கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்மவதிகள்

Page 1


Page 2

தள்மவதிகள்
இந்திய, தமிழ்ப்பண்பாட்டில் பிரசித்திபெற்ற காவிய மகளிர் எழுவர் பற்றிய மீள்நோக்கு
'சம்பந்தன்'

Page 3

காணிக்கை
சம்பந்தன் அவர்களை உலகக்களித்க
அருமைத் தாயார் இராசமணி அவர்களுக்கும்
சம்பந்தன் அவர்களின் வாழ்வை வளஞ்செய்த
அருமைத் துணைவி பரிமளகாந்தி அவர்களுக்கும்
இந்நூல்
காணிக்கை

Page 4
BIBLOGRAPHY
* Title DHARMAVATHIKAL * Theme Literature ܫ
* Author : “SAMBANDAN'
The late K. THIRUGNANA «MP SAMBANDAN] * Size of the book : 21cm X13.5 cm * Number of Pages : iX-+- 92-+-1 1 * Publisher S. Rajanayagam
42 B, Parakum Mawatha, Dehiwala, Sri Lanka.
Assistance Mrs. Thriveni Kajaroganan
49. Cliff view Road, Lewisham, SE 13, 7 DB,
London.
* First Edition : June, 1997 * Printers : Sharp Graphics
DG2. Central Road, Colombo 12.
அன்பளிப்பு: еђип 100/= C 2.00 (லண்டனில்)

உள்ளே.
பக்கம் * அணிந்துரை:
நமது பாரம்பரியத்தின் “தர்ம ந்ாயகியர்" i
* அணிந்துரை:
காவிய மகளிர் V
* இந்நூலின் கதை vii
1. ஊர்மிளை 1.
2. மண்டோதரி 5
3. அகல்யை 11
4. மாதவி 17 5. யசோதரா 31
6. கைகேயி 35 7. திரெளபதி 51
பின்னிணைப்பு al

Page 5
அணிந்துரை
நமது பாரம்பரியத்தின் "தர்ம நாயகியர்”
இது ஒரு அசாதாரண இலக்கியத்தொகுதி.
தமிழுக்கு மிகப் பிந்திவந்த ஒரு இலக்கிய வகையின் அழகையும், காம்பீர்யத்தையும், எடுத்துரைப்பு உத்திகளையும், உரைநடையைக் கவிதையாக்கும் ரஸ் வித்தையையும் பயன்படுத்தி, தமிழின் வழியாகத் தெரியப்படும் இந்தியப் பாரம்பரியப் பெண்மையை, இந்துநீகரிகம் தரும் இலட்சியமய நோக்கிற் பார்த்து, இலக்கிய சாதனையொன்றினைக் காட்டி நிற்பது இந்தத் தொகுதி.
ஈழத்தின் கதவுகளுடாக வந்து, தமிழ்ச் சிறுகதை மாளிகையின் ஆரம்ப சிற்பிகளுள் ஒருவராக அமைந்த யாழ்ப்பாணத்து க. தி. சம்பந்தன் என்ற கந்தையா திருஞானசம்பந்தன், தனது இலக்கிய - ஆன்மீகப் பயணப் பாதையின் இறுதியில் (சிறுகதையில் தொடங்கி, காளிதாசனின் சாகுந்தலத்தைத் தனதாக்கி) இந்துப் பாரம்பரியத்தின் இலட்சியச் செந்நெறிப்பார்வைப் பூாணத்துவத்துடன் தந்துள்ள இறுதிப் படைப்பு இது.
இதில் சிறுகதையின் நவீனத்துவ, கவித்துவ வசீகரமும், இந்தியப்பண்பாட்டின் இலட்சிய விதந்துரைப்பும், இவற்றுக்கு மேலாக அதிரவைக்கும் நெகிழவைக்கும் ஆதர்சமயப் பார்வை நேர்த்தியும் இணைகின்றன.
இந்தியப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் என்றுமே “பிரச்சினைப் பெண்களாக" எடுத்தாராயப்படும் சில முக்கிய தலைமகளிரின் வாழ்க்கைகளைச் சம்பந்தன், (தனது அறிவும் பார்வையும் பழுத்திருந்த நிலையில்) அந்தப் பெண்கள் பற்றிய தனது வாசிப்புக்களாகத் தருகிறார்.
இந்த வாசிப்பு உண்மையில் “அர்ச்சிப்பு" ஆகவே அமைந்துள்ளது.

தெய்வங்களை வழிபடும்பொழுது அவர்களது பண்புகளை. பெயர்களை மந்திரங்களாக, சுலோகங்களாக எடுத்துரைப்பது போன்று சம்பந்தனும், இந்தியக் காவிய நாயகிகளை முன்னிலையிலும், படர்க்கையிலும் முன்னிறுத்தி விவரிக்கிறார்:
இந்தியப் பெண்கள் பற்றிய இந்த வாசிப்பு. இன்று பல வினாக்களை எழுப்பும் என்பதிலே சந்தேகமில்லை. அத்தகைய வினாக்களினூடே ஒரு மறுக்கப்பட முடியாத உண்மை "பாலரில் படுநெய்யாக" மேற் கிளம்புகிறது. இந்தியப் பாரம்பரியத்தில் அதன் நடைமுறைக் குரூரங்கள் எத்தனை இருப்பினும் பெண்மையில் தெய்வத்தைக் காணும் நோக்கு, பெண்மை (சக்தி) இல்லாத தெய்வீகம் பூரணமற்றது எனும் சித்தாந்தம் வலுவான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. அந்தப்பார்வையின் ஒரு வெளிப்பாடுதான். சம்பந்தனின் இந்தத் தொகுதி.
சிறுகதை இலக்கியத்தின் உயிர்ப்பு மையங்களில் ஒன்றான "இறுதி வாக்கிய முத்தாய்ப்பில்”, சம்பந்தன் தனது பார்வைத் தெளிவையும், மனப்பக்குவத்தையும்,கவிதை நெஞ்சையும் ஒருங்கு திரட்டித் தருகிறார்.
“புத்த பகவானின் சிலைகளினூடாகப் பொங்கிப் பெருகும் கருணைவெள்ளமும், ஞானப்பிரகாசத்தின் ஒரு பாகமும் உனது பங்குதான் என்பதை மகான்கள் மட்டும் நன்றாகத் தெரிந்திருந்தனர்.”
-யசோதரா பற்றி.
"நானே முதலில் மரணிக்க வேண்டும் என்ற என் தவம் பொய்யாகிப் போனதோ " என அலறியவாறே அவன் மார்பில் வீழ்ந்தாள்.
அவ்வளவில் காலங் காலமாய் பெண் மையைப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்த அந்த அமர ஜோதி திடீரென மறைந்து விட்டது"
-மண்டோதரி பற்றி.
ii

Page 6
ஊர்மிளா பற்றியும், திரெளபதி பற்றியும் கூறப்பெறும் இறுதி வாக்கியங்களும் இப்படித்தான். கவிதையை மீறிய தத்துவச் செழுமையும், அந்தத் தத்துவச் செழுமையின் கவித்துவமும் இணைந்த சொல்லோவியங்கள் அவை.
அகலிகை பற்றிய பல்வேறு தமிழ் இலக்கிய வாசிப்புக்கள் எமக்குத் தெரிந்தனவே. வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், புதுமைப்பித்தன், ச. து. சு. யோகி என வரும் பிரசித்தி பெற்ற பட்டியலிற் சம்பந்தன் சேர்ந்துகொள்கிறார்.
"அந்தச் சமயமே இவள், இறைவனையன்றி பிரபஞ்சம், உடம்பு, பிராணன், மனம், அறிவு என எதுவுமே தெரியாத நிர்விகல்ப சமாதியில் உறைந்து விட்டாள்.”
புதுமைப்பித்தனின் குரல் எதிரொலிக்கிறது.
கைகேயி பற்றிக் கம்பன் கையாண்ட "தீ" என்னும் சொல்லையே லாகவமாகத் திசைமாற்றிப் பயன்படுத்துகின்ற திறன் எம்ைைப் பிரமிக்க வைக்கிறது.
"தீ என்று பேசப்படும் அனைத்திலும் உயர்வாகிய யாகத் தீயாக அமைந்தவள். y:9
உலக வாழ்வுக்கமைந்த சாதாரண தர்மங்களைப் பொருள் செய்யாதுபுறக்கணித்துவிட்டு, இராமாவதார நோக்காகிய பரம தர்மப் புனருத்தாரணத்துக்காக, யாரும் என்றுமே இழப்பதற்கு ஒருப்படாத பெண்மை என்ற பெருந்தக்க செல்வத்தை தியாகாக்கினியில் ஆகுதி செய் த வள் , மாசறு கற் பும் , துT ய சிந்தையுமுடையவளான கைகேயி ஒருத்தியே. அவள் தர்மவதி”
சிறுகதையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று உரை நடையைக் கவிதையாக்கியமையாகும். இந்தத் தொகுதியில் அந்த உண்  ைம மீண் டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்படுகிறது.
iii

அளவு மீறாத மணிப்பிரவாளத்துக்கு ஒரு கவர்ச்சி உண்டென்பதை மறுக்க முடியாது எனும் உண்மையும்
இதற்குள் குத்திட்டு நிற்கின்றது.
இந்த "உரைக் கவிதை” நடையின் இன்னொரு பயன்பாடு, உயிர்நிலை உண்மைகளை, உச்சாடன முறைமையில் கூறுவதாகும். பாரதி தன் வசன கவிதைகளில் இதன் வனப்பையும் வலுவையும் காட்டியுள்ளான். சம்பந்தனின் உரையினது "தொனி'யிலும் அந்தப் பண்பு காணப்படுகிறது.
இந்த வேளையில் ஒரு இலக்கிய உண்மை எமது நெஞ்சிற் பளிச்சிடுகிறது. சம்பந் தன் போற்றிய பண்டிதமணி கணபதிப்பிள்ளையிடத்தும் இந்த உரைநடைப் பண்பு காணப்பட்டது.
அது சிறுகதைப் பாணியில் சைவ சித்தாந்தக்
கருத்துக்களைக் கூற முயன்றவரின் திறன்.
இது ஒரு சிறுகதை ஆசிரியன் தனது இலக்கிய, ஆன்மீகப் பயண முடிவில் தர முயலும் தரிசனம்.
இது ஈழத் திலக்கிய வளத்தின் உதாரணங்களுள் ஒன்றாக நின்று நிலைக்கப் போகிறது.
2/7, 58, 37 வது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி. வெள்ளவத்தை,
கொழும்பு 6,
I2O5.1997
iv

Page 7
அணிந்துரை 2
காவிய மகளிர்
ஈழத்துச் சிறுகதை முலவர் என மதிக்கப்பட்ட மூவருள் ஒருவர் திரு க. தி. சம்பந்தன் அவர்கள்.
அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இதிகாசங்களில் காணும் போற்றுவதற்குரிய தெய்வீக மகளிர் எழுவர் பற்றியதே கட்டுரைப் பொருள்.
தெய்வீகம் நிறைந்த பெண்களின் சீலத்துக்கும் பண்புக்கும் மாசு கற்பித்து மேடைகளிற் பிதற்றுவோரும் உண்டு. இவர்களின் கருத்துக்களை ஆமோதிப் போரும் பலருண்டு. தரு ம விரோதமான இக்கருத்துக்கள் சம்பந்தன் அவர்களின் இதயத்தில் நீண்டகாலம் முட்களாய் உறுத்திக்கொண்டிருந்தன.
இந்நூற்கட்டுரைகளில் சம்பந்தன் அவர்கள் இக்காவிய மகளிரூடாக மெய்ப் பொருளை மிக நுட்பமாகத்
தெளிவுபடுத்துகிறார்கள்.
திரெளபதி, கைகேயி, மண் டோதரி, அகலிகை முதலியோரிடம் மிளிர்ந்த ஒப்பற்ற குணாம்சங்களைத் துல்லியமாக விளங்க வைக்கிறார் சம்பந்தன் அவர்கள்.
கிருஷ்ணாவதாரத்தின் மகிமை திரெளபதியினாலல்லவா வெளிப்பட்டுப் பூர்த்தி செய்யப்படுகிறது! g
இராமாவதாரத்தின் நோக்கம் நிறைவேறத் தன்னையே ஆகுதி ஆக்கியவள் கைகேயி அல்லவா! இந்த மகத்தான தியாகத்தின் உயர்வை உணராத பலர் இன்றும் அவளிற் "தற்றங் காண்கின்றனரே. என்னே பரிதாபம்! x

இத்தவறான கருததுக்களை யெல்லாம் சம்பந்தன் அவர்கள் நிர்மூலஞ் செய்து, உண்மையைத் தெளிவுபட எம்முன் வைத்திருக்கிறார்.
இயல்பாயமைந்த தம் சிந்தனை வளமும், பொருள் செறிந்த இனிய மொழி வளமும் ஒருசேர, இந்த அறிவுக் களஞ்சியத்தைச் சமய - இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார் சம்பந்தன் அவர்கள்.
சம்பந்தன் அவர்கள் லண்டனில் சொற்ப காலமே வாழ்ந்தார். உசாத்துணை நூல்கள் மிகக்குறைவு. எழுத வசதிகளும் அதிகமில்லை. இவற்றின் மத்தியிலும் சம்பந்தன் அவர்கள் இக்கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பே அவர் தம் கடைசி நூலாகிவிட்டது.
தம் எழுத்து மூலமாகவும், கவிதை மூலமாகவும் சம்பந்தன் அவர்கள் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
லண்டன்- சத்தியபாமா குமாரசுவாமி.
O2,1997.

Page 8
இந் நூலின் கதை
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் "சர்ச்சை' ஒன்று பிறந்தது.
“கை வண்ணம் அங்கு, கால் வண்ணம் இங்கு” என்ற தலைப்பில், கம்பரை நன்கு பயின்ற பண்டிதர் ஒருவர் இலக்கியச் சொற்பொழிவு செய்தார்.
"ஆயிரம் யானைப் பலங் கொண்டவளும், முனிவர்களின் தவ வாழ்வுக்கும் அவர் செய்யும் யாகங்களுக்கும் இடையூறு செய்தவளுமான அரக்கி தாடகையை வதைத் தொழித்த இராமனின் சாதுர்யம்மிக்க கைகளின் ஒப்பற்ற உயர்வை அங்குக் கண்டோம்; காலங்காலமாய்ச் சாபங் காரணமாகக் கிடந்த சிலை ஒன்றைத் தன் பாததுரளியின் மகத்துவத்தால், அது பட்டதுமே அகல்யை என்னும் முனிபத்தினியாய்ப் புனிதம் பொங்கும் முன்னைய உருப்பெறச் செய்தகால்களின் உந்நத வண்ணத்தை இங்குக் கண்டோம்" என்பது அச் சொற்பொழிவின் தாத்பர்யம்.
சொற்பொழிவாற்றிய பண்டிதர், "புக்கவளோடு காமப் புதுநல மதுவின் தேறல்.” எனத் தொடங்கும் கம்பரின் செய்யுளை நன்கு பயன்படுத்தி, 'அகல்யை தவறு செய்தாள்' என அழுத்திக் கூறினார்.
சபையில் மெளனமான அமைதியின் மை ஒன்று தோன்றியது.
ஒரு மூலையிலிருந்த இந் நூலாசிரியர். (அமரர்) "சம்பந்தன்' எழுந்தார். தர்மாவேசம் அவரைப் பேச வைத்தது.
"பஞ்சகன்னியர் வரிசையிலே, ஒருவனைப் பற்றி ஓரகத் திருக்கும் பெருமைக் குரியோர் வரிசையிலே வைத்துச் சான்றோர் ஏத்தும் அகல்யை, திரெளபதி போன்றோரை எம்மனோரின் சிற்றறிவு அவதூறு செய்யக் கூசாத காலமிது. கண்ணப்பரையும், சிறுத்தொண்டரையும் கூடத் தரிசிக்கத்
vii

தெரியாதோர் இந்நாளில் மலிந்துள்ளனர். இந்நிலையில் தெய்வீகமானவற்றை, தேவரகசியங்கள விளங்கிக் கொள்ள எம்மனோரால் முடியுமா? விளங்க முடியாத அவல நிலையில்தான் நாமுள்ளோம்.
"நெஞ்சினாற் பிழைப்பிலஸ்" என விசுவாமித்திர முனிவரே கூறுகிறார். அருகில வந்து நின்ற கெளதமரின் பொற்பாதங்களை வணங்கிய இராமன், ‘கற்பின் மிக்க அணங்கு ஆய அகல்யையை அவர் கையில் ஒப்படைத்துச சென்றான் எனக கம்பரே கூறுகிறார்.
"விசுவாமித்திரரும், இராமனும் அகல்யையின் தூய்மையை விதந்துரைக்க, தவத் திருவாங் கெளதமரே ஏற்றுக்கொள்கிறார். ஆனால் நம்மவர் ஏற்க மறுக்கின்றனர். எமது அறிவு சிற்றறிவு என்பதே இதற்குக் காரணமாகும்."
இவை, ‘சம்பந்தன்' அன்று கூறியவற்றுள் சில. இவ்விடயம் சம்பந்தன் அவர்களுடைய உள்ளத்தில் அன்றுமுதல் கனன்றுகொண்டிருந்தது.
இடையில், "சாகுந்தல காவியம” ஆக்குவதில் அவரின் கவனம் ஈர்க்கப்படடது. 1962 வரையில் பூர்த்தியான
ry
சாகுந்தல காவியம 1987 இல் வெளியீட்டைக்காணும் வரை 'சம்பந்தன்' அககாவிய நினைவிலே ஊறிக் கிடந்தார்.
பின், 1990 இல் தமது பிள்ளைகள் நால்வரும் புலம்பெயர்ந்து வாழும் லண்டனுக்குச் சென்றார்.
அங்கு, அரை நூற்றாண்டுக் காலமாக உள்ளத்திற் கனன்றுகொண்டிருந்த விடயத்தை, காவியநாயகியர் பற்றிய தமது நோக்கை, கட்டுரைகளாக எழுதினார். உசாத்துணை நூலகள் கிடைப்பது அரிதாகவே இருந்தது. எனினும் தமது தெளிந்த அறிவு கொண்டு இந்நூலிலுள்ள ஏழு கட்டுரைகளையும் பூர்த்தி செய்தார்.
ஏழு கட்டுரைகளையும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். இது 1994 நடுப்பகுதியில்,
viii

Page 9
பேராசிரியர் கார்த்திகேசு சிவத் தம்பி, அறிஞர் கதிரிப் பிள்ளை உமாமகேஸ்வரன் ஆகியோரின் அபிப்பிராயங்களைப் பெற்று, பிரசுரிக்கத் தக்கவை யாயின், பிரசுரிப்பது குறித்து மேலும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனச் ‘சம்பந்தன்', இந்நூல் பதிப்பாசிரியரான எனக்கு எழுதினார்.
பல்வேறு காரணங்களின் தலையீட்டால், உடனடியாக இது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள என்னால் இயலவில்லை.
இக் கட்டுரைகள் ஏழு தவிரச் சீதே, நளாயினி, தாரை, தமயந்தி, சந்திரமதி ஆகிய காவிய மகளிர் பற்றியும் எழுதச் 'சம்பந்தன்' திட்டமிட்டிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, இத்திட்டம் நிறைவேறாமல், சம்பந்தன் அவர்கள் 1995 ஜனவரி 07 இல் உலக வாழ்வை நீத்தார்.
சம்பந்தன் அவர்களின் மூத்த புதல்வி திருமதி திரிவேணி கஜரோகணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நூல் வெளியீடு பற்றி அடிக்கடி எழுதினார். நான் கொழும்பு வந்த பின்னர் தொலைபேசியிலும் நூல் வெளியீடு பற்றிக் குறிப்பிட்டு முடுக்கினார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், அதிர்ஷ்டவசமாகக் கொழும்பில் தங்கியிருந்தார். அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்தம் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் ஊக்கமும் பெறப்பட்டு இந்நூல் வெளிவருகிறது.
“இது ஒரு அசாதாரண இலக்கியத் தொகுதி" என விதந்து, பேராசிரியர் அணிந்துரை நல்கினார்.
இந்நூல் ஆர்வலர்களின் கைகளில் தவழும்போது, சம்பந்தன் அவர்களின் ஆத்மா ஆசீர்வதிக்கும்!
42B, பரக்கும் மாவத்தை, சு. இராஜநாயகம்,
தெஹிவளை, பதிப்பாசிரியர்.
16.05.1997.
ix

ஊர்மிளை

Page 10

ஊர்மிளை
ஊர்மிளா, நீ சாதாரணமானஸ் அல்ல, பெண் குலத்தின் ஜீவன், அமிர்தபாகம், அதற்கும் அப்பாலுக்கு அப்பாலானவள்.
உன்னைப் பெற்றவன் தன் தேகத்தையே மறந்து வாழ்ந்த ஜநகனாகிய வித்தகன் அல்லவா ?
உலகம் என்ற எல்லைக்குள் உன்னை அடக்கிவிட முடியவில்லை. எப்படியும் உணர முடியாத உன்னை, உன் நிஜ சொரூபத்தை, உற்று நோக்கும் போது நீ பரம ரகஸ்யமாகவே விளங்குகிறாய்.
தியாகமும் பெண்ணுருவில் திகழக்கூடும் என்பதை, உன்னைப் பார்த்த பிறகே உணரமுடிந்தது.
உன் கணவன் லக்ஷமணனும் மிக உயர்வான தியாகிதான். அவனுடைய தியாகம் அனைத்தையும் தூய்மை செய்யும் அக்கினி போன்றது. உன்னுடைய தியாகம் குளிர்ந்து இனிக்கும் மலர்த்தடாகம் போன்றதல்லவா!
இருவர் தியாகங்களும் வேறுவேறாகத் தெரிந்தாலும் எல்லைக் கோட்டுக்கருகில் யோகியும் ஞானியும் போல அவை ஒன்றுதான்.
லசுஷ்மணனுக்கு வாழ்வு, உலகம் எல்லாமே அண்ணனாகிய ராமன் என்ற ஒன்றுக்குள்ளேயே அடங்கிவிட்டன. அவனைப் பிரிவதென விளையாட்டாக நினைத்தாலும் அது லகூழ்மணனை நடுங்க வைத்துவிடும். அப்படி அவன் தன் அண்ணாவுக்குள் கரைந்துவிட்டான்.
வைதேகியும் லக்ஷமணனைப்போல ராமனைப் பிரிந்து வாழ முடியாதவள் தான். ஆனால் அவள் நிலை வேறு. அந்த ாாமனில் சரி பாதி அவள் அல்லவா ? பிரிக்க, பிடிபட முடியாதவள் அவள்.
ஊர்மிளா, வனம் புகுந்த சமயம் லக்ஷமணன் உன்னிடம் சொல்லாமலே போய்விட்டான் அல்லவா ? அவனுக்குத் தான் அண்ணாவின் நினைவு அனைத்தையுமே மூழ்கடித்து விட்டது. அண்ணாவோடு இருந்தாலும் காடு அவனுக்கு

Page 11
அரண்மனையை விட இனித்தது. தன் உபாசனா மூர்த்தியை மையமாகக் கொண்ட கர்மக் குவியலுக்குள் பரம திருப்தியோடு மகிழ்ந்து அமிழ்ந்திக் கிடந்தான்.
பசி, தாகம், நித்திரை எதுவுமே அவனைத் தீண்டவில்லை. இரவு பகல் எனவந்த காலக் கணக்குகளும் அவனளவில்
அர்த்தமற்றனவாயின.
நீ அரண்மனையிலேதான் இருந்தாய். அதையிட்டு விருப்போ வெறுப்போ உன்னைத் தீண்டியதாகவும் தெரியவில்லை. அந்த அரண்மனை தன்பாட்டில் கிடந்தது. நீயோ உன்பாட்டில் இருந்தாய்.
அனைத்தையும் எடைபோடும் மனம் என்றாவது உன் பக்கம் தலை நீட்டியதை இதுவரை யாருமே கண்டதில்லை. லகூழ்மணன், உன் கணவன், தன் அண்ணனைத் தொட்டபடி நீங்காமலே இருந்து தனக்கான சுதர்மத்தை நிகழவிட்டான். நீயோ உன் தெய்வத்தை உன்னுள்ளேயே நிரந்தரமாக அமர்த்திக்கொண்டே உனக்கமைந்த கர்மங்களை நிகழவிட்டாய். உன் தொண்டு அத்தை மார் மற்றவர்கள் என்ற பேதங்களைத் தீண்டாமலே நிகழ்ந்தது. உனக்கு ஆறுதல் செய்ய உன் அத்தைமார் எத்தனையோ பட்டார்களே, பயன் பெற முடிந்ததா? கடைசியில் கலங்கிய நெஞ்சும் கண்களுமாய் அவர்கள் இருந்ததை எல்லாருமே அறிவார்கள்.
மெல்ல அரண்மனை உன்னைப் பூசிக்க ஆரம்பித்து விட்டதுசுவட உனக்குத் தெரியவில்லையே.
அம்மா, ஊர்மிளா, நீ யார் ? எப்படி இந்த உலகுக்குள் வந்தாய் ? எல்லாமே புதிராகி மயக்கமாகித் தடுமாறச் செய்கின்றனவே,
பதினான்கு வருடங்கள் கழிய வனவாசிகள் அயோத்திக்கு வந்த நேரம் அது. அரண்மனையும் சூழலும் மகிழ்ச்சிக்கடலில் முழுகிக் குமுறியது. எல்லோரும் கரை கடந்த இன்பத்தில் மொத்துண்டு தடுமாறினர்.
அப்போது நீ பூசை அறையில் ஏகாக்கிரதையில் உறைந்து செயலற்றிருந்தாய். ஒருத்தி, ஒடி வரும்போதே இப்படிச் சொன்னாள் :- "அம்மா, வனவாசம் முடித்துக்கொண்டு, பிா, தம்பி, தேவி எல்லோரும் வந்துவிட்டார்கள்.”
2

நீ சிறிது பொறுத்து எழுந்து அமைதியாக நடந்து வந்க ஒருபுறமாக ஒதுங்கி நின்றாய்.
நின்றவர்கள் திரும்பி உன்னையே பார்த்தார்கள். திடீரென அங்கே குடிபுகுந்த நிசப்தம் தொடர்ந்து நிலைத்தது.
பரமசிவனை நோக்கிய, நீண்ட தவத்தின்பின் காட்சி தந்த மலையரசன் மகளே போல் நீ நின்றாய்.
அந்த நிலையிலும் உன் தெய்வீக சோபை இடையீடின்றி
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. உன்னைப் பார்த்தவர்கள் கண்களை மீட்க முடியாமலே நின்றார்கள்.
வைதேகியின் மலர்க் கண்களிலும் நீர் நிறைந்து விட்டது ராமனுடைய அமுத மொழுகும் கருணைக் கண்களில் மிருதுவான இள நகையின் ஒளி தவழ்ந்தது.
லகூழ்மணனோ தலையைத் தொங்கப் போட்டபடி நிலத்தையே பார்த்தவனாய் நின்றான்.
அன்றுவரை பிரியாமல் இருந்த உன் அத்தை, கோசலை, திடீரென்று உணர்ச்சி வசமானவளாய் ஓடிவந்து உன்னைத் தழுவியபடி கண் கலங்கினாள். அதற்குள், பக்கமாக நின்ற சுமித்திரை உங்களிருவரையும் சேர்த்து அணைத்தவாறே விம்மினாள்.
சிறிது நேரத்துள் நீ அவர்களிடமிருந்து விடுபட்டு லக்ஷமணனை நோக்கி நடந்தாய். அவனுக்கு அருகாகச் சென்றதும் குனிந்தாய். உன் கைகள் இரண்டும் அவன் கால்களைத் தொட ஓடின.
அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. வெலவெலத்து ஒடுங்கிய நிலையில் தானும் குனிந்தான்.
ஊர்மிளா, உன்னை நனைத்துவிடத்தக்கதாக அத்தனை கண்ணிரையும் அவன் எங்கேதான் தேக்கி வைத்திருந்தானோ?
அப் போது ஜநகனுக்கே சமானமான நீயுமே அழுதுவிட்டாயே.
பிறகு எல்லோருமே அரண்மனைக்குள் சென்றுவிட்டார்கள்.
லகூழ்மணன் தாய்மாரிடமிருந்து விடுபட்டு உன்னிடம வந: சேர சற்று நேரமாகி விட்டது.

Page 12
எத்தனை ஆவலோடு வருகிறான் என்பதை அவனது முகமே காட்டியது வந்தவன் பேசாமலே நின்றான். பேச எனோ அவனால முடியவில்லை. சகிக்க முடியாத ஒரு வித மெளன நிலைதான் அது, அப்போது அவனை நன்றாக உணர்ந்தவளாகிய நீயே பேச ஆரம்பித்தாய்.
"சுவாமி !
ஏன் இப்படி நீங்கள் சலனப்பட வேண்டும். நான் உங்களை கணமேனும் பிரிந்திருக்கவேயில்லை. என் மனமாகிய கோயிலை விட்டு வெளியேறாமல் என்றுமே இருந்தீர்களே. தனிமை என்னை அணுகியதே இல்ஒலயே. நீங்கள் படும் வேதனையைப் பார்க்கும்போது 'எப்போதாவது உங்களை மறந்திருந்தேனோ?" என என்னை நானே கேட்குமாறு தோன்றுகிறதே."
அவன் பிறகும் பேசவில்லை. ஆனால்,
“பெண்னே, உன் கணவன் யார் தெரியுமா ? தேவருலகைக் கலக்கிய வில்லாளனாருக்கெல்லாம் வில்லாளனாகிய இந்திரசித்தனின் தலையைக் கொய்த மகா வீரன். அவனை எத்தனை தரம் அழ வைத்துவிட்டாய் ? ஆனாலும் அவன் பாக்கியவானே. உன்னை மனைவியாக அடைந்தவனல்
6υ 6) 1 Π Ρ
இதையும் கேள்:- பூனிராம பட்டாபிஷேகத்தின் பின்,
ஒரு நாள், உன் கணவனது உபாசனாமுர்த்தியாகிய அந்த ராமனே தான் உன் அறைக்குள் நுழைந்தான். நீயோ ஆழ்ந்த தூக்கத்தில் முழுகிக் கிடநத நேரம் அது. வந்தவன் படுக்கையோடும் உன்னை சுற்றி வந்து தலை சாய்த்து வணங்கிவிட்டு வெளியேறினான்.
அதைப் பார்த்தவர்கள் பிரமித்து நின்றுவிட்டார்கள் வைதேகி பரவசத்தில் மலர்நது உருகி நின்றாள்.
வாழ்ந்து காட்டி வேத தர்மத்தை நிலை செய்ய அவதரித்த மகா புருஷன் அல்லவா அந்த ராமன்.
உன்னை, காலத்தைக் கடந்து நின்றொளிரும் உன் ஆன்மப் பிரகாசத்தை அவனைத் தவிர வேறு யார்தான் அறியவல்லவர் 2 அடி தெய்வப் பெண்ணே, ஊர்மிளா , உண்மையில் நீட்யாரம்மா ?”

மண்டோதரி

Page 13

மண்டோதரி
இலங்காபுரி இராவணனது பேரரசின் தலைநகரம். அது இந்திரனது அமராவதியை விட அழகும், குபேரனது அழகாபுரியை விட அற்புதமுமானது.
எல்லா சிறப்புக்களும் அமைந்த நகரத்தின் நடுவில் இருந்த இராவணனது அரண்மனையைத் தொடர்ந்தே, அவன் பட்ட மகிஷி மண் டோதரியின் மாளிகை, நவரத்தினங்களின் இடையே ஒளிரும் சிந்தாமணியென விளங்கியது.
அந்தக் காலத்தில் ஈழதேசத்தின் வடமேற்கில் இருந்த - இன்றும் இருக்கும் மாந்தையைத் தலைநகரமாகக் கொண்டு, பரந்து கிடந்த தமிழ்ப் பிரதேசத்தை ஆண்ட மயனே மண்டோதரியின் தந்தை.
மயன் சிற்பக்கலையின் உயிர் நிலை தெரிந்தவன். முதன் முதலில் நடராச விக்கிரத்தை உருவமைத்து சாஸ்திரியமாக வடித்து உலகுக்குத் தந்தவன் அவனே. மேலும் சிற்ப நுட்பங்களைப் பற்றிய விரிவான ஒரு நூலையும், ஆத்மீகம், சங்கீதம், சித்திரம் முதலிய துறைகளோடு மொழிபற்றிய தமிழ் நூல்கள் பலவற்றையும் எழுதியவன்.
மண்டோதரி ஒரு காலத்தில் கைலாசத்திலே பரமசிவனது சடாமுடியிலே ஒரு பெண் வண்டாக இருந்து. சதா பஞ்சாட்சரத்தை ஒதிக் கொண்டிருந்த பரமபக்தை என்பது புராணவரலாறு.
"ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேயபிரான்”
"உந்து திரைக் கடல் கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை அதனில் பந்தணை மெல் விர லாட்கு அருளும் பரிசறிவார் எம்பிரானாரே " (மணிவாசகப் பெருமான்
திருவாசகம்) ܀-
"வண்டம ரோதி மடந்தை (ஞானசம்பந்தப் பெருமான். தேவாரம்)
இத்தனை மேலான பக்திக் கடலில் முழ்கிக்கிடந்தவள் மண்டோதரி. அவள் திரு உத்தரகோசமங்கை என்னும் திருப்பெருந்துறைப் பெருமானையே தன் உள்ளக் கோயிலில்
R

Page 14
பிரதிட்டை செய்து கொண்டு, அந்தப் பரமபதியை என்றும் பிரியாதிருந்தவள். அவளைப் பஞ்ச கன்னியருள் ஒருத்தியாகச் சான்றோர் போற்றினர். (பஞ்சகன்னியர், ஒருவன் என்ற ஒருவனையே தீண்டுபவர். அத்வைத சிந்தனை. பண்டிதமணி சி. க)
தன் உள்ளத்தில் என்றும் நீங்காது ஒளிரும் அந்த ஆன்ம நாயகனை, கல்யாண சுந்தரனாக, நேருக்குநேர் காணவேண்டும் என்ற ஆசை ஒரு சமயம் அவளுக்கு உண்டாகியது. நாளாக ஆக அந்த ஆசை வளர்ந்து தாகமாகிவிட்டது. காலம், இடம் அனைத்தையும் மறந்த நிலையில் அவள்மனமும் கண்களும் பெருமானைத் தேடித் தேடிக் கலங்கின. வேண்டுவார் வேண்ட முழுதாகவே கொடுத்தருளும் பரமன் மண்டோதரியை மகிழ்விக்க திருவுளங் கொண்டான். அதனால் தாரு காவனத்து ரிஷிபத்தினிகளின் கர்வ பங்கத்தின் பொருட்டு எழுந்தருளிய கோலத்திலும், அநந்த கோடி மடங்கு அமிர்த மயமான, மோகன கல்யாண சுந்தரனாக அவள் எதிரில் வந்து நின்றான். இத்தனை காலமும் பேரானந்தத்தை வாரிவழங்கிக் கொண்டிருந்த நிர்க்குண வஸ்துவை, நெஞ்சை அள்ளும் சகுண சொருபமாகக் கண்ட அளவில், கருவி கரணங்கள் செயலிழக்க பரவசத்தில் அமிழ்ந்திக் கல்லாகி நின்றாள் தேவி மண்டோதரி. அனைத்துக்கும் அப்பாலுக்கப்பாலான ஆநந்த மெளனம் நிலைகொள்ள, காலம் தன்னியல்பில் கழிந்துகொண்டிருந்தது.
அந்த சமயமே இராவணனும் மண்டோதரியின் மாளிகையை நோக்கி வந்து கொண்டிருந்தான். யெளவன சுந்தரனாக, அதுவரை நின்ற பரமபதி, திடீரென அழகொழுகும் ஒரு குழந்தையாகி மண்டோதரி முன் கிடந்தான். தூரத்தில் வரும்போதே அந்தக் குழந்தையைக் கண்ட இராவணன் ஆவலோடு கையை நீட்டியபடியே வந்து வாரி எடுத்து அணைக்கும் போதே, "மண்டோதரி இது யார் குழந்தை” என்றும் கேட்டான். தேவி சொன்னாள் :-
"சுவாமி ! சற்று நேரம் பார்த்துக் கொள்ளுமாறு ரிஷிபத்தினி ஒருத்தி தந்து சென்றாள்.”
அதற்குள் லோகமாதாவே அந்த ரிஷிபத்தினியாக வந்து குழந்தையை வாங்கிச் சென்றுவிட்டாள். இத்தனை உயர் வினளான - தெய்வீகத்தின் விளை நிலமான மண்டோதரிகரு வாய்த்த கணவன், அரக்கர் குலத்தவனாகிய
6

இராவனேஸ்வரனே இராமாவதார காரியம் நிறைவுபெற இந்தத் திருமணமும் இன்றியைமயாததே போலும்.
பலகோடி ஆண்டு ஒளிஎல்லைக்கு அப்பாலான சூரிய கோளங்களை, எத்தனை முயன்றுங் காணமுடியாத மனித சக்தியால் ஈஸ்வர நியதினன்ற பரமரகஸ்யத்தை எவ்வாறு விடுவிக்க முடியும் ? இராவணனும் பிரமன் வழிவந்த புலஸ்தியன் மரபினன், சிவபக்தன், அளப்பரிய தவத்தவன், தேவாதி தேவர்களிடம் வரங்களை நிறைவாகப் பெற்றவன், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவன், சிறந்த கலைஞன். ஆனால்,
அவனது பக்தியும் தவமும், பெற்ற வரங்களும், கற்ற கல்வியும்,கலா சர்ஸ்திர ஞானமும என யாவுமே அரசு, வெற்றி, வீரம், வாழ்வு, அதிகாரம், புகழ் முதலிய அநித்தியங்களே மையநோக்காக அமைந்தவைகளே. பிறவாத நெறி என ஒன்று உண்டு என்பதை அவன் கனவாகக் கூடக் கண்டதில்லை. மேகச் சாயைபோல கணந்தோறும் தோன்றி மறையும் சுகங்களே அவனது லக்ஷயங்கள்.
சீதையைப்பற்றிய சூர்ப்பனகையின் வர்ணனைகளைக் கேட்ட அளவிலே, தர்மம் என்ற காவலைத் தகர்த்தவன். காமாந்தகாரத்துள் நுழைந்து மீள விரும்பாமலே தவித்தவன். மதன வேகம் அவன் கண் களுக்கு சராசரங்கள் அனைத்தையுமே சீதையாக்கி விட்டது. அரக்கரோ பாவத்தின் விளைநிலங்கள். அறத்தைத் தின் று கருணையைப் பருகினவர்கள். மறத்தை அணிந்து பாவத்தை மணந்து கொண்டவர்கள். காளியின் கொடுஞ் சினத்தில் முளை கொண்ட கூனியின் உடன்பிறப்பினர் என்றும் பேசபபட்டார்கள். அவர்கள் சாகம், குசை, இலவம், அன்றில் முதலிய தீவுகளிலும், கந்தமாதனம் ஆகிய மலையிடங்களிலும், தண்டகாாணய. ஜநஸ்தானம் முதலிய காடுகளிலும, நகர்ப்புறப புதர் கe , அடவிகளிலும் பரந்து வாழ்ந்தனர். அவர்களது வாழ்வு கொடுமையும் குரூரமும் முளை கொண்டு செழித்துப் பாவமாகவே படர்ந்து தரும நாசத்தை விளைவித்தது.
இராவணனது விரிந்த பேரரசு, அளவு மீறிய வீரம்பெற்ற வரங்கள், தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த புகழ் என எல்லாமே, எங்குமாகப் பரந்து வாழ்ந்த அரக்கரை, தனித்தும் ஒருங்கிணைத்தும் அவனுக்காக, தத்தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பெருமகிழ்ச்சியோடு தியாகஞ்செய்ய
7

Page 15
அரக்கர் குலமே தயார் நிலையில் சந்தர்ப்பத்தைப் பார்த்தபடி காத்திருந்தது. இராவணனுக்குப் போகப் பொருள்கள் அளவிறந்து குவிந்து கிடந்தன. அவற்றை அனுபவிப்பதை விட, சீதையின் ஆசை என்ற இனித்துக் கொல்லும் கொடு விடத்தையே அள்ளிப்பருக அவன் ஆவல் கொண்டு அலைந்தான்.
மாலியவான் இராவணனுக்கே வணக்கத்துக் குரியவன். வயோதிபன், அனுபவம், அறிவு நிறைவு பெற்றவன். தருமம் தெரிந்தவன். வாய்த்த சந்தர்ப்பங்களிலெல்லாம், "உன்னையும் அரசையும். குலத்தையும் காக்க வேண்டுமானால் சீதையை விடவே வேண்டும்' என்று காரணங்களோடு விளக்கமாகச் சொல்லியிருக்கிறான்.
வருகிற சமயங்களிலெல்லாம் அப்படி அவன் பேசுவதை இராவணன் வெறுத் தான். அதனால் ஒரு சமயம் , மாலியவானை நோக்கி, " சீதையை விடு என்று சொல்வதானால் நீ இங்கே வரவே வேண்டாம்" என்று சொல்லிவிட்டான்.
விபீஷணன் இராவணனுக்கு உடன் பிறந்த தம்பி, சிறந்த மந்திரி, அறத்தின் காவலன், தர்மவிரோதம் எத்தனை அழிவுக்குக் காரணமானதென்பதை எடுத்துக்காட்டி, "உன் வாழ்வுக்காகவே வேண்டுகிறேன்.' என்று கண்ணிரால் அவன் கால்களைக் கழுவி இரந்து வணங்கிக் கேட்டான். ... இராவணனது பாவவிதி, முன்னின்று அவமதித்து உதைத்து அவனை இராச்சியத்தை விட்டே வெளியேற்றிவிட்டது. பேரிழப்புகள் நிகழ்ந்து விட்டன. இடையீடற்ற தூக்கத்திலே கிடந்த தம்பி கும்பகர்ணனை எழுப்பி வரச்செய்தான். அவனோ காலனையே கலங்க வைக்கும் ஆற்றல் பெற்றவன். இராவணனது பேரரசுக்கும் புகழுக்குமே முலமானவன். அவன் வரும்போதே இப்படிக் கேட்டான் :
“ஜானகி துயர் இன்னும் தவிர்ந்த தில்லையோ ? நோக்கினாலேயே கொல்லும் திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ ?"
அந்தப் பேச்சு இராவணனைக் கொதிக்கச் செய்தது. அதனால், அனைத்தையும் மறந்த நிலையில் அவன் பேசினான்: "மானிடரை வணங்கி, கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு வாழ உன் தம்பியோடு நீயுமே போய்விடு". எதிர்பாராதபடி அவன் பேசிய வார்த்தைகள் கும்பகர்ணனை அதிரவைத்தன.
8

கும்பகர்ணனோடு அதிகாயன் முதல் பலர் இறந்து விட்டார்கள். வில்லாளர் ஆனார்க்கெல்லாம் மேலவன். வீர ரென்பார்கட்கெல்லாம் முன்நிற்கும் வீரர் வீரன். அருமைமகன், தேவருலகைக் கலக்கியவன், இந்திரனை ஜயித்தவன், மண்டோதரியின் தனி மகன் இந்திரஜித்தன், அவன் யுத்தகளத்தில் அடிபட்டுக் கலங்கி வந்த நிலையில் தந்தைக்குச் சொன்னான் :-
"பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதம் மூன்றுமே பலன் தரவில்லை குலஞ் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக்கொண்டாய். சீதைமேல் வைத்த ஆசையோடு அவளையும் விடுவதே இனி செய்யத்தக்கது.”
"இதை அச்சத்தால் சொல்லவில்லை, உன்மீது கொண்ட அன்பினால் சொல்லுகிறேன்" என இந்திரசித்தன் சொன்னவை காதில் விழுந்ததும் இராவணன் ஏளனமாகச் சிரித்தான். பிறகு, "மகனே, நீயா இப்படிப் பேசினாய் ? இறந்தவர்,
இருப்பவர், நீ என எவரையுமே கருதாமல் என்னையே நோக்கி இப்பகையைத் தேடிக் கொண்டவன் நான். நீ மயங்கிவிட்டாய், மனிதருக்கு அஞ்சுகிறாய். நான் ஒருவனே தனி நின்று வென்று வருவேன். நீர்க்குமிழி போன்ற இந்த யாக்கையை விடுவதன்றி சீதையை விடுவதென்பது நிகழப் போவதில்லை. நீ சென்று சிரம பரிகாரம் செய்வாயாக’ என்றான். இராவணன் பேச்சு இந்திரசித்தனைச் சுருக்கிச் சுருங்கச் செய்து விட்டது ஆனால், மண்டோதரியோ சீதை சிறைப்பட்ட காலத் திருந்தே பல சந்தர்ப்பங்களில் இராவணனைத் தன்மாளிகைக்கு அழைத்துச் சென்று, அந்தச் சீதையை, அவள் விடுதலையை, தர்மா தர்மங்களைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறாள்.
ஒரு சமயம், "ஸ்வாமி 1 சீதையை கெளரவமாகவே இராமரிடம் சேர்த்துவிட்டு, மகனுக்குப் பட்டாபிஷேகத்தைச் செய்வோம். அதன்மேல்இந்த அரண்மனை வாழ்வையே துறந்து வானப் பரிர ஸ் தர் களாகக் கால தி  ைத ப் போக்கலாமல்லவா? நீங்களோ புகழ் மகளே பாடும் எல்லை தாண்டிய புகழாளராகி விளங்குகிறீர்கள். இன்னும் என்னதான் வேண்டும்?"
அதுவரை மெளனியாக நின்று கேட்ட இராவணன் இனிமையாகவே பேசினான்: “மண்டோதரி ! நீ உயர்ந்தவள்தான், ஆனாலும் பெண்களுக்கு இயல்பான பயம் உள்ளீடாக மறைந்து கிடப்பதையே உன் வார்த்தைகள் காட்டுகின்றன.”
9

Page 16
அவ்வளவில் அவன் அங்கிருந்து வெளியேறிவிட்டான். எந்தச் சமயத்திலும் அவன் மண்டோதரி மனம் நோகப் பேசியதோ செயல் புரிந்ததோ இல்லை.
விதியால் எற்றுண்டு தன் கணவன் சீதைபாற் கொண்ட தர்மவிரோதமான வேட்கைப் பெருக்கின் அலங்கோலத்தை நேருக்கு நேர் கண்டபிறகும், அவள் பெண்ணிர்மை குன்றியதே இல்லை. சீதையை வசப்படுத்திவிடலாம் என்ற நிறைவேறாத ஆசைக்கு ஆளாகி. அவளிருந்த அசோகவனச் சிறைக்கு அவன் போன பல சமயங்களில் மண்டோதரி தானுமே கூடிச் சென்றிருக்கிறாள். அவளது தூய உள்ளம் என்றுமே தன் கணவனது சுக நலனையே மையமிாகக் கொண்டே செயறபட்டது.
'கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானையன்றி அறியாக் குலமகள்' ஆகவே அவள் வாழ்வு காலமெல்லாம் மலர்ந்திருந்தது. பெண்மை என்ற பெரும் பேற்றை வாழ்ந்து காட்டி உலகுக்கு உணரச் செய்தவள் மண்டோதரி. கணவன் தன் மனமாகிய கோயிலில் என்றும் நீங்காதவாறு பிரதிட்டை செய்து போற்றி வாழ்ந்தவளுக்கு அவனை நினைத்தல் மறத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விட்டது.
மேலான தர்மத்தின் பக்கம் அமரத்வத்தையும் நிலை செய்யும் இன்னமுதமாயும், அதர்மத்தின் பக்கம் சர்வ நாசத்தையே தரும் ஆலகாலமாயும் சீதை என்ற ஒருத்தியே இருந்ததை தெளிவாக உணர்ந்திருந்தவள் மண்டோதரி.
இராவணன் களப்பட்டு பூமியில் பிணமாகி விழுந்து கிடக்கின்றான். நிலை கெட்ட நிலையில் சிந்தையும் செயலும் இழந்தவளாய் மண்டோதரி தடுமாறி வருகிறாள். அவள் பொன்மேனி, பாதாதி கேசம் வரை உருகிக்கிடப்பதை எலலோரும் கண்டு கதிகலங்கினார்கள். வரும்போது -
'அன்னாயோ ! அன்னாயோ !' - என்று கூவி அழுதபடிதான் வந்தாள். கணவனை தியாகமே சொரூபமான இனிக்கும் அன்புத் தாயாகவும் போற்றி வாழ்ந்தவள் அவள். நானே முதலில் மரணிக்க வேண்டும் என்ற என் தவம் பொய்யாகிப் போனதோ' என அலறியவாறே அவன் மார்பில் விழுந்தாள்.
அவ்வளவில் காலங்காலமாய் பெண்மையைப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்த அந்த அமர ஜோதி, திடீரென மறைந்து விட்டது.
10

அகல்யை

Page 17

அகல்யை
தாடகை வதம் முடிந்த பிறகு ராம லக்ஷமணர் தொடர்ந்து வர, பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் சித்தாஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார். கருதியபடி, யாக காரியுங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பக்கத்து வனங்களில் தவவாழ்வு வாழ்ந்த முனிவர்களும் சிஷ்யர்களோடு வந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டார்கள். அதற்குள் அந்த யாகத்துக்கு இடையூறுகள் செய்யக் காத்திருந்த அரக்கரும் கூட்டங் கூட்டமாக வந்து சூழ்ந்து விட்டார்கள்.
LI ITLD லக்ஷமணரின் காவலை அவர்கள் பொருள் செய்யவில்லை. எப்போதும் போலவே மாமிசம், இரத்தம் என்று கொட்டி அசுத்தஞ் செய்ய முயன்றார்கள்.
ராம பாணத்தால் மாரீசன் கடலிலே தூக்கி எறியப்பட்டான். அவன் தம்பி சுபாகு செத்து மடிந்தான். மேலும் அநேகர் கொல்லப்பட்டதும் எஞ்சி நின்றவர்கள் எப்படியோ தப்பி ஓடிவிட்டார்கள்.
எந்த இடையூறும் இன்றி யாகம் நிறைவு பெற்றது. பிரம்மரிஷி யாகசாலையை விட்டு வெளியே வந்து, ராம லகூழ்மணரை அருகாக அழைத்து, பெரும் மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்தார்.
"ராமா ! சராசரங்களை யெல்லாம் உள்ளே அடக்கி சதா காத்தருளும் உனக்கு இந்த யாகத்தின் காவல் ஒரு சிறு விஷயம். உன் பொருட்டுப் பெரியகாரியம் ஒன்று உளது. அது முடிப்பது பின்னர்" என்றார்.
பிறகு பெருந்தவத்தால் தான் பெற்று வைத்திருந்த திவ்யாஸ்திரங்களை வரச்செய்து, மந்திர உபதேசத்தோடு ஆசீர்வதித்து "இவைகள் உனக்கு இன்றியமையாதன” என்று கொடுத்தார்.
மூவரும் ஆசிரமக் குடிசையில் ஆறியிருந்த சமயம், மிதிலை மன்னர் ஜநகரது தூதர் வந்து, மகரிஷியை வணங்கி, "பகவான், மிதிலையில் நிகழ்த்த இருக்கும் யாகத்தை ஆசீர்வாதிக்க தங்கள் வருகையை பணிவோடு காத்திருக்கிறேன்” என்ற தங்கள் அரசரது வேண்டுகோளை விண்ணப்பித்தார்கள்.
மகரிஷி மகிழ்ச்சியோடு “வருகிறோம்” என்று அவர்களை அனுப்பிய பின்னர் ராம லக்ஷமணைரப் பார்த்துச் சொன்னார்:
11

Page 18
"ராமா ! ஜநகர் அரசர் மட்டுமல்லர் ; பெரிய தவ சிரேஷ்டரும், ராஜரிஷியும், விதேகருமாவர். அவசியம் பாாக்க வேண்டிய யாகம் அது; ஜகரிடம் ஒரு வில் இருக்கிறது. அசைக்கவே முடியாததாம் அது. அதையும் பார்க்கலாமல்லவா?
"அந்த ராஜ ரிஷிக்கு ஒரு மகள்; தெய்வீகத்தின் அற்புத இரகசியம் அவள் அழகு குண செளந்தர் யங்களில் மகாலகூழ்மிக்கு வேறு என்று சொல்ல முடியாதவள்.
"அந்த சிவ தநுசை முன் வைத்து "இதை வளைத்து நாண் பூட்டுபவனுக்கே என் மகள் உரிமையாவாள்' என்ற நிபந்தனையை ஜநகர் வைத்தார். எத்தனையோ ராஜ குமாரர்கள் வந்து அந்த வில்லைப் பார்த்துப் பார்த்துப் போய் விட்டார்கள்.” மகரிஷி அவ்வளவில் பேச்சை நிறுத்தி விட்டார். மறுநாளே மூவரும் மிதிலைக்குப் புறப்பட்டு விட்டார்கள். தவத்தின் புனிதமான புகழே என நிமிர்ந்த சடாமுடி, ஞானம் பிரகாசிக்கும் கண்மலர்கள், சிவ சொரூபம் என்று விளங்கும் முக மண்டலம் எனுமாறு அனைத்தும் ஒளி செய்ய மகரிஷி முன்னால் நடந்தார். கோதண்ட பாணியாய் நீல மேக ஸ்யாமளனான ராமன் அவர் பின் வர, பொன் பொலிந்த மேனியனும் தியாக சுந்தரனுமான லக்ஷமணன் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
தேன் சொரிந்து மணம் நாறும் மலர் பரந்த வழிகள், மான் விளையாடி மகிழும் மரகதப் பசும்புல் பரந்த மலைச் சாரல்கள். இசை பாடும் அருவிகள்; நதிகள், குயில் கூவ மயில் ஆடும் குளிர்ந்த சோலைகள் என இயற்கையன்னை கொலு விருக்கும் சோலைகளினூடாக மூவரும் நடந்து சென்றார்கள்.
பிரம்ம ரிஷியின் முழுமையான தவமாகிய தளத்திலிருந்து எழுந்து பரவும் ஞான அலைகளும், வேத தர்மத்தை மலர்விக்க அவதரித்த ராம லக்ஷமணரது தெய்வீகத்திற் பிறந்த ஆநந்த அலைகளும் கலந்து பரவ அந்த வனப் பிரதேசம் இனித்தது.
வழியில் மானஸ்ரோவரில் ஜநித்து வரும் சரஸ்வதி நதியைக் கண்டதும் வணங்கி நடந்து, செல்வ நாடுகள் சில கழிய, பரமசிவனது திருமுடியிலே பிறந்து, உலகு புரக்க வரும் பாகீரதியைத் தரிசித்து, மலர்தூவி, மந்திர பூர்வமாகத்
1r

தொழுதார்கள். மேலும் தொடர்ந்து நடந்தவர்கள், அன்னங்கள் விளையாடி மகிழும் மலர்த் தடாகங்களும், பறவைகள் பாடிப் பரவும் பொழிலிடங்களும் நிறைந்த மிதிலையின் மதிற் புறம் வந்து சேர்ந்தார்கள்.
அங்கே வந்ததும் அந்தப் பிராந்தியமே ஏதோ ஒரு தெய்வீகத்தில் அமிழ்ந்திக் கிடப்பது போன்ற சுகாநுபவம் அவர்களையுந் தழுவிக் கொண்டது.
ராமன் சுற்று முற்றும் பார்த்து விட்டு மகரிஷியைக் கேட்டான் :-
"ஸ்வாமி! இங்கே வர ஒரு அதிசய உணர்வு தோன்றுகிறதே, ஏதாவது காரணம் உண்டா?
பிரம்மரிஷியும் அதை அநுபவித்தவாறே பதில் சொன்னார்:-
"ராமா! மகாத்மாவான கெளதம ரிஷி மாசற்ற கற்பினளாகிய அகல்யா தேவியுடன் தவ வாழ்வு வாழ்ந்த ஆசிரமப் பிரதேசம் இது." சொல்லிக் கொண்டே தலையை நிமிர்த்தியவர், “அதோ பார்' என்று மதிற்புறத்தைக் காட்டினார். ராம லக்ஷமணர் இருவருமே திரும்பிப் பார்த்தார்கள். சற்றே உயரமான மேடு, அதில் சந்திரிகை போன்ற இனிக்கும் ஒளி பரவியிருந்தது. அதன் நடுவே அற்புதத்தின் அற்புதமாகிய அழகிய பெண்ணின் சிலை வடிவம். கால வெள்ளத்திற் கரையாத, கற்பனை தீண்டாத அதன் தனித்தனி உறுப்புக்களே, உள்ளீடான குண செளந்தர்யத்தைத் தெளிவாக உணர்த்தும் ஆநந்த அதிசயம் பொருந்தியதாக அது அமைந்திருந்தது.
பரமாத்ம சொரூபனான ராமனது கண்வழிப் பெருகிய பெருங்கருணைப் பேராறு, நிர்விகல்ப சமாதியில் கல்லியலாய், காலமெல்லாம் சலனமற்று நின்ற அந்தத் தவக் கன்னியை கதுவிப் பேராது அணைத்துக் கொண்டது.
அஞ்ஞானம் என்ற பேயிருளகல, ராசத தாமதங்கள் விலக, மனம் தன் சொந்த இயல்பான சத்வ சொரூபமாக, ஞானாசாரியன் திருவருளை சீவன் பெற்றவாறே, சமாதி நிலை கலைய அவள் ஞான சொரூபமாகி நின்றாள்.
உடனே ராமன் பிரம்ம ரிஷியைப் பார்த்துக் கேட்டான்:
“பகவான்! இந்த உலக இயல்பு அதிசயமாக இருக்கிறதே !
13

Page 19
லோக மாதாவுக்கு நிகரான இவளுக்கு பிராரத்வமோ அல்லது வலுப்பிராரத்வமோ இது நிகழக் காரமாணமாயிற்று?
மகரிஷி பேசினார்:-
"ராமா! இவள் பிரம்மாவின் மானச புத்திரி, வினைகள் பற்றிய பேச்சுக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லை. இது திருவருட் செயலாக இருக்கலாம். உலகுக்கு இன்றியமையாத ஆன்மீகத்துக்கு அவசியமாய் நிகழும் ஈஸ்வர நிகழ்ச்சிகளுக்குக் காரணம் காணமுடியாது. அது என்றுமே பரம ரகஸ்யந்தான்.”
ராம லக்ஷமணர் மெளனமாகி நின்றார்கள்.
ரிஷி தொடர்ந்தார்:-
"ராமா ! பிரம்மா இவளை இத்தனை அழகோடும் ஏனோ சிருஷ்டித்தார். புலன்களைக் கலங்கவைக்கும்படி இவளைப் படைத்தவரே பிறகு ஆச்சரியப்பட்டாராம். இந்திரன் இதை அறிந்ததும் இவளைத் தனதுடைமையாக்கிக் கொள்ளப் பெரிதும் முயன்றான். பிரம்மா அதை விரும்பவில்லை. அது கூட விளங்காத ரகஸ்யந்தான்.
“பிறக்கும் போதே வைராக்கிய சித்தத்தோடு பிறந்தவர் மகான் கெளதமர். அப்போது அவர் தூய நைஷ்டிகப் பிரமச்சாரி, அவரை பிரம்மா தன்னிடம் வரச்செய்து, 'இவளை மிகக் கவனமாகப் பாதுகாத்து, நான் விரும்பும்போது என்னிடம் சேர்க்க வேண்டும்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். கெளதமரிடம் அமைந்த அத்துணை சீரிய பண்புகளும் இவளிடம் இருந்தன. இறைவனைத் தவிர பிரபஞ்சம் எதுவுமே இல்லை என்ற காட்சி கைவந்தவள் இவள்.
“ஒருவர் மற்றவரை நீங்காமலும், அதே சமயம் அணுகாமலும் ஒருவர் மற்றவரை முழுமையாக அறிந்திருந்தும் அன்னியர் போல, அந்த ஆசிரமக் குடிசையில் இருவரும் ஒன்றாகவே வருஷக் கணக்கில் வாழந்தார்கள்.
“ஒரு சமயம் பிரம்மா அவர்களைத் தன்னிடம் வருமாறு அழைத்தார். வந்ததும் இருவரையும் மகிழ்ந்து ஆசீர்வதித்தார். பிறகு, "உங்களுக்குச் சமானமாய் யாருமே இல்லை. உண்மையில் உங்களில் ஒருவரே மற்றவருக்குச் சமானமாகலாம். ஆதலால் நீங்கள் இனி மணந்து கொண்டு தவவாழ்வைத் தொடருங்கள் என்று சொல்லி மீண்டும் ஆசீர்வதித்து அனுப்பிவிட்டார்.
14

"அன்றிலிருந்து இருவரும் இங்கேயே கணவன் மனைவியாக வாழ்ந்தார்கள். அந்தக் காலத்திலேதான், எது நடக்கக் கூடாதோ அது நடந்தே விட்டது.
"இந்திரனால் இவளை மறக்கவே முடியவில்லை. இவளது பார்வையே தன்னை எரிக்கவல்லது என்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரியும். மதன வேதனையும் அவனைக் கொல்லவே நின்றது. உய்ய வழியறியாது பெரிதும் அல்லற்பட்டு அலைந்தவன் ஒருநாள் உற்ற மையலால், கெளதமனை ஏமாற்றி ஆசிரமத்தை விட்டு வெளியேறச் செய்து, கெளதமரின் உருவில் உள்ளே நுழைந்தான்.
"நீசனாகி நுழைந்தவன் புதிதாக மணந்த காமுகனே போல மிக இழிவாகவே நடந்து கொண்டான். காமப் பெருங் கடலில் முழுகிய மயக்க வெறி எற்ற, அவனது அறிவுக்கண்கள் முற்றாகவே பார்வையை இழந்துவிட்டன.
"அப்போது இவளோ ஆநந்த மயமான ஆத்ம ஸாகூrாத்காரத்தில் உறைந்து கிடந்தாள். கனவுலகின் நிகழ்வே போல நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளிலும் தோற்றிய வேற்றுமைகளைக் கூட ஆராய் வது 'பெண் மைக்கு அமைந்ததல்லவே' எனத் தன்னைத் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டாள்.
"அந்த சமயமே பசுபதியாகிய பரமசிவனே போன்ற கெளதமர் வந்து நின்றார். அகல்யை பார்த்தாள்; எதிரில் கெளதமர் இருவர் நின்றார்கள். வந்தவருக்கு நின்ற இந்திரனாகிய கெளதமன் நடுங்கினான். அவன் மகரிஷியின் கோபத்துக்கு இலக்காகி உடனே நபுஞ்சகனானான்.
"இவளோ எழுந்து மெல்ல நடந்து கருணை வழிய நின்ற முனிவர் திருவடிகளைக் கண்களால் ஒற்றி நிமிர்ந்தாள். அப்போது இவளை அவர் ஆசீர்வதித்தபடி நின்று 'கல்லியவாதி" என்று பேசத் தொடங்கி விட்டார்.
"அந்த சமயமே இவள், இறைவனையன்றி பிரபஞ்சம், உடம்பு, பிராணன்,மனம், அறிவு என எதுவுமே தெரியாத நிர்விகல்ப சமாதியில் உறைந்து விட்டாள்.
“கெளதமர் சமாதியில் முழுகி நின்ற அவளையே பார்த்தபடி தொடர்நதும் பேசினார்.
'இதுவரை உன்னைக் காத்து நின்ற என் தவத்தின் ஆற்றலும், திரிகால நிகழ்ச்சிகளையும் காட்டும் உன் தூய்மையின் உயர்வும் இதில் நலிவடைந்தமை, உன் அமிர்தத்துவத்தை
15

Page 20
உலகுக்குக் காட்டவே.'
"வேத தர்மத்தைப் புனருத்தாரணஞ் செய்ய அவதரித்த பூgராமன் இங்கே வரும்வரை உனது சமாதிநிலை கலைய வேண்டாம். அவன் கருணை வெள்ளம் உன் நிறைவை, கன்னிமையை காலங் கடந்து நிலைக்கச் செய்யும்.'
“கெளதமர் கல்லுருவாய் நின்ற இவளை, கண்ணும் மனமுங் குளிரப் பார்த்துவிட்டுத் தன் தவவாழ்வைத் தொடர நடந்தார்.”
பிறவியாகிய பெருந்துயர் என்றும் அணுகாதவகை அருள் செய்து நின்ற கருணைக் கடலை, அகல்யை இமைக்காமலே வெகு நேரம் பார்த்தபடி நின்றாள். இத்தனை காலமும் சகுணசொரூபமாக மனக்கோயிலில் பிரதிட்டை செய்து வழிபாடியற்றிய அதே இன்னமுதை, நேராகக் கண்டபின் கண்களை எடுக்க நினைவு வரவில்லை. செயலிழந்து நின்றவள், தன்னை முழுதாக மறந்த நிலையில் அடியைப் பெயர விட்டாள்.
"நீ என்னை நோக்கி ஒரு அடி வந்தால், நான் உன்னை நோக்கி பத்தடி வந்துவிடுவேன்” என்று பிறகு கீதையில் திருவாய் மலர்ந்த அந்தப் பரம நாயகன், தானும் அவளை நோக்கி வந்தர்ன். இருவரும் பக்கம் பக்கமாக வந்ததும் அவன் திருவடிமீது அகல்யை தண்டமாகவே விழுந்து கிடந்தாள்.
கருணாசமுத்திரத்தின் குரல் அமுதாகிக் கேட்டது: "அம்மா! இனி உன்னைப் பிறவியாகிய படர் என்றுமே அணுகாது. நீ வண்டே தீண்டாத போதாகிய புதுமலர்க்கன்னி. தேவி! எழுந்திரு'
எழுந்தவள், ஆசீர் வதித்தபடி பக்கத்தில் நின்ற கெளதமரிஷியைக் கண்டதும் திரும்பி அவர் பாதங்களில் வீழ்ந்தாள்.
பிரம்மரிஷி விஸ்வாமித்திரரும் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.
வேத தர்மத்தை வாழ்ந்து காட்டி உத்தாரணஞ் செய்ய என்றே அவதரித்த அந்த ராமமூர்த்தி, மாசறு கற்பினளாகிய தேவி அகல்யையையும், மகாத்மா கெளதமரிஷிரியையும் வலமாக வந்து வணங்கி பிரம்மரிஷி விஸ்வாமித்திரரைத் தொடர்ந்து மிதிலையை நோக்கி லக்ஷமணன் பின்னே வர நடந்தான்.
16

மாதவி

Page 21

மாதவி
மாதவி பூம்புகாரின் புகழ் பூத்த மாணிக்க விளக்கு. தெய்வீக மலர், தாமரை, முத்து, புனுகு, கஸ்தூரி என இவை பிறந்தது போல அவளும் ஒரு கணிகை வயிற்றுப் பெண். சித்திராபதி என்ற தாய் புகழ் பெற்ற நாடகக் கணிகை.
பிறக்கும் போதே பரம ஞானியாகப் பிறந்த சுகரைப் போலவே மாதவியும் கலாமேதையாகப் பிறந்தவள். சுகரது தந்தையாகிய வியாஸ் பகவான் 'ஜநகரிடம் சென்று உபேதசம் பெற்று வா' என்று அவரை அனுப்பிவிட்டார். ஜநகர் சு கரைப் பார்த்துவிட்டு "உனக்குத் தெரிந்திருப்பதற்கு மேல் எதுவுமே இல்லை" என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
அப்படியே மாதவிக்கும் சொல்லித்தர வந்தவர்களுக்கு அவளிடமிருப்பதை விட விசேடமாகத் தங்களிடம் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.
ஆரம்பத்திலிருந்தே அவள் கலைகளின் புகலிடம் எனவே விளங்கினாள். அந்தக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே கலை என்ற பெருங்கடலைக் கட்ந்து மதிப்பரியரத்நங்கள் பலவற்றை எடுத்து தனதுடைமை ஆக்கிக் கொண்டாள்.
நாட்டியம், பாடல், வீணை முதல் யாவற்றிலும் தேவாதியரைத் தலை வணங்க வைக்கும் மாண்புறங்கு பெரு நிலை அவள் ஆட்சிக்குள் அடங்கிவிட்டது.
கலையாத சுருதியோடு குழைந்து உயிராகி இனிக்கும் கந்தர்வகானம் போலவும், வசந்தத்தில் சந்திரிகை தழுவ இவர்ந்து வரும் தென்றல் போலவும், பரமஞானியரது மனத்தின் உள்ளே பொங்கிப் பிரவாகிக்கும் பேரானந்தசுகம் போலவும் அவளிடம் இப்படி என்று சொல்லமுடியாத ஒரு மாதுர்யம் நிரந்தரமாக நிலைத்திருந்தது. அதை அணுகவோ அலகூஷியம் பண்ணவோ முடியாது என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள்.
எத்தனை கலா கூேடித்திரமாக இருந்த போதும் அவளுக்கும் அரங்கேற்றம் இன்றியமையாது நிகழவே வேண்டி இருந்தது.
17

Page 22
அரங்கம் , பேரரசனாகிய சோழ மன்னனது வேத்தியலரங்கம். அரசன், தேவியர், ஐம்பெருங்குழு, எண்பேராயம், கலைஞர்கள், தத்துவ வித்தகர்கள், செல்வப் பெருமக்கள் என சபை தேவருலகம் எனப் பொலிந்து விளங்கியது. பாடலாசிரியர், தோரிய மடந்தையர், யாழ் குழல் தோற் கருவியாளர் யாவரும் தொடர வந்த மாதவி சம்பிரதாயப்படி வலக்காலை முன்வைத்து ஏறி அரங்கின் வலப்புறத்தே வந்து நின்றாள்.
அவ்வளவில் சபையில் நிசப்தம் குடிபுகுந்து நிலை கொண்டு விட்டது. நிகழ்ச்சிகள் ஆரம்பமான
நடனம், நிருத்தம், தாண்டவம் என்ற நாட்டியத்துறைகள், உள்ளீடான அபிநய நவரச பாவங்கள் எல்லோரது உள்ளங்களையும் அள்ளுமாறு தொடர்ந்து நிகழ்ந்தன.
பதாகை, திரி பதாகை முதலிய முத்திரைகளில் தனித்தும், அஞ்சலி கபோதம் முதலிய முத்திரைகளிற் சேர்ந்தும் வந்த கைகள், அபிநயத்தில் தொழிற்கையாகவும், ஆட்டத்தில் அழகுக் கையாகவும் அமைந்த லாகவமும், ஜதி பாவங்களுக்கமைய, அந்தக் கைகள் நெகிழ்ந்து வளைந்து அசைந்த நளினமும் எல்லோரையும் ஆநத்தத்தில் மூழ்கடித்தன.
சமபதம் , குஞ்சிதபதம் , மண் டில பதம் முதலிய பதவகைகளும், சமசிரம், கம்பிதசிரம் முதலிய சிரவகைகளும், காந்தை, பயாநசம், கருணை முதலிய கண்வகைகளும், வேண்டும் போதெல்லாம் லய நிர்ணயம் வழுவாத அமைதி கூடிய அமைவின் அழகை அனுபவித்துத் தலை வணங்காதவர் அங்கே யாருமே இல்லையே.
கொடு கொட்டி முதலிய பதினொருவகைத் தெய்வக் கூத்துக்களையும் அந்த அந்தக் கடவுளருக்கமைந்த உடை அணிகளோடு அவள் ஆடி முடித்தாள்.
ஆட்டத்தின் போது அவளது முகமண்டலத்தில், வாகான அங்க அசைவுகள் அனைத்திலுமே தெய்வீகம் சுடர்விட்டுச் சோபித்தது. இழிவான ஆபாச உணர்ச்சிகளைத் தூண்டும் நரகத்தின் நிழல் துளி கூட அணுகியதேயில்லை.
சபையில் எல்லோருமே, குரு சாஸ்திர சாதனையால்,
மனக்குவிவு, தியானம் எனப் படியேறி யோகசமாதி
18

கைவந்தவர்கள் போலவே மனோ லயத்தில் காலத்தை மறந் திருந்தனர்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் பெரியோர் எழுந்து நின்று கைகளை மேலே தூக்கி ஆசீர்வதித்தார்கள்.
அரசன் மதிப்பரிய பரிசில் களை ஆனந்தமாக வழங்கினான். அந்தப் பரிசில்களுள் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுமதியான கிழிச் சிறைப் பச்சை மாலை விசேடமானது.
அந்த மாலையை அதற்கான விலையைக் கொடுத்து வாங்கும் செல்வனுக்கே பரிசு பெற்றவள் உரிமையாவாள். இது அந்தக்காலக் கணிகையர் குடிகளுக்கைமந்த பொது விதி. அரசும் அதை அங்கீகரித்திருந்தது.
நிகழ்ச்சிகள் முடிய பெருமகிழ்ச்சியோடு எல்லோரும் தத்தம் இருப்பிடஞ் சென்றார்கள்.
மாதவி வீட்டுக்கு வந்ததும் சித்திராபதி அந்தக் கிளிச்சிறை மாலையை அவளிடமிருந்தும் வாங்கி, ஒரு பணிப்பெண் கையிலே கொடுத்து இப்படிச் சொன்னாள் :
"இதை செல்வப் பெருமக்கள் வாழும் பெருந்தெருவுக்குக் கொண்டு செல். இதற்குரிய ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னைத் தரும் பெருமகனை இங்கே அழைத்து வா."
உடனே அந்தப் பணிப்பெண் மாலையோடும் வெளியே சென்றாள்.
இந்த நடை முறையை மாதவியும் முன்னரே அறிந்திருந்தாள். ஆனால் அதன் பயங்கர சொரூபத்தை இன்றே அவளால் உணர முடிந்தது. அனுபவம் வேர் விடாத இளந்தளிர் அவள். இந்தப் பயங்கரமான நெருப்போடு வரும் (சூறைக்காற்றின் முன், அந்த மலர்க்கொடி நிற்க முடியாமல் அடிபட்டு வாடிச் சுருங்கி ஒடுங்கி விட்டாள். அன்று அரங்கிலே பிரகாசித்த அனைத்துமே மங்கி அழிய, அவள் செயலற்றிருந்தாள். பெற்றவளே விஷத்தை ஊட்ட முன்னாகி நிற்கும்போது துணையாவார் யாவர்? பணப் பேயான தாயின் முகத்தையும், தெருவாயிலையும் பார்த்தபடி மாதவி வாடிச் சோர்ந்திருந்தாள்.
19

Page 23
அப்போதுதான் மாலையோடு சென்ற பணிப்பெண்ணின் பின்னால் அவன் வந்தான். சித்திராபதிக்கு அவனை முன்னரே புகார் நகரத்துக்குப் பெருஞ் செல்வனான மாசாத்துவான் மகன் என்பது தெரியும். தங்கப் புதையலைக் கண்டெடுத்தவள். போல அவள் மகிழ்ந்து பரவசமானாள்.
மாதவி அப்போதுதான் முதன்முதலாக அவனைக் கண்டாள். அதுவரை அவளைச் சூழ்ந்து கிடந்த இருள் மெல்ல லிலக ஆரம்பித்தது. அதற்குள் அந்தப் பணிப்பெண் அவனை அழைத்து வந்து அவளுக்கு முன்னே நிறுத்திவிட்டாள். உடனே மாதவி எந்தத் தூண்டுதலுமில்லரீமலே எழுந்து விட்டாளாயினும் குனிந்தபடியே தான் நின்றாள்.
தன்னெதிரில் எழுந்து நின்ற அந்தப் பரமசுந்தரி கண்ணிலே பட்டதும் அவன் முகம் மலர்ந்து விட்டது. அந்த மலர்ச்சி எந்த இழிந்த தாகத்தின் நிழலுந் தீண்டாத தூய்மையின் ஊற்றேதான்.
குடிப்பிறப்பு, உயர்ந்த கலைப்பண்பு, ஆழந்த அறிவின் அமைதி, செல்வத்தின் பொலிவு அனைத்தையும் அவனது தோற்றமே சொல்லிக் கொண்டிருந்தது.
அப்போதும் அவள் தலை நிமிரவில்லை. எத்தனையோ அற்புதக் கற்பனைகளை, தத்துவங்களை சொல்லிக் காட்ட வல்ல அவளது நீண்டகன்ற கமலக்கண்கள் வெறுமனே நிலத்தைப் பார்த்தபடியே நின்றன.
இருவரும் மெளனமாகவே அதில் நின்றார்கள். நெறியற்ற நெறி ஏற்படுத்திய சந்திப்பு அது. பேசுவதற்கும் எதுவும் இல்லை. இருவர் உள்ளங்களிலும் விளைவாகிக் கிடந்த உயர்ந்த பண்புகள் உடனே பேச்சை எடுக்கவும் இடந்தரவில்லை.
அவர்களையே பார்த்தபடி மறைவில் நின்ற சித்திராபதி இருங்கள்' என்று சொல்லவும் தெரியாதவளாகி நிற்கிறாளே என்று அங்கலாய்த்தாள்.
அதுவரை நிலத்தையே பார்த்தபடி நின்றவள் நிமிர்ந்தாள். அவளது கை மலர்கள் கூம்பி அவன் பாதங்களின் பக்கமாக விரைந்தன. அவளும் கொடியாகி நுடங்கி மெல்லக் குனிந்தாள். அதற்குள் துடித்தெழுந்த இரு கரங்கள் அந்தப் பொற்கொடியை வாரி அனைத்து வருடின.
շՈ

மாதவிக்குப் போல இல்லையானாலும், அவனுக்கும் இந்த வாழ்வு புதியதுதான். எத்தனையோ கோணங்களில் முழைத் தெழுந்த தடுமாற்றங்களை யெல்லர்ம் சுமந்தபடி நுழைந்தவனுக்கு அவள் உஷையாகியே எதிர் நின்று ஒளி காட்டினாள்.
கோவலனுக்கு எதிர்பாராமல் வந்த வாழ்வு தான். ஆனாலும் அது சுவர்க்கத்தை விட அவனுக்கு இனித்தது. நழுவ, அசையவே முடியாதபடி அதன் பிடிக்குள் கோவலன் அகப்பட்டே கிடந்தான். அவனுக்கு மாதவி என்ற அந்த அமுதே சொரூபமான் வட்டத்துக்கு வெளியே எதுவுமே தெரியவில்லை. அப்படி ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையும் ஒரு போதும் தோன்றியதில்லை. ‘இது உலக வாழ்வு தான்’ என்றாலும் அவளும் அவனுக்குள் கரைந்து ரசமாகிக் குழைந்து ஒன்றிவிட்டாள்.
அந்த நிலையில் அவள், என்றுமே தெவிட்டாத கந்தர்வ கானமாய், தென்றல் தவழ்ந்து வரும் வசந்தமாய், இன்பத்தை ஊட்ட வரும்சிருங்கார ரசமாய் அவனுக்கு தெரிந்ததில் வியப்பதற்கில்லை. இந்த இன்ப மயக்கத்தில் அழுந்திக்கிடந்த கோவலன் கண்ணகியை மறந்தே போனான்.
அந்தக் கண்ணகி சுருதி கலைந்த யாழிற் பிறந்த இசை போலவும், நடுக்கத்தைச் செய்யும் ஊதை கூடிய சரத்காலம் போலவும், அழத்துரண்டும் சோகரசம் போலவும் அவனுக்குத் தெரிந்தாள். எப்படியோ பொய்யாய், பழங்கதையாய், கனவாகி இன்று மறைந்தே போனாள் அவள்.
ஆனால்,
மாசறு பொன்னாய், வலம்புரி முத்தாய், குற்றமற்ற தூய தெய்வீக மணமாய், கரும்பாய், தேனாய், மேலும் கிடைத்தற்கரிய மாணிக்கமணியாய், இன்னமுதாய், தேவகானமாய் அவனது இதயமாகிய மாளிகையில் அந்தக் கண்ணகி என்ற குலக்கொடி கொலுவிருந்த காலமும் ஒன்று இருந்தது. அந்த மாளிகையின் கதவுகள் அவள் சம்பந்தப்பட்டமட்டில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன.
21

Page 24
மாதவி கோவலனைக் கண்ட ஆரம்ப காலத்திலேயே அவனைத் தெளிவாகத் தெரிந்து கொண்டாள். கலைஞானம், அறிவு, உயர் பண்புகள், அழகு, இளமை என அடுக்கிக் கொண்டே போக அவனிடம் எல்லாமே நிறைவாக இருந்தன. உள்ளக் கோயிலில் வைத்துப் பூசிக்க வேண்டிவனே தான். வெகு நாட்களுக்கு முன்பே அவள் அதைச் செய்து விட்டாள். உண்மையில் இன்பத்தின் சொரூபமாகவே அமைந்தவன். இன்பத்தை தெவிட்டத் தெவிட்ட விடாமலே வாரி வாரி வளம்பெற ஊட்டிக் கொண்டே இருப்பவன். இன்றுவரை அவளுக்குக் குறை என ஒன்று அணுகாதபடி எல்லாம் நிறைவாகச் செய்துகொண்டிருந்தவன்.
அந்த இன்ப அநுபவத்தின் நடுவிலும், நீங்காத, நீங்கிவிட முடியாத ஒரு குறை - வேதனை அவளுக்கு இருந்தது.
மகிழ்ச்சிப் பெருக்கில் அள்ளுண்டு போய்க்கொண்டிருக்கும் சமயங்களிலே அந்தக் கூரிய முள் அவளது இதயத்தைக் கீறி இரத்தக்கசிவை உண்டுபண்ணியது. அந்த சமயங்களில் வரும் பெருமூச்சை, அவன் உணர்ந்து விடாதபடி அடக்கி அடக்கி மெல்ல விடுவாள். சில சமயங்களில் பெண்மைக்கே அமைந்த உணர்ச்சி வேகத்தால் கண்களில் நீரும் அரும்பியதுண்டு. அதைத் துடைப்பதற்குள் பார்த்துவிட்டால், "ஆநந்தக்கண்ணிர்தான் அது' என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு மேலும் மேலும் மகிழ்ச்சியை ஊட்டுவாள்.
அந்தக் குலமகள் - அக்காள் என்று தனக்குள்ளே முறைவத்து, அன்போடு உரிமை பாராட்டிப் போற்றும் கண்ணகியைப் பற்றிய நினைவுதான் அது.
இத்தனைக்கும், நானா காரணம்' என்று கேட்டுக் கேட்டு, தானே காரணம் என்ற முடிவை என்றோ கண்டறிந்தவள் அவள்.
சதா சோகத்தில் முழுகிக் கிடக்கும் அந்த அபலைப் பெண்ணின் கதையை, கோவலன்முன் எடுக்க அவளுக்கு இதுவரை துணிவு வரவேயில்லை. பிறருடையது என்று தெரிந்த பின்னும், கிடைத்த விளையாட்டுப் பொருளைக் கைவிட முடியாத குழந்தை போலவே அஞ்சி யஞ்சி அவள்
22

இருந்து விட்டன். ஆலல் சந்தர்ப்பங்கள் தோறும் அந்தக் கூரிய முள் குத்திக் கிழித்து அவள் நெஞ்சை ஆழம பாாககாது விட்டதே இல்லை.
நிறை மதி கூடிய சித்திரைத் திங்களில் சித்திரை நன்னாளில் ஆரம்பமாகும் 'இந்திர விழா' பூம்புகாரில் நடந்து கொண்டிருந்தது. மருவூர்ப் பாக்கமும், பட்டினப் பாக்கமும், அழகாபுரியும், அமராபதியும் போல சோதி மயமாகி, பார்ப்பவரைப் பரவசப்படுத்தின.
மாடமாளிகைகள், கோயில்கள், மன்றங்கள, தெரு ககள, வெள்ளி மணல் பரந்த காவிரியின் கரையிடங்கள, சங்கமத் துறைகள், கடலிடம் என எல்லாமே ஒளி வெள்ளத்துள் மூழ்கிக் கிடந்தன. பார்க்கின்ற திசையெல்லாம் மக்களின் வெள்ளம். நாட்டியமும் கூத்தும் பாட்டும் என இன்பமே சுரக்கும் நிகழ்ச்சிகள்.
அன்று மாதவியும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டாள். கோவலன் கூடவே இருந்தான். மாதவியின் ஆட்டத்தையும், கூத்தையும் பாடலையும் அநுபவிப்பதற் கென்றே தேவ கந்தர்வர் கூட்டங்கூட்டமாக வந்து உருத் தெரியாத நிலையில் மறைந்து நின்றார்கள்.
அவளையும் ஆட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கோவலன் மகிழ்ச்சிப் பெருக்கில் அள்ளுண்டு மயங்கிப் போனான். உணர்வு வந்ததும் தனக்குள்ளே பேசிக்கொண்டான் : “நானே நிறையழிந்து கலங்கிப் போனேன். இப்படி எத்தனை பேர் இச்சைக்கு ஆளானாளோ ?"
அவனுடைய முகத்தில் வெறுப்பின் நிழல் படிந்து விட்டது. ஆட்டம் முடிந்து வரும்போதே அவன் மன நிலையை மாதவி உணர்ந்து கொண்டாள்.
உள்ளே சென்றவள், உடைகளையும், அணிகளையும் களைந்து, அவனுக்கு மகிழ்ச்சி தரத்தக்கதாக அனைத்தையும் மாற்றி, புதுமையான அற்புதக் கோலத்தோடும் வெளி வந்தாள். அவளை, அந்த அழகிய நிலையிற் கண்டதும் கோவலன் மகிழ்ச்சியில் மலர்ந்துவிட்டான். சற்று முன் இருந்த மனநிலை முற்றாகவே அழிந்து விட்டது.
23

Page 25
அன்று முழு நிலா, சந்திரிகையில் உலகம் சுவர்க்கத்தை விட மலர்ந்து கிடந்தது. மக்கள் கூட்டங் கூட்டமாகக் கடலாடவும் பார்க்கவும் போய்க்கொண்டிருந்தார்கள் மாதவிக்கும் பார்க்க வேண்டும் என்று மனம் விரும்பியது. விநயமாகவே நின்று கோவலனைக் கேட்டாள் :-
"கடலாட்டுக் காண நாமும் போவோமா?"
அவனுக்கும் அந்த ஆசை இருந்தது. அதனால் உடனே ஊர்திகளில் புறப்பட்டார்கள்.
பால் மணல் பரந்த புன்னைப் பொதும்பர். அதன் கீழ் அழகிய பட்டினால் விதானமிட்டு பூந்துகிலாற் செய்த படாம் வீடு. உள்ளே யானைக் கொம்பின் கால் கொண்ட மலர்ப் படுக்கை. கோவலனோடும் அவள் அந்த அமளிமீ தமர்ந்து வசந்த மாலையிடம் தொழுது யாழை கொஞ்சி வாங்கினாள். உடனே தன் அமுதக் குரலால் ஸ்வரங்களைப் பாடிப் பாடிச் சுருதி சேர்த்தாள். மேலும் அதைப் பரிசோதித்தவள், ‘இனி என் பணி எதுவோ' என்று கேட்டவாறே அந்த யாழைக் கோவலன் கையிற் கொடுத்தாள்.
யாழை மீட்டிக் கொண்டே அவன் மன நிறைவோடு பாட ஆரம்பித்தான். வெள்ளமாக உள்ளே எழுந்த கற்பனைத் திறனோடு வரிப்பாடல்களைப் பாடினான்.
அந்தப் பாடல்கள் காதலி ஒருத்தி மீது கொண்ட வேட்கைப் பெருக்கின் குறியீடாகவே அமைந்திருந்தன.
அந்தப் பாடல்களை அதிர்ந்த நிலையில் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த மாதவி, அவன் பாடி முடித்து யாழைக் கொடுத்ததும் வாங்கி மீட்டிக் கொண்டே பாட ஆரம்பித்தாள். வெறுப்பை மறைத்து இன்பத்தில் குழைந்தவள் போலவே முகத்தை மாற்றிக் கொண்டாள்.
அவனைப் போலவே தானும் மற்றொருவன் மீது கொண்ட வேட்கைப் பெருக்கைக் குறிக்கும் குறியீடாகவே அவள் பாடல்களும் அமைந்திருந்தன. பாடும்போது கோவலன் முகத்தைப் பாராமலே யாழ் மீது கண்களை வைத்தவளாகி அடங்கி இருந்துவிட்டாள்.
24

அவனுக்குள்ளே சந்தேகம் நுழைந்து கீறல்களை உண்டாக்கி விட்டது. வெறுப்போடு அவளைப் பார்த்தவன், 'பொழுதாகிறது. போவோம்' என்று சொல்லும்போதே தழுவிய கையை ாங்கியவனாய், ஏவலாளர் தொடர, வெளிநடப்புச் செய்தான்.
முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி அது. அதிர்ந்து கலங்கிச் செயலற்றிருந்தவள், தடுமாறிக் கொண்டே எழுந்தாள். வழியைக் கூட நிதானிக்க முடியவில்லை.
அது அவனில்லாத தனிமை, அப்படி என்றுமே இருந்ததில்லை. வசந்த " மாலையின் அணைப்பில் மெல்ல நடந்து தன் மாளிகைக்கு வந்துவிட்டாள். இத்தனை காலமும் தங்களை அசைய விடாமலே பிணித்து வைத்திருந்த பாசக் கயிறு முற்றாகவே அறுந்து விட்டது தெரியாத நிலையிலேயே நிலாமுற்றத்தில் கிடந்த அமளியில் விழுந்தாள். விழுந்தவள் கிடக்கவும் முடியாதவளாய் நீர் மல்கிய கண்களோடும் எழுந்தாள். உடனே தாழையின் வெள்ளி மடலிலே செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்த அரும்பை உதறி உதறி எழுதினாள்.
"பெருமானே! வேனிலான் நெறியறியாதவன். திங்களோ கொடியவன். கூடினார் சிறு பொழுது பிரிந்தாலும், பிரிந்தவர் மறந்தாலும் கொல்லப்படுதலை நினைவு கூருங்கள்."
எழுதும்போது பண் இனித்த மழலை வாயால் சொல்லிச் சொல்லியே எழுதினாள்.
உயிர்நிலை உருகிக் கரைந்து ஒழுக ஒழுக அவள் எழுதிக் கொடுத்த திருமுகத்தோடு வசந்தமாலை அவனிடம் ஒடிச் சென்றாள். திருமுகத்தை வாங்கிப் பாாத்தவன் அலகூழ்யமாக, பசையின்றியே பதில் கொடுத்தான் :
"நாடகக் கணிகையல்லவா அவள்? நன்றாக நடிக்கக்
கற்றவள்; நீ போகலாம்"
வசந்தமாலை வாடிச் சோர்ந்தவளாகவே திரும்பினாள். அவளுடைய சோக நிழல் படிந்த முகமே பதிலைச் சொல்வது போல அமைந்திருந்தது.
25

Page 26
அவள் சொன்னதைக் கேட்டபிறகும் அந்த அபலைப் பெண்ணுக்கு நம்பிக்கை என்ற கயிறு அறுந்ததாகத் தெரியவில்லை. உள்ளே உறைந்து கிடக்கும் சோகம் “காலையாவது வருவார் தானே" என்ற உருவில் வெளிவந்தது. தனியாகவே தொடர்ந்து விழுந்து கிடக்க அவளுக்கு முடியவில்லை. அதனால் வசந்த மாலையை அழைத்து தன்னோடு கூட இருத்தி அணைத்துக் கொண்டாள்.
வேதனை கரைந்து கரைந்து அடிக்கொரு தரம் பெருமூச்சாக ஒழுகியது. கண்களை மூட்ாமலே இராப பொழுதைக் கழித்தாள். அந்த சமயம் மனம் அன்றைய நிகழ்வுகளைத் தொட்டுத் தொட்டுக் காட்டியவாறே இருந்தது.
அவர் பாடியது வெறும் கற்பனை தானே ? அவர் வேட்கைப் பெருக்குக்கு உரியவள். அடி பெண்ணே ! நீயாகவே இருந்து விட்டால் ? எத்தனை இன்ப ரசம் சுரக்கும் நிகழ்ச்சியாகிவிடும் அது. நன்றி கெட்டவளே! பிறகு, நீ எத்தனை துணிவோடு பொய்யாகவே வேட்கையின் தாகத்தைப் பாட்டாக்கிவிட்டாய். பாடும்போது நடுவே ஒரு முறையாவது அவர் முகத்தையாவது பார்த்தாயா ?
நடுநடுவே அவள் விம்மியழுத போதெல்லாம் அந்தத் தோழிப் பெண், தானும் கண்ணிர் வடித்தபடி அவளை அனைத் தனைத்துக் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே இருந்தாள்.
இரவு யுகமாகிக் கழிய, வைகறையும் வந்துவிட்டது. வாராமல் இருப்பாரோ? வருவார் தானே என்று எண்ணியிருந்த
சமயம், யாரோ ஒடி வந்து வேதனையோடு சொன்னார்கள்:
“கோவலன் குலக் கொடியான கண்ணகியோடும் இரவோடிரவாக மறைந்து விட்டான்."
இருந்தவள், துடித்தெழுந்து சரிந்து விழுந்தாள். கூrணப் பொழுதில் பொறி புலன்களும் அடிபட்டுப் போக எல்லாமே
26

இருளில் மூழ்கிவிட்டன. வசந்த மாலை அவள் தலையைத் தன் மடிமீது அணைத்து வைததவளாய் சோக உருவில் கூட இருந்தாள். அதற்குள் எல்லாவற்றையும் கேள்விப்பட்டே கெளசிகமாணி வேதனையோடும் அங்கே வந்தான்.
அவனைக் கண்டதும் மாதவி எழுந்து ஓடி வந்தாள். அவன் கால்களைக் கட்டிக் கொண்டு குமுறி அழுதழுது கெஞ்சுங் குரலில் வேண்டினாள். :-
“என் செல்வரை, கண்ணானவரைத் தேடிக்கண்டு எப்படியாவது அழைத்து வந்து என்னை உயிர் வாழ வையுங்கள்."
தொழுகையை விடாமலே அவன் கால்களைப் பற்றியபடி, தொடர்ந்து வேண்டினாள். அவன் தாமதிக்காமலே புறப்பட்டான். போகும்போது "மகளே! வருந்தாதே! எத்தனை பாடு வரினும் தேடிக் கண்டே வருவேன்” என்று ஆறுதலடையச் சொல்லியே சென்றான்.
கெளசிகன் நகரங்கள், நாடுகள், காடுகள் என, மாதங்கள் பருவங்களாகத் தேடித் தேடி அலைந்தான். கடைசியில் மதுரை நகர்ப் புறச்சேரி ஒன்றிலே வந்து தங்கினான். அங்கே ஒரு தனியிடத்தில் கண்டபோதும் உருமாறி இருந்ததில் ‘இவன் கோவலனே' என நிர்ணயிக்க முடியாமல் நின்றவன், பக்கத்தில் வேனிலால் வாடிக் கிடந்த குருக்கத்திக் கொடியைப் பார்த்து, கோவலன் காதுகளிலும் விழுமாறு இப்படிச் சொன்னான்:
"கோவலனைப் பிரிந்த துயரால் வாடிக்கருகிய மாதவியே \போல, எ மாதவிக் கொடியே நீயும் வேனிலால் வாடி
கரு கினையோ"
கோவலன் இதைக் கேட்டதும் அவன் பக்கமாக விரைந்து வந்து "ஐயரே! என்ன சொன்னீர்?" என்று பதட்டமாகக் கேட்டான். அவ்வளவில் சந்தேகம் நீங்க கெளசிகன் பேச
ஆரம்பித்தான்.
27

Page 27
"குரவரும், சுற்றமும், நகரமுமே புலம்பி அழ, தேவியோடும் இரவு கழிவதன் முன்னே நீங்கள் மறைந்ததைக் கேட்ட மாதவி, துடிதுடித்து மயங்கி செயலிழந்து விழுந்தே விட்டாள். அவளைப் பார்த்தபின் கண்ணிர் விட்டுக் கதறாதவரே இல்லை. என்னைக் கண்டதும் கால்களைப் பற்றிக்கொண்டு "என் உயிரானவரை, கண்ணின் மணியை, என்னை வாழ வைத்த தெய்வத்தை எப்படியாவது தேடிக்கண்டு என் உயிர் நிலைக்க வழி செய்ய வேண்டும் ஐயனே' என்று கதறினாள். "தாமதிக்க முடியவில்லை. உடனே புறப்பட்டேன். அதற்குள் இந்தக் திருமுகத்தையும் எழுதி 'என் தெய்வத்திடம் கொடுங்கள் எனறு தநதாள."
கெளசிகன் மண்ணால் முறி வைத்தபடி இருந்த அந்தத் திருமுகத்கையும் எடுத்து கோவலன் பக்கமாக நீட்டி னான்.
நடுங்கும் கைகளால் அகை வாங்கும்போதே முறி செய்ய: அழுத்திய கூந்தலின் மணம் நீங்காமலே கிடந்த பழமையை நினைவூட்ட நின்றவன் சிறிது தாமதித்தே முறியை உடைத்து ஓலையைப் படித்தான்.
"திருவடிகளில் விழுந்து வேண்டுகிறேன். தெளிவற்ற என புன் சொற்களைப் பொறுத்தருளுக. குரவர் பணியுந் துறந்து, குலக்கொடியோடும் இரவிலே கழிய யான் செய்த பிழையை அறியாது கலங்கி நெஞ்சழிந்து கிடக்கின்றேன். மெய்யறிவுடைய பெரியோய் ! பொறுத்தருளுக."
திருமுகத்தை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த பின் பெருமூச்சுடன், "அவள் தீதிலள்", "தீது என்னதே" என்று சொன்னான். மேலே பேச்சின்றி நின்ற கோவலனைப் பார்த்தபடியே கெளசிகன் மனத்தை அடக்கிக் கொண்டு வெகுநேரம் நின்றான். தானும் அப்படியே நின்ற கோவலன் "நீ போ, விதி விடுவதாக இல்லையே” எனறு சொல்லரி அவ்விடம் விட்டு வேதனையோ டே தான் அகன்றான். கெளசிகனும் மிகுந்த சிரமத்தோடு மனத்தை அடக்கிக்கொண்டு அங்கிருந்தும் அடிபெயர்த்தான்.
28

கெளசிகனைக் கண்டதும் மாதவி அங்கலாய்ப்புடன் துடித்து ஓடி வந்தாள். வெறுங்கையோடு வந்தவனுக்குப் பேச்சு வர மறுத்தது. சிறிது தாமதித்து மெல்லவாகவே பேசினான்.
"அம்மா! காலமெல்லாம் தேடித்தேடி எங்கெல்லாமோ அலைந்தேன். கண்டு கொள்ள முடியவில்லை. கடைசியில் மதுரைப்புறச் சேரி ஒன்றில் வந்து சற்றுத் தங்கியிருந்தேன். அங்கேதான் அவரைப் பார்க்க முடிந்தது.”
அடையாளமே மாறிப்போன கோவலனது நிலையை அவன் சொல்லாமலே தொடர்ந் தான். "நீ பட்ட துன்பத்துடிப்பை, துறை கடந்த அவல நிலையை விளக்கமாகவே சொல்லி திருமுகத்தையும் கொடுத்தேன். திருமுகத்தின் மேலே பொதிந்த மண்மீது கூந்தலை அமிழ்த்தி முடியிட்டாயே நீங்கா திருந்த உன் கூந்தலின் மணம் பழமையை நினைவூட்டினதும் அவர் துடித்துத் தடுமாறிவிட்டார். சிறிது தாமதித்தே பிரித்து ஒலையைப் படிக்க முடிந்தது. படித்த உடனேயே "உண்மையில் அவள் தீதில்லாதவளே' என்று
உருகினார்."
அதைக் கேட்ட அளவில் தன் செய்கையை நினைத்து மாதவி விம்மி விம்பி அழ ஆரம்பித்து விட்டாள்
கெளசிகன் சிறிது தாமதித்து நின்றபின், தொடர்ந்து சொன்னான் : 'வாருங்கள் என்று கேட்கவும் முடியவில்லை. என் மனத்தையும் சமாதானஞ் செய்யவும் வழி தெரியவில்லை, நின்றேன் ; நின்றேன் ; செயல் புரியும் திறன் கெட்டவனாய் அவரையே பார்த்தபடி நெடுநேரம் நின்றேன்.
'அவ்வளவு நேரமும் பேச்சின்றி நின்றவர் பெருமூச்சின் நடுவே "விதி வழிநடத்துகிறது" என்று சொல்லிவிட்டு மிகச் சிரமத்தோடு "நீ போ" என்று மட்டும் சொல்லியபின் சென்றுவிட்டார்', அவ்வளவில் பேச்சை நிறுத்திய கெளசிகன் மெளனமாகி அவளையே பார்த்தபடி நின்றான்.
లో
அவளோ எட்டாத ஆழத்தில் எதையோ தேடுபவள் போல கெளசிகனைப் பார்த்துவிட்டு அதிலேயே உட் கார்ந்து சரிந்தாள்.
29

Page 28
எது நடக்கக் கூடாததோ அதை விதியென்ற கொடிய பாவி நடத்தியே விட்டது.
மனைவியின் சிலம்போடு மதுரை வீதியிற் சென்ற கோவலன் கள்வன் என்று பாதகர்கள் கொன்றுவிட்டார்கள்.
சில தினங்களுக்குள் இந்தச் செய்தி எட்டியது அதன் பின் மாதவியைப் பார்க்க எவராலுமே முடியவில்லை. அவள் F காமலே செத்துக் கிடந்தாள். வேதனை, கலக்கம், துடிப்பு, மயக்கம் எல்லாமே ஒன்றாகி பயங்கரமான இருண்ட பிலத்தினுள்ளே அவளை விழுத்தி அமுக்கி வைத்துக் கொண்டன.
அறிவை இழந்த நிலையிலும் அவளது கண்களின் கரு மணிகளுக்குள்ளே மணிமேகலை என்ற தன் தெய்வக் குழந்தையின் பிரதிவிம்பம் மட்டுமே தெரிய அதைக் கண்ணிரால் இடைவிடாமல் கழுவிக்கொண்டிருந்தாள்.
தேவ கன் னியரை யும் ம யங் கச் செய் யும் நடனகலா வல்லியை,
கந்தர்வரே தேடிவந்து தவமாக அனுபவிக்கும் கான வாரிதியை,
தனக்குத் தானன்றி நிகரில்லாத கலா கூேடித்திரத்தை, ரதி தேவியையும் நாணவைக்கும் பரமசுந்தரியை, மனிதகுலம் என்றுமே காணாத மாண்புறங்கு கலைகளின் கருவூலத்தை, பருவமல்லாத பருவத்தில் இந்த உலகத்தின் துர்ப்பாக்கியம் பறித்துக் கசக்கி எறிந்தேவிட்டது. ஆயினும்,
என்றும் மாறாத பேரானந்த வாழ்வுக்கு அவளை அழைத்துச் செல்ல, சந்நியாசத்தின் புனிதமான தெய்வக் கரங்கள், அபய வரதமாய் அவளெதிரே தோன்றி நின்றன.
தாசி வயிற்றிற் பிறந்து குலமகளாக வாழ்ந்த மாதவி என்ற அமர மாது என்றென்றும் வாழ்வாள்.
30

யசோதரா

Page 29

யசோதரா
யசோதரா, நீ மலரை விட மிருதுவானவள். ஆனால் யாராலும் சிதைக்க முடியாதது உன் மிருதுத்தன்மை.
நீ தெய்வீகம் என்ற புனிதமான தவத்திலல்லவா முளை கொண்டவள்! உன்னுள்ளே இருந்து எழுந்து பரவும் இன்ப அலைகள் உன் இதயத்துாய்மையின் அமுத நாதமே. உன்னை முழுமையாக அறியும் சக்தி எல்லோரிடமும் இல்லை. எப்படியும் நீ சாதாரணமானவளே அல்ல.
சித்தார்த்தன் உனக்குக் கணவன் மட்டுமல்ல, நண்பனாயும் தெய்வமாயும் அமைந்தவன் அல்லவா ?
அவன் பரம ஞானி; சர்வகர்மங்கள், வாழ்வு அனைத்தையுமே தியாகஞ் செய்தவன். அந்த ஆற்றல் அவனுக்குப் பிறப்புரிமையான செல்வந்தான். முதல் பார்வையிலேயே நீங்கள் ஒருவாை ஒருவர் பரிந்து கொண்டீர்கள் அல்லவா ?
அது எல்லோருக்கும் சாத்தியமாய் அமைவதில்லை. இருளை ஒளி விழுங்குவதை எல்லோரும் காணமுடியும். ஒளியோடு ஒளி கலப்பதை அப்படிச் சொல்லிவிட முடியாது
அல்லவா ?
நீயோ மிக உயர்வான கர்மயோகி. உனக்கமைந்த கர்மங்களை உனது உள்ளத் தூய்மையாகிய நீரினாலே கழுவியே நிகழவிட்டாய். அதனால் உன் செயல்கள் கருத்தின் றியே நிகழ்ந்து கொண்டிருந்தன. கர்மபந்தம் இல்லாபோது நீ கர்மயோகியே தான்.
ஆனால்,
உன் கணவன் சித்தார் த் தன பரம ஞானி. சர்வகர்மங்களையும் துறந்தவன். ஞானியின் உள்ளீடான
31.

Page 30
தூண்டுதலாலேயே எங்கும் எல்லாக் கர்மங்களும் நிகழுகின்றன. சூரியனைப்பார். எதையுஞ் செய்யாமலே தூண்டுதலால் உலககர்மங்கள் அனைத்தையும் செய்விக்கின்றான்.
ஆகவே, ஞானி கர்மங்களைச் செய்யா திருந்தும் செய்தவனாகிறான். கர்மயோகி கர்மங்களைச் செய்தும் செய்யாதவாகிறான். பரமஞானியாகிய சித்தார்த்தனும் கர்மயோகியாகிய நீயும் வேறு வேறாகச் சொல்லப்பட்டாலும் நிலையில் சமமானவர்களே.
மகா ஞானியாகிய யக்ஞவல்ஹியருக்கு, கர்மயோகி ஜநகர் சீடர் ; ஜநகருக்கு ஞானியாகவே பிறந்த சுகர் சீடர். தராசுத்தட்டு வேறு வேறுதான். நிறைநிலையில் அவை சமமே.
உன் கணவன் உன்னை விட்டுப் பிரியப்போகிறான், பிரியத்தான் வேண்டும் என்ற எல்லாமே உனக்கு முன்னரே தெரிந்திருந்தது. அவனுக்கும் நீ முழுவதும் அறிந்திருக்கிறாய் என்பது தெரியும்.
யோகி, ஞானி இருவருமே மூன்று காலமுந் தெரிந்தவர்கள். உங்கள் கூட்டம், வாழ்வு, விடுபாடு எல்லாமே இந்த உலக்குக்கு ஆச்சரியமான நிகழ்ச்சிகள்தாம்.
சலனமற்ற நிலையில் இருவருமே ஒன்றாமல் ஒன்றி வாழ்ந்தீர்கள். அன்று நடுநிசிவேளை, சைதன்யம் மலரும் சமயம் அது. நீ துTங் கிகொண்டே இரு ந் தாய் . கண்களைத்திறக்காமலே அனைத்தையும் காணவல்ல அறிதுயில் அது.
சித்தார்த்தன் எழுந்து நடநது வெளியேறினான. துறக்கி றேன் என்ற கருத்தின்றியே அவன் அனைத்தையுந் துறந்து சென்றுவிட்டான். மனமே அழிந்த நிலை அது.
நீயோ பாராமலே எல்லாவற்றையும் பார்த்தபடி இருந்தாய். அந்த நிலை உன்னை உண்மையில் 'நீ யார்’ என்பதைத்
32

தெளிவாகக் காட்டிவிட்டது. உனக்கு அவனும், அவனுக்கு நீயும் எத்தனை பொருத்தம்? சரி நிகர் சமானமானவர்களே.
சித்தார்த்தன் போனபிறகு அரண்மனை ஜீவனை இழந்து விட்டது போலத் துரங்கிக் கிடந்தது. மக்கள் கலக்கத்துள் சிக்கினவர்களாய் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டி ருந்தார்கள்.
நீ அமைதியாகததான் இருந்தாய
'சிந்தனைக்கு அப்பாலுள்ளதாகிய எதிர்காலம், ஏதோ ஒரு ஒழுங்கில் நிகழ்காலமென்ற மையக் கோட்டைக் கணந்தோறும் கடந்து கடந்து, இறந்த காலமாகிய கடலுள் விழுந்து கரைந்து மறைந்துகொண்டிருப்பதை பார்த்தபடி நீ மெளனத்தில் மூழ்கியிருந்தாய்,
அப்போது உன்னைப் பார்த்த சிலர் இப்படிச் சொன்னார்கள்:
"கடல் பொங்கிப் பெருக்கெடுக்கமுன் காணப்படும் அமைதி போல, மனம் வெடித்துச் சிதறுவதன்முன் தோன்றும் உற்பாதமாகவே இந்த மெளன அமைதி தோன்றுகிறது"
மற்றொரு சமயம், "தோன்றியதிலிருந்து கணந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தின் இயல்பை, ஆழ்ந்து நோக்கியபடி நீ செயலற்றிருந்தாய். அதைக்கவனித்த சிலர், "அற்புதமான இவள் அழகு, இளமை எல்லாமே மெல்ல வாடி உதிர்ந்து பயனற்றதாகிவிடப்போகிறதே" என்று கலங்கினார்கள்.
இன்னும் வேறெரு சமயம், "அஞ்ஞானம் என்ற இருளில் அகப்பட்டு வழி திசை தெரியாமல் அவலப்படும் இந்த உலகத்துக்கு என்றுதான் விடிவு வரப்போகிறதோ' என்று நீ பெருமூச்சு விட்டபடியிருந்தாய்.
அந்த மூச்சே பஞ்சசீலம் ஜநிப்பதற்கு ஆதார சுருதியாக இருந்தென்பதை அறியமுடியாத சிலர், "இப்படி இருந்திருந்து முச்சு வெளிக்கிளம்புவது, முற்றாக அடங்குவதற்குமுன் காணப்படும் ஒரு அறிகுறிதான்' என்று அழுதார்கள்.
33

Page 31
புத்த விகாரைகளைப் போய் பார்த்தவர்களில் சிலர் "உன் நினைவுக்கு ஒன்றுமில்லையே ; இப்படி ஏன் மறந்து விட்டார்கள்!' என்று ஏங்கினார்கள்.
புத்த பகவானின் சிலைகளினூடாகப் பொங்கிப் பெருகும் கருணை வெள்ளமும், ஞானப்பிரகாசத்தின் ஒரு பாகமும் உனது பங்குதான் என்பதை மகான்கள் மட்டும் நன்கு தெரிந்திருந்தனர்.
34

கைகேயி

Page 32

கைகேயி
ரிஷிகளும் போற்றி செய்த மகரிஷி வான்மீகி. புற்று முடியபிறகும் தவ நிலை கலையாத மாதவர். உலகை உய்விக்க வந்த மகான்களில் உயர்ந்தவர். பரமஞானி. அவருடைய வாழ்வே ஞானப் பிரகாசமானது. தேவரிஷியான நாரதர் ஒரு சமயம் வான்மீகியின் ஆசிரமப் பக்கமாக வந்தார். நாரதரோ மிக மிக உயர்வானவர். நித்திரை விழிப்பு என்றில்லாமல் பகவன் நாமம் ஒலி நீங்காத உள்ளத்தவர் அவர். நாமமே புனித மந்திரமாக மதிக்கப்பட்டது. அந்த மகான் வந்து கொண்டிருப்பதை உணர்ந்ததும், வான்மீகி மலருங் கையுமாக எதிர் சென்று பூசித்து அழைத்து வந்தார். வந்தவர் இருந்ததும் வேத தர்மங்களைப் பற்றியே பேச ஆரமயித்தார். அந்தத் தர்மங்களின் ஒப்பற்ற உயர் நிலையை அனுபவ உணர் வோடு விளக்கமாகச் சொல் லிக் கொண்டிருந்தார்
"பகவான்! இத்தனை உயர்வுடையனவாக இந்தத் தர்மங்கள இருந்த போதும் அவற்றால் உலகம் சிறிதளவு பயனையும் அடைந்ததாக இல்லை. உண்மையில் இந்த நிலை வேதனைக்குரியதே."
தேவரிஷி பேசினார் :- “வெறுமனே தர்மங்களை மனப்பாடஞ் செய்வதிலும் பயன் விளையாது. அதன்படி வாழவும் வழி செய்ய வேண்டும்."
அப்போது வான்மீகி,
"ஸ்வாமி! இதையே மனத்திற் கொண்டு ஒரு காவியஞ் செய்ய முயன்றேன். தர்மங்களை வாழ்ந்து காட்டிய பாத்திரங்ககளுக்கூடாகவே காட்ட வேண்டுமல்லவா?" என்று (ό 5ι - Π. ή ,
நாரதர் ஆரம்பித்தார் :-
“எதையும் வாழ்வில் நேராகக் காணும்போதுதான் நம்பிக்கை பிறக்கும், ஈடுபாடும் உண்டாகும். தர்மத்தின் நெறி நின்று வாழ்வதென் பது சாதார ண மா? அப் படி வாழ்ந்தவர்களை நானுமே இதுவரை கண்டதில்லை. ஆனால், மிக விரைவில் ஒரு அவதாரம் நிகழப்போகிறது."
35

Page 33
வான்மீகி ஆவலோடு தேவரிஷியையே பார்த்தபடி இருந்தார்.
நாரதர் தொடர்ந்து பேசினார்:
"சிறீமத் நாராயணனே சொன்னான்
"சூரிய குல திலகனும் ராஜரிஷியுமான அயோத்தி மன்னன் தசரதன் மகனாக நான் அவதரிக்கப்ப போகிறேன். மிதிலை மன்னனும் விதேகனும் ராஜரிஷியுமான ஜனகன் மகளாக மகாலகூழ்மி அவதரிப்பாள். அவர்களுடைய வாழ்வில் குற்றங்கள் அணுகுமா ?”
அப்போது வான்மீகி குறுக்கிட்டுப் பேசினார்:
"ஸ்வாமி அந்த அமரவாழ்வில் தர்மங்களைப் பற்றிப் பேச இடமுண்டாகாதே?
அந்த சமயம் அவர்களுக்குப் பக்கமாக இருந்து, "அவர்கள் வாழ்வை உங்கள் கருத்துக்கமைய நானே முன்னின்று நடத்துகிறேன்! நீங்கள் காவியத்தை ஆரம்பிக்கலாம்" என்ற இனிய தெய்வீக நாதம் கேட்டது.
இருவரும் திரும்பினார்கள். தேவி சரஸ்வதி அவர்களை ஆசீர்வதித்துவிட்டு மறைந்தாள்.
கேகய நாட்டு மன்னன் அஸ்வபதி. அவனும் தவசிரேஷ்டன், வேதாகம பண்டிதன், சோதிட சாஸ்திரத்தில் விசேட ஈடுபாடுடையவன். அந்த ஆராய்ச்சியில் முழுகி இருந்த சமயம் சில சந்தேகங்கள் தோன்றவே சரஸ்வதி தேவியிடமே கேட்டறிய விரும்பித் தவமிருந்தான்.
ஒரு நாள் சரஸ்வதி தேவியே பிரத்தியட்சமானாள். அம்பிகையை நேருக்கு நேர் கண்டதும் ஆனந்தத்தில் எல்லாவற்றையும் மறந்து, "தாயே! எனக்கு உன்னையே போல ஒரு குழந்தை அருள வேண்டும்" என்று மட்டும் கேட்டு வணங்கினான்.

தேவி சொன்னாள் :
"என்னையே போல ஒரு குழந்தையைத் தர என்னால் முடியாது. நானே ஒரு குழந்தையாக உன்னிடம் வருகிறேன்."
அவன் கைகளைத் தலைமீது ஏற்றியவனாய் எழுந்திட எண்ணியபோதே தேவி மறைந்திட அவன் மடிமீது ஒரு பெண் குழந்தை கிடந்தது.
அஸ்வபதி அந்தக் குழந்தையை வாரிஎடுத்து மார்போடு அணைத்தபடி அரண்மனைக்குள் ஓடினான். அந்தத் தெய்வீகமான பெண் குழந்தை, அரண்மனையில் எல்லோரும் அருமை பாராட்ட நாளொரு வண்ணமாக வளர்ந்துவந்தது. பருவங்கள் ஒன்று மாறி ஒன்றாகக் கழிய, அவள் உலகே அதிசயிக்குமாறு அழகு பொலியும் கன்னியுமானாள்.
அரண்மனையில் அவளை சரஸ்வதி என்றே எல்லோரும் அழைத்தார்கள். தசரதன் அயோத்திக்குமட்டும் அரசன் அல்லன். அயோத்திக்கு வெளியே பரந்து கிடந்த எல்லா நாடுகளுமே அவன் ஆணைக்கு உட்பட்டிருந்தன. பேரரசனான சக்கரவர்த்தி அவன். சூரியகுலத்தை ஒளிரச் செய்தவர்களில் மிகச் சிறந்தவன். அரிச்சந்திரனையொத்த சத்தியவான், திலீபனுக்கு இணையான தியாகி, சிபிக்கு நிகரான கருணைவள்ளல், ரகு அனைய புகழாளன். வேதவாழ்வு வாழ்ந்தவன். அன்பினால் உலகை ஆண்டவன். மக்களுக்கு தாயாய் , தந்தையாய் , தெய்வமாய் விளங் கியவன் . எல்லாவளங்களும் பொங்கிப் பொலிய வாழ்ந்த மன்னன் அவன். அந்தக் காலத்தில் கோசல நாடு சுவர்க்கத்தை விட இனித்தது.
தசரதனுக்கு எல்லா நிறைவும் இருந்தும் பிள்ளைப் பாக்கியம் கிட்டவில்லை. “உலகம் போற்றி மகிழ்ந்த தெய்வ மன்னர்களைத் தந்த சூரியகுலம், என்னளவில் அஸ்தமனமா வதா ?” என்ற துயரம் அவனை விட்டு நீங்குவதாக இல்லை. பத்திரப் பேறு சம்பந்தமாக எத்தனையோ செய்தாயிற்று. கடைசிப் பிரயத்தனம் சோதிடவழி. இணையாருமல்லாத சோதிட அறிஞனாகிய அஸ்வபதி அவனுக்கு நீண்டகால நண்பன். தானே நேரிற் சென்று ஆராய வேண்டும் என்ற
37.

Page 34
முடிவில் புறப்படுமுன், தன்வரவையும் அஸ்வபதிக்கு அறிவித்து விட்டான். அதை அறிந்ததும் அஸ்பவதி பெரிதும் மகிழ்ந்தான். சக்கரவர்த்தியான தன் நண்பனைக் கெளரவமாக வரவேற்க எல்லா ஏற்பாடுகளையும் முன் கூட்டியே செய்து வைத்தான். தன் அரண்மனையையே அவன் தங்குவதற்கு ஏற்றபடி சரி செய்து கொடுத்தான். தசரதனுக்கு அது நீண்ட பிரயாணம். அஸ்வபதியின் அரண்மனையில் ஆறியிருந்த சமயம் அது. வந்த விஷயம் பற்றி இன்னுமே யாரோடும் சொல்லிக் கொள்ளவில்லை, ஆனால் புத்திரப் பேறு சழ்பந்தமாகவே அவன் நினைவுகள் சுழன்று கொண்டிருந்தன.
கேகயன் மகள், ராஜகன்னிகை, தெய்வீக மலர்களின் மணத்தை எடுத்து அவற்றின் தூய்மையில் கழுவி, அழகில் குழைத்து, சந்திரிகையில் காயச் செய்த கட்டியில் வல்லான் வடித்தெடுத்த விக்கிரகமாய் தசரதன் எதிரில் வந்து அவள் நின்றாள்!
தசரதனோ வீரத்தின் லட்சிய புருஷன் எந்த நிலையிலும் தடுமாற்றம் அவனை அணுகியதில்லை. ஆயினும் அவள் எதிரில் நிலை குலைந்தது.
செயலிழந்தவனானான். ஆனால் அவளைப் பார்ப்பதை நிறுத்திவிடவும் அவனுக்கு முடியவில்லை.
அவளோ நன்கு பழகியவள் போலப் பேச ஆரம்பித்தாள். " அரசே! புத்திரப் பேறு இல்லையே என்ற குறைதானே உங்களை வாட்டுகிறது? இனி அந்த விசாரம் வேண்டாம். தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய தெய்வக் குழந்தைகள் உங்களுக்குக் கிடைக்கப் போகிறார்கள். அவர்களால் உங்கள் புகழ் வான நாடுகளைக் கடந்தும் பேசப்படும். அந்தப் புகழைக் காலத்தால் அழிந்துவிட முடியாது."
தசரதன் அதிர்ந்து போய், பேச்சற்றிருந்தான். ஆநந்த அலைகள் அவனை அள்ளி எறிந்து விளையாடின.
38

அவள் பேச்சு மேலும் தொடர்ந்தது:-
"நீங்கள் கழி பிறப்பில் சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சாயாதேவி என நால்வரை மணந்து கொண்டீர்கள். யாது காரணமோ, சாயாதேவி மீது எல்லையற்ற பிரேமை கொண்டு, மற்ற மூவரையும் அலட்சியம் செய்து விட் டீர் கள் . அது காரணமாக அந்த மூவரையும் இந்த ஜன்மத்தில் மனைவியராக ஏற்கவே வேண்டியதாயிற்று. அவர்களுள் இரு வரை இதற்குள் மணந்து கொண்டீர்கள்.”
அவ்வளவில் பேச்சை நிறுத்தியவள், வந்தவாறே சென்று மறைந்தாள். தசரதனை நிலை கலங்குமாறு மனம் சுழற்றியது. பிள்ளைகள் கண்முன்நிற்பது போன்ற உருவெளித் தோற்றமும் அவளைப் பற்றிய கற்பனைக் கெட்டாத நினைவுகளும் தொடர அவன் ஒரு வகை இன்ப அணைப் பில் செயலற்றவனாகவே இருந்தான்.
மெல்ல மெல்லத் தன் மனக்கூட்டினுள்ளே அவளையன்றி மற்றொன்றை நுழைத்துவிட அவனால் முடியவில்லை. ஊனோ உறக்கமோ இல்லாத நிலையை நோக்கித் தான் நகருவதுகூட கனவாகவே அவனுக்குத் தெரிந்தது.
எபபடியோ அற்றைப் பொழுது கழிய மறு உதயம் வந்து விட்டது. தசரதன் முதல் நாள் அதே இடத்தில் நினைவு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இருந்தான். முதல் நாட்போலவே அன்றும் அதே நேரத்தில் அவன் முன் அவள் வந்து நின்றாள். ஆனால் பேசவில்லை.
தசரதன் தன்னை எந்த நிலையிலும் அடக்கி ஆளவல்லவன். எனினும் அதற்கு அன்று முடியவில்லை. பிறகு சொற்களை விழுங்கி விழுங்கியே பேசினான் :-
“இனிமையானவளே! உன்னை நான் அறியேன். நீயோ எப்படியோ என்னை நன்றாகவே அறிந்திருக்கிறாய், ஆதலால் என்னை அறிமுகஞ் செய்ய வேண்டிய தேவை என்னளவில் இல்லை என்றே எண்ணுகிறேன்."
39

Page 35
பேச்சை நிறுத்திய மன்னன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. சாதாரணமாகவே நின்றாள். அவன் தன்னளவில் பெரும் சிரமத்தோடுதான் மீண்டும் பேசினான். சில வார்த்தைகளானாலும் விழுங்கப்பட்டு அவை அரை குறையாகவே வெளிந்தன.
'பெண்ணே, என்னை மணந்து கொள்ள நீ" என்ற அளவில் நிறுத்தி விட்டு ஏதோ தகாததைச் செய்தவன் போல
அவளைப் பார்த்தான்.
அவள் குரல் மிருதுவாக, ஆனால் நிதானமாகக் கேட்டது.
“அந்த முடிவைச் செய்யும் உரிமை எனக்கில்ேைலய!” என்றவள், நிற்காமலேயே வந்த வழியே போய்க்கொண்டி ருந்தாள். தசரதனோ தடுமாற்றத்தினால், “என்னையே தாழ்த்திவிட்டேனே" என்று கலங்கிச் சோர்ந்தான்.
அஸ்வபதி இதை அறிந்ததும் பெரிதும் மகிழ்ந்தான்.
"சக்கரவர்த்தி, வீரலட்சுமியை வரித்துக் கொண்டவன், சூரிய வம்ஸத்தவன். பேரறிஞன், புகழ்பூத்த அழகன், இளைஞன், அருமை நண்பனுங்கூட. இத்தனையும் ஒன்றுகூடிய சீராளன், தானே வந்தணுக தவஞ் செய்தோமோ?” என்ற மகிழ்ச்சியோடு தாமதிக்காமலே திருமணத்தை நிறைவு செய்துவிட்டான்.
சில தினங்களுள் தசரதன் அந்த அற்புத வித்தக அழகியோடும் அயோத்திக்குப் புறப்பட்டான். சகல வரிசைகளோடும் அந்த ராஜகுமாரியின் செவிலியும் தோழியுமான மந்தரை என்பவளும் கூடவே அயோத்திக்கு வந்தாள். அயோத்தி அந்தக் கேகய ராஜகன்னியைப் பூரண நிறைவுடனேயே வரவேற்றது. கேகயன் மகள் ஆதலால் எல்லோருமே அவளை கைகேயி என்றே அழைத்தார்கள். சரஸ்வதி என்ற நாமம் மறைந்து விட்டது. அவள் உண்மையாகவே பெண்மையின் பெரும் பேறாகவே பிரகாசித்தாள். அன்பு, அடக்கம், பணிவு, சாந்தம், அறிவு, மதிநுட்பம், பேரழகு என எல்லாமே நிறைவானவள் அவள்; ஒப்புக்கு மற்றொருவர் இல்லாத உயர்வினள். அவளிடம் அற்புதமான தெய்வீகம் நிரந்தரமாக ஒளிர்வதைக் கண்டு மகிழ்ந்து போற்றாதவர் இல்லை.
40

நீண்ட அனுபவமும் நுண்மதியும் படைத்த மந்திரி போலவும், வாழ்ந்து கண்ட ஞானி போலவும், எப்பொழுதுமே அவள் தெளிவுடன் விளங்கினாள், தசரதனேயன்றி கோசலையும், சுமித்திரையும் மகிழ்ந்து குழைந்து அவளுக்குள் ஒன்றி விட்டார்கள். வசிட்டர் போன்ற மகான்களே அவளைப்
பெரிதும் மதித்தார்கள்.
அந்தக் காலத்தில் தசரதனுக்கு சம்பராசுரனோடு ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அவன் யுத்தத்துக்கு இன்றியமையாது எடுத்துச் செல்ல வேண்டிய ஆயுதங்களை ஒன்று சேர்ப்பதில் முனைந்தவனாய் ஆயுதசாலையில் நின்றான். அந்த சமயம் கைகேயி அவன் எதிரே வந்து நின்றாள்.
தசரதன் ஆச்சரியத்தோடு அவளைப் பாாத்தபோது அவள் அலட்சியமாகவே "உங்களோடு நானும் வரப் போகிறேன்" என்று சொன்னாள்.
அவன் மேலும் ஆச்சரியப்பட்டவனாய், “எதற்காக நீ அங்கே வரேவண்டும்?' என்று கேட்டான். உடனே அவள் இப்படிச் சொன்னாள்:-
“எனக்கு அங்கே வேலை இருக்கிறதோ, இல்லையோ, நானும் வரே வண்டும்."
தசரதன் கோபிக்காமலே இனிய குரலில் பேசினான்:
"கைகேயி, யுத்தகளம், பெண்கள், அவர்களுள்ளும் உன்னைப் போன்ற மலர்ப் பெண்கள் கண்ணாலே பார்க்கவே தகாத இடமல்லவா?"
அவளோ "நான் வரவே வேண்டும். தடுக்காதீர்கள்" என்று பிடிவாதஞ் செய்தாள். கடைசியில் தேர்ச் சாரதியாய் வருகிறேன் என்று உத்தரவு பெற்றுப் புறப்பட்டாள்.
"கைகேயி நிகரற்ற தேர்ச்சாரதி யென்பது தசரதனுக்கு முன் ன ரே தொ? ந் திருந்தது. ஆயினும் பெரும் வேதனையோடுதான் அவளையும் யுத்தகளத்துக்கு அழைத்துச் சென்றான். "இவளது எல்லை கடந்த மிருதுவான இயல்புக்கும்,
41

Page 36
கொடுமையும் குரு ரமும் கூத்தாடும் யுத்தகளத்துக்கும் பொருந்தாதே" என்ற வேதனையின் தொடர் நினைவுகள் அவனை விட்டு நீங்காமலே இருந்தன.
கொடுமைக்குள் அமிழ்ந்தி அழிவுக்குத் தாயகமான அசுரக்கும்பல். மேலும் யுத்தம். அது பயங்கரத்தின் தாண்டவமாக அமைந்திருந்தது. இரு பக்கத்துப் படைகளும் முட்டி முழங்கி மோதின. மரணத்தின் அவலக்குரல் எங்குமாகி நெஞ்சைக் கிழித்தது. தசரதன் அஸ்திரங்களை அற்புத கதியில் பிரயோகஞ் செய்து கொண்டே ஒரு முறை உற்றுப் பார்த்தான்.
ஆச்சரியத்தில் அவன் உடம்பு சிலிர்த்தது. 'இவள் என் கைகேயியா?’ என்று பல தடவை சொல்லிக் கொண்டான். 'துர்க்கையாகவே காட்சி தருகிறாளே’ என்று ஆச்சரியத்தில் மீண்டும் மீண்டும் பார்த்தான். அந்த எதிர்பாராத உற்சாகத்தில் பகைப்புலத்தை வேரறுக்க வந்தவன் போல அம்புகளை மழையாக வர்ஷித்தான்.
யுத்தத்தின் வேகம் வரவரப் பயங்கரமாக மாறிக் கொண்டேயிருந்தது. கைகேயி குதிரைகளை அற்புத கதியில் நடத்திக் கொண்டே தேர்த்தட்டில் இருந்தபடி திரும்பினாள். தசரதன் மூர்ச்சிப்பவன் போலச் சோர்ந்து சரிந்தான். நொடிக்குள் அந்தத் தேர் ஒரு தனியிடம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. என்ன விந்தை புரிந்தாளோ ? விரைவில் தசரதன் தெளிவுபெற்று முன் போலத் தயார் நிலைக்கு வந்து விட்டான். மீண்டும் அவள் செலுத்திய தேர் யுத்த பூமியில் சுழல ஆரம்பித்தது. கடைசியில் சம்பராசுரன் மரணிக்க யுத்தம் வெற்றியில் முடிந்தது. மகிழ்ச்சிப் பெருக்கோடு எல்லாருமே களத்தை விட்டுப் புறப்பட்டார்கள். சேனைகள் பின் தொடர தசரதனது தேர் முன்னதாக வந்தது. யுத்தத்தில் பட்ட அடிகளின் வேதனையும் வெற்றி மகிழ்ச்சியில் முற்றாகவே மறைந்துவிட, குதிரைகளை நடத்தியபடி தேர்த்தட்டிலிருந்த கைகேயியைப் பார்த்துப் பார்த்துப் பூரித்த தசரதன், 'யுத்தக்களத்தில் என் தேரை ஆச்சரியப்படுமாறு நடத்தியவள் மிருதுவான மலர்போன்ற என் கைகேயியே அல்ல' என்று சொன்னான். கைகேயி மெல்லத் திரும்பி அவன் பக்கமாகச் சரிந்து 'அப்படியானால்?’ என்று செல்லமாகக் கேட்டாள்.
42

“வெற்றிக்கு மேல் வெற்றியை அருளி கூடித்திரிய குலத்தை என்றும் வாழ வைக்கும் தேவி துர்க்கையே வந்து நின்று என்தேரை ஓட்டியவள்” w
கைகேயியின் முகத்தில் மலர்ந்த புன்னகை அவனைப் புளகிக்கச் செய்துவிட்டது. தசரதன் அவள் மீது வைத்த
கண்களை வாங்காமலேயே மீண்டும் பேசினான்:
“என் தேரை ஒட்டிய தெய்வக் கன்னியே எனக்கு என் உயிரையும் பெரும் புகழுக்கான வெற்றியையுந் தந்தவள்.”
அவள் நன்றாகத்திரும்பி ஆநந்த அலைவீசும் தன் அகன்று விரிந்த நீண்ட கண்களால் அவனை விழுங்கி விடுபவள்போலப் பார்த்தாள்.
தசரதன் தொடர்ந்து பேசினான்:-
"கைகேயி எனக்கு இத்தனை உதவியவர்கள் உன்னைவிட யாருமே இல்லை. உன் உயிரையே பொருள் செய்யாமல் கொடிய போர் முகத்தில் என் கூடவே நின்றாய். தக்க சமயத்தில் எனது உயிரையே காத்தாய். இந்தப் புகழ் தந்த வெற்றியும் உன்னால் வந்தது தான்! இப்போதே உனக்கு கைமாறு தர என்னிடம் யாதொன்றுமில்லை. எவையேனும் இரண்டு வரங்கள் கேட்டுப் பெற்றுக்கொள். அவற்றைத் தந்தாவது நான் மகிழ்வேன்."
அவன் யாசிப்பவன் போலவே முகபாவத்தோடு கைகளையும் அவள் பக்கமாக நீட்டியபடி கேட்டான். குதிரைகைள மெல்ல நடக்குமாறு அடக்கியவள். நன்றாகத் திரும்பி செல்லக் குரலில் மழலையாகப் பேசினாள்;
“ஒப்போ உயர்வோ இல்லாத ஒரு தெய்வத்தைக் கணவனாகப் பெற்றவள் இந்தக் கைகேயி. அவளுக்குக் குறை என்று எதுவுமே இதுவரை இருந்ததில்லை. தேவை வரும்போது
அவள் கேட்பாள்.”
தசரதனுக்கு அவளை அள்ளி அணைக்க வேண்டும்போல் மனம் துடித்தது. மனத்தை அடக்கி இருந்தவன் இப்படிச் சொன்னான்:
43

Page 37
"அன்புக்கு ஒரு வடிவமானவளே! உண்மையில் நீ என்னில் எனக்கு இனியவள்தான்."
தாமதமே இல்லாமல் அவளிடமிருந்து பதில் வந்தது: "ஸ்வாமி! எத்தனையோ காலத்துக்கு முன்னரே நீங்கள் என்னிலும் எனக்கு அமுதமாகிவிட்டீர்களே”
அவனால் பிறகும் இருக்க முடியவில்லை. ஆர்வத்தால் எழுந்து விட்டான். அவள் மெல்லச் சிரித்தபடி சொன்னாள்:-
"அரண்மனை முதல் வாயிலுக்கு வந்துவிட்டோம். கொஞ்சம் பொறுங்கள்."
தசரதன் மிகுந்த சிரமத்தின் பேரில் இருந்துவிட்டான். ஆனால் குதிரைகள் நின்றதும் தானே முதலில் இறங்கி அவளை இறுகத் தழுவியபடி மெல்ல இறக்கிவிட்டான்.
தசரதனின் அதிமதுர மலர்ப்போதாயமைந்த கைகேயிக்கு ஆதிமுதல் செவிலியாகவும் தோழியாகவும் அமைந்தவள் மந்தரை என்ற கூனியே.
கிருஷ்ணாவதாரத்தில் யோகமாயை யசோதை வயிற்றில் பெண்ணாகப் பிறந்ததுபோலவே இராமாவதாரத்தின்போது அது மந்தரையாக உருவெடுத்தது.
இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி அந்த மந்தரையின் காதினிலே பட்டதும் அவன் வில் உமிழ்ந்த மண் உருண்டை தன் கூனையே உண்ட நிகழ்ச்சி அவள் நினைவுக்கு வந்தது. உடனே கைகேயிடம் ஓடிச் சென்று நிதானமாகப் பேசினாள்.
“இராமனுக்கு நாளைக் காலையே பட்டாபிஷேகமாம். உனக்குமே தெரிந்திராது. சொல்வாரும் இல்லையாகிவிட்டது. பரத சக்துருக்கரையும் கேகய நாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். உன் வயிற் றிலே பிறந்ததால் பாவம் , பரதன் , அநாதையாகிவிட்டான். உண்மையில் கோசலை வல்லவள். நீ எல்லா நலனையும் இழந்தவளாகி விட்டாயே பெண்ணே."
அவள் வேதனையோடு அழுவதுபோலவே சொன்னாள். கைகேயியோ இராமன் பட்டாபிஷேகச் செய்தி கேட்ட மகிழ்ச்சியையே மறந்து கோபமாகப் பேசினாள்.
44

"அடி மந்தரா! நீ என்ன பேசுகிறாய்?"
விராவரும் புவிக்கெலாம் வேதமேயன இராமனை மகனாகப் பெற்றவள் நான். பன்னரும் பெரும்புகழ் பெற்ற பரதன் அவள் மகன். சக்கரவர்த்தி இருவருக்கும் கணவர். இதில் என் நலன் அழிந்தவாறு எங்கனம்?
“பெண்ணே உன் மனநிலை புரிகிறது.
மயில் முறைக்குலத்து உரிமையை, மனுமுதல் மரபை அழிக்க வழி சொல்கிறாயா ? நீ எனக்கோ அந்தப் பரதனுக்கோ ஏன் உனக்கோ தான் நல்ல வளாகத்
தெரியவில்லை. பாவ ஊழ் தூண்ட வந்தாயோ?”
அப்போது கைகேயி மனுதர்மத்துக்கு அணுவும் பிசகாத லக்ஷயப் பெண்ணாகவே நின்றாள்.
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் இமையவர் பெற்ற சத்தியமான வரங்களும் மகரிஷிகள் தவமும் தூண்ட கூrணித்துப் போன வேததர்மப் புனருத்தாரணத்துக்கான இராமாவதார நோக்கை நிறைவு செய்யத்தான் வந்த உணர்வு
தோன்றியதும் அவள் தூய சிந்தையும் திரிந்தது.
இராமனைப் பெற்ற தவத்தாய் கோசலையே தான். ஆனால் அவனை அவதார காரியத்துக்கமைய வளர்த்தெடுத்த தெய்வத்தாய் கைகேயியே.
தான் பெற்ற மகனை, தன்னைவிட அருமை செய்து கணமும் பிரியாமலும், பிரியவிடாமலும் ஒன்றி வாழும் கைகேயியைப் பார்த்துப் பார்த்துப் கோசலை உருகினாள்.
கல்யாணத்தின் பின் மிதிலையிலிருந்து சீதையோடும் அயோத்தி வந்தபோதும் தாயரில் இராமனது வணக்கத்துக்கு முன்னுரிமை பெற்றவள் கைகேயியே வனவாசத்தை முடித்துக்கொண்டு அயோத்தி வந்தபோதும் முதலில் அவனது வணக்கத்துக்கு அமைந்தவள் அவளேதான்.
45

Page 38
ஒரு சமயம் சீதை தன் கிளிக்கு யார் பெயர் இடுவது என்று கேட்டபோது 'மாசறு கேகயன் மாது என் அன்னைதன் பெயரே தக்கது' என்ற இராமன், அவளை வெறுத்துத் தொடர்பையே அறுத்து நீக்கிய தந்தையிடம், 'நீ தீயவள் என்று துறந்த என் தெய்வம்' என்றும் ‘என்னை யீன்ற எம் பிராட்டி' என்றும் அவளே தன் தெய்வத்தாய் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றான்.
தசரதன் கைகேயியை மறந்து எதையும் என்றுமே செய்தது இல்லை. அவனுக்கு இவள் மதி மந்திரியாகவும் அமைந்தவள். இராமனுக்கு வரும் பாக்கியம் தன்னைவிட அவளுக்கே பெரிதும் ஆநந்தமாயமையும் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் இராமனது பட்டாபிஷேகம் பற்றி வசிட்டர், மந்திரிமார், குடிசனங்கள், என எல்லாரோடும் ஆலோசித்தவன், கைகேயிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்ல நினைக்கவில்லை.
இராமனும் அந்த பட்டாபிஷேக நிகழ்ச்சி பற்றிய செய்தியைத் தன் தெய்வத் தாயிடம் சொல்லவேயில்லை.
சக்கரவர்த்தித் திருமகனது பட்டாபிஷேகம் அது. இராமனை என்றும் பிரிந்தறியாத பரத சத்துருக்கர் அயோத்தியில் இல்லாத சமயம்! ஒருநாள் கூட நிறைவாக இல்லா குறுகிய காலத்தில் திரிகால ஞானியாகிய வசிட்டரே முகூர்த்த நிர்ணயஞ் செய்ய, தசரதன் அதை ஒப்புக் கொண்டுவிட்டான்.
இவ்வாறு நடக்க முடியாதவைகளை எது நடப்பித்துக் கொண்டிருந்ததோ அதே முன் வந்து நின்று கைகேயியைக் கருவியாகக் கொண்டு இராமனது அரசையும் பறித்து அவனுக்கு வனவாசத்தையும் நிர்ணயித்துவிட்டது.
தசரதன் சிறந்த விவேகி. தனித்துத் தானாகவே சிந்தித்துத் தக்க முடிவுக்கு வரவல்லவன். தன் அன்புக்குரிய இராமன் பிரிவைத் தாங்க முடியாத நிலையில் மரணத்தைத் தழுவியவன். இராமன் வனம்புகப் புறப்பட்டபோது 'மகனே நானும் உன்னோடு வனத்துக்கு வருகிறேன்’ என்று இராமனைத் தொடர அவனுக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால் அந்த வழி அவன் மனக்கண்ணுக்குத் தோன்றவேயில்லை.
46

வசிட்டர் எல்லாமறிந்த மகான், மேதை, இராமன் பிரிவால் தசரதன் மரணத்தைத் தழுவப் போகிறான் என்று வருத்தப்பட்டவர், ‘அரசே! நீங்களும் இராமனோடு போகலாமே என்று சொல்ல அவருக்குமே தோன்றவில்லை.
பஞ்சவடியில் அந்தப் பொன் மானைக் கண்டதும் சீதை அதைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினாள். அவனும் அதைத் தொடர்ந்து ஓடினான். அப்படி ஒரு பொன்மான் சிருஷ்டியில் இல்லை என்பது சீதைக்கோ இராமனுக்கோ உணர்வுக்கு எட்டாத விஷயம் அன்று.
அக்கினியையே குளிரச் செய்த கற்பின் செல்வியால் கபடசந்நியாசியாக வந்து பின் சுயரூபத்தைக் காட்டி பலாத்காரமாகத் தூக்கிச் சென்ற இராவணனை, ஒரு சொல்லினால், ஒரு நோக்கினால், சுட்டெரித்துவிட முடியாதா ? யுத்தகளத்தில் இந்திரசித்தன் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் அடியுண்டு பிரக்ஞையற்றுக்கிடந்த லகூழ்மணனைக் கண்ட இராமனும் பிணம்போலச் செயலற்றுக்கிடந்ததை அரக்கர் வேண்டுமென்றே சீதைக்குக் காட்டினார்கள். தேவி அழுது மயங்கினாளேயன்றி உயிர் விடுபடவில்லை. அந்தக் கற்பரசியைப் பற்றிய பேராச்சரியமான செய்தியல்லவா இது.
எல்லாமே எந்த அறிவு நிலையிலும் புரிந்து விடமுடியாத பரமரகசியங்களே. கைகேயி தெய்வக்கற்பினள். மாசறு கேகயன் மாது; தூயவள்; துரமொழி மடமான்; தூய சிந்தையள்; கேகயன் இறை திருமகள்; அளவில் கற்புடைச் சிற்றவை என்று போற்றப்பட்டவள்.
தன் உயிரான கணவனது மரணத்துக்குக் காரணமானவள் என்று கைகேயியை இராமன், சீதை என்ற இரு வரையும் தவிர்ந்த எல்லோருமே தூற்றினர். பரதனே, "மிக இழிந்தவள் என்று எல்லாச் சந்தர்ப்பத்திலும் பேசியிருக்கிறான்.
y
இராமனது புகழை என்றும் மங்காது நிலைக்கச் செய்தவளும், பரதனது வானளாவிய உயர்வுக்கு அடித்தளம் அமைத்தவளும், சூரிய வம்சத்தையே புகழேணியில் ஏற்றி வைத்தவளும் அந்தக் கைகேயியே தான்.
47

Page 39
தசரதனிடம் வரங்களைக் கேட்டபோது,"என் சேய் அரசாள்வது, சீதைகேள்வன் வனம் ஆள்வது என்றுதான் கேட்டாள். ஆனால் அதை இராமனிடம் சொல்லும்போதோ 'உலகெல்லாம் பரதனே ஆள நீ போய் தாளிருஞ் சடைகள் தாங்கி தாங்கரும் தவம் மேற்கொண்டு பூமிவெங்கானம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி ஏழிரண்டாண்டின் வா' என்று சொன்னாள்.
அநித்தியமான அரசச் செல்வத்தைப் பரதன் ஆளட்டும். உலகம் கண்டு வாழ சடாமுடி தரித்த பாலசந்நியாசியாகி தண்டகாரண்யம் முதலிய பயங்கரப் பிரேதசங்களைப் புண்ணியத் தலங்களாக்கி, கடலிடங்களும் நதிகளும் புனித தீர்த்தங்களாகிப் பயன் தரச் செய்து பதினான் காண்டு தெய்வீகம்மலர வாழ்ந்து பின் மீளுவாயாக!
பதினானர் காண்டுகள் அஹிம் சா தர்மம் பிசகாது வாழ்ந்ததனாலேயே இராவணவ தத்துக்கான மந்திர உபதேசத்தை இராமன் அகஸ்தியரிடம் பெறும் தகுதியை அடைந்தான். பதினான்கு வருடகாலம் லகூழ்மணன் ஊண், உறக்கம் நீங்கிய தவவாழ்வு மேற்கொண்டதனாலேயே இந்திரசித்தனைக் கொல்ல முடிந்தது. இராவணனும் இந்திரசித்தனும் அப்படி வரம் பெற்றவர்கள். கைகேயி எல்லாவற்றையும் தெரிந்த நிலையில் நின்றே செயற்பட்டாள். பொய்யான வாழ்வை நெறிசெய்ய வகுக்கப்பட்ட தர்மங்கள் ஒருவகை. ஆன்ம ஸாகூடிாத்காரம் கைகூடிய நிலையில் சமய சத்திய கட்டுப்பாடுகள் கடக்கப்படுவதே போல், பரமதர்மத்தை நிலை செய் யும் போது சாதார ண தர் மங் கள் புறக்கணிக்கப்படலாம்.
அவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் மிக உயர்வானது என்பது சான்றோர் முடிவு. பாவத்தின் விளை நிலமாகி விருத்தியடைந்து கொண்டிருந்த கூடித்திரிய குலத்தை நாசஞ் செய்ய அந்தக் கிருஷ்ணமூர்த்தி சாதாரண தர்மங்களைக் கடந்த நிகழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும் பல.
48

இராமாவதாரத்தில் நிகழ்ந்த வாலிவதமும் பரமதர்மத்தை உத்தேசித்து அந்த இராமனே சாதாரண தர்மத்தைப் புறக்கணித்த நிகழ்ச்சியாகும். சிறந்த வைத்தியன் தவறாது கொல்லும் விஷத்தையே மருந்தாக்கி உயிரைக் காத்து விடுகிறான். மகாவைத்தியர்களாகிய அவதார புருஷர்களுக்கு எதை, எப்படி, எப்போது செய்ய வேண்மென்பது தெளிவாகத் தொயும் அவதார புரு ஷர் களைவிட தருமத்தை உரைத்துப்பார்க்க அமைந்த உரை கற்களை எவரும் எங்குமே கண்டு விடமுடியாது.
கைகேயியும் அதற்கு வேறானவள் அல்லள்"
“வெவ்வினை அவள் தர விளைந்ததேயும் அன்று” "ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ"
மகரிஷி வசிட்டர் இப்படிச் சொன்னார். ராமனோ,
"நதியின் பிழையன்று நறும்புனலின்மை” நம்மைப்பயந்தாள் மதியின் பிழையன்று, விதியின் பிழை” என்றான்.
பொன், அரசு, போகம் எனவரும் அநித்தியங்களை தந்தை, தாய், மனைவி, மக்கள், சுற்றம் என அமைந்த சார்பு பற்றிய பந்தங்களை, புகழ், அதிகாரம், பதவி போன்ற மயக்கங்களை, நன்மை, தீமை, இன்பம், துன்பம் எனத் தோன்றும். துவந்துவங்களைப் பொருள் செய்து பிறவிப் பெருங்கடலுள் எற்றுண்டு அலையாமல், அறிவு, அடக்கம், தூய்மை, பொறை, சத்தியம், தயை, நீதி, தியாகம், ஞானம், தவம், துறவு ஆகிய தெய்வ சம்பத்துக்களைப் போற்றி வாழ்ந்து காடடவந்த என்றும் அணையாத ஒளியே இராமன் என்பதையும், பிரகாசிப்பதாகத் தோன்றி, மயக்கி, இருளிலே மூழ்கடிக்கும் அரண்மனை வாழ்வுபோன்ற பொய்ம்மைகளைப் பொருள் செய்து, பொன்னும் மணியும் புனைந்து, மலர் மேல் நடந்து, வாடி, உதிர்ந்து, சரு காகும் பொருளற்ற வாழ்வை உதறித் தள்ளி, உயர்வுக்கோர் ஒப்பேயில்லாத தியாக நெருப்பில், பெண்மை என்ற பிரபஞ்சர கஸ்யத்தைப் புடமிட்டு, எதனாலும் அளப்பரிய மாண்புறங்கு தெய்வ விளைவை வாழாமல் வாழ்ந்து காட்டவந்த பா தேவதையே சீதை என்பதையும்
49

Page 40
அறிந்து தெளிந்திருந்தவள் கைகேயி என்ற ஒருத்தியே, எதை எப்பொழுது எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பரமரகஸ்யமும் அவளுக்கே தெரிந்திருந்தது. ஏற்ற காலம் வந்ததும் அவள் தன்னை முற்றாகவே மாற்றி அமைத்துக் கொண்டாள்.
அற்புதமான சித்தாந்தங்களுக்கு அப்பாலுக்கப்பாலாகி, பரிசுத்தமாய், சலனமின்றியே அவள் நின்றாள்.
அவளை விளங்கிக் கொள்ள அப்போது யாராலும் முடியவில்லை. அணுகவும். அஞ்சி செயலிழந்து எல்லோரும் ஒதுங்கி நின்றுவிட்டார்கள்.
'தீயவை யாவினும் சிறந்த தீயள்' என அவள் செயற்பட்டாள்
தீ அவை-வீட்டுத்தீ முத்தீ முதலியன. யாவினும் சிறந்த தீயள்.தீ என்று பேசப்படும் அனைத்திலும் உயர்வாகிய யாகத்தீயாக அமைந்தவள். t
அயோத்தியாகிய களத்தில், அரண்மனையே யாக குண்டமாக, பெண்மையின் தியாகமாகிய அக்கினியில் தன் வாழ்வையே சமித்தாக்கி, அருள் மயமான தாய்மையை உருக்கி நெய்யாக்கி, மனமாதி கரணங்களை சுருக்கு சுருவமாக்கி, தூய அன்பே மலராகவும் உயிரினும் இனித்த கணவனே பூரணா குதியாகவும் தன்னையே இயற்றும் ஏ வும் கர்த்தாக்களாகவும் கொண்டு இந்தத் தெய்வீக யாகத்தை கைகேயி நிறைவுபெறச் செய்து முடித்தாள்
உலக வாழ்வுக்கமைந்த சாதாரண தர்மங்களைப் பொருள் செய்யாது புறக்கணித்து விட்டு இராமாவதார நோக்காகிய பரம தர்மப் புனருத்தாரணத்துகாக, யாரும் என்றுமே இழப்பதற்கு ஒருப்படாத பெண்மை என்ற பெருந்தக்க செல்வத்தை, தியாகாக்கினியில் ஆகுதி செய்தவள். மாசறுகற்பும், தூய சிந்தையுமுடையவளான கைகேயி ஒருத்தியே.
அவள் தர்மவதி.

திரெளபதி

Page 41

திரெளபதி
பாஞ்சாலன் செய்த தவத்தின் பயனே நீ
அக்கினியல்லவா உன்னைப் பெற்ற தாய்? அவளைப் போலவே நீயும் பரிசுத்தமானவள். உன்னை அணுகவே தெய்வீகமான தூய்மை தானாகவே வந்து பற்றிக்கொள்ளுகிறது. நீ சத்தியமே போல அழிவற்றவள். அதைப்போலவே நெறிப்படுத்தவும் வல்லவள்; அழிவின்மைக்கு அழைத்துச் செல்ல உன்னால் முடியும்; நீ அற்புதமான ஒரு அழகி. சாதாரண அழகு, உனக்குப்போல நிலையாக நிற்பதில்லை. இது தவத்தின் ஒளியாகவும் இருக்கலாம். ஆனால் தவம் கலங்கவிடாமலே நெறி செய்வது. இது கலங்கவைத்தல்லவா நெறி செய்கிறது.
எப்படியும் உன் அழகில் ஒரு அற்புதம் இருக்கிறது. அது உணர வல்லவரை மேன்மேல் உயரத் தூக்கிவிட்டு மற்றவரை இருளினுள்ளே தள்ளி விடுகிறதே.
உன்னைச் சான்றோர் கன்னியர் வரிசையிலேயே வைத்திருக்கிறார்கள். உண்மையில் மாசற்ற கற்பு, மங்காத தெய்வீகம், அழிவின்மை, தவத்தின் திறம் என, கன்னி என்பதற்கு இன்றியமையாதன எல்லாமே உனக்குப் பண்புகளாகி விட்டன.
உள்ளத்தாலோ உடலாலோ நீ யாரையுமே தீண்டாதவள். அப்படியே உன்னையும் எவருமே தீண்டியதில்லை. பொறிகளைத் தீண்டாத மனமுள்ளவர்களை எப்படி மற்றவர் தமது மனத்தினால் தீண்ட முடியும்?
உன்னை உள்ளபடி காண எல்லோராலும் முடியாது. அதற்குத் தூய தவக்கல்லில் சாணையிட்ட அறிவுக் கண்களே வேண்டும். புறக்கண்களுக்கு வெறும் சடப்பொருளே புலனாகும்.
அநேகர் சூழ்ந்திருக்கும்போதும் தனித்திருக்கத் தெரிந்தவள் நீ அதனாலேதான் வாசுதேவனான கிருஷ்ணன் உன்னைத் தன் பிரியமான சகோதரியாக ஏற்றுக்கொண்டான்.
51

Page 42
எதிர்காலம் உய்திபெற, இறந்தகாலமாகிய ஆழ் கடலுள் முழுகிப்போன மானிட தர்மம் என்ற விளக்கை எடுத்து, மீண்டும் பிரகாசிக்க வைப்பதற்கு, நிகழ்காலம் கஷ்டப்பட்டுப் பிரசவித்த பரதேவதை நீதானே.
திரெளபதி விடுவிக்க முடியாத இந்த உலக நியதிக்குள் பரம இரகசியமாக எப்படியோ என்றுமே நீ மறைந்தே நின்றாய்.
அஸ்தினாபுரத்தின் மாமன்னனாக இருந்த பாண்டுவின் புத்திரர்களும் உன்னைப் போலவே தெய்வீகமாக இந்த உலகுக்கு வந்தவர்கள். தூய்மை, பணிவு, பொறுமை, கருணை, சத்தியம் முதலிய தெய்வ சம்பத்துக்களே அவர்களுக்கும் ஆபரணங்கள். குழந்தைகளாக வாழ்ந்த காலத்திலேயே அவர்களிடம் பிரகாசித்த உயர்ந்த பண்புகள் எல்லோரையும் கவர்ந்து பந்தித்து விட்டன. அஸ்தினாபுரமே தனது LipT 95 T5 LDfT aor எதிர்காலத்தை அவர்களுடைய குழந்தை முகங்களில் என்றுமே பார்த்தபடி காத்திருந்தது.
பாண்டு மன்னன் அகால மரணம் அடைந்ததும், கண்ணில்லாத அவன் அண்ணன் திருதராஷ்டிரன் இராசப் பிரதிநிதியாக சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டான். அவனுக்குப் பிள்ளைகள் அநேகர். அவர்களுள் மூத்தவன் துரியோதனன். பாவத்தை வார்ப்படஞ் செய்ய வந்த உருவம் அவன். தன் னையும் சகோ தரையும் விட பாண் டவர் கள் மதிக்கப்படுவதை அந்தச் சிறுவயதிலேயே அவனால் சகிக்க முடியவில்லை. நாள்கள் கழியக் கழிய வளர்ந்து வந்த பொறாமை முற்றாக அவனை விழுங்கிவிட ஆரம்பித்து விட்டது. பெரியவர்களுக்கும் தெரியாமலே சூழ்ச்சி செய்து பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் எனத் தன் சகாக்களையும் தூண்டி, கொடிய பல பாதகங்களைச் செய்தான். V
பாண்டவர்கள் தருமத்தை நம்பி அதன் நிழலை நீங்காமல் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு சமயமும் தருமதேவதை அவர்களைக் காத்து விட்டது. இத்தனைக்கும் தப்பிவிட்டார்களே” என்று துரியோதனனும் அவன் சகாக்களும் பெரிதும் கவலைப்பட்டார்கள்.
52

பீஷ்மர் முதலிய குல முதல்வர்களுக்கும் சனங்களுக்கும் துரியோதனனையும் திருதராஷ்டிரனையும் நன்றாகத் தெரிந்திருந்தது. அஸ்தினாபுரத்தின் எதிர்காலத்தை நினைத்து, திருதராஷ்டிரனை வற்புறுத்தி, பாண்டவருள் முத்தவனான யுதிஷ்டிரனுக்கு அஸ்தினாபுர யுவராஜ அபிஷேகத்தைச் செய்வித்து விட்டார்கள்.
இந்த நிகழச்சி துரியோதனனை மேலும் வருத்தி நிலை கலக்கிவிட்டது. அப்போது அவனுக்கு முக்கிய வழிகாட்டியாக இருந்தவன் மாமனான சகுனியே. அந்தச் சகுனி, பாவம் தன் வாழ்வை என்றும் நிலை செய்யப் பெற்றெடுத்த பிள்ளை. வஞ்சகத்தின் வடிவில் வந்த படு பாதகன். அவனே பாண்டவரை ஒரு சேர அழிக்க வழிவகுத்தான். வாரணாவதம், அஸ்தினாபுர அரசின் மற்றொரு நகரம், அங்கே மெழுகு, நெய், குங்கிலியம், அரக்கு முதலிய எரிபொருள்களையே முழுமையாக மறைத்து வைத்து ஒரு மாளிகை கட்டுவித்தார்கள். ஆசனங்கள், படுக்கைகள் என்று எல்லா வசதிகளோடுங் கூடிய அலங்காரமான மாளிகை அது. ரகசியமாகவே கட்டடவேலை தொடங்கி முடிந்து விட்டது. துரியோதனன் திருதராஷ்டிரனிடம் வந்து,
'வாரணாவத மக்கள் யுவராஜனை வரவேற்கவும் பார்க்கவும் பெரிதும் ஆவலாக இருக்கிறார்கள். அங்கே சிவனுக்கான பெரிய விழாவும் வரப்போகிறது. பாண்டவர்களும் போக விரும்புவதாகத் தெரிகிறது. அவர்கள் தங்கியிருக்க வசதியான ஒரு மாளிகை கூடக் கட்டியிருக்கிறோம். நீங்கள் சொன்னால்தானே போவார்கள்' என்று சொன்னான்.
திருதராஷ்டிரனின் விருப்பப்படி பாண்டவர்கள், தாயான குந்தியோடும் புறப்பட்டார்கள். எல்லோருமே வழியனுப்ப வந்தார்கள். “மீளாத பயணத்தைத் தொடங்கியவர்களுக்கு வாயார வாழ்த்தும் சொல்லி அனுப்பிவிட்டோம்” என்று சிரித்துப் பேசித் துரியோதனனும் சகாக்களும் மகிழ்ந்தார்கள்.
வாரணாவதம் போய், மாளிகைக்குள் நுழைந்ததும் எங்களுக்காக இத்தனை வசதிகளோடு கட்டிவிட்டார்களே என்று பாண்டவரோடு குந்தியுமே ஆச்சரியப்பட்டாள்.
சந்தேகம் தோன்றாதபடி மாளிகையில் தங்கியிருக்க விட்டு, இவ்வளவு நாட்களின்பின், யாருமே தப்பாதபடி இரவு
53

Page 43
நேரத்தில் தீவைக்கும் ஏற்பாடுகளை முடிவு செய்துவிட்டார்கள். அந்த மாளிகையைக் கொலைக் களமாகத் திட்டமிட்டுக் கட்டுவித்த புரோசனன் என்ற மந்திரியே நிகழ்த்த வேண்டியவற்றிற்குப் பொறுப்பாக அங்கே இருந்தான்.
அதற்குள் வேண்டியதைச் செய்ய தருமதேவதை முன் வந்து விட்டது. யாரும் அறியாதபடி பாண்டவரையும் குந்தியையும் சுரங்க வழியால் வெளியேற்றி, மாளிகைக்கும் அது தீயை முட்டிவிட்டது புரோசனனும் அந்தத் தீக்கே இரையாகி விட்டான்.
"பாண்டவரும் குந்தியும் மாளிகையோடு சாம்பலாகி விட்டார்கள்' என்ற செய்தி அஸ்தினாபுரத்துக்கு எட்டியதும் பீஷ்மர், காந்தாரி முதலியோர் துடித்து அழுதார்கள். திருதராஷ்டிரனும் சோகத் தோடு கங்கையாற்றிலே அவர்களுக்கான ஈமக்கடன்களைச் செய்து முடித்தான். துரியோதனனும் சகுனி முதலானவர்களும் உள்ளே மகிழ்ந்து சிரித்தபடி அழுது காட்டினார்கள்.
யுதிஷ்டிரன் இறந்து விட்டான் என்றதால் துரியோதனனுக்கு உடனடியாக யுவராஜ அபிஷேகம் செய்யப்பட்டு விட்டது.
திரெளபதி! வாரணாவத விபத்துச் செய்தி உன் தந்தை யைப் பெரிதும் வேதனை செய்துவிட்டது. புகழ் பெற்ற வில்லாளனான அருச்சுனன், பாண்டவருள் ஒருவன், அவன் தன் குருவான துரோணர் கேட்டுக்கொண்டபடி, உன் தந்தையை போரில் வென்று சிறை செய்து கொண்டுபோய் தக்ஷணையாக அவரிடம் கொடுத்தவன். பெரும் வீரனாகிய உன் தந்தை, தன்னை வென்று சிறை செய்த மகா வீரனாகிய அந்த இளைஞனுக்கு மிக உயர்வான ஒரு சன்மானம் செய்ய வேண்டுமென்ற ஆசையால் தவமிருந்து யாகாக்கினியில் உன்னைப் பெற்றவர். "அவனும் விபத்துக்குள்ளாகிவிட்டான்' என்றதும் கலங்கிப் போனார். 'தெய்வாம்ஸமாகப் பிறப்பவருக்கு இப்படி விபத்துக்கள் வருவதில்லை' என்ற ஒரு நம்பிக்கை அவரை சிறிது ஆறியிருக்க விட்டது.
காத்திருந்து பார்த்துவிட்டு, இருந்தால் வெளி வரச் செய்யும்படியான வில்லாளருக்கே அமைந்த ஒரு நிபந்தனையோடு உனக்கு சுயம்வரப் பிரகடனம் செய்தார்.
54

நிபந்தனை இது:-
"சுயம்வர மண்டபத்தின் நடுவில், அம்பு பாயும் உயரத்தில் ஒரு பொன்மயமான லக்ஷயமும் அதன்கீழ் துவாரமுள்ள சுழலும் ஒரு யந்திரமும் இருக்கும். எஃகு நானோடும் ஐந்து அம்புகளோடும் கீழே இருக்கும் வில்லில் நாணைப் பூட்டி, நீரிலே தெரியும் நிழலையே பார்த்து, சுழலும் யந்திரத்தின் துவாரத்தினுாடாக அம்பைச் செலுத்தி, அந்த லக்ஷயத்தை விழுத்த வேண்டும். அந்த வீரனுக்கே என் மகள் மாலையைச் சூட்டுவாள்."
திரெளபதி! உனது சுயம்வரத்துக்கென்றே காம்பில்யத்தில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது. அந்தப் பெரிய மண்டபத்துக்கு வெளியே அரசர் பரிவாரங்களோடு தங்க வசதியான மாளிகைகள் போன்ற பல வீடுகள்.
மண்டபத்தினுள்ளே, மெத்தைகளோடு கூடிய ஆசனங்கள், பட்டுப் படுதாக்கள், தோரணங்கள், விளக்குகள் என எத்தனை ஆடம்பரம்! அரசர், வீரர், அந்தணர், பிரபுக்கள், கலைஞர், பொதுமக்கள் என ஆசன வரிசைகள் பல ஆயிரவருக்கு ஏற்றபடி வைக்கப்பட்டிருந்தன.
சுயம்வர தினம்; அன்று காலையே மண்டபம் நிறைந்து பொலிந்து விளங்கியது. முன்வரிசையில் துரியோதனன், சராசந்தன், சிசுபாலன், சல்லியன், கர்ணன் என்ற பெரு வீரர்கள் இருந்தார்கள். எதிரில் பலராம கிருஷ்ணர்,
முகூர்த்தம் நெருங்க நெருங்க மண்டபத்துள் பரபரப்பு வளர்ந்தது. துருபதன் வந்து அரசரை, வீரர்களை, சபையை வணங்கிய பின் போய் தனது ஆசனத்தில் அமர்ந்தான். அவனுக்குப் பக்கத்தில் உனக்குரிய ஆசனம் இருந்தது. என்ன மாயமோ, நீ இல்லாமலே அது தன்னைப் பார்க்கும்படி எல்லோருக்கும் தூண்டுதல் செய்துகொண்டேயிருந்தது.
திடீரென்று சகலரும் வாயிலைப் பார்த்தார்கள். திருஷ்டத்துய்மன் குதிரையில் நின்றும் இறங்கினான். நீ பின்னால் வந்த யானையை விட்டு இறங்கினாய்.
தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தபோது கையில் மனமாலையோடு நாராயணனை நோக்கி நளினமாக
நடந்துவந்த மலர்மகளே போல மாலையும் கையுமாய்
55

Page 44
அண்ணனின் பக்கமாக நீ தோழியர் சூழ மண்டபத்துள் வந்தாய். அப்படி வரும்போதே கண்களாற் பேசி உன் தெய்வக் கிருஷ்ணனிடம் ஆசியும் பெற்றுவிட்டாயல்லவா ? நீ போய் இருப்பதன் முன்னமே ஆயிரமாயிரம் கண்கள் உன்னைக் காயப்படுத்தி விட்டனவே. நீ கண்ணிலே பட்டபின் ஆசை என்ற அவலக்கடலுள் அமிழ்ந்தாதவர் எவரும் இல்லையேதான்.
துரியோதனன் உன்னையே பார்த்தபடி நெகிழ்ந்து போயிருந்தான். திருஷ்டத்துய்மன் எழுந்ததும் சபையில் அமைதி நிலவியது. அவன், வந்திருந்த அரசர், வீரர், சபையோர் எல்லோரையும் வணங்கி நின்று, கம்பீரமான குரலில், நிபந்தனையை விளக்கினான். பிறகு லகூழியம் சிலை, அம்பு என எல்லாவற்றையும் தனித்தனி காட்டியபின் மீண்டும் எல்லோரையும் வணங்கியே சென்று இருந்தான். உன்னைப் பார்ப்பதையே நிறுத்தும் அளவுக்குச் சிறிது நேரம் சிந்தனையில் ஆழந்து இருந்துவிட்டார்கள்.
முதலில் எழுந்தவன் துரியோதனனே. நேராக அவன் வில் இருக்கும் இடத்துக்கே சென்றான். வில்லை எடுத்தும் விட்டான். ஆனால் சிறிதளவு கூட வளைய அது மறுத்து விட்டது. முயன்றுதான் பார்த்தான். முடியவில்லை. வெட்கத்தோடு மெல்லத் திரும்பினான். பிறகு சராசந்தன், சிசுபாலன், சல்லியன் என்ற மாவீரர்களும் சென்று சென்று திரும்பி விட்டார்கள். அதன் பிறகே புகழ் பெற்ற வில்லாளனாகிய கர்ணன் எழுந்தான். துரியோதனோடு அவனைத் தெரிந்தவர்கள் எல்லோருக்குமே நம்பிக்கை உண்டாகிவிட்டது. பொதுவாக சபையின் கவனம் கர்ணனையே மையமாகக் கொண்டு சுழன்றது. கம்பீரமாகவே நடந்து சென்று வில்லை எடுத்தவன், நாணைப் பிடித்தபடி அதை வளைத்தான். அதுவும் வளைந்தது. ஆனால் ? நாணைப் பூட்டுமளவுக்கு அது வளைய மறுத்து விட்டது. களையையும் பொருட்படுத்தாமல் பலமுறை முயன்றான். எட்டவில்லை. அவமானந்தான், திரும்பவே வேண்டியிருந்தது. வந்து இருந்துவிட்டான். அதன் பிறகு வந்தவர்களிற் பலர் வில்லைத் தொட்டுப் பார்க்கவும் விரும்பாமலே திரும்பிவிட்டார்கள். வீரர் என்று அகம்பாவத் தோடு வந்தவர்களின் முகங்களில் அவமானத்தின் இருளே பரந்து கிடந்தது.
56

இத்தனை கடினமான நிபந்தனையை வைத்த துருபதனை இகழ்வோரும், எல்லா நலன்களோடு பிறந்தும் வாழாத நிலைக்கான பெண்ணுக்காக இரங்குவோருமாக மண்டபம் சோர்ந்து கிடந்தது.
அப்போது பிராமணர்கள் நடுவிலிருந்த ஒரு இளைஞன் எழுந்தான். அவன் உடனே திருஷ்டத்துய்மனைப் பார்த்து,
“யுவராஜனே! பிராமணன் ஒருவன் நிபந்தனைப்படி இந்த இலக்கை வீழ்த்தினால் மனமாலை பெறும் உரிமை அவனுக்கும் கிடைக்குமா?’ என்று கேட்டான்.
திருஷ்டத்துய்மன் உடனே பதில் தந்தான்:-
“எவனொரு வன் நிபந்தனைப் படி இலக் கை வீழ்த்துகிறானோ அவனுக்கே என் தங்கை உரிமையானவள். இது சத்தியம்"
பெண் னே! இத்தனைக்கும் ஊமைப் பார்வை யோடிருந்தவள் நீ. திடீரென்று காது கண்களைத் தீட்டிக் கொண்டு சத்தம் வந்த திசைக்கே உன்னை அர்ப்பணித்து அங்கே நிலைத்து விட்டாயே!
அந்தப் பிராமணன், மச்சயந்திரம் இருந்த நடு மண்டபத்தை நோக்கி வந்தான். வரும்போதே கிருஷ்ணனிடம் ஆசி பெற்றுக்கொண்டதை யாருமே கவனிக்கவில்லை. அப்படி வந்தவன் முகத்தில் அடக்கம், ஞானம், வீரம், குடிப்பிறப்பு எல்லாமே ஒளிர்ந்தன.
அவனைப் பார்த்தவர்களில் ஒருவர், "தோற்றமும், பேச்சும், எல்லாமே கூடித்திரியன் போலவே விளங்குகிறானே” என்றார். மற்றொரு குரல் அதை மறுப்பது போலக் கேட்டது.
"ஏன்? பரசுராமன் கூடித்திரியனா ? இல்லையே”
அவன் அதற்குள் மச்சயந்திரத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு திரும்பி கீழேயிருந்த வில்லை வணங்கி அதை எடுத்து நிறுத்தினான். நாணைப் பிடித்தபடியே அந்த வில்லை வளைக்க, மனமாலையை ஏற்கக் குனிந்து கொடுக்கும்
மணமகளே போல அது வளைந்து நாணை ஏற்றுக்கொண்டது.
57

Page 45
திரெளபதி 1 அந்தச் சமயம், உன்னுடைய நீண்ட மலர்க்கண்கள் மட்டுமா, மண்டபத்தில் இருந்த அத்தனை பேர் கண்களுமே அவனைக் கவ்வி விழுங்கிக் கொண்டிருந்தன.
அந்தச் சமயம் நீரினுள்ளே லக்ஷயத்தின் நிழலைக் குனிந்து பார்த்தபடி அவன் ஏவிய அம்பு யந்திரத்தின் கீழ்த்துளையூடாக நுழைந்து லக்ஷயத்தை அறுத்து வீழ்த்தியது.
பிராமணர்களின் கூட்டம் துள்ளி எழுந்து நின்று குரலெடுத்து மந்திரங்களைச் சொல்லி ஆசிர்வதித்தது.
வீரர்கள் என்று இறுமாந்து வந்திருந்த கூடித்திரியர்கள் அவமானத்தால் சுருங்கி சோர்ந்து தலை கவிழ்ந்திருந்தார்கள்.
இலக்கை வீழ்த்திய அந்த அமரனான இளைஞன் வில்லையும் அம்புகளையும் கையோடு கொண்டு சென்று உன் தந்தையின் பாதங்களில் வைத்துவிட்டு வணங்கினான். மகிழ்ச்சி வெள்ளத்துள் முழுகிக் கிடந்த உன் அப்பா ஆசீர்வதிக்க எழுவதற்குள் நீ மாலையுங் கையுமாக எதிரில் வந்து விட்டாயே. துருபதனின் ஆசீர்வாதமும், சிரிக்காமலே சிரிக்கும் முகமலரோடு நின்று நீ அவனுக்கு மாலை சூட்டியதும் ஒரே நேர நிகழ்ச்சி ஆயிற்று. அதன் பிறகே உன் தந்தைக்கு உன்னை ஆசீர்வதிக்க முடிந்தது.
அந்த நேரம், அவமானம், பொறாமை உள்ளே குமுற அரசர் என்றிருந்தவர்கள் குழப்பஞ் செய்ய முயன்றார்கள்.
“பிராமணனுக்கு சாஸ்திரத்தில் சுயம்வரம் சொல்லப் படவில்லை. எவனாவது ஒரு ராஜகுமாரனை இவள் விரும்பாவிடில் கல்யாணமே இல்லாமல் சிதையேறட்டும்; தர்ம விரோதத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவே முடியாது” என்று கிளம்பினார்கள்.
இதை எதிர்பார்த்திருந்த வீமன் வெளியே நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கி இலைகளை உதறியபின் அதை ஒரு தடியெனவே கையிலே கொண்டுவந்து நின்றான். உனது அண்ணா திருஷ்டத்துய்மன் தனது வில்லை எடுத்தான்.
"இனி, இவளைக் காப்பது என் கடமையல்லவா? நீங்கள் சிரமப்பட வேண்டாம்" என்று தன் வில்லைப் பார்த்தான் உன்னுடைய செல்வன்,
58

பலராமனும் கிருஷ்ணனும் குழப்பம் வராமல் தடுக்க முயன்று கொண்டிருந்தார்கள். எப்படியோ குழப்பத்தை வராதபடி செய்தும் விட்டார்கள். அதற்குள், அந்த பிராமண இளைஞன் உன் கையைப் பற்றியவாறு அந்த மண்டபத்தை விட்டுவெளியேறினான். எத்தனை மகிழ்ச்சியோடு நீ அவனைத் தொடர்ந்தாயென்பதை உன் முகமே சொல்லிக் காட்டியது. அரண்மனையில் மலர்மீது மெல்ல நடந்த உன் பாதங்கள், வெறுந்தரையில் அலகூதியமாக வேக நடை நடக்க எப்படித்தான் இடந் தந்தனவோ ?
எங்கேதான் உன்னை அழைத்துச் செல்கின்றான் என்பது உனக்கும் உன்னைத் தொடர்ந்து வந்த உன் அண்ணனுக்குமே தெரிந்திருக்கவில்லை. பிராமண அகதிகள் போல வந்து தங்கியிருந்த குயவனது வீட்டுக்கே, அஸ்தினாபுரத்தின் பேரரசியாக இருந்த தங்கள் தாய் குந்திதேவிக்கு உன்னைக் காட்டிவிடவே இத்தனை அவசரம்.
ராஜ்ய லக்ஷமியின் பிரகாசத்தோடிருந்த தாயோடு ஐவராய் நின்ற பிள்ளைகளையும் உற்று நோக்கிய திருஷ்டத்துய்மன் விரைந்து சென்று தந்தையிடம் தெரிவித்ததும் துருபதன் பெரிய மகிழ்ச்சியோடு ஓடிவந்து அவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே போனபிறகே திரெளபதியை தாங்கள் ஐவருமே மணந்து கொள்ளுந் தீர்மானத்தை யுதிஷ்டிரன் சொன்னான்:-
"கிடைத்ததை ஐவருஞ் சேர்ந்தே அனுபவிப்பதென்று பெரிய பெரிய ஆபத்துக்களுக்கிடையில் தீர்மானித்துச் சத்தியஞ் செய்துவிட்டோம். தாயாரும் அப்படியே சொல்லிவிட்டார்கள்.”
அந்தச் சமயத்தில் கிருஷ்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
திரெளபதி! நீ அவனைப் பார்த்தாய். உன்னுடைய அந்தப் பார்வைக்குள் எத்தனை அற்புதங்கள், வித்தகங்கள் அடங்கிக் கிடந்தன என்பதை அந்தக் கிருஷ்ணனே அறிவான். வந்தவன் உன்னை நேராகப் பார்க்கத் தக்கதாக எதிரில் இளநகை மாறாத முகத்தோடும் இருந்து எல்லாவற்றையும் கேட்டான். பிறகு,
59

Page 46
"அத்தையும் அப்படியேதான் சொன்னாள் என்றீர்களே! அத்தை சிந்திக்காமலே சொல்லிவிட்டாலும் அதை தெய்வத்தின் குரலாகவே கருதவேண்டும்” என்றவன்,
"இந்த ரகசியம் எனக்கும் திரெளபதிக்குமே தெரிந்ததுதான். திரெளபதி! நீயே சொல்லப் போகிறாயா ? நானே சொல்லிவிடவா?’ எனக் கேட்டான். உன்னுடைய மெளன பாஷை நீங்களே சொல்லுங்கள் என்றுதான் அமைந்தது. அதனால் கிருஷ்ணனே சொல்லத் தொடங்கினான்.
"இவள் முன் ஒரு சமயம் பெருந்தவஞ் செய்து சிவபெருமானிடம் இப்படியான ஒரு வரத்தையே கேட்டுப் பெற்றவள். அவர் பிரசன்னமானதும், 'பெருமானே! தர்ம சொரூபர், அளப்பரிய பலமுடையவர், புகழ்பூத்த மகாவீரர், பரமசுந்தரர், ஒப்பற்ற பேரறிஞர் என விளங்கும் கணவரை எனக்கு அநுக்கிரக்க வேண்டும்’ என்று வேண்டியதும்,
'பெண்ணே! யோசிக்காமலே கேட்டுவிட்டாய். அப்படியே பெற்றுக்கொள்வாயாக' என்று சொல்லி சிவபெருமான் மறைந்து விட்டார். உன்னைத் தவிர, இதைக் கேட்டதும் எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள்”
அவன் தொடர்ந்து பேசினான்:-
வேறு வேறாகவும், அதேசமயம் வேறாக்க முடியாத அமைவில் ஒன்றாகவும் விளங்கும் புலன்களே போல, இவர்கள் ஐவரும் ஒரு வர்தான். புலன்கள் தூய மனத்தினுள்ளே கரைய, ஒளிரும் ஆநந்த அனுபவமென, ஐவரையும் தன்னுள் ஒரு சேர அமிழ்ந்தச் செய்து, தானும் வேறாகாத ஆநந்த நிறைவை நிரூபித்துக் காட்டவந்த இவளிடம், பேத அபேதத்துக்கு இடமுண்டா ?
இவள் வாழ்ந்துகாட்ட வந்தவளேயன்றி வாழ வரவில்லை. சிந்தனைக் குவியலுள் முழுகிக் கிடந்த மெளன நிலை அர்த்த முள்ளதாகி மலர்ந்தது.
துருபதன் நிறைவான மனத்தோடு பொலிந்து நின்றான். “பாண்டவரும் குந்தியும் வாரணாவதத் தீ விபத்தில் சாம்பாராகி விடவில்லை. அந்தப் பாண்டவர்கள் பாஞ்சால ராஜ கன்னியான திரெளபதியையும் மணந்து துருபதனுடைய உறவுடன் பெருஞ் செல்வமும் திருஷ்டத்துய்மன், சிகண்டி
60

முதலிய மகாவீரர்களோடு கூடிய படைகளின் பலமும் பெற்று காம்பில்யத்தில் புகழோடு வாழுகிறார்கள்" என்ற செய்தியை அஸ்தினாபுரத்துக்குத் துரியோதனனே கொண்டு சென்றான்.
பீஷ்மர், துரோணர், கிருபர், காந்தாரி போன்ற உத்தமர்கள் எல்லோருமே தரும யுகம் பூத்தது போன்ற சுகக் கடலில் முழுகியவர்களாய் மகிழ்ந்தார்கள். திருதராஷ்டிரன் கடவுளுக்கு நன்றி செலுத்தினான்.
"யுதிஷ்டிரன் உயிரோடு இருக்கும்போது துரியோதனனது யுவராஜப் பதவி தானாகவே அழிந்து விட்டதல்லவா?" என்று காந்தாரியே திருதராஷ்டிரனிடம் கேட்டுவிட்டாள்.
தன்னை எதிர்கொண்டு நிற்கும் பதவி இழப்பை அறிந்த துரியோதனன், "அப்படி நிகழும் பகூடித்தில் என்னை நானே மாய்த்துக் கொள்வேன்’ என்று திருஷ்ராஷ்டிரனிடமே சொல்லி வைத்தான். திருஷ்ராஷ்டிரனுக்கு அவிழ்த்துவிட முடியாத சிக்கலான முடிச்சாகவே இது அமைந்து விட்டது. அடிக்கடி அதைத் தொட்டுப் பார்த்துத் தடுமாறினான். பீஷ்மர், துரோணர் முதலியவர்களோடும் யோசித் தான். யுத்தம் என்ற பேரழிவிலிருந்து விடுபடவேண்டுமானால் நாட்டைப் பிரிப்பதே செய்யத்தக்கது என்ற முடிவுக்கே எல்லோரும் வந்தார்கள். நெருங்கிய உறவு இல்லாவிடினும் பகைக்கான பயங்கரம் அகன்றுவிடும் என்றே எல்லோரும் நம்பினார்கள்.
திருதராஷ்டிரன் நாட்டைப் பிரிப்பதிலும் வஞ்சகனாகவே செயற்பட்டான். காண்டவப் பிரஸ்தம் அஸ்தினாபுரத்தின் ஒரு பகுதிதான். ஆனால் அரக்கர், கொள்ளைக்காரர், கொடியவிலங்குகள், விஷஜந்துக்கள் மட்டுமே வாழும் பயங்கரமான காடு அது. மனித வாழ்வுக்கே இடந்தராத தண்டகாரண்யம் போன்ற பிரதேசம் ; கர்மபூமி.
யுதிஷ்டிரன் மறுக்கமாட்டான்; எதையும் ஏற்றுக்கொள் வான். தம்பிமாரோ அண்ணன் சொல், செயல் எதற்கும் மாறாகச் சிந்திக்கவே தெரியாதவர்கள். எதை வேண்டுமானா லும் கொடுத்து அனுப்பி விடலாம்' என திருதராஷ்டிரன் இந்த முடிவுக்கு வந்ததும் குந்தியை, பாண்டவரை, மருமகளை பார்க்க தாகமாக இருக்கிறதென்று சொல்லி அவர்களை அழைக்க விதுரனையே அனுப்பினான்.
61

Page 47
விதுரன் நேராக காம்பில்யத்துக்கு உன் தந்தையிடமே வந்தான். துருபதன் விரும்பவில்லை. பாண்டவர் கருதுகிறபடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டான். பிறகே விதுரன் உபப்பிலாவியம் வந்தான்.
குந்தி பெரிதும் அஞ்சினாள். மீண்டும் அந்தப் பாதகர் தொடர்பா என்றவள், "தரும தேவதையாக நின்று இத்தனை அபாயங்களிலிருந்தும் காத்த விதுரன் இருக்கும் போது அஞ்ச வேண்டியதில்லை" என்று மனம் மாற உன்னையும் உடன் கொண்டு புறப்பட்டார்கள்.
தேவி! நீ அஸ்தினாபுரத்துக்கு முற்றாகவே புதியவள். உன்னை வரவேற்க அந்த நகரம் முன் கூட்டியே தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தது. இதற்குள் எத்தனையோ உத்தமிகளின் பொன்னடிகள் பட்ட மண் அது. ஆனால் உனக்குச் சமானமான எந்தத் தெய்வக் கன்னியின் திருவடியையும் அந்தமண் தீண்டியதே இல்லை.
உன்னைக் கண்டாலே போதும் என்று தவமிருந்தவர்களும் கண்ட அளவிலே தங்களைத் தாங்களாகவே அழித்துவிடும் மனத்தவர்களும் கலந்து நின்று செய்த வரவேற்பு அது.
எத்தனை ஆடம்பரங்கள் செய்திருந்தார்கள். குயவன் குடிசைக்கும், அரண்மனைக்கும் வேறுபாடு பாராத உனக்கு இது வேண்டியதில்லை என்பதுதான் அவர்களுக்கு எப்படித் தெரியும் ?
உன்னிடம் ஆசிபெற வேண்டிய பலர் உன்னை ஆசீர்வதித்தார்கள். எத்தனை பவ்வியமாக அவற்றை ஏற்றுக் கொண்டு தாழ்ந்து வணங்கி உன்னை உயர்த்திக் கொண்டாய்.
அந்தச்சமயம் வியாச பகவானும் அங்கே வந்திருந்தா ரல்லவா ? யுதிஷ்டிரன் உன்னை அவர் முன்னாக அழைத்துச் சென்று, பகவான்! இவளுக்கு உங்கள் ஆசீர் வாதம் இன்றியமையாததல்லவா?’ என்ற போது, "மகனே! இவளுக்கு ஆசியென்ற ஒன்று யாதாயினும், என்றுமே வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டாரே.
62

அன்று காந்தாரி உன்னைத் தொட்டுப் பரவசமானாள். பீஷ்மர் உன்னையே பார்த்துப் பார்த்து உருகி உருகி ஆசீர்வதித்தாரே.
பகவான் வியாஸர், பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் முதலான பெரியவர்களே முன்னின்று காண்டவப் பிரஸ்தத்துக்கு உன்னையும் வைத்து யுதிஷ்டிரனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
காண்டவப்பிரஸ்தத்துக்கு நீங்கள் புறப்படும்போது கண்ணோடு மனமுங் குருடான திருதராஷ்டிரன் உன் கணவனைப் பார்த்து " அருமை மகனே! நமது முன்னோர்களான புரூரவசு, நகுஷன், யயாதி என்ற மகா மன்னர்களின் பழமையான ராசதானி அது. அதைப் புனருத்தாரணஞ் செய்து புகழ் பெறுவாயாக’ என்று சொல்லி விடையுந் தந்தான்.
பாவத்தின் பயங்கரமான அங்கங்கள் சிதறிக் கிடந்தன என இருந்தது அந்தக் கர்மபூமி. வாசுதேவனான கிருஷ்ணனது திருவடிகளும் உனது மகத்தான மலரடிகளும் உன் தெய்வக் கணவரது பொன்னடிகளும் தீண்டிய பிறகல்லவா இந்திரப் பிரஸ்தம் என்ற வளநாடாகியது.
அடி பெண்ணே! உன் உயிருக்குயிரான அண்ணனும் தெய்வமுமான கிருஷ்ணன் பிறந்து வளர்ந்து, விளையாடி, அற்புதங்கள் செய்து, கோபியரோடு ராஜ லீலைகள் புரிந்த யமுனா தீரத்திலல்லவா உன் இந்திரப்பிரஸ்தம் அமைந்திருந்தது. திரெளபதி! நீ கருணையின் சொரூபமான காமாகூழியாகவே இருந்து உன் கணவரையும் பாக்யசாலிகளான இந்திரப்பிரஸ்த மக்களையும் பரம சந்தோஷமாக வாழ்வித்தாய்.
மதுர வாசகங்களைப் பேசிக்கொண்டே இருபத்து மூன்று வருடங்கள் ஓடி மறைந்தன.
யுதிஷ் டிரனை மாமன் ன னாகவும் உன் னைப் பேரரசியாகவும். பார்க்க வேண்டுமென விதி தூண்ட எல்லோருமே ஆவல் கொண்டனர். திக்கு விஜயங்கள் சீராக முடிந்ததைத் தொடர்ந்து, முனிவர்கள், மகான்கள், வேத
63

Page 48
வல்லுநர்கள், பேரரசர்கள் என எல்லோரும் சூழ்ந்திருக்க அஸ்வமேதயாகம் வெகு சிறப்பாக நிகழ்ந்து பூரணாகுதியும் செய்தாயிற்று.
பகவான் வியாஸர், பிதாமகர் பீஷ்மர், துரோணர், கிருபர் முதலிய பெரியோர்கள் திருதராஷ்டிரன் போன்ற அரசர்கள் எல்லோருக்குமே முக்கிய பணியாளனாய் பரமாத்மனான கிருஷ்ணனே நின்றான். ஆனாலும் அக்ரபூசைக்குப் பீஷ்மர் கிருஷ்ணனையே தெரிவு செய்தார். சிசுபாலனுக்கு அதை ஏற்க முடியவில்லை. முதலில் ஆக்ஷேபித்தவன் வர வர தகாத வார்த்தைகளால் எல்லோரையுமே கேவலமாக இகழ்ந்தான். பிறகு, கோபாவேசத்தனாகி கிருஷ்ணனை எல்லை கடந்து நிந்தனை செய்தான். கடைசியில் இருவருக்குமிடையில் நடந்த சண்டையில் கிருஷ்ணனுடைய சக்கராயுதமான சுதர்சனம், சிசுபாலன் தலையை அறுத்து வீழ்த்தியது. அந்தப் படை மீண்டு வந்த சமயம் கிருஷ்ணன் விரல் ஒன்றில் காயம் செய்துவிட உதிரம் வழிந்தது.
திரெளபதி! நீ பக்கத்தில் நின்றவள், உன் கூறையைக் கிழித்துக் கட்டுப் போட்டுவிட்டாய். உதிரப் பெருக்கு நின்று விட்டது. அப்போது அந்த கிருஷ்ணன் உன்னைப் பார்த்து, " சகோதரி! இந்தக் கடனை என்றோ ஒருநாள் அடைத்தேயாக வேண்டும் அல்லவா?’ என்றான். அந்த வார்த்தைகளின் அர்த்தம் உனக்குப் புரியாமலா போய்விடும்?
யுதிஷ்டிரன் ராஜ ராஜனான மாமன்னராக, நீயோ பேரரசியானாய்.
யாகத்திற் கலந்து கொண்டவர்கள் விடைபெற்றுக் கொண்டு பெரும்பாலும் போய்விட்டார்கள். பகவான் வியாசரும் புறப்படமுன் யுதிஷ்டிரனிடம் வந்தார். பேசும்போது,
"மகனே! தொடர்ந்து வரும் பதின்மூன்று வருடங்களும் பயங்கரமானவை. கூடித்திரிய குலமே நாசமடையப் போகிறது. எல்லாமே காலத்தால் வருவனவே. எனினும் அவை உன்னையே மையமாகக் கொண்டு நிகழ இருக்கின்றன. அதற்கு இப்பொழுதிருந்தே உன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொள். அல்லது பெரிதும் வேதனைப்பட வேண்டிவரும்” என்று எச்சரித்துச் சென்றார். முனிவர்
64

போன பிறகு யுதிஷ்டிரன் தொடர்ந்து துயரில் மூழ்கிக் கிடந் தான். உன்னிடமும் , தம் பிமாரிடமும் அவர் சொன்னவைகளைக் கூறி “யாருக்கும் கோபம் வராதபடி நடந்து கொள்வதோடு எக்காரணத்துக்காகவும் யாரையும் கோபிப்பதில்லை" என்றும் பிரதிக்ஞை செய்து கொண்டான். இந்திரப் பிரஸ்தத்தில் நிகழ்ந்த யாகமும் அங்கே அரசர்கள் கொண்டுவந்து குவித்த செல்வங்களோடு பாண்டவ ரடைந்த புகழும், உன்னைப் பற்றிய நினைவுகளும் துரியோதனனை வேரறுத்துக் கொண்டிருந்தன. அணையாத நெருப்புத் தழலை விழுங்கியவன் போல அவன் துடித்துக் கொண்டேயிருந்தான்.
நீங்காமலே அவனைப் பற்றியிருந்த அந்தப் பொறாமை என்ற நோய்க்கு சகுனி மருந்து கண்டு பிடித்துவிட்டான். மகன் என்ற பாசத்தை வீசி திருதராஷ்டிரனைக் கொண்டே விதுரனைத் தூதராக அனுப்பி சூதுக்கென்பதையுஞ் சொல்லி பாண்டவர்களை அஸ்தினாபுரத்துக்கு அழைக்க வழிசெய்தான் அந்த சகுனி.
வியாசர் சொன்னவைகளை மனதில் வைத்துக் கொண்டு யாருக்குமே வெறுப்பு உண்டாகாதவாறு நடக்க வேண்டும் என்ற பிரதிக்னைப்படி மறுக்காமலே புறப்பட்டீர்கள்.
"காலத்தின் கட்டளைகளை யாராலும் நிறுத்திவிட முடியாது. நிகழ்ச்சிகளின் அடிக்கல் எப்பொழுதோ நாட்டப்பட்டு விடுகிறது. முடிவை நோக்கி காலம் அடித்துக்கொண்டே செல்லும். பாக்கியமோ துர்ப்பாக்கியமோ விதி வகுத்ததே." வியாச பகவானது இந்த வார்த்தைகளை நீயும் மறக்க மாட்டாய். உன் சுயம்வரத்தன்று இவள் வாழ அல்ல, வாழ்விக்கவே வந்தவள் என்று கிருஷ்ணன் சொன்னதை நிரூபிக்க காலமே உங்களைப் பின்னால் நின்று தள்ளிச் சென்றதாகவும் இருக்கலாம்.
பீஷ்மர், துரோணர், கிருபர் எல்லோருமே அந்த அரங்கில் இருந்து பிசங்கியவர்கள் தாம். ஆடும்போது துரியோதனுக்காக அதிபாதகனான சகுனியே சூதை ஆடினான். யுதிஷ்டிரன் நாடு, நகரம் எல்லாமே போனபிறகு சகோதரரையும் தன்னையுமே பணயமாக வைத்து இழந்து விட்டான். எதுவும் பணயம் வைக்க இல் லாத நிலை. யுதிஷ் டிரன்
65

Page 49
செயலிழந்தவனாயிருந்தான். புதிதாகக் கண்டவன் போல சகுனி சொன்னான்: "ஏன்? திரெளபதியையும் வைத்துப் பார்க்கலாமல்லவா?"
கூடித்திரிய குலத்தை விழுங்கிவிட வாயைப் பிளந்தபடி நின்ற நியதி பின்னே நின்று தூண்ட மகா மேதையான தரும ராஜன் "ஆம்" என்பது போல தலையை அசைத்தான்.
அதிலும் சகுனிக்கே வெற்றி கிடைத்தது. புழுநெளியும் வாயைத் திறந்து நரகம் சிரித்தது போல சகுனி சிரித்தான். அவனது சிரிப் பொலி அனைவர் எலும்புகளையும் ஊடுருவி மச்சை வரை சென்று எரியூட்டியது. அப்போது துள்ளி எழுந்த துரியோதனின் தோற்றம் நரகத்தையே நினைவூட்டியது.
தேர்ப்பாகனான பிரதிகாமியைப் பார்த்துச் சொன்னான். அவன் குரலும் அபஸ்வரமாகவே ஒலித்தது.
"திரெளபதியிடம் போடா, சூதில் எனக்கு அடிமை -தாசி ஆகிவிட்டாளென்பதைச் சொல். என் கட்டளை என்று உடனே அழைத்து வா."
பிரதி காமி வேதனையோடு உன்னிடம் வந்து எல்லாவற்றையும் சொன்னான்.
நீ பதறாமலே நின்று நிகழ்ந்தவற்றைக் கேட்டபின் "தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா? என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா என்பதை சூதாடிய அரசரிடமே கேட்டு வா" என்று அவனை அனுப்பி விட்டாய்.
தேரோட்டி தனியாகவே வரக் கண்ட துரியோதனன் கோபத்தோடு எழுந்தான். ஆயினும் பிரதிகாமி நீ கேட்டதை யுதிஷ்டிரனுக்கும் கேட்கும்படி சொல்லிவிட்டான்.
யுதிஷ்டிரன் தலை நிமிரவில்லை. துரியோதனனோ கொதி கொண்டு பொங்கி நின்று பேசினான். “போடா, போய் திரெளபதி என்ற தாசியிடம் சொல். கேட்கவேண்டியதை இங்கேயே வந்து கேட்கட்டும். அவள் சபைக்கு வரவே வேண்டும்."
o6

பிரதிகாமி கலங்கிய கண்களோடு மீண்டும் உன்னிடம் வந்து யுதிஷ்டிரன் மெளனமாயிருந்ததையும் துரியோதனன் பேசிய கொடிய வார்த்தைகளையும் சொன்னான்.
"அப்படியானால் சபையிலுள்ள பெரியவர்களிடம் பதில் கேட்டு வா" என்று அவனை மீண்டும் திருப்பி விட்டாய்.
மறுபடியும் அவன் தனியே சென்றதும் புலி போல் மாறிய துரியோதனன் உறுமிக் கொண்டே கடுரமான குரலில் துச்சாதனனைக் கூவினான். 'தம்பி, இந்த மடையன் வீமனைக் கண்டு பயப்படுகிறான். நீ போய் அவளை இங்கே இழுத்து
of IT.'
துரியோதனன் சொல்லி முடிக்குமுன் துச்சாதனன் துள்ளி எழுந்து பாய்ந்து சென்றான்.
தருமந்தெரிந்த, அடக்கவல்ல பெரியவர்களைக் காலம் எவ்விதத்திலோ செயலற்றிருக்கச் செய்துவிட்டது.
துச்சாதனன் வந்த வேகத்தையும் அவன் கோலத்தையுங் கண்ட பிறகும், மா மகளே! நீ அவனை மனிதனாகவே மதித்துப் பேசினாய். "துச்சாதனா! ஸ்நானஞ் செய்யாத நிலையில் ஒற்றைத் துகிலோடிருக்கிறேன். சபைக்கு வர முடியாதல்லவா’ என்று கேட்டாய். முடனும் பாவியுமான அவன், ஆணவம் மலையாகி வளர நின்று வாயில் வந்தபடி பேசினான்.
"நீ அண்ணனுக்கு அடிமை-தாசியெடீ. ஐந்து பேருக்கு மனைவியான உனக்கு நெறி, மானம், வெட்கம் என்று ஏதும் gD GðornT?”
அதன் பிறகும் நீ அவனைப் பார்த்தபடி அதிலேயே நின்றாய். அதற்குள் அவன் வெறி நாயாக மாறி உன்னை நோக்கி வந்தான். உடனே நீ காந்தாரியின் அந்தப்புரத்துக்கு ஓடினாய். அவனும் தொடர்ந்து ஓடி வந்து உன் கூந்தலை எட்டிப் பிடித்து விட்டான். பிடித்த கையை விடாமலே உன்னை இழுத்து வந்து சபை நடுவில் நிறுத்தினான் அல்லவா?
புயல் நடுவில் அகப்பட்ட துண்டு முகில் போல உன் இனிய இயல்பு சிதறி அழிய நீ ரவுத்திராகாரமாக மாறிக் கொண்டிருந்தாய். யுதிஷ்டிரன் தலை நிமிரவில்லை. வீமன்,
67

Page 50
அர்ச்சுனன் கண்கள் தழலாகி ஒளிர்ந்தன. நகுல சகாதேவர் நெட்டுயிர்த்தபடி இருந்தனர். பெரியவர்கள் என்றிருந்தவர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள முடியாத அவலநிலையில் உயிரற்றவர்களாகி இருந்தார்கள்.
துரியோதனனை ஆணவ வெறி இருப்புக் கொள்ள விடவில்லை. எழுந்தான். உன்னை உற்றுநோக்கியபடி வாயைத் திறந்தான். "அடி மானமற்றவளே. இப்போது நீ என் அடிமை; தாசி. என்தாசிகள் இருக்கும் இடமே இனி நீயும் தங்குமிடம்."
அவ்வளவில் துச்சாதனனைப் பார்த்து, “தம்பீ! இவளை - என் அடிமைத் தாசியை, இழுத்துவந்து என் தொடை மேல் இருக்கவை' என்று தன் தொடையைத் தட்டிக் காட்டியபடி சிரித்தான். விதுரன் எழுந்து நின்று "மூடனே, யமனை நீயாகவே அழைக்கிறாய்" என்று எச்சரித்தார்.
துரியோதனன் தம்பியருள் ஒருவனான விகர்ணன் சபையிலுள்ளவர்களிடம் உனக்காக நியாயங்கள் கேட்டான். அதற்குள் அங்க மன்னனான கர்ணன் ஓடிவந்து விகர்ணனைப் பேசவிடாது நிறுத்திவிட்டான்.
துரியோதனன் மீண்டும் எழுந்தான். அவன் வாய் வழி வந்த வார்த்தைகளில் நரகத்தின் முதிர்ந்த மயிர்களே ஒட்டிக் கிடந்தன.
"தம்பி துச்சாதனா! ஐந்து பேருக்கு மனைவியானவளுக்கு மானம் வெட்கம் ஏது? இவள் துகிலை உரி. என் அடிமை மேலாடையின்றி நிற்பதை நானும் பார்க்கவேண்டும்”
தொடர்ந்து கர்ணனுடைய குரல் பிண வெடில் வீச எழுந் தது. "துச்சாதனா! அடிமைகளான பாண்டவரது அங்க வஸ்திரங்களைப் பறித்து மாமாவிடம் கொடு” என்று சொல்லித் திரும்பினான். எதிரில் நீ நின்றாய். அழியாத பழியையே சுமந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன.
"இவள் ஐவருக்கும் பொதுப்பெண். வேசி; வெட்கம், மானம் என்ற பேச்சுக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லை. துகிலை முழுதாக உரிந்துவிடு"
நரகத்தை நிரந்தரமாக்க முயன்று கொண்டிருந்த சகுனியும் துரியோதனனின் சகாக்களும் கண்களை அகல விரித்துக் கூர்மை செய்து கொண்டு உன்னையே பார்த்துக்கொண்டி
68

ருந்தார்கள். பெரியவர்கள் என்றிருந்தவர்கள் நீர் சொரிந்த கண்களை முடியவாறே தலையைத் தொங்கப்போட்டபடி குனிந்திருந்தார்கள். ஊருக்குள் நுழைந்த பைசாசங்கள் போலவே துரியோதனனைச் சேர்ந்தவர்கள் அங்கே காணப்பட்டார்கள். பாவியும் மூடனுமாகிய துச்சாதனன் பெரும் மகிழ்ச்சியோடு முன்னரிலும் கம்பீரமாக நின்று வெறிக்கப் பார்த்துவிட்டு தன் நீசக் கரங்களை உன் பக்கமாக அசைத்தான்.
அக்கினி பெற்றெடுத்த தவக்கனலே! உடனே உன் தெய்வ வாயிலிருந்து பிறந்த 'நாராயணா' என்ற இனிக்கும் திருநாமம் அணுமுதல் விசுவமும் நிறைவுறப் பரந்து நீக்கமற ஒலித்தது.
எங்குமாய் எல்லாமாய், உன்னில் வேறாகாத மூலமும் முடிவும் தானேயான ஒன்றில் ஒன்றாகும் 'பரிபூரண சரணாகதி சித்திக்க மனமழிந்தவளாய் நீ பரிபூரணியாகவே நின்றாய்.
9
துச்சாதனன் துகிலைப் பிடித்து இழுத்தான். அது வளர்ந்து கொண்டேயிருந்தது. அவன் ஓயாமலே இழுத்தான். அது குறையாமலே தொடாந்து வளர்ந்து கொண்டிருந்தது.
“இந்தப் பிரபஞ்சத்தின் பரம ரகஸ்யமான பெண்மையின் மனித உருவம் நீ" என பரமாத்மனான கிருஷ்ணனால் மதிக்கப்பட்டவள் அல்லவா நீ.
சிசுபால வதம் நிகழ்ந்த சமயம் காயப்பட்ட கைக்கு உன் கூறையைக் கிழித்துக் கட்டுப்போட்டபோது, "சகோதரி தக்க சமயத்தில் இந்தக் கடனை நான் தந்தே தீர்ப்பேன்’ என்று அந்தக் கிருஷ்ணன் அன்று சொல்லி வைத்தது இங்கே நடந்தது.
நூல் ஒன்றுக்கு ஆயிரமாக சேலைகள் வளர்ந்தன. துச் சாதனன் களைத்து விழுந்தே போனான். துகிலை உரிந்து உன்னை அவமானஞ் செய்ய முயன்ற துச்சாதனன் தான் தன்னோடு தன் குலத்தவர் துகில்களையும் உரிந்து விட்டான். அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் படு நாசத்தை நோக்கிஓடிக் கொண்டிருப்பதை அவர்களால் அப்போது உணர முடியவில்லை.
69

Page 51
நீயோ சபையின் நடுவில் காலருத்திரனின் பத்தினியே போல, அவிழ்ந்து பரந்த கூந்தலோடும் கோபம் ஜவலிக்கும் கண்களோடும் நின்றாய். பெரியவர்கள் எழுந்து நின்று “பரதேவதே!" என்று கையெடுத்து உன்னைக் கும்பிட்டார்கள். துரியோதனனாதியோர் திசை மாறி திரும்பி நின்றார்கள். தர்மராஜனான யுதிஷ்டிரன் தலையை நிமிர்த்தினான். அவன் கண்களில் நீர் மல்கியிருந்தது. முகத்தில் தர்மத்தின் ஒளிபரவ ஆரம்பித்திருந்தது.
அப்போது நீ சாபமிட்டிருந்தால் உடனடியாகப் பலன் நிகழ்ந்திருக்கும். வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு 'இது அடிக்கல் நாட்டுவிழா' என்று கருதி சபிக்காமல் நீ அடங்கியிருந்தாய் போலும். ஆனால் உன் வாயிலிருந்து சில வார்த்தைகளே தழலாக உதிர்ந்தன. சோர்ந்த நிலையில் கிடந்த துச்சாதனனைப் பார்த்து “துச்சாதனா! நீ பிடித்திழுக்க அவிழ்ந்த இந்தக் கூந்தல் உன் உடலிலிருந்து எடுத்த குருதி தடவியே முடிக்கப்படும்" என்றாய்.
இது கூட உன்குரல் அல்ல, விதியின் குரலே தான்.
அப்போது வீமனும் அர்ச்சுனனும் உன்னையே மையமாக வைத்து சபதங்களைச் செய்தார்கள். அந்த நேரம் தீராத வேதனையோடு விம்மிப் பொருமி அழுதபடி காந்தாரி உன்னையே நோக்கி தடுமாறி வந்தாள். நீ திரும்பினாய். அவளை யாரோ அணைத்து வழி நடத்த கைகளை நீட்டியவளாய், "எங்கள் குலக் கொழுந்தே' என்று கூவி உன்னைத் தழுவிய பின் பேச வராமலே நின்றவள் மெல்ல அழுகையினுடாகவே பேசினாள்.
"குலமயிலே, அஸ்தினாபுரத்தின் தவமே! எங்கள் தெய்வீகமே! என் பாவிகளான பிள்ளைகள் இத்தனை படுபாதகங்களை, கொடுமைகளைச் செய்துவிட்டார்களே! உன்னை இரந்து நிற்கும் உன் பெரியத்தைக்காக பொருத்தருள் அம்மா. சாபமிட்டு விடாதே. நீ சபித்திருந்தால் இவர்கள் மட்டுமா, அஸ்தினாபுரமே அழிந்து விடாதா?’ என்று வேண்டிய படியே திரும்பினாள்.
துரியோதனின் குரல் காதிலே கேட்டதும்,
70.

"அடபாவி, பாதகனே, அண்ணியின் சேலையை உரியச் சொன்ன உன் தம்பியை கூப்பிட்டு, அம்மாவின் சேலையையும் உரியெடா என்று சொல்லடா. உன்னைப் பெற்றதால் என் வயிறு நரகக்குழியாகி விட்டதே! உலகம் உள்ளவும் தீராத வசையையும் பாவி என்ற பெயரையுமல்லாவா பெற்றுவிட்டேன்" என்று சொல்லி உன்னை அணைத்த கையை எடுக்காமலே பாவத்தின் விளை நிலமாகிய திருதராஷ்டிரன் இருக்குமிடத்துக்குப் போய்ச் சேர்ந்தாள்.
திருதராஷ்டிரனும் தடுமாறி எழுந்து உன்னைக் கும்பிட்டான். பிறகு, "அருமை மகளே! எனக்குக் கண்ணும் இல் லை, மனமும் தடு மாறி விட்டது. அவர் கள் பெருங் குற்றங்களையே செய்தாலும் உன் அருமைக் கணவர்களின் சகோதரர்கள் தானே, தாயைப்போல அவர்களை மன்னிப்பாய். அம்மா, சாபம் கொடுத்துவிடாதே. நீ விரும்பியதெல்லாம் நான் தர இருக்கிறேன் கேட்பாயாக" என்று தன் பிள்ளைகளுக்கு நாசம் வந்து விடாமலே தொழுது மன்றாடினான்.
நீ உங்களைப் பீடித்த அடிமைத் தளைகளோடு உன் கணவரது படைக்கலங்கைளயும் விடுவித்துக் கொண்டாய். திருதராஷ்டிரன் மேலும் கேள் என்றான். நீ மறுத்துவிட்டாய். ஆனால் அவன் யுதிஷ்டிரன் சூதில் இழந்தவை அனைத்தையுமே தருகிறேன் எனறு சொல்லி மெலிந்தான்.
நீங்கள் இந்திரப் பிரஸ்தத்துக்குப் புறப்பட ஆயத்தம் செய்தீர்கள்.
இத்தனைக்கும் உங்களை அழைத்துச் சென்றது எதுவோ அது முழுமையான முடிவை நோக்கி மீண்டும் ஒரு சூதுக்கு வழி செய்தது. சகுனிதான் அதற்கும் வழி வகுத்தான். துரியோதனன் விரும்பியவாறே திருதராஷ்டிரன் மற்றொரு சூதுக்கு உன் கணவனைக் கட்டளை செய்தான். மறு சூதின் நிபந்தனை இது:-
“வென்றவர் அரசு முழுவதையும் ஆள்வது. தோற்றவர் பன்னிரண்டு வருட வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் செய்யவேண்டும். அஞ்ஞாதவாச காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டால் மீண்டும் வனவாசமும் அஞ்ஞாதவாசமும் தொடர வேண்டியதே'
71

Page 52
முடிவு இப்படித்தான் வரும் என்பதைத் தெரிந்து கொண்டே யுதிஷ்டிரன் ஆட்டத்தில் கலந்து கொண்டான்.
உன் சபதம், வீமார்ச்சுனர்களுடைய சபதங்கள் நிறைவு பெற, கூடித்திரிய குல நாசம் நிகழ, காலம் முன்னரே நட்டுவைத்த அடிக்கல்லுக்குத் துணையாக யுதிஷ்டிரனுடைய தோல்வி இன்றியமையாததாக இருந்தது. அதனால் அந்த ஆட்டமும் தோல்வியாகவே முடிந்தது.
அரச மரியாதைகளோடு இந்திரப் பிரஸ்தம் செல்ல வேண்டிய நீங்கள் அனைத்தையும் இழந்தவர்களாய் வனம் நோக்கிநடந்தீர்கள், குந்தி உங்கேளாடு வரவில்லை. விதுரர் மனையில் தங்கிவிட்டாள்.
யுதிஷ்டிரன் வஸ்திரத்தினாலே முகத்தை முடிக்கொண்டும், வீமன் கைகளைப் பிசைந்து கொண்டும், அர்ச்சுனன் மணலைத் தூவிக்கொண்டும் நகுலசகாதேவர் உடல் முழுதும் புழுதியை பூசிக்கொண்டும் நடந்தார்கள். நீயோ அவிழ்ந்து பரந்து கிடந்த உன் கூந்தலால் முகத்தை முடி மறைத்தவளாய், குனிந்து நிலத்தைப் பார்த்தவாறே நடந்தாய். அது இத்தனை காலமும் அஸ்தினாபுரத்தில் வாழ்ந்த தர்மதேவதை குடிபெயர்ந்து காட்டை நோக்கிச் செல்வதாகவே தெரிந்தது. உங்களைத் தொடர்ந்து பின்னாக தெளமியர் யமனைக் குறித்த சாம கீதங்களைப் பாடிக்கொண்டே வந்தார்.
மக்கள் வழி நெடுகவே நின்றார்கள். உன்னைப் பார்த்து அழாத பேர்களே இல்லை. உனது நீண்ட கரிய கூந்தலில், அமுதமே ஒழுகிய கண்களில் 'பழிக்குப்பழி' என்ற அகூடிரங்கள் தெளிவாகத் தெரிந்தன.
உங்களுக்கு வனவாசம் பரம சந்தோஷமாகவே கழிந்தது. எப்போதுமே முனிவர்கள், அந்தணர்கள், அன்பர்கள் என்று உங்களைச் சூழ்ந்தபடி இருந்தார்கள். உணவிலே கூடக் குறை அணுகாதவாறு தெய்வமே ஒரு அக்ஷய பாத்திரத்தையும் தந்து உதவியது.
நீங்கள் அரசிழந்து நிலை கலங்கி அல்லற்படுவதை நேருக்கு நேர் பார்ப்பதோடு தன் செல்வப் பொலிவையும் காட்ட வந்த துரியோதனன் அவமானப் பட்டபிறகும் உங்களுக்கு எத்தனை கேடு சூழ்ந்தான்.
72

நீங்கள் வனம் புகுந்த செய்தி துவாரகைக்கு எட்டியதும் கிருஷ்ணன் உங்களைக் காணப் புறப்பட்டான். திருஷ்டத்துய்மன், சாத்தகி முதலிய உறவினர்களும் அன்பர்களும் கூடி வந்தார்கள். நீ கிருஷ்ணனைக் கண்டாய். உள்ளே அடங்கிக் கிடந்த வேதனைகள் வெடித் தெழுந்தன. விம்மிப் பொருமி கண்களால் நீர் ஒழுக,
"பரமாத்மனே! நீ கருணையின் இலக்கணமல்லவா? தர்மம், சத்தியம் என்பவற்றின் மனித உருவமும் பிரபஞ்ச மூலத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் சராசரங்களின் முழுமையான வடிவமும் நீயல்லவா? பாதையும் லக்ஷயமும் நீதானே? தினமும் கதிரவன் உன்னிடமிருந்தே உதித்து அஸ் த மிப் பதும் உன் னுள் ளே யல் ல வா ? எல்லாமாய் எல்லாமறிந்த" என்ற அளவில் பேசமுடியாது திணறினாயே.
அப்போது உன் பக்கமாக அவன் வந்து கூந்தலோடு உன் தலையையுந் தடவி கண்ணிரைத் தன் கையினாலே துடைத்து விட்டு,"சகோதரி! நீ யாகாக்கினியில் ஜநித்த உதய தாரகை அல்லவா? எல்லா அவமானமும் நிகழ்ந்தது எனக்கே. நீயோ வாழ்வின் ஒளியானவள். நிலம், நீர், காற்று, தீ, ஆகாசம் இவற்றை முழுமையாக எவன் ஒருவனால் அவமதிக்க முடியும்? திரெளபதி! நீ இந்தப் பிரபஞ்சத்தின் பெண்மையின் மனித உருவம். மனித குலம் என்றென்றும் உன்னைப் போற்றவே போகிறது” என்று எப்படியோ உன் வேதனையை அவன் தன் கருணை என்ற அமுத நீரினாலே கழுவி விட்டான்.
கிருஷ்ணனையே அறிந்து கொள்ளாத உலகம் உன்னை அறிந்து கொள்ளாதது ஆச்சரியமே யல்ல. ஒருநாள், பாண்டவர்கள் இல்லாத தனிமையில் ஜயத்திரன் உன்னைக் கண்டான். பாவம், அவன் மனிதனாக உருவெடுத்த மிருகங்களில் ஒன்றுதானே.
உன்னைக் கண்டதும் நீ மகிழ்வாய் என்று இப்படிப் பேசினான்:-
"திரெளபதி ! நீ பேரரசனான துருபதன் மகளல்லவா? பெரிய அரண்மனையில் செளகர்யமாக வாழ்ந்தவள். காட்டுக் குடிசையில் இப்படி நீ வாழலாமா? உனக்கு முழுமையான
73

Page 53
இன்ப வாழ்வு தர என்னால் முடியும். என் அரண்மனைக்கே வந்துவிடு."
உடனே நீ சொன்னாய்:- “எனக்கு நீ சுக வாழ்வு தர முயல்வதை விட, பாண்டவர்கள் கண்ணிலே படமுன் போய் விட்டால் உன்னுடைய சுகவாழ்வு நீடிக்குமல்லவா?
அவன் கோபித்து பலவந்தமாக உன்னைத் தன் தேரில் ஏற்றிவிட்டான். சிறிது போகமுன் வீமார்ச்சுனர்களால் அவன் சிறைப்படுத்தப் பட்டான். பிறகு மரண தண்டனையிலிருந்து அவனை விடுவித்தவள் நீதானே. மன்னிக்க முடியாத கொடுமைகளை உனக்குச் செய்த துரியோதனன் தங்கை துச்சலைக்காக நீ செய்த தெய்வச் செயலல்லவா அது.
ஒரு சமயம் உங்களைப் பார்க்க வந்த கிருஷ்ணனும், மற்றொரு சமயம் அங்கே வந்த வியாஸ் பகவானும், வரப் போகும் பயங்கரமான யுத்தத் தின் பொருட்டு திவ்வியாஸ்திரங்களை, தவத்தினாலாயே பெற வேண்டும் என்று அர்ச்சுனனிடம் சொல்லியிருந்தார்கள். அதன்படி அர்ச் சுனன் தவத் துக்குப் புறப் பட்டான் . முதலில் யுதிஷ்டிரனிடமும் மற்றச் சகோதரரிடமும் சொல்லி விடைபெற்ற பின் உன்னிடமும் வந்து சொன்னான். அப்போது,
"உனக்கு எல்லாமே மங்களமாக கைகூடட்டும். உன்னைப் பெற்ற சமயம், உன்தாய் எதையெல்லாம் விரும்பினாளோ, அவை அனைத்தையும், முழுமையாக நீ அடைவாயாக, எங்கள் வாழ்வு, சுகம், மானம், ஐஸ்வரியம், அனைத்துக்கும் ஆதாரம் நீயே தான். திவ்யாஸ்திரங்களோடு கூேழ்மமாக விரைவில் வருவாயாக’ என்று தாயாகவே நின்று அவனை ஆசீர்வதித்து வழியனுப்பினாய் அல்லவா?
மற்றொரு சமயம், தெளமியர் மட்டும் ஆசிரமத்தில் உங்களோடிருந்தார். யுதிஷ்டிரனுக்கு எதிரில் சற்றுத்தள்ளி நீ இருந்தாய். சிறிது நேரம் உன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தர்மராஜன் சொன்னான்:
"திரெளபதி! நீ அரசரது சிரசுக்கே உரிய கிரீடத்தின் முகப்பிலோ, அவர்கள் மார்பிலே அணிவதற்கமைந்த பதக்கத்தின் நடுவிலோ வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய
74

மிக உயர்ந்த தெய்வ மணியான அர தனமேயன்றி வேறல்ல” என்றளவில் மேலும் பேச்சைத்தொடர விடாமல் நீ குறுக்கிட்டுப் பேச ஆரம்பித்தாய்.
எல்லோரும் உன்னையே பார்த்தபடி இருந்தார்கள்.
"ஸ்வாமி என்னை எங்கேதான் வைக்க வேண்டுமென்பதை நானேதான் நன்றாக அறிவேன்'. 'அப்படியானால்’ என்று கேட்பது போல யுதிஷ்டிரன் உன்னைப் பார்த்தான். உடனே,
“உங்கள் பொன்னான பாதங்களின் கீழல்லவா எனக்குரிய இடம்” என்றாய். அப்போது தர்மராஜன் குழைந்த குரலில், "திரெளபதி! அர தனம் கூட உனக்கு ஒப்பில்லை என்பதை இப்போதுதான் அறிகிறேன்" என்றான். "அம்மா நீ வேத தர்மத்தை நிலை செய்ய வந்த தர்மவதியேதான்" என்றார் தெளமியர்.
வனவாச காலத்தில் எத்தனை அற்புதமாயமைந்திருந்தது உனது வாழ்வு. கடமைகள் என்றாவது உனக்கு சுமையாக இருந்ததுண்டா ? வேலை என்ற பேச்சுக்கே இடம் இல்லாதபடி அனைத்தையும் நிகழவிட்டாய். எப்படி அந்த லகூழ்மணன் அண்ணனுக்கும் அண்ணிக்குமாக அந்தக் கர்மக் கடலுக்குள் தன்னை மறந்து முழுகிக்கிடந்தானோ, அப்படியேதான் அமுதானவளே, நீயும் உன்னை உன்னவர்களுக்கு அர்ப்பணித்து காலத்தை மறந்து வாழாமல் வாழ்ந்தாய்.
அரசு என்ற பந்திக்கும் வாழ்வை விட வனவாசம் இன்பமயமாக அமைந்துவிட முக்கிய காரணமாயமைந்தவள் நீயே தான்.
வனவாசம் முடியும் கால எல்லை மெல்ல மெல்ல அணுகிக் கொண்டிருந்தது. கூட இருந்தவர்களை வாழத்தக்கதாக வேறு வேறு நாடுகளுக்குப் போக வழி செய்துவிட்டு தெளமியரோடும் மத்ஸ்ய நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தீர்கள். வழி நடந்த களை, ஒரு மர நிழலில் எல்லோரும் உட்கார்ந்தீர்கள்.
75

Page 54
திரெளபதி! தன்னெதிரில் இருந்த உன்னை- உன் முகத்தைப்பார்த்ததும் யுதிஷ்டிரன் பெரிதும் சிரமப்பட்டான், முதலில் பேச்சே வராமல் கஷ்டப்பட்டவன், பிறகு ஆரம்பித்தான்: "துன்பத்தின் காற்றே படாமல் துருபதனால் அருமை செய்து வளர்க்கப்பட்டவளே! தோழியர், செவிலியர், பணியாளர் சூழ்ந்து தொண்டுகள் செய்ய வாழ்ந்த செல்வதி நீ ஏழைப்பெண் போல காட்டுக் குடிசையிலே தனித்து எல்லாருக்கும் பணி செய்து வாழும் துன்பச் சுமையை உன் தலைமீது ஏற்றிய பாவி நான்தானே.”
பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் குரல் கனக்க கண்கள் கலங்கின. அதுவரை மெளனமாக இருந்த நீ திடீரென எழுந்து நின்று பேசினாய்.
"ஸ்வாமி. இந்த வனவாசத்திலே நான்அனுபவித்த இனிக்கும் தெய்வீக அனுபவங்கள் மீண்டும் எனக்குக் கிடைக்கவா போகின்றன. தெய்வக் குழந்தைகளாக உங்களை வைத்து உணவு தந்து துரங்க வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த ஆநந்த அனுபவம் அரண்மனையில் எனக்குக் கிடைத்ததா? ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள்தான் நான். ஆனால் தாய்மையின் இனிய தியாக இன்பத்தை உணர அங்கே கிடைத்ததா? முனிவர் அந்தணர் அன்பர்கள் என வந்த எல்லாருக்கும் உணவு பரிமாறி எச்சில் மாற்றி உங்களையும் உண்ணச் செய்து கடைசியில் நான் உணவு கொள்ளும் இன்பம் சாதாரணமானதா ? தாய்மை, தியாகம், அன்பு, பணிவு பொறுமை, அடக்கம், மன்னிக்கும் மகாவீரம் எல்லாமே உங்களால் பெற்ற பேறுகளல்லவா ?
ஆநந்தக் கண்ணிர் அரும்ப எல்லோருமே உன்னைப் பார்த்தபடி புளகித்திருந்தார்கள்.
தர்மராஜன் மிருதுவான குரலில் பேசினான்:
“பாக்யவதி உன்னோடு வைத்துப் பார்க்கும் போது இந்த ராஜ்ய லக்ஷமியும் மற்றும் அனைத்துமே தூசாக எனக்குப் படுகின்றன."
தன் அருமைக் குழந்தையை அணைக்க தாய் பாசத்தோடு நீட்டிய கைகளே போல உன்பக்கமாக அந்தக் கருணை வள்ளலின் இரு கரங்களும் நீண்டன.
76

பரம தர்ம ரூபிணியாய் தாய்த்தெய்வமாய் எதிரில் நின்ற உன்னைப் பார்த்த தெளமியர் 'செளபாக்கியவதி' என்று உருகி நின்று ஆசீர்வதித்தார்.
அஞ்ஞாதவாச காலத்தில் தங்கள் சிறப்பியல்புகளை எப்படி மறைத்துக் கொள்ள முடியும் என்று யுதிஷ்டிரன் பெரிதும் கவலை கொண்டான். பிறகு தர்மராஜா, தான் கங்கன் என்ற சந்நியாசியாகவும், வீமன் பலாயனன் என்ற சமையற்காரனாகவும், அர்ச்சுனன் நாட்டியம் சங்கீதம் வல்ல நபுஞ்சகனாகிய பிருகன்னளையாகவும், நகுலசகாதேவர் குதிரைகள் மாடுகளைக் கவனிக்கும் தாமக்கிரந்தி தந்திரிபாலன் எனவும் இந்திரப்பிரஸ்த அரண்மனையில் வாழ்ந்ததாகச் சொல்லி விராடனிடம் வேலை பெற முடிவு செய்தார்கள். மிருதுவானவளும் பேரழகியும் ராஜகுமாரியுமான உன்னை எப்படி மறைக்க முடியும் என்ற கலக்கத்தில் இருந்த யுதிஷ்டிரனைப் பார்த்து நீ சொன்னாய்:-
“என்னைப் பற்றிய கவலை வேண்டாம் . நான் திரெளபதியின் மாளிகையில் 'அவளுக்குப் பணி செய்தவள்’ என்று சொல்லி அரசியின் அந்தப்புரத்தில் ஸைரந்திரியாக இருப்பேன். அந்தப்புரப் பெண்களுக்கு என்ன பணியானாலும் செய்து மகிழப்பேசி என் கற்பையும் காத்துக் கொள்வேன்"
உன் வார்த்தைகள் அவர்களை மகிழச் செய்தன. பிறகு திட்டப்படி எல்லோரும் வேலைகளில் அமர்ந்து விட்டீர்கள்.
திரெளபதி உன்னையும் நீ பணிபுரியும் பாங்கையும் பார்த்த அரசியும் அந்தப்புரப் பெண்களும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். பிறகு திரெளபதி தேவியால் மதிக் கப் பட்ட  ைஸ ர ந் திா? அல் ல வா எ ன் று பேசிக்கொண்டார்கள்.
ஒருநாள் அரசியான சுதேஷ்டினை உன்னிடம் இப்படிக் கேட்டாள்:
"ஸைரந்திரி திரெளபதியால் பாண்டவர்களுக்குள் ஒரு போதாவது மணக்கீறல் உண்டானதில்லையா?”
77

Page 55
"அப்படி என்றேனும் நடந்ததாக நானறிந்ததில்லை” என்று உடனடியாகவே அலகூழியமாக நீ பதில் கொடுத்து விட்டாய்.
"அப்படியானால் திரெளபதி உண்மையாகவே போற்றப் படத் தக்கவள்’ என்றாள் அந்த அரசி.
காலம் தன்னியல்பில் நகர்ந்து கொண்டே இருந்தது. அஞ்ஞாதவாச கால எல்லைக் கோடும் மெல்ல அருகாகி வந்து விட்டது.
அன்று நீ, அரசி சுதேஷ்டிணையை அலங்கரித்துக் கொண்டிருந்தாய். எதிர்பாராத நிலையில் அரசியின் சகோதரனான கீசகன் அங்கே வந்து நுழைந்தான். எதிரில் நின்ற உன்னைக் கண்டதும் கண்களை வாங்காமலே அவன் கல்லாகி நிலைத்து நின்று விட்டான். நீ உடனே அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்றுவிட்டாய். அவனோ காம வசப்பட்டவனாய் சகோதரியிடம் விசாரித்து விட்டு,
“இவளையும் பணிப்பெண்ணாக வைத்திருக்கலாமா ? என்னிடமே அனுப்பிவிடு. அவளுக்குரிய ஸ்தானம் எது என்பதை நான் தான் அறிவேன்" என்றான்.
சுதேஷ்டிணை எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். அவன் காதுகள் எதையும் கேட்க மறுத்து விட்டன. அதிலிருந்தே உன்னைத் தேடிப் புறப்பட்டு எப்படியோ வந்து கண்டு விட்டான். கண்டதும் தான் படும் காம வேதனையை வார்த்தைகளிலே தோய்த்து உன் எதிரில் கொட்டினான். நீயோ அச்சம் அணுகாத நிலையில் நின்றே பேசினாய்.
"தவறாகவே என்மீது நீ ஆசை கொண்டுவிட்டாய். நான் பிறர் மனைவி என்பதோடு கற்பென்ற வஸ்திரத்தினாலே நீக்கமற என்னைப் போர்த்திக் கொண்டவள். என் கற்புக்கு இடையூறு வராதபடி காவலாக கந்தர்வர் ஐவர் இருக்கிறார்கள். நீ தவறு செய்ய முயன்றாலே நிச்சயமாகக் கொல்லப்படுவாய்"
அவன் உன் வார்த்தைகளை அலகூழியஞ் செய்துவிட்டு மீண்டும் சகோதரியிடம் போனான். கெஞ்சினான். உயிரையே விடுவேன் என்றான். தடுக்கவோ மறுக்கவோ முடியாத நிலையில் வேதனையோடு அனுப்புவதாக சம்மதந் தெரிவித்து அவனை அனுப்பி விட்டாள் அரசி.
78

சுதேஷ்டினை அன்று அஸ்தமித்த பின் உன்னை வரச்செய்து " நீ இப்போதே கீசகனது மாளிகைக்குப் போய் அங்கே தயாராக இருக்கும் மதுவை எடுத்து வா” என்று ஒரு அழகான பாத்திரத்தையும் உன்னிடம் தந்தாள். நீ மறுத்தாய். " இந்த நேரத்தில் போகமாட்டேன். எனக்கு பயமாக இருக்கிறது. வேறு யாரையாவது அனுப்புங்கள்" என்றாய். சுதேஷ்டிணை கோபித்துக் காட்டி வலிந்து உன்னையே அனுப்பி விட்டாள். நீ பயந்து கொண்டே சென்றாய்.
உன்னை அவன் கண்டதும் எல்லாவற்றையும் மறந்தவனாய் எழுந்து விட்டான். நீ சற்றே லிலகி நின்று தர்மம், கற்பு என எத்தனையோ சொல்லிப் பார்த்தாய். கடைசியில் உன் வாயிலிருந்து கோப வார்த்தைகளே வெளி வந்தன.
"நீயாகவே உன் மரணத்துக்கு அழைப்பை விடாதே. நாளைக்கு உன் பிணத்தில் விழுந்து உன் சகோதரி அழுவதற்கு வழி செய்யாதே" என்றாய். காமவேகம் கோபாவேசம் இரண் டும் கலந்த நிலையில் அவன் உன் னை அணுகமுயன்றான்.
நீ விராட மன்னன் இருந்த இடத்தை நோக்கி ஓடினாய். பின்னாக வந்தவன் அரசன் எதிரிலே வைத்து உன்னை உதைத்து விட்டான். நீ விழுந்து எழுந்தபோது உன் அதரத்தால் குருதி வழிந்துகொண்டிருந்தது. அன்று சுதேஷ்டிணை உன்னைக்கண்டதும் 'ஸைரந்திரி என்ன நடந்தது' என்று பயந்து கொண்டுதான் கேட்டாள்.
முகம், தோற்றம், குரல் எல்லாமே மாறிய நிலையில் நின்று நீ பதில் சொன்னாய்.
"முடியாது, போகவே மாட்டேன் என்றவளை போ போ என்று துரத்தினிர்கள். அஞ்சாமல் என்னை அவமானப்படுத்திய உங்கள் சகோதரனின் ஈமச்சடங்குக்கான ஆயத்தங்களை இப்பொழுதே செய்து வையுங்கள். இனி அவன் ஒருநாள் கூட உயிர்வாழ்ந்திருக்கப் போவதில்லை. அவன் சாகமுன் உதட்டில் வழிந்த உதிரம் துடைக்கப்படவே மாட்டாது. உடைகளையும் மாற்றமாட்டேன்."
79

Page 56
கொடூரமான உன் வார்த்தைகளைக் கேட்ட சுதேஷ்டிணை, “நானும் தவறுதான் செய்து விட்டேன். பொறுத்துக்கொள்” என மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டாள்.
நீயோ இரவோடிரவாக யாருமறியாமலே வீமனை எழுப்பி எல்லாவற்றையும் சொல்லியபின் "நாளை மறுநாள் அவன் சூரியோதத்தைக் காணமுடிந்தால் உங்கள் திரெளபதி அன்று அஸ்தனத்தைக் காணப்போவதில்லை” என்று சொல்லி விட்டாய்.
மறுநாள் இரவு நீயும் வீமனும் செய்த சூழ்ச்சியால் கீசகன் நடன சலைக்கு தனியாகவே வந்தான். அங்கே காத்திருந்த வீமனுக்கும் அவனுக்கும் நிகழ்ந்த தனிப்போரில் கீசகன் கொல்லப்பட்டான்.
அந்த இரவே நீ அங்கேயிருந்த காவலாளரை எழுப்பி “என்னை அவமதித்த கீசகனை எனக்குக் காவலாக இருக்கும் கந்தர்வர்கள் கொன்றுவிட்டார்கள்” என்றும் சொல்லி விட்டே வந்தாய்.
மறுநாள் ஸைரந்திரியின் கந்தர் வர்களால் கீசகன் மரணமான செய்தி எங்கும் பரவி விட்டது. உன்னைப் பார்க்கவே அஞ்சி எல்லோருமே நடுங்கினார்கள். "அவள் பார்வைக்கு நல்லவளாகத் தெரிந்தாலும் பயங்கரமானவள். அரண்மனையை விட்டு அகற்றிவிடுங்கள்” என்று அரசியிடம் பலர் முறையிட்டார்கள்.
சுதேஷ்டினை உன்னை மரியாதையாக அழைத்து “ அம்மா நீ நல்லவள்தான்; ஆனாலும் தயவு செய்து இந்த நாட்டை விட்டுப் போய்விடு” என்று இரந்து வேண்டினாள்.
நீயோ அஞ்ஞாதவாச கால எல்லையை மனத்துட் கொண்டு " இன்னும் சில நாட்களில் என்னை அழைத்துச்செல்ல என் கணவர் வந்துவிடுவர். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டாய்.
கீசகன் மரணச் செய்தி அஸ்தினாபுரத்துக்கு எட்டியதும் 'பாண்டவர் மத்ஸ்ய நாட்டிலேயே இருக்க வேண்டும்’ என்ற சந்தேகம் துரியோதனனாதியோருக்கு உண்டாகிவிட்டது. ஒரு படையெடுப்பை நிகழ்த்தினால் விராடனுக்காக போராட அவர்கள் வெளிவருவார்கள், கண்டு விடலாம் என எண்ணி ஒரு பெரிய யுத்தத்தையே துரியோதனன் ஆரம்பித்து வைத்தான்.
8በ

அஞ்ஞாதவாசகாலம் கழிந்த மறுநாளே அர்ச்சுனன் காண்டீபனாய்க் களத்தில் இறங்கினான். அந்த யுத்தத்தில், மச்சயந்திர லக்ஷயத்தை ஒரு அம்பினால் வீழ்த்தி உன் கையைப் பற்றிய புகழ் பூத்த அந்த வீரன் ஒருவனே தனித்து நின்று பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற வீரர்களோடு துரியோதனனையும் படைகளையும் ஒட அடித்து வாகை சூடினான்.
பரம சுந்தரியாகிய நீயும் உன் தெய்வக் கணவரும் வெளிப்பட்டதும் அரசமாளிகையும் மத்ஸயமும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.
உன்னை கட்டி அணைத்துக்கொண்டு சுதேஷ்டிணை சொன்னாள்:
“பேரரசியே! நீ எனக்குப் பணிப்பெண்ணாக இருக்க நான் எத்தனை தவத்தவளாக வேண்டும்." சொல்லும்போதே அவள் நெஞ்சம் உருகிக் கண்களால் வழிந்தது.
அப்போது உன்னைத் தழுவி நின்றவளை நீ இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டு “நீங்களும், அரசரும், அரண் மனையும் நாடுமே சேர்ந்து என் னையும் என் கணவரையும் அன்போடு ஒருவருட காலம் குறையே அணுகாதபடி காத்தீர்களே! இந்த நன்றிக்கடன் என்றுதான் தீருமோ” என்று உள்ளம் குளிர்ந்து கேட்டாயல்லவா?
அன்பு வெள்ளத்தில் முழுகித் திளைத்து ஒரு வரை ஒருவர் தழுவி அனைவரும் மகிழ்ந்து நின்ற நிலை கண்டு மத்ஸ்ய நாடே புளகம் பூத்து நின்றது.
அஸ்தினாபுர அரண்மனையில் துரியோதனனாதியோர் 'அஞ்ஞாதவாசகால எல்லைக்குள் கண்டு பிடித்துவிட்டோம்' என்று பொய் பேச ஆரம்பித்து விட்டார்கள். வேண்டுமென்றே அறிஞர் சொல்லையும் ஏற்க மறுத்தார்கள்.
அஸ்தினாபுரத்துக்கும் நீங்கள் இருந்த உபப்பிலாவியத்துக்கு மிடையில் மாறி மாறி தூதுவர் போய்வந்தார்கள். கடைசியில் கிருஷ்ணன் தானே சமாதானத் தூதனாகப் போகப் புறப்பட்டான். போர் நடந்தே தீரும் என்பதை சந்தேகமின்றித் தெரிந்திருந்தும் சமாதானம் பேச அவன் புறப்பட்டான்.
81

Page 57
உனக்கும் போர் நடக்கும் என்பது தெரியும். போரை நிறுத்தவே முடியாது; அது நடக்கவே செய்யும். 'உன் கூந்தலை நானே முடிப்பேன்’ என்று அவன் சொன்னதை நீ மறந்திருக்கவே மாட்டாய்.
'பொன்மான் என்று ஒன்று இல்லை’ என்பது ராமனுக்கும் சீதைக்கும் தெரியாததா? அதைப் பிடித்துத் தரும்படி சீதை கேட்டதும், லகூழ்மணன் தடுத்தும் கேட்காமல் ராமன் அதைத் தொடர்ந்ததும் போன்ற பரம ரகஸ்யந்தான் கிருஷ்ணனது சமாதானத்தூதும், அவனைத் தடுக்க நீ முயன்றதும்,
கிருஷ்ணன் அஸ்தினாபுரத்துக்குப் புறப்படுவதன் முன்னே நீ அவனிடம் ஓடிச்சென்றாய். சென்று,
"கேசவா! அந்தத் துஷ்டர்களுடைய கூட்டம் உன்னை அவமானப்படுத்தும். அதை நான் விரும்பவில்லை. என் கூந்தல் அவிழ்ந்து கிடக்கும்வரை அமைதி கிட்டக்கூடிய ஒன்றுதானா? அவிழ்ந்தபடி விரிந்து கிடக்கும் இந்தக் கூந்தல் திசைகளெங்கும் பாண்டவருக்கு அவமானத்தின் சின்னமாக விளங்கத்தான் வேண்டுமா?
"இந்தத் திரெளபதி, துருபதன் மகள், அக்கினியிற் பிறந்தவள், திருஷ்டத்துய்மன் தங்கை, மகாவீரர் ஐவர்தம் மனைவி, உன் பிரிய சகோதரியும் பக்தையுமானவள் ; குருவம்ஸத்தின் பாதுகாவலர், பெரியவர்கள் இருந்த சபையில் அவமானம் செய்யப்பட்டபோது, உன்னைத் தவிர மானங்காக்க சபையில் எழுந்தவர் யார்? அந்த சபைக்கு நீ போவதை நான் விரும்பவில்லை" என்று நீ சொன்னாய்.
அப்போது கிருஷ்ணன் உன்னைப் பார்த்து “சகோதரி, உனக்கு இவை தெரியாதனவா? உன் கூந்தல் என்கண்களில் படவில்லையா? ஆயினும் அமைதி வேண்டியதே' என்றான்.
“கேசவா, நீ போய் அமைதியைப் பற்றிப் பேசலாம். ஆனால் என் உடம்பைத் தீண்டிய துச்சாதனன் கையை, தொடையைத் தட்டிக்காட்டி துகிலை உரியச்சொன்ன துரியோதனனை, வாய் கூசாமலே என்னை வேசி என்ற
தேரோட்டி மகனை மறந்து விட வேண்டாம் நீயும்.
82

தர்மராஜரான யுதிஷ்டிரரும் புகழ்பெற்ற வீரர்களான சகோதரர்களும் அதிையை விரும்பினாலும் என் கிழத்தந்தையும், சகோதரர் திருஷ்டத்துய்மனும், எனது ஐந்து மைந்தர்களும் என் கூந்தலிலே தடவ துச்சாதனன் குருதியையும் தந்து, துரியோதனன் தொடையையும் உடைத்து, தோரோட்டி மகன் நாக்கையும் சேதித்து என் சபதத்தை நிறைவு செய்வார்கள்."
அப்பொழுதும் அழுகையை நிறுத்திவிட உன்னால் முடியவில்லை. அதைப் பார்த்தவன் உன் கண்ணிரைத் தன் கையினால் துடைத்துக்கொண்டே,
"பிரிய சகோதரி, அழாதே! குருவம்ஸத்து மற்றப் பெண்களே இனி அழப்போகிறவர்கள். உன் கண்களில் கண்ணிருக்குப் பதிலாக பாரதத்தின் பிரகாசமல்லாவா ஒளிர வேண்டும்” என்றான். அவனுடைய செயலும் வார்த்தைகளும் அமைதியாக உன்னைத் திரும்பச் செய்தன.
போர் தொடங்கமுன் அவரவர் தங்கள் தங்கள் பாசறைகளிலே தங்கியிருந்தார்கள். பாண்டவருக்குரிய பாசறை ஒன்றில் உன்னைக் கண்டதும் அர்ச்சுனன் ஆச்சரியப்பட்டான். “என்னைப் பார்த்ததும் ஏன் இத்தனை ஆச்சரியம்?” என்று நீ கேட்டாய்.
“போர்க்களத்தில் உனக்கு வேலை இல்லையே. அதனாலல் லவோ உன்னை உபப்பிலாவியத்தில் விட்டுவந்தோம்" என்றான்
அர்ச்சுனன்,
உடனே உனது பதில் வெடித்து வந்தது:
“இந்தப் போர் உங்களுடையது மட்டுமல்ல. என்னுடைய துந்தான். இதில் எனக்கு நானே படை. தளபதியும் நானேதான். என்னுடைய கூந்தலே அஸ்திரங்கள்.
"கதாயுத வீரனான குந்திமைந்தர், துச்சாதனன் மார்புக் குருதியைக்கொண்டு உபப்பிலாவியம் வரும் சிரமத்தை நான் விரும்பவில்லை. இந்தப் பாசறையிலிருந்தே அவரை வரவேற்கக் காத்திருக்கிறேன். இடைநடுவில் மன்னிப்பதுதான் தருமம் என்று உங்கள் பெரியண்ணா உங்களிடம் கூறிவிட்டால்,
83

Page 58
அவிழ்ந்து கிடக்கும் என் கூந்தல் முடியும்வரை அவரது தர்மத்துக்கும் உங்களுக்கும் நடுவில் இடையூறாக நிற்க நான் இங்கேதான் தங்கியிருக்க வேண்டும்.”
அவன் உன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பதில் சொல்லாமலே நகர்ந்து விட்டான்.
ஒரு சமயம் அம்புப்படுக்கையில் கிடந்த பிதாமகர் பீஷ்மரைத் தரிசித்து வணங்கி நீ வரும்போது எதிரில் துரியோதனன் வந்தான். அவனைக் கண்டதும் "துரியோதனா! எப்படி இருக்கிறாய்" என்று நீ கேட்டாய்.
"திரெளபதி ! பரிதா மகர் விழுந்த அளவில் அஸ்தினாபுரத்தின் கொடியே விழுந்துவிட்டது என்று எண்ணிவிடாதே. அஸ்தினாபுரத்தின் கொடி நானேதான்" என்று அவன் சொன்னான். உடனே, "துரியோதனா! அதுதான் அஸ்தினாபுரத்தின் துர்ப்பாக்கியம்” என்று சொல்லிவிட்டு நீ நடந்தாய், பெண்ணே எத்தனை துணிச்சல் உனக்கு. அச்சமென்பது உன்னை அணுகுவதற்கு என்றும் அஞ்சிநிற்கும் ஒன்றுதான்.
பாசறைக்கு வந்ததிலிருந்து உன்னிடமிருந்த மிருது சுபாவம் மீண்டும் இறுகி வைரித்து விட்டதாகவே தெரிகிறது.
வீமன் துச்சாதனன் கையைத் திருகி துரியோதனனெதிரே யெறிந்துவிட்டு அவன் மார்பைப் பிளந்து குருதியை அள்ளிக் குடித்தான். பிறகு தன் முகத்திலும் பூசி உள்ளங்கையிலும் ஏந்திய குருதியோடு 'திரெளபதி' என்று குரல் கொடுத்தபடியே ஓடிவந்தான். நீயும் பாசறையை விட்டு வெளியே விரைந்து வந்தாய்.
அவன் தந்த குருதியை வாங்கி கூந்தலில் தடவினாய். அப்போது உன் உதடுகளிலே தோன்றிய குரு ரச்சிரிப்பு, கண்களில் எழுதிக்கிடந்த பழிக்குப்பழி என்ற அகூடிரங்களைத் துலக்கமாகவே காட்டியது.
கர்ணன், சகுனி, துரியோதனன் மரணங்களுக்கு முன் அந் த அ கூடிரங்களை உன் னாலுமே அழித் திருக்க * முடியாதுதான்.
84

பெண்ணே! கூடித்திரிய குலநாசம் என்ற பிரகடனத்தின் கடைசி அத்தியாயமாக உன் அண்ணன் திருஷ்டத்துய்மனும் அருமை மைந்தர் ஐவரதும் மரணச் செய் தியே எழுதப்பட்டிருந்தது.
போர் முடிந்து வெற்றி கிட்டிய பிறகும் அஸ்வத்தாமன் அக்கிரமமாகச் செய்த இந்தப் படுகொலைக்கும் நீ பழிதீர்க்கத் தவறவில்லை.
ஆனால்,
நீ எப்போது குருக்ஷேத்திரத்துக்கு வெளியே காலை வைத்தாயோ அப்போதே, அஸ்தமனத்துக்கு மறுநாள் புதுப் பொலிவோடு தோன்றும் உஷைபோல இனித்து விளங்கினாய். கடந்தகால நிகழ்ச்சிகள் உன் மனத்திரையில் தொடர்ந்து தெரிந்திருக்க வேண்டும். தங்களைத் தாங்களாகவே அழித்துக் கொள்ளப்பிறந்த துரியோதனனாதியோருக்காகவும் கவலைப்பட்டாய். எல்லா நினைவுகளுமே உன்னை அஸ்தினாபுர அரண்மனை வாயிலில் நுழைய விடாமல் தடுத்துவிட்டன போலும்.
அஸ்தினாபுர அரண்மனை கண்ணிரால் கழுவப்பட்டுக் கிடந்தது. கிருஷ்ணனுடனேயே அனைவரும் , நுழைந்தீர்கள். யுதிஷ்டிரன் அழுதவாறே வந்தான். வீமன் பயத்தில் மெலிந்து சுருங்கி அடிமேல் அடிவைத்து நடந்தான். அருச்சுனன் கிருஷ்ணனோடு ஒட்டிக் கொண்டே வந்தான். நகுலசகாதேவர் தலையைத் தொங்கப் போட்டபடியே பின்னால் வந்தார்கள்.
நீ அரண்மனை முதல் வாயிலை விட்டு நகராமலே நின்றுவிட்டாய். ஐவரும் தங்களை யார் யார் என்று சொல்லிச் சொல்லி திருதராஷ்டிரனை வணங்கியபின், காந்தாரி பாதங்களில் தலைவைத்து வணங்கினார்கள். அப்போதுதான் வேதனை தோய்த்த குரலில் 'திரெளபதி எங்கே’ என்று திருதராஷ்டிரன் கேட்டான் யுதிஷ்டிரன் பதில் சொன்னான்:-
“உங்கள் உத்தரவுக்காக வாயிலில் காத்து நிற்கிறாள்."
திருதராஷ்டிரன் அவசரமாகவே காந்தாரியின் பக்கமாகத்த திரும்பி, "உத்தரவு போடவேண்டிய அவளுக்குமா ய த்தரவு? காந்தாரி, நீயே போய் அவளை அழைத்து வா" நன்றான்.
85

Page 59
காநதாரியைக் கண்டதுமே ஓடிச் சென்று அவள் கால்களைப் பற்றிக் கொண்டு விம்மி அழுதாய். அவளும் உன்னைத் தூக்கி இறுக அணைத்தபடி அழுது குலைந்தாள். அந்த நிலையிலே சென்று கொண்டிருந்தபோது திருதராஷ்டிரனைப் பார்த்ததும் காந்தாரியிடமிருந்தும் விடுபட்டவளாய் ஓடிப்போய் அவனடிகளில் தலையை வைத்தபடி பெரியப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினாய். அவன் கண்ணிர் மல்க கரகரத்த குரலிலேதான் பேசினான்.
"அருமையானவளே!
நானல்லவோ உன்னிடம் மன்னிப்புக்கேட்கவேண்டியவன். எனக்குக் கண்கள் இல்லைத்தான். காதுகளும் மனமும் இருந்தனவே, உனக்கு அவர்கள் செய்த பாவங்களை அவ்வப்போதே அறிந்திருந்தும் தடுக்கா திருந்த பாவி நான்தானே மகளே?
நீ பிறகு உருக்கமான குரலில் தெளிவாகப் பேசினாய்.
“பெரியப்பா, உங்கள் செயலின்மை என்ற தளமே எனக்கு பெரிதும் உபகாரமாய் அமைந்தது.
"ஏகாக்கிரசித்தத்துக்கும் பரிபூரண சரணாகதிக்கும் ஊன்றுகோலாகி வழி செய்ததும் அதுவே. அப்போதிருந்த சபையை - எனக்கு நிகழ்ந்த துகிலுரிப்பை, உரிய உரிய சேலைகள் வளர்ந்து கொண்டிருந்ததை நானறியேன்.
இந்த இனிய சுகத்துக்குக் காரணமான செதுலின்மையை
கடைப்பிடித்த உங்களை, பெரியப்பா, நான் அல்லவா வணங்க வேண்டும்"
இன்னும் ஒன்று:-
“இத்தனை அழிவு, துயரங்களின் மூலகாரணமானவள் இந்தத் திரெளபதியல்லவா? இவள் தானாகவே தன்னைப்
பிறப்பித்துக் கொண்டவள். இந்த திரெளபதி என்ற பெண்
86

பிறவா திருந்தால் நிகழ்ந்தவைகளில் எதையுமே இந்த உலகம் கண்டிருக முடியாது. எனவே, இத்தனைக்கும் காரணமான இவளே , இந் த த் திரெளபதி யே உங்களிடமும் , அஸ்தினாபுரத்திடமும், மக்களிடமும் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்கவேண்டிவள்."
திருதராஷ்டிரன் தடுமாறிக்கொண்டே எழுந்து உன் கைகளைப்பற்றி தன் கண்கள், சிரசு, மார்பு எங்கும் ஒற்றிக்கொண்டு " மகாலகூழ்மி ஆனவளே, உன் தெய்வக் கைகள் பட்டதால் காலமெல்லாம் செய்த பாவங்கள் எரிந்துசாம்பலானதை நான் உணருகிறேன்.”
“நீ பரம சுகம் பெற்று செளபாக்கியவதியாக” என்று அவன் உன் தலைமீது கையை வைத்து ஆசீர்வதித்தான்.
காந்தாரியும் குந்தியும் தாங்கள் பெற்ற குழந்தையை கட்டியணைப்பது போல உன்னை அணைத்து மாறி மாறித் தழுவினார்கள்.
விதுரன் வாயிலிருந்து 'அம்மா பரதேவதே’ என்ற வார்த்தைகளே வெளிவந்தன.அப்போது அந்த வாசுதேவனான கிருஷ்ணன் உன்னை நோக்கி வந்தான். நீ ஓடிச்சென்று அவன் திருவடிகளைப் பற்றியவாறே தலையையும் பொருந்த வைத்தவளாய் உன்னையே மறந்தவளாகிக் கிடந்தாய். அவன் திருவாய் மலர்ந்தது :- W
"திரெளபதி! நீ சொல்லாமலே எல்லாவற்றையும் அறிந்தவள். அவ்வாறே காட்டாமலே அனைத்தையும் கண்டவள். உனக்குச் சொல்ல, காட்ட எதுவும் இல்லை. பெண்மையின் பிரபஞ்ச ரகசியமான உன்னை, இந்த உலகம் என்றுமே மறந்துவிட முடியாது.
செளபாக்கியவதி, உனக்கு சர்வமங்களம்.”
87

Page 60
சம்பந்தன்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி
கந்தையா திருஞானசம்பந்தன்
1913.10.20 - 1995.01.07 .
 

அநுபந்தம்
"சம்பந்தன்”
"சகுந்தலையைக் காவியமாத் தமிழ்மரபிற் சம்பந்தன்
தக்கோர் போற்ற
மிகுந்த பெருங் கற்பனையும் அணிநலனுங் கவித்திறனும்
வீறு கொள்ளத்
தகுந்தவகை புனைந்திட்டான் எழுத்துலகில் கதையுலகில்
தானே யானோன்
இகந்தனில் மற் றிவன்புலமை எழுச்சிபெறுங் கவியுலகிற்
கெடுத்துக் காட்டே"
எனப் பண்டிதமணி, இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் விதப்புரை செய்த சாகுந்தல காவிய நூலாசிரியர் கந்தையா திருஞானசம்பந்தன் எனும் பெயர்கொண்ட சம்பந்தன் அவர்கள் எழுதிய "தர்மவதிகள்” என்னும் நூலின் பின்னிணைப்பு இது.
'சம்பந்தனர்" யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 1913 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிறந்தவர்.
(தந்தையார்: சபாபதி கந்தையா; தயாார்: பொன்னையா மகள் இராம்மா எனும் இராசமணி)
இலக்கியப்பாதை
"இலக்கியம் என்பது சான்றோரால் நெறிப்படுத்தியவ, பூ அறம், பொருள், இன்பம், வீடு பயக்க வழி செய்ய வேண்டும். இல்லையாயின் அவை இலக்கியங்கள் ஆகா" என்ற முன்னுரையுடன் சம்பந்தன் அவர்கள் தமது 'இலக்கியப் பாதை' குறித்து இலங்கை வானொலி கலைப்பூங்கா நிகழ்ச்சியில், பல்லாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய பேச்சு ஒன்றில், நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறார்.
சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசை சம்பந்தன் அவர்களுக்குப் பிறந்து விட்டது. வரலாற்றுப் பின்னணியில் இரு சிறுகதைகள் எழுதினார். 'கலைமகள்' இவற்றைப் பிரசுரித்தது.
al

Page 61
பின்னர் சமூகச் சிறுகதைகளை எழுதினார் . அலுத்துவிட்டது. பிறகு, உள்ளத்தின் தூய உணர்வுகளை அலசிப் பார்ப்பதையே மையமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதினார். "சபலம்”, “சலனம்" முதலிய சிறுகதைகள் இவ்வரிசையைச் சேர்ந்தவை.
ஏறக்குறைய இருபத்தைந்து சிறுகதைகளும் "ஈழகேசரி"யில் வெளியான “பாசம்” என்ற ஒரு நாவலும் ஆக்க இலக்கியத்துறையில் இவர்தம் பங்களிப்பாகும்.
முதன்முதலில் “அல்லயன்ஸ் கொம்பனி" யார் வெளியிட்ட கதைக்கோவையில் தெரிந்து சேர்க்கப்பட்ட சிறுகதைகளுள் சம்பந்தன் அவர்கள் எழுதிய 'விதி' என்ற சிறுகதையும் ஒன்றாகும்.
இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் சம்பந்தன் அவர்களின் சமகால ஆக்க இலக்கியகாரர். இம்மூவரும் ஈழத்தின் சிறுகதை மூலவர் மூவர் என ஆக்க இலக்கிய வரலாறு கூறுகிறது.
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுகளில் தொடங்கி, ஏறக்குறையக் கால் நூற்றாண்டு காலத்துக்குச் சற்று அதிகமாக சம்பந்தன் அவர்கள் அடிக்கடி தமிழகம் சென்றுவந்தவர். கி. வா. ஜ, புதுமைப்பித்தன், கம்பதாசன் முதலியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அறுபதுகளில் அழ, வள்ளியப்பா அவர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டன.
1959 ஒகஸ்ட் மாதம் சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற் கலந்துகொண்டார். இரண்டாம் நாள், "தமிழ் வசன நடை தந்த நாவலர் பெருமான்" என்னும் பொருளில் உரையாற்றினார்.
மஹாத்மா காந்தியிலும், அவர் அஹிம்சையிலும் சமபந்தன் அவர்கள் மிகப்பெரும் ஈடுபாடு கொண்டிந்தார். உடுத்தியது கதரா டை. ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தெட்டு வரையில் மேற்சட்டை அணிவதை நிறுத்திக் கொண்டார். நான்கு முழக் கதர் வேட்டிமேல்துண்டு ஒன்று. (லண்டன் சென்ற போதும், லண்டனிலும் இதே உடை)
а 2

இளமைக் காலம்
திருநெல்வேலி சைவ வித்தியாசாலையிலும், சிறிது காலம் நாவலர் அவர்கள் தாபித்த வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் சம்பந்தன் அவர்கள் கல்வி கற்றார்.
பண்டிதமணி அவர்களிடமும், அவர்கள்ால் மெளனதவ முனிவர் எனப் போற்றப்படும் உப அதிபர் பொ. கைலாசபதி அவர்களிடமும் கல்வி கற்கும் வாய்ப்புத் தற்செயலாகக் கிடைத்த ஒன்றன்று, அது தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமே என சம்பந்தன் அவர்கள் அடிக்கடி கூறுவார்.
நாடகம், கூத்து என்பன பார்க்கும் அவாவும், பார்த்த அநுபவங்களும் சம்பந்தன் அவர்கள் எழுத்துலகிற் பிரவேசிக்கக் கால்கோளாய் அமைந்திருக்கலாம்.
இவ்வேளையில், "சாகுந்தலகாவிய"ப் பதிப்பாசிரியர், நூலாசிரியர் சம்பந்தன் அவர்களையிட்டு, "பிறப்பினாலும், பண்டிதமணி அவர்களிடம் பாடங் கேட்டமையாற் கல்வியாலும் நாவலர் பரம்பரை" எனக் குறிப்பிடும் பரம்பரை இயல்பும் இவரை எழுதத் தூண்டியிருக்கும்.
இலக்கியப் பணி
வரலாற்றுப் பிண்ணனியில் இரண்டு சிறுகதைகள், சமூகக் கண்ணோட்டத்தில் இன்னுஞ் சில, உள்ளக் கிளர்ச்சி தொடர்பானவை மேலும் சில என ஏறக்குறைய இருபத்தைந்து சிறுகதைகள் ஆக்க இலக்கியத்துறையில் சம்பந்தன் அவர்களின் பங்களிப்பாகும்.
மிகப்பல "கலைமக'ளில் வெளிவந்தவை. சில ‘கிராம ஊழியன்’ இதழிலும் வெளிவந்தன.
வரதர் வெளியிட்ட 'மறுமலர்ச்சியிலும் இரண்டு சிறு
கதைகள் எழுதியுள்ளார். சம்பந்தன் அவர்களை 'மறுமலர்ச்சி
எழுத்தாளர்' என வரதர் விதந்து, 'மறுமலர்ச்சியில் ஒரு
பக்கம் குறிப்பும் எழுதியிருந்தார். Հ
а 3

Page 62
சம்பந்தன் அவர்களின் ஏழு சிறுகதைகள் கொண்ட "சம்பந்தன் சிறுகதைச் சிறப்பிதழாக 'விவேகி' இதழைச் செங்கை ஆழியானும், செம்பியன்செல்வனும் வெளியிட்டார்கள்.
1972 இல், பல்கலைக்கழக மாணவருக்குக் கம்பராமாயணம், மிதிலைக் காட்சிப் படலம் பாடநூலாக அமைந்தது. பதிப்பகம் ஒன்று வேண்ட, அப்படலத்துக்குச் சம்பந்தன் அவர்கள் உரை எழுதினார். பொழிப்புரை, பதவுரை, விசேட உரை என்ற வகையில் உரை அமைந்தது. இது நூலுருப் பெற்றது.
காளிதாஸனின் சாகுந்தலம் சம்பந்தன் அவர்களைப் பெரிதுங் கவர்ந்தது. மறைமலை அடிகளாரும். யோகி சுத்தானந்தரும், நவாலியூர் நடராசனும் சாகுந்தலத்தைத் தமிழில் அப்படியே நாடகமாக்கித் தந்துள்ளனர். அமரர் சு. நடேசபிள்ளை அவர்கள் சகுந்தலை கதையை ‘சகுந்தலை வெண்பா' என்ற பெயரில் பாடியுள்ளார். சாகுந்தலம் உரைநடையில் அமைந்தால் பயன்படும் எனச் சம்பந்தன் அவர்கள் எண்ணினார். 1951 ஆம் ஆண்டளவில் ‘சகுந்தலை என்னும் பெயரில் உரை நடையில் கதை எழுதப்பட்டது. பண்டிதமணி அவர்கள் மதிப்புரை வழங்கினார். எனினும் அது பிரசுரிக்கப்படவில்லை.
இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள், "கரவைக் கவி கந்தப்பனார்" என்ற புனைபெயருள் மறைந்து நின்று, “ ஈழத்துக் பேனா மன்னர்” என்ற தலைப்பில் இலக்கியகாரர் பற்றி "ஈழகேசரி’ வார இதழில் தொடர்ந்து எழுதினார்.
பண்டிதமணி அவர்களுடன் பேனா மன்னர் வரிசை தொடங்கியது. இத்தொடரில் , சம்பந்தன் அவர்கள் முன்வரிசையில் வைத்து ஆராயப்பட்டார். இது, 1950 களின் முற்பகுதியிலாயிருக்கலாம்.
கடந்த 1994 ஆம் ஆண்டில் ஈழத்துச் சிறுகதைகள் பல தெரிந்து சென்னையில் நூலுருப் பெற்றன. (காந்தளகம் வெளியீடாயிருக்கலாம்.) இந்நூலில் சம்பந்தன் அவர்களின் சிறுகதை இருக்கும் என விளம்பரம் தெரிவித்தது. நூல் வெளிவந்து விட்டது. இங்கு பெறமுடியவில்லை.
а 4

லண்டனில்
1990 இல் சம்பந்தன் அவர்கள் லண்டன் சென்றார். அவரின் பிள்ளைகள் நால்வரும் அங்குள்ளனர்.
நீண்ட காலமாகச் சம்பந்தன் அவர்களது மனத்துட் கிடந்து ஊறிய விடயம் ஒன்று பற்றித் தீவிரமாகச் சிந்தித்தார். இந்த விடயம் 1948 ஆம் ஆண்டளவில் இவரது மனதில் ஆழமாகப் பதிந்தது என்பது ஒரு சிலருக்குத் தெரியும்.
திருநெல்வேலி தெற்கில் 1946 ஆம் ஆண்டில் தொடங்கிய நேரு சபாவில் மாதமொருமுறை பயன்தரும் நிகழ்ச்சி ஒன்று இடம்பெறும், சொற்பொழிவு, புதிய நூல் அறிமுகம், விவாதம், பட்டிமண்டபம் போன்ற நிகழ்ச்சிகள் வழமையானவை.
சிறந்த ஆசிரியரும், இலக்கிய இரசிகருமான மறைந்த பண்டிதர் சுப்பிரமணியம் அவர்கள் ஒருநாள் 'காகுத்தன் கன்னிப்போரும் அகலிகை சாப நீக்கமும்' என்னும் விடயத்தைக் "கைவண்ணம் அங்கு, கால்வண்ணம் இங்கு” என்ற தலைப்பில் விரிவுரை செய்தார்.
(இவ்விரிவுரை தொடர்பான விடயங்கள் “இந்நூலின் கதை"யில் உள)
பொதுப்பணிகள்
இளமைக்காலத்தில், எழுதுவதோடு மட்டும் சம்பந்தன் அவர்கள் நின்றுவிடவில்லை. தமிழ், இலக்கியம் தொடர்பாக அன்பர்களைக் கூட்டிக் கலந்துரையாடுவார்.
1960 - 62 காலப் பகுதியில் அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைமைப் பதவியை ஏற்று இளந்தலைமுறையினரை நெறிப்படுத்த முனைந்தார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து, அமரர் திரு. ச. அம்பிகைபாகன் அவர்களுடன் இணைந்து செயலாற்றி, கவிஞருக்கு மகத்தான வரவேற்பு விழாவை யாழ், நகர மண்டபத்தில் எடுத்தார்.
а 5

Page 63
"கலைமகள்” ஆசிரியர் கி. வா. ஜ. அவர்களின் மணி விழாவை யாழ். நகரில் கொண்டாட, நீர்வேலி பிரமயூரீ சு. இராஜேந்திரக் குருக்கள் அவர்களுடன் இணைச்செயலாளராக, மணிவிழா மலர்க்குழு உறுப்பினராகப் பணிசெய்தார். இம் மணிவிழாச் சபைத் தலைவராகப் பண்டிதமணி விளங்கினார்.
பண்டிதமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது, அவர்களைப் பாராட்டி எடுத்தவிழாவில் மலர் ஒன்று வெளிடப்பட்டது. இம்மலரின் ஆசிரியராகச் சம்பந்தன் அவர்கள் பணியாற்றினார். மலரில் கனதி' யான பல விடயங்கள் இடம்பெற்றன.
கலைத்துறையிலும் சமபந்தன் அவர்களுக்கு ஈடுபாடு. இணுவில் ஏ. சுப்பையா அவர்களின் நாட்டிய அரங்கு கொக்குவிலில் அமையப் பல வழிகளிலும் உதவினார். 'கலாபவனம்' எனப் பெயர் சூட்டி, அதன் தலைவராகவும் பணி புரிந்தவர்.
அமைதியும் தர்மாவேசமும் சம்பந்தன் அவர்கள் சாதுவானவர். ஒரொரு சமயம் தர்மாவேசங் கொள்வார்.
தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. யாழ். இந்தக்கல்லூரியில், முப்பதாண்டுகளுக்கு முன்னர் என்று நினைவு.
மாநாட்டு நிகழ்ச்சிகளின் இடையில் அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றது. யாரோ முட்டைக்கணை வீசினார்கள். கூழ் முட்டைகள். ஒன்று சம்பந்தன் அவர்கள் முகத்தையும் அபிசேஷகித்தது.
அபிகூேடிகம் பெற்ற மற்றையோர், தமக்கு நேர்ந்ததைப் பொருட்படுத்தவில்லை. சம்பந்தன் அவர்களுக்கு இது நேர்ந்ததே எனத் துக்கித்தனர்.
அமைதியாகவும், சலனமின்றியும் வெளியே சம்பந்தன் அவர்கள் வந்தார்.
а 6

இதே சம்பந்தன் அவர்கள். ஒரு சமயம் தர்மாவேசங் கொண்டார் எனவும் அன்பர்கள் கூறுவார்கள்.
நாடறிந்த ஆக்க இலக்கிய கர்த்தாவும், மருத்துவ ஆலோசனை நூல்களின் ஆசிரியருமான பேராசிரியர் நந்தி அவர்கள் அறுபது வயதை அடைந்தபோது, பாராட்டு விழா ஒன்று எடுக்கப்பட்டது.
சம்பந் தன் அவர்களும் பாராட்டுரை வழங்க அழைக்கப்பட்டிருந்தார்.
வழமையான சம்பிரதாயங்களுடன் விழாத் தொடங்கியது.
பாராட்டுரைகள், ஒருவர் பின் ஒருவராகப் பலர் “பாராட்டுரை' என்ற பெயரில் ஆபாசங்கொட்டினர் எனப்
பின்னால் சம்பந்தன் அவர்களே கூறியுள்ளார்.
கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. சம்பந்தன் அவர்களுக்கு ஆவேசம் வந்துவிட்டது. தர்மாவேசம். எழுந்தார்.
“பாராட்ட வாருங்கள் என அழைக்க வந்த பெருமகனை ஆபாசங்கொட்டி, விரசம் விளைவித்து, சர்க்கடைச்சேறு பூசி அனுப்புவது போலவே இவ்வுரைகளைக் கேட்டதும் உணருகின்றேன். அப்பெருமகனை வாழ்த்தி, இங்கிருந்து வெளியேறுகிறேன்" என்று கருத்துப்படக் கூறி, வெளிச் சென்றாராம்.
மற்றும் பணிகள்
சம்பந்தன் அவர்களுடைய சாகுந்தல காவியம் யாழ்.இலக்கிய வட்டம்/இலக்கியப் பேரவையின் பரிசையும், கொழும்புத் தமிழ்ச் சங்கம் தந்த பரிசையும், தமிழ்மரபு இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதையும் பெற்றது.
இவற்றிற் கிடைத்த பரிசிற் பணத்தையும், தமது ஓய்வூதியத்தையும், மற்றும் வருமானங்களையும் தர்ம கைங்கரியங்களிலேயே சம்பந்தன் அவர்கள் செலவிட்டார்.
а 7

Page 64
பண்டிதமணி சி. க. நினைவுக் காப்பு நிதியம்
சம்பந்தன் அவர்கள் தம்மைத் 'தாயினும் இனிக்க அனைத்து நெறி செய்த" பண்டிதமணி அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடியவர்.
பண்டிதமணி அவர்கள் மறைந்த பின்னர், அவரை நினைவு கூர, அவர்தம் நூல்கள் உள்ளன. அரிய பொக்கிஷங்கள், எனினும் அவர் எழுதிய எல்லா நூல்களும் இலகுவிற் பெறத்தக்க நிலையில் இல்லை. பண்டிதமணி அவர்களின் ஆக்கங்கள் பெற இயலாத நிலையும் ஏற்படலாம். ஆயின் பண்டிதமணி அவர்களின் அரும்பாடுகளும், நோக்குகளும் என்னாகும்?
ஆண்டுதோறுமாவது, பண்டிதமணி அவர்களையும்
அவர்தம் இலட்சியங்களையும் நினைவுகூர என்ன செய்யலாம்?
எவருமே இது குறித்த ஆழமாகச் சிந்திக்கவில்லை. இந்நிலையில் சம்பந்தன் அவர்கள் சிந்தித்தார்.
பல்கலைக்கழக மாணவர் மட்டத்தில் பண்டிதமணியின் பெயரில் புலைமப்பரிசில், தமிழில் அல்லது இந்து நாகரிகத்தில் அதிவிசேட சித்திபெறும் மாணவர்க்கான ஆராய்ச்சிநிதி, தமிழ் இலக்கியத்தில் அல்லது சைவ சித்தாந்தத்தில் வெளிவரும் சிறந்த நூல்களுக்கான பண்டிதமணி விருது, பண்டிதமணி நினைவுப் பேருரை என்பது பற்றியெல்லாம் அவர் சிந்தித்தார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி முதலாம் பேரறிஞர்களின் கருத்துக்களைத் தம் மாணாக்கர் ஒருவர் மூலம் சேகரித்தார்.
காலத்துக்குக் காலம் சிறிய தொகைகளாகப் பணம் *அனுப்பி பண்டிதமணி அவர்கள் பெயரில் ஆண்டு தோறும் நினைவுப் பேருரைகள் இடம்பெறவும், ஒவ்வோராண்டும் தமிழ்- தமிழிலக்கியம்-சைவசிந்தாந்தம் ஆகிய துறைகளில் வெளிவரும் நூல்களுட் சிறந்தவற்றுக்கு விருது வழங்கி அந்நூலாசிரியர் கெளரவிக்கப்படவும் நிதி உபகரித்தார். ஓர் இலட்ச ரூபா.
а 8

இந் நிதி பற்றித் தம் பெயர் எக்கட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்படக் கூடாது எனவும் அவர் வேண்டிக் கொண்டார். ஆயினும் எவ்வாறோ அவர் நிதி வழங்கியமை பற்றித் தெரிந்து விட்ட இன்றைய நிலையில், இந்த உண்மையைக் கூறுவதில் குற்றமில்லை எனலாம்.
இந்த நிதியை நிர்வகித்துப் பயன்படும் வகையில் கொள்கைத்திட்டங்களை வகுக்க, இன்னார் இன்னார் எனப் பெயர் குறித்து அறங்காவற்குழுவில் அவர்கள் இடம்பெறுவதைத் தாம் விரும்புவதாகவும் சம்பந்தன் அவர்கள் கடிதம் எழுதினார்.
சம்பந்தன் அவர்களின் விருப்பின்படி,
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவுக் காப்பு நிதியம்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தலைமையில் 1992.10.01 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
1993 ஆம் ஆண்டிலிருந்து பண்டிதமணி சி. க. நினைவுச் சொற்பொழிவும் சிறந்த ஆக்கத்துக்கான விருது வழங்கலும் நடைபெற்றன. 1996 இல் இடம்பெயர்வு காரணமாய் இந்நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை.
பின் குறிப்பு 1
சம்பந்தன் அவர்கள் 07.01.1995 இலன்று லண்டனில் காலமானார்.
அவரது மறைவு குறித்து 09.01.1995 இல் சம்பந்தன் அவர்களின் மாணாக்கர் சு. இராஜநாயகம் அவர்கள் இல்லத்தில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது. பல்வேறு துறையினர் பங்குபற்றி இரங்கலுரை செய்து, அஞ்சலி செலுத்தினர்.
பின்குறிப்பு 11
சம்பந்தன் அவர்கள் சிறுகதையில் தொடங்கி, சாகுந்தல காவியம் என்ற நூலில் தமது எழுத்தாற்றலைப் பதித்துள்ளார்.
சாகுந்தல காவிய நூல் வெளிட்டு விழா வழமையான நூல்வெளியீட்டு விழாக்களினின்றும் வேறுபட்டதாய்அமைந்தது.
а 9

Page 65
வெளியீட்டு விழா, 13.09.1987 இலன்று முற்பகலும், பிற்பகலும் என முழுநாள் நிகழ்ச்சிகளைக் கொண்டமைந்தது.
பேரறிஞர்கள் காவியத்தின் ஒவ்வோர் அம்சங் குறித்து விமர்சனஞ் செய்தார்கள்.
அறிஞர் சிலரின் கருத்துக்களை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். →
* திரு . இ. முருகையன். (மேலதிக பதிவாளர், யாழ்.பல்கலைக் கழகம்.)
அபிஞ்ஞான சாகுந்தலம் ஒரு அற்புத அழகியல் நாடகம், அதைக் காப்பியமாக மாற்றியுள்ளார் சம்பந்தன். பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தை, சகுந்தலையின் பிள்ளைப்பருவத்தைச் சித்தரிக்கும்போது இணைந்திருப்பது, இக்காவியத்தின் சிறப்பான அம்சம்,
சம்பந்தன் காளிதாசனோடு கைகோத்துச் செல்லுகிறார்.
இக்காவியம்படைப்பதில் சம்பந்தன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியது தெளிவாகத் தெரிகிறது. ஒரு அற்புத காவியத்தை அவர் தந்திருக்கிறார்.
* பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன். எம். ஏ. பிஏச். டி. யாழ். பல்கலைக் கழகம் (தலைவர், இந்து நாகரிகத் துறை)
திரு சம்பந்தன், சாகுந்தலத்தைத் தமது சமய தத்துவக் கருத்துக்களை விளக்கிக்கூற ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளார். சிருங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் காளிதாசர். ஆனால் திரு. சம்பந்தன் சமய தத்துவ சிந்தனைகளுக்கே மதிப் புக் கொடுத் தார் . அாரிய வரிஷயங் களைச் சாதாரணமெனுமாறு விளக்கி வைத்துள்ளார்.
* பேராசிரியர் கா. சிவத்தம்பி. எம். ஏ. பிஏச். டி., யாழ் பல்கலைக்கழகம்.
சாகுந்தல காவியம் இந்துசமய பாரம்பரியத்தைச் சிறப்பாக வெளியிடுகிறது. காளிதாசனதுஅபிஞ்ஞான சாகுந்தலத்தை உள்வாங்கிச் சம்பந்தன் தமக்குரிய பாணியில் அருமையான கருத்துக்களைப் புகுத் தி ஒரு காவியமாக்கியிருக்கிறார். கம்பராமாயணத்தில் பாத்திரங்களே பேசின. பெரிய
а 10

புராணத்தில் முழுக் கதையையும் உள்வாங்கி தாமே சொல்லுகிறார் சேக்கிழார் இந்த இரண்டாவது யுத்தியையே கையாண்டு செய்யப்பட்டது சாகுந்தல காவியம்.
இந்துமதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் அழகு கெடாமல் மிக ஆழமான முறையில் பிறர் நயந்து இரசிக்கத் தக்க வகையில் சாகுந்தல காவியம் படைக்கப்பட்டிருக்கிறது.
பரம உண்மைகளை அவர் எடுத்துச்சொல்லியிருக்கும் முறை அலாதியானது. பிறர் மனதை ஈர்க்கக்கூடியதாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அபிஞ்ஞான சாகுந்தலம், ஒரு அற்புத அழகியல் நாடகம். இதனைச் சம்பந்தன் அழகு கெடா மல் தன் னெண் ணங்  ைகளப் பதிக் கப் பயன்படுத்தியுள்ளார்.
மாபெரும் ஆக்கத்தை மீளச் சொல்வதிலும் ஒரு தனித் தன்மை வேண்டும். இந்தத் திறனைச் சம்பந்தன் பெற்றுள்ளார் என்பதை அவரது நூல் வாயிலாக அறிந்துள்ளோம்.
இந்தக் காவியம் பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்பட வேண்டியது. அவரது சிறு கதைகள் யாழ். பல்கலைக்கழக
மாணவரால் ஆராயப்பட்டவை. இது அவருக்கு மட்டுமல்ல. எமக்கும் பெருமை தருவது.
* திரு கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரன்
நீண்ட காலமாகத் தக்கதொரு காவியம் இல்லையே எனத் தலைகுனியும் நிலையில் தமிழ்க் கவிதைக்கன்னி இன்று
இல்லை. சாகுந்தல காவியம் பிறந்திருக்கிறது.
இக் காவியத்திற் சம்பந்தன் வாழ்கிறார்; என்றென்றும் வாழ்வார்.
தொகுப்பு : சு. இராஜநாயகம்.
а 11

Page 66
நன்றி நவில்கின்றோம்
சம்பந்தன் அவர்களின் கையெழுத் துப் பிரதியைக் கணனியில் அச் சிட்டு உதவிய அவர்தம் மரு கர் திரு சற்குருநாதன் குலேந்திரன்
இந் நூலைத் தமது மேலான கவனத்திற் கொண்டு அணிந்துரை வழங்கிய
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் மிக அழகாக அச்சேற்றித் தந்த ஷார்ப் கிறாஃபிக்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர்
திரு கனகரத்தினம் கருணானந்தன்
“தர்மவதிகள்" உருவாகப் பல்வகை களிலும் உதவியோர் ஆகிய அனைவருக்கும் எமது இதயங் கனிந்த நன்றியறிதல் உரித்தாகும்.


Page 67