கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1999.10

Page 1
ஒக்டோபர் : 1999
 


Page 2
A variety of flavours in
"bulk and retail packs. Your favourite Tel: 576265, Sundaes and Coupés.
575498, Yn yr 57.3865. A choice of non-la-Vi Fax: 576265 no sugar Ice Cream.
Carnival Ice Crean Parlour open daily 9.00am to 11.30pm
ZA TUN INDUSTRIAL PROJECTS LTD.
263, Galle Road, Colombo 3. -
i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*ஆடுதல் பாடுதல் சித் தரம் கவியாதியனைய கலைகளில்
உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்
(265)ஒக்டோபர் 1999 பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"
nom gg. Govori gagoru u Loser
இலக்கியப் பதிவு
நீண்ட காலமாகவே நமக்கு ஒரு விருப்பம் இருந்தது. மாத்தளைச் சிறப்பு இதழ் ஒன்றை வெளியிட்டால் என்ன? எனக் கன காலமாக யோசித்துக்கொண்டு வந்தோம். காரணம் பல ஆண்டுகள் பழகியதில் இருந்து பல மாத்தளை இலக்கிய நெஞ்சங்களின் மனஆர்வங்களை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களது இலக்கிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நேரடியாகக் கண்டு நாம் பிரமித்துப் போய் விட்டோம்.
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்த மலர்த் திட்டத்திற்கு உருவம் கொடுக்க முனைந்தோம். எல்லா விவகாரங்களையும் கொழும்பிலி ருந்து எம்மால் செய்துவிட முடியாது என்பதை உணர்ந்துகொண்டோம். நண்பர் எம். எம் பீர் முகம்மது சகல பொறுப்புக்களையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதி தந்தார். உறுதிதந்த பிரகாரம் எம்முடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்தார்.
இந்த மலர் மாத்தளை முழுவதையும் உள்ளடக்கிய மலரல்ல. ஏதோ எம்மால் இயன்றவரைக்கும் ஓர் இலக்கியப் பதிவுக்காக இந்த மலரை மக்கள் கரங்களில் சமர்ப்பிக்கின்றோம். மல்லிகையின் இலக்கியப் பதிவு காலங்காலமாகப் பேசப்படும் என்பது உறுதியாகும்.
இம்மாத்தளைச் சிறப்பு மலர் வெளிவரச் சகல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.
- ஆசிரியர் -

Page 3
ஓர் அறிமுகம்
மாத்தளை கார்த்திகேசு
பல சிறப்புக்கள் வாய்ந்த இலங்கை இரண்டு பகுதிகளாக அமைந்தது. ஒன்று ஓங்கி வளர்ந்த தென்னைகளும், வெண்ணிலவை விரித்தாற் போன்ற மணற் பரப்புடைய கடல்சார்ந்த பகுதி, மற்றது வானளாவிய மலைகளும், குன்றுகளும், வற்றாத ஆறுகளும், செறிந்த காடுகளும் ஒருங்கே கொண்ட LIGI) all IELİı,
பச்சைநிறக் கம்பளமே திட்டுத் திட்டாய் பதித்தது போல் தேயிலை மலைகள் எங்கும் இசையுடன் வளர்ந்தோங்கி உள்ளம் ஈர்க்கும் எழில் காணக் கோடிக்கன வேண்டும் வேண்டும் மஞ்சுதவழ் தோட்டங்கள் கானகங்கள் அலைமுடிகள், தேயிலையின் கம்பளங்கள் கொஞ்சுகின்ற குளிர் தென்றல் கங்கையாறு குரங்காடும் பெருமரங்கள் இனியபூக்கள் அஞ்சவரும் பாதெலங்கள் அருவிக்கூட்டம் அடுக்கடுக்காய் றப்பர் மரம் பறவைகட்டம்
2 3
துஞ்சுகின்ற மலையக இயற்கைக் காட்சி துன்பமெல்லாம் துடைக்கின்ற காட்சி
இவை மாத்திரமா இங்கே இன்னும்
மேகம் வந்து மேகம் வந்து மெல்ல நடக்குது மோகம் கொண்டு மலையின்மீது முத்தம் கொடுக்குது
இத்தனை இயற்கையழகு கொஞ்சும் மலையகத்தின் தலைநகர் கண்டி, உr) கத்தில் வேறெந்த நகருக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு கண்டிக்குண்டு. அத னால்தான் உலகெங்குமுள்ள பெளத்த மதத்தினருக்கு அதிவிசேட புண்ணிய பூமியாக இருக்கிறது. மகான் கௌதம புத்தரின் பிரசித்திபெற்ற பல்லானது (தாது) கோவில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் இடம் இந்த கண்டியே. கண்டி கோவிலில் (தலதா மாளிகை) மிகவும் பிரசித்தமான உற்சவம் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் பெரஹர உற்சவமாகும்.
மலையகத்தின் தலைநகர் கண்டியி லிருந்து திருக்கோணமலை செல்லும் நெடும் வீதியில் பதினாறாவது மைலில் மேற்குத் திசையில் அழகு மலையும், கிழக்கே உன்னாளப் கிரிய மலைத் தொடரும், வடக்கிலும் தெற்கிலு
 

ப்தியா, பலக்கடுவா மலைத்தொடர் கரும் அரண் செய்ய அதன் பள்ளத் நாக்கில் அமைந்திருக்கும் நகர்தான் "பன்னகாமம் என்னும் மாத்தளை நகர் பரந்து வானளாவ நீண்டு உயர்ந்து ஓங்கி, பச்சைப் பசேலென
வி நறு ஓடி வரும் ஆறுகளும் ாத்தளையை அழகு செய்கின்றன. ங்களாவர். தமிழர், முஸ்லிம், பரங்கியர் ன்ற (உள்ளுராட்சி கணக்கெடுப்பின் டி சிங்களவர் 71) வீதம் தமிழர் 17.3 தம் முஸ்லிம் 0.7 ஏனையோர் 05) அனைவரையும் தன்னகத்தே கொண்டு ல்லோரும் ஓர் இனம் என்ற இன மத ஒற்றுமையு ண் இன்பமாக வாழும் இடமாகத் திகழ்வது மாத்தளை.
எங்கும் பகமை, எங்கும் இனிமை டர்ந்த காடுகள், பரந்த விளைநிலங் ள், இனிய நீரோடைகள் இத்தனையும் காண்டது மாத்தளை மலைகள் ன்றோடு ஒன்று கூடிக் குலவும் காட்சி ம், கார்முகில்கள் மலைகளின்மீது வழ்ந்து விளையாடுவதும் இங்குதான், துகங்கை ஆறு இந்நகரை வலம்வந்து அழகுபடுத்துகின்றது. கொக்கோவும், ாவும், பலாவும் குழைந்து மகிழ்ந்து இங்குதான், றப்பரும் தயிலையும் தேக்கும் பாக்கும், மிளகும் ஏலமும், கிராம்பும், பஞ்சும் இந்நகரை சுற்றி குவிந்து கிடக்கின்றன. இனிய நறுமணத் தென்றல் வந்து சைக்கும் பசுமணனிக்கதிர்கள், தின்னத் தவிட்டாத தீஞ்சுவைக் கனிகள், னங்கமழும் பூஞ்சோலைகள் இவை பாவும் இந்நகர் வரும் மக்களை இன்பத்தில் ஆழ்த்துகின்றன.
ாத்தளை என்ற பெயர்,
மாத்தளைக்குப் பன்னகாமம் என்ற |ழம் பெயருண்டு. பன்னகாமம் என்ற
பெயரை ஆராய்ந்து பார்த்தால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்கள் இப் பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்திருக்க வேண்டும் என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. ஆறுகள், மலைகள், குன்றுகள், கிராமங்கள் ஆகியவற்றிற்கு வழங்கும் தூயதமிழப் பெயர்களே இந்த உண்மைக்குச் சான்றாக உள்ளன. பொலனறுவையை ராஜதானியாகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் பன்னகாமம் எல்லை பாகவும் இருந்ததோடு கண்டி ராச்சியத் தின் எல்லையாகவும் பன்னகாமம் என்னும் மாத்தளை இருந்துள்ளது. ஆயினும் அக்காலத்தில் இவ்வூருக்கு "மகாதளாவ" என்று பெயர் இருந்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் சுற்றிலும் மலைத் தொடர்கள் வளைந்து சூழ்ந்த பெரிய சமவெளி என்பதாகும்.
பாண்டுகாடபனின் மாமனான கிரி கந்தசிவா என்ற இளவரசன் இவ்வூரில் வசித்திருந்ததாகவும் நம்பப்படுகிறது. மாமன் என்பதற்கு "பாத்துள" என்று சொல்லப்படும். இந்தச் சொல்லில் பாத்தளை என்ற பெயர் ஏற்பட்டிருக்க லாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இன்னொரு விதமாகவும் நம்பப்படுகிறது. சோழர்கள் இலங்கையைத் தாக்கிய போது கஜபாகு மன்னன் அவர்களைப் பழி வாங்க விரும்பினான். அதனால் அவன் சோழர்களின் மண்ணிலேயே அவர்களுடன் போரிட்டு வென்று அதில் தோற்ற தமிழ்ப் போர்க் கைதிகள் சிலருடன் இலங்கை திரும்பினான். அந்தக் கைதிகளை அவன் இலங்கை யெங்கும் பல இடங்களுக்கும் அனுப் பிக் குடியமர்த்தினான். அவர்கள் அதிக பாகக் குடியமர்ந்த இடம் மாத்தளைப் பகுதியாதலால் அவ்விடம் "மகாதளே”

Page 4
(பெருந்தளக்கட்டு) என்றழைக்கப்பட்ட தாம். பெரும் தொகையான மக்கள் கூடியுள்ள இடத்தை தளக்கட்டு என்று தமிழில் கூறுவதும் உறுதிப்படுகிறது.
கி.பி 12ம் நூற்றாண்டில் சோழ மன்னர் இராஜ இராஜனின் புதல்வன் இராஜேந்திரன் பொலனறுவையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் மாத்தளைக்கு வடக்கே நாலந்தை கணவாய் வழியே வந்து தமிழ் மக்கள் மாத்தளையில் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டி ராச்சியத்தின் எல்லையாகவும் மாத்தளை இருந்ததால் கண்டியைத் தமிழ் அரசர்கள் ஆண்ட காலத்திலே யும் தமிழர்கள் மாத்தளையில் குடியேறி இருக்கலாம். எது எப்படியாயினும் தொழில் நிமித்தம் வந்த தொழிலாளர்க ளில் பலர் தோட்டப் பகுதிகளுக்கு மட்டுமன்றி மாத்தளையிலேயே தங்கி விட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து வியாபார நோக்கத்தில் நாட்டுக் கோட்டை செட்டிமாாகளும், முஸ்லிம்க ளும் வந்து சேர்ந்து தொழில் நடத்தி னார்கள். நாலந்தை கணவாய் வழியா கவே மன்னார் முதலிய ஊர்களில் இருந்தும் பிற்காலத்தில் வடமத்திய மாகாணத்தில் இருந்தும் யாழ்ப்பாணத்தி லிருந்தும் வர்த்தக நோக்கமாக மாட்டு வண்டிகளில் தமிழர்கள் முஸ்லிம்கள் வந்து ஆங்காங்கே நிலைத்து வாழ்ந்த பழங்குடிகளும் உண்டு.
மாத்தளையிலும் அதன் சுற்றுப்புறங் களிலும் இந்திய தமிழர்கள் பெரும் பாலும் வாழ்ந்து வந்ததனால் தென்னிந் திய கலை கலாச்சாரமும் முதன்முத லில் இங்குதான் வேரூன்றியது.
தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலே யரின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக் காக அழைத்து வரப்பட்ட தமிழ்
4
م. سی...-.با
மக்கள், மன்னார் இறங்கு துறையிலிரு ந்து வனவழியாக நடந்தே மாத்த ளையை அடைந்தனர். அவ்வாறு வந்த வர்கள் தங்கி இளைப்பாறுவதற்கு தொட்டகமுக என்னும் இடத்தில் ஒரு தங்கு மடம் அமைந்திருந்தது. அதன் அடித்தளம் இன்றும் காண்படுகிறது. இவ்வாறு இந்த மடத்தில் தங்கி களைப்பு நீங்கப் பெற்ற தமிழ் மக்கள் மலைநாட்டுத் தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலர் மாத்தளையிலேயே தங்கியும்விட்டனர். இவ்வாறு தங்கிய மக்கள் தமது கலை கலாச்சார அறிவு சார்ந்த விடயங்களி லும் ஈடுபாடுடைய வர்களாகவும் காணப்பட்டனர்.
மாத்தளையில் தமிழ்க் கல்வியின் தாபகர் எனப் போற்றப்படத்தக்கவர் அமரர் கந்தசாமி ஆவார். இவர் 1927ல் திருமதி பாக்கியம் பேரால் அமைக்கப் பட்ட மகளிர் வித் தியாலயமான பாக்கியம் வித்தியாலயம் மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு சேர் பொன் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மாத்தளை மாவட்டத்தில் பெளத்தர்களுக்கு அலுவிகாரையும் இந்துக்களுக்கு முத்துமாரியம்மன் தேவஸ்தானமும், கிறிஸ்தவர்களுக்கு வஹக் கோட்டை தேவாலயமும் ,
முஸ்லிம்களுக்கு கோட்டகொடைப்
பள்ளிவாசலும் அமைந்துள்ளன.
மாத்தளை மாவட்ட இலக்கிய முயற் சிகைைள நோக்கும்போது முருகேசி பிள்ளை என்பவரால் மாத்தளை முத்துமாரியம்மன் பெயரால் பாடப்பெற்ற பதிகம், அந்தாதி, ஊஞ்சல் என்ற நூலே முதல் நூலாகும். இதன் முதல் பதிப்பு 1922 இல் வெளிவந்துள்ளது

அடுத்து 1931 இல் மாத்தளை உடுப்பி லியைச் சேர்ந்த எஸ்.எஸ்.சிவனாண்டி 1ன்பவரால் இந்து சமயச் சார்பானதாக பஞ்சமாபாதக விளக்க வினாவிடை எனும் பெயர் கொண்ட 112 பக்கங்க ளைக் கொண்டதாக அமைந்த நூலா (சம். இவர் உடுப்பீலி பூரி சச்சிதானந்த பேரின்ப மாதவர் சங்கம், உடுப்பீலி
தமிழச் சங்கம் என்பவற்றின் சொற்பொழி வாளராகவும் திகழ்ந்தவர்.
வற்றாத ஜிவநதிகளையும் நீருற்றுக் களையும் பெறுமதி மிக்க இரத்தினக் கற்களையும் கொண்டு காணப்படுகின்ற மாத்தளையின் வரலாறு புகழ் பூத்ததா கக் காணப்படுகின்றது.
ஹெரோயின் சமுகம்
கெகிறாவை ஸ்ஹானH -
தம்பி நீ யார்? உலகில் அழகிய தோற்றததிற்கு ஏங்குவோர் பலரிருக்க அழகான தோற்றத்தில் அப்செட்டாய் வந்தவனே É um i?
அதிகம் படித்ததனால் பித்துப் பிடித்தவனா? கற்றோர் நிறைந்த குடும்பத்தில் கல்லாததன் காரணமாய் சித்தம் இழந்தவனா?
மருத்துவக் கல்லூரி மாணவனா? உடலறுத்துக் குருதிக் குழாய் தேடும்
செய்முறைப் பரீட்சையில் கோட்டை விட்டவனா?
ஆசிரியர் கலாசாலையில் சகாவைக் காப்பாற்ற சகட்டு மேனிக்கு நடித்ததில் உன்மத்தம் பிடித்தவனா?
பெற்றோர் அலட்சியத்தால் பேதலித்துப் போனவனா? போதைவஸ்துப் பிரியனா?
இன்டர்நெட் ரசிகனா? அன்புக் காதலியை விபத்தில் இழந்ததனால் பரிதவித்து பைத்தியம் ஆனவனா?
இலங்கை நகர வீதிகளில் கொடூர குண்டுத் தாக்குதலில் மனிதத் துண்டுகள் சிதறும் அவலத்தை நேரில் கண்டதனால் மனநோய் கொண்டவனா?
ராஜகருணா இல்லத்தில் கருணை வேண்டி நின்ற தம்பி! மென்ட்டலாய் இருப்பதுவும் நல்ல முன்மாதிரிதன் உன்வழியைப் பின்பற்றித் தொடர்ந்து வருவதற்கு இங்கே ஒரு தலைமுறை தயாராய் இருக்கிறது!
பி.கு. 99.08.06 அன்று மனநோப் மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜகருணா அவர்களது கொழும பு இல் லத் தல சந தத் த இளைஞனுக்காக எழுதப்பட்டது.
:::<< --><.:ჯ ჯაჯა--><

Page 5
மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே நாம் அதன் சுவைஞர்களாக இருந்து வருகின்றோம். மாத்தளைச் சிறப்பு மலர் மலர்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்
VEGE了A寅麗AN HQ『EL
சுத்தமான, சுவையான, சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகளுக்கு கொழும்பு மாநகரில் பிரசித்தி பெற்ற ஹோட்டல் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கத்தக்க பெயர்
கோல்டன் கபே
98, பாங்ஷால் வீதி, கொழும்பு - 11 தொலைபேசி: 324712

(8ờEFITảg, சுந்தரம்
கே கோவிந்தராஜ்
கண்டியிலிருந்து அலவத்துகொட வழியாக அங்கும்புற செல்லும் மூன்று மணி நேர பஸ்ஸில் ஏறி மூலையில் அமர்ந்து கொண்டேன்.
பஸ் புறப்பட்டுத் திரும்புகையில் தோளில் ரவலிங் பேக்கும், வாயில் சிகரட்டுமாக பஸ்ஸை நிறுத்தி ஏறிக் கொண்ட்ான் சுந்தரம்.
சுந்தரமும் நானும் ஒரே தோட்டம் தான்! ஒரே லயம் தான்! அடுத்தடுத்த காம்பறாதான்!
அவன் கொழும்பில் ஆரிய பவானில் சர்வராக வேலை செய்வது என்னைத் தவிர தோட்டத்தில் வேறு யாருக்கும் தெரிய ஞாயமில்லை.
கந்தோர் ஒன்றில் பணியாற்றும் நான், அநேகமாக வாரத்தில் இரண்டு நாட்க ளாவது அந்த சைவக் கடையில் சுந்தர த்தைக் கண்டு குசலம் விசாரித்துக் கொள்வதுண்டு.
"அண்ணே. நா சைவக் கடையிலே வேலை செய்யிறேன்னு தோட்டத்தில யாருக்கிட்டேயும் சொல்லிறாதீங்க.” என்பான்.
அப்படிச் சொல்வதனால் எனக்குப் பெரிய நன்மை எதுவும் ஏற்படுவ தில்லை. நான் எதைப்பற்றியும் வாயே
திறப்பதில்லை என்பது சுந்தரத்துக்குத் தெரியும்.
"பிழைக்கத் தெரியாதவன்” என்று என்னைப் பற்றிப் பலரிடம் அவன் சொல்லியிருந்ததும் எனக்குத் தெரியும்.
புறக்காடு தோட்டத்திற்கு பஸ் போய் சேர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகும். அதாவது மாலை நான்கு நான்கரையாகும்.
கண்டியிலிருந்து போகும் பஸ் புதுக் காட்டு கொழுந்து மடுவத்தை தாண்டி அடுத்து வரும் "மொடக்கில் தான் பஸ் நிறுத்த வேண்டும் - நாங்கள் இருவரும் இறங்க வேண்டும்.
கொழுந்து மடுவதி தரிலேயே பஸ்ஸை நிறுத்தி இறங்க வேண்டும். அங்கே கொழுந்து நிறுக்க வரிசையாக நின்றிருக்கும் இளம் பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற் காக, பஸ்ஸில் ஏறியது முதல் மாறி மாறி ரைவருக்கும், கண்டக்டருக்கும் சிகரட் கொடுத்துக் கொண்டும் - பஸ்ஸின் "புட்போர்ட்டில் நின்று ஆட்கள் இறங்கியதும், ஏறியதும் ரைட் சொல்வ தும் பார்க்கச் சிரிப்பாக இருக்கும்.
அப்படி ஒரு ஆசை சுந்தரத்துக்கு கறுத்த முகத்தில் கறுப்புக் கண்ணாடி,
配汤口

Page 6
டாக்டர் போல் வெள்ளை ரவுசர், வெள்ளை சேர்ட், ஜேம்ஸ் பொண்ட் பெல்ட், தங்கச் செயின் போட்ட ரிஸ்ட் வோச், பாம்பு படம் எடுக்குமாப் போல் இரண்டு விரல்களில் வெள்ளி இடமிடே சன் மோதிரம், பூட்ஸ் சப்பாத்து இத்தி
யாதிகளுடன் பஸ்ஸின் "புட்போர்ட்டில்
பயணம் செய்கிறானே, அவன் தான் சோக்கு சுந்தரம்.
அவன் நினைத்தது போல பஸ்ஸ?ம் கொழுந்து மடுவத்தில் நின்றது. இறங்கினான். நான் பஸ்ஸின் மூலை யில் இருந்து எழுந்து பெல் அடித்து அடுத்த மொடக்கில் உள்ள பஸ் ஸ்டாப்பில் தான் இறங்கினேன்.
விடிந்தால் தீபாவளி
கொழுந்து நிறுக்கும் வரிசையில் நின்றிருந்த அம்மா, சுந்தரம் இறங்குவ தைக் கண்டு நான் வரவில்லை என்ற ஏக்கத்துடன் வீடு வரும்போது 'அம்மா என்றேன். அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
"என்னடா நீயுந்தான் கொழும்பில வேலைசெய்ற, சுந்தரம் பஸ்ஸை விட்டு எறங்கையில் பார்த்தேன். கையில் தங்க உருளோசு என்னா. கறுப்புக் கண்ணாடி என்னா. வெள்ளையும் சொள்ளையுமா டாக்டர் மாதிரி வந்து இறங்கினான். நீ என்னடான்னா மொட்டையா வந்திருக்க. சாப்பிடுறியோ என்னமோ கழுத்தெல் லாம் நீண்டு போயிருக்கு” என்று அம்மா
ஏங்கியது இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
"இந்த மாசம் 'சீட்டு போட்டு எடுத்து வைச்சிருக்கேன். எடுத்துக்கிட்டுபோய் கைக்கு நல்ல உருலோசு ஒன்னு வாங் கிக்கட்டிக்க” என்று அம்மா சொன்னது நெஞ்சில் நெருப்பாய்ச் சுட்டது.
சுந்தரம் வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் கோழிக் கறிதான். கையில் இருக்கும் காசு கரையும்போது, கோழி, டின்மீனாகி. மீன் கருவாடாகி, கருவாடு நெத்தலியாகி, நெத்தலி முட்டையாகி, முட்டை மரக்கறியாகி, மரக்கறி தேங் காய்ச் சம்பலாகி சாப்பிடும் போதுதான் - கொழும்புக்குப் போக பஸ் செலவுக்கு எங்கள் அம்மாவிடம் கடன் வாங்கும்
சுந்தரத்தைப் பற்றி தோட்டத்தில் எல்லாருக்கும் தெரியும்.
‘தீபாவளி’ முடிந்த ஒருநாளில்
கொழும்புக்கு வந்துவிட்டேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரவு சாப்பிட ஆரியபவானில் சாப்பிட்டு அலுத்துப்போய், வாணி விலாஸ%க்குப் போனேன்.
சுந்தரம் அங்கே என்னைக் கண்டு சிரித்தபடி "அங்க சம்பளம் பத்தாது. அதுதான் இங்க வந்திட்டேன். இன்னை க்குத்தான் வேலைக்கு வந்தேன்" என்றான்.
நானும் சிரித்துக் கொண்டேன்.
வெளிவந்து விற்பனையாகின்றது டொமினிக் ஜீவாவின் சிங்களச் சிறுகதைகள் 14 சிறுகதைகளின் தொகுப்பு பத்தர பிரசூத்திய சுதாராஜ
சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
&
SLSEEEEBLBLBDSLDBLEEEJE0000eeeeSe0EeSBezeLezSeL0 EEEEEEeSeLSeeSDB0LeBeS B SB
---

இருளும்
மாத்தளை S.M. ரியாஸ்
இருளும் ஒளியும்
ஒரு நாள் சண்டை போட்டுக்
கொண்டன.
இருளாதிக்கம் செய்து கொண்டிருந்த காரிரவு
... !95یگ
85(b60)LD
எக்காளமிட்டு சிரித்துக் கொண்டிருந்தது. இருள் சொன்னது பிரபஞ்சமே என்னுள்
கட்டுண்டு கிடக்கிறது
மனிதரில் அனேகருக்கும் நானே விருப்பம்.
வெளவால் என் கோட்டையின் தலைவன்
ஆந்தை எனது
நாட்டின்
ஆரம்ப அதிதி
நான குருடரின் உரிமை திருடரின் உறவு
என் கருமை தகிக்கும் சூட்டில்தான் குடும்ப வயலில்
விவசாயம் நடக்கிறது
மனிதரின் வம்சம் செழிக்கிறது.
ஒளியும்
முற்றுப்புள்ளியின்றி பேசிச் சென்றது இருட்டு.
இருட்டே உன் புரட்டை நிறுத்து சத்தமிட்டது வெளிச்சம் பின்னர் பேசத்தொடங்கியது குருடர்க்கும் திருடர்க்கும் உறவான இருட்டே. உன்னால் பள்ளத்தில் விழுந்தவர் எண்ணிக்கை தெரியுமா உனக்கு. அதர்மன் உன்னை அதிகம் விரும்பலாம் ஆனால் நானிருக்கும் இடத்தில் நியாயம் இருக்கிறது.
விவசாயத்தில் என்னவோ விதைப்பதற்கு நீ தேவைதான் அறுப்பதற்கு அவசியமானவன் நான் என்பது தெரியுமா. படிப்பவர் உள்ளத்தில் எல்லாம் நான்
இருக்கிறேன். எழுத்தில், பாட்டில் அறிஞரின் பேச்சில் அவரின் அவையில் அனைத்திலும் நான்தான். பகல்வந்து விட்டால் - உன் பட்டத்தில் நூலில்லை

Page 7
அதோ பார் கிழக்கில்
i
இறுமாப்புடன் சிரித்தது.
ஃ"ேவிழுந்தது பார்த்தாயா வெளிச்சமே சிரித்தது ஒளி ஆவாகள சணடைககுள
நீ சமாதியானாய் விடிந்து கொண்டிருந்தது நான் உயிர்த்தெழுந்து விடிகாலையிலே வந்தேன். அந்த ஊரில் - விடிவு என்பது எனக்கு கிழக்கு வீதிக்கும் ஒருபோதும் வடக்கு வீதிக்கும் முடிவு இல்லை. இடையே மூண்டது விக்கித்துப் போய் நின்றது ஒரு சாதிச் சண்டை வெளிச்சம்!
இருள் இப்போது
மறுமலர்ச்சி வரதருக்கு மல்லிகையின் பாராட்டு
மறுமலர்ச்சி சஞ்சிகையின் ஆசிரியரும் மூத்த எழுத்தாளருமான தி. ச. வரதராசன் (வரதர்) அவர்களை கொழும்பில் மல்லிகைப் பந்தல் சார்பில் டொமினிக் ஜீவா கூட்டமொன்றை ஏற்பாடு செய்து கெளரவித்தார். இந்நிகழ்வு 29.10.99ல் புதிய சோனகத் தெருவிலுள்ள அஸிஸ் மன்றத்தில் நடந்தது.
திரு லெ. முருகபூபதி தலைமை தாங்கினார். தமிழ் மாமணி ம. மக்கீன் வரதருக்குப் பொன்னாடை போர்த்தினார்.
காவலூர் இராசதுரை, அன்னலெட்சுமி இராசதுரை, மேமன்கவி ஆகியோர் இதில் கலந்துகொண்டு வரதரின் நீண்ட நாள் இலக்கியப்பணியை வாழ்த்தினர். வரதரின் பல்குறிப்பு என்ற நூல் இலங்கைத் தமிழருக்குப் பெருமை தேடித் தரத்தக்கதென லெ. முருகபூபதியும்: ஊடகத்துறைகள் வரதருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறிவிட்ட
தெனவும், புதிய தலைமுறைக்கு வரதரை அறிமுகப் படுத்துவதே இக்கூட்டம் ஏற்பாடாகியதற்குக் காரணமென மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும்,
தனது படைப்புகளில் ஈழத்து உணர்வுகளை ஒடவிட்டு எழுதியவர் வரதரென அன்னலெட்சுமி இராசதுரையும் தமது உரைகளில் கூறினர். தற்பொழுது ஈழத்தில் மூன்று தமிழர்களின் சேவைகள் பாராட்டத்தக்கவை.
அந்த மும்மணிகள் கம்பவாரிதி ஜெயராஜ், செங்கை ஆழியான், டொமினிக் ஜீவா ஆகியோரென வரதர் தமது உரையில் சொன்னார்.
10

ஜெயமோகனில் மெளனமாகும் யதார்த்தங்கள்
லெனின் மதிவானம்
ஜெயமோகனின் "திசைகளின் நடுவே" சிறுகதைத் தொகுப்புப் பற்றிய விமர்சனக் கட்டுரை ஒன்றினை திரு.கே.எஸ்.நரேந்திரன் (இயற்பெயர் ந.இரவீந்திரன்) நந்தலாலா-2ல் எழுதியி ருந்தார். இக் கட்டுரை ஜெயமோகனின் சிறுகதைகள் குறித்தும், இலங்கைப் படைப்புகள் பற்றிய அவரது கருத்துக் கள் தொடர்பாகவும் விமர்சித்திருந்தது. இதற்கான பதிலொன்றினை நந்தலாலா -3 இல் ஜெயமோகன் எழுதியிருந்தார். இவ்விடயங்கள் குறித்து பரந்துபட்ட விவாதம் ஒன்றினை எதிர்நோக்கிய கட்டுரையாளர் கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம் (1918) என்ற நூலில் சில விளக்கக் குறிப்பு களை மட்டுமே எழுதியிருந்தார். தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்விவாதத்தின் முக்கியத்துவமே சுருக்கமானதோர் குறிப்பெழுத என்னை நிர்ப்பந்தித் துள்ளது. இக்குறிப்பு ஜெயமோகனுக் கான பதிலாக எழுதப்பட்ட போதிலும் நமது இலக்கிய உலகில் நிலவும் ஓர் இலக்கிய போக்கை திறனாய்வு செய்தலே இதன் அடிப்படையான நோக்காகும்.
ஜெயமோகனின் இலக்கியக் கோட் 11ாட்டினை திறனாய்வு செய்வதற்கு அவரது இலக்கிய மேதாவிலாசம்
பற்றிய தெளிவு அவசியமானதொன்றா கின்றது. க.நா.சுப்பிரமணியமும், அவர் போன்றோர் எழுதிவந்த இலக்கிய விமர்சனங்கள், சர்ச்சைகள் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் கைலாசபதி அவர்கள் எழுத்துக்களின் தன்மை யினை இரு பண்புகளில் அடையாளப் படுத்தியிருந்தார். இவ்வம்சம் ஜெய மோகனின் எழுத்துக்களிலும் முனைப் புப் பெற்றிருப்பதனால் மேற்குறித்த ஆய்வு நோக்கின் அடிப்படையில் இவரது எழுத்துக்களை அடையாளப் படுத்திக் கொள்வது பொருத்தமானதாக ՖI60ւDակմ).
ஜெயமோகன் பற்றி சிந்திக்கின்ற போதும், அவரது எழுத்துக்களைப் படிக்கின்ற போதும் இரு வகையான முகங்கள் - தோற்றங்கள் ஆளுமைகள் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். அவை ஒன்றை ஒன்று விளக்குவன அல்ல என்ற போதும், வெளித் தோற்றத்திற்கு முரண்பட்டவையாகவே காணப்படுகின்றன.
அவரது ஒரு முகம் - தோற்றம்
எப்பொழுதும் பரபரப்பூட்டுவது போல
வும், அதிர்ச்சி வைத்தியம் செய்வதாக
வும், வக்கிர மேதாவிலாசம் கொண்ட
மைந்துள்ளது. "இலங்கைச் சிறுகதை
படைப் புகள் யாவும் வெறுமி
1.

Page 8
வெம்பல்கள்” எனக் கூறும்போது அவர் இலங்கைச் சிறுகதைகளை முழுமை யாக வாசித்துவிட்டு இம்முடிவுக்கு வந்தாரா? என்பது வினாவாகின்றது. இலங்கைச் சிறுகதைகளை முழுமை யாகப் படிக்காத ஜெயமோகன் அவற் றினை படித்தவர் போல நடிக்கின்றார் என்ற போதினும், அவர் அப் படைப்பு கள் யாவற்றையும் தேடிப் படித்திருப்பி னும் கருத்துகள் மாறியிருக்காது. காரணம் அவரது இலக்கியக் கோட்பாடு அத்தகைய தளத்தினைக் கொண்ட மைந்துள்ளது.
பிறிதொரு முகம் தோற்றம் இலக்கிய சிருஷ்டிகள் அனைத்தையும், நிதானித்து வாசித்து தன் கோட்பாட்டு நிலை நின்று கருத்து தெரிவிக்கின்ற பண்பு. இவரது நாவல் என்ற சிற்றாய்வு நூல் இதனை சிறப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது. இவரது தத்துவத்தை யும், வர்க்கச் சார்பினையும், ஏதோ ஒரு வகையிலும், அளவிலும் புலப்படுத்தி நிற்கின்ற சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை', 'ஜே.ஜே.சில குறிப்புகள்’ ஆகிய நாவல்களே தமிழ் நாவலுக்கான முயற்சிகள் எனக் கூறும் போதும், முற்போக்குணர்வு கொண்ட நாவல்கள் யாவும் நீள் கதைகள் என நிராகரிக்கின்ற போதும் "கலை கலைக் காகவே” என்ற கோட்பாட்டுத் தளம் சார்ந்த அவரது நிதானித்த பார்வை யினை அடையாளம் காணலாம். ஜெய மோகனின் தத்துவத் தெளிவும், சிருஷ் டிகர திறனும் ஒருங்கிணைந்து வெளிப் பட்ட சிறுகதைத் தொகுதியே 'திசைக ளின் நடுவே ஆகும். சிறுகதைகளில் அவரையும் மீறி இடையிடையே யதார்த் தம் தலைகாட்டிய போதும் அவரது இலக்கிய நோக்கினை சிறப்பாக நிலை நிறுத்த முயற்சிக்கும் தொகுதியாக இது அமைந்து காணப்படுகின்றது
12
6T66T6) TLD.
ஜெயமோகனின் இலக்கிய நோக்கு.
'திசைகளின் நடுவே குறித்த கட்டுரை ஜெயமோகனின் இலக்கியத் தளத்தினை விளக்கி, அதன் பின்னணி
யில் அவரது சிறுகதைகள் எந்தளவு
அவரது உல நோக்கினை உள்வாங்கி யுள்ளது என்பதனை சிறுகதைக்கான ஆதாரமாகக் கொண்டு விமர்சனத்தை முன்வைத்திருந்தது. கட்டுரையின் பந்தியொன்றினை வாசகர்களின் நலன் கருதி இங்கொருமுறை குறித்துக்காட்டு வது அவசியமானதொன்றாகின்றது.
"முன்குறிப்பைக் கடந்து உள்ளே சிறுகதைக்குள் பிரவேசிக்கும்போது மக்களுக்கான புற உலகொன்றினை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை என்பது தெரியவரும். மக்களைப் பிரிந்து மன பிறழ்வடைந்தோரின் புற அக உலகு களை எந்த விகிதாசாரத்தில் இணை த்த போதினும், வாழ்க்கைப் போராட்டத் தில் சவால்கள் நிறைந்த புற உலகு காட்டப்படாமலே போய்விடும் என்பத னையே காண்போம்”
இக்கூற்று 'திசைகளின் நடுவே' சிறுகதைத் தொகுப்புக்கு முழுமை யாகப் பொருந்தும். சிற்சில இடங்களில் ஜெயமோகனையும் கடந்து யதார்த்தம் இடையிடையே படைப்புகளில் எவ்வாறு தலைகாட்டியுள்ளது என்பதனையும் கட்டுரையாளர் சிறப்பாக எடுத்துக் காட்டியிருந்தார்.
இது தொடர்பில் ஜெயமோகனின குமுறல் இவ்வாறு வடிவெடுத்திருந்தது.
"நான் இலக்கியத்தை ஓர் அசலான மெய்காணி முறையாக மதிப்பவன். தருக்கத்தையல்ல. உள்மன இயக்கத் தையே இது தனது வழிமுறையாகக்

கொண்டுள்ளது. எல்லா அறிவுத் துறையுடனும் இலக்கியத்திற்கு உறவு உண்டு. ஆனால் எந்த அறிவுத்துறை யின் கட்டளைக்கும், பணிந்து இயங்கும் பொறுப்பு அதற்கு இல்லை. அரசியல், தத்துவம், உளவியல் எதுவாயினும் சரி, பிற துறையின் முடிவுகளுக்கு ஏற்ப இலக்கியம் அமைப்பவர்கள், படைப் பாளிகள் அல்ல. பிரச்சாரகர்கள்.”
இத்தளத்தின் பின்னணியில் நின்று தான் இலக்கியப்படைப்புகளை மதிப்பிட முனைகின்றார். ஓர் ஒப்புவமை வசதி கருதி ஓர் சந்தர்ப்பத்தில் பாரதி பற்றிய அவரது மதிப்பீட்டினை நோக்குவோம்.
"நான் பாரதியை மகாகவியாகவே ஏற்றுக்கொள்வதில்லை. மகாகவி என்ப வன் ஒரு காலத்தின் மக்கள் சமுதாயத் தின் கவித்துவ நுண்ணுணர்வை அவர் கள் வாசிக்கும் முறைமையிலே மாற்றி அமைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்”
இக்கூற்று எதனை வெளிப்படுத்து கின்றது? யதார்த்தம் நேரடியாக இலக்கியமாகர். என்ன எழுதப்படுகின் றது என்பதனைவிட எப்படி எழுதப்படு கின்றது என்பதே இங்கு இலக்கிய கோட்பாடாக அமைந்து காணப்படுகின் றது. அந்தவகையில் ஜெயமோகனின் சொல்லிலும், செயலிலும் ஓர் அம்சத்தி னையே முனைப்புப்படுத்தியுள்ளார். இலக்கிய சிருஷ்டி என்பது சமுதாய விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாத ஒன்று. மாறாக மானசீக மான தனி மனித விவகாரங்களும், மனப் பிறழு வுகளுமே இலக் கிய சிருஷ்டியின் உயிர் என்கின்றார். இவ் வம்சத்தினை ஜெயமோகன் போன்ற தூய கலைத்துவ பிராமணியர்கள் அழகியல்’ என்ற பெயரில் முன் வைக்கின்றனர்.
இந்நிலை நின்றுதான் பாரதி பற்றியும் அவர் கருத்துத் தெரிவிக்கக் காண்கின்றோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி, ராஜாஜி முதலானோர் பாரதி ஒர் மகாகவி அல்ல என வாதிட்டபோது உருவ வாதத்தினையே தமது இலக்கிய கோட்பாடாகக் கொண்டிருந்தனர். இப்பார்வையின் சற்றே வளர்ச்சியடைந்த நிலையினை, நாம் ஜெயமோகனில் காணக்கூடியதாக உள்ளது.
இவ்விடத்தில் இவ்விலக்கியக் கோட் பாட்டின் லாபம் யாருக்கு என்ற வினா எழுவது இயல்பான ஒன்றாகின்றது.
இலக்கியத்தில் தூய்மை, அழகியல் என்ற பிரமாஸ்திரத்தை உபயோகித்து மக்கள் இலக்கிய படைப்புக்களையும், மக்கள் இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முயல்வது தற்செயல் நிகழ்ச்சி யல்ல, மாறாக தனது தத்துவத்திற்கும், வர்க்கச் சார்பிற்கும் ஒவ்வாத தேசிய ஜனநாயக முற்போக்குச் சக்திகளை தாக்குவதற்கும் மட்டந்தட்டுவதற்குமே இவ்வாறான கோட்பாட்டுத் தளத்தை அமைத்துக் கொள்கின்றனர்.
இவர்களது கட்டுப்பாடுகளையும் கண்டனங்களையும் மேலோட்டமாக நோக்குகின்ற போது அர்த்தமுள்ளதா கத் தோன்றும். சற்று ஆழமாக நோக்கி னால்தான் இவர்களின் பின்னணியில் பிற்போக்குத் தனமான அரசியல் மறைந் திருப்பதனை உணரலாம். சமூகத்தில் வாய்ப்பும், வசதியும் பெற்ற மாந்தர்க ளின் குரலாக இக்கோட்பாடு அமைந் திருப்பதனை காணலாம். இது வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பாகும்.
மக்கள் சார்பு இலக்கியம் என்றுமே அழகியலை நிராகரிக்கவில்லை. உள்ளடக்கம், உருவகம் இரண்டும்
配孩回

Page 9
இசைவுபட்டே நல்ல இலக்கியம் தோன்ற முடியும் என்ற இலக்கிய மரபினை அது கட்டிக் காத்தே வந்துள்ளது. "எல்லா இலக்கியங்களும் பிரச்சாரங்களே! ஆனால் எல்லா பிரச்சாரங்களும் இலக்கியமாகா”
என்பதே மார்க்ஸ் முதல் கைலாசபதி
வரை வலியுறுத்திவந்த கோட்பாடாகும். ஓர் கலைவாதியின் அழகியல் பற்றிய பார்வையும், மக்கள் சார்பான இலக்கிய கர்த்தாவின் அழகியல் பார்வையும் அடிப்படையில் முரண்பட்ட ஒன்றாகும். அவை இரு வேறுபட்ட நலன்களை பிரதிபலித்து நிற்கின்றன.
தூய அழகியல் கோட்பாடு குறித்து ஓர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் முற்போக்கு அணியினைச் சார்ந்து நின்ற விமர்சகர் ந.சண்முகரத்தினத்தின் கூற்று இவ்வாறு அமைந்திருந்தது.
“பிற்போக்கு அழகியல்வாதிகளின் அளவுக்கோல்களோ முற்றிலும் பொருந் தாதவை. ஆளும் வர்க்கத்தின் அழகி யல் இரசனைகளை அடிப்படையாகக் கொண்ட அளவுக் கோல்களினால் முற் போக்கு இலக்கியத்தை மதிப்பீடு செய் யும் அபத்தம் முற்றாக எதிர்க்கப்பட வேண்டியதாகும். சமுதாயத்தின் ‘அசிங்கங்களை அழகுபடுத்துவதும், அநீதிகளை மூடி மறைப் பதுமே முதலாளித்துவ வாதத்தின அரசியல் கடமையாகும்"
(மேற்கோள் க.கை. - சமர் - 1977)
ஜெயமோகனின் அழகியல் பார்வை இத்தகைய பண்பினையே கொண்டுள் ளது. மாறாக மக்கள் சார்பு அழகியல் என்பது மனித நலநாட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக மாற்றத்தில் பங்கெடுப்பது அதன் முனைப்பான பணியாகும்.
14
'திசைகளின் நடுவே யில் பிராமண எதிர்ப்பு.?
'திசைகளின் நடுவே, ‘மாடன் மோட்சம் முதலிய கதைகள் பிராமண எதிர்ப்புத் தன்மை கொண்டவையாக காணப்பட்டமையால் பிராமணர்களின் கடுமையான கண்டனங்களுக்கு உட்பட் டது எனவும், அதனை கட்டுரையாளர் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் மேலும் புலம்புகின்றார் ஜெயமோகன்.
'திசைகளின் நடுவே கதையில் உலகை மாற்றும் தத்துவமாக தோற்றம் பெற்ற உலோகாயதம் கேவஜிம் மனப் பிறழ்வுக்கு ஆட்படும் உளநோயரிளிேக் குரிய தத்துவமாகச் சித்தரிக்கப்பட்டுள் ளது. இக்கதை வைதீய பிராமணர்க ளால் எதிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் முதலாளித்துவ மாற்றத்துடன் தோற்றம் பெற்ற ஜனநாயக சமரச பிராமணர்கள் ஜெயமோகனின் கோட்பாட்டுத் தளத் தினை சரியாகவே இனங்கண்டு மகுடம் சூட்டவும் தயங்கியிருக்க மாட்டார்கள். பிராமணியத்தின் கருத்து முதல்வாதம் இக்கதையினுாடாக நிலைநிறுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகின்றது. 'திசைக ளின் நடுவே கதையினுாடாக வளர்ந்த ஜெயமோகனின் தர்க்கரீதியான வளர்ச் சியினை நாம் ஜகன்மித்தை கதையில் காணலாம். (நஇரவீந்திரன் - 1993)
இக் கதைகளை பிராமணர்கள் எதிர்க்கின்றார்கள் எனும் அம்சத்தினை மட்டும் கொண்டு அவற்றினை முற்போக் கானது என அடையாளப்படுத்துவது கோமாளித்தனமான பார்வையாகும். கட்டுரையாளரின் பார்வை பெரியாரிஸ நிலைப்பட்டதொன்றல்ல. அவை மார்க் ஸிஸிய நிலைப்பாட்டினைக் கொண்டிரு ந்தமையால் தான் கருத்து முதல்வாதத் தினை எதிர்த்தளத்தில் அடையாளப்படு

த்தி இனங்காணக்கூடியதாக இருந்தது. நிலையிழந்துபோன பிராமணிய கருத்து முதல் வாதத்திற்கு நிலை தேடும் கைங்கரியத்தையே ஜெகன்மோகன் இக்கதையினூடாக செய்திருக்கின்றார்.
மாடன் மோட்சம் அவரது தூய கலைவாத கோட்பாட்டினையும் கடந்து மதமோசடிகளை அம்பலப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதனைக் கட்டுரையாளர் மிகச் சிறப்பாகவே தனது கட்டுரையில் காட்டியிருந்தார். ஜெயமோகன் கட்டுரையை ஆழ்ந்து வாசித்திருப்பாராயின் புரிந்திருக்கும்.
இப்புரிந்து கொள்ளலின் அடிப்படை
பில் நின்று நோக்கும்போது தான் ,
கட்டுரையாளர் ஜே.எஸ்.நரேந்திரனின் கருத்துக்கள் எத்துணையளவு ஆழம் கொண்டதென்பதனை உணரமுடியும்.
இலங்கைப் படைப்புகளின் உணர்த் தளம் குறித்து..?
இது தொடர்பில் ஜெயமோகனின் JTsi 6o6)!
"இலங்கையின் பெரும்பாலான உரைப்படைப்புகளுக்கு சமநிலையற்ற தும், ஒற்றைப் படைத்தன்மை கொண்ட துமான உணர்வுத்தனமே உள்ளது" என்பது என் கணிப்பு. இதற்குக் காரணம் தீவிரமான சுய அனுபவங் களை நேரடியாகக் கூற விளைவது தான் என்று குறிப்பிட்டேன். வியூகம் ஜூன் 94 இதழில் தன் பேட்டியில" எம்.ஏ.நு.மான் இதனைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். "இலங்கைப் படைப்புகள் பலவற்றில் ஒருபக்கச் சார்பான பிரச்சார வாடை மேலோங்கியிருக்கும் அளவு இலக்கியதரம் பேணப்படவில்லை எனக் கருதுகின்றேன்" என மதிப்பிடுகின்றார்.
மதிப்புரையாளரின் கூற்றில் தெரிவது, நு. மான் கூறலாம் ஜெயமோகன் கூறக்கூடாது என்ற குறுகிய தேசியப் UTiGO)6)
போர்ச்சுவாலை மிக்க யதார்த்த தளத்தினை தூரவிலக்கிவிட்டு, அதனை அமெரிக்க மேலாதிக்கவாதிகளிடமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளிடமும், உள்ளுர் பிற்போக்கு வாதிகளிடமும் தாரைவார்த்துவிட்டு, ஓராயிரம் படிமங் கள், தொன்மங்கள் கொண்ட கலைப் படைப்பினை ஆக்கித்தருவதே ஓர் இலக்கியவாதியின் கடமை என்பது ஜெயமோகனின் வாதமாகும். (கே.எஸ். நரேந்திரன் - 95) இந்நோக்கு ஓர் தூய கலைவாதியிடம் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஆகும்.
நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று ஜெயமோகன் இலங்கைப் படைப்புக் களை பூரணமாக வாசித்துவிட்டு (வாசித்திருப்பினும் கருத்து மாறியிருக் காது) இந்த முடிவிற்கு வந்தார் என்பதனைவிட நூட்மான் போன்றோரின் மேற்குறித்த கூற்றுகளைக் கொண்டே இவ்வாறான முடிவுக்கு வந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் எழுவது இயல்பானதொன்றாகின்றது.
இங்கு விமர்சிக்கப்பட்டது தனிநபர ல்ல, ஓர் இலக்கிய நோக்காகும். கட்டுரையாளர் நூ.மான் அவர்களின் பெயரை குறிப்பிடாவிடினும், அவரது மேற்குறித்த கருத்துக்களை விமர்சனத் திற்கு உட்படுத்தியிருந்தார்.
கட்டுரையாளரை குறுகிய தேசிய வாதியாகக் காட்டுவதற்கு கைலாசபதி முதல் நூ.மான் வரை தமிழக படைப் பாளிகள்மீது வைத்த விமர்சனங்களைத் தமக்கு ஆதாரமாகக் காட்டியிருந்தார். கைலாசபதி, க.நா.சு பற்றிய விமர்சனத்
É回

Page 10
தில் அவர் தனிப்பட்டு எழுதிய கடிதத் தினைக்கூட விட்டுவைக்கவில்லையே என மேலும் வேதனையடைகின்றார்.
க.நா.சு பற்றிய கைலாசபதியின் விமர்சனமானது தமிழ் இலக்கியப் பரப்பில் காணப்பட்ட தூய அழகியல்
வாதத்துக்கு எதிரான தத்துவப் போராட்
டமாகவே அமைந்து காணப்பட்டது. ஓர் எழுத்தாளன் பற்றிய ஆய்வுக்கும், மதிப்பீட்டிற்கும் அவனது எழுத்தில் பொருந்தியிருப்பவைகளே பெரும் துணைபுரியும் என்ற போதினும், க.நா.சு வைப் பொறுத்தமட்டில் சிறுகதை, நாவல் விமர்சன முயற்சிகளின்போது தனது வாழ்க்கையையும் இணைத்தே கருத்து தெரிவித்து வந்திருப்பதனைக் காண்கிறோம்.
அவ்வடிப்படையில் தான் தமிழ் நாவல் உலகில் மு.வ. பற்றிய சர்ச்சை நடைபெற்றபோது அது குறித்து கைலாசபதிக்கு க.நா.சு எழுதிய மடல் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதவர் என்ற நிலை நின்றுதான் ஆய்வினை மேற்கொள்ள முடியும் என்ற குறுகிய நிலைப்பாட்டினையே வெளிப்படுத்தி யிருந்தது. கைலாசபதி இப்போக்கி னைச் சிறப்பாகவே அடையாளப்படுத்தி விமர்சித்திருந்தார். இந்திய பிராமணித் துவ மேலாதிக்கத்தின் கைக்கூலியான ஜெயமோகனுக்கு இவ்வம்சம் ஆத்திர மூட்டியது தற்செயல் நிகழ்ச்சியல்ல.
அவ்வாறே கைலாசபதி முதல் நூ." மான் வரையில் தமிழக படைப்பாளிகள் மீது வைத்த விமர்சனங்கள் யாருக்கு எதிரானவைகளாக இருந்தன என்பதும் சுவாரசியமான வினா.
அவை தூய கலைவாதிகளையும், நிலைமாறாத கருத்து முதல்வாதிகளை யும் சாடியதுதான் ஜெயமோகனின்
回配筠
t
கோபத்திற்கான பின்புலமாகும். தமிழக த்தில் தோன்றிய எத்தனையோ மக்கள் இலக்கிய கர்த்தாக்கள் ஈழத்து இலக்கி யவாதிகளுக்கு ஆதர்சமாக இருந்து வந்துள்ளனர் என்பதனை ஜெயமோகன் வேணுமென்றே அறியாதிருந்தாலும், ஓர் சமயம் தமிழகத்தில் உள்ள முற்போக் குணர்வு கொண்ட எழுத்தாளர்கள் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தால், உளமகிழ்ந்து மகுடம் சூட்டவும் தயங்கி யிருக்க மாட்டார். இவரது இலக்கிய பிரவேசம் என்பது வெறுமனே இலங்கை எழுத்தார்களுக்கு மட்டுமன்று சமூக மாற்றத்திற்காக பேனா பிடித்த அனை த்து இலக்கிய கர்த்தாக்களுக்குமான
எதிர்ப்புக்குரலாகவே அமைந்து காணப்
படுகின்றது. இவருக்கு எதிரான விமர் சனங்கள் இலங்கை எழுத்தாளர்களால் மட்டுமன்று தமிழக எழுத்தாளர்களாலும் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வந்து ள்ளது. ஓர் உதாரணத்திற்காக 'திசைக ளின் நடுவே விமர்சனம் குறித்த வல்லி க்கண்ணனின் கூற்றினை நோக்குவோம்.
“ஜெயமோகன் வார்த்தைகள் பற்றிய விமர்சனம் முக்கியமானது. ஆழ்ந்த பார்வை கொண்டது" இப் பார்வை யரினை ஜெயமோ கண் குறுகிய தேசியவாதப் பார்வை என அடையாளப் படுத்துவாரா? இது தூய அழகியல்வாதி க்கான ஓர் எதிர்ப்புக் குரலாகும்.
‘கலைநயம்’, ‘கலையழகு என இவர்கள் கூப்பாடு எழுப்பி குதியாட்டம் போடுகையில், இவர்களின் வரவு நல்வர வாகவும், அர்த்தமுள்ளதாகவும் தோன் றும். ஆழ்ந்து நோக்கினால் அடிப்படை யான சமுதாய மாற்றத்தை விரும்பாது அதனை எதிர்க்கும் மனப்போக்கிற்குப் பின்னால் அரசியல் பிற்போக்குத்தனம் அ ைமநீ தருப் ப ைத அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை
இன்று தமிழகத்தில் மட்டுமன்று உலகளாவிய ரீதியிலேயே மக்கள் இயக்கம் தளர்ச்சியடைந்துள்ள இச் சந்தர்ப் பதி தலி ஜெயமோகன் போன்றோர் தூக்கிப் பிடிக்கப்படுவதும், மகுடம் சூட்.:படுவதும் தர்க்க ரீதியான ஒன்றே. அ:ை வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்ப{கும். இக்கலைத்துவ நோய் கூற்றாளனுக்கு எதிரான தத்துவப் போராட்டத்தில் நண்பர்கள் எதிரிகளாக
மாறியுள்ளதால் அப்போராட்டத்தைத் தத்துவத் தெளிவுடனும், நிதானத்துட னும் முன்னெடுத்தல் அவசியம்.
“நமது கருத்துக்களைச் சரித்திரம் சித்தரிக்கின்றது. எதார்த்த நிலவரத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நம்மை அது ஆதரித் திருக்கின்றது." வி.ஐ.லெனின்
சரித்திரத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து நடப்போமாக!
SLBgeMLL SLLLLS eMMarerYS aaLrrrS SLLkkSHqSSJSkaJSr
பட்டமரம் ஒரு பாடம் புகட்டுது
காரை, செ.சுந்தரம்பிள்ளை
பட்ட மரங்கு படம் புகட்டுது
Fரினில் :{வு நிசமல்ல என்பதை இட்ட மt3:டி கூத்துக்க ளடி எல்லாமே :ெயென எண்ணி மிருந்து கெட்டத் தீங்கள் பலப்பல காட்டி கேவல மலர் செயல்நூறு செய்து சட்டங்கள் கூறித் தருமங்கள் கொன்று தார்மீகம் பேசித் தரணியு மாண்டோம் ஆற்று மணலிற் கயிறு திரித்து அந்தக் கயிற்றில் வலைசில பின்னி காற்றில் படுத்துவிண்மீன்கள் பிடித்து கானல் நீரிற் குழம்பாக்கி யெடுத்து சேற்றில் நறுமண வுண்டிகள் சுட்டு செத்த பிணத்தில் நறுநெய் வடித்து சாற்று மறுசுவை யுண்டியென்றுட்டத் தலைப்பட்ட பேரெல்லாம் தலைகீழாய் ஆனர்
எங்கள் இனம்பெரி தென்றுமே துள்ளி எங்கள் மொழிசிறப் டென்றுமே கத்தி எங்கள் நிலம்உயர் வென்று துடித்து எங்கள் தம்அரி தென்று புலம்பி தங்கள் சுயநலம் காக்க முயன்று தாரணி தன்னில் தகாதன செய்து பொங்கி யெழுந்தோர் வரலாற்றைப் பரீர் பொகங்கியழிந்தனர் வேறென்ன கண்டார் மானிடம் தன்னை மதித்துயி ரோம்பி மன்னுயிர்க் காகவே தன்னுயிர் ஈயும் வானவர் ஒத்தவர் வாழ்வதனாலே வையகம் வாழ்வதாய் நல்லவர் சொல்வர் ஈனச் செயல்களைத் தீக்கிரை யாக்கி இல்லாமை தன்னையிங் கில்லா தொழித்து மான முடன்மனி தப்பண்பு காப்பேர் மரணத்தை வென்றுபல் லாண்டிங்கு வாழ்வர்
Š
`နဲလဲ\လဲ\
N லங்கையின் 6) Tabi Dir
s :A/V22Ᏹ2Ꭷ62Ꮓ டிஸ்ே கல்வி
§ • - 1 N o:”
\
X
: 17
Sty
17

Page 11
இந்த மண்ணில் இலக்கிய சுவைஞர்களினால் வியந்து போற்றப்படும் மல்லிகை, மாத்தளை சிறப்பு மலரை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
8ČIRIUíl T6:XTIls6:S & MIIsles (pVT) LTE) 32/34, 3rd Cross Street, Colombo - 11 T.P: 336977, 43.8494,449105 Fax: 438531.

திரைப்படங்களும் தமிழிலக்கிய
வளர்ச்சியும்
சு.ராதிகா
திரைப்1 க்கள் வர்த்தக ரீதி யானவை. திரைப்படங்களைத் தயாரிப் பவர்கள் தாம் இடுகின்ற பாரிய முதலீட் டைப் பன்(4.குே இலாபமாக ஈட்டுவதி லேயே பெரும்பாலும் நாட்டம் செலுத்து கின்றனர். பிறமொழிகளில் இந்நிலை வேறாக இருக்கலாம். தமிழைப் பொறுத்தவரை திரைப்படம் அறிமுக மான 1931ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பெரும்பாலான தயாரிப் பாளர்களிடையே இத்தகைய மனப்பான் மையே நிலவி வருகின்றது. இவர்களின் நோக்கில் திரைப்படம் ஒரு பொழுது போக்குச் சாதனமே. பாமர மக்களின் சுவைகளை அறிந்து அவர்களின் பசியைப் போக்குவதே இவர்களின் முதலும் முடிவுமான குறிக்கோளாய் விளங்குவதை நாம் மறுத்தல் இயலாது. எனினும் அவ்வப்போது இந்நிலையினை மீறிக் கொண்டு கலைவளர்ச்சியை நோக்காகக் கொண்டு படம் தயாரித்த சிலரின் தொண்டுகளையும் நாம் 2றந்துவிடல் இயலாது.
இத்தகையவர்களால் திரைப்படத் நிற்கேற்ற எதார்த்தமான கதைகள் கதைகளுக்கேற்ற உரையாடல்கள் ல்ல பாடல்கள் என்பன கையாளப் ட்டன. இவ்வாறு தயாரிக்கப்பட்டவற் ன் மூலம் தமிழிலக்கிய வளர்ச்சியும்
ஓரளவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுத்தல் இயலாது. ஆரம்பகாலத் திரைப்படங்கள் மேடை நாடகங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தன. அக் கால நாடகங்கள் இசைப் பாடல்களு க்கே முதன்மையளித்தன. வசனங்க 6ளின் இலக்கியச் சுவையைக் காண்பது அரிதாகவே இருந்தது. காலப்போக்கில் இந்நிலை சிறிது மாறியது. இசையின் ஆதிக்கம குறைவுறாத போதிலும் முன்னரிலும் பாடல்களில் இலக்கிய மணம் கூடுதலாகக் கமழலாயிற்று. இந்நிலைக்குக் காரணமாயிருந்தவர்க ளிற் குறிப்பிடத்தகுந்தவர்கள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, கம்பதாசன் முதலியோர். பெரும்பாலும் சமய புராண இதிகாசக் கருத்துக்க ளைப் பாடற் கருப்பொருளாகக் கொண்டபோதிலும் இவர்களின் பாடல் கள் சிறந்த சொல்லாட்சியும் நல்ல கருத்தமைதியும் நிறைந்து விளங்கின. இளங்கோவன், கம்பதாசன், பி.எஸ். இராமையா முதலான வசன கர்த்தாக் கள் சினிமா உரையாடல்களில் இலக்கிய வளத்தையும் சேர்த்தனர்.
ஐம்பதுகளுக்குப் பிறகு திரையுல கில் சிலகாலம் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபொழுது அறிஞர் அணி னா துரை, கலைஞர்.

Page 12
மு.கருனாநிதி, ஏ.வி.பி.ஆசைத்தம்பி முதலானோர் சிறந்த வசனகர்த்தாக்க ளாக விளங்கித் திரையிலே இலக்கியச் சுவைக்குக் கூடிய இடம் வழங்கினர். 8. புலச் சாதனமாகவ்ே பெரிதும் :ங்கவேண்டிய வெள்ளித் திரையைப் பிரசார மேடையாகவும், எதுகை, மோனை வசனங்களின் தாயகமாகவும் மாற்றிச் சொற் சிலம்பம் விளையாடிய குறை இவர்களுக்கு உண்டு. எனினும் இவர்களது அலை சொற்பொழிவு tேடைகளில் இலக்கிய வளத்தினைச் சேர்த்தது போலவே திரையிலும் இலக்கியச் சுவைக்கு ஊட்டமளித்தது. இவர்களின் வசனத்திற்கு உயிருட்டித் திரைப்படத்தைச் செவிபுலச் சாதனமா கல்ே மாற்றிவிட்ட பணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். இராஜேந்திரன், எம்.ஜி.இராமச்சந்திரன், பி.எஸ்.வீரப்பா முதலியோருக்கு நியாய xiன பங்கு உண்டு. இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க கவிஞர்களான கண்ண தாசன், பட்டுக்கோட்டை கலியான சுந்தரம் ஆகியோர் திரையுலகில் கால் எடுத்து வைத்து இலக்கியச் சுவையும்
கருத்தாழமும் மிகுந்த பாடல்களை இயற்றித் திரைப்படப் பாடல்களும்
இலக்கியச் சுவைக்கு உரியனவே என்ற நிலையை ஏற்படுத்தினர்.
"செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்
@5ង្u mi" பாடலின் இலக்கியச் சுவை கூடியதாகவே உள்ளது. பழைய நூற்கருத்துக்கள், தத்துவங் கள், காதல் அன்: உணர்வுகள், கிளுகிளுப்பான சொற்கோர்டபுகள் ஆகியவற்றால் திரையுலகிற்கு அரிய பாடல்களை வழங்கிய வகையில் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்லதோர் இடமுண்டு. கண்ணதாசனின் பார்வை
ଶt adi [3 கவைக்கக்
காணமுடியும்.
யிலே இதயம் இலக்கிய
வரிகள்:
கவர்ந்த
"எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா அந்த ஊர் நீயுப் கூட அறிந்த ஊர் அல்லவா”
முற்போக் கான கருத்துக்கள் நாட்டாரியல்சார் யாப்புகள், எளியை என்பன ஒருங்கமையப் பாடல்கள் யாத்துத் திரையுலகினை அணி செய்த வர் கண்ணதாசனும் பட்டுக்கோட்பை கலியாணசுந்தரமும். இவ்விருவரும்
இண்று எம்மிடையே இல் லாபை பெருங்குறையே.
அண்மைக் காலத்தில் திரைப்படம் செவிப்புலச் சாதனத்தின் செல்வாக்கி லிருந்து விடுபட்டுக் கட்புலச் சாதனமாக வளர்ச்சி பெறுகின்றது. ஜெயகாந்தள் முதலான காத்திரமான எழுத்தாளர்க் ளின் கதைகளும் வசனங்களும் திரைப் படத்தின் இலக்கிய அந்தஸ்தின்ை உயர்த்தி விடுகின்றன.
கே.பாலச்சந்தர், பாக்கியராஜா பாரதிராஜா போன்ற சிறந்த இயக்குனர் கள் திரைக குகந்த கதைகளைத் தெரிந்து சிக்கனமான வசனங்களைக் கையாண்டு திரைப்படத்திற்குக் காலி யத் தகுதியை ஏற்படுத்தி வருகின்றன நுட்பமான கலை உத்திகளும் சt காலச் சிந்தனைகளும் அவற்றின் கருத்து வடிவங்களும் திரைப்படத்தின் வளர்ச்சியில் மைல் கற்களாகிவிட்டன
இவற்றினிடையே இலக்கிய வளர்ச் சியும் காணப்படுகின்றது. வாலி இவரின் பாடல்களில் இலக்கியச் சுவையை நாம் "நூறு நிலாவை ஒரு நிலவாக்கிப் பாவை என்பேன். ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்டை என்பேன். கண் மீனாக மானாக நின்றாடவோ. என்னும் பல இலக்கிய
 
 
 
 

சுவைப் பாடல்களை இயற்றியுள்ளார். 4ங்கை அமரன், வைரமுத்து முதலான இளம் கவிஞர்களின் திரைப்பாடல்
களை எடுத்து நோக்கினால் அவற்றி லும் ஒரு சில பாடல்களின் இலக்கியம்
காணப்படுகின்றன.
“கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணியை உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ளே இனிக்கும்" இப்பாடல்களில் வரும் இலக்கியச் சுவையான 'வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுன்னு சொன்னேன் கனவா ஓடி
மறைஞ்சே” இன்னுமோ ஜீ லக்கிச் சுவையுடைய பாடலை நோக்கினால் "மார்கழி திங்கள் அல்லவா : கொஞ்
சும் நாள் அல்லவா இது .ண்ணன் வரும் பொழுதல் லவர் ஒருமுறை
உனது திருமுகம் பாத்தால் விடை பெறும் உயிர் அல்லவா’ இவை அனைத்தும் வைரமுத்துவின் இலக்கி யம் கலந்த பாடல்கள். இனி வரும் கவிஞர்களையும் இலக்கியம் கலந்த பாடல்களை இயற்றுவார்கள். இக்கலத் திற்கும் எதிர் வரும் காலத்திற்கும் ஓரளவு இலக்கிய வளர்ச் சிக்கும் இடமளித்தே வருகின்றன எனலாம்.
:Հ:
வெய்யில் தகிக்கும் நண்பகல் பாதையில் சாரி சாரியாய் வாகனங்கள் மனிதர்கள் (?) அட இத்தனை சந்தடியில் அசையவே மாட்டாமல் என்ன இது?. மன்னிக்க யார் இவன்? ஒட்டி உலர்ந்து தோல் சுருங்கி. என்றோ மனிதனாய் வாழ்ந்த உருவில். பாதைப் பயணிகளுக்கும் " வினா தோய்ந்த முகங்கள். சர்வ நிச்சயமாய் இறந்த உடல்தான். ஆனால் யார் இவன்?
பணமும் 4.7%дотуур
செல்வி. மொனிக்கா கோமஸ்
NoS. ১ S
ܐܸܠ
s இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் Š கோபகலாவ மாத்தளையைப் பிறப்பிடமாகக் Š கொண்டவர். இவர் மாத்துகளை நகரசபையிலும் R
DESSzz DBS eeeSJ0 DEeS eeL0S DESEeSeeS eee DSLLS eDESJSD SEELLEEEDBSBSBDBDBeDeS
இவன் மொழி என்ன? எந்த சாதியாய் வாழ்ந்தான் எல்லார் முகத்திலும் பொதுவாய் ஒரு விாை! எனக்கு எதிரான இனத்தின் எண்ணிக்கைக்குள் அடங்கியவனோ?. எல்லாரும் கொண்டது g(b (p196). எவன் செத்தால் எனக்கென்ன பொழுது போகிறது என் வாழ்வுக்குப் பணம் தேட வேண்டும் இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்த்துவிட்டுப் (8Luf; u. 6.GNO È !
அங்கத்தவராக இருந்தக்ர்,
NÀ
Š
ܟ؟

Page 13
"மல்லிகையின் மாத்தளைச் சிறப்பிதழ் மலர்வதையிட்டு எமது மனமார்ந்த
வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்"
AJ. HRI. A.R.fl) JOBAJ MATALE

வதைப் படலம்
மாத்தளை வடிவேலன்
காட்டுக்கோட்டை! தன் பெருமைக்கு பேரிலே கட்டியம் சொல்லும் ஊர். பாரம்பரியம் மிக்க கிராமம்.
ஆனால் இன்று, இவ்வூரில் காடும் இல்லை. கோட்டையும் கிடையாது.
ஒரு காலத்தில் இவை இருந்திருக்க லாம். சாதகப் பட்சியைப்போல் ஒரு துளி மழைக்காக வானத்தைப் பார்த்துப் பார்த்து ஏங்கி ஆண்டியாகிவிட்ட ஒலர் வாசிகளுக்கு இந்த காட்டுக் கோட்டை வீரப்பிரதாடங்களெல்லாம் அர்த்தமற்ற, வேண்டாத கதையாகிப் போய்விட்ட காலம்.
பொய்த்த வானத்தை நம்பிக்கை யோடு பார்த்து ஏமாந்து, நெஞ்சில் சரளைக்கற்களை வடுவாக்கிக்கொண்ட வானம்பார்த்த பூமியாகி. "வெளைஞ்சா காட்டுக்கோட்டை இல்லாட்டி வெறும் கோட்டை” இதுதான் இப்போது காட்டுக்கோட்டை கிராமத்தின் எழுத்தில் வரையாத சிலாசனமும் செப்பேடும்.
காட்டுக்கோட்டையை ஏழ்மையின் கோட்டையாக்கி விட்ட பஞ்சம், கோவணத்தையும் பிடுங்கிக்கொள்ள நோய்களையும் துணைக்கழைத்துக் கொண்டு உலா வருகின்றது.
எல்லா ஊர்களிலுமே காணப்படும்
சிறு மலையினைப் பற்றிய பொதுக் கதையான "அனுமார் சஞ்சீவி மலை யைக் கொண்டுவரும் போது அதிலிரு ந்து உடைந்து விழுந்த துண்டுதான் இந்த மலையாகும்” என்று கூறப்படும் குரு மலையினை மேற்குத் திசையில் அரணாகக்கொண்டு காட்டுக்கோட்டைக் கிராமம் தெற்கு வடக்கில் கிடத்திய பிணமாகக் கிடக்கிறது.
வானம் பொழிந்தால் கூட, நஞ்சை பயிருக்குமே கிணற்றுப் பாய்ச்சல் மட்டும் போதாது. கம்மாங்கரையில் இருந்து பாசனம் கிடைத்தாலே மகசூல் தேறும் இப்போது வானம் பொய்த்துப் போய் சாம்பல் தட்டி வருடக்கணக்கில் அலையும் போது, புஞ்சைப் பயிரைப் பற்றியெல்லாம் பேசவும் வேண்டுமா?. மேட்டு நிலங்களிலெல்லாம் வேலிக் கருவேலச் செடிகள் வளர்ர், எஞ்சி யுள்ள கால்நடைகளின் ; விலும் 'செடில் பூட்டி விடுகின்றன. நாக்கு அழகி தலை உதறலெடுத்து நிற்கும் எலும்புக்கூட்டு உருப்படிகளை யார் வாங்குவார்கள்?
உப்புக் கண்டத்தில் சாப்பிட்ட மாமிசம் வfற்றில் பொருமி. ஊதிக்கிடக்கின்றது.
சேரத்தண்ணி காணாத மேனிகள்

Page 14
அரிப்பெடுத்து மொச்சைக்கொட்டை. மொச்சைக்கொட்டையாய் சொரி சிரங்கு போட்டு தடிக்க, இரத்தம். சீழ். வடிய.
பசி. பசி. பஞ்சாய்ப் பறந்தவர் களை வெம்மை தகித்து அம்மை வெளையாண்டு வர குடும் பம் குடும்பமாக படுக்கையில் வீழ்கின்றனர்.
"கொடை எடுத்து அம்மனுக்குக் குளிர வார்த்து, சக்திக்கரகம் பாளித்து வேப்பிலை தேர் கட்டி இழுத்தால் அம்மா கோபம் தணிவாள்" அபிப்பிரா பம் தெரிவித்ததோடு தனது கஞ்சிக்கும் சேர்த்தே மடிப்பிச்சை எடுக்கப் புறப்பட்ட சிவனாண்டிக் கிழவனை, அடுத்த கிழ மையே ஊரின் சனத்தொகையைப் பாதி யாகக் குறைப்பதற்கு சபதமெடுத்து, வியூகம் அமைத்த வாந்திபேதி வரவே ற்று கஞ்சை மறக்கச் செய்கின்றது.
வாந்தி. வயிற்றோட்டம். மளமள வெனச் சரியும் பினங்களை இடுகாட்டிற் குத் தூக்கிச் சென்றவர்களில் சிலர் திரும்பி வரும் வழியிலேய்ே வாந்தி இரத்த வயிற்றோட்டம் கண்டு வீடு வந்து சேராமலேயே அவர்களும் போகவேண்டியதாகி விட்டது.
கொள்ளை நோய். காலரா. ஊரே பினவாடை வீசிக்கிடக்கின்றது.
இழவு வீடுகளிலெல்லாம் மாரடித்து ஒப்பாளி வைத்து களைகட்டச் செய்யும் கறுப்பாயிக் கிழவி தனக்கு ஒரு ஒப்பாரி வைக்கக் கூட ஆளில்லாமல் வண்ணா ரத் தெருவின் தொங்கலில் ஊர் மனையைக் காத்து நிற்கும் சங்கிலிக் கறுப்பன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள
குடிசையில் செத்து நாதியின்றி அழுகிப்
போய் வீச்சம் வரவே குடிசையோடு எரிக்க வேண்டியதாயிற்று.
ஜே. ஜே. என்றிருந்த ஊர்
互配芯
5.
இப்போது இப்படி சி. சி. சின்னாபின்னப்படுகிறது.
blači u
வெள்ளிக்கிழமை காலையிப்ே சையத தில என்னமொ செய்யுது? என்று ஆரம் பித்த ரெங்கையா கிழவனை அன்று மாலையிலேயே ரத்தமும் சீழுமாக அடக்கம் செய்துவிட்டுத் திண்னையி லிருந்து குமுறிக் குமுறி அழுதுகொண் டிருக்கிறான் பேரன் கணபதி.
"டென்டனுக்கு. டென் டனுக்கு அவன் அழுகைக்கு சுருதி சேர்ப்பது போல் ஒத்த தப்புவின் ஓசை ஓட்டைக் குடிசையைப் பிய்த்துக்கொண்டு கோடி யில் தாளம் போட்டது. "சாவுத்தப்பா இல்லியே. தப்படிச்சி. கேதம் சொல்லி, ஒப்பாரி வைச்சி. நீர்மாலை எடுத்து கோடி போட்டுசவம் அடக்கிற நேரமா இது.? ஊரே கொள்ளை நோபபிஸ் கொல நடுங்கிக் கிடக்குதே. இல்ல. இஸ்ல. தமுக்கடிச்சி தனி டாரா போடுறாங்க." காதைத் தி டிக்கொண் கணபதி தப்புக்காரனைத் தொடர்ந்தான்
'டென்டனக்கு. னக்கு. ாைக்கு. என்று அடித்துக்கொண்டு தப்புக்கார காத்தான் டன். டன். டன். என
அடித்து நிறுத்தினான்.
தப்புச் சத்தத்தைக் கேட்டு பள்ளர் தெரு, பறையன்தெரு, சங்கிலியர்தெரு, குடியானவன்தெரு என்றெல்லாம் பிரியும் அந்த ஊர் சந்தியில் பலர் கூடினர் சிறிது நேரத்தில் காத்தானைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது.
"இதனால் ஊர் சனங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் இப்பவும் நம்ம ஊர்லேயும், பக்கத்து ஊர்களிலே யும் பஞ்சம் பசியோட கொள்ளை நோயும் வந்து பெருவாரியான சனங்கள் செத்துப் போனாங்க. நம்மட கஷ்டபெஸ் லாம் எப்போ தீரமின்னு தெரியல்

தனால ஊர்விட்டு ஊர் போய், தேசம் LG தேசம் போய் புத்தியுள்ள னங்க பஞ்சம் பொளைக்கிறாங்க. தனால ஆத்தூர் தாலுக ஆனையம்
ட்டியில் இருக்கும் கருக்குவேல் கண்டிச்சீமையில உள்ள காப்பித் தோட்டம் , தேயிலைத் தோட்டம், கோச்சிரோடு போடுகிற வேலைகளுக்கு ஆள் கூட்டுராறு. அந்தக் கண்டிச் சீமையிலேயும் இந்த வள்ளைக்காரன் கொடிதான் பறக்குது. கண்டிச் சீமையில தாயில்லாத புள்ளை பம் பொளச்சிக்கிறாளாம். தேயிலைத் துர்ல் தேங்கா மாசியெல்லாம் கூடக் கெடைக்கிதாம், தலைக்கு கெழமைக்கு காப்பொச பர்மா அரிசி. வெள்ளிப் பணம்." தப்புக்கார காத்தான் கட்டியக் காரனாக விவரித்து நின்றான். இப்போது ஊரில் முக்கால்வாசிக்கும் அதிகமா
னோர் அங்கு கூடி, கசமுசவென பேசிக்கொண்டனர்.
காத்தான் மீண்டும் ஒருதடவை
தப்பை அடித்துவிட்ட, 'ஆதலால் சனங் களே, ஆனையம்பட்டிப் பெரியாணிக்கு உதவிய நாம் ஊர்ல இருக்கும் சின்னக் கங்காணி முனுசாமி ஐயாகிட்ட பெய ரைப் பதிந்துகொள்ளுங்கள். டென்டன க்கு. டென்டனக்கு." தண்டா போட்ட காத்தான் இருளில் தலைமறைந்து போனாலும் பசியால் கூட்டைவிட்டுப் பற ந்துவிடத் துடிக்கும் உயிரைத் தடுத்து விடும் சஞ்சீவியென ஒத்தை தப்புவின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.
காத்தானின் அலங்கார ஆவர்த்தனத் துக்கு ஊர் சனம் தாளம் போட்டு பஞ்ச
அாைகத நாதமாக ஒலிக்கும்போது.
"வேறு கதி. மேட்டுத்தெரு முனுசாமி சின்னக்கங்
நடை நடந்தது. ஆகதமான தப்பு ஒலி
காணியாகி, செல்லமாக சின்னாணியாக விளம்வரூபமெடுத்து நிற்க ஆள்திரட்டும் தர்பார் அமர்க்களமாக நடக்கின்றது.
உறவைப் பிரிந்து, உணர்வைத் துறந்து, ஊரைப்பிரிந்து, ஊரைப்பிரிக் கும் கடலையும் தாண்டி ஒன்றாகவே சாவோம் என்ற முடிவோடு பயனப்படு வோரை சடங்கு முதல் சாதிவரை பார்த்து பிரிவு பிரிவாக பட்டியல் போட்டுக்கொண்டு அனையம்பட்டிக்கு புறப்படத் தயாரானான் சின்னாணி.
பசி. பஞ்சம், பட்டினி எல்லோருக் கும் பசி, பசிக்கும் வயிறும் ஒன்றுதான் குலம், கோத்திரம், வர்ணாசலம் என்ற பாகுபாடு மட்டும் வேறு வேறாக.
"கும்பிடுறேங்க சாமி." பிந்தி வந்த ஆராயி கைகூப்பியபடி நின்றுகொணர் டிருந்தாள். நாலு பிள்ளைகளின் தாயாக இருந்த போதிலும் கட்டுக் குலையாமல் இருந்த அவள் உடம்பு தற்போது தளர்ந்துபோய் இருக்கின்றது.
"கும்பிடுறேங்க சாமி." ஆராயியின் குரல் மீண்டும் இழைக்கின்றது. கூப்பிய கையோடு நாலு பிள்ளைகளின் தாய்.
அந்த இருட்டிலும் சின்னக்கங்காணி யின் கழுகுப் பார்வை ஆராயியை அலசுகின்றது.
"என்ன ஆராயி..?" கங்காணியின் குரல் சாரங்கமாக ஒலிக்கின்றது. "சாமி என் மகன் கணபதியையும் கண்டிச் சீனமக்கு கூட்டிப்போங்க.." சின்னக்கங் காணியார் பதில் கூறவில்லை. பதிலுக் குச் சிரித்தார். தொடர்ந்தும் சிரித்துக் கொண்டே பக்கத்திலிருக்கும் மாயான் டியைப் பார்த்தார். மாயாண்டி கோரஸா கச் சிரித்தான். சின்னக்கங்காணி சிரித் தால் மாயாண்டியும் சிரிக்க வேண்டும். முறைத்தால் முறைக்க வேண்டும்.

Page 15
பதில் கூறாது சிரித்துக்கொண்டே இருக்கும் கங்காணியின் காலில் தானும் விழுந்து கும்பிட்டதோடு, மகன் கணபதி யையும் அப்படிச் செய்யும்படி கூறினாள். பதினாறு வயது பூர்த்தியடைந்தும், ஒரு சிறுவனைப் போன்ற தோற்றத்தை யுடைய கணபதி, கங்காணியின் காலில் மிகவும் பவ்வியத்துடன் சாஸ்டாங்கமாக விழுந்தான்.
"என்ன புள்ள வெளையாடுறியா." குரலில் விநோதமான சீற்றம், "இந்த சின்னப்பயலை கூட்டிப்போய் நான் என்ன செய்ய? உன் புருஷன் சன்னாசி அந்த குப்பமேட்டு சிவனாயியை கூட்டிக் கிட்டு சிலோனுக்கு ஓடிப்போயிட்டாணு என்னு ஊர்ல. டொம்மு. டொம்முன்னு கெடக்கு."
"ஐயையோ என தல புளர் எ சத்தியமா சொல்றேன். நான் வேணு ம்னா எந்தக் கோயில்லேயும் சத்தியம் செய்யுறேன். என் புருஷன் ஒருநாளும் அப்படி செய்யாது. அந்த குப்பத்து சிறுக் கசி செவளாயி எவனோட போனாளோ. கொள்ளையில போவா. என் புருஷனோட போனதிற்கு என்ன சாட்சி இருக்கு.? ஐயன் வீட்டு மாடு கன்ன மேச்சிக்கிட்டு இருந்த என் புருஷன் மாட்டேன்னு ஒதுங்கிக்கிறவும் ஐயனுடைய தென்னந்தோப்பில யாரோ தேங்காயைப் புடுங்க இவருதான் புடுங்கினார்ன்னுபொய்க்குத்தம் சாட்டி கட்டி வைச்சி அடிச் ச படி பால அவமானம் தாங்காம போயிட்டாரு."
"இவங்க பாட்டனும் கண்ண முடிட் டாரு. நான் இந்த நாலு புள்ளைகளை யும் வைச்சிக்கிட்டு என்னா பண்றது. சாமி எப்படி சரி எம்புள்ளயள சுட்டி போங்க.." இப்போது விசித்து விசித்து அழும் அவள் குரல். ஓ என்ற அழுகையாக பெரிதாகக் கேட்டது.
"இது நல்ல கதை. உன் புருஷனை தேடவா வெள்ளைக்காரன் எங்களுக் குப் பணம் கொடுக்கிறான்? சரி. சரி. என் கையைக் கடிச்சாலும் பரவாயி ல்லை. ஏதோ புண்ணியமாப் போவுது ஆனா சொல்பேச்சி தட்டக் கூடாது கண்டிச்சீமையிலே கெப்டன் பான்னப் துரை கோச்சிரோடு போடுநான். அங்க தனியாள் "ஒண்டி"களுக்கு வேன: இருக்கு. இப்ப தோட்டங்கள்ல வேலை க்கு குடும்பமாத்தான் கேட்கிறாங்க கோச் சிரோடு போடுற இடத்தி: கல்லுடைக்க, மண்தூக்க இப்படிப்பட் வேலைகள் இருக்கு. பரிதாபப்பட்டு
இவன் பேரையும் பதிஞ்சிக்கிறேன்
மாயாண்டி சன்னாசி மகன் கணபதின்று காட்டுக்கோட்ட பெரட்டில போட்டுக்க ஞாயிற்றுக்கிழமை காலையில நா: பெரட்டு ஆளு புறப்படுறாங்க. அதுல் இவனையும் சேர்த்துக்கச் சொல்லு. சனிக் கிழமை சாயந் தரமா வந்து செலவுக்கு பனம் வாங்கிக்க. எல்லI: கடன்தான். என்ன மாயாண்டி புறப்படு வோமா." சின்னக் கங்காணியின் சில் ரைக் கங்கானி மாபாண்டி அரிக்கன் விளக்குடன் தலையசைக்க இருவரும் நடக்கின்றனர்,
கணபதி தன் தாயைப் பின் தொடர்ந்து குப்பத்திற்கு நடந்தான்.
"நீ கண்டிச் சீமைக்குப் போப் எப்படி யும் உங்கப்பாவைத் தேடிக் க்ண்டு பிடிச்சு அப்பாவை உடனே இங்கே அனுப்பி வைச்சிரு. நான் பிறகு தம்பி தங்கச்சிமார்களையும் கூட்டிக் கிட்டு கண்டிக்கு வந்திடுறேன். பார்த்தியா கங்காணியாருக்கு எப்படி எளகின் மனசு, அவரு பேச்சைத் தட்டாம நடந் துக்கப்பா." ஆராயி புதுத்தெம்புடன் கூறினாள்.
"நீ பயப்படாத அம்மா. நான்

எப்படியும் நம்ம அப்பாவை தேடிக்கிட்டு வந்திடுறேன். தம்பி தங்கச்சிமார்களை கவனமாப் பார்த்துக்க, நான் அங்க இருந்து உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன்" கணபதி நம்பிக்கை perl'liq ସ୍ୱାମୀ ୩ ବର୍ଯt.
அன்றிரவு அவர்கள் குடிசையில் ஒரு கவளம் சோறு பெரும் விருந்தாக அமைந்தது.
ஞாயிற்றுக்கிழமை ஊர்கள் பலவற் றிலும் இருந்து கண்டிச் சீமையைப் பற்றி பூத்துக்குலுங்கும் கனவுகளுடன் நீ முந்தி. நான் முந்தி. என்று வந்தவர்கள் ஒன்றாகக் கூடி நடந்தார் கள், ஒரு புழுதிப்பட்டாளம் கடலை நோக்கி விரைந்தது. தன் நெருங்கிய உறவுக்கார வீரமுத்துவிடம் கனப தியை ஒப்படைத்த ஆராயி கண்கலங்கி நின்றாள். கண் கலங்கி நிற்கும் ஆராயியை "நீ பயப்படாத தங்கச்சி. நான் என் மகனா நெனச்சி பாதுகாத்து இருப்பேன்" என்று தைரியம் கூறி தேற் றிய வீரமுத்து கணபதியை தன்னோடு சேர்த்துக்கொண்டு நடந்தான். வீரமுத்து ஆராயிக்கு சகோதர முறையானவன். நடை. நடை. நடை. கால்கள் தேய்ந்து விடுமோ என்று அஞ்சும்படி யான நடை, முள்குத்தி. புண்பட்டு. காஸ்கள் கெஞ்சி புலம்பினாலும் தொடர்ந்து நடை, நீண்ட நெடும் பயன நடை "எவ்வளவு நேரம்தான் கண்டி கதிர்காமக் கந்தனை நினைத்துப் பாடுவது." பெரியோர்கள் இடையில் தங்கும் இரவுகளில் இராமாயணக் கதையைக் கூறி களைப்பைப் போக்கி னார்கள். இடைக்கிடை குக்கிராமங்க எளின் சந்திகளில் சாலையோரத்தில் மரநிழலில் கஞ்சித் தொட்டில்கள் நடை பட்டாளத்தின் களைப்புத்திர, கம்பனிக் காரர் ஏற்பாட்டில் "பரிதாபி வருஷம்
பரதேசம் போறோம்" என்று கஞ்சி குடித் தாறிய ஒருவன் பஞ்சகும்மி பாடினான். பஞ்சகும்மியும் தெம்மாங்கும் கஞ்சி சுவைபடாத இன்னொருவன் சலித்துக் கொண்டான்.
இராமாயணக் கதையில் கடல் தாண்டும் படலம் வரும் முன்னரே நடை பட்டாளத்தினர் தனுஷ்கோடியை வந்த டைந்துவிட்டனர். அத்தனை உத்வேக மான நடை கடலையே காணாத பலர் முதலில் கடலைக் கண்டனர். கடலை மட்டுமா கப்பலையும் பார்த்தனர் கப்பலை தொட்டுப் பார்த்தனர். தோணி யில் ஏறி கப் பலரிலி அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.
தண்ணீரில் தள்ளாடும் பாய்க்கப்பில் பயணம் தொடர. பாய்க்கப்பல் மெதுவாக ஓடியது. தூரத்தே தெரியும் இராமேசுவரம் கோபபில். சுகமா கடற் காற்று அரவணைக்க நடை பயணத் தில் களைத்துப்போன அனைவருமே நித்திரையில் ஆழ்ந்தனர்.
பொழுது புலரும் முன்னர் மறுகரை யினை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பாய்க்கப்பலிலி ஏறியவர்கள் 'வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கலங்க. சிறிது சிறி தாக ஆரம்பித்த மழை பெருமழையாக. பேய்மழையாக அடம்பிடித்துக் கொண்டு பெய்ய, வெறிகொணி டு ஆடும் அலைகள். நீர்ச்சுழிகள்.
தண்ணீர்க் கட்டில் திசையும் தடுமாறிப் போக இடையிடையே கடலே பிளவு றும் படியாக இடியோசை வானத்தைப் பிளந்து காட்டும் மின்னல்கள். ஆட்டம் போடும் படகிற்கருகில் ஒரு மின்னல் வெட்டு "சாட்டையை சொடுக்குவது போல சொடுக்குகின்றது. அரண்டு போய்க்கிடக்கும் கணபதி, வீரமுத்து

Page 16
வைக் கட்டி அணைத்துக்கொள்கிறான். “எல்லோருமே அருச்சுணா. அருச்சுனா சொல்லுங்க” அருச்சுணா. அருச்சுணா கப்பலே அதிரும் படியாக அருச்சுணா கோஷம் கேட்கின்றது.
தலைசுற்றி வாந்தி எடுத்த பலர், இப்போது அதிலேயே விழுந்து விட்ட னர். மயக்கமடையாதோர் தெய்வங்க ளைத் துணைக்கழைத்து உயிர்ப் பிச்சை வேண்டி நின்றனர். பாய்க்கப்பலு க்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.
கப்பலோட்டி கட்டளையிட்டான். கப்பலின் நடுமரத்தில் அம்பு போல் விரைந்தேறிய ஒருவர் 'பாயை அறுத்து விட்டு 'விர் ரென்று இறங்கினார். சற்று நேரத்திற்கெல்லாம் தறிகெட்டு ஓடிக்கொ ண்டிருந்த அந்த பாய்க்கப்பல் வேகம் தணிந்து கட்டுக்கடங்கியது. காற்றின் வேகமும் தணிய, அலைகளும் அடங்கி ஓய்ந்தன.
பாய்க்கப்பல் நிதானமாக மிதந்து கொண்டிருந்தது. கிழக்கும் வெளுத்துக் கொண்டுவர துவண்டு கிடந்த அனைவ ரும் எழுந்து நின்றனர். அமைதி பிறந்து நிற்கும் போது. அந்த அமைதி நிலவி யது. சிறிது நேரம்தான். பாய் இழந்து நிற்கும் கப்பலை ஒரு பெரிய மலை ஒட்டி உரசி. சேர்த்து இழுப்பது போல. மெதுமெதுவாக இடது பக்கமா கச் சரிய. என்ன இது புதிதாக. தெரியாமல் விளங்காமல் "ஐயோ. ஐயோ. கப்பல் மூழ்கப் போகுதா..? அவலமாகக் கத்துகின்றனர்.
கூனிப்பொடி மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து. மலைமலையாகக் குவிந்து கப்பலை ஒட்டுது. உடனே அந்த மூலையில் அடுக்கி வைச்சிருக் கும் தவிட்டு மூட்டைகளைக் கடலில்
கொட்டுங்க. தவிட் டை கடலில் போ டுங் க. 5 Li LJ (ể bì) (T L \ọ அவசரப்படுத்தினான்.
அந்த அவசரக் குரலைவிட அவசர அவசரமாக ஒரு மூலையில் தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தவிட்டு மூட்டைகளை எடுத்து அவிழ்த்து கடலில் கொட்டினார்கள். தவிட்டு மூட்டைகளைக் கொட்டிக்கொண்டே இருந்தார்கள். தவிடு கடலில் மிதந்தது. கடற்பரப்பில் தவிட்டுக் கோலம். பாய்க்கப்பலில் மலையெனப் படிந்த கூனிப்பொடிகள் கலைந்து கடலில் மிதக கும் த விட் டை உணர் ண விரைந்தன. அலைகளில் தவழும் தவிட்டை உண்டு. உண்டு.
கப்பல் ஒரு குலுங்கு குலுங்கி திசை திரும பி ஓடியது. சிறிது நேர ஓட்டத்திற்குப் பின்னர், கரைதெரிந்தது. கரையைக் கண்ட கப்பல் பயணிகள் கையெடுத்துக் கும்பிட்டனர்.
அன்று நண்பகலுக்கு முன்னேயே தட்டப் பாறையில் முட்டி:ைத்துப் பொங்கியவர்கள், மறுநாள் காலையி லேயே மலைநாட்டை நோக்கி நடந்த னர். கப்பல் பயணத்தில் இறுதிப் பயணம் சென்றுவிட்ட சிலர் மன்னார் மணலில் அடங்கிவிட, நோய்வாய்ப் பட்டோர் பின்தங்கி நடந்து வந்தனர்.
மீண்டும் ஒரு நடை டாரதம் தொடங்கியது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் புழுக்கள் நெளியும் மனித சடலங்களையும், எலும்புக்கூடுகளையும் வழித்தடமாகக் கொண்டு நடந்தனர்.
உலர் காடுகளைக் கடந்து ஈரவலயக் காடுகளில் புகுந்தபோது அட்டை போன்ற ஐந்துக்கள் தொற்றி இரத்தம் குடித்தன.

ஆங்காங்கே 'முட்டி வைத் து ஆக்கிய போது மிஞ்சிய பழைய சோற்றை அடுத்த நேர சாப்பாட்டுக்கே வைத்துக் கொண்டனர். நடை பயணத் தில் களைத்தோர் பிந்தி வந்த கூட்டத் தில் சேர்க்கப்பட்டு "தொத்த பயலுகள் என்று கேலி செய்யப்பட்டனர்.
பத்துத் தினங்கள் இரவு பகல் நடை பயணத் தரில் கழித்த பின் னர் பன்னாமத்தை அடைந்தனர். மலைநாட் டின் வாசலென விளங்கிய பன்னாமம்
அழகிய சிறு கிராமம். நாற்புறமும் சுற்றிலும் முடிச்சு விழுந்த மலைகள். கறுத்தை ரோடு ஒன்று அங்கிருந்து
புறப்பட்டுச் சென்றது.
ஆட்டுப்பட்டி, தாம்பரவள்ளி பன்னாமம் தமிழ் மணம். அடுத்தடுத்து தமிழ் குடிகள் வாழ்ந்தனர். பன்னாமத்தில் மாரி குடியிருந்தாள்.
மதுரை மீனாட்சியைக் கையெடுத்
துத் துதித்தவர்களுக்கு பன்னாமத்து முத்துமாரி அடைக்கலம் கொடுத்தாள்.
பன்ன்ாமம் வந்து சேர்ந்தோரை மீண்டும் நாலு குழுக்களாகப் பிரித்தனர். முதல் மூன்று குழுக்களும் குடும்பத் தவர்களாக விளங்க நாலாவது குழு தனிக்கட்டைகளைக் கொண்டதாக அமைந்தது. நாலாவது குழு கோச்சு ரோடு வேலைக் கெனத் தெரிவு செய்யப்பட்டதாகும்.
குழுக்களாகப் பிரித்த கங்காணி மனம் குமுறி நிற்கின்றார். "இந்தப் பயணத்தில் சேதாரம் பெரிதாக அமைந்துவிட்டது. ஆளை திரட்டுவதை விட உயிரோடு கொண்டுவந்து சேர்ப் பதே மலையாக அமைகிறது. எப்படி சரிக்கட்டுவது.? தலை சுற்றுகிறது” கங்காணியார் தலையைச் சுற்றி தலைப்பாகையைக் கட்டுகிறார்.
!pbff3(35(? 6 BITLL-GFALL DIT Gb QT : D யவே பதுளைக்கு அனுப்பப்பட்டது. ஏனையவை பன்னாமத்துக்குப் பக்கத்தி லுள்ள தோட்டங்களுக்கு அனுப்பப் பட்டது. இதனால் ஒன்றாகச் சேர்ந்து வந்த பலர் பலவாறு பிரிந்து போய்விட்டனர்.
மாயாண்டி, கணபதியை தனது கையடக்கத்தில் வைத் திருந்து, நாலாவது குழுவிலேயே அமர்த்திக் கொண்டான்.
"ஏன்டா இந்த ஊரை பன்னாமம்னு சொல்றாங்க. ஆனால் இந்த ஊர்ல ஆளுகள மாத்தி மாத்தி தலையே அனுப்பிறாங்க" சகாக்களைப் பிரிந்த ஒருவன் மன உளைச்சலில் கூறினான்.
"ஆமா நாம்மா ஒன்னா வந்தவ: களை மாத்தி அனுப்பின ஊர். மாத்தளை. பன்னாமம் இல்லை.” பகிடியாகக் கூறினான்.
* மாதி தளை நல் ல பெயர் . எல்லோருமே சிரித்தனர். அவர்கள் துயரத்திலும் சிரிப்பை மறக்கவில்லை.
ரயில் ரோடுக்கு தெரிவு செய்யப்பட்ட குழு தனியாக நடையைக் கட்டியது. கணபதி, வீரமுத்துவை நிழல் போலத் தொடர்ந்தான். வழிநெடுக சேறும் சகதியும், குன்றும் குழியுமாக ஏறி இறங்க வேண்டியிருந்தது. பனிமூட்டத் தைத் துளாவிக்கொண்டு வழி தேடிச் செல்வோரை தூவானம் வரவேற்றது.
இருபுறமும் படரும் தோட்டங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வானளாவி நிற்கும் ஈரவலயக் காடுகள் அழிய கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தோட்டங் களுக்கு நடுவே ரயில் ரோடு உருவெடுத்துக் கொண்டிருந்தது. ரயில்

Page 17
பாதைக்கிடையில் கேம்ப்' அடித்துத் தொழிலாளர் தங்குவதற்கு வசதி செய்திருந்தார்கள். ஒவ்வொரு கேம்பி லும் இருநூறு பேருக்குக் குறையாமல் இருந்தனர்.
சல்லிக்கற்கள் உடைத்தல், பாதை வெட்டுதல், மண்நிரப்பல், மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகளை அமைத்தல், பாலம் கட்டுதல், தொங்கு பாலம் அமைதி தல் முதலான வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கொத்தனார் களர் ஆணி கல , பெண்கல், அலிகல் பார்த்து பச்சிலை மூலிகைக்கொண்டு பாரிய கற்பாறைக ளைப் பிளந்து கொண்டிருந்தனர். மலை களையே சிலைகளாக்கிக் கொண்டி ருந்த சிற்பிகளின் உளிச்சத்தம் தேனி சையாக அருவிகளின் ஆலாபனையில் கேட்டுக்கொண்டிருந்தது. இடைக்கிடை கல்லு வெடிச்சத்தம் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
கணபதியும் வீரமுத்துவும் சிங்க மலைச் சுரங்கத்திற்கு அடுத்ததாகக் கட்டப்படும் பாலத்தில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்டனர். இடையில் தங்கிய கேம்புகளிலும் சந்தித்த ஆட்களிடமும் சன்னாசியை விசாரித்தபடியே இருவரும் சென்றனர்.
இரவு. தூக்கத்தில் ஆழ்ந்து கிடக் கின்றது. தூங்காமல் சின்னக்கங்காணி முனுசாமியும் மாயாண்டியும் கேம்புகளு க்கு மத்தியிலுள்ள 'வாடியில் வாடிப்போய் மந்திராலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு குடம் கித்துள் கள்ளில் இன்னும் ஒரு சிரட்டைக் கள்ளே எஞ்சியிருக்கின்றது.
யோசனை. யோசனை.
回配念
St.
எப்படி
இடிந்த பள்ளத்தை நிரப்புவது.? எப்படி இந்த பள் 6ாத்தை நிரப் புவது..? உருப்படியாக ஒன்றும் தட்டுப்பட வில்லை. முட்டிக் கள்ளு முடிந்ததே ஒழிய போதையோ பாதையோ தெரியவில்லை.
வெள்ளைக்கார பன்ஸ் துரையின் முகத்தை நினைக்கும் போது தலைக் கேறிய போதை இறங்கிப் போகின்றது. கைநீட்டி வாங்கிய வெள்ளிப்பணம் கொஞ்ச நஞ்சமா..?
குறித்த காலத்தில் பாலத்தை எப்படிக் கட்டி முடிப்பது.? யோசனை யில் மூழ்கி, துயரப்பட்டு. மெளனத்தில் ஆழ்ந்து போன கங்காணியின் மெளனத் தளைகளை உதறுவதுபோல மாயாண்டி "ஐயோ கங்காணியாரே. கங்காணி யாரே” குரலில் உற்சாகம் ததும்பியது.
முனுசாமி நம் பரிக் கையோடு "கங்காணியாரே ம். சொல்லு"
"கங்காணியாரே நாம்ம கட்டாத பாலம் இல்ல. மறிக்காத ஆறு இல்ல. நிரப்பாத பள்ளம் கெடங்கு இல்ல. பள்ளம் மட்டும் தான் இப்படிச் சோத னையா போச்சி. மண் நிரப்ப, நிரப்ப இடிஞ்சி போவுது. இப்படி ஒரேயடியா இடியிறத்துக்கு ஒரு காரணம் இருக்கு. இப்பதான் எனக்கும் அது மனசில படுது. இந்த இடத்துல ஒரு முனி பாய்ச்சல் இருக்கு. அதுதான் இப்படி. இங்க இருந்து பாருங்க. ஏழு மலைகள் ஒரே தொடர்ச்சியா தெரியுதே அது ஏழு கன்னிமார் இருக்கிற மலையா இருக்கும். இங்க இருந்து ஒரு முனி பாய்ச்சல் அங்க போவுது. முனிபாய்ச்சு லின் வழி சரியா இந்த இடத்தில தான் அமையுது. ரெண்டொரு தடவை என் கனவிலயும் இது தட்டுப்பட்டிச்சி.

அதனாலதான் பாலத்தைக் கட்ட விடாம தடுக்குது. அதுதான் இந்த சோதனை எல்லாம். முனியை நம்ம வழியில வராம தடுக்க ஒரு வழி இருக்கு. முனியைத் திருப்திப்படுத்த ஒருவழி இருக்கு. ஒன்னு செய்யனும்."
"என்னா செய்யனும் . உடனே சொல்லு" கங்காணியின் குரலில் பதற்றம். எனினும் தெம்பு இழைந்தது. சோர்ந்து கிடந்தவர் துள்ளி எழுந்து நிற்கிறார்.
நாற்புறமும் நோட்டம் விட்ட பின்னர், மாயாண்டி கங்காணியின் காதில் கிசுகிசுக்கிறான். கங்காணியின் முகம் வியப்பால் விரிகின்றது. ”செஞ்சா சரிவ ருமா..? அப்புடி செஞ்சா சரியா? மாயா ண்டி. மாயாண்டி. குரல் இழைகின்றது.
"ஆமா. ஆமா. எங்க பாட்டா முந்தி ஒரு கதை சொல்லிச்சி. ஏழு அண்டா புதையல் எடுக்க செஞ்சாங்க ளாம். சரி வந்திச்சாம்.”
மீண்டும் இருவரும் கிசுகிசுக்கின் றனர். கங்காணி மாயாண்டியிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு,திட்டம் போடுகிறார். இப்போது தலைக்கேறுவது போதையா புத்தியா தெரியவில்லை. தெளிவில்லை. இரவருக்குமே தெரிய வில்லை. வெள்ளைக்காரனிடம் வாங் கிய வெள்ளிப் பணத்திற்கு வகை சொல்ல வழி கிடைத்துவிட்டது. பாலத்தைக் கட்டி விடலாம்.
அடுத்தநாள் சின்னக்கங்காணி அவசர வேலையாக வீரமுத்துவை 'உதுமான் கந்த சுரங்க கேம்புக்கு அனுப்ப, வீரமுத்து தான் திரும்பி வரும் வரை கணபதியைப் பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டுச் செல்கின்றான்.
வீரமுத்து அங்கேயும் தன் தகப்ப
னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கை கணபதிக்கு வளர்ந்தது. வீரமுத்து உதுமான் கந்த கேம்ப்புக்கு புறப்பட்டுப் போனான். அங்கேயும் கணபதியின் தகப்பனைப் பற்றி விசாரித்தபடியே சென்றான். சன்னாசியைத் தேடியவன், கறுத்த, வாட்டசாட்டமான கறுப்பரும் அங்கே ரயில் ரோடு போடும் வேலை யில் ஈடுபட்டிருப்பதைகண்டு வியந்து போனான்.
"யார் இவங்க...? என்றான். “காபிரியன். கடிச்சிடுவான்கள்" என்று ஒருவன் பயம் காட்டினான். அன்று மாலை சில லறைக் கங் காணி மாயாண்டி, கணபதிக்குத் தெரிவித்த செய்தி, அவனை ஆடுபாலத்தில வைத்துத் தாலாட்டியது. ஆயா. அப்பா இருக்கி றாராம். அப்பா இருக்கிறாராம். நாளைக்கு அவராப் பார்க்கப் போறேன். உங்களையும் தங்கச்சிமார்களையும் கூட்டி வர அப்பாவை அனுப்பி வைக்கி றேன். நாளைக்கு அப்பாவைப் பார்ப் பேன். நான் கடல் கடந்து தேடி வந்த தைக் கண்டு சந்தோஷப்படப்போறார்." கணபதி களிப்பில் மிதந்தான். நாளை காலை பொட்டகல கேம்பில் இருக்கும் அவன் அப்பா சன்னாசியைப் பார்க்கப் போக வேண்டும். அதிகாலையிலேயே.
"இந்த மாயாண்டி சின்னக்கங்காணி க்குத் தான் எவ்வளவு நல்ல மனசு. அப் பாவைத் தேடிக் கணி டு பிடிச்சிட்டாரே."
மகிழ்ச்சி கிச்சு கிச்சு மூட்ட து"க்கம் வரவில லை. கணி ணா மூச் சு வெளையாடுகின்றது. கணபதி எப்போது விடியும். ஆவலோடு விழித்தபடியே. விடியல். கணபதி விடியலின் கதிராக எழுந்து புறப்பட.
ஞாயிற்றுக்கிழமை விடியற் பொழுது:

Page 18
சூரியப்பந்து மேகத்திரையில் ஒளிந்து கிடக்கின்றது. கேம்புகளிலுள்ளோர் எழுந்திருக்க மனமின்றி எலும்பைக் குத் தும் குளிரில் சுருணி டு கிடக்கின்றனர். மாயாண்டி கூறியபடி கணபதி குளிரையும் பொருட்படுத்தாது, குளித்துவிட்டு கொட்டகல கேம்புக்குப் புறப்படத் தயாராக நிற்கின்றான்.
திட்டு திட்டாக இருட்டு மேகம் திரை போட்டு நிற்கின்றது.
"கணபதி." மாயாணி டியரின்
பாசக்குரல்.
"வந்துவிட்டீங்களா. இதோ புறப்பட்டுவிட்டேன் கங்காணியாரே." கணபதி பணிந்து பவ் வியமாகக் கூறினான்.
“கணபதி பொழுது விடியிறதற்
குள்ள நாம இங்கிருந்து புறப்பட்டாத் தான் காச்ச மலையைத் தாண்டி கொட்டகல கேம்பிற்குள் பகல் சாப்பாட் டிற்கு முந்தி போயிறலாம். அங்க முதல்ல உங்க அப்பாவைக் கண்டு பேசுவோம். பிறகு பெரிய கங்காணியார் கிட்ட சொல்லி ரெண்டு பேரையும் ஒரே கேம் பில சேர்த் திருயறேன். நீ காலையில குளிச்சியா ஒரு பூஜை நேர்த்திக்கடன் இருக்கு."
"ஆமா. நீங்க சொன்னபடி குளிச்சிட் டேன்." கணபதியின் குரலிலும் தூய்மை, மெல்லிய இருளுக்கு மெரு கேற்றியபடி இருவரும் நடந்தனர். ஒரு காதம் நடந்திருப்பார்கள். அவர்கள் பாதையில் ஒரு முடக்கு. அங்கே இருவர் இருளோடு இருளாக நின்றனர். அந்த இருவரும் இவர்களைத் தொடர் ந்து நடந்தனர். பின்பு நாலெட்டு தூரம் தான் நடந்திருப்பர். “கணபதி இந்தப் புது வேட்டியைக் கட்டிக்க. உங்க அப்பாவை புதுசாப் பார்க்கப் போறே
32 El
ウエ
இல்ல. புது வேட்டி கட்டிக்க. அப்பதான் மதிப்பா இருக்கும். முதல்ல இந்த இடத்தில சாமி கும்பிட்டுட்டு போவோம்” வாஞ்சையோடு தரும் வேட்டியை வாங்கிக் கட்டிக்கொண்டான். "இந்தா விபூதியைப் பூசு" கூ.வந்த இருவரும் இப்போது அவன் நெற்றியில் விபூதியைப் பூசி, சந்தனத்தை அப்பி, குங்குமப் பொட்டை வைத்தனர்.
கணபதிக்குப் புதிராக இருந்தது. அப்பாவைப் பார்க்க. சாமி கும்பிட. நல்லது எதி தனை உபசரணை. அப்பாவை நேரில் பார்த்துவிட்டது போல மகிழ்ச்சியில் தோப்புக்கரணம் போட்டு விழுந்து கும்பிட்டான்.
"இந்த தேசிக்காயை கையில வைச் சிக் க.” வணக்கம் முடிய மாயாண்டி கணபதியின் கையில் கொடுத்து, "இதுவரை காணாம, இந்த ஆள முதல் தடவையா காணப் போறோம் இல்லியா. அதுதான். இதெல்லாம். நான் முந்தியே வைச்ச நேத்திக்கடன். நேர்த்தி வைச்சா மறக்காம செஞ்சிடனும்."
கணபதி எலுமிச்சம் பழத்தை வாங் கிக் கையில் வைத்தக் கொண்டான். கூட வந்தவன் செம்பரிலிருந்த தண்ணிரை சிறுவனின் தலையில் தெளித்துக் கொட்டினான். கணபதி தலையைச் சிலிர்த்தான். தண்ணிர் விசிறி தெறித்தது. எதற்கும் சம்மதமாக சிலிர்த்தான். தலையை ஆட்டினான். அது சம்மதம் தான் என்ற சாடையைக் காட்டியது.
“இப்ப போவோம்."
மாயாண்டி முன்னே நடக்க, நால்வ ரும் பள்ளத்தில் இறங்கி நடக்கின்றனர். "இந்த குறுக்குப் பாதை இதுல போனா சுருக்கா போயிறலாம்” குறுக்குப்

பாதையோ என்னவோ. அப்பாகிட்ட போனா சரி” கணபதி வாய் திறக்கவில்லை.
சிலிர்த்தோடும் அருவியின் ஓரத்தில், இறங்கி புதிதாக பாலம் கட்ட ஆழமாக குழி தோண்டியிருக்கும் பகுதிக்குள் இப்போது நடந்துகொண்டிருந்தனர். பாதாளக் குழியின் ஓரமாக இருளைத் தடவியபடி நால்வரும் நடக்கும் போது.
முன்னால் சென்றுகொண்டிருந்த மாயாண்டி நின்று, திரும்பிப் பார்த்து, "கணபதி இப்படி நில்லு." குரலில் நடுக்கம். எனினும் அதட்டி வந்தது.
"நம்ம எங்க அப்பாவைத்தானே பார்க்கப் போறோம்.” கேள்வியா. நடுக்கமா.
"ஆமா நீ உன் தாய்க்கு தலைமகன் தானே. இந்தப் பக்கம் பாரு. திரும்பு. ஆமா திரும்பு.’ மாயாண்டி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அசுரனாக மாறி, ஆழக் கிடங்கினுள் கணபதியைத் தள்ளிவிட.
ஒருகணம் நடந்தது என்ன என்பதை நிதானிக்க முடியாத கணபதி நிலை குலைந்து, கால்கள் இடறி, தலை குப்புற சரிந்து, "ஐயோ. அம்மா. அப்பா. அப்பா.” கணபதியின் அபயக்குரல் பாழுங்கிடங்கிலிருந்து வெளியே வரவில்லை.
இடிந்து கிடக்கும் பாழுங் கிடங்கி
தலைகுப்புற அப்பாவைத் தேடி. தேடி. கணபதி
இருட் டிலிருந்து வெளிப் டட் ட கங்காணி முனுசாமி பதறும் குரலில் “போடு சாம் பிராணியை. போடு சாம்பிராணியை" துரிதப்படுத்தினான்.
மாயாண்டி எழுமிச்சம் பழத்தை வெட்டி நான்கு திசையிலும் வீசிக் கொண்டிருந்தான். தணல் சட்டியில் சாம்பிராணியைத் துவி பள்ளத்திற்கும் மேட்டிற்குமாக ஆட்டிக் காட்டி விட்டு குழியினுள் வீசியெறிந்தனர் கூட வந்தோர்.
"வால் முனியே உனக்கு நரபலி, தாய்க்குத் தலைமகனைக் காவு கொடுத்திட்டேன். இரத்தபலி கொடுத்திட் டேன். இந்த பலியை ஏத்துகிட்டு இனி பாலத்தைக் கட்ட விடு. குழியை இடிய விடாதே. பாலத்தைக் கட்ட விடு." வெற்றிலையிலை சூ ட த தைக் கொளுத்தி, சுடரை நாலா திசைகளி
லும் காட்டிய முனுசாமியின் நா. முணுமுணுக் கனி றது. கைகள் நடுங்குகின்றன.
அப்போது மற்றவர்கள் அதல பாதாளத்தில் தலை சிதறி குற்றுயிரும் குறையுயிருமாகக் கிடக்கும் கணபதி யின்மீது பெரிய பெரிய பாறாங்கற்களை தம் தலைக்கு மேலே தூக்கி தூக்கி. முனியே பலி ஏத்துக்க. ஏத்துக்க. என்று சரமாரியாக போட்டுக்கொண்டே
னுள். ஆழக்குழியில் பள்ளத்தில் யிருந்தனர்.
Š - A. தலாவ பாலிஸ் iero LIITTabu Lu N
Z7ബ് N } ே S சிறப்பு - 3 N மாத்தளையைச் சேர்ந்தவர். Š N
33

Page 19
"மல்லிகை” மாத்தளை சிறப்பிதழாக மலர்ந்திட வாழ்த்துக்கள்
Alankar Jeuuellers
236, Trincomalee Street, Matale Phone: 066 - 2344

தொலைத்துவிட்ட சமாதானம் தேடி. மும்தாஜ் முபாரக்
உனக்கு நானும் எனக்கு நீயும் எதிரிகளாய் எஞ்சிப் போனோம் இருண்ட காலத்தின் பாடல் இருள் பற்றியே அமைந்தது எனக்கும் என் சகோதரனுக்குமிடையே யுத்த காண்டம் அரங்கேறிற்று யுத்தங்களின் வாசத்தில் நாசிச்சுவர் உரிய கவசங்களுக்குள் வெந்து கிடந்தன நம்முடல்கள்!!
விஷக்கொடி முடிச்சுகளில் எலும்புகள் தசையை இடம் பெயர்க்க உயிரணுக்கள் மடிந்து விழுப்புண்களே எஞ்சி நின்றன மனுஷர்களின் சுழற்சியில் மனுஷனை மோதி முறிய பயந்தபடிதான் பகலைக்கூடக்
கடத்தினோம் திசைவெளியெங்கிலும் இருண்டு திரண்டது புகை பிணவாடையே துரத்திற்று உலக வீதிகளில் செம்மணிக்குள் சகோதரனைப் புதைத்துவிட்டுத் திருப்தியாய்த் திரும்பினோம்
என்றாலும் என்னை ரத்தத் தாகவிடாயில் தேடல்கள் தொடர
Š x2O627یڑھیوڑھی zzzzو
சிறப்பு - 4
சாரணர் இயக்கத்தை முதன்முதல் தோற்றுவித்ததும் மாத்தளையே. அதன் முதல் உறுப்பினர் அமரர் திருநடராஜா அவர்கள்.
Š
கருணைக்கு இடமின்றி மணவறை சுருங்கிப் GLATóïĝbgy
தரித்திரத்தின் கரகோஷம் வீட்டு வாசலடியே கேட்டது குலை பதற விழிகள் குத்திநின்றன கேவலம் குருவிகளின் கீச்சுக் குரலில்கூட சினேகமே தெரிந்தது சொல்லத் தெரியா ஏமாற்றங்கள் நெஞ்சு கவ்வின அறியாததான எதிர்காலம் தேடி உள்ளுள் எரிந்த தீரின் சுவாலையில் இருந்த கொஞ்ச நஞ்ச ஈரமும் உலர்ந்தே போயிற்று
உனக்கு நானும்
எனக்கு நீயும் எதிரிகளாய் எஞ்சிப் போனதன் பேரிழப்பில் தழுதழுத்த இதயம் கண்ணீராய் வெளியேறிற்று தெய்வீகப் பேரொளியாம் நின் சமாதான வேதத்தின் நித்திய விலாசம் தேடி நடையிட்டன நம் கால்கள்
5
司

Page 20
"மல்லிகை" மாத்தளை சிறப்பிதழாக
மலர்ந்து மணங்கமழ்ந்திட வாழ்த்துக்கள்
173, Main Street, Matale Gowri Jewellers Dealers in 22 Ct Genuine Gold Jewellery
 

இன்றைய நவீன தொடர்பாடல் முறைகள் பாத்திமா ஷமீமா
இன்றைய இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்திலே வர்த்தகத்துறை பெருமளவு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வதைக் காணமுடிகிறது. அந்த வகையிலே வர்த்தகத்தின் துணைச் சேவைகளில் ஒன்றான தொடர்பாடல் முறையும் இன்று பெரு வளர்ச்சி கண்டுள்ளது.
இன்றைய நவீன தொடர்பாடல் முறைகள் பற்றி ஆராயுமுன்னர் தொடர் பாடல் என்றால் என்ன என்பது பற்றி சற்று அறிந்து கொள்வோம். தொடர் பாடல் என்பது தனி நபர்களுக்கிடை யேயோ அல்லது தனியாருக்கும் நிறுவனங்களுக்குமிடையேயோ செய்தி கள், கருத்துக்கள், ஆலோசனைகள் போன்றவற்றை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கையாகும். அதாவது செய்திக ளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதே தோடர்பாடலாகும்.
பல்வேறுபட்ட தொடர்பாடல் முறைக ளுள் இன்றைய நவீன தொடர்பாடல் முறைகளாக பெக்ஸ் (Fax), டெலெக்ஸ்
(Telex), கூரியர் சேவை, செலுலர் (Celular), G6ër (8 vit(3. It is (Infotalk)
போன்ற தொலைபேசிகள், இனடர்நெட் (Internet), S-Gupuiao (E-Mail) (3 Jigorg வற்றைக் குறிப்பிடலாம். இவை தொடர் பான சில தகவல்களை இங்கு நாம் காண்போம். பெக்ஸில் (Fax) தகவல் களை எழுத்துக்களாகவோ, வரைபடங்
களாகவோ விரும்பிய மொழிகளில் அனுப்பலாம். இதற்காக இரு முனைக ளிலும் டெக்ஸ் (tax) இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அனுப் பவேண்டி: தகவலைத் த்யார்படுத்தி பெக்ஸிற்குக் கொடுக்கப்படும்போது அனுப்பவேண்டிய முனையிலுள்ள் பெக்ஸ் இயந்திரத்திலிருந்து தகவல் அல்லது செய்தி போட்டோ பிரதி மூலம் வெளிப்படுத்தப்படும். 1970 காலப்பகுதி யில் ஆரம்பிக்கப்பட்ட இம்முறை ஒரு வானலை தொடர்பு சாதனமாகும்.
டெலெக்ஸ் (Tex) முறையானது இரு முனைகளிலும் டெலெக்ஸ் இயந்திரங் களைக் கொண்டிருக்கும், செய்தியை அனுப்பவேண்டிui முனையிலுள்ளவர் ஆங்கிலத்தினால் தனது செய்தியைத் தயாரித்துடெலெக்ஸ் இயந்திரத்தில் பொறித்ததும் அனுப்ப வேண்டிய டெலெக்ஸின் இலக்கத்திற்கு வானலை மூலமாக செய்தி கொண்டு செல்லப் படும். இச் செய்தி கிடைக்கும் முனையி லுள்ள டெலெக்ஸ் இயந்திரததில் ஆங்கில மூலப் பிரதியாகக் கிடைக்கும்.
கூரியர் சேவையானது சர்வதேச ரீதியாகப் பொதிகள் (Parets). வியா பாரத் தகவல்கள், மாதிரிப் பொருட்கள், ஆவணங்கள் என்பவற்றைப் பரிமாற்றிக் கொள்வதற்கு Liயன்படும் முறையT கும். இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் மிகக் குறுகிய காலத்தில் வெளிநாட்டு

Page 21
முகவர்களுக்கு கையளிக்கும்முறையே
Jinfluff (33606). Sg. DHL, Universal parcel Service (3 ft 6 6f LDT 6013, கம்பனிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
செலூலர் (Cellular) தொலைபேசி முறையானது கம்பிகள் இணைப்பற்ற வான் வழித் தொடர்பாடல் முறையாகும்.
இதனை நடமாடும் சேவை எனவும்
குறிப்பிடலாம். எந்த ஒரு தொலைபேசி யுடனோ அல்லது மற்றொரு செலுாலர் (Cellular) உடனோ இணைத்து செய்தி களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். செய்தியை அனுப்புபவ ரிடமிருந்தே இதற்குரிய கட்டணம் அறவிடப்படும். இச்சேவையை இலங் கையில் செல்டெல் (Celtel), மொபி GL6) (Mobitell), (35. T6) - 656óid (Call -Link) போன்ற பல்வேறு தனியார் நிறு வனங்கள் நடைமுறைப்படுத்துகின்றன.
இன்போடெக் (Infotalk) என்பதும் ஒரு நவீன தொலைபேசி முறையாகும். இனோமீடியா எனும் பிரசித்தமான தொலைத் தொடர்புக் கருவிகளின் உற்பத் தி நிறுவனமே இதனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இன்டர்நெட்டின் (Internet) துணையுடன் கிடைக்கும் செய்திகள் இன்போடெக் எனும் இத்தொலைபேசிக்கு மாற்றப்படு கிறது. வேண்டிய நேரம் உரையாடக் கூடிய இத்தொலைபேசியை சாதாரணத் தொலைபேசியைப் போலவே பாவிக்க லாம். இதனுடன் பதிலுரைக்கும் இயந் திரமொன்று இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் மூலம் வரும் அழைப்பு களை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் வெளிநாட்டுத் தொலைத்தொடர் ஏற்படுத்தக்கூடியதாக இத்தொலைபேசி அமைந்துள்ளது.
இன்டர்நெஷனல் நெட்வேக் (International Network) 676ÕTL6Oogöở Gi(b&ÈG56
தால் வரும் இன்டர்நெட் (Internet) கணனி உலகின் புதுவரவு எனலாம். இணையம் என்ற தமிழச் சொல்லைக் கொண்ட இன்டர்நெட்டானது 1969ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தனிப் பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டது. ஓர் அபாயத்தைத் தடுக்கும் வகையிலேயே அமெரிக்கா தனது முக்கிய இடங்களிலிருந்த மெயின்பிரேம் கம்பியூட்டர்கள் (கணனி கள்) அனைத்திலும் முக்கிய தகவல்க ளைப் பதிவு செய்து ஒரு கணனியிலிரு ந்து இன்னொரு கணனிக்குத் தகவல் பெறும் நெட்வேக்கை (Network) உரு வாக்கியது. எர்நெட் (Ernet) என்ற லோக்கல் நெட்டை விரிவுபடுத்தி உல கெங்குமுள்ள கணனிகளை இணைக்க லாமே என்ற எண்ணத்தின் வெளிப் List(8L 1986 (S6) National Science Foundation Net S, 60T gal. SÐgb(86 இன்டர்நெட் என வழங்கப்படுகிறது.
இலக்ரோனிக் மெயில் (Electronic Mai) என்பதன் சுருக்கமான இ-மெயில் (E-Mail) ஆனது இன்டர்நெட் பிறப்பத ற்கு முன்பே ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு தகவல் பரிமாறு வதற்குப் பயன்படுத்தப்பட்டது. கணனி வைத்திருக்கும் இருவரிடையே அல்லது கணனியுள்ள இருமுனைகளிடையே நடக்கும் தகவல் பரிவர்த்தனையே இம்ெயில் எனப்படுகிறது. இது சாதாரண அஞ்சலைவிட மிகவும் விரைவானது. சிக்கனமானது. அனுப்பும் செய்திகளில் எழுத்துக்கள் மட்டுமன்றி ஒலி, ஒளி என்பவற்றையும் அனுப்ப முடியும்.
இவ்வாறான இன்னும் பல்வேறு
நவீன தொடர்பாடல் துறைகளால்
இன்று வர்த்தகத்துறை மட்டுமன்றி இன்னும் பல துறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரிய தம்பியின் புள்ளி ஆடு
மலரன்பன்
புள்ளி ஆடு காணாமல் போய்விட் டது. பட் இறப்பர்’ மலை, கொக்கோ மலையென எங்கும் தேடியாகி விட்டது. மற்றய ஆடுகளுடன் சேர்ந்து மேயப் போனதுதான். பெரிய தம்பியும் இரண்டு முறை ஆள்காட்டிவிரலை நீட்டி ஒன்றொ ன்றாக எண்ணிப் பார்த்து விட்டான். பட்டியில் இருபத்தியிரண்டு உருப்படி கள் தான் றிற்கின்றன. மொத்தம் இருபத்து மூன்று இருக்க வேண்டும். துல்லியமாகத் தெரிகின்றது. புள்ளி ஆட்டுக்கிடாயைத்தான் காணவில்லை.
மேய்ச்சலுக்கு ஆடுகளைப் பத்திக்
கொண்டு போன ஸ்டோர் லயத்து
சின்னராசு அரண்டுபோய் நிற்கின்றான். மூன்று நாட்களாக சின்னராசுதான் அழகனுக்குப் பதிலாக மாத்துக்காட்டு ’க்கு ஐயாவின் ஆடுகளை மேய்க்கப் போகின்றான். தோல் போர்த்திய பதின் மூன்று வயது எலும்புக்கூட்டிலிருந்து அடிக்கடி நழுவி விழும் அரைக்காற் சட்டை. பிருஷ்டம் தெரியும். கிழிசல் காற்சட்டையின் பின்புறம் செம்மண் அப்பிக்கொண்டிருக்கின்றது. ஆடுகள் 'செவனேன்னு மேய இவன் எங்காவது காளான் பூத்திருக்கின்றதா எனத் தேடித் தோண்டிக்கொண்டிருந்திருக்கக் கூடும்.
ந்ேறறு சின்னராக தண்ணிக் கானில்
பிடுங்கிகிகொண்டு போன சேமன் குருத் துக்களைத்தான் தாய் குழம்பு வைத் துக்கொடுத்தாள். ஒருபிடி சோறும் கோப்பை நிறைய சேமன் குழம்பும் தான் இராச்சாப்பாடு. கணக்கப்பிள்ளை ஐயா வீட்டிலிருந்து சின்னராசு கொண்டு போன ஒரு ஆளுக்கான சோறுதான் நான்கு பேருக்கும் பகிரப்பட்டது.
'கங்குவெட்டு மலையில் ராஜாப் பீலிக்கருகில் காட்டு சூரியகாந்தி வளர்ந்து பந்தலாய்ப் பின்னிக்கிடக்கும் நெத்திக்கான் மட்டுமே ஆட்டைத் தேடு வதற்குப் பாக்கி. கானில் இறங்கித் தேடலாம் என்றால், கருகருவென இருட்டிக் கொண்டு வந்துவிட்டது. வெருகு சேம்பு வேறு வளர்ந்து மண்டிக் கிடக்கின்றது.
"ஆட்டுக்குப் பின்னுக்கே தாங்க அம்மா நின்றேன்"
திக்கித் திக்கி வார்த்தைகள் வருமுன் அழுதே விடுகின்றான் சின்னராசு.
தோட்டத்து உத்தியோகத்தினரின் மனைவியரை வயது வித்தியாசம் இல்லாமல் 'அம்மா’ என்றழைப்பது மரியாதை கலந்த அந்தஸ்து.
பெரியதம்பிக்கும் அழுகை குமுறிக்
مراجع

Page 22
கொண்டு வருகின்றது. புள்ளிமான்
நிறத்தில் புள்ளிகள் நிறைந்த கிடாய்.
குட்டிபோட்ட நாளிலிருந்து பெரியதம்பி ஆசையோடு தூக்கி வளர்த்தது.
அம்மாவுக்கும் விசனம்தான். அழகன் இருந்திருந்தால் ஆடு போயிருக்காது. கணக்குப்பிள்ளை ஐயா வீட்டில் ஆடுகள் மேய்ப்பது, குழை
வெட்டுவது எல்லாமே அழகன்தான்.
'அக்கா மகளுக்குச் சடங்கு' என்று சொல்லி ரத்வத்தை தோட்டத்திற்கு போனவன் மூன்று நாட்களாகியும் திரு ம்பி வராததால் வந்த வினை. சின்னப் பயல் ஆட்டைத் தொலைத்துவிட்டு வந்து முழிக்கிறான்.
அழகன் பால் வெட்டு ஆள்’. பால்
வெட்டு வேலை பகல் ஒன்றரை மணியோடு முடிந்துவிடும். பால் அளந்து, சோடியம் அசிட் தண்ணிர்
கலந்து நுரை பிரித்து டிஸ் களில் அடுக்கி வைப்பதோடு சரி.
பால் அளந்த கையோடு கணக்குப் பிள்ளை ஐயா வீட்டில்தான் வந்து நிற்பான் அழகன். பகல் சாப்பாடு ஐயா வீட்டில். கோப்பிக் கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு ஆடுகளுடன் புறப்படு வான் இறப்பர் மலைக்கு. ஆடுகள் தங்கள் பாட்டுக்கு மேய கொக்கோ மலையில் பலாக் குழை ஒருகட்டு வெட்டிக்கொண்டு டோய் ஆட்டுப்பட்டி யில் போட்டுத் திரும்பிவிடுவான். நேரம் கிடைத்தால் பட்டுப்போன இறப்பர் வாது இருக்கின்றதா? எனத்தேடி மரத்திலேறி, ஒரு கட்டு விறகும் வெட்டிக் கட்டி வைத்துக் கொள்வதுமுண்டு, ஐயா வீட்டுக்கு மாத்தளையில் புதுப்படம் போடும்போது டிக்கெட்டுக்கு விறகு கைகொடுக்கும். கைரேகை மறையும்
நேரம் ஆடுகளை ஒட்டி வந்து பட்டியி
லடைத்துத் திரும்பும்போது குசினி
40
காணாமல்*
வராண்டாத் திட்டில் ஆவி பறக்கும் தேநீர் காத்திருக்கும்.
மூன்று நாட்கள் அழகன் இல்லை. ஓர் ஆடு குறைந்து விட்டது. அம்மாவுக் கும் கவலைதான். ஐயா வந்து என்ன சொல்லப்போறாரோ.
ஐயா வேலை முடிந்து வீடு திரும்பும் போது நன்றாகவே இருட்டிவிடும். நூறு ஏக்கர் விஸ்தீரணத்தையே பேராகக் கொண்ட நூறு ஏக்கர் தோட்டத்தின் சொந்தக்கார முதலாளியும், அதே தோட்டத்தில் பங்களாவில் இருந்தாலும், வேலைக்கான முழுப் பொறுப்புகளும் ஐயாவினுடையதே. இருட்டும் வரை வேலை செய்யும்படி இருக்கின்றதே என அம்மா நொந்துகொண்டாலும், இதை விட்டுவிட்டால் பிள்ளை குட்டிகளுடன் தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதும் அம்மாவுக்குத் தெரியாததல்ல
"புள்ளி ஆடு காணாமல் போயிருச்சி
அப்பா" ஸ்கூல் ஹோம் வேர்க் செய்து
கொண்டிருந்த பெரியதம்பி அழுதே விட்டான்.
வீட்டினுள் நுழைந்த கணக்கட் பிள்ளை சின்னராசுவை ஏறிட்டுப் பார்க்கி ன்றார். இவனெல்லாம் ஆடு மேச்சா உருப்பட்ட மாதிரித்தான்' என்கிற மாதிரி. அடி விழுமோ என்கிற பயத்தில் கூனிக்குறுகி சுவரோடு ஒட்டிக்கொள்கின் றான் சின்னராசு.
முத்தன் பூசாரிக்கு செய்தி போனது தோட்டம் தோட்டமாக சுற்றி கோடாங்கி அடிப்பது: முத்துப்போட்டுப் பார்ப்பது ஊர்ச்செய்திகளைப் பரப்புவுது என்ப:ை
முத்தன் பூசாரியின் பிரதான ஜோலிகள்,
வெள்ளித்தலை மயிரும் முறுக்கிய கிருதாவும் சந்தனப் பொட்டும், ஆளைப் பார்க்க பவுசாதான் இருக்கும். பூசரி கொண்டு வரும் ஊர்ச்செய்திகளில்

கற்பனையே தூக்கலாக இருப்பது af BÜLJubagub.
விரித்துப் போட்ட படங்குத் துண்டில் சம்பலம் போட்டு உட்கார்ந்து, "முருகா" என்று இருகரம் கூப்பி வணங்கி, சிறிய சுருக்குப்பையை விரித்து முத்துக்களை கைக்கெடுக்கின்றார் பூசாரி, படங்கின் மூலையில் வெற்றிலையில் அம்மா வைத்த பத்து ரூபா காணிக்கையை ஒரக்கண்ணால் பார்த்தபடி.
குலுக்கிய முத்துக்களை லாவகமா கப் படங்கில் போடுகின்றார்.
“முருகா ஒன்னு. ரெண்டு. மூணு. நாலு. அஞ்சி." கணக்கெடுக்கின்றார்.
மீண்டும் குலுக்கல். இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் ஐந்தே விழுகின்றன.
"மூணு தரம் அஞ் சாம் வீடு வந்திருச்சா. எதுக்கும் அஞ்சாதேன்னு சொல்லுது. ஒங்க மனசில உள்ள ஒரு கவலயைப்பத்தி கேக்குறீங்க. சரியா நான் சொல்றது. என்னா கவலைன்னு சொல்லுங்க."
“என்னா பேசமாட்டேங்கிறீங்க. கவல வீட்டு அரசனை பத்தியா? எதிரிகாரன்க ளோட பில்லி சூனியம் சூழ்ச்சியா? இல்லாட்டி யாருக்கும் நோய் நொடியா. இல்ல பொருள் ஏதும் காணாமல் போயிருக்கா”
"வளர்க்கிற பொருள் ஒன்னு காணாமல் போயிரிச்சிங்க."
"நாலுகால் சீவனா இல்ல வேற ஏதுமா?”
"பெரியதம்பி ஆசையா வளத்த கெடா குட்டிங்க."
பெரியதம்பி படங்குக்கு முன்னால் உட்கார்ந்துகொள்கிறான்.
முத்துக்கள் உருள்கின்றன.
"ஒன்னு ரெண்டு மூணு. மூணாம்
வீட்டுக்குக் காணாமல் போதனு தானாகவே வருது”
"ஒன்று ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு. ஆறு உழுந்தா ஆறுதல் தான் கேடு ஒன்னுமில்லை."
அடுத்தமுறை நான்கு.
"நாலு உழுந்திருக்கா. நாலாம் வூடு நடப்பயணம். நாலடி தூரம். நீங்கள் எதுக்கும் அஞ்ச வேண்டாம். காணாமல் போன ஆடு உசிரோட வீட்டுக்கு ഖന്ദ്രg."
அம்மா சலனமில்லாமல் பூசாரியின் முகத் தையே பார் தி துக் கொண்டிருக்கிறாள்.
"நான் சொல்லல. முத்து பேசுதுங்க. நீங்க ஒண்னுக்கும் கவலப் பட வேணாம்."
பாதி பாரம் குறைந்த மாதிரி அம்மாவுக்கு.
"அலகு மலையானுக்கு சேவல் பலி கொடுக் கிறேன் னு நேத்திக் கடன் போடுங்க. ஆடு கெடச்ச ஒடனே சொல்லியனுப்புங்க. நான் வந்து அலகு மலையான் பூசைய ஒரு கொறையும் இல்லாம செஞ்சி தாரன்"
மேய்ந்துகொண்டிருந்த கொண்டை வளர்ந்த சிவப்புச் சேவல் ஒன்றைப் பிடித்து, மஞ்சள் நீரில் நனைந்த துணித் துண்டை காலில் கட்டி தலைக்கும் மஞ்சள் நீரைத் தெளிக்கின்றாள் அம்மா. தலையை உதறி சிறகடிக்கின்றது சேவல்.
彦T丐

Page 23
"சேவ தலய ஆட்டிருச்சி. அலகு மலையான் நேத்திக்கடனை பாரம்
எடுத்துக்கிட்டாரு. நான் போயிட்டு
வாரங்க."
நாலெட்டு நடந்த பூசாரி திரும்பி வந்து,
"அம்மா தேத்தூளு இருந்தா ஒரு புடி குடுங்க தாயி. சாயத்தண்ணியைக் கண்டு ரெண்டு நாளாச்சி”
SLíbuDs! அறைக்குள் போக,
"நான் ஒரு மடையன். அம்மாவுக்கு
இருக்கி வெசனத்தில தேத்துாளும், கீத் தூளும். செரமமா இருந்தா வேணாங்க அம்மா. நான் போய்ட்டு வாரன்.”
இடத்தை விட் டு நகராமலேயே
நிற்கின்றார்.
அம்மா உள்ளேயிருந்து கொண்டு வந்த காகிதப் பொட்டலத்தை வாங்கும் போது ஒரு புது மலர்ச்சி. கும்பிடு போட்டு நடையைக் கட்டுகின்றார்.
ஆடு களேபரத்தில் சுணங்கிவிட்ட சமையலை முடிக்கும் அவசரம் அம்மா வுக்கு. இடைவிடாமல் நாய் குரைக்க ஜன்னல் வழியே பார்க்கின்றார்.
இறப்பர் மலையில் குறுக்குப் பாதை
யில் கொள்ளிக் கட்டையை வீசியபடி
ஒரு காலை இழுத்து இழுத்து நொண்டி நொண்டி வந்துகொண்டிருக்கிறான் ஸ்டோர் லயத்து செல்லையா.
இருட்டிய பின்னரும் மகன் சின்ன ராசு வீடு வராததால் தேடிக்கொண்டு வந்திருக்கிறான். ஊனமான காலுக்குத் துணையாக ஊன்றிக்கொண்டு வந்த ஊன்றுகோலை சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டு குசினிப்பக்கம் போய் நிற்கின்றான்.
"புள்ளி ஆடு காணாமப் போயிரிச்சி
42
செல்லையா”
"ஐயயப் யோ! ஆடு காணாமப் போயிருச்சிங்களா அம்மா. பய என்னா செஞ்சிக்கிட்டிருந்தான்."
“சின்னப்பய என்னா செய்வான்.
பாரே இந்த அழகன் சடங்குக்குப் போயி மூணு நாளாச்சி. இன்னும் வரல்ல"
மெல் மெல்ல நகர்ந்து வந்து தகப்பன் அருகில் ஒட்டிக்கொள்கிறான் சின்னராசு.
"ஏன்டா, ஆட்டை காணாமாக்கிட்டு வந்து நிற்கிறியா. திங்க தெரியும். கவனமா வேலை செய்ய தெரியாது. வா ஊட்டுக்கு. ஒன் முதுகு தோல உரிச்சி தப்பு கட்டுறேன்."
"அவனைப் போட்டு அடிச்சிறாத. சின்னப்பய. கொஞ்சம் இரு தண்ணி சுட்ட ஒடன தேத்தண்ணி ஊத்தித் தாரேன்”
செல்லையாவுக்குக் கால் முறிந்ததி லிருந்து அம்மாவுக்கு அவன்மேல் கொஞ்சம் அனுதாபம்.
இறப்பர் ஸ்டோர் அடுப்புக்கு விறகு வெட்டும் போது மரம் விழுந்து ஒருகால் முறிந்துபோனவன் செல்லையா. ஊன்று கோல் இல்லாமல் நடக்க முடியாது. மூன்று பிள்ளைகள். மனைவி ஒருத்தி யின் உழைப்பில் அரை வயிறும் கால் வயிறுமாக வண்டி ஓடுகின்றது. மூத்த வன் சின்னராசுவை ஐயாதான் வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார். காலையில் வந்து பங்களாவையும் சுற்றுப்புறத்தையும் கூட்டுவது, பூந்தோட் டத்தில் புல் பிடுங்குவது, பூஞ்செடிக ளுக்குத் தண்ணிர் ஊற்றுவது அன் றாடப் பணி. சாப்பாடு மட்டுமே வேதனம். அந்திக்கு தனது பங்கு இராச்சாப் பாட்டை சுற்றி எடுத்துக் கொண்டு

போய்விடுவான் வீட்டுக்கு
முதலாளிமார் தோட்டத்தில் வேலை
நேரத்தில் நிகழ்ந்த விபத்துக்காக நஷ்டஈடு வாங்குவதென்பது சீக்கு மரத்தில் பாலெடுக்கும் சாதனை.
தோட்டத்தில் இரண்டு சங்கங்கள். ஒரு சங்கத்துக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்தால் மறு சங்கத்து ஆட்கள் ஒருவர் தவறாமல் வேலைக்கு வருவார் கள் எண் ற ஒற்றுமை முதலாளிக்குத் தெரியாதா என்ன!
செல்லையாவின் பிரச்சினை மூன்று மாதங்களுக்கு மேல் கொன்பரன்ஸ் என்றும் விசாரணை என்றும் ஒட்டுப் பாலாய் இழுபடுகின்றது. காலோடு மனமும் உடை நீ துபோனான செல்லையா.
காலேலாதவன் என்கிற கருணையி னால் வீட்டுக்குக் கொஞ்சம் பிடியரிசி சேர்த்து கொடுப்பதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டுக்கு ஒரு மாதம் வரை இருந்த ஒத்துழைப்பும் எப்போதோ குறைந்து ஏனோதானோவென்று போக ஒருநாளை க்கு ஒன்றோ ரெண்டு வேலையோ அரைவயிறும் கால் வயிறுமாக காலம் ஓடுகின்றது.
மாதக்கடைசி. லயத்தில கைமாற் றாக காசோ அரிசியோ நினைத்தும் பார்க்க முடியாது. சம்பளம் போட்டால் பாதிக் கடனையாவது அடைத்துவிட்டு பல்லைக் காட்டலாம் கடைக்காரனிடம். பதிநாலு நாளர் தான் (8 LI mỉ போட்டிருக்கிறாள் மனைவி.
இரண்டு நாட்களாக ஐயா வீட்டில் சின்னராசுவுக்குக் கொடுக்கிற இராச் சாப்பாடுதான் ஐந்த பேருக்கும் ஆளுக் கொரு பிடி என்ற வகையில். அரிசி கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகும்
எண்ணமும் இருந்தது செல்லையாவு க்கு. ஆடு காணாமல் போன கவலை யில் இருக்கும் அம்மாவிடம் எப்படிக் கேட்பது. அம்மா கொடுத்த சின்னராசு வின் இராச்சாப்பாட்டுடன் கொள்ளிக் கட்டை ஒன்றை வாங்கி விசிறியபடி நடக்கின்றான் மகன் பின்தொடர.
மறுநாள் பெரியதம்பிக்கு பள்ளிக் கூடம் போக மனமில்லை. ஆட்டைவிட வரப்போகும் பரீட்சை முக்கியம். ஐயா வின் அதட்டலோடு புறப்பட்டுவிட்டான். மாலையில் ஸ்கூலிலிருந்து திரும்பிய பின்னர்தான் பயணம் போயிருந்த அழகன் தோட்டம் வந்து சேர்ந்தான்.
ஆடு காணாமல் போனதல் அழகனுக்குக் கவலையோடு கோபமும் கூட. சின்னராசுவைப் பிடித்து முதுகில் இரண்டு போடப்போனவனை அம்மா தடுத்துவிட்டாள்.
பெரியதம்பியுடன் சின்னராகவையும் கூட்டிக் கொண்டு ஆட்டைத் தேடப் புறப்பட்டான் அழகன். செல்லையாவும் இவர்களைப் பின்தொடர்கின்றான்.
ராஜா பீலியருகில் சூரியகாந்தியும் வெருகுசேம்பும் மணி டிக் கிடக்கும் நெத்திக்கானில்தான் தேடவேண்டும். கானுக்கு மேற்புறமாக உள்ள மேட்டில் கொக்கோ மலை பவுண்டரியில் கற்பாறையில் ஏறி நின்றுகொண்டார்கள் பெரியதம்பியும் சின்னராசுவும்.
செல்லையாவை கானோரமாக நிறுத்தி சூரியகாந்தி செடிகளை விலக்கிக் கொண்டு உள்ளே இறங்குகிறான் அழகன்.
ராஜா பீலிக்கு அழகனோடு குளிக்கப்
போகின்ற நாட்களில் பெரியதம்பியை
இந்தக் கற்பாறையில் உட்கார வைத்து
விட்டு மைனாக்குஞ்சு பிடித்துக்கொண்டு
43

Page 24
வருகிறேன் என கானில் இறங்கி விடுவான். திரும்பி வர அரைமணித்தி யாலத்துக்கு மேலாகும். அழகன் திரும்பி வந்த சற்று நேரத்துக்கெல்லாம் தவறனை மெய்யனின் மகள் அவிழ்ந்த கூந் தலை முடிந்தவாறு மேலே வருவாள். ராஜா பீலிக்குக் கீழேயுள்ள கானை மறித்து அணை கட்டப்பட்டுள்ள இடத்துக்குப் பக்கத்தில் கொக்கோ மிளகுக் கண்றுகள் நாட்டப்படும் தவறனை இருக்கின்றது. மெய்யனுக்கு உதவியாக கன்றுகளுக்குத் தண்ணிர் இழுத்துக் கொடுப்பதற்கு மகள் வருவாள். ஒருநாளாவது அழகன் கிளிக் குஞ்சோ மைனாக் குஞ் சோ பிடித்துக் கொடுத்ததில்லை.
இப்படித்தான் ஒருநாள் அழகனோடு குளிக்கப்போன சமயம், தலையில் சுமையுடன் வந்த மெய்யனின் மகளின் அருகில் சென்று சிரித்துப் பேசியபடி அவளது முலையைப் பிடிக்கின்றான் அழகன். அவளும் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே போனது ஏனென்று விளங்கவில்லை.
சின்ன வயசிலிருந்தே அழகனைப் பெரியதம்பிக்குத் தெரியும். அவனது செயல்கள் ஒவ்வொன்றும் இன்னும் புதிராகவே இருக்கின்றன.
பள்ளிக்கூடத்தை எட்டியும் பார்க்காத வயசு, பெரியதம்பியை குளிப்பாட்டி பவுடர் போட்டு சுத்தமான உடை அணிவித்து கடைப்பக்கம் கூட்டிக்
கொண்டு போகச் சொல்வாள் அம்மா.
சில்லறையும் கிடைக்கும்.
கடை முதலாளியிடம் அழகன் கண்சிமிட்டியபடி சொல்வான்.
“மொதலாளி ஒங்க கடசாவிய காணமின்னு தேடுனீங்களே இந்தா பாருங்க இருக்கு."
工配莎
VS
பெரியதம் பியின் ஜங்கியின் முன்பக்கத்தை நீக்கிக் காட்டுவான் அழகன். பெரியதம்பிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்,
"சாவியை நீங்க கொண்டு போனது. நாங் மிச்சம் கஸ்டப்பட்டது” சிரிக்காமல் சொல்வார் முதலாளி. யார் யாரோ சிரிப்பார்கள். இனி அழகனோடு கடைக் குப் போவதில்லை என நினைத்துக் கொள்வான். மறுநாளும் அழகனோடு தான் அனுப்புவாள் அம்மா.
அழகனோடு கோபித்துக்கொண்டால் இரவில் கதை சொல்ல யாருமில்லை. கூடுவிட்டுக் கூடுபாயும் விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராசன் கதை, நல்ல தங்காள் கதை என நூற்றுக்கணக்கில் கதைகள் தெரியும் அழகனுக்கு
பேய்க்கதை சொன்னால் வெளியில் இறங்கவே பயமாயிருக்கும். அஞ்சுரோட் டில் தூக்கில்போட்டு செத்த அமராவதி பேயையும், பாடமாத்தி அவட்டப்பேயை யும், ஸடோர் றோத முனியையும் சச்சு ருவா கண்ணால கண்டவன் அழகன்.
பெரியதம் பிக்கு ஒரு சின் ன கைவாளி கொடுத் திருக்கின்றாள் அம்மா. படுக்கைக் காம்பராவின் ஒரு மூலையில் கைவாளி இருக்கும். இரவில் கைவாளியில்தான் ‘ஒன்னுக்கு இருப்பான். காலையில் முதல் வேலை வெளியில் கொண்டுபோய் ஊற்றி விடுவது. அழகனோடு கோபித்துக் கொள்ளக் கூடாது. தோட்டம் பூராவும் இதனைத் தப்படித்துவிடுவான்.
பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் புள்ளி ஆட்டைத் தோளில் சுமந்தவாறு மேலே வருகின்றான் அழகன், சூரியகாந்தி செடிகளை ஒரு கையால் ஒதுக்கியபடி.

வயிறு உப்பி, கால்களும் கழுத்தும் நீட்டி விறைத்துப் போயிருந்தது, மண் ணில் கிடத்தப்பட்ட புள்ளி ஆடு. கால் தவறி கானில் விழுந்து கழுத்து ஒடிந்தி ருக்க வேண்டும். செத்த ஆட்டின் மூக்கி லிருந்து சீழ் வடிந்தது. குப்பென்ற துர் நாற்றம். நொய்யென ஈக்கள் சீழ் வடிந்த இடத்தில் மொய்த்தன. விரல்களால் மூக்கைப் பிடித்தவாறு நின்ற அழகனுக் குப் பக்கத்தில் போன பெரிய தம்பிக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. அழகன் ஆட்டை சுமந்து கொண்டடுவர முன்னால் ஓடுகின்றான் பெரியதம்பி, வீட்டுக்குச் சற்றுத் தூரத்திலேயே ஆட்டைக் கிடத்தினான் அழகன்.
வெள்ளையும் கறுப்புமாய் மூக்கி லிருந்து குபுகுபுவென பீறிடும் சீழ், பின்னால் துரத்திக்கொண்டு வந்த ஈக்கள் கூட்டத்தோடு இன்னுமொரு செட் ஈக்கள் கூட்டுச்சேர
"அடேயப்பா நாத்தம் கொடலை புடுங்கிது"
சேலைத் தலைப்பால் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டிருந்த அம்மா வின் அடிவயிற்றிலிருந்து ஒரு குமட்டல். ஐயா ஆட்டின் கிட்டகூட நெருங்க வில்லை.
செல்லயைாவிடம் இருபது ரூபா காசைக்கொடுத்த ஐயா சொல்கின்றார்.
"தூரத்துக்குக் கொண்டுபோய்
2Ꮓ2Ꮡ2Ꭷ6ᏧᏃ
ஹொக்கி ஆட்டத்தை முதன்முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தியதும் மாத்தளையே.
ஆழமா குழிவெட்டிப் புதைச்சிரு."
"லயத்து கோடிக்குப் பின்னுக்குப் புதைக்கிறேங்க."
அழகன் உதவியோடு ஆட்டைத் தூக்கித் தோளில் வைத்துக்கொள்கின் றான் செல்லையா. மூக்கிலிருந்து வடியும் சீழ் ஒட்டுப்பாலாய் கோடிழுத்துக் கொண்டு போக மெல்ல நடக்கின்றான் சின்னராசா பின்தொடர.
ராஜா பீலிக்குக் குளிக்கப் போகும் அவசரம் அழகனுக்கு.
புத்தகங்களை விரித்துக்கொண்டு ஜன்னலருகே உட்கார்ந்த பெரியதம்பி க்கு படிப்பில் மனம் செல்லவேயில்லை. பள்ளத்தில் லயம் தெரிகின்றது. தொங்கல் காம்ப்ரா சின்னராசுவினுடை யது. தொங்கல் காம் ப்ராவிலும் பக்கத்துக் காம்ப்ராவிலும் அன்றிரவு நீண்ட நேரம் விளக்கெரிகின்றது.
அன்றிரவு இராச்சாப்பாடு வாங்க சின்னராசு வரவில்லை. மறுநாள் காலை யிலும் வரவில்லை. அதற்கடுத்த நாள் சனிக்கிழமை. சின்னராசுவைத் தேடிக் கொண்டு போகின்றான் பெரியதம்பி உற் சாகமாக இரும்பு வளையம் ஒன்றை உருட்டி விளையாடிக்கொண்டிருக்கின் றான் சின்னராசா. அவர்களின் காம்ப்ரா முன்வாசலில் லைசன்கல்லில் உரித்த புள்ளி ஆட்டுத்தோல் விரித்து சாம்பல் தூவி காய வைக்கப்பட்டிருக்கின்றது.
Š
Š
Š Š Š
8
哆国

Page 25
மல்லிகைக்கு மனம் உவந்த வாழ்த்துக்கள்
O.L.S. Mohamed & Sons
Wholesale and Dealers in Made Tea & All Kinds of Ceylon Products
474, Trincomalee St. Matale T.P.: 066 - 22.353

மாத்தளை மாவட்டத் தமிழ்க் கவிதா பாரம்பரியம் ஏ.ஏ.எம்.புவாஜி
ஆயிரத்து எண்ணுாற்று எண்பதுக ளில் மாத்தளை மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை ஏறத்தாழ எண்பத்தேழாயிரம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அதிக மானோர் தமிழப் பேசும் மக்கள் எனவும் 1881ஆம் ஆண்டு சனத்தொகை மதிப் பீடு சுட்டிக் காட்டுகிறது. இம்மாவட்டத் திலே தமிழரும் முஸ்லிம்களும் இந்த ளவு பரவலாக வாழ்ந்துள்ள போதிலும் இப்பிரதேசத்தின் ஆதாரபூர்வமான தமிழ் இலக் கரிய வரலாறு இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் விடிவுக்குப் பின்னரே ஆரம்பமாகின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். ஆனால் இக்கூற்று, அதற்கு முன்னர் இப்பிரதேச இலக்கி பம் வாய்மொழி இலக்கியமாக வளர்ந் திருக்கலாம் என்ற ஊகத்தை நிராகரிக் கவில்லை என்பதை உணரத் தவறி விடக்கூடாது. உலகின் எந்த ஒரு மொழியினதும் காலத்தால் முற்பட்ட இலக்கியம் நாட்டார் பாடல்களே
எனவும் அவற்றிலிருந்தே ஏட்டிலக்கியம்
6னக் கொள்ளப்படும் ஏனைய வகை இலக்கியங்கள் தோன்றின எனவும் கலாநிதி க. அருணாசலம் கூறுவது இதனையே உணர்த்துகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் அரிசி
விலை இருபத்தைந்து சதமாக உயர, அதன் காரணமாக மரம் ஏறும் தொழிலாளிகள் ஏறு கூலியாக மரம் ஒன்றுக்கு இரண்டு சதத்திற்குப் பதிலாக நான்கு சதம் கேட்டபோது, இப்பிரதேசத்தில் வாழ்ந்த யூனுஸ் லெப்பை என்பவர் தன் நண்பர்களிடம்
"கொத்தரிசி நாலு பணமாச்சு பிழைக்கிறது ரொம்ப மோசமாப் போச்சு மரமேறுறவனும் நாலு சதம் கேட்கலாச்சு என்னடாப்பா இது பெரும் கஷடமாய்ப் போச்சு” என பாடி தன் மனச் சலிப்பைக் காட்டி னார் எனக் கூறப்படுவது, வாய்மொழி இலக்கியப் பாரம்பரியம் ஒன்று மாத்தளைப் பிரதேச மக்களிடம் இருந்திருக்கிறது என்பதை உறுதிப் படுத்துகின்றது.
சில இலக்கியவாதிகள், மாத்தளை தமிழ் இலக்கிய வரலாற்றின் பிதாமகன் என திரு.எஸ்.எஸ்.சிவனாண்டி எனும் சைவப் பெரியாரைச் சுட்டிக் காட்டுகின்ற னர். மாத்தளை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள உடுபிஹில்ல எனும் கிராமத்தில் வாழ்ந்த இப்பெரியார், உடுப் பீலி சச்சிதானந்த பேரின்ப மாதவர் சங்கம், உடுப்பீலி செந்தமிழ்ச்
配江五口

Page 26
சங்கம் எனும் பெயர்களில் மன்றங்கள் நிறுவி சைவப் பணிகளையும் இலக்கி யப் பணிகளையும் ஆற்றியுள்ளார் என இவர்கள் கூறுகின்றனர். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் மிக்க இவர் பல செய்யுட் களை இயற்றியுள்ளார் எனவும் இவர் கள் கூறுகின்றனர். திரு.சிவனாண்டி எழுதிய பஞ்சமா பாதக விளக்க வினா விடை’ எனும் வசனநூல் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. ஆனால் இவரின் கவிதைகள் எதுவும் அச்சு வாகனம் ஏறியிருக்கின்றன என்று கூறு வதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. எனவே மாத்தளை மாவட்ட தமிழ்க் கவிதா பாரம்பரியத்தின் முன்னோடியாக திரு.சிவனாண்டி அவர்களைக் கருது வது பொருத்தமற்றது என்றே நினைக்க வேண்டி உள்ளது.
தகுந்த ஆதாரங்களின் அடிப்படை யில் மாத்திரமே முடிவெடுப்போர்
மாத்தளைப் பிரதேச தமிழக் கவிதை
பாரம்பரியத்தின் மூத்த புதல்வர்களான குமரேசபிள்ளை, கோட்டாறு சுலைமா னுல் காதிரி எனும் இரு இலக்கிய படைப்பாளிகளையுமே இனங்காட்டுவர். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம், மூன்றாம் தசாப்தங்களிலே தம் புலமையை வெளிப்ப:த்திய இவ்விருவ ரது ஆக்கங்களும், அக்கால இலக்கி யப் பண்புகளுக்கேற்ப சமயச் சார்பு டையனவாகவே விளங்குகின்றன. இவர்களது அத்தனை படைப்புக்களின தும் கருப்பொருளாக அமைந்து இருப்பது சமயமே.
நீர்வளமும் நிலவளமும் மக்கள் மனவளமும் ,குன்றாத மலைநாட்டின் மத்திய பகுதியாம் பன்னகாமம் என்னும் எழில் கொஞ்சும் மாத்தளை யில் கோயில் கொண்டு வீற்றிருக்கும் அருள் மிகு அன்னை பூரீ முத்துமாரியம் மன்
瓯配致
மீது பதிகம், அந்தாதி, ஊஞ்சல் எனப் பல பிரபந்தங்கள் இயற்றி மாத்தளை வாழ் சைவப் பெருமக் களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற வர் உயர்திரு குமரேசபிள்ளை ஆவார்.
“சீரான செந்நெல் விளைகழனிகளமைந்துலவு செய்ய பங்கேருகங்கள் செப்பு வால் வளையினிது சூற்கொண்டல் பூகமா செண்பக மலர்ந்துலவிடப் பேரான நீரோடை வாவிகளமைந்து நற் பெய்யுமுகி லினம தென்னப் பிரபலத்துடனருவி சொரிநறவ மணிகளும் பிரிவிலாதுலவி யொளிரும் நேரான நயமருவநிகரில் வளமுற்றிடும் நீள் பன்னகாமமுறையும்"
என அன்று தமிழ் பேசும் மக்களால் பன்னகாமம் என்றும் அழைக்கப்ட்ட
மாத்தளையின் இயற்கை அழகுகளை
மாத்தளை முத்துமாரி அம்பாள்
பதிகத்தில் எடுத்துரைத்த குமரேச பிள்ளை அவர்களின் தமிழ் அறிவை, கவிதா ஆற்றலை முத்துமாரி அம்மை ஊஞ்சலில் வரும்
"மேகநிகர் குழலசையப் பணிகளாட விளங்கிய குண்டலங் கொப்பு மின்னியாட வேகளைய சுடி பக்கம் 66T58 usi மேகலை நற்சிறு செச்சை மிளிரெண்டாட வாகனைய பாணியணி கிள்ளையாட வயங்கிய நூபுரச் சிலம்பு கலிரென்றாடப் பாகனைய பங்கயப்

VolUI i 3 UIIğbLLUI Tll I
பரிந்துறையும் மாரியம்மை
u HTIO 5655 60" என் னும் அடிகள் காட்டுகின்றன.
எடுத் துக்
சைவப் பெரியார் குமரேசபிள்ளை அவர்களின் கவிதா ஆக்கங்கள் யாவும் 1922 ஆம் ஆண்டளவில் நூலுருப் பெற்று வெளிவந்துள்ள போதிலும், ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கூட மக்களின் பார்வைக்குக் கிட்டா ஒரு நூலாகவே இருந்தது. ஏறத்தாழ மறைந்திருந்த இந்நூலினைத் தேடிப் பிடித்து அதனை மீண்டும் பதிப்பித்து, குமரேசபிள்ளையின் கவித்துவத்தை இளைய தலைமுறையினருக்கும் அறி முகம் செய்த மாத்தளை கார்த்திகேசு வின் பணி போற்றப்பட வேண்டிய தொன்றாகும்.
குமரேசபிள்ளை அவர்களின் ஆக்கங்களின் எண்ணிக்கை குறைவு. அளவிலும் அவை சிறியவையே. ஆனால் அவரின் மொழியறிவையும் சொல்லாட்சியையும் கவித்திறனையும் புலப்படுத்த அவை போதுமானவை யாகும். காரைக் கால் அம்மையார் பாடிய பாக்களின் எண்ணிக்கை சிறியதே. ஆனால் அதற்காக பெரும் புலவர் வரிசையிலே அவருக்கு இடம் மறுக்கப்படவில்லையே. அவ்வாறே மாத்தளை தமிழ்க் கவிதை இலக்கிய வரலாற்றிலே குமரேசபிள்ளையின் முதன்  ைம சந்தேகதி தறி கு அப்பாற்பட்டதாகும்.
உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர், புலோலியூர் குமாரசாமிப் புலவர், மயில்வாகனப் புலவர் போன்ற அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, அவர்களுக்கு ஒப்பாகக் கவிபாடி சைவம் வளர்த்த மாத்தளை
குமரேசபிள்ளை அவர்களைப் பற்றி விரிவாகக் கூறமுடியா திருப்பது விசனத்திற்குரியதே.
குமரேசபிள்ளை இலக்கியப் பணி ஆற்றிய அதே காலத்திலே மாத்தளைப் பிரதேசத் தில் தமிழ் வளர்த்த மற்றுமொருவர் 'கோட்டாறு பாவா’ என இஸ்லாமியர்களால் பெரும் கண்ணியத் துடன் அழைக்கப்பெற்ற கோட்டாறு ஷெய்கு சுலைமானுல் காதிரி எனும் இஸ்லாமிய இறை நேசர் ஆவார். இஸ்லாமிய உணர்வுக்கும், தமிழ்ப் புலமைக்கும் பெயர் பெறற கோட்டாறு என்னும் தென்னிந்திய ஊரிலிருந்து இலங்கை வந்து, மாத்தளைக் குப் பக்கத்து ஊரான உள்பொந்தபிட்டியில் தங்கி, மாத்தளை, கண்டிப் பிரதேசங்க ளில் இஸ்லாமிய சமயப் பணியில் ஈடுபட்டிருந்தவர் தான் சுலைமானுல் காதிரி எனும் இப்பெரியார். எவ்வாண்டில் இவள் இலங்கை வந்தார் என்பதைக் கூறுவதற்கில்லை என்ற போதிலும் 1903 ஆம் ஆண்டில் இவர் மாத்தளைப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கும் 1946 ஆம் ஆண்டில் இதே பிரதேசத்தில் மரணித் திருக்கிறார் என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன.
தமிழ்ப் புலமை மிக்க காதிரி அவர்கள் அப்புலமையைக்கூட இஸ்லா மிய பிரசாரத்திற்கான ஒரு சாதனமா கவே பயன்படுத்தியுள்ளார். இவர் இயற்றிய மெய்ஞானத் தங்கப்பாட்டு மாலை, ஷிபா மாலை, வேம்படிப் பள்ளி திருக்காரண பாப்பதிகம், பாவா காயிம், ஒலியுல்லாப் பதிகம், பக்கீர் மன்னான் முகம்மதொலிப் பதிகம், நெஞ்சொளிவு மாலை, தாய் மகளேசல் அந்தாதி, திருமணி நடனவலங்கார புஞ் சம், பஞ்சரத்தினமாலை, அஹதத்துமாலை,

Page 27
வாஹிதிய்யா மாலை, ஞானக்கண்
மாலை, ஞானப்பெண் மாலை, மெய்
ஞான பட்றொடை, பராபரக்கண்ணி,
மனோனி மணிக் கணிணி போன்ற
அத்தனை நூல்களும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டும் நோக் கோடும் அவர்கள் மத்தியில் இஸ்லா மியஉணர்வை வளர்க்கும் நோக்கோ டும் எழுதப்பட்டவையே. இவற்றுள் மெய்ஞ்ஞானத் தங்கப்பாட்டு மாலை, வரிபா மாலை, வேம் படிப் பள்ளி திருக்காரண பாப்பதிகம் என்பன 1916 ஆம் ஆண்டிலேயே நூலுருப் பெற்றுள் ளன. நெஞ்சொளிவு மாலை, தாய் மகளேசல் அந்தாதி, திருமணி நடனவலங்கார புஞ்சம் என்ற மூன்றும் குமரேசபிள்ளை தன்னுடைய மூன்று இலக்கியப் படைப்புகளையும் வெளி யிட்ட ஆண்டில், அதாவது 1922 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளன. குமரேச பிள்ளை அவர்களின் நூல் அச்சிடப்படு வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே சுலைமானுல் காதிரியின் ஒரு சில நூல்கள் வெளிவந்துவிட்டன என்பது கவனிப்புக்குரியது.
தனக்கும் சக முஸ்லிம்களுக்கும் நோயற்ற வாழ் வைத் தருமாறு இறைவனை வேண்டி காதிரி அவர்கள் பாடிய சில பாக்களின் தொகுப்பே விபா மாலை என்பதாகும். இதில் காணப்படும் கீழ் வரும் பாடல்கள் ஆசிரியரின் கவிதா பாங்கினைக் காட்டும் பதச் சோறுகளாகும்.
"பல விதமான நோய்கள் பாய்ந்திடா திரங்கி யாள்வாய் சலநிதி போல துன்பம் ஜல்தியில் நீக்கி யாள்வாய் குலத்தினில் துன்பம் வந்து குடிகொள்ளா திரங்கி யாள்வாய் கலக்கங்கள் வந்திடாது காத்தருள் யா ஹபீலே”
"மெத்தவே வந்து உன்பால் மெழுகு போலுருகி னாங்கள் குற்றங்கள் பொறுக்க வேண்டி குறிப்புட னழுது கேட்க பெத்த பிள்ளையைத் தாய் தந்தை பேணியே காப்பது போல் நித்தமுங் காத்து ஆள்வாய் நீதியே யா ஹபீலே”
கோட்டாறு பாவா அவர்களின் இலக் கியப் பங்களிப்பு பரப்பில் அகலமானது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் முஸ்லிம்களுக்காகவே, அவர் களின் சமய அறிவை வளர்ப்பதற்கா கவே, அவர்களுக்கு இறை உணர்வு ஊட்டுவதற்காகவே கவிதைகள் எழுதிய இப்புலவர் இஸ்லாமியக் கோட் பாடுகளைப் பிழையற விளக்குவதிலே காட்டிய சிரத்தையைக் கவிதை அமைப்பிலே காட்டவில்லை என்று கூறுவதற்கு இடமுண்டு: செய்யுள் அணி களும் இலக்கணங்களும் அவரைப் பொறுத்தவரையில் இரண்டாம் பட்ச மானவையாகவே இருந்தன. அரபு, பாரசீக, உருது சொற் பிரயோகமும் சற்று அதிகமே. இஸ்லாமியரல்லாதோர் சுலைமானுல் காதிரிஅவர்களைப் பற்றி அதிகம் அறியாதிருப்பதற்கும், அவரது பாக்களைச் சுவைக்காதிருப்பதற்கும் இவையே முக்கிய காரணங்களாகும். ஆனால் எது எப்படி இருப்பினும் சுலை மானுல் காதிரியைக் குறிப்பிடாது மாத்தளை கவிதா பாரம்பரியத்தினைப் பற்றி எழுதமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
காதிரி அவர்களின் நூல்களுக்குச் சாற்றுகவி, சிறப்புப் பாயிரம் போன்றவை எழுதி அவரைக் கண்ணியப்படுத்தியுள் ளவர்கள் வரிசையில் கோட்டாறு மகா வித்துவான் சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், காயற் பட்டினம்

செய்யது முஸ்தபா புலவர், மதுரை தமிழ்ச் சங்க வித்துவான் மேலச் செவல் பாவா முஹியத்தீன், கண்டி 'வித்துவத்தீபம்' அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் போன்றோரும் அடங்கு வர். இவ்வகையில் மாத்தளை தமிழ்க் கவிதா இலக்கியத்தினை மாத்தளை மாவட்ட எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்றவரும், அதற்குத் தமிழகப் புலவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் காதிரி அவர்களே எனக் கூறலாம்.
குமரேசபிள்ளை, சுலைமானுல் காதிரி ஆகிய இருவருக்கும் பிறகு மாத்தளை கவிதா இலக்கியப் பாரம்பரி யத்தில் தன் பெயரை அழுத்தமாகப் பதித்திருக்கும் இலக்கியவாதி, சதக்குத் தம்பிப் புலவர் என மாத்தளை மக்க ளால் பேரன்புடன் அழைக்கப்பெற்ற ஜனாப்.எஸ்.ரி.எம்.சதக்குத்தம்பி என்பவ ராவர். கீழக்கரையில் பிறந்து, பொருள் தேட இலங்கை வந்து, நீண்ட காலம் மாத்தளையிலே வாழ்ந்து, அங்கேயே மறைந்தவர் இக் கவிஞர். நாற்பது ஐம்பதுகளிலே ஏராளமான பாடல்களை யும் பதங்களையும் இயற்றிய இவரது பல பாடல்கள் வானொலியிலும் பொது மேடைகளிலும் ஒலித்துள்ளன.
சதக்குத்தம்பிப் பாவலர் அவர்களது பாடல்களில் சில சன்மார்க் கச் சங்கீதமாலை, இலங்கை இன்னிசைப் பூங்கா, கீதாமிருதச்சோலை எனும் பெயர்களிலே சிறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இந்நூல்களில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் யாவும் இஸ்லாமிய அடிப்படையில் ஆனவையா கும். ஆனால் இவர் இறுதியாக வெளியிட்ட சிறீ லங்கா சுதந்திரகீதம் அல்லது 'மரதன் ஓட்ட மணி ஒலி எனும் கவிதைத் தொகுதி இவரது
முந்திய மூன்று தொகுதிகளிலிருந்தும் முற்றும் மாறுபட்டது. அதுவரை சமயம் என்ற பாட்டையிலே ஊர்ந்து கொண்டி ருந்த மாத்தளை தமிழ்க் கவிதையை, தேசியம் என்ற ராஜபாட்டையில் முதன் முதலாக நடை பயில வைத்தது இத் தொகுதியே எனக் கூறுவது நியாயமான புகழுரையே.
முழுக்க முழுக்க தேசிய உணர்வு களையே பிரதிபலிக்கும் இக் கவிதைத் தொகுதியில் வரும் கீழ்வரும் அடிகளும்
"தென்ற லுலாவுநன் னாடு - இன்பத் தேன்மலர் தீங்கனி குலுங்கு நன்னாடு என்றென்றும் நீர்நிலை நாடு - கிளி எல்லாம் நிறைந்திடு மெம் வளநாடு மற்றும்
“தேசத்தைத் தேசங்கள் ஆளவிடோம் - எங்கள் " தேவியின் மேனியைத் தீண்ட விடோம் நேசக்கரம் நீட்டி நின்றிடுவோம் - ஆனால் நீச பாசக்காரர் நெருங்க விடோம்"
என்ற அடிகளும் சதுக்குத்தம்பிப் புலவரின் நாட்டுப்பற்று, கவித்திறன் போன்றவற்றைக் காட்டுகின்றன. பண்டி தமணி கணபதிப்பிள்ளை, கவியோகி சுத் தானந்த பாரதியார், அறிஞர் ஏ.எம.ஏ.அஸிஸ், புலவர் பெரியதம்பி போன்றோர் இந்நூலுக்கு வழங்கியுள்ள வாழ்த்துரைகள், அணிந்துரைகள், சிறப்புரைகள் என்பன அவர்கள் அத்தனை பேர்களும் சதக்குத்தம்பிப் புலவரின் கவிதா ஆற்றலை எந்தளவு மதித்தனர் என்பதை உணர்த்துகின்றன.
ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் னர் கழக கரை வணிகப்

Page 28
பெருமக்கள் சிலர் மாத்தளை நகரப் பகுதியிலேயே ஒரு நிலத்தை வாங்கி, அதிலே ஒரு வசதியான வீட்டைக்கட்டி அதனை இப்புலவருக்கு அன்பளிப்புச் செuப் திருக் கிண்றனர் எண் றால் , அம்மக்கள் இப்புலவர் மீது எத்துணை மதிப்பு வைத் திருந்தனர் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
இக்கவிஞர் இலக்கியப்பணி ஆற்றிக் கொண்டிருந்த காலப்பகுதியிலே மாத்த ளைப் பாடசாலைகளிலே கல்வி புகட் டிக் கொண்டிருந்த திரு.கதிரவேல், திரு. செபஸ்ரியன் பிள்ளை, செல்வி கந்தப்பு, திரு.சீனித்தம்பி போன்றோரும் அவ்வப் போது கவிதைகள் இயற்றியுள்ளனர்.
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பது களில் இலங்கையில் ஏற்பட்டஅரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்கிலே பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தின. தேசிய இலக்கியம், மண்வாசனை, பிர தேச சொற் பிரயோகங்கள் என்பவை, ஓர் இலக்கியவாதி சதா பயன்படுத்த வேண்டிய சொற்கள் என்ற அந்தஸ்தி னைப் பெற்றன. மாத்தளைப் பிரதேச தமிழக் கவிதைத் துறையும் இப் பாதிப்புக்குள்ளாகவே செய்தது.
இந்நூற்றாண்டின் அறுபதுகளிலே மாத்தளைப் பிரதேசத்தில் தோன்றிய கவிதைகளில் நாம் இப்போக்குகளின் பாதிப்புக்களைத் தரிசிக்கின்றோம். இக்காலப் பகுதியிலேயே மாத்தளைத் தமிழ்க் கவிதை நவீன உரு எடுக்க ஆரம்பித்தது எனலாம். சதக்குத்தம்பி யின் சில பாடல்களில் தேசிய வாடை கமழ்கின்றது என்ற போதிலும் அறுபது களிலே எழுதிய சொக்கநாதன், கந்தவனம், ஈழவாணன், பண்ணாமத்துக் கவிராயர், சிறீகாந்தன், பூபாலன் போன்றவர்களின் கவிதைகளிலேயே
52
நவீன கவிதைப் பண்புகள் கூடுதலாகத் தென்படுகின்றன எனலாம்.
மேலே குறிப்பிடப்பட்டவர்களில் சொக்கநாதன், கந்தவனம், ஈழவாணன் என்ற மூவரினதும் கவிதைகள் சில சிட்டுக்குருவி' என்னும் பெயரிலே 1963 ஆம் ஆண்டில் ஒரு சிறு தொகுதியாக வெளியிடப்பட்டன. இதில் இடம் பெறும் மூன்று கவிஞர்களும் அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருபவர்கள். நாடறிந்த கவிஞர் கள். கணக்கற்ற கவிதைகளை எழுதிக் கட்டுக்கட்டாக வீட்டில் குவித்து வைத் திருப்பவர்கள். ஈழத்துக் கவிஞர்களுக் குள்ளே தனிவழியே சென்று முன்மாதிரி யாகத் திகழ்பவர்கள் என்பதை இவர்களது கவிதைகளைப் படிப்பவர் கள் அறிவர். பிறருடைய சாயல் படி யாத, சுவட்டில் நடக்காத தனித்துவம் அவரவர் உணர்ச்சிக்கும் சிந்தனைக்கும்
பெருமை கொடுத்து நிற்கின்றதென்ப
தினை இச் சிட்டுக்குருவி மூலம் அறிந்து கொள்ளலாம் ” என்ற
முன்னுரையுடன் வெளிவந்த இந்நூலு க்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் கைலாசபதி அவர்கள் “உதட்டிற் குள்ளே சிரித்து உள்ளத்தால் தனது கவிப் பொருளைச் சாந்தமுடன் தழுவிக் கொள்ளும் திரு.சொக்கநாதனும், சமூக நிலைகுலைவு கண்டு தாங்கொணாக் கோபம் காட்டும் திரு.கந்தவனமும் மனத்தை வளைத்துச் சரக்கூடம் போடும் உணர்வுகளை வார்த்தைகளு க்குள் சிறைபடுத்திவிட வேண்டும் என்று துடிக் கும் ஈழவாணனும் தத்தம் வகையில் ஈழத் தமிழ்க் கவிதைக்குப் பதம் காட்டுகின்றனர் எனக் கூறி இக்கவிஞர்கள் மூவரையும் அழகாக இனம் காட்டியுள்ளார்க்ள். மாத்தளைத தமிழ்க் கவிதை வளர்ச்சி வரலாற்றிலே சிட்டுக்குருவி ஒரு மைல்கல் என்பது

மிகையான கூற்றல்ல.
முக் கவிஞர்களுள் மூத்தவரான நவாலியூர் சொக்கநாதனின் மற்றுமொரு படைப்பு அவர் 1964 ஆம் ஆண்டில் வெளியிட்ட மாத்தளை முத்துமரி யம்மன் குறவஞ்சி ஆகும். இதன் சிறப் புக் கருதியும் தேவையை உணர்ந்தும் இலக்கிய ஆர்வலர் மாத்தளை செல்வா விக்கிரமசிங்க அவர்கள் 1993 ஆம் ஆண்டிலே பெரும் பொருள் செலவிலே இதனை மீள் பதிப்பு செய்துள்ளார். இதில் உள்ள கீழ் வரும் செய்யுள் சொக்கநாதரின் கவித்துவத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.
"வான முகிலொடு வாதம் புரிகிற மாமலை சூழ்பதி மாத்தளைக்கண் கானக்குயில் பயில் காவெழி லோடுறை கனக மணிப்பரற் கோவிலுக்குள் ஞான மணிக் கண்ணுக்கான வுருவுடன் நாளு முறைபவள் மாரிமுத்து - 96) Gift மோன நிலையிற் கண்மூடி யிருந்திடில் மூவுல கங்களு மில்லை யாமே."
அறுபதுகளில் சொக்கநாதர் எழுதி மேடையேற்றிய ’சிங்ககிரிச் செல்வி என்ற கவிதை நாடகம் அவருடைய திறமையின் உச்ச வெளிப்பாடாகும். மலைநாட்டு நாடக விழாவில் சிறப்புப் பரிசு பெற்ற இந்நாடகம் மாத்தளையி லும் மேடையேறியது.
பண்ணாமத்துக் கவலிராயர் என்ற புனைப்பெயரில் நாற்பது வருடங்களு க்கு மேல் கவிதைகள் எழுதிவரும் எஸ்.எம்.பாரூக், மாத்தளை வழங்கி புள்ள மிக உன்னதமான கவிஞராவார். "செத்தைக் கவிதைகள் செப்புவதற்கு
நானறியேன்: அக்கினியாய் உமிழும் ஆவேசப் பாவலன் நான்” என்று ஆங்காரமாக தன்னை அறி: கப்படுத் திக் கொள்ளும் அளவி குத் தன் கவித்துவத்தில் அசைய நம்பிக்கை கொணி டவர் இவர் உணர்ச் சிப்
பிழம்புகளாய்க் கனலும் சொல்லாட்சி
மிக்க இவரது கவிதைகளைப் படித்த வர்கள் இவ்வறிமுகம் நியாயமானது என்றே கருதுவர். இக்கவிராயர் கவிதை களுக் காக விருதுகள் 6) @_j}}|6.
தனது மொழிபெயர்ப்பு ஆற்றலினால் தமிழ்க் கவிதை வட்டத்தை விரிவடை யச் செய்தவர் பண்ணாமத்துக் கவி ராயர். மஹற்மூத் தர்வேஷ், ஸ்மி அல் காசிம், ஹ?ரியன் மாவான் போன்ற பாலஸ்தீனியக் கவிஞர்களையும் டைஸ் அஹம்மத் பைஸ், சுல்பிகார் ஆரிப் போன்ற உருது மொழிக் கவிஞர்க ளையும் நஸ்ருல் இஸ்லாம் எனும் ஒப்பற்ற வங்கக் கவிஞனையும் தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயப்படுத்தியவர் களுள் இவர் முக்கியமானவர். இவர் மொழிபெயர்த்த முப்பது கவிதைகள் காற்றின் மெளனம்' எனும் தலைப்பில் 1996 ஆம் ஆண்டில் நூலுருப் பெற்றன. இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், கவிதை மொழிபெயர்ப்பு என்பது உண்மையில் மொழி பெயர்ப்பு அல்ல: அது இன்னொரு மொழியாக்கமே. இன்னொரு படைப்பே, பண்ணாமத்துக் கவிராயர் தந்துள்ள இந்த மொழி பெயர்ப்புக்கள் தமிழ்ப் படைப்புகளா கவே மேற்கிளம்புகின்றன” எனக்கூறி பண்ணாமத்தாரின் மொழிபெயர்ப்புத்
திறனுக்குக் கட்டியம் கூறியுள்ளார்.
மாத்தளை மாவட்ட தமிழ்க் கவிதை வரலாற்றில் மாத்திரமலல, ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் கூட
哆国

Page 29
பண்ணாமத்துக் கவிராயரின் இடம் உறுதியானதுதான்.
பிறமொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழின் வளத்தைப் பெருக்கிய மற்றுமோர் மாத்தளை
இலக்கியவாதி, பத்திரிகைத் துறையின்
ஜாம்பவானாய்த் திகழ்ந்த எழுத்தாளர் மர்ஹ?ம் அபூதாலிப் அப்துல் லதீப் ஆவார். மகாகவி இக்பால், நஸ்ருல் இஸ்லாம் போன்றவர்களின் கவிதை களை மொழிபெயர்த்துள்ள இவர் அண்மையில் மறைந்த முன்னாள் வெளிநாட்டு விவகார அமைச்சர் மர்ஹ?ம் அல்ஹாஜ் ஏ.சி.எஸ்.ஹமீத், அக் குறனை மணி வாசனை கமழ ஆங்கிலத்தில் எழுதிய நெடுங்கவிதை ஒன்றினையும் “கண்ணே ஜெசீமா" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இம் மொழிபெயர்ப்பு அறுபதுகளில் தார கையில் ஒரு தொடராக வெளிவந்தது.
இக்காலப்பகுதியில் ஈழத்துத் தமிழ்க் கவிதா பாரம்பரியத்திற்கு வளத்தையும் வனப்பையும் ஊட்டிய ஏனைய மாத்த ளைக் கவிஞர்களில் முக்கியமானவர்க ளாக கவிஞர் பூபாலன், சிறி காந்தன், தத்துவச்சாறு எனும் கவிதை நூலை
வெளியிட்ட குவைலித், மலர்ச்செல்வன்,
மலைவேள் என்ற புனைபெயர்களில் எழுதிய வேலாயுதம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்திலே மாத்தளையின் தமிழ்க் கவிதை வளர்ச் சிக்குப் பாரிய பங்களிப்பு வழங்கிய அமைப்பு வேலாயுதம், திருச்செந்தூரன் எனும் இரு இலக்கியவாதிகளை இணைச்செயலாளர்களாகக் கொண்டி யங் கிய மாத் தளை இளைஞர் மன்றமாகும்.
மாத்தளைச் சோமு, மலரன்பன், சிவஞானம், மாத்தளை வடிவேலன், செல்வா, இராஜலிங்கம், பெரியசாமி,
54
மருதன் போன்ற இலக்கிய உணர்வு மிக்க இளைஞர்களைக் கொண்ட ஓர் இளைஞர் குழு எழுபதுகளில் மாத்த ளையில் பெரும் துடிப்புடன் இயங்கி யது. இன உணர்வும் மொழியுணர்வும் கொண்ட ஓர் அற்புதமான குழு அது. இக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலா னோர் சிறுகதையினையே தம் இலக் கிய உணர்வுகளுக்கு வடிகாலாக ஏற்ற னர். என்ன காரணமோ தெரியாது கவிதைத்துறையில் இக்குழு அக்கறை காட்டவில்லை. இவர்கள் கவிதைத் துறையில் ஈடுபட்டிருந்தால் உணர்ச்சி கொப்பளிக்கும் பல கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும் என்பது நிச்சயம். இவர்களில் மலரன் பன் மாத்திரமே கவிதைத் துறையில் சிறு ஈடுபாடு காட்டியுள்ளார். அதில் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளார்.
எழுபது, எண்பதுகளிலே கவிதைத் துறையிலே பெரும் அக்கறை காட்டிய வர் மாத்தளைப் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்து இன்று மேற்கு மாகாணத்திலே வாழும் அல் அஸமத். இவரது கவிதை கள் சில 'அல் அஸீமத் கவிதைகள் - மலைக்குயில் என்ற பெயரிலே 1987 ஆம் ஆண்டிலே ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. 'ராத்ரி’ எனும் கவிதைத் தொகுதியும் இவருடையதே. மலைக்குயில் எனும் இவரது நெடுங் கவிதை மலையகத் தொழிலாளர்களின் வருகையை, அன்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை முகங்கொடுத்த அவலங் களை, அனுபவித்த சிறுமைகளை, இலங்கையின் அன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கிய பாரிய பங்களிப் புகளை அழகாக பதிவு செய்துள்ள ஒரு வரலாற்று ஆவணம் எனச் சில இலக்கிய விமர்சகர்களால் பாராட்டப் பட்டுள்ளது. இக்கவிதையினை மலைய கத் தமிழ் இலக்கியம்' எனும் தனது

நூலிலே, "பாரதியின் குயிற் பாட்டை ஒருமுறை படித்தவர், பின்னர் அதனை மறத்தல் அரிது: பாரதியின் குயிற்
பாட்டை அடியொற்றி, அதே அமைப்பு
முறையிலும் சாயலிலும் நடையிலும் உள்ளத்தைப் பிணிக்கும் வகையில் படைக் கப்பட்டதே கவிஞர் அல் அஸமத்தின் ‘மலைக்குயில்' என்னும் அற்புதமான படைப்பு
எனக்கூறி அஸஉமத்தின் படைப்பைப் பாராட்டியுள்ள கலாநிதி அருணாசலம் தனது நூலின் மற்றோர் இடத்திலே, "மலையகத் தொழிலாளரின் ஆரம்ப காலகட்ட வரலாற்றை வேறு யாரும் இந்த அளவிற்கு நோக்கி, உருவக நெடுங் கதையாக வடித்ததில்லை. மலையகக் கவிதை வரலாற்றில் மலைக்குயிலுக்குத் தனியிடமுண்டு என்பதில் ஐயமில்லை" எனக் கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.
அல் அஸ*மத்தின் மற்றுமொரு பாரிய கவிதா பணி 1990ல் இருந்து 1994 வரை - நான்கு ஆண்டுகள், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையிலே ‘கவிதைச்சரம்' எனும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி ஏறத்தாழ ஐந்நூறு முஸ்லிம் இளம் கவிஞர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாகும். இந்நிகழ்ச்சியினை நடத்தியதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று
நினையாமல் 'வாயொலியாக வானொலி
யில் தவழ்ந்த இக் கவிதைகளை, ஒன்று இரணி டல் ல ஐந் நுாறி நு அறுபத்தெட்டு கவிதைகளை ஒரு பாரிய தொகுதியாக வெளியிட்டது, ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு மாத்தளையில் பிறந்த அல் அஸ*மத் செய்துள்ள பெரும் சேவையாகும்.
எண்பதுகளில் கவிதை படைத்த மற்றுமொருவர் கொழும்பிலே பிறந்து,
மாத்தளையிலே வாழும மனித நேயம் மிகு வைத்திய கலாநிதி மகேந்திரராஜா ஆவார். ஆழமான தமிழ் இலக்கண அறிவு, ஆங்கிலக் கல்வி :ழங்கிய அகண்ட பார்வை, வெளிநாட்டுப் பிரயாணங்கள், இயல்பாகவே அவரிடம் அமைந்திருக்கும் அன்புள்ளம் - இவை யாவும் ஒன்று சேர்ந்து மகேந்திரரா ஜாவை ஒரு தரமான கவிஞராக உரு வாக்கியுள்ளன. மரபுக் கவிதைகளிலே
ஈடுபாடுமிகு இக்கவிஞர் 1995ல் தனது
கவிதைகள் சிலவற்றைக் 'கண்ணிர்த்
துளிகள் என்ற பெயரிலே ஒரு தொகுதி
யாக வெளியிட்டுள்ளார். இத்தொகு ப்பிலே வரும் கீழ்வரும் கவிதை
"வெண் ணிலவிற் றேனெடுத்து வெங்கதிரிற் றியெடுத்துத் தண்முகிலிற் பாலெடுத்துத் தயிர்கடைந் தென்னுயிர் புனையுங் கண்ணிகராங் கவிதைகளைக் கவினுடனே மதித்துயர்த்தும் மண்ணுலகின் பெரு வளத்திர் மகிழ்ந்தினிதே வாழ்த்துவிரே"
களிஞர் மகேநீ திரராஜாவின் கவியாற்றலை வெளிப் படுத்தப் போதுமானதாகும்.
இக்காலகட்டத்திலே கவிதைத் துறைக்குப் பங்களிப்புகள் வழங்கிய ஏனைய மாத்தளைக் கவிஞர்களாக பல்கலைச் செல்வர் கோமஸ், மலைமதி சந்திரசேகரம். பாரில் பாருக், கோட்ட கொடை அப்துல் ரஹற்மான், ரபீக்கா ரபாய்தீன், மாத்தளைக் கமல், இரா. சிவலிங் கம் போன்றவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். கவிதையிலே நாட்டம் உள்ளவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குக் கவிதை இலக் கணங்களைச் சொல்லிக் கொடுத்து, ஊக்குவித்து அவர்களைக் கவிதை உலகில் நுழைய வைத்த பெருமை
哆国

Page 30
பண்பாளர் கோமஸ் அவர்களுக்கு
உரியதாகும்.
எழுபதுகளில், எண்பதுகளில் கவி தைத் துறையில் அடியெடுத்து வைத்த வர்களின் பங்களிப்புகள் இன்னும் தொடர, இம் மாவட்டத்தில் வாழும் இளைஞர்களும் யுவதிகளும் இன்று கவிதை உலகில் தம் ஆற்றல்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது மாத்தளைப் பிரதேசத்தில் வாழ்பவர்க ளுக்குப் பெரு மகிழ்ச்சியை நல்குவ தாகும். பாலரஞ்சனி, ராஜன் நசூர்தீன், கே.எம்.சமது, விஜயமலர் ஆறுமுகம், எம்.எஸ்.எம்.ராஸிக், பஸ்மிளா அன்சார், எஸ்.எம்.ரியாஸ், மொனிக்கா கோமஸ், தமீமா, அருசியா ஹசன், அனுன் பானு, முரளிதரன், எஸ்.எம்.நு.மான், ஆரிபt அப்துல் ஸலாம், ஐனுல் லலாம், சஜிதரன், எஸ் .எம்.எம். இஸ்மாயில், சகீலா தாஜுதீன், தமிழ்ச்செல்வன், மடவளை கலீல், நிஷா ஷிகாரி, ரியாயா, பவானி, என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
"கிள்ளிய கொழுந்து கூடையில் வாட்டும் வறுமை வாழ்க்கையில்
நாட்டின் செல்வம் முதுகினில் நாளெல்லாம் வாழ்வு கண்ணிரில்"
என தேயிலைத் தோட்ட தொளிலாளர்க ளின் வாழ்வின் அவலங்களை வார்த்
தைகளில் வடிக்கும் ராஜன் நசூர்தினும்
முறிவு என்பது சோகிக்கும் விடயமல்ல - ஒன்றின் முறிவு
کے مf
56.
பிறிதொரு தோற்றத்தின் உத்தரவாதம்
எனக் கூறும் எஸ்.எம்.ரியாஸஉம்
நட்சத்திரங்கள் பேசும் இரகசியத்தைத் தவிர வேறெந்த சப்தங்களும் காதில் விழாத இரவுநேரம்
என இரவின் அழகை வர்ணிக்கும் யடவத்தை பர்ஸானும் நாடறிந்த நல்ல கவிஞர்கள்.
இன்னும் பதினாறு வயதினைத் தாண்டாத தவ.சஜீதரன் பன்னிரண்டு வயது நிரம் புவதற்கு முன்னரே அழகான கவிதைகள் இயற்றிப் பலரை வியப்பில் ஆழ்த்தியவர். பிறவிக் கவிஞர். வாசிப்பும் அனுபவமும் கூடும் போது இவர் தரமான ஒரு கவிஞராக மிளிர்வார் என நம்பலாம்.
கவியரங் கங் களிலும் நுT லி வெளியீட்டு விழாக்களிலும் கவிதைகள் பாடி பலரின் பாராட்டுக் களையுமி பெற்றிருக்கும் மடவளை கலீலி அவர்களின் கவிதைகள் ஈழத்து பத்திரிகைகளிலும் ராணி போன்ற தமிழகப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி யுள்ளன. ‘துயரக் கொழுந்துகள்" ’கைதிப் புறாக்கள்’ என்பன இரண்டும் இவர் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதிகளாகும்.
ஆசிரியையாகக் கடமையாற்றும் பாலரஞ்சனி தரமான கவிதைகள் பல படைத்துள்ளார். இவரது கவிதைகள் ஈழத்துப் பத்திரிகைகளில் மாத்திரமன்றி இங்கிலாந்து, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் வெளிவரும் தமிழ் பி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன

மல்லிகையில் வெளிவந்த அதிகாலைச் சேவலின் கூக்குரலும் கூரைமுகட்டுச் சிட்டுக்குருவியின் சிருங்காரமும் புல்நுனிப் பணித்துளிகளும் காலைச் சூரியனின் வர்ணஜாலமும் வானின் நிர்மலமும் பஞ்சு முகில்களின் செளந்தர்யமும் துணையாய் நான்' என வருடிச் செல்லும் தென்றலும் அந்திச் சூரியனின் அவசர விசாரிப்பும் சிணுங்கிச் செல்லும் சின்ன மழையும் இரவின் மடியில் வீதியில் நறநறத்தபடி சோர்ந்து போகும் மாட்டுவண்டிகளும் மொட்டவிழ்க்கும் பவளமல்லி வாசமும் இரவின் நிசப்தமும் நடுநிசி அமானுஷ்யமும் பாரதியின் பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வைரமும் இனி நான் ரசிப்பதெப்போ? எனக்கு வேலை கிடைத்துவிட்டது
எனும் கவிதை பாலரஞ்சனியின் வித்தியாசமான பார்வையையும் அவரது அழகியல் உணர்வுகளையும் வெகு துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
மாத்தளை வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் மற்றொரு வளர்ச்சி, இப்பிரதேச தமிழ்ப் பாடசாலைகள் கவிதைத் துறையில்
இன்று காட்டும் பேரார்வமாகும். எதிர்காலத்திலும் தமிழ்க் கவிதைத் துறை மாத்தளையில் சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கையை இது ஊட்டு கின்றது. மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் அண்மையில் சிறப்பாக நடைபெற்ற மாணவர் கவியரங்கம் இதற்கு நல்லதோர் சான்றாகும். மாணவர் கவியரங்கம்தானே என்று அதனை உதாசீனப்படுத்தி விடாது, அந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றி மாணவர்களை ஊக்கு வித்த, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஜனாப்.ரவுப் ஹக்கீம் மாத்தளை இலக்கிய ஆர்வலர்களின் நன்றிக்குரியவராவார்.
மாத்தளை, இலக்கிய உணர்வும், உயர் இலக்கியப் பாரம்பரியமும் மிக்க ஒரு மாவட்டம். இதன் தமிழ்க் கவிதை வரலாறும் நீளமானது. ஒரு நீண்ட கவிதை வரலாற்றினைக் கொண்டுள்ள போதிலும், அம்மாவட்டம் ஒரு கார்த்தி கேசுவை வழங்கி தமிழ் நாடக உலகில் பெற்ற வெற்றியை, சோமு.மலரன்பன், வடிவேலன், அல் அஸமத், கோவிந்த ராஜ் போன்றவர்களை ஈந்து, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை அரங்கிலே ஈட்டியுள்ள பாரிய வெற்றியை, தமிழ்க் கவிதை உலகில் அது இன்னும் பெறவில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையே. எனினும் இன்று இப்பிரதே சத்திலே கவிஞர்களாக முகிழ்ந் திருப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது, அவர்களின் ஆற்றல்களைப் பார்க்கும் போது, கவிஞர் புரட்சிக் கமாலின் அடியொட்டி " ஞாலத் திசைகள் கோலமிட, மாத்தளையில் நாளை பிறப்பான் ஒரு நற்கவிஞன்” என நம்பிக்கையுடன்
கூறலாம் போலத் தோன்றுகின்றது.

Page 31
சர்வதேச தமிழ் இலக்கிய உலகில் மிகவும் வியந்து பேசப்படும் "மல்லிகை”க்கு வாழ்த்துக்கள்
சுஜாதா பிரசுரம்
278, பிரதான வீதி, மாத்தளை.

சுமைதாங்கி
பாலரஞ்சனி ஜெயபால்
அந்தப் பாதையின் வளைவில் தூரத்தே தெரிந்தது அந்தத் தேயிலைத் தொழிற்சாலை. பகல் பன்னிரண்டு மணி சாப்பாட்டுக்கென வந்துவிட்டு, மீண்டும் வேலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் கூட்டத்துள் தாயம்மாவும் தெரிந்தாள். அந்த பட்டப்பகலின் கொழுத்தும் வெயிலின் கொடுரத்தில் "ஸ்டோர்ஸ்' கண்ணுக்குத் தெரிந்ததும் 'அப்பாடா என ஆயாசப்பட முடியாமல் அந்தத் துTரம் பயமுறுத்தியது. "இன்னும் இரண்டு வளைவுகளைக் கடந்தாக வேண்டுமே" என்ற எண்ணமே தாயம்மா வுக்குக் களைப்பை ஏற்படுத்தியது. மற்றயவர்களோடு சேர்ந்து நடக்க முடியாமல் காலில் பாளம் பாளமாய் வெடித்திருந்த பித்தவெடிப்பு தார் ரோட்டின் வெக்கையில் வேதனையைத் தர, அதன் பிரதிபலிப்பு முகத்தில் அப்பட்டமாய்த் தெரிய, தலையை வெடிக்க வைக்கின்ற வெயிலுக்கு ஏதோ தன்னாலான அணையாயப் கைகளையே குடையாக்கிக்கொண்டு. பாவம் இவளும்தான் எத்தனை காலம் இப்படிக் கஷடப்படுவது..?
பொதுவாக 'அவளின் விதி இப்படியி ருக்கிறது என சாதாரணமாக சொல் வது வழக்கம். ஆனால் இந்தியாவி லிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்டு,
தோட்டக்காட்டான் எனச் சிறப்புப் பெயரையும் பெற்ற இவர்கள் எல்லோரு டைய விதியையும் இறைவன் எப்படி ஒரே மாதிரியாக எழுதினான் என்பது ஆச்சரியமான விடயம்தான். இவர்கள் ஒவ்வொருவருடைய வேதனைகளும் வெவ்வேறு வகையாக இருந்தாலும் கூட ஒட்டுமொத்தத்தில் எல்லோருமே வேதனைகளையும் சோகங்களையும் தம் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தான். இதில் தாயம்மாள் மாத்திரம் எப்படி வேறுபடுவாள்?
மடுகல்ல தோட்டத்தில் தன் தாய் தந்தையோடு இருந்து கொழுந்தெடுத் துக் கொண்டு உல்லாசமாய்த் திரிந்து கொண்டிருந்தவளை, விரும்பி மணமுடி த்தான் சொந்த மாமன்மகனான வேலு. புருஷனோடு அவனது ஊரான ஒபல் கல தோட்டத்திற்கு வந்து அந்த மலை யிலும் தன் காலடிகளைப் பதித்தாள். தோட்டத்து ஸ்டோரில் வேலை செய் தான் வேலு. பழகுவதற்கு இனிமையான வேலு எல்லோர் மனசிலும் இடம் பிடித் துக்கொண்டவன். வேலையிலும் கெட்டி க்காரனான அவனது நேர்மை சுப்பிரின்ட ன்ட் முதலான எல்லோர் மத்தியிலும் பிரசித்தம்.
முத்து முத்தாக இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கடைக்குட்டியாக

Page 32
ஒரு பையனுக்கும் தாயம்மாவைத் தாயாக்கி, குடும்பத்தை அழகாக கட்டியெழுப்பிய வேலுவின் வாழ்விலும் புயல் வீசத்தொடங்கியது. ふ
ஸ்டோரில் சகதொழிலாளி ஒருவன் ‘தூள் திருடியதை நேரில் கண்ட சாட்சியான வேலு அவனைப்பற்றி சுப்பிரின்டனிடம் முறையிட அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். தான் வேலையிலிருந்து நீக்கப்பட தன் குற்றமே காரணம் என்பதை ஒப்புக் கொள்ளாமல் வேலுவின் மீது வஞ்சம் வைத்து, "நைட் வேலை முடித்துத் திரும்பிவந்த வேலுவை கத்தியால் குத்திவிட்டு திருப்திப்பட்டுக்கொண்டான் அவன். அந்த அதிகாலைப் பொழுதில் யாருமே அற்ற அந்தத் தோட்டத்து தார் ரோட்டில் குற்றுயிராய்க் கிடந்த வேலு தன்னைக் காப்பாற்ற யாரமே வரமாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு, தாயம்மாளையும் குழந்தைகளையும் யாருமே அற்ற அநாதைகளாக்கிவிட்டு போகிற வேதனையோடு கொஞ்சங் கொஞ்சமாய் உயிரை விட்டான்.
எந்த சேதியுமறியாமல் நைட் வேலை முடித்து வீடு வரப்போகின்ற கணவனுக்காய் தேத்தண்ணி ஊற்றி
வைத்துவிட்டு காலை சாப்பாட்டுக்கு
ரொட்டி தட்டத் தயாரான தாயம்மாவை அந்த சோகச் செய்தி பஸ் டிரைவர் மூலம் வந்து எட்டியது.
கொலையுண்டு போன கணவனுக் காய் அழுவதா, ஆதரவற்று நிற்கும் தனக்காகவும் தன் குழந்தைகளுக்காக வும் கதறுவதா எனத் தெரியாமல் விக்கித்துப் போனாள் தாயம்மா.
தோட்டத்து நிர்வாகம் வேலுவின் இறுதிப் பயணத்துக்காக சகல வழிகளி லும் உதவி செய்தது. அத்தோடு வேலு
(603
வின் மீது வைத்திருந்த அபிமானத்தால் தாயம்மாவுக்கு ஸ்டோரில் வேலை கொடுத்தது. கொழுந்து எடுப்பதிலும் பார்க்க இதில் வருமானம் சற்றே கூடுதல் என்பதையும், வெயிலிலும் மழையிலும் உடல் வருந்த நிற்கவேண் டியதில்லை என்பதையும் விட, தன் கணவன் வேலை செய்த இடத்தில் வேலை செய்வதில் ஆத்ம திருப்தி அடைந்தாள் தாயம்மா,
ஆனால் நைட் வேலை என ஸ்டோரில் தங்க வேண்டிய நாட்களில் தவித்துப் போவாள். மூத்தவள் ராணி க்கு விபரம் தெரிகிற வயசு என்றாலும் அடுத்தவள் சுமதியும் கடைசிப் பைய னான ராமுவும் வயதில் சிறியவர்கள். இரவில் மூவரையும் தனியே லயத்தில் விட்டு விட்டு தான் ஸ்டோரில் நிற்பது முள்ளின் மேல் படுப்பது போல் தாயம்மாவுக்குக் கஷடமாக இருக்கும். எப்படியோ கஷடங்கள், சோகங்கள், துன்பங்கள் என்று படவேண்டிய அத்த னையும் அனுபவித்துக்கொண்டு இந்தக் குடும்பம் வாழ்ந்தது.
தாயம்மாள் ஒருத்தியின் வருமானத் தால் குடும்பத்தைக் கட்டியிழுப்பது கஷ்டமாக இருக்கவே தோட்டத்துப் பள்ளிக்கூடத்தில் ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்த ராணியும், சுமதியும் 'ஸ்கூல் போவதை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராணி தாயின் கஷடமுணர்ந்து தானாகவே கொழுந் தெடுக்கும் வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டாள். அவ்வப்போது புத்தகச்சுமையோடு போகின்ற பிள்ளை களை ஏக்கத்தோடு பார்ப்பதோடு தன் சோகத்தை மறைத்துக் கொள்வாள். ஆனால் நன்றாகப் படித்துக்கொண் டிருந்த சுமதியால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவளைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்ப தாயம்மா விரும்பவில்லை. ராமு மாத்திரம் ’ஸ் கூலுக் குப் போய்வந்து கொண்டிருந்தான்.
காலம் நகர்ந்தது. காலத்தின் ஒட்டத்திற்கேற்ப போட்டி போட முடியாமல் தாயம்மா களைத் துப்
போனாள். வயது வந்த பெண்ணான ராணியின் உழைப்பைப் பெற்றுக் கொண்டிருப்பது தவறாகப்படவே ஏதோ தன்னாலான வகையில் ராணியின் திருமணத்தை முடித்து, தன் பொறுப் பைக் குறைத்துக்கொண்டாள். மீண்டும் குடும்பம் தாயம்மாவின் வருமானத்தை மாத்திரம் நம்பி வாழத்தொடங்கியது. ராமுவின் படிப்புச் செலவும் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்பில் மிகவும் கெட்டிக்காரனான ராமு உயர்தர வகுப்புக்காக டவுனுக்கு வந்துபோகத் தொடங்கியதாலும் பாடப்புத்தகங்கள், அவனது தேவைகள் என்பன அதிகரித் ததாலும் தாயம்மாவின் வருமானத்தை மாத்திரம் கொண்டு குடும்ப வண்டி நகர கஷடப்பட்டது. ஏதோ தன்னாலான உதவியாய் வீட்டிலிருந்துகொண்டே பூக்கள் செய்து, தையல் தைத்துக் கொடுத்து சிறு சம்பாத்தியத்தைப் பெற்று குடும் பத் தறி காக செலவழித்தாள் சுமதி.
ராமு வீட்டில் அனைவரது அறிவை யும் தனதாக்கிக்கொண்டு படிப்பில் படு சுட்டியாகத் திகழ்ந்தான். தோட்டத்துப் பாடசாலைகளிலேயே மிகத் திறமையா கப் பயின்று சித்தியடைந்து டவுனுக்கு உயர்தர வகுப்புக்காகச் சென்றுகொண் டிருக்கும் ராமுவுக்குத் தன் குடும்பம் மீதான பற்று மிக அதிகம். அதிலும் தாய் படுகின்ற, பட்ட சோகங்கள் அவன் நெஞ்சில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. தாயம்மா அடிக்கடி
சொல்லுகின்ற உபதேசம் அவனுக்கு நித்திய உணவு போலானது.
“தம்பி. நீ படிச்சுப் பெரிய ஆளா வந்து சம்பாதிக்கனும்டா ராசா ஒங்கக் காவை கரைசேர்க்கிற பெரிய பொறுப்பு ஒனக்கிருக்கு. நீயும் குடும்பமாகி நல்லா வாழனும், ஒன்ன நம்பித்தான்டா நா இன்னும் உசிரை கையில புடிச்சுக்கிட்டு இருக்கிறேன்! எங்காலம் முடியிற வரையில இந்த பொறுப்புகளை நாம சுமக்கிறேன். அதுக்குப் பொறவு நீ தா எல்லாத்தையும் கவனிச்சுக்கணும்"
பிள்ளைகள் வளர வளர தேவைக ளும் அதிகரிக்கத் தொடங்க, தாயம்மா வும் தன்னைமீறி உழைக்கத் தொடங்கி னாள். அடிக்கடி நைட் வேலைக்காக ஸ்டோரில் தங்க வேண்டி இருந்ததால் தொடர்ச்சியாக ஒழுங்கான தூக்கமில் லாததும் தொடர்ந்து ஸ்டோரில் நிற்பதால் தூள் தூசுக்கள் மூச்சுக் காற்றோடு உட்செல்வதும் தாயம்மாவை நோயாளியாக்கியது.
"அம்மா! எனக்காக நீங்கள் கஷ்டப் படுறதைப் பாக்குறப்போ எனக்குப் படிக்கவே பிடிக்கல. நோய்க்கு மருந்து எடுக்கிறீங்களுமில்லை. வேலைக்குப் பொகாமல் வfட் டி லயாவது நிக்கலாமில்லயா?”
ராமுவின் ஆதங்கத்தைப் பார்க்கத் தாயம்மாவுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. "அடே! இன்னும் சின்னப் பையனாவே இருக்கியே. வேலைக்கு நா போகாம விட்டா எப்படிடா குடும் பத்த நடத்துறது? வேணுமின்னா ஒன்னு செய்! நல்லா படிச்சு பாஸ் பண்ணி சம்பாதிச்சு குடு. நா காலாட்டிக்கிட்டு வீட்டுல கெடக்குறேன்"
தாயின் கிணி டலில் ரோசம் பொத்துக்கொண்டு வந்தது ராமுவுக்கு.
ஒ61)

Page 33
"ஏன் நா சம்பாதிச்சு தரமாட்டனா? ஒரு பெரிய வேலையில சேந்து அப்படியே வெளிநாடு போயி நல்லா சம்பாதிச்சு." அவனது கறி பனைக் குத் தடை போட்டாள் தாயம்மா. "ஏய் நிப்பாட்டுடா. வெளிநாடு போகப் போறியா. ஏன் ஒனக்கு நம்ம ஊருன்னா கசக்குதோ. நீ இங்கயே தான் வேலை செய்யனும். அத எங்கண்ணால நா பாக்கனும்"
ராமு அத்தனை கஷடங்களையும் பொறுத்துக் கொண்டு படித் தான். அவனது எண்ணத்துக்கும் தாயின் ஆசைக் குமாக உயர் வகுப்பில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றான்.
அவன் பட்டப்படிப்பை முடிக்கவும் அவனது திறமையரின் பேரில் லணர்டனுக்கு மேற் படிப்புக் கென செல்லவும் அனுமதி கிடைத்தது.
வயதாகிப் போனாலும் உழைப்பை மூச்சாகக் கொண்டு வாழ்ந்திருந்த தாயம் மாவுக்கு மகள் சுமதியின் கவலையே ரொம்ப துன்புறுத்தியது. மகன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல முயல்வது தாயம்மாவை வேதனைப்படுத்தியது. ராமுவிடம் தன்னால் முடிந்தளவு சொல்லிப் பார்த்தாள்.
"தம்பி ஒங்கப்பா உசிர விடுறப்போ நீ சின்னப்புள்ள. விபரம் தெரியாத வயசு, அப்ப நா பட்ட கஷடங்களையும் சோதனைகளையும் இப்ப நெனைச்சாக் கூட மலைப்பா இருக்கு. எல்லாத்தை யும் அனுபவிச்சுக்கிட்டும் வாழ்ந்து ஒரு நிலைக்கு வரணும்னு நா ஆசைப் பட்டேன். எல்லா ஒன்ன நெனைச்சுத் தான்டா. நீ முன்னுக்கு வருவே. வேலு வின் மகனப் பாத்தியான்னு ஊரே மலைச்சுப் போற மாதிரி எல்லார் கண்
区配态
முன்னாலயம் நீ வாழனும்னு ஆசைப்பட் டேன். இந்த தோட்டம் ஒங்க அப்ப னோட பேரை பெருமையா சொல்லி க்கிட்ட மாதிரி ஒம்பேரையும் சொல்ல னும் ராசா. நீ இத்தன துரம் பெரிய ஆளா வர இந்தத் தோட்டத்து வேலை யில கெடச்ச காசு தானே ஒதவிச்சு. அன்னிக்கு ஒங்கப்பா செத்த பிறகு எனக்கு இந்த வேலையை குடுத்த இவங்களுக்கு நாம என்னப்பா செஞ் சோம்? நீ வெளிநாடு போற நெனப்ப விட்டுப்புட்டு தோட்டத்து ஸ்கூல்ல படிப்பிச்சு குடு. இதுதாம்பா என் ஆச”
ராமுவுக்குச் சங்கடமாக இருந்தது. அம்மாவை மீறிக் கதைக்க என்னவோ
போலிருந்தது.
"அம்மா ஒங்க ஆசைய நிறைவேத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அத கட்டாயம் நா செய்வேன். ஆனா லண்டனுக்குப் போயி எந்த செலவுமில் லாமல் படிக்கிற வாய்ப்பு எல்லாருக்கும் கெடைக்காதம்மா. அதோட அங்க போயி ரெண்டு வருஷத்தில படிச்சுக் கிட்டே வேலையும் செஞ்சு சம்பாதிக்க லாம். கையில காசோட வந்தா அக்கா கலியாணத்தையும் நடத்திப்பிடலாம். பெறகு ஒங்க ஆசப்படியே இங்கயே வேலை செஞ்சுக்கிட்டு ஒங்க கூடவே இருந்துடறேன். என்ன நம்புங்கம்மா" அவனது கெஞ்சல் தாயம்மாவை ஏதோ செய்தது. அவன் சொல்லுவதில் உள்ள நியாயமும் சரியாகப்பட்டது.
எல்லார் மனதிலும் பெருமையையும் ஊரை விட்டுப் போகின்றானே என்ற வேதனையையும் தந்துவிட்டு ராமு லண்டன் போனான். தாயம்மாவும் இரண்டு வருடத்தில் ராமு வந்துவிடு வான் தானே என்ற நம்பிக்கையில் தன் பொழுதை ஸ்டோரோடு ஒட்டினாள்.

கடிதங்களில் எப்போதும் தாயை வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும்படி வற்புறுத்தி எழுதுவான் ராமு, “ஏ உசிரு இருக்க மட்டும் இந்த வேலய நா விடமாட்டேன்” என்பதில் தாயம்மா உறுதியாக நின்றாள்.
சொன்ன வாக்கு தவறாமல் இரு வருடங்களில் அக்காவின் கலியாணத் துக்கென சம்பாதித்த பணத்துடன் வந்து சேர்ந்தான் ராமு. அவனில் தெரி ந்த மிடுக்கும், படித்த முகக்களையும் தாயம்மாவினால் நம்பமுடியாமலிருந் தது. அடிக்கொரு தடவை அம்மாவைக் கூப்பிட்டு சந்தேகங்களைக் கேட்ட அந்த சின்னப்பையனா இப்படி வளர்ந்து விட்டான்? எந்தவித அலட்டலுமில்லா மல் முடிவெடுக்கிற அவனது சுபாவமும் வார்த்தைக்கு வார்த்தை புகுந்து விளையாடுகின்ற ஆங்கிலமும் எல்லோ ரிடமும் அளவாகப் பழகுகின்ற விதமும் தாயம் மாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
சுமதிக்குத் திருமணம் முடிந்தது. வீடு அமளிதுமளி பட்டு அடங்கியது. வேலைக்கு எனக் கிளம்பிய தாயை “என்னம்மா எவ்வளவு சொல்லியும் கேக் காம வேலைக்குப் போறிங்களா? எனக் காக எத்தனை கஷ்டங்களை அனுபவி ச்சீங்க. இப்பவாச்சும் நா சம்பாதிக்கிறத வீட்டுல இருந்து அனுபவிக்க லாமில்ல” என்ற கேள்வியோடு நிறுத்தினான்.
சிறப்பு - 8
Nபுத்தரின் புனித தந்த சின்னத்தை இலங்கைக்குக் S கொண்டுவந்த இளவரசன் தந்தா என்பவரும்
ZA/ 2007
安 N இளவரசி ஹேமமாலியும் மாத்தளையில் உள்ள
N
N மெனிக்தென்ன என்னும் இடத்தில் S தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
"ராமு நீ நம்ம ஸ்கூல்ல எப்ப வேலைக்கு சேரப்போற? அதச் சொல்லு மொதல்ல" என்றாள் தாயம்மா.
"அம்மா எவ்வளவோ கஷடப்பட்டு படிச்சு முன்னுக்கு வந்துட்டேன். இன்ன மும் இதுக்குள்ளேயே இருன்னு சொல் லுறீங்களே. லண்டனுக்குப் போனப்பொ றவுதான் எனக்கு வெளங்குது. எவ்வ ளவு விஷயங்கள நாம தெரிஞ்சுக்காம, அனுபவிக்காம இருந் திருக்கமின்னு. இனிமேயும் அப்படியே இருக்க நா விரும்பேல்ல. என்ன மன்னிச்சிடும்மா”
ராமுவின் பேச்சில் விக்கித்துப் போனாள் அவள் . எவ்வளவோ கெஞ்சியும் பயமுறுத்தியும் பார்த்தாள். ம்ஹம் அவன் தானெடுத்த தீர்மானத்து லயிருந்து அசையவேயில்லை.
தனக்குள் என்னவோ சரிந்து விழுமாப்போல் உணர்ந்த தாயம்மாவு க்கு எல்லாமே சொந்தம், உறவு, பாசம் என்று எல்லாமே அதாள பாதாளத்துக் குள் புதையுண்டு போவதாகப் புரிந்தது.
மீண்டும் லண்டன் நோக்கிப் பயண மாகப் போகும் மகனைப் பற்றிய அக்க றையே இல்லாமல் காலில் தெரிந்த பித்தவெடிப்பின் வேதனையைக்கூட உணராமல் புத்தம்புது மனுவியாய் ஸ்டோரை நோக்கிய தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாள் தாயம்மா.
Š S

Page 34
மாத்தளைக்கு இலக்கிய அந்தஸ்தை வழங்கி சிறப்பிதழ் வெளியிடும் "மல்லிகை”க்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
M.P. JANUL ABDEEN & SON
CO CON LT" : P RA Sk R C E O EA ER
362, Main Street
Matale - Sri Lanka. Phone: 066 - 22237
066 - 23304 066 - 23468 (R)
Residence: 19, Clinic Road. Matale - Sri Lanka.

(மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எம்.நஜிமுதீன் அவர்கள் தற்போது கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் சேவையாற்றி வருகிறார். இவர், ‘கண்டி இராச்சிய முஸ்லிம்களின் வம்சாவழிப் பெயர்கள் என்ற வரலாற்றாய்வு நூலை கடந்த ஆண்டில் எழுதி வெளியிட்டார்)
பண்ணாமத்துப் பதிவுகள் ஏ.எம்.நஜிமுதின்
பழமையான காலம் முதல் தமிழ் பேகம் மக்கள் மத்தியில் வழக்கில் இருந்த பல இடப் பெயர்கள் இடம் தெரியாது போய்விட்ட துரதிர்ஷ்டமான சரித்திரங்களை நாம் காணலாம். சில ஊர்ப் பெயர்கள் சிங்கள மொழி வடிவு பெற்று தமிழ் மணம் மாறி திரிபு அடைந்துவிட்டன. இவ்வாறு வழக் கொழிந்த ஊர்ப்பெயர்களின் கைநழு விய வரலாறுகளை ஒரு பெரும் கிரந்த 10ாகவே வடித்திடலாம். எழுதப்படாத அந்த ஏட்டிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டிய ஓர் ஊர் பண்ணாமம் ஆகும்.
மலையகத்தில் உயர்ந்த மலை வளங்களுக்கு மத்தியில் விரிந்து பரந்த சமவெளி என்பதால் 'மஹதலாவ என்று அழைக்கப்பட்டு, பின் அது மாத்தளை ஆகியது என்பதாக ஒரு வரலாறு உள்ளது. அதே போன்று. 'மஹாதலய (பெருங்கூட்டத்தவர்), மஹாதில பதேச “மாதுல ஜனபத' என்ற பதங்கள் மருவி மாத்தளை என்னும் பெயர் தோன்றிய தாகவும் வரலாறுகள் பல உள்ளன. ஆனால், இவ்வுரை தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவாக அழைத்து வந்த பண்ணாமம்’ என்ற நாமம் வரலாற்றில் நின்றும் எடுபட்டுவிட்டது கவலைக்கிடமானதாகும். இப்பெயர் பேச்சுவழக்கில் மாத்திரமே பெரும்பா
லும் காணப்பட்டதும் ஒரு காரணமாகக் கூறலாம். ஆனால், அயலூர் வாசிகளும் தென்னிந்திய வைச் சேர்ந்தவர்களும் பண்ணாமம்' என கூறினால் மாத்திரமே குறிப்புணர்ந்து கொள்ளும் ஒரு பொற்காலமும் இருந்துள்ளது.
மாத்தளை நகரப் பகுதியே பண்ணாமம் என அழைக்கப்பட்டது. புராதன மாத்தளை நகரமானது கொன் காவலை, அகல கொட்டுவை என்னும் ஊர்களைக் கொண்டதாகும். அதில் கொன்காவலை ஊரே நகரின் பிரதான பகுதியாக விளங்கியது. இந்த கொன் காவலை ஊரில் தாரலந்தை, கொங்கா வளை என்னும் இரு பிரிவுகள் அடங் கின. மிக நீண்ட காலமாக இவ்வூர் முஸ்லிம், தமிழ் மக்களின் கேந்திர நிலையமாக இலங்கி வருகின்றது.
இது கொண் காலை அல் லது அரசனின் மாடுகள் இருந்த ஸ்தானம் என மிக பழங்காலத்தில் அழைக்கப்பட் டது. கண்டிய மன்னர்களின் காலத்தி லும், 1628 இல் மாத்தளை உப இராச்சியமாக்கப்பட்டபோது கொடபொல என்னும் இடத்தில் தனது இராசதா னியை அமைத்துக் கொண்ட விஜய பால இளவரசனின் காலத்திலும் இங்கு மாடுகளைக் கொண்ட பண்ணைகள்
65

Page 35
காணப்பட்டன. இப்பகுதியில் முஸ்லிம் கள் செறிந்து வாழ்ந்தமையால் அவர்களே இதனைப் பராமரித்ததற் கான சான்றுகளும் உள்ளன. இங்கிரு ந்து தவள வாணிகம் நடைபெற்றதால் ஒரு மடிகே கரும பீடமும் இங்கு காணப்பட்டது. கண்டிய மன்னன் பூரீ விக்கிரம இராஜசிங்கனின் மகாதிகாரம் பதவி வகித்த பிலிமத்தலாவை என்பவர், 1806ம் ஆண்டில் வகித்த பதவிகள் தொடர்பான சன்னசையில் ’கொண் காவலை மடிகே பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்ணாமம் பற்றிய தரவுகளுக்கு வரும் முன்னர் அதற்கு அடிப்படையான மாத்தளை நகர வடிவமைப்பை ஆய்வது பயனுடையதாகும். நீண்ட வரலாற்றுப் பெருமையும் தனித்துவமான பாரம்பரியத்தையும் கொண்ட மாத்தளை நகரைப் பற்றி 1640ல் வர்ணிக்கும் ஒரு வெளிநாட்டவர் பின்வருமாறு குறிப்பிடுகி றார். 'மாத்தளை உப இராச்சியத்தின் சூழலும், காலநிலையும் மிகவும் ரம்மியமானது. என்றாலும் முழுமையாக சனச் சூனியமான இடமாகும். இந்த நகரம் எவ்வளவு சிறியது என்றால் அதிலுள்ள வீடுகள் 40க்கும் குறைவான வையே. இந்த உப இராச்சியத்தின் பெயர் அரசனின் அரச மாளிகை அணி மித்த மாத தளை நகரின் பெயராகும்.
பிறிதொரு குறிப்பின்படி, அதாவது 1948ல் வெடித்த மாத்தளை மகா கலவரம் தொடர்பான ஓர் அறிக்கையில் மாத்தளை நகரம் என்று சொல்லப்படு வது முக்கால் மைல் தூரமான திருகோ ணமலை வீதியிலே இரு மருங்கிலும் தென்னை ஒலைகள் அல்லது வைக் கோலால வேயப் பட்ட சிறிய வீடுகளுடன் கூடிய கடை வரிசைகள்
61,
இரண்டேயாகும்’ எனக் குறிப்பிடப்பட்டு
ள்ளதைக் காணலாம்.
இந்த வர்ணிப்புகள் மிகப் பழமை யான காலத்திலிருந்தே மாத்தளை நகரம் ஒலை, இலை, வைக்கோலினால் வேயப்பட்ட சிறிய வீடுகளைக் கொண் டிருந்தது என்பதை அறிய முடிகிறது. இலை. ஒலை ஆகியவற்றால் அமைக் கப்பட்ட குடிசைகளைக் கொண்டவை 'பண்ணாகம' என அழைக்கப்படும். பண்ணாமம்' என மாத்தளை நகரம் இதனை அடிப்படையாக வைத்தும் அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஏனெனில், 'கம என்னும் சொல் காமம்’ எனவும் வடிவம் பெறுகிறது. இங்கே "பண்ணாமம் என்பது 'பண்ண காமம்' என அழைக்கப்பட்டு உள்ளமை க்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. ஆரம்ப காலம் தொட்டே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதால் வரலாற்றுத் தொண்மை வாய்ந்த அவர்களது வணக்க ஸ்தலமொன்று இந்நகரில் காணப்படுகிறது. இதனை "ஊர்ப்பள்ளி' என பழங்காலத்தவர் கூறினர். இப்பள்ளிவாயிலில் தொன் மைக் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பித்தளையிலான குத்துவிளக்கு கள் சில இன்றும் காணப்படுகின்றன. இவை ஊர்வாசிகளால் பள்ளிக்கு அன்பளிப்புச செய்யப்பட்டவையாகும். ஒரு குத்துவிளக்கிலே!
பண்ணாமத்திலிருக்கும் வாப்பு லெப்பையுடைய மகன் ராசமரைக்காரி னால் ஊர்ப்பள்ளிக்கு வக்குப் செய்யப் பட்டது என தமிழில் செதுக்கப்பட்டுள்ள வசனமொன்றினை காண முடிகிறது. இன்னுமொரு குத்துவிளக்கில் த.ஆ. மரிக்கார் ஆராச்சியார் பண்ணாமம் ஊர்ப்பள்ளிக்கு ஒக்கூடு சய்யிதது என

பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு பண்ணா மம் ஊர்’ எனக் குறிப்பிடப்படுவது கொண் காவலை ஊரையேயாகும் , 10.12.1913 இல் எழுதப்பட்ட இல: 15183ம் உடைய ஒரு சிங்கள மொழிக் காணி ஒப்பனையில் கொன்காவலை கமயில் வசிக்கும் வாப்பு லெப்பையு டைய மகன் ராசமரைக்கார்’ என மேலே கூறப்பட்டவர் வசித்த இட விபரம் கூறப் பட்டுள்ளது. இது போல பண்ணாமத் திற்கும், கொன்காவலைக்கும் ஒத்த தன்மை காணப்படுவதைக் காட்டும் அநேக ஆதாரங்கள் அறியக கிடக்கின்றன.
கண்டி மாவட்ட நீதிமன்றத்தில்
மரணச் சொத்துத் தொடர்பான 956
என்னும் இலக்கமுடைய வழக்கு ஏட்டில் ஒரு தமிழ் ஆவணம் இணைக் கப்பட்டுள்ளது. இவ்வூரில் வசித்த ஒருவரது சொத்துக்களை உரித்தாளிக ளுக்குப் பகிர்ந்தளித்ததன் பின்னர் கொமிஷனர் ஒருவரினால் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையே அவ்வாவணமாகும். இள்வூரைச் சேர்ந்த கதீப் அகமது லெப்பை என்பவர் 1877ம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளுக்காக கொமிஷ னராக நியமிக்கப்பட்டிருந்தார். அந்தப் பத்திரத்தில் 'பண்ணாமத்தில் கதீபு அகமது லெப்பை என ஒரு குறிப்பும், 'மாத்தளை பண்ணாமத்தில்’ என மற்றுமொரு பகுதியிலும் தமிழில், அவர்தம் கடமைகளை மேற்கொண்ட இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு 'பண்ணாமம்', 'பண்ணகாமம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வழக்கில் 30.1.1878 இல் எழுதப்பட்ட இலக்கம் 286 என்ற காணி உறுதி யொன்றிலும் 'மாத்தளை பண்ணகாம என்பதாக பதியப்பட்டுள்ளது.
பண்ணாமம் பற்றிய மற்றுமொரு
தெட்டத் தெளிவான பதிவு இலங்கை புகையிரத திணைக்கள அறிவித்தல் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. மாத்தளை க்கும் கண்டிக்கும் 04.10.1880 இல் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட போது மாத்தளை புகையிரத நிலையம் கொன்னகாவலையிலேயே அமைக்கப் பட்டது. புகையிரத நிலையங்களின் பெயர்களில் அவை அமையப் பெற்றிரு ந்த ஊரின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காது இடப் பெயராலேயே பல நிலையங்கள் அழைக்கப்பட்டன. 'கோட்டை' என்பது கொழும்பு புகையி ரத நிலையத்தைச் சுட்டிக் காட்டியது. அதுபோல், மாத்தளை புகையிரத நிலையம் 'பண்ணாமம்’ என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்குச் சான்று பகரும் பதிவொன்று 1954ம் ஆண்டு மெய் கண்டான் தமிழ் Lயறியில் இலங்கை புகையிரத விகிதம்' என்ற மகுடத் தின்கீழ் அச்சிடப்பட்டுள்ளது. இதில் பிரதான நிலையங்கள் எனக் கருதப் பட்டவை தடித்த எழுத்தினால் பொறிக் கப்பட்டுள்ளன. பண்ணாமத்திற்கும் அவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. கோட்டை புகையிரத நிலை யப் பெயர்ப் பலகையிலும் மாத்தளை என்பதற்குப் பதிலாக பண்ணாமம்’ என்பதாகவே சில காலங்களுக்கு முன்னர் பதியப்பட்டிருந்தது.
பண்ணகாமம்' என்பது பண்ணாமம்’ எனத் தெளிவாகப் பதியப்பட்டிருந்ததை நாம் ஆராய்ந்து பார்க்கையில் 'கொன் காவலை' என்ற பதத்திற்கு உள்ளார் ந்த அம்சத்தால் ஒருமித்த தன்மையைப்
பெறுவதை நாம் காணலாம். 'கொன்
கால" என்பதன் மருவுதலே 'கொங்கா வலையாகும். இங்கு சிங்கள் மொழி யில் 'கொன்' என்பது மாட்டையும் கால எனப்படுவது பட்டி, பண்ணை, என்ப தையும் குறிக்கும் சொற்களாகும்.
配汤互口

Page 36
இப்புகையிரத நிலையத்தை அண்மித்த தாயுள்ள பகுதியிலேயே அதிகமான மாட்டுப் பண்ணைகள் காணப்பட்டன. பண்ணைகளைக் கொண்டிருந்ததால் பண்ணாமம்' என்ற பெயர் கூறப்பட்டதா கவும் கூறலாம். ஏனெனில் கொன்கா வலையும் பண்ணையைக் குறிக்கும் பெயர் என்பதால். ஆனால் சிங்கள மொழி பதிவுகள் இவ்வூரை கொன்கா வலை என்றே அழைத்துள்ளதை ஆய்வுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
வரலாற்றுப் பதிவுகள் பற்றிய ஆய்விற்கு மொழி பிரதானமான தொன்றல்ல. பண்ணாமம் பற்றிய பதிவு களும் அரபி மொழியில் எழுதப்பட்ட சில கையெழுத்து ஆவணங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பணி ணாமத்து முஸ் லிமி கள் மத்தியில் அரபு மொழிப் பாவனை ஒரு காலப்பகுதியில் கணிசமான செல்வாக் கைப் பெற்று விளங்கியது. அரபியில் கவிதை புனையும் அளவு அவர்களது பாண்டித்தியம் மிளிர்ந்துள்ளது. திரு மணப் பதிவுகள் அரபியிலும், அரபுத் தமிழிலுமே எழுதப்பட்டன. மரண, பிறப்பு செய்திகள் பற்றிய குடும்ப குறிப்புகள் போன்றவையும், கையொப் பங்களும் அரபி மொழியிலேயே இடப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை ஆராய்கையில் அவற்றில் பல பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.
இவை தவிர, புகழ் பெற்ற இஸ்லா மிய மார்க்க ஞானிகளுள் ஒருவரான கசாவத்தை ஆலிம் அப்பா என அழைக்கப்படும் அஸ்செய்உற் முஹம் மத் அவர்கள் 1864ம் ஆண்டில் 1352 பக்கங்களைக் கொண்ட ஒரு மாபெரும் அரபி கையெழுத்து நூலை இவ்வூரின்
আত্মা
கதீப் ஒருவருக்கு அன்பளிப்புச் செய்து
அதில் பின் வரும் குறிப்பையும் எழுதியுள்ளார்.
'அதிகமான அறிவுகள் அடங்கிய இப்பெரும் கிதாபை. பிரபல்யமான பணி னகாமத்தைச் சேர்ந்த கதீபு அகமது லெப்பை அவர்களுக்கு ரூபா 100/- பெறுமதிக்கு உறத்யாச் செய்கி றேன். ஹிஜ்ரி 1281 ஜமாதுல் ஆகிர் பிறை 15 சாட்சியாக இருந்தவர்கள்
பக்கீர் லெப்பை இட்று கண்டு
விதானை, பண்ணகாமம். அடுத்த சாட்சி
யாளரும் பண்ணகாமத்தைச் சேர்ந்தவ ராவார். இவ்வூர்ப் பள்ளியில் நல்லட க்கம் செய்யப்பட்டிருக்கும் இறைநேசச் செல்வரான செய்யித் செய்லூலாப்தீன் வலியுல்லாஉற் அவர்கள் பற்றிய 41 பாடல்கள் அடங்கிய ஒரு அரபிக் கவிதையில் ‘பிரபல்யம் பெற்ற மாத்தளை பண்ணகாமம்’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஒரு மகான் ஆவார்.
மாத்தளை ஹரஸ்கமை என்னும் பிரிவிலும் பண்ணகம' என்றழைக்கப் படும் ஒரு பகுதியுள்ளது. இது பண்ணா மத்திற்கு மேற்கே அமையப்பெற்ற சிங்கள சமூகத்தவரைப் பிரதானமாகக் கொண்ட ஒரு பகுதியாகும். பன்னயா', பன்னயோ’ என்னும் பன்னா குலத்தவ ர்களில் ஒரு சாரார் இங்கு வாழ்ந்தத னால் இப் பெயர் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. புல்லு அறுப்பவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டனர். வன்னி திசாவணியிலும் இக்குலத்தார் வசித்தத னால் அங்கும் பனங்காமம்' அல்லது பனங்கமுவ என அழைக்கப்பட்ட ஓர் ஊர் இருந்தது. மாத் தளையில் இப்பிரிவிற்கு 1829ஆம் ஆண்டில் ஹலங் கொடை லேக்கம் என்பவர் பிரித்தானிய

ரால் 'பன்னகம விதானை என்னும் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
1818இல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கண்டி இராச்சியமெங்கும் மூண்ட பெருங் கலவரத்தின்போது, மாத்தளையில் நிலை கொண்டிருந்த கலகக்காரர்களை அடக்குமுகமாக லெப்டினன்ட் கேர்னல் கெலியின் தலைமையில் மாத்தளைக்கும் ஒரு படைபிரிவு அனுப்பப்பட்டது. எத்காலை க்குப் புறப்பட்ட இப்படை பிரிவு மலை
முகடுகளில் இருந்து பனாகL'விற்கு வந்ததாக ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. இக்குறிப்பானது பன்னகாமத் தையா அல்லது பன்னகயையையா குறிப்பிடுகிறதென்பதில் தெளிவின்மை காணப்படுகிறது.
என்றாலும், பேணி பாதுக்ாக்கப்பட்ட வரும் எழுத்தினாலான பதிவுகள் பலவற்றால் 'பண்ணாமம்' என்ற நாமம் மாத்திரமேனும் கைநழுவி விடாது இன்றும் நிலைத்திருக்கிறது.
சமயங்களும் சரித்தரங்களும் பள்ளியில் படித்தது புள்ளிக்கு மட்டுந்தான்! வாழ்க்கையில் தலை கீழாக மாற்றிவிட்டோம்
சட்டங்களும், நியதிகளும் தட்டிவிடப்படுகிறது தட்டிக் கேட்க வேண்டியவர்கள் தட்டியே கொடுக்கின்றார்கள்
மாப்பிள்ளை சிங்கங்களின் வரதட்சணைப் பற்களை கூர்படுத்துவதும் நாங்கள்தான்! பற்களல் - கிழிக்கப்படுவதும் நாங்கள்தான்!
குஷியாக அமர்ந்திருந்து ஆபாசப் படக்காட்சிகளை விழிகளால் புசிக்கும் போது சகோதரனின் பசி பற்றி எங்ங்னம் சிந்திப்பது?
ஆண்களது அந்தஸ்தின் தத்துவ நீரோடை களங்கப்படுகிறது.
விடை மறுத்த வினாக்கள் -திக்குவல்லை ரதீமா -
துஷ்பிரயோக அழுக்குகளால் 'ஆண் என்ற அகம்பாவத்தால் போதைச் சிறைகளின் ஆயுட் கைதிகளான எங்கள் வாலிபர்கள் சுவர்க்கத்தைத் தேடுகிறார்கள் நரகில் வீழ்ந்து கொண்டு
'பெண் விடுதலையின் அர்த்தங்கள் புரியாமல் தடுமாறும் தாய்க்குலங்கள் விலங்கையே மாட்டிக் கொள்கிறார்கள்
வளர்க்க வேண்டியது ஒற்றுமைச் செடிகளைத்தான்! வளர்த்ததென்னவோ வேற்றுமை களை'
பாவம் நாங்கள்
‘விடியல் விடியல்
என்றால் - 'ஒடியல் என்று நினைத்துவிட்டோமா? விலை கொடுத்து வாங்குவதற்கு! கண்களை கெடுத்துக் கொண்டு வெளிச்சம் தேடுகிறோம்!

Page 37
அடுத்த நூற்றாண்டிலும் அதிகமாக அலசி ஆராயப்படும்
y
மல்லிகை”க்கு வாழ்த்துக்கள்
CAMBRIDGE INTERNATIONAL SCHOOL
52, Hulangamuwa Road, Phone:0094 66 30286 Matale 2000 FaX: 0094 66 36}409 Sri Lanka E-MailCambridge Geureka

சொர்க்க மலர்கள் நரகப்
பிரவேசங்கள்
அல் அஸ்மைத்
பொய் எங்களை விழுங்கித்தான் இருக்கிறது. அதனால்தான் நிஜங்களை விட்டும் நாங்கள் விலகி வாழ்ந்துகொண் டிருக்கிறோம். அதுவும் எங்கள் வீடுகளி லேயே. சதா கற்பன வாதத்தில் உருகிக் கழியும் டிவி யிலேயே வீட்டின் முக்காற் பொழுதையும் வீணாக்கிக்கொ ண் டிருக் கிறோமே அதைத் தான் சொல்கிறேன்.
அப்போதும் அப்படித்தான் டீவீ மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் சோபாக் களில் கிடந்தோம். சத்தியம் என்றொரு சினிமாக் கற்பனா வாதம்.
என் முழங்கால்கள் மீது விரிந்த கைகளில் தன் தலையைப் படர்த்தி மகிழ்ந்து நெளியும் பிறந்தமேனிப் பேரன், ஐந்தே மாதங்களும் ஐந்துாறு வகை மழலை மைகளும் சின்னத்திரை யில் கால்வாசிக் கண்ணும் மடிகிடந்த பொன்னுத்துரையில் முக்கால்வாசிக் கண்ணுமாக நானும்,
குழந்தைகள் எமது பல்கலைக்கழக ங்கள் அல்லவோ? அதனால் என் மனதிற்குள் ஒரு பகுத்தறிவுப் பாடம் அப்போதும் படிந்துகொண்டிருந்தது.
"..முன்னய இத்தகு சொர்க்க மலர்கள் தானே இன்று நரகக் காய் கனிகளாகி இம்சித்தும், அடிமைப்படுத்தி
யும். கொன்றும் ஆதிக்கம் நடத்துகின் றன. அல்லது இம்சைப்பட்டும், அடிமைப் பட்டும் கொலையும் படுகின்றன. நாடு பிறகேன் நரகமாகாது.?”
எதிர்வீடு மனதில் எழுந்தது. தாய் தகப்பன் மகன் மகள் 10'டுமேயான குடும்பக் கட்டுப்பாட்டின் வீடு. மகன் கில்லாடித்தனத்தில் மகன். திருத்தப்ப Lவே முடியாத கேஸ் என்று ஆண்டவ னாலேயே கைவிடப்பட்டவன். சகல எதிர் காலங்களையும் யோசித்துப் பார்த்தவர்களாக அவனை எப்படியோ இராணுவத்தில் - அதாவது இன்றைய உடனடிப் பென்ஷன் தொழிலில் சேர்த்து விட்டார்கள் குடும்பத்தார்கள் - ஊரே கையெழுப்பிக் கும்பிட
திட்டிக்கொண்டிருந்த ஊர் திடுதிப் பென்று அவனை மண்ணின் மைந்த னென்று புகழத் தொடங்கிவிட்டது. பெற்றவர்களும் ஆகாய மைந்தர்கள் மாதிரி மதிக்கத் தொடங்கினார்கள்.
அவர்களுக்குப் பலவகை மகிழ்ச்சி கள். இந்த நரகக்காய், வவுனியாவி லிருந்து திரும்பவே திரும்பாது என்பது தான் முதல் மகிழ்ச்சி. மண்காக்கும் விரன் எனச் சொல் பாலைகள் வீதி தோறும் வீசப்படுவதைப் பொறுக்கிக் கொள்வது நாளாந்த மகிழ்ச் சி.

Page 38
எப்படியாவது செத்துப்டோனால் கிடைக் கும் வீர விருதுப் பணத்தி லவறுமை வியர்வையை துடைத்துக்கொள்ளலாம் என்பது அடிப்படையான அந்தரங்க மகிழ்ச்சி.
எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார் கள் வறுமைச் செல்வத்தைச் சிலர்.
அவனும் அனுப்பிசகாமல் செத்துத் தான் போனான். மூடி திறவாத பெட்டி யைத் தேசியத் துணி வேறு மூடியிருந் தது. என்ன இருந்தாலும் எனக்கும் துக்கம்தான். யாள் யாரோ செய்திருக்கும் பாவங்களுக்காக இவனும் பலியா னானே' என்று. பாவப்பட்ட ஜென்மம்.
ஐந்தாறு நாட்கள் வரை குடும்பம் ஒருவகை முகமூடி அழுகையில் இருந்தது. பிறகு விருதுப்பணம் சதா நிம்மதியைக் கொண்டு வந்ததோடு சகலமுமே சுபம்.
புலியைக் கொன்று வா’ என்று மகனைக் கொன்றுவிட்ட அவர்களுக்கு நரகம் கூட எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
உதவாக்கரைகளை வளர்ப்பதுவும் இன்று தேசியக் கெளரவம்தான்.
+ + + + +
பேரனின் சிறுநீர் சுளிரென்று என் முகத்தில் தைத்ததால் திடுக்கிட்டுப் போனேன்.
மகளும் மருமகனும் சின்ன மகனும் மாமியும் ஆரவாரமாகச் சிரிக்கத் தொட
ங்கினார்கள். ஸனத்தின் ஸிக்ஸரை 'டீவீயில் கண்ட மாதிரி.
ஆனால் மனைவி மாத்திரம்
கத்தினாள். நான் ஏதோ குடும்பத்தையே கெடுத்துவிட்ட மாதிரி. "என்னப்பா நீங்க!
[ 72 Eğ59
ஆட்டினதால பிள்ள அடக்கிட்டான் பாருங்க”
மூத்திரத்தை
இதொன்றிலுமே காலத்தை விரயமா க்காது ஆடிய தன் கைகால்களுக்குத் தகுந்த மாதிரிப் பொக்கை வாயை நெளித்துக்கொண்டிருந்தான் அவன்.
"நான் ஒண்னுஞ் 8ெ:ய்யல்லப்பா சும்மா கத்தாதீங்க” என்று புறங்கையால் முகம் துடைத்தேன். வாயில் உப்புக் கரிச்சலோடு. "டேய் கள்ளா ! இப்பத் தானேடா ஒண் L மம் (fட கவுன நனச்சே?”
“அஞ்சி நிமிஷத்துக்கொருக்கா யார் மேலயாச்சும் பெய்யல்லேன்னா அவனு க்குத் தூக்கம் போகாது டெடி” என்று மகள் பெருமைப்பட்டாள்.
"மூத்திரம் கட்டுறது அவ்வளவு நல்லதில்ல. பிள்ளைக்கு வருத்த மில்லியா” என்றாள் இவள்,
மடியிலிருக்கும்போது பிள்ளை சிறுநீர் கழித்தானானால் கழித்து முடிகிற வரைக்கும் நானும் அசைவதில் லைதான். இன்றென்னவோ ஒரு திடீர் வீக்னஸ்.
கமக்கட்டுகளுக்கூடாகப் பேரனைக் காவிக்கொண்டு போய் வாசற்படியில் உட்கார்ந்தேன். என் குதிகால் பாதங் களை நட்டுப் பிள்ளையையும் உட்கார வைத்தேன். "நீங்க பேயுங்க ராஜா” என்ற கொஞ்சலுடன் அவனது அடி வயிற்றில் உள்ளங்கையால் அழுத்தி யும் கொடுத்தேன் - முத்திரம் பிழிபட் டாவது வரட்டுமென்று.
“அவன் இனிப் பேயவ: போறான்?” என்றாள் மனைவி சாபம் கொடுக்கிற தொனியில், எனக்கு எரிச்சலாக இருந் தது. ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ளும் அரசாங்கத்தில் இருப்பதைப்

போல
மூத்திரப் பிரக்ஞையே இல்லாமல் வாசல் வேடிக் கை பேரனுக் கு. இப்போதைக்குப் பெய்ய மாட்டான் என்பதுவும் எனக்குத் தெரியும்.
மகள் “டீ வீ கண்களோடு என் தோளில் ஒரு துணித் துணி டைப் போட்டாள். முகம் துடைப்பதாகப் பெயர் பண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் இருந்த பார்க்கலானேன்.
4- -- -(- - --
குழந்தைமை! நாம் நம்மிலிருந்து மறந்து போன ஒர் அதியற்புதப் பராயம்.
ஏன் இந்த அற்புதத்தை மறந்து போனோம்? அற்புதமாய் இருந்து தானே ஆபாசமாய் மாறிப்போனோம். அமை தியே இன்று போராக மாறிவிட வில்லையா? எப்படித்தான் அந்த தூய அற்புதம் இந்த அசுத்தத்தில் நிற்கும்? அது தானாகவே ஒதுங்கிக் கொண்டது.
ஒரு பக்கமாக.
மொழி, அறிவு, மத, பண, புகழ் ஆதிக் அசுத்தங்கள்.
மறுபக்கமாக
ஆதிப்பாமர, நாத்திக, வறுமை, அடிமைத்தன அசுத்தங்கள்.
இவற்றை நேரத்துக்கொன்றாய் மாட்டி நாம் ஆபாசமாகிப் போனோம்.
அற்புதமாய் இருந்தபோது குழந்தை
கள் சொர்க்கத்து மலர்கள் தாம். தூய்
மைதான். அதிலும் மனத் துய்மைதான் சொர்க்கமென்றால், குழந்தை மலர்கள் அந்தச் செடியில்தானே பூக்கவும் முடி பும்? தாயின் பாதத்தடியில் சொர்க்க மென்றால், அவள் வயிறும், அவ்வயிறு
கணிவித்த குழந்தையும் சொர்க்கம் அல்லாதவையாக இருக்க முடியுமா?
ஜல-மலங்கள் கூட அவர்களுக்கு அழுக்காக இல்லையே. அவற்றோடு இவர்கள் விருப்பு வெறுப்பில்லாமல் விளையாடுவதைப் பார்த்தால், விவேகா னந்தர் கூறியது சரிதான் என்று படுகி றது- மலத்திலும் கடவுள் உண்டென்று.
ஆகா! 'ஜலமலநாதர் அல்லது 'மூத் திரச் சாமியார்’ என்ற படிமம் அல்லது குறியீடு குழந்தைகளுக்கு எவ்வளவு அழகாய்ப் பொருந்துகிறது. அவையடக் கமற்ற சில தலைக்கணங்களின் வீச்சுக் கவிதைகளைவிட, இவ்வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாகக் கொலு வீற்றிருக்கின்றன. -
ஆதாமும் ஏவாளும் பாவக் கணி யைப் புசிக்கும் வரையில் சொர்க்கத் தில்தான் இருந்தார்கள். புசித்த கையோ டுதான் வெட்கம் வந்தது. பாவக்கனி புசித்தல்' எனும் குறியீடு குழந்தைப் பருவம் முடிவடைவதைக் குறிப்பதாகத் தான் இருக்க வேண்டும். 'சொர்க்க மலர் நரகக் காய்மைக்குள் பிரவேசிக்கும் விழா' என்றும் கொள்ளலாம்.
அதனால்தான் அந்தப் பருவம் மறக்கடிக்கப்படுகின்றது போலும்.
மறக்கடிக்கப்பட்ட இதே ஆரம்ப நிலையோடு, இதே குழந்தைமையோடு இறக்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘எல்லாம் கடந்த நிலை என்று அதற் கொரு பெயரைச் சூட்டி, உதிரும் தருணத்தில் அதை உக்கிரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றன நரகக் கனிகள். முடிகிற காரியமா? புத்தராலும் முடியாமற் போன ஒன்றாயிற்றே?
ஜலமலம் இவர்களுக்கு அசுத்தமா கப் படாததால் தான், இதுபோன்ற கால்

Page 39
கக்கூஸிலோ பூமியிலோ குழந்தைகள் அவற்றைக் கழிக்க விரும்பாமல் இருக்கிறார்கள் போலும், நம் தலை, முகம், தோள். மடி, உடை, உணவுத் தட்டம், புத்தகம் - அதாவது உயர்ந்த இடங்களே அவர்களுக்குத் தேவை. அரசியல்வாதிகள் கழிப்பதற்கு நம் வாக்குகள் தேவைப்படுவதைப்போல.
கிளிண்டன் குழந்தை எவ்வளவு அபாரமாகக் கழித் திருக்கிறான். அமெரிக்கப் பெரியவர்களும் அந்தச் சொர் க் கத்து மலரை எவ்வளவு பாசத்தோடு கொஞ்சுகிறார்கள்.
-- 4) -- -- 伞
எங்களின் சொர் க் க மலரும் இப்போதைக்கு மூத்திரம் பெய்வதாக இல்லை. "இனி எங்க பேயப் போறான்?" என்று இவள் வேறு சிலுவையோடு இன்னும்,
சரிடா, மிச்சத்தையும் எண் L வாய்லேயே பேய்" என்று எரிச்சலோடு பிள்ளையைத் துர்க்கி முத்தமிட்டேன். மறுபடியும் பழைய இருக்கை. புதிய கொஞ்சுகை.
令 伞 令 今 令
எங்களுக்கு ஏழு பிள்ளைகள். ஏதோ திட்டம் போட்டு இலட்சிய வாரிசுகளைப் பெற்று விட்டோம் என்று அநியாயமாகக் குளிர்ந்து போகாதீர்கள். அவஸ்தைதான்.
இரண்டைப் பெறு, ஒன்றைப் பெறு என்றெல்லாம் அரசாங்கம் கத்துவதுகூட இலட்சிய வாரிசுகளைப் பெறுவதற்காக அல்லவே. பஞ்சப்பாட்டில்தான்.
இலட் சரிய வாரிசைப் பெற முடியாவிட்டால் பெறாமலேயே இரு என்றால் அது வித்தியாசம் தான்.
முதல் ஆறு பிள்ளைகளின் மீதும் எழாத ஒருவகைப் பாச உபாதை எனக்கு ஏழாவது 'குடல் துடைத்தான் மீதுதான் எழுந்தது. அவள் தாயல்லவா. அதனால் அனைத்துக் கெளரவர்கள் மீதுமே அவளுக்குப் பாசம்தான்.
நமது குழந்தைகளே நமது பலகலைககழகங்களா எனபதை நான உணர்ந்த முகூர்த்தத்தில்தான் இந்த ஏழாமவன் கருத்தரித்திருக்க வேண்டும். ஏனென்றால் எது பாசம், எதற்காகப் பாசம், அதன் மறுபக்கம் என்ன என்பவற்றையெல்லாம் அவ்வக்கணமே உணர வைத்தவன் அவன்தான்.
ஆறு பல்கலைக்கழகங்களையும் அநியாயமாக இழந்துவிட் டை உணர்ந்து நான் နှီးမြှို့ ဖြိုး ஊற்றுத் தூர்ந்துபோய் இருந்தது. இனிட் பேரப்பிள்ளைகள் தாமே கதி.
பாசம் வைக்கத் துடித்தும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறதே, அதுதான் நரக தண்டனை, அந்நிலை வெல்லர் பட்டதால் தான் இந்த எட்டாவது பேரன் மீது எனக்கோர் 'ஹோல்ஸேல் பாசம் மூன்று பிள்ளைகளின் ஒப்பாரியோர எங்கள் மூத்த மகனுக்குத் தூரத்தில்
குடியும் குடித்தனமும் . மழைக்கு ஒதுங்குவதுபோல எப்போவாவது ஒரு
‘வரி ஸf L’ ’. அநேகமாக Q ( மணித்தியாலத்து உறவு.
இரவில் புதியவர்கள் யாருகே தங்கக் கூடாது என்பது பொலீஸ் அடக்குமுறை அல்லவோ.
வருந்தி அழைத்தாலும் வாராது
குழந்தைகள். ‘வா வா என்று கெஞ்சி கூத்தாடி, நீட்டிய கைகளும் நிதை தளர்ந்து, தொண்டை நீரும் வற்று வரும்போது தான்.

"இவர்கள் பிள்ளை பிடிப்பவர்களாக வும் இல்லையே. போய்த் தான் பார்ப்போமா, பாவமே! என்ற தினுசில் மூன்றும் அன்னைக்கோ தந்தைக்கோ பின்னாலிருந்து ஒளிந்து பார்க்கத் தொடங்கும்.
சரி, குழந்தைகளை இனித் தூக்கிக் கொஞ்சலாம் என்று நாங்கள் தயாராகும் போது கடைசி வண்டியையாவது பிடிக்கும் அவசரம் அவர்களுக்கு வந்துவிடும்.
இனி எப்போதாவது அடுத்த கண்ணிர் மழைக்கு ஒதுங்கினால்தான் மூன்று பேரப்பிள்ளைகளையும் கியூவில் காணமுடியும், கெஞ்சிக் கூத்தாடித் தோற்றுப்போய் எரிச்சல்பட முடியும். 'பிள்ளைகளா பிசாசுகளா' என்று பல்லைக் கடிக்கவும் முடியும்.
குடும்பத்தில் இரண்டாவதாகக் கலியாணம் செய்தவன் மகத்தான ஒரு பாடத்தை எங்களுக்கு அனுகூலப்படுத் தித் தந்த எங்களின் நாலாம் தகப்பன் தான். தன் பத்து வயதிலேயே பரதேசம் போய் எங்களைக் கலங் கடித்த இன்ஸ்டன்ட் யூனிவர்ஸிட்டி"
மேலும் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன இப்போது. மூன்று தகப்பன் 10ாருக்கு அவன் ஒரு குழந்தை என்று போன வருஷம் காற்றில் ஒரு கேள்வி மிதந்து போனது.
ஆகா, சொந்தம் பேசிவந்த முதல் ஆறு பிள்ளைகளைப் போல், பேரம்பேசி வந்த ஆறு பிள்ளைகளுமே இவ்வாறாக அந்நியப்பட்டுப் போக மொத்தம் பன்னிரண்டு பல்கலைக்கழகங்களுமே
lsp.
மூன்றாவதாக முடித்தவள் தான் இந்த மகள். மூன்றாவதாய மகள்.
میم
மூத்திரச்சாமியாரின் தாய்.
உண்டாகியிருப்பதாக வைத்தியர் (?) அறிவித்த கணத்திலிருந்தே ஒருவகைத் தேர்தல் காலத் துப் பரபரப்புத் தொற்றியது குடும்பத்தில். பசித்தாலும்கூட என்னமோ ஏதோ என்று ஆஸ்பத்திரிப் பயணம்.
ஏழாவது மாதம் மலடாக வந்தது. வயிற்றில் பிள்ளை அல்லாத வேறு ஏதோ பிணி என்றார் அதே வைத்தியர் திலகம்.
தொடர்ந்த இரு வருஷத்திய ‘றிப்போர்ட்டுகளும் ’எக்ஸ்ரேகளும் ஒரு ‘லைப்ரரி மாதிரிக் குவிந்து வேலூர், வெட்டுர் என்ற பயமுறுத்தல்களோடு நீண்ட போது, மேலுTரில் பாரம் போடும்படி வற்புறுத்தினேன் நான்.
இக்காலகட்டத்தில்தான் இரண்டா வது மகன் திருமணம் போனான் எங்கள் கைகளில் ஒரு குழந்தையை எப்படியும் கொடுப்பது என்ற ரோஷம் பொத்துக்கொண்டவன் மாதிரி. ஏழாவது மாதம் அவன் குழந்தையும் தாழ் புவி.
ஏழு தவணைகளில் இந்த மாதிரியெ ல்லாம் குழந்தைப் பாசம் எங்களுக்கு ஊட்டப் பட்ட பிறகு மகளுக்குப் பிறந்தவன்தான் இந்த மலஜலநாதர்.
மேலூரில் போடப்பட்ட பாரங்கள் மகள் வயிற்றில் பால் ஊற்றியதோடு, வறண்டுகிடந்த எங்கள் மன நிலத்தை யும் துளிர்க்கச் செய்தது, தவமிருக்க ஆரம்பித்தோம். ஒரு சகாப்தத்தின் தவம் என்றுதான் கூறவேண்டும்.
என்னைப் பெறுவதற்கு முதல் நாள் எங்கள் அம்மா அந்த ஹிட்லர் க் காலத்தில் ஒரு புசல் நெல் குற்றியதாக குடும்பம் பெருமைப்படுகிறது. உண்டா கிய உடனேயே இந்தக் கம்பியூட்டர்
配颈区
\.

Page 40
காலத்தில் எங்கள் மகள் ஒர் ஊசியை க்கூடத் துக்கக்கூடாது என்று விஞ்ஞா னம் பயமுறுத்தியது. எனவே முழுக் குடும் பமும் தவமிருக் கத தானே வேண்டும்.
அரசைச் சுற்றினால் தாய்க்கும் கரு வுக்கு நல்லதென்று பெரிசுகள் தொண தொனத்தன. அதற்குக் கீழிருந்து தானே சித்தார் த தனி வாரிசுக் குடலையே அறுத்தெறிந்தான் என்பது நினைவுக்கு வராமல்,
மகளோ கிளிநிக்கைச் சுற்றி வந்து தான் இந்தப் பசிய கிளி நிற்கப் பெற்றாள்.
ஆறு நாட்களில் அலறல்கள் சகிதம் ஆஸ்பத்திரியில் பெற்று நாலாம்நாள் வீடு கொண்டுவந்து சேர்த்தாள்.
ஆறு - ஒருவகையில் ஏழு - பேரப் பிள்ளைகளை நெருங்க முடியாம லிருந்த எங்களை இவன் அன்றிலிருந்து தனக்குள் பூட்டி வைக்கவே தொடங்கி
யமை தான் எங்கள் வாழ்க்கையின் மிகப் பெரும் திருப்பமாக இருக்க (8660ÖT (Gb.
இவனை நாங்கள் நெருங்கும் ஒவ் வொரு சமயமும், எங்கள் ஒவ்வொருவரி னதும் உருவம் அப்படியே இருக்க, மனம், வாக்கு, காயங்களால் இவனை விடக் குழந்தைகளாகச் சுருங்கிப் போகிறோமே, குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பதாலா?
நம் காலத்தில் நாம் இரண்டு மூன்று.
வயதுகளில் செய்தவற்றை இன்றைய குழ நீ  ைத களர் இரணி டு மூனர் று மாதங்களிலேயே செய்கிறார்களே? என்றெல்லாம் வியந்து -
கண்ணுாறு-வாயூறுகள் என்றெல்லாம் திருஷடிகள் கழித்து
囚頁孩們
உலகம் பிறந்தது இவனுக்காக என்றெல்லாம் புளகாங்கித்து
அவனது விழிப்பு, உறக்கம், சிரிப்பு, அழுகை யாவற்றிலுமே புதிய புதிய அர்த்தங்கள் கண்டு.
நாலாம் மாதம் மகளும் மருமகனும் மீண்டும் தனிக்குடித்தனம் போனார்கள். பக்கத்தில் தான் என்றாலும் மனம் எங்களுக்குப் பக் குவப் படாமல் இருக்கும்போதே.
மறுநாள் விடியு முன் பாகவே குழந்தையை முடி எடுத்துக்கொண்டு ஓடி வந்தார்கள். மருந்தெடுக்க யார் நல்ல குழந்தை மருத்துவர் என்று அழுதபடியே.
அவன் இரவெல்லாம் அழுதழுது மன லிலேயே படுத் திருந்ததாகப் பெற்றார் அழுததோடு நாங்களும் கலங்கு முன்பாகவே -
அவர்களின் அலறலை முறியடித்த பாச அலறலோடு என்னிடம் பாய்ந்து வந்தானே குழந்தை, அதன் சுவட்டோடு அனலையும் கானோம் அடுப்பையும் காணோம்.
பாசத்தால் நான் மாசறுத்த முதற் பொழுது அது.
இப்போதெல்லாம் தினமொரு தரமா வது இவனைக்கான நாங்கள் அங்கே போயாக வேண்டும். அல்லது அவன் இங்கே வந்தாக வேண்டும்.
மார்பில் அணிவதற்கு இவனைப் போல் வைர மணி எங்குமில்லை என்பதை மட்டமல்ல ஒருதலைப்பட்ச மாக எங்கும் எந்தப் பாசமும் நிறைவு பெறுவதில்லை என்பத்ையும் கற்றுக் கொண்டேன் - கசடற.
இப்படிப் பாசத்தால் பிணைக்கப்பட்ட
Q தத

சொர்க்க மலர்கள் தாமே இன்று நரகக் காய்கனிகளாக மாறிச் சகோதரக் காதகம் புரிகின்றன.
மனிதர்களுக்காகவே படைக்கப்பட்ட உலகத்தில், நியாயமான தனியொருவ னுக்குரிய வாழுரிமை மறுக்கப்பட்டால், அந்த உலக தி தையே அழிக் க முயல்வதில் தவறென்ன இருக்கிறது?
மனது கனத்தது.
மடியில் கிடக்க விருப்பமில்லை என்பதைப் போல் அடம் பிடிப்பதாக அசைந்து கொண்டிருந்த குழந்தை திடீரென்று அழ ஆரம்பித்தான். என் கால்களைத் தொட்டிலாக அசைத்தும் பலமாக அழ ஆரம்பித்தான்.
"நுளம்பு கடிச்சிருக்கும்” என்று மருமகன் சொல்ல, மகள் குழந்தையை யும் டீவீயையும் மாறி மாறிப் பார்க்க, மனைவி எழும்பி அருகில் வர, “ஊசி போட்ட எடத்ல என்ட கை பட்றிச்சோ?” என்று நான் சந்தேகப்பட்டேன் என் மீதே.
அன்று காலையில் அவன் தொடை யின் ஊசி பாய்ச்சிய “கிளிநிக் நர்ஸ்’ காய்ச்சல் வரலாம் என்றிருந்தாளாம்.
அந்த இடம் அப்போது சிவந்து சிறிது உப்பலாகவும் இருந்தது. வாயில் ஊதி ஊதி. அழுகை அதிகரித்ததால் தேறுதல் குளறல்களோடு அவனைத் தோளில் சாய்த்துத் தட்டித் தடவி. எழுந்து திரிந்து.
அழுகையின் சுருதி கூடியதோடு கீழே இறங்கவேண்டும் என்பது போல் அடமும் பிடித்தான் குழந்தை. மனைவி யும் அன்புக் குழைச்சல்களோடு என் பின்னாலேயே திரியத் தொடங்கினாள். கைகளை நீட்டி அழைத்தும் பார்த்தாள். தோடம் பழம் உரித்து வருவதாக
உள்ளே ஓடினாள்
மகளும் எழுந்து வந்து பிள்ளை யைப் பறிக்கப் பார்த்துத் தோற்றுப் போனாள்.
எ ல் லாருக் குமே இருந்தது.
நுளம்போ எறும்போ கடித்திருக்க லாம். அவனது தொடையில் என் கை பட்டிருக்கலாம். வேறும் ஏதாவது.
(€5 pL 1.DfT 35
அதறி காக gé) Li t J IQ 99
DIT TG36OT....?
எனக்குள் வியர்ப்பது போல் ஓர் உணர்வு குழந்தையின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒர் வியர்ப்பு.
இவன் கண்களில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம்தான் கொட்டும். வடியாது. கொட்டும். நாடு போகிற போக்கைப் பார்த்தால் கொட்டாது. குமுறிப் பிழியும் போலும் படுகிறது.
இந்தச் சொர்க்கக் குழந்தைகூட நிச்சயமாக நாளை ஒரு சரகக் காயோ கனியோதான் என்பதில் இரு கருத்து க்கு இடமில்லை. இந்த ஆபாசம் ஆதிக் கத்துவ அழுக்காலா அடிமைத்துவ அழுக் காலா என பதுவும் தெரியவில்லை.
இவனை இன்று சீராட்டுகிறோமே, நாளை கொலைகாரனாக்கவா, கொலை படுபவனாக்கவா?.
ஐயோ பிள்ளை பெற்றுக்கொள்ளவே கூடாதா? பெற்றாலும் வளர்க்காமல் வள்ளுவரைப் புறம் தள்ளிப்போனது போல் போய்விட வேண்டுமா?
தப்பித்தவறி வளர்த்தாலும் பாசமே வைக்கக்கூடாதா?
卤互口

Page 41
இண்று செர்ர்க் கத்து மலராக இருக்கும் இவன், நாளை நரகத்துக் காயாகவோ கணியாகவோ வாழப் போகும் காலங்களில் கொலைகாரனா கவோ, கொலை படுபவனாகவோ வாழப்போகும் அந்த எதிர்காலங்களில் நான் இன்னும் கனிந்தவனாய் உயி ரோடு இருக்க நேர்ந்தால், அன்றைய என் மனநிலை எப்படியிருக்கும்?
எதிர் வீட்டார் மாதிரியா?
போர் என்பது கொலைத் தொழில் அல்ல என்கிறார்கள். போருக்குப்போய் இறந்த அந்தக் கில்லாடி மகானும் கொலைப்படவில்லை.
ஆனால் நாங்கள்? நிச்சயமாக நாங்கள் போருக்காக அனுப்பப்படப்போவதில்லை. ஆகவே -
ஆதிக்கத்துவக் காய் கனிகளின் ஒரு வெறிக்காலம் ஏற்படுமானால் -
நாங்கள் கொலைப்படவும் கூடும்.
பிறந்ததிலிருந்தே இறக் கத் தொடங்கிவிட்டோம் என்பதுதான் தத்து வார்த்த உண்மை என்ற போதிலும் பெரியவர்களாகிய நாங்கள் பலாத்கார மாகவும் நாளாந்தம் செத்துச் செத்தே
எங்கள் முடிவை அண்மிவிட்டோம்.
எங்கள் வாரிசுகளின் - இந்தப் பிஞ்சுகளின் காலங்கள் எப்படி?.
விழிகள் கலங்குவதைத் தடுக்கப் பாடினேன் அந்த அழகான வரியை:
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.
தோளில் கிடந்த துண்டால் முகம் துடைக்கும் சாட் டில் கண் ணிர் வடியாமல் கவனித்துக் கொண்டேன்.
அன்பை வார்த்தைகளில் குழைத்து மனைவரி நரீட் டிய தோடம் பழச் சுளையைத் தள்ளிவிட்டுத் திமிறி அழுதபடியே துடித்தான் குழந்தை
மகள் மறுபடியும் எழுந்து வந்து, "பசியோ தெரியல்ல, வாங்கடா தங்கம், உங்கா குடிக்கிறீங்களாடா?” என்று கைகளை நீட்டினாள்.
குழந்தை திடீரென்று அழுகையை நிறுத்தினான். அவனது சிறுநீர் என் நெஞ்சு வழியே சரசரவென இறங்கி என்னை முற்ற நனைத்தது.
இப்போது நான் அசையவுமில்லை: இவளிடம் வசவு வாங்கவுமில்லை.
ޗީ
வாழ்த்துகின்றோம்
கதிரேசன் மண்டபத்தில்
கம்பன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான டாக்டர் இ.தயாசிவன் தம்பதிகளின் சிரேஷ்ட குமாரன் சிவசங்கா அவர்களுக்கும் பாரிஸ்டர் மா.சிவானந்தன் தம்பதிகளின் புத்திரியான சிவதேவி அவர்களுக்கும் கொழும்பில் புதிய 16.9.99 அன்று மிகமிகக் கோலாகலமகவும் விமரிசையாகவும் திருமணம் இனிதே நிறைவெய்தியது. மணமக்களை மல்லிகையின் சார்பாக வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகின்றோம்.
- ஆசிரியர்

மாத்தளை எழுத்தாள நண்பர்களே
ஏ.பி.வி. கோமஸ்
மாத்தளைப் பகுதியில் வாழும் எழுத்தாளர்களைப் பற்றி ஏதாவது குறிப்புகள் எழுதினால் நல்லது என்று கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில் இப்பகுதியில் வாழும் எழுத்தாளர்களில் வயதில் மூத்தவன் நான்தானாம். அந்த அளவில் எல்லா எழுத்தாளர்களுக்கும் என் ஆசிகள்.
நான் உங்கள் ஒவ்வொருவரையும் பற்றி எழுதப்போவதில்லை. மாறாக நீங்கள் எழுதுபவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றி எழுதப் போகிறேன். எல்லாரும் ஏற்றுக் கொள் விர்கள் என்பதில்லை. ஆனால், இன் றைய உலகில் காலத்திற்கு ஏற்ப எவைபற்றி எழுதவேண்டும் என்று விநய மாய்க் கேட்டுக் கொள்ளப் போகிறேன். ஏற்பதெனில் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களிடம். வற்புறு த்த மாட்டேன் - கட்டாயப்படுத்த uDTI G3 6ö.
இன்றைய உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் இரண்டு முக்கியமான இயல்புக் குணங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணுகி றேன். ஒன்று ஆன்மீகம், மற்றது மனிதநேயம்.
ஆன்மீகம் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் சில வேளைகளில் அதில் கடவுள் புகுந்துவிடுகிறார். ஆமாம். கடவுளை நம்பினால்தான் ஆன்மீகம் உள்ளது என்று எண்ணுகிறார்கள். ஆனால்
உண்மை அதுவல்ல. உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளிடமும் வேற்றுமை யின்றி அன்பு காட்டுவதே ஆன்மீகம்.
அந்த ஜீவராசி மனிதன் முதல் சாதாரண எறும்புவரை இருக்கலாம். இவ்வுலகில் படைக்கப்பட்ட எல்லா
உயிர் உள்ளவைகளும்,
அவைகள் மாட்டு அன்பு கொள்வதே ஆன்மீகம். அடுத்து 'மனிதநேயம் ஆம். எந்தவித வேற்றுமையும் காட்டாமல் அன்பு செலுத்துவது.
அன்பு என்றால் என்ன? அன்பால் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம். ஆமாம், உண்மை அன்பின் அடிப்படையிலே தான் உலகமே வாழ்கிறது. அன்பு எந்தவிதமான வேற்றுமைகளையோ பிரிவினையையோ காட்டாது. எல்லாரை யும் எந்நேரமும் அரவணைத்துக் கொள்ளும். அன்பின் அடிப்படையிலே தான் இரக்கம், பற்று, பாசம், அநுதாபம் போன்றவை எல்லாம் பிறக்கின்றன.
ஏன் எந்தவிதத்திலும் மக்களிடத்தில் உயர்வு தாழ்வு காட்டாது, ஏழை, பணக் காரர், பதவியில் உயர்ந்தவர் தாழ்ந் தவர், பெரியவர் சிறியவர், கற்றவர் கல்லாதவர், நற்குணம் படைத்தோர் தீயகுணம் படைத்தோர் என்ற வேற்று மைகள கூட காடடாது.
சாதி வேற்றுமையையும் சமய வேற் றுமையையும் காட்டாது. எனவே, பெரு ம்பான்மையும் சிறுபான்மையும் ஒன்றே.
配江五

Page 42
மகாத்மா காந்தி, மதப்பெரியார்கள் வேண்டியது இதனையே. நாம் எழுதும் பொழுது இவைகளை நம் மனத்தில் கொள்ளவேண்டும். எல்லா சமய புத்தக ங்களும் இதனையே போதிக்கின்றன. எனவே, நமக்குள்ளேதான் நாம் சாதி, மத வேற்றுமைகளை உருவாக்கிக் கொணி டோம் என்பதை மறந்து விடக்கூடாது.
மொழியும் மதமும் எதற்காக உள்ளன என்பதை உண்மையில்
நீங்கள் எதை எழுதினாலும், கதையாய் இருந்தாலும், நாவலானாலும், கவிதை, கட்டுரை எதை எழுதினாலும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுங்கள். ஆம் -
எந்த இடத்திலும் எதிர்மறையில்
எழுதாமல் உடன்பாட்டில் எழுதுங்கள்.
எனவே நாம் எழுதும் இலக்கியங் கள் இந்த இலட்சியங்களைக் கொண்ட தாக அமையவேண்டும். முடியாது என்ற
அறிந்து கொள்ள வேண்டும். எதிர்மறையல்ல, முடியும் என்ற உடன்
எனவே, பொதுவாகச் சொல்வதாகில் பாட்டு நம்பிக்கையுடன் எழுதுங்கள்
மல்லிகை
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
ஆண்டுச் சந்தா 180/- t தனிப்பிரதி 15/-
災 RNNSRNàềNềì * NNINF ક્સે
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
Š ```````````ဗဲ့```````
NNNNNNNNNN
AN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாத்தளை மண் தந்த சிறுகதைப் படைப்பாளிகள் ஸய்யத் முஹம்மத் ஃபாரூக்
பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரை
அடையாகப் போட்டு மாத்தளை இலக் கியவாதிகள் பலரும் பேனா பிடிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே எழுத்து லகில் பிரவேசித்தவர் அருணேசர், முப்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் 1947 இல் கலைமகளில் பிரசுரமான தந்தையின் உபதேசம் என்ற சிறுகதை மூலம் மாத்தளை அருணேசர் என அறிமுகமானார்.
மாத்தளை மண் தந்த சிறுகதைப் படைப்பாளிகளின் முன்னோடியான அருணேசரைத் தொடர்ந்து விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுகதைகள் மூலம் தம் படைப்பாளுமையை நிறுவிச் சென்றவர் சோவியத் விருது பெற்ற பத்திரிகையா ளரும், கவிஞரும், முற்போக்குச் சிந்தனையாளருமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய மர்ஹ”ம் அபூதாலிப் அப்துல் லத்தீப்.
இளங்கீரனின் மரகதத்தில் லத்தீப் எழுதிய 'மய்யத்து' என்ற சிறுகதை பின்னர் எம்.எச்.எம்.ஷம்ஸின் அஷரா வில் மறுபிரசுரமாகி துரைவி வெளியீ டான 'உழைக்கப் பறந்தவர்கள்-மலை யகச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அறுபதுகளின் தொடக் கத்தில் மரகதத்தில் வெளிவந்த போது பெரிதும் பேசப்பட்ட லத்தீபின் சர்ச்சைக்
குரிய சிறுகதையை முற்போக்கு எழுத்தாளர் சந்க வெளியீடான புதுமை இலக்கியத்தில் விமர்சித்தார் ஏ.ஜே. கனகரத்னா, 'மய்யத்து, நன்றிக் கடன், ‘உரிமை எங்கே’ முதலிய சிறு கதைகளும் அவை போன்று லத்தீப் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளும் அவரது சமூக அரசியல் கரிசனைக ளின் வெளிப்பாடுகளாகும். மாத்தளை அருணேசரையும், அபூதாலிப் அப்துல் லத்தீபையும் தொடர்ந்து பல படைப் பாளிகள் மாத்தளை மண் ணில சிறுகதை ஆசிரியர்களாய் மலர்ந்திருக்கிறார்கள்.
மலையக இலக்கியம் எழுச்சி பெற்ற அறுபதுகளின், பிற்பாதியில் எழுதத் தொடங்கியவர்ளில் முக்கியமானவர் நோர்த் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மலரன்பன். இவரது முதல் சிறுகதை 'பார்வதி' உருவம், உத்தி, உள்ளடக்கம் முதலிய சிறப்புக்களுடன் மலரன்பனின் சிருஷ்டி மேதைமையை வெளிப்படுத்திய இம் முதல் சிறு கதையே தமிழ்ச் சிறுகதையுலகில் இவருக்கு நிலையான ஓரிடத்தைப் பெற்றுக் கொடுத்து விடுகிறது. புதுமைப்பித்தனின் 'பொன்னகரத்தில் வரும் அம்மாளுவைப் போன்று மனதை விட்டகலாத பாத்திரம் பார்வதி.

Page 43
மாத்தளை கார்த்திகேசு தயாரித்து அரங்கேறிய காலங்கள் அழுவதில்லை’ மேடை நாடகமும், காலங்கள் டெலி நாடகமும் மலரன்பனின் 'உறவுகள் சிறுகதையைத் தழுவியதுதான். மகள், தாய் என்ற உறவெல்லாம் பொருளா தாரம் என்ற நூலில்தான் இழைக்கப் படுகிறதா எனக் கதையினுடு கேள்வி எழுப்பும் மலரன்பன் கலை நுட்பம் கெடாமல் இப்பிரச்சனையை இக்கதை யில் கையாளுகிறார். பொருளாதார அமுக்கத்தில் உறவுகள் நசிவதனைச்
சித்தரிக்கின்றது இச் சிறுகதை, சிங்கள
த்தில் மொழி பெயர்க்கப்பட்டு ‘விவரண பத்திரிகையில் வெளிவந்த மலரன் னின் 'தார்மீகம் தோட்டக் காட்டினிலே மிளிரும் இனபேதம் கடந்த மனிதாபிமா னத்தைக் காட்டுகின்றது. ‘கறிவேப் பிலைகள்', 'கோடிச்சேலை', 'சுயம்வரம் முதலியன மலரன்பனின் சிருஷ்டியாற்ற லையும், அவதான சக்தியையும் வெளிப்படுத்தும் சிறந்த சிறுகதைகள். தனது "கோடிச்சேலை சிறுகதைத் தொகுதிக்காக சாகித்திய விருது பெற்றவர் மலரன்பன்.
"கப்பலேறி மன்னார் வந்திறங்கி, கண்டிக்குக் காட்டு மார்க்கமாய் நடக்கத் தலைப்படுகின்ற கங்காணி ஆடம்பர மாய் முன்செல்ல, கண்டிக்கு வரும் கூட்டத்துடன் அநுரதபுரம், தும்பறை, பண்ணாமம் முதலயவிடங்கள் வழியாக நடந்து 15வது நாள் கண்டி நகரம் வந்து சேர்ந்தான் நமது ராமசாமி” என்று செல்கிறது கோதண்டராம நடேசய்யர் எழுதிய மலையகத்தின் முதல் சிறு கதையாகக் கருதப்படும் 'ராமசாமிச் சேர்வையின் சரிதம்' பெருந்தோட்டங்க ளில் ஒப்பந்தக் கூலிகளாய் உழைத்துச் சாவதற்காக மேற்கொண்ட இந்நடைப் பயணத்தை விவரண சித்திரம் போன்று காட்சி சொரூபமாக்கித் தருகிறது
82
மலரன்பனின் அண்மைக்காலச் சிறு கதைகளில் ஒன்றான 'பிள்ளையார் சுழி. மாத் தளை வடிவேலனின் 'வதைப்படலமும், 'பிள்ளையார் சுழி போன்று பல்வேறு உணர்வலைகளை எழுப்பவல்ல சிறுகதை.
அண்ணனுக்குத் தம்பி சளைத்தவ னல்ல என்பது போல் நல்ல பல சிறு கதைகளைப் படைத்துள்ள நோர்த் மாத்தளையைச் சேர்ந்த வடிவேலன், மலையக எழுத்தாளர் மன்றம் வீரகேசரி யுடன் இணைந்து நடத்திய நான்காவது சிறுகதைப் போட்டியில் பிஞ்சு உலகம் மூலம் முதல் பரிசு பெற்று 1970ல அறிமுகமான ஆற்றல் மிகு படைப் பாளியாவார். கட்டுவதற்கு மாற்றுத்துணி இல்லாத நிலையிலும் வாழத்துடிக்கும் மனிதத்தைச் சித்தரிக்கி ன்றது வடிவேலனின் ‘புத் தாண்டு புதிதல்ல. இச்சிறுகதை பண்ணாமத்துக் கவிராயரால் ஆங்கிலத்தில் மொழி (oju Isides: 1 (6 Voice of the Voiceless சஞ்சிகையிலும், The Island பத்திரிகை யிலும் பிரசுரமாயிற்று கறிக்குப் பயன்படுத்தியபின் எடுத்தெறியப்படும் கறிவேப் பிலைகளாக, தோட்டக் காட்டினிலே வேலை செய்ய முடியாத வர்கள் தெருவிலே நடைப்பிணங்க ளாகக் கிடந்து மடியும் சோகத்தை கூறுகிறது வடிவேலனின் கறிவேப்பிலை கள், முதியோர்கள் பயனற்றவர்களாய் ஒதுக்கப்படுவதைக் குறியீட்டுப் பாணி யில் உணர்த்துகிறது இவரது ‘வெட்டு மரங்கள். நாட்டாரியலிலும், தொன்ம வியலிலும் சமீபகாலங்களில் அதிக ஈடுபாடு காட்டிவரும் வடிவேலனின் "ஊமையன்கோவில் அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
கட்டிடம் எதுவுமின்றி ஒரு கல்லுத் திண்டின்மேல் முக்கோணவடிவில் நடப்

Liu B6) இதுதான் ஊமையன் கோவில் வெள்ளைக் காரத்துரை
மரத்தில் கட்டிவைத்து "உண்மையைச் சொல்லுண்ணு’ அடித்தும் "வாயே தொரக் காத" மலையப்பன் பிறகு அவமானம் தாங்காமல் மூனாம் நம்பர் முடக்குப் பள்ளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறான். அவனை அடித்த துரை தந்தி வந்து சீமைக்குப் போய் மறுமாசத்தில் யுத்தத்தில் சாகின்றான். பெரிய கங்காணிக்கு மூன்று மாதத்தில் உடம்பெல்லாம் கட்டி கட்டியாய் நோய்வந்து அழுகிப் போகத் தொடங்கி, வாயும் கொன்னி பேசமுடி யாத நிலை. உடுக்கடித்துப் பார்த்த போது சாமி வந்து உணர் மைக் கதையைச் சொல்ல, செய்த பாபத்திற்
குப் பிராயச்சித்தமாய் பெரிய கங்காணி
அமைத்த இக்கோவிலின் வரலாற்றோடு, காலம் காலமாகத் தொடர்ந்தும், சுயநலக்காரர்களால் வஞ்சிக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் வந்துள்ள - இன்பமும் துன்பமும் மலிந்த - மக்களின் சரித்திரமும் பின்னிக் கிடப்பதை அழகாகச் சொல்கிறது மாத்தளை வடிவேலனின் இச்சிறுகதை,
சில நாவல்களையும் ஏராளமான
சிறுகதைகளையும் எழுதியுள்ள மாத்த
ளைச் சோமு என்ற சோமசேகரம் அசுர
வேகத்தில் எழுதும் ஓர் படைப்பாளி.
அந்தவகையில் செங்கை ஆழியானோடு ஒப்பிடத்தக்கவர். ‘நமக்கொன்றொரு பூமி', 'அவன் ஒருவனல்ல', 'அவர்களின் தேசம் முதலியன இவரது சிறுகதைத் தொகுதிகள். "சமுதாயத்தில் வேஷம்
போட்டு வாழ்கின்ற மனிதர்களின்
முகத்தைக் கிழிப்பதே என் லட்சியம். எனது கவலையெல்லாம் எனது சிறு கதைகள் சமுதாயத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான்” என தனது எழுத்தின் நோக்கம் பற்றிக் கூறும்
சோமு அதிகமான சிறுகதைகளில் இதனைச் சாதித்திருக்கிறார் எனலாம். மலையக மக்களின் வாழ்க்கைப் போரா ட்டங்கள், ஆசாபாசங்கள், கனவுகள், ஏக்கங்கள், வெற்றி தோல்விகளை யெல்லாம் எழுத்தில் கொண்டுவரும்
முனைப்புடன் எழுதிவந்த இவரின்
கதைக்களம் 83க்குப் பின் தமிழகம் அவுஸ்திரேலியா என விரிவடைந்து அவர் சமூகப் பார்வையும் அகலித்து அவரது படைப்புகள் புதுப் பரிமாணங் களைப் பெறுவதனைக் காண்கிறோம் இப்போது அவுஸ்திரேலியாவில் தொழில் புரியும் மாத்தளைச் சோமு ஈழத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பிரிவாகக் கண்டுள்ள புலம்பெயர் இலக்கியத்துக்கும் தம் பங்கினை வழங்கி வருபவர்.
மாத்தளை எழுத்தளர் ஒன்றியம் 1980ல் வெளியிட்ட "தோட்டக்காட்டி னிலே’ சிறுகதைத் தொகுதியின் தொகுப் பாசிரியரும் மாத்தளை சோமுவே, மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் ஆகிய மூவரின் சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்புக்கு முன்னுரை வழங்கிய காலஞ்சென்ற கலாநிதி க.கைலாசபதி
"பிரதேச வாழ்க்கையைப் பொருளாகக்
கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புகளில், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குக் களமாக உள்ள மலை நாட்டை மையமாகக் கொண்டு எழுதப் பட்டிருப்பனவற்றுக்குத் தனியான இட முண்டு. சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்ற இலக்கியப் பிரிவுகளில் சிறுகதையே மலைப்பிரதேசம் பற்றிய படைப்புகளில் முதலிடம் பெற்றுள்ளது" என்கிறார்.
மாத்தளை சுதுகங்கை எஸ்டேட் டைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்

Page 44
அல் - அஸ”மத் இலங்கையின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவர். தேசிய வாராந்தரிகளிலும், சிற்றேடுகளி லும் இவரது சிறுகதை அவ்வப்போது பிரசுரமாகின்றன. மொழிக்கூர்மையுட னும், கலை நுட்பத்துடனும் தனக்கே யுரிய தனித்துவ பாணியில் கலைத் தன்மை குன்றாத சிறுகதைகளைப் படைத் துத் தருபவர். கேலியும் கிண்டலுமாய் கனதியான, காரசாரமான, கோபம் வரச்செய்யும் விஷயத்தைக்கூட குருர ஹாஸ்யத்துடன் அநாயாசமாகக் கையாளும் தமிழ்நடை அல் - அஸ*மத் துடையது. கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது ‘விரக்தி அண்மையில் தமிழகத்து லில் லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசினையும், விருதையும் பெற்றது. 'வெள்ளை மரம்', 'பஞ்சத்து ஆண்டி, வம்சத்துவம், வான்கோழி முதலியன அல் - அளிலுமத்தின் சிறந்த சிறுகதைகள், முஸ்லிம் சமூகத்தைப் பகைப்புலனாகக் கொண்ட சிறுகதை களையும் படைத்துள்ளார் அல் 96m) LD5.
கொழும்பில் பிறந்து மலையகப் பகுதிகளில் ஆசிரியரகவும், மாத்தளை ஹிந்து மகா வித்தியாலய அதிபராக வும் பல ஆண்டுகள் பணி புரிந்து இளைப்பாறியபின் மாத்தளையையே நிரந்தர வதிவிடமாகக் கொண்டுள்ள ஏ.பி.வி.கோமஸ் பற்றியும் இங்கு குறிப்பிடல் அவசியம். கல்வியிலும் கலை இலக்கியத் துறைகளிலும் மலையகத்தின் எழுச்சிக்காக அரும் பணியாற்றியுள்ள கோமஸ் சிறந்த பேச்சாளர், கவிஞர், நாடக நடிகர், சிறு கதை எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ‘வாழ்க்கையே ஒரு புதிர் தொண்ணுாறுகளின் தொடக்
84
கத்தில் வெளியான இவரது சிறுகதைத் தொகுதி, கோம ஸ்ரினி சிறந்த சிறுகதைகளில் ஒன்றான "அவலம்' அவரது மொழிபெயர்ப் பாகவே ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.
அறுபதுகளின் பிற்பாதியில் எழுதத் தொடங்கிய மற்றொரு படைப்பாளியான கே.கோவிந்தராஜ் மாத்தளைக்கு அருகாமையில் உள்ள அங்கும்புற தோட்டத்தில் பிறந்தவர். இவரது 'பசியாவரம் சிறுகதைத் தொகுதி 1996ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. தன்னுடைய கருத்துக்கள் தனக்கு வெகு அன்னியோன்யமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகுந்த கரிசனை கொண்டவர் கோவிந் தராஜ், மலையக மக்களின் வாழ்க்கை யைப் போன்று இவரது சிறுகதைகளும் எளிமையானவை - படாடோபமற்றவை. இரண்டு மூன்று தலைமுறைகளைக் கடந்துவிட்ட போதும் - மிக அண்மைக் காலம் வரை தனிமைப்படுத்தப்பட்ட - அந்நிய மனப்பான்மை கொண்ட சமூகமாகவே இருந்துவிட்ட இம்மலை யக மக்கள் நாடற்றவராக நடுக்கடலில் தத்தளித்த வேதனையைக் கோவிந்தரா ஜின் கப்பல் எப்பங்க', 'குத்தகை’, “கந்தசாமி ஊருக்குப் போகிறான்' போன்ற கதைகள் சித்தரிக்கின்றன.
தொண்ணுாறுகளின் தொடக்கத்து
டன் நம்பிக்கையோடு தமிழ்ச் சிறுகதை
யுலகில் அடியெடுத்து வைத்திருப்பவர் பெண் எழுத்தாளரான பாலரஞ்சனி சர்மா. செ.யோகநாதனும் சுந்தரலட்சுமி யும் தொகுத்து வெளியிட்டுள்ள "இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் - இரண்டாவது தொகுதியான 'ஒரு கூடைக் கொழுந்து'வில் இடம் பெற்றள்ள கடைசிச் சிறுகதை பால ரஞ்சனியின் 'மாற்றம். தினகரன்,

வீரகேசரி ஞாயிறு வெளியீடுகளில் இவரது சிறுகதைகள் அவ்வப்போது வெளிவருகின்றன. சென்ற ஆண்டு சித்திரையில் லண்டன் நலன்புரிச் சங்கம் வெளியிட்ட சர்வதேசத் தமிழ் எழுத்துக்களின் தொகுப்பான "இன்னு மொரு காலடியில் பாலரஞ்சனியின் ‘நெத்திக்காக’ என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது. மலையகத்தைக் கதைக் களனாகக் கொண்டு சிறுகதைகளைப் படைத்துவரும் பாலரஞ்சனி பாத்திரங்க ளின் மனஓட்டத்தை நுட்பமாகவும், அழகாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்வதில் வல்லவர். எளிமையுடன் கதை சொல்லும் பாங்கும், நறுக்குத் தெறித்தாற் போன்ற சொல்வீச்சும், கூர்மையான உளவியல் பார்வையும் இவரது படைப் பாளுமையரின் சிறப்பம்சங்களாகும்.
தொகுத்துரைப்பதாயின் மாத்தளை மண் பெருமையுறும் வகையில் தமிழ்ச்
சிறுகதைக்குச் செழுமை சேர்க்கும்
நான் குறிப்பிட்ட படைப்பாளிகள் சமூக மனம் கொண்டவர்கள். சமூக அக்கறை யுடன் எழுதுகோல் ஏந்தியுள்ளவர்கள். மனிதனைக் கனவுலகில் ஆtத்தாமல் கனவுகளையும் , பிரலைகளையும் உடைத்தெறிந்து அவனை விழிப்புறச் செய்வதறி காயப் இலக் கயம் u66) Lt 6hT856i.
காலமாற்றத்திற்கேற்ப சமூகப் பிரச் சனைகளும், வாழ்க்கைச் சிக்கல்களும் புதிய வடிவங்களில் தோற்றம் கொள்ளும்போது அதற்கேற்ப கலை இலக்கிய வடிவங்களும் மாறுகின்றன. புதுப் பரிமாணங்களை ஏற்கின்றன. நவீன இலக்கிய வடிவங்களுள் ஒன்றான சிறுகதையும் இப்படைப்பாளிக ளின் கைவண்ணத்தால், வரப்போகும் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள் ளும் வகையில் புதிய வீச்சும் வீறும் பெறும் என்ற நம்பிக்கையை ஊட்டுவன வாகவே இவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன எனலாம்.
HAPOU PHOTO
Excellent Photographers
Wedding, Portraits
Child Sitting
300, Modera Street, Colombo - 15. T.Phone : 526345

Page 45
Renoun Trade Centre
For Quality Textiles, Threads, Trimmings 6 - B Harrison Jones Road, Matale Tel: 066 - 30789 Fax: 22041 Home: 22586
86

சிந்திப்பீர்
இனிதாய் இனி மலரப் போகிறதாம்
ჯგ:xაჯა. ჯა:აჯა:*w:ჯჯ.·ი;«x:y,xx8.8;
இருபத் தோராம் நூற்றாண்டும்
கனிந்த எண்ணப் பிரளயங்கள்
கனவாகா நிச்சயம் நனவாகும்!
சனி சச்சரவு அகன்றே யெங்கும்
சாந்தி சமாதானம் நிலவிடவே
நனிசேர் நாட்டுப் பற்றுடனே
நல்லதைச் செய்யவே முயன்றிடுவீர்!
எத்தனை ஆண்டுகள் பிறந்தாலும்
என்ன பயன்? பூகோளக் கிராமமாய்
இத்தரணியே விஞ்ஞான வளர்ச்சியால்
இன்றுகுறு கியேபெரும் செளகரியங்கள் அத்தனையும் காலடியில் தானழகாய்
அமைந்தாலும் நிம்மதியும் இல்லையே! மெத்தனத்தின் மொத்தஉரு வேயான
‘மேதைகள் பலருமிதைச் சிந்திப்பீர்
மாண்புமிகு மனிதனையே இன்றந்தோ!
மனிதனே மதிக்காமல் வெகுவிரைவில்
காண்போமே - மிலேனியம் நாமுமெனக்
களிக்கின்றார்! என்றாலும் வெட்கம்தான்!
ஈண்டின்று கிளம்பும் சவால்களையே
9.
எவ்வாறு சமாளிப் போமென்றே பூணுமச்சத் தால் தடுமாறுகின்ற
புத்தி ஜீவிகளே சற்று சிந்திப்பீர்
ஆழ்ந்தறிவுப் பெருங்கடலில் சுழியோடி
'அறம் வளர்க்க முயல்கின்ற அனேகரின்னும் கீழ்சாதி - மேல்சாதி எனப் பிரித்தும்
கேவலமே! சிறுபான்மை பெரும்பான்மையென்றும்
தாழ்ந்தோர் உயர்ந்தோர் என வகுத்தும்
தனவந்தர் வறியோர் எனக் குறித்தும் பாழ்பட்ட வேற்றுமை உணர்வோடு
பாகுபாடு காட்டுகிறார் மனிதஜாதிக்கே
அருட்கவி அல்ஹாஜ் கல்ஹின்னை
எம்.எச்.எம். ஹலீம்தின்
அறிவீரே! அனைவருமே ஒருண்மை
இறையோனின் படைப்புக்கள் அனைத்திலுமே சிறப்பான படைப்பாமே மனிதர்கள்
சிந்திப்பீர் இக்கூற்றைத் தெளிவுறுவீர்! சிறுபிள்ளை போன்றே பலருமின்னும்
சிலந்தி வலைக்குள்ளே இருந்து கொண்டு சிறகடித்து வானில் பறந்து சென்று
சிகரத்தில் நிற்பவராய்ப் பித்துகிறார்!
எவராக இருந்தால் தானென்ன
எல்லா மனிதர்களும் பிறப்பாலே அவனிக்கு வந்ததுமே கெளரவமான
அரும்பிரஜைகள்தான் - எனினும் அவமே! போலிகெளரவப் போராட்டமுடன்
அசிங்கமாம் சாதிமதப் பேதமுடன் குவலயத் தையேயின்று பலபேரும்
கொடும் போர்க்கள மாக்குகின்றார்!
மலட்டுக் கொள்கையில் நித்தமூறி மகத்துவம் பேசுகின்ற மகான்கள் பலருமேனோ பழையபல வரலாறுகளைப்
படித்தும் உண்மைகள் புரியாமல் சலசலப்பை ஏற்படுத்தி இனத்துவேசச்
சாக்கடையைக் கிளற முயன்றதினால் பலத்தஅடி பட்டையோ மூக்குடைபட்ட பலநிகழ்வு களைநாமும் அறிவோமே!
10னிதனை மனிதனே மிதிக்காமல்
மணியான மனிதாபிமானத்தைத் தனிமனிதன் மட்டும் தானின்றித்
தரணி முழுவதிலும் அனைவருமே புனிதவுணர் வோடுசெயற் படுத்திட்டால்
பூக்கும் சமாதானம் ஐக்கியமும் மனிதநேயமும் அருஞ்சந்தன மரமாகி
மாநிலத்தில் மனம்கமழும் இறையருளல்
XX. ::::%x.
配汤互口

Page 46
WITH BEST COMPLIMENTS FROM
STATION VIEW HOTEL
Distributor For Coca Cola Beverages Sri Lanka Ltd. 45, Gongawela Road, Matale 066 - 22113
சிவசக்தி லக்ஷ்மி கோர்பரேஷன் போரேஜ்
249, பிரதான வீதி, 258, பிரதான வீதி, மாத்தளை தொலைபேசி 066 - 25gg | தொலைபேசி: 066 - 2518
மாத்தளை
国配剑

இலக்கியப் புரவலர் "துரைவி"
என். அருளானந்தம்
உலகில் உதாரணப் புருஷர்கள் தோன்றுவது பல நூறாண்டுகளுக்கொரு முறை என்பர். கருவறை தொடக்கம் கல்லறைவரை சில்லறையையே மனித மனங்கள் நாடி நிற்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து மனிதம் நிறைந்த மாமனிதர்களும் இடைக்கிடை இவ்வுலகில் தோன்றுகிறார்கள் தானே.
ஆம்! அவர்களில் ஒருவராகத்தான் துரைவி என்ற மலையகம் தந்த மலை யைக் குறிப்பிடவேண்டும். மனத்தால் உயர்ந்த மலை, மாசற்றமனம் படைத்த ஒரு மலையருவி. மலையருவிக்கு இல்லாத குளிர்ச்சி இந்தத் துரைவியின் மனத்துக்கு இருக்கிறது. இவருடன் பழகிய எவராவது இதை மறுக்க முடியுமா?
வாசிப்பு என்றால் என்னவென்று யோசிக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் நேரம் அனைத்தையும் வாசித்து வாசித்து ஒரு வாசிகசாலையாகவே வளர்ந்தவர். பட்டம் பெற்றவர்களுக்கே தெரியாத இலக்கிய அறிவு, இலக்கிய கர்த்தாக்களைப் பற்றிய அறிவு, இலக்கிய கர்த்தாக்களை மதிப்பிட்டு வைத்திருக்கும் திறன் இவருக்கே உரிய தனித்திறன்.
இவரிடம் காணும் இலக்கியத்திறன் அபாரமானது. பல கலைக் கழகம் காணாத ஒருவர் ஆனால் பல்கலைக் கழகமாகத் திகழும் இலக்கிய அறிவு, பொது அறிவு, சிறுகதையா?, நாவலா?, குறுநாவலா? அனைத்து விடயங்களை யும் அச்சொட்டாக அடுக்கி வைக்கும் திறன், விமர்சிக்கும் திறன் இவரிடம் நிறைந்தே காணப்பட்டனி. ஒன்றை வாசிப்பவர் அதனைக் கருத்துன்றி வாசித்து, அதில் கூறப்பட்ட விடயங்க ளைக் கிரகிக்கும் திறன் எல்லோரிடமும் காணப் படுவதில் லை. அத் திறன் இவரிடம் நிறைவாகவே காணப்பட்டன. ஒன்றைப் பற்றிக் கதைக்கும் பொழுது அதைப்பற்றிய தெளிவு, நேர்மை, ஒாமம் இவரிடம் உண்டு. தன்மீதும் தான் படித்த இலக்கியங்கள் மீதும் தெளிந்த ஒரு உறுதி கொண்டிருந்தார்.
மனிதன் பிறக்கிறான். இறக்கிறான். இது இயற்கையின் நியதி. பிறப்பவன் என்னபடி வாழ வேண்டும், என்னபடி சமூகத்துடன் தொடர்புகொள்ள வேண் டும். யாருக்கு எவ்வாறு எப்பொழுது என்ன விதத்தில் உதவ வேண்டும் என்பதைத் தெரிந்து, தெளிந்து அதன் படி வாழ்நெறி கொண்டு வாழ்ந்த ஒர் உத்தமர் இந்த துரைவி.
配丞

Page 47
"தோன்றலிற் புகழொடு தோன்றுக
- அ.திலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று" என்று வள்ளுவப் பெருந்தகை கூறி யுள்ளார். இந்த இலக்கணத்துக்கு உதாரணமாக வாழ்ந்தவர்தான் துரை விஸ்வநாதன்
ஒருவன் தான் பிறந்த நாட்டுக்கு, இனத்துக்கு, மொழிக்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவும் வகையில் வாழ வேண்டும். எந்த வகையில் அந்த உதவியைச் செய்யலாம் என்பதைக் காலச்சூழல், தேவைக்கு ஏற்பச் செய்ய வேண்டும். அதனை அறிந்து உணர்ந்து செய்த பெருமை இப் பெருந்தகைக்கு உண்டு. இவர் தான் பிறந்த இடத்துக்கு தனது இனத்துக்கு தனது மொழிக்கும் செய்த தொண்டுகள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மலையகப் பகுதியில் முத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவையாகும்.
இலக்கியத் தொண்டு செய்பவர்கள் இறப்பதே இல்லை. கால வெளளத்தால் அள்ளிச் செல்லப்படுபவர்கள் இல்லை. தன்னாலியன்ற இலக்கியத்தொண்டை அடக்கமாக, அமைதியாக, விளம்பரம் தேடாமல் செய்த பெருமை துரைவி க்கே உரியதானதாகும். ஒரு முட்டை போட்டுவிட்டே கொக்கரிக்கும் கோழி போலல்லாமல் எவ்வளவோ முட்டையிட் டும் அமைதியாக இருக்கும் ஆமை போல் அமைதியாக இருந்து மலையக இலக்கியத்துக்குச் செய்த தொண்டை எளிதாக நினைக்க முடியுமா? மலையக இலக் கசியத் துக் கே முழு வடிவம் கொடுத்தவர் துரைவி.
இலக் கியங்கள் பல லாயிரம் தோன்றலாம். பல வாசகர்கள் வாசிக்க 6ðss tíð. 85 6O3;& B6OT td. D6ð)|Bu.16ðsTtd. ஆனால் அவை ஒரு ஆவணமாகப்
90
பேணப்படும் பொழுதுதான் காலத்தைக் கடந்து நிற்கும். அந்தக் கைங்கரிய த்தை மலையகத்திற் செய்த மாமனிதர் துரைவிதான். மலையகம் முழுவதும் சிதறிக் கிடந்த சிறுகதைகளைத் தேடித் தொகுத்தார். வெளியிட்டார். இலக்கிய உலகமே மலைத்தது. எழுத்தையே விற்று வாழும் சிலரின் எழுத்தையே பேணும் இவரைக் கண்டு பலர் அதிசயித்தனர். இலாபத்தை நோக்கா கக் கொள்ளும் மக்களிடையே இலக்கி யத்தை வளர்க்கும் தாபத்தையே கொண்ட ஒரு மகானாகத் திகழ்ந்தார். "காலத்திறட கேற்ற வகைகள்
அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும்
நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய் -
எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்று
மில்லை” என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடினார். காலத்திற்கேற்ற நூலைத்
தன்னால் படைக்க முடியாவிட்டாலும் காலத்திற்கேற்ற ஒரு செயலாக மலை யகத்திற் சிதறிக்கிடந்த பல சிறுகதை களை, குறுநாவல்களை, ஆய்வுக் கட்டுரைகளை, கவிதைகளைத் தொகு த்து துரைவி' வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுச் சாதனை படைத்தார்
எழுத்தாளர் ரூபராணி ஜோசப் தான் கண்ட துரைவி' என்ற சிற்றேட்டில், துரைவி அவர்களைச் சந்தித்தபோது அவர் தனது இலட்சியத்தைப் பின்வரு மாறு வெளிப்படுத்தியுள்ளார். "மலையக த்தில் 50 ஆண்டுகள் வாழ்ந்து வளம் பெற்றவன் என்ற முறையில் அம் மக்க ளுக்கு ஓரளவெண்கிலும் முக்கியத் துவம் அளித்து உதவ்வேண்டுமென்ற எண் ண தி தி ல G3 u 65 ul விரும்புகின்றேன்"

இலட்சியம் உயர்ந்ததாக இருப்பது நல்லது. ஆனால் அதையடையும் வழியும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன்.
“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து" என்ற திருக்குறளை நினைவுடன்
பலனை எதிர்பாராது உண்மையான எண்ணத்துடன் பல ஆண்டுகளாகச் செயற்படுகின்றேன்”
இவ வாறான உயர்நி த ஒரு இலட்சியத்தை மனதில் வைத்து அந்த இலட்சியத்தை நேர்மையான முறையில் குறுகிய காலத்திற்குள்ளே நிறைவேற் றிய பெருமைக்குரியவர். இவர் மிகக் குறுகிய காலத்துக்குள் பல நூல்களை வெளிக்கொணர அயராது உழைத்தவர். 1997ம் ஆண்டு மாசி மாதம் "மலையகச் சிறுகதைகள்" துரைவி வெளியீட்டகத் தால் முதலில் வெளி வந்தது. 33 சிறு கதைகளின் தொகுப்பு இது. 1930ம் ஆண்டுகளிலிருந்து எழுதியவர்களின் கதைகளைத் தொகுத்து ஆவணமாகக் கொண்டு வந்தார். மேலும் 'உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற மற்றுமொரு சிறு கதைத் தொகுதியை நான்கு மாத கால இடைவெளிக்குள் வெளிக் கொண்டு வந்தார். அது மட்டுமன்றி சூட்டோடு சூடாக மூன்றாவதாகப் பாலாயி என்ற குறுநாவலை வெளியிட்டார். இது தெளிவத்தை ஜோசப்பின் குறுநாவலா கும். ஈழத்து எழுத்தாளர்களையே வியப்பில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல் வெளியீட்டாளர்களை யும் மூக்கில விரல் வைக் கும் நிகழ்வாக்கியது இவைகள்.
தொடர்ந்து மலையகம் வளர்த்த தமிழ் என்னும் ஆய்வுக் கட்டுரைத்
தொகுதியையும் சக்தி பாலையாவின் கவிதைத் தொகுதியையும் 'ஒரு வித்தி யாசமான விளம்பரம்' என்னும் ரூபராணி ஜோசப்பின் 40 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பையும் வெளியிட்டார். உண் மையில் இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு நூலை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பொருளாதாரப் பிரச்சனைகளை இலக்கிய நெஞ்சங்கள் அனைத்தும் அறியும், அதையெல்லாம் உதாசீனம் பண்ணி நெஞ்சுரத்துடன் இச் சாதனை செய்த துரைவி அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கக் 3rn (BDT.
"காலத்தாற் செய்த நன்றி
சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" தேவையான காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தா லும் அது செய்யப்பட்ட காலத்தை நோக்க இந்த உலகத்தைவிடப் பெரிய தாகும் என்பது வள்ளுவர் கூற்று. துரைவி அவர்கள் செய்த செயலுக்கும் இக்குறள் முற்றிலும் பொருந்தும்.
மேலும் இலங்கையில் இதுவரை காலமும் நடக்காத நிகழ்வொன்றையும் துரைவி அவர்கள் நிகழ்த்திக் காட்டியு ள்ளார். அவர் தினகரனுடன் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டிதான் அது. இலங்கையில் எந்த ஒரு இலக் கிய அமைப்போ அல்லது தனிநபரோ கொடுக்காத பரிசுத் தொகையை அள்ளி வழங்கினார். அந்தத் தொகை ரூபா 100,000. இந்தச் சாதனை முறியடிக்கப்பட இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ?
இறைவன் நல்லவர்களை, வல்லவர் களை, வள்ளல்களை வெகு நாட்கள் நம்மோடு வைத்திருக்க மாட்டான் போலும். பாரதியார், பட்டுக் கோட்டை
配汤口

Page 48
கலியாணசுந்தரம் போன்ற நல்ல கவி ஞர்களின் வாழ்க்கை அதற்கு உதாரண ங்களாகும். அதேபோல் எமக்குள் உயர்ந்த உள்ளம் கொண்டு நிமிர்ந்து நின்ற துரை வி அவர்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டான். அந்நாளில் இலங்கை பொதுசனத் தொடர்பு ஊடகங்கள் அனைத்தும் துரைவி அவர்களுக்குக் கொடுத்த
முக்கியத்துவம் அதனால் இலக்கிய நெஞ்சங்கள் வடித்த கண்ணிர் அவர் விதைத்த மலையக இலக்கியச் செடியை வளர்க்கும். அவரின் அன்பு மகன் அவரின் காலடியைப் பின்பற்றுகி றாரென அறிகின்றோம்.
வாழ்க அவர் நெறி. வளர்க அவர் குடும்பம்.
மல்லிகை ஏற்பாட்டில் முருகபூபதிக்கு வரவேற்பு
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து இன்று அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் சிரேஷ்ட எழுத்தாளர் முருகபூபதி ஒரு விடுமுறைக் காலத்தைக் கழிப்பதற்காகக் கொழும்பு வந்திருந்தார்.
அன்னாருக்கு மல்லிகைப் பந்தலின் சார்பாக மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவா தலைமையில் மல்லிகை நிறுவன மேல்மாடியில் ஓர் வரவேற்பு விழா இடம் பெற்றது.
வளர்ந்துவரும் பல்துறைக் கலைஞர் பூரீதர் பிச்சையப்பா பூபதிக்கு
மலர்மாலை சூட்டி வரவேற்றார்.
தலைமையுரையில் மல்லிகை ஆசிரியர் பூபதியின் சிறப்புப் பண்புகளை
எடுத்துச் சொன்னார். பாராட்டினார்.
பூபதி பேசும்போது எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வசித்தாலும் தமிழ் இலக்கியத்திற்காக அயராது பாடுபடுவேன். நமது எழுத்தாளர்களின் புலமைகளை, திறமைகளை, ஆற்றல்களை உலகறியச் செய்யக் கடைசிவரையும் உதவுவேன் எனக் குறிப்பிட்டார்.
பல பத்திரிகையாளர் எழுத்தாளர் இவ்வரவேற்பில் கலந்து கொண்டனர்.
இறுதியில் தேநீர் விருந்தும் இடம் பெற்றது.
92

மேமன் கவியின் “மீண்டும் வசிப்பதற்காக” நூல் வெளியீட்டு விழா - அவதானி -
மேமன் கவியின் ஐந்தாவது புதுக் கவிதைத் தொகுதியான "மீண்டும் வசிப்பதற்காக” மல்லிகைப் பந்தல் வெளியீடாக 3.10.99 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை மேமன் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவின் முதற் சிறப்பு அம்சமாகக் கூறுவதானால், இலங்கை யில் வாழும் மேமன் சமூகத்தினரின் மண்டபமான இலங்கை மேமன் சங்க மண்டபத்தில் நடைபெறும் முதலாவது தமிழ் இலக்கிய விழாவாக மேமன் கவியின் அந்த நூல் வெளியீட்டுவிழா அமைந்தது. சமூகஜோதி ராபிக் அவர்க ளின் வரவேற்புடன் விழா ஆரம்பமானது.
இந்த விழாவுக்குத் தலைமை வகித்த கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தனது தலைமை உரையில்,
"தமிழ்க் கவிதைகள் எழுதியதன் மூலம் தனது சமூகத்திற்கு பெருமை யையும் புகழையும் சேர்த்தவர் மேமன் கவி. நவீன கோட்பாடுகளான அமைப்பி யல் வாதம், சந்தியலிசம், இருப்புவாதம், பின் நவீனத்துவம் போன்ற ஆழமான கோட்பாடுகளை மேமன் கவியினால் புரிந்துகொள்ள முடிந்து இருப்பதைக்
கண்டு நான் வியந்து இருக்கிறேன். எங்களைப் போன்ற ஆய்வாளர்களை விட படைப்பாளிகளின் அனுபவம் உயர்வானது. ஏனெனில் அவர்களின் படைப்புக்களில் வாழ்க்கையின் பல் வேறு அம்சங்கள் மேலோங்கி நிற்கின் றன. மேமன் கவியின் கவிதைகளிலும் அத்தகைய அம்சங்களை நான் காண்கிறேன்" என்றார்.
சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட ருபவாஹினிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சபை உறுப்பினரான சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் அவர்கள் தனது வாழ்த்துரையில்
"மேமன் கவியின் அற்புதமான படைப்புக்கள் சமுதாயத்தை மேம்படுத் தக்கூடியவை. அவரது படைப்புக்களும் அவரது கவிதைப் பணியும் அவரது சமூகமும் நீடுழிகாலம் வாழவேண்டும்" என வாழ்த்துக் கூறினார்.
எழுத்தாளர் மு. பவழீர் அவர்கள் தனது நேச உரையில்
"மே மண் கவியரின் கவிதை ஆற்றலை விமர்சிப்பதற்கு முன்னதாக அவர் அடிப்படையில் மனித நேயம் மிக்க மனிதராகத் திகழ்கின்றார் என்பது தான் முக்கிய விடயம். மேமன்கவி புதுக்கவிதையில் தனக்கான இடத்தைப்

Page 49
பதித்து வைத்துள்ளார். அத்தோடு சமீப கால கவியரங்க மேடைகளில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்து வருகிறார்” என்றார்.
மேமன்கவி நேசத்திற்கு முதன்மை கொடுப்பவர் என்ற முறையில் மேமன் கவியின் நேசங்களுடனான உறவு களையும் அவரது நேச அழகை அழகிய கவிதை நடையில் எடுத்து இயல்பினார் தனது நேச உரையில் கெக்கிராவ ஸஹானா.
கவிஞர் A.R.A யூஸர் கவிதையில் தனது வாழ்த்தினை மேமன்கவிக்கு தெரிவித்தார்.
நூல்வெளியீட்டு உரையை நிகழ்த் திய மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள்
”மேமன் கவியை ஆரம்பகாலம் தொடக்கம் அவதானித்து வருபவன் நான். அவரது வளர்ச்சியில் கணிசமான பங்கு எனக்குண்டு. அவரது தொகுதி யினை மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சி அடை கிறேன். மேமன் சமூகம் ஒரு வர்த்தக சமூகம். இன்று அந்த சமூகத்தை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி யது மேமன்கவியின் வருகை. நாளை இந்தச் செல்வங்கள் அழிந்துபோகலாம். ஆனால் மேமன் சமூகத்தின் பெயரை மேமன்கவியின் பணிகள் சொல்ல வைக்கும். இத்தகைய அழகான பிரமா ண்டமான மண்டபத்தை மேமன்கவியின் இந்த விழாவுக்கு வழங்கியமைக்கு மேமன்சங்க நிர்வாகத்திற்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித் துக்கொள்கிறேன்." என்றார்.
சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் சிறப்பான ஓர் உரையை
| 94 |
நிகழ்த்தி, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரது மனதையும் கவர்ந்தார். அவர் தனது உரையில்,
“இந்த விழாவில் மேமன்கவி ஒரு புத்தகம் வெளியிடுவது எனக்குப் புதினமாகப் படவில்லை. இந்த அளவு மக்களை வரச்செய்திருக்கிறார் என்பதே அவரது சிறப்புக்கும் பண்புக்கும் எடுத்து க்காட்டாகும். மேன்கவி மனிதர்களை மிகுந்த பண்புடன் மதிக்கத் தெரிந்தவர் என்பதுதான் நான் அவரில் காணும் சிறப்பு அம்சமாகும். அவரது கவிதை ஆற்றலில் எனக்கு சிறிதும் சந்தேகமி ல்லை. அவரது கவிதை ஆற்றலை பல மேடைகளில் அனுபவித்தவன் நான். அதைவிட அவரது மனித நேயத்திற் காக அவரை நூறு தடவை பாராட்ட லாம்." எனக்கூறி மிகுந்த நகைச்சுவையு டனும் , ஆழமான கருத்துக்களை தனக்கேயுரிய பாணியில் கூறிச்சென்ற ஜெயராஜ் அவர்கள் மேலும் தனது உரையில்,
"யாழ்ப்பாணத்தில் நான் இருந்த பொழுது, முஸ்லிம்களும் நம்மைப் போன்றுதான் தமிழின் வளர்ச்சிக்கு பங்கு ஆற்றி வருகிறார்கள் என்றுதான் எண்ணி இருந்தேன். ஆனால் கொழும்பு க்கு வந்தபின்தான் தெரிந்தது. தமிழில் எல்லையற்ற அவர்களின் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்.” என்றார்.
இவ்வாழாவின் சிறப்பு அம்சமாக கெளரவ அமைச்சர் M.H.M அஷரப் அவர்கள் மேமன்கவியை வாழ்த்தி ஒரு கவிதையை பாராளுமன்றக் குழுத் தலைவர் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர் கள் மூலம் அனுப்பி வைத்திருந்தார். மேமன்கவியின் வேண்டுகோளுக்கின ங்க ரவூப் ஹக்கீம் அவர்களே அந்தக் கவிதையை வாசித்தார்.
சக தமிழ் கலை இலக்கியப் படைப்

பாளிகளின் 117 நூற்களின் முதற்பிரதி களை வாங்கிய அல்ஹாஜ் ஹாலிம் உமர் அவர்களை கெளரவிக்கும் முகமாக மேமன்கவி தனது நூலின் முதற் பிரதியை அவர்களுக்கே வழங்க விரும் பியதன் காரணமாக சிறப்பு அதிதியா கக் கலந்துகொண்ட திருமதி ஜெயந்தி வினோதன் வாமதேவன் மேமன்கவி "மீண்டும் வசிப்பதற்காக” நூலின் முதற் பிரதியை அல்ஹாஸ்
ஹா சிம் உமர் அவர் களுக்கு வழங்கினார்.
அதேவேளை, தமிழ்க் கலை
இலக்கியத்திற்கு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜிவா அவர்கள் ஆற்றும் பணியினை கெளரவிக்கும் முகமாக அல்ஹாஸ் ஹாசிம் உமர் அவர்கள் பெக்ஸ் இயந்திரமொன்றை டொமினிக் ஜீவா அவர்களுக்கு பரிசு அளித்தமை இவ்விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.
மேமன்கவி அவர்களுக்கு கெளரவம் அளிக்கும் முகமாக கம்பன் கழக சார்பில் பாலசுந்தரம் அவர்களும் பூபாலசிங்கம் குடும்பத்தின் சார்பாக பூரீதரசிங் அவர்களும் பொன்னாடையும் மாலையும் அணிவித்தார்கள்.
மேமன்கவியின் "மீண்டும் வசிப்பதற் காக” என்ற இந்த நூல் வெளியீட்டு விழாவின் மிகச் சிறப்பு அம்சமாக சொல்லுவதானால் இதுவரைகாலம் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திராத புதிய முகங்கள் மேமன்கவியின் இந்த
ġebl
விழாவுக்கு வருகை தந்திருந்தமை, அங்கு வருகை தந்திருந்த இலக்கிய நெஞ்சங்களுக்கு மகிழ்ச்சியடைய வைத்த விடயம் எனலாம்.
மேமன்கவி தனது நன்றியுரையில் என்னை மதித்து இத்துணை நண்பர்கள் இங்கு வருகை தந்திருப்பதுதான் எனது வெற்றி என்பேன். நான் சாகித்திய மண்டல பரிசு பெற்ற பொழுது பெற்ற மகிழ்ச்சியைவிட பன்மடங்கு மகிழ்ச்சி இன்று நான் அடைந்து இருக்கிறேன்.
நான் மனிதர்களை மதிக்கிறேன். எனக்கு மனிதர்கள்தான் முக்கியம். மனிதர்கள் முன் எனக்கு இலக்கியம் இரண்டாம் பட்சமானது. இங்கு என்னை ப்பற்றிப் பாராட்டிப் பேசினார்கள் அந்த நேரம் எனக்குச் சங்கடமும் வெட்கமும் தான் ஏற்பட்டது. எனது முன்னேற்றத்திற் காகவும் வெற்றிக்காகவும் உழைத்த அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன்” என உணர்ச்சிவசப் பட்ட தனது நன்றியுரையை நிறைவு செய்தார் மேமன்கவி.
குறிப்பாக கணிசமான மேமன் சமூக த்தினர் இவ்வழாவில் வருகை தந்திருந் தமை ஒரு குறிப்பிட்ட அம்சமாகும். மல்லிகைப் பந்தலின் உழைப்பில் மிக அழகான முறையில் அச்சு அமைப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மேமன் கவி "மீண்டும் வசிப்பதற்காக" நூல்வெ ளியீட்டு விழாவும் பல சிறப்பு அம்சங்க ளைக் கொண்ட விழாவாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
S.
N சிறப்பு - 7
N
8
8.
உலக உத்தமர் காந்தி அடிகளின் ஞாபகார்த்த மண்டபம் ஒன்று முதன்முதல் இங்குதான் கட்டப்பட்டது. அம்மண்டபம் 1983ல் ஏற்பட்ட கலவரத்தில் தியிடப்பட்டது. அது இன்று பாழடைந்த நிலையில் உள்ளது.
N N རྗེས་ངེ་སྲིངེ་སྲིངེ་སྲིངེསྲི
*ワ
9
5

Page 50
செய்திக் கடிதம்
- பா ரகுபரன்
ஜூலை மாத மல்லிகை கிடைத்தது. தங்களுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்ட தில் மகிழ்ச்சி.தினமணிகதிரில் வந்த தங்களின் பேட்டி பல பயனுள்ள காத்தி ரமான விடயங்களைக் கொண்டிருந்தது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் 36 தமிழ்ச் சஞ்சிகைகள் ஐரோப்பிய அவுஸ்திரேலிய நாடுகளிலிருந்து வெளி யிடப்படுவது பற்றியும், இதன் மூலம் புதிய வீச்சுள்ள சிந்தனைகள் தமிழுக்கு வருவது பற்றியும் குறிப்பிட்டு இது அந்த நூற்றாண்டின் கடைசிக் கட்டத் தில் ஏற்பட்டுள்ள சர்வதேசத் திருப்பம் எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள். பருத்தித் துறையில் நண்பர் து. குலசிங்கம் மூலம் பல சர்வதேச தமிழ்ச் சஞ்சிகைக ளைப் பெற்று வாசித்துள்ளேன். புதிய அனுபவங்கள் பல பணி பாட்டுக் கலப்புடன் வெளிவந்து தமிழுக்குப் புதிய வீச்சினைக் கொடுப்பதை உணர முடிகிறது.
இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற இளைஞர்கள் பெரும்பாலும் தமிழ்த் தேசியத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் கள். வலிமையான சமூகத் தொடர்பைக் கொண்டிருந்தவர்கள். புலம் பெயர்வி னால் இதயத்தில் ஏற்பட்ட வெறுமை, தனிமை, ஏக்கம் தாயகத்தின் இனிய கனவுகள் என்பனவெல்லாம் இவர்களின் ஆக்கங்கள் மூலம் நிரப்ப முயன்று வெற்றியும் கண்டுள்ளனர்.
அண்மையில் பருத்தித்துறையில் புலோலியூர்க் கந்தசாமியின் "மெல்லத்
தமிழ் இனி.” என்ற சிறுகதைத் 可配ö
SEZ
தொகுதி அறிமுக விழாவில் பேசிய செங்கை ஆழியான் தனது ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் சுற்றுப்பயண அடிப்படையில் கருத்துக்களைக் கூறும் போது, புலம்பெயர்ந்து வாழும் பெரும்பா லான இலங்கைத் தமிழர் களின் பிள்ளைகள் பாடசாலையிலும், வீட்டி லும் ஆங்கிலத்தையே பேச்சு மொழி யாக கொண்டுள்ளார்கள் எனவும். தமிழ் இலக்கியம் என்றெல்லாம் கவலைப் பட்டு செயற்படுபவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க தொகையினரே என்ப தால் அடுத்த சந்ததியில் அங்கு சர்வ தேச ரீதியிலான தமிழ் வளர்ச்சிக்குரிய பங்களிப்பை எதிர் பார்க்க முடியாது என்றார். இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் தமிழர்களே தமிழின் வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்லவேண் டியவர்கள். மெல்லத்தமிழ் இனி சாகும் என அஞ்ச வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேற்படி சிறுகதைத் தொகுதியின் அறிமுகவிழா பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் 18.09.99ல் பருத்தித்துறை பர்வதவர்தனி மண்டபத் தில் நடைபெற்றது. தெணியான், கலாநிதி சிவலிங்கராஜா போன்றோரும் கருத்துரை வழங்கினார்கள்.
"அறிவோர் கூடல்” தொடர்ந்தும் நடைபெறுகிறது. 96ம் ஆண்டுக்கு முன் மாதம் இருதடவை நண்பர்கள் சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது மாதத்தின் கடைசி ஞாயிறு மாலையில் நடைபெறுகின்றது. எமது நண்பர்களில் பலர் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இவர்களில் டாக்டர் எம். கே முருகானந்தனின் பிரிவு பெரிய தாக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாத அறிவோர் கூடலில்

நண்பர் பொ. அரவிந்தன் மரபு அணு இரேகைப் பதிவு பற்றி பல சுவையான சேம்பவங்களை உதாரணமாகக் கூறி இலகுவாக விளங்க வைத்தார். தற்கால (த்தில் குற்றவாளிகளை அடையாளம் காணல் , காணாமற் போனோ ரை அடையாளம் காணல் போன்றவற்றிற் கெல்லாம் இதை எவ்வாறு பயன்படுத்த லாம் என்பதைத் தெளிவு படுத்தினார்.
செப்ரெம்பர் மாதம் நண்பர் ப. தவப்பிரகாசம் தற்காலத்தில் உணவுப் பொருள்கள் நஞ்சாதல் பற்றி சிறப்பாக இருத்துரை வழங்கி இயன்றளவில் தவிர் தி துக் கொள் ளக் கூடிய முறைகளையும் கூறினார்.
ஜூலை மல்லிகை இதழில் ஈழத்து சிறுகதை முன்னோடிகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியிருந்தார். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளாக சம்பந்தன், வைத்திலிங்கம், இலங்கை பர்கோன் ஆகியோர்களையே அனைவ ரும் ஒருவாய்பாடாக கூறிவருவதையும், அதற்கு முன்னரே எழுதிய ஆயா, ஆனந்தன், பாணன் ஆகிய மூவரும் கவனத்திலெடுக்கப்படாது விடப்பட் டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
இவர்களுள் ஆனந்தன் என்கின்ற பணி டிதர் க. சச் சிதானந்தனின் தண்ணிர்த் தாகம் என்கின்ற சிறுகதை ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்று மட்டுமன்றி யாழ்ப்பாண சாதிக் கொடுமையை முதல்முதலாக வெளிப் படுத்திய சிறுகதையாகவும் உள்ள தென்று குறிப்பிட்ட போது உண்மை யில் இந்த வரலாறு தெரியாத எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இவர் பருத்தித் துறையில் தும்பளையைப் பிறப்பிடமா கக் கொண்டவர். எனது உறவினர்
அடிக்கடி பல விடயங்களைப் பற்றிக் கதைத்து பொழுது போக்குவதுண்டு. மல்லிகையில் வந்தபின்னரே இதுபற்றி அறிந்துகொண்டேன்.
பண்டிதர் க. சச்சிதானந்தனின் யாழ்ப்பாண காவியம் நூலுக்கு சாகித் திய அக்கடமி பரிசு கிடைத்ததாக அறிந்தேன். தமிழ், ஆங்கிலம் , சமஸ்கிருதம், வானியல், சோதிடம், உளவியல், கல்வியியல், கணிதம் போன்ற பலதுறை விற்பன்னரான இவரின் சேவைகள் சரியான கணிப் புக்கு உள்ளாகாமல் போனது வருத்த மானதே. எதிர்வரும் அறிவோர் கூடலில் இவர் கருத்துரை வழங்க உள்ளார்.
அண்மைக் காலத்தில் யாழ் குடா நாட்டில் செ. மெற்றாஸ்மயில் பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டுக்குக் குறிப்பிடத் தக்க செயற்பாடுகளை ஆற்றி வருகி றார். சென்ற வருடம் பாரம்பரிய நாடகப் போட்டியை நடத்தி வெற்றி பெற்ற குழுக்களுக்கு பணப்பரிசு, கெளரவம் என்பனவற்றை வழங்கினார். பங்குபற் றும் ஒவ்வொரு குழுக்களுக்கும் இரண் டாயிரம் ரூபா வழங்குகிறார். இவை பற்றிய பதிவை ஒரு மலராக வெளி யிட்டும் வைத்துள்ளார். இந்த ஆண்டும் பாரம்பரிய நாடகப் போட்டிகளுடன் ஏனைய பாரம்பரிய கலை வடிவங்களும் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாடகப்போட்டி, நாட்டுக் கூத்து, இசைநாடகம் காத்தவராயன் என மூன்று பிரிவாக திறந்த போட்டி யாகவும், பாடசாலை மட்டத்திலும் என இரு சாராருக்கும் நடத்தப்படுகிறது. பல குழுக்களும் பாடசாலைகளும் ஆர்வத் துடன் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் செ. மெற்றாஸ்மயில்
ET互

Page 51
யாழ் குடாநாட்டில் உள்ள வாழும் பாரம்பரிய நாடகக் கலைஞர் 35 பேரின் வாழ்க்கைத் தகவல்களைப் புத்தகமாக வெளியிட்டு கைலாசபதி மண்டபத்தில் கலைஞர்களை கெளரவித்து விழாவும் நடத்தினார். புத்தகத்தில் அரங்கவியல் ரீதியான பார்வை இல்லை என்பது பெருங்குறைபாடுதான். ஆயினும் நாடக ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இது அமைந்து மேலும் தொடர வழி அமைக்கிறது.
இவரின் நெறியாள்கையில் உருவான வேழம் படுத்த வீராங்கனை என்ற நாட்டுக்கூத்து குடாநாடெங்கும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஆடப்பட்டு வருகிறது. ஆட்டக்கவர்ச்சி, கட்புலக் கவர்ச்சி, புதிய கதைக்கரு என்பவற்று க்கு மேலாக விளம்பரக் கவர்ச்சியும் மக் களை நன்கு ஈர்த்துள்ளது. படையப்பாவுக்குப் போட்டியாக மக்கள் நாட்டுக் கூத்துக்கும் திரண்டனர். யாழ்
அரங்க செயற்பாட்டுக் குழுவினர் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிறுவர் நாடகப் போட்டிகளை 2ம், 3ம் திகதிகளில் ஒக்டோபர் மாதம் நிகழ்த்தி யதும் குறிப்பிடத்தக்கது. மின்னுவ தெல்லாம் பொன்னல்லவே, உம்மாணடி விளையாட்டு, பாறையும் கசிவும் ஆகிய சிறுவர் நாடகங்கள் முறையே முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டன. இவற்றை யாழ்ப்பாணக் கல்லூரி, அருணோதயாக் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர்மட ஆரம்பப் பிரிவினர் ஆற்றுகை செய்தனர்.
நண்பர் சுந்தரேசனின் இந்தியாவில் பிரசுரமாகி அவருக்கும் குறிப்பிட்ட பிரதிகள் வந்து சேர்ந்துள்ளன. பல சிறிய கவிதைகள் ஆங்கிலமூடாக நல்ல மொழிபெயர்ப்பு. பக்கத்துக்குப் பக்கம் சோ. கைலாசநாதனின் ஓவியங் கள் மெருகூட்டி நிற்கின்றன. விரைவில் அறிமுகவிழா நடைபெற உள்ளது.
S
பாளி மொழியிலிருந்த பெளத்த நூலான பீட்டகதர் என்னும் நூலையும் அதன் விரிவுரையாக சிங்கள மொழியில் கட்டகதா என்னும் நூலையும் கி.பி.412 இல் மகர நாட்டிலிருந்து வந்தவரான புத்தகோசர் என்பவர் பாளி மொழியில் மொழி பெயர்த்தார். இவருடைய விரிவுரையே இலங்கையில் பெளத்த சமய நூல்களில் மிகவும் முக்கியமானதாகும். இந்த நூல் வலகம்பாகு மன்னனின் ஆட்சி காலலத்தில் மாத்தளை அனுவிகாரையில் வைத்து பனை ஒலையில் பதிவு செய்யப்பட்டது.
Záಣx N
1803 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மாத்தளையில் 'மக்டொவல" (மக்தவல) என்னும் கோட்டையை கட்டினார். இக்கோட்டை மூர் சாதியாரின் உதவியால் கட்டப்பட்டது. இக்கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
AS) சுதந்திர வீரன் என்று போற்றப்படும் வீர புரான் அப்புவை
அவள்ளையர்கள் பிடித்து மாத்தளையிலேயே மரத்தில் தூக்கிலிட்டனர். அந்த இடத்தில் முன்னள் நகரபிதா அமரர் தம்பிராஜா அவர்களால் ஞாபகார்த்த ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது.
தகவல் மாத்தளை கார்த்திகேசு
NNNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNN
NNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNN
 
 

劉*線 磁懿縫簽
மாத்தளை மலரை வாழ்த்துகின்றார்கள்
இந்நாட்டு இலக்கியத் துறைக்கு மாத்தளை அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. இலக்கியம், கலை, கலாசாரம், சமயம் ஆகிய துறைகளில் மாத்தளைக்கெனத் தனியான பாரம்பரியம் உண்டு. இது இன்னும் நிலைகொண்டுள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கு மல்லிகை வெளியிடவிருக்கும் மாத்தளை மலர் வழிவகுக்குமென நம்புகிறேன்.
இம்மலர் சிறப்புடன் வெளிவரவும் அதன் மூலம் இப்பகுதி எழுத்துத்துறை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகம் தலைதூக்கவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாத்தளை இந்துக் கல்லூரி வி. பாலகிருஷ்ணன்
(தேசிய பாடசாலை) (அதிபர்)
மாத்தளை
தமிழ் இலக்கிய உள்ளங்களில் நிரந்தரமானதொரு இடத்தைப் பிடித்துள்ள மல்லகை, மாத்தளை மலராக வெளிவரவிருப்பது குறித்துப் பெரும் புளகாங்கிதம் கொள்கிறோம். மல்லகை என்றும் வாடா மலராக இலக்கிய மணம் வீச இக்கல்லூரியின் சார்பாக நெஞ்சார வாழ்த்துகிறேன்.
சாகிரா கல்லூரி கே. எம். புஹார்தீன்
மாத்தளை (அதிபர்)
முப்பத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மல்லிகை இதுவரை மலர்ந்தது அயல்வீட்டுப் பந்தலில் இன்று மலர்வது நம்முற்றத்தில்
ஓங்குக டொமினிக் ஜீவாவின் பணி.
பாக்கியா மகா வித்தியாலயம் திருமதி. யே. நாகேந்திரன்
தேசியக் கல்லூரி (அதிபர்)
மாத்தளை சமாதான நீதவான்
š§:: 懿簽 綴 மாத்தளை மாவட்ட மலராக வெளிவரும் மல்லிகை இதழுக்கு வாழ்த்துரை வ| 11:குவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். பல எழுத்தாளர்களின் இலக்கிய 8, 1 கிகளை உள்ளடக்கி மலரப்போகும் இந்த விசேட இதழ் தமிழ் பேசும் நல்லுலகு முழுவதும் நறுமணம் பரப்பும். மாத்தளைச் சூழலையும், மொழிவளத்தையும் இலக்கியத்தில் நிரந்தரப் பதிவாக்க இந்த இதழ் உதவ போவது குறித்துப் பெருமிதம் கொள்கிறோம்.
மல்லகை இதழின் பிரதம ஆசிரியருக்கு எமது நன்றியும் பாராட்டுதல்களும்.
அமீனா பெண்கள் தேசியக் கல்லூரி திருமதி பறுாஜா ஆப்தீன் பத்தளை அதிபர்

Page 52
ஒரு பிரதியின் முனுைமுனுைப்புக்கள்
மேமன்கவி
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
இது - டாரதி கண்ட ‘பா’ கனவு இது இல்லையா?
அது - நிறைவேறிவிட்டது. இன்று "வெட்ட் தளம் தோறும் தமிழ் ஒலிக்கிறது. பார்க்கப்படுகிறது. பேசப்படுகிறது.
சந் தோஷமாக இருக் கறது இல்லையா? இப்பொழுதுபார்ப்போம்.
வெப் தளம் தோறும்
இருக்கிறது சரிதான். அங்கு நடக்கிறது.
தமிழ் என்ன
இலக்கிய பக்கங்கள்
நண்பர் பக்கங்கள்
அறிவியல் பக்கங்கள். பக்கங்கள் இருக்கின்றன.
ஏராளமான
அங்கும் சினிமாவின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. அசிங்கங்க ளும் இருக்கின்றன.
ஆனாலும் - அதனை மீறியும் நல்ல தமிழ் உலகமெல்லாம் ஒலிக்கிறது என்பதில் சந்தோஷம்தான்.
இனி எதிர் காலம் தான் இதன் சிறப்புக்களை எமக்கு அடையாளம்
100
காட்டும். அதுவரை காத்திருப்போம்.
இந்த குறிப்புகள் எழுத உட்கார்ந்த பொழுது தீர்மானமாக எழுத நினைத்த விடயங்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. நினைவுக்கு வரவில்லை என்பதை விட, நினைவுக்கு வர விடவில்லை. ஒரு நிகழ்வு.
அதுதான்.
இந்த குறிப்புகளை எழுதிக்கொண் டிருக்கும் போது ஞாயிற்றுக்கிழமை (24.10.99) காலைக்கதிர் சக்தி டிவி நிகழ்ச்சியில் ‘கலாபூஷணம்' புல்லு மலை பெருமாள் நல்லரத்தினம் அவர்க ளுடனான கலந்துரையாடல் மனதை மிகவும் கவர்ந்தது.
அவர் எந்தவித பந்தாவின்றி 'ஜானு எனும் அந்தப் பெண் அறிவிப்பாளருடன் பேசிய விதம், 68 வயசுகார கலைஞ னின் நிமிர்வும், மங்காத ஆர்வமும்
எந்தவித போலித்தனமும் இல்லாத)
வெளிப்பாடு எனலாம். у
அவர் சொன்ன கருத்துக்களில் சிற்பக் கலைக்கென ஒரு கல்லூரி இங்கு இல்லாததை மிகுந்த கவலையும் னும் கோபத்துடனும் பேசியது நியாயமாகவே பட்டது. கலாசார்

திணைக்களத்துடன் சண்டை பிடிக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்ன தில் சிற்பக் கலை மீதான அவரின் ஆத்ம சுத்தமான பிடிப்பைக் காட்டியது. ஒருவர் சிலைகளுக்கு வணிணம் தீட்டுவதைப் பற்றிக் கேட்ட பொழுது, தனது குரு தனக்கு சொன்னாராம் “பொம்மைகளைச் செய்யாதே. சிலைக ளைச் செய்' என்றார், நல்ல விடயம் இல்லையா?
இன்னொரு இடத்தில் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னார். என் கைகளை வெட்டிப் போட்டாலும் மூக்காலாவது சிலை செய்வேன் என்றார். −
அவரது சிற்பங்களை கொழும்பில் பார்க்கக் கிடைத்து இருக்கின்றன. அவரை நேரில் சந்தித்தும் இருக்கி றேன். ஆனால் இந்த சக்தி டி.வி தந்த கலந்துரையாடல் அவரின் வீச்சையும் ஆத்ம சுத்தத்தையும் எனக்குப் புரிய வைத்தன. அவரை நல்ல முறையில் மதித்து உரையாடிய 'ஜானுவும் பாராட்ட வேண்டியவர்.
புல்லுமலை பெருமாள் நல்லரத்தினம் ஐயா அவர்களின் பேட்டி இன்னொரு ஆழமான சிந்தனையை எனக்கு
தந்தது. நல்லரத்தினம் ஐயர் அவர்க ளின் கருத்துக்கள் நமக்கு உடன்பாடR னவை. அதனால் அவரை ஆதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆன3) நமக்கு உடன்பாடு இல்லாத சில விடயங்களை முன்வைக்கின்றவர்களை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ளவில் லை போல் தெரிகிறது.
முதலில் நாம் ஒன்றை உணர வேண்டும். நமக்கு உடன்பாடு இருக்கி றதோ இல்லையோ அந்தக் கருத்துக் குரியவர் தாம் கொண்டிருக்கும் கருத் துக்காக ஆத்ம சுத்தமான முறையில் தன் னை ஈடுபடுத்து கறாரா வெளிப்படுத்துகிறாரா என பார்த்து அப்படி அவர் ஈடுபடுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அவரை மதிக்க வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் பிற்காலத்தில் அக்கருத்துக்களிலிருந்து அவர் விடுபடலாம்.
994 gôl கால மி அவருக் கு எடுத்துக்கொடுக்கும் தெளிவு எனலாம்.
அதுவரை அவரது ஆத ம சுத்தமான அர்ப் பணிப்புக்கு நாம் மதிப்பளிக்க பின்தங்க வேண்டிய தில்லை என்பதே என் கருத்து,
பறவையின் குருதி குறி தப்பாது சுடும் வேட்டைக்காரனின் சந்தோஷமா? சிறகின் இழப்பு பறவையின் சிறையா? ஒவ்வொரு இழப்பும் யாரோ ஒருவருக்கான சந்தோஷமா? இல்லை - யாரோ ஒருவருக்கான சோகமா?
- மேமன்கவி -
சவப்பெட்டிக் காரனின் காலைப் பிரார்த்தனை ஒருவனின் மரணமென்றால்
அவன் -
G&T60)G&Esty QStrip உலக விந்தையின் பின்னல்
மனசில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் விதைத்துக்கொண்டடே இருக்கிறது.
101

Page 53
செங்கை ஆழியான் கட்டுரை தொடர்பாக.
- அருன் -
1999 ஜூலை மாத மல்லிகை இதழில் செங்கை ஆழியான் அவர்கள் எழுதியுள்ள ஈழத்துச் சிறுகதை முன் னோடிகள் என்னும் கட்டுரையில் தமிழ் நாட்டில் சிறுகதைகள் தோன்றுவதற்கு முன்பு 1860 களிலேயே ஆனல்ட் சதாசிவம்பிள்ளை சிறுகதைகள் எழுதி யிருந்தார்கள் என்றும் அவரே தமிழ்ச் சிறுகதையின் பிதாமகள் என்றும் அவரு க்குப் பின்பு பண்டிதர் சந்தியாகோ சந்திரவர்ணம்பிள்ளை "கதாசிந்தாமணி” என்று ஒரு கதைத் தொகுதியை 1875 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார் என்றும் அதில் ஏழு சிறுகதைகள் அடங்கியிருந்தன என்றும் அதே நூற்றாண்டில் தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் "ஊர்க்கதைகள்” என்று 101 கதைகள் கொண்ட ஒரு தொகுதியை வெளியிட்டிருந்தார் என்றும் அதேபோல் ஐதுரூஸ் லெப்பை மரைக்கார் என்பவர் "ஹைதர் ஷா சரித்திரம்” என்னும் கதைத் தொகுதியையும் வெளியிட்டிருந் தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் சிறுகதைகள் எழுதப் பட்டு வெளியிடப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே - சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே - ஈழத்தவர் கள் சிறுகதைகள் எழுதி வெளியிட் டிருந்தார்கள் என்பது ஈழத்தவர்களுக்
102
குப் பெருமை தரக்கூடிய ஒன்றேயாகும்.
இக்கதைகளை எழுதி வெளியிட்ட நால்வரிலும் ஆணல்ட் சதாசிவம்பிள்ளை யைப் பற்றிய தகவல்கள் பல ஏடுகளில் இருக்கின்றன. அதேபோல் தம்பிமுத்துப் பிள்ளை பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. இவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வளர்ப்புத் தந்தை
ஆவார். ஏனைய இருவர்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகத் தெரிய
வில்லை. இவற்றையும் தேடிப்பிடித்து இம்முன்னோடிகள் நால்வரைப் பற்றியும் ஏட்டில் பதிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
சந்தியாகோ சந்திரவர்ணம் என்ற பெயருடைய ஒருவரைப் பற்றி எனக்குச் சில தகவல்கள் தெரிந்திருக்கின்றன. இவர்தான் "கதாசிந்தாமணி" என்னும் கதைத் தொகுதியை வெளியிட்டிருந் தவர் என்றும் நான் ஊகிக்கின்றேன்.
இச் சந்தியாகோ சந்திரவர்ணம் என்பவர் சென்ற நூற்றாண்டில் பிறந்த வர். அரசாங்கத்தில் ஒரு மொழிபெயர்ப் பாளராக இருந்திருக்க வேண்டும். 1890 களில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றுக் கெளரவிக்கப்பட்டவர். இந்த நூற்றாண்டின் பின் பகுதியில் இந்தியா 665) (oggsful LC Lig (bibg, Indian Yea

Book என்னும் புத்தகத்தில் (1902 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன்) இவரு டைய பெயரும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்களின் பெயர்க ளுடன் இலங்கைப் பிரமுகர்கள் என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்தது. விருந்தோம்பலில் சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்பொழுது கொழும்பு கொட்டாஞ்சே னையிலுள்ள பூரீ குணானந்த மாவத்தை என்று வழங்கப்பட்டு வரும் வீதி சில ஆண்டுகள் வரையில் இவருடைய நினைவாக சந்தியாகோ வீதி என்று வழங்கப்பட்டிருந்தது. கண்டியிலுள்ள g5 fig6.15, B6ögrf (Trinity College) அமைந்துள்ள காணி அவருடையதாக இருந்தது என்றும் அங்கு அவர் வாழ்ந்திருந்தார் என்றும் தெரிகின்றது.
இவருக்கு இரண்டு மகன்களும் சில பெண் பிள்ளைகளும் இருந்தனர். மூத்த மகன் ஹென்றி ஜேம்ஸ் என்பவர் மாவட்ட நீதி மன்றச் செயலாளராக இருந்தவர். இவருக்கு மூன்று பிள்ளை கள் இருந்தனர். இரண்டு ஆண்கள் ஒரு பெண். ஆண் பிள்ளைகளில் ஒருவர் சிறு வயதிலேயே இறந்துவிட் டார். மற்றவர் அந்தணி சந்தியாகோ
விக்ரர் என்பவர் கொழும்பு மாநகர 36ool Jules) LI
யாற்றியவர். அவரும்
888 భ
இறந்து விட்டார். அவருக்கு நாலு பிள்ளைகள் இரண்டு ஆணர்கள் . இரண்டு பெண்கள். இரு பெண் பிள்ளை களும் திருமணம் செய்துள்ளனர். ஒருவ ருக்கு ஒர் அண் குழந்தை உள்ளது.
முதலியார் சந்திரவர்ணத்தின் இரண்டாவது மகனாகிய லினிவிறொட் என்பவர் பவர் அன்ட் கம்பனி (Baur & Co) யில் தொழில் புரிந்தவர். அவருக்கு மேரி என்று ஒரு மகள். எழுபது வயது இருக்கும் . அவரும் திருமணம் ஆகாமலேயே இருந்து வருகிறார்.
"கதாசிந்தாமணி" என்னும் கதைத் தொகுதியை 1875 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்த சிறுகதை முன்னோடி களில் ஒருவரான சந்தியாகோ சந்திர வர்ணம்பிள்ளை என்பவரின் வழித்தோன் றல்கள் என்று இப்போது அவருடைய பேரப்பிள்ளையாகிய மேரி என்னும் எழுபது வயதான பெண்ணும் பூட்டப் பிள்ளைகளாகிய இரு ஆண்களும் இரு பெண்களும் அவர்களின் ஒரு பெண் பிள்ளையின் மகனுமாகிய ஆறு பேர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
முதலியார் சந்தியாகோ சந்திரவர் ணம்பிள்ளை அவர்களின் சற்றுச் சிதைந்து போன நிழற்படம் ஒன்று தெய்வாதீனமாக என்னிடம் வந்துள்ளது.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
மல்லிகை எழுத்தாளர்கள்,
சுவைஞர்கள்,
சந்தாதாரர்கள்,
விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த தீபாவளி
வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறோம்.
- Sjálfu Ísr -
ుళ్ల &

Page 54
அய்யாக்கள் சிலபேர்
மா பாலசிங்கம்
தனக்கு நாளைக்கு பேத்டே என்ற கலகலப்பை ருசிக்கா காட்டிக்கொள்ள வில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா இருந்த பொழுது இப்படியில்லை. பிறந்ததினம் வருகின்றதென்றால் அவளுக்கு ஒரே குஷிதான். மனம் கொள்ளாப் புழுகம். பேத்டே சம்பந்தமான கதையோடுதான் சுற்றித் திரிவாள். ஆனால் இம்முறை. அந்தப் பேச்சே இல்லை.
புத்தாண்டுக் கலண்டர்கள் எப்பொழுது வருமென முன்பெல்லாம் துடியாய்த் துடிப்பாள். பதில் சொல்வதில் அம்மா வின் வாய் வலி கண்டுவிடும். கந்தோர் வேலை முடிந்து வீடு திரும்பும் அம்மாவின் பாக்கிக்குள் கலண்டர்க ளைக் கண்டுவிட்டால் சிட் டாகப் பறந்துபோய் பறித்திடுவாள். கலண்டர் தாள்களை ஒவ்வொன்றாகக் கிளப்பித் தனது பேத்டே என்ன கிழமையில் வருகின்றதென அறிந்துகொள்வாள்.
“ஒவ்வொரு மாதமும் எனக்கு பேத்டே வந்தாலென்ன?” களங்கமற்றவ ளாகத் தாயோடு செல்லங்கொஞ்சுவாள்.
“ருசிக்கா நீ அதிஷ்டக்காரி குஞ்சு” “என்னத்துக்கம்மா?" "ஆனதாலதான் நீ பெப்ரவரி 29ல்
104.
பிறக்கேல்ல. அப்படி உன்னை நான் பெத் தருந் தா உனக் கு நாலு வருஷத்துக்கு ஒருக்கா தான் பேத்டே வரும் குஞ்சு. இப்ப ஆண்டுக்கொரு பேத்டே வருகுதுதானே” மகளின் கன்னத்தில் முத்தங்களைக் குவித்தபடி சட்டம்பியாராகி மகளின் அறிவை விசாலப்படுத்தும் முனைப்போடு அம்மா? சொல்வாள்.
அப்பா இந்தாண்டுக் கலண்டர்க ளோடு வந்த பொழுது ருசிக்கா முற்றத்தில்தான் நின்றாள். அவள் கண்டும் காணாததுபோல் பாவனை செய்தது அப்பாவுக்குப் பெருத்த ஏமாற்றம். "இந்தாவன் ருசிக்கா. புதுக் கலண்டருகளைப் பாருமன்” வலியக் கூப்பிட்ட அப்பாவின் குரலுக்குக்கூட அவள் உசும்பவில்லை. அசைவற்று நின்றாள். メ
“பேத்டேயைப் பாரன் குஞ்சு." மகளுக்கு அருகில் வந்து அவளின் தோளில் கையைப் போட்டு அணைத்த படி அப்பா மனந்திருப்ப எத்தனித்தார்
"கொழுவினாப் புறகு பாக்கலாந் தானே.” பிடிவாதப் பேச்சு அப்பாவைச் சீண்டுவதாக இருந்தது. கனிவான பேச்சு இலாபத்தைக் காட்டவில்லை.

“புறகு அம்மம்மாவோட சேந்து பார்” கடுப்புக்கொண்ட அப்பா தோளில் போட்ட கையை வெடுக்கென எடுத்தபடி தன் நடையை விசை கொள்ள ச்
செய்தார். வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
புத்தாண்டு தொடங்கி பொங்கலும் வந்து போய்விட்டது. அப்பா கொண்டுவந்த கலண்டர்களுக்கு ருசிக்கா தீண்டாமை காட் டிக் கொணி டே நாட்களைக் கடத்தினாள். தொடக்கூட இல்லை.
அம்மம்மாதான் தடவித் தடவித் தட்டிப் பார்த்து பேத்டே புதன்கிழமை எனச் சொன்னாள்.
மகளின் பேத்டேயில் அப்பாவின் கரிசனை கோபுரமாக உயர்ந்து
நின்றது.
பிறன் சுகளுக்கு என்னத்தைக் கொண்டுபோய்க் குடுக்கப்போற?" அப்பா ஆரவாரப்பட்டார். இரண்டு நாட்கள் லீவும் எடுத்துக்கொண்டார்.
"நீங்கள் தாறதைக் கொண்டு போவன்” பற்றி இறங்கின றேடியோ போல் ருசிக்க முணுமுணுத்தாள்.
அம்மா இருந்தகாலத்து நடப்புகளை அசைபோட்டுக்கொண்டிருந்த அப்பா முகத்தைக் கோணினார்.
ருசிக்காவுக்கு பேத்டே என்றால் வீட்டில் ஒரு உள்நாட்டுக் கலகம் வெடிக்கும். ஒரே சண்டை தான். பிரின்ஸ் பலுக்குக் கேக், கிளாஜ் ரீச்சருக்குக் கண்டோஸ், கூட்டாளிமாரு க்கு டொபியென நீண்ட பட்டியலை ருசிக்க நீட்டுவாள். எதையும் அப்பாவோடு ஆலோசித்துச் செய்யும் 9LÈ LDIT U 19u60) 6ù e LFT 665 (b5 சமர்ப்பித்துவிடுவாள்.
கனடாவிலிருந்த அம்மா அனுப்பிய
பேத்டே காட் ருசிக்காவுக்குத் தபாலில் வந்தது. விரித்தால் இசை பொழியும் மியூசிக்கல் காட் அம்மா பாய் சூட் அனுப்பியிருந்தாள். மேலதிகமாகக் காசும் வந்தது. மகளின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கவுணோ அல்லது பாய் சூட்டோ வாங்கிக் கொடுக்கும் படி அப்பாவின் கடிதத்தில் எழுதியிருந்தாள். அம்மா அனுப்பிய பாய் சூட்டை அணிந்துகொண்டு ருசிக்கா கண்ணாடி யில் பார்த்தாள். அளவெடுத்து வெட்டித் தைத்த மாதிரி தொளதொளக்காமல் இருந்தது. அம் மா வின் மூளை கொம் பியூட்டர் என் நினைத்துக் குதுாகலித்தாள். அந்த உடையில் அவள் பாவை போல் இருப்பதாக அம்மம்மா உவமித்தாள்.
"கேக் வெட்டேக்க அம்மாவின்ர பாய் சூட்தான்” இறுதி முடிவாக அழுத்திச் சொன்னாள். அப்பாவுக்குக் கேட்கும்படி யாக, "நான் கொண்டுவாற உடுப்பைப் போட்டுத்தான் கேக் வெட்ட வேணும். அவளின்ர உடுப்பையும் போட்டுப் படம் எடுப்பம்" அப்பாவின் முன்னெச்சரிக்கை ருசிக்காவுக்கு இடியாக விழுந்தது. முகம் கரித்தது.
“டேய் நீதானே கண் முன்னால எல்லாத்தையும் பாக்கப்போற. கண்கா ணாத தேசத்தில நிக்கிற அதுகின்ர மனம் குளிரும். தாய் அனுப்பினதைப் (8LI FILL (BDLIT”. 6). Li LDub { DIT etj Lisi, காத்தாகி வாதமிட்டார்.
"அவளெண குளிரான நாட்டிலதான் நிக்கிறாள். மனம் மாத்திரமில்லை தேகம் முழுவதும் குளிர்ந்துகொண்டு தான் இருக்கும். உந்த அலம்பல் கதையை விட்டுட்டு நான் சொல்றதைத் தான் ருசிக்கா செய்ய வேணும்” அம் மம் மா வை அப் பா அதட் டி
Eğ 105]

Page 55
மடக்கினது ருசிக்காவின் இதயத்தைப்
பிறாண்டியது. கொப்பி வாங்கிக் கொண்டிருந்த ருசிக்காவை முந்தநாள் பாங்க் அன்ரி கண்டு கொண்டாள். அவள் அம் மாவின் சிநேகித, ஒட்டென்றால் ஒட்டும் உண்மையான நட்பு. அடிக்கடி ருசிக்கா வீட்டுக்கு வருவாள் போன பேத்டேக்கு இவளும் அம்மாவும் சேர்ந்துதான் ருசிக்காவுக்குக் கவுண் தைத்தவர்கள். துணி கசங்கும் அளவிற்குத் தேகம் முழுவதும் பிடித்துப் பிடித்துப் பார்த்து யோசித்து யோசித் து வெட் டி வெட் டித் தைத் தார்கள். அவைகளெல்லாம் நேற்று நடந்தது போல ருசிக்காவுக்கு இன்னமும் பசுமையான நினைவைத் தந்துகொண்டிருக்கின்றன.
"பேத் டேக் கு அம் மா என்ன அனுப்பினவ” கையை இறுக்கிப் பிடித்தபடி பாங்க் அன்ரி விசாரித்தாள்.
"பாய் சூட் அனுப்பினவ அன்ரி. காட்டும் வந் திட்டுது” ருசிக் கா புழுகத்தோடு சொல்லியபடி கையைப் பறித்துக்கொண்டு ஓடினாள். பாடசாலை க்கு பிந்தக் கூடாதென்ற பயம் அவளில் சிலிர்த்திருந்தது.
"மடம் இருக்கிறாவா?” எனக் கேட்டுக் கொண்டுதான் பாங்க் அன்ரி வீட்டுக்கு வருவதுண்டு. அப்படி அவள் வருவதும் அப்பாவுக்கு அலேஜிக்கா இருக்கும்.
இவளென்ன பறங்கிக்கா பிறந்தவள் இவவின்ர வாயில தமிழ் வராதாக்கும்” அப்பாவின் அனல் பேச்சை அம்மா சிரித்தபடி சமாளிப்பாள்.
"இதெனி ன உங் கட கதை. பொண்ணாப் பிறந்தவள் இருக்கிறாராவெண்டு கேட்டுக்கொண்டு வந்தா ஆரும் என்ன நினைப்பீனம்”
106
"ஆணெணி ன பெணி னெனி ன உன்னைக் கேட்டுக்கொண்டுதானே வருகுதளடி" அப்பாவின் அடிமனதி லிருந்து பீறிடும் சொற்கள் வயிற்றெரிச் சலாக அம்மாவை நனைக்கும். அம்மா செய்வதறியாமல் திகைப்பாள்.
அம்மாவோடு ருசிக்காவுக்குக் கடும் கோபந்தான். இன்னமும் நீறு பூத்த நெருப்பாக இருந்துகொண்டு தான் இருக்கிறது. தான் கனடாவுக்குப்
போகும் சங்கதியை ருசிக்காவுக்கு அம்மா ஒப்பீஸ் ரகசியமாக்கிப் போட்டாள். போவதற்கு முதல்
நாள்தான் சொன்னாள்.
"இனி அம் மம்மா அல்லாட்டி அப்பா தான் குஞ் சுக் குச் சோறு தீத்துவீனம்" கோழிக் கறியோடு சோற்றுப் பருக்கைகளை சேர்த்துப் பிசைந்த உருண்டையாக்கி மகளின் வாய் க்குள் வைத் தபடி அம்மா சொன்னாள்.
"என்னத்துக்கு" வாய்க்குள் வைத்த சோறு நிலத்தில் சிதற ஏறிட்டுப் பார்த்தபடி ருசிக்கா கேட்டாள்.
"நாண் வெளிநாட்டுக் கு
கனடாவுக்கெல்லே குஞ்சு போறன்" அம்மாவின் உஸ்ணமான கண்ணிர் ருசிக் காவிண் கையில் விழுந்து தெறித்தது ருசிக்காவுக்கு திடுக்காட்டிய மாக இரு நீ தது. அவளுடைய சிநேகிதியின் அம்மா வெளிநாட்டுக்குப் போய்விட்டாள்.
"இப்ப நாங்கள் அம்மாவின் ர போட்டோவைத்தான் பாக்கிறம். அவ வெளிநாட்டில” விழிகள் நீர்த்திரையால் மூடுண்ட சிநேகிதி சோகித்தது ருசிக்காவின் நினைவில் மின்னலாகப்
TuŮbbgbl.

"இனிமேல் நானும் அவளைப் போலத்தான்" இனந்தெரியாத பயம் ருசிக்காவை வதைத்தது.
பிரகடனப் படுத்தப்பட்ட எந்த விடுமுறையாக இருந்தாலும் கந்தோரில் ருசிக்காவின் அம்மாவுக்கு வேலைதான்.
"எனக்கு லீவு. நீங்களும் வீட்டில நில்லுங்களன் அம்மா”
“என்ர குஞ்சோட எனக்கிருந்து விளையாடத்தான் ஆசை. உம்மோட நான் இருந்துபோட்டா உம்மை மாதிரியான எத்தனையோ குஞ்சுகளுக் குத் திண்னக் கூடக் கிடைக்காமல் போயிடும். என்ர செல்லம் அதுக்காகத் தான் நான் கந்தோர் கந்தோரெண்டு ஒடிறன்"
அம்மாவின் உத்தியோகம் மரியா தைக் குரியதென ருசிக் காவுக்கு விளங்கும். சுற்றுப்புறத்தவர்களின் செய்கைகள் இதை உணர்த்தியிருக் கின்றன. பாடசாலையிலும் அவளுக்குப் பெருங்கணிப்பு. ஆசிரியர் மட்டுமன்றி அதிபர் கூட அவளைப் பணிப்பாளரின் மகளென்றுதான் அடையாளப்படுத்துவ துண்டு. சில சந்தர்ப்பங்களில் "டிரெக்டர் அம்மா’ எனச் சிலர் தன்னைச் சுட்டுவதையும் இரண்டு காதுகளால் கேட்டிருக்கிறாள். அப்படி இருக்க. "ஏன் ருசிக்கா பேசாமல் இருக்கிற.” மீண்டும் ஓர் உருண்டை சோற்றைக் கையில் ஏந்தியபடி அம்மா ருசிக் காவின் மெளனத்தைக் கலைத்தாள்.
"இஞ ச இருந்து வேலை செயப் ய லாமே. என் னத் துக் கு வெளிநாட்டுக்கு.” விரல்களைப் பொத்தி அம்மா வின் நாரியில் ‘டொக் டொக்கெனக் குத்தியபடி ருசிக்கா சிணுங்கினாள்.
"அங்க போனா நல்லாச் சம்பாரிக்க லாம். பெரிய வீடு கட்டலாம். நகை செய்யலாம்.” அம்மாவின் குரல் கரகரத்துக் கம்மியது.
"எங்களிட்ட வீடு கட்ட நிலமா கிடக்கு" ஒடிப்போய் ருசிக்கா கட்டிலில் 'தொக்'கென் விழுந்தாள். பின்னே சென்ற அம்மா கட்டிலில் குந்தி மகளின் தலையை மடியில் தூக்கி வைத்தாள்.
"எங்கட நிலம் எங்க குஞ்சு போகும். எங்கட மண் எங்கடதான். ஊருக்குப் போனா வீடு கட்டலாம் தானே” விக்க லும் விசும்பலும் போக நெடு நேரம் பிடித்தது. ருசிக்காவின் குறட்டை ஒலி கேட்டது. உயிதொன்றைக் கொன்று விட்ட ஏக்கத்தில் அம்மாவின் ஆத்மா அந்தரித்தது. அம்மாவின் வெளிநாட்டுப் பயணத்தோடு ருசிக்காவின் உற்சாக மும் பஞ்சாகக் காற்றோடு பறந்து விட்டது. கூட்டாளிகளோடு சேர்வது குறைந்துபோனது. படிப்பில்கூட மந்த நிலையைக் கண்டு விட்டாள்.
"அவ உன்னை விட்டிட்டு இருக்க மாட்டா. கெதியில வந்திடுவா. நீ ஒண்டுக்கும் யோசிக்காத" அம்மம்மா கூடு பாய எத்தனித்தாள். தானும் ஒரு தாயாக இருந்து பெற்று வளர்த்தவ ளென்ற உசாரில் பேர்த்தியோடு நெருக்கமாகப் பார்த்தாள். ருசிக்கா கொஞ்சம் ஒட்டாக இருந்தாலும் அம்மாவின் நினைவுகள் அகாலத்தில் மரணிக்காமல் அவளுள் இருந்தன.
"நான் இருக் கறணி தானே. கொம்மாவை என்னத்துக்கு. என்ன வேணும் கேளன் குஞ்சு வாங்கித் தாறன்" சோர்ந்துபோயிருக்கும் மகளை உசார் படுத்த அப்பா கொடுத்த மாத்திரை சித்திக்கவில்லை.
Rğ 107]

Page 56
“எனக்கு அம்மா வேனும் அப்பா. ருசிக்கா அதிரடி கொடுத்து அப்பாவை ஓரங்கட்டி விடுவாள்.
இப்போதெல்லாம் அப்பாவின் ஸ்கூட்டரில் ருசிக்காவை அடிக்கடி காணலாம். தான் போகுமிடமெல்லாம் மகளையும் கூட்டிக்கொண்டு போவார். அவள் மனதைச் சலவையிட்டு அம்மாவின் நினைவைக் குறைப்பது தான் இந்தத் தந்திரோபாயத்தின் சூட்சுமம். இரவுப் படுக்கை அம்மம்மா வோடுதான். நன்றாகத் தூங்கின பின் அப்பா தூக்கிக்கொண்டு போய் தனது படுக்கையில் வளர்த்துவார். ருசிக்கா எப் பொழுது விழிக் கறாளோ அப்பொழுதே எழுந்து அம்மம்மாவின் அறைக்கு வந்துவிடுவாள். “நான் வளத்தின இடத்தில கிடக் காட்டி வெளுவைதான் தருவன்.” சாமம் ஏம மென் றுமி பாராது அப் பா கொந்தளிப்பார்.
“என்னத்துக்கடா அதட்டிற. இப்படி அதட்டி அதட்டித்தான்உன்ர பொஞ்சாதி யையும் வெளிநாட்டுக்குப் போக வைச்சு உன்ர ஆண்தனத்தைக் காட்டின நீ” அப்பாவின் கர்ச்சனையால் கண்விழிக் 'கும் அம்மம்மாவுக்கு காரம் உச்சிக்கு ஏறிவிடும். அப்பாவுக்கு நல்ல கிழியல் கிடைக்கும். அம்மா கனடாவுக்குப் போன பிறகு வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அப்பாவிடம் முக்கால் பழசுகள்தான் முன்பும் வருவார்கள். இவர்களோடு அப்பா பேசிக்கொண்டிருக்கும் பொழுது சடுதியாக அம்மா வந்துவிட்டால் கதையை விட்டுப்போட்டு இவர்கள் எழுந்து நிற்பார்கள். அம்மாவுக்கு மரியாதை கொடுப்பதற்காக,
"என் னத்துக்கு எழும் புவான் .
回配筠
அவளின் ர ஒப் பீசா வீட்டிலும் அவளென்ன பணிப்பாளரா. அவவுக்கும் தன்ர முகத்தைக் காட்டாமல் இருக்க ஏலாது உரத் துத் தான் அப்பா சொல்வார். அம்மாவுக்கு கேட்கட்டு மென் று. அம் மா வினி உருவம் கண்ணைவிட்டு மைைறந்த பின்தான் எழுந்தவர்கள் உட்காருவார்கள்.
”அவவிட்ட என்னத்துக்கு றிங்சை குடுத்துவிடுகிறனியள்’ கூட்டாளி ஒருவர் அம்மம்மாவிடம் சொல்ல அப்பா
வானமாகச் சீறிப் பட்டா சாக
வெடித்தார்.
"எண் னடா அவவெனி ன தேவ
கன்னிகையா? கச்சேரியில தான்
டிரைக்டர். வீட்டில? கிளாக்கன். என்ர மனிசியெடா’ அப்பாவின் எரிசரங்கள் அம்மம்மாவைத் தீண்டிவிடும்.
"அதுகின்ர படிப்புக்குத் தக்கின் உத்தியோகமெடா. உன்னை மாதிரித் தானே அதுவும் கிளாக்காகச் சேந்திது. ஊக்கமெடுத்ததால அதுக்கு இந்த நிலைமை, றோட்டுச் சுத்தின உனக்கு ஆரு தரப் போகனம் பெரிய உத்தியோகம்.
அப்பாவுக்குச் சுணை இல்லை. ஆட்களுக்கு முன்னால் வைத் து அம்மம்மா இப்படி ஆயிரம் தடவை சீலம் பாயாகக் கிழிச்சிருக்கிறாள். இன்னமும் அப்பா தட்டை மாற்ற வில்லை. கோழி மிதிச் சுக் குஞ்சு முடமாகிவிடததென்ற தடிப்பாக்கும். வீட்டில் அடிக்கடி அரங்கேறிக்கொண் டிருக்கும் இந்த முக்கோண ரகளை ருசிக்காவுக்கு விசரைக் கிளப்பும். பாடசாலையில் இருந்து விடலாம் என எண்ண வைக்கும்.
அப்பாவின் முறைப்பெண் அம்மா.

சொந்த மச்சாள். அம்மம்மாவின் தம்பி மகள். இந்தப் பந்தமே இருவரையும் கூட்டணியாக்கியதென அப்பா முணு முணுத்துக்கொள்வார். வீட்டில் தனக்கெ னக் கூட்டணி இல் லாமல் தான் தனி மரமாக விட்ட தையரிட டு சி சஞ்சலப்படுவார்.
நீ என் ர அம் மா இல் லை. அவளுக்குத்தான் அம்மா." அம்மமம்மா
வுக்கு நெற்றியடி கொடுப்பார்.
"என்னத்தையும் சொல்லடா. நான் என்ர தம் பிமோளெண்டதுக்காகக் கதைக்கேல்ல இன்னொருத்தியெண்டா இத்தறிதிக்கு எழுத்தைத் தள்ளிப் போட்டு ஓடிப்போயிருப்பாள். அது பொறுமைசாலி உன்னோட கிடந்து உத்தரிக்குது." அப்பாவும் ஒயமாட்டார். விட்டுவிட்டால் அம்மம்மா அம்மணமாக வும் கொட்டுவாள்.
"இஞ்ச வாங்க அம்மம்மா எனக்கு என்னவும் தின்னத்தாங்க.” ருசிக்கா சமயோசிதமாகத் தலையிட்டு அம்மம்மா வைக் கொற இழுவையாக இழுத்துக் கொண்டு குசினிக்குள் செல்வாள்.
“மருமோளின்ட பெண்ணாதிக்கம் இந்தக் கிழட்டிட்டயும் இருக்குது” பொச் சந்தீர எதையோவெல் லாம் சொல்லிப்போட்டு அப்பா சிந்திக்கத் தொடங்கி விடுவார்.
"அம்மா இல்லாத வீட்டில் நான் என்னத்துக்கு” ருசிக்காவுக்கு வீட்டில் இருப்பது இரும்பாலையில் இருப்பதைப் போன்றிருந்தது. அப்பா உச்சாடனம் செய்யும் பெண்ணாதிக்கம் என்ற சொல்லுக்குக் கருத்து விளங்காமல் குழம்பினாள்.
"புலமைப் பரிசில் சோதினையில்
கேட்கவும் கூடும்” சோதினைக்கு வந்து விடலாம் என்ற ஏக்கம் இருப்புக்கொள்ள விடவில்லை. அப்பாவிடம் கேட்பதா? ரீச்சரிடம் கேட்பதா? ஏதடையில் மனம் அலைக்கழிந்தது. அவளுக்கு ரியூசன் கொடுக் க அப் பாவுக் குத் தானே கொள்ளை ஆசை. அப்பாதான் மாட்டிக் கொண்டார்.
"அப்பா பெண்ணாதிக்கமெண்டா எனக்கு விளங்கேல்ல. தற்சமயம் ரெஸ்ருக்கு வந்தா என்னால எழுத ஏலாது." சிணுங்கி ருசிக்கா மூக்கைச் சிந்தினாள்.
"அழப்போற போல குஞ்சு, இரம்மா நான் சொல்லித்தாறன்” அப்பாவின் முகத்தில் நிறைந்த சந்தோஷம் , உரத்த சத்தத்தோடு செருமி, சளியை வெளியில துப்பினார். மகளுக்கு ரியூசன் கொடுக்க அப்பா தயார்.
“பெண்ணாதிக்கம் பெரும்பாலும் உத்தியோகம் பார்க்கிற பொண்டுக ளிட்டதான் கிடக்கு. புருசன்மாரைப் பொருட்படுத்த மாட்டினம். அவைக்கு புருசன்மார் வோச்சர்தான்.” கேட்டுக் கொண்டிருந்த ருசிக்காவின் மனதில் பல பொறிகள் கிளம்பின. அம்மம்மா வின் பேசிசுக்கள் மனதில் விரிந்தன.
"என்ன குஞ்சு விளங்கிச் சா” மகளுக்கு நாள் முழுவதும் இருந்து ரியூசன் கொடுத்தாலும் அப்பாவுக்குப் பொச்சந்தீராது. அதிலொரு தனிப்பிரியம் அவருக்கு.
"உதுக்கா வேண்டியா அம்மாவைக் கனடாவுக்குப் போக விட்டனியள்." அச் சத்தால் சற்று மெதுவாகக் கேட்டாள்.
"அவளென் ன குறைஞ்ச வளா?
109

Page 57
டிரைக்ரானவுடன் அவள் என்னைத் தன்ர கிளாக்கனெண்டு நினைச்சுப் போட்டாள்." அப்பா ஆத்திரம்கொண்டு விட்டார். ருசிக்காவுக்குக் குண்டுசி குத்தியதுபோலக் கடுக்கியது.
"இனி நான் பள்ளிக்குப் போக LDITL6ir"
அப்பாவுக்கு மகள் தடைதாண்டிப் பாய்வது போல் இருந்தது.
"என்னத்துக்கு" அப்பாவின் பற்கள் உராய்ந்து ஒலித்தன.
கனக் கப் படிச் சா எனக் கும் அம் மாவின் ர பெண் ணாதிக் கம் வந்திடும்" ருசிக்கா சொல்லிக்கொண்டே ஓடிப்போய் அம்மம்மாவின் பின்னால் ஒளிந்த நின்றாள்.
"கேட்டியாடா உந்தப் பச்சைப் பாலன்ர கதையை. இப்ப என்னடா சொல்லப்போற" அம்மம்மா மகனோடு
மோதினாள். அப்பா எவ்வித வாக்கு மூலமும் கொடுக்கவில்லை. ஆளை ஆள் முகம் பார்ப்பதில் நொடிகள் நிமிடங்காளகின.
"சரி சரி வெளிக்கிடன் குஞ்சு மயிர் வெட்ட நாளைக்கு பேத்டே தானே" சாரத்தை உரிந்து அப்பா உதறிக் &b ç & G &fT 60 i LFA Ť . ) LÊ DĎ DFT சொன்னதைப் பொருட்படுத்தவில்லை.
" e! LÓ LD T 6.) J L (61f g), ti | | T. அதுக்குப்பிறகு பேத்டே கொண்டாடு வம்” அம்மம்மாவின் கொய்யத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற ருசிக்கா அப்பா முன் அஜாராகிச் சொன்னாள்.
தான் பின்னின வலையில் தானே மாட்டிக்கொண்ட சிலந்தியின் சங்கடம் அப்பாவுக்கு. தன் திட்டங்கள் மெல்லிய இழையொன்றில் ஊஞ்சலாடுவதாக உணர்ந்தார்.
நீங்கள் இந்த நாட்டுப் படைப்பாளிகளை இதயபூர்வமாக
நேசித்ததால் இந்த நாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்களைப்
பணம் கொடுத்து வாங்குங்கள். நீங்கள் இதற்காகச் செலவு
செய்யும் ஒவ்வொரு சதமும் இந்த மண்ணைப் பசளையிட்டுப்
பண்படுத்தும்.
 

காபிரியெல் கெய்லரும் அவரது
அகவாய்மைக் கோட்பாடும்
நெய்தல் நம்பி
அடிமன இயல்புகளை வெளிக் கொணரும் கலைப்பாணி விபரீத பண்பு களைக் கொண்டது. இதனை அகவாய் மைக் கோட்பாடு என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இத்தகைய இயல்புக ளைத் தனது கலைகளில் காட்ட முயன்றவர் காபிரியெல் கெய்லர். (Gabrielle Keiller) Sgsgb60)85uj 56O)6) பண்புகளை இந்த நூற்றாண்டில் கடைப் பிடித்த அதி உன்னத கலைஞர்களில் இறுதியானவர் என காபிரியல் கெய்ல ரைக் குறிப்பிடலாம். இவர் இங்கிலாந் தைச் சேர்ந்தவர்.
இருபதாம் நூறட்றாண்டில் அடிமன இயல்புகளை கலைத்துவ பாணியில் காட்ட முயன்று அதன் பாரம்பரிய எச்சங்களைப் பாதுகாத்தவள் காபிரியல் கெய்லர் என விமர்சகர்கள் வியந்து பாராட்டுகின்றனர். 1995ம் ஆண்டு கெய்லர் மரணித்த போது பின்வரும் சந்ததிக்கு மரபுரீதியாக இவர் விட்டுச் சென்றவை ஒவியச் செல்வங்களும் (Wealth of Paintings) fibu (86.606), UT (63 (Giblf (Works of Sculpture) கையெழுத்துப் பிரதிகளுமே (Objects and Manuscript). S60)636f 6T1960 பேர்க்கில் (Edinburgh) உள்ள நவீன கலைகளின் தேசிய நுழைமடத்தில்
(National Gallery of Modern Art).
வைக்கப்பட்டுள்ளன. அடிமன இயல்பி னைக் காட்டும் கலையினைப் பயில்வதற்கு ஏற்ற நிலையமாக இந்த நுழைவாயில் மாறியுள்ளது.
அடிமன இயல்புகளைக் கொண்ட இலக்கியப் பாணியும் அதற்குப் பின்பும் (Surrealism and After) E, T L fiful 65 GlabuŮ6dff Gg5 Tg5ÜL (The Gabrielie Collection) என்ற இரண்டு நூல்களும் இவரது ஆளுமையை வெளிப்படுத்து கின்ற கலைப் படைப்புக்களாகும். இந்த நூல்களில் கெய்லர் குழிப்பந்தாட்டம் (Golf)(குழிப்பந்தாட்டத்தை இங்கிலாந்து நாட்டிற்காக ஆடியவர் கெய்லர்) உடை யலங்காரம், தோட்டக்கலை, கலை சம்பந்தமான விரிவுரைகள் அனைத்தை யும் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கிலாந்து நூதன சாலையின் பிரித்தானிய புராதன சின்னங்கள் இலாகாவில் விருப்புப் usri GO)6.15 Gig T006 LGOTIT85 (Part time Volunteer) பணிபுரிந்ததன் மூலம் கலைத்துவ சேகரிப்புக்கு இவரின் அணுகுமுறை மிக நெருங் கின நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும்.
முறையான பட்டியல் தயாரிப்பிலும், அல்லது அறிவியல் சார்ந்த புதைகுழி களிலும் நூதனசாலை அறைகளிலுமே புதைமறைவான செய்திகள், சிற்றின்ப
111

Page 58
ரீதியாக அடிமன இயல்புகளைக் காட்டும் இலக்கியப்பணி உருவாவதும், வகைப்படுத்தப்படுவதும் அடங்கியிருப்ப தாக எண்ணுவதில் நாம் இயல்பாகவே ஈடுபாடு கொண்டதில்லை.
முதன்முதலாக 1920ல் நடைமுறைக் குக் கொண்டுவரப்பட்ட, சிலருக்கு மட் டுமே கற்றுக்கொடுக்கக் கூடிய கலை இயக்கத்தின் உணர்ச்சியிழைகள் 1930ல் செழித்து வளர்ந்து பின்பு அது அரசியலிலும் சினிமாவிலும் இசையிலும் இலக்கியத்திலும் எவ்வாறு சென்றடைந் தது என்பதை கெய்லரின் தொகுதி தெளிவாக்குகின்றது. 1960 களின் ஆரம்பத்திலேயே கெய்லர் இவற்றைச் சேகரிக்கத் தொடங்கிய காரணத்தினா லேயே வரலாற்று ரீதியான ஒரு கண் ணோட்டத்தை அவர் ஈட்டிய பொருள் களில் காணமுடிந்தது. உணர்ச்சி மிக்க காலகட்டத்தில் மற்றைய சேகரிப்பாளர் களின் செயற்பாட்டைவிட கெய்லரின் செயற்பாடு மேம்பட்டிருந்தது.
அடிமன இயல்புகளை வெளிக்காட்டும் சஞ்சிகைகள், திரைப்படக் கதை சம்பந்தமான கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள், கலைக் குறிப்பேடுகள் அடங்கிய நூற்றுக் கணக்கான நூல்க ளைக் கொண்டது கெய்லரின் நூல்நி லையம். இத்தகைய நூல்களின் மூலம் கடுமையான உழிப்பின் பின்னணியில் இருப்பவர் அகவாய்மைக் கோட்பாடுக ளைக் கொண்டவரும் கவிஞரும்,
புத்தக அமைப்பாளரும், பதிப்பாளரு மான ஜேர்ஜஸ் ஹங்நெட் (Georges Hugnet) ஆவார். கெய்லர் பொதுமாதிரி இல்லாத படைப்புக்களையும் தந்தார். ஒருசிலர் என்றுமே பார்க்க முடியாத தன் சொந்தப் படைப்பக்களிலே ஒரு உண்மையான கலைஞனின் சந்தோஷ
த்தை கெய்லர் எழுதிக்கொண்டார்.
கெய்லர் ஆழமான கலைத்தத்துவங் களைத் தனது காலகட்டத்திலேயே வழங்கியதன் விளைவே அவரது தொகுப்புகள் வரலாற்று ரீதியான உண்மைகளை உரத்துப் பேசியது. உலகை நாம் பார்க்கும் விதமாகவே அவர் அடிமன இயல்புகளை தனது கலைப்படைப்புகளில் கண்டார். இது அவரது ஆளுமையைப் பிரதிபலித்தது. கணத்தின் மரணத்தைப் போன்று அவரது கலையின் உயிர்த்தத்துவம் மரணித்ததில்லை. அவரது அடிமன இயல்பு கலைப் பாணி சமகால இலக்கியமாக உருவாகும் பொழுது அவரது தொகுப்பின் காலகட்டத்தைப் பொறுத்தவரை கெய்லர் அதிஷ்டம் இல்லாதவராகவே கணிக்கப்பட்டார். 1960 களிலும் 70 களிலும் 80 களிலும் தோன்றிய கலைகள் சொற்புரட்டான தும், நுண்மைவாய்ந்ததும் புலன்களு க்கு இனிய விதத்தில் தொட்டறியக் கூடியதுமாக கெய்லரின் ருசியோடு உருவாக்கப்பட்ட ஆக்கங்களோடு எந்த விதத்திலும் முரண்படவில்லை.
டொமினிக் ஜீவா சிறுகதைகள் 50 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல்
முக்கியமக பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்களில
அவசியம் இருக்கவேண்டிய புத்தகம்.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
[112
 

கருமாந்தரம்
சி. சுதந்திரராஜா
வெளிசகலர் பூச்சைக் கண்டதில்லை. மூளித்தனமாக வெற்றுச் சீமெந்துக் கல்லுகளின் அடுக்கை அப்பியதாகவே வெளித் தேரிந்தது. கீழ்ப் பகுதியிலே செம்மர்ை படர்ந்திருந்தது. மேல் பக்கத்தில்ே சிலந்தியின் கைவண்ணம் காட்டப்பட்டிருந்தது.
சாய்மனைக் கதிரையில் பிரம் பெல்லாம் அறுந்துபோய் இருந்தது. அநேகமாக தம்பிமுத்தரை அக்கதிரை யில்தான் இருந்திடக் காணலாம். ஆனால் அதே கதிரையில் பாலசிங்க மும் சில சமயங்களில் சாய்ந்தபடி படுத்திருப்பான்.
அவனே வீட்டின் செல்லப்பிள்ளை என்பதன் அடையாளமாக அவன் கைப் பெருவிரலில் தடித்துப் பருத்த தங்க மோதிரம் காணப்படும். மோதிர முகப்பில் சிகப்பு - மஞ்சள் - பச்சை வர்ணங்களின ஆங்கிலக் குற்றெழுத்து அவனை எப்போதும் எடுப்பாக்கிக் காட்டிக்கொண்டிருக்கும்.
தம்மூத்தர். தம்மூத்தர். என்றே அயலார் உறவினர் குடிமக்களால் அழைக்கப்பட வாஞ்சையோடு செவி மடுப்பார் தம்பிமுத்தர். நரை குறைவான
போதிலும் முன்தலை வழுக்கையும் பின்தலைக் குடுமியும் அவரது வயதை மதிப்பிட வாய்த்தவையே. செல்லாச்சி அவரோடு ஒத்த முதுமைக் கான முகமன் அங்கம் கொண்டவள். பாக்கு வெட்டி கொண்டு டாக்கை உடைத்து உரலுக்குள்ளே குத்தியிடித்துத் தூளா க்கி மென்று தீர்ப்பதே அவளுடைய அன்றாடக் காரியம்.
இருவரும் மாறிமாறிச் சுரணை ஏற்றிப் பாலசிங்கத்தின் கையாலாக நிலை குறித்துத் திட்டிக்கொண்டேயிருப் பார்கள். வாய்ப்பாட்டுத் தோத்திரங்க ளையே மீளமீள ஒப்புவிப்பார்கள்.
உபதயாற்கந்தோரில் எப்போதும் முதன் முதலில் கசற் வாங்கி வேலை விண்ணப்பங்களை நுணுகி நுணுகி பார்க்கின்றவன் பாலசிங்கமே. அத்தனை ஆர்வம். ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து நச்சரிப்புகளையும் தாய் தந்தையரின் திட்டுதலையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தே விட வேண்டுமெனத் துடித்தான். மூத்தவன் வீரசிங்கமோ முழுநேர விவசாயி. தோட்டம் துரவுகளைப் பார்க்கவே அவன்பாடு சரியாகி விடும். வேறு குடும்பமாகி வேற்றுக் குடித்தனமுமாகி
113
<ಲಿ

Page 59
நாலு பிள்ளைகளைப் பெற்றுவிட்டவன்.
இந்துக் கல்லூரிக்குப் போய் வந்த போதெல்லாம் இந்த அர்ச்சனைகளை அவன் கேட்கவேண்டி நேரிட்டதில்லை. சொகுசாகச் சைக்கிள் சவாரி, வீடு திரும்பியதும் வயிறு புடைக் கச் சாப்பாடு. மாலை நேரத்தில் வொலி போலடி. உடம்பு கட்டுப் பட்டுத் திரண்டது. பாஸ்கற்றுக்குள் எப்போதும் பள்ளிக்கூடப் புத்தகங்கள். அதன் இடைநடுவில் படப்பாட்டுப் புத்தகங்கள்.
"வளவுக்கை விழுந்த தேங்காய ளைப் பொறுக்கிப் பொச்சுரியன், சமைக்கலாம்."
“என்னை உதுக்கே பெத்தனியள்"
இலேசான கோபம் கண்ணில் கொப்பளித்திட பாலசிங்கம் கேட்டான். செல்லாச்சி ஒன்றும் கப்சிப்பாகி அடங்கி விடவில்லை.
"உன்னைப் படிப்பிக்கச் செய்த செலவில ფ2 ([ნ கு மரைக் கரைசேத்திடலாம்"
தம்பிமுத்தர் பிலாக்கணம் வைத்தார்.
பாலசிங்கம் விருட்டென சாய்மனைக் கதிரையை விட்டெழுந்தான். என்றென் றும் கேட்டுக்கொண்டிருக்கிற பல்லவி யேயானாலும் அன்றைய தினத்தில் அவனால் அதைக் கேட்டுக்கொண்டிருக் கும் பொறுமை இருக்கவில்லை. தண் டச்சோற்றைத் தின் பதற்காக சகித்த அவன் மனது அன்றைய தினத்தில் பிரளயப்படுத்தியது. இப்பூமி க்கே தன்னைக் கொண்டு வந்த பிரம்மா க்கள் இருவருக்குமே தன்னுயிரின்
அருமையை உணர்த்தவே துடித்தான்.
"செல்லாக்காக”
அடைமொழிகொண்டு உவமித்தாள். செல்லாச்சி.
படபடத்தபடி மலசல கூடத்தோடு ஒட்டிய தாழ்வாரத்துக்குள்ளே போய் ஒதுங்கிக்கொண்டான் பாலசிங்கம்.
அவன் குறைந்தது.
மறைந்ததும் பேச்சரவம்
மூத்தவன் வீரசிங்கம் தோட்ட வேலைக்கென மர அலுமாரிக்குள் வைத்திருந்த பொலிடோல் குப்பியே பாலசிங் கதி திண் கவனத்தைக் கட்டியிழுத்தது.
"நீ உயிரோட இருந்தாலென்ன செத்தாலென்ன"
தம்பிமுத்தர் சொன்ன வார்த்தைகள் மீள அவன் காதில் எதிரொலித்தது. ஒர்மத்தின் உச்சிக்கு உந்தப்பட்டான்.
குப்பிப் பொலிடோலைப் படக்கென்று திறந்தவன் மிடறு தெறிக்கக் குரல்வ ளையூடு குடித்துக்கொண்டான். எவருமே அவனை அவதானிக்கவில்லை.
அடுத்த காலையில் அங்கே அடித்த பறை மேளங்களின் குரூர ஓசையைக் கேட்டிட முடியாதபடி பாலசிங்கத்தின் செவிப்பறை கல்லாய் உறைந்து விட்டிருந்தது. செல்லாச்சியின் ஒப்பாரி
மாற் று ராகத் தி ல ஒலிக் கதி தொடங்கியது.
"என்னைப் பெத்த ராசாவே.
என்னை எடுக்கச் சொலிற்று எமனிட்டை இருந்து வாருமே.”

லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ் மெனிபெக்சர்ஸ்
நந்தரம்பொத்த குண்டசாலை தொலைபேசி இல. 08-224217, 232574 பெக்ஸ் 94-8-233740
ச பிஸ்கட் உற்பத்தித் துறையில் பன்னெடுங்கால அனுபவம்.
ச லக்கிலேண்ட் பிஸ்கட்
ச அன்றும் இன்றும் இல்லங்களிலுள்ள அனைவரது இனிமைச்
சுவையும், தெரிவும் லக்கிலேண்ட் பிஸ்கட்
ச இப்பொழுது நவீன இயந்திரங்களினால் சுத்தம், சுகாதாரம் பேணி தயாரிக்கப்படும் லக்கிலேண்ட் உற்பத்திகள் நாடெங்கும் கிடைக்கின்றன.
ச லக்கிலேண்ட் பிஸ்கட் சுவைகள் பல
அவற்றில் சில
ர லக்கிலேண்ட் மாரி
ச வளரும் குழந்தைகளுக்கு போஷாக்கு தரும் லக்கிலேண்ட்
(8 DfTrf
ஈ லக்கிலேண்ட் லெமன் பப்
ஈ லக்கிலேண்ட் கிறீம் கிறக்கர்ஸ்சோல்ட் கிரக்கர்ஸ்
ரச லக்கிலேண்ட் ச்சொரிஸ் நட்ஸ்
ச நாவுக்கு சவை சேர்த்து, நானிலமெங்கும் புகழ் பரப்பும்
ஈ லக்கிலேண்ட் பிஸ்கட்டுகளை எல்லாக் கடைகளிலும் கேட்டு
வாங்குங்கள்.
Luckyland Buiscuits
Mill- 115)

Page 60
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத் துறையின் தொடக்கம்
வ. இராசையா
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை இலக்கி யத்தினது தோற்றம், வளர்ச்சி, பண்பு கள் என்பனபற்றிய ஆய்வுகள் இக்கால த்தே விரிவடைந்து வருகின்றன. இந்த இலக்கியத் துறையினது மூலவர் யார், தொடக்கம் எது என்னும் ஆய்வு இவற் றிலே ஒன்று. சம்பந்தன், வைத்தியலிங் கம், இலங்கையர்கோன் ஆகிய மூவரை யும் இதன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக் கும் காரணமான மூலவர்களாக, முன் னோடிகளாக நாம் ஏற்றுக் கொண்டுள் ளோம். இப்பொழுது இந்த ஆய்வு மேலும் ஆழமாகச் செல்லுகின்றது. இது சம்பந்தமான புதிய தரவுகள் முன்வைக்கப்படுகின்றன.
மல்லிகை சஞ்சிகையின் 34ஆம் ஆண்டு மலரிலே செங்கை ஆழியான் அவர்கள் எழுதியுள்ள "ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழகேசரியின் பங்களி ப்பு” என்னும் ஆய்வுக் கட்டுரை இந்த வகையில் மிகவும் முக்கியமானதாகும். அதிலே ஈழகேசரிப் பண்ணையில் பிறந்த சிறுகதைகளைக் குறிப்பிடும் போது அவற்றைப் பலவேறு விதத்தில்
வகைப்படுத்தியும், ஓரளவு கால வரன்முறைப்படி வகுத்தும் அவர் காட்டியிருக்கிறார். அதன்படி, சுயா,
ஆனந்தன் ஆகிய இருவர் முன்னோடிக ளாக இருந்தனர் என்று தெரிகிறது. சுயா 1936 இலும் ஆனந்தன் 1938 இலும் சிறுகதை படைத்திருக்கின்றனர். சுயா அப்போது எழுதிய சிறுகதைக ளும் தரத்தில் உயர்ந்தவை என்பதை செங்கை ஆழியாண் கொழும்பில் நடைபெற்ற சிறுகதை நூல் வெளியீடு ஒன்றிலே பேசும்போது குறிப்பிட்டார். ஆகவே ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு வளம் சேர்த்தவர்களான சம்பந்தன்,
வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியவர்களின் படைப்பாற்றலைப் போற்றுகின்ற அதேவேளை, நமது சிறுகதைக் களத்தின் மூலவேரைத் தேடும் முயற்சியில் நாம் இவர்களையும் கடந்து மேலும் ஆழமாகச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நமது மலையகத் தமிழ் மக்களது எழுச்சிக்கு உழைத்த கோ. நடேசய்யர் அவர்கள் 'திரு. ராமசாமிச் சேர்வையின் ‘சரிதம்' என்னும் ஒரு சிறுகதையைப் புனைந்துள்ளார். 1931ல் பிரசுரமான இக்கதை மலையகச் சிறுகதைகளுள் முதற்கதை எனக் கொள்ளப்படுகிறது. நடேசய்யர் எழுதிய இந்த ஒரேயொரு கதையையும் கணிப்பில் கொள்ளும் போது, ஈழத் தமிழ்ச் சிறுகதையின் ஆரம்பம் 1931 க்குச் செல்கிறது.
மேலே குறிப்பிட்ட செங்கைஆழிய னது பேச்சிலே அவர் கூறிய மற்றும் சில அம்சங்களையும் நாம் உன்னிப் பாக நோக்குதல் வேண்டும். அவர் உதயதாரகை என்னும் ஈழத்து முதலா வது தமிழ்ப் பத்திரிகையில்ே ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை எழுதியுள்ள சிறு கதைகளை நமது கவனத்திற்குக் கொண்டுவந்து, 1875 ஆம் ஆண்டு பிரசுரமான அவரது கதை ஒன்றையும் உதாரணமாகக் காட்டினார். இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு இது:
யாழ்ப்பாணத்திலே கிறிஸ்தவப் போதகள் ஒருவர் மதப்பிரச?ரத்துக்காகக் கிராமியக் குடும்பம் ஒன்றி: குச் செல்கி றார். அவர் படலையுள் நுழைவதைக் கண்டதும் அந்த வீட்டுச் சிறுவன் ஒருவன் ஓடி வந்து, வீட்டு முற்றத்திலிரு ந்த வாங்கைத் தூக்கிக் கொண்டு

போய் மறைத்து வைத்துவிடுகிறான். போதகள் உட்காருவதற்கு வீட்டு உரல் கொண்டுவந்து வைக்கப்படுகின்றது. கவிழ்த்து வைக்கப்பட்ட அந்த உரலே ஆசனமாக போதகர் அதில் அமர்ந்து வீட்டாருடன் உரையாடிவிட்டு புறப்பட்டுச் செல்கிறார். அவர் போனதும் போகாதது மாக அந்த வீட்டுக்காரர் மஞ்சள் கரைத்த நீர் கொண்டு வந்து அந்த உரலைக் கழுவுகிறார். இதைக் கண்டு கொண்ட பாதிரியார் "புதிதாகக் கிறிஸ்த வத்துக்கு வந்தவர்களிலும் பார்க்க பிறப்பால் கிறிஸ்தவர்களாக உள்ளவர் கள் மேலானவர்கள்" என்று தமக்குள் சொல்லிக் கொணி டு அங்கிருந்து போய்விடுகிறார்.
கடந்த நூற்றாண்டில் யாழ் மக்களி டையே கிறிஸ்தவ மத போதனை நடைபெற்ற வகையையும், பாதிரிமார் எதிர்கொண்ட சிரமங்களையும், மத மாற்ற விடயத்தில் அக்கால மக்கள் கொண்டிருந்த மனப்பாங்கையும், அன் றைய கிராமிய வாழ்வின் சில கூறுக ளையும் இந்தக்கதை யதார்த்தமாகச் சித்தரிக்கின்றது. அத்துடன் இந்த நூற்றாண்டில் சிறுகதையின் பண்புகள் பற்றி நம்மிடையே தோன்றியுள்ள எண்ணக்கருக்களுக்கு இயைந்ததாக வும் இருக்கின்றது. இது 125 ஆண்டுக ளுக்கு முன் எழுதப்பட்ட சிறுகதை என்பதை நாங்கள் நினைவில்கொள்ளு தல் முக்கியமாகும்.
உதயதாரகையில் வெளி வந்திருக் கும் இத்தகைய சிறுகதைகளைத் தேடியெடுத்து மறு பிரசுரம் செய்ய வேண்டும். அன்றைய சிறு கதைகளின் பண்புகளையும் தரத்தையும் நாம் கண்டுகொள்வதற்கு இது பயன்படும்.
பேராசிரியர் கைலாசபதி அவர்க ளும், தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பற்றி நூல் எழுதிய சிட்டி - சிவபாத சுந்தரம்' ஆகியவர்களும் நாம் மேலே குறிப்பிட்ட உதயதாரகைச் சிறுகதை
girp di
கள் சம்பந்தமான குறிப்புகளைத் தமது எழுத்துக்களில் சுருக்கமாகத் தந்துள்ள னர் என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
உதயதாரகைக் கதைகளை நமது சிறுகதைக் களத்தில் கொணர்ந்து மதிப் ட்டுக்கு உள்ளாகும்போது, ஈழத்துச் சிறு கதைத் துறையினது ஆரம்பம் 1875ஆம் ஆண்டுக்குச் சென்று விடுவதை நாம் காணமுடியும் என்று நம்புகிறேன்.
ஈழத்துச் சிறுகதை என்று கொள்ளா மல் தமிழ்ச் சிறுகதை எனப் பொதுவாக நோக்கும்போது, சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கதைகளையே இத்துறையின் ஆரம்பப் படைப்புக்களாகப் பலர் கூறிக் கொள்கிறார்கள். இந்தக் கருத்து ஏக மனதாக அங்கீகாரத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை. பாரதியார் எழுதியவை சிறிய கதைகளேயன்றிச் சிறு கதைகள ல்ல எனப் பேராசிரியர் சிவத்தம்பி அவற்றை நிராகரித்து விடுகிறார். பாரதி யாரது சிறுகதைகளைத் தவிர்த்து விட்டு நோக்கினால், வ.வே.சு ஐயர் எழுதிய கதைகளே தமிழில் முதலில் எழுதப்பட்ட சிறுகதைகளாக நிற்கின் றன. அவர் இந்தக் கதைகளை 191517ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் படைத்தார். இதன் பின்பு தான் மாதவையாவினது சிறுகதைகள் தோன்றுகின்றன.
இதன்படி, 1915ஆம் ஆண்டுதான் தமிழ்ச் சிறுகதைகளின் ஆரம்பகாலம் ஆகும்.
இந்நிலையில் உதயதாரகைக் கதைகள் இத்துறையின் வல்லோரால் மதிப்பீடு செய்யப்பெற்று ஏற்றுக்கொள் ளப்படுமாயின், ஈழத்துச் சிறுகதைத் துறையினது ஆரம்பம் 1875 இல் என்றாகிவிடும். அத்துடன் இதுவே சிறுகதைத் துறையினது தொடக்கம் என்பதும் உறுதியாகிவிடும்.
17

Page 61
கம்பியூட்டர் கல்வி
நீங்கள் AIL முடித்தவரா? அல்லது பட்டதாரியா? நவீன கணணி
தொழில்நுட்பத்தை
Power User 6 மாதங்களில் Visual Programmer 12 மாதங்களில் System Analyst 24 மாதங்களில் Computer Professional 36 மாதங்களில்
k p6.a Ggirls) (bulb (Latest Technology)
பாடவிதான உள்ளடக்கம் தொழில் அமைப்புக்களின் தேவைக்கேற்ப ஆராய்ச்சிகளுக்குப் பின் தாயாரிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் இலக்காகக் கொண்ட பயிற்சி (Internet.Focussed Training) உங்களை தொழில் அமைப்பின் தேவைக்கேற்ப பயிற்சி அளிக்கப்படும். Aptech தொழில் வாய்ப்புக்கள் KO h 50,000 திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்திய கம்பனிகளில் தொழில் வாய்ப்புப் பெறுவதற்கு உதவி வழங்கியுள்ளது. Microsoft D-gig & Fairgigs (microsoft Certification) முதலாம் இரண்டாம் ஆண்டுகளில் முறையே MCP அல்லது MCSD சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு u6);55 assiblisgD (p60p60LD (Multi-Model Teaching Methodology) உங்களை ஒரு சிறந்த உயர் தொழிலதிகாரியாக உருவாக்குவதற்குப் பல ஆய்வுகளின் பின் கற்பித்தல் வழிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 59556) (pp56SLib (First in Quality) இந்தியாவின் முதல் கல்விச் சேவைக்கான ISO 9001 பத்திரம் பெற்றுக்கொண்ட அமைப்பு. உலகின் பல நாடுகளிலும் 1100 கிளைகள் (1100 Centres in 20 Countries) 1100 ற்கும் மேற்பட்ட கிளைகள் உலகின் 20 ற்கும் மேற்பட்ட நாடுகளில்
மேலதிக தொடர்புகளுக்கு, நேரில் / தபால்
Julgil : .................. கொள்ளுப்பிட்டியில் 6 ................................... : ألالاه | (ΨΦθυή : . . ΑΡΤΕOH | தொலைபேசி : ... | 320 1/1, Galle Road, Colombo - 03. COMPUTER EDUCATION L Tel 0755 19900/i Tel/Fax: 577780
(118 É
Na

கடிதங்கள் 1
ஜூலை மாத இதழ் கிடைத்தது. அனுப்பியமைக்கு நன்றி. முகப்பில் எனது உருவப்படம். எனது பிறந்த மாதத்தில் (ஜூலை - 13) முதலாவது கதை - இப்போது அதே மாதத்தில் முகப்பில் படம். திட்டமிட்டுத்தான் பிரசுரித்தீர்களோ என யோசித்தேன்.
என்னைப் பற்றிய குறிப்பு எழுதிய நண்பர் ஆப்டீன் அவர்களுக்கும் எனது நன்றியைக் கூறவும்.
நீர்கொழும்பில் எமது குடும்பத்தினர் நடத்திய விழாவுக்கும் சென்று உரையாற்றியமைக்கு மனமார்ந்த நன்றி.
உங்கள் தினமணிக்கதிர் பேட்டி நன்றாக இருந்தது. உங்கள் மனதில் பட்ட தைத் தெளிவாகக் கூறி இருக்கிறீர்கள்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கு புலம் பெயர்ந்தோர் இலக்கிய முயற்சிகள் குறித்து தீர்க்கதரிசன மாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
மலரவுள்ள புதிய நூற்றாண்டில் மல்லிகையின் 35 ஆவது ஆண்டு மலர் மலரும் . இம் மலர் வெளியீட்டின் பொழுது-இலங்கையிலும் அவுஸ்திரேலி யாவிலும் 'மல்லிகை விழா நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அத்து ன் இலங்கையில் மல்லிகை பிரதேசமலர் வெளியிடுவது போன்று சர்வதேசமலரும் எதிர்காலத்தில் (2000 ஆண்டின் பின்பு) வெளியாக வேண்டும்.
மல்லிகையில் எழுதுபவர்கள் வாசகர்கள் பூமிப் பநீ தெங் கும் வாழ்கின்றனர்.
கன 1, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நோர்வே,
டென்மார்க், நியூசிலாந்து, இத்:லி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா இப்படி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் மல்லிகை சிறப்பிதழ்கள் வெளியாக வேண்டும்.
இது குறித்து எதிர்காலத் திட்டம் ஒன்று வகுத்துள்ளேன். பின்பு விரிவாக உங்களுக்கு எழுதுவேன்.
மல்லிகை விழா
இலங்கையில் கொழும்பில் ஒருநாள் முழுவிழாவாக (காலை முதல் மாலை வரையில்) மல்லிகை விழா நடைபெற (8660, Gib.
நான்கு அமர்வுகள்
காலையில் 2 அமர்வுகள்-மல்லிகையில் இதுவரையில் வெளியான சிறுகதைகள் - கவிதைகள் குறித்த கருத்தரங்கு
பிற்பகல் 2 அமர்வுகள்-மல்லிகை ஆசிரியத் தலையங்கங்கள், மல்லிகை யில் வெளியான விமர்சனங்கள் குறித்த கருத்தரங்கு மாலையில் ஒரு அமர்வு - மல்லிகை 35 ஆவது ஆண்டுமலர் வெளியீடும் சிறப்புரைகளும் - மல்லிகை ஆசிரியரின் பதிலுரையும். அத்துடன் ஒரு தரமான கலைநிகழ்ச்சி
இது ஒரு புறமிருக்க, மண்டபத்தின் ஒரு பகுதியில் மல்லிகை இதழ்கள் - மல்லிகைப் பந்தல் வெளியீடுகளின் கண்காட்சி.
முழுநாளும் மல்லிகைக்கென நடத்தப் படும் விழாவாக இது அமையவேண்டும்.
மல் லி கை அபரிமாணிகளைக் கொண்டு ஒரு சூழலை அமைத்து - பணிகளைப் பகிர்ந்தளித்து செய்ய வேண்டும்.
விழாவில் கலந்து கொள்வோருக்கு மதிய உணவும் மாலை தேநீர் விருந்தும் வழங்க வேண்டும்.

Page 62
கட்சி அரசியல் கலப்பற்ற முழுமை யான இலக்கிய விழாவாக இது அமைய வேண்டும். இது எனது நீண்ட கால ஆசை-கனவு. நிறைவேற்ற உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை.
அடுத்த ஆண்டில் அவுஸ்திரேலியா சிறப் பரிதழ் வெளியிட ஆவன செய்கிறேன்.
அதே ஆணி டில் ஐரோப்பரிய சிறப்பிதழும் வெளியிட ஒழுங்கு செய்து தருகிறேன். அவுஸ்திரேலியா,
2
நலம். நலம் மலர்க. எமது நட்பு 30 வருடங்களுக்கு மேற்பட்டது. ஆனாலும் நான் எழுதும் முதலாவது கடிதம் இதுவென எண்ணுகிறேன். காரணம், தாங்கள் எழுதிய "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்" எனும் நூலை ஆறுதலாக வாசித்துப் பெற்ற உந்துதல்தான்.
"நான் கூறுவது உண்மை. உண்மை யைத் தவிர வேறொன்றுமில்லை" என்ற சத்திய வாக்குடன் சில கருத்துக்க ளைச் சொல்ல விழைகிறேன்.
முருகபூபதி.
1. நூலை வாசிக்கத் தொடங்கிய
தும் மூடிவைக்க மனமில்லாமல்
வாசித்து முடித்தேன். காரணம் அத்தகைய அருமையான ஓட்டம்.
2. இசை நாடகங்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு நூல் களை வெளியிட்ட என்னை, விசுவநாததாஸின் வரலாறு, பயூன் செல்லையா பற்றிய குறிப்பு கள் மிகவும் கவர்ந்தன. அவை
1. It islglu 6)61.
3. யாழ்ப்பாணம் சமூகவியலை ஆர யும் ஒருவன் இந்நூலை விடுத்த எந்த ஆய்வும் செய்ய முடியாது 4. இந்நூல் டொமினிக் ஜீவாவின் வரலாற்றை மட்டும் கூறவில்லை ஒரு சமூக வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறது. 5. இரண்டாவது உலக மகா யுத்த காலச் சூழல், இடம்பெயர்வு என்பன இன்றைய எம்மவர் நிலைமையுடன் ஒப்பு நோக்கத்த க்கவை. என்றாலும் சூள்கொண்டு மீன் பிடித்துக் கூழ் காய்ச்சிக் குடித்த அனுபவத்தை இன்றைய இடப்பெயர்வில் யாரும் அனுபவி த்திருக்க முடியாது. பரணியும்
T- (p19.uTg). 6. நீங்கள் நடந்து வந்த பாதையிற் பெற்ற அனுபவங்களிற் சில எனக்குமுண்டு. அதனாலும் நூல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நூலின் அமைப்பும் நன்றாக வுள்ளது. 7. உண்மையில் அரசியற் சித்தாந்த வேறுபாடுகளை மறந்து எழுத்தா ளர்கள் அனைவரும் ஒரே குலம் எனும் உங்கள் பண்பை மெச்சுப வன் யான். இதேகருத்து எனக்கு மட்டுமல்ல செங்கையாழியான், சோ.ப போன்றவர்களுக்குமுண்டு. நிறைவாக உங்கள் முயற்சி அருமையான முயற் சி. அடுத்த பாகத்தையும் விரைவிற் கொணர்க. இறையருள் பாலிப்பதாக, வணக்கம்.
காரை.செ.சுந்தரம்பிள்ளை.
201 - 1/1 ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13. என்ற முகவரியைக் கொண்டவரும், ஆசிரியரும், வெயியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு - 12 பேர் பெக்ட் அச்சகத்தில்
அச்சிட்டு வெளியிடப்பட்டது "
120

* * Rani في
ESTO1966
KANI GRINDING MILLs
Manufacturers of Quality Masala Products
* Chillie Powder * Chicken Masala * Curry Powder * Mutton Masala * Turmeric Powder * Fish fry Masala
No. 219, Main Street, Matale. Tele : 066 - 22425.
The Flavour of sanka
ਨ।
VJAYA
Vijaya General Stores
(Agro Service Centre)
Dealers in Agro chemicals, Sprayers & Wegetable Seeds etc.
No. 85, Sri Ratnajothy Sarawanamuthu Mawatha, (Wolfendhal Street) Colombo - 13. Tele : 327011
Service to the farmers for more than tuo decades.
برس

Page 63
WM|| || K.4 ||
MATAIF
மல்லிகை மாத்
51றித்
PARA EXPOF
鲁
默
壬
 
 
 
 
 
 
 
 

MALAR OCTOBER: 1994)
...
தளைச் சிறப்பு மலருக்கு
வாழ்த்துக்கள்! -
RODUCTS (PVT) LTD.
pOrteTS of Traditional Inkan Foods
Sea AVenue, bombO -3. - 573717