கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்

Page 1
\
/
கம்யூனிஸ்ட்
தோழர் சனி
(விமர்சனக் ச
வெகு இமயவ

இயக்கத்தில் ண்முகதாசன் கண்ணோட்டம்)
ஜனன் பரம்பன்

Page 2

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
(விமர்சனக் கண்ணோட்டம்)
வெகுஜனன்
இமயவரம்பன்
சவுத் ஏசியன் புக்ஸ்
புதிய பூமி வெளியீட்டகம்

Page 3
Communist Iyyakkathi Thozar Shanmugadasan (Vimarsana Kannottam)
Vegujanan
Imayawaramban First Published : March 1994 Printed at Rasakili Printers, Madras-20 Published in association with
Putihiya Bhoomi Veliyeetagam
&
South Asian Books
6 If Thayar Sahib II Lane
Madras-600002 Rs. 6-00
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
(விமர்சனக் கண்ணோட்டம்)
வெகுஜனன் & இமயவரம்பன்
முதற் பதிப்பு ; மார்ச் 1994
அச்சு : இராசகிளி பிரிண்டர்ஸ், சென்னை-20.
வெளியீடு : புதிய பூமி வெளியீட்டகம்
up &
சவுத் ஏசியன் புக்ஸ் 611 தாயார் சாகிப் 2-வது சந்து சென்னை-600002
ரூ. 6-00
இலங்கையில் கிடைக்குமிடம் : WASANTHAM (P) Ltd S. 44, III Floor Central Super Market Complex Colombo-l

பதிப்புரை
இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கப் பரப்பில் ஒரு முக்கியமான அரசியல் தொழிற் சங்கத் தலைவராகத் திகழ்ந்தவர் மறைந்த தோழர் நா. சண்முகதாசன். கடந்த 08-02-1993 அன்று தனது 74வது வயதில் அவர் மரண மடைந்தார். ஐம்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை அரசியல்-தொழிற் சங்க இயக்கத்தின் முழு நேர வாழ்வுக்குத்தன்னை அர்ப்பணித்தவர் சண்முகதாசன். ஆரம்ப காலத்தில் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டபின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் RC5 முழு நேர ஊழியராக இணைந்து கொண்டவர். பிற்காலத்தில் மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர். அதனால் அவரது தலைமைத்துவத்தின் பங்களிப்பும் சாதனைகளும் குறை பாடுகளும் பல கோணங்களில் இருந்தும் நோக்கப் பட்டது. அவரது தலைமைத்துவத்தால் சாதகமானவை களும், பாரிய தவறுகளும் இழைக்கப்பட்டன. அவை இன்று மார்க்சிய லெனினிய விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஏனெனில் கம்யூனிஸ்ட் இயக் கத்தில் புதிய தலைமுறையினர் அவற்றில் இருந்து பல அனுபவங்களைப் பெறவேண்டி உள்ளது. அந்நோக்கி லேயே இச்சிறு நூலில் இரண்டு கட்டுரைகள் இடம் பெறுகின்றன. இக்கட்டுரைகள் சண்முகதாசன் என்ற தனி மனிதர் பற்றிய அகவிருப்பு வெறுப்பில் எழுதப் பட்டவையல்ல. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமைப்

Page 4
4
பாத்திரத்தில் இருந்த ஒருவரின் நிலைப்பாட்டினைப் பற்றியதே யாகும்.
இக்கட்டுரைகளை சிறு நூலாக வெளியிட புதிய பூமி வெளியீட்டகம் தீர்மானித்தபோது அதற்கு தமது சம்மதத்தை தெரிவித்த கட்டுரையாளர்களான வெகு ஜனன், இமயவரம்பன் ஆகிய இருவருக்கும் எமது நன்றிகள். அதே வேளை எம்முடன் இணைந்து இதனை வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினர், அச்சக உரிமையாளர், ஊழியர்களுக்கும் எமது நன்றிகள்.
புதியயூமி வெளியீட்டகம்
117, கீழ் சென் அன்றுரீஸ் இடம், முகத்துவாரம்,
கொழும்பு 15,
இலங்கை.

தோழர் சண்முகதாசன்
வெகுஜனன்
இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்று இந்த வருடம் யூலை மூன்றாம் திகதியுடன் ஐந்தாவது வருடத்தை அடைகின்றது. அக்கட்சியைத் தோற்றுவித்து இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழி நடத்தி வந்த வர்களில் குறிப்பிடத்தக்க சில தோழர்கள் அண்மைய வருடங்களில் ஒருவர் பின் ஒருவராக மறைந்து வருகின் றனர். அந்த வரிசையில் தோழர் நா சண்முகதாசன் கடந்த 08-02-93ல் மறைந்து விட்டார். அவரது மறைவுச் செய்தி இலங்கையின் தொழிலாளி வர்க்கத் திற்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த துக்கத்தை ஏற் படுத்தியதொன்றாகும். அதே போன்று அவருடன் இணைந்து அரசியல், தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அனைவரையும் கவலையடையச் செய்த செய்தியுமாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத் தையும், அஞ்சலியையும் தெரிவிக்கும் அதே வேளை இடது சாரி இயக்க அரசியலில் குறிப்பாகக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் அவரது பங்களிப்பின் பக்கங்களை நேர்மை யான நோக்கில் மதிப்பிட்டுக் கொள்வது அவசியமாகும்.
தோழர் சண்முகதாசன் 50 வருட காலத்திற்கு மேல் அரசியல் வாழ்வில் முழு நேரமாகத் தன்னை அர்ப்பணிப்பு

Page 5
6
டன் ஈடுபடுத்தி வந்தவர். இலங்கையின் மூத்த இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் ஒரு காலகட்டத் தில் ஆளும் வர்க்கத் தலைவர்களால் 'பிரச்சினைக்குரிய மனிதர்" என அடையாளமிடப்பட்டவருமான சண்முக தாசனின் சாதக பாதக அம்சங்களைக் கொண்ட அரசியல் வாழ்வு உரிய மதிப்பீட்டிற்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதனை வெறும் வழிபாட்டு நிலையிலோ அன்றி முற்றி லும் நிராகரித்த வகையிலோ அல்லாது நிதானமான நோக்கிலே அணுக வேண்டும்.
1. தோழர் சண்முகதாசன் தனது பல்கலைக்கழகக் கல்விக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியவர். அவ்வார்வம் அவரை மார்க்சிசத்தின் பால் அதிக ஈடுபாடு கொள்ள வைத்தது. 1943ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக அவ் ஆண்டிலேயே இணைந்து கொண்டார். அன்றைய தேசிய சர்வதேசியச் சூழலில் நிலவிய கம்யூ னிஸ்ட் எதிர்ப்பு அலைகளின் மத்தியில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்க இயக்கத்தை முன்னெடுக்க சண்முகதாசன் எடுத்துக் கொண்ட முடிவு தன்னலமற்ற இலட்சிய நோக்கம் கொண்டதாகும். அன்றைய கால கட்டத்தில் ஏனைய தோழர்களுடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. கொழும்பு நகரத் தொழி லாளி வர்க்கத்திடையேயும், அதனைத் தொடர்ந்து மலை யகத் தோட்டத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியிலும் தொழிற் சங்கத்தின் ஊடே சண் மிகப் பெரும் அர்ப்பணிப் புடன் கடுமையான பணிகளைக் கையேற்று செயற்படுத்தி வந்தார். இத்தொழிற் சங்கப் பணியானது இரு முறை களைக் கொண்டதாக இருந்தது. ஒன்று தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதும் அவற்றை வென்றெடுப்பதுமாகும் இரண் டாவது தொழிலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியில் அணி

7
திரட்டி ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டு முதலாளித்துவ பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராகப் போராட வைப்பதுமாகும். இவ்விரு நோக்கங்களையும் முன்னெடுப் பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இலங்கை தொழிற் சங்க சம்மேளனத்தைச் சக்திமிக்க தொழிற் சங்க மத்திய ஸ்தாபனமாக கட்டி எழுப்பி போர்க்குணம் கொண்டதாக வழி நடத்தி வந்ததில் தோழர் சண் வகித்த பாத்திரம் இலங்கையின் தொழிற் சங்க வரலாற்றில் முன் னுதாரணம் மிக்கதாகும். அன்று கட்சி தொழிற் சங்க தலைமை டாக்டர் எஸ். ஏ விக்கிரமசிங்கா, பீற்றர் கென மன், எம் ஜி. மென் டிஸ், நா. சண்முகதாசன் அ. வைத்தி லிங்கம், பொன் கந்தையா, டபிள்யூ ஆரியரட்ணா. ஏ. குணசேகரா மு. கார்த்திகேசன் போன்ற முன்னணித் தோழர்களைக் கொண்ட கூட்டுத் தலைமையாகவே இருந் தது. இத்தலைமையானது நாற்பதுகளில் முக்கியத்துவம் மிக்க வேலை நிறுத்தங்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்புபாசிச விரோத இயக்கங்களையும் முன்னெடுத்து வந்தது. இவற்றுள் குறிப்பிடத்தக்க வேலை நிறுத்தம் 1947ல் இடம் பெற்ற பொது வேலை நிறுத்தமாகும். அதே போன்று 1945ல் இடம்பெற்ற சோல்பரி ஆணைக் குழுவை எதிர்த்த வெகுஜனக் கிளர்ச்சி முக்கியமானதாகும். இவை போன்ற பெரிய சிறிய போராட்டங்களில் சண்முகதாசன் வகித்த முன்னணிப் பாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் உடைய தாகும்.
இதே தொடர்ப் போராட்டங்கள் 1950ம் ஆண்டு களிலும் நீடித்தன . 53ம் ஆண்டில் இடம்பெற்ற மகத்தான அர்த்தால் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த தலைமைத்துவத்தில் சண்ணின் பங்கு போற்றத் தக்கதாகும். 55ம் ஆண்டில் இடம் பெற்ற தனியார் ஆதிக் கத்தை எதிர்த்த பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் சண் முன்னணிச் செயல் வீரராகத்

Page 6
8
திகழ்ந்தார். அப்போராட்டமே 1956ல் பதவிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகா தலைமையி லான மக்கள் ஐக்கிய முன்னணி அரசினை பஸ் தேசிய மயத்திற்கு நிர்ப்பந்தித்தது.
தோட்டத் தொழில் துறையில் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கமான செங்கொடிச் சங்கத்தைப் பலமிக்க தொழிற் சங்கமாக்குவதிலும் அதன் தலைமையில் பல வெற்றிகர மான வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்த திலும் சண் தகுந்த தலைமை வழங்கினார். கொழிற் கோர்ட்டுகளில் தொழிலாளர் சார்பாக வாதிடுவதிலும் அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதிலும் அவர் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காது தொழிலாளர் சார்பாக நேர்மையுடன் செயல்பட்டு வந்தார்.
இலங்கை இடதுசாரி இயக்கத்தில் நாற்பதுகளின் ஆரம்பத்துடன் ரொட்சிசம் ஓர் தீய அம்சமாக வெளிப் பட ஆரம்பித்தது. இதனை தத்துவத்தாலும் நடைமுறை யாலும் எதிர்த்துப் போராடுவதில் சண் ஏனைய கம்யூ னிஸ்ட் தலைவர்களுடன் இணைந்து முக்கிய பங்காற்றி னார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே தீவிர ஸ்ராலினிஸ்டாக சண்முகதாசன் இருந்து வருகிறார் என ரொட்சிசவாதிகள் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டினர். இதே குற்றச்சாட்டையே பின்னாளில் சண்ணின் ஆரம்ப காலச் சாகாக்கள் ஒரு குற்றச்சாட்டாகச் அவர் மீது சுமத் தினர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
2. இவ்வாறு நாற்பது ஐம்பதுகளில் பழைய கம்யூ னஸ்ட் தொழிற்சங்க இயக்கத்தில் முக்கிய தலைமை பாத் திரத்தில் ஒருவராக இருந்து வந்த சண்முகதாசன் அறுபது களின் முற்கூறுகளில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றிய மாபெரும் தத்துவார்த்த விவாதத்தில் முக்கிய மான தலைவராகப் பங்கு கொண்டார். ஏகாதிபத்தி

9
யத்தின் இயல்பு பற்றியும். தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைப் பாராளுமன்றப் பாதையிலா? அன்றிப் புரட்சிகரப் போராட்டப் பாதையிலா? கைப் பற்றுவது என்பதிலும், ஸ்டாலினைக் குருச்சேவ் கண்டித்து நிராகரித்ததிலும் மற்றும் தேசிய சர்வதேசியப் பிரச்னைகளிலும் சோவியத்தின் சீன கட்சிகளிடையே யான கடுமையான விவாதமே மாபெரும் விவாதம் ஆகும். சோவியத் யூனியனையும்-குருசேவ்வையும் எஸ். ஏ. விக்கி ரமசிங்கா கெனமன் குழுவினர் ஆதரித்து நிற்க சண்முக தாசன்-பிரேம்லால் குமார சிறி ஆகியோர் மாக்சிசம் லெனினிசத்தை ஆதரித்து நிற்கும் நிலையை எடுத்தனர். இதனால் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகி சண்முகதாசன் புதிய கட்சியின் தலைமைக்கு வந்தார்.
இக்கால கட்டமே சண்முகதாசனின் அரசியல் வாழ்வில் உச்சகட்டமாகும். இக்காலம் அறுபதுகளின் நடுக்கூறாகும். இலங்கையின் சமூக மாற்றத்திற்கு ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்றும், பாராளுமன்றப் பாதையின் மூலம் தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் மக்களும் விமோசனம் பெறமுடியாது என்பதையும் மிகப்பரந்த அளவில் பிரசாரப்படுத்தும் புரட்சிகர இயக்கத்திற்கு சண்முகதாசன் தலைமை தாங் கினார். இப்புரட்சிகர கருத்துக்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிற்சங்க சம்மேளனம், செங்கொடிச் சங்கம், வாலிபர் இயக்கம் என்பவற்றின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சண்முகதாசனின் புரட்சிகர கோட்பாட்டு பிரச்சாரத்தின் பின்னால் அணி திரண்டனர், அன்றைய சர்வதேசிய சூழலில் நிலவிய புரட்சிகர எழுச்சிகளும் சண்ணின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்த்தியிருந்தன. கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் தெற்கின் குறிப்பிடத்தக்கப் பிரதேசங் களில் புரட்சிகர சக்திகள் பலமாக அணிதிரண்டு அவரது

Page 7
10
தலைமைத்துவத்தை ஏற்றிருந்தன. இக்காலத்தில் வட பகுதியில் தீண் டாமைக்கும் சாதி அடக்கு முறைக்கும் எதிரான புரட்சிகரப் போராட்டங்கள் வெடித்தெழுந்தன. சண்முகதாசன் இப்போராட்டம் பற்றிய கோட்பாட்டு ரீதியான முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்த அதே வேளை கட்சியின் வட பிரதேசத் தலைமையானது அப்போராட்டத்திற்கான நடைமுறைத் தந்திரோபாயங் களை தகுந்த முறையில் வகுத்து முன்னெடுத்தது. அதனால் அப்போராட்டத்தின் மார்க்கத்தை வெற்றிகர மாக அத்தலைமையால் முன்னெடுக்க முடிந்தது. இதே காலப் பிரிவில் வடபகுதியில் தொழிற் சங்க இயக்கம் என்றுமில்லாதவாறு முன் சென்றது.
காங்கேசன் சீமெந்து ஆலைத் தொழிலாளர், வல்லை நெசவாளர், மில்க்வைற் சோப் தொழிலாளர், இ.போ.ச. தொழிலாளர் என்போர் நடத்திய தீரமிக்க வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கும் அவை சார்ந்த தொழிற் கோட்டு வழக்குகளுக்கும் சண் ஏனைய தோழர்களுடன் இணைந்து வழிகாட்டியாக நின்றார். அதே போன்று மலையகத்தில் மலையகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி கர உணர்வுகள் பல வெற்றிகரமான வேலை நிறுத்தப் போராட்டங்களாக முன் சென்றன. போராட்டத்தின் மூலம் தமது உரிமைகளை தொழிலாளர்களே வென் றெடுக்க அணி திரள வேண்டிய தொழிற் சங்க இயக்கம் சண் தலைமையிலான செங்கொடிச் சங்கமே என்ற நிலை மலையகத்தில் அவ்வேளை நிலவியது. போக வந்தலாவ மடக்கும்புர, டயகம, கீனா கலைப் போராட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் தமது புரட்சிகர உணர்வு களை வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுச் சென்றனர். ஒரு கால கட்டத்தில் செங்கொடிச் சங்கத்தின் அங்கத்துவம் ஒரு லட்சத்தை அண்மித்தது. அதே போன்று கொழும்பில் பல வேலை நிறுத்தப் போராட்டங்கள்

11
புரட்சிகரமான வழிகளில் முன் சென்றன. வெள்ளவத்தை நெசவாளர், இ.போ.ச. தொழிலாளர், துறைமுகத் தொழிலாளர், தனியார் துறையினர், சினிமாத் தொழி லாளர், பலமிக்க வேலை நிறுத்தப் போராட் டங்களை நடத்தினார்கள். இவை யாவற்றிலும் தோழர் சண் ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ பிற்போக்குச் சக்தி களுக்கும் எவ்வகையிலும் விட்டுக் கொடுக்காத நிலையில் ஏனைய தலைமைத் தோழர்களுடன் இணைந்து முன் வரிசையில் தலைமை கொடுத்து நின்றார் என்பது அவரது சாதகமான பக்கங்களின் சிறப்பு அம்சமாகும்.
3. ஆனால் அறுபதுகளின் இறுதி ஆண்டுகளிலும் எழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் அவரைச் சுற்றி நின்ற புரட்சிச் சக்திகளே அவரை நோக்கி பல கேள்வி கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தன. புரட்சிகர கருத் துக்களைப் பிரச்சாரப்படுத்தி அதற்கு தத்துவார்த்தக் காரணங்களை முன் வைத்து; ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவங்களை உதாரணமாக்கி, பிரச்சார மட்டத்தில் நின்றதில் சண்முகதாசன் சரியான பாத்திரத்தை வகித்த போதிலும் அவற்றை இலங்கையின் யதார்த்த நிலைமை களுக்குப் பொருந்தும் வகையில் எவ்வாறு பயன்படுத்து வது என்பதில் சரியான தலைமைத்துவத்தை அவரினால் வழங்க முடியாத நிலைமைக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது. நடைமுறை பற்றிய கேள்விகள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டபோது சண்முகதாசன் தத்து வங்களுக்குள் மட்டுமே தலை புதைத்து நின்றாரே தவிர அவற்றின் நடைமுறைக்கு உகந்த வழி முறைகளை முன் வைக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார். சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலை உருவாகியது. இதனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவரது தலைமைத்துவத்தை நிராகரித்து பல்வேறு குழுக்களாகவும், தனி நபர்களாகவும் பெரும்

Page 8
12
பாலானவர்கள் வெளியேறிச் செல்ல நேரிட்டது. ஒரு காலத்தில் கூட்டுத் தலைமையும், தனி நபர் பொறுப்பும், விமர்சனம், சுயவிமர்சனம் என்ற கம்யூனிஸ்ட் கட்சி வழி முறை பின்பற்றப்பட்ட நிலையில் சண் ஆற்றிய சாதனை களும், பங்களிப்பும் பிற்காலத்தில் எதனையும் எதிர்த்து கேள்வி கேட்டால் அத்தகையவர்கள் கட்சியை விட்டுப் போய்விட வேண்டும் என்ற பாதகமான அம்சங்கள் மேவி நின்ற நிலைக்குத் தலைமை தாங்க வேண்டிய நிலைக்குச் சீரழிந்தார். இதனால் அவரது தலைமையிலான கட்சி ஒரு ஜனநாயக மத்தியத்துவம் அற்ற கட்சியாகவும், தனி நபர் வழிபாடு மிக்க ஒரு சிலரை மட்டும் கொண்டதான கட்சியாகவும் இருப்பதில் திருப்திகாணும் நிலைக்கு அவர் செல்ல வேண்டி ஏற்பட்டது.
இறுதியாக 1978ல் அக்கட்சிக்குள் இருந்து தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையிலான புரட்சிகர சக்தி கள் ஓர் விஷேச மாநாட்டின் மூலம் தமது மார்க்சிச லெனினிசம் கொள்கையை முன்வைத்திருந்தனர். அம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளையும் மீறி முற்றிலும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டுக்கு அப்பால் பகிரங்க பத்திரிகை அறிக்கை விடுத்து கட்சியைப் பிளவுக்கு உள்ளாக்குவதில் தனது ஒரு முனை வாதத்தை சண்முகதாசன் வெளிப்படுத்தினார். தவிர்க்க முடியாத நிலையில் மாக்சிச லெனினிச புரட்சிகர சக்திகள் மாற்று அறிக்கை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் புதிய கட்சியைத் தோற்றுவிக்க வேண்டிய நிலைக்கும் உள்ளா கினர் . சண்முகதாசனுடைய இப்பிளவு தனிப்பட்ட சுக துக்கங்களோடு சம்பந்தமுடைய ஒன்றல்ல. அல்லது இரகசியமானதுமல்ல, அக்கட்சிக்குள் இருந்த நேர்மை யான மாக்சிய லெனினிச சக்திகளை மேலும் தனி நபர் களாகவும், குழுக்களாகவும் சீரழிந்து விடாது பாதுகாக்க எடுத்த சரியான முயற்சியாகும். அத்தகைய முடிவும் நிலைப்பாடுமே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது)

13
யாகவும் பின் புதிய-ஜனநாயகக் கட்சியாகவும் வளர்ந்து நிற்கும் நிலைக்கு அடிப்படையானது. இது மாக்சிசம் லெனினிசத்தையும் மாஒ சேதுங் சிந்தனையையும் இலங் கையின் யதார்த்த நிலைமைகளுக்குப் பொருந்தியவாறு முன்னெடுக்கும் நீண்ட புரட்சிகர இலட்சிய நோக்குடன் சம்பந்தப்பட்டதொன்றே அன்றி சண்முகதாசன் என்ற ஒரு தனி மனிதனுக்கு வழிபாட்டு ரீதியில் விசுவாசமாக இருப்பதோ அன்றி, நன்றிக் கடனாக ஏனோ, தானோ என்று இருந்து விட்டுப் போவதோ அல்ல என்பது கவனத் திற்குரியதாகும். இது பற்றி பகிரங்கமாக எடுத்துக் கூற நிர்ப்பந்திக்கப்பட்டமையினாலேயே இவ்விசயம் சுட்டிக் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சண்முகதாசன் ஆளும் வர்க்க சக்திகளுக்கு விட்டுக் கொடுக்காதவர் என்பது உண்மையே. ஆனால் அதே விட்டுக் கொடுக்காமையை கட்சிக்குள் பிரயோகித்து எதி ரிக்கும் நண்பர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காணாது வந்ததினால் காலத்திற்குக் காலம் நல்ல சக்தி களை இழந்தார். இறுதியில் தனி மனிதர் போன்று சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு இருக்க வேண்டியும் ஏற்பட்டது. அவர் யாவற்றுக்கும் நடைமுறையை விட தத்துவத்தின் மீதே தங்கியிருந்தார். ஒரு பிரச்சனையைப் புறநிலை யதார்த்தத்துடன் இணைத் துப் பார்ப்பதற்குப் பதிலாக தனியே மார்க்ஸ், லெனின், மாஒ ஆகியோர் கூறிய வரிவாசகங்களுடன் மட்டும் இணைத்துப் பார்ப்பதிலேயே கவனமுடையவராக இருந் தார். தத்துவத்தை நடைமுறையுடன் இணைப்பதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் தலை மைத்துவத் தகுதியைப் படிப்படியாக இழந்து நிற்கக் காணப்பட்டார். அதனால் அவர் முன்னுக்குப் பின் முர ணான நிலைப்பாடுகளைக் காலத்திற்குக் காலம் கொண் டிருக்கவும் செய்தார். உதாரணமாக முதலாளித்துவ

Page 9
14
பாராளுமன்றத் தேர்தல்களைப் பற்றிய கண்ணோட்டத் தில் 1965இல் தானே முன்னின்று தேர்தலில் பங்கு கொண்டமைக்கும், பின்பு 1969இல் முற்றாகவே தேர் தலைப் பகிஷ்கரித்தமைக்கும் தோழர் லெனின் தொகுப்பு களில் இருந்தே காரணம் காட்டி நின்றமை சுட்டிக் காட்டப்படக்கூடியதொன்றாகும். ஐக்கிய முன்னணி யைக் கட்டியெழுப்புவதில் கட்சியின் பாத்திரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதில் காலத்திற்கு காலம் குழப்ப கரமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததுடன் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியை-கம்யூனிஸ்ட் கட்சியை ஜனநாயக மத்தியத்துவம் மிக்கதோர் ஸ்தாபனமாகக் கட்டி எழுப்ப முடியாத இயலாமையையும் அவரது பிற் காலத்தில் கொண்டிருந்தார். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்து அவற்றின் உள் விவகாரங்களில் தலையிட்டு, சரி பிழை கூற முற்பட்டு தன்னை மிகச் சரி யான ஒருவராகக் காட்ட முனைந்தார். இதனால் சகோ தரக் கட்சிகளுடனான உறவுகளை இழக்க நேரிட்டது. அவர் உலகின் புதிய வளர்ச்சிப் போக்குகளையும் மாக்சிச லெனினிசத்தில் சமகால வளர்ச்சியினையும் கவனத்தல் கொள்ளாது என்றென்றைக்குமான மாறா நிலை கொண்ட ஒரே அளவுகோலையே பயன்படுத்தி வந்தர்ர்.
இவை யாவும் சண்முகதாசனின் பிற்காலத்திய அர சியல் வாழ்வில் 'நான்’ என்ற முனைப்புடன் கூடி ஒரு “புத்தக வாத மாக்ஸ்சிஸ்டாகவே' அவரால் செயற்பட முடிந்தது என்ற நியாயமான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தும் சூழலை எற்படுத்தியது, "அவர் இறுதிவரை ஒன்றையே கூறி வந்தார்' என்றும் “அவர் என்றுமே மாறவில்லை' என்றும் கூறப்படும் புகழ்ச்சிக்குரிய கூற்றுக் களிடையே ஓர் எதிர் அம்சம் அடங்கியிருப்பதை மாக்சிச லெனினிச வாதிகளால் மட்டுமே அடையாளம் காண இயலும், அதாவது அவர் ஓர் வரட்டுவாத “நிலையியல்

15
வாத” 'புத்தக வாத', 'ஒரு முனைவாத' நிலைப்பாட் டினை இறுதி வரை கொண்டிருந்தார் என்பதே அது வாகும். சண்முகதாசன் என்ற தனி மனிதன் அபார சக்தி படைத்தவர் என்றும் அவர் கூறிய அல்லது முன் வைத்த கருத்துக்கள் என்றும் சரியானவை மட்டுமல்ல முக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது எனவும் பக்த சிஷ்சி யர்கள் போன்று வழிபாட்டு வகையில் யாராவது கூற முக்பட்டால் அது அவர்களது கிளிப்பிள்ளைத் தனத் தையே வெளிப்படுத்தும். இயங்கியல் நோக்கில் மாக்சிச லெனினிசத்தின் வளர்ச்சியையும் அதன் எதிர்காலத்தையும் பற்றிய அக்கறையுடைய எவரும் புறநிலை யதார்த்த நிலைமைகளுடன் அதனை இணைத்து சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கி மதிப்பீடு செய்யவே செய்வர். இன்று அவசியம் தேவைப்படுவது அதுவேயாகும் அப்பொழுதுதான் சண்முகதாசன் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் வழங்கிய சாதனைகளைக் கையேற்று முன் னெடுத்துச் செல்லவும், அதே வேளை அவரது பாரதூர மான தவறுகளை ஒரு பாடமாகக் கொண்டு அதே தவறு கள் மீண்டும் ஏற்படாதவாறு வழி நடந்து செல்லவும் கூடிய புதிய நிலைமைகளைத் தோற்றுவித்து முன்னேறிச் செல்ல முடியும்,
4. இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கப் பரப்பிலே ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை எதிர்த்தும், தொழி லாளர் வர்க்க இயக்கத்தை முன்னெடுத்தும் வந்தவர்களில் தலைமைப் பாத்திரத்தில் ஒருவராகத் திகழ்ந்து வந்த சண்முகதாசன் தனது ஆரம்பகால கட்டத்திலும் அதனைத் தொடர்ந்த உச்ச நிலைக் காலத்திலும் ஆகக் கூடிய நல்லம்சங்கள் பொருந்திய சாதனைகளை வழங்கக் கூடிய ஒருவராக இருந்தாரென்பது மறுக்க முடியாத தாகும். ஆனால் பிற்காலத்தில் அவரது குறைபாடுகள் முன்னைய சாதனைகளையும் மேவி தீயம்சங்களாக

Page 10
6
வளர்ச்சி கண்டது. இவற்றைத் தனது இறுதிக் காலம் வரை அவர் திருத்திக்கொள்ள முயற்சிக்கவில்லை என்பது கவலைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். தோழர் சண்முக தாசன் அத்தீய அம்சங்களை உரிய காலங்களில் விமர் சனம் சுயவிமர்சனம் வழியாக நீக்கி இருப்பாரேயானால் இன்று இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கமும், புரட்சிகர சக்திகளும் பன்மடங்கு பலமிக்கதாகத் திகழ்ந்திருக்கக் கூடிய தலைமைப் பங்களிப்பை அவரால் வழங்கி இருக்க முடிந்திருக்கும். குடுட்டுத்தனமோ அன்றி வரட்டுத் தன்மைகளோ அற்ற விதத்தில் இலங்கையின் யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப மாக்சிசம், லெனினிசம் மாஒசேதுங் சிந்தனையைப் பிரயோகிப்பதில் மிக உறுதியுடன் முன் செல்வதே தோழர் சண்முகதாசன் உட்பட மறைந்து விட்ட அனைத்துத் தோழர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்"

சண்முகதாசன் ஒரு புனர் மதிப்பீட்டிற்கான அவசியம்
-இமயவரம்பன்
டட்லி சேனநாயக்க மரணமடைந்த போது அவரது நற்பண்புகள் பற்றிப் பாராளுமன்றத்திற் புகழுரைகள் ஒன்றையொன்று மீறின. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும், 'கசாப்புக் கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன் என்று போற்றப்படுகிறான்' என்று குறிப்பிட்டார். சிறந்தவர்களை முக்கியமாக அவர்களது மரணத்தை உடனடுத்து, இகழ்வது பண்பாட்டுக் குறை வானது. ஆயினும் நேர்மையற்ற புகழ்ச்சி தவறானது.
சண்முகதாசன், உயிரோடு இருந்த காலத்திலேயே, கடுமையான தாக்குதல்கட்கு முகங்கொடுத்தவர். சளைக் காத ஒரு போராளி. ஆயினும் தவறுகள் பல செய்தவர். அவரது பங்களிப்புக்களின் முக்கியத்துவத்தை அவரது தவறுகள் மறுதலிக்கப் போவதில்லை. ஆயினும், நமக்கு முக்கியமானவர் சண்முகதாசன் என்ற தனி நபரல்ல. சண்முகதாசன் என்ற அரசியல்வாதி, அவர் தலைமை தாங்கிய அரசியல் இயக்கம், அவரது வழி நடத்தல், அவரது அரசியல் நடத்தை, அவரது அரசியல் நிலைப் பாடுகள் அவரது அரசியற் கணிப்பீடுகள் போன்றனவே நமக்கு அதி முக்கியமானவை.

Page 11
18
சண்முகதாசனின் நேர்மை பற்றியும் அவரது அயராத உழைப்புப் பற்றியும் தளராத கொள்கைப் பிடிப்பு பற்றியும் நெஞ்சத் துணிவு பற்றியும் தனது கொள்கைக் காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் இது வரை பலர் எழுதியுள்ளனர். அவை பொய்யுரைகள் அல்ல. இறந்தவர் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தத்தாற் பிறந்தவையல்ல. பலரது அஞ்சலிகள் நெஞ்சின் ஆழத்தினின்று பிறந்தவை. ஆயினும், சண்முகதாசனின் அரசியல் பற்றிய ஒரு முழுமை யான விமர்சனத்திற்கான தேவை உள்ளது. சண்முக தாசனை அறிவதற்கு மட்டுமல்லாது இலங்கையின் மாக்ஸிய லெனினிஸ் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்கவும் அது அவசிய மாகிறது.
என்னுடைய கட்டுரை சண்முகதாசனுடன் எனது கருத்து வேறுபாடுகள் பற்றியதல்ல. அவர் மேற்கொண்ட அரசியற் பயணத்தில் அவரது மதிப்பீடுகளும் புறநிலை யான உண்மைகளும் எவ்வளவு தூரம் உடன்பட்டன. அவரது பங்களிப்புக்களுக்கு அவரது குறைபாடுகள் அவரது இலட்சியத்தை எவ்வாறு பாதித்தன என்பது பற்றியே சிறிது எழுத முயல்கிறேன்.
மர்ஒசேதுங், ஸ்டாலின் மீதான தனது மதிப்பீட்டில், ஸடாலின் 60 பங்கு சரியாகவும் 40 பங்கு தவறாகவும் பங்களித்ததாக எழுதியதாக நினைக்கிறேன். இந்த 60-40 பங்களிப்பை வைத்தே ஸ்டாலினின் ஒட்டு மொத்த மான பங்களிப்பு மிகவும் பயனுள்ளதும் வரலாற்று முக்கியத்துவமுடையதும் என்றமுடிவுக்கு மாவோவால்வர முடிந்தது. தவறு செய்யாதவன் எதையுமே செய்யாதவன் என்பதும் மாவோவின் கருத்து. எனது விமர்சனம் சண்முக தாசனுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை எவ்வகை யிலும் குறைவாக மதிப்பிடக் காரணமாகி விடாது என்பது என் நம்பிக்கை

19
சோவியத் - சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையிலான விவாதம் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தியது. அந்த விவாவதத்தின்போது மார்க்ஸிய லெனினிஸ் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திப் பாராழு மன்ற சந்தர்ப்பவாத அரசியலை நிராகரித்து மாக்ஸிய தத்துவார்த்த விவாதத்தை முன்னெடுத்தவர்களில் சண்முகதாசன் முக்கியமானவர். இதுவே அவரது அதி முக்கியமான அரசியற் பங்களிப்புமாகும். சண்முக தாசனின் வாதத் திறமையும் உறுதியும் செயலாற்றலும், கட்சியிலும் தொழிற்சங்கத்திலும் பெரும் பகுதியினரை மாக்ஸிய - லெனினிஸத் தரப்பிற்கு வென்றெடுத்தது. சண்முகதாசனைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்தும் அவர் தமிழர் என்ற விஷயத்தைக் கட்சியின் உறுப்பினர்கட்கு நினைவூட்டும் விதமாக, "சண்" அல்லது "தோழர் சண்’ என்று சொல்வதைத் தவிர்த்துத், திரும்பத் திரும்ப ‘நாகலிங்கம் சண்முகதாசன் அவர்கள்" என்று மேடைகளிற் குறிப்பிட்டும் அவரது செல்வாக்கைக் குறைக்க முயன்றவர்கள் வலதுசாரி (மொஸ்கோ சார்பு) கம்யூனிஸ்ட் கட்சி மேல்மட்டங்களிலும் இருந்தார்கள். ஆயினும் சண்முகதாசன் இந்தக் கீழ்த்தரமான அரசியலை அலட்சியம் செய்ததன் மூலம் தன்னை மேலும் உயர்த்திக் கொண்டார். வலதுசாரிகளின் இச்சூழ்ச்சிகள் வெற்றி பெறவில்லை. எனினும் சோவியத் கட்சியும் அரசாங்கமும் அள்ளிய வீசிய பணமும் சலுகைகளும் சபல புத்தி படைத்த சிலரைக் கவர்ந்தது. பாராளுமன்ற அரசியலில் இருந்த வலதுசாரிகள், 5LD 6تي{ செல்வாக்கைப் பிற யோகித்துத் தொழிற் சங்கத்திலிருந்தும் கட்சியிலிருந் தும் சிலரைத் தம்பக்கம் திருப்பியபோதும், இளைஞர் 35 oil. Lll- * மாக்ஸிய அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடுடையோர், பெருமளவும் புரட்சிகர மாக்ஸிய லெனினிஸத்தின் திசையிலேயே சென்றனர். இந்தக் கால கட்டத்திற், சண்முகதாசன், பூரீ, ல.சு. கட்சிக்கும்

Page 12
: 20
யூ.என்.பிக்குமிடையிலான வேறுபாட்டைத் தெளிவாகவே இனங்கண்டார். பண்டாரநாயகவின் முற்போக்கான பக்கத்தை அவர் அடையாளங் கண்டதன் விளைவாகவே (கட்சியில் ஏற்பட்ட பிளவையடுத்து “தேசாபிமானி" வலதுசாரிகளின் கைக்குப் போன நிலையில்) தான் ஆரம்பித்த தொழிலாளி பத்திரிகையின் முதலாவது இதழை , முகப்பில் பண்டாரநாயகவின் படத்துடன், பிரசுரித்தார்.
(மாக்ஸிஸ் லெனினிஸ்க்) கம்யூனிஸ்ட் கட்சியில் சண்முகதாசனையொத்த அரசியல் ஞானமும் ஆய்வுத் திறனும் கொண்டவர்கள் இருந்தாலும் பிளவுண்ட கட்சியைத் தலைமை தாங்கி நடத்தும் ஆற்றலில் அவர் அனைவரையும் மிஞ்சி நின்றார். இதன் பாதகமான ஒரு விளைவு சண்முகதாசனின் மிகையான முக்கியத்துவ மென்றே எண்ணுகிறேன். சண்முகதாசனின் கொள்கைப் பிடிப்புக்கும் உறுதிக்கும் அடிப்படையாக இருந்த அவரது பிடிவாதப் போக்கு, விமர்சனங்களை ஏற்கத் தயங்கும் மனோபாவத்துக்கும் கட்சிக்குள் தன்னுடன் முரண் பட்டோரை எதிரிகளாகவே க்ாணும் போக்குக்கும் காரணமாயிற்று. பிரேம்லால் குமாரசிரி முதல் ரோஹண விஜேவீர வரை, கட்சியிலிருந்து பிரிந்தோரும் பிளவுகளை ஏற்படுத்தினோரும் சண்முகதாசனைக் காரணங் காட்டியே வெளியேறினர். இவர்களிற் சிலர், அடிப் படையில் நல்லவர்களாயினும், போதிய அரசியற் தெளி வில்லாதவர்கள், வேறு சிலர் சுயலாபங் கருதியே கட்சியுள் நுழைந்த சந்தர்ப்பவாதிகள் - சண்முகதாசனு டைய ஸ்தாபன ரீதியான தவறுகளில் விஜேவீரவைச் சரியாக அறியாமல் முக்கியமான சில பொறுப்புக்களை அவரிடம் கொடுத்தது முக்கியமான ஒன்று. சண்முக தாசனின் தவறுகள் பற்றி விமர்சிக்கும் போது அவற்றை முற்றிலும் தனிநபர் ஒருவர் மீதான விமர்சனங்களாகக் காண்பது நியாயமல்ல வேறுபடும் அளவுக்குக் கட்சியின்

21
தலைமைப் பீடம் முழுவதுமே அரசியல், ஸ்தாபன வேலைகளிலான தவறுகட்குப் பொறுப்பேற்க வேண்டும்.
சர்வதேச ரீதியாக மாக்ஸிஸ் லெனினிஸ் இயக்கம் வலுப்பெற்று வந்ததுபோல, இலங்கையிலும் (மாக்ஸிஸ லெனினிஸக்) கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது. கட்சியின் இரண்டு பகுதிகளும் இலங்கைக் 35ửdsofGiv Li- GSL SFA GT Gör gp Gu Jag äg (Communist Party of Ceylon) உரிமை கொண்டாடியதால், மற்றவர்கள் முக்கியமாக மாக்ஸிய விரோதிகள், இரு பிரிவினரையும் மொஸ்கோ சார்பு - பீக்கிங் சார்பு அல்லது சோவியத் சார்பு - சீன சார்பு என்று குறிப்பிட வசதியாயிற்று" இவ்வகையான பேரிடல் கட்சிக்கு ஒரு அயற் தன்மையை, முக்கியமாக ஒரு அயல் நாட்டின் சார்பிற் செயறபடும் கட்சி என்றவாறான படிமத்தை, வழங்கியது. இது பற்றிய கவனம் காட்டப்பட்டிருப்பின், மாக்ஸிய லெனினிஸவாதிகள் தமது கட்சிப் பேரை மா. லெ. கம்யூ னிஸ்ட் கட்சி என்றோ வேறு விதமாகவோ மாற்றி வைத் திருக்கலாம். கட்சியின் பேர் மீதான உரிமைப் போராட் டம் கட்சி பற்றிய வெகுஜனப் பார்வையை விட முக்கிய மாகியமை இன்னொரு வருந்தத் தக்க விஷயம்.
எவ்வாறாயினும், கட்சி, பல துறைகளிலும் துரிதமாக வளர்ச்சி பெற்றது. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை, மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொண்ட மானின் இ.தொ.கா.வின் பிடி யைத் தளர்த்தித் தொழிலாளி வர்க்க நலனை முதன்மைப்படுத்திய ஒரு வலிய தொழிற்சங்க அமைப்பைக் கட்டியெழுப்பியமையும் வடக்கிற் சாதியத்திற்கெதிரான போராட்ட இயக்கத் தைக் கட்டியெழுப்புவதில் கட்சியின் தலைமைத்துவமான பங்களிப்பும் எனலாம். இவற்றைவிடக், கட்சியின் மகளிர் முன்னணி, வாலிப முன்னணி, விவசாயிகள் ஸ்தாபனங்கள் போன்ற வெகுஜன அமைப்புக்களும்

Page 13
22
விருத்தி பெற்றன சீன - இலங்கை நல்லுறவின் விருத்தி காரணமாக, இலங்கை - சீனா நட்புறவுச் சங்கம் போன்ற அமைப்புக்களும் பயனுள்ள தொடர்புகள் ஏற்பட்டன.
இவ்வளவு வலிமையான நிலையில், கட்சியின் மாக்ஸிய - லெனினிஸவாதிகள் பெரும்பான்மையான உறுப்பினர்களதும் ஆதரவாளர்களதும் ஆதரவைப்
பெற்ற பின்பு, பீற்றர் கெனமன் - எஸ். ஏ. விக்ரமசிங்ஹ தலைமையிலான வலதுசாரிகள் படிப்படி யாகத் தம் ஆதரவைப் பெருக்குவது எவ்வாறு இயலுமாயிற்று? சோவியத் எஜமானர்களது நிதி ஆதரவும் ஊக்குவிப்பும் சபல பத்திக்காரர்கள் பலரை எளிதாகவே வலதுசாரிகளின் பக்கம் வென்றெடுக்க உதவியது உண்மை. அதே வேளை, சண்முகதாசனுயை தலைமையின் தவறுகளும் நண்பர் களைப் பகைவராக்கி ஐக்கியப்படக் கூடியவர்களிட மிருந்து கட்சியைத் தனிமைப்படுத்தின. அவர் செய்த ஸ்தாபனரீதியான தவறுகளையோ அவரது தனிப்பட்ட குறைபாடுகளையோ விட அவரது அகச்சார்பான அரசியல் மதிப்பீடுகளின் பாதிப்புக்கள் பாரியவை. முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய சில தவறான மதிப்பீடு களுட் சிலவற்றையும் அவற்றின் விளைவுகளையும் கவனிப்போம் :
1. இலங்கையின் தொழிலாளி வர்க்கப் புரட்சியில்
தோட்டத் தொழிலாளரின் பங்கு.
2. தொழிற்சங்கங்களை அரசியல் மயப்படுத்தல்.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான நிலைப் பாடு. ஆயுதமேந்திய புரட்சி பற்றிய நிலைப்பாடு. மூன்றாமுலகக் கோட்பாடு பற்றிய நிலைப்பாடு கலாச்சாரப் புரட்சி பற்றிய கணிப்பு.

23
அவரது சில தவறான மதிப்பீடுகள் ஒரு சரியான முனைப்பைச் சமுதாய யதார்த்தத்துக்கும் பொருந்தாத விதமாகப் பிரயோகித்ததன் விளைவுகள். வேறு சில புறநிலையான உண்மைகளைக் கணிப்பிலெடுக்கத் தவறி யமையின் விளைவுகள்.
தோட்டத் தொழிலாளரே இலங்கையின் தொழி லாளருள் மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்ட பகுதியினர். எனவே, தொழிலாளி வர்க்கம் என்ற வகையிலும் கடுமை யான சுரண் டல் காரணமாகவும் அவர்களது உழைப்பன் தேசிய பொருளாதார முக்கியத்துவங் காரணமாகவும் இலங்கையின் புரட்சியில், அவர்கட்கு ஒரு மிக முக்கிய பங்குணடு. ஆயினும், இலங்கைப் புரட்சிக்கு அவர்களே தலைமைச் சக்தியாவர் என்ற மதிப்பிடு, கட்சியின் செல்வாக்கு அவர்கள் மத்தியில் வளர்ந்து வந்த கார ணத்தையிட்டு ஏற்பட்டது. தோட்டத் தொழிலாளர்களிற் பெரும் பகுதியினர், அரசியல் ரீதியாக மிகப் பின்தங்கிய நிலையில் இருந்தமை பற்றியும் இலங்கையின் தேசிய அரசியலிற் தேசிய இனப் பிரச்சனையின் பாதிப்புக்கள் பற்றியும் போதிய கவனம் காட்டப்பட்டிருப்பின், உடனடியான சூழலில் மலையகத் தொழிலாளர் புரட்சியின் தலைமைச் சக்தியாக அமைந்திருக்க முடியாது என விளங்கியிருக்கும்.
கட்சிக்குத் தொழிற்சங்கத் துறையில் இருந்த செல்வாக்கு, கட்சி ஊழியர்கள் தொழிலாளர்களது உரிமைப் போராட்டங்களில் முன்நின்று உழைத்ததோடு நல்ல தொழிற் சங்கத் தலைவர்களாகவும் செயற்பட்டமை காரணமானது. ஒரு தொழிற்சங்கம், புரட்சிகரப் போராட்டச் சூழலில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாற்றமடையலாம். ஆயினும், தன்னளவில் அது முன்னோடியான புரட்சிகர அரசியற் சக்தியல்ல. ஒரு தொழிற்சங்கத்திடம் ஒரு புரட்சிகர அரசியற் கட்சி எதிர்

Page 14
24
பார்க்கக் கூடியது என்ன என்ற விஷயத்தில் சண்முக தாசன் அஞ்ஞானியல்ல. ஆயினும், இலங்கையின் அன்றைய அரசியற் சூழல் எவ்வளவு தூரம் புரட்சிக்குச் சாதகமானது என்பது பற்றிய அவரது தவறான கணிப்பீடு காரணமாகவே அவர் இத் தவறான முடிவுக்கு வந்தாரென்று நம்ப வேண்டியுள்ளது. இதன் இரு முக்கிய விளைவுகளை இங்கு குறிப்பிடலாம்.
1969ம் வருட மேதினத்தன்று வெசாக் தினமும் அமைந்த காரணத்தால், மே முதலாம் திகதி தொழிலாளர் தின ஊர்வலங்கட்கும் பெரும் பொதுக் கூட்டங்கட்கும் தடை விதிப்பதென அன்றைய யூ. என். பி. அரசாங்கம் முடிவு செய்தது. இதை ஏற்று, மே இரண்டாம் திகதி தமது மேதின நிகழ்ச்சிகளை நடத்துவதென்று (மாக்ஸிய லெனினிஸ்) கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்த சகல இடதுசாரிக் கட்சிகளதும் செல்வாக்குக்குட்பட்ட தொழிலாளர் ஸ்தபா னங்கள் முடிவு செய்தன. சண்முகதாசன், தொழிலாளர் தினம் மே முதற் திகதியே, அதை மாற்றும் அதிகாரம் முதலாளித்துவ அரசுக்கு இல்லை என்பதோடு வெசாக்கை விட மேதினமே தொழிலாளர்கட்குப் புனிதமானது' என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டு, மே தின ஊர்வலங்களை மே மாதம் முதலாம் திகதியே நடத்த முடிவு , செய்தார். இதன் மூலம் மற்ற மாக்ஸியுர்களை விடத் தான் உண்மையான மாக்ஸியவாதி என்ற கருத்துக்கு அவர் இன்னொரு ஆதாரத்தை தேடிக் கொண் டாரோ என்னவோ, கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பெளத்த மக்கள் விரோதக் கட்சி என்ற கருத்தை இதன் மூலம் மக்கள் மத்தியில் எதிரிகள் பரப்ப வசதியாயிற்று. கட்சி முடிவை ஏற்று, 1969ம் ஆண்டு மே தின ஊர்வலத்தை வடக்கில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த கே. ஏ. சுப்பிர மணியம், பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான அடி உதைக்கு ஆளாகினார் என்பதும் பிற நல்ல கட்சித் தோழர்களும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாயினர்

25
என்பதும் குறுப்பிடத் தக்கது. சண்முகதாசன். இது பற்றி முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டதாலோ என்னவோ, பொலிஸ் தாக்குதலினன்று தப்பிக் கொண்டார்.
1970இல் பூரீ.ல.சு கட்சி தலைமையிலான கூட்டர சாங்கம் அதிகாரத்திற்கு வந்ததை யடுத்து தொழிற்துறை முதலாளிகளும் முக்கிய தொழிற்சங்சங்கள் சிலவும் ஊதியம், தொழிற்சங்க நடவடிக்கை என்பன தொடர் பான ஒரு கூட்டு உடன்படிக்கையை ஏற்படுத்தினர். இந்த ஒப்பந்தத்தின்படி, அதிற் கைச்சாத்திடும் சங்கங்களுடைய உறுப்பினர்கட்கு ஊதிய உயர்வும் அதற்கு ஈடாக அவர்கள் குறிப்பிட்ட கால வரையறைக்கு வேலை நிறுத்தம் செய்வதில்லை என்ற உடன்பாடும் ஏற்கப்
அது தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக் . لتك سام الL கொடுக்கும் செயல் என்று சண்முகதாசன் சரியாகவே சுட்டிக்காட்டினார் . ஆயினும், பெரும்பான்மையான தொழிலாளரை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் இந்த உடன்படிக்கையிற் கைச்சாத்திட்ட பின், கட்சியின் செல்வாக்குக்குட்பட்ட இலங்கைத் தொழிற் சங்க
சமேளனத்திலிருந்த தொழிற் சங்கம் மட்டுமே ஒப்பந்தத் திற்கைக்சாத்திடாது ஒதுங்கி நின்றது. இந்த நிலையில், சண்முகதாசன் நடைமுறைச் சாத்தியமான விதமாக நடந் திருந்தால், உடனபடிக்கையைக் கண்டித்து அதே நேரம், தனது ஆதரவாளர்களது நலன்களைப் பேணு முகமாக, தனது கருத்து வேறுபாடுகளை வலியுறுத்தியும் இம்முடிவைத் தொழிற்சங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் அதில் ஒப்பிடச் சம்மதித்திருக்கலாம். ஒப்பிட மறுத்ததன் விளைவாக் கட்சிக்கு அனுதாபமான தொழிற் சங்கத்தின் உறுப்பினர் கள் சம்பள உயர்வு பெறவில்லை. மற்றோர் சம்பள உயர்வு பெற்றனர். இதன் விளைவாகத் தொழிற்சங்கம் தனது உறுப்பினர்களை வேகமாக இழக்கத் தொடங்கியது. விடாப்பிடியான ஒரு அரசியல் நிலைப்பாடு எப்போது

Page 15
26
சாத்தியம் என்பதைச் சரிவர மதிப்பிடாமல், தனித்து நின்று, தனது ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்து மாறான நடவடிக்கை மாக்ஸிய லெனினிஸ்மாகாது. சந்தர்ப்பவாத அரசியலுக்கும் சமயோசிதமான அரசிய லுக்குமுள்ள வேறுபாட்டைச் சண்முகதாசன் தவறவிட்ட மேலுமொரு சந்தர்ப்பமே இது.
பாராளுமன்ற அரசியலை சோஷலிஸ் சமுதாய மாற் றத்திற்கான பாதையாக மாக்ஸியவாதிகள் கருதுவதற் கில்லை. எனினும், பாராளுமன்றத் தேர்தல்களிற் பங்கு பற்றுவதும் குறிப்பிட்ட அரசியற் கட்சிகட்கு ஆதரவளிப் பதும் தந்திரோபாயுந் தொடர்பானவை. சண்முகதாசன், கட்சியில் நேர்ந்த பிளவையடுத்து பீற்றர் கென மனின் தேர்தற் தொகுதியான மத்திய கொழும்பில் 1965இல் போட்டியிட்டது நினைவுகூரத் தக்கது. எனினும், 1970 தேர்தலின் போது. யூ என்.பியை முறியடிப்பது அவசிய மெனக் கருதி, ஜே. வி. பி. உட்பட, சி. தொ தமிழரசு, தமிழ்க் கொங்கிரஸ் நீங்கலாக, முக்கிய அரசியற் கட்சிகள் அனைத்தும் செயற்பட்ட சூழ்நிலையில் சண்முகதாசன் தேர்தலை அலட்சியம் செய்ய வேண்டும் என்ற நிலைப் பாட்டை எடுத்தார். மேடைகளிற் திரும்பத் திரும்ப யூ. என். பி. அணிக்கும் பூரீ. ல. சு. கட்சி தலைமையிலான முக்கிய முன்னணிக்கும் உள்ள வேறுபாடு அவித்த மீனுக்கும் பொரித்த மீனுக்கும் உள்ள வேறுபாடுதான் என்று சொன்னதன் மூலம் யூ.என்.பி. எதிர்ப்பாளர்களிட மிருந்து கட்சி தனிமைப்படுத்த வழி ஏற்படுத்தினார். மாக்ஸிஸம் பற்றிய ஆழ்ந்த ஞானமற்ற விஜேவீர. தன் ஆதரவாளர்களிடம் ஐக்கிய முன்னணியை ஆதரித்து இயங்குமாறு சொன்னதன் மூலம், ஐ.மு. கீழ்மட்டங்களிற் தன் தொடர்புகளை அதிகரித்துக் கொண்டார் என்பது கவனத்துக்குரியது.

27
ல ச.ச. கட்சியினதும் (வலதுசாரி) கம்யூனிஸ்ட் கட்சி யினதும் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலமாக்குவதும் பாராளுமன்ற அரசியலின் பயனின்மையை விளக்குவதும் மக்களிடமிருந்து தனித்து நின்று செய்யக் கூடிய காரியங் களல்ல. யூ. என்.பி.யை முறியடிக்கும் தேவையை வலியுறுத்தி, ஐ.மு. ஆட்சியால் மக்களது பிரச்சனை களைத் தீர்க்க இயலாது என்பதைப் பகைமையற்ற முறை யில் விளங்கும் திறமை சண்முகதாசனிடம் இல்லாம லில்லை. ஆயினும், இலங்கையின் அரசியல் நிலவரம்பற்றிய தவறான மதிப்பீடு காரணமாகக், கட்சி பெருவாரியான மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. மாவோஸ்ேதுங், ஜோ என் லாய் போன்ற தலைவர்கள் ஐ. மு. அரசினிடம் காட்டிய அனுதாபம் பற்றிச் சண்முகதாசன் எரிச்சலுற் றாலும், 1971 இல் ஜே. வி. பி. கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்பு, சீன அரசு இலங்கை அரசுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்த பின்பே, சண்முகதாசன், இது பற்றிய அதிருப்தியை சாடையாகவேனும் வெளிக்காட்டினார். 1976 ல் மாவோவின் மரணத்தின் பின்பு, சண்முகதாசன் மும்முரமான சீன எதிர்ப்பில் இறங்கியதையொட்டிச் சீனாவில் தனக்கு உ டன்பாடற்ற விஷயங்கள்,மாவோவின் அங்கீகாரமின்றியே நடந்தவை என்று விளக்க முற்பட் டார். எவ்வாறாயினும், 1977ம் ஆண்டுக்குப் பிறகு, சண்முகதாசன் ஒப்புக் கொள்ளாவிடினுங்கூட இலங்கை மக்கள் பொரித்த மீனுக்கும் "அவித்த மீனுக்கும் இடை யிலான வேறுபாட்டை நன்றாக உணர்ந்து கொண்டார்கள்.
ஆயுதமேந்திய புரட்சித் தொடர்பாகச் சண்முக தாசனது அகநிலைச் சார்பு, யாருக்கெதிராக, எப்போது என்ற விஷயங்களில் மிகவும் தவறான முடிவுகட்கு அவரை இட்டுச் சென்றது. உதாரணமாக, யாழ்ப்பாண மாவட் டத்தில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டத்தில், தாழ்த் தப்பட்ட மக்கள் வேளாள சாதியினருக்கு எதிரான தனி

Page 16
28
மனித வன்முறையை மேற்கொள்ள வேண்டும் என்ற பாங்கில் சண்முகதாசன் முன்வைத்த கருத்துக்கள், சாதி முறைக்கு எதிரான போராட்ட நடைமுறையில் முன் வரிசையில் நின்ற கே. ஏ. சுப்பிரமணியம் போன்றோரின் உறுதியான எதிர்ப்பால் நிராகரிக்கப்பட்டன. இதனால் சாதியமைப்பிற்கெதிரான போர் சாதிகட்கிடையிலான போராக மாறுவது தவிர்க்கப்பட்டது.
ஜேவிபி.யின் 71 ஏப்ரல் கிளர்ச்சிக்குச் சில வாரங்கள் முன்பு அமெரிக்கத் தானிகராலயத்திற்குக் குண்டு வீசிய ஒரு கிளர்ச்சிக் குழுவின் செயல், “தொழிலாளி பத்திரிகை யில், விதந்துரைக்கப்பட்டது. கட்சியே இக்காரியத்தைச் செய்திருக்கக்கூடும் என்ற கருத்தை இக்கட்டுரை ஏற்படுத் தியதால் அரசுக்கெதிரான வன்முறையைத் தூண்டியவர் என்ற காரணத்தைக் காட்டிச் சண்முகதாசனைக் கைது செய்வது போலிஸாருக்கு வசதியாயிற்று. போலிஸார் மீது ஒரு கல்லைத் தானும் எறியாத ஜே. வி. பி. என்று அவர் எழுதிய இரண்டு வாரங்களில் ஏப்ரல் கிளர்ச்சி வெடித்தெழுந்தது.
1971க்கு முதலே ஜே. வி. பி. பற்றிய மிகச் சரியான அரசியல் மதிப்பீட்டைச் செய்த ஒருவரைக் குறிப்பிடுவ தானால், முதலில் மனதிற்கு வருபவர் சண்முகதாசனே. ஆயினும் ஜே.வி பி.யின் ஜனரஞ்சக பாட்டாள் வர்க்க விரோத அரசியலை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றிய தீர்வு அவரிடமும் இருக்கவில்லை. இதற்கான ஒரு காரணம், கட்சி முற்குறிப்பிட்ட பாரிய தவறுகள் மூலம் தன்னைச் சிங்கள மக்களிடமிருந்தும் வாலிப சக்தி களிடமிருந்தும் தனிமைப்படுத்திக் கொண்டமையே ஐந்தே வகுப்புக்களில் மாக்சிய விடுதலைப் போராட்ட அரசியலைப் போதிக்கிறதாகப் பாவனை செய்த ஜே. வி. பியின் பேரினவாத அரசியலை முறியடிக்க எவருடன் எவ்வாறு ஐக்கியப்படுவது என்ற தெளிவைப் பெறமுடி

29
யாத அளவுக்கு சண்முகதாசனின் அகச்சார்பு ஒரு முக்கிய மான தடையாகவே இருந்தது.
சீன-சோவியத் முரண்பாட்டின் உச்ச நிலையில், மாஓ, சோவியத் ஆட்சியாளர்களைச் சமூக ஏகாதிபத்திய வாதிகள் என வர்ணித்தார். இந்த வர்ணனையை நியா யப்படுத்த வலிய காரணங்கள் பல இருந்த போதும் சோவியத் யூனியனின் அரசியற்-பொருளாதாரக் கட்டு மானம் ஒரு ஏகபோக முதலாளித்துவத்தினதினின்றும் வேறுபட்டது. மறுபுறம் அது வெறுமனே சீரழிந்த ஒரு சோஷலிஸ் அமைப்பு என்ற நிலையில் இருக்கவில்லை. சோவியத் ஆட்சியாளர்கள் உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில், தம் பங்குக்கு, ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சுரண் டவும் அடக்கியொடுக்கவும் தயங்கவில்லை. அமெரிக்க-சோவியத் போட்டா போட்டியைப் பயன் படுத்தி ஓரிரு நாடுகள் தமது நலன்களைப் பேணிய போதும், க்ருஷ்ச்சோவின் எழுச்சிக்குப்பின் சோவியத் யூனியன் தன் சோஷலிச முனைப்பை இழந்துவிட்டது. எனவே உலகை முதலாளித்துவ முகாம், சோஷஸ் முகாம், தொழில் அபிவிருத்தியடையாத நாடுகள் என்ற வகையிற் பகுப்பது தவறாகவே தெரிந்தது. எனவே தந்திரோ பாயங் கருதி, இரண்டு பெரு வல்லரசுகளையும் உலக ஆதிக்கத்திற்குப் போட்டியிடும் சக்திகளாக ஒரு முனை யிலும் ஒடுக்கப்பட்ட நாடுகளை மூன்றாமுலகம் என மறு முனையிலும் இரு பெரு வல்லரசுகளுடனும் முரண் பட்ட தொழில் விருத்தி பெற்ற நாடுகளை இரண்டா முலகம் என நடுவிலும் மாஒ அடையாளங் கண்டார். இதன் நோக்கம், மூன்றாமூலக நாடுகளின் ஆட்சியாளர் களை அந்த நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி களாகக் காட்டுவதல்ல. எனினும், 1970 களின் உலக அரசியலில், ஏகாதிபத்தியவாதிகட்கும் பெரு வல்லரசு கட்கும் எதிரான போராட்டத்தில், மூன்றாமுலக நாடு களின் ஆட்சியாளர்கள் மூலம் செய்யக்கூடிய காரியங்கள்

Page 17
30
இருந்தன. அணி சேரா நாடுகளின் இயக்கம் போன்றவை மூலம், 70களில் மூன்றாமுலக நாடுகளின் நலன்கட்காகச் குரலெழுப்பக்கூடிய நிலைமை இருந்ததை நாம் அறி வோம்.
1970களில் சீனா கைக்கொண்ட மூன்றாமுலக நிலைப் பாட்டுக்கு மாஒவின் பங்களிப்பு மிக முக்கியமானது. அது எக்காலத்துக்குமான ஒரு கணிப்பாக இல்லாவிடினும், அந்தச் சூழலில், அதற்கு ஒரு நல்ல பயன்பாடு இருந்தது. சண்முகதாசன் தனது உடன்பாடின்மையை 1974 மட்டிற் சாடையாகவும் 1976க்குப் பின், மாஓவின் மரணத்தை யடுத்துப் பகிரங்கமாகவும் முன்வைத்தார். தனது நிலைப் பாடுகளை நியாயப்படுத்துவதற்கு மாஒவையே ஆதாரங் காட்டும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட காரணத் தால், மூன்றாமுலகக் கோட்பாட்டுக்கு மாஓ உடன்பட வில்லை என்ற விளக்கத்தை முன்வைத்தார். இதற்கு அவர் எந்தவித நம்பகமான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இதிலுள்ள இரண்டு தவறான போக்குகளில் ஒன்று மாஒ தவறுகட்கு அப்பாற்பட்ட மனிதர் என்ற கருத்த மைவு தொடர்பானது. (இது மாஓவுக்கே உடன்பாடற்ற தாக இருந்திருக்கும்). மற்றது தனது அகச்சார்பான முடிவுகட்குக் கருத்து முதல்வாதப் பாங்கில் ஆதாரம் தேடுகிற தன்மை தொடர்பானது. (இதுவும் மார்க்சியத் துக்கு உடன்பாடற்ற ஒன்று).
இவ்வாறான அகச்சார்பே, சீனாவில் ஜியாங்ஜிங்,யாஒ வென்யுஆன், ஜாங் ஜன்ஜியாஒ, வாங்ஹ"ங்வென் ஆகிய நால்வரதும் அதிகாரம் பறிபோன பின்பு, சீன எதிர்ப்பில் முன்னின்ற அல்பானிய அரசாங்கத்துடனும் கட்சியுடனும் சண்முகதாசனுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெகு விரைவிலேயே, அல்பானியத் தலைமை மாஒ மீது தாக்குதல் தொடுக்க முனைந்தபோது, சண்முகதாசனன் நிலைப்பாடு மேலும் பலவீனமடைந்தது.

3.
அல்பானியாவில் 1974 மட்டில் இருந்தபோது, தனது பேரிலன்றிச் சண்முகதாசன் ஜே. வி.பி. கிளர்ச்சிக்கு அனுதாபமாக ஒரு கட்டுரையை வெளியிட்டமையும் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது. தன்னை நியாயமின்றிச் சிறையில் வைத்த காரணத்திற் காக ஐ. மு. ஆட்சி மீது தீராக் கோபமுடையவராகவே அவர் இறுதிவரை இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த வகையில், தங்களது சுய விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கித் தமது அரசியல் இலட்சியத்தை முதன்மைப் படுத்திச் செயற்பட்ட மு. கார்த்திகேசன், கே. ஏ. சுப்பிர மணியம் போன்றோரை நாம் நினைவு கூர்வது பயனுள்ளது.
சீனக் கலாச்சாரப் புரட்சி பற்றிய சீன விரோதப் பிரச்சாரத்துக்கு நல்ல பதில் கொடுத்தவர்களில் சண்முக தாசன் முக்கியமானவர். ஆயினும் கலாச்சாரப் புரட்சி தடம் புரண்டதை மாஒ அடையாளங் கண்டு அதை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பும் சண்முகதாசன் அங்கு நடந்த தவறுகளை அடையாளங் காணத் தயங்கினார். சீனாவில் ஒரு "புதிய மனிதன்" உருவாகி விட்டான் என்ற தனது கருத்தை அவர் மறுபரிசீலனை செய்ய ஆயத்தமாக இருக்கவில்லை. கலாச்சாரப் புரட்சியின் தவறான போக்குகளையும் விமர்சனமின்றி அங்கீகரித்ததன் விளை வாக, மாஓவின் மரணத்தையடுத்துச் சுலபமாகவே சீன விரோத நிலைப்பாட்டுக்குள் அவர் செல்ல நேர்ந்தது. இறுதிவரை கலாச்சாரப் புரட்சியை விமர்சனப் பாங்கில் அணுக மறுத்த 'தீவிர இடதுசாரிகள் மத்தியிற் சண்முக தாசனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
அகநிலைச் சார்பாக ஏற்பட்ட தவறுகள் ஒருபுற மிருக்க, தனது தனி நபர்வாதம் காரணமாக அரசியற் கருத்து வேறுபாடுகளையும் தனி மனித உறவுகளையும் வேறுபடுத்த இயலாதவராக அவர் இருந்தமையைக் குறிப்

Page 18
32
பிடாது விட முடியாது. கட்சியிற் தன்னுடன் நெடுங் காலம் உழைத்துக் கருத்து வேறுபாட்டாற் பிரிந்த நல்ல தோழர்களை அவர் தனிப்பட்ட முறையிலும் எதிரி களாகவே கருதினார். அதே வேளை, வர்க்க எதிரிகளாகத் தான் அடையாளங் காட்டக் கூடிய சிலருடன் தனது தனிப்பட்ட நல்லுறவு காரணமாக, அவர்களைப் பற்றி நல்லபிப்பிராயங்களையே தெரிவித்தமை கவனிக்கத் தக்கது அவரது தனிப்பட்ட குறைபாடுகளைக் கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் புரிந்துணர்வுடன் பொறுத்துக் கொண்டனர். அவரது குறைபாடுகளை விட அவர் கட்சிக்கும் மாக்ஸிய லெனினிஸச் சிந்தனைக்கும் போராட்ட இயக்கத்திற்கும் அளித்த பங்கும் அவரது தன்னலமற்ற வாழ்க்கையும் அவர்கட்கு முக்கியமானது. அவரிடமிருந்து விலகியவர்கள் பலரும் அவரது பங்களிப்பைப் பற்றித் தமது மதிப்பைத் தெரிவிக்கத் தவற வில்லை
"எதிரி யார், நண்பன் யார்?' என்ற கேள்வி முக்கிய மானது. அகச்சார்பின் காரணமாகச் சண்முகதாசனின் அரசியல் வாழ்வின் பிற்பகுதியில் அவர் நண்பனை எதிரி யாகக் காணத் தலைப்பட்டார். இதன் பாடங்கள் நமக்கு முக்கியமானவை.
இன்னொரு புறம் சண்முகதாசனுடைய தவ்றுகளை விமர்சிக்க முற்படும் சில தேசியவாதிகள் (தம்மை மாக்ஸியவாதிகளாகக் கருதுவோர் உட்பட) அவரது லெனினிஸ அரசியல் நடைமுறையிலும் மதிப்பீடுகளிலும் இருந்த தவறுகளை எல்லாம் உதாசீனம் செய்தோ அங்கீ கரித்தோ கருத்துத் தெரிவிக்கும் அதே வேளை, தேசிய இனப் பிரச்சனை விஷயத்தில் மட்டும் அவர் தவறிழைத் தாரென்று வலியுறுத்தக் கேட்கலாம். இது இவர்கள் தமது தமிழ்த் தேசியவாத அரசியல் முன்னோடிகளின் குற்றச்சாட்டுக்களை விசாரணையின்றி ஏற்றுள்ளதையே
குறிக்கிறது.

33
சண்முகதாசனோ கம்யூனிஸ்ட் கட்சியோ தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை அங்கீகரிக்க என்றுமே மறுக்கவில்லை. ட்ரொட்ஸ்கிவாதிகள் மத்தியில் இது பற்றியதயக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது உண்மை. கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்தினின்று பிரதேச சுயாட்சி முறையை ஆதரித்தது பற்றித் தமிழரசுக் கட்சி அதிகம் கவனங் காட்டவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சிங்களத் தேசியவாதிகளின் ஒரு கட்சியாகவும் தாழ்த்தப் பட்ட சாதியினரைக் கிளறிவிட்டுத் தமிழினத்தைப் பிளவு படுத்தும் சக்தியாகவுமே அவர்கள் காட்ட முற்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி மொழிப் பிரச்சனையின் எழுச்சிக்கு முன்போ பின்போ வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களின் முக்கிய அரசியற் கட்சியாக வளராமைக்குப் பல காரணங்கள் இருந்தன. யாழ்ப்பாணத்தின் மிகவும் ஒடுக் கப்பட்ட மக்களிடையே கட்சிக்கு ஆதரவு பெருகியமைக்கு ஒரு காரணம், சாதிய அடிப்படையிலான சமுதாய அமைப்பையுடைய தமிழ்ப் பகுதிகளில் நிலை கொண்ட குறுகிய தேசியவாத அரசியற் தலைமையாற் சாதியத் திற்கு எதிராகச் செயற்பட முடியாமை எனலாம். இது அவர்களது வர்க்க அடிப்படை தொடர்பான பிரச்சனை.
தேசிய இனப் பிரச்சனை தொடர்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியும் சண்முகதாசனும் மேற்கொண்ட நிலைப்பாடு அடிப்படையிற் சரியானதே. அந்த நிலைப்பாடு சிங்களப் பேரினவாதத்துடன் சமரசம் செய்து கொண்ட சமசமாஜக் கட்சியும் வலதுசாரிக் கம்யூனிஸ்ட்டுகளும் மேற்கொண்ட தனையொத்ததல்ல. 1965 இல் யூ.என்.பி.யும் தமிழரசுக் கட்சியும் கூட்டரசாங்கத்தில் இணைந்ததன் காரணமான கோபத்தை, இனவாதக் கோஷங்களாக 1968இல் பூரீ.ல.சு. கட்சி வெளிப்படுத்தியபோது, மாக்ஸிய வெனினிஸக் கம்யூனிஸ்டுக்கள் மெளனம் சாதிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மக்களைத் தம் பக்கம் வென்றெடுப்பதற்காகக் குறுகிய தமிழ்த் தேசியவாத அரசியல் பேச வேண்டு

Page 19
34
மென்ற வாதம் தவறானது. அவ்வாறு செய்யும் ஒரு கட்சிக்கும் சிங்கள இனவாதத்தின் மூலம் சிங்கள மக்களைக் கவர முனைந்த ஜே வி.பி.க்கும் என்ன வேறு பாடு இருக்க முடியும்?
இந்த அளவிற் சண்முகதாசன் கடைப் பிடித்த நிலைப் பாடு அடிப்படையிற் சரியானதே. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன், "விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தும் உரிமையைச் சம்பாதித்தனர் எனவே அதை யாரும் அவர் களிடமிருந்து பறிக்க முடியாது’ என்று அவர் எழுதி யிருந்தது சில ஆட்சேபனைகளை எழுப்பியது. ஆயுதமேந்தும் உரிமையைச் சம்பாதித்த ஒருவர் அதை மக்களிடமிருந்தே சம்பாதிக்கிறார். என்றைக்கு அந்த ஆயுதங்கள் மக்களுக்கு எதிராகத் திரும்புகின்றனவோ அன்றைக்கு, அவை பறிக்கப்பட வேண்டியன என்பதை அவர் சொல்லத் தவறியமை காரணமாக, ஆயுதமேந்திய போராட்டம் பற்றிய விஷயத்தில் அவரது முன்னைய தவறான நிலைப்பாட்டை (அதாவது அரசுக்கெதிரான சக்திகளின் ஆயுதமேந்திய போராட்டம் என்ற காரணத் தால் மட்டுமே அதன் பிற பரிமாணங்கள் பற்றிய கணிப் பீடின்றி நிபந்தனையின்றி ஆதரிக்கும் நிலையை) மீண்டும் வலியுறுத்துகிறார் என்று கருத இடமிருந்தது.
சண்முகதாசனுடைய தவறுகளின் அடிப்படை அவரது அகச் சார்பு என்று சொன்னாலும் அது திருத்தப் பட இயலாத ஒன்றல்ல. விமர்சனமும் சுயவிமர்சனமுமே மாக்ஸிய லெனினிஸவாதிகள் தமது குறைபாடுகளைக் களையப் பயன்படுத்தும் ஆயுதங்கள், ஜனநாயக மத்தியத்துவமான ஸ்தாபன அமைப்பும் விமர்சன சுயவிமர்சன அடிப்படையிலான வேலை முறையுங் கொண்ட ஒரு கட்சியாகத் தன்னைக் கட்டியெழுப்புவதன் மூலமே அக்கட்சியாற் தன் தவறுகளினின்று பாடங்களைக் கற்றுத் தவறுகளை நிஷர்த்திக்கவும் சரியானதைத் தெரிந் தெடுக்கவும் இயலுமாகின்றது. சண்முகதாசனுடைய

35
அகச்சார் பிற்கும் மேலாக அவரது சுய முக்கியத்துவம் 1963க்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்சியை ஒரு ஜனநாயக மத்தியத்துவமான புரட்சிகர தலைமைச் சக்தியாக வளர்ப்பதற்குத் தடையாகி விட்டது என்பது வருக்கத்துக்குரிய ஒரு உண்மை.
சண்முகதாசனின் அகச்சார்பின் விளைவான தவறு கட்கும் அவரை மட்டுமே குற்றஞ்சாட்டுவது சரியல்ல. கட்சித் தலைமை முழுவதும் இவ்விஷயத்திலும் பொறுப்பை ஏற்க வேண்டும். சில தவறுகள் உடனுக்குடன் திருத்தப்பட்டன. சில தவிர்க்கப்பட்டன. மற்றவை திருத்தப்படாமைக்குச் சண்முகதாசன் முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டுமாயினும், பிற தலைமை உறுப்பினர்கள் இவ்வாறான தவறுகளைத் தட்டிக் கழிக்க முடியாது. தவறான போக்குகளைக் கட்சியுள் அடை யாளங் கண்டவர்கள் சிலர் உட்கட்சிப் போராட்டத்தின் மூலம் x அவற்றைத் திருத்த முயலாமல் வெளியேறி அரசியலினின்றே ஒதுங்கினார்கள்.
1972ல் சண்முகதாசன் வெளிநாடு சென்றிருந்த வேளை, கட்சி மத்திய கமிட்டியின் ஒரு பகுதியினர் அவரை நீக்க எடுத்த முயற்சி இன்னொரு பிளவை ஏற்படுத்தியது. இவ்வாறான முறையில் சண்முகதாசன் ‘விலக்கப்பட்டது தவறு என்று கருதி அவருடன் நின்ற வர்கள் தொடர்ந்தும் உட்கட்சிப் போராட்டத்தின் மூலம் சரியான அரசியல் மார்க்கத்துக்காகச் செயற்பட்டனர். 1977 தேர்தலின் போதும் பின்னரும் சண்முகதாசன் தனது தவறான நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்றதன் விளைவாக, 1978ல் பிரிந்து, வேறு கட்சியாக இயங்கும் தேவைக்கு உள்ளானார்கள். 1972ல் சண்முகதாசனுடன் முரண்பட்டு அவரை ‘விலக்கியவர்களுள் வொட்ஸன் ஃபெர்னான்டோ, மு. கார்த்திகேசன் போன்ற மிக உன்னதமான கட்சித் தோழர்களும் இருந்தனர். இவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு, முக்கியமாக உட்கட்சிப்

Page 20
36
போராட்டம் பற்றிய விதிமுறைகட்கு, அதிக மதிப் பளித்து நடந்திருந்தால் 1972ல் ஏற்பட்ட பிளவு தவிர்க் கப்பட்டு உட்கட்சிப் போராட்ட மூலம் சண்முகதாசனு: டைய தவறுகள் திருத்தப்பட்டிருக்கக் கூடும். இதன் மூலம், ஒரு உயரிய பாட்டாளி வர்க்கப் போராளியின் இறுதிக்காலப் பங்களிப்பு மீண்டும் பயனுள்ள முறையில் அமைந்திருக்கக் கூடும்.
சண்முகதாசனுடைய அகச்சார்பான தவறுகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய முற்கூறிய கருத்துக்கள் அவரது முக்கிய பங்களிப்புக்களை மறுதலிக்கும் நோக்கிற் கூறப்படவில்லை. இவ்வாறான தவறுகளை மாக்ஸிய லெனினிஸக் கட்சிகள் இனியேனுந் தவிர்க்க வேண்டுமென்ற நோக்கிலேயே இவை சுட்டிக் காட்டப்பட்டன.
பாட்டாளி வர்க்க இயக்கத்தினுள் ட்ரொட்ஸ்கியத் திற்கும் வலதுசாரிச் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் எதிராகச் சண்முகதாசன் ஆற்றிய பங்கு இலங்கையில் மட்டுமன்றி வெளியிலும் மிக முக்கியமானது. சீனப் புரட்சி, மாஒசேதுங் சிந்தனை போன்றவற்றைப் பற்றிய அறிவைப் பரவலாக்குவதிலும் மாக்ஸியம் என்றால் என்ன என்று வெகுஜனங்கட்கு விளக்குவதிலும் அவரது பங்களிப்புக்கு நிகராக அதிகம் இல்லை. சுயநல மற்றதொரு நேர்மையான பாட்டாளி வர்க்கப் போராளி யாகவே சொல்லிலும் செயலிலும் தன்னை அடையாளங் காட்டியவர் சண்முகதாசன். அவரது அறிவும் ஆற்றலும் தியாக மனப்பான்மையும் அவரை ஒரு ஒப்பற்ற பாட் டாளி வர்க்கப் போராளியாக வரலாற்றில் அடையாளங் காட்டுவன. அவரது சரியான பங்களிப்புக்களின் பயன் களை மேலும் விருத்தி செய்து, அவரது தவறுகளினின்று பாடங்களைக் கற்பதன் மூலமே, மாக்ஸிய லெனினிஸ் வாதிகள் இலங்கையின் சகல தேசிய இனங்களதும் ஒடுக் கப்பட்ட மக்களதும் போராட்டத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்த முடியும்.


Page 21