கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Story of Rama

Page 1


Page 2
NOTE ON THE AUTHOR
The Rev. Francis Kingsbury, B. A. a 蠶 of the veteran Tamil Scholar, Rao Bahad
3, W. Tamotharam Pillai, B. A., B. L. ; waA
Professor of Tamil, United theological Colliege 3angalore, 910-1919
Additional Editor of The Tamil Lexicon University of Madras, 924. 1926
Lecture in Tamil, Ceylon University Coliezel {: cyabo, 1926-1936
Author of Several works in Tamil and Engiis.

இராமன் கதை
சிறுவர் சிறுமியர்க்கு எழுதிய தமிழ் வசன நூல்
இயற்றமிழ்ப் போதகாசிரியர் கலைமாணி பிரான் விஸ் கிங்ஸ்பரி வரைந்தது
கல்விநூற்கழகத்தினர் கருத்துப்படி புதுக்கிய பதிப்பு
முதல் அழுத்தம்
சாவகச்சேரி இலங்காபிமானி அச்சியந்திரசாலை
ஜய (ஹில ஆடி மீ”
விலை ரூபா 1.
All Rights Reserved

Page 3
முன்னுரை
தமிழில் வசனநடையில் உள்ள இராமாயண நூல்களிற் ဖါ၈) மிக விரிந்தவை; சில மிகச் சுருங்கியவை. மிக விரிக்காதும் மிகச் சுருக்காதும் மாணவர்க்குப் பயன்படுமாறு எழுதிய இக் நூல் மிகையாகாது என்பது என் கருத்து.
தமிழில் நூலாயினும் கட்டுரையாயினும் எழுதுவார் கூடியவசையிலும் இயற்சொற்களையே வழங்கல்வேண்டு: என்பது என் துணிபு. ஆயினும் அறிஞர்சிலர் மாணவர்க்கு எழுதும் நூல்களிற் கிரிசொற்களும் கிரிசொற் ருெடர்களும வடசொற்களும் வடசொற்ருெடர்களும் ஒசளவுக்கு வ கல் விரும்பத்தக்கது எனக் கருதுகின்றனர். என் கருக் ைபும மறவாது அவர்கருத்தையுங் தள்ளாது எழுகியது இர் 1 ல், அன்றியும் மாணவர் கமிழ் இலக்கண நூல்களிற் க. லும் விதிகளுக்கு இந்நூலில் உகாரணங்காட்டுவதும் என் நே: கம் களிலொன்று. இவ்வாறு பல்வகை கோக்கங்களும் t ،،،ܙܘܵܐ நூல்நடை இங்குமங்கும் வேறுபட்டன. நூல் முழுவதும் நடை வேறுபடாது ஒரே கன்மைக்சா யிருக்கல்வேண்டு மென்னும் என் துணியை கினைப்பின், பலருடை விரவியுள்ள இந்நூல் குற்றமுடைக் து என் கனலாம். இக் , ஸ்/mக்காகப் பெரியோர் மன்னிக்க. இந்து தேசவாசிகளின் 610 -ன க.கும் மெய்ப்பாடும் இயங்குமாறு கவ்வாறு என அறிய விரும்புவார் இராமாயண பாரதக் கதைகளை ஆராய்ந்தறிதல் வேண்டுமென் பது அறிஞர் பலரது கொள்கை, புறநாட்டி கார் இந்நூல்களைக் சுற்று நமது குணுகுனங்களை அறிய நாடுவால், நாம் நமது குணகுணங்களை அறிந்துகொள்வது வந்துனே ஆவசியகம்,
பொருந்தியவிடங்களில் ஆன்முேர் செய்யுட்களும் பழ மொழிகளும் சேர்க்கப்பட்டுள.
இலக்கியச்சொற்களேயன்றி உலக வழக்குச்சொற்கள் சிவ நுழைந்திருப்பதையும் கவனிக்க,
பழைய தமிழிலக்கண விதிகளுக்கு மாருனவற்றைப் * புதியன புகுதல் எனக் கொள்க.

Sற்சொல்லிய கதைக்கும் வால்மீகிராமாயணம் பணம் என்னும் நூல்களிற் சொல்லிய கதை தாா தம்மியத்தைப் பின்னுரையிற் காண்க.
கொழும்பு, ஞ்ல ஜனவரி மீ" 13 உ
குறிப்பு கலைமாணி அழகசுந்தரஞர் இயற்றிய இராமன் கதை', ' பாண்டவர்கதை' என்னும் புத்தகங்களை அங்கீகரித் துள்ள கல்விநூற் கழகத்தினர் (E. P. B.), இப்புத்தகங் களில், ஆளப்பட்டுள்ள புணர்ச்சிகள் சிலவற்றை மாற்று மாறு கூறினர். அவர்கருத்துக்கு அமையுமாறு இப்புகிய பகிப்பிலே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. *தாமரையிலை யிற் தண்ணீர், (பக்கம் 5) இல்லறத்திற் துறவு பூண்டவர்' (பக்கம் 5 ) என்பன முறையே காமரையிலையிற் றண்ணீர்? இல்லறத்திலே துறவுபூண்டவர் என மாற்றப்பட்டுள்ளன.
இப்புணர்ச்சியினைப் புகியன புகுதலின்பாற்படுத்தி முதன்முதல் வழங்கியவர், இவர் தங்கையார், தமிழ்ப்பெரு வள்ளல் திரு சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களேயாவர், அவர் பதிப்பிக்க கொல்காப்பியம், இலக்கண விளக்கம், சூளாமணி வசனம் முதலிய நூல்களில் இவ்வழக்கினைக் காணலாம். உ-ம்: ஆகலாம் தம் உயர்வு, பரீசைடியிற் தேறி, அம்முதற்பொருளாற் தோன்றுதல்பற்றி, நிலமக்களுட் கலை ம்க்களும், “ தங்தைசொன் மிக்க மக்கிரம் இல்லை' என்பதற் கமைய இச்சங்கியை வழங்கிய ஆசிரியர் கருத்துக்குமாருக இம மாற்றங்களைச் செய்ததற்காக வருந்துகின்ருேம். ஆசிரி யரின் முன்னுரையினையும், பின்னுரையினையும் படிப்பவர்க்கு ஆசிரியர் உள்ளக்கிடக்கை இனிது விளங்கும். இவ்வாசிரியர் இயற்றிய பாடப்புத்தகங்களை உபயோகிப்பவர்களுக்கு எமது நன்றி.
1-8 1954, பதிப்பாளர்.

Page 4
பொருளடக்கம்
புத்தியாயம் விஷயம் 1. பிறப்பும் இளமையும் 2. இராமன் விசுவாமிக்கிரர் வேள்விகாத்தலும்
சனகர் மகளை வேட் 3. பரசுராமனை வெல்லல் மந்திராலோசனை &ழுதுவார் 4. மந்தரை கைகேயி . • á.e. s 1.ண்: 5. கைகேயி தசரதர் 8 p. 8 A A. O. I 6. கைகேயி இராமர் . 2 هٔ ، هٔ 1. கெளசலை இராமர் . di de as e a p s is 2. 8. சுமித்திரை சீதை இராம இலக்குமணர் di i a j 2; 9. சித்திரகூடம் d x 8 to Ö 8 ila ı 2. 10. அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள் . . . 3 11. வனவாசம் எச். . مهد • á • 3. 12. சூர்ப்பணகை di di o · a · ... . 4. 13. இராவணன் w 4 di y di ab é o as 4; 14. மாரீசன் . a di as - é a le 48 15. சீதை இாங்கல் 5 16. இராமலக்குமணர் 5 17. மதங்கமுனிவர் ஆச்சிரமம் 5. 18. வாலி வதம் · sa di di 6 di de 6 (; 19. சுக்கிரிவ பட்டாபிஷேகம் ... pay Ab 6. 20. இலங்கை : was a was a d 67 21. அனுமன் 0. o ar p, a ... 69 22. இராவணன் கொலு . p 7 G was 75 23. போர் If y 9 7 Ar 9 o da SC 24. விபீஷண கிரீடதாரணம் o sí ar yr yr 17 88 25. சீதை இசாமர் gAPA . r r • 9 26. தீ வீழ்தலைத் தடுத்தல் ía ao a) AV AP 9. 27. இராம பட்டாபிஷேகம் y dép roo

இராமன் கதை 1. பிறப்பும் இளமையும்
ஆரியவர்த்கத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலே நாடு அதற்கு இராசதானி அயேத்தி. அங்கே தசரதன் என்னும் வேங்கர் வேந்:ன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ்சினன் ; மன்னுயிரைத் கன்குயிர்போல நேசிப்பவன் ; கொடையிற் கற்ப கத் ைவென்றவன் ; பொய்க்குப் பகை, மெய்க்கு
அணி; புகழுக்கு வாழ்வு.
இவனுக்கு மனைவியர் மூவர்: கெளசலை, கைகேயி, சுமிதிரை. இம்மூவரும் வெவ்வேறு நாட்டு இராச கன்னிகைகளாயினும் ஒருதாய்மக்கள்போல ஒருவர் பாலொருவர் அன்பு பாராட்டினதுமன்றி மூவரும் தசதனைக் கண்ணுங் கவசமும்போலப் பேணி வந்தனர். இவர்களுள் பட்டத்தரசி கெளசலைக்குச் சா கைஎன்னும் மகள் பிறந்தாள். தமக்குப் பிளேயில்லாத உலோமபாதமுனிவர் சாந்தையைத் தமக்குப் பிள்ளையாய்த் தரும்படி தசரதன வேண்ட, அவன் அவளை அவருக்குத் தத்தஞ்செய்துவிட்டான். உலோமபாதமுனிவர் தக்க காலத்திலே சாந்தை பைக் கலைக்கோட்டுமகாமுனிவருக்கு விவாகஞ்செய்து கொடுத்தார்.
இது நிற்க, தசரதனுக்கு மூவர் மனைவியரிடத்தும் fல்வர் மைந்தர் தோன்றினர்: கெளசலை இராமன

Page 5
16.
21.
23. 24. 25. 26. 27.
2 . இராமன் ககை
ஈன்றுள் ; கைகேயி பரதனைப் பெற்றுள் ; சுமித் இலக்குமணன் சந்துருக்கினன் என்னும் இரண் வண்ணமும் பொழுதொருமேனியுமாக, சு கில் சத்துச் சோதியம்புலிபோல வளர்ந்துவத பிள்ளைகள் மழலைமொழியாலும் பலவகை வி யாட்டினலும் பெற்றுரைக் களிப்பித்தனர்.
ஏற்ற பருவம் வந்தபொழுது தசரதன் பிள்
கள் நால்வருக்கும் குலகுருவாகிய வசிஷ்டமுe
ரைக்கொண்டும், வேறு ஆசான்மாரைக்கொண் சுருதி, ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களையும், ! வித்தை முதலிய படைக்கலப்பயிற்சியையும், ஆ
யேற்றம் குதிரையேற்றம் முதலிய அருஞ் செ
களையுங் கற்பித்தான். பிள்ளைகள் தாய்கந்தையு குரவரும் வியந்து அதிசயிக்க எவ்வகைக் கல்வியி. தேர்ச்சியடைத்தனர். இவ்வாறு சென்றன
லாண்டு.
ஒருநாள் அரசன் அவைக்களத்தே வி மித்திர மகாரிஷி தோன்றி, காம் ஒரு ய செய்யத் தொடங்கினதாகவும் கம்மை அவ்விய செய்யவிடாமல் விந்தியமலைக்குத் தெற்கே வ ஒரு சாதியார் கறுத்த நிறத்தினர், சுருண்ட சியர் பலர் இடையிடையே புகுந்து தடைெ
இவர் தமிழரென்பதற்கு 8யமில்லை. ஆரியப் புலவர் தம அாக்கரென்றும், வானா சென்றும், சாடிகளென்றும், ச ளென்றும் இழித்துக் கூறினும் இசனல் தமிழருக்கு வொன்றுமில்லை. விபீஷ்ணன், அனுமன், சாம்பவன்,
முதலியோரை அவரே புகழ்ந்து கூறியது கவனிக் கற்பால

ரை DLly
TIT(15
DLut
பிறப்பும் இளன மயும் 3
காகவும் காம் செய்யும் யாகம் தடையின்றி இனிது முடியுமாறு தமக்கு உதவிசெய்யத் தசரன் தன்மகன் இராமனைத் கம்மோடு அனுப்பவேண்டுமென்றும் சொன்னர். இதைக்கேட்ட வேங்கன், 'முனியுங்கவ, கமது வேள்விக்குத் கடையொன்றும் வாராமல் காக்க நானே வருகின்றேன்’ என்றன். விசுவா 'மித்திரர், “ தசரகா, இச்சிறுகாரியத்துக்கு நீ உன் இராச்சியத்தைவிட்டு வருவானேன்? இராமனை அனுப்பினுற் போதும்' என்ருரர். அரசனே ? ஐய, இராமன் சிறுவன், அவனுலாகாது இக்காரியம். நானே வருகிறேன்” என, விசுவாமித்திரர் : * நீ வர வேண்டியதில்லை, இராமன் வங்காற் போதும் ; இரா மனையே அனுப்பு” எனப் பின்னுங் கூறினர். இராமனை விட்டுப்பிரியத் தசரதனுக்கு மனமில்லை யென்றுகண்ட வசிஷ்டர் அரசனைநோக்கி < வேந்தே, நீ உன் மகனை விசுவாமித்திரரோடு அனுப்பச் சிறிதும் அஞ்சாதே. இராமனுக்கு யாதொரு தீமை யும் உருவண்ணம் விசுவாமித்திரர் அவனைக் காப் பதுமன்றி அவனுக்குப் பல வித்தைகளையும் உப தேசிப்பார். இதனுல் இராமனுக்கு நன்மையே வரும். இப்பொழுது இவர் கேட்டதுபோல இராமனை அனுப்பாவிடின் உனக்கும் உன்னிராச்சியத்துக்கும் மட்டுமன்று, இராமனுக்குங் தீமை விளையும், இது திண்ணம் ” என்று புத்தி சொன்னர். உடனே இராமனே அழைத்து முனிவரோடு போகும்படி தசரதன் ஏவினன். இரட்டையரில் ஒருவனை இலக் குமணனும் இராமனேடு காலும் போகத் தனக்கு விடைகரும்படி அரசனை வேண்டினன். அரசன் அகற்கிசைந்து "நீயும் போகலாம் ' என்ருரன்.

Page 6
4. இராமன் கதை
இராமலக்குமணர் தந்தையிடத்தும் தாய்மாரிடத்தும் விடைபெற்று விசுவாமித்திர முனிவரோடு கானகஞ் சென்றார்.
2. இராமன் விசுவாமித்திரர் வேள்விகாத்தலும் சனகர் மகளை வேட்டலும்
விசுவாமித்திரர் ஒரு காலத்தில் ஒரு நாட்டையாண்ட மன்னவர். ஒருநாள் வசிஷ்டருடைய ஆச்சிரமத் துக்குப் போனபொழுது அவருடைய தவவலிமை யைக்கண்டு, ' துறவிக்கு வேந்தன் துரும்பு’ என் னும் முதுமொழியினுண்மையை யுணர்ந்து தாமுங் துறவுபூண்டார். துறவுபூண்டவர் பல்லாண்டு பல கடுந்தவம் புரிந்து, பிறப்பில் கூடித்திரியராயினும் வசிஷ்டர் வாயினல் பிரமரிஷி எனப் போற்றப்பட் டார். இகனல் சாதியிலும் குணமே சிறந்தது என் பது வெளிப்படை.
விசுவாமித்திரர் அரசிளங்குமார ரிருவரையும் தம்மோடழைத்துச் சென்று அவர்களுக்குப் பல வித்தைகளைப் போதித்தார். அகன்பின்பு அவர், இராம லக்குமணர் காக்க, வேள்வியைத் தொடங்கி முடித்தார். வேள்வி நடந்தபொழுது தடைசெய்ய வந்த பலரை இவரிருவரும், புறங்கொடுத்தோ
செய்தார். தாடகை ப்ெண்ணுயினும் ஆண்ம, களிலும் மிக அஞ்சாநெஞ்சும் திறமையும் .01 க்
தவள். இப்படிப்பட்டவள் பெண்ணுயினும் இ. க்

விசுவாமித்திரர்வேள்வி காத்தல்
கொல்லுதல் அறமேயன்றி மறமன்றென விசுவா மித்திரர் இராம இனு க்கு வற்புறுத்த இராமன் கோதண்டமென்னும் தன் வில்லை வளைத்து அம்பு தொடுத்து அவளைக் கொன்ருரன்; அப்பொழுது அவளுக்குத் துணேயாய் வந்த அவள் இளையமகன் சுபாகுவையும் கொன்ருரன். அவள் மூத்தமகன் மாரீசன் ஒடித்தப்பினன். விசுவாமித்திரர் வேள் வியை முடித்தபின் இராமலக்குமணரைப் பல காடுகளுடும் நாடுகளுடும் கொண்டுபோய் அவ்வவ் விடத்துப் பழங்கதைகளை அவர்களுக்கெடுத்தோதி னர். ஈற்றில் விதேக நாட்டுக்கு இராசதானியான மிதிலைமாநகரத்திை மூவரும் அடைந்தார். விதேக நாட்டு மன்னவர் சனகர். இவர் இராச கோலத் தோடு அரசியல் நடத்திவந்தாராயினும், இவர் நெஞ்சம் தாமரையிலையிற் றண்ணிர்போல உலகத் காற் சிறிதும் கறைப்பட்டிலது. இவர் இல்லறத் திலே துறவுபூண்டவர்; கடவுளடி கனவிலும் மறவாதவர்; * எத்தொழிலைச் செய்திடினும் எதவத்தைப் பட்டிடினும்
முத்தர் மனமிருக்கும் மோனத்தே ’ என்ற சொல்லிற்கு இலக்கானவர்.
இவருக்குச் சீதை என்னும் பெயருள்ள மக ளொருத்தி யிருந்தாள். கடவுளுடைய திருவருளி ேைல யிவருக்குக் கிடைத்த வில்லுமொன்றுண்டு. அவ்வில்லை வ 2ள க்கு ம் ஆற்றலுடையானுக்கே சீதையை விவாகஞ்செய்துகொடுப்பதாக எண்ணி யிருந்தார் சனகர். விசுவாமித்திரர் இராமலக்கு மணர்களை வேத்தவையிற் கொடுவந்து அவர்களது

Page 7
6 இராமன் கதை
வரலாற்றையும் திறமையையும் எடுத்துக்கூறி, சனகரது வில்லை இராமன் வளைப்பான் என்ருரர். சனகர் வில்லை எடுத்துவரும்படி ஏவலாளருக்குப் பணிக்க, வில்லைச் சபையிற் கொண்டுவந்தார்கள். விசுவாமித்திரர் இராமனுக்கு ஆசிகடறி 'வில்லை வளைக்க” எனக் கட்டளையிட்டார். இராமன் வில்லை யெடுத்து வளைக்க அஃது இரண்டு துண்டாக ஒடிந்து விழுந்தது. இவனே என் மகளுக்கு வாய்த்த கணவன் என உவந்தார் சனகர். உடனே தசரத னுக்கு நடந்ததையறிவிக்க ஓலே சென்றது. தசரதனும் இதைக் கேட்டவளவிலே உவகைக் கடலிற் படிந்தான். அவன், மனைவியர் மூவரும் பரத சத்துருக்கினரும் வசிஷ்டரும் மந்திரிமார் முதலியோரும் புடைசூழ மிதிலே வந்துசேர்ந்தான். சுபதினத்திலே சுபமுகூர்த்கத்திலே இராமனுக்கும் சீதைக்கும் விவாகம் நடந்தது. இராமன் இரகு வமிசத்திற் பிறந்தவனுகையால் இராகவனென்னும் பெயரும் பெறுவன். தசரதன் மகனகையால் தாசரதி யென்பதும் அவன் பெயர். விதேக நாட்டாளாகிய சிதைக்கு வைதேகியென்று பெயர். மிதிலைப் பட்ட ணத்திற் பிறந்ததால் மைதிலியென்பதும் அவள் பெயர். சனகன் மகளாதலால் சானகியென்பதும் அவள் பெயர்.
இராமனுக்கும் சீதைக்கும் விவாகம் நடந்த பொழுதே தம்பியர் மூவருக்கும் திருமணம் நிறை வேறின. இலக்குமணன் ஊர்மிளையை மணந்தான். பரதனும் சத்துருக்கினனும் குசத்துவன் மக்களிரு வரை மணந்தனர். இன்னும் சிறிதுகாலம் மிதிலேயிற்

பரசுறா பட வெல்லல்; மந்திராலோசனை
கழித்தபின் க ச ரக ன் மனைவியரும் மக்களும் தற்குழ, பரிவாரம் முன்னும் பின்னும் செல்ல அயோத்திக்குப் புறப்பட்டான்.
3. பரசுராமனை வெல்லல்; மந்திராலோசனை
சிமத்க்கினி முனிவர் ஒரு பிராமண ரிஷி. அவரை ஒரு கூடித்திரியன் கொன்ருரன். அகனல் அவர் மகன் பரசுராமன் கன் தந்தையைக் கொன்றவனே மட்டுமல்ல கூடித்திரியரெல்லாரையும் பகைத்தான் ; கூடித்திரியரை எங்கு காணினும் அவர்களைச் சண் டைக்கழைப்பான் ; கூடித்திரிய குலத்தை வேரோடு ଏଥିମୀ ରାଓଁ, i; அவன்பூண்ட விரதம். தசரதன் குடும் பத்தோடு அயோத்திக்கு மீள்கையில் அவனை வழியிற் சந்தித்த பரசுராமன் இராமனைத் கன்னேடு சண்டைக்கு வரும்படி அழைத்தான். கன் கையில் வைத்திருந்த ஒரு வில்லே இராமனுக்குக் காட்டி, * இராமா, நீ சனகன் வில்லை ஒடித்துவிட்டாயென்று இறுமாப்புற்றரய். அது முன்னமே சிறிது ஒடிங் திருந்த வில், என் கையிலுள்ள இந்த வில்லே நீ வளைப்பையேல் வல்லவன்றன் ; இல்லையேல் உன்னை மானபங்கஞ்செய்வேன்” என்று இடித்துக் கழறி ன்ை. இராமன் ‘* நீ வேதியன், ‘வேதியரோ டமர்பொருது வென்று லும் கோற்றுலும் வசையே பன்றே 'ஆகலின் உன்னேடு அமர்செய்ய எனக்கு விருப்பமில்லை' என்ருரன். அதற்குப் L I Tigr TITLD6ðir * இப்படி ஞானவார்த்தைபேசித் தப்பித்துக்கொள்

Page 8
8 இராமன் கதை
ளலாமென் றெண்ணுதே. நீ என் வில்லை வ8ளயா விடின் நான் உன்னை விடேன்’ என்ருரன். இரா மன் 'நான் உன் வில்லை வளைத்து அம்பு கொடுப் பேனேல் அதற்குக் குறியாது?’ என வினவினன். பரசுராமன், "உன் அம்புக்கு நானே இலக்கு; என்னைக் கொல்லலாம்’ என, இராமன் 'பிரா
விடை பகர்ந்தான். பரசுராமன் * அப்படியாயின் இதுவரையிலும் 5ான் செய்த தவப்பயனெல்லாம் உனக்கேயாகுக' என இராமன் சம்மதித்துப் பரசுராமன் தங்க வில்லை வளைத்தான். அ துவும் சனகர் வில்லைப்போலவே ஒடிந்துபோயிற்று. பரசு ராமன் வெட்கி, தன் கவப்பயனெல்லாமிழந்து இரா மனிடம் விடைபெற்றுப் போய்விட்டான். பிறப்பிற் பிராமணரெல்லாம் பிராமணரோ?
அந்தணரென்போர் அறவோச் மற்றெவ் வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான். '
அயோத்தியைத் தசரதனும் குடும்பத்தினரும் அடைந்து சில நாளாயினபின் பரதன் தன் தாய் மாமன் ஆளும் கேகய5ாட்டைக் கண்டுவரும்படி போயினன். அவனுடன் சத்துருக்கினனும் சென் முன.
தசரதன் சிலநாட்சென்றபின் தன் சபையிலே கொலுவீற்றிருந்தபொழுது, அங்கிருந்த வசிஷ் டரையும், மந்திரிமாரையும் பிறரையும் நோக்கி, * நான் அரசுபூண்டு அறுபது வருஷம் கழிந்தன. மூப்பால் வருந்துகின்றேன். இனி நான் அரசியஃ விட்டு முத்திநெறி தேடல்வேண்டும். என்மகன்

பரசுராமனை வெல்லல்; மந்திராலோசனை 9
இராமனுக்கு இவ்வரசியலேக் கொடுக்க எண்ணி னேன். உங்கள் கருத்து யாது?’ என்ருரன். சபை யார் யாவரும் சிறிதுநேரம் வாளாவிருக்க, பின் வசிஷ்டர் பேசலுற்றர் : “ சக்கரவர்த்தி, உன் சொல் எங்களெல்லாருக்கும் வருத்தத்தை விளைத்தது. உன் குடைக்கீழ் வாழ்ந்த எங்களில் யாருக்கேனும் ஒரு குறையிருந்ததுண்டோ ? நாங்கள் யாவரேனும் உன் மனஞ்சலிக்க எவ்வகை மொழியுங் கூறினேமோ? இனி நீ முத்திநெறி தேடவேண்டுமென்றாய். மன் னுயிரைத் தன்னுயிர்போல் ஒம்பும் அரசனுக்கு முத்தி தானே கிட்டாதோ? முத்தியும் தேடவேண் டிய பொருளோ? ஆயினும் மூப்பால் வருந்துகின்றே னென்கிருரப்; அப்படியாயின் நீ வருந்தக் காண்பது எங்களுக்கழகன்று. நீ உன்னிஷ்டப்படி உன் அர சைத் துறக்கலாம். உன்மகன் இராமன் உன்னிடம் அரசுபெறுவதற்கு எவ்வகையினுமுரியவன். மக்கள் 5ால்வரில் அவனே மூத்தவன் என்பது மட்டுமல்ல, இயற்கையறிவிலும், கல்வியிலும், ஆற்றலிலும் சிறந் தவன், சகல கலியானகுணங்களும் ஒருங்கே வாய்க்கப்பெ ற்றவன், தசரதன் மைந்தர் நால்வரும் காசரதிகளே யாயினும், தாசரதி என்னும் பெயர் இராமனுக்கே காரண இடுகுறியாயிற்று. உனக்குப் பின் கோசல நாட்டை இராமனுள்வதே எங்களுக்குங் கருத்து ’.
சபையிலிருந்த மந்திரிமாரும் படைத்தலைவரும் மற்ற உத்தியோகஸ்கர்களும் பிறரும் "முனிவர் கூறியது ஒக்கும் ஒக்கும், இதுவே எங்கள் கருத்தும் ” என்ருரர்கள். இச்சொல் அரசன் செவியில் நுழைய
... 2

Page 9
10 , இராமன் கதை
அவன் ஆன ங் த ப ரவ ச னைன் . சிறிதுநேரஞ் சென்றபின் ஏவலாளரை கோக்கி, * இராமனை அழைத்துவாருங்கள்’ என்றன். அவர் சென்று இராமனேச் சபைக்கு அழைத்துல்ங்கனர். தசரகன் இராமனை மார்புறத்தழுவி, மகனே இராமசந்திரா, * நானும் இங்குள்ள சபையார் யாவரும் ஒரு விசேஷ காரியத்தைத் தீர்க்காலோசி த்து ஒரு முடிவுக்கு வக் கோம். அம்முடிவை உனக்கறிவிக்கவே இங்கு உன்ன்ே அழைத்கோழ் நான் அரசு பூண்டு இன்று ஆண்டு அறுபது தழிக்கன; மூப்பால் வருந்துகின் றேன்; முன்போல் அரசியல் டேக்க எனக்கு வலி யில்லை; ஆகவே நான் இவ்வரசியலைத் துறத்தல் வேண்டும் ;/எனக்குப்பின் கோசல நாட்டையாள உரிமையும் தகுதியுமுை டயவன் நீயேயென்பது எங்க ளெல்லேமுக்கும் ஏக அபிப்பிராயம் : ம க னே நாளைக்குச் சுபதினம், அதிலே உன்னே இராசனக் முடிசூட்டக்கருதினுேம்; உன் கருத்து என்ன?” எனக் கூறினன்.
இராமன் இன்றைக்கிதைக் கேட்பேனென்ற சிறிதும் நினைத்தவனல்ஸ்ன். மின்னமல் இடியாமல் மழை பொழிந்ததுபோலத் தந்தைசொல் செவியில் நுழைந்த தும் தன்னை மறந்தான்; சபையையும் மறக் தான்; மரம்போலத் திகைத்து நின்றன். சிறிது நேரஞ் சென்று கன்புத்தி கனக்கு வரவே சக்கரவர்த் தியையும் சபையையும் கைகூப்பி வணங்கிநின்று, * ஐயன்மீர்! என் கருத்து என்னைஎன்று ଶtପର୍ଯ୮ ଅor வினவினீர். எனக்குங் கருத்தொன்றுண்டோ? எந்தையாரும் குருசிரேஷ்டரும் மந்திரிமாரும் மற்றச் "சபையாரும் தீர்க்க ஆலோசித்து ஏக அபிப்பிராயங்
 

மந்தரை கைகேயி 11.
கொண்டு என்னை யழைத்து எனக்குக் கட்ட2ளயிடும் பொழுது யான் செய்வது வேறென்றுண்டோ? இவ் ரைசியல் நடத்த நான் சிறிதுங் தகுதியற்றவயிைனும் கடவுள் திருவருளும் எந்தையாரின் புத்திமதியும் சபையாரின் தூண்டுதலும் எனக்கிருக்க என்ன லியன்றமட்டும் என்கடனைச் செய்வேன்? என்ருரன். இராமனது வினயத்தையும் கீழ்ப்படிதலையும் Φ 6οπι வேந்தனும் அவையும் அவனே மெச்சினர். திசரதன், "மகனே, காளைக்கு உனக்கு முடிசூட்டல்; மற வாதே ’ என்றான், இராமன் கெளசலைக்கும் பிதைக்கும் மற்றவருக்குஞ் சொல்ல அந்தப்புரம் ஏ கினன், நாளைக்கு இசாமிட்டாபிஷேகம் என்ற சொல், நகரம் குழிழுதும் பரம்பினது. உடனே கெருக்களையும்" வீடுகளையும் அலங்கரிக்கத் தொடங் கினர். அயோத்தி முழுவதும் " நாள்ைக்கு இராம மனுக்குப் பட்டாபிஷேகம் ? στσότρο ஒருசொல்லே ofவர் வாயிலும் ஒலித்தது.
4 மந்தரை கைகேயி
கேகயநாட்டு இராசகுமாரி கைகேயி இவளைத் கச பகன் மணந்து அயேயுக்திக்குக் கொண்டுவந்த பொழுது இவளோடு உடன் வளர்ந்தாளும் இவளது அடிமைப் பெண்ணுமாகிய மந்தரையும் கன் காய்ச்சி யுடன் அயோத்திக்கு வங்காள். இவள் வடிவிற் சுனி; ஆகவே மந்தரையென்ற இயற்பெயர் இவ வருக்கு வழங்காமல் கூனியென்ற பெயரே பெரும் பாலும் வழங்கினது. இவள் தன் நாய்ச்சிபால் மிக

Page 10
12 இராமன் கதை
அன்புடையள்; நாய்ச்சியின் மகன் பரதனிடத்தும் பேரன்புடையள்.
'இராமனுக்கு நாளைக்குப் பட்டாபிஷேகம் ! என்ற சொல் மந்தரைகாதில் விழுந்தது. இராமன் தனக்கு யாதொரு தீங்கும் செய்திலனேனும் கைகேயி யிட்த்தும் பரதனிடத்தும் இவளுக்கிருந்த பேரன்பு இவளைத் தூண்டவே இவள் எவ்வகையானும் இராம அணுக்கு முடிசூட்டலைத் தடுத்துப் பாகனே முடிசூட்டு விக்கவேண்டும் என்று க்ன் மனத்தில் உடனே தீர் மானித்தாள். தீர்மானித்தவுடனே கைகேயியின் அந்தப்புரம் சேர்ந்தாள். பள்ளியறையில் தன்னை மறந் துயில்செய்யும் கைகேயியைப் பலமுறை கூப்பிட்டும் அவள் எழாததுகண்டு அவளைத் தட்டி எழுப்பிள்ை. கைகேயி ன்முந்து அரைத்துயிலுடன் "மந்தரை, என்னவிசேஷம்? ஏன் என்னை இப்படித் தட்டியெழுப்பினய்?’ என்று வினவ, வீடு தீப்பற்றி யெரிகையில் கித்திரைகொள்ளுகிறவள் பைத்தியம் பிடித்தவள்’ ஸ்ன்ருள் கூனி. * வீடு தீப்பற்றியெரிய வில்லை; தோன் பைத்தியக்காரி" என்றுள் கைகேயி. உடனே கூனி, ' இராமனுக்கு 512ளக்குப் பட்டா பிஷேகமாம் ; இதைச் சொல்லக்கான் o-GÜrಓ೮r எழுப்பினேன்" எனப் பரதனிலும் பதின்மடங்கு இராமனைத் தன்மகனென்று နှီး கைகேயி ஆனந்தபரவசத்தளாய், கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றிக் கூனியின் கழுத்திலிட் டாள். கடனி கோபாவேசத்களாய் மாலேயை யெடுத்துத் தரையிலே வீசியெறிந்து, ' எனக்கு வேண்டா இந்தமாலை; நாளைக்கு இராமன் அரசனுகும்

மந்தரை கைகேயி 13
போது கைகேயி கெளசலேக்கடிமையாவாள்;மந்தரை அடிமைக்கடிமையாவாள், இந்தச் சந்தோஷத்துக்கு மாலையும் வேண்டாவோ?’ என்று சிரித்தாள். கைகேயி, ‘இராமன் என்மகன், பரதனிலும் நூறு மடங்கு நல்லவன்; இராமன் எனக்கு வலக்கண் ; பரதன் எனக்கு இடக்கண் ; நீ சொல்வதெல்லாம் விப ரீதம்; இனியொன்றும் பேசாதே’ என்றுள். மந்தரை பின்னும் உரத்துக்கிரித்து, "இஃகெல்லாம் நாளைக் குத் தெரியும். தசரதர் சிங்காசினத்திலிருக்கையில் கெளசலையும் இராமனும் உன்மே திலும் பரதன்மேலும் மிகஅன்புள்ளவர்போல 5டிக்கிருரர்கள் ; பேய்ச்சி நீ இதையெல்லாம் நம்புகிருரய்; 5ா?ளக்கு இராமனுக்குப் பட்டாபிஷேகம் முடிந்தபின், தசரதர் கவிஞ்செய்யக் காட்டுக்குப் போவர்; அப்போது உன் மகன் பரதன் படப்போகிற பாடு ஈசனுக்குத்தான் தெரியும் ; 房 இருந்துபார்; நான் இன்றே சாகத்துண்ணிந்தேன்” என்ருள். இதனைக்கேட்ட கைகேயி சிறிதுநேரம் வாளாவிருந்து பின் இவ்வாறு சொல் yolfrei : ** # சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை; ஒருவேளை உண்மையாயினும் இராமபட்டாபிஷேகத்தை நாம் எப்படித் தடுக்கமுடியும்? இராமன் 5ால்வருள் மூத் கவன்; சக்கரவர்த்திக்கு உயிர்; வசிஷ்டரும் மந்திரி மாரும் படைத்தலைவரும் இராமனே நேசிப்பவர்கள்; இவையன்றி, சக்கரவர்த்தி சொன்னசொல் மாரு கவர்; முடிசூட்டுவேனென்று இராமனுக்கு அவர் சொன்னபின்பு அகைத் கடு க்கத் கேஷ்ராலுமாகாது; மூவராலுமாகாது.” கூனி பின்னுஞ்சிரித்து, ‘தேவ ராலும் மூவராலுமாகாததை மங்கரை செய்துமுடிப் பள்; ஆனல் என் புத்தியின்படி நீ கடவாவிடின்

Page 11
14 இராமன் கதை
நான் செய்யக்கிடப்பது ஒன்றுமில்லை; என் சொற் படி நீ செய்தால் மூவுலகத்தையும் ஆட்டிவைப்பேன்’ என்று ஆர்த்தனள். கைகேயி 'நீ என்னையும் என் மகனையும் காக்கவந்த தெய்வம்; உன்சொல்லைக் கேளாமல் வேருர் சொல்லைக் கேட்பேன்?’ என்ருரள். அப்படியானற் சொல்கிறேன்; கேள் ” GT6OT 2 Lu தேசிக்கத் தொடங்கினுள் கூனி :* சக்கரவர்த்தி ඉ(b நாளும் பூொய்சொல்லாதவரலர்ே? கொடுத்த வரக் கைச் செதே/தீர்ப்பவரிலரோ? ராமனுக்கு வர்ச் குக் கொதிக்குமுன் உன்க்கு இரண்நி வரங்கொடுப்ப தாக உறுதிமொழி புதன்றுளாரி. அவ்விரண்டு வரத்தையும் முதலில் பிணக்குத் தங்கபின் இராம அணுக்குக் கெடுத்தி வ க்கை)மன்னவர் நிறைவேற்ற லாம் ?? என்ருள் / எப்போது இரண்டு வரம் தருவதாக வேந்தீர்வ்ேந்திர் கூறினர்? எனக்கு நினைவில்லை ? என்ருள் கைகேயி "கெளசலை யாலும் இராமனலூம் ம்யங்கின உனக்கு எது நினைவி லிருக்கும்? முன்னெருகாலம் கசரதச்சக்கரவர்த்தி மாற்றரை எதிர்த்துப் போர்செய்யப் போனபொழுது நீயும் உடன்சென்ருரய். தசரதருடைய கேர்ப் பாகனைப் பகைவர் அம்பால் வீழ்த்தியபோது உடனே நீ சாரதியாகித் தேரை ச் செலுத்த , அரசர் பகைவரையெல்லாம் வென்றர். அ ப் பொ Gу и உவகைமேலிட்டவராய் கேட்கும் இரண்டுவரம் எவையானுலும் தருவகாக் உனக்கு உறுதிமொழி புகன்றர். நீ அவ்வரத்தை உடனே கேளாமல் வேண்டியபோது கேட்பதாகச் சொன்னய். இப் போது போய், வரம் இரண்டையும் கேள்: முதல்வரம் பரதனைக் கோசலநாட்டுக்குவேந்தனுக முடிசூட்டுதல்;
 

கைகேயி தசரதர் 丑5
இரண்டாம்வரம் இராமன் நாடுதுறந்து பதினன்கு
வருடம் வனவாசஞ்செய்தல். இவ்விரண்டும் தந்தே
தீரவேண்டும் என்று உறுதியுடன் நில் ; போ ; உடனே செய்; காலதாமதஞ் செய்யாதே; இன்னும்
சிறிது நேரத்துக்குள் மகாராசா உன்னைத் ே தடி
வருவர்; அப்பொழுது காரியம் தீரவேண்டும்’ என்று
சொல்லிவிட்டுக் கூனி போய்விட்டாள்.
5. கைகேயி தசரதர்
இராமன்து பட்டாபிஷேகத்துக்குச் செய்யவேண் டிய ஒழுங்கெல்லாம் செய்துமுடித்தபின் தசரதன் கைகேயிக்கு இதை அறிவிக்க அவளுடைய அங்கப் புரத்துக்குப் போனன். கைகேயியோ அங்கில்லை. இங்குமங்கு மவ?ளத்தேடி ஈற்றில் ஓர் அறையிலே ஆபரணங்களையெல்லாம் களைந்து எறிந்துவிட்டு, கூந்தல் விரிந்து தரையிலேயுரள,கைகேயி நிலத்திலே குப்புறப்படுத்துத் கேம்பித்தேம்பி யழுதுகொண் டிருக்கத் தசரதன் கண்டான். தன்னுயிர்க்காதலியை வருத்துவது யாதென்றறியாத தசரதன் ஒடிப்போய் அவள் அருகிலிருந்து' கண்ணே கைகேயி, உனக்கு என்ன நேரிட்டது? தேக அசெளக்கியமோ?’ என்று உசாவினன். அவள் முன்னிலுமதிகம் தேம்பி யழுதாள். தசரதன் ஆயிரஞ்சொல்லியும் ஒன்றுக்கும் வாய்திறந்தாளில்லை. பின்னுமரசன் :
* கைகேயி, உன் குை ற யென்? அதை யெனக்குத் தெரிவித்தால் எப்படியுங் தீர்ப்பேன்’ oான்றன்.

Page 12
16 இராமன் ககை
கைகேயி, 8 போம், போம், உமக்கு என்மேல் மிகப்பிரியம் என்பது யாவருமறிவார், நீரதை இன்னு: மொரு முறை சொல்லிக்காட்டவேண்டியதில்லை; உமக்குக் கெளசலேயிருக்கக் கைகேயி ஏன்?” என்று கோவென் றலறினுள்.
* நீ சொல்லுவது எனக்கொன்றும் விளங்க வில்லை; எனக்கு என்னுயிரிலும் நீயே இனியை? என்ருரன் தசரதன்.
* நீர் சொல்வதுண்மையாயின் நான் கேட்பதை எனக்குத் தருவீரோ?" என்ருள் கைகேயி.
* இராம ன ஃண, நீ யெதைக்கேட்டாலும் உனக்குத் தருவேன்' என்று தசரதன் கூற,
கைகேயி சொல்லுவாள்: 'முன்னே ஒருநாள் உமக்குச் சாரதியாக நான் தேரோட்ட நீர் உமது சத்துருக்களை வென்ற காலத்தில் எனக்கு இரண்டு வரம் தருவதாக நீர் வாக்குக்கொடுத்தது மறந்து போனிரோ??
தசரதன், ' நான் மறக்கவில்லை; நீ தான் இது காறும் ஒருவரமும் கேட்கவில்லே’ என்றன்.
கைகேயி, ‘அவ்விரண்டுவரமும் இப்பொழுது நான் கேட்கிறேன்; 'மருது தருவீரோ?” என்ருள்.
* முன்னமே கொடுத்த வரத்தை இப்பொழுது எப்படி மறுப்பது? கசரதன் சொன்னசொல் மாறு
முன்னே கிழக்கிலுதிக்கும் ஞாயிறு மேற்கிலுதிக்க

கைகேயி தசரதர் 17
வண்டும். ஞாயிறு மேற்கிலுதித்தாலும் தசரதன் சான்னசொல் தவருரன்’ என்ருன் அரசன்.
**இது சத்தியங்கானே? sy * ஆம், இது சத்தியந்தான்." * பின் மறுத்தால் ?? * மறேன்." * உம் இராமனண் ?? * என் இராமனுண்.”
* அப்படியானற் சொல்லுகிறேன் : கோசல 11ப்டுக்கு மன்னனுக என்மகன் பரதனுக்கு முடி சூட்டவேண்டும்.
தசரதன், ‘என்னசொன்னப் ?”
கைகேயி, ' நான் இன்னும் பேசிமுடியவில்லை : இப்பொழுது கேட்டது முதல்வரம் ; இதன்படி கோசலநாட்டுக்கு மன்னனவான் பரதனே. நான் கேட்கும் இரண்டாம்வரம், இராமன் நாளைக்கே" அயோத்தியை விட்டுப்போய் பதின.இவருஷம் வன வாசம் செய்தல்வேண்டும். இவ்விரண்டு வரங்களையும் மீர் எனக்குக் கொடுத்தால் நீர் சத்தியவந்தரே ; இல்லை யென்ருரல் தசரதரும் சொன்னசொல் மாறுகிறவரே' என்ருள்.
உடனே தசரதன், ‘இராமனை நாளைக்கு முடி /ட்டுவதாக அவ னு க் குச் சொல்லிவிட்டேன்; 1ான்னசொல்லேத் தசரதன் மாற்றுவதில்லே " மண்ரன்.

Page 13
18 இராமன் கதை
* அப்படியானல் மகாராசா எனக்குச் சொன்ன சொல்லைத்தான் மாற்றிவிட்டார்; என்றும் பொய் யாதவர் பொய்த்தார்!’ என்று நகைத்தாள் கைகேயி.
அரசன், 'பெண்ணே, ஆத்திரப்படாகே ! நிகானித்துப்பார்; மைந்தர் நால்வருள் இராமனே மூத்தவன் ; பட்டத்துக்குரியவன் அவனே ; உரிமை மட்டுமன்று, ககுதியுமுடையான். இம் மட்டோ, வசிஷ்ட முனிவரும் மந்திரிமாரும் படைத்தலைவரும் சபையார் எல்லாரும் இராமனேயே முடிசூட்டல் வேண்டுமென்று தீர்மானித்து, அதை அவனுக்கு அறிவித்துவிட்டார். நான் மாறின லும் என் சபையார் மாறுவாரோ? வசிஷ்டர் என்ன சொல் லுவார்? நாம் எல்லேமும் சம்மதித்தாலும் பரதன் சம்மதிப்பானே?’ என்ருரன்.
அதற்கு ‘இந்தச் சாதுரியமெல்லாம் எனக்குக் தெரியாது; நான் கேட்ட வரங்கள் கொடுக்க உமக் கிஷ்டமில்லையேல் இஷ்டமில்லையென்று சொல்லும், அதை விட்டுவிட்டு, ‘பரகன் சம்மதியான் ; வசிஷ்ட என்னசொல்லுவார்' என்ற நீண்ட கதைகள் எனக்கு வேண்டா. தசரதர் பொய்க்குப் பகை ; மெய்க் அணி ; புகழுக்கு வாழ்வு' என்ற பேச்செல்லாப் வெறும்பேச்சு ; கசரதர் அரிச்சந்திரன் மரபில் வந்தவராம்!” என்று பரிகசித்தாள்.
தசரதன், ' நான் இராமனுக்குச் சொன்ன சொன்னகே ’ என்ருரன்.
கைகேயி, *இ ரா மனு க்குச் சொன்னது இன்றைக்கு; எனக்கு வாக்குக்கொடுத்தது முப்பது வருஷத்துக்குமுன். முன் சண்டையிலே சாகாமல்

கைகேயி தசரதர் 19
உம்முயிரைக் காத்க எனக்குச் சொன்ன வாக்கோ, இன்றைக்குக் கெளசலேமகனுக்குச் சொன்ன வாக்கோ, எதை முதலில் நிறைவேற்றவேண்டும் ? பேசியென்ன பிரயோசனம்? பொய்த்த மனுஷன் பொய்யன் தானே' என்ருள்.
இதைக்கேட்ட தசரதன், “கைகேயி, இந்த இரண்டு வரத்தையும் விட்டு வேறு எந்த இரண்டு வரமாகுதல் கேள்; நான் தருவேன்” என்றன்.
* தம்முயி ரிராமன்மே லாஃணயிட்ட இரண்டு வரமும் இராசா கந்துவிட்டார்! இனிக் கெளசலேமே லாணேயிடுவார்போலும் வேண்டா, வேண்டா; கான் இனி வேறுவரங் கேட்ப்தில்லை; பொய்த்தார் அயோத்தி மன்னவர்; பரதனே முடிசூட்டவேண்டும் , இராமனைப் பதினன்கு வருஷம் காட்டுக்கனுப்ப வேண்டும் ; இஷ்டமில்லேயென்ருல் இஷ்டமில்லை யென்று சொல்லும்.” என்றுள் கைகேயி.
இதைக்கேட்டவுடனே தசரதன், அறிவுகெட்டு மூர்ச்சித்துச் சிறிதுநேரம் மரம்போலக் கிடந்தான். மூர்ச்சை தெளிந்தபின், “கைகேயி! உன்னிஷ்டப் படியே பரதனை முடிசூட்டலாம் ; இரண்டாம் வரக்கைமட்டும் கேளாமல் விட்டுவிடு” என்று அவள் காலில் தன்முடியை வைத்து இரங்தான்.
* கிழடனுக்கு மாய்மாலமெல்லாம் தெரியும்; என்காலில் விழவேண்டா, கெளசலைகாலிற் போய் விழும்” என்று சீறினுள் கைகேயி.
* நான் செய்வது மாய்மாலமன்று , இராமன் என்னுயிர், இராமனைப் பிரிந்தால் என்னுயிர்

Page 14
20 இராமன் கதை
போய்விடும்; எனக்கு உயிர்ப்பிச்சை தா' என்று கெஞ்சினன் தசரதன்.
će இராமனைப் பிரிந்தால் உயிர் போய்விடுமோ? இராமன் விசுவாமித்திரரோடு போனபோது நீர் செத்துப்போனிரோ? அப்போது சாகாத உயிர் இப்போது சாகுமோ? செத்தாற் ருரனென்ன ? வயது எண்பதானது உமக்கு; இன்னும் எத்தனை வருஷம் நீர் உலகத்திலிருக்க வேண்டும்?' என்று சிரித்தாள்.
* பாதகி, நான் செத்தால் உன் மங்கிலியம் போய்விடுமல்லவோ? "கைம்பெண்கைகேயி யென்று உலகம் o_drಓಂr ஏசுமல்லவோ? ’ என்ருரன் அரசன்.
* என் மங்கிலியத்தைக் காக்கத்தான் இராசா உயிரோடிருக்கவேண்டுமாம் ; இராசா உயிரோ டிருக்க இராமன் அயோத்தியிலிருக்கவேண்டுமாம் ; போதும் போதும், கதை ; இராமன் நா?ளக்கு அயோத்தியைவிட்டுப் போக வேண்டும்; அஃ தில்லையேல் கைகேயி நஞ்சு தின் அறு சாவாள்.? என்ருள் கைகேயி.
இன்தக்கேட்டவுடனே ? இனி உன்னிஷ்டம்; இராமனை அழைப்பி; இனி நீ எனக்கு மனைவியல்லை; பரதன் எனக்கு மகனுமல்லன்' என்று சொல்லித் தசரதன் பின்லும் மூர்ச்சித்தான்.
இராமனையழைத்துவர ஏவலாளர் போயினர். தந்தையார் தன்னையழைக்கிருர் என்று கேள்விப் பட்ட இராமன் விரைந்துவந்து கைகேயியந்தப்புரம் சேர்ந்தான்.

6. கைகேயி இராமர்
அக்கப்புரத்தினுள் வந்த இராமன் தன் கங்தை மூர்ச்சித்துத் தரையிற் கிடப்பதையும் கைகேயி அருகில் வாளாவிருப்பதையும் கண்டு, "ஐயோ! ஐயோ! மகாராசா இப்படித் தரையில் மூர்ச்சித்துக் கிடப்பதற்குக் காரணம் யாது?’ என வினவ, கைகேயி, * ஏனுே அறியேன்; இன்றைக்குப் பலமுன்ற யிவ்வாறு மூர்ச்சித்தார்; இன்னுஞ் சிறிது நேரத்துள் மயக்கங்கீர்ந்துவிடும்” என்றுள். இராமன், * மகாராசா என்னை அழைத்தாராமே, காரணங் தெரியுமோ?’ என்றன். கைகேயி, ‘ ஆம் தெரியும்; மகாராசா கோசலநாட்டுக்கு மன்னணுகப் பரகனை நா?ளக்கு முடிசூட்டத் தீர்மானித்துவிட்டார்; இதுவு மன்றி, நீ நாளைக்கே அயோத்தியைவிட்டு ஈரேழாண்டு வனவாசம் செய்யவேண்டும் என்று உனக்குக் கட்டளையிடுகிருரர்; இஃது என் கட்டளையன்று ; உன் கங்தையார் கட்டளை ” என, இராமன் #്പ. ഖTOT
* மன்னவன் பணியன் முகில்
தும்பணி மறுப்ப னே ? என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்ற தன் ருே ? என்னினி உறுதி இப்பால் ?
இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னவிர் கானம் இன்றே
போகின்றேன், விடையுங் கொண்டேன். ? உடனே இராமன் தந்தையின் பாகத்தில்விழுந்து ஈமஸ்கரித்து எழுந்து, கைகேயிக்குத் கெண்ட னிட்டுப் புறப்பட்டான். -

Page 15
கெளசலை இராமர்
இதைத் தாய்க்கும் சீன்தக்கும் சொல்லும்படி கெள சலே கோயிலுட் புகுந்தான் இராமன்.
குழைக்கின்ற கவரி யின்றிக்
கொற்றவெண் குடையு மின்றி, இழைக்கின்ற விதிமுன் செல்லத்
தருமம்பின் னிரங்கி யேங்க, மழைக்குன்ற மனையான் மெளலி
கவித்தன்ன் வரும் என் றென்று தழைக்கின்ற வுள்ளத் தன்னுள்
முன்னெரு தமியன் சென்ருன் இவ்வாறு வந்தமகனைக் கெளசலை கண்டு, மகனே! நீ இப்படி வருவது என்ன காரணம்பற்றியோ?” என்ருள். இராமன், ‘அம்மா, மகாராசா என்மேல் மிக் அன்பு வைத்துளார்; ஆகலால் என் தம்பி பரதனைக் கோசலநாட்டு மன்னனக நாளைக்கு முடி சூட்டுவார் ’ என்ருரன், இதைக்கேட்ட கெளசலே சிறிதும் மன ங் கோணும ல் , 1 சந்தோஷம், சந்தோஷம், நீயாண்டாலென்ன? உன் தம்பி பரதனுண்டாலென்ன? ஒன்றுமெய் பரதன் உன் னிலும் நல்லவன் ; மகாராசா செய்தது சரி; மெத்தச்சரி; நீ இதற்கு வருந்துதல் தகாது’ என்ருள். உடனே இராமன், “ அம்மா, இவ்விஷ யத்தில் நானும் உளங்களிக்கின்றேனேயன்றி மனஞ் சிறிதும் வருந்திலேன் ; நான் வேறு பரதன் வேறு என்று நான் கனவிலும் எண்ணினதில்லை. பரதன் என்னிலும் நல்லவனென்பது எனக்குப் பாலியமுதற்

கெள சலே இராமர் 器
றெரியும். பலவருஷங்களுக்கு முன்னே நாங்கள் 5ால்வேமும் கலைவாசலிலிருந்து அவல் தின்று கொண்டிருந்தோம் ; ஓர் ஏழை மிகப் பசித்துவந்து கன் பசிதீர யாகேனும் தரும்படி எங்களிடம் இரந்தான். நானும் இலட்சுமண சத்துருக்கினரும், எங்களிடத்திலொன்றுமில்லை ; போ, போ ? என்றுேம்; பரதனே தன் மடியிலிருந்த் அவல் முழுவதையுமெடுத்து இரவலனுக்குக் கொடுத்து விட்டான் ; எங்கள் 5ால்வேமுள்ளும் பரதனே நல்லவ னென்பது அன்றுமுகல் எனக்குத் தெரியும். . அன்றியும், இராச்சியபாரங் காங்குதல் எனக்கு 6ாளிகன்று ; அவ்வருத்கத்தினின்றும் மகாராசா என்னை நீக்கினது பேரருளே " என்றன். * நீ சொன்னதெல்லாஞ் சரி’ என்ருரள் கெளசலே. இராமன் : * 5ான் சொல்லவேண்டிய விஷயம் இன்னுமொன்றுண்டு; மகாராசா எனக்கும் ஒரு கட்டளை விதித்திருக்கிருரர் : நான் இன்றே கோசல காட்டைக் கடந்து பதின்ைகுவருஷம் மரவுரிகரித்துத் கவஞ்செய்தல் வேண்டும் என்பதே. " இச்சொல் காய்ச்சின நாராசம்போல கெளசலை செவியிற் புகுந்தது. * இஃகென்ன அநியாயம் 1 இஃதென்ன விபரீதம்! இஃதென்ன கொடுமை?! உன்னை நாட்டை விட்டுத் துரத்த நீ என்ன அக்கிரமஞ் செய்தாய்? கிழவனுக்குப் பைத்தியம் பிடித்தது போலும் ” என்ருரள் கெள சலே. உடனே இராமன், “ அம்மா! இப்படிப் பேசவேண்டா, பைத்தியம் பிடித்தது இராசாவையல்ல, உங்களைத்தான். மகன்மேலுள்ள பைத்தியத்தால் மகாராசாவையும் இகழத்தொடங் தினது உங்கள் வாய்; அகியாயம் விபரீதம் ?

Page 16
2. இராமன் கதை
‘கொடுமை’ என இப்படிப்பட்ட சொற்களால் பத்தின. யொருத்தி கணவனே இகழ்வாளோ? என்தங்கையை இவ்வாறு வேருெருவர்பேச நான் கேட்பேனே? என் சிற்றன்னை கைகேயிசெய்த குற்றந்தா னென்னே ? உங்கள் இயற்கைப்புத்தியும் கணவன்மேற்பத்தியும் தங்கைமேலன்பும் எங்கே போயின ? ஐயையோ ! இதையெல்லாம் உங்கள்வாயிற் கேட்க என்ன பாவஞ் செய்தேனே நான் ?’ என்று கலங்கினன். உடனே கெள சலே, "மகனே! நான் நினைத்தவை பேசினவையெல்லாம் பிழை ; நீ இப்பிழையை மன்னிக்கவேண்டும். ஆனல் ஒன்று சொல்லு கிறேன், கேள்: நானும் இன்றே உன்னேடு காட் டுக்கு வருகிறேன்” என்ருள். இராமன் : “ அம்மா, மகாராசா மூர்ச்சித்துத் தரையிலே விழுந்துகிடக்கர் கண்டேன்; உங்கள் கடமை உடனே அவரிடஞ் சென்று அவருக்குச் செய்யவேண்டிய சிகிச்சை யெல்லாஞ் செய்து அவரை யாற்றித்கேற்றுவதே. இத்தனையாண்டு கணவருைக்கு ஏவல் செய்துவங்க நீங்கள் இன்னுஞ் சிறிதுகாலம் அவரோடிருந்து அவருக்கேவல் புரிவகே உங்கள் கடன். நான் சிறிய இணு மல் லே ன்; மூப்படைந்தேனுமல்லேன் : என்னைக் காத்துக்கொள்ள என்னுலாகும் ; நீங்கள் என்னுேடுவர அவசியமில்லை ; உடனே மகாராசா விடம் போங்கள்; எனக்கு விடைகாருங்கள்' என்ருரன். கெளசலே இராம லுக்கு விடைகொடுத்துத்
தசரதன்பாற் போயினள்.

8. சுமித்திரை சீதை இராம இலக்குமணர்
தீயிடம் விடைபெற்ற இராமன் சீதைபாற்சென்று நடந்ததையெல்லாம் அவளுக்கறிவித்தான். அதற்குச் சீதை, ' எங்கையார் சனகர் இல்லறம் நீங்காமலே துறவு பூண்டவர்; நான் அவர்மகள்; நுந்தையார் நுமது தம்பியார் பரதருக்கு முடிசூட்டினல் நான் வருந்துவேனே? நீர் பதினன்குவருஷம் வனவாசம் செய்வது என்னே வருத்துமோ ? இவையெல்லாம் ஈசன் செயல். நானும் மரவுரிகரித்து உம்மோடு கானகஞ்சேர்வதே பத்தினியென் கடன்" எனப் புகன்ருள். இம்மொழிகேட்ட இராமன், “ சானகி, நீ சொல்வதின் பொருள் உனக்குத் தெரியுமோ? காட்டில் நீ எப்பொழுதாவது வசித்ததுண்டோ? அங்கே வாழும் மக்கள் எப்படிப்பட்டவர்? நீ என் னுடன் வந்து நான் வாழும் வாழ்விற் பங்குபெற வல்லையோ? அங்கு நேரிடும் வருத்தமெல்லாங் தாங்குவாயோ? இவற்றுளொன்றையும் ஆராயாமல் துணிந்த உன் துணிபென்னே?’ என்ருரன். அதற்குச் சீதை, ' இரகுகுலோத்தமரே! நீர் கூறிய கொவ்வொன்றையும் நான் தனித்தனி யாராயவில்லை யென்பது மெய்கான் ; முன்னே நான் காட்டில் வசித்தவளல்லள் ; கா டென் பது எனக்குத் தெரியாது; ஆயினும் பெண்ணுய்ப்பிறந்த நான் ஒன்று அறிவேன்; ஆடவராகிய நீர் அதையறியீர்; பதின்ைகுவருஷம் உம்முடன் காட்டில் வாழ்ந்து உடலை வருத்துஞ் சில வருத்தங்களை யனுபவிப்பகோ அல்லது பதினன்கு வருஷம் உம்மைப் பிரிந்து
4.

Page 17
26 இராமன் கதை
உமக்கு என்ன நேரிட்டதோ, நீர் எங்குற்றிரோ என்பனவற்றில் ஒன்றுமறியாது ஆவியிலே துயருறு வதோ எது பெரும் வருத்தம் ? இதை நீர் யோசித்தி ராயின் நான் வருவதற்குத் கடையொன்றுங் கூறீர்; அன்றியும், சுகத்திலும் துக்கத்திலும் வாழ்விலும் காழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் உன்னைப் பிரியேன்” என்று நீர் சொன்னசொல் இவ்வளவு சீக்கிரம் மறந்தீரோ ? நான் உம்முடன் வருவது திண்ணம் ; வேறு பேசுவதிற் பயனில்லை' என்ருள். * உன்னெண்ணம் இஃதாயின் நீ வா’ என்றன்" இராமன்.
பின் சுமித் திரையின் அந்தப்புரத்திற்கு இராமன் போனன். நிகழ்ந்தனவற்றையெல்லாம் அங்கே யவளுக்கு இராமன் கூற, அருகிற் கேட்டுக் கொண்டிருந்த இலக்குமணன், “ ஒகோ இப்படியா காரியம் ? இலக்குமணனுெருவ்ன் இங்கிருக்கிருர னென்பதை எல்லாரும் மறந்தார்போலும் 1 பரதன் முடிசூட்டப்படுவதில்லே ; இ ரா ம ன் காட்டுக்குப் போவதுமில்லை; இராமனுக்கு நாளை நானே முடி சூட்டுவேன்; என்னைத் தடுக்க வல்லவரெல்லாரும் ஒருங்குசேர்ந்து வரலாம் ; இதை நாளைக்குப் பாருங்கள்’ என்று சீறிச்சினந்து, பிரளயகாலத்து வடவாமுகாக்கினிபோல விளங்கினன். அதைக் கண்ட இராமன் ‘இலக்குமணு, உன் சகோதர சிநேகத்தை மெச்சினேன்; நீ சொல்லியதைச் செய்ய வல்லவனென்பதிலும் எனக்கையமின்று; ஆயினும் ஒருகாரியத்தை மறந்தாய்நீ. பரதனுக்கு முடிசூட்டுவதற்கும் காட்டுக்கு "நான்போவதற்கும்

சுமித்திரை சீதை இராமலக்குமணர் 27
நான் சம்மதித்து வாக்குக்கொடுத்துவிட்டேன்; பிதிர் வாக்கிய பரிபாலனஞ்செய்யப் பிறந்தான் இராமன் என்னும் ஒரு சொல்லே நான் நாடுவது. அயோத் விக்கு மன்னனுக முடிசூட்டப்படுவதைப் பெரிதென்று ான் மதித்தேனல்லேன். ஆகவே நீ வேறென்ன செய்யினும் என்மனத்தையும் மாற்ற வல்லாயோ ?? என்ருரன். உடனே இலக்குமணன், கண்களில் நீர் சொரிய இராமன் அடியில் விழுந்து ‘அண்ணு ! கீங்கள் இப்படிச் சொல்லின் நான் வேறென் செய்வேன் ? ப தி )ை ன் கு 1ெ ரு ஷ மும் 5ானும் உங்களோடுவந்து உங்களுக்குத் தொண்டுசெய்வதே என் பிறப்பின்பேறு’ என்று அழுதான். விசனத்தி லாழ்ந்த தம்பியை இராமன் கையினலே தூக்கி யெடுத்து 8 மகாராசா என்னேக் காட்டுக்குப் போகச் சொன்னரேயன்றி, உன்னையும் போகச் சொல்ல வில்லை ; நீ இங்கிருந்து இங்குள்ளார் யாவரையும் ஆதரி’ என, இலக்குமணன், “முன்னே விசுவா மித்திரர் வந்து உங்களை அழைத்தபோது என்னையும் அழைத்தாரோ? அழையாவிடினும் 5ானும் உங்க ஞடன்வர மகாராசா சம்மதித்காரே; அப்படியே! இப்பொழுதும் மகாராசாவிடஞ் சென்று கான் அனுமதிகேட்க இது சமயமன்று; இங்கு அருகில் என் தாயார் இருக்கிருரர்கள்; அவர்கள் சம்மதம் பெற்றுக்கொண்டு நானும் காட்டுக்கு வருகிறேன்.” என்ருன். இதைக்கேட்ட சுமித்திரை 'மகனே இலக்குமண! நீ சொல்வது சரி, உன்னிஷ்டப்படி செப்; நீ போகவில்லே காட்டுக்கு; இராமனிருக்கு மிடமே அயோத்தி ; பதினன்கு வருஷ ம் நீ இராமனுேடு அயோத்தியிலிருப்பாய்; இராமனில்லாக

Page 18
2S இராமன் கதை
அயோத்தியே காடு; Bாங்களே பதினுலுவருஷம் காட்டிலிருக்கப்போகிறோம். இலக்குமண, இராமனை உன்னண்ண்னென்றெண்ணுதே ; உன்ண்ைடவன் அவன்; அவனே தசரதச்சக்கரவர்த்தி. சீதையை உன் மைத்துணி யென்றெண்ணுகே ; அவளே உன் காய்; கெளசலை கைகேயி சுமித்திரை மூவரும் ஒர் உருஎடுத்துவங்கால் அவ்வுருவே சீதையென்று கினை ; நீ இராமனுக்குத் தம்பியல்லை; அவன் அடிமை. நீயும் நானும் செய்த புண்ணியத்தா லன்ருே உனக்கு இப்பேறு வந்தது! ஊர்மிளையை விட்டுப்போவதற்கு வருந்தாதே; என் கண்மணி போல அவளை நான் காப்பேன். அவளும் எனக்கு உதவி செய்வாள். எல்லாம்வல்ல ஈசன் உன்னை ஆசீர்வதிக்க " என்ருள். இதைக்கேட்ட இராமன் * கெள சலே என்னைப்பெற்ற தாயார் ; கைகேயி என்னை வளர்த்த தாயார்; சுமித்திரை என்னைக் காக்குங் தெய்வம்" என்று அவளை வழிபட்டு விடை பெற்றபின், இராமன் சீதை இலக்குமணன் மூவரும் தம்முடையைக் களைந்து மரவுரிகரித்து, சுமந்திரன் கங்கைக்கரை வரையிலும் வழிகாட்ட, அயோத்தியை விட்டுப் புறப்பட்டனர்.
14 சிரை சுற்றித் திருமகள் பின்செல, மூரி விற்கை யிளையவன் முன்செஸ், காரை யொத்தவன் போம்படி கண்டவள் வூரை யுற்ற துணர்த்தவு மொண்ணுமோ ?? சுமந்திரன் தசரதனது மந்திரிமாருள் பிரதம மந்திரி; அரசனுக்கு ஆருயிர்நண்பன் ; இராமலக்கு மணரும் சீதையும் கங்கைக்கரையையடைந்தவுடன்

சித்திரகூடம் - 29
ஓரோடத்திலேறி ஆற்றைக் கடந்தனர். சுமந்திரன் கங்கைக்கு வடகரையில் நின்றுவிட்டான். இராமன் சுமந்திரனைப் பார்த்துத் தானும் தம்பியும் சீதையும் கோசலநாட்டி னெல்லையைவிட்டு ஒட மே நறிச் சென்றதை மகாராசாவுக்கறிவிக்கும்படிசொன்னன். சுமந்திரன் இராமனிடம் விடைபெ ற்று அயோத் திக்குத் திரும்பினன்; நகரம் சேர்ந்தவுடன் தசரத னிடம் இராமன் நாட்டினெல்லேயைவிட்டுக் கடந்து சென்றதை யறிவித்தான். இதைக்கேட்ட தசரதன் அக்கணமே உயிர்நீத்தான்.
9. சித்திரகூடம்
இராமன் கங்கையைக் கடக்க ஓடத்தைச் செலுத் தினவன் குகன். இவன் ஆற்றின் தென்கரையில் வசிப்பவன். தன் ஒடத்தில்வந்த ஆடவரிருவரும் கோசலநாட்டு இராசகுமாரரென்றும், பெண் அவரில் மூத்தவன் மனைவியென்றும், மூத்தவனுக்குப் பெயர் இராமனென்றும், இவனே அ ர ச ன் நாட்டி னெல்லேயைவிட்டு வெளியே போம்படி கட்டளை பிட்டானென்றும் சுமந்திரன்சொல்ல அறிந்த குகன் மூவரையும் தன் சிறுகுடிலுக்கழைத்துச்சென்று கன்னலியன்றமட்டும் அன்போ டு ப சரித் தான். இதைக்கண்ட இராமன் குகன் அனுரியனும் புறநாட்டுக் குடியுமாயிருந்தும் அன்னிய ரா கிய கங்களை உள்ள்ன்போடு உபசரித்தகைக்கண்டு அ:ென்பா லுறவுபூண்டான். * குகனே, நீ என் தோழன்; என் தம்பி இலக்குமணன் உனக்கும்

Page 19
30 இராமன் கதை
தம்பி ; என்மனைவி சிதை உனக்கு மைத்துணி. நீ எங்களுக்குச் செய்க இந் நன்றியை நாங்கள் ஒரு 5ாளும் மறவோம்’ என்ருரன் இராமன். அதைக் கேட்ட குகன், 'அன்னியர் எவரேயாயிலும் அவரை உபசரிப்பது எங்கள் வழக்கம்.
* விருந்து புறத்ததாத் தாலுண்டல் சாவா மருத்தெனினும் வேண்டற்பாற் றன்று. '
s
என்பது எமதுகோள். நீவிரோ சாமானிய மனசு ரல்லீர். உங்களை என்குடிலுக்கு வரச்செய்கவை: உங்கள் தீவினைப்பயனும் என் நல்வினைப்பயனுமாம். அடியேனே நீங்கள் மறவாமல், திரும்பி அயோத் திக்குப் போகும்பொழுது என்னிடம் வரல்வேண்டும். இதற்கு \ ஒரு காகத்துக்கப்பால் சித்திரகூடம் என்னும் மலேயுள்ளது; அதன் சாரல் நீங்கள் வசித் தற்குத் தக்க இடம். அங்கேயுள்ள பலவகைக் காட்சி மன த் து க் கின் பங் தருவன. அங்கு சென்று உறையுங்கள்” என்ருரன். அவன் சொல்லிய வண்ணமே மூவரும் சித்திரகூடஞ் சென்றனர். அம் மலைச்சாரலில் இலக்குமணன் ஒரு சிறுகுடில் சமைத்துத் தழையால் வேய்ந்து முடித்தபின் மூவரும் ஆங்குறைந்து சிலநாட்கழித்தனர். இராம இலக்குமணருக்குக் காட்டு வாழ்வு புதிதன்று. சீதைக்கு இது புதிதாயினும் சித்திரகூடத்தினழகும் இராமனது சகவாசமும் அவளுக்கு ஆனந்தத்தை விளைந்தன. மலேச்சாரலிற் கிடைத்த கந்தமூல பலாதிகளே இவருக்கு உணவாயின. -

10. அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள்
தி சரகன் மரணமுற்றவுடனே அவன் சரீரத்தை எண்ணெய்க் காப்பிட்டுவைத்து, உடனே பரதனும் சத்துருக்கினனும் வரும்படி கேகயநாட்டுக்கு ஒலே போக்கினர். அவ்வோலேயில் தசரதன் இறந்துபட்டா னென்ற செய்தியாவது இராம லக்குமணரும் சீதையும் காட்டுக்குப்போய்விட்டாரென்ற செய்தி யாவது எழுதவில்லை. ' உடனே அயோத்திக்கு மீளவேண்டும்’ என்று கண் டி ருந்த தேயன்றி காரணம் யாதும் சொல்லப்படவில்லே. ஒலே கொண்டு போன ஆளும் பரதனுக்காவது சத்துருக்கினனுக் காவது அயோத்தியில் நிகழ்ந்த சம்பவமொன்றும் தெரிவிக்கலாகாது என்று வற்புறுத்தப்பட்டது. ஒலேயைக்கண்ட இராசகுமாரரிருவரும் கேகய மன்ன னிடம் விடைபெற்றுக்கொண்டு உடனே திரும்பினர்.
அயோத்தி இலக்குமியில்லாத தாமரைமலர் போலப் பொலிவழிந்து காணப்பட்டது. அர மனேக்குட் புகுந்து கொலுமண்டபஞ் சேர்ந்து அரசனைத்தேட, அவனே அங்குகாணவில்லை. இராம ல்க்குமணரைத்தேட அவருங் கண்ணுக்ககப்பட்டிலர். கெளசலை சுமித்திரை எங்கு மறைந்தனரோ தெரிய வில்லை. ஈற்றில் க்ைகேயிமட்டும் புலப்பட்டாள். பரதன் தாயைக்கண்டவுடன் அவளிடம் செல்ல, அவள் * மகனே, கேகய5ாட்டிலுள்ளவர&னவரும் சுகத்துடனிருக்கிருரர்களா? அங்கே நீ கழித்த நாளெல்லாம் உனக்கு இன்பங் தந்தனவா?’ என்று
வினவினுள். * அங்கேயொருவருக்கு மொருகுறையு

Page 20
32 - இராமன் கதை
மில்லை. நாங்களும் பலவகை யின்பங்களே யனு பவித்தோம். அவை கிற்க, மகாராசா எங்கே? அண்ணனெங்கே? இலக்குமணனெங்கே? மற்ற்ை யன்னையரிருவருமெங்கே? அரமனை அழகழிந்து இப்படியிருப்பதற்குக் காரணமென்ன? நான்கண்ட கனவு மெய்த்தகோ ? என்மனம் கலங்குகிறது ஏன் எங்களை அழைப்பித்தீர்கள்? எல்லாஞ் சொல்லுங்கள்; ஒன்றுமொளிக்கவேண்டா” என்று பதற்றத்துடன் கேட்டான் பரதன். கைகேயி, * உன்னை வரும்படி அழைப்பித்த5ான் உனக்கு எல்லாஞ் சொல்லேனே? நான் உனக்கு எப்பொழு த்ேனும் யாதும் மறைத்ததுண்டோ?’ என, "சரி, சரி, சொல்லுங்கள், சொல்லுங்கள்’ என்ருரன் பரதன். 'மகாராசா இறந்து இன்றைக்கு ஆறு நாள். ’ இகைச்செவியுற்ற மைந்தரிருவரும் கண்ணிர் விட்டழுதனர்; சிறிதுநேரம் ஒன்றும் பேசிற்றிலர். அதன்பின் பரதன், ‘அண்ணனெங்கே? என்ருரன்.
* மகாராசா இறக்க நாலுநாளைக்குமுன்னமே இராமன் அயோத்தியைவிட்டுக் காட்டுக்குப் புறப் பட்டான்."
*அண்ணன் காட்டு க்குப் போகவேண்டிய காரணமென்ன? விசுவ்ாமித்திரர்வந்து மறுபடியும் கூட்டிக்கொண்டு போனுரோ?”
* விசுவாமித்திரர் வரவில்லை; வேருெருவரும் வரவில்லை. நானே இராமனைக் காட்டுக்கனுப் பினேன்.”
* ஏன், ஏன்? சொல்லுங்கள் சொல்லுங்கள்; சும்மா ஏன் நிற்கிறீர்கள்??

அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள் 33
* மகனே பரதா, நான் உன் தாயல்லேனே ?” é é அஃதெல்லாமிருக்க : அண்ணனை ஏன் காட்டுக் கனுப்பி னிர்கள் ?” w
* இன்றைக்குப் பத்துநாளைக்குமுன்னே இராம னுக்குப் பட்டாபிஷேகம் எனத் தீர்மானித்தார் LD5T TT 3F (T. ”
* அப்படியானற் காட்டுக்குப் போவானேன்?"
* என்னை உன்னன்புதூண்டக் கோசலநாட்டை உனக்காக இரந்தேன்; மகாராசா உன்னையே முடிசூட்டுவதாக எனக்கு வாக்குத்தந்தார். '
தாய் இகைச்சொல்லக்கேட்ட பரதன், ? ஐயோ! பாவி, உன்னலன்ருே மகாராசா இறந்துபட்டார்! இராமனை வனம் போக்கினயின் தசரதர் உயிரோ டிருப்பாரென்று எண்ணினயோ? முடிசூட்டப்பட விருந்த இராமனைக் காட்டுக்கு அனுப்பினயே! இந்த விபரீகபுத்தி உனக்கு எப்படி வந்தது? இராம லுயிரோடிருக்க நான் அரசாள்வேனென்று எண்ணினயே! உன் மடமை என்னே ! உன் துர்க்குணமென்னே ! உனக்கு மகனய்ப்பிறக்க என்ன பாவஞ் செய்தேனே?’ என்று சிறி, உடனே கைகேயியிருந்த இடத்தை விட்டுக் கெளசலைகோயி லுக்குச் சென்ருரன். அங்கே கைம்மையுற்று மகனைப் பிரிந்து வாடியிருந்த கெளசலேயைக் கண்டவுடனே ஓடி, அவளடியில் அடியற்ற மரம்போல விழுந்து தேம்பித்தேம்பி யழுதான் பரத ன். உடனே கெள சலே கன். கையாலெடுத்து மார்போடஃணத்து, * மகனே, இனியழுது ஆவதென்னே? எல்லாம் ஈசன்
5

Page 21
34 இராமன் கதை,
செயல்’ எனத்தேற்றினுள். பரகன் கெளசலை தேற்றவும் கேருது, “ அம்மா, கைகேயி செய்த செய்கைக்கு நான் முன்னமே உடன்பட்டிருந்தேன், அல்லது இப்பொழுதாயினும் உடன்பட்டேன் என்று எண்ணினீர்களோ ? இராமன் உயிரோ டிருக்கப் பரகன் நாடாள்வான் என்று நினைக் கிறீர்களோ ? உங்கள்மறுமொழி என்னைத் தேற்றும் அல்லது கொல்லும் ; காத்திருக்கிறேன், பேசுங்கள்' என்ருரன். உடனே கெள சலே, * களங்கமற்ற பாலா, உன்னை நானறியேனே? கைகேபி செய்தவை யெல்லாம் உனக்குச் சொல்லாமலே செய்தாள். அவளும் பலநாள் நினைத்துச் செய்த செயலல்ல இவை. யாராலோ அணுப்பப்பட்டுச் செய்தாள்ஏழை. நடந்தவை நடந்துபோயின; இராமன் காட்டுக்குப் போய்விட்டான். பதிலுைவருஷம் கோசலநாட்டில் அடியெடுத்துவையான்; ஆதலால் நீயே இந்தBாட்டை ஆளல் வேண்டும்’ என்றுள். இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், பாகன் கேகய5ாட்டி னின்றும் வந்துவிட்டான் என்று கேள்வியுற்ற வசிஷ்டமுனிவர் பலவிடங்களில் அவனைத்தேடியுங் காணுமல் ஈற்றில் கெளசலேகோயிலுக்கு வந்து, கெள சலையும் பரதனும் சம்பாஷிப்பதைப் பார்த்து, கெள சலே சொன்ன மறுமொழியைக் கேட்டுக் கொண்டு நின்றார். அவள் பேசி முடித்தவுடனே வசிஷ்டர், 'ஆம் ; பரதா, உன் காயார் சொல்வது மெய் ; எல்லாம் ஈசன்செயல்; நீ கோசலநாட்டுக்கு முடிவேந்தவைகே இப்போது உன் கட்மை’ என்ருரர். உடனே பரதன், வசிஷ்டர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, ‘அடிகள் திருவாய்மொழி

அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள் 35
யையும் அன்னை கெளசலேயாரின் திருவாசகத்தையும் கட்டிப் பேசுகிறேனென்று நினைக்கவேண்டா ; நாளைக்கு என் கங்கையாருக்குச் செய்யவேண்டிய சரமகிரியைகள் யாவும் செய்துமுடிப்பேன்; அடுத்த நாள் அண்ணனைத்தேடிக் காட்டுக்குப் போவேன்; மற்றவையெல்லாம் அகன் பின் பார்க்கலாம்; இராமன் உயிரோடிருக்கப் பரதன் முடிசூடுவதில்லை, இது சத்தியம் ' என்ருரன். அப்படியே அடுத்தநாள் தசரதச்சக்கரவர்த்திக்கு ஈமக்கடன்கள் நிறை வேறின. அடுத்தநாள் பரதன் காட்டைகோக்கிப் புறப்பட்டான் பின்னே அன்னையர் மூவரும் சத்துருக்கினனும் வசிஷ்டரும் மங் திரி மாரும் நாற்படைகளோடு படைத்தலைவரும் போயினர். அனைவரும் கங்கையைக் கடந்து தென்கரை சேர்ந் கனர். அங்கு நின்ற குகன் வந்தவ ரின்னரென் 0றிந்து, அவரிடஞ்சென்று, பரதனை நமஸ்கரித்து, நான் கு கனென்றும் இராமலக்குமணரையும் சீதையையும் இக்கரையிற் சேர்த்தவன் தானே என்றும் மூவரும் சித்திரகூட மலேச்சாரலில் தங்கி யிருக்கிருரரென்றுஞ் சொன்னன். பரதனும் கூட வந்தவரும் கு கன் சொன்ன வழியைக்கேட்டு இராமனே நாடிச்சென்றனர். சித்திரகூடமலையி லொருமரத்தின் கிளை யிலிருந்த இலக்குமணன், தூரத்திலே வரும் பரதனையும் சேனைகளையுங்கண்டு, வருபவன் பரதன்ருரனென்று மட்டிட்டு, உடனே சென்று இராமனுக்கிதையறிவித்தான் ‘அண்ணு, கைகேயி நம்மைக் காட்டுக்குத் துரத்தினள். அவள் மகன் நம்மைக் காட்டிலுமிருக்கவிடான்போலும் ! பாதகன் படைகளோடு வருகிருரன் ; வருக பரதன்;

Page 22
36 இராமன் கதை
வருக சேனைகள் ; விசுவாமித்திர முனிவர் கற்பித்தி வித்தையால் இவரெல்லாரையும் நான் ஒருவனே அதம்பண்ணுவேன்; இல்லையேல் என்பெயர் இலக்கு மணனன்று.” இதைக்கேட்ட இராமன் விலாப் புடைக்க நகைத்து, ' இலக்குமண! நீ இவ்வளவு மடையனென்று நான் எண்ணினதில்லை ; போ, போ; பரதனை நீ இன்னுமறிந்தாயில்லை, பரதன் வந்தபின்னுயினும் நீ யவனை அறிவாய்; நீ உன் ண்ைமையை அடக்கு ; எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுவேன். இப்பொழுது நீ இங்கு சீதையோடு இரு’ என்றுசொல்லிப் பரதனை எதிர்நோக்கிச் சென்றன். இராமனைக்கண்ட பரதன் காக்கத்தைக் கண்ட இரும்புபோல அவனே அணுகி அவனடியில் விழுந்து தெண்டனிட்டான். பின் இராமனவனைத் தூக்க எழுந்துநின்று, 'அண்ணு! கைகேயி செய்த தெல்லாமறிந்தேன்; அவள்செய்த குதுக்கு நான் உடன்பட்டவனல்லேன் ; இஃது அன்னே யார் கெளசலையார் அறிவர்; நீங்களும் அறிவீர்களோ?" என்ருரன். அதற்கு இராமன், 'அன்னே யார் கைகேயியார் ஒருகுதுஞ் செய்தவரல்லர்; என்மே லுள்ள அன்பினுல் நான் ஈடேறவேண்டுமென்றே இவ்வாறு செய்தனர்; அஃதெவ்வாருரயினுமாகுக, நீ இவ்விஷயமொன்றும் அறியாய் என்பது நான் நன்கறிவேன்; இதனை ஒருவர் எனக்குச் சொல்ல வேண்டுமோ? என்ருரன். ப்ரகன், ‘ஒருவரிடத்துங் தீங்குநினையாத உங்களுள் ளம் கை கே யி யின் தீங்கையும் கண்டிலது; உங்களுக்கு இக்கொடுமை செய்தவள் கணவனுரையும் கொன்ருள். தசரதச் சக்கரவர்த்தி யிறந்து இன்று பதினுன்கு பகல்

அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள் 37
கழிந்தன. நாட்டையாள வேந்தனில்லை. நீங்கள் மீளவேண்டும்’ என்ருரன். தசரதன் இறந்ததைக் கேட்ட இராமன், புண்பட்ட நெஞ்சினனுய் வருந்தி, பின் அன்னையர் மூவரையும் வணங்கி, வசிஷ்டரைத் கொழுது, சத்துருக்கினனைத் கழுவி, மந்திரிமாருக்கும் படைத்தலைவருக்கும் முகமன்கூறி, எல்லாரையுஞ் சித்திரகூட மழைத்துச்சென்ருரன். அங்கு சீதையும் இலக்குமணனும் வந்து, வந்தவரை வணங்கினர். இதன்பின் சகோதரர் நால்வரும் த ங்  ைத க்கு அந்தியேட்டி செய்தனர். அக்தியேட்டி முடிந்தபின் சுப சுவீகரணம் நடந்தது. அடுத்தநாள் பரதன் இராமனே அயோத்திக்குவந்து அரசியலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினன். இராமன் சிறிது மி ைசக்தி லன் . கைகேயி வந்து கான்செய்த குற்றத்தை இராமன் மன்னிக்க வேண்டுமென்று வேண்டினள். இராமன், ‘அம்மா, நீங்கள் செய்தது குற்றமென்று நான் நினைப்பினன்ருே மன்னிப்பது ? எனக்குக் குற்றமொன்றுஞ் செய்யாதிருக்க நான் மன்னிப்ட் தெ த னை?’ என்ருரன். வசிட்டரும், * இராமா! நீ குணாத்திற் பெரிய ன் , நாங்கள் எல்லேமும் கோசலநாட்டார் யாவரும் விரும்பி உன்னை யழைக்கிருேரம் ; நீ வந்து எங்களையாளல் வேண்டும்” என்ருரர். * சுவாமி, பிதிர்வாக்கிய பரிபாலனஞ்செய்வதையே கடகைக்கொண்ட நான் எப்படி யரசாளலாம்?’ என்ருரன் இராமன். உடனே பரதன், ‘அண்ணு, எனக்குத் தங்கையார் தந்த அரசை என்னிடமிருந்து நீங்கள் பறித்தாலன்ருே உங்களைப் பழி சாரும் 2 மகாராசா இராச்சியத்தை எனக்குத் தந்தார். இராச்சியம் என்னுடையது;

Page 23
38 இராமன் கதை
என்னிராச்சியத்தை நான் உங்களுக்குத் தந்தால் நீங்களதை ஏற்றுக்கொள்ளலாகாகோ ? ஏற்றல் இழிவுண்டோ?’ என்று அழுதான். உடனே இராமன், ‘பரதா! அழாதே, உன்னன்பிருந்தவா றென்னே! உன்னன் பாற் பிணிப்புண்டேன்; நீ கொடுக்கும் இராச்சியத்தை நானேற்பதில் இழிவொன்றுமில்லே ; நீ கொடுக்க நான் ஏற்றுக் கொண்டேன்; இது சரி. ஆயினும், பதிநான்கு வருஷம் நான் காட்டில் வாழவேண்டுமென்பது எந்தையார் கட்டளை ; அதை மீறலாகாது. நீ போய்ப் பதினுன்கு வருஷம் எனக்காகக் கோசலநாட்டை ஆள் ; பதினன்கு வருஷம் முடி ந் தவுடனே நான் அயோத்திக்கு வந்து உன்னிடம் அரசு பெற்றுக்கொள்ளுவேன். இதற்குமேல் என்னல் ஒன்றுமாகாது’ என்ருரன். பரதன் இதைக்கேட்டு மகிழ்ந்து, ‘அண்ணு, உங்கள் சித்தம் என்பாக்கியம் ; நானிப்பொழுதே திரும்பிப்போகிறேன்; ஆயினும் இப்பதினுலுவருஷம் அரசனென்ற பெயர்வகிக்க வாவது சிங்காசனத்திலிருக்கவாவது, முடிகரிக்க வாவது என்னலாகாது. உங்கள் மிதியடியைக் கொடுத்தல்வேண்டும். நான் அதைக்கொண்டுபோய்ப் பட்டாபிஷேகஞ்செய்து அதைச் சிங் கா சனத் தி லிருத்திவிட்டு அயோத்திக்கருகில் நந்திக்கிராமம் என்னும் ஊரிலிருந்து இராச்சியத்தின் காரியங்களைப் பார்வையிடுவேன். நீங்கள் அயோத்தியைவிட்டுப் புறப்பட்டநாள்முதல் பதினன்குவருஷம் முற்றுப் பெறும் தினத்தில் உங்களை நான் அயோத்தியிற் காணவேண்டும். நீங்கள் அன்று அங்கு இல்லையேல் உடனே உயிர்துறப்பேன்; இது சத்தியம் ” என்று

வனவாசம் 39
கடறினுன், இராமன் அதற் கிணங் கித் தன் பாதுகையைக் கொடுக்கப் பரதன் கொண்டுபோய் அதற்கு அயோத்தியிற் பட்டாபிஷேகஞ்செய்து சிங்காசனத்திருத்திவிட்டுத் தான் போய் நந்திக் கிராமத்தில் வாழ்ந்தான்.
11. வனவாசம்
பரதன் பரிவாரத்துடன் போயினபின் தாசரதியும் சானகியும் இளையவனும் சிலகாலம் சித்திரகூட மலையிற்றங்கி வாழ்ந்தனர். அவர்களுறைந்தவிடத்துக் கருகே பல ஆச்சிரமங்களிருந்தன. அவற்றில் இருடிகளும் இருடிபத்தினிமாரும் மாணவர் சூழ வேதமோதுதல் ஒதுவித்தல் எரியோம்புகல் கவஞ் செய்தல் முதலியவற்றிற் காலங்கழித்து வந்தனர். மூவரும் இவ்வாச்சிரமங்களைச் சந்தித்து, முனி வரையும் பத்தினிகளையும் வணங்கி, அவராலுபசரிக் கப்பட்டு, யாதொரு கவலேயுமின்றிப் பொழுது போக்கினர்; பெரியோரிடத்தும் தம் உடன்மாணவ ரிடத்தும் பல பாடங்களைக் கற்றுக்கொண்டனர். ஆச்சிரமங்களிலுள்ளவருக்கு இயன்றமட்டும் எவ் வகையிலும் பணிவிடைசெய்து மகிழ்ந்தனர். ஆச் சிரமவாசிகளும் இம்மூவரும் கங்களோடிருந்ததா லுவகைகொண்டனர். இப்படிச் சில வருஷங் கழிந்தபின் சித்திரகூடத்தைவிட்டுக் கென்றிசை நாடி விந்தியமலையைக் கடந்து கண்டகாரணியஞ் சேர்ந்தனர். தெற்கே வரவர ஆரியர் அருகவும் திராவிடர் பெருகவும் தலைப்பட்டனர். சிலகாலம்

Page 24
40 இராமன் கதை
கோதாவரியாற்றங்கரையில் வசித்து மகிழ்ச்சியுற் றனர். அங்கிருக்கையில் விராகன் என்னுமொரு கொடியன் மூவரையுங்கண்டு சீதைமேல் மோகங் கொண்டான்; அவளோடிருந்த ஆட வரிரு வரும் தன்னிலும் வலி குறைந்தா ரென் றெண் ணி மைதிலியைத் தூக்கித் தன் கோள்மே லிருத்திக் கொண்டு ஓடின்ை. அதைக்கண்ட இராமலக்குமணர் அவனைப் பின்தொடர்ந்து சீதையை மீட்டனர். விராதனைக் கொன்ருன் இராமன். முன் விசுவாமித் திரர்செய்த யாகத்தை அழிக்கவந்தவருள் தாடகை யையும் சுபாகுவையும் இவர்கள் கொன்றது முன் கண்டுளோம். இப்பொழுது வனவாசகாலத்தில் இ ரா ம ன் கையால் கொலேயுண்டிறந்தவர்களில் முதல்வன் விராகனே. வேருெருநாள் தமிழைெருவன் கழுகுக்கொடியோன் இங்குவந்தான். வனத்திலிருந்த ஆரியர் மூவரையும் சிறிதுற்றுநோக்கி, ' நீவிர் வடநாட்டீர்போலும்! இங்குவந்த காரணம் யாதோ?” என வினவினன். அதற்கு இராமன், ' நாங்கள் கோசலநாட்டேம், எங்கள் கங்கை தசரதர்; அவர் இறந்துபோயினர்; என் கம்பி பரதன் இப்பொழுது இராச்சியவிஷயங்களை மேற்பார்க்க, நான் என் மனைவி சீதையோடும் தம்பி இலக்குமணனேடும் அரணியசஞ்சாரஞ் செய்து வருகின்றேன்; என் பெயர் இராமன்’ என்றன்.
இதைக்கேட்ட தமிழன், * என்பெயர் சடாயு; உங்கள் தகப்பனர் தசரதர் எனக்கு உற்ற நண்பர்; பலமுறை தசரதர் சத்துருக்களோடு யுத்தஞ்செய்யப் போனபோது என்னையுங் தம்முடன் அழைத்துச்

வனவாசம் 41
செல்ல, ஆரிய மன்னராகிய அவரும் தமிழனகிய நானும் ஒருவருக்கொருவர் அருகில்கின்று உடன் , பிறந்தார்போல யுத்தஞ்செய்திருக்கிறோம். ஒருநாள் வலியனை மாற்ருரணெருவனேப் போர்க்களத்திலே கொன்றபின் தசரதர் என்னைநோக்கி, சடாயு, நீ என் உயிர், நான் உன் உடல் ' என்று கூறினர். உடலைவிட்டு உயிர் போவது கண்டுளோம்; உயிரை விட்டு உடலைக்கொண்டுபோன தமன் மடையன். ஐயோ! இனி என் நண்பனை என்றுகாண்பேனுே? கொடையிற் கற்பகத்தையும் தண்மையிற் சங் திரனையும் வென்றவர்; சத்தியத்தில் தம் முன்னேன் அரிச்சந்திரனுக்கு எவ்வாற்ருனுங் குறைந்தவரல்லர். என் நண்பரைப் பிரிந்த கலக்கமொருபாலிருக்க அவர் பிள்ளைகளாகிய உங்களைக் கண்டது எனக்கு மெத்தச் சந்தோஷம். நீங்கள் மூவிரும் என் பிள்ளைகள் ; நான் உங்கள் தகப்பன் ; நீங்கள் இங்கே வசிக்கும்பொழுது என்னுலியன்ற உதவி உங்களுக்குச் செய்வேன்' என்றுசொல்லி அவர் களைத் தழுவி ஆசீர்வதித்துவிட்டுப் போயினன்.

Page 25
12. சூர்ப்பணகை
மூவரும் பஞ்சவடியென்னும் இடம்போய் அங்கு சிலபகல் கழித்தனர். இவரிருந்தவிடத்துக்கருகே ஒரிளங்கைம்பெண் வாழ்ந்தனள். இவள் பெயர் சூர்ப்பணகை. இவள் இலங்கைவேந்தன் இராவணன் தங்கை. இவள் கைம்மையுற்றபின் இலங்கையை விடுத்துப் பஞ்சவடியையடுத்துத் தன்னுறவினர் சிலரோடு வாழ்ந்துவந்தாள். இராமலக்குமணரும் சீதையும் இங்குவர இவர்களைப் பலமுறை காட்டிற் கண்டனள். இவரோடு பழகி நட்புக்கொள்ள விரும் பினள். பல முறை இவரிருக்குமிடஞ் சென்று இவரோடு அளவளாவி வருவள். இளங்கைம்பெண் ணுகிய சூர்ப்பணகை இராசகுமாரரின் பேரழகைக் கண்டு இருவரிலொருவரை மணஞ்செய்துகொள்ள விரும்பினள். தமிழருட் கைம்பெண்கள் மறுமணஞ் செய்வது தவறென்று விலக்கப்படவில்லை. ஆகவே சூர்ப்பணகை மறுமண ஞ் செய்ய விரும்பியதில் யாகொரு தப்பிதமுமில்லை. மனைவி உயிரோ டிருக்க ஆடவன் வேறு மனைவியரை மணஞ் செய்வது தவறென்ற கொள்கையுமில்லை. ஆகவே இராமன் மனைவி யுடையனேனும் விருப்பமாயின் சூர்ப்பணகையையும் விவாகஞ் செய்து கொள்ளலாம். தங்கைக்கு மனைவியர் மூவரா யின் மைந்தற்கு மனைவியரிருவர் வாய்ப்பது பிழையன்று என்று எண்ணினள் சூர்ப்பணகை. நாளுக்குநாள் காதல் * வடம் என்னும் வடமொழிக்கு ஆல் என்பது தமிழ், பஞ்சவடி யென்பது 8யா லடி எனப் பொருள்படும். அங்கு 8ந்து ஆல மரங்கள் இருக்சனாைதலால் இப்பெயர் வந்தது போலும்.

சூர்ப்பணக்ை 43
வளரச் சூர்ப்பனகை தன் மனக்கோளை மெல்ல இராமனுக்கறிவித்தாள். சந்திரன் களங்கமுடையது ; இராமசந்திரன் நடக்கையிலும் சில களங்கம் காணப் படுகின்றன. இராமன் சூர்ப்பனகையை மணந்து கொள்ளச் சிறிதும் எண்ணமிலானுயினும் அவளோடு சரசசல்லாபஞ் செய்வது தவறென்று கருதிை னல்லன், தன் மனைவி பொல்லாதவளென்றும் தான் வேருெ ருத்தியை விவர்கஞ்செய்யின் புலிபோலச் சீறுவாளென்றும் இலக்குமணனுக்கு மனைவியில்லையென்றும் (இலக்குமணன் மனைவி ஊர் மிளை உயிரோடிருப்பது இராமனறிந்த விஷயமே.) அவனை விவாகஞ்செய்துகொள்வதே புத்தியென்றும் சூர்ப்பணகைக்குச் சொன்னன். இதை மெய்யென்று நம்பி யாதொரு கபடமுமின்றிச் சூர்ப்பனகை இளையவனிடம்போய்த் தன் காகலே அறிவித்தாள். இலக்குமணனும் தான் அரிச்சந்திரன் வழித்தோன்ற லென்பதை மறந்து, தான் இராமனுக்கு இளவல் என்பது உண்மையே எனினும் அவனுக்குத் தானடி மையென்றும் ஒரடிமையை மணப்பது அவள் மேன் மைக்கு அடாதென்றும் சிகையினும் அழகியான சூர்ப்பனகையை இராமன் விவரகஞ் செய்துகொள் ளுவானென்றும் இராமனும் சூர்ப்பணகையுமே மன்மதனும் இரதியும் போல ஒருவருக்கொருவர் பொருத்தமுடையவரென்றும் சொல்ல, இஃகெல்லாம் மெய்யென்று நினைத்த பேதை மீண்டும் இராமனே படுத்தனள். இராமன் மீண்டும் பல பொய்சொல்ல, ஈற்றில் சூர்ப்பணகை தான் இராமனே மணக்கத் தடையாயிருந்த சீதையை இராமனே விட்டு ப் பிரிப் பின் அவன் கன்னே மணந்துகொள்ள

Page 26
44 இராமன் கதை
இசைவானென்று கருதி, சீதையைத் தூக்கிக் கொண்டு ஓடத் தலைப்பட்டனள். உடனே இராமனும் இளையவனும் அவளைத் தொடர்ந்தோடிச் சீதையை மீட்டதுமன்றிச் சூர்ப்பணக்கையுடம்பை ஊறுசெய் தனர். இராமன் சொல்ல இலக்குமணன், அவளை மானபங்கப்படுத்தினன். அவள் தன்னிருக்கை சேர்ந்தனள். அங்கிருந்த உறவினருள் கரன் துரஷணன் என்னும் வீரரிருவர் தங்களுறவினஞக்கு ஆரியரிருவரும் செய்த தீங்கைக்கேட்டு அவர்களோடு யுத்தஞ்செய்ய வந்தனர். கர தூஷணர் இராம இலக்குமணரோடு எதிர்த்துநிற்க ஆற்றலுமின்றிப் புறங்கொடுத்தோட மனமுமின்றிப் போர்செய்து மாண்டனர். இவையெல்லாம் நடந்தபின்னும் குர்ப் பணகை இராமன்மேலுள்ள காதல் தணியாத வளாய்ச் சீதையை இராமனைவிட்டுப் பிரிப்பின் இராமன் தன்னை மணந்துகொள்ளுவான் என்ற வீணெண்ணம் மாரு கவளாய் அதற்கோருபாயஞ் செய்யக் கருதி இலங்கைக்குத் தன் அண்ணன் இராவணன்பாற் சென்ருள்.

13. இராவணன்
இராவணன் தாய் இலங்கைவேந்தன் சுமாலிக்கு மகள். இவள் பெயர் கைகசி. சுமாலி தமிழன். கைகசியுந் தமிழ்ப்பெண். கைகசியின் கணவனர் விச்சிரவர் என்னும் ஓர் ஆரியமுனிவர். தந்தையார் ஆரியமுனிவராயினும் இராவணன் தமிழனகவே வளர்க்கப்பட்டான். ஆரிய பாஷையிலுள்ள வேதங் களிலும் வல்லான். இவனுக்குக் கும்பகன்னன் விபீடணன் எனத் தம்பியர் இருவர். இவரெல்லா ருக்கும் இளையாள் சூர்ப் பண கை. முன் நாம் கண்டபடி சூர்ப்பணகை இளமையில் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுக் கணவனிறக்கவே ப ஞ் ச வடி
சென்ருள். இவளுக்குப் பிள்ளையில்லை.
சூர்ப்பணகை கரதுTஷணரிறந்தபின்பு மீட்டும் இலங்கைக்கு வந்து தமையன் இராவணனைக் கண்டு அவனேடு இவ்வாறு சொல்லலுற்றுள் : *அண்ணு ! நான் பஞ்சவடியிலிருந்த காலத்தில் ஆரிய இராச குமாரரிருவர் வடக்கேயிருந்துவந்து அங்கு கங்கினர். அவருள் மூத்தவன்பெயர் இராமன். அவன் ம்ஃனவி சிதையென்பாள்; அவளைப்போல வடிவும் அழகும் உள்ள பெண் வேருெருத்தியையும் நான் எங்கும் கண்டதில்லே. அன்னம்பழித்த நடை, ஆலம் பழித்த விழி; அமுதம் பழித்த மொழி; சின்னஞ் சிறுத்த இடை : பென்னம் பெருத்த நூதல் ; கன்னங்கறுத்த குழலுடைய அவள், இராமன் என்னும் அலிக்கு மனைவியாய் வந்தது என்ன கொடுமை? 'அரசற் குரித்து அருங்கலம்' என்றாற்போல உன்போலும்

Page 27
46 இராமன் கதிை
விறல்வீரைெருவனுக் குரியாளவள் என நான் என் னுள்ளத்திலே தேறி, அவளை உன்னிடஞ் சேர்ப் பிக்கக் கருதி, இராசகுமாரரிருவரு மில்லாதகாலம் பார்த்து அவளைத் தூக்கிக்கொண்டுவந்தேன். நீ அதிர்ஷ்டங்கெட்டவன். எங்கோகின்று ஆடவரிரு வரும்வந்து அவளை மீட்டதுமன்றி என்னேயும் அவ மானப்படுத்தினர். கான் போய் இதைக் கரதுாஷண ருக்குச்சொல்ல, அவரும்போய் அவ்வாரியப் பிசாசுக ளிரண்டோடும் போர்செய்து மடிந்தனர். என் -9| @! மானததையும கரதுரஷணா சாவையும நாண எணண வில்லை; கைக்கெட்டினது வாய்க்கெட்டவில்லையென் பதுபோல, சீதையைத் தூக்கிவந்தும் உன்னிடங் கொண்டுவந்து சேர்க்கத் தவறிப் போனே னே யென்று வருந்துகிறேன். உன்மனைவி மண்டோதரி போல ஆயிரவர் பெண்கள் சீதையின் காற்றுரசு பெறுவார்களோ ? உனக்குரியவள் சீதை ; சீதைக் குரியை மீ. இனி உன்னிஷ்டம். நான் செய்வது செய்தும் எல்லாம் வீணுயிற்று."
தங்கையின் சொல் லேக் கேட்ட இலங்கை வேந்தன் இளையனல்லன்; முன்பின் ஐம்பது பிராய முடையான். அவன் மனைவி மண்டோதரி சகல சற்குணமும் வாய்ந்தவள். மேகநாதன் முதலிய மக்கள் பெரும் வீரர். ஆயினும் 'கெடுமதி கண் ணுக்குத் தோன்ருது' என்பதுபோல, தன்னியற்கை யறிவும் கல்வியும் பத்தியும் போகவிட்டுக் காமப் பேய் பிடித்தலைக்க எப்படியாயினும் சீதையை இலங்கைக்குக் கொண்டுவந்து அவளையே தன் பட்டத்து மகிஷியாக்கத் துணிந்தான் இராவணன்

இராவணன் 47
கான் நினைத்ததை முடிக்கத் தனக்குத் துணே வேண்டுமென்றும் தக்கதுணே செய்யக்கூடியவன் காடகைமகன் மாரீசனேயென்றும் இராவணன் எண்ணி அவனையழைத்து, தன்கருத்தை அவனுக் கறிவித்து 1 நீபோய் எப்படியாயினும் இராமனையுங் கம்பியையும் சிகையைவிட்டுப் பிரித்து வெகுதூரம் கொண்டுசெல்லல் வேண்டும். அப்பொழுது நான் சீதையைத் தூக்கிக்கொண்டு இலங்கை வந்து சேருவேன்? என்ருரன்.
மாரீசன் இதைக்கேட்டு,
疹 தாரங் கொண்டார், நாடுக வர்த்தார், கடையல்லா வாரங் கொண்டார், மற்றெரு வர்க் காய் மனை வாழும் தா ரங் கொண்டார் என்றிவர் தம்மைத் தருமந்தான் ஈருங் கண் டாய் ; கண்டக ருய்ந்தா ரெவரையா?
* எம்பிக் கும்மென் னன்னை தனக்கும் இறுதிக்கோர் அம்புய்க் கும்போர் வில்லி தனக்கும் அயனிற்கும் தம்பிக் கும்மென் னண்மை தவிர்க்தே சயநிற்கும் ; கம்பிக் கும்மென் தெஞ்சவ னென்றே கவல்கின்றேன். '
என்று கூறித் தடுக்க முயன்றன். 'இராம இலக்கு மணர்கள் உன்னே ஒருவேளை கொல்வார்கள் என்று அஞ்சுகின்றன; நான் உன்னை இப்படிப் பணிந்து கேட்கவும் நீ போக மறுத்தால் இங்கு இப்பொழுது என் கையால் நீ சா வது ஒரு த லே என்ருரன் இரர்வனன். ஈற்றில் மாரீசன் உடன்பட்டான்.

Page 28
14. மாரீசன்
ITரீசன் பஞ்சவடிசென்று இராமனிருந்த பன்ன சாலைக்குப் போனன். வந்தவிருந்தினனைத் தக்கபடி மூவரும் உபசரித்தனர். மாரீசன் அவர்களை நோக்கி, * நான் தெற்கே பாண்டிநாட்டிலுள்ளவன்; பாண் டியன் பல வகை மிருகங்களிலும் பிரியங் கொண்டவன். பஞ்சவடிக்கு இரண்டு காதத்துக் கப்பால் ஒரு வனம் உள்ளதென்றும் அவ்வனத்தில் அழகிய புள்ளிமான் பலநூறு சஞ்சரிக்கின்றன என்றும் இங்கிருந்துவந்த முனிவரொருவர் சொல்லப் பாண்டியன் கேட்டு, அவனது அரமனைத் தோட்டக் காரனகிய என்னைப்பார்த்து, “கறுப்பா, நீ இந்த முனிவர் சொல்லும் வனத்துக்குச்சென்று இரண் டொரு புள்ளிமான் கொண்டுவா’ என எனக்குக் கட்டளையிட்டனன். பாண்டிமாதேவியும், 'கறுப்பா, எனக்கும் ஓர் அழகிய குட்டிமான் கொண்டுவரல் வேண்டும் ' என்ருள். அதுவே நான் இங்குவந்த காரணம். இவ் வள வு துர ரம் வந்துவிட்டேன், இன்னும் இரண்டுகாகந்தான்; நான் போகிறேன்" என்ருரன். இதைக்கேட்ட சீதை இராமனைப்பார்த்து, * அப்படியானுல் நீரும் இவருடன் சென்று எனக்கு ஒர் அழகிய புள்ளிமான்குட்டி கொண்டுவாரும் ” என்ருள். இராமன் அதற்கிணங்கி 'அப்படியே போகின்றேன்; இன்று பகல் பதினைந்துநாழிகை யாகுமுன் திரும்பி விடுவேன்; தம்பீ! நீ பன்ன சாலையைவிட்டு எங்கும் போகாதே, சீதை பத்திரம் ” என்றுசொல்லி, மாரீசனேடு போனன். போனவன் பகல் இருபது நாழிகை கழிந்தும் வரவில்லை. சீதை

Wvko:
LDfTiff F6O * 49
இலக்குமணனைப் பார்த்து, ' பதினைந்துநாழிகைக்கு முன்னே வருவேனென்று சொல்லிப்போன உன் தமையனர் இருபது 15ாழிகையாகியும் இன்னும் வந்தாரில்லை; அவருக்கு என்ன தீங்கு நேரிட்டதோ அறியேன், நீ விரைந்துசென்று பார்த்து வா? என்ருள். ' அண்ணனுக்குத் தீங்குசெய்வார் இங்கு யார்? நீங்களஞ்சுவது வீண் ; விரைவில் வந்து விடுவார், கலங்காதேயுங்கள்’ என்று ன் இளையவன். மனக்கலக்கங்கொண்ட சீதை, தான் பேசுவதின்ன கென்றறியாது, கோபத்தோடு, ‘இலக்குமணு, நீ நல்லவன்போல் வெளியே தோன்றினும், உன் னுள்ளம் தீயது ; காட்டிலே இராமன் என்று சாவான், அன்றன்ருே சீதையை நான் மணப்பது என்ற பொல்லா நெஞ்சத்தோடு, உன் மனைவி ஊர் மிளையையுங் துறந்து என்னைத் தொடர்ந்துவங்காய்; இராமன் சாகினும் சாக, நான் உன்னை மணவேன் என்பது நிச்சயம் ; புலியது பசித்திடின் புல்லைத் தின்னுமோ?’ என்ருள். இக் நச்சுச்சொல் காதில் விழுந்தவுடன் இ லக் குமணன் காதிரண்டையும் பொத்திக்கொண்டு * Bானிங்கு சீதையுடன் கணித் திருப்பது அழகன்று ' என்று மனத்தில் நினைத்து, * அம்மா, என் கமையன்சொல்லை மீறி நான் வெளியே செல்கின்றேன்; 'சீதையைத் தனியேவிட்டு ஏன் வந்தாய் கம்பி?’ என்று அண்ணன் என்னைக் கேட்டால், உங்கள் பத்தினியாரையே கேளுங்கள் என்று சொல் லுவேன்’ என்று கூறிவிட்டு, இராமனைத் தேடியோடினன். இதுவரையிலுஞ் சமயம் பார்த்துக்கொண்டிருந்த இராவண ன் சன்னியாச கோலத்தோடு பன்னசாலைக்கு வந்து 7

Page 29
இராமன் கதை
வாயிலில் நின்று பிச்சைகேட்டான். திருநீற்றுப் பூச்சும் உருத்திராக்கவட்மும் புலித்தோலாடையும் பொருந்திநிற்கக்கண்ட சீதை, சிவபெருமானே இன்றைக்கு என் குடிலுக்குப் பிச்சைக்குவந்தார்’ என எண்ணினள். நின்ற சன்னியாசியும் சிவன் போலவே விளங்கினுன். கள்ளச் சன்னியாசி, பார்வையாலும் மொழியாலும் தன் தீய எண்ணத்தை விளக்க, அதனைக்கண்ட சீதை, 8 சீச்சி, நாயே, "யாரென்று என்னை நினைத் தாய்?’ என்ருள். * யாரென்று நீ என்னை நினைத்தாய்’ என்ருரன் இராவணன். உடனே தன் பொய்வேடத்தைக் களைந்து, “நான் இராவணன்; கடல்சூழ் இலங்கைக் காவல்வேந்தன் ; இலங்கை ஒரு பெருந்தீவு ; கடலுக் கப்பாலுள்ளது; இங்கிருந்து பலநூறு காதங்கடந்து கடலையுந்தாண்டிப் போகவேண்டும் இலங்கைக்கு. ஆயினும், அங்கும் உன் புகழைக் கேள்விப்பட்டேன். உன் வடிவும் அழகும் வருணிக்கக் கேட்ட நான் இப்படிப்பட்ட பெண் பூவுலகிலுண்டோ என்றறிய இங்கு வந்தேன். நான் கேள்விப்பட்டதிலும் பூாருயிரம் மடங்கு வடிவிற் சிறந்தனை ; அழகிற் பொலிந்தனை ; இர தியும் ச சி யும் மட்டுமல்ல, இலக்குமியும் உனக்கு நிகரல்லள். ' குரங்குக்குப் பூமாலே வாய்த்ததுபோல' இராமனுக்கு வாய்த்தாய்நீ. கண்ணே, சனகன் பெண்ணே, எண்ணேன் இனி மறுமாதரை ; உன்னேயே இலங்கைக்குப் பட்டமகிஷி யாக்குவேன்; வா, என்னேடு புறப்படு இப்பொழுகே" என்று சீதையின் அடியில் வீழ்ந்தான். உடனே அவள், உள்ளேசென்று விளக்குமாறெடுத்துவந்து அவன் த லே யிலும் முக த்திலும் மாறிமாறி

சீதை இரங்கல் 51
அடித்தனள். உடனே அவன் சீதையைப்பார்த்து, ** மயிலே மயிலே, இறகுதா’ என்றல் மயில் இறகு கொடுக்குமா? உனக்குச் செய்ய வேண் டியது செய்தால் நீயேவந்து என் காலில் விழுவாய்” என்று சொல்லி, அவள் கூந்தலைத் தன் இடக்கையாற்பற்றி வலக்கையால் அவளைத் துரக்கிக்கொண்டுபோய், தூரத்தினின்ற தன் கேரில் அவளோடுமேறி அவளைத் தன் இடத்தொடையிலிருத்தி, இடக்கை அவள் பிடரைப் பிடிக்க வலக்கை தேரோட்ட, தெற்குநோக்கிச் சென்ருரன்.
15. சீதை இரங்கல்
“ ‘சானகி, நீ அயோத்தியிற்றுனேயிரு, என்னுேடு காட்டுக்கு வருமெண்ணத்தை விட்டுவிடு' என என் கணவனுர் எனக்குச்சொன்ன சொல்லை மீறிவக்க பாவத்தின் பல ன ன் ரூேர இது ? நான் இங்கு வந்ததனுல் என் நாயகருக்கு என்ன சுகம்? அன்று விராகன் என்னைத் துரக்கிக்கொண்டுபோக என் கண வருைக்கும் இளவலுக்கும் மனவேதனே விளைத்தேன்; என்னல் விராகனும் மடிந்தான். வேருெருநாள் சூர்ப்பணகை என்னை எடுத்துச்செல்ல இருவருக்கும் மனக்கிலேசம் விளைத்தேன். என்னுற் கரதூஷணரும் மாண்டார். உத்தமனுகிய இளைய வனைப்பற்றிப் பொல்லாப்பு நினைத்தேன். நினைத்தது மட்டுமோ, பித் துப் பிடித்து வாய்க்குவந்தபடி ஏசினேன். அதனலன்றே அவ ன் என்னைக் காப்பதைவிட்டு வெளியே ஒடினன்? 'தன்வினை

Page 30
இராமன் கதை
தன்னைச்சுடும் என்பது பொய்யோ? ஒரு Bாழி கைக்குள் என் ஆகாமியம் என்னைப்பிடித்தது. த டவுளே, என் புத்தியீனத்தை எனக்கு மன்னியும் ; இந்தப் பாதகன் கையிலிருந்து என்னைத் தப்புவியும். ஐயோ! என் கொழு5ர் எங்குற்றரோ? அவருக்கு என்ன நேர்ந்ததோ? இலக் குமணன் எங்கு போயினனே? இருவரும் திரும்பிவந்து என்னைக் காணுமல் யாது நினைப்பரோ? பாதகன் இராவணன் என்னைப் பிடித்து இழுத்துத் தேர்மேலேற்றிச் செல்வதை யாரும் பார்த்திலரே! இதை அவருக்குச் சொல்லுவார் யார்?
* உள்ளம் அறிவாய், உழைப்பறிவாய், கான் ஏழை ;
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன், பராபரமே.”
எனச் சீதை, பரமனைத் தியானிக்கையில், "ஏட, ஏட, நிறுத்து தேரை ; தேரை நிறுத்து ; சீதையை எடுத்துச்செல்கிற நீ யார்? இறக்கு அவரைக் கீழே ? எனப் பேரிடி இடித்ததுபோலக் கழறிக்கொண்டு குதிரைகளுக்கு முன்னே கின்ருரன் ஒரு வீரன். அவன் கையிற் கதையிருந்தது. இடையில் வாள் தொங்கினது. அவனேக்கண்ட இராவணன் ' விடு குதிரையை ; அன்றேல் என்கையாற் செத்தாய்' என்றன். இவ்வாறு எதிர்பாராதவண்ணம் வந்து தடுத்தவன் சடாயு. அவன் இராமலக்குமணரையுஞ் சீதையையுங் கண்டு நட்புக்கொண்ட வரலாறு முன்னமே கண்டுளேம். சடாயுவைக் கண்டவுடனே சீதை, 'ஐயா, உம்மை இக்கணம் இங்கு கொண்டு வந்தவர் கடவுளே. என் கணவனரும் தம்பியும் இல்லாத நேரத்திலே இந்தப் பாதகன் என்னை

சீதை இரங்கல் 53
வலாற்காரஞ்செய்து இழுத்துக்கொண்டு போகிறன்; நீரே என்னை இரட் சிக்க வேண்டும்’ என்று கதறினுள். *அஞ் சாதே, சான கி’ என்று அவளுக்குத் தைரியம் கூறியபின், இராவணனைப் பார்த்து, “நீ பெருஞ் சூரன் ; ஆண்பிள்ளைகள் வீட்டிலில்லாத நேரத்திலே பெண்ணேத் திருடிக் கொண்டுபோகிற பராக்கிரமசாலி நீ; நான் முதியோ ணுயினும் என்கையிரண்டும் இருக்கையில் நீ இவரைக் கொண்டுபோவதில்லை; நீ ஆண்பிள்ளையானல் இறங்கு தேரைவிட்டு; எடு உன் வாளை ; போர்செய்வோம், வா’ என்றுசொல்லிக் கதையை கிலத்தில் எறிந்து விட்டு வாளை உறையினின்றும் உருவினன் சடாயு, இராவணனும் வாளை எடுத்துக்கொண்டு கேரி னின்றுங் குதித்துச் சடாயுவோடு போர்செய்யத் தொடங்கினன். இருவருக்கும் சிறிதுநேரம் வாட் போர் நடந்தது. முதியோனுகிய சடாயு இராவணனை எதிர்த்துப் போர்செய்யத் தேகபலமில்லையாயினும் மனேவீரங் குறைந்தவனல்லன். தன்னலானமட்டும் சீதையைக்காக்க முயன்ருரன். ஆயினும் ஈற்றில் இலங்கைவேந்தன் சடாயுவின் இரண்டு கோளையும் வெட்டவே சடாயு தரையில் விழுந்தான். இராவணன் சீதையோடு தேரிலேறி இலங்கையை நோக்கிச் சென்றன்.

Page 31
16. இராம இலக்குமணர்
இலக்குமணன் இராமன்போன திசையைநோக்கி அவனைத் தேடிச்செல்கையில் அவன் தனித்தவனுய் மானென்றுமின்றி வரக்கண்டான். இலக்குமணன் ராகவனப்பார்த்து ‘அண்ணு, இவ்வளவு நேரஞ் சென்றதேன்? கறுப்பனெங்கே? மான் ஒன்றுங் கிடைக்கவில்லையோ?" என்றன். 'கறுப்பனும் நானும் இரண்டுகாதமல்ல மூன்றுகாகம் போயிருப் போம் ; மான் ஒன்றும் காணவில்லை. வழிநடந்த களைப்பினல் நான் ஒரு மரத்தடியிற் படுத்து ஒரு நாழிகை மெய்மறந்து தூங்கினேன்; கறுப்பனும் என்னருகிற் படுத்திருந்தான். சிறிதுநேரத்துள் இராமா, இராமா, என்னைக்கா வென்ற சத்தங் கேட்டுத் திடுக்கிட்டு நித்திரைவிட் டெழுந்தேன்; கறுப்பனை ஒருபுலி காவிக்கொண்டு ஒடக்கண்டேன். நான் புலி யைத் துரத்திக்கொண்டோட, புலி கறுப்பனை விட்டுவிட்டு ஓடிப்போயிற்று. கறுப்பன் குற்றுயிரோடு கிடந்தான்; ' இராமா நான் உனக்குப் பொய்சொன்னேன்; கடவுள் என்னைத் தண்டித்தார்; நான் பாண்டிநாட்டா னல்லேன்; என் பெயர் கறுப்பனன்று, என்பெயர் மா-மா-மா' என்ருரன். அதற்குள் அவனுயிர் போயிற்று. ஒரு கிடங்கு வெட்டி அவனைப் புதைத்துவிட்டு அங்கிருந்த ஒரு குளத்திலே ஸ்நானஞ்செய்துவிட்டு வருகிறேன். நீ ஏன் சீதையைத் தனியேவிட்டு வந்தாய்?"
இப்படி இ ரா ம ன் பேசிக்கொண்டுவரவே பன்னசாலையை இருவரும் அடைந்தார். உள்ளே

இராம இலக்குமணர் 55
சென்றபோது சீதையைக் கண்டிலர். உடனே அக்கம்பக்கத்தில் அவளைத் தேடினர். 'சீதை எங்கே ஒளித்துநிற்கிருய்? வெளியேவா ; எனக்கு நிரம்பப் பசிக்கிறது’ என்ருரன் இராமன். பின் அவளைத் தேடிச்செல்ல, ஒரு தேர்த்தடமும் குதிரைக் குளம்புகளின் சுவடும் ஓர் ஆடவன் அடிச்சுவடும் கண்டனர். உடனே காரியம் விளங்கிற்று. தாமிரு வரும் இல்லாத நேரத்தில் எவனே வந்து சீதையைத் தேர்மேலேற்றிக்கொண்டு போயிருக்க வேண்டும். தேர்த்தடமும் குதிரைக்குளம்பின் சுவடும் போன வழியே இருவரும் போயினர்.
பொழுதுபடும் நேரத்தில் யாரோ ஒருவன் அலறுவதைக்கேட்டு அவனிடம் ஓடினர். அருகிற் போனபோது இரண்டுகையும் இருபுறமும் விழுந்து கிடக்க, அடியற்ற மரம்போல் ஒருவன் "ஐயோ! ஐயோ!! இராமனைக் காணேனே! என்னுயிர் போகுமுன் வந்தால், சொல்லிவிட்டுச் சாகலாமென் றிருந்தேனே' என்ற சத்த த்  ைத க் கேட்டு, * நான்தான் இராமன்; வந்தேன், வந்தேன்" என்று ஓடினன் இராகவன். அங்கு விழுந்துகிடக்கவன் சடாயுவென இராமனறிந்தான். 'ஐயா, ஐயா, என்ன இது? யார் உமது கையை வெட்டினவன் ?? என்ருன் இராமன். மூடியிருந்த கண்ணேத் திறந்து, 'இராமா, வந்துவிட்டாயா? சீதையை இராவணன் கேர்மேலேற்றித் கெற்கே போவகைக் கண்டேன். உடனே ஓடி முன்னின்று தேரை மறித்தேன். சீதையை விட்டுவிட்டுப்போ என்று கழறினேன்; வாட்போருக்கு அழை த்தே ன்; என் இரண்டு

Page 32
இராமன் கதை
கையையும் வெட்டிவிட்டுச் சானகியோடு சென்ருரன் பாதகன்’ என்ருரன் சடாயு. தங்கள்கிமித்கம் சடாயு கை இரண்டுமற்றுச் சாகக் கிடப்பதைகண்ட இரா மனும் இலக்குமணனும் கோவென்று புலம்பினர். சடாயு, *அழவேண்டா ; இதோ தசரதர் வந்து என்னை அழைக்கிருரர்; நான் போகிறேன். போகு முன்னே உன்னைக்கண்டு, சீதையைக் கொண்டு போனவன் யாரென்று உனக்குச்சொல்ல எனக்குக் காலங்கிடைத்ததே ' என்று சொல் லி உயிர் துறந்தான். வீரர் இருவரும், தங்தையின் நண்பனும் சீதையைக் காக்கவிரும்பி உயிர் துறந்தவனுமாகிய சடாயுவின் உடலை எடுத்துத் தகனஞ்செய்துவிட்டு, அன்றிரவு அவ்விடத்திலே தங்கி, வைகறையில் எழுந்து தெற்குநோக்கிச் சென்றனர். இவ்வாறு இரண்டுமூன்று நாள் தேடியும் சீ ைத யைக் காணவில்லை.
இராவணனெங்கே? தேரெங்கே? சீதையெங்கே?
17. மதங்கமுனிவர் ஆச்சிரமம்
பஞ்சவடியைவிட்டுப் புறப் பட்டுப் பலநாளாயின. * இராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு போனுனே ? வேறெங்கு கொண்டுபோனனே ? சீதையைக் கற்பழித்தானே? அவனெண்ணத்துக்கு உடன்படாத சீதையைக் கொன்ருரனே ? சீதை சாகும்பொழுது என்னசொல்லி அழுகாளோ?" என்று ஏங்கினுன் இராமன். சீதையின்பொருட்டும் இராமன்பொருட்டும் கலங் கின ன் இளையவன்.

மதங்கமுனிவர் ஆச்சிரமம் 5
இப்படி இருவருங் கலங்கிச் சீதையைத் கேடிக் கொண்டுவர, ஒரு முனிவர்ஆச்சிரமம் கண்ணுக்குத் தென்பட்டது. இரவை அங்கே கழிக்கலாமென்.' இருவரும் அங்கு சென்றனர்.
இவ்வாச்சிரமம் மதங்கமுனிவருடையது. இது கிட்கிங்தை5ாட்டுக்கு அருகேயுள்ளது. கிட்கிக்தைக்கு அரசன் வாலி என்பான். இவனது கொடி குரங்குக் கொடி. வாலி மகாவீரன். தன்னை மற்போகுக் கழைத்த சத்துருவொருவனே வாலி பின்தொடர்ந்து சென்று ஒருவருஷமாகியும் அவன் கிட்கிந்தைக்குத் திரும்பவில்லை. மாற்ருன்கையால் வாலி மாண்டான் போலும் என்று எண்ணின கிட்கிந்தையின் குடிகள் வாலியின் தம்பி சுக்கிரிவனை முடிசூட்டி இராசாவாக்கினர். சுக் கிரி வன் கிட்கிந்தையை ஆண்டுவந்தான். பல மாதங்களாகப் பகைவனைத் தொடர்ந்துசென்ற வாலி அவனைக் கொன்றபின் நகரத்துக்குத் திரும்பினன். இங்கு சுக்கிரிவன் ஆள்வதைக்கண்டு அவனைச் சினந்து சீறிக் கொல்ல எத்தனித்தான். அவன் கைக்குத் தப்பியோடின சுக்கிரிவனும் அவன் தோழன் அனுமனும் வேறு சிலரும் மதங்கமுனிவ ரா ச் சி ர மத்தில் வந்து * அடிகள் சரணமே சரணம் ” என, முனிவரும் அவருக்கு அபயங்கொடுத்து, 'வாலி என்னச்சி" மத்துள் வரான், நீவிர் அச்சமின்றி இங்கு கங்குமின்’ என அங்கே தங்கினர். சுக்கிரிவன் மனைவியை வாலி மணந்து கம்பியைக் கொல்ல எண்ணின எண் ணத்தை மறந்துவிட்டான்.
8

Page 33
இராமன் கதை
வாலி தம்பியை மறந் தானே லும் , தம்பி தமையனே மறந்தானல்லன். ஒருநாளில்லாவிட்டால் வேருெரு5ாள், இங்கில்லாவிட்டால் வேறெங்கேனும் வாலி தன்னைக் கொல்வான் என்ற அச்சம் சுக்கிரிவ ள்ளத்திற் குடி புகுந்தது. அன்றியும், தன் மனேவியை அபகரித்துக்கொண்ட பா வி ையக் கொன்ருற்ருரன் தனக் குத் திருத்தியுண்டாகும் என்று நினைத்தான் சுக்கிரிவன். ' அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம் பேய்” என்பது பழமொழி. அன்னியைெருவனேக் காணும்போ தெல்லாம் இவனை வாலியனுப்பினன் என்னைக் கொல்ல என்று கலங்குவான் இவன். இப்படி நாடோறும் கலங்கின நெஞ்சினனகிய சுக்கிரிவன் இராமல்க்குமணரை மதங்கமுனிவ ராச்சிரமத்திற் கண்டபோது, 'இவரை வாலியனுப்ப வந்தனரிங்கு; இவர் என்னைக் கொல்வது திண்ணம் என்று தன் தோழருக்குக் கூறினன். இதைக்கேட்ட அனுமன், * விடு, விடு, வீண் அச்சம் ; உன்னைக் கொல்ல நினைப்பதைத்தவிர வேறு வேலை யில் லே யோ வாலிக்கு? ஆயினும், வந்தவர் யாவர் என அறிந்து வி ருவேன்; அதுவரையிலும் உன் மலைவீட்டில் நீயிரு’ எனச் சுக்கிரிவனுக்குச் சொல்லி, இராம இலக்குமணர்பாற் சென்றனன். "ஐயன்மீர்! நீவிர் எந்நாட்டினிர்? எவ்விடத்தீர்? இங்குவந்த காரணம் யாது ? சொன்மின்’ என்ருரன் அனுமன். * நாங்கள் கோசலநாட்டேம். எம் நாடுவிட்டுப் பல்லாண்டு சென்றன. பஞ்சவடியில் வசித்துவந்தேம். என் மனைவியை இராவணன் எடுத்துச்சென்றன் என்று கேள்வியுற்று அவளைத் தேடிப் புறப்பட்டு இங்கு

மதங்கமுனிவர் ஆச்சிரமம் ر(
வந்தேம். அவளை இன்னும் கண்டிலேம். நீவிச் யாரேனும் அவளே க் கண்டீரோ ? ? என்ருன் இழன்.
உடனே அனுமன், ‘ ஆம், ஆம்; இன்று மூன்றுநான்கு தினத்துக்குமுன்னே இராவணன் தேர்மீது தெற்கே போகக் கண்டேன்; தேரில் ஒரு பெண் ஃணயும் கண்டேன். நீர் சொல்வதைக் கேட்கையில் அப்பெண்ணே நும் மனைவியார் போலும். அதுகிற்க, இராவணன் வேந்தச் வேந்தன், இலங்கை கடலுக்கு அப்பாலுள்ளது ; அவனது சேனை கடலினும் பெரிது. நும் மனைவி யாரை நீவிர் மீட்டுவர விரும்புதிரேல் யான் ஒர் உபாயஞ் சொல்வேன் : இவ்வாச்சிரமத்தில் ஒரு மலேயுள்ளது; அம்மலேமீதில் ஒரு கோட்டையுள்ளது : அங்கு சுக்கிரிவர் வசிக்கின்றர்; அவர் கிட்கிக் தையின் இளங்கோ. நீவிரிருவிரும் இப்போது என்னேடு வருவீராயின் நும்மைச் சுக்கிரிவரிடம் அழைத்துச் செல்வேன். அவர் தக்க உபாய ஞ் சொல்வார். இ ரா வணன் எடுத் து ச் சென்ற நங்கையாரை மீட்டற்கு வழி இதுவே ” என்ருரன். இருவரும் சம்மதித்து அனுமனேடு புறப்பட்டனர். அனுமன், “நாம் ஏறும்மலை மிகச் செங்குத்துள்ளது. இவ்விளஞ்சிங்கம் ஏறும் ; நீவிர் மிகக் களைத்துளிர். நீர் என் கோள்மேலேறியிருப்பின் நும் மைத் தூக்கிச் செல்வேன் ” என்ருரன். முதலில் இராமன் அகற்கு இணங்கிலனேனும் இ லக் குமண ன் , *அண்ணு! நீங்கள் மிகக் களைத்திருக்கின்றீர்கள் ; சீதையைப் பிரிந்தபின் வாட்டமதிகம்; இவர்

Page 34
60 இராமன் கதை
சொல்வது சரி; இவர் தோள்மேலேறி வாருங்கள் : நான் அருகில் நடந்துவருகின்றேன்” என்ருரன். அகற்கு இராமன் இணங்க, அனுமன் இராமனைத் தோளிலேற்றி, இலக்குமணன்கையைத் தன்கையாற் பற்றிக்கொள்ள, மூவரும் சுக்கிரிவனிருக்குமிடம் சேர்ந்தனர்.
18. வாலிவதம்
தன்னிடம்வந்த இராம இலக்குமணரைச் சுக்கிரிவன் அன்போடுபசரித்தான். அனுமன், இராசகுமாரர். வரலாற்றைச் சுக் கிரி வ னு க்கு விவரித்தான்! அதன்பின் சுக்கிரிவன் தன்கதையை இராமனுக்குக் கூறினன் : தக்க காரணமொன்றுமின்றி வாலி என்னை என் நாட்டிலிருந்து துரத்தினதுமன்றி, என் மனைவியையும் அபகரித்துக்கொண்டான். அவனைக் கொன்று என் மனைவியை மீட்டுத்தருவீரேல் நானும் என் சேனைகளின் உதவியைக்கொண்டு சீதையை மீட்க உமக்கு உதவிபுரிவேன்' என்றன். இராமன் அதற்கு உடன்பட்டான். இராமன் சுக்கிரிவனை நோக்கி, "நீ போய் வாலியை உன்னேடு மற்ாேர் செய்ய அறைகூவு. விேர் இரு வீரும் ப்ேர் செய்கையில் நான் ஒரு மரத்தின்பின் ஒளித்திருந்து ஒரு வாளியால் அவனை எய்து கொல்வேன்' என்றான். அவ்வாறே சுக்கிரிவன் மற்போருக் கழைக்க, வாலி வர, இருவரும் மலிேக்கனர். உடன் பிறந்தார் இருவரும் ஒருவனேடொருவன் மலையப் பார்த்துகின்ற இராமன், இவருள் எவன் வாலி எவன் சுக்கிரிவன் என வேற்றுமை கண்டிலன்.

வாலிவதம் 61
ஆகவே அவன் அன்று வாலியைக் கொல்ல முயல வில்லை. சுக்கிரிவன் தோற்று, வாலிகைக்குத் கப்பி ஓடிவந்து, ‘இராமரே, நன்றுசெய்தீர்! இன்று நான் கப்பினது என் தாய்செய்த புண்ணியம்; உம்மை நம்பி மோசம்போனேனே!” என்ருரன். இராமன், கான் அன்று வாளாவிருந்ததற்குக் காரணங்கூறி * நாளைக்கும் நீ போய் அறைகூவு. போகுமுன் ஒரு காரணிந்துசெல், அப்பொழுது வாலி இன்னு னென்று யானறிவேன். நாளை வாலி சாவது மெய்? என்ருன். சுக்கிரிவன் கழுத்தில் ஒரு பூமாலை சூடிச் சென்று மற்போருக்கு வரும்படி வாலியை அறை கூவினன். உடனே வாலியும் வரப்புறப்பட்டான். அப்பொழுது அவன் மனைவி தாரை வாலியை நோக்கிக் கூறுவாள் :
*ஐய! இத்தனைகாலம் உம்மையஞ்சி மதங்க முனிவ ராச்சிரமத்தில் ஒளித்திருந்த உம் தம்பி யாருக்கு இப்போது இங்கேவரத் தைரியம் வந்த தெப்படி? அன்றியும் நேற்றுத் தோற்றேடினவர் இன்றுவந்து அறைகூவுவது என்ன ஆச்சரியம் ! தமக்குத் தக்க துணேயின்றி இப் படி ச் செய்ய 7 ரொருவரும், மேலும் நானெரு சொல் கேள்வி யுற்றேன். கோசலநாட்டு மன்னன் தசரதன்மகன் இராமன் இங்கு வந்துள்ளானம். அவனும் சுக்கிரி வரும் பெரு நண்பினராம்; சுக் கிரி வருக்குத் துணேநிற்கவும் இராமன் உடன்பட்டிருக்கிறனும், இவற்றை யோசியாது நீர் இப்பொழுது செல்வது புத்தியன்று.”

Page 35
62 இராமன் கதை
இதைக்கேட்ட வாலி:
4 நுண்ணறிவுள்ள நூல்பல கற்பினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தை மைத்தே
என்றது சும்மாதான? உன் பேகைமையை, இன்று காட்டினய், அ ற மே உருவெடுத்காற்போன்ற தசரதனுக்கு மகனுய்ப்பிறந்த இராமன் அநியாயம் செய்வான ? அன்றியும் , இராமனும் பாகனும் ஒருவன்மேலொருவன் எத் துனே அன்புடையா ரென்பதை நீ அறிவாயோ? இவ்வாறு சகோதர சினேகத்துக்கு இலக்கியமான இராமன், வாலி சுக்கிரிவராகிய எங்களிருவரில் ஒருவனை யடுத்து மற்றவனைக் கெடுப்பானே? இனி இப்படிப் பேய்ச் சொல் பேசாதே ' என்றுசொல்லிப் போருக் கேகினன். வாலியும் சுக்கிரிவனும் மற் போர் செய்கையில் திடீரென ஓர் அம்பு பறந்துவந்து வாலியின் மார்பைத் துளைத்தது. உடனே வாலி நிலத்தில் விழுக்கான், விழுந்ததும், இவ்வாறு ஒளித் திருந்து தன்மேல் அம்பெய்தவன் யாவனே? என அதிசயித்தான். உடனே தன் கையொன்றினல் மார்பிற் தைத்த அம்பைப் பலத்தோடு பிடுங்கிப் பார்க்க, அதில் இராமன் என்ற பெயர் பொறித் திருந்தது. ‘இராமனு இப்படிச்செய்தான்?" என்று ஆச்சரியத்தோடு கூறுகையில், மரத்தின்பின் ஒளித் திருந்த இராமனும் வேளியே தோன்றி வாலியை யணுகினன். அவனே க் கண் ட வுட் ன் வாலி சொல்லுவன் : -
* இராமா, என்னசெய்தாய்? பழியில்லாத உன் குலத்துக்கு உன்னுற் பழிவந்ததே! நீ தசரதன்

வாலிவகம் 63
மகன் என்றதை மறந் தாயோ? பரதனுக்கு அண்ணன் நீயென்பது உ ன் நினைவை விட்டுப் போயிற்றே? நான் உனக்கு என்ன தீமைசெய்தேன்? சிகையை இழந்தபின் உன் புத்தி தடுமாறிற்றே? இராவணன் உன் மனைவியை எடுத்துக்கொண்டு போனல், அதற்கு வாலியைக் கொல்லென்று மனு நூல் கூறிற்றே ? நானும் என் தம்பியும் ஒருவனே யொருவன் பகைத்தால் எங்களிருவரையும் சமாதா னப்பஇத்துவதன்றே உன் கடமை? என்னைக் கொல்லலாமோ? அப்படிக் கொல்லநினைத்தாயாயின் என்னைப் போருக்கழைக்க நீ வரவேண்டாவோ? ஒளித்திருந்து அம்பெய்யும் ஆண்மை எங்கு கற்ருய்? வசிஷ்டரும் விசு வா மித் தி ரரும் உனக்குப் போதித்தவை எல்லாம் இதுதானே? ஒ இரகுவே, அரிச்சந்திரமன்ன, தசரத சக்கரவர்த்தீ, உங்கள் பேரைக்கெடுக்கப் பிறந்தானே இராமன்!”
நூலி யற்கையும் நுங்குலத் துந்தையர் போலி யற்கையும் சீலமும் போற்றலை வாலி யைப்படுத் தாயலை மன்னற வேலி யைப்படுத் தாய்விறல் வீரனே.”
அகற்கு இராமன், “பொறு, பொறு; வாலி, உன் பேச்சை யடக்கு; குற்றஞ்செய்யாத தம்பியை அவன் நாட்டைவிட்டுத் துரத்தினதுமன்றி, அவன் மனைவியைக் கற்பழித்தரீ நீதிமான்போலப் பேசத் கலைப்பட்டாய் உன்போற் பாதகரை அழிப்ப கன்ருே கஷத்திரிய தருமம்? என்கையில் நான் வில்லைப் பிடித் திருப்பது வேறென்னத்திற்கு?

Page 36
64 இராமன் கதை
என்ருரன். உடனே வாலி " நான்செய்தது குற்ற மாயின், என்னைக்கொல்வது கூடித்திரிய தருமமாயின், குற்றஞ்சாட்டப்பட்டவனை விசாரியாமற் கண்டிப்பது கஷத்திரிய தருமமோ? ஒளித்திருந்து அம்பெய்யும் வீரா, வெட்கமில்லாமற் பேசுகிருரயோ?" என்றன்.
தான் சாக இரண்டொரு விநாடிகான் இன்னு முண்டென்று கண்ட வாலி, * நீ எனக்குச் செய்த பிழையெல்லாம் நான் உனக்கு மன்னிக்கிறேன். இராமா, உன்னிடம் ஒரு வரங் கேட்கிறேன். தா ?
என்ருரன். 'நீ கேட்கும் வரம் யாது ?? என்று இராமன் வினவ, ‘ என்மகன் அங்கதனை உனக்கு அடைக்கலமாகத் தந்தேன். நீ என்னைக் கொன்
ருரலும், உன்னை நான் நம்புவேன்; சுக்கிரிவனை நம்பேன். சுக்கிரிவனுக்குப் பின் எ ன் ம க ன் அங்கதனே கிட்கிங்தைக்கு இராசவைான் என்று நீ எனக்கு வாக்குத்தால் வேண்டும்’ என்ருன் வாலி. உடனே இராமன், “வாலி நான் உனக்குத் துரோகஞ்செய்தேன். நான் என் பிழையை உணரு முன்னமே நீ என்னை மன்னித்தாய். அம்மட்டோ ? துரோகியாகிய என்னை நம்பி உன் மகனை எனக்கு அடைக்கலமாகக் கொடுத்தாய். நீயே பெரியவன்; உன் புகழே புகழ் ; உன் குணத்தால் நான் தூயனுனேன். நீ அஞ்சற்க; அங்ககனை என் கண் மணிபோலக் காப்பேன்; சுக்கிரிவனுக்குப் பின் அங்கதனே இராசனுவான்’ என்ருரன். உடனே வாலி அருகினின்ற அங்கதனை அழைத்து அவன் கையைப்பிடித்து இராமன்கையில் வைத்து, "இகோ உன்மகன்; இகோ உன்தந்தை' என்று சொன்ன வுடனே வாலியின் ஆவி பரமபதமடைந்தது.

19. சுக்கிரிவ பட்டாபிஷேகம்
விெ மடிந்தவுடன் அவன் உடல்மேல் விழுந்து, காரை, சுக்கிரிவன் அங்கதன் முதலாயினேர் புலம்பினர். அப்பால் அங்கதன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடனெல்லாம் செய்துமுடித்தான். அதன் பின் இராமன், தான் எந்நகரத்துள்ளும் போக லாகாது என்ற கட்டளையை மறவாதவனுய் இலக்குமணனைக்கொண்டு சுக்கிரிவனுக்கு முடி சூட்டுவித்தான். பின் மழைக்காலங் தொடங்கிற்று. * கார்ப்பருவம் முடிந்தவுடன் என் சேனைகளிற் சிலவற்றைப் பற்பல திசையிலும் அனுப்பிச் சீதையைத் தேடுவிப்பேன்’ என்ருரன் சுக்கிரிவன். மழைக்காலம் முடியுமட்டும் இராமன் தம்பியோடு மதங்கமுனிவ ராச்சிரமத்திலே தங்கினன். மழைக் காலம் முடிந்தும் சுக்கிரிவன் சீதையைத்தேட ஒரு முயற்சியும் செய்திலன். பலநாட் காத்திருந்தபின்பு இராமன் இளையவனேச் சுக்கிரிவனிடத்தில் அனுப் பினன். தமையனுலே துரத்தப்பட்டுப் பல்லாண்டு முனிவராச்சிரமத்தில் ஒளித்திருந்த சுக்கிரிவன் திடீரென முடிசூட்டப்பட்டவுடன், காய்ந்த மாடு கம்பங்கொல்லேயில் அழைந்தாற்போல’ என்றபடி தன்னைமறந்து குடித்துவெறித்து எல்லாச் சிற்றின் பங்களிலும் முழுகியிருந்தனன். இவனைக்காண, இலக்குமணன் காலருத்திரனைப்போலக் கோபாவே சத்தோடு போனன். போயும் சுக்கிரிவன் தன் நிலையை உணர்ந்தானல்லன். இலக் குமணன்

Page 37
இராமன் கதை
கோபத்கோடு வருவகைக்கண்ட தாரை சுக்கிரீ வனக் குடிவெறியினின்றுக் கட்டியெழுப்பி, இலக்கு மணன் புலிபோல் வந்திருப்பதை அறிவித்துவிட்டு, கானே முதலிற்சென்று இலக்குமணனை நமஸ் கரித்தாள். காரை அமங்கலியாய்வந்து தன்னை நமஸ் கரித்ததைக் கண்ட இலக்குமணன் அயோத்தியில் தன் தாய் சுமித்திரையும் இப்படித்தானே அமங் கலியாய் வாழ்கின்ற ஸ் என்ற எண்ணம் வரக் கோபத்தைவிட்டுத் துக்கத்திலாழ்ந்தான். பின்பு சுக்கிரிவன் வந்து தோன் றினன் . அவனைக் கண்டதும் இலக்குமணன் சினந்து, ' இன்னும் மழைக்காலம் முடிந்திலதுபோலும். நீ இராமனுக்குச் சொன்னசொல் நினைவிலிருக் கி ன்ற தோ?” என்ருரன். இலக்குமணன் சொன்னசொல் தன் நெஞ்சைச்சுட, தான் தனக்குப் பேருதவிசெய்த கிராகவனயும் மறப்பித்த மதுபானத்தை அன்றே வடுவதாகவும் தான்செய்த அபராதத்தை இராமன் மன் னிக்க வேண்டுமென்றும் வேண்டினுன் சுக்கிரிவன். அதன்பின் தன்சேனையின் ஒரு பாகத்தை நாலாகப்பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவனை நியமித்து எங்கும்போய்ச் சீதையைத் தேடிவரப் படைகளை அனுப்பினன். தெற்கே போன படைக்குத் தலைவன் அனுமன். ராமன் அனு மனிடம் தன் கணேயாழியைக் கொடுத்து, அதைச் சீதையிடஞ் சேர்ப்பிக்கவேண்டும் என்ற து ம ன்றி, சீதைக்குங் தனக்கும்மட்டும் தெரிந்தவையும் வேறொருவருக்குங் தெரியாதவையு மான சில விஷயங்களை அனுமனுக்கு எடுத்துச் சொல்லி, 'இவற்றைநீ சீதைக்கெடுத்துரைப்பையேல்

இலங்கை 67
8ான் உன்னை அனுப்பியதை அவள் நம்புவாள்' என்ருரன். இராமனிடம் விடைபெற்ற அனுமன் தெற்கே பாண்டிநாடுமட்டும் வெவ்வேறிடங்களிற் சீதையைத்தேடியும் எங்கும் அவளைக் காணுமல், மதுரைக்குக் கிழக்கேயுள்ள கடற்கரைக்கு வந்து, அங்குகின்று இலங்கை க் குப் போகும் ஒரு தோணியைக்கண்டு, சேனையையெல்லாம் அங்கே நிறுத்திவிட்டு, தான் தன்னந்தனியணுய் இலங்கைக் கரையை யடைந்தான்.
20, இலங்கை
பஞ்சவடியினின்று சீதையோடு புறப்பட்ட இரா வணன் வழியிலெங்குந் தங்காமல் இலங்கைவந்து சேர்ந்தான். * சேர்ந்த வுடன் இராசதானியாகிய இலங்காபுரியையடுத்த அசோகவனத்திலே சீதையை யிருத்தினன். சீதைக்குக் காவலராகப் பெண்கள் பலரை நியமித்தான். அவருளொருத்தி திரிசடை என்பாள். திரிசடை இராவணன்தம்பி விபீஷணன் மகள். ( இராவணன் சீதையை இலங்காபுரியிலே கோயிலொன்றிலே அந்தப்புரத்திலே இருத்தாமல்
இலங்கையென்பது ஒரு பெருக்தீவுக்குப் பெயர். அன்றியும் இலங்கைத் தீவிலே இலங்கையென் ருெரு நகரமுமிருந்தது இந்த நகரத்தை இலங்கா புரியென்றுஞ் சொல்லுவர். தற்காலத்துள்ள ஈழமண்டலமே இராவணனது இலங்கைத் தீவென்பதற்கு ஐய மின்று. இராமாயணத்திற் கூறப்படும் இலங்கைத்தீவும் சிங்களத் அ பீடமும் ஒன்றேயாயினும், இலங்கா புரியென்னும் நகரக் இருந்தவிடமுக் தெரியாமல் அழிந்துபோயிற்று.

Page 38
இராமன் கதை
அசோகவனத்தில் வைத்ததற்கு நியாயம், இராமன் வனவாசியாயிருக்க, கான் ககர்வாசியாயிருக்கச் சிகை உடன்பட்டாளில்லை. அன்றியும் இராவணன் விருப்பத்துக்கிணங்கி அவனே டு வாழ ச் சானகி சிறிதுஞ் சம் மதித் தாளில் லை . இராவணன் பரகாரத்தை இச்சித்துச் சீதையைப் பஞ்சவடியி லிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்த பாதக னெனினும், இணங்காத ஒருபெண்ணேயும் வலாற் காரஞ்செய்து கற்பழிக்கும் அதிபாதிகனல்லன். காளடைவிலே சீதை மன்ம்மாறித் தன் மனைவியா வகற்குச் சம்மதிப்பாளென்றும் அப்படிச் சம்மதித்த பின்பே தானவளை மணஞ்செய்வகென்றும் இரா வணன் காத்திருந்தான்.) ஒவ்வொருBாளும் அசோக வனத்திற் சென் று B ய வ ச ன் ங் சுட றி யும் அச்சுறுத்தியும் ஒருபயனுமின்றித் திரும்புவான். அவுளுக்குக் காவலராகவைத்த பெண் களை யும் அவளுக்குப் புத்திசொல்லும்படி கட்டளையிடுவான். *அவருள், திரிசடையொழிந்த ஏனைய பெண்களெல் லாரும், சீதை இராவணன் மனைவியாவதே தக்க கென்று அவளுக்குப் புத்திசொல்லி வருவார்கள். திரிசடையோ பெண்களுள் உத்தமி. அவள் தங்தை விபீஷணனும் சு குண சம் பன்னன் . திரிசடை நாடோறுஞ் சீதையைத் தேற்றிக் " கடவுள் நும் கணவனுரை நும்மிடம் விரைவிற் கொண்டுவந்து சேர்ப்பர்; ஒன்றையும் அஞ்சவேண்டா" என்று ஆறுதல் சொல்லுவாள். திரிசடை தேற்றச் சீதை தேறுவாள் சிலநாள்; திரிசடை தேற்றவும் தேருள் சிலநாள். 'என் வினைப்பயனை நான் அனுபவித்தல் வேண்டும். கணவன் சொல்லை மீறிவந்த பாவிநான் ;

அனுமன் 6.
களங்கமற்ற மைத்துனன்பால் ஐயமுற்று நிந்தித்த பாவி நான். இவை இப்பிறப்பில் 5ான்செய்ச பாவங்கள். கடந்த பிறப்புக்களில் யார் யாருக்கு என்னென்ன பாவஞ் செய்தேனே? என் கணவ: ச் இன்னும் எனபால் விருப்புளரோ? அல்லது வெறுத்துத் தள்ளினரோ ? ஐயோ! இதை எனக்குச் சொல்வார் யார் ?
* பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்
ஆவிக் குறு துணையார் ஐயா, பராபாமே.
14 ஒயாதோ என் கவலை? உள்ளேயா னக்தவெள்ளம்
பாயாதோ ? ஐயா, பகாசப் பராபாமே ?
என்று புலம்புவாள்,
21. அனுமன்
இலங்கைக்கரையையடைந்த அனுமன் சீதையைப் பலவிடங்களிற் தேடியும் காணுமல் ஈற்றில் அசோக வனம் புகுந்தான். அவன் ஒருபக்கத்திலிருந்துவர வேருெருபக்கத்திலிருந்து இராவணன் வந்தான். இராவணன் அனுமனேக் காணவில்லை. அனுமன் இராவணனை முன்னமே கண்டுளானதலின் அவன் யாவனென உடனே யறிந்தனன். * நல்ல சமயத்தில் இங்கு வந்தேன். அம்மரத்தினடியில் பலர்சூழ வாடியிருப்பவள் சீதைபோலும், முன்னே யான் தேரிற் கண்டபெண் இவர்கான். இதோ, இரா வணனும் அங்கேதான் செல்கின்றன். நான் யாருமறியாமல் இம்மரத்திலேறியிருந்து நடப்பன

Page 39
70 இராமன் கதை
வெல்லாம் கவனிப்பேன். அதன்பின் யான் செய்ய வேண்டியது இஃதெனத்தெரியவரும்' என எண்ணி ஒரு மரத்தில் ஏறியிருந்தான். அவன் அசோக வனத்துள் நுழைந்ததும் மரத்தில் ஏறியிருந்ததும் யாரும் கண்டிலர். இராவண்ன், சீதையையணுகி, * இன்னும் எத்தனைBாள் நான் காத்திருப்பேன்? நீ யிங்கிருப்பது இ ரா மனு க்கு எப்படித்தெரியும்? தெரியினும் அவன் இங்கெப்படிவருவான்? அவன் இங்குவந்து உன்னை மீட்பன் என்னும் வீணெண் ணத்தை விட்டுவிடு. நீ எனக்கு ம ன வியாக இ  ைச  ைவயே ல் நீயே பட்டத்துமகிஷியாவாய்; மண்டோதரி உனக்குக் குற்றேவல் செய்வாள்' எனச்சொல்லி அ வ ள் கா லில் விழுந் தான். * இராவணு! நான் பதிவிரதையென்றதை உனக்குச் சொன்னலும் நீ அதை அறியமாட்டாய். அசுத்த கிைய உனக்குச் சுத்தமென்பது எப்படிப் புலப் படும்? உனக்கு விளங்காவிட்டாலும் உன் மனைவி மண்டோதரியைக் கேள். அவள் பதிவிரதை. அவளுக்கு விளங்குமிது. எ ன் கோபத்தை மூட்டாதே; எழுந்து போ" என்ருள். இராவணன் எழுந்துகின்று ‘என் கோபத்தை மூட்டாதே நீ; இவ்வளவுகாலமும் ஒரு பேதைப்பெண்ணென்று இரங்கினேன். நான் கெஞ்சக் கெஞ்ச நீ மிஞ்சி மிஞ்சிப் பேசுகிருரய். என் எண்ணத்திற்கு நீ உடன் படாவிடில் உன்னை உயிரோடே சுட்டெரித்து உன் சாம்பலை இராமனுக்கனுப்புவேன். இல்லையேல் என்பெயர் இராவணனன்று " என்றுகூறி அவ் விடம்விட்டுப் பெயர்ந்தான். அவன் போனவுடனே திரிசடை சீதையைப் பார்த்து, “ அம்மா, சீர்

அனுமன் 71 ۔.
அஞ்சன்மின்; ' குரைக்கிறநாய் கடியாது’ என்னும் முதுமொழி நீர் அறிந்தகன்ருே ? இராவணன் உமக்கு ஒருதீங்குஞ் செய்யான். அன்றியும், சென்ற இரவில் நானெரு கணுக்கண்டேன் ; ஒரு பெருஞ் சேனை இலங்கைக்குவந்து இங்குள்ள சேனையோடு பொருது எல்லாரையும் அழித்தபின் சுந்தர புருட ரொருவர் உம்மை மீட்டுச் சென்றதாக ' என்று தேற்றினுள்.
திரிசடை இவ்வாறு கூற, சீதை சொல்லுவாள், "இஃகென்ன ஆச்சரியம்! நீ சொன்னதுபோலவே என் கனவுமிருந்தது. நீ கனவிற்கண்ட சுந்தரபுருடர் இரகுகுலாதிப தாசரதியாரே. ஆயினும் கனவு கனவுகானே, கனவு நனவாகுமோ?? இப்படி இவர்கள் இரு வ ரும் பேசுகையில், 'மங்களம் மங்களம் இராமனுக்கு, மங்களம் எங்கள் சானகிக்கு: என்றுமென்றும் மங்களம்' என ஒருபாட்டு யாரோ பாடக்கேட்டு “இவ்வொலி எங்குகின்று வந்தது ?” என இருவரும் நாலுபக்கமுஞ் சுற்றிப்பார்க்க, மரத் திலிருந்து ஒருவன் இறங்கிவந்து, சீதையை அஞ்சலி செய்துகொண்டு, முன்னே தான் பாடின பாட்டைப் பின்னும் பாடினன். அங்கிருந்த காவற்பெண்டிர் எல்லாரும் 'இராவணனன்றி வேறு ஒராடவனும் உட்புகாத இவ்வனத்துள் வந்த இவன் யார்? எவ்வாறு வந்தானிங்கு ? இவன் உடையையுங் தோற்றத்தையும் பார்த்தால் இவன் இலங்காவாசி யல்லன்” எனத் தம்முள் ஒருத்தியோ டொருத்தி பேசினர். அனுமன் பாடிமுடிந்தவுடன் அம்மா, நான் இராமதூதன்; என்பெயர் அனுமன். அமது

Page 40
፲፯ இராமன் கதை
காயகர் தும்மைப் பிரிந்தபின் இளையவரோடும் அம்மைத்தேடிக் கிட்கிங்தைக்கருகில் வந்தனர். இப்பொழுதும் இருவரும் அங்குகானுள்ளார். நீயிர் எவ்விடத்துற்றீர் எவ்வாறிருக்கின்றீர் எ ன் அறு அறிந்துவரும்படி என்னே அனுப்பினர். ’ என்ருரன். அதைக்கேட்ட சீதை, * நீ சொல்வதெல்லாம் பொய் யன்று, உண்மைதானென நான் எப்படி யறிவேன்? என்னே அணுப்ப இராவண ன் செய்த சூதா யிருக்கலாமே ' என்ருள். அனுமன், “அகத்தினழகு முகத்திலே தெரியும் என்பர் பெரியோர். நான் சொல்வது மெய்யென்பதற்கு என் முகமே சான்று; இது போதாதாயின் வேறொரு சான்று வைத் துளேன். இக்கணயாழி யாருட்ையது? பாரும் ” என்றுசொல்லிச் சீதைகையில் அதைக்கொடுத்தான்; கஃனயாழியைக் கண்டது இராமனைக் கண்டதுபோ லிருந்தது சீதைக்கு. கண் இமைகொட்டாமற் சிறிது நேரம் உற்று நோ க் கின ஸ். பின் இரண்டு ண்ேணிலுமொற்றினள்; மார்பிலொற்றினள்; முத்த மீந்தனள். பின் தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்துகொண்டனள். பின் அனுமனே நோக்கி, இஃது என் நாயகர் கணேயாழியே. ஆயினும் இதை அவர் உன்னிடந்தந்து எனக்கனுப்பினரென்பதற்கு என்ன சான்று? அவர் நித்திரைசெய்கையில் துஷ்ட ைெருவன் அவரைக்கொன்று இவ்வாழியை அப கரித்திருக்கலாமே ' என்றனள். அதைக்கேட்ட அனுமன், “ அம்மா, நீரும் தாசரதியாரும் தனித்தி ருக்கையில் அவர் நும் மடிமீது தலைவைத்துக் கண் ணுறங்குகையில், காகமொன்றுவந்து நும் இதழைக் கொவ்வைப்பழமென எண்ணிக் கொத்தத் தொடங்கு கையில் நீர் அசைய, இராமர் கண்விழித்துக்

அனுமன் 3
காகத்தைப் பிடித்துக் கொல்லப் போனபொழுது, நீர், " அஃறிணைப்பொருளாகிய காகம் அறிவுடைய கன்று, அதைக் கொல்லல் நீதியோ?” என்று இராம ரிடஞ் சொன்னவாசகம் நும்மிருவருக்குமேயன்றி வேருெருவருக்குத் தெரியுமோ? இதை எனக்குச் சொன்னவர் யார்?’ என்ருரன். உடனே சீகை, * நான்செய்த பெரும்பிழையை மன்னிக்கவேண்டும். முன்னே அணுப்பப்பட்ட நான் உன்னே உடனே நம்பாதது இயற்கையன்ருே ?’ என்ருள். ‘அம்மா! நீர் செய்தது சரி; முழுதுஞ்சரி; நுமது புத்தியை மெச்சுகிறேன். நான் இராமதூதன்கானென்று இப்பொழுது நம்புவதால் ஆனந்தமடைகின்றேன். மங்களம், மங்களம் இராமனுக்கு மங்களம் 1’ என்று சொல்லி ஆடினன். 'என் பிராணநாயகர் இன்னும் உயிரோடிருக்கிருரரென்றும் என்மீது அவருக்குள்ள அன்பு சிறிதும் மாறவில்லையென்றும் அறிந்து நானும் உவகைக்கடலிற் படிந்தேன். நான் இங் கிருக்கும் நிலையைக் கண்ட நீ அதை இராகவருக் கெடுத்தோதி, இன்னுமொருதிங்களுள் வந்து என்னை மீளாவிடின் நான் இறந்துபடுவது ஒருதலையென்று கூறு. மேலும் அயோத்தியிலுள்ள என் மாமியர் மூவருக்கும் என் நமஸ்காரம் அறிவி. மிதிலையில் எந்தையார் இன்னும் உயிரோடிருப்பின், நுமது மகள் சீதை, இராவணன்கைப்பட்டு இலங்கையிற் சிறையுற்றுப் பலதிங்கள் வருந்தினளேனும் சுந் கைக்கும் மிதிலைக்கும் விதேகநாட்டுக்கும் யாதொரு வசையும் வாராதபடி கன்னேக்காத்து இறந்தனள் என்றும் அறிவி. நீசெய்யும் இவ்வுதவிக்கு நான் கைம் மாறென்றுஞ் செய்ய வல்லேனல்லேன். கடவுள்
10

Page 41
இராமன் ககை
உனக்கு அருள்செய்வர்” என்றுள் சீதை. அனும்ன்,
* போதும், போதும் ; இவையெல்லாஞ் செய்வது என்னலாகாது. நீர் உயிரோடிருக்க யான் பார்த்தும் உம்மை இங்குவிட்டு நான் திரும்பிப்போய் இராமன் முகத்தில் எப்படி விழிப்பேன்? இவனுமொரு
வீரனே?’ என்று பிறர்கூறும் கிங்தையை எப்படித் தாங்குவேன்? என்காய் அஞ்சனே பத்தினியானல்,
அனுமன் இராமருக்குத் கொத்தடிமையென்பது
மெய்யானல், ஏழையெனக்கு அன்னையார் சானகியார்
அருள் கிடைக்கது உண்மையானல், நீவிர் இப்
பொழுதே என்னுடன் வரல்வேண்டும். என்னுடன்
வருகற்கு ஐயப்பாடு வேண்டா. காசரதியாரும்
குறையொன்றுஞ் சொல்லார்; வாரும் ” என்று
சொல்லித் தர்ையில் விழுந்து இரங்கினன். இதைக்
கண்ட சீதை, 'அனும! நீ எனக்கு மகன் ; நான்
உனக்குத்தாய். உன்னேடு நான்வர எனக்கு அச்சமு
வில்லை, ஐயமுமில்லே. ஆயினும் எனக்கிவ்வாறு
தீங்கிழைத்த இராவணனைக் கொன்று இராமர்
என்னை மீளாவிடின் அவருக்கும் அவர் வில்லுக்கும்
வசையல்லவோ ? இராமர் என்னை மீட்டாலன்றி நான்
மீளேன். என்னை நீ கண்டதற்கறிகுறியாக, நான்
அணிந்திருக்குஞ் சூளாமணியை உன்கையிலே தருகிறேன். இதைக்கொண்டுபோய் என் நாயகர் கையிற் கொடு” என்றுசொல்லித் தன் சூளா மணியை அனுமன்கையிற் கொடுத்தாள். அனுமன் அதை வாங்கி இட்ைவாரிலிருந்த பையினுள் இட்டு அவளை நமஸ்கரித்தபின்னர் அசோகவனத்தை விட்டுப் புறப்பட்டான்.

22. இராவணன் கொலு
சீதையைவிட்டுப் புறப்பட்ட அனுமன் இராவணன் கொலுமண்டபம் புகுந்தான். அங்கு கும்பகன்னன் விபீஷணன் என்னுங் கம்பியரிருவரும் இருமருங் கிலும் இருப்ப, சிங்காதனத்திலே இலங்கைவேக்கன் வீற்றிருந்தான். அவனுக்குச் சிறிதுதுரத்திலே வேறு மந்திரிமார் இருந்தனர். இராவணன் மகன் மேகநாதன் படைத்தலேவன், கும் பகன் ன ன் பக்கத்திலிருந்தான். அவன் தம்பி அட்சன் விட ஷணன் பக்கத்திலிருந்தான். வாயில்காப்பாள ைெருவன் மண்டபத்துட்புகுந்து, "வேந்தர்வேங்கே, அயோத்திமன்னவர் இராமசந்திரபூபதி அனுப்பிய தூதைெருவன் அனுமனென்பான் வந்து கோபுர வாயிலில் நிற்கிருரன்; அவனை உள்ளேவிடலாமோ ?” என்ருரன். “அவனே வரச்சொல்” என இராவணன் கூற, நாம் முன்னே கண்டபடி அனுமன் கொலு மண்டபம் புகுந்தான். துரகருக்கென வைக்கப்பட் டிருந்த இருக்கை பலவற்றுள் ஒன்றைக்காட்ட அதன்மீதிருந்தான் அனுமன். 'இலங்கைவேக்கே கமஸ்காரம் ; கோசலநாட்டையாளும் இராமசந்திர சக்கரவர்த்தி அனுப்பின தூதன் நான் ; என் பெயர் அனுமன். தூதை அறிவிக்கலாமோ?’ என்ருரன் ஆஞ்சனேயன். *
*சொல்லுக ’ என அரசன் பணிக்க, சொல்ல லுற்ருரன் துரதன் : “ பஞ்சவடியிலே நானும் என் தம்பியும் இல்லாத நேரத்திலே நீ என்மனைவி
* அஞ்சனையின் மகன் ஆஞ்சனேயன்

Page 42
6 இராமன் கதை
சீதையைக் களவுசெய்து இலங்கைக்குக் கொண்டு போயினை எனக் கேள்வி ; உன் ஆண்மையையும் வீரத்தையும் மெச்சுகின்றேன்; என் தேவியை விடுகின்றயா? அல்லது உன்ஆவியை விடுகின்றாயா? சொல் ' என்பதே தூது. இதைக்கேட்ட இரா வணன் அங்கமெல்லாம் குலுங்கக் கைகொட்டி, *வாலியை மறைந்துநின்று கொன்ற ஆண்மகனர் என் ஆண்மையையும் வீரத்தையும்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்!" என்று விலாப்புடைக்கச் சிரித்தான். 'சுக்கிரிவன் மனைவியை அபகரித்த வாலியைக் கொன்ற இராமர் தம்மனைவியைத் திருடின உம்மை கொல்லாமலிருப்பாரோ? இப் பொழுதே சீதையை விட்டுவிட்டால் தப்பினிர்; இல்லையேல் நீரும் உமது குடும்பமும் மட்டுமல்ல, இலங்கையிலுள்ளார் யாவரும் மடிவது திண்ணம்." என்ருன் அனுமன்.
இராவணன் கண் இரண்டுஞ் சிவக்க, மீசை துடிக்க, 'அச்சமின்றி என்முன் இவ்வார்த்தை கூறிய மக்கட் பகடியை பிடித்துக் கொன்மின்' என்று தன் சேவகருக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது விபீஷணன், “அரசே, தூதரைக் கொல்வது அநீதி. தன் அரசன் சொன்னகை இவன் சொன்னனேயன்றி வேறென்றும் சொற் றிலன். மேலும் இவன் சொன்னவையெல்லாம் உண்மையல்லவோ? கன்னங்கணியளாய் நின்ற ஒரு பெண்ணேக் கவர்ந்துகொண்டுவந்தது ஆண்மையோ? வீரமோ? உம்மால் இலங்கைக்கு வசையுண்டா யிற்றே. சீதையை நீர் கொண்டுவந்தும் நும் கருத்து

இராவணன் கெர்லு
நிை றவேறினே தா? இனியேனும் நிறைவேறுமோ ? சீதையை உடனே இ ரா மனிடம் திருப்பி யனுப்புவதே தகுதி. இருபதுவருஷத்துக்கு முன்னே காடகையையும் சுபாகுவையும் கொன்ற இளஞ் சிங்கம் இன்று கரதுTஷணரையும் படைகளையும் அழித்த பராக்கிரம்சாலி. அவனிடம்போன மா? Fனும் அழிந்தான். இப்பொழுகோ இராம இலக்கு மணர் துணையற்றவரல்லர்; சுக்கிரிவன் அங்கதன் இருவரும் இவரைச் சார்ந்தனர். சீதையை உடனே அனுப்பிவிடுக ’ என்றன்.
* கேட்டபின் புத்திசொல்வது மந்திரி கடன் நீ பிரகமமந்திரியுமல்லை; உன்னில் மூத்தவன் உன்னில் விவேகி கும்பகன்னன் வாளாவிருப்ப, வாய்திறந்து பேசவந்தாய் அறிவிலி! புண்ணியன் போலப் பாசாங்குபண்ணித் திரிகிற கபடி, என் இராச்சியத்திலுள்ளா ரனேவரையும் என க்கு விரோதிகளாக்குகின்ற சத்துரு உன்னையன்றி வேறுளரோ? இராமன் எனக்கு வெளிப்பகைவன்; அவனை நம்பலாம். நீ எனக்கு உட்பகைவன் ; உன்னை ஒருகணமேனும் நம்பலாகாது; இத்தனைநாளும் பொறுத்தேன்; இனிப்பொறுக்க என்னுலாகாது. 15ட வெளியே, அல்லது உதைத்துத்தள்ளுவேன் ’ என்று இடிபோற் கழறினன் இ ரா வணன் , அப்பொழுது விபீஷணன், ‘என்னைப்பிடித்த சனி இன்றுவிட்டது என்புத்தியைத் தள்ளின ச் எக்கேடு கெடினுங் கெடுக. இலங்கையையாவது காக்க முயல்வேன்” என்று எழுந்தான். உடனே கும்பகன்னன் * வெளியே போ, மடையா; நீ செய்

Page 43
இராமன் கதிை
வகைச்செய்; நானும் மேகநாதனும் அட்சனும் மாண்டபின்னன்ருே ? இலங்கைவேந்தர் மடிவார். உனக்கு உன்னுயிர் வெல்லம். சாக அஞ்சினை ; இலங்கையைவிட்டு ஓடிப்போ' என்ருரன்.
** கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே' என்பது பொய்யோ?” என்று பேசத் கொடங்கின விபீஷணனை எழுந்து உதைத்தான் இராவணன். உடனே மேகநாதன் விபீஷணனைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் வெளியே தள்ளி விட்டுக் கொலுமண்டபம் வந்தான். இராவணன் அனுமனைப்பார்த்து, "நீ போய் உன்னை அனுப்பின அரசனிடம் 'இராவணன் முன்வைத்தகாலைப் பின் வைக்கிறவனல்லன். நான் சீதையை விடுவதில்லை. நீ செய்வதைச் செய்' என்று சொல் ; போ, வெளியே” என்ருரன்.
அனுமன் கிட்கிங்தைக்குத் திரும்பினன்.
விபீஷணன் தன் மகளிருக்குமிடஞ்சென்று, அவளேயழைத்து, கொலுமண்டபத்தில் நடந்ததெல் லாம் அவளுக்குச் சொல்லி, "மகளே, நீ சீதா தேவியாரைத் தேற்றிக்கொண்டிரு; நான் இரா மரைச் சரண்புகுவேன். இவ்வாறு நான் செய்வது என்னையும் உன்னையும் காக்கவன்று. எனக்கு என்னுயிர் வெல்லமென்ருரன் கும் ப கன்னன். எனக்கு ஆயிரம் உயிரிருந்தால் ஆயிரத்தையுங் கொடுப்பேன்" இலங்கையைக் காத்தற்கு. இராம இலக்குமணரோடு போர் செய்து இங்கையைக் காத்தல் இயலாது. அறமே உருவெடுத்துவந்தாற்

இராவணன் கொலு 79
போன்ற இராமரையும் அருளே உருவெடுத்துவங் காற்போன்ற சீதாதேவியாரையும் அழிக்கக் காமாக் தகனுகிய இராவணனல் முடியுமோ? அவன்பக்கம் நின்று யுத்தஞ்செய்தால் நன்மை வருமோ? இவை யெல்லாம் ஒருமுறை இருமுறையல்ல, பல்லாயிரம் முறை யோசித்த பின்பே நானிவ்வாறு கொலுவிற் பேசினேன். இராவணனும் அவன் குடும்பமும் அழிந்தேதீரும். அவரைக் காக்க ஒருவராலும் முடியாது. இத்தீயல்ை இலங்கையெல்லாம் அழிய வேண்டுமோ? இலங்கையிலுள்ளாரைக் காக்கும் பொருட்டே நான் இராமர்பாற் சரண் புகுகின்றேன். யார் என்னைப்பற்றி எவ்வாறு சொல்லினும் நீ என்னை நம்புவாயல்லேயோ?” என்ருரன். திரிசடை தந்தையைவிட்டுப் பிரிவதை நினைக்க மனம்வருந்தி, கண்ணிராருய்ப் பெருக, 'ஐயா, உங்களை உங்கள் மகள் எப்பொழுதாயினும் சமுசயித்ததுண்டோ? உங்களை நான் சமுசயித்தால் வேறு யாரை நம்புவேன்? வருவன வெல் லாம் வந்தேதீரும். எல்லாம் ஈசன்செயல். நான் சீதையைப் பார்த்துக் கொள்ளுவேன்; நீங்கள் போய்வாருங்கள்’ என்று சொல்லித் தந்தையின் அடியில் விழுந்து பஞ்சாங்க நமஸ்காரஞ் செய்தாள். விபீஷணன் இரண்டு கையாலுங் கன்மகளைத் தூக்கியெடுத்து, உச்சி மோந்து, இரு கன்னத்திலும் முத்தமிட்டு, “ என் மகளை இறைவன் காக்க ’ என்று ஆசிகூறி அவளைவிட் டகன்ருரன்.

Page 44
23. போர்
இலங்கையைவிட்டுப் புறப்பட்ட அனுமன் தான் விட்டுவந்த சேனையை யடைந்து, அவற்றேடு கிட்கிக் தைக்குத் திரும் பினன். அங்கு சுக்கிரிவனைக் கண்டு இலங்கையில் நிகழ்ந்தனவற்றை அவனுக்குச் சொன்னபின், மதங்கமுனிவ ராச்சிரமத்துக்கு இராமனிடஞ் சென்ருரன். 'எப்போது திரும்பி வருவனே அனுமன்?’ என ஏங்கின முகத்தோடு இருந்த இராமன் திரும்பிவந்த அனுமனேக்கண்ட வுடனே, "இவன் இப்போது என்னசொல்வானே?” எனவெண்ணி நடுங்கி வியர்த்தான். பேச நா வெழவில்லை. உள்ளத்தின் வருத்தமெல்லாம் முகத் திற்கண்ட அனுமன், “ கண்டேன், கண்டேன், கண்டேன் சிதை  ைய’ என ஆரம்பித்தான். அச்சொல் அமிர்தம்போல நுழைந்தது இராமன் செவியில். அச்சமும் ஐயமும் நீங்கின. ஆனந்தம் முகத்தில் விளங்கினது. ‘இன்று எனக்குப் புத் துயிர் அளித்தாய் அனும’ என்ருரன் இராமன். பின் அனுமன், இலங்கையில் அசோகவனத்தில் தான் சீதையைக் கண்டதும், இராவணன் அங்கு வந்து அவளுக்கு 6யத்துடனும் பயத்துடனும் பேசித் திரும்பினதும், தான் சீதையைச் சந்தித்ததும், சீதை நாயகருக்குச் சொல்லியனுப்பியதும் எல்லாம் ஒன்றும்விடாமல் விரித்துரைத்தான். அன்றியும் சீதை கொடுத்த சூளாமணியையும் அரைவார்ப்பையி லிருந்தெடுத்து இராமன்முன் வைத்தான். மிதிலையிற் சானகியை மணந்த அன்று கண்ட சூளாமணியை

Guit if 8.
இராமன் ஒருநாளும் மறந்தவனல்லன். அதை மறு படியுங்கண்ட இராமனைக் கார்பெற்ற தோகையென் பேமோ? கண்பெற்ற வாண்முகமென்பேமோ? நீர் பெற்றுயர்ந்த நிறைபுலமென்பேமோ? பாற்கடலி லிருந்துவந்த அமிர்தத்தை உண்ட தேவரும்,இராமன் சூளாமணியைக் கண்டு உவப்புற்றதுபோல உவப்புற் றிலர். அனுமன் சொன்ன சொல்லெல்லாம் செவி வாயாக நெஞ்சுகளகை மண்டினன் இராமன். ' என் சீதை இன்னும் உயிரோடிருக்கின்ருரளோ? இரா வணன் கைப்பட்டும் கற்பழிந்திலளோ ? என்னையு மின்னும் நினைக்கின்ருளோ? என்று நான் காண் பேன் என்கண்ணே ” என்று பாடினன், ஆடினன் இராகவன். அதன்பின் அனுமன் தான் இரா வணன் சபையிற் சென்றதும் அங்கு கண்டதுங் கேட் டதும் எல்லாம் விஸ்கரித்தான். ‘இனி நாம் போருக்குச் செல்வதே கடன்’ என்று இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், அங்குவந்து இராமனை நமஸ்கரித்துநின்றன் விபீஷணன். விபீஷணன் வாய்திறந்து பேசுமுன்னர் அனுமன் இராமனை நோக்கி, ' இவர் இராவணனுக்குக் கனிஷ்ட சகோ தரர்; விபீஷணனென்னும் பெயரினர். மூகேவி யோடு பிறந்த சீதேவிபோல, இராவணன் கும்பகன் னன்போலாது அறங்கிடந்த நெஞ்சினன். வேத் தவையில் அரசனைச் சிறிதும்.அஞ்சாது அறமெடுத்து மொழிந்த ஆண்சிங்கம். இவர்மகள் திரிசடையார் ஒருவரே தே வியாருக்கு உற்றதுணையாவார்’ என்ருரன். விபீஷணனும், 'மன் ன வ ரே நே, இலங்கை வேந்தனுக்கு நான் எடுத்துச்சொன்ன
l

Page 45
இராமன் கதை ثلات
அறமெல்லாம் பாலைநிலத்திற் பெய்த மழைபோல வீணுயிற்றன்றிப் பயனென்றுங் தந்திலது.
விதிவலியசற் கெடுமதிக ண் தோன்ற தன்றே. *
*ஆகவே இராவணன் கிளையோடு நாசமுறுவது ஒருதலே. ஆயினும் அவனையும் அவன் குடும்பத் தையும் நீவிர் அழிக்கையில், குற்றமொன்றுஞ் செய்யாத பேதையரான இலங்காவாசிகளையும் அழித்து நாசஞ்செய்யேனென அபயந் தந்தருள வேண்டுமென்று உம்மைச் சரண் புகுந்தேன். சர ணம், சரணம் இராகவ சரணம்” என்று இராம னடியில் வீழ்ந்தான். உடனே இராமன் அவனைத் துரக்கியெடுத்து, ' விபீஷணு, துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்வதன்ருே அரசன்கடன்? அன்றி, தீயாரை அழிக்கையில் நல்லாரையும் உடன் அழிக்க ஐாமோ? யான் அவ்வாறு செய்யேன். நீ அஞ்சற்க. அன்றியும், இராவணனும் கும்பகன்னனும் மேக நாதனும் அட்சனும் பட்டொழிந்தால் இலங்கைக்கு அரசன் நீயன்றி வேறுயார்? உன்னை இலங்காதிபதி யாக்குவேன்; நீ என்னேடிரு” என்ருரன். விபீ ஷணன், ' நான் இங்கே இருப்பதுமன்றி இரா வணன் செய்யும் சதியெல்லாம் அப்போதைக்கப்போ கறிந்தறிந்து உமக்கு வெளிப்படுத்துவேன். இரா வண சங்காரத்துக்கு வேண்டிய யாவும் யான் சொல்லுவேன்" என்ருரன். இப்படி விபீஷணன் பேசுகையில் அங்கு வந் தான் சுக்கிரிவன், விபீஷணன் யாரென்றறிந்த கிட்கிங்கைமன்னன் இராமனைப்பார்த்துக் கூறுவான்:

போர் 83
'ஐய, தாம்செய்தது என்னே? இவனை முன்பின் அறியீர். பிறந்தநாள்தொடங்கி அன்புபாராட்டின தமையனைவிட்டு வந்தேன்’ என இவன் சொல்வது மெய்யோ பொய்யோ? மெய்யேயாயினும் இன்று தமையனுக்கு இரண்டகம்பண்ணினவன் நாளைக்குத் தமக்கு என்செய்யான்? அன்றி இவன் உத்தமனே யாகுக. நாளைக்கு இராவணன் வந்து தமது காலில் விழுந்து ' என் குற்றத்தைப் பொறுத்தருள்க, இதோ சீதை, இவ் வுத் த மியை அங்கிகரிக்க என்பனேல் தாம் அவனை மன்னிப்பீர். அப்போது இலங்கைக்கு இராசா இராவண ணுே விபீ ஷணனே? சொல்லும்” என்ருரன். அதற்கு இராமன், * சுக்கிரிவா, ஒருகாரியத்தை யோசித்துத் துணியச் சிலருக்குப் பலநாள் வேண்டும். மதியூகி களுக்கு இரண்டுவிநாடி போதும். இத்துணேக் காலம் அனுமன் உன்னேடிருந்தும் நீ அவனை அறிந்திலை. நான் அவனையறிவேன். இராவணன் சபையில் நடந்தவற்று ளொன்றையும் விடாமல் உண்மையறிந்தபின்பே நான் விபீஷணனுக்கு அபயங்கொடுத்தேன். நீ சொல்லுகிறபடி நாளைக்கு இராவணன் செய்வனேல் விபீஷணஃன அயோத் திக்கு அரசனுக்குவேன்' என்ருரன். இதைக்கேட்ட அனுமன் விபீஷணனநோக்கி, “அஞ்சன்மின், தசரதசக்கரவர்த்தி மைந்தனர் உரைதிறம்பார்” எனருரன. -
இதன்பின் போருக்குவேண்டிய ஆயத்தஞ் செய்யப்பட்டன. காற்படையோடு மலைக2ளயும் ஆறுகளையும் சுரங்கங்களையும் காடுகளையுங் கடந்து கடற்கரை சேர்ந்தனர். போர்த்தொழில் விரும்பாத

Page 46
84 இராமன் கதை
இராமன் இராவணன்மேலுற்ற பரிவால் இன்னு மொருமுறை இலங்கைக்குத் தூதனுப்ப எண்ணி அங்கதனை விடுத்தான். அங்கதன் இலங்கை வேத்தவையை அடைந்து இராவணனைப் பார்த்து, * உம்மைக் கொல்ல மனமில்லாத இராமர் இப் பொழுதாயினும் சீதையை அனுப்பிவிடுவாயா? நீ ஏன் சாகவேண்டும்?' என்று சொல்லுகிருர்? என்ருரன். இராவணன் சிரித்து, “நன்று, நன்று உன் வார்த்தை ; இராமன் போர்செய்ய அஞ்சு கிருரன் ; ஆயினும் வீரன்போலப் பேசுகிருரன். நான் சீதையை விடுவதில்லை. அதுகிற்க, அங்கதா, நீ வாலி மைந்தனல்லையோ? உன் தந்தையை ஒளித்து நின்று கெர்ன்ற பாதகனுக்கு நீ உதவிசெய்ய நினைத்ததெப்படி? சிச்சி ! இராமனை விட்டுவிட்டு என்னைச்சேர்; நான் உன்னைக் கிட்கிந்தைக்கு அரசனுக்குவேன்'.என்ருரன். அங்கதன் அதைக் கேட்டு, ' இராவணு, என்னை உன் கபடநாடகம் ! நான் இராமர்பக்கத்திலிருந்தால் அவருக்கே வெற்றி வரும் என அஞ்சின நீ என் உதவி கேட்கிருரய். அப்படி வெளியே சொல். அதைவிட்டு ‘ஆடு நனை கிறதென்று கோBாய் அழுவதுபோல கள்ள இரக்கம் பாராட்டுகிருரய்! எங்தையார் இறக்குமுன் அவரே என்னை இராமர்கையில் ஒப்புக்கொடுத்ததை நீ அறிந்திலேபோலும். இது மன்றென்று விரித்தல். இராமர் சொல்லியனுப்பிய சொல்லுக்கு விடை கூறு' என்றன். 'முன்வைத்த காலைப் பின் வைப்பதில்லை இராவணன் என்று முன்வந்த தூத னிடம் சொல்லியனுப்பினேனே. நான் மனம்மாற வாலியல்லேன்' என்ருரன் இராவணன். "நீயும்

உன் கிளையும் மாண்டீர்" என்று சொல்லிவிட்டு அங் கதன் இலங்கையைநீங்கி இராமனிடஞ் சேர்ந்தான்.
இராமன் படைகளோடு இலங்கைக்கரையை யடைந்து, படையை மூன்றணியாக வகுத்தான். வல அணிக்குச் சுக்கிரிவனேயும் இட அணிக்கு இலக்குமணனையும் கலேவராக்கி, மூலபலத்துக்குத் கானே தலைவனைன் இராமன். அங்கதனும் அனு மனும் அப்போதைக்கப்போது மூன்று அணி களுக்கும் உதவிசெய்யும்படி ஏவினன். இலங்கைப் படையையும் மூன்று அணிகளாக வகுத்தான் இரா வணன். வல அணிக்குக் கும்பகன்னனேயும் இட அணிக்கு மேகநாதனேயும் தலைவராக்கி மூலபலத் துக்குத் தானே தலைவனுனன் இராவணன். அட்சனை இம் மூன்று அணிகளில் எகற்காவது சமயத்துக் குத்தக்கபடி உதவிசெய்ய ஏவினன் இராவணன். இரண்டுசேனையும் கைகலந்தன. முதல்நாட்போரில் இராவணன் தேரிலேறி வில்லெடுத்துக்கொண்டு கணித்துவந்து இராமனைத் தனிப் போருக்கழைத் தான். இராமஇராவணரிருவரும் வேறொரு சேனையு மின்றித்தனியே மலைக்தனர். அப்பொழுது இராமன் இராவணனது தேரிற்பூட்டிய குதிரைகளை அம்பினுற் கொல்ல, இராவணன் தேரினின்றுங் குதித்து, * இராமா, நீயுங் குதி ” என்று சொல்லுமுன்னரே இராமனுந் தேரினின்று குதித்து இராவணனைப் பொருகான். நெடுநேரம் இருவரும் பொருதனர். பார்த்துங்ண்றவர், யார் வெல்வான் யார் தோற்பான் என்று சொல்லமுடியவில்லை. ஆயினும் ஈற்றில் இராமன் தன் அம்பினுல் இராவணன் சிலை5ாணே

Page 47
86 இராமன் கன்தி
அறுத்துவிட்டான். *நிராயுதபாணியாய் நிற்கும் இராவணனைக் கொல்லுதல் பாவம். முன்னுெரு முறை வாலியைக்கொன்ற பாவம் என் மனத்தை இன்னு மழுத்துகின்றது" என இராமன்எண்ணி, *இ ரா வணு , நிராயுதபாணியாயினை, நின்னைக் கொல்லல் எனக்கு அழகன்று ; புகழன்று ; திரும் பிப்போ உயிரோடு. இப்பொழுதாயினுஞ் சீதையை விடு; இல்லையேல் நாளைவா சாக’ என்ருரன்.
தேரிழந்து வில்லிழந்து நிராயுகபாணியாய்ச் சென்ற இராவணன் அவ்விரவு துயின்றிலன். அவ மானம் நெஞ்சை நிரப்பிற்று. ' நானின்று இரா மனைத் தனிப்போருக்கழைத்தது என் மடைமை. நாளைக்கு நாற்படையோடுஞ் சென்று வெல்லுவேன்; அல்லது, போரில் மடிவேன். இராமன் என்மே லிரங்கிப் பரிந்துபேசவொட்டேன் இனி" என்று ஒருவாறு ஆறியிருந்து பொழுதுவிடிந்தவுடன் யுத்த *சன்னத்தனுய் வங்கான் இராவணன். இரண்டு சேனைகளுக்கும் பலநாட்போர் நடந்தது. இரண்டு பக்கத்திலும் மாண்டார் பல்லாயிரவர். ஆயினும் இராமன் பக்கத்தில் தலைவரொருவரும் மாண்டிலர். இராவணன் சேனையிலோ நாற்படைகளிலும் பல்லாயிரவர் மாண்டதன்றி அனுமன் கையாற் செத்தான் அட்சன், இலக்குமணன் கையால் மாண்டான் மேகநாதன். கும்பகன்னனை இராமன் கொன்றன். தம்பியையும் மக்களிருவரையும் பல் லாயிரவர் சேவீைரரையும் இழந்த இராவணன் தன்கதியை முன்னமே அறிந்தவனுய், ‘இனியேன் எனக்கு வாழ்வு? "சேயோடு தான்பெற்ற செல்வம் போம். மேகநாதனும் அட்சனும் மாண்டபின்

G3. Tif 87
நான் உயிர்வாழ்வது தகுதியோ? தம்பி கும்பகன்ன ! அந்தப்பாதகனைப்போல நீ இராமனிடஞ் சரண் புகவில்லை. என்பொருட்டு நீ மாண்டாய்; உன்னே இழந்தபின் நான் உயிர்தரிப்பேனே? சிங்கமுகனை இழந்த சூரன் மடியவில்லையோ? நானும் மடிவேன்.” என்று புலம்பினன். மண்டோதரி அவன் காலில் விழுந்து, 'ஐயா ; இப்பொழுதாயினும் சீதையை அனுப்பிவிடுங்கள்; உங்களிடம் மங்கிலியப்பிச்சை கேட்கிறேன்’ என்று கதறினுள். இராவணன், சீச்சி! சவமே போ; நீ காலியறுத்தால் எனக் கென்ன ? சீ  ைத யை விட்டு உயிர்வாழ்வேனே? அவளே என்னுயிர்; அவளை 5ான் இராமனிடம் அனுப்புவதில்லே’ என்று இடித்துரைத்தான். * ஐயா, எனக்காக உயிர்வாழ உங்களுக்கு மன மில்லையேல், உங்கள் குடிகள் பொருட்டாயினும் நீங்கள் உயிர்கரித்திருந்து அவர்களை யாள ல் வேண்டும். சீதையை அனுப்பிவிடுங்கள். - * அல்லற்பட்டாற்ரு தழுத கண் ணிசன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. ? ?
என்ருள் மண்டோதரி. குடிகளை யாள விபீஷணன் இருக்கின்றன். அவன்தான் தருமப்பிரபு. குடிக ளெல்லாரும் அவனையே நேசிக்கின்ருரர்கள். அவன் எப்போது திரும்பிவருவான் என்று காத்திருக்கின் றனர். நான் செத்தபின் நீயும் அவனை மணந்து கொள்; அப்போது சுமங்கலியாய் இருப்பாய். என் ஆவி சீதையே ; சீதையே என்னவி ' என்றன் இராவணன். ‘சிவ சிவா! சிவ சிவா.* இந்தச்
* மண்டோதரி சிவனடியாள் என்பது மாணிக்கவாசக சுவாமிகள் கூற்று.

Page 48
S8 இராமன் கதை
சொல்லேக் கேட்கவோ இத்தனைநாளும் உயிரோ டிருக்கேன்! நீங்கள் இறந்த அன்றே என்னுயிரும் போய்விடும். இப்பிறப்பில் நான் பெருரத பாக் கியத்தை இன்னெரு பிறப்பிலாயினும் பெறுவேன்." என்ருள் மண்டோதரி. -
இராவணன் போர்க்களஞ் சென்று, காலே தொடங்கிப் பிற்பகல்மட்டும், குட்டிகளைப் பறி கொடுத்த சிங்கம்போல, அச்சஞ் சிறிதுமின்றித் தன்னுயிரைக் காக்கவேண்டும் என்ற எண்ணமே யில்லாமல் எதிரிசேனையிற் புகுந்து, இங்குமங்கும் முன்னும் பின்னும் பல்லாயிரவரைக் கொன்ருரன், ஈற்றில் இராமன்வர, அவனேடு பொருது வலியற்று மதியற்று, ‘இராமா, நீயேவென்றாய்” என்று சொல்லுமுன், இராமன் வாளி அவன் மார்பை ஊடுருவிச் சென்றது. வேறுே ரம்பு அவன் தலையை விழுத்திற்று. சுத்தவீரன் காமப்பேய் ஆட்ட ஆடி, காய்போற் களத்தில் விழுந்து அழிந்தான்.
24. விபீஷண கிரீடதாரணம்
போர்க்களத்தில் இராவணன் மடிந்தபோது மண் டோதரி அவன் தேகத்தின்மீது விழுந்து அழுதாள். விபீஷணனும் கண்ணிர்விட்டான். பின் இராமன் கட்டளைப்படி, இராவணனுக்கு விபீஷணன் ஈமச் கடனெல்லாஞ் செய்தான். இவையெல்லாம் முடிந்த பின்பு இராமன், தான் ஒரு பட்டணத்துள்ளும் பிரவேசிப்பதில்லை என்ற சபதத்தை மறவாது, இலக்குமணனைக்கொண்டு விபீஷணனுக்கு முடி

விபீஷண கிரீடதாரணம் 89
சூட்டுவித்தான். அப்பொழுது அங்கு இலக்குமணன் சுக்கிரிவன் அங்கதன் அனுமன் சாம்புவன் முதலிய பெருமக்கள் அவையை விளக்கஞ்செய்தார்கள். இலங்கை நங்கையரில் மண்டோதரியும் திரிசடையும் ஆங்கு விளங்கினர். மறுநாட்காலை இராமன் தங்கி யிருந்த ஓர் அரசமரச் சோலேக்கு விபீஷணனும் திரிசடையும் வந்தனர். சுக் கிரிவன் முதலியோர் முன்னரே அங்குபோய் இராமனேச்சூழ இருந்தனர். விபீஷணனையும் திரிசடையையும் இராமன் கண்ட வுடனே, 'சீதையெங்கே? ஏன் அவள் வரவில்லை?” என்ற எண்ணம் அவனுள்ளத்திலே தோன்றின. அவன் வாய்திறந்து கேட்குமுன்னரே திரிசடை இராமனைக் கைகடப்பிச் சொல்லுவாள் : “மகாபிரபு! கடந்த இருபத்தொரு5ாளும் சீதாபிராட்டியார் கடும் உபவாசம்செய்து மெய்களர்ந்தநிலையி லிருக்கின் றனர். இவ்விருபத்தொரு5ாளும் த ன் னிரும் உப்புமேயன்றி வேருென்றும் உட்கொண்டிலர். இன்று கான் அவர் பாரணம்பண்ணும்பொருட்டுத் தோடம்பழச்சாற்றைச் சருக்க  ைரயிற் கலந்து கொடுத்தேன். அவர் கம் இயற்கைநிலையடையக் குறைக்கபட்சம் இன்னும் ஒருமாகஞ்செல்லும். அதன்பின்புதான் பயணஞ்செய்யமுடியும். அது வரையில் சக்கரவர்த்தியவர்களும் இலங்கையில் இருந்து, பின்பே பிராட்டியாரை அழைத்துக் கொண்டு அயோத்திக்கே கலாம். தாங்கள் அவரை இப்பொழுது பார்க்க விரும்பின் வந்து பார்க்கலாம். ஆயினும் இன்னும் பத்துநாளைக்குப்பின் பார்ப்பதே உசிதம்.” இகைக்கேட்ட இராமன், ‘ ஆக்கப் பொறுத்தவன் ஆறப்பொறுக்கவேண்டாவா ? உன்
12

Page 49
. . ) இராமன் கதை
டிடப்படியே பத்துநாட் சென்றபின் நான் சீதையைப் பார்ப்பேன்’ என்ருரன்.
விபீஷணனும் திரிசடையும் ஒருபக்கத்தில் ஒரு மான்கோலில் இருந்தனர். அப்பொழுது அங்கதன் எழுத்துகின்று, இராம ன க்கு அஞ்சலிசெய்து சொல்லுவான் : "வேந்தர் வேந்தே, தங்கள்பால் ஒரு விண்ணப்பஞ்செய்ய விரும்புகின்றேன். இத் க சனத்தில் இலங்கைக்கோனும் கோமகளாரும் இங்கிருப்பது பாலிற் பழம்விழுந்ததுபோலாம். ஐய, இலங்கைக் கோமகளாரை என் மனைவியாக்கிக் கொள்ள மிக விரும்புகின்றேன். என் ஆசையைத் தேவரீரே பூர்த்திசெய்தல் வேண்டும்.' இதனைக் கேட்ட இராமன், ** நற்ருமரைக்கயத்தில் நல் லன்னஞ் சேர்ந்தாற்போல் நீ தி ரி ச டையை மணப்பது எனக்குச் சம்மதமே. ஆயினும் இதைக் குறித்துத் திரிசடையிடம் பேசினயோ?" என்ருரன். அங்கதன், * நான் அவரோடு வாய்திறந்து ஒன்றும் பேசினதில்லை; அவரும் என்னேடு பேசினரல்லர். ஆயினும் நேற்றுப் பட்டாபிஷேககாலத்திலே தாங்கள் ஒருவரொருவரைக் கண்டபோது எங்கள் கண்கள் பேசின. * கண்ணுெடு கண்ணிணை கோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில ’ என்ருரன்.
இதைக்கேட்ட திரிசடை மங்ககாசத்தோடு நிலம் கோக்கினள். இராமன், விபீஷணு, உன் கருத் தென்னே ? ? எனவினவ, இலங்கை வேங் கன், * திரிசடை தன்கருத்தை வாய்திறந்து சொல்லுக’

விபீஷண கிரீடகாரணம் 91
என்ன, திரிசடை தந்தையைப்பார்த்துக் கூறுவாள் : * எந்தாய், நான் கைக்குழந்தையாயிருந்தபொழுது என் தாயார் இறந்தனர். எனக்கு அண்ணன் தம்பியர் ஒருவருமில்லை. நேற்றுவரையிலும் நான் உங்களேயன்றி வேருேராடவனையும் நேசித்ததில்லை. நேற்ருே கிட்கிங்தை இளங்கோவைப் பட்டாபிஷேக மண்டபத்திலே கண்டபொழுதே என் நெஞ்சு என்னையறியாமல் அவர்வசமாயிற்று. இனி வேறென் சொல்வேன் ? ? என்ருரள், விபீஷணன், "மகளே, சக்கரவர்த்தியவர்கள் இப்பொழுது சொன்னது போல நற்றமரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தது. என் நல்லன்னமே, நீ உன் நற்றமரைக்கயத்தைச் சேர்க. நா?ளக்கே மணவினையை முடிப்போம்”
என்றான். உடனே திரிசடை, ‘அம்மம்ம! அத்துண் விரைவு செய்யவேண்டா. எனக்கு விவாகம் நடக்கும் பொழுது சீகாபிராட்டியாரும் அங்கிருக்கவேண்டு மன்ருே ? மேலும் அவர் மெய்களர்வுற்றிருக்கும் இக்காலம் அவரை ஆதரிப்பது எனக்குக் கடனும் சிலாக்கியமுமாகும். சீதாபிராட்டியார் தம் பிரான நாயகரை மீட்டும் அடையும்நாளே நானும் கிட்கிக்கை இளங்கோவை மணக்கும் 5ாளாம்” என்ருள். இதைக்கேட்ட சபையார் யாவரும் திரிசடையின் விவேகம் போலவே குணமும் இருந்தகைக்கண்டு வியந்தனர்.

Page 50
இராமன் கதை خیل۔
ஒருபொழுதும் என்னை விட்டுப் பிரியாதிருக்கி வேண்டும்" எனக் கேட்க, மண்டோதரியுமிசைந்து திரிசடையோடு கிட்கிங்தைக்குப் போனுள். இராமன் விபீஷணனை ஆசீர்வதித்து, ' நான் எங்கு சென் ருரலும் என் கண் உன்னையும் இலங்கையையும் நாடி நிற்கும் ' என்றுசொல்லிப் புறப்பட்டான்.
28. தீவீழ்தலைத் தடுத்தல் இலங்கையைவிட்டு நீங்கிப் பரிவாரத்தோடு கிட் கிச்தையையடைந்த இராமன், அங்கே சுக்கிரிவன் அங்கதன் முதலியவரை நிறுத்திச் சீதையோடும் இலக்குமணனேடும் அயோத்திக்குப் புறப்பட்டான். இன்னும் சிலபகல் கிட்கிங்தையிலே தங்கும்படி சுக் கிரிவன்வேண்ட, இராமன், ' நாங்கள் அயோத்தியை விட்டுப் புறப்பட்டுப் பதின்மூன்றுவருஷம் ஒன்பது மாதம் சென்றன. நாங்கள் செய்யவேண்டியது 5ெடும்பயணம். ஒரு5ாளேக்கு ஒருகாகத்தின்மேல் நடக்கச் சீகையாலியலாது. பதினன்கு வருஷம் முடிகிற தினத்திலே சான் அயோத்தியிலில்லாவிடின் பரதன் அன்றே உயிர்விடுதல் திண்ணம். ஆகையால் 5ாங்கள் போக எங்களுக்கு விடை கொடுக்க வேண்டும் ' என்ருரன். அப்பொழுது திரிசடை சீதையை நோக்கி, ‘நீங்கள் இங்கு எழுபகலிருக்கக் கூடாதா?’ என வேண்டினள். அப்பொழுது சுக்கிரிவன், “ உங்களுக்குமுன்னே அனு மன் சென்று, பரதர் உயிர்துறவாமற் காக்கும்படி செய்வேன்" என்ன, சீதை திரிசடையின் வேண்டு கோளைத் தட்டமுடியாமல் மூவரும் அங்கு பின்னும்

தீவீழ்தலைத் தடுத்தல்
எழுபகல் தங்கினர். அதன்மேல், திரிசடையும் அங் கதனும், இராமபட்டாபிஷேகங் காணத் காமும் அயோத்திக்கு வருவதாகச் சொல்ல, அவரையுங் கூட்டிக்கொண்டு, மூவரும் கிட்கிந்தையை நீங்கித் தாம் முன்வந்தவழியே மீண்டனர். ஆங்காங்குள்ள துறவிகளைச்சந்தித்து அவ்வவ்விடங்களில் ஒவ்வொரு இராத்தங்கி மெல்லமெல்ல வடதிசை சென்றனர். ஈற்றில் கங்கையின் தென்கரையிலே குகன்வீட்டை யடைந்தனர். அன்று பதினன்காம் வருஷம்முடி
ஈற்றயல்காள். அன்றே பரதன் நந்திக்கிராமத்தை விட்டு, அயோத்திக்குவந்து மூவர் வரவையும் எதிர் பார்த்திருந்தான். அடுத்தநாள் பொழுதுவிடிந்து பதினைந்து நாழிகை சென்றும் இராமன் வந்திலன். “காசாதியார் சொற்றவரு கவர்; அவர் வாராததற்குக் காரணம் யாதோ? அவருக்குக் கானகத்தில் என்ன 5ேரிட்டதோ? ஒன்றுமறியேன் ; இனி நான் உயிர் வாழ்ந்திருப்பகாற் பயன் என்? இறந்துபடுவகே ககுதி” எனப் பரதன் எண்ணி, தான் விழுந்துசாகத் தீவளர்க்குமாறு பணித்தான். நாழிகை இருபத்தைத் தாயிற்று. இராமன் இன்னும் வரவில்லை. பரகன் தீக்குதிப்பதைக் கேள்வியுற்று, அகைத் தடுக்கத் காயர்மூவரும் வசிஷ்டமுனிவரும் மந்திரிபிரகானி முக லியோரும் வங்கனர். 'பரகா, பொறு பொறு; ஆத்திரப்படாதே ” என அவர் புத்திசொல்லியும், பாகன் கேளாது நான் கசரத சக்கரவர்த்திக்கு மகனல்லேனே? இராமருக்குத் தம்பியல்லேனே! 5ானும் என்சொற்படி 5டப்பவன் என்பகை இன. உலகம் அறிக ’ எனச்சொல்லித் தீயுள் விழும்படி அதனை மும்முறை வலஞ்செய்யத் தொடங்கினன்.

Page 51
96 இராமன் கதை
முன்ருரம் பிரதட்சணம் முடியுமுன் அசரீரிபோல
பரொலி கேட்டது :
* வந்தான் வந்தான்; பரதா-இரகுநாதன்
வந்தான் வந்தான் ; பரதா. ' "இஃதென்னே? இஃது யார்குரல்?" என்பூ யாவரும் சுற்றிப்பார்க்க, தென்றிசையினின்றும் ஒருவன், எட்டடி உயரமுடையான், பருத்த யாக் கையன், கறுத்த தோலினன், முடித்த குஞ்சியன், கை இரண்டும் சிரமேற்குவிய ஓடிவந்து, பரதன் காலில் விழுந்து, பின்னுமொருமுறை
* வந்தான் வந்தான்; பரதா-இரகுநாதன்
வந்தான் வந்தான்; பரதா ’ என்று கூறினன். * நீ யார்? எங்குகின்று வரு கின்றன?’ என்று பரதன் அவனைக்கேட்க, ‘நான் இராமதுTதன்; அனுமன் என்பெயர். காசரதியாரும் சீதாபிராட்டியாரும், இலக் குமண ரும் தேற்றுக் கங்கைக்குத்தென்கரையில் குகன்வீட்டுக்கு வந்தனர். இன்றுகாலே ஆற்றைக் கடந்திருப்பர். அவர் விரைவில் வரும்படி நீவிர் கேரொன்றனுப்பினல் பொழுதுபடுமுன் அவரை இங்கு காணலாம்' என்ருரன். உடனே இதைக்கேட்ட சுமந்திரன் கேரி லேறித் கென்திசைசென்று, பொழுதுபட இன்னும் அரை நாழிகையுள்ளது என்னுமளவில் மூவரையு அழைத்துவந்து கோயில் புக்கனன். சீரா ரிலங்கை சிறக்க விபீடனுக் கோசர் முடிசூட்டி ; இங்கிதமாய்ப்-பாராள மாதோடு மன்னன் வரக் கண்ட மாத தருக்
கேதோ வுரைப்பன் எதிர். 7

27. இராம பட்டாபிஷேகம்
திரும்பிவந்த மூவரையும் தாயர் தழுவினர்; வசிஷ்டர் ஆசீர்வதித்தனர். பரதசத்துருக்கினர் இராமனையும் சீதையையும் நமஸ்கரித்தனர். இலக்குமணன் பர னே நமஸ்கரித்து, சத்துருக்கினனை ஆலிங்கனஞ் சய்தான். அங்கு நின்றவரெல்லாரையும் வசிஷ்டர் விளித்துப் பின்வருமாறு கூறுவார் : “ கோசலநாட் டினர்காள்! நாளைக்காலே ஏழரை நாழிகைக்குமேல் பூரீராமசந்திரபூபதிக்கும் சீதாபிராட்டியாருக்கும் பட்டாபிஷேகமும் கிரீடதாரணமும் நடக்கும். தசரத சக்கரவர்த்தியார் ஆஃணயைச் சிரமேற்கொண்டு பதி ன்ைகுவருஷம் வற்கலேதரித்துச் சடைகள் தாங்கிக் கந்தமூலபலாதிகளையுண்டு தவஞ்செய்து திரும்பினர் இராமர். தந்தையார் தமக்களித்த இராச்சியத்தைப் பரதபூபதி தமையனருக்கு அருப்பணஞ்செய்யத் தமையனரும் சிந்தைமகிழ்ந்து அதனை அங்கிகரித் துளார். இப்பதின்ைகுவருஷமும் நமக்கு யாதொரு குறையும் நேரிடாதபடி பரதர் நம்மையாண்டார். அவருக்கு நாம் யாகொரு கைம்மாறும் செய்ய வியலாது. இச்சுபதினத்தில் 5ம் எல்லேம் மனத் திலும் மகிழ்ச்சி நிறைந்துவழிகையில் ஒரெண்ணம் சிறிது துயரத்தைத் தருகின்றது : நாளைக் கம் மகனர்க்கு முடிசூட்டுகலேக்காணத் தசரதர் இங் கில்லையே என்ற நினைவே. அத்துயரத்தை மாற் றுவது வேருேர் எண்ணம் : இராமசந்திரருக்கு இன்று வயது இருபத்தை ங் கன் று, முப்பத் கொன் க. இவர் கடந்த பதினன்குவருஷமும் பெற்ற , பு துபவம் பெரிது; புகழ் நீண்டது. எல்லாம்
முன்யெல்.’

Page 52
98. இராமன் கதை
அடுத்தநாள் ஐம்பத்தாறு தேசத்து அரசர்களும் இருமொழி வல்லுநரும் கூடின சபையிலே
* அரியணை யனுமன் ருங்க,
அங்கதன் உடைவா ளேந்த, பரதன்வுெண் குடைக விக்க,
இருவருங் கவரி வீச, விரைசெறி குழலி யோங்க,
வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மெளலி, ?
இதன்பின் பலயாண்டு மன்னுயிரைத் தன் னுயிர்போல அறமுறை திறம்பாது ஒம்பினன் இராமன். இதனலன்ருே தருமராச்சியம் எஃத : யினும் ஆகுக, அதற்கு இராமராச்சியம் எனப் பெயர் வந்தது. இராமனுக்கும் சீதைக்கும் குசன் இலவன். என மக்களிருவர் பிறந்தனர். இராமன் பல்லாண்டு அரசியல் நடத்தி முதிர்வுற்றபோது, தன் மக்களில் மூத்தவனகிய குசனுக்கு முடிசூட்டி,கான் சீதையோடு வானப்பிரஸ்தாச்சிரமம் புகுந்து, கடவுளடி மறவாத வணுய்ச் தவஞ்செய்து பரமபதமடைந்தனன்.
தமிழெம் செவிக்குள் அமிழ்தினு மினிக்க ! கம்ப்ன் பெயரென்றும் அம்புவி நிலைக்க ! ஈழமும் பாதமும் வாழியர் வாழ்க ! உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும் : நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யான்எவன், தலைவன் ; அன்னவற் கேசரண் நாங்களே.

பின்னுரை
வால்மீகிராமாயணம் இராமன் மகாவிட்டுத்ணுவின் அவதார மென யாண்டுங் கூருது, அவன் ஒரு பெருவீரனென்றே கூறும், கம்பராமாயணமோ இராவணுகி இராட்சதாை அழிக்கத் திருநெடுமால் இராமனுகவும் இலக்குமி சீதையாக வும் தேவர்கள் வானாவீரராகவும் அவதரிததனர் என்று கூறும். இவ்விரண்டினுள் முன்னேயதையே யான் கொண்டனன். வால்மீகியும் கம்பரும் இதில் வேறுபட்டனரேனும் இருவரும் இயற்கைக்கு மிஞ்சியவையையும் இயற்கைக்குமாருனவை யையுங்கொண்டனர். இருவரும் தசரதன் அறுபதினுயிரம் வருடம் அரசாண்டானென்பர். யானே அறுபது வருடம் சசரதன் அரசாண்டான் என்றேன். இருவரும் இராவண *றுக்குப் பத்துத்தலையும் இருபதுகையும் கொண்டனர். என் இராவணனுக்கோ தலையொன்றே, கையிரண்டே, முகல் ாலும் வழிநூலும் இராட்சதிசெனஷம் குரங்குகளெனவும் ாடிகளெனவும் கழுகுகளெனவும் கொண்டவாைத் தமிழ செனவே யான் கொண்டனன். வாலி சுக்கிரிவன் அனுமன் என்னும் மூவரது தங்தையரையும் விண்ணவரெனக்கொள் ளாது மண்ணவசெனவே கொண்டேன். ஆகாயத்திற் செல்லும் விமானம் கிறிஸ்துவுக்குப்பின் இருபதாம் நூற் முண்டிலுள்ளது, கண்கூடாயினும் இரவணறுக்குப் புட்பக விமானம் இருந்ததென்பதைத் தள்ளினேன்.
"அன்சிலே யொன்று பெற்.ான் அள்விலே யொன்றைத் தாவி
,பிலே யொன்மு (ወፇd5 -ዖ! flرونه ... I w (Banya அ லே யொன்று பெற்ற அணங்கைக்கண் டயலா ரூரில்
. . . a Gustairp' aparis air "

Page 53
என்னுங்கூற்றை முற்றுந்தள்ளினேன். இப்படியெல்ல. யான் செய்ததற்குக் காரணமென் ? இராமாயணம் முழுது பொய்யும் புளுகும் கிறைந்த கதை என மாணவர் நினைய திருக்கும்பொருட்டே. பொய்க்கதைகளிருப்பதால் மெய்க் கதையையும் பொய்க்கதையென்றுர் அறிஞர் சிலரும். அப்படி யாயின் இந்துதேசத்கில் நடந்த மெய்ச்சரிதமோ இராமன் கதை என வினவுவார்க்கு விடைகூற யான் வல்லேனல்லேன். கதைகளிலுள்ள அசம்பாவிதங்களைப் போக்கி, மெய்க்கதை போலக் காட்டுவதே என் கருக்கன்றி இது மெய்க்கதை தா னெனச் சாகிப்பது என் அறிவுக்குமேற்பட்டது. இந்நூல் பெரும்பாலும் என் ஞாபகத்திலிருந்து எழுகியது. இக் நூலிற் கூறப்படும் ஸ்கிரீ புருஷர் சம்பாஷணை யெல்லாம் முதல்நூல் வழிநூல்களில் இல்லை, சில எனது கற்பனையே. அங்கதகிரிசடைவிவாகம் முன் எந்நூலிலுங் கூறப்பட்டில து; என்னூலிற் தான் காணலாம். இது குற்றமேல், பெரியார் மன்னிக்க.
அரிச்சந்திரன் காலக்கிலிருந்த வசிஷ்டவிசுவாமித்திரர், தசாக இராமர் காலத்திலிருந்தது எப்படி என்பார்க்கு, அரிச் சந்திரன் காலக்கிலிருந்த வசிஷ்ட விசுவாமித்திரர் வேறு, தசாக இராமர் காலக்கிலிருந்த வசிஷ்ட விசுவாமித்திரர் வேறு பெயசொற்றுமையினலே பேதங்தெரியாது கதைகள் மயங்கின என்க
நூறவருஷ்த்துக்குமுன், 1838ளுல் ஜனுவரிமீ 13வ. பிறந்த-என்குரு உவில்லியம் மில்லர் தேசிகர் ஞாபகார்த்த மாக இந்நூலை இன்று பிரசுரிக்கிறேன்.
1938ளுல் ஜனுவரிமீ 13உ


Page 54
A 電江T鵡■ ܢ ̄
- PREAME
| THE N
ਜੋ
SESFEES A
The Best T.
|
"萱、 *。 凰、
Ավիլոտիրիի: துே
*リ リー 。
-se 、
Ghilay
 
 

* 〔 , エNT○ リー
1 ܨa)
|-
凰一 —
5
ட்வித்
エリ
ij.
துெ - *、
リ。 | .
-
*)、