கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சத்தியங்கள்

Page 1
■■■■■■■
■■■ ■■■■
CEE: 3.
"
 
 
 
 

■■圖_冒_冒_冒_圖_『_冒_圖_圖
■-_電圖_圖_圖『豐_圖「團「團
■*...*.------- = — Tūsī! ±
■■■■■■■■■「圍
&&!
圖圖圖圖圖_圖圖
■■■■■
■■■■■■
■_■±,±,±,±),
... =)-(=|-
!
|-
■ + |-
■ |- |- * |-
SqqSSSS SSSSSLS S SLSLSLSLS SLS SLLSSLLS SLSSL
:
■「圖「圖_圖圖
■·
■oso*
■■■■ - "No
S SLSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSYSLLSSSSYSSS
saeos(o)-","--","-Fae
■■-)-
■■■■■■■■■■■ -----o-o-o-No-
■■■■■■■■■■■■■■■ = :s-os-Nossae-"- *』

Page 2

சத்தியங்கள். (சிறுகதைகள்)
நெல்லை க. பேரன்
Q a 6th u G : . • ஷர்மிளா பதிப்பகம், நெல்லியடி, கரவெட்டி,

Page 3
சத்தியங்கள். SATHIYAN KAL... Short Slories in Tamril by NELLAi KA. PRAN Nelliady, Karaveddy.
(c) THE AUTHOR
Publishers Sharmila Pathippakam, Nelliady,
Printers Kugan Press, Tellippalai Cover Design by 1 * THAVAM Offset Printers Vijaya Press, Jaffna First Edition : January 1987
PRICE : 2O/-
ஆசிரியரின் பிற நூல்கள்
ஒரு பட்டதாரி நெசவுக்குப் போருேள்
( சிறுகதைத் தொகுப்பு - 1975 ) வளைவுகளும் நேர்கோடுகளும்
( நாவல் - வீரகேசரி வெளியீடு 1978 சந்திப்பு (பேட்டிச் சிறுநூல் 1986 விமானங்கள் மீண்டும் வரும்
(பரிசுக் குறுநாவல் 1986)

உள்ளே.
o
2.
3
4.
5.
16.
夏7。
ஒரு பென்சன்காரர் பயணம் போகிருர் மனப்போக்கு
ஒரு விதமான கதை சத்தியங்கள் திரளும்போது சினிமாவுக்குப் போகிருர்கள் ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது ஒரு தொழிலாளி சைக்கிள் வாங்குகிருன் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாற்பது நிமிடம் வாடகைக்கு வீடு
பெரு மூச்சு
ஏணிப் படிகள்
புகை
கவிதை அரங்கேறும் நேரம் ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது அன்புள்ள எழுத்தாளருக்கு மெல்ல இனிச் சாகும்
பிள்ளைகள்
u kastio
09
7
29
35
44
68
74
$2
88
9@
93
12
O
5

Page 4
வாழ்த்துரை
எனது மானுக்கருள் ஒருவரான நெல்லை க. பேரன் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதும் ஈழத்து இலக்கிய இயக்கத்தில் மற்றைய எழுத்தாளர்களு டன் இணைந்து பல நல்ல கருமங்களை ஆற்றுவதும் எனது மகிழ்ச்சிக்குரிய விடயங்களாகும். சிறு வயது முதல் இவரது இலக்கிய முயற்சிகளை அவதானித்து வரும் நான் எதிர்காலத்தில் இவருக்கு எல்லாவகை களிலும் முன்னேற்றம் கிட்டுமாறு ஆசீர்வதிக்கின் றேன். சமூகத்துடன் இணைந்த தனது அனுபவங்களை மற்றையோருக்கும் தொற்றுமாறு இலகுநடையில் இனிமையாக எழுதும் இவருக்கு எனது வாழ்த்துக்கள். தமது எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் ஊக்கு விப்பதன் மூலம் எமது கலாசாரத்தையும் பண்பாட் டையும் வளர்க்கின்ருேம் என்பதை இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.
கணேச வித்தியாலய வீதி aan Gaput(p க. வீ.
4- 1 - 8 7

என்னுரை.
. தன்னுலியன்றளவு நேர்மையுடன் ஆசிரியர் ததைகளில் இடம்பெறும் சம்பவங்களை விபரிப்பதால், ஒரு முக்கியமான கருத்து ஐயத்துக்கிடமின்றி உணர்த் தப்படுகின்றது. அதாவது இறுதி ஆய்வில் மனித உற வுகளும் உணர்வு நிலைகளும் பொருளாதார உறவுக ளினடியாகத் தோன்றுவன என்பதாகும். மூலாதார மான இக்கோட்பாட்டினை அறிந்தோ அறியாமலோ ஆசிரியர் பல இடங்களில் ஆற்றலுடன் புலப்படுத்தி யுள்ளார். இச் சாதனை குறித்து ஆசிரியர் திருப்திய டைய நியாயமுண்டு. வாழ்க்கையே உணர்வுகளையும் சிந்தனைகளையும் நிர்ணயிக்கின்றன என்னும் மகத்தான உண்மையைச் சூசகமாகவும் நேரடியாகவும் துலக்கிக் காட்டும் இக் கதைகள் பின்னேக்கும் வரட்டு இலட் சியவாதத்தையும் முன்னேற்றத்திற்குத் த டை யா யுள்ள குறுகிய தூய்மை வாதத்தையும் எதிர்த்தும் போராடிச் சாடுவதற்கான கருவியாயும் பயன்படக் கூடியன
- பேராசிரியர் க. கைலாசபதி (27-7-75 ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிருள்
முன்னுரையில் இருந்து.)
பன்னிரண்டு வருடங்களின் பின்னர் எனது சுய முயற்சியில் வெளியிடப்படும் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுதியில் இடம்பெறும் கதைகளுக்கும் நான் பெருமதிப்பு வைத்திருக்கும் அமரர் கைலாச பதியின் மேற்படி கூற்றுக்கள் பொருத்தமானவை எனக் கருதுகிறேன். எ ன து அனுபவங்களினூடாக நான் உணர்பவற்றை எனக்கே உரிய பாணியில் துணிந்து கூறியுள்ளேன். சுவைப்பதும் விமர்சிப்பதும் வாசகர்களாகிய உங்களது பொறுப்பு: உரிமையும்
ܘܚܬܗܿ
1966 முதல் எழுத்துத் துறையில் காலடி வைத் தவன் நான். அவ்வப்போது பத்திரிகைகள் சஞ்சிகை களில் வெளியான ஏராளமான சிறு கதைகளுள் இத்
Vg

Page 5
தொகுதிக்குப் பொருத்தமானவற்றைத் தெரிவு செய் ததோடு தெல்லிப்பழையில் இதனை அச்சிடுவதற்கு உற்சாகமளித்ததுடன் படிகளைத் திருத்தும் முழுப் பொறுப்பையும் தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட வர் திருமதி கோகிலா மகேந்திரன்; அவரது முயற்சி யினுற்ருன் இந்நூல் இவ்வளவு விரைவாக வெளிவர முடிந்தது என்பதை நன்றியுடன் நினைவுகூரக் கட மைப்பட்டுள்ளேன். "சிறுகதை" காலத தின் கண்ணுடி என்பார் புதுமைப்பித்தன் . 1966 முதல் 86 வரை வெளியான கதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன: ஒவ்வொரு கதையின் இறுதியிலும் வெளியான காலம் இடம்பெற்றுள்ளது. அக் காலப்பகுதியில் புறச்சூழல் களையும் மனிதர்களையும் நான் எவ்வாறு படம் பிடித் தேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பல கதைகள் எனது சொந்த அனுபவங்கள் எனலாம். " ஒரு ஞாயிற்றுக்கிழமை நாற்பது நிமிடம் " கதையில் வரும் கதாநாயகனை இன்றைக்கும் யாழ்ப்பாணத் தெருக்களில் கண்டு நான் சுகம் விசாரிப்பதுண்டு. ஒரு எழுத்தாளனுக்குக் கதாபாத்திரமான தை யிட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சி வங்கிகள் முறையாக இயங்க முடி யா த சூழ்நிலையில் ஓய்வூதியப் பணம் பெறுவதில் உள்ள கஷ்டங்களை அவதானித்தபிறகே " ஒரு பென்சன்காரர் பயணம் போகிருர் . " கதை பிறந்தது. இக்கதை வெளிவந்த இரண்டு தினங்களில் நான் ஸ்ரான்லி வீதியால் போய்க் கொண்டிருந்த போது மக்கள் எழுத்தாளர் கே. டானியல் என்னைக் கூப்பிட்டு இக் கதையைப் பற்றிச் சிலாகித்துப் பாராட் டிஞர். பஸ் நிலையத்திலும் என்னைத் தெரிந்த சில பென்சன்காரர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். தங்களைப்பற்றி எழுதப்படும் விஷயங்களை மக்கள் எவ்வளவு ஆர்வத்தோடு படிக்கிருர்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்;
* கவிதை அரங்கேறும் தேரம் " க  ைத  ைய ப் படித்த ஒரு கவிஞரின் மனைவி உங்களுக்காகத்தான் இந்தக் கதையை எழுத்தாளர் எழுதியிருக்கிருர் என்று பகிடி பண்ணியதாக நவாலியூர்க் கவிஞரான எனக்கு
vi

முன்னர் அறிமுகமில்லாத ஒரு வ ர் தெரிவித்தார்; வைத்திய கலாநிதி எம். கே , முருகானந்தனும் தாம் இக் கதையை மிகவும் ரசித்ததாகச் சொ ைஞர்.
நான் குவைத்தில் இருந்தபோது சவூதி அரேபி யாவில் இருந்து உறவினர் ஒருவர் எழுதிய கடிதத் தின் எதிரொலிதான் " அன்புள்ள எழுத தாளருக்கு. * என்ற கதை. மே தினத்தன்று விடுமுறை இல்லையா என்று எனது வெள்ளைக்கார மனேஜரிடம் கேட்ட போது அவர் அட்டகாசமாகச் சிரித்துப் பகிடி பண் ணியதன் விளைவுதான் "சத்தியங்கள் திரளும்போது." என்ற கதை பிறக்கக் காரணமானது, கறுப்பு மணி தர்களுடைய தோலில் செருப்புத் தைத் துப்போட விரும்பும் " கீத் " என்ற தடித்த 'நிறத் தடிப்புள்ள, விவப்பூலைச் சேர்ந்த எஞ்சினியரை என்னல் மறக்கவே முடியாது. அச்சகம் ஒன்றில் 24 மணித்தியாலங்களும் இருக்கவேண்டி நேரிட்டது. இந்த அனுபவம் " ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது " என்ற கதையாக உருவெடுத்தது " ஒரு விதமான கதை எந்தப் பத் திரிகையிலும் வெளிவராதது. இதைத் தொகுதியில் சேர்க்கலாமோ என்று தயங்கிய போது தனக்கு மிக வும் பிடித்தமான கதை என்று கோகிலா மகேந்திரன் தெரிவித்தார் ஒருவருக்குப் பிடிப்பது இன்ஞெருவ ருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவரவர் மட்டத் தில் ரசனை வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின் றன. எனது கதையில் இன்னும் இறுக்கம் தேவை என்று நண்பர் தெணியான் கூறுவார். அண்மையில் " உயிர்ப்புகள் " தொகுதியில் இடம்பெற்ற எனது சம காலப் பிரச்சனைக் கதையான " பிறந்த மண் பற்றி விமர்சித்த பேராசிரியர் கா. சிவத்தம் பியும் இதே கருத்தினை வலியுறுத்தியிருந்தார். இவற்றை மனங் கொள்ளும் அதே வேளையில் எனது அனுபவ உணர் வுகளை அப்படியே வாசகனுடன் விரிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பெரு வேட்கையே என் னிடம் எப்போதும் மேலோங்கி விடுகிறது என்ற உண்மையையும் இங்கு ஒப்புக்கொள்ளத்தான் வேண் டும் இலக்கியத்திற்கு வரம்புகட்டி கு. ப5 ரா வையும்
νίί.

Page 6
ல. ச. ரா வையும் மெளனியையும் புதுமைப்பித்தனே யும் போல எழுதுவதைவிட என்னைப்போல எழு த வேண்டும் என்பதே என் ஆசை.
எமது மண்ணுக்கே உரித்தான பிரச்சினைகளை எவ் வாறு எழுதி ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதைத் தமது ஆக்கபூ7 வமான விமர்சனங்கள் மூலமும் வழி காட்டுதல் மூலமும் தெரியப்படுத்துவதே நல்ல விமர் சகர்களின் கடமை என்று நான் கருதுகிறேன்.
இத்தொகுதியில் இடம்பெறும் கதைகளைப் பிர சுரித்த வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் மல்லிகை, தாமரை, செவ்வந்தி ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் களுக்கும் அழகாக ஒவ்செற்றில் அட்டையை அமைத்த பிரபல ஓவியர் ' தவம் " மற்றும் விஜயா அழுத்த கத்தினருக்கும் படிகளைத் திருத்துவதில் கோகிலாவுக்கு உதவி செய்த அவரது அன்புத் தந்தை யாருக்கும் நான் விரும்பிய வண்ணமே வி  ைர வா க அச்சிட்டு உதவிய தெல் லிப்பழை குகன் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியது.
எனது அண்மைக்கால இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இரு ந் து உற்சாகமளிக்கும் கட்டை வேலி நெல் லிய டி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கலாசார கூட்டுறவுப் பெருமன்றத்தின் தலைவர் திரு. த. சிதம் பரப்பிள்ளை மற்றும் பெருமன்ற உறுப்பினர் கள் அனைவருக்கும் நான் பிரத் தியேகமாக நன்றி சொல்லக் கடமைப்பட்டவன். எ ல் ல ரா வ ற் றிக்கும் மேலாக எனது நன்றிக்குரியவர்கள் வாசகர்களாகிய நீங்களே. ஏனெனில் நீங்கள் தரும் உற்சாகத்திலும் ஆதரவிலுமே என்னுல் அடிக்கடி புத்தகம் போட முடிகிறது. என் எழுத்துக்களைப் பற்றிய சிலரது கருத் துக்களை இத்தொகுதியின் இறுதியில் சேர்த்துள்ளேன் உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்
நெல்லியடி,
கரவெட்டி நெல்லை க. பேரன் 1 4 -- 0 1 -- 8 7
νiii

ஒரு பென்சன்காரர் பயணம் போகிறர்
AeAeMeAeeM eMeMeSeLeA AeeMeMeMeLMeMeL eMSeeSLSeMeSMeMSeSeM MJSeSeeeeeSeL ALAeeSeMeSeSeAeM eeLeeeeeeeS SAeAeeALeMSSLeAMeSL eASeSeAL MMLeASeSeSeAAS SSSSAASSASAeAeAMLqA AeAeMeS ASAeMeMeMqAeLS AMS
வயது எழுபத்தேழைத் தாண்டியும் சின்னத் தம்பி மாஸ்ரரின் தலைமுடி ஒன்றுகூட நரைக்கவில்லை. தாடி மயிர்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை தட்டி அவரின் முதுமை யைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இன்றைக்கும் தம்முடைய வெங் காயத் தறைக்குள் காலைச் சூரியன் உதிக்க முன்னர் புல்லுப் பிடுங்கக் குனிந்தாரென்றல் உச்சி மத்தியா னம் வரைக்கும் ஒரு வாய் வெறுந் தேத் தண்ணிர் கூடக் குடிக்காமல் வேலைசெய்து நிமிரக்கூடிய வலு வைப் பெற்றிருந்தார் எவ்வளவு தான் நெஞ்சுரம் இருந்தாலும் அன்று பின்னேரம் கடை முதலாளி இராசையா வந்து கேளாத கேள்வியெல்லாம் கேட் டுப் போட்டுப் போனதுதான் மாஸ்ரருக்கு மனசுக் குள் என்னவோ போலிருந்தது;

Page 7
நெல்லை க. பேரன்
இரண்டு குமர்களுக்கு அடுத்தபடியாகப் படித்துக் கொண்டிருந்த மகனை ஜேர்மனிக்கு அனுப்பவென்று இராசையா முதலாளியிடம் தோட்டக் காணியை ஈடு வைத்து இருபத்தையாயிரம் வாங்கியிருந்தார், மாச வட்டியாக எழுநூற்றைம்பது ரூபா பென்ஷன் காசு எடுத்ததும் தருவதாக ஒப்பந்தம். ஒப்பந்தப் படி மாசம் முடிந்து பென்ஷன் திகதியும் வந்து மூன்று நாட்களாகியும் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்று தான் இராசையா வந்து நாணயத்தையும் நேர்மை யையும் பற்றித் தாறுமாரு கப் பேசிவிட்டுப் போயி ருக்கிருர் நாளைக் குப் பென்ஷன் தவணையென்றும் குருநகர் வங்கியில் வந்து வவுச்சரைக் காட்டிப் பணத் தைப் பெற்றுக்கொள்ளும்படியும் கடிதம் வந்திருந் தது. இவ்வவவு காலமும் பக்கத்தில் உள்ள உப தபால் அலுவலகத்தில் பென்ஷன் எடுத்து வந்த மாஸ்ரருக்கு இந்தக் குருநகர் பிரயாணம் பொல்லாத வேதனை LL T OGL LL LLLLTTTT LLLTT T S STTYT S LLLTTT TTTtLL காசு வேணுமே என்ற கவலையில் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து வெள்ளை வேட்டியும், நாஷனலும் அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்து விட்டார். பஸ் நிலையத்திற்கு வர முன்னர் வழி யில் உள்ள காளிகோவிலையும் பிள்ளையார் கோவிலை யும் சற்றே நின்று தரிசித்துக் கொண்டார் மூத்த மகள் தந்த தேத் தண்ணிரை மட்டும் குடித்துவிட்ட அவர் மத்தியானம் வேளைக்கே வந்துவிடுவேன் என்று கூறியிருந்தார் ஞாபகமாகப் பென்சன் வவுச்சர், காட் என்பனவற்றுடன் தேசிய அடையாள அட்டை யையும் தம்முடன் எடுத்துக் கொண்டார். அதிகாலை நான்கு மணிக்கே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் பட்டாலும் மாஸ்ரர் நன்ருக விடிந்து ஐந்தே முக் கால் மணியளவில் தான் பஸ்நிலையத்திற்கு வந்திருந் தார் மானிப்பாய் - நவாலி பஸ் ஒன்று வந்தது
2

ஒரு பென்சன்காரர் பயணம் போகிறர்
அதில் நேரே யாழ்ப்பாணம் போக முடியாது என்ப தால் அதில் ஏழு மல் காத்திருந்தார் இரண்டு மினி வான்கள் " கோன் " அடித்துக் கொண்டு வந்தன; * அச்சுவேலி போகாமல் நேரே யாழ்ப்பாணம் " என்று பெருங்குரலெடுத்து ஒரு கொண்டக்டர் பொடியன் கூவிஞன். சிலர் அதில் ஏறிக்கொண்டனர்; அந்த வானில் ஆங்கிலத்தில் பெரிதாகப் " பாஸ் " என்று எழுதியொட்டியிருந்தது.
" உவங்கள் உப்பிடித்தான் பாஸ் எண்டு எழுதி ஒட்டுவாங்கள் பிறகு அவங்கட வாகனங்களைக் கண் டதும் நிண்ட இடம் தெரியாமல் குறுக்கொழுங்கை எல்லாம் பிரயாணிகளைக் கொண்டு உலாத்துவான்கள்g உதுகளிலை போய் ஆபத்தை விலைக்கு வாங்கிறதை விடப் பஸ்ஸிலை போறதுதான் புத் திசாலித்தனம். "
அனுபவம் மிக்க அரசாங்க உத்தியோகத்தர் ஒரு வரின் அபாய அறிவிப்பு.
மாஸ்ரரும் வானில் ஏற விரும்பி முன் வைத்த காலைத் திடீரென்று பின் னுக்கு எடுத்துவிட்டார். நேரம் ஆறரையைத் தாண்டியும் யாழ்ப்பானத்திற்கு எழுநூற்றைப்பது எழுநூற்றறுபத்திநாலு என்று நம் பர் போட்ட ஒரு பஸ் தானும் வரவில்லை. பஸ்நிலை யம் தொட்டனைத் தூறும் மனற்கேணியைப் போலப் பிரயாணிகளால் ஊறிக்கொண்டிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களும், கச்சேரி ஊழியர்களும், சில வியாபாரிகளும் ஆஸ்பத்திரிக்குப் போகிறவர்களும் என்று கூட்டம் சேர்ந்துவிட்டது; ஆங்காங்கே கூட் டம் கூட்டமாக நின்று தத் தமது போக்கிற்கேற்பப் பிரயாணிகள் அரசியல் நிகழ்ச்சிகளையும், நேற்றைய நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்துகொண்டு பஸ் ஸின் வருகைக்காகத் தவமிருந்தனர் " டீசல் தட்டுப் பாடாம் இண்டைக்கு பஸ் வருவது ஐமிச்சம் " என்று
3

Page 8
நெல்லை க. பேரன்
ஒருவர் புரளியைக் கிளப்பினர் " அப்ப சீசன்காரர் என்ன செய்கிறது? " என்று இன்னுெருவர் சொல்ல அங்கு நின்ற இ போது ச. ஊழியர்களைப் பார்த்துச் சிலர் சி. ரி பி, நிர்வாகங்களைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கினர்; திடீரென்று வந்த மிணிவான் ஒன்றில் சிலர் துணிந்து ஏறினர். நடப்பது நடக்கட்டும் என்று சில பெண்களும் வானுக்குள் ஏறிஞர்கள். சின்னத் தம்பி மாஸ்ரருக்குக் கொஞ்சநாளாகத் தொடரிந்து வெங்காயத் தறைக்குள் வேலேயாக இருந்த காரணத் தால் இடது காலில் கொஞ்சம் வாதம் ஏறியிருந்தது. பஸ் வரட்டும் போவம் என்று விட்டுப் பஸ்நிலைய அரைச் சுவர் மீது அமர்நிதுவிட்டார். திடீரென்று கொடிகாமம் ருேட்டால் எழுநூற்று அறுபத்திநாலு பஸ் ஒன்று ஊர்ந்து கொண்டு வந்தது; பஸ் நிலையத் தில் ஒரே சலசலப்பு சீசன் ரிக்கற் காரர்களும், சி. ரி. பி பாஸ்காரர்களும் முன் கதவால் ஏறுவதற்குத் தாவி ஓடினர்கள் யாரோ கண்டிப்பான சாரதியாக இருக்கவேண்டும்; ' எந்த ராசாவெண்டாலும் முன் பக்கமா ஏறேலாது. போய்ப் பின்னுக்கு ஏறுங்கோ " சாரதி உரக்கத் கத்திக் கொண்டிருந்தார். இவரது குரலுக்கு மதிப்புக் கொடுத்த சி. ரி, பி. ஊழியர்களே பின்னல் வந்து ஏறத் தொடங்கினர்கள். ஆண்களும் பெண்களுமாக மூண்டியடித்துக்கொண்டு ஏறினர்கள்:
சின்னத் தம்பி மாஸ்ரருக்குப் பஸ்ஸினுள் கால் வைக் கக்கூட இடம் கிடைக்குமோ என்பது சந்தேகமாகவே யிருந்தது; சில இளைஞர்கள் பெரியவர் ஏறுங்கோ என்று சொல்லி விலகி வழிவிட்டார்கள்; ஒருவாறு ஒற்றைக்காலை அவர் துழைத்ததும் பஸ் புறப்பட்டு விட்டது. மெதுவாக உடம்பை நுழைத்து முதல் படி யிலிருந்து மேலே ஏறிக்கொண்டார்; கொண்டக்டர் நடுவில் நின்று கொண்டு முன்னுக்கு வாருங்கோ என்று கத்திக் கொண்டிருந்தார் ' எளிய சனங்களப்பா.

ஒரு பென்சன்காரர் பயணம் போகிறர்
எப்பிடிக் கத்தினுலும் முன்னுக்குப் போகாதுகள். தாங்கள் மட்டும் பயணஞ் செய்தால் போதும் எண்ட நினைப்பு: " ஒரு பெண்மணியின் புறுபுறுப்பு, அதைத் தொடர்ந்து கச்சேரியில் வேலை செய்யும் உத்தியோ கத்தர் ஒருவரின் - அப்பெண்ணுக்கு ஆதரவான - விமர்சன அறிக்கை. சின்னத்தம்பி மாஸ்ரருக்கு இருக்க இடமில்லை. அவரது கைகள் இடுப்புக்கு அருகில் எல் லாம் தலைகள் முண்டியடித்துக் கொண்டு நின்றன: ஆள் உயரமானவர் என்பதால் பஸ் எங்கே செல்கி றது என்பது கூடத் தெரியாமல் இருந்தார். குஞ்சர் கடையில் சிலர் ஏறினர்கள். மறுபடியும் கொண்டக் டரின் சுத்தல்; பிரயாணிகளின் புறுபுறுப்பு. எல்லா வற்றையும் கடந்து பஸ் ஓடிக்கொண்டிருந்தது. வல்லை வெளியில் உடைக்கப்பட்ட ஆஸ்பத்திரிச் சந்திக்கு முன்பாகத் திடீரென்று பஸ் நிற்பாட்டப்பட்டது. பச்சை வாகனங்களும், பச்சை உடை அணிந்தவர்க ளும் " செக்கிங் “ குக்குத் தாயாராக நின்றர்கள்: ஒவ்வொரு ஈச்சமரப் பற்றைகளுக்கும் ஒவ்வொருவர் தயாராக நின்ருர்கள். கிடங்கு போன்ற வெள்ளை மணல் பரப்புகளுக்குள் சிலர் படுத்துக் கிடந்தார்கள். சின்னத் தம்பி மாஸ்ரருக்கு இதைக் கண்டதும் நெஞ்சு பகீரென்றது.
** நீங்களேன் மாஸ்ரர் பயப்பிடுகிறியள்? அவை யள் வயது வந்த வையை ஒண்டும் செய்யமாட்டி னம். " தெரிந்த ஒருவர் ஆறுதல் கூறினர். பெண் களை உள்ளே இருக்கச் செய்துவிட்டு, ஆண்கள் எல் லோரையும் கீழே இறக்கி வரிசையாக நிறுத்தினர்கள்: அடையாள அட்டைகளும், பொதிகளும் சோதிக்கப் பட்டன. மறுபடியும் பஸ்சினுள் எல்லோரும் முண்டி யடித்துக்கொண்டு ஏறிஞர்கள் பிரயாணம் தொடர்ந் திது;

Page 9
நெல்லை க. பேரன்
வல்லை முனியப்பர் கோவிலைத் தாண்டிப் பாதை வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத் தப்பட்டது. நிற்பவர்கள் எல்லோரையும் இறங்கும் படி கொண்டக்டர் கூறினர் மாஸ்ரர் மறுபடியும் இறங்கினர். சுமார் அறுநூறு யார் தூரம் நடந்து இரண்டாவது பள்ளத்தையும் தாண்டி எல்லோரும் அ ப் பா ல் மிதந்தார்கள். தனது மூதாதையர்கள் காலத்திற்கு முன்னரேயே வல்லைப் பாலம் கட்டப் பட்டிருக்குமோ என்று மாஸ்ரர் எண்ணினர்; அவர் பிறக்கும் முன்னரேயே அப்பாலத்தால் வண்டில் கட் டிக்கொண்டு யாழ்ப்பானத்திற்குக் கூத்துப் பார்க்கச் சென்றதாகத் தகப்பனர் சொன்னதாக ஒரு ஞாபகம். * இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்பிடி இறங்கி ஏறு வது? " என்று கச்சேரிக் கிளாக்கர் ஒருவர் அங்க லாய்த்தார்;
நெரிபட்டதிலும் ஏறி இறங்கி நடந்ததிலும் மாஸ் ரரின் கால் வாதம் சற்று அதிகரித்திருந்தது:
மறுபடியும் பஸ் புறப்பட்டது; புத்தூரில் இருந்து கோப்பாய் பாதையில் உரும் பிராய் ஊடாக யாழ்ப் பாணம் சென்றது; அச்சுவேலி - வயாவிளான் பாதை யில் ஏதோ பிரச்சினை என்று அந்தப் பாதை தவிர்க் கப்பட்டது. " பாவிகள் போகுமிடம் பள்ளமும் திட் டியும் " என்பதுபோலப் புத்தூர், கோப்பாய் வரைக் கும் ருேட்டில் குண்டும் குழியுமாக ஆயிரத்தெட்டுப் பள்ளங்களில் விழுந்தெழும்பிப் பஸ் ஓடியது; சின்னத் தம்பி மாஸ்ரரின் கால்கள் குலுங்கி, எழும்பி விழுந் ததில் நோக்கண்டுவிட்டன. கோண்டாவில் டிப்போ வடியிலும், திருநெல்வேலியிலும் பலர் இறங்கினர் கள். யாழ்ப்பாணப் பஸ் நிலையத்திற்கு வந்ததும் மாஸ்ரரால் நடக்க முடியுமோ என்பது சந்தேகமாகி விட்டது. பஸ் நிலையத்தில் குந்தி இருக்கக்கூட வசதி
6

ஒரு பென்சன்காரர் பயணம் போகிறர்
யில்லை. ஸ்ராண்டில் இருந்த ஒரு துணி மூட்டை மீது அப்படியே குந்திவிட்டார். இவருடன் இன்னுெரு இளைப்பாறிய ஆசிரியரும் வந்தபடியால் இருவரும் ஆளுக்காள் உதவியாக இருந்தனர். பஸ் ஸ்ராண்டில் இருந்து குருநகர் வங்கிக் குப் போகும் வான் ஒன்றில் ஏறினர். அங்கே வங்கிக்கு முன்னுல் " நான்கு நான்கு பேராகத்தான் வரவேண்டும் " என்று ஒரு அதிகாரி உரத்த குரலில் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்; வழக்கத்தை விடவும் காவல் அதிகமாக இருந்தது; எல்லோரையும் கியூவில் நிற்கச் செய்தார்கள் பங் குனி வெய்யில் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது; மாஸ் ரரின் " ரேண் வர மத்தியானம் ஆகிவிட்டது. காை யில் வெறும் தேநீர் மட்டும் குடித்திருந்த காரணத் தால் மாஸ்ரருக்குப் பசி மயக்கம் வேறு, தம்மை அறியாமலேயே தலையைச் சுற்றிக் கீழே விழுந்துவிட் டார் கியூவில் திடீரென்று பதற்றம் ஏற்பட்டது. யாரோ வங்கிக்குள் இருந்து தண்ணிர் சொண்டுவந்து தெளித்தார்கள்; சற்றுப் பருகவும் கொடுத்தார்கள்:
மாஸ்ரர் உடனே உள்ளே அழைக்கப்பட்டுப் பென் ஷன் பணமும் கொடுக்கப்பட்டது. மயங்கி விழுந்த தால் கியூவரிசையினின்றும் மாஸ்ரர் தப்பினர்;
மறுபடியும் மிணிவானில் யாழ்ப்பாணம் பஸ் நிலை யத்திற்கு வந்து சேர்ந்தார் எழுநூற்றி ஐம்பது பஸ் நெடுநேரமாக வரவில்லை. ஐம்பத்தியொன்று பஸ் ஒன்று வந்தது அதில் போனலும் அல்வாய்ச் சந்தி யில் இறங்கித் தன் வீட்டிற்கு உள் பாதையால் நடந்து போய்விடலாம் என்று நினைத்தார் மறுபடி யும் மத்தியான வெக்கையையும் பாராது கிழங்கு கள் போல மனிதரை நுழைத்து அடைந்தார்கள். மாஸ்ரருக்கு இப்போதும் இருக்க இடம் கிடைக்க வில்லை கியூவில் இல்லாத பலர் முண்டியடித்துக் கொண்டு ஏறி ஆசனங்களைப் பிடித்துவிட்டார்கள்.
7

Page 10
நெல்லை க. பேரன்
மாஸ்ரர் மடியில் பென்சன் காசை நன்கு இறுகக் கட்டிக்கொண்டார். நாஷனலை அதன் மேலேயே விட் டிருந்தார்.
ஆவரங்கால் அச்சுவேலி கடந்து ம று படி யு ம் வல்லை வெளியில் இரண்டு பள்ளங்கள் இறங்கி ஏறிக் கொதிக்கும் வெய்யிலில் வியர்வை முகத்தில் வழிய மா ஸ்ரர் பயணஞ் செய்து கொண்டிருந்தார். 751 பஸ் தொண்டமானறு போய் உடுப்பிட்டிச் சந்தி போய் வல்வெட்டித்துறை பெற்ருேல் செற் வரைக் கும் சென்று மறுபடியும் திரும்பிவந்து உடுப்பிட்டி , நவிண்டில், வதிரி என்று ஒடிக்கொண்டிருந்தது. பிற் பகல் இரண்டரை மணிக்கு மாலிசந்தியில் அவர் இறங் கினர். மறுபடியும் நடந்து போகையில் வதிரி பிள்ளை யார் கோவில் அருகாமையில் மயங்கி விழுந்துவிட் டார். ஊரவர்கள் உடனே முதலுதவி அளித்தார்கள்: மயக்கம் தெளியவில்லை, ' பாஸ் " என்று போட்டு வந்த யூனியன் லொறி ஒன்றை மறித்து மாஸ்ரரை உடனே மந்திகை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி அனுப்பினர் கள் வீட்டிற்கும் தகவல் கொடுத்தார்கள். மாஸ்ரர் இப்போது மயக்கம் தெளிந்து வாதக் காலுக்கு மந் திகை வார்டில் இருந்து வைத்தியம் செய்விக்கிருர்: தம்மை ஆஸ்பத்திரியில் பார்க்க வந்த இராசையா முதலாளியிடம் மறக்காமல் வட்டிப்பணம் எழுநூற் றைம்பது ரூபாவையும் கொடுத்த பிறகு தான் அவ ருக்குத் தன் நாணயத்தைக் காப்பாற்றியதாக மனம் நிம்மதியடைந்தது; அடுத்த பென்ஷன் வவுச்சர் எப் போது வருமோ என்று மாஸ்ரர் இப்போது ஏங்கிக் கொண்டிருக்கிருர்,
(யாவும் கற்பனை)
வீரகேசரி, ஏப்ரல் 85

ானப் போக்கு
AASAA ALSLALA AqASASASAAALLSSLqASALeSAASASASA AAAS AAALLLLSAAAASqLLLAAAA
நெற்றி வியர்வையில் நனைந்துவிட்ட தலைப் பாகையை அவிழ்த்து உதறிய கந்தசாமி, தமது புழுங் க்க் கிடந்த தலையில் மெல்லென்ற காற்றுப் பட்டதும் ஒருவித சுகத்தைக் கண்டவர் போல உஸ். அப் பா டா " என்று பெருமூச்சு விடுகிருர் மீண்டும் அந்த வல்லைக் கைத்தறி நெசவுத் துவாயை உதறிவிட்டு விசுக்குவிசுக்கென்று தலையைச் சுற்றி அழகான தலைப் பாகை கட்டிவிடுகிறர். பின்னர் குனிந்து மண்வெட் டி யைப் பிடித்துத் தாம் புதிதாகப் போட்ட கீரைப் பாத்திக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிருர்: அவருடைய முல்லையன் தோட்டம் என்று அழைக் கப்படுகின்ற கிணற்றடியில், பழைய வில் லியர்ஸ் மொடல் நீரிறைக்கும் யந்திரம் ஆழமான கிணற்றி லிருந்து ஆவேசமாக நீரை வாரிக் கொட்டிக் கொண் புருக்கிறது; இயந்திரத்தின் கிர்ரென்ற சத்தம் அவ பது காதில் நன்றக ஒலித்துக்கொண்டிருக்கிறது;

Page 11
நெல்ல க. பேரன்
முன்னர் வரணியில் ஒறனை மாடுகளை வைத்துக் கொண்டு. சூத்திர வாளிகள் கடாம் புடாமென்று சத்தம்போடக் கிணற்றைச் சுற்றிச் சுற்றிக் கால்கள் உளைய மாடு வளைந்தது. இப்பொழுது நினைவுக்கு வந்தது. பாவம். அதிகமாக அவரது மூத்த மகன் இரத்தினம் தான் "ஹை ஹை" என்று சத்தமிட்ட வாறே ஒரு பூவர சந் தடியையும் வைத்துக்கொண்டு மாடு வளைத்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் அதுவும் பூரணே நிலவென்ருல் அன்று நடுச் சாமம் வரையிலும் தோட்டத்தில் இறைத்துக் கொண்டிருப் பார்கள் தகப்பனும் மகனும் இரவு பகலாகப் பிரயாசைப் படுவதைப் பார்த்து ஊர் மக்களே வியந்தும் பாராட்டியும் பேசுவார்கள்.
பாவம், இரத்தினம். அந்தப் பொடியனுடைய நல்ல குணத் திற்கும் பிரயாசைக்கும் கடவுள் நல்ல தொரு உத்தியோகம் பார்த்துக் கொடுக்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுச் சின்னுச்சிப்பேத்தி அடிக்கடி வேண்டிக் கொள்ளுவார். ஏன் இரவு பதினெரு மணி வரை ஊர் விவகாரங்களைப்பேசி அடுத்த வீட்டில் அன்று வைத்த கறி புளி முதற்கொண்டு அன்றைக்குப் பிறந்த ஆட்டுக்குட்டி வரையில் கதைத்து முடிவுக்கு $1 நகின்ற பொன்னம்மாக் குஞ்சி, பார்வதியக் கை, துளய பிள்ளை மச் சாள், தங்கச் சிப்பிள்ளை ஆகியோரு டைய பாராளுமன்றத்திலே கூட இரத்தினனுடைய கதை தினசரி ஒரு தடவையாவது அடிபடத் தான்
செய்யும் : " பொடியன் படிப்பும் படிப்புத்தான் வேலையும் வேலைதான். அவள் தாய் எவ்வளவு பெரு மைப்படவேணும் தெரியுமே .." என்று தங்கச்சிப்
பிள்ளை மாமி ஏற்றிப் பேசவும், இஞ்சை எனக்கும் இருக்குதுகள் தானே! இதுகளைப் பெத்தவேளே இரண்டு தென்னம் பிள்ளையளைப் பெத்தாலும் அரு மந்தாப் போல" என்று இளைய பிள்ளை மச்சாள் ஒத்துப்பாட, "ஏன் கூத்தில்யெண்டால் எ ன் ன ? கூட்டங்கள்
10

மனப் போக்கு
சொமிற்றியளிலை யெண் டாப்போலை பொடியன் குறைவோ " என்று பார்வதியக் கை முத்தாய்ப்பு வைத்துக் கதையை முடிப்பார்கள்; இத்தனைக்கும் கந்தசாமிக்கும் பெருமை தான். பொடியனும் உழைக்க வேண்டும் என்று தான் அவரும் விரும்பினர்; ஆனல் இந்த எல்லோரும் சொல்லுகிற கோழி மேய்ச்சா லும் கோறனமேந்து உத்தியோகம் தான் பார்க்க வேணும் " என்கிற பல்லவி மாத்திரம் அவருக்குப் பிடிக் காத ஒன்று புகையிரத இலாகாவில் உதவி ஸ்ரேசன் மாஸ்டருக்கும் சுகாதாரப் பகுதியில் சனிற் றறிக்கும் ஆட்களை எடுப்பதற்கு அண்மையில் சோத னைகள் நடைபெற்றதும், இவ்விரண்டு சோதினைக ளுக்கும் இருபது இருபது ரூபா வென்று முத்திரை யொட்டி இரத்தினம் பரீட்சை எழுதினதும் அனைவ ருக்கும் தெரியும். உள்ளூர விருப்பமில்லாவிட்டா லும் பொடியனுடைய ஆசைகளையும் அவள் தாய் மனுஷியினுடைய மனக் கோட்டைகளையும் ஏ ன் கெடுப்பான் என்ற பெரும் நோக்கோடுதாம் பிடிப் புகையிலை விற்ற நாற்பது ரூபாவையும் மகனிடமே கொடுத்துவிட்டார்
தமது வாழ்க்கையையும் மகனுடைய எதிர்காலத் தையும் சிந்தித்தவாறே கீரைப் பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கந்தசாமியின் காதுகளில் "ஐயா. ஐயா. மகிழ்ச்சியான சேதி " என்று மகனுடைய கு ர ல் ஒலித்ததும் நிமிர்ந்து பார்த்தார்; முகத்திலே நிரம்பிய மகிழ்ச்சியோடு இரத்தினம் ஐயா நான் உதவி ஸ்டேசன் மாஸ்டர் பரீட்சையில் சித்தியடைந்து விட்டேன். இனிமேல் கெதியில் வேலைக்குக் கூப்பிட்டு விடுவார்கள். அநே கமாகக் கொழும்புக்குத் தான் விடுவார்கள்" என்று வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போனுன் ,
1.

Page 12
நெல்லை க. பேரன்
கந்தசாமி, மகனது ஆர்வத்தைப் புரிந்து கொண் டார். மகனது திறமைக்காக உள்ளூரப் பெருமைப் பட்டார். ஆனல் அவனுடைய உழைப்பு. அதை நினைக்கும்போதுதான் அவர் பிரச்சினைப்பட்டார்: "அம்மாவுக் குத் தெரியுமா ?" என் று மாத்திரம் கேட்டு வைத்தார், இரத்தினம் தனது மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக உடனே தோட்டத்தைவிட்டுப் போய்விட்டான். ந ன் கு உருண்டு திரண்ட அவனது உடற் கட்டையும் தம் மோடு சேர்ந்து தரையைக் கொத்தும்போது வெகு லாவண்யத்தோடு மண்வெட்டியைப் பிடிக்கும் அவ னது கரங்களையும் பார்த்துப் பெருமூச்சு விட்டார் கந்தசாமி,
வெள்ளைக்காரன் அடிமைப்படுத்திய உத்தியோ கம் என்ற பெயரும் நீட்டுக் குழாய்கள் போன்று காற்சட்டைகள் சப்பாத்துகளைப் போடுகின்ற நாக ரிகப்பேயும் இந்த ஊர் மக்களை எப்படி ஆட்டிப் படைக்கின்றன என்பதனையும் அவர் எண்ணிஞர். தோட்டக் காரர்களுடைய பெண் பிள்ளைகள் தான் இன்று அரசாங்க உத்தியோகத் தர்களை அதிகமாக விரும்புகிறர்கள் என்பதையிட்டு அவர் ஆச்சரியப் பட்டார் தோட்டக்காரன் எவ்வளவு வருமானம் காட்டிஞலும் அவ ன உதாசீனம் செய்துவிட்டுக் கொழும்புக்குப் போய்க் குடித்தனம் செய்து அங்கு கால்பேஸ் கடற்கரை யையும் தெ ஹி வ ளை மிருகக் காட்சிச்சாலையையும் வெள்ளவத்தைக் கடற்கரையை யும் பார்த்துவிடவேண்டும் என்பதிலேதான் அவர்க ளுக்குக் கொள்ளை ஆசை. ம்.காலம் போகிறபோக் கிலே கற்தசாமியால் என்ன செய்யமுடியும்?
உண்மையைச் சொல்லப்போனுல் கந்தசாமிக்கு மகன் கொழும்புக்குப் போகாமல் விட்டால் அவனு
டைய முயற்சிகளுக்குக் கூலியாக மாதம் நூற்றி ஐம்
12

மனப் போக்கு
பது ரூபாவுக்குக்கூட ஊரிலே மிஞ்சும் தோட்டத்தி லும் சரி, வீட்டிலும் சரி, அவனுடைய தேவை அளப் பரியது; அதுவும் இப்போது தினமும் இரவில் பத்து ஜி. சி. ஈ. படிக்கும் பொடியளுக்குத் தமிழ், ஆங்கி லம் என்பன சொல்லிக் கொடுத்து அதில் நூறு ரூபா தனியாக உழைக்கிருன் மொத்தமாக இருநூற்றி யைம்பது ரூபா ஊரோடை வீட்டிலே சாப்பிட்டுக் கொண்டு சுளேயாக உழைக்கிறதை விட்டு விட்டுக் கொழும்புக்குப்போய் மூச்சைப் பிடித்து மாதம் ஒரு எண்பது ரூபா அனுப்புவதில் என்ன பலன் இருக்கப் போகிறது? அப்பிடியில்லையெண்டு தல யாலை நிண்டு சீவிச்சாலும் கொழும் பிலை இந்த ஸ்டேஷன் மாஸ் டர் உத்தியோகத்திலை இருந்துகொண்டு ஒரு நூறு ரூபாவுக்கு மிஞ்சி அனுப்ப முடியாது. அப்ப இந்த ஊராற்றை மோகத்திலை அள்ளுப்பட்டுக் கொழும்பிலை போய் ஏன் உடம்பையும், உழைப்பையும் கெடுத்துக் கொள்ளவேணும் என்பதுதான் கந்தசாமியின் பிடி வாதம் கொழும்பிலை உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது தாயினுடைய தாரக மந்திரம்:
எப்படியோ ஒரு மாத இடைவெளிக்குள் உத்தி யோக அழைப்பு வந்து இரத்தினம் பயணமாகிவிட் டான்கு உள்ளூர விருப்பமில்லாவிட்டாலும் பெற்ற மகன், அதிலும் மூத்தவன் என்ற கோதாவில் கந்த சாமியும் ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு கொடிகாமம் வரை வந்து மகனை ரயிலேற்றி வழிய னுப்பி வைத்தார். அம்மாவுக்குக் கடிதம் போட மறந்துவிடாதே என்பதை மட்டும் சொல்லி வைத் தார். கந்தசாமி மீண்டும் தனியணுகவே தோட்டத் திற்குள் இறங்கிவிட்டார் மாத முடிவில் மணியோ டர் வந்தது. எண்பது ரூபா தான்; புதுவருடப் பிறப் புக் கொண்டாட்டத்திற்காக அட்வான்ஸ் எடுத்து விட்டேன்; சங்கத்தில் சேர்ந்த பணம், வாசிகசாலை விளையாட்டுப் பணம் என்றெல்லாம் கழித்துக்கொண்டு
13

Page 13
நெல்லை க. பேரன்
விட்டார்கள். வெள்ளவத்தையில் அறை எடுத்துக் கட்டிலுக்கு (படுக்கை போட மட்டும்) முப்பத்தி ஐந்து ரூபா வாடகை கொடுக்கிறேன். இப்போது கையில் பத்து ரூபாதான் உள்ளது. அடுத்த சம்பளம் வரை செலவுக்குக் காணுது. எனவே இந்த எண்பதில் இரு பது ரூபாவை மீண்டும் எனக்கு அனுப்பி வைக்கவும்: முதற் சம்பளம் அம்மா பேசுவ என்பதற்காகவே எண்பது ரூபா அனுப்பியுள்ளேன், ஒரு போத்தல் தும்பளை நல்லெண்ணெய்யும் யாரும் வருபவர்களிடம் கொடுத்து அனுப்பவும் என்று கடிதம் வந்தது, இரத் தினத்தின் முத்துமுத்தான எழுத்துக்கள். தங்கை நீலாதான் தகப்பனிடம் வா சித் து க் காட்டினுள்? பெரியண்ணு எனக் குப் பாவாடை சட்டை வாங்கி அனுப்பவில்லை. எனது பள்ளிக்கூடத் தவணைப் பணம் கட்டவேண்டும் என்றெல்லாம் தனது பிரச்சினைகளை உடன் கூற ஆரம்பித்துவிட்டாள்.
* இஞ்சாருங்கோ. அந்த நூறுரூபாச் சீட்டுக்குச் சேரச்சொல்லிக் கதிரவேலன் ஆக்கினைப் பண்ணிச் சேர்ந்தும் போட்டன் தம்பி எவ்வளவு அனுப்பிக் டேக்கு, என்று கேட்டபடியே தாய் அடுக்களையிலி ருந்து வெளியே வந்தாள். " உங்கடை எண்ணங்கள் எடுப்புச் சாய்ப்புகள் சரிவராது பிள்ளை. அவனுக்கு மாதம் இருபது ரூபா அனுப்பவேணுமாம். அதுக்கு ஏதும் வழிசெய் போ. நாங்கள் முந்தியே சொல் லுறது உங்களுக்கு விளங்காது. கொழும்புக்குப்போ எண்டு அனுப்பினியள். இப்ப பட்டுப் பாருங்கோ வன் சீட்டுப் போடவும் சிங்காரிக்கவும் கொழும்புக் காசு வந்து சேராது பிள்ளை; அது போனது போன துதான். என்று விரக்தியாகப் பேசினர்;
கந்தசாமி " இதென்ன நாசங் கட்டிப் போச்
சுது..? தம்பியை நாலு இடத்தாலையும் மாப்பிள்ளை கேட்டு வருகினம்?. என்று நாடியிலை கையை
14

மனப் போக்கு
வைத்த மனைவியிடம், "ஓ! இப்ப கலியாணம் ஒண்டு தான் அவவுக்குக் குறைச்சல்' என்று இடித்துக் கூறி ஞர் கந்தசாமி,
ஒரு வருடம் போய்விட்டது. இரத்தினத்தின் சரீர உழைப்புக் குறைந்ததால் கந்தசாமிக்குத் தோட்ட வருமானத்தில் பெருந்தொகை குறைந்து விட்டது. எதிர்பார்த்த இலாபத்தில் சுமார் ஆயிரத்து எழு நூறு ரூபாய் வரையில் குறைந்து விட்டது. ஒருநாள் குடிலடியில் (புகையிலை காய்ச்சுமிடம்) புகையிலைக்குப் பாணி தோய்த்துக் கொண்டிருக்கும்போது மனைவி பரக்கப்பரக்க ஓடிவந்து, "இஞ்சரப்பா. தம்பி இந்த முறையும் சிங்களச் சோதினை பெயிலாம், சிங்களம் பாசு பண்ணுட்டில் சம்பள உயர்வு வேலை உயர்வு, இடமாற்றம் எதுவுமே இல்லையாம். தம்பி மூண்டு வரியத்திலை பாசு பண்ணுட்டால் வேலையாலே தட்டிப் போடுவாங்களாம்." என்று பிலாக்காைம் வைத்த தைக் கண்டு சினங்கொண்டார். அட ஒமடியப்பாஎன்னேடை தோட்டத்திலை உதவியாக நிண்டிருந் தால் நான் உந்தச் சிங் களம் படிக்கச் சொல்லிக் கேட்டிருப்பனே? உவனுக்கேன் உந்த அடிமை உத்தி யோகம் எண்டு கேட்கிறன்?. பேசாமல் திரும்பி வரச் சொல்லு - இன்னும் நூறு பட்டி தோட்டம் குத்த கைக்கு எடுப்பம், வேணுமெண்டால் அவன் இராசநாயகத் திட்டைச் சொல் லி பிறவுண் அன் கோம்பனியிலை ஒரு உழவு மிசினையும் புதிசாக எடுப் பம். என்னடியப்பா-நான் பேசுறன் நீ மரமாப் போனப்." என்று எரிந்து விழுந்தார். முடக் காட்டுத் துறையனிட்டை மலிவாக நல்ல பங்குனிக் கள்ளுப் போட்டுவிட்டு வந்தபடியால் அவரது கண்களும் சிவந்து குரலிலும் சற்றுக் கார்மேறியிருந்தது:
15

Page 14
நெல்லை க. பேரன்
தாய் மனுஷிக்குப் புருஷன் காரன் சொல்லறது. முந்திச் சொன்னது எதுவுமே விளங்கவில்லை - ஏன் மாசா மாசம் தம்பிக்கு இருபது ரூபாவும் பஞ்சப் படியாக எண்ணெய், மா, முட்டை, புழுக்கொடியல் என்பன அனுப்பிவருகிருளே - அதுகூடப் புரியவே யில்லை. ஆக ஒன்றுமட்டும் புரிகிறது. அது வேறெது வுமில்லை. அன்ருெருநாள் அதிகாலையில் மெயில் வண் டியில் வந்த தம்பி நல்ல மடிப்புக்கலையாத வெள்ளை நீட்டுக் காற்சட்டையும் ச ட்  ைட யு ம் போட்டுக் கொண்டு டக்கு.டக்கு என்று சப்பாத்துக்கள் தாளம் போட்டதை. ஒரு கையில் கறுப்புத் தோல்பையும் மறுகையில் இரண்டு அன்னசிப் பழங்களையும் காவிக் கொண்டு கொடிகாமம் மெயில் பஸ்சிலை வந்து நெல் லியடிச் சந்தியிலை இறங்கித் தேத் தண்ணிக் கடைச் சின்னையா, புத்த கக்கடை பூபாலு, சைக்கிள் கடைச் சந்திரன் சந்தைக்குப்போற தனது சினேகிதப் பெண் டுகள் எல்லோரும் பார்க்கத்தக்கதாக நடந்து வந்து தனது வீட்டுத் தலைவாசலை மிதிச்சு " அம்மா! " என்று சத்தமிட்டுக் கூப்பிட்டானே! அந்தக் காட்சி-ஆம்! அதே காட்சி மட்டும் புரிகிறது. அவளுடைய உட லெங்கும் புள காங்கிதமேற்படுகிறது - தன்னுடைய மகன் உத்தியோகம். அதுவும் கொழும்பில் உத்தி யோகம்.
கந்தசாமிக்குப் பற்றிக்கொண்டு வருகிறது; மனை வியின் போக்கு அவருக்குப் புரியவேயில்லை பாவம் கந்தசாமி.
வீரகேசரி, ஏப்ரல் 68
16

* ஒரு விதமான கதை'
SSqSAqASJASqASASJJSMS ASASASASJAqSASASeSASAeeS ASAeS ASAeSLALS AAALSAAE SAqASLLASASALqAASSSAAS SAAAqAAA SSSSSSASASASAqAASAS
மத்தியானம் சாப்பிட்டுவிட்டு வந்தேன்; வாயில் பீடா வெற்றிலையைப் போட்டுக் குதட்பியவாறே " உண்டகளை தொண்டருக்கும் உண்டு " என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு தளர்நடை போட்டுக் கொண்டு டியூக் வீதியில் நடக்கிறேன்: தபாற்தந்திப் போக்குவரத்துத் தலைமை அலுவலகக் கட்டிடம், கூட்டுறவு வங்கிக் கட்டிடம் "டைம்ஸ் ஒவ் சிலோன்" பத்திரிகாலயக் கட்டிடம் ஆகியன டியூக் வீதியில்தான் இருக்கின்றன. காரியாலய ஊழியர்களின் போக்கு வரத்தைத் தவிரப் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் இ. போ ச; மற்றும் வாகஞதிகளின் போக்குவரத்து இவ் வீதியில் இல்லை புதிய கடல் கடந்த தந்திப் போக்குவரத்துக் காரியாலயத்தின் உயர் மாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்காக உதவி செய்யும் இயந் திரங்களின் கடாமுடன் சத்தமும் பெரிய ருேலர்கள் அசையும் கர்புர்" ஒலியும் அதிர்வும் டியூக் வீதியில் சர்வசாதாரணம்:

Page 15
நெல்லை க. பேரன்
நான் வேலை செய்யும் இடம் டியூக் வீதியோரமாகச் சற்றுப் பள்ளத்தில் தபால் பொதிகள் அனுப்பும் அலுவலகங்களுக்கு அண்மையில் இருக்கிறது. பிரதான வீதியிலிருந்து படிகளில் இறங்கித்தான் எனது காரி யாலயத்துள் நுழைய வேண்டும். படிக்கட்டுகளுக்கு அண்மையில் வீதியோரமாக மாமரங்களும் ஒரு மூலை யாகச் சிவப்பு வர்ணம் பூசிய தபால் பெட்டியும் இருக்கிறது. தபால் பெட்டியின் அருகே மாமரத்தையே கூரையாகக் கொண்டு ஒரு குடும்பம் வாழ்கிறது: நான் போகும்போதும் வரும்போதும் இக் குடும் பத்தை அவதானிக்கத் தவறுவதில்லை. சுமார் முப்பத் தைந்து வயது மதிக்கத்தக்க ஒருத்தி அழுக்கடைத்த உடைகளுடன் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் ஆண்கள் சாரம் உடுத்துவதுபோலத் தன் மார்பில் ஒரு கந்தல் சேலை யைச் சுற்றியிருந்தாள் தெருவிலிருந்து உடைந்து பிளந்துபோன தட்டையான கல்லொன்றைத் தலை யணையாக வைத்துப் படுத் திருந்தாள். அவளருகே குழந்தைகள் இரண்டும், கந்தல் துணிகளின் மீது வளர்த்தி விடப்பட்டிருந்தன. அவளிடம் இன்னுெரு அதிசயத்தை என்னல் காணமுடிந்தது; வாயில் சிக ரெட்டை வைத்துப் புகைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலே பலவிதமான சுருக்கங்கள், வெடிப் புகள், கீறல்கள் எல்லாம் இருந்தன. அவளது வறுமை யின் அறிகுறி என உணர்ந்தேன்;
அவள் அழகாகச் சிகரட்டை வாயில் வைத்துப் புகைப்பது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது. இலங்கையில் பெண்கள் சுருட்டுக் குடிப்பதை அதுவும் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் நேரடியாகக் கண்டி ருக்கிறேன் எனது பாட்டி ஒருத்திகூட நன்ரு கச் சுருட்டுக் குடிப்பாள்; ஆனல் வெளிநாட்டைச் சேர்ந் தவர்கள், உல்லாசப் பிரயாணிகளைத் தவிர மற்றத் தமிழ் அல்லது சிங்களப் பெண்கள் சிகரட் புகைப்பது
18

ஒரு விதமான கதை
அபூர்வம் பக்கத்தில் கட்டிடத்தில் கூலி வேலை செய் யும் யாராவது கொடுத்திருப்பார்கள் என எண்ணி னேன்; அதை உண்மைப்படுத்துவதுபோல அப்போது பக்கத்து வேலைத்தளத்திலிருந்து கூலியொருவன் வந்து அவளருகே அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான்; பிறகு அவளது வாயிலிருந்த சிகரட்டை வாங்கித் தன்னுடைய தைப் பற்ற வைத் தான். பிறகு அவள் அவனுடன் ஏதோ கதைத்துச் சிரித்தபடியே அவனது சட்டைப் பொக்கற்றிலிருந்து இன்னெரு சிகரட்டை எடுத்து வெகு லாவகமாகப் பற்ற வைத்து அவனது முகத்திற்கு நேரே ஊதிக்காட்டினுள் இருவரும் களுக் களுக்கென்று சிரித்தனர். ஒருவேளை இவன்தான் அவ ளது கணவனுக இருக்குமோ என்று யோசித்தேன்; அப்படியென்ருல் இவர்களுக்கென்று ஒரு சிறிய சேரி வீ டா வது கிடைக்காமலா போயிருக்கும். இவள் நீண்டகாலமாக இந்த மாமரத்த டியே தஞ்சமென்று படுத் திருக்கிருள். மழை நாட்களில் என்ன செய் வாளோ தெரியாது, அருகிலுள்ள அரசாங்கக் கட்டி டங்களின் கீழ் எங்காவது ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொள்வாள் என நினைத்தேன். அவளது தோற்றம் வறுமையின் வாட்டத்தை உணர்த்தினுலும் உடற் கட்டு இன்னும் நன்ருகத்தான் இருந்தது. இவள் ஒழுக்கத்தை விலைபேசி வாழ்ட வளாக இருக்குமோ என எண்ணினேன். யாராவது பணம் கொடுப்பவர் களுடன் ச ரசம் பேசுவா ள் , பிறகு எங்காவது ஒதுக் கிடத்திற்கு அவளை க் சு. ட் டி ப் போ வார்கள், இரவில் ஒதுக்கிடம் தேடாமல் அந்த மாப ரத்தின் கீழேயே தன் வியாபாரத்தை முடித் துக் சொள் வாளோ என் றெல்லாம் என் சிந்தனை ஓடியது.
எட அவள் யாராக இருந்தாலென்ன ! எனக்கேன் அவளைப் பற்றிய கவலை? நானுண்டு என் வேலையுண்டு என்று பேசாமலிருக்க முடியாதா? முடியவே முடி யாது. நான் கதை எழுது டவன், கதைக் குக் " கரு "
19

Page 16
நெல்லை க. பேரன்
இல்லாமல் தெருத்தெருவாக அலைகிறேன். எனது காரியாலயத்திற்கு அருகே இப்படியான ஒரு "கரு அருமையாகக் கிடைத் திருக்கும்போது அதைத் தவற விடலாமா? விடக்கூடாது. ஒரே மூச்சில் எழுதி முடித் து விட வேண்டும் என்று இன்று மேசையின் முன்னுல் உட்கார்ந்துவிட்டேன் தினசரி நான் காணுகின்ற இக் காட்சி கதைக் குரிய " கரு " தானு என்று முதலில் யோசித்தேன் அருமையான " கரு " என்று என் எழுத்தாள மனம் இடித்து வைத்தது. (இப்போது சமுதாயப் பிரச்சினைகளை மையமாக வைத்துக் கதை எழுதுவதுதான் பாஷன்) ஏழைகளையும், உழைப்பா ளிகளையும், பிச்சைக்காரர்களையும், அனுதைகளையும், தாசிகளையும் வைத்துக் கதை எழுதாவிட்டால் அவன் பூரணமான எழுத்தாளனே அல்ல என்று யாரோ எழுத்தாளர் சந்திப்பொன்றில் சொன்ன கருத்துக்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. (என் இரண்டரை ரூபா * சியல் " பேணு விரைவாக அசைகிறது.)
மாமரத்தடியில் ப டு த் தி ரு க் கும் இவள் ஒரு அனுதை பிள்ளைகள் இரண்டு. தகப்பன் பெயர் தெரி யாமல் பிறந்தவர்களாக இருக்கலாம். இருக்கலா மென்ன? அப்படித்தான். அடிக்கடி கண்ட கூலிகளு டனும் சரசம் விளையாடுகிருள். சரசத்திற்கு ஆசைப் பட்ட எல்லோரும் அவளுக்குக் கணவர்கள் தான். கந்தல் உடைவேறு; கதைக்குரிய அருமையான பின் னணிகளுடன் வாழ்கிருள். இவளைவிட வேறுயார் என் கதைக் குக் கதாநாயகியாக முடியும் எல்லாவற்றிற் கும் மேலாக இன்றைய சமுதாயத்தில் இவளும் இவ ளைப் போன்றவர்களும் மகா மகா பிரச்சினைகள் அல் லவா!
சரி இவளை வைத்துக் கதையை ஆரம்பித்தால் இவள் ஏன் இப்படி ஆனுள் என்று ஆராய்ந்து பிறகு அதற்கு ஒரு முடிவும் எழுதவேண்டுமே! என் மூளை
20

ஒரு விதமான கதை
குழம்பியது. கதையை முடிக்க முடியாது போலிருக் கிறதே. "முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்" என்ருல் என்ன? சீ! அது ஒரு எழுத்தாளனுக்கு மதிப் பில்லை. நோயையும் சொல்லி மருந்தையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவனுல் சமுதாயத்திற்கு என்ன பயன்? சரி. இவளையும் பிள்ளைகளையும் முனி சிப்பல் லொறியில் ஏற்றிக் கொண்டுபோய் அனுதை கள் இல்லத்தில் சேர்ப்போமா? அதனுல் இவளுடைய பிரச்சினை தீர்ந்து விடுமா? நாளைக்கு மாமரத்தடியில் இன்னெருத்தி வந்து " காம்ப் " போட்டு விடுவாள். இவளைப் போன்றவர்களை ஒழிக்க வேண்டுமானல் இப் படியான நிலைமை இவர்களுக்கு உருவாகாத சமுதா யம் தேவை என்றுதான் எழுத வேண்டும். வறுமை தானே இவளை இந்த நிலைக்கு ஆக்கியது? புருஷன் இருந்து இறந்திருந்தாலும்கூடப் பணம் இருந்திருந் தால் இப்படி நடுத்தெருவுக்கு வந்திருக்க மாட்டாள் உண்பதற்கு எதுவும் இல்லாததால் யாசிக்க வேண்டி மாமரத்தடிக்கு வந்திருப்பாள்: நடுத்தெருவுக்கு வர முன்னர் எங்காவது தனியாகவோ அல்லது கூட்டா கவோ “ விலை மாதாக " இருந்திருப்பாள் அப்போது நல்ல உழைப்பு இருந்திருக்கும் பிறகு பிறகு தேவை யும் மதிப்பும் குறைந்து பாதையோரத்திற்கு வந்தி ருக்கிருள். அ ல் ல து பெரிய ஹோட்டல்களுக்கும் பெரிய இடங்களுக்கெல்லாம் போகக்கூடிய வசதியும் திறமையும் அறிவும் நுட்பமும் அவளிடம் இல்லாமல் இருக்கலாம்:
ஓ. இப்போது அவளைச் சல்லடை போட்டதில் என்ன பலன்? அவள் எப்படியோ இப்படி ஆகிவிட் டாள். இனி அவளைத் திருத்த வேண்டும்; அவள் வாழ்க்கையை வளம்பெறச் செய்யவேண்டும். அவ ளைப்போல மற்றப் பெண்களும் மாருமல் இருப்பதற்கு வழி செய்யவேண்டும். இவ்வளவையும் எனது கதைக் குள் கொண்டுவந்து புகுத் தி எப்படியாவது வாசகர்
21

Page 17
நெல்ல க. பேரன்
களிடம் " சபாஷ் ” வாங்கி ஒரு " சித்தாந்த எழுத் தாளஞகி " விடவேண்டும் என்ற எண் ணம் என்னி டையே வலுக்கிறது. சித்தாந்தம் என்றதும் எந்தச் சித்தாந்தத்தில் இவளது வாழ்க்கை அடங்குகிறது என்று யோசித்தேன். மாக்சிச சித்தாந்தம் தான். மாக்ஸ் தானே ஏழைகளைப் பற்றியும் தொழிலாளர் களைப் பற்றியும் சொல்லியிருக்கிருர்! வர்க்கங்களின் வேறுபாட்டை அவர் தானே உணர்த்தியிருக்கிருர், ஆகவே அவருடைய சித்தாந்தத்தைப் பின்பற்றி இவ ளுடைய கதையை எழுதவேண்டும். நிலமானிய சமு தாய அமைப்பில் அகப்பட்டு உழன்று கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தினளாக இவளைப் படைத்தால் தான் நடுத் தெருவுக்கு இவளைக் கொண்டு வந்து நிறுத்த முடியும். இப்போ திருக்கிறதும் நில மானிய சமூக அமைப்புத் தானே! அது இன்னும் மாறிவிடவில்லேயே
அதற்காகத்தான் இவளைப்பற்றி எழுதி ஒரு முடிவு காணவேண்டும்;
வர்க்கங்கள் ஆளுமை கொண்ட சமுதாயத்தில் வறுமையை ஒழிக்க முடியாது. பணக்காரன் இருக் கும் வரைக்கும் ஏழைகள் இருந்து தானே ஆக வேண் டும். எல்லோருமே பணக்காரராக மாறிவிட்டால் . அது எப்படி முடியும் ? உள்ள வனிடமிருந்து இல் லா தவனுக்குப் பறித்துக் கொடுப்பதா ?
அப்படித் தேவையில்லை பணம் கொழிக்கும் ஸ்தாபனங்களையும் , முதலாளிகளின் சொத்துடமைக ளையும் அரசாங்கம் தேசிய மயமாக்கித் தனது அதிகா ரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இது நடக்கக் கூடிய காரியமா? அரசாங் சத்தில் மந்திரிகளாக இருப் பவர்களிடமே பெரிய தோட்டங்களும், ஆலைகளும் , வியாபார ஸ்தாபனங்களும் இருக்கின்றனவே அவர் களே இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்
22

ஒரு விதமான கதை
இடையில் என் கதையின் கருவுக்கு ஓடி வருகி றேன். தேசிய வுடைமைக்கும், வர்க்க முரண்பாட்டிற் கும் என் மாமரத்தடிக் கதாநாயகிக்கும் என்ன சம் பந்தம் ? அவளின் வாழ்க்கையை எப்படிச் சீராக்க லாம்? மறுபடியும் என் சிந்தனை தீவிரமடைகிறது.
வசதிகுறைந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் கற்பை விற்பதற்குப் பணம்தான் முக்கிய காரணம் , வசதியடைந்தவர்கள்தான் பொழுது போக்காகவும், காம இன்பத்திற்கும் ஒழுக்கத்தை மீறுவார்கள், சில உயர்தரக் குடும்பங்களில் ஒழுக் கத்தை மீறி நடப்பதுதான் நாகரிகமாக்கப்பட்டுள் ளது. ஆனல் கிராமங்களில் வாழ்ந்து, கஷ்டங்களில் உ ழ ன் று மற்றவர்களால் ஏமாற்றப்பட்டவர்களும் திட்டமிட்டுக் கெடுக்கப்பட்டவர்களுமே அனேகமான நடைபாதைப் பிச்சைக்காரர்களாகவும் விபசாரிகளா கவும் மாறிவருவதை எ ன் னு ல் காணமுடிகிறது: ஆணுல் மாமரத்தடியில் படுத்துறங்கும் அந்தப் பெண் ணைப் பொறுத்த வரையில் அவளிடம் நல்ல உடற் கட்டு இருந்தது. உழைக்கக்கூடிய ஆற்றலும் இருந் தது. அவள் விரும்பினுல் ஒருவேளை அருகிலுள்ள வேலைத் தளத்தில் மண் சுமக்கும் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம். ஆனல் அவளுக்கு அது விருப் பமாகவோ அல்லது அவசியமாகவோ படவில்லைப் போலும், அங்கு வேலை செய்யும் கூலிகளே அவளுக்கு உதவியாக இருக்கும்போது கூலிவேலை செய்வதைப் பற்றி அவளுக்கென்ன கவலை? எப்படியோ எந்தவித மான சுகாதார சீருமில்லாமல் பிள்ளைகளையும் வளர்த் துத் தானும் வாழ்ந்து வருகிருள்,
என்னைப் பொறுத்தவரையில் இவளை ஒரு இலங்கை ஹிப்பி என்பேன். ஆனல் வெளிநாட்டுக் ஹிப்பிகளுக் கும் இவளுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் ஊர் ஊராக உலாவி எதையாவது யாசித்து உண்கிருர்கள்?
23

Page 18
நெல்லை க. பேரன்
இவள் மாமரத்தடியிலேயே படுத்துவிடுகிருள் அவர் களும் இவளைப் போலத்தான் குளிப்பதிலோ முழுகு வதிலோ கவனஞ் செலுத்துவதில்லை, வீதியோரங்க ளிலும் நிழல்களிலும் படுத்து உறங்குவார்கள். பண் பாட்டை மறந்து காம சேஷ்டைகளில் ஈடுபடுவார் கள் அத்தகைய ஹிப்பிகளை அமெரிக்கா தான் உற் பத்தி செய்கிறது என்கிருர்கள் அப்படியானல் கொழும்பு நகரத்துக் ஹிப்பிகளையும் இலங்கைதான் உற்பத்தி செய்கிறது என்று சொல்லலாமா ? அப்ட டிச் சொன்னுல் அமெரிக்காவும் இலங்கையும் சில போக்குகளில் ஒன்றுபடுகின்றனவா?
ஒ. சிறுகதைக்குள் அரசியல் கலக்க விடுகிறேன் போலும். சரி. ஓட்டத்தைத் திருப்புவோம் வர்க் கங்களைப் பற்றிப் பேசினல். அது மட்டும் அரசி யல் இல்லையா? " அரிசி முதற்கொண்டு அடுப்படி வரைக்கும் அரசியல் தான் " என்று யாரோ நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது; அப்படியாளுல் சிறு கதையிலும் அரசியல் கலக்கலாம். ஓம் அது கலையம்சத்தோடு கலக்க வேண்டும்.
கலேயம்சம் என்ருல்.
பசித்திருக்கும் தொழிலாளியையும் வரி ண னை யோடு எழுதவேண்டும் " அதாவது நாரை போலச் சவண்டு கொக்குக் கழுத்துப்போல மெலிந்து வாடிய ருேஜா போலச் சோர்ந்து இருந்தான். " என்று எழுதினல் அது கலையம் சமா?
தலையைக் குடைகிறேன். கட வுளே! இந்தக் கதையை முடிக்க உதவி செய்ய மாட்டீரா கடவுள் என்ன எழுத்தாளரா? ஒ. அவர் தானே என்னையும் படைத்திருக்கிருர் என் படைப்டை யும் ப  ைட க் கின்ருர்:
24

ஒரு விதமான கதை
ஓ. எல்லாத்துக்கும் முதல் கடவுள் இருக்கிருரோ! எனக்குள்ளே கேட்டுக் கொள்கிறேன்; அவர் இருந் நீால் ஏன் வறிய மக்களைப் படைக்க வேண்டும்? எல் லோரையும் பணக்காரர்கள் ஆக்கிவிடலாமே. கட வுள் முட்டாளாக இருப்பாரோ?. இல்லை. அவர் புத்திசாலிதான். ஒரு முட்டாள் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது;
அப்படியாஞல் வறுமையை ஏன் படைக்க வேண் (ᎶᎥᎨ ?
என்னைப் போன்றவர்கள் கதை எழுதுவதற்காகப் படைத் திருக்கலாம்.
என்ன பகிடியாக் கிடக்கோ. ? என் மனம் இடித்துரைத்தது மீண்டும் ஒரு தடவை நான் கதை எழுதப் புகுந்தவளைப் பற்றிச் சிந்தித்துவிட்டு இப் போதைக்கு இவளைப் போன்ற சோம்பேறிகளையும் சோரம் போனவர்களையும் அரசாங்கம் தனது பாது காப்பின் கீழ் பொருத்தமான வேலைகளைக் கொடுத்து வாழ வைக்க வேண்டும், இவர்களுடைய தகப்பன் பெயர் தெரியாத குழந்தைகளையும் தகுந்த பாட சாலைகளில் படிக்க வைத்து ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இனிமேல் இவளைப் போன் றவர்கள் தோன் ரும லிருக்க என்ன வழி என்றும் சொல்லிவிட்டால் கதை ஓரளவு முடிந்த மாதிரித் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
வெகு விரைவில் கதை முடியப்போகிறதே என்று நிம்மதி:
எல்லாரையும் உள்ளவர்களாக்கும் சமத்துவ சமு தாயம் எப்படித் தோன்றப் போகிறது? இப்போ துள்ள மேல்தட்டு (பிரபுத்துவ) வர்க்கம், நடுத்தர மத்தியதர வர்க்கம், பாட்டாளி, தொழிலாளி, விவ
25

Page 19
நெல்லை க. பேரன்
சாயிகள் வர்க்கம் ஆகிய மூன்று பிரிவினரும் இதில் சம்பந்தப்பட வேண்டும். நடுத்தர மத்தியதர வர்க் கத்தினர்தான் கீழே வரவும் முடியாமல் ( போலிக் கெளரவங்களும் பிறவும்) மேலே போகவும் முடியா ல் நசிந்து கஷ்டப்பட்டு வாழ்கிருர்கள். இவர்கள் கீழ்த் தட்டுப் பாட்டாளி, தொழிலாளி, விவசாயி வர்க் கத்துடன் இணைந்து மேல்தட்டு வர்க்கத்திற்கு எதி சாகப் போராட வேண்டும் அப்போதுதான் உண்மை யான போராட்டம் உருவாகி மக்கள் கையில் அதி காரத்தைக் கைப்பற்ற முடியும். இந்த நாட்டின் பெரும்பான்மை தொழிலாள விவசாயிகளை மிகச் சிறு ாேன்மையினரான பணக்காரர்களும், முதலாளிகளும் ஆளுகிறர்கள். பதவிகளுக்கு மதிப்பும் கெளரவமும் உள்ளவரை எந்த அரசாங்கம் வந்தாலும் மாறிமாறி இதே கதை தான். மக்கள் அதிகாரத்தைக் கைப்பற் றும் வரையும் மக்களுக்கு விடிவோ விமோசனமோ கிடையாது.
மக்கள் அதிகாரத்தைக் கைப் பற்றிய வுடன் அடிமைநிலையும் பிச்சைக்காரர்களும் விபச் சாரிகளும் குறைந்து இல்லாமல் போய்விடுவார்களா மாமரத் தடி வாழ்க்கை ஒழிக்கப்படுமா? மக்கள் ஆட்சியில் அதிகாரத்திலிருப்பவர்கள் பிறகு ஒரு புதிய வர்க்க மாக மாறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
இப்படியே கேள்விகளை அடுக்கிக் கொண்டுபோ ஞல் கதையை முடிக்க முடியாது போலிருக்கிறதே கதையில் கடைசிப் பகுதி ஒரே பிரச்சாரமாக இருக் கிறதோ. கதை பிரச்சாரம் செய்யலாம்: ஆனல் அதிலும் கலையம்சம் இருக்க வேண்டும்:
ஒ. இந்தக் " sà) u bab "
அது எல்லாவற்றையும் கெடு க் கிற து ஒரு கருத்தை உடனடியாகச் சொல்லிவிடாது உணரவும்
26

ஒரு விதமான கதை
விடாது கொஞ்சம் கடத்தித்தான் விடுமோ. தொழி லாள, விவசாயிகளின் அரசாங்கத்தில் அவர்களின் உண்மையான, விசுவாசமான உழைக்கும் பிரதிநிதி கள் தான் அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக பூர் ஷ்வா வர்க்க மேல்தட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவர்கள் அல்லர். அ த ன ல் மக்களின் தேவை சளையும் பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு நேர்மையாகவும், ஆணித்தரமாகவும் அவர் க ள் செயற்பட்டு உண்மையான சமத்துவத்தையும் சகோ தரத்துவத்தையும் முழு நாட்டிற்கும் பொருளாதார வலுவையும் ஏற்படுத்துவர் ;
AD ES ...... பிறகு?
ஏழைகளும் பணத்திற்காகத் திருடுபவர்களும் பொருளுக்காக விபசாரம் செய்பவர்களும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் இன்பமாக வாழ்வார் & sit...
ஒரு கேள்வி. என்னது? மூளை குடைகிறது
புரட்சிகர சமுதாயத்தில் யாராவது பொழுது போக்கவும், இன் பத்திற்காகவும் திருடியும் காமவேட் டையும் செய்தால்.
அந்த அமைப்பில் அப்படிச் செய்யக்கூடிய சந் தர்ப்பம் இருக்காது. எல்லோரும் கட்டாயமாக வேலே செய்யவேண்டியிருக்கும். வெறுமனே சதை வளர்ப்ப வர்களும், வட்டிப் பணத்தில் உழைப்பவர்களும் இருக்க மாட்டார்கள். உண்மையான தேசீய உணர் வும், ஒற்றுமையும் மனிதாபிமானமும் பண்பாடும் இருக்குமே தவிர வேறு பிரச்சினைகளுக்கு இடமிருக் காது;
27

Page 20
நெல்லை க. பேரன்
Fuors?
ßé Fautoms
சரி அப்படியானுல் அந்த சமுதாய அமைப்பு வரட்டும்
sa ... ... SY 5 år 10 S....."
பிறகு;
கதை எழுதக் கருவே கிடைக்காதோ.
ஓம். அதுவும் நல்லதுதான்
சரி; இத்துடன் என் கதை முடிகிறது. இனிமேல் உங்கள் விமர்சனத்தைச் சொல்லலாம்.
( 1971 )

சத்தியங்கள் திரளும்போது.
SAS AAASASAAAAS AeASkSASMSAqALAMSeAqASA AeAMSeSMLSSLAqeSeMAMMALSMeAeAeSA AeMAAA AAAA SAAAqAASS AAASS AeqeSeSLSASSASS AeSeSLALASSAeAeASSLSASeSeSLSLL LSAeSLSLASLS ASeAAeeLeAAeAeqAekeqAqeAS MALSAeS
* கல்ப் சிமென்ற் ஷிப்பிங் லைனர் " என்ற அந் தப் பாரிய நீலநிறக் கப்பலின் மேல்தளத்தில் கம்பி யைப் பிடித்துக்கொண்டு ஆழமான கருநீலக் கடலில் தொங்கி விளையாடும் " டொ ல் பின் " மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அன்ரன் கடலில் கரை தெரியாமல் தத்தளிக்கும் மனிதர்களேத் தன் முதுகில் சுமந்து கரைக்குக் கொண்டு வரும் பாது காவலன் என்பதால் கடலோடிகளுக்கு "டொல் பின்" மீது தனி மரியாதை. கப்பலில் வேலைக்குச் சேர முன் னர் தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் " டொல் பின் " களின் பந்து விளையாட்டையும் பாய்ச்சல்களை யும் பார்த்த அன்ரனுக்கு இங்கே குவைத் கடலில் கண்களுக்கு முன்னுல் நூற்றுக்கணக்காகக் குதித்தும் நீந்தியும் ஒடும் " டொல்பின் " களைக் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

Page 21
நெல்லை க. பேரன்
இந்தக் கிழமை கப்பலில் நைட் ஷிவ்ற் மெக்கா னிக்காக அன்ரன் கடமையாற்றினன்; நைட் ஷிவ்ற் எஞ்சினியராக வெள்ளைக்கார எஞ்சினியர் கீத் வேலை செய்தான். கீத் என்ருல் இலங்கைத் தொழிலாளர் களுக்கு ஒரே அருவருப்பு. அவனை நேரில் கண்டால் பயப்படுவார்கள். யானை மாதிரிப் பெரிய தோற்றம்3 * கவ்போய் * தொப்பியும் சுருட்டுமாக நித் தி  ைர கொள்ளாமல் அலைந்து கொண்டிருப்பான். தொழி லாளர்களை எப்போதும் ஆங்கிலத்தில் தூஷித்துக் கொண்டே வேலை வாங்குவான். துறை முக த் தி ல் கொட்டுண்ட சீமெந்தைக் கூட்டி இரு கைகளாலும் அள்ளிக் கடதாசிப் பைகளில் போடும் படி உத்தர விட்டுக்கொண்டு முன்னுல் வந்து நிற்பான். அவன் சொல்வதைச் செய்யாவிட்டால் மறுநாள் கப்டனி டம் சொல்லிச் சம்பளத்தை வெட்டிவிடுவான். எஞ் சினியர் மாரை எதிர்த்துக் கதைத்தால் மறுநாளே கொம்பனியில் ரிக்கற் கொடுத்து ஊருக்கு அனுப்பி விடுவார்கள். பிறகு ஏஜண்டுமாருக்குக் கொடுத்த இருபத்தையாயிரத்தையும் எப்படிச் சம்பாதிப்பது?
எஞ்சினியர் கீத்தை மடக்குவதில் அன்ரன் கெட் டிக்காரன். எப்படியாவது பக்கத்துக் " கிறீக் கப்பல் களில் போய் இலங்கைப் பொடியன்களுடன் சினே கிதம் செய்து கொண்டு இரண்டு அல்லது மூன்று டொலர்களுக்கு விஸ்கிப் போத்தலை வாங்கி வருவான். சிலர் பியர் ரின்களையும் சு ம் மா கொடுப்பார்கள். இரண்டையும் மாறி மாறிக் குடிக்கும்படி கீத்திடம் கொடுப்பான். சாமம் பன்னிரண்டு மணியளவில் கீத் கப்பலின் எங்காவது ஒர் மூலையில் போய் மயங்கிப் படுத்து விட்டால் மறு நாள் அதிகாலை ஐந்து மணிக் குத்தான் எழும்புவான்.
இன்றைக்கும் த்ேதை நித்திரை கொள்ள வைத்து விட்டுத்தான் அன்ரன் மற்ற நண்பர்களுடன் தனது
30

சத்தியங்கள் திரளும்போது
திட்டம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். நீலக் கடலில் மிதந்த முழுநிலவு அவன் யோசனைக்கு இத மாக இருந்தது;
அன்ரனுக்கு உதவியாக " கொன்ருேல் றும் ஒப் பரேட்டர் " சிவபாலன் இருந்தான். இருவரும் இலங் கையிலேயே ஆப்த நண்பர்கள். சிவபாலன் நாவலப் பிட்டியில் தேயிலைத் தோட்டமொன்றின் தொழிற் சாலையில் போர்மஞகக் கடமையாற்றியவன். பல  ெதாழிற் சங்கப் போராட்டங்களில் முன் ፴6ör ዐ! உழைத்தவன். குவைத்தில் தொழிலாளர்கள் மத்தி யில் தொழிற்சங்கம், உரிமைக் குரல், போராட்டம் அது இது என்று ஒன்றுமே கிடையாது. சங்கம் ஆரம் பிக்கிருர்கள் என்ற விடயம் முதலாளிக்கு மணந்தாலே போதும் , மறுநாளே டிக்கட் கொடுத்து *டிப்போட்" பண்ணி விடுவார்கள். சில முதலாளிகள் ஏதாவது குற்றச் சாட்டுகளைச் சுமத்திப் பொலீசில் பிடித்துக் கொடுத்து விடுவார்கள்
தாங்கள் வேலைக் குச் சேர்ந்து இரண்டு வருடங் களுக்கு மேலாகியும் சம்பள உயர்வு கொடுக்காமலும் லீவில் ஊருக்குப் போக விடாமலும் நிர்வாகம் அடக்கி வைத் திருப்பதற்கு எதிராகப் பல தடவைகள் குரல் எழுப்பியும் முதலாளி எதையும் செவி சாய்க்கவில்லை. எல்லாமாக எழுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலை செய்யும் அக்கம்பனியில் எவ்வளவோ பிரச் சினைகள். சிலருக்கு குளிர் காலத்திற்கான போர்வைக ளும், மெத்தைகளும், ஹீட்டர்களும் வழங்கப்பட வில்லை. விடுதியில் குடி க் கும் தண்ணீருக்குக்கூடப் பணம் சம்பளத்தில் வெட்டப்பட்டது; மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை தான் சம் பளம் கொடுக்கப்பட்டது எல்லா முதலாளிகளும் இப்படி என்றில்லை. ஆனல் அன்ரனுக்கு இப்படியாகி விட்டது. போன வருடம் மே தினத்திற்கு லீவு கேட்டுக்
3.

Page 22
நெல்லை க. பேரன்
கொடுக்காதபோது வேலைக்குப் போகாமல் நி ன் ற குற்றத்திற்காக மூன்று பேருக்கு டிக்கட் கொடுக்கப் பட்டது. இந்த மூவரில் ஒருவன் எயர்போட்டில் வைத்து வேறு எங்கோ கொம்பனிக்கு ஓடிவிட்டான்: இ ன் ஞெ ரு ஞாயிற்றுக்கிழமை அன்ரன் நகரத்தில் உள்ள சேர்ச்சிற்குத் தன் காதலியைப் பார்க்கப் போய்விட்டான் என்று கப்டனிடம் யாரோ கோள் மூட்டி அதற்காக ஒருவாரம் சம்பளம் வெட்டப்பட்டு ஓவர்டைம் வேலையும் மறுக்கப்பட்டது. அப்போது நல்ல பனிக்காலம். முகத்தில் வழியும் பணிக்கட்டிகளை விரல்களால் வழித்துக்கொண்டே விறைக்க விறைக்க வேலை செய்தும் சம்பளம் இல்லையென்ருல், யார் தான் பொறுப்பார்கள்?
இரவு நேரங்களில் கப்பலின் மேல் தளத்தில் சக தொழிலாளர்களுடன் அன்ரன் சம்பாஷித்து வந்தான் பிரச்சினைகளை விவாதித்து இந்த வருடம் மே தினத் தன்று எவருமே வேலை செய்யக்கூடாது என்று தீர் மானிக்க வைத்தான். நிர்வாகத்திற்குப் பயந்தவர்க ளையும் தன் வார்த்தைகளால் திருப்பி விட்டான் எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளைக்கார எஞ்சினியர் கீத் நாயைவிடக் கேவலமாகத் தங்களை நடத்துவது தான் அவனுக்கு ஆத்திரமாக இருந்தது: யாழ்ப்பா ணத்தில் சாதித்திமிர் பிடித்துத் தடிப்புக் கதைகள் பேசித்திரிந்த பல இளைஞர்களை இங்கே கீத் வாயில் வத்தபடி தூஷணத்தால் பேசிப் பிழியப் பிழிய வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய ஆங்கிலத் தில் சொல்வதானல் " ..பிறந்த கறுப்பு நாய்களே " என்று தான் ஆரம்பிப்பான் இப்போதும் ஊரில் சாதிப்பாகுபாடு காண்பிக்கும் இளைஞர்களை ஒரு கப் பலில் ஏற்றி இங்கே கொண்டுவந்து இந்த வெள்ளைக் காரன் முன்னுல் விட்டால் கட்டாயம் திருந்திவிடு வார்கள் என்று சிவபாலன் அடிக்கடி சொல்லுவான். நிர்வாகத்தின் பாராமுகமும் எஞ்சினியர் மீ தா ன
32

சத்தியங்கள் திரளும்போது
வெறுப்பும் பல்வேறு பிரச்சினைகளுமாகச் சேர்ந்து எல்லாத் தொழிலாளர்களையும் ஒன்றுபட வைத்து விட்டது.
இரவு விடிந்தால் அன்ரனின் திட்டம் பூர்த்தியாகி விடும். விடிய ஆறு மணிக்கு அபுதாபி “ராசல் கைமா" என்ற துறைமுகத்திலிருந்து " டான் " கப்பல் அறுப தாயிரம் தொன் சீமெந்தை ஏற்றிக்கொண்டு குவைத் வருகிறது; அன்ரன் வேலை செய்யும் கப்பலில் இருந்து சீமேந்து வெளியே பக்கற் செய்து போளுல்தான் வரு கின்ற பொருளை ஏற்பதற்கு இடமிருக்கும். இல்லா விட்டால் நாளை மேதினம் முடிய மற்ற இரண்டு நாட்களும் இஸ்லாமிய விடுமுறை நாட்களாகும். மே தினம் குவைத்தில் வேலை நாளாகும். அன்றைக்கு எல்லோரும் வேலை செய்யாவிட்டால் " டான் " கப் பலைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் துறைமுகத் தில் காக்க வைக்க முடியும். இதனுல் முதலாளிக்குச் சுமார் எட்டு லட்சம் குவைத் டிஞர்கள் நஷ்டமாகும்.
முதலாளி இந்த நஷ்டத்தை விரும்பமாட்டார். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் இதுதான் திட்டம்.
விடிய ஐந்தரை மணிக்கே " பூம்பூம்" என்று சம் கூதிக்கொண்டே " டான் " கப்பல் " கல்ப் ஷிப்பிங் கலனரை " அண்மித்தது. பகல் ஷிப்ற் தொழிலாளர் கள் எவருமே வேலைக்கு வரவில்லை; நைட் ஷிப்ட் தொழிலாளர்களும் வேலை செய்ய மறுத்துவிட்டார் கள். வயலர்ஸ் மூலம் தகவல் கொம்பனி முதலாளிக் குத் தெரிவிக்கப்பட்டது. ஈராக்கில் இருந்து சீமெந்து வாங்க வந்த ஐநூறுக்கும் அதிகமான ட்ரக்குகள் வெறுமனே நிறுத்தப்பட்டிருந்தன. அரை மணித்தி யாலத்தில் முதலாளி ஓடி வந்தார். எ ஞ் சி னி ய ர் மாரைக் கூப்பிட்டு மாநாடு வைத்தார். அன்று வேலை
33

Page 23
நெல்லை க. பேரன்
செய்பவர்களுக்கு "டபிள் ஒவர் ரைம்" தருவதாயும், எக்ஸ்ராவாக ஒரு " கேஸ் பியர் " ( அதாவது 24 டின்கள் ) தருவதாயும் கேட்டுப் பார்த்தார் ஒருவ ரும் அசையவில்லை; பொலிசைக் கூப்பிடுவேன், டிக் கட் தந்து எல்லோரையும் அனுப்புவேன் எ ன் று வெருட்டினர். இலங்கையில் இல்லாத ஒற்றுமையை அந்நிய தேசத்தில் எல்லோரும் இன, மத பேதமின்றி நிலைநாட்டினர்கள். இறுதியாக முதலாளி வழிக்கு வந்தார். எல்லோருடைய கோரிக் கைப்படியும் நிற வெறியும் கொடூரமும் கொண்ட கீத் எஞ்சினியர் வெளியேற்றப்பட்டார் சம்பளம் கூட்டப்பட்டது. பல வசதிகளும் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத லீவு வழங்கப்பட்டது. " மே தினம் " கொண் டாடாத நாட்டில் * தொழிலாளர் ஐக்கியம் * நில் நாட்டப்பட்டது. " டான் " கப்பல் மீண்டும் ஓடியது:
ஈழமுரசு, மே 1985
34

சினிமாவுக்குப் போகிருர்க
SASASeLASAeqeSMAASSLAJSLSLSASSeMMSLSLAAeMAeeSLAeLASeMAeAMMLM qAeAeSM AMeS AAAA
سیسیی
படம் ஆரம்பமாவதற்கு இன்னும் கொஞ்ச நேரந் தான் இருந்தது முதலாம் வகுப்பில் அமர்ந்திருந்த சிவகுமாரின் கண்கள் தனக்குப் பக்கத்துச் சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணையே நோக்கிக்கொண் டிருந்தன. வைத்த கண் வாங்காமல் அவளை அப்படியே விழுங்கி விடுவதுபோலப் பார்த்து ரசித்துக் கொன் டிருந்தான். அவனது நீண்டநேரப் பார்வையின் நேர டித் தாக்கத்தைச் ச கித் துக் கொள்ள முடியாமல் வசந்தி பெரிதும் சங்கடப்பட்டாள். அவளுக்கு ஏதோ முள்ளின் மேல் இரு ப் பது போன்றதோர் அத்தர உணர்வுதான் ஏற்பட்டது. " சே! இப்படியும் ஒரு ஆண்பிள்ளையா? ஆளையே விழுங்கிவிடுவான் போலிருக் கிறதே ' என்று எண்ணி வெறுப்போடு முகத்தைச் சுழித்து மறுபுறம் திருப் பிக் கொண்டாள் பக்கத்தில் தோழி கமலாவோடு மெதுவாகப் பேச்சுக்கொடுத்து
35

Page 24
நெல்லை க. பேரன்
நிலைமையைச் சமாளிக்க முயன்ருள். ' சே என்னடி கமலி! பெண்களைக் காணுதவன் போலல்லவா முறைத் துப் பார்க்கிருன். நல்ல காலம், இவன் மாத்திரம் விசுவாமித்திரனுக இல்லையே." என்று சொல்லிக் கொண்டாள் சிவகுமார் மட்டும் என்ன லேசுப்பட் டவஞ? அவனும் பக்கத்தில் இருந்த நண்பன் மஞே கரிடம், " அடேயப்பா என்ன அடக்கம் என்ன ஒழுக்கம்! இவளல்லவோ குடும்பப் பெண். ஆமா! இவர்களெல்லாம் ஏன் தான் தாவணியையும் போட் டுக் கொண்டு இந்தச் சினிமாவுக்கு வருகிருர்களோ தெரியவில்லை. பாவங்கள் பவிசு கெட்டுப் போகும் " என்றெல்லாம் அளக்க ஆரம்பித்தான் ,
அவனுக்கு அருகிலே உட்கார்ந்திருந்த வசந்திக்கு அவன் சொல்லியவைகள் அனைத்தும் மணிமணியாகக் கேட்டன. அவள் மேலும் வெறுப்போடு பார்த்துக் கொண்டாள். அந்த முகம் அவள் மனதில் நன்ரு கப் பதிந்து விட்டிருந்தது. கடைசி மணியும் அடித்து விளக்குகள் யாவும் அணைந்து படம் ஆரம்பித்துவிட் டது, சிவகுமாரின் கால்கள் மெதுவாக முன்னுேக்கிச் சென்றன; பின்னர் சாடையாக வசந்தியின் கால்க ளோடு வட்டும்படாததும் மாதிரி முட்டிக்கொண்டன " தற்செயல் நிகழ்ச்சியாக்கும் " என்று வசந்தி பேசா மல் இருந்தாள். ஆனல் நேரம் செல்லச் செல்ல வசந்தியின் கால்களோடு வேறு இரு கால்கள் உராய் வது போலவும் அந்த உராய்வு வரவர அதிகரிப்பது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளுக்குப் பயத்தில் உடலெல்லாம் வியர்த்தது; நெஞ்சுக்குள் எதையோ அடைத்துக்கொண்டதைப் போன்று எது வும் பேசமுடியாமல் இருந்தது கூனிக் குறுகியபடியே பேசாமல் உட்கார்ந்திருந்தாள், சற்று நேரத்தின் பின்னர் அவளது இடது பக்கத் தொடைமீது ஒரு கை லேசாக விழுந்தது. பின்னர் அங்கும் மெதுவான உராய்வு ஆரம்பித்தது. ஐயோ! இது எங்கே போய்
36

சினிமாவுக்குப் போகிறர்கள்
முடியுமோ? யாராவது பார்த்தால் என்ன ஆவது? சத்தம் போட்டுக் குழறவா? சே! அவமானமாகப் போய்விடுமே! என்றெல்லாம் எண்ணிச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தாள் வசந்தி: இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்தால் எங்கே படக் கூடாத இடங்களிலெல்லாம் அந்தக் கை பட்டுவிடுமோ என்று பயந்தாள். நெருப்பின்மேல் உட்கார்ந்திருப்பது போலத் தவித்துக் கொண்டிருந்தாள். சிவகுமாரனது முகத்திலே காறித் துப் ப வேண் டு ம் போலவும், செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும் போலவும் தோன்றியது, ஆனல் ஏதோ ஒரு அவமானகரமான பய உணர்வு அவளை அப்படிச் செய்யாமல் தடுத்ததும் திடீரென்று அவளது வேதனைக்கும் விடுதலை கிடைத் به ای قوی
இடைவேளை விடப்பட்டு மின்சார விளக்குகள் யாவும் தியேட்டரினுள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. வசந்தி திடீரென்று எழுந்து சிவகுமாரனைப் பொசுக்கி விடுவதுபோல உக்கிரமாகப் பார்த்துவிட்டுக் கமலா வுடன் பின்னுல் வெறுமையாகக் கிடந்த இரண்டு ஆசனங்களிற் சென் று இருவரும் அமர்ந்தார்கள்
அப்பாடா - தொலைந்தது சனியன்! " என்று வசந்தி பெரிதாகப் பெருமூச்சு விட்டாள் படம் முடிந்துவிட் டது; வசந்தியும் கமலாவும் வீடு செல்வதற்காகப் பஸ்சுக்குக் காவல் நிற்கிருர்கள் மறுபடியும் பழைய குரல்கள் ஒலிக்கின்றன. "" ஏன் மச் சான் பெரிய எழுப் பத்திலை படம் பார்க்க வந்திட்டினம் டாக்சி பிடிச் சுக்கொண்டு போக முடியாதாக்கும் பாவங்கள். பஸ் ஸ"க்குக் காவல் நிற்கினம், " என்று ஒரு குரல் ** அதுசரி மச்சான், எனக்கெண்டால் பெரிய புதின மாகக் கிடக்கு - இந்தக் காலத்திலை அதுவும் கொழும் பிலை இப்பிடி வெட்கப்படுகிற பெண்களை நான் காண வேயில்லை. சுத்தப் பட்டிக்காடுகளாகக் கிடக்கு மச் சான் " என்று இன்னுெரு குரல் ஒலிக்கிறது; இந்தக்
37

Page 25
நெல்லை க. பேரன்
குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் வேறு யாருமில்லை. சிவகுமாரனும் மனேகரும் தான். " சே காற்சட்டை போட்டுவிட்டால் மாத்திரம போதுமா? ஏதோ மன் மதக் குஞ்சுகள் என்ற நினைப்பு இதுகளுக்கு. ஆக்க ளும் அவையின் ரை பார்வைகளும். பெத்ததுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத காவால் யஸ் , " என்று எண் ணிக் கொண்டாள் வசந்தி. பல்ஃக் கடித் தச் கொண்டு பொறுமையாக இருந்தாள் அடக்கம் ஆயிரம் பொன்னல்லவா? திடீரென நு வந்த பஸ் ஒன் றில் ஏறிக் கொண்டாள். எமகாதகப் பயல்களிடமி ருந்து தப்பிவிட்டதாக அவளுக்கு ஒரே சந்தோஷம்
சிவகுமாரனுக்கும் மனேகருக்கும் அன்று தியேட் டருக்குள் தங்களுடைய " லைன் அடிப்பு " உத்தியோ கம் சரிப்பட்டு வராததை எண் ணி ஒரே சோகம். சை 1 தங்களுடைய வரலாற்றிலேயே முதன் முறை பாக ஒரு பெண் ணிடம தோல்வி கண்ட கலக்கம் அவர்கள் ந  ைட யி லே தென்பட்டது. " போனல் போகிறது. நாளை க்கு இன்னென்று. " என்று சூள் கொட்டிக் கொண்டே தனது " ஜா கை ” என்று சொல் லப்படுகின்ற அந்தக் கொழும்பு வாடகை வீட்டு அறைக்குத் திரும் பிஞர்கள் என்னதான் முசுப்பாத்தி பண்ணினலும் அநியாயஞ் சொல்லக்கூடாது. உண் மையிலேயே சிவகுமாரனுக்கு வசந்தியின் தக்காளிப் பழச் சிவப்பு நிறமும் வட்டமான வடிவு முகமும் நாவற்பழத்தை நீட்டினது போலக் கறுப்புக் கண் களும் அவற்றின் மருண்ட பார்வையும் ஒரேயடியாகப் பிடித் துப்போய்விட்டன. கிறங்கிப்போஞன் என்றே சொல் லலாம். " சே! கிளி பறந்து விட்டது. இ னி மே ல் என்ன செய்வது என்று பெருமூச்சு விட்டான்
அன்று காரியாலயத் தில் ஒரேயடியாகப் பைல்க ளேப் புரட்டிக்கொண்டு வேலையில் மூழ்கிப் போயிருந்த சிவகுமாரனிடம் பியூன் அ ன்  ைற ய தபால்களைக்
38

சினிமாவுக்குப் போகிறர்கள்
கொண்டுவந்து கொடுத்தான், வழக்கமாக வருகின்ற பத்திரிகையொன்றும், சில கடிதங்களும் அவற்றுள் இருந தன. பரபர வென்று எ ல் லா வ ற்  ைற யு ம் மேலோட்டமாக வாசித்தான். வீட்டிலிருந்து தாயார் எழுதிய ஒரு கடிதம் முக்கியமாகத் தென்பட்டது தாய் அவனுடைய உடல் நலத்தைப் பற்றி விசாரித் தருந்தாள். ஹோட்டலில் முற்றிப்போன கத்தரிக் காய், வெண்டிக் காய்க் கறிகளுடன் பற்றற்ற துறவி போலச் சாப்பிட்டு உடம்  ைபப் பாழாக்குகிறயே ராசா - என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்திருந்தாள் கடைசியாக " இனிமே லென்ன உனக்கும் வயது சரி யாகிறது. நான் கண்ணை மூடமுன்னர் உனது கலியா ணத தைக் கண் குளிரப் பார்க்க வேண்டும் - உனக்குப் பொருத்தமான சம்பந்தம் ஒன்று பேசி வைச்சிருக்கி றேன். உடனே ஓடி வா மகனே. உன்னுடைய மங்கள காரியம் சிறப்பாக நடைபெற வேண்டும். அம்மாவின் சொல்லைத் தட்டாதே " என்றெல்லாம் பெரிய வாரப் பாடாகவும் அன்புக் கட்டளையாகவும் எழுதப்பட்டி ருந்தது. சிவகுமாரனும் அந்த வருடம் திருமணம் செய்யலாம் என்று நிச்சயித்திருந்தான். அம்மாவிட மிருந்து வந்த கடிதமும் அவனுக்குத் தென் பையூட்டி யது. பிற கென்ன? பெட்டியைக் கட்டினன். ஊருக்குக் கிளம்பி விட்டான் தனக்குத் திருமணம் பேசிய அம் மாவின் வாய்க்குச் சர்க்கரை போடுவதற்குப் பதிலா கப் பேரீச் சம்பழம் வாங்கிக் கொண்டு சென்ருன் ,
" மாப்பிள்ளைப் பெடியன் வந்திட்டுதாம்: இராத் திரித்தான் வந்தது. நாளைக்கு எழுத்து. பக்க த் து ஊரிலை பொம்பிளையாம் " என்று ஊரில் பேசிக்கொண் டார்கள் ஒரு சிலர் எழுத்துக்குப் போக வேண்டும் என்று தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள் " ஒரேயடியாகத் தாலிகட்டிற்கே போய்விடுவம் " என் றும் சிலரி பார்த் திருந்தார்கள்; எப்படியோ அந்த ஊரிலே ஒரு விதமான கலியாணக்களை கட்டியது:
39

Page 26
நெல்லை க. பேரன்
வசந்தி இயற்கையிலேயே அழகானவள் அன்று பெண் பார்க்கவும் எழுத்துக்கும் வருகிருர்கள் என்று விட்டு மேலும் அழகாக ஆடைகளை அணிவித்தார்கள். காஞ்சிபுரம் பட்டிலே செய்த நீலக் கரைச் சேலை கட் டிக் கையிலே தங்க வளையல்கள் சுமந்து நெற்றியிலே குங்குமத் திலகமிட்டுக் கருவிழிகளின் ஒரத்திற்குக் கறுப்பு மையூசி வசந்தி அன்று வடிவழகியாகத் திகழ்ந் தாள். வண்ணத் தமிழ் பெண்ணுெருத்தி போல அச் சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை அனைத்தும் கொண்டு அன்ன நடை நடந்து அழகுப் பதுமையென மாப்பிள்ளை வீட்டுக்காரர் தங்கியிருந்த மண்டபத் திற்கு வந்தாள். சூரியனைக் கண்ட தாமரை மலர்கள் விரிவது போன்று அவள் வரவைக் கண்ட மாப்பிள்ளை வீட்டார் தமது கண்களை அகலத் திறந்தனர். சிவகுமா ரனும் நிமிர்ந்து அவளைக் கவனித்தான். என்ன ஆச்ச ரியம் அவனுக்கு ஒரே திகைப்பாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அன்று தி யே ட் டரி ல் அவன் மனதைக் கொள்ளை கொண்ட பெண்மணியா இவள்? அடடே தனக்குத் தெரியாமல் போய்விட் டதே என்று எண் ணி னன். தனது மனதுக்கினியவ ளையே மணமகளாக அடையப் போகிருேம் என்ற பெருமையும் மகிழ்ச் சி யும் அவன் உடலெல்லாம் நிரம்பி வழிந்தது.
தனது கடை விழியசைப்பில் வசந்தி அவனைக் கண்டு கொண்டாள். அவளும் ஆச்சரியமும் அதே சம யம் ஆத்திரமும் அடைந்தாள். "சே போயும் போயும் இந்தக் காவாலியா என க் கு மாப்பிள்ளையாக வர வேண்டும்? ? என்று எண்ணிச் சலித்துக் கொண்டாள் அவளுக்கு ஆத்திரம், ஏமாற்றம் எல்லாமே பொத்துக் கொண்டு வந்தன. கண்கள் கலங்கிக் குளம் போலா யின; குமுறிக்குமுறி அழவேண்டும் போலத் தோன்றி யது திடீரென்று மயக்க முற்று வீழ்ந்து விட்டாள். அப்புறமென்ன? சகுனம் பிழைத்து விட்டது என்று கூறிக் கலியாணமும் ஒத்தி வைக்கப்பட்டது:
40

சினிமாவுக்குப் போகிறர்கள்
வீட்டில் வசந்தி எதையோ பற்றி ஆழமாகச் சித் தித்துக் கொண்டிருந்தாள். ஏண்டி கண்ணுக்கு லட் சணமான நல்ல சம்பளம் வாங்குகிற உத்தியோக மாப்பிள்ளை இ னி மே ல் உனக் குக் கிடைப்பானடி? வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத் துவிடாதே பே சா ம ல் கலியாணத்திற்கு ஒப்புக் கொள்ளு, சும்மா மயங்கி விழாதேடி " என்று எச்ச ரித்தாள் கமலா பாவம் அவளுக்கென்ன தெரியும் வசந்தியின் மனநிலை - அது எரிமலையாகக் கொந்த தளித்து வெடித்துச் சிதறியது.
" வாழ்க்கையிலே ஒழுங்காக வாழத் தெரியாத வர்களுக்கும், மிருக இச்சை மிகுந்து கண்ட பெண்க ளிடமும் கண்ட இடங்களிலும் வாலாட்டுகிறவர்களுக் கும் தாலிகட்டுகிறதுக்குக் கழுத்தை நீட்டுகிறதை விட இரண்டுமுழக் கயிற்றைப் போட்டுத் தூங்கிச் சாவதே மேலானது. பண்பு கெட்டவர் என்று முன்பே தெரிந் திருந்தும் அவரை மணக்கச் சம்மதிப்பதா? முடியாது ஒருக்காலும் முடியாது. இப்பொழுதே எனது முடிவை அவருக்குத் தெரிவித்து விடுகிறேன். இவர் களை ப் போன்ற கயவர்களுக்கும் காமாந்தகாரப் பிசாசுகளுக் கும் இப்படித்தான் பாடம் படிப்பிக்க வேண்டும் " என்று கறுவிக் கொண்டாள். தி டீ ரென் று ஏதோ உத்வேகம் கொண்டவளைப்போல மேசை டிராயரைத் திறந்து பேப்பர் எடுத்தாள். பேனையை எடுத்தாள் மேசையிலே உட்கார்ந்து மளமளவென்று எழுதத் தொடங்கினுள் . கமலா எப்பொழுதோ வெளியில் போய்விட்டபடியால் சிந்தனைத் தடைகள் எதுவுமின்றி நீரோட்டம் போல எழுதிக் கொண்டிருந்தாள் தன் னுடைய முடிவு அ வ ளு க் குச் சரியாகவே பட்டது. அன்றே கடிதத்தைத் தபாலிலும் சேர்த்து விட்டாள்
கலியாணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற வுடன் சிவகுமாரன் அதிகம் அதிர்ச்சியடைந்து விட வில்லை. இரண்டு கிழமைக்குள் மீண்டும் வசந்தியின்
41

Page 27
நெல்லை க. பேரன்
கழுத்தில் தாலி கட்டப்போகிருேம் என்ற நினைப்பில் அவன் மீண்டும் கொழும்புக்கு ரயிலேறி விட்டிருந் தான் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறு கிற விக்கிரமாதித் தன் கதைபோல அவன் மீண்டும் கரையோரப் புகை வண்டியில் கல்கிசையில் இருந்து தினமும் புறக்கோட்டையிலுள்ள காரியாலயத்திற்கு ஒழுங்காகப் போய் வந்து கொண்டிருந்தான் அன்றும் அவனுக்கு வந்திருந்த கடிதங்களில் ஒன்றின் கவர் மீது முத்து முத்தான எழுத்துக்களில் திரு சிவகுமாரன் அவர்களுக்கு. என்று அழகாக விலாசம் பொறிக் கப்பட்டிருந்தது. பெண்ணின் கையெழுத்து என்ப தைப் புரிந்துகொண்ட சிவகுமாரன் அது யாராகவி ருக்கும் என்பது தெரியாமல் சிறிது திகைத் தான் 5 ஒருவேளை தனது பழைய கல்லூரிக் காதலி மனுேகரி யாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான் அவளைத் தான் கை கழுவி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவே! அவள் ஏன் எழுதப் போகிருள் என்று எண்ணினுன் கவரை மெது வாக ப் பிரித்தான்; பரபரவென்று வாசிக்க ஆரம்பித்தான்;
திரு. சிவகுமாரன் அவர்களுக்கு
அன்று தியேட்டரிலும், பஸ் நிலையத்திலும் சந் தித்த அதே பெண்தான் நான் என்பதை எங்கள் வீட்டுக்கு வந்தபோதே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்; என்னை மணக்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் ஆனல் அது மாத்திரம் இந்த ஜன் மத்தில் நடக்காது. ஏன் மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் கூட அங்கேயும் உங்களோடு இணைய நான் ஒருப்படமாட்டேன்; பெண்கள் என்ருல் வெறும் உடற்பசியைத் தீர்க்கும் இன்பக் கருவிகள் என்ற எண்ணத்தோடு கண்ட பெண்களையும் மிகத் துணிக ரமாக அணுகுகின்ற உங்கள் கீழ்த் தரமான செப் கையை அன்று தி யே ட் டரில் கண்டுகொண்டேன்.
42

சினி மாவுக்குப் போசிறர்கள்
வேண்டுமென்றே பெண்களுடன் உராய முற்பட்டுப் பின்னர் அவர்களுடன் இன் பசுகம் காண முனையும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை எங்கள் சமுதாயம் எப்படித்தான் உருப்படும்? படம் பார்க்க வருகின்ற பெண்களெல்லாம் தவருண உங்கள் செய் கைகளுக்கு உடந்தையாக இருப்பார்கள் என்ற எண் ண மா? உங்களைப் போன்றவர்களுக்காகப் பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படி வேண்டுமா? கொழும்புப் பெண்கள் என்ருல் உங்க ளுக்கு நம்பிக்கையில்லையா? அட கடவுளே! அப்படி யானுல் கிராமப்புறப் பெண்களில் தாம் நம்பிக்கை வைக்கிறீர்களா? அல்லது எவர் மீதும் நம்பிக்கையில் லையா? முதலில் உங்களையே நீங்கள் நம்புகிறீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? சரி, நான் அதிகம் எழுத விரும்பவில்லை. எனக்காக வீணுக உங்கள் மூளையைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள்; எனக்கு உள் கண் மணக்கச் சம்மதமில்லை. மன்னிக்கவும். இனிமே ாைவது பெண்களுடன் மதிப்பாக நடந்து கொள்வீர் கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு வசந்தி
சிவகுமாரனுக்கு உடம்பெல்லாம் தேன் கொட் டியது போலவிருந்தது. அவமானம் அப்படியே பிடும் கித் தின்றது. உணர்ச்சிவசப்பட்டுக் கண்கள் கலங்கி விட்டன. இவ்வளவு தூரம் எழுதித் தன்ன அவமதிப் பாள் என்று அவன் கனவிலும் கருதவில்லை. அவனது நம்பிக்கையெல்லாம் பொடிப் பொடியாகியது; அந் தச் சம்பவத்தின் பிறகு அவன் எல்வளவோ மாறி விட்டான்g இருந்தாலும் அவனல் கடைசிவரைக்கும் வசந்தியை அடையவே முடியவில்லை; அவள் பத்தரை மாற்றுத் தங்கம். பண்பட்ட தமிழ்ப் பெண்.
சிந்தாமணி, பெப்ரவரி 69
43

Page 28
ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது
محبرمحمحیے۔محم^مح^محمحصب^محے می^مح*محمحبرتن SqAJSLSqS ASeSSL ASeLSL AeSeSS AASeSeSM AJSeSLSAJSLLLL AALL S AAAAS AAASS محصے^صے^* صے
சந்திரன் கண் விழித்தபோது காற்று இன்னும் பலமாக வீசிக்கொண்டுதான் இருந்தது காண்டாவ னம் இன்னும் ஓயவில்லைப் போலும் என நினைத்துக் கொண்டு பாயில் புரண்டு படுக்கிருன் வாசலை ஒரு தடவை பார்த்தபோது கிழக்கு வெளிக்க இன்னும் நேரம் இருப்பதை உணர்கிருன் கொட்டிலை வேய்ந் திருந்த கிடுகுகளைக் காற்றுக் கிளப்பி விட்டிருந்ததால் முன்னரைவிட இப்போது இடைவெளிகள் அதிகமா கத் தெரிந்தன. வான் நட்சத்திரங்கள் கூட அந்தக் கிடுகு ஓட்டைகளுக்கால் தெரியக்கூடியதாக இருந் தது. வழக்கமாக அவன் கொட்டிலின் வாசல் புற மாகக் காட்டுத் தடிகளினல் வரிச்சுக் கட்டப்பட்ட கட்டிலின் மேல் தான் பாய் விரித்துக்கொண்டு படுப் வான் இன்று யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த தன்னுடைய கல்லூரி நண்பன் இன்மானுவேலுக்காக அக்கட்டிலை ஒதுக்கியிருந்தான் தன்னுடைய தலைய ணையையும் அவனுக்கே கொடுத்திருந்தான்; அதனுல்
44

ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது
அன்றிரவு சற்று வசதிக் குறைவாக இருந்த தென் ரு லும் காட்டை வெட்டுகின்ற ஆரம்ப நாட்களில்தான் இத்தனை வசதிகள் கூட இல்லாமல் வெறுந் தரையில் படுத்து உறங்கியதை நினைத்துச் சமாதானப்பட்டுக் கொண்டான். நண்பன் இம் மானுவேல் யாழ்ப்பாணத் தில் குருநகரில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வன். சமீபத்தில் வேலை தேடவும், மேற்படிப்புக்கு மாக லண்டனுக்குச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட் டுள்ளான் சந்திரனின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று இப்போது விஸ்வமடுவில் ஒரு வாரம் தங்குவ தற்காக வந்திருந்தான். அவனுக்குத் த ன் ஞ லா ன வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது சந்திரனின் கடமையாக இருந்தது.
சந்திரனுக்குக் காணியில் உதவியாக வீரச்சாமி என்ற சிறுவன் இருந்தான் , இனக் கலவரத்தின்போது தருமபுரத்தில் ஒதுங்கிய இந்திய வம்சாவழியினரின் பரம்பரையில் வந்தவன்தான் வீரச்சாமி. மிகவும் சுறுசுறுப்பானவன். உழைப்பதில் நேர்மையான வன்? தறையைப் பண்படுத்துவது முதல் மிளகாய்க் கன்று நாட்டி உரம்போட்டு வளர்ப்பதுவரை சந்திரனுக்கு ஒத்தாசையாக இருந்தவன். இனியும் சந்திரன் அண்ணு வோடுதான் இருப்பேன் என்று உரிமையோடு சொல் விக் கொள்வான். பதினன்கு வயதிலேயே அவன் ஒரு ப ர ம் ப  ைர த் தோட்டக்காரனுக்குரிய சகல பயிர்ச்செய்கை அனுபவங்களையும் பெற்றிருந்தான் பக்கத்துக் காணிக்காரர்கள் கூடத் தங்களுடைய மிள காய்ச் செடிக்கு ஏதும் நோய் பீடித்தால் வீரச்சாமி யிடம் ஆலோசனை கேட்குமளவிற்கு அவ ன து விவ சாய அனுபவம் வளர்ந்திருந்தது. இதையிட்டுச் சந்தி ரனுக்கு மிகவும் சந்தோஷம். வீரச்சாமி கொட்டி லுக்கு வெளியே இறக்கி விடப்பட்டிருந்த சாய்ப்பா ஒனுக்குள் சாக்குகளின் மீது பாயைப்போட்டு உறங் இக் கொண்டிருந்தான். கொட்டிலுக்கு வெளியே
45

Page 29
G56th s. Guy siy
முகப்பில் சுத்தஞ் செய்யப்பட்ட தரையில் காயப் போடப்பட்டிருந்த மிளகாய்ப் பழங்களுக்கும் அவன் காவலாக இருந்தான்.
இம்மானுவேல் இன்னும் உறக்கம் கலையாமல் பிரம்புக் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். சரி பாக அதிகாலை ஐந்தரை மணிக்கு விஸ்வமடுக் குளத் திட்டத்திற்கான நீர் இறை க் கும் இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு அவை எழுப்பிய " கர். " என்ற ஓசை அந்தப் பிரதேசம் முழுவதும் மெதுவா கப் பரவிக் கொண்டிருந்தது. நேற்றுப் பின்னேரம் இம்மானுவேலைத் தொட்டியடிக்கும் " பம்ப் ஹவுசிற் கும் " குளத்தங்கரைக்கும் கூட்டிச் சென்று காட்டிய போது அவன் வாயைப் பிளந்து கொண்டு எல்லா வற்றையும் ஆர்வத்தோடு பார்த்ததை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான் " பம்ப் ஹவுஸில் " ஏழு பாகிஸ்தான் இயந்திரங்கள் கனத்த சப்தத்து டன் நீரை இறைத்து வெளித் தள்ளுவதையும் அவை பாரிய குழாய்கள் மூலம் இருநூறடி தூரம் வரை வத்து பெரிய தொட்டிக்குள் விழுவதையும் பின்னர் அத் தொட்டியில் இருந்து வாய்க்கால்கள் பிரிந்து செல்வ தையும பார்த்தபோது அவன் வியப்படைந்ததில் ஆச் சரியமில்லைத் தான். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு உதாரணத்தை இங்கே தான் பார்க்கமுடியும் என்று அவன் எண்ணினுன் ஆறு குழாய்களில் இருந்தும் " குபு குபு " வென்று தொட் டிக்குள் நீர் விழுவதை எத்தனை மணித்தியாலங்கள் நின்று பார்த்தாலும் ஆசை தீராது போல இருந்தது; நன்ருக விடிந்து விட்டால் எஞ்சின் சப்தம் கேட்காது. மனிதர்களது நடமாட்டமும் "பவர்ஸ் பிறேயர்களின்" கடூரமான சப்தமும் அப்பிரதேசத்தை நிறை த் து விடும். அனேகமான காணிகளில் சொந்தமாகவே கிணறுகள் வெட்டி மோட்டர் வைத்துத் தண்ணீர் இறைக்கிருர்கள் இந்த வாட்டர் பம்புகளின் சப்த
46

ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது
மும் காலையில் காதைத் துளைக்கும். சந்திரன் வீரச் சாமியைச் சாப்பிட்டுத் தேத்தண்ணி வைக்கச் சொல் கிருன், ஏற்கனவே பானையில் தயாராக வைக்கப்பட் டிருந்த தண்ணிர் சில நிமிட நேரங்களில் காட்டு விறகின் தணல் வெக்கை தாங்காது கொதித்து விடு கிறைது.
வீரச்சாமி சந்திரனுக்கும் இம்மானுவேலுக்கும் தேத் தண்ணி தயாரித்துக் கொடுக்கிருன, யாழ்ப்பா னத்தில் தன்னுடைய சொந்தக் கிராமமான துறை லயில் இருந்து தாயார் அனுப்பி வைத்த பனங்கட் டியைக் கொறிப்பாகக் கொடுத்தபடியே சத்திரன் இம்மானுவேலுடன் பேச்சுக் கொடுக்கிருன்
" எப்பிடி மச்சான் முதலிரவு. அதாவது காட் டில் முதலிரவு " என்று கேட்கவே இம்மானுவேல் சிரித்துக் கொண்டே 'நல்ல அனுபவந்தான். கரடி, பன்றி ஏதாவது வருமோ என்றுதான் பயந்தேன்து யானை பிளிறிய சத்தம் கூடக் கேட்டது போல ஒரு உணர்வு ஆஞலும் ந ன் ரு கத் தூங்கிவிட்டேன் " 87si76uy?6ire
** முந்தித்தான் காட்டு யானைகள் இந்தக் காணிப் பக்கம் வரும் இப்ப தொட்டியடிக்குப் பக்கம் யானை கள் வருவதில்லை. பைவோஸ்காரங்கள் கா டு களை வெட்டி அழிக்கத் தொடங்கிய பிறகு யானைகளின் நடமாட்டம் குளத்தங்கரைக்கு அங்காலையுள்ள காடு களின் பக்கந்தான் அண்ணை " வீரச்சாமி பதிலிறுத் As tir sir.
மூவருமாக வெளியே வந்தார்கள். வீரச்சாமி பிரம்புக் கட்டிலின் அடியில் இருந்த வானெலிப் பெட்டியைக் கையில் எடுத்தவாறே தி ரு ச் சி யி ல் நாதஸ்வரத்தைக் கேட்டழிவாறு வெளியே வந்தாள் அவள் எப்பொழுதும் வாஞெலிப் பெட்டியும் கையு
47

Page 30
நெல்லை க. பேரன்
மாகத் தான் இருப்பான். மிளகாய்ச் செடிக்குப் பாத்தி கட்டுப போதும நீர் கட்டும்போதும் ஒரு தடியில் அதைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டே வேலை களைச் செய்வான். விஸ்வ மடுவில் உழைக்கின்ற விவ சாயிகளுக்கு வானெலி ஒரு நல்ல பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
மூவருமாகக் கிணற்றடியில் வந்து பல் துலக்கி முகம் கழுவ ஆரம்பித்தார்கள். வீரச் சாமி இம் மானு வேலுக்கு நீர் மொண்டு கொடுத்தான் சத்திரனின் வாட்டர்பம் கடந்த மூன்று மாசமாகக் கிணற்றடியி லேயே பூட்டிய நிக்லயில் காணப்படுகிறது. செம்புழு தியும் வெள்ளத் தண்ணிரும் படிந்து அதன் உதவி யால் சந்திரன் ஒவ்வொரு நாளும் ஐநூறு கன்றுக ளுக்கு நீர்பாய்ச்சி வருகிருன்;
வாய்க்காலில் வருகின்ற குளத்துத் தண்ணிர் அவ னுடைய மூன்று ஏக்கர் காணிக்கும் போ த ர து. அதாவது ஒன்றரை நாட்களுக்குத் தான் அவனுடைய வாய்க்காலுக்குக் கொடுப்பார்கள் பிறகு அடுத்த தவணைவரை காத்திருக்க வேண்டும். இதற்கிடையில் பைவோஸ்காரர் (உத்தரவின்றிக் காடுகளை வெட்டு பவர்கள்) யாராவது வாய்க்கால் தண்ணீரைக் கள வாக இறைத் துத் தங்களுடைய காணிக்கு நீர் பாய்ச் சுவார்கள். இந்த அநியாயத்தை எதிர்த்துச் சந்திரன் எத்தனையோ தடவைகள் மேலிடத்திற்குப் புகார் செய்தும் நிலைமையில் மாற்றமேதும் இருப்பதாகத் தெரியவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு இம் மானுவேல் சந்திரனின் காணியை முழுவதும் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு வேலியோரமாக நடந்தான் நாலாபுற மும் காட்டுக் கட்டைகளைப் போட்டு மு ட் கம் பி அடித்துக் காணி மிகவும் செப்பமாகத் திருத்தப்பட் டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னல் பயங்கர மாண காட்டு விலங்குகள் வசித்த இந்தக் காடு இன்று
48

ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது
பயன் தரும் மிளகாய்ச் செடிகளைக் கொண்டிருக்கிறதே என்று வியந்தவாறே வே லியோரமாக வள ர் ந் து படாந்திருந்த பயற்றங்கொடிகளைப் பார்வையிட்ட வாறு நடந்தான். சுமார் நான்கு அல்லது நான் கரை அடி நீளம் வரை ஒவ்வொரு பயற்றங்காயும் நீண்டி ருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். யாழ்ப்பா ணத்தில் அவனது வீட்டு வேலைக்காரன் சின்னக் கடைச் சந்தையில் வாங்கிவரும் பயற்றங்காய் சில வேளைக ளில் முக்கால் அடிகூட நீளம் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும்,
சந்திரன் வாட்டர் பம்பை ஸ்ரார்ட் பண்ணி நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் வீரச்சாமி காலை உண விற்காகக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தான். அவர் களுடைய காணிக்குள் நின்ற பசுக்களின் பாலேக் கறந்து ஊற்றிப் பாற்கஞ்சி காய்ச்சினன். இம்மானு வேல் பச்சைப்பசேல் என்று நெஞ்சளவு மதாளித்து வளர்ந்திருந்த மிளகாய்ச் செடிகளினுாடே நடந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு செடியிலும் சுமார் அரை இருத்தல் நிறையுள்ள மிளகாய்ப் பழங்கள் செக்கச் சிவந்து காணப்பட்டன. அன்று காலை எட்டு மணிக்கே தருமபுரத்துக் கூலிகள் பழம் பொறுக்க வருவார்கள் என்று சந்திரன் சொல்லியிருந்தான்,
சொல்லி வைத்தது போலக் காலை எட்டு மணிக்கே எட்டுப் பெண்கள் பழம் பொறுக்க வந்துவிட்டார் கள் இவர்களுக்கு மூன்று வேளைத் தேத் தண்ணிர் போட்டுக் கொடுத்தால் போதும் சாப்பாட்டைத் தாங்களே கொண்டு வருவார்கள். சாக்குகளை எடுத் துக் கொடுத்துவிட்டுத் தேத் தண்ணிர் ஊற்றுவதற்கு ஆயத்தமானுன்
காணியின் ஒரு ஒரமாகச் செழிப்பாக நின்ற புகையிலைக் கன்றுகளையும், க த் த ரி க் கன்றுகளையும் பார்த்துப் பரவசமான இம்மானுவேல் கூலிகளைக்
49

Page 31
நெல்ல க. பேரன்
கண்டதும் கொட்டில் பக்கமாக வந்தான்; கொட்டி லின் அருகே வாசல் புறமாக வாழை, மாமரங்கள், பலாமரங்கள், தென்னை மரங்கள் என்று ஒரே சோலை யாக இருந்தது. இம்மானுவேலுக்குப் பார தி யி ன் "காணி நிலம் வேண்டும்" என்ற பாடல் தான் ஞாப கம் வந்தது. இந்தப் பசுமையான செல்வங்களை உரு வாக்கக் கூடிய தாய்நாட்டின் சிவந்த மண்ணை விட் டுத்தான் ஏன் லண்டனுக்கு ஓடிப்போக வேண்டும் என்ற எதிர் மாருன சிந்தனைகள் அவன் நெஞ்சிலே கருவாகின. தான் இனிமேல் யாரையாவது பிடித்து * ஸ்பொன்சர் லெட்டர் " எடுத்து லண்டனில் அட் வான்ஸ் லெவல் படித்து எஞ்சினியரிங் செய்து படிப் புக்களை முடித்துக் கொண்டு வேலை தேடவேண்டும். அதுகூட நிச்சயம் என்று சொல்ல முடியாது. ஆளுல் அதற்கிடையில் இங்கே இந்த மண்ணில் உழைத்தால் நல்ல பலனிைப் பெறலாம் என்பதை நேரில் கண்டு கொண்டான் பலனைக் காணக்கூடிய வாய்ப்பை நண் பன் சந்திரன் ஏற்படுத்தித் தந்துள்ளான்; தண்ணீர் இல்லாவிட்டால் இங்கே எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற சந்தேகமும் அவனுக்குள் எழாமல் இல்லை. ஆனல் அங்கு பார்த்தபோது நூற்றுக்குத் தொண்ணுறு வீதமானவர்கள் அகலமாகவும் ஆழ மாகவும் கிணறுகளை வெட்டிக் குளங்களைப் போலத் தண்ணீரைத் தேக்கி வைத் திருப்பதை அவதானித் தான். பதினேராங் கட்டை புன்னை நீராவி போன்ற இடங்களில் இப்படியான கிணறுகள் அதிகம் வெட்ட ப்பட்டு இருப்பதாகச் சந்திரன் அவனிடம் சொல்லி யிருந்தான், நீர் வளத்தை நாமே ஏற்படுத்திக் கொண் டால் நிலமாதா துரோகம் செய்யமாட்டாள் என்று நம்பினன். இந்த நம்பிக்கை வலுக்கவே அவனது வெளிநாட்டுப் பயண மோகம் வர வரக் குறைந்து கொண்டே போயிற்று
50

ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது
பால் கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தபோது செம்புழுதியைக் கிளப்பிக்கொண்டு தூரத்தில் ஒரு கார் வருவது தெரிந்தது. அதன் கரியரிலும், டிக்கி யிலும் மிளகாய்ச் சாக்குகள் சிகரம் போல அடுக்கப் பட்டிருந்தன. யாரோ கொழும்பு வியாபாரிகளாக இருக கும் என்று சந்திரன் சொன்னன் , கொட்டிலுக்கு வெளியே வந்து காரில் வந்தவர்களுக்குக் கையைக் காட்டினன். கார் இப்போது அவனது காணியை நோக்கி வந்தது, சந்திரனிடம் ஏற்கனவே ஐநூறு ருத்தல் மிளகாய் சேர்ந்திருந்தது. அதைப் பத்திர மாகப் பாதுகாத்து வைத் திருந்தான். மேற்கொண்டு உரம், பசளைவகை வாங்குவதற்காக அவசரம் பனம் தேவைப்படவே தன்னிடமிருந்த மிளகாயை விற்ப தென்று தீர்மானித்து விடுகிறன் . இன்னும் வைத்தி ருத்தால் நல்ல விலைக்கு விற்கலாம். ஆஞலும் தேவை இருப்பதால் ருத்தல் பத்து ரூபாய்ப்படி எல்லாவற் றையும் கொடுத்துப் பணத்தை எண்ணி வாங்குகி ருன் . ஐயாயிரம் ரூபாய் கிடைத்ததும் உடனேயே பரந்தன் கிராமிய வங்கிக்குச் சென்று தன்னுடைய கணக்கில் வரவு வைத்துவிட்டு ஐநூறு ரூபாயில் உர மும் மருந்து வகையும் எடுத்துக்கொண்டு திரும் பினன் வரும்போது இம் மானுவேலுக்குப் பிடித்தமான பன்றி இறைச்சியும், வாங்கி வந்தான்; பரந்தனுக்கு இம் மானுவேலும் கூடவே சென்ருன் விஸ் வ ம டு வில் இருந்து பரந்தன் வரைக்கும் வழி நெடுகலும் மிள காய்த் தோட்டங்களையும், நெல்வயல்களையும் பார்த் துப் பார்த்துப் பரவசப்பட்டவாறே இருவரும் சென் றனர், வெகுவிரைவில் கூட்டுறவுக் கிராமிய வங்கி யும், மின்சாரமும் , பொது நூல் நிலையமும் விஸ்வ மடுவுக்கு, அதுவும் முக்கியமாகப் படித்த வாலிபர் திட்டத்திற்கு அவசியம் எ ன் ப  ைத உணர்ந்தான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் தான் இவற்றைச் சாதிக்க முடியும் என்ற சந்திரனின் கூற்றை அவன் ஒப்புக்கொள்ளாமல் இல்லை. ஆஞல் படித்த விவசா
51

Page 32
நெல்லை க. பேரன்
யிகளும் இதற்கான கோரிக்கைகளே ஏன் அடிக்கடி விடுக்கக்கூடாது என்று தனக்குள் கேட்டுக் கொண் டான்,
என்ருே ஒரு நாள் தான் விஸ்வமடுவில் வந்து தனது வருங்கால மனைவியுடன் வாழப்போவதாகவும் தன்னுடைய காணியின் ஒரு பக்கமாகக் கொட்டில் போட்டுக் கிணறும் கட்டவேண்டும் என்றும் கொட் டிலைச் சிறிது காலத்தில் கல் வீடாக மாற்றி அதனைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு தென் னை மரங்கள் நாட்டவேண்டும் என்றும், மா, பலாச் சோலைகளை உருவாக்கவேண்டும் என்றும் எண்ணினன். ஒவ்வொரு பழச்சோலைகளைக் கண்டபோதும் அதுவே தன்னுடைய காணியாக இருக்கக்கூடாதா என்று ஏங்கினன். ஊருக் குப் போனதும் முதல் வேலையாகப் பெற்றேரிடம் சொல்லிக் காடு வெட்டவும் இதர செலவுகளுக்கு மாக முதலில் ஐயாயிரம் ரூபாய் கடஞகப் பெறுவது என்று தீர்மானித்தான். பெற்ருே ரிடமே கடன் பட் டால் தான் உணர்ச்சியோடு உழைத்துத் திரும்பக் கொடுக்கமுடியும் என்பதும் அவனுக்குத் தேரியும் அரசாங்கம் காணியை ஒதுக்கித் தராவிட்டால் காட் டைக் களவாகவும் வைபோசாகவும் வெட்டக்கூட அவன் ஆயத்தமாகிவிட்டான்
பரந்தனில் இருந்து திரும்பியதும் சந்திரன் மேற் பார்த்து இம்மானுவேலுக்கு ஒரு பாஸ்போட் விண் ணப்பப்படிவம் வந்திருந்தது; இம்மானுவேல் லண்ட னுக்குப் போவதற்காக விண்ணப்பித்த அப்படிவம் யாழ்ப்பாணத்திற்கு வந்து அங்கிருந்து பெற்ருேரால் மறுவிலாசமிடப்பட்டிருந்தது; அந் த ப் பாஸ்போட் விண்ணப்பப் படிவத்தைப் பிரித் த இம்மானுவேல் எந்தவிதமான சலனமும் இன்றி அதனைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டான்.
வீரகேசரி, யூலை 1976
52.

ஒரு தொழிலாளி சைக்கிள் வாங்குகிருன்
ASq AAAASLLLLAAAASLSLSqASLS ASLSSASLSSL LSLSLSLSLSLSeLSSSeeeSSLSeeeeSLSLSeSeSLSLSMLSSSMeASLLALAeSMSAqASqSS AAAASLLLLL SLALS AAALSLALALeSLASLSLSL ALALSLSLALSLSSLAeeSLSASeLSeLSLLLLLLLS
இராயப்புவுக்கு வருகிற மார்கழியோடு ஐம்பத் தைந்து வயதாகிறது; பென்சன் கொடுப்பதற்கான முன்னறிவித்தலை இப்பொழுதே கொடுத்துவிட்டார் கள்; நான் வேலை பார்க்கும் காரியாலயத்தின் பரி பாலனத்தின் கீழ் உள்ள தபாற் கந்தோரில் தான் இராயப்புவும் கக்கூசுத் தொழிலாளியாக இருக்கிருன் தபாற்கந்தோரில் அவனுடைய உத்தியோகபூர்வமான பதவிப் பெயர் " சனிற்ரறி லேபரர் " சாதித் தழும் பேறிய வெளியுலகிற்கு அவன் " சக்கிலியன் " இந் தச் சக்கிலியர்கள் மாத்திரம் ஒரு நாளைக்கு வேலை நிறுத்தம் செய்தால் யாழ்ப்பாண நகரமே நாறி மணக்கும்.
** தம்பீ. "
4" என்ன இராயப்பு ".
53

Page 33
நெல்லை க. பேரன்
இராயப்பு எனது காரியாலயத்திற்கு வந்திருத் தான்.
' என்ன வேணும்? ??
*" ஒரு  ைச க் கி ஸ் லோன் அப்ளிகேசன் போம் வேணும் ".
" என்ன இராயப்பு. . பென்சனும் எடுக்கப் போகிருய். கடைசிக் காலத்திலை சைக்கிள் லோன் எடுக்கிருய். பென்சன் எடுக்கிற நேரத்திலை லோன் ஒண்டும் குடுக்கிறதில்லை எண்டு தெரியுமே. p
*" தெரியும் தம் பீ. எனக்கு வயது வந்த நாலு பெம்பிளைப் பிள்ளையஸ் இருக்கினம். ஒரேயொரு மகன் தான். அவனை ஏ தே னு ம் தொழிலாக்கலாமெண்டு முயற்சிக்கிறன் . முடியேல்லை. அதுதான் ஒரு சைக் கிளையேனும் வாங்கிக் குடுத்தால் ஏதும் ஓடியாடிப் பிழைச்சிடுவான் ".
" என்ன இராயப்பு? மாநகரசபையிலே உன் ரை மேனுக்கு வேலையில்லாமல் கிடக்கே, உன்னைப்போல அ வ னை யு ம் ஒரு கக்கூசுத் தொழிலாளியாக்கிறது தானே. " வேண்டுமென்றுதான் இப்படிக் கேட்கி றேன்
பரம்பரை பரம்பரையாக அடிமைத் தொழில் செய்து வரும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு மாறவேண்டும் என்று எண்ணி வருகின்ற நானே விளையாட்டாகத் தன்னும் இப்படிக் கேட்டதற்காக வெட்கப்பட்டேன். ஆனல் இராயப்பு ஒருவித சல னத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. அடிமையாக இருந்தே ஊறிவிட்ட மனசு போலும்:
" ஓம் தம்பி கொக்குவில் கிராம சபையிலை மக னுக்குச் " சனிற்ரறி லே பறர் பதவி குடுத் திருக்கின மாம் தினமும் கொக்குவிலுக்குப் போய் வாறதுக்
54

ஒரு தொழிலாளி சைக்கிள் வாங்குகிறன்
குத் தான் ஒரு சைக்கிள் வாங்கிக் குடுக்க வேணும். என் ரை முப்பத்துநாலு வரிய உழைப்பிலை நான் பெறு மதியாக எதையும் வாங்கேல்லை. வாங்கவும் ஏலேல்லை. கடைசிச் சமயத்திலேயெண்டாலும் ஒரு சைக்கிளா வது என்ரை பேரிலை நிக்கட்டுமன் தம்பி ":
தபாற்கந்தோர் ஊழியர்கள் அடிக்கடி என்னு டைய காரியாலயத்திற்கு வருவார்கள். சம் ப ள க் கணக்குக் கேட்டும் புறமோஷன் பேப்பர்களைப் பற்றி அறியவும் இன் கிறிமென்ற் நேரத்திற்குப் போடுவிக்க வும் லீவு விஷயங்களை அறியவும் பல்வேறு பிரச்சினை களுக்காகவும் வருவார்கள். வருபவர்கள் எல்லாம் " ஐயா " போட்டுக் குழைந்து கொண்டே நிற்பார் கள். காரியாலயங்களில் ஏதாவது அலுவலைப் பெற வேண்டுமானல் இந்த ஐயா " போட்டுக் காக்காய் பிடிப்பது சர்வசாதாரணம் . எனக்கு இந்தச் சம்பிர தாயம் அடியோடு பிடிப்பதில்லை. வயதிற்கு மூத்த வர்கள் வந்தால் " தம் பீ" என்று அழைக்கச் சொல் லுவேன் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவர்களும் எங்களைப் போலச் ச கோ த ரத் தொழிலாளர்கள் தானே சில உத்தியோகத் தர்கள் வேண்டுமென்றே இந்த " ஐயா "வை எதிர்பார்க்கிருர்கள். வேறு சிலர் காரியாலய வேலையில் மாத்திரமன்றித் தமது சொற் தத் தேவைகளான சிகரெட் வாங்குதல், மீன் வாங் குதல், சீனி வாங்குதல், பாண் வாங்குதல் போன்ற காரியங்களுக்கும் இந்தக் கீழ்நிலை ஊழியர்கள் உதவி செய்தால் பெரி து ம் சந்தோஷப்படுவார்கள். சில சிற்றுாழியர்கள் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியி லும் ஐயாமாரின் வேண்டுகோள்களை மறுக்கமுடியா மல் ஓடிஓடி உதவி செய்வதை நான் நன்கு அறிவேன்;
இராயப்புவை நான் கண்ட நாள் மு த லி ல்
இருந்தே அவனது போக்கில் ஒரு தனித்தன்மை இருப் பதைக் கண்டேன். தினமும் அவன் எனது காரியால
55

Page 34
நெல்லை க. பேரன்
யத்திற்கும் கக்கூசு துப்புர வாக்க வருவான்; கழுத் திலே எப்போதும் சிலுவைச் சின்னம் - அவனது இறுக்கமான மதப்பற்றைப் பறைசாற்றிக் கொண்டி ருக்கும் எப்பொழுதும் ஒரு நீல சேட்டையே தோய்த் துத் தோய்த்துப் போட்டிருப்வான், பழுப்பு நிறத்தில் ஒரு வேட்டி முழந்தாள் அளவில் மடித்துக் கட்டியி ருப்பான், க ட  ைம யி ல் நேர்மையும் சுறுசுறுப்பும் கொண்ட இராயப்புவின் பார்வையில் ஒரு சாந்தம் இருக்கும். பேச்சிலே இயல்பான பணிவும் அடக்கமும் நிரம்பி வழியும் சொற்களில் நேர்மை தெரியும். சில தொழிலாளர்களைப் போலத் தேவை நேரத்திற்கு மாத்தரம் குழையும் ஆள் அல்ல இவன் என்பதை எப்பொழுதோ தெரிந்து கொண்டேன்.
என்னைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களைப் பற்றி பும் மேல்நிலையில் இருப்பவர்களைப் பற்றியும் எப் பொழுதும் ஒரு ஆய்வுக் கண்ணுேட்டத் துடனேயே பார்ப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது ஒவ்வொரு வரது உயர்வு தாழ்வுக்கும் உரிய காரண காரியங் களை ஆராய்ச்சி செய்து எனக்குள்ளேயே அதற்கான காரணங்களைக் கற்பித்துக்கொண்டு முடிவு செய்து திருப்திப்படுவதில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம். ஒரு சக்கிலியனுடைய மகனுகப் பிறந்த இராயப்பு வும் தனது புறச்சூழல்களின் காரணமாகவே ஐம்பத் தைந்து வயதையடையும் பருவத்திலும் ஒரு சைக் கிள் வாங்க வகையில்லாத அரசாங்க உத்தியோகம் பார்த்தான் என்று எனக்குள் கற்பித்துக்கொண்டே அவனுடன் பேச்சுக் கொடுக்கிறேன்.
* அதுசரி, நீ வாங்கப்போற சைக்கிள் என்ன விலே வரும்? "
" எங்கை தம்பி இப்ப சமான் எல்லாம் ஆன விலே குதிரை வில்யாய்ப் போச்சு, அந்த நாட்களிலை இருநூறு ரூபாய் விற்ற சைக்கிள் இப்ப எண்ணுாறு
56

ஒரு தொழிலாளி சைக்கிள் வாங்குகிறன்
தொளாயிரம் எண்டு விக்கிருங்கள் ஏன் தம்பி இந்த ஏழையள் ஒட்டுகிற சைக்கிலுக்கும் இவ்வளவு விலை வந்துது? நாங்களெல்லாம் காரிலை ஏன் போகப் Gumph?“
" இப்ப மனிசன் சாப்பாடில்லாமல் க ஷ் ட ப் படேக்கை நீங்கள் சைக்கிள் வேணுமெண்டால் விலை யைக் கூட்டாமல் வேறென்ன செய்வாங்கள். ம். இதைக் கொண்டு போய்ப் பிழைவிடாமல் நிரப்பிக் கொண்டுவா: பாப்பம். பென்சன் எடுக்கிற வயதிலே லோன் தரலாமோ எண்டு பெரிய உத்தியோகத்த ரோடை கதைச்சுப் போட்டுச் சொல்லுறன். பன்னி ரண்டு மாசத்திலேயே கடனைத் திருப்பிக் கட்டத்தக் கதாகத் தவணை போடுறன். பென்சனிலை போகுமட் டும் சைக்கிள் நீதான் பாவிக்கவேணும் அரசாங்கச் சட்டப்படி கடனுக்குச் சைக்கிள் வாங்கி வேறை ஆக் களுக்குக் கொடுக்க முடியாது. "
" சொந்தப் பிள்ளைக்குமோ தம்பி. "
*" சொந்த மகனெண்டாலும் சட்டம் சட்டந் தான். " பெரிய நீதவானைப்போல உரைக்கின்றேன்,
" சரி தம்பி - என்னவோ கடன் பணம் ரூபா ஐநூறையும் தந்தால் சரிதான். மற் ற  ைத நான் பார்த்துக் கொள்ளுறன். ' அப்பிளிக்கேசன் போமு டன் இராயப்பு போய்விட்டான்:
இராயப்புவுக்குச் சம்பளம் போடும் கிளாக்கரி டம் போய் அவனுடைய சம்பளக் கணக்கைப் பார்க் கின்றேன்; கடன் வழங்க முன்னர் கடன் எடுக்கும் உத்தியோகத்தருடைய சம்பளத்தைப் பார்த்து அவ ருக்குக் கடனை வழங்கிஞல் அவர் வாழ்க்கைச் சேல வுகளைச் சரிக்கட்டுவாரா என்று பார்க்க வேண்டிய கடப்பாடு எனக் குண்டு என்னை விட இரண்டு மடங்கு
57

Page 35
நெல்லை க. பேரன்
வயது அதிகமான இராயப்புவுக்கு எனது சம்பளத் தின் அரைவாசிக்கும் குறைவான சம்பளம். நான் கடமையில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் தான். இரா யப்புவோ முப்பத்தி நாலு வருஷம் சேர்விஸ் போட் டும் எவ்வளவு குறைந்த சம்பளம் வாங்குகிறன்? இதுதான் தொழில் மகத்துவமோ?
எஞ்சினியருக்கு ஆயிரம் ரூபாவும் அவருக்குக் கீழே வேலை செய்யும் கிளாக்கருக்கு முன்னூறு ரூபா வும் சம்பளம் கிடைக்கின்ற இந்தச் சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் இல்லாமல் வேறு என்ன இருக்கும்? ஒரு வேளை நான் ஒரு எஞ்சினியராக இல்லாததால் தான் இப்படிப் பேசுகிறேனே என்று எண்ணினேன்: சீச்சீ. அப்படி இருக்காது : நான் உள்ளதைச் சொல் லுகிறேன்; யார் எப்படி நினைத்தால் எனக்கென்ன ? என்னைப் போலவே மனைவியும் குழந்தைகளும் உள்ள எஞ்சினியருக்கு என்னை விட ஒரு இருநூறு ரூபாய் கூடக் கொடுத்தால் போதாதா? அரசாங்கம் பல் கலைக்கழகத்தில் இலவசக் கல்வியைக் கொடுத்துப் படிப்பித்த பிறகும் இவ் வள வு தொகை சம்பளம் தேவைதானு? இதுகூடப் போதாதென்று எல்லோரும் சாம்பியாவுக்கும், இங்கிலாந்திற்கும் ஒடுகிருர்களாம். தேசத் துரோகிகள், இவர்கள் அனுப்புகின்ற கள்ளப் பணத்திஞல்தான் இந்த நாட்டில் கணக்கு வழக்குத் தெரியாமல் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது; விலைவாசி களும் அதிகரித்துள்ளது ஒரு காலத்தில் ஐந்து ரூபா வுக்கு இருந்த பெறுமதி இன்று ஐம்பது ரூபாவுக்குக் கூட இல்லாமல் போய்விட்டது
இராயப்புவைப் போன்றவர்களுக்கும் சம்பளம் கூட்டிக் கொடுத்தால்தானே அவர்களும் ஏதோ மிச் சம் பிடித்து ஒரு சைக்கிள் வாங்கலாம். காரியாலய வேலே முடிந்த பிறகு பின்னேரமாக ஒரு நண்பரை
58

ஒரு தொழிலாளி சைக்கிள் வாங்குகிறன்
வழியனுப்புவதற்காக யாழ்ப்பாணம் புகையிரத நிலை யத்திற்குச் சென்றேன். அங்கே பொதி சுமக்கும் கூலியாக இராயப்பு வைக் கண்டேன்;
*" என்ன இராயப்பு இங்கும் வேலையா?"
" இல்லைத் தம்பி. ஒரு ரெம்பறறியாகத் தான் செய்யிறன் நீங்கள் கந்தோராலே தாற ஐநூறு ருபா கடனேட சைக்கிள் வாங்க ஏலாது. இ ன் னு ம் நானூறு ரூபா போட்டால் தான் ஒரு நல்ல சைக்கிள் வாங்கலாம்; அந்த மிச்சக் காசுக்காகத் தான் இப்பிடி நாராய் உழைக்கிறன், இரவிலை சினிமாத் தியேட்ட ருக்கும் கடலைச்சரை விக்கப் போறஞன். உங்கட வீட்டிலை ஏதும் கொத்து வெட்டு வேலை இருந்தாலும் சொல்லுங்கோ தம்பி வந்து கொத்தித் தாறன் . ஏதேனும் ஐஞ்சைப் பத்தைத் தராமல் விடப்போ றியளே. ' என்று சொல்லிச் சாந்தமாகச் சிரித்
p
தான் ,
இராயப்பு காரியாலயத்திற்கு வரும் சமயங்களில் தன்னேடு வேலை பார்த்த பல ஐயாமாரைப் பற்றிக் கதைகதையாகச் சொல்லுவான்; தான் சனிற்றறி லேபறராகச் சேரும் போதே த ப ா ல் பியோனகச் சேர்ந்து பிறகு சிறிது காலத்தில் போஸ்ட்மாஸ்டரி பரீட்சையில் பாஸ் பண்ணி இப் போது பெரிய போஸ்ட்மாஸ்டர் ஆகி ஒரு தபால் அலுவலகத்திற்கே பொறுப்பாக இருக்கும் ஒருவரைப் பற்றிச் சொன் ஞன். இன்னுமொருவர் கொழும் பில் பெரிய பதவி வகித்து மகனையும், மகளையும் இலண்டனில் படிக்க வைத்துப் பெரிய இடங்களில் திருமணமும் செய்து வைத்துப் பென்சனும் எடுத்துவிட்டார் என்று சொன் ஞன் இவர்கள் எல்லோருக்கும் கூப்பிட்ட வாய்க்கு ஒடி வந்து உதவி செய்த தான் மட்டும் இன்னும்
59

Page 36
நெல்ல க. பேரன்
சனிற்றறி லேபறராகவே இருந்து பென்சன் எடுக் கப்போவதாக இராயப்பு சொல்லும்போது உணர்ச்சி வசப்பட்டு அவன் கண்கள் பனித்தன;
நாங்கள் எப்போதும் க க் கூ சு வாளிகள் தாமா என்று கேட்காமல் கேட்பதுபோல எனக்குப்பட்டது நிர்வாக உத்தியோகத்தருடன் கதைத்து எப்படியும் இராயப்புவுக்கு ஐநூறு ரூபாய் கடன் வழங்கிவிட வேண்டும் என்று என்மனம் துடியாய்த் துடித்தது: சாதாரண தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடி யாத வகையில் வேலை பார்த்துப் பென்சனும் வாங் கப்போகும் ஒரு கக்கூசுத் தொழிலாளிக்காக என் மனசு இரங்கியது;
பாவம் இராயப்பு. மிச்சக் காசுக்காக இரவும் பகலுமாய் உழைத்துக் கொண்டிருக்கிருன்;
* sársmúd '', sJúgóv 75 (யாழ் சட்டக் கல்விகிலையக் கையெழுத்துச் சஞ்சிகை)
60

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாற்பது நிமிடம்
ASAA qLSLSLSLSLSLSSSMALLSSLSLSSLSSLALLSSeSLJLSSLASeSMeLSLALSLSLSLSLeSSeeSLLLLLAALLLLLASLLALALLSASLLLSAAAqLSLeSLSeeSSLSLSASeSqLSeSeSLSLSeSLSASSSLSLSSSMLMLSSLeeSLSLASSLLASLLALLSLLLAAS SLALSLALALSLSASLL ALASLLALeASLASLSAS
* சி. ரி. பி மைக் பழுதுபட்ட படியால் காரி யாலய அறிவித்தல் ஒன்றை நான் சொல்லவேண்டி இருக்கிறது; இன்று இரவு 6-30 மணியுடன் சகல பாதைகளிலும் போக்குவரத்துச் செய்யும் பஸ் வண் டிகளின் சேவை நிறுத்தப்படும் ஆகவே அவரவர்கள் ஆப்பிடுகிற பஸ் வண்டிகளில் டபக்கெண்டு தொத் திக்கொண்டு வீடு போய்ச் சேருங்கோ " இந்த அறி வித்தலைத் தமக்கே உரித்தான கணிரென்ற வெண் கலக் குரலில் சொல்லியவாறே மறுபடியும் தமது வியாபாரத்திற்கு வருகிருர் அந்த டைமன் சேட்காரர்.
" ஆ. சுடச்சுடத் தோசை. ஒரே ஒரு மித்தி ரன் பேப்பர்தான் இருக்கிறது: கல்லூரி மாணவி கடத்தப்பட்டாள். காதலன் தற்கொலை போனல் கிடையாது பொழுதுபட்டால் கிடையாது. பிறகு என்னைக் குறை சொல்லாமல் இப்பவே வாங்கிப்போ
6.

Page 37
Ossiblin s. Gugiy
டுங்கோ நல்லூர்க் கந்தன் கைலாச வாகனத்தில் வரும் காட்சி அருமையான காட்சி, நான் இப்ப போக வேணும் "
ஒரு கையில் சுவீப் டிக்கட்டும் மறுகையில் பத்தி ரிகையுமாக அவர் தமது பற்களை அடிக்கடி நெருடி யும், தமது பார்வையாளர்களை முழித்துப் பார்த்தும் முழங்கிக் கொண்டிருக்கிருர்,
அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் சட்டக் கல்வி நிலையத்தில் படித்துவிட்டு வீடு போவதற்காக பஸ் நிலையத்தில் வந்து 750 பஸ்சிற்காகக் காத்து நிற்கி றேன். ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ அ ல் ல து வேறு ஏதோ காரணங்களாலோ சுமார் அரைமணி நேரமாகப் பஸ் சைக் காணவில்லை கியூ நிரம்பியது தான் மிச்சம். போர் அடிக்காமல் இருப்பதற்காகக் கண்களையும் காதுகளையும் மிகவும் நன்ருகவே பயன் படுத்திக் கொள்கிறேன்.
இந்த சுவிப் டிக்கட்காரரை எனக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாகவே தெரியும். ஏனென்ருல் நான் ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் காரியாலயத்திற்கு வரும்போது இவரைப் பஸ் நிலையத்தில் தரிசிக்காமல் இருக்க முடியாது. இவரை இதற்குமுன்னரும் பல தடவைகள் யாழ்ப்பாணத்தில் கண் டி ரு க் கிறேன்; அதே டைமன் சேட் முழங்காலளவில் போட்டிருப் பார் மிகவும் ரசனையாக ஏ தா வது சொல்லிக் கொண்டே இருப்பார். வாய் அலுக்காது. திடீரென்று எனக்கு அண்மையில் வந்து,
?? என்ன பார்க்கிறீர். தெரியுமா என் னை ப் பற்றி. ம். (பல்லை நெருடிக் கொண்டே) உடுப்பிட்டி சண்டியன் சேஞதிராசன். அந்தக் காலத்திலை. " என்று தொடங்கி ஆங்கிலத்தில் முழக்குகிருர்: " தி தெப்போலியன் பொன்னபாட் கேம் விதி ஹிஸ் பெட்
62

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாற்பது நிமிடம்
டாலியன் ரு தி வோர் " என்று ஒரு ஐந்து நிமிடம் லெக்சர் அடிப்பார். திடீரென்று குரலைத் தாழ்த்தி " இண்டைக்குக் கால மை பழஞ்சோறுங் கறியும் சாப் பிட்டனுன் வயித்தை என்னவோ செய்யுது சுவீப் முடிஞ்சதும் டாக்குத்தர் மணியத்திட்டைப் போக வேணும் டாக்குத்தர் மணியத்தின் ரை பேரன் அம் பலவாணர் எண்டால் அந்தக் காலத்திலை பேர் போன மனுசன் வயிற்றுக்குத்து, நாரிப்பிடிப்பெல்லாம் அவ ரோடதான். ' என்கிருர். அப்போது யாரோ சிங்க ளக் குடும்பம் ஒன்று நயினுதீவு பஸ்சைத் தேடி அல் கிருரர்கள்; அவர்களை ஆங்கிலத்தில் அழைத்துச் சரி யான இடத்தைக் காண்பிக்கின்ருர் ஒவ்வொரு பஸ் வண்டியும் வரவர அண்மையில் சென்று தமது வியா பாரத்தை நடத்துகின்ருர்
திடீரென்று என்னுடைய இடது கையை யாரோ ஒருவர் சுரண்டுவது தெரிகிறது; திரும்பிப் பார்த்தால் ஒரு பெண் - சுமார் 35 வயது மதிப்பிடலாம்: கசங் கிய சேலை கட்டியிருந்தான் முகத்தைக் கெஞ்சும் பாவனையில் வைத்துக் கொண்டே, " அண்ணை ஒரு பத்துச் சதம் தருவியளே , " என்கிருள்: இதுவும் ஒரு பழைய கேஸ்தான். கடந்த நான்கு ஆண்டுக ளாக நான் கேட்டுப் பழகிய குரல் தான். என்னிடம் இல்லை என்று தலையசைத்து விட்டு என் கண்களே வேறுபுறம் திசை திருப்புகிறேன், இறுக்கமான மினி உடைகளை அணிந்திருக்கிருர்கள் படம் பார்த்து விட் டுப் போகிருர்கள் போலும் இவர்களுக்குப் பின் வரி சையில் சில வாலிபர்களும் நின்று த மா ஷா கக் கதைத்துச் சிரித்துக் கொள்கிருர்கள் இவர்கள் இடை யிடையே பெண்கள் மத்தியிலும் சிரிப்பைப் பரவ விடுகிருர்கள். இப்போது டைமன் சேட்காரரி அவரி களின் முன்னல் போய் நின்றுகொண்டு பாட்டுப் பாடி யும் ஆடியும் காண்பிக்கிருர்
63

Page 38
நெல்லை க. கபேரன்
"" ஆளை ஆளைப் பார்க்கிருய், ஆட்டத்தைப் பார்த் திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிருய் " என்று அவர் ஆடுகிருர், இள வட்டங்கள் குபிரென்று சிரிக்கின்றன,
" ஐயா கண் தெரி யா த கபோதி தர்மம் போடுங்கசாமி " என்ற குரல் என் ரசனையைப் பட் டென்று அறுக்கிறது; வழக்கமான குருட்டுப் பிச்சைக் காரன்தான் ஒரு பழைய லக்ஸ்பிறே டின்னையும் தடி யையும் கொண்டு தடவித் தடவி நகர்ந்து கொண் டிருக்கிருன் . இவன் காலையில் ராணித் தியேட்டர் அருகாமையில் பீடியும் புகைத்துக்கொண்டு அமைதி யாக இருப்பதை நான் பல தடவைகள் அவதானித் திருக்கிறேன். உண்மையில் குருடுதான என்பது எனக் குச் சந்தேகமே! பிச்சைக்காகக் குருடர்களாகவும் நொண்டிகளாகவும் பயிற் ற ப் பட்ட பலரை நான் முன்பு கொழும்பு நடைபாதைகளில் கண்டிருக்கிறேன் உச்சி மகாநாட்டின் போது இவர்களை லொறிகளில் பிடித்துக்கொண்டு போஞர்களாம். யாழ்ப்பாணத்தி லும் இந்தப் பிச்சைக்காரர்களை முனிசிப்பல் லோஹி யில் பிடித்துக்கொண்டு போனல் என்ன என்று நான் நினைப்பதுண்டு. நியாயமான தேவைக்காக இல்லாமல் தொழிலுக்காகவே பிச்சை எடுப்பவர்களை எனக்கு அடியோடு பிடிக்காது. எத்தனையோ பிச் சைக்காரர் களை ' தங்கப் பதக்கம் ' கியூ வரிசையிலும் சாராய ஜொயின்ற்றுகளிலும் நான் கண்டிருக்கிறேன்:
750 எக்ஸ்பிரஸ் கியூ வரிசையும் 751 எக்ஸ்பிரஸ் கியூ வரிசையும் ஒரே இடத்தில் இருப்பதால் எனக்கு புறமோஷன் கிடைத்தது: 751 காரரைப் போகவிட்டு நான் இன்னும் முன்னுல் நகர்ந்து நின்றேன்; இதற் கிடையில் இரண்டு பெண்கள் குறுக்கு வழியைக் கையாண்டு எனக்கு முன்ஞல் முதல் வரிசைக்கு வந்து விட்டார்கள். இவர்கள் செய்தது நியாயமில்லை என்று எனக்குப் பட்டாலும் நான் அவர்களை ஒன்றுமே பேச
64

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாற்பது நிமிடம்
வில்லே. அவர்களும் என்னைப் பார்த்து முறுவலித்த வாறே தமது பிழையைச் சரி செய்துகொள்கிருர்கள் கரவெட்டியில் யாரோ தங்களுடன் படித்த பிள்ளைக் குக் கலியாணமாம். அதற்குத் தான் போகிருர்களாம்; மிகவும் எடுப்பாக உடையணிந்து கலகலவெனச் சிரித் துப் பேசிக்கொண்டிருந்த அவர்கள் மீது பட்டும் படா மலும் கண்களை மேயவிட்டேன். இந்த மேயவிடுகிற பழக்கம் மட்டும் இல்லையென் ருல் பஸ் ஸ்ராண்டில் காத்து நிற்கிற நேரத்தை எ ன் ஞ ல் சமாளிக்கவே Փւգ Ամո 3513
751 பஸ் தன்னுடைய நீண்ட வயிற்றை நிரப் பிக் கொண்டு பக்க வழிகளிலும் ஆட்களை அணைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டது. இட்போது கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் படவே மறுபடியும் முன்புறக் காட்சிகள் புலனுகின்றன; கச்சேரியடி பஸ்கியூ நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் பஸ் வரவில்லைப் போலும் இளவட்டங்களில் சிலர் பெண்களுக்குள் நுழைந்து மிகவும் அன்னியோன்யமாகக் கதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன் படம் பார்த்த நினைப் புகளைப் பகிர்ந்து கொள்கிருர்கள் என்று நினைத்தேன். இப்படியான அணைப்புச் சுகங்களுக்காக ஏங்கித் தவ மிருக்கும் எத்தனையோ நண்பர்களையும் பெண்களையும் நான் பி ர யா ண த் தி ன் போது கண்டிருக்கிறேன் கொண்டக்டர் முன்னுக்குப் போங்கோ என்று சொல் வதையே சாக்காக வைத்து ஏதோ தாங்கள் சுத்த மாணவர்கள் என்றும் கொண்டக்டரின் கட்டளைக்குப் பணிபவர்கள் போலவும் காட்டிக்கொண்டு எக்ஸ் பிரஸ் பஸ்களில் பெண்களுக்குள் நுழைந்து பெரு மூச்சுகளை அவர்களுடைய தோள்களிலும் கழுத்துக ளிலும் விட்டுக்கொண்டு பிரயாணம் செய்யும் பலரை நான் கண்டிருக்கிறேன்: இந்த அணைப்புச் சுகங்களுக் காகவென்றே மற்ற வசதியான பஸ்களைத் தவற விட்டு எக்ஸ்பிரஸ்களை நாடி ஏறும் நாகரிக மணிக
65

Page 39
நெல்லை க. பேரன்
ளேயும் எனக்குத் தெரியும் மஞ்சத் திருவிழாக்களும், கைலாச வாகனங்களும், சப்பறங்களும் இவர்களைப் போன்றவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டுதானே வருகின்றன.
கொழும்பில் நான் கூட்டு அறைவாசியாக இருந்த போது வெசாக் உற்சவம், ஆடிவேல் விழாக்களுக் கெல்லாம் ஊதியம் பெருத பொலிஸ்காரர்களாக நானும் நண்பர்களும் கால்கள் நோக அலைந்திருக்கி ருேம், ஒரு தடவை அலைந்து களைத் தவர்களுக்குப் பிறகு அலைய மனமே வராது. ஆனனப்பட்ட விசு வாமித்திரனே த வங்கு லந்து சலனப்பட்டபோது சாமானிய மனிதன் அதுவும் அந்தக் காலத்தில் வெள் ளவத்தையில் எங்கோ ஒரு சிறு மூலை அ  ைற யி ல் வாழ்ந்த ஜந்துவாகிய என்னுல் சலனங்களைக் கட்டுப் படுத்தியிருக்க முடியாதுதானே.
750 பஸ் வருவது தூரத்தில் தெரிகிறது என் சிந்தனைத்தொடர் அறுந்து இப்போது பஸ்சிற்குள் ஏறுவதையும் இடம் பிடிப்பதையும் பற்றி யோசிக் கிறேன். ஒ. எனக்கு மிகவும் தெரிந்த ஆமிதான் கொண்டக்ரர். நான்கு ஆண்டுகளாக நானும், ஆமி பும் எத்தனை தடவைகள் சந்தித்துவிட்டோம் வந்த களைப்பில் பெரிதாக மூச்சுவிட்டு ஆறு கிற து பஸ் வண்டி றைவர் எழுந்து வெளியே வந்து தமது ஆச னச் சூட்டை ஆற்றுகிருர் ஆட்கள் முன் பக்கமாக ஏருமல் ஒரு பெரிய தகரம் வைத்து அடைக்கப்படு கிறது; ஆஞலும் சில சி. ரி. பி காரர்கள் தகரத் தையும் தொங்கி ஏறுகிருர்கள். ஒசியிலே பயனஞ் செய்யும் சி. ரி பி காரர்களுக்கு இந் த ப் பஸ்க ளெல்லாம் தங்களுடைய சீதனம் என்ற நினைப்புப் போலும் மணிக்கணக்காக கால் கடுக்கக் காவல் நிற் கும் பிரயாணிகளைப் பற்றிச் சிந்திக்காமல் காநல வாதிகளாகி இடம் பிடிக்கும் இந்த வேசைத்தனங்களை
66

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாற்பது நிமிடம்
நான் பல த ட  ைவ கள் அவதானித் திருக்கிறேன். மேலதிகாரிகளுக்குப் புகார் செய்தாலும் கவனிப்ப தாகத் தெரியவில்லை எனக்கு முன்னுல் நின்ற பெண் கள் இடம் பிடித்த சீற்றுக்கு பின்புறமாகவே ஒரு மூலையாக உட்கார்ந்து கொள்கிறேன்; பஸ்சிலும் "சரி றெயினிலும் சரி கோனர் சீற் பிடிப்பதில் எனக்கோர் அலாதிப் பிரியம்
பஸ்சின் வயிறு மறுபடியும் நிரம்புகிறது; யூல் பிறைனரைப் போன்ற உருவமுடைய றைவர் வந்து தனது ஆசனத்தில் அமருகிருர் ஆசனம் மறுபடியும் சூடேற ஆரம்பிக்கிறது. ஆமி இரண்டு தடவைகள் கயிற்றைப் பலமாக இழுத்து மணியை அடிக்கிருர், பஸ் பின்புறமாக நகர்ந்து பிறகு முன்னுல் நின்ற கோப்பாய் பஸ்  ைச யு ம் விலத்திக்கொண்டு முன் னுேக்கி நகர்கிறது; ராணி சினிமாவில் உயரக் காட் சிக்கு வைக்கப்பட்டிருந்த " அவள் ஒரு தொடர் கதை " கட்டவுட்டுகளைப் பார்த்துக் கொண்டே மறு படியும் ஆழமான சிந்தனைகளில் ஆழ்ந்து விடுகிறேன்:
செவ்வந்தி, செப்டம்பர் 1976
67

Page 40
வாடகைக்கு வீடு
ALqAMSqLAeS AAALSALAALLL AAALLSSeSLSALSL LASLeSLALSLALSLASSL ALeAeSLSLA SSALLLS SASMqqSeMAqSTSLALASS
பக்கத்து வீட்டில் பியானே வாத்தியத்தின் மெல் லிசை மெல்ல மிதந்து வந்து அருளம்பலத்தாரின் காதுக்கு எட்டியது; பலரகக் கா ர் க ள் வருவதும் போவதுமாக அந்த வீடு ஒரே கலகலப்பில் ஆழ்ந்தி ருந்தது அருளம்பலத்தார் தனது ஈசிச்சேரில் சாய்ந் தபடியே யாழ்ப்பாணம் கனகலிங்கம் சுருட்டில் ஒன் றைப் பற்ற வைத்துக்கொண்டு பலத்த யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.
அவருக்குக் கொழும்பில் அதுவும் கொள்ளுப்பிட் டியில் ஒரு பெரிய வீடு சொந்தமாக இருக்கின்றது. யப்பான்காரன் குண்டு போட்ட காலத்தில் சிங்கப் பூரில் இருந்து இலங்கைக்கு ஓடிவந்த பிரகிருதிகளில் அருளம்பலத் தாரும் ஒருவர். வ ரு ம் போது ஒரு மூட்டை பிரிட்டிஷ் கரன்சி நோட்டுக்களையும் அள்ளிக் கட்டிக்கொண்டு வந்தாரி என்று கேள்வி. இல்லாவிட் டால் இருபது வருஷங்களுக்கு முன்னரேயே கொழும் பில் எப்படி ஒரு வீட்டை வாங்கியிருக்க முடியும்?
68

நெல்லை க. பேரன்
வீட்டை வாங்கிய உடனேயே அதை இரண்டு பகுதி களாகப் பிரித்துக் குறுக்குச் சுவர் கட்டி இரண்டு வீடுகளாக்கினர். ஒன்றில் தான் இருந்து கொண்டு மற்றதைப் பியரத்தினுவுக்கு வாடகைக்குக் கொடுத் தார்;
அப்போது வாடகையொன்றும் அவ்வளவு தூரம் அதிகமில்லை; இரண்டு பெட்றுாம்களும், ஒரு சமையல றையும், ஒரு பாத்றுரமும் அத்தோடு சேர்ந்த கக்கூ சும் உள்ள அந்தப் பாதி வீட்டிற்குப் பியரத்தின இருபது ரூபாதான் வாடகை கொடுத்தான் இருபது வருஷங்களுக்கு முன்னர் இருபது ரூபா இப்போதைய இருநூறு ரூபாவுக்குச் சமம் என் பார்கள் ஆளுல் ஒன்று பியரத்தின இப்பவும் அருளம்பலத்தாருக்கு இருபது ரூபாதான் வாடகை கட்டி வருகிறன்.
இன்றைக்குப் பியரத்தினவின் மூத்தமகள் கருளு வதிக்குப் பிறந்த நாள் விழா அதுதான் பக்கத்து வீட்டில் ஒரே ஆர்ப்பாட்டமும் கலகலப்புமாக இருக் கிறது; கேக் வெட்டியவுடன் " விஸ் யூ ஏ ஹப்பி Guri iš G-... @IDL? Guitř Š GL e g ... ” Taivo ஆங்கிலப் பாடல் காதைத் துளைக்கிறது; அருளம்ப லத்தாருக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது; சுருட் டோடு சேர்ந்து மனமும் புகைகிறது.
" அயோக்கிய ராஸ்கல் - இவனை வாடகைக்கு இருத்தி இருபது வருஷமாகிறது. இன்னும் இருபது ரூபாவுக்கு ஒரு செப்புக் காசுகூடக் கூடத் தருவ தில்லை; ஆளை எழுப்பலாம் என்று இயன்றவரை பார்த் தேன் முடியவில்லையே " என்று கறுவிக் கொண்டார்;
கொழும்பில் வீடுகளில் வாடகைக்கு இருத்துகிற வர்களைத் தகுந்த காரணமின்றிப் பலாத்காரமாக எழுப்ப முடியாது வாடகைப் பணமும் நினைத்தபடி அதிகமாக அறவிட முடியாது அதற்கு அரசாங்கத்
69

Page 41
வாடகைக்கு வீடு
தின் வாடகைச் சட்டம் தடையாக இருக்கும் இவற் றையெல்லாம் நன்ருக அறிந்து வைத்திருந்த பியரத் திணு அருளம் பலத் தாரின் திருகுதாள வேலைகள் ஒன் றுக்கும் அசைந்து கொடுக்கவில்லை
ஒருநாள் அருளம்பலத்தார் பியரத்தினவின் வீட் டுக்கு முன்னுல் நின்று கண்டபாட்டில் பேசிவிட்டார். இன்னும் இருபத்து நாலு மணித்தியாலங்களில் வீட் டைக் காலி செய்யவேண்டும்; இல் லா வி ட் டா ல் பொலிசு வைக் கூப்பிடுவேன் என்று வெருட்டிப் பார்த் தார். பியரத்திஞ ஒன்றும் பேசவில்லை; அன்று இரவு தான்கு சாரங்கட்டிய தடியன்கள் வந்து அருளம்ப லத் தாரின் வீட்டுக் கதவைத் தட்டினர்கள். வெளியே வந்த அருளம் பலத்தார் என்ன ஏது என்று விசாரிக்க முன்னரேயே அவர்கள் சிங்களத்தில் கண்டபடி பேசி ஞர்கள். அவர்களில் ஒருவன் கடைசியாகக் கொச் சைத் தமிழில்,
" மாத்தயா. நாங்களும் நீங்களும் மனுச ஜாதி. இலங்கை ஜாதி நம்மட பியரத்தின மாத்தயாவை நீங்கள் ஞாயமில்லாமே வூட்டைவுட்டுப் போறதுக் குச் சொல்றது சரியில்லை. ஒங்க பணத்தாசை அதிக மாச்சு துன்னக் கடைசியிலே வீடே ஒங்களது இல் லாமே போயிடும். ஆமா. "
என்று அழுத்தமாகச் சொன்னன் இன்னுெருத் தன், "அடோ நம்ம கிட்டே ஜாதி தாண்ட எப்பா." என்று சொன்னன்: அருளம்பலத் தாருக்கு ஐம்பத்தி யேட்டாம் ஆண்டுக் கலவரம் ஞாபகத்திற்கு வந்தது! ஒன்றும் பேசாமல் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளே திரும்பிவிட்டார். பொலிசுக்கு முறையிட் டால் என்ன என்று யோசித்தார். பிறகு வீட்டை எறிந்து கிறிந்து உடைச்சுப் போடுவாங்கள் சுத்தக் காடையங்கள் என்று பயந்து பேசாமலே இருந்து
70

நெல்லே க. பேரன்
விட்டார். இப்போது அவற்றையெல்லாம் நின்த்துப் புகைந்து கொண்டிருந்தார்; தன்னுடைய வீட்டில் இன்னுெருவன் சொந்தம் கொண்டாடுவதோடு சன் டித்தனமும் செய்கிருனே என்று தான் அவருக்கு ஆத்திரம்
இன்றைக்கு இருக்கும் நிலையில் அந்த வீட்டை வேறு யாருக்காவது வாடைக்கு விட்டாரென்முல் நிச்சயமாக இருநூற்றைம்பது ரூபாய் வாங்குவார்; ஆழத்தெரியாமல் காலைவிட்டுவிட்டு இப்போது அவ திப்படுகிருர்,
பிரபல சிங்களப் பாடகரான சி. ரி பெர்ஞன் டோவின் " பைலா " ராகப் பாட்டுக்கள் அமர்க்கள மாக ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த இசைக்கேற் பக் கருணுவதி நடனமாடிக் கொண்டிருந்தாள்:
அந்த வீட்டின் பக்கத்தில் இன்னும் பல தமிழ்க் குடும்பங்கள் இருந்தன அவர்களுக்கெல்லாம் மகளின் பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி அழைப்பிதழ் அனுப்பியிருந்த பியரத்திஞ அருளம்பலத்தாருக்கும் ஒரு அழைப்பிதழை அனுப்பியிருந்தான்; அதை அவர் தூக்கி மூலயில் கிடந்த குப்பைக் கூடைக் குள் போட்டு விட்டார். அவ்வளவு ஆத்திரம். எல்லாம் வாடகை யைப் பற்றித்தான்
பிறந்தநாள் விழாவில் " பைலா " நடனத்தின் சத்தம் வரவர அதிகரித்தது, "ஹாய், ஹாய்" என்ற கூச்சல்களும் கை தட்டல்களுமாக ஒரே சத்தம், அருளம்பலத்தார் திடீரென எதையோ முடிவுகட்டி யவர்போலத் தொலைபேசியைக் கையில் எடுத்தார்; கொள்ளுப்பிட்டி பொலிஸ் ஸ்டேஷனுக்குப் போன் GV of A5 nrif:
7

Page 42
வாடகைக்கு வீடு
** இங்கே எனது வீட்டில் ஒரே கூச்சலும் குழப் பமுமாக இருக்கிறது. யாரோ குடித்துவிட்டுக் கூத் தாடு கிருர்கள். என் ஞல் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. தயவு செய்து உடனே வாருங்கள் ' என்று சொல்லிவிட்டு ரிசீவரைக் கீழே வைத்தார்:
சில நிமிட நேரங்களில் பொலிஸ் ஜீப் ஒன்று வந்து பியரத்தினவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. பிறந்த நாள் விழா தான் இவ்வளவு அமர்க்களமாக நடக்கிறது என்பதைக் கண்ட இன் ஸ்பெக்டர் பியரத் தினவிடம் " பக்கத்து வீ ட் டி ல் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் அமைதியாகக் கொண் டாடும்படி " கூறி எச்சரித்துவிட்டுச் சென் ருர், அரு ளம்பலத்தார்தான் பொலிசுக்குப் புகார் செய்திருக்க வேண்டும் என்பதைப் பியரத்தினு தெரிந்து கொண் Lintair
அன்றிரவு அருளம்பலத்தாரின் வீட்டிற்குக் கல் லெறி விழுந்தது. கதவுக் கண்ணுடிகளும் உடைந்து விழுந்தன. அருளம்பலத்தார் துடியாய்த் துடித்தார்: மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாகப் புறச்டர் நீலகண்டனைப் பிடித்து பியரத்தின மீது வழக்கொன்று தாக்கல் செய்தார். தனது வீட்டைவிட்டு ஒருமாத கால எல்லைக்குள் அவன் வெளியேறிவிட வேண்டும் என்பதே வழக்கின் சாராம்சம்
அருளம் பலத் தாருக்கு யாழ்ப்பாணத்தில் அதிகம் நிலபுலன்கள் இருக்கிறதென்பதையும் இரண்டு வீடு கள் யாழ்ப்பாணத்தில் உள்ளனவென்றும் தான் வசிப் பதற்கு ஒரு காற்குழி காணியாவது கிடையாதென் றும் பியரத்தினு கோர்ட்டில் எடுத்துக் காட்டிஞன் தன்னை வீட்டை விட்டு வெளியேறச் செய்வது நியாய மற்றது என்றும் வேண்டுமானுல் வாடகைச் சட்டப் படி அந்த வீட்டின் வாடகையைக் கொடுப்பதாக வும் ஒப்புக் கொண்டான்
72

நெல்லை க. பேரன்
கனம் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பின்போது "" அருளம்பலத்தாரின் முழு வீட்டிற்கும் அரசாங்கக் கணக்குப்படி முப்பது ரூபா தான் வாடகை என்றும் பியரத்தினு பாதி வீ ட் டை யே உபயோகிப்பதால் மாதா மாதம் பதினைந்து ரூபா மட்டும் கட்டி வர7 வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் "
அருளம்பலத்தார் இப்போது பியரத்தினுவிடம் பதினைந்து ரூபா மட்டும் வாங்கிக்கொண்டு பேசாமல்
இருக்கிருர், பியரத்தினுவும் பிறந்த நாள் விழாக் களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறன்
சுதந்திரன், பெப்ரவரி 1970
மறுபிரகரம், தாமரை 1970
73

Page 43
பெருமூச்சு
மலையின் ஈரலிப்பான பகுதிகளிலிருந்து சுரந்து பின்னர் மலையோடு இணைத்துக் கட்டப்பட்ட மூங்கிற் பீலிகளில் விழுந்து சிறுதுளி பெருவெள்ளம் போல வேகமாக ஓடிவந்த குளிர்மையான நீர் சண்முகத் தின் கார்முகில் மேனியில் பட்டுத் தெறித்துச் சில் லிட வைத்தது. குளிர் ஒன்றும் அவனுக்குப் புதிய அனுபவமில்லையென்ருலும் அதிகாலை ஆறு மணிக்குப் பீலித் தண்ணிர் பட்டபோது. அவன் உடல் நடுங் கிய நடுக்கம். தலையிலிருந்து கால்கள் வரை ஒரு தடவை சி லி ர் த் துக் கொண்டான். பீவியிலிருந்து கொள கொளவென்று சப்தித்து விழும் தண்ணிரில் தலையைக் கொடுத்தபடியே வாயைத் திறந்து நீரை ஏந்தி ஏ ந் தி க் கொப்பளித்துக் கொண்டிருந்தான் மனம் மட்டும் ஆனந்தமாகச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது;
74

நெல்லை க. பேரன்
அன்றைக்கு மத்தியானம் யாழ்தேவியில் அவனை ஊருக்குப் போகும்படி முதலாளி சொல்லியிருந்தார். கலிகமத்தில் ஒரு யாழ்ப்பாணத்தவரின் சு ரு ட் டு க் கடையில் வேலை பார்த்து வந்த சண்முகம் அன்றைக்கு ஊருக்குப் போகிருன் கொழும்பிலிருந்து 2 மணி 5 நிமிடத்திற்குப் புறப்பட்டு வரும் யாழ்தேவி பொல் காவலையை வந்தடைய சுமார் மூன்று மணியாகும். அவன் ஊருக்குப் போவதானுல் பொல் காவலையில் தான் ரயில் ஏறவேண்டும் கலிக மத்தில் இரு ந் து பொல் காவலைக்கு பஸ்சில் போய்விடுவான் இந்ததி தடவை அவன் ஊருக்குப் போவதில் விசேஷம் இல் லாமலில்லை சண்முகத்திற்கு ஊ ரி ல் பேச்சுக்கால் நடக்கிறது:
சண்முகம் அந்தக் கடைக்கு வந்து இப்போது ஆறு வருஷமாகிறது. முதன் முதல் தனது சுருட்டுக் கடையில் அந்தப்புரத்தில் (அதாவது அடுக்களையில்) சட்டிபானை கழுவவும் கடையில் நிற்பவர்களுக்குச் சமையல் செய்யவும் அவனை வேலைக்கமர்த்திய முத லாளி அவனது நேர்மையையும் வேலைத்திறனையும் கண்டு படிப்படியாக முன்னல் பட்டறையில் இருந்து வியாபாரஞ் செய்யுமளவிற்குப் பிரமோஷன் கொடுத் திருந்தார். இப்போது சண்முகத்திற்கும் சேர்த் து இன்ஞெரு புதுப் பையன் சமைக் கிருன் . இருந்தாலும் சண்முகத்தின் சமையல் திறனை முதலாளி இடைக் கிடை புதுப் பையனிடம் ஞாபகப்படுத்திக் கொள் ளுவார். கடையில் சமையல் செய்த காலத்தில் சண் முகம் ஆக்கித் தரும் பச்சை வல்லாரைச் சம்பலையும், மாசிக் கருவாட்டுச் சம்பலையும் நினைத்தால் முதலா ளிக்கு இப்பவும் நாக்கில் நீர் ஊறும் அதற்காகச் சண்முகத்தை ஒரேயடியாகச் சமையற்காரணுக வைத் திருக்க அவர் விரும்பவில்லை;
அன்றைக்கும் குளித்துவிட்டு வந்து கடையெல்
லாம் திறந்து வியாபாரம் செய்துவிட்டு மத்தியானம் பொல் காவலைக்குப் போகும் சமயத்தில் முதலாளி
75

Page 44
பெருமூச்சு
அவன் கையில் அந்த மாதச் சம்பளம் அறுபது ரூபா வும், மேலதிகமாக இருபது ரூபாவும் வைத் தார். இன்னும் கடையிலிருந்து பேரீச் சம்பழத்தில் இரண்டு ருத்தலும் விசுக்கோத்துகளில் இரண்டு பெட்டியும் கொடுத்துவிட்டுக் கனநாள் நிக்காமல் கெதியாய் வரவேணும் இங்கை வியாபாரஞ் செய்ய உன்னைவிட வேறு நல்ல ஆக்களில்லை ? என்றும் அவர் சொல்லி விட்டார். " முதலாளிக்குத்தான் எ வ் வ ள வு நல்ல மனசு " என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.
சிறுவயதிலேயே சண்முகத்தின் தகப்பஞர் கால மாகிவிட்ட பிறகு தாய் அன்னம்மாதான் எல்லாம் செய்து வந்தாள். அன்னம்மாவின் கூடப்பிறந்த அண் ணர் அருமைத்துரை நல்ல இடத்தில் ச ம் ப ந் த ம் செய்து ஒரு அரிசி மில்லும், டிராக்டரும் வைத்துக் கொண்டு பசையோடு வாழ்ந்து வந்தார். அவரது மகள் காஞ்சஞ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள். சண்முகம் சின்ன வய தில் படிப்பில் நல்ல கெட்டிக்காரன். தகப்பனும் இறந்த பிறகு அவனது படிப்புச் செலவும் சகோதரி யின் வாழ்வுப் பிரச்சினையும் தன் மீது வந்து பொறி யப் போகிறதே என்ற பயத்தில் அருமைத்துரை முன் யோசனையுடன் சண்முகத்தைத் தன் நண்பர் ஒருவ ரின் கடைக்கு நேர காலத்துடன் அனுப்பிவிட்டார்.
சண்முகம் கடையிலிருந்து வரும் ஒவ்வொரு தட வையும் மாமனுர் அருமைத்துரையின் வீ ட் டு க் கு ப் போவது வழக்கம். இந்த முறை காஞ்சனுவும் பல் கலைக்கழக விடுமுறையாதலால் வீட்டில் நின் ருள். அவளுக்குச் சண்முகத்தையும் அவனது குடும்பத்தை யும் கொஞ்சம் இளக் காரமாகப் பேசுவதில் ஒரு தனி விருப்பம். அதைத் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண் டாள் என்றும் சொல்லலாம். சுருட்டுக் கடையில் கூலி வேலை செய்யும் சண்முகத்தைத் தன் அத் தான்
76

நெல்லே க. பேரன்
எ ன் று சினேகிதிகளிடம் அறிமுகப்படுத்தவே அவ ளுக்கு வெட்கமாக இருக்கும். அவனே அவளது குடும் பத்தினர் ஒரு வேலைக்காரனை அல்லது தீண்டத்தகா தவனைப் பார்ப்பதுபோலவே பார்த்து வந்தார்கள் என்ருலும் ஊராருக்கு முன்னல் அவ்வளவு வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்கிஞர்கள்.
அன்றைக்குத் தான் கடையிலிருந்து கொண்டு வந்த பேரீச் சம்பழத்துடன் காஞ்சனவின் வீட்டுக்குச்
சண்முகம் போனபோது அவள் , " அம்மா அம்மா. மாப்பிள்ளை பேரீச் சம்பழத்தோட வாழுர், " என்று கேலியாகக் கூறிக்கொண்டே, " அப்பிள், திராட்
சைப் பழம் இப்ப எடுக்கேலாதா ? ஏன் கலிகமம் பகு தியிலை நிறையப் பழங்கள் கிடைக்குமே!’ என்று கேட்டுவிட்டுப் பேரீச்சம் பழத்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் கொடுத்துவிட்டாள். " நீ சாப்பிடவில்லையா காஞ் சஞ? " என்று சண்முகம் கேட்டபோது, " நான் உதெல்லாம் சாப்பிடுவதில்லை " என்று முகத்திலடித் ததுபோலப் பதில் சொன்னுள் சண்முகம் ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டான். " நானும் இவளைப்போல யூனிவசிட்டிக்குப் போய்ப் படித் திருந்தால் இப்படி எடுத்தெறிந்து பேசு வாளா? என்னைத்தான் சின்னணி லேயே கடைக்கு அனுப்பிவிட்டார்களே " எ ன் று குமுறினன்
தன் கணவர் உயிரோடு இருந்தபோது அன்னம் மாவுக்குத் தன் அண்ணனது குடும் பத்துடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு இருந்த தென்னவோ உண்மைதான். ஆனல் அவளது கணவர் இறந்த பிறகு தமையனும் அவளது குடும்ப முன் னேற்றத்தில் அவ்வளவு சிரத்தை எடுக்காதபோது தன் அண்ணன் மகளுக்கும் சண்முகத்திற்கும் ஒரு காலத்தில் திருமணஞ் செய்துவைக்க வேண்டும் என்ற
77

Page 45
பெருமூச்சு
நினைப்பையே அடியோடு மறந்துவிட்டாள் கலிகமம் கடையில் மகன் நன்முக இருக்கிருன் என்பதை அறிந்து கஷ்டப்பட்ட குடும் பங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் பெண்களுக்குச் சண்முகத்தை மணம் பேச முன்வந்த னர். என்ன இருந்தாலும் சண்முகம் சொந்தமாக உழைக்கும் ஒரு ஆண்பிள்ளையல்லவா ?
சண்முகத்திற்குக் கலியாணம் பேசுகிருர்கள் என்ற கதையே அருமைத் துரைக்கு இளக்காரமா கப்பட்டது. " உவனுக்கென்ன கலியாணம் ? " என்று மனதுள் நினைத்துக் கொள்ளுவார், ஆனலும் வெளிப் படையாக ஏதும் குறிப்புரைக்காமல் பேசாமல் இருந்து விடுவார் அன்னம்மா பண்பான ஒரு விவ சாயியின் மகளுக்குத் தன் மகனை மணம் பேசி முடித் தாள். கிளிநொச்சியில் மூன்று ஏக்கர் வயலும் காசாக ரூபா இரண்டாயிரமும் சீதனமாகக் கொடுத்தனர் * சண்முகத்தின் முதலாளியும் வந்து கலியாணத்தைச் சிறப்பித்தார். அவர் தனது அன்பளிப்பாக ஐநூறு ரூபா கொடுத்தார். " சண்முகத்தைப்போல நேர் மையான உழைப்பாளியை ஒருதராலும் பிடிக்கே லாது " என்று மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்,
கலியாணத்தின் பின்னர் சண்முகத்தைக் கலிகமம் கடைக்கு அனுப்ப அவனது மனைவியும் , மாமனரும் விரும்பவில்லை, இன்னும் கொஞ்ச முதலைப் போட்டு ஊரிலேயே சந்தியில் பிரபலமான இடத்தில் ஒரு பல சரக்குக் கடையை வாடகைக்கு எடுத்துக் கொடுத் தார்கள்
சண்முகத்தின் முதலாளியும் இதற்கு ஒன்றும் பேசவில்லை. அவனும் தன்னைப்போல ஒரு முதலாளி யாக வந்திடுவான் என்று வாழ்த்தி அனுப்பினர் மலைநாட்டில் சிங்கள மக்களிடையும், சுற்றவரவுள்ள தோட்டத் தொழிலாளர்களிடையும் முதலாளிக்கு
78

நெல்லை க. பேரன்
நல்ல மதிப்பு: நம்பிக்கையாகக் கடன் கொடுப்பார்: மற்றவர்களைப்போல விலை விஷயங்களிலும் கருராக இருப்பதில்லை. கஷ்டப்பட்டவர்களுக்கு அவசரத்திற்கு ஐந்தோ பத்தோ கடஞகக் கொடுத்து உதவுவார் எல்லா மக்களுடனும் சினேகபாவத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த இனக்கலவரத்தின்போது கூட இவ ரது கலிகமம் கடைக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை யென்ருல் அவர் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் தான் காரணம்; சண்முகத்தின் பலசரக்குக் கடைக்கு அவரே மாதாமாதம், சுருட்டு, புளி, பேரீச்சம்பழம், பாக்கு போன்றவற்றைக் கொள் முதல் செய்து அனுப்பினர் சண்முகம் ஊரில் அவ ருக்காகப் புகையிலே தீர்த்துக் கட்டி அனுப்பினன்கு இருவரும் பரஸ்பரம் வியாபார உதவி செய்து கொண்
60
காஞ்சகு பல்கலைக்கழகத்தில் படிக்க ஆரம்பித்த போது அவளுக்கு வயது 22 மூன்று ஆண்டுகள் பீ. ஏ. பட்டப் படிப்புப் படித்து மூன்ருவது ஆண்டு இறுதித் தேர்வில் பெயிலாகிவிட்டாள். மறுபடியும் பரீட்சை எடுத்து ஒருவாறு பொது வகுப்பில் சாதா ரண சித்தியடைந்துவிட்டாள். ஊரில் வந்து இருந்து கொண்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அருமைத்துரை மகளுக்குப் பெரிய இடங்களில் திருமணம் பேசினர், பசையுள்ள இடங்களில் மாப் பிள்ளைகள் பெரிய உத்தியோகம் இல்லை. அவர்களும் யூனிவசிட்டிக்குப் போய்ப் படித்த பெண்னை தங்கள் பிள்ளைக்குத் தோதாக வராது என்று தட்டிக் கழித்த னர். ஊரில் ஒரு டாக்டர் பையனைத் திருமணம் பேசியபோது அவளது பெற்றேர் வீட்டுக்கு ஐம்ட தி ஞயிரமும் ஒரு காரும், கொழும்பில் வீடும் தருவீரா என்று கேட்டபோது அருமைத்துரை மலைத்துப்போய் உட்கார்ந்துவிட்டார். அவரது மில்லையும் , டிராக் டரையும் விற்றலே அவ்வளவு பணம் தேருது மக
79

Page 46
பெருமூச்சு
ளைப் படிக்க வைத்ததே குற்றமாகிவிட்டதோ என்று கவலைப்பட்டார் மாப்பிள்ளை தேடி வேறு ஊர்களுக் கெல்லாம் அலைந்தார். அவர்கள் இவரது குல ம் , கோத்திரம், சாதி முறைகளைச் சிலேடையாகவும், சாடை மாடையாகவும் விசாரித்தபோது உயர் வேளா ளராகிய இவருக்கு மூக்கெல்லாம் சிவந்து கொண்டு வரும். என்ன செய்வது என்று பொறுத்துக் கொள் ளுவார். மகள் படிக்காமல் இருந்திருந்தால் மு  ைற மருமகன் சண்முகத்தைக்கூட மாப்பிள்ளையாக்கி யிருக்கலாமே என்றுகூட ஒரு தடவை யோசித்தார். சண்முகமும், தாயாரும் கஷ்டப்பட்டபோது அவர்க ளுக்கு உதவிசெய்து படிக்க வைத் திருந்தால் இ ப் போது அவன் நல்ல நிலையில் இருப்பான். தானும் துணிந்து தன் மகளுக்கு அவனைக் கேட்டிருக்கலாம்: இனிமேல் எல்லாம் பிந்திவிட்டது. யார் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்த்தார். இதற்கி டையில் தனது செல்வாக்கைப் பிரயோகித்து எம். பி; யையும் வேறு இடது-சாரிப் பிரமுகர்களையும் பிடித் துத் தன் மகளுக்கு உத்தியோகம் தேடும் படலத்தி லும் இறங்கினர். அதுவும் இந்தக் காலத்தில் சிரம மான காரியம் என்பதை உ ண ர அதிகநாட்கள் எடுக்கவில்லை.
சண்முகத்தின் பலசரக்குக் க  ைட இப்போது * சண்முகம் ரெக்ஸ் ரைல்ஸ் " ஆக மாறிவிட்டது. அவ னது குடும்பம் மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது
காஞ்சஞவுக்குச் சும்மா வீட்டில் இருக்க விசரே வரும் போல இருந்தது. பொழுது போக்காகவும் பிர யோசனமாகவும் ஏதாவது செய்யவேண்டும் என்று கருதினுள். அவளுக்குத் துணையாக வேறு சில படித்த பெண்களும் சேர்ந்து கொண்டார்கள். காஞ்சனுவின் வீட்டில் ஒரு மெசன்ரிசோரி வகுப்பும் மாதர் கைப் பணி, தையல் வகுப்பும் ஆரம்பமாகின. அந்த ஊரி லுள்ள குழந்தைகள் அனைவரும் அவளது மொன்ரி சோரி வகுப்புக்கு வந்தார்கள்,
80

நெல்லை க. பேரன்
காஞ்சனவுக்கு இப்போது வயது இருபத்தியொன் பது நடக்கிறது. கண்ணுடி போட்டிருந்தாள். தலை யிலிருந்து இரண்டு நரைத்த மயிர்களைப் பிடுங்கி எடுத் தி போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.
அன்றைக்கு அவளது மொன்ரிசோரி வகுப்பில் தன் மகனைச் சேர்ப்பதற்காகச் சண்முகம் மகனுடன் வந்திருந்தான். காஞ்சனவுக்குச் சண்முகத்துடன் முகம் கொடுத்துப் பேசவே வெட்கமாக இருந்தது பால் வடியும் அந்தச் சிறுவனின் மூகத்தைப் பார்த் தபோது காஞ்சனுவுக்கு என்னவோ போலிருந்தது. அவள் இப்போது மற்றவர்களை இளக்காரமாகப்பேசி எத்தனையோ காலமாகிவிட்டது.
மகனைப் பாலர் பள்ளியில் சேர்த்துவிட்டுச் சண் முகம் திரும்பி நடந்து கொண்டிருந்தான். உழைத்து உறுதி பாய்ந்த அவனது கட்டுமஸ்தான தேகத்தை யும் உற்சாகமான நடையையும் பார்த்துக் கொண்டே அவன் மறையும்வரையும் தன் வீட்டுத் தூணுேடு காஞ்சஞ ஆடாமல் அசையாமல் நின்ருள் .
அவள் அடிமனத்திலிருந்து ஒரு நீண் ட பெரு மூச்சு எழுந்து அடங்கியது .
அஞ்சலி, ஆகஸ்ட்டு 71
81

Page 47
ஏணிப் படிகள்
ALLASLSALALSAALAqAASSLALASeSeAqeALSLSSLALASLLASSS SSqqqSqASASAAALLLA AAAAA AAAALLLAAAAAqA AAA
புதிதாக இலங்கை நிர்வாக சேவைக் குத் தெரிவு செய்யப்பட்டுப் பயிற்சியை முடித்துக் கொண்ட தில கம் எனது கிராமத்திலுள்ள உதவி அரசாங்க அதி பர் பணிமனைக்கே உதவி அரசாங்க அதிபராக நிய மனம் பெற்றுள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. சிறு பராயத்திலிருந்தே எனது கண் முன்பாக ஒவ்வொரு கட்டம் கட்டமாக வளர்ச்சி பெற்றுத் தன் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொண் டவள் திலகம்,
நான் அப்பொழுது அட்வான்ஸ் லெவல் படித்து விட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த காலம். திலகத்தின் தகப்பனர் கூலித் தொழிலுக்குப் போன இடத்தில் கூரை முகட்டிலிருந்து தவறுதலாக வழுக்கிக்கொண்டு கீழே விழுந்து மரணமாகிவிட்டார். அதன் பிறகு தாய் அன்னம் ஊரில் வீடு வீடாகச்
82

நெல்லே க. பேரன்
சென்று அரிசி இடித்தும் மா வகைகளை வறுத்துக் கொடுத்தும் தன் வயிற்றையும் மகளுடைய வயிற் றையும் கழுவிக்கொண்டு வந்தாள். தி ல க ம் ஊரி லுள்ள சிறு பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டேபள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தாய்க்கு உதவி யாக வீடுகளுக்குப்போய் வேலை செய்து கொடுப்பாள்
அன்னமும் திலகமும் அடிக்கடி எங்கள் வீட்டிற் கும் அரிசி இடிக்க வருவார்கள். திலகம் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே என்னிடம் அன்ே ன ஐந்தாம் வகுப்பில் ஏதாவது கேள்விகள் கேளுங்கள் அல்லது கணக்குக் கேளுங்கள் நான் பதில் சொல்கி றேன் என்று என்னைத் துளைத்துக் கொண்டிருப்பாள். ஏழையாக இருந்தாலும் கல்வியில் அவளுக்கு இருக் கும் ஆர்வம் என்னை அவள்மீது அனுதாபம் கொள்ள வைத்தது. மேலும் எனது தகப்பனர் தலைமை ஆசி ரியராக இரு க் கும் பாடசாலையில் தான் அவளும் படித்து வந்தாள். அவளது வீட்டு நிலையை அறிந்து தகப் பஞரும் வே ண் டி ய புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். தவணைக் கட்டணத்தையும் தாமே செலுத்திவிடுவார். சராசரி ஆசிரியர்களைவிட என் அப்பா இந்த விடயங்களில் விதிவிலக்காக இருந்தார்: அம்மாவும் மிகவும் இரக்க குணமுடையவர். அன்னம் வீட்டிற்கு வேலை செய்ய வந்தால் திரும்பிப்போகும் போது ஏதாவது சாப்பாடு கட்டிக் கொடுத்து விடு வாள். அவசர தேவைகளுக்கு அன்னம் அம்மாவிடம் நம்பிக்கையோடு ஓடிவருவாள். பிறகு த ன க் குக் கிடைக்கும் கூலிக் காசுகளில் திருப்பிக் கொடுத்துக் கடனைத் தீர்த்து விடுவாள்.
நான் திலகத்தைப் பின்னேரங்களில் வீட்டிற்கு வரச் சொல்வி இலவசமாகவே ஆங்கிலமும் கணக்கும் சொல்லிக் கொடுத்தேன். அப்பா தனக்கு நேரமுள்ள போது தமிழ் சொல்லிக் கொடுத்தார். ரியூட்டரி
83

Page 48
ஏணிப் படிகள்
களுக்குப் பிள்ளைகளை விடுவதே பாஷனும் தேவையு மாகிவிட்ட இந்தக் காலத்தில் திலகம் போன்ற ஏழை களால் என்ன செய்ய முடியும்? ஒரளவு வசதியாக வாழும் நான் எனக்குத் தெரிந்த அறிவை நாலு ஏழைப்பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் ஆறுதலடைந்தேன். " அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் " என்ற பாரதியின் பாடல் வரிகளை அடிக்கடி ஞாபகத்தில் கொள்வேன். அப்பா எனக்குக் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாரதி பாடல்கள் என்பவற்றில் ஆர் வத்தை ஊட்டி வளர்த்திருந்தார். திலகத்திற்கும் வேறு ஊர்ப்பிள்ளைகளுக்கும் அவர் பாடம் சொல்லிக் சொடுக்கும்போது தம்மை மறந்து தமிழ்க் கவிதை களோடு ஒன்றிப்போவதை நான் பல தடவைகளில் அவதானித் திருக்கிறேன்.
நான் எதிர்பார்த்தது போலவே திலகம் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாவதா கத் தேறினள். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியின் மகளிர் விடுதியில் அவளைச் சேர்ப்பதற்கு அப்பா உதவி செய்தார். புலமைப் பரிசில் பரீட்சையில் அவள் தேறியது இதற்கு உதவி யாக இருந்தது. அப்பா மேலும் நிற்காது ஊராட்சி மன்றத்தின் அங்கத்தவர்களைப் பிடித்து ஏழைப் பிள் ளைகளின் கல்வி நிதி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் திலகம் பட்டப்படிப்பு முடிக்கும் வரைக்கும் மாதாந் தம் சிறு தொகையை நன்கொடையாகப் பெற்றுக் கொடுத்தார்.
நான் " கி ள றி க் கல் சே வன் ற் " ஆக வேலை கிடைத்துக் கொழும்புக்குப் போய்விட்டேன். வீவில் வரும்போது அன்னத்திடம் மகளைப்பற்றி விசாரித்துக் கொள்வேன். படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் அந்த மகளிர் கல்லூரியில் முதலாவதாகத் திலகம்
84

நெல்லை க. பேரன்
திகழ்வதாகவும் அவளால் கல்லூரிக்கே பெருமை என்றும் அதிபர் அடிக்கடி கூட்டங்களில் புகழ்வதாக வும் கேள்விப்பட்டேன். காலம் ஓடிக்கொண்டிருந்தது எனக்குத் திருமணம் முடிந்து நான் மனைவியுடன் கொழும்பில் வாழ்ந்துகொண்டிருந்தேன். மூன்று வரு டங்களாக முயற்சி செய்து சிங்களம் எட்டாம் வகுப் புத் தேர்ச்சி பெற்றேன். இல்லாவிட்டால் என்னைச் சேவையில் நிரந்தரமாக்க மாட்டார்கள். வருடாந்த சம்பள உயர்வும் (இன் கிறிமென்ட்) கிடையாது;
திலகம் பேராதனை பல்கலைக் கழகத்தில் பீ. ஏ படிக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நானும் அப்பாவும் செய்த உதவிகளுக்கெல்லாம் நன்றி தெரி வித்தும் கடிதம் எழுதியிருந்தாள். தனது முன்னேற் றங்கள் குறித்து அடிக்கடி எனக்கு எழுது வாள்; நானும் அவளே எனது உடன் பிறவாத சகோதரியாக மதித்து அவள்மீது அன்பு செலுத்தி வந்தேன். லிவு நாட்களில் எப்போதாவது கண்டிக்கு மனைவியுடன் போய் அவளைப் பார்த்து வருவேன். நான்கு ஆண்டு களில் நான் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு உணவு வழங் கல் பகுதிக்கு இடமாற்றலாகி வந்தேன். இதற்கிடை யில் எழுதுவினைஞர் சேவையின் இரண்டாந்தர பதவி உயர்வுப் பரீட்சையும் எடுத்துச் சித்தி பெற்றுவிட் டேன். பத்து ஆண்டுகள் திருப்திகரமான சேவையை முடித்தவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றும் தகைமை இருந் தது; நானும் இரண்டு தடவைகள் தோற்றினேன் தோல்விதான் மிச்சம். இரண்டாவது தடவை பரீட் சையில் சித்திபெற்று நேர்முகப் பரீட்சைக்கும் கூப் பிட்டார்கள் என்ன காரணமோ பிறகு சரிவரவில்லை.
திலகம் பீ. ஏ. தமிழ் (சிறப்பு) படிப்பை முடித்
துக்கொண்டு வந்துவிட்டாள்; அதே வருடம் தடை பெற்ற இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைக்கும்
85

Page 49
ஏணிப் படிகள்
தோற்றினுள். முதல் தடவையிலேயே சித் திபெற்று மூன்று மாதங்கள் பயிற்சியையும் முடித்துக்கொண்டு தன் சொந்தக் கிராமத்திற்கே உதவி அரசாங்க அதி பராக நியமனம் பெற்று வந்தாள். அரசாங்க வர்த்த மானியிலும் பத்திரிகைகளிலும் இச் செய்தியைக் கண் ணுற்ற என் கண்கள் ஆனந்தத்தால் பணி தி தி  ை அப்பா மிகவும் பெருமையாகச் சொன்னர், " அரிசி இடித்துப் பிழைக்கும் அன்னத்தின் மகள் அரசாங்க அதிபராக வருகிருள் " என்று: அ ப் பா வி ன் நல்ல மனம் தன் மகன் இன்னும் கிளார்க் வேலை தான் செய் கிருன் என்று பொருமவில்லை. கீழ்மட்டத்தில் இருந்து உ ய ர் ந் து விட்ட திலகத்திற்காகப் பொருமைப்பட வில்லை. ஆசிரியருக்கே இலக்கணமாக வாழ் ப வர் Ցյւն սո3
விதானையாரும் வேறு யாரோ மில் முதலாளியும் தான் இனி " அன்னம் தங்கடை வீடுகளுக்கு அரிசி இடிக்க வருவாளோ " என்று ஏளனமாகக் கதைத் தார்களாம். எனக்கும் ஊருக்கு மாற்றலாகித் தில கத்தின் கீழ் பிரதம லிகிதராக வேலை செய்யும் வாய்ப் புக் கிடைத்தது. முதல் நாள் அலுவலகத்தில் திலகம் என்னைக் கண்டதும் கண்கள் பனிக்க " அண்ணு உங் களுக்கு மேலதிகாரியாக நான் எப்படி இருக்க முடி யும்? “ என்று கேட்டபோது, நான் தைரியம் கூறி னேன்.
*" பாரதியின் புதுமைப் பெண்ணுக நீ வாழவேண் டும் திலகம். இந்த ஊரில் நான் உனக்கு உதவியா ளனக இருப்பதுதான் இன்னும் உனக்குப் பாதுகாப் பும் இந்த ஊருக்கு முன்னேற்றமும் அளிக்கும். நாம் இருவரும் சேர்ந்து நமது கிராமத்தை முன்னேற்று வோம். எமது மக்களுக்கு உண்மையான சேவை செய்வோம், இலஞ்ச ஊழலை விரட்டியடித்து உண் மையான உழைக்கும் மக்களுக்கும் விசுவாசமான
86

நெல்லை க. பேரன்
கிராமத்து ஏழை எளிய சனங்களுக்கும் உதவியாளர் களாக இருப்போம். நான் உனக்கு ஒரு காலத்தில் ஆசிரியனுக இருந்தேன் என்பதற்காக நீ எ ன க் கு மேலதிகாரியாக வரக்கூடாது என்று சட்டமா என்ன? மகிழ்ச்சியாக இரு திலகம். கல்வித்துறையிலும் அந் த ஸ்திலும் நீ முன்னேறிவிட்டாய். இனிமேல் உன் எதிர்கால வாழ்க்கையை நல்ல துணைவரோடு அமைத் துக்கொள்ள வேண்டும். அதற்கும் என்னுலான உத விகளைச் செய்வேன். "" என்று கூறினேன்.
" வேலையில் அனுபவமும் முன்னேற்றமும் ஏற் பட்ட பிறகு அதைப்பற்றி யோசிப்போம் அண்ணு " திலகம் அன்போடு பதிலளித்தாள்.
திலகம் உழைப்பதால் அன்னம் இப்பொழுது ஓய்வெடுக்கிருள்:
திலகத்தைப் போலவே எனது கிராமத்தின் கஷ் டப்பட்ட குடும் பத்துப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் கல்வியில் ஆர்வம் காட்டவேண்டும் என்பதும் அவர்க ளுக்கு ஏணிப்படிகளாக வசதியுள்ளவர்கள் இருக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும்.
* கலைநிதியம் " 84/85 (பருத்தித்துறை மகளிர் கல்லூரி மலர்)
87

Page 50
G) E,
بسیحیی عصبی سمیستمعی
எல்லோரும் அவளை அதிசயமாகப் பார்த்தார் கள் பக்கத்திலிருந்த அப்புஹாமி மாத்தயா ஏதோ ஒர் அபூர்வ பிராணியை மிருகக் காட்சிச் சாலையிற் பார்ப்பது போன்று அவளையே உன்னிப்பாகப் பார்த் துக் கொண்டிருந்தார். பின் ஆசனத்தில் இருந்த சில வாலிபர்கள் கூட அவளையே பார்ப்பதும், அடிக்கடி தங்களுக்குள் சிரித்தும் கேலி செய்வதுமாகக் காணப் Lu LL nrri asesir
பின்னல் ஒரு மூலையில் சாந்தம் தவழும் முகத் தோடு அமர்ந்திருந்த ஒரு பெண்மணிகூட ஏதோ அருவருப்பான பொருளைப் பார்ப்பது போல வு ம் தனது பெண் இனத்திற்கே அழுக்கு ஏற்பட்டுவிட்டது போலவும் நாணிக் கோணிக்கொண்டு இருந்தாள்,
88.

நெல்லை க. பேரன்
இத்தனை பேருடைய கவனத்துக்கும் ஆளானவர் வேறு யாருமல்ல. சுருள்சுருளாகச் சிகரட் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்த அந்த வெள்ளைத் தோல் பெண்மணிதான். கொழும் பிலிருந்து கண் டி  ைய நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்தக் கடுகதி பஸ் வண் டியிலே பின் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள்.
தனது மாதுளம்பூ நிற மேனிக்க உகந்ததாகச் சிவப்பு நிற வெல்வெட் மினிஸ்கேட் அணிந்திருந்தாள். தனது பிரயாணத்திற்கான உபகரணங்கள் அடங்கிய பெரிய சுருக்குப் பையின் மேற்பாகத்தை இறுக்கும் கயிற்றைத் தனது தளிர்க் கரங்களில்ே தவழவிட்ட அழகே தனி மார்பை இறுகப் பிடித்துக் கொண்டி ருந்த பச்சை நிற பெனியன் அவளுக்கு மிக வு ம் பொருத்தமாகவே இருந்தது. முட்டினல் சிவந்து விடுமோ என்று சொல்லத் தக்க அளவில் அவளது முகம் மென்மையாக இருந்தது. இத்தனை அழகுள்ள இவள் அநியாயமாகக் சிகரட்டைப் புகைத் துத் தன் உதடுகளைக் கறுப்பு நிறமாக்கிக் கொள்கிருளே என்று எனக் குள் கவலைப்பட்டேன்.
அப்புஹாமி மாத் தயா இப்போது வெளியே இயற்
கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ ரோடுதான் நான் வரக் காப் பொலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன், நாங்கள் இருவரும் எமது காரி யாலயத்தில் வேலை செய்யும் ஒரு நண்பரின் திருமண வைபவத்திற்குச் சென்று கொண் டி ரு ந் தோ ம் , எனக்குப் பஸ்சில் இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. எனவே தான் அந்த வெளிநாட்டுப் பெண்மணியின் அருகே மேல் தாங்கியைப் பிடித்த படி நின்றுகொண் டிருந்தேன்.
எனக்குப் பின்னல் வேறு எவரும் நிற்கவில்லை:
ஆனல் ஒரு இளைஞனும் யுவதியும் அருகருகே அமர்ந்து வெகு உல்லாசமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே வந்
89

Page 51
புகை
தார்கள். இவர்கள் கல்லூரி மாணவர்களைப் போலச் காட்சியளித்தார்கள் ஒருவேளை இவர்கள் காதலர்க ளாக இருக்கக்கூடும் என நான் எண்ணினேன். மற் றவர்களைக் கவர்ந்துவிட்ட இந்த சிகரட் பெண்மணி அந்த இருவரையும் கொஞ்சமேனும் கவர்ந்து விட வில்லை.
குதிரைவால் கொண்டை போட்டுக் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு ஆண்களைப் போலவே புகைத் துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்துப் பின் ஞல் இருந்த இளைஞர்கள் சிங்களத்தில் கேலி செய்வதை நிறுத்தவேயில்லை;
" பொணி டெயில் " என்று எள்ளி நகையாடி 607 ff.
இவை அனைத்தும் அவளுக்குப் புரிந்திருக்க நியா யமே இல்லை. அவள்தான் வெளிநாட்டுக் காரியா யிற்றே! அவளைப் பார்த்து மற்றவர்கள் ஏன் அதிச யப்படுகிறர்கள் என்பது எனக்கோ விளங்கவில்லை; மேல் நாடுகளில் பெண்கள் சிகரட் புகைப்பது அதி சயமல்லவே. அவளை வெளிநாட்டுப் பெண்மணி என்று தெரிந்து கொண்ட பின்னரும் இதில் அதிசயப்படுவ தற்கு என்ன இருக்கிறது?
திடீரென்று பிரயாணிகள் மத் தி யி ல் கலகல வென்று சிரிப்பொலி எழுந்ததைக் கவனித்தேன். வேருென்றுமில்லை. அப்புஹாமி மாத்தயாவின் சுருட் டைவாங்கித் தனது சிகரட்டைப் பற்ற வைத்து விட்டு அவரிடமே சுருட்டைத் தி ரு ப் பி க் கொடுத்தாள் அதைப் பார்த்துவிட்டுத்தான் மற்றவர்கள் சிரித்தி ருக்கிறர்கள்.
அப்புஹாமி மாத்த யாவுக்கோ ஒரே வெட்கமாய் இருந்தது. நல்லவேளை அவர் தமது முகத்தைச் சட் டைக்குள் நுழைத்துக் கொள்ளாமல் மறுபுறம் திருப்
90

நெல்லை க. பேரன்
பிக் கொண்டார். எல்லோரும் தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டு அவளும் சி ரித் து வி ட் டா ள் அடாடா! என்ன அழகான வரிசைப் பற்கள். முத் துக்கள் சிதறிவிடுமோ என்னும்படியாக இருந்தது அந்தச் சிரிப்பு.
"லேடீஸ் ஆர் நொட் ஸ்மோக்கிஞ் இன் சிலோன்" (இலங்கையில் பெண்கள் புகைப்பதில்லை) என்று நான் மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.
" ஆம், அது எனக்குத் தெரியும் " என்று அவள் பளிச்சென்று பதில் கூறிஞள். தொடர்ந்து ஆங்கிலத் திலேயே பேசிக்கொண்டு வந்தோம்.
" அதாவது ஆண்களே அதிகம் இங்கு புகைப்ப தில்லை. எனவே தான் பெண்கள் புகைப்பது அதிசய மாகவும் ஓ ர ள வு சிரிப்பாகவும் போய்விட்டது " என்றேன்.
" நான்கூட இலங்கைக்கு வந்தபோது புகைக்கக் கூடாது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆணுல் பழ கிப்போய் விட்டது. கைவிட முடியவில்லை. என்ன செய்வது? " என்று சொல்லி வருத்தப்பட்டாள். தான் பெல்ஜியத்தைச் சேர்ந்தவளென்றும் அகில உலக சமூக சேவைகள் நிறுவனத்தின் மூலம் இலங்கையில் சில காலம் தங்கிச் சமூக சேவைகள் செய்வதற்காக அனுப்பப்பட்ட வள் என்றும் தெரிவித்தாள்.
அவளது பெயர் மிஸ் ஹன்னிரெரஸ் எ ன்பது பேச் சின் மூலம் தெ ரிந்து கொண்டேன். தான் கொழும்பில் தங்கி இலங்கையருக்குப் பிரெஞ்சு, ஆங் கிலம் முதலிய மொழிகள் கற்றுக் கொடுப்பதாகவும், சமூக சேவைகள் பற்றி ஆங்கிலத்தில் வகுப்புகள் நடாத்துவதாகவும் கூறினுள். இப்பொழுது பிலிமத் தலாவ என்னுமிடத்திற்குத் தனது சினேகிதியொ
9

Page 52
புகை
ருத்தியைப் பார்ப்பதற்கும், தேயிலைத் தோட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கும் போய்க் கொண்டி ருப்பதாகக் கூறி ஞ ள். இந்த இளம் வயதிலேயே பெல்ஜியத்திலிருந்து சமூக சேவைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துவிட்ட அப்பெண்ணை எண்ணி எண்ணி வியந்தேன்.
நீங்கள் வேறு எந்தெந்த நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது இந்தியாவில் கல்கத்தா, டெல்லி, ஆக்ரா, சென்னை முதலிய இடங் களுக்கம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் விஜ யம் செய்துள்ளதாக வும் அடுத்த மாதம் நேபாளம் சோக இருப்பதாகவும் தெரிவித்தாள். ஆக்ராவில் தாஜ்மஹால் எல்லாம் பார்த்ததாகக் கூறினுள்,
நானும் கடந்த வருடம் தாஜ்மஹால் எல்லாம் பார்க்கச் சென்றிருந்தேன். மிகவும் அழகான கட்டி டம். காதல் சின்னமல்லவா என்று சில நிமிஷங்கள் தாஜ்மஹாலின் அழகு ப ற் றி யே இருவரும் பேசி மகிழ்ந்தோம் . இந்தியா அழகுதான். ஆனல் ஜனத் தொகை அதிகம் என்று கூறிஞள்
இலங்கை அவளுக்குப் பிடித்திருக்கிறதோ என்று கேட்டபோது " ஐ லைக் இட் வெரிமச் " என்று பளிச் எனப் பதில் அளித்தாள். " நான் விரும்பும் நாடுக ளில் இலங்கையும் ஒன்று. சென்றவாரம் திருகோண மலைக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள துறைமுகம் என் மனத்தைக் கவர்ந்தது " என்று கூறிஞள்
கண்டி, நுவரெலியா முதலிய மலைப் பிரதேசங்க ளுக்கும் சென்றிருப்பதாகவும். கண்டி நகரின் அழ கைத் தான் மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தாள். யாழ்ப்பாணத்திற்குப் போனிர்களா? எ ன் று கேட் டேன்
92

நெல்லை க. பேரன்
" ஆமாம். நெடுந்தீவு, மண்டைதீவு நயினதிவு எல்லாம் போயிருந்தேன். மிக உஷ்ணமான பிரதே சம் என்ருலும் அங்குள்ளவர்கள் மிகக் கடுமையாக உழைக்கிருர்கள். இதையிட்டுப் பெருமைப்படுகின் றேன் "" என அவள் தெரிவித்தாள்.
நயினுதீவில் தம்மோடு சமூக சேவைகளில் ஒத் துழைத்த தமிழ் வாலிபர்களையும் அவள் பாராட்டி ஞள். " அடேயப்பா முழு இலங்கையையும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! உங்கள் சாமர்த் தியத்தைப் பாராட்டுகிறேன் " என்ருன்.
இப்போது அவளை மாத்திரம் பார்த்துச் சிரித்த பிரயாணிகள் சிலர் என்னையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள். எப்படி இவ்வளவு விரைவில் சினேகி தர்களானர்கள் என்று ஆச்சரியப்பட்டார்கள் போலும் கடுகதி பஸ் ஹொர கொல்லையைத் தாண் டிக் கொண்டிருக்கும்போது காலஞ்சென்ற இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவின் சமாதியையும் அவ ருக்கே சொந்தமான பெரிய தென்னந் தோட்டத் தையும் அப் பெண்மணிக்குச் சுட்டிக் காட்டினேன்;
நிட்டம்புவ என்னுமிடத்தில் தேநீர்க் கடை ஒன் றின் அருகே பஸ் நின்று பிரயாணிகள் பலர் இறங் கிக் கடைப்பக்கம் சென்றனர்
பெல்ஜியப் பெண்மணி அங்கு இளநீர் விற்றுக் கொண்டிருந்த பையனிடம் இளநீர்க் குரும்பைகளை வாங்கினள் எனக்குக் கண்சாடை செய்து தன்னருகே வரும்படி அழைத்தாள். கத்தியை அவனிடம் இருந்து பெற்றுத் தானே வெகு அழகாக இளநீரை வெட்டித் தந்தாள். உள்ளே இருந்த பால் தேங்காயை வழித் துச் சாப்பிட்டாள்
93

Page 53
புகை
பெல்ஜியத்தில் அவளின் வீடு ஒரு இள நீர் த் தோட்டத்திற்கு அருகேதான் இருக்கிறதாம். இளநீர் என்ருல் அவளுக்குக் கொள்ளை ஆசை எனவும் கூறி ஞள் எனக்கும் இளநீர் குடிக்க நல்ல விருப்பம் என் றும் அதிலும் செவ்விளநீர் தான் பிடிக்கும் என்றும் அவளிடம் தெரிவித்தேன்
மீண்டும் பஸ் புறப்பட்டுவிட்டது. பின்னுலிருந்த காதல் பறவைகளில் ஒன்று பறந்து விட்டது. ஆம் அந்த இளைஞனைக் காணவில்லை. நிட்டம்புவவில் இறங்கி விட்டான் போலும் . யுவதி மிக வு ம் நாகரிகமாக உடுத்திருந்தாள். இதழ்களுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கண் புருவங்களில் ஐடெக்சுடன் வெகு ஆடம்பரமாகவே தோற்றமளித்தாள் கையிலே சிறிய தங்கமுலாம் பூசிய டம்பப் பை ஒன்று அசைந்து ஆடியது. கண் களை அங்குமிங்கும் சுழல விட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
சிகரட்டைப் பற்ற வைத்த பெல்ஜியப் பெண் மணி என்னிடமும் ஒன்றைப் பற்ற வைக்குப் படி நீட் டினுள். " தாங்ஸ், நான் புகைப்பதில்லை. "" என்று சொல்லி மறுத்துவிட்டேன். ஆனல் என்ன ஆச்சரியம்! என க்குப் பின்னல் இருந்த அந்த நவநாகரிகக் காதல் யுவதியோ தனது டம்பப் பையைத் திறந்து வெகு லாவண்யத்தோடு ஒரு பிரிஸ்டல் சிகரட்டை எடுத் துத் தனது உதடுகளில் வைத்தாள்
பெல்ஜியப் பெண்ணிடமே தீப்பெட்டியைக் கேட் டுப் பெற்றுத் தனது சிகரட்டைப் பற்ற வைத்தாள்.
ஒரு வரையும் கவனியாதவள் போலத் தன் பாட் டில் இருந்துகொண்டு சுருள் சுருளாக அலை அலையா கப் புகையை மேலே விட்டுக் கொண்டிருந்தாள். வட் டம் வட்டமாகப் புகையை விடும் அவளைப் பார்த்து வாயைப் பிளந்தார்கள். பின்வரிசை வாலிபர்கள், இப்பொழுது எவருமே சிரிக்கவில்லை.
94

நெல்லை க. பேரன்
பெல்ஜியப் பெண்மணி என்னைப் பார்த்து மெது வாகச் சிரித்தாள். இலங்கையில் பெண்கள் புகைப்ப தில்லை என்ற எனது வார்த்தைகளை எண்ணி நான் வெட்கப்பட்டேன், மீண்டும் அவளது முகத்தைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது. அப்புஹாமி மாத்த யாவைப் பார்த்தேன்; அவரது முகத்திலும் ஈயாட வில்லை.
மூலையில் இருந்த தமிழ்ப் பெண்மணியோ தனது கழுத்தைத் திருப்பி ஒரு வெட்டு வெட்டிவிட்டுத் தாவணி முத்தானையால் முகத்தை மூடிக்கொண்டாள்; இலங்கைப் பெண்களைப் பற்றி நான் கொண்டிருந்த உயர்ந்த அபிப்பிராயம் - வேற்று நாட்டுப் பெண் ணிடம் அவர்களைப் பற்றிக்கூறிய பெருமைகள் எல் லாம் சேர்ந்து புகைந்து புகைந்து காற்றேடு கலப்ப தாக எனக்குத் தோன்றியது. பின்னுல் திரும்பினேன். புகை ஒரே புகைதான்.
சிந்தாமணி, பெப்ரவரி 69
95

Page 54
கவிதை அரங்கேறும் நேரம்
- Mlo v vo
* மீண்டும் அறிவிக்கின்ருேம். இன்று மாலை 6-30 மணிக்கு விநாயகர் ஆலய முன்றிலில் நடைபெற வுள்ள பாலர் பாடசாலைக் கலைவிழாவில் மாணவர்க ளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவியரங்கும் பட்டிமன்றமும் நடைபெறும். கவியரங்கில் பிரபல கவிஞர்கள் ஏகாம்பரம், முடியரசன்.
தற்செயலாகத் தெருப்பக்கம் வந்த கவிஞர் ஏகாம் பரத்திற்குத் தூரத்தே அறிவிப்புச் செய்துகொண்டு போன ஒலிபெருக்கி பூட்டிய கார் ஓடி முடக்கில் திரும்பி ஊர் ஒழுங்கைக்குள் இறங்குவது தெரிகிறது. அவரது நெஞ்சம் பெருமிதத்தால் துள்ளுகிறது. சங் கக் கடையடியில் சாமான் வாங்க வந்த பலரும் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஏகாம்பரத்தையும் திரும் பிப் பார்க்கிருர்கள். தன்னைப் பிரபல கவிஞர் என்று இந்த ஒலிபெருக்கியில் எத்தனை தரம் சொல்லப் போகி
96.

நெல்லை க. பேரன்
ருர்கள்? இன்றிரவு மேடையில் வரவேற்புரை, நன் றியுரை, இடையில் சாப்பாடு, சோடா, கைதட்டல் கள் என்று இத்தியாதி நிகழ்ச்சிகளையும் மனதுள் அசைபோட்டவாறே ஏகாம்பரம் வீட்டிற்குத் திரும் பினர். இரண்டொருத்தர் " என்ன மாஸ்ரர். உங் கட பேரும் சொல்லிக்கொண்டு போருங்கள். என்ன கூட்டமாம். " என்று கேட்டு வைத்தார்கள்.
நிமிர்ந்த நன்னடையுடன் வீடு சென்ற ஏகாம்பரம் மாஸ்ரர் நிலைக் கண்ணுடியின் முன்பாகக் கம்பீரமாக நின்றுகொண்டு தான் எழுதி வைத்த கவிதையை வாசித்துப் பார்க்கிருர் தலைமை வகிக்கப்போகும் பிரபல கவிஞரைப் புகழ்ந்து எழுதிய வசனங்களே வாசித்து மகிழ்கிருர். இந்த அலங்காரம், இந்தச் சொல்லடுக்கு எதுகை மோனையில் தலைவர் இறங்கி இனி ஒவ்வொரு கவியரங்கிலும் தன்னை அழைக்கச் சொல்லிப் பொடியனிடம் சிபார்க செய்ய வேண்டும் என்று நினைத்தார். தலைவர் ஊரில் செல்வாக்குள்ள வர். அவரைக் கவிதையில் வளை த் துப் போட்டுக் கொண்டால் பல காரியங்களைச் சாதிக்கலாம், என்ற நினைப்புடன் தலைவரின் கவிதைகள் கம்பனை ஞாபக மூட்டும் என்றும் புதுயுகக் கவிஞன் பாரதிகூடச் சில இடங்களில் தோற்றுவிடுவான் என்றும் வசனங்களே அடுக்கி இருந்தார்.
ஆள் பாதி ஆடை பாதி எ ன் ப ைத ப் புரிந்து கொண்ட மாஸ்ரர் விழாக் குழுவினர் சொன்னபடி இரவு எட்டு மணிக்கே புறப்பட ஆயத்தமாகிருர், அன்று பின்னேரம் முதலே அவரது புறப்பாட்டைப் பக்கத்து வீடுகளுக்குக் கதையோடு கதையாக விளம் பரம் செய்துகொண்டிருந்த அவரது மனைவி அவசரம் அவசரமாக இடியப்பம் அவித் து க் கொடுக்கிருர் . இரவு உணவை முடித்துக்கொண்டு ஏற்கனவே கழு வித் துடைத்து வைத்திருந்த சைக்கிளையும் ரோச்
97

Page 55
கவிதை அரங்கேறும் நேரம்
லேற்றையும் எடுத்துக்கொண்டு புறப்படுகிருர், திரு மணத்தின் போது வாங்கிய பட்டு வேட்டியையும் நாஷனலேயும் பட்டுச் சால் வையையும் இன்னமும் பாதுகாத்து வைத்து அவற்றைக் கம்பீரமாக அணிந்து புதுமாப்பிள்ளைபோலச் சைக்கிளில் ஏறிய மாஸ்ரரைக் குச் சொழுங்கை முடக்குத் திரும்பி மறையும் வரைக் கும் கனிவோடு பார்த்து வழியனுப்பி வைக்கிருர் மனைவி.
சுற்றிவர இராணுவ மகாம்கள் இருந்தாலும் பாதுகாப்பு வலைய எல்லேயைத் தாண்டிச் சுமார் மூன்று மைல்கள் உள்ளுக்கே மாஸ்ரரின் வீடு இருந்த காரணத்தாலும் ஆமிக்காரர் இப்ப இரவில் வெளிக் கிட மாட்டினம் என்ற தளராத நம்பிக்கையிலும் மாஸ்ரர் எதுவித பயமும் இல்லாமல் தெருவில் உளள பள்ளங்களை விலத்தி மெதுவாகச் சைக்கிளில் ஊர்ந்து சென்ருர், மாஸ்ரரின் மனத்துக்குள் உள்ளூர இப்படி யான நிகழ்ச்சிகளுக்குக் காரில் போய் இறங்க வேண் டும் என்ற ஆசை இருந்தாலும் ஏற்பாட்டாளர்கள் இந்தக் காலத்தில் பஸ் சிலும் சைக்கிள்களிலும் வரக் கூடியவர்களாகப் பார்த்தே எல்லா விழாக்கள், நிகழ்ச் சிகளுக்கும் ஏற்பாடு செய்கின்றர்கள் என்பதால் கார் விடச் சொல்லிக் கேட்டால், கிடைக்கும் மேடைச் சான்சும் இல்லாமல் போய்விடும் என்பதால் மறுக் காமல் சைக்கிளிலேயே செல்வதை அவர் வழக்க மாக்கி விட்டிருந்தார்
கலைவிழா நடைபெறும் இ ட த்  ைத த் தூரத்தி லேயே ஒலிபெருக்கியிலிருந்து வரும் நிகழ்ச்சிகளின் ஓசை உணர்த்திக் கொண்டிருந்தது. வழியில் நிகழ்ச் சிகளைப் பார்க்க ஏராளமான பெண்கள் கூட்டங் கூட்டமாகச் செல்வதைக் கண்டு பெருமிதப்பட்டார். விநாயகர் ஆலயத்தின் முன்னல் ஆல மர ங் களின் நடுவே அழகான மேடை அமைக்கப்பட்டிருந்தது மேடையின் பின்னல் பிரமுகர்களுக்கும், பேச்சாளர்
98

நெல்ல க. பேரன்
கள், கவிஞர்களுக்கும் கதிரைகள் போடப்பட்டிருந் தன. சனம் திரளாக வந்திருந்து கோவில் வீதியில் அமர்ந்திருந்தது. இரவு பதிஞெரு மணியாகியும் கலை நிகழ்ச்சிகள் முடிந்தபாடில்லை; பாலர்கள் வேஷங்க ளைப் போட்டுக்கொண்டே நித் திரை தூங்கி விழுகி ரூர்கள் என்று அவசரம் அ வ ச ர மாக அவர்களே மேடைக்கு ஏற்றினர்கள். குறத்தி நடனம், நாடகம், பாட்டு, கோலாட்டம் என்று இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் நிகழ்ச்சிகள் நீண்டுவிட்டன. இதைத் தொடர்ந்து பிரபல திரைப்பட நடிகரும் வானெலி புகழ் கலைஞரொருவரின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இந்தக் கலைஞரைக் கடைசி வரைக்கும் நிறுத்தினுல் சனம் இருக்குமே என்றும் இந்த மக்கள் கூட்டத்தில் தன் கவிதையைப் படித்து விட வேண்டும் என்றும் ஏகாம்பரம் மாஸ்ரர் விரும்பினர். தலைவருடன் மெது வாகக் கதைத் துப் பார்த்தார். பட்டி மன்றத்திற்கு வந்தவர்களும் நேரம் போகின்றது என்று முணு முணுக்கத் தொடங்கினர்கள். அவர்கள் விஷயத்தில் முந்திக்கொண்டு கவியரங்கிற்கு முதல் பட்டிமன்றம் என்று ஏற்பாடு செய்துவிட்டார்கள்
கலை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்போதே ஆலயத்தின் அருகில் உள்ள வீட்டிற்குக் கூ ட் டி ச் சென்று பேச்சாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் சாப் பாடு கொடுத்தார்கள் . வீட்டில் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்தாலும் சம்பிரதாயத்திற்காக மாஸ்ரர் நான்கு இடியப்பங்களைத் தின் ருர், சூடாகப் பால் கிடைத்தது. விழா ஏற்பாட்டாளர்கள் உபசரிப்பில் குறையில்லாமல் இருந்ததை மாஸ்ரர் மனந்திறந்து பாராட்டினர்.
பட்டிமன்றத் தலைப்பு இன்றைய பிரச்சினைகளை ஒட்டியதாக இருந்தது. மாலை 7 மணிக்கே நிகழ்ச்சி கள் ஆரம்பமாகி விட்டதாலும் நிகழ்ச்சிகளின் பட்
99

Page 56
கவிதை அரங்கேறும் நேரம் டியல் நீண்டுவிட்டதாலும் திரைப்படக் கலைஞரின் நிகழ்ச்சி முடியவே சனம் மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்துவிட்டது. பட்டிமன்றம் முடிந்ததும் ஆல ய கதிற்கு அருகில் வசிக்கும் சிலர் மட்டும் கண்களைக் கசக்கிக்கொண்டு விழித் தி ருந்தார்கள் சிறுவர்கள் மேடைக்கு முன்னுல் நித்திரையாகிவிட்டார்கள். கவி யரங்கம் ஆரம்பமாகும்போது சில பெண்கள் தூங் கிக் கொண்டிருந்த பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். இதற்கிடையில் நிலைமை மோசமாவதைப் புரிந்து கொண்ட கவிஞர் முடியர சன் கவியரங்கத் தலைவருடன் காதுக்குள் ஏதோ குசு குசுத்தார்; அவரே முந்திக்கொண்டு முதற் கவி தையைப் படிக்க ஆரம்பித்தார். பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு வந்து ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவைகள் திருப்பித் திருப்பி வாசித்தார். முன்னல் இருந்த நாலு பெண்களும் நித் திரையாகிவிட்டார்கள். மேடை அமைப்பாளர்கள் அவசரம் அவசரமாகப் பின்புறமாக மேடை அலங்காரங்களைக் கழற்றி க் கொண்டிருந்தார்கள். அண்மையில் உள்ள வீட்டுக் காரர் மாத்திரம் மேடையின் அருகே நின்றுகொண் டிருந்தார். அவரும் நிகழ்ச்சி முடிந்ததும் மேசையில் விரித்த தன்னுடைய கம்பளத்தை எடுத்துக்கொண்டு போவதற்காகவே நின்றுகொண்டிருந்தார்.
நேரம் அதிகாலை ஒன்றரை மணியாகிவிட்டது. நிலைமையை அவதானித்த தலைவர் முடியரசனின் கவிதை முடிந்ததும் திடீரெனக் கவியரங்கை முடித்து வைத்தார். பிரபல கவிஞர் ஏகாம்பரத்திற்கு ஒரே ஏமாற்றம். கடைசி கவியரங்கத் தலைவரும் ஏனைய கவிஞர்களும் ஒலிபெருக்கிச் சொந்தக்காரரும், கம் பளச் சொந்தக்காரருமாவது த மது கவிதையைக் கேட்டிருப்பார்களே என்று ஆதங்கப்பட்டார். மன
100

நெல்லை க. பேரன்
துள் தலைவரைச் சபித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களையும் சபித்தார். ஒரு விழ ரா வின் ஆரம்பத்தில் நடாத்தவேண்டிய கவியரங்கு நிழ்ச்சியைக் கடைசி யாக அதுவும் விடிய ஒன்றரை மணிக்கு நடத்தினுல் எவன ப்யா உட்கார்ந்து கேட்டான்? கவிதை என்ன சிலுக்குவின் நடனம் மாதிரியா? அல்லது கமலகாச னின் டிஸ்கோவா? என்று தலைவர் தமது வயிற்றெ ரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.
பிரபல கவிஞர் ஏகாம் பரம் தமது அரங்கேருத கவிதைக் கட்டுகளை மடித்து மடியில் செருகினர்; சைக்கிளில் ஏறி அமர்ந்தார். மங்கிய ரோச் வெளிச் சத்தில் சோர்வுற்ற மனத்தோடு அவர் பள்ளங்களை விலக் தி ஓடிக் கொண்டிருந்தார். வழியில் தனிமைப் பயத்தைப் போக்குவதற்காகத் தேவாரங்களை வாய் விட்டு மெதுவாகப் பாடிக்கொண்டே வந் தார்: ஆணுல என்ன பரிதாபம். நாற்சந்தி ஒன்றில் படுத் திருந்த தெருநாய் ஒன்று ஊளையிட்டதுதான் தாம தம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கவிஞரைச் சுற்றி வளைத் துக் கொண்டன; டிக், அடிக். டிக். " என்று கத்திக்கொண்டே கவிஞர் விரைவாகச் சைக்கிளை உழக்கிஞர். வேகமாகப் பின் ஞல் வந்த நாய் ஒன்று அவரது வலது காவில் பலமா கக் கவ்வியது. மாஸ்ரர் சாக் கடை ஒடும் கானுக்குள் சரிந்து விழுந்தார். இன்ஞெரு நாயும் ஓடிவந்து கவ் வியது. பட்டுவேட்டி கிழிந்துவிட்டது. காலில் இரத் தம் கசிந்தது. வேலி வரிச்சுத் தடியொன்றை உரு விக் கழற்றித் திரைப்படக் கதாநாயகன் போலச் சிலம்பம் சுழற்றினர். நாய்கள் விலகி ஓ டி ஞ லு ம் குரைப்பதை விட்ட பாடில்லை. மடிக்குள் சொருகிய கவிதைத் தாள்கள் தெருவில் விழுந்து சிதறின. எப் படியோ சமாளித்துக் கொண்டு இரத்தக் கசிவையும்
10.

Page 57
கவிதை அரங்கேறும் நேரம்
பாராமல் அதிகாலை இரண்டரை மணிக்கு வீடு வத்து சேர்ந்தார். கவிஞரின் கிழிந்த பட்டு வேட்டியையும் சாக்கடை அழுக்கடைந்த நஷனலேயும் ஈரலிப்பான சரிகைச் சால் வையையும் கண்ணுடி உடைந்துபோன ரோசி லேற்றையும் இரத்தம் கசியும் கால்களையும் கண்ட மனைவி ஐயோ என்று ஒப்பாரி வைத்தாள்.
யாரோ திருடர்கள் புகுந்து விட்டார்கள் என்ற பயத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட வந்து பார்க் கவில்லை. நன்ருக விடிந்ததும் மாஸ்ரரைத் தட்டிவான் ஒன்றில் ஏற்றிய மனைவி அரசினர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
பிரபல கவிஞர் ஏகாம்பரம் இப்போது விசர்நாய் கடிக்கு வைத்தியம் செய்வித்துக் கொண்டு இருக்கிருர்,
* ஈழமுரசு " 1986
102

ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது
ASASASSSqSAS AqASeSeHM ALASSH qAJSAeMeMAASSLM qAASSLLALALMeS AASLLL S qAASS AAALLL SAAAASq qSSSL ASLSLAqASqSqASqSqSqAASSLLSASqqqq
சுமார் கால்நூற்ருண்டு காலமாக அந்த ஊரின் பிரதான வீதியில் அமைந்துள்ள * ஷர்மிளா " அச்ச கத்தின் மெஷின் ஓடிக்கொண்டிருக்கும் கடகட சத் தம் கே ட் கிற து: மெயின் கறண்ட் இல்லாவிட்டால் மெஷினின் இயக்கமும் நின்றுவிடும். போர்மன் இராக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அன்று மத் தியானத்திற்குள் தருவதாக ஒப்புக்கொண்ட விளை யாட்டுக் கழகத்தினரின் பரிசளிப்பு நோட்டீஸ் ஒன்றை அவசரம் அவசரமாகக் " கொம்போஸ் " ப ண் ணி க் கொண்டிருந்தார். பிரதான கொம்போசிட்டர் என்று ஒருவர் இருந்தாலும் நோட்டீசுகளில் வரக்கூடிய ஆங் கில எழுத்துக்களை இராசு தான் கொம்போஸ் பண்ணு வார். இதற்கிடையில் வருகின்ற ஒடர்களையும் கவ னித்து வருபவர்களுக்குத் த குந்த மாதிரி றேட் சொல்லி விடவேண்டும்;
103

Page 58
நெல்லை க. பேரன்
இராசுவின் வேலைத் திறமையிலும் நாணயத்திலும் ஈடுபாடு கொண்ட பலரும் எ ல் ல ள வேலைகளுக்கும் ஷர்மிளா " அச்சகத்தையே நாடுவது வழக்கம். வரு கின்றவர்களில் பலர் விஷயத்தைக் கொடுத்துவிட்டு அன்றைக்கே புறுரவ் பார்க்க முடியுமா என்று கரைச் சல் பண்ணுவார்கள். கடைசி நேரத்தில் கொணடு வந்து உடனே நோட்டீசு வேணும் என்று கரைச் சல் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டுமே என்று இராசுவும் மனங்கோளுமல் எல்லா வற்றையும் பொறுப்பேற்றுச் சில வேளைகளில் மத்தி யாணச் சாப்பாட்டிற்கும் போகாமல் நின்று வேலே செய்வார்.
விளையாட்டுக் கழக நோட்டீஸ் ஆயிரம் தேவைப் பட்டது. கொம்போஸ் செய்த மாற்றரை செற் பண் னிப் புறுரவ் எடுத்துப் பார்த்தபிறகு மெஷினில் ஏற் றும் படி மெஷின் மைண்டரிடம் பணித்தார். மெஷின் மைண்டர் முதற்கொண்டு கொம்போசிட்டர், பைன் டர்வரை இராசு சொன்னதைச் சிரமேற் கொண்டு கடமையே கண்ணுக இருப்பார்கள். வேலை பழகுவ தற்கு வந்து நிற்கும் சின்னத்துரை காலை பத்து மணிக் கும் பின்னேரம் நான்கு மணிக்கும் அ னை வ ரு க்கு ம் தேநீர் தயாரித்துக் கொடுக்க வேண்டும். அடித்து முடிந்த எழுத்துக்களைக் கலைத்து உரிய இடத்தில் திரும் பவும் போடவேண்டும். கழிவுப் பேப்பர்களைக் கட்டி அள்ளிக் குப்பையிலே கொட்டவேண்டும் . கடைக்குப போய்த் தினசரிப் பத்திரிகை வாங்கி வர வேண்டும் என்று இத்தியாதி எடுபிடி வேலைகளையும் சின்னத்துரை செய்து கொண்டிருப்பான். மெஷின் புறுாவை எடுத் துக் கொடுத்துச் ச ரி யெ ன் று தலையாட்டியதுதான் தாமதம் ஒட்டோ மெஷினில் வெகுலாவகமாக நின்ற நிரையில் வலது கையால் பேப்பரைப் " பின் னுக் குள் பொருத்தமாக விழுத்தியும் மறுகையால் இம்ப் றஷன் விழுந்த நோட்டீசை எ டு த் துப் பக்கத்தில்
104

ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது
இருந்த மேசையில் அடுக்கியும் சுமார் ஒரு மணித்தி யாலத்துக்குள் ஆயிரம் நோட்டீசுகளையும் மெஷின் மைன்டர் அடித்து முடித்து விட்டார்.
மத்தியானம் எல்லோரும் சாப்பிட ஆ ய த் த ம் ஆஞர்கள் பண்டிதர் பரமசிவம் தமது பழைய "றலி" சைக்கிளில் பறக்கப்பறக்க ஓடி வந்தார். வெள்ளை வேட்டியும் நாஷனலும் கழு த் தி ல் சால் வையுமாக அவர் எப்போதும் காட்சி தருவார். ஷர்மிளா அச்ச கத்தின் வாடிக்கையாளர். இதுவரையில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை எழுதி அங்கு அச்ச டிப்பித்துள்ளார். கல்வெட்டுக்கள் என்ருல் ஒவ்வொரு பாடல்களையும் தனியே அமர்ந்து சிந்தித் துப் புதிது புதிதாக எழுதுவார். ஒரு சில கல்வெட்டு வித்துவான் களைப் போலப் பத்துக் கல்வெட்டுக்களைப் பரப்பி வைத்துக்கொண்டு இறந்தவரின் பெயரையும் ஊரை யும் அன்னரது குலதெய்வத்தையும் மாற்றிப்போட்டு விட்டுப் புதிய கல்வெட்டு எழுதும் கவிஞர் அல்ல இவர்,
மறுநாள் விடிய ஏழு மணிக்குப் பரமசிவத்தின் தூரத்து உறவினர் ஒருவரின் அந் தியேட்டி. ஒரு வாரத் திற்கு முன்னரேயே கல்வெட்டை எழுதிக் கொடுத்தி ருந்தார். நிலைமை என்னவென்று பார்க்கவும் புறுாவ் திருத்தவும் வந்திருந்தார், இராசு எப்படியும் கடைசி நேரத்திலும் வேலைசெய்து நேரத்திற்குக் கல்வெட்டை றெடி பண் ணி வி டு வார் என்பது பண்டிதருக்குத் தெரிந்த விடயம். அ த ஞ ல் தான் பயமில்லாமல் இருந்தார். பண்டிதரைக் கண்டதும் இராசு o "Gastrui போசிங் முடிஞ்சுது மாஸ்ரர். இன்னும் ஆறு பக்கங்கள் தான் மிச்சம் இருக்கு. நீங்கள் புறுாவ் பார்த்துத் தந்திட்டுப் போங்கோ. பின்னேரம் நாலு மணிக்குப் புத்தகக் றெடி சாப்பிட்டவுடனும் முதல் வேலை உங் கடை தான் ""
105

Page 59
நெல்லை க. பேரன்
இராசுவின் பேச்சில் திருப்தியடைந்த பண்டிதர் ஆறு பக்கங்களையும் புறுரவ் திருத்திய பிறகு சைக்கி ளில் ஏறிப் போய்விட்டார் அச்சகத்தில் இருந்து அவரது வீட்டிற்கு மூன்று மைல்கள் போகவேண்டும். பண்டிதரின் பாடல்களை மெஷினில் போட்டு இறுக்கி யதும் திடீர் என்று கறண்ட் நின்றுவிட்டது. விரை வில் கறனட் வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் எல் லோரும் வழக்கம் போல மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிருர்க . . அடித்து முடித்த விளையாட்டுக் கழக நோட்டீசுகளைப் பைன்டர் ஒழுங்காக அடுக்கி மடித்துக் கட்டிக் கொண்டிருந்தார். இராசு பல்கலைக் கழக மாணவி ஒருவரின் "தீசிஸ்" எழுதிய கொப்பியை எப்படி அழகாகப்  ைப ன் டி ங் செய்யலாம் என்று பிளான் பண்ணிக் கொண்டிருந்தார். மெஷின் மைண் டர் ஏற்கனவே அடித்து முடித்த கலியான அழைப் பிதழ்களை மடித்து அடுக்கிக் கொண் டி ரு ந் த ரா ர். கறண்ட் நின்றுவிட்டதால் சின்னத்துரை அச்சகத்திற் கப் பின்னல் உள்ள நிலத்தில் மூன்று கற்களை அடுக் கிக் கழிவுப் பேப்பர்களையும் வெட்டுத் துண்டுகளை யும் போட்டு எரித்துப் பானையில் தண்ணிர் சுட வைத்துக் கொண்டிருந்தான். பின்னேரம் நான்கு மணியாகியும் கறண்ட் வரவில்லை, ஒட்டோமெற்றிக் மெஷினுடன் இன்னெரு கால் மெஷினும் இருந்தால் இப்படியான சமயங்களில் எவ்வளவோ உதவியாக இருக்கும் என்று இராசு நினைத்தார் பக்கத்தில் இன் னெரு அச்சகத்தில் ஒட்டோமெஷின் இ ல் லா ம ல் கால்மெஷின் ஒன்றை வைத்தே சமாளிக்கிருர்கள் : ஆணுல் அவர்கள் புத்தக வேலைகள் பெரிய வேலைக ளைப் பொறுப்பேற்பதில்லை;
பின்னேரம் நான்கு மணியாகியும் கறண்ட் வந்த பாடில்லை. மழைவேறு பிடித்துக்கொண்டது. இராசு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊரின் எல்லையில் இருந்த மின்சார இலாகாக் கிளைக்கு ஓடினர். மரம் விழுந்து
106

ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது
பிரதான லைனில் ஏதோ அவசர திருத்த வேலைக்கான நிற்பாட்டியிருக்கிருர்கள் என்றும் எப்போது திரும்ப வரும் என்று சொல்ல முடியாது என்றும் அங்கிருந்த உத்தியோகத்தர் கையை விரித்து விட்டார். இனி யும் கறண்ட்டை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று இராசு பக்கத்து அச்சகத்திற்கு உதவி கேட்டு ஓடி ணுர். அவர்களும் மறுநாள் காலேயிற் கொடுப்பதற் காக இரண்டு கல்வெட்டு வேலைகளை அவசரம் அவ சரமாகச் செய்து கொண்டிருந்தார்கள் , அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை. ' அவசர வேலைகளைக் கடைசி நேரம் மட்டும் வைத்து இழுத்தால் உப்பி டித் தான் கலங்க வேணும், என்று அந்தச் சிறிய அச் சகக்காரர் இராசு வைப் வார்த்துக் கேட்டார்.
" என்ன செய்வது எல்லோரும் வேண்டியவர்கள் எல்லாரையும் ச மாளித் து நடக்கவேணும். வாற வேலையையும் விடக்கூடாது" என்றுவிட்டு இராசு வந்து விட்டார்.
" நீங்கள் பயப்பிடாதையுங்கோ மாஸ்ரர். எங் களைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே விடிய அந்தியட்டிக்கு முதல் கார் பிடிச்சென்ருலும் புத்த கங்களே கொண்டுவந்து தருவம்,
" இல்லை இராக. அது எனக் குத் தெரியும். ஆனல் யாழ்ப்பாணத்தலே இருந்து இரண்டு பாட்டுக் கார ரைக் கூப்பிட்டிருக்கினம். அவை பாட முதல் ஒருக் கால கல்வெட்டுப் பாடல்களை வாசிச் சால் ந ல் ல தெல்லே . அப்பத்தானே பிசிறில்லாமல் இராகங்களை யோசிச்சுப் பிடிப்பினம். இரவு எட்டுமணிக் கென்ரு லும் அவைக்குப் புத்தகம் கெர்டுக்க வேணும் " இது பண்டிதர்.
* நீங்கள் கொஞ்சமும் யோசியாமல் போங்கோ மாஸ்ரர், எனக்கு உங்கட வீடு தெரியும் தானே.
107

Page 60
நெஸ்லே க பேரன்
இரவு எட்டு மணிக்குள்ள நான் எப்பிடியும் புகத கத் தைக் கொண்டு வந்து தாறன் . இப்ப ஒறிஜினல் ஒற் றைகளைத் தாறன். ஏன் கையாலை சுழட்டி மெஷின் புறுரவ் எடுத்துத் தாறன் நீங்கள் கொண்டுபோய்ப் பாட்டுக்காறரிட்டைக் குடுங்கோவன். "
மா ஸ்ரரை இருத்திவிட்டு அவசரம் அவசரமாக மெஷின் மைண்டரை அடிக்கச்  ெசா ல் லி விட்டுத் தானும் சின்னத்துரையும் கொம்போசிட்டருமாகச் சேர்ந்து அந்தப் பெரிய மெஷினின் சக்கரத்தைக் கையினுல் சுழற்றிஞர்கள் மெதுவாக இரண்டு மூன்று பிரதிகள் எடுத்துக்கொடுத்து மாஸ்ரரை அ னு ப் பி வைத்தார்கள். வெளியே மழை கொட்டிக் கொண் டிருந்தது: அடித்துமுடித்த " போம்கள் " நனையாமல் மெழுகுப் பேப்பரால் எல்லாவற்றையும் மூடினுர்கள். அச்சகக் கட்டிடம் பழையது. அதனுல் கடும் மழைக்கு ஓடுகள் ஊறிச் சிந்தின. சுவர்களும் நனேந்து ஈரமாகி விட்டன. நிலமெல்லாம் கசிந்து கொண்டிருந்தது, இராசுவுக்கு கால்கள் வெடவெடத் தன. பின்னேரம் ஐந்து மணிக்கு மெஷின் மைண்டரும் பைண்டரும் வீட்டுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் தூரத்தில் இருப்பவர்கள் அவர் க ஞ டைய ஊர்ப் பக்கமாகப் பின்னேரத்தில் இருந்து வெடிச் சத்தங்கள் கேட்ட தால் வீட்டில் பெண்கள் பயந்து கொண்டிருப்பார் கள் என்று அவர்கள் போய்விட்டார்கள், இராசு தங்களுக்குப் போர்மன் என்ருலும் கடைசிவரைக்கும் ஏன் வேலைகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அளவுக்கு மிஞ்சி ஏன் ஒடர்களை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு ஆதங்கம். இராசு வும் மாஸ்ரரும் பட்டுப்பாருங்கோ என்றுவிட்டு அவர் கள் போய்விட்டார்கள். பிரதான கொம்போசிட்டர் ஊரவர். அவரும் சின்னத்துரையும் இராசுவுக்கு உத வியாக அச்சகத்தில் நின்ருர்கள். இனி வேறு வழி யில்லை; இரவு வந்துவிட்டது அச்சகம் இருளில் மூழ்
08

ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது
கீயது மழை வேறு கொட்டுகிறது. ரோச் லேற்றை யும் மெழுகுதிரிகளையும் வைத்து எப்படியும் வேலையை முடிக்க வேண்டும் என்று இராசு கங்கணம் கட்டுகி ரூர், யார் விட்டுப் போனுலும் தன்னுடைய நான யத்தையும் அச்சகத்தின் மரி யா  ைத யையும் காப் பாற்றிவிட வேண்டும் என்று மனம் துடியாய்த் துடிக் கிறது. பிரதான கொம்போசிட்டரை மெ வழி னின் விட்டுவிட்டுத் தன்னுடைய பலம் கொண்ட மட்டும் சின்னத்துரையுடன் சேர்ந்து அந்த இராட்சத இயந் திரத்தின் சக்கரங்களைச் சுழற்றுகிருர், எல்லா மாக ஐநூறு பிரதிகள் தேவை ஒரே தடவையில் நாலு பக்கங்கள் தான் போடலாம் ; ஆனல் ஆறு பக்கங்க ளுக்கும் இன்னுெரு தரம் போட்டு எல்லாமாக ஆயி ரம் தடவை சக்கரத்தைக் கையினுல் சுற்றவேண்டும்; நூறு தரம் சுற்றுவதற்குள்ளேயே சின்னத்துரைக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. இராசு கொஞ்சம் பலசாலி சேட்டைக் கழற்றிவிட்டு வியர்க்க வியர்க்கச் கற்றிக் கொண்டிருந்தார். மெழுகு திரிகள் ஒவ்வொன் ரூக எரிந்து கொண்டிருந்தன. இராசு தன் நாணயத் தைக் காப்பாற்றுவதற்காக உடம்பை முறித்து உரு கிக் கொண்டிருந்தார். ஐநூறு பிரதிகள் அடித்து முடிக் கம்போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது; மூவரும் சாப்பாடும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்தார்கள். எல்லாம் அடித்து முடிந்து பக்கங்கள் மடித்து மட்டை சேர்த்து அடுக்கி முடிக்க இரவு பதி ஞெரு மணியாகிவிட்டது. கட்டர் எல்லாம் மழைநீர் ஒழுகிக் கறள் கசிந்துகொண்டிருந்தது. பழைய நியூஸ் பிரிண்ட் பேப்பர்களால் கட்டரை அழுக்குப்போகத் துடைத்த இராசு மளமளவென்று புத்தகத்தின் மூன்று பக்கங்களையும் வெட்டிக்கொண்டிருந்தார்; சின்னத் துரையும் கொம்போசிட்டரும் வெட்டிய புத்தகங்களை அ டு க் கி ப் " பின் " பண்ணிக் கொண்டிருந்தார்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு வேலை முடிந்தது. வெளியே மழை சனசளத்துக் கொண்டிருந்தது இராசு மெழு
109

Page 61
நெல்லை க. பேரன்
குப் பேப்பர்களால் ஐநூறு கல் வெட் டு க்களையும் மடித்து வைத்துப் பாசலாக மூடிக்கட்டினர் சைக் கிள் கரியரில் வைத்துக்கொண்டு குடையும் இல்லாமல் ரோச்சைப் பிடித்துக்கொண்டு பண்டிதர் வீட்டிற்குக் கிளம்பி விட்டார். கிடங்கு குழிகள் எல்லாம் விழுந்து எழும்பிச் சைக்கிள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பண்டிதரின் வீடு அண்மித்ததும் மதகு ஒன்றின் அருகே இருந்த சுல்லில் தடக்கிச் சைக்கிள் தடம் புரண்டு கானுக்குள் வீழ்ந்தது. தூக்கி வீசப்பட்ட புத் தகக் கட்டைத் தாவி எடுத்த இராசு மறுபடியும் சைக் கிளை உருட்டிக்கொண்டு சென்ருர், பண்டிதர் வீட்டு தாய் குரைக்கிறது. இரவு பத்துமணி வரைக்கும் இராசுவை எதிர்பார்த்த பண்டிதர் ஆழ்ந்த நித்திாை யில் இருந்தார். நாய் குரைத்த சத்தம் கேட்டதும் கையில் இலாம்புடன் எழுந்து வந்தார்.
* அது நான் தான் மாஸ்ரர். இராசு வந்திருக்கி றேன். சொன்னபடி வேளைக்க வர முடியேல்லே மாஸ் ரர். மன்னிச்சுக் கொள்ளுங்கோ. " என்றவாறு புத் தகப் பார்சலே அவரது விருந்தையில் இருந்த வாங் கிலில் வைக்கிருர் இராசு.
இராசுவின் கோலத்தைக் கண்ட பண்டிதருக்குப் பாவமாக இருந்தது. முழங்காலில் வேறு இரத் தம் கசிந்து கொண்டிருந் இது இாட்டில் எங்கோ விழுந்து எழும் பி வந்திருப்பதை உணர்ந் கார்,
" என்ன இருந்தாலும் கால மைக்கிடையிலே புத்த கங்களைக் கொண்டு வந்திட்டீர் . அந்தியட்டி வீட் டுக்காரர் நான் தங்களை ஏமாத்திப் போட்டதாகத் தான் நினைச் சுக் கொண்டிருக்கினம். விடிய ஐஞ்சு மணிக்கே நான் அவையிட்டப் புத் தகக் கட்டோட போகப்போகிறேன். உங்கட அச்சகத்தின் ரை பேரை யும கூட என்ைேட நாணயத்தையும் காப்பாத்திப் போட்டீர். " என்று பண்டிதர் பெருமைப்பட்டார்
110

நெல்லை க. பேரன்
இராசு வீடு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்க அதி காலை ஒன்றரை மணி இருக்கும். இந்தக் கசப்பான அனுபவத்திற்குப் பிறகு இப்போது இராசு கடைகி நேரம் வரைக்கும் வேலைகளை வைத்துக்கொண்டுதான் இருக்கிருர், அவரால் வருகின்ற வாடிக்கையாளர்களை எப்படியோ திருப்திப்படுத்த மு டி கி றது. " கால் மெஷின் ” வாங்க வேண்டும் என்ற எண்ணமும் அடிக் கடி வந்து போகிறது.
* வீரகேசரி 7 1986
111.

Page 62
அன்புள்ள எழுத்தாளருக்கு
qqAMeqLqAMqL LqAMLMAqA AAALLL AAALLL S AAAALAAAAAL AAAAAAS AAAAA AAASAASAA AAAA AAMMLASASSLASLSASqqeqASMMqMSAMLASAS AAMLSALSLALLSMALLAqSq
அன்புள்ள நண்பனுக்கு,
உனது எட்டாந் திகதிக் கடிதம் கிடைத்தது. அக்கடிதம் எனது தனிமையை ஒரளவு போக்கியுள் ளது. நீ ஒரு எழுத்தாளன் என்றபடியால் உனக்கு உண்மை முமுவதையும் எழுதப் போகிறேன். ஏனெ னில் இவை எழுதுவதற்கு உதவலாம். இந்த விடயங் களை உன் மனைவிக்கோ அல்லது வேறு எவருக்குமோ தெரிவிக்க வேண்டாம். நான் இப்பொழுது ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன்.
முதலில் எனது அலுவலகத்தைப்பற்றி விளக்கு கிறேன். இது ஒரு கள்வர் குகை. முக்கிய தொழில் வெளிநாடுகளில் இருந்து அதாவது இலங்கை, பிலிப் பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பணிப்பெண்களை எடுத்துத் த ரு வ தா க க் கூறி
12

நெல்லை க. பேரன்
முற்பணத்தை வாங்கிப் பின் ஏமாற்றுவதேயாகும்; நான் வந்து சேர்ந்த பொழுது இரண்டு பங்குதாரர் கள் இக் குகையை நடத்திக் கொண்டிருந்தார்கள் இபபொழுது ஒருவர் விலகிப் புதிய குகையொன்று ஆரம பித்துள்ளார்.
நான் வந்த பொழுது ஒரு முகாமையாளர் ஒரு டெலக்ஸ் ஒப்பரேட்டர், ஒரு சாரதி, ஒரு பியோன் ஆகியோர் வேலை செய்தனர். பியோன் எகிப்தியர் அவர் ஒரு மாத லீவில் எகிப்துக்குப்போய் இப்போது இரண்டு மாதம் மு டி ந் தும் வரவில்லை; காரணம் கடைசி மூன்று மாத சம்பளம் கொடுபடவில்லை, மற் றைய மூவரும் பிரிந்து சென்ற பங் கு தா ர ரு ட ன் சேர்ந்துவிட்டனர். இரண்டு கிழமைகள் தனித்து ஒவ் வீஸ் நடத்தியுள்ளேன்.
இங்கு ஒரு வ ரு க் கு ம் ஆங்கிலம் தெரியாது. டெலக்ஸ் ஒப்பறேட்டருக்கு மட்டும் தெரியும். ஆனல் அத்த ஆள் அதிகம் கதையாது. இப்பொழுது புதிய டைப் பிஸ்ட் ஒருவன் வந்துள்ளான். அவன் ஒரு எகிப் தியன்.
நாம் இருவரும் தான் இப்பொழுது வேலை செய் கிருேம். வேலை செய்வதென்ன? சும்மா இருக்கின் ருேம். எமது உரிமையாளர் அதிகம் ஒவ்வீசுக்கு வரு வதில்லை. காரணம் பிரச்சினை தான். நான் வர முன்பே டெலிபோன் பில் கட்டாதபடியால் டெ லிபோன் வெட்டப்பட்டுவிட்டது. சென்ற 10ஆம் திகதி தொடக் கம் டெலக்ஸ் காசு 19000 றியால்கள் ( 1 றியால் 5-20) கட்டாத படியால் அதுவும் வெட்டப்பட்டுவிட் டது. உரிமையாளர் இக் காசை எப்படிக் கட்டி முடிப் பாரோ தெரியாது; அதனல் டெலக்ஸ் மூலம் எவரு டனும் தொடர்பு கொள்ள முடியாமலிருக்கிறது:
3

Page 63
அன்புள்ள எழுத்தாளருக்கு
இலங்கயிைல் உள்ள ஏஜென்டுக்கு நான் கொடுத்த தொகை 15 ஆயிரம் ரூபா. எனது சம்பளம் ஆருயி ரம் ரூபா என்றும் தங்குமிடவசதி மட்டும் தரப்படும் என்றும், சமைத்துச் சாப்பிடுவதற்குரிய வசதிகளும் தரப்படும் என்று: சமைத்துச் சாப்பிட்டால் ஆயிரம் ரூபாதான் செலவாகும் என்றும் கூறிஞர்கள். நான் எல்லாக் தொகையையும் இலங்கை ரூபாவிலேயே குறிப்பிடுகின்றேன் , இங்கு சாதாரணமாக டெலக்ஸ் ஒப்பரேட்டரின் சம்பளம் தங்கும் வசதியுடன் பத் தாயிரம் ரூபா. இங்கிருந்தவரின் சம்பளம் பன்னீரா யிரத்து ஐநூறு ரூபா. தங்குமிட வசதி கொ டு பட வில்லை இங்கு புதிதாக வந்த டைப்பிஸ்டுக்கு ஆரு யிரத்து ஐநூறு ரூபா. ஆணுல் எனக்கு ஆருயிரம் மட் டுமே. என்ன செய்வது எ ன க் குச் சாப்பாட்டிற்கு ஆயிரத்து ஐநூறு ரூபா முடியும்.
நான் 11-3-83 மாலை பாரெயின் வந்து சேர்ந் தேன் அங்குள்ள ஏஜென்ட் கிரு சம்மி என்பவர் : அவர் தான் சவூதி அரேபியாவுக்குரிய விசா எடுத்து என்னை 12-3-83 (அடுக்த நாள்) மாலை சவூதிக்கு அனுப்பி வைத்தார். சம்மி பாரெயின் ஏயாப் போட் டுக்கு நேரத்துக்கு வந்து எனக்கு ஒரு நல்ல அறை சாப்பாடு எல்லாம் தந்து நன்ருகக் கவனித்து அனுப் பினர். 12ஆம் திகதி மாலை நான்கு மணியளவில் றியாட் (தலைநகரம்) ஏயாப்போட்டில் வந்து இறங் கினேன். இரவு ஏழு மணிவரை என்னைக் கூட்டிச் செல்ல ஒருவரும் வரவில்லை. என்னிடம் காசு எதுவும் கிடையாது. புறப்படும் பொழுது றியாட் ஏயாப் போட்டுக்கு யாராவது வருவார்கள் என்றும் அங்கு போனவுடன் சம்பள முற்பணம் தருவார்கள் என்றும் திரு. சம்மி கூறிஞர்
எமது ஒவ்வீஸ் அமைந்துள்ளது, பாதா என்ற இடத்தில், இலங்கையில் “கோட்டை" என்று கூறலாம்!
li4

நெல்ல க. ப்ேரன்
ரயாப்டோட்டில் தொண்ணுாறு வீதமாஞேருக்கு ஆங் கிலம் தெரியாது ஏழு மணிவரை காத்திருந்து விட்டுக் கண்ணுடிக் கூட்டுக்குள் இருந்த ஒருவரிடம் போய் முறையிட்டேன் அவர் மிக நல்ல வர். அடுத்தநாள் வெள்ளிக்கி மை லீவு நாள் என்றும் இன்று ஒவ்வீஸ் முடிவதற்குள் தான் என்னைக் கொண்டுபோய் விடுவ தாகவும் அந்த வழியாலேயே தான் போக வேண்டும் என்றும் கூறினுர்
அவர் அவ்வாறே எட்டு மணிபோல் என்னேக் கொண்டுபோய் ஒவ்வீசில் விட்டார்.
கத்தோரில் உரிமையாளரைத் தவிர மற்றெல் லோரும் பிரசன்னமாயிருந்தனர்.
நான் போய் பத்து நிமிடத்தில் கந்தோரைப் பூட்டிக் காரில் என்னைக் கொண்டுபோய் ஒரு அறையில் விட்டு விட்டு அவரவரே சென்று விட்டனர். டெலக் ஸ் ஒப்பறேட்டரும் முகாமையாளரும் தமது இருப்பிடத் துக்குச் சென்றுவிட்டனர். சாரதியும் பியோனும் நானும் தான் அவ்வறையில் தங்குவது. கார் ஒன்று எம் மூவருக்கும் தரப்பட்டுள்ளது. அதில்தான் கற் தோருக்கு வந்துபோவோம். அடுத் நாள் லீவு என்ற படியால் என்னை அங்கு விட்டு விட்டு வியாழக் கிழமை இரவு 12 மணிபோல் வந்து சேர்ந்தனர்.
என்னிடம் காசு மில்லை. வீட்டிலிருந்து கொண்டு வந்த பல காரந் தான் ஓரளவு உதவியது. èb&( עש நாட்களாக அந்தப் பல காரந்தான் கை கொடுத்து உதவியது. இங்குள்ளவர்களுக்கு ஏழு, எட்டு மாதம் களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை;
யாராவது பணிப்பெண் தேவை என்று முற்பணம் கட்டினுல் உடனே பற்றுச்சீட்டைக் கொடுத்து விட் டுப் பணத்தைப் பிரித்து எடுத்து விடுவார்கள், உரிமை
5

Page 64
அன்புள்ள எழுத்தாளருக்கு
யாளருக்குச் சம்பளத்தில் இவ்வளவு தொகை எடுத் துள்ளோம் எனக் கணக்குக்காட்டப்படும் உரிமை யா ளருக்கும் சம்பளம் கொடுத்தபடியால் ஒன்றும் பேசாது சென்று விடுவார். எனக்கு மூன்ருவது நாளும் சாப்பாட்டுக்குக் காசு தரப்படவில்லை வேறு வழி யில்லாமல் ஒருவருடைய வீட்டு டெலிபோ னுடன் டெலக்ஸ் மூலம் திரு. சம்மிக்கு எனது பிரச்சினைகளை அறிவித்தேன் சம்மி டெலிபோன் மூலம் எனது உரிமையாளருடைய வீட்டு ரெலிபோனுடன் கதைத் துள்ளார் போலும் . அடுத்தநாள் நூறு றியால் களை உரிமையாளரே கொண்டு வந்து தந்தார். அவருக்கு ஆங்கிலம் பேசினல் ஓரளவு விளங்கும்.
நாம் தங்கியிருந்த அறை ஒரு பாழடைந்த வீடு அந்த வீட்டிலுள்ள ஒரு அறையிலேயே நானும் றைவ ரும், பியோனும் தங்குவோம். பியோன் மட்டும் ஏதாவது தயாரித்துச் சாப்பிடுவான்.
பியோனும் நான் வந்த மூன்ருவது நாள் தனது நாடான எகிப்துக்குப் போய் இன்னும் வரவில்லை. அறைக்கு ஏ. சி. (குளுரூட்டி) இருக்கிறது. அதன் சத்தத்தில் நித்திரை கொள்ள முடியாது. தாம் ஒவ் வீசுக்குப் போய்வந்த காரும் களவுபோய் விட்டது; றைவரும் விலகிச் சென்றவுடன் நானும் புதிய டைப் பிஸ்டும் இப்போது கந்தோரிலேயே தங்கிவிடுகின் ருேம். இதற்கிடையில் ஒருநாள் என்னையும் பியோனையும் தவிர உரிமையாளர் உட்பட எல்லோரையும் பொலிஸ் பிடித்துக் கொண்டு போய் ஒரு நாளில் விட்டுவிட்டனர்.
எனது சம்பளத்திலும் ஒரு சிறுபிரச்சினை ஏற்பட்டு விட்டது. எனக்கு இலங்கையில் ஆருயிரம் ரூபா என்று சொல்லி விட்டு இங்கே ஐயாயிரம் ரூபா என்று அறி விக்கப்பட்டுள்ளது. உரிமையாளர் ஐயாயிரம் ரூபா வுக்குமேல் ஒரு சதமும் கூடத் தரமுடியாது என்று கூறிவிட்டார். நான் இதையும் திரு சம்மிக்கு அறி
16

நெல்லை க. பேரன்
வித்து இப்பொழுது ஆயிரம் ரூபாவுக்கு ஒத்துக் கொண்டுள்ளனர். இங்கே சம்பளம் எடுப்பதுகஷ்டம் என்றபடியால் உரிமையாளர் எப்பொழுது வந்தாலும் காசுகேட்பேன். இப்படியாக இரண்டு மாதங்களில் நாலாயிரத்து ஐநூறு ரூபா வாங்கி அதில் ஆயிரத்து ஐநூறு ரூபாவை மனைவிக்கு அனுப்பினேன். இரண்டு மாதமாகச் சம்பளம் தரப்படவில்லை, என்பதையும் தம்பிக்கு அறிவித்தேன். டெலக்ஸ் இருந்தது வத தி யாகப் போய்விட்டது மேலும் எனது குடும்பம் இலங்கையில் கஷ்டப்படுவதுபோல் மனைவி டெலஸ் செய்தி தயாரித்து அதையும் காட்டி ஒரு மாதிரி இரண்டு மாதங்களுக்குரிய மிகுதிப் பணத்தையும் வாங்கி விட்டேன். இந்த மாதச் சம்பளத்துக்கும் ஏதும் தந்திரோபாயங்கள் செய்ய வேண்டும். இன் னும் இரண்டு மாதச் சம்பளம் வாங்கிவிட்டேன் என்ருல் ஏஜண்டுக்குக் கொடுத்த பதினையாயிரம் ரூபா வந்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் ஊருக்குப் போகத் தயாராய் இரு க் க லா ம் , இப்பொழுது டேலக்ஸும் இல்லை திரு, சம்மியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறது. வேறு இடம் மாறு வதும் கஷ்டமாக இருக்கிறது. உரிமையாளர் றிலீஸ் லெற்றர் தந்தால் தான் மாறலாம், அவர் அக் கடி தம் தரமாட்டார். ஏனெனில் இவ்வளவு குறைந்த சம்பளத்தில் இன்னெரு டெலக்ஸ் ஒப்பறேட்டரை எடுப்பது மிகக் கஷ்டம் , இன்னும் இரண்டு மாதங் கள் இருந்து விட்டு ஒன்றும் முடியாவிட்டால் இலங் கைத் தூதரகத்திற்கு அறிவித்துச் சம்பளப் பாக்கிரிக்கற் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு போய்விடு வேன்.
நான் இங்கே சமைத்துத் தான் சாப்பிடுகின்றேன். கந்தோரில் ஏ. சி. குளிர்சாதனப் பெட்டி வசதிகள் யாவும் உண்டு. கந்தோர் மிக விரைவில் மூடப்படுமோ என நினைக்கின்றேன்; ஏனெனில் இப்பொழுது ஒரு
117

Page 65
அன்புள்ள எழுத்தாளருக்கு
விதமான வேலையும் இங்கு நடைபெறுவதில்லை. எமது சந்தோர் உள்ள கட்டடம் கொழும்பு மத்திய வங்கிக் கட்டடம் போல ஐந்து மடங்கு கட்டடங்களை அடுக்கி விட்டால் எவ்வளவு உயரமோ அவ்வளவு உயரமாக இருக்கும். இக் கட்டடத்தில் தான பிரபல்யமான "பாதா ஹோட்டல்" உள்ளது. இந்த ஹோட்டலில் தினமும் பகல் ஒரு மணி தொடக்கம் இரவு பன்னி ரண்டு மணிவரை வீடியோ காண்பிப் பார்கள். குரு பாணி, ஷோலே, சத்தியம் சிவம் சுந்தரம் போன்ற படங்களுடன் ஹொலிவூட் ஆங்கிலப் படங்களும் காண்பிப்பார்கள். இக் கட்டிடத்திலுள்ள எல்லா டெலிவிஷன்களிலும் இவற்றைப் பார்க்கலாம், எலது வேலை இப்போது எமது கந்தோரில் உள்ள ரி. வி. யில் இவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதே, ஒவ் வொரு மாதமும் புதிய படங்கள் வரும் , அதுவரை பார்த்த படங்களையே திருப்பித் திருப்பிக் காட்டு Gall prif as dir.
றியாட்டில் எம் ஊர வர் க ள் எவருமில்லே ஜெட்டா, டம்மாம் ஆகிய இடங்களிலேயே இருக் கின்றனர். இவை றியாட்டில் இருந்து ஆயிரம் கிலோ மீற்றர் வரை தூரம் இருக்கும். பிளேனிலேயே போக வேண்டும்; நியாட் த%லநகரம் என்ருலும் அவர்க ளுக்கு றியாட்டுக்கு வரவேண்டி வராது ஏனெனில் சர்வதேச விமான நிலையம் ஜெட்டாவிலேயே இருக் கின்றது. நான் இலங்கைக்குப் போகவேண்டும் என் ருல் பாரெயின் போயே போகவேண்டும். தூதரகங் கள் யாவும் ஜெட்டாவிலேயே இருக்கின்றன. எம் ஊரவர்களின் விலாசங்கள் யாவும் வைத்திருக்கின் றேன்.
யாழ்ப்பாணத்துச் சீ த ன க் கொடுமைகளுக்கும் இன்றைய விலைவாசி உச்ச கட்டத்தில் ஒரு சிறு வீட் டைத் தானும் கட்டமுடியாத அவல நிலக்கும் ஆட்
8

நெல்லை க. பேரன்
பட்ட என்போன்ற நான்கு பெண்களைப் பெற்ற தகப் பன்மார் எத்தனை பேர், பணந்தேடி வெளிநாடுக ளுக்குச் சென்ருர்களோ நானறியேன். ஆனல் உனக் குச் சொல்வதில் என்ன வெட்கம்? மனைவிக்குக் காசு அனுப்ப வேண்டுமே என்பதற்காக நான் இரவில் ஹோட்டல் ஒன் றில் வேலை செய்கிறேன் என்ன வேலே என்று மட்டும் தயவு செய்து கேட்டு விடாதே அதை எழுதும் திராணி எனக்கு இன்னும் வரவில்லை: குவைத்தில் இருந்து உன் கடிதத்தை விரைவில் எதிரி பார்க்கிறேன்
இப்படிக்கு அன்பு நண்பன்
* வீரகேசரி ? யூலை 1984
119

Page 66
மெல்ல இனிச் சாகும்
SASLqLSLAqLALSLSqASqSqALSL AqALSLSqALLLLLSAAAAAALLL AAALLSSLS ASLLSLLS qALSLSLSASLLLSAAAASLSL AAAAS AAALSAeqLSASLqLSASLLALASqSqLALqSqSq
இரவு நீண்டுகொண்டே செல்கிறது; சின்னத் துரை நித்திரை வராமல் இன்னும் படு க்  ைக யி ல் புரண்டு கொண்டே இருந்தான் தொழிலாளர்கள் தங்குவதற்கென்று கட்டப்பட்டிருந்த அந்த நீண்ட தொடர் மாடி அறைகளில் ஒன்றில் தான் சின்னத் துரைக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சவூதியில் அப்போது வெய்யில் காலம் என்பதால் அறையில் ஏ. சி. இரவு பகலாக வேலைசெய்து கொண்டிருந்தது; வேலைக்கு வந்த நாளில் இருந்து சின்னத்துரைக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. வேலை செய்யும் இடம், பழகும் மனிதர்கள், தங்கும் அறை எல்லாமே அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை. ஒரே
uturasà (gypt Guniù 9CU 5567.
2O

நெல்லை க. பேரன்
யாழ்ப்பாணத்தில் சைவ மரபுகள் தழைத்தோங் கிய கிராமமொன்றில் பரம்பரை உடையார் குடும்ப மொன் றி ன் வழித் தோன்றலான சின்னத்துரை, காலத்தின் கோலம் கா ர ன மாக மற்றவர்களைப் போலத் தானும் ஏஜன் சிக்கு இருபத்தெட்டாயிரம் கட்டி இரண்டு மாதங்களில் சவூதிக்குப் பயணமானுன் துறைமுகத்தில் தங்கி நிற்கும் கப்பல் ஒன்றில் ஸ்ரோர் கீப்பர் வேலை. அவன் வேலை செய்த கப்பல் தூள் சீமெந்தைப் பைக் கற்றில் அடைத்து விற்பனை செய் யும் கம்ட னிக்குச் சொந்தமானது என்பதால் யாழ்ப் பாணத்தில் இருந்து பல எஞ்சினியர்கள், கூலியாட் கள் அங்கு தருவிக்கப்பட்டிருந்தார்கள்.
சின்னத்துரை தங்கிய அறையில் மேலும் கீழு மாக ஆறு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. இதில் சின்னத்துரைக்கு மிக வும் அருவருப்பான விடயம் என்னவென்ருல், அவனது படுக்கைக்குமேல் அவனது கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர் சளும், இன் னும் இரண்டு கட்டில் களில் மாத்தறையைச் சேர்த்த இரண்டு சிங்களவர்களும் படுக்க வைக்கப்பட்டிருந்த னர். இந்தப் படுக்கைகளை ஒதுக்கும் வேலை அராபிய காம்ப் மனேஜருடையது. இதில் யாராவது தலையிட் டால் உடனே அவருக்குக் கோபம் வரும். வெள்ளைக் கார மனேஜருக்கு றிப்போர்ட் செய்து மறுநாளே ஊர்திரும்ப டிக்கட் எடுத்துக் கொடுத்து விடுவார்கள். கம்பனியின் சட்டதிட்டங்கள் அவ்வளவு கடுமையா னவை. வேலேதான் அங்கு முச்கியம்: சாதி, மதம் மொழி, பாகுபாடு ஒன்றுக்கும் அங்கு இடம் கிடை யாது
சில வருடங்களின் முன்னர் தன் ஊர்க் கிராமத் துக் கோயிலில் திருவிழா நடக்கும்போது ஆலயப் பிரவேசம் செய்ய வந்தவர்களை மற்ற உயர்சாதியா ரோடு அடித்துத் துரத்தியதும் பட்டின சபை கட்டிக்
121

Page 67
மெல்ல இனிச் சாகும்
கொடுத்த பொதுக் கிணற்றில் கூடத் தண்ணிர் அள்ள விடாது தடை செய்ததும் தன்னையொத்த விடலைப் பொடியளுடன் சேர்ந்து சாதியின் பெயரைச் சொல்வி மற்றச் சமூக த் து இளைஞர்களையும் பெண்களையும் தெருவால் போகும்போது பகிடி பண்ணியதையும், முகாயில் சன்னிதானத்தில் எளிய சாதியளுக்குக் 'கடை சியாகப் பெட்டிச்சோறு மாத்திரம் கறியில்லாமல் கொடுத்து அனுப்புவதில் தான் முன்னின்று மனேச்ச ரிடம் நல்ல பெயர் வாங்கியதையும் நினைத்துப்பார்த்த சின்னத்துரைக்குத் தன்னிடம் பெட்டி ஏந்திச் சோறு வாங்கிய சின் ஞச்சியின் மகன் இன்று தன் கட்டிலுக்கு மேலே படுக்கும் அளவுக்குத் துணிவைக் கொடுத்தது யார் என்று சிந்தித்தான். ஸ்ரோர் ப்ே பரும் தொழி லாளர்களும் அங்கு ஒரே தரத்தில்தான் கவனிக்கப் u L.-t.-nrd seir.
எல்லாவற்றுக்கும் மேலாகச் சின்னத்துரையின் மனதைப் புண்ணுக்கியது எஞ்சினியர் கதிரவேலு அவ னுக்கு இடுகின்ற கட்டளைகளும், அதை அவன் பணி வோடு உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டிய சங்க டமான நிலைவரமுந் தான். கதிரவேலு வேறு யாரு மல்ல. சின்னத்துரையின் கிராமத்தில் உடையார் வீட் டில் அடிமை குடிமையாக இருந்த செல்லனின் பேரப் பொடியன் பேராதனையில் பொறியியல் கல்வி படித்து விட்டு ஹோங்கொங், சிங்கப்பூர் எல்லாம் ஸ்கொல ஸ்பீப்பில் போய்விட்டு வந்தவன்; இப்போது இந்தக் கம்பெனியில் மெக்கானிக்கல் எஞ்சினியராக இருக்கி முர். ஸ்ரோர் கீப்ப்ருக்கும் அவ னு க் கும் அடிக்கடி தொடர்புகள் வரும். துறைமுகத் தளத்தில் வானில் கொண்டு வந்து இறக்கும் ஆணிகள், நட்டுகள், பார மான எஞ்சின் சாமான்கள் அத்தனையும் சின்னத்துரை தான் உடனுக்குடன் ஸ்ரோரில் இருந்து கப்பல் ஏணிப் படிக்கட்டுகளில் இறங்கிவந்து தூக்கிக்கொண்டு போக வேண்டும். அந் த க் கம்பனியில் ஸ்ரோர் கீப்பருக் கென்று தனியாகக் கூலி ஆள் இல்லை;
22

saba as. Bu valv
Seir evrég sopr Gaufáa Gard á sé • fruð með sðaráð தூக்கிவரும்போது கதிரவேலு கப்பல் மேல் தளத்தில் கறுப்புக் கண்ணுடியுடன் சி க ர ட் புகைத் தவாறே பாாத்துக் கொண்டிருப்பான்; பாவம் சின்னத்துரை கதிரவேலுவின் பேரன் பக்திசிரத்தையோடு கோவில் கும்பிட வந்த போது விலா எலும் பில் இடித்துத் துரத் தியடித்த சம்பவத்தை நினைத்துக் கொண்டே பல்லைக் கடித்துக்கொண்டு வேலை செய்வான்.
கதிரவேலுவுக்கு வெள்ளைக்கார எஞ்சினியர் மாரு டனும் கிறிஸ், சுவீடிஸ், ஜேர்மன் நாட்டு எஞ்சினியர் மாருடனும் ஒவ்விசேர்ஸ் மெஸ்சில் சாப்பாடு, அவர் களுக்கென்று தனியாக மெஸ் போய். கதிரவேலுவுக்கு மட்டும் "காம்ப்பில்" தனியான அறையும் அதற்கு ஒரு மெஸ்போயும் கொடுத்திருந்தார்கள். கதிரவேலு சாப் பிடும் மேசையில் இருந்து சின்னத்துரை சாப்பிட முடி யாது; கம்பனிச் சட்டப்படி எஞ்சினியர் மாரும் மற்ற வேலையாட்களும் ஒரே மெஸ்சில் ஒரே வகையான சாப் பாடு சாப்பிட முடியாது
* ஊருக்கு வரட்டும், கதிரவேலுவை என்ற வீட்டு வாசற் படிக்கும் அண்டவிட மாட்டன், உவரை வெளி யாலே நிற்க வைச் சே கதைச்சு அனுப்புவன். சிரட்டை யிலே தண்ணி குடிச் ச வைக்கு இப்ப மெஸ்போய் கேக் குதோ " சின்னத்துரை மனதிற்குள் கறுவிக் கொண் L-Tai.
" இருபத்தெட்டாயிரம் குடுத் திட்டன் அ ந் த க் காசையும் உழைச் சுத், தங்கச் சிக்கு ஒரு விடும் கட்ட வேணும். இல்லாட்டி நாளைக்கே ஊருக்குத் திரும்பி விடுவன்; இந்த மாதிரி இஞ்சை நடக்கும் எண்டு ஆர் கண்டது; யாழ்ப்பாணத்தைப் போல இ ஞ்  ைச யு ம் கொம் பணியளிலை சாதி அமைப்பு இருக்கும் எண்டும், அங்கை மாதிரி இஞ்சையும் வண்டில் விடலாமெண்டும் எதிர் பார்த்தது பெரிய தப்பாய்ப் போய்ச்சுது "
123.

Page 68
மெல்ல இனிச் சாகும்
சின்னத்துரை இருதலைக் கொள்ளி எறும்புபோலத் தவித்தான். இதற்கிடையில் இலங்கையில் நடைபெ றும் இனக்கலவரப் பிரச்சனைகள் காரணமாகச் சிங் கள நண்பர்களும் இ வ னைப் பார்த துத் தெமஞ " என்றும் " கொட்டியா " என்றும் ந க் கல டி க் கத் தொடங்கினர்கள். பொதுவாக எல்லாத் தமிழர்களும் சந்தேகக் கண்களுடன் கணிக்கப்பட்டார்கள். ஆஞல் சவூதிச் சட்டதிட்டங்களினுல் எவரும் யாரையும் ஒன் றும் செய்யமுடியாமல் இருந்தார்கள். எ ல் லே (ாரும் உழைப்பை மாத்திரம் நோக்கித் தமது உணர்வுகளை மனதுள் அடக்கிக் கொண்டு ஊமைகள்போல வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கோயிலடியில் * ஷெல் " விழுந்து சின்னத்துரை யின் பேரஞர் காலமானுர் என்று ஊரில் இருந்து கடிதம் வந் தி ரு ந் த து. ஆனல் சின்னத்துரையின் தடிப்பு உணர்வுகள் மட்டும் இன்னும் செத்துவிடா மல் அடிமனதில் உறுத்திக் கொண்டே இருக்கின்றது யாழ்ப்பாணத்தில் தா னு ம் தன் சமூகத்தவர்களும் சேய்த அநியாயங்களுக்குத் தான் இங்கு நல்ல தண்ட னையை அனுபவிப்பதாகவே அவ ன் உணர்ந்தான் மாறிவரும் சமூகத்துடன் தன்னைப் பிணைத்துக்கொள் ளப் படிப்படியாக அவன் முயன்று கொண்டு இருக் கிருன்;
* மல்லிகை" டிசம்பர் 1986
124

275 it
హr'r-rv_r^^r"జో" భూజా
கோழி கூவித்தான் எங்கள் வீட்டில் விடியும் என்ற வழக்கம் இல்லை.
கோழிக்கூடும் இல்லை. கூடு வைக்க இட மும் இல்லை; -
* கோப்பியைக் குடியுங்கோவல்
இரண்டு வயது மகனின் அலுவல்களைக் கவனிக் கவும் மகனுடைய படிப்பை மேற்பார்வை செய்ய வும் லீவு நாட்களிலும் வே ஃள க் கே துயிலெழுந்த மனைவியின் வேண்டுகோள்
மேசை மீது மணிக்கூட்டில் கண்களை ஓடவிடுக றேன்.
2S,

Page 69
பிள்ளைகள்
இன்னும் ஆறு மணியாகவில்லை.
தூரத்தில் எனக்கு விருப்பமில்லாத அந்த உறு மல் சத்தம் கேட்கிறது. வரவர அது என் காதுகளே அண்மிக்கிறது.
என் மார்பின் மீது படுத் திருந்த குழந்தை திடுக் கிட்டு எழும்புகிருள், மிக வும் பரபரப்புடன் என் கையைப் பிடித்து இழுக்கிருள்.
" அப்பா வாங்கோ. ம். பாங்கோ., டும். டும். பாங்கோ. "
பெரிய மனுஷிபோல என்னையும் கூட்டிக்கொண்டு
மகள் மளமளவென்று குசினிக்குள் நின்று எரிக்கும்
அடுப்புப் புகட்டின் அடியில் சென்று ஒரு மூலையில் பதுங்கி இருக்கிருள்.
* அண்ணு. அம்மா. ஒடி பாங்கோ. ”
எல்லாரும் ஓடி வந்து. குடும்பமாகவே புகட்டி னுள் பதுங்குகிருேம்,
சில நிமிடங்களில் தலைக்கு மேலே விழுவதுபோலப் பொலபொலவென்று பட்டாகச் சத்தங்கள்.
குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தரையோடு படுத்துவிடுகிறேன்: எ ல் லோ ரு ம் அப் படியே.
பத்து வயது மகனுடைய கண்கள் பயத்தால் குளமாகின்றன.
தூரத்தில் எங்கோ வித்தியாசமான வெடிச் சத் தம் எனக்கு நெஞ்சு சற்றே நிமிருகிறது;
* உது அவங்கடை தான் " மனைவி
26

Qg5d)2n) as. Cuyah
* இப்ப பார் உவர் பயந்து ஓடப்போருர் . இப் போதைக்கு இந்தப் பக்கமும் வராயினம். " தான் சற்று நேரத்தில் சப்தங்கள் அடங்கிவிட்டன;
எல்லோரும் வெளியே வருகிருேம்; கோப்பி ஆறி விட்டது.
தெருவில் லாண்ட் மாஸ்ரர் ஒன்று போகிறது: மகள் மறுபடியும் பரபரப்புடன் என்னைப் பதுங்க வரும்படி அழைக்கிருன் ,
நான் மறுக்கிறேன் ஒ வென்று அழுது கொண்டே அந்த இடத்திற்கு அதே மூலையைத் தேடி ஓடுகிமுன்
நான் கந்தோருக்குப் போன வேளைகளில் தாய் தான் பழக்கியிருக்க வேணும்.
பிள்ளையின் பயத்தைப் போக்குவதற்காக அது ஒண்டு மில்லையம்மா. சும்மா ட்ரைக்டர். சின்ன றைக்டர். ஆ. பாருங்கோ. " என்று சொல்லித் தெருவுக்குக் கொண்டு வந்து காட்டுகிறேன்.
சிறிது நேரம் இருக்கும். கடற்கரைப் பக்கமாக ஒரே சத்தங்கள். குழந்தை மிகவும் பயந்துபோய் இருக்கிருள்.
இந்தப் பயம் எதிர் காலத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ?
என் நெஞ்சு கணக்கிறது:
நெஞ்சு கணத்தாலும் அடி மனதில் விடிவுக்கான ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது
gTas, 1987
127

Page 70
நூலாசிரியரது படைப்புகள் பற்றி.
“ வாசகனை மாணுக்கனக்கி, அவனுக்குப் போதித் தலிலும் தனது கருத்துக்களைத் திணித்தலிலும் நம் பிக்கையற்றவர் பேரன். போதித்தலும் திணித்தலும் வாசகனின் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்பவை. சம்பவங்களைச் சித்தரிப்பதன் மூலம் வாசகனின் சிந் தனைப் புரவியைத் தட்டி விடுபவனே உண்மையான படைப்பிலக்கிய கர்த்தா ஆகின்றன்.
- சி. வன்னியகுலம், எம். ஏ. (ஈழமுரசு, 16-3-86)
... But what appears to be the strong point the writer makes is this, People in Jaffna who talk about caste superiority little know that their own children working in Gult states do menial jobs with so called Lowcaste people do in their own dominian.
- K. S. Sivakumaran
(The island 13-4-86)
வாழ்வின் அனுபவ வெளிப்பாட்டினைச் சுவை
படத் தரும் ஒரு படைப்பென்று சுருங்கச் சொல்லி விடலாம். - கந்தையா நடேசன்
(மல்லிகை, ஏப்ரல் 86)
விமானங்கள் மீண்டும் வரும். பற்றி
சமுதாயத்தில் ஒரு இயக்கமாக நடைமுறைப் படுத்தவேண்டிய விடயத்தை இக்கதை துல்லியமாகக் கூறுகிறது. ஒரு ஆண் இதை எழுதியிருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இந்தக் கதாநாயகி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவள். எ ன் னை க் கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று.
- கோகிலா மகேந்திரன் (18-11-86 "சினிமாவுக்குப் போகிறர்கள் கதைபற்றி)

சிறிய விஷயத்தை அழகாக, ஆழமாக, கோவை யாகச் செம்மையான சிறுகதையாகத் தந்த எழுத்தா ளருக்கு என் பாராட்டுகள்.
- செல்வி எஸ். இராஜம் புஸ்பவனம்
Jejl, tt tu siv (சிந்தாமணி, 20.8-69)
S TTTLLLL T GS TTTLLLL 0L TO GLS S S T LTT0TkkLLL LLL 0 வும் கதை கூறும் ஆசிரியரது ஆற்றல் குறுநாவலெங் கும் இழையோடுகின்றது.
- செ. யோகராசா (18-12-85, விமானங்கள் மீண்டும் வரும்,
அறிமுக விமர்சனம்
... The author vividly brings home to the reader, the various aspects of life, the trials and tribulations of one who has gone to a foreign land to earn...
– Nevaliyur N. Satchithananthan
(Daily News, 8-9-86)
‘ஈழநாடு" பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறு க  ைத ப் போட்டியில் தங்கள் கதை பாராட்டுப் பெறுகின்றது. கதை, இலக்கியம் வளம் பெறத் தொடர்ந்து எழுதுவீர்களாக,
- கே. பி. ஹரன் கிர்வாக ஆசிரியர், ஈழநாடு 11-6-69
நெல்லை க. பேரன் இலங்கையில் பொதுமக்க ளிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற எழுத்தாளர் தான். பொதுமக்களது வாழ்வியக்கத்துடன் பின்னிப் பிணைந்தவையாக அமைந்து விடும். இவரது எழுத்துக் கள் இந்தப் பிரபல்யத்துக்கு ஒரு மூல காரணம்.
- SGgan Sun Iromm (தினகரன், 1-6-86)

Page 71
ஆசிரியரைப் பற்றி ஒன்று மாத்திரம் உறுதியா
கக் கூறலாம்: ஆபாச இலக்கியங்களைப் படைக்கும்
நெறியினின்று விலகி வாழ்க்கை வரலாற்றை வடிக்
கும் பாணியில் அவர் செல்வது அழகிய சிறந்த
நாவல்களைப் படைக்கும் ஆற்றல் அவரது பேனையில்
குடியிருக்கிறது என்பதே, இதற்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டும் :
- பண்டிதர் சோ. தியாகராஜன்
கரம் பொன் (சிரித்திரன், பங்குனி 86)
இவருடைய எழுத்துக்கள் எல்லாமே பொதுமக்
களது வாழ்வியக்கக் துடன் பின்னிப் பிணைந்தவையாக
அமைந்தவையாகும். மக்களது வாழ்வின் அன்ருட
நிகழ்ச்சிகளே இவரின் கருப்பொருளாகின்றன. காலத்
திற் கம் சூழலிற் கும் ஏற்ப மாறும் மனித வாழ்வு இவரது எழுத்தின் பகைப்புலமாகிறது.
- குப்பிழான் ஐ. சண்முகன்
(ஈழநாடு, 2-3-86)
வாழ்க்கையில் நிகழும் பல செயல்கள் சம்பந்தா சம்பந்தமற்றுத் தோன்றினலும் அவற்றிடையேயுள்ள மெல்லிய உ று தி யான தொடர்பினுல்தான் சமூக அசைவுகளே நிகழ்கின்றன என்ற உண்மை யைப் புரிந் துகொள்பவர்களுக்கு இந்த நாவல் மிகுந்த சுவாரஸ் யத்தையும் பிடிப்பையும் உணர்த்தலாம். புதிய அனு பவத்தை அல்லது அதிகம் கிடைக்காத அனுபவத்தை ஏற்படுத்தலாம், புரிகின்ற மொழியில் கூறுவதா னல் அசோக மித்திரனின் எழுத்துப் போன்ற முயற்சி. விரிவான விபரணங்களிடையே கதைக் கூற்று அம்சங் களை ஒருவித அதிர்ச்சியுடன் இணைத்து விளக்கும்

எழுத்து முயற்சி, அந்த முயற்சி தான் இதற்கு யாழ் இலக்கிய வட்டப் பரிசினை வழங்கச் செய்திருக்கும் என நம்புகிருேம்:
- அமிர்தகங்கை விமர்சனக்குழு
(சித்திரை 86)
ஒரு நாணயம் காப்பாற்றப்படுகிறது, கவிதை
அரங்கேறும் நேரம் " ஆகிய கதைகளை அண்மையில் படித்தேன். நன்முகச் செய்திருக்கிறீர்கள்.
- எம். கே. முருகானந்தன்
(நவம்பர், 86 விமர்சன உரையாடல் ஒன்றின்போது)

Page 72