கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிதைவுகள்

Page 1


Page 2

சிதைவுகள்
(ÖDIGT GUGÜES Sİİ)
தெணியான்
மீரா பதிப்பகம், (39 ஆவது வெளியீடு) C-/ அன்டர்சன் தொடர்மாடி, நாரஹேன்பிட்டி, 584,317

Page 3
நூலின் பெயர்
665
உள்ளடக்கம் பெற்ற
குறுநாவல்கள்
ஆசிரியர்
ஆசிரியர் முகவரி
பதிப்புரிமை
முதற் பதிப்பு
அச்சிட்டோர்
விலை
சிதைவுகள்
குறுநாவல்கள்
பரம்பரை அகதிகள் (பக் 01 - பக் 90) சிதைவுகள் (பக் 91 - பக் 168)
தெணியான்
கலையருவி, கரணவாய் வடக்கு, வல்வெட்டித்துறை. மீரா பதிப்பகம்
R C-/அன்டர்சன் தொடர்மாடி கொழும்பு - 05. (தொ.பே-584317)
17.08.2003
ஈகுவாலிற்றி கிரபிக்ஸ் 315, ஐம்பெட்டா வீதி, கொழும்பு-13. தொபே 389848
ரூபா 225/-

எனது தரிசனம்
Tெனது இரண்டு குறுநாவல்களை ஒன்றாக இணைத்து சிதைவுகள் எனும் தொகுதியாக இன்று மீரா பதிப்பகத்தினர் வெளிக்கொணர்கின்றனர்.
இந்த இரண்டு குறுநாவல்களும் இன்று நூலுருப் பெற்று உங்கள் கைக்கு வந்து சேர்ந்திருப்பதற்குக் காரணமாக இருப்பவர் எனது அன்புக்குரிய தம்பி புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் அவர்கள்.
மீரா பதிப்பக வெளியீடாக எனது நூலொன்றினை வெளியிட்டு வைக்க வேண்டுமென்னும் தமது விருப்பத்தினைச் சிலகாலங்களுக்கு முன்னர் அவர் எனக்கு அறியத் தந்தார். அப்பொழுது அவரது நாட்டம் எனது நாவல் ஒன்றினை வெளியிட்டு வைப்பதில்தான் இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து இதுவரை நூலுருப் பெறாது எனது கைவசம் இருக்கும் மூன்று குறுநாவல்கள் பற்றிய தகவல்களை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவற்றுள் இரண்டு குறுநாவல்களை இணைத்து ஒரு நூலாக வெளியிட்டு வைக்கலாமெனத் தமது மனக்கருத்தை அவர் எனக்கு அறியத்தந்தார். அவைகள் இரண்டையும் தேர்வு செய்யும் பொறுப்பினை நான் அவரிடத்திலேயே விட்டுவிட்டேன்.
“சிதைவுகள்’ தேசிய கலை இலக்கியப் பேரவை, சுபமங்களா இணைந்து நடத்திய ஈழத்துக்குறுநாவல் போட்டியில் (1995) பரிசு பெற்ற ஒரு குறுநாவல். பின்னர் தினகரன் வாரமஞ்சரியில் (1998) சிலகாலம் தொடராக வெளிவந்தது. பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்த சமயம் வாசகள்கள், விமர்சகர்களின் கவனத்துக்குள் ளானது; பலரது பரீாட்டைப் பெற்றுக் கொண்டது.
‘பரம்பரை அகதிகள்’ (1985) ஈழநாடு வார இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு படைப்பு. இது வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதோடு மாத்திரமல்லாது, வேறு சிலரை முகஞ்சுழிக்கவும் வைத்தது. முகஞ்சுழிக்க வேண்டியவர்களை முகஞ்
(iii)

Page 4
சுழிக்க வைத்ததன் மூலம் எனது படைப்பின் வெற்றியை அது எனக்கு ஈட்டித் தந்தது.
இந்த இரு குறுநாவல்களையுமே இரத்தினவேலோன் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
என்ன அதிசயம்!
இந்தத் தேர்வு எனக்கு வியப்பாக இருக்கிறது! ‘சிதைவுகள் தினகரனில் வெளிவந்து கொண்டிருந்த சமயம் அவர் அதைப் படித்திருக்கின்றார்.
‘பரம்பரை அகதிகள் முன்னர் அவர் படித்தறியாத ஒரு படைப்பு. ஆனால் இந்த இரண்டு படைப்புக்களும் அவரது தேர்வுக்கு ள்ளாயின.
இரண்டும் எமது மக்களின் புலம்பெயர் வாழ்வு பற்றிய படைப் புக்கள் என்பது இவைகளுக்கிடையே உள்ள பெரிய ஒற்றுமை.
1991 ஒக்டோபர் 16ம் நாள் இந்துக்களுக்கு மிக முக்கியமான ஒரு தினம், நவராத்திரிப் பூசைகள் நடந்தேறி அதன் நிறைவாக இல்லங்கள் தோறும் கலைத் தெய்வம் வாணிக்குப் பூசை வைத்து வணங்கி வழிபாடு செய்யும் நன்னாள். அன்று இரவு ஒன்பது மணியளவில் வானொலியில் ஒரு அறிவித்தல். வடமராட்சி மக்கள் அனைவரும் வடமராட்சி மண்ணைவிட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்பது தான் அந்த அறிவித்தல். இரவோடு இரவாக தமது சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வடமராட்சி மக்கள் இடம்பெயர்ந்து தென்மராட்சி, வலிகாமம் நோக்கிச் சென்று, பட்ட துன்பங்கள் துயரங்களைச் சொல்லு கின்றது சிதைவுகள். அந்த அவலங்களைக் குடும்பத்துடன் சேர்ந்து அனுபவித்தவன் நான்.
‘பரம்பரை அகதிகள்’ குடியிருப்பதற்கு ஒரு குளி நிலந்தானும் சொந்தமாக இல்லாத நிலையில் நிலவுடைமையாளனால் குடியெழுப்பித் துரத்தப்பட்ட ப்ோது அகதிகளாகிக் காலங்காலமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணிர்க்கதை. இது
(iv)

வடமராட்சியின் மேற்கில் நடந்த சம்பவத்தைச் சித்திரிக்கின்றது. குந்தி இருப்பதற்கும் இடமில்லாது இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து அகதிகளாக அலைந்து திரிந்த குடும்பத்துக்குச் சிறிய ஒரு நிலத்துண்டொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் நான் முனைந்து நின்று பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடு இது.
இந்த இரண்டு குறுநாவல்களும் ஒரு தொகுதியாக இணைந்து நூலுருப்பெற்று இன்று வெளிவருவதன் மூலம் என்னை முழுமையாக இனங்காட்டுமென நம்புகின்றேன்.
பொய்மை, போலித்தனம் என்பன இல்லாது என்னை உண்மையாக வெளிப்படுத்தும் இத்தகைய ஒரு தொகுதியினை எதிர்பாராத வண்ணம் தெரிவு செய்திருக்கும் இரத்தினவேலோன் அவர்கள் எனது பாராட்டுக்குரியவர்.
இந்த நூலின் அட்டைப்படத்தை வழமைபோல எனது இனிய நண்பர் ரமணி அவர்கள் வரைந்துள்ளார்கள். இதன் அட்டை ஓவியம் புலம்பெயர்வின் குறியீடாகச் சிறப்புற அமைந்துள்ளது.
இன்று இந்த நூலை தமது 39 ஆவது பிரசுரமாக அக்கறையுடன் வெளியிட்டு வைக்கும் மீரா பதிப்பகத்தார் - குறிப்பாக சாந்தகுமாரி இரத்தினவேலோன் மற்றும் அச்சிட்டு உதவியு ரஞ்சகுமார், ஒவியர் ரமணி, ஒப்புநோக்கலில் உதவிய வதிரி - ரவீந்திரன் ஆகியோருக்கும் நான் நன்றியுடையவனாவேன்.
கலையருவி, -தெணியான் கரணவாய் வடக்கு, வல்வெட்டித்தும்ை,
17.08.2003
(ν)

Page 5
தெணியானின் நூல்கள்
விடிவை நோக்க
- நாவல்- வீரகேசரி வெளியீடு.1973
கழுகுகள்
- நாவல்-நர்மதா வெளியீடு-1981
சொத்து
- சிறுகதைகள்-என்.சி.பி.எச். வெளியீடு-1984
பொற் சிறையில் வாடும் புனிதர்கள்
- நாவல். முரசொலி வெளியீடு.1989
மரக்கொக்கு
-நாவல்.நான்காவது பரிமானம் வெளியீடு-1994 (இலங்கை அரசு, வடக்குக் கிழக்கு மாகாண அமைச்சு இலக்கியப் பரிசில்கள்,இலக்கியப் பேரவைப் பரிசில் பெற்றது)
மாத்து வேட்டி
சிறுகதைகள்.மல்லிகைப் பந்தல் வெளியீடு- 1996
காத்திருப்பு
- நாவல். பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு-1999 (வடக்குக்,கிழக்கு மாகாண அமைச்சுப் பரிசில் பெற்றது)
கானலில் மான்
- நாவல்-பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு -2002
சிதைவுகள்
-குறுநாவல்கள் - கொழும்புமீரா பதிப்பக வெளியீடு-2003
(vi)

Uரம்Uரை அகதிகள்
கந்தசாமி, சின்னக்குஞ்சிக்கு அவள் பெற்ற பிள்ளைதானா அல்லது சகோதரனா என்பது பலருக்குத் தெரியவராது. அவளிடம் இது பற்றி யாராவது நேரில் கேட்டு விட்டால் 'அவன் என்ரை மூத்த மேன் என்று எடுத்த எடுப்பில் அவள் பதில் சொல்லி விடுவாள். பின்னர் சற்றுத் தாமதித்து, சிரித்துக் கொண்டு 'அவன் என்ரை தம்பி’ என்று சொல்லும் போது அவள் விழிகளிற் பெருமிதம் ததும்பி நிற்கும்.
அவள் கந்தசாமியைத் தன் சகோதரனாக மாத்திரம் கருதி அவனை நடத்தவில்லை. கோழி தன் குஞ்சைச் சிறகுக்குள் அணைத்து வைத்துப் பாதுகாப்பது போல அவள் வளர்த்து உருவாக்கிய குஞ்சுதான் அவன்.
கந்தசாமி அவனைப் பெற்றவர்களின் முகங்களை அறியாதவன். அவர்கள் பற்றி சின்னக்குஞ்சி சில தகவல்களை அவனுக்கு அவ் வப்போது சொல்லி இருக்கிறாள். அந்தத் தகவல்களே அவன் மனத்தில் அவர்களின் தெளிவில்லாத மங்கலான இரு உருவங்களைப் பதித்து வைத்திருக்கின்றன.
அவன் அறிந்த வரை சின்னக்குஞ்சி ஒருத்தி தான் அவன் கண் கண்ட தாய், தந்தை, சகோதரி எல்லோரும்,
அவள் கந்தசகியைப் பத்து மாதங்கள் தன் வயிற்றிலே சுமந்து பெற்றெடுக்காதது தான் ஒரு குறை. பெற்ற தாயானவள், தன் பெற்ற குழந்தைக்குச் செய்ய வேண்டிய சிசுருட்சைகள் எல்லாம் சின்னக்குஞ்சி அவனுக்குச் செய்திருக்கிறாள். அவன் பச்சைக் குழந்தையாகச் சாணைக் குள்ளே கிடந்து பசியினால் வீரிட்டுப் பாலுக்கழுத வேளைகளிற் சுமந்து
1.

Page 6
பரம்பரை அகதிகள்
பெற்றவளுக்கில்லாத சிரமங்கள் எல்லாம் அவள் பட்டுத் துடித்தி ருக்கிறாள்.
அந்த நாட்கள். கைக்குழந்தை கந்தசாமியை அணைத்துக் கொண்டு ஆதரவு காட்டுகின்றவர்கள் யாருமில்லாமல் அநாதை போல அலைந்து திரிந்த அந்த நாட்கள். இன்று அவள் நினைவிற்கு வந்தாலும் விழிகள் கலங்கி உடைப்பெடுக்கும்.
சின்னக்குஞ்சிக்குப் பன்னிரண்டு வயது முடிகின்றவரை அவள் பெற்றோர்களுக்கு அவளே ஏக புத்திரி. அடுத்த ஆண்டு அருமை பெருமையாக அவர்களுக்கு கந்தசாமி வந்து பிறந்தான். அவன் பிறந்தபோது அவனைப் பெற்றவர்கள் அடைந்த குதூகலத்தை இப்போது சின்னக்குஞ்சி நினைத்தாலும் மனம் வருந்துவதுண்டு.
'உனக்கினிமல் என்ன குறையடி ஆத்தை என்னையும் பிடிச்சு வெளியிலை விட்டிடுவாய்' என்றார் அவள் தந்தை.
"இதென்ன கதை?” என்று கேட்டாள் தாய்
“பின்னை”
"அப்பிடியேன் சொல்லுறியள்? ‘உன்னைப் பார்க்கத்தானே மேன் இருக்கிறான்' “உங்களைப் பாரானே.?
“எனக்கு என்ரை பெட்டைக் குஞ்சிருக்குது, தான் எரிச்ச தண்ணியிலை ஒரு சிரட்டை குத்தித் தந்தால் போதும்.
‘வாறவன் விடுவனே தன்ரை உழைப்பிலை உங்களுக்குக் குத்தித் தாறதுக்கு ஆம்பிளைப் பிள்ளையெண்டால் ஆர் கேக்கிறது’
‘நல்ல கதை கதைக்கிறாய்! இந்தக் காலத்திலை ஆம்பிளைப் பிள்ளையஸ்தான் பெண்டில்மாற்றை கொய்யகத்திலை பிடிச்சுக் கொண்டு நிப்பங்கள்’
'நீங்களும் அப்பிடியே. உங்கடை மேன் அப்பிடி இரான் அவள் கூறியதைக் கேட்டுத் தன் அகன்ற மார்பை நிமிர்த்திக் கொண்டு அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தார்.
2

தெணியான்
'உங்களுக்கு நினைவிருக்கே போன மார்கழிக்கு முந்தின மார்கழி
நான் சொன்னது' என்றாள். அதைத் தொடர்ந்து அவள்
‘என்னடி ஆத்தை அது?
'நீங்கள் சுருட்டுப் பத்திறதுக்குப் பிள்ளை நெருப்புக் கொள்ளி எடுத்து வந்து தரேக்கை.
‘ஓ.ஓ.ஓ.’ என்று அந்தச் சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். அன்று அவருக்கு இனித்த பனங்கள்ளைச் சுவைத்துக் குடித்த மெல்லிய ஒரு போதை மயக்கம். வாரத்தில் ஓரிரு தடவைகள் அவர் மது அருந்துவதுண்டு. அப்போது அதன் போதையிற் கிறங்கிப் போய் விடுவது அவர் வழக்கம். அன்றும் காலை முதல் மதியம் திரும்பும் வரை கொளுத்தும் வெய்யிலில் நின்று தோட்டநிலத்தைக் கொத்தி நன்றாகக் களைத்துப் போயிருந்தார். கூலிக் காசில் ஐம்பது சதத்தைக் கொடுத்து உடல் அலுப்புத் தீர ஒரு போத்தல் கள்ளு அருந்தி விட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக அந்தப் பகுதி மக்களுக்கென்றுள்ள பொதுக் கிணற்றுக்குச் சென்று குளித்து முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது அவர் மனைவி மண் சட்டியில் தயாராகச் சோற்றைப் போட்டு வந்து அவர் முன் வைத்தாள். சோற்றுக்கு மேலே ஒடியற் பிட்டுக் குந்தி இருந்தது. அதன் அருகே நன்றாக மசிச்சுக் காய்ச்சிய மரவள்ளிக்கிழங்குக் கறி சளிந்து கிடந்தது. இன்னொருபுறம் செத்தல் மிளகாயுடன் மல்லி, நற்சீரகம், மிளகு, வெள்ளைப்பூடு சேர்த்து அரைத்த கூட்டைப் போட்டுத் தேங்காய்ப்பாலிற் கரைத்து ஒட்டி மீன் போட்டுக் காய்ச்சிய குழம்புக் கறி சட்டி விளிம்பைத் தளம்பிக் கொண்டு நின்றது. இதுபோன்ற நல்ல உணவை அடிக்கடி உண்புதென்பது அவர்கள் சக்திக்கு மீறிய காரியம். எப்போதாவது ஒரு தின மனதுக்கு உவப்பான உணவுகள் கிடைத்து விடடால் அதை அனுபவித்துச் சுவைத்து உண்பதே அவர் சுபாவம். அவருக்கு எந்த உணவென்றாலும் அதிற் காரம் அதிகம் இருக்க வேண்டும். மது அருந்தி அதன் கிறுகிறுப்பு நீங்காத நிலையில் உணவுக்கு முன்னே வந்து குந்தி விட்டாரென்றால், காரம் மண்டையில் ஏறி நாசியால் அவருக்கு நீர் வடிய வேண்டும்!
3

Page 7
பரம்பரை அகதிகள்
சோற்றோடு ஒடியற் பிட்டைச் சேர்த்துப் பிசைந்து, மரவள்ளிக் கிழங்குக் கறியையும் சேர்த்து, குழம்பும் கூட்டிக் குழைத்து கவளம் கவளமாகத் திரட்டியெடுத்து வாயிலிட்டு உண்ணத் தொடங்கினார். அப்போதுதான் அதுவரை அவர் அவதானிக்காத இறாலின் ருசி திடீரென்று நாவிலே தட்டியது. ஒடியற் பிட்டை விரல்களால் கிளறிப் பார்த்தார் அதற்குள்ளே சின்னச் சின்ன இறால்கள் சுருண்டு கிடந்தன. அவற்றைக் கண்டு கொண்டதும் அவர் நாவில் நீர் ஊற ஆரம்பித்து விட்டது.
‘என்னடியாத்தை இண்டைக்கெல்லாம் எழுப்பமாகக் கிடக்கு
‘உள்ளநேரம் வாய்க்கிதமாய்த் தின்னுங்கோவன்’ ‘ச்சே. இப்பிடியெண்டால் இன்னுமொண்டு அடிச்சுப்போட்டு வந்திருப்பன்’ என்று அங்கலாய்த்தார்.
‘போதும் போதும். கணக்க குடிச்சால் சாப்பிடமாட்டியள் அவர் வயிறு நிறையத் திருப்தியாக அன்று சாப்பிட்டு முடித்துக் கொண்டு இறுதியாகத் தண்ணிரும் குடித்து கை, வாய் கழுவிய பின்னர் அடுக்களைக் கொட்டிலை விட்டு வெளியே வந்து, எதிர்த்தாற் போலவுள்ள குடிசைக்குள்ளே குனிந்து சென்று, கடந்த இரவு மூட்டிப் புகைத்துவிட்டுப் பாதியில் அணைத்து வைத்த குறைச் சுருட்டைக் கையில் எடுத்துக்கொண்டு வாசலில் வந்து அமர்ந்தார்.
தினமும் ஏதோ கிடைத்ததைத் தின்று முடித்தபின் படுக்கைக்குப் போகும் சமயத்திற் சுருட்டுப் புகைத்துக் கொள்வதுதான் அவள் வழக்கம். இப்போ வயிறு முட்ட உணவு உண்டதனால் உண்டான வயிற்றின் கனதியும், கள்ளின் இலேசான கிறக்கமும் சேர்ந்து அவர் மனத்தில் புகைவிடும் ஆவலைத் தூண்டிவிட்டன.
‘பிள்ளை நெருப்புக் கொண்டா அம்மா’
குறைச் சுருட்டை வாயிலே வைத்துக் கொண்டு குரல் கொடுத்தார். சின்னக்குஞ்சி எரிந்து கொண்டிருக்கும் சிறிய நெருப்புக் கொள்ளி ஒன்றைக் கொண்டு வந்து அவர் முன் நீட்டினாள்.
4

தெணியான்
அவர் கை நீட்டி அதை வாங்கிக்கொண்டு, "இஞ்சை கொண்டு வா! கொள்ளிதான் கொண்டந்திருக்கிறாய் ஒ. நீதானே எனக்குக் கடைசியாகவும் கொள்ளி தூக்க வேணும்' என்றார்.
அவர் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் அடுக்களைக் கொட்டில் முகட்டில் பல்லியொன்று அடித்துத் தீர்ந்தது.
‘ஏனப்படிச் சொல்லுறியள் கொள்ளி வைக்கிறதுக்கும் ஆள் வரப்போறார்’ என்றாள் உடனே அவர் மனைவி.
‘ஓமோம் உனக்கும் ஆசைதான்’ அவர் அவளை நையாண்டி பண்ணினார்.
‘சும்மா போங்கோ’ அவள் வார்த்தைகளில் வெட்கம் அவளைக் கெளவி நின்றது.
கடைசியில் அவருக்குக் கந்தசாமி கொள்ளி வைக்கவில்லை. பிறந்து மூன்று மாதம் கூடக் கழியாத பச்சைக் குழந்தையாக இருந்த அவன், எப்படி அவருக்குக் கொள்ளி வைக்க முடியும்? ஆறுமாத கால இடைவெளிக்குள் சின்னக்குஞ்சியே தாய், தந்தை இருவருக்கும் கொள்ளிவைக்க வேண்டி நேர்ந்து விட்டது.
ஒன்றும் அறியாத அந்தப் பச்சை மண் கந்தசாமியைப் பார்த்து உலகம் பழி சொல்ல ஆரம்பித்தது.
‘இவன்தான் தேப்பனையும் தாயையும் திண்டிட்டான்' ‘ஆளைப் பாருங்கோ. வைச்சுரிச்சுத் தேப்பனைப் போலத் திடுமன் மாதிரி'
சின்னக்குஞ்சியின் உளம் இந்தப் பழிச்சொற்களைக் கேட்டு அவற்றைத் தாங்கிக் கொள்ள இயலாது துடித்தது.
"ஐயோ பாவம் தாய் தேப்பனைத் தின்னியள்’ என்ற அனுதாப வார்த்தைகளை அவள் செவிப்படப் பலர் சொல்லிக் கொண்டு மெல்ல விலகி இருந்து விட்டார்கள். அவளுக்கு மிக நெருக்கமான உறவுமுறைக்காரர் என்றும் எவருமில்லை.
5

Page 8
பரம்பரை அகதிகள்
பதின்மூன்று வயது நிரம்பிய உலகமறியாத கன்னிப் பெண் சின்னக்குஞ்சி. அவள் கைகளிலே பச்சிளம் பாலகனான கந்தசாமி
அவள் எதிரில் எதிர்காலம் இருண்டு கிடந்தது. சின்னக்குஞ்சிக்கும், கந்தசாமிக்கும் அவர்களைப் பெற்றவர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போன சொத்தென்று சொல்வதற்கு ஒருவருக்கு ஒருவரைத் தவிர வேறொன்றும் இல்லை. மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்கி வாழ்ந்த குடிசையை மாத்திரம் அவர்களுக்குத் தங்கள் புகலிடமாக அளித்துவிட்டுப் போய்விட்டார்கள். அந்தக் குடிசை இருக்கும் நிலத்துக்குச் சொந்தமானவன் நாளை வந்து குடிசையைப் பிய்த்து எறிந்து விட்டு வெளியே போ என்று மிரட்டினால் காலூன்றி நிற்பதற்கும் அவர்களுக்கு இடமில்லை. சின்னக்குஞ்சிக்கும் அவள் தம்பி கந்தசாமிக்கும்தான் இந்த நிலையென்றில்லை அவர்கள் குடிசைக்கருகே வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னும் ஒன்பது குடும்பங்களின் நிலையும் இதுதான்.
சின்னக் குஞ்சிக்கு அவள் பெற்றோர்களால் வரப் பெற்ற சொத் தென்று எதுவுமில்லாவிட்டாலும் அந்தப் பரம்பரைக்கே உரித்துள்ள உழைப்பென்ற ஒரு சொத்து கைவசமிருந்தது.
பனையோலையில் இழைத்த குஞ்சுப்பெட்டியைத் தலையிற் கவிழ்த்துக் கொண்டு கூலி வேலைக்குப் போகும் பெண்களோடு சேர்ந்து அவளும் புறப்பட்டாள். பக்கத்துக் குடிசையில் வாழ்ந்த கிழவி ஒருத்தியிடம் கைக்குழந்தை கந்தசாமியை ஒப்படைத்து விட்டே கன்னிப் பெண்ணான அவள் புறப்பட்டாள்.
வெங்காய நடுகைக் காலங்களில் ஈரலிப்பான பாத்திகளுட் குந்தி இருந்து வெங்காயம் நட்டாள். களைபிடுங்குங் காலங்களில் குனிந்து நின்று முதுகுளைய களை எடுத்தாள். கழுத்தடைக்கத் தலையிலே எருச் சுமந்தாள். மண் சுமந்தாள், வெங்காயப் பாத்திக்குள் கால் பதித்து செருசெருத்த தோட்டத்து ஈரமண்ணில் வெங்காயங்களை எடுத்து விரல்களால் ஊன்றிப் பதித்து நடும்போதும், அவள் உள்ளம் பக்கத்து குடிசையில் வாழும் கிழவியிடம் ஒப்படைத்து விட்டு வந்த கந்தசாமி யின் மேலே பதிந்திருக்கும். தலையின் மேற்சுமையை வைத்து சுமந்து SS 6 SS

605600fuшпео,
கொண்டு மூச்சிழுக்க நடந்து கொண்டிருக்கும் போதும் அவள் மனதிற் கந்தசாமியின் எண்ணமே சுமையாகக் கனக்கும்.
வேலை முடிவதற்குச் சற்று நேரம் தாமதமானாலும் அவள் வீடு போவதற்குத் துடித்துக் கொண்டிருப்பாள்.
'இவளுக்குப் பால்முட்டிச் சொரியுது குழந்தைக்குப் பால் குடுக்க வேணும் அதுதான் அவசரப் படுகிறாள்’ என்று அவளைப் போன்ற இளவட்டங்கள் அப்போது அவளைக் கிண்டல் பண்ணும். அதை எல்லாம் கேட்டு அவள் மனம் சோர்ந்ததில்லை.
கந்தசாமிக்கு ஐந்து வயதான போது அந்தக் கிராமத்தில் உள்ள மெதடிஸ்தமிஷன் பாடசாலையில் அவனைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். பாடசாலைக்குப் போய் கொண்டிருந்த அவனுடைய உடுப்புக்காகவும் படிப்பிற் காகவும் செலவு செய்வதற்கு அவள் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது அவளைப் பார்த்து, 'எடி பிள்ளை, ஏன் உவ்வளவு நெருக்குவாரப்படுகிறாய்! எங்கட பொடியள் படிச்சு கோறணமேந்திலை உத்தியோகம் பார்க்கப்போறாங்களே! உன்ரை தம்பி படிச்சது போதுமடி நிற்பாட்டு’ என்று ஆலோசனை சொன்ன
GT856 U6)ff.
அவர்களுக்கெல்லாம் அவள் சொல்லிக் கொண்ட ஒரே சமாதானம் ' பள்ளிக்கூடம் போகாவிட்டால் தெருவளிய விளையாடித் திரிவான், படிப்பை விட்டுட்டு இப்பென்ன உழைக்கப் போறானே! ஏதோ போவிட்டு வரட்டுக்கும்’ என்பதாகத்தான் அவள் பதில் இருந்தது. ஆனால் உண்மையில் தன்னால் முடிந்தவரை அவனைப் படிப்பிக்க வேண்டுமென்றே உள்ளூர அவள் விரும்பினாள். எட்டாவது வகுப்பு வரை படித்து முடித்த பின்பு தக்கை சின்னக்குஞ்சி தனக்காகப்படும் கஷ்டங்களை உணர்ந்து பள்ளிக்கூடம் போவதற்குக் கண்டிப்பாக மறுத்து விட்டு அவளோடு சேர்ந்து கூலித்தொழிலுக்குப் புறப்பட்டு விட்டான் கந்தசாமி.
கந்தசாமியின் வாளிப்பான வாலிப வளர்ச்சி சின்னக்குஞ்சி பட்ட துன்பங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனத்திலிருந்து இன்று
7

Page 9
பரம்பரை அகதிகள்
போகடித்து விட்டன. அவன் போன்ற ஒரு சகோதரனை வளர்த்து உருவாக்குவதாக இருந்தால் அன்று தான் அனுபவித்த வேதனைகள் போல இன்னும் ஆயிரம் தடவைகள் அனுபவிப்பதற்கும் இன்று அவள் தயாராக இருக்கிறாள்.
கந்தசாமியை நினைத்து நினைத்து நெஞ்சம் நிறைந்து பூரித்துப் போகும் சின்னக்குஞ்சிக்கு மனத்தில் உள்ளூர அவனைப் பற்றி ஒருவகைப் பீதியும் இருந்து கொண்டே வருகிறது. அவர்களுடைய தந்தைக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் என்னவென்று அந்தப் பகுதியில் எவருக்குமே தெரியவராது ஆனால் ‘வீமன்’ என்று சொன்னால் பட்டென்று எல்லோரும் அவரை அறிந்து கொள்வார்கள். உடல் வாகிலும் நெஞ்சுரத்திலும் அவர் மகாபாரதக் கதையில் வரும் வீமன் போலவே திகழ்ந்தவர். அவருடைய வீரதீரச் செயல்கள் பற்றி அந்தப் பகுதியில் கள்ணபரம்பரைக் கதைகள் போல இன்றும் கதை கதையாய்ச் சொல்லி மெய் சிலிர்த்துப் போவார்கள்.
அவரிடமிருந்த அந்தத் துணிச்சலும் துடிதுடிப்பும் கந்தசாமி யிடமும் அப்படியே குறைவில்லாமல் இருக்கின்றன. அவர் கல்வி அறிவில்லாத வெறும் உடலுரம் கொண்ட முரட்டு மனிதர். கந்தசாமி நாலெழுத்துப் படித்தவன். அவனுடைய சிந்தனையும் செயலும் பாரம்பரியமான இந்தப் பழமையான சமூகத்தின் போக்குகளுடன் முரண்பட்டு நிற்பதையே அவள் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக் கிறாள். அவன் எங்காவது போய் முட்டிக்கொண்டு கஷ்டங்களைத் தேடிக்கொண்டு விடுவானோ என்றே அவள் அஞ்சிக் கொண்டிருந் தாள.
இப்போது மரமும் கொடுகும் மார்கழி மாதத்துக் கடுங்குளிர் அந்தக் குளிர் எதுவும் அவனை ஒன்றுமே செய்து விடாது. அவன் நன்றாக இருள் விடிவதற்கு முன்னரே படுக்கையை விட்டு எழுந்துவிட்டான். அவன் காலை உணவு பற்றியே அக்கறை இல்லாமல் தொழிலுக்குப் புறப்பட்டுக் கொண்டு போய்விடுவான். ஒரு தேநீரை யாவது அவன் குடித்து விட்டுப் போக வேண்டுமென்று அக்கறை யினால்தான் சின்னக்குஞ்சி படுக்கையை விட்டெழுந்து தண்ணீர்க்
8

தெணியான்
குடத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு வந்தாள்.
அவள் அவசர அவசரமாகத் துலாக்கொடியைக் கையில் எடுத்து வாளியைக் கிணற்றினுள்ளே விட்டு வேகமாகத் துலாவை இழுத்துத் தாழ்த்திய போதும் சொற்ப நீரைக்கோலிக்கொண்டு அவளின் மனம் போல வாளி நீரில் மிதக்கிறது. அவள் மீண்டும் துலாவை மேலே தூக்கி, கொடியை நுகைத்து நீரின் மேல் வாளியைத் தூக்கிப் போட்டுப் போட்டு தண்ணிரில் ஆழ்த்தி நீரைக் கோலி அள்ளப் பிரயத்தனம் செய்கிறாள்.
அந்த வாளி நீரின் மேல் நீந்தி நீந்தி விளையாடி, அவளுக்கு வேப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அவள் கொஞ்சம் கொஞ்சமாகப் பல தடவைகள் நீரைக் கோலி எடுத்து அரைவாளி அரைவாளியாகக் குடத்தை நிரப்பி முடித்துக் கொண்டு இடுப்பிலே அதைத் தூக்கி வைத்தவாறு அவசரமாக வீட்டுக்கு வந்து சேருகிறாள்.
அப்போது கந்தசாமி அங்கில்லை அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டான்.

Page 10
கந்தசாமியின் கறள் படிந்த பழைய சைக்கிளின் சக்கரங்கள் அவனுடைய உடல் வலுவினால் தங்கள் சக்திக்கு மீறி வாய்விட்டு அழுவது போலச் சத்தமிட்டுக் கொண்டு வேகமாகச் சுழன்று கொண்டி ருந்தன.
அவன் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிச் செல்வதானால் அவனோடு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்கள் வந்து சேருவதற்கு முன்னர் வேலை செய்யுமிடத்தில் அவன் முதல் ஆளாக நிற்பான். தான் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அந்தத் தொழிலில் முழுமனத்துடன் ஈடுபட்டு அயர்வின்றி உழைப்பதே அவன் இயல்பு அதனால் அவனுக்கு எந்தக் காலத்திலும் செய்வதற்கு வேலை இல்லாமற் போவதில்லை. அவனை வேலைக்கமர்த்துகின்றவர்கள் எப்போதும் நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப்போட்டுக் கொண்டு தொழிலுக்குக் கூப்பிடுவார்கள்.
கந்தசாமி செய்வதற்கு இயலாத தென்று ஒரு கூலி வேலையும் சொல்வதற்கில்லை. தோட்டங்களைக் கொத்திப் பண்படுத்திப் பயிர் நாட்டுங் காலங்களிற் கொத்துக்குப் போவான். புகையிலைக் கன்றுகள் வெட்டுங் காலங்களில் கண்டு வெட்டுக்குப் போவான். வெங்காயம் நடுகை ஆரம்பித்து விட்டால் நிலத்தைச் சாறி நடுகையில் ஈடுபடுவான். தோட்டங்களில் வேலைகள் செய்வதற்கு இல்லாத சமயங்களில் நிலத்துக்குப் பசளையாகத் தாழ்க்கும் குழை வெட்டு வேலை செய்வான். அந்த வேலையும் இல்லாத சந்தர்ப்பங்களில் வேலி வாசல் அடைத்துக் கொடுக்கும் தொழிலில் இறங்கிவிடுவான். மாலை நேரங்களில் வீட்டில் ஓய்வாக இருந்தால் ஆடுமாடுகளுக்குணவாக பனைமரங்களில் ஏறி
10

தெணியான்
ஒலை வெட்டிக்கொடுப்பான். இந்தத் தொழில்கள் ஒன்றுமே இல்லை யென்றால் அவனுக்கு இருக்கவே இருக்கிறது பனையடிப்புத் தொழில். அவன் யாரோடு சேர்ந்து எந்தத் தொழில் செய்வதற்கு விரும்பினாலும் அந்தத் தொழிலாளர்கள் அவனைத் தங்கள் குழுவில் ஒருவனாக விரும்பிச் சேர்த்துக் கொள்ளுவார்கள். இப்படி அவனை எல்லோரும் விரும்பிச் சேர்த்துக் கொள்வதற்குச் செய்யும் தொழிலில் அவனுக்கிருக்கும் திறமை மாத்திரமல்ல சக தொழிலாளிகளுடன் ஒத்துழைத்து சுமூகமாக அன்பாக நடந்து கொள்ளும் அவனுடைய இயல்பும் இதற்குக் காரணம்.
கந்தசாமி காலையில் எழுந்து தினமும் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் வேளைகளில் அவன் உணவு உண்ணாமல் வெறும் வயிற்றுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுவான். அவன் ஒரு நேர உணவை ஒறுத்து நடப்பதன் மூலமும் சகோதரி சின்னக்குஞ்சியின் குடும்பத்தைப் பாதுகாத்து பராமரிப்பதற்குத் தன்னால் முடிந்தவரை உதவவேண்டுமென்றே மனத்துள் எண்ணினான். சின்னக்குஞ்சியின் கணவன் பாயும் படுக்கையுமாக அடிக்கடி விழுந்து விடுவதால் அந்தக் குடும்பத்தாரைத் தாங்க வேண்டிய பொறுப்பு தன்னுடையதென்றே அவன் கருதி நடந்தான்.
சின்னக்குஞ்சிக்கும் அவன் மனப்போக்கு என்னவென்று நன்றாகத் தெரியும். அதனால் அவன் வெறும் வயிற்றோடு தொழில் செய்யப் போவதை அவள் உள்ளூர விரும்புவதில்லை. சில சமயங்களில் அவள் விடாப்பிடியாக அவர்ை வற்புறுத்துவாள்.
தம்பி சாப்பிட்டு விட்டுப் போ' “எனக்கு வேண்டாம் 'ஏன்.
'பசிக்கயில்லை’
“பொய் சொல்லாதை'
'உண்மை அக்கா இராத்திரிப் பட்டினி கிடந்தவன் போலை
11

Page 11
பரம்பரை அகதிகள்
விடிய வெள்ளென எப்பிடிச் சாப்பிடுகிறது’
அவன் சமாதானம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து அவசர மாகப் புறப்பட்டுப் போய் விடுவான்.
அவனுடைய சைக் கிள் வீட்டிலிருந்து கிளம்பி மண் ணொழுங்கையைத் தாண்டி பருத்தித்துறை-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மிதந்து மந்திகை அரசினர் வைத்தியசாலையைக் கடந்து பெரியார் கந்த முருகேசனார் உருவச்சிலையையும் கடந்து ஒராங் கட்டைச் சந்தியைத் தாண்டிப் பருத்தித்துறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
கந்தசாமி அறிவறிந்த பருவமுதல் அவன் உள்ளத்தில் வளர்ந்து வந்துகொண்டிருக்கும் குமுறல்கள் இன்னும் ஒய்வதாக இல்லை. மாறாக அந்தக் குமுறல்கள் அவ்வப்போது பெருகிக் கொண்டே சென்று அவனைத் துன்புறுத்திக் கொண்டேயிருந்தன. அவன் மனத்திற் பொங்கிக் கொண்டிருக்கும் குமுறல்கள் வெடித்து ஆவேசமாகக் கிளம்பாத வண்ணம் அவன் கையையும் காலையும் கட்டிப்போட்டுச் செயலற்றவனாக்கி வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருப்பவள் சின்னக்குஞ்சிதான். சின்னக்குஞ்சியின் ஆறுதல் வார்த்தைகள் அவன் உள்ளக் கொதிப்பைத் தணிக்காது விட்டாலும் அவள் பெற்ற குழந்தை களின் பசித்த முகங்கள் அவனைச் சாந்தப்படுத்தி உள்ளடங்கிப் போகச் செய்து விடுகின்றன.
கடந்த வாரம் ஒரு சம்பவம்:-
கந்தசாமி வேலை முடிந்து மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான்.
அவன் வீட்டுக்கு அடுத்தடுத்த வீடொன்றின் அருகே தெரு வோரமாகப் பெரிய சனக்கூட்டம் ஒன்று கூடி நிற்கிறது. அங்கு கூடி நின்றவர்கள் அத்தனை பேரும் அந்த இடத்தில் குடியிருக்கும் அவனுடைய இனத்தவர்கள். அவர்கள் எல்லோரும் இனம்புரியாத ஒருவகை அச்சத்துடன் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லோருமே மனத்தில்
12

தெணியான்
எதனையோ எண்ணி மிரண்டு கொண்டு நிற்கிறார்கள் என்பது அவர்கள் முகங்களில் தெளிவாகத் தெரிகிறது.
கந்தசாமி வீட்டுக்குத் திரும்பாமல் நேரே அங்கு வந்து சேர்ந்தான். அங்கே தெருக்கரையில் உள்ள ஒரு குடிசையின் பனையோலை வேலி பிய்த்தெறியப்பட்டிருப்பது அவன் கண்ணிற் படுகிறது.
அவன் அங்கு வந்து நிற்பதைக் கண்டதும் சின்னக்குஞ்சி அவசரமாக அவனருகே ஓடி வந்தாள். அவர்கள் எல்லோரும் தெரு விலே கூடி நிற்பதும், வேலி பிடுங்கி எறியப்பட்டிருப்பதும் ஏனென் பதைப் புரியாத அவன் மனக்குழப்பத்துடன் சின்னக்குஞ்சியைப் பார்த்துக் கேட்டான்.
‘என்னக்கா நடந்தது? அதேதோ. சின்னப் பிரச்சனையாம் நீ வா. சாப்பிடு’ என்று சொல்லி நடந்ததைப் பெரிதுபடுத்தாது மறைத்து, அவனை அங்கிருந்து தந்திரமாக அழைத்துக் கொண்டு போய்விடுவதற்கு முற்பட்டாள் அவள்.
‘சாப்பிடுவம் முதல் நடந்ததைச் சொல்லு' என்று விடாப்பிடியாக நின்றான் அவன்.
பொன்னையாக் கமக்காரன் நல்லையனோடை ஏதோ வில்லங்கமாம்!
− ‘அதுதான் வேலியைப் பிடுங்கி எறிஞ்சு போட்டுப் போயிருக்கிறாராக்கும்’
அவன் சினந்து கூறிக்கொண்டு நல்லையன் வளவுக்குள்ளே போகத் திரும்பினான்.
அதுக்கு நீ இப்ப என்ன செய்யப் போறாய்? நட வீட்டை போவம் சின்னக்குஞ்சி அவனைத் தடுத்தாள்.
13

Page 12
பரம்பரை அகதிகள்
அவள் வார்த்தைகளைக் காதிற் போட்டுக் கொள்ளாமல் 'S போ நான் வாறன்’ என்று கடுகடுத்துக்கொண்டு ‘நல்லையா அண்ணை. நல்லையா அண்ணை.’ என்று உரக்க அழைத்த வண்ணம் அவன் வீட்டு முற்றத்துக்கு வந்தான் கந்தசாமி.
குடிசையின் தாழ்வாரத்தில் தலைகுனிந்து குறாவிப் போயிருந்த நல்லையன் அவன் தன்னை அழைத்துக் கொண்டு உள்ளே வருவது கண்டு ‘வா தம்பி’ என்று மெல்லக் குரல் கொடுத்தான்.
கந்தசாமி அவன் முன்னே வந்து நின்றான். அவன் மனத்தில் தோன்றிய புயல் வார்த்தைகளிலும் வீச அண்ணை என்ன நடந்தது?’ என்று பொறுமையை இழந்து கேட்டான்.
‘வீட்டிலை அவசர வேலைகிடக்கெண்டு வரச்சொன்னவள் நான் உடம்பு சரியில்லை எண்டு போகேயில்லை’ என்று குரல் தளதளக்கக் கூறினான் நல்லையன்.
“வேலைசெய்யப் போகேல்லை எண்டால் அவர் வந்து நீங்கள் குடியிருக்கிற வீட்டுவேலியைப் பிடுங்கி எறிஞ்சுபோட்டுப் போறதுக்கு. அவ்வளவு. கந்தசாமியின் பற்கள் நெறுநெறுத்தன.
"நாங்கள் என்ன செய்யிறது தம்பிட் நல்லையன் குரலில் அவனது இயலாமை வெளிப்பட்டது.
‘அண்ணை நீங்கள் ஒரு ஆம்பிளையெல்லே! வேலியிலை தொட்டவன்ரை கையை முறிச்சுப் போடாமல் விட்டிட்டு.
'தம்பி அவன் ரை நிலத்திலையெல்லே குடியிருக்கிறம். நாளைக்கு அவன் பிடிச்சு வெளியிலை விட்டானெண்டால்.?’ என்று நல்லையன் தயங்கினான்.
கந்தசாமியாற் பதில் சொல்ல முடியவில்லை. இருபது வருடங்களுக்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் இராமாயணத்தில் வரும் இராமனின் அருமைத் தம்பி இலக்குமணன் செய்தது போன்ற ஒரு சம்பவம், அவன் சூர்ப்பனகையின் மார்பையும்
14

தெணியான்
மூக்கையும் மாத்திரந்தான் அரிந்து போட்டு விட்டானாம். நவீன இலக் குமணனான பென்ஸன் வாத்தியார் ஒருவர் கூலிவேலைக்குப் போன பெண்ணொருத்தி தன் உடல் இச்சைக்குப் பலியாகவில்லை என்பதால் தோட்டத்துக்குள்ளேயே வைத்து அவள் கழுத்தை அரிந்து கொலை செய்தார். அவளோடு சேர்ந்து கூலிப்பிழைப்புக்குச் சென்ற பெண்கள் இந்தக் கோரக்காட்சியை நேரிலே கண்ணாற் கண்ட சாட்சிகளாக இருந்தார்கள். அவர்களை எல்லாம் வாத்தியாரும் அவருடைய இனத் தவர்களும் அழைத்து "கூலி வேலைகளுக்குக் கூப்பிடமாட்டோம். வீடு களுக்கு நெருப்பு வைப்பம் குடியிருக்கிற எங்கடை நிலத்திலையிருந்து குடியெழுப்பிக் கலைச்சுப் போடுவம் என்று மிரட்டி நீதிமன்றம் சென்று சாட்சி சொல்லாது தடுத்து, கொலைக்குற்றத்திலிருந்து வாத்தியார் தப்பித்துக் கொண்டார்.
அப்போது விபரமறியாத எட்டுவயதுச் சிறுவனாக இருந்த கந்தசாமி சின்னக்குஞ்சியிடம் வந்து, ஏனக்கா அவவைச் சாக் கொண்டவை என்று ஒரு தினம் கேட்டான்,
"அவவிலை ஏதோ கோவமாம்’ என்றாள் சுருக்கமாகச் சின்னக்
குஞ்சி.
‘கோவம் வந்தால் சாக்கொல்லுறதே! அப்ப நாங்களும் அவரைச் சாக்கொல்லுவம்
'அப்படிச் சொல்லாதை அப்பு, ஆற்றையும் காதிலை விழுந்தாலும்.’ என்று சொல்லிக்கொண்டு அவன் வாயைப் பயத்தோடு பொத்தினாள்.
கந்தசாமிக்கு அவளுடைய அச்சத்திற்கான காரணம் புரிய வில்லை. அவன் சற்றுப் பொறுத்திருந்து மீண்டும் அவளிடம் கேட்டான்.
‘எங்களை என்ன செய்வினமக்கா’
"நாங்களெல்லோரும் இருக்கிறது அவையளின்ரை காணி, வீடுகளையும் புடுங்கி எறிஞ்சு, தங்கடை காணிக்குள்ளை இருக்கக் கூடாதென்று கலைச்சுப் போடுவினம்’
1S

Page 13
பரம்பரை அகதிகள்
‘எங்களுக்குக் காணியில்லையே அக்கா
'இல்லை’
G
ஏன்’
“காணி வாங்கக் காசில்லை’
‘நான் உழைச்சு உனக்குக் காணி வாங்கித் தாறன், என்னக்கா என்றான் அந்தச் சின்னப்பிள்ளையான கந்தசாமி.
உலகம் புரியாத அந்தச் சின்னஞ்சிறு பருவத்தில் அன்று சொன்ன வார்த்தைகளை அவன் இன்றும் நினைத்துப் பார்க்கிறான். இருபது ஆண்டுகளாக அந்த நிலத்தை சொந்தமாக வாங்க வேண்டு மென எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் எண்ணம்.?
கந்தசாமி பெருமூச்சு விட்டுக் கொண்டு தும்பளையை வந்து சேர்ந்தான்.
முதல் நாள் 'பனையடிப்பு வேலையை முடித்துக் கொண்டு வாச்சி, கோடரி முதலிய ஆயுதங்களை எல்லாம் ஒரு சாக்கில் வைத்துச் சுருட்டிக் கட்டி வேலை செய்த காணிக் கருகே குடியிருக்கும் பொன்னம்மா வீட்டில் வைத்துவிட்டுச் சென்றார்கள்.
அந்த வீட்டுப் படலைக்கு வந்து சயிக்கிளால் இறங்கி வீட்டுக் காரர் என்று அழைத்த வண்ணம் சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நடந்தான்.
அப்போது அவன் குரல் கேட்டு அடுக்களை வாசலில் தலை நீட்டி எட்டிப்பார்த்த தங்கத்தின் விழிகள், அவன் விழிகளை ஒரு கணம் சந்தித்துத் தடுமாறிப் பிரிந்தன.
崇
16

அது ஒரு கடற்கரைப் பிரதேசம், கடலிலிருந்து ஐம்பது மீற்றர் தூரத்தில் நீண்டு செல்லும் றோட்டுக்குத் தெற்கே வீதியோரத்திலிருந்து பரந்து கிடக்கின்றன, அந்தப் பகுதியில் மீன்பிடித்து வாழும் தொழிலாளர் களுடைய இல்லங்கள். அந்த இல்லங்களின் தெற்கு எல்லையில் தங்கத்தின் குடும்பம் இனசனங்களென்று சொல்வதற்கு யாருமில்லாத ஒரு தனிக்குடியாகவே இன்றும் இருந்து வருகிறது. அந்த மீனவ குடும்பங்களுக்கு மிக நெருக்கமாகத் தனக்கென்றொரு குடிசையைப் போட்டுக்கொண்டு தங்கத்தின் பாட்டனான பொன்னன் அதிற் குடியேறி அங்கு வாழ ஆரம்பித்து ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு மேலிருக்கும். பொன்னன் அங்கு வந்து குடியேறித் தன் வாழ்வைத் தொடங்கியது ஒரு தனிக்கதை.
அந்தக் கிராமத்திலிருந்து மேற்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரணவாயிற் பிறந்து தனது காளைப் பருவத்தையும் அவன் அங்கேயே கழித்தான்.
பொன்னன் அவன் பெற்றோருக்குத் தனிப்பிள்ளை என்பதால் அவர்களின் வசதிக்கு ஏற்றளவில் அவன் செளகரியங்களுடன் வளர்ந்தான். அவனோடு சேர்ந்து கட்டுக் கடங்காத துடுக்குத்தனமும் யாருக்கும் அடிபணிந்து போகாத நிமிர்ந்த சுபாவமும் சிறுபருவம் முதல் வளர்ந்து வந்தன.
வாலிபனான பொன்னனின் வைரம் பாய்ந்த உள்ளம் போலவே அவன் உடலும் உரம்பெற்று அழகுதேவதையின் அற்புத சிருஷ்டியாக அவன் விளங்கினான். அவனுடைய அகன்ற மார்பு சிரிக்கும் கண்கள்.
17

Page 14
பரம்பரை அகதிகள்
றோசா இதழ் போன்று சிவந்து தடித்த உதடு. சுருண்டு கறுத்த கேசம். சிவந்தமேனி. என்று ஒவ்வொரு அங்கமும் கொள்ளை அழகை அவனுக்குக் கொட்டிக் குவித்திருந்தன.
அவனுடைய தலையலங்காரம் அக்காலத்து நாகரிகத்தின் அதி உன்னதமான உச்சசிருஷ்டிப்பாகவே விளங்கியது. அவன் தனது அழகான முன் மயிரை காதுகள் இரண்டையும் தொட்டுக் கொண்டு நிற்கும் குறுக்குக் கோடாக வகிடெடுத்து முன்புறமாகச் சீவிவிட்டு, நடு நெற்றியிலிருந்து உச்சி பிரித்து அதை இரண்டாகக் கூறுபோட்டு எதிரெதிர்ப்பக்கமாக சளித்திழுத்து, அளவாகக் கத்தரித்து ஆட்டுக்கடா வின் கூரான கொம்புகள்போல முறுக்கிவிட்டுக்கொண்டு, பின் மயிரை வாரிப் பந்துபோல ஒரு குடுமி போட்டுக் கொள்ளும் அதன் அழகே ஒரு தனிக்கலைதான்.
அவனுடைய கூனற் பிறை நெற்றியில் எப்போதும் அழியாத ஒரு குங்குமப் பொட்டிருக்கும். தடித்துச் சிவந்த அவன் உதடுகள் வெற்றிலையை மென்று மென்று கொவ்வைப் பழங்களாகக் கனிந்து கிடக்கும்.
பொன்னன் தன் நெற்றியிற் சிறிய ஒரு குங்குமத் திலகம் இட்டுக் கொள்வது அவனுடைய தவறாத வழக்கம். அவனுக்கு இந்த வழக்கம் மந்திரவல்லியின் தொடர்பினாலேயே உண்டானது.
மந்திரவல்லி அந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, அயற்கிராமங்கள் எங்குமே அக்காலத்தில் நன்கு அறியப்பட்ட பிரபலமான ஒருவன். அவனுடைய பெயரைக் கேட்டாலே அவனைப்பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தவர்கள் உள்ளூர நடுங்குவார்கள். அவன் நிழல்தானும் தங்கள் மேற்பட்டுவிடக் கூடாதென்ற நினைப்புடன் அஞ்சி அஞ்சி ஒதுங்கிப் போய்க்கொண்டிருப்பார்கள். பேய் பிசாசுகளை ஏவி விடு வதுடன், பில்லி, சூனியம் ஒட்டுவதிலும் அக்காலத்திற் கைதேர்ந்த ஒரு மந்திரவாதி அவன்.
மந்திரவல்லியின் வீட்டில் இரவு வேளைகள் வந்து விட்டால் தினமும் உடுக்கையின் நாதம் ஒலிக்க ஆரம்பித்துவிடும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேயோட்டுவிப்பதற்காக

60ф600fшт60ї
வருகின்றவர்கள் எப்போதும் நான்கு ஐந்து பேராவது அவன் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார்கள்.
மந்திரவல்லியின் வீடும் அதன் சுற்றாடலும் காண்பவர்கள் மனத்திலே பயப் பிராந்தியையே எப்போதும் தோற்றுவிக்கும். அவனுடைய குடிசையைச் சுற்றிவர அடர்ந்து செறிந்த வேப்பமரங்கள் காடுகள் போல நிழல் பரப்பி நின்றன. அவற்றின் கீழே நெடிதுயர்ந்த மூவிலைச் சூலங்கள் நாட்டப்பட்டிருக்கும். அந்தச் சூலங்களின் அடியிற் கள்ப்பூரம் கொளுத்துவதற்கும், பூப்போடுவதற்கும் வசதியாக ஒவ்வோர் கற்கள் வைக்கப்பட்டிருக்கும். சூலங்களின் நுனியில் தேசிக்காய்கள் வரிசையாகக் குத்தப்பட்டிருக்கும். சில தினங்களில் இரவு பலிகொடுத்த சேவல்கள் இரத்தம் வடிந்து காய்ந்துபோன நிலையிலே காலையிற் சூலங்களின் மேல் விறைத்துக் கிடக்கும். திருநீறு, சந்தனம், குங்குமம் என்பன அந்த இடத்தில் எங்குமே இறைந்து கிடக்கும். பில்லி சூனியங்களுக்கு மந்திரித்துக்கட்டும் காவல் நூல்கள் சூலங்களின் மேல் போடப்பட்டிருக்கும். உச்சிப் பொழுதிலும் அந்தி இருள் அந்த வளவுக்குள் கவிந்து கிடக்கும்.
மந்திரவல்லி உடல் தோற்றத்தில் மெலிந்து கறுத்த குள்ளமான ஒருவன். இராக்காலங்களில் உறக்கமில்லாது விழித்திருந்து மாந்திரீகம் பார்ப்பதால் காய்ந்துபோன முகம், கருவிழிகளில் நீலம் பாரித்த குரூர மான பார்வை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை சந்தனத்திலகம், அதன்மேல் ஒழுங்கின்றி அப்பிக் கிடக்கும் அகன்ற குங்குமப் பொட்டும், காதுகளில் பூக்களுமாகவே எந்தச் சமயத்திலும் அவன் தோன்றுவான்.
அவன் ‘கரையாக்கன் வல்லி’ என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டான். அவன் கரையாக்கனில் ஒருவனுக்குச் சூனியம் செய்தானென்றால் அதனால் உண்டாகும் இரணத்துக்குச் சிகிச்சையே இல்லையென்று எல்லோரும் நம்பினார்கள். இன்னொரு மந்திரவாதி யினாலோ அல்லது எந்நவொரு வைத்தியரினாலோ அந்த இரணத்தைச் சுகப்படுத்த முடியாதென்றே முடிவாகக் கருதினார்கள்.
அவன் தன் வீட்டில் வைத்து ஆதரிக்கும் தெய்வங்களின் பெயர்களைக் கேட்டாலே பலருக்கு உள்ளம் நடுநடுங்கும். ஊத்தை
19

Page 15
பரம்பரை அகதிகள்
குடியன், உதிரமாகாளி, அகோரவயிரவன், அக்கினிவயிரவன், சொத்தி முனி, சுடலைமாடன், கரையாக்கன், பேச்சியம்மன், விறுமர் இத்தியாதித் தெய்வங்கள்தான் அவன் குடிசையைச் சூழவுள்ள மரங்களின் கீழ் கோயில் கொண்டுள்ளார்கள்.
மந்திரவல்லி உலகம் உறங்கும் வேளையில்தான் விழித்துக் கொண்டு நடமாடித்திரிகின்ற பேர்வழி, நடு இரவிலும் சில மைல்கள் நடந்து அயற்கிராமங்களுக்கு அவன் தனி வழி போய் வரவேண்டி இருந்தது. கிராமங்களுக்கூடே செல்லும் குச்சொழுங்கைகள், ஒற்றை யடிப்பாதைகள், மரஞ்செடிகள் அடர்ந்த தனிப்பாதைகள், குடிசன நெருக்கமில்லாத அந்தர வெளிகளெல்லாம் அவன் கடந்து போய் வரவேண்டி இருக்கும். இப்படியான பாதைகளில் இரவு வேளைகளில் தனி வழி போய் வருவதற்கு அவனுக்கு உற்ற துணையாக ஒருவன் தேவைப்பட்டான். அவன் தனது பாதுகாப்பை மனத்தில் கொண்டு பொன்னனைத் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டான். பொன்னனின் கம்பீரமான தோற்றமும் துணிச்சலும் சிலம்பாடுவதில் அவனுக்கிருந்த திறமையுமே மந்திரவல்லியை வெகுவாகக் கவர்ந்தன.
மந்திரவல்லி எந்தவொரு இரவு நேரத்தில் வெளியே செல்வதற்குப் புறப்பட்டாலும் பொன்னனின் துணை இல்லாமற் கிளம்ப மாட்டான். பேய் உறங்கும் நடுச்சாம வேளைகளில் மயானத்திலும் சமுத்திரக்கரையிலும் மந்திரவல்லிக்குப் பக்கத்தில் பொன்னன் துணையாக நின்று கொண்டிருப்பான். மயானத்திற் புதைத்த பிணங் களைப் புரட்டி எடுத்து வல்லி மாந்திரீகம் செய்யும் வேளைகளிற் கூடிச் சென்ற சிலர் மயக்கம் போட்டுக் கீழே விழுந்திருக்கிறார்கள். இப்படி யான சந்தர்ப்பங்களிலும் மனத்தில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாது பொன்னன் நடப்பவற்றைப் பார்த்து உறுதியுடன் சிரித்துக் கொண்டு நிற்பான். இரவு வேளைகளில் மந்திரவல்லியுடன் அவன் புறப்பட்டு விட்டானென்றால் அவனுடைய மடிக்குள் விரித்தபடி தயாராக எப்போதும் ஒர் வில்லுக்கத்தி இருந்து கொண்டிருக்கும்.
மந்திரவல்லி பொன்னன் மேற்கொண்ட அன்புக்கு தன் மனைவி மக்கள் மீது வைத்த அன்பு கூட ஈடாகாது. அவனைத் தன் உயிருக் குயிராக நேசித்தான். அவனைத் தன் வாரிசாக உருவாக்க வேண்டு
20

தெணியான்
மென்ற எண்ணமும் மந்திரவல்லியின் உள்ளத்தில் இரகசியமாக இருந்து வந்த ஒரு திட்டம். ஆனால் பொன்னன் மனம் அதில் அதிகம் ஈடுபாடு கொள்ளவில்லையாயினும், மந்திரவல்லிக்குத் துணையாகப் போய் வந்ததில் அவனும் சில மாந்திரீக முறைகளைக் கற்றுக் கொண்டான். அதனால் அவனைப் பூசாரி பொன்னன்’ என்றும் சிலர் அழைத்து வந்தார்கள்.
பொன்னன் நெற்றியில் எப்போதும் வைத்துக் கொள்ளும் குங்குமத் திலகம், மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட அபூர்வமான வசிய சக்தி உள்ளதாகவே எல்லோரும் கருதினார்கள். அந்தத் திலகத்தைப் பார்த்த மாத்திரத்தே எந்தவொரு பெண்ணும் அவனுக்கு வசியமாகி அவன் பின்னால் போய்விடுவாள் என்ற விதமான ஒரு கதை எங்கும் பரவி இருந்தது.
பொன்னன் அவன் தந்தையைப் போல மரமேறுமீ தொழிலையே தன் ஜீவனோபாயத்தின் பொருட்டு அக்காலத்திற் செய்து வந்தான். நிலபுலமுள்ள குடும்பங்கள் தங்களுக்குச் சொந்தமான பனை மரங்களில் ஏறி கள்ளுக் கருப்பநீர் இறக்குவதற்கும், ஏனைய பிரயோசனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பொன்னன் போன்றவர்களின் குடும்பங்களைத் தமக்குக் கீழ்ப் பத்தாள்மைக்காரர்களாக வைத்துக் கொள்வது வழக்கம்.
பொன்னனுடைய குடும்பந்தான் தங்கப் பொன்னு குடும்பத்தின் பரம்பரையான பத்தாள்மைக்காரர். தங்கப் பொன்னுவின் குடும்பத்துக்குச் சொந்தமான காணி, பூமிகளுக்கு வேலி, வாசல் அடைத்துப் பாது காப்பது, தோட்டந் துரவுகளில் வேலை செய்வது, பனை மரங்களயில் ஏறி ஒலை வெட்டுவது, கள்ளுக் கருப்பநீர் இறக்குவது, ஆடு, மாடுகளுக்கு உணவு தேடுவது, பனங்கொட்டைகளைப் பரப்பிப் பாத்தி போடுவது, கிழங்கு முற்றிய பின் நிலத்திலிருந்து கிண்டிக் கொடுப்பது போன்ற தொண்டுகள் அவர்களுக்குரியவை. தங்கப் பொன்னு குடும்பத் தில் இடம்பெறும் நன்மை தீமைகளின் போதும் அவர்களுக்கென்று பாரம்பரியமான சில பிரத்தியேகக் கடமைகள் உண்டு.
பொன்னன் அவன் தந்தையின் பின்னர் தங்கப் பொன்னு குடும்பத் தின் பத்தாள்மையைக் கவனித்து வந்தான். அந்தக் குடும்பத்துக்குச்
- - 21

Page 16
பரம்பரை அகதிகள்
சொந்தமான பனைமரங்களிலிருந்து பதநீர் இறக்கிக் கொடுக்கும் தொண்டைப் பொன்னன் செய்து வந்ததால் தினமும் காலையிலும், மாலையிலும் அந்த வீட்டுக்குப் போய் வந்தான்.
பங்குனியின் சுட்டெரிக்கும் வெயிற்கொடுமையால் தண்ணிர்த் தாகம் வந்தபோதெல்லாம் தண்ணீர் பருகுவதற்கு அவன் அங்கு போவது வழக்கம். அப்போது பெரும்பாலும் தங்கப்பொன்னுவே அவனுக்குத் தண்ணீர் வார்த்து வந்தாள். அவன் கைகள் இரண்டையும் சேர்த்து கோலி, வாய்க்கருகே பிடித்த வண்ணம் தலை குனிந்து நிற்பான். அவள் செம்பிலே நீரை எடுத்து வந்து கோலிப் பிடித்த அவன் கைகளிலே ஊத்தி விடுவாள் அவன் மடமடவென்று தண்ணிரைப் பருகிவிட்டு களைதீர முகத்தையும் ஒரு தடவை கழுவிக் கொண்டு போய்விடுவான்.
காலஞ்செல்லச் செல்ல வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயங்களில், அவன் கையில் தண்ணீர்ச் செம்பைக் கொடுத்து விட்டு அவன் தண்ணீர் குடிக்கும் வரை தங்கப்பொன்னு அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நிற்பாள். சில சமயங்களில் தண்ணீர் கேட்டுப் போகும் அவனுக்கு தண்ணீரிற் சர்க்கரையைக் கரைத்து அதில் தேசிக்காயையும் பிழிந்துவிட்டு குடிக்கக் கொடுப்பாள்.
தங்கப்பொன்னு தன்னை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனத்தை அவனிடம் பறிகொடுத்தாள். காலையிலும் மாலையிலும் தினமும் அவன் வருகையை எதிர்பார்த்து அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது. பொன்னன் மேல் ஆரம்பத்தில் அவளுக்குண்டான சாதாரண ஈடுபாடு, பின்னர் பிரிக்கமுடியாத அன்பாக பரிணமித்து அவனில்லாது இனிமேல் தனக்கொரு வாழ்வில்லை என்ற முடிவுக்கு அவளைக் கொண்டு வந்து விட்டது.
பொன்னனும் அவள் இப்படியான ஒரு முடிவுக்கு வருவா ளென்று ஆரம்பத்தில் அவன் எண்ணி இருக்கவில்லை.
சிறிது காலம் அவன் மனத்தினுள்ளே தீர்வுகாண இயலாத ஒரே போராட்டம்.
22 - -

தெணியான்
இறுதியில் பொன்னன் மந்திரவல்லியிடமே தங்கள் உறவை வெளியிட்டு அவன் ஆலோசனையைச் சொல்லுமாறு கேட்டான்.
மந்திரவல்லி அவர்களிருவருக்குமிடையே உருவாகி இருக்கும் உறவை அறிந்தபோது உள்ளம் அதிர்ந்து போனான்.
'தம்பி பொன்னு நீ என்ன சொல்லுகிறாய்! உயிரோடை இருக்க விடமாட்டான்கள், உயிரோடை நெருப்பு வைச்சுக் கொளுத்துற இரணியச்சாதி”
அவள் என்ன சொன்னாலும் கேக்கிறாளில்லை. என்னோடை வாறனெண்டு நிக்கிறாள்'
"இளங்கண்டு பயமறியாதெண்டு சொல்லுவினம். நீயும் கருப் பணியை ஏறிக்கொடுத்து நல்லா இனிப்புக் காட்டிப் போட்டாயாக்கும். சரி. நீ அவளை எடு
மந்திரவல்லியின் துணையோடு பொன்னன் தங்கப்பொன்னு வைத் தூக்கிக் கொண்டு அந்த ஊரைவிட்டே கிளம்பி விட்டான்.
அவன் தனக்கும் அவளுக்கும் பாதுகாப்பான ஒரு இடம் தேடி உற்றார் உறவினர் யாருமில்லாத தனிக்குடும்பமாகவே அங்கு வந்து குடியேறினான்.
23

Page 17
வானத்திற் கருமுகில்கள் ஒன்று திரண்டு மேகம் கறுத்து மழை தூற ஆரம்பித்தது.
கந்தசாமி பொன்னம்மா வீட்டுத் தாழ்வாரத்தில் ஒதுங்கி இருந்து தலையைத் தாழ்த்தி வெளியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தூறல் நிற்பதாக இல்லை. தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. அங்கே சும்மா குந்திக் கொண்டிருப்பதிலும் பார்க்கத் தொழிலு க்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வோம் என்று அவன் நினைத்துக் கொண்டு அணியப்பையை எடுத்து அதைச் சுற்றிக் கட்டி இருக்கும் கயிற்றையும் அவிழ்த்தெடுத்தான். வாச்சிகளை வெளியே எடுத்து வைத்துக் கொண்டு அழுத்தமாகச் சீவிய வைரித்த பனைக்குற்றி ஒன்றிலே காய்ந்த வெள்ளை மணலைப் பரப்பி அதன் மேல் வாச்சி யைத் தீட்ட ஆரம்பித்தான். தூறல் கனத்து மழையாகப் பொழியத் தொடங்கியது. அவன் வாச்சிகளை ஒவ்வொன்றாகத் தீட்டி முடித்தான். மழை ஒய்வதாக இல்லை.
கரணவாயிலிருந்து வயிரவிக்கிழவனும் மற்றத் தொழிலாளர் களும் தொழிலுக்கின்று வருவார்களோ என்ற சந்தேகம் அவன் மனத்திற் பிறக்கின்றது.
அதே சமயம் பெண்கள் மாத்திரமுள்ள அந்த வீட்டில் தான்
ஒருவன் அங்கு குந்திக் கொண்டிருப்பது அவன் மனத்துக்குச் சங்கடமாகத் தோன்றுகிறது.
24

தெணியான்
அந்தக் குடும்பத்தோடு அவனுக்கு உண்டான உறவு கடந்த பதினைந்து நாட்களுக்குள் வந்ததுதான்.
அந்த வீட்டுக்கு அருகேயுள்ள பனங்காணிக்குள் நிற்கும் பனைகளைத் தறித்து விழுத்தி ஆப்பு வைத்து அடித்துப் பிளந்து வாச்சியினால் வீட்டுக் கூரைக்கேற்ற மரங்களாகச் சீவி எடுக்கும் வேலைகள் ஆரம்பித்த முதல் நாள் அவர்களின் தொழிற்கூட்டுத் தலைவனான வயிரவிக்கிழவன் அங்கு வந்து சேருவதற்குப் பத்து மணிக்கு மேலாகிவிட்டது.
வேலை செய்யும் தொழிலாளர்கள் காலை உணவாக அருகில் உள்ள கடையில் பாண் வாங்கி தேநீர் தயாரித்து அதனுடன் பருகுவது தான் வழக்கம். வேலை செய்யுமிடங்களுக்கு அருகே குடியிருக்கும் வீடுகளிலொன்றில் யாரிடமாவது சீனி, தேயிலை என்பவற்றை வாங்கிக் கொடுத்துத் தேநீரைத் தயாரித்துக் கொள்வார்கள். வயிரவிக் கிழவனுக்கு அந்தப் பகுதியில் எங்கும் அறிமுகமுண்டு. அதனால் தொழிலாளர் தமக்கு வேண்டிய தேநீரைப் பெறுவதில் அவர்களுக்கு எந்தவிதச் சிரமமும் இருப்பதில்லை.
அன்று வயிரவிக் கிழவன் அங்கு வந்து சேர்ந்தபோது வேலை செய்து கொண்டு நின்ற தொழிலாளர்கள் பத்துப்பேருமே நன்றாகக் களைத்துப் போய் நின்றார்கள். பாணோடு சீனி, தேயிலையையும் வாங்கி வைத்துக் கொண்டு தேநீர் தயாரிப்பதற்கு மார்க்கமின்றிக் குழம்பிக் கொண்டு நின்றார்கள்.
வயிரவிக் கிழவன் அங்கு வந்து சேர்ந்ததும் முதற்கேள்வியாக மக்கள் தேத்தண்ணி குடிச்சிட்டியளோ' என்றுதான் கேட்டார்.
‘எங்கையப்பு தேத்தண்ணி வைக்கிறது' என்றான் கந்தசாமி.
இதென்ன கேள்வி இந்த வீடு எங்கடை வீடெல்லே! என்ரை சொந்தக்காரர் என்று அருகேயுள்ள பொன்னம்மா வீட்டைக் காட்டிச் சொன்னார் வயிரவிக் கிழவன்.
தனிக்குடியாக இருக்குதுகள்.
25

Page 18
பரம்பரை அகதிகள்
‘ஓமோம். தனிக்குடிதான். வேறையொருத்தரும் இஞ்சை இல்லை' என்று சுருக்கமாகக் கூறினார் வயிரவிக்கிழவன்.
அன்றுமுதல் அந்தக்குடும்பத்துடன் கந்தசாமிக்கு உண்டான பழக்கந்தான்.
மழை முற்றத்தில் வெள்ளம் போட்டு வேலியை இடித்து வீதியால் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
அவன் அங்கிருந்து உடனே கிளம்பி, வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று விரும்பினான்.
அப்போது தங்கம் அடுக்களைக்குள்ளிருந்து தாய் பொன்னம்மா வுக்குக் குரல் கொடுத்தாள்.
பொன்னம்மா சுளகொன்றைத் தலைக்குப் பிடித்துக் கொண்டு அடுக்களைக் கொட்டிலுக்குள் நுழைந்தவள் ஒரு 'கிளாசில் தேநீரை எடுத்து வந்து அவன் அருகே வைத்து விட்டு ‘குடியுங்கோ தம்பி’ என்றாள்.
அவர்களுடைய இந்த உபசாரத்தைச் சிறிதும் எதிர்பார்க்காத கந்தசாமி திடீர்ச் சங்கடத்துக்குள்ளானான்.
அவன் தேநீரை எடுத்துப் பருகுவதற்குத் தயங்குவதை அவதானித்த இளையமகள் தங்கமணி 'எடுத்துக் குடியுங்கோ’ என்று மீண்டும் வற்புறுத்தினாள்.
அவன் மறுபேச்சின்றி தேநீரைக் கையில் எடுத்துக் கொண்டான்.
பொன்னம்மாவும் தங்கமணியும் சரளமாகத் தயக்கமில்லாது பேசிக்கொள்வது போல தங்கம் அவனுடன் இதுவரை ஒரு வார்த்தை தானும் பேசிக்கொண்டதில்லை. ஆனால் இவளுடைய ஆழ்ந்த மெளனமும், ஏக்கம் நிறைந்த இரகசியப் பார்வையும் எதை எதையோ எல்லாம் அவனுக்குச் சொல்லாமல் சொல்லிக்கொண்டன. அவன் இதுவரை எக்காலத்திலுமில்லாத ஒரு மனச்சலனம் தன் உள்ளத்திலும் தலை தூக்குவதை உணர்ந்து கொண்டான். அடுக்களைக்குள்ளே
26

தெணியான்
இருக்கும் தங்கத்தின் பக்கமாகவே தன்னை அறியாமலே தன் பார்வை இடையிடையே திரும்புவதையும் மனத்தில் நினைத்துக் கொண்டான்.
இனிமேலும் தொடர்ந்து அங்கே இருக்கக்கூடாது என்பதை மனத்துள் எண்ணிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுவதற்கு அவன் தயாரானான். மழை சற்று ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தது.
'தம்பி மழையிலை நனைஞ்சு கொண்டு போகப்போறியளே’ பொன்னம்மா அவனைத் தடுத்தாள்.
'இல்லை நான் அவசரமாகப் போகவேண்டியிருக்கு சொல்லிக் கொண்டு கந்தசாமி சயிக்கிளை உருட்டிய வண்ணம் வெளியே வந்தான். அவன் வீடு வந்து சேரும்போது சொட்டச் சொட்ட முற்றாக நனைந்து போயிருந்தான். சயிக்கிளைக் குடிசையின் தாழ்வாரத்துக்குள்ளே நிறுத்திவிட்டு, குடிசைக்குள் அவன் நுழையும்போது அடுக்களை வாசலுக்குள் தலைகுனிந்து குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த சின்னக்குஞ்சி அவனைக் கண்டு கொண்டு விட்டாள்.
“கொஞ்சநேரம் எங்கினையாவது ஒதுங்கி நிண்டுவிட்டு வந்தாலென்ன குழந்தைப் பிள்ளையஸ் போல நனைஞ்சுகொண்டு வாறாய்' என்றாள் அவள்.
அவன் வாய் திறக்கவில்லை. தலையையும் உடலையும் துடைத்து விட்டுக்கொண்டு, கட்டிக்கொண்டிருந்த ஈரஉடையையும் மாற்றிக் கொண்டான்.
சின்னக்குஞ்சியின் கணவன் இராசன் அந்தக்குடிசையின் ஒரு மூலையிற் போர்த்து மூடிக்கொண்டு குறண்டிக் கிடந்தான். அவனுக்கு வானம் இருண்டாலே தொய்வு நோயினால் மூச்சிழுக்க ஆரம்பித்து விடும். கடைக்குட்டிக்கு மூத்த குழந்தைகள் இருவர் குடிசைக்குள் விரித்த பாயிலே களைத்துச் சோர்ந்து போய்க்கிடக்கிறார்கள். மூத்தவர் கள் மூவரும் வீட்டுக்கூரையால் வடிந்து கொண்டிருக்கும் மழை நீரைத் தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று ஏந்துவதும், முற்றத்திலே பாய்ந்து கொண்டிருக்கும் வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு விளையாடுவது மாகப் பொழுது போக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
27

Page 19
பரம்பரை அகதிகள்
இதுவரையில் இன்று அங்கே அடுப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை.
பூமிக்கும் புலவர்களுக்குந்தான் மார்கழி சிறந்த மாதம். எங்களைப் போலை ஏழை எளியவர்களுக்குப் பீடை பிடிச்ச மாதம். இண்டைக்கு வேலை செய்திருந்தால் கையிலை காசு கிடைச்சிருக்கும், இப்பென்ன செய்யிறது. இந்தக்குழந்தை குட்டியெல்லோ பட்டினிகிடக்கப்போகுதுகள் என்று எண்ணி மனம் உளைந்தான்.
‘ஆரிட்டைப் போறது.? ஆரிப்ப கடன் தரப்போகினம்.
அவன் தன் மனதுக்குள் வந்த ஒவ்வொரு முகத்தையும் நினை த்துப் பார்த்தான்.
அந்த இடத்தில் குடியிருக்கும் அவனுடைய இனத்தவர்கள் யாரிடமும் கடன் கேட்க முடியாதென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும். அவர்கள் வீடுகளிலும் இன்று அடுப்பெரியாதென்பதை அவன் அறியாதவனா?
“வேறை ஆரிட்டைப் போறது. என்று மனம் குழம்பிக்கொண்டே அவன் இறுதியில் சந்தியிலுள்ள கடைக்காரனிடமே போவோமென்று தீர்மானித்துக் கொண்டு முற்றத்துக்கு வந்தான்.
“இப்பத்தானே மழையிலை நனைஞ்சுகொண்டு வந்தனி பிறகெங்கே போறாய்' என்று சின்னக்குஞ்சி அவனைத் தடுத்தாள்.
‘நான் ஒருக்கால் சந்திக்குப் போவிட்டு வாறன்’ சொல்லிக் கொண்டு அவள் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவன் நடந்தான்.
வானம் சற்று அடைத்து நீர்ச்சிதறல்கள் பன்னீர்த்துளிகளாக விழுந்து கொண்டிருந்தன.
நீ கூடப்பிறந்த பாவத்துக்காக எல்லாச் சுமையையும் சுமக்கிறாய். எப்பதான் உனக்கிந்தச் சுமை இறங்கப் போகுதோ!
சின்னக்குஞ்சி மனம் நொந்து சொல்லிக் கொண்ட இந்த வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கும் அவன் செவிகளிலும் விழுந்தன.
28

மார்கழி மறைந்து தையும் பிறந்தது.
தோட்ட நிலங்களைக் கொத்திப் பண்படுத்தும் வேலைகள் மும்முரமாக நடைபெற்றன.
கந்தசாமிக்குத் தினமும் தோட்டங்களில் வேலைகள் இருந்து வந்ததன.
வயிரவிக் கிழவன் ஒரு நாள் அதிகாலை வேளையிற் கந்தசாமி யைத் தேடிக்கொண்டு அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய ‘பனைஅடிப்பு வேலை கள் இருந்தால் அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு இப்படிச் சில சமயங்களில் அவர் அங்கு வருவதுண்டு. இன்றும் அதற் காகத்தான் அவர் அங்கே வந்திருக்க வேண்டுமென்று கந்தசாமி முதலிற் கருதினான்.
'தம்பி வா உப்பிடிப் போய் விட்டு வருவம்’ என்று அவனை அழைத்துக் கொண்டு வயிரவிக் கிழவன் வெளியே நடந்த போதுதான் அவர் வேறு ஏதோ ஒரு நோக்கத்துடன் தான் தன்னைத் தேடிக் கொண்டு இன்று வந்திருக்கிறாரென்பதை அவன் உணர்ந்து கொண்டான். வயிரவிக் கிழவன் ஒழுங்கைக்கு வந்து மெல்ல நடந்த வண்ணம் மெதுவாகக் கதை கொடுத்தார்.
“கந்தசாமி, நேத்துப் பொன்னம்மா வந்து என்னைக் கண்டிட்டுப் போகுது'
29

Page 20
பரம்பரை அகதிகள்
“எந்தப் பொன்னம்மா?’ என்று கேட்டான் கந்தசாமி.
‘என்ன கதை தம்பி தெரியாதது மாதிரிக் கேக்கிறாய், தும்பளையிற் பொன்னம்மா"
கந்தசாமிக்கு அவன் மனத்திலிருந்த ஊகம் சரியாகவே பட்டது. ஆனால் எதற்காக இந்தப் பீடிகை போடுகிறார் என்பதுதான் அவனுக் குத் தெளிவாக இல்லை. பொன்னம்மாவின் குடும்பம் பற்றிச் சில நாட்களாக தன் மனத்திலிருந்து வரும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டு மெனும் நோக்கத்துடன் அவன் பேசினான்.
"அப்பு அவ பொன்னம்மாவின் தகப்பனும், தாயும் நீண்ட காலம் ஒன்டாக இருந்தவையே. அல்லது.
தாய் தங்கப் பொன்னுவைப் பொன்னண்ணன் துாக்கிக் கொண்டு பேர்ய் இரண்டு வரியந்தான். அவ அவரோடை சீவிச்சவ'
அதுக்குப் பிறகு. ‘ஒரு நாள் இரவு பொன்னண்ணன் வெளியிலை எங்கையோ போயிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பாக்க, அவ செத்துப் போய்க் கிடந்தா, அப்ப பொன்னம்மாவுக்கு ஒரு வயசு
‘எப்பிடிச் செத்தவ?’ அது ஒருவருக்கும் தெரியாது. என்ன நடந்ததெண்டு அவர் எவ்வளவு காலம் இருந்தவர்?’
அவர் போன வரியந்தானே செத்தவர். பெண்சாதி செத்தாப்பிறகு அவர் வேற கலியாணமே செய்யேல்லை. மேளைக் கிளி போலை வளர்த்து கடைசியிலை குரங்கின்ரை கையிலை குடுத்திட்டார்.
ஏன்? 'மருமோன் முறையான ஒருத்தனைச் சொந்தமெண்டு நினைச்சு பொன்னம்மாவுக்குக் கட்டிக் குடுத்தார். அவன் ஒரு ஊதாரி, குடிகாரன், ஒரு மாசம் ஒற்றுமையாக இருப்பான், ஆறு மாசம் கோவிச்சுக் கொண்டு — 30 —

தெணியான்
போய் விடுவான். இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்ததுதான் அவன் இம்மை மறுமை தெரியாமல் குடிச்சு கடைசியாகச் செத்துப் போனான்.
'அதுகள் எப்பிடி அப்பு சீவிக்குதுகள்? ‘பொன்னம்மா ஊருக்குள்ளை அரிசியை மாவை இடிச்சுக் குடுத்து ஒரு மாதிரி வயிறு கழுவுதுகள்
'பாவம்.”
‘பாவந்தான் தம்பி, அதுதான் நீ என்ன சொல்லுறாய்? ‘என்னத்தைப் பற்றிக் கேக்கிறியள்’
'இல்லை. பொன்னம்மாவின்ரை அந்த மூத்த பொடிச்சி தங்கத்தை உனக்கு.
"அப்பு, நான் கலியாணம் செய்யிறதெண்டால் எப்பவோ செய்திருப்பன்.என்னோட்டை வயதுள்ளவன்கள் இப்ப நாலைஞ்சு பிள்ளை குட்டியளோடை இருக்கிறான்கள்’
‘அதுதான் சொல்லுறன் தம்பி, இனிமேலும் நீ கடத்தக் கூடாது. கலியாணத்துக்கு ஒரு காலம், நேரம் இருக்கு கண்டியோ'
"அப்பு அக்காளும் பிள்ளையஞம் படுகிற கஷ்டம் தீர வேணும். நான் அதுகளுக்காகத்தான் இருக்கிறன்’
'தம்பி கந்தசாமி, நீ படிச்ச பிள்ளை எண்டாலும் நான் என்ரை அனுபவத்திலை சொல்லுறன். எங்களைப் போல இட்டிடைஞ்சல் உள்ளதுகள் உப்பிடி நினைச்சால் ஒண்டும் நடவாது. அலை ஒயவும் மாட்டுது. தலை தோயவும் மாட்டம். எல்லாம் எங்களுக்குரியது எண்டு நினைச்சுக் கொண்டு அதை, அதை அந்தந்த நேரத்திலை செய்ய வேண்டியதுதான்’
"இப்பவுள்ள கரைச்சலோடை பிறகும் அப்பு.’
31

Page 21
பரம்பரை அகதிகள்
‘எப்ப இந்தக் கரைச்சல் தீருமெடா தம்பி. அதுகளும் பாவம். அணிசாரில்லாததுகள். அதுகளை நினைச்சு நடந்தால் ஆண்டவன் உன்னை ஒரு காலமும் கைவிட மாட்டான். நீ ஒரு மறுப்பும் சொல்லாதை. நானொருக்கால் கொக்காளோடை கதைக்கிறன்.
அவனுக்குச் சொல்லிக் கொண்டு வயிரவிக் கிழவன் வந்த பாதையில் திரும்பி நடந்தார்.
சின்னக்குஞ்சி அப்பொழுதுதான் படுக்கையிலிருந்து எழும்பி கால், முகம் கழுவி அடுக்களைக் கொட்டிலுக்குள் தேநீருக்காக அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள்.
வயிரவிக் கிழவன் அங்கே வந்திருப்பதைக் கண்டதும் அவள் வெளியே வந்து வீட்டு ஒத்தாப்புத் திண்ணையில் பாய் ஒன்றை எடுத்து விரித்து விட்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வந்து அவர் முன்னே வைத்தாள்.
“கந்தசாமியைக் காணயில்லை அப்பு. அவன் விடியுது விடியு தெண்ண எழும்பிக் கொண்டு பேசாமல் பறையாமல் வெளிக்கிட்டிடு
வான்’
‘நான் உன்னட்டைத்தான் வந்தனான்ரி பிள்ளை. எங்கை உன்ரை புரியன்?’
அது பொங்கை கிடக்குது. இன்னும் எழும்பயில்லை’
'ஒ. அவன் பொடியனுக்கும் இந்த நோய் தீர்ந்தபாடில்லை. ஹoம் என்ன செய்யிறது! அதுசரி நீ கந்தசாமிக்கு ஒரு சடங்கைக் கிடங்கைச் செய்து வைக்கிற யோசனை இல்லையேடி பிள்ளை உன்னையெல்லே ஊருலகம் பழி சொல்லப் போகுது'
"நான் என்னப்பு செய்ய அவனெல்லோ வேண்டாம் எண்டு நிக்கிறான்.
'அவன் சொன்னாப்போலை விட்டு விடுகிறதே?’
32

தெணியான்
“எத்தினை இடத்தாலை வந்து கேட்டதுகள். அவன் ஒண்டுக்கும் சம்மதிக்கிறானில்லை’
'அவன்ரை கதை கிடக்கட்டும். நீ இப்ப என்ன சொல்லுறாய்?
‘அப்பு என்ன கேக்கிறியள்?’
‘நான் அவனுக்கொரு சம்பந்தம் பேசி வந்திருக்கிறன்
முதலிலை அவன் ஒமெண்ட வேணும் ‘நான் கந்தசாமியிட்டைச் சம்மதம் கேட்டுப் போட்டுத்தான் உன்னட்டை வாறன்’
'உண்மையாவே அப்பு?
'உண்மைதான்! நானென்ன பொய்யே சொல்லுறன்?’
“எனக்கு நல்ல விருப்பம் அப்பு, எந்த இடம்?"
வயிரவிக் கிழவன் முழு விபரங்களையம் அவளுக்கு எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன எல்லாத் தகவல்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவள் முகம் கொஞ்சம், கொஞ்சமாகக் கறுத்துக் கொண்டு வந்தது. அவள் முகத்தில் உண்டான மாற்றங்களைக் கூர்மையாகக் கவனித்த வயிரவிக் கிழவன் அவளிடம் மெல்லக் கேட்டார்.
‘என்ன பிள்ளை பேசாமல் இருக்கிறாய்
'இல்லை அப்பு.’
‘மனதிலை ஒண்டையும் ஒழியாமல் சொல்லு'
‘அதுகள் ஒரு அணிசாரில்லாததுகள் போல கிடக்கு. அதுக் கிள்ளை கொண்டு போய் இவனைத் தள்ளிறது.
“எடி பிள்ளை கோச்சி கொப்பு செத்துப் போக நீயும் அப்பிடித் தானே இருந்தனி உன்ரை புரியன் உதை நினைச்சிருந்தால் உன்னைக் கட்டியிருப்பானே?
33

Page 22
பரம்பரை அகதிகள்
“வேறை ஒண்டும் வேண்டாம் அப்பு. குடியிருக்கிறதுக்குச் சொந்த மான ஒரு குளி நிலமெண்டாலுமுள்ள ஒரு பொம்பிளையைத்தான் அவனுக்குக் கட்டிக் குடுக்க வேணும். அது அவனுக்கு நெடுகிலும் ஒரு விசர் மாதிரி. ஆற்றையும் நிலத்திலை குடியிருக்கிறமெண்டு’
'பிள்ளை எங்கடை ஆக்கள் எத்தினை பேரிட்டையெடி குடி யிருக்கிறதுக்குச் சொந்தமாக நிலங் கிடக்கு? கந்தசாமி நல்ல பிரயாசி. அவன் உழைச்சு வாங்கட்டன். அதோடை தனக்குக் கலியாணம் வேண்டாமெண்டு நிண்டவன் இப்ப ஒரு மாதிரிச் சம்மதிச்சிட்டான். பொடிச்சியும் தங்கமானவள். பேரும் தங்கம்தான். இவனுக்கும் அவளிலை ஒரு கண் விழுந்திட்டிது. அதிதெண்டு கதைச்சுக் குழப்பிக் கிளப்பிப் போடாதை
இருங்கோ வாறனப்பு.
'திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவள் போல் எழுந்து சென்ற சின்னக்குஞ்சி அடுக்களைக்குள்ளே நுழைந்து தேநீர் தயாரித்து ஒரு குண்டுக் கோப்பையில் எடுத்துக் கொண்டு வந்து அவர் முன்னே வைத்தாள்.
வயிரவிக் கிழவன் அவள் கொண்டு வந்து வைத்த தேநீரை குறிப்பாக ஒரு தடவை பார்த்து விட்டுச் சற்று நேரம் எதுவும் பேசாமல் மெளனித்திருந்தார். அவருடைய இந்த மெளனத்தைக் கண்டு ஒண்டும் விளங்காத சின்னக்குஞ்சி அவரைப் பார்த்து ‘அப்பு தேத்தண்ணியைக் குடியுங்கோவன்’ என்று சொன்னாள்.
அவர் தேநீரை மீண்டும் ஒரு தடவை குறிப்பாக நோக்கிக் கொண்டு தலையைத் துாக்கி அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தார்.
‘அப்பு என்ன பாக்கிறியள்’ எண்றாள் அவள்.
“தேத்தண்ணியைக் குடிக்கட்டோ பிள்ளை?
‘சரி குடியுங்கோ அப்பு' என்றாள், மின்னல் தெறித்தது போல ஒரு கணத்தில் தனக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்ட அவள்.
34

தெணியான்
அவர் சிரித்துக் கொண்டே தேநீரை எடுத்துப் பருகினார். வெற்றிலையையும் போட்டுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்படு கின்ற சமயம் கந்தசாமி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் சின்னக்குஞ்சியின் கண்கள் மகிழ்ச்சியால் அகலத் திறந்தன.
35

Page 23
கந்தசாமி - தங்கம் திருமணம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. அவன் தும்பளையில் மனைவியின் வீட்டிலேயே தங்கி இருந்தான்.
தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகச் சின்னக் குஞ்சி வீடு வந்து சேர்ந்து அங்கிருந்தே தொழிலுக்குப் புறப்பட்டுச் செல்வது அவன் வழக்கம். தொழில் முடிந்து மாலையில் தன் வீட்டுக்குப் போவதற்கு முன்பும் அவன் நேரே சின்னக்குஞ்சி வீடு வந்து சேருவான். அன்று செய்த வேலைக்குத்தான் பெற்ற கூலியில் ஒரு பகுதியை சின்னக்குஞ்சியின் பிள்ளைகள் கையில் ஒப்படைத்து விட்டே அங்கிருந்து தும்பளைக்குப் போவான். அவன் திருமணமாகி ஒரு குடும்பத்துக்குப் போன பிறகும், தன் உழைப்பில் ஒரு பகுதியைத் தங்களிடம் கொண்டு வந்து தருவதைச் சின்னக்குஞ்சி ஏற்க மறுத்தாள். அவன் அவளுடைய மறுப்பைப் பொருட்படுத்தாது சின்னக்குஞ்சியின் பிள்ளைகளிடம் பணத்தைக் கொடுத்து வந்தான்.
அவன் தன் திருமணம் நடந்து முடிந்த மறுநாளே தான் செய்யும் கூலித் தொழிலுக்குப் புறப்பட்டுப் போகத் தயாரான போது தங்கம் அவனைத் தடுத்தாள்.
‘என்ன இது நீங்கள் செய்யிற வேலை?”
‘ஒரு நாள் உழைக்காவிட்டாலும் நாங்கள் பட்டினி கிடக்க வேண்டியதுதான்’
அதுக்காக. நேத்துக் கலியாணம் நடக்குது.
"இண்டைக்கு வேலைக்கு வெளிக்கிட்டிட்டன் எண்டு சொல்லுறா யாக்கும். கலியாணம் பண்ணுறது சும்மா இருந்து தின்னுறதுக்கல்ல − 36

தெணியான்
‘எவ்வளவு முட்டுப்பட்ட குடும்பமெண்டாலும் ஒரு மாதமேனும் மாப்பிள்ளைச் சாப்பாடு குடுக்காமல் விடாதுகள்’
தங்கம் கொம்மா எங்களுக்குச் சாப்பாடு தரமாட்டா எண்டு சொல்லயில்லை. இப்ப கொம்மாவையும் உன்ர தங்கச்சியையும் பார்க்க வேண்டியதும் எங்கடை கடமை
'சரி நாலாஞ் சடங்கு முடிஞ்சாப் போலையாவது தொழிலுக்குப் போங்கோவன்’
'நாலு நாளைக்கு என்னைச் சும்மா இருந்து தின்னச் சொல்லுறாய்
திருமணம் நடந்து முடிந்த நான்காம் நாளும் வந்து சேர்ந்தது. திருமணத்தன்று முதல் விரத உணவை உண்டு கொண்டிருந்த அவனும் தங்கமும் அன்று தலைமுழுகி, பொன்னம்மா ஆக்கிக் கொடுத்த கோழிக்கறியை உண்டு சம்பிரதாய பூர்வமாக நாலாஞ் சடங்கையும் முடித்துக் கொண்டார்கள். கந்தசாமி மறுநாளே வேலைக்குப் புறப் பட்டவன்தான் அவன் வாழ்க்கை உழைப்பும் புது மனைவியுமாக சில நாட்கள் மகிழ்ச்சியுடன் கழிந்து கொண்டிருந்தது.
அவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் அவனுக்கிருந்து வந்தது போன்ற மகிழ்ச்சியை அவன் மனைவி தங்கம் உள்ளீடாக அனுபவிக்க முடியவில்லை. அவள் தன் மனத்தின் அடியில் கிடந்து அவளைப் போட்டு அரித்துக் கொண்டிருந்த பிரச்சினையை அவனிடம் சொல்லிவிட வேண்டுமென்று பல தடவைகள் உன்னியதுண்டு. ஆனால் எப்படிச் சொல்வது என்று அறியாமல் எண்ணி எண்ணி அவள் ஏங்கினாள். இந்தக் குடும்பத்தில் ஒருவனாக அவன் வந்தது வரு முன்னரே இப்படியொரு பெரிய பாரத்தை அவன் தலையில் எப்படிச் சுமத்துவது என்றே அவள் தயங்கினாள்.
அவனுக்கு அதைச் சொல்வது தவிர வேறு மார்க்கமில்லை யென்ற நிலையில் அவனிடம் மனக் குழப்பத்தோடு வாய் திறந்தாள்.
'இந்தக் காணிக்காரன் இண்டைக்கும் வந்திட்டுப் போறார்.
‘என்னவாம்?
'காணியை விடட்டாம் தங்களுக்கு வேணுமாம்’
37

Page 24
பரம்பரை அகதிகள்
இப்பதான் வந்து கேக்கிறாரோ அல்லது.”
"அப்பு இருக்கேக்கையும் சொன்னவர்
"அப்ப நெருக்கயில்லை?”
இல்லை’
'இப்பேன் அவசரப்படுகிறார்?
அப்புவாலையும் ஏலாது. நாங்களும் பெண்ணாப் பிறந்ததுகள் எண்டு விட்டவராம்
"இப்ப நான் வந்திட்டன்’
‘என்ன தங்கம் பேசாயாம்
“கொப்பு வந்து இதிலை குடியிருக்கேக்கை இந்தக் காணிக் காற்னைக் கேட்டா இருந்தவர்?’
‘அப்ப ஒரே பத்தைக் காடாக் கிடந்ததாம். அப்புதான் எல்லாம் வெட்டித் திருத்தி. பிறகு இதிலை வீடு கட்டினவராம்
"அப்ப எங்கேயாம் போனவர் இந்தக் காணிக்காரன்'
‘அப்புவும் ஒரு நாள் உப்பிடிக் கேட்டது. அதுக்கு அவர் தன்னட்டை இந்தக் காணிக்கு உறுதி கிடக்கெண்டு கொண்டந்து காட்டினவர். அப்புவிட்டை உறுதி இல்லை’
உப்பிடித்தான் சும்மா கிடந்த நிலங்களுக்கெல்லாம் அந்தக் காலத்திலை புத்திசாலியா இருந்தவங்களெல்லாம் உறுதி எழுதி வைச்சிட்டான்கள். இப்ப என்னடாவெண்டால் உரிமை கொண்டாடு றான்கள்.
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யேலாதுதானே'
"ஏன் செய்யேலாது?’
'நிலத்தை விடேலாது இது எங்கடை நிலமெண்டு சொல்லுறது?’
"நாங்கள் சொன்னாப் போலை சும்மா விட்டு விட மாட்டான்கள். வீண் கரைச்சலுகள் வரும்’
38

தெணியான்
‘வாறது வரட்டும் பாப்பம் கந்தசாமி எதற்கும் துணிந்து நிற்கும் மனநிலையில் துச்சமாகப் பேசினான்.
அவனுக்கிருக்கும் மனத்துணிச்சலும், தைரியமும் எப்படிப்பட்ட தென்பது பொன்னம்மாவுக்கும் தெளிவாகத் தெரியம். கந்தசாமியின் திருமணம் நடந்து முடிந்து ஒரு மாத காலம் ஆவதற்கு முன்னரே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலச் சொந்தக்காரர் தாமோதரம்பிள்ளை பொன்னம்மாவை அழைத்து அந்த நிலத்தை விட்டுக் குடியெழும்பி விடவேண்டுமென அறிவித்து விட்டார். ஆனால் அந்தச் செய்தி கந்தசாமியின் செவிக்கு எட்டாதவாறு பொன்னம்மா மறைத்தே வைத்திருந்தாள். அவன் தங்கள் குடும்பத்துக்குள் ஒருவனாக வந்து ஒரு மாத காலந்தானும் கழிவதற்கு முன்னர் இப்படி ஒரு நெருக்கடியை அவனுக்குக் கொடுக்கக் கூடாதென்பது மாத்திரம் அவள் எண்ணமல்ல. அவன் தாமோதரம்பிள்ளையை எதிர்த்துக் குடியெழும்ப மாட்டேனென்று துணிந்து நிற்பானென்பதும் அவளுக்குத் தெரியும்.
அப்படியான ஒரு கரைச்சல் தன் குடும்பத்துக்கு வரக்கூடா தன்று நினைத்துக் கொண்டு தாமோதரம்பிள்ளையிடமே பணிந்து ன்றாட்டமாய்க் கொஞ்சக் காலம் அவகாசம் கேட்டாள்.
‘எவ்வளவு காலத்திலை நிலத்தை விடுவாய்' என்று விசாரித்தார் அவர்.
‘ஒரு வரியம் பொறுத்தியளெண்டால்.’
'சிச்சீ. அவளவும் பொறுக்கேலாது. உனக்குத்தானே இப்ப மரு
மேன் வந்திருக்கிறான். காசைக் குடுத்து வாங்குங்கோவன்’ என்று நையாண்டி பண்ணினார் அவர்.
பொன்னம்மா பதிலெதுவும் சொல்வதற்கு இயலாமல் வாய் மூடித் தலை குனிந்து நின்றாள்.
என்ன பேசாமல் நிக்கிறாய்! நீங்கள் இருக்கிற எல்லைக்குள்ளே நாலு பரப்புக் கிடக்குது. இப்ப ஒரு பரப்பு இருபத்தையாயிரத்துக்கு மேலை விலை போகுது. என்ரை இளையவன்கள் இரண்டு பேரையும் இஞ்சை வைச்சிருக்கேலாது. படிக்கிறதுக்கு வெளியிலை அனுப்பலா மெண்டு யோசிக்கிறன். நடுவிலாளுக்கும் கலியாணத்தைச் செய்து
39

Page 25
பரம்பரை அகதிகள்
பொடியனோடை அமெரிக்காவுக்கு அனுப்பலாமெண்டு இருக்கிறன். எல்லாத்துக்கும் முதலிலை இப்ப காசு வேணும். அந்தக் காணி முழு தையும் விக்கப் போறன்’
‘எடுத்தடி மடக்காகச் சொன்னால் நாங்கள் எங்கை போறது. அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுறாய். ஆய். சரி நீயும் விடுகிறாயில்லை. இன்னும் ஒரு மாதத்திலை நிலத்தை விட்டு எழும்பிவிட வேணும். எழும்பாவிட்டால். பிறகு நடக்கிறதைப் பார்!’ அவர் இறுதியாக அவளை எச்சரிக்கை செய்துதான் அனுப்பி வைத்தாார்.
அன்று முதல் தன் குடும்பத்துக்கு உண்டான நெருக்கடியை வெளியே சொல்ல இயலாமல் மனதுக்குள் வைத்துக் குழம்பிக் கொண்டே இருந்தாள் பொன்னம்மா. தாமோதரம்பிள்ளை கொடுத்த காலக்கெடு நெருங்க நெருங்க அவளுடைய குழப்பமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. தனிமையிலும், இரவு படுக்கையிற் போய்க் கிடக்கும் போதும் இரகசியமாகக் கண்ணின் விட்டு அழுதாள்.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் அங்கிருந்து குடிபெயர்ந் வேறு எங்காவது போய் விட வேண்டும். அந்த இடத்திலிருந்து குடியெழுப்பி அந்தப் பகுதியிற் புதிதாக அவர்கள் குடியிருப்பதற்கு நிலம் கொடுத்து உதவத் தகுந்தவர்களும் வேறு யாருமில்லை.
பொன்னம்மா இனிமேல் தன்னால் எதுவுமே செய்வதற்கு இயலா தென்ற நிலையிலேயே மகள் தங்கத்தின் மூலமாகக் கந்தசாமியின் செவிகளுக்கு இந்தச் செய்தி எட்டும்படி செய்தாள். கந்தசாமி அந்த நிலத்தை விட்டுத் தாங்கள் வெளியேறப் போவதில்லை என்று உறுதி யாகச் சொன்னதை அறிந்ததும் பொன்னம்மா அச்சத்தினால் துடித்துப் போனாள்.
'தம்பி அவன் மனிசன் பொல்லாதவன்’ ‘என்ன செய்வார்?
"இஞ்சை எங்களுக்கு அயலட்டையும் கை குடாது.
அதுக்காக.?
40

தெணியான்
'நீங்கள் தனித்து நிண்டு என்ன செய்வியள்! உங்களுக் கொண்டெண்டால் நானும் இந்தப் பிள்ளையஞம் உந்தக் கடலுக் குள்ளைதான் போக வேணும்.
“இப்ப என்ன செய்யச் சொல்லுறியள்? ‘இந்த ஊரை விட்டு எங்கையாவது போவம்' பொன்னம்மா சொல்லிக் கொண்டு குமுறிக் குமுறி அழத் தொடங்கினாள். அவள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். அவள் தாயும் தந்தையும் ஒன்று கூடிக் குலாவி இருந்து மகிழ்ந்த மண். அந்த மண்ணை விட்டு அவள் போவதென்றால்.?
கந்தசாமிக்கு அவளைப் பார்க்கப் பார்க்க உள்ளத்தில் வேதனை குமுறிக் கொண்டெழுந்தது. அவள் தன் மனத்திற் கொண்டுள்ள பீதியும் நியாயமானதாகவே அவனுக்குப் பட்டது.
தான் ஒருவன் தனி மனிதனாக நின்று தாமோதரம்பிள்ளை போன்றவர்களை எதிர்ப்பதற்கு இயலாது என்ற உண்மையை அவன் அடி மனம் அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தது.
‘எங்கை போறது? 'குடியிருக்கிறதுக்கு ஆர் இடந்தரப் போகினம்’ கந்தசாமி தன் மனத்தில் எழுந்து அலைக்கழித்துக் கொண்டிருக் கும் வினாக்களுக்கு விடை காணவியலாது தடுமாறித் தவித்தான். இறுதியில் அவனுக்கு வேறு மார்க்கம் எதுவும் இல்லாத நிலையில் அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். சகோதரி சின்னக்குஞ்சியின் வீட்டுக்கே குடும்பத்துடன் போய் விடுவதற்குத் தீர்மானித்தான்.
崇
41

Page 26
கந்தசாமி, சின்னக்குஞ்சியின் வீட்டுக்குக் குடும்பத்துடன் குடி பெயர்ந்து போய் விடுவதென்று தீர்மானித்துக் கொண்ட போதும் அங்கு செல்வதற்கு முன்னர் அவளிடம் பேசி அதற்கான சம்மதத்தைப் பெற்று விட வேண்டுமென்று எண்ணினான்.
மறுநாட் காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவன், சின்னக்குஞ்சியிடம் இன்று இதுபற்றிப் பேச வேண்டுமென்று நினைத் துக் கொண்டு போனான்.
சின்னக்குஞ்சி தன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் சொல்ல மாட்டாளென்றே அவன் திடமாக நம்பினான். ஆனால் சின்னக் குஞ்சியின் அந்தச் சிறிய குடிசை அவளுக்கும், அவளுடைய குழந்தை களுக்குமே இன்று அவர்கள் வாழ்வதற்குப் போதுமானதாக இல்லை. அந்த நிலையில் தன் குடும்பமும் இணைந்து கொண்டால் எப்படி அங்கே வாழ முடியுமென்பதுதான் அவன் முன் பூதாகரமாகத் தோன்றிய ஒரு பிரச்சினை.
அவர்கள் குடியிருக்கும் அந்த இடமே நெருக்கடியான ஒரு பகுதிதான். பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பருத்தித் துறையிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் வீதிக்கு வலது புறமாகப் பார்வையைச் செலுத்திக் கொண்டு சென்றால் மந்திகைச் சந்திக்கு அண்மையில் வீதியிலிருந்து சில மீற்றர் துாரம் உள்ளே தள்ளிப் பன்றிக் குட்டிகள் போலத் தாழ்ந்து நெருக்கமாகத் தோன்றும் குடிசைகள் நிறைந்து கிடக்கும் இடம்தான் அந்தப் பகுதி யாழ்ப்பாணச் சமுதாயத்தின் முள்ளுவேலிக் கலாசாரத்தின் சின்னமாக விளங்கும்
42

தெணியான்
வேலிக் கதிகால்கள் அங்கு நெருக்கமாகக் கிடக்கும் குடிசைகளை எல்லை பிரித்துக் கொண்டு நிற்கின்றன. அந்தக் கதிகால்களும் அந்தக் குடிசைகளில் வாழும் மக்களைப் போல, செம்மண் புழுதி படிந்து பரட்டை பற்றி சோகை பிடித்துத் தோன்றுகின்றன.
அங்கு போய், புதிதாக ஒரு பகுதியில் குடிசை ஒன்றைப் போட்டுக் கொண்டு கந்தசாமி குடும்பத்துடன் குடியேறி வாழலாம் என்றால் அதற்கு மங்கு இடமில்லை. அந்தக் குடிசைகளுக்கிடையில் ஒரு வேப்பமரமும் அந்த வேப்பமரத்தின் அடியில் அந்தப் பகுதி மக்களின் வழிபாட்டுத் தெய்வமான காளியும், அதற்கு முன்புறம் சிறியதொரு நிலப்பரப்பும் இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்தச் சிறிய நிலப்பரபப்பில் கந்தசாமியும் அவன் வயதொத்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து தமக்கென்றொரு வாசிகசாலையை அமைக்கத் தீர்மானித்தார்கள். சிறிய ஒரு ஒலைக் கொட்டிலை அதிற் போட்டு அதற்கு ‘பாரதி படிப்பகம்’ என்று பெயரும் சூட்டினார்கள். அவர்கள் வாசிகசாலை ஆரம்பித்த அடுத்த நாள் பிற்பகல், தங்கள் கூலி வேலைகளை முடித்துக் கொண்டு அங்கு வந்து பார்த்த போது, வாசிகசாலை எரிந்து சாம்பலாகிக் கிடந்தது.
அவர்கள் குடியிருக்கும் அந்தப் பகுதி நிலங்களுக்குச் சொந்தக் காரனானவன் அங்கே வந்து அந்த வாசிகசாலைக் கொட்டிலுக்குத் தீ மூட்டியதோடு, ஒரு ஆட்டுக் கொட்டில் கூட இனிமேல் யாரும் புதிதாக அந்த நிலத்தில் போடக் கூடாதென்று எச்சரிக்கை செய்து கொண்டு போனதாக அவர்கள் அறிந்தார்கள்.
கந்தசாமி இந்தக் கொடுமையைக் கண்டு அன்று துடித்தான். அவனைச் சமாதானம் பண்ணிக் கட்டுப்படுத்தி வைப்பதற்குச் சின்னக் குஞ்சி அன்று பெருஞ் சிரமப்பட்டுப் போனாள். கந்தசாமி அன்றே மனக் கொதிப்புடன் சொன்னான்.
"நாங்கள் இந்த நிலங்களைச் சொந்தமாக்க வேணும்'
'வயித்துப் பாட்டுக்கே எங்கடை உழைப்புப் போதாது. நிலத்தை
வாங்கிறதெண்டா.
43

Page 27
பரம்பரை அகதிகள்
'ஏன் வாங்க வேணும்’ என்று திருப்பிக் கேட்டான் அவன். வாங்காமல் எப்பிடி நிலம் எங்களுக்கு வரும்' ‘சந்ததி சந்ததியாக நாங்கள் குடியிருக்கிறம், அதனாலை எங்களுக் குத்தான் சொந்தம்
“வாய்ச் சொல்லுப் போதுமே! அதுக்கென்ன ஆதாரம்? "நாங்கள்தானே இருக்கிறம்’ 'அவன்களிட்டை உறுதி கிடக்குது'
‘எங்களிட்டையும் மனத்திலை உறுதி இருந்தால் அவையள் எங்களை ஒண்டும் செய்யேலாது
கந்தசாமியின் கருத்தை இளைஞர்கள் சிலர் உறுதியாக ஆதரித் தனர். ஆனால் முதியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களைத் தட்டி அடக்கி, நிலத்துக்குரிய பணத்தைக் கொடுத்துச் சொந்தமாகவே வாங்கி விடுவோமென்று சமாதானம் பண்ணி வைத்தார்கள். இன்று வரை அவர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களில்தான் அடங்கி ஒடுங்கி அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சின்னக்குஞ்சியின் வளவெல்லைக்குள் புதிய ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டே வாழவேண்டி இருக்குமென்று கந்தசாமி மனத்தில் தீர்மானித்துக் கொண்டான்.
நிலத்துக்குரியவன் அதற்கும் சம்மதிக்க மாட்டானே என்ற சந்தேகம் அவன் மனத்தில் வேறு எழுந்தது.
நிலத்தைச் சொந்தமாக வாங்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு அண்மைக்காலமாகத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலச் சொந்தக்காரன் அப்படி வாங்காவிட்டால் எல்லோரையும் குடியெழுப்பி விட்டு வேறு யாருக்காவது விற்றுவிடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தான்.
கந்தசாமி தன்னுடைய நிலமையை அவளுக்கெடுத்துச் சொன்னான். அவன் விபரமாகச் சொல்லும்வரையும் யாவையும்
44

தெணியான்
பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சின்னக்குஞ்சி. அவன் சொல்லி முடித்த பிறகு இறுதியாக ‘உனக்கிஞ்சை இருக்கச் சரிவராது என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னாள்.
அவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சின்னக் குஞ்சி இப்படி எடுத்தெறிந்து பதில் சொல்லுவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் அவள் முகத்தையே ஏக்கத்துடன் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் தன் மனத்தி லெழுந்த குழப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தளதளத்த குரலில் மெல்லக் கேட்டான்.
'ஏனக்கா அப்படிச் சொல்லுறாய்!
‘எல்லாரும் என்னெண்டு இஞ்சை இருக்கிறது. வசதி இருக்கே! அதுதான் சொல்லுறன்’
‘அப்ப நாங்கள் எங்கை அக்கா போறது?’ கேட்கும் போதே அவன் அழுதுவிடுவான் போலத் தோன்றுகிறது.
அவன் இப்படிக் கேட்ட போது அவள் தன் மனத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதே விட்டாள். ஆனால் தன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவனை நினைத்துக் கண்ணிர் விட்டு அழுது கொண்டு மீண்டும் சொன்னாள்,
'நீங்கள் எங்கையும் போயிடுங்கோ. ஆனால் இஞ்சை இருக்க வேண்டாம். நான் இருக்க விடமாட்டேன்’
அவன் அதன் பிறகு அவளோடு வாய் திறந்து ஒன்றும் பேசிக் கொள்ள விரும்பவில்லை. தலையைத் தொாங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து மெல்லக் கிளம்பினான்.
சின்னக்குஞ்சி தெரிவித்த மறுப்பு வேதனைப்படுத்தி அவனைத் துன்புறுத்திய போதும் அவள் உண்மையான உள்ளத்துடன் அப்படிச் சொல்லவில்லை என்றே அவன் மனத்துக்குத் தோன்றியது. அவள் எதை மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் சொன்னாள் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது.
45

Page 28
பரம்பரை அகதிகள்
கந்தசாமியைச் சகோதரனாக அல்ல. தான் பெற்ற பிள்ளையாகவே வளர்த்தெடுத்த அவள் அவன் படுத்துத் தலைசாய்ப்பதற்கே ஒரு இட மில்லாது அந்தரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அவனுக்கு ஆதரவு காட்டாமல் ஒதுக்கி விடுவாளா?
'அவன் எங்களோடை இருந்தால் என்ரை பிள்ளைகளின்ரை குறைநிறைகளைத்தான் நெடுகப் பார்த்துக் கொண்டிருப்பான். பெத்த நான்தான் வில்லங்கப்படுகிறன். அவனாவது நல்லாயிருக்க வேணும். எங்கேயாவது துாரப் போயிருந்தால்தான் அவன் ஒரு மனுசனாகத் தலை நிமிருவான். தான் குடியிருக்கிறதுக்கெண்டு ஒரு துண்டு நிலமாவது வாங்குவான், இல்லையெண்டால் அவனுக்கு நெடுக இது கரைச்சல்தான்.
சின்னக்குஞ்சியின் மனதில் ஓடிய எண்ணம் இதுதான் என்பது அவனுக்கெப்படித் தெரியப் போகிறது?
அவனால் அன்று வழக்கம்போல அங்கிருந்து தொழில் செய்வ தற்குப் போகவும் முடியவில்லை. சின்னக்குஞ்சி வீட்டிலிருந்து கிளம்பிய அவன் நேரே தும்பளையை நோக்கிச் சயிக்கிளைத் திருப்பினான்.
'இன்னும் ஒரு கிழமைக்குள்ளே எங்கே போறது? ஆர் இடந்தரப் போகினம்?
அவன் மனத்திலெழுந்த வினாக்களுக்கு விடை காண இயலாது எதிர்காலம் அவனுக்குப் பயங்கரமாக இருண்டு கிடந்தது.
46

கந்தசாமியின் மனக் கொதிப்பைக் கண்டு வீட்டிலுள்ளவர்கள் எவரும் அவனோடு பேசுவதற்கு அஞ்சினார்கள்.
"நாங்கள் குடியெழும்பிறநில்லை. வாறது வரட்டும் பாப்பம்’ என்று அவன் மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.
சகோதரி சின்னக்குஞ்சியுடன் மந்திகையிற் போய்த் தங்கியிருப் போமென்று சொல்லிக் கொண்டிருந்தவன் அந்த எண்ணத்தைச் சடுதியாக ஏனிப்படி மாற்றிக் கொண்டான்!
அவனிடம் போய் இது பற்றி விசாரிப்பதற்கு மனைவி தங்கமும் உள்ளூரத் தயங்கினாள்.
நிலத்தை விட்டுக் கொடுக்க மறுத்து தாமோதரம்பிள்ளையை எதிர்த்து நின்றால் அவர் வீட்டோடு சேர்த்து தங்களையும் தீ மூட்டி எரிப்பதற்குத் தயங்கமாட்டாரென்பதை எண்ணிப் பொன்னம்மாவுக்கு உள்ளம் குலைந்து உதறல் எடுத்தது. இனிமேல் என்ன சமாதாதனம் சொன்னாலும் கந்தசாமியும் அதைக் கேட்கக் கூடியவனாக அவள் மனதுக்குத் தோன்றவில்லை. எப்படியும் தான் முயற்சி பண்ணியே இந்தத் தொல்லையிலிருந்து குடும்பத்தைக் காக்க வேண்டுமென்ற நிர்ப்பந்த த்தை அவள் உணர்ந்தாள். குடும்பத்தில் ஒருவனாக அவன் வந்து முழுமையாக இரண்டு மாத காலங்கூட ஆகாத நிலையில் அவனுடைய தலையில் இப்பிடியொரு பாரத்தைச் சுமத்தாமல் இதைத் தீர்த்து வைக்க வேண்டியது தன் கடமை என்றே அவள் எண்ணினாள்.
இப்போது இதற்கென்ன செய்யலாமென்பதும் அவள் மனதுக்குத் தெளிவாகத் தோன்றவில்லை. தாமோதரம்பிள்ளையிடம் திரும்பவும்
47

Page 29
பரம்பரை அகதிகள்
போய் ஒரு வேளை மன்றாடிப் பார்க்கலாம். அவர் வேண்டுமானால் இன்னுமொரு மாதம் அவகாசம் தரலாம். அதற்கு மேல் அவர் இரக்கம் காட்டுவார் என்று எதிர் பார்க்க முடியாது. அதன் பிறகு எங்கே போவது? மீண்டும் இதே கதைதான். இதே தொல்லைகள்தானே! இந்தத் தொல்லைகள் பிறகும் தொடராமல் இப்போதே இதற்கொரு தீர்வு காண வேண்டுமென்று பொன்னம்மா விரும்பினாள்.
பொன்னனின் சிறிய தந்தை வழியில் வந்த சகோதரன் ஆறுமுகம் கரணவாயிற் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். பொன்னம்மாவுக்கு அவனோடு நெருக்கமான உறவு இல்லாத போதும் அவள் குடும்பத்து நன்மை தீமைகளுக்கு வந்து போகும் அளவுக்கு அவர்கள் தொடர்பு இருந்து வந்தது.
ஒரு நாள் பொன்னம்மா தும்பளையில் இருந்து அவனைத் தேடிக் கொண்டு கரணவாயிற்கு வந்து சேர்ந்தாள். தன் குடும்பத்துக்கு நேர்ந் திருக்கும் நெருக்கடியை அவனுக்கு எடுத்துச் சொல்லி, அவனுடைய உதவியை நாடி நின்றாள். அவன் மறுபேச்சில்லாமல் தன் வீட்டிலேயே அவர்களையும் வந்து தங்கியிருக்கும்படி அவளிடம் சொல்லி அனுப்பினான்.
இரண்டு தினங்களில் கந்தசாமி குடும்பத்துடன் கரணவாய்க்குக் குடி வந்தான். ஆறுமுகத்தின் வளவுக்குள் அழிந்து போய்க் கிடந்த பழைய குடிசை ஒன்றைத் திருத்தி, பனையோலையாற் கூரை வேய்ந்து அதில் அவன் குடும்பம் வாழத் தொடங்கியது.
அந்த வீடு கிராமத்தின் தெற்கெல்லையில் அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குத் தெற்குப் புறத்திலும், கிழக்கிலும் பரந்த தோட்டங்கள் இருந்தன.
கந்தசாமி தொழில் செய்து வாழ்வதற்கு அந்த இடம் அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. தொழில் தேடி அவன் துார இடங்களுக்குப் போய்வர வேண்டிய அவசியமில்லாமல் போனது. அவன் அங்கு வந்து சேர்ந்த சில தினங்களுக்குள்ளே அவனை எல்லோருக்கும் நன்றாகப் பிடித்துக் கொண்டு விட்டது. அதனால் அவன் எப்போதும் அந்தப்
48

தெணியான்
பகுதித் தோட்டங்களில் ஏதோவொரு வேலை செய்து உழைத்துக் கொண்டிருந்தான்.
கந்தசாமியின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை அண்டி இருபது குடும்பங்கள் வரை அந்த இடத்தில் குடியிருந்தன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் பெரும்பாலும் தோட்டக் கூலிகளாகவே இருந்தார்கள். பெண்களும் தோட்டங் களுக்கும், பிற கூலி வேலைகளுக்கும் போவதுண்டு. சில குடும்பங் களைச் சேர்ந்த பெண்கள் வீட்டோடு தங்கியிருந்து, பனையோலையிற் பாய், பெட்டி இழைக்கும் தொழிலைச் செய்தார்கள்.
ஆறுமுகம் கந்தசாமியைப் போலத் தோட்டங்களிற் கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் எவரும் கூலி வேலைக்குப் போகும் வழக்கமில்லை. அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஓய்வான வேளையிற் பாய், பெட்டி இழைக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.
ஆறுமுகத்தின் குடும்பத்தில் அவனுடைய மனைவியோடு, அவளுடைய தாய் முத்தியும் சேர்ந்து தங்கி இருந்தாள். ஆறுமுகத்தின் சகோதரி மீனாட்சி, அவள் கணவன் இறந்த பிறகு தமையனின் நிழலில் அங்கு வந்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறாள்.
கந்தசாமி குடும்பத்தோடு அங்கே தங்குவதற்கு வந்து சேர்ந்த போது மனநிறைவோடு முன்னின்று வரவேற்றவள் முத்திதான்.
இந்த முத்தி இருக்கிறாளே அவள் ஒரு அலாதியான பேர்வழி, அவள் உண்ணாமல் இருப்பாள். உறங்காமல் இருக்க வேண்டு மானாலும் இருந்து விடுவாள். ஆனால் வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக் கொண்டு, அயலிலுள்ள நாலு பெண்களை இழுத்து வைத்து ஊர்ப் புதினங்களைப் பேசாமல் இருப்பது மாத்திரம் அவளுக்கு இயலாத காரியம். அவள் உண்ட உணவு செரிக்க வேண்டுமானால் அவளுக்கு ஊர் வம்பு பேசியே ஆக வேண்டும்.
அவள் யாரைக் கண்டாலும் அவர் வாயைக் கிண்டிக் கிளறி, தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குக் கையாளும்
49

Page 30
பரம்பரை அகதிகள்
தந்திரோபாயங்களை அறிந்தால் பத்திரிகைகளின் செய்தி நிருபர்கள் சில காலம் அவளிடம் சிஷ்யர்களாக இருக்க விரும்புவார்கள். அவள் தனக்குக் கிடைத்த தகவல்களைக் கருவாக வைத்துக் கொண்டு அவற்றைத் தானே நேரிற் கண்ணாற் கண்டவைகள் போல மூக்கும் முழியும் வைத்துக் கற்பனை பண்ணும் கதைகள் விஷயத்தில் ஜனரஞ்சக எழுத்தாளர்களையும் தோற்கடித்து விடுவாள்.
முத்திக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பேதமே இல்லை. அவள் யாரைச் சந்தித்தாலும் அவர்கள் எல்லோரும் அவளுக்கு மிக வேண்டியவர்களே. எல்லோரிடமும் இனிக்க இனிக்கப் பேசி அவர்கள் குடும்ப விவகாரங்களில் மிகவும் அக்கறையுள்ளவள் போலத் துருவித் தருவி விசாரிப்பாள். வழி தெருவில் போவோர், வருவோரைக் கண்டு கொண்டால் ‘துலைக்கே?' என்ற ஒரு கேள்வியை சகசமாகக் கேட்காமல் அவள் சும்மா விட்டு விடுவதில்லை.
கால்கள் இரண்டையும் அவள் நீட்டி வைத்துக் கொண்டு கண்களை வேண்டியபோது சுருக்கியும், அகலத் திறந்தும் தலையை முன்னும் பின்னுமாக கொண்டை குலுங்க ஆட்டி அசைத்து பொக்கை வாயைத் திறந்து இரகசிய பாவத்தில் அடித் தொண்டையால்தான் எவரோடும் பேசுவாள். அவளோடு பேசிக் கொண்டிருந்தவர்களின் நிழல் மறைவதற்கு முன்னரே அவர்களிடம் அவள் கேட்டறிந்த செய்திகளுக்குப் புது வடிவம் கொடுத்துப் பரப்பி விடும் அந்தரத்துடன் அயல்வீட்டுப் பெண்களைத் தேடிக் கொண்டு ஓடுவாள்.
முத்திக்கு அவள் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப் பதற்குக் கந்தசாமியின் குடும்பத்துப் பெண்கள் மூன்று பேர் வீட்டோடு வந்திருக்கிறார்கள் என்றால், அவளுக்குண்டான மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்.?
முத்தி உள்ளூர மனத்தால் வெறுக்கும் ஒருத்தி உண்டென்றால் அவள் ஆறுமுகத்தின் சகோதரி மீனாட்சிதான்.
மீனாட்சி தமையன் ஆறுமுகத்தைத் தனக்கொரு பாதுகாவலாகக் கருதியே அங்கு அவர்களுடன் தங்கியிருந்தாள். அவள் தனது
50

தெணியான்
அன்றாடத் தேவைகளுக்கு அவனை நம்பி இருக்கவில்லை. அவன் உழைப்பில் தான் வாழக் கூடாதென்பதே அவள் அடிமனத்திலிருக்கும் ஒரே எண்ணம். அவள் காலையில் எழுந்தால் படுக்கைக்குப் போகின்ற வரை இயந்திரம் போல இயங்கிக் கொண்டே இருப்பாள். இரவு பகல் என்று பார்க்காமல் எப்பொழுதும் அமைதியாக ஓரிடத்திலிருந்து பனையோலையிற் பாய் இழைப்பதே அவளுக்கு வேலை. அதோடு கோழிகள் சிலவற்றையும் வளர்த்து அவை இடும் முட்டைகளை விற்பாள். இந்த வருமானங்களைக் கொண்டே மீனாட்சியின் வாழ்க்கை ஆறுமுகத்தின் ஆதரவை நாடாமற் போய்க் கொண்டிருந்தது.
மீனாட்சிக்கு இயல்பாகவே தானுண்டு தன் வேலையுண்டென்று பிறர் காரியங்களில் தலையிடாமல் இருக்கின்ற சுபாவம். அவள் கணவனை இழந்ததன் பின்பு பெரும்பாலும் மற்றவர்களுடன் வாய் திறந்து பேசிக் கொள்வதே மிகக் குறைவு.
முத்தி அயல்வீடுகளிற் குடியிருக்கும் பெண்களை எல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு சில சமயங்களில் தனது கதாகாலட் சேபத்தை ஆரம்பித்து விடுவாள். பெண்களுக்குப் பொதுவாக ஊர்க்கதை என்றாற் போதுமே! அதுவும் முத்தியின் வாயால் ஊர்க்கதை கேட்பதற்குக் கொடுத்து வைக்க வேண்டும்.
அவள் பெண்டுகளைக் கூட்டி வைத்துக் கொண்டு சொல்லச் சொல்ல எல்லோரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஊர்ப் புதினங்களுக்கு மீனாட்சி காது கொடுப்பதில்லை. மீனாட்சி இருக்கும் இடத்தில் முத்தியின் கச்சேரி ஆரம்பித்து விட்டால், அவள் அந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்து போய் விடுவாள்.
மீனாட்சி தன்னை மதிப்பதில்லை என்ற எண்ணம் முத்தியின் மனதில் நீண்ட காலமாக இருந்து வந்தது. அவள் தன்னை அலட்சியம் பண்ணுகிறாள் என்றே முத்தி கருதினாள். அதனால் சமயம் வாய்த்த போதெல்லாம் அவளைப் பற்றி அவதுாறான கதைகளைப் பெண்கள் மத்தியில் முத்தி பரப்பிக் கொண்டே இருந்தாள்.
கந்தசாமி குடும்பத்தோடு தும்பளையிலிருந்து இங்கு வந்து சேர்ந்ததும் முத்தி அந்தக் குடும்பத்துப் பெண்களுடன் பதநீரும்,

Page 31
பரம்பரை அகதிகள்
இனிப்பும் போலக் கலந்துறவாடினாள். கந்தசாமியின் குடும்பத்து இரகசியங்களை ஒன்று விடாமல் கறந்தெடுத்து விட வேண்டுமென்று அந்தரங்க நோக்கத்துடன் தனக்கே உரித்தான உத்தி முறைகளை யெல்லாம் அவள் கையாண்டு பார்த்தாள். ஆனால் பொன்னம்மாவும், அவள் மக்களும் முத்தியின் குணத்தை உணர்ந்து அவள் விரித்த வலையில் விழுந்து விடாமல் மிக நிதானமாக விலகிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குடும்ப விவரங்களைத்தான் அறிந்து கொள்ள முடியாமற் போனதில் அவளுக்குப் பெரிய ஏமாற்றம்.
அவர்கள் வாயைத் திறக்காமல் இருப்பதற்கு தாங்கள் வடுப்பட்ட சங்கதிகளை ஊரறிந்து விடுமென்று அஞ்சுவதுதான் காரணம் என்று புதிய உத்தியில் அவள் கதை கட்ட ஆரம்பித்தாள். அவர்க்ள் தாங்க ளாகச் சொல்லாது விட்டாலும் என்ன, அவர்களைப் பற்றித் தனக்கு முன்னரே எல்லா விபரங்களும் தெரியுமென்ற முகவுரையைச் சொல்லிக் கொண்டு பல புதுக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.
பொன்னம்மாவின் தந்தை பொன்னன் தங்கப்பொன்னுவை விரும்பியதும், அவளைக் கிளப்பிக் கொண்டு தும்பளைக்குப் போனதும், பொன்னம்மா பிறந்ததும், தங்கப்பொன்னு ஒரு நாள் திடீரென்று மர்மமாக இறந்து போனதும் இராஜா இராணிக் கதைபோல இப்போது முத்தியின் வாயால் அந்தப் பகுதியில் விரித்துரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த முழு விபரங்களும் பொன்னன் தன் வாயாற் சொல்ல, தான் நேரிற் கேட்டறிந்துக் கொண்டதாகவே அவள் எல்லோரிடமும் பெருமை அடித்துக் கொண்டாள்.
அந்த வீட்டில் அவளோடு சேர்ந்து கந்தசாமியின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது என்பது பெரிய அதிசயந்தான்.
崇
52

கந்தசாமியின் குடும்பம் கரணவாய்க்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்கள் கழிந்து விட்டன.
கந்தசாமி இப்போது முன்போலச் சின்னக்குஞ்சியின் வீட்டுக்குப் போய் வருவதற்கு முடியவில்லை. அதனால் அவள் குடும்பம் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற கவலை சதா அவன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது. அவள் குழந்தைகளில் இருவரைத் தன்னோடு அனுப்புமாறு அவன் போய்க் கேட்டுக் கொண்ட போதும், அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவள் மறுத்து விட்டாள். அவனுக்கு அது வேதனையாகவே இருந்தது.
தங்கமணி இன்னும் திருமணமாகாது வீட்டோடு இருக்கிறாள் என்பது அவன் மனத்தை வேறொரு புறம் உறுத்திக் கொண்டிருந்தது. வயிரவிக் கிழவனை நேரிற் கண்டு இரண்டொரு தடவை அவன் பேசிவிட்டான். ஆனால் இன்னும் அவள் திருமணம் எதுவும் பொருந்தி வருவதாகவில்லை. ஆறுமுகம் வீட்டில் தொடர்ந்து தாங்கள் குடி யிருப்பதும் அவன் மனத்துக்குச் சரியாகத் தோன்றவில்லை. அந்த வீட்டைவிட்டுக் கிளம்பி வேறு எங்கே போய் ஒதுங்குவதென்பதும் அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை. அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தால் விரைவிலே தொல்லைகள் வந்து சேரக் கூடுமென்றும் அவன் எதிர்பார்த்தான்.
அவன் எதிர்பார்த்ததுபோல் அதற்கு நீண்ட காலம் செல்ல வில்லை. பொன்னம்மாவையும் அவள் மக்களையும் முத்திக்கு முற்றாக வெறுத்துப் போய் விட்டது. பொன்னம்மா அவள் மருமகன் கந்தசாமி யோடு அநாவசியமாக நேருக்கு நேர் பேசுவதில்லை. அவன் முகத்தை
53

Page 32
பரம்பரை அகதிகள்
ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை. அவன் நிழலைக் கண்டாலே அவள் ஒதுங்கிப் போய் விடுவாள்.
'மருமோனைக் கண்டு ஒதுங்கிறதெல்லாம் மாசாலம். முத்தி இதற்கு எதிர் மாறானவள். மடியிலை கனம் இருந்தால்தானே வழியிலை பயம். மருமோன் எண்டாப் போலை என்ன. பெத்த பிள்ளையிலை ஒண்டுதானே!"
அவள் வாய்க்கு வாய் இவ்வாறு சொல்லிக் கொண்டு பேசத் தகாத வார்த்தைகளையெல்லாம் தன் மருமகன் ஆறுமுகத்துக்கு முன் எந்த விதமான கூச்ச நாச்சமில்லாது பேசுவாள்.
மீனாட்சி முன்பு போல எப்போதும் அழுது வடிந்து கொண்டிருக் காமல் பொன்னம்மாவோடும் அவள் மக்களுடனும் மனம் விட்டு நெருக்கமாகப் பழகுவதைக் காண முத்திக்கு வயிறெரிந்தது. பனை யோலைப் பாய்ப்பெட்டி இழைப்பதற்கு மீனாட்சி அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும், அவளும் அவர்களும் எப்போதும் உறவு கொண்டாடி ஒற்றுமையாக இருப்பதும் முத்தியின் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது.
மீனாட்சி பொன்னம்மா குடும்பத்துடன் நெருங்கி உறவாடுவதற்கு அவர்கள் அவளுடைய இரத்த உறவுக்காரர்கள் என்பது மட்டும் காரண மல்ல. அவர்களுடைய அடக்க, ஒடுக்கமும் பண்பான நடத்தையுமே அவளைப் பெரிதும் கவர்ந்தன.
அவர்கள் தங்களுக்குள் மிக அன்னியோன்னியமாகி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிப் போய்க் கொண்டிருக்கும் போது முத்தியின் உள்ளத்தில் பொறாமைத் தீ சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வந்தது. பொன்னம்மாவும், அவள் மக்களும் நல்ல மனத்தோடு தன்னை விரும்பு வதில்லையென்றும், மனத்திலுள்ள வெறுப்பை வெளியிற் காட்டிக் கொள்ளாமல் போலியாக உறவாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் முத்தி காலப் போக்கில் உணரத் தலைப்பட்டாள்.
முத்தி தனக்கேற்ற சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து மனத்தினுள்ளே கறுவிக் கொண்டு மீனாட்சியின் மேல் கழுகுப் பார்வையைச் செலுத்திக்
54

தெணியான்
கொண்டிருந்தாள்.
“எடியாத்தைமாரே! அவள் மீனாட்சி ஆடுகிற ஆட்டத்தை என்னெண்டு இந்த வாய் திறந்து சொல்லுறது அவள் கந்தசாமியோடை. சீ. நான் இந்தக் கண்ணாலை கண்டனான்ரி ஆத்தைமாரே என்ரை மோளுக்கும் புரியனுக்குமெல்லோ இதாலை வாழ்மானம் வரப்போகுது நாங்களும் மனிசரெண்டு அரையிலை சீலை உடுத்துக் கொண்டு வெளியிலை எப்பிடித் திரியப் போறோமோ. ஐயோ அண்ணமாரே! இப்பிடியுமொரு கிலிசைகேடு எங்களுக்கு வரவேணுமெண்டு தலை எழுத்தே'
முத்தி தன் பரிவாரங்களுக்கெல்லாம் அல்லும், பகலும் மீனாட்சி யைப் பற்றி இரகசியமாகப் பிரசாரம் செய்யத் தொடங்கினாள். இப்படி யான வதந்திகள் மக்கள் மத்தியில் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதைச் சொல்லவா வேண்டும்!
மீனாட்சியைப் பற்றிய அவதுாறுகள் மூக்கும் முழியும்வைத்து அந்தப் பகுதி முழுவதும் பரவிக் கொண்டிருந்தன.
முத்தியின் மனம் அந்தளவோடு ஆறுதல் பெற்று அமைதி அடைந்து விடவில்லை. மீனாட்சியை வலுச் சண்டைக்கு இழுத்து தன் மனக் கொதிப்பு அடங்கும்வரை அவளை இரண்டு கேள்வி கேட்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பங்களைத்தானே வலிந்து உருவாக்கிக் கொண்டு அடிக்கடி அவளைச் சீண்டிக் கொண்டு வந்தாள்.
மீனாட்சி, முத்தியின் கல்லெறிகளுக்கெல்லாம் மெல்ல விலகி விலகி ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
முத்தி தனக்கென்று இரண்டு கோழிகளை வீட்டில் வளர்த்து வந்தாள். கோழிகளில் ஒன்று இடும் முட்டையை இரண்டு தினங்களாகக் காணவில்லையாம். இதைச் சாட்டாகக் கொண்டு நீண்ட நாட்களாக அவள் எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் போர்ப் பிரகடனம் செய்வது போலத் தன் வக்கணைகளை ஆரம்பித் தாள.
55

Page 33
பரம்பரை அகதிகள்
அவள் வாயிலிருந்து கேட்பவர்கள் காதைக் கூச வைக்கும் மிகக் கீழ்த்தரமான வசவுகளும், திட்டுகளும் வார்த்தைகளாக வெளி வந்து கொண்டிருந்தன. காலையில் சுமார் பத்து மணிக்கு ஏசுவதற்கு ஆரம் பித்த அவள், நடுப் பகலைத் தாண்டி பொழுது சாய்கின்ற வேளை யிலும் வாய் ஓயவில்லை. அவளுடைய குத்தலான ஒவ்வொரு வார்த்தையும் மீனாட்சியின் மேல் வீண் பழி சுமத்தி மறைமுகமாகத் தாக்கிக் கொண்டிருந்தன.
அவள் என்ன சொன்ன போதும் மீனாட்சி சூடு சொரணை இல்லாதவள் போல அமைதியாகக் கேட்டுக் கொண்டு பொறுமையோடு இருந்தாள்.
முத்திக்கு, மீனாட்சியின் இந்தப் பொறுமை மேலும், மேலும் சினத்தை வளர்த்துக் கொதிப்பையே கிளப்பிக் கொண்டிருந்தது. சுற்றி வளைக்காமல் கொஞ்சம் நேரடியாகவே தாக்கி அவள் வாயைக் கிளற வேண்டுமென்று முத்தி விரும்பினாள்.
ஆரோ. புரியனைத் தின்னிதான் அந்த முட்டையளை எடுத்துப் போட்டாள்.’ என்று அவள் ஏச ஆரம்பித்தாள். அவள் நேரடியாகவே தன்னைக் குறிப்பிட்டுத் திட்டுவதற்கு ஆரம்பித்தபிறகு மீனாட்சியால் பொறுமையுடன் இருப்பதற்கு முடியவில்லை.
மீனாட்சி தனக்கேயுரியதான அந்தப் பொறுமையை இழந்தாள். அடக்க முடியாத ஆத்திரத்தால் அவள் கண்கள் சிவந்தன. உடல் படபடவென்று நடுங்கத் தொடங்கியது. வார்த்தைகள் தெளிவாக வெளிவர இயலாமல் திக்கித் திணறி தடுமாறின.
‘எணை ஆரணை உன்ரை முட்டையை எடுத்தது?
‘என்ரை நாச்சியார், உனக்கேனணை கோவம் வருகுது? நீதான் எடுத்தனி எண்டு நான் சொன்னனானே! நீ ஏனெனை நனைச்சுச் சுமக்கிறாய்! எனக்குத் தெரியும். தெரியும். மடியிலை பாரமிருந்தால்.’ என்று அவள் நையாண்டியாகக் கூறி மீண்டும் அவளையே குற்றஞ் சாட்டினாள்.
முத்தியின் கிண்டலும் கேலியும் மீனாட்சியின் இதயத்தை 56 -

60ф600fшт60ї
இடித்துப் பிளந்தன. அவர்கள் இருவருக்குமிடையில் வார்த்தைகள் தடித்துத் தள்க்கம் வலுத்தது. அந்த வீட்டில் மீனாட்சியிலும் பார்க்க அதிகாரமும் உரிமையும் கூடியவள்தானே தான் என்பதை நிரூபிப்பவள் போல முத்தி எகிறி எகிறிக் குதித்தாள்.
முத்தியின் மகள் அயலுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, இருவரையும் சமாதானம் பண்ணி வைப்பவள் போல இடையில் இரண்டு வார்த்தைகள் சொல்லிக் கொண்டு, அவள் மெல்ல விலகிக் கொண்டாள்.
முத்திக்கா தெரியாது தன் மகளின் குணம் முத்தி மகளின் வார்த்தையைத் தூக்கி எறிந்து விட்டு ஒயாமல் வசைமாரி பொழிந்து கொண்டிருந்தாள். முத்தியின் வீராவேசமான வசை மொழிகளைக் கேட்டு, அடுத்தடுத்த வீடுகளிலுள்ள பெண்கள் எல்லோரும் ஓடோடி வந்து அங்கு கூடிவிட்டார்கள்.
இழவு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் வரவேற்று ஓங்காரமாகப் பறை முழங்குவது போல பெண்கள் கூட்டம் வந்து சேரச்சேர, முத்தியின் குரல் உச்சஸ்தாயில் ஏறிக் கொண்டே சென்றது.
முத்தியின் வாயிலிருந்து உக்கிரமாகப் புறப்பட்டு வந்து கொண்டி ருக்கும் அக்கினி அஸ்திரங்களான சுடு சொற்களுக்கு முன்னால், அப்பாவியான மீனாட்சி எதிர்த்து நிற்பதற்கு இயலாமல் மெல்ல வாயடங்கி, மனக்குமுறலுடன் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.
வேடிக்கை பார்ப்பதற்கு அங்கு வந்து கூடி நின்ற பெண்களும், தம்மை அறியாமல் மீனாட்சியைப் பார்த்து உள்ளூரப் பரிதாபப்பட்டார்கள். ஆனால் முத்தியின் வாய் அப்போதும் ஓய்வதாக இல்லை.
இதுவரை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வாய் திறக்காமல் உள்ளக் கொதிப்புடனிருந்த பொன்னம்மா, மீனாட்சி வாய் விட்டழத் தொடங்கிய பிறகும் முத்தி அவளை வசை பாடிக் கொண்டிருப்பது கண்டு வேதனை தாங்காமல் மெல்லச் சொன்னாள்!
'எணையாச்சி! அவள்தானே பேசாமல் இருக்கிறாள் நீ ஏன்
57,

Page 34
பரம்பரை அகதிகள்
போட்டு உலுப்பிறாய்
“எடியாத்தை, அவை ஒரு இரத்தமெல்லே! அவவுக்கெல்லோ கோவம் வருகுது என்ரை மருமோளை நான் பேசினால் உனக் கென்னடி?’
பொன்னம்மா எப்போது வாய் திறப்பாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த முத்தியின் சீற்றம் திடீரென்று அவள் பக்கம் திரும்பியது. ‘ஓ.ஓ. நீ அவளை உன்ரை மருமோள் எண்டு வைச்சுப் பாத்துத் தான் இவ்வளவும் பேசிறாய் உனக்கொரு வாயைக் கடவுள் படைச் சிருக்கிறான்'
‘என்ரை வாய்க்கு என்னடி குறைஞ்சது உன்னைப் பற்றித் தெரியாதேயடி எனக்கு.
என்ன தெரியும் உனக்கு.? அப்படித்தானாக்கும் உன்ரை எண்ணம். ஆட்டக்காறி "இஞ்சார், நரம்பில்லாத நாக்காலை கண்டதையெல்லாம் கதை யாதை.
‘ஓமெடி நீ ஆட்டக்காறி தான்ரி. “எடியேய். என்னடி சொன்னனி. என்னடி சொன்னனி. கோதாரியிலை போவாளே. நரகத்துக்குப் போவாளே. உன்ரை நாக்கிலை புத்தெழும்பப் போகுதடி.
பொன்னம்மா இரண்டு கைகளாலும் மண்ணைவாரி வாரி அள்ளி ஆகாயத்தை நோக்கி எறிந்தாள்.
'எடியெடியே. நீ பெரிய கற்பாஸ்திரியெடி. நீ எனக்குச் சாபம் போடுறியே! உன்ரை நாத்தமெல்லாம் எனக்குத் தெரியுமெடி தும்பளை
யிலை உங்களை ஊரை விட்டு ஏன் துரத்தினவங்கள்?
'எடியே கண்கெடுவாளே. கண்கெட்டு இருந்து தடவுவாளே. உன்ரை நாக்கினில புத்தெழும்பப் போகுதடி ஐயோ! கடவுளே!
58

தெணியான்
ஆத்தங்கரையில் வேலே இவளின்ரை தலையிலை இடியேறு வந்து விழாதே ஐயோ. முருகா. முருகா.
'எடியே. குந்தியிருக்கக் குடி நிலம் இல்லாதவள் என்ரை வீட்டிலை வந்திருந்து எனக்கு நடப்புக் காட்டிறாய்
‘ஓமெடி. ஓமெடி. ஆரோ உள்ளவன் உடையவனின்ரை காணியிலைதான்ரி நீயும் இருக்கிறாய், அதுக்குள்ளை பெரிய காணி, பூமிக்காறி மாதிரி ஏன்ரி கதைக்கிறாய்?
'உள்ளவன், உடையவன் உன்னையேடி இதுக்குள்ளை கொண்டந்து வந்த விட்டவன். எடி கூத்தாடி. மட்டு மருவாதை யோடை இந்த வளவுக்கை இருந்த எங்களை மதிப்பிறக்கத்தானேயடி நீங்கள் இஞ்சை வந்திருக் கிறியள். இஞ்சை வீட்டுக்குள்ளை என்ன நடக்குதெண்டு நாலுபேரறியச் சொல்லட்டேயடி’
முத்தி சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் மீனாட்சி வெறி கொண்டவளாக அவள் மேற் பாய்ந்து, அவளுடைய கொண்டையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளினாள். தங்கம் இரண்டு கைகளாலும் மண்ணைக் கோலி அள்ளி அவள் தலையிலே கொட்டினாள். முத்தியின் மகள் ஓடி வந்து தங்கத்தைப் பிடித்திழுத்தாள்.
அதுவரை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற பெண்கள் மீனாட்சியைப் பிடித்திழுத்து, அவள் பிடியிலிருந்து முத்தியை விடுவித்தார்கள். தங்கமணி இவையெல்லாவற்றையும் பார்த்து ஒரு புறத்தில் வாய் விட்டு அழுது கொண்டு நின்றாள்.
அப்போது தொழில் முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்த கந்தசாமி மெளனமாகத் தலைகுனிந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
崇
59

Page 35
10
uasumu
கந்தசாமி படுக்கையிற் போய் விழுந்தவன்தான், இரவு உணவுக்குக் கூட எழும்பவில்லை.
தங்கம் பல தடவைகள் அவனருகே போயிருந்து உணவை உண்டு விட்டுப் படுக்குமாறு நச்சரித்துப் பார்த்தாள். அவன் எதையுமே தன் செவியிற் போட்டுக் கொள்ளவில்லை. அவனைப் பார்க்கப் பார்க்க முன்னர் எப்போதும் இல்லாத ஆச்சரியமும், இன்னொரு புறத்தில் வேதன்னயும் அவள் மனத்தை உறுத்தித் துன்புறுத்தின.
வீட்டில் அன்று நடந்து முடிந்த சம்பவத்தை அறிந்தும் அவன் ஒன்றும் அறியாத அப்பாவி போல இருந்துவிடக் கூடிய இயல்பு ள்ளவன் அல்லன் என்பது அவளுக்குத் தெரியும். ஆறுமுகம் அங்கு வந்த பிறகாவது அவன் தன் மனக் கொதிப்பை அவரிடம் சொல்லி மனமாறுவானென்று அவள் எதிர் பார்த்தாள். அப்படி அவரோடு அவன் பேசப் போய் விபரீதங்கள் எதுவும் வந்து சேர்ந்து விடுமோ என்றும் அவள் எண்ணிப் பயந்து கொண்டே இருந்தாள்.
இப்போது அவன் கையாலாகாதவன் போல இப்படிக் குப்புறப் படுத்துக் கிடப்பதைக் காணும் போது ஆறுமுகத்துடன் நேருக்கு நேர் பேசி அதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாற் கூடப் பரவாயில்லை யென்றே அவள் மனதுக்குத் தோன்றுகிறது.
அவனுக்கு இயல்பாகவுள்ள தார்மீக ஆவேசங்கள் எல்லாம் உள்ளடங்கி அவனைக் கோழையாக்கி விட்டதாக அவள் எண்ணிக் கொள்ளவில்லை. அவ்னுடைய இந்த மெளனம் அவன் உள்ளத்தின் வைரமான உறுதி என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
60

தெணியான்
தங்களுக்கென்று சொந்தமான ஒரு வீடில்லாததால் கணவனும் அவமானத்துக்குள்ளாகி அநாதைகள் போல் செயலற்றுப் போய் இருப்பதை அவள் எண்ணி எண்ணி மனம் புழுங்கி இரவெல்லாம் கண்ணீர் வடித்தாள்.
ஆறுமுகம் வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகு அங்கு நடந்து முடிந்த இந்த மானக் கேடான சம்பவங்களை அறிந்து தன் மனைவியையும், மாமி முத்தியையும் சில சமயம் கண்டித்து வைக்கக் கூடுமென்று அவள் எதிர்பார்த்தாள். அவளுடைய அந்த எதிர்பார்ப்பு வெறும் ஏமாற்றமாகவே முடிந்தது. அந்த வீட்டில் விரும்பத்தகாத சம்பவமொன்று நடந்திருக்கிற தென்பதைத் தான் அறிந்து கொண்டதாகவே அவன் காட்டிக் கொள்ளவில்லை. அவன் சுபாவம் அதுதான், தனக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைத்து விட்டு யாரோடும் முரண்படாது பட்டும் படாமல் வாழ்ந்து விட வேண்டும் என்னும் மனப் போக்குள்ளவன் அவன். இன்று தனது சகோதரி மீனாட்சியின் பொருட்டாவது தன் வாயைத் திறக்கக் கூடுமென்று அவளுக்கொரு அற்ப நம்பிக்கை, அந்த நம்பிக்கையையும் ஆறுமுகம் பொய்யாக்கிய பிறகு.
கந்தசாமி என்ன தீர்மானத்துடன் இப்படி மெளனமாகப் படுத்துக் கிடக்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.அவன் அங்கு நடந்த சம்பவத்தைத் தன் கண்களால் நேருக்குநேரே கண்டவன். அப்போதே பாயை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத்தவன்தான். ஒரு வார்த்தை தானும் வாய் திறந்து அவளோடு கூட அவன் பேசவில்லை. எவர் முகத்தையும் அவன் ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.
அவனைப் போலவே அந்தக் குடும்பத்தில் அன்று எல்லோரும் பட்டினிதான்.
அவன் படுக்கையில் விழுந்து கிடந்தாலும் உள்ளம் உறங்காது குமுறிக் கொண்டிருக்கும் போது விழிகளை மாத்திரம் உறக்கம் வந்து எப்படித் தழுவிக் கொள்ளும்?
அந்தக் கிராமத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து நாய்களின் குரைப்பு வீட்டுக்குப் பின்புறமுள்ள வேலிப் பூவரசிற் படுத்துறங்கும்
61

Page 36
பரம்பரை அகதிகள்
கோழிகளின் குறுகுறுப்பு, பூனைகளின் வாஞ்சையோடு கூடிய உறுமல், சில்லிடுவானின் இராக ஆலாபர்னம், பல்லியின் பொருளறியாச் செய்தி கள், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறவர்களின் குறட்டை ஒலிகள் எல்லாமே அவன் செவிகளில் சுவாதீனமாக வந்து விழுந்து கொண்டி ருக்கின்றன. ஆனால் அவன் ஆவலுடன் நீண்ட நேரமாக எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் குரல்.
அவன் நெடுமூச்செறிந்த வண்ணம் படுக்கையிற் புரண்டு புரண்டு மனம் சோர்ந்து கிடக்கிறான். திடீரென்று அந்தக் குரல் அவன் படுத்துக் கிடக்கும் குடிசைக்குப் பின்புறத்தில் நிற்கும் பூவரசில் இருந்து எழுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு விளக்கில் பல தீபங்கள் ஏற்றப்பட்டுச் சுடர் விடுவது போல பல குரல்கள் ஆங்காங்கே எழுகின்றன.
சேவல்கள் கூவுகின்றன.
வாரிச் சுருட்டிக் கொண்டு கந்தசாமி படுக்கையை விட்டு எழுந்தான். குடிசையை விட்டு வெளியே வந்து, சிறிது நேரத்தின் பின் மீண்டும் குடிசைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு புறப்பட்டான்.
அவன் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே செல்வதையும், திரும்பி வந்து எங்கோ போவதற்குப் புறப்படுவதையும் அவதானித்துக் கொண்டு கிடந்த தங்கம், அவனிடம் போகுமிடத்தை அப்போது விசாரிக்கக் கூடாதென்று எண்ணிக்கொண்டு மெளனமாக இருந்து விட்டாள்.
கந்தசாமி சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். உள்ளூர்ப் பாதைகளூடாக மேடு, பள்ளங்களையும், மணற் கும்பிகளையும் தாண்டி நான்கு கிலோ மீற்றர் துாரம் வந்து கெருடாவில் வேலாயுதம் வீட்டை அடைந்த போது வானம் நன்றாக வெளுத்து விட்டது.
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை வேளையில் கந்தசாமி அங்கு வந்து நிற்பது கண்டதும் வேலாயுதம் அதிசயித்துப் போனான். கந்தசாமியை வரவேற்கும்போது அவன் மனத்திலெழுந்த அதிசயம் அவனையறியாமல் வார்த்தைகளாக வெளிப்பட்டது.
62

தெணியான்
‘வா மச்சான்! என்ன விடிய வெள்ளணை?’
‘வரவேண்டி இருந்தால் வரத்தானே வேணும்
‘சரி. சரி. என்று சொல்லிக் கொண்டு ஒரு பாயை எடுத்துத் திண்ணையில் விரித்து விட்டான் வேலாயுதம், வேலாயுதத்தின் மனைவி அதற்கிடையில் எழுந்து தேநீர் தயாரித்து இருவருக்கும் பரிமாறினாள். தேநீரைப் பருகி முடித்ததும் இருவரும் வெற்றிலையை எடுத்துப் போட்டுக் கொண்டனர்.
கந்தசாமியும் வேலாயுதமும் நீண்ட கால நண்பர்கள். கூலிப் பிழைப்புக்காக இருவரும் தோட்டங்களுக்குச் சென்ற சமயங்களிற் கந்தசாமி வேலாயதத்தைத் தேடிக் கொண்டு அவன் வீட்டிற்கு வருவதுண்டு. அதே போல வேலாயதமும் கந்தசாமியைத் தேடிக் கொண்டு செல்வதுண்டு.
இன்று விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் கந்தசாமி அங்கு வந்திருக்கிறான். அவன் முகத்திற் சோர்வும், வேதனையும் குடி கொண்டிருக்கிறது. அவன் ஏதோவொரு மனச் சங்கடத்துடன் இன்று வந்திருக்கிறான் என்று வேலாயுதம் தன் மனதில் தீர்மானித்துக் கொண்டான். எதுவாக இருந்தாலும் கந்தசாமி தானாகவே சொல்லட்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலாயுதம் அவன் முகம் வாடி மெளனமாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் குழம்பிக் கொண்டிருப்பது கண்டு தானே வாய் திறந்தான்.
‘என்ன மச்சான் யோசிக்கிறாய்?
இ.ல்.லை’ என்று இழுத்தான் கந்தசாமி.
‘என்ன இல்லையெண்ணுறாய்! என்ன எண்டாலும் யோசிக்காமல் சொல்லு' என்று அவன் மனதுக்கு நம்பிக்கை ஊட்டினான் வேலாயுதம்.
கந்தசாமி மனம் பொருமிப் பெருமூச்செறிந்து கொண்டு
“எனக்கு இருக்கிறதுக்கு இடம் வேணும் மச்சான்’ என்றான் மெல்ல அடித்தொண்டையால்.
63

Page 37
பரம்பரை அகதிகள்
அட, இதுதானே! வா இஞ்சை வந்து என்னோடை இரு
'இல்லை மச்சான். கந்தசாமி தயங்கினான்.
"அது விருப்பமில்லை எண்டால் இஞ்சினை வந்து ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இரன்’
‘எங்கை இருக்கிறது? இடம் வேணும்'
‘என்னப்பா இடமெண்ணுறாய் இஞ்சைதானே நிலங் கிடக்குது. என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை நீயும் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறதுதான்'
‘மச்சான் வேலாயுதம், நீ நிலச் சொந்தக்காரன் மாதிரியெல்லே கதைக்கிறாய்!
'மச்சான் இஞ்சை ஆருக்கடாப்பா குடி இருக்கிற நிலம் சொந்தம் இருபத்தி மூன்று குடும்பம் இருக்கிறம். நீயும் வந்து இருபத்தி நாலாவ தாகக் குடியேற வேண்டியதுதான்.
நிலச் சொந்தக்காரன் புதிசாக வந்து குடியேறுகிறதுக்கு விடுகிறாரோ என்னவோ!'
"அதைப் பற்றி நீ கவலைப்படாதை அதை நான் பார்த்துக் கொள்ளுறன். வா இப்பவே போய்க் கதைச்சுக் கொண்டு வருவம்
இருவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
அந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான நிலங்களெல்லாம் திருச்சிற்றம்பலத்தார் குடும்பத்துக்குப் பரம்பரையாக வந்த சொத்துக்கள். அவருடைய முன்னோர்கள் ஒரு காலத்தில் அந்தப் பகுதியின் முடிசூடா மன்னர்களாக இருந்து ஆண்டு அனுபவித்தவர்கள். திருச்சிற்றம் பலத்தார் குடும்பம் அக்காலத்தில் இருந்தது போன்ற பழைய நிலையில் இன்று இல்லாத போதிலும், அவர்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை ஒவ்வொன்றாக விற்றாலும் இன்னும் பத்துத் தலைமுறைக்கு அசைவில்லாது அவர்களால் வாழ்வதற்கு முடியும்.
64

தெணியான்
அவர் மறுக்காமல் சம்மதிப்பார் என்ற நம்பிக்கை வேலாயுதம் மனத்தில் இருந்தது.
இருவரும் திருச்சிற்றம்பலத்தார் வீட்டுக் கேற்றைத் திறந்து கொண்டு, புராதன சின்னமாகத் தோன்றும் அந்தப் பழைய வீட்டு முற்றத்துக்கு வந்தனர். வேலாயுதம் முற்றத்தில் நின்று கொண்டு உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.
'ஐயா. ஐயா!'
அவனுடைய குரலைத் தொடர்ந்து ‘ஆரது?’ என்று கேட்டுக் கொண்டு திருச்சிற்றம்பலத்தார் வீட்டு வாசலுக்கு வந்தார்.
‘எட வேலாயுதம் என்னடா மோனை வெள்ளணக் காலண இந்தப் பக்கம்?"
'ஐயாவிட்டைத்தான் வந்தனாங்கள்’
‘ஆரிந்தப் பொடியன்? புது ஆளாக்கிடக்கு
‘இவர் கரணவாயில் இருக்கிறவர். என்ரை சிநேகிதன். . கந்தசாமி
‘என்ன விஷயம்! இரண்டு பேருமாக வந்திருக்கிறியள்
‘இவர் குடியிருக்கிறதுக்கு இடமில்லாது அந்தரிக்கிறார், ஐயா! அதுதான் என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறதுக்கு விரும்புகிறார். அதுதான் நாங்கள் ஐயாவிட்டை.
‘அப்பிடியோ. என்று கேட்டுக் கொண்டு கந்தசாமியை அவர் தலையிலிருந்து கால்வரை ஏற இறங்கப் பார்த்தார். சிறிது நேரம் யோசித்தார். “பொடியன் நல்லவன் போலை கிடக்கு நீங்களெல்லாம் என்ரை பிள்ளை குட்டியளடா மேனை! உங்களுக்கு உதவி செய்யாமல் நான் வேறை ஆருக்கு உதவி செய்யிறது. சரி ஒரு கரைச்சலில்லாமல் இருக்க வேணும். எனக்கும் தேவைப்பட்ட நேரத்திலை தொண்டு துரவுகள் செய்ய வேணும் சரியோ. என்றார் குறிப்பாகக் கந்தசாமியைப் பார்த்து. கந்தசாமி சரியென்று தலையசைத்தான்.
65

Page 38
பரம்பரை அகதிகள்
‘சரி அப்ப போய் ஒரு கொட்டிலைக் கிட்டிலைப் போட்டுக் கொண்டு இருங்கோ’ சொல்லிக் கொண்டு அவர் உள்ளே போகத் திரும்பினார்.
‘அப்ப நாங்கள் வாறம் ஐயா’ அவரிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
வேலாயுதம் தாங்கள் சென்ற காரியம் கை கூடி விட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தான். ஆனால் கந்தசாமி தான்
குடியிருப்பதற்கு நிலம் கிடைத்து விட்டதென்ற ஆறுதல் மனதுக்கு உண்டான போதும், அவன் உள்ளம் குமுறிக் கொண்டுதான் இருந்தான்.
66

11.
கந்தசாமி தன் குடும்பத்துடன் கெருடாவிலுக்கு வந்து குடியேறி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. அவனும் அவன் குடும்பத்தவர் களும் அந்தப் பகுதி மக்களுக்கு அந்நியப்பட்ட நிலை மாறி அந்தக் கிராமத்தவர்களாகவே இந்தக் குறுகிய காலத்துக்குள் ஆகி விட்டார்கள்.
கந்தசாமிக்கு அவன் பிறந்த கிராமத்தில் வாழும் தன் இனத்தவர் களையோ அல்லது சில காலம் குடியிருந்த கரணவாய் மக்களையோ பார்க்கிலும் கெருடாவில் மக்கள் அவனுடைய மனதைப் பெரிதும் கவர்ந்தவர்களாக இருந்தார்கள். மண்ணோடு பிணைந்து வாழும் கூலித் தொழிலாளிகளான அவர்களிடையே காணப்படும் ஐக்கியம் அவன் உள்ளத்தில் எதிர்காலம் பற்றிய உறுதியையும், நம்பிக்கையையும் அளித்தன. அந்த நம்பிக்கைதான் பிறந்த மந்திகைக் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடமும் உருவாக வேண்டுமே என்று அவன் உள்ளம் ஏங்கியது.
அவன் மந்திகையிலிருந்து சில கிலோமீற்றர்களுக்கப்பால் கெருடாவிலில் வந்து வாழ்ந்து கொண்டிருந்த போதும் சகோதரி சின்னக்குஞ்சியையும், பிள்ளைகளையும் வாரத்தில் ஒரு தடவையாவது சென்று பார்ப்பதற்கு தவறுவதில்லை. ஆனால் சின்னக்குஞ்சியின் குடும்பத்துக்குத் தன்னாலியன்ற உதவிகளை அவன் செய்ய முன் வந்த சமயங்களிலெல்லாம் அவள் அந்த உதவிகளை ஏற்றுக் கொள்ளாது மறுத்துத் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். சின்னக்குஞ்சி அப்படி ஏன் தன்னோடு நடந்து கொள்ளுகின்றாள் என்பதும் அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவளுக்குத் தன் மேலுள்ள ஏதோவொரு வெறுப்புக் காரணமாகவே தான் செய்ய
67

Page 39
பரம்பரை அகதிகள்
விரும்பும் உதவிகளையெல்லாம் அவள் தட்டிக் கழித்து வருகின்றாள் என்று கொள்வதற்கும் அவனால் முடியவில்லை. சின்னக்குஞ்சி தான் பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க இன்றும் தன் மேல் அதிக பாசம் வைத்திருக்கிறாள். அவன் பெயரைக் கேட்டாலே அவள் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறாள் என்பது அவனுக்குத் தெரியும்.
அவளையும், அவள் குடும்பத்தையும் பட்டினியின்றி எப்படிப் பாதுகாப்பது என்பதே இன்று அவன் மனத்தை வருத்திக் கொண்டிருக் கும் ஒரே பிரச்சினை. அவர்களிலிருந்து துார விலகி அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் தினமும் உணவுக்கு முன்னே போய் அவன் அமர்ந்து கொண்டால் சின்னக்குஞ்சியின் குழந்தைகளின் முகங்களே அவன் நினைவுக்கு வரும்.
இன்று கந்தசாமி வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய நேரம் முதல் ஏனோ அவர்களுடைய எண்ணமே அவன் மனத்தைப் போட்டு அரித்துக் கொண்டிருந்தது. தங்கம் அவனைச் சாப்பாட்டுக்கு அழைத் ததும் அவன் உணவுக்கு முன் வந்து குந்தினானே அன்றி அவனுக்கு உணவு உட்செல்லவில்லை.
‘என்ன யோசிக்கிறியள் சாப்பிடாமல்?’ அவனை அவதானித்துக் கொண்டிருந்த தங்கம் இப்பிடிக் கேட்டாள்.
'இல்லை. அக்காளையும், பிள்ளைகளையும் பற்றித்தான் இண்டைக்கு மனத்திலை ஒரே எண்ணமாகக் கிடக்கு’ என்றான் அவன்.
அவன் தான் சாப்பிட்டதாக அவளுக்குப் பேர் பண்ணி விட்டு கையை அலம்பிக் கொண்டு அவசரமாக எழுந்து போய் விட்டான்.
மனம் தொடர்ந்து அலட்டிக் கொண்டிருப்பதிலும் பார்க்க ஒரு தடவை மந்திகைக்குப் போய் வருவோமென்று உள்ளூர நினைத்துக் கொண்டிருந்த போதுதான் சின்னக்குஞ்சியின் கணவன் இராசன் திடீரென்று இறந்து போன அந்த மரணச் செய்தி அங்கு வந்து சேர்ந்தது. கந்தசாமி குடும்பத்துடன் உடனே மந்திகைக்குப் புறப்பட்டான்.
மறுநாள் இராசனின் மரணச் சடங்குகள்யாவும் நடந்து முடிந்தன. கெருடாவிலிலிருந்தும் ஆண்களும், பெண்களுமாகப் பலர் சின்னக்

தெணியான்
குஞ்சி வீட்டுக்கு வந்து மரணச் சடங்கில் கலந்து கொண்டனர்.
சடுதியாக நடந்து விட்ட இராசனின் மரணச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்வதற்கு சின்னக்குஞ்சியால் முடியுமா? கெருடாவில் நண்பர்கள் பலர் வந்து கந்தசாமிக்குக் கை கொடுத்து உதவி இருக்காது விட்டால் கந்தசாமியும் அந்தச் செலவுகளைச் சமாளிப்பதற்கு இயலாது திணறி இருப்பான். இராசனின் மரணச் சடங்குகள் நடந்து முடிந்த அடுத்த தினமே கந்தசாமி தன் கூலித் தொழிலுக்குப் போகப் புறப்பட்டு விட்டான்.
அவன் குடும்பம் மந்திகையில் ஒரு வார காலம் சின்னக் குஞ்சியின் வீட்டில் தங்கியிருந்தது. அதன் பிறகு கெருடாவிலுக்குச் செல்லப் புறப்பட்ட போது கந்தசாமி தன் மருமக்களிற் சிலரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு செல்ல விரும்பினான்.
'அக்கா பிள்ளையளை நான் கூட்டிக் கொண்டு போகப் போறன்’
'அது வேண்டாந் தம்பி’ என்று மறுத்தாள் சின்னக்குஞ்சி.
‘ஏனக்கா முந்தியும் நீ மறுத்துப் போட்டாய்”
"இப்பவும் சொல்லுறன் அதுகள் இஞ்சினை என்னோடை இருக்கட்டும்
'நீ ஒராள் உழைச்சுத் தீன் குடுப்பியே?’
"அது நான் குடுப்பன்’
‘அப்ப நாங்கள் கெருடாவிலுக்குப் போகேல்லை. இஞ்சை உன்னோடை இருக்கிறம்.
'அந்தக் கதை வேண்டாம். நீ போய்க் கெருடாவிலிலைதான் இரு’
சின்னக்குஞ்சி கண்டிப்பாக மறுத்து விட்டாள். கந்தசாமி அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாதவனாகி மனச் சோர்வுடன் கெருடாவிலுக் குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்.
69

Page 40
பரம்பரை அகதிகள்
அதன் பிறகு மூன்று வாரங்கள் கழிந்து போய் விட்டன. இன்னும் ஒரு வார காலத்தின் பின்பு இராசனுடைய அந்தியேட்டிக் கிரியைகளைச் சம்பிரதாயபூர்வமாகச் செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணி இருந் தார்கள். தங்கள் இயல்புக்குத் தகுந்ததாக மிகச் சிறிய அளவில் அந்தச் சடங்குகளை முடிக்க வேண்டுமென்று கந்தசாமி தீர்மானித்திருந்தான். அதற்கான ஏற்பாடுகளை இனிமேற் கொஞ்சமாகச் செய்து வைக்க வேண்டுமென்பதைக் கந்தசாமி மனத்தில் நினைத்துக் கொண்டு சின்னக்குஞ்சி வீட்டை நோக்கிப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்த போது. அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்த்ததும் அவன் இரத்தம் கொதித்தது. கண்கள் சிவந்து கொண்டு வந்தன.
சின்னக்குஞ்சியும், பிள்ளைகளும் கையில் ஒரு துணி மூட்டை யுடன் தெருவிலே கோழியும், குஞ்சுகளும் போல குறாவிப் போய் நின்று கொண்டிருந்தார்கள்.
அவன் அங்கே வந்திருப்பதைக் கண்டதும் சின்னக்குஞ்சிதம்பி’ என்று சொல்லிக் கொண்டு கோவென்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். அவள் குழந்தைகள் ‘மாமா." என்று அழைத்துக் கொண்டு ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழுதார்கள்.
அந்த இடத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த குடிசை கள் எல்லாம பிரித்தெறியப்பட்டு வேலிக் கதியால்கள் வெட்டி வீழ்த்தப் பட்டிருந்தன. மதங் கொண்ட யானை ஒன்று வெறியோடு புகுந்து மிதித்து உழக்கி அழித்து விட்டது போல் அந்தக் குடிசைகள் கோரமாகக் காட்சி அளித்தன. சட்டி பானைகள் உடைந்து சிதறிக் குடிசைக்குக் குடிசை பரந்து கிடந்தன. பிய்த்தெறிந்த கூரைகளும், பழைய பாய்களும் ஆங்காங்கே குவிந்து கிடந்தன.
கந்தசாமியால் சில நிமிடங்கள் வாய் திறந்து பேச முடியவில்லை. மருமக்களை ஆதரவோடு அணைத்து வைத்துக் கொண்டிருக்கும் போதும் உழைத்து உழைத்து உரமேறிப் போன அவன் கை கால்கள் படபடத்து நடுங்கின. அவன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த
70

தெணியான்
முடியாத நிலையில் வாார்த்தைகள் தடுமாறிக் கொண்டு வெளி வந்தன.
'அக்கா என்ன நடந்தது? “காணிக்காறர் வந்து வீடுகளைப் புடுங்கி எறிஞ்சு எங்களைக் கலைச்சுப்போட்டினம் அப்பு'
"நாங்கள் தானே சந்ததி சந்ததியாக இதிலை குடியிருக்கிறம். பிறகு அவைக்கென்னவாம் காணி?
"உதை ஆரப்பு கேக்கிறான்' நாங்கள்தான் தட்டிக் கேக்க வேணும். இஞ்சை இருந்தவ
னெல்லாம் எங்கை போய் விட்டான்கள்?
‘மாயக்கைக்கும். அல்வாய்க்கும் சொந்தக்கார வீடுகளுக்குப் போய் விட்டினம்’
“சீ. இவங்களெல்லாம் ஆம்பிளையளே! வேட்டி கட்டிக் கொண்டு திரியிறாங்கள். ஆரார் வந்து புடுங்கி எறிஞ்சவங்கள் ஆக்களைச் சொல்லு நான் இப்ப போய்.”
கந்தசாமி பொறுமையை இழந்து பல்லை நெருடினான். ‘என்ரை அப்புவெல்லே, நீ போக வேண்டாம் ராசா. இதுகளை நினைச்சுத்தானப்பு நீ இஞ்சை குடியிருக்க வேண்டாமென்று ஊரை விட்டுக் கலைச்சனான். நீ உழைச்சு எங்கையெண்டாலும் ஒரு காப் பரப்புக் காணி வாங்கி அதிலை குடியிருக்க வேணுமெண்டு நினைச்சுத் தான் என்ரை குஞ்சு, குருமனுகளை உன்னோடை விடாமல் மறிச்சனான். இப்ப என்ரை ராசா. ஐயோ. ஐயோ.
சின்னக்குஞ்சி தன் மனதில் அவனைப் பற்றிக் கொண்டுள்ள கவலைகள் எல்லாம் இப்போதுதான் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தன. 'அக்கா. குரல் தள தளக்க வாஞ்சையோடு அழைத்த அவன் மேலும் பேச முடியாமல் கண் கலங்கினான்.
"ஐயோ ராசா, இந்த வீட்டிலை இருந்து கண் மூடின அந்த
71.

Page 41
பரம்பரை அகதிகள்
மனிசன்ரை அந்திரட்டிக்கும் இதிலை காய்ச்சிப் படைக்கேலாமற் போச்சே! அந்தச் சீவனெல்லோ அந்தரிக்கப் போகுது. எங்களுக்கு மண் கிள்ளிப் போடப் போகுது
இப்பிடிச் செய்தவங்களுக்கு மண்ணள்ளிப் போடட்டுமக்கா சரி. நாங்கள் போவோம் வாருங்கோ’
கந்தசாமி தன் இளைய மருமகனைத் துாக்கித் தோளின் மேல் போட்டுக் கொண்டு அங்கிருந்து திரும்பி நடந்தான். சின்னக்குஞ்சியும், பிள்ளைகளும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
அன்றிரவே கெருடாவிலிலுள்ள அவன் வளவுக்குள்ளே, அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய குடிசை ஒன்றைப் போட்டு முடித்தார்கள்.
72

12
அடுத்த தினம் உதயத்தில் இருள் முற்றாகக் கலைவதற்கு முன்னர் வழமைபோலக் கந்தசாமியால் படுக்கையிலிருந்து எழும்பு வதற்கு முடியவில்லை. வேலிக்கு மேல் பொழுது கிளம்பிய பிறகுதான் அவன் உறக்கம் கலைந்து சோம்பலுடன் எழுந்தான். கந்தசாமி குடிசையை விட்டு வெளியே வந்ததும், சின்னக்குஞ்சியின் கடைக் குட்டிக்கு மூத்தவன் அவன் எழும்பும்வரை காத்திருந்தவன் போல ஓடோடி வந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டான். கந்தசாமி மெல்லக் குனிந்து அவனை ஆதரவோடு துாக்கித் தோளிற் போட்டுக் கொண்டு அடுக்களைக்குள்ளிருக்கும் தங்கத்தை நோக்கிச் சென்று வாசலில் நின்றான்.
அடுப்பின் மேல் “தேத்தண்ணிக் குடுகை' வைத்து நெருப்பு மூட்டி எரித்துக் கொண்டிருந்த தங்கம், வாசலில் வந்து நிற்கும் அவனை யும், சின்னக்குஞ்சியின் மகனையும் சில கணங்கள் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு உதட்டிலே புன்னகை நெளிய நாணத்துடன் தலை கவிழ்ந்து கொண்டாள்.
அவளுடைய அந்தப் பார்வையும், என்றுமில்லாத குமரி நாணத் துடன் தலை குனிவதும் அவனுக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் தோன்றுகின்றது.
அவன் வாய் திறந்து அவளிடம் அதுபற்றிப் பேசாமலே விழிகளை அகலத் திறந்து அந்தப் பார்வையிலேயே வினாவைத் தேக்கி வைத்து அவளை ஏறெடுத்து நோக்கினான்.
அவள் மீண்டுமொரு தடவை அவன் முகத்தை குறிப்பாகப்
73

Page 42
பரம்பரை அகதிகள்
பார்த்து விட்டு, பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டு ‘என்ன விடிஞ்சது விடிய முன்னம் மாப்பிள்ளையைத் துாக்கிப் போட்டியள்’ என்றாள் மெல்லச் சிரித்த வண்ணம்.
அவளுடைய சிரிப்பும், குழைவும், மருமகனைப் பார்த்து 'மாப்பிள்ளை' என்று குறிப்பிட்டுச் சொல்வதும் அவன் மனத்திற் பட்டென்ற எதனையோ உணர்த்தியது. அவன் அதனைத் தெளிவு படுத்திக் கொள்ளும் அவசரத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
‘தங்கம், என்ன சொல்லுறாய்?
அவள் உதடுகளிற் புன்னகை மலரத் திரும்பவும் தலை குனிந்து கொண்டாள்.
‘என்னப்பா, புதுப்பெம்பிளை மாதிரி வெக்கப்படுகிறாய் சொல்லுமன்
'ஒண்டுமில்லை இப்பவே மாப்பிள்ளையை வளைக்கிறியள் எண்டு சொல்லுறன்’
‘அப்பிடியெண்டால்.?
8. १
‘என்னப்பா சொல்லுமன்'
‘போன மாதம் நான் முழுகேல்லை' சொல்லிக் கொண்டு அவன் முகத்தை ஆவலுடன் உற்றுப் பார்த்தாள் அவள். அவன் முகம் பட் டென்று சுண்டிக் கறுத்தது.
அவன் முகம் திடீரென்று மாறியதை அவதானித்த அவள் உள்ளத்தில் துள்ளிக் கொண்டிருந்த ஆனந்தம் மறைந்து முகத்தில் வேதனை ரேகை படர்கிறது. சில கணங்கள் இருவரும் மெளனமாகி நிற்க நெருடலுடன் மெல்லக் கழிகிறது.
கந்தசாமி மனம் மகிழ்ந்து குதுாகலப்பட வேண்டிய நேரத்தில் முகம்மாறி வேதனைப்படுவது கண்டு மனம் பொறுக்காத அவள் சற்றுத் தாமதித்து வெப்பிசாரத்துடன் அவனிடம் கேட்டாள்.
74

தெணியான்
'ஏன் ஒரு மாதிரி இருக்கிறியள்?’
‘எப்பிடித் தங்கம் நான் சந்தோஷப்படுகிறது?’
'ggát?”
"நாங்கள் தான் குடியிருக்கிறதுக்குச் சொந்த நிலமில்லாத பரதேசி
களாக இருக்கிறம். அதுக்குள்ளை ஒரு பிள்ளையைப் பெற்று, அது களும் எங்களைப் போலை.
அவன் வேதனையுடன் கூறிக் கொண்டு அந்த இடத்தை விட்டு விலகி, முற்றத்துக்குத் திரும்பி மெல்ல நடந்தான். அப்போது அவன் வீட்டுப் படலையில் நின்று யாரோ ஆக்குரோசத்துடன் அழைக்கின்ற குரல் எழுந்தது.
“கந்தசாமி. கந்தசாமி.
‘ஆரது' என்று கேட்டுக் கொண்டு தோள் மேலிருந்த மரு மகனைக் கீழே இறக்கி விட்டுப் படலையை நோக்கி நடந்தான் கந்தசாமி. படலைக்கு வெளியே சுந்தரலிங்கம் கடுகடுப்புடன் மதம் பிடித்தவர் போல நின்று கொண்டிருந்தார்.
அரைக் கை நஷனலும், வெள்ளை வேட்டியும், தும்பைப் பூப் போன்று நரைத்த தலையுமாகக் கண்கள் சிவந்து நிற்கும் அவரைக் கண்டு அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிசயமாகத் தலை யிலிருந்து கால்வரை அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தான்.
அவருக்கு அவனுடைய அந்தப் பார்வை கட்டோடு பிடிக்க வில்லை. அதனால் மனத்தில் எழுந்த வெறுப்பைச் சிந்தும் கள்வம் மிக்க அலட்சியப் பார்வையை அவன் மேற் பதித்த வண்ணம் அவர் பேசினார்.
'ஆர் உன்னை வீடு கட்டச் சொன்னது?
‘இதென்ன கேள்வி நான் இதிலை குடியிருக்கத் தொடங்கி வருஷக்கணக்காச்சு’
'இராத்திரி ஆரைக் கேட்டுக் கொண்டு வீடு கட்டினனி'
75

Page 43
பரம்பரை அகதிகள்
‘நான் இருக்கிற வளவுக்குள்ளைதானே ஒரு கொட்டில் போட்டனான்.
'நீ இருக்கிறதெண்டாப் போலை அது உன்ரை வீட்டு நிலமே!’
"அதைக் கேக்க நீங்கள் ஆர்’
‘நான் ஆரோ?”
‘ஓமோம் நான் திருச்சிற்றம்பலத்தாற்றை நிலத்திலைதான் குடியிருக்கிறன்’
'அப்பிடித்தான் உம்முடைய நினைப்பு
“கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கோ'
‘ஓகோ. என்ரை நிலத்திலை குடியிருந்து கொண்டு உமக்கு ஒரு மரியாதையும் தேவைப்படுகுது'
'குடியிருக்கிறதுக்கும் மரியாதைக்கும் சம்பந்தமில்லை.
'நீர் ஒரு மாதிரி ஆள் எண்டது எனக்கு எப்பவோ தெரியும். திருச்சிற்றம்பலத்தார் என்னோடை நிலத்துக்கு விலைபேசிற நேரத்திலை தான் உம்மை இதுக்குள்ளை குடியிருக்க விட்டவர். இந்த நிலம் முழு வதும் பரப்புக்கு ஆறாயிரம் வீதம் குடுத்து நான் வாங்கிப் போட்டன். லட்சக்கணக்காகக் காசைக்குடுத்தது உங்களைக் குடியிருக்க விடுகிறதுக் கல்ல. உறுதி முடிஞ்சு வரட்டுக்கெண்டுதான் பொறுத்திருந்தனான். முதலிலை இராத்திரிக் கட்டின வீட்டை இப்ப புடுங்க வேணும். எல்லாரும் ஒரு மாதத்துக்குள்ளை இந்த இடத்தை விட்டுக் குடி யெழும்பிவிட வேணும்.
கந்தசாமி திகைத்துப் போனான். திடீரென்று இப்படி எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு தாக்குதல் வருமென்று அவன் எதிர் பார்க்கவே யில்லை. சுந்தரலிங்கம் சொல்வது எல்லாவற்றையும் உண்மையென்று எப்படி நம்புவது என்று ஒரு கணம் சந்தேகித்தான். ஆனால் சற்றும் உண்மையில்லாமல் இவ்வளவு துணிச்சலாக வந்து பேசமாட்டாரென்றும் நினைத்துக் கொண்டான். பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வரும்
76

தெணியான்
ஏழைகளைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படாமல் திருச் சிற்றம்பலத்தார் நிலத்தை விற்றிருப்பாரா என்ற எண்ணமும் அவன் மனத்தில் இழையோடியது. அவருக்கு உடனடியாக எந்தவிதமான பதிலும் சொல்லுவதற்கு இயலாமல் அவன் விறைத்துப் போய் நின்றான்.
‘என்ன பேசாமல் நிக்கிறாய்?’ சுந்தரலிங்கம் உறுமினார். ‘என்ன பேசிறது' எரிச்சலோடு கேட்டான். ‘ஒரு மாதத்திலை எல்லாரும் குடியெழும்பி விடவேணும் 'குடியெழும்பி எங்கை போறது.? அது முடியாது’
‘முடியாதோ அதை நான் பார்த்துக் கொள்ளுறன். வீண் கரைச்சற் படாதையுங்கோ இப்பவே சொல்லிப் போட்டன்’
சுந்தரலிங்கம் எச்சரிக்கை செய்து விட்டுச் சினத்துடன் அங்கி ருந்து திரும்பி விறுவிறென்று நடந்தார்.
கந்தசாமி அவர் போகின்ற திக்கையே பார்த்துக் கொண்டு மரமாக அசையாமல் நின்றான். அவள் வேகமாகச் சென்று கண்களுக்கு அப்பால் மறைந்த பின்னரும் நின்ற இடத்திலிருந்து சில நிமிடங்கள் அசையவே இல்லை அவன்.
அரைமணி நேரத்துக்குள் அந்தச் செய்தி அங்கு குடியிருக்கும் இருபத்திநான்கு குடும்பங்களுக்கும் கலவரகால வதந்திகள் போல விரைவாகப் பரவியது. அவர்கள் எல்லோரும் இனம் புரியாத கலக்கத்தி னால் மனத்திற் பீதியுடன் குழம்பினார்கள். சிலர் அந்தச் செய்தியை நம்புவதற்கு மறுத்தனர். திருச்சிற்றம்பலத்தார் ஒரு வார்த்தை சொல்லாமல் தாங்கள் குடியிருக்கும் நிலத்தைச் சுந்தரலிங்கத்துக்கு விற்றிருக்க மாட்டாரென்றே நம்பினார்கள்.
அன்று மாலை கந்தசாமியும், வேலாயுதமும் வயதில் மூத்தவரான சின்னவியும் இன்னும் சிலரும் திருச்சிற்றம்பலத்தாரைத் தேடிக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் அவர் வீட்டு முற்றத்தில் நின்று மெல்லக் கொடுத்த குரலைக் கேட்டு அவர் மனைவிதான் முன்புறக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவள் அவர் 77 —

Page 44
பரம்பரை அகதிகள்
களுடன் அதிகம் பேசுவதற்கு விரும் பாது வந்தது வர முதல் வெடுக்கென்று ‘என்ன?’ என்று கேட்டு நெருப்பில் விழுந்த உப்பு போல வெடித்தாள்.
‘ஐயாவைக் காண வேணும்’ என்றான் பணிவாகச் சின்னவிக் கிழவன்.
‘என்னத்துக்கெண்டு சொல்லன்’ என்றாள் மீண்டும் அவள். ‘ஐயாவிட்டைத்தான். சின்னவிக் கிழவன் அடித்தொண்டையில் கிடந்து வார்த்தைகள் இழுபட்டன.
அவள் முகத்தைச் சுழித்துக் கொண்டு அவர்களை வெறித்தொரு பார்வையாற் சுட்டுவிட்டு வெடுக்கென்று திரும்பி உள்ளே நடந்தாள். சற்று நேரம் தாமதித்து திருச்சிற்றம்பலத்தார் மெல்லச் செருமிக் கொண்டு நிதானமாக வெளியே வந்தார்.
78 SLSLSSLSLSSLSLSSLSLSSLSLS

13
முற்றத்து மாமரத்துக்குக் கீழே நின்றவர்கள் வீட்டு வாசல்வரை வந்து அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டனர். திருச்சிற்றம்பலத்தார் வாசலை விட்டு இறங்கிக் கீழ்ப் படியில் நின்ற வண்ணம் ஒன்று மறியாதவர் போல அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
‘என்ன மக்கள் வந்து நிக்கிறியள்?’
‘ஐயாவிட்டைத்தானாக்கும்’ என்றார் சின்னவிக் கிழவன்.
‘என்ன காரியம்?’
சுந்தரலிங்கம் ஐயா வந்து எங்கள் எல்லாரையும் குடியெழும்பச் சொல்லுறார்’
‘ஓகோ.
'தான் அந்த நிலத்தை வாங்கிப் போட்டாராம்
'அவன் என்னை விட மாட்டனெண்டு பிடிச்சுக் கொண்டான் மக்கள். கொழும்பிலையும். கண்டியிலையும் அவன் வைச்சிருந்த கடையளைக் கலவரத்தோடை எரிச்சுப் போட்டான்களாம். அவனும் பாவம்'
‘அதுக்காக ஐயா.
‘இனிமேல் யாழ்ப்பாணத்துக்கு வெளியாலை போய்ப் பிழைக் கேலாது. தான் முந்திரியத் தோட்டம் செய்யப் போறனெண்டு நிண்டு கொண்டான்'
79

Page 45
பரம்பரை அகதிகள்
"நாங்கள்.’ என்று எதையோ சொல்ல வாயெடுத்தான் கந்தசாமி. அதற்குள் அவர் இடைமறித்துச் சொன்னார். 'உங்களை நினைக்காம லில்லை. ஆனால் உங்கடை கையாலை நான் எப்பிடிக் காசு வேண்டுறது மக்கள்! நீங்கள் எங்கடை பிள்ளையஸ்’
"நாங்கள் ஐஞ்சாறு தலைமுறையாகக் குடியிருக்கிறம். எங்களை அதுக்குள்ளாலை இருந்து வெளிக்கிடச் சொன்னால் நாங்கள் எங்கை போறது?’ என்றான் வேலாயுதம்.
‘நான் சுந்தரலிங்கத்துக்குச் சொல்லுறன். அப்ப. நீங்கள் வாருங்கோ’ என்று சொல்லிக் கொண்டு அவர் உள்ளே திரும்பி விட்டார்.
அவர்களுக்கு ஒன்று புரிந்தது. திருச்சிற்றம்பலத்தார் தந்திரமாக அந்த நிலத்தை விலைக்கு விற்றுப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு விட்டீார் என்பதுதான் அது. அவரோடு இனிமேல் பேசுவதில் அர்த்த மில்லை. தாங்கள் குடியிருக்கும் நிலத்தை இந்த விலை கொடுத்து வாங்கி யிருக்கும் சுந்தரலிங்கமும் சும்மா இருந்து விடப் போவதில்லை. இதனால் பெருங் குழப்பங்கள்தான் வரப் போகிறது என்பதைத் தீர்மானித்துக் கொண்டார்கள்.
திருச்சிற்றம்பலத்தாார் வீட்டிலிருந்து அவர்கள் திரும்பும் போது மனத்தில் குழப்பமும், குமுறலுமே நிறைந்திருந்த போதிலும் உறுதியான ஒரு முடிவுடன்தான் வந்தார்கள். -
சுந்தரலிங்கம் சொல்லிப் போன ஒரு மாத கால கெடுவும் முடிந்து போனது. அவர் எதிர்பார்த்தது போல அந்த நிலத்தில் குடியிருந்த ஒரு குடும்பந்தானும் அங்கிருந்து வெளியேறவில்லை.
அந்த நிலத்தை விட்டு அவர்கள் வெளியேறினால் சுதந்திரமாகக் காலுான்றி நிற்பதற்கும் அவர்களுக்கு இடமில்லை. தங்களுக்கென்று வேறு புகலிடமில்லாத அந்த ஏழை மக்கள் சுந்தரலிங்கத்தின் எச்சரிக்கைக்குப் பயந்து வேறு எங்குதான் சென்று சரண் புக முடியும்? சுந்தரலிங்கம் தன் கையாட்கள் மூலம் மீண்டும் மீண்டும் தகவல் களை அனுப்பி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
80

தெணியான்
அவர்களுக்கும் தாங்கள் இப்போது செய்யத் தகுந்தது என்ன வென்பது புரியாமல் தினமும் நெஞ்சம் கலங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் முதியவர்களாக இருந்தவர்களின் சிந்தனை, சுந்தர லிங்கத்தின் பாதங்களிற் போய் விழுந்தால் அவர் தங்களைக் கைவிடாது அபயமளித்துப் பாதுகாப்பாரென்றே நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் முதியவர்களின் அந்த மனப்போக்கை இளைஞர்கள் எல்லோரும் ஒரு மனமாக எதிர்த்தார்கள்.
‘பணம் கொடுத்து நிலத்தைக் கேட்டாலும் அவர் எங்களுக்குத் தரப் போவதில்லை. அப்பிடி அவர் கேட்டாலும் குடுக்கிறதுக்கும் எங்களிட்டை எதுவுமில்லை. வீணாக அவரிட்டை ஏன் போவான்’
இளைஞர்கள் எடுத்தெடுத்துச் சொன்ன போதும் பெரியவர்கள் தங்கள் மனத்திற் கொண்ட நம்பிக்கை தளராமல் ஒரு தினம் அவரைத் தேடிச் சென்றார்கள்.
அவர்கள் அவர் வீடு தேடிச் சென்ற சமயம் சுந்தரலிங்கம் தன் காரிலேறி வெளியே செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவருடைய கார் ‘கேற்றைத் தாண்டி தெருவில் இறங்கி வேகமாகத் திரும்பியது.
அப்போது ‘கேற்றுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருக்கும் அவர்களைஅவர் கண்டு கொண்டார். உடனே காரை நிறுத்துமாறு சாரதிக்குக் கட்டளையிட்டார்.
காருக்குள்ளே அவர் அமர்ந்திருந்த வண்ணம் தலையை மட்டும் வெளியே நீட்டி, "ஏன் நிக்கிறியள்?’ என்றார். பார்வையில் அலட்சிய மும், குரலில் அதிகாரமும் தொனித்தது.
'ஐயா எங்களைக் கைவிடக் கூடாது' சின்னவிக் கிழவன் கூனிக் குறுகினான்.
'அதெல்லாம் சரிவராது போங்கோ’ எடுத்தெறிந்து பேசினார் சுந்தரலிங்கம்.
'ஐயா அப்படிச் சொல்லக் கூடாதாக்கும் இன்னொரு கிழவன் பணிந்து குழைந்தான்.
81

Page 46
பரம்பரை அகதிகள்
‘ஓ. நான் லட்சக்கணக்கிலை மண்ணுக்கை காசைக் கொட்டிப் போட்டு கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் நிக்க வேணுமாக்கும்’
"நாங்கள் ஏழையள் எங்கையாக்கும் போவம்' "அதை என்னையேன் கேக்கிறாய்? எங்கையாவது கடல் கிணத் துக்குப் போங்கோ. அவர் சீறினார்.
'ஐயா இப்பிடிச் சொன்னால் நாங்கள் என்னவாக்கும் செய்வம். ஐயாதான் ஏதும்.
‘சீச்சீ. அதொண்டும் நடவாது. இப்ப நான் லோயரைத் தேடித்தான் போறன். கோட்டாலை கட்டளை வரும் அங்கை வந்து சொல்லுங்கோ’
கார் தெருப்புழுதியை அவர்கள் மேல் அள்ளி இறைத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பிச் சென்று விட்டது. அவர் சொல்லிக் கொண்டு போனது போல பத்துக் குடும்பங்களுக்கு இரண்டு வார காலத்துக்குள்ளே நீதிமன்றக் கட்டளைகள் வந்து விட்டன.
சுந்தரலிங்கம் விசாரணைகள் துரிதமாக நடந்து முடிவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்தார். காணித் தகராறுகள் நீதி மன்றத் துக்குச் சென்று விட்டால் பொதுவாக வருடக்கணக்கில் விசாரணைகள் நீண்டு செல்வதே வழக்கம். ஆனால் இந்த வழக்குகள் ஓராண்டு காலத்துக்குள்ளே விசாரணைகள் எல்லாம் முடிவுற்றுத் தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது.
ஆறு மாத எல்லைக்குள் அந்தப் பத்துக் குடும்பங்களும் அவர் கள் குடியிருந்து கொண்டிருக்கும் நிலத்தை விட்டு வெளியேறி விட வேண்டுமென்பதே நீதிமன்றத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் தீர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குச் சாதகமாக அமைந்ததும், மறுநாளே எஞ்சிய பதினான்கு குடும்பங்களின் மீதும் அவர் உடனடியாக வழக்குத் தொடுத்தார்.
நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆறுமாத காலக்கெடு இமைப் பொழுதாக விரைந்து கழிந்து போனது. ஆனால் அவர்கள் எவருமே தாங்கள் குடியிருக்கும் அந்த நிலங்களிலிருந்து வெளியேறவில்லை.
82

தெணியான்
ஒரு தினம் நடுப்பகல் வேளை
கூலி உழைப்பாளர்களான அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் அந்தப் பகுதித் தோட்டங்களை நோக்கி அன்றைய வயிற்றுப் பாட்டுக்கான உழைப்புக்காகப் போய்விட்ட நேரம், வயதேறித் தளர்ந்து போனவர்களும், கூலிப்பிழைப்புக்குச் செல்லாத சில பெண்களும், புழுதி அளைந்து விளையாடும் சிறார்களும்தான் அந்தக் குடிசைகளில் அப்போது தங்கி இருந்தனர்.
அதுதான் தகுந்த சமயம் என்று கண்டு நீதிமன்றக் கட்டளைச் சேவகனும், சுந்தரலிங்கத்தின் கையாட்களும் ஒன்று சேர்ந்து திடீரென்று அங்கு வந்து அகற்றப்பட வேண்டிய குடிசைகளை உதைத்து விழுத்திப் பிடுங்கி எறிந்தார்கள்.
அந்தக் குடிசைகள் அனைத்தும் மிக நெருக்கமாகவும். புகையிலைப் புகைபோடும் குடில்கள் போலச் சின்னச் சின்னக் கொட்டில் களாகவும் இருந்ததால் அவற்றை அழித்துச் சிதைப்பதில் அவர்களுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
அவர்கள் தங்கள் வெறியாட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது கந்தசாமியின் குடிசையில்தான். அதையடுத்து வேலாயுதத்தின் குடிசை நிலத்திற் சரிந்து விழுந்தது. தொடர்ந்து பதினைந்து குடும்பங்களின் குடிசைகளை அழித்து விட்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.
தோட்டங்களில் வேலை செய்து கொண்டு நின்றவர்களுக்குத் தங்கள் குடிசைகள் அழிக்கப்படும் செய்தி எப்படியோ போய்ச் சேர்ந்து விட்டது. அவர்களும், அவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் ஏனைய கூலித் தொழிலாளர்களும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டு வைத்து விட்டு உள்ளக் கொதிப்புடன் ஓடி வந்தார் கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்த சமயத்தில் சுந்தரலிங்கத்தின் ஏவற் கூலிகள் நின்றிருந்தால்.
அன்றிரவே அவர்களும், அந்தக் கிராமமெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கூலித் தொழிலாளர்களும் ஒன்று திரண்டு அழிக்கப் பட்ட குடிசைகளை மீண்டும் அதே இடங்களிற் போட்டு முடித்தார்கள்.
83

Page 47
பரம்பரை அகதிகள்
சுந்தரலிங்கம் அந்த அளவில் தமது நடவடிக்கைகள் எல்லா வற்றையும் கைவிட்டு அமைதியாக இருந்து விடப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் பயங்கரமான ஒரு சோதனைக்கு முகம் கொடுக்க வேண்டியவொரு காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
இதற்கிடையில் வயிரவிக் கிழவன் ஒரு தினம் கந்தசாமியைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். கந்தசாமி பல தடவைகள் அவரைக் கண்டு தங்கமணிக்கு ஒரு வரன் பார்க்குமாறு சொல்லிக் கொண்டிருந்தான். கந்தசாமியின் குடும்ப நிலைக்குத் தகுந்ததாகத் தங்கமணிக்கு ஒரு வரன் தேடுவதில் அவருக்குப் பல சிரமங்கள் இருந்தன. இறுதியில் இமையாணனில் ஒரு மாப்பிள்ளையை ஒழுங்கு செய்து கொண்டு அவர் அங்கு வந்தார்.
” ஒரு வார காலத்தில் மாப்பிள்ளையையும், அவன் உறவினர் களையும் தங்கமணியைப் பெண் பார்க்க அழைத்து வருவதாகக் கூறிக் கொண்டு அவர் புறப்பட்டுப் போய் விட்டார். வயிரவிக் கிழவன் வருவதாகச் சொல்லிக் கொண்டு போன தினத்துக்கு முதல் நாள் இரவு.
84

14
கந்தசாமி, வேலாயுதம் போன்ற அந்தப் பகுதி வாலிபர்கள் இப்போது இரவு வேளைகளிலும் ஒழுங்காகப் படுத்துறங்குவதில்லை. சுந்தரலிங்கத்தின் குணவியல்புகளை அவர்கள் சரியாகவே கணக்கிட்டு வைத்திருந்தார்கள். எந்தக் கொடுமையைச் செய்தும் தங்களை அந்த நிலத்திலிருந்து விரட்டி அடிப்பதற்கு அவர் பின்னிற்கமாட்டாரென்பது அவர்களுக்குத் தெரியும்.
கந்தசாமி மனப் போராட்டங்களுடன் உறக்கமின்றிக் குழம்பிக் கொண்டிருந்தான்.
‘எங்கடை தலைமுறையோடையாவது குடியிருக்கிறதுக்கு நிலமில் லாமல். அதனாலை வீடில்லாதவர்களாகி. தலைக்கு மேலேயுள்ள ஆகாயத்தைத் தவிர, காலுக்குக் கீழை மிதிச்சு நிக்கிறதுக்கு இடமில்லா மல் ஏங்குகிற வாழ்வு ஒழிஞ்சு போகாட்டில் எங்கடை பிள்ளை யஞக்கும் இதே கதிதான்’
அவன் நினைத்து நினைத்து நெஞ்சம் பொருமிக் கொண்டு, குடிசைக்குள் குழந்தையை அணைத்தவண்ணம் படுத்துக் கிடக்கும் தங்கத்தைத் திரும்பிப் பார்க்கிறான். அவளுக்கும் உறக்கமில்லை. ஆனால் அவள் உறங்குவது போலப் பாசாங்கு செய்து கொண்டு கிடக் கிறாள் என்பது, மினுக்கம் காட்டும் குப்பி விளக்கின் ஒளியில் அவன் பார்வைக்குப் புலனாகின்றது. குழந்தை தாயின் மார்போடு நெருக்கமாக இணைந்து ஆனந்தமாக உறங்கிக் கிடக்கிறது.
நாளைக்கு இந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டால். எங்களைப் போலத்தான் ஏக்கங்கள். குழப்பங்கள். தலைகுனிவுகள். இது தொடர்ந்து கொண்டிருக்கக் கூடாது இதுக்கொரு தீர்வு வேணும்

Page 48
பரம்பரை அகதிகள்
இப்படியெல்லாம் எண்ணி, எண்ணி மனத்தை அலையவிட்டுக் கொண்டு கிடந்த கந்தசாமி, ஒரு சாமத்தில் தன்னையறியாமல் துாக்கம் அழுத்திக் கனத்த விழிகளை மெல்ல மூடிக் கொண்டான். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தானோ அவனுக்குத் தெரியாது.
திடீரெனக் குழந்தை வீரிட்டுக் கத்தும் சத்தம் எழுகிறது. அதைத் தொடர்ந்து தங்கம் துடித்துப் பதைத்து "ஐயோ. ஐயோ. என்று நாத் 'தடுமாறக் குமுறிக் கொண்டு எழுகிறாள். அவர்கள் படுத்துக் கிடந்த குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குழந்தையின் மீது தீப்பிழம்புகள் சுவாலிக்கும் கூரை ஒலையொன்று வந்து விழுந்து.
தங்கம் குழந்தையைத் துாக்கிக் கொண்டு வெளியே ஓடி வரு கிறாள். அவளைத் தொடர்ந்து வெளியே பாய்ந்து வந்த கந்தசாமி சின்னக்குஞ்சியும், குழந்தைகளும் படுத்துக் கிடந்த குடிசையைப் பார்க்கிறான். அதுவும் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அவன் அதற்குள்ளே பாய்ந்து குழந்தைகளை மீட்டுக் கொண்டு வெளியே ஓடி வருகின்றான்.
அந்த வீட்டு எல்லைக்குள் கிடந்த நான்கு குடிசைகளும் தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தன. நெருப்புச் சுவாலையிலிருந்து ஒதுங்கு வதற்கும் அவர்களுக்கு இடமில்லாது குழந்தைகளையும் தாக்கிக் கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள்.
அப்போதுதான் வேலாயுதத்தின் குடிசைகளும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கந்தசாமி கண்டு கொண்டான். அதன் பிறகு. அடுத்த குடிசை. அடுத்த குடிசை. அடுத்த.
அந்தப் பகுதி எங்குமே "ஐயோ. ஐயோ. என்ற அவலக்குரல்கள் எரிந்து கொண்டிருந்த குடிசைகளை நோக்கிக் கந்தசாமி வெறியுடன் பாய்ந்தோடினான்.
ஒரு சில மணி நேரம் அந்த அகால வேளையில் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நெருப்புடன் போராடினார்கள். அவர்கள் எப்படித்தான் தங்கள் முழுப்பலத்துடன் போராடிய போதும் ஏழு
86

தெணியான்
குடும்பங்களுக்குச் சொந்தமான குடிசைகளை அவர்களாற் காப்பாற்ற முடியவில்லை. அவை எல்லாம் எரிந்து கனன்று கொண்டிருக்கும் சாம்பல் மேடுகளாகப் புகைந்து கொண்டிருந்தன.
அவர்களது நீண்ட நேரப் போராட்டத்தின் பலனாக எஞ்சிய குடிசைகளுக்கும் அந்தத் தீ பரவாமல் அவர்களால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அவர்கள் காப்பாற்ற முடியாமல் போனது சில குடிசைகள் மட்டுமல்ல. தங்கம் மாத்திரம் எரிகாயங்களுடன் உயிர் பிழைத்தாள். அவள் குழந்தை - கந்தசாமியின் குலக் கொழுந்து அந்த வேள்வித் தீக்கு ஆகுதி ஆனது.
தங்கமணியின் திருமண ஏற்பாடுகளும் இடைநடுவில் தடைப்பட வேண்டி நேர்ந்தது.
குடிசைகள் தீப்பற்றி எரிந்த மறுதினம் அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் அங்கு நடந்த சம்பவங்களைக் கேள்வியுற்று பாதி வழி யிலேயே திரும்பிப் போய் விட்டார்கள்.
இரண்டு வார காலம் கழிந்தது. எரிந்து சாம்பரான குடிசைகளை எல்லோரும் சேர்ந்து மீண்டும் போட்டு முடித்து விட்டார்கள். சுந்தரலிங்கம் அதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்.
எதிர்பார்த்தது போலத் திரும்பவும் அந்த நிலத்திலிருந்து அவர்களைத் துரத்தி விடுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளில் அவர் இறங்கினார்.
அன்றைய தினம் சட்டத்தின் இரும்புக் கரங்களால் அடித்து விரட்டி, அவர்கள் அனைவரையும் பலவந்தமாக அந்த மண்ணை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் நேரடியாக இறங்க இருக்கிறார் என்பதை எப்படியோ அவர்கள் முன் கூட்டியே அறிந்து கொண்டார்கள்.
அவர்கள் எவரும் அன்று கூலி வேலைகளுக்குப் போகவில்லை. எல்லோரும் தங்கள் தங்கள் குடிசைகளில் தங்கி இருந்தார்கள். அவர்களுடைய அவலநிலையை உணர்ந்து அந்தக் கிராமத்திலும்,
87

Page 49
பரம்பரை அகதிகள்
அயற்கிராமத்திலும் வாழும் கூலித் தொழிலாளர்கள் பலர் அங்கு வந்து தமக்கு அறிமுகமான நண்பர்களுடன் தங்கியிருந்தனர்.
சுமார் பத்து மணியளவில் நீதிமன்றக் கட்டளைச் சேவகன் ஒருவன் அங்கே வந்து முதலிற் கந்தசாமியைத் தேடிக் கொண்டு அவன் வீட்டை அடைந்தான்.
'தம்பி கந்தசாமி, உங்களுக்கேன் இந்த வீண் கரைச்சல்' ‘என்னத்தைச் சொல்லுறியள்?’ கந்தசாமி கேட்டான். 'இல்லைத் தம்பி கோட்டிலே தீர்ப்பு வழங்கியாச்சு’ ‘ஓகோ. அதுவா' இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நீதிமன்றக் கட்டளைச் சேவகன் வந்திருக்கும் செய்தி அறிந்து கொஞ்சம், கொஞ்ச மாக அந்தப் பகுதி மக்கள் ஆண்களும், பெண்களுமாக கந்தசாமி வீட்டுக்கு வந்து கூடத் தொடங்கினார்கள்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு நிற்கும் போது சின்னக் குஞ்சி அவர்களுக்கருகே வந்து 'ஐயா என்னவாம் தம்பி’ என்று கந்தசாமியைப் பார்த்துக் கேட்டாள்.
“கோட்டுக் கட்டளை நீதிக்குக் கட்டுப்பட வேணுமெண்டு சொல்லுறன்’ என்றான் சேவகன்.
"நீதிமன்றம் இப்ப வழங்கி இருக்கிறது சட்டத்தின்ரை தீர்ப்பு நாங்கள் எதிர்பார்க்கிறது நீதியின் தீர்ப்பு' என்றான் கந்தசாமி.
‘ஐயாவுக்கு விளங்கிறதோ!' என்று அப்போது ஏளனமாகக் கேட்டாள் அங்கு கூடி இருந்த பெண்களில் ஒருத்தி.
அவளைப் பார்வையால் எரித்து விடுபவன்போல ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு ‘அப்பிடியெண்டால் நீங்க எல்லோரும் மறியலுக்குத்தான் போக வேண்டி வரும்’ என்றான் சேவகன்.
‘அனுப்புங்கோ’ என்றாள் சின்னக்குஞ்சி.
88

தெணியான்
‘எங்களுக்கு இருக்கிறதுக்கு வீடுதானே வேணும்’ என்றாள் முதற் பேசிய பெண்.
‘குடும்பங்களோடை அனுப்பி விட்டால் நாங்கள் எல்லோரும் கரைச்சலில்லாமல் அங்கேயே குடியிருந்து விடுவம்' என்று சொன்னான் வேலாயுதம்.
'தம்பியவை, ஐயாவோடை என்ன கதை ஐயா. எங்களுக்கு இந்த இடத்தைத் தவிர போயிருக்கிறதுக்கு வேற இடமில்லை’ என்று அவனைச் சமாதானம் பண்ணி அனுப்பி வைப்பதற்கு நினைத்தவன் போல எடுத்துச் சொன்னான் சின்னவிக்கிழவன்.
‘அப்ப. நீங்கள் இந்த நிலத்தை விட்டு வெளியேறப் போவதில்லை' М
'இல்லை’ கந்தசாமி உறுதியுடன் சொன்னான்.
‘சரி, நான் வாறன். இனிமேல் நடக்கிறதைப் பாருங்கோ’ என்று சொல்லிக் கொண்டு விறுவிறென்று படலையை நோக்கி வெளியே நடந்தான் நீதிமன்றக் கட்டளைச் சேவகன்.
இந்த அளவில் இன்று காரியம் முடிந்துவிடப் போவதில்லை. சுந்தரலிங்கம் திட்டமிட்டே முதலில் நீதிமன்றக் கட்டளைச் சேவகனை அனுப்பி இருக்கிறார். இதைத் தொடர்ந்து தங்களுக்குப் பல சோதனை கள் இன்று வரவிருக்கின்றன என்பதனை எண்ணி எல்லோருமாக ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது.
ஜிப் வண்டி ஒன்று உறுமிக் கொண்டு வேகமாகத் தங்கள் பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சத்தம் அவர்கள் செவிகளில் வந்து விழுகிறது.
அவர்கள் எல்லோருடைய கண்களும் சிவக்கின்றன. கந்தசாமியின் முகம் இறுகுகிறது.
‘ஒரு நாட்டிலை இருந்து இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக ஒடிப் போய்த் தஞ்சமடைகிறார்கள். தலைநகரிலிருந்து அக்திகளாகக்
g —

Page 50
பரம்பரை அகதிகள்
பிறந்த கிராமங்களுக்கு வந்து ஒதுங்குகிறார்கள். நாங்கள் மட்டும் பிறந்து, வளர்ந்து வாழும் இந்த மண்ணிலேயே பரம்பரை பரம்பரையாக அகதி களாக இருந்து வருகிறம். இந்தப் பரம்பரை இனிமேலும் தொடரக் கூடாது. இந்த மண் எங்கடை மண்'
கந்தசாமி சொல்லிக் கொண்டு ஒரு பிடி மண்ணை வலது கரத்தால் வாரி அள்ளி, இறுகப் பொத்திப் பிடித்து உயர்த்திய கரத்துடன் சினந் தெழுந்தான்.
அவனைத் தொடர்ந்து பெண்கள் பக்கத்திலிருந்து சின்னக் குஞ்சியும் அங்கு கூடி இருந்த மக்கள் எல்லோரும் கரங்களை உயர்த்திக் கொண்டு ஆக்குரோசமாக எழுந்தார்கள்.
- ஈழநாடு - 1985
姿豪深

சிதைவுகள்
விளக்கு அணைந்து போனது. எழுந்து அதைக் கொளுத்துவதற்கு மனசில்லை. இது எரிந்தா
லென்ன, அணைந்து போனால்தான் என்ன எல்லாம் இந்த மனசுக்கு இப்போது ஒன்றுதான்.
உயிர்க்கும் விளக்கொளியிலும் மங்காத மை இருள், விளக்கு அணைந்ததும் எங்கும் உறைந்து கட்டித்து இருட் சூனியமாகிக் கிடக் கின்றது. இந்த இரவும் இப்படித்தான், கருமை உறைந்த ஒரு மை இரவு கூடத்து மூலையில், கன்வேஸ் கட்டில் சீலைக்குள் கால்களை மடித்து வைத்து அப்பா குந்திக் குறுகிக் கிடக்கிறார். மேலே முழுக் கைச்சட்டை போட்டு துவாய் ஒன்றினால் காதுகளையும் தலையையும் மூடிக் கட்டிக் கொண்டிருக்கின்றார். வாயில் சுருட்டு புகைந்து கொண்டிருக்கிறது. யன்னல்கள் யாவும் இறுக மூடிக் கிடக்கின்றன.
இன்னொரு மூலையில் உயிருக்குப் பயந்து அஞ்சி ஒடுங்கும் மக்களைப் போல சிக்கன விளக்கு உயிர் மூச்சு இழுத்துக் கொண்டு கிடக்கிறது. இது ஜாம் போத்தல் விளக்கு தேங்காய் நெய் ஊற்றி, குறுக்காக வாயில் ஒரு தகடு போட்டு, தகட்டில் இட்ட துவாரத்தில் திரியைச் செலுத்தி ஏற்றி வைத்த விளக்கு. மின்சாரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த இல்லங்களுக்கு மண்ணெண்ணையும் மறுக்கப்பட்டு விட்டதால், கண்டு பிடிக்கப்பட்ட போர்க்கால விளக்கு
அப்பா இந்தக் கூடத்துள்ளே தனித்துக் கிடக்கின்றார். இந்தக் கூடமும் அப்பாவைப் போலத்தான்.
91

Page 51
சிதைவுகள்
வெளிப்பார்வைக்கு வீட்டுடன் இணைந்து கிடப்பது போலத் தோன்றுகின்றது. இந்தக் கூடம் நான்கு அறைகளும் நடுவே ஒரு கூடமும் சமையல் அறைகளுமாக வீடு கட்டி முடிப்பதற்குத் திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்தார் அப்பா. இடையில் ஒரு திடீர் யோசனை வீட்டோடு சேர்த்து இந்தப் புதிய கூடத்தையும் அவர் இணைத்துக் கொண்டார்.
அவர் தனக்காகவே உருவாக்கியது போல இந்தக் கூடம். கூடத்து வெளிப்புறக் கதவையொட்டி முன் கூரையை நீட்டி, அதன் கீழே கதவோடு இணைத்து சீமெந்தினால் தளம் அமைத்து வசதியாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.
காலையில் அப்பா படுக்கையை விட்டு எழுவது தான் தாமதம். குனிந்து கன்வேஸ் கட்டிலை மெல்லத் துாக்கி வந்து கூடத்துக்கு வெளியே கதவோரமாக வைப்பார். பின்பு இரண்டு கதிரைகளைத் துாக்கி வந்து கட்டிலுக்கெதிரே போடுவார். இதன் பின்பு சுருட்டைப் பற்றிக் கொண்டு கட்டிலில் வந்து அமருவார். அன்றைய தினசரிப் பத்திரிகை கிடைத்து விட்டால் ஒரு எழுத்து விடாமல் படித்து முடிப்பார். சில தினங்களில் அவரை ஒத்தவர்கள் யாராவது அவரைத் தேடிக் கொண்டு அங்கு வருவார்கள். அவர்களுக்கென்று தான் அப்பா இரண்டு கதிரைகளைத் தினம் போட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு வகையில் அவர்களை அவர் எதிர் பார்த்து தினமும் காத்திருக்கின்றார்.
அவர்கள் நித்தமும் வர வேண்டும்.
அவர்கள் தன்னைத் தேடிக் கொண்டு வருவது உள்ளூர அப்பா வுக்குப் பெருமை. தான் மதிப்புள்ள மனிதன், சமூகத்தில் முக்கியமான மனிதன்.
தன்னைத்தேடிக் கொண்டு வருகின்றவர்களுடன் சலிக்காமல் அப்பா பேசிக் கொண்டிருப்பார். தான் பேச வேண்டியவர், அவர்கள் அதைக் கேட்க வேண்டியவர்கள் என்பது அப்பாவின் நினைப்பு
'அந்த டொக்டரைத் தெரியுமா. அவர் என்னிடம் படித்தவர்.
92

தெணியான்
இந்த எஞ்சினியர் அவரும் எனது மாணவன் தான். "இப்ப விரிவுரையாளராக இருக்கின்ற அந்தப் பையன் ஐயோ, இந்தக் கையாலெ எத்தனை குட்டு வாங்கி இருப்பான்.
'இந்தக் கவிஞன். என்னிடம் படித்த மாணவன். அவன் படிக்கிற காலத்திலேயே எனக்குத் தெரியும் ஒரு காலத்தில் இவன் கவிஞனாக வருவான் என்று. எத்தனை கவிதைகளை எழுதிக் கொண்டு வந்து என்னைக் கொண்டு திருத்தி இருக்கிறான்.
இப்ப பிரபலமாக இருக்கிற பேராசிரியர். என்னுடைய மிக நெருக்கமான நண்பர். இரண்டு பேரும் ஒன்றாய்ப் படித்த நாங்கள்.
‘கல்விப் பணிப்பாளரென்ன, கல்வி மந்திரியென்ன. இன்றைக்கும் ஒரு துண்டுக் கடதாசி எழுதினால் உடனே செய்வினம் கேட்ட காரியம். சலிக்காமல் எப்பொழுதும் அப்பா சொல்லிக் கொண்டிருப்பார். முன்பு சொன்னவைகளையெல்லாம் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்.
அப்பாவின் தொழில் சார்ந்த குணம். மீள வலியுறுத்தல் என்பார்களே அதுதான் இது.
அப்பாவை மறுதலிக்கின்றவர்கள் அவரைத் தேடிக் கொண்டு ஏன் வருகின்றார்கள்
வந்தவர்கள் முன்னால் அமர்ந்திருந்து நேர்த்தியாகத் தலையாட்டுவார்கள். அப்பாவுக்கு அது போதும் மனம் நிறைந்து போகும்.
வீட்டு வாசலில் பகற் பொழுதெல்லாம் குந்திக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு சில சமயம் தன்னைப் பற்றி தனக்குள்ளேயே சந்தேகம் முளைப்பதுமுண்டு. அப்பொழுது அப்பா சொல்லிக் கொள்வார்.
'அறுபது வயது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.
‘ஓமோம் அப்பாவுக்கு முன்னால் அமர்ந்திருப்பவர் தெரியாத்
93

Page 52
சிதைவுகள்
தனமாக அதற்கும் உடன்பாடாகத் தலையாட்டுவார்.
‘என்ன?”
'நீங்கள் சொல்லுறது சரி ‘அப்ப. நாங்களெல்லாம் நாயளே! என்ன சொல்லுறீர்! 'நீங்கள் பிழையாகச் சொல்லமாட்டியள் ‘நான் உம்மைச் சோதிக்கிறதுக்குத்தான் சொன்னனான். ‘அப்ப சொல்லுங்கோவன், உங்களுக்குத் தெரியாததே!’ "அது சரிதான். கி.ஆ.பெ விசுவநாதத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களே’
'ஆர் வாத்தியார்? ‘விசுவநாதம்’ ‘எந்த விசுவநாதம்? “கி.ஆ.பெ' 'உந்தப் படிப்பாளியளை எனக்கெங்கே தெரியும்’ "அவர் பெரிய படிப்பாளி இல்லை. புகையிலை வியாபாரி'
‘அப்படியே’ ஆனால் தமிழறிஞர் அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதிய செல்வங்கள் என்று.
‘என்ன எழுதியிருக்கிறார்?
முதியவர்கள் வீட்டுக்குச் செல்வம் என்று. அப்ப நாங்களெல்லாஞ் செல்வங்கள் அப்படித்தானே! 'நீர் செல்வமோ என்னவோ. ‘வாத்தியார் செல்வந்தான். வீட்டுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தான்!
94

தெணியான்
அப்பா மனசு நிறைந்து போகும்.
தலையைத் தூக்கிக் கட்டிலுக்குள் நிமிர்ந்து உட்காருவார். தன் விழிகளில் பெருமிதம் தெறிக்க எதிரே குந்தி இருக்கின்றவரைக் குறிப்பாக நோக்கிய வண்ணம் சில நிமிடங்கள் மெளனமாக இருப்பார்.
இன்று அப்பாவைத் தேடிக் கொண்டு எவரும் வரவில்லை.
மதியம் திரும்பிய பின் வெளியே குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நன்றாக இருட்டிக் கொண்டு வருவ தற்கு முன்பு இளமாலைப் பொழுதில் கட்டிலைத் துாக்கிக் கொண்டு வந்து உள்ளே போட்டுக் கொண்டு, கூடத்துக்குள் அப்பா அமர்ந்து கொண்டார்.
வெளியே கொடுங்குளிர். மெல்லிய சுழல் காற்று. மரங்களும் குளினால் கொடுகி காற்றில் சுழன்று ஆடுகின்றன.
அப்பா கண்ணாடி யன்னலுக்கூடாக கூர்ந்து கூர்ந்து வெளியே பார்க்கின்றார்.
பேய் இரைச்சலும் உதிரத்தை உறைய வைக்கும் குளிரையும் தவிர வேறொன்றையும் அப்பாவால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.
சுருட்டை உள்ளே இழுத்திழுத்து புகையைக் கக்கிக் கொண்டிருக் கின்றார்.அடைத்துக் கிடக்கும் கூடத்துக்குள் சுருட்டுப் புகை மெல்ல மெல்லப் பரவி கூடமெங்கும் மணக்கிறது. அந்த மணத்திலும் ஒரு சுகத்தை அப்பா மனசு சுகிக்கிறது. தான் கக்கிய புகை என்பதில் இனம் புரியாத ஒரு பெருமிதம் அப்பா மனசை நிறைக்கிறது.
அப்பா புகையின் போதையில் கிறங்கிக் கிடக்கிறார். கூடத்து வெளிக் கதவு பட்டென்று திறந்து கொள்கின்றது.
'அம்மா எங்கே?
அவன் பரபரப்புடன் வேகமாக உள்ளே வருகின்றான்.
அவனை முந்திக் கொள்கிறது வாடைக் காற்று. ‘குப்’பென்று கூடத்துக்குள் புகுந்து அப்பாவைக் கொடு கடிக்கிறது.
95

Page 53
சிதைவுகள்
அப்பாவுக்கு இப்போது எல்லாம் மறந்து போய் விடுகிறது. திறப்பை உள்ளே போட்டு, கதவைப் பூட்டாமல் விட்டு வைத்து விட்ட தவறு அப்பாவின் கவனத்துக்கு வருகிறது.
குளிர் காற்றில் அப்பாவின் உடல் சில்லிட்டுப் போகின்றது. தலையில் கட்டிய துவாய் முடிச்சைத் தாடைக்குக் கீழ் பட்டென்று இறக்கி விட்ட வண்ணம் அவர் சிலிர்த்துக் கொண்டு நிமிருகின்றார்.
போர்க்கால விளக்கு தன்னளவில் ஒளிர்ந்து கொண்டு கிடக்கிறது.
அதன் மஞ்சள் ஒளியில் அவன் முகம் அப்பாவுக்குத் தெளிவாக வில்லை - அவன் குரல்.
கூடத்துக்குள் வந்து நுழைந்த வேகம். அந்தக் குரலும், வேகமும் வெளிப்படுத்தும் பதற்றம். அப்பா யாவையும் ஒரு கணத்தில் அவதானிக்கின்றார். அவன் அப்பாவைக் கண்டு கொள்ளவில்லை. எப்பொழுது தான் அப்பாவை அவன் கவனிக்கின்றான்! அவன் உள்ளே வந்து கூடத்தையும், வீட்டையும் இணைக்கும் கதவைத் தாண்டி வீட்டுக்குள் போய்க் கொண்டிருக்கின்றான்.
அப்பாவுக்கு அவனைத் தெளிவாகத் தெரியும். வரும் பொழுது அவன் கேட்டுக் கொண்டு வந்த கேள்வியும் அவருக்கு அர்த்தமாகும். அம்மா இருக்கும் இடம் அவன் அறியாததா!
ஏன் இந்தக் கேள்வி?
இது கேள்வி அல்ல.
நான் அம்மாவைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறேன் என்பதை அவன் இப்படிக் கேட்டுக் கொண்டு போகின்றான்.
அவன் எப்பொழுது அப்பாவைத் தேடிக் கொண்டு வருவான்! அவனுக்கு எல்லாமே அம்மாதான்!
96

தெணியான்
ஆனால் இந்த நேரத்தில் அவனுக்கு அப்படி என்ன அவசரம் பதற்றப்பட்டுக் கொண்டு ஓடி வருகின்றானே! ஏன் இந்தப் பதற்றம் அப்பா மனசு குழம்புகின்றது.
குழந்தை அழுகின்றதோ. பால்மா கரைப்பதற்கு சீனி இல்லாமல் இருந்திருக்கும். இந்தக் குழந்தை அம்மாவைத் தேடிக் கொண்டு வந்திருக்கும்.
எந்த வயதானாலும் அம்மாவுக்கு அவள் பெற்ற பிள்ளை பச்சைக் குழந்தை தான்.
அப்பா மனசு தனக்குத்தானே ஒரு சமாதானம் தேடிக் கொள்ள முனைகிறது.
வாயில் புகைந்து கொண்டிருக்கும் சுருட்டுடன் உதட்டைச் சுழித்துக் கொண்டு புன்னகை ஒன்று அப்பாவிடம் மலர்கிறது.
மறுகணம் மீண்டும் அந்தச் சந்தேகம்!
அந்தக் கேள்வி:
அவன் பதற்றத்தோடு ஏன் ஓடி வந்திருக்கின்றான்?
97

Page 54
இதுதான் அவன்!
ஒ. அவன் குண இயல்பு இப்படி.
சின்னச் சின்னக் காரியத்துக்கும் அவசியமற்ற அவசரம், நிலத்தில் கால் பரவாத அந்தரம். மிதிவெடியில் கால் வைத்து விட்டவன் போலத் துள்ளிக் குதிப்பு
இவை எல்லாம் அவனுக்கு வேண்டாத குணங்கள். அவனை வழிப்படுத்தவேண்டும். அவசரப் போக்கை நிதானப்படுத்தவேண்டும். அப்பா மனசு பல தருணங்களில் நினைத்திருக்கிறது. சொல்ல வேண்டும் என்று அது உந்தியிருக்கின்றது. நிதானம் இழக்காது எப்பொழுதும் நடக்க வேண்டுமென்று சொல்லி வைப்பதற்கு அது எண்ணம் கொள்ளும்.
ஆனால், மனசில் உள்ளதை வெளியே சொல்லி வைப்பதற்கு முடிவதில்லை. அப்படி அப்பா மனசில் ஒரு தயக்கம்.
முகத்துக்கு முகம் அவனோடு பேச்சில்லை. அப்பாவுக்கும் அவனுக்குமிடையே அப்படி ஒரு விலகல். ஒட்டிக் கொள்ளாத ஒரு இடைவெளி. ஆனால் அப்பா அல்லவா!
அதிகாரமும் பணிக்கும் உரிமையும் அப்பாவுக்கு இல்லாமலா போய்விடும்!
தான் என்றும் அப்பாவாகவே இருப்பதற்கு இயலும். அம்மா என்றும் அவனுக்கு அம்மாவாக இருக்கும் போது அப்பா மாத்திரம், அப்பாவாக இருப்பதற்கு இயலாதா!
98

தெணியான்
அப்பா தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போல, சில தருணங்களில் அவனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
மலையே சரிந்தாலும் மனம் சரியக் கூடாது. பதறக் கூடாது. பதறினால் எடுத்த காரியம் சிதறிப் போகும்.
அப்பா பழமொழி ஒன்றுக்கு உரை சொல்லிக் கொண்டிருக்கின்றார். பள்ளிக் கூடத்தில் பல காலமாகச் செய்து கொண்டிருந்த காரியம். இப்போது வீட்டில் அதைச் செய்கின்றார், பள்ளிக் கூட நினைப்பில்.
அவன் மனசில் அப்படி ஒரு எண்ணம் எழுந்து உள்ளே மெல்ல நகைக்கும்.
அப்பாவின் நல்லுபதேசங்களை அவன் செவிகளில் போட்டுக் கொள்வதாக இல்லை.
அம்மா மனசு இந்தச் சமயங்களில் அப்பாவை எள்ளி நகைக்கும். அம்மா அல்லவா அறிவாள் இந்த அப்பாவின் பிறவிக் குணத்தை!
அப்பா 'சுடுகுது மடியைப் பிடி" என்றுதான் எதற்கெடுத்தாலும் நிற்பார். இப்ப ஆள் ஏலாவாளி பென்சன் காரர். கட்டிலுக்குள் முடங்கிப் போனார். அப்பாவுக்குக் கொதியன் என்றொரு பெயர். அப்பாவின் கொதியை ஆற்றி நடந்தவள் அம்மா. அம்மா ஒய்வாக இருக்கும் போது அந்தக்கால நினைவுகளை இப்போது சில சமயங்களில் நினைவு கூர்வாள்.
அப்பாவுக்கு எதற்கெடுத்தாலும் சினம் பொத்துக் கொண்டு வரும்! அம்மா அதை அறிய மாட்டாள். அதுவும் அவள் அறிவு ஞானத்துக்குள் அகப்படாத ஒன்று.
நாளை புறப்பட வேண்டுமானால் இன்று அதற்கான பரபரப்பு ஆரம்பித்து விடும். அம்மா சிரித்துச் சிரித்துச் சொல்லச் சொல்ல அந்தக்காலத்தில் நடந்த சம்பவங்கள் பல அவர் நெஞ்சுக்குள் வரும். மெல்லச் சிரித்த வண்ணம் அப்போது அம்மாவை நன்றியுடன் நோக்குவர் அப்பா.
அவன் பேச்சை அப்படியே விட்டு விட்டு, மெளனமாக அப்பா அடங்கிப் போவார் .
99

Page 55
சிதைவுகள்
அப்பாவின் நிதானமான மெளனத்தையே அம்மா எதிர்பார்ப்பாள். அந்த நிதானம், மெளனம் அப்பா- மகன் மோதலைத் தடுத்து வைக்கும். அதைச் செய்வதுதான் அம்மா மனசின் உள்ளிருக்கும் அந்தரங்கம்.
கூடத்து வெளிக்கதவை அவன் திறந்து போட்டு விட்டு வந்திருக் கிறான். திறந்து கிடக்கும் சிறகுக் கதவுக்கூடாக அப்பா பார்வையை வெளியே செலுத்துகின்றார். வெளியே அடைத்துக் கிடக்கும் கனத்த இருளில் விழிகள் குத்திட்டு நிற்கின்றன. சில நிமிட நேரம் இருளுக்குள் விழிகளால் துழாவித் துழாவி வெறித்து நோக்குகின்றார். விழிகளின் ஒளியை இருள் விழுங்கிக் கொண்டிருக்கின்றது. அப்பா வெட்டி வெட்டி விழிக்கிறார். இருளைத் தவிர பொருளில்லாத இருள்.
சன்னதம் கொண்டு காற்றில் அசைந்தாடும் மரங்கள் விடும் வெறிமூச்சு அவர் செவிகளில் வந்து முட்டுகிறது.
அவன் கதவை மூடிக் கொண்டு உள்ளே வந்திருக்க வேண்டும்.
கீழே சிந்தக் கூடாது. சின்ன வயது முதல் இப்படியெல்லாம் அவனுக்கு அப்பா சொல்லிக் கொண்டு வருகின்றார்.
அவன் அறைக் கதவு திறந்தால் திறந்தபடி விட்டு வைப்பான். அப்பா உள்ளத்தில் எரிய ஆரம்பிக்கிறது எரிச்சல். கதவு உடனடியாக இப்போது மூடி விட வேண்டும். எழுந்து மூடி விடுவது அப்பாவுக்கு இயலவில்லை. உடல் விறைத்து மூட்டு மூட்டாக நொந்து வலிக்கிறது.
அவன் வெளியே செல்வதற்குத் திரும்பி வரப் போகிறான். போகும் போது மூடிக் கொண்டு போவான். சில சமயம் அப்படியே விட்டு வைத்துவிட்டுப் போகவும் முடியும். அவன் அசண்டையாக அப்படி நடக்கக் கூடியவன்.
எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம். இப்பொழுது எழுந்து போய் கதவு மூடுவது வீண் சிரமம். அவன் திரும்பி வரும்வரை இந்தக் குளிர் காற்றைத் தாங்கிச் சகித்துக் கொள்ள வேண்டும். கட்டிலில் வசதியாகச் சாய்ந்து, சுருட்டுப் புகையை இதமாக நெஞ்சுக்கிழுத்து, மெதுவாக
100

தெணியான்
வெளியே விட்டுக் கொண்டிருக்கின்றார் அப்பா.
சுழன்றடிக்கும் குளிர் காற்று கொடிய வேகத்துடன் எதிரியைப் போலக் கூடத்துக்குள் திடீரென்று நுழைகிறது. குத்தும் குளின் ஊசி முனைத் தாக்குதலில் ஒரு கணம் அப்பா ஆடிப் போகின்றார்.
"மடையன் கதவைச் சாத்தியிருக்க வேணும்" உள்ளம் உந்தும் வேகத்திற்கு அவரால் எழுந்திருக்க இயலவில்லை. சடுதியாக எழுந்து கொள்வதான நினைப்பில் கட்டில் சட்டத்தில் கையை ஊன்றி மெல்ல எழுகின்றார். வலது காலை அசைக்க முடியவில்லை. மெல்ல இழுத் திழுத்து கதவை நோக்கிப் போகின்றார். கதவைப் பிடித்து மூடிக் கொண்டு மீண்டும் கட்டிலுக்குத் திரும்புகின்றார்.
"நேரம் என்ன?" தலையை மேலே துாக்குகின்றார். சுவரில் தொங்கும் கடிகாரம் பார்வைக்குத் தெளிவாக இல்லை. கடிகாரத்திலும் இருள் படர்ந்து ஒட்டிக் கிடக்கின்றது. மூலையை நோக்கி நகர்ந்து மெல்லக் குனிந்து போத்தல் விளக்கைக் கையில் எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தி பார்வையைச் சுவரில் வீசுகின்றார்.
கடிகாரத்தைக் காண்பதற்கு முன்பு, பாவிகளுக்காகச் சிலுவை சுமந்த யேசு, பாட்டாளிகளுக்காகப் போராடிய லெனின், பாமர மக்களுக் காகப் பாடின பாரதி, அகிம்சைக்காக வாழ்ந்த காந்தி, மனப்பாரங்களை இறக்கி விடும் பாலமுருகன் அவர் கண்களில் தோன்றுகிறார்கள்.
"அப்பனே முருகா" அப்பா பிரார்த்தித்துக் கொள்ளுகின்றார்.
விளக்கை அசைத்து ஒளியை மணிக் கூட்டின் மீது வீழ்த்துகிறாார். நேரம் 940 இலங்கை வானொலியில் செய்திகள் முடிந்து போயிருக்ரும். லண்டன் பி.பி.ஸி. செய்திகளை இப்போது கேட்கலாம். அதற்கு மின்சாரம்தான் இல்லை. இரண்டு பற்றரிகளையாவது வாங்கலாம் என்றால் அது கிடைப்பதாக இல்லை. தண்டிக்கப்பட்டவர்களுக்கா அல்லது கைவிடப் பட்டவர்களுக்கா இந்த அவலமான வாழ்வு. உலகம் ஒடுங்கி இங்கு மெளடீக இருள் மண்டிப்போய் கிடக்கிறது.
நித்தமும் பார்க்கக் கிடைப்பது உள்ளூர்ப் பத்திரிகைகள் ஒன்று. இரண்டு. அவைகளும் உள்ளூருக்குள்ளேதான். கிணற்றுத் தவளைகள். - 101 -

Page 56
சிதைவுகள்
காற்றில் மிதந்து வரும் வானொலிச் செய்திகளின் அச்சுருப் பதிவுகள்.
அப்பாவுக்கு நெஞ்சில் முட்டும் பெருமூச்சொன்று சீறிக் கொண்டு வந்து நாசித் துவாரங்களைச் சுட்டுப் போட்டு வெளியேறுகின்றது.
அப்பா மெல்ல நடந்து சென்று மூலையில் விளக்கை வைத்து விட்டு, திரும்பிக் கட்டிலுக்கு வந்து அமர்ந்து கொள்கின்றார்.
அப்பாவுக்கு மதியத்தில் நிறைவான உணவு வேண்டும். இரவு வேளைக்குப் பெரிதாக இப்பொழுது உணவு வேண்டியதில்லை. ஒரு கப் பால் மாத்திரம் அவருக்குப் போதும். சில இரவுகளில் ஒரு துண்டு பாண், அல்லது இரண்டு இடியப்பம், குளிர் மிகுந்த இரவுகளில் அப்பா மிகுந்த எச்சரிக்கையாக இருந்து கொள்வார். இடையிடையே வயிற்றுக் குழப்பம். இருந்திருந்து வயிற்றுப் போக்கும் வந்து விடுகின்றது.
இப்பொழுது நவராத்திரி பண்டிகைக் காலம். இன்று ஒன்பதாவது நாள்.வீட்டுப் பூசைக்குரிய விஷேச நாள். இந்துக்கள் இல்லந்தோறும் கலைமகளுக்குப் படையல் செய்து வழிபாடு செய்வார்கள், கலைமகள் கலைகளின் தெய்வம். கல்வித் தெய்வம். கல்வியே எல்லாம் தரும் என்று கருதி இருந்த அப்பா, கலைமகளுக்குச் செய்கின்ற பூசையில் குறை வைப்பாரா! சிறப்பான பூசை ஆண்டு தோறும் நடத்தி முடிப்பார். இப்போது அவர் எண்ணம் போல எல்லாம் ஆடுவதற்கு அம்மாவுக்கு இயலாது. அம்மா நோயாளி.
சின்ன அளவில் கலைமகளுக்கு வீட்டுப் பூசைகள் செய்து முடித்துக் கொண்டு விட்டார்கள். அம்மா உடல் நிலை அயலவர்களுக்குத் தெரியும்.
கிராமம் என்பது ஒரு குடும்பம் போல, இன்பத்திலும், துன்பத் திலும் பங்காளிகளாக இணைந்து நிற்கும் நெருக்கம், செளஜன்னியம் அந்தக் குடும்பத்திற்குள் எப்பொழுதும் இழையோடும் தனித்துவமான ஒரு செளந்தரியம்.
அம்மாவின் இயலாமை, அயல் வீடுகளில் இருந்து பொங்கல், மோதகம், வடை, கடலை, பயறு, அவல் என்று கொண்டு வந்து குவிந்து விட்டது. அப்பா ஒன்று ஒன்றாகச் சுவைக்க ஆரம்பித்தார். அம்மா 102

தெணியான்
தடுத்துப் பார்த்தாள். அவரா அம்மா பேச்சுக் கேட்டு நடக்கின்றவர்
முதுமை நெருங்க நெருங்க நா மட்டும் அடங்குவதில்லை. அது சுவைத்துச் சுவைத்துப் பார்க்கவே சப்புக் கொட்டிக் கொண்டிருக்கும். அப்பாவுக்கு வயிறு கணக்கிறது. உடல் கொள்ளாத அசதி கட்டிலில் வசதியாகச் சாய்ந்திருந்து கொண்டு மீண்டும் சுருட்டைப் புகைக்க ஆரம்பிக்கின்றார்.
அம்மா வருகின்றாள்.
தன்னளவில் விரைந்து நடப்பதான எண்ணம் அவளுக்கு. அசைந்து அசைந்து கூடத்துக்குள் மெல்ல வருகின்றாள். அப்பா எதிரில் வந்து பட்டென்று தரையில் அமர்ந்து விடுகின்றாள். அம்மாவினால் எழுந்து நிற்க இயலவில்லை. அப்பாவுக்கு அவள் பரிதாபமாகத் தோன்றுகின்றாள்.
"ஏனப்பா இந்தக் குளிருக்கே வந்தனி?"
அப்பாவின் குரல் கண்டிப்பாக ஒலிக்கிறது. இந்தக் கண்டிப்பு அம்மாவுக்கல்ல. அவனுக்குத்தான். அவன் அம்மா பின்னால் வந்து நிற்கின்றான். அவனைத் தொடர்ந்து சின்னவள்.
சமயலறைக் கதவுகளை அவசர அவசரமாகப் அவள் பூட்டிக் கொண்டு அங்கு வந்து நிற்கின்றாள். அவனுக்குப் பதற்றம் இன்னும் தணியவில்லை. அவனைப் போலவே சின்னவளும் இப்போது பதறிக் கொண்டு வந்து நிற்கின்றாள்.
பதற்றப்பட்டுக் கொள்வதற்கும் அம்மா உடல் இடம் கொடுப்பதாக இல்லை. அம்மா அப்பாவைப் போலவே தலையையும், காதுகளையும் மூடிக் கட்டிக் கொண்டிருக்கின்றாள். அம்மாவின் சுவாசிப்பில் அவள் அணிந்து கொண்டிருக்கும் தடித்த சுவற்றர் பொம்மிப் பொம்மித் தணிந்து கொண்டிருக்கின்றது. அவள் தொண்டைக் குழிக்குள் படபடத்துத் துடிக்கும் மூச்சுக் காற்று குஞ்சுக்கோழி போலக் கீச்சிடுகின்றது. அவள் விழிகள் குழிகளுக்குள் வீழ்ந்து சிவந்து வீங்கிக் கிடக்கின்றன. தாடைகள் வற்றி, கன்னங்கள் சோகை பிடித்து உப்பிக் கிடக்கின்றன.
103

Page 57
சிதைவுகள்
அம்மா சுவாசிப்பதற்கு அவஸ்தைப்படுகின்றாள். அப்பாவுக்கு மனசு சஞ்சலப்படுகின்றது. அம்மா படுக்கையை விட்டு ஏன் இறங்கி வர வேண்டும்! இரவும் உறக்கமில்லை அவளுக்கு படுக்கையில் கிடந்து உழலுகின்றாள்.
அப்பாவின் சினம் அவன் பக்கம் திரும்புகின்றது. அவன்தான் அவளைப் போய் இழுத்து வந்திருக்கின்றான். கொஞ்சமும் அறிவில்லா தவன். அவளை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்?
சின்னவள் அம்மா போல அமைதியானவள். அவளும் வந்து பதற்றப்பட்டுக் கொண்டு நிற்கின்றாள். அப்பாவுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கின்றது. அம்மா ஊகிக்கின் றாள் அப்பாவுக்குத் தகவல் ஏதும் தெரிய வராது. அதனால்தான் வெகு அமைதியாக அப்பா இருக்கின்றார். அம்மா மிகுந்த பிரயாசத்துடன் கேட்கின்றாள்.
"இப்பென்ன செய்யிறது?"
"என்ன சங்கதி?" அசட்டையாகக் கேட்டுவிட்டு, "இந்தக் குளிருக் குள்ளே ஏனப்பா எழும்பி வந்தனி" எனத் தொடருகின்றார்.
"வராமல் என்ன செய்யிறது"
அவன் மனசு பொறுமை இழந்து போகிறது. அவர்கள் இருவரும் இப்பொழுது திடீரென உருவாகியிருக்கும் நெருக்கடியின் பயங்கரத்தை உணராமல், வெகு சாவதானமாகப் பேசிக் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. மனசை அடக்கிக் கொண்டிருப்பதற்கு அவனுக்கு இயலவில்லை.
அவன் அம்மாவை முந்திக் கொண்டு படபடப் போடு சொல்லுகின்றான்.
"வடமராட்சி மக்களை வீடுகளை விட்டு வெளியேறட்டுமாம்"
'otorol?"
崇
104

அப்பா அவன் முகத்தை மங்கிய அந்த வெளிச்சத்தில் கூர்ந்து
பார்க்கின்றார்.
அப்பா மனசில் இப்போது எழுந்துள்ள பிரச்சினை வேறு. இதைச்
சொல்வதற்கு அம்மாவைத் தேடிக் கொண்டா ஓட வேண்டும்!
அம்மா அவள் பாவம் நோயாளி. அவளுக்கு வீண் தொல்லை.
அப்பாவிடம் நேரே வந்து அவன் சொல்லி இருக்கலாம்.
அவன் மீது அப்பாவுக்கு கோபம் கோபமாக வருகிறது. உள்ளே எழும் வெறுப்பை வெளியே கொட்ட வேண்டும் போல மனசு உந்துகிறது. அம்மா பாவம். அவனோடு மோதிக் கொண்டால் அவள் சங்கடப்படுவாள். அவள் மனதை நோகடிக்கக் கூடாது. அப்பா தனக்கொரு தளை போட்டு வரிந்து கொண்டு அக்கறை இல்லாது கேட்கின்றார்.
"எங்கே போகிறதாம்?"
"கோயிலுக்கு. பள்ளிக்கூடத்துக்கு" வேண்டா வெறுப்பாக, பட்டென்று அவன் பேசுகிறான்.
'ஆர் சொன்னது?"
'ஒன்பது மணிச் செய்தி"
"நீ கேட்ட நீயே"
ல்லை"
105

Page 58
சிதைவுகள்
அப்ப.
"என்ன அப்ப." அவன் சினந்து கொண்டு இடைமறிக்கிறான். "என்னத்துக்கு இந்த விசாரணைகள்?"
"எப்ப வெளியேற வேணுமாம்?"
"நாளைக்கு இரண்டு மணிக்கு முன்னம்"
"அதுக்கு இப்பென்ன அவசரம்"
"உங்களுக்கு என்ன தெரியும்"
"எல்லாம் தெரியும்"
"என்ன?"
"காலையிலே எல்லாம் பார்க்கலாம்" அப்பா சமாதானம் சொல்லு கிறார் இந்தச் சமாதானத்தைக் கேட்பதற்கு அவன் தயாராக இல்லை. அப்பாவின் சமாதானமும், தாமதிப்பும் அவன் மனதில் கொதிப்பு மூட்டி விடுகின்றது.
"காலையிலே எங்கே போகிறது?" சற்றுச் சூடாக அவன் வார்த்தை கள் வெளிவருகின்றன. அப்பா அதைக் கண்டு கொள்ளாதவராக இயல்பாகவே பேசுகின்றார்.
"பள்ளிக் கூடத்துக்கு. அல்லது கோயிலுக்கு"
"எண்பத்தேழு ஒப்பரேஷன் லிபரேசன் மறந்தே போச்சு. கோயிலுக்குப் போங்கோ எண்டு சொன்னாங்கள் நம்பித்தானே அல்வாய் முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சனம் போனது. கடைசியிலே ஷெல் அடிச்சு நுாற்றுக் கணக்கான சனம் சிதறிச் செத்தது"
"அப்ப வீட்டோடை இருந்திடுவம்"
"இதென்ன இழவடா.இந்த நேரம் பாத்து இப்பிடிக் கதைச்சுக் கொண்டிருக்கிதுகள்"
"அப்பா வீட்டிலை இருந்ததுகளை எல்ரிரிஈக்கு சமைச்சுக் குடுக்க
106

தெணியான்
இருக்கிறியள் எண்டு வெட்டியும், சுட்டும் கொண்டவன்கள்" சின்னவள் கடந்த கால நிகழ்வை இடையில் சொல்லுகின்றாள்.
"இந்த நேரம் என்ன செய்யிறது எல்லாரும் போய்ப் படுங்கோ விடிஞ்சாப்போலே பார்ப்பம்"
அப்பாவின் உதாசீனம் அவனுக்கு வெறியாக வெளிப்படுகிறது. அப்பாவைக் கொல்லும் கோபத்தில் அவன் பொறுமை இழந்து போகின்றான்.
o-fl
"நீங்கள் ஒண்டும் விளங்காத ஆள். சும்மா கனக்கக் கதைப்பியள் இதன் பிறகு அவன் அங்கு தரித்து நிற்கவில்லை.
"நான் போறன். நீங்கள் என்னவும் செய்யுங்கோ"
கூடத்து வெளிக் கதவைத் திறந்து, திறந்த வேகத்தில் படாரென்று அடித்து மூடிக் கொண்டு ஆத்திரமாக வெளியேறுகின்றான். அம்மா அதிர்ந்து போகின்றாள். கதவை இழுத்து அடித்தது அப்பாவுக்கு அவன் அடித்த அடி ஒருவருக்கு அடிப்பதற்குக் கை நீட்டி அடிக்க வேண்டுமா! ஒவ்வொரு அசைவிலும் இன்னொருவர் இதயத்தில் ஓங்கி அடிக்கலாம்.
அப்பா எதிரில் அதிர்ந்து பேசாதவள் அம்மா. ஒரு வார்த்தை சூடாகச் சொல்லி அறிய மாட்டாள். அப்பாவின் பலம் அம்மா அறியாத தல்ல. அவர் பலவீனங்களையும் அவள் உணர்ந்து வைத்திருக்கிறாள். இரண்டும் இணைந்தவன்தானே ஒரு மனிதன். அப்பாவும் அப்படி ஒருவர்தான் முதுமை இயலாமைக்குள் இப்போது அவரைத் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அவன் கதவை இழுத்தடித்துக் கொண்டு சென்றது. அம்மா நெஞ்சில் ஓங்கி அடித்தது போல வலிக்கிறது.
அப்பாவுக்கு எப்படி இருக்கும்! சின்னவளுக்கு மனசு நோகிறது. அவன் இப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாம். அப்பாவை அவமதித்திருக்கக் கூடாது. அவன் அவசரக்காரன். அவன் அவசரத்தில் இன்று நியாயமிருக்கிறது. கடந்த காலத்தில் அப்படிப்பட்ட அனுபவம். — 17

Page 59
சிதைவுகள்
ஒப்பரேஷன் லிபரேசன் போது பூவற்கரைப் பிள்ளையாருக்கு ஒடிப் போனோம். இரண்டு வாரங்களின் பின்பு பசி, பட்டினி, பிணியோடு ஊருக்குத் திரும்பி வந்து, ஊருக்கு மத்தியில் வயிரவர் கோயிலின் மரங்களின் கீழ் ஊரெல்லாம் ஒன்று கூட இரவு படுத்தெழும்பினோம். மாதமொன்று கழிந்து வீடுகளில் பலர் கூடி இராப் படுத்தோம்.
ஒருநாள் மாலை விளக்கேற்றிய வேளையில், பூமியே வெடித்துச் சிதறும் ஊழிக்காலப் பயங்கர ஓசை பூகம்பத் தாக்குதல் போல வீடுகள் கிடுகிடுத்து நடுங்கின. நெல்லியடி மகா வித்தியாலயம் குண்டு வைத்துத் தகள்க்கப்பட்டுவிட்டது. மில்லரின் தாக்குதல். முகாமிட்டிருந்த இராணுவம் வெடித்துச் சிதறியது. மீண்டும் கையில் கிடைத்த பெட்டி படுக்கை களைத் துாக்கிக் கொண்டு உயிருக்கஞ்சி வலிகாமம் நோக்கி ஓடினோம். பாழடைந்த வீடொன்றில் தாவடியில் உறவினர் பலருடன் ஒன்று சேர்ந்து தஞ்சம். ரி.வி.யும் டெக்குமாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் அனுதாபத்திற்குரிய அகதிகள், எத்தனை ஏளனம் அவமதிப்புகள்! இளக்காரம் அகதிகளாக ஓடிப் போகாமல் வீட்டோடு தங்கி இருந்த ஒரு சிலரை ஊருக்குள் புகுந்த சிலர் கண்ட துண்டமாக வெட்டிக் கொலை செய்து காவோலை போட்டு எரித்து விட்டுச் சென்ற செய்தி வந்து சேருகின்றது.
இந்திய அமைதிப்படையின் வருகையுடன் எல்லாம் தீர்ந்து விட்டதான உணர்வோடு ஊருக்குத் திரும்பினோம். புயலுக்கான அமைதி மீண்டும் வெடிக்கிறது. வல்வெட்டித்துறையில் இருந்து பருத்தித்துறை வரை எதிர்ப்பட்ட அப்பாவிகளைச் சுட்டு வீழ்த்திய வண்ணம் ஒரு தினம் அமைதிப்படை ஆரவாரித்துக் கொண்டு போகின்றது.
திரும்பவும் அகதி ஓட்டம் தென்மராட்சிக்கு. அப்பாவுக்கு அறிந்த நண்பர் வீட்டில் ஒரு மாத காலத்துக்கு மேல் அடைக்கலம். இப்போது மீண்டும் அகதிகளாக ஓடிப் போக வேண்டும். இதயம் வெடித்து விடும் போல சின்னவளுக்குத் துயரம் முட்டுகிறது. அவன் அவசரத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது.
கடந்த கால அனுபவங்கள் அவனை கதிகலங்க அடிக்கின்றன.
108

தெணியான்
உயிர் ஒடுங்கி ஓடியோடிப் போவதொன்றே வாழ்வாகிப் போன அவலம். முதுமைத் தளர்ச்சியின் மூச்சிறைக்கும் ஆயாசம் அப்பாவுக்கு. அப்பாவை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவனிடம் அந்தப் புரிதல் இல்லை.
இருவருக்கும் கதை வளராமல் முன்பென்றால் அம்மா இடையில் புகுந்து தடுத்திருப்பாள். அவளுக்கு இப்போது பேச முடியவில்லை. அவள் நெஞ்சைக்குடைகிறது. அவன் அடித்த கதவுச் சத்தம். அம்மா தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கின்றாள்.
அப்பா மகன் பகையை வளர்க்கக் கூடாது என்பதில் அவள் எப்பொழுதும் எச்சரிக்கையானவள். அப்பா நொந்து போகாமல் அவள் பார்த்துக் கொள்ளுகிறாள். அப்பா மனதைச் சமாதானம் பண்ணுவதாக அவள் மெல்லச் சொல்லுகின்றாள்.
"அவன் உங்களைப் போல. அதுதான் உங்களுக்கும் அவனுக்கும் ஒத்து வராதாம். சாதகம் பாத்தும் அப்பிடித்தான் நெடுகிலும் சொல்லு கினம்" அப்பா வாய் திறக்கவில்லை.
சின்னவள் அஞ்சி ஒடுங்கி மனக் குழப்பத்துடன் இருவர் முகங் களையும் பார்த்து நிற்கின்றாள். அம்மா எழுந்து உள்ளே போய் விட வில்லை. கூடத்தின் வெளிக்கதவை நோக்கி மெளனமாக அம்மா அமர்ந்திருக்கின்றாள்.
109

Page 60
அப்பாவைப் பொறுத்தவரை முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது. அவன் சினந்து கொண்டு அங்கிருந்து போய் விட்டான்.
அம்மா உள்ளே போய்ப் படுத்துக் கொள்ள வேண்டும். அம்மா வுக்கு முடியவில்லை அங்கிருந்து எழுந்து உள்ளே போவதற்கு
சின்னவள் முற்றாகக் குழம்பிக் கலங்கிப் போனாள். அவள் அந்த இடம் விட்டு விலகுவதற்கு இயலாமல் அங்கேயே உறைந்து போனாள். அருகிலுள்ள கதிரையொன்றில் தொப்' என்று அமர்ந்து கொண்டாள். பீதி அவளைப் பிடித்து உலுப்ப பிதுங்கும் விழிகளால் அப்பா முகம், அம்மா முகம் என்று ஒன்று மாறி ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருக் கின்றாள்.
அம்மா மனதில் ஒரு எதிர்பார்ப்பு, அவன் வரத்தான் போகின்றான். மீண்டும் அவன் வருவான், அவனுக்கு இயலக் கூடிய காரியமல்ல. எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டு தன்னிச்சையாகப் போய் விடுவது. நெருக்கடியில் எழுந்த மன அழுத்தத்தில் அவன் இப்படி ஆகிப் போனான்.
இரத்தம் வடியும் இந்த யுத்த பூமியில் எந்த மனிதன் தானாக இருக்கிறான்! சுயத்தை இழந்து போகாத அந்த மனிதன் யார்?
யாருக்குத்தான் குழப்பமில்லை! யாருக்கு உயிரச்சம் இல்லை! வீதியில் செல்லும்போது ஷெல் வந்து விழுந்து சிதறி மடியலாம். வீட்டுக்குள் இருந்தால் விமானக் குண்டு விழலாம்.ஷெல் விழலாம். இராக்காலம் வந்து படுக்கையில் சரிந்தால் கூரைக்கு மேல் போகும் ஹெலி குண்டு வீசிவிட்டுப் போகலாம்.
110

ക്ലെങ്ങിuങ്ങ്
யாருக்கு அச்சமில்லை! மனசில் குழப்பமில்லை! அவன் சொல்வதில் நியாயம் இருக்கிறது. அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யார் அறிவார்! கடந்த கால அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள். அவன் உள்ளூர அஞ்சுகிறான். அவன் அஞ்சுவது போல எதுவும் நடக்கலாம். அப்பா பாவம். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரால் என்ன செய்ய இயலும் அவர் நிலையில் இப்போது எவர் இருந்தாலும் அவரைப் போலத்தான் இருப்பார்கள்!
அவர் உடல் நொந்து நன்றாக இளைத்துப் போய் விட்டது. வலது முழங்காலில் வலி, அந்தக் காலை முற்றாக மடிப்பதற்கே இயலாது. தன்னிச்சையின்றி இடையிடையே நீட்டி முடக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் வலி சற்றுக் குறைவது போல இருக்கும்.
கடந்த வாரம் அவருக்கொரு விபத்து. அப்பாவுக்கு எப்போதும் வீட்டோடு முடங்கிக் கிடக்க முடியாது. வெளியே இடையிடையே போய் வர வேண்டும். மனசுக்கும் அது ஆறுதல். வாரத்தில் இரண்டெர்ரு தடவை சயிக்கிளை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டு விடுவார்.
ஒரு நாள் காலை வழமை போல சந்தைக்குப் புறப்பட்டுப் போனார். சந்தை வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் துாரம். அன்று ஒரு வெள்ளிக்கிழமை. வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளும் வாழைப் பழமும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிர்த்திசையில் பெண் பிள்ளைகள் சிலர் வேகமாகச் சயிக்கிளில் குதித்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஏதோவொரு ரியூட்டரிக்குப் போய்க் கொணர் டிருக்கலாம். பெண்கள் கல்லுாரி ஒன்றில் படித்துக் கொண்டிருப்பவர்கள். வீதியை அடைத்துக் கொண்டு உல்லாசமாக தமக்குள்ளே பேசிச் சிரித்த வண்ணம் வந்து கொண்டிருந்தார்கள்.
அப்பா அவர்கள் வருகையைக் கவனித்தார். விட்டார்த்தியாக வீதியை அடைத்துக் கொண்டு பவனி வருகிறார்கள். வீதி முழுவதும் தமக்கே சொந்தம் என்ற நினைப்பு எதிரில் வந்து கொண்டிருப்பவர்களும் அவர்கள் கண்களில் படவில்லை. பேச்சு சுவாரசியத்தில் எல்லாம் அவர்களுக்கு மறந்து விட்டது.
111

Page 61
കിങ്ങ്ട്രഖക്ക്
அப்பா வீதியில் ஒரமாக ஒதுங்கினார். எவ்வளவு ஒதுங்கித்தான் என்ன! அவர்களில் ஒருத்தி அப்பாவின் சயிக்கிளோடு வந்து மோதினாள். அப்பா சயிக்கிளுடன் சரிந்து கீழே விழுந்தார். அவர் சந்தையில் வாங்கி வந்த காய்கறி, வாழைப்பழம் கூடையுடன் வீதியில் விழுந்து சிதறின.
"பழம் கீழே விழுந்து போச்சு" நக்கலாக ஒருத்தி இன்னொருத்தி யைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு சென்றாள்.
அவர்கள் எல்லோரும் திரும்பி அப்பாவைப் பார்த்து கொல் என்று சிரித்த வண்ணம் அவர்கள் பாட்டில் சென்று விட்டார்கள். விழுந்து போன அப்பா ஒரு கிழவன். இருந்தும் அவருக்கு உதவி பண்ணும் எண்ணம் அவர்களுக்கு இருக்க வில்லை. இந்த இளம் தலைமுறையினர் ஏன் இப்படி ஆனார்கள்! இவர்களுக்கு என்ன நடந்தது!
" இது ஆரோக்கியமான ஒரு வளர்ச்சியா! அப்பா மெல்ல எழுந்து போய்க் கொண்டிருகிறவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றார். அப்பாவுக்கு வாய் திறந்து பேச முடியவில்லை. வீதியில் போவோர், வருவோர் அப்பாவை அனுதாபத்துடன் நோக்கினர். தனக்கு உதவி செய்ய வந்தவர்களையும் அப்பா தடுத்து விட்டார். சயிக்கிளைத் துாக்கி நிறுத்தி, கூடையைக் கையில் எடுத்து சிந்திக் கிடக்கும் காய்கறி, பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு மெல்லப் புறப்பட்டார்.
அப்பா ஆசிரியராக இருந்து பின்னர் அதிபராகப் பணி புரிந்தவர். இவர்களைப் போல எத்தனை மாணவிகள் அவரிடம் கற்றிருப்பார்கள்! இன்று நிலத்தில் குப்புற வீழ்த்தி விட்டுக் கேலி செய்து கொண்டு போகின்றது இந்தத் தலைமுறை. இது தலைமுறை இடைவெளி என்பதா! அப்பாவுக்கும் அவருக்கு முந்தின தலைமுறைக்கும் இந்தத் தலைமுறை இடைவெளி இல்லாமலா போனது. ஆனால் இந்தத் தலைமுறை ஏன் இப்படி மாறிப்போனது. தவறு எங்கே நிகழ்ந்தது!
அப்பாவுக்கு உள்ளம் உளைத்தது. மனசில் நோவு முழங்காலி லும் நோவு அடியெடுத்து நன்றாக நடப்பதற்கும் இயலவில்லை. இந்த
112

தெணியான்
அப்பாவால் இப்பொழுது என்ன செய்வதற்கு இயலும் "காலையிலே பார்ப்போம்" என்றுதானே அவர் சொல்லுவார்.
அவர் வரையில் அவர் சொல்வது நியாயந்தானே! அம்மாவின் இயலாமையை நிச்சயம் அப்பா நினைத்துப் பார்த்திருப்பார். அம்மா நாட்பட்ட நோயாளி உடல் மிகவும் இளைத்துப் போனவள். தவறாமல் தினமும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவள். கடந்த வாரம் ஒரு தினம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாள்.
வாகன வசதிகள் இல்லாத காலத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் சுய உணர்வுகளை இழந்து நீட்டி நிமிர்ந்து கிடந்த அம்மாவை டொக்ரரிடம் அவசரமாகக் கொண்டு போய்க் காட்டுவது ஒரு சாதாரணமான காரியமல்ல! அந்தரப்பட்டு அங்குமிங்குமாக ஒடியதில் இறுதியில் தேங்காய் வியாபாரம் செய்யும் வான் ஒன்று கிடைத்தது. புகை கக்கிக் கக்கி 'லாம்பெண்ணையில் ஒடும் பழைய வான். ஒரு பகல் முழுவதும் அந்த டொக்ரரின் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டி நேர்ந்தது. இப்பொழுது அவளுக்கு நோய் ஒன்றல்ல. பல நோய்களின் பாதிப்பு சுவாசிப்பதும் அவளுக்குச் சிரமமாகிப் போனது.
அப்பாவுக்கும் மூத்தவனுக்கும் என்றும் பொருந்தி வருவதில்லை. எதற்கெடுத்தாலும் முரண்பாடு. அப்பாவின் குணமறிந்து நடக்க அவனுக்குத் தெரியாது. தனது இளமைக் காலத்து உலகம் இப்போதும் அப்பாவின் கற்பனையில் இனிய சுகமாக விரிகின்றது.
அந்தக் காலத்தில் அவர் செய்து முடித்த காரியங்கள் அவரைப் பொறுத்தவரையில் வீர சாகசங்கள். அந்தச் சாகசங்களைப் பொறுமை யாக இருந்து கேட்பவர் கிடைத்து விட்டால் அப்பா கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அப்பாவின் கதை முற்றுப் பெறாத விக்கிரமாதித்தன் கதை.
இந்த அப்பாவை விளங்கிக் கொண்டவன் நடுவிலான், அப்பா வுக்கு ஏற்ற விதமாக நடக்கின்ற திறமை அவனுக்குத்தான் இருந்தது. அவன் சொல்லுக்கு அப்பா மறுப்பில்லை. அப்பா மறுப்புச் சொல்லாத
113

Page 62
சிதைவுகள்
விதமாகத்தான் எதற்கும் அப்பாவை அவன் அணுகுவான். அந்தச் சாதுரியம் அவனுக்கிருந்தது.
அவன் மீது அப்பா வெகு பிரியம். மூத்தவனின் கடும் சொற்கள் அப்பாவின் நெஞ்சைச் சுடும். அப்பொழுது எல்லாம் அப்பா நடு விலானை நினைத்துக் கொள்வார். "அவனல்லவா பிள்ளை ஒரு சொல் சினந்து சொல்லி அறியமாட்டான்." நடுவிலான் வெளிநாடு போவதற்கு அப்பாவின் சம்மதம் பெற்றது பெரிய ஒரு சாதனை.
அவனுக்குச் சம்மதம் தெரிவித்த பிறகு, நினைத்துப் பார்க்க அப்பாவுக்கே ஆச்சரியம்.
114

அப்பா ஒரு ஆசிரியர். பிற்காலத்தில் தலைமை ஆசிரியர். கல்வி ஒன்றே மேலான செல்வம். அதைவிட உயர்ந்த செல்வம் பிறிதொன்று இல்லை என்பது அப்பாவின் முடிந்த முடிவு. அப்பா மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனும் அப்பா போலத்தான் முடிவு கொள்கிறான்.
பணம் படைத்தவன் அதுவே உலகில் மேலானது என்கின்றான். பலம் படைத்தவன் அதைவிட உயர்ந்தது வேறொன்றில்லை என்கின் றான். மனிதன் ஒவ்வொருவனும் தனது இருப்பின் திவ்வியத்தைச் சமூகத்தில் நிறுவ எத்தனிக்கின்றான். அப்பாவின் பிரயத்தனமும் அது தான். கற்ற கல்வியை நீக்கிவிட்டு அப்பாவை நோக்கினால் சமூகத்தில் சாதாரண மனிதன் அப்பா.
யார்தான் சாதாரண மனிதனாக வாழ்ந்து அநாமதேயமாக மறைந்து போவதற்கு எண்ணுவார்கள். அதனால் கல்வியின் சிறப்புக்களை அப்பா எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். கல்வி ஒன்றே மேலான செல்வம். வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, கள்வராலும் கொள்ள இயலாது. வாரி வழங்க வழங்க வற்றாது. கொடுக்கக் கொடுக்கப் பெருகுவது, மறு உலக இன்பத்துக்கும் வழிசமைப்பது இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.
இந்த அப்பாவிடம் நடுவிலான் தகுந்த சந்தர்ப்பம் ஒன்றை எதிர் பார்த்துக் காத்திருந்தான். எண்பத்துஏழில் இலங்கை இராணுவம் வடமராட்சிக்குள் புகுந்தது. அப்பா குடும்பத்துடன் பூவற்கரைப் பிள்ளையார் ஆலயத்துக்கு ஓடிப் போயிருந்தார். பிள்ளையார் தஞ்சமாக பத்தாயிரத்துக்கு மேல் அப்பாவிப் பொதுமக்கள் வந்து குவிந்தார்கள்.
115

Page 63
fങ്ങമ്രഖക്ക്
பலாலியில் இருந்து இராணுவம் கிழக்கு நோக்கி வந்து கொண்டி ருக்கிறது. வானில் இருந்து விமானக் குண்டுகள் விழுகின்றன. ஷெல் கூவிக் கொண்டு வருகின்றது, துப்பாக்கிச் சன்னங்கள் சீறிக் கொண்டு பாய்கின்றன. ஹெலி சுழன்று சுழன்று சுட்டுத் தள்ளுகின்றது.
உண்பதற்கு உணவில்லை, படுத்து உறங்குவதற்கு இடமில்லை.
எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம். ஒரு நாள் கழிந்தது.
மறுநாளும், மறுநாளும் கழிந்து நான்காம் நாள் இராணுவம் வந்து சூழ்ந்து கொண்டது.
விடலைப் பருவ வாலிபர்களைச் சனக் கூட்டத்தில் இருந்து பிரித் தெடுத்தார்கள். தனியாக வைத்து அவர்களுக்கு அறிவுரை சொல்லப் போவதாக ஏமாற்றி இறுதியில் வாரிக் கொண்டு போனார்கள். கப்பல்களில் ஏற்றி காலித்துறைமுகத்துக்குக் கொண்டு சென்று ஒரு மாத காலம் சிறைப்படுத்தி வைத்தார்கள்.
அப்பா என்ன ஆகுமோ என்று தெரியாமல் அச்சத்துடன் துடித்துக் கொண்டிருந்தார். மூத்தவன் திருமணமானவன் அதற்கொரு மன்னிப்பு, கருணை- அவன் காலிக்குக் கப்பல் ஏறாமல் சுலபமாகத் தப்பித்துக் கொண்டான்.
நடுவிலானைப் பிடித்துக் கொண்டார்கள். மந்தைகளாகக் காலிக்கு இட்டுச் சென்ற கூட்டத்தோடு அவனையும் இழுத்துப் போகப் பார்த்தார்கள்.
அப்பா தன் சேவைக்காலத்தில் மாத்தறையிலும் ஆசிரியராக இருந்தவர். அதனால் சிங்களம் ஓரளவு பேச வரும். அந்தச் சிங்களம் அப்பாவுக்குக் கை கொடுத்தது. தங்கள் மொழியில் பேசக் கேட்டதில் அவர்களுக்கொரு நிறைவு
அப்பாவின் வீர சாகசங்களுக்கு மகுடம் வைத்தது போல நடுவிலானை அப்பாவிடம் விட்டுப் போனார்கள்.
நடுவிலான் அப்பொழுது ஏ-எல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். குடும்பச் சுமை சின்ன வயசிலும் அவன் நெஞ்சை அழுத்தும். படுக்கையில் கிடந்து காலையில் கண் விழிக்கும் போது

தெணியான்
யாரிடம் போய் இன்று கடன் கேட்கலாம் என்னும் எண்ணத்துடனேயே
அம்மாவின் பொழுது புலரும். பகல் பொழுது கழிந்து இரவு படுக்கைக் குப் போகும் வேளை வாங்கின கடன்காரர்கள் நாளை வரப்
போகிறார்களே என்று அவள் நெஞ்சு ஏங்கும்.
குடும்பம் பெரியது. வாழும் வீடு அதற்கேற்ற வசதிகள் இல்லாதது. தென்னங்கீற்றினால் வேய்ந்த சின்ன வீடு. அப்பாவின் மாதச் சம்பளம் தவிர வேறு வருமானம் இல்லாத குடும்பம். பிள்ளைகள் எல்லோருக்கும் படிப்புச் செலவு
கடன் மலைபோல வளர்ந்து கொண்டே போயிற்று. மூத்தவன் படித்து வந்து அப்பாவைப் போல ஒரு ஆசிரியர் ஆனான். அப்பாவின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. தனக்கொரு வாரிசு உருவாகிவிட்டான் என்னும் நெஞ்சு நிறைந்த நினைப்பு அவருக்கு.
அப்பாவின் சம்பளமும், மூத்தவனின் அற்ப சம்பளமும் சேர்ந்தும் வீட்டுத் தேவைகளை நிறைவு செய்ய முடியவில்லை. பெருகிக் கொண்டு போகும் கடன் பளுவை இறக்கி வைப்பதற்கும் மார்க்கமில்லை. கடன்கள் சில நெருக்கடி கொடுப்பதற்கு ஆரம்பித்தன.
அம்மா செய்வதறியாது திணறிப் போனாள். அம்மாவுக்கு கண்ணெதிரில் தெரிந்த ஒரே மார்க்கம் மூத்தவனை அவன் தொழிலைச் சொல்லி விலை கூறி விற்பதாகவே இருந்தது.
ஊரிலுள்ள பெண்ணுக்குச் சீதனத்துக்காக அவனைக் கட்டி வைத்தார்கள். அவன் வாங்கின சீதனக் காசினால் கடனில் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டார்கள். தேங்கி நின்ற மிகுதிக் கடன் பெருகிக் கொண்டு போனது. இந்தச் சமயத்தில் நடுவிலான் ஒரு தினம் அம்மாவிடம் வந்து சொன்னான்.
"அம்மா நான் வெளிநாட்டுக்குப் போறேன்"
"என்ன?" அம்மா உண்மையில் அதிர்ந்து போனாள். அவன் வந்து இப்படிக் கேட்பான் என்று அம்மா எதிர்பார்க்க
வில்லை. தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களைப் பிள்ளைகள் அறிந்து
117

Page 64
சிதைவுகள்
விடக் கூடாது என்று எச்சரிக்கையாக நடக்கிறவள் அவள். பிள்ளைகள் அறிந்து கொண்டால் அது அவர்கள் படிப்பைப் பாதிக்கும்.
கல்வியை விடப் பெரிய செல்வம் பிறிதொன்றுமில்லை என்று இறுமாந்திருக்கும் பள்ளிக்கூட அதிபரின் பிரிய பத்தினியல்ல அம்மா! நடுவிலான் தங்கள் குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து கொண்டு விட்டான்.
"படிக்க அலுப்பாயிருக்கோ"
"இல்லையம்மா பயமாயிருக்கு"
"என்னத்துக்கு?"
"ஆமிக்கு"
"எத்தினை பிள்ளைகள் படிச்சுக் கொண்டிருக்குதுகள், ஆமிக்குப் பயந்த்ால்."
"எனக்குப் பயமாயிருக்கு"
"பொய் சொல்லாதே"
"உண்மை அம்மா"
"உன்னை எனக்குத் தெரியும் நீ அவ்வளவு பயந்தவனில்லை" "உங்களைப் பார்க்கப் பயமாயிருக்கு"
"66?"
"எவ்வளவு காலத்துக்குத் துன்பப்படப் போகிறியள்"
"என்ன துன்பம்"
"அம்மா, இப்பவும் நான் குழந்தையில்லை" "ஓ. அப்பிடியா. அதுக்கு?"
"நான் உழைக்க வேணும்"
" . الاوا?
118

தெணியான்
"போதும் மற்றவை படிக்கட்டும்"
"எல்லாரும் படிக்கட்டும் உனக்கு மட்டும் அது வேண்டாம்"
"இந்தப் படிப்புப் போதும் நான் வாழுறதுக்கு குடும்பத்துக்காக இனி உழைக்க வேணும்"
"நீ படிச்சு வந்தால்."
"அண்ணாவுக்குச் சீதனம் வாங்கி என்ன கண்டியள். பொம்பிளைப் பிள்ளையஞக்கு வெளிநாட்டுக்காறன் ஒவ்வொருதனும் பத்து லட்சம், பதினைஞ்சு லட்சம் எனக் குடுக்கிறான்"
"நாங்கள் படிச்ச குடும்பம்"
"சீதனம் வாங்காமல் ஆர் வரப் போறான்" "நாங்களும் விரலுக்கேத்த வீக்கமாகப் பார்க்கிறதுதான்"
"படிச்ச மாப்பிளை வேணும். அதுக்கு எங்களிட்டை சீதனம் இல்லை. நாட்டுப் பிரச்சினையாலை எல்லோரும் வெளிநாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறாங்கள். இருக்கிறவனுக்கும் விலை ஏறிக் கொண்டே போகுது. அது ஒரு புறம். நீங்கள் எவ்வளவு காலம் கடனோடை கிடந்து அழியப் போகிறியள்! கடன் கேட்டு ஆற்றையும் படலையை திறக்கிறதுதான் உங்களுக்கு வேலையே! நான் இதைப் பார்த்துக் கொண்டிருக்க வேணும் எண்டு சொல்லுறியள்"
அம்மாவுக்குக் கண்கள் கலங்கின.
இந்தச் சின்ன வயதில் அவனுக்கு இத்தனை மன முதிர்ச்சி. குடும்பப் பொறுப்புக்களை அவன் ஆழமாக உணர்ந்திருப்பது அம்மா வுக்குப் புரிந்தது. அம்மாவுக்குப் பெருமையாக இருக்கிறது அவனை நினைத்துப் பார்க்க.
ஆனால் அவனைப் பிரிந்து அவனை வெளிநாடு அனுப்புவதை அந்தத் தாய்மையினால் கற்பனை பண்ணிப் பார்ப்பதற்கும் இயலவில்லை. அம்மா இறுதியில் முடிவாக ஒன்று சொன்னாள்.
119

Page 65
சிதைவுகள்
"இப்ப படி பிறகு பார்ப்பம்"
அம்மா சொன்ன அந்தச் சமாதானத்தை அவன் கேட்பதாக இல்லை.
"பிறகெப்ப. வயது போனாப்போலேயோ!"
"கொஞ்ச நாள் பொறு, யோசிச்சுச் சொல்லுறன்"
அம்மா மனசுக்குள் ஒரு சில நாட்கள் இடையறாத போராட்டம். அவனும் அம்மாவை விட்டுவிடுவதாக இல்ல.ை அவள் முடிவு என்ன என்று எப்போதும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். இப்படி ஒரு இக்கட்டு இதுவரை அம்மாவுக்கு வந்ததில்லை. அப்பா தீர்க்கமாக ஆலோசித்து எல்லாவற்றுக்கும் தீர்வு காண்பார். அம்மா மறு பேச்சின்றி அதை ஏற்றுக் கொள்வாள். இதைப் போய் அப்பாவிடம் சொல்வதற்கு இயலாது. அப்பா அறிந்தால் நிச்சயம் சீறி விழுவார். அம்மாவுக்கு அதை நினைக்கவே அச்சமாக இருந்தது. அம்மா இறுதியாக ஒரு நாள் சொன்னாள்:
"அப்பா ஒத்துக் கொள்ள மாட்டார்"
"இல்லை அம்மா, நீங்கள் மெல்லச் சொல்லுங்கோ" "அதுதானே சொல்லுறன், அப்பா சம்மதிக்க மாட்டாரென்று"
"அப்பாவின்ரை காதிலை போடுங்கோ நான் மிச்சம் பார்த்துக் கொள்ளுறன்"
அவன் கொடுக்கும் தொல்லை தாங்க இயலாது அப்பாவிடம் சொன்னாள்.
"பாலன் சொன்னால் கேட்கிறானில்லை"
"என்னவாம்"
"நெடுகத் தொல்லையாக் கிடக்கு"
"என்னத்துக்கு?
120

தெணியான்
"வெளிநாடு போகப் போறானாம்"
"என்ன சொன்னவன்!"
"படிப்பைக் கைவிட்டு விட்டு வெளிநாடு போகப்போறானாமோ! சவக்குழி வெட்டுகிறதுக்கும். கக்கூசு கழுவுறதுக்கும். திண்ட கோப்பை கழுவுறதுக்கும். இவன் போகப் போறானாமே!"
"அவன் சொல்லுறதும் ஞாயந்தான்"
"என்ன நியாயம்! காசு பணம் பிறகும் தேடிக் கொள்ளலாம். கல்வியைப் பிறகு தேடிக் கொள்ள இயலாது. இவைகளைச் செய்வதற்கு வெளிநாட்டுக்கு ஏன் போவான் ஊரோடு இருந்தும் மாடு மேய்க்கலாம். அவனுக்குப் படிக்கிறதுக்கு அலுப்பு"
இந்தச் சந்தர்ப்பத்தில் அவனே நேரில் வந்து விட்டான். அவனைக் கண்டு அப்பா ஷெல் போலச் சீறினார்.
"பாலன் நீ என்ன நினைக்கிறாய்?"
"ஒமப்பா"
"என்ன ஓம்!"
121 —

Page 66
"படிப்பு இவளவும் எனக்குப் போதும்"
GT66
"அப்பா, என்னைக் கோபியாதையுங்கோ பள்ளிப் படிப்பும் பல்கலைக்கழகப் படிப்பும் என்னத்துக்காக அப்பா! அறிவுக்காக எண்டு சொல்லுவியள். அது பொய் அப்பா உத்தியோகத்துக்காக, உத்தியோகம் கிட்ையாதெண்டால் ஆர் உந்தப் படிப்புப் படிக்கப் போகினம்! அறிவுக் காகப் படிக்கிறவர்கள் பள்ளிக் கூடத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் வெளியிலேதான் இருக்கினம். அந்தப் படிப்புக்கு வயதில்லை. காலமில்லை. பணம் தேடுகிறதுக்கு அந்தப் படிப்பெல்லாம் இண்டைக்குத் தேவையில்லை. எங்கடை வறுமை தீர வேணும். நீங்களும், அம்மாவும் இன்னும் எவ்வளவு காலம் கஷ்டப்படப்போகிறியள்! என்னை அனுப்புங்கோ அப்பா'
அப்பாவிற்கு வாய் திறப்பதற்கு இயலவில்லை. நில நிமிடநேரம் ஸ்தம்பித்து சிலையாகி இருந்தார். நெஞ்சுக்குள் நெகிழ்ந்து கலங்கிப் போனார். தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன். ஒமென்ற மந்திரத் தின் உட்பொருளை உணர்த்திய ஞானப்பழம். இந்தக் கணம் அவன் பாலமுருகனாக அப்பாவுக்குக் காட்சி அளித்தான். இந்த வயதில் இப்படி ஒரு ஞானம். அப்பாவை மூடியிருக்கும் மாய இருள் விலகுவது போல, அவருள் ஓர் உள்ளுணர்வு தோன்றுகிறது. அப்பா அதன் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அவன் விருப்பம் போல அவனை அனுப்பி வைத்துவிட அப்பா முடிவு செய்தார். அவனை அனுப்பி வைப்பதற்கு இப்போது பணம் வேண்டும். அப்பாவுக்கு சமூகத்தில் ஒரு மதிப்புண்டு.
122

தெணியான்
அது போதாதா அவனை வெளிநாடு அனுப்பி வைப்பதற்கு வேண்டிய பணத்தைப் பெறுவதற்கு அவருக்கு மிக வேண்டியவர்கள் என்றிருக்கும் சிலரை வெகு நம்பிக்கையுடன் மெல்ல அணுகினார். ஒரு உண்மை இப்பொழுது அப்பாவுக்கு நெஞ்சில் உதைக்கிறது. தனக் கிருப்பது வெறும் மதிப்பு. அது நாணயமில்லாத மதிப்பு என்பதுதான்
.lنI|9تک
நாணயத்துடன் மதிப்புத் தேடும் எண்ணம் வெறியாக மனசில் எழுந்தது. குடியிருக்கும் நிலம் இரண்டு ஆண்டுகால எல்லை போட்டு பொருத்தறுதி எழுதிப் பணம் பெற்றுக் கொண்டார். முதலும் வட்டி யுமாகக் குறித்த காலத் தவணைக்குள் கட்டியாக வேண்டும். தவறிப் போனால் கடன் கொடுத்தவனுக்கு அந்த நிலம் சொந்தமாகிப் போகும்.
இரண்டு ஆண்டுகள் காத்திருக்கும்படி நடுவிலான் விட்டு வைக்க வில்லை. முதல் ஆண்டு முடிவதற்குள் கடன் கட்டி முடித்து விட்டான். அடுத்த ஆண்டு குடியிருந்த ஒலைக் குடிசை மறைந்து போயிற்று. அழகான இந்த வீடு வசதிகளுடன், கம்பீரமாக எழுந்து நின்றது. பின்னர் அப்பாவுக்கு எழுதினான்.
"தம்பியை அனுப்புங்கோ" வசதியான வாழ்வின் ருசிகளை இப்பொழுது கண்டு விட்டவர் அப்பா, இந்த அப்பா அவன் விருப்பத் துக்கு மறுப்புச் சொல்லுவாரா? அவன் விருப்பம் போலச் 'சின்னவனையும் அனுப்பி வைத்தார்.
அவர்கள் அம்மாவை இப்பொழுது பார்க்க வேண்டுமாம். வசதி யான வீட்டில் செளகரியமாகத் தங்கள் அம்மா வாழ்வதைத் தாங்கள் பார்க்க வேண்டுமாம். அவர்கள் இருவரும் ஒவ்வொரு கடிதத்திலும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் அம்மாவின் சுகத்தில் வெகு கவனம்.
வானத்தில் திடீரெனப் பயங்கர இரைச்சல். சகடை ஒன்று அல்லது அவ்ரோ ஒன்று இருளைக் கிழித்துக் கொண்டு போகின்றது. கடலில் கடற்படையின் இயந்திரப் படகொன்று விரைந்து செல்லும் உறுமல் வடக்குத் திக்கில் இருந்து எழுகின்றது.
123

Page 67
ഴിഞ്ഞുമ്രഖക്കt
வீட்டில் பதுங்கு குழியும் இப்போது இல்லாமல் போனது. அண்மை யில் பெய்த பெருமழையில் அது இடிந்து துார்ந்து போயிற்று.
இப்பொழுது விமானத்தில் இருந்து குண்டுகள் வந்து விழலாம். கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல் நடக்கலாம். பலாலி இராணுவ முகாமில் இருந்து ஷெல் வந்து விழுந்து வெடித்துச் சிதறலாம். திசைகள் எங்கும் மரணம் சூழ்ந்து நிற்கிறது. மரணத்தை மறித்துத் தப்பி ஓடுவது எப்படி
காலங்காலமாக ஆன்மீக வாதிகளின் தேடல் இது. அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் மரணத்தின் மறைவிடங்கள் இந்தப் பதுங்கு குழிகள்தானா
இப்பொழுது என்ன செய்யலாம்!
அப்பா மீது அதிருப்தியுடன் அவன் இங்கிருந்து சென்று விட்டான். ஆனால் அவன் திரும்பி வரத்தான் போகின்றான். கோபித்துக் கெர்ண்டு போனவன் எல்லோரையும் நிராகரித்து விட்டு தன் குடும்பத் துடன் ஓடிப் போக அவனுக்கு இயலாது.
அவனுக்கென்ன வெகு துாரத்திலா வீடு அடுத்த தெருவில் மனைவி வீட்டில் குடியிருக்கின்றான். குடும்பத்தில் மூத்தவன். தான் பிறந்த குடும்பத்துக்குத் துணையாக இருக்க வேண்டியவன். அதனால் தான் அவனை அருகில் வைத்துக் கொண்டார்கள். அம்மா அவனை எதிர்பார்த்து இருக்கிறாள். அவன் மீண்டும் வருவான் என்பது அவள் அறிவாள். கூடத்து வெளிக்கதவையே அவள் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்.
கதவு பட்டென்று திறந்து கொள்ளுகிறது. அவன் வேகமாக வருகின்றான். அவன் முற்றாகக் குழம்பிப் போய் நிற்கின்றான்.
"அம்மா சனம் முழுக்க வெளிக்கிட்டுப் போகுதுகள். நீங்கள் ஒண்டுமறியாமல் வீட்டுக்குள்ளே இருக்கிறியள். குழந்தையளை வைச்சுக் கொண்டு நான் இருக்கேலாது. நானும் வெளிக்கிடப் போறேன்" அவன் கடுகதியில் இங்கிருந்து திரும்பி நடக்கிறான்.
124

அப்பா கட்டிலை விட்டு மெல்ல எழுகின்றார். வலது காலை இழுத்திழுத்து நடந்து, கூடத்து வாசலைத் தாண்டி வெளியேறி வீதியில் வந்து நிற்கின்றார். அவன் வீட்டை விட்டுப் போவதற்குத் தயாராகப் புறப்பட்டு விட்டான். மனைவி, குழந்தைகளுடன் வந்து வெளியே காத்து நின்றான். சின்னவள் அம்மாவை அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்தாள்.
அப்பா கூடத்துக் கதவைப் பூட்டிக் கொண்டு சயிக்கிளுடன் தெருவில் இறங்கினார். பெட்டி படுக்கைகளைச் சுமந்த வண்ணம் மக்க ளெல்லாம் வீடுகளை விட்டுப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
முகமறியாத இருட்டு. கையில் துாக்கிய ஜாம் போத்தல் விளக்கு கள். அலை அடிக்கும் கடல் மீது மிதக்கும் தோணிகளில் இராக்காலம் தோன்றும் வெளிச்சம் போல அந்த விளக்குகள் அசைந்து அசைந்து போய்க் கொண்டிருந்தன. பனங்காணிகள், குச்சொழுங்கைகள், மேடு, பள்ளங்கள் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்தன.
அம்மா கையிலும் அந்தப் போர்க்கால விளக்கு அம்மாவுக்கு எழுந்து நிற்பதற்கு இயலவில்லை. நன்றாகச் சுவாசிப்பதற்கும் இயலாது. மூச்சுத் திணறுகின்றது மெலிந்து நொந்து போன அவளுடல் வெடுவெடுத்து நடுங்கிக் கொண்டிருக்கின்றது. வீசிக் கொண்டிருக்கும் குளிர் காற்று இன்னும் முற்றாகத் தணியவில்லை. அம்மா அடியெடுத்து வைத்து நடக்கும் நிலையில் இப்போது இல்லை.
அப்பாவுக்கு அம்மாவைப் பார்க்க இதயம் நோகிறது. அவள் இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் வீட்டை விட்டு அவளை அழைத்துப் போக வேண்டாம். குடும்பத்துடன் வந்து நிற்கும் அவனுடன்
125

Page 68
ഴിഞ്ഞമ്രഖകണt
சின்னவளையும் அனுப்பி வைத்துவிட்டு, தான் அவளோடு வீட்டில் தங்கிவிட்டால் என்ன என்று ஒரு தடவை நினைத்துப் பார்த்தார்.
காலை விடிந்தால் ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள். சனம் இல்லாத ஊரில் தாங்கள் இருவர் மாத்திரம் தனித்திருந்து என்னதான் செய்வது?
சனத்தோடு சனமாக எங்காவது போய்ச் சேர்ந்து விடுவதுதான் உசிதம். வீட்டை விட்டுப் போவதற்குப் புறப்பட்டு வெளியே வந்தாயிற்று வடமராட்சி விட்டு இடம்பெயர்ந்து எங்காவது போய்ச் சேர்ந்தால் போதும் என்பது மாத்திரம்தான் எல்லார் மனசுகளிலும் இப்பொழுது இருக்கும் ஒரே இலக்கு.
எங்கே போவது?
அதை இன்னும் தீர்மானிக்கவேயில்லை.
அம்மாவுக்கு அதை அறிய வேண்டும் போல் இருந்தது. அவளது இயலாமை அந்த ஆவலை மனசில் துாண்டி விட்டது. போகும் இடம் நீண்ட துாரமானால் அவள் எப்படிப் போய்ச் சேருவாள்.
அம்மாவுக்கு வாய் திறந்து ஒழுங்காகப் பேசவும் முடியவில்லை. அவள் மனசில் எழுந்த எண்ணம் நாக்குழற தட்டுத்தடுமாறி அடித் தொண்டையில் இருந்து மெல்ல வெளி வந்தது.
"இப்ப எங்கே போறது?"
"வடமராட்சியை விட்டு எங்கேயாவது போவோம்" என்றான் அவன்.
"ஆவரங்காலுக்குப் போவோம். விடிஞ்சாப்பிறகு அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போவோம். அப்பாவின் ஆலோசனை.
"வல்லை வெளி தாண்டிப் போக வேணும். பலாலியிலே இருந்து ஷெல் அடிப்பான்கள்"
"எங்கே அண்ணா போறது?"
126

தெணியான்
"வறணிப் பக்கம். சனம் முழுக்க அங்கேதான் போகுது" "முள்ளி வெளியிலே ஷெல் வந்து விழாதாக்கும்"
கேட்க வேண்டும் போல இருக்கிறது அப்பாவுக்கு, தனக் குள்ளே ஒரு தடவை கேட்டுக் கொள்ளுகின்றார்.
"சரி எங்கேயாவது போவோம்" அப்பாவுக்குச் சலிப்போடு அவசரம். அம்மாவை எப்படியும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அம்மாவை யார் கொண்டு போகப் போகிறார்கள். அவன் சைக்கிளில் பின்புறக் கரியலில் பெரிய சூட்கேஸ் ஒன்றைக் கட்டியிருந்தான். முன்னே இரண்டு குழந்தைகளை ஏற்றிக் கொண்டான்.
சின்னவள் தோளில் கனக்கும் பாக்கொன்று தோள் பதியத் தொங்கியது. அண்ணாவின் மூத்த மகன் அவர் சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டான். அவன் மனைவிக்குச் சயிக்கிளில் ஏறிச் செல்ல வசதி யில்லை. சயிக்கிள்களுக்குப் பின்னால் நடந்து போவதற்குத் தயாராக இன்னொரு "பாக்"கைச் சுமந்த வண்ணம் அவள் நின்றாள்.
அம்மா என்ன செய்யப் போகின்றாள். அவர்களுடன் நடந்து செல்வதற்கு அவள் இயலாதவள். அப்பாவிற்கு அவளைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போவதற்கு முடியாது.
சின்னவளை நம்பி இந்த இருளில் அம்மாவைச் சயிக்கிளில் ஏற்றி விடவும் முடியாது. அவன் கட்டிக் கொண்டிருக்கும் கனத்த சூட்கேஸை அப்பா சைக்கிளில் சுமக்கவும் மாட்டார். அப்படியானால் அம்மாவை என்ன செய்யலாம்! அவன் இப்பொழுது அம்மா, அப்பாவுக்கு மகன் மாத்திரமல்ல. அவன் ஒரு கணவன் மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன். அவனுக்கென்று ஒரு குடும்பம். அப்பா செய்யத் தகுந்தது என்னவென்று இப்போது அவருக்குப் புரியவில்லை.
இயலாமையில் மனம் குழம்பிக் குழம்பித் தவிக்கின்றது. இயலாமை என்பது எப்பொழுதும் எரிச்சலைத்தான் மூளச் செய்யும். அப்பா மனசில் எரிச்சல் மூளுகின்றது. எரிச்சலை ஒருவாறு அடக்கிக் கொண்டார். அடுத்த கணம், எடுத்த சயிக்கிளை "ஸ்ராண்டில்" நிறுத்தி விட்டு நில்லுங்கோ வாறன் எண்டு சொல்லிக் கொண்டு தெருவில் இறங்கினார். - 127

Page 69
சிதைவுகள்
சுமார் ஐம்பது மீற்றர் துாரம் நடந்து தெரு மூலையில் திரும்பி அதை அடுத்துள்ள வீட்டுப்படலையைத் திறந்து முற்றத்துக்கு வந்தார்.
அந்த வீட்டிலும் எல்லோரும் அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். சற்று நேரம் தாமதித்து இருந்தால் அவர்கள் அங்கிருந்து கிளம்பிப் போய் இருப்பார்கள். அப்பா சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார். வீட்டு முற்றத்தில் ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.அகலமான இரும்புக் கரியர் பூட்டிய சைக்கிள் அது.
அந்த வீட்டு இளைஞன் விமலன் வீட்டோடு சிறிய கடையொன்று வைத்து வியாபாரம் செய்கின்றான்.காலையில் எழுந்து நெல்லியடிச் சந்தைக்குச் சென்று கடைக்கு வேண்டிய பொருட்களைக் கொள்வனவு செய்து அந்தச் சயிக்கிளில் கட்டிக் கொண்டு வந்து கொடுப்பான். பின்னர் தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்கு அவன் போய் விடுவான்.
wa
வீட்டிலுள்ள கடையை அவன் அக்கா கவனித்துக் கொள்வாள். அவளுக்குக் கணவனில்லை. குஞ்சும் குருமனுமாக ஐந்து குழந்தைகள், வயது முதிர்ந்த தாயும் தந்தையும் அந்தப் பெரிய குடும்பப் பாரத்தைத் தனியொருவனாக நின்று விமலன் சுமந்து கொண்டிருக்கின்றான். அவன் பொறுப்புணர்ந்து நடக்கின்றவன்.
அம்மாவின் மீது அவனுக்கு நல்ல பிரியம். அம்மம்மா. அம்மம்மா என்று எப்போதும் வாஞ்சையுடன் அழைப்பான். அவன் ஒருவன் மட்டும்தான் இந்த வேளையில் மனசு வைத்து உதவக் கூடியவன். தன் சிரமத்தைப் பெரிதாக எண்ணாமல் எதையும் அம்மா வுக்காகச் செய்யக் கூடியவன். அவனது சயிக்கிள் முற்றத்தில் நிற்கின்றது. அவன் இங்கிருந்து புறப்பட்டு இன்னும் வெளியே போய்விடவில்லை.
அப்பாவுக்கு மனசு நிறைந்த நம்பிக்கை. பீதி, துயரம் நிறைந்த நெருக்கடியான இந்த வேளையிலும் மனசுக்குள் சின்னச் சந்தோஷம். முற்றத்தில் வந்து தரித்து நின்று ஆவலோடு அப்பா குரல் கொடுக் கின்றார்.
"தம்பி. தம்பி.!"
128

தெணியான்
"ஆர், அப்பையாவே" கேட்டுக் கொண்டு முற்றத்துக்கு ஓடி வந்தான்.
"ஓமப்பு" அப்பாவுக்கு முன்னே வந்து நின்று பதற்றத்தடன் கேட்டான்.
"என்ன அப்பையா? t
"அம்மம்மா..!"
அப்பாவுக்கு இதற்கு மேல் பேச நா எழவில்லை. குரல் வெளிவர இயலாது கம்மிப் போகிறது. நெஞ்சில் முட்டும் சோகம் திடீரெனப் பெருகிக் கொண்டு வெளி வருகின்றது. அப்பா அழுது விடுவார் போல அவருக்குத் தோன்றுகிறது. நெஞ்சினுள் தேங்கி நிற்கும் துயர வெள்ளம் சில சமயங்களில் ஆறாகப் பெருகும். வாயடைத்து நிற்கும் அப்பாவை அவன் ஒரு நொடியில் விளங்கிக் கொண்டு விட்டான். இந்த அப்பையா செய்வது என்னவென்று அறியாமல் நின்று கண்கலங்கக் கூடிய ஒருவரல்ல.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் ஏழை எளியவர்கள் வாழ்வு இன்று நரகமாகிப் போனது. நித்தமும் பசி பட்டினியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு. கிடைக்கக் கூடிய பொருட்களுக்குத் தங்க விலை, வைரவிலை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு மாத்திரம் கொழுத்த லாபம்.
அவசர நோயாளிக்கும் ஒரு வாடகைக் கார் கிடைப்பதில்லை. சகல தேவைகளுக்கும் சமரசமாக சயிக்கிள் வண்டியில் போய் வர வேண்டும். அல்லது அந்தக் காலக் கால்நடைதான். வாடகைக்கார் ஒன்றில் அம்மாவை ஏற்றிக் கொண்டு செல்ல முடியுமானால் இந்த அப்பையா இங்கு வரக் கூடியவர் அல்லர் தான் பெரியவன் என்ற மிடுக்குடன் காரில் ஏறிப் பறந்து போயிருப்பார். அப்பையா கையில் பணம் வந்து பிடிபட்ட பிறகு முற்றாக மாறிப் போனார்.
அம்மம்மா அப்படி இல்லை. அம்மம்மா என்றுமுள்ள அம்மம்மா தான். இந்த அம்மம்மாவுக்கு இந்த வேளையில் உதவாமல் வேறு
129

Page 70
சிதைவுகள்
யாருக்குப் போய் உதவி செய்ய வேண்டும்.
"போங்கோ. அப்பையா வாறன்" அவன் சயிக்கிளில் கட்டிவிட்டிருக்கும் தகரப் பெட்டியை அவிழ்த்தெடுக்க ஆரம்பித்தான்.
崇
130

அப்பா திரும்பி வந்து அங்கு சேர அவர் பின்னால் அவன் சயிக்கிளுடன் வந்து நின்றான்.
தலையணை ஒன்று வாங்கி சயிக்கிள் கரியரில் வைத்து அம்மா வின் தோளைப் பிடித்து அதன் மீது பக்குவமாக இருத்தினான். அம்மா வசதியாக இருந்து கொண்ட பின்னர் சைக்கிளை நிதானமாக முன்னே தள்ளி மெல்ல உருட்டிய வண்ணம் புறப்பட்டான். அவன் பின்னால் அவனைத் தொடர்ந்து அப்பா சயிக்கிளை உருட்டினார். அப்பாவை அனைவரும் தொடர்ந்தனர்.
எங்கெங்கு நோக்கினாலும் இருள் தானன்றி வேறொன்று காட்டாத தனி இருள். போகும்பாதை புலப்படாத பயங்கர இருள். இருளினுள்ளே அசைந்தசைந்து போய்க் கொண்டிருக்கும் போர்க்கால விளக்குகள். சுழலும் காற்றில் பக்கென்று அந்த விளக்குகள் அணைவதும் மீண்டும் மீண்டும் ஏற்றுவதுமாகப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
மழைவெள்ளம் பாய்ந்தோடி மண்ணரித்துக் கிடக்கும் பாதைகள் மேடும் பள்ளமும் மணலும் கும்பியுமாக ஒழுங்கின்றிக் கிடந்தன.
இல்லங்களை விட்டுப் புறப்பட்டு பாதைகளில் வந்து மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி மெல்ல மெல்ல ஊர்ந்து இருளில் பாதங்களால் பாதை தடவி நகள்ந்து போய்க் கொண்டிருந்தனர்.
காற்றில் அசைந்தாடும் பனையோலைகளின் சலசலப்புத் தவிர எங்கும் அமைதி, அச்சத்தினால் பேச்சு மூச்சடங்கிப் போன ஊமை அமைதி
131

Page 71
சிதைவுகள்
ஒரு மணி நேரப் பயணம் கிராமத்தில் இருந்து பிரதான வீதிக்கு வந்து சேருவதற்கு அதன் பிறகு அவன் சயிக் கிளை ஓட்ட ஆரம்பித்தான். அவனுக்குப் பின்னே அப்பா சயிக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பிரதான வீதியில் சன வெள்ளம் பெருகிக் கொண்டிருந்தது. கையிலும், தோளிலும், தலையிலுமாகச் சுமந்து கொண்டு கால்நடையாகப் போகின்றவர்கள், சயிக்கிளில் ஏற்றி உருட்டிக் கொண்டு செல்கின்ற வர்கள் கடகடத்துக் கொண்டு ஓடும் ஒரு சில மாட்டு வண்டிகள், புகைக்கும் மோட்டார் சயிக்கிள்கள், ஊரெல்லாம் வீதிக்கு வந்து ஒன்று கூடி வீதியை அடைத்துக் கொண்டு தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
அவன் அவதானமாகச் சைக்கிளைச் செலுத்தி முன்னேறிப் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அப்பாவின் சயிக்கிள் சில்லொன்றில் இருந்து சீறிக் கொண்டு திடீரெனக் காற்று வெளியேறியது. அப்பாவினால் அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதற்கு முடியவில்லை. சயிக்கிளை விட்டிறங்கி அதை உருட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினார். சின்னவளும் மூத்தவன் குடும்பமும் பின் தங்கி வந்து கொண்டிருந்தனர்.
எல்லோரும் வெகுவாகக் களைத்துப் போய் விட்டார்கள். முள்ளி வெளி ஆரம்பிக்கும் சந்திக்கு ஒருவாறு வந்து சேர்ந்தனர். நெல்லியடியில் இருந்து துன்னாலையை ஊடறுத்து வரும் வீதியும், பருத்தித்துறையில் இருந்து மந்திகை வழியாக வரும் வீதியும் ஒன்றாக வந்து சங்கமிக்கும் சந்தி அது. இரண்டு வீதிகளிலும் வந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் முள்ளிச் சந்தியில் வந்து இணைந்து தென்மராட்சி நோக்கி நகர முடியாது ஊருகிறது.
வீதியில் விரைந்து சென்று எங்காவது ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற அந்தரம் எல்லோருக்கும். ஒன்றாக மக்கள் திரண்டு சென்று கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பம் பார்த்து முகாமில் இருந்து ஷெல் அடிக்கப்படலாம். ஹெலிகள் வானத்தில் பறந்து வந்து பரா
132

தெணியான்
யால் தொடர்ச்சியாகச் சுட்டுத் தள்ளலாம். இவைகளெல்லாம் இந்த மக்களுக்குக் கடந்த காலங்களில் சாத்தியமான அனுபவங்கள்.
வடமராட்சி மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து ஓடிக் கொண்டிருக் கும் பாவப்பட்ட மக்கள். இவர்கள் வலிகாமம்நோக்கிப் போவதானால் இடையில் வல்லைவெளி தாண்ட வேண்டும். தென்மராட்சிக்கு ஓடிப் போவதானால் முள்ளிவெளியைக் கடக்க வேண்டும்.
இன்னும் மூன்று கிலோ மீற்றர் துாரம் தாண்டிப் போக வேண்டும். முள்ளிவெளியின் எல்லைக் கிராமம் கறுக்காயைச் சேருவதற்கு, அது வரை மக்கள் குடியிருப்பு இல்லாத பயங்கர வெளி வீதியின் இரு மருங்கும் பரட்டையான கண்டல் காட்டுப் பற்றைகள், ஓங்கி வளர்ந்த நாணற் புற்கள், இவைகளுக்கு மத்தியில் தேங்கி நிற்கும் அழுக்கு நீர்க் குட்டைகள். சேறும் சகதியுமான சதுப்பு நிலம், இவைகளைத் தழுவிக் கொண்டு வீசும் குளிர்காற்று. அந்தக் காற்றுச் சுமந்து வரும் சாதாளை நாற்றம். இவைகளுக்கு மத்தியில் வளைந்து வளைந்து செல்லும் வீதி போர் தொடங்கிய காலம் தொடக்கம் நிராகரிக்கப்பட்டு, பட்டினியால் செத்துக் கொண்டு கிடக்கும் ஏழையின் முகம் போல இடிந்து தகர்ந்து கிடக்கின்றது.
அந்த வீதி இதுவரை கண்டிராத சனப் பெருக்கம் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. போய்க் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இருந்து தூக்கம் கலைந்து அழுகின்ற குழந்தையின் அழுகுரல் முதியவர்கள், நோயாளிகளின் இயலாமையால் மூச்சிழுக்கும் முனகல், சயிக்கிள் வண்டிகளின் கடகடப்பு, மேடு பள்ளத்தில் விழுந்தெழும் மாட்டு வண்டிகளின் அதிர்வு பெற்றவர்களைப் பிரிந்து தவிக்கும் பிள்ளைகளின் கூக்குரல், பிரிந்த உறவுகளைத் தேடி அலைகின்றவர் களின் அழைப்பு எல்லாமே சங்கமமாகி அந்த வெளியின் இரைச்சல் மத்தியில் சோகத்தை எழுப்பியது.
வானத்தில் ஆங்காங்கே பூத்திருக்கும் வெள்ளிகள் திடீரென மறைந்தன. வீசிக் கொண்டிருந்த சுழல் காற்று அடங்கிப் போனது. வானம் குளிர்ந்து குளிர் காற்று எங்கும் பரவியது. கண்ணைப் பறிக்கும் சுடர் வானின் ஒளி மின்னல்கள் வானத்தை வெட்டிப் பிளந்தன. ஷெல்
133

Page 72
சிதைவுகள்
வெடித்துச் சிதறுவது போல இடி இடித்து முழங்க ஆரம்பித்தது.
மழை ஆரம்பிக்கப் போவது கண்டு மக்கள் ஏங்க ஆரம்பித்தனர். மழை ஆரம்பித்து விட்டால் ஒதுங்கி நிற்பதற்கு இடம் வேண்டுமே அந்தப் பற்றைக் காட்டு வெளியில் எங்கே போய் ஒதுங்குவது அவர்கள் அஞ்சி ஏங்கியது போல மழை தூறல் போட ஆரம்பித்தது. தூறலாக ஆரம்பித்த மழை கணக்க ஆரம்பித்தது. மக்கள் வெள்ளம் மழை வெள்ளத்தில் நனைந்த வண்ணம் நகர ஆரம்பித்தது.
அம்மாவைச் சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு நினைத்த வேகத்தில் செல்வதற்கு விமலனால் இயலவில்லை. வீதியை அடைத்து நகர்ந்து கொண்டிருக்கும் சன நெரிசலை ஊடறுத்து அவனும் ஊர்ந்து ஊர்ந்துதான் செல்ல முடிந்தது. பெய்து கொண்டிருக்கும் மழையில் அம்மா நனையாது பாதுகாக்கவும் அவனுக்கு இயலவில்லை.
பரந்த வெளிக்குள்ளே குளிர் காற்று வீசும் நள்ளிரவு வேளையில்
மழையில் நனைந்ததும் அவனுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.
அம்மா தேகம் சில்லிட்டு விறைத்துப் போனாள். தாடை கிடு கிடென்று அடிக்க ஆரம்பித்தது. கை, கால்கள் படபடத்து நடுங்க ஆரம் பித்தன. தவறி நிலத்தில் விழுந்து விடாதவாறு சயிக்கிள் கரியரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டாள்.
அவன் முயன்று முயன்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆரம்பித்தான். பிரதான வீதி ஓரமாக அங்கே ஒரு பாடசாலை இருப்பது அவனுக்குத் தெரியும். அந்தப் பாடசாலைக்குள் அம்மாவைக் கொண்டு போய்த்தங்க வைக்கலாம் என்று தீர்மானித்தான். ஆனால் பாடசாலையின் பிரதான வாசல் தாண்டி உள்ளே நுழைவதற்கும் அவனால் முடிய வில்லை.
பிரதான வீதியில் தொடர்ந்து தெற்கு நோக்கிப் போக ஆரம்பித் தான். ஒரு கிலோ மீற்றர் துாரத்துக்கு மேல் கடந்து வந்து வரணிச் சந்தையை அடைந்தான். நான்கு ஐந்து கடைகளும் அந்தக் கடைகளுக்குப் பின்புறமாக பகற் பொழுதினில் தேங்காாய் வியாபாரம் சுறு சுறுப்பாக நடைபெறும் சிறியவொரு சந்தைக் கட்டிடமும் உள்ள
134

தெணியான்
இடம். அவர்களுக்கு முன்னர் வந்து சேர்ந்து விட்டவர்கள் கடை விறாந்தை களையும், சந்தைக் கட்டிடங்களையும் நிறைத்துக் கொண்டு விட்டார்கள். ஒரு அடி பதித்து வைப்பதற்கும் இடமில்லாத சனக் கூட்டம்.
அம்மாவைத் தங்க வைப்பதற்கு உடனடியாக ஒரு இடம் தேடியாக வேண்டும். தான் வியாபாரம் செய்வதற்குத் தேவையான தேங்காய்கள் வாங்கிப் போக இடையிடையே இந்தப் பக்கம் வந்து போகிறவன் விமலன், இன்னொரு பாடசாலை ஊருக்குள் இருப்பது அவனுக்குத் தெரியும்.
அந்தப் பாடசாலையில் எப்படியாவது அம்மாவைத் தங்க வைக்கலாம் என்று மனதில் அவனுக்கு ஒரு நம்பிக்கை.
அவன் சைக்கிள் கொடிகாமம் பாதையில் முன்னேறிச் சென்று சற்றுத் துாரம் கழிந்ததும் பிரதான வீதியிலிருந்து மேற்குத் திக்காகச் செல்லும் மண் ஒழுங்கையில் திரும்பியது. சிறிது துாரம் கடந்ததும் வரணிப் பாடசாலை தெரிந்தது. அந்தப் பள்ளிக் கூடத்துக்குள்ளும் வடமராட்சி மக்கள் வந்து கூடி விட்டார்கள். அவன் அம்மாவைச் சைக்கிளில் இருந்து மெதுவாக இறக்கி அணைத்துப் பிடித்த வண்ணம் பள்ளிக்கூடக் கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்று ஒரு இடம் பிடித்து மெல்ல இருக்க வைத்தான். அம்மா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவன் அணிந்திருக்கும் சேட்டைக் கழற்றி ஈரத்தை நன்றாகப் பிழிந்து உதறி அந்தச் சேட்டினால் அம்மாவின் தலையையும் உடலை யும் ஈரம் போகத் துடைத்தான். அம்மாக்கு நிமிர்ந்து உட்கார முடிய வில்லை.
தரையில் மெல்லச் சரிந்து படுத்தாள். அவளது உடல் வெடுவெடு வென நடுங்கிக் கொண்டிருந்தது. அம்மாவின் ஈரத்துணியை மாற்றி உடுப்பதற்குக் கையில் வேறு சேலை இல்லை. அம்மாவைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் துயரம் நெஞ்சை அடைத்தது. அவனுக்குச் செய்வ தென்னவென்று தெரியவில்லை. அப்பா எப்போது வந்து சேருவார் என்று எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தான்.
அப்பா சயிக்கிளை உருட்டிக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து
135

Page 73
சிதைவுகள்
வரணிச் சந்தைக்கு வந்து சேர்ந்தார். சின்னவளும், மூத்தவன் குடும்பமும் இருளோடு இருளாக அப்பாவைக் கடந்து வரணிச் சந்தையையும் தாண்டி சுட்டிபுரம் அம்மன் கோயில்வரை சென்றடைந்து விட்டார்கள்.
பொழுது புலர ஆரம்பித்தது. கறுக்காயில் இருந்து வரணிச் சந்தைக்கு அப்பால் இரண்டு கிலோ மீற்றர் துாரத்துக்கு மேல் வீதியின் இரு பக்கங்களிலும் வடமராட்சி மக்கள்தான்.
வசதி படைத்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள், அவர்களை ஆதரித்து வரவேற்கின்றவர்கள் இல்லங்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
போக்கிடமில்லாத அன்றாடங்காய்ச்சிகளுக்கு வீதி தவிர வேறு புகலிடம் ஏது? இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து இன்னும் முற்ற்ாக உலர்ந்து போகாத ஈர உடைகள், கண் விழித்து மழையில் நீண்ட துாரம் நடந்து வந்த சோர்வு உண்பதற்கு உணவேதும் கிடைக்காத பசிக்களை, அயர்வு நீங்க விழுந்து படுப்பதற்கு ஒரு நிழல் இல்லாத ஏக்கம், இவைகளெல்லாம் ஒன்றாகப் போட்டு வருத்த வீதியோரங்களில் குழந்தை குட்டிகளுடன் குந்தியிருக்கிறார்கள். நடைகுன்றிப் போன தள்ளாத வயதுக் கிழங்கள், நித்திய நோயாளிகள் வீதியோரத்து ஈர மண்ணில் சரிந்து படுத்துக் கிடந்தார்கள்.
இந்த ஏழை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்
இவர்கள் ஏன் இப்படிச் சிலுவை சுமக்கின்றார்கள்!
இவர்களுக்கு அது தெளிவில்லை.
இவர்கள் மனசுகளில் இப்பொழுது ஒரு நிறைவு. வடமராட்சி மண்ணை விட்டு இங்கு வந்து சேர்ந்தாயிற்று. இனி உயிருக்கு ஆபத்தில்லை.
விமலன் அம்மாவை எங்கே கொண்டு போய்ச் சேர்த்தான். சின்னவளும், மூத்தவன் குடும்பமும் என்ன ஆனார்கள். அப்பா எல்லோரையும் தேடிக் கொண்டு இருந்தார். காற்று வெளியேறிப் போன
1136

தெணியான்
சயிக்கிள் சில்லுக்கு மீண்டும் காற்றடித்துக் கொண்டு சயிக்கிளில் ஏறித் தேடிக் கொண்டிருந்தார். வரணியில் இருந்து வந்த பாதைவரை சென்று கறுக்காய் வரை சென்றவர், மீண்டும் வரணிச் சந்தைக்கு வந்து அங்கிருந்து சிறிது துாரம் முன்னேறி மறுபடியும் சந்தைக்குத் திரும்பினார்.
வழியில் கண்டவர்களிடம் விசாரித்தபோதும் யாரும் அவர்களைக் கண்டதாகச் சொல்வாரில்லை. அப்பா மனம் ஒரேயடியாகக் குழம்பிப் போனது.
இந்தக் கஷ்டங்கள் எல்லாம் அவனால் வந்தது. இப்படித் துன்பப் படுவதிலும் பார்க்க வீடு விட்டுப் புறப்படாமல் அங்கேயே தங்கி இருந்திருக்கலாம். என்ன நடந்தாலும் நடந்து போயிருக்கும். இப்பொழுது அனுபவிக்கும் இந்தத் துயரங்களை விடவா மரணம் பெரியது சாவே வாழ்வாகிப் போயிற்று.
அவனொரு அவசர புத்திக்காரன் அவன் சொல் கேட்டு உடனே புறப்பட்டிருக்கக் கூடாது. இப்பொழுது அவனுமில்லை. அம்மாவும் எங்கேயென்றில்லை. அம்மா பாவம்! நாட்பட்ட நோயாளி. நொய்ந்த உடம்பு. இந்த அலைச்சலை அவள் உடம்பு தாங்காது. அப்பா அம்மா வைத் தேடித் தொடர்ந்து அங்குமிங்குமாக அலையத் தொடங்கினார்.
சோம்பிக் கிடக்கும் காலைப் பொழுது மெல்ல ஏற ஆரம்பித்தது. காலை எட்டு மணியைத் தாண்டும் வேளையில் பீரங்கிகள் முழங்க ஆரம்பித்தன. மக்கள் குடிமனைகளை நோக்கிக் குண்டுகள் வந்து விழ ஆரம்பித்தன.
வீதியோரங்களில் படுத்துக் கிடக்கும் மக்கள் மத்தியில் பீதியும், பதற்றமும் பரவியது. தளர்ந்து கிடக்கும் அகதிகளில் சிலர் முண்டியடித் துக் கொண்டு மேலும் ஓடுவதற்குத் தயாராகினர். அப்பாவோ எதையும் பொருட்படுத்தாது அம்மாவைத் தேடிக் கொண்டிருந்தார்.
அப்பா ஒரு தேநீர் தானும் இதுவரை அருந்தாமல் உச்சி வெயிலில் மண்டை காயத் தேடிக் கொண்டிருந்தார்.
அம்மா எப்படி இருக்கிறாளோ!
137

Page 74
சிதைவுகள்
குளிர் காற்று அவள் உடம்புக்கு ஆகாது.
மழையில் வேறு நனைந்திருப்பாள்.
அப்பா தகவல் கேட்டுக் கேட்டு அலைந்து கொண்டிருக்க இறுதியில் ஊருக்குள் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றிலும் அகதிகள் தங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. அந்தப் பள்ளிக்கூடம் நோக்கி அப்பா ஒடத் தொடங்கினார்.
崇
138

-9.
நேரம் நடு இரவு தாண்டி விட்டது.
இன்னும் உறக்கமில்லை. உறக்கம் எப்படி வரும் உறக்கம் வர வேண்டும் என்ற எண்ணமுமில்லை. ஏன் உறங்க வேண்டும் முதுகுத் தண்டுக்குள் சில்லிட்டுக் குளிர்ந்து கொண்டு வருகின்றது.வெறும் நிலம். சிமெந்து நிலம், சுகமாகப் படுத்துத் தூங்குவதற்கு வெதுவெதுப்பான கட்டில்கள் உண்டு. அந்தக் கட்டிலொன்றில் வசதியாகப் படுத்துத் துயில்வதற்கு மனசில்லை.
வரணிப் பாடசாலையில் அம்மா வெறுந்தரையில்தான் கிடந்தாள். விமலனுக்கு அம்மாவை விட்டு விலக இயலவில்லை. அதனால் மேற் கொண்டு அம்மாவுக்கு எதனையும் செய்யவும் முடியவில்லை.
வயது முதிர்ந்த தாய், தகப்பன், சகோதரிகள், குழந்தைகள் என்ன ஆனார்கள்! எங்கே போய் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பது இன்னும் அவன் அறிய மாட்டான். அவர்களைத் தேடிக் கண்டு கொள்ள வேண்டும்.
ஐந்து சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அக்கா பாவம், நெற்றிக் குங்குமம் அவள் இன்னும் அழிக்கவில்லை. அவளுக்கு மனசில் திடமான ஒரு நம்பிக்கை அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். என்றோ ஒரு நாள் திரும்பி வருவார். அவர் உயிருடன் இருக்கும் போது ஏன் குங்குமத்தை அழிக்க வேண்டும்! அவனுக்குத் தெரியும் அவர் இன்று இல்லையென்பது.
வடமராட்சி முற்றுகையின் போது குடும்பத்துடன் அவரும்
139

Page 75
சிதைவுகள்
கோயிலில் தங்கியிருந்தார். கோயிலுக்கு வந்து சேர்ந்து மூன்று தினங்கள் கழிந்து விட்டன. குழந்தைகள் உண்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. பசியின் கொடுமையால் துடிக்கின்றார்கள். சோர்ந்து சோர்ந்து படுக் கிறார்கள். வீட்டில் உள்ள பானையில் இருக்கும் சொற்ப அரிசி, பருப்பை எடுத்துக் கொண்டு வந்தால் ஒரு நேரப் பசியாவது அவர்களுக்குப் போக்கிவிடலாம்.
அவர் புறப்பட்டார். அக்காவும் அவனும் தடுத்தனர். அவருக்குக் குழந்தைகளின் பசிதான் பெரிதாகத் தெரிந்தது. அவர் புறப்பட்டுவிட்டார். போனவர் போனவர்தான் திரும்பி வந்து சேரவில்லை. அவர் கட்டிக் கொண்டிருந்த சாரத்தின் எரிந்து எஞ்சிப் போன துணித் துண்டுகளை அவன் பார்த்திருக்கிறான். அதன் பிறகு அக்காவுக்கும், அந்தக் குழந்தைகளுக்கும் அவன்தான் எல்லாம்.
அம்மாவை இப்படியே விட்டு வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நல்ல ஒரு வைத்தியரிடம் அம்மாவைக் கொண்டு போய்க் காண்பிக்க வேண்டும். அதற்கு யாராவது ஒருவர் அங்கு வந்து சேர வேண்டும். இந்த நிலையில் எப்படி அம்மாவைத் தனித்து விட்டுப் போகலாம்! அவன் அப்பாவை அல்லது மூத்தவனை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றான்.
இந்தப் பாடசாலை சிறிய ஒரு மண்டபமும், அதனுடன் இணைந்த ஒரு அறையும் மாத்திரமுள்ள வசதியற்ற கட்டிடம். அகதிகளாக வந்து தங்கியிருக்கும் மக்கள் பாடசாலை வளவுக்குள் நிற்கும் தென்னை மரங்களின் நிழலில் குடும்பம் குடும்பமாகக் கூடி இருக்கின்றார்கள். மூன்று கற்களை எடுத்து வைத்து மூட்டிய அடுப்புகள் ஆங்காங்கே புகைந்து கொண்டிருந்தன.
கையில் எடுத்துக் கொண்டு வருவதற்கு எதுவும் இல்லாது வெறுங்கையுடன் எழுந்தோடி வந்தவர்கள் உண்பதற்கு வழியின்றித் தவித்தார்கள். உணவு கிடைக்காத குழந்தைகள் மெல்லச் சிணுங்கி அழ ஆரம்பித்தனர். சிலர் பாடசாலை வளவுக்குள் நிற்கும் தென்னை மரங்களில் ஏறி இளநீர் பறித்துண்டு வயிற்றில் பற்றி எரியும் பசியைத் தணித்துக் கொண்டனர். தொண்டர் ஸ்தாபனம் ஏதாவது உணவுக்கு வழி
140

தெணியான்
செய்யுமா என்று விசாரித்து அறிந்து வருவதற்காகச் சிலர் புறப்பட்டுச் சென்றார்கள்.
அம்மா எழுந்திருப்பதற்கு இயலவில்லை.
அம்மாவின் நிலைமையைக் கண்டு அப்பா ஆடிப் போனார். அவர் தனது இயலாமைகளை எல்லாம் இழந்து போனார். வரணிச் சந்தைக்கு ஓடோடி வந்தார் சூடாக இரண்டு தேநீர் அம்மாவுக்கும் அவனுக்கும் வாங்கிக் கொண்டு வேகமாகத் திரும்பினார்.
யாராவது ஒரு வைத்தியரிடம் உடனடியாக அம்மாவை இப்பொழுது காட்டியாக வேண்டும். இங்கு ஒரு நல்ல வைத்தியர் இல்லை. முள்ளிவெளி தாண்டி வடமராட்சிப் பகுதிக்குத்தான் இந்தப் பகுதி மக்கள் வைத்தியம் பார்க்க வர வேண்டும். அல்லது சாவகச்சேரி நோக்கிப் போக வேண்டும்.
இப்பொழுதுள்ள அவசரத்துக்கு இங்கு உதவக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா!
அப்பா பலரிடமும் சென்று விசாரித்தார். வடமராட்சிப் பகுதியில் வாழும் ஒரேயொரு தனியார் டொக்டரும் அகதியாகக் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இருக்கிறார் என்னும் செய்தி அப்பாவுக்குக் கிடைத்து விடுகின்றது. அப்பா அவர் தங்கி இருக்கும் இடம்தேடி அவசரமாக ஓடினார்.
மூத்தவன் தேடி அலைந்து இறுதியில் மாலை நேரம் அம்மா இருக்கும் இடம் கண்டு பிடித்து விடுகின்றான். அப்பா அவனைக் கண்டு முகம் கொடுத்துப் பேசவேயில்லை. அம்மா இரண்டு வார்த்தைகள் தெளிவாக யாரோடும் பேசும் நிலையில் இப்போது இல்லை. அம்மாவுக்கு மூச்சு முட்டுகிறது. உடல் சோர்ந்து கொண்டு போகிறது.
அவன் அங்கிருந்து விரைவாகச் சென்று சின்னவளையும், அவன் மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கு வந்து சேர்ந்தான்.
வடமராட்சியை விட்டு அகதிகளாக ஓடி வந்து மூன்று தினங்கள்
141

Page 76
சிதைவுகள்
கழிந்து போய் விட்டன. மக்கள் அஞ்சி, அஞ்சி எதிர்பார்த்தது போல அப்படியொன்றும் நடந்து விடவில்லை. வடமராட்சியை விட்டு மக்களெல்லோரும் வெளியேறும் வண்ணம் ஏன் அறிவித்தார்கள்.
எதற்காக இந்த மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள்!
இன்றுவரை விடை இல்லாத வினாக்கள். நெஞ்சில் பிறந்து விடை கோராமல் மடிந்து போகும் வினாக்களின் மயான மனசுகள் இந்த மக்களுக்கு.
எத்தனை நாட்கள் வீதிகளிலும், மரநிழல்களின் கீழும் தங்கி பசி பட்டினியோடு அலைந்து கொண்டிருக்கலாம்!
மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக கால்நடையாகவும், சயிக்கிள் வண்டிகளிலும் வடமராட்சி நோக்கித் திரும்பத் தொடங்கி விட்டார்கள். நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் வந்து ஒட்டிக் கொண்டவர்கள் சற்றுப்பொறுமையாக இருந்து தங்கள் பகுதியில் நடக்க வேண்டியது நடந்து முடியட்டும். அதன் பிறகு போகலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.
அம்மாவை இன்னும் பள்ளிக்கூடத்துக்குள்ளே சனங்களின் மத்தியில் வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. முதல் உதவியாக அப்பாவிடம் மருந்து கொடுத்து அனுப்பும் போது வைத்தியர் சொன்னார். குறையாவிட்டால் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கோ. அவர் இதைத் தவிர வேறெதைச் சொல்வார்.
குடும்பத்துடன் அகதியாகப் புறப்பட்டு ஓடி வரும் போதும் கஷ்டப் படும் மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு வந்திருந்தார். அவர் இயல்பு அது. அவலப்படும் மக்களுக்கு அபயக்கரம் காட்டும் 'முருகன்’ அவர். அம்மாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு இப்போது அகதியாக இடம் பெயர்ந்து வந்திருக்கும் அவரிடம் போதுமான வசதிகள் இல்லை.
போர் தொடங்குவதற்கு முன்னர் எத்தனை தனியார் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்தார்கள். வைத்திய சேவையை இந்த மக்கள்
142

தெணியான்
சிறப்பாகப் பெற்றார்கள். அரசாங்க வைத்தியசாலைகளிலும் இன்று வைத்தியர்கள் இல்லாமல் போனார்கள். வைத்தியர்களை விமானத்தில் ஏற்றிப் பறக்க விட்டது இந்த யுத்தம்.
அம்மாவை உடனடியாக அரசினர் வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும். முள்ளிவெளி தாண்டி மந்திகை அரசினர் வைத்தியசாலைக்கு அம்மாவைக் கொண்டு போகலாம். அல்லது சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு போக வேண்டும். மந்திகை அரசினர் வைத்தியசாலைக்குப் போவதாக இருந்தால், குடும்பத்துடன் ஊருக்குப் போய் விடலாம்.
அம்மாவை எந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். முன்னர் போல சயிக்கிள் வண்டியில் இருந்து வரும் நிலையில் அம்மா இப்போது இல்லை. இந்த வீதியில் கார்கள் ஓடுவது உலக அதிசயங் களில் ஒன்றாகிப் போனது.
அப்பா மண்டையைப் போட்டு உடைக்கின்றார். அம்மாவைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கு எந்த வாகனம் கிடைக்கும்.
பிள்ளைகள் வெளிநாடு சென்று பணம் சேர்த்து அனுப்புவதற்கு முன்பிருந்த காலத்து அப்பாவாக இருந்தால் இதுவரை ஒரு முடிவுக்கு வந்திருப் பார்.
இந்த அப்பா தனது கெளரவம் மிக உயர்ந்து விட்டதாக எண்ணு கின்ற ஒருவர். தனக்கிருப்பது மேல் மட்டத்தவர்களின் தொடர்புகள்தான் என்று சதா வாய்விட்டு இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றவர்.
ஒரு முடிவுக்கு அவரால் இலகுவாக வர முடியவில்லை. இன்றுள்ள நிலையில் எடுக்கக் கூடிய முடிவு எதுவாக இருக்கும் என்பதும் அவர் மனசுக்குத் தெரியாமல் இல்லை. வாய் திறந்து அதைச் சொன்னால் அவர் கெளரவம் என்னாகும்.
மூத்தவனிடம் அவர் கேட்கின்றார்.
"அம்மாவை எப்படிக் கொண்டு போவது?"
"எப்படி"
143

Page 77
சிதைவுகள்
"அதுதானே உன்னட்டைக் கேட்கிறேன்"
"வேறு என்ன வழி."
"என்ன வழி"
"வண்டிலிலே"
"என்ன மாட்டு வண்டியிலேயா"
"ஒமோம்"
அப்பா மெளனமானார்.
144

1O.
அம்மாவை மாட்டு வண்டியில் ஏற்றி அரசினர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்வோம் என்று முடிவாயிற்று. இந்த மாட்டு வண்டி அந்தக் காலத்தில் உடையார், மணியகாரன்மார் சமூக அதிகார மிடுக்குடன் ஆரோகணித்தது போன்ற பிரயாண வண்டியல்ல. எருது களின் கழுத்தில் வெண்டயம் ஒலிக்கப் பாய்ந்து வரும் அந்த வண்டி களை இப்பொழுது டானியலின் நாவல்களில்தான் பார்க்கலாம்.
அம்மாவை ஏற்றிச் செல்வதற்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்வது பெரும் சிரமமாகிப் போனது. அவன் வண்டி கொண்டு வரட்டும் என்று அப்பா இருந்து விட்டார்.
அவன் அங்கும் இங்கும் ஒடியாடி விசாரித்ததில் ஊருக்குள் ஒரேயொரு வண்டி மாத்திரம் இருப்பதை அறிந்து கொண்டான். அந்த வண்டியும் தோட்டப் பயிருக்குப் பசளையாக எரு ஏற்றிப் பறிப்பதற்குப் போய்விட்டதாகத் தகவல் அவனுக்குக் கிடைத்தது.
எரு எங்கே ஏற்றி எங்கே பறிக்கிறார்கள். அவன் கேட்டறிந்து கொண்டு தோட்டம் ஒன்றுக்கு ஓடிப் போனான். அப்பொழுது வண்டியில் இருந்து எருவைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.
"அவசரமாக நீங்கள் ஒருக்கா வர வேணும்" மன்றாட்டமாக அவன் கேட்டான்.
"இன்னுமொரு வண்டில் பறிக்க வேணும்" வண்டில்காரன் மறுத்தான்.
"ஒரு நோயாளியை அவசரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக
145

Page 78
சிதைவுகள்
வேணும்"
"எந்த ஆஸ்பத்திரிக்கு?" "மந்திகை"
"கடுமையோ?"
"ஒமோம்"
"ஆளிப்ப எங்கே?" "பள்ளிக்குடத்திலை இருக்கிறம்"
"சரி, இதைப் பறிச்சுப் போட்டு வாறன் போங்கோ" வண்டிக்காரன் உடன்பட்டதே இப்போது பெரிய காரியம். அவனுக்குத் தெரியும் ஆறு மாதங்களுக்கு முன்னம் நடந்த ஒரு சம்பவம்.
வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையில் நோயாளியாகப் படுத்துக் கிடந்த ஒருவர் இறந்து போனார். அவருக்கு மரணம் சம்பவித்த போது நேரம் நடுப்பகல் தாண்டி விட்டது. இறந்தவர் வசதியான மனிதன். அவருக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். உறவினர்களும் நிறையப் பேர் இருந்தார்கள்.
அவர் இல்லத்தில் அபரக்கிரியைகளை மறுநாள் செய்து முடித்து, பூதவுடலை எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாலை மங்கி பொழுது கருகுகின்ற நேரமாயிற்று அவர் சடலம் இன்னும் வீடு வந்து சேரவில்லை. ஒரு மாட்டு வண்டிதானும் அவர்களுக்கு அந்தச் சமயத்தில் வசதியாகக் கிடைக்கவில்லை. அநாதைப் பிணமாக அவர் சடலத்தை வைத்தியசாலையில் விட்டு வைப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை.
இறுதியில் அகலமான பலகை வாங்கின் மேல் சடலத்தைக் கிடத்தி, வெள்ளைச் சீலையால் அதை மூடி, வாங்கின் நான்கு மூலையிலும் உறவினர்கள் நின்று துாக்கி தோளின் மேல் வைத்து இரண்டு கிலோமீற்றர் துாரம் சுமந்து கொண்டு வந்தார்கள்.
146

தெணியான்
இந்தச் சூழ்நிலையில் அம்மாவுக்கு ஒரு வண்டி கிடைத்திருப்பது அவள் செய்த பாக்கியந்தான்.
படுக்கைச் சீலை ஒன்றை எடுத்து அதை வண்டிக்குள் விரித்து, அதன் மீது ஒரு தலையணையை வைத்து அம்மாவைத் துாக்கி அதில் படுக்க வைத்தார்கள். வண்டியின் இரு பக்கத் தட்டிகளின் மேல் பந்தலுக்கு வெள்ளை கட்டுவது போல இன்னொரு படுக்கைச் சீலையை விரித்துக் கட்டி வெயிலுக்குப் பாதுகாப்புச் செய்தார்கள்.
மூத்தவன், மனைவி, குழந்தைகள் வண்டியில் ஏறிக் கொண்டதும் வண்டி மெல்லப் புறப்படுகின்றது. அப்பா சால்வையை எடுத்து விரித்து தலையை மூடிக் கட்டிக் கொண்டு சயிக்கிளில் ஏறி முன்னே சென்று கொண்டிருந்தார்.
சின்னவளும் மூத்தவனும் தங்கள் தங்கள் சயிக்கிள்களில், மாட்டு வண்டியின் வேகத்துக்கு மெல்ல ஊர்ந்த வண்ணம் வண்டியுடன் சென்றார்கள்.
நடுப்பகல் தாண்டியதும்தான் வைத்தியசாலைக்கு வண்டி வந்து சேர்ந்தது. அவசர அவசரமாக வைத்தியசாலையில் அம்மாவை அனுமதித்தார்கள். சின்னவள் அம்மாவுக்கு உதவியாக அங்கு தங்கிக் கொண்டாள்.
மூத்தவன் மாலையில் வைத்தியசாலைக்கு வந்து அம்மாவைப் பாாத்துவிட்டுத் திரும்பினான். வைத்தியசாலைக்கு வந்த பிறகும் அம்மாவின் உடல் நிலையில் குறிப்பிட்டுச் சொல் லத் தகுந்த முன்னேற்றம் எதுவுமில்லை.
அப்பா மாலைவேளையில் வைத்தியசாலைக்குச் சென்று அம்மாவைப் பார்ப்பதற்கு அவருக்கு இயலாது போனது. அப்படி உடலில் ஒரு அசதி
இரவு படுக்கையில் சென்று சரியும்போது மனசு கனத்தது. எப்பொழுது போய்ப் பார்க்கப் போகின்றேன் என்ற தவிப்புதவிக்கின்றது. மாலையில் சென்று பார்த்து வராதது தான் செய்த தவறு என்ற குற்ற உணர்வு உள்ளத்தை நெருடியது.
147

Page 79
சிதைவுகள்
சில தினங்கள் ஓய்வொழிச்சல் இல்லாது அலைந்து திரிந்ததில் உடல் களைத்து உள்ளம் சோர்ந்து ஆழ்ந்த துயிலில் அமிழ்ந்து போனார் அப்பா. இப்பொழுதெல்லாம் இப்படி மெய்மறந்து அவர் துாங்குவதில்லை. இரவு வேளையில் உறக்கம் கலைந்து இடையிடையே கண் விழிப்பு ஏற்படும். இது அவருக்குரிய முதுமை நோய்.
இன்று அப்படி இடையில் அவள் விழித்துக் கொள்ளவில்லை. அயர்ந்து துாங்கிப் போனார். சேவல் கூவும் போது அவர் கண் விழித்தார். ஒ. இன்னும் கொஞ்ச நேரத்திலே பொழுது விடிந்து விடும். அவளைப் போய்ப் பார்க்க வேண்டும். நெஞ்சு பரபரத்தது.
அம்மா நினைவு நெஞ்சில் எழுந்த பின்புதான், அப்பா மனசில் இன்னொரு எண்ணம் வந்து உறைத்தது. இந்தப் பெரிய வீட்டில் வேறு யாரொருவரும் இன்றி தன்னந்தனியாக இந்த இரவு கிடக்க வேண்டி நேர்ந்து விட்டது. வாழ்வில் இது முதற் தடவை. தான் தன்னந் தனியனாகிப் போய்விட்டதான உள்ளுணர்வு அப்பா உள்ளத்தை வாட்டியது. இதன் பிறகு படுக்கையில் விழுந்து கிடப்பதற்கு அவருக்கு இயலவில்லை.
அப்பா வைத்தியசாலை வந்து சேரும்போது நன்றாக விடிந்து விட்டது. சின்னவள் அப்பா அல்லது மூத்தவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏங்கி நின்றாள். அப்பாவைக் கண்டதும் சின்னக் குழந்தை போல வைத்தியசாலைச் சூழலையும் மறந்து குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுகையும், கண்ணிரும் கண்டு அப்பாவுக்கு காரணம் விளங்கி விட்டது. அவர் நெருங்கி வந்து கட்டிலில் நீட்டி நிமிர்ந்து கிடக்கும் அம்மாவை அவதானித்தார். மருந்து கலந்த சேலைன் துளித்துளியாக உடம்பில் ஏறிக் கொண்டிருந்தது. அம்மா முற்றாக உணர்விழந்து போனாள்.
அப்பாவை, சின்னவளை இனங்காணும் நிலையில் இப்பொழுது அவள் இல்லை. அவளை இனி இங்கு வைத்திருந்து வைத்தியம் பார்ப்பதில் பயனில்லை.
148

தெணியான்
வேண்டிய வைத்திய வசதிகளும் இங்கில்லை, வைத்தியர்களும் இல்லை. யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு இங்கிருந்து அம்மாவை அனுப்பி வைக்க வேண்டும். இங்கிருந்து முப்பது கிலோமீற்றர் தூரம். அவசரமாக எப்படி அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது இலகுவாக என்ன வாகனம் கிடைக்கப் போகின்றது. அப்பா சிந்தித்துக் குழம்பிக் கொண்டிருக்கும் போது சின்னவள் சொன்னாள்
"யாழ்ப்பாணம் கொண்டு போக வேணுமாம்" "அதுதான் யோசிக்கிறேன்"
"செஞ்சிலுவைச் சங்க வாகனத்திலே."
"அப்படியே." நிம்மதியாகப் பெருமூச்சு விடுகின்றார். அப்பா டொக்டரைப் பார்ப்பதற்கு வேகமாக விரைந்தார்.
அம்மாவைத் தூக்கித் தள்ளுவண்டில் ஒன்றில் கிடத்தி, வண்டியை வெளியே தள்ளிக் கொண்டு வந்தார்கள். செஞ்சிலுவைச் சங்க வானில் அம்மாவைப் பக்குவமாக ஏற்றினார்கள். சின்னவள் அம்மாவுக்குத் துணையாக அவள் போகும் அந்த வானில் ஏறிக் கொண்டாள். வான் மெல்ல மெல்ல நகர்ந்து வீதிக்கு வந்து வேகம் பிடிக்க ஆரம்பித்தது.
விரைந்தோடிச் செல்லும் அந்த வான் கண்களிலிருந்து மறையும் வரை அப்பா பார்த்துக் கொண்டு நின்றார். வான் மறைந்ததும் அப்பாவின் கண்கள் கலங்கின. தோள் மீது கிடக்கும் சால்வையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டார். பின்னர் சயிக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஒடோடி வந்து சேர்ந்தார்.
மூத்தவன் செய்தி அறிந்து யாழ்ப்பாணம் போவதற்கு அப்பாவுக்கு முன்னம் சயிக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான். அப்பா வீட்டிலிருந்து சயிக்கிளில் புறப்பட்டு யாழ்ப்பாணம் அரசினர் வைத்திய சாலை நோக்கி மெல்லப் போய்க் கொண்டிருந்தார்.

Page 80
11.
இந்த மனசு இப்படித்தான் நல்லது நினைக்கத் தெரியாத மனசு. துன்ப துயரங்களைத் தன் போக்குக்கு கற்பனை செய்து அஞ்சி அழியும் பேதை மனசு, அம்மாவை நினைத்து அப்பா மனசு இப்பொழுது அஞ்சுகிறது. அம்மா இந்த நோயில் இருந்து சுகமாக மீண்டு வருவாளா
அல்லது.
உள்ளூரக் கண்ணிர் வடிக்கின்றது.
சுவிஸில் இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் தேடிய பணத்தில்தான் இந்த வசதியான வாழ்வு அம்மா செளகரியமாக இனி யாவது வாழ வேண்டும் என்பது அவர்களின் அவா. அம்மாவுக்காக அவர்கள் உழைப்பில் எவ்வளவும் செலவாகிப் போகலாம். அவள்கள் இருவரும் திரும்பி வந்து அம்மாவைப் பார்க்கும்வரை அவள் காத்திருப்பாளா!
பெண்பிள்ளைகள் இருவர் கொழும்பில் இப்போது தங்கியிருக் கின்றார்கள். அவர்கள் இருவருக்கும் அம்மாவின் நிலைமையை அவசரமாக அறிவித்தாக வேண்டும். அவர்கள் இங்கு வந்து அம்மா வைக் காண வேண்டும்.
இப்பொழுது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேருவதற்கிடையில் உலகத்தைப் பல தடவைகள் சுற்றி வந்து விடலாம். கிளாலி நீர்ப்பரப்புத் தாண்டி வருவதென்பது உயிரோடு விளையாடும் முயற்சி. எந்தச் சமயத்திலும் சாவை எதிர்பார்க்கும் கொலைப் பயங்கரம். அவர்கள் இங்கு வந்து சேருவது என்பது ஒரு புறம். தகவல்
150

தெணியான்
அனுப்புவது என்பதும் இலகுவாக நடந்தேறும் காரியமல்ல, ஆனால் எப்படியும் செய்தி அனுப்பித்தானே ஆக வேண்டும். அம்மாவைக் காண்பதற்கு அவர்கள் வந்துதான் ஆக வேண்டும். அம்மா நிலைமை அப்படி இப்பொழுது யார் கொழும்பு போக இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் உடனடியாகச் செய்தி அனுப்பி வைக்க வேண்டும்.
அப்பா மனசு குழம்புகிறது. எதிரில் வருவோர், போவோரையும் கவனிப்பதற்கு அவருக்கு முடியவில்லை. யார் யாரோ வீதியில் வருகிறார்கள். அப்பாவைக் கடந்து போகிறார்கள். அப்பா தன்னளவில் தனித்துப் போய்க் கொண்டிருக்கிறார். புறாப்பொறுக்கியைத் தாண்டி, உப்புறோட்டுச் சந்திக்கு வந்து வல்லை வெளிக்குள் பிரவேசித்து விட்டார்.
அந்த வீதி இப்பொழுது சயிக்கிள் ஓடும் வீதி போக்குவரத்து வசதிகள் தடைப்பட்ட பிறகு சயிக்கிள் தவிர வேறு வாகனங்களைக் காண்பது அரிது. அரசாங்க உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு போய் வருகின்றவர்கள், வேறு தேவைகளுக்காக யாழ்ப்பாணம் நகருக்குப் போய் வருவோர் எல்லோருக்கும் பொதுவான வாகனம் சைக்கிள்.
அப்பா வல்லை முனியப்பர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். வீதியின் கிழக்குப் புற ஓரத்தில் குளிர்ச்சிதரும் மரநிழலின் கீழ் முனியப்பர் கோயில் கொண்டிருக்கின்றார். புதிதாக அண்மைக்காலத்தில் அவருக்குக் கோயில் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். முனியப்பருக்கு தென்புறத்தே, விக்கினம் நீக்கும் விநாயகப் பெருமான் சிறிய கட்டிடத்தில் கோயில் கொண்டிருக்கின்றார்.
ஒரு காலத்தில் இந்த வீதியில் இரவு வேளையில் பயணம் செய்வதற்கு எவருக்கும் துணிச்சல் வராது. வல்லையில் ஒரு முனி இருக்கிறது. அந்த முனி பற்றிக் கள்ண பரம்பரையாகப் பல கதைகள் உண்டு. பஸ் வண்டிகள் வீதியில் ஓடுவதற்கு முன்பு கால் நடையாகவே பட்டணம் போவார்கள். திரும்பி வரும் போது பலர் சேர்ந்து தங்கள் பயணத்தைத் தொடருவார்கள். வல்லை வெளியை நெருங்கி வருவதற்கு
151

Page 81
சிதைவுகள்
முன்பு பொழுது மறைந்து விடும். இருட்டிய பின்பே வல்லையைத் தாண்டுவார்கள். அப்பொழுது வல்லை முனி அவர்களை அச்சுறுத்து மாம். சிலரை அடிக்குமாம். வல்லை முனி அடித்து வாயினால் இரத்தம் கக்கி சிலர் இறந்திருக்கிறார்களாம். வீதியின் குறுக்கே மறித்து நிற்கும் முனியின் கோர உருவம் கண்டு அச்சத்தினால் சுரம் வந்து செத்தவர் களும் உண்டாம். w
வல்லைமுனி கண்டு அச்சம் கொண்ட மக்கள் முனியை முனியப்பர் ஆக்கி வெற்றி கொண்டார்கள். முனியாக நின்று சேஷ்டை செய்வதை விட்டு முனியப்பராகி அருள் பாலிக்கும் தெய்வமாக விளங்குகின்றார்.
அகால வேளையிலும் இந்த வீதியில் செல்வோருக்குக் காவல் தெய்வமாக முனியப்பர் வீற்றிருக்கின்றார். ஆனால் பகற் பொழுதிலும் இந்த வீதியில் போவதற்கு இப்பொழுது மக்கள் அஞ்சுகின்றார்கள். உயிர்”குடிக்கும் நவீன முனி எங்கிருந்து வரும் எந்த உருவத்தில் வந்து உயிரைக் குடிக்கும் மக்கள் அஞ்சி அஞ்சி ஒடிக் கொண்டிருக்கிறார்கள். வடமராட்சியின் எல்லையில் யாழ்ப்பாண நகரப் பாதையில் பரந்து கிடக்கின்றது வல்லைவெளி. அந்த வெளியின் குறுக்கே உவர் நீராகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது தொண்டமானாறு. நீர்ப் பரப்பைத் தாண்டிச் செல்வதற்கு ஆற்றுக்கு மேலே ஒரு பாலம்.
இந்த வீதியில் சயிக்கிள் வண்டிகளில் மக்கள் வேகமாக ஒடிக் கொண்டிருந்தார்கள். பகல் பொழுது தாண்டி விட்டால் இரவு இந்த வீதிக்கு யாரும் வருவதில்லை. வீதியில் செல்லும் வாகனத்தின் வெளிச்சத்தை இலக்காக வைத்து மரணம் சீறி வந்து சாய்க்கலாம்.
வல்லைவெளியைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் மக்கள் இடைநடுவில் முனியப்பர் ஆலயத்தில் தாமதித்து, விபூதி, சந்தனம் தரித்து, உண்டியலும் இட்டுப் பிரார்த்தித்துக் கொண்டுதான் ஓடுவார்கள். அப்பா வல்லை முனியப்பர் ஆலயத்தில் வந்து நின்றார். வெயிலில் சயிக்கிள் ஓடி வந்திருக்கும் களைப்பு அவருக்கு. சயிக்கிளை விட்டிறங்கி தலையில் கட்டிய சால்வையை அவிழ்த்தெடுத்து, முகத்தில் அரும்பும்
152

தெணியான்
வியர்வையை அழுத்தித் துடைத்துக் கொண்டார்.
தொண்டமானாற்று உவர் நீரைத் தடவிக் கொண்டு வரும் ஒரு மெல்லிய காற்று அவர் உடலைத் தழுவிக் கொண்டு சென்றது. ஆலயத்து மருத மர நிழலின் கீழ் அந்த ஒரு சில நிமிடங்களில் ஒரு தனிச் சுகம் தோன்றுகிறது அப்பாவுக்கு
அந்தச் சுகத்தில் முழுமையாக லயித்துப் போக அப்பாவுக்கு இயலவில்லை. அம்மாவை எப்படி மறந்து போகும் அப்பா மனசு
அப்பாவின் வழிபாடு இன்று அவளுக்காகத்தான். அவள் சுகப்பட வேண்டுமே என்ற மன்றாட்டம் மட்டும் மனசுக்கு வருகின்றது. நெஞ்சம் நெகிழ்ந்து ஆற அமரப் பிரார்த்தனை செய்து முடித்துக் கொண்டு, உண்டியலில் தாராளமாகத் தட்சணை இட்டு திருநீறு, சந்தனம் எடுத்து நெற்றியில் தரித்தக் கொண்டார். பின்னர் பூவரசில் இரண்டு இலைகள் பிடுங்கி ஒன்றில் திருநீறும் மற்றதில் சந்தனமும் கிள்ளி வைத்து பக்குவமாக இலைகளை மடித்து சேட் பைக்குள் வைத்துக் கொண்டார்.
அம்மா நெற்றியில் இவைகளை இட்டுவிட வேண்டும். அப்பா சயிக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
அப்பா பின்னால் வந்த பலர் அவரைத் தாண்டி வெகு துாரம் போய் விட்டார்கள். அப்பாவக்கு அவர்களைப் போல வேகமாகச் சயிக்கிளில் ஒடிப் போக முடியுமா?
அப்பா முனியப்பர் கோயிலிலிருந்து ஐம்பது மீற்றர் துாரம் போயிருக்க மாட்டார் ஹெலி ஒன்று இராணுவ முகாம் இருக்கும் திசையில் இருந்து விரைந்து வந்தது. அப்பாவைத்தாண்டிச் சென்று விட்டவர்கள் கடுகதியில் விரைந்து ஓடி, வல்லைப்பாலம் தாண்டி அப்பால் போய்ச் சேர்ந்து விட்டனர். அப்பாவைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த சிலர் விரைந்து சென்று ஆலயத்துடன் ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.
அப்பாவுக்கு முடியவில்லை கடுகதியில் ஒடித் தப்புவதற்கு. அப்பாவைப் போல இன்னும் சிலரும் இடைநடுவில் அகப்பட்டுக் கொண்டார்கள். கண்களை மூடிக் கொள்ளும் பூனை போல, மனதின்
153

Page 82
சிதைவுகள்
தேறுதலுக்காக மறைந்து நிற்கும் மரங்கள்தானும் அந்த இடத்தில் இல்லை.
சயிக்கிளை வீதியில் போட்டுவிட்டு, வீதியோரத்து முள்ளுப் பற்றைக்குள் புகுந்து அப்பா குப்புறப்படுத்துக் கொண்டார். வியாபாரத் துக்காக நீர்வேலியிலிருந்து வாழைக்குலைகளைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அப்பாவுக்கு எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மூவர் பழங்கள் நசிந்து சிதறிப் போக சயிக்கிளைக் கீழே தள்ளி விட்டு நிலத்தில் விழுந்து குப்புறப்படுத்துக் கொண்டனர். பேரப்பிளையின் சயிக்கிளில் ஏறி வந்த ஒரு பாட்டியும் அந்தப் பேரனும். இப்படி இன்னும் பலர் வீதியிலும் முள்ளுப் பற்றைக்குள்ளும் விழுந்து படுத்துக் கொண்டனர். அரைமணி நேரம் ஆர்ப்பாட்டமாக வானத்தில் வட்டமிட்ட ஹெலி பின்னர் ஓய்ந்து முகாம் நோக்கித் திரும்பிச் சென்றது. வீதியில் படுத்துக் கிடந்தவர்கள் மெல்ல எழுந்து நின்றார்கள். பற்றைக்குள் மறைந்து படுத்தவர்களும் மெல்ல எழுந்து வீதிக்கு வந்தார்கள். அப்பா அணிந்திருந்த சேட்டும் வேட்டியும் முள்ளில் விழுந்து கிழிந்து தொங்கியது. கைகளிலும், முகத்திலும் முட்கள் கீறிக் கிழித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
முள்ளுப் பற்றைக்குள் படுத்துக் கொண்டவர்கள் எல்லோரும் அப்பாவைப் போலவே இரத்தம் கசிய ஏக்கத்துடன் நின்று கொண்டிருந் தார்கள். அப்பா உடலில் அழுக்கும், இரத்தக் கறைகளுமாக பார்ப்பதற்குப் பரிதாபமாகத் தோன்றினார்.
அப்பாவுக்கு வாய் திறந்து கோ' என்று அழ வேண்டும் போல நெஞ்சுக்குள் பொருமிக் கொண்டு வந்தது. நெஞ்சக் குமுறலை ஒருவாறு அடக்கி விட்டுக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டார். யாழ்பப்பாணம் செல்லாது இங்கிருந்து திரும்பி வீடு போய் விட்டால் என்ன என்ற எண்ணம் நெஞ்சில் எழுந்தது. மறுகணம் அம்மாவின் எண்ணம் எழுந்து நெஞ்சை அழுத்தியது.
அம்மாவைப் போய்ப் பார்த்தாக வேண்டும்
154

தெணியான்
இந்தக் கோலத்திலேயே போகவும் வேண்டும். இது மண்ணின் கோலம். வடிந்து கொண்டிருக்கும் குருதியைத் துடைத்து விட்டுக் கொள்ளும் எண்ணமும் அவர் மனசில் இல்லை.
நிலத்தில் சரிந்து கிடக்கும் சயிக்கிளைக் குனிந்தெடுத்து நிறுத்து கின்றார். சீற்றை ஒரு தடவை கையினால் துடைத்து விட்டுக் கொண்டு சயிக்கிளில் மெல்ல ஏறுகின்றார். அப்பாவின் சைக்கிள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
崇
155

Page 83
12.
கொழும்புக்குத் தகவல் அனுப்ப வேண்டாம் என்று மூத்தவன் தடுத்து விட்டான். தகவல் அனுப்புவதற்கு அப்பா எடுத்த முயற்சியை அவன் தடுத்தது அப்பா மனசுக்குத் திருப்தியாக இல்லை. அவன் எண்ணத்தை மீறி நடப்பதற்கும் இப்போது அப்பா விரும்ப வில்லை. இன்னொரு புறம் வெளியில் சொல்லிக் கொள்ளாத மகிழ்ச்சியும் அப்பாவுக்கு உண்டு.
அம்மா சுகப்பட்டுத் தேறி வருகின்றாள் என்று அவன் உறுதியாக நம்புகின்றான். அந்த நம்பிக்கை மனசில் இல்லாதிருந்திருந்தால் சகோதரிகளுக்கு அறிவிக்கவேண்டும் என்று அவன் துடித்திருப்பான். அவன் மனசில் உறுதியாக இப்படி எண்ணுவதில் அப்பாவுக்கு வெளி யில் சொல்லிக் கொள்ளாத ஆனந்தம். அப்பாவுக்கு இப்பொழுது என்ன வேண்டும்! அம்மா சுகப்பட்டு எழுந்து விட வேண்டும். அவன் நம்பிக்கை பொய்த்துப் போய் விடவில்லை. அம்மா கொஞ்சம் கொஞ்ச மாக உடல் தேறிக் கொண்டு வருகின்றாள்.
சின்னவள் பாவம். அவளுக்குத்தான் அம்மாவின் சுமைகள் எல்லாம். அம்மாவோடு வைத்தியசாலைக்குப் போனவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை. அம்மாவுக்குத் துணையாக மூத்தவன் மனைவியை இரண்டொரு தினங்கள் தங்க வைக்கலாமென்றால் சின்னவள் அம்மாவை விட்டு வரத் தயாராக இல்லை.
சின்னவளுக்கு நல்ல உணவில்லை, ஒழுங்கான உறக்கமில்லை, போதுமான ஓய்வில்லை, அவள் உடல் மிக மெலிந்து போனாள்.
அம்மாவின் சுகத்தில் எல்லாக் கஷ்டங்களும் அவளுக்கு மறைந்து
156

தெணியான்
போயிற்று. அம்மா சிறிது சிறிதாகத் தேறிக் கொண்டு வருவது கண்டு அவளும் உள்ளூரப்பூரித்துப் போகின்றாள். பெண்களுக்குள் மூத்தவள் கொழும்பு விவேகானந்தாக் கல்லுாரியில் ஆசிரியை. அவள் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. அவளை ஒரு டொக்டராகக் காண்பதே அப்பாவின் கனவாக இருந்தது.
மூத்தமகன் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய இயலாது தவறிப் போனான். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக் கல்விக்கு மேல் அவன் எந்த முயற்சியிலும் ஈடுபடுவதாக இல்லை. அண்ணனை விட அவள் ஒருபடி மேலே போனாள். ஆனால் டொக்டர்க் கனவு பொய்த்துப் போனதில் அப்பாவுக்கு நெஞ்சு நிறைந்த கவலைதான். அந்தக் கவலைக்குள்ளும் அவளை நினைத்து அப்பா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவள் எப்படியோ பல்கலைக்கழகத்தில் படித்தவள். ஒரு பட்டதாரி.
நடுவிலாளிள் படிப்பு அப்பாவுக்கு ஒரு பிரச்சினை. கல்விப் பொதுத் தராதர சாதாரண வகுப்புத் தாண்டுவதற்கு அவள் சிரமப்பட்டுப் போனாள். மூன்று தடவை அவள் பரீட்சை எழுதித் தோற்றுப் போனாள்.
பரீட்சை இனி எழுதுவதில்லை என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். அப்பா அவளை விடுவதாக இல்லை.அப்பாவின் கெளரவம் என்ன ஆகும்! அப்பாவின் நச்சரிப்புத் தாங்க இயலாது நான்காவது தடவை பரீட்சை எழுதினாள். இந்தத் தடவை எதிர் பாராத விதமாக அப்பாவின் கெளரவம் சித்தியடைந்தது.
அதற்கு மேல் படிப்பது பற்றி அவள் மனசில் எந்தக் கற்பனையும் வரவில்லை. அப்பா சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தார். காதில் அவள் அதைப் போட்டுக் கொள்ளாது மெல்லத் தட்டிக் கழித்து விட்டாள். அப்பா மனசில் போட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மெல்ல ஓய்ந்து போனார். அவளுக்கு எந்தக் குறையுமில்லை.
சகோதரர்கள் சம்பாதித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பணம் அவளுக்கு இல்லை என்ற குறையில்லை. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருக்கின்றார்கள். அவளுக்கு வேறென்ன வேண்டும்!
அப்பா தனக்குள்ளே தான் ஒரு சமாதானம் தேடிக் கொள்கின்றார்.
157

Page 84
சிதைவுகள்
அவளைச் சுவிஸுக்கு அனுப்பி வைத்துவிடும்படி நடுவிலான் கேட்டுக் கொண்டிருக்கிறான். அப்பா, அம்மாவுக்கும் அது சம்மதம். அவள் சுவிஸ் செல்வதற்காக கொழும்பு சென்று மூத்தவளுடன் தங்கியிருக்கின்றாள்.
மூத்தவளுக்கும் வயது வந்துவிட்டது. அம்மா மனதைச் சதா அரித்துக் கொண்டிருக்கும் கவலை அது. அப்பா அவளுக்கு மாப்பிள்ளை தேடிச் சலித்துப் போனார். இப்பொழுது மூத்தவனை அவர் குறைபட்டுக் கொண்டிருக்கின்றார். அவருக்கு இயலாத வயது. அவளுக்கு வரன் தேடி அலைவதற்கு அவரால் முடியவில்லை. மூத்தவன் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். சகோதரி களின் காரியங்களில் அவன் அக்கறை காட்ட வேண்டும். வெளியுலகத் தொடர்புகள் இல்லாது எப்பொழுதும் அவன் விட்டுக்குள்ளே ஒதுங்கிக் கொள்ளுகின்றான். தேடிப் போகாமல் மாப்பிள்ளை பெண் வீடு தேடி வருமா!
அப்பா முன் போல நடமாடித் திரிந்திருந்தால் இதுவரை மகள் பெற்றுத் தந்த பேரக் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
அப்பா மனம் பொறுக்காது இடையிடையே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அனுபவம் கற்றுத் தந்த பாடத்தில் அப்பா உள்ளத்தில் உறுதியோடு இருந்த எண்ணங்கள் சிந்தனைகள் இப்பொழுது தளம்புகின்றன. அவளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்த பிறகு அப்பா இப்போது எண்ணுகிறார், அவளைப் படிக்க வைத்தது தவறாகிப் போய் விட்டதோ?
அப்பா மனசில் குழப்பமும், சந்தேகமும், அவள் பட்டப்படிப்புப் படித்தவள். ஆசிரியை. அவளுக்குத் தகுந்த உத்தியோக மாப்பிள்ளை யல்லவா வேண்டும். உள்ளூர்ச் சந்தையில் மாப்பிள்ளைமாருக்குப் பெருந் தட்டுப்பாடு போரும், பொருளாதாரத் தடையும் மேற்கு நாடுகளுக்கு அவர்களை ஏற்றுமதி செய்து விட்டன. எவ்வளவு விலை கொடுத்து வாங்வதற்கும் அப்பா தயார். ஆனால் மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே! அப்படி ஒரு அருந்தல்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் போது உள்ளாடைக்குள்
58

தெணியான்
ஒளித்துக் கொண்டு வரும் தடைசெய்யப்பட்ட பொருள் போலத்தான் இங்கிருக்கும் மாப்பிள்ளைமார். மாப்பிள்ளையானவன் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் இன்றில்லை. அவன் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் அது போதும். என்ன விலை கொடுத்தும் அவனை வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்.
அப்படிச் சிலரிடம் புரளுகிறது வெளிநாட்டுப் பணம். அப்படி ஒருவன் கூட அப்பாவுக்கு மாப்பிள்ளையாகக் கிடைக்கவில்லை. வேறென்ன செய்யலாம் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுக்க வேண்டியதுதான். அப்பா ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.
வெளிநாட்டு மாப்பிள்ளைமார் திருமணச் சடங்குகள் மரபுகளை எல்லாம் இப்பொழுது மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளை கேட்டுப் போகும் மரபு அருகிப் போகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளை வீட்டார். பெண் கேட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப அப்பா சம்மதம் என்று அறிந்து பலர் வந்தார்கள்.
கனடா மாப்பிள்ளை ஒன்று இறுதியில் அவளுக்குப் பொருந்தி வந்தது. அவள் மாப்பிள்ளையைப் பார்த்ததில்லை. அவன் நிழற்படத்தைப் பார்த்து அவள் சம்மதித்தாள். அப்பா பெரிதாக எண்ணிக் கொண்டிருந்த படிப்பு என்னவென்பதும் தெளிவாகத் தெரிய வராது. தொழில் என்ன என்பது வெளிநாட்டு மாப்பிள்ளை பற்றிக் கேட்கத் தகாத கேள்வி.
எஞ்சினியர் என்று மாப்பிள்ளை பக்கம் சொல்லிக் கொள்ளு கிறார்கள். மாப்பிள்ளையின் படிப்பையும் அதற்குள் தீர்மானமாக்கிக் கொள்ளுகிறார்கள். அப்பா ஒரு விஷயத்தில் மிகவும் விழிப்பாக இருக்கின்றார். வாகனங்களுக்கு 'எக்ஸ்ட்ரா வீல்" இருப்பது போல இவள் வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவனுக்குப் போய்ச் சேர்ந்து விடக் கூடாது.
அவன் நிழற்படம் அப்பாவுக்கும் காட்டினார்கள். சுமார் என்று சொல்வதற்கும் இல்லை. முடிவு அவள் எடுக்கட்டும் என்று விட்டு விட்டார். என்ன அதிசயம் அவள் சம்மதித்து விட்டாள். அவனைப் பெற்றவர்கள் என்னும் உரிமையில் சீதனமாகப் பல இலட்சம் கேட்டார்கள்.
159

Page 85
കഞ്ഞഖകി
அப்பா கூசாமல் அள்ளிக் கொடுத்தார். அவன் இப்பொழுது அடிக்கடி உறவு கொள்ளுகின்றான் தொலைபேசியில்.
அவள் காத்திருக்கின்றாள் அவனோடு போய்ச் சேருவதற்கு. நடுவிலாளைச் சவிஸ் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகே தான் கனடா போக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றாள். அவர்களிடம் இருந்து அப்பா தகவல் எதிர் பார்த்திருக்கின்றார். அப்பாவும், மூத்தவனும் கொழும்பு போய் அவர்களைக் கனடாவுக்கும், சுவிஸுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
அம்மாவைப் பார்ப்பதற்கு அவர்களை இங்கே அழைத்திருந்தால் அது வீண் சிரமந்தான். அம்மாவுக்கென்ன அவள் முற்றாகச் சுகப்பட்டு விட்டாள். உடல் கொஞ்சம் இன்னும் தேற வேண்டும். இன்னும் ஒரு வார காலத்தில் அவள் வீடு வந்து சேர்ந்து விடுவாள்.
அப்பா முன்னர் போல இப்போதும் வைத்தியசாலைக்கு அம்மா வைப் பார்ப்பதற்கு ஓடிப்போவதில்லை. அவர் உடல் நிலை தாங்காது. அப்பாவில் நேசமுள்ள மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் ஊழியராகக் கடமையாற்றுகின்றான். அம்மாவுக்கும், சின்னவளுக்கும் வேண்டிய உதவிகள் எல்லாம் அவன் செய்து கொண்டிருக்கின்றான். மூத்தவன் தவறாது அம்மாவைப் போய் பார்த்து வருகின்றான்.
இன்று காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் அவன் புறப்பட்டான். நடுப்பகல் அம்மாவைப் போய்ப் பார்த்தான். அம்மா சுகமாக இருக்கின் றாள். அம்மாவின் சுகத்தில் சின்னவளும் உற்சாகமாக இருக்கின்றாள். நடுப்பகல் வெயில் சற்றுத் தணிந்த பிறகு அவன் வீடு நோக்கித் திரும்பி வந்த கொண்டிருக்கின்றான்.
崇
160

13.
வல்லைவெளி கடந்து போய் வருகின்றவர்களுக்கு அது ஒரு நித்திய யம கண்டம். அவன் யாழ் நகரில் இருந்து புறப்பட்டு மிகுந்த சோர்வுடன் வல்லைவெளிக்கு வந்து சேர்ந்தான். வேகமாகச் சயிக்கிள் ஓட்ட அவனுக்கு இயலவில்லை.
கடந்த சில தினங்களாக இரவு வேளை உறக்கமில்லாது கழிகிறது. மக்கள் உள்ளங்களில் மரணப்பயமாக இருள் வந்து படருகிறது. இராக் காலத்தில் நிம்மதியாக யாரும் ஓய்ந்து படுப்பதில்லை. படுத்துக் கொண்டாலும் அயர்ந்து தூங்குவதில்லை.
நடு இரவில் வானத்தில் ஹெலி தோன்றி வட்டுக்கு மேல் தாழப் பறக்கும். அப்போது நடுக்கமாக இருக்கும். சில சமயங்களில் குண்டு களையும் வீசும். வீடுகளில் யாரும் துாங்குவதில்லை.
வல்லைவெளி தாண்டி வேகமாகப் போக வேண்டும். அவன் களைத்துப் போனான். மனோவேகத்துக்கு சயிக்கிளில் ஒடிப் போவதற்கு முடியவில்லை. அச்சுவேலி வீதி வந்து சந்திக்கும் சந்தியில் இருந்து பாலம் வரை வந்து அதைத் தாண்டி அவன் வந்து சென்று கொண்டிருந்தான்.
மாலையில் வடமராட்சி நோக்கியே சைக்கிள்கள் பெருகி ஓடிக் கொண்டிருக்கும். அவனைக் கடந்து பலர் போய்க் கொண்டிருந்தார்கள். வயது மூத்தவர்கள் சிலரும் அவனைத் தாண்டி விரைவாகச் சென்று கொண்டிருந்தனர்.
அவனுக்கு உள்ளூர வெட்கமாக இருந்தது. வீதியில் ஒருவர் முந்திக் கொண்டு போய் விட்டால் அதனால் அவமானம் நேர்ந்து
161

Page 86
சிதைவுகள்
விட்டதாகக் கருதி அவரைக் கலைத்தக் கொண்டோடி முந்திப் போகும் விடலைப்பருவ உணர்வை நினைந்து சிரித்துக் கொண்டான். அவனுக்கு எதிரில் நான்கோ, ஐந்து பேர் சைக்கிள்களில் பெரும்பாரமாக விறகு கட்டிக் கொண்டு மெல்ல நகர்ந்து வந்தார்கள்.
அவர்கள் அதிகாலைப் பொழுதில் உணவும் உண்ணாது புறப்பட்டுப் போனவர்கள். இருபத்தைந்து, முப்பது கிலோமீற்றர் தூரம் நாகர் கோயில் வரை கறள் பிடித்த சைக்கிள் வண்டிகளில் போய்ச் சேர்ந்தார்கள். அந்தப் பகுதிப் பரட்டைக் காடுகளுக்குள் புகுந்து விறகுக்காக மரம் தடிகளை வெட்டி சயிக்கிள்களில் கட்டிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள்.
வாழ்வின் சுகங்களை இழந்து போன முகங்கள். நலிந்து அழுக்கடைந்த உடல்கள். மெலிந்து களைத்துப் போன பசித்த மனிதர்கள். சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டு அல்லற்படும் பாவப் பட்ட மக்கள். வசதி படைத்த தனவான்கள் வீட்டு அடுப்புகளுக்குள் இந்த விறகுகள் இரையாகி எரியும் போதுதான், இவர்கள் குடும்பங்களின் வயிற்று நெருப்பு சற்றுத் தணியும்.
உடலில் உள்ள தங்கள் வலுவையெல்லாம் ஒன்று திரட்டி மெல்ல மெல்ல சயிக்கிள்களை மிதித்துக் கொண்டிருந்தனர். இருந்தாற் போல திகிலூட்டும் ஒரு சத்தம் எழுந்தது. கண் மூடி விழிப்பதற்குள் ஷெல் வந்து அருகில் விழுந்து வெடித்தது போலத் தோன்றியது. நடந்தது என்னவென்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் எப்படியோ நிலத்தில் விழுந்து குப்புறக் கிடந்தான்.
சில நிமிட நேரம் அசையாது உறைந்து கிடந்த அவனுக்கு எழுந்திருக்க இயலவில்லை. அந்தத் திசை நோக்கி மீண்டும் ஷெல் வரலாம். சயிக்கிள்கள் வீதியில் உருள ஆரம்பிக்கின்றன. அவன் மெல்ல எழுந்து நின்றான். அவனுக்கு முன்னே சற்றுத் துாரத்தில் சயிக்கிள் களுடன் பலர் கூடி நின்றனர். அவன் தனது சயிக்கிளை எடுத்து உருட்டிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான்.
அவனுக்கு எதிரே சயிக்கிள்களில் விறகு ஏற்றிக் கொண்டு வந்தவர்கள் தசைத் துண்டங்களாகச் சிதைந்து குருதி கொட்டி அங்கு — 12

தெணியான்
விழுந்து கிடந்தனர். அவன் உயிர்க்கும் பிணமாக வீடு நோக்கி வந்து சேர்ந்தான். திகைப்பும், பதற்றமும் அவனை விட்டு விலகவில்லை.
அவன் வருகையை எதிர்பார்த்து அப்பா பதற்றத்துடன் காத்திருந்தார். கொழும்பிலிருந்து வந்திருக்கும் செய்தியினால் அப்பா முற்றாகக் குழம்பிப் போனார். மூத்தவள் கிடைத்த பிரயாண வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதால் திடீரெனக் கனடாவுக்கு பறந்து போய் விட்டாள். அவள் போவதற்கென்று காத்திருந்தவள். அவள் போகட்டும். அது மனசுக்கு நிறைவு தரும் நல்ல செய்தி. நடுவிலாளை எண்ணியே அப்பா குழம்பிக் கொண்டிருந்தார்.
மூத்தவள் கனடாவுக்குப் புறப்பட்டுப் போன மறுதினம் நடுவிலாளை சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் கைது செய்து கொண்டு போயிருந்தது. கொழும் பில் இது அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவம்.
வெளிநாட்டு முகவர்களுக்கு ஊரில் கடன்பட்டு வந்த இலட்சங் களைத் தாரை வார்த்து விட்டு, வெளிநாட்டுப் பயணத்தை எதிர்பார்த்து லொட்ஜூ களில் காத்திருக்கும் தமிழர்களான இளைஞர்களும், யுவதிகளும் "பயங்கரவாதிகளாகக் கருதப்படுகிறார்கள்.
வேண்டியவர்கள் கைக்குள் சில ஆயிரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டு விட்டால் சந்தேகம் தீர்ந்து போய் விடுகிறது. கொழும்பு க்கு உடனடியாக இப்பொழுது புறப்பட வேண்டும். அவளைப் பொலிஸில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். பணம் எவ்வளவு வேண்டு மானாலும் கொடுக்கலாம். அவளை ஊருக்கு அழைத்து வந்து சேர்த்து விட வேண்டும்.
அவள் சுவிஸ் போக வேண்டுமானால், அப்பா கொழும்பு போய் அவளுடன் தங்கியிருக்க வேண்டும். அவளைச் சுவிஸ் அனுப்பி வைத்து விட்டு அதன் பிறகு அப்பா ஊருக்குத் திரும்பி வரலாம். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அப்பா கொழும்புக்கு போவது சாத்தியப்படக் கூடியதல்ல. அவள்தான் ஊருக்கு வந்தாக வேண்டும்.
அவளைப் பொலிஸில் இருந்து முதலில் மீட்க வேண்டும்.
163

Page 87
சிதைவுகள்
ஆகவே மூத்தவன் கொழும்புக்குப் போவதற்குப் புறப்பட்டான்.
இரவு புகைவண்டியில் கொழும்புக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலையில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த பிரயாணமல்ல, இன்றைய பயணம்!
பயணத் தடைகளை வெட்டி அவன் இங்கிருந்த புறப்படுவதற் கிடையில் இரண்டு தினங்கள் கழிந்து போயின. அவன் விட்டை விட்டுச் கிளம்பிய பிறகு, காலையில் எழுந்ததும் தினமும் பத்திரிகை பார்ப்பதே அப்பாவுக்கு வேலை.
கிளாலி நீர்ப்பரப்பில், நடந்த மோதலில் பயணிகள் பலர் பலி,
கொழும்பில் குண்டுவெடிப்பு. நுாற்றுக்கணக்கில் பொதுமக்கள் பலி. பத்திரிகைகளில் இப்படிச் செய்திகள். ஆனாலும் அவன் கொழும்புக்குச் சென்று சகோதரியைப் பொலிஸில் இருந்து மீட்டாக வேண்டும். அவளையும் உடன் அழைத்துக் கொண்டு சுகமாக அவன் வீடு வந்து சேர வேண்டும்.
அப்பா பத்திரிகையை நித்தம் பார்க்கின்றார். அவர்கள் வீடு வந்து சேரும்வரை பயங்கரங்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்று நெஞ்சார நேர்த்திக்கின்றார்.
கடந்த இரவு பயங்கரமான ஒரு இரவு
பயங்கர இரவுகள் பழக்கப்பட்டவைதான். ஆனால் கடந்த இரவு பயங்கரமான ஷெல் வீச்சுக்கள் நடத்தப்பட்ட இரவுபதுங்கு குழிகள் வீடுகளில் இருந்தும் பயனில்லை. முழு இரவும் பதுங்கு குழிக்குள் எல்லோரும் எப்படி குந்தியிருக்கலாம். ஷெல் வரும் நேரம் பதுங்கு குழிக்குள் நுழைவதற்கு அது சொல்லிக் கொண்டா வருகிறது.
அப்பா இரவு கண்ணோடு கண் மூடவில்லை. உள்ளம் உறங்காது உளைந்து கொண்டிருந்தது. வாய் திறந்து 'கோ' என்று குழறி அழ வேண்டும் போலக் குமுறிக் கொண்டு வந்தது. சிக்கன விளக்கை வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் அவர் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தார்.
164

தெணியான்
காலைப் பொழுது பதுங்கிப் பதுங்கிக் கிழக்கு வானில் தலை துாக்கியது. ஷெல் வீச்சும் ஓய்ந்து போனது. அப்பா பதுங்கு குழிக்குள் இருந்து வெளியே வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு பத்திரிகை வாங்குவதற்கு அவசர அவசரமாக ஓடினார்.
வழமை போல் பத்திரிகை உரிய நேரத்துக்கு வந்து சேரவில்லை. அப்பா காத்து நின்றார். அப்பாவைப் போல இன்னும் பலர் காத்து நின்றனர். இரண்டு மணி நேரம் கடந்து பத்திரிகை வந்து சேர்ந்தது. அப்பா பத்திரிகையை வாங்கி அவசரமாகப் புரட்டினார். அஞ்சுவதற்கு அப்படி ஒரு செய்தியும் இல்லை. அப்பா மெல்ல வீடு வந்து சேர்ந்தார். அப்பாவுக்கு அமைதியாக இருக்க இயலவில்லை. அவர் மனக் கலக்கம் தீரவில்லை. நிம்மதி இழந்து குழம்பியது.
யாழ்நகள் நோக்கிப் பயங்கரச் ஷெல் வீச்சு என்று பத்திரிகையில் பார்த்த செய்தி அப்பா நெஞ்சை வெட்டிப் பிளந்தது.
அம்மாவும் சின்னவளும். . அப்பா மனசில் ஒரு நம்பிக்கை. அவர்கள் சுகமாக இருப்பார்கள். இருந்தாலும் மனசு ஓயாமல் அலட்டிக் கொண்டிருப்பதை நிறுத்த வில்லை. அவர்களை உடனே போய்ப் பார்க்க வேண்டும் போல அப்பாவுக்குத் தோன்றியது. உடனே, அவர் யாழ்ப்பாணம் போவதற்கு அவசரமாகப் புறப்பட்டார்.
அப்பொழுது வைத்தியசாலையில் ஊழியனாகக் கடமையாற்றும் அப்பாவின் மாணவன் பதற்றத்துடன் அவசரமாக வந்த சேர்ந்தான்.
அப்பா, அவனைக் கண்டதும் திகைத்துப் போனார்.
"ஐயா, மண்டை தீவிலிருந்து அடித்த ஷெல் வந்து ஆஸ்பத்திரி யில் விழுந்து இரவு அம்மாவும், பிள்ளையும் போய் விட்டார்கள்"
அப்பா மரமாகிப் போனார்!
165

Page 88
சிதைவுகள்
அவருக்கு அழுவதற்கு முடியவில்லை. விழிகள் நீரைச் சிந்த வுமில்லை.
விளக்கு அணைந்து போனது. அப்பாவால் எழுந்து அதை ஏற்றி வைக்க முடியவில்லை. அவருக்கு எங்கும் இருள். இருள். அணைந்த விளக்கை ஏற்றாமல் என்றென்றும் இருளில் எப்படி அவர் கிடக்கப் போகின்றார்?
(தேசிய கலை இலக்கியப் பேரவை, சுபமங்கள இணைந்து நடத்திய ஈழத்துக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது).
-தினகரன் வாரமஞ்சரி - 1998
崇崇来
166


Page 89

Gflu Jirgfléör னிவிழா மலரிலிருந்து.
Eபானுக்கென்று ஒரு தனித்துவப் வை உண்டு ஆரம்பு ந்தொட்டே அதன் வழிகாட்டுதல் யே தொடர்ந்து நடைபோட்டு பவரான இவரிடம் தடம் புரளும்
போன்ம்ை சிறிதளவும் கிடைப்ாது==
எனியான்-பிரதானமாக ஒரு பலாசிரியரே தெணியானுடைய க்கங்கள் பெரும்பாலும் =
யமைப்பின் கொடூரங்களுக்கான த்துநிலை ஆள்நிலைப் புலங்களை விபரிப்பதாகும் இவரது பல்களில் ஒரு அகண்ட பார்வை சு உண்டு அரசின் இனக்குழும்
ங்கரவாதத்தை எதிர்த்து எழுதியோர் .
டியவில் தெணியானுக்கு ளரவமான ஓர் இடமுண்டு
பேராசிரியர் கார்த்திகேசு சிவந்நம்பி
j( (fiീ