கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விண்ணும் மண்ணும்

Page 1


Page 2

விண்ணும் மண்ணும்
f
(கதைப்பூங்கா-தொகுதி: 2)
தொகுப்பாசிரியர் : “செம்பியன் செல்வன்'
பல்கலை வெளியீடு,
பேராதனை, இலங்கை.

Page 3
முதற் பதிப்பு: ஜனவரி 163
பல்கலை வெளியீடு : 2
விலை 1.25 .
விற்பனை உரிமை :
பூபாலசிங்கம் புத்தகசாலை
27, பெரியகடை யாழ்ப்பாணம்

O
பதிப்புரை
பல்கலைக் கழகத் தமிழ் மாணவர் களைப் பொறுத்த மட்டில், கடந்த ஆண்டு, குறிப்பிடத்தக்க ஓர் உன் னத காலக்கட்டம் , ஈழத்து இலக் கிய விழிப்பினை உச்சநிலையாக்கித் தக்க பாதையில் நடத்திச் செல் கின்ற பெருமை பல்கலைக்கழக எழுத் தாளருக்குரியது சற்றுக் கன மாக இலக்கியவுலகிற்கு அளிப்பவர்கள் இவர்கள்.
கலாநிதி ஆ. சதாசிவம், கலாநிதி சு. வித்தியானந்தன், திரு. க கைலா சபதி போன்றேர் நமது இலக்கிய வுணர்விற்கு வழிகாட்டிகளாக நாம் பெற்றிருப்பது, நமது பெருமை.
இலக்கிய விழிப்பின் எதிரொலி யாகவே நண்பர் க. நவசோதி (ஆவி கன்) யும், நானும் சேர்ந்து பல்கலை வெளியீட்டை ஆரம்பித்து அதன் முதல் அறுவடையாகக் *கதைப் பூங்கா' வைத் த மி ழு ல கி ற்கு ப் பெருமையோடு அளித்தோம்.
*விண்ணும் மண்ணும் இர ண் டாம் அறுவடையாகும். முதல் அறு வடையில் பெற்ற பயனிலும், சிறப் பான நல்விளைவை, இவ்விரண்டாம் சிறுகதைத் தொகுதி, நிச்சய்மாக இலக்கியவுலகிற்கு அளிக்கும் என் பதில் நம்பிக்கை நிறையவுண்டு.

Page 4
O “பல்கலை வெளியீட்' டின் இவ் விரண்டாம் தொகுப்பிற்கு, எழுத் தாள நண்பர் 'செம்பியன் செல்வன்' பொறுப்பேற்றிருக்கிருர்.
டு இத்தொகுதி இலக்கிய வுலகிற்கு நம்பிக்கையையும், திருப்தியையும் அளிக்கும் என்ற திடம் எமக்கு இருக்கிறது.
டு இலக்கிய வுலகிற்குக் கடைசியாக இன்னென்றையும் கூற விரும்புகின் ருேம். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் களால் வருடாவருடம், முந்நூறு சிறுகதைகளுக்கு மேல் படைக்கப் படுகின்றன. 1963-ம் ஆண்டு தை மாதம் தொடக்கம், மார்கழிமாதம் வரையில், ஈழத்துப் பத்திரிகைகளில் (தினகரன், வீரகேசரி, ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, தேனருவி, புதினம்) ஈழத்தெழுத்தாளர்களால் படைக்கப்பட்டு வெளிவரும், சிறு கதைகளில், மிகக்சிறந்த பன்னிரு சிறு கதைகளைத் தேர்த்தெடுத்து ஒரு தொகுதியாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.
டு எல்லாவற்றிற்கும் உங்கள் ஆத
ரவு தேவை.
வண்க்கம்
செங்கை ஆழியான் பதிப்பாசிரியர் மாக்கஸ் பர்ணுந்து மண்டபம், பல்கலைக் கழகம்,
பேராதனை.
10-1-63

முன்னுரை
இத் தொகுதிக்கு முன்னுரை எழுது வதில் எனக்கு ஏற்படுபவை சிரமம் : தடுமாற்றம்.
தொகுதி முழுவதற்கும் உரிமை என்னுடைத்தாயின் செயல் : சுலபம் : மகிழ்ச்சி.
என் கதைகளுக்கு நானே ‘வக்கா லத்து' வாங்கியோ இன்னெருவரை விட்டு முன்னுரை எ முத ச் சொல்லியோ கிடைக்கும் 'முதுகு சொரியும்' ஆனந் தத்தை, கண்மூடி சுகாநந்தமாக ரசிக்க லாம். இது --
இத் தொகுதியினைப் பொறுத்தவரை முடியாததொன்ருகும். ஆனலும் --
இத் தொகுதியைப் பற்றி--இதன் பொது அம்சம் பற்றிச் சில கூறி, உங்களை நுழைவாயினுள்ளே அழைத்துச் செல்கிறேன்.
சோஷலிசயதார்த்தம், ஜனநாயக யதார்த்தம் என்பனவும் --
முற்போக்கு இலக்கியம், அஃதில்லா இலக்கியம் என்பனவும் --
உருவமா உள்ளடக்கமா ? -- என்ப னவும் --
மண்வளமா, இழிசனர் வழக்கா ? என்பனவும் --
இலக்கியப் பிரச்சனைகளாகக் கிளை விரித்து நிற்கையில் -
இந்தப் பிரச்சனைகளால் எந்தளவுக்கு 'பல்கலைக் கழக' எழுத்தாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர் என்பதற்கு, அவர்களின் எழுத்துக்களே இங்கு சாட்சிய மளிக் கின்றன.

Page 5
இங்கே -- யாழ்ப்பாண மண் வாசனையையும், மலைநாட்டு தேயிலைக் கொழுந்தின் நறு மணத்தையும், தொழிலாளர் பிரச்சனை களையும், சமூகச் சீர் கேடுகளையும், மக்கள் தம் வாழ்க்கையினையும் படம் பிடித்துக் காட்டுகின்றனர்.
அறிவியற்றுறையும், உணர்வியற் றுறையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உறவாடி நிற்பதையும் காணலாம்.
[ ᏗᎧhᏪ எழுத்துக்களில் *சோதனை" முயற்சிகள் காணப்படுகின்றன. பொருள் மரபிலும், உத்தி முறையிலும், அமைப்பு வகையிலும், உரை நடையிலும் பல சோதனை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இவர்களின் சோதனை முயற்சிகளை நாம் பாராட்டிலுைம் அவை எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளன என்பதனைப் பற்றிக் கூறவேண்டியவர்கள் இருவர்.
ஒன்று நீங்கள் ! மற்றென்று காலம் ! காலமே இவர்களின் *சோதனை' எந்த “சாதனையை நிலை நாட் டி ச் சென்றுளது என்பதைக் கூற வேண்டும். இவ் எழுத்தாளர்களின் கண்கள் பண்பட்ட எழுத்தாளர்களின் கண்ணுேட் டத்துடன் ஒத்து பிரச்சனைகளை நுணுகி ஆராய்கின்றன. இவர்கள் பிரச்சனையை அணுகும் விதத்தில் நம்மிடையே வேறு பாடுகள் எழுந்தாலும்--இ வர் களின் அனுபவக் குறையும், உணர்ச்சி வேகமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்-- அவர்கள் சரியான தடம் பார்த்தே தமது இலக்கிய யாத்திரை'யை ஆரம்பித் துள்ளனர் என்பதை நாம் பெருமிதத் துடன் கூறிக்கொள்ளக் கூடியதாக உளது.

இத் தொகுதியில் பல்கலைக் கழக எழுத்தாளர்கள் எல்லாரும் 61 மு தி விட்டனர் எனக் கூற முடியாது. ஒரு சிலரை விட ஏனையவர்கள் எழுத்துல கிற்குப் புத்தம் புதியவர்கள்.
சென்ற ஆண்டு வெளியான 'கதைப் பூங்கா’ பல்கலைக் கழகத்தின் ‘இலக்கிய விழிப்பானுல் ?.
இன்றைய விண்ணும் மண்ணும்'.
சொல்ல வேண்டியவர்கள் நீங்கள் !
நன்றிக் கடன் செலுத்துவது தமிழ் மரபு. இத் தொகுதியினை வெளியிட ஆலோசனைகளும், கதைகளின் தரம் பற்றி எடுத்துக் கூறி எமக்கு 'துணை' நி ன் ற வர் க ள் : திரு. க. கைலாசபதி (விரிவுரையாளர், பல்கலைக் கழகம், திரு. வரதர் (புதினம்-ஆசிரியர்), திரு. இராஜ-அரியரத்தினம் (ஈழநாடு-ஆசிரி யர்) ஆசியோர். அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
செம்பியன் செல்வன்'
தொகுப்பாசிரியர்
விஜயவர்த்தணு விடுதி, பல்கலைக்கழகம்,
பேராதனை, 10- 1 - 63

Page 6
வாழததுரை
இன்று ஈழத்தில் ஏற்பட்டுள்ள இலக்கிய விழிப்பின் ஒரு முக்கிய பாகமா கப் பல்கலைக் கழகத்தில் இலக்கியப் படைப்புகள் பெருகி வருகின்றன. இலக் கியவுணர்வும், ஆர்வமும் ப்டைத்த இளம் இலக்கிய கர்த்தாக்கள் பெருமள வில் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த உருவாக்கத்தின் விளைவுதான்-- *விண்ணும் மண்ணும் !"
இலக்கிய உணர்வுள்ள ஈழத்துப் பத்திரிகைகளில் தமக்கெனத் தனியிடங் களை ஒதுக்கிக் கொண்டிருக்கும், தரமான இலக்கிய கர்த்தாக்களின், சிறு கதை களைத் தொகுத்து, நூலாக்கி, இலக்கியத் துக்கு ஆக்கம் கொடுக்கும் முயற்சியைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் வர வேற்று, வெளியிட்டு வைப்பதில் பெரு மைப்படுகிறது.
இது எமது பல்கலைக் கழகப் பூங்கா வின் மலர்களாலான இரண்டாவது மாலை. இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் அ னை வரும் வரவேற்பார்களென்பது எமது நம்பிக்கை.
வணக்கம்.
செ. அழகரெத்தினம் தமிழ்ச் சங்கத் தலைவர். ஜேம்ஸ் பீரிஸ் மண்டபம், பல்கலைக் கழகம்
பேராதனை. 24-1-63.

JBTGIT
"செங்கை ஆழியான்'
கொதிமணலில் துவஞம் சிறுபுழு வாய்ப் படுக்கையில் கிடந்து, உழன்று, துடிக்கிருள், அம்மா ; அவளுக்குச் சுய அறிவு மயங்கி கொடிய இரு இரவுகள் கழிந்து விட்டன.
கண்கள் கொவ்வைப் பழங்களாகச் சிவப்பேறிக் கனன்றிருக்க, அருவிப் பிர
வாகத்தினுல் கன்னங்கள் கறைபட்டிருக்க,
வெட்டிச் சாய்த்த இளம் வாழைபோல சுவரோடு சாய்ந்து கண்ணிர் விடுகிருள், சாரதா.
‘அம்மா. அம்மா !.' விம்மல் ஒலி ஓயாது எழுகிறது.
*அழாதை, பிள்ளை!.உன்ரை கொம் மாக்கு ஒண்டுமில்லை ! அழாதை ...!" பெரி யம்மா சாரதாவிற்கு ஆறுதல் கூறுகிருள்; அவள் குரல் படபடத்து நடுங்குகிறது. அந்த அறையிலே எரிந்து கொண் டிருக்கும், சிறிய குத்து விளக்கு. எண் ணெய் போதாமையால், "அணைந்து விடு கிறேன்" என்று கூருமல் கூறி அலைப்புறு கிறது.
'இந்தா, சாரதா ! இப்படி ஒப் பாரி வைத்தால் என்ன செய்யிறது..? பயப்பட்டுச் சாகாதை. அடுப்படிக்குப் போய் தேங்காயெண்ணைப் போத்திலை எடுத்து வந்து, விளக்குக்கு விடு.!’

Page 7
10 விண்ணும் மண்ணும்
சாரதா எழுந்து வெளியே வருகிருள் , அவள் மெலிந்து கறுத்துப் போய் விட்டாள் ; கால்கள் துவண்டு விடுவன போலத் தியங்குகின்றன.
*அவள் சாப்பிட்டாளோ என்னவோ ? என் கண்ணிரை நான் துடைத்துக் கொள்கிறேன் ; நானே அழுதால், அவள் என்ன செய்வாள் ?
*சாரதா!...”* என் குரலையும் மீறி அழுகையின் அபஸ்வரம் ஒலிக் கிறது.
அவள் திரும்பிப் பார்க்கிருள்; எதையோ இழக்க விரும்பாத விருப்பம் முகத்தில் தெறிக்கிறது.
‘அண்ணு 1. அம்மா எங்களை விட்டுட்டுப் போடு வாளா ?. செத்துப் போடுவாளா, அண்ணு ?" சாரதா என்கையைப் பற்றிக் கொண்டு கதறுகிருள்.
"அழாதை, சாரதா 1 அழாதை.!’. என் வாய் ஆறுதல் கூறுகிறது ; ஆணுல், கண்களில் சூலேறி, நீர் கொப்புளிக்கிறது.
‘அண்ணு!.. அம்மா இல்லாமல் நானேன் இருப்பான்?" ‘இஞ்சை பிள்ளை 1. இப்படிக் கத்தினுல் வருத்தக் காரருக்குக் கஷ்டம். போ, பிள்ளை 1. போய் எண்ணையை
எடுத்துவா...' பெரியம்மாவின் குரல் அறைக்குள்ளிருந்து
கரகரக்கிறது.
நான் விருந்தைக் குந்தில் அமர்கின்றேன். 'அம்மா !.
வாயிலிருந்து உதிர்ந்த குரல், இதயக் குகையில் மோதி. மோதி.
சாரதா எண்ணெய்ப் போத்தலோடு அறைக்குள் போகிருள்.
வெயிலின் வெம்மையால், தண்மையின் நீர்மையிழந்து
வாடிக் கருகிய அவரைக்கொடி ஒன்று, முற்றத்து வேலி யினைத் தழுவிக் கொண்டு மென்காற்றில் பரதவிக்கிறது.

அந்த ஒரு நாள் 11
இந்த அவரைக் கொடியையும் அம்மாதான் நட்டாள். அவளுக்கு இதுதான் பொழுதுபோக்கு முருக்கந் தடி தொடக்கம், மிளகாய்ச்செடி வரை நட்டு நீர் வார்ப்பது தான் அவளுக்கு வேலை , வளவு முழுவதும் முருக்க மரங்களும், பூசணிக் கொடியும், கத்தரி, மிளகாய்ச் செடிகளுந்தான். மகிழ்ச்சியையும் இதில்தான் கண்டாள். அவள் நட்ட கன்றுகளை ஆடுமாடு கடித்து விட்டால் போதும், துடித்துப்போய் விடுவாள். அவ்வளவு அன்பு அவைமேல் அவளுக்கு.
அவரைக் கொடி காற்றில் பரதவிக்கிறது. எனக்குப் பக்கத்தில் யாரோ விம்முகிருர்கள். * சாரதா 1.*
*அண்ணு.! அம்.மா !” அவள் விக்கி விக்கி அழுகி முள். இந்தப் பெண் அழுதழுதே.
*அழாதை சாரதா ! அழாதை. அம்மாவுக்கு ஒன்று மில்லை 1.*
சாரதா கண்களைத துடைத்துக் கொள்கிருள்.
சாரதா மேல் அம்மாவிற்கு எவ்வளவு அன்பு ? தன் னுயிரையே அவள் மேல் வைத்திருந்தாள். சாரதாவின் கண்கள் கலங்கினல் பொறுக்க முடியாது, அம்மாவால்.
சாரதா செல்லப் பெண்.
காலையில் எண்ணெய் வார்த்துத் தலை வாரிப் பின்னி விடு வது கூட அம்மாதான்.
‘விடம்மா!. நானே பின்னுறன்..! இன்னும் சின்னக் குழந்தை போல.’’ எனச் சிணுங்குவாள், சாரதா.
அம்மா சிரிப்பாள். அறைக்குள் அம்மா முணுகுவது கேட்கிறது ; ஏதேதோ பிதற்றுகின்ற தெளிவற்ற ஒலி.
“அவள் என்ன பிசற்றுகிருளோ ? எதை வேண்டிப் பிசற்றுகிருளோ ? யாரை எண்ணிப் பிசற்றுகிருளோ ?. என்னை எண்ணியா ?. சாரதாவை நினைத்தா..? அல்லது. அல்லது. ஐயாவை.சீ !."
f y 29 Այո ! ...
மனத்தி னடித்தளத்திலிருந்து ஏதோ உருத் தெரியாத நினைவுகள் குமுறி வெளிவரத் துடிக்கின்றன.

Page 8
12 விண்ணும் மண்ணும்
வானக் கருமையை நீவிக்கொண்டு, சின்னஞ் சிறு குருவி யொன்று, கோடிட்டபடி பறக்கிறது, காற்றினல் அது அள் ளப்படுகிறதா ? அச்சின்னஞ்சிறு உடற்கட்டிற்குள் இறகு களை இயக்கும் சக்தி எப்படித்தான் இருக்கிறதோ ?
மனப்புள் இறகு விரித்து நினைவு வெளியில், தன்னிச் சையாகப் பறக்க விழைய.
* ஐயா !” என்னை யறியாமல் என்னுள் கசப்பு எழுகிறது; கசப் பைத் தவிர வேறுவித உணர்ச்சிகள் என்னுள் எழ வழியில்லை. * மேட்டு நிலத்திலே பொழிகின்ற மழைநீர் குளத்தினுள் பாய்ந்து தேங்கி விடுவதுபோல, தந்தையைப் பற்றிய நினைவு கசப்பு என்ற உணர்வோடு தேங்கி நிலைத்துவிட முயல்கிறது.
குளத்தின் அணைகள் உடைந்து, சரிகின்றன. அவர் முதலில் மிக நல்லவராகத்தான் இருந்தார். என்னிதயம் பாறையாகக் கணக்கிறதே ! அவர் இறந்த போதுகூட என்னல் அவருக்காக ஒரு சொட்டுக் கண்ணிர் கூட விட முடியவில்லையே என்னிதயம் அவ்வளவு கடின மானதா ? அவர் நல்லவராக விருந்த அந்த ஒரு காலத் திற்காகவாவது நான் அழுதிருக்கலாம்.
என் மனம் அன்று ஏன் அவ்வளவு வைராக்கியம் பூண்டிருந்தது? ஐயா மீது நான் கொண்ட வெறுப்பினலா? அல்லது, அம்மா மீது நான் வைத்த அதீத அன்பினலா ?
அதீத அன்புதான் வெறுப்பைத் தந்ததா ? வெறுப்புத்தான் அன்பைக் கூட்டியதா ? இரண்டுமே தான். ஐயாவின் மேற் கொண்ட வெறுப் பும், அம்மாவின்மேல் வைத்த அன்பும். கடைசி நேரத்தில் கூட என் கண்களில் நீரை வருவிக்கவில்லை.
ஐயாவிற்காக, அவர் இறந்தபோது அழாத நான், இன்று அம்மாவிற்காகக் கண்ணீர் விடுகிறேன்.
மரணப் படுக்கையில் இன்று அம்மா துடிக்கிருள் ; என்னிதயமும் சேர்ந்து துடிக்கிறது.

அந்த ஒரு நாள் 13
அன்புதான் கண்ணிரை வருவிக்கக் கூடியதா ? அன்பு தான் துடிக்க வைக்கக் கூடியதா ? எதுவும் அன்பினுல் தான் நடக்குமா ? வெறுப்பினுல் ஒன்றுமே ஆகாதா..?
அன்று, அந்த நாள் -- குளித்துக் கோடி யுடுத்து, தோளிலே பூனூல் சரிய, தெற்பை அணிந்த வலக்கையினல் உலக்கையை வலுவாகப் பற்றிக்கொண்டு நிற்கின்றேன்.
உலக்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் என் கரத்தில் ஒருசிறு நடுக்கமாவது இருந்திருக்கலாம் ; ஐயரைப் பார்த்த படி சுண்ணமிடித்துக் கொண்டிருந்த என்னுடலில் ஒரு சிறு பதற்றமாவது இருந்திருக்கலாம் : உயிரின் இயக்கமற்று, பினமாகச் சவப்பெட்டிக்குள் வளர்த்தப்பட்டுக் கிடக்கும் என் தந்தைக்காக என் விழிகள் ஒரு சிறு துளி நீரையாவது சிந்தியிருக்கலாம்.
என் கையில் நடுக்கமில்லை ; உடலில் எவ்வித பதற்றமு மில்லை : கண்கள் கூடக் கலங்க மறுத்தன
ஒரு வாரத்திற்கு முதல், என் சிநேகிதன் ஒருவன் வீட்டுச் செத்தவீட்டிற்குச் சென்றிருந்தது, நினைவில் கிளேவிட.
கனகசபையின் தகப்பன்தான் இறந்து விட்டார் ; இதே சூழ்நிலைதான்.
சுண்ணமிடிக்க உலக்கையைப் பற்றியிருந்த கனகசபை யின் கை, என் கையைப்போலவா நடுங்காது இருந்தது ? விஷப் பாம்பைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, அவன் கை நடுங்கியதே ? உடல் பதற, கண்களிலே ஒயாத நீர் வெள்ளம் கரைவெட்டிப்பாய. அவன் சுண்ண மிடித் தான். அவன் உயிர் அணுக்களை இயக்கி, நடுங்க, துடிக்க, பதற வைத்தது, எது ?
அன்பா -? அன்புதான் ஒருவனே நடுங்க வைக்குமென்ருல், அன்பு தான் ஒருவனைப் பதறவைக்கு மென்ருல், அன்புதான் ஒரு வனைத் துடிக்க வைக்கு மென்ருல், என் மீது பிழையில்லை. சலனமற்ற எ ன் னுடல் ஜடமாக நின்று கொண்டு சுண்ணமிடிக்கிறது ; அதில் பிழையில்லை.

Page 9
14 விண்ணும் மண்ணும்
என்னைப் பெற்றவன்மீது கொண்ட வெறுப்பின் சாயல் என்னை ஜடமாக்கி விட்டது.
அம்மா அழுகிருள்--கொண்டவன் என்பதற்காக.
சாரதா அழுகிருள்-பெற்றவன் என்பதற்காக.
நான் அழவில்லை--ஏன் ?
என்ன்ைப் பெற்றவன் அவன் தானே ?
*இஞ்சை. பொன்னு ! அவனைப் பாரென் !. தேப்பன் செத்துப் போய்க்கிடக்கிறன். அவன் மரமா யெல்லே நிக்கிருன் 1 சே. தேப்பனுக்காக ஒரு சொட் டுக் கண்ணிர்விட வேண்டாம்.'-யாரோ பேசுவது என் காதுகளில் மோதி ரீங்காரமிட்டுத் தேய்கிறது.
‘பின்னை என்ன ?. இவனுக்கு ஆர்தான் அழுவி னம் ? இவன் செய்த செய்கைக்கு அழவே வேணும் ? . அவளை அவன் தூற்ருத இடமில்லை. செய்யாத இம் சையில்லை. தாயைத் தூற்றினல், இம்சைப்படுத்தினுல் எந் தப் பிள்ளைக்காவது கண்ணிர்விட மனம் வருமே ?. sp
உண்மை : கண்ணிர்விட எனக்கு மனமில்லை.
என் ஐயாவின் முடிவுப்படி--
என் அம்மா ஒரு..?
யார் நம்புவார்கள் ?
என்னைப் பெற்றவளின் முகத்தைப் பார்த்த எவனும் சொல்லத் துணியமாட்டான், இப்படி ? அம்மாவின் கண்களிலே கரைந்தொழுகும் நீர் போதுமே அவளின் புனிதத்தைக் கூற ?
ஐயாவின் மனதில், அம்மாவைப்பற்றி அத்தகைய ஒரு எண்ணம் எழுந்ததன் பின் அம்மா மகிழ்ச்சியையே கண் டிராள். அவள் கண்டவை-அடியும், உதையும், குத்தும் தான்.
என் கை சுயநினைவின்றி உலக்கையைத் தூக்கி இறக்கு கிறது.
இதே உலக்கையால்தான்.?
எங்கோ சென்றுவிட்டுத் திரும்பி வீட்டிற்கு வருகி றேன் ; படலையைத் தள்ளித் திறந்தபோது என் தங்கை யின் கூக்குரல் எழுகிறது :

அந்த ஒரு நாள் 15
'ஐயோ அம்மாவை ஒன்றும் செய்யாதீங்கோ...! அடிக்காதீங்கோ.1 ஐயோ, ஐயோ. ஒன்றும் செய்யா தீங்கோ..!"
நான் ஒடுகிறேன் ; அங்கேஎன் தந்தையின் ஒரு கையில் இந்த உலக்கை. சுவரோடு நிலைகுலைந்த நிலையில், குளிரில் நடுங்கும் ஆட்டுக் குட்டிபோல என் அம்மா.
நான் ஒருகணம் பிந்தியிருந்தால், நிச்சயமாக உயர்ந்த உலக்கை அம்மாமேல் இறங்கி.
*உலக்கையை முரட்டுத்தனமாகப் பறித்து எறிகிறேன் ; எனக்கு எப்படி அவ்வளவு வெறி வந்ததோ..?
'ஐயா ! வரவர நானும் பார்க்கிறேன், நீங்கள் ஆக இடங் கண்டிட்டியள். இது கலிகாலம். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது..!"
ஐயா திகைத்துப்போய் என்னைப் பார்க்கிருர் : என் வார்த்தைகள் அவரிதயத்தை உலுக்கியிருக்க வேண்டும். ஏதோ சொல்ல வாயெடுக்கிருர் :
*உன்ரை கொம்மா...இவள்.ஒரு.!” ஏதேதோ சொல்கிருர்.
'இந்தக் கதையை வேறு ஆருக்காவது போய்ச் சொல்லுங்கோ..!" நான் கத்துகிறேன்.
அவர்மீது ஏற்பட்ட வெறுப்பின் விதை, இவ்வளவு தூரம் மரமாக, இராட்சத வடிவில் வளர்ந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அவரில் ஏற்பட்ட வெறுப்பு -- அவர் பிணத்தின் மீது கண்ணிரைச் சொரியக்கூடத் தடை விதித்தது ; ஊருக்காகக்கூட என்னுல் அழ முடிய வில்லையே ?
முற்றத்து வேலியில், காய்ந்துபோன அவரைக்கொடி காற்றின் சலசலப்பில் பரதவிக்கிறது.
படலையைத் திறந்து விடும் சத்தம். யாரோ அம்மாவை வருத்தம் பார்க்க வருகிருர்கள் ; உயிர்ப் பறவைக்கு விடை கொடுக்க வருகிருர்களா ?

Page 10
6. விண்ணும் மண்ணும்
என் பக்கத்தில் சாரதா, முழங்கால்களிடையே முகத் தைப் புதைத் தபடி ஆழ்ந்து துரங்கிவிட்டாள் போலிருக் கிறது.
Li Taulb. *தம்பி ! இஞ்சை ஒடியா. உன் கொம்மா கண் களை விழித்துப் பார்க்கிருள் 1.'
பெரியம்மா அழைக்கும் குரல் எனக்கு மட்டும் கேட்க வில்லை ; சாரதா திடுக்கிட்டு எழுந்து அறைக்குள் ஒடுகி முள்.
அறையில் குத்துவிளககு என்றுமில்லாத பிரகாசத் தோடு எரிகிறது ; தீச்சுடர் காற்றின் மெல்ல சைவில், முற் றத்து அவரைக்கொ டி போல, அலைப்புறுகிறது.
அம்மா, ஆழப் பதிந்த தன் கண்களைத் திறந்து என் னைப் பார்க்கிருள் என்னைத் தெரிகிறதோ, இல்லையோ ? என்னைத்தான் பார்க்கிருள் ; அவள் உதடுகள் துடிக் கின்றனவே ? ஏதோ கூற விழைகிருளா ?
*அம்மா ! அம்மா !. t
'அம்மா ! என்ரை அம்மா !. y
அம்மாவால் பேச முடியவில்லை ; ஈனஸ்வரத்தில் ஏதோ கூறுகிருள் ; நான் குனிந்து, கண்ணிரிடையே, என் காது களைக் கூர்மையாக்கிக் கேட்கின்றேன்.
"த.ம்.பி !’
'தம்பி’ என்று அ ன் பாக உரக்கக் கூப்பிடும் குரல் இன்று எவ்வளவு தேய்ந்து விட்டது ?
“த.ம்பி! உன்ரை. கூறினது. கொய்யா. 'தொடர்ந்து கூறுகிருள்.
'அம்மா !’ என்று நான் வீரிடுகிறேன் : ‘'நீ என்ன கூறுகிருய் ?. ' என் கால்களை யாரோ பற்றி, இதயம்
இற்றுப் பிளந்துவிட, வேகமாகச் சுவரோடு மோதுகிருர் 95@Y7.
''g'...... நீ இப்படிப்பட்டனியா ?. py நான் வெளியே ஒடி வருகிறேன் ; என் கண்கள் மடை திறந்து. பிளக்கின்றன; என்னிதயம் பிளந்து, தெறிக்கிறது.
தூணைப்பற்றிக் கொள்கிறேன்.

அந்த ஒரு நாள் 1.
சுண்ணமிடிக்க வலக்கையைப் பிடித்த என் கை அன்று நடுங்கவில்லை ; இன்று நாணற்புல்லாக நடுங்குகிறது. பதழுத உடல் இன்று சன்னி கண்டவனைப்போல பதறிப் பரதவிக் கிறது நீரை அன்று சொரியாத கண்கள், இன்று ஊழிக் காலப் பிரளய வெள்ளம் போல நீரைச் சொரிகின்றன.
நான் கதறுகிறேன். * என்ன விருந்தாலும், மணிக்குத் தாயிலை உயிர்தான் ! untri. . . . . . அவனை..! தேப்பனுக்கு ஒரு சொட்டுக் கண்ணிர் விடாதவன், தாய் சாகப் போகிருள், என்று கதறுகிருன்..!’ என் காதுத்துளைகளில் யாரோ மாட்டு ஊசியைப் பல மாக ஏற்றுகிருர்கள்.
"ஐயோ 1. ॐ * இப்போது என் கண்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அம்மாவிற்காக நீரைச் சொரிகின்றன !
இல்லை, இல்லவே இல்லை ! அவள் இறந்து போனல் கூட, இனி என் விழிகள் அவளுக்காக ஒரு சொட்டு நீரைச் சொரியா !
நான்-அழுகிறேன். என்றே அழத்தவறி விட்ட ‘அந்த ஒருநாளுக்காக நான் கதறிக் கதறி அழுகிறேன்.

Page 11
வாழ்க்கை
625
T
Sy
“முருகு
‘ஏலோப்-ஒப்பல்” 'முருகானந்தா-கோவிந்தா'
ஆனந்த கீதமிசைத்தவாறு வலைஞர் கள் உற்சாகத்தில் ஊறியவர்களாய், கட்டுமரத்தினைக் கடலினின்றும் வெண் மணற் பரப்பிற்கு இழுக்கின்றனர். நுனிப் பகுதியிலே இரு இளைஞர்கள். அடிப் பகுதியிலே--மூன்று நடுத்தர வய தினர்.
முன்னிற்கும் இளைஞன் இன்பக் குது குதுப்பினை அகத்தினில் மூட்டி பரவச் செய்கின்றன்.
‘'வேலும் மயிலும் வேலாயுதம் ; வேலும் மயிலும் வேலாயுதம்.” கு ர ல் உச்ச ஸ்தாயினை அடைகின்றது.
கட்டு ம ரங் க ள் ஒவ்வொன்முகக் கரை சேர்க்கப்படுகின்றன. அவை இழுக் கப்படும் போது மணலில் உ ரா யு ம் *ஸ் -ஸ் எ ன் னும் ஒலி எழுகின்றது. அண்மையில் தரையிலே வீற்றிருந்து எல் லையற்ற பெரு வெளியினை நோக்கிய வாறு கரத்தினுல் கற் களை எடுப்பதும் வீசுவதுமாக சேஷ்டைகள் புரிந்து கொண் டிருக்கும் வெற்றிவேலின் செவிகளில் விழுகின்றன. நாளாந்தம் கேட் டுஅலுத்து-புளித்துப் போன வார்த்தை
 

வாழ்க்கை ஒரு காணிவல் 19
களாய் அவை அவன் காதுகளிலே வெறுப்பினை வளர்க் கின்றன. அதே மொழி கடலின் ஒதையுடன் ஒசையாய் இசைந்து வருகின்றது.
**கடா தெய்வம் - கடாவேல் : சாவல் கோழிகூவயிலே’
‘என்ன இழவு விழுந்த வாழ்க்கை ?”
‘ஒ, ஓ வெனக் கதறி இரையும் ஆழியின் அலைகள் கரையினில் பால் நுரையினைத் தாகத்தால் ஒதுக்குகின்றன. வெற்றியின் அகமென்னும் இல்லத்திற்குள் கற்பாந்த கால பேரோசை எழுகின்றது.
அவன் தன்னைச் சுற்றி ஒரு தரம் பரிவட்டமாக நோக்கு கின்ருன் நீரில் வானத்தின் எழில் பிரதிபலிக்கின்றது.
அவன் கரையினை நோக்குகின்றன். ஆங்குக் கட்டு மரத்தினை இழுத்த சுவடிகள், மண் விலகி ந ன் கு தெரி கின்றன
‘எப்போ காணிவலின் வேலையெடுத்து, இந்த அறுந்து போன வாழ்க்கைக்கு முடிவு கட்டுறது ?" சலித்து-அங்க லாய்க்கின்றது மனம்.
宋 : k
‘என்னை வந்து காணவும்-காணிவல் நடாத்துவோன்." வெற்றிக்கு இவ் வார்த்தைகள் பாற்கடலில் கடைந் தெடுத்த அமுதம். மஞ்சள் படர்ந்து இன்ருே நாளையோ, என்றிருந்த புற்களின் மேல் போட்டிருந்த மறைப்பினை விலக்கி விட்ட நிலையினைப் பெறுகின்றன் அவன்.
மஞ்சள் மாறி புத்துணர்வின் பசிய இலைகள் தலை காட்டுகின்றன.
*எஸ் எஸ். சி. பர்ஸ் பண்ணின. நான் மீன் பிடிக்கி றதே ? எப்பிடியும் வீட்டை விட்டுப் போய் உழைச்சு வீட்டுக்கும் செலவுக்கு அனுப்பினுல் சரி. அண்ணையும் வீணுகக் கடல், கடல் என்டு ஓட வேண்டாம். அம்மாவும் கடகப் பெட்டியைத் தலையிலை வைச்சுக் கொண்டு தெருத் தெருவாத் திரியாமல். சங்கையா--மற்றவையைப் போலை வாழலாம் . பாஸ் புத்தகத்தையும், உடுப்புகளையும் கொண்டு போயிடனும். சொன்னுல் விடமாட்டினம்.”
米 米 ,米

Page 12
20 விண்ணும் மண்ணும்
'எணை ஆத்தை வெற்றியன் வீட்டை விட்டு எங்கையோ...' கடிதத்தினை வாசித்ததும் தாயினை எழுப்பு கின்றன் சுப்பு.
அவள் தன் கண்களில் விழும் நரையோடிய கேசத் தினைக் கோதி விட்டவளாக, கண்களைக் கசக்குகிருள். அவை சோகத்தால் சிறுந்து சூம்புகின்றன.
“ஐயோ! என்றை மேன் சொல்லாமல் போட்டானே ?' தவிக்கும் அவளுள்ளத்தில் ஆற்று நீரின் சுழற்சிகள் எழுகின்றன. அன்புச் சுழற்சியில் அவள் துரும்பா கித் தவிக்கின்ருள்.
*பொலீசிலை எண்டாலும் சொல்லி அவனைக் கூப்பி டுடா மேனை. கூப்பிடுடா. இவ்வளவு நாளும் என்ரை கையாலை சோறு வாங்கிச் சாப்பிட்டவன். சீ, புத்தி கெட்டுப் போயிட்டானே..?’
நாடியினைத் தன் உள்ளங் கையால் ஏந்தித் தாங்கிய படி அவள் கிழிந்த பாயில் இருக்கின் ருள்.
இம். ம்.' பெருமூச்சில் அவயவங்கள் பொருமித் தாழ்கின்றன.
**வயது வந்த பொடியனை பொலிசிலை சொல்லித் தேடக்கூடாதென பாரன் ஒரு மாதத்துக்கை வந்திடு
y
வான் .'
சாந்தப் படுத்த முயன்ருலும் உள்ளத்துச் சுமையை இறக்க முடியவில்லை அவனுல். சுப்புவும் அவளும் ஒருவரை யொருவர் நிமிர்ந்து நோக்க வலியற்றவர்களாகத் தவிட்டு நிற மணலை நோக்குகின்றனர்.
கடலின் பேரொலி கேட்கின்றது. அலைகள் மணலில் அடித்து நீர் ஊறும் 'இஸ்’ என்னுமோதை சங்கமித்து வரு கின்றது.
வலைக்குள் சிக்கியுள்ள பாசி வெடுக்கு மணத்தைப் பரப்புகின்றது.
3ද 米
வெற்றி காணிவல் நடத்துபவரின் வீட்டினை அணுகு கின் முன்.
'மிஸ்டர் கப்பிரமணியம் இருக்கிராறே ?"

வாழ்க்கை ஒரு காணிவல் 21
*வாரும் உள்ளுக்கை." மெல்ல மெல்ல நிலத்திற்கு நோகாதவாறு செல்கிருன் உள்ளே.
நான் தான் வெற்றிவேல், காணிவலிலை வேலைக் கெண்டு.” கண்களைத் தன் கைக்குட்டையால் துடைக் கிருன். வியர்வை குட்டையில் ஊறுகின்றது.
'ஆ ! சிற் டவுண் .' தயங்கியவாறு அமர்கின்றன். அவனின் கைகளும் வலப் பாதமும் தடவி விடுகின்றன--கதிரையின் கைப்பிடி விளிம் பினையும், மா பிள்' பதித்த தரையினையும்
‘பாதர் என்ன செய்கிரு?ர் ?’
‘இறந்திட்டார்...' மூக்கினை உறுஞ்சுகின் முன்- கைக் குட்டையால் கண்களைக் துடைத்தவாறு .
*அம்மா’
“ ‘6ÉL q.8a'.'
அவன் அவ்விசால அறையினை நோக்கமிடுகிருன், மேசை யிலை பிளாஸ்டிக் மலர்கள்--போலி வேடம் பூண்டோர் போன்று சிரிக்கின்றன. சீனத்து வெண்களியில் செய்ததோர் விலையைக் கண்டதும் அருவருப்பு மேலிட தன் பார்வை யைத் திருப்புகின்றன் .
‘அண்ணை, தம்பி இருக்கினமே ?
* ஒரே ஒரு அண்ணை.' வார்த்தைகளை விழுங்குகின்றன். அவனகத்தில் சிலையின் வெண் பளபளப்பு வட்டமிடுகின் றது.
‘தென் ஒல் றைட்" மூக்குக் கண்ணுடியின் பொன்நிற விளிம்புகளை மூன்று விரல்களால் தடவி விடுகின் ருர்,
*நாளைக்கே வேலைக்கு வருவீரோ ?” ‘ஓம்’ தலையை அசைக்கின்ருன் முறுவலுடன்
*ஒன்றை மறந்திட்டன். என்னென்றல் பாரும்--காணி வலிலை பலரும் பத்துப் பேர் வருகிற இடமல்லே, அதனுலை நீர் இப்பிடி அங்கையிருக்கக் கூடாது. லோங்ஸ் போடணும். அதோடை ஒன்று . .' நெற்றியைத தடவுகின்றர். ரேகைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. 'காசோடை பிளங்கிறதாலை எல்லாரிட்டையும் கே ட் டது போலைத் தான் உம்மையும் கேக்கவிருக்கு. என்னென்ருல் பிணைக் காசாக முன்னூறு ரூபா இன்றைக்குக் கட்டவேணும்.'

Page 13
22 விண்ணும் மண்ணும்
*300 ரூபா. வியர்க்கின்றது. வெற்றிக்கு. அவனின் நாக்கு அடி அதரத்தைத் தடவுகின்றது. வியர்வையின் உப்புக் கைச்சல் எழ எச்சிலை விழுங்குகின் முன்.
‘எப்பிடி எடுக்கிறது.சீ.ஆ. பாஸ் புத்தகத்திலே அண்ணே சேர்த்துத் தந்த முன்னுாற்றைம்பதுச் சொச்சம் கிடக்கல்லே. பிணைக்காசுதானே ? பிறகு இதோடை உழைச்ச காசையும் கொண்டு. அவன் உழைத்துக் கோடி சீமானகி விட்ட பேரின் பமடைகின்றன்.
'பின்னேரம் ஐஞ்சு மணியைப்போலை கொண்டு வாறன்’ ‘ஓகே. ஒகே. இன்றைக்குத் தான் கொடுக்க வேணும் என்டில்லை. நாளைக்கும் கொடுக்கலாம் "
ck c 永 புத்தம் புதிய கால் சட்டை அணிந்தவாறு வெற்றி மோட்டார் சைக் கிளினின்றும் இறங்கி மணியத்துடன் காணிவல் மைதானத்திற்குள் செல்கின்றன் அவன் தான் பெறப்போகும் நாளாந்த பத்துரூ பாப் பணத்தைப் பற்றி எண்ணியவணுய் இன்ப லாகிரியில் ஆழ்ந்தவாறு செல்கின்றன்.
மின் விளக்குகளின் வர்ணங்கள் நயனங்களை உறுத்து கின்றன பசிய வேப்பமர இலைகள் சிவப்பாக LDnt n) யுள்ளன.
'கம்பிளிங் ஸ்டோருகளிலை நின்று வேலையைப் பழகும்.' ஒலிபெருக்கியின் ஒலத்தில்ை ஒரிரு வார்த்தைகளே வெற்றியின் செவிகளை எட்டுகின்றன.
* மிஸ் லீலா, இவருக்கு வேலையைக் கொஞ்சம் இன் றைக்குப் பழக்கி விடும்'--வேலை'யில் ஒர் அழுத்தம் தொனிக்கின்றது.
லக்கி ஸெவின் ஸெட்டிற்குள் இருவரும் செல்கின்றனர். கையில் சிகரெட்டை எடுத்தவாறு கடைக்கண்ணுல் லீலா வைப் பார்த்தவாறு மணியம் பற்ற வைக்கின் ருர் நெருப்புக் குச்சியின் ஒளியில் மீசையின் கருமை நன்கு தெரிகின்றது. லீலா நகைக்கின் ருள். சிவப்பின் நடுவே வெள்ளை துலாம் பரமாகின்றது.
மணியத்தின் கடைவாய் இலேசாக ஆடுகின்றது. அவரின் மீசையில் ஓர் நெளிவு. கன்னத்தின் இரேகையும், குழியும் ஒடி மறைகின்றன.

வாழ்க்கை ஒரு காணிவல் 23
மிக உயரத்திலுள்ள மைமுகிலைப் போன்று  ெம ல் ல மெல்ல மணியம் செல்கிருர்,
*மிஸ்டர் உம்முடைய நேம் என்ன ? சாதாரண முறுவலுடன் "லிப்ஸ்டிக்’ பூ சி ய வாயால் மிஸ் லீ லா வினவுகின் ருள்.
புல்லரிக்கின் ருன் வெற்றி. **வெற்றி.வேல்.’ நா தடுமாறித் தழ தழக்கின்றது. பிடரியைச் சொரிகின்றன் வெட்கத்தால்,
ஜனங்கள் கூடுகின்றனர். ஒன்று, இரண்டு, மூன்று. நூறு. இருநூறு.
எத்தனை பேர்கள் தொ ங் கி ய தலையுடனும் வாடிய முகத்துடனும் செல்கின்றனர் !
இரவு ஒரு மணி-நெருக்கடி குறைகின்றது. லீலா வெற்றியைப் பார்த்து நகைக்கின் ருள். இந் நகையின் உட்கிடக்கையை வெற்றிபுரிகின் ருள். அப்போஉடலை சாவசமாக அவ ன் மீது பட விடுகின் ருனில்லை. அவள் ஆடி அசைந்து திரும்புகின்ருள் அப்போ ---உடலை சாவகாசமாக அவன் மீது பட விழுகின் ருள். அர்த்த மற்றுச் சிரிக்கின்ருள். உ ட ன் நெட் டி முறிக்கின் ருள். ஒன்று-இரண்டு-மூன்று-டிக்-டிக்-டிக். விரல்கள் உள்ளங் கையைத் தொட்டு எழுகின்றன.
"சீ இது தானு வாழ்க்கை ? பெண்மை ?. நடுத் தெருவில் விலை போகிறதே. s
அவளின் நெற்றியின் ஆச்சரியக் குறிச் சாந்து உயர்ந்து பதிகின்றது. சேலைத் தலைப்பினை முறுக்குகின் ருள்.
“சீ பேய். என்னை அழிக்க வந்த மோகினி. எத்தனை பேரிந்தை காசைப் பறிச்சவள் ?. செ, அவளைக் குறை கூறி என்ன ? பிழைக்க வழியில்லாமல். நானும் பிழைக்க வழியில்லாமல்தானே வந்த நான். ? என்ருலும் பொம் பிளை இப்பிடியெல்லாம்.
2
அவள் தன் சேலையைச் சரி செய்கின் முளா ? களைக் கிளறுகின் முளா ?
உணர்ச்சி
மணியம் ஆடி ஆடி வருகின் ருர்,

Page 14
24 விண்ணும் மண்ணும்
* மிஸ் லீ.ல், யூகம்.வித் மீ. மிஸ்.டர் வெ. வெ.கோ.அன் சிலீப்.' வலது க ரத் தி னை ஆட்டி தலையை ஒரு புறம் திரும்பி இடது கையால் கண் ணை க் கசக்கியவாறு கூறுகின்ருர்,
அவரும் அவளும்--ஒருவரை யொருவர் அணைத்தவாறு செல்கின்றனர்.
米 米 米
*கன்றினுக்குள் நுழைகின்றன் வெ ற் றி. ஆங்கு அரட்டை அடிக்கின்றனர் பலர்.
“ஹலோ உம்முடைய பெயரென்ன ?’
*வெற்றி வேல்.’
ஒருவன் சிகரெட்டை நீட்டுகின்றன்.
**தாங்ஸ்...'
சிகரெட் புகையுடன் மதுவின் நெடி கலங்குகின்றது.
அரைமணி நேரத்தின் பின் வெற்றியையும் அழைத்துக் கொண்டு படுப்பதற்குச் செல்கின்றனர்.
米 ck 米
அடுத்த நாள் சூதாட்ட இடத்தினை விட்டு வாசலில் ரிக்கற் விற்க விரும்புகிருன் வெற்றி. மணியத்திடம் கூற கூடாரத்தினை நோக்கி நடக்கிருன். கூடாரத்துக்குள் மணி யம் புட்டிகளின் மையத்தே செய்து வைத்த பாவையாகி யுள்ளார்.
வெற்றி தயங்கித் தயங்கிக் கூறுகிறன்.
"ஆல்  ைறட் வாசலிலை இருந்து இன்றைக்கு ரிக்கற் வில்லும்'
*ஆ. ஒரு கிளாஸ் குடியுமென். சாராயத்தினை வார்க்கின் ருர் மணியம். மணம் மூக்கினைத் துளைக்கின்றது. வாந்தியின் அறிகுறியாய் வயிற்றுக்குள்ளிருந்து.
“வெறி சொறி, நான் பாவிப்பதில்லை. ' மெல்ல நழுவு கின்றன்.
y 9
"சீ இதுக்கே வந்த நான் ?. என்ன பிழைப்படாப்பா ? பேசாமல் அண்ணையோடை அவற்றை தொழிலைப் பழகி யிருந்தாலும். s
来 ck 米

வாழ்க்கை ஒரு காணிவல் 25
தென்னேலைக் கிடுகின் தூவாரத்திற்கூடாக வெற்றி பிக்கெற்றுக்களை விற்கிருன்.
இரைந்து ‘கியோக்.கீக்.க்.’ என்னும் சுயம்பு அதிர்வு தத்தின் நடுவே எழுகின்றது ஒலி பெருக்கியில்.
sy
'கலோ. 岛······ சே. முதல் நாளிரவு சிகரெட்டினை நீட்டியவன் வருகிருன் வெற்றி நிமிர்ந்து அவனை யாரென அடையாளம் கண்டு கொள்கின் முன்,
‘எப்படியிருக்கு வேலை ?'
**நல்லாயிருக்கு' இளிக்கின்றன். வந்தவன் சிறிது நேரம் இருக்கிருன் வெற்றியுடன், ** எனக்கு கம்பிளிங் செட்டிலை வேலை. அப்ப செறியோ" *செறியோ.’ கரங்களை ஆட்டியவாறு செல்கிருன் அவன். அவனின் கரிய கபடின் லோங்ஸின் மீது வெற்றி தன் கண்களைப் பதிய வைக்கின்ருன்.
வேலை முடிகின்றது. விற்ற ரிக்கட்டுகளின் அடிக்கட்டை களையும் பணத்தையும், மணியத்திடம் கொண்டு செல்கின் முன். மணியம் எண்ணுகின் ருர்,
* மிஸ்டர் வெற்றிவேல், முதல் நாளே பிழை விட் டிட்டீர் இருபது ரூபா லொஸ்.' நெற்றிப் புருவங்களை உயர்த்தி அதரங்களைப் பிதுக்குகின் ருர்,
வெற்றிக்கு சிந் தை கலங்குகின்றது. கண்களிற்குள் குமிழிகள் சுழல்வது போன்ற பிரமை.
ம ணி ய ம் தன் புன்னகையைச் சிந்துகின்ருர் அவர் பிந்துபவை வெற்றிக்கு வெந் தழலாச மாறுகின்றது.
*நீர் கவலையீனத்தாலை எங்கையோ லொஸ் பண்ணிப் போட்டீர். இதை நினைச்சுத்தான் முதலே முன்னுாறு ரூபா பிணைப்பணம் வாங்கின நான். இனி இருநூற்று எண்பதுதான் பிணைப்பணமாகக் கிடைக்கும்.'
அவரின் கண்களின் செவ்வரியைப் பார்த்தவாறு அவன் கன் துடிக்கும் இதயமுடன் தள்ளாடித் தள்ளாடிச் செல் ன்ெறன். தன்னைத் தானே நம்ப முடி யா த வெறுக்கும்
வி 4

Page 15
26 விண்ணும் மண்ணும்
சுழலும் நீரில் பட்டுத் தெறிக்கும் ஞாயிற்றின் பிரதி பிம்பத்தினைப் போன்று அவன் எண்ணம் இருபது ரூபா வினைப் பற்றியே வட்டமிட்டுச் சுழல்கின்றது.
சிகரெட் ஆசாமி அவன் எண்ணத்தில் வராது தப்பித் துச் செல்கின் முன்.
sk ck 2% காலை நெடுநேரமாகியும் வெற்றி படுக்கையை விட் டெழாதுள்ளான் பிறிதொருவன் அவளை எழுப்ப முனை கின்றன். கை வைக்க நெருப்பாகக் கொதிக்கின்றது உடல் ‘புது ஆசாமிக்கு நெருப்பாகக் காயுதடா 1 மிஸ் லீலா பொடி போட்டிட்டாள் !'
வெற்றி எழுகின் முன். அவன் தலை பாரம் ஏறி நீர்பட்ட மலர் சாய்வது போன்று சாய முனைகின்றது. 'கிண் - கிண்' என்னும் ஒசையெழுகின்றது காதுக்குள். நெருப்பாகக்காய்ந்த அவன் உடலிலும், அடி வயிற்றின் தழல் அவனைச் சித்திர வதை செய்து சுட்டுப் பொசுக்குகின்றது.
'வீட்டுக்குப் போகவேணும். அம்மாவை. அண் ணையை அண்ணையிந் தை பிள்ளையைக் காண வேணும். இன்றைக்கே போயிடனும்.'
மணியத்திடம் ஆடி ஆடிச் செல்கின்றன். ஒவ்வொரு பாத அடிகளையும் காணிவல் மைதானத்திற்குள் 60,வக்கும் போது, அதல பாதாளத்திற்குள் விழுவது போன்ற பிரமை. இரு நூற்றி எண்பது ரூபாவை கேட்கின்றன் வெற்றி. * தம்பி வேலை செய்து களைச்சுப் போட்டுது. வீட்டை போகனுமாம்.' அருகிலிருந்த லீலாவைப் பார்த்து தன் காவி படிந்த பற்களைக் காட்டுகிருன் ருர். அவள் தன் தலையைக் குனிகின் ருள்.
'விலாசத்தை தந்திட்டுப்போம். திரும்பி நீர் வேலைக்கு வராட்டில் ஆறுதலா அனுப்பி வைப்பன்.' காகிதத் துண் டினை நீட்டுகின்றர்.
கைகள் நடுக்கமுற வெற்றி தன் விலாசத்தை எழுது கின் முன் அவநம்பிக்கையுடன்,
உடுப்புப் பெட்டியுடன் வெற்றி பஸ்நிலையத்தை நோக் கிச் செல்கின்றன்.

வாழ்க்கை ஒரு காணிவல் 2
"ஐயா, ஐயா. சின்னையா வந்திட்டார். சின்னையா வந்திட்டார். பெட்டியை வாங்கியவாறு சுப்புவின் மகன் கூத்தாடுகின்றன் ஆனந்தத்தால்.
தாயும், தமையனும் ஓடிவருகின்றனர். இன்பத்தால் எல்லார் மத்தியிலும் வார்த்தைகள் வெளிவராது மனதிற் குள் துடிக்கின்றன .
*செல்வச் சந்நதியானுக்குக் கொண்ணன் இந்த முறை காவடி எடுக்காததிலை தான் உனக்கு இந்தக் கெடு புத்தி யெல்லாம், முந்தா நாத்து வர்ர திருவிழாவிற்கு காவடி யெடுக்கிறது என்று நேந்திருக்கு ' பக்தி நிலையில் தாய் வடக்குத் திசை நோக்கிக் கைகூப்புகின் ருள்.
‘நான் சொன்னன் பார்த்தியேணை. ஏன் ஒரு மாதிரி இருக்கிருய் ? காய்ச்சலே. என்னடா தம்பி ?”
'ஒ. காய்ச்சல்.’ இன்பமும் இன்பமும் பெருகிய நிலையில் துன்பம் சோக ரசத்தை மெல்ல ஏற்றுகின்றது.
உள்ளங்கள் தவிக்கின்றன. ‘போய்ப் படு. பரியாரியாரைக் கூட்டிக் கொண்டு வாறன் .'
மணற்றரையில் சாக்கினை விரித்து அக் கணகணப்பில் படுத்துறங்குகின் முன் வெற்றி. தாய் அருகில் கற்சிலையாய் அமர்ந்து விடுகின் ருள்.
* அம்மா. அம்.மா. அண்ணை ...' *நான் ஒரு நாளும் . செய்யன். செய்யன். வெற்றி வாய் பிதற்றுகின்றன். பரியாரியார் வந்து மருந்தளித்துச் செல்கின் ருர்,
*மேனை சுப்பு நீ அடுத்த முறை வேல் குத்தி இழுவைக் காவடி யெடடா மேனை. உன்ரை தம்பி படுற பாடு.” தொண்டையைத் தன் எச்சிலால் நனைத்தவாறு கரகரத்த வார்த்தைகளைக் கூறுகின்ருள். அவள் கண்கள் கலங்கு கின்றன. முருகனை நினைத்து இருபத்தைந்து சதக் குத்தியை லேஞ்சியில் கட்டி முகட்டு வளையில் கட்டுகின்ருள்-கண் களில் ஒற்றிய பின்னர்.

Page 16
雳8 விண்ணும் மண்ணும்
மூன்றம் நாள்- காய்ச்சல் படிப்படியாகக் குறைகின் றது. பயங்கரக் கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்கின்ருன் வெற்றி. அவன் மீது ஒர் துளி வெம்மையான கண்ணிர் விழுகின்றது. ஊறிய மட்பாண்டத்தினை அதிகாலையில் தொட்ட உணர்வில் உள்ளம் சுருக்கெனத் தைக்கின்றது.
" . . . 6T600T 60انو »
‘என்ன வேணும் தம்பி ?’
அகல் விளக்கின் மண்எண்ணெயின் புகை நாற்றமும், வெளியே வலையில் காயவிட்ட மீனின் மணமும் கொட்டி லுக்குள் பரவுகின்றன.
வெற்றியின் எண்ணங்கள் சுழல்கின்றன. தன் தமைய னின், தாயின் அன்பு, -கற்ற தனது போக்கிரித்தனம்,-தமை யன் பாடுபட்டுச் சேர்த்துக் கொடுத்த முன்னுாற்றைம்பது ரூபா-அதனை வீணே செலவழித்தமை அப் பணமிருந்தால் ஒரு வலையாவது வாங்கித் தமையனுக் களிக்கலாம் என்ற நப்பாசை
நீருக்குள் விழுந்த பழைய இலை போன்று அவனுள்ளம் உக்கி-இத்துப் போகின்றது.
‘ஒன்று சொல்லுறன் அண்ணை கோவிக்க மாட்டன் என்று சொல்லு.'
முகட்டிலிருந்து உக்கிய கிடுகின் சிறு சிறு துகள்கள் சொரிகின்றன. தன் நயனங்களைப் புறங்கையால் வெற்றி தடவுகின்றன் .
**கோவிக்கல்லையடா தம்பி" சுப்பு அவனின் முதுகினைத் தடவி விடுகின்றன். வலை இழுத்த கடின கையானுலும் இதமாக இருக்கின்றது வெற்றிவேலுவுக்கு.
*நீ சேர்த்துத் தந்தியே அண்ணே முன்னுாற்றைம்பது ரூபா. அது முழுத்திலா செலவழிச்சிட்டன்." தன் செய் கைக்காக வருத்தப்பட்டவாறு தயங்கித் தயங்கிக் கூறுகின்
“அதை நினைச்சு வருத்தப்படாமல் படுத்து நித்திரை கொள் தம்பி.' அவன் தம்பியைத் தடவுவது அதிகரிக் கின்றது,

வாழ்க்கை ஒரு காணிவல் 29
*அண்ணை இஸ்.ஸ்.’ அவனின் முகத்தில் வெற்றி, கட்டிப்பிடித்தவாறு முத்தமிடுகின்றன்.  ெவ ற் றி யி ன் உள்ளம் சாந்தியடைகின்றது. மீண்டும் முத்தமிடுகிருன். சுப்புவின் கன்னத்து மயிர்கள் குத்துகின்றன.
பாரம் இறங்குகின்றது. காய்ச்சல் எங்கோ பறந்த உணாவு.
விக்கி விக்கி அழுகின்றன் வெற்றி. கண்ணிர் அவனின் மார்பகத்தில் பட்டுச் சுடுகின்றது வீட்டு வேலிச் சிலாகை யில் கட்டியுள்ள ஆடு தன் உரோமத்தைச் சிலிர்த்தவாறு அழுகின்றது.
''th... h... gilb... iD... LD...
y
சுப்பு கண்ணீரைத் துடைக்கின்றன். 'தம்பி ! 61ல்லாத்தையும் பட்டு அனுபவிச்சுப் பார்க் கனும். இப்ப என்ன...? ஒரு மாதத்துக்கை உழைச்சுப் போட்டால் போச்சு...'
பனை மட்டையின் வரிச்சிற் கூடாகச் சீதளக் காற்று மென் நடையிட்டு குளிர்மையைப் பரப்பியவாறு வருகின்றது. அவர்களின் இன்ப அன்புப் பிணைப்பிற்கூடாக, மென் தென்றல் கூட அவர்களைப் பிரித்து இடையாற் செல்ல முடியாமல் தவிக்கின்றது.
கடலின் பேரிரைச்சல் இப்பொழுது கேட் 7 வில்லை அமைதியே விளங்குகின்றது.

Page 17
‘துருவன்'
இதற்கிடையில் இப்படியென்றல். இருளே வாழ்வாகி வாழ்வே இருளாகி விட்ட குருடனுக்கு.
வைக்கோலைக் கடித்த மாதிரி என் உடம்பு சிலிர்க்கிறது ! க தி  ைர  ைய விட்டு எழுந்து தடவித் தடவிக் கதவைக் திறந்து வெளியே பார்க்கிறேன். எங் கும் வெறுமையின் கருமை,
மாணவர்கள் கூய் கூய்’ என்று கத் துகிறர்கள் பல்கலைக் கழகத்தில் இப் படித் திடீரென்று வெளிச்சம் அணைவது மிக அருமை. ஆனல் நிகழ்ச்சி நினைவைக் குத்துவது. அது கூட அருமைதான்.
என் இதய விளக்கிலிருந்து ஒ வரி க் க ற்  ைற கும் மிருட்டைக் கிழி த் து க் கொண்டு பாய்ந்து சென்று, கைதடியிலே அந்தக் குடிசையின் பின்னல் சாக்கிலே படுத்துக் கிடக்கும் சின்னையனின் உட லில் பட்டுத் தெறிக்கிறது. என்னுடைய மன ஒளியோடு மோத அவனுக்கு ஒளி இல்லை.
அவன் குருடன்,
‘ஒரு நிமிசத்திலை என்னுல் ஒன்றுமே செய்ய முடியாத இயக்கமற்ற நிலை. ஆனல் சின்னையன், தடியிலே கண் ணை வைத்து என்னவென்ன வெல்லாம் செய்
30
 

கு ரு டு 31
கிருன் ? ஒன்று இயங்கா விட்டால் இன்னென்று அதிக சக்தியுடன் இயங்குவதுதான் மனித இயந்திரத்தின் சூட்சுமமா ?
* சொறி மச்சான், ஒண்டுமே தெரியேயில்லை’ என் னிலே தற்செயலாக மோதிவிட்ட நண்பனெருவன் மன் னிப்புக் கேட்டுக் கொண்டு இருளேத் துளாவிக்கொண்டு நடக் கிருன் . இப்போது அவன் கூடக் குருடுதான். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லையாம். எனக்கு ஏதோ தெரிகிறது.
நினைவுக் கதிர் நத்தையின் உணர்ச்சி உறுப்பைப்போல் ஒரு முறை சுருங்கி விரிகின்றது. அடிமனதிலிருந்து அவனு டைய முழு நினைவும் சுருள் சு ரு ள |ா க வெளியே வந்து நீண்டு விரிகின்றது.
ck 米 米 ‘எட துலைஞ்சு போவாங்களே, என்ரை த டி  ைய த் தாருங்கோவன்மு.” கையை அப்படியும் இப்படியும் வீசிக் கொண்டு பரிதாபமாகக் கத்துகிருன் சின்னையா, சப்பித் துப்பிய ஹம்புட்டான் பழ'க் கொட்டையைப்போல் சதைக் குழிக்குள் கிடந்து அவன் வழிகள் உருண்டு புரள்கின்றன.
வேதனையை ரசிக்கும் சிறுவர் கூட்டத்துக்குப் பின்னல் நானும் நிற்கிறேன்.
எனக்கும் வேதனையா ? எனக்கு முன்னுல் நிற்பவர்கள் கையைத் தட்ட சின்னையா கண்ணைக் கட்டாமலே ‘க ண் க ட் டி விளை பாட்டு விளையாடுகிருன் , அவனுடைய முகம் நான் நிற்கும் பக்கமாகத் திரும்பும் போதெல்லாம் ஒன்றுமில்லாத அவனுடைய அந்தக் கண்களிலிருந்து இரண்டு நெருப்பிலே காய்ச்சிய ஆoைகள், பிய்த்துக் கொண்டு வந்து என் இதயத்தைக் குத் தித் துளைப்பது போல்..?
*கோதாரியிலை போவாங்களே, தடியை இப்ப தரமாட் டியளோ ?' உரக்கக் கத்தி விட்டு கீழே குனிந்து கல்லையும் மண்ணையும் அள்ளி நாலா பக்கமும் அள்ளி வீசுகிருன்
‘என்னைத் திட்டுகிருணு ?" திடீரென்று கைகளை முன்னுக்கு நீட்டி எதையோ இலக்கு வைத்து ஒடுபவன் போல் ஒடுகிறன். அந்தப் பூவரச மரத்தோடு மோதி நெற்றியால் இரத்தம் வடியக்

Page 18
38、 விண்ணும் மண்ணும்
கீழே விழுந்து கத்துகிருன். தடியை எடுத்து ஒளித்து வைத்தவன் அதைக் கொண்டுபோய் அவனுக்குப் பக்கத்தில் போட்டு விட்டு ஒட, எல்லாரும் ஒடிப்போய் விடுகிருேம். அடுத்த நாள் தலையிலே பழைய சீலையால் சுற்றிக் கட்டிக் கொண்டு, கையில் வைத்திருக்கும் தடியால் ஒழுங்கை வேலியைத் தட்டியபடியே ஒழுங்கைக் கள்ளிருந்து வருகிருன். அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
* சின்னையா ??? நின்று என் பக்கம் திரும்புகிருன், பார்வையில்லாத வெறும் கண் துடிக்கிறது. என் குரல் அவனுக்குத் தெரியும். வெறும் இமைகளின் துடிப்பிலே நான் பார்ப்பது ஒரு உணர்ச்சிச் சித்திரமா ? மூடிவிட்ட பானைக்குள் கிடந்து வேகும் அரிசியைப் போல் அவனுடைய மூடிய கண்களுக் கூடாக உணர்ச்சிகள் வெந்துகொண்டிருப்பது தெரிகிறது. மனவேக்காட்டின் உந்தலில் அவனைக் கூப்பிட்டு விட்டு என்ன பேசுவதென்று தெரியாமல் நிற்கிறேன். உள்ளப் பயத்தை உணர்வு மூடிவிடுகின்றது.
‘நான் தெருவுக்குக் கிட்ட வந்துட்டனே ? நல்லம்மா வீட்டை விளையாடப் போறன். நீரும் அங்கைதான் வந்தனிரோ ?'
படிப்பே இல்லாத அவன் மரியாதையாகப் பேசுவதில் மட்டும் குறை வைக்கமாட்டான்.
'ஓம்' நான் தலையை ஆட்டுகிறேன் ; குரல்தான் அவனுக்குக் கேட்டிருக்கும். தடியால் தடவித தடவிக் கொண்டே நல்லம்மா வீட்டுக்கு எந்தநாளும் பின்னேரத் திலே விளையாட வந்து விடுவான். அவனுக்குக் கண் அந்தத் தடிதான். ஐந்தாறு பேராகச் சேர்ந்து விளையா டும் போது அவனைச் சும்மா சா ட் டு க் குத் தான் விளை யாட்டில் சேர்த்துக் கொள்வது.
'சின்னையா ! நான் இந்தக் கொஞ்ச நேர இருட்டுக்கை எவ்வளவு அவலப் படுறன் ? நீ என்ன மாதிரி இருப்பாய் எண்டதை இப்ப நல்லா உணர்ந்து கொள்ளுறன். உன்ரை மனதாலே இரத்தம் வடியக் கூடிய எவ்வளவு துன்பத்தை உனக்கு நாங்கள் குடுத்திருப்பம் ? சின்னப்பிள்ளை விளை யாட்டு உன்னையே."

கு ரு டு 33
நினைவுக் கண் அங்கே மொய்த்து நிற்க என் கண் கண்ணிரில் ஊறுகின்றது. கதவைத்திறந்து கொண்டு அறைக் குள் வந்து கதிரையில் இருக்கிறேன்.
நீ அந்தரத் தாமரை மாதிரி என் மனக்கிண்ற்றின் மேற்பரப்பிலே மிதந்து கொண்டு எவ்வளவு நினைவு வேர் களை தொங்க விட்டுக் கொண்டிருக்கிருய் தெரியுமா ?”
வேர்கள் கும்பலாக நீரிலே ஆட ஒன்று நீளுகின்றது.
நல்லம்மா வீட்டிலிருந்து மேளச் சப்தம் ஒலி பெருக்கி மூலம் கேட்கிறது. அவள் பெரிய பிள்ளையாகி விட்டதை ஊருக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிருர்கள். அவள் பெரிய பிள்ளையாகும் போது நாங்கள் மட்டும் சின்னப் பிளைள்களாக இருக்கமுடியவில்லை. ஆனல் சின்னையா.. ?
அவன் அன்று முழுவதும் நல்லம்மா வீட்டிலே தான் தங்கி நிற்கிருன். அவர்களுக்கு உதவி செய்வதாக அங்கு மிங்கும் ஒடி எல்லாருடைய திட்டையும் வாங்கிக் கொள் கிருன்.
‘இந்தக் குறுட்டுப் பெடியன் ரை கரைச்சல் பெரிய கரைச்சல், அம்மா அதுக்குள்ளாலையும் இதுக்குள்ளாலையும் தடியை ஆட்டிக் கொண்டு பெரிய உவத்திரவம்'
'கண் தெரியாட்டி எங்கையாலும் மூலையிலை படுத்தி ருக்கிறதுதானே. இல்லாட்டிப் பக்கத்திலை குறுட்டுப் பள் ளிக்குடமிருக்கு அங்கை போறது.'
'குறுடன்
'குறுடன்’
அவர்களுடைய ஒவ்வொரு பேச்சும் கப்பல் வெடி’யாகி என் மனப்பாறையைப் பிளந்தெறிகின்றது.
நல்லம்மாவுக்கு சின்னையா மீது அளவு கடந்த பாசம். அவனேடு சேர்ந்து குருட்டு விளையாட்டு விளையாட மனமில் லாமல் அவனை மற்றவர்கள் ஒதுக்கிவைக்கும் போது அவன் அழ ஆரம்பித்து விடுவான். பார்வையில்லாத கண்களுக் கூடாக உருண்டு வரும் நீர் அவனுடைய ஊத்தைச் சாறத் தில் விழுந்து சிதற, நல்லம்மா அவனையும் விளையாடச் சேர்த்துக் கொள்ளும்படி மற்றவர்களைத் தூண்டுவாள்.
‘சரியெடா நீயும் வா' என்றவுடன் அவன் மகிழ்வதைப் போலவே நானும் மகிழ்வேன்.
米 米 · வி 5

Page 19
34 விண்ணும் மண்ணும்
என்னை நோக்கியா ?
எனக்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வளவோ மாற் றங்கள். அவனுக்கு என்னைக் காண முடியாது. பேசாமல் ஒதுங்கிவிடத் துடிக்கிறேன். ஆனல் நாக்குக்கு இருந்தாற் போல் உணர்வு வந்து என்னை வென்று விடுகின்றது.
** gaaö7%07 uur ?”
**தம்பியே ?’ ஏனே தெரியாது. இப்போது எ ன் னை த் தம் பி என் கிருன். பழைய எண்ணம் பசுமையாக இருக்க வ ய தின் வளர்ச்சி புதிய உறவை ஏற்படுத்துகின்றதா ? வயதளவில் அவனுக்கு நான் தம்பிதான்.
*அப்படியென் ருல் அண்ணனையே..." ‘சாமத்தியச் சடங்கு இவ்வளவு பெரிசா நடக்குது. எனக்குத் தான் தம்பி அதைப் பாக்கேலாது. எண்டாலும் என்ரை'மனக் கண்ணுக்கை ந ல் ல ம் மா வி ன் ரை வடிவு தெரியுது. எப்பிடித் தம்பி நல்லம்மாவின் ரை வடிவு தெரி யுது. எப்பிடித் தம்பி நல்லம்மா நல்ல வடிவா இருக் கிருவே ?"
'ஓம் சின்னையா, நல்ல வடிவா இருக்கிரு. உனக்குத் தான் சின்னனிலை இருந்தே அவவிலை நல்ல விருப்பமிருக்கே. விருப்பத்திற்கும் பார்வைக்கும் என்ன. நீ வீணு மனவருத் தப்படத் தேவையில்லை.'
* மனவருத்த மொண்டு மில்லைத் தம்பி. எனக்கு இந் தத் தடியும் மனமும் நல்லா இருந் காக் காணும். ஆன க் கண்ணிருந்தா நானும் உம்மைப் போலை டவுண் பள்ளிக் கூடத்திலை படிச்சு. இண்டைக்கு நல்லம்மாவின் ரை வீட்டைவர. எவ்வளவு சந்தோசமா இருக்கும் தம்பி.” 'இதுகளிலை என்ன சின் னை யா ? நீ நல்லம்மாவிலை வைச்சிருக்கிற அன்பு எனக்குத் தெரியும். உலகத்திலை எல்லா வகையாக மனுசரும் இருக்கினம்தானே. உனக்கும் கட்டாய மாக நல்ல வாழ்வு கிடைக்கும்."
அவனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். என்னுடைய நம்பிக்கை வார்த்தைகளில் தொங்கித் தொங்கி சின்னையா வெகுதூரம் போய்விட்டான்போல் இருக்கிறது. அவனுக்கு இனி வாழ்வே நம்பிக்கைதான். திடீரென்று பெ ரு மூ ச் சு விடுகிருன்.

கு ரு டு 35
“எனக்கு ஒரே ஒரு ஆறு த ல் தம்பி. கொ ஞ் ச நாளெண்டாலும் இந்த உலகத்தைக் கண்ணுலை பார்த்துட் டன். நல்லம்மாவை எவ்வளவு சின்னனிலை நான் கடைசி யாகப் பாத்தது. கடவுளே ! அண்டைக்கொரு நாள். அதுதான் என்ரை கடைசிப் பார்வை. அதுக்குப் பிறகு நல் லம்மா என்ரை மனதிலை வளருரு'
நான் பெருமூச்சு விடுகிறேன்.
நல்லம்மாவில் அவன் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பின் முடிவைச் சிந்திக்க என்னல் முடியவில்லை. நல்லம்மா அவன் இதயத்தில் சுடர் விடுகின்ருள். ஆனல் அவளுக்கு மனதிலே விளக்கேற்றக் கூடிய பக்குவமே இப் போது தானே ஏற்பட்டுள்ளது.
* சின்னை யா, நீ ஏன் கடுமையாய் யோசிக்கிரு ய் ? உன் ரை நிலை எனக்குத் தெரியும். கடவுள் இனியும் உனக்குத் துன்பத்தைத் தரமாட்டார் ”
அவனுடைய இருண்ட முகம் மலர்கிறது. எவ்வளவோ நம்பிக்கைகளின் கூட்டு மலர்ச்சி அது. வாயைத் திறந்து சிரிக்கிரு:ன். என்னிடம் விடை பெற்றுக் கொண்டு உற்சாக மாகத் தடியால் தடவிக்கொண்டு திரும்பவும் நல்லம்மா வீட்டுக்குள் நுழைகிருன்.
நான். p
கதிரையில் சாய்ந்து கொண்டு நினைவுக் கதிரின் பிறப் பிடமாக இருக்கிறேன். பல்கலைக் கழகம் இருட்டிலே தோய்ந்து போய்க் கிடக்கின்றது. மாணவர்களுடைய கூச்சல் இன்னும் ஓயவில்லை நான் குருடனுகி அவனுடைய உணர்வுகளை அனுபவிக்கிறேன். சிகரட் புகை வளையங்களைப் போல் நினைவும் சிறிது சிறிதாக ஆரம்பித்து பெரிய பெரிய வளையங்களாகி.
G67%rt T. P.
ஒரு கையிலே தடியைபும், இன்னெரு கையிலே ஒரு போத்தலையும் கொண்டு பழக்கப்பட்ட தடத்தால் அடி அடியாக நடந்து வந்து, கைதடிச் சந்தியால் திரும்பி, சங்கக் கடைக்குக் கிட்ட வந்து விட்டவன் அப்படியே

Page 20
36 விண்ணும் மண்ணும்
*ஆரது ?"
அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுட னேயே என்னைத் தெரிந்து கொள்பவனுக்கு என்னுடைய பெயரைச் சொல்லித் தெரியப்படுத்துகிறேன் ; ஒரு கணம் வார்த்தைகளை நிறுத்தி விட்டு அவனை நோட்டமிடுகிறேன். இடையிடையே யாரோ முள்ளுக் கரண்டியால் பிருண்டி எடுத்து விட்டதைப்போல் முகத்திலே சுருக்கங்கள் ; நெஞ்சு உள்ளே குழிந்து விட்டது ; தலையிலே நரை மயிர்கள் கரு மயிர்களை வெல்ல முனைகின்றன. வெடித்துப் போன முட்டையை அவிக்க, வெள்ளைக்கரு வெடிப்புக் கூடாகப் பீறிக்கொண்டு வந்து மேலோட்டிலே படிந்து கிடப்பதைப் போல் இரு கண் மடல்களுக்கு நடுவில் சதையும், பீளையும் கலந்து கிடந்தன.
'தம்பி எப்ப வந்தது ?”
அவன் கேட்டதற்கு ஏதோ ப தி ல் சொல்லுகிறேன். மனம் அரிக்கிறது.
*நீ ஏன் சின்னையா இப் பி டி மாறிப் போ ன ய் ? நாலைஞ்சு மாதத்துக்கை உன்னை அ டை யா ள ம் கண்டு கொள்ளேலாமலிருக்கு.'
*நான் என்னத்தைத் தம் பி சொல்ல ? இப்பிடியே கிடந்து அழிஞ்சு போவேண்டியதுதான் நான் , எ ன க் கு எவ்வளவெவ்வளவு மனவேதினை ; எல்லாமாச் சேத்துத் தான் என்னை இப்பிடி ஆக்கிப் போட்டுது. உ ங் களை ப் போலை என்ன மாதிரி இருக்க வேண்டியனுன் கடவுளே. கடவுளே !’
'உனக்குக் கண் குறுடெண்டால் என்ன சின்னையா ? கண்ணில்லாட்டி ஒண்டுமேயில்லையே ? ஏன் வீணு மனசைப் போட்டு அலட்டி இப்பிடியா உருக்குலையிருய் ?’
‘என்னைப்பற்றி இப்பிடி அன்பாய்க் கதைக்க நீர் மட் டும்தான் தம்பி இந்த உ ல கத் தி ல் இருக்கிறீர். நான் குறுட்டுத் தனமாய்ப் பெரிய பெரிய எண்ணங்கள் எண் ணிப் போட்டன் ; குறுடனுக்கு ஆசையளும் குறுடாய்த் தான் போகும் தம்பி.'
சின்னை யாவைக் குடைந்து குடைந்து கேட்டுக் கொண்ட விஷயங்களை என் மனதிலே போட்டுப் புரட்டுகிறேன்.

குரு டு 3r
“ஒன்று இயங்கா விட்டால் இன்னென்று அதிக சக்தி யுடன் இயங்குவதுதான் மனித யந்திரத்தின் சூட்சுமமா? படலையைத் திறந்து கொண்டு சின்னையா நல்லம்மா வீட்டுக்குள் நுழைகிருன். அவனைக் காத்துக் கொண் டு நின்ற மாதிரி அவளும் வரவேற்கிருள்.
‘ஏன் சின்னையா இரண்டு நாளா இஞ் சி னே க் கை கானேல்லை.”
‘இனிமேல் அடிக்கடி இஞ்சை வாறது அவ்வளவு நல்ல தில்லையெண்டு மனதுக்குப் பட்டுது அதுதான். ρ :
திகைக்கிருள். ‘சரி சின்னையா எனக்கொரு உதவி செய்ய வேணும். மெது மெதுவாய்ச் சங்கக் கடைக்குப் போய் எங்கடை கூப் பனை ஒருக்கால் எடுத்துத் தரவேணும். அப்பு வயலுக்குப் போட்டார் ; ஆச்சியும் சாவச்சேரிச் சந்தைக்குப்போட்டா." ஒ. அதுக்கென்ன நல்லம். பையையும் கூப்பனையும் எடு, உனக்கு உதவாமல் வேறை ஆருக்கு உதவப் போறன் !' மகிழ்ச்சியோடு பையையும் கூப்பனையும் எடுத்துக் கொண்டு தடியால் தட்டித் தட்டிப் பழகிப் போன தடத் தால் கடைக்குப் போகிருன், நல்லம்மாவோடு மனம் திறந்து பேச வேண்டு மென்ற ஆசை மனதிலே கருக்கூட்டி நிற் கிறது. கடைக்கு வருவதற்கிடையில் ஆசையைச் சொல்ல வார்த்தைகளை நெஞ்சிலிருந்து உதட்டுக்குத் தட்டி முணு முணுத்துப பொறுக்கிக் கொள்கிருன்.
அரிசிப் பையை இறக்கி வைத்து விட்டுக் கூப்பனை அவள் கையிலே கொடுத்து விட்டு நெற்றியிலே அரும்பி நின்ற வியர்வையை வளித்துச் சிதற அடிக்கிருன்,
**நல்லம்.’
என்ன சின்னை யா ?” ‘என்னைப் பற்றி என்ன நினைக்கிருய் ?’ ‘என்ன புதிசா ? நீர் அருமையான மனுசன்' *நல்லம்' ' * ଜTର୍ଦt ଜor' ? '' ‘என்னை நீ நல்ல மனுசனெண்டு மதிச்சா என்ரை ஆசையை நிறை வேத்தி வைப்பியே ?" 'g. . . . . . . . . சொல்லுமன்’

Page 21
38 விண்ணும் மண்ணும்
*நான் உன்னை. s ‘என்னை. y 9 'கலியாணம் கட்ட வேணுமெண்டு. *என்ன ?' கூப்பன் அவரது முகத்திலே மோதி மடியிலே விழுகின்றது. அவனது ஆசையும் . . . .
'குறுட்டு மனிசனெண்டு நான் இவ்வளவு மரியாதை தர நீர் என்னடா எண்டால். உமக்கேன் இந்தக் கண் கெட்ட ஆசை.'
**நல்லம் என்னிலை கோவிக கிறியா ?” ‘வீட்டுக்கா றர் எனக்குச் சந்திக் கடைச் சுப்பையா வைப் பேசி, எல்லாம் முற்ருக்கி வைச்சிருக்க எனக்கு எளிய பேர் வாங்கித் தரவோ இந்தக் கோலம் கொண்டனீர் ?"
சின்னைய அவமானத்தில் சிறுக்கிறன். அவனது மன மேட்டில் முளை விட்டு வளர்ந்திருந்த ஆசைச் செடி அப் படியே ஆழப்புதைந்து விடுகிறது.
米 米 ck
'தம்பி, நான் இப்பவும் நல்லத்துக்காகத் தான் மண் ணெண்ணை வாங்க வந்தனன். அவளின் ரை புருசன் நல்ல வன் ; எனக்கொரு கொட்டிலையும் ஒதுக்கிச் சாப்பாடும் போடுருன் .'
"*36 oour''
என் குரல் கரகரக்கிறது
‘நல்லம் என்னை மன்னிச்சிட்டாள். ஒரு வீண் ஆசை வந்த மாதிரிப் போட்டுது. இப்ப அவள் என்ரை தங்கச்சி மாதிரி. சின்னனிலே நாங்களெல்லாம் ஒண்டாயிருந்து விளையாடினது எனக்கு அடிக்கடி நினைவு வரும்.'
அவனுக்கு முன்னுல் நிற்க என் மனம் கூசுகின்றது. என்னை அவனுடைய உணர்ச்சிகளெல்லாம் உருவமெடுத்து வந்து கழுத் ைக நெரிப்பது போன்று. உள்ளத் தகிப்பிலே வியர்வை கக்கிறது. அவனுடைய முகத்திலே கவலைகள் எல்லாவற்றையும் மூடிய புன்னகை நெளிய--
என்னைச் சுடுகிறது.
பளிரென்று அறையெங்கும் ஒளி பரவுகின்றது பல் கலைக் கழகம் பழையபடி வெளிச்சப் புள்ளிகளால் பொட் டிடப் படுகின்றது ; மாணவர்களது கூச்சல் அப்படியே ஒடுங்கி விடுகின்றது.

கு ரு டு 39
இருளுக் கூடாக ஒடிக்கொண்டிருந்த நினைவு ஒளி மங்கிப்போகின்றது.
நான் யன்னலைத் திறந்து அறைக்கு வெளியே பார்க் கிறேன். இருளும் ஒளியும் கலந்து மங்கிப்போய். மலை முகட்டுக்கு மேல் எறித்துக்கொண்டிருக்கும் நிலவுக்குள் யாரோ தடியை வைத்துக் கொண்டு குந்திக் கொண்டிருக் குமாப் போன்ற பிரமை
'சின்னை யாவா ?”
நான் முணுமுணுக்கிறேன்.
*சின்னையா 1 அந்தத் தைப் பொங்கலண்டு நீ நல்லம்மா வீட்டை விளையாட வர விளையாட்டுக்காக அவளின் ரை வீட்டு அந்தப் பனை மரத்துக்குப் பின்னலை ஒளிச்சு நிண்டு, அந்தப் பெரிய கப்பல் வெடியைக் கொளுத்தி உன்ரை காலுக்கை எறிஞ்சுபோட்டு, பயத்திலை நான் ஒடிப் போகாட்டி இண்டைக்கு நீ இப்பிடியே இருப்பாய் ?

Page 22
யோகேஸ், ஐயாத்துரை
வெளியே பணி கொ ட் டி யது. பாயைத் திண்ணையில் விரித்த வேலாயு தம் குளிரிலிருந்து தன்னைப் பாதுகாக் கும் பொருட்டுத் திண்ணையை மறைத்து ஒரு சாக்கைக் கட்டினன்.
‘விடிந்ததும்  ெச ய் வ த ந் கு எத் தனையோ வேலைகள், மலைபோலக் காத் திருக்கின்றன. நாளைக்குப் பட்டினத்தில் இருந்து அண்னைவரப் போருன் , குடும் பத்தோடு !.ம். எனக்கு விதி ச் ச விதி ! அவன் ரை தோட்டம் துரவுகளைப் பார்ப்பதும், அவ ன் கொடுக்கிற பிச் சைச் சம்பளத்திலை சீவியம் செய்யிறதும் தான் தொழில் ! நாளை க்கு வெள்ள னமே எழும்பி அவன் ரை வீ ட்  ைட த் துப்பரவாக்க வேணும் !'
லாந்தர் விளக்கைக் குறைத்து விட் டுப் படுக்கையில் சரிந்தவன், மனைவியி டம், “நான் எழும்ப ம று த் தாலும் எழுப்பிவிடு!" என ஒரு குரல் கொடுத்து விட்டுப் படுத்துக் கொண்டான்.
நித்திரை வந்தால் தானே ? எங்கோ ஒரு சேவல் கூவி ஓய்ந்தது.
திடுக்கிட்டெழுந்த வேலாயுதம் லாந் தர் விளக்கைத் தூண்டிவிட்டுப் பாயைச் 40
 

பே தம் 41
சுருட்டி வைததுவிட்டு வெளியே வந்தான். உடம்பில் ஓடும் இரத்தத்தை எல்லாம் உறையச் செய்யும் பணி வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. சால்வையால் உடம்பைப் போர்த்துக் கொண்டு குடிசைக்கு அயலே யிருந்த கல்வீட்டை நோக்கி நடந்தான்.
வீடு வாசல் எல்லாவற்றையும் கூட்டித் துப்புரவாக்கி ஞன். வருபவர்கள் பட்டின வாசிகள், தூ சி க் காற்றைச் சுவாசித்தாலும் துப்புரவு என்று சாகிறவர்கள். ஆகவே, விளக்குமாற்றை எடுத்து ஒரு தூசி, துரும்பு விடாமல் கூட் டினன். தண்ணிர் அள்ளிப் பழக்கமில்லாதவர்களுக்குத் தண்ணிர் அள்ளித் தொட்டியில் நிரப்பினன்.
“பல பல"வென்று விடியவும், புதிய ஒரு கார் வந் து வீட்டின்முன் நிற்கவும் ச ரி யா க விருந்தது. கார் வந்து நின்ற சத்தம் அவனுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. ‘கேட்டைத் திறந்து விட்டான், மரியாதைக்காக அஞ்சி எழும்பி நின்றன்.
கப்பல் போன்ற அக்காரை வெகு வேகமாக அண்ணன் மகன் ஒட்டி வந் தான். காருக்குள் வேலாயுதத்தின் தமை யன், மனைவி, மகள் யாவரும் காதைக் கழுத்தைக் கம்பளிச் சட்டைகள், ‘மப்ளர்களால் மூடிக் கொண்டு மலையேறும் கோஷ்டியினர் போலக் காட்சியளித்தனர்.
பணிவாகப் போய் நின்ற வேலாயுதத்திடம், அவன் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென உணர்த்துப வன் போல ‘டிக்கி" யைத் திறந்து விட்டு, உள்ளே சென்று விட்டான். பாஸ்கர்-அவன் அண்ணன் மகன். டிக்கிக் குள் கிடந்த பொருட்களை ஒவ்வொன்முக இறக்கிவைத்த வேலாயுதத்திற்கு எத்தனையோ கட்டளைகள் இட ஆயத்த மாயிருந்தார், அண்ணனர். பட்டினத்திலிருந்து வந்து, சகோதரனைச் சுகம் விசாரிக்கா விட்டாலும், ஒர் புன்னகை யைக் கூட உதிர்க்க அவருக்கு மனம் வரவில்லை.
‘என்னப்பா, வேலாயுதம் ! தோட்டத்தை இந்தநிலை யிலை வைச்சிருக்கிருய் ? வயலிலை கூட விளைச்சலை நல்லாய்ச் செய்யவில்லையாமே ? இவற்றினுலை வர்ர வரும்படி, வரு மானவரி கட்டவே போதாமல் இருக்கு 1 விற்று விட்டால் என்னெண்டு பார்க்கிறன்!.’
வி 6

Page 23
42 விண்ணும் மண்ணும்
வேலாயுதத்திற்குத் தமையனரின் பீடிகை விளங்கி விட் டது. ஒவ்வொரு முறையும் இப்படிக் கதைத்துத்தானே, அவன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு வந்தவர்.
வேலாயுதம் மெளனியாக நின்றன்.
அப்போது தமையனின் தர்மபத்தினி வேகமாக ஒடி வந்தாள்.
“இஞ்சேருங்கோ, உங்கடை தம்பி செய்த வேலையைப்
பார்த்தியளே. ? என்ன அழகான செடிகள் ! பட்டினத் திலை எவ்வளவு பாடுபட்டு வளர்க்கிறர்கள் ! எங்களை ஒரு சொல் கேட்காமல் வெட்டிப்போட்டாரே ? முன்பக்கமெல் லாம் நடவேண்டுமென்றும், வீட்டிற்கு கக்டஸ் விலா"
என்று பெயரிட வேண்டுமென்றும் எண்ணியிருந்தேனே ? உங்கடை தம்பி எல்லாத்தையும் தறிச்சுப்போட்டாரே ?' தமையன் மனைவியின் குற்றப்பத்திரிகைக்குரிய காரணம் வேலாயுதத்திற்கு விளங்கியது. அவர்கள் வீட்டுக் கொல்லை யில் கள்ளிக் செடிகள் பற்றையாக வளர்ந்திருந்தன. அவற்றை வேண்டாத குப்பையென்று வேலாயுதம் வெட் டிப் போட்டிருந்தான்.
மனைவியின் அருமை அவருக்குத்தான் தெரியும். கள்ளிச் செடி முன்பக்கமெல்லாம் போடவேண்டும் என உத்தரவு கொடுத்தார். தமையனர். அத்தோடு மட்டும் நில்லாது, அதற்கு இடவேண்டிய எரு, பசளை பற்றிப் பெரிய பிரசங்கமே நிகழ்த்தினர். அந்த உதவாச் செடிக்கு எவ்வளவும் செலவழிக்கத் தயாராக விருந்தனர் கணவனும் மனைவியும்.
தமையனுளின் வார்த்தைக்கு மறுவார்த்தை கூருது கேட்டுக் கொண்டிருந்த வேலாயுதத்திற்குத் தலை சுற்றியது.
அமைதி நாடி வயலை நோக்கிச் சென்ருன். எதிரில் இன்னெரு தலையிடி காத்திருந்தது. வயல் வரம்பில் நடந்த வேலாயுதம், தமையன் மக்கள் ‘ரான்சிஸ்டர்' றேடியோவுடன் வருவதைக் கண்டான். * என்ன தம்பி ! காற்று வாங்கவோ..?" என மரியாதைப் பன்மையில் விசாரித்தான்.

பே தம் 43
'நேரம் போக வழியில்ல்ை ! இந்த றேடியோவும் இல்லை என்ருல் போர் அடித்து விடும் !”
பட்டினத்தையும், குடும்பத்தையும் பற்றித் தமையணி டம் விசாரிக்கத் துணிவற்ற வேலாயுதம், மகனை விசாரிக் கத் தொடங்கினன். அவனே வேண்டா வெறுப்பாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தான். .
'வா, அண்ணு ந்ேரமாகுது. ‘காடினரோட்டு கதைத் துக்கொண்டிருக்கிருய் ? எனக்கு நல்லாக் கால் உளையுது !' என்ருள், அவன் தங்கை,
வேலாயுதத்திற்கு நெஞ்சிலை சவுக்காலை அடித்தது போலிருந்தது. சொந்தச் சிறிய தகப்பனைத் தோட்டக் காரன் என்று அழைக்கு மளவிற்கு வந்து விட்டதோ, அவன் நிலைபரம் ?
இவை எல்லாம் நடந்தேறிவிட்ட விஷயங்கள், இப்போது நினைக்கும் போது கூட அவன் நெஞ்சு வேதனை யால் துடிக்கிறது. கள்ளிப்பால் கண்ணில் பட்டதுபோல, அண்ணன் குடும்பம் பட்டினம் போய் பல நாட்களாகியும் அவன் மனதில் அமைதி பிறக்கவில்லை.
எந்நேரமும் அவன் மனம் தன் நிலையையும். அண்ணன் நிலையையும் தராசு கொண்டு அளந்து கொண்டிருந்தது. இருவரும் குடியிருந்த கோயிலோ ஒன்று. அப்படியிருந்தும் அவர்கள் வாழ்வில் எத்தனை வித்தியாசங்கள் ! அவன் மனைவி மக்கள் கஞ்சிக்கும், கந்தலுக்கும் ஏங்கும் நிலை. அவனே ஒய்வொழிவின்றிப் பாடுபடுகிருன் ,
யாருக்காக..? அண்ணனுக்காக ! அவன் தமையன் வாழ்க்கை எல்லாவிதத்திலும் எதிர்த் துருவமாக அமைந்துள்ளது. இரு உடன் பிறந்க சகோ கரர்களைக் கடவுள் ஏன் இப்படிப்படைக்க வேண்டும் என அவனுல் எண்ண மிடாமல் இருக்கமுடியவில்லை.
அவன் கஷ்டப்படப் பிறந்தவன். ‘இஞ்சேருங்கோ, என்ன இப்பிடி இடிந்துபோய் இருக் கிறியள் ? எழும்புங்கோ. நாளைக்கு நல்லூரானின் தேர்த் திருவிழாவல்லோ ? இந்த வருஷமாவது என்னைக் கூட்டிக்

Page 24
44 விண்ணும் மண்ணும்
கொண்டு போங்கோ ? தம்பி பிறக்கும்போது நேர்ந்த நேர்த்திக்கடன் உண்டியலில் காசு சேர்த்து வைத்திருக் கிறன் ! என்று அவனை உலுக்கியதோடு, தனது ஆசை யையும் வெளியிட்டாள், வேலாயுதத்தின் மனைவி.
ஒவ்வொரு வருஷமும்போல இந்த வருஷமும் தட்டிக் கழித்திருப்பான். ஆனல், சில நாட்களாகத் தன் அந்தஸ்தை யும், தமையனரின் அந்தஸ்தையும் ஒப்பிட்டுக் கொண்டி ருந்த அவன் மனம், அவள் ஆசையை நிறைவேற்ற விரும்பி Ամ Ցl.
2
நல்லூரை அடைந்ததும் வேலாயுதத்தின் மனைவிக்கும் குழந் ைதளுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. எத்தனை பெரிய கோயில் வானளாவிய தேர் ; தேரின் அழகோ சொல்லத் தர மன்று 1 முருகவேலில் பதித்திருந்த வைரக்கல் மைல் கணக்கில் பிரகாசித்தது. தெய்வங்களுக்கு அணிந்திருந்த ஆபரணங்களோ விலை மதிப்பற்றவை. பார்க்கப் பார்க்க ஆச்சரியம் அதிகரித்துக் கொண்டே போனது.
முதல் முறையல்லவா ?
ஒரே ஜனத்திரள்; இலங்கையில் சனத்தொகை அதி கரிக்கும் மின் வேகத்திற்கு ஒரே எடுத்துக் காட்டாக விளங் கியது.
அர்ச்சனைக்கும் காசை நீட்டினன் வேலாயுதம்.
‘இஞ்சை காசு வாங்கிறதில்லை ! போய் "துண்டு’ எடுத் துவ ?." என்ருர் அர்ச்சகர்.
‘அர்ச்சனைக்குக் காசு வேண்டாம் என்று கூறும் கோயி லும் உண்டோ' என்று வியந்த வண்ணம் கற்பூரத்தைக் கொளுத்தப் போனுள், அவன் மனைவி.
*கோயிலுக்குள்ளை கற்பூரம் கொளுத்தக் கூடாதென்று, உமக்குத் தெரியாதே ?’ என்று எரிந்து விழுநதான், கோயில் ஊழியன் ஒருவன்.
வியற்பிற்கு மேல் வியப்பு.
எத்தனை பணக்காரக் கோயில் ? எத்தனை அலங்காரங் கள் ? உள்ளும் புறமும் கண்கொள்ளாக் காட்சி ? தேர்க் கயிற்றைப் பிடித்திழுக்க எத்தனை பேர் போட்டி ? பிர தட்டை எடுப்போர் எத்தனை ? காவடி எத்தனை. . ?’

 ேப த ம் 45
சுவாமி தரிசனம் முடிந்ததும் கடலைப்பொட்டலங்களும் விளையாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொண்டு, முத்திரைச் சந்தையில் போய் பஸ் ஏறினர்கள். ஆச்சரியத்திலிருந்து ஒருவரும் விடுபடாத காரணத்தால் யாவரும் பேகம் சக் தியை இழந்திருந்தனர்.
பஸ் நாற்சந்தியில் வந்து நின்றது. வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்கள்.
வழியில் ஓர் அரசமரம்; அதனடியில் ஒரு வைரவசூலம் வைரவரை மழை, வெயிலிலிருந்து காப்பாற்ற யாரோ ஒரு புண்ணியவான் ஒருசிறு தகரத்தை மடித்து வீடு போலச் சூலத்தின் மேல் வைத் திருந்தான். சூலததின் அயலே ஒரு அகல் விளக்கு அது எண்ணெயையோ திரியையோ கண்டு நாட்கள் பல. சூலத்தின் மேல் ஒரு சிதம்பரத்தம்பூ அது ஒன்றே வைரவரின் அலங்காரம் ; சார்த்துப் படி,
பழக்கம் காரணமாக வேலாயுதம் மனைவி மக்களும் வைர வர்முன் நின்று சற்று, கும் பிட்டனர். வணங்கி விட்டுச் சிறிது இளைப்பாறும் பொருட்டு மரநிழலில் அயர்ந்தனர். மனைவி நல்லூரில் கண்டவற்றைச் சொல்லி அதிசயித்தாள்.
வேலாயுதத்தின் மனமோ திரும்பவும் அண்ணனையும், அவனையும் மதிப்பிடத் தொடங்கியது
*அண்ணனெல்லாம் மனைவியை எத்தனை இடங்களுக்கு அழைத்துச் செல்கிருர் ! நான் உன்னைக் கட்டின தற்கு இது தானே முதல் தடவையாக அழைத்துச் சென்றிருக்கிறன் !’ என்ருன் வருத்தத்துடன்
வேலாயுதத்தின் மனைவிக்கு எல்லாம்  ெரியும் , அவன் கொஞ்ச நாட்களாகப் படும் வேதனையின் காரணமும் தெரியும்.
அவள் குறைவின்றிச் சிரித்தாள்
இஞ்சை பாருங்கோ, இந்த வயிரவரை..? இவரின் கோயிலையும், அலங்காரத்தையும் பாருங்கோ ! இவரின் ரை சகோதரன் தானே முருகன் ? அவரின் ரை கோயிலையும், அலங்காரத்தையும் தானே பார்த்தீங்கள் ? இவர்களின் அந்தஸ்தில்தான் எவ்வளவு வித்தியாசம். ? தெய்வத்திற்கு இல்லாததையா தெய்வம் நமக்கு விட்டுவிட்டது..?” வேலாயுதம் அமைதியாகப் புன்னகைத்தான். அவன் கண்கள் வைரவசூலத்தின் மீது படிந்து நின்றன.

Page 25
எம். சிவபாலபிள்ளை
க்சா வைக் கீழே வைத்த அவன் வ 7 யி லி ரு ந் து ‘அப்பாடா" என்ற வார்த்தை அவனையறியாமலே கிளம்பி யது. நாள் முழுவதும் நகரம் முழுக்கச் சுற்றிய களைப்பல்லவா ? தலையில் சுற்றி யிருந்த அழுக்கேறிய துண்டை அவிழ்த்து மேலிலிருந்து வழித்தோடும் வே ர்  ைவ யைத் துடைத்த அவன் கைகள் கலைந்த தலையையும் கோதி விட்டன. கால்கள் பழக்கப்பட்டன போல் அவன் குடியிருந்த மாளிகையை நோ க் கி அடியெடுத்து
வைத்தன
அவன் குடியிருந்த மாளிகை மழை யென்ருல் வெள்ள மெனக் காட்சியளிக் கும், வெயிலென்ருல் கதிரவனின் சில கதிர்களாவது அங்கு அதிகாரம் செலுத் திக் கொண்டே இருக்கும். காலையிலே றிக்சாவை எடுத்துக் கொண்டு கிளம்பு வான். நாள் முழுவதும் நகரிலே சுற்று வா ன், மாலையிலே வீடு திரும்புவான். மனைவியென்ருே, மக்களென் ருே எது விதக் கவலையுமற்ற ஜீவன் அவன். கிடைக் கும் ஊதியத்தைச் சேர்த்து வைப்பது என்பது அவன் வாழ்க்கையிலேயே கிடை யாத வேலை. கையிலே காசு கிடைத்த வுடன் அவன் காலும், றிக்சா வும் கள் ளுக்கடையை நோக்கிக் கம் பீ ர நடை
போடும்.
46
 

து ணை 47
‘எப்படிச் சொக்கண்ணே, வரும்படி ஜோ ரா" வரவேற்கும் குரல்கள் அவன் சகபாடிகள்தான். அவர் களும் சொக்கனுக்குக் குறைந்தவர்களா ? அவ னு க் கு முன்பே அங்கு வந்து குடித்துக் கும்மாளமிட்டுக் கொண் டிருப்பவர்கள் தானே.
*போதுமண்ணே....' சொக்கன் சொ ல் ல ச் சொல்ல அது கேட்டும் கேட்காததுபோல் ஊற்றிக்கொண்டே இருந்தான் கள்ளுக்கடைக்காரன்.
*ஊத் தண்ணே, ஊத்து எவன் எ ன் னை எ ன் ன, பண்ணப் போ கிருன் ' குடிபோதை தலைக்கேறிய அவன் தனக்குத் தெரிந்த செந்தமிழை யெல்லாம் உபயோகிக்கத் தொடங்கின்ை.
பக்கத்தில் நின்றவர்கள் றிக்சாவை அவன்  ைக யி ல் கொடுத்து அவனைப் போகச் சொல்லி விட்டனர். தத்தித் தள்ளாடியபடி குடிசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவன் நடு ரோட்டிலே சாய்ந்து விட்டான். பார்த்தவாகள் பலர், இவன் கெட்டான் குடி கரேப்பயல் என்று செ n ன் ஞர்களேயொழிய ஒருவராவது அவனுக்கு உதவ முன்வர வில்லை. இதைக் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந் தாள், அப்பிச்சைக்காரி லட்சுமி, பார்த்துப் பார்த்திருந்த அவள் மனதில் பச்சாத்தாபம் ஊற்றெடுத்தது. அவளையறி யாமல் அவள் கால்கள் அவன் கிடந்த இடத்தை நோக் கிச் சென்றன. மெதுவாக அவனை ஒரத்திற்குக் கொணர்ந் தாள.
சிறிது நேரத்தில் கண்ணைத்திறந்த சொக்கன் ஏதேதோ பிதற்றினன். அண்மையில் அவன் குடிசை இருந்ததால் லட் சுமியின் சிரமம் சிறிது குறைந்தது. ஆடிக் கொண்டிருந்த அவனை மெதுவாக அவன் குடிசைக்குள் கூட்டிச் சென்ருள் • ஐந்தாறு ஒட்டைகளுடன் சாக்கினல் அமைக்கப்பட்ட ஒரு கட்டில் கிடந்தது. சிறிது நேரத்துக்குமுன் நடுரோட்டில் கிடந்த சொக்கன் இப்போது தன் பஞ்சுமெத்தை போன்ற கட்டிலில் கிடந் தான். வைத் தவிழிவாங்காது அவன் வாட்ட சாட்டமான உடம்பைச்சுற்றியே சுழன்று கொண்டிருந்தன அவள் அகன்ற விழிகள். நடக்க ஏனே மனம் வரவில்லை, கால்கள் வீட்டை நோக்கிப் பெயர்ந்தன.

Page 26
48 விண்ணும் மண்ணும்
அவள் வீட்டுக்காரர் நல்லபேர்வழி. ஒன்றுமே கேட்க மாட்டார்கள். வாடகை என்ற பேச்சேயில்லை. சில வாட கைக்கு விடும் பேர்வழிகள் "லைட்"டைக்கூட எரிக்காதே, பைப் தண்ணீருக்கு மீட்டர்’ கூடுது 1 என்று அங்கலாய்ப் பார்கள். ஆனல் லட்சுமிக்கு வாடகைக்கு விட்டவரோ அவள் விருப்பம்போல் வாழ இடமளித்திருந்தார்.
திருமலைநகரின் மத்தியில் அண்ணுர்ந்து பார்த்தபடி நின் றது அந்த ஆலமரம். எண்ணற்ற உயிர்களுக்குத் தஞ்ச மளித்த அது லட்சுமிக்கும், அவள் தாயாருக்கும் தஞ்சமளித் ததில் வியப்பில்லை. ஆலமரத்தடியை அடைந்த லட்சுமி * அம்மா’ என்று குரல் கொடுக்கவும்,
* எங்கேடியம்மா போனெ ? உன்னைக்காணும நான் பயந்தே போயிட்டேன்' என்று கூறியபடி ஒரு கிழவி வர வும் சரியாக இருந்தது
‘அதையேம்மா கேக்கற. இதிலே றிக்சா இழுத்துக் கிட்டுப் போவாரே சொக்கனென்று ஒரு ஆளு. அந்த ஆளு குடிச்சுப்புட்டு நடுரோட்டிலே கெடந்தாரு'.
இடை மறித்த கிழவி 'நீ அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருந்தியா’ என்ருள்.
‘சும்மா இருப்பேன உன் மகளில்ல. அந்த ஆளை அவ குடிசையிலே உட்டிட்டு வந்தேன். அதுதான் ரொம்ப நேரமாயிடிச்சி' என்ருள் லெட்சுமி.
* சரி படுத்துக்கம்மா, பகல் முழுக்க ரோட்டுச் சுத்தித் திரிஞ்சநீ ஒடம்பு இளைச்சுப்போச்சு, படுத்துக்கம்மா’’
காலை நேரம் வெயில் கண்களிற் சுடவே திடுக்கிட்டு எழும்பினுள் லச்சுமி. இப்படி எழும்புவது அவள் வாழ்க்கை யிலே நடக்கும் சாதாரண நிகழ்ச்சி. தன் தாய் இன்னும் எழும்பாததைக் கண்ட அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
* அம்மா, அம்மா !” என அன்பொழுக அழைத்தாள் பேச்சு வரவில்லை. முனகல் மட்டுமே வெளி வந்தது. அன்னையின் அருகில் சென்ற அவள் அக்கிழவியைத் தொட்டு உலுப்பினள். அனலாய்க் கொதித்தது கிழவியின்
உடம்பு.

துணை 49
மீண்டும் 'அம்மா" என்ருள். ، « ) " வில்லை.
அனலாய்க் கொதித்த கிழவியின் உடம்பு லட்சுமிக்குப் பயத்தை ஊட்டியது. கையைப் பிசைந்து கொண்டு கலங்கிய கண்களுடன் நின்ற லட்சுமி 'லட்சுமி' என்ற குரல் கேட்டுத் திரும்பினுள்.
*லட்சுமி நீ நேத்துச் செஞ்ச ஒதவியை அந்தக் கடக்காரன் சொன்னன். ஒனக்கு என்ன மாதிரி என் நன்றியைச் செய்வதெண்டே தெரியல்ல. ஏன் ஒருமாதி ரியா இருக்கிற, ஒடம்புக்குச் சொகமில்லையா ? லட்சுமி யைத் தேடிவந்த சொக்கன் கேட்டான்.
என்ற முனகல் வந்ததன்றி சத்தம் வெளிவர
“எனக்கில்லீங்க என் அம்மாவுக்கு ஒடம்பு அனலாய்க் கொதிக்குது. எனக்கு ஒதவி செய்ய யார் இருக்காங்க’ என்ற லட்சுமியை “ஏன் நானில்லையா ? ஓங்கம்மாவை ஆஸ்பத்திரிக்கு நான் கொண்டுபோய் விடறேன் நீ எனக்குச் செஞ்ச ஒதவிக்கு இது எம்மாத்திரம்’ என்று சொக்கன் கூறிக்கொண்டிருக்கும் போது, ‘ லட்சுமி ' என்று அழைத் தாள் கிழகிவி.
* லட்சுமி இனிப் பிழைப்பேன் என்று நெனக் கல்ல உன்னைத் தனியா உட்டுட்டு எப்படிப் போவேன்.'
விக்கி விக்கிக் கிழவி பின் வாயினின்றும் வெளிவந்தன இவ் வார்த்தைகள். பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த சொக்கன் உள்ளத்தை இவ் வார்த்தைகள் பாகாய் உருக்கின.
‘அம்மா பயப்படனும், லச்சுமியைக் காப்பாத்துவது
எம் பொறுப்பு, நீங்க படுத்துக்கிங்க' அவன் உள்ளம் கூறியது.
* (u rri (oF (rej 95 Gör தம்பியா ஒண்மையாத்தான்
கூறிறியா, எம் மகளுக்குத் துணையாய் இருப்பியா?" பஞ் சடைந்த கண்கள் சொக்கனைப் பார்க்கவில்லை, நோக்கின. 'அம்மா இது சத்தியம் லச்சுமியைக் காப்பாத்துவது எம்பொறுப்பு’ சொக்கன் வாய் அசைந்தது.
வி 7

Page 27
50 விண்ணும் மண்ணும்
**லொக்கு ! லொக்கு" இருமிய கிழவியின் தலை சாய்ந்தது.
9
'அம்மா, அம்மா !” அலறிஞள் லட்சுமி.
கிழவியின் முகத்தில் நிலவிய புன்னகை சொக்கனுக்குக் கொடுத்த வாக்குறுதியை “நிறைவேற்று, நிறைவேற்று' என்று பறை சாற்றுவதுபோலிருந்தது.
ck 米 s சொக்கனின் ஒலைக் குடில் ஒரளவு நன்முக வேயப்பட்டும் கொஞ்சம் விஸ்தரிக்கப் பட்டும் காட்சியளித்தது. ஒருயிருக் குத் தஞ்சமளித்த அது இப்போது ஈருயிர்க்களுக்கல்லவா தஞ்சமளித்துக் கொண்டிருந்தது.
றிக்சாவை வெளியில் விட்ட சொக்கன் 'லட்சுமி' என அழைத்துக் கொண்டே வீட்டினுள்ளே நுழைந்தான். ‘வந்திட்டீங்களா ஒடம்பெல்லாம் வேத்துப் போச்சு’ ஒரு துண்டினல் அவன் வேர்வையைத் துடைத்தாள்.
லட்சுமி நீ வந்ததுக்கப்புறம் இந்தக் குடிசையே எனக்கு மாளிகையாயிடிச்சி, அன்பிருக்கிற எடத்திலதான் ஆண்ட வன் இருப்பான் என்பாங்க. என் வெசயத்திலும் இப்பத் தான் ஒண்மையாயிடிச்சி' கூறிய அவன் அவள் தலையை வருடினன்.
*இல்லைங்க என் அம்மா போனப்புறம், என்னைக் கண் கலங்காமந் பாத்துக்கிறீங்களே, நீங்கதான் என் தெய்வம் !' கூறிய அவளைத் தன் பரந்த மார்போடு அணைத்துக் கொண்டான் அவன்.
அண்ணே என் பொஞ்சாதிக்கு ஒடம்பு சொகமில்லை அதாலே நான் போறேன். ஏதோ இன்னிக்குக் கிடைத் தது போதும்' என்று தன் சகபாடியிடம் கூறிய சொக் கன் அவசர அவசரமாகத்தன் குடிசையை நோக்கிச் சென்றன்.
தூரத்திலே தன் குடிசையின் முன்னுல் நாலைந்து பெண் களைக் கண்ட அவன் கண்கள் ஆனந்தத்தால் விரிந் தன. ‘நான் ஒரு குழந்தைக்குத் தந்தையாக ஆகிவிட்டேன்’ என்பதை நினைக்க, நினைக்க அவன் உடம்பெல்லாம் பூரித்தது.

து ணை
‘அப்பா, அப்பா’ எனச் சுற்றிவரும் அதை நிக்சா வில் வைத்துச் சுற்றித் திரியல்லாம் என்றெல்லாம் அவன் சிந்தனை ஒடியது.
குடிசையினுள் நுழைய முயன்ற அவனைப் பக்கத்து வீட்டிப் பாட்டிதான் வரவேற்ருள்.
‘ஏம்பா ஒனக்கு இக்கதிவரணும், ஒம்பொஞ்சாதி வயி றும் புள்ளையுமா இருந்ததைப் பார்த்துக் கிட்டுப் போனிய்ே, அவ கெணத்தடிக்கு தண்ணியள்ளப் போய் வழுக்கி விழுந் திட்டா, தூக்கியாந்து போட்டிருக்கோம், கொழந்தை பிறந் திடிச்சு லட்சுமிதான் மயக்கமாக் கெடக்கிரு !' வார்த்தை கள் கனவில் யாரோ கூறுவது போன்றிருந்தது அவனுக்கு
குடிசையினுள் நுழைந்த அவன் தன் நினைவி ன் றி க் கிடக்கும் லட்சுமியைக் கண்டவுடன் அவனுக்கு வாழ்வே அஸ்தமித்தது போல் இருந்தது.
அப்போது மெல்ல அசைந்த லட்சுமி "அத்தான் !' என முனுகினுள்.
'லட்சுமி ஒனக்கு இக்கதியா வரணும்." அவள் அரு கில் சென்ற அவன் வாய் ஒலமிட்டது.
*அத்தான் என்னை மன்னிச்சிடுங்க, ஒ ங் களை யும் கொழந்தையையும் உட்டுட்டுப் போகணுமிண்ணு ஆண்ட வன் எழுதிருக்கான் போலிருக்கு கொழந்தையைப் பார்த் துக்கங்க, எனக்கு ஒரு மாதிரி வரும் போல இருக்கு நான்.நான்.'அவள் தலை சாய்ந்தது.
'லட்சுமி என்னைத் தனியா உட்டிட்டுப் போயிட்டியே எனக்கு யார் இனித் தொணை அளிப்பாங்க.." அவ ன் வாய் ஓலமிட்டது. அப்போது
*ம்மா, ம்மா’ என்று வீரிட்டது அவள் பெற்ற செல் வம், அவன் குழந்தை. அவள் அவனுக்கு விட்டுச் சென்ற துணை. அதை வாரி எடுத்து அணை த் து க் கொண்டான் சொக்கன்.
**ஆம் லட்சுமி நீ என்னைத் தனியா உட் டி ட் டு ப் போகல்ல, எனக்குத்தொணை தந்திட்டுத்தான் போயிருக்கே"

Page 28
9.
முத்து - சிவஞானம்
வெய்யிற் தகிப்பு கன்ன உச்சியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது.
"தலைமடையாலை ஒரு ஐஞ்ஞாறு கண்டு கெட்டு எடுத்துப் போட் டால், வீட்டை போட்டு நாளையிற் பாட்டுக்கு வந்து மிச் சத்  ைத ப் U Tii is 6) frti. மனதில் எண்ணங்கள் உருள, முத்த ரின் கைகள் புகையிலைக் கெட்டுக்களை நுட்பமாக ஒடித்துத் தள்ளுகின்றன.
வாழையிலை அகலத்தில் இலைவிரித்து. மதர்த்துக் கிடக்கும் புகையிலைக் கன்று களின் இடையே, இலைகள் ஒடிந்து போகாமற் பதனமாக ந க ர் ந் து . நகர்ந்து, பிள்ளையின் தலையிற் பேனெ டுக்கும் தாயாகி .
கெட்டெடுத்துக் கொண்டிருக்கும்
முத்தரின் இதய மடிப்புகள், தாம்
வளர்த்த பயிரின் வளத்தைக் கண்டு பூரித்து விரிகின்றன.
வெய்யிற் கற்றைகள் உடம்பின் மயிர்க் கணுக்க்ளில் உறைத்து ஊடுருவி வியர்வையினைப் பெருக்க- ஈ
நெற்றிப் படத்தில் வழிந்து புருவ விளிம்பில் கரைகட்டி நின்ற வியர்வைத் துளிகளை, விரலால் வழித்துச் சுண்டி எறிந்து விட்டு த லைப் பா  ைக  ைய ஒருமுறை குலைத்து, உதறிக் கெட்டியா கக் கட்டிக் கொள்கிருர்,
52
 

ஒ டி வு
பொழுது ஏறிக்கொண்டிருக்கிறது. களைத்துவிட்ட கைகள் ஒய்வுக்காகக் கெஞ்ச-- முதல் நாள் இரவு உண்ட மரவள்ளிக் கிழங்கோடு இதுவரை அமைதி கண்டுவிட்ட வயிறு கொதித்துப் புரள--
விழிக் கிடங்கின் மேல்வரம்போடு கைகள் கிடையாகப் பொருந்தி வெயிற் கூச்சத்தை மறைக்க, பார்வை தோட்ட வரம்பின் தொலை நீட்டத்தைத் துருவுகின்றது
“காலைச் சாப்பாடு கொண்டு வரவேண்டிய மனைவி தெய்வானையைப் பார்க்கிருரா.
ஒரு சிரட்டை தேயிலைச் சாயமாவது குடிக்காவிட்டால் வேலை பறியாது என்ற நிலையில், களைத்துப்போய் வாழை நிழலில் வந்து குந்துகிருர்,
அவர் பார்வையில்-பச்சைத்திட்டாக அவருடைய இரண்டாயிரங் கன்று புகையிலைத் தோட்டமும் பரந்து நின்று, எண்ணப் பாய்ச்சலை இயக்கி, நினைவு வாய்க்கால் களை மடை திறக்க வைக்கிறது.
கரும்பன் கிரும்பன் விழாமல் நல்ல கணக்கா வளந் திருக்குது. நூறு பவுணுக்கெண்டாலும் தேறும்.' மனம் கணக்குப் போடுகிறது.
‘வளவிற் பூவரசங்குழை அம்மளவோடும், சரவண்ையிற் குழையுமெல்லே வண்டில் கணக்காப் பறிப்பிச்சுத் தாட் டனன். முதற் சாறலின் போது மட்டும் எம்மளவு எருப் போட்டனன். நான் பட்ட இம்மளவு பாட்டுக்கும் கடவு ளாகப் பாத்துத்தான் இதை அளந்திருக்கிருர் புகையிலைப் பா60ளி படிந்த கைகள் தாமாகக் கூம்பு கின்றன.
"நூறு பவுணுக்கெண்டாலும் தேறிச்சுதெண்டால், சாளம்பையிற் சின்னத்தம்பியின் ரை காசைச் சுழட்டி எறிஞ்சுபோட்டு ஊருக்கை கிடக்கிற சில்லறைக் குடுக் குமதியளையும் தீத்துப்போட்டு, மூத்தவளுக்கு ஒரு கல் லுத் தோடெண்டாலும் வாங்கிப்போடவேணும்.’ நெடுக முளியாத் திரியிருள். மனதில் நிறைந்த ஒரு நிமிர்வோடு வாழையிற் சாய்ந்து கொள்ளவும்--

Page 29
@生必 விண்ணும் மண்ணும்
கட்புலனின் தெளிவுக்குட்பட்ட தூரத்தில் அவர் மனைவி வருவது தெரிகிறது.
எண்ணச் சுழிப்பில் விசை அடங்கிப் போயிருந்த வயிற் றுக்கொதி திரும்பிக் கிளறுகிறது. எழும்பிப் போய் பீலித் தண்ணிரில், புகையிலைப் பாணி போக மண்போட்டு உரசிக் கையைக் கழுவுகிருர்,
"கையோடை வாழையிலையுங் கிள்ளி வாணை !' மூடல் பெட்டியையும் கேத்திலையும் தெய்வானை ஆடுகாலடியில் வைத்து விட்டு நிற்க,
வாழையிலைத் துண்டோடு முத்தர் வந்து, சாப்பாட்டுப் பெட்டிக்கு முன்னல் குந்துகிறர்.
மூடற்பெட்டியைத் திறந்து, கோதுமைப் பிட்டையும் மரவள்ளிக் கிழங்குக் கறியையும் சேர்த்துப் புரட் டி க் குழைத்து, திரணை திரணையாகக் கையிலையில் மனை வி வைக்க. அமிர்தத்தை உண்ணும் புளுகத்தில் முத்தர் ஒரு குழற் பிட்டையும் தீர்த்துக் கட்டுகிருர் .
வயிற்றுப் பிருண்டல் வலி ஒடுங்கிப் போனதன் அறி குறியாக ஒரு ஏவறை வெளிப்படசர்க்கரைச் சரையைப் பிரித்து, ஒரு நெட்டி சர்க்கரை யைக் கிள்ளி உள்ளங்கையில் வைத்து நக்கிக் கொண் டு, தெய்வானைப்பிள்ளை சிரட்டையில் வார்த்துக் கொடுத்த தேநீரைச் சுவைத்து நிமிர் கிருர்,
“வாய்புளிக்குது. பொயிலை கொண்டந்தனியேணை?’
2
*சாய். நான் தீரமறந்து போனன்.” என்று தெய் வானைப்பிள்ளை கொட்டப்பெட்டியைத் துழாவ
*இந்தளவு பொயிலைத் தோட்டத்தைச் செய்தும் வாய்க்குப்போட பொயிலைக்கு வழியில்லை. குறைமையின் உணர்வில் அவருடைய உதடுகள் நெளி கின்றன.
தெய்வானைப்பிள்ளை மூடல் பெட்டியை அடுக் கி க் கொண்டு
“இஞ்சாரெணை.இந்தக் கிழமையிற் கூப்பன் கூடி எடுக் கேல்லை. வாறகிளமை தம்பியின்ரை சுருட்டுக் கொட்டில் கணக்குத் தீர்வையோடை தாறனெண்டு போய்க் கேட்க,

ஒ டி வ 55
அவன் தின்பான் பெட்டியையுந் தூக்கிச் சுழட்டி எறிஞ்சு செத்தாலுந் தரமாட்டேண்டுட்டான். இனிப்போய் உலே யைக் கிலையை வைக்கவும் ஒரு அரிசிப் பொரிக்கு வழியில்லை." என்று சிக்கலினை அடுக்கிக் கேள்விக் குறியோடு முத்தரின் முகத்தை ஊடுருவ
சிந்தனையின் வேகம் அவர் முகத்தில் சுழல்கிறது. கந்தையாவின் வீடுகுடி புகுதலுக்குக் கொடுக்க என்று வேட்டித் தலைப்பில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாய்த் தாள் அவர் சிந்தனையை அழுத்துகிறது.
'இப்போதையிற் பாட்டுக்குக் கூப்பனை எடுப்பம். வீடு குடி பூரல் நாளையிண்டைக்குத்தானே, அதுக்கு பேந்து ஆரிட்டையன் மாறிக்கொள்ளுவம்." “இந்தா. இதைக் கொண்டுபோய் ஏதன் சரிக்கட்டு. பிறகு பாப்பம்.'
அந்த இரண்டு ரூபாய்த்தாள் செம்பாட்டு வேட்டியின் தலைப்பிலிருந்து, சீலைத் தலைப்பிற்கு மாறிப் பத் தி ர மா ன முடிச்சுள் அடங்குகிறது.
**சரி ! நீ வேளைக்குப் போய் என்னெண்டாலும் பாக் கிற அலுவலைப் பார். அவன் சின்னவனை ஒருக்கா இத் தினியர் வீட்டை போக்காட்டி, 'அந்தத் தருமதிக் காசை இன்னுந் தாறதுக்கு மனமில்லையோ’ எண்டு கேட்டு வரச் சொல்லு'
தலைப்பாகையையும் செருகிக் கட்டிக் கொண்டு, முத் தர் புகையிலை நெரிசலுக்குள் இறங்கி விடுகிறர்.
2 அடுக்களைக்குள் புகைப்பிரளயம் நிறைந்து திக்கு முக் காடுகிறது. ஒன்றரைக் கொத்து வேகக் கூடிய ஒரு பானை அடுப்பிற் கிடந்து, புகையிற் குளிக்கிறது.
*இந்தப் பொரிஞ்ச அடுப்பு என்னவாம். ஒரே புகைஞ்சு தள்ளிக்கொண்டு கிடக்குது ! அடுக்களைக்குள் அரிசி கிளைந்து கொண்டிருந்த தெய் வானைப்பிள்ளை விறகுச் சுள்ளிகளை இழுத்து ஐதாக்கி விடவும் நெருப்புச்சவ்வு பானையைச் சுற்றிப் படர்ந்து எழும்புகிறது.

Page 30
56 விண்ணும் மண்ணும்
அரிக்கன் சட்டியை இடதுகை ஆட்ட ஆட்ட, வலதுகை அரிசியைக் கிளைந்து சிறங்கை சிறங்கைய்ாக அள்ளி உலையிற் போடுகிறது. கத் கரிக்காயில் ஒரு குழம்பாவது வைப்பதற்கு மிளகாய்த் தூள் இல்லையென்ற நினைவு மனதில் தட்டவும்-- 'பிள்ளை பரசி அக்காட்டை ஒடிப்போய் ஒரு மூடி துரள் வாங்கியானே. நாளைக்கு இடிச்சுப் போட்டுக் குடுப்பம்.’’ திண்ணையில் செப்புப் பேணிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த இளையவளை வாய் ஏவுகிறது. தோட்டத்திலிருந்து களைத்து விழுந்து வரப்போகும் கணவனின் வயிற்றுப் பசிக்கு வழிதேடக் கைகள் பரபரக் கின்றன. அரிவாள் முனையில் கத்தரிக் காய்கள் கீற்றுத் துண்டங்களாகின்றன.
இளையவள் வந்து அடுக்களை வாசலோடு நிற்கிருள். *அவா தூள் இல்லையாம் எணை அம்மா. உங்க ளுக்கு நெடுகத் தாறத்துக்கு தன்னட்டை முன்னுக்குப் பின்னுக்குத் தந்து வைச்சுக் கிடக்கோவாம் எனை. நேற்று வாங்கின ஒரு மூடி தூளும் தரேல்லையாம் எண்டு. எண்டு.' அவளுடைய ரோச உள்ளம் வெடிக்கத் துடிக்க, கண்கள் பொல பொலவென்று. தெய்வானைப்பிள்ளைக்கு நெஞ்சில் நெருப்புக் கங்குகளைத் தூவி விட்டதுபோல். உணர்வு கொதித்துப் புலுண்டு கிறது.
'ஒருமூடி தூளுக்கு அவாவுக்கு இவ்வளவு பெருமை வந்திட்டுதாமையெடி. ? அவையைப்போலை வாங்கின பொருளைத் திருப்பிக் குடுக்காமல் எடுக்கிற சாதியாமேடி நாங்களும்.’’
வெம்மை தகிக்கும் சொற்கள் அவசரத்தில் படபடத்து
பக்கத்து வீட்டுப் பரசுவின் காதுகளில் மோதித் துடிக் கின்றன. ۔
‘உங்களைப் போலை வீட்டுக்கு வீடு வாங்கி நக்கிற சாதியளெண்டு எங்களையும் நினைச்சியளே.! "
சூட்டுக்குச் சூடுபோட பரசுவின் வார்த்தைகள் முந்து கின்றன.

pl. GN 57
சொல்லுக்குச் சொல் நுட்பம் துலக்கி வாய்க்கு அடங் காத வசைகளின் மின்னல் அதிர்ப்பில்-வீட்டுத் திண்ணை யில் கள்ளுவெறியோடு கிடந்த, பரசுவின் கணவன் மணி யன் எழும்பி முற்றத்துக்கு வருகிறன்.
சண்டையும் சள்ளும் தண்ணிபட்ட பாடாகி விட்ட அந்தச் சண்டியனின் வாயில் ஊத்தைப் பேச்சுக்கள் Fpr67TLDsrg – .
* உன்ரை . வாயைக் கீறி உப்புப் போடுவன் ரீ ! இம் முறை முத்தருக்குப் பொயிலை வாய்ச்சாப் போலை உனக் கும் ஒரு இல்லாத எழுப்பமாம் . 9
காரண காரியமற்ற அவனுடைய வார்த்தைப் புழுக் கள் தெய்வானைப்பிள்ளையின் காதுச் சவ்வுகளைக் கிழித்து, இதயச் சதையைப் பிய்க்கின்றன.
அந்த இதய நோவின் தாக்கத்தில், பேசுவதின்ன பேசாததின்ன என்று தெரியாமல்--
'எட கீழ்சாதி 1 பெண்டிலின் ரை சீலேக்கை கிடந்து
கொண்டு கதைக்கவும் வந்திட்டியே..! பெண்டிலும் நீயு மாச் சேந்து குடிச்சுப் போட்டுச் சண்டைக்கெண்டு மல்லுக் கட்டிறியளே ! என்னம்பொண்டு. உது நளவரிட்டை
அடிபட்ட குணமே !'
தெய்வானைப்பிள்ளை முற்றத்துக்கு வந்து விடுகிரு. வார்த்தைகளாற் திருப்பி எதிர்க்க முடியாத வெறியில் மணியன் ஓடிவந்து தெய்வானைப்பிள்ளையின் தலைமயிரைப் பிடித்து, நிலத்தில் "கொற கொற' என்று இழுக்க.
இளையவள் திகிலின் அதிர்ச்சியில் குரல்வெடிக்கக் குழறு கிருள்.
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து மணிய னைப் பிடித்துக் கொண்டும்
வார்த்தைகள் தணியவில்லை. ஆத்துக் கொட்டுணு வான் !.உந்த.நளவர் வீட்டுக்..கோடி தூங்கி என்ரை தலைமயிரைப் பிடிக்க. அவ்வளவுக்குத் தத்துவங் கிடக்கே...? மூச்சு இளைத்தபோதும் தெய்வானைப்பிள்ளையின் ப்ேச்சில் சளைக்கவில்லை.
“பொத்தடி வாய்” தன்னைப் பிடித்துக் கொண்டிருப் பவர்களிடமிருந்து மணியன் திமிறுகிறன்.
ଘର 8

Page 31
58 விண்ணும் மண்ணும்
‘அம்மா உன்னைக் கும்பிட்டன் பேசாதையெணை....! அம்மா !...” இளையவள் தாயின் வாயைப் பொத்துகி
முள.
மனித வெறியின் பயங்கரத்தைக்கண்டு அந்தப் பிஞ்சு உள்ளம் வெருண்டு பதறுகின்றது . ‘அங்கை முத்தரண்ணையும் வாழுர், எணை தெய்வானை அக்கை நீ வீட்டுக்கை போணை. எட ! நீயும் போடா. சும்மா சச்சரவுப் படாதையுங்கோ...' சண்டை பலக்கப் போவதை விரும்பாத வண்டில் காரச் செல்லர் கூடிநின்ற வர்களைக் கலைக்க முயல்கிருர்,
‘அவர் வந்தா என்ன ? இஞ்சை ஒரு தூமையும் அவ ருக்குப் பயந்து கொண்டு இருக்கேல்லை' மணியன் நெஞ் சைத் தட்டுகிருன் ,
முத்தர் முற்றத்துக்கு வந்து விடுகிறர். அவருடைய கண்கள் கேள்விக் குறியோடு விரிகின்றன.
இளையவள் ஒடிப்போய்த் தகப்பனைக் கட்டிக் கொண்டு அழுதழுது நடந்ததைச் சொல்ல. அவருடைய நெஞ்சம்முறுகுகிறது.
‘நான் சொல்லிப் போட்டன். குடிச்சால் தங்கடை தங்கடை பாட்டிலை இருக்கவேணும். சும்மா இருக்கிற ஆக் களோடை சொட்டல் சுரண்டலுக்குப் போய், வீண் கொலை யளை விழுத்தாதேங்கோ .' ஆவேசம் பீரிட்டாலும் வார்த் தைகள் அளந்து விழுகின்றன.
நான் குடிப்பன். விடுவன். அது க் கு உனக்கென் னடா..?’ வயதுக்கு மூத்தவரென்றும் பாராமல், மணியன் மரியாதையைத் தடம்புரட்டுகிருன்.
முத்தருக்குக் கேந்தி ஏற. . 'வாயைப் பொத்திக்கொண்டு மரிசாதையாப் போவிடு. சும்மா இதிலை நிண்டு.” பற்களுக் கிடையில் கீழ்ச்சொண்டு பதற, முத்தர் அவனை நெருங்குகிறர்.
* இல்லை, நிண்டா என்ன ? மயிரைப் புடுங்கிப் போடு வியே... " தன்னைப் பிடித்தவர்களை தள்ளிவிட்டு அவன் கொடுக்கை இழுத்துக் கட்டுகிருன்.
அடுத்த மின்னற் பொழுதுக்குள் -

ֆ1գ-ճ 59
ஆவேச உணர்வில் துடித்த முத்தரின் கைகள் அவ னுடைய முகத்தில்.
அவனும் கையை நீட்டி விடுகிருன் ,
நின்றவர்கள் பிடித்து இழுத்துக் கொண் டு போய் அவனை வீட்டுக்குள் விட்டுப் பூட்டுகிருர்கள்.
“என்ன முத்தரண்ணை, குடிகாறன்ரை பேச்சை எடுத் துக்கொண்டு. அவன் ரை குணம் உனக்குத் தெரியுந் தானே..!’ முத்தரை ஆற்றித் தேற்றி அவருடைய வீட் டில் விடுகிறர்கள்.
அன்றைய இரவின் அழிவோடு, முத்தரின் மனச் சுமைய களின் விரிசலில், அந்தச் சண்டையின் நினைவும் அடங்கிப் போய் விடுகிறது.
3
இருட்திரை கிழியப் போகும் புலரிப் பொழு தி ல், வேட்டியை அவிழ்த்து மேலோடு போர்த்தபடி, தோ ட் டத்தைக் குறிவைத்து முத்தர் நடந்து கொண்டிருக்கிருர், 'மிச்சக் கெட்டு எல்லாத்தையும் இண்டைக்கு எடுத்து முடிச்சுப் போடவேணும்.
வாறகிழமை பொயிலையைப் பாக்க சுதுமலையான் வாறனெண்டு சொன்னன் . இவன் இரணையன் சின் னத்தம்பி அச்சவாரத்தைப் பிடி’ எண்டு நாண்டு கொண்டு நிக்கிருன். கூடக் கேக்கிறவனை வெட்டி ஏத்தச் சொல்லுவம்..!
வழி நடையின் தனிமையில் தன்னுடைய புயைபியிலைத தோட்டத்தைப்பற்றி அவருடைய சிந் த னை க ள் கொடி வைக்கின்றன.
தெருவில் தலைநிமிர முடியாமல் மொய்த்துக் கிடக் கும் கடன் சுமைகளில் இருந்து மீளவும், அடுத்தவருடப் புகையிலைச் செய்கைமட்டும் வீட்டுப்பாட்டைச் சரிக்கட்ட வும் அவர் பனையாக நம்பிக்கொண்டிருச்கும் இந்தப் புகை யிலைத் தோட்டத்தைத் தவிர, வேறு எதை அவரால் சிந்திக்க (tpւգ սյւն . −
அச்செழுவிற் புகையிலைச் சுருட்டு, அவர் வா யின் இதழ்ப்பிடியிற் கிடந்து புகையாகக் கருகுகிறது.

Page 32
tj0 விண்ணும் மண்ணும்
விடியற் காலையில் வெறுவயிற்றில் இதமாகக் குடித்து விட்டு வத்த தேநீர், நரம்புகளின் உணர்வில் ஒடிச் சுறு சுறுக்க முயல்கிறது.
'இம்முறை பொயிலைச் செய்கையிற் காசோடை எங் கையன் மாறிச் சrறிப் பொருத்தி. மூத்தவளின் ரை கலி யாணத்தையும் அடுக்குப் பண்ணிப் போடவேணும். அவ ளுக்கு வயதும் பங்கை போட்டுது. 99
தேநீரைக் கோளையில் ஆற்றி ஆற்றி, தெய்வானைப் பிள்ளை கதையோடு கதையாகச் சொன்னது காதுப்பறை யில் வேதனை நாதமிடுகிறது.
புகையிலை விற்றுத் தேறப்போவது, இல்லை இல்லை யென்று போனுல் ஒரு ஆயிரம் ரூபாய். அதை எத்த னைக் கென்று பிரித்து.
‘வீட்டுக்குள்ளை இருக்கிறதுகளுக்கென்ன. மனிசன் படுற பாடுகளை அதுகளுக்கெங்கை விளங்கப் போகுது. உள்ள கடன் தனியளைத் தீக்கிறதெங்கை, சடங்குக்கு ஒழுங்கு செய்கிறதெங்கை . பலமுகச் சிந்தனைகளின் தொடுப்பில் மனஞ் சலிக்க வாய்ச்சுருட்டைக் கையில் எடுத்துக்கொண்டு எ ச் சிலை க் காறித் துப்புகிருர்.
வாழ்க்கையின் துன்பமான நகர்வுக்கு ஆதார மூலமாக ஒரு சிறிய புகையிலைத் தோட்டத்தை நம்பிக் கனவுகளை வளர்த்தபடி, கருகிச் சாம்பலாகிக் கொண்டிருக் 4 ம் அவர் மனத்தைப் போல,
வாயிலிருந்த சுருட்டும் புகைந்து கருகிக் குறைய-- வழியும் குறுகிறது.
*காலமைச் சாப்பாடு வாறதுக்கிடையிலை கிழக்குக் கீலத்துக் கண்டுகளை கெட்டெடுத்து முடிச்சுப் போட வேணும்.' குறைச் சுருட்டை எறிந்து துப்பிவிட்டு, தோட்டத்து வரம்பில் இறங்கி நடக்கத் தொடங்குகிருர்.
தன்னுடைய புகையிலைத் தோட்டத்துள் இ ற ங் க ப் போனவர், திகைப்பூண்டில் மிதிக்கிருர்!
நான்கு பெண்பிள்ளைகள், மூன்று ஆண்பிள்ளைகள். இவர் களோடு அவரையும் மனைவியையும் சேர்த்து ஒ ன் ப து உயிர்த்துடிப்புக்களின் கஞ்சிக்கு வழிகாட்டும் அவருடைய புகையிலைத் தோட்டம்.

ஒடிவு 61
அவர் உடல் பதறுகின்றது. வயதின் பளுவோடு வறுமையின் பாரமும் சேர்ந்து மழுக்கிவிட்ட குழிந்த கண்கள் துடித்துப் பதைத்துச் சுழல் கின்றன.
வாழையிலை அகலத்தில் இலைவிரித்து, மதர்த்துக் கிடந்த அவருடைய புகையிலைத் தோட்டத்து இரண்டாயிரம் புகை யிலைக் கன்றுகளும்--
இலை கிழிந்து முரிந்து; ஒடிந்து பாட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. அவர் மனதை நிறைத்துக் கொண்டிருந்த நூறு பவுண் களும்--
துருப்பிடித்த செல்லாக் காசுகளாய் சிதறுகின்றன. சாளம்பையிற் சின்னததம்பிக்குக் கொடுக்கவேண்டிய நாற்பதுபவுண் சொச்சமும், அவர் நெஞ்சகத்து உயிர்ப் பைச் சுழித்து சுழல்கிறது,
வாழ்வின் அடி ஆதாரமே ஒடிந்து, பொடித்து விட்ட உணர்வில், நினைவு இழுப்புக்கள் குமைய
கெட்டெடுக்க வந்துவிட்டவருக்ா க் காலைச் சாப் பாட்டைச் சுமந்து கொண்டு வரப்போகும் தெய்வா
னைப்பிள்ளை அன்று விடியற்காலை நினைவூட்டிய சில்
லெடுப்புக்கள், எதிர்வைக்காட்டி எ ன் ண த்  ைத 2-3) t t . . .
மூத்தவள் ஓடிவந்து மூளியாக நிற்கிருள். சில்லறைக் கடன்காரர்கள் அவரைப் பிய்த்துப் பிடுங்குகிருர்கள்,. வீட்டில் கூப்பனுக்கு . கறி புளிக்கு வழியில்லாமல்.
ஏக்கப்பதைப்பின் நெருக்கலில், அவருக்கு ஐந்தும் கெட்டு. அறிவுங் கெட்டு.
மண்டையெங்கும் ஓடி விறைக்க, கிறுதி வ ரு மா ப் போல். கண்ணை மின்னுகிறது.
வாழையடியிற் போய் பொத்' தென விழுகிறார். வெய்யில் தன்பாட்டில் எறித்துக் கொண்டிருக்கிறது.

Page 33
b
சி. மெளனகுரு
ծ է Պ
டேய் ! ஆண்களின் மனத்தைப் பற்றி என்னடா நினைக்கிருய் ?’ அதிகா ரக் குரலில் கேட்டான் மணியம்.
'ஆண்களின் மனம் பெண்களின் மன்ம் எண்டு வேறயாடா, LDST ud எண்டா எல்லாம் ஒண்டுதான்' சட்டக் கலரை இழுத்து மேலே விட்டபடி விளக்கம் கொடுத்தான் கந்தசாமி.
“மணம் ஒரு வண்டு ; அது அடிக்கடி தா வும்'
“மனம் ஒரு கடல். அதன் ஆழங் காண முடியாது. நண்பர்களின் வாயி லிருந்து ஏகமாகப் புறப்பட்டன பொன்
மொழிகள்.
நான் நெற்றி வியர்வையை வழித் தெறிகிறேன்.
எங்களைப் போன்ற இளைஞர்கள்-- நண்பர்கள் சந்திக்கையில் வேறு எதைப் பற்றிப் பேசுவோம். பெண்களைப் பற் றித்தான் பேச்சுக்களதிகம். இ ன் று ஏதோ பு தி தா க மனத்தைப்பற்றி எடுத்து விடுகிருனே' என்ற எண்ணம் எழாமலில்லை. இருந்தாலும் "மனம்" என் மனம் எண்ணத் தொடங்குகின்றது. *டே ! டே !! உங்கட மனப் பிரச்சனைய விட்டுட்டு இங்க பாருங்கடா
62
 

ஓட் டம் 3
இரண்டு குட்டிகள்’ ரகசியமாகக் குசுகுசுத்த கேள்வி கேட்ட நண்பனின் மனம் இப்போது அங்கே -
திரும்புகிறேன் சிந்தனை அறுகின்றது; இரண்டு சிங்களப் பெண்கள். உடை இனம்காட்டியது. சிரித்துப் பேசிக் கொண்டு செல் கின்றனர் பஸ்ஸ"காகத் தவம் கிடந்து அலுத்துக் களைத்த என் நண்பர் பட்டாளத்திற்கு ஒரு பரவசம்.
*ஹலோ ... ஓ..' *G6) uuri...... ரூ.? 'ஹல் .லோ.மிஸ் . மிஸ்." ''... �ܲ6... ܕܲ6݂ "
வழக்கமான பகிடிகள் ஆரம்பமாகின்றன. நாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதைப் பறை சாற்றிக் கொள்ள வேண்டாமோ ?
என் மனம் இப்பக்கம் திரும்புகின்றது. வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரா விடினும் சிரிப்பு வெளிவருகின் நிறது -
சிரிக்கின்றேன். மனத்தைப் பற்றிக் கேள்வித் தூண்டலை வீசிய மணி யம் எனது மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. அவ ன் தூண்டிலில்தான் வேறு மீன் பட்டு விட்டதே ; அது மீனு ? LurrgQun ?
பகிடியின் முன்னணியில் நிற்கின்றனர் நண் பர் க ள்: பஸ்ஸுச்காகக் காத்திருந்த அவசரம் பறந்தோடி விட்டதோ
பஸ் வருகின்றது. ஹோல்டிங் பிளேஸ் இல்லாமலிருந்தால் என்ன என்று எங்களுள் நினைப்பு.
சுப்பிரமணியம் கண்களை இடுக்கிக் கொண்டு பஸ் ஸைப் பார்த்துவிட்டு 'டே ! டே !! வாசிற்றி வஸ்’ என் கிருன்.
'கட்டுக்கல வயினுவாத ?". "'பொ ட் டாக் கிண்ட மாத்தையா' கண்டக்டரின் குரலை மதியாது உள்ளே நுழை கின்றது நண்பர் பட்டாளம்.

Page 34
6. விண்ணும் ம்ண்ணும்
கடைசியில் நான். காசு கொடுக்க வேண்டிய இடி என் தலையில் விழுந்து விட்டது.
**ஆர்ட்ஸ் தியேட்டர்’ எட்டு ரிக்கற்றுகளைப் பெற்றுக் கொள்ளுகிறேன். எண் பது சதத்தைக் கொடுக்கிறேன்.
**gi” − பஸ் போகத் தொடங்குகின்றது. பஸ்ஸில் ஒரே நெரிசல் ‘யண்ட மாத்தயா’ கண்டக்டர் கூச்சல் போடுகி முன், முண்டியடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைகி றேன்.
'நண்பர்கள் எங்கே ?” என் கண்பார்வை பஸ்ஸை முற்ருக ஒரு முறை நோட் டம் விடுகின்றது. சுற்றிச் சுழன்ற கண்கள் ஒரே இ ட த் தில். அவள் நிற்கின்ருள்.
அவளுடைய இரண்டு பின்னல்களும் நன்ருகத் தெரி கின்றன. அவளுடைய முதுகுப் புறமாக வெட்டிய ரவிக்கை அவள் பிடரியின் அழகைப் பளிச் சென்று காட்டுகின் றது. அவளது சிவந்த மேனிக்குப் பச்சை நிறச் சாரியும் சிவப்புச் சட்டையும் எடுப்பாகத்தான் இருக்கின்றன. அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
அடுத்த, 'ஹோல்டிங் பிளேசில்' பஸ் நிற்கின்றது.எனக் குப்பின் நின்றவர்கள் முண்டியடித்துக் கொண்டு இறங்கு கின்றர்கள். இறங்கியவர்களை விட ஏறியவர்கள் அனே கம் பேர் போலும். பஸ்ஸில் முந்திய நிலையை விட இன் னும் நெருக்கமாக இருக்கின்றது.
எனக்கும் அவளுக்குமிடையே இப்போ ஒருவர்தான் இருக்கின்ருர்,
அவள் பின்புறத்தை எ ன் ன ல் நன்கு அவதானிக்க முடிகின்றது.
ஒருதரம் திரும்புகின்ருள். இருவர் பார்வையும் முட்டி மோதுகின்றன. ப் ஸ் குருஷேத்திரமா ? கெளரவர்களும், பாண்டவர்களும் மோது கின்றனரா ? தோல்வி எனக்கே.

ஒ ட் டம் 65
என் கண்களைத் தாழ்த்திக் கொள்ளுகிறேன். அறம் என்னிட மில்லை. கள வெண்ணம் என்னிடத் தில் தானே. பஸ் ஒடிக் கொண்டிருக்கின்றது.
அவளைப் பார்க்கிறேன். அவள் சிவப்புச்சட்டைத் தோள்கள் என்னவோ எனக்குச் சொல்வது போல் கண்களை அதில் வைத்த மனம் அதிலிருந்து எவ்வி, டிரைவருக்கு மேலேயுள்ள புத்தர் படத் திற்குக் கீழே செங்குத்து வடிவமான கண்ணுடிக்குமிழுள் செம்மை கணிவிக்கும் முன் விளக்கில் சிக்குணுவதை உணர் கின்றேன்.
செம்மைநிறம் குமிழுள் ஏறி இறங்கி வடிகின்றது. ஏறி இறங்கி வடியும் நிறமாய் மனதுள் வடிவதெல்லாம் சிவப் பின் சிவப்புச் சட்டைக் காரியா ?
மேலும் கீழும் ஒடும் நிறம் குமிழுக்குள் குமிழிடுகின் றது. மீண்டும் என் கண்களை அவள் பக்கம் திருப்புகின் றேன். அவள் எங்கோ பார்த்துக்கொண்டு நிற்கின்ருள். வள வளப்பான தார் ரோடுபோல இரண்டாகப்பிரிந்து செல்லும் பின்னல்களின் நடுவே முக்கோண வடிவாய்த் தெரிந்த அவளது அங்கத்தினெருபகுதியின் சிறிய கறுத்த மறு என் கண்களுக்குத் தென்பட, என் கண்கள் மீண்டும் துருவுகின்றன. சிறிய நெளிந்த கன்னத்து மயிர்களை மேலே தூக்கிமாட்டி வைத்திருக்கும் கிளிப்பு. s
அருகில் நின்றவனைக் கவனிக்கிறேன். அவளுடைய உடம்போடு ஒட்டி உரசிக் கொண்டு நிற் கிருன், அவளும்--
அதைக் கவனியாதவள் போல அவனுடன் ஒட்டிக் கொண்டு.
‘ஒருவேளை அவளின் கணவனுக இருப்பானே ?” கணவனென்றல் அவளுடன் கதைத்துக் கொண்டு வந்திருப்பானே. ܝ ܝ
*சே 1 சே !? அவளுக்குக் கலியாணமே ஆகவில்லை" முகத்தில் 'கன்னி’ என்று எழுதி ஒட்டி இருக்குதே' மனத்தைத் தேற்றிக் கொள்கிறேன். அடுத்த மனிதனைப் பெருமையுடன் பார்க்கின்றேன்.
வி 9

Page 35
66 விண்ணும் மண்ணும்
““ tą ši”
குலுக்கி இழுத்துக் கொண்டு பஸ் நிற்கின்றது.
'வயினுவாத" கண்டக்டரின் கரகரப்பான குரல் ஒலி. அவளும் இறங்கி விடுவாளோ ?
பஸ்ஸினுள் திமுதிமுப்பு.
என் அருகில் நின்றவன் இறங்கி விடுகின்றன்.
அவள்--
இறங்கவில்லை.
மனதில் ஏதோ நிம்மதிபோல ; நிம்மதி.
“டிக், டிக்'. ரிக்கற் கொடுக்கும் இயந்திரத்தின் ஒலி
“uqiš”
பஸ் செல்லத் தொடங்குகின்றது. அவளுக்கு எதிர்ப்புறமாக நான் நின்றுகொண்டிருக்கி றேன். அவள் முதுகுப்புறம் என் முதுகுடன் உரசுவதை என்னுல் உணர முடிகின்றது.
மின்சார அதிர்ச்சி; திரும்பிப்பார்க்கத் துணிவில்லை. *பஸ்ஸினுள் இருப்பவர்கள் அனைவரும் என்னைப் பார்க்கின் ருர்களோ ?’ மனதில் ஒரு பிரமை.
சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் ந ன் பர் கள் ஏதோ ஒரு ரசமான விவாதம் நடத்திக் கொண்டிருப்பது கேட்கின்றது. ஆட்களைக் காணமுடியவில்லை. நெரிசல்.
சரக். கிறீச் . .பஸ் பிரேக் போடுகிறது. எ ன் ன நடந்ததோ தெரியாது. என்னுடன் அவளுடம்பு நன்ருக முட்டி மோதிப் பிரிகின்றது.
",உடலுள் குளிர் திரவமாகி இரத்த நாளங்களில் இரத்தமென ஓடுகிருப்போல உணர்வின் விரிசலில் உடம்பு நடுங்குகின்றதா ? ஒடுங்குகின்றதா ?” வியர்க்கின்றது. ஆசை எங்கே ? துணிவு எங்கே ? பஸ் தட தடத்து ஓடிக் கொண்டிருக்கின்றது. அவளைத் திரும்பி மெல்லப் பார்க்கின்றேன். அவள் எங்கோ பார்த்

ஒ ட் டம் 6宵
துக் கொண்டு நிற்கின்ருள். அவளின் ஒரு கை மேலே கம் பியைப் பிடித்துக்கொண்டிருக்கின்றது. மறுகை; மார்பை விட்டு விலகிய சேலையைச் சரிப்படுத்துகின்றது.
பார்வையைக் கஷ்டப்பட்டு இழுத்துக் கொள்கிறேன். மனம். Il-...... Lut-é. · · · · ·
'முல்கம்பல வயினுவாத ?' கண்டக்டரின் குரல். இரண் டொருவர் இறங்குகின்றனர். அண்மையில் ரயில் ஒ டு ம் குரல்; அதன் புகை மேலே மேலே உயர்வதுபோல என் மனமும் எங்கோ, எங்கோ பிரிந்து கலைகிறது. என் கண் கள் இறங்கும் வாசலைப் பார்க்கின்றன. முதுகு அரை வட்ட மாய்க் கவிழ்ந்து நடை தள்ளாடும் கிழவன்.ஒருவன்
நடுங்கி. நடுங்கி. இறங்குகின்றன். **விழுந்து விடுவானே ?' மனம் எண்ணுகிறது. விழுந்து விட்டான்.
s
*மகே. 9. . . . . . f0• • • • • • -
நெஞ்சைப் பிழிந்தது கிழவனின் ஒலம்.
பஸ்ஸினுள் ஒரு கலகலப்பு.
பெரும்பாலோர் எழுகின்றனர். என் கண் கள் விழுந்த கிழவனைத் தேடுகின்றன. அவன்.அவன்.மணியந்தான் கிழவனைத தூக்கிக் கொண்டிருக்கிருன் விரைந்து செல்கின் றேன், கை கொடுக்க.
கிழவனைத் தூக்கி நிறுத்தி.பொருக்கு ' படிந்த அவன் கைகளில் கைத்தடியையும் கொடுக்கிருே b.
அவன் உதடு வெடித்து உ தி ர ம் கொட்டுகின்றது. கைலேஞ்சை எடுத்து அவன் வா யி ல் ஒற்றுகின்றேன். நரைத்த விறைத்த அவன் தாடி மயிர்களில் என் கைபடு கின்றது.
கைலேஞ்சை அவனிடமே கொடுத்து விடுகிறேன். கிழ வன் தன் சூம்பிய கைகளை மெல்லக் கூப்பி என்னைக் கும் பிடுகிருன்,
பஸ்ஸில் ஏறுகிருேம்.
*“lgăi
பஸ் ஓடத் தொடங்குகின்றது.
என்னை எல்லோரும் பார்க்கின்ற மாதிரி.
st

Page 36
68. விண்ணும் மண்ணும்
நிமிர்ந்து பெருமையுடன் பஸ்ஸை ஒரே நோட்டம் விடு கின்றேன். பிறகு; அழுக்குக் கறைபடிந்த சட்டைக் கைகளை தாடையில் உராசி ஊத்தையை அணுவசியமாக அக ற் ற முயல்கிறேன்.
நினைப்பில் மூன்றிலிரண்டு பங்கு சரிதான்.
ஆனல் நான் எதிர்பார்த்த பார்வை.
எ கிகே ? அவள் எங்கே ?
இறங்கி விட்டாளோ ?
*:அடடா என் பெருந்தன்மையான குணத்தை அவள் பார்க்கவில்லையே' எரிச்சல் எரிச்சலாக வருகின்றது. பஸ்ஸை என் கண்கள் துழாவுகின்றன.
அதோ--அவள் இடம் கிடைத்து விட்டது போதும். பஸ்ஸின் கடை சிச் சீற்றில் யன்னலோரத்தில் அமர் திருக்கின்ருள். அவள் முகம் மட்டுமே என் கண்களுக்குத் தெரிகின்றது.
இப்பொழுது பஸ் சோடாப் போத்தல்கள் குறைந்த சோடாப் பெட்டி மாதிரி அவ்வளவு இடை விட்டு இருந் தது. நான் பிரயாணிகள் இறங்கும் வாசற்படிக் கருகில் நின்று கொண்டிருக்கிறேன். அவள் கண்கள் என்னைப் பார்க் கின்றன.
அவள் செம்பவள உதடுகள் லேசாகப் பிரிந்து தமக் குள் ஒளித்து வைத்திருந்த முத்துக்களை ஒருதரம் காட்டுகின் றன, என்னைப் பொறுத்த அளவில்.
சிரிப்பதா..? விடுவதா..? போராட்டம். அசட்டுத் துணிவு. மனம் படக். Lul-d;...... சிரித்துவிடுகின்றேன். ‘டேய்;’ கந்தசாமியின் குரல் எனக்கு பஸ்ஸை நினை வூட்டுகிறது. அவளைப் பார்க்கிறேன். பக்கத்திலிருந்த சீற் றில் கையால் தட்டி இடமிருப்பதாகக் கண்ணுல் காட்டு கின்றன். பஸ்ஸினுள் தாராளமாக இடமிருக்கின்றது. என் ரு லும் இருக்க மனமில்லை. வாசற்படியினுல் இறங்குகையில் அவளுடன் முட்டலாம் என்ற அசட்டு எண்ணம்.
*இல்லடா நிற்கிறன் கொஞ்ச தூரந் தானே' வாய் கஷ்டப் பட்டு மறுமொழி கூறுகின்றது. அவர்களின் சந் தேகப் பார்வை என்மீது விளக்கூடாதே.

ஓ ட் டம் 69
அவள் என்னைப்பார்க்கின்ற மாதிரி ஒரு பிரமை. அவளை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை. பஸ் ஓடிக்கொண்டிருக்கின்றது. பஸ்ஸுக்கு வெளியே பார்க்கின்றேன். மரங்கள்.கட்டிடங்கள்.ஒடிக் கொண்டிருக்கின்றன என் மனம் மாதிரி.
*ம்.ம்.' வெளியிலிருந்த காற்று உள்ளேசென்று உடம்பினுள் ஏதோ விளையாட்டெல்லாம் பண்ணிப் பெரு மூச்சாக வெளிக்கிடுகின்றது.
பட. படப்பு இன்னும் தீரவில்லை
கள்ளத் தனமாகப் பார்வையை மெள்ளத் திருப்பி அவளைப் பார்க்கின்றேன்.
என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென என் மீது வைத்த பார்வையைப் பறித்துக் கொண்டு யன்ன லுக்கு வெளியே பார்க்கின்ருள். அவளுக்கும் மரங்கள், கட்டிடங்கள் ஓடியது தெரிந்திருக்க வேண்டும். அவள்மன மும் ஏதேனும் எண்ணியிருக்க வேண்டும்' என் மனம் எண் ணுகின்றது.
துணிவு வந்து விட்டது.
வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்கின்றேன். அவளுக்கு முன்னலிருந்த ஆசனம் வெறுமனே கிடக்கின்றது அவளுடைய அழகான கேசம் சுருண்டு . சுருண்டு. .." கருகருவென்று புருவம்; மை தீட்டியிருக்க வேண்டும். மெல் லிய மூக்கு. கீழே.கீழே.
இறக்கிக் கழுத்து வெட்டிய சட்டைக்கு மேல் அவள் அங்கம் நன்கு தெரிகின்றது. திருட்டுத்தனமாக உற்றுப் பார்க்கின்றேன்.
பெண்மை பாதுகாக்கப் பட்டிருக்கின்றது.
என்ருலும் பார்க்கின்றேன்
இறக்கம் -எண்ணம்
மயக்கம்
**ւգ եյ''
என்னை அவள் பார்க்கின்ருள் என்பார்வை திடீரென
யன்னலுக்கு வெளியே செல்கின்றது. பஸ் நிற்கின்றது.

Page 37
r0, விண்ணும் மண்ணும்
பெரா தெணிய வயினுவாத ? கண் டக் டர் கு ர ல் கொடுக்கின்றன். அவள் அசைகின் ருள்.
இறங்கப் போகின் ருளோ ? ஒருதரம் நிமிர்ந்து நிற்கின்றேன். நெஞ்சத்தின் இடிச்சப்தம் செவிகளில் நன்ருக விழுகின் Agil
உடம்பில் ஒரு பலஹினம் மாதிரி. சக்தி யாவுமே வழி வெட்டிப் பாய்ந்த வெறு வாய்க்காலினனது வெறுமையுறு கிறது உடல்.
இனி இறங்கி விடுவாளோ ? எனக்கு மிகவும் வேண்டியஏதோ ஒரு பொருள் என்னை விட்டு நழுவிப் போகப் போகின்றமாதிரி ஒரு உணர்வு,
அவள் எழும்புகிருள், என்னைப் பார்க்கின்ருளோ ? தலையைக் குனிந்து கொள்ளுகின்றேன். போர் செய்யப்போகும் வீரனைப் போன்று ஆயத்தமாக நிற்கின்றேன்.
அவள் வருகின்ருள். அவளை முதன் முறையாகப் பார்க்கின்றேன். முற்ருகப் பார்க்கிறேன். அழகான முகந்தொடக்கம் அடிப்பாதம் வரை செல்ல வேண்டிய என் கண்கள் இடைப்பாகத்தில்.
என்னுள் என்ன ? பிரளய வெடிப்பு. மனத்தசையை அலவாங்கு குத்தி இழுத்துக் குழப்பி அதல குதல மாக்கு வது போல, மரணத்தின் முடிவு வேதனை மனத்துளக்கம். நான் நானழிந்து நாணுகின்றேன்; கவிழ்கின்றேன், உணர்வோடு உடலாகி.
அவள் வயிறு உப்பிப் பெருத்து இருக்கின்றது. பிள்ளைத்தாச்சி. ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகின் றவள். என்னைப் போல ஒரு ஜீவனைத் தனக்குள் சுமந்து கொண்டு திரிகின்றவள். எழுந்து நின்று நடனம் செய்த என் எண், ணங்கள் அனைத்தும் பாதாளத்தை நோக்கிக் கீழே, கீழே செல்கின்றன.
என் உணர்ச்சி உறைந்து விடுகின்றது. மூளையின் ஏதோ ஒருபகுதிமட்டும் வேலை செய்கின்றது:

ஓ ட் டம் 1.
*நெருப்பை மூச்சாய்க் கொண்ட புயலாய் எனக்
குத் தெரியும் அவள், நெருப்பையழிக்கும் நீர் போலவே
கண்களில் கணிவை யுமிழ்கிருள்."
அதே புன்னகை. அதில் என் தாயின் சாயல், மரியாதை யுடன் ஒதுங்கி இடம் விடுகின்றேன்.
பஸ்புறப்படுகின்றது.
பஸ் புறப்படுகின்றதா ?
பஸ்ஸின் உலுக்கலில் நிமிர்கின்றேன். என் கண் பார் வையுள் அதே மின்சார விளக்கு. சிவப்பு ஒளி மேலே மேலே ஏறுகின்றது. அது செம்முனைப்பு அம்பின் விரைவில் கண்ணுக்குள் நாணேற்றுவதைப் போல
"ஐயோ ! அம்மா !. s
திரும்பும் பார்வையுள் பசுமை பசுமை.
நான் மீண்டும் பார்வையை அவளிருந்த இடத்திற்கே விடுகின்றேன். அவளிருந்த இடத்தில் உயர்ந்து என் கண் களில் மானசீகமாகச் சிரித்துக்கொண்டிருக்கும் அந்தத்தாய் புகை மூட்ட உருவம் புகைந்து அழிகின்றது. தாய். தாய்.
பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது !.

Page 38
Llő5) பொழுது
இ. சிவானந்தன்
1னையோலையிற் சுருண்டு படுத் திருந்த குமரையருக்கு பொழுது புலர்ந் தது தெரியவில்லை. வீட்டின் கிடுகுக் கண்கள் வாயிலாகப் பொட்டிட்ட ஆதவன் கரங்கள், அவர் அமைதியைக் குலைக்கவில்லை. வெற்றிலைக் காவி படிந்த பற்கள் அவர் உதடுகளுக்கிடையில் எட்டிப் பார்க்கின்றன. நரை மயிர்கள் தலையில் நெளிந்தோடிக் கருமையைக் கூறுபோடுகின்றன. உடலிற் பலவிடங் களிலும் கிடுகுக் கண்கள் முத்திரைகள் பதிக்கின்ன.
அவர் முகத்தில் குழந்தைமை படர்ந் திருக்கிறது.
சாந்தம், பாவம், தூய்மை--
இவற்றுடன் அமைதி கலந்திருக் கிறது.
பகல் முழுவதும் ‘பஸ் ஒட்டிய அவர் உடலுக்கு ஒய்வு, இரவுக் கன்னியின் கரங்களில் மட்டும் தான் அவருக்கு ஒய்வு : இன்பம் எல்லாம். சுகவீனத்தில் வருந் தும் மனைவியின் நிலை அவரிடத்தில் அமைதிக்கும் ஒய்வுக்கும்  ெக ஞ் சு கிறது. பகல் முழுவதும் அவரை ஆட்டி வைக்கும் சக்திகள் அவரை விட்டு இப்போது விலகி நிற்கின்றன. இந்த
72
 

பகற் பொழுது ፳8
இரவுமட்டும் இல்லாவிட்டால் மனிதகுலத்திற்குப் பயித் தியமே பிடித்துவிடும். மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்தி கள் திரும்ப வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
**கீச்சுகீச்சு. கா. கர்.க. கறுச்.கொக்கிருேக்கோ..." உதய சூரியனை குரல்கள் வரவேற்கின்றன. அவனின் தயவிற்ருன் எத்தனை உயிர்கள்...! 'இஞ்சேருங்கோ என்ன பொழுது விடிஞ்சு போச்சு வேலைக்குப் போகல்லையோ!' நீர் நிறைந்த குடம் இடுப்பை வளேக்க அவர் மனைவி பொன்னு அங்கு நிற்கிருள். “டேய், இஞ்சை வாடா கிளியா. அடிப்பன்" 'மாட்டன். அப்பா. ஐயோ. அப்பா' குரல்கள் குமரையருக்குச் சிறிது சிறிதாக உணர்வைக் கொடுத்து இவ்வுலகிற்கு இழுக்கின்றன.
‘நான் என்ன பருத்தித்துறை 'லயினே' ' புரண்டு படுக்கிருர் குமரையர். கைகள் இரண்டும் ஒன்று சேர்ந்து கால்களின் இடைவுக்குள் புகுகின்றன.
‘என்ன் விடியக்காத்தாலை புலம்பிறியள்? இஞ்சே ருங்கோ. தாரடா அங்கை. மூத்தம்பி’
‘ம்.ஆய்.முருகா!' கைவிரல்கள் பின்னுப்பட்டவாறு தலைக்கு மேலாக நீள, குமரையரின் கால்கள் இரண்டும் பாய்க்கு மேலாக ஊர்ந்து சாணியால் மெழுகப்பட்ட நிலத்தில் படர்கின்றன.
“அப்பு.சிவனே.முருகா' கையிலிருந்த விபூதிகை நெற்றியில் நன்முக அழுத்திப் பூசிய குமரையர் கை க ள் இரண்டையும் கூப்பி மெளனம் சாதிக்கிருர் .
**வாருங்கோ சாப்பிட." பொன்னுவினுடைய கு ர ல் அவர் அமைதியைக் குலைக்கிறது. வேட்டி முன் தலைப்பை எடுத்துத் திரும்பவும் செருகிய வண் ண ம் அடுக்களையுட் போகிழுர்,
‘என்ன இண்டைக்குத் தீத்தத்துக்கும் விரதம் போலை! என்னவோ உந்த வருத்தத்தோடை. அவன் கண் திறந் தாப் போதும்.'
வாய் பேசக் கால்கள் தாமாகவே மடிந்து நிலத்தில் சப்பாணி கொட்டுகின்றன. கைகள் மெதுவாக அங்கு
வி 10

Page 39
4. விண்ணும் மண்ணும்
கிடந்த பூவரச மிலைகள் இரண்டை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றைக் குத்தி, மனைவி தி ர ட் டி வைத்திருந்த ப ழ ஞ் சோற்றை அதன் மேல் வாங்குகின்றன.
எங்கை பிள்ளையஸ் மூத்தங்கச்சி . டேய், சின்னவா கொண்ணன் எங்கை? . அதுகளுக்கு பள்ளிக்கு என்னம் நேர மாகல்லைப் போலை. அதுகளுக்குப் பழஞ்சோறு குடுக்காதை. உந்தப் பிட்டையும் வைச்சுக்குடு, மிச்சப் பழஞ்சோத்துக்கு நாய் நிக்குது . 6FLDrt'
"அப்பா. . சோதனைக்கு இருபது ரூபா கட்ட வேணும் ப்பா" கைகள் இரண்டையும் பிசைந்தவாறு தாயின் பக்கத்தில குந்துகிருள் வள்ளியம்மை. கால்களை மூடி நின்ற பாவாடை நிலத்தில் நெளிவு வட் டம் ஒன்றைப் போட்டு அவள் பாதங்களை மறைக்கிறது. நெற்றியில் பூசிய வெண்ணிறுக்கிடையில் கரிய திலகத்தின் பிரகாசம்.
“இண்டைக்குத்தானே சம்பளம் பிள்ளை, நாளைக்குக் கொடுக்கலாம்.
பொன்னுவின் இருமல் அவர் நெஞ்சை இடிக்கிறது. ஒவ் வொரு இருமல் ஒலிகளும் ஒவ்வொரு இடிகளாக ஒன்று கூடி நெஞ்சை அமுக்குகின்றன.
கண்களில் கசிவு
பொன்னுவுக்கு வயது முப்பத்தாறு என்ருலும் இளமை முற்றக மறைந்துவிடவில்லை. சிலமாதங்களாக வருத்தத் தால் அல்லற்படும் அவளை நினை க் கும் தே (ா று ம் குமரையருக்கு உலக வாழ்க்கையிலேயே வெறுப்புத்தட்டி யது வீட்டுக்கு நேர் எதிராகக் காணப்பட்ட புடலங் கொடிப் பந்தலில் அவர் கண்கள் பதிகின்றன. . . .
கொடிக்குக் காய்களின் சுமை போதாதென்று இக்காய் களிற் கற்களையும் பிணைத்து அவற்றில் நெளிவும் குறண்ட லும் வராமற் செய்திருக்கிருர்கள். காய்கள் கனப்பதென்று கொடிகள் என்றும் விருந்துவதில்லை. இயற்கையின் துணை கொண்டு தன் காய்களைத் தாங்குகின்றது. இயற்கை மறுத் தாலும் தன்னல் முடிந்த மட்டும் தாங்கிப், பின் கொடி யும் காயுமாகச் சுருண்டு மடிகிறது.

பகற் பொழுது 5
கொடிகளில் எத்தனை வகை !
காய்களிலே எத்தனை வகை !
“டேய். மூத்தம்பி, அந்தப் பிடலங்கொடி வாடப் போகுது கொஞ்சத் தண்ணி ஊத்திவிடு"
*வேலுப்பிள்ளை அண்ணரும் அந்தக் காசைத் த ர ச் சொல்லிக் கேட்டார்."
‘等...... அதுசரி. அந்தக் கொடியிலை கிடக்கிற சா ல் வையை மடிச்சு இந்த ஒலைப் பையிலை வை, நான் இண் டைக்கு வேலை முடிஞ்சதும் அதாலை நல்லூர்த் தீர்த்தத்துக் குப் போட்டு வாறன் .'
* அப்பா நானும் வாறன்.'
‘அண்டைக்கெல்லே போனணுங்கள். நான் போய் பிள்ளைக்குக் கடலை, பலூண், பாவப்பிள்ளை எல்லாம் வாங் கிக் கொண்டு வாறன்."
"இந்தாருங்கோ,...மருந்தும் முடிஞ்சு போச்சு அ. அதைப் பிறகு வாங்கலாம்’
குமரையர் கையை நீட்டி ஒலைப்பையை வாங்குகிறர்.
பொன்னு புன்னகை பூத்த வண்ணம் நிற்கிருள். அவள் நெற்றியிலும் கரங்களிலும் அணிந்திருந்த அனுட்டானக் குறிகள் வெயிலுக்குப் பளிச்சிட்டு மின்னுகின்றன. நெற்றி யின் நடுவே இலங்கும் குங்குமத் திலகம் அவள் சோர்ந்த முகத்திற்குப் பிரகாசத்தைக் கொடுக்கிறது.
ஒலைப்படலையைத் தூக்கித்தெண்டுகிருர் குமரையர்,
நேரம் சென்று விட்டதை அறிந்து இவர் கால்கள் விரைகின்றன. உள்ளத்தில் உதித்தெழும் சில அற்ப ஆசை களும், சிக்கல்களும் ஒன்று கூடி நினைவில் ஒலிக்கின்றன. கால்களின் விரைவிலும் வேகமாக சிந்தனை வேலை செய்கி st) gil.
இண்டைக்கு மத்தியானம் போய்ச் சம்பளம் எடுக் கவேணும். அந்த "வஸ்சை' அவன் 'செக்' பண் ணி வைச்சிருக்கிருணுே. சம்பளத்திலை பிள்ளைக்கு சோதி னைக்காசு இருவது ; கடைக்கும் ஐம்பதோ அறுவதோ தெரியாது ; மனுசிக்கு மருந்துக்கும் ஒரு இருவதெண் டான்ன வேணும். சி, இதென்ன!. என்னவோ காலிலை

Page 40
፳6 விண்ணும் மண்ணும்
பிரண்டு போச்சு. மூத்தவளுக்கு ஒரு சட்டைச்சீலை வாங்கவேணும். அதை நாளைக்குத்தான் வாங்கலாம். இண்டைக்கு நேரமில்லை. வீடும் ஒழுகுது : ஒருக்கால் மேயவேணும். இதுக்கிளை தானுக்கும் எங்கடை பிள் ளையா கோயில் அபிஷேகமும். அதுக்கும் ஒரு பத்தெண் டான்ன சி ! இதென்ன வெய்யில். இந் த மா காய்ச்சிருக்கிற காய். ‘என்ன குமரையாண்ணை, ஒரே யோசனையிலை" * வா வா, இண்டைக்குக் கொஞ்சம் "லே ட் டா ப் போச்சு,’’
பஸ்ஸினுள் நுழைகிருர் குமரையர். *தம்பியாணை, இந் த ஈ இந்தக் குடையை ஒருக்காய் புடி.’ நடுங்கும் குரலுடன் சற்று கூனிய தனது உ ட லை பேஸ்ஸினுள் ஏற்ற முயல்கிருள் கிழவி. அவள் த லை யில் வெள்ளிக்கம்பிகள் போல் ஒடிய முடியுடன் உடம்பிற் சு ற் றப்பட்டிருந்த வெள்ளைச் சேலையும் சேர்ந்து அ வளு க் கு ஒரு பரிசுத்த தன்மையை அளிக்கிறது. பஸ்ஸினுள் இருந்த குமரையரின் வலது கரம் அவர் உணர்வின்றி நீள்கிறது. 'இஞ்சைதாணை ஆச்சி.மெள்ள கவனமாய் ஏறு, என்ன குறியளோடை நல்லூராலையோ?”
‘ஓம் தம்பி, ஒருக்காய் அவன் ரை வாசலுக்கு வெய்யி லுக்கு முன்னம் போவ மெண்டு போட்டு’
குமரையர் உள்ளத்தில் எழுந்த தீக்குழம்பின் அனற் சுவாலை வெளியிற் பெருமூச்சாக வருகிறது உள்ளம் வேத னையின் வெம்மை தாங்க முடியாமல் கண்கள் கலங்குகின் றன. பொன்னு கண்களிற் தோன்றித் தோன்றி மறை கிருள். கை தாமாகவே ‘கோணை’ அமுக்குகிறது, குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கிறது.
**தம்பி உண்ணுணை என்னையந்த வயிரவர் கோயிலுக்கு அங்காலை கிடக்கிற கடைக்கு நாலு வீடு தள்ளிக் கிடக்கிற வீட்டுக்கு முன்னலை இறக்கிவிடு.' கிழவியின் குரலிற் பதற்றம். பஸ்ஸினுள் இருந்தவர்கள் நகைக்கிருர்கள்.
‘அப்ப வாறன் தம்பி.” கைகளும் கால்களும் நடுங்க பஸ்ஸை விட்டு இறங்கித் தெருவில் நகர் கிருள்.

பகற்பொழுது ፲፲
‘எட, இந்த மனுசி குடையை விட்டிட்டுப் போகுது. இனேய், ஆச்சி இந்தாணை குடையை விட்டிட்டுப் போருய்.' ஆசனத்தில் இருந்தவாறு குடையை ஜன்னல் வழியாக நீட்டுகிருர் குமரையர். மு கத் தி ல் என்றுமில்லாத பெருமிதம்.
'ஐயோ கடவுளே, உனக்குப் புண்ணியமுண்டு தம்பி.' குடையை வாங்கிய கிழவி பொக்குவாய்ப் புன்னகை சிந்த அங்கிருந்து விலகுகிருள்.
sk 米 米
அருச்சனை முடித்துக் கொண்டு முகப்பில் வந்த குமரையர் கண்கள் தனக்கு நேரே எழுந்து உயர்ந்து நின்ற சப்பறத்தின்மேல் படர்கின்றன. கைகள் காக்கிச் சேட்டினை அணிவதில் முனைகின்றன. வாய்க்குள் தேவார மொன்றை முணுமுணுத்தவாறு சப்பறத்தை நோக்கி நகர்கிருர். அங்கு வரிசையாக ஒலைப்பெட்டிகளுடன் உட் கார்ந்திருந்தவர்கள் மீது அவர் பார்வை மாறுகிறது.
ஒன்றுக்கு உடையில்லை.
ஒன்று அரை நிர்வாணம்.
குழந்தைகள் ; முதியோர்கள் ; ஆண்-பெண்.
'அய்யா அம்மா புண்ணியமுண்டுங்க, அய்யா அம்மா...'
குரல்- ஒன்றல்ல, இரண்டல்ல.
'டாங்ட டாங்.. டாங்.. டாங்...'
குமரையர் கண்கள் தனக்கு எதிரில் உயர்ந்து எழுந் திருந்த கோபுரத்தை நோக்குகின்றன. சட்டைப் பையுள் கையை விட்டு அதனுட் கிடந்த சில்லறையை எ டு த் து அருகில் இருந்த சிலருக்குப் பகிர்ந்து போடுகிறர். கையில் இருந்த மிகுதி பத்துச் சதக் குத்தியை பையுட் திணித்த வாறு அங்கிருந்து தீர்த்தக் கேணியை நோக்கி ஜனக் கும்ப லுக்கு ஊடாக விரைகிருர்,
எதையோ மனதில் திடுகுறியாக நினைத்துக் கொண்டு கையை மறுபையுள் விடுகிருர்,
உள்ளம் படக்கென இடித்துவிட்டு சில, விஞ டி க ள் உணர்வின்றி மயங்குகிறது.

Page 41
8 விண்ணும் மண்ணும்
சிலையாக நிற்கிருர், இருதயம் அற்ற நிலை கொட்டப்பட்டியும், சம்பளமும் ? உணர்வு எதையெதையோ எண்ணி அமைதியாக குழறு கிறது. நிமிடங்கள் விரைகின்றன.
''. . . . . . l-. I'll fhill . . . . . . L-sT fol. . . ... டாங். “பலூண். பலுரண்.பலுரண்' சிரிக்க எத்தனித்த அவர் முகத்தில் பலவித உணர்ச் சிகள்.
கைகள் இரண்டையும் சட்டைப் பைகளுட் செலுத்தி எதையோ தேடுகிருர் கையில் வந்த பத்துச் சதக்குத்தியை ஒரு முறை சுண்டி விட்டுக் கை கோலி ஏந்துகிருர் .
'ஏய், இந்தா ஒரு பலூண் தா'
பலூனை வாங்கிக் கை பைக்குள் அமுக்குகிறது. கழுத் தில் அலங்கரித்த சால்வையை இடுப்பில் வரிந்து கட்டுகி முர்:
கால்கள் நகர்கின்றன.
ஆதவன் தன் கரங்களிற் செம்மையுடன் குளிர்மை சிந்த மறைந்து கொண்டிருக்கிருன் அவனிடத்தில் கடமை முடிந்த பெருமிதம் அவனை நம்பி வாழும் உயிரினங்கள் தமது உடல்களை அசைத்து மகிழ்கின்றன, அந்த மகிழ்ச்சி யிற்ருன் எத்தனை இன்பம்.
குமரையர் வீட்டினுள் நுழைகிருர்.

67
செம்பியன் செல்வன்
பூவரச மரங்களிலிருந்தும், தென் னேலைகளிலிருந்தும் மழை த் துளிகள் சொட்டிக் கொண்டிருக்க.
துளிர்கள் மெல்லிய கதிரொளியில் பச்சைச் சுடராக ஒளிர்கின்றன ! .
அவன் துயில் கலைந்து வெளியே வரும்போது விடிந்து நீண்டநேரமாகி விடுகின்றது. உடலை குளிருக்கு அடக்க மாக போர்வையால் மூடிக்கொண்டு. இரவு நுளம்புக்காகவும், குளிருக்காகவும் எரிந்த 'கணப்புச் சட்டியில் கிடந்த *உமிச் சாம்பலை" எடுத்து பல்லை விளக் கியவாறு ‘முற்றத்தில் காலடி பதிக்க. ஈரநிலத்தில் பாதங்கள் 'பூ'வின் தன்மையில் மிருதுவாகப் பதிகின்றன. முற்றம் சற்றுத் திட்டியானபடியால் மழையில் மணல்க்ள் கழுவப்பட்டு வெண் மணல்களாகச் சிரிக்கின்றன. தெருத் தட்டிப் படலையைத் திறந்து வெளியே வருபவன் மனம் கலங்குகின்றது.
அவனது வீட்டிற்கும், தெருவிற்கு மிடையே ஒரு பரந்த பள்ளமான நிலப்பரப்பு. கோடையிலே அப்பள்ளத் தில் பல ‘குடும்பங்கள்' வந்து குடியேறி விடும். மாரியிலே மழைவந்து பள்ளம் நிரம்பிவிட்டாலோ.
79

Page 42
80 விண்ணும் மண்ணும்
w அவர்கள் தெருவின் கரையோரமாக குடியேறி. அவர்கள் குழந்தைகளுக்கும் வாகனங்களுக்கு மிடையே ஏற்படும் கண்ணும்பூச்சி’யாட்டங்களும்.மரண ஒலங்களும்.
பள்ளம் குளமாக மாறி, குடிசைகளின் ‘முகடுகள் ஒடங்களாக மிதக்கின்றன. தூரத்தே.
எண்ணெய் மில் முதலாளி சிவசங்கரம்பிள்ளையின் *கல்வீடு கம்பீரமாகவும், தலைமுழுகிய குமரிப்பெண்ணின் மோகன லாவண்யத்துடனும் மின்னுகின்றது.
* தம்பி !. நீ முகத்தை களுவிட்டியெண்டா கெதியா வாவன். நான் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக் கிறது !’-தாய் பாக்கியத்தின் குரல் நீரில் விழுந்த கல்லாக நினைவு அலைகளைக் கலைத்துவிட.
அந்த ஒசை அவன் காதில் படைபடையாக வந்து, பலமாக மோதுகின்றது.
‘சம்பளத்தை குறைக்காதே !’
‘எட்டு மணி நேரம் வேலை”
* வர்கக பேதம் ஒழிக !”
* வாழு, வாழவிடு !’
‘ஒகோ !. பழையபடி எண்ணை மில்லில் வேலை நிறுத் தம் வந்துட்டுது போல. இவர்களின்ர பிணக்குகள் எப்ப தான் தொலையுமோ ?. சமரசமே ஏற்படாதோ ?. எல் லாரும் மனிதர்கள் தாமே ? . ஏன் இவர்களிடையே இந்த வர்க்க பேதங்கள் எல்லாம் 1.'
*மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது ம னி தர்களின் உணர்வுகளல்ல, சமூக வாழ்க்கையே மணி தர்களின் உணர்வுகளை நிர்ணயிக்கின்றது எ ன் பது, நிதர்சனமாகின்றதா ?."
2
அவசரம் அவசரமாக அடுக்களைக்குள் நுழைகின்றன் அவன். பாக்கியம் பெரிய பனைஓலைப்பெட்டி ஒன்றிற்குள் இடியப்பத்தை நிறைய அடுக்கிவிட்டு, பெட்டியின் மூலையில் ஒரு கிண்ணத்தில் "தேங்காய்ப்பூ சம்பலை நி  ைற த் துப் பதித்து கிண்ணத்தில் சின்னஞ் சிறு கரண்டி ஒன்றையும் செருகிக் கொண்டிருக்கிருள்.

வர்க்கங்கள் 8.
அடுப்படியின் மூலையிலே அடுத்த நாளுக்காக ‘அ ரி சி’ நனைகிறது. இன்னெரு பாத்திரத்தில் உளுந்து' தண்ணி ரில் ஊறி உப்பிக்கிடக்கிறது !. சிறிது நேரத்துக்கு மு ன் பயன்படுத்திய அடுப்படிச் சாமான்கள் நாலாபுறமும் சித றிச் சித்திரம் தீட்டுகின்றன !.
அவன் தாயின் முகத்தையே உற்றுப் பார்க்கிருன்!. அடுப்புத் தின்றதால் முகம் காய்ந்து கருகி. முகத்திலே அங்குமிங்குமாக கரிக் கோடுகள். வியர்வைகள் அக்கோடுகளை அழிக்க முயன்று கிடைத்த தோல்வியில் முகத்தில் வாய்க்கால் கிழிக்க.
'அம்மா. அம்மா !. எனக்காக எ ப் படி எல்லாம் கஷ்டப்படுகிருய். நீ இப்படி உழைத்து, உருக்குலைந்து போக நான் எப்படி அம் மா அமைதியாக இருந்து படிக்க முடியும். இப்படியும் ஒரு படிப்பா ?. நான் வேலை தேடிப் போகிறேன் என்ருலும் விடுகிறயில் லேயே. எனக்கென ஒரு கூலிவேலையாவது கிடைக் காமலா போய்விடும் !. *என்ன ராசா அப்படி பாக்கிருப் ?.’ *ஒண்டுமில்லையம்மா...நீ எத்தனை நாளைக்குத்தான் இப் படி உழைக்கப் போகிருய் ?.
*உனக்கெல்ல இந்த வீட்டுக் கவலை வேண்டாமெண்டு சொன்னஞன். நீ பேசாம படி, அது எனக்குப் போதும்!." கண்டிப்பில் கனிவு உருகுகிறது.
*சரி...சரி. நீ இப்ப சாப்பிடப் போறியோ. பேந்து சாப்பிடப் போறியோ ?.’
*உனக்கென்னத்துக்கு வீண் கரச்சலை. நான் இப்ப சாப்பிட்டுட்டா. உனக்கும் அடுப்படிக்கவலை தொலையும். நான் இப்ப சாப்பிடாட்டி..?நான் சாப்பிடலியே எண்டு, வியாபாரத்தைக் கூட முடிக்காம வந்திடுவாய். நான் இப் பவேசாப்பிட்டு விடுறன் !.
‘'நீ நல்லாத்தான் பேசப் பழகிட்டாய்.1'- பீங்கான் தட்டில் இடியப்பத்தை எடுத்து வைக்கிருள்.
‘'நீ சாப்பிட்டுக் கொ ன் டி ரு !. நான் ஒருக்கா முகத்தை களுவிக் கொண்டு வந்திடுறன் !...”
“gfflub Dr P...” --மனம் சிலந்தியாகி இழைகின்றது !.
GS) lil

Page 43
82. விண்ணும் மண்ணும்
‘இஞ்சேரும் உங்க என்ன செய்யிறீர் ?."
"ஏன் இப்ப. உங்களுக்கு என்ன ஏதும் வேணுமே ?.' *நான் ஒருக்கா பஸ்காலை'க்கு போட்டு வா ற ன்.
உவன் தம்பி எங்கபோட்டான் !. காணவில்லையே'
‘வெளியில விளையாடுகிருன் போல கிடக்கு. நா ன் கூப்பிடவே !...”
‘வேணும்.வேணும்.விளையாடுற பிள் ளை  ைய ஏன் குழப்புகிறீர் ?. நான் இண்டைக்கு இரவைக்கு வரக் கொஞ் சம் சுணங்கும். நீர் எனக்காக முழிச்சுக் கொண்டிராதே யும் என்ன. அப்ப நான் வரட்டே !...”
*ஏன் இப்ப தானே வந்தனிங்க. கொஞ்சம் இருந்து ஆறி அலம்பிப் போறதை விட்டுட்டு. அ ப் படி என்ன பாச்சல்...!"
'இல்லைப் பாரும். இண்டைக்கு ஏதோ தொழிலா ளர் சம்பளம் காணுதெண்டு "ஸ்டிரைக் செய்யப் போயி னம் போல இருக்கு. உமக்குத்தான் தெ ரி யு மே நான் உந்த தொழிலாளர் யூனியனில் காரியதரிசியாக இருக்கிற தால் எவ்வளவு காரியங்களை நான் பாக்கவேண்டியிருக்கு எண்டு. .'
*நீங்க எப்ப உந்த நாசமாப்போற யூனியனில சேர்ந்தீங்களோ. அப்பவே அரை உடம்பாய் போனிங்க!. உங்களுக்கு ஏன் இந்த வீண் கரச்சல் எல்லாம். நீங்க பேசாம இருந்திட்டா வேற யாராவது உந்த காரியங் களைப் பாக்க மாட்டினமே !.
**இப்படி ஒவ்வொருத்தரும் சொல்லிட்டா, தொழிலா ளரின் நலத்தை ஆர் கவனிக்கிறது : எண்டு நீர் சொல் லுமன் .'
'நீங்களும் உதில சேர்ந்துதான் நல்லாக் கதைக்கப் பழகிட்டீங்க!...”
--நழுவி விழும் தனது காற்சட்டையை ஒரு கையால் இறுகப் பற்றி தூக்கிப்பிடித்துக் கொண்டு, திறந்தமேனி யுடன் அவன் நுழைகிருன்.
‘இதென்னடா கோலம். மேலெல்லாம் புழுதியாக் கிடக்குது. தெருவில விளையாடினியோ!. ஒரு சட்டையை போட்டுக் கொண்டு போய் விளையாடக் கூடாது ?. சரி. சரி.அம்மாட்ட சொல்லி மேலைக் களுவு. என்ன நான் போட்டுவரட்டே .'?

வர்க்கங்கள் 85
*அப்பா !. வரேக்க எனக்கு 'சொக்கா’ வாங்கி வாறியா ?.'
"ஓ !.'--சிரித்துக் கொண்டே வெளியேறுகிருர், 米 3ද 3ද
விடிவிளக்கு இருளை மென்று ஜீரணிக்க முயல.. ஒளிச் சுடருக்கு அஜீரணவாதியின் அவஸ்தை.
*அம்மா !. அப்பாவை ஏன் இன்னும் காண்ேல்ஸ் 1.
s
**அவர் வருவார் !. நீ பேசாம நித்திரையைக் கொள். அப்பா வந்ததும் நான் எழுப்புறன் !.’,
‘அப்பா எனக்கு 'சொக்கா 1 வாங்கி வருவார் இல்லீம்மா 1. உனக்கு ஒண்டு. அப்பாக்கு ஒண்டு. மிச்ச
மெல்லாம் எனக்குத்தான் !.’
‘ஒமடா கண்ணு ! பேசாம நித்திரையைக் கொள் !" -அப்பா வாங்கிவரும் 'சாக்லெட்'டின் சுவையின் லயிப்பில் விடிய எழும்பும் போது வாயினிக்க எழும்பும் நினைவில் உறங்கி விடுகிறன்.
இருவருமே தம்மையறியாமல் அயர்ந்து செல்லும் பாக்கியத்துக்கு திடீரென விழிப்பு கண்டுவிடுகிறது. மனம் ஏனே வேதனையால் பிழியப்படுகிறது. “.அம்மா. பயம்மா.இருக்கும்மா..."என்னைப்பிடிச்சு. இறுக்கிப் பிடிச்சுக் கொள். அப்பா. சொக்கா. எங்க போறே. பயம்மா..!"
--அவன் நித்திரையில் புலம்புகிருன்... --பயத்தால் மேனி விதிர்த்து, வியர்வையில் மூழ்கிக் கிடக்கிறது. அவள் மெதுவாக தட்டி எழுப்ப.
'அம்மா !. '--ஆவேசத்துடன் பாய்ந்து, பயத்தால் அவளைக் கட்டி அணைக்கிருன்.
'பயப்படாதேடr. குஞ்செல்ல. கெட்டகனவெதும் கண்டியே..!' - என்று அவனைத் தேற்றுபவள் அவன் நெற் றியில் திருநீற்றை அள்ளி வந்து பூசுகின்ருள்.
அவனை மெதுவாக படுக்கையில் கிடத்தி, அவன் முதுகை பரிவுடன் தட்டித்துரங்க வைத்துக் கொண்டிருக்கையில்... . தெருப்படலைப்பக்கம் நாலைந்துபேர் கதைக்கும் ஒசை ! . 'மெதுவா. மெதுவா. வாங்க ! . சேருக்கிடக்குது. யாராவது கூப்பிட்டுச் சொல்லுங்கோவன். முளிச்சுக்
வி 12

Page 44
84 விண்ணும் மண்ணும்
கொண்டு நிக்கிறீங்களே !. அவசரப்படாம.விஷயத்தை ஆறுதலா சொல்லுங்க. அதுகள் பயந்திடப் போதுகள் !...”
--பாக்கியத்தின் நெஞ்சம் புழுவின் இறக்கைகளாக அடித்துக் கொள்கிறது !
“வீட்டுக்காரர். வீட்டுக்காரர்.!” --இரவின் அமை தியை பிளந்து கொண்டு யாரோ கூவுகின்ருர்கள்.
*யாரது ? . " பாக்கியம் பயத்தைமென்று கொண் டே கேட்கின்ருள்.
* வீட்டுக்காரர் ஒருக்காவந்து படலை"யைத் திறவுங் கோவன்.ஒரு முக்கியமான விசயம் !...”*
--பாக்கியம் பயத்துடன் துரங்கிக் கொண்டிருக்கும் கந்தசாமியை எழுப்பி, அவன் கையைப் பற்றிக் கொண்டு வெளியே வந்து படலையைத் திறக்க--நாலைந்து பேர் நிற்கிருர்கள் !
- தொண்டை ஏனுே கரகரத்து. *.வந்து உங்கட அவரை கொண்டு போய் ஆஸ்பத் திரியில் வைத்திருக்கிறம்...!’’
‘ஏன். அவருக்கு என்ன நடந்தது..?’ -- *. அவருக்கு இண்டைக்கு நடந்த ‘ஸ்டிரைக்’கில் ஏற் பட்ட தகராறில தலையில் 'காயம்’பட்டு. யாரோ பாவி கள் எறிஞ்ச சோ டாப் போத்தில் ஒண்டு ...!"
‘என்ன ? ..
“ஐயையோ . என்ர ரா சாவுக்கு என்ன. எப்படி இருக்கெண்டு சொல்லுங்கோவன். !' --பாக்கியம் பத றித்துடிகAருள். அவன் மிரள மிரள விழித்தபடி.
*ஒண்டுமில்லைப்பிள்ளை. நீயேன் வீணுக கவலைப்படு
கிருய். கொஞ்சம் ரெத்தம் போட்டுது. வேருெண்டு மில்லை ! ...'
*அவருக் கொரு வேளை உயிருக்கேதாவது..?'
“என்ன விசர்க்கதை கதைக்கிருய் பிள்ளை. அப்படி ஏதாவது நடக்க நாங்க விட்டிடுவமே !. எங்களில ஒரு வரை அதுவும் பொறுப்பு வாய்ந்த எங்கட ந ல னை க் கவ னிக்கிறவரை. நாங்க சும்மா வி டு வ மே !. அவருக் கொண்டு நேர்ந்து விட்டால். அது பெரிய கலவரத்தைத் தான் கொண்டுவரும். நீ பயப்படாதையணை பிள் ளை. இப்ப ஆஸ்பத்திரிக்கு போகேலாது. எண்டாலும் ஒருக்கா விசயத்தைச் சொல்லிட்டுப் போவமெண்டுதான் வந்த

வர்க்கங்கள் 85
'நான் இப் அவரைப் பாக்கோணும். அவர் எப்
படி இருக்கிருரோ. ஆண்டவனே 1. முருகா !.. எ ன் ர *தாலிக் கொடி’யைக் காப்பாத்து- உனக்கு தங்கத்திலே தகடடித்துப் போடுறன் !...” - என்று சொல்லிய வாறு இருளில் ஒட முயற்சிக்கும் அவளை
தடுக்கின்றர்கள். அடுத்த நாள்
ஆஸ்பத்திரிக் கட்டிலில் தலை தெரியாதவாறு பாண் டேஜ் போடப்பட்டு அப்பா கிடக்கிருர் . அவரைச் சூழ்ந் துதான் எவ்வளவு பேர்கள். அவ்வளவு பேரும் தொழிலா ளர்கள். அவர்கள் கண்களிலேதான் எவ்வளவு கருணை!. அப்பாவுக்கு நினைவு மீளவில்லை. ஆப்பிரேசன் செ ய் யப்பட்ட அயர்வில் கிடக்கிருர், அம்மா பக்கத்திலிருந்து புலம்பிக்கொண்டு.
அம்மாவை தொழிலாளாகள் தேற்றுகிருர்கள். ஒரு வர் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு, கையிலே "சொக் லேட்டை திணிக்கிருர்,
சொக்கலேட் அவனுக்கு கசக்கிறது. தொழிலாளர்கள் பெருமையடித்துக் கொள்கிருர்கள், *ஸ்டிரைக் வெற்றியாம் ! எல்லாம் அவன் அப்பாவின் முயற்சி தானும், அவரில்லாவிட்டால் ஸ்டிரைக் தோல்வி அடைந்திருக்குமாம் 1.'
அப்பாவின் பெருமையில் -
தொழிலாளர்களின் அன்பு மழையில் இருவரும் நனை கிருர்கள். ஆல்ை.
*சடக் !...”
- இழை மீண்டும் அறுந்து. அவன் நிமிர் கி மு ன். இறப்பு வழியே எலி ஒன்று ஒடிக்கொண்டிருக்கிறது. எதிர் சுவரிலே--
தந்தை அவனைப்பார்த்து சிரிக்கிருர்
சம்பள உயர்வு !
எட்டு மணிநேர வேலை.
தன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கிருரோ ?
ஷ் !. அப்பாடா !. இவ்வளவு நாளும் மழையாக்
கொட்டிச்சு 1 இண்டைக்கு ஏதோ வெயிலா. அகோர மாக் கிடக்குது . காலெல்லாம் பொரிஞ்சு போச்சு 1.'

Page 45
8链 விண்ணும் மண்ணும்
--என்று கூறிக் கொண்டே தனது முந்தானையால் முகத்தை அழுத்தி தேய்த்து துடைத்துக்கொண்டு திண்ணையிலமர் கின்றள் பாக்கியம் ! அடுத்து அவள் கண்கள் வெற்றிலை தட்டத்தை தேடுகின்றன !.
சுவரிலே முதுகைச் சாய்த்து காலை மெதுவாக, சுகமாக நீட்டிக் கொண்டு, வெற்றிலைத் தட்டத்தை அருகே இழுத்து வைத்துக்கொண்டு, பாக்கைத் தறிக்கிருள் !.
அவன் கண்களிலே தாயின் பாதங்கள்.
தார் ரோட்டிலே நடந்து. நடந்து. தீய்ந்தாலும் அங்குமிங்குமாக தார் ஒட்டியிருந்தாலும் அவை பரிதாப கரமாக விகாரத் தன்மையுடன் அவன் கண்களை ஈட்டி கொண்டு கிழிக்கின்றன.
“தொழிலாளர் நலனுக்காக பாடுபடச் சங்கங் கள். யூனியன்கள். எவ்வளவோ தோன்றுகின் றன. ஆணுல். என் அம்மா அக்கா. எட்டு மணி யென்ன..நாள் முழுக்க உழைதது ஒடாகப் போகும் என் அம்மாவுக்காகக உழைக்க பாடுபட நலன் கோர. ஏதாவது சங்கங்கள் .?’
‘அம்மாவுக்காக... எனக்காக...எங்கள் குடும்பத்
திற்காக யார் சங்கமாகவோ. யூனியனுகவோ
இருந்திருக்க வேண்டியவரோ ?. அவர் !.'
"அப்பா !. தொழிலாளர் ந ல னு க் கா க
உழைத்த நீங்கள். எங்களை. என் அம்மாவை
மறந்துவிட்டு போய்விட்டீர்களே !...”
3.
அடுப்பு கொழுந்துவிட்டு எரிகிறது, தீக்கொழுந்துகள் பாத்திரத்தை ராக்ஷச வெறியுடன் தழுவி முத்தம் கொடுக்
கின்றன ! . அந்த வெப்பத்தில் பாக்கியம் மாவறுத்துக் கொண்டிருக்கிருள்.
* அம்மா !” ‘ என்னடா ராசா !. என்ன வேணும் ?.” தலையைத்
திருப்பு:மலே பாக்கியம் கேட்கின்ருள்.

வர்க்கங்கள் 8ሽ
*நான் நேத்தைக்கு சொன்னதை நீ மறந்திட்டியே ! நாளேக்கு சம்பளக்காசு கட்டவேணும். இல்லாட்டி பள்ளிக் கூடத்தால் கலைச்சுப் போடுவினம் எணை!...”
"சே ! . நான் இவ்வளவு நேரமும் அதை மனசார அயத்துப் போயிருந்திட்டன். சின்னக்கடையால வரேக்க *முதலாளி வீட்ட கடன் வாங்கி வரோணும் எண்டு நினைத் தனன். அதுக்குள்ளா ? அயத்துப் போனன்!. ’
*பொறு ! இதை வறுத்துப்போட்டுப் போய் வாங்கி வாறன். ஏன். இப்ப நீயும் எங்கேயும் வெளியால போகப் போறியே ?.'
'இல்லையம்மா ! . ஏன் ?." அப்படிண்டா நீயும் என்னுேட ஒருக்கா வெளியாலவா. காசை வாங்கிக் கொண்டு. ஒருக்கா சங்கக் கடைக்கும் போக வேண்டி இருக்கு ! . போன கிழமைக் கூப்பனும் இன் னும் எடுக்கேல்ல. அப்படியே கொஞ்சம் 'சரக்கு முளகாய்' யும் வாங்கி வரவேண்டியிருக்கு !.
* சரியம்மா ! ...'
冰 ck 米 இருவரும் ‘முதலாளி--சிவசங்கரம்பிள்ளை வீட்டுவாசலில் நிற்கின்றர்கள்.
*எணை பிள்ளை 1 . உங்க அம்மா இருக்கிருவே ?. 'ஒமணை இதில இரு. அம்மாவைக் கூட்டியாறன் ! ...' --என்று சொல்லிக் கொண்டே கந்தசாமியை ஒரக்கண் சூறல் விழுங்கிக்கொண்டே உள்ளே நுழைகிருள் சுந்தரி -சிவ சங்கரம்பிள்ளையின் ஒரே செல்வமகள்.
‘என்ன பாக்கியம். என்ன இந்த நேரத்தில் இங்கால பக்கம்." - என்று கேட்டுக்கொண்டு வருகிருள் மீனுட்சி *இல்லப்பிள்ளை ஒருக்கா சங்கக்கடைக்குப் போ கணும் எண்டு வந்தனுங்கள். அதில ஒருக்கா உங்களையும் சந்திச் சுட்டுப் போ கணும் எண்டு. 9 y
சும்மா கதைவிடாத. என்ன விசயம் ?.’’ என்று கேட் டுச் சிரிக்கிருள் மீனட்சி
*உங்களுக்கேன் பொய்யைச் சொல்லுவான்.கொஞ்சம் கடனுக காசு கேட்கலாம் எண்டு : ..."

Page 46
88 விண்ணும் மண்ணும்
‘ என்ன காசோ !. நல்ல கதை 1. இப்ப என்னட்டை ஒரு செப்பாலடிச்ச காசில்லை. எனக்கே கொஞ்சம் காசு தேவையா இருக்கு. என்ன செய்யலாம் எண்டு முளிச்சுக் கொண்டிருக்கிறன். நல்ல நேரம் பாத்து காசுக்கு வந்தாய் போ !.
'இல்லப்பிள்ளை அப்படிச் சொல்லாத ஒரு இருவது ரூவா தந்தியெண்டா போதும். மாத முடிவிலை தந்திடு றன்.'
*ஏன் இப்ப உனக்கு என்ன அவசரம் அப்படி. இருவது ரூபாவுக்கு ?...'
‘பிள்ளைக்கு பள்ளிக்கூடக் காசு கட்டவேணும்.!'-- அவள் முகம் அந்தக் கஷ்டத்திலும் பெருமிதத்தில் சிலிர்க் கிறது- மழையின்போது எறிக்கும் வெயிலைப்போல.
* ஒ இவனே உன்ர மகன். நல்லா வளர்ந்திட்டான் இப்ப. என்ன படிக்கிருன் ?."
* 'இந்தமுறை எஸ். எஸ். சி சோதனை எடுக்கிறன்!...” --மீனுட்சி முகம் பொருமையால் சுருங்கி, அவள் கண்கள் வெறுப்பால் அவள் மகனை உறுத்துப் பார்க் கின்றன.
'நீயும் இருக்கிறியே மாடுமாதிரி ! - உன்னல எட்டாம் வகுப்பு பாஸ் பண்ண முடியவில்லை. உன்னைவிட குறைந்த வயதுக்காரன் போல இருக்கும் இவனைப்பார் எஸ். எஸ். சி. எடுக்கப் போருண்!...'
“மன்னிச்சுக்சோ பாக்கியம். இப்ப என்னட்டை யெண்டா செப்பாலடிச்ச வெள்ளச் சல்லி கூட இல்லை 1.* 'இல்ல நாச்சியார். அப்படிச் சொல்லக் கூடாது!...” ‘இதென்ன பாக்கியம் காசு இல்லை யெண்டிறன். நான் என்ன மரமே முளைக்கப் போட்டிருக்கிறன் !...”
* பிள்ளையின் ரை படிப்புக் கெட்டுப்போகும் நாச்சியார் --கொஞ்சம் இரக்கம் வைத்து.'
உங்களுக் கெல்லாம் என்னத்துக்கு படிப்பை. பல காரப் பெட்டி தூக்கினதுகளெல்லாம் அரசாங்க உத்தி யோகத்துக்குப் போக எண்டா முடியுமே !...”

வர்க்கங்கள் 89.
*நாச்சியார் !."--பாக்கியம் கூவுகிருள் *வாய் மூடுங்க 1. அனவசியமான வார்த்தைகள் இங்க வேண்டாம். இங்க உங்களிட்ட கடன் தான் கேட் டோமே தவிர சும்மா கேக்கவில்லை. தாறதெண்டா தாங்கோ. இல்லாட்டி விடுங்கோ. அதை விட்டு உங்க ளுக்குத் தேவையில்லாத பேச்செல்லாம் தேவையில்லை.” --அவன் ஆத்திரத்தை பற்களால் கடித்துக் கொண்டு, வெளியெ அமைதியாக பேசுகிருன் ,
*பாரன் பிச்சைக்கார நாய்க்கு எவ்வளவு திமிரெண்டு. என்னைப் பார்த்து ஒருவன் கேக்கிற கேள்வியா ?...'
'யார் பிச்சைக்கார நாய்கள். நீங்கதான். முந்தி சோத்துக்கு கூட வழியில்லாம திரிந்ததை நீங்க மறந்திட் டாலும் நாங்க மறக்கவில்லை. நாங்க பலகாரப்பெட்டி தூக்கினது எண்டு ஏளனமாக சொல்லுறிங்க. ஆணு நீங்க. ஏழைத் தொழிலாளர்களின் பணங்களைச் சு ர ண் டி ச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் திருடர்கள். ஏழைகளிடையே திருடும் பிச்சைக்காரர்கள்....! அவன் ஆவேசமாகப் பே சு
* போடா வெளியே 1.* *.வாம்மா இதில நிக்கிறது கூடப் பாவம்..!' -- அவர்கள் தெருவிலே இறங்குகிருர்கள்.
"ஐயோ!. அப்பா. நீங்க தொழிலாளர் நலனுக்காக பாடு படப் போய். அவர் க ள் வாழ்வை உயர்த்தப் போய். எங்களை . உங்கள்
குடும்பத்தை இன்னும் தாழ்த்தி விட்டீர்களே..!' *. தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உ ங் க ளால் ஒரளவு உயர்ந்திருந்தாலும் உங்கட குடும் பத்தின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு கேவல நிலைக்கு மாறிவிட்டது என்பதை உணர்வீர்களாக ?." - அவர்கள் நடக்கிருர்கள் !

Page 47
ஆசீர்வாதம் அச்சகம்,
32, கண்டி வீதி,
யாழ்ப்பாணம்.
 


Page 48
| | | | }