கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெட்டு முகம்

Page 1


Page 2

வெட்டு முகம்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
சவுத் ஏசியன் புக்ஸ்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Vettumugam Inuviyur Cithambara Thiruchenthinathan First Published : August 1993
Printed at : Suriya Achagam, Madras. Published in Association with
National Art & Literary Association by South Asian Books 611, Thayar Sahib II Lane
Madras - 600 002. RS. 20.00
அட்டை ஓவியும் : தயா
வெட்டு முகம் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முதற்பதிப்பு : ஆகஸ்டு 1993
அச்சு : சூர்யா அச்சகம், சென்னை. வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை-600 002. ლნ. 20.00

இந்நூல்
எந்தை தம்பையர் சிதம்பரநாத பிள்ளை (இணுவையூர் த. சிதம்பர [5ffዳb¢ኳ ) அவர்கட்கு

Page 4
பதிப்புரை
யாழ்ப்பாண மத்தியதரவர்க்கத்தைச் சார்ந்த மக்களின் வாழ்நிலைமைகளை இச்சிறுகதைகள் சித்தரிக்கின்றன. சொல்லுக்கும் செயலுக்குமிடையிலான மாறுபாடு, போலிப்பெருமைகள் போன்றவற்றை அம்பலப்படுத்து வதினூடாக நிஜவாழ்க்கைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார் இக்கதை ஆசிரியர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள்.
இச்சிறுகதை நூலுக்கு முன்னுரை வழங்கிய கலாநிதி நா. சுப்பிரமணியம் அவர்களுக்கும் கதைக் கலைஞர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களுக்கும் இவ்வெளியீட்டில் எம்மோடிணைந்துழைக்கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனர் திரு. எம். பாலாஜி அவர்களுக்கும் அச்சகர் சங்கரனுக்கும் ஊழியருக்கும் எமது நன்றிகள்
இந்நூல் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை 14, 57ஆவது ஒழுங்கை கொழும்பு-06 இலங்கை 12-08-1ጥጥ °

என்னுரை
சிறு வயது முதல் வாசிப்பில் எனக்கிருந்த நாட்டமே எனது எழுத்து முயற்சிக்கு ஆதாரமாக அமைந்தது. வாசிப்புக் காரணமாக என்னுள் எழுந்த எழுச்சி, எழுத வேண்டும் என்ற வேகத்தினை ஊட்டியது அது காரண மாகவே தீவிரமாக எழுத ஆரம்பித்தேன்.
ஆனால் ஆரம்ப நாட்களில் நான் எழுதியவைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகவில்லை. வீரகேசரி வார வெளியீட்டில் எனது சிறுகதைகள் பிரசுர மாக பல மாதங்கள் நான் எழுத்துப் போராட்டம் நடாத்த வேண்டி இருந்தது.
எனினும் இயல்பான எனது கிளர்ச்சி பெற்ற வேகம் ஏராளமான சிறு கதைகளை வீரகேசரியிலும் ஏனைய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுத வழிவகுத் g5gil
எனது சுற்றாடலை, சமூகத்தினை, இனத்தினைப் பாதிக்கும் ஒவ்வொரு விடயமும் என்னை எழுதத் தூண்டு கிறது. பொதுவாக எழுத்தளர்கள் சிறுமை கண்டு பொங் கும் இயல்பினராக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. -
சராசரி மனிதருக்கு இருக்க வேண்டிய சாதாரண மனிதப் பண்புகள் ஏராளமாக எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும், இல்லையேல் அவன் எழுத்தினால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

Page 5
எழுத்தினால் சமூக மாற்றமோ.வேறு எத்தகைய மாற்றமோ ஏற்படுகிறதோ இல்லையோ...ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னைச் சூழவுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் அக்கறை உள்ளளவனாக அவற் றின் மேம்பாட்டில் கரிசனை உள்ளவனாக இருத்தல் அவசியம்.
தான் படைக்கும் படைப்புக்கள் சிறந்த கலைப் படைப்புக்களாக மட்டும் வெளிவர வேண்டும் என்பதில் மாத்திரம் அக்கறை உள்ளவனாக இருப்பதை விட புற உலக யதார்த்தத்தினைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களைப் படைக்கும் போதே அத்தகைய படைப்புக்கள் உச்சம் பெற முடியும்.
ஒருவனின் எழுத்து அவனது செயற்பாடு. சமூகம் மீதான அவனது கரிசனை எல்லாவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றில் ஒன்றை விட்டு ஒன்றை பிரித்துப் பார்க்க முடியாது என்றே நான் கருது கின்றேன். <
24-11-1972ஆம் திகதி எனது முதற் சிறுகதை பிரசுர மானதில் இருந்து ஒரு சிறு கதைத் தொகுப்பினையாவது வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தின் மத்தியில் ஒரு குறு நாவலும், நான்கு நாவல்களும் நூல்களாக (மீரா வெளியீடுகள்) வெளிவந்தனவே தவிர சிறுகதைத் தொகுப்பு வெளியாகவில்லை.
இவ்வளவு காலத்திற்குப் பிறகு வெளியாகும் எனது இந்த முதலாவது சிறு கதைத் தொகுப்பு வெளிவருவதற்கு காரணமாக இருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு எனது மனப் பூர்வமான நன்றி.
இந்த சிறு கதைத் தொகுப்பில் உள்ள பதினொரு இறுகதைகளும் வீரகேசரியில் பிரசுரமானவை. அந்த

வகையில் இச் சிறுகதைகள் வெளிவரவும். எழுத்துலகில் எனது பெயர் உலாவக் காரணமாக இருந்தவருமான மதிப்புக்குரிய பொன். இராஜகோபால் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
வீரகேசரி மாத்திரமல்லாது ஈழநாடு, ஈழமுரசு, ஈழநாதம், சஞ்சீவி, வாரமுரசொலி ஆகிய பத்திரிகைகள், சிரித்திரன், மல்லிகை, உள்ளம், வெளிச்சம், ஆதாரம் போன்ற சஞ்சிகைகளில் எனது சிறுகதைகள் பிரசுரமாகி யுள்ளன. அந்த வகையில் அவற்றின் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.
இத்தொகுப்புக்கு அழகுற அட்டைப் படம் வரைந்த “தயா”வுக்கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்திற்கும்: குறிப்பாக திரு. எம்.பாலாஜி அவர்களுக்கும், கதைகளைப் பிரதி செய்து உதவிய எனது மனைவிக்கும், செல்வி, செ. ஜெயந்திக்கும் நன்றி தெரிவிப்பது எனது கடமையே.
எழுதத் தொடங்கிய காலம் முதல் என் ஆர்வத்தினை சரியாகப் புரிந்து கொண்டு என்னை இப்போதும் வழி நடத்தும் மறைந்த எந்தை தம்பையா சிதம்பரநாத பிள்ளை (இனுவையூர் த. சிதம்பரநாதன்) அவர்களை நினைவிற் கொள்கின்றேன்.
நன்றி, இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் "தனஸ்தான்" உடுவில் வீதி மருதனா மடம் சுண்ணாகம் யாழ்ப்பாணம் 07-07-1993

Page 6

அணிந்துரை
நவீன தமிழிலக்கியத்துறைகளில் சமூகப் பொறுப்பு ணர்வுடனும் அயரா ஊக்கத்துடனும் செயற்பட்டுவரும் ஈழத்து எழுத்தாளர்களில் தனிக் கவனத்துக்குரியவர் களுள் ஒருவராகத் திகழ்பவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள். புனைகதைத் துறையில் தனி ஈடுபாடு காட்டிவரும் இவர் 1970 களில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர். இவரது எழுத்தாக்கங்’ கள் பல ஏற்கெனவே நூல் வடிவுபெற்றுள்ளன. இப்பொழுது நூல்வடிவம் பெறும் இத்தொகுதி ஈழத்தின் முன்னணி இதழொன்றில் - வீரகேசரியில்1980-90 காலப்பகுதியில் பிரசுரமான பதினொரு சிறு கதைகளின் தொகுப்பு ஆகும்.
‘வெட்டுமுகம்" என்ற தொடர் ஒரு திண்மப் பொரு ளின் 'குறுக்குவெட்டு’க் காட்சியைச் சுட்டி வழங்குவது. இங்கே இத்தொடர் ஒரு சமூகத்தின்-ஈழத்து யாழ்ப் பாணப் பிரதேச சமூகத்தின்-உள்ளார்ந்த குணாம்சங் களின் குறுக்குவெட்டுக்காட்சி என்ற கருத்தில் ஒரு குறிப் பிட்ட கதையின் தலைப்பாகவும், நூல் முழுமைக்குமான பொதுத் தலைப்பாகவும் அமைந்துள்ளது. இதில் அமைந்த கதைகள் மேற்குறித்த ஆண்டுகளில் அப்பிரதேச சமுதாயத்தில் நிலவிவந்துள்ள பிரச்சினைகளில் சில் வற்றை அவற்றுக்கு அடிப்படைகளாகவுள்ள உணர்வு நிலைகளுடன் புலப்படுத்த முற்பட்டுள்ளன என்ற வகையில் தலைப்பு பொருட் பொருத்தமுடையதாகவே கொள்ளத்தக்கது.

Page 7
2
யாழ்ப்பாணம் பிரதேசம் என்றவுடன் இன்று எமக்கு முதலில் நினைவுக்கு வருவது அதன் போர்ச் சூழலாகும் இது கடந்த ஏறத்தாழப் பதினைந்தாண்டுக்காலப்பகுதி யில் முனைப்புற்று வந்த ஒரு நிலையாகும். இச்சூழல் உருவாக்குவதற்கு முன்பிருந்தே அம்மண்ணில் பாரம்ப ரியமாக நிலவிவந்து, இன்றும் தொடரும் சமூகப் பிரச்சி னைகள் சில உள, சாதிமுறை, சீதன வழக்கம் முதலியன வாக இவற்றைச் சுட்டலாம், கடந்த ஏறத்தாழ இருப தாண்டுகட்கு மேலாக-இனப்பிரச்சினையின் கொதிநிலைச் சூழலில் உருவாகி முனைப்புற்ற பிரச்சினைகளும் இம் மண்ணில் உண்டு. கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் ஏற்பட்ட தேக்கநிலைகளால் அயல்நாடுகளை நோக்கிப் புலம்பெயரும் நிலமை, போர்ச் சூழலில் உடமைகளை இழந்து புகலிடம்தேடி அயல்நாடுகளுக்குத் தப்பிச் செல் லும் அவலம், அழிப்பு முயற்சிகளுக்கு மத்தியில், "இந்த மண் எங்களின் சொந்தமண்" என்ற பற்றுறுதியுடன் வாழ்வோர் எதிர்கொள்ளும் துன்பதுயரங்கள் முதலி யனவாக இவற்றை வகைப்படுத்தலாம் இவ்வாறான பொதுநிலைப் பிரச்சினைகள் மட்டுமின்றி மனிதசமூகம் அனைத்துக்கும் பொதுவான தனிமனித குணாம்சங்க ளான பொய்ம்மை, பொறாமை, பொருளாசை, அந்தஸ் துணர்வு முதலியவற்றால் எழும் பிரச்சினைகளும் உள.
மேற்குறித்தவாறான பிரச்சினைகஞ்ட் சில-குறிப் பாக பொய்ம்மை, பொறாமை, பொருளாசை, சீதன வழக்கம், இனப்பிரச்சினையின் கொதிநிலைச் சூழலின் அவலங்கள் முதலியன-சமூகத்தில் நிகழ்த்தி வந்துள்ள பாதிப்புக்களை சிதம்பர திருச்செந்திநாதனின் இக் கதைகள் சித்தரிக்கின்றன. முதல் நான்கு கதைகள் பொதுவான தனிமனித குணாம்சங்களான பொய்ம்மை முதலியவற்றின் சித்திரங்கள் ஐந்தாவது கதை சீதன வழக்கத்தின் பகைப் புலத்திலான படைப்பு. அடுத்து வரும் ஐந்து கதைகளும் இனப்பிரச்சினை இனக் கொலை"யாக மாறிவிட்ட சூழலின் பிரசவங்கள். மண்

3
வாசனை என்ற தலைப்பில் அமைந்த இறுதிக்கதை ஏனைய கதைகளிலிருந்து வேறுபட்டு, பொதுவான சில மனோபாவங்களை உணர்த்திநிற்பது.
கோஷமும் வேஷமும், ஆரோகணம் அவரோகணம் முகமூடி மனிதர்கள், குட்டையும் மட்டைகளும் ஆகிய கதைகள் சமூகத்தில் ஒருவர் அல்லது சிலரிடம் நிலவும் போலித்தனங்களையும் அவர்களால் சமூகம் எய்தும் ஏமாற்றங்களையும் உணர்த்தும் நோக்கின. இவற்றுட குறிப்பாக “கோஷமும் வேஷமும் கதை தனிக் கவனத்துக் குரியது. சமூகத்தைச் சுரண்டி வாழும் சுயநலமிகளுக்கு சமயம், தத்துவம் முதலிய பண்பாட்டு மூலங்கள் எவ்வாறு துணை போகின்றன என்பதை இது உண்ர்த்தி நிற்கிறது. சமயம், தத்துவம், கலை இலக்கியம் முதலிய பண்பாட்டுக் கூறுகள் மனித நேயத்தை வளர்க்கவும் செயலூக்கத்துக்கு வழிப்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் நடைமுறையில் பெரும்பான்மை யும் நேரெதிரான விளைவுகளை நோக்கியே இவை இட்டுச்செல்லப்படுகின்றன; சமூகத்தைச் சுரண்டி வாழும் சிலருக்கு இவை விளம்பர மேடைகளாக அமைகின்ற முரண்நிலையை நாம் நேரடியாக பலகாலமாக அவதா னித்து வருகிறோம். இத்தகு ஒரு நிலையைத்தான் சிதம் பர திருச்செந்திநாதன் இக்கதை மூலம் நம்முன் காட் சிப்படுத்தியுள்ளார். "ஆரோகணம் அவரோகணம்' கதை வளர்ந்து வரும் கலைஞரொருவரை வாழ்த்த மனமற்றுக் குறைகூறும் கலையுலகப் பிரமுகரொருவரின் முகத்திரை யைக் கிழித்துக் காட்டுவது. இவ்வாறே முகமூடிமனிதர் கள், குட்டையும் மட்டைகளும் ஆகிய கதைகளும் சமூக மாந்தர் சிலரின் மனக்கோணல்களின் விமர்சனங்களாக அமைகின்றன.
சுவையாக அமையவேண்டிய மணவாழ்வு சுமையாக மாறுவதற்கான சமூகக் காரணிகளுள் முக்கியமான

Page 8
4.
ஒன்று சீதன வழக்கம். அன்புப் பிணப்ைபை விழைந்து நிற்கும் பெண்மையுணர்வுகள், சீதனை முறையால் சுட் டெரிக்கப்படுவதைச் *சேர்ந்தோம் வாழ்ந்திடுவோம்" கதைசித்திரிக்கிறது.
இனக் கொலைச் சூழலில் எழுந்த கதைகளில் எந்தையும் தாயும்,வீட்டை மட்டுமல்ல ஆகிய இரண்டும் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற அவலநிலை யின் சித்திரங்கள், இராணுவ அடக்குமுறைச் சூழலில். நோயுற்ற தாய்க்கு மருத்துவ வசதி ஏற்படுத்த முடியாத நிலையில், அவளை இழந்து தவித்த ஒருமகனின் உணர் வோட்டத்தில் எந்ததையும் தாயும் கதை அமைகிறது. வயிற்றுவலிக்கு விமானத்தில் மருத்துவர் வந்து மருத்து வம் பார்க்கும் வசதிபடைத்த (அவுஸ்திரேலிய) நாட்டின் பகைப்புலத்தில் இந்த உணர்வு விரிந்து செல்கின்றது. விமானங்களிலிருந்து ஷெல் முதலியவற்றால் அழிவுகள் ஏற்பட்ட நிலையிலும் மனம்கலங்காத பக்குவநிலை வீட்டைமட்டுமல்ல கதையின் உள்ளீடாக அமைந்துளது.
காணிக்கு வேலி உண்டு என்ற கதை யாழ்ப்பாண மண்ணின் பாரம்பரியமான சொத்துடைமை மனோ பாவம், புதிதாக அயல்நாட்டுப் பணவரவால் உருவான அந்தஸ்துணர்வு என்பவற்றைப் பொருத்திக்காட்டுவது. நாட்டுரிமைக்காக போராடும் இயக்கங்கள் உருவாகி வளரும் சூழலிலும் அம்மண்ணின் 'வேலிச்சண்டை” முடியாதநிலை முரண்சுவையுடன் இக்கதையில் வெளிப் படைகிறது. போராட்ட இயக்கங்களின் உருவாக்கத்தை மறுக்கும் உணர்வோட்டங்களும் மேற்படி சொத்து டைமை, அந்தஸ்துணர்வு நிலைகளில் உள்ளுறைந்திருந்த மையையும் ஆசிரியர் உணர்த்தியுள்ளார்,
கடந்த ஏறத்தாழ கால்நூற்றாணடுக் காலப்பகுதி யில் யாழ்ப்பாணப்பிரதேச இளையதலைமுறையினர் பல் வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு நோக்கங்களோடு

5
நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்த நிலைமைகள் பற்றிய நினைவோட்டமாக வெட்டுமுகம் என்ற கதை திகழ் கிறது. பிறந்தமண்ணில் மனநிறைவுடன் வாழமுடி யாமை என்ற அவலம் இக்கதையின் அடிநாதமாக ஒலிப் பதை உணரமுடிகிறது.
என்றுமடியும் எங்கள். என்ற கதை பிள்ளை களைப்பார்க்க பல மணி நேரமாகக் காத்திருக்கும் பெற் றோரின் துயரத்தையும் சலிப்பையும் சித்தரிப்பது. பிள் ளைகள் எங்கே போனார்கள்? எதற்காக? எப்படி? இந்த வினாக்களுக்கான விடை கதையில் இல்லை. அதை வெளிப்படையாகக் கூறும் சுதந்திரம் ஆசிரியருக்கு அன்று இல்லை 1988, 89 காலப்பகுதியில் அமைதிப் படையின் மேலாண்மைச் சூழலில் இளைஞர்கள் பலர்பள்ளிமாணவர்கள் உட்பட - திடீர் திடீர் என காணாமற் போயினர்; பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர்; கடடாய ராணுவசேவைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அவ்வாறான அவலச் சூழலில் பெற்றோர் சமூகம்
எய்திய துயர் இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண் வாசனை கதை சமூகத்தின் அபிப்பிராயங் களுக்கும் தனிமனித விருப்புக்கள் உணர்வுகள் என்பவற் றுக்குமிடையிலான முரண்நிலை காட்டும் ஒரு பொது வான ஆக்கம் என்ற வகையில் ஏனைய கதைகளினின்று
வேறுபட்டது.
மேற்படி பல்வேறு பிரச்சினைகளுடன் கூடிய சமூகத் தில்வெட்டுமுகத்தைக்காட்டும் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக் கும் போதகராகத் தம்மைக் காட்டிக் கொள்ளவில்லை. 'இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்' என வாசகர்களை அழைக்கும் அளவோடு நிற்கிறார். சமூகம் சிந்திக்க முற்படுவதற்கு ஒரு தூண்டுகருவி என்ற வகையிலேயே தினது நிலைப்பாட்டை அவர் புலப்படுத்தியுள்ளார் மான் பதையே இக்கதைகள் உணர்த்தி நிற்கின்றன.

Page 9
6 கதைகூறும் முறையில், முரண்பட்ட நிகழ்ச்சிகளை அருகருகே பொருத்திக் காட்டல், உரையாடல், நினைவு மீட்டல், கடிதம் முதலிய உத்திகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பொதுவாக கதைகள் விவரணத்தன்மை யுடையனவாக அமைந்துள்ளன. கதைமாந்தரின் இயல்பு, கதைநிகழ்சூழல் என்பவற்றை வாசகர் மனதில் பதிய வைக்க இவ்வாறான விவரணமுறைமை அவசியம் என திருச்செந்திநாதன் கருதுவதாகத் தெரிகிறது. ஆயினும் விவரண விரிவு கலைரசனையுடைய வாசகர்களுக்குச்சலிப் பூட்டுவதாகவும் அமையக்கூடியது என்பதையும் அவர் மனதிற்கொள்வது அவசியம். இவ்வகையில், சிறுகதை என்ற கலைவடிவம் இன்று எய்தியுள்ள கட்டமைப்புச் செம்மையின் பகைப்புலத்தில் நோக்கும்போது இத் தொகுதியிலுள்ள கதைகள் இன்னும் செப்பமாக-இறுக் கம் உடையனவாக-அமைந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது. இதனையும் அவர் கருத்திற் கொள்வது இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிவதாக அமையும்.
ஈழத்தின் ஏறத்தாழ 60ஆண்டுக் கால தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இத் தொகுதிக்குரிய இடம் என்ன என்பதை ஒப்பீட்டு நிலையில் எடுத்துக்காட்ட இது சந்தர்ப்பமல்ல. ஆயினும் சமகால ஈழத்தின் ஒரு வெட்டு முகப் பார்வை என்ற வகையில் தனிக் கணிப்புக்குரிய ஒரு ஆக்கம் இது எனலாம். சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களின் சமூக அக்கறையும் படைப்பாற்றலும் தமிழிலக்கியத்தையும் அதனூடாக தமிழர் சமூகத்தையும் உயர்நிலைக்கு இட்டு வரவேண்டும் என்ற வாழ்த்துரை யுடனும் வேண்டுகோளுடனும் இவ்வுரையை நிறைவுசெய் கின்றேன்.
கலாநிதி நா. சுப்பிரமணியன் முதுநிலை விரிவுரையாளர் தரம்-1 தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.

உள்ளே.
O.
11.
கோஷமும் வேஷமும் ஆரோகணம் அவரோகணம்
முகமூடி மனிதர்கள்.
குட்டையும் மட்டைகளும்.
சேர்ந்தோம் வாழ்ந்திடுவோம். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும்.! காணிக்கு வேலி உண்டு.
வீட்டை மட்டுமல்ல. வெட்டு முகம்.
என்று மடியும் எங்கள். மண் வாசனை
22
33
48
63
55
OO
6.
30
罩42
53.

Page 10

1.
65TQyi Galagyi
("கைத்தல நிறைகனி யப்பமொடவல் பொரி
கப்பிய கரிமுக னடி பேணிக் கற்றிடு மடியவர் புத்தியிலுறை பவ கற்பக மெனும் வினை கடி தேகும்"
அன்பர்களே, எல்லாம் வல்ல இறைவியின் துணை கொண்டு மாயா தத்துவமென்னும் பொருள் பற்றிக் கதாப்பிரசங்கம் செய்ய முனைகின்றேன். மாயத்தைக் கூற முனைகின்ற போது இங்கு இளம் பெண்கள் அதிக மாக இருக்கின்றார்கள். நேற்று, பெண்களை இங்கு காணவில்லை. காரணத்தைப் பின்புதான் அறிந்தேன். நேற்று செவ்ாய்க்கிழமை எல்லோரும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம் போய்விட்டார்களாம். அது” நல்லதுதான். பெண்களுக்கும் மாயத்துக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பெண்ணாய்ப் பிறந்த மாயம்.வேண்டாம். பெண்கள் கோவிப்பார்கள். (சனங் கள் சிரிப்பு) மாயை என்றால் என்ன என்பதை ஆத்ம சாதகர்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்தச் சொல்லை மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகத்தில் பத்தொன்பது தடவைக்கு மேல் கையாண்டுள்ளார்.)
வெ-1

Page 11
1Ս அது பஸ் நிலையம். எப்போதும் சனக் கூட்டத்தின் காலடிகளுக்குள் அகப்பட்டுக்கொண்டும், பஸ் வண்டி களின் இரைச்சல்களில் திக்குமுக்காடிக் கொண்டும் இருக்கும். பஸ் நிலையத்துக்கெதிரே அந்தக் கடை இருந்தது. ۔۔
பரபரப்பாக இயங்கும் பஸ் நிலையத்துக்கு எதிரே அந்தக் கடை இருந்தபடியால் எந்நேரமும் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். கடை வேலையாட் கள் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
காலை எட்டு மணியளவில் கடை முதலாளி பூரீமான் சுந்தரம் அவர்கள் கடைக்கு வருவார். காரை நிறுத்தி விட்டு அவர் கடையினுள் புகும்போது அங்கு வேலை செய்யும் வேலையாட்களில் சட்டென்று ஒரு மாறுதல் உண்டாகும்.
தன்னுடைய இடத்தில் அவர் அமர்ந்து கொண்டு கடையைச் சுற்றிப் பார்வையிடுவார். அந்த ஒரு சுற்றுப் பார்வையிலேயே கடையின் குறைநிறைகள் எல்லாம் அவர் விழிகளில் பதிந்து விடும். அதன் பின்னர்தான் கணக்குப்பிள்ளையைப் பார்ப்பார்.
ஏதாவது குறைகள் இருந்தால் அவ்ர் சத்தம் கர்ண கடூரமாக வெளிப்படும். அன்றைக்கு அவர் கடையில் “வந்து அமர்ந்ததும், கடையில் சில்லறை வேலை செய்யும் கந்தசாமியைக் கண்டார்.
அடுத்த வினாடி,
"டேய் கந்தசாமி.." என்று கத்தினார்.
கந்தசாமி பயந்தபடி அவர் முன்னால் வந்தான்.
"ஏன்டா.நேற்று என்னடா நடந்தது?" என அவர் கேட்டார்.

கந்தசாமி தடுமாறினான். “சுகமில்லை முதலாளி”
“என்னடா சுகமில்லை?” “இல்லை முதலாளி.வயிற்றுக்குத்து.” “ஏன்டா டூப் அடிக்கிறாய்? கழுதைப் பயலே, ஒழுங் காக வேலை செய்யிறதெண்டால் வேலை செய். இல்லாட்டி பேசாமல் வேறை எங்கேயும் வேலையைப்
பார். நான் இஞ்ச தர்மசத்திரம் வைச்சிருக்கேல்லை. உங்க ளுக்கெல்லாம் சும்மா சம்பளம் தர.”
“சத்தியமாய் முதலாளி.சுகமில்லாததால்தான் வரே ல்லை."
“ஒரு நாளையோடை உனக்குச் சுகம் வந்துட்டு தோடா..?”
-
“இல்லை முதலாளி. இன்னும் சுகமாகேல்லை. உங்க ளுக்குப் பயத்திலதான் வந்தனான்."
சுந்தரம் சிரித்தார் .
"நல்லாய்க் கதையளக்கிறாயடா கந்தசாமி. கையில
காசிருந்தால் வேலைக்கு வாறஞாபகம் வராது
தானெடா.கூட்டாளிமார் சேர நல்ல கொண்டாட்டந் தான். ஆனால். ஒன்டை மாத்திரம் சொல்லிப் போட்டன். இனிமேல் உப்பிடி நிண்டால் அடுத்த நாள் கடைக்கு வராதை. அப்பிடியே நின்டுவிடு.” என கோபத் துடன் சுந்தரம் சொல்ல பய்மாகத் தலையாட்டினான் கந்தசாமி.
“கந்தசாமி ஒழுங்காய் வேலை செய்ய வேணும்டா. ஒழுங்காய் உழைச்சால்தான் பலன் இருக்கு எண்டதை மாத்திரம் மறந்து போகாதை." என்று மறுபடியும் சுந்தரம் சொன்னார்.
ഷട് ഭൂട് ഭട്

Page 12
12
(மாயா என்னும் சமஸ்கிருதப் பதத்திலேயே அதன் அர்த்தம் அடங்கியிருக்கிறது. யா-யாதொன்றும் மா-ஒரு கணத்துக்கு முன்பு இருந்தது போன்று பின்பு இல்லையோ அது மாயா-மாயை. ஓயாது மாறி அமையும் தன்மை எதனிடத்திருக்கிறதோ அது மாயை-ஆக மாயை என்பது பிரபஞ்சம். அது ஓயாது தன் வடிவத்தை மாற்றியமைத்து கொண்டிருக்கிறது. நிலைபேறு ஒன்றையும் அதனிடம் காண முடியாது. இவ்வுலகம் மாயை. இதில் தாம் வசித் திருப்பது மாயை. நாம் பிறப்பது, வளர்வது, வாழ்ந்திருப் பது, தேய்வது, மாய்வது ஆகிய எல்லாம் மாயை. நாம் முன்னேற்றம் அடைவது மாயை. உலகம் தோன்றி வந்து நிலைபெற்றிருக்கிறது. அது மாயை. நாளைக்கு உலகம் தேய்ந்து மறைந்து போகிறது. அது மாயை. அண்டகோடி கள் அனைத்துமாய் இருப்பது மாயை. ஜீவகோடிகள் அனைத்துமாய் இருப்பது மாயை. சிற்றுயிர்கள் பேருயி ராய்ப் பரிணமித்து வருவது மாயை. உயிர்கள் பந்த பாசத் தில் திருப்தியடைந்து உழல்வது மாயை.) '
ரெலிபோன் மணி அடித்தது. கணக்குப்பிள்ளை றிசீவரை எடுத்தார். “ஹலோ."
"ஒமோம்.இருக்கிறார்.இப்பதான் வந்தவர்.” என்று பதில் சொல்லி விட்டு, சுந்தரத்தைப் பார்த்தார். கணக்குப்பிள்ளை. அவர் பார்வையின் பொருளை உணர்ந்த சுந்தரம் றிசீவரை தான் வாங்கிக் கொண்டார்.
"ஹலோ."
VO Ath
"நான் சுந்தரம்தான் பேசிறன்.ஆர் பேரம் பலமோ..?
0'

13 .
“என்ன பேரம்பலம்.என்ன நடந்தது.? நேற்று ராத்திரி எட்டு மணி வரை லொறியைப் பார்த்துக் கொண்டு இஞ்சை கடையிலதான் நிண்டனான்."
a
அதுசரி பிரச்சினை விளங்குது.இண்டைக்கும் லொறி வராதே...?"
A O D 8
“என்ன அரை லோட்தானோ? என்னப்பா இப்ப அதுக்குத்தானே மார்க்கெட். வாற கிழமை அது விலை ஏறப் போறதாகக் கேள்வி.ஓமோம். நான் பெலத்துக் கதைக்கேல்லை. இப்ப கடையிலை ஆட்கள் இல்லை.சரி சரி விசயத்துக்கு வர். அரை லோட் காணாது. எவ்வளவு அனுப்ப முடியுமோ அவ்வளவையும் அனுப்பு. நாள் போகப் போக எல்லாம் பிரச்சினையாகப் போகும். இப்ப ஸ்ரொக் பண்ணினால்தான் பிறகு.எல்லாம் சரியாய் முடியும்."
S
O
“சரி சரி.எப்படியும் இண்டைக்கு அனுப்பிப் போட வேணும். ஒமோம்.என்ரை வீட்டைதான் அனுப்ப வேணும். எத்தினை மணியென்டாலும் பரவாயில்லை. நான் பார்த்துக் கொண்டிருப்பன்."
“சரி, அப்ப வைக்கிறன்.இண்டைக்கு அனுப்பினால் நாளைக்கு நான் கணக்கைத் தீர்த்துப் போடுறன் சரிதானே." எனப் பேசி முடித்த சுந்தரம் றிசீவரை வைத்தார்.
முகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. அதனைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு

Page 13
14
“அந்தச் சாமான் இண்டைக்கும் வாறது கஷ்டம் போலக் கிடக்கு. இஞ்சை கடையில இருக்கிறதை இப்ப விற்க வேண்டாம். பின்னேரமாய் வீட்டை அனுப்பி விடுங்கோ. வாற கிழமை மட்டிலதான் விலையேறும் போலக் கிடக்கு. அதுவரை வீட்டை இருக்கட்டும். செக்கிங் அமளியாய் இருக்கு." என்று கணக்குப்பிள்ளையிடம் சொன்னார்.
கணக்குப்பிள்ளை தலையை அப்பிடியும், இப்பிடியு மாக அசைத்தார் ‘சங்கரன் காசை அனுப்பிப் போட் டானா' என மீண்டும் கணக்குப்பிள்ளையிடம் சுந்தரம் கேட்டார்.
'இல்லை, நாளை.க்.கு அனுப்புறதாக அப்போதை ரெலிபோன் பண்ணினார்.
"அதுக்கு நீர் ஒம் எண்டு சொல்லிப் போட்டீரா.? அவன் என்ன மனிசன்? சொன்ன தவணைக்குக் காசு தராமல் இப்ப ரெலிபோனை எடுத்து; இன்டைக்குப் பின்னேரம் கொண்டு வரச் சொல்லும்."
———
(என்ன இது எல்லாமே மாயை என்று சொல்லுகிறாரே என நீங்கள் நினைக்கலாம். உண்மை யிலே எல்லாம் மாயைதான். அதனால்தான் மாணிக்க வாசகர் தன்னுடைய சிவபுராணத்தில் பின்வருமாறு கூறு கின்றார்.
'ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி s மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி' என்று சொன்னார். இதன் கடைசி வரியைக் கவனிக்க, அதில் சொல்லுகின்றார். மாயையின் விளைவு ஆகிய

15
பிறப்பு, இறப்பு என்னும் மாறுபாட்டை அகற்றுகிற இறைவனது திருவடிக்கு வணக்கம். ஆக பிறப்பு, இறப்பு எல்லாமே மாயை. இதை நம்மில் எத்தனை பேர் உணரு கின்றார்கள். ஏதோ தாங்கள்தான் பூமியில் பிறந்தவர்கள் என்றும், சாகாவரம் பெற்றவர்கள் போலவும் நடந்து கொள்ளுகின்றார்களே. நிலையில்லாத உடல், நிலையில் லாத வாழ்க்கை, நிலையில்லாத ஐம்புலன்களின் செய்கை கள் எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார் கள். பெண்களைப் பாருங்கள். நிலையில்லாத இந்த உடம் புக்காக, அதாவது அலங்காரப் பொருளுக்காக எவ்வள வைச் செலவழிக்கிறார்கள்? பெளடர்கள், கிறீம்கள், கண்
களுக்குக் கறுப்பு, உதடுக்குச் சிவப்பு என்று பூசி
இப்படியே சேலைத் தலைப்பை போட்டு (தோளில்
துண்டைப் போட்டுக் காட்டுகிறார்) பிறகு லெதர்
பாக்கை இப்படியே கொழுவி (ஒரு பையைக் கையில்
கொழுவிக் காட்டி) கொஞ்சம் இடுப்பைக் காட்டிக்
கொண்டு அசைவார்கள், (பிரசங்கியர் பெண்ணைப்
போல நடிக்க, கூடியிருந்த பெண்கள் சேலைத் தலைப் பால் இடுப்பைப் பொத்த ஆரம்பித்தார்கள்) ஏன் இந்தக் கோலம்? ஒருவேளை நிலையில்லாத இந்த உடம்பை ஏன்
மறைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமுமாக இருக்க
லாம். (ஆண்கள் பலமாகச் சிரித்தார்கள்) ஆண்கள் கூட
அப்பிடித்தான். ஹிப்பி வேஷத்துடன் இடுப்பில் பெல்ட்,
நிலத்தைக் கூட்டும் உடையுடனும், உதட்டில் புகை யுடனும்தான் திரிகிறார்கள். அவர்களுக்குத் தேவாரங்கள்
பிடிக்காது. சூராங்கனி சூராங்கனி பாடல்கள்தான்
பிடிக்கும்.)
*ూ *SP శతా
சுந்தரம் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார்.
நான்கு பேர்கள் கடை வாசலில் வந்து நின்ாார்கள். கடைப்பெடியன் தலையை நீட்டினான்.

Page 14
16
“ஐயா வாருங்கோ.வாருங்கோ என்ன வேணும்?” எனக் கேட்டான்.
"நாங்கள் சாமான் வாங்க வரேல்லை. உங்கடை முதலாளி நிற்கிறாரோ..? என நால்வரில் ஒருவர் கேட் டார்.
கடைப்பெடியன் தடுமாறிப் போனான். யாராவது முதலாளியைத் தேடி வந்தால் வழக்கமாக முதலாளி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலாளி கடையில இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த சுந்தரம் கடைப் பெடியனை அர்த்தத்துடன் பார்த்தார்.
“முதலாளி இல்லை வெளியில போட்டார்” என்று அவன் சொன்னான்.
*மனேச்சர் நிற்கிறாரே" என வந்தவர்கள் விடுவ தாக இல்லை.
கடைப்பெடியன் இதற்கு மறுக்கமுடியவில்லை.
"ஒ நிற்கிறார்" என்றான்.
நால்வரும் கடைக்குள் புகுந்தார்கள். முதலாளி சுந்தரம் மனேச்சராக நடிக்க முனைந்து கொண்டிருந் தார். w
'வாருங்கோ.வாருங்கோ.முதலாளி வெளியில போட்டார். நீங்கள் இருங்கோ' என நால்வரையும் வரவேற்றார் மனேச்சர் வேடம் போட்ட முதலாளி சுந்தரம்.
கடைப்பெடியன் கதிரைகளைக் கொண்டு வந்து நால்வருக்கும் வைத்தான்.

17
“சொல்லுங்கோ, உங்களுக்கு என்ன வேணும்.?”என மனேச்சர் வேடம் போட்ட முதலாளி சுந்தரம் கேட்டார்.
வந்த நால்வரில் ஒருவர் பேச்சைத் தொடங்கினார்.
“நான் ஞானஸ்கந்தன், அவர் குகேந்திர மோகன், அவர் யோகேந்திரன், இவர் ரஞ்சித். நாங்கள் நாலு பேரும் கொழும்பில இருந்து இஞ்சை வந்திருக்கிறம். அனாதைகள் பாதுகாப்புச் சபையில் அங்கத்தவர்கள். அனாதைகள் தொடர்பான நிதி சேகரித்துக் கொண்டி ருக்கிறம். ஏதோ உங்களால் ஆன உதவியைச் செய்ய வேணும்" என்று ஞானஸ்கந்தன் சொன்னார் .
“நல்ல காரியம், ஆனால் இப்ப ஒரு பிரச்சினை பாருங்கோ. முதலாளி வெளியில போட்டார். அவர் இல்லாமல் நான் ஒண்டும் செய்ய முடியாது. அவர் கட்டாயம் உதவி செய்வார். உதவி செய்யிறது அவருக்கு பிடிக்கும். ஆனால்." என்று மனேச்சர் வேடம் சுந்தரம் சொன்னார் . ܗܝ
'இல்லை பாருங்கோ. இப்ப நீங்கள் தந்திட்டு பிறகு, முதலாளியிட்டைச் சொல்லுங்கோவன். நாங்கள் றிசீற். தருவம் என்றார் குகேந்திரமோகன்.
"தாற்தில் ஒண்டுமில்லை. ஆனால் அவரைக் கேட் காமல் ஒண்டும் செய்யிறதில்லை” எனச்சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கடைப்பொடியன் GsF frunt விநியோகம் செய்தான்.
“சோடாவைக் குடியுங்கோ. என்ன செய்யிறது சாண்டு தெரியேல்லை, முதலாளி இப்ப வருவார், எண்டாலும் . பரவாயில்லை. அதுவரை உங்களை இருக்கச் செய்யலாம்: ஆனால் இப்ப அவர் வரமாட்டார்.ம்.என்று இழுத்துக் கொண்டு போனார் சுந்தரம்.

Page 15
18
"அப்ப பரவாயில்லை.நாங்கள் போயிட்டு இன்னு மொரு நாளைக்கு வாறம்..” என நால்வரும் விடைபெற முனைந்தார்கள்.
"குறைநினையாதேங்கோ நாங்கள் சம்பளத்திற்கு நிக்கிற ஆட்கள் தானே.”
“சீச்சீ. நாங்கள் குறை நினைக்கேல்லை. போயிட்டு
வாறம்..” என்று சொல்லிக் கொண்டு ஞானஸ்கந்தன்,
குகேந்திர மோகன். யோகேந்திரன், ரஞ்சித் ஆகியோர் விடைபெற்று வெளியேறினார்கள்.
(இந்த மாயை உடம்புக்கும், உலகுக்கும் ஏன் தான் இந்த சனங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ தெரியாது. இந்த நிலையில்லாத வாழ்க்கையில் யார் ஐயா ஒழுங்காக இருக்கிறார்கள்? பொய், கோபம், காமம், ஏமாற்று என்று எத்தனை குளறுபடிகளை செய்கின்றனர். வீட்டில் ஒரு பெண்சாதி, வெளியில ஒரு பெண்சாதி, பொக்கற்றில் ஒன்று. (சனங்களின் சிரிப்பு) இந்த ஊரில அப்பிடி இருக்காது என்று நான் நினைக்கிறன். கலியாண வயதில் ஒரு ஆள் இருந்தால் கலியாணம் ஆச்சே என்று கேட்பார்கள். கலியாணம் முடிந்தால் பிள்ளை ஆச்சா என்று கேட்பார்கள். இதுதான் நம்மவர்கள் வழக்கம். சுவையான பலகாரங்களை பேஷ் என்பார்கள். தயிர்க் குழம்பு, பால், பழம் எல்லாவற்றையும் பேஷ் பேஷ் என்று சுவைப்பார்கள். கோயிலில் யாராவது சரி பிழை கதைத் தால் என்ன துணிவில் கதைக்கிறார்கள். கோயிலுக்கு ஏதாவது வாகனம் செய்து வைத்தார்களா? கோயில் திருப்பணி வேலை செய்கிறார்களா? என்று கேட்பார்கள். இதற்குக் காரணம் மனித மனங்கள்தான். மனிதனிடத்து மனதாய் மிளிர்வது மாயை. இந்த மனதை ஒரு விதமான ஜால வித்தைக்காரனென்று சொல்ல வேண்டும். ஏனென் றால் மனது தோற்றத்துக்கு வரும்போது மனிதன் பிரபஞ் சத்தைக் காணுகின்றான்)

19
"கணக்குப்பிள்ளை ஸ்டூடியோவுக்குப் போன் பண்ணி பின்னேரம் ஆறு மணிக்கு கமெராக்காரர் ஒருவர்ரை இஞ்சை கடைக்கு அனுப்பச் சொல்லும். அதோட அந்த பேப்பர் றிப்போட்டரையும் நான் தேடினதாகச் சொல் லும்” என்று சுந்தரம் சொல்லிக் கொண்டு போக கணக்குப்பிள்ளை தலையாட்டிக் கொண்டிருந்தார்.
“என்ன காணும், எல்லாத்துக்கும் தலையாட்டுறீர், சொன்னது எல்லாம் ஞாபகமே...!"
அதற்கும் தலையாட்டினார் கணக்குப்பிள்ளை.
令
"கொஞ்சம் பொறுத்து கந்தசாமியை கந்தவனத் தின் ரை புடவைக்கடைக்கு அனுப்பி அந்தப் பார்சலை எடுத்து வைத்திரும். நான் வீட்டைபோட்டு ஆறு மணிக்குக் கடைக்கு வர கமெராக்காரர், அந்தப் பார்சல் எல்லாம் 'ரெடியப்ாக இருக்க வேணும்" என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார் சுந்தரம்.
சரியாக மாலை ஆறு மணிக்குக் காரில் மீண்டும் க்டைக்கு சுந்தரம் வந்தபோது கமெராக்காரர், பார்சல எல்லாம் ரெடியாக இருந்தன.
கமெராக்காரரும், பார்சலுடன் கணக்குப்பிள்ளையும் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது.
( LDT 60)Lu உணராதவன்தான் வாழ்க்கையையும், உலகையும் பெரிதாக நினைக்கிறான். சில பேரைப் பாருங்கள். தங்கள் பெயருக்கு முன்னால் பட்டங்களைச் சூட்டுவது பிடிக்கும். அடைமொழிகள், பட்டங்கள் ஆகா துங்க. நிலையில்லாத இந்த உடம்புக்கு இவை எல்லாம் எதற்கு, சாதாரண சண்முகம், மயில்வாகனம், சிவகாமி சாதாரண மனிதர்களாவே இருக்கட்டுமே. எதற்காகப் பட்டங்கள், அடைமொழிகள். உயிர் இருக்கும் வரைக் கும்தான் ஐயா உடலுக்குப் பெயர். உயிர் போய் விட்டால் பிரேதம்தானே. பிறகு ஏன் ஐயா பட்டங்களும், பதக்கங்

Page 16
2)
களும், அடைமொழிகளும் மாய உடம்புக்கு இவை தேவை தானா..? மாயையின் தோற்றங்கள் அனைத்திற்கும் இகம் என்று பெயர். இதற்கு அப்பால் இருக்கும் பெரு நிலைக்கு பரம் என்று பெயர். இந்த மாயையில் கட்டுண்டு கிடப்பது வாழ்க்கையின் குறிக்கோள் அன்று. பரமனைச் சார்ந்திருந்து மாயையைக் கடந்து அப்பால் போவது தான் குறிக்கோள். இதனையே
"ஐய நின்னது அல்லது இல்லை
மற்று ஓர் பற்று வஞ்ச வேன் .
பொய் கலந்தது அல்லது இல்லை
பொய்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க
வந்து நின் கழல்களே
மெய் கலந்த அன்பர் அன்பு
எனக்கு ஆக வேண்டுமே." என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது ஐயனே எம் பிரானே, கண்ணில் மை தீட்டியுள்ள உமாதேவியாரின் வலப் பாகத்தில் இருப்பவனே பொய்யான உடல் வாழ்க்கையில் பற்று வைத்தால் நான் வஞ்சகன் ஆவேன். அப்படி நான் பொய்மையில் மூழ்கேன். மெய்ப் பொரு ளாகிய உன்னிடத்தே உன் அன்பர்கள் பற்று வைத்திருக்கின்றனர். நான் வேண்டுவதும் அப்பேரன்பேயாம். ஆகவே பரமனை நாடுவோம். மாயத்தைக் கடப்போம்)
கோயிலடிக்கு சுந்தரம் காரில் வந்து இறங்கியபோது பிரசங்கியாரின் பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது. சிலர் பரபரப்புடன் வந்து சுந்தரத்தை வரவேற்றார்கள்.
W 17s. 17S. S.
கோயிலடியில் பிரசங்கத்தை ரசிக்கும் கூட்டத்தினரும்
மற்றவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு விமர்சனம் செய்வோருமாகப் பலர் காணப்பட்டார்கள்.

21
பலர் புடைசூழ விமர்சனங்களைத் தாண்டிக் கொண்டு சுந்தரம் மேடையை அடைய பிரசங்கம் முடிந்தது.
“இப்போது எமக்குப் பிரசங்கம் மூலம் இனிய கருத் துக்களைச் சொன்ன திருவாளர். அவர்களுக்கு பிரபல வர்த்தகர், கொடைவள்ளல் சுந்தரம் அவர்கள் கதாப் பிரசங்க மாமேதை என்ற பட்டத்தை வழங்கி அன்பளிப்புச் செய்து பொன்னாடை போர்த்தி கெளரவிப் பார்” என யாரோ அறிவிக்க.
அவர் அறிவித்த காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. சுந்தரத்துடன் வந்த கமெராக்காரர் படமெடுக்க ஆரம் பித்தார்.
வீரகேசரி 16- I -1980

Page 17
2
9,6JT5600Ti அவரோகணம்
“வணக்கம்”
“வணக்கம்-வாருங்கள்”
*நன்றி-"
“இப்படி அமரலாமே--”
"நேற்றிரவு ரெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்குக் கூறியது போல எமது வார வெளியீட்டின் சார்பில் பேட்டி காண வந்துள்ளோம்-ட"
"நல்லது .”
“தங்களை எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரியும். ஆகவே எமது பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்தி வைப்பது எமது நோக்கமல்ல. அது அவசியமுமல்ல. தங்களின் பேட்டி மூலம் வளர்ந்து வரும் கலைஞர் களுக்கு ஏதாவது பயன் கிடைக்க வேண்டும் என விரும்பு இறோம். எனவே எமது கேள்விகளையோ, குறுக்கீடு களையோ, எதிர்பாராமல் பயனுள்ள மிக முக்கியமான விடயங்களைப் பற்றி ஆழமாகவும் நுட்பமாகவும் சொன் னால் நன்றாக அமையும்." , “உங்கள் நோக்கம் எனக்குப் புரிகின்றது. கூடியவரை உங்களது வேண்டுகோளை நிறைவேற்ற முனைகின் றேன்"
“தாங்கள் இசைத்துறையில் மிக நீண்ட காலமாக ஈடுபாடு உடையவராக இருக்கின்றீர்கள், இசைத்துறை யில் ஈடுபடக் காரணம் யாது?
*SP శాతా =S>

23
சங்கீத ரசிகர்கள் எந்தவிதமான ஆர்ப்பரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் இன்றி அடங்கிப்போய் இருந்தார் கள். அவர் ருடைய தோற்றங்களிலும் செயற்பாடுகளி லும் சங்கீதம் மணத்தது. .
இந்தியாவில் இருந்து சற்று முன்னர் தான் வந்த வர்கள் போல பெண்கள் காணப்பட்டார்கள். பளபளக் கும் சேலைகள் பளிரென மின்னும் நகைகள் அன்ற லர்ந்த மலர்கள் சகிதம் அவர்கள் வெகு சிறப்பாகக் காணப்பட்டார்கள்.
இனிமையான ஒரு எதிர்பார்ப்புடன் எல்லோரும். அமர்ந்திருக்தார்கள். விழிகள் ஆர்வத்துடன் சுழன்று பார்வைகளை எறிய செவிகள் இனிய நாத இசையை செவிமடுக்க துடி துடிக்க, இதயங்கள் இன்பவேதனையை அனுபவிக்கக் காத்து நிற்க, ராஜபார்வையுடன் செல்வி பிரியா கந்தசாமி மேடையில் தோன்றினார்.
প্ৰভজ-স্পষ্টভঙ্গ-প্ৰভঙ্গ
“சிறு வயதிலேயே எனக்கு சங்கீதம் என்றால் உயிர். யாராவது பாடும் போது அசையாமல் இருந்து கேட்பேன். எனது இந்த ஆர்வம் காரணமாக தகப்ப னார் எனக்கு சங்கீதம் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத் தித் தந்தார். நானும் வளர, என்னுடைய சங்கீத அறிவும், ஆர்வமும் வளர்ந்தன. இப்படியான உரமிக்க வளர்ச்சியின் அடிப்படையினாலேயே நான் மிகச் சிறந்த இசை மேதையாக விளங்குகின்றேன் என்பதை தெரிவித் துக் கெரள்ள விரும்புகின்றேன்." "சங்கீதத்தைப் பற்றி.” "சங்கீதம் என்பது, செவிக்கு இன்பம் தரும் ஒரு புனிதமானகலை. மனிதர்கள் முதற் கொண்டு மிருகங் கள், பண்டிதர்கள், பாமரர்கள், விருத்தர்கள், பாலகர் 'கள் எல்லோருமே அதனை ரசிக்கின்றார்கள்.
s7SP 41 47SP

Page 18
24
உடல் வெண்பட்டாய் பூத்திருக்க, வதனம் புன்னகை மழைபொழிய நெற்றியிலே வட்டக் கரும் பொட்டு வண்ணமாய் பிரகாசிக்க, காதில் தூங்கிய வளையங்களும் காதோரத்து கார் கூந்தலும் அசைந்தாட, கன்னக் கதுப்புகள் கருஞ்சிவப்பாய் மின்ன மெல்லதரங்கன் மலர -செல்வி. பிரியா கந்தசாமி பாட ஆரம்பித்தார்.
“வலசி வச்சி யுன்ன நாபை-சலமுஸேயமே ராஸா மி” என்ற நவராக மாளிகை வர்ணத்துடன் கச்சேரி ஆரம் பிக்க ரசிகர்கள் மெய்மறக்க முனைந்தனர்.
மிருதங்கமும் வயலினும் கடமும் அவர் நாதத்தோடு இணைந்தும், வளைந்தும், நெளிந்தும் மெருகூட்ட கச்சேரி களை கட்டியது. حیح
முன் வரிசையில் இருந்தவர்கள் தங்களை மறந்து தாளம் போடத்தொடங்கினர். ஊனையும், உயிரை யும் உருக்கும் உன்னதமான நாத வெள்ளம் அந்த மண்ட பத்தில் இருந்தவர்களை மயக்கி உணர்ச்சிப் பிரவாகத் தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.
ഭ\ട് ഭട് ജട്ടത്ത
ஏனைய கலைகளுடன் ஒப்பிடுகையில் சங்கீதம் எந்த வகையில் வேறுபடுகின்றது, என்று சொல்ல முடி uyudrr?”
“கலைகளுக்குள் மிக நுட்பமான கலை சங்கீத மாகும். சிற்பம், சித்திரம், இவற்றைக் கண்ணால் காண லாம். அவற்றைத் திருத்தி அமைக்கலாம். அழித்து எழு தலாம். கவிஞர்கள் தாங்கள் எழுதும் கவிதைகளைக்கூட ஒருமுறை ஏட்டில் எழுதிப்பார்த்துவிட்டு தேவையா னால் பிறகு திருத்தி அமைக்கலாம். ஆனால் சங்கீதக் கலையில் இப்படி எல்லாம் செய்ய முடியாது. சங்கீதம் காற்றினிலே தோன்றிக் காற்றிலேயே மறைந்து விடுகின் றது. அதற்கு உருவம் கிடையாது. கண்ணால் பார்க்க

25
முடியாது, திருத்தி அமைக்க முடியாது என்று பேராசிரி யர் கல்கி அவர்கள் சொன்னதையே நானும் இங்கு சொல்ல விரும்புகின்றேன்.
-༧༤ ༡༤ ༡༤
இசை ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளந்தது. அவர்களது ஆனந்தமான பாராட்டுகளைத்தன் புன்ன கையினால் ஏற்றுக் கொண்டார் செல்வி-பிரியா கந்த சாமி, எத்தனை தரம் கேட்டாலும் சற்றும் தெவிட் டாத ஆலாபனை அளவுடனும், அழகுடனும் ஒழுங் கான அமைப்புடனும், அடுக்கடுக்காகவும், செதுக்குவது போலவும், வளைந்தும் குழைந்தும் வழங்கி, மக்களை தன் வசப்படுத்தி செயல் இழக்கச் செய்து கொண்டிருந் தார் தொடர்ந்து முத்தையா பாகவதரின் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த.
“கங்கணபதே.நமோ . நமோ.சங்கரி . தந்யா. நமோ.நமோ...' என்ற கீர்த்தனை ராஜபாவத்துடனும் உயிரோட்டத்துடனும் எழுந்து மெல்லிய நுண் அலை களாக மண்டபத்தில் இருந்தவர்களின் செவி வழியாகப் புகுந்து இதயநாடிகளை இதமுடன் வருடியது.
அந்தச் சந்தர்ப்பத்திலே மண்டபத்தின் வாசலிலே கார் ஒன்று வந்து நின்றது. அங்கு ரசிகர்களை வர வேற்றுக் கொண்டிருந்த வரவேற்பு குழுவைச் சேர்ந்த எக்கவுண்டன் ஞானஸ்கந்தனும் ரெவிக்கொமினிக்கே ஷன் இன்ஸ்பெக்டர் சாள்ஸ் ரஞ்சித்தும், பரபரப்புடன் காரை நெருங்கினார்கள். பருத்த உருவமும் உயர்ந்த தோற்றமும் உடைய ஒருவரும் வேறு சிலரும் காரை விட்டு இறங்கினார்கள்.
ஆளும் உதவ

Page 19
26
“சங்கீதம் பயலுவதனாம் இசைக் கலைஞராக மாறு வதைவிட வேறு என்ன பலன்களைப் பெறலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?"
"சங்கீதம் பயிலுவதனால், அன்பு, அடக்கம், பக்தி, நட்பு, மனத்திருப்தி முதலிய நற்குணங்கள் விருத்தியாகும் என்று சொல்லப்படுகின்றது கூடவே புத்தி கூர்மை, கற்பனாசக்தி, ஞாபகசக்தி முதலியவையும் ஒருவருக்கு விருத்தியாகும். சங்கீதத்தினால் ஒற்றுமையினை வளர்க்க லாம், அகில உலக மனப்பான்மை ஏற்படும், பல தேசத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி சங்கீதத்துக்கு உண்டு எனவும் கூறப்படுகின்றது."
1OSP OSS SSD
மதுரமான தெளிவான கவர்ச்சியான குரலையுடைய பிரியா கந்தசாமி மண்டபத்தில் அமர்ந்திருந்த சனங் களை தன்வசம் இழுக்கச் செய்து மகுடியில் மயங்கிய நாகங்களாக மாற்றி "ஜெகன் மோகினி" ராகத்தில் அமைந்த “ஸோ பில்லு சப்தஸ்வர-அந்தருல பகிம்ப வே மனசா" என்ற கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந் தாா.
உடலோடு இயைந்த உயிராக பக்க வாத்தியக்கார ரும், அவரின் இசைக்கு சுவையூட்டினர்.
பிரியாவின் குரல் இளமையும், இனிமையுமாக பொங்கிப் பிரவாகித்தது. மென்மையான மலர்களை உதிர்த்தது. பன்னீரைச் சொரிந்தது. மெருதுவான தென்றலாக உருவெடுத்தது. உணர்ச்சியைக் கிளறும் தாபத்தை உண்டுபண்ணியது. ரோஜாவின் மெதுமையை உணரவைத்தது. மொத்தத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான ஜொலிப்புடன் வெளிப்பட்டுக் கொண்டிருக், கையில்.

27
காரில் வந்திறங்கிய மனிதரை ஞானஸ்கந்தனும் சாள்ஸ் ரஞ்சித்தும் மண்டபத்தினுள் அழைத்து வந்தார் கள்.
ഭ്ട് ഭട് ഭട്
'பாடுபவர்கள் எல்டோரும் பக்தி உடையவர்களாக இருக்க வேண்டுமா?"
“நிச்சயமாக இசைக்கு அடிப்படை பக்தியாகும். ஏணி எவ்வளவுதான் மேலே சாய்ந்திருந்தாலும் அதன் அடிக்கால் தரையில் நன்றாக ஊன்றியிருக்க வேண்டும். அதேபோல, பக்தியோடுதான் இசை அமைய வேண்டும். மேலும் பாடுவது என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய கலையாகும். சுருதியை அனுசரித்துப் பாட முயலுவதிலும் லயத்துடன் பாடுவதினாலும் மனிதனுக்கு ஒழுங்குடன் நடக்கும் குணமும் சங்கீதத்தால் ஏற்படு கின்றது."
கsச கSச சுளு
ராகம், தானம், பல்லவி, கீர்வாணி ராக ஆலாபனை யுடன் ஆரம்பித்து, "தென் பழனி வடிவேலனே" பல்லவி யுடன் களை கட்டி திரிகாலப்படுத்தி அணுலோமம்பிரதிலோமம் பாடி நிரவல் செய்து “ரிகரிஸநீ.ஸரிகரீரி. ஸரிகரிவிஸரீ.ஸநிநிததபாம பதநீஸரீ.ரிகமகரிஸ்.ரிக மபா.பதிபதபம.பததிநிஸா.ஸ்” என்ற சுரவரிசையில்
புகுந்தது.
போர்க்களத்தில் வில்லில் இருந்து குறிதப்பாமல் பாயும் பாணங்களைப் போல சுர பாணங்கள் புறப் பட்டு ரசிகர்களை சல்லடைக் கண்களாகத் துளைக்கட அவர்களோ,
மென் காற்றில் ஆடும் நாற்றங்கால்களாக மனங் களை அசையவிட்டு வேப்பமர நிழலின் குளிர்மையையும்

Page 20
28
பணிகாலத்து விடியற்காலையின் சிலிர்ப்பையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். .
பருத்த உருவமும், உயர்ந்த தோற்றமும் கொண்ட அந்த மனிதரையும் அவரோடு வந்தவர்களையும் அழைத் துக் கொண்டு மண்டபத்தின் உள்ளே ஞானஸ்கந்தனும் சாள்ஸ் ரஞ்சித்தும் வந்தபோது மேடையின் முன்னால் மெய்மறந்து போயிருந்த ரசிகர்கள் இவர்களைக் கவனிக்கவில்லை.
முன் வரிசையில் கதிரைகள் ஒன்றும் வெறுமையாக இல்லை. ஞானஸ்கந்தனும், சாள்ஸ் ரஞ்சித்தும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினர்.
as as as
"சங்கீதக் கச்சேரி செய்பவர்கள்-அதாவது பாடு பவர்கள் எவ்வாறு பாட வேண்டும்?"
'பாடுபவர்கள், கேட்பவர்கள் மனதிலே உணர்ச்சி பொங்கும்படி, மொழியுணர்ச்சி, பாவ உணர்ச்சிகளுடன் பாடவேண்டும். தானும் உணர்ச்சிவசப்பட்டு - சபை யோர்களையும், அவ்வுணர்ச்சி வசப்படும்படி பாடுவதே உண்மையான சங்கீதமாகும். சங்கீத வளர்ச்சிக்கு வித்து வான்களின் சீர்திருத்த முயற்சி மட்டும் போதாது. பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அப் போதுதான் அவர்களாலும் உன்னதமான சங்கீதத்தினை அனுபவிக்க முடியும். உண்மையான சங்கீதத்தின் அழகு படித்தவர்களும், படிக்காதவர்களும் சங்கீத ஞானம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் அனுபவிக்கும்படி இக்க வேண்டும். சங்கீத வித்து வான்களின் உண்மை பான உயர்ந்த நோக்கம் தங்கள் சங்கீதத்தை பல்லாயிரக் கணக்கான மக்கள் அனுபவித்து ரசிக்க வேண்டும் என்ப தேயாகும்.
1st is as

29
ரசிகர்கள் கரகோஷம் செயவதையே மறந்து போய் இருக்க-லாவ்கமாக ஊர்ந்தும் ஒடியும், பாய்ந்தும், பறந்தும் ஜால வித்தை செய்து கொண்டிருந்தது செல்வி. பிரியா கந்தசாமியின் குரல். பிரம்மபூரீ வீரமணி ஐயரின் அடாணா ராகத்தில் அமைந்த கந்தனிடம் நீ சொல் லடி-சகியே - இந்தகணம் வராவிடில் எந்தன் உயிர் நில்லா தென்று" என்ற பதம் புதுமையாக வெளிப் பட்டு ரசிகர்களை சிலு சிலுக்கச் செய்தது. "நீறு பூத்த நெருப்புப் போல் நெஞ்சம் நிறைந்ததே தொல்லை கூடும் பிரிவுத் துயரில் கொடுமைக்கும் உண்டோ எல்லைஆறுமுகன் அன்றி எனக்கு ஆறுதல் எவரும் இல்லை” என்ற சரண அடிகளுடன் ரசிகர்கள் உருகினர்.
ராஜ பார்வையுடனும்-நாயகி பாவத்துடனும் உன்னதமான தாபத்துடன் உணர்ச்சிகளை குவியல் குவி யல்களாக வாரியிறைத்தார். ரசிகர்கள் புல்லரித்து, வண் டிடம் மயங்கிய புதுமலர்களாகத் தள்ளாடினர்.
மண்டபத்தின் சனங்கள் இவ்வாறு இருக்க, உள்ளே வந்த பருத்த உயரமான மனிதருக்கு சற்று கோபம் வந்தது, “ஏன்.நான் வருவேன் என்று தெரியாதா? நல்ல ஆட்கள்தான். நீங்கள்." என முனு முணுத்தார்.
அப்போதுதான் அவரை அவதானித்த சிலர் விரை வாக எழுத்து பயபக்தியுடன் அவரைப் பார்த்து சிரித்து அவருக்கு இருக்க இடம் கொடுக்க முனையும்போது யாரோ கதிரைகள் கொண்டுவந்து வைத்தார்கள்.
கால்மேல்கால் போட்டவாறு - அவர் கதிரையில மர்ந்தார். அவருடன் கூட வந்தவர்களும் அவ்வாறே அமர்ந்தனர்.
--S- <2- 42N
“அகம்பாவத்தை அழிக்கக்கூடிய சக்தி சங்கீதத்துக்கும் உண்டென்று சொல்லுகிறார்களே . தற்போதைய

Page 21
30
இசைக் கலைஞர்களுக்கு இது எவ்வளவு தூரம் பொருந்து ன்ெறது?"
“நல்லதொரு கேள்வி கேட்டீர்கள். அகம் பாவத்தை அழிக்கக்கூடிய சக்தி சங்கீதத்திற்கு உண்டு என்பது மிகப்பெரிய"உண்மை. ஆனால் தற்போதைய கலைஞர்களிடம் அகம்பாவமும் ஆணவமும்தான் மிஞ்சி யுள்ளது. தங்களை விட்டால் வேறு இசைக் கலைஞர் களே இல்லை என்ற மாதிரியான ஒரு மனப்பாங்கு அவர் களுக்கு இருக்கிறது. ஒருவர் நன்றாகப் பாடுவதைக் கூட மற்றவர்கள் சரியில்லை-சுருதி சுத்தமில்லை, தாளக்கட்டு இல்லை என்று சொல்லுவார்கள். இப்படியான எண்ணங் களும் செயல்களும், சங்கீத வளர்ச்சிக்கு ஏற்றது அல்ல "
1SYNr 127SP SNA
“கீததுணிகி தக தீம் திகிட தோம். நாசுரக கோனி. தாதி தெய்.தெய்தி தெய் கிரக தோம்" என்ற பல்லவியு. டன் தில்லானா ஆரம்பித்தது.
இனிய மெருகுடன் ராகபாவம் ததும்பும் வகையிலும் பாட ரசிகர்களின் உணர்வுகளைச் சுண்டியிழுத்து “பது ம நாப "துமாரி.லீலா.ஜாபசுமே ஸாவரோ-தாப சங்கட சரனா ஆயோ,ஸோக மாரோ துமஹரோ ததீம் ததீம், திரனா-உதறித-தானி தானி ததீம் ததிம் திரணா” என்ற சரணம் பாடி மீண்டும் பல்லவிக்கு வந்து தில்லானாவை நிறைவு செய்த போது ரசிகர்கரங்கள் அசைந்தனவே ஒழிய கரவோசை வெளிவரவில்லை. அந்தளவுக்கு மெய் சிலிர்த்து உருகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மெய் மறந்து உருகும் ரசிகர்களை அந்த பருத்த உருவமுடைய உயர்ந்த தோற்றமுடைய மனிதர் பார்த்தார். அவர் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன.
17SP is 17SP

31
“இப்படியான பிரச்சினைக்கு தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்-குறிப்பாக இளங் கலைஞர்களுக்கு"
“ஏனையோரிடம் குற்றங்கள் குறைகள் இருக்கலாம். அவற்றை திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும்.மட்டம் தட்டும் மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆனால் நம்மவர்கள் ஒரு இசைக் கலைஞர் என்னதான் திறமை யாகப் பாடினாலும் மட்டம் தட்டுவதைத்தான் செய்கின் றனர். ஆனால் ஒன்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். எனவே ஏனையவர்களை மதிக்கும் பழக்கமும் வாழ்த்தும் பண்பும் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். இளைய தலைமுறை கலைஞர்களாக இருந்தால் என்ன-வளர்ச்சி பெற்ற கலைஞர்களாக இருந்தாலென்ன-இதை மனதில் கொள்ளவேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று கதைக்கும் பழக்கமும் இருக்கக் கூடாது"
“இவ்வளவு நேரமும் மிக பயனுள்ள விடயங்களைப் பேட்டி மூலம் கூறிய தங்களுக்கு எமது நன்றிகள்", "நன்றி”
1 s SP
“அபகார நிந்தை பட்டுழலாதே அறியாத வஞ்சனைக் குறியாதே." என்ற திருப்புகழுடன் கச்சேரி இனிது முடிந்தது. பாடிக் களைத்து சிவந்த முகத்துடன் பிரியா கந்தசாமி பவ்வியமாக மேடையை விட்டு இறங்கினார்.
மேன்டயில் யாரோ நன்றி சொல்ல ஆரம்பித்தார். "சிறப்பாக இசைக் கச்சேரி செய்த செல்வி. பிரியா கதந்சாமி அவர்களுக்கும் வயலின் வாசித்த. அவர்கட்கும்' மிருதங்கம் வாசித்த. அவர்கட்கும் மற்றும் வாத்தியக் காரர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவிக்கின்றேன். முக்கியமாக இந்த இசைக் கச்சேரி சிறப்பாக நடக்க ஒழுங்கு செய்து பெரிதும் உதவிய செல்வி.அவர்கட்கும் எனது இதயம் கலந்த மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

Page 22
32
மேடையை விட்டு இறங்கிய செல்வி பிரியா, கந்தசாமி அந்த பருத்த உருவமுடைய மனிதர் அருகில் வந்து கை1ெ டுத்து வணங்கினார். பார்வையாலேயே கச்சேரி எப்படி இருந்தது என வினவினார்.
“என்ன நடந்தது? நன்றாகப் பாட முயலுகின்றீர்.
தான். ஆனாலும் சுருதி சுத்தமில்லை. தாளமும் இடை யிடையே தவறி விடுகிறது. இவற்றைக் கவனிக்க வேண்டும். சங்கீத ஞானம் இல்லாத ரசிகர்கள் எல்லாவற். றுக்கும் கையைத் தட்டுவார்கள். அதை வைத்துக் கச்சேரியை மதிப்பிடக்கூடாது. தொடர்ந்து சிறப்பாகக் கச்சேரி செய்ய வேண்டும். எனது வாழ்த்துக்கள்." என அந்தப் பருத்த உயரமான மன்தர் சொன்னார்.
சிவந்திருந்த பிரியா கந்தசாமியின் வதனம் இருண்டு கறுத்தது. இனிய சுகத்தை அனுபவித்த ரசிகர்கள் ஆனந்தக் களிப்புடன் இசை நாயகியான பிரியா கந்த சாமியை நெருங்கினார்கள்.
அந்த பருத்த உருவமுடைய உயரமான மனிதர் தன் மனைவி சகிதம் வீடு போய்ச் சேர்ந்தார்.
வீட்டிற்குப் போகவும் ரெலிபோன் மணி அடித்தது அவர் ரெலிபோனை எடுத்தார்.
“ஹலோ." “ஹலோ..." “நான் வார வெளியீட்டு நிருபர் ப்ேசுகின்றேன்.
நாளை உங்களைப் பேட்டிகாண விரும்புகின்றேன். என்ன
நேரத்துக்கு வரலாம்?"
“காலை பத்து மணிக்கு.ஓமோம் நான் வீட்டில் தான்
இருப்பேன்." ン
வீரகேசரி 01. 02 198

முகமூடி மனிதர்கள்
மாலை ஆறு மணிக்கு றுாமை விட்டு வெளியே வந்தேன். றோட்டு றோட்டாக இல்லை. ஊர்ந்து செல்லும் வாகனங்கள். பாய்ந்து செல்லும் மனிதர்கள் பந்தடிக்கும் சிறுவர்கள். காறித்துப்பும் முதுமைகள் துள்ளிச் செல்லும் இளசுகள்.
மிக அவதானமாக மூக்கைப் பிடித்து நடந்து காலடி களைக் கூட மிக லாவகமாக வைக்க வேண்டியிருந்தது:
ஏனைய மனிதர்களைப் போல பாய்ந்து செல்ல முடியவில்லை. எப்போதுதான் அவர்களைப் போல நடந்து பழகப் போகின்றேனோ..?
நகரத்தின் சகல குளறுபடிகளும் அந்த றோட்டின் இரு புறங்களிலும் கடை விரித்திருந்தன. பைப் தண்ணி ரில் தலையை நனைத்து உடலை தெளிக்கும் இளம் பெண்கள். சட்டி பானைகளைக் கழுவி நடுறோட்டில் ஊற்றும் குடும்பப் பெண்கள். றோட்டுக்கானில் காலை யில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் குழந்தை கள். அருகே தின்பண்ட வியாபாரம் செய்யும் நடை பாதை வியாபாரிகள். சீ.பார்க்க என்ன பின்னேரம் ஆறுமணியா? எந்த நேரம் பார்த்தாலும் இதே காட்சி தான். மனதில் வெறுப்பு அலை மோதியது.

Page 23
34
மிக அவதானமாக நடந்தும் பாய்ந்தும் வந்த நடுத்தர வயதுப் பெண் தோள் தெறிக்க இடித்து விட்டு பேசாமல் போனாள்.
என்ன மனிதர்கள் இவர்கள்.சந்திக்கு வந்தாகி விட்டது. முன்பை விட பரபரப்பான மனிதர்கள் கும்பல் கும்பலாக எங்கேயோ போட்டதை எடுக்கப் போவதைப் போல,
ஒரே அமளி, ஒரே பரபரப்பு சந்தியில் சற்று நேரம் நின்று மேலும் நிற்க முடியாமல் சனங்கள் இடிக்க.
இடது பக்கம் திரும்பி நடந்தேன். மிஸ்டர் சுந்தர லிங்கம் சந்திக்கு வந்து இடது பக்கம் தானே திரும்ப சொன்னவர்.
ப்ளூக் கலர் பெயின்ட் அடித்த கேற். நம்பர் செவன் லக்கி செவன் என்று சொன்னவர். நடந்தேன் நம்பர் ரூ. திறி.திறிஏ.நடந்து.நம்பர் செவன் மங்கிப் போன ப்ளூக் கலரில் கேற்.
கஞ்ச களு கSச
பஸ்சை விட்டு இறங்கி அந்த ஒவ்பீசை நெருங்கி னேன். காலை ஏழு ஐம்பத்தைந்து. ஒவ்பீஸ் அமைதியாக இருந்தது.
இன்னமும் யாரும் வரவில்லை. வெளியே கதிரையில் அமர்ந்தேன். மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.
சுய நினைவுக்கு வந்த போது எட்டு இருபத்தைந் தாகிவிட்டது. அப்பொயின்மன்ட் லெட்டரைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து, வழக்க மான காரியங்களை முடித்து, அட்டென்டன்ஸ் றெஜிஸ்ட ரில் கையெழுத்து வைத்துஎன்னுடைய மேசையில் வந்து அமர்ந்தேன்.

35
சுற்றிவர மேசைகள் எதிரும் புதிருமாக சக ஊழியர் கள் சிலர் என்னை ஒரு மாதிரியாக, மெல்லிய புன்னகையு டன் பார்க்க வேறு சிலர் எதையுமே கவனிக்காமல் தம் பைல்களுடன் போராட எனக்கு சலிப்பாக இருந்தது.
12, SP 17SP
கேற்றை திறந்தேன். மெல்லியதாக கிரீச்சிட்டது இந்த றோட்டில் வித்தியாசமான வீடு, வீட்டின் முன்னால் முற்றம் இருந்தது. அடர்த்தியாக புல்லுக்கிடை யில் மண் தெரிந்தது. முற்றம் முழுக்க ஒரே குப்பை.
றோட்டு நாற்றம் பரவாயில்லைப் போல இருந்தது. இன்னுமொரு லேஞ்சி தேவைப்பட்டது. கேற்றடியில் நின்று வீட்டைப் பார்த்தேன். கதவு, யன்னல்கள் எல்லாம் வாயடைத்துப் போய் இருந்தன. மிஸ்டர் சுந்தர லிங்கம் வீட்டில் இல்லையோ.
சா.அப்படியிருக்காது கட்டாயம் ஆறு மணிக்கு வரச்சொன்னவர். வரச்சொலிப் போட்டுப் போயிருக்க மாட்டார். அப்படியான ஆளாக அவர் இருக்க மாட்டார்
திரும்பவும் வீட்டு முற்றத்தைப் பார்த்தேன் வருஷக் கணக்காக விளக்குமாறு படாத முற்றம் வாடிப் போன பூ மரங்கள்.உடைந்து போன போத்தல் துண்டுகள் காகம் கொண்டு வந்து போட்ட நண்டுக் கோதுகள். நாய் கடித்த எலும்புத் துண்டுகள்.
திரும்பிப் போவோமா? என்மனம் என்னிடம் கேள்வி கேட்டது.
சரியில்லை கதவைத் தட்டிப் பார்ப்பம், நகரத்து ஆரவாரங்களுக்கும், றோட்டின் அமளிக்கும் பயந்து வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு இருக்கிறார்களோ?

Page 24
36
கேற்றை விட்டு உள்ளுக்குள் இறங்க பயமாக இருந்தது. எந்தப் பக்கத்தால் நடந்து வீட்டுக் கதவை அடைவது.
கேற்றுக்கும் வீட்டின் முன் கதவுக்கும் இடையில் வழக்கமான பாதையில்லை. என்றாலும் குப்பைக்குள் இறங்கினேன்.
கதவைத் தட்டப்போக உளேயிருந்து யாரோ அழுவதும் தடார். படார் என்ற சத்தமுமாக.நான் கதவைத் தட்ட வில்லை.
༡༤༧༤ ཁ《༡༧་
பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
"இண்டைக்கு இப்படியே பைல்களைப் புரட்ட வேண்டியதுதான். இரண்டு மூண்டு நாளைக்கு இந்த மேசையில் இரும். பிறகு பார்ப்பம்” என்று கெட்கிளார்க், சொல்லியிருந்தார்.
பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க மனத்தின் வெறுமை போகவில்லை" ஒவ்பீஸ் கலகலப்பான இயக்கத்துடன் இயங்க ஆரம்பித்திருந்தது. ۔
சிலர் வேலை செய்ய, சிலர் பேப்பர் வாசிக்க, சிலர் சிகரெட் குடிக்க, சிலர் கொடடாவி விட வழக்கமான கவண் மென்ட் ஒவ்பீஸ்களில் வழக்கமான செயல்கள் நடைபெற
என் முன்னால் ஒருவர் வந்து நின்றார். “ஹலோ தம்பி.நான்." தன்னை அறிமுகப்படுத் திக் கொண்டார். தானும் என்னைச் சொல்ல. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
அவரில் சென்ட் மணந்தது. வெகு கவர்ச்சியான உடை. இடுப்பில் மூன்றங்குல பெல்ட், அடர்த்தியான

37
மீசை, சிவந்தநிறம் மெல்லியதாக காதைமூடும் சுருண்ட மயிர் அவர் அழகாக இருந்தார்.
“இருங்கோ. ه« இருந்தார்.
“வேலை ஒண்டும் தரே ல்லைப் போல." நான் சிரித்தேன்.
“இரண்கு மூண்டு நாளைக்கு ஒரு வேலையும் இல்லா மல் இருக்கிறது நல்லதுதான், வேலையைப் படிக்க முதல் இந்த ஒவ்பீசில் இருக்கிற ஆட்களைப் படிக்க வேணும்."
“ஓம்தம்பி அதுதான் முக்கியம்"
“இந்த உலகம் கெட்ட உலகம். யாரையும் நம்பே லாது. வசதிப்பட்டால் ஒருத்தனின்ர தலையில் மற்றவன் மிளகாய் அரைப்பான். எல்லா மாதிரியான ஆட்களும் இந்த ஒவ்பீசில இருக்கினம். யாரையும் நம்பிப் பழகாதே யும். எல்லாரும் வெளியே நல்ல மாதிரி நடிப்பினம். உள் ளுக்கை வித்தியாசமான ஆக்கள். நான் “ரென்" போல வாறன், கன்ரீனுக்கு ரீ குடிக்கப் போவம்.” என்றார்.
நான் தலை ஆட்டினேன்.
கS கலச வSச
கதவடியில் நிற்க ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே இருந்து அழுகை பெரிதாகப் வெளிப்பட்டது.
இதென்ன கஷ்டகாலம். ‘போடி வெக்கம் கெட்ட கழுதை, நீயும் ஒரு பொம்பிளையே." சுந்தரலிங்கத்தின் சத்தம் பூட்டி
யிருந்த கதவைப் பிரித்துக் கொண்டு என் காதில் புகுந்து கொண்டது.

Page 25
38
'ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்யிறியள் நான் என்ன பிழை செய்தனான்.' பெண் குரல் அழுது கொண்டு விம்மியது.
'போடி பேசாமல்." அந்தவார்த்தைகள் வந்தன.
"ஐயோ ஏனப்பா இப்பிடி செய்யிறியள்? உங்களுக்கு சொல்லிப் போட்டுத்தானே கோயிலுக்குப் போனனான்"
படார் என்ற சத்தத்துடன்
'வெளியில சொல்லாதை வெட் கம்கெட்ட கதையை. கோயிலுக்குப் போனணியோ புருஷனை மதிக்கத் தெரி யாத உங்களுக்கு என்ன கோயில்’
*நான் உங்கள மதிக்கேல்லையோ. நானோ ஏனப்பா இப்படி சொல்லுறியள்? என்ரை முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கோ. ஒரு நாளாவது உங்கடை விருப்பத்திற்கு மாறாக உங்கடை சொல்லை மீறி ஏதா வது செய்திருக்கிறேனே? இந்த வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு எப்போதாவது வெளியால வந்திருக்கின் றேனே." பெரிதாக அழுது கொண்டு பெண் கதறி னாள்.
'நான் உன்னை வெளியால கூட்டிக் கொண்டு போறேல்லை என்பதை மறைமுகமாக இப்படிக் காட்டு றியே. உன்னைப் போல பொம்பிளையை வெளியில கூட்டிக்கொண்டு போறதை விட."
'நீங்கள் என்னதான் சொன்னாலும் எப்படித்தான் என்னை நடத்தினாலும் ஒழுங்கான பெண்சாதியாகத் தான் நான் இருப்பேன்."
"அப்ப நான் என்ன ஒழுங்கில்லாமலே இருக்கிறன். உனக்கு அவ்வளவு வாய்க் கொழுப்பே." தொடர்ந்து பல படார் படார்.
* ஐயோ என்ரை அம்மாளே.'

39
என் மனம் பொறுக்கவில்லை. படபடவெனக் கதவைத் தட்டினேன்.
1S S 17SP
முதலில் என்னைப் பார்த்து சிரித்த வலது புறத்திலி ருந்த அந்த நடுத்தர வயதுப் பெண் மெல்லியதாகக் கதைத்தாள்.
"மிஸ்ஸிஸ் கந்தவனம்" - என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.
"நாலு வருஷமாய் இந்த ஒவ்பீஸ்ல வேலை செய்யி றன். நல்ல ஒவ்பீஸ் வேலை ஒண்டும் தரேல்லைப் போல..."
“ஒமோம்.”
‘வ்வெஸ்ட் அப்போயின்மென்றுதானே'
"நல்ல வடிவாய் வேலை பழக வேணும். புதுக்க புதுக்க எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கும். ஏன் பயமாக, வும் இருக்கும். வேலையில ஏதும் பிரச்சினை வந்தால் சொல்லும். நான் ஹெல்ப் பண்ணுறன்."
“தாங்ஸ்.”
66A10
வேலைகள் முடிஞ்சால் பழைய பைல்களை எடுத் துப் பார்க்கலாம். அப்பதான் ஒவ்வொரு பைலாக ஸ்ரடி பண்ணலாம்"
ஓம்." “என்ன பிரச்சினை என்றாலும் நான் ஹெல்ப் பண்ணுவன். இப்ப கொஞ்சம் அவசரமான வேலை
இருக்கு, பிறகு கதைக்கிறன் ." என்று சொல்லி விட்டு மிஸ்ஸிஸ் கந்தவனம் தன் வேலைக்குள் மூழ்கினார்.
*ZS* 42/S* 47

Page 26
40
பட்டென்று உள்ளே அமைதி பிறந்தது. சில நிமிடங் களின் பின்னர் கதவு திறந்தது.
முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண் டேன். “ஹலோ தம்பி." என் முகத்தில் முழுமையாக புன்னகை மலர்ந்து இதழ் விரிக்க.சுந்தரலிங்கம் என்னை வரவேற்றார். “வாரும் வாரும் எப்படி வீட் டைக் கண்டுபிடிக்க கஷ்டமாய் இருந்ததோ, இந்த ஏரியா சரியில்லாத எரியா. ஒரே பிரச்சினை. ஆட்களும் ஒரு ரைப்பான ஆக்கள். எந்த நேரமும் அமளியும் கூச்ச லும் குழப்பமும் தான், என்ன செய்யிறது எண்டு இந்த வீட்டில இருக்கிறன் என்ன யோசினை இதிலை இரும்" என்று சுந்தரலிங்கம் தொடர்ந்து வெகுசீராகக் கதை சொல்லுபவர் போல சொல்லிக் கொண்டு போக எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்னர் எப்படி பாய்ந்து விழுந்து கொண்டிருந்த மனிதர் இப்படி, சுந்தரலிங் கத்தை ஆழமாகப் பார்த்தேன்.
எப்படி விரைவாகஇவ்வளவு இவரால் மாறமுடிந்தது. இருந்து கொள்ளும். நான் வெளிக்கிட்டுக் கொண்டு வாறன் வெளியால போவம்." என்று சொல்லிக் கொண்டு அவர் உள்ளே போக.
நான் அந்த வீட்டிஸ் ஹாலில் தனிமையானேன். ஹாலின் சுவரில் தூசு படிந்த படங்கள் நடுவே மூலைக் கொன்றாக நாலைந்து கதிரைகள். அதில் நான் இருந் ததுதான் கொஞ்சம் பரவாயில்லை. தரையில பல சிக ரெட் கட்டைகள், கருகிப் போன நெருப்புக் குச்சிகள்.
நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். உள்ளே இருவர் ரகசியமாகச் கதைக்கும் சத்தம்.
"இஞ்சை ஒண்டும் இல்லையப்பா. வரேக்கை வாங் கிக் கொண்டு வாங்கோ.”

41 “நான் கடையில சாப்பிடப் போறன் நீ ஏதோ பார்” சுந்தரலிங்கம் வந்தார். "அப்ப தம்பி போவமே." இருவரும் றோட்டுக்கு வந்தோம்.
as 17 12
பத்து மணிக்கு கன்ரீனுக்கு ரீ குடிக்கப் போவம் என்று சொன்ன அந்த மூன்றங்குல பெல்ட் அணிந்தவர் வரவில்லை.
நானே தனிய ரீ குடிக்கப் போனேன். கன்ரீனில் அறிமுகமான சிலர் சிரித்தார்கள்.
ரீ குடித்து விட்டு மறுபடியும் மேசையில் வந்து அமர்ந்தபோது வேறு சிலர் கதைத்தார்கள். இடதுபுற மேசைக்காரர் தன்னை பொன்னுத்துரை என அறிமுகப் படுத்திக் கொண்டு,
*தம்பி வேலையில ஏதும் பிரச்சினை எண்டா என்னைக் கேளும்” என்று வெகு ஆதரவாகச் சொன்னார்,
மனத்தில் பாரம் குறைந்தது போல இருந்தது. லஞ்ச் டைம் அந்த மூன்றங்குல பெல்ட்காரர் வந்தார். *வெரி சொறி தம்பி. அவசரமான வேலை ஒண்டு. அதால ரென் னுக்கு வரமுடியாமப் போச்சு. சாப்பாடு என்ன மாதிரி? வாருமன் கன்ரீனில சாப்பிடலாம்.
இருவரும் நடந்தோம்.
சாப்பிடும்போது அவர் கதைத்தார் இரகசியமாக.
"மிஸ்ஸிஸ் கந்தவனம் கதைச்சவவோ.." என்று கேட் mr fr .
ʻʻlib...»
வெ-3

Page 27
  

Page 28
44
“ஹலோ என்ன தம்பி லவ் லெட்டரோ.” என்று: கேட்டுக் கொண்டு மறுபடியும் மூன்றங்குல பெல்ட்காரர் என் முன்னால் வந்து அமர.
“இல்லை" என்று சொல்லி தடுமாறி.கடிதத்தை மடிக்க அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
"இதுக்குப் போய் ஏன் இவ்வளவு தூரம் வெட்கப் படுகின்றீர். வெட்கப்படாமல் எனக்குச் சொல்லும்”
*gFT, ...”
"லவ் லெட்டர் எழுதுவது அப்பிடி ஒண்டும் நடக்காத விசியம் இல்லையே. பொழுதுபோக்காக எல்லாரும் லவ் பண்ணுறதுதானே! நானும் கணக்க லவ் பண்ணினான்.” சிரித்துச் சொன்னார்.
"அப்பிடி ஒண்டும் இல்லை. என்னுடைய பிரண்டுக்குத் தான் கடிதம். பார்க்கப் போlங்களே."
“இல்லையில்லை, வேண்டாம். நான் ஒரு விசியம் சொல்ல வேண்டும் எண்டு வந்தனான்."
“ùb...”
“உமக்கு இடதுபக்கம் இருக்கிறாரே பொன்னுத்துரை
அவரோடயும் கவனமாய் இரும் தம்பி. ஆள் சரியான
தண்ணிச்சாமி. மற்றவையிட்ட காசை தட்டிச் சுற்றி தண்ணி அடிப்பார்"
tib. . ."
"அதுதான் இந்த ஒவ்பீஸ்ல வேலையைப் படிக்க
முதல் ஆட்களை படிக்க வேணும் என்று சொன்னனான். இப்ப விளங்குதே."
17S SP 7SP

45
- "நேரம் போட்டுது. நான் றுாமுக்குப் போக வேணும்.” என்று சொல்லிக் கொண்டு சுந்தரலிங்கத் திடம் விடுபட முனைந்தேன்.
"೯್ಲೆ தம்பி இப்பிடி இருந்தால் சரி வராது. ஒரு ஆண் இப்பிடிப் பயப்படலாமே. மெல்ல மெல்ல எல்லாம் பழக வேணும்" என்று சொல்லிக் கொண்டு அவர் என் கையைப் பிடித்தார்.
“எனக்குத் தலையிடிக்குது. நான் றுாமுக்குப் போக வேணும்.” முன்னைவிட வேகத்துடன் கையை இழுத்து அவரின் பிடியில் இருந்து தப்பித் திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.
“தம்பி தம்பி." என அவர் கூப்பிட்ட தைக் காது ஏற்கவில்லை.
சற்று தூரத்தில். இருவர் நடந்து வந்தனர். ஒரு ஆண் ஒரு பெண் தோளோடு தோள் இடிபட கைகளைக் கோர்த்துக் கொண்டு.
அட மிஸ்ஸிஸ் கந்தவனம். “ஹலோ தம்பி எங்கை போட்டு வாரீர்.” என்றார் மிஸ்ஸிஸ் கந்தவனம்.
"சும்மா.இப்படியே.” வார்த்தைகளை முடிக்காமல் தடுமாற.
"இஞ்சருங்கோ இந்த தம்பி எங்கடை ஒவ்பீசுக்கு புதிதாய் வந்திருக்கிறார்.இவர் என்னுடைய மிஸ்டர் என மிஸ்ஸிஸ் கந்தவனம் என்னையும் அறிமுகப்படுத்தி தன்னுடைய கணவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
சிறிது நேரம் சின்ன உரையாடல். "வலு அமைதியான ஆள் போல.” மிஸ் 前 கந்தவனம் சொன்னார்.

Page 29
46
நான் புன்னகைத்தேன். “ஒரு நாளைக்கு எங்கடை வீட்டுக்கு லஞ்சுக்கு வர வேணும்” என்றார் மிஸ்டர் கந்தவனம்.
நான் தலையை ஆட்டினேன்.இருவரும் விடை பெற்று அப்பால் போனார்க்ள்.
প্ৰািখবৈল কািস্তকেল্পী அந்த மூன்றங்குல பெல்ட்காரர் திரும்பவும் மூன்றரை மணிக்கு வந்தார்.
“ஹலோ ரீ குடிக்க போவம்.” என்றார். மனத்தில் அமைதியில்லை. காரணம்.எனக்குப் புரிய வில்லை. -
மெளனமாக அவர் பின்னால் நடந்தேன். கன்ரீனில் ஒதுக்குபுறமாக அமர அவர் கேக்குடன் வந்தார்.
"சாம்பிடும் தம்பி." சாப்பிடுவதாகப் பாவனை செய்தேன். “நீர் ஒண்டுக்கும் யோசிக்காதேம். என்ன பிரச்சினை எண்டாலும் என்னட்டை சொல்லும். அது ஒவ்பீசலாக இருந்தால் என்ன அண் ஒவ்பீசலா இருந்தா என்ன வெட் கப்படாதேயும்."
| D. • • “இப்பிடி வாயை மூடிக் கொண்டு பழகாதேயும். நல்லாகக்கதைக்க வேணும். கதையாலேயே மற்ற
ஆட்களை மடக்கப் பார்க்க வேணும்.அதுசரி பின்னேரம் வீட்டுக்கு வாருமன்."
“பாப்பம்."
“நீர் எங்கை இருக்கிறீர்.”

47
சொன்னேன்.
"அட அதுக்குக் கிட்டத்தான் நான் இருக்கிறன். நீர் இருக்கிற றோட் வந்து ஒரு சந்தியில ஏறுது தெரியுமே.”
"ஒம்
'அந்தச் சந்திக்கு வந்து இடது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் நடக்க நம்பர் செவன்தான் என்ரை வீடு நம்பர் செவன் எண்டா லக்கி செவன். ப்ளூ கலர் பெயின்ட் அடிச்ச கேற்.வருவீரே.
"பாப்பம்.'
"கட்டாயம் பின்னேரம் ஆறுமணிக்கு வாரும் பாத்து கொண்டு இருப்பன். வீட்டை கண்டுபிடிக்க கஷ்டம் என்டால் சுந்தரலிங்கத்தின்ரை வீடு எங்கை என்டு விசா ரித்தும் பாரும்."
“子份..”
"கட்டாயம் வர வேணும் பாத்துக் கொண்டு இருப் பன்."
"வாறன்."
வீரகேசரி @0 05-互982

Page 30
4.
குட்டையும் மட்டைகளும்
நேரத்தோடு விழுந்தடித்து பாய்ந்து ஏறிவிட்டபடி யால் மினி பஸ்ஸில் இருக்க இடம் கிடைத்தது. உண்மை யில் புண்ணியம்தான்.
இல்லாவிட்டால் எட்டாக வளைந்து தலையை மடக்கித் தவம் செய்ய வேண்டியிருக்கும். இருக்க இடம் கிடைத்தாலும் பஸ்ஸில் நின்று கொண்டிருப்பவர்கள் தோளில் ஏறி அமராத குறையாக சாய்ந்து கொள்ள முனைய, அவர்களை முறைத்துப் பார்க்க முடியாமல் நெளிய வேண்டியதாயிற்று.
ஜன்னல் கரையோரமாக பக்கத்தில் இருந்த பெண் “லெதர் பாக்கை" திறந்து சிறிய கண்ணாடியில் முகம் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டாள்.
வியர்வை கண்ணாடியில் வழியும் மழைநீர் போல உடலில் பெருகிக் கொண்டிருந்தது. யன்னலின் ஊடாக நகரத்து அழுக்கினை கையில் தாங்கிக் கொண்டிருந்த பெண்மணி பிச்சைக்காகப் பேணியை நீட்டினாள். எப்போதும் அவளுடன் இருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை பரட்டைத் தலையுடன் சிரித்துக் கொண்டி ருந்தது. w
பக்கத்தில் இருந்த பெண் லேஞ்சியால் முகத்தை மறைத்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்.

நானும ஒன்றுமே தெரியாதுபோல முகத்தைத் திருப்ப அந்தப் பிச்சைக்காரி அப்பால் நகர்ந்தாள்.
மனம் விசிலடித்துக் கொண்டிருந்தது. எப்போது மினி பஸ் புறப்படும், எப்போது போய்ச் சேரலாம் என்ற பரபரப்பு கூடவே எழுந்தது.
"இடம் இருக்கு வாங்கோ.வாங்கோ" என்று சனங் களை அள்ளி அடைத்து "பின்னுக்குப் போங்கோ போங்கோ" என்று கத்திய மினி பஸ்ஸின் மினிப் பெடியன் ரைட் சொல்ல நிறைமாதக் கர்ப்பிணியாக அது புறப்பட்டது.
14S-42- 4-2- பொன்னம்பலத்தின் வீட்டில் அனேகம் பேர் கூடியி ருந்தார்கள். கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு உறுதி எடுப்பதற்காக காத்திருப்பதாக ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
கிராமத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும், கிராமம் பல வழிகளில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு “வேண்டும்களை" தங்கள் மனங்களில் கொடியாக பிடித்திருந்தனர்.
கிராமத்தின் பாதைகள் சரியில்லை. அதனை சீரமைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தை திருத்த வேண்டும் இப்படி எத்தனையோ அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்பது அவர்களது கூட்டத்தின் நோக்கம். -
இதுவரை காலமும் அவர்கள் ஏதோ பாவம் செய்து விட்டவர்கள் போலவும், இனிமேல் அதற்கு பிராயச்சித் தம் செய்ய வேண்டும் போலவும் மனமுருகினர்.
அவர்களில் பலபேர் கிராமத்தில் பிறந்து கிராமத்தி லேயே வளர்ந்து கிராமத்து புழுதியில் குளித்து அதன் வாசனையில் திளைத்து கிராமத்தின் ஒவ்வொரு அணு வோடும் இரண்டறக் கலந்தவர்கள்.

Page 31
50
பொன்னம்பலந்தான் அந்தக் கூட்டத்தின் தலை வராகவும் அங்கு குழுமியிருந்தவர்களின் தலைவர் போலவும் காணப்பட்டார்.
நீண்ட நேர அமளியின் பின்னர் அவர்களிடையே அமைதி பிறந்தது. எல்லோரும் பொன்னம்பலத்தை பார்த்தார்கள்,
பொன்னம்பலம் பேசத் தொடங்கினார். பேச்சு உஷ்ணமாக இருந்தது.
இவர்கள் இப்படி கூட்டம் போட காரணம் இருந் தது. இரண்டு கிழமைக்கு முதல் இதே போல ஒரு கூட் டம் சின்னத்தம்பி வீட்டிலும் நடந்தது.
துரிதமான அபிவிருத்தியலோ அல்லது என்ன காரணத்தினாலேயோ எட்டாக வளைந்தோ பத்தோடு பதினொன்றாக அடைந்து கொண்டோ விரைவில் இப் படி மினி பஸ்சில் ஒரு இடத்தில்இருந்து இன்னொரு இடத்திற்கு போய் கொள்ள முடிகின்றது.
"மினிபஸ் வந்தால் மூன்று மணித்தியால ஓட்டம் தான், மச்சான் எங்கடை கிராமத்தின்ர முகப்பில் பஸ்சில நீ வந்து இறங்கேக்க நான் அங்கை நிப்பன். நீ காலமை ஒன்பது மணிக்கு பஸ் எடுத்தாலும் பன்னி ரண்டு மணிக்கு வந்திடலாம். நான் பார்த்துக் கொண்டு இருக்கிறன்" என்று சொன்ன நண்பனின் வேண்டு கோளிபடி நானும் புறப்பட்டு விட்டேன்.
மூன்று நாட்கள் பரபரப்பு இல்லாத வாழ்க்கை. பைல் *ளுடன் போராடத் தேவையில்லை. தலையைசொறிந்து கொண்டு “ஓம்சேர்” என்று சொல்லத் தேவையில்ன்ல. தேடிவரும் பொது சனங்கள் மீது வள்ளென்று பாயத் தேவையில்லை. இப்படி எத்தனையோ தேவையில்லை களை மனம் நினைத்து சந்தோஷப்பட்டது.

51
இவ்வளவு கால வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அனுபவம் எனக்கில்லை. ஏதோ நகரத்தில் நவீன வசதிகள் நிறைந்த இடத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவன் என்பது இதற்கு அர்த்த மில்லை.
ஆனால், இதமான விடியற்காலை நேரத்தில் இனி மையான இயற்கை அழகு நிறைந்த இடத்தில் ஏகாந்த மாக இருந்து அந்த இனிமையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு.
எந்த நேரமும் கூக்குரலும் குழப்பமும் நாலாவிதமான சத்தங்களும் நிறைந்த நகரத்து வாழ்க்கையில் இப்படி யான அமளிகள் இல்லாவிட்டால் தன்னை நகரம் என்று யாரும் சொல்லமாட்டார்களோ எனப் பயந்துவிடாமல் அமளிப்பட்டுக் கொண்டிருக்கும் நகரத்தில்,
-zs- 

Page 32
52
"நாங்கள் எல்லோரும் இருக்க, எங்கையோ இருந்து வந்த ஆட்கள் ஒன்றும் செய்யாமல் நல்ல பிள்ளை பட்டம் காவிறான்கள்” என்று ஒருவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
சின்னத்தம்பி இடையில் குறுக்கிட்டான். “தயவு செய்து அமைதியாக இருங்கள். யார் எப்படி இருந்தால் என்ன நாங்கள் செய்வதை சரியாக ஒழுங்காகச் செய் வோம். இது எங்கள் கிராமம். அதன் வளர்ச்சிக்கு நாங்கள் தான் பாடுபட வேண்டும். அதன் முன்னேற்றம் எங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே யாரும் ஆவே சப்பட வேண்டாம். ஆவேசத்தால் பயன் இல்லை. சரியா கத் திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களை ஒழுங் காக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமம் வளரும். எங்களுக்கு முன்பு இருந்தவர்கள் செய்யாமல் விட்டவைகளை நாங்கள் செய்யவேண்டும். எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாங்கள் தவறு செய்ய முடியாது. நாங்கள் நல்லதை செய்ய வேண்டும்.
1SZSOT 

Page 33
54
அட பார்கள். பெற்ற தாயின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வது போன்ற ஒரு மனோ, உணர்வினை அவர் கள் அடைந்தர்கள்.
“எங்கள் நோக்கம் சரியாக அமைய எங்களிடையே ஒழுங்கான அமைப்பு இருக்க வேண்டும்” என்ற சின்னத் தம்பியின் கோரிக்கையை ஏற்று “கிராமப்பணி மன் றம்" ஒன்றை அந்த இடத்திலே உருவாக்கினார்கள் அவர்கள். w
“கிராம பொதுப்பணி மன்றத்தை உருவாக்கினால் மட்டும் போதாது. தகுதியான ஆட்களை மன்றத்தின் நிர்வாகிகளாக தெரிவும் செய்ய வேண்டும். அதுவும் தலைவர் செயலாளர் பதவிகளுக்கு ஆட்களை தெரிவு செய்வது முக்கியம். வல்லவர்களாகவும், செயல்பாட்டு திறன் கொண்டவர்களாகவும் இருப்பவர்களை தெரிவு செய்வது தான் பொருத்தமானதாகும்” என்று சின்னத் தம்பி பல தடவை சொன்னதன் உட்பொருளை உணர்ந்த தாலோ என்னவோ எல்லோரினதும் ஏகோபித்த வேண்டு கோளின்படி சின்னத்தம்பியே தலைவராக தெரிவு செய் யப்பட்டார், ஏனைய அங்கத்தவர்களும் தெரிவு செய் x Illu l-L-GTT.
அந்தப்படலம் முடிந்த பின்னர்.
அடுத்ததாக நாங்கள் முதலில் செய்ய வேண்டிய் காரியம் அதாவது எமது முதலாவது திட்டம் என்ன என்பது பற்றி தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும். எமது முதலாவது திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு சிறப்பாக முடிந்தால் தான் எமக்கு நன்மை கிட்டும். அத தனால் கிடைக்கும் பெருமையினால், புகழினால் கிராமத்து மக்களிடையே எமக்கு மதிப்பு உண்டாகும். இதை யாரும் மறந்து போகக் கூடாது. எனவே எப்படியான ஒரு திட் படத்தை அமுல்படுத்துவது என்பது பற்றி யோசிக்கு

55
மாறு வேண்டுகின்றேன்’ என்றான் தலைவர் சின்னத் தம்பி.
| 12-1zs-1zs
“மன்னிக்க வேணும். நீங்கள் சொல்லுறது சரிதான். நான் நல்ல இடம் எண்டு சொன்னது வேறு பார்வை யில், எனக்கு அமைதியான கிராமம் என்றால் நன்றாக பிடிக்கும். கொஞ்ச காலம் கிராமத்தில் வசிக்க வேணும் எண்டு விரும்புகின்றலன், அதன் அழகை ரசிக்க ஆவல் உள்ளவன்' என்றேன் நான் அவள் சிரித்தாள்.
'நீங்கள் சொல்றது இரண்டு, மூண்டு நாள் நிண்டு
சுற்றிப் பார்க்கத்தான் சரி. கொஞ்சகாலம் அங்கை
இருந்து சீவித்துப் பார்த்தால் தெரியும், அங்கை உள்ள
பிரச்சினைகளை. நீங்கள் இப்ப எங்கை போறிங்க'
சொன்னேன்
‘நல்லதுதான். போறதுக்கு முதல் கிராமம்தான். ஏதோ நல்ல காலம். கரண்ட்கூட அங்கை வந்திட்டுது. ஆனால் எத்தனையோ பிரச்சினைகள்தான் ஒண்டையும் சொல்ல விரும்பவில்லை. போரீர்கள்தானே உங்களுக்குத் தெரியவரும், உங்களைப்போல ஆம்பிளையள் எப்படியும் சமாளிக்கலாம். எங்களைப் போல பொம்பளையஞக்குத் தான் பிரச்சினை. கிராமத்தில் சரி, நகரத்தில் சரிசனங்கள் சகல வசதியளோடை வாழத்தான் விரும்பினம். ஆனால் எப்படியான வசதிகளை என்னமாதிரித் தேடிக்கொள்ளு. Dgöl என்னமாதிரி பயன்படுத்திறது எண்டுதான் தெரியேல்லை நாகரீகம் வளர்ந்தாலும் எங்கடை அடிப் படைக் குணங்கள் மாறாத மாதிரித்தான் சனங்களும்' என்று சொல்லி முடித்தாள் அவள்.
என்மனம் குழம்பிப் போய்விட்டது. நான் இறங்க வேண்டிய இடம் வந்தபோதும் மனதில் குழப்பம் தீர வில்லை,

Page 34
56
'இதுதான் நீங்கள் இறங்கிற இடம்' என்று அவள் சொன்ன பிறகுதான் விழுந்தடித்துக் கொண்டு அவ னிடம் விடைபெற்று பஸ்சைவிட்டு இறங்க நண்பன் எதிர் கொண்டான்.
'இதே உங்களடை ரவுண்"
'இல்லை. இது ஒரு சக்திதான், எங்கடை கிராமத் திற்கு இன்னும் இடம் இருக்கு'
எதிரும் புதிருமாக நாலைந்து கடைகள் கடை வாசலில் குந்தியிருக்கும் சனங்கள். கடைகளில் அலறும் சினிமாப் பாடல்கள்.
427-17-122S
சின்னத்தம்பியின் வேண்டுகோளைத் தொடர்ந்து பலரும் பலவிதமான யோசனைகளைச் சொன்னார்கள் பின்தங்கிய பிரதேசமாகிய அக்கிராமத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளா இல்லை.
முதலில் செய்வதை நன்றாகச் செய்ய வேண்டும் என்ப தால் நல்லதொரு திட்டத்திற்காக எல்லோரும் காத்திருக் கும்போது தலைவர் சொன்னார்.
"தற்கால உலகத்திலே எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதற்கேற்ப நாமும் மாறுபட வேண்டும். நான் ஒரு திட்டத்தை இப்போது சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் பல பேர் சொன்னவைகளைக் கூடச் செய்யலாம். ஆனால் செய்கின்ற செயல்களால் எங்களுக்குப் பிரயோசனம் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் இதனை யார் செய்தார்கள் என்று கிராமத்தவர் கள் வியக்க வேண்டும். சில அலுவல்களைச் செய்யலாம். அவற்றால் பயன் ஏனையவர்களுக்குக் கிடைத்தாலும் யார் அதனைச் செய்தார்கள் என்று தொடர்ந்து யாரும்

57
கதைக்க மாட்டார்கள். அதனால் பிரயோசனம் இல்லைத் தானே. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது உங்க ளுக்கு தெரியும் என நம்புகின்றேன். ஒவ்வொரு முறையும் நாங்கள் சேய்வது பற்றி கிராமத்தவர்கள் கதைக்க வேண்டும். எங்கள் புகழ் எல்லோரிடையேயும் பேசப்பட வேண்டும். கிராமப் பொதுப்பணி மன்றம் என்ற பெயர் எங்கள் கிராமத்தில் மாத்திரம் அல்ல. ஏனைய கிராமங் களில் ஏன் நாட்டிலேயே புகழுடன் விளங்க வேண்டும்.”
எல்லோரும் மெளனமாக தலைவர் சின்னத்தம்பி சொன்னவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் போல காணப்பட்டார்கள்
“இப்போது நான் சொல்லும் திட்டம் புதுமையானது. எங்கள் கிராமத்தவர்களுக்குப் பயன் தரக் கூடியது. ஆனால் பெருமளவு செலவும் கொண்டதுதான்" என்று தொடர்ந்தார் தலைவர்.
1-SzWSM SSSP- ~SP
“எங்கை போனாலும் இந்த சினிமாப் பாடல்கள் விடாது" என்றேன் நான்.
“ஏன்டாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறாய்” என்று பாக்கை வேண்டிக் கொண்டு நண்பன் கேட்டான்.
மினி பஸ்ஸில் நடந்த கதையைச் சொன்னேன். அவன் சிரித்தான், ܚ
மத்தியான வேளை என்றாலும் மழைக் கோலத்தால் வெய்யல் தெரியவில்லை. தொடர்ச்சியாக பெய்த மழை தரையில் தெரிந்தது.
நாங்கள் சென்ற பாதை தார் போட்ட கல் றோட் டாக இருந்தாலும் குளங்கள் அதிகம் இருந்தன. சேறும்
வெ-4

Page 35
58
சகதியும் திரண்டு இருக்க நான் அவற்றுடன் போராடத் தொடங்கினேன்.
“இந்தப் பாதை பரவாயில்லை, இன்னும் போனால் ஆக மோசம்”
"உண்மையோ"
அவன் சிரித்தான். அடிக்கடி இப்படி நான் கேட்ட கேள்விகளுக்கு சிரிப்பாலேயே பதிலை முடித்து விட்டான்
அவன் கொண்டு வந்த சைக்கிளில் நான் முன்னுக்கு இருக்க அவன் ஓட ஆரம்பித்தான். V
“எங்கடை கிராமத்தின் சனங்கள் வசிக்கும் பகுதிக்குப் போக இன்னும் மூண்டு மைல் இருக்கு."
"பஸ் ஒண்டும் இல்ம்ை)யே, சிரிக்காமல் பதில் சொல்லு".
“இல்லை. தட்டிவான் சேவிஸ்தான், அதுவும் குறைவு"
இரண்டு பக்கமும் நெருக்கமில்லா காடும், பசுமை யான புற்தரையும், தேங்கி நிற்கும் மழை நீரும் வட்ட மிடும் பறவைகளும் விழிகளுக்கு விருந்தாகின.
பெரிய கட்டிடம் ஒன்று செடிகொடிகளால் மூடப் பட்டுக் கிடந்தது.
“என்னடாப்பா இது”
“இதுதான் சந்தைக் கட்டிடம், கனகாலத்திற்கு முந்தி அரசியல் காரணங்களுக்காகப் பொருத்தமில்லாத இடத் தில் கட்டினது. சனங்கள் அதைக் கவனிக்கவில்லை. சம்பந் தப்பட்டவர்களும் கைவிட்டு விட்டார்கள். இப்படி இருக்கு"
தொடர்ந்தும் வேறு சில கட்டிடங்கள் கூரை, கதவு, யன்னல், நிலைகள் ஒன்றுகூட இல்லை. நான் கேட்காமலே அவன் சொன்னான்.
<2e- A-S 

Page 36
60
எங்கள் புகழ்." என்று அன்று நீண்ட பேச்சுப் பேசிய தலைவ்ர் சின்னத்தம்பியின் முடிவை ஏற்றுக் கிராமத்து மண்ணில் வியர்வையை விதைத்துப் பயன் பெறும் விவசாயிகளிடம் காசு திரட்டி இதனை ஒழுங்கு செய் தார்கள். தொடர்ந்தும் செய்வார்கள்.
இதனை பொன்னம்பலம் குழுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ഭട്ട് ജട്ല. ഭൂട്
"எல்லாத்தையும் சனங்கள் கொண்டுபோய் விட்டுது கள். கொண்டு போய்விட்டுதுகள் எண்டால் களவு போய் விட்டது, இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தச் சுவர்களை இடித்துக் கல்லுகளைக்கூடக் கொண்டு போயிடுங்கள்"
எந்த இடத்திலும் சனங்கள் எல்லோரும் அல்ல சிலர் தான். ஒரே மாதிரித்தான்.
“எனக்கே இங்கை வாழப் பிடிக்கேல்லை" என்றான் நண்பன்.
“rais”
‘நான் சொல்லுறதைக் கேள். இங்கை பார். இந்தப் பாதையை. இதை விட மோசமாய் சேற்றுப் பாதைகள் ஊருக்கை இருக்கு மழை பெய்தால் குடை பிடித்து படிக்கிறநிலையில் பள்ளிக்கூடம். சுவரில அல்லது தரையில வைத்து எழுதுற நிலையில் பள்ளிக்கூடம் பிள்ளையள் மேசை, வாங்கு, கதிரைகள் குறைவு. இருக்கிறதும் உருப் படியாய் இல்லை. அங்கை பார் . சந்தைக்கட்டிடம் அப்படி பாழடைந்து போய் இருக்கு. சனங்கள் ஆல மரத்தடியில் மழையில் நனைந்து வியாபாரம் செய்யுது. இப்படி எத்தனையோ அடிப்படையான பிரச்சினைகள்” என்று நண்பன் சொல்லும்போதே அவன் மனத்தின் வேதனை களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

61
"ஏன் இவைகளை தீர்க்க முடியாதா?
“யாரைக் கொண்டு”
"சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டு”
"அதுசரி வந்தால்தானே"
"ஊரில் உள்ள நீங்கள்தான் ஒண்டு சேர்ந்து ஒரு
அமைப்பை உருவாக்கி நீங்களாகவே ஏதாவது சேர்ந்து இவைகளை நிவர்த்தி செய்ய முடியாதா?”
அவுன் சிரித்தான்.
"அப்படியெண்டால் ஊரில் உள்ள எல்லாரும் தலைவர்களாகவும், பெயர், புகழ் வரக் கூடியதுமான ஒரு அமைப்பை சொல்லு பார்ப்பம்”
P9
"ஏன்
“வாற சனிக்கிழமை இஞ்சைதானே நிற்பாய். அன்றைக்கு பின்னேரம் என்னோடை கிராமத்து ஆல மரத்தடிக்கு வா' என்றான் நண்பன்.
<=S>  ఆకా
சின்னத்தம்பி குழுவுக்கு எதிரானவர்கள்தான் இந்தப் பொன்னம்பலம் குழுவினர்.
சின்னத்தம்பியைத் தலைவராகக் கொண்ட கிராமத்து பொதுப்பணி மன்றம் வாரம் தோறும் இலவச ரெலிவிஷன் படக்காட்சியை காட்டத் தொடங்கிய பின்னர் அவர்கள் புகழ் சட்டென்று கிராமத்தை மூடிக் கொண்டது.
எல்லோரும் பெரிதாகக் கதைத்தார்கள். சின்னத்தம்பி யைப் புகழ்ந்தார்கள்.

Page 37
62
“கிராமத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ரெலிவிஷன் படக்காட்சியைக் காட்டி சனங்களை ஏமாத் துறார்கள். இதனால் சனங்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா? கிராமம் வளர்ந்து விடுமா?’ என்று பேசிக் கொண்டார்கள். -
ஆதனால், பொன்ம்பலம் கூட்டிய அந்தக் கூட்டத்தில் பொன்னம்
பலத்தை தலைவராகக் கொண்ட "கிராமநற்பணி மன்றம்" அமைக்கப்பட்டது.
‘கிராமத்தின் அபிவிருத்திதான் முக்கியம்" என்றும் பேசப்பட்டது. வீண் வேலைகளைச் செய்யாமல் பொருத்த மான நல்ல வேலைகளாக செய்வதாக ஒப்புக் கொள்ளப் Lull-gil,
இருந்தாலும்,
சின்னத்தம்பிக்குக் கிடைத்த பெயர் புகழை தற்காலிக மாகவேனும் உடைத்தெறிய வேணும் என்ற அடிப்படை யில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலமரத்தடியில் இரண்டு சினிமாப் படங்களை ரெலிவிஷன் படக்காட்சிக ளாக இலவசமாக கிராமத்து சனங்களுக்கு காட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.
இன்று சனிக்கிழமை பின்னேரம் ஆலமரத்தடியில் சனங்கள் கூடுவார்கள்.
வீரகேசரி 8-12-1983

5
சேர்ந்தோம் வாழ்ந்திடுவோம்
மே 1ஆம் திகதி
நேற்று பஸ் 'சீசன் ரிக்சட்" எடுக்காதபடியால் இன்று காலை மினி பஸ்சில் போக வேண்டியதாயிற்று. ஒப்பீஸ்சில் அற்றென்டன் றியிஸ்ரரில் றெட்லைன் கீற முன்னர் சைன் பண்ண எத்தனை தடவை முயன்றும் பலன் இல்லை.
மினி பஸ்ஸில் சனத்துடன் நசிபட்டு. இடிபட்டு ஏறி. ஒருமாதிரி நிற்க இடம் கிடைத்தது ஆச்சரியம் தான் சீ. என்ன வாழ்க்கை.என்று நினைக்கத்தான் முடிகின்றது.
சலிப்புடன் பார்த்தாள் சுலோசனா. நான் அவளை எதிர்பார்க்கவில்லை. கனகாலத்திற்குப் பிறகு மலர்ந்த உடலும் உப்பிய கன்னங்களுமாக.
y
'என்னப்பா.’’ என்று அவள் என்கையைத் தொட்ட போது எவ்வளவு ஆனந்தம் மனத்தில் நீச்சலடிக்கும். இளமைக்கால நினைவுகள். அட்வான்ஸ் லெவல் படிக்கும். போது ஏற்பட்ட கல்லூரிக்காலத்து கனவுகள் பசும் புற்தரையில் பதியும் பாதங்களாக,
'சுலோசனா" எனும் போதே.விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது ஆனந்தத்தினாலா? தெரியவில்லை.

Page 38
64
‘என்ன இப்பவும் அப்பிடியே இருக்கிறாய்" "அப்பிடியே எண்டா.”
"என்னடியப்பா நீ.நான் கேட்கிறது விளங்கேல் லையே." நான் சிரித்தேன்.
'உனக்கென்ன குறை. முந்தி இருந்ததைவிட வடிவாய் இருக்கிறாய். அப்பவே எத்தினை பெடியள்-ம்.என மெதுவாக அவன் சொன்னாலும் அவளுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வயது போனவர் என்னைப் பார்த்துச் சிரித் தார். சுலோசனாவும் சிரிந்தாள்.
'எனக்கு இன்னும் காலம் வரேல்லை- அதைவிடு. நீ எப்ப இஞ்சை வந்தனி",
'இப்ப மூண்டு மாதம்தான். உன்ரைவீட்டை வர நினைக்கிறனான்தான்’ ஆனா நேரம் கிடைக்கேல்லை."
“எத்தினை பிள்ளையன்."
'எனக்கோ. அளவோடை பெத்து வள மோடை'
என்று சொல்லிச் சிரித்து “இரண்டு” என்றாள்.
சுலோசனா நெடுக இப்பிடித்தான். ஒரேசிரிப்பு
காரணம் இல்லாமல், காரணத்தோடும் சிரிப்பாள்.
ஒப்பீஸ்சில் ஆட்கள் இல்லை. சாப்பாட்டு நேரம் பழையபடி களைகட்ட எப்பிடியும் இரண்டு மணியாகும். ரெலிபோன் அலறியது.
அவள்தான் ரெலிபோனுக்கு கிட்ட நின்றாள். வழக்க மாக அவளுக்கு.ரெலிபோன் றிசீவரை எடுப்பது சங்கடம். கதைப்பது பெண்ணாக இருந்தால் ரெலிபோன் எடுத்த வன் தேவையில்லாத கதைகளைக்கதைத்து அறுத்துக் கொண்டிருப்பான்.
தொடர்ந்து மணி அடிக்க. தவிர்க்க முடியவில்லை என்ன செய்வது என்று எடுத்தாள்.

65
'ஹலோ" “ஹலோ.குட் e ஸ்பீக் ரு நிர்மலா “என்றது: போனில் ஆண்குரல். அவளுக்கு தெரிந்து விட்டது. அவர் தான்.
“ஸ்பீக்கிங்.."
“ஹலோ.என்ன சத்தம் ஒரு மாதிரியாய் இருக்கு.” "ஒண்டுமில்லை." “பின்னேரம் என்ன புறோகிராம்." y “பின்னேரமோ.அப்படி ஒண்டும் இல்லை."
*அப்ப.நாலுமணிக்கு வரட்டே.பிறகு நான் ஃபைவ்: தேட்டிக்கு கூட்டிக் கொண்டு போய் விடுறன். என்ன மாதிரி..."
“ம். நாலு மணிக்கோ " “ஹலோ.ஏன் என்ன விசியம்."
"வீட்டை சொல்லிப் போட்டு வரேல்லை .லேட்டா னால் அம்மா தேடிக் கொண்டிருப்பா...'
போனின் ஊடாக அவரின் சிரிப்பு.
*நல்ல கதை கதைக்கிறீர். என்னோடை வந்தால் அம்மா என்னை கதைக்கிறது.'
“இல்லை.நாளைக்கு சொல்லிப் போட்டு வாறன். "நாளைக்கு சனிக்கிழமை."
‘ஓம். நான் மறந்து போனன்.'
"அப்ப ஒண்டு செய்யலாம்.'
‘என்ன...'

Page 39
66
"இண்டைக்கு பின்னேரம் நான் வரேல்லை. நாளைக்கு மோணிங் வீட்டை வாறென். பிறகு யோசிப் பம்.என்ன.'
"ஒம் 'அப்ப போன வைக்கட்டே'
««(g fى، ،
மே 6ஆம் திகதி
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. மத்தியானம் சாப் பிட்டுவிட்டு ரேப்பில் கர்நாடக இசை கேட்டுக் கொண் டிருந்தேன்.
அதுஒரு இராக. மாலிகை கீர்த்தனை நெஞ்சத்தை இதமாக வருடியது. கூடவே சிலிர்ட பையயும் ஏற்படுத்தி li ġbi. ,
*வேடனைப் போல் வந்து வேங்கை மரமாய் நின்ற-வேலன் வரக்காணனே-சகியே" என்ற பல்லவி யுடன் ஆரம்பித்து இதயத்த்ை நெகிழ்ச்சி செய்து நான் என்னிலை மறந்து.
“கலியாணம் முடிச்சால்.உந்த சுதந்திரம் வருமே.” என்று சொல்லிக் கொண்டு சுலோசனா வந்தாள்.
கோடையில் பெய்த மழைபோல அவளைக் கண்ட தும் மனம் குளிர்ந்தது. பல ஆண்டுகள் பின்னோக்கி ஒடி கனவு எது-நினைவு எது என்று தெரியாமல் நாங் களும் மயங்கி ஏனையவர்களையும் மயக்கவைத்த அந்த அற்புதமான காலத்தை நினைத்து குதிக்கத் தொடங் கியது.
அவள் என்னருகில் அமந்தாள். என்னதான் சொன்னாலும்.நெருங்கிய சினேகிதியை. அதுவும் வெகு

67
நாட்களுக்குப் பிறகு காணுவதால் ஏற்படும் இன்பத்தை எதற்கு ஒப்பிடுவது.
"நீயும் என்னைப்போல காதலித்து கலியாணம் செய்திருந்தால் இப்ப என்னைப்போல ." மேலே சொல் லாமல் சிரித்தான்.
“நீ ஏனப்பா சிரிக்கிறாய்-நாட்சென்று கலியாணம் முடிக்கிறது இப்ப எங்கடை பொம்பிளையஞக்கு ஒண்டும் புதுசில்லையே-”
"அதுக்கு நீ இன்னும் கனகாலம் இருக்கப் போறியே." a
“சீ..அப்படியில்லை..எதுக்கும் காலம் வரவேணும். என்ரை தலைவிதி, அப்பிடி, உனக்கு வேறை கதை இல்லையே. நெடுக கலியாணக்கதைதான் கதைக் கிறாய்."
“என்ன செய்ய.இப்ப அதைத்தானே கதைக்கலாம். உன்னைப் பார்க்க எனக்கு ஆத்திரமாய் இருக்கு என்ன -வடிவான பொம்பிளை"
"சுலோசனா அதுக்கு நான் என்ன செய்ய. எல்லாம் சரியாய் வருமே. ஏதோ ஒரு பிரச்சினை. இப்ப கிட்டடி யிலதானே சின்னக்காவுக்கும் நடந்தது. நான் வடிவு, வேலை செய்யிறன் எண்டா சீதனம் இல்லாமல் கலியா -ணம் நடக்குமோ.நான் வடிவு எண்டா சாதகம் பாக்கா மல் செய்வினமே."
“ஒமடியப்பா. எல்லா விதத்திலையும் சிக்கல்தான்." "ஐயா பேசாத இடம் , இல்லை. இஞ்சை வராத புரோக்கர்களும் இல்லை.” என்று சொல்லும் போதே அம்மா தேனீருடன் வந்தாள்.
"பிள்ளை போன கிழமை வந்த புறோக்கர் வத் திருக்கிறார்" என்றாள் அவள்.
 

Page 40
68
"அவர் வாறது என்று சொன்னனி, பிறகு ஏன் உப் பிடியே இருக்கிறாய். எழும்பி முகத்தைக் கழுவிக் கொண்டு நல்ல சாறியை எடுத்துக் கட்டன்ஃ என்று: நிர்மலாவை அவள் அம்மா பேச.
அவள் எழும்பி முகம் கழுவி அந்த புதிய சிவப்பு செக் சாறியை கட்டினாள். பின்னலில் நாலைந்து மல் லிகை மலர்களைச் செருகிாள்.
கால்களை, கைகளை அழுத்தித் துடைத்தாள். பளிச்சென்று இருந்த்ாள். கேற்றடியில் ஸ்கூட்டர் வத்து நிற்கும் சத்தம்.நிர்மலா ஓடாமல் நடந்தாள்.
ஒரு கையில் ஹெல்மெட் சகிதம் சிகரெட்புகை. முன்னே வர அவர் வந்தார். நிர்மலா ஹெல்மெட்டை வாங்கிக் கொண்டு நடந்தாள்.
அவர் நிர்மலாவைப் பார்த்து நன்றாகச் சிரித்தார். அவளோடு சேர்ந்து நடந்து ஹாலில் அமர்ந்தார்.
"இருமன்" பக்கத்தில் இடம் ஒதுக்கினார். நிர்மலா இருக்கவில்லை. "இஞ்சை வாரும். என்ன வெட்கம். அதுவும் ஒரு வேக் பண்ணுகிறலேடி-இப்பிடி வெட்கப்படலாமே. வாரும்."
“சா. அப்பிடி ஒண்டும் இல்லை." "நான் இண்டைக்கு ஓவர்ரைம் இருந்தும் வேலைக்கு போகேல்லை,”
“ùb...”
"இஞ்சை வாறது எண்டு நேற்று சொன்னனான் தானே"
"ஒமோம்.”

69
"வாருமன். பக்கத்தில இரும்."
“வாறன்." என்று சொல்லி குசினிக்குள் போய் அம்மா போட்டு வைத்த ‘ரீ"ஐ கொண்டு வந்து கொடுத்தாள் நிர்மலா.
அவர் கையைப் பிடித்து பக்கத்தில் இருக்கச் செய் தார். அப்போது வீட்டில் அதிகம் ஆட்களில்லை. இருந்த வர்களும் ஹாலின் பக்கம் வரவில்லை,
அவர் கையை விடவில்லை
மே 20ஆம் திகதி
இரண்டு கிழமைக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழ மையும் சுலோசனாவும் நானும் கூட்டுச் சேர்ந்தோம். யாழ்ப்பாண ரவுணின் பரபரப்புக்களுக்கு இடையில் சொப்பிங் செய்தோம்.
என்ன தான் நடந்தாலும்.ரவுணிலும் நியூமார்க்கட் டிலும் பெண்களும் ஆண்களுமாக சனங்கள் குறைந்த பாடில்லை.
“என்னடியப்பா.நான் வந்த அண்டைக்கு புரோக் கர் வந்தாரே பிறகு என்ன மாதிரி?”
“என்னவோ சாதகம் பொருந்தியிட்டுதாம்.என் னையும் பார்த்து ஒமெண்டு சொல்லிப்போட்டா Jr nr ...’”
‘சரியான ஆளப்பா.இவ்வளவு புதினத்தையும் இவ் வளவு நேரமும் சொல்லாமல்.’
‘பொறடியப்பா..எனக்கும் நேற்றுத்தான் தெரியும். போன திங்கட்கிழமை ஒவ்பீசில வந்து பார்த்தவ ராம்.'

Page 41
70
"அப்ப இனி என்ன.கையைப்பிடிக்க ஆள் ரெடி, அப்படித்தானே' &
நான் சிரித்தேன்.'
"ஏன்டி சிரிக்கிறாய்."
"இன்னும் ^க்கியமான விசயத்தில உடன்பாடு வரேல்லை'
‘என்ன சீதனமோ வீடு, வளவு, நகை, காசு எல் லாம் இருக்குதானே.”
""gr了9ー மட்டமாய் ஒண்டு கேட்கினம். எங் களிட்டை ஐம்பது கொடுக்கிறதே பிரச்சினை
*அது எல்லாம் சரிவரும். உனக்கு அவனைத் தெரி யுமே. பேர் என்னவாம்."
“எனக்கு ஆளைத் தெரியாது.பாங் ஒவ் சிலோனில வேலை செய்யிறாராம்.தந்தகுமார் பெயராம்."
"ஓ அவரே." என்று சொல்லும் போதே சுலோசனா வின் முகத்தில் எத்தினை மாற்றங்கள்.
'அவன் இன்னும் கலியாணம் செய்யேல்லையே."
‘ஏன்டியப்பா.உனக்கு ஆளைத் தெரியுமே."
'நல்லாய் தெரியும். நாலைஞ்சு மாதத்துக்கு முதலும் அவருக்கு கலியாணம் ஒன்று பேசி முற்றாகிப் போய் பிறகு குழம்பிப் போச்சு."
* ஒரன்'
'சீதனம்தான்.'
என் நெஞ்சத்தில் என்னவோ ஒரு நெருடல். அதன் தன்மையை விளங்கப்படுத்தவில்லை. வேதனையின் ஆரம்பமா?

71
'ஆனால் ஆள் நல்ல ஹான்ட்சம். உனக்கு நல்லாய் மச் பண்ணுவார்.’என்று சுலோசனா சொன்னது இத யத்தில் ஒட்டவில்லை.
sear en- es
அவர் "ரீ குடித்துவிட்டு நிர்மலாவை வடிவாகப் பார்த்தார்.
“நீர் நல்ல வடிவாய் இருக்கிறீர்-அது சரி நான் நெடுக. கதைக்கிறன் நீர் ஏன் பேசாமல் இருக்கிறீர்"
"சொல்லுங்கோ-"
“உப்பிடி உம்மாண்டியாய் இருந்தால் எனக்குச் சரி வராது. நான் நல்லாய் கதைப்பன். என்னோடையும் மனம் விட்டுக் கதைக்க வேணும்.
மனம் விட்டு என்பதைக் கேட்க நிர்மலாவுக்குச் சிரிப் பாக இருந்தது. ஆனால் சிரிக்கவில்லை.
“ஒப்பீஸ் வேக் எல்லாம் எப்பிடி இருக்கு. நல்ல வேலையோ"
"பரவாயில்லை”
“முந்தி ஒரு ஆள் வேலை செய்தார் தெரியுமேகந்தவனம் எண்டு. இப்ப மன்னாருக்கு றான்ஸ்பரிலபோயி ருக்க வேணும்.
"ஒ."
"அவர் எனக்கு கசின் பிறதர்"
LO • • •
“ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்? சந்தோஷமாய் கதையு மன். உமக்கு என்ன கலர் சாறி பிடிக்கும்."
“கலரோ, எதெண்டு இல்லை. எல்லாக் கலரும் பிடிக்கும்”

Page 42
72
“சீ..அப்பிடி இருக்காது, ஏதோ ஒன்று இருக்கும் தானே"
“இல்லை."
"எங்கை கையைக் காட்டும் பாப்பம். எனக்குக் கொஞ்சம் சாத்திரம் தெரியும்.” என்று சொல்லிக் கொண்டு நிர்மலாவின் கையைப் பிடித்தார்.
“உமக்கு ஆறு, ஏழு பிள்ளைகளுக்குப் பலன் இருக்கு” என்று சொல்லி அவர் பெரிதாகச் சிரிக்க நிர்மலா மெது வாகச் சிரிக்க, அவருக்குச் சப்பென்றிருந்தது.
மே 29ஆம் திகதி
ஒவ்பீஸ்சால் வந்து தேத்தண்ணி குடித்துவிட்டு வீட்டின் பின்பக்கத்தில் இருந்த மாமரத்தின் கீழ் சாய் மனைக் கதிரையைப் போட்டுவிட்டுப்படுத்தாள். சிந்தனை கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கத் தொடங்கின.
நேரம் ஆறு மணியாகி விட்டது. நாலு மணிக்கு பஸ் எடுத்தாலும் இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் மாமரத் தின் குளிர்மையும், பவ்வியமான மாலை நேரத்து சூழ்நிலையும் மனதுக்கு வழக்கம் போல இனிமையைத் தரவில்லை.
அன்றைக்கு யாழ்ப்பாணம் சொப்பிங் செய்யப்போன போது சுலோசனா நந்தகுமாரைப் பற்றிச் சொன்ன
606)j567...
மொரமொரப்பான துணி அணிந்தபோது உடம்பு படும் கஸ்டம் போல மனத்தைக் கஸ்டப்படுத்தின.
சாதகம் பொருந்தி எல்லாம் முற்றாகி, பிறகு சீதனப் பிரச்சினையால் கலியாணத்தைக் குழப்பிய அவரை

73
எனக்கு முற்றாக்கி இருக்கினம். முதல் குழப்பின மாதிரி எனக்கும் செய்தால்.
இதயத்தின் அடித்தளத்தில் எழுந்த இந்த கேள்விக்கு யாரிடம் பதில் கேட்பது பெண்களின் மன உணர்வுகளை இலகுவாக வெளிக்காட்ட முடியுமா?
“பிள்ளை” என்று சொல்லிக் கொண்டு அம்மா வந்து வழக்கமாகத்தான் இருக்கும் அந்த மரக்குற்றியின் மேல் இருந்தாள்.
“என்னம்பமா?
“ஏதோ நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடேல்லை"
*ஏனம்மா..?
"உனக்குப் பேசின அந்தக் கலியானம் முற்றாய்ப் Gurr digit" 3.
si
l so • • •
“ஒம் பிள்ளை. ஏதோ எல்லாம் அம்பாள் துணைதான் றிஜிஸ்ரேசனுக்கும் நாள் வைச்சாச்சு."
s g பி g 勢彎 ஏனம்மா, சீதனப் பிரச்சினை என்ன மாதிரி?
“அதெல்லாம் சரி. அவை கேட்டபடி ஐம்பதை காசாய் கொடுக்கிறம். மிகுதி ஐம்பதுக்கும் கொக் ளின்ரை காணியைப் பொறுப்புக் கொடுக்கப்போறம், வாற வருஷம் காசைக் கொடுப்பம்."
"அதுக்கு அவை சம்மதமோ?" “ஒமோம். அது சரி நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்” "ஒண்டுமில்லையம்மா."
வெ-5

Page 43
74
"வாற பத்தாம் திகதி பகல் பதினொரு மணிக்கு தாளாம். இண்டைக்குப் பகல்தான் எல்லாழ் முற்றாச்.ே கொய்யா உந்த அலுவலாய்த்தான் ဓါးလှီနှီး போட் டார்." என்று அம்மா சொல்லிக் கொண்டு போனாள்.
14S is sel
'நான்தான் நெடுகக் கதைக்கிறன். நீர் வடிவாய்க் கதைக்கிறீர் இல்லை-ஏன்?’
கூல்பாரில் ஐஸ் கிறீம் குடிக்கும்போது அவர் கேட் டார். அவரின் முன்னால் ப்ளூ செக் சாறியில் நிர்மலா மினுமினுத்தாள். தலையில் இருந்த மல்லிகை கும்மென்ற வாசனையைத் தர அவள் மெதுவாகப் புன்னகைத்தாள்.
**ஏன்...எதுவும் பிடிக்கேல்லையோ.ஐஸ்கிறீம் .சரி யில்லையோ"
‘சா.அப்பிடி ஒன்டும் இல்லை."
‘நான் எனக்குள்ளே சில வரையறைகள் வச்சிருந்த
னான். இன்ன மாதிரி இருக்க வேண்டும் எண்டு நினைச்ச னான். உம்மை முதல் கண்டவுடனேயே பிடிச்சுப்போச்சு' என்று அவர் சொன்னார்.
நிர்மலாவின் விழிகள் பளபளத்தன. எதையோ கேட்க நினைத்தவள் போல முகத்தில் சில தீவிரங்கள் ஏற்பட் டன. ஆனால் பிறகு அவை அடங்கிப் போயின.
'உண்மையாத்தான் சொல்லுறன். என்னவோ தெரி யேல்லே. உம்மைக் கண்டவுடனேயே எனக்கு நல்லாய் பிடிச்சுக் கொண்டுது. எப்பிடியும் உம்மைத்தான் மறி பண்ண வேணும் எண்டு மனதில உறுதி செய்திட்டன்"
பழையபடி நிர்மலாவின் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வெளிவர வில்லை.

75
** என்ன நிர்மலா நான் இவ்வளவும் சொல்லுறன். நீர் பேசாமல் இருக்கிறீர். என்னென்டு சொல்லுமன்.'
‘சா.அப்பிடி ஒன்றும் இல்லை." 'மனத்தில் ஏதாவது குறையன்.' *“G,..母份””
'சந்தோஷமாகத்தானே இருக்கிறீர்.
s'
'ஒமோம்." என்றாள் நிர்மலா .
யூன் 8ம்ஆம் திகதி
நாளைக்கு "மறுநாள் றிTஸ்ரேஷன். கொஞ்ச நாட் களாய் வீட்டில் ஒரே பரபரப்பு. நானும் அந்த பரபரப் பில் ஆழ்ந்துபோய் விட்டேன். ஐயா, அம்மா, பெரியக்கா, சின்னக்கா, அத்தான்மார், பெரிய அண்ணை எல்லாரும் ஏதோ வேலை செய்கின்றார்கள்.
என்னதான் பரப்ரப்பில இருந்தாலும் மனத்தில் மகிழ்ச்சி நிலைக்க மறுக்கிறது. பாங்கில் வேலை செய்யும் ஹான்சமான மாப்பிள்ளை. எல்லாவற்றையும் மிஞ்சி. நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகள் சிறிய ரம்பமாக மனத்தை அறுக்கின்றது.
நந்தகுமாரின் தாய் தகப்பன் சகோதரங்கள் ஏன் அவர் கூட சீதனப் பிசாசுகள் என்று ஐயா இரகசியமாய் பேசினது என் காதில் விழுந்ததாக நான் காட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன செய்யிறது. எங்கடை பிள்ளைக்கு நல்லதொரு வாழ்வு வேண்டும். ஒவ்வொரு முறையும் பேசின கலியாணங்கள் சரிவராமல் போச்சு. சீதனம்தானே கூடக் கேட்கினம். என்ன கஸ்டப்பட்டும செய்வம். பிறகு அவள் சந்தோஷமாய் இருந்தால்

Page 44
76
காணும்.’ என்று அவர் கதைத்ததையும் கேட்டேன. அம்மா கண்ணிர் விட்டதையும் பார்த்தேன்.
இப்பிடியான ஆட்களே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? பனத்தில் தோன்றுவதை என்னைப் போன்ற பெண்களால் வெளியே கதைக்க முடியுமா?
இரவு ஒன்பது மணி இருக்கும். கார் ஒன்று வந்து நின்றது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்தான். ஐயா அம்மா என்று எங்கள் விட்டுக்காரர் எல்லாருமே வரவேற்றார் கள்.
ஐயாவோடு அவர்கள் குசுகுசுத்தார்கள். பிறகு கொஞ்சம் உரத்த குரலில் கதைத்தார்கள். பிறகு அப்பிடியே சத்தம் கூடிக் குறைந்து. போய் விட்டார்கள்
அம்மாவின் கண்ணீரைப் பார்த்த பின்னர்தான் எனக்குச் சர்வமும் விளங்கியது. ஐயா தலையில் 'கை வைத்தபடி இருந்தார். அவர் விழியோரங்களிலும் ஈரக் கசிவு.
“காசு ஒரு லட்சத்தையும் ஒருமிக்க தரட்டாம். முன்னர் ஒப்புக் கொண்ட மாதிரி ஐம்பது காசும் மிகுதிக்கு பொறுப்பாய் காணியும் வேண்டாமாம்.'
நாளைக்கு ஒரு நாள்தான். அதற்கிடையில் ஐம்பதை எங்கை புரட்டுறது. முத்லில சம்மதிச்சவை, பிறகு ஏன் இப்பிடி கதையை மாற்றினம். என்று வீட்டில் எல்லோரும் கதிகலங்கினார்கள்.
*காசு சரி வராவிட்டால் றிஜிஸ்ரேசனுக்கு வைச்ச நாளை மாத்துங்கோ.வாற மாதம் வைக்கலாம்.'
ஒரு மாதத்திற்கு இடையில சரிவந்தால் சரி.இல்லா விட்டால் கலயாணப் பேச்சை விட வேண்டியதுதான்" என்று அவர்கள் சொன்னார்களாம். ۔۔۔۔۔

7ך
தியேட்டரில் சனமில்லை. கடைசி வரிசையில் ஒரமாக அமர்ந்திருந்தார்கள். பழைய காலத்துப் புடம். சனங்கள் இல்லை. நிர்மலாவுக்குப் படம் பார்ப்பது சிம்ம சொர்ப் பூனம். தலையிடிக்கும். ஆனால் மறுக்க முடியவில்லை. பிடிக்காவிட்டாலும்.
அவர் சிகரெட் புகைத்து.புகைத்து. புகையை விழுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் புகையால் பிரச் சினைப்படவில்லை.
நிர்மலா கிறீன் கலர் சாறியில் பசுமையாக இருந் தாள். மெல்லய இருளில் விழிகள் பிரகாசித்தன. "அப்பாடா' என்றார் அவர்.
நிர்மலா திரும்பிப் பார்த்தாள். 'ஏனெண்டு கேக்கேல்லை. மீண்டும் அவரே கேள்விக் கணை தொடுத்தார்
அவர் மெல்லியதாகப் புன்னகைத்தது அந்த மெல்லிய இருளிலும் ஒளி வெள்ளமாகப் பாய்ந்தது.
ஏன் அப்பாடா எண்டு சொன்னனான் தெரியுமே . பாருமன் தாங்கள் இருக்கிற பக்கம் சனங்கள் இல்லை. நாங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்." என்று அவர் முகத்திற்குக்கிட்ட வந்து சொன்னார்.
“ւD..." . 'நீர் எப்பவும் சந்தோஷமாய் இருக்க வேணும்' "என்ன மனவேதனை எண்டாலும் என்னட்டைச் சொல்ல வேணும் சரியே."
“g 'எனக்கு மனத்தில ஒண்ட வைச்சுக் கொண்டு வெளி யில ஒண்டைக் கதைக்கேலாது. அப்பிடிக் கதைக்கிறவை யையும் பிடிக்காது. அதேமாதிரி சொல்லுற சொல்லை

Page 45
78
மாத்திறவையை ஏமாத்திறவையை கண் .ாலே பிடிக்" காது.
திர்மலா திரையைப் பார்க்காமல் அவரைத் திரும்பி பார்த்தாள். மனதுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் முளைவிட்டன. பிறகு அவை அப்பிடியே கருகிப் போயின. அவள் எதையும் கேட்கவில்லை.
'நீர் இண்டைக்கு வழக்கத்தைவிட நல்லாய் இருக் கிறீர்’ என்று சொல்லிக் கொண்டு முகத்தை அவள் பக்கம் திருப்பினார் அவர்.
யூன் 10ஆம் தேதி
இன்றைக்கு றிஜிஸ்ரேசன் என்று இருந்தபடியால் நான் முன்னரே லீவு எடுத்து விட்டேன். எடுத்த லீவை கான்சல் பண்ணிவிட்டுத் திரும்ப ஒப்பீசுக்குப் போக மனம் வரவில்லை.
எனக்கு வேதனை வரவில்லை. ஆனால் வெறுமை, அந்த வெறுமையில் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. எல்லாமே ஒழுங்காக இருந்திருந்தால் எனக்கு இன்றைக்கு றிஜிஸரேசன் நடந்திருக்கும்.
ஆனால்
நேற்றைக்கு இடையில ஐம்பதினாயிரம் புரட்டுவது என்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயலா? ஏங்கனவே கொடுக்க ஒப்புக்கொண்ட காசையும் கடன் பட்டுத்தான் சேர்த்திருந்தார்கள், பிறகு மீண்டும காசு கடன்படுவது என்றால்.
எனக்கு இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என்று சொல்லி விடலாமா? கதைகளிலும் சினிமாக்களிலும் தான் அப்படிப் பெண்களால் சொல்லிவிட முடிகிறது. வாழ்க்கையில்.

79
அப்படியிருந்தும் ஐயா நேற்றுப்போய் வாற மாதம் வரையும் பொறுத்துக் கொள்ளும்படியும் மன்றாடிக் கேட்டுவிட்டுத்தான் வந்திருக்கின்றார். அவர்களும் வாற மாதம் நாள் இருக்கு அதற்கு இடையில ஒரு லட்சத்தை சேர்த்துப் போடுங்கோ. ஒரு மாத தவணைதான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஐயாவும் அண்ணைமாரும் ஒடித் திரியினம். எவரா லும் மாப்பிள்ளை வீட்டுக்காரரை எதிர்க்க முடிய வில்லை. எங்கள் சமுதாயத்தின் நிலைமை அப்படி.
பெண்கள் சமுதாயத்திற்குப் பயப்ப/ வேண்டி இருக் கிறது. தெருவில், வெளியில் குறை கேட்காமல்-வுாழத் தெரிந்தவர்களைக் கூடப் பார்த்துச் சிரிக்காமல்-கதைக் காமல் ஐயாவுக்குப் பயந்து, அம்மாவுக்குப் பணிந்து, அண்ணை தம்பிக்குத் தலை குனிந்து, வெளியுலக பூனை களை, ரதிகளை ஒத்த பெண்களைவம்புகள் செய்யும் ஆண் களுக்கு இடையில் தப்பி-நல்ல பெயர் காவி-கடைசியில் இப்பிடி எந்த நேரம் கலியாணம் குழம்பும் என்று கதி கலங்கி.
இப்படி காசுக்குச் சண்டை பிடிப்பவர்களுடன் நாளை எப்படி வாழ்க்கை நடத்துவது? உடம்புதான் பலவந்தத்தால் அவர்களுடன் சேரும்.மனம் சேருமீா?
வாழ்க்கைப் பயணத்தில் நன்மையிலும் தீமையிலும் எது நடந்தாலும் துணைக்கு வரும் பெண்ணை இப்படி வேதனைப்படுத்தி விட்டு, பிறகு எந்த முகத்தோடு சிரித்து கதைத்து-கட்டியணைக்க நினைக்கிறார்கள்.
சேட் கொலரைப் பற்றிப் பிடித்து நேருக்கு நேர் கேட்க வேணும் போல. ஆனால் கேட்கலாமா? எங்க ளால் கேட்க முடியுமா?
பின்னேரம் போல சுலோசனா வந்தாள். என் மனநிலை தெரிந்தவள். என்னை சமாதானம் செய்தாள்.

Page 46
80
வாழ்க்கைப் பயணத்தில் சில வேளை கண்ணை மூடி.சில வேளை காதை மூடி-சிலவேளை வாயை மூடி-வாழ வேண்டியிருக்கு என்றாள்.
-ZS--ZS--z-
கோயிலுக்குப் போய்விட்டு ஸ்கூட்டரில திரும்பி வந்து கொண்டிருந்தார்கள் நிர்மலாவும் அவரும். "வடிவாய் சாய்ந்து இரும்’ என்று சொன்னதை நிர்மலா காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. “என்ன...இன்னமும் சாயேல்லை." அவள் சாய்ந்தாள். “இன்னும் கொஞ்சம்.நெருங்கலாம்.” நெருங்கினாள். “கோயிலிலை என்னத்தை நினைத்துக் கும்பிட்டனீர்” அவள் பதில் சொல்லவில்லை. *சொல்லுமன்.” “பிறகு சொல்லுறன்." “உமக்கு இந்த பிறவுண் கலர் சாறி நல்லாய் இருக்கு எல்லாக்கலரும் நல்லாய் மச்பண்ணுது.”
...' "உப்பிடி எல்லாக் கலரும் எல்லாருக்கும் மச் பண்ணாது.என்ன” 'ஒமோம்."
“ஏன் எப்பவும் சுருக்கமாகவே பதில் சொல்லுறிர். வடிவாய் கதையுமன்."
w s
lì • • •
“இப்பிடியே உங்கடை வீட்டை போவமோ அல்லது வேறை எங்கையாவது போவமோ..."

'g dr.
'இல்லை.வேறை எங்கையாவது போய் கொஞ்ச நேரம் சந்தோஷமாய் இருக்கலாம் எண்டுதான். வாழ்க் கையில நிம்மதி.சந்தோஷம்தான் முக்கியம்."
“ “ùb....””
"அப்ப இப்பிடியே ரவுணுக்குப் போய் பிறகு வீட்டை போவம்; உம்மை விட்டிட்டு போக மனம் வரேல்லை."
"போவம்.'
'எங்கை.' "நீங்கள் சொன்னபடி ரவுணுக்கு.'
"என்ன..பழையபடி பின்னுக்குப் போlர்.நீர் பின் னுக்குப் போனால் நானும் பின்னால சரிவன்.' என்று அவர் சொல்லி சிரித்துக் கொண்டு.
'வடிவாய் நெருங்கி இரும்." என்றார்.
யூலை 11ஆம் திகதி
விபரிக்க முடியாத வேதனைகள், கண்ணீர் சகிதம் ஐயாவும் ஏனையவர்களும் கடந்த ஒரு மாதமாக எத்தனை ஒட்டம் ஒடினார்கள். வெளியில இருக்கிற தம்பிக்கும் கடிதம் எழுதினார்கள். பாவம் அவன் என்ன செய்வான் சின்னக்காவுக்கு கலியாண வீட்டுச் செலவுக் கும்.பிறகு எனக்கு வீடுகட்டவும் அவன்தானே தன் முழு உழைப்பையும் தந்தவன்.
அவனும் அங்கு தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் பட்டு முப்பதினாரயிரம் அனுப்பினான். வீட்டில் மிச்ச மாய் ஒன்றும் இல்லை. அம்மாவின் நகை . அத்தனையை யும் அழிச்சு புதிசாய் எனக்கு நகை செய்தாகி விட்டது.

Page 47
82
ஐயா என்ன கஸ்டப்பட்டாரோ.யாரின்னிர காலில விழுந்தாரோ.இந்த ஒரு மாதத்துக்கு இடையில மிகுதி இருபதினாயிரத்தையும் சேர்த்து முதல் வைத்திருந்த ஐம்பதினாயிரம்.தம்பி அனுப்பிய முப்பதினாயிரம். எல்லாம் ஒன்றாகிவிட்டன.
இன்றைக்கு றிஜிஸ்ரேசன்.
எல்லா வேதனைகளையும் கஸ்டங்களையும் மறந்து ஐயாவும். அம்மா வும் ஏனையவர்களும் பம்பரமாக செயல்பட சுலோசனாவும் ஏனைய சினேகிதர்களும் என்னை அலங்சரிக்க ஏற்கனவே அழகான என் உடம்பு மேலும் அலங்காரமானது.
மனம்.அதை எதனைக் கொண்டு அலங்கரிப்பது. நந்தகுமார் என்னும் நாகரீகமான ஹான்சமான ஆணுக்கு என் உடம்புதான் தனியச் சேரப் போகின் றதா? என் உடம்பை அவர் ஆக்கிரமிக்கலாம். முற்று கையிடலாம் மனத்தை அடைய அவரால் முடியுமா?
அகலமான ஹாலின் அலங்காரப் பின்னணியில் அழகான நந்தகுமாரையும்.என்னையும் விதம் விதமான போஸ்களில் தனித்தும், உறவினர்கள், நண்பர்களுடனும் படங்களும் எடுத்தார்கள்.
எழுத்து முடித்து தனித்து விடப்பட்ட போது ஸ்ரைலாக புகைப் பிடித்துக் கொண்டு அவர் சிரித்துக் கதைத்த போது நானும் சிரித்தேன்.
1zs-1zs--ZS
ரவுணுக்குப் போய்விட்டு நிர்மலாவை அவர் வீட்டை கொண்டுவந்து விட்டபோது இரவு ஏழரைமணியாகி விட்டது. பெளர்ணமி தினமாகையால் நிலவு இலவச மாக உலகத்தை பொன் முலாம் பூசிக்கொண்டிருந்தது.

83
வீட்டுவாசலில ஸ்கூட்டர் நின்றதும் வெளி விறாந்தை. யில் அவளுக்காகக் காத்திருந்த அவள் அம்மா எழுந்து உள்ளே போய் விட்டாள்.
'வாங்கோவன்." என்றாள் நிர்மலா. 'இல்லை. லேட்டாய் போச்சு. நான் போறன், இப்ப கிட்ட ஒருக்கா வாருமன்.” அவள் போனாள்.
"இப்பிடியான நிலவு நேரத்தில் கடற்கல்ரையில இருக்க வேணும்"
' ' ...'
y
"கிட்ட வாருமன்.' அவள் போனாள். நெருங்கியவளை அப்படியே இறுக! அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அவள் விரை வாக விலகிக் கொண்டாள்.
'நான் வரட்டே. நாளைக்கு ஒப்பீஸ்சுக்கு போன் பண்ணுறன்” என்று சொல்லி பழையபடி ஸ்கூட்டரை ஸ்ராட் செய்து கொண்டு போய்விட்டார்.
நிர்மலா வீட்டுக்குள் போய் உடுப்பை மாற்றிக் கொண்டு வந்தபோது. .
'வந்து சாப்பிடன் பிள்ளை” என்றா அம்மா.
'பிறகு சாப்பிடறன்." என்று சொல்லிவிட்டு வீட்டின் பின்பக்கம் போய் தான் வழக்கமாக இருக்கும் அந்த மாமரத்தின் கீழ் இருந்த சாய்மனைக் கதிரை யில் இருந்தாள்.
நிலவின் ஒளி பொன் கம்பிகளாக.மாமர இலைகளு 1ாக எட்டிப் பார்த்தன. சில அவள் முகத்திலும் வீழ்ந் தன.

Page 48
84
அம்மா வந்தாள்.
'பிள்ளை. நான் சொல்லுறதைக் கேள், ஹிஜிஸ் ரேசன் முடிஞ்சபிறகு நீ வழக்கம் போல சந்தோஷ மில்லை. உன்ரை மனத்தில இருக்கிறது எனக்குத் தெரி யும். உன்ரை சினேகிதி சுலோசனாவும் சொன்னவள். ஏதோ வாழ்க்கையைக் குழப்பிப் போடாதே.சந்தோஷ மாய் இரு.’ என்று சொல்லும் போதே அம்மாவின் குரல் சிதறுவதையும் அவள் விம்முவதையும் நிர்மலா உணர்ந்தாள்.
பிறகு. "நான் வாறன் பிள்ளை' என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.
நிர்மலாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. தன் மடியில் இருந்த டயறியை எடுத்தாள். ஒவ்வொரு நாளும் டையறி எழுதும் அவள் றிஜிஸ்ரேசன் நடந்த பின்னர் ஒருநாளும் எழுதவில்லை.
சமீப காலமாக தான் , எழுதியவைகளை நினைத் துப் பார்த்தாள். தனது அம்மாவையும் நினைத்தாள். மனத்தில் வேதனை அதிகமானது. கண்ணிரும் பெரு கியது.
தான் எழுதிய டயறியின் பக்கங்களை ஒவ்வொன் றாகக் கிழித்துப் போடத் தொடங்கினாள்.
வீரகேசரி 30-9-1984

6
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும்.
நீலக்கடலோர வெண்மலர்ப் பரப்பில் நிரை நிரை யாக ஆண்களும், பெண்களும் கலர் கலராக பலூன்களை பரவ விட்டது போல.
இடையையும், நெஞ்சையும் மெல்லியதாக மறைத்தும் மறையாமலும் பெண்களும் இடையை மட்டும் காட்டர்த ஆண்களும் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தார்கள்
பார்க்கும் இடமெல்லாம் பளபளப்புத் தேகங்களுடன் வெள்ளை அழகிகள் பவனி வருவதைப் பார்த்தால் வெட் கப்பட்டுச் சங்கடப்பட்டு மீண்டும் கலர்களைப் பார்க்க வேண்டியதாயிற்று. கூச்சப்படாமல் பார்வையால் அவர் களை வருடப் பழக வேண்டும்.
“என்ன மிஸ்டர் நதன்?" என்றார் மிஸ்டர் மாரின். நாதன் என்ற பெயரை நதன் ஆக்கிவிட்ட அவரது கேள்விக்கு பதில் சொல்லாமலே சிரித்தேன்.
யாழ்ப்பாணத்து வெய்யிலை (என்னவோ தெரிய வில்லை இப்ப வெக்கை கூடப்போல) சுட்டெரிக்கும் அதன் கொடுமையை அனுபவித்துப் பழகிய எனக்கு இந்த வெய்யில் பதைபதைக்க வைத்தது. -

Page 49
86
ஆனால் அந்த வெள்ளையாட்கள் தங்கள் வெள்ளைத் தோல் பழுக்கப் பழுக்க ஒருவகையாக சிவந்து கனிந்து கறுக்க ஆசையோடு வெய்யில் காய்ந்தார்கள்,
மிஸ்டர் அன் டிமிஸிஸ் மாரின் வெய்யில் காயத் தயா ராகிக் கொண்டிருக்க அவர்களின் பிள்ளைகள் இரண்டும் (கதரின் ஒன்பது வயது, ஜோன் ஏழு வயது) மண்ணில் புரண்டு விளையாடித் திரிந்தனர்.
ஏற்கனவே வெய்யில் காய்ந்து கருவாடாக கருகி விட்டவன் என்று என்னைப் பார்க்கத் தெரிவதால் என்னவோ மிஸ்டர் அன் மிஸிஸ் மாரின் என்னை வெய்யில் காய அழைக்காமலே அர்த்தமுடன் சிரித்துவிட்டு கும்பலில் கரைந்தார்கள்.
அழகான ஆரவாரம் நிறைந்த அந்தத் தங்கக் கடற் கரையில் (கோல்ட் கோஸ்ட்) அரைகுறை ஆடை அணிந்தவர்கள் மத்தியில் முழுமையான ஆடைகளுடன் நின்று கொண்டு என்னைப்பற்றி ய்ோசித்துப் பார்க்க எனக்கே வியப்பாக உள்ளது.
கனவிலாவது நடக்குமா? என்றுகூட நான் நினைத்த தில்லை அவுஸ்திரேலியா போய்ச் சேருவேன் என்றோ. இப்படி நல்ல இதயம் படைத்த மிஸ்டர் மாரின் அவர் களிடம் வேலைக்கு (மிஸ்டர் மாரின் அவர்களை நண்பன் அல்லது சகோதரன் என்று சொன்னால்தான் பொருந் தும்) சேர சுவிப் விழும் எனவோ சாத்திரத்தில்கூடச் சொல்லவில்லை.
ஜேர்மனியோ பிரான்ஸ்சோ எந்த அகதி முகாமோ அல்லது மிடில் ஈஸ்ட்டில் கடும் வெய்யில் குடித்து உடம்பு முறிய வேலை செய்து டொலராகவோ, மார்க்காகவோ அனுப்ப வேண்டி வரும் என்று நினைத்தது உண்மை. g5 T67.

87
ஏஜென்சிக்குப் பின்னாலும் தெரிந்தவர்களுக்குக் கடிதங்கள் எழுதி போஸ்ட் ஒவ்பீஸ்சில் முத்திரைகள் தட்டுப்பட யாழ்ப்பாணக் கச்சேரியடி வேப்ப மரத்தடி புறோக்கரிடம் கூட விலை கொடுத்து முத்திரை வாங்கி கடிதங்கள் போட்டு பதிலை எதிர்பார்த்துக் கடிதங்கள் கிணற்றில் போட்ட கல்லுகள் மாதிரி ஆயின.
இப்படி எத்தனை நாட்கள் எப்படி எப்படியோ கழிந்தது. பிறந்து வளர்ந்த மண்ணில் நண்பர்களுடன் சைக்கிளில் பவனி வந்த றோட்டில் செக்கன்ட் ஷோ படம் பார்த்து விட்டுத் திருப்புகழ் பாடிக்கொண்டு வந்த அனுப வத்தைக் கோயில் திருவிழாவில் விடிய விடிய திருவிழா பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு கண்களைக் கழற்றி எறியும் கன்னம் சிவந்த பைங்கிளிகளைப் பார்த்துக் கச்சான் கடலை வாங்கிக் கொடுத்ததை. s
ஒருவனை ரயிலில் பயணமேத்த ஒன்பது சைக்கிளிலில் பதினெட்டுப் பேர் போய் பிளாட்போம் நிரையில் நின்று ஒப்பாரி வைத்து அனுப்பியதெல்லாம்.
யோசித்துப் பார்த்தால் நெருஞ்சி முள்ளின்மேல் படுப்பதுபோல இருக்கும்.
"தம்பி வெளியால போகாத, லைபிரரிக்கும் வேண் டாம். கடைத் தெருவுக்கு நாங்கள் போறம்” என்பதை யெல்லாம் கேட்டு. .
வீடே சிறையாக மனத்தில் வெறுமை.வரட்சி நிறைந்து எதிலுமே விரக்தி, கடைசி வீட்டில் தன்னும் நிம்மதியாக இருக்க முடிந்ததா?
*தம்பி கெதியாய்ப் போடா. குஞ்சியப்பு வீட்டைப் போய் கொஞ்சநாள் இரு. இஞ்சைஇருந்தால் பிரச்சினை" என்று அம்மா அழுதழுது சொன்னதைக் கேட்டு அங்கும இங்கும் ஒடித் திரிந்ததுதான் மிச்சம்.

Page 50
88.1
எங்கள் வீட்டில், எங்கள் தெருவில், கிராமத்தில் நகரத்தில் இருக்க முடியாமல் எல்லாமே அட்டமத்துச் சனியன் பிடித்ததுபோல, கடைசியில் வெளிநாடு போனால்தான் ஆயுள்ரேகை பலமாக இருக்கும் என்று குறிப்புப் பார்க்காமலே நடைமுறையில் உணர்ந்தேன்.
எத்தனை ஆட்டம் போட்டு எவ்வளவு கூத்தாடி யார் செய்த புண்ணியமோ அம்மாவின் நேர்த்திக் கடனோ தெரியாது. அதனால்தான்.
எங்கு பார்த்தாலும் யூகலிப்டஸ் மரங்கள் போன்ற, என் வாழ்க்கையில் காணாத உயர்ந்த மரங்களையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாத தன்மை கொண்ட காடுகளையும் பாரிய தோட்டங்கள், மெய் சிலிர்க்க வைக் கும் இயற்கைக் காட்சிகள், அதிர வைக்கும் நகரங்கள் அவற்றின் அதிசயமான அமைப்புக்கள், வானுயர்ந்த கட்டிடங்கள். w
செளந்தரியம் நிறைந்த பூரிப்பான மனிதர்கள் குறிப் பாக, நெஞ்சத்தை சுண்டியிழுக்கும் ரூபவதிகளான பெண் களும் நிறைந்த அவுஸ்ரேலியாவில் இப்படி சர்வ சுதந்திர புருஷனாக இருக்க முடிகின்றது.
யாரால் நம்ப முடியும், இப்போதுகூட ப்ரிஸ்பேன் நகருக்கு ஐம்பது மைல் தூரத்தில் உள்ள இந்தத் தங்கக் கடற்கரையில் நிற்கும்போது கூட நம்ப முடியாமல் இருக்
றது.
எத்தனை ஆயிரம் கார்கள் ஸர்ஃபிஸ் மட்டைகள் சகிதம் (கடலலை மீது சவாரி செய்ய) ஆண்களும் பெண் களும் குழந்தைகளுமாக எவ்வளவோ தூரத்திலிருந்து வருகின்றார்கள்.
அப்படித்தான் ஆஷ்லிங் என்னும் இடத்தில் இருந்து ப்ரிஸ்பேன் நகருக்கு அலுவலாக வந்த மிஸ்டர் மாரின் அப்படியே இங்கே வந்து விட்டார்.

89
ஒவ்வொரு அவுஸ்ரேலியரும் அப்படித்தான். சனி
ஞாயிறு இரண்டு நாள் விடுமுறையையும் அட்டகாசமாக பொழுதுபோக்குவர்.
இந்த இனிமையை அதிலுள்ள சுகத்தினை அதற்கான தேவைப்பாட்டினை என்னால் உணர முடியவில்லை. ஏற்ற மனப்பக்குவம் என்னில் ஏற்படவில்லையா? என் மனம் வரண்டு போய் விட்டது? தெரியவில்லை.
வெறும் சவுக்கு மரங்களைக் கொண்ட சின்னஞ்சிறு கசுர்னாபீச்சில் கிடைத்த சந்தோஷம் இங்கு ஏன் வரமாட் டேன் என்கிறது.
ரப்பர் கானில் கொண்டு போகும் பனங்கள்ளும், நண்டுப் பொரியலும் தந்த ஆறுதலும், அதில் கிடைத்த உவகையையும் இங்கு எங்கு போல்த் தேடுவது. (ஞானஸ் கந்தன் மேளம் தட்ட சாள்ஸ் ரஞ்சித் தென்றல் உறங்கிய போதும்தென்றல் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா" என்று பாட, நாங்கள் மணலில் நர்த்தனம் புரிய, அதன் விளைவாக நெஞ்சங்களில் முகிழும் மலர்ச்சி எங்கு போனாலும் கிடையாது. v
உழவு மாடு போல திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டு ஒரு இடத்திலேயே நிற்கின்றது. மனம் இங்கு எதிலுமேயே ஒட்டவில்லை.
இன்று மாத்திரமா? வந்த நாள் தொடக்கம் இப்ப டித்தான்.
ஆஷ்லிங் ஒரு அதி அற்புதமான இடம். அப்படியான ஒரு இடத்தைப் பார்த்தது வாழ்க்கையில் இப்போது தான் முதற்தடவை என்பதால் எனக்கு ஒப்பிடத் தெரிய வில்லை.
வெ-6

Page 51
90
மனதுக்குப் பிடித்த இதமான கலரில் வாங்கிய துணியைப் பார்க்கும் தன்மையை அல்லது இதயத்தைக் கவர்ந்த காதலியைக் காணும் உணர்வினை ஆஷ்லிங்கை பார்க்கும்போது அடையலாம் என நினைக்கின்றேன்.
ஆஷ்லிங்கில் ஒரு பிரமாண்டமான தோட்டத்தின் மத்தியில் மிஸ்டர் மாரின் அவர்களின் பெரிய மர வீடு.
சொன்னால் நம்ப முடியாத அளவு உண்மையாக ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஏக்கர் கொண்ட நிலப்பரப்பு மாரின் அவர்களுக்குச் சொந்தமானது. அதில் சிறு பகுதி யில்தான் தோட்டம். 登
மிகுதி எல்லாம் யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த காடுகள். அவற்றோடு இரண்டறக் கலந்த அமைதி, எப்போதாவது தென்படும் கங்காருகள். Y
மரவீட்டைச் சுற்றி ஸ்ட்ராபெரி மரங்சளின் கிளைகள் பழங்களை சுமக்க முடியாமல் சுமந்து வளைந்து ததிங் கினத்தோம் போட்டுக் கொண்டிருந்தன.
வீட்டின் ஒருபுறத்தே டிராக்டர்கள், புல்டோசர், கார், மோட்டார் சைக்கிள்கள், விவசாய இயந்திரங்கள்.
அனுதினமும் அதே ஒழுங்கில் ஒரே இடத்தில் குழம்பாமல் இருக்கும் அதுவும் தங்கள் நாளாந்த வேலை களை ஒழுங்காகச் செய்து கொண்டு.
தோட்டத்துக்கு வரும் பாதையின் இரு மருங்கிலும் ஜகராண்டா மரங்கள். நீலநிறப் பூக்களை அந்த மரங்கள் பூப்பதில்லை. நீலநிற சாயத்தில் மூழ்கி எழுந்தது போல இவை தெரியாமல் கிளை வெளிப்படாமல் நீலக்குடை களாக கோபுரங்களாக பூக்கள், நீலப் பூக்கள்.
முதன்முதலில் பார்த்தபோது அந்த நீலநிறம் எனக்கு பிரியாவைத்தான் ஞாபகப்படுத்தியது. கல்லூரியில் படித்த

9.
அந்தக் காலத்தில் நானும் ஞானஸ்கந்தனும் வேறொரு பெண்கள் கல்லூரியின் டின்னருக்கும் போனோம்.
நீல சாரியில் நீலப்பொட்டு என்று எல்லாமே நீலமாக அசைந்த பிரியாவைக் கண்டு மெய் மறந்ததுதான் நினை வுக்கு வந்தது.
அது அந்தக் காலம். இப்ப அழகுணர்ச்சியை ரசிக்கும் மனோபாவமே மாறிப் போய் விட்டது. யாழ்ப் பாணத்தில் நிம்ம்தியாக கொஞ்சதூரம் சைக்கிளிலில் போனாலே பெரிய புண்ணியமாக இருக்கையில் ரசிக்கும் மனம் எப்படி வரும்.
வந்த புதிதில் தோட்டத்திற்கு உதவியானேன். பத்தாயிரம் ஏக்கர் இருக்குமா? மாரின் அவர்களிடம் கேட்கவில்லை. கேட்டு என்ன செய்வது.
இவ்வளவு நாளும், மாரின் குடும்பத்தினர் தனித்துப் பார்த்த தோட்டம்தானே. எல்லாமே இயந்திர உதவிகள் இப்பகூட நானுமானேன்.
ஒரு தடவை மாடுகளை மேய்க்க மிஸ்டர் மாரின் அவர்களின் மூத்த பிள்ளை கதரினுடன் ப்ோனேன். மாடு கள் ஒன்றா, இரண்டா, ஐம்பதா. நூறா.
சிறிய மந்தை, பெரிய மந்தை என்று எண்ணாயிரம் மாடுகள்.அந்தப் பிள்ளை குதிரையுடன் வந்தது. அப்படி யல்ல, குதிரையில் வந்தது.
நானும் குதிரை ஏறிப் பழக வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விரிந்து பரந்திருந்த அந்தத் தோட்ட மும் புல்வெளியில் மந்தை மேய்ப்பையும் பார்க்கும்போது என்ன யோசனை வரும்.
இப்ப யாழ்ப்பாணத்தவர்கள் செய்யும் சில ஆயிரம்
கன்று தோட்டத்தரைகள் என்ன பாடுபடுகின்றன. புகையிலை நல்ல விலை போகவில்லை.

Page 52
92
குழை தாட்ட செலவுகளும் மருந்தடித்த செலவு களும் வருமா? போக்குவரத்துக்குறைந்து எண்ணெய் தட்டுப்பாடு வந்த பிறகு கள்ள விலைக்கு வாங்கும் எண்ணெயைக் கொண்டு இறைத்தால் எங்கே கொண்டு போய் விடும்?
அதையும் இதையும் ஒப்பிட முடியுமா? போய்ச் சேர்ந்த ஒரு கிழமையின் பின்னர் வயிற்றில் சாடையான வலி எடுத்தது.
"மிஸ்டர் நதன் எங்கள் நாட்டுப் பாலை கவனமாக பருகுங்கள். அவுஸ்ரேலிய பாலுக்குக் கொழுப்புச் சத்து அதிகம். சீரணம் ஆவது கடினம்" என்று மிஸ்டர் மாரின் சொன்னார்.
அதுதான் காரணமா? அப்பிளா, ஸ்ட்ராடெரிபழமா, திராட்சையா, வாதாம் பருப்பா, பீரா, பதம் செய்யப் பட்ட இறைச்சியா? இன்னும் பெயர் தெரியாத பொருட் 5ς,π π 2
மெல்லியதாக இருந்த வலி அன்று இரவு பெரிதா கியது மிஸ்டர் மாரின் தன்னிடம் இருந்த சில மருந்து களைத் தந்தார்.
டாக்டரிடம் போவது என்பது டாக்டர் என்ன பக்கத்து வீடே இல்லை பக்கத்து தோட்டம்தான். அந்தத் தோட்டத்து வீட்டுக்கு காரில் போக எவ்வளவு நேரம் செல்லும் போய்ப் பார்க்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இப்படித்தான் ஒரு நாள் இரவு ஏழு மன்னி இருக்கும் றோட்டில் சனநடமாட்டம் இல்லை. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததோ இல்லையோ தெரு சூனியமாகி விடும். வீடுகளின் வெளிவிறாத்தை லைட் எரியாது.

93 காதைக் கூர்மையாக்கிக் கொண்டு வீட்டில் உள்ளவர் கள் இருப்பார்கள். ஒருவருடன் ஒருவர் கதை குறைவு. வேலைக்குப் போன அத்தான் பல மாதங்களாக வர வில்லை என்று அக்காவுக்குக் கவலை.
அக்கா பிள்ளைகள் மேசையில் இருப்பார்கள் ஆனால் படிப்பதில்லை. குசுகுசு என்று கதைப்பார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அந்தக் கதை இருக்கும். நிச்சய மாகப் படிப்பைப் பற்றி இராது.
ரேடியோவில் ஆறு மணி, ஆறரை, ஏழு பதினைந்து, ஏழு நாற்பத்தைந்து, ஒன்பதேகால், ஒன்பது நாற்பத் தைந்து என்று சகல நியூஸ்களையும் கேட்பது வருத்தத் திற்கு நேரத்துக்கு நேரம் குளிசைகள் போடுவது போல ஒரு நாளாந்தக் கடமை,
அன்றைக்கும் ஆறரையானும் கேட்டுவிட்டு ஏழு பதினைந்துக்காகக் காத்திருந்தோம். தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. நாய்கள் குலைத்தன.
"லைட்டை நூருங்கோ” என்று சொன்னார்கள், றோட்டுக்கரை என்பதால் எல்லோரையும் விட பயம் கூட. சட்டென்று சத்தம் அடங்கியதால் லைட் நிப்பாட் டப்படவில்லை.
வீட்டின் ஹாலில் சுருண்டு படுத்திருந்த அம்மா சற்றே முனகினார். அமைதியான அந்த நேரத்தில் அது பெரிதாகக் கேட்டது.
"என்ன அம்மா” என்று அக்காதான் ஓடிப்போனாள் "ஒண்டுமில்லைப் பிள்ளை. சாடையான நெஞ்சுவலி பெரிசாய் இல்லை. வாயுக் குழப்படியாய் இருக்கும்"
அம்மா வேதனையை சமாளித்துக் கொண்டு சொல்லு கின்றாளா? அல்லது உண்மையிலேயே வேதனை இல்லையா? புரிந்து கொள்ள முடியவில்லை.

Page 53
94
அக்காவைக் கொண்டு சில கைமருந்து செய்தா, சாய்ந்து படுத்தா, எங்கள் வீடு றோட்டோரம். பிற்பக்கம் மதில் கொண்ட் வீடுகள். அதற்குப் பின்னால் தோட்ட வெளி வெகுதூரம் வரை,
சும்மா நேரத்திலேயே றோட்டில் போவது சிக்கல், ஊரடங்கு நேரத்தில் என்றால் எப்படி இருக்கும். றோட்டு பக்கமே தலை காட்ட முடியாது, விடியும்வரை சமாளிக்க வேண்டும்.
நாங்கள் பதட்டப்பட்டோம். அம்மா பெரிதுபடுத்த வில்லை. எல்லாம் சரிவரும் என்றா. அப்படியே நெஞ்சுவலி குறைந்து விட்டது.
விடியத்தான் ஆஸ்பத்திரி போய் பில்ஸ்சும், மிக்ஸ்சரும் வாங்கிக் கொண்டு வந்தா. அதைக் கூட ஒழுங்காக் குடித்தாவோ தெரியாது.
மிஸ்டர் மாரின் அடிக்கடி என் வயிற்றுவலி பற்றி கேட்டார். அவர் தந்த சில மருந்துகளால் வலி போன இடம் தெரியவில்லை.
ஆனால் ம்னிசன் என்னை விடவில்லை. படுக்கையில் கிடத்தி விட்டார். இரண்டு நாள் றெஸ்ட் எடுக்கச் சொன் னார். தோட்டப் பக்கமே தலைகாட்ட வேண்டாம் என்று தடை உத்தரவு போட்டார்.
அறையில் நுரை. மெத்தையில் படுத்துக் கொண்டு யன்னல் ஊடாகத் தெரியும் பசிய புல்வெளியைப் பார்த்துக் கொண்டு இரண்டு நாளைக் கழித்த பின்னர் தான் தோட்டப் பக்கம் விட்டார்.
இரண்டு நாள் றெஸ்ட் எடுத்த பின்னர் மாலையில் புல்வெளிப் பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். கூட கதரினும், ஜோனும் நெடுகச் சிரித்துச் சிரித்து வந்தனர்.

95
அந்தப் பிள்ளைகள் நெடுகச் சிரித்த படிதான். யாழ்ப் பாணத்தில் கொஞ்ச நாள் இருந்தால் இப்பிடிச் சிரிக்குமோ தெரியாது. v.
கடும் பச்சைப் புல்வெளியில் இடையிடையே மலர்க் கூட்டங்கள் தெரியும். கலர் டி.வியில் காணும் பிரகாச மான வண்ணங்களைக் கொண்ட மலர்கள்.
ஒரு இடத்தில் அமர்ந்து பிள்ளைகள் விளையாடத்
தொடங்கினார்கள். அதில் இருந்து சுற்றிப் பார்த்தால் ஒரே பிரமிப்பு.
ஊரில் பின்னேரங்களில் ஸ்ரேசனடி பிளாட் போமில் இருந்து எதிரே தெரியும் தோட்டங்களையும், தென்னை பனை மரங்களையும் பார்த்து மயங்கிய கண்களுக்கு,
இந்தக் காட்சி அதிசயத்தை தான் உண்டு பண்ணும் ஆனால்,
இப்ப ஸ்ரேசனடி பிளாட்போமில் இப்படி இருக்க முடியுமா? ஸ்ரேசன் கட்டிடமே பாழடைந்தது போல் ஆகிவிட்டதே. பிளாட்போமில் கூட புல் மண்டிக்கிடப்ப தாக சொல்லக் கேள்வி.
ஒரு நாள் மனத்தை ஆற்றுவதற்காகப் போய் இருந் தால் நிம்மதியாக ஆறுதலாக அந்த பிளாட்போமில் இருக்க முடியவில்லை.
ஐந்து பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். தோட்டங் களில் இருந்து புல்லுக்கட்டுகளுடன் ஆண்களும் பெண் களுமாக சனங்கள் ஓடி வந்தார்கள்.
'ஏன்ர தம்பி இருக்கிறாய் கெதியாய்ப் போ’ என்று அவர்கள் சொன்ன விதத்திலிருந்து நிலைமையை உணர்ந்து இருந்த இடத்தை விட்டு விரைந்து மறைந் தோம்.

Page 54
96
இப்ப பச்சை வண்ணமாய் பரந்திருக்கும் இந்த புல்வெளியில் வண்ணமலர்களைக் களைப்பு இல்லாமல் தாங்கும் செடிகளைத் தூரத்தில் நீலவண்ணக் கன்னிக ளாக ஜொலிக்கும் ஜகராண்டா மரங்களையும் பார்த்து பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழியில்லை.
ஒரு கிழமை கழிந்த பின்னர் பழையபடி அந்த நேரம் அம்மாவுக்கு நெஞ்சுவலி வந்தது. ஆனால் வலி அதிகம் போல, அம்மா கடுமையான வலியுடன் போராடுவது தெரிந்தது.
வீட்டில் எல்லோரும் கலவரப்பட்டார்கள். வெறுமை" விரக்தி நிறைந்த மனங்களில் விபரிக்க முடியாத வேதனை நோகின்ற இடத்தை மேலும் அழுத்தி வலியை உண்டாக் கும்போல்,
எப்பிடியும் ஆஸ்பத்திரி கொண்டு போக வேண்டும். எப்படிக் கொண்டு போவது தலையை மோதி உடைக்க வேண்டும் போன்ற உணர்வு. பிரச்சினைக்கு தீர்வு எப்படிக் காண்பது.
தெரு முனையில் ஒரு கார் இருந்தது ‘பாஸ்’ ஒட்டி இடையிடையே ஒடும். வெள்ளைக் கொடி பிடித்து ஆஸ்பத்திரி போகலாம் என்று அந்தக் கார்க்காரரிடம் போனோம்.
அவர்கள் வீட்டுக் கதவைத் திறக்கவ்ே பலமுனைப் போராட்டம் நிகழ்த்திக் கடைசியில் கார்க்காரர் வெளியே வந்தார்.
மிகப் பணிவாக வேண்டுகோள் விடுத்தும் பயன் இருக்கவில்லை 'வெள்ளைக் கொடி பிடிச்சால் என்ன பிடிக்காவிட்டால் என்ன. பிரச்சினை ஒண்டுதான் விளை வும் ஒரே மாதிரித்தான் தம்பி என்னைக் கேட்டு குறை நினையாதை. நான் வரமாட்டன். வேணும் என்றால் காரைத் தாறன் கொண்டு போங்கோ. நானும் பிள்ளை

7ون
குட்டிக்காரன் என்ரை மணிசி பிள்ளையன் சம்மதிக்காது கள். உங்கடை நிலையும் எனக்கு விளங்குது தம்பி.' என்று அவர் சொல்வது நியாயந்தான்.
ஆனால் என்ன செய்வது.
அசாத்தியத் துணிச்சலுடன் சைக்கிளில் புறப்பட்டு றோட்டால் போய் தெரிந்த டாக்டர் ஒருவரை கண்டு மன்றாடி.
"சைக்கிளில வந்து பாருங்கோ' கூப்பிட்டபோது
டாக்டர் வீட்டுக்காரரும் போர்க்கோலம் கொண்டு விட்டார்கள். அவர்கள் நிலையில் அது சரிதான். எப்கள் நிலையில்.
விதியை நொந்து கொண்டு அவர் ஒரு குறிப்பில் தந்த மருந்துகளுடன் வீட்டை வந்தால்.
அதற்கிடையில் யாரோ புண்ணியவான் அந்த நேரத் தில் துணிந்தவன் காரோடத் தெரிந்தவன் உதவிக்கு வந்து தெருமுனைக்குக் காரைக் கொண்டுவந்து அம்மா வைக் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் இதற்கிடையில் எவ்வளவு நேரம் ஒடிவிட் " . اق-با
இனி எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரி போக வேண்டும். ஆனால் பாதுகாப்பாகப் போகமுடியுமா? இடறிவிழும் தெருவில் வாகனம் வேகமாகப் போக முடியாது.
எப்படிப் போய்ச் சேருவது.
கொஞ்ச நாள் கழித்து எனக்கு மீண்டும் வயிற்றுவலி
எடுத்தது. அன்று கதரினுடன் காலையில் மாடு மேய்க்கக்
குதிரையில் போனேன், கும்பலாக மாடுகள் புல்தரையில் ஊர்ந்த போது.

Page 55
98
அடிவயிற்றில் முள்ளாகக் குத்தியது போல வலி உண்டானது. சமாளிக்க முனைந்து முடியவில்லை.
புல்லுத் தரையில் கொஞ்ச நேரம் படுத்தேன். சரிவர வில்லை. நிச்சயமாக அவுஸ்திரேலியா கொழுப்பு நிறைந்த பாலினர்லோ அல்லது வேறு எந்தப் பதார்த்தி னாலோ இருக்க முடியாது.
நான் சாப்பாட்டு விடயங்களில் இப்ப அதிக கவனம் எடுத்திருந்தேன். வலி அதிகமாக கதரினைத்தனியே விட்டு வீட்டுக்குப் போனேன். புன்னகையுடன் அது விடை கொடுத்தது. V தோட்டத்தில் மிஸ்டர் அன் "மிஸிஸ் மாரின் வேலை செய்து கொண்டிருந்தனர். நான் வீட்டை நோக்கி நடக் கும் போது எனது நிலையை உணர்ந்து போலும் அவர் கள் விரைந்து வந்தார்கள்.
என் வேதனை அவர்கள் முகங்களில் தெரிந்தது. ஆத ரவுடன் அழைத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத் துப் போன முறை போலவே மருந்துகளைத் தர அது பிரயோசனப்படவில்லை.
அந்த நேரம் ஜோனுக்கு வகுப்பு நடந்து கொண்டி ருந்தது. ஜோன் இருந்தது தங்கள் வீட்டில்தான். ஆனால் வாத்தியாரோ பல மைல்களுக்கு அப்பால் இருந்தார்.
அங்கு இருந்த ரேடியோ நிலையத்திலிருர்து வாத்தி யார் பாடம் புகட்டுவார். ஒவ்வொரு தோட்டத்து வீடு களிலும் உள்ள பிள்ளைகள் தங்கள் வீட்டை வகுப்ப றையாக்கி பாடம் படிப்பர்.
பல நூறு மைல்கள் விஸ்தீரணத்தில் வகுப்பறை இருக்கும். பிள்ளைகளின் முன்னால் ரேடியோ (ஸ்ராண் சீவர்) ஆசிரியராகக் காணப்படும்.
தேவையான நேரத்தில் பிள்ளைகள் சுவிட்சைப் போட்டு வாத்தியாரிடம் விளக்கம் கேட்பார்கள். அப் படியான நேரடித் தொடர்பு.

99 ரேடியோ நிலையம் சமயத்தில் வைத்திய நிலைய" மாகத் தொழிற்படும். அல்லது வைத்திய நிலையம் தான் கல்வி-ரேடியோ நிலையமாகத் தொழிற்படுகிறதோ தெரி шJлт95).
மிஸ்டர் மாரின் விரைவாகச் செயற்பட்டார்’ ஜோனின் படிப்பை இடைநிறுத்தி ரேடியோ மூலம் வைத்தியருடன் தொடர்பு கொண்டு டாக்டரை அழைத்தார்.
அடுத்த விநாடி டாக்டர் என்னோடு கதைத்தார். கேள்விகளைக் கேட்டார். சரிவரவில்லை. தானே வருவ தாகச் சொன்னார். v
முன்பு இருந்த டாக்டர் அவரே பிளேன் ஒடுவார் இப்போது இருப்பவர் தயாராக இருந்த பைலட்டுடன் புறப்படுவதாக அறிவித்தார்.
நான் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க ஜோன் என்னை கவலையோடு பார்த்தான். மிஸிஸ் மாரின் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.
மிஸ்டர் மாரின் காரை எடுத்துக் கொண்டு பிளேன் வந்து இறங்கும் இடத்திற்குப் போய்விட்டார். சிறிது நேரம் கழிய டாக்டர் மாரினின் காரில் வந்து இறங்கினார் .
அடுத்த சில நிமிடங்களில் டாக்டரின் பரிசோதனை ஆஸ்பத்திரி போய்ச்சேர்த்து, எனக்கு ஒப்பிரேசன் நடந்தது. நான் சுகமானது வேறு விசியம்.
ஒரு மாதம் கழித்து ஊதிய உயர்வும் உப்பிய கன் னங்களுடன் மிஸ்டர் மாரினின் தோட்டத்திற்கு வந்து பழையபடி புல்வெளி தோட்டம் யூகலிப்டஸ் மரங் களைப் பார்த்து அவற்றுடன் ஐக்கியமானேன். ஆனால், அம்மாவை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. அம்மாவும் என்னைப் போல அவுஸ்திரேலியாவில் இருந். திருந்தால் அன்றைக்கு உயிர் தப்பியிருப்பாளா?
வீரகேசரி, 21-7-1985

Page 56
காணிக்கு வேலி உண்டு?
அழகான வளைவுகள் கொண்ட மதிலின் கவர்ச்சி யினைப் பசிய மை மெருகூட்டியது. அந்த றோட்டுக் கரை மதில்களில் வித்தியாசமான மதில்.
அதி அற்புதமான மதிலின் ஒரு புறத்தே பல வர்ண நிறமுடைய போஸ்டர் ஒன்று அழுத்தமாக ஒட்டப்பட்டு இருந்தது. யாருடைய சுண்ணிர் அஞ்சலியோ?
எதிரே தெரியும் காட்சிகளை வெண்திரையாக மறைப்பது போல வெண்பனி, உடம்பைச் சிலிர்க்கவைக் கும் பணியின் கொடுமையை மறைக்கக் கம்பளியால் போர்த்துக் கொண்டு கணபதிப் பிள்ளையர் வீட்டை விட்டு வெளியே வந்தார்,
வழக்கமாக காலையில் அவர் ரோந்து புரிவது வழக் கம். அதுவும் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்பக்க மதில் எப்படி இருக்கின்றது எனப் பார்க்காவிட்டால் தலைவெடித்து விடும்.
என்ன மாதிரித் திட்டம் போட்டு எவ்வளவோ செல வழித்து அந்த றோட்டில் யாவரும் வியக்கும் வண்ணம் மதிலைப் பராமரித்துக் கொண்டு இருக்கின்றார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த மண்ணுக்காக எத்தனை எத்தனை கண்ணிர் அஞ்சலிகள். தப்பித் தவறித் தங்கள் வீட்டு மதிலிலும் கண்ணிர் அஞ்சலிகள்

101
ஒட்டப்படலாம் என்ற தாங்கமுடியாத யோசனை காரணமாகத்தான் இந்த அதிகாலை ரோந்து.
இன்றைக்கும் அவர் கேற்றினைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். வெறிச்சோடிப் போயிருந்த தெருவில் தூரத்தில் இரண்டொருவர் அசைவது வெண்பனிப் புகார் ஊடாகத் தெரிந்தது.
யாழ்ப்பாணம் போகப் பாய்ந்து வந்து கொண் டிருந்த மினிபஸ் கணபதிப்பிள்ளையரை அடித்து விழுத்துவது போல வந்து அவரைக் கடந்து போயிற்று. கேற்றின் முன்னால் நடுரோட்டில் நின்று மதிலை ஆழமாகப் பார்க்க முன்பே அந்த போஸ்டர் முனைப் பாகத் தெரிந்தது.
அதில் இருந்த வர்ணங்கள், அழகான இளைஞன். ஒருவனின் பெருப்பிக்கப்பட்ட புகைப்படம்.தோற்றம் மறைவுக் குறிப்புகள் எதுவுமே அவருக்குப் புலப்பட வில்லை. சுவரை அசிங்சப்படுத்திக் கொண்டு அது இருப்பதுதான் அவருடைய சொற்களில் சொல்வது போல,
y
'வயிற்றைப் பற்றியெரிய." தது.
'அறுவான்கள் உவன்களுக்கு வேறை வேலை இல்லையே' என்று சத்தம் போடத்தொடங்கினார்.
செய்து கொண்டிருந்
12S-47-17S
“எங்கடை சின்னத்தம்பி மாமாவின் பெட்டைக்கு. இந்த ஆவணிக் கடைசி நாளுக்குக் கலியாணம் முடிஞ் சுது. அவளுக்கு முப்புத்தாறோ, முப்பத்தேழு வயதா குது தானே. கலியான வீட்டுக்கு ஐயா வரமாட்டன் எண்டு சத்தம் போட்டார். அவருக்கும் சின்னத்தம்பி யாருக்கும் சரிவராதுதானே. முந்திச் சண்டை பிடிச்சது

Page 57
102
ஞாபகம் இருக்கும். நானும் பெட்டையஞமாக சேர்ந்து ஒருமாதிரிச் சமாளிச்சுக் கூட்டிக் கொண்டு போனனாங் கள். கலியான வீட்டண்டு ஐயா வந்தார். பிறது நாலாஞ் சடங்குக்கு வரமாட்டன் எண் டு நிண்டிட்டார், ஐயா. சொல்லுறதும் சில வேளை சரிதான். சின்னத் தம்பி மாமா வீட்டுக்காரருக்கு சாடையான புளிப்புக் குணம் இருக்கு. முந்தி எண்டால் சின்னத்தம்பி மாமா பெண்சாதி அடிக்கடி வந்து பெட்டை கலியாணம் முடிக்காமல் இருக்கு எண்டு சொல்லிக் கவலைப்படும். இந்தக் கலியாணம் முற்றாகி நாள்வைக்கும்வரை எங்களுக்கு ஒரு சொல் சொல்லேல்லை. அது சரி கலியா ணத்துக்கு உனக்கு அறிவிச்சவையோ’’
' *=  ఆతా
அந்தச் சந்தியில் இருந்து புறப்பட்டால் கொஞ்சத் தூரம் வரை இரண்டு பக்கமும் கடைகள், மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் வருடாந்த தீவைத்தல் சம்பவங் களால் சில கடைகள் எரிந்து வெறும் மொட்டையான சுவர்களுடன் தான் இருக்கின்றன.
அக்கடைகளில் பெரும்பகுதி எரிந்தாலும் வல்லமை யுள்ளவர்கள் திருத்தி வியாபாரத்தைத் தொடங்கி விட்டார்கள். ஏனையவர்கள் அப்படியே விட்டு விட்டார் 495 Go .
இவ்வாறான எல்லாக்கடைகளையும் தாண்டி வந்தால் வீடுகளின் அணிவகுப்புகள் தொடங்கும். பெரும் பான்மை கல்வீடுகள் சிறுபான்மை ஏனைய வீடுகள் அவற் றுக்குச் சிறுபான்மைக்கே உரிய அடிப்படைப் பிரச்சினை கள்
பெரும்பான்மை வீடுகளில் ஒன்றுதான் கணபதிப் பிள்ளையரின் வீடும். றோட்டால் போகும்போது முளிப் பாகத் தெரியும்.

103
வீடு இருக்கும் வளவின் மூன்று பக்கமும் மதில். வளவின் பின்பக்கம்தான் மதில் இல்லை. முட்கிழுவை வேலிதான்
அந்த வேலி மறைந்து மதில் வராமைக்குக் காரணங் கள் பல. வேலிக்குப் பின்னால் வசதியுள்ளவர்கள் வசிக் காமையும் வேலி அவர்களுக்கு உரிமையாக இருப்பதும் தான். கணபதிப்பிள்ளையர் "நான் மதில் கட்டுகின் றேன்" என்று கேட்டும் பின் வளவுக்காரர் கந்தையர் தனது உரிமையினை விட்டுக் கொடுக்கவில்லை. இனப் பிரச்சினை அரசியல் தீர்வுக்கு எவ்வளவு காரணங்கள் தடையாக உள்ளனவோ அதேபோலதான் இதுவும்.
ഭട്ട് ഭട്ട് ഭട്ടത്ത
"இஞ்சை எல்லா இடமும் சொல்லித்தான் செய்தவை. மாப்பிள்ளை குவைத்தில் வேலை செய்யிறாராம். முந்திச் சந்தையுக்க வியாபாரம் செய்த ஆளாம்.
இந்தமுறை கோயில் திருவிழா வடிவாய்ச் செய்தனாங் கள். வழக்கத்தைவிட மேளங்களும் கூட இப்ப கீொஞ்சம் பிரச்சினை இல்லைத்தானே. ரவுணுக்குக் கிட்ட எண்டால் தான் “செல்” வந்து விழும் எண்டு பயம். அவன்கள் வெளிக்கிட்டு வாறதெண்டாலும் இவ்வளவு தூரம் வருவங்களே. அதால இஞ்சை இப்போதைக்குப் பிரச் சினை இல்லை. மேலால வந்து ஏதும் செய்தால்தான் பிரச் சினை. அதால திருவிழாவுக்கு வழக்கத்தைவிட நல்ல சனம், கண்டதுகள் நிண்டதுகள் எல்லாம் வெளிநாடு வெளிநாடு எண்டுபோய். ஒரு காலமும் வெளிக்கிடாத பெண்டுகள் கூட உடுத்துப் படுத்துக் கொண்டு வெளிக் கிட்டு விட்டினம்"
ഭ്ട് ബ്ള്യൂ. ഭട്
கணபதிப்பிள்ளையர் அந்தக் காலத்தில் செல்வாக் கோடு இருந்த அரசாங்க அதிகாரி. சம்பளத்தைவி

Page 58
104
சம்திங் அதிகமாகக் கிடைத்தது. வன்னியிலும் கிளி நொச்சியிலும் வயற்காணிகள் வேறு ஏக்கர்களாகச் சேர்த்துக் கொண்டவர்.
அத்தனை வசதிகள் இருந்தபடியால் பிள்ளைகளுக்கு லட்சங்களாகச் செலவழிக்கக் கூடியதாக இருந்தது, காசின் பெறுமதியைக் கஸ்டப்பட்டு உழைத்து தெரிந்து கொண்டதால் ஏனையவர்களுக்கு சிறிதும் உதவி செய்யாமலே சேமிக்க முடிந்தது.
சொந்த மண்ணில் படிக்க முடியாத மகன்கள் வெளி தாட்டுக்குப் படிக்கப் போனதும், பெண்களில் இரண்டு பேர் கலியாணம் முடித்து, வெளிநாட்டுக் கணவர்களுடன் பிளேன் ஏறியதும் குறிப்பிடக் கூடிய விடயங்கள்.
வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுக்கு கலியாணப் பேச்சு நடந்து கொண்டிருக்கின்றது. பத்தாயிரம், பதினையாயிரம் கொமிஷன் வாங்கும் கலியானப் புறோக்கர்கள் நித்தமும் வந்து போய்க் கொண்டு இருக் கின்றார்கள்.
கணபதிப்பிள்ளையரின் கடைசி மகன் வீட்டிலேதான் இருந்தான். மூன்று வருடங்களுக்கு முன்னர் வரை.
"சீ நைன்ரி" மோட்டார் சைக்கிளில் சந்தோஷமாக திரிந்து கொண்டிருந்தவன் போக்கில் நாளடைவில் மாற் றங்கள் ஏற்படலாயிற்று. நேரம் கெட்ட நேரங்களில் வீட்டுக்கு வரலானான்.
சில இரவுகள் வீட்டுக்கே வருவதில்லை. அவனைத் தேடி ஒளி பொருந்திய விழிகளை உடைய சில இளைஞர் கள் வந்தார்கள். இளைஞர் சக்தி வேகம் பெற்றுக் கொண் டிருந்த நேரமது. .
கணபதிப்பிள்ளையரின் துணைவியார் தங்கம்மா கடைசி மகனின் போக்கினைத் துல்லியமாகக் கண்டு

105
கொண்டாள். சில நாட்கள் கணவனும் மனைவியும் இரக சியமாகக் கதைத்தார்கள். லண்டனிலுள்ள மகன்களுடன் போனிலும் கதைத்தார்கள்.
1zs - 1zse 1ze
"பெட்டையள் திருவிழாவை ரீ.வியில எடுக்க வேணும் எண்டு நிண்டு கொண்டாளவை. அதால திருவிழா முழுக்க ரீ. வி. எடுத்தது. ரீ. வி. எடுக்கத் தொடங்கின பிறகு தான் எங்கடை சில பெண்டுகள் (பாக்கியம், பாக்கியத் தின்ரை பெட்டையள் சாரதா, சண்முகா இவையுந் தான்) எல்லாம் சீலையளைச் சரி பணணிக் கொண்டு முன்னுக்கு முன்னுக்கு வரத் தொடங்கியிட்டினம். எங்கடை பெட்டையள் அதுகளைக் காட்டி காட்டித்தான் ஒரே சிரிப்பு.
நாங்கள் திருவிழாவுக்கு ரீ. வி. எடுத்த பிறகுதான் வழக்கமாகக் கடைசித் திருவிழா செய்யிற மகேசன் வீட்டுக்காரரும் ரீவியும் எடுத்துத் திருவிழாவையும் பெரி சாய்ச் செய்யப் பாத்தவை. ஆனால் அது எங்கடை மாதிரி வருமே. மற்றது எங்கடை கமலாவுக்கும் இரண்டு மூன்று சம்பந்தங்கள் வந்தது. புறோக்கர்மார் ஒரே கரைச்சல். ஏதோ கொளுத்த சீதனம் அள்ளலாம் எண்டு நினைக்கினமோ தெரியாது."
*ZS-42-177
விளைவு
இரண்டொரு மாதங்களுக்குள் கடைசி மகன் மனம் மாற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கடைசியில் எல்லா மகன்களும் லண்டனில என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள வாய்ப்பாயிற்று.
இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட கணபதிப் பிள்ளையர் இந்த அதிகாலைப் பொழுதில் றோட்டுக்
வெ-7

Page 59
106
கரை மதிலுக்கு முன்னால் நின்று மதிலில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டரைப் பார்த்துச் சத்தம் போட்டார். அவரைப்போல கம்பளியால் போர்த்துக் கொண் டிருந்த மனைவி தங்கம்மாவும் வெளியே வந்தார். “என்னப்பா.ஏன் சத்தம் போடுறியள்"
"இஞ்சை வாரும்.இதைப் பாரும். உந்த அறுவான் களுக்கு வேலையில்லையே.சந்தியில பள்ளிக்கூட மதில் இருக்கு வேற எத்தினை மதில்கள் இருக்கு. உவன்களுக்கு எங்கடை மதில்தான் கண்ணுக்க குத்துதோ” என்று கணபதிப்பிள்ளையர் சொல்ல.
தங்கம்மா மதிலைப் பார்த்தார். கணவரை மிஞ்சிய ஆத்திரம் பீறிட்டுக் கொணடு வந்தது.
“இன்றைக்கு ஒருபோஸ்டர் நாளைக்கு எத்தினையோ கடைசியாக பள்ளிக்கூடச் சுவர் மாதிரி வந்திடுமோ?" என நினைத்தார்.
"உது ஆரோ வம்புக்குச் செய்திருக்கிறாங்கள். எல்லா வீட்டு மதிலும் இருக்க எங்கடை மதில்ல ஒட்ட வேணுமே”
"இனிமேல் பாப்பம். எவன் வந்து என்ரை மதில்ல ஒட்டுறான் எண்டு”
தங்கம்மா அங்கும் இங்கும் பார்த்தாள். தெருவில் ஆட்கள் இல்லை.
"எவன் வந்து ஒட்டினானோ? இரவில சத்தம் கேட் டால் எழும்பிப்பார்க்கத் தெரியாது. இனி நெடுக எங்கடை மதிலிலதான் ஒட்டுவான்கள்" என்றார்.
"வீண் கதையை விட்டுப் போட்டு நீர் போய் அவள் பெட்டையை ஒரு வாளி தண்ணி கொண்டு வரச்

107
சொல்லும். அவள் என்ன இன்னும் எழும்பேல்லையோ" என்றார் கணபதிப்பிள்ளை.
தங்கம்மா உள்ளே போனார்.
ഭട് 17>
“சில ஆட்கள் எங்கடை வீட்டுச் சம்பந்தத்தை விரும் பிக் கேட்கினமாம். நல்ல குடும்பம், நல்ல பரம்பரை, பிள்ளையன் எல்லாம் நல்லாய் இருக்கு எண்டு கதைக் கினம் என புறோக்கர் வந்து சொல்லும், நாங்கள் இன்னும் ஒண்டும் முடிவாய் இல்லை. நல்ல மாப்பிள்ளை யாய் வந்தால் பார்க்கலாம்தான். அவள் இவ்வளவு கால மும் நல்ல சொகுசாய் எங்களோடை இருந்தவள். இனிப் போற இடத்தில கஷ்டப்பட வைக்கிறதே."
“முந்தி உங்கை பார்த்தது என்ன மாதிரி? உங்கை எண்டால் நல்லதுதானே. அல்லது இஞ்சை நாங்களே பார்த்து முடிவு செய்யிறதோ.இஞ்சினியர், டொக்டர் என்றால் இரண்டு லட்சம் இனாமாய்க் கொடுக்க வேணும். இரண்டு லட்சம் இனாம் எண்டால் சீதனம் எங்கை போய் முடியும் . கதையோடு கதையாய் பொன்னுத்துரை மாஸ்டரின்ரை பெடியனுக்கும் கலியாணம் எல்லாம் முற்றாய் இருந்து கடைசியில சீதனப் பிரச்சினையால குழம்பிப் போச்சுது"
বপুৰ্জ্জন- “প্রকেল্প কাম্পশু
வீட்டுக்குள்ளே போன தங்கம்மாவுக்கு யோசனை அதிதீவிரமாக இருந்தது, “உது யாரோ வேணும் எண்டு தான் செய்திருக்கினம். நிதி திரட்ட ஆட்கள் வரேக்க உந்த வீட்டில கணக்க வேண்டலாம், பிள்ளையன் எல்லாம் லண்டனில, அவரும் பென்சனியர் எண்டு அக்கம் பக்கத்தில உள்ள ஆட்கள் சொல்லி அனுப்புவது போல மதிலின்ரை வடிவைப் பார்த்து ஆத்திரப்பட்டு சொல்லி யிருப்பினம்." எனத் தங்கம்மாவின் சிந்தனை விரிந்து

Page 60
108
கொண்டு போனது. அந்தச் சிந்தனை காரணமாக உண்டான கோபத்துடன் போய் வேலைக்காரச் சிறுமியை அடித்து எழுப்பி வாளித் தண்ணியைக்
கொண்டு போகச் செய்துவிட்டு மறுபடியும் யோசிக்கத் தொடங்கினாள்.
போன கிழமையும் பின்வளவுக்காரரான கந்தையா வுடன் சின்னப் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.
முட்கிழுவை வேலிக்கு அப்பால் தெரியும் கந்தைய ரின் அந்தப் பதிந்த ஒலை வீட்டைப் பார்க்கத் தங்கம்மா வுக்கு ஏனோ தெரியவில்லை சங்கடம் ஏற்படுவது உண்டு.
தங்கம்மாவின் தாயாரின் காலத்தில் கணபதிப் பிள்ளையரின் மாளிகை உள்ள தற்போதைய வளவில் ஒலை வீடுதான் இருந்தது. தங்கம்மாவின் தகப்பன் ஒரு நல்ல தோட்டக்காரன்.
அந்தக் காலத்தில் கந்தையரின் மனைவி பகவதியின் தாய் வீட்டுக்காரருக்கும் தங்கம்மா வீட்டுக்காரருக்கும் நல்ல நெருக்கம் இருந்தது, காரணம் ஒரே மாதிரியான தரத்தில் காணப்பட்டமையே.
அதனால் அன்பாக இருந்தார்கள். ஒரு வீட்டில் அப்பம் சுட்டால் மறுவீட்டில் சாப்பிடுவார்கள். நல்ல நாள் பெருநாளுக்கு ஒன்றாகச் சேர்ந்து வெளியே போய் வருவார்கள்.
இதெல்லாம் என்ன மாதிரி மாறிப் போனது. திடீர் என தங்கம்மா குடும்பம் முன்னுக்கு வந்ததும் வல்லமை யும் வசதியும் உள்ள கணபதிப்பிள்ளையர் மருமகனான தும் அணுகுண்டு விழுந்த பின்னர் ஜப்பான் நாடு வளர்ந்த மாதிரி விரைவான வளர்ச்சியானது.
அதன் பின்னர் இரண்டு குடும்பங்களும் சிறுபான்மை பெரும்பான்மை இனங்களாகி விட்டன. பகவதியைக் காணவே தங்கம்மாவுக்குப் பிடிப்பதில்லை. அதைவிட

109
அவர்களின் ஏழ்மையினை-அந்த முட்கிழுவை வேலி யினை - இப்படிப் பல விடயங்களை.
47SP 47SP 47N
“இப்போதைக்கு இஞ்சை வாறதைப்பற்றி யோசிச்க
வேண்டாம்.கொழும்புக்கு வந்தாலும் இஞ்சாலை வாறது பிரச்சினை, கொண்டு வாற சாமான்களையும் ஒழுங்காகக் கொண்டு வந்து சேர்க்கேலாது. வந்து போற செலவும் வீண்தானே. கமலாவின் இருபத்தி மூண்டாவது பேர்த்டேக்கு எடுத்த ரீ. வி. கசெட் அனுப்பி யிருந்தம். எப்படி இருந்தது? கமலா வுக்கு அவ்வளவு திருப்தியில்லை. அவளின் ரைபிரண்ட்ஸ் ஒருத்தரும் ரீ. வியில இல்லை. அவையள் எல்லாம் பிந்தித்தான் வந்தவை. அதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்? கலியாண வீட்டுக்குத் தனிய உன்ரை பிரண்ட்சை மாத் திரம் ரீ. வியில எடுக்கிறதுக்கு ஒரு கமராக்காரனை ஒழுங்கு செய்வம் எண்டு சொல்லிச் சிரிச்சம்”
 
"எத்தனை தடவை மதில் கட்டக் கேட்டாயிற்று, தங்களாலும் மதில்கட்ட ஏலாது. கடைசி கட்டுறவை யைத் தன்னும் விடேலாது. அதுகளுக்கு நாங்கள் உடுக் கிறதையும் படுக்கிறதையும் வேலிக்கிளாலைப் பார்க்க ஆசை போல” என்று யோசித்த வண்ணம் விறாந்தைக் கதிரையில் த்ங்கம்மா அமர்ந்து கொண்டார்.
வெளியே கணபதிப்பிள்ளையர் சத்தம் போட்டுக் கொண்டு வேலைக்காரச் சிறுமியைக் கொண்டு மதிலில் ஒட்டப்பட்ட போஸ்டரைத் கிழிக்கும் ஆரவாரம் கேட்டது.
“அவைக்கு நல்ல சாட்டு ஆடு மாடு வளர்க்க குழைக்கு வேலி வேணுமாம். வேலியை அழிச்சு மதில் கட் டினால் குழைக்கம் எங்கை போறது எண்டு கேட்கினம். குழைஇல்லாட்டி ஆடு மாடு வளர்க்கேலாது. கண்டறியாத

Page 61
110
ஆட்டு வளர்ப்பும் மாட்டு வளர்ப்பும். அவையின்ரை வேலியால எங்கடை வளவுக்கைதான் கஞ்சலும் குப்பை யும். நெடுகக் குப்பையுக்க சீவிக்கிற அதுகளுக்கு எங்கடை கஷ்டம் தெரியுமே" என்று தங்கம்மாவின் யோசனை வளர்ந்து கொண்டு போனது.
“கந்தையர் வீட்டுக்காரர்தான் மதிலில போஸ்ட்டர் ஒட்டக் காரணமாக இருக்க வேணும் எனவும் தங்கம்மா வுக்கு திடீர் ஞானோதயம் உண்டானது.
“ஒருநேரக் கஞ்சி குடிக்க வழியில்லாததுகளுக்கு எங்களோடை போட்டி. என்ன செய்யிறது? காலம் கெட்டுப்போய் இருக்கு. முந்தின மாதிரி எல்லாம் இருந் தால் இப்ப எத்தினை விளையாட்டுக் காட்டலாம்” எனவும் நினைத்தார்.
முன்பு கணபதிப்பிள்ளையருக்கு எவ்வளவு செல் வாக்கு. பொலிஸ், ஏ. ஜீ. ஏ. என்று யாரையும் கைக்குள் போட்டுக் கொண்டு நினைச்சதைச் செய்யலாம் “அந்தக் காலம் எண்டால் கந்தையர் வீட்டுக்காரருக்குப் பாடம் படிப்பிக்கலாம். இப்ப, அதுவும் இந்த இரண்டு மூன்று வருஷங்களாய் எல்லாத்துக்கும் இவன்கள்தான்."
தங்கம்மா ஆத்திரத்துடன் பொருமினாள். "அறு வான்கள்-அறுவான்களாலதான் எல்லாம். எதை ஒழுங் காய் வைச்சிருக்கிறாங்கள். எங்கடை நிம்மதி, எங்கடை செல்வாக்கு வாய்ப்புக்கள் எல்லாத்தையும் கெடுத்தாங் களே.இப்ப மதில்லையும் போஸ்ட்டர்” “என்னப்பா செய்யிறீர்” கணபதிப்பிள்ளையர் வெளியே நின்று கூப்பிடுவது கேட்டது.
சிந்தனையைக் குழப்பிக் கொண்ட தங்கம்மா எழுந்து வெளியே போனார்.
1ZP 1ZP 17sp
"இஞ்சை பெரிய கரைச்சல். எந்த நேரமும் தொந் தரவுதான். வீட்டுக் கேற்றைத் திறந்து விடேலாது.

111
அதை வேண்டுங்கோ.இதை வேண்டுங்கோ எண்டு எந்த நேரமும் பெடியள் வருவினம். என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இந்த உபத்திரவத்தைக் குறைக் கிறதுக்கு அனேகமாக வெளிக்கேற்றைப் பூட்டியே வைக் கிறம். அது மாத்திரமே மாதத்துக்கு எத்தினை தரம் காசுக்கு வருகினம். காலம் எவ்வளவு கெட்டுப் போச் செண்டு தெரியுமே. கண்டதுகள் எல்லாம் கேற்றைத் திறந்து கொண்டு வளவுக்கு வாறதோடை வீட்டுக்கையும் வரப் பாக்குதுகள். உதுகளின் உந்தக் கூத்துக்கள் எல்லாம் எப்ப முடியப்போகுது."
<74 P
வெளியே மதிலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்க மதிலில் இருந்த எச்சங்களை வேலைக்காரச் சிறுமி தண்ணிரால் கழுவிக் கொண்டிருந்தாள். -
“உதப்பா கந்தையர் வீட்டுக்காரரின் ரை வேலையாய் இருக்கும். இவ்வளவு காலமும் இல்லாத ஒரு அலுவல் இப்ப நடந்திருக்கு எண்டால் யாரோ சொல்லித்தான் செய்விச்சிருக்கினம். என்ன தங்கம்மா”
“ஓமோம். அப்பிடித்தான் இருக்க வேணும். அவை யின்ரை சேட்டைக்கு ஆக நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது" என்றார் கணபதிப்பிள்ளையர்.
“கொட்டில் வீட்டுக்க இருந்து கொண்டு அதுகளுக்கு பெரிய எண்ணம். ஏன் மதில் கட்ட வேண்டாம் எண்டு மறிக்கினம் தெரியுமே”
"ar60T sto"
"மதில் கட்டினால் காணி பிடிக்கேலாது. இது வேலி எண்டால் ஒவ்வொரு கதியாலாகத் தள்ளிக் காணி பிடிக் கலாம்தானே"

Page 62
112
"ம்.என்ன செய்யிறது.முந்தின மாதிரிக் காலம் எண்டால் இவையஞக்குப் பாடம் படிப்பிக்கலாம். இவன் கள் தேவையில்லாமல் பிரச்சினையைத் தொடக்கிச் சும்மா சனங்களைக் கஷ்டப்படுத்திறதுதான் மிச்சம். இவன்களின்டை ஆட்டம் எங்கை போய் முடியப் போகுதோ? ஏன் இந்த வில்லங்கம். தாறதை வேண்டிக் கொண்டு ஒமெண்டு சொல்லுறதுக்கு என்ன” என்று சொல்லிக் கொண்டு போன கணபதிப்பிள்ளையர் தங்கம்மாவின் தலையீட்டால் பேச்சை நிறுத்தினார்.
“உதுகளைக் கதைச்சு என்ன பிரயோசனம். கொஞ்ச நேரம் ஆறுதலாய் இருந்து ரீ. வி. பார்க்கத்தான் நிம்மதியோ? வெளிக்கிட்டு வெளியில போகத்தான் முடியுதே.அவன் பெரியவன் அனுப்பின இரண்டு சாறிக்கு ப்ளவ்ஸ் துணி எடுக்க ரவுண் பக்கம் போக முடியாமல் எங்கடை கடைசி, இரண்டு மூண்டு நாளாய் புறுபுறுத்துக்க்ொண்டு இருக்கிறாள். கஸ்டப்படுகிற சனங்கள் எப்படியும் சீவிக்கலாம். நாங்களும் அப்படிச் சீவிக்கலாமே”
42- 12S <2S
“இஞ்சையே இப்படிப் பிரச்சினை எண்டால் உங்கை எப்பிடியிருக்கும். உங்கைதான் கனக்கக் காசு சேர்க் கிறவை எண்டு கேள்வி. போராட்டம் அது இது எண்டு கண்டபடி காசு கேட்டு வருவங்கள். உதுகளில ஒண்டும் சேராமல். உதுகளுக்கு ஒரு சதமும் கொடுக்காமல் இருக்க பார்க்க வேணும். ஒருக்காக் குடுத்துக் காட்டினால் நெடுக வருவான்கள். பிறகு கரைச்சலாய்ப் போகும். முந்திக் குடுத்திருந்தாலும் இனிமேல் குடுக்க வேண்டாம். எப்ப உவை பிரச்சினை தீர்க்கப் போயினம். எவ்வளவு காலத் துக்கு எங்களைப் போல ஆக்கள் காசு குடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆர் எக்கேடு எண்டாலும் கெட்டுப் போகட் டுமன். எங்களுக்கு என்ன.”
17SP 7S (SP

113
“சரி சரி..பாப்பம்.என்ன நடக்குதெண்டு. கந்தையர் வீட்டுக்காரர் காணி பிடிக்கிற கெட்டித்தனத்தைப் பாப்பம்." என்றார் கணபதிப்பிள்ளையர்.
வேலைக்காரச் சிறுமி கோப்பி டம்ளர்களோடு வந்தாள். கணபதிப்பிள்ளையரும் தங்கம்மாவும் கோப்பி குடிக்கத் தொடங்கினார்கள்.
“இவளுக்கு எத்தினை தரம் சொல்லியாச்சு. கோப்பித்
தூளை அள்ளிக் கொட்டாதை எண்டு.” என்று புறுபுறுத் தார் தங்கம்மா.
பொழுது நன்றாகப் புலர்ந்து தெருவில் சனநடமாட டம் அதிகமாக இருந்தது. சனங்கள் இல்லாத மினி பஸ்கள் மிக மெதுவாகச் செல்ல.சனங்கள் நிரம்பி வழியும் மினி பஸ்கள் றோட்டில் பறப்பது போல இருந்தன.
வேலைக்காரச் சிறுமி திரும்ப ஓடி வந்தாள். “அம்மா. அம்மா." என்றாள் பதட்டத்துடன், “என்னடி பிரச்சினை.ஏன் ஓடி வாறாய்" "அம்மா.வேலியில..." என்று ஓடி வந்ததால் ஏற்பட்ட பதட்டத்துடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சொல்ல முற்பட்டதை முழுமையாகச் சொல்லி முடிக்கா மல் கஷ்- ப்பட்டாள்.
வேலி என்றதும்தாமதம், தங்கம்மா இருந்த இடத்தை விட்டு பரபரப்புடன் எழுந்தார்.
“வேலியில என்னடி" என்ற கேள்வியில் உஷ்ணம் இருந்தது.
“வேலிக்குப் பின்வளவுக்காரர் கதியால் போடினம்" என்றாள் சிறுமி.
"என்ன.கதியால் போடுகினமோ.ஐயோ ஏனப்பா பேசாமல் இருக்கிறியள்.எழும்புங்கோ." என்று சத்தம்

Page 63
114
போட்டுக்கொண்டு தங்கம்மா விரைந்துசெல்ல, கணபதிப் பிள்ளையர் கோப்பி டம்ளரை வைத்து விட்டுப் பின்னே போனார்.
வளவின் பின் வேலிக்கரையை அவர்கள் அடைந்த போது வேலிக்கு மறுபக்கத்தில் உள்ள கந்தையர் குடும்பத் தினர் நிற்பது தெரிந்தது.
அலவாங்குடன் நின்ற கந்தையர் வேலியின் சில இடங் களில் குழி பறித்துக் கொண்டு இருக்க பகவதி துணை யாக இருந்தாள்.
"என்ன செய்யிறியள்" எனத் தங்கம்மாதான் கேட் டார்.
கந்தையர் நிமிர்ந்து பார்த்தார். முகத்தில் எந்த விதமான கலவரமும் இல்லை. உழைத்து உரமேறிய உடம்பு பதட்டப்படவில்லை.
“வேலியில கதியால் கொஞ்சம் பட்டுப்போய் இருக்கு. அதுதான் புதுக்கதியால் போடுறம்” என்றார் நிதானமாக.
“என்ன புதுக்கதியால் போடுறிரோ.ஆரைப் பேக் காட்டுற கதை கதைக்கிறீர்.” என்றார் தங்கம்மா.
கந்தையர் தம்பணி தொடர்ந்தார்.
“உம்மைத்தான் கந்தையர் கதியால் பேர்டுற வேலையை நிற்பாட்டும்" என்று சொல்லி முன்னே நின்றார் கணபதிப்பிள்ளையர்.
"கதியால் போடுறம், கதியால் போடுறம் என்று சொல்லிச் சொல்லிக் காணி பிடிக்கிறியளோ..இனி ஒரு அங்குலம் தன்னும் வேலி அசையவிட மாட்டம்” என்று சொன்ன தங்கம்மா ஒடி ஒடி வேலியை அங்கும் இங்கும் பார்த்தார்.

115
பிறகு
"ஐயோ.இஞ்சை வந்து பாருங்கோ.எவ்வளவு அநியாயம். என்ன மாதிரி இருந்த வேலி என்ன மாதிரி இருக்கு, வளைஞ்சு வளைஞ்சு எங்கடை காணியுக்கை எவ்வளவு தூரம் வந்திட்டுது. காணி பிடிக்கிற ஆசை யில மதிலையும் கட்ட விடாமல் தடைப்படுத்திக் கொண்டு. ஐயோ.அம்மாளே இந்த அநியாயத்தைக் கேட்க ஆட்கள் இல்லையோ.." என்று தலையில் அடித்து கொண்டு குழறத் தொடங்கினார்.
12S- 1-2-1-YN
“இன்னுமொரு விசியம். பின்பக்க மதில் இன்னும் கட்டேல்லை எண்டு தெரியும்தானே. கந்தையர் வீட்டுக் காரரால பெரிய உபத்திரவம். அவை மதில் கட்டாமல் மறிச்சுக் கொண்டு.கதியால் போடுறம் எண்டு சொல்லி கொண்டு கதியால்களை எங்கடை காணிக்கைத் தள்ளிப் போடினம். வேலியும் நேராய் இல்லை. பிள்ளையார் கோயிலுக்குப் போற குச்சு ஒழுங்கை மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு இருக்கு. நாங்கள் இவ்வளவு நாளும் பொறுமை யாய் இருந்தனாங்கள். இனியும் இருக்கேலாதுதானே. பான கிழமை கந்தையர் கதியால் போடேக்க நாங்கள் போய் மறிச்சுப் போட்டம், இப்ப பிரச்சினை சமா" தான சபையிடம் போட்டுது. வழக்குக்கும் போகுமோ தெரியாது. ஆனால் எவ்வளவுதான் எத்தனை ஆயிரமாக இருந்தாலும் வழக்குக்குச் செலவழிச்சாலும் கந்தையருக் கும் பாடம் படிப்பிக்காமல் விடமாட்டம், நாங்கள் ஆர் எண்டு அவருக்குத் தெரிய வேணும்"
வீரகேசரி 28-12-1986

Page 64
S
6f 6)L IDBIDGG)
வானத்தில் சிறு குருவிகள் வட்டம் போட்டன். வெண்பஞ்சு மேகங்கள் மிதந்தன. நிர்மலமான அந்த அழகினை அனுபவிக்கும் மனோநிலை காரில் இருந்த யாருக்கும் இல்லை.
கீார் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. சற்குணம், அவன் மனைவி, பிள்ளைகள் மெளனமாக ..விழிகளால் வீதியையும், சனங்களையும் துழாவியபடி
இருந்தார்கள்.
எவ்வளவு காலத்திற்குப் பிறகு சொந்த வீட்டைப் பார்க்கப்போக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என சற்குணம் யோசித்தான். திடும் என ஏற்பட்ட மாற்றங்கள் அவற்றின் விளைவுகள் எல்லாம் நினைவில் வந்தன.
அம்மன் கோயிலடியை, கோயிலின் முன்னால் இருந்த, ஆரவாரம் நிறைந்த கடைகளை கார் தாண்டியது" முன்பென்றால் இந்த கோயிலடியைத் தாண்டி கார் போகாது. கார் மாத்திரம் அல்ல எல்லா வாகனங்களுக் கும் முற்றுப்புள்ளி கோயிலடிதான்.
தான் வீட்டைவிட்டு இரவோடு இரவாக ஓடிய பின்னர் நாலைந்து நாட்கழித்து முதல் தடவையாக கோயிலடிக்கு வந்த அன்றைய தினத்தினை சற்குணம் நினைத்தான்.

117
அன்று கோயிலடியும் சுற்றியுள்ள பகுதியும் என்ன மாதிரி இருந்தன என்பதும், அன்று நடைபெற்றவையும் அவன் நினைவுக்கு வந்தன.
நீண்ட அந்தத் தெருவில் அம்மன் கோயிலடிக்கு அப்பால் சனப் புழக்கமே இல்லை. கோயிலடிக்கு அப்பால் சர்வ முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிய சந்தி இப்போது கோயிலடிக்கு நகர்ந்து வந்து விட்டது.
சந்தோஷக்கனவுகளால் மலர்ந்திருக்கும் சின்னஞ் சிறுசுகளும், புத்தகச் சுமைகளுடன் அணிவகுத்துப் போகும் தாவணிப் பெண்களும் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக் கட்டிடங்கள் கல்லாய், மண்ணாய், குவியலாய் பரவிப் போய் இருந்தன.
கருகிப்போன தளபாடங்கள், உருக்குலைந்த பொருட்கள் களவு போகக் கூடியன போய் மிகுதியாய் உள்ளவை மண்ணுக்கு உரமாகிக் கொண்டிருந்தன.
சந்தியில் பரந்திருந்த கடைகள் ஏனைய வியாபாரத் தலங்கள் எல்லாம் வெடித்துச் சிதறி திசைக் கொன்றாகப் போய்விட்டன.
பெண்களால் நிறையும் புடவைக் கடைகளும், றாம் றாமாக சாராயம் விற்கும் ரொடடிக் கடைகள், காதை செவிடாக்கும் ரெக்கோடிங் பார்கள், வீடியோ நிலையங் கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் மழைக்கு ஒதுங் கும் மனிதர்கள் போல எங்கெல்லாமோ ஒதுங்கி விட்டன
பெரும்பாலானவை கோயிலடிக்கு வந்து விட்டன. கோயிலடியில் தட்டிக் கடைகளாக இருந்தவை எல்லாவற் றுக்கும் சர்வதேச முக்கியத்துவம் வந்து விட்டவை போல திடீர் என பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்று விட்டன.
கோயிலிலும் அகதிகள் வந்து சேர்ந்து விட்டார்கள். முன் மண்டபத்தில் கும்பலாக அவர்கள் இருந்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

Page 65
118
கோயிலுக்கு முன்னால் கட்டப்பட்டிருந்த பெரிய கூரை போட்ட பஸ்நிலையம் இதுவரை காலமும் அடை யாத பலனை இப்போதுதான் அடைந்துள்ளது. வெற்றுடம்புகளுடன் ஆண்கள் பலர் அங்கு படுத்திருப் ιμπή 5ών .
அடிக்கடி வரும் மினி பஸ்களும். எப்போதாவது சட சடத்து வரும் சி.ரி.பீ. பஸ்களும் கோயிலடிக்கு அப்பால் மரத்தடியை இறுதித் தரிப்பிடமாகக் கொண்டன, வீதிக் கரையில் பஸ்களின் ட்றைவர்கள் இருந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார்கள்.
கோயிலடிக்கு சிறிது தூரம் அப்பால் வெளி. அதற்கு அப்பால் தான் வீடுகள். இப்போது அந்த வெளிக்கு. அப்பால் ஆட்களின் நடமாட்டமே இல்லை.
கோயிலடியில் நின்று பார்த்தால் திடீர் என சூனிய மான பிரதேசமாகிப் போய் விட்டதைப் போல வெறுமை.
எல்லா ஆரவாரங்களும் அமளிகளும் உயிர்த்துடிப்பு களும் கோயிலடியுடன் பட்டென்று நின்று விட்டன. ஏதோ ஒரு வகையில் முடமானது போல.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத அந்தத் திசையிலி லிருந்து இரண்டொரு வயதானவர்கள் மாத்திரம் சைக் கிள்களிலும், தோள்களிலும் சுமைகளுடன் வந்து கொண்டிருந்தனர். கொண்டுவந்த பொருட்கள் ஒன்றும் பெறுமதியானவை அல்ல. ஆனாலும் அவர்கள் அவற்றி னைச் சுமந்து கொண்டு வந்தனர்.
சற்குணம் அவர்களை விநோதமாகப் பார்த்தான். பொருட்களுடன் வந்து அவர்கள் மரநிழலில் நின்று களைப்பாறத் தொடங்க சற்குணம் அவர்கள்ைக் கூப் பிட்டான்.
‘என்ன மாதிரி இருக்கு அங்கால?"

119
“என்னத்தைச் சொல்லுறது?" என்றார் அவர்களில் ஒருவர்.
"கனதூரம் போகலாமோ?” என்று கேட்டான் சற் குணம்.
“எங்கை போறது? சரியான கஷ்டம், நாங்கள் எவ்வ ளவோ கஷ்டப்பட்டு குனிஞ்சு, உருண்டு, தவண்டு, பிரண்டு போட்டு வாறம்"
“வேறை ஆட்களும் வந்தவையோ?"
"எங்களைப்போல சில ஆட்கள்தான் வந்தவை. அவையும் கஷ்டப்பட்டுத்தான் வந்தவை"
“வீடுகள் என்ன மாதிரி.?”
"நாங்கள் பார்த்த இடங்களில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் அங்கால கனச்க இடிபடுது போல. வடிவாய் ஒண்டும் தெரியேல்ல. களவுகள்தான் கூட எச்கசக்கமா நடக்குது."
"மெயின் றோட்டுப் பக்கம் பாரதியார் சிலையடி என்ன் மாதிரி எண்டு தெரியுமோ?"
"சாச்சா.மெயின் ரோட்டுப் பக்கம் ஆர் போறது. இது நாங்கள் குச்சு ஒழுங்கைகள் பார்த்தெல்லோ போட்டு வாறம். ' மெயின் ரோட்டில் அவங்கள் பெரிய காம் போட்டிருக்கவேணும். பாரதி சிலைக்கு பக்கத்தில் இருந்து சங்கக் கட்டிடத்தில் அவங்கள் இருக்கவேணும்." என்று அவர்கள் சொல்லும் போதே அடிவயிற்றைக் கலக்கியது.
மெயின் வீதியில் பாரதி சிலைக்கு அண்மையில் சங்கக்கட்டிடத்திலிருந்து ஐந்தாவது வீடு சற்குணத்தி னுடையது. எத்தனையோ லட்சங்களை ஏப்பம்விட்டு
மெயின் வீதியில் முழிப்பாய் சிவந்த அழகி ஒருத்திரத்தத்

Page 66
120
சிவப்பாய் சேலைகட்டி நிப்பது போல அட்டகாசமான எழிலோடு உள்ள வீடு.
மல்லிகைப் பந்தலும், பூந்தோட்டமும், கார் கராஜ் ஜும், காற்றுவாங்க வசதியான மொட்டை மாடியும்.
யோசித்துப் பார்த்த போது சற்குணத்திற்கு தலை விறைத்து என்ன நடந்திருக்கும்? நடக்கக் கூடாத மாதிரி ஏதாவது நடந்து விட்டால்.
"மெயின் ரோட்டுக்கரை வீடுகள் என்ன மாதிரி என்று வடிவாய் தெரியாதுதானே." என மீண்டும் கேட்டான். அப்படி மீண்டும் கேட்பது பொருத்தமில் லாத கேள்வியாய் இருந்தாலும் மனத்தில் ஏதோ நிம்மதி யில்லை. அதனால் கேட்க வேண்டியதாயிற்று.
அவர்கள் சற்குணத்தை ஒரு மாதிரிப்பார்த்தார்கள்.
"அதுதானே தம்பி அப்போதையே சொன்னம். மெயின் றோட்டால் நாங்கள் போகேல்லை. நாங்கள் என்ன? எல் லாருமே போக, ஏலாது. உதில கொஞ்சத்தூரம் போய் நிண்டு பார்த்தால் அந்த வளைவு வரை தான் தெரியும். வளைவுக்குக் கிட்டபோய் நிண்டு பார்த்தால் சந்தி தெரி யும். சந்திக்கு அங்காலதானே அவங்கள் நிற்கிறாங்க ளாம். சந்தி தாண்டிப்போக அரச மரத்தடியில முத லாவது சென்றியாம், மண் மூட்டை எல்லாம் அடுக்கி வைச்சிருக்கு. அண்டைக்கு அந்த றோட்டு வளைவுக்குப் போன ஒரு பொடியன் காயப்பட்டவன் தெரியுமே, அரச மரத்தடிக்கு அங்கால கன தூரம் போக வேணும் பாரதி சிலையடிக்கு. சங்கத்தடியில் காம்ப். பிறகெப்படி மெயின் றோட்டால் போறது!’ என எவ்வளவு முட்டாள் தன மான கேள்வியை சற்குணம் கேட்டுள்ளான் என்பதை உணர்த்தும் பதிலாக அவர்களது பதிலிருந்தது."

121
சற்குணம் மெளனமானான். அவர்கள் தங்கள் சுமை -களுடன் புறப்பட்டார்கள். காரோடு சாய்ந்து நின்ற சறகுணம் சிகரெட் ஒன்றைப் புகைக்கத் தொடங்கி ā了fT@项。
சுருள் சுருளாகப் புகை வெளிப்பட்டது போல சிந்த னையும் சுழன்றது. சோபை இழந்து போய் இருக்கும் அந்தப் பகுதியையும் சனங்கள் நிறைந்திருந்த கோயில டிய்ையும் மாறிமாறிப் பார்த்தான்.
வீடும் வளவும் மனதில் தோன்றியது, மனத்தில் வேதனை உச்சமாகியது. கூடவே எரிச்சலும் பொரும லும் ஏற்புட்டது. பேசாமல் எல்லாவற்றையும் விற்றுக் கொண்டு அவுஸ்திரேலியாவோ கனடாவோ போயிருக் 45 G) s TLD .
எத்தனை சந்தர்ப்பங்கள் வந்தன! நன்றாக நடக்கும் பிசினசை குழப்பிக் கொண்டு போய் பிறகு எப்பிடி இப்பிடி பிசினசை உருவாக்குவது என்று மனம் குழம்பி நாளும் பொழுதும் குழம்பிக் குழம்பிக் கனடா வின் சான் சையும் கை விட்டு இப்போது வீடு, வளவும் எல்லாமே என்ன மாதிரிப் போகப் போகின்றன.
சோதனைகளும் கஷ்டங்களும் வரும் போது மனி தருக்கு எரிச்சலும் நிதாமிைன்மையும் தான் ஏற்படுமா? சற்குணத்திற்கும் அது உண்மை போலத்தான் பட்டது.
கார் கதவைத் திறந்து ட்றைவிங் சீற்றில் ஏறி அமர்ந்து வெறுப்புடன் கதவினை ஓங்கியடித்தான். எதி லுமே மனம் ஓடவில்லை.
அன்றைக்கு கார்க் கதவை ஓங்கியடித்தது இப் போதும் ஞாபகத்தில் இருக்கின்றது. நேற்று நடந்த சம்பவம்போல காரை செலுத்திக் கொண்டு பழையபடி சிந்தனையில் ஆழ்ந்தான் சற்குணம்.
வெ-8

Page 67
22
காரில் மனைவி பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு: இரவோடிரவாக சில அத்தியாவசிய சாமான்களையும் தூக்கிக் கொண்டு புறப்பட்ட அந்த நிகழ்வு உருப்பெற் sigil.
17s. 17s. 17S.
முதல் நாள் தொடக்கம் பிரதான வீதியால் சனங் கள் போய்க்கொண்டிருந்தனர். துயரம் படர்ந்த முகம். கண்ணிர் பாயும் விழிகளுடன் சுமிக்க முடியாத சுமைகளு டன் அவர்கள் சென்ற காட்சியை எல்லோரும் கேற்றடி யில் நின்று பார்த்தார்கள்.
மெர்ட்டை மாடியில் நின்ற மனைவியும் பிள்ளை களும் கூடப்பார்த்தனர். கடைசிப்பிள்ளை *வேடிக்கை யுடன் கை கூட அசைத்தது.
நாலைந்து கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருந்து கூட சனங்கள் வாழ்விடங்களை துறந்து வந்து கொண் டிருந்தார்கள். இரவிரவாகக் கேட்ட காதைப் பிளக்கும் சத்தங்கள் தான் அவர்களை இப்படி சொந்த மண்ணி லேயே அகதியாக்கி உள்ளது தெரியாத விடயமல்ல,
வீட்டில் சற்குணம் நிற்பது பெரும்பாலும் இரவில் தான். தொழில்துறை நடவடிக்கைளில் ஒரு நாளில் பெரும்பொழுது கழிந்து விடும்.
அன்று இரவு - சற்குணம் வீடு திரும்பும்போதே எங்கும் பதற்றம் நிலவிக் கொண்டிருந்தது. குண்டுச்சத் சத்தங்களும் துப்பாக்கிச் சத்தங்களும் தாராளம், இடை யிடையே ஷெல்லடிகள்.
வீட்டில் மனைவி பிள்ளைகள் நிலைகுலைந்து போய் இருந்தார்கள். மருளும் விழிகளுடன் பிள்ளைகள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"அப்பா. எங்கையாவது போவம்" என்றார்கள் அவர்கள்.

123
பிள்ளைகளின் கருத்தை மனைவியும் ஆமோதிப்பது
அவள் விழிப் பார்வைகளில் தெரிந்தது ஆனாலும் சற்குணத்திற்கு மனமில்லை, வீட்டையும், வீட்டுப்
பொருட்க்ளையும் கைவிட்டுப் போவது என்பது சங்கடமாவே இருந்தது.
"பாப்பம், பாத்துச் செய்வம்' என்று மனமில்லா மல் பதில் சொன்னான்.
திடும் என சத்தம. வெடித்துச் சிதறும் அதிர்வுகள் "ஐயோ" என்று மனைவியும் பிள்னளகளும் கூக்குரலிட். டனர். -
அதிர்வுகள் குறைய முன்னர் மற்றைய சத்தம். முன்பைவிட மோசமான சத்தத்துடனும், அதிர்வுகளுட ணும்.
*ஷெல் அடிக்கிறார்கள் கிட்டத்தான் விழுகுது போல், வாங்கோ கெதியாப் போவம், போற போக் கைப் பார்த்தால் எங்கன்ட வீட்டுக்கு மேலேயும் விழும் போலக் கிடக்கு’ என்ற மனைவியின் வேணடுகோள் அவனைச் சித்திரவதை செய்ய பிள்ளைகளின் அழுகுரல் தொடர்ந்தது,
அதைவிட மோசமாக ஷெல்கள். வீதியால் சனங்கள், ஓடினார்கள், அவன் விறைத்துப் போய் நின்றான். மனைவி அவனை விநோதமாகப் பார்த்தாள்.
**என்ன நினைச்சுக் கொண்டு நிக்கிறியள். பிள்ளையஸ் பயந்துசாகுதுகள், கொஞ்சம் தன்னும் யோசினையில்லாமல்.’’ என வார்த்தைகளை முடிக்கா
மல் குமுறி வெடித்தாள்.
சற்குணம் எதுவுமே பேசவில்லை: ஒரே குழப்பமாக இருந்தது. என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றமும் உண்டானது.

Page 68
124
ஆனால் மனைவி தொடர்ந்து அப்பிடியே நிக்க வில்லை. s
பிள்ளைகளை அழைத்துப் போனாள். மிக மிக அத்தியாவசியமான சாமான்களை எடுத்துக் கொண்டு காரினுள் வைத்தாள். பிள்ன்ளகளையும் ஏற்றினாள்.
* வாங்கோ, காரை எடுங்கோ' என அவள் சொல் லும் போது முகத்தில் உறுதி தெரிந்தது.
நாராசமாய்க் கேட்கும் சத்தங்களின் மத்தியில், அவ னுக்குத் துப்புரவாக மனமில்லாத நிலையில் வீட்டை வீட்டுப் புறப்பட்டார்கள்.
அதன் பின்னர் வீட்டைப் பார்க்க முடியவில்லை. வீட்டை என்ன? அந்த பகுதிக்கே செல்ல இயலாமல் போய்விட்டது.
இரண்டு மூன்று தடவை கோயிலடிவரை போய் வந்ததுதான் மிச்சம்.
மீண்டும் இப்போதுதான் சற்குணம் வீடு டார்க்கப் போகிறான்.
கார் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. கால் தடங்கள் பதியாத அந்த றோட்டில் சனங்கள் போட்டதை எடுக்கப் போகும் மனோநிலையில் செல்வ தைப் போல விரைந்து கொண்டிருந்தனர்.
சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், எல்லோரும் வீடுகள் பார்க்கத்தான் போகின்றார்களா? அல்லது விடுப்புப் பார்க்கவா? அழுதாலும் பார்ப்பார்கள், சிரித் தாலும் பார்ப்பார்கள். எது தடந்தாலும் விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கும் எப்போதும் முடிவில்லை.
காரணமில்லாமல் போகும் சனங்கள் மீது ஆத்தி ரம் வந்தது. போகும் மனிதர்களுள் கவலை தோய்ந்த முகங்களுடன் சிலர் போய்க் கொண்டிருத்தனர்.

125
வீதிக் கரையோரம் புற்களும், புதர்களும் மண்டிப் போய் இருந்தன. குன்றும் குழியுமாக வீதி சிதைந்து போய் இருந்தது.
தோட்ட நிலங்கள் எல்லாம் பாழ்பட்டுப் போய்க் காணப்பட்டன. பச்சையாய், பசுமையாய் வெங்காய மும், புகையிலையும் செம்மிப் போய் இருக்கும் தோட் டங்கள் சூறையாடப்பட்டு இருந்தன.
வேலிகள் இல்லை. மதில்கள் இல்லை. வீடுகளின் அத்திவாரங்கள் கூட இல்லாமல் புல்டோசரின் தடம் பதித்த தரைகள். பிரளயத்தில் அகப்புட்ட பகுதி போல. இயற்கை கோரத் தாண்டவமாடினால் கூட இவ்வளவு அழித்திருக்குமா? என்று எண்ண வைக்கும் தன்மையதாய் காட்சிதந்தன.
இடித்து நொறுக்கப்பட்ட, குண்டு வைத்துத் தகர்க் கப்பட்ட வீடுகளின் குவியல்கள், குதறி எறியப்பட்ட மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை இருந்தன.
விரிந்து இமைக்க மறுக்கும் இமைகளும், குத்திட்ட்
விழிகளுமாக பிள்ளைகள் பார்த்தார்கள். பரிதாபமான உணர்வுடன் மனைவி சற்குணத்தைப் பார்த்தாள்.
சூறையாடப்பட்ட இடங்களில் விடுப்புப் பார்க்கும் சனங்களுடன் பாதிக்கப்பட்டவர்களும் நின்றார்கள். சோகம் ததும்பும் முகங்களுடன் தங்கள் தங்கள் இடங் களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீட்டு அத்திவாரங்கள் தெரியாத வளைவுகளின் எல்லைகள் தெரியவில்லை யாருடைய காணி எது என்று அடையாளம்கூட காட்டமுடியாமல் இருந்தன.
தலைகளை ஏந்திப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சி அடைந்த பலர் தரைகளில் அமர்ந்திருந்தனர். அவர்களை யும் விடுப்புப் பார்க்கும் கூட்டம் சுற்றிச் கொண்டிருந் тё5.gif.

Page 69
126
ஒரு இடத்தில் எரிந்து கருகிப்போய் இருந்த பொருட் களை சிலர் கிளறிக் கொண்டிருக்க இன்னும் சிலர் இவற் றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கடை வீடு என்ன மாதிரி இருக்கிறதோ என மறு படியும் யோசித்தான்.
வீதியில் ஆங்காங்கே கிடந்த கிடங்குகள், மண் வரம்புகளைத் தாண்டி கார் மிக மெதுவாக ஊர்ந்தது. திடீரென றோட்டுக் கரையில் சுருள் சுருளாக முள்ளுக் கம்பிகள் மண் மூட்டைகள், கற்களின் அரண்.
தொடர்ந்து காரைச் செலுத்துவது சிரமமாக இருந் 芯g列·
"ஆக்கள் போகேலாமல் இருக்கிற றோட்டில் இவைக்கு ஒரு கார் ஏன் நடந்து போகேலாதோ” என ஒருவர் கேட்க யாரோ அதற்கு பதில் சொன்னதும் கேட்டது.
"ஏனப்பா பிரச்சினை, காரை நிற்பாட்டுங்கோ இனி நடந்து போவோம்." என்றாள் சற்குணத்தின் மனைவி.
சற்குணம் எதையுமே காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை" என்றாலும் பாரதி சிலையைத் தாண்டி காரை அப்பால் கொண்டு போக முடியவில்லை. எனவே காரை நிறுத்த வேண்டியதாயிற்று.
அழுது வடியும் முகத்துடன் இறங்கிய மனைவி பிள்ளைகளுடன் நடக்கத் தொடங்கினாள். சற்குணமும் தொடர்ந்தான்.
பாரதியாரின் சிலையின் தலையைக் காணவில்லை. கை ஒன்று உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிலையின் பீடத்தில் பல உடைவுகள், ஏராளமான துளைகள்.
சிலையடியைச் சுற்றி பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெள்ளைக் கொடிகள் கட்டிய

127
பல ஜீப்புகள், பச்சைத் தலைப்பாகைகள், தாடிகள் கொண்ட ஏராளமான இராணுவத்தினர்.
எதையுமே கவனித்தாலும் அவற்றில் அதிக அக்கறை கொள்ளாமல் தொடர்ந்து நடந்தனர். வேகமாக நடக்கும் மனைவியைத் தொடரப் பிள்ளைகள் நடக்க முடியாமல் ஒடத் தொடங்கினர்.
சிலையடியைத் தாண்டிய பின்னர் சில வீடுகள் ஓரளவு முழுமையாக இருந்தன. மனத்தில் பரபரப்பு உண்டா கியது. தூரத்தில் வீட்டின் ஒரு புறச் சுவர் தெரிந்தது. மதிலைக் காணவில்லை. கட்டிய அடையாளமே தெரிய வில்லை.
முன்புறம் இடிந்து போய்க் காணப்பட்டது. விரை வாகப் போன மனைவி "ஐயோ" எனக் குளறிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள். பிள்ளைகளும் ஓடினார்கள். சற்குணமும் விரைந்தான்.
வீட்டின் ஒரு சிறு பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் குண்டினால் சிதறிப் போய் இருந்தன. கண் கொண்டு பார்க்க, முடியாத கலக்கமான காட்சி.
அழகான முன்புறம், விசலமான கண்ணாடி ஜன்னல் கள். தேக்கம் கதவுகள், காற்று வாங்கும் மொட்டை மாடி, மின் விறாந்தை ஹோல், சகலதும் இருந்த தடம் தெரியாமல் இருந்தன.
பார்க்கப் பார்க்க பொங்கிவந்தது அழுகை, கண்களை மறைத்தது கண்ணிர். விக்கல் எடுத்து அழுத மனைவியை சற்குணம் பார்த்தான். பிள்ளைகளும் தாயுடன் சேர்ந்து
9(p5607.
அக்கம் பக்கித்து வீடுகள் பல அடியோடு இல்லை. வீடுகள் இல்லாத தரையில் காணப்பட்டது போல புல்டோசரின் வரித்தடங்கள் தான் தெரிந்தன.

Page 70
128
எது வளவின் எல்லையென்று கூடத் தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள், பின் வீட்டுக்காரர்கள் எல்லா ருமே தங்கள் தங்கள் பகுதிகளில் நின்று தங்களின் இடிபாட்டுக் குவியல்களைப் பார்த்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்தனர்.
வேகமாக அழும் மனைவி பிள்ளைகளை சமாதானப் படுத்தாமல் பிரமை பிடித்தவன் போல சற்குணம் இருக்க, பொன்னுத்துரையார் நடந்து வந்தார், முகத்தில் வேதனையிலும் புன்னகை எப்போதும் போலவே அவர் முகத்தில் பிரகாசிக்கும் சகிப்புத் தன்மையுடன் சற்குணத்தை அணுகினார்.
சிறிது நேரம் பேசாமல் நின்றார். என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? என்று சிறிது நேரம் யோசித்திருக்க வேண்டும்.
“என்ன செய்கிறது. கவலைப் பாடதேங்கோ” என்றார் முதலில்.
சற்குணம் பதில் சொல்லவில்லை.
"அழாதேங்கோ தங்கச்சி. ஏதோ உங்களுக்கும் பிள்ளையஞக்கும் ஒண்டும் நட்க்கேல்லை எண்டு மனத்தை தேற்றுங்கோ. எத்தினை பேர் என்னென்ன மாதிரியெல் லாம் கஷ்டப்பட்டிருப்பினம். அதுகளைப் பார்த்து ஆற வேண்டியது தான்" என்றார். சற்குணத்தின் மனைவியி
• الا مسt
அவள் வெம்பினாள்.
சற்குணம் பொன்னுத்துரையரைப் பார்த்தான். வெறும் உடம்புடன் கசங்கிய வேட்டிடி உழைத்து உருக்கு லைந்து போன உடலுமாகக் காணப்பட்ட அவரைப் பார்க்க என்னவோ போல இருந்தது.

29
இந்த மனிதனின் அந்தச் சின்ன வீடும் துப்புரவாக. இடிந்துதானே போய் விட்டது. எப்படி இந்த மனிதனால் இப்படி அமைதியாக இருக்க முடிகிறதென சற்குணம் யோசித்தான்.
மதில் கட்டும் போது கிழக்குப் பக்கமாக இருந்த எல்லை வேலி தொடர்பாகதான் அவருடன் தர்க்கம் புரிந்ததோடு அடிக்கப் போனது கூட அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.
“வீட்டின் ஒரு பகுதியை திருத்திப் போட்டு இருக்க லாம் போல” " என பொன்னுத்துரையர் சொல்லிக் கொண்டு போனார்.
சற்குணம் வெறுமையான வானத்தையே பார்த்தபடி. மெளனமாக நின்றான்.
வீரகேசரி 24-09-1987

Page 71
9)
ଗରା[[B [l]]il)
பிரதான வீதியில் இருந்து ஒழுங்கை ஊடாக சைக்கிள் திரும்பியது. சிறிது தூரம்தான் கல் ஒழுங்கையின் இரு *பக்கங்களிலும் வீடுகள் அப்பால்
கழுத்தை முறித்துப் பார்க்கும் உயரம் கொண்ட பனைமரங்கள் நிரைநிரையாக கருகருவென்று, மெல்லிய தாக அசைந்து கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவைதான்.
சினிமாக் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் களைக்க களைக்க ஒடிக் கட்டிப்பிடித்து தெய்வீகக்காதல் புரிய அருமையான இடம்.
அப்பனைகளின் ஊடாக வளைந்து வளைந்து செல் லும் ஒழுங்கைப் பாதை. அதைவிட நடப்பவர்களும் சைக்கிள்காரர்களும் தங்கள் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற மாதிரி உண்டாகி விட்ட எண்ணற்ற ஒற்றையடிப் பாதைகள். அவற்றின் தடயங்கள்.
பளிச்சென துடைத்து விட்டாற் போல கீழே பசியபுல் வெளி. சின்னச் செடிகள்கூட இல்லாமல் பார்ப்பதற்கு என்ன ஆனந்தம்.
பனைகள் கொண்ட அந்தப் பாரிய பிரதேசம் கண் களுக்கு தரிசனம் ஆனவுடன் நெஞ்சில் இனம் புரியாத 4-եhւնւI.

131
சைக்கிள் இயல்பாகவே வேகம் குறைந்தது, அம்மன் *கோயிலடியால் திரும்பிப் போகும் நாலைந்து ஆட்களைத் தவிர வேறு ஆட்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
வழக்கமாக முன்பு நாங்கள் குந்தியிருந்து, வம்புகள் புனையும் அந்த இடத்திற்கு வந்தாலும் சைக்கிள் தனியே பனையோடு சாய்ந்தது.
எப்போதும் நாங்கள் அமர்ந்திருக்கும் அந்தக் கற்கள் அப்படியேதான் இருக்கின்றன. நாங்கள் நித்தமும் வந்து போவதால் கற்கள் இருந்த பகுதியில் புற்கள் இல்லாமல் வெறுமையான தரை தெரியும். இப்போது பசிய புற்கள் தலைகாட்டி நிற்கின்றன.
கல் ஒன்றில் அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க ஏனைய கற்களில் சில சிதறிப்போய் இருக் கின்றன. வேறு இரண்டில் துளைகள். அண்ணாந்து பார்த் தால் பனைகளில் கூட ரத்தமில்லாக் காயங்கள். அட கற்கள் கூடத் தப்பவில்லை.
மேலே பார்த்தால் வானம் எங்கள் எதிர்காலம் போல் இருக்கவில்லை. மெல்லிய நீலத்தில் துலக்கமாகப் பிரகா சித்த க. உரத்து வீசிக் கொண்டிருந்த காற்றினால் பனை யோலைகள் தாளம் தப்பாமல் இசைபாடின.
சுற்றிச் சுற்றிப் பார்க்க என்ன இனிமை, நெஞ்சத்தில் முகிழ்ந்தெழும் அந்த இனிய உணர்வுகளுக்கு இணை இல்லை.
எவ்வளவு காலத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு வ்ந்து இந்த இனிமையை நுகர சந்தர்ப்பம் கிடைத்திருக் கின்றது. அதுகூட முழுமையானதா? என்று என்னை நானே கேட்கவில்லை எங்கள் பிரதேசத்தில் எங்குதான் நின்றாலும் எந்தப் பகுதிக்குத்தான் போனாலும் நிம்மதி யாக ஆறுதலாக நிற்க முடியாமல் மாயச் சக்தி

Page 72
132
மனதுக்குள் புகுந்து விரைவாகப் போ என்று சொல்லிய படிதானே இருக்கின்றது.
பனைகளுக்கு அப்பால் அம்மன் கோயிலின் அந்த உயர்ந்த கோபுரம் தெரிகின்றது. கோயிலில் இருந்து தெற்குப் பக்க வாசலால் வரும் பக்தர்கள் இந்த வழி யால்தான் வருவார்கள்.
பார்வைகளை எறிந்து கொண்டு வரும் அந்தப் பக்த கோடிகளுக்காக நாங்கள் தவம் இருந்த அந்தக் காலம் நேற்றுக் கண்ட கனவு போல.
காத்திருக்கும் இளைஞர்களே எங்கள் இடைகள் உங்கள் கண்களில படுகின்றதா? எங்களுக்கு முதுகு ஒன்று இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் ப்ரா அணிவதாக ஞாபகமிருக்கின்றதா? என்ற பல கேள்விகளை வாய்களாலே கேட்காமல்
தங்கள் அதீத நாகரிகத்தின் உடைகளால் கேட்டுக் கொண்டு முந்தநாள் புஷ்பித்த பெண்கள்கூடப் போவார் கள். நம்புவது கஷ்டம்தான். அவர்கள் கோயிலில் இருந்துதான் வருவர்ர்கள்.
அட்வாண்ஸ் லெவல் படித்து கொப்பிகளும் சைக்கிள் களும் துணையாக இருந்து காலையிலும் மாலையிலும் ரியூஷன் ரியூஷன் என்று அலைந்து ரியூஷன் முடிய இந்த இடத்திற்கு முன்னரே காத்திருக்கும் எங்களிலும் வயது ழுதிர்ந்த பல்துறை விற்பன்னர்களான “குருவானவர் களின்” தாழ்படியும் சீடர்களானோம்.
எத்தனை ன்சக்கிள்கள் எத்தனை ஆட்கள். ஓமானுக்கு உழைப்பதற்கோ, கனடாவுக்கு அகதியாகவோ போகாமல் எத்தனை பேர் இந்த மண்ணும் இந்தக் காற்றின் சுவாச மும்தான் எங்கள் ஜீவாதாரங்கள் என்று நம்பிக் கொண்டு

33
சில வேளைகளில் இரவு ஏழெட்டு மணிவரை ரியூஷன் முடித்துக் கொண்டு வரும்போது ஒருவன் வாயால் சங்கூதுவான். இன்னுமொருவன் சேமக்கலம், தேவாரம், திருவாசகம் என்று.பஜனைக்குப் பிழையில்லை. இண் டைக்கு இதைத் தெருவில் வேண்டாம் வீட்டில்கூடச் செய்வதற்குத் துணிவு இல்லை.
கல்லைவிட்டு இறங்கி புல்வெளியில் படுக்க வேணும் என மனம் நினைக்கிறது. புல்தரையில் படுத்துக் கொண்டு வானத்தையே பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது.
பதினைந்து பேருக்கு குறையாத எங்கள் திருக்கூட்டம் என்ன மாதிரி சிதறுண்டு போனது. கோயிலுக்குப் போய் காஞ்சிபுரங்களையோ, கனகாம்பரங்களையோ பார்த் தால் என்ன? றிகல் தியேட்டரில் அரையிருட்டில் சிகரெட் புகைத்து, வெள்ளைக்கார கோமானும், சீமாட்டியும் படுக்கையில் புரள்வதை ஆர்வமுடன் பார்க்கும் போதாவது சரி, கல்யாண வீடுகளில் சபை நடத்தி சாதனை புரிவதிலாகட்டும் சரி எங்கும் எதிலும் நீக்கமற எல்லோரும்தான். .... 。
கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி நான் மாத்திரம் இந்த பனை மரங்களுக்கு மத்தியில் இருந்து நிம்மதியாக ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாத சூழ்நிலையில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு.நினைத்துப் பார்க்க வேடிக்கையாக இருக் கின்றது.
மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள். அப்போது எங்களது குருவானவர்களாக இருந்த ஒருவருக்கு பழைய சினிமாப் படங்கள் என்றால் நன்றாகப் பிடிக்கும். பொழுது மங்கி சூரியன் தூரத்தே தெரியும் பளைகளின் அடிப்பகுதியில் மறைந்து கொள்ள அவரது பாட்டுக் கச்சேரி தொடங்கும்.

Page 73
134
மெல்லிய குரலில் தமிழ் சினிமாவில் அப்போது தாங்கள் மிகவும் இனிமை வாய்ந்ததென நினைத்த பாடல் களை அவர் பாட நாங்கள் தாளம் போடுவோம். அப்படி ஒருநாள் பாடும்போதுதான் வசந்தியும் தாயும் அந்தப் பகுதியால் நடந்து வந்தார்கள்.
“பாடதேங்கோ
அண்ணை பாடதேங்கோ" என்று சத்தம் போட்ட வண்ணம் நாதன் பனை மரத்துக்கு, பின்னால் மறைந்தான்.
அவனது திடீர் அதிரடி நடவடிக்கைக்கு காரணம் புரியாமல் தடுமாறிப் பின்னர்தான் அவன் வசந்திக்குக் காதல் வலை வீசுகின்றான்.என்று ஒருவன் சொல்ல,
"நாதன் இஞ்சைதான் சிகரெட்டோடை நிற்கின் றான்" என்று கூட்டத்தில் ஒருவன் சத்தம் போட மிகுதிப் பேர் பெரிதாகச் சிரித்து சத்தம் போட்டார்கள்.
நாதனுக்கு அந்த நேரத்தில் கண்ணிரே வந்து விட்டது. கொஞ்ச நாட்கள் எங்கள் கூட்டத்தோடு சேராமல் கூடத் திரிந்தான். காதல் உறுதியான பின்னர் ஏதோ வீரதீர செயல்கள் செய்தவன் போல பழையபடி சேர்ந்தான்.
“என் காதல் தெய்வீகக் காதல் அவள் இல்லாமல் உயிர் வாழ மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த நாதன் தான் முதலில் உயர்படிப்பு என்று சொல்லி லண்டன் போனான். போனவன் போனதுதான்.
மூன்று நாலு வருடங்களுக்கு முன்னர் லண்டனிலும் யாழ்ப்பாணத்திலும் தனித்தனியே வீடுகளும் ஏனைய ரொக்கங்களும் நகைநட்டுக்களாகவும் சீதனம் வாங்கி ரே ப்ரெக்கோடரில் நாதஸ்வரம் ஒலிக்க லணடனில் தாலி கட்டினதாகக் கேள்வி.

135 நாதன் லண்டன் போன சில காலத்திற்குள்ளேயே எங்கள் சூழலில் நாலைந்து பேர் லண்டன் போய் சேர்ந்து விட்டார்கள். இப்போது கண்டால் சிரிப்பதுகூட பெரிய வேலையாக நின்ைத்து, "உம்" என்று விட்டுப் போவார்களோ அல்லது ‘ஹாய்" என்பார்களோ தெரியாது.
அவர்களின் வீடுகள் பெருத்து விட்டன. மனிதர்களும் மாறிவிட்டார்கள், முதல் நாள் வீடியோவில் பார்த்த பட்ம் என்ன மாதிரி என்று. அடுத்த நாள் பகலில் வாயடித்து, இரவில் மீண்டும் வீடியோ ஏதாவது. உதவி கேட்டு வருபவர்களை தூரத்தே கண்டு விட்டு கதவு களைப் பூட்டிவேலைக் காரப் பெட்டை மூலம் வீட்டில் ஆட்கள் இல்லை என்று சொல்லியும், வசதியானவர்கள் வந்தால் வீட்டின் ஹால் வரை அழைத்து" "கூல்றிங்ஸ்" சும் “சோட்டீற்ஸ்" சுமாக சந்தோஷம் பாடி. இந்த நடவடிக்கைளில் இதுவரை மாற்றம் இல்லை.
கையில் ட்ரான்சிஸ்டர் ரேடியோ சகிதம் ஒருவன் சைக்கிளில் என்னை வினோதமாகப் பார்த்துக் கொண்டு போனான். ரேடியோவில் மாலை நேர செய்தியறிக்கை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பாக இருக்" கிறது. "என்ன தம்பி யோசனை" என்று அந்தப் பழக்க மான குரல் காதில் விழ திசை திரும்பினேன். வாழ்விழந் திருந்த நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் என் சகபாடி களால் ஒருவனான செந்தூரனின் தாயார். முகத்தில் புன்னகை இல்லை. நிரந்தரமான சோகம் குடிகொண்ட அதில் ஒருவகை அமைதி. "சும்மா” என பதிலை இழுக்க வேண்டியதாயிற்று. “என்ன சும்மா பொழுது நல்லாய் போட்டுது. தனிய இதில் இருக்கிறது சரியில்லை அதுவும் இந்த நேரத்தில்" என்றாள் அவள்.
செந்தூரனும் அவன் அம்மா போலதான். கதைப்பான் முகச்சாயல் கூட அப்படியேதான். எனக்கு செந்தூரன் தான் கதைப்பது போல இருந்தது.

Page 74
136
கணப்பொழுதில் அவன் நினைவு வந்தது. எத்தனை கனவுகளைச் சுமந்து கொண்டு திரிந்தவன், அந்தக் கனவு களையெல்லாம் அப்படியே காற்றில் பறக்க விட்டு, வேலை தேடியும் போகாமல், அகதியாகவுய் போகாமல் போய்ச் சேர்ந்து விட்டான்.
அதிர்ந்து பேசத் தெரியாமல் எல்லோரையும் நேசித்து,
கஷ்ட்ப்பட்டவர்களுக்காக கண் கலங்கி, மற்றவர்கள்
துயரத்தில் தானும் பங்கு கொடுத்து என்ன மாதிரிப் போனான்.
எங்கள் அணியில் இரண்டாவது வெளியேற்றம் அப்படித்தான் நடந்தது. சொல்லாமல், கொள்ளாமல் செந்தூரன் மறைந்து போனான். பின்னர் இரண்டு மூன்று பேர் போனார்கள்.
நெருக்கடி மிகுந்த அந்த நேரத்தில் நாங்கள் இந்தப் பகுதிக்கு வருவதை நிறுத்திக் கொண்டோம். புறப்பட்டா லும் வீட்டில் விட மாட்டார்கள். அந்த நேரத்தில்தான் அவர்கள் மறைந்து போனார்கள்.
இரண்டு வருடத்தின் பின்னர் செந்தூரனைக் கண்ட போது அவன் முகத்தில் புதிய பொலிவு பிறந்திருந்தது. முகத்தில் மட்டுமல்ல மக்களுக்காக வாழத் தொடங்கிய அவனை அப்போதுதான் புரிய ஆரம்பித்தோம்.
"இண்டைக்கு வேலைக்குப் போகல்லையே' செந்தூர
னின் அம்மாதான் கேட்கின்றார்.
“போய் வந்திட்டன் சைக்கிளில வந்தாப் போல பழைய இடத்தில் இருந்து பாக்க வேணும் போல இருந்தது. அதுதான்" என்று சொல்லி சமாளிக்க
"கண்டது நல்லதாய் போச்சு. நான் சொல்லி அனுப்ப
இருந்தனான். தம்பியின்ரை ஆண்டுத்திவசம் வாற புதன் கிழமை கட்டாயம் வர வேணும். அவன்ரை சிநேகிதரில்

37
உன்னைப்போல இரண்டொரு பேர்தானே ஊரோடை நிற்கிறியள்" என்றாள் அவள்.
செந்தூரன் செத்துப்போய் ஒரு வருடமாகி விட்டது என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. அவன் மரணித்து போனதும் ஊர்ே அழுது கொண்டு ஊர்வலம் போனது. தேற்றுப் போல நெஞ்சில வேதனை உண்டானது. கண் களில் கணணிர் வந்தது.
இளமைக் காலத்தில் எத்தனை கூத்தடித்த எங்கள் மத்தியிலும் சில செந்தூரன்கள். நினைத்துப் பார்க்கச் சங்கடமாக இருந்தது.
செந்தூரனின் அம்மா விடை பெற்றுப் போனார். எனக்குத் தெரியக் கூடிய காலத்திலிருந்து அவனின் அம்மா உடுப்பது அதே வெளிறிய சாறிதான். மெலிந்து போன உடலுடன் கூட இப்போது சோகம். வீட்டுக்குப் போனா லும் அதே ஒலை வீடு. கறையான் அரித்த வேலிகள். வயது முதிர்ந்த கன்னிப் பெண்களான செந்தூரனின் சகோதரி
35 GT.
பனை மரங்கள் ஊடாக மெல்லிருள் பரவத் தொடங்கி விட்டது. மேலும் இருந்து யோசிக்கக் கவலைகள்தான் மிஞ்சும்.
பனையில் சாத்தியிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் உருட்டத் தொடங்க எதிரே ஒரு சைக்கிள் முன் பாரில் ஒரு பெண் பிள்ளையுடன் மெலிந்த தாடியும் வாடிய முகமுமாக. வடிவாகப் பார்த்தால் சிவலோகன்.
"டேய் சிவலோகன்" என்று என்னை மறந்து சத்தம் போட "இன்னா மச்சி" என்ற அவன் குரல் என்னைத் திகைக்க வைத்தது. பேச்சுக்கூட மாறி விட்டதா!
வெ-9

Page 75
138
அவன் சைக்கிளை நிறுத்தி என் அருகில் வந்தான் “என்னடா உனக்கு நடந்தது” என்று கேட்க.
அவன் சிரித்தான். அது வேடிக்கைச் சிரிப்பா? கவலைச் சிரிப்பா என்று புரியவில்லை.
“போன கிழமைதான் வந்தனான் மச்சான்” என்று. சொன்ன அவனில் வறட்சி தெரிந்தது. அழுக்கான உடை கள் “பெரிதாக யோசிக்காதே மச்சான் அகதியாய் கப்ப்லில வந்தனான். உன்னை வந்து சந்திக்கத்தான் நினைச்சனான். ஆனால் வசதிப்படேல்லை கப்பலில வரேக்கையே பிள்ளையஞக்கும் மனுசிக்கும் சுகமில்லை.”
நான் ஆச்சரியமடைந்தேன்.
"நான் சொல்லுறது எல்லாம் உனக்குப் புதினமாய்த் தான் இருக்கும். என்ன செய்யறது மக்சான் என்ரை தலை விதி” என்றான். எது தலைவிதி என்று நான் கேட்க வில்லை.
“இது என்ரை மூத்த பிள்ளை ஐந்து வயதாகிறது. கடைசிப் பிள்ளைக்கு மூன்று மாதம் இடைவெளியில வேறை இரண்டு" என்று அவன் சொன்னது பகிடி போலத், தெரியவில்லை.
எங்கள் அணியில் இருந்து மூன்றாவது வெளியேற்றம் சிவலோகன் போன்றவர்கள் புறப்பட்டபோது நடந்தது. அகதிக்ள் என்ற பெயரோடு போய்ச் சேர்ந்தவர்களோடு சிவலோகன் போன்றவர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.
சிவலோகனுக்கு எதிலுமே அக்கறை இல்லை. குடும் பத்தில் கூடப் பெரிய பொறுப்பும்இல்லை, மேற்கொண் டும் படிக்காமல் தொழிலும் தேடாமல் சிகரெட்டும் இடைக்கிடை, சாடையாகத் தண்ணியும் அடிச்சுக் கொண்டு திரிந்த அவன் ஊரில் நிலமை மோசமாகிய போது ஓடித் தப்பி விட்டான்.

139
"நீ கலியாணம் முடிச்சிட்டியே” எனற அவனைப பார்த்துச் சிரித்தேன்.
"நீ அப்படியே இருக்கின்றாய் போல நான் போய்ச் சேர்ந்த உடனே கலியாணம்தான் முடிச்சன் மச்சான் கடைசியில கண்ட மிச்சம் நாலு பிள்ளையன்தான்” என்று சொன்ன அவன் கடுமையாக இருமினான்.
"என்ன செய்யிறது மச்சான் போன உடனே ஒரு அகதி முகாமிலதான் இருந்தனான். வேலை ஒண்டுமில்லை. ஒரு பெட்டை கண்ணுக்கு முழிப்பாய் தெரிஞ்சாள் கண்ணைக் கொடுத்தன். பிறகு அவசரப்பட்டுப்போனேன். தலையைச் சுத்தேலாமல் போட்டுது. சிம்பிளாய் கலியா ணம் முடிச்சு வீட்டையும் அறிவிச்சன். அவ்வளவுதான் வீட்டுக்காரர் நான் கலியாணம் முடிச்ச பகுதியைப் பற்றி விசாரித்திருக்கினம். இடம் அவைக்குப் பிடிக்கேல்லை. அதோடை எனக்குக் கடிதம் எழுதறதை விட்டிட்டினம். நானும் அக்கறைப்படேல்லை! நாங்கள் செம்பு தண்ணி எடுக்கக்கூடிய இடத்தில அவன் கலியாணம் முடிக்கேல்லை எண்டு அப்பா சத்தம் போட்டாராம். நான் என்ன செய்ய' மச்சான்" என்று சொல்லி அவன் தொடர்ந்துஇருமினான்
இப்ப கப்பலில வந்தவுட்னே தந்த காசு இரண்டா யிரம் வரேக்க கொண்டு வந்த கொஞ்சக் காசோடைதான் இருக்கிறன். இனி இருக்க ஒரு இடம் தேட வேணும் சீவிக்க ஒரு வேலை தேட வேணும்"
“இஞ்சை வந்து உங்கடை வீட்டை போகேல்லையே. இப்ப எங்கை இருக்கிறாய்” என்று கேட்டேன். 'ኣ
"மனுசி வீட்டுக்காரரோடைதான் இருக்கிறன் ஆனால் அங்கை இருக்க இடம் காணாது. அதுகளோடை இருக்கவும் ஏலாது எந்த முகத்தோடை நான் எங்கடை வீட்டைப் போறது. போனாலும் அவை என்னையும் மனிசியையும் பிள்ளைகளையும் சேர்ப்பினமோ. ஏன் பிரச் சினைப்படுவான், ஏதாவது பார்ப்பம்"

Page 76
140
நான் அவனை நினைத்து பரிதாபப்படுவதா, வேத னைப்படுவதா என்று தடுமாறினேன்.
“அவனவன் என்னென்ன மாதிரி அங்கையிருந்து கனடா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா என்று மாறினாங்கள். நான் பரதேசி ஆனதுதான் மிச்சம் என்றான்.
“சரி சரி உதுகளை இப்ப யோசிச்சு என்ன செய் யிறது. இனி நடக்கிறதைப் பார். இப்ப எங்கை போறாய்."
“இப்ப இவளுக்கு உதில இருக்கிற டாக்குத்தரிட்ை மருந்து எடுக்க வந்தனான் என்று சொன்னான்.
அந்த அழகான சின்னப்பிள்ளை தன் சுழலும் வட்டக் கண்களால் மருட்சியுடன் என்னைப் பார்த்தது
“தங்கச்சிக்கு என்ன பெயர்” என்று கேட்டேன். பிள்ளை சொல்லாமல் சிவயோகனைப் பார்த்தது. “சொல்லன் பெயரைக் கேட்டால்" என்று பிள்ளை யைப் பார்த்து எரிந்தான் அவன்.
எனக்கு ஆத்திரம் வந்தது. “சொலலுங்கோ அச்சாப்பிள்ளை” என்றேன். “ஜெயமாலினி” என்று கீச்சிட்ட குரலில் பிள்ளை சொல்ல.
“ஏண்ரா டிஸ்கோ சாந்தி என்று வைக்காதேயன்.” என்று சிவயோகனைப் பார்த்துக் கேட்க வேணும் போல இருந்தது. கேட்டும் பிரயோசனப்படாது.
முழுமையாக இருள் சூழ்ந்து விட்ட நிலையில் நேரம் போனது தெரியாமல் அவனோடு பொழுது போய் விட்டதை உணர்ந்தேன்.

- 141
சட்டென்று இயல்பான உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. இனி வீடு போய் சேருவது பற்றி மனம் பதற் றப்பட ஆரம்பித்தது. -
“பொழுதுபட்டால் றோட்டில் போறது பிரச்சினையே மச்சான்” என்றான் சிவலோகன்.
"உனக்குப் பிள்ளை இருக்குத்தானே, உனக்குப் பிரச் சினை இல்லை" என்றேன் நான்.
இருளில் கரும் பூதங்களாகத் தெரிந்த பனை மரங்கள் “ஊய்" உன்ற சத்தத்துடன் வெருட்ட ஆரம்பித்தன.
வீரகேசரி 3-08-1988.

Page 77
1O
616) If Igub GI Rij6ir
வெய்யில் வறுத்துக் கொண்டிருந்த தெருவில் எப்போ தாவது வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. சில சைக் கிள்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள்.
உருகிக் கொப்பளிக்கும் தாரில் கால் பதியப் பதிய மாட்டு வண்டில் ஒன்றின் மாடுகள் பாய்ந்து கொண்டு போயின. முதுகில் விழும் அடிகளைத் தாங்கிக் கொண்டு மூக்குத் துவாரத்தின் ஊடாக வெண்மையாய் நுரை தள்ளத் தள்ள அவையால் என்ன செய்ய முடியும்?
எத்தகைய வேதனைகளையும் வெளிக்காட்டாமலே தமக்குள் அனுபவிக்கும் அந்த வண்டில் மாடுகளைப் போல சின்னத்தம்பியும் தன்னை நினைத்துக் கொண் டான்.
உச்சி வெய்யிலின் துளைத்தெடுக்கும் கோரத்தினைத் தாங்கிக் கொண்டு தன்னைப் போல இருக்கும் ஏனைய வர்களையும் சின்னத்தம்பி பார்வையினால் அளந்தான்.
விதவைக் கோலம் பூண்ட பெண் போல வாடித் துவண்டு இருந்த அந்த சிறிய ஆல மரத்தின் நிழலில் அவர் கள் காத்திருந்தார்கள். அதன் நிழல் சிதறுண்டு போய் இருந்தது. இடையிடையே வெய்யில் கதிர்கள் பதம் பார்த்துக் கொண்டிருந்தன

143
சின்னத்தம்பியுடன் சேர்த்து பன்னிரண்டு பேர் கைகளில் உடுப்புப் பார்சல்கள், சாப்பாட்டுப் பார்சல், சகிதம், மனங்களில் வேதனை சுமையாக அழுத்த குமுறிக் கொண்டு இருந்தனர்.
சின்னத்தம்பிக்குப் பக்கத்தில் இருந்த வயதான பெண் ஒருத்தி கடுமையாக இருமிக் காறித் துப்பினாள். நெஞ்சில் உண்டான எரிவைத் தடுக்க நெஞ்சைத் தடவிக் கொண்டு “என்ரை அம்மாளே” என்றாள்.
சின்னத்தம்பி அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். சின்னத்தம்பி வரும் நாட்களில் எல்லாம் இந்தப் பெண் னும் வருகின்றாள்தான், என்றாலும் எதுவுமே சரி வரவில்லை.
அந்தப் பெண்ணின் விழிகளில் கண்ணீர் திரண் டிருந்தது. பரட்டைத்தலையையும் பொலிவிழந்த முகத்தை யும் பார்க்க சின்னத்தம்பிக்குத் தன் மனைவியின் நினைவு வந்தது.
சூழ்ந்து விட்ட கவலைகள் அரித்தெடுத்ததால் வயதால் மூப்படையாமல் தோற்றத்தால் மூப்படைந்து நாளும் பொழுதும் குசினுக்குள் இருந்து கஸ்டப்படு கின்றாள், w
இரவும் அவள் நித்திரை கொள்ளாமல் படுக்கையில் புரண்டு புரண்டு கடைசியில் அதிகாலை நாலு மணிக்கு எழும்பி விறகில்லாமல் வேலி மட்டை முறித்து அடுப்பு மூட்டி.சாப்பாடு செய்து பிள்ளை பாசத்தை எல்லாம் சேர்த்து பார்சலாக்கி கண்ணிருடன் தந்திருந்தாள். இப்படி எத்தனை நாட்கள் தந்திருப்பாள்.
எத்தனை தடவைகள், சாப்பாட்டுப் பார்சல்களைக் கொடுக்க முடியாமல் திருப்பிக் கொண்டு போன நாட்கள் எத்தனை?

Page 78
144
இன்றைக்கும் காலையில் முதல் பஸ் பிடித்து இறங்கியபோது பணியில் குளித்திருந்த செடிகள் சொட்டு போட்டுக் கொண்டிருந்தன. விறைத்துப் போன முகங் களுடன் சிலர் நடந்து கொண்டிருந்தனர். தேனீர் கடைக் காரர் கடையைத் திறத்து கொண்டிருந்தார். மின்சார வயர்களில் அணி வகுத்திருந்த காகக்கூட்டம் ஒருவாட்டம் கரைந்து வட்டம் போட்டன.
முன்னரே வந்துவிட்ட அந்த வயதான பெண் புழுதி தோய்ந்த கால்களுடன் குந்தியிருந்தாள். அப்போது தொடக்கம் பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்ட இந்த நேரம்வரை சின்னத்தம்பியைப் போலவே அவளும், அவள் மட்டுமா? ஏனையவர்களும் காத்திருக்கின்றனர்.
சின்னத்தம்பியின் வாழ்க்கையில் இப்படி எத்தனைக் காத்திருப்புக்கள். நினைத்துப் பார்க்கையில்.
படிப்பில் ஒரு காலும்-தோட்டத்தில் மறுகாலுமாக இருந்து எஸ். எஸ். சி. வரை படித்து மேலும் படிக்க முடியாமல் இருக்கும்போது ஒரு வேலை எடுத்தால் என்ன என்ற சிந்தனை,பிறந்தது.
அந்தக் காலத்தில் எம். பியைப் பிடித்தால் சி. ரி. பி. பஸ் கண்டக்டர் வேலை கிடைக்கும் என ஊரில் கதைத் ததை நம்பினான். எம். பி.யின் வீட்டுப் படியேற துணி வில்லை. இலகுவாக அவரைச் சந்திக்க முடியாது. எம். பி.யின் பன்னிரு கைகளில் ஒன்றாக இருந்த முத்துத்தம்பி யரைச் சந்திக்கக் காத்திருந்த நாட்கள் கணக்கற்றவை.
பல தடவை சந்திக்ச முடியாமல் கடும் மழை பொழி யும் மார்கழி மாதத்து அதிகாலையில் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டு போனாலும் முத்துத்தம்பி நித்திரை யால் எழும்ப எட்டு மணியாகி விட்டது.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர்,

145
"நீ பொன்னுத்துரையின்ரை பெடியன் தானே. ஆட் களைச் சந்திக்க வாறதுக்கு ஒரு ந்ேரக் கணக்கில்லையே சரி உதிலை இருந்து கொள் நான் ஒரு அவசர அலுவல் போட்டு வாறன்” என்று சொல்லி விட்டுப் போனவர்
தான்.
அதிகாலையில் சக்கரையோடு குடித்த தேயிலைச் சாயத்துக்குப் பிறகு எதுவுமே இல்லாமல் பகல் பன்னி ரண்டு மணிவரை விஜாந்தைக் கதிரையிலும் வெளி மாமர்த்து நிழலிலுமாக காத்திருந்தது தான் மிச்சம்.
இருக்கச் சொல்லி விட்டுப் போனவர் வருவார் இப்ப வருவார் .இன்னும் கொஞ்ச நேரத்தால வருவார் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.
வியர்க்க விறுவிறுக்க வந்த அவர் சின்னத்தம்பி காத் திருப்பதையே உணராதவர். போல உள்ளே போய் விட்டார். அவர் உள்ளே போன அடுத்த நிமிஷமே வெளியே வந்த ஒரு பெண்
"ஐயா சாப்பிடப் போறார்.போட்டு பிறகு வரட் டாம்” சான்று சொல்லிக் கொண்டு.முகத்தில் அடித்தாற் போல கதவை ஓங்கியடித்தாள்.
நெஞ்சம் வலியெடுக்க புற்கள் வரம்பு கட்டியிருந்த செம்பாட்டு மண் பாதையால் நடந்து வீடு திரும்பிய போது தங்களைப் போன்றவர்களுக்கு விமோசனம் எப்போ கிடைக்கும் என்ற எண்ணம் இருபது வயதும் நிரம்பாத அந்த நேரத்தில் எழுந்தது. முப்பது வருடங் களுக்கு மேலாகி விட்ட இன்றைய நிலையிலும்கூட அந்த விமோசனம் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
"தம்பி நேரம் என்ன” என்று கேட்டாள் அந்த வயதான பெண்.

Page 79
146
சின்னத்தம்பி மணிக்கூடு உள்ள ஒரு ஆளிடம் கேட்டு பன்னிரண்டு ஐம்பது" என்றான்.
"சில வேளை இரண்டு மணிக்கும் விடுவினம் முந்தியு மொருக்கா இப்பிடித்தான். காலமை தொடக்கம் எங்களை காய விட்டுப் போட்டு இரண்டு மணிக்குப் பிறகு பார்க்க விட்டாலும் விடுவினப்" என்றாள் பெருத்த எதிர்பார்ப்புடன் ஏக்கம் நிறைந்த முகத்தில் சிறிது சிறிது ஆர்வம் பொங்கிற்று.
இந்த எதிர்பார்ப்புடன்தானே நாளைக் கழிக்க வேண்டியுள்ளது. இந்த நிமிடம் இல்லாவிட்டால் அடுத்த நிமிடம். அடுத்த நாள்.வாரம்.மாதம்.வருடம் என்று கலியாணம் முடித்து மூன்று பிள்ளைகள். பிறந்த நிலையில் குத்தகைக் காணியுடன் மல்லுக் கட்டிக் கொண் டிருந்தபோதுதான் வன்னியில் வயற்காணி அரசாங்கம் கொடுக்கப் போவதாக வன்னிக்குப் போய் வந்த வன்னிய சிங்கம் சொன்னான்.
ஊரில் இருந்து காணிக்கு அப்பிளிக்கேசன் போட்ட நாலைந்து பேரில் சின்னத்தம்பியும் ஒருவனுமானான். குறிப்பிட்ட நாளில் வவுனியாவில் நடக்கும் , காணிக் கச்சேரிக்கு வருமாறு கடிதமும் வந்தது.
அழகாக விடிந்த ஒரு காலைப் பொழுதில் முதன் முதலாக ரயில் ஏறி வன்னிய சிங்கத்துடன் வவுனியா பயணப்பட்டது இப்போது சின்னத்தம்பிக்கு ஞாபகம் வந்தது.
விரைந்து மறைந்த காடுகளையும் மின்னல் அடித் தாற் போலத் தோன்றும் வயல்வெளிகளையும், பசும்பாசி பொருமிய குட்டைகளையும் பார்த்து ஆனந்தப்பட்டுத் தானும் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் வாழப் போவ தாக கற்பனையில் இன்பம் அனுபவித்து வவுனியா போய் சேர்ந்தான்.

147
பஸ் ஸ்ராண்டுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையொன்றில் இடியப்பமும் சாப்பிட்டு தேனீரும் குடித்துக் கச்சேரியை அடைந்தபோது காலை பத்து மணி இருக்கும்.
கும்பலாக வந்திருந்த ஆட்களுடன் இவர்களும் சேர்ந் தார்கள், சின்னத்தம்பியை இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போன வன்னியசிங்கம் சிறு பொழுது கரையத் திரும்பி வந்தான்.
"எங்களை ஒரு மணிக்குப் பிறகுதான் கூப்பிடுவார்
களாம்."
"ம்.அதுக்கென்ன.." என்றான் சின்னத்தம்பி,
"வாவன் ஒருக்கா ரவுணைச் சுற்றிக் கொண்டு வருவம்"
“சா.என்னத்திற்கு இஞ்சை இருப்பம்" “எவ்வளவு நேரம் எண்டு இருக்கிறது. உவன்கள் ஒரு மணி எண்டு சொல்லிப் போட்டுக் கடைசி இரண்டு. மூண்டு மணிக்குத்தான் கூப்பிடுவான்கள்" அதுவரை என்னெண்டு காத்திருக்கிறது.”
"எனக்குப் பிரச்சினையில்லை. காத்திருந்து எனக்கு அனுபவம் இருக்கு" என்றான் சின்னத்தம்பி.
உண்மையில் மாலை நாலு மணி வரை காத்திருந்து காணிக்கச்சேரி முடிய இரவு மெயில் ரயினில் புறப்பட்டு காலையில் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
இன்றுவரும் கடிதம் நாளை வரும் என்று இருந்து மாதங்கள் கடந்து
“காசு கட்டின ஆட்களுக்கும் பெரும்பான்மைக்கும் தான் காணி குடுத்தவையாப்" என்று வெகு நாட்கள் கழித்து வவுனியா போய் வந்த வன்னிய சிங்கம் சொன் னான்.

Page 80
148
வன்னியிலே வயற்காணி எடுத்து வயல் செய்யலாம் என்று ஆசையுடன் சின்னத்தம்பியைப் போலவே காத் திருந்த வன்னியசிங்கம்.
“எங்கடை வாழ்க்கை இப்பிடியே காத்திருந்து காத். திருந்து கரைந்து போகப் போகுது. எப்பதான் எங்க ளுக்கு ஒரு நிலையான விமோசனம் கிடைக்க போகுதோ" என்றான் வேதனையுடன்,
அன்றைக்கு அப்படிச் சொன்ன வன்னியசிங்கம் இப்போது இல்லை. வன்னிக்கு நெல் வாங்கப் போனவன் வழியிலேயே காணாமற் போய்விட்டான்.
உதவிக்கு யாரும் இல்லாத அவன் குடும்பம் இப்போது படும்பாட்டை நினைத்தால் வேதனைப்படு வதைத் தவிர வேறு வழியில்லை. யார் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்.
சின்னத்தம்பி மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்குப் போனான்.
சின்னத்தம்பியின் மூத்தமகன் அட்வாண்ஸ்லெவல் ஒரு தடவைதான் எடுத்தான். பரீட்சை நன்றாகச் செய் திருந்தபடியால் அவன் பெருத்த எதிர்பார்ப்புடனேயே இருந்தான்.
ஆனால் றிசல்ட் நன்றாகவே வந்தது. மகனும் பல்கலைக்கழகம் போவான் என்று சின்னத்தம்பியும் தனக்குள் பரவசம் அடைந்திருந்தான்.
எப்போதும் போலவே சின்னத்தம்பி காத்திருந்தான். கடைசியில் அவன் காத்திருப்பு நொறுங்கியது. கனவுகள் கலைந்தது. தனக்குள் குமைந்து குமைந்து தன் வேதனையை முழுமையாக வெளிக்காட்டாமல் சோகம் ததும்பும் வதனத்துடன் திரிந்த மகனை சமாதானப் படுத்த முனைந்தான்.

149
எல்லோரும் சொன்னது போலவே தானும் “தம்பி. திருப்பி எடு ராசா. அடுத்த தரம் நிச்சயமாய் உனக்கு இடம் கிடைக்கும்" என்று சொன்னதை மகன் வேதனை யின் சாயல்படிய சிரித்து மறுத்தான்.
எதற்காக அவன் அப்படிச் சிரிக்கின்றான் என்பது முதல் சின்னத்தம்பிக்கு விளங்கவில்லை. மகனை ஆர்வத் துடன் பார்த்தான். *
“என்ன தம்பி" என்ற கேள்வியில் மனம் கரந்தது.
"நான் இனித் திருப்பி சோதினை எடுக்கேல்லை ஐயா.திருப்பி எடுத்தாப் போலை கம்பஸ் போக சான்ஸ் கிடைக்குமோ எண்டு எனக்கு நம்பிக்கையில்லை. உங்கடை காசையும் என்ரை காலத்தையும் டிரஸ். வீணாக்குவான் எண்டுதான் யோசிக்கிறன் .'
சின்னத்தம்பி அதிர்ந்து போனான். சோகம் அவனை கவ்விக் கொண்டது. மகனின் வார்த்தைகளுக்கு பூரண விளக்கம் தெரியாமல் சிறிது நேரம் தடுமாறிப் போனான்
“என்ன தம்பி நீ சொல்லுறாய்." என்னும் போதே விழிகளில் கண்ணிர் எட்டிப் பார்த்தது.
"ஐயா.நீங்கள் என்ன கஸ்டப்படுறியள் எண்டு எனக்குத் தெரியும். என்னையும்.தம்பி தங்கச்சிமாரையும் படிபிக்க நீங்கள் படும்பாடு எனக்கு நல்லாய் விளங்கும். அதாலதான் யோசிக்கிறன் நான் இந்த அட்வான்ஸ் லெவல் றிசல்டோடை எதாவது வேலைக்குத் தெண்டிச் சுப் பார்க்கப் போறன். எனக்கு ஒரு வேலை கிடைச்சால் கடைசி நான் படிக்காட்டியும் பரவாயில்லை தம்பி தங்கச் சியையாவது படிக்க வைக்கலாம்," என்று சொன்ன அவனில் ஒரு உறுதி வெளிப் பட்டிருந்தது.
இறைஞ்சும் விழிகளுடன் மகனை சின்னத்தம்பி பார்த்தான்,

Page 81
150
அது ஒரு இருள்கவியும் மாலை நேரம். வானச்சரிவு செம்மையாகிக் கொண்டு இருந்தது. கொக்கரித்துக் கொக்கரித்து கோழிகள் தாழ்ந்த மரக் கொப்புக்களில் ப்ாய்ந்து கொண்டிருந்தன.
கொட்டிலில் நின்ற ஆடு புழுதி கிளறியதால் மாலைப் பொழுது புழுதியாக மறைந்தது. அம்மன்கோயில் மாலை நேரப் பூசையின் மணியோசை கேட்டது. சின்னத்தம்பி யின் மனைவி மாட்டில் பால் கறந்து கொண்டு இருந் தாள் வேலியைப் பிடுங்கிக் கொண்டு வைக்கோல் லொறி ஒன்று நகர்ந்தது. இத்தனையையும் மீறி வெகுதூரத்தில் இருந்து அதிர்வுகள் கேட்டன.
பிரகாசமாக ஜொலிக்கும் கண்களுடன் சின்னத்தம்பி யின் மகன் தகப்பனையே பார்த்தான்.
“என்னர ராசா." என எதையோ கேட்பதற்கு முனைந்த சின்னத்தம்பி மேலும் கேட்க முடியாமல் தடுமாறினான்.
“ஐயா.நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பாட தேங்கோ.நான் வடிவாய் யோசிச்சுத்தான் இந்த முடிக்கு வந்தனான். தம்பி தங்கச்சியவையைத் தன்னும் நாங்கள் நல்லாய் படிப்பிக்க வேணும்,” என்று சொன்னான்.
சின்னத்தம்பி அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை. மகன் சொல்வதில் உள்ள நியாயத்தினைப் புரிந்து கொண்டான்.
இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். சின்னத் தம்பிக்கு வேதனை நெஞ்சை முட்டி மோதியது. மூத்த மகனை நினைக்கும் போது நெஞ்சில் பாரம் ஏற்றி விட்டது போன்ற தவிப்பு உருவானது.
எத்தனை வேலைகளுக்கு அப்பிளிக்கேசன் அனுப்பி இன்டர் வியூக்களுக்குப் போய் தெரிந்த ஆட்கள், பெரிய ஆட்கள் என்று சுழியோட்டங்கள் செய்தும்.எல்லாமே. வெறும் கணவாய்.கதையாய் முடிந்து விட்டன.

151
வேலை கிடைக்கும். வேலைகிடைக்கும் என இயல் பான எதிர்பார்ப்புடன் காத்திருந்து காந்திருந்து காலத் தைக் கடத்தியது தான் மிச்சம்.
புறச்சூழல் பாதிப்புக்கள் இருந்த போதும் சுற்றுப் புறத்து அவலங்கள் நெஞ்சத்தைக் கொடுமைப் படுத்திய போதும் அதைக் கருத்திற் கொள்ளாது தன் நெஞ்சத்தி னுள் அவற்றினை அமுக்கிக் கொண்டு தன் குடும்பத்தை நல்லாய் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற் காகவே முனைந்து நின்றேன்.
மரத்தடியின் நிழல் படர்ந்த தரை கூட நன்றாகச் சுட்டது. வயதான பெண்மணி கடுமையாக இருமத்தலைப் பட்டார். குந்தியிருந்த அனேகம் பேர் சோர்ந்து போய் இருந்தார்கள்.
சின்னத்தம்பிக்கு நாவரண்டு போய் இருந்தது. குளிர்ந்த தண்ணிர் குடித்தால் நல்லது போல இருந்தது.
தண்ணிர் குடிக்க சந்திக் கடை வரை போக வேண்டும். இந்தக் கொடிய வெய்யிலில் அதுவ்ரை போய் வருவது என்பது சங்கடமான காரியம். அதற்கிடையில் இவர்கள் கூப்பிட்டு விட்டால்..? என்ற யோசனையும் கூடவே எழுத்தது.
பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது போலும் சந்திக்கு அப்பால் இருந்த பாடசாலையில் இருந்து அணிதிரளும் மேகங்களாக மாணவர்கள் வீடுநோக்கி புறப்படத் தொடங்கி விட்டனர்"
திடீர் என றோட்டில் வாகனங்கள் முளைத்தன. மரத்தடியில் குந்தியிருந்தவர்களில் ஒருவர் மயங்கித் தரையில் சரிய அவரை ஏனையவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
வெறும் போத்தில் ஒன்றுடன் ஒருவர் விரைந்து சந்தியை நோக்கி ஓடினோர்.

Page 82
152 சின்னத்தம்பி நடுங்கும் கால்களுடன் எழுந்து அந்த மனிதரை அண்மித்தான்.
"பாவம் எத்தினை நாள் சாப்பிடாமல் இருந்துதோ மனிசன் இண்டைக்கும் விடிய வெள்ளண வந்திட்டுது.” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் ஒரு பெண்.
சின்னத்தம்பி சுற்றி நின்ற எல்லோரையும் பார்த் தான். எல்லோரும் ஒரே விதமான முகங்களுடன் தான் இருந்தனர் வயதான கிழவி கூட எழும்பி வந்தாள்.
"தம்பி.இரண்டு மணிக்கு மேல இருக்குமே" "ஒமெணை” என்றான் சின்னத்தம்பி. “இண்டைக்காவது t_חו fז &db விடுவங்களே.என்ரை பிள்ளையைப் பாத்து எத்தனை நாளாச்சு.” என்றாள். அழுகையுடன் அவள்.
சின்னத்தம்பிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, எதை சொல்வது எப்படிச் சொல்வது
"நானும் என்ரை மூத்தவனைப் பார்ப்பனே.” எனத் தனக்குள் கேட்டுக் கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தான்.
agGs, g if 21-05-89

11
ID6 QTJ 6)6OT
காலையில் பளீரென்று மென்பச்சையாக இருந்த செவ்வந்தியின் இலைகள் தளர்ந்து போய்க்காணப்பட் டன. மதிலோடு சரிந்திருந்த குரோட்டன்கள் சோம்பி யிருந்தன.
வேப்பமரக்கிளையில்இரண்டு காகங்கள் கவலையுடன் பதுங்கியிருந்தன. சமகால நிகழ்வுகளைப்போலவே வெய் யில் அகோரமாக எறித்தது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு கேற்றடிக்கு வர வெய் யிலின் வெம்மை உடலைச் சுட்டது. தகதகவென்று தெரு மின்னியது.
நேரம் பகல் பதினொரு மணி இருக்குமா? வெய்யில் இப்போது இப்படிப் பொசுக்கினால் திரும்பி வரும் போது எப்படியிருக்கும்?
வெளி விறாந்தைக் கதவடியில் நின்ற சின்னமகன் தளர்ந்து விழும் காற்சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டு டாட்டா காட்டினான்.
வெளியுலகத்து வெய்யிலைவிட எத்தனையோ மடங்கு வெம்மையைத் தினமும் அலட்சியமாக நெஞ்சில் தாங் கிக் கொண்டு வாய்க்கு ருசி படைக்கும் மனைவியும் அவ னோடு கூடநின்றாள்.
அவள் முகத்தில் வியர்வைத்துளிகள் முகிழ்ந்திருந்தன. “என்ன யோசிக்கிறியள்?” என்றாள் அவள். "th...... வெய்யிலாய் இருக்குதப்பா.g “எத்தனை தரம் சொல்லிப்போட்டன், குடையைக் கொண்டு போங்கோவன் எண்டு-" என்றாள் பதிலுக்கு,
வெ-10

Page 83
154 "குடை பிடிச்சுக்கொண்டு சைக்சிள் ஒடுறது கஷ்டம் அப்பா "
"என்னெண்டு மழைகாலத்திலை ஒடுறநீங்கள்." என்ற அவளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
அவளுக்குத் தெரியும் என் மனத்தைப் பற்றி. ஒரு ஆண் வெய்யிலுக்குக் குடை பிடித்துக் கொண்டு போவது என்பது? எல்லா ஆண்களும் குடையுடனா போகின்றார்கள். நான் மட்டும் குடையுடன் றோட் டால் போனால்? எத்தனைபேர் விண்ணாணமாகப் பார்ப் பார்கள். கொடுப்புக்குள் சிரிக்க மாட்டார்களா?
"என்ன மனிசரப்பா நீங்கள். ஏன் மற்றவைக்காகப் போகிறியள்? ஒண்டில் நீங்கள் வெய்யிலில போய்ப் பழக வேணும் அல்லது குடையைத் தொப்பியைத் தன்னும் கொண்டு போக வேணும்.”
அவள் சொல்லுவது நியாயம்தான், எல்லாப் பிரச் சினைகளையும் விளைவுகளையும் இறுதியாக சுமை தாங்கியாகச் சுமப்பவள், அவள்தான்.
வெய்யிலுக்குள் போய் வந்தால் அன்று முழுக்கத், தலை வலிக்கும், தலையைத் தூக்க முடியாது. தொடர்ந்து விடாமல் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே பல்லவிதான்.
நான் படும் பாட்டை உணர்ந்து துணைக்கு வருப வள் அவள்தான். பின் தூங்கி முன் எழுவது மட்டுமல்ல சகல வேலைகளுக்கும் ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டு என் தலை வலிக்கும் துணைவருவது என்றால் இலேசான காரியமா?
யாழ்ப்பாணத்துச் சுற்றுப்புறத்து சூழ்நிலை நாளொரு தன்மையும், பொழுதொரு தோற்றமுமாக இருக்கையில் வெளியில் போகும் அலுவல்களை இயன்ற வரை குறைத்துவிட்டேன். என்றாலும் பரீட்சை ரூபத் தில் வந்துவிட்டது உபத்திரவம்.

55
"தொடர்ந்து ஒரே கதிரையில் இருக்கிறியே. அலுக் கேல்னிலயே." என்று நண்பர்கள் கிண்டல் செய்ய.
“என்னப்பா.உங்களுக்குப் புறமோசன் ஒண்டும் இல்லையே” என் மனைவி கணைகள் எறிய, கடைசியில் களத்தில் இறங்கியா கினேன்.
பிரதிவாரமும் மாதம் கடந்து வரும் அரசாங்க கசட் பார்த்து உயர் பதவிக்கான பரீட்சைக்கு விண்ணப் பித்தாகி விட்டது.
அந்தப் பரீட்சைத் திகதி இந்தா இந்தா என்று பூதமாக வெருட்ட. பரீட்சைக்குத் தயார் செய்யவே இந்த சனி, ஞாயிறு பயணங்களில் வெய்யில் பிரச்சினை யும், பஸ்சில் போகலாம்தான். ஆனால் பஸ்சில் போகும் பழக்கத்தைக் கைவிட்டே கன காலமாகி விட்டது. பரீட் சைக்குப் படிக்கப்போகும் இடத்திற்குப் போய்ச் சேர இரண்டு பஸ் மாற வேண்டும். பிறகும் இறங்கி நடக்க வேண்டும். வெய்யிலுக்குள் சைக்சிளில் போவதே சங்கட மாக இருக்கும்போது. நடப்பதெப்படி?
தற்போதைய காலத்திய நிலையில் பஸ்ஸை நம்பிப் போக முடியாது. றோட்டால் போய் வரும் மினிபஸ்கள் சில வேலை ஒழுங்கைகள் வழியாகவும் சுழன்றடிக்க முனையும். பஸ்ஸேயில்லாமல் நடைக்குத் தாவ வேண்டி வரும். இப்படி எத்தனையோ " சிக்கல்கள் இருக்கும் போது பஸ்சில் எப்படிப் போக முடியும்? ஒவ்வொரு சனி, ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில்தான் இந்தப் பிரச்சினை களை கட்டும். ஏனைய நாட்களில் காலை யில் வேலைக்குப் போய் மாலையில் வேலையால் திரும் பும் வரை வெய்யில் பிரச்சினை இல்லை.
இரட்டை மாடிக் கட்டிடத்தில் சீமெந்துக் கூரை கொண்ட கீழ் மாடியில் ஃபான் காற்று கச்சிதமாக வீச, கிளுகிளுவென்று ஜன்னல் வழியே வேப்பங்காற்று சுகமாய் வர பைல்கள் நகராவிடினும் பொழுது கரைந்து விடும். பிறகு எப்படி வெய்யில் பிரச்சினை வரப் போகி ந9து?

Page 84
156 ஒரு தடவை துணித் தொப்பி சகிதம் புறப்பட்டால் அது கல்லாகத் தலையை அழுத்திற்று. தலையை யாரோ அமர்த்திப் பிசைவது போன்ற உணர்வு.
தலை வேறு வியர்த்துப் பேன் கடிப்பது போல கடித்துத் துளைத்துத் தலையைப் பிய்த்துப் பிடுங்க வேணும் போல இருந்தது.
தொப்பியைப் போட்டுக் கொண்டு போங்கோ என்று ஆலோசனை சொன்ன மனைவியை ஒரு வாட்டம் திட்டித் தீர்க்க முனைந்தது மனம்.
ஒரு வழியாக தொப்பியையும் பிடுங்கிக் கொண்டாகி விட்டது. திடுமென ஒருவகை சுதந்திர உணர்ச்சி வெம் மையாக இருந்தாலும் காற்றுப் பட்டவுடன் இதமாக இருந்தது. ஆனால் மறுபடியும் வெய்யில் தலையைப் பொசுக்கியது.
வீடு வந்து சேர தலையிடி களைகட்டி விட்டது. சகல பக்க வாத்தியங்களும் துணை சேர, நாளைவரை வேறு தொந்தரவுகள் தேவை இல்லை.
தொப்பி இல்லாமலே வந்து சேர்ந்து விட்ட என் னைக் கண்டதும் கோபமாகவே வந்த மைைவி “கண்ட றியாத நாகரீகம் பாக்கிறியள், தொப்பியைப் போட்டுக் கொண்டு வந்தால் என்னவாம். எப்படித்தான் கழுதை யாய்க் கத்தினாலும் உங்களைத் திருத்தேலாது" என்று வார்த்தைகளைத் தாழித்தாள்.
தலையிடி வருத்தம் ஒரு பக்கம். அவளின் திட்டுதல் மறுபுறமாகச் சேர்ந்து கோபத்தை உண்டாக்கியது. அவ ளைக் கோபித்து என்ன பிரயோசனம் என்று சமாளித் துக் கொண்டு படுக்கையில் சரிந்தேன்.
நான் கோபத்தைக் கைவிட்டாலும், மனைவி கை விடுவதாக இல்லை. கோபத்தை மாத்திரம் அல்ல வார்த்தையாடல்களைக் கூட என்னைத் துளைத்தெடுக் கத் தொடங்கி விட்டாள். “குடைபிடிக்க " வெட்கம் தொப்பி பே: நிறது நாகரிகம் இல்லை எண்டால்

157
இனிமேல் காலமை போய் பின்னேரம் வாங்கோ.நான் இரண்டு நேரச் சாப்பாட்டையும் சமைச்சுத்தாறன் கட்டிக் கொண்டுபோய் சாப்பிட்டு விட்டு ஆறுதலாய் வாங்கோ. மணிசர் ஒண்டில் தங்கடை சொந்தப் புத்தி யில நடக்கவேணும் அல்லாட்டி ஆரும் சொல்லுறதைத் தன்னும் கேட்க வேணும்.இரண்டும் இல்லாட்டி பிற கென்ன மணிசர்?”
கட்டில் தலைமாட்டில் நின்று அவள் புறுபுறுத் தாள். எழும்பி ஒரு தடவை அவள் வாயைப் பொத்தி இரண்டு அடி கொடுத்தால் என்ன? என்ற ஐடியாவும் வந்தது. அண்டைக்கு மாத்திரம் அல்ல, அவள் வாய் நீளும் அனேக தடவைகளில் இப்படியான ஒரு யோசனை வருகிறதுதான் என்றாலும் செய்ய முடிவ தில்லை. மனம் வராது.
தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு பதில் சொல்ல்ாமல் படுத்திருப்பதை சிறிது நேரம் பார்த் துக் கொண்டு நின்ற அவள் போய் குளிசையுடனும் கோப்பியுடனும் வந்தாள்.
அதற்கிடையில் என் நிலையை அவளுக்குப் புரிந் திருக்க வேண்டும். எனது கோபத்தைக் கரைக்க அவளும் கரையத் தொடங்கினாள்.
"இஞ்சருங்கோப்பா. எழும்புங்கோ" என்றபடி தலைமாட்டில் வந்து அமர்ந்தாள். அவளின் மிக நெருங்கிய அண்மை நன்றாகத் தெரிந்தது. இயல் பாக அவள் மேனி வாசம் சற்றுப் புளிசலான வாடை கொண்ட அவனது உடையின் மணம் சேர்ந்து இம்சைப்படுத்தியது.
"இஞ்சை. குளிசையும் கோப்பியும் கொண்டு வந்தி ருக்கிறன் எழும்புங்கோ.நீங்களும் எங்கடை சின்ன வன் மாதிரித்தானப்பா." என்றபடி கையினால் தலை மயிரைக் கோதினாள்.
அவள் விரல்கள் நெற்றியில் அலைந்தன.

Page 85
158
சட்டென்று நிலை குலைந்து போனேன். பஞ்சாப் பறந்த கோபத்தைத் தேடி நான் ஓடவில்லை. அவள் கைகள் தந்த சுகமான தழுவலினால் மெய் மறந்து போனேன் நிமிர்ந்து பார்த்தேன். அவள் விழிகள் பிர காசமாக ஜொலித்தன். பரவசம் கொப்பளித்தது.
அதன் பின்னர் இன்றைக்குத்தான் வெய்யில். நேரத் தில் புறப்பட்டது மாத்திரம் அல்ல குடைச் சங்கதியும் வேதாளமாக மீண்டும் முளைத்துள்ளது.
சைக்கிள் கேற்றைத் தாண்டவில்லை. தலையைச் சொறிந்தபடி மனைவியையும் தெருவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்க யாரோ ஒரு வயதான மனிதன் குடை பிடித்துக் கொண்டு நடந்து போனார்.
“அங்கை பாருங்கோவன், வெய்யிலுக்க குடைபிடிச்சுக் கொண்டு ஆட்கள் போயினம்தானே. நீங்கள்தான் கண் -றியாத வீண் கதை கதைச்சுக் கொண்டு இருக்கிறியள்"
நான் எதுவுமே பேசவில்லை.
“நில்லுங்கோ வாறன்" என்றபடி வீட்டுக்குள் ஓடினாள்.
"அம்மா. அம்மா." என்றபடி சின்னவனும் தாயின் பின்னால் விரைந்தான்.
வெய்யிலில் காப்பாற்றக் கூடிய ஒரு பெரிய குடையை கொண்டு வந்து நீட்டினாள்.
"உதையே கொண்டு போறது"
“பின்னை வேற எதைக் கொண்டு போகப் போறியள். இது எண்டால்தானே வெய்யிலுக்கு நல்லது.
"உந்தப் பெரிசைக் கொண்டு போறதைவிட பேசாமல் போகலாம்"
"அப்ப என்ன சின்னக்குடை கொண்டு வாறதே"
*ம்.' என்றேன் அரை மனத்துடன்,

159 மீண்டும் ஓடியே போனாள், சின்னக்குடையுடன் திரும்பி வந்தாள்.
"பிடியுங்கோ' அரைமனத்துடன் வாங்கியாகி விட்டது. "சரி.கவனமாய்ப் போட்டு வாங்கோ' என்றாள் மனைவி. −
ஆனால் நான் அசையவில்லை. ஏதோ ஒன்று மனதை சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது.
'பிறகேன் மினைக்கெடுறியள்.போட்டு வாங்கோ' என வார்த்தைகளால் தள்ளினாள்.
வேறு வழியில்லை. கையிற் குடையுடன் கேற்றைத் தாண்டி தெருவுக்கு வர வெய்யிலின் வெப்பம் தகித்தது.
வீட்டு வாசலில் நின்ற மனைவி விடாமற் பார்வை யினால் துளைத்துக் கொண்டு இருந்தாள். கடைசியில் அவள் வெற்றியும் கண்டு விட்டாள்.
நாற்பது வயதை எட்டியும் பார்க்காத நான், குடை பிடித்துக் கொண்டு சயிக்கிளில் பயணப்பட்டேன்.
தெருவில், சனநடமாட்டம் இல்லை. நல்லதுக்குத் தானோ, சந்தியில்தான் தேத்தண்ணிக் கடை வாசலில் நாலைந்து பேர் என்னையே பர்த்துச் சிரிப்பது போல இருந்தது ஒருவன் பெரிதாகச் சிரித்து விட்டு என்னவோ சொன்னது போலவும் தெரிந்தது.
அவர்கள் என்ன கதைத்தார்களோ? எதற்காகச் சிரித்தார்களோ? அதை ஏன் தூக்கி என் தலையில் போடவேண்டும். பிரதான தெருவிற்கு சைக்கிள் வந்தது. நம்ப முடியாத புதினமாக வெய்யிலுக்குக் குடையுடன் போவது இருந்தது. ஏதோ ஒரு மாயத்திரை பிடித்துக் கொண்டு போவது போல.
என்னைக் கடந்து போன மோட்டார் சைக் கிள் ஒன்று தன் வேகத்தைக் குறைத்தது "என்ன மச்சான்!" என்றான் அதில் வந்த கந்தசாமி.

Page 86
1 ԾՍ
பதில் சிரிப்புத்தான். “என்ன மழையே பெய்யுது" என்றான் அவன் மீண்டும் சிரிப்பு!! 'குடையோடை போக நான் ஒரு அம்மான் போறார் எண்டு நினைச்சன் பிறகுதான் உன்னைக் கண்டன். என்ன விசேஷம்?"
"தெரியாதே வெய்யில்” "ஒமடாப்பா. சரியான வெய்யில்தான் வரட்டே." என்றான் அவன் உண்மையைச் சொல்லியிருக்க மாட் டான்.
கட்டாயம் நாளைக்கு இவன் ஒவ்பீசில சொல்லிச் சிரிப்பான் என்ற யோசனையும் சட்டென்று அப்போது எழுந்தது.
திடுமென வெய்யில் குறைவது போலத் தெரிந்தது. வானத்தில் சில கருமுகிற் கூட்டங்கள் அசைந்தன. எதிரே அடிவானத்தில் இன்னும் திரளாக
சூரியன் பட்டென்று அதனுள் மறைந்திருக்க வேண் டும். வெய்யில் எங்கே போனது?
குடையைச் சுருக்குவதா? விடுவதா என மனப் போராட்டம் வெடித்தது என்றாலும் குடையைச் சுருக்க வில்லை. -
மப்பும் மந்தாரமுமாக இருக்கும் வேளையில் குடை பிடித்தால் பைத்தியக்காரன் என்று நினைக்க மாட்டார் களா? கடைசி மழையாவது பெய்ய வேண்டும். மழையும் இல்லை, வெய்யிலும் இல்லை என்றால் என்ன செய்ய
MosTuo?
மழை பெய்யாதா? அல்லது வெய்யில் வராதா? என்று வானத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
வீரகேசரி 25-03-1990


Page 87