கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீதியெல்லாம் தோரணங்கள்

Page 1
『』 『』
) 歴| || ||
!
 


Page 2

வீதியெல்ல்ம் குேறுணங்கள்
(நாவன்)
தாமரைச்சென்வி
மீரா பதிப்பகம், (40 ஆவது வெளியீடு) C -/s அன்டர்சன் தொடர்மாடி, பார்க் றோட் கொழும்பு 05.

Page 3
நூலின் பெயர்
665
ஆசிரியை
ஆசிரியை முகவரி:
முதற் பதிப்பு
பதிப்புரிமை
அச்சிட்டோர்
விலை
வீதியெல்லாம் தோரணங்கள்
நாவல் தர்மரைச்செல்வி
75 குமரபுரம், பரந்தன்
28.11.2003
மீரா பதிப்பகம்
3 C-/, அன்டர்சன் தொடர்மாடி, பார்க் வீதி, நாரஹேன்பிட்டி TP. 2584517, 2508250
ஈகுவாலிற்றி கிரபிக்ஸ்
315, ஐம்பெட்டா வீதி, கொழும்பு-13. தொபே 2389848
ரூபா 170/-

அமைதிப்படையென வந்தோரினால்
«ЭlfBштшшотіЈ அழிக்கப்பட்டவர்களுக்கு. இந்நூல்
9fuഞ്ഞു.

Page 4

என்னுரை
இந்த மண்ணில் இருபது வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு போர் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. ஒரு படைப்பாளியின் உணர்வும் சிந்தனையும் மொழியும் எழுத்தும் ஒன்று சேர்ந்து அந்த வலிகளை இலக்கியமாகப் பதிவு செய்து கொள்கிறது. அந்த அந்த காலத்தின் பிரதிபலிப்பாக இது அமைகிறது.
"வீதியெல்லாம் தோரணங்கள்" என்ற இந்த நாவல் இந்திய ராணுவம் இந்த மண்ணில் நிலை கொண்டிருந்த காலத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஏற்கனவே நொந்து போய் கிடந்த மக்கள் மீது அவர்களும் வந்து வேல் பாய்ச்சிய காலமது. ஓரிடத்தில் ஏற்படும் போரின் அனர்த்தங்களின் விளைவுகளை. அந்த வலிகளை. சுமந்தவாறு இன்னோரிடத்தில் வாழ்கின்ற மனிதர்களை இங்கே சந்திக்கலாம். அன்பும் பாசமும் உறவுகள் மீதான நேசிப்பும் துயர் கலந்த சுமைகளையே மனங்களுக்குத் தருகின்ற போர்க்கால அவலத்தின் சிறுதுளியாக இதைப் பார்க்கலாம்.
1989ம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டமும் வீரகேசரியும் இணைந்து நடாத்திய போட்டியில் இது இரண்டாம் பரிசு பெற்றது. 01.03.1992 இலிருந்து 03.05.1992 வரை வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராய் பிரசுரமானது.
இந் நாவலுக்கு பரிசு வழங்கிய யாழ் இலக்கிய வட்டம் அமைப்பினருக்கும் தொடராக பிரசுரித்த வீரகேசரி வாரவெளியீட்டுக் கும் இன்று நூல் வடிவமாக்குகின்ற கொழும்பு மீரா பதிப்பகத்தி னருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
வணக்கம்
75 குமரபுரம், - தாமரைச்செல்வி பரந்தன். 28.09.2003
(v)

Page 5
பதிப்புரைத் தோரணம்
ஈழத்து இலக்கியத்தின் பதிப்புத்துறையில் இதுவரை பல்துறை நூல்களையும் வெளியிட்டு காத்திரமான பங்கினை ஆரவாரமின்றி செய்து வரும் மீரா பதிப்பகத்தின் நாற்பதாவது வெளியீடே உங்கள் கையில் இருக்கும் தாமரைச் செல்வியின் வீதியெல்லாம் தோரணங்கள்' பரிசு நாவல், இலக்கிய ஆய்வு நலவியல், புனைகதை இன்னும் பல துறைகளைச் சார்ந்த, சம்பந்தப்பட்ட துறைகளின் துறை போன மூத்த இளைய எழுத்தாளர்களின் பலதரப்பட்ட ஆக்கங்களை நூலுருவாக்கி யுள்ளோம். ஆக்கிய படைப்புக்கள் நூலுருவம் ஆகாததால் எழுத்துலகின் ஈர்ப்பினை பெறாதிருந்த பல எழுத்தாளர்களை இலக்கிய அறிமுகமும் கணிப்பும் பெறச் செய்யும் முயற்சியில் கணிசமான வெற்றியைக் கண்டுள்ளது மீரா பதிப்பகம். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகள்கள் அளித்துவரும் ஒத்துழைப்பு எம் பணிக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. புனைகதைத் துறையில் பலதரப்பட்ட நூல்களை வெளியிட்ட நாம் நாவல் இலக்கியத்துறையில் நீண்டதோர் திட்டத்தின் இரண்டாவது முயற்சியாக தாமரைச் செல்வியின் நாவலை இலக்கிய உலகிற்கு உவகையுடன் அளிக்கிறோம்.
தாமரைச் செல்வி நாடறிந்த எழுத்தாளர். இன்று ஈழத்து பெண் எழுத்தாளர் வரிசையில் முன்னணியில் நிற்பவர். ஏலவே இரு சிறுகதைத் தொகுதிகளையும் நான்கு நாவல்களையும் நூல்வடிவில் தந்தவர். புனைகதைத் துறையில் பல பரிசுகளைப் பெற்றவர். ஆரம்பகாலத்தில் வன்னிமண் வாசனையை இலக்கியத்தில் வெளிக்கொணர்ந்தவர். போர்க்காலச் சூழலில் வன்னி மக்கள் முகம் கொடுத்த உயிருக்கே உத்தரவாதமற்று வாழ்ந்த அவலத்தை அம் மக்களின் ஒருத்தியாக இருந்து உயிர்த்துடிப்புடன் இலக்கிய கோலங்களாக ஆவணப் படுத்தியவர்.
(vi)

இந்நாவல் வட-கிழக்கு மக்களின் வாழ்வுக் கட்டமைப்பே உருக்குலைந்து, எந்நேரம் ஏது நடக்குமோ என்ற ஏக்க உணர்வு மலிந்திருந்த, மாறி மாறி சாவுகளும், நினைவஞ்சலிகளும், ஹர்த்தாலும், எப்பொழுது பார்த்தாலும் எந்த வீதியைப் பார்த்தாலும் தோரணங்களும், கழற்றப்படாத கறுப்புக்கொடிகளும் இருந்த சூழலில், இருக்கிற ஆமியில் பட்டது காணாது இன்னும் ஒரு ஆமி புகுந்து அட்டூழியம் செய்த கால கட்டத்தின் பகைப்புலத்தில் எழுதப்பட்டது. யாழ்ப்பாண மத்தியதரக் குடும்பத்தில் பிரச்சனை என்று வீட்டோடு இருக்காது எல்லா அலுவல்களும் உறவும் பரிமாறல்களும் நடைபெறும் போர்ச் சூழலில் கதை நகள்கிறது.
போர்க்காலச் சூழலுக்கு முகம் கொடுத்து வாழும் மக்களின் பல்வேறு உணர்வுகளையும் அவலங்களையும் சித்திரிக்கிறது இந் நாவல். நாவலாசிரியை வடபுல மத்தியவர்க்க மக்களின் வாழ்க்கை முறைகள், அபிலாசைகள், ஆசாபாசங்கள் இன்றும் செறிவு கொண்டிருக்கும் சீதனப் பிரச்சனை இவற்றையெல்லாம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மாதிரிவடிவமாக படித்த மத்தியதரவர்க்க இளைஞன் தெய்வேந்திரன். போர்ச்சூழலில் குடும்பத்தைப் பிரிந்து உழைப்புக்காகக் கொழும்பில் வாழும் ராஜேந்திரன், ஓய்வு பெற்றும் குடும்பத்தின் ஈடேற்றத்துக்காக இன்னும் உழைத்து வயதுவந்த பிள்ளைகளை கரைசேர்க்க முடியாத செந்தில்நாதன், பாசமலராக ஊமை உள்ளத்தின் ஏக்கத்தை சுவாசிக்கும் வடபுல பெண்ணின் பிரதிநிதியாக பாரதி இன்னும் ஏனைய பாத்திரங்களையும் தத்ரூப மாகப் படைத்துள்ளார். பெண் பாத்திரங்களின் உணர்வுகளை ஒரு பெண் எழுத்தாளரால்தான் திறம்படச் சித்திரிக்க முடியும் என்று எண்ணத் தோன்றுமளவிற்கு பாத்திர அமைப்பு அமைந்துள்ளது.
தேர்ந்தெடுத்த கரு. கதையம்சம், கதை கூறும் முறைமை ஆகியவற்றால் தாமரைச்செல்வி மீண்டும் தன்னை ஒரு தரமான நாவலாசிரியை என்பதை இந்நாவல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
(vii)

Page 6
எழுதப்போகும் பகைப்புலத்தையும், களத்துடன் சம்பந்தப் பட்ட மாந்தர்களின் பிரச்சனைகளையும் நேரில் பார்த்து உணர்வு பூர்வமாக உள்வாங்கி, ஆழமாக ஆணிவேர் வரை நோக்கி தெளிவு பெற்று பின் எழுதுவது. எடுத்துக்கொண்ட பிரதேசத்தில் நடமாடும் பாத்திரங்களை அக்களத்தில் தனித்துவத்துடன் படம் பிடிப்பது. சுற்றுச் சூழலை இயற்கையுடன் வர்ணிக்கும் பாணி, சமகால வாழ்க்கைப் படிமங்களை கதை நிகழும் சூழல் பின்னணியில் விபரிக்கும் பாங்கு போன்ற இன்னோரன்ன தாமரைச்செல்வியின் படைப்பாக்கும் இயல்புகளை தமிழ்நாட்டு பிரபல நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணனின் ஆளுமையுடன் ஒப்பிட்டு சமன்படுத்திப் பாராட்டி விதந்துரைக்கலாம்.
தாமரைச் செல்வியின் முன் உலகம் விரிந்துகிடக்கிறது. போர்க்காலச் சூழலில் ஏற்படும் அவலம் கதையம்சத்தின் ஆரம்பத்தில் கசிந்துவந்து இறுதியில் காட்டாறாகிறது. அறுந்து தொங்கிக் கொண்டிருந்கும் தோரணம் காட்டும் சோகம் நெஞ்சை நெருடுகிறது.
நல்லதோர் நாவலுக்கு கதையம்சம் முக்கியமானது என்பர். விறுவிறுப்பான சுவை யோட்டத்துடன் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடிய அருமையான நாவல் ஒன்றை இதோ படிக்கப் போகிறீர்கள். இனி விலக்குங்கள் தோரணத்தை
-புலோலியூர் க. சதாசிவம், மீரா பதிப்பகம்,
(viii)

விதியெல்ாைம் தேரணங்கள்
கொழும்பு நகரின் பரபரப்பான மாலைப்பொழுது, அலுவலகம் முடிந்து நூற்றி ஆறாம் இலக்க பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தான் தெய்வேந்திரன், அலுவலகங்கள் முடியும் நேரமாதலால் பஸ் நிலைய த்தில் ஆட்கள் நிறைந்து போயிருந்தார்கள்.
நாலேமுக்கால் மணிக்கு சுள்ளென்று வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. வியர்வையில் சேட்டு முதுகோடு ஒட்டிக்கொண்டது. உஸ் என்று கொலரை இழுத்து விட்டுக்கொண்டான். அலுவலகத்தில் பகல்முழுக்க மின் விசிறிக்கு கீழே இருந்து பணிபுரிவதால் வெளியே வந்ததும் வெய்யிலின் வெம்மை ஒரு படி அதிகமாய்த் தெரிந்தது.
அவனுடைய அலுவலகம் இரண்டாவது மாடியில் உள்ளது. வலதுபக்கமாய் இருக்கும் நீளநீளமான யன்னல்களைத் திறந்து விட்டால் அருகே உள்ள கடற்கரைக்காற்று சில் லென்று வீசும். யன்னல் வழியாய் காலிமுகத்திடல் கடற்கரையின் பரப்பு அழகாய்த் தெரியும். எத்தனை மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காத அழகு. அந்தக் காற்றின் இதம் தெருவுக்கு வந்ததும் மறைந்து போகிறது.
இப்போது சனங்களின் நெரிசலில் இன்னமும் அதிகமாய் வேர்க்கிறது. பஸ்ஸுக்கு காத்திருப்பதில் மனம் எல்லாம் அலுத்துப் போகிறது. ஒவ்வொருநாள் மாலையும் இதே அலுப்புத்தான்.
எல்லோரும் கைக்கடிகாரத்தையும் தெருவையும் மாறி மாறிப் பார்த்தார்கள். பெரிய கார்கள் அலுங்காமல் அசையாமல் வழுக்கிக் கொண்டு போய் வந்தன. சர் சர் ரென்று வரும் ஒவ்வொரு பஸ்ஸிலும் ஆட்கள் ஏறிப்போனார்கள். அப்படியிருந்தும் ஆட்கள் குறைந்த

Page 7
வீதியெல்லாம் தோரனங்கள்
பாடில்லை. தமிழும் ஆங்கிலமும் சிங்களமும் ஆட்களின் குரலில் கலவையாய்க் கேட்டது. பெண்களின் அலுத்த குரல். சிரிப்புக்குரல். தெய்வேந்திரன் ஒரு ஓரத்தில் நின்று சுற்றாடலை ஒரு வித ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதும் அவர்களின் முகங் களை ஆராய்வதும் சிலநேரங்களில் ரசனையான விடயமாய் அமைந்து விடுவதுண்டு. வழக்கமாய் பத்து நிமிடத்துக்கு மேலாய் பஸ்நிலையத்தில் நிற்க வேண்டிய அவசியம் வராது. அதற்குள் பஸ் வந்து விடும். புதிதாய் பளபளப்பாய் மினிபஸ்கள் வந்த பிறகு பயணம் கொஞ்சம் சுலபமாய் அமைகிறது. இன்றைக்கென்னமோ இத்தனை நேரம் நிற்கவேண்டி யிருக்கிறது.
அலுப்புடன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்ட அந்த வினாடி குண்டு ஒன்று வெடிக்கும் அதிர்வு காதை வந்து மோதியது. அடுத்த வினாடி சூழலில் ஒரு வித பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. திடுக்கிட்டு நின்ற சனங்கள் பயத்துடன் தெருவை அங்கும் இங்குமாகப் பார்த்தார்கள். குண்டு வெடித்தது சிறிது தூரத்தில்தான். ஆனாலும் அந்த அதிர்வு நெஞ்சின் ஆழம் வரை வந்து தாக்கியதில் பத்து நிமிடம் வரை அந்த பரபரப்பு அடங்காமல் இருந்தது.
என்ன நடந்தது என்ற கேள்வி தமிழில் ஆங்கிலத்தில் சிங்களத்தில் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
சமீப காலங்களாக கொழும்பு வரை வெடிச்சத்தங்களையும் குண்டுவெடிப்பு சத்தங்களையும் கேட்க நேரிடுகிறது. அவன் அமைதி யாகப் பார்த்துக்கொண்டு நின்றான். பதட்டம் குறைந்து சனங்கள் இப்போது இயல்பாக நின்றார்கள்.
பஸ்நிலையத்தை நோக்கி செந்தில்நாதன் வந்து கொண்டிருந்தார். வெள்ளைவெளேரென்று நரைத்த தலைமயிர், கொஞ்சம் கட்டையாய் பருமனான தோற்றத்தில் தடித்த கண்ணாடியுடன் சதா சிந்தனை தேங்கிய முகத்துடன் இருப்பார். அவன் தங்கியிருக்கும் வீட்டில் எதிர் அறையில் இருப்பவர்.

தாமரைச்செல்வி
என்ன தம்பி பஸ் வரலையே.
கேட்டுக்கொண்டே அவர் அருகில் வந்தார். பஸ் வந்திருந்தால் போயிருப்பனே. என்று சொல்ல நினைத்து
இன்னும் வரேலை' என்று சொன்னான்.
செந்தில்நாதன் ஓய்வூதியம் பெற்ற பிறகும் தனியார் கொம்பனியில் வேலைபார்க்கிறார். யாழ்ப்பாணத்தில் இருக்கும் மனைவி பிள்ளை களைப் பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார், இன்னும் இரண்டு பொம்பிளைப்பிள்ளையன் கலியாணம் செய்யாமல் இருக்குது கள். அதுகளுக்கு ஒரு வழி பிறக்கும் வரைக்கும் நான் உழைச்சுக் கொண்டிருக்கத்தானே வேணும், என்று அடிக்கடி சொல்லிக் கொண்டி ருப்பார்.
"ஒரு குண்டு வெடிச்ச உடன இவையள் பட்டபாட்டை பார்த்தீரே." ரகசியமாய் சொன்னார்.
"அங்க எங்கட சனங்கள் எந்தளவு சத்தங்களுக்குள்ள உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு வாழுதுகள் எண்டதை இவையள் ஒருக்கா எண்டாலும் நினைச்சுப் பார்க்கிறேலை. தனக்கு தனக்கு எண்டா சுளகும் படக்கு படக்கெண்டு அடிக்குமாம்.'
அவன் சிரித்துக் கொண்டு பேசாமல் நின்றான்.
"சத்தத்தின்ர அதிர்வை வைச்சுப் பார்த்தா கொள்ளுப்பிட்டிப் பக்கம் போல இருக்கு."
இப்போது பரபரப்பு அடங்கிப் போக சலிப்புடன் பஸ் வருகிறதா என்று தெரு நீளம் சனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"ஒரு ஆமியின்ர ஆக்கினை காணாதெண்டு இப்ப இன்னொரு ஆமியும் வந்து நிற்குது. எங்கபோய் எல்லாம் முடியப்போகுதோ தெரியேலை." பெருமூச்சு விட்டவர் திரும்பி "அஞ்சு மணியாகுது. என்ன.?" என்று கேட்டார் .
"ஒமண்ணை"

Page 8
வீதியெல்லாம் தோரணங்கள்
"உம்மடை கல்யாண அலுவல் எந்த அளவில இருக்குது. ஊருக்குப் போய் பொம்பிளை பார்த்திட்டு வந்தனிராம். எல்லாம் நிச்சயமே." அவன் ஒரு வினாடி தயங்கிவிட்டு:
"எப்பிடி அண்ணை உங்களுக்குத் தெரியும்" என்று கேட்டான்.
"இதெல்லாம் என்ன சொல்லக்கூடாத விசயமே. ராஜேந்திரன் சொன்னவன். உமக்கும் பொறுப்பு ஒண்டும் இல்லை. பிறகு ஏன் வீணாக இருப்பான். எல்லாம் நிச்சயம்தானே."
"நிச்சயமான மாதிரித்தான்."
"அதென்ன மாதிரித்தான் எண்டு இழுக்கிறீர். இந்தக் காலத்தில கல்யாணம் நிச்சயம் எண்டால் பின்போடக்கூடாது. அதுசரி. நீர் மாப்பிள்ளை. ஆனா பொம்பிளைப் பக்கம் உங்களை அவசரப்படுத் தேலையோ"
"அவவின்ர அண்ணா வெளிநாட்டிலயிருந்து இந்த மாதம் இலங்கைக்கு வாறார். அவருக்கும் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கு. அவர் வந்து கல்யாணம் செய்த பிறகுதான் எங்கட கல்யாணம்."
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், அவர் செய்த பிறகுதான் உங்கட நடக்க வேணும் எண்டு சட்டமே?"
அவன் மெளனமாய் நின்றான். மனதுக்குள் ஒருவித சங்கட உணர்வு. தமயன் கல்யாணம் செய்து வாங்குகின்ற சீதனத்தைத்தான் அவை எனக்கு தருகினம் என்ற உண்மையை சொல்ல முடியாத தவிப்பு.
ஒரு வித அவமான உணர்வு மனதைச் சூழ்ந்தது. நல்லவேளை ராஜேந்திரன் இதை அவரிடம் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டான்.
இப்போது தன் கல்யாணம் பற்றிய அவரது விசாரிப்பை விரும்ப முடியாதவனாய் நின்றான். தூர பஸ் வருகிறதா என்று தலையை உயர்த்திப் பார்த்தான். அவரும் விடாமல்;

தாமரைச்செல்வி
"அப்ப இனி தையில தான் வைப்பினம் போல." என்றார்.
"ஓம் போல இருக்கு. இப்ப சொல்ல ஏலாது."
"என்ர மகளுக்கு நானும் ஒரு இடம் பார்த்தனான், அமெரிக்கா விலயிருந்து வந்த பெடியன். இந்தா எண்டு கிட்டி முட்டி வந்திட்டுது. பிறகு குழம்பியிட்டுது. பொம்பிளை கூட வந்து பார்த்தவை. பொம் பிளைக்கு பல்லு கொஞ்சம் மிதப்பாம். வேணுமெண்டால் ஐம்பதினாயிரம் கூடக் குடுத்தால் பல்லு உள்ள போயிடுமே."
அவர் வேடிக்கை மாதிரிச் சொன்னாலும் மனதின் வேதனை குரலில் தெரிந்தது. படிச்ச உத்தியோகம் பார்க்கிற நல்ல குடும்பத்துப் பெடியள் கூட பொம்பிளை பார்த்திட்டு வேண்டாம் எண்டு சொன்னால் அந்தப் பிள்ளையின்ர மனம் என்ன வேதனைப்படும் எண்டு உணரு றேலை. உழைச்சு நல்லா இருக்கிறவை கூட சீதனரேட்டை குறைக்கி றேலை. சனம் போற வேகத்திற்கு எங்களை மாதிரி நடுத்தர ஆட்களால ஈடுகுடுக்க ஏலுமே. ஏன் தம்பி. உமக்குத் தெரிஞ்ச பெடியள் ஆரும் முப்பத்தைஞ்சு நாற்பது வயசுக்குள்ள இருக்கினமே. பிள்ளைக்கு இப்ப முப்பத்திரண்டு வயசாகுது. அடுத்தவளுக்கே இருபத்தெட்டு வயசு, எங்காவது பொருத்தமாய் இடம் சந்திச்சால் சொல்லும் என்ன." மிகவும் அக்கறையோடு சொன்னார்.
"அதுக்கென்ன. அறிஞ்சால் சொல்லுறன்."
சுற்றும் முற்றும் பார்த்து தனக்கு அறிமுகமான இன்னொருவருடன் செந்தில்நாதன் உற்சாகமாகக் கதைக்கத் தொடங்க அவன் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
தன்னுடைய கல்யாணக்கதையை அவர் கிளப்பி விட்டதில் அவனது மனம் ஒரு தடவை பாரதியை நினைத்துக் கொண்டது.
பெண் பார்த்த அன்று பாரதி குனிந்த தலையுடன் வந்தது. தேநீர் பரிமாறியது. அவர்கள் புறப்பட்டபோது அவள் இயல்பாய் வந்து நின்றது. ஒரு வினாடி அவன் பார்த்த அதேநேரம் அவளும் பார்த்தது.
சட்டென்று பார்வையைத் தாழ்த்திக்கொண்டது. வெறும் பார்வைதான்.
5

Page 9
வீதியெல்லாம் தோரணங்கள்
அதையே நினைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு சக்தி பெற்றுவிட்ட பார்வை அது.
அவன் எதிரே தெருவைப்பார்த்தான். நீலச் சேலையுடன் நடந்து வந்து கொண்டிருந்த பெண் பாரதியை நினைவு படுத்தினாள். இல்லை. பாரதியின் கண் இன்னமும் வடிவு. நிறமும் இன்னமும் அதிகம், பாரதி இப்படி பல்லுத் தெரிய சத்தமாய் சிரிக்கமாட்டாள்.
"அங்க எங்கட பஸ் வருகுது"
பஸ் வந்து நிற்க ஆட்கள் பாய்ந்து விழுந்து ஏற கடைசியில் செந்தில்நாதனை முன்னே விட்டு அவனும் படிக்கட்டில் தொற்றிக் கொண்டான். கொச்சிக்கடையில் அந்தோனியார் கோவில் வாசலில் தெய்வேந்திரமும் செந்தில்நாதனும் இறங்கிக்கொண்டார்கள்.
வீதியைக் குறுக்கே கடந்து எதிரே நீண்ட வீதியில் நடந்தார்கள். மாலைநேர நெரிசலில் ஜம்பட்டா வீதி திணறிக்கொண்டிருந்தது. இடைவெளி விடாமல் போய்க்கொண்டிருந்த வாகனங்கள். அதை விட நெருக்கமாய் நடக்கும் மனிதர்கள். தெருவோரம் கடை வாசல்களில் எறியப்பட்டிருந்த அழுகிய காய்கறிகள். பழங்களில் மிதித்து விடாமல் ஆட்களோடு மோதிக் கொள்ளாமல் கவனமாக நடந்து போனார்கள். கடைகளில் தமிழிலும் சிங்களத்திலும் பாடல்கள் அலறிக் கொண்டி ருந்தது.
"தம்பி ! இடி வந்து விழுந்தாலும் கூட சனங்களின்ர இயக்கம் மாறாது. என்ன இருந்தாலும் தலைநகரம் அல்லே. இருவத்திநாலு மணி நேரமும் பரபரப்புத்தான். குண்டு வெடிச்சு நாலுசனம் செத்துப்போச்சுது கள் எண்டு நாளைக்கு பேப்பரில நியூஸ் வந்தால் கூட அடுத்த பக்கச் சனங்கள் கவலைப் படப்போறதில்லை."
செந்தில்நாதன் மெதுவான குரலில் சொல்லிக்கொண்டே வந்தார். இவருக்கு எந்த நேரமும் எதையாவது கதைத்துக் கொண்டே இருக்க வேணும். இப்படிப்பட்ட மனிதருக்கு ராஜேந்திரன் தன்னுடைய கல்யாண விசயத்தைச் சொல்லிவிட்டானே என்ற ஆதங்கத்தில் தெய்வேந்திரன்
6

தாமரைச்செல்வி
மெளனமாய் நடந்து கொண்டிருந்தான்.
"தம்பி, உயிர் எண்டு பார்த்தால் எல்லாச்சனமும் ஒண்டுதான் ஆனால் மனம் மட்டும் இப்பிடியும் அப்பிடியும் வேறுபடுகுது. என்ன தம்பி பேசாமல் வாறிர்."
"அட. உம்மட நினைவு யாழ்ப்பாணத்துக்கு போயிட்டுது போல கிடக்கு" அவரது கேலியா. அக்கறையா. எது தொனிக்கிறது என்று தெரியவில்லை அவன் லேஞ்சியால் முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
வீதியிலிருந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பும் பாதையின் முனையில் செந்தில்நாதன் நின்றார்.
r
"இதில் நான் கொஞ்சம் மரக்கறியள் வாங்கிக் கொண்டு வாறன்.
"அப்ப நான் போகட்டா."
"ஓம் நீர் நடவும், நான் வாங்கிக் கொண்டு வாறன்."
செந்தில்நாதன் பெட்டிக்கடைக் கிழவனிடம் காய்கறி விலையைக் கேட்டு சண்டை பிடித்துக்கொண்டிருக்க அவன் திருப்பத்தில் இறங்கி நடந்தான், கொஞ்சம் குறுகலான பாதை, தொடராய் கட்டடங்கள், வீடுகளின் கதவுகள் தெருவிலேயே இருந்தன.
பாதை அருகில் தண்ணீர்க்குழாயிலிருந்து நீர் வடிந்து கொண்டி ருந்தது. அருகே இரண்டுபெண்கள் நின்று கதைத்துக் கொண்டி ருந்தார்கள். அந்த வரிசையில் அவன் தங்கியிருந்த வீடு கொஞ்சம் பெரியதாக இருந்தது.
வீட்டின் கதவு திறந்திருக்க அவன் உள்ளே போனான், நீளமும் அகலமுமான ஹோல், வரிசையாய் இரு பக்கமும் அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு குடும்பம், முன் அறையில் அவனும் ராஜேந்திரனும், செந்தில்நாதன் எதிர் அறையில் தனியே இருந்து தானே சமைத்து சாப்பிடுகிறார். அவன் தன் பையிலிருந்து திறப்பை எடுத்து தனது அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

Page 10
வீதியெல்லாம் தோரணங்கள் சிறிய அறை, எதிர் எதிர்ப்பக்கமாய் இரண்டு கட்டில்கள். யன்னலோரம் சிறிய மேசை, அதன் மேல் ஹீற்றரும் தேநீர் தயாரிக்கத் தேவையானவை அடைக்கப்பட்ட போத்தல்கள். இரண்டு டம்பளர்கள் இரண்டு கப்புகள், சுடுதண்ணீர்ப் போத்தல்கள் எல்லாம் இருந்தன.
மேசையின் மீது சிரித்தபடி ராஜேந்திரனின் 905 வயது மகன் திலீபனின் பெரிதுபடுத்தப்பட்ட புகைப்படம். போன வருடம் செப்டெம்பர் இருபத்தாறு பிறந்தவன், மேசைக்கு கீழே இருவருடைய சூட்கேஸ்கள், பிரயாணப் பைகள், தேநீர் மட்டும் இவர்கள் தயாரிப்பார்கள். மற்றப்படி சாப்பாடு எல்லாம் கடையில்தான்.
அவன் உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டுக்குப் பின்புறம் போய் குளியலறையில் கால்முகம் கழுவினான், துவாயால் முகம் துடைத்துக் கொண்டு அறைக்கு திரும்பிய போது ராஜேந்திரன் வந்து விட்டிருந்தான்.
"கெதியாய் டீ போடு தெய்வா. தலை இடிக்குது."
"நீ செய்த வேலைக்கு எனக்குத்தான் தலை இடிக்க வேணும், நீ என்னடா செந்தில்நாதனிட்ட என்ர கல்யாணம் பற்றி சொல்லியிட்டாய் அவர் இப்ப வீடு முழுக்க பத்த வைச்சிருப்பார்."
"இதில என்னடா. எல்லாம் நிச்சயமாச்சுதுதானே, நீ முதல்ல தண்ணியை கொதிக்கவை."
தெய்வேந்திரன் கப்பில் நீர் எடுத்து வந்து ஹீற்றரில் கொதிக்க வைத்து லக்ஸ்பிறே கலந்து தேநீர் போட்டு ராஜேந்திரனுக்கும் கொடுத்து தானும் குடித்தான்.
"ஏன் தலை இடிக்குது."
"இந்த கஸ்டம்ஸில வேலை செய்யிறது சரியான அலுப்பு தெரிஞ்ச ஆட்கள் வந்து மாறிமாறிப் பிடிச்சுப் போடுவினம், எல்லாம் கிளியர் பண்ணிக்குடுக்க வேணும். தெரிஞ்சவைக்கு மறுக்க ஏலாது. இண்டைக்கு
ஒருதரிட்ட நல்லாய் மாட்டி நான் பட்டபாடு."
ராஜேந்திரன் அலுப்புடன் சொல்லிவிட்டு கால்முகம் கழுவப்
8

தாமரைச்செல்வி
போக அவன் யன்னலை நன்றாகத் திறந்து வைத்தான்.
தெருவைப் பார்த்த யன்னல், இதன் வழியாக தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தால் பொழுதுபோவது தெரியாது.
சட்டென்று அவன் பார்வையில் ஒரு ஆச்சரியம், மாலையில் பஸ்நிலையத்தில் பார்த்த அந்த நீலச்சேலைப் பெண் தோளில் தொங்கிய பையுடன் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு வகையில் பாரதியை நினைவு படுத்தும் பெண்,
அவன் மேசையில் வைத்திருந்த தனது நாட்குறிப்பை எடுத்து விரித்தான். முன் பக்கத்தில் பாரதியின் வண்ணப் புகைப்படம், மல்லிகைச் செடியின் பக்கத்தில் நின்று புன்னகைத்துக் கொண்டிருந்தாள்,
கல்யாணப் பேச்சின் ஆரம்பத்தில் கல்யாணத் தரகள் இவர்களுக் குத் தந்த புகைப்படம் இது, அவன் தன்னுடன் கொண்டு வந்து விட்டான்.
அந்த முகமும் பார்வையும் சிரிப்பும் மனதை மென்மையாய் அழுத்தியது. வெறும் பார்வையில் ஒரு பெண் இத்தனை தூரம் தன்னைக் கவரக்கூடும் என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. ராஜேந்திரன் அறைக்குள் நுழைய அவன் பட்டென்று மூடி வைத்து விட்டான்.
"பரவாயில்லை. நீ பார்,"
கண்ணடித்துச் சிரித்தான்.
"இரவு பகலாய் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய், தமயனின்ர கல்யாணம் முடிஞ்ச பிறகு உங்கட கல்யாணம் நடக்கப்
போகுது. பிறகு ஏன் மற்றவைக்கு மறைக்க வேணும். ஏன் கலியாணம் நடக்காமல் போயிடுமோ எண்டு பயப்பிடுறியா"
அடிபட்ட பார்வையுடன் நிமிர்ந்தான் அவன்.

Page 11
2
அவனுடைய முகத்தைப் பார்த்ததும் ராஜேந்திரனுக்கு தன் தவறு புரிந்தது. "ச்சீசும்மா ஒரு பேச்சுக்கு சொன்னனான் விடு. எல்லாம் நல்லபடி நடக்கும்."
"இப்ப எல்லாம் மாறி மாறி பிரச்சனையள்தானே. யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குதோ எண்டு எந்த நாளும் ஏங்க வேண்டிக்கிடக்கு."
"நான் யாழ்ப்பாணத்தில நிண்ட ஒரு கிழமையும் நிலமை சரியில்லை. திலிப்பின்ர முதலாவது பிறந்த நாளைக் கூட சந்தோசமாய் கொண்டாட முடியேலை, இப்ப நினைக்கவும் மனம் பாரமாய்க் கிடக்கு, நாங்க எங்க போறம். எங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது எண்டு ஒண்டுமே தெரியேலை, ஏதோ நடக்கிறதைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டியது தான். ரேவதியையும் திலிப்பையும் நினைச்சால் மனதுக்கு கவலைதான். "நீ இங்க ஒரு ரூம் எடுத்து அவையளையும் கூட்டி வந்திருக்க
ff
லாம்.
"வயசு போன தாய் தகப்பனை விட்டிட்டு ரேவதியை கூட்டி வர ஏலாது. அதுகளும் பாவம் தானே. கொஞ்ச நாளைக்குப் பார்ப்பம், பேப்பர் இருக்குமோ தெரியேலை."
"நானும் இன்னும் பார்க்கேலை"
இருவருமாய் ஹோலுக்கு வந்தார்கள். திறந்து கிடந்த வாசல் புறக் கதவுகளின் அருகில் நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்கள். தனது அறைவாசலில் நின்று மிகவும் சுவாரசியமாக பக்கத்து அறை கதிரவேலு மாஸ்டருடன் கதைத்துக் கொண்டிருந்தார் செந்தில்நாதன்.
10

தாமரைச்செல்வி
"பாவம் நல்ல மனிசன், கவலையள்தான் ஆளுக்கு கூடிப்போச்சு, முப்பத்தைஞ்சு நாற்பது வயதில யாரையாவது அறிஞ்சால் சொல்லச் சொன்னார். மகளுக்கு பாக்கிறது ஒண்டும் சரிவருகுதில்லையாம். சொல்லிக் கவலைப்பட்டார். அந்த வயது வரை பெடியள் ஆரும் இப்ப கல்யாணம் செய்யாமல் இருக்குதுகளே? இருந்து பார்! எங்களில மாப்பிள்ளையஞக்கு சரியான பஞ்சம் வரப்போகுது. அப்பிடியும் இப்பிடியுமெண்டு இளம் தலைமுறையே அழிஞ்சு போயிட்டுது. மிச்சமாய் இருந்ததுகளும் எல்லாம் வெளிநாடுகளுக்கு எண்டு போயிட்டுதுகள். இன்னும் கொஞ்ச வருசங்களில் ஆறு பொம்பிளை யளுக்கு ஒரு ஆம்பிளை எண்ட வீதத்திலதான் நாங்கள் இருக்கப் போறம், அதாலதான் மாப்பிள்ளை வீட்டாரின்ர டிமாண்ட் கூடிப் போயிருக்கு, அதைக் கொண்டா இதைக்கொண்டா எண்டு, உள்ளவன் குடுப்பான் இல்லாதவன் என்ன செய்வான்? அவன்ர பொம்பிளைப் பிள்ளை கல்யாணம் செய்யிறேலையே." ஒரு வேகத்தில் ராஜேந்திரன் பேசிக்கொண்டு போக அவன் நெஞ்சில் எங்கோ ஒரு மூலையில் சுரீரென்று வலித்தது.
நிச்சயமாக இது ஒரு ஆழமான அழுத்தமான வலிதான்.
தனது கையாலாகாததனத்தினால் ஏற்பட்ட நிலமையா இது. அம்மா கண்ணாடியை ஒரு விரலால் உயர்த்திக் கொண்டு பாரதியின் அப்பாவுடன் பேசும் போது அவனும் தானே நின்றான். இரண்டு லட்சம் காசாகவும் இருக்கிற வீட்டை எழுதித்தரவேணும் என்றும் நகை நட்டு குறைவில்லாமல் போடவேண்டும் என்றும் அம்மா சொன்னபோது அவன் ஏன் பேசாமல் நின்றான். அம்மா நீ கேட்பது சரியில்லை என்று உறுதியாகச் சொல்ல ஏன் முடியாமற் போனது. சிறு வயதிலிருந்து அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாகவே வளர்ந்து விட்டதனால் இருக்கலாம். அப்பா இல்லாததால் அம்மாவே கண்டிப்புடன் தன் சொல் கேட்பவனாக அவனை வளர்த்து விட்டாள்.
என்றாலும் பாரதியின் அப்பா உறுதி சொல்லியிருந்தார். தனது மகன் சிறீதரனுக்கு நிச்சயம் செய்த கல்யாணம் நடக்கும்போது பெண்
11

Page 12
வீதியெல்லாம் தோரணங்கள்
வீட்டாரிடம் இரண்டு லட்சம் வாங்கித்தருவதாக அதனால் தான் அம்மா சம்மதித்தாள். அம்மா எப்போதுமே யாரையும் நம்புவதில்லை. குழந்தைகளாக அவர்கள் இருந்தபோதே அப்பாவை இழந்துவிட்டவள். பல சிரமங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து நிமிர்ந்த வள், சமூகத்திடமிருந்து வலிக்க வலிக்க நிறைய அனுபவங்களைப் பெற்றவள், அந்த அனுபவங்களே அவள் மனதை கடினமாக்கி விட்டதோ என்று அவ்வப்போது தோன்றுவதுண்டு.
பாரதியின் அப்பாவின் எளிமையான தோற்றமும் அமைதியான பேச்சும் எடுத்ததும் அவனைக் கவர்ந்துவிட்டது. தன் மகளுக்கு இந்த இடம் அமைந்து விட வேண்டும் என்ற பதைபதைப்பில் அவர் ஒவ்வொரு வார்த்தைகளையும் அமைதியாய் உறுதியாய் பேசிக் கொண்டிருந்தார். அவரது அந்தத் தவிப்பு அன்றைக்கே அவனை நெருடிக்கொண்டிருந்தது.
பெண்களைப் பெற்றவர்கள் எல்லோருக்குமே இதே தவிப்புத்தான் இருக்குமா..? அம்மாவுக்கு பொம்பிளைப் பிள்ளைகள் இல்லை. அண்ணாவும் அவனும்தான், அண்ணா தான் விரும்பிய பெண்ணை சீதனம் அவ்வளவு எதிர்பாராமல் கல்யாணம் செய்து கொண்டு சாவகச்சேரியில் இருக்கிறான். அண்ணிக்கு வீடும் நகைகளும் தான் கொடுத்தார்கள். அந்த ஆற்றாமையை அம்மா இப்போதும் சொல்லிப் புகைந்து கொண்டிருக்கிறாள். அண்ணி மிகவும் நல்லவள். எப்போதும் அம்மாவுடன் ஒத்து நடக்கவே முயல்கிறாள். அம்மாவின் சுடும் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் வந்து போகவே செய்கிறாள். அப்படியிருந்தும் அண்ணி மீது ஆயிரம் குற்றம் குறை சொல்வாள் அம்மா. அந்த ஆற்றாமைதான் இவனது கல்யாணத்தில் அம்மா இப்படி பிடிவாதமாய் நிற்கக் காரணமோ என்று யோசித்துக் கொண்டான்.
பாரதியின் தந்தையும் வற்புறுத்தலுக்கு பணிந்து ஒப்புக்கொண்ட தாய் தெரியவில்லை. சந்தோசமாய்த்தான் ஒப்புக்கொண்டிருந்தார். சிறீதரன் தொழில்நுட்பவியலாளனாய் சவூதியில் நல்ல கொம்பனியில் வேலை செய்கிறான். அவனுக்கு பெண் கொடுப்பவர்கள் நல்ல
12

தாமரைச்செல்வி
வசதியானவர்கள், அவர்கள் தாமாகவே மூன்று லட்சம் தங்கள் மகளுக்கு கொடுக்கிறார்களாம். அதில் இரண்டு லட்சம் சிறீதரன் தன் தங்கைக்கு கொடுக்கலாம் என்றும் சொல்லிவிட்டார்களாம். அதனால்தான் பாரதியின் தந்தையும் இவர்களிடம் தைரியமாக சொல்லி விட்டிருந்தார்.
கொஞ்சம் மன உறுத்தல் இருந்தாலும் அவர்களிடம் சீதனம் வாங்குவதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாரதியின் அக்கா திருமணமாகி யாழ்ப்பாணத்தில் இருக்கின்றா, அடுத்தது பாரதி தான் இருக்கிறாள். அதனால் அவர்களுக்கும் சீதனம் கொடுப்பதில் சிக்கல் இருக்காது. ஒரு தம்பி மூன்று வருடங்களுக்கு முன்பாக கோட்டையிலிருந்து இராணுவம் ஏவிய எறிகணை வீச்சுக்கு இலக்காகி இறந்து போனதாய் தரகள் சொல்லியிருந்தார், குடும்பத்தின் எல்லாப் பொறுப்பும் சிறிதரன் கையில்தான். எது எப்படியிருந்தாலும் இப்போது ராஜேந்திரன் வார்த்தைகளைக் கேட்ட போது மனதுக்குள் சுருக்கென்று வலிக்கத்தான் செய்தது.
அவனது முகமாற்றத்தைக் கண்டதும் ராஜேந்திரன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான். தனது வார்த்தைகள் அவனது மனதைப் புண்படுத்தியிருக்கக் கூடுமோ என்ற நினைவில் அந்தப் பேச்சை அத்துடன் விட்டு விட்டான்.
ராஜேந்திரன் பத்திரிகையை விரித்துக்கொண்டு படிக்கத் தொடங்கினான். திறந்திருந்த கதவு வழியாக தெய்வேந்திரன் தெருவைப் பார்த்தான்.
இந்தக் கிழமைக்குள் சிறீதரன் இலங்கை வருவதாக சொன்னார் களே, ஐப்பசியில் சிறீதரனின் கல்யாணம் நடந்தால் தங்களுடையதை தைமாதம் தான் வைப்பார்கள். எங்கே சுற்றினாலும் நினைவுகள் கடைசியில் பாரதியில் வந்து நின்றது. கல்யாணம் செய்ததும் பாரதியை இங்கே கூட்டி வந்து இருக்க வேண்டும். செந்தில்நாதனின் பக்கத்து அறையில் உள்ளவர்கள் இந்த டிசம்பருடன் மாற்றலாகி கண்டிக்குப் போகிறார்கள். அந்த அறையை தை மாதம் முதல் சொல்லி வைத்திருக் கிறான்.
13

Page 13
வீதியெல்லாம் தோரணங்கள்
ஐநூறு ரூபாய் வாடகை, சமையலையும் அறைக்குள்ளேயே செய்தாக வேண்டும். அங்கிருக்கும் ஏழு குடும்பத்துக்கும் குளியலறை கழிவறை ஒவ்வொன்றுதான் இருக்கிறது. சில நேரங்களில் சிரமப்பட வேண்டியும் நேரும் என்றாலும் இப்போதைக்கு கொழும்பில் இப்படி ஒரு அறை ஐநூறில் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம் தான்.
பாரதிக்கு பொழுதுபோவது தான் சிரமமாய் இருக்கும். நாள் S. முழுக்க அறைக்குள் இருக்க வேண்டி வரும். பக்கத்து அறைகளில் கதிரவேலு மாஸ்டரின் மனைவி சுபத்திராக்கா, கோமதி அன்ரி எல்லோரும் இருக்கிறார்கள். சனி, ஞாயிறுகளில் படத்துக்கு போகலாம், செல்லமஹால், கிங்ஸ்லி எல்லாம் நடை தூரம் தான், அந்தோனியார் கோவில், சிவன் கோவில், மாரியம்மன் கோவில் என்று செவ்வாய் வெள்ளி, ஞாயிறுகள் மாலை நேரங்களில் போகலாம். பஸ் எடுத்து காலிமுகத்திடல் போய் வரலாம். இருளும் வரை கடற்கரையில் இருந்து விட்டு ஏதாவது நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு வரலாம். எத்தனையோ எதிர்பார்ப்புக்கள் நெஞ்சின் ஆழம் வரை பரந்திருந்தன. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
இரவு ஏழு மணியான போது இருவரும் சேர்ட்டைப் போட்டுக் கொண்டு சாப்பிடப் புறப்பட்டார்கள். உள் பாதையில் தெரு விளக்குகள் மினுக் மினுக்கென்று மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. இன்னமும் குழாய் அருகில் பெண்கள் சத்தம் போட்டு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த சத்தம் மட்டும் அவனுக்கு பிடிப்பதில்லை. மூக்கு ஒழுக நிற்கும் சிறுவர்களின் முதுகில் பொத்பொத்தென்று அடிபோட்டு கலைத்து விட்டும் அப்படி என்ன கதை என்று அவனுக்கு புரிவதில்லை. இந்த நகரத்தின் இன்னொரு பக்கம் இந்த விதமாகவும் இதைவிட மோசமாயும் இருப்பது தெரிகிறது. ஏழ்மை, படிப்பின்மை, எல்லாவற்றோடும் இன்னொரு கூட்டமும் இங்கே வாழத்தான் செய்கிறது.
அகல வீதியில் ஏறியதும் பளிச்சென்ற வெளிச்சத்தில் சனங்களின் ஆரவாரம்.
"இண்டைக்கு கொஞ்சம் நடந்தாலும் பரவாயில்லை. யாழ்ப்பாணச்
14

தாமரைச்செல்வி
சாப்பாடு சாப்பிடவேணும். அமுதசுரபிக்கு போவமா? ஆனந்தனைக் கண்டது மாதிரியும் இருக்கும். கொஞ்சம் உப்புப் புளிப்பாய் சாப்பிட்டது மாதிரியும் இருக்கும்." என்றான் ராஜேந்திரன்.
"ஒமடாப்பா நாக்கே செத்துப்போச்சு எப்படித்தான் உப்பு புளிப்பில் லாமல் இந்தச் சனங்கள் சாப்பிடுதுகளோ. ஆனந்தனிட்ட ஏதாவது அலுவலே.?"
"அப்படி அலுவல் எண்டு ஒண்டும் இல்லை. போன கிழமை ஊருக்கு போன போது அவன்ர தாய் தங்கச்சியவையை பார்த்தனான். சொன்னால் சந்தோசப்படுவான். இங்க சாப்பாட்டுக்கடையில நிற்கிறதுகள் ஊருக்கு அடிக்கடி போய் வர ஏலுமே.?"
அந்த இரவு நேரத்தில் குளிர்காற்றை எதிர்கொண்டபடி ஆறுதலாய் நடப்பது சந்தோசமாகவே இருந்தது. அமுதசுரபி ஓட்டலுக்குள் நுழையும் போது வாசலில் கொத்து ரொட்டி வாசம் மூக்கைத் துளைத்தது. அநேகமாய் மேசைகள் நிறைந்து போயிருந்தன. முன்பக்கம் இருந்த முதலாளி "என்ன தம்பி சுகமோ ஊர்ப்பக்கம் போகேலையா?" என்று வரவேற்றார். "போனகிழமைதான் போயிட்டு வந்தனான்" என்றவாறே சிறிது நேரம் ஊர்விடயம் கதைத்துக்கொண்டிருந்தான். ராஜேந்திரன் அவனுடைய ஊர்க்காரர்." நானும் ஊர்ப்பக்கம் ஒருக்கா போய் வர வேணும் தம்பி, அந்தா போய் அங்க இருங்கோ."
அவர்கள் சுவர்ப்பக்கமாய் இருந்த மேசையில் போய் அமர்ந்து கொண்டார்கள். பலவித சாப்பாடுகளின் கலவையான வாசனை பசியை இன்னும் அதிகமாகக் கிளப்பி விட்டது.
எங்களை கண்டா ஆனந்தன் வந்திடுவான். ஆளைக் காணேலை. சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னான் ராஜேந்திரன்.
அப்போதுதான் கறிக் கிண்ணத்துடன் உள்ளே வந்த ஆனந்தன் இவர்களைக் கண்டதும் சந்தோசத்துடன் ஒரு கையை உயர்த்தி அசை
த்து விட்டு எதிர் மேசையில் கிண்ணத்தை வைத்து விட்டு வந்தான்.
"எங்க கன நாளாய் உங்களைக் காணேல்லை."
15

Page 14
வீதியெல்லாம் தோரணங்கள்
"ஊருக்குப் போய் போனகிழமைதான் வந்தனான்." "ஊருக்குப் போனனீங்களோ.." சட்டென்றுஅவன் முகம் மலர்ந்தது. "அங்க என்ன விசேசம்? அட. அதுக்கு முதல் என்ன சாப்பிடப் போறீங்கள் சொல்லுங்கோ." என்றான்.
0.
0
16

3
26losis போய் வந்ததாய் சொன்னதுமே ஆனந்தனின் முகம் மலர்ந்த விதத்தை தெய்வேந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். தன் வீட்டாரைப் பற்றி விசாரிக்கும் ஆவல் அந்தக் கண்களில் இருந்தது.
"முதல்ல சாப்பிடுங்கோ. பிறகு கதைப்பம். என்ன கொண்டு வாறது புட்டு, இடியப்பம், சோறு."
"சோறு சாப்பிடுவம் கொண்டு வா"
அடுத்த நிமிடம் இலை கொண்டு வந்து விரித்து சோறும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான்.
"கறி என்ன வேணும், கோழி, நண்டு, றால், கணவாய், மீன்."
"மீன் போதும்." பெரிதாய் மீனும் போட்டு குழம்பும் விட்டு மீன் பொரியலும் வைத்தான். அவர்கள் சாப்பிடத் தொடங்க ஆவலோடு கேட்டான்.
"சொல்லுங்கோ அண்ணை ஊரில எல்லாரும் எப்பிடி இருக்கினம். ஊர்ப்பக்கம் போய் நாலைஞ்சு மாதமாச்சு. தீபாவளிக்கும் போகநேரம் வருகுதோ தெரியேலை. இல்லையெண்டால் பொங்கலுக்குத்தான்." அவன் முகத்தில் ஒருவித ஏக்கம் தெரிந்தது.
"ஊருக்கென்ன நல்லாய் இருக்கு அம்மன் கோயில்ல வெள்ளிக் கிழமை உன்ர அம்மாவையும் தங்கைச்சியவையையும் கண்டனான்.
உன்னைப் பற்றித்தான் அம்மா கேட்டவா."
ஆனந்தனின் முகம் மலர்ந்தது.
17

Page 15
விதியெல்லாம் தோரனங்கள்
"அம்மா வேற என்ன கதைச்சவ?"
கண்கள் மின்னக் கேட்டான்.
"உன்ர அக்காவுக்கு ரீச்சிங் ஊரோட கிடைச்சிருக்காம், தாங்கள் எல்லாரும் சுகமாய் இருக்கிறம் எண்டு சொல்லச் சொன்னவ."
"அம்மாட்டயிருந்து மூண்டு கிழமையாய் கடிதம் வரேலை. ஏதோ சுகமாய் இருந்தால் போதும். தம்பியவையைக் கண்டனீங்களே? கண்டபடி ரவுணுக்கு போகாதேங்கோடா எண்டு கடிதம் போட்டனான். இங்கயிருந்து அவையளை நினைக்க ஒரே பயமாக்கிடக்கு."
"நான் காணேலை ஆனந்தன். ஆனா சுகமாயிருக்கினம் எண்டு அம்மா சொன்னவ. நானும் ஒரு கிழமைதான் நிண்டனான்."
"ஒ. உங்கட மகன் திலீபனின்ர முதலாவது பிறந்த நாளல்லே. அதுக்குத்தான் போயிருப்பீங்கள்."
அவன் ஞாபகத்தில் வைத்திருக்கிறானே என்று ராஜேந்திரன் வியப்போடு பார்த்தான். ん
"வடிவாய் சாப்பிடுங்கோ. நண்டுக் குழம்பு விடுறன்."
நண்டுக் குழம்பு நிறைய ஊற்றினான்.
"சோறு தரட்டுமா?"
"வேண்டாம், போதும்."
"உங்களுக்கு - ?"
"ஊஹoம்."
சாப்பிட்டு கை கழுவி ஆனந்தனிடம் சொல்லிக் கொண்டு வாசலுக்கு வந்து காசு கொடுத்தார்கள். இவர்கள் வெளியே வருவதை உள்ளே நின்றபடி ஆனந்தன் பார்த்துக்கொண்டிருந்தது இவர்கள் மனதை அழுத்தியது. நடந்து கொண்டே ராஜேந்திரன் சொன்னான்.
18

தாமரைச்செல்வி
"ஆனந்தனை நினைக்க எவ்வளவு பாவம், வீட்டுக்கதை கதைச்ச உடன கண்ணெல்லாம் கலங்கியிட்டுது பார்த்தியே."
"உழைப்புக்காக மாசக்கணக்கில வீட்டை விட்டு பிரிஞ்சு இருக்க வேண்டிக்கிடக்கு. மனம் வேதனைப்படும்தானே."
ஆனந்தன்ர குடும்பம் சரியான கஸ்டப்பட்ட குடும்பம் தான். தகப்பன் இல்லை. யாழ்ப்பாணத்துக்கு அலுவலாய் போனவர் திரும்பி வரேலை. என்ன நடந்தது ஏது நடந்தது எண்டு ஒண்டும் தெரியாது. ரெண்டு வருசமாச்சு. இது பெரிய கொடுமை என்ன நடந்தது எண்டு தெரியாமல் இருக்கிறது. இனி திரும்பி வருவர் எண்ட நம்பிக்கையும் அதுகளுக்கு குறைஞ்சிட்டுது. நான் ஊருக்கு போனால் இவன்ர தாய் இவனைப் பற்றி விசாரிக்க வந்திடுவா. பிரச்சனையளுக்க அதுகள் சரியாய் கஸ்டப்பட்டிட்டுதுகள். பாவம் அம்மாவைக் கண்டனான் எண்ட உடன அவன் சந்தோசத்தில் எங்களுக்கு நண்டுக் குழம்பை அள்ளி அள்ளி விட்டதை."
"அது சரியடா. மூண்டு வோரண்டோட நாங்கள் வருசத்துக்கு மூண்டு தரம்தானே ஊருக்குப்போய் வாறம். ஆனந்தன் போல ஆட்கள் அடிக்கடி போய் வர ஏலுமே."
"இவன் வருசத்துக்கு ரெண்டு தரம் கூட ஒழுங்காய் வாறேலை எண்டு தாய் சொல்லிக் கவலைப்பட்டா. ஊரில் என்னைக் கண்டாலே தாய் மனிசி ஆனந்தனைக் கண்டதுமாதிரி சந்தோசப்படும், பாவங்கள்."
வீட்டுக்கு திரும்பிய போது ஒன்பதரை மணியாகி விட்டிருந்தது. ஹோலுக்குள் கலகலவென்று சத்தமாய் இருந்தது.
"என்னடா நிறைய விசிட்டர்ஸ் வந்திருக்கிற மாதிரி தெரியுது." ஏழெட்டுப் பெண்கள் பிரயாணக் களைப்புடனும் கனமான பைகளுடனும் நின்று கொண்டிருந்தார்கள்.
செந்தில்நாதன் "அறைக்குள்ள எல்லாத்தையும் கொண்டு போய் வச்சிட்டு கால்முகம் கழுவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிக்
19

Page 16
வீதியெல்லாம் தோரணங்கள்
கொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும்;
"எனக்குத் தெரிஞ்ச பிள்ளையஸ்தான், டீச்சிங் இன்ரவியூக்கு
வந்திருக்கினம்" என்று சொன்னார்.
"றெயின்லயே வந்தனிங்கள்" ராஜேந்திரன் கேட்டான்.
"ஓம் எட்டேமுக்காலுக்குத்தான் றெயின் வந்து சேர்ந்தது."
ஒரு பெண் அலுப்புடன் சொன்னாள்.
"பிள்ளையஸ் போய் கால் முகம் கழுவியிட்டு வாங்கோ."
அந்தப் பெண்கள் தங்கள் பொருட்களை செந்தில் நாதனின் அறைக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டு பின்பக்கமாய் துவாய் களுடன் போனார்கள்.
"தெரிஞ்ச பிள்ளையஸ்தான். தங்கிறதுக்கு வேற இடம் இல்லையாம். எனக்கு சிநேகிதமான ஒருத்தர் கூட்டி வந்து விட்டிட்டுப் போறார்"
"எப்பவாம் இன்ரவியூ?"
"நாளைக்காம், இன்ரவியூ முடிஞ்ச உடன நாளைக்கு இரவு றெயினில ஊருக்குப் போயிடுவினம், ஒருநாள் நிற்கிறதுக்கு இந்தளவு பெரிய பாய்க்கோட வந்திருக்கினம். இப்ப ஒரு பிரச்சினை. நான் ஹோலுக்குள்ள படுப்பன். அறையுக்குள்ள அந்தப் பிள்ளையளை படுக்கவிடலாம். எல்லாரும் படுக்க அறையுக்க இடம் காணாது. அதுதான் என்ன செய்வம் எண்டுயோசிக்கிறன்."
"எங்களின்ர அறைக்குள்ளயும் வேணுமெண்டால் படுக்கட்டும், நானும் ராஜேந்திரனும் ஹோலுக்குள்ள படுப்பம்."
"அப்படியெண்டால் சரி. உங்களுக்கு பரவாயில்லையா."
செந்தில்நாதன் தன் அறைக்குப் போனார். அந்தப்பெண்கள் உடைமாற்றி முகம் கழுவி பளிச்சென்று ஹோலுக்குள் வந்தார்கள்.
"இந்தப்பிள்ளையஸ் இந்தப் பேப்பரை உடுப்புக்களை சுத்திக்
2O

தாமரைச்செல்வி
கட்டி கொண்டு வந்திட்டுதுகள். என்ன அநியாயம் பாருங்கோ."
செந்தில்நாதன் உதயன் பத்திரிகையை விரித்துக் காட்டினார், அதன் நடுப்பக்கத்தில் ஒன்பது பேரின் படங்களும் செய்தி களுடன் வந்திருந்தது.
"யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குள்ள இந்தியன் ஆமி நுழைஞ்சு கண்டபடி சுட்டதில டொக்டர்களும் நேர்ஸ் மாரும் அங்க வந்து படுத்திருந்த வருத்தக்காரருமாய் ஒன்பது பேர் செத்துப் போச்சினமாம். அவையின்ர படங்கள்தான் வந்திருக்கு எங்கயிருந்தோ வந்தவங்கள் எங்களுக்கு செய்த அநியாயத்தை பாருங்கோ."
படங்களைப் பார்க்க கவலையாக இருந்தது.
"ஆஸ்பத்திரிக்குள்ள போய் சுட்டாங்களே, அப்ப. எங்கதo, எங்களுக்கு பாதுகாப்பு"
"பிள்ளையஸ் ஏதும் சாப்பிட்டீங்களோ? அல்லது ஏதும் எடுப்பிக் கட்டோ?"
செந்தில்நாதன் கேட்டார்.
"றெயினுக்குள்ள சாப்பிட்டிட்டம்." "அப்ப இருங்கோ, டீ போடுறன்."
"ஐயோ, வேண்டாம்."
அவர்கள் மறுத்தார்கள், தோள்களை குலுக்கிக்கொண்டு "எங்களால உங்களுக்கு கரைச்சல்" என்றார்கள். அப்படிச்சொல்லியும் செந்தில்நாதன் தேநீர் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார், "தாங்ஸ்" சொல்லி எடுத்துக் குடித்தார்கள்.
"யாழ்ப்பாணத்திலை என்ன மாதிரி, சரியான பிரச்சனையள் போல கிடக்கு."
ராஜேந்திரன் பத்திரிகையை மடித்துக்கொண்டே கேட்டான்.
21

Page 17
வீதியெல்லாம் தோரணங்கள்
"அய்யோ. இண்டைக்கு நாங்கள் வெளிக்கிடுற நேரம் வெடிச் சத்தம் கேட்டது. என்ன நடந்தது எண்டு தெரியேலை. வழியிலயும் சரியான செக்கிங், ஆனையிறவில ஒரு மணித்தியாலம் மறிச்சு வைச்சிட்டாங்கள்."
சிவப்புச் சட்டைப் பெண் அவசரமாய் சொன்னாள்.
"ஏன் ஏதாவது பிரச்சினை நடந்ததா?"
"என்னவெண்டு தெரியேலை. ஏதோ நடந்திருக்கவேணும். ஆக தூர இடத்து பஸ்கள் தான் நேற்றைக்கும் இண்டைக்கும் ஓடினது. ஒரு காகம் குருவி ரோட்டில இல்லை. கடையள் ஸ்கூலுகள் எல்லாம் பூட்டுத்தான். சிலநேரம் இங்க வர ஏலாமல். போயிடுமோ எண்டு கூட பயந்து போனம்."
"ஏன் பிள்ளை எந்தப்பக்கமாய் வெடிச்சத்தங்கள் கேட்டது."
செந்தில்நாதன் குறுக்கிட்டுக் கேட்டார்.
"கச்சேரிப் பக்கமாய்த்தான் கேட்டது. இந்தியன் ஆமி சுத்தி வளைச்சு ஏதோ சண்டை எண்டு பிறகு சனம் கதைச்சுதுகள். பஸ் எல்லாம் சுத் தித் தான் வந்தது." கதைகளை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த தெய்வேந்திரன் "கச்சேரி" என்றதும் திக் கென்று நிமிர்ந்தான், பாரதியின் வீடு கச்சேரிக்குப் பக்கத்தில் தான்.
"கச்சேரிக்குப் பக்கத்திலயா. என்ன பிரச்சனையாம்."
"வடிவாய் தெரியேலை, ஆமி சுத்தி வளைச்சு சண்டையாம்."
"நீங்கள் கச்சேரியடியிலயா இருக்கிறனிங்கள்."
"கொஞ்சம் தள்ளி இருக்கிறம். ஆனா பக்கம்தான்." இவளிடம் பாரதியைத் தெரியுமா என்று கேட்கலாமா என்று
நினைத்தான். செந்தில்நாதன் கூடவே நின்றது தயக்கத்தைத் தந்தது. ராஜேந்திரனை ஓரக்கண்ணால் பார்த்தான்.
22

தாமரைச்செல்வி --m-
"உங்களுக்கு சோமசுந்தரம் என்று கச்சேரிக்குப் பக்கத்தில
இருக்கிறார் தெரியுமா? இப்ப பென்ஷனில் இருக்கிறார். சிறீதரன் என்று
மகன் சவூதியில்." அவன் சார்பில் ராஜேந்திரன் கேட்டான்.
அந்தப் பெண் முகம் மலர மற்றப் பெண்களைப் பார்த்து.
"பாரதியின்ர அப்பா தான்." என்றவள் இவர்களிடம் திரும்பி "ஓ, தெரியும். அவையள் எங்கட தூரத்துச் சொந்தம் தான். ஏன் கேட்டனிங்கள்" என்றாள்.
"இல்லை சும்மா கேட்டனான். அவையளின்ர பக்கம் தான் பிரச்சினையோ எண்டதால விசாரிச்சனான்."
"ஆனா பிரச்சனையள் வரும் பிறகு அடங்கிப்போகும், இதெல் லாம் பழகிப் போச்சு. பிரச்சினை வருவது எண்டு வீட்டுக்குள்ளயும் இருக்க ஏலாது. எல்லா அலுவலும் நடக்குது."
"நேரமாகுது பிள்ளையஸ். படுங்கோ." செந்தில்நாதன் குரல் கொடுத்தார். ராஜேந்திரனும் தெய்வேந்திரனும் தங்கள் படுக்கையை ஹோலுக்குள் விரித்துக் கொண்டார்கள், தெய்வேந்திரன் ஹோல் யன்னலை நன்றாக திறந்துவிட்டான். சேர்ட்டை கழற்றி கதிரையில்
போட்டான்.
"யன்னலுக்கு பக்கத்தில் சேர்ட்டை வைக்காத சாமத்தில ஆராவது தடியை விட்டு அடிச்சுக் கொண்டு போயிடுவாங்கள்."
கதிரையை நகர்த்தி இந்தப் பக்கமாய் வைத்தான். அறைக்குள் பெண்களின் கதையும் சிரிப்பும் சத்தமாய்க் கேட்டது.
"என்னதான் இந்தப்பிள்ளையஸ் கதைச்சுச் சிரிக்குங்களோ?" என்றபடி செந்தில்நாதனும் அவர்களுக்குப் பக்கத்தில் தனது பாயை விரித்தார்.
"நான் நாளைக்கு லீவு போட்டிட்டு இந்தப் பிள்ளையளை இன்ரவியூக்கு கூட்டிப்போகவேணும். அப்பனே முருகா.
23

Page 18
-வீதியெல்லாம் தோரணங்கள் நீளமான கொட்டாவி விட்டுக்கொண்டு திரும்பிப் படுத்தார்.
ராஜேந்திரன் நினைவு வந்தவனாய் சொன்னான்.
"நாளைக்கு நான் எயாப்போட்டுக்கு டியூட்டிக்கு போக வேணு மடா. நாலைஞ்சு நாளுக்கு டியூட்டி போட்டிருக்கு."
"எத்தினை மணிக்குப் போகவேணும்."
"ஏழு மணிக்குள்ள வெளிக்கிட்டால் காணும்."
ராஜேந்திரன் பாயில் படுத்துக்கொண்டான்.
"நாங்கள் இங்க கிடக்கிறம். யாழ்ப்பாணத்தில என்னென்ன நடக்குதோ. மனம் நிம்மதியில்லாமல் கிடக்கு ஒரு சின்ன வெடிச்சத்தம் தூரக்கேட்டாலும் திலிப் பயந்து அழத்தொடங்கி யிடுவானாம். பிஞ்சு மனதிலே பய உணர்ச்சி எவ்வளவு ஆழமாய் பதியுது பார். அங்க யாழ்ப்பாணத்தில் மாறி மாறி சாவுகளும் நினைவஞ்சலியும் ஹர்த்தாலும் தானே. எப்ப பார்த்தாலும் எந்த ரோட்டைப் பார்த்தாலும் தோரணம்தான் கட்டியிருக்கும். கறுப்புக்கொடி கழட்டப்படுறதே இல்லை." ராஜேந்திரன் கவலையோடு சொல்லிக்கொண்டு போனான்.
"போதாததுக்கு செக்கிங் எண்டு மனிசற்ர உயிரை எடுக்கிறாங்கள். எங்கயும் நினைச்ச உடனயும் போய் வர ஏலாது. எந்தநேரம் எது நடக்குமோ எண்டு செத்துப்பிழைக்கிற வாழ்க்கை."
தெய்வேந்திரனுக்கும் மனம் குழம்பியிருந்தது. நித்திரை வர வில்லை. திறந்திருந்த யன்னல் வழியாக தெரு விளக்கின் வெளிச்சம் வந்து ஹோலில் பரவியது. தெளிந்த வானமும் அரைவட்ட நிலவும் யன்னல் வழியாக தெரிந்தது.
கச்சேரியடியில் பிரச்சனை என்ற செய்தியால் பாரதியின் நினைவு கவலையுடன் மனதை வந்து நிரப்பியது. இந்த அரைகுறை வெளிச்சத் தில் பாரதியின் புகைப்படத்தை ஒருதடவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. வெகுநேரத்தின் பின் மெலிதாய் வீசிய காற்றில் நித்திரை வந்து சுகமாய் அவனை அழுத்தியது.
24

தாமரைச்செல்வி
பDறுநாள் ஏழுமணியளவில் ராஜேந்திரன் புறப்பட ஆயத்த மானாள். இரண்டொரு உடுப்புக்கள் அடங்கிய பிரயாணப் பையைத் தோளில் போட்டுக் கொண்டு அவனைப் பார்த்தான்.
"தெய்வா! நாலைஞ்சு நாள்தான் டியூட்டி இருக்கும். அதால ரேவதியின்ர லெட்டர்ஸ் வந்தால் இங்கேயே இருக்கட்டும். நான் வந்து பார்க்கிறன்." அவன் போட்டுக் கொடுத்த தேநீரை நின்ற நிலையில் அவசரமாய்க் குடித்தான்.
"நான் வரட்டா. லேற்றாப் போச்சுது."
மேசையில் இருந்த மகனின் படத்தை எடுத்து ஆசையோடு முத்தமிட்டு வைத்தான்.
"என்ர செல்வம்."
கதவைத் திறந்து கொண்டு வேகமாக நடந்து போனான்.
இனி நாலைந்து நாட்களுக்கு ஒரே அலுப்பாக இருக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டே குளித்து உடைமாற்றிக் கொண்டு அலுவலகம் புறப்பட்டான்.
அன்றைக்கு அலுவலகத்தில் அவ்வளவாய் வேலை இருக்க வில்லை. யன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு பாதிநேரம் கடற்கரை யையே பார்த்துக் கொண்டிருந்தான். மாலையில் வீட்டுக்கு வரும்போதே இரவுச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டே வந்தான். ராஜேந்திரன் நின்றால் இருவரும் சேர்ந்து வெளியே போய்ச்சாப்பிடலாம். தனியப் போவதென்றால் அலுப்பாக இருக்கும். செந்தில்நாதனின் அறைக்குள் பெண்களின் கலகலத்த குரல்கள் நேர் முகப் பரீட்சையைப் பற்றி அலசிக் கொண்டிருந்தது.
இரவு ஒன்பது மணியளவில் அந்தப்பெண்களை அழைத்துக் கொண்டு செந்தில்நாதன் புகையிரத நிலையத்துக்கு போய்விட்டார்.
25

Page 19
வீதியெல்லாம் தோரணங்கள்
தெய்வேந்திரன் தன் அறைக்கட்டிலில் படுத்தபடி பாரதியின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ராஜேந்திரன் அறையில் இல்லாதது வசதியாய்ப் போய்விட்டது. நின்றால் ஏதாவது பகிடியாய்ச் சொல்லுவான். அப்படி சொல்லுவதும் கூட ரகசியமான சந்தோசத்தைத் தான் தரும்.
மறுநாள் மாலை. அலுவலகத்திலிருந்து திரும்பும்போது ஐந்து மணியே ஆகியிருந்தது. சிவன் கோவிலுக்குப் போய் நாளாகி விட்டது என்ற நினைவில் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் சிவன்கோவிலை நோக்கி நடந்தான்.
{X)
26

4.
ില്ക്ക് கோவிலுக்கு அடிக்கடி தெய்வேந்திரன் போவதுண்டு. குகை மாதிரி மண்டப அமைப்பையும் அந்தக் கருங்கற்சிலைகளையும் பார்க்க ஒரே வியப்பாக இருக்கும். தகதகவென்று ஒளிரும் விக்கிர கங்களை வணங்கும் போது மனம் எவ்வளவோ லேசாகி விடுகிறது.
கோவிலில் அவ்வளவு கூட்டம் இல்லை. சப்பாத்துகளை கழற்றி விட்டு வாசலில் கால்களைக் கழுவி விட்டு உள்ளே நுழைந்தான்.
மாலைநேரப் பூசை தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. தீபத்தை தொட்டு வணங்கி விட்டு கண்களை மூடித்திறந்த போது எதிரே பார்வை
பதிய. திக் கென்றது.
அவனால் நம்பமுடியாமல் இருந்தது.
எதிரே. பாரதி, பாரதிதானா?
இது எப்படி சாத்தியமாகும். யாழ்ப்பாணத்தில் உள்ளவள் கொழு ம்புக்கு ஏன் வரப்போகிறாள். இல்லை பாரதிதான். அந்த முகமும் கண்களும் அப்படியே நெஞ்சில் பதிந்து போய் இருக்கிறதே! அவள் தான், எதிரே பெண்கள் வரிசையில் நின்ற பாரதி அவனைக் கண்டதும்.
தடுமாறிப்போவது தெரிந்தது. பூசை முடிந்து மற்றவர்கள் கலைந்து போக அவளிடம் போனான்.
"எப்ப வந்தனீங்கள். என்று வியப்புடன் கேட்டான்.
"நேற்றுத்தான்." மெல்லிய குரலில் சொன்னாள்.
"அண்ணா நாளைக்கு காலமை வாறார், அதுதான்."
27

Page 20
வீதியெல்லாம் தோரணங்கள்
சிறீதரன் வருகிறான் என்ற செய்தி அவன் நெஞ்சை சந்தோசமாய் அழுத்தியது.
அப்போது அவர்களை நோக்கி சித்தப்பாவும் சித்தியும் வந்தார்கள். சித்தப்பாவை அவனுக்கு முன்பே தெரியும். பாரதியை அவனுக்கு கல்யாணம் பேச ஆரம்பித்த நேரம் அவனைப்பற்றி சித்தப்பா நிறைய விசாரித்தவர். ஒரு தடவை அவனுடன் அலுவலகத்தில் வந்து சந்தித்து கதைத்திருக்கிறார். சித்தப்பா அவனைக் கண்டதும்.
"அட எதிர்பாராத சந்திப்பாய்ப்போச்சு" என்றார்.
சித்தியைக் காட்டி "என்ர மிஸிஸ்" என்றார்.
"உங்களுக்கு அவசரமில்லை எண்டால் நில்லுங்கோ, நாங்கள் கும்பிட்டிட்டு வாறம்,"
அவன் வெளிப்புற வாசல் அருகே வந்து நின்றான்.
பாரதியும் சித்தப்பா சித்தியும் சுற்றி வணங்குவது தெரிந்தது.
பாரதி இலைப்பச்சையில் வெள்ளைப்புள்ளிகள் பரவிய சேலை யில் மிகவும் அழகாய்த் தெரிந்தாள். நெற்றியில் சிவப்பு நிற ஒட்டுப் பொட்டுக்கு மேல் மெலிதான விபூதிக்கீறல். இவளை இங்கே சந்திக்க நேர்ந்த அதிசயத்தை மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே நின்றான். பத்து நிமிடத்தின் பின் மூவரும் வந்தார்கள்.
"வாருங்கோ அந்தப்பக்கம் போவம். இண்டைக்கு கோயில்ல அவ்வளவாய் சனம் இல்லை."
சித்தப்பா அவனிட்ம் சொல்லிக்கொண்டே நடந்தார்.
வெய்யில் நன்றாக தாழ்ந்து விட்டது. மழை வரும் போல் காற்று குளிராய் வீசியது. அவன் சப்பாத்தைப் போட்டுக் கொண்டு அவர்க ளுடன் கோவிலின் பின் பகுதிக்கு வந்தான்.
"நீங்கள் கொட்டாஞ்சேனையில் இருக்கிறதெண்டு முந்தி சொன்ன னிங்கள்."
28

தாமரைச்செல்வி
"ஒம். சிவானந்தா வீதியில இருக்கிறன்."
"கிட்டத்தான் இருக்கிறீங்கள். நாங்கள் விவேகானந்தாமேடு, வலது பக்கமாய் எட்டாவது வீடு. நீலப்பெயிண்ட் அடிச்சிருக்கும். சிறீதரன் வந்தால் ரெண்டுநாள் நிண்டுதான் யாழ்ப்பாணம் போவான். ஒருக்கா வீட்டயும் வாங்கோவன்."
"அதுக்கென்ன நாளைக்கு பின்னேரம் வாறன். அதுக்குள்ள வந்திடுவார் தானே"
"காலமை வந்திடுவான், ஏதோ நிறையச்சாமான்கள் கொண்டு வாறானாம். எயாப்போட்டிலயும் கஸ்டம்ஸ் பிரச்சினை."
"எயாப்போட்டில என்ர ஃபிரண்ட் கஸ்டம்ஸில இருக்கிறான். ராஜேந்தின் எண்டு பேர். நீங்கள் இன்னார் எண்டு சொன்னால் அவன் எல்லா உதவியும் செய்வான்."
"அவரை நாங்கள் எங்க தேடிப்பிடிக்கிறது. ம். உங்களுக்கு கஸ்டம் இல்லை யெண்டால் நாளைக்கு எங்களோட எயாபோட்டுக்கு வாங்கோவன்." w
அவர் தன்னையும் அழைப்பார் என்று அவன் எதிர்பார்க்க வில்லை. அவன் பாரதியைப் பார்க்க அவள் தூரத்தெரிந்த நந்தியா வெட்டைச் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நான்." அவன் தயங்கி நின்றான்.
"ஏன் ஏதும் கஸ்டமா? விடிய ஆறுமணிக்கு பிளேன். உங்கட வேலைக்குப் போறதுக்கு நேரத்தோட வந்திடலாம்."
"எனக்கு ஒரு கஸ்டமுமில்லை. நான் வாறன்." "அப்ப விடியப்புறமாய் நாலு மணிபோல உங்கட வீட்ட வாறம். மினிவானுக்கு சொல்லி வைச்சிக்கிறம். வானில வந்து அப்பிடியே உங்களையும் கூட்டிக் கொண்டு போறம். நீங்கள் நாலு மணிக்கு முதல் ஆயத்தமாய் நில்லுங்கோ."
29

Page 21
வீதியெல்லாம் தோரணங்கள்
அவன் தலையசைத்தான்.
"நீங்கள் இப்ப வீட்டதானே போறீங்கள்."
"ஆம்" என்றான்.
"அப்ப வாங்கோ கதைச்சுக் கொண்டே போகலாம்."
சித்தப்பாவும் அவனும் முன்னால் நடக்க சித்தியுடன் பாரதி அவர்களைத் தொடர்ந்து நடந்து வந்தாள். வழமை போலவே ஜம்பட்டா
வீதி பொழுது சாய்கின்ற இந்த நேரத்தில் ஒரே சன நெரிசலாய் இருந்தது. எதிரே வரும் ஆட்களில் மோதிக் கொள்ளாமல் நடப்பதற்கு சிரமமாய்
இருந்தது.
"இந்தச் சனங்கள் இப்பிடிப் பறந்து பறந்து எங்கதான் போய் வருகுதுகளோ.." சித்தப்பா அலுத்துக் கொண்டார்.
சித்தப்பா வீட்டுக்கு திரும்பும் சந்திமுனை வந்ததும் "அப்ப நான் போய்வரட்டா" என்று தெய்வேந்திரன் விடை பெற்றான்.
"நல்லது தம்பி. காலமை நாலு மணிக்கு வாறம்."
பொதுவாக சித்தப்பா சித்தியைப் பார்த்து தலையாட்டி விட்டு பாரதியைப் பார்த்து "வாறன்" என்றான். அவள் அழகாகத் தலை யசைத்தாள். மூக்குத்தி ஒரு தடவை பளிரிட்டது.
அவன் தொடர்ந்து நடக்கத் தொடங்கினான். மனம் உற்சாகத்தில் மிதந்தது. இது எவ்வளவு எதிர்பாராத மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ராஜேந்திரன் இல்லாதது மிகப் பெரிய குறையாகப் பட்டது அவனுக்கு. அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது செந்தில்நாதன் வாசல் புறமாய் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.
"என்ன தம்பி இண்டைக்கு லேற்றாப் போச்சு."
"சிவன் கோயிலுக்குப் போனனான்."
30

தாமரைச்செல்வி
"ஓ. இப்ப கெளரி விரதம் நடக்குதல்லே. அம்மனுக்கு விசேட பூசை. எப்பிடி அம்மன் தரிசனம்."
அவர் இயல்பாய்க் கேட்க சில்லென்ற உணர்வு நெஞ்சை இதமாய்த் தாக்கியது.
"நல்ல வடிவாய் இருந்தது."
மனதுக்குள் சிரித்துக்கொண்டே தன் அறைக்குப் போனான்.
அம்மன் தரிசனம்' என்ற வார்த்தை வெகுநேரமாய் மனதில் நிறைந்து போயிருந்தது.
விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து விட வேண்டுமே என்ற
நினைப்பில் இரவு முழுக்க நித்திரையே வரவில்லை. திடுதிப்பென்று போய் முன்னால் நிற்க ராஜேந்திரனே அசந்து போகப் போகிறான்.
மூன்று பத்துக்கு கண்விழித்து நேரம் பார்த்து எழுந்த போது கண்கள் இரண்டும் எரிந்தன. ஹோல் விளக்கை போடாமல் மெதுவாய் பின் பக்கம் நடந்து போய் குளித்து விட்டு வந்தான்.
சூட்கேஸ் திறந்து, புதிதாய் இருந்த உடுப்புக்களை எடுத்துப் போட்டுக் கொண்டு மெலிதாய் சென்ற் போட்டுக் கொண்டான். மூன்று நாற்பதுக்கெல்லாம் தயாராகி ஹோலுக்குள் வந்து யன்னல்களைத் திறந்து விட்டு வெளியே தெருவைப் பார்த்தான்.
மழை பெய்து ஓய்ந்திருந்தது. தெருவிளக்கு வெளிச்சத்தில் ஈரத்தெரு 'பளபளவென்று மின்னியது. மூன்று ஐம்பத்தி ஐந்துக்கு அந்த வெள்ளை வான் வீதியில் மிதந்து வந்து கொண்டிருந்தது. மெல்லிய பாம். என்ற ஒலியுடன் அவன் வீட்டு வாசலில் நின்றது.
அவன் வாசல் கதவைத் திறந்து விட்டு உள்ளேபோய் செந்தில் நாதனின் அறைக்கதவைத் தட்டினான். அவர் நித்திரைக் கலக்கத்தோடு கதவைத் திறந்து அவனைப் பார்த்து வியப்புடன்" என்ன தம்பி?" என்றார். "நான் எயாபோட்டுக்கு போகவேனும், வாசல் கதவை உள்ள பூட்டிக்கொள்ளுங்கோ."
31

Page 22
வீதியெல்லாம் தோரணங்கள்
அவர் ஆச்சரியத்துடன் "என்ன தம்பி திடீரெண்டு ராத்திரி கூட நீர் சொல்லேலை' என்றார் கொட்டாவி விட்டுக்கொண்டே
அவன் வாசலுக்கு வந்து படிகளில் இறங்கி அவரை நோக்கி தலையசைத்துவிட்டு வானில் ஏறிக் கொண்டான்.
சாரதிக்குப் பின் ஆசனத்தில் இருந்த சித்தப்பாவின் அருகில் அவன் அமர்ந்து கொண்டான். பாரதி மட்டும் பக்கத்து தனி இருக்கையில் அமர்ந்திருந்தாள். இரவின் அமைதியில் ஈரமான தெருக்களில் வான் வழுக்கிக்கொண்டு ஓடியது. தெரு வெறிச்சென்று இருக்க இரண்டு பக்க கடைகளிலும் கட்டடங்களிலும் நிறைய மின்குமிழ்கள் பளிச்சிட்டன. சிவப்பு. பச்சை. மஞ்சளாய். குளிர்காற்று உடலைச்சிலிர்க்க வைத்தது.
"ராத்திரி நல்ல மழை பெய்திருக்கு."
சித்தப்பா யன்னலால் பார்த்துக்கொண்டே சொன்னார். "பன்ரெண்டு மணிக்குப் பிறகுதான் நல்ல மழை." ஏதாவது சொல்லவேண்டுமே என்பது போலச் சொன்னான்.
"எயாபோட்டில உங்களை சிறிதரன் எதிர்பார்க்க மாட்டான். ஏன் பாரதி எத்தனை மாத லீவில வாறான்."
பாரதியிடம் முன்புறம் சரிந்து கேட்டார்.
"அது தெரியாது. சில நேரம் திரும்பிப் போகாமலும் விட்டிடுவார், அப்படித்தான் எழுதினவர்." மெல்லிய குரலில் சொன்னாள். அவளது வார்த்தைகள் வான் இரைச்சலில் இன்னும் மெல்லிசாய்க் கேட்டது.
"அதுசரி கல்யாணம் செய்திட்டால் இங்கயோ எங்கயோ ஒரு இடத்தில இருக்கவேணும்." சித்தப்பா சொல்லிவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டார்.
அவன் பாரதியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தான். வான் வேகமாய் போனதில் தெருக்கரையில் உள்ள வெளிச்சங்கள் அவளின் முகத்தில் பளிச் பளிச்சென்று விழுந்தது. இருளும் ஒளியுமாய் மாறி மாறி விழுந்து
32

தாமரைச்செல்வி
முகத்தை அழகாய்க் காட்டியது. அவள் வெளியே கடைகளையும் கட்டடங்களையும் ஒரு வித ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே வந்தாள்.
இவளுடன் ஏதாவது கதைக்கலாமா என்று யோசித்தான். சித்தப்பா அருகே இருந்தது சங்கடமாக இருந்தது. அவர் ஏதாவது நினைத்துக் கொள்ளக்கூடுமோ என்று தயக்கமாகவும் இருந்தது.
விமான நிலையத்துக்கு திரும்பும் பாதையில் வான் ஓடியது. அகல அகல வீதிகள். தெரு நீளத்துக்கு பளிச்சிடும் மின்குமிழ்கள் நனைந்த தெருவில் தெறித்துப் 'பளபளவென்று மின்னியது. "இங்கயும் நல்ல மழை பெய்திருக்கு."
தூரத்தில் விமான நிலையம் மின்விளக்குகளாய்த் தெரிந்தது. வழியில் பொலிசாரின் சோதனை நிலையம்.
அதை அண்மித்தபோது முன்னால் பல வாகனங்கள் வரிசையாய் நின்றன. சாரதி வானை நிறுத்தி விட்டு எட்டிப் பார்த்தார்.
"என்னவாம்." சித்தப்பா கேட்டார்.
"தெரியேலை, வாறன் கேட்டுக் கொண்டு"
சாரதி இறங்கிப் போய் முன் வாகன சாரதிகளோடு கதைத்து விட்டு வந்தார்.
"கொஞ்சம் கடுமையான செக்கிங்காம். ஏழெட்டு வாகனம் முன்னால நிற்குது" சித்தப்பா நேரத்தைப் பார்த்தார். நாலு ஐம்பது ஆகிக் கொண்டிருந்தது.
"பரவாயில்லை நேரம் இருக்குது. திடீர் திடீரெண்டு செக்கிங்தான்." ஒவ்வொரு வாகனமாக நகர்ந்து இவர்களது வாகனம் போனபோது ஐந்தேகால் ஆகிவிட்டது. பொலிஸ் வந்து இவர்களை இறங்கச் சொல்லி சிங்களத்தில் சொன்னான்.
பாரதி முதலில் இறங்க அவனும் சித்தப்பாவும் தொடர்ந்து
33

Page 23
வீதியெல்லாம் தோரணங்கள்
இறங்கினார்கள். முதலில் பாரதியின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பொலிஸ் அவளிடம் சிங்களத்தில் ஏதேதோ கேட்டான். அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவன் போய் சிங்களத்தில் "என்ன" என்று கேட்டான்.
"கொழும்பில் வேலை பார்க்கிறவவா." என்று கேட்டான்.
"இல்லை."
"யாழ்ப்பாண விலாசம் இருக்கு."
"வெளிநாட்டிலயிருக்கிற இவவின்ர அண்ணா இங்க வாறார். அவரைக் கூட்ட வந்திருக்கிறா."
"சரி, இந்தாங்கோ"
பாரதியை ஏற இறங்கப் பார்த்து விட்டு அடையாள அட்டையை திரும்பிக் கொடுத்தான். அவனதும் சித்தப்பாவினதும் அட்டைகளை வாங்கிப் பார்த்து விட்டு கொடுத்தான். இரண்டு பொலிஸ்காரர் வானுக்குள் போய்ப் பார்த்து விட்டு இறங்கி "போகலாம்" என்றார்கள்.
அவர்கள் ஏறிக்கொண்டதும் வான் புறப்பட்டது.
"இப்ப கொஞ்ச நாளாய் எல்லா இடங்களிலும் செக்கிங்தான். ஆரம்ப கால யாழ்ப்பாணம் மாதிரி. அந்த நேரத்திலயிருந்து நாங்கள் பட்டுக் கொண்டு வாறம் இங்க உள்ளவை இப்ப இப்ப படத்தொடங்குகினம். அந்தா பாஸ்' எடுக்கிற இடம் வருகுது. வானை இதில நிற்பாட்டும்" என்றார் சித்தப்பா.
"மூண்டு பேருக்கும் பாஸ் கிடைக்குமோ தெரியாது கேட்டுப் பாப்பம்."
சித்தப்பா இறங்கிப் போனார். அவன் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து கொண்டு பாரதியைப் பார்த்தான். அவள் தயக்கமாய் அவனைப் பார்த்து மெலிதாய்ப் புன்னகைத்தாள். இந்த விடியற்காலை இருட்டில் குளிர்காற்றின் நடுவில் நீண்டு போய்க் கிடந்த தெருவில் மின்விளக்குகள்
34

தாமரைச்செல்வி மத்தியில் ஒரு வானில் இவளுடன் இருக்கின்ற நிலமை கனவோ என நினைக்க வைத்தது. ஏதாவது இவளுடன் கதைக்கலாம் என்றால் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.
சித்தப்பா திரும்பி வந்து "நல்ல காலம் கிடைச்சிட்டுது." என்று சொல்லிக் கொண்டே ஏறி அமரவும் வான் மறுபடியும் தெருவில் வழுக்கிக் கொண்டே போனது.
மழை பெய்து ஓய்ந்து விட்டதால் கழுவி விட்டது போல் இருந்தது வீதி, விமான நிலையத்தின் முன் வாசலில் வான் போய் நின்றது.
"நீங்கள் ரெண்டுபேரும் இறங்குங்கோ. நான் வானோட போய் பாக்' பண்ணியிட்டு வாறன். பிறகு வானைத் தேடவேணும்."
அவனும் பாரதியும் இறங்கிக் கொள்ள சித்தப்பா வானுடன் போனார்.
அவர்கள் முன்புறமாய் இருந்த அந்த வழுவழுப்பான நீளமான நடைபாதையில் நின்றார்கள். எங்கெங்கோ பார்த்துக்கொண்டு மெளன மாய் நின்றார்கள்.
00
35

Page 24
5
அந்த விமானநிலைய முன்புறம் ஆட்களினால் நிறைந்து போயிருந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் தங்கள் பொருட்களைத் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு போனார்கள். நல்ல யாழ்ப்பாணத் தமிழில் குழந்தைகளை அதட்டிக் கொண்டு ஒரு குடும்பம் போனது. விதம் விதமான உடைகளுடன் விதவிதமான மனிதர்கள். ஐந்து நிமிடங்கள் மெளனமாய் நின்றார்கள். அவன் அந்த மெளனத்தைக் கலைத்து.
"முந்தி இங்க வந்திருக்கிறீங்களா?" என்று கேட்டான்.
போய்க் கொண்டிருந்த வெள்ளைக்காரப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த பாரதி "இல்லை" என்று தலையசைத்தாள்.
"முந்தி இருந்ததிலும் விட இப்ப வடிவாய்க் கட்டியிருக்கினம்."
அவள் பிரமிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"அதுவும் இப்ப உள்ள போறதில சரியான கட்டுப்பாடு. எல்லாம் பாதுகாப்புக்குத் தான் எண்டு சொல்லுகினம், இந்த விறாந்தையில கூட கனநேரம் நிற்க விடாயினம்." அவன் சொல்வதை அவள் மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவனுக்கு ஒரு வினாடி இந்த நேரத்தில் இதென்ன அர்த்த மில்லாத கதையை கதைத்துக் கொண்டு நிற்கிறேன் என்று தோன்றியது. எவ்வளவோ கதைக்க மனம் நினைக்கிறது. ஆனால் அவை எல்லா வற்றையும் இப்போது கதைக்க இயலாது. இந்த சேலை உனக்கு நல்ல வடிவாய் இருக்கிறது என்றோ மூக்குத்தி உன் முகத்துக்கு நன்றாய் இருக்கிறது என்றோ குனிந்த பார்வையில் உன் முகம் எவ்வளவோ
36

தாமரைச்செல்வி
வடிவு என்றோ சொல்ல வேண்டும் போல இருந்தது.
ஆனால் இந்தளவு அறிமுகத்தை வைத்துக்கொண்டு இன்னமும் பழகாத ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாம் இப்போது சொல்வது கொஞ்சம் அபத்தமாக இருக்கும் என்பதும் அவனுக்குத் தெரிந்தி ருந்தது.
இவள் தனக்கென நிச்சயிக்கப்பட்டவள் என்ற உணர்வு மனதை அழுத்தினாலும் அவளுடன் அந்த உரிமையை எடுத்துக் கொள்வதற்கு இன்னும் கொஞ்சத் தூரம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
வருபவர்களையும் போகிறவர்களையும் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். வான், வாடகைக்கார் என்று மாறி மாறி வந்து இறங்கு பவர்கள் பரபரப்பாக உள்ளே போனார்கள். அவள் முகத்தில் கலவை யிட்ட உணர்வுகளையும் சந்தோசத்தையும் அவன் கவனித்துக் கொண்டி ருந்தான்.
கேட்பதற்கு மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் அவள் பதில் சொன்னது கொஞ்சம் குறையாகப்பட்டது தான். ஆனாலும் அந்த அமைதியே அவளை இன்னும் ஒரு படி அதிகமாய் நேசிக்க காரணமானது. வெளியே நின்று கொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் வந்து "இங்கே நிற்கக் கூடாது" என்றார்கள். "சித்தப்பா வாறதுக்குள்ள நான் ராஜேந்திரனுக்கு சொல்லியனுப்பியிட்டு வாறன்."
அவன் சிறிது நடந்து போய் ஒரு பாதுகாப்பு ஊழியரிடம் ராஜேந்திரனைப் பற்றி விசாரித்தான். கஸ்டம்ஸ் பிரிவில் அவன் இருப்ப தாகவும் தான் சந்திக்க விரும்புவதாகவும் சொல்லும்படி கேட்டுக் கொண்டான். இவனுடைய பெயர் விபரங்களை கேட்டுக்கொண்டு அந்த ஊழியர் உள்ளே போனதும் அவன் பாரதியிடம் சொன்னான்.
"ராஜேந்திரன் என்னோடை ரூமில இருக்கிறவன். சொந்த இடம் புங்குடுதீவு கல்யாணமாகி ஒரு வயசில மகன் இருக்கு."
அவள் மெல்லிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
37

Page 25
வீதியெல்லாம் தோரணங்கள்
எது சொன்னாலும் இதே புன்னகைதானா.?
வெளியே விடிவதற்கான அறிகுறியாக கறுப்பிலிருந்து வானம் மெல்ல மெல்ல விடுபட்டுக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒளியை இழந்திருந்தன.
சித்தப்பா அவசரமாய் வந்தார்.
"இண்டைக்கு ஒரே சனமாய்க் கிடக்கு, வானை நிற்பாட்டக் கூட
கஸ்ரமாய்ப் போச்சு. என்ன உங்கட ஃபிரண்டுக்குச் சொல்லி விட்டாச்சா.
"ம். சொல்லி விட்டிட்டன், இப்ப வருவான். இதில நிற்கவேண் LTLDITið."
"மெதுவாய் நடந்து கொண்டிருப்பம் வாங்கோ. உள்பக்கமும் போய் நிற்கலாம்." இப்போது விறாந்தையில் இன்னும் அதிகமான ஆட்கள்.
வழுவழுக்கும் தரையில் பாரதி கவனமாய் கால் பதித்து நடந்தாள். பாதுகாப்பு ஊழியர்கள் யாரையோ அதட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு வெள்ளைக்கார பயணி தெய்வேந்திரனுடன் மோதிவிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போனான்.
கண்ணாடிக் கதவுகளுக்குப் பின்னால் நீலச்சேலையுடன் நீான்கு விமானப் பணிப்பெண்கள் கதைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் கண்ணாடி கதவைத் திறந்து கொண்டு வேகமாய் வந்த ராஜேந்திரன் கூட்டத்தில் அவனைத் தேடிக் கொண்டு வந்தான்.
"என்னடா அதிசயம். இங்க வந்து நிற்கிறாய்."
என்று கேட்டவன் அருகில் நின்ற பாரதியை அடையாளம் கண்டு விட்டு ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான்.
"பாரதியும், சித்தப்பாவும்"
அவன் அவர்களை ராஜேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
38

தாமரைச்செல்வி
"என்னடா, இது திடுதிப்பென்று.
t;
"பாரதியின்ர அண்ணா சிறீதரன் இப்ப வாறார். நேற்று சிவன் கோயில்ல இவையளை தற்செயலாய் சந்தித்தனான். அப்பதான் தெரிஞ்சது. நீ சிறீதரனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு." என்றவன் சித்தப்பாவிடம் திரும்பி "ஃபிளைட் நம்பர். பெயர் விபரங்களை எடுத்து இவனிட்ட குடுங்கோ" என்றான்.
"பாரதியிட்டத்தான் இருக்குது. எடுத்துக் குடும்மா."
பாரதி கைப்பையைத் திறந்து ஒரு நீள உறை எடுத்து சரி பார்த்து விட்டு ராஜேந்திரனிடம் கொடுத்தாள்
"பாஸ் எடுத்திட்டீங்களா.."
"ஒரு மாதிரி கதைச்சு மூண்டு பாஸ் எடுத்திட்டம்."
"பிளேன் ஆறுமணிக்கு வரும் எண்டு சிறீதரன் எழுதினவன்."
"சிலநேரம் லேற்றாகுதோ தெரியேலை. நீங்கள் வாங்கோ உள்ள போய் அதுவரைக்கும் நிற்கலாம்."
ராஜேந்திரன் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். அவர்கள் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சிறு ஓடைக்குள் நடந்து பரிசோதனையை தாண்டி உள்ளே போனார்கள். -
வெளியே மெல்ல விடிந்து கொண்டிருந்தது. உட்புறம் மெதுவான குளிர் அழுத்தியது. எதிரே உயரமான திரைகளில் விமான இலக்கங்களும் வரும் நேரங்களும் விழுந்து கொண்டிருந்தது. மேற்புறம் நிறங்களில் வெளிச்சம் எரிந்து எரிந்து அணைந்தது. தரையின் வழுவழுப்பும் பளிங்கு சுவர்களும் கண்ணாடி தடுப்புகளும் கதவுகளும் வேறொரு உலகமாய் எதிரே விரிந்தது. ராஜேந்திரன் உட்புறம் போய் மறைவதை கண்ணாடி சுவர் வழியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
உள்ளே "எல்' வடிவமான பெரிய ஹோல் தெரிந்தது. நீளமான
39

Page 26
வீதியெல்லாம் தோரணங்கள் வழுவழுத்த மேசைகளில் அலுவலர்கள், எந்த எந்த பிரிவு என்பதை தெரிவிக்கும் குறிப்பு, தகடுகள். சிறிதரனின் விமானம் ஆறேகாலுக்கு வந்து விட்டது. "ஆறரை ஏழுமணிக்கெல்லாம் அண்ணா இங்கு வந்திடுவார் தானே சித்தப்பா."
தன்னை மறந்து போய் சித்தப்பாவிடம் கேட்டவள் தன்னுடைய பரபரப்பை நினைத்து வெட்கப்பட்டு மெலிதாய் சிரித்தாள். ஆறேமுக்கால் மணியான போதுதான் வரிசையாய் ஆட்கள் உள்ளிருந்து வந்தார்கள். கண்ணாடிக் கதவுகளுக்கப்பால் உள்ளிருந்து வரும் ஆட்களை அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் ராஜேந்திரன் தெரிந்தான். ஒரு இளைஞனுடன் கதைத்துக் கொண்டே வந்தான். "உங்கட சிநேகிதரோட நிற்கிறவன் தான் சிறீதரன்."
சித்தப்பா சுட்டிக்காட்டிச் சொன்னார்.
சிறீதரன் அப்படியே பாரதியின் சாயலாய் இருந்தான்.
4s

6
சிதரன் நல்ல உயரமாய் அதற்கேற்ற தோற்றத்துடன் இருந்தான்.
சவூதியிலிருந்து வந்தவன் போல் அல்லாமல் குளிர்நாடுகளிலிருந்து வந்தவன் போல நல்ல நிறமாக இருந்தான். தோளில் தொங்கிய பையுடனும் கையில் பெரிய சூட்கேசுடனும் ராஜேந்திரனிடமிருந்து இவர்கள் பக்கம் திரும்பினான். அங்கிருந்த படியே கையசைத்து சிரித்தான். பளிச்சென்ற சிரிப்பு பாரதியும் கண்கலங்க கையசைத்தாள்.
கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருபவர்களை உறவி னர்கள் கட்டி அணைத்தும் முத்தம் கொடுத்தும் வரவேற்றுக்கொண்டி ருந்தார்கள். வருபவர்களின் முகங்கள் களைத்திருந்தாலும் உறவினரைக் கண்ட சந்தோசம் அதையும் மீறி வெளியே தெரிந்தது.
சிறீதரன் கிட்டவந்து தோள்பையை நிலத்தில் வைத்து விட்டு தெய்வேந்திரனுடன் கைகுலுக்கினான்.
"உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களின்ர ஃபிரண்ட் எனக்கு நல்ல ஹெல்ப் பண்ணினவர், சிரமப்படாமல் வந்திட்டன். எப்பிடி இருக்கிறீங்கள்." சிரித்த முகத்துடன் அன்னியோன்னியமாய் கை குலுக்கிக் கதைக்கும் சிறீதரனை முதல் பார்வையிலேயே அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. "நல்லாய் இருக்கிறன். உங்களைச் சந்தித்ததில எனக்கும் சந்தோசம்," சிறீதரன் சித்தப்பாவையும் அணைத்துக் கொண்டு எப்பிடி சித்தப்பா? உடம்பு நல்லாய் வச்சிருக்கு, சாப்பாட்டை குறையுங் கோ இல்லாட்டி கஸ்டப்படுவீங்கள்" என்று சிரித்தான், பாரதியின் பக்கம் திரும்பினான்.
"பாரதி."
41

Page 27
வீதியெல்லாம் தோரனங்கள்
திடீரென்று கண்கலங்க உதட்டைப் பற்களால் அழுத்திக் கொண்டு நின்றாள் அவள். இன்னொரு தடவை பாரதி' என்றால் அழுதுவிடுவாள் போலிருந்தது.
அவளின் தலையைத் தடவி "எப்படி பாரதி இருக்கிறாய்?" என்றான்.
அவள் கண்ணிரோடு சிரித்து தலையசைத்தாள். "சரி வாங்கோ வீட்ட போய் கதைப்பம்."
சித்தப்பா அவசரப்படுத்தினார்.
சிறீதரன் பாரதியின் தோளை தட்டி "வா போவம்" என்றான். அவர்கள் வெளியே வந்த போது நன்றாக விடிந்திருந்தது. வானம் இன்னொரு மழைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
"இதில நில்லுங்கோ, நான் போய் வானைக்கொண்டு வாறன்." என்று சித்தப்பா இறங்கி வேகமாக நடந்து போனார்.
வாசலில் ஒவ்வொரு வாகனமும் வந்து நிற்க பொருட்களை ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டமாய் போனார்கள். சிறீதரன் தன்னுடைய பிரயாணத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். நனைந்த கண்களில் மலர்ச்சி தெரிய பாரதியும் பேச்சில் கலந்து கொண்டாள். பாரதியிடம் அம்மா அப்பாவைப் பற்றி சிறீதரன் கேட்டபோது தான் அதில் நிற்பது சரியில்லை என்பது போல அவன் சற்று விலகி நின்றான். அப்போது ராஜேந்திரன் வந்தான்.
"என்னடா நீ சொல்லாமல் கொள்ளாமல் போகப்போறாய் போல கிடக்கு."
"இல்லை, நான் அங்க உன்னைப் பார்த்தனான். வேலையை முடிச்சிட்டு வருவாய் எண்டு பார்த்துக் கொண்டிருக்கிறன்."
"எனக்கு இன்னும் ஆச்சரியம் தீரேலை, இதைத்தான் எதிர்பாராத பலன் அல்லது அதிர்ஸ்டம் எண்டு சொல்லுறது. பாரதியோட
42

தாமரைச்செல்வி
கதைச்சனியா?"
"என்னத்த கதைக்கிறது. சித்தப்பாவும் கூடவே இருக்கிறார், ஏதும் நினைப்பாரோ தெரியேலை."
அவன் தயங்கி தயங்கிச் சொன்னான்.
"நல்லாய் இருக்குதே கதை, சித்தப்பா என்ன நினைக்கிறது. எல்லாம் பேசி முற்றாக்கி வைச்ச பிறகு, இனி என்ன மாறப்போகினமே. ஏன் சிறீதரன். இவையின்ரயும், நிச்சயம் செய்த கல்யாணம் தானே" என்று சிறீதரனிடம் திரும்பி கொஞ்சம் சத்தமாய்க் கேட்டான்.
"Guy TLD65JLIT"
"பின்ன என்ன இவ்வளவு தூரம் வந்தாச்சு, கதைக்கக் கூட வெட்கப்படுகிறான். என்ர ஃபிரண்டின்ர கெட்டித்தனத்தைப் பாருங்கோ."
ராஜேந்திரன் இப்படி சொன்னதும் சிறீதரன் சட்டென்று சிரித்து விட்டான். இவன் இப்படி சொல்வான் என்று யார் எதிர்பார்த்தது. அவன் தவிப்புடன் பாரதியைப் பார்க்க அவள் சிரிப்போடு எங்கோ பார்ப்பது போல நின்றாள்.
"உங்கட வெடிங் முடிஞ்சபிறகு இவைக்கு தையிலதான் நடக்குமா?" .
"அப்பிடித்தான் முடிவு செய்திருக்கு"
"பின்ன, என்ன நாலு மாசத்துக்குள்ளதானே."
வெள்ளை வான் வந்து நிற்க சித்தப்பா அதிலிருந்து இறங்கினார். "சரி நான் டியூட்டி முடிஞ்சு கொழும்புக்கு வாறதுக்குள்ள நீங்கள் யாழ்ப்பாணம் போயிடுவீங்கள். பிறகு சந்திப்பம் என்ன" என்று சிறீதரனுடன் கைகுலுக்கிக் கொண்டான் ராஜேந்திரன்.
சித்தப்பாவுடன் சேர்ந்து தெய்வேந்திரன் சூட்கேஸ்களை வானில் ஏற்றினான். ராஜேந்திரனிடம் சொல்லிக்கொண்டு அவர்கள். வானில் ஏறி அமர அவன் திரும்பி "வாறமடா" என்றான்.
A1

Page 28
வீதியெல்லாம் தோரணங்கள் ராஜேந்திரன் ரகசியமாய் கண்சிமிட்டிச் சிரிக்க அவனும் சிரிப்புடன் வானில் ஏறிக்கொண்டான்.
வான் அதே பாதையால் போய் வளைந்து கொண்டு மறு பாதையால் திரும்பி வேகம் பிடித்தது. இப்போது சித்தப்பாவும் சிறீதரனும் பேசிக்கொண்டு வர அவன் மெளனமாய் அமர்ந்திருந்தான். சோதனை நிலயத்துக்கு அருகில் வந்த போது அப்போது போலவே நாலைந்து வாகனங்கள் நின்றன. அவர்கள் காத்திருந்து இறங்கி அடையாள அட்டையைக் காட்டி மறுபடி ஏறிக் கொண்டார்கள். எட்டு மணியளவில் வான் சித்தப்பா வீட்டுக்கு திரும்பும் வீதியின் முகப்பில் வந்தபோது,
"நான் இதில இறங்கிறன்" என்றான் அவன்.
"வேண்டாம். வீட்ட வந்திட்டுப் போங்கோ." என்றார் சித்தப்பா.
"எட்டுமணியாகுது நான் கந்தோருக்குப் போகவேனும்," தயங்கிய வாறு சொன்னான்.
"ஒரு பத்து நிமிஷம் தான் செல்லும், வந்திட்டுப்போங்கோ" என்று சிறீதரனும் சொல்ல அவனால் மறுக்க முடியவில்லை.
சித்தப்பாவின் வீடு சிறிதானாலும் அழகாய் இருந்தது. முன்ஹோல் நிறைய பொருட்கள், சோபாக்கள். அழகிய சிலைகள். மணி கோர்த்த திரைகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி என்று நேர்த்தி யாக இருந்தது. அதில் சித்தப்பாவினது வசதி தெரிந்தது. தன்னுடைய இரண்டு மகன்களும் லண்டனில் படிப்பதாக முன்பு சொன்னது அவனது நினைவுக்கு வந்தது. "முந்தியும் இந்தளவு சாமான் வைச்சிருந்து எழுவத்தேழில அடிபட்டுது. பிறகு சேர்த்து வைச்சிருக்க எண்பத்தி மூண்டில எல்லாம் போச்சுது. இப்ப பழையபடி எல்லாம் சேர்த்திருக்கு. இதுக்கு எப்ப காலம் வரப்போகுதோ தெரியேலை. இந்தப் பொம்பி ளையஸ் சொன்னாலும் கேட்காதுகள், எப்பவும் அத இத சேர்க்கிற ஆசைதான்."
சித்தி மேசையில் சாப்பாடுகளை எடுத்து வைத்தாள்.
44

தாமரைச்செல்வி
"வாங்கோ, அஞ்சு நிமிசத்தில சாப்பிட்டிட்டுப் போகலாம்,"
அவனும் சிறீதரனும் சாப்பிட சித்தி பார்த்துப் பார்த்து பரிமாறினாள். சற்றுத் தள்ளி கதவின் திரையைப் பிடித்துக்கொண்டு பாரதி நின்று கொண்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு அவன் விடை பெற்ற போது,
"நானும் ஒருக்கா கோட்டைக்கு ஏஜென்ஸியிட்ட வரவேணும் றிக்கோவில சாமான்கள் எடுக்கவேணும்," என்றான் சிறீதரன்.
"நீங்கள் ஏஜென்சியில றிசீற்றை எடுத்துக்கொண்டு எங்கட கந்தோருக்கு வாங்கோ, றிக்கோவில ராஜேந்திரன்ர ஃபிரண்ட்ஸ் இருக்கினம். அவை உதவி செய்வினம். ரெண்டு பேருமாய் போவம்"
"அப்ப பத்து மணிபோல வாறன்."
"சரி நான் போயிட்டு வாறன்."
எல்லோருக்கும் பொதுவாக தலையாட்டி விட்டு நடந்தான்.
அவன் பஸ் எடுத்து அலுவலகத்திற்கு போனபோது ஒன்பது மணியாகிக் கொண்டிருந்தது. அவசர அவசரமாய்ப் போய் கையெழுத்து வைத்து விட்டு தனது மேசைக்குப் போனான். மனம் முழுவதும் பரபரவென்றிருந்தது.
பத்தேகாலுக்கு சிறிதரன் வந்து தூரத்தில் நிற்பதைக் கண்டதும் அனுமதி பெற்றுக் கொண்டு போனான். இருவருமாய் பஸ் எடுத்துக் கொண்டு றிக்கோவுக்குப் போனார்கள். றிக்கோவில் ஒரே சனக்கூட்டமாய் இருந்தது.
"பாஸ்போர்ட் உள்ள ஆட்கள்தான் உள்ள போகலாம், எல்லோரை யும் விட மாட்டினம் பொறுங்கோ, ஆரிட்டயாவது சொல்லி அனுப்பி விடுவம்."
உட்புறத்தில் நின்ற பணியாளரை அழைத்து "மிஸ்டர் ரவிக்குமாரை தெரியுமா" என்று கேட்டான்.
45

Page 29
வீதியெல்லாம் தோரணங்கள்
"கொஞ்சம் உயரமாய் இருப்பார். அவர் தானே? தெரியும், கரவெட்டி ஆள்."
"அவர்தான், அவரைக் காணவேணும். ஒருக்கா சொல்லி விடுங்கோ, ராஜேந்திரன்ர ஃபிரண்ட் தெய்வேந்திரன் என்று சொன்னா g乱"
இந்த ரவிக்குமார் ராஜேந்திரனுக்கு நல்ல ஃபிரண்ட் நானும் நாலைஞ்சு தடவை சந்திச்சு கதைச்சிருக்கிறன்.
பத்து நிமிடங்களில் ரவிக்குமார் வந்தான். அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு என்ன விஷயம் ? என்றான்.
அவன் சிறீதரனை அறிமுகப்படுத்தி வைத்து விபரத்தை சொன்னான்.
கேட்டதும் "அட." என்றான்.
"ஏன் ஏதும் பிரச்சினையா.?"
"இண்டைக்கு வழமையிலும் விட சரியான ஆட்கள், காலையில நம்பர்கள் எடுத்தவைக்குத்தான் குடுத்துக்கொண்டிருக்கிறம், இப்ப நேரமும் போயிட்டதால கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இருங்கோ நான் ஒருக்கா பார்த்துக்கொண்டு வாறன். உங்கட றிசீற்றைத் தாங்கோ." என்று வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.
வானும் வாடகைக் காருமாக வாசலில் வந்து நிற்க ஆட்கள் பெட்டி பெட்டியாய் தங்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டு போனார்கள். இதழ்களில் கருஞ்சிவப்பில் உதட்டுச்சாயம் பூசிய பெண்கள் நுனி நாக்கால் ஆங்கிலம் கதைத்துக்கொண்டே போனார்கள். கோட்டும் சூட்டுமாய் வெளிநாட்டு சென்ற் மணக்க ஆண்கள்.
பத்து நிமிடங்களின் பின் வந்த ரவிக்குமார் அவர்களிடம் வருத்தம் தெரிவித்தான். "உங்கட பார்சல்கள் இருக்குது. ஆனா கொஞ்சம் முன்னால நீங்கள் வந்திருந்தால் எடுத்திருக்கலாம். இப்ப கவுண்டர் குளோஸ் பண்ணியாச்சு, உங்களுக்குக் கஷ்டமில்லையெண்டால்
46

தாமரைச்செல்வி
நாளைக்கு வாங்கோ. நான் காலையிலேயே நம்பர் எடுத்து எல்லா ஒழுங்கும் செய்துதாறன். பரவாயில்லையா?"
"பரவாயில்லை. நாங்கள் நாளைக்கு காலமை வாறம்" என்றான் சிறீதரன். ரவிக்குமார் றிசீற்றை அவனிடம் கொடுத்துவிட்டு;
"ராஜேந்திரன் எப்பிடி இருக்கிறான். அவனையும் கண்டு கனகாலமாச்சு, இப்பவும் கஸ்டம்ஸ்ஸிலதானே இருக்கிறான்," என்று கேட்டான்.
"ஓம் ஆளுக்கு நாலு நாளைக்கு எயாப்போட்டில டியூட்டி" "நான் கேட்டதாய் சொல்லிவிடுங்கோ, வேற என்ன."
"ஓ.கே. நாங்க போயிட்டு வாறம்."
இருவரும் வெளியே வந்தார்கள். "நாளைக்கு நான் லீவு போடுறன், காலமைக்கு உங்கட வீட்ட வந்தால் ரெண்டுபேருமாய் இங்க வரலாம். இப்ப நான் ஒவ்வீசுக்கு போகட்டுமா." பஸ் நிலையத்துக்கு இருவருமாய் நடந்தார்கள்.
"அப்ப லஞ்ச்"
"நான் அங்க போய் சாப்பிட்டுக் கொள்ளுவன்." ஒரு வினாடி அவனைப் பார்த்த சிறீதரன்;
"கடையிலதான் சாப்பாடா?" என்றான். "ம், சமைச்சுச் சாப்பிட சரிவராது. கடையிலதான் சாப்பாடு டீ மட்டும் ரூமில போட்டுக்குடிப்பம்."
ஒரு நிமிடம் மெளனமாய் இருந்து விட்டு சிறீதரன் கேட்டான்.
"பிறகு என்ன ஐடியா வைச்சிருக்கிறீங்கள்." "பிறகு.?" தெய்வேந்திரன் புரியாதவனாய்க் கேட்டான். "இல்லை வெடிங் முடிஞ்ச பிறகு எப்பிடி? இங்க பாரதியைக் கூட்டி வந்து இருக்கிற ஐடியா இருக்கா எண்டதுக்காகத்தான் கேட்டனான்."
47

Page 30
வீதியெல்லாம் தோரணங்கள்
அந்தக் கேள்வியே ஒரு கணம் அவனைத் திக்குமுக்காட வைத்தது.
"ம் எங்கட வீட்டில ஒரு ரூம் ஜனவரி மாசத்திலயிருந்து வேக் கன்ட் ஆகுது. சொல்லி வைச்கிருக்கிறன்."
"அதுதான் நல்லது. எங்கேயோ ஒரு இடமாய் இருந்திடவேணும். எனக்குப் பாருங்கோவன் சவூதிக்கு கூட்டிப்போக ஏலாது. விசா தரமாட்டினம். அப்பிடித் தந்தாலும் எங்கட சம்பளத்தில அங்க சீவிக்கிறது கொஞ்சம் கஷ்டம், சில வசதியளுக்காக இந்த வெளிநாட்டு வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் கிடக்கு. பொம்பிளைச் சகோதரங்களுக்கு வீடு கட்டவேணும். சீதனம் தேடவேணும். இதை நினைச் சுத்தான் எத்தனையோ பேர் வெளியில போகினம். யாழ்ப்பாணக் குடும்பங்களில அநேகம் பேருக்கு கல்யாணமே பெரிய சுமை மாதிரிதான். எங்களை மாதிரி நடுத்தர வர்க்கக்காரருக்கு இன்னும் அதிகமான சுமை. அப்பிடியும் போக ஏலாமல் இப்பிடியும் போக ஏலாமல் கெளரவத்தைக் கட்டிக் காக்கவேண்டியிருக்கு எனக்கு ரெண்டு தங்கச்சிமார். வீடும் குண்டு வீச்சில் அகப்பட்டு இடிஞ்சு போக திருப்பிக் கட்ட வேண்டிய தாச்சு. பெரிய தங்கச்சிக்கு கல்யாணம் செய்து வைக்கிற அளவில எத்தினையோ அனுபவம் வந்திட்டுது. நான் கஷ்டப்பட்டு உழைச்சதால எல்லாம் செய்ய முடிஞ்சுது. நல்லாய் இருக்கிறாள். அதனால சந்தோஷம், எவ்வளவுதான் இரவு பகலாய் கஷ்டப்பட்டு உழைச்சாலும் இங்குள்ள தேவைகளை ஈடு செய்ய முடியாமத்தான் இருக்கு. பாரதிக்கும் நடந்திட்டுதெண்டால் எனக்கு பெரிய ஆறுதல், உங்களைப் பார்த்து பழகின பிறகு எனக்கு நிம்மதியாய் இருக்கு."
குரலில் ஏற்ற இறக்கங்களோடு சிறீதரன் பேசிக்கொண்டே வந்தான். தெய்வேந்திரன் மெளனமாக, மெல்லிய மனப்பாரத்துடன் கேட்டுக் கொண்டே வந்தான்.
0. 0x8
48

7
சிறீதரனின் முகத்தில் யோசனையும் ஒருவித வருத்தமும் தென்பட்டது. லேஞ்சி எடுத்து வேர்த்த முகத்தைத் துடைத்துக் கொண் டான். அந்த மத்தியான நேரத்திலும் வாகனங்கள் வேகமாய் ஒன்றன் பின் ஒன்றாக போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தன.
"இவ்வளவு நாளும் எங்கட வீட்டாருக்காக உழைச்சன். இனி எனக்கெண்டு ஒரு குடும்பம் வந்தால் அதுக்காக உழைக்கவேணும். என்னை நேரில பார்க்காமலே நிச்சயம் செய்திருக்கினம். என்னைப் பற்றி நிறைய விசாரிச்சவை. அவையள் கொஞ்சம் வசதியான ஆட்கள். தங்கட பொம்பிளைப் பிள்ளையை நான் நல்லாய் வைச்சிருப்பன் எண்ட நம்பிக்கையில தான் எனக்கு தருகினம். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேணும், எனக்கு மூண்டு லட்சம் தரக் கூடிய வசதியுள்ள குடும்பத்தில என்ர மனைவி இருந்தால் அவளை அதே வசதியோட வைச்சிருக்க நான் திரும்பவும் வெளிநாடு போகத்தான் வேணும். மனித மனங்களுக்கு ஒரு நாளும் போதும் எண்ட திருப்தி வாறேலை."
சிறீதரனுடைய வெளிப்படையான பேச்சு அவன் மனதை ஆழமாய் தொட்டது. 'அங்க இருந்து கொண்டு இவ்வளவு காலமும் அப்பா அம்மா சகோதரங்களை நினைச்சுக் கவலைப்பட்டுக் கொண்டி ருந்தனான். இனி கவலைப்பட இன்னொரு சீவனும் இருக்கப் போகுது. யாழ்ப்பாணப் பக்கம் ஏதும் பிரச்சனை எண்டால் அங்க நாங்கள் படுகிறபாடு சொல்ல ஏலாது. இப்பிடியும் இருந்து உழைக்க வேணுமோ எண்டு வெறுத்தே போயிடும், தம்பியின்ர விசயம் தெரியும் தானே."
"ஒம் தெரியும்."
"அவன்ர இறப்புக்குப் பிறகு எனக்கு எல்லாமே வெறுத்திட்டுது.
49

Page 31
வீதியெல்லாம் தோரணங்கள் என்ர வேதனையை வெளிக்காட்டாமல் இருக்கிறன். எங்களுக்கு இப்பிடி ஏன் நேரவேணும் எண்டு நான் நொந்து கொள்ளாத நேரமில்லை. அவனை நினைச்சால்."
குரல் தடுமாற கண்கள் லேசாய் கலங்க சிறீதரன் எதிரே வெறித்துப் பார்த்தான். தலையை கோதி விட்டுக் கொண்டான்.
"உண்மையில எனக்கு இப்ப கல்யாணம் செய்ய வேணும் எண்ட எண்ணம் இல்லை. தவிர்க்க முடியாமல் பலன் வந்திட்டுது. ஆனாலும் பெரிய ஆறுதல் நல்ல குடும்பம் நல்ல பிள்ளை. கல்யாணம் செய்தால் ஒரே இடமாய் இருக்கவேண்டும் எண்டு சொல்லுறன். எங்களுக்கு அப்பிடி சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியேலை. ஆனா ஒரு ஆறுதல், வருசத்துக்கு ஒருக்கா இனி வந்து போகலாம். எனக்கு தை மாதம் உங்கட வெடிங்கையும் பார்த்திட்டுப் போகத்தான் விருப்பம். லீவை கொஞ்ச நாளைக்கு நீடிக்கச் சொல்லிக் கேட்டுப் பார்ப்பம். ஆனாலும் ஒண்டு. போற போக்கில சிலநேரம் சவூதிக்குப் போகாமலும் விட்டிடுவனோ தெரியேல்ல. அதுசரி இனி நீங்கள் எப்ப யாழ்ப்பாணப் பக்கம்." சிறீதரன் இயல்பாக சிநேகித பாவத்தோடு கதைத்தது அவனுக்கும் கதைக்கத் தெம்பைக் கொடுத்தது.
"இனி தையில எங்களுக்கு நாள் குறிச்சா வரலாம்."
"பஸ்ஸுக்கு காவல் நிற்க ஏலாது. ஒட்டோவில போவம்."
தெருவில் போய்க் கொண்டிருந்த ஓட்டோவை மறித்து இருவரும்
ஏறிக்கொண்டார்கள்.
தெய்வேந்திரன் வீதியின் ஒரு பக்கமாய் பார்த்துக் கொண்டே போனான். இந்த மத்தியான வெய்யிலை யாரும் பொருட்படுத்தியதாய்த் தெரியவில்லை. சிறீதரனை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. மனம் விட்டுப் பேசும் அவனின் இயல்பு.
அம்மா சீதனத்துக்கு ஆசைப்பட்டாலும் ஒரு நல்ல குடும்பத்தில் தான் சம்பந்தம் பேசியிருக்கின்றா என்பதில் அளவில்லாத ஆறுதலாக இருந்தது அவனுக்கு.
50

தாமரைச்செல்வி
சித்தப்பா வீட்டு வாசலில் சிறீதரன் இறங்கிக் கொண்டு அவனை யும் இறங்கச் சொன்னான்.
"வந்து சாப்பிட்டிட்டுப் போகலாம். வாங்கோ." அவன் மறுத்தும் சிறீதரன் பிடிவாதமாய் ஒட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டான்.
"சித்தி இரண்டு பேருக்கும் சாப்பாடு போடுங்கோ" என்று சொல்லிவிட்டு; "நீங்க வோஷ்" எடுக்கிறதெண்டால் எடுத்திட்டுச் சாப்பிடலாம்." என்று அவனிடம் சொன்னான்.
"பரவாயில்லை."
"வெய்யிலுக்க வந்தது அலுப்புத்தானே, பாரதி அந்த டவலை எடுத்துக்கொண்டுவா" பாரதி துவாயுடன் வந்து நிற்க;
"அவரிட்ட துவாயைக் குடு, வாங்கோ இந்தப் பக்கம்."
என்று பின்பக்கம் நடந்தான்.
இது என்ன சங்கடம் என்று நினைத்தபடி பாரதியிடமிருந்து துவாயை வாங்கினான்.
"நேரம் போயிட்டுது. நான் ஒவ்வீசுக்கு போக வேணும்."
"பரவாயில்லை, சாப்பிட்டிட்டு பிறகு போகலாம்," பாரதி மெல்லிய குரலில் சொல்லிவிட்டு மேசையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த சித்தியிடம் போனாள். எண்ணி மூன்று வார்த்தைகள் தொடராய் அவள் கதைத்தது அவனுக்கு உற்சாகத்தைத் தர அவன் போய் கால்முகம் கழுவி விட்டு வந்தான். இருவருக்கும் சித்தி சோறு கறி எடுத்து வைத்தாள். நேற்று தூரநின்று பார்த்துக்கொண்டிருந்த பாரதி இன்று மேசைக்கு அருகில் வந்து நின்றாள்.
அவர்கள் சாப்பிடும் போது தண்ணிர் எடுத்து வைத்தாள்.அன்று நடந்தவைகளைப்பற்றி சொல்லிக் கொண்டே சிறீதரன் சாப்பிட அவன் மெளனமாய்ச் சாப்பிட்டான்.
51

Page 32
வீதியெல்லாம் தோரணங்கள்
பாரதி பக்கத்தில் நிற்க தான் சாப்பிடுவது ஒரு கனவு மாதிரி இருந்தது. இதுவும் ஒரு புதிய அனுபவமாய் மனம் எல்லாம் என்னமாய் பரபரக்கிறது. சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் சிறீதரனுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.
"ரெண்டு மணியாகுது. நான் போய் வரட்டா."
அவன் எழுந்து விடைபெற்றுக்கொண்டு படிகளில் இறங்கித் திரும்பிப் பார்க்க சிறிதரனின் தோளுக்கு அருகே பாரதியின் முகம் தெரிந்தது.
அன்றைக்கு இரவு அவனால் நித்திரை கொள்ளமுடியாமல் இருந்தது. அவனது முழு நினைவையும் பாரதி ஆக்கிரமித்திருந்தாள். எல்லா அலுவல்களும் முடிந்து சிறீதரனும் பாரதியும் யாழ்ப்பாணம் போனபிறகு செந்தில் நாதனிடம் விபரத்தைச் சொன்னால் அவர் அட கடவுளே என்று ஆச்சரியப்படப்போகிறார். அப்போதுதான் அவனுக்கு மனதில் மின்னலாய் அந்த எண்ணம் தோன்றியது. இந்த எதிர்பாராத சந்திப்பின் ஞாபகமாகப் பாரதிக்கு எதையாவது வாங்கிக் கொடுக்க வேணும். என்ன வாங்கிக் கொடுக்கலாம்.?
இப்படி நினைத்ததும் கொஞ்ச நஞ்ச நித்திரையும் பறந்து விட்டது. ராஜேந்திரன் இருந்தால் அவனிடம் ஆலோசனை கேட்கலாம்.
வெகுநேரமாய் யோசித்து பாரதிக்கு ஒரு கால் சங்கிலி வாங்கிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தான். அவளுடைய கால்களில் கால் சங்கிலி பார்த்த ஞாபகம் இல்லை. அவளுக்கு உபயோகமாய் இருக்கும் பொருள் என்ற அளவில் கால் சங்கிலிதான் சிறந்த பரிசாகப்பட்டது.
என்ன விலை வரும்? இங்கே எண்ணுாறு ரூபாய் இருக்கிறது. அதற்குமேல் பெறுமதி வராது, வந்தாலும் கந்தோர் மேசைக்குள் முன்னூற்றிச் சொச்சம் இருக்கிறது. தாராளமாய்க் காணும்.
மறுநாட்காலை, அவன் அவசரப்படாமல் ஹோலுக்குள் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான்.
52

தாமரைச்செல்வி
செந்தில்நாதனின் அறைக்குள்ளிருந்து வெந்தயக்குழம்பு வாசம் வந்தது.
"என்ன தம்பி கந்தோருக்குப் போகேலையே.?"
தோளில் துவாயுடன் அறையிலிருந்து வெளியே வந்த செந்தில் நாதன் கேட்டார்.
"இண்டைக்கு நான் லீவு"
"ஏன் ஏதும் சுகமில்லையே."
"அப்பிடி இல்லை. ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்குப் போக வேணும்." மேற்கொண்டு அவர் ஏதும் கேட்கக்கூடும் என்று பத்திரி கையை கவனமாகக் குனிந்து படித்தான்.
"தம்பி
மிக அருகில் வந்து செந்தில்நாதன் கூப்பிடவும் அவன் பத்திரி கையைத் தாழ்த்திக்கொண்டு நிமிர்ந்தான்.
"நேற்று வீட்டிலயிருந்து கடிதம் வந்தது. பிள்ளைக்கு ஒரு சாதகம் பொருந்தியிருக்காம். மாப்பிள்ளையின்ர விலாசம் அனுப்பியிருக்கு மனிசி, விசாரிச்சுப் பார்க்கட்டாம். இங்க லேபர்டிப்பார்ட்மெண்டிலதான் வேலை யாம். உமக்கு அங்க வேலை செய்யிற ஆரையாவது தெரியுமே. ஆளைப்பற்றி விசாரிக்க வேணும்."
அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு "அங்க எனக்கு ஒரு தரையும் பழக்கமில்லை அண்ணை. வேணுமெண்டால் ஆரையாவது விசாரிச்சுப் பார்க்கிறன்."
"கெதியாய் விசாரிச்சுப் பார்த்து நல்ல இடமெண்டு எல்லாம் சரி வந்தால் தையில நடத்திப்போடலாம். பெடியனைப்பற்றி விசாரிக்கிறதுதான் முக்கியம்."
"ஏன் அண்ணை எங்கட பக்கத்து ரூம் மாஸ்டரின்ர தம்பி லேபர்டிப்பார்ட்மெண்டில் தானே வேலை செய்யிறார். நீங்க மாஸ்டரோட
53

Page 33
வீதியெல்லாம் தோரணங்கள் கதைச்சுப் பாருங்கோவன்."
அவர் ஒரு வினாடி தயங்கி விட்டு "கல்யாண அலுவல் தம்பி எல்லோரோடயும் கதைக்க ஏலாது. ஆனால் மாஸ்டர் நல்ல மனிசன், கதைச்சுப் பாப்பம்." என்றபடி கதிரவேலு மாஸ்டரைத் தேடிப்போனார். அவனால் மேலே பேப்பர் படிக்க முடியவில்லை, பாவம் இவரும் எத்தனை தூரம் அலைகிறார். இதுவாவது சரிவந்திடவேணும். கடவுளே. எட்டரை மணிக்குப் பிறகு குளித்து உடைமாற்றி வழியில் கடையில் பானும் கறியும் சாப்பிட்டு விட்டு ஒன்பது பதினைந்துக்கு சித்தப்பா வீட்டுக்குப் போனான். சிறீதரன் ஆயத்தமாக நின்றான்.
பாரதி நீட்டிய தேநீரைக் குடித்து விட்டு இருவரும் புறப்பட்டார் கள். றிக்கோவுக்கு போய் சொல்லி அனுப்பியதும் ரவிக்குமார் வந்தான். "எல்லாம் ரெடி நீங்கள் வாங்கோ. அரைமணியில எடுத்திடலாம்." சிறீதரன் கடவுச்சீட்டுடன் உள்ளே போக அவன் வெளியே மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.
இந்த மனிதர்களிடம் வெளிநாட்டு வாசனை. இவர்களும் சிறீதரன் மாதிரி வெளிநாட்டில் இருப்பதை தண்டனை யாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? கட்டாயத்தின் பேரில் உழைக்கப் போனவர்களா அல்லது மேலதிக வசதிகளை எண்ணிப் போனவர்களா..? பெட்டி பெட்டியாய் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போகும் இவர்கள் இவற்றுக்கெல்லாம் கொடுத்த விலை எவ்வளவாக இருக்கும்.
பத்தரைக்கு சிறீதரன் வந்து "எல்லாம் எடுத்தாச்சு, டாக்ஸி அல்லது வான் பிடிக்கலாமோ பாருங்கோ." என்றான்.
தெய்வேந்திரன் வெளியே போய் வான் ஒழுங்கு செய்து கூட்டி வந்தான்.
"எங்க போகவேணும்."
54

தாமரைச்செல்வி
"விவேகானந்தா மேட்டுக்கு."
"கிட்டின இடமாக்கிடக்கு எங்களுக்கு நட்டம்."
"ஏதோ நீ கேட்கிறதைத் தரலாம். வா"
வானை வாசலில் நிறுத்தி இருவருமாய் பொருட்களை ஏற்றி விட்டு தாங்களும் ஏறி அமர்ந்தார்கள்.
வான் ஒடும்போது அவன் பக்கத்தில் திரும்பி சிறீதரனைப் பார்த்தான். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். இப்படியே இவர்கள் வீட்டுக்குப் போய் இறங்கியதும் சொல்லிக்கொண்டு நகைக்கடைக்குப் போகவேனும், கால்சங்கிலி வாங்கவேணும். கால் சங்கிலியை எப்படி பாரதியிடம் கொடுப்பது. இன்று இரவோ அல்லது நாளை காலையோ இவர்கள் யாழ்ப்பாணம் போகிறார்கள் என்ற நினைவு சுமையாய் அழுத்தியது. பாரதியுடன் தனியே கதைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்றிருந்தது. சிறீதரனுடன் கதைத்துப் பார்க்கலாம். அவன் புரிந்து கொள்வான்.
"இண்டைக்கு இரவு றெயிலில போகலாம் அல்லது நாளைக்கு காலமை பஸ்ஸில போகலாம். எது பாதுகாப்பு?" சிறீதரன் கேட்டான்.
"இங்கயிருந்து பஸ்ஸிலயே எண்டால் பொருட்களோட போறது பயம்தான். றெயின் எண்டால் வவுனியா வரைக்கும் பயமில்லை. அங்கால எங்கட இடம்தானே."
"எங்கட இடமெண்டால் பயமில்லையோ?"
"எங்கட இடங்களிலயும் பிரச்சினைதான். ஆமியால பயம்தான். ஆனாலும் எங்கட இடம் எண்டு போக ஒரு ஆறுதல் இருக்கும்தானே."
"பாப்பம், சித்தப்பாட்ட கேட்டுச் செய்வம், நீங்கள் இண்டைக்கு எங்களோட நில்லுங்கோவன்."
"இல்லை, இப்ப நான் ஒரு இடத்துக்குப் போகவேனும், மற்றது."
தயங்கினான்.
"என்ன சொல்லுங்கோ,"
55

Page 34
வீதியெல்லாம் தோரணங்கள்
"நீங்கள் தவறாய் நினைக்காட்டி பாரதியை நான் ஒருக்கா வெளியே கூட்டிப்போகலாமா?"
அவனை சிறீதரன் மெல்லிய சிரிப்புடன் பார்த்தான்.
"அதுக்கென்ன கூட்டிப்போங்கோவன்."
அவன் உற்சாகமாய் நிமிர்ந்தான்.
"இவ்வளவு தூரம் வந்த பிறகு நீங்களோ நாங்களோ மனம் மாறப் போறதில்லை. மனம்விட்டுக் கதைக்கிறதில ஆரோக்கியமான ஆரம்பம் இருக்கும். உள்ள நாளிலயே பாரதி எண்ணி எண்ணித்தான் கதைக்கிற
(SGT.
சிறீதரன் இவ்வளவு சந்தோசமாக அனுமதி தருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லைத்தான். எத்தனை தயக்கத்தோடு இருந்தான்.
"ஒரு மணிநேரம் மிஞ்சிப் போனால் ஒன்றரை மணிநேரம் கோல்பேஸ் வரைக்கும் போயிட்டுவாறம்."
"றெயினுக்கு போறதெண்டாலும் பதினொருமணிக்குத்தானே. நீங்கள் போயிட்டு ஆறுதலாய் வரலாம்."
"நான் இப்பபோய் பின்னேரம் அஞ்சுமணிக்கு வரட்டுமா."
"g乱”
சிறீதரன் சிறிது திரும்பி அவனைப் பார்த்து சிரித்தான்.
"உங்கட நிலமை எனக்கு இன்னும் நல்லாய் விளங்கும். நீங்களா வது ஒருநாள் போய் பாரதியை பொம்பிளை பார்த்தீங்கள். நான் என்ர ஆளை படத்தில மட்டும்தான் பார்த்தனான். எனக்கு இவள்தான் எண்டு முடிவான உடன மனம் எத்தினை கனவு காணுது ஒருக்கா. கூட நேரில பார்க்காத ஒரு பொம்பிளை என்ர மனதை இவ்வளவு தூரம் பாதிச்சதை நினைக்க ஒரே ஆச்சரியமாக்கிடக்கு யாழ்ப்பாணம் போன அடுத்த நாளே போய் அந்தப் பிள்ளையை பார்க்க வேணும் எண்டு மனம் கிடந்து தவிக்குது. பொம்பிளை பார்க்கிற சாட்டில போகவேண்டியது
தான
56

தாமரைச்செல்வி
பல்வரிசை பளிச்சிட சிரித்தான். அவனின் கையைப் பிடித்து வாஞ்சையோடு அழுத்தினான். சிறீதரனின் வார்த்தைகளிலும் அந்த கையின் அழுத்தத்திலும் இருந்த இதம் அவன் நெஞ்சுக்குள் சில்லென்ற குளிர்மையோடு இறங்கியது.
"நான் இதில இறங்கிறன்."
அவன் இறங்கிக் கொள்ள சிறீதரன் கையசைத்து விட்டுப் போனான். அவன் ஜிந்துப்பிட்டிக்கு ஊடாக நடந்து செட்டியார்தெருவை அடைந்தான். மத்தியான நேரத்திலும் நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அதிகமாய் இருந்தது. ஐப்பசி கல்யாணமாதம் என்பதால் ஒவ்வொரு கடையிலும் பெண்களின் கூட்டம் இருந்தது. அவன் கால் சங்கிலி பார்த்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கினான். கடைசியில் நித்தியகல்யாணியில் ஒரு கால்சங்கிலி பார்த்தான். சின்னச்சின்ன வட்டம் இணைத்த அழகான சங்கிலி. இரண்டு மணி கோர்க்கப்பட்டு சிலுங் சிலுங்' என்று மெலிதாய் ஒலி எழுப்பியது.
இது நல்ல வெள்ளிதானே. கறுக்குமா. கறுக்காதா என்று திருப்பி திருப்பி கேட்டு அறுநூற்றி நாற்பது ரூபா கொடுத்து வாங்கிக் கொண் டான். சிவப்பு ரிஷ்யூ காகிதத்தில் சுற்றி சிறிய பைக்குள் போட்டுக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்தான்.
வீட்டுக்கு வந்து அறையின் கதவை சாத்தி விட்டு கால்சங்கிலியை உள்ளங்கையில் வைத்துப் பார்த்தான். பார்க்க பார்க்க மிக அழகானதாய்த் தெரிந்தது. இதை பாரதி காலில் போட்டுக்கொண்டு நடக்க மெலிதாய் சத்தம் வரும். அந்த சத்தம் மனதுக்கு இனிமையாய் இருக்கும்.
மாலை நாலரை மணிக்கு அவன் பாரதியின் வீட்டுக்கு புறப்பட ஆயத்தமாகிவிட்டான். அறைக்கதவைப்பூட்டும்போது செந்தில்நாதன் வந்தார்.
"தம்பி! அந்தப்பெடியனைப்பற்றி விசாரிச்சனான். நல்ல குணமான பெடியனாம். ரொறிங்ரன் கவர்மெண்ட் மாடிவீட்டில ரூம் எடுத்து தங்கியிருக்குதாம், ஆளை நேரில போய்ப்பார்க்கலாம் எண்டு இருக்கிறன். ஆள் பொது நிறமெண்டாலும் நல்ல ஸ்மார்ட்டான ஆளாம். ஏதோ
57

Page 35
வீதியெல்லாம் தோரனங்கள்
குணம் நல்லாய் இருந்தால் போதும்."
"நல்ல குணம் நடையெண்டால் பிறகு ஏன் யோசிப்பான்."
"எண்டாலும் வடிவாய் இன்னும் விசாரிக்க வேணும், ஆளை நேரில பார்த்து ஒருக்கா கதைச்சுப்பார்க்க வேணும். இந்தக் காலத்து பெடியளை நம்ப ஏலாது."
அவர் சொல்லிக்கொண்டே தனது அறைக்கதவை திறந்து உள்ளே போனார். அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
இப்படித்தான் பாரதியின் சித்தப்பாவும் இவனைப் பற்றி விசாரித்துக் கொண்டு அலைந்தவர். தங்கள் பெண்களின் வாழ்க்கை நல்லவனான ஒருவனின் கைகளில் ஒப்படைக்கப்படவேண்டும் என்பதில் பெற்றவள் கள் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள்?
அவன் வாசல் படிகளில் இறங்கியபோது எதிரே கோமதி அன்ரியும் சுபத்திராக்காவும் வந்தார்கள்.
"ஒவ்வீசுக்கும் ஒழுங்காய் போகாமல் ஏதோ கடும் அலுவலாய் திரியிறீர் தம்பி, என்ன விசேசம்?"
கோமதி அன்ரி வேடிக்கையாய்க் கேட்டதற்கு;
"அப்பிடி ஒரு விசேசமும் இல்லை அன்ரி சும்மா அலுவல்தான்.'
என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து நடந்தான்.
பக்கத்து அறைகளில் இருக்கும் இவர்கள் நாளைக்கு பாரதி வந்த பின் அவளுடனும் சிநேகிதமாக இருக்கக் கூடியவர்கள். கல்யாணம் நிச்சயமானது பற்றி மட்டுமே இவர்களுக்கு தெரியும். மற்றபடி பாரதி நடைதூரத்தில் வந்திருப்பதையும் காலை மாலை என்று அங்கு தான் போய் பார்ப்பதையும் இப்போது இவர்களுக்கு சொன்னால் ஆ. என்று அதிசயப்படுவார்கள்.
அவன் சிவானந்தா வீதி கடந்து ஜம்பட்டா வீதிக்கு ஏறி நடந்தான்.
0. 0x8
8

ன்ெனவென்று சொல் லத் தெரியாத உணர்வின் ஊற்று நெஞ்சுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. இந்த சந்தோஷப்பரபரப்பு
இதுவரை அவனுக்குள் ஏற்பட்டிராதது. சட்டைப் பைக்குள் இருந்த கால் சங்கிலியை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
சித்தப்பாவின் வீட்டுக்கு போனபோது வாசலிலேயே சிறீதரன் நின்றிருந்தான். உள்ளே திரும்பி "பாரதி" என்று குரல் கொடுத்தான்.
"GJITëIG85T."
இருவரும் ஹோலில் அமர்ந்தார்கள்.
"இரவு றெயினில போறதுதான் நல்லது எண்டு சொல்லுறார் சித்தப்பா. வவுனியாக்கு போய் பிரைவேற் பஸ்ஸில பொருட்களை ஏத்திக் கொண்டு போகலாம்."
"ஓம். அது நல்லது."
சித்தி கேக்கும் கப்பல் வாழைப்பழமும் தேநீரும் கொண்டு வந்து வைத்தாள். போதும் என்கிற அளவுக்கு உபசரிப்பு.
பாரதி நீலநிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட சேலையில் வந்து நின்றாள். தலையை உயர்த்தி இழுத்து கிளிப் பண்ணிதளரப்பின்னி யிருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலி கையில் ஒரு காப்பு நெற்றியில் சிவப்பு நிற ஒட்டுப்பொட்டு. மெல்லிய விபூதிக்கீறல், முகம் பவுடர் வாசனையோடு மூக்குத்தி பளிரிட மலர்ச்சியாக இருந்தது.
சிறீதரனிடம் சொல்லிக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
"ஒட்டோவில போவம், பஸ்ஸுக்கு நிற்க ஏலாது." அவன் வீதியில்
59

Page 36
வீதியெல்லாம் தோரணங்கள்
காலியாகப்போய்க்கொண்டிருந்த ஓட்டோவை கைதட்டி நிறுத்தினான். இருவரும் ஏறி அமர்ந்ததும் ஒட்டோ உறுமிக் கொண்டு ஓடத் தொடங்கியது.
அன்றைக்கு கொஞ்சமும் வெய்யில் இல்லை. எந்த நேரத்திலும் மழை வந்து விடும் போலத் தோன்றியது. வானம் தெளிவாய் இருந்தாலும் காற்றில் ஈரலிப்பு இருந்தது.
கப்பல் போன்ற கார்கள் தெருவில் வழுக்கிக் கொண்டு ஓடின. வரிசையாய் சிவப்பு பஸ்கள். மினி பஸ்கள் . நடைபாதையில் நெருக்கமாய் சனங்கள். அலுவலகங்களிலிருந்து திரும்பும் கூட்டம், கூரான குதிக்கால் பாதணிகளுடன் அனாயாசமாக நடக்கும் பெண்கள். நடைபாதைக்கடைகளில் குவிக்கப்பட்டிருந்த பொருட்கள். அவை களை பார்த்து விலை விசாரிக்கும் மனிதர்கள். வரிசையாய் கடந்து போகும் உயர்ந்த கட்டடங்களை அவள் வியப்புடன் பார்த்துக்கொண்டே வந்தாள். ஒட்டோ வாகனங்களை விலத்திக் கொண்டு வேகமாக ஓடியது.
கார்கில், மில்லேர்ஸ் தாண்டி லேக்ஹவுஸ் சந்தி சென்று வலது பக்கமாய் திரும்பி, திறைசேரியை ஒட்டோ நெருங்கியது. இடது பக்கமாய் இருந்த உயர்ந்த திறைசேரிக் கட்டடத்தொகுதியை பாரதிக்குக் காட்டி
6TITGT.
"இதில் தான் நான் வேலை செய்யிறனான். இரண்டாவது மாடியிலதான் என்ர கந்தோர்."
"அட எவ்வளவு பெரிய கட்டடம்" என்று வியந்து கொண்டாள். கட்டடத்தின் மேற்கு முனையில் இருந்த பாராளுமன்றத்தின் முன்புறம் இறங்கிக் கொண்டார்கள். ஒட்டோவை பணம் கொடுத்து அனுப்பிவிட்டு இருவரும் மெல்ல நடந்தார்கள். வீதியின் இருபக்கமும் பார்த்து விட்டு "இங்க ரோடு கடக்கிறதில கவனமாய் இருக்க வேணும். டக்கெண்டு வாங்கோ." என்று அவளை முன்னே விட்டு வீதியைக் கடந்தான்.
பாராளுமன்ற முன்புறம் இருந்த சிலைகளையும் கடற்கரையில் வரிசையாய் இருந்த பீரங்கிகளையும் பார்த்துக்கொண்டே அவள்
60

தாமரைச்செல்வி
நடந்தாள். தூரத்தில் கடலின் அலைகள் ஒ. வென்ற சத்தத்துடன் ஆரவாரித்தது. வெய்யில் சிறிதும் உறைக்காத அந்த பின்னேரப் பொழுதில் இப்படி நடப்பது மனதுக்கு சந்தோசமாய் இருந்தது.
பாரதி மெளனமாய் நடந்து வந்தாள். பார்வை மட்டும் அங்கும் இங்கும் ஆர்வத்துடன் பதிந்தது. ஒரு பக்கம் அலைகள் மோதிவிழும் பரந்த கடல், மறுபக்கம் பசும்புல்வெளி. தூரத் தெரியும் பெரிய பெரிய கட்டடங்கள். நடுவே நீளும் வீதியில் வாகனங்களின் ஓட்டங்கள்.
அவர்கள் நீண்டு கிடந்த வீதியில் நடந்தார்கள். தூரத்தூர மனிதர்கள். ஒருவராய், இருவராய், குழுவினராய். குழந்தைகள் பட்டங்கள் விட்டுக் கொண்டே புல்வெளியில் ஓடின.
"ஞாயிற்றுக்கிழமை எண்டால் இங்க விலத்த ஏலாத அளவுக்கு சனமாய் இருக்கும். இண்டைக்கு மழைக் குணமும்தானே அதுதான் அவ்வளவாய் ஆட்கள் இல்லை."
தள்ளுவண்டியில் அன்னாசிப்பழம் விற்பவனையும், சுண்டல் விற்பவனையும் கடந்து கொஞ்சத்தூரம் நடந்தார்கள். கடற்கரை அரு கில் பார்க்க மிகவும் அழகாய் இருந்தது. வெண் நுரையாய் அலைகள் கரையில் வந்து மோதி மோதி அடித்தது.
"வாங்கோ அந்தக் கரையில் கொஞ்சநேரம் நிற்பம்."
இருவரும் படிகளில் இறங்கி மணற்பரப்பில் போய் நின்றார்கள். அலை வந்து கால்களை நனைத்து போனது. உள்ளங்கால்கள் குறுகுறுவென்று குளிர்ந்தது. குழந்தைகள் அலைவந்து நனைக்கும் போதெல்லாம் ஓவென்று ஆரவாரித்தார்கள். பாரதியும் அந்த குழந்தை களோடு சேர்ந்து சிரித்தாள். சிறிது நேரம் அலை வந்து மோதுவதை பார்த்து விட்டு படி ஏறி வந்தார்கள்.
"அந்த புல்வெளியில் கொஞ்சநேரம் இருப்பம்."
கடற்கரையைப்பார்த்த படி புல்வெளியில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள் வானம். நீலத்திலிருந்து மெல்லிய சிவப்புக்கு
61.

Page 37
வீதியெல்லாம் தோரணங்கள் மாறிக்கொண்டிருந்தது. கடலின் மேற்பரப்பில் சிவப்பு பந்தாய் சூரியன். கடற்பரப்பு வானுடன் முட்டும் எல்லையில் சிறிதாய் இரண்டு கப்பல்கள்.
காற்று கொஞ்சம் அதிகமாகவே வீசியது.
பாரதியின் முன் மயிர் காற்றுக்கு நெற்றியில் வந்து விழுந்தது. ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டு கடலையே பார்த்தாள். இப்படி தன்னுடன் கடற்கரையில் வந்து இருப்போம் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள்.
கால்களை மடித்து ஒரு கையை ஊன்றிக்கொண்டு மறுகையால் தலைமயிரை ஒதுக்கி விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். சேலையை விலக்கிக் கொண்டு பாதங்கள் பளிச்சென்று தெரிந்தன. இந்த அழகான பாதங்களுக்கு கால்சங்கிலி எவ்வளவு பொருத்தமாக இருக்கும்.
ஐந்து நிமிடங்களுக்கு இருவரும் தூரத்தில் பார்வையை பதித்தி ருந்தார்கள். அந்த மெளனத்தை கலைத்துக் கொண்டு அவன் பேச ஆரம்பித்தான். M
"அண்டைக்குப் பொம்பிளை பார்க்க உங்கட வீட்ட வந்தபோதே உங்களோட கதைக்கவேணும் எண்டு நினைச்சனான். அப்ப அது முடியாமல் போயிட்டுது. இப்பதான் அதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நீங்கள் யாழ்ப்பாணம் ஹின்டு லேடிஸ்லயா படிச்சனிங்கள்."
அவள் தலையை சரித்து 'ம்' என்றாள்.
"வீட்டில இருக்கிறநேரம் என்ன செய்வீங்கள். ரேடியோ கேட்பீங்களா"
d
"புத்தகங்கள் வாசிப்பீங்களா? கதையள் படிக்க பிடிக்குமா?"
LD
"கவிதைகள்"
62

தாமரைச்செல்வி
"படிப்பன்"
"நீங்கள் ஷோர்ட் ஹான்ட் படிச்சனீங்களா?" அவள் வியப்புடன் நிமிர்ந்து "இல்லையே. ஏன் ... " என்றாள்.
"இல்லை ஷோர்ட் ஹான்ட் மாதிரி சுருக்கமாய் பதில் சொல்லு நீங்கள் . அதுதான் கேட்டனான்."
அவள் சட்டென்று சிரித்து விட்டாள். ஒரு பெண்ணின் சிரிப்பில் இத்தனை அழகு இருக்கக்கூடும் என்பதை இன்றுதான் உணர்ந்தான்.
"எவ்வளவோ காலம் சேர்ந்து வாழப்போறம், இது எங்கட ஆரம்பம். நாங்கள் மனம் விட்டு கதைச்சுக் கொள்ளுறது நல்லது. என்னட்ட உங்களுக்கு பயமோ தயக்கமோ தேவையில்லை."
அவன் ஒரு வினாடி நிறுத்தினான். அவள் புல்தரையில் விரலால் கீறிக் கொண்டிருந்தாள்.
"என்னைப் பற்றி என்ர பழக்கங்கள் ரசனையள் பற்றி உங்களுக்குச் சொல்லவேணும்." என்று ஆரம்பித்து தான் மத்திய கல்லூரியில் படித்த தையும் வேலை கிடைத்து கொழும்புக்கு வந்ததையும் ஒரு அறைச் சீவியத்தையும் பற்றிச் சொன்னான்.
"எனக்கு உங்களிட்ட சொல்ல இன்னொரு விசயமும் இருக்கு, எங்கட கல்யாணத்தில சீதனம் தாறதுக்கு உங்களை நிர்ப்பந்திக்க எனக்கு உண்மையில விருப்பமில்லை. காசு தாறகில உங்களுக்கு ஏதும் கஸ்டமிருக்கா?"
அவள் ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து விட்டு சொன்னாள்.
"அண்ணாவுக்கு தாற சீதனக்காசில எடுத்துத்தான் எனக்கு தருகினம், நாங்க தாற காசில எடுத்து தங்கச்சிக்கு குடுக்கலாம் எண்டு அவையள் தாங்களாகவே சொன்னவை. அதால அப்பாவுக்கு எதுவும் கஸ்டமில்லை. அண்ணா இதுவரை உழைச்சு அனுப்பியும் காசு சேர்த்து வைச்சிருக்கேலை. வீடு ஷெல் பட்டு இடிஞ்சு போய் அதை திருப்பி
63

Page 38
வீதியெல்லாம் தோரனங்கள் கட்டினனாங்கள். அக்காவுக்கு யாழ்ப்பாணத்திலேயே வீடு வாங்கிக் கொடுத்து காசும் குடுத்து கல்யாணம் செய்து வைச்சது. எல்லாம் அண்ணாவின்ர உழைப்புத்தான். நாங்கள் பெரிய வசதி எண்டும் இல்லை கஷ்டம் எண்டும் இல்லை.
இதைக் கேட்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
"எனக்கு உங்கட அண்ணாவை சரியாய் பிடிச்சிருக்கு. எவ்வளவு ஃபிரண்ட்லியாக பழகிறார்."
"எங்கட வீட்டில எல்லாத்துக்கும் அண்ணாதான், அவர்தான் எல்லாப் பொறுப்பும். அப்பா கூட அண்ணாவின்ர ஆலோசனை கேட்டுத்தான் நடப்பார்."
"சிறீதரனுக்கு இனிமேல் தானே நாள் குறிப்பினம்." "ஒம், இந்த மாதமே செய்யிறதாய்த்தான் பேச்சு." "எனக்கும் இன்விடேஷன் அனுப்புவீங்கள் தானே."
சட்டென்று திரும்பி அவனைப்பார்த்து விட்டு மறுப்பாய் தலைய சைத்தாள்.
"ஊஹ0ம். நீங்கள் வாறது சரியில்லை."
"என்ன சரியில்லை. அதெல்லாம் அந்தக்காலம். இப்ப அதை ஆர் கவனிச்சுக் கொண்டிருக்கப் போகினம். கட்டாயம் காட் அனுப்ப வேணும். நான் வருவன், சிறிதரன்ர கல்யாணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும். அத்தோட உங்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும்."
அவள் உதட்டை சுழித்துக் கொண்டு சிரித்தாள்.
"முதல்ல அண்ணான்ர நடக்கட்டும். பிறகு எங்களுடையது தானே"
"எல்லாம் பிரச்சனையள் இல்லாமல் நல்லாய் நடந்திடவேணும்." என்றான் அவன்.
"பிரச்சினையள் நெடுகவம் தானே, இது முடியப்போகுதே,
64

தாமரைச்செல்வி
இருக்கிற ஆடமியிட்ட பட்டது காணாதெண்டு இப்ப இன்னொரு ஆமி வந்திருக்குது. எல்லாக் கஸ்டங்களும் எங்களுக்குத்தான்."
"அவங்களை விட இவங்கள் மோசமாக்கிடக்கு. கச்சேரிப் பக்கம் நெடு கவும் பிரச்சினை எண் டு கதைப் பினம், உங்களுக்கு பயமில்லையே?"
"எல்லாம் எங்களுக்குப் பழகியிட்டுது, சத்தம் கேட்டால் கூட சனம் தங்கட பாட்டில போகும்."
"எண்டாலும் கவனமாய் இருக்கவேணும், எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது. உங்கட தம்பிக்கு அப்பிடி நடக்கும் எண்டு என்ன நினைச்சனிங்களே..?"
அவளுடைய முகம் ஒரு வினாடியில் மாறியது. தூரத்து வானத்தை வெறித்துப் பார்த்தாள். கலங்கிய கண்களிலிருந்து இருதுளிநீர் கன்னத்தில் கோடிட்டது.
ஒரு பேச்சுக்குச் சொன்ன வார்த்தைகள் அவளை வருத்தி விட்டதே என்று அவன் தவித்துப்போனான். அவள் தழுதழுத்த குரலில் சொன்னாள் "தம்பியை நினைச்சால் மனம் தாங்காது. பதினெட்டு வயதிலேயே அண்ணாவை விட உயரம். நல்ல கெட்டிக்காரன், அத்தோட நல்ல குணமும், அடுத்தவைக்கு உதவி செய்ய எப்பவும் முன்னுக்கு நிற்பான். அப்பிடி உதவி செய்யப் போய்த்தான் தன்ர உயிரையும் குடுத்தவன், அப்ப கோட்ட்ைக்குள்ளயிருந்து ஒரே ஷெல் அடி அவன் ரியூஷன்ல யிருந்து வாற வழியில ஒரு ஆள் ஷெல் பட்டு விழுந்திட்டுது. சனம் எல்லாம் குளறிக் கொண்டு ஓடுதுகள். இவன் பாவம் பார்த்து காயம் பட்ட ஆளை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போயிருக்கிறான். ஆஸ்பத்திரி வாசலுக்கு போக அடுத்த ஷெல் வந்து விழுந்து அவனும் அதிலேயே. " ஒரு வினாடி நிறுத்தி விட்டு தொடர்ந்தாள்.
"நாங்கள் விசயம் அறிஞ்சு ஓடிப்போனபோது மதில் சுவரில தெறிச்சிருந்த அவன்ர தசையளைத்தான் பார்த்தனாங்கள், அவனைக்
65

Page 39
வீதியெல்லாம் தோரணங்கள்
காணேலை. கட்டிப்பிடிச்சு அழக்கூட அவன்ர உடம்பு இல்லாமல் போச்சுது. அதோட அம்மா அழுது அழுது பாதியாய்ப் போனா, மூண்டு வருசமானாலும் இப்பவும் நேற்றுத்தான் அவன் போனது மாதிரி கிடக்கு, அவன். அவனை." சொல்ல இயலாமல் மெல்லிய குரலில் விசும்பினாள், கண்கள் சிவந்து நீர்த்துளிகள் சிந்தின, அவனுக்கு கவலையாக இருந்தது. என்ன வார்த்தைகளை சொல்லி இவளைத் தேற்றுவது.?
புற்றரையில் பதிந்திருந்த அவளின் கை மீது தனது கையை பதித்து "அழாதை பாரதி" என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.
ஒரு விரலால் அவளது முகத்தை நிமிர்த்தி அந்த கண்ணிரை துடைத்து விட வேண்டும் போலிருந்தது. அவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் லேஞ்சியால் கண்களையும் முகத்தையும் அழுத்தித் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். கண் இமைகளில் இன்னமும் ஈரம் இருந்தது.
"இந்த இளம் வயதில் அவன் அநியாயமாய்ப் போனதை நினைக்க நினைக்க மனமே ஆறாது. எவ்வளவோ பேருக்கு நேர்ந்த கொடுமைக ளோட இதுவும் ஒண்டு எண்டு நினைச்சு மனதை தேற்றிக் கொண்டிருக் கிறம்." V
இப்போது அவள் முகம் கொஞ்சம் தெளிவாய் இருந்தது. "வாழ்க்கை எண்டாலே இழப்புகளும் சோகங்களும்தானே, பிரச்சினை இல்லாமல் ஒருதருக்கும் வாழ்க்கை அமையிறேலை."
"யாழ்ப்பாணத்தில மாறி மாறி செத்த வீடுகள் தான். மாறி மாறி திவசங்களும் நினைவஞ்சலிகளும் தான், அப்பிடி ஒரு சோகமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிட்டம்."
இப்போது சூரியன் முழுவதுமாய் மறைந்திருந்தது. வானம் சிவப்பிலிருந்து கருமைக்கு மாறி கடலுக்குள் தாழ்ந்தது. மழை வந்து விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு காற்று குளிராய் வீசியது. சுற்றிலும் மெல்ல மெல்ல இருள் பரவ ஆரம்பித்தது.
66

தாமரைச்செல்வி
"சரியான குளிர் காத்து அடிக்குது."
என்று சொல்லிக்கொண்டு தோளில் படபடத்த சேலையை மறு தோளால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டாள்.
கடலின் இரைச்சல் இன்னும் அதிகமாய் கேட்டது. கடலைச்சுருள் விற்றுக்கொண்டு போன சிறுவனைக் கூப்பிட்டு இரண்டு சுருள் வாங்கி ஒன்றை அவளிடம் நீட்டினான். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு ஜோடி நெருக்கமாய் அமர்ந்திருந்தது. அந்தப் பக்கம் பார்த்தவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். விர். ரென்று மேலே ஐந்தாறு காற்றாடிகள் பறந்து கொண்டிருந்தன. அவை இருண்டு கொண்டு வருகின்ற வானத்தில் சிற சிறு புள்ளிகளாகத் தெரிந்தன. கொஞ்சநேரம் நிமிர்ந்து அதையே பார்த்தாள். பிறகு திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
"உங்கட வீட்டில நீங்களும் அண்ணாவும் தானே?"
"ம். எங்களுக்கு சின்ன வயசாய் இருக்கிற போதே அப்பா ஒரு விபத்தில போயிட்டார். அம்மா எங்களை கஸ்டப்பட்டு வளர்த்தா, அம்மா நல்லவதான். தெரியாதே, மனம் நொந்து நொந்து வாழ்ந்தவ. சிலவேளை சட்டென்று ஏதும் கதைச்சிடுவா. பொம்பிளை சகோதரங்கள் எண்டு இல்லாமல் வளர்ந்திட்டம். எதுக்கும் அம்மாவைச் சார்ந்தே பழகியிட்டுது. நீங்கள் வந்து அம்மாவோட பழகிப்பார்த்தா தெரியும். அண்ணி சரியான நல்லவ, உங்களோட சகோதரம் மாதிரி பாசமாய் இருப்பா. எங்கட சின்னக் குடும்பம். அக்காவோ தங்கச்சியோ இல்லாமல் போச்சே எண்டு எனக்கு சரியான கவலைதான். சிறிதரனுக்கு ஒரு தங்கச்சி மாதிரி எனக்கும் இருந்திருக்கலாம். எவ்வளவு நல்லாய் இருந்திருக்கும்."
அவன் கூறிய பாவன்ையில் அவள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். ஒரு நிமிடம் பொறுத்துக் கேட்டான்.
"யாழ்ப்பாணம் போன உடனை எனக்கு லெட்டர் போடுறீங்களா.."
ff
"அய்யோ.
67

Page 40
வீதியெல்லாம் தோரணங்கள்
f
ஏன்.
"நான் எப்பிடி."
"நான் போட்டால் பதில் போடுறீங்களா.." அவள் பேசாமலிருந்தாள். "சரி நானே போடுறன். பதில் போடவேணும். என்ன ." "பார்ப்பம்."
"என்ன பார்ப்பம். கட்டாயம் போடவேணும். வேணுமெண்டால் இதுக்கும் சிறீதரனிட்ட நான் அனுமதி கேட்கட்டுமா?"
"அய்யோ. அவர் என்ன நினைப்பார்?" "ஒண்டும் நினைக்க மாட்டார். அவருக்கு விளங்கும் தானே." "s. urirub."
"பாரதி."
முதல் தடவையாய் பெயர் சொல்லி கூப்பிட அவள் நிமிர்ந்து பார்த்தாள். இருளும் ஒளியும் கலந்திருந்த அந்த மங்கிய பொழுதில் அவள் முகம் பளிச்சென்று அழகாய் தோன்றியது.
{X)
68

9
ஒரு வினாடி அவன் பாரதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"இண்டைக்கு நான் எவ்வளவோ சந்தோசமாய் இருக்கிறன், இந்த நாளின் நினைவாய் உங்களுக்கு ஒரு பொருள் தரப்போறன்."
தன் சட்டைப்பைக்குள்ளிருந்து கால்சங்கிலியை எடுத்து அவள் கையில் கொடுத்தான். விரித்துப் பார்த்த அவள் வியப்புடன்
"என்ன இதெல்லாம். " என்றாள்.
"உங்களுக்குப் பிடிச்சிருக்கா." "ub " என்றாள். "காலில போட்டுப் பாருங்கோ"
"இப்பவா..?"
"ஏன் இப்ப போடக் கூடாதோ?"
அவள் சிரித்துக் கொண்டே கால்களில் போட்டுக் கொண்டாள். பாதத்தை அழுத்திப் பார்க்க சிலுங் கென்றது.
"நடக்க சத்தம் வருமே?"
"அதுதான் நல்லது. காலுக்கு வடிவாய் இருக்கு."
"என்ன விலை?"
"விலையைப் பற்றி இப்ப என்ன, சரி மழை வரப்போகுது போல
கிடக்கு போவமா?"
69

Page 41
வீதியெல்லாம் தோரணங்கள்
""
இருவரும் எழுந்தார்கள். சுற்றிலும் மின் வெளிச்சங்கள். கடலின் பரப்பு கருமை போர்த்து காணப்பட்டது. வானத்தில் மெல்லிய பிறை நிலவு . . '
"கோல்பேஸ0 க்கு வந்திட்டு ஐஸ்கிரீம் குடிக்காமல் போகக் கூடாது." தூரத்தில் நின்ற வானை நோக்கிப் போனான். கோன் ஐஸ்கிரீமை இரண்டு கைகளிலும் கொண்டு வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தான். அங்கும் இங்குமாய் நடக்கின்ற. இருக்கின்ற மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே குடித்தார்கள்.
"சரி வாங்கோ, பொழுது படுகுது."
புற்றரையில் மெதுவாக நடந்தார்கள். அருகில் அவள் நடந்து நடந்து வரும்பொழுது எழுந்த கால்சங்கிலியின் மெல்லிய சிலுங்' 'சிலுங்" என்ற சத்தம் அவனுக்கு சந்தோசத்தைத் தந்தது.
சுற்றுப்புறங்களில் மெல்லிய வெளிச்சம். புற்றரைகளிலும் சீமெந்து இருக்கைகளிலும் கைகளைக் கோர்த்த படியும் ஆண்களும் பெண் களும்.
அவன் அவளை குறுகுறுவென்று பார்த்தான்.
"பிறகு ஒருநாளைக்கு நாங்களும் இப்பிடி வந்து கதைச்சுக் கொண்டிருக்கலாம்."
"அய்யோ."
மெலிதாய் சிணுங்கினாள்.
சிவந்து போன அவளின் முகத்தை எதிரே தெருவில் வளைந்து வந்த காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் அவனால் பார்க்க முடிந்தது. இவளது முகத்தில்தான் எத்தனை கலவையான அழகு. சோகத்திலும் சரி. சந்தோசத்திலும் சரி. வெட்கத்திலும் சரி. ஒவ்வொரு துளியாய் மெல்லிய மழைத்தூறல் விழத் தொடங்கியது. வீதியை நோக்கி வேகமாய் நடந்தார்கள். .
70

தாமரைச்செல்வி
அங்கும் இங்குமாய் இருந்த சனங்கள் மழை தூறத் தொடங்கியதும் வீதிப் பக்கமாய் ஓடத் தொடங்கினார்கள். வீதியோரம்
நின்ற ஒட்டோக் களில் சட்சட்டென்று ஏறிப் போனார்கள்.
"கெதியாய் வாங்கோ. ஆட்கள் சேர்ந்தால் ஒட்டோ எடுக்கிறது கஸ்டம்." அவளின் கையைப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஆட்களுக்குள் மோதாமல் வீதியோரம் வேகமாக நடந்தார்கள். வீதியில் முன்விளக்குகள் எரிய வேகமாக வந்த ஒட்டோ இவர்கள் அருகில் வந்தததும் நின்றது. இவர்கள் ஏறியதும் வாகனங்களையும் மனிதர்க ளையும் விலத்திக் கொண்டு ஓடத் தொடங்கியது. அவளின் முகத்தில் முத்து முத்தாய் மழைத்துளிகள்.
தெருக்கரைக் கட்டடங்களின் மின்விளக்குகள் இரவைப் பகலாக் கிக் கொண்டிருந்தது. ஒட்டோவுக்கு உள்ளே மெல்லிய இருளாக இருந்தது. காற்றுக்கு அவளின் சேலைத் தலைப்பு அசைந்து அவன் தோளில் படபடத்தது. அதை ஒதுக்க முயன்ற அவளது கரம் அவன் மார்பில் லேசாகப் பட்டது. சேலைத் தலைப்பால் முகத்தை ஒத்திக் கொண்டாள்.
இப்படி இருட்டுக்குள் அவளுடன் இத்தனை அருகில் இருப்பதை அவனாலேயே நம்பமுடியாமல் இருந்தது. அவன் திரும்பி அவளின் முகத்தைப் பார்த்தான். வீதியின் வெளிச்சங்கள் மாறி மாறி முகத்தில் பட்டுத் தெறித்தது.
இவள் இன்றைக்கு போகப்போகிறாள் என்ற உணர்வு மனதை பிசைந்தது. இந்த மூன்று நாட்களில் இந்தப் பெண் எவ்வளவு தூரம் தனது மனதைக் கவர்ந்திருக்கிறாள். இவளும் இப்போது இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருப்பாளோ. தான் தவிப்பது போலவே இவளும் மனதுக்குள் தவிப்பாளா..?
ஏழே காலுக்கு வீட்டுக்குத் திரும்பி விட்டார்கள். உள்ளே சிறீதரன் பயணப்பொருட்களை கட்டி ஒழுங்கு படுத்துவதில் மும்முரமாய் ஈடு பட்டுக்கொண்டிருந்தான்.
71

Page 42
வீதியெல்லாம் தோரனங்கள்
தெய்வேந்திரன் உள்ளே போனான்.
"நானும் ஸ்டேஷனுக்கு வாறன், பிறகு திரும்பி வர பன்னிரண்டு ஒரு மணியாகி விடும். அதால வீட்டில ஒருக்கா போய் சொல்லியிட்டு வாறன்."
அதற்குள் சித்தப்பா "அவர் சாப்பிட்டிட்டு போகட்டும். நேரம் இருக்குத்தானே" என்றார்.
சிறிது நேரத்தில் அவனும் சிறீதரனும் சாப்பிட அமர்ந்தபோது சித்தியுடன் சேர்ந்து பாரதியும் பரிமாறினாள். கால் சங்கிலியின் ஓசை கேட்க சிறீதரன் வியப்புடன் பார்க்க.
"ஒரு சின்ன பிரசண்ட்" என்று அவன் சங்கடத்தோடு சொன்னான். சிறீதரன் சிரித்தான்.
ஒன்பது மணிக்கு அவன் தன் வீட்டுக்குப் போனான். ஹோலில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ராஜேந்திரனைக் கண்டதும் ஆச்சரிய மாய் "நீ எப்படா வந்தனி?" என்றான்.
"பின்னேரம் வந்திட்டன். அதுசரி நீ எங்க சுத்திக்கொண்டு வாறாய்."
ராஜேந்திரனை அறைக்குள் கூட்டிப்போய் எல்லாவிபரமும் சொன்னான்.
"உனக்கு வந்த 'லக் கைப்பாரன். இப்ப வழியனுப்பு விழாவா..?" "ம். நானும் ஸ்டேஷனுக்கு போகவேணும்." "நானும் வாறன், சும்மாதானே இங்க இருக்கப்போறன்."
"gris, 6JT,"
"ரேவதியிட்டயிருந்து லெட்டர்ஸ் வரேலையே.?"
"வரேலை."
"அவளிட்டயிருந்து கடிதம் வந்து ஒரு கிழமையாச்சு, ஏன்
72

தாமரைச்செல்வி
போடேலையோ தெரியாது. நாளைக்கு நானெண்டாலும் எழுதிப் போட்டிடவேணும்."
இருவரும் செந்தில்நாதனிடம் புகையிரதநிலையம் வரை போய் வருவதாக சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். சித்தப்பா வீட்டுவாசலில் வான் நின்றிருந்தது. வீட்டுக்குள் ஆரவாரமாக இருந்தது.
ராஜேந்திரன் சிறிதரனுடன் கதைத்துக் கொண்டிருக்க அவன் பாரதியைப் பார்த்தான். மனதில் ஏதோ ஒன்று அழுத்தமாய் பரவியது.
வானில் பொருட்களை ஏற்றியதும் எல்லோரும் ஏறிக்கொண் டார்கள். வான் பயணத்தில் யாரும் கதைக்கவில்லை. அவன் யன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். புகையிரதநிலைய வாசலில் இறங்கி உள்ளே போனார்கள். சத்தமும் சந்தடியுமான இடம். பலதரப்பட்ட சனங்கள். வேறு எங்கோ போக வேண்டிய வண்டிக்கு அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது.
"ஆக நேரத்துக்கு முந்தி வந்திட்டம். இன்னும் நிறைய நேரம் இருக்கு."
சித்தப்பா அங்கும் இங்குமாய் நடந்தார்.
"றெயின் வருகுது. வந்து நிற் கட்டும். அவசரப்பட்டு ஏற வேண்டாம். பார்சலுகள் கவனம். தவறவிடாமல் ஏத்தவேணும்."
சித்தப்பா பிரயாணப்பைகளை நான்காவது தடவையாக எண்ணி னார். தண்டவாளம் அதிர அவர்களுக்குரிய ரயில் வந்து நின்றது. சனங்கள் இடிபட்டு அடிபட்டு ஏறினார்கள்.
அவர்கள் சமீபமாய் நின்றிருந்த முன்பெட்டிக்குள் ஏறினார்கள். நல்ல வேளை இரண்டு இருக்கைகள் கிடைத்தன. யன்னலோரம் பாரதி அமர்ந்து கொள்ள சிறீதரன் பொருட்களை உள்ளே வைத்து விட்டு வெளியே இறங்கி வாசல் ஒரம் நின்றான். ரயில் புறப்பட ஆயத்தமான போது சிறீதரன் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டான். சித்தப்பாவை அணைத்து ராஜேந்திரனிடம் கைகுலுக்கி விட்டு அவ
73

Page 43
வீதியெல்லாம் தோரணங்கள் னிடம் திரும்பினான். கை குலுக்கி விட்டு அவனது தோளை அணைத்து வாறன் என்றான். ஏறி பாரதியின் அருகில் அமர்ந்து யன்னல் வழியாக கையசைத்தான்.
பாரதி எல்லோருக்கும் தலையசைத்து கடைசியாய் அவன் மீது பார்வை பதிய. வண்டி நகரத்தொடங்கியது.
கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து அது மறைந்து போகும் வரை நின்றார்கள். அவனுக்கு எல்லாமே வெறுமையாகிப் போய்விட்டது போலிருந்தது. போன வானிலேயே திரும்பி வந்து சித்தப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டுக்கு அவர்கள் போன போது பன்னிரண்டு மணியாகியிருந்தது.
இரவு படுத்துக் கொண்டபோது வெகுநேரமாய் உறக்கம் வரவில்லை. பாரதியும் சிறீதரனும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டான். இங்கே பாரதியை கண்டதும் கதைத்ததும் அம்மாவுக்கு தெரிய வந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வா. தவறு என்று சொல்லுவாவோ தெரியவில்லை.
மறுநாள் பாரதிக்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டான். கடிதம் எழுதி போட்ட பிறகுதான் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது.
ஒவ்வொருநாளும் அன்றாடக் கடமைகளோடு நகர்ந்து கொண்டி ருந்தது. செந்தில்நாதனும் வீட்டில் இல்லை. மகளின் கல்யாண விடயமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். பாரதியின் பதிலுக்காக ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு வாரம் சென்ற பின் அவனுக்கு சிறீதரனின் திருமண அழைப்பிதழ் வந்தது. பாரதியின் அழகான கையெழுத்தில் நாலுவரி கடிதமும் இருந்தது.
ஆரம்பம் எதுவும் இல்லாமல் சுருக்கமாய் தாங்கள் சுகமாய் வந்து சேர்ந்ததாகவும் அவனது கடிதம் கிடைத்ததாகவும் கல்யாணம் கோயிலில் நடப்பதால் 'விரும்பினால் வரலாம்' என்றும் சிறீதரன் தான் அன்போடு விசாரித்ததாய் எழுதச் சொன்னான் என்றும் எழுதியிருந்தாள். கடைசியாய் அன்புடன் -பாரதி என்று எழுதியதை வெகுநேரம் பார்த்துக்
74

தாமரைச்செல்வி
கொண்டிருந்தான். அழைப்பிதழைப் பார்த்த அந்த வினாடியே போவது எனத் தீர்மானித்தான் கல்யாணம் அடுத்த வெள்ளிக்கிழமை. அவன் யோசித்தான். வியாழன் இரவு பஸ்ஸில் இருக்கை பதிவு செய்து பிரயாணம் செய்தால் காலை ஒன்பது மணிக்கு வீட்டுக்கு போய் விடலாம். மத்தியானம் பன்னிரண்டு மணிக்குத்தானே முகூர்த்தம், அதுவும் கோயிலில் நடப்பதால் நேராக கோயிலுக்கே போய்விட்டு வரலாம். ராஜேந்திரனிடம் சொன்னபோது "அப்படியே செய்" என்றான். ஒவ்வொருநாளும் மெதுவாய் நகள்வது போலிருந்தது. வியாழக்கிழமை காலையில் போய் இரவு பஸ்ஸுக்கு பதிவு செய்து விட்டு வந்தான்.
அன்றிரவு எட்டு மணிக்கு அவனுடன் பஸ் நிலையம் வரை வருவதாகக் கூறி ராஜேந்திரன் புறப்பட்டான். இருவரும் அறையைப் பூட்டிக் கொண்டு திரும்ப செந்தில்நாதன் பிரயாணத்தில் களைத்துப் போனவராய் வந்தார்.
"என்னண்ணை. அதுக்குள்ள திரும்பியிட்டீங்கள்."
"அது பிள்ளையின்ர கல்யாண விசயம் சரிவரேலை. பிறகு ஏன் நிற்பான். வந்திட்டன்," அலுப்போடு சொன்னார்.
"ஏன்?" கவலையோடு கேட்டார்கள்.
"அந்தப்பெடியன் மாமன்ர மகளை விரும்பியிருந்ததாம். அதை சீதனம் இல்லை கஸ்டப்பட்ட குடும்பம் எண்டு விட்டிட்டினமாம், ஒரு பிள்ளை கண் கலங்க நாங்கள் என்னெண்டு செய்யிறது. வேணாம் எண்டு விட்டிட்டம், நீங்கள் எங்க பயணம்?"
"இவன் ஊருக்குப் போறான். பஸ் ஏத்தி விட்டிட்டு வாறன்."
"வவுனியாவில பிரச்சனை தம்பி. ஒரே பதட்டமாய் கிடக்கு ரவுண் முழுக்க சீக்கியங்கள் நிற்கிறாங்கள். பார்த்துத்தான் போகவேணும். இந்தப் பிரச்சனையளுக்க பிரயாணங்களை தவிர்க்கிறது நல்லது."
ராஜேந்திரன் அவனைப் பார்த்தான்.
"நான் கவனமாய் பார்த்துத்தான் போவன்."
75

Page 44
வீதியெல்லாம் தோரணங்கள்
"அது சரி பிரச்சனையள் எண்டு எங்கட அலுவல்களை கவனிக் காம விட ஏலுமே. பார்த்து கவனமாய் போம் தம்பி. சரி நீங்கள் நடவுங்கோ. எங்கயாவது உங்களுக்கு தெரிஞ்ச இடத்தில முப்பத்தைஞ்சு நாற் பது வயதுள்ள ஆள் இருந்தால் சொல்லுங்கோ. பாப்பம் என்ன?"
அவர் சோர்வுடன் உள்ளே போக அவர்கள் வெளியே நடந்தார்கள். எத்தனையோ நம்பிக்கையோடு போனவர். பாவம் மனம் புண்பட்டு வந்திருக்கிறார்.
இருவருக்கும் கவலையாக இருந்தது.
அவன் பஸ்ஸில் ஏறி யன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
"கவனமாய் போயிட்டு வாடா"
"நான் எப்பிடியும் ஞாயிறு வந்திடுவன். போறதும் வாறதும் தான்."
எட்டரை மணிக்கு பஸ் புறப்பட்டது. இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான். சீரான பஸ்ஸின் ஒட்டத்தில் பாரதியின் நினைவு கள் சுகமாய் வந்து அழுத்தின.
விடியற்காலை ஐந்து மணிக்கு வவுனியாவை பஸ் அடைந்தது. இன்னமும் விடியாத கும்மிருட்டு. இரவு முழுவதும் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். இனியும் மழை பெய்யக்கூடும். காற்றில் குளிர் பரவியிருந்தது. தெருவெல்லாம் நீர் தேங்கிக் கிடந்தது.
தூரத் தூர மின் விளக்கு வெளிச்சங்களோடு இருந்த பஸ் நிலையம் கடந்து எதிர்பக்க வீதியின் முனையில் பஸ் நின்றது. முன்பும் பின்புமாய் சில பஸ்கள் நின்றன.
இனி ஆறுமணிக்கு பிறகுதான் பஸ் புறப்படும். குறைந்தது ஒரு மணி நேரம் என்றாலும் காத்திருக்க வேண்டும்.
76

தாமரைச்செல்வி
நேரத்துக்கு வீட்டுக்கு போய் குளித்து உடை மாற்றி கல்யாணம் நடக்கும் கோயிலுக்குப் போகவேண்டுமே.
இனி இங்கிருந்து பறப்பட்டாலும் ஆனையிறவிலும் எத்தனை மணி நேரம் தாமதிக்க நேருமோ?
அவன் அலுப்போடு கண்களை மூடிக் கொண்டான்.
{0 0x8
77

Page 45
10
விடியற்காலை ஐந்தரை மணிக்கு அந்தப் பிரதேசமே அதிரும் வண்ணம் ஒரு பயங்கரச் சத்தம் கேட்டது.
திடுக்கிட்டு விழித்து சுற்றும் முற்றும் பார்த்தான். சனம் எல்லாம் என்னவோ ஏதோ என்று கலவரப்பட்டு எழுந்து நின்றார்கள். கலக்கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அந்த இருட்டுக்குள் பஸ்ஸை விட்டு இறங்கிப் பார்க்க யாருக்கும் துணிவில்லை. திறந்திருந்த நாலைந்து தேநீர்க்கடைகளும் சடசடவென்று பூட்டப்பட்டது. மின் விளக்குகளும் அணைந்து விட்டது.
தூரத்துக்கொரு வீதி விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டி ருந்தது. பதினைந்து நிமிடங்களில் வாகன இரைச்சல்கள் கேட்டது. தொப் தொப் என்று குதித்த ராணுவத்தினர் வினாடியில் அந்த இடங்களில் நிறைந்து நின்றார்கள்.
"வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் போட்டிருக்கு வாகனங்களைப் போக அனுமதிக்க முடியாது. பாதுகாப்பான இடத்துக்கு எல்லா வாகனங்களையும் ஆட்களோட கொண்டு போகவும்."
வேறு மொழியில் அதிகாரி பேசியதை சிப்பாய் தமிழில் மொழிபெயர்த்து சொன்னான்.
இருள் விலகாத அந்த நேரத்தில் ஆயுதங்களுடன் அவர்களைப் பார்க்க முதுகுத்தண்டு சில்லிட்டது.
ஒவ்வொரு பஸ்ஸும் ஒவ்வொரு திக்கில் நகள்ந்தது.
78

தாமரைச்செல்வி
தூரத்தில் தொடர்ந்து கேட்ட வெடிச்சத்தங்கள் இப்போதைக்கு போக முடியாது என்பதை உறுதிப்படுத்தியது. தெரு வெறிச்சிட்டு கிடந்தது. ஒரு மண்டபத்தில் இறங்கி நின்றார்கள். பக்கத்தில் இருந்த கடைகளில் சாப்பிட்டு அவர்கள் அன்றைய பொழுதைக் கழித்தார்கள் சனிக்கிழமையும் இதே நிலைதான். சூழலில் இருந்த பதட்டம் தணிய வில்லை. அவனுக்குச் சலித்து விட்டது. திரும்பி கொழும்புக்கே போய் விடலாமா என்று நினைத்தான். இவ்வளவு தூரம் வந்து விட்டுப் பாரதியைப் பார்க்காமல் போக மனம் வரவில்லை. சிறீதரனை வாழ்த்து கின்ற சாட்டில் என்றாலும் போய் வரலாமே என்ற நினைவில் பொறுத்துக் கொண்டான்.
ஞாயிற்றுக்கிழமை காலை தான் பஸ் புறப்பட அனுமதி கிடைத்தது. கடைகள் முழுவதும் திறக்கப்படவில்லை. தெருவில் ஆட்களும் அதிக மில்லை. வாகனங்கள் மட்டுமே போய் வந்தன.
பஸ் புறப்பட்டது. வவுனியாவிலேயே மூன்று இடங்களில் சோதித்து அனுப்பினார்கள். ஆனையிறவிலும் அன்றைக்கு அதிக நேரம் தாமதிக்க வைத்தார்கள்.
ஒருவாறு எல்லாவற்றையும் கடந்து வீடு போய்ச் சேர பன்னி ரண்டு மணிக்கு மேலாகி விட்டது. தலையெல்லாம் கலைந்து போக களைத்துப் போய் வீட்டுக்குள் நுழைந்தவனை அம்மா அதிசயமாய்ப் பார்த்தாள்.
நிச்சயம் அவனை எதிர்பார்த்திருக்க மாட்டாள். ஹோலுக்குள் அண்ணாவும் அண்ணியும் நின்றது அவனுக்கு ஆச்சரியத்தை தர "என்னண்ணா வந்திருக்கிறீங்கள்" என்றான்.
"சும்மாதான்" என்ற அவர்களின் முகங்களில் தொனித்த வித்தி யாசம் அவன் மனதை நெருடியது.
"என்ன திடீரெண்டு வந்திருக்கிறாய்?"
அண்ணா கேட்டான்.
79

Page 46
வீதியெல்லாம் தோரணங்கள்
"சிறீதரன்ர கல்யாண வீட்டுக்கு வருவம் எண்டு நினைச்சு வெளிக்கிட்டனான், வழியில் ரெண்டு நாள் மாட்டுப்பட்டுப் போனன்."
அம்மா சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள்.
"என்ன உரிமையில கல்யாணத்துக்கு வரவேணும் எண்டு வந்திருக் கிறாய்?"
அவன் ஒன்றும் புரியாமல் அம்மாவைப் பார்த்தான்.
இந்த அம்மா என்ன கதைக்கிறாள்.?
"ஏனம்மா?"
"எல்லாம் பிறகு கதைக்கலாம். வா முதல்ல கை கால் கழுவியிட்டு வந்து சாப்பிடு."
"இல்லை. ஏதோ இருக்குது. சொல்லுங்கோ."
"கல்யாணம் எண்டால் நாலு இடத்திலை பேசிறதுதான். பாரதியை உனக்கு பேசினதுதான். ஆனால் இப்ப அந்த இடத்தில கல்யாணம் செய்ய சரிவராது. இனி வேற இடத்தில பாப்பம்."
அவனுக்கு 'திக் கென்றது.
"ஏன். ஏனம்மா?"
அவன் பதட்டத்துடன் கேட்டான். "சொன்னபடி இனி அவையால சீதனம் தர ஏலாது அதால விட
வேண்டி வந்திட்டுது. இதை விடு வேற நல்ல இடம் வராமலோ போயிடும். நீ முதல்ல வா. சாப்பிட்டு பிறகு கதைக்கலாம்."
"நான் சாப்பிடுறது இருக்கட்டும். ஏன் இந்த இடம் சரிவராது எண்டு சொல்லுறீங்கள்?"
அண்ணா மெல்லிய குரலில் சொன்னான்
"போன வியாழக்கிழமை கச்சேரிப் பக்கம் சரியான பிரச்சனை.
80

தாமரைச்செல்வி
ஆமி சுத்தி வளைச்சு தேடிக்கொண்டு போக நடந்த சண்டையில கொஞ்ச சனம் அம்பிட்டு செத்துப் போச்சுதுகள், அதில சிறீதரனும்."
"என்னது. சிறீதரன்." இடி விழுந்தது போல வெல வெலத்துப் போய் விட்டான். கடவுளே. நெஞ்செல்லாம் பதறியது. "வெள்ளிக்கிழமை பிரேதம் எடுத்தது."
அவனால் அந்தச் செய்தியை தாங்க முடியவில்லை.
சிரித்து கதைத்த. அவனுடன் தோழமையுடன் பழகிய சிறீதரன் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி எரிந்து சாம்பலாகி விட்டானா..? அய்யோ. இதென்ன கொடுமை..?
பாரதியின் குடும்பம் இந்த இழப்பை எப்படித்தாங்கும்.?
"அந்தப் பெடியன் கல்யாணம் செய்தால்தானே அந்தக் காசை வாங்கி எங்களுக்கு தருவினம். இனி என்ன செய்யிறது?"
"அம்மா." மனம் பதறிப்போக அவன் அம்மாவின் பக்கம் திரும்பினான்.
"பின்ன என்ன. போய்ப் பொம்பிளை பார்த்தது மட்டும் தானே. வேற நாங்கள் என்ன போக்குவரத்து வைச்சனாங்களே. அந்தப் பக்கம் வீடு வீடாய் போய் ஒரே செக்கிங். என்னென்ன நடந்ததோ ஆர் கண்டது.?"
"அம்மா."
அம்மாவை வெறுக்கும் ஒரு தருணம் கூட இருக்கக் கூடும் என்று அவன் நினைத்தும் பார்த்ததில்லை. இப்போது அம்மாவை எரித்து விடுவது போலப் பார்த்தான்.
81

Page 47
வீதியெல்லாம் தோரணங்கள்
"இப்பிடி மனச்சாட்சி இல்லாமல் கதைக்கிறீங்களே?"
என்று கத்தினான்.
"இப்ப ஏன் ஆத்திரப்படுறாய்?"
அவன் விறுவிறு வென்று பிரயாணப் பையை உள்ளே எறிந்து விட்டு அப்படியே புறப்பட்டான்.
"எங்க போறாய்?"
அம்மா ஓடி வந்து கேட்டாள்.
"பாரதி வீட்ட"
"அந்த இடம் கைவிட்டாச்சு. அங்க நீ போகத் தேவையில்லை.
"கை விடுறதோ..? இப்பதான் கை குடுக்கவேணும். அண்ணா உங்கட மோட்ட பைக் திறப்பு எங்க.?"
அண்ணா அண்ணியைப் பார்க்க அண்ணி மேசையைப் பார்க்க அவன் பாய்ந்து எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியேறி மோட்டார் சைக்கிளை எடுத்தான்.
உதைத்த வேகத்தில் அவனது அவசரமும் ஆத்திரமும் தெரிந்தது. அம்மா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது அவனது காதுகளில் விழவில்லை.
பெண் பார்க்க ஒரே ஒரு நாள் போன அடையாளத்தை வைத்துக் கொண்டு வேகமாய்ப் போனான்.
இந்த திருப்பத்தில் அதோ. அந்த பச்சை கேற் வீடுதான்.
வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கினான். கேற்றிலிருந்து சற்று உள்ளடங்கிய வீடு. வாசல்கதவு சாத்தப்பட்டு அமைதியாய் இருந்தது.
82

தாமரைச்செல்வி
தெரு நீளத்துக்கு கயிற்றுடன் அறுக்கப்பட்ட தோரணங்கள் மண் மீது காய்ந்து போய்க் கிடந்தது.
இது சிறீதரனுடைய கல்யாண வீட்டுக்கு கட்டின தோரணமா? இல்லை செத்த வீட்டுக்கு கட்டின தோரணமா?
நினைக்கையில் நெஞ்செல்லாம் அடைத்தது. அவனையும் மீறி கண்களில் நீர் துளிர்த்தது.
உரிமையோடு அந்த கேற்றைத் திறந்து கொண்டு அவன் உள்ளே போனான்.
-முற்றும் -
யாழ் இலக்கிய வட்டமும் வீரகேசரியும் இணைந்து நடாத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.
O. O3.9932 — O3. O5.992
வரை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராய் பிரசுரமானது.
83

Page 48
தாமரைச்செல்வியின்
நூ O
சுமைகள் - நாவல்.
விண்ணில் அல்ல விடிவெள்ளி - நாவல்.
தாகம் -நாவல்
வேள்வித்தி குறுநாவல்கள்ஒரு மழைக்கால இரவு -சிறுகதைகள்
அழுவதற்கு நேரமில்லை -சிறுகதைகள். வீதியெல்லாம் தோரணங்கள் -நாவல்.
(கொழும்புமீரா பதிப்பக வெளியீடு)
84
1977
1992
1993
1994
1998
2002
2003


Page 49

ாமரைச் செல்வி நாடறிந்த எழுத்தாளர் ழத்து பெண் எழுத்தாள் வரிசையில் னியில் நிற்பவர் ஏலவே இரு தத்தொகுதிகளையும் நான்கு ளையும் நூல்வடிவில் தந்தவர். விதத் துறையில் பல விருதுகளைப் ர் ஆரம்பகாலத்தில் வன்னி மன் னய்ை இலக்கிபத்தில் வெளிக் ந்தவர் போர்க்காலச்சூழலில் வன்னி முகம் கொடுத்தந்உயிருக்கே ாதமற்று வாழ்ந்த அவலத்தை ஆம் ன்-ஒருத்தியாக இருந்து உயிர்த்: பன் இலக்கிய கோலங்களாக ப்படுத்தியவர்.
ந்நாவல் வடகிழக்கு மக்களின்: க்கட்டமைப்பே உருக்குலைந்து, ம் ஏது நடக்குமோ என்ற ஏக்க:
மலிந்திருந்த மாறிமாறி சாவுகளும், வஞ்சவிகளும் ஹர்த்தாலும் ழுது பார்த்தாலும் எந்த வீதியைப் லும் தோரணங்களும் கழற்றப்படாத" க்கொடிகளும் இருந்த சூழலில்
ஆமியில் பட்டது காணாது இன்னும் மி புகுந்து அட்டூழியம் செய்த கால இ தின் பகைப்புலத்தில் எழுதப்பட்டது. இ
தர்ந்தெடுத்த கரு கதையம்சம், கதை முறைமை ஆகியவற்றால் தாமரைச் "மீண்டும் தன்னை ஒரு தரமான : சிரியை என்பதை இந்நாவல் மூலம் படுத்தியுள்ளார்.
=புலோலியூர் க. சதாசிவம்