கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1985.08-09

Page 1
வண்ண வண்ண ஆடைகளை
எண்ணம் போல்
தேர்ந்தெடுக்க
இன்றே நாடுங்கள் சிவகணேசன் ஸ்ரோர்ஸ்
41, பெரியகடை விதி,
யாழ்ப்பாணம்.
வாழ்த்துக்கள்!
நல்லூர் வீடியோ சென்ரர்
நல்லூர்.
:: ܦܶܠSܗܶ

lear God
My naoTWE P. , Q R A ES
Near Dat wn Aen ,Se
eN QRING, le NA
My mote R CRE
| "2 "רוץ אY
- • you RS
Nogie N. NNP PC AND Qev 2.S LIV I N VYA SAN),
se es eOxes VA VLE WAS.
Pestinian
C. Miv \ d •

Page 2
அட்டைப்படம் ஒரு பாலஸ்தீனக் குழந்தையால் இறைவனுக்கு எழுதப்பட்டது. அக்குழந்தை கீறியிருப்பதொரு சவப்பெட்டி, தினமும் அக்குழந்தை சந்தித்த மரண ஒலங்களின் பாடே இது. ஆம்! நமக்குள்ளும் எத்தனே குழந்தைகள்?
எத்தனை தாய்மார்கள்?ர் திே *
"தாத்தா, உன் ஊன்றுகோலுக்கு
குஞ்ச்ம் கட்டி விட்டு,
சுதந்திரக் கொடியென்று சொல்கிறர்கள் *
நான் என்னத்தைச் சொல்ல?”
c
ராஜி. சண்முகராசா : காரைநகர்.
 

ofs. ரூபா
துளி - 3
ஆவணி புரட்டாதி - 1985
4.00
தாகம் ஆண்களின் பங்களிப்பால்,
அவர்களின் பின்னணியில், அவர்களின்
வழிகாட்டலில் மலர்வது என்போர் சிலர். இன்னும் சில: 'விமர்சனங்களை நாங்கள் விரும்பி வரவ்ேற்கிறேம்’ எனக் கூறிக் கொண்டு தாகத்தின் விமர்சனங்களைக் கண்டு வீறுகொண்டெழுகிறர்கள் .
இவர்களக்கு என்ன சொல்லலாம்?
وقع
பெண்களால் வெளியிடப்படும் இச் சஞ்சிகை பற்றிய உங்கள் தவறன கருத் துக்களுக்காய் நாம் மிகவும் வேதனே uடைகிறேம். பெண்களின் சஞ்சிகையான தாகத்தை எந்தவொரு ஆணும் உரிமை பாராட்டுவதை நாம் விரும்பவில்லை. ஆணுல் ஆண்கள் எழுதித்தரும் கருத் துக்கள் தாகம் g@fiu T- அங்கீகரிக் கப்படும் பட்சத்தில் அவை நிச்சயமாகப் பிர சுரிக்கப்படும்.
கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்க எவருக்கும் சு த ந் தி ர ம் இருக்க வேண்டும் என்றுதான் நாம் கருதுகிறேம் ஒரு வேளை நாம் பெண்
கள் என்பதால் தான்!
உண்மையில் நாம் எம்மைச் சொற்ப மாவது திருத்திக் கொள்ள வேண்டு மென்று நினைத்தால் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கவே வேண்டும்.

Page 3
தாகத்தோடு நாம் . . . .
(சில சந்திப்புகளுக்கு நமது கருத்து)
காகிதங்கள் வேண்டாம். ஆயுதங்களே வேண்டும்.
இவ்வாருன ஒரு கருத்தை முன்வைக்கிருேம் எனும்போது நாம் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெளிவு. நாளாந்தம் நாம் சந்திக்கும் அடக்குமுறைகள் நமது பொறு மையை இழக்கவே வைக்கிறது. ஆயுதம் ஏந்தினேரும், ஆயுதம் ஏந்தவுள்ளோரும் மட்டுமல்ல, நாமெல்லாம் சரியானதொரு அரசியல் தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள் ளோம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நேற்றைய, இன் றைய நிகழ்வுகள், குறிப்பாக விடுதலை ஸ்தாபனங்களைச் சேர்ந்த சிலரின் செயற்பாடுகள் நமக்குக் காகிதங்களின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன. எமக்கு விடுதலைவேண்டும். அதைப் பெறுவதற்குரிய வழியும் ஆயுதப் பே: " .மே. ஆனல் காகி தங்கள் கூறும் பல சிந்தனைகள் பற்றிய தெளிவுகளோடு நாம் ஆயுதங்களை ஏந்த வேண்டும். அப்போதுதான் நாம் சரியான வகையில் போராட்டத்தை நெறிப்படுத்தமுடியும்
அரசியல்த் தெளிவோடு. சிந்தனைத் திறனுேடு.
() தாகம் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாததால் சிலரைக் கிண்டல் பண்ணியுள்ளது.
தாகம் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனல் அரைகுறையாக ஏற்றுக்கொள்கிறது என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு நாம் என்ன சொல்லமுடி பும், தாகத்தை நீங்கள் அரைகுறையாக வாசித்துள்ளீர்கள்.
எவரையும் கிண்டல் பண்ணவேண்டும் என்ற நோக்கம் எமக் கில்ஜல. எமது கருத்துக்கள் ஒரு சிலரைத் தாக்கலாம். அந்த ஒரு சிலருக்கு மட்டுமல்ல, முழுச்சமூகத்துக்குமான படிப்பினைக்காகவும் சிந்தனைக்காகவுமே தாம் இவற்றைப் பிரசுரிக்கிறுேம்.
தவறுகளைத் தவறுகளாக. உணரும் நாள், விரைவிலா. தொலைவிலா..?
தாகம் - 2

விடுதலையா..? விபரீதமா..?
மகரிஷி
தமிழீழப் போராட்டமானது இன்று பல முனைகளிலும் கூர் மையடைந்து முன்னேறி வருகின்றது. இம் முன்னேற்றத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் இலங்கை அரசாங்கம் பல வழிகளி லும் நிலைகுலைந்து போயுள்ளது. இந்த நிலைகுலைவிலிருந்து தப்பி, தன்னை ஸ்திரப்படுத்துவதற்காக போர் நிறுத்தம் என்ற மாயை யின் கீழ் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது. மேலும் எமது போராட்ட சூழலை வைத்துக் கொண்டு இந்தியா உட்பட சில அந்நிய சக்திகள் தமது நலன்களுக்காக எமது போராட்டத்தை பயன்படுத்தும் தீயநோக்கோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த சிக்கலான சூழ்நிலையில் எமது போராட்டத்தினை மிகவும் அவதானமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சமயத்தில், போராட்டத்தின் பெயரால் இடம் பெறும் அராஜக நடவடிக் கைகள் மக்களை வேதனையடையச் செய்வதோடு, மேலும் சிக்க லான நிலைமைக்குள் எமது போராட்டத்தினை இட்டுச் செல் கின்றது.
நாட்டின் அகப், புறச் சூழ்நிலைகளும்; விடுதலை ஸ்தாபனங் களின் நடவடிக்கைகளுமே மக்கள் விடுதலையில் நம்பிக்கை வைப் பதைத் தீர்மானிக்கின்ற காரணிகளாக அமைகின்றன. எனவே, விடுதலை ஸ்தாபனங்களின் நடவடிக்கைகள் மக்களின் நலன்களை பாதுகாக்கின்றவகையில் அமைய வேண்டும். ஆனல், விடுதலையின் பெயரால் இடம்பெறும் சில நடவடிக்கைகள் மக்களை போராட் டத்தில் நம்பிக்கை ஊட்டுவதற்குப் பதிலாக அவர்களை போராட் டத்திலிருந்து அந்நியப்படுத்துவதாக அமைகின்றது. வாகனக் கடத்தல்கள், தனிநபர் கடத்தல்கள், மக்களின் அத்தியாவசியச் சேவைச் சீர்குலைப்பு, கொள்ளைகள், உரிமை கோரப்படாத கொலை கள், போராளிகளின் கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைளின் வெளிப்பாடுகள் மக்களைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்துவதனையும், அதற்கெதிராக டோரTடுகி: ) தன் மையினையும் உருவாக்குகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பத்திரிகை யினூடாக வேண்டுதல்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல்
தாகம் - 3

Page 4
ஊர்வலங்கள், உண்ணுவிய தம். பறியல் போராட்ட: \போ6த் நடவடிக்கைகளினை மேற்கொள்கின்றனர். புரட்டாதி மாதம் 30ம் திகதி மயிலிட்டியில் குறித்தவொரு விடுதலை ஸ்தாபனத்தால் மக்கள் மிரட்டப்பட்டபோது, அதற்கெதிராக மக்கள் ஆயுதம் தூக்கிய சம்பவமொன்று இடம்பெற்றது மிகுந்த வேதனைக்குரி1 விடயமே! இம் மாதம் 2ம் திகதி ஏழு முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து தமது சமூகத்திலிடம்பெற்ற கொள்ளைகள், வாகனக் கடத்தல்கள், ஆள் கடத்தல்கள் போன்ற செயல்களினைக் கண்டித்து பெரியதொரு அறிக்கை ஒன்றினை பிரசுரித்து வெளி யிட்டது. இத்தகைய சம்ப வங்க ள் அரசும், தீயசக்திகளும் தமிழ் - முஸ்லிம் மக்களை பிளவுபடுத்த வாய்ப்புக்களை உருவாக் கிக் கொடுக்கும். கடந்த சித்திரை - வைகாசி மாதங்களில் இத் தகைய சம்பவங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசும், அதன் அடிவருடிகளும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற் படுத்தி, இரு சமூகங்களுக்குமிடையே பெரும் கலவரத்தையே உண்டுபண்ணியது. மேலும் இத்தகைய சில நடவடிக்கைகள் பிக் களிடையே ஏற்படுத்துகின்ற தாக்கத்தினை நடைமுறையில் எம் மால் காணக்கூடியதாயுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட சம் பவங்களுக்கு நாம் எந்தவகையிலும் நியாயம் கற்பித்துவிட முடி
Lng.
நாம் மக்களுக்காகவே ஆயுதம் ஏந்தினுேம் என்பதை மு(1ழி மையாக விளங்கிக்கொள்ளாமல் ஆயுதங்களில் முழுமையாக நம் பிக்கை வைத்ததின் வெளிப்பாடே இத்தகைய நடவடிக்கைகள் . ஸ்தாபனத்தின் உறுப்பினர்கள் இந்தத் தவான போக்குகளுக்கு எதிராக ஒருமுகப்பட்ட உறுதியான போராட்டத்தினை டோகி யளவு நடாத்தாததும். ஸ்தாபனத்தின் சரியான இலக்கை உறுப் பினர்களுக்கு விளக்காததும் இத்தகைய சம்பவங்கள் நிலவிவரு வதற்குரிய முக்கிய காரணங்களாகின்றன. இச் சம்பவங்களில் ஈடுபடும் ஸ்தாபன உறுப்பினர்கள் 'அரசியற் கடமைகளை நிறை வேற்றும் சாதனங்களில் ஒன்று தான் இராணுவ விவகர்ரம்' என்பதை விளங்கிக்கொள்ளாமல் சுத்த இராணுவக் கண்னேட் டத்துடன் செயற்படுகின்றனர். தம்மைவிட போராட்டத்தை முன்னெடுக்கும் வேறு புரட்சிகர சக்திகளில்லை என இவர்கள் எண்ணுவதும், அக, புற சூழ்நிலைகளைப் புறக்கணித்து போராட் டத்தினை தீவிரப்படுத்துவதாக குருட்டு நடவடிக்கைகளில் ஈடு படுவதும் காரணங்களாகின்றன. இவைகள் இராணுவத்தில் அர சியல் தலைமையின் கடமையை உணராமல் இராணுவ பலத்தில் மித மிஞ்சிய நம்பிக்கையும், மக்களின் பலத்தில் நம்பிக்கை இன்
தாகம் = 4

மையும்; இத்தகைய நடவடிக்கைகளை ஊக்கமாகக் கவனித்து :ர்சிக்கத் தவறியமையும் வெளிப்பாடுகளாக அமைகின்றன.
எனவே, இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டி யதும் தவிர்க்கப்படவேண்டியதும் அவசியமாகும். ஸ்தாபனத் தின் அரசியற் தரத்தினை உயர்த்தி, மக்களின் பலத்தில் நம்பிக்கை வைக்கவேண்டும். ஒரு காரியத்தைச் செய்வதற்குமுன் எதற்காக? யாருக்காக அந்தக்காரியத்தினைச் செய்கின்ருேம்? அதன் விளைவு கள் எவ்வாறு இருக்கும் என்பதை விவாதிக்கவேண்டும். கூலிப் படைகளின் மனப்பான்மையை நீக்கி மக்கள் நலன்களைப் பாது காக்கவே ஆயுதம் ஏந்தினுேம் என்பதை உணரவேண்டும். ஸ்தா பனத்துக்குள் பூரண விமர்சனங்களை முன்வைக்கவும், அதற்கான உரிமையுமிருக்கவேண்டும். எந்த விவாதத்திற்குரிய பிரச்சினையி லும் மழுப்பலோ, சமரசமோ இல்லாமல் சரியையும், பிழையை பும் தெளிவுபடுத்தி சரியான முடிவுக்கு வரவேண்டும். போராட் டத்தின் தந்திரோபாயங்களையும், வேஜலமுறைகளையும் சமுதாய பொருளாதார பரிசீலனையில் கவன ம் செலுத்தி நிர்ணயிக்க வேண்டும். ஸ்தாபனம் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றும் கருவிகள்; தமது பொறுப்டம், கடமைகளும் புரட்சிக்கே என் தை எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஸ்தா 16த்தின் பொருளாதாரப் பலத்தினை உயர்த்துவதற்கான தட வடிக்கைகளாக உற்பத்தியிலீடுபடவேண்டும். சமூக, அரச வாழ்வை விரிவாக ஜனநாயகப்படுத்தி, விரிவான வெகுஜனங்களை கட்டு 10ானத்தில் பங்காற்ற வைத்து; மக்களின் கல்வியையும் பண் 11ாட்டையும் உயர்த்துவதன் மூலமே பொருளாதார வளர்ச்சி யைப் பெறமுடியும். இயக்கங்களுக்கிடையிலான போட்டியும், பிள வும் தவிர்க்கப்பட்டு ஒரு பொதுவேஆலத்திட்டத்தின் கீழ் ஒன் றிணைந்து செயலாற்றுவதன் மூலம் எமது போராட்டத்தினை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லலாம்.
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரும் சோஷலிசத்தை நோக்கிச் சரியான கருத்துத் தெளிவு பெற்று, ஸ்தாபனப்பட்டிருப்போமா யின் எமது போராட்டத்தினை எவராலும் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ முடியாது. தென்னசியப் பிராந்தியத்தின் முழுமக் களின் விடிவுக்கும் வழிகாட்டக்கூடியளவுக்கு எமது போராட் டம் புரட்சிகரமானது. எனவே, நாம் எல்லோரும் ஐக்கியப்பட்டு பூரண ஜனநாயகத்துடன் ஒரு பொதுவேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து சகல அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுவோம்!
தாகம் - 5

Page 5
நம்மை நாமே . . . .
சிறுவயதில் எமக்கு பல ஒழுக்கவிதிமுறைகள் சொல்லித் தரப்பட்டது. பொய் சொல்லாதே, களவெடுக்காதே, உயிர் களைக் கொல்லாதே. பெற்றேர், ஆசிரியர், முதியவர் அனைவ ருமே ஒரு சில கதைகளைச் சொல்லி எம்மைப் பயமுறுத்தி வைத் தார்கள். இதனுல் எமக்குள் ஒரு வித பயம் காணப்பட்டது. ஆனல் நாம் வளர்ந்தபோது எம்மைச் சூழவுள்ளோரின் சொல் லுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்தோ, புரியா மலோ அவர்களோடு ஒன்றிணைத்து விட்டோம். காலப்போக்கில் நாமும் ஒழுக்கவிதிமுறைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிருேம். ஆணுல் நாம் இவ்வடிப்படை ஒழுக்கங்களைப் பின் பற்றுகிருேமா ? ? ?
குழந்தைகள் நம்மைப் பார்த்து "நீ சொல்வது நல்லது ஆளுல் செய்கையில் அதைக் காணுேமே” எனக் கேட்பதற்கு முன், அவர்கள் வளர்ந்து நம்மைப் போலாவதற்கு முன் நம்மை நாமே திருத்திக் கொள்வோம். தப்பென்று சொல்லிச் சொல்லி தவறு செய்யும் மக்களாகிய (இல்லை, இந்த விடயத்தில் பலரும் குழந்தைகளே) நமக்காய் நாம், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் சிலவற்றை நினைவு கூர்வோம். இவை சொல்வதற் காய் அல்ல, நடைமுறையில் பின்பற்றி நடப்பதற்காய் மட்டுமே.
* பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா !
* பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
யங்கொள்ளலாகாது பாப்பா!
* தேம்பியழுங் குழந்தை நொண்டி - நீ திடங்கொண்டு போராடு பாப்பா!
* வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!
தாகம் இதனை ஏன் பிரசுரிக்கிறது? இன்று அடிப்படை ஒழுக்கத்தை, பண்பாட்டை நமக்குள் அவசியம் பின்பற்ற வேண்
தாகம் - 6

டிய நிலையுண்டு. பண்பாடு எனும் போது அன்பு, உண்மை, நேர்மை, இரக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வு, மனிதாபிமானம், மனச்சாட்சி முதலாகப் பல. இவை எம்மோடு இல்லாதவரை கொலை, கொள்ளை, கடத்தல், புதைத்தல் போன்ற பலவும் தொடர்ந்து எதிரியின் வலைக்குள் வீழ்ந்து விடுவோம். எமது போராட்டம் உறுதியுடன் நடைபயில அரசியல், சமூகவிஞ்ஞான தத்துவங்களின் முக்கியத்துவத்துக்கு முன்னர் பண்பாடு நடை முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். விடிவுக்கு அதுவே முதற்படி. W
தாகத்தோடு நாம் . . . .
() தாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் காணுது.
பெண்களோடு தொடர்பான பிரச்சனைகள், நமது விடுதலைப் போராட்டம் தொடர்பான நிலை போன்ற இன்னும் பல விட யங்களை கவிதை, கதை, கட்டுரை என்பவற்றினூடாக சொல் வதுடன், நம்மைப் பொறுத்தவரை நேருக்கு நேர் மக்களையணுகி அவர்களது கருத்துகளை வெளிக்கொணரலே முக்கிய நோக்கமாக வுளது. சந்திப்புக்கள் மூலம் பல விடயங்களைக் கற்பனையோடு நோக்காமல், உண்மையோடு உணர்கிருேம். அதையும் சாதா ரண நடையில் விஷேடமாகப் பேச்சு நடையில் சொல்லவே விரும்புகிருேம். எமது எளிய நடைக்கும், நாம் சொல்கின்ற விடயங்கள் காணுது என்பதற்கும் காரணம் அனுபவமற்ற தன் மையென்கிருர்கள். மக்களினுாடு மக்கள் கருத்தாக நாம் சொல்ல வருகின்ற விடயங்களை மேலோட்டமாகப் பார்த்து, வாசிப்ப துடன் நின்று விடாமல் ஆழமாக நோக்கிச் சிந்திப்பின் பல உண்மைகளை உணர முடியும். ஆணுல் நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற விடயங்களையும் இனிப்பிரசுரிக்க முயல்கிறேம்.
மக்களினூடு மக்களுக்கு. எங்களினூடு எங்களுக்கு .
தாகம் - 7

Page 6
சற்று நில்லுங்கள்!
உங்களுக்கு ஆயிரம் அலுவல்கள் இருக்கும். ஆயினும் இதல் வாசிப்பதற்கான ஒரு சிறுஅளவு நேரத்தை ஒதுக்குவீர்கள் இதனை விளம்பரம் செய்யும் நோக்கத்திற்காக அல்ல, இந்த வி யத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே
“ஒரு போராளியாக வாழமுற்பட்ட ஒருவனை ஜன நாயக உரிமைக்காய்க் குரலெழுப்பிய ஒருவனை கொன்றெழித்த நிகழ்வை; அதனை நியாயப் படுத்தும் இரவல் முகங்களுடன், முதுகெலும் பைத் தொலைத்து விட்டுத் திரிபவர்களைப் பற்றிய ஒரு அவல நிலைமையைக் கூற முனைகின்றேன். இது இவன் ஒருவனுக்கு மட்டுமன்று. மூடிய மண் ணில் புற்கள் முளைத்த பின்னும் வெளிப்படாமல் இருக்கும் இன்னும் பல இளைஞர்களின், நண்பர்க ளின், போராளிகளினதும் கொலைகள் மீதான ஒரு குமுறலின் வெளிப்பாடே இது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’
உன்னைக் கொன்றனர்.
அரசின் காக்கிச் சட்டை அதிகாரங்கள் உன்னைக் கொல்வதற்குமுன் அவர்கள் உன்னைக் கொன்றனர்.
‘என் மகனை
ஒரு முறை, ஒரேயொருமுறை பார்ப்பதற்கு; அல்லது, அவனின் ஒரு சிறுகடிதம்; வேண்டாம்: உயிருடன் இல்லாவிடினும் இறந்த உடலையாவது தாருங்கள்; ”
தாகம் - 8

ST6ar blair snai
கேட்பதற்கிடையில் ஒரு கண அவகாசமும் கொடுத்திடாமல் உன்னைக் கொன்ருெழித்தனர்.
உன்னைக் கொன்று மூடிய புதிய மண்ணின் ஈரம் மாறுவதற்கு முன் நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களை இடத்திற்கு ஒவ்வொன்ருய் அனுப்பினர் (வேலைப் பிரிவினை டோலும்
அனுப்பி காரணங்களை தொகுத்து நோக்கத திறனற்று அவகாசமுமற்று கிளிப்பிள்ளைகளாய்; முதுகெலும்பற்று சொந்த முகங்களைப் புதைத்து விட்டு இரவல் முகங்களுடன் மக்களைத் தேடி ஓடுபவர்களிடம் உன்னைக் கொன்ற அவுர்களிடம் ஒரு வேண்டுகோள்!
“இன. பேல் மக்களைத் தேடி ஓடாதீர்! உங்கள் முகங்களைப் புதைத்த புதைகுழிகளைத் தேடுங்கள்! நீங்கள் மறந்து போன S. உங்கள் முதுகெலும்பை நிமிர்த்துங்கள்!!
இந்த மண்ணில் சொந்த முகத்துடன் நிமிர்ந்து நின்று அநீதிகளுக்கெதிராய் கிளர்ந்தெழும் ஒரு மனிதனை
ιδί ଖୁଁ மனிதனை
நாம் படைப்போம்!!!
- தில்லாஞ -
தாகப் 9

Page 7
இவர்களுக்கு என்று விடியும்?
- ரங்கா வ
சாந்தா, வீட்டைக் கூட்டிக் கொண்டு, பின்புறமாகத் திரும் பிப் பார்த்தாள். அக்கா, தனது கணவனின் படத்தை வைத்து, வணங்கிக் கொண்டிருந்தாள். போனமாதம் தொடக்கம் அவள் தனது இரண்டு வயதுப்பெண் குழந்தையுடனும், 6 மாத ஆண் குழந்தையுடனும் வந்திருக்கிருள். அவள் சாந்தாவின் அம்மா வால் முறையாக வளர்க்கப்பட்ட பிள்ளையென அடிக்கடி செ1 ல் லிப் பெருமைப்படும் அப்பா இறந்து, இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. அப்பாவைப் பொறுத்தவரை அவர் மைனர் மச்சான். அம்மாவின் இலட்சியமோ அவருக்குக் கடமை செய்வது. அவள் ஒருபோதும் அவரை மனங்கோண விட்டதில்லை எனச் சொல்லுவாள். சாப்பிட்ட கோப்பை கழுவுவது முதல் குளிக்க வார்த்து, உடுப்புத் தோய்த்தல் வரை அவளே செய்து வந்தாள். அம்மா வருத்தமாக இருக்கும் போதுகூட அப்பா ஒரு உதவியும் அம்மாவுக்கு வீட்டில் செய்வதை சாந்தா காணவேயில்லே. அம் மாவைப் - பொறுத்தவரை தனக்கு இரண்டும் பெட்டையாப் போச்சே என்பதைத் தவிர வேறு கவலையில்லை. அவள் “பெட்.ை நாயன்' என அடிக்கடி முணுமுணுப்பாள்.
அன்று அம்மாவும், அக்காவும் கோயிலுக்குப் போக, சாந்த7 மட்டும் படுத்திருந்தாள். அவர்கள் போன சில நிமிடத்தில் வீட டுக்கு வந்த அப்பா சாந்தா இருப்பது தெரியாமல், வேலைக்காரி ராசத்தை இறுக அணைத்து, அறைக்கு அழைக்க முற்படுவதை அவதானித்தாள். சாந்தா இருந்தது அவர்களுக்குச் சங்கடம்" கப் போய் விட்டது. அவள் சுமங்கலி பூஜைக்காய் கோவிலுக் குப் போன அம்மாவை நினைத்துப் பார்த்தாள். தனது கணவன் தனக்கு மட்டுமே சொந்தம், அவரே உத்தமர், அதற்குத் தனது திறமையும் அழகுமே காரணமெனப் பெருமைப்பட்டுக் கொள் ளும் அம்மா சாந்தாவுக்கும், அக்கா வசந்திக்கும் கூட இவற் றைப் பயிற்றுவித்தாள். இந்த வயதிலும் மஞ்சள் பூசி, பூவும், பொட்டும், கண் மையுமாக அவள் அலங்கரிக்கும் அழகே தனி. அப்பாவினதும், ராசத்தினதும் கதையை அறிந்தால் அவள் அன்றே செத்துப்போவாள். சாந்தாவுக்கு அம்மாவை நினைக்கச் சிரிப்பு வந்தது.
தாகம் - 10

கோயிலால் வந்த அம்மாவுக்கு அப்பா நின்றது கொள்ளை மகிழ்ச்சி. அவரை வணங்கி, தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவர்களின் தனிமையைக் குழப்ப விரும் பாதவளாய் வசந்தி சாந்தாவிடம் போனள். பெற்றேரின் குடும் பவாழ்வில் நிலவும் உச்ச திருப்தி பற்றிச் சொன்னவள், கணவ னுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பது எப்படியென்ற புத்தகத்தை புரட்டிக் கொண்டு சாந்தாவையும் வாசிக்கச் சொன்னள். சாந்தா புன்னகையோடு இதெல்லாம் நான் வாசிக்கிறேல்லை எனத் தட் டிக் கழித்தாள். வசந்தி நக்கலாக 'உந்த லெவல் கொஞ்ச நாளில அடங்கும்’ எனச் சென்று விட்டாள். வசந்தியைப் பொறுத்த வரை இந்த உலகத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. தன்னைக் கவர்ச்சியாக அலங்கரித்து சுற்றித் திரிவாள். அவளுக்கு எத்தனை தோழிகள் அவர்களெல்லாம் தமது அழகைக் காட்டத் தவியாத் தவிப்பவர்கள்.
அம்மாவோ அடிக்கடி புருஷனை மனம் நோக விடப்படாது. அவை கோபத்தில அல்லக் களைப்பில அடிச்சாலோ ஏசினலோ எதிர்க்கப்படாதென தாரகமந்திரம் போல் சொல்லிக் கொள் வாள். இந்தப் பெண்களெல்லாம் தம்மைத் தாமே அடக்கு முறைக்கு உட்படுத்துவதில் எவ்வளவு இன்பம் காணுகிருர்கள். வசந்திக்கும் திருமணம் முடிய அவள் கணவனுடன் முல்லைத் தீவில் வாழ்ந்து வந்தாள் அப்பாவோ கடனில் மூழ்கி கஷ்டப் பட்டதுடன், அதிக குடியால் அதிவிரைவிலேயே செத்துப்போனர். அம்மா உள்ளதெல்லாம் விற்றும் கடன் அடைக்க முடியாதவளாய் திண்டாடினர். இதன் விளைவு சாந்தா A/L பரீட்சை எடுக்கா மலே சிறுவர்களுக்குப் படிப்பிக்கிருள். இந்த நிலையில் தான் வசந் தியும் வந்தாள்.
முல்லைத்தீவில் நடந்த பிரச்சனையில் வசந்தியின் கணவரும் இராணுவத்தால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்டார் சென் றவர் சென்றவர்தான். முழுவீடும் எரிந்து, முழுப் பொருளும் இழந்த நிலையில் வசந்தி பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தாள். சாந்தா விசாரித்ததில் அத்தான் இறந்து விட்டதே உண்மை. ஆனல் வசந்தியோ வருவார் வருவார் என முழு நம்பிக்கையோடும் இருக்கிருள், சாந்தா அவளுடன் அதிகம் கதைப்பதில்லை அத் தான் ஒருநாள் வசந்தியை அடித்து, தலைமயிரைப் பிடித்து இழுத் தெல்லாம் தள்ளினர். வசந்தி அழுதாள். இதைத் தாங்க மாட் டாதவளாய் சாந்தா "இவன்களுக்கெல்லாம் நாங்க கை நீட்
f-t-
தாகம் - 11

Page 8
மாட்டம் என்ற துணிச்சல்" என ஆத்திரப்பட்டாள். ஆனல் வசந்திக்குச் சாந்தாவின் கத்ை பிடிக்கவில்லை. "நீ உன்டை அலுவலைப் பார்’ என அனுப்பி விட்டாள். அவளுக்கு வசந்தியை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறுவழியில்லை. அலள் வளர்க்கப்பட்ட விதத்தில் அப்படியே ஊறி விட்டாள். இந்த சமூக அமைப்பை மாற்ருமல் அவளை மாற்றவே முடியாதா எனச் சாந்தா வேதனைப்பட்டாள்.
ஆனல் அந்த வீட்டில் சாந்தா மட்டும் எப்படி வேறுபட் டாள். நண்பர்கள், கருத்தரங்குகள் புத்தகங்கள், சஞ்சிகைகள் இவைதான் அவளை மாற்றின. அவள் துளசியோடும், நண்பன் முராவோடும் நன்கு பழகிவந்தாள். முற்போக்கான அவர்க ளோடு பெண்களின் நிலை, அவர்களுக்கான விடுதலை பற்றி அடிக் கடி விவாதிப்பாள். பெண்களை சமத்துவமாய் மதிக்கும் முரா வின் போக்கே தணி. அவளுக்கு அவனை ரொம்பப் பிடித்திருந் தது. அவன் விடுதலைப் போராட்டத்தில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்திருந்தான்.
சாந்தா எத்தனைதான் சிந்தித்தபோதும் அவளால் அம்மா அக்கா பிள்ளைகளையும் தனியே விட முடியாத நிலை. அவர்கள் இவளின் உழைப்பையே நம்பி நின்றனர். சாந்தா கஷ்டப்பட்டு உழைத்து, அவர்களைக் காப்பாற்றியபோதும் அவர்களின் அடக்கே முறைக்கு ஓய்வில்லை. இருவருமாக அவளின் உயிரை வாங்சி, திட்டித் தொலைப்பார்கள். ஆனல் அவள் உழைப்பதை மட்டும் தடுக்க லாயக்கற்று இருந்தார்கள்.
சாந்தாவின் வீட்டைக் கட்டுப்பாடுகளும், மரபுகளும் 'ட் கொண்டிருக்கும் வேகமே தனித்துவமானது. அப்பா செத்ததி லிருந்து சாந்தாவின் அம்மா வெள்ளைச் சேலையுடுத்தி, பொட் டிழந்து, பூவிழந்து, எந்தவொரு நல்ல காரியத்துக்கும் போகா மல் வீட்டுக்குள் அடங்கி விட்டாள். சாந்தாவுக்கு வசந்தியும் அதேபோல் . அதே போல் அடங்கி விடுவாள் என்பதை நினைக்க தாங்க முடியாதிருந்ததால் அவளும் அத்தான் உயிரு டன் இருப்பதாகவே சொல்லிவந்தாள். விதவைகளுக்குரிய (ԼՔ(Լք விதிமுறைகளையும் தேடித் தேடி பிடித்து செயற்படுத்தும் தன் மைமிக்க அக்காவுக்கு ஒரு பொய்யைச் சொல்வதற்காக அவள் கவலைப்படவில்லை. ஆனல் உண்மையை அறியும் போது பைத்
arraub - la

தியமாகி விடுவாளோ என்பதையும் அவளால் ஜீரணிக்க முடிய வில்லை. அப்பாவோ, அத்தானே தமது மனைவியரை இழந்திருத் தால் இத்தனைதூரம் வேதனைப்பட்டிருக்க மாட்டார்கள். இரு வருமே நிச்சயமாக மறுமணம் செய்திருப்பார்கள் அல்லது வைப்பாட்டி வைத்திருந்திருப்பார்கள். அம்மாவும், அவள் வழி யில் அக்காவும் எத்தனை தூரம் தூய்மையாக . பெரும்பாலும் பெண்கள் தான் இந்த மாதிரி நடப்பதற்கு முன்னிற்கிருர்கள். ஆனல் நாங்களோ ஆண்களைக் கடிந்து கொண்டு பெண்விடுதலை கேட்கிருேம் என்பதை சாந்தா யோசித்துப் பார்த்தாள். அதை விடவும் இப்பத்தே பெட்டையள் அடக்கமில்லை. இப்ப வரவர வாய் கூட, சைக்கிள் என்ன? ஒட்டம் என்ன? தேவடியாளவை. படிப்பு படிப்பெண்டு பெடிளோட, வாயால சொல்லத்தக்கதே நடக்குது.’’ எனப் பெண்களே அதிகம் கதைப்பதை சாந்தா கேட்டிருக்கிருள். அவள் ஆம்பிளையஸ் அடக்குவதையோ, ஏசு வதையோ பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் பொம்பிளையஸ் கணபேர் அதையே விரும்புறதையும், எதிர்க்க விரும்பாததையுமே முதலில் ஒழிக்கவேண்டும் என்பது அவள் விருப்பம்.
வசந்தியையும், இரண்டு பிள்ளையளையும் எத்தனை காலத் துக்கு உழைத்துக் காப்பாற்றப் போகிறேன் என்ற ஏக்கம் சாந் தாவுக்கு அடிக்கடி ஏற்பட்டது. வசந்திக்குத் தெரிந்த ஒரு பொம்பிளை தன்டை மூன்று பிள்ளையளையும் காப்பாத்த உடலை விற்கிருளாம். சனமெல்லாம் ஒரே திட்டு. வசந்தி கதைத்துப் பார்த்தபோது கூலிப் பிழைப்புக்கு போனன், வேலையும் இடை யிடையே, சம்பளமும் கொஞ்சம், பிள்ளையளோ பசியில, பார்த் தன், இந்த வழியில் ஒழுங்கா காசு கிடைக்குமெண்டு தொடங் கினன், இப்ப இரண்டு நேரமாவது வயிருராத் தின்னுறம்’ அவள் சாதாரணமாகச் சொன்னளாம். வசந்திக்கு ஒரே ஆத் திரம். வந்தவேகத்தில் சாந்தாவிடம் சொன்னள். முராவும், துளசியும் கூடவே கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவருமே வசந் தியுடன் எதிர்த்து வாதிடவில்லை. அவளால் இன்றைய பொழு தில் அதை ஏற்கவே முடியாதென்பது அவர்களுக்குத் தெரியும்.
அன்றைய பொழுதில் அவர்கள் இந்தப் பெண்கள் பற்றியே பேசிக்கொண்டார்கள். இராணுவத்தின் அட்டகாசத்தால் கண வனே இழந்து குழந்தைகளுடன் வாழ வழியற்றுத் தவிக்கும் பெண்களுக்கு என்னவழி? பிள்ளைகளின் படிப்பு? அகதிகளாக
தாகம் - 13

Page 9
முகாம்களில், உறவினர் வீடுகளில் எத்தனை நாள்? வீடு, உடை, உணவு இந்த அடிப்படை வசதிகளுக்கு என்ன செய்வது? வரு மானத்துக்கு என்ன வழிகாட்டலாம்? இவர்களைப் போல் பலராக தினமும் பெருகி வரும் இந்தப் பிரச்சனைக்கு என்ன முடிவு? இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வழியை சகலரின் சிந்தனைக்கும் விடவேணும். எல்லா இயக்கமும் யோசிக்க வேணும் என்ற பல வேறு கருத்து மாறல்களுடன் அவர்கள் விடைபெற்றுக் கொண் LIT riggit.
ஊருக்கு உபதேசம் செய்யும் முன்னர் தனது வீட்டைத் திருத்துவோம் என சாந்தா முற்படும் போதெல்லாம் நன்கு வேண்டிக் கட்டினள். ஆனல் அவளைப் பொறுத்தவரை இன்னும் ஏனே நம்பிக்கை இருந்தது. அம்மாவும், அக்காவும் கோயில் கோயிலாகச் சுற்றி, இருக்கின்ற வளவையும் ஈடுவைத்து தின்னு வதிலும் பார்க்க வீட்டில் இருந்து கொண்டே எதையாவது செய்து வ ரு வா ய் ஈட்டினல் என்னவென்று சாந்தாவுக்குத் தோன்றும்.
அன்று, நீண். நாளைக்குப் பின் முராவைச் சந்தித்தாள். அவன் இயக்கத்திலிருந்து விலகி விட்டதாகச் சொன்னன் அவ ளொன்றும் அதைக் கேட்டு அதிர்ச்சியடையவில்லை. நடைமுறை யைத் தெரிந்தவள் தானே. ஆனல் அவன் ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருப்பது தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. இயக்கத்தில் இருந்து விலகியதற்காக, சமூகக் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதை அவள் மறுத்தாள். மரணதண்டனைகளை அவள் அறிந்திருந்த போதும், அவன் இந்த மண்ணையும் மக்களையும் நினைத்துப்படும் வேதனைக்குப் பேசாமல் இருப்பதிலும், எதையா வது செய்யவே வேண்டும் என்பதில் அவள் உறுதியாக நின்ருள். அவனே எல்லாம் போலி என வாதிட்டு, கண்ணீர் விட்டழுதான். அவளோ டேய், முரா நீ பிழைகளைத் தெரிந்ததால் விலகிக் கொண்டாய். தெரியாமல் தொடர்வோர் பலர். எனவே நாமும் எதையோ செய்யவே வேண்டும். என்னடா, நமக்கு ஒரு முடிவு காணத்தானே வேண்டும். அவனின் மெளனம் தொடர்ந்தது. இறுதியாக இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். பழமையில் ஊறிய சமூகத்தை புதிய விடியலை நோக்கித் திரும்புவோம். போலி களைக் களைந்து விடுதலையை முன்னெடுப்பொம். மெல்ல மெல்ல (தொடர்ச்சி 18-ம் பக்கம் பார்க்க)
தாகம் - 14

ஒரு உள்ளம் பேசுகின்றது. . . . .
"பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த விடுதலைப் போராட் டமும் வெற்றியளிக்காது’ என்று பலர் சொல்கிருர்கள் ஆணுல் அதனை மனப்பூர்வமாகத்தான் சொல்கிருர்களோ என்ருல் நிச் சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்களா? விடுதலை இயக்கத்தினுள்ளேயா? வேண்டவே வேண் டாம் என்று பெண்களைக் கண்டால் பேயைக் கண்டவர்கள் போல அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறர்கள். பெண்களால் மட்டும் தான் எந்த விடுதலை இயக்கத்தினுள்ளும் பிரச்சினைகள் ஏற்படு கின்றதா? ஒரு பெண்ணுல் பிரச்சினை ஏற்படுகின்றதென்றல் அங்கு ஒரு ஆணும் நிச்சயமாகச் சம்பந்தப்படுகிறன். அப்படியிருக்க, அந்தப் பெண்ணை மட்டும் எல்லோரும் குறை சொல்வது ஏன்?
விடுதலை ஸ்தாபனங்களில் இணைந்து தம் பங்களிப்பை ஆற் றப் பலர் துடிக்கிருர்கள். ஆனல் அவர்களின் ஆர்வமெல்லாம் மங்கி மறையும் படியான சூழ்நிலைதான் இன்னும் தொடர்கிறது. விடுதலை இயக்கத்தில் சேரவிரும்பும் பெண்களில் பெரும்பாலா னேர் ஆயுதப்பயிற்சி பெறவே விரும்புகிருர்கள் என்ருல் அதற்கு ஒரு நியாயமான அடிப்படைக் காரணம் உண்டு. ஆண் பெண் சமத்துவம் பலரால் வாயளவில் தான் பேசப்படுகின்றதேயன்றி இதயபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என்னதான் திற மையான நல்ல ஒரு வேலையை ஒரு பெண் செய்தாலும் "ஆ, அவள் பெண் தானே’ என்ற அலட்சியமனுேபாவமே பலரின் மனதில் உள்ளது. அவளின் திறமைகள் திறமைகளாகக் கணிக் கப்படுவதில்லை. ஒரு பெண் ஒரு ஆணுக்கு சமமாக மதிக்கப்படு வதில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு உயிர் ஜீவியாக கருதப்படுவ துமில்லை. பெரும்பாலானேரால் பெண் போகப் பொருளாக அடிமை வேலை செய்ய உருவாக்கப்பட்டவளாகவே கருதப்படுகி ருள். எத்தனையோ சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பெண்களைப் பற்றி வரும் கட்டுரைகளோ, கவிதைகளோ பலரால் வாசிக்கப் படுவதேயில்லை. “பெண்களைப் பற்றியது தானே, என்ன பெரி தாக எழுதப்பட்டிருக்கப் போகிறது?’ என்ற அலட்சிய பாவத் தில் அந்த ஆக்கங்கள் வரும் பக்கங்கள் தட்டப்படுகின்றன.
தாகம் - 15

Page 10
இப்படியாக, பெண்களாகிய தாம் எல்லோராலும் (விடுதலை ஸ்தாபன ஆண்களில் பலர் உட்பட) மிகவும் கடை நிலையில் வைத்துக் கணிக்கப்படுவதனல் ஆயுதப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்திய போராளியாக மாறிய பின் தான் தம்மையும் மனித உயிர்களாக எல்லோரும் கணிப்பார்கள் என்று பெண்கள் கருது கிருர்கள். அதனல்தான் விடுதலை ஸ்தாபனங்களில் சேரவிரும்பும் பெண்கள் முதலில் ஆயுதப்பயிற்சி பெறவேண்டும் என்று தவிக் திருர்கள். அவர்களின் அந்த நியாயமான விருப்பம் நிறைவேற் றப்படும் பட்சத்தில்தான் பெண்களை மனித ஜீவன்களாகவாவது ல்லோரும் மதிப்பார்கள். அதன் பின் அவர்கள் விடுதலை இயக் கத்தினூடாக தம் பங்களிப்பை ஆற்ற "தாழ்வு மனப்பான்மை’ குறுக்கிடாது. ஆயுதப் பயிற்சி எடுக்காமல் ஓர் இயக்கத்தில் இணைந்து வேலை செய்யும் பெண்களின் பனதிலே தாம் செய் யும் எதையும் சரியானதென ஆண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள்" என்ற தாழ்வு மனப்பான்மை எ ப் போதும் இருந்து கொண்டே இருக்கும்.
என் தாய் நாட்டின் மீட்சிக்கான போராட்டத்தில் நான் என்னலான முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்று எப்படித் துடிக்கிறேனே அப்படித்தானே ஒரு பெண்ணும் நினைக் கிமுள்' என்று விடுதலை இயக்க ஆண்கள் உட்பட அனைத்து ஆண் களும் எண்ண வேண்டும். அதனை விடுத்து "இவள் ஒரு பெண் தானே இவள் பெரிதாக நாட்டிற்கான போராட்டத்தில் என்ன பங்களிப்பை வழங்கப்போகிருள்” என்று எண்ணி பெண்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து அவர்களை விரக்தியடையச் செய்யக்கூடாது. விரக்தியின் எல்லையில் எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் விடுதலை ஸ்தாபனங்கள் என்ற பெயரில் இயங்கும் சில சமூகவிரோதக் கும்பலினுள் இணைந்து பணிசெய்ய அவர் கள் முன்வருகிருர்கள். அதனல் தம் மானத்தை இழப்பது மட்டு மல்ல மரணத்தையும் சிலர் தழுவுகிருர்கள்.
இத் துரதிர்ஷ்டமான நிலை பெண்களுக்கு நேராமல் இருப் பது உண்மையான விடுதலை ஸ்தாபனங்களிலுள்ள ஆண்களின் கைகளில்தான் உள்ளது. தமது இயக்கங்களில் இணைந்து வேலை செய்ய விரும்பும் பெண்களை ஏற்காமல் அல்லது ஏற்றுக்கொண்டு *சேர்த்து விட்டோமே. என்னவாவது வேலை கொடுக்கத்தானே வேண்டும் என்று சலித்துக் கொண்டு பெரிதான பங்களிப்பைச் செய்ய வாய்ப்புக்கள் கொடுக்காமல் சிறு சிறு வேலைகளைக்
தாகம் - 16

கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருந்தால் அவர்களின் மனதில் விரக்தியும் வேதனையும் தான் மிஞ்சும், அந்த விரக்தியும் வேத னையும் அவர்களை என்னென்ன விதத்தில் திசைதிரும்பவைக்கி றதோ தெரியாது.
ஏன் இந்த விடுதஃ ஸ்தாபனங்களில் இணைந்து வேலை செய்ய பெண்கள் விரும்பவேண்டும்? பெண்கள் ஒன்றிணைந்து ஒர் அமைப்பை உருவாக்கி வேலைகள் செய்யலாமே என்ற கேள்வி பலர் மனங்களில் எழலாம். தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம் பங்களிப்பை ஆற்றவிரும்பும் பெண்கள் இன்று இருக்கும் விடுதலை ஸ்தாபனங்களில் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதே நல்லது. விடுதலை ஸ்தாபனங்களின் தொகையை அதிகரிப்பதை தவிர்த்துக்கொள்ளுதல் சிறந்தது. அத் து.ண் இப்போது உள்ள விடுதலை ஸ்தாபனங்களின் ஏதாவது ஒன்றினது கொள்கையை சரியானதெனக் கொண்டு அதனில் நம்பிக்கை கொண்டுள்ள பெண்கள் அந்த இயக்கத்தினுள் இணைந்துதான் வேலைசெய்ய விரும்புவார்கள். அதிலிருந்து அவர்களைப் பிரித்தெடுப்பதை தவிர்த்துக்கொள்வதும் நல்லது.
பொங்கிவரும் வெள்ளத்தை அணைகட்டித் தடுத்து பல தேவை களுக்குப் பயன்படுத்தலாம். அதனே விடுத்து அதனைத் தடுக்கா மல் பாயவிட்டால் அந்நீர் வீணுவது மட்டுமல்ல. பல சேதங் களையும் விளைவிக்கும். அதேபோன்று தம் தாயகத்தின் விடுதலைக் காகத் தம் பங்களிப்டை ஆற்றத் துடிக்கும் பெண்களை ஒதுக்கி னல், ஏற்றுக்கொள்வதாகக் கூறி அலட்சிப்படுத்தினல் அந்த மாபெரும் சக்தி வீணுவதுமட்டுமல்ல தீயவிளைவுகள் கூட உரு வாகலாம். பெண்கள் என்னும்போது அவர்களைச்சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமென்றே பலர் கருதுகிருர்கள் அந்த எண்ண மும் தவிர்த்துக் கொள்ளப்படவேண்டியது. அவர்களால் எந்த வேலையும் செய்யமுடியும் என்று நினைத்து அவர்களுக்கு எந்த வேலையும் எந்தப்பயிற்சியும் கொடுக்க வேண்டும்,
இது ஒரு பெண்ணின் உண்மையான மனக்குமுறல் இக் கருத் துக்களுடன் நாமும் சில விடயங்களை . V
ஆயுதப்பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தில் தப்பில்லை. பெண்ணென்ருல் தாழ்வுக்கண்ணுேடு நோக்கும் ஆண்கள், ஆயுதப் பயிற்சி பெற்ற பின்பும் கூட அவ்வாறு நோக்கலாம். பெண்களை
தாகம் - 17

Page 11
மனிதஜீவன்களாக மதிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் பெற விரும்பும் ஆயுதப்பயிற்சி மட்டும் முழுமையான விடுதலையைத் தந்து விடப் போவதில்லை. பெண்கள், அவர்களுக்கான விடுதலை, ஆணுதிக்கம் போன்ற விடயங்கள் பலருக்கும் ஊட்டப்பட வேண்டும். ஆணுதிக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கு சகல துறை களிலும், முன்னின்று முழுமையான துணிவுடன் ஈடுபடுவதுடன், பெண்கள் பற்றிய தெளிவான கண்ணுேட்டத்தை ஆண் களு க் கும் விஷேட மாக ப் பெண் களு க் கும் உ ண ர் த் த வேண்டும். ஏனெனில் பெண்களில் பலர் தாம் அடிமைப்பட்டுள் ளோம் என்பதை உணர்வதில்லை. இன்னும் சிலர் நாம் விளக்கி உணர்த்த முற்படும் போதும் கூட. அதனை அங்கீகரிப்பதில்லை. விடுதலை ஸ்தாபனத்தைச் சேர்ந்த பெண்களாயின் முதலில் தம் மைச் சார்ந்தோருக்கும், சூழவுள்ளோருக்கும் விளக்கி, அதனை நடைமுறைப்படுத்த உழைக்க வேண்டும். உண்மையுடன் ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
இன்று விளங்கப்படாத பெண் விடுதலை என்ருவது ஓர் நாள் விளங்கப்படும் தானே என்று விடுவதோ, தற்போதைய நமது நிலக்கு என்ன குறை எனப் பெண்கள் சிந்தித்து மெளனம் சாதிப்பதோ, முதலில் தேவை தேசிய விடுதலை அது கிடைத் தால் போதும் பின்னர் பெண்விடுதலையை உருவாக்கலாம் என் பதோ முற்றிலும் தவறுன கருத்துக்கள். இவற்றினை தகர்த் தெறிந்து நாம் நம்மைப் புறக்கணிப்போருக்கு எதிராகப் போரா டுவோம்.
இவர்களுக்கு என்று விடியும். ? (10-ம் பக்கத் தொடர்ச்சி) அவர்கள் அதற்கான வேலைகளைத் தொடங்கினர்கள், சாந்தா வால் தன் ஒய்வு நேரத்தில் மட்டுமே ஈடுபட முடிந்தது.
சாந்தா கொஞ்சநேரம் பிந்தி வந்தால் வீட்டில் தொடுக் கப்படும் கேள்விக்கணைகள், கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள் எனக்கூற முனைகையிலேயே அடிக்கின்ற கரங்கள், வாசிக்கும் புத்த கங்களை அவள் இல்லாத போது எரித்து விடும் துணிச்சல், யாரு டன் கதைத்தாலும் சந்தேகத்தோடு நோக்கும் கண்கள். ஒ! இவர்கள் எந்தச் சமூகத்தில் வாழ்ந்தாலும், சமூகத்தில் நின்று விலகி நிற்கும் தூயவர்கள் பூவையராய், மெல்லியராய் வாழும் இவர்களுக்குப் பொழுது இப்போ விடியாது. ஆனல் மெல்ல மெல்ல என்ருே ஓர் நாள் விடியுமென முராவும், துளசியும் கூறிக் கொள் வதை நினைத்தவளாய் சாந்தா வாழ்ந்து கொண்டிருக்கிருள்.
தாகம் - 18

அவர்கள்
வந்து கொண்டிருக்கிறர்கள் . . .
ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப் பட்ட வர்கள் பால் இர க்க உணர்வு கொண்ட மேரி டெய்லர் என்பவர் ஓர் இங்கிலாந்துப் பிரஜை. இவர் ஒரு ஆசிரியை. இவர், ஜெர்மனியில் ஒரு வங் காள பொறியியல் ப்ட்டதாரியைச் சந்தித்தபோது நக்சல்பாரி கொள்கையால் ஈர்க்கப்பட்டார். இந்திய சமூக நிலைமைகளை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தினல் இந்தியாவிற்குப் புறப்பட்டு வந்தார். இந் தி ய விவசாயிகள், தொழிலாளிகள் கொடூரமான சுரண்டல் முறைகளால் கொடுமைப் படுத்தப்படு வதை நேரடியாகக் கண்டபோது நக்சல் பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அவர் செய்த தியாகப் பரிணுமம் சொல் லில் அடங்காதது.
1970 ஜனவரியிலிருந்து 1975 ஜூலை வரை ஐந்து ஆண்டு 1ள் சாய்பேஷா, ஹஜாரிபாக், ஜரம்ஷெட்பூர் ஆகிய சிறைச் சாலைகளில் சக தோழர்களோடு, கொடூரமான சித்திரவதை களுக்கு ஆளானவர். ஐந்து வருஷங்கள் விசாரணையின்றி சிறைக் கைதியாக வைக்கப் ட்ட இவர் எழுதிய "இந்திய சிறைச்சாலை களில் ஐந்து ஆண்டுகள்" என்ற புத்தகம் சிறைச்சாலைக் கொடு மைகளைச் சித்தரிக்கின்றது.
விடுதலை செய்யப்பட்டபின், இன்னும் பீஹார் பெண்கள் சிறையிலிருக்கும் தனது தோழருக்க; தோழர் மேரிடெய்லர் எழு திய கடிதம் கீழே பிரசுரிக்கப்படுகிறது.
எனதருமை காம்ரேட்,
நமது காம்ரேட் இங்கிருந்து நம்மை விட்டுப் பிரிந்து இரண்டு வருஷங்களாகி விட்டது என்று நீ, மற்றவர்களிடம் சொல்வது சிறை மதில்களையும் தொலைவையும் கடந்து எனக்குக் கேட்கிறது. பக்கத்திலுள்ள உனது சிறை காம்ரேட் என்ற சொல்லின் அர்த் தத்தை நீ தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாய். நான்
தாகம் - 19

Page 12
நீண்ட தொலைவிற்கு அப்பாலிருந்தாலும் - அருகருகே இருப்பதால் ஏற்பட்ட நெருக்கத்தை உடைப்பதற்காக நம்மைப் பிரித்து விட் டாலும், காம்ரேட் என்ற அந்தச் சொல்தான் உன்னை, என்னைப் பற்றி நினைக்க வைக்கிறது. என்ன, உன்னை நினைக்கச் சொல் கிறது.
உனது தேகநிலை எப்படி இருக்கிறது? அடி உதைகளினல் இன்னும் ஜாரம் வருகிறதா? சித்திரவதையினல் ரணம் கொண்ட காயங்கள் வேதனையில் தெறிக்கிறதா? அடித்த அடியினுல் செவி டாகிப்போன காதுகள் இன்னும் நோவு எடுக்கிறதா? அவர்கள் கொடுக்கும் நாற்றம் எடுத்த சாதம், அதில் கல்லையும் குப் பையையும் பொறுக்கி விட்டு ஒரு வாய் சாப்பிடுவதற்காக மக் கிப்போன ப்ருப்பு, கீரையுடன் வயிற்றுக்குள் திணிப்பதற்குக் கஷ்டப்படுவதை நான் இங்கிருந்தே பார்க்க முடிகிறது. வயதாகி விட்ட தாய், உன்னைக் காணுமலே இறந்துபோய் விட்ட தந்தை, உனது சகோதரர்கள், ஆறுவயதான உனது மகள் - இவர்களைப் பற்றியெல்லாம் நீ பேசுவதை நான் கேட்க 19டிகிறது. பாசத் திற்குரிய இவர்களிடமிருந்து சேதி கிடைத்ததா? பக்கத்திலே அவர்கள் இருந்தாலும் அவர்கள் இருப்பது இருபது மைல் தூரம் தான் என்ருலும் பார்க்க வரும் பயணம் செலவுக்கு காசில்லா மல் அவர்கள் வரவில்லையா?
வந்தாலும் சிறை அதிகாரிகட்கு லஞ்சம் கொடுக்க (potgut fT ததால் திரும்பிப் போய் விட்டார்சளா" உனது எதிர்காலத்தைப் பற்றி - திரும்பவும் நீ கிராமத்திற்கு செல்கிற எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிருயா? திரும்பிட் போகும்போது நிலப் பிரபுக்களுக்கு எதிராக ஏழை எளிய மக்களை .ோ + டச் செய் ததற்காக தூண்டிவிட்டதற்காக பழிவாகத் காத்திருக்கும் நிலப் பிரபுக்களை - உனது ரத்தத்தைக் குடிப்பதற்காக காத்திருக்கும் நிலப்பிரபுக்களை நினைத்துப் பார்க்கிருயா? ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தும் உன்னைப் பார்க்கவும் பேசவும் முடியர்மல் வைக்கப்பட்டிருக்கிற உன்னுடைய கணவனிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்ததா? W
உனது சிறையில் இன்றையபிரச்சனை என்ன? எந்தக் குழந்கை நோயுற்று மருந்து கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கிறது? எந்த வயது முதிர்ந்த தாய்மார்கள் துனையில்லாமல் SQLpgill கரைந்து கொண்டிருக்கிறர்கள்? ஏழை மக்களுக்கு இதெல்லாம்
தாகம் - 20
 
 

சாதாரணம் என்று டாக்டர்கள் அலட்சியமாக ஒதுக்குகிற எந்த ஏழை இளைஞனின் காயங்களில் இருந்து ரணம் கொட்டிக் கொண்டிருக்கிறது?
இன்றைய போராட்டம் என்ன? இந்த அரசாங்கம் நிர்வா ணமாய் உடையில்லாமல் அலைய விட்டிருக்கிறவர்களுக்காக உடை யும் உணவும் கேட்டுப் போராட்டம் நடக்கிறதா? கொடுமை யான இரவுக்ளைத் தாங்கும் சக்திகளுடன் நீ இருக்கிருயா? நோவும் அவலமும் சாவின் வாசனையும் கூக்குரலும் வெக்கையும் உள்ள சிறைக் கூண்டுகள்; ஒரே கூண்டில் பல பேர் அடைக்கப்பட்டு மூச்சுவிடக் கூட முடியாமல் கஷ்டப்படுகிற இரவுகளை நீ தாங் கிக் கொள்கிருயா? தி ரு ம் பி யோ அசைந்தோ படுத்தால் உன்னைப் போல் வாடுகிற சிறைத் தோழிகளின் துரக்கம் கெட்டு விடும் என்று அசையாமல் படுத்திருக்கிருயா? தண்ணீர் இல்லா மல் பல நாட்கள் குளிக்காமல் உடல் உஷ்ணத்தில் எரிகிறதா? அல்லது மழையால் நனைந்து ஒழுகி ' சதசத’ என்று தண்ணியும் சகதியுமாய் இருக்கும் அறையில், பாயும் உடையும் நனைந்துபோய் குளிரில் வா டி க் கொண்டிருக்கிருயா? உன்னுடையது என்று சொல்லப்படும் சில சுதந்திரமான நிமிடங்கள் என்ருவது வரும் என்று இன்னும் காத்திருக்கிருயா?
உனது வழக்கு என்னவாயிற்று? குற்றப் பத்திரிகை தாக் கல் செய்யப்படும் என்று ஒருநாள் பயமுறுத்துவது - ஒரு நாள் நீ விடுதலை செய்யப்படுவாய் என்பது இன்னும் இந்த போலி வார்த்தைகள் சொல்லப்படுகிறதா? வெற்று வார்த்தைகளையே சொல்லி அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது,
வேகும் உடல்கள். அடி உதைகள், உயிர் பறிபோகும் சத் தம், ஆண்களை அடைத்து வைத்திருக்கும் சுவர்களுக்கு அப்பா லிருந்து வரும் அலறல்கள், கொசு, கழிவுப் பொருள் மலத்தின் மீது உட்காரும் ஈக்கள், சொறி சிரங்கு இவைகளுக்கு நடுவில் தான் இன்னும் வைத்திருக்கிறர்களா?
உன்னைப் போன்றவர்களை விடுவிக்கப் போவதாக சொல்லிக் கொண்டே அரசியல் வாதிகள் கொக்கோகோலாவைச் சாப்பிட் டுக் கொண்டிருக்கிருர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீ விடு தலை செய்யப்படுவாய், உனது கேஸ் சீக்கரம் எடுத்துக் கொள்
தாக்ழ் , 24

Page 13
ளப்படும் என்றெல்லாம் அள்ளித் தெளித்துக் கொண்டேபோகி முர்கள். இப்படிச் சொல்லி சொல்லியே பல ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன.
*ஜெயில் மகாராஜாக்கள்’ எப்படி இருக்கிருர்கள்? இன்னும் உன்னை அவர்களுக்காக பணிவிடை செய்யச் சொல்கிருர்களா கண்களில் தண்ணீர் வரும்வரை மிளகாய் அரைக்சச் சொல்கி முர்களா? கொதிக்கும் வெயிலில் வெட்டவெளியில் நின்று, ஒவ் வொரு எலும்பும் வேதனையில் உடையும்படி அவர்க்களுக்காக கோழிரோஸ்ட் செய்ய ஆட்டுக்கல்லில் ஆட்டச் சொல்கிருர் களா? அல்லது இப்படி சொல்லலாமா?
நீயும் உனது தோழர்களும் ஜெயிலில் வளர்க்கிற கோழிகளை அவர்கள் திருடி தங்களுக்காக கோழிரோஸ்ட் செய்! ம்படி இன் னும் சொல்கிருர்களா? உங்களுக்கு கொடுக்கப்படுகிற சோப்பு முதலியவைகளைத் தங்களுக்கே கால்விலையில் கொடுத்து விடும் படி இன்னும் கட்டாயப் படுத்துகிறர்களா? இப்படிச்செய்வதன் மூலம் உங்களுக்காக ஏதோ சகாயம் செய்வது போல் சொல்லிக் கொள்கிறர்களா? 'சோம்பேறிகள் சுத்தமில்லாத பன்றிகள் கொலைகாரர்கள்!' என்று இன்னும் உங்களைத்திட்டுகிறர்களா? உங்களைப் பொன்ற அற்பபிராணிசளுக்கு உணவும் தங்க இடமும் கொடுத்த கற்காக அரசாங்கத்தை நீங்கள் பாராட்டவேண்டும்' என்ற பழையபாட்டையே சொல்கிறர்களா?
அன்புத் தோழி; ஆம்! நான் அங்கிருந்து புறப்பட்ட நாளி லிருந்து - சித்திரவதை செய்யப்படும் தோழர்களிடமிருந்து சுவர் களுக்கு மேலாக கிளம்பிவரும் அவலக்குரல்களை நீ எத்தனையோ முறை கேட்டிருப்பாய், எத்தனையோ உடல்கள் சவமாக உனது சிறைக் கம்பிகளுக்கு முன்னல் எடுத்துப் போகப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பாய், எனக்குத் தெரியும் உனது உடல்நிலை மோச மாகி வருகிறது. கடக்கிற ஒவ்வொரு நாளும், உனது உயிரைத் தவணை தவணையாக எடுத்துப் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனல் எனக்கு உறுதியாகத் தெரியும் உன்னுள் நம்பிக்கை சுடர்விட்டுக் கொண்டிக்கிறது. ஏனெனில் உனது நம்பிக்கை ஏழைகள், துயரப்படும் மக்களின் மேல் இருக்கிறது. அவர்களுக் காக உழைத்தாய், நீ தான் எனக்கு அவர்களுக்காக உழைக்கும்
uðausz
தாகம் - 22

வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தாய். உன்னையும் உன்னைப் போன்றவர்களின் கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையையும் அதன் கொடூரங்களையும் நீ தான் எனக்குச் சொன்னய்; அநீதிக் கும் அக்கிரமங்களுக்கும் முடிவுகட்ட வேண்டுமானல் முடிவற்ற கொடுமைகளுக்கும் அக்கிரமங்களுக்கும் ஆளாகியே தீர வேண் டும் என்று நீ தான் சொன்னய், உஷ்ணத்தை, குளிரை, கொடு மையை நோவை எதிர்த்து தாங்கிக் கொண்டேதான் ஒருவன் முன்னேற முடியும் என்று நீ தான் சொன்னய்.
சில நேரங்களில் உனக்கு வெளியுலகக் காற்று வரும். தேர் தல், மக்களின் கோபம், ஆட்சியில் மகத்தான மாற்றம் என் டெல்லாம் காற்றுவரும். ஆனல் இந்த மாற்றத்தில் உனக்கு அணுவளவும் நம்பிக்கை கிடையாது, இதுபோல் பல மாற்றங் களை கண்டு, நீங்கள் ஏமாந்திருக்கிறீர்கள். இருந்தும் வதந்திகள் வருகிறது, 'எல்லாக் கைதிகளும் விடுதலை செய்யப் படுவார்கள்; நீங்களும் செய்யப்படுவீர்கள்’’ என்றெல்லாம் வருகிறது. உங்கள் நாடித்துடிப்பை போலித்தனமாக கொஞ்ச நேரம் ஒட வைப்ப
தற்கான வார்த்தைகள் இவை, பிறகு வாரங்கள், மாதங்கள் கடந்து மறைகின்றன. ஒன்றையும் காணுேம்; அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிருர்கள். நீங்கள் காத்துக் கொண்டே இருக்
கிறீர்கள். சித்திரவதையில் செத்துக் கொண்டே இருக்கிறீர்கள், ஒன்றும் காணேம். அவர்களின் மாற்றம் என்பது உங்களுக்கு ஒன்றும் இல்லை, அதே சிறை அதிகாரிகள், கோர்ட்கட்டிடத்தையே உங்கள் கண்முன் காட்டாத அதே போலீஸ் அதிகாரிகள், அதே அதிகார வர்க்கம், எல்லாம் அதேதான்!
ஆனல் இல்லை காம்ரேட், ஏதோ ஒரு மாற்றம் வந்திருக்கி றது. வெளியில் ஆயிரக் கணக்கான, கோடிக்கணக்கான மக்க ளின் ஊர்வலமும் போராட்டமும் கோஷங்களும் உனக்குக் கேட் டிருக்கும். கொதிப்பேறிய முகங்கள், முழக்கங்கள். அவர்கள் உனக்காகப் போராடிக் கொண்டிருக்கிருர்கள். இந்த பூமி முழு தும் பரவியெழும் கோபா வேஷமான குரல்கள். உனக்காக சிறை யில் வாடும் ஆயிரக்கணக்கான வர்களுக்காக உழைக்கும் மக்களின் ஒட்டு மொத்தமான விடுதலைக்காக எழும் குரல்கள். நீ அறி வாய்! கொடுமையை அடக்கு முறையை வெறுக்கிற இதே மக் கள் போலி வாக்குறுதிகளையும் பொய்யையும் எதிர்க்கிற இதே மக்கள் சுரண்டலைச் சகிக்காத இந்த மக்கள் பொறுமை இழந்து கொண்டிருக்கிருர்கள். அவர்கள் உன்னை விடுதலை செய்வார்கள்.
அவர்கள் வந்து கொண்டிருக்கிறர்கள்.
தோழமையுள்ள, மேரி டெய்லர்
தாகம் 3ே

Page 14
பெண்களுக்கு ger *ச்ரிக்கை
1. வயது வந்த பெண்கள், முழுப்பாவாடை அணிய வேண்டும்
2
கண்டவர்களுடன் சைக்கிளில் செல்லக் கூடாது.
3. கல்யாணம் செய்தவர்கள் சேலைதான் அணிந்து வெளியில் செல்ல வேண்டும். இரவு உடுப்புகளும், அங்கம் தெரிய உடுப்புகளும் அணியக் கூடாது.
4. கல்யாணம் செய்தவர்கள் கணவன் மாருடன் தான் சைக்கி
ளில் செல்ல வேண்டும்.
5. தேவையில்லாமல் கண்ட இடங்களில் கானும் பெண்களுக்கு
அடி கொடுக்கப்படும்,
6. கண்டவர்களுடன் சைக்கிளில் சென்றல் விசாரணை செய்து
அடி கொடுக்கப்படும்.
7. சிறுவயது முதல் இப் பழக்கங்களைக் கைக் கொண்டால்
தான் பெரியவர்கள் ஆனதும் நற்பழக்கங்கள் பழகலாம்.
8. ஒழுக்கமான பிள்ளைகளாய் இருந்தால் வாலிபர்கள் சீ. ம்ை
இன்றியும் திருமணம் செய்வார்கள்.
9. 10 பிள்ளைகள் ருேட்டில் போனல் 1 பெண்தான் குமர்ப்பிள்ளை
10. இதை அனுசரியாமல் பிள்ளைகளைப் தங்கள் எண்ணத்திற்கு திரியவிடும் தாய் தந்தையருக்கு தகுந்த தண்டனை வழங்
கப்படுவதுடன் மரியாதையும் கெடுக்கப்படும்.
நன்மை விரும்பி தமிழ்மக்கள்
(இப்பிரசுரம் அவர்களால் வெளியிடப்படடது போலவே
இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது யாழ் குடாநாடெங் கும் பரவலாக விநியோகிக்கப்பட்டது.)
தாகம் - 24

இவ்வாருக எச்சரிக்கை விடுவதென்பது நமது தமிழ்ச் சமூ கத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமானது. ஆளுல் பெண்களுக்கு முதல் தடவையாக விடப்பட்ட இவ் எச்சரிக்கை குறித்து நாம் மிகுந்த கவனம் கொள்ளவே வேண்டும். "நன்மை விரும்பித் தமிழ் மக்கள்" என்ற போர்வைக்குள் மறைந்து கொள்ளும் இவர்களைப் போன்றவர்களே இனங்காண வேண்டி யது முதற்கடமை. அடுத்து இந்தப் பிரசுரமானது பலரது முக மூடிகளைக் கிழித்துள்ளது.
பிரசுரத்தை வாசித்ததும் கொதிப்படைந்தோர் (பின்னர் அதை மறந்து தாமும், தம்பாடும்), ஏதாவது செய்யவே வேணும் என்று போர்க்கோலம் கொண்டோர் (சொல்லிய இடங்களி லேயே மீண்டும் அமைதியடைந்தனர்), அவன்கள் விசரன்கள் என விட்டுத்தள்ளிஞேர் (பெண்விடுதலை விரும்பிகள் எனத் தம்ம்ை விளம்பரப்படுத்துவதில் பின்நிற்காதவர்), இவர்களை விட சில கூட்டளைகள் சரியானவை என வாதிட்டோர் (அதுவும் தமக் *ல்ல, தடத்தை கெட்டவர்களுக்கு மட்டும் ?
என்னே! நமது பரிதாப நிலை. பெண்களாகிய நாம் நம்மைப் பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளோம்? அடிகொடுக்கப்படும், விசாரணை செய்து அடிகொடுக்கப்படும், தாய் தந்தையருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுவதுடன், மரியாதையும் கெடுக்கட் படும் என்ற மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டபோதும் கூட நம்மில் மிகச் சிலரே அதனை எதிர்த்து கின்றேர். இவை எதனைக் காட்டுகின்றன? பெண்களாகிய எமது
13:வீனத்தையா?
ଐତ' Jørräöଶr! :
இந்த எச்சரிக்கை கூட எங்களை முழுமையாக விழிக்கவைக்க வில்லை. நாம் எப்போது விழித்துக் கொள்வோம்? எச்சரிக்கைகளை அவர்கள் நடைமுறையில் காட்டும் போதா? அப்போது கூட நம்மில் சிலர் விழிக்க மாட்டார்கள். அவர்கள் உனது ஊரவனை உறவினனை, நண்பன அடிகொடுத்து விசாரிக்கும் போதும் நீ மெளனம் சாதிப்பாய். அவர்கள் உன்னை ஆம்! உன்னை அடிக்கும் போதுதான் நீ விழித்துக் கொள்வாய்.
நம்மை அடக்குவோரை, அடக்குதற்காய் வீட்டில் மட்டு மல்ல, எங்கும். எப்போதும் எதிர்த்து நின்று போராடும் சக்தி
܀3.
ST'sub - 25

Page 15
நமக்குள் வளரவேண்டும். அடக்குமுறைகளை உடைத்தெறிவோமி எனக் கூக்குரல் இடுவதல்ல; அவற்றை நடைமுறையில் பின பற்ற வேண்டும்.
நன்மை விரும்பித் தமிழ் மக்களே!
அந்நியனின் அடிமை விலங்கொடிக்க முடியாத நிலையில் பெண்களுக்கா அடிமை விலங்கிடுகின்றீர்?
சமூகத்தின் விடிவிற்காய் சரியான பாதை அமைக்க முடி யாதநிலையில் பெண்களுக்கா கட்டளை இடுகின்றீர்?
தமிழ்ச் சமூகத்தின் அடிமை விலங்கொடிப்பதில், சமூக, பொருளா தார அபிவிருத்தியில் பங்காற்றி வருகின்ற பெண்களை மீண்டும் சிறை க்குள் பூட்டி, அவர்களது சுதந்திரத்தை பறித்தெடுத்து, மக்க
ளிடையே வீணன குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடு படாமல் இந்தச் சமூகத்தின் விடிவிற்காய் ஆண், பெண்ணென்ற பே த மின் றி, சா தி, மத, வர் க் க வேறு பா டி ன் றி அனைவரும் சரியான பாதையில் உழைத்தால் நமக்கு விடுதலை கிடைப்பது திண்ணம்.
பெண்களை அடக்கி ஒடுக்குவதில் சர்வதேசரீதியாகவே ஒரு ஒற்றுமை நிலவி வருகின்றது என்று சொன்னல் மிகையாகாது. பெண்களுக்குப் பல சலுகைகளும், உரிமைகளும் வழங்கி வருகி ருேம் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நமது நாட்டிலே, தார்மீகம் நிலவி வருகிறது எனக் கூறும் ஜனநாயக ஆட்சியில் ஒரு சிங்களக் கல்லூரி மாணவியின் நிலை.
கல்லூரி மாணவியான அவளுக்கு வயது 16. தங்கச் சங்கிலி திருடிய குற்றத்திற்காக அவளுடைய 78 வயதுப் பாட்டியார் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு, அவள் தனது மாமா மாமியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ருள். அதன் பின் அவளுக்கு நிகழ்ந்தவற்றை நீதிபதிக்கு முன் நீதி மன்றத்தில் அவள் அளித்த சாட்சியத்தில் தான் நாம் அறிகி
ருேம்.
பொலிஸ் நிலையம் சென்றதும் ஒரு பொலிஸ்காரர் தூசன வார்த்தைகளால் ஏசி, குற்றப்பிரிவுக்கு வருமாறு உத்தரவிட் டார். மாமா மாமியை என்னுடன் வர அனுமதிக்கவில்லை.
antasib -- 26

அவர்களை ஏசிக் கலைத்தனர். நான் சென்ற அறைக்குள் இரு போலிஸ்காரர் இருந்தனர். ஒருவர் என்னைத் தாக்க வேண்டாம் எனச் சொல்லி விட்டு வெளியே சென்ருர். என்னை அழைத்த பொலிஸ்காரர் கதவைச் சாத்திவிட்டு, எஸ்லோன் பைப்பால் 5 தடவைகள் அடித்து, உண்மைபேசுமாறு கூறினர். என்னை உதைத்தார். பின்னர் ஒரு காரில் என்னை ஏற்றினர். காரில் போகும்போது உண்மை பேசாவிடில் என்னைக் கொன்று, சட” லத்தை தகரப்பீப்பாவுக்குள் அடைத்து ஒரு ஆற்றினுள் எறி வோம் என்றனர். எனது வீட்டுக்கு இரவு 8 மணிபோல் கொண்டு: சென்றபோது வீடு பூட்டியிருந்ததால் மீண்டும் பொலிஸ் நிலை யம் வந்தோம்.
காரில் இருந்து இறங்கியதும், என்னை அழைத்துச்சென்ற பொலிஸ்காரர் ஒரு டோச்லைற்றினல் அடித்தார். மீண்டும் முத லிருந்த அறைக்குக் கொண்டு சென்று, சங்கிலி கள்வெடுத்தது நீ தானே எனக் கூறி, உண்மை பேசும்படி சொன்னர்கள். ன்னது ஆடைகளை கழற்றச் சொன்ன போது, நான் மறுக்கவே என்னைஅடித்தனர். நான் முழு ஆடைகளையும் கழட்டிய பின் எனது கைகளைக் கட்டி, ஒரு இரும்புக் கம்பியினை எனது கால்களுக்கிடை யில் செருகி, மற்றப் பொலிஸ்காரனின் உதவியுடன் என்னைத் தூக்கி, இரண்டு மேசைகளுக்கிடையில் கம்பியை வைத்து, அந்த ரத்தில் என்னை நிர்வாணமாகத் தொங்க விட்டனர். سي
ஒரு எ ஸ்லோ ன் பைப் மூலம் எனது அடிப் பாதத் தில் அடித்தனர். நான் உரத்துக் கத்தினேன். எனது சத்தம் கேட்காதபடி ஒரு மோட்டரை முறுக்கி விட்டனர். ன்ன்னை மேலே பார்த்தவாறு, நிலத்தில் படுக்கச் சொல்லி விட்டு, எனது தொடைகளில் அடித்தனர். பின்னர் எனது கைக்கட்டுக்களே அவிழ்த்து விட்டு, என்மீது ஆடைகளை எறி ந் து அணியுமாறு: சொன்னர்கள், ஆடைகள் அணியும் போது இரத்தம் வழிவதனை நான் அவதானித்தேன். என்னல் எழுந்து நிற்க முடியாமல் இருந்த” பொழுது, காலினுல் உதைத்தார்கள். அப்பொழுது எனது கீழ் வாய்ப்பல்லு ஒன்று உடைந்தது. அத்துடன் நான் அறிவு மயங்கி னேன். பின்பு எனக்கு அறிவு வந்த பொழுது ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தேன். நான் நகரத்தில் விபச்சாரியாசத் திரிந்ததாக ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு கூறி யே, என்னைப் பொலிசார் அனுமதித்ததாக அறிந்தேன். நான் நடக்கும்
தாகம் - 7

Page 16
பொழுது எனது காலில் இருந்து ஒரு வலி ஏற்பட்டு உடல் முழுவதும் பரவுவதை உணர்கிறேன். ( நன்றி: ஐலன்ட், 23-9-1985 )
இச் சிங்களக் கல்லூரி மாணவியின் நிலை நமக்குத் தெளிவுபடுத்தி
வது என்ன? பெண்கள் எங்கும் அடக்கப்படுகிறர்கள். ஆம்! நாம் எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் அடக்கப்படுகிருேம். ஆனல் இன்றுபல பெண்கள் பெண்களுக்கு இனியும் என்ன விடுதலை எனப் பேசிக் கொள்கிருர்கள். நாம் வேண்டும் பெண்விடுதலே என்பது என்ன?
சைக்கிளில் திரிவதும், விரும்புகின்ற ஆடையணிந்து, விரும் புகின்ற இடமெல்லாம் சென்றுவருவதும், பாலுணர்ச்சிகளைத் தீர்ப்பதற்காக உடல் உறவு வைப்பதும் என்று மட்டும் நினைத்து விட்டீர்களா? நினைத்தபடி நினைத்தவாறு போய் வரும் பெண் பெண்விடுதலைக்கு எடுத்துக் காட்டு என்று நினைத்து விட்டீர்களா?
பெண்விடுதலை பற்றிய தெளிவு எமக்கு நிச்சயம் வேண்டி யது ஒன்ருகும். பெண் அடக்குமுறையானது அரசியல், பொரு ளாதாரம், சமூகம், கலாச்சாரம் யாவற்றிலும் பரந்து காணப் படுவதுடன் குடும்பம், குடும்பத்தில் ஆண்களின் மேலாதிக்கம் , சமூகத்தில் ஆண்களின் மேலாதிக்கம் ஆகிய தளைகளையும் உள்ள டக்கியுளது. இவைகளை ஒவ்வொரு பெண்ணும் உடைத்தெறிய வேண்டும். பெண்ணுனவள் ஆண்கள் பெறுகின்ற சகல உரிமை களேயும் பெறுவதோடு சட்டங்களோ, ஒழுங்குகளோ, விதிகளோ பால் வேறுபாட்டிறகென வேறுபடக் கூடாது. பண்பாட்டு அம் சங்கள் என்ற அடிப்படையில் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள எல்லா ஒடுக்கு முறையும் அழிக்கப்படுவதோடு, பெண்களின் மனப்பான்மைகளும் மாற வேண்டும். சமூகமுன்னேற் மத்தில் அவளின் விடுதலை பங்களிப்பைச் செய்வதாய் அமைய வேண்டும்.
ஆம்! பெண்விடுதலையானது நமது விடுதலைப் போராட்டத் திற்கும், தமது சமூக அபிவிருத்திக்கும் முன்னேறும் படிக்கல்லாக அமைய வேண்டும். ..... :-tr.waraewr
*-வைதேகி
srah - 28

எங்கள் கேள்வியும்
உங்கள் பதிலும்
1. கேள்வி: பெண்விடுதலை பற்றிய விடயங்களைக் கூட பெண்களை
பதில்:
விட ஆண்களே அதிகம் வாசிக்கிருர்கள். இதனை நீங்கள் ஏற்கிறீர்களா?
பெண்விடுதலை குறித்துப் பெண்களைவிடவும் ஆண்களே அதிகம் பேசுபவர்களாகவும் எழுதுபவர்களாகவும் உள் ளார்கள் என்பது உண்மைதான். அதுவும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிற்தான் இந்த நிலைமை. இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் பெண் விடுதலை சமூக சீர்திருத்தங்களுள் ஒரு "திருத்தமாகப்" பேசப்படுவதால். ஆசியாவில் 19ம் நூற்ருண்டிலிருந்து தேசியவாதத்தின் எழுச்சியுடன் சமூகசீர்திருத்தம் பற் றிப் பேசப்பட்டபோது பெண்களுக்குள்ள உரிமைகள் குறித்தும் பல ஆண் சீர்திருத்தவாதிகள் பேசினர்; எழுதினர்; போராடினர். இந்தியாவை உதாரணமாக எடுத்தால் ராஜாராம் மோகன்ராய், வித்தியாசாகர் விவேகானத்தர், ரானடே, காந்தி, சுப்பிரமணியபாரதி போன்ருேர் 19ம் நூற்றண்டிலும் 20ம் நூற்ருண்டிலும் பெண் விடுதலை பற்றிக் கதைத்தோரில் முக்கியமான வர்கள். இவர்களுடன் ஒப்பிடும்போது பெண்விடுதலை பற்றி உரத்துக்கதைத்த, வரலாற்றில் இடம்பெற்ற பெண்கள் மிகச் சிலரே.
இன்றும் எமது சமூகத்தில் இந்தநிலையே தொடர்ந் தும் நிலவுகிறது. ஆணுதிக்கக் கருத்துகளால் வழிநடத் தப்படும் எமது சமூகத்தில் பெண்கள் தமது ஒடுக்கு முறை பற்றிச் சிந்திக்க முடியாமலுள்ளனர் அவ்வாறு சிந்திப்பவர்களும் தமக்கு அபவாதம் நேரும் என்பதால் அதை வெளியிடத் தயங்குகின்றனர். அல்லது அவ்வாறு சிந்திப்பவர்களின் குரல், அவர்கள் பெண்களாக, சமூக அந்தஸ்து இல்லாதவர்களாக, பொதுசனத்தொடர்பு சாதனங்களில் செல்வாக்கில்லாதவர்களாக இருப்பதால் வெளிவருவதில்லை. பலத்து ஒலிப்பதில்லை. சமீபகால மாக நிலைமை மாறிவருகிறது. பல பெண்கள் சஞ்சிகை கள் பெண்களாலேயே நடத்தப்படுகின்றன.
gfrosið - 29

Page 17
ஆனல் முக்கியமானது என்னவென்ருல் பெண்களின் உரிமைகள் குறித்துக் கதைக்கும் ஆண்களிற் பெரும்பா லோர் அவற்றை நேர்மையாகக் கடிைப்பிடிப்பதில்லை. பெண்களின் சம உரிமைப் போராட்டத்திற்கு இவர் கள் ஆதரவளிப்பர். ஆனல் ஆணுதிக்கம், அதற்கான தீர்வுகள் ஆகியவை குறித்து விவாதங்களைக் கிளப்பும் கருத்துக்களைப் பெண்கள் வெளியிடும்போது அவற்றை எதிர்க்கின்றனர். எனவே பெண்கள் உரிமைகள் குறித்து ஆண்களே அதிகம் குரலெழுப்புபவர்களாகத் தென்படி னும் ஆணுதிக்கம் என்ற கருத்துப்பற்றிய திரவப்பரீட் சையில் அவர்கள் தோல்வியுற்று வருகின்றனர்.
2. கேள்வி "ஆண்கள் அடக்குவதைவிட பெண்கள் அடங்கிப் போவதே அதிகம்" இக்கூற்று எந்தளவு தூரம் பொருத்தமானது?
பதில்: தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பெண்கள் அடங்கிப் போகும் தன்மை கூடுதலாகக் காணப்படு கின்றது. ஏனென்ரில் ஆண்களுக்கு அதாவது திருமணத் திற்குமுன் தந்தைக்கும், பின் கணவனுக்கும் கட்டுப் பட்டிருப்பவளே ஒழுக்கமா% குடும்பப்பெண் என்ற கருத்து தமிழ் சமுதாயத்தில் நிலவுகிறது. அத்துடன் பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கிவாழவேண்டி இருப்பதும் பெண்கள் தாமாகவே அடக்குமுறைக்கு உட்படுவதற்கு சாதகமாக இருக்கிறது. பெண்கள் சுதந் திரமாக சிந்தித்து அதைத் துணிவாக வெளிப்படுத்துவ தும் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கும் உறுதியும் பெண்கள் அடங்கிப் போவதை தடுக்கும் என லாம்.
3. கேள்வி: ஸ்தாபனங்களின் தவறுகளைக் காரணம் காட்டி சிலர் இடைக்காலத் தீர்வை வரவேற்கிறர்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: விடுதலை ஸ்தாபனங்களின் தற்போதைய நிலையை மேற் கோள் காட்டி இடைக்காலத்தீர்வை வரவேற்பது சரி யான ஒரு கருத்தல்ல. இது ஒரு நிலையான தீர்வு அல்ல. ஏனென்றல் இவ்வாறு ஒரு தீர்வைப் பெறுவ
islash a 30

தால் ஒரு நிலையற்ற அமைதி கிடைக்குமே தவிர, ஒரு பூரண விடுதலையை தமிழ்ச்சமுதாயம் பெறமுடியாது. இதனல் தமிழர் மீதான அந்நியனின் அடக்குமுறைகள் அடங்கப் போவதில்லை. எமது எதிர்காலத் தமிழ்ச் சமூ கமும் இதே அடக்குமுறைக்குத் தள்ளப்பட்டுவிடும். நாம் ஒரு நிரந்தரமற்ற தீர்வைப் பெற்று நிரந்தரமான விடுதலையை இழந்தவராகி விடுவோம். நாட்டின் விடு தலையில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. எனவே விடு தலை ஸ்தாபனங்களின் சில தவறுகளுக்காக நாம் எமது பங்களிப்பை விடுதலைப் போராட்டத்திற்கு செய்யாது தப்பித்துக் கொள்வதற்காக இடைக்காலத் தீர்வை நாடி நிற்பது தவருனதாகும்.
4. கேள்வி: முன்னுள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலை தொடர்பாக உங்கள் கருத்தென்ன?
பதில்: இக்கொலையைப் பிழையென்று சொல்பவர்களில் நானும் - ஒருத்தி உண்மையில் நமது பிரச்சனை தொடர்பாககாலத் தின் தேவையையொட்டி அவர்கள் சரியான தலைமையை கொடுக்கவில்லை. ஆனல் இவ்வாருன துரோகத்தனத் திற்கு துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் பதில் சொல்வது அவர்கள்ை மேலும் தியாகி என்ற நிலைக்கு உயர்த்தி யுள்ளது. இவர்களின் துரோகத்தனமான செயல்களை மக்களிடையே சொல்லி, விளங்க வைப்பதன் மூலம் மக்களே அவர்களைத் தூக்கியெறிவார்கள். மக்களே வரலாற்றின் நாயகர்கள் முக்கிய: ஒரு விடயம் என்னவென்முல் செய்கின்ற கொலைகளுக்கு உரிமை கோரி, சரியான காரணத்தை முன் வைக்காமல் இயக் கங்கள் தப்பித்துக் கொள்வது துரோகிகளை மக்கள் நேசிக்கவும், இயக்கங்களை மக்கள் வெறுக்கவும் காரண மாகிறது. འ་ - - -
(நான்கு கேள்விகளுக்கும் பதிலை எழுதித் தந்தவர்கள் பெண்களே)
தாகம் 31

Page 18
* மனந்திறந்து () ஒரு விடுதலைப் போராளியுடன், ..!
எமது விடுதலைக்காக அனைத்து அடக்குமுறைகளையும் உடைத் தெறிய வேண்டும் என்ற அவாவில் சத்திய ஆவேசத்துடனும், ஆத்ம உணர்வுடனும் போராடுகின்றவர்களில் அவனுமொருவன். இன்னுெருவகையில் எனது நண்பரும் கூட! நீண்ட நாட்களின் பின் சந்தித்த மகிழ்வில் எனது கரங்களை இறுகப்பிடித்து தனது அன்பினைத் தெரிவித்தான். இருவரும் பல்கலைக்கழக முன்றலி லுள்ள சீமெந்து இருக்கையில் அமர்ந்து எமது போராட்டம் தொடர்பான பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடினுேம். அவ் விடயங்களுள் நண்பர் கூறிய சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள் கிறேன்!
1983 ஜூலை இனக்கலவரம்:
அப்போது நான் கொழும்பிலிருந்தேன். 83 ஜூலை 23ம் திகதி திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகளினல் மேற் கொள்ளப்பட்ட தாக்குதலினைச் சாட்டாக வைத்து சிறீலங்கா இனவெறி அரசால் தமிழ் மக்களுக்கு எதிராகத்திட்டமிட்டு மேற் கொண்ட தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களினுல் நானும் பாதிக்கப்பட்டு இரத்மலானை இந்துக்கல்லூரியில் அகதியாய் இருந்தேன். கலவரத்தின் போது தமிழ் மக்கள் சிலர் சிங்களக் காடையர்களினல் கத்தியால் குத்தப்பட்டு எரியும் கட்டிடங்க ளுக்குள் தூக்கிவீசப்பட்டதை நான் பயத்தில் ஒளித்திருந்தபோது கண்டேன். இச்சம்பவமே சிறீலங்கா அரசுக்கெதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை எனக்குள் தோற்றுவித்தது. அகதி யாய் யாழ்ப்பாணம் வந்து இரண்டு மாதங்களில் தற்போது நான் சார்ந்திருக்கும் விடுதலை இயக்கத்துடன் பயிற்சிக்காக இந் தியா சென்றேன்.
இந்தியாவில் எமக்கு அரசியல் வகுப்புக்களெடுக்கப்பட்டன. அதில் நாம் ஆயுதம் ஏந்த வேண்டியதின் வரலாற்றுத்தேவை யினை உணர்ந்து கொண்டேன். வெறுமனே ஒரு 83 ஜூலை இனக் கலவரமல்ல; நாம் மக்கள் மீது கொண்ட நேசமே எம்மை ஆயுத
தாகம்  ை32

மேந்த நிர்ப்பந்தித்தது என்பதைக் கற்றுக்கொண்டேன். அங்கு எமக்கு எடுக்கப்பட்ட அரசியல் வகுப்புக்களே எனது அரசியல் வறுமையையும், போராடுவதற்காக நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் எனக்கு உணர்த்தியது.
சிங்கள மக்களுக்கு நாம் எதிரி எல்ல:
83 ஜுலை இனக்கலவரத்தினை ஒட்டிய நாட்களில் சிங்கள பக்களுக்கு எதிரான ஒரு உணர்வு எனக்குள் இருந்தது என்பது ண்மையே! எனினும், எனது அறிவின் வளர்ச்சிப் போக்கில் ங்கள மக்களல்ல; சிறிலங்கா அரசும் அதற்குத் துணைபோகும் இயந்திரங்களுமே எமது எதிரிகள் என்பதைப் புரிந்து கொண் டேன். உண்மையில், 'தமிழ் பேசும் மக்களின் விடுதலையே, சிங் கள மக்களுக்கும் ஒரு முழுமையான விடுதலையை பெறக்கூடி சூழ்நிலைகளை உருவாக்கும்' என நான் கருதுகிறேன். ஆகவே நாம் ஏன் ஆயுதம் ஏந்தினுேம்? என்பதினையும், அது ஒரு வர bறின் நிர்ப்பந்தம் என்பதினேயும் சிங்கள மக்களுக்கு விளங் கப்படுத்த வேண்டும். மேலும், சிறீலங்கா இனவெறி அரசாங்கம் தனது நலன்களுக்காக சிங்கள மக்களை எவ்வாறு பயன்படுத்து கிறது? என்பதினையும், அவர்கள் எவ்வாறு ஆட்சி" என்ற பெய ரில் சிங்கள முதலாளிகளால் அடக்கப்படுகின்றனர்? என்பதினை பும் எடுத்துக்கூறி அரசாங்கத்திற்கும், அவர்களுக்குமிடையிலான முரண்பாட்டையும் கூர்மையடையச் செய்ய வேண்டும்
ܗܐ
இந்தியாவின் நிலைப்படு:
நான் பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்தபோது அங்கிருந்த நிலை:ைகளைக் கண்டு இந்திய அரசாங்கம் எமக்கு உதவிசெய் யும் 6 ஈறு நம்பியிருந்தேன். காலப்போக்கில், எமது போராட் ம் தொடர்பாக இந்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கு ':ென்பதை விளங்கிக் கொண்டேன்.
தென்னுசியப் பிராந்தியத்தில் ஒரு சமதர்ம அரசு அமைவது எல்லாவகையிலும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமானதாகவே அமையுமென்பதால் எமது போராட்டம் கூட இந்கிய அரசின் நலன் 1ளுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே அமையும். எனவே, தமிழீழம் என்றொரு சமதர்ம நாடு உருவாகுவதை இந்திய அர Fாங்கம் ஒரு போதும் விரும்பமாட்டாது. மாருக, எமது போராட்
தாகம் ம 33

Page 19
டத்தினை நசுக்குவதற்கான நடவடிக்கைகளையே எடுக் கும். எனவே, எமது போராட்டத்திற்கு இந்தியா உதவி செய்யு. என்ற மாயையிலிருந்து விலகி, எமது முழுமையான விடுதலை காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து போர்ாடவேண்டும்
மறக்கமுடியாத சம்பவம்:
எனது போராட்ட வாழ்க்கையிலே மறக்கமுடியாத சம்: மென்று கூறும்போது ஒவ்வொரு தோழனதும், ஒவ்வொரு ம: களினதும் இழப்பும் என்னல் மறக்கமுடியாதவையே! ஆயினும் நாம் சுதந்திரமாகவும்; சுயாதிபத்தியத்துடனும் வாழ்வதற்க: கவே போராடுகின்ருேம் என்றரீதியில் எமது உயிரினையும் பொருட் படுத்தாதே போராட்டத்தில் இறங்கினுேம். ஆனல், அநுராத புரத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் மீது கொள்ளப்பட்ட தாக் குதலில் உயிரிழந்த அந்த முகம் தெரியாத மனிதர்களின் மர ணங்களை என்னல் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்தச் சம்பவத் தினை மிஞ்சுகின்ற வகையில் வெலிக்கடையிலும், வதை முகாம் களிலும், இன்னும் பல்வேறு இடங்களிலும் எமது மக்களும், சகோதரர்களும் கோரமான முறையில் கொல்லப்படுகிரு?ர்கள். இதுபோன்ற இன்னும் எத்தனையோ சம்பவங்களினல் தானே நாம் இந்த இனவெறி அரசுக்கெதிராக ஆயுதமேந்தினுேம். ஆனல் அந்தச் சிங்கள மக்களின் மரணங்களுக்கு நாம் என்ன நியாயத் தினை கற்பித்துவிடப் போகின்ருேம்? சிக்கலான சூழ்நிலை:
எமது போராட்டம் கூர்மையடைந்து வருகின்ற வேளையில் “போர் நிறுத்தம்', 'பேச்சு வார்த்தை" என்ற போர்வையின் கீழ் சிறீலங்கா இனவெறி அரசு தன்னை பலப்படுத்திக் கொள் கிறது. இன்னெரு பக்கம், இந்தியா எமது போராட்டத்தின் பெயரால் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்கிறது. இந்தச் சிக்கலான சூழ்நிலையில் மக்களுக்கும், விடுதலை இயக்கங்களுக்கு மிட்ையே இடைவெளி ஏற்படாதவகையில் எமது போராட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்லவேண்டும். எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்க ளில் தங்கிநின்று, மக்களின் நலன்களுக்காக செய்யப்படவேண்டும். மக்களோடு நாம் கைகோர்த்து இருப்பின் எமது விடுதலைப்போராட் டத்தினை எந்தச்சக்தியாலும் நசுக்கவோ, பின்தள்ளவோ முடியாது!
தாகம் ை هن

தென் வியட் : மின்
விடுவிக்கப்பட்ட பிரதே%ங்களில் கலை - இலக்கிய வாழ்வு
JTsöt Lysit Guitair (Tran Dinh van) (சென்ற துளித் தொடர்ச்சி) மக்கள் எழுத்தாளர்களும், கலைஞர்களும்
நாட்டில் இன்று பிரபலமாகவிருக்கும் மிகச் சிறந்த எழுத் தாளர்களும், கலைஞர்களும் இந்த மாபெரும் இயக்கத்திலிருந்தே தோன்றினர். பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட
படைப்புகளுக்கூடாக சில ர் வெளிநாடுகளிலும் தெரியவந்துள் ளனர். . V−
பிரான்சுக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியபோது கியாங் நாம் (*{1 g N : n ) 16 வயதுடையவராய் இருந்தார். முதலில் அவர் Kharthca மாகாணத் தகவல் சேவைப்பிரிவில் பணிபுரிந் தார். நிலம் வளமற்றிருந்தது; வாழ்க்கை கடினமாயிருந்தது; உணவுப் பற்ருக்குறை நிரந்தமாகவிருந்தது. பின்னர், அமெரிக்க ஆதிக்கம் ஏற்பட்டது. பொம்மை நிர்வாகத்தின் கீழுள்ள நகரங் களில் அடுத்தடுத்து கார்ச் சாரதியாகவும், றப்பர் தோட்டத் தொழிலாளியாகவும், வியாபார நிறுவனமொன்றில் கணக்குப் பதிவாளராகவும் வேலை செய்தார். அவர் வெகுஜனப் போராட் டங்கரில் பங்கு கொண்டு கவிதைகள் எழுதினர். பெரிய யுத் தங்களில் அவர் பங்குகொண்ட அதேவேளை அவரது ம:ை வி: ' அவர்களின் 5 வயதுக் குழந்தையும் சிறைப்பட்டிருந்தனர். (; ல் னர் குறித்தபடி 1965ல் அமெரிக்கர் "குச்சிப்” ( tch ) பகுதியினை ஒரு பெரிய தாக்குதலின் மூலம் 'சுத்தப்படுத்தலே' மேற்கொண் டனர், ''நருப்பு:நிலம்’ ( and of fre) என்ற கட்டுரை எழுது தெற்கு அங்கு வந்திருந்தார். பின்னர் டா நாங் ( A ! g என்ற இடத்திலுள்ள அமெரிக்கக் கடற்படைத்தளத்தினைச் சிற்றி ைெளத்த குவாங் நாம் (Quang Nam) மாகாணப் போராளிகளு உன் அவர் சேர்ந்து கொண்டு பல சிறுகதைகளையும் கவிதை களையும் எழுதினர். அதன் பின்னர் சைகோனுக்கு அருகிலுள்ள லோங்கான் (Logan) மாகாணத்திற்குத் திரும் பி முன்னைய காலத்துக் கவிதைகளை சேகரிப்பதோடு, உள்ளூர் பத்திரிகை
தாகம் r 35

Page 20
ஒன்றுக்காக வேலை செய்தார். களத்தில் \t the frot) என்ற அவருடைய சிறுகதையில் லோங்கானில் கலைஞர்களது செயல்வீரத்தினைப் புகழ்ந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில், அவரது தங்குமிடத்திலிருந்து மூன்று மீற்றர் தூரத்தில் ஒரு குண்டு வெடித்தது. ஒரு மணி நேரத் திற்குப் பின்னர் லோங்கான் கலைஞர்கள் சிலருடன் உணவருத் திக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டிற்குமேல் குண்டு வெடித்தது. வீடு தகர்ந்தது. பானைகளும், சட்டிகளும் உடைந் தன, ஆடையணிகள் எரிந்தன. “எமது தோழர்கள் எதுவித உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை" என்று அவரு டைய நண்பர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் கியாங் நாம் எழுதினர். “பெண்கள் மறைவிடத்தினைத்தேடி ஓடவில்லை. நாங் கள் அவர்களது கவலையீனத்திற்காகக் கண்டித்தோம். நடிகை யும், எழுத்தாளருமான ரூயெற் (Tuvet) நித்திரை கொள்ள விரும்பும்போது நாம் மறைவிடத்திற்குச் செல்வோம். ஒவ்வொ ருதடவையும் குண்டுகள் எம்மேல் விழமுடியாது’ என்று கூறி ஞர். ரூ  ெய ந் றும் அவரது பத் தி ரி  ைகயா ள, நண் டரான ‘நான்’ (Nhat) என்பவரும் ஒருதடவை மறைவிடமொன் Aறிலிருந் த போ து அதன்மீது "நப்ளம் குண்டு ஒன்று வீசப் பட்டது. ஐந்து நாட்களிற்குப் பின்னரும் எமது இருதய: எரி வது போன்று, நாம் உணர்ந்தோம். எமது மூச்சில் பெற்றேல் வாடை வீசியது என்று நான் கூறினர் பல மாதங்கள் அவர் களுக்குச் சிகிச்சை அளிக்கவேண்டி இருந்தது.'
இவ்வாறுதான் எ மது எழுத்தாளர்களும், கலைஞர்களும் வாழ்ந்தார்கள், மற்றவர்களைப் போல அவர் க ஞம் போராளி களே 1915 இலிருந்து தென் வியட்னுமிய மக்கள் விடுதலைக்காக போராடினர்கள். சாதாரண போராளியோ, போராளிகளின் தலைவனே, கெரில்லாவோ, எழுத்தாளனே எவருக்கும் எவ்வித ஊதியமுமில்லை. எல்லோரும் மக்களுடன் வாழ்ந்தனர்: உற்பத்தி வேலைகளில் ஈடுபட்டனர்; மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்தி லும் பங்குகொண்டனர், மற்றும் எவரையும் போலவே கலைஞனே எழுத்தாளனுேகூட, தனது நேரத்தினை ஏறத்தாழச் சமனன மூன்று பகுதிகளாகப் பகுத்துக்கொண்டு, மறைவிடங்களைத் தோண் தெல், உணவு உற்பத்தி, அவரது துறைசார்ந்த பணிகளில் ஈடு படல் வேண்டும்,
தாகம்  ை36

தங்குமிடங்களாகவும், மாநாடு, கூட்டங்கள் கூடும் இடங்க ளாகவும் நிலத்தின்கீழான மறைவிடங்கள் பயன்படுத்தப்பட்டன. அவைகளை, சிக்கலான கிடங்குப் பின்னல்கள் இணைத்தன. எங்கு சென்ருலும் மறைவிடங்களை அமைப்பதே ஒருவர் செய்யவேண் டிய முதல் பணியாகும். நெல், சோளம், மரவள்ளி பயிரிடுத தலும் மீன்பிடித்தல், விளையாட்டுக்கான பொறிகள் அமைத்தல் இரண்டாவது பணியாகும். மறைவிடங்களை அமைத்த பின்னர் உற்பத்தி வேலையில் ஈடுபட்டு, பின்னரும் நேரம் எஞ்சியிருப்பின் அப்போது எமது எழுத்தாளர்கள் படைப்பில் ஈடுபடுவார்கள். வளமற்ற நிலப்பகுதிகளிலும், எல்லைப்பிரதேசத்தின் பெரு பகுதி எதிரியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமிடத்தும் உணவு விநியோ கம் ஒரு பிரச்சினையாக இருக்கும். Ths Xanu woof படைப்பின் -ạ6ìfìugrr Går Nguyen Trung thanh, Coming Back g; 3oguýìạir 2,8Fífluuii Phantu, A I etter From Muc Village GTGŠTLg5&ar GTyp திய Nguyen Chi Trung ஆகியோர் வருடத்தில் ஆறு மாதங் களை நெல், சீனிக் கிழங்கு பயிரிடுவதில் செலவிட்டனர். 196265 க்கு மிடையிலான காலப்பகுதியில் கவிஞர் Phan minh :) ) ஒரு கஷ்டமான பிரதேசத்தில் பணிபுரிந்தபோது மிக நீண்ட காலத்திற்கு இலைகளையும், காட்டுக் கிழங்குகளையுமே உணவாகக் கொள்ளவேண்டி இருந்தது. இவ்வாறன சூழ்நிலைகளில் எழுந்த பணிகள் எவ்வாறயினும் நம்பிக்கை ஒளி தருவதாகவும், வாழ் வின் மீது கொண்ட அபரிதமான காதலையும் வெளிப்படுத்தின, ஏனெனில், அ  ைவ மக்களையும் போராளிகளையும் தூண்டும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன.
உயர்ந்த மேட்டுநிலங்களில் உப்புக்குக்கூட தட்டுப்பாடு ஏற் LIG) b. A Letter From Muc Village GTaito Liaoli 2.07 Nguyen Chi Trung ஆக்குவதற்கு இது தடை யாக இருக்கவில்லை, மேட்டு நிலக்கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் விமானத்தாக்குதல் பற்றிய பயத்தினின்றும் எவ்வாறு விடுபட்டு சாதாரண ரைபிள்களைக் கொண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தினர்கள் என்பதை அப் படைப்புச் சித்தரிக்கிறது. 1965ல் வெளியிடப்பட்ட இப்படைப்பு உயர்ந்த ம்ேட்டு நிலக் கிராமங்களில் மிகுந்த வரவேற்பினேப் பெற்றிருந்ததோடு 'புக்’ (Muc) கிராமத்தினை முன்னுதாரண மாகக் கொண்டு அக்கிராமங்கள் செயற்படத்தொடங்கின.
உற்பத்தி வேலையும், போராடுவதில் ஏற்படும் அபாயங்களை யும், மகிழ்ச்சிகளையும் மக்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள
ፈወfféstb ! 87

Page 21
லும், எல்லையற்ற உயர் வான யதார்த்தத்தின் மையத்தினை (உயர்நிலையினை) எமது எழுத்தாளர்கள் சண்டுணர உதவின. நாடு பூராவிலும் புகழ்பெற்ற "ஹொன்டா’ (Hon Dat) என்ற நாவல் மீகொங், டெல்டா (Mekong, Delta) வின் மேற்குப் பகுதியில் பல ஆண்டுகள் போராட்ட வாழ்வினை மேற்கொண்ட பின்னர் .nh DuC என்பவரால் எழுதப்பட்டது. பிரதேச இலக் கியச் சஞ்சிகையின் ஆசிரியராகப் பணிபுரிதல், உள்ளூர் பத்திரிகை யொன்றுக்குக் கட்டுரைகள் எழுதுதல், அச்சகம் ஒன்றினை மேற் பார்வையிடுதல், பத்திரிகை விநியோகித்தல் ஆகியன அவரது அன்ருட வேலைகளாகவிருந்தன. குண்டு வீச்சில் இருந்து HTது காத்துக்கொள்ள அச்சகமும், சஞ்சிகை அலுவலகமும் அடிக்கடி இடம்மாறின. ஏப்போதாவது சிறிய ஒய்வு நேரம் கிடைக்கும் போது அவர் தன் நாவல எழுதி வந்தார். இருபது ஆணிே களுக்கு முன்னர் பத்து வயதினராக இருந்த போதே குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் வாழப் பழகிக் கொண்டார். அவரது நாவலின் முதற் பதிவின் போது வெளியான ஒரு லட்சம் பிரதி களும் விரைவிலேயே விற்பனையாகி விட்டன. மறுபதிப்பின்போது பல லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு, இன்று அந்த நாவல் T வலாக அறியப்பட்டதாகும்.
Natyen Duc Thuar என்பவர் சைகோன் ஆட்சியாளரின் சிறைகளிலும், முகாம்களிலும் ஆறுவருடங்கள் கழித்துள்ளார். அந்தச் சிறைகளிலும், முகாம்களிலும் தான் போராளிகளின் புரட் சிகர ஆர்வத்தினை மழுங்கடிக்கவும், அவர்களின் இலட்சியத்தினைக் கைவிடச் செய்யவும் என பிரத்தியகமாகத் திட்டமிடப்பட்ட சித்திரவதை முறைகளை "அமெரிக்க ஆலோசகர்கள்" பரீட்சித் துப் பார்த்தனர். மிருகத்தனமான உடல்ரீதியான கொடுமை களும், நுட்பமான மனரீதிான வேதனையும் இணைந்த சித்திர வதைகள் அவை.
நீண்டகாலமாக, நூற்றுற்கனக்கான ஆண்களும், பெண்க ளும் இத்தகைய சோதனைகளை எதிர்த்து நின்றுள்ளனர். 1363 இல் சைகோன் ஆட்சியால் ஏற்! ட்ட எழுச்சியில் நிகுயூபென் டக் தூஆன் தன்னை விடுவித்துக் கொள்ள முடிந்தது. ‘வெற்றி வீரன்' (1he Victu ) என்ற அவரது படைப்பில், மேற் கூறிய சோதனை கள் பற்றிய விபரங்களை பலநூறு பக்கங்களில் தெளிவான மொழி நடையில் விவரித்துள்ளார். (தொடரும்) தொடர்பு:- தாகம் நுண்கலைப்பீடம்.
தாகம் - 38

வேலிக்கு ஒணுன் சாட்சியா?
கண்காணிப்புக்குழுவில் இடம் பெறுபவர்கள் பக்கம் சாராத வர்களாக இருப்பர் என எதிர்பார்ப்பது இயல்பே. ஆன ல் பூரீ லங்கா அரசாங்கம் நியமித்துள்ளவர்கள் ஐ. தே. கட்சியின் மறை முக ஆதரவாளர்களே எனக் கருத இடமுண்டு. இதில் திரு. கொட்பிறி குணத்திலக்கா குறிப்பிடத்தக்கவர் இவர் 'மார்க்கா" என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் இந் நிறுவனத்திற்கு வழிகோலிய முக்கியஸ்தரில் ஒருவராக அமரர் திரு. கே. சி நித் தியானந்தன் இருந்தபோதும், திரு. கொட்பிறி குண தி ல க் கா தலைவரானர். இவர் 1970 களின் முற்பகுதியில் ஒரு கருத்தரங்கில் 'நான் எனது ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆராய்ச்சியாளர்களைச் சேர்க்கும் பொழுது இன அடிப்படையிலேயே பொறுக்கி எ டு ப் பேன். இதனுல் தமிழ் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கையில்
இன விகிதாசாரம் மீறுத வகையில் சேர்த்துக்கொள்வேன்.'
இவ்வாறு பேசிய ஒருவரை தமிழராகிய நாம் எவ்வாறு ஏற்பது.
ராஜிவ் கண்ணடிக்கிறரா?
வியாபாாம் ஒழுக்கவியலை அறியாது. குறிப்பாக ஆயுத உற்பத்தி உலகத்திலேயே மிகப்பெரியதும், மிக்க லாபத்தையும் தரும் ஒரு கைத்தொழிலாகும் ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் யூனியனும் தான்ஆயுத உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்ணனியில் நிற்கும் அதேவேளை இந்தியா உற்பட பல நாடுகள் இந்த விளையாட் டில் சேர்ந்துள்ளன.
Times of India சஞ்சிகையில், 'அமித் குப்தா’ என்ற பத் திரிகையாளர் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு வருடங்களில் "பிறேஸில் ஆண்டுக்கு கோடி டொலருக்கும் அதிகமான பெறு மதியுடைய ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுபோலவே அதே காலகட்டத்தில் 'எகிப்து’ ஏறத்தாழ 50 மில்லியன் டொ லர் பெறுமதிக்கு விற்பனைசெய்துள்ளது. எவ்வாருயினும் 33 ஆயுதத்தொழிற்சாலைகளையும், 10 பாதுகாப்புக்கான பொது நிறுவனங் களையும் கொண்ட இந்தியா (பாதுகாப்பு அமைச்சின் 1932-83 ம் ஆண்டுக்குரிய அறிக்கையின்படி) 13 கோடி ரூபா பெறுமதிக்கு ஆயுத ஏற்றுமதிகளைச் செய்துள்ளது. இந்தப் பெறுமதி F 16 யுத்த விமா னம் ஒன்றின் விலையிலும் குறைவானதே. உலகச்சந்தையில்
தாகம் உ89

Page 22
மிகுந்த பணச்சுழற்சி கொண்ட ஒரு துறையில் இந்தியா எவ் வ ளவு தூரம் பின்தங்கிநிற்கிறது என்பதினையே இந்த புள்ளி விப ரங்கள் காட்டுகிறது.
வல்லரசுகளின் பின்னல் வெகுதூரம் பின்தங்கியுள்ளபோதும் ஆயுத ஏற்றுமதியில் முன்னேற பெரியளவில் இந்தியா செயற்ப டுகிறது என்பதையும், மிக விரைவிலேயே இந்தியா உலகின் முக் சிய ஆபுத ஏற்றுமதியாளர்களுக்குச் சமனுக வளர்ந்துவிடும் என் பதையும் 'அமித் குப்தா வின் அறிக்கை தெளிவாக விளக்குகிறது.
நிலைமை இவ்வாறிருக்க சிறிலங்கா இராணுவத்திற்கு தேவை யான ட்ரக் வண்டிகளை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்தி ரங்களை அண்மையில் அனுப்பி இருப்போரில் இந்தியாவின் '-ாட்டா' (*8) வும், அசோக் லேலண்ட் (Ashok eyland) நிறுவனங்களும் அடங்கும். h
அண்மைக்காலத்தில் இதற்கு முன்னரும் கூட இலங்கைக்கு டாட்டா நிறுவனம் ட், க்வண்டிகளை வழங்கியுள்ளது.
ஒரு பக்கத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை இனப்பிர ச் ச னைச்குத் தீர்வுகாண்பதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்துவரு கிறது. மறுபக்கத்தில் இந்தியத் தனியார் துறையின் மிகப்பெரும் நிறுவனங்களான டாட்ாவும், அசோக் ல்ேலன்டும் இலங்கை இராணுவத்திற்கு ட்ரக் வண்டிகளை வழங்குவதற்கு போட்டியிடு கின்றன.
டாட்டாவும் அசோக் லேலன்ட்டும் என்ன நோக்கில் இப்ப
டிச் செயல்படுகின்றன என்பதை இந்தியப் பிரதமர் அறியமாட் ւ-ո Մո ?
(அட்டைப் படத்தின் தமிழாக்கம்)
அன்பார்ந்த கடவுளே!
ஒவ்வொரு நாளும் என்னுடைய அம்மா இவ்வாறன பெட்டிகளைக் காணும் போது அழுகிருள். அவர்கள் ஒவ் வொரு நாளும் அவற்றைக் கொண்டு வருகிறர்கள். நிலத் தைக் கிண்டி, மண்ணில் போட்டுப் புதைக்கிறர்கள். ஏன் என்னுடைய அம்மா அழுகிருள்?
உன்னுடைய பாலஸ்தீனக் குழந்தை நன்றி,
Tears oin Palestiniai. Childrei to God.
தாகம் af)

பிடவைத்தினிசுகள், கூறைச்சேலேகள்,
சிறுவர்கள், ஆண்கள், பெண்கள்
அனைவருக்கும் ஏற்ற உடைகளை
விரும்பிய டிசைன்களில்
ஒரே இடத்தில் தெரிவு செய்ய
மணியம்ஸ்
16, நவீன சந்தை
தொலைபேசி : 23543 யாழ்ப்பாணம்.
சகலவிதமான பிடவைவகைகளையும்
நியாயமான விலையில்
தரமானதாகப் பெற்றுக் கொள்ள
எம்மிடம் விஜயம் செய்யுங்கள்
வெல்கம்ஸ்
161, 162, நவீன சந்தை
யாழ்ப்பாணம்.