கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2005.07-08

Page 1
囑
III
 

PN
Ο
*
。

Page 2

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த சேது சமுத்திரப் பூதம் கிளம்பி விட்டது. அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நடைபெற்று முடிவடைந்து விட்டன. இந்திய ஆளும் வர்க்கம் தனது அரசியல், பொருளாதார, இராணுவப் பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டே இத்திட்டத்தை முன்னெடுக்க முனைகின்றது. இதுபோன்ற பாரிய திட்டங்கள் பற்றிய சாதக - பாதகங்களும் ஒரு பரந்த பார்வையில் மதிப்பிடவேண்டும். வட இலங்கை, தென்னிலங்கை, தென்னிந்தியா என பகுதி பகுதியாக நோக்குவதால் ஒட்டுமொத்த பாதிப்புக்கள் பற்றிய முழுமையான நோக்கு கிடைக்கமாட்டாது. பாதிக்கப்பட்ட மக்கள் பிளவு படும்போது அதனால் இலாபமடையப்போவது அதிகார வர்க்கங்களே என்று அறிவியல் உலகம் கூட பலம் மிக்க வல்லரசுகளில் உலகமயமாதலின் ஆதிக்கக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. மேலாதிக்க வல்லரசுகள் பிரசாரப் பீரங்கிகளால் உண்மைகள் மறக்கப்பட்டு, திரிபுபடுத்தப்பட்டு பிழையானவை உன்னதமான உண்மைகளாக நிலைநிறுத்தப்படுகின்றன. இதனால் பிரச்சினையின் ஒரு பக்கப்போக்குப் பாணியை ஏற்றுக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள். இது அனைத்து மக்களின் நலனிற்கும் எதிரான தாகும். இந்நிலையில் இவை பற்றிகருத்துக்களை வெளியிடும் புத்திஜீவிகள் மிகுந்த சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். ஆனால்.
வரலாறு என்றும் நேர்கோட்டில் செல்வதில்லை. ஆக்கிரமிப்புகளுக்கும் ஒர் எல்லை உண்டு. சுதந்திரம், சமத்துவம் நோக்கிய மனிதகுல வரலாற்றின் மேல்நோக்கிய சுழற்சி எவராலும் தடைப்படுவதில்லை. அன்று காலனித் துவத்திற்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு போராடிப் பெறாத சுதந்திர உணர்வை கடந்தகாலப் படிப்பினைகளிலிருந்து பெற்று இரண்டாவது சுதந்திரத்திற்கான வாய்ப்பை எம் நாட்டு மக்கள் உணர்ந்து பயன்படுத்தும் வல்லமையைப் பெறவேண்டும்.
-ஆசிரியர் குழு
ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 3
Dipides Clity.....
νιώθανάλινύ
இரு மாத இதழ்
ஜுலை - ஒகஸ்ட் 2005
உரிமைக் குரல் - கவிதை 3 விதைப்பு - 01 அறுபது ஆண்டுகள் . - கட்டுரை 4 அறுவடை - 10
முரண் முள் - கவிதை 8'
வளர்பிறையாய். - சிறுகதை 9 இதழாசிரியர்கள்
O தே. அபிலாஷா GunT. ல் - கவிை இப்போதும் என் மனதி த கு. பாரதி செவ்வி - அழ, பகீரதன் 14 பயில்நிலம் குழு பயம் - கவிதை 21 பொ. கோபிநாத்
தே. ஜனமகன்
உலகப் பட்டினி பற்றிய பத்து புனைவுகள் 22 ந. பிரசாந்த்
ஸைராகலீல் வெளிநாட்டில் - 27 கி. திவாகரன் நாட்டு நடப்பு - கட்டுரை 28 க. அபிராமி
செ. நந்தமோகன் நரை- கவிதை 3. வி. பிரபுநாதன்
செ. கெளரி எதிர்பார்ப்பேதுமின்றி. - கவிதை 32 ந. ரவிச்சந்திரகுமார் தேவையில்லாமல் - கட்டுரை 33 த. பார்த்திபன்
தெ. ஞா. மீநிலங்கோ இன்னும் இங்கே - கவிதை 34 வெளியிடுவோர் போதையில்லா பேருலகம். - கவிதை 35 பயில்நிலம்
59/3, வைத்யா வீதி, கருத்துமேடை - 09 37 தெஹிவளை 5527O74 நீலம் பாரித்த நினைவு - கவிதை 38
அமைப்பும் அச்சும் முகவரி யாருக்கு? - கவிதை 39 "கிறிப்ஸ்'
- 162, டாம் வீதி, வாசகர் மேடை 40 டாம தி,
கொழும்பு
2 bונf8SטTNRונו
 

இங்கு இவர்கள் ܭܰ - குரல் கொடுக்கிறோம் என வந்தன 2. әуеу4рлёе
தலைகள் சில
ஆனால்
நூற்றாண்டுகளாக தலைகள் மாறினாலும் தலையெழுத்தென்னவோ மாறவில்லை
பச்சையும் நீலமும் என மாறினாலும் தலைகள் மட்டும் மாறாமல். பெற்றுக் கொடுத்தன சாதனையை
‘அதிக காலம் அமைச்சர் நிறம் மாறினாலும் குணம் மாறாத இனவாதிகளுக்கு ஒன்று மட்டும் உறுதி பெரும்பான்மையில்லாமலும் GONA கதிரையேற உள்ளது மலையகத் தலைகள் V இவர்களால் இனத்திற்கு வந்ததென்னவோ இழிபெயர் மட்டுமே,
இவர்களால் முடிவது நன்கொடையாக கிடைத்தவையை தட்டி பறித்ததாக கூறி மார்தட்டவே! நடிகர் திலகங்கள் இவர்கள் அவ்வப்போது அரங்கேற்றும் நாடகங்களோ. அம்மம்மா!
இவர்களேமுதலாளிகள் இவர்களே தொழிற்சங்கவாதிகள்
இவர்கள் திட்டமிடும் வேலைகளுக்காக அடிக்கடி வேலை நிறுத்தங்கள் முடிவில் கைமாறுவது பெட்டிகள் மட்டுமே!
குடியுரிமைக்காக அரைநூற்றாண்டாக போராடினார்களாம் யாராவது கூறுங்களேன்.இவர்கள் குடியுரிமையை பறிக்குமாறு.
საuნსRსაქჭRაub 8 ஜூலை - ஒகஸ்டி - 2005

Page 4
அறுபது ஆண்டுகள் கடந்த பின்னர் - அ. செஞ்ஞாயிறு -
வரலாறு நமக்குச் சொல்லியவை
66
அமெரிக்காவில் அணுகுண்டு
களே 2ம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தன”
இது எங்கள் எல்லோருக்கும் பழக்கமான ஒரு கூற்று மட்டுமன்றி எங்கள் மனங்களில் உள்ள முடிந்த முடிவும் கூட. இந்தக் கூற்றின்
உண்மைத் தன்மையை அறிய
நாங்கள் 60ஆண்டுகள் முன்
நோக்கிச்செல்ல வேண்டியுள்ளது.
பயில்நிலம்
1945 யூலை 16: அமெரிக்காவில் அல்மொகொர்டோ (Alamogordo) எனும் இடத்தில் வெற்றிகரமாக அணுகுண்டுப் பரிசோதனை நடாத்தப்பட்டது. இதன் பின்னர் செனட்டர் பிரயன் மக் மோகன் (Brien Mcmahon) 196šTG)JC5LDIIgpy குறிப்பிடுகிறார் 'இது யேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு அடுத்த படியாக வரலாற்றில் மிக முக்கிய விடயமாகும்’
1945 ஆகஸ்ட் Ο6ι b, O9 b திகதிகளில் முறையே ஹிரோசிமா, நாகசாசி நகரங்களின் மீது
அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இதனால் ஒன்றுமறியா 4,47,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல இலட்சம் பேர் கதிர்த்தாக்கத்திற்கு உள்ளாகினர். 'இதன் பின் விளைவு கள் கணக்கெடுக்க முடியாது’’ என்கிறது சர்வதேச அணுசக்தி ஏஜென்சி. அவ்விரு நகரங்களில் எதுவுமே எஞ்சவில்லை. ஜப்பா னைச் சரணடையச் செய்வதற்கா
கவே 1வது குண்டு வீசப்பட்டது
ஜூலை - ஒகஸ்டீ - 2005
 

என்றால் 2வது குண்டு நாகசாசியில் இடப்பட்டது ஏன்?
'முதலாவது குண்டு யுரேனியக் குண்டு என்பதாலும் 2வது குண்டு புருட்டோனியக்குண்டு என்பதுமே இதற்குக் காரணமாக இருக்கும்’ என்கிறார் ஆய்வாளர் ஹாவாட் 6.637 (Howard Zinn) (3LDgjLb 916) i 'நாகசாகியில் இறந்தவர்களும் கதிர்த்தாக்கத்திற்கு உள்ளானவர் களும் அறிவியல் பரிசோதனையின் பலிக்கடாக்களா?' என்ற கேள்வி யையும் விட்டுச் செல்கிறார்.
உண்மையில் குண்டு ஏன் வீசப்
பட்டது?
இதற்கான பொதுவான விடை யாகக் கூறப்படுவது ‘அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் (Harry S Trueman) ஜப்பானின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை இல்லா மல் செய்யவே குண்டுகளை வீசக் கட்டளையிட்டார்’ என்பது இதை விட இன்னுமொரு பெரிய பொய்யே. அமெரிக்கர்களது அணு ஆயுதத்தயாரிப்புக்குக் காரணமாகக் காட்டப்பட்டது அது 'ஹிட்லரு டைய நாட்டு விஞ்ஞானிகளும் ஹிட்லரும் அணு குண்டைத் தயார் செய்கிறார்கள் என்பதே. பிரித்தானிய இரகசிய புலனாய்வு சேவை (SIS) 1943 இலேயே தீர்க்க
மான சான்றுகளுடன் ஜேர்மனி
அணுகுண்டைத்தயாரிக்கவில்லை எனவும் அவை அதற்கான முயற்சி யில் ஈடுபடவில்லை எனவும்
பமில்டுலம்
கூறியது. அமெரிக்கா தன்னுடைய செயற்பாட்டை நியாயப்படுத்தவும் தனது அணுகுண்டுத் தயாரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை (Manhatten Project) தொடர்ந்து கொண்டு செல்லவும் இப் பொய்யைப் பயன் படுத்தியது என்பதுதான் உண்மை.
1945 ஆகஸ்ட் 09இல் அமெரிக்க ஜனாதிபதி ட்மேன் 'இப் புதிய ஆயுதமானது ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் உயிர்களைக் காக்க உதவும் ' என்றார். அணு ஆயுதம் தொடர்பிலும் குண்டுகள் போடப்பட்டது தொடர்பிலும் இதுவே இவரது இறுதிக் கூற்றாக இருக்கவில்லை.
அவர் 1945 டிசெம்பர் 15: "1/4 மில்லியன் மலர்களைப் போன்ற எங்கள் இளம் அமெரிக்க சமுதாயம் ஜப்பானின் இரு நகரங்களைவிடப் பெறுமதியானது'
1948 ஒக்டோபர் : "குண்டு போடப் பட்டதன் மூலம் 1/2 மில்லியன் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டுள் ளார்கள்??
1949 ஏப்ரல் 06 : 'நேராக யுத்தத் தில் ஈடுபடாமல் குண்டு போடப் பட்டதால் 200,000 இளம் அமெரிக் கர்கள் காப்பாற்றப்பட்டிருக் கிறார்கள்." -
இறுதியாக 1949 ஏப்ரல் 28: "அணுகுண்டுகள் போடப்பட்டது மிகச் இதன்
ஜூலை - ஒகஸ்டீ - 2005
சரியானதே.

Page 5
மில்லியன்
உயிர்கள் காக்கப்பட்டுள்ளன'
விளைவாக பல
டரூமன் அணுகுண்டுகள் போடப் படுவதன் மூலம் ஜப்பான் சரண டையும் எனவும் இதனால் 2ம் போரில் சோவியத் யூனியனின் பங்கை குறைத்து விடமுடியும் எனவும் இதன் மூலம் அமெரிக்காவே 2ம் உலகப்போரை
ഉം ബക
வென்றது எனக் காட்டலாம் என நினைத்தார்.
உண்மையில் நடந்தது என்ன?
1945 யூலை 26ம் திகதி அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் கூட்டாக நிபந்தனையற்ற சரணடை யுமாறு ஜப்பானுக்கு எதிராக பிரகடனப்படுத்தின. இதை ஜப்பான் நிராகரித்தது. இதை யடுத்து ஜப்பானுக்கெதிராக யுத்தத் தில் இறங்குமாறு அமெரிக்கா, பிரித்தானிய அரசாங்கங்கள் சோவியத் அரசை வேண்டின. தனது நேச நாட்டுக் கடமைக்கு விசுவாச மாக சோவியத் யூனியன் யால்டா மகாநாட்டு தீர்மானத்தின் அடிப் படையில் இவ் வேண்டு கோளை ஏற்றது.
இவ்விடத்தில் சில விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
1. சோவியத் யூனியனுக்கு எதிரான பாசிச சேர்ந்து
போராட்டத்தில்
ஜேர்மனியோடு
பயில்நிலம்
ஜப்பானுக்கு முக்கியதாக்குதல் சக்தியின் பங்கையளிந்த அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆடும் வட்டங்கள் கிழக்கில் ஏகாதிபத்திய ஜப்பா னின் ஆக்கிரமிப்புக்கு ஊக்கம் அளித்தன. ஜப்பானின் ஆக்கிர மிப்புக் கொள்கையில் இவை தலையிடாததற்கு இதுதான்
35 FTUGTL rb.
2. ஜப்பானிடம் பெரிய இராணு வம் உள்ளதை கவனத்தில் கொண்ட அமெரிக்கா 1946ஆம் ஆண்டுக்கு ஜப்பானில் படைகளை இறக்கு வதில்லை என முடிவு செய்தது.
முன்னதாக
3. ஏற்கனவே யுத்தத்தில் பாரிய இழப்புக்களைச்சந்தித்த பெரிய பிரித்தானியா ஜப்பானுடன் போரில்
வில்லை.
ஈடுபட விரும்ப
4. சோவியத் யூனியனை ஜப்பா ஈடுபடச் செய்வதால் போரின் முடிவில்
னுடன் போரில்
ரஷ்யாவை பலமிழக்கச் செய் வதன் மூலம் தனி வல்லரசாக தான் இருக்கலாம் என்ற அமெரிக்காவின் நப்பாசை.
1945ஆகஸ்ட் 08ம் திகதி சோவியத் யூனியன் ஜப்பான் மீது யுத்தப் பிரகடனம் செய்தது. 1949 ஆகஸ்ட் 09 அன்று உயர் மட்ட இராணுவ கவுன்சில் கூட்டத்தில் ஜப்பானியப்
ஜூலை-ஒகஸ்டி - 2005

பிரதமர் சுட்சுகி பின்வருமாறு குறிப்பிடுகிறார்; 'அணுகுண்டுகள் போடப்பட்டது எங்களது படைப் பலத்திலோ மக்களின் மனநிலை யிலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று காலை சோவியத் யூனியன் யுத்தத்தில் இறங்கியதாளது. மேற்கொண்டு யுத்தத்தை தொடரு வதை இயலாததாக்குகிறது.
ஜப்பானியப் படைகளில் மஞ்சூரியாவில் குவிக்கப்பட்டி ருந்த குவாண்டுவ் இராணுவம்தான் மிகப் பலம் வாய்ந்ததாகக் கருதப் பட்டது. இதில் 10 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இருந்தனர். பாரியளவில் இராணுவத் தளபாடங் கள் அவர்களிடமிருந்தன. அணு குண்டுகளைக் கண்டு ஜப்பான் அஞ்சவில்லை சரணடையவில்லை உறுதி பூண்டது. குவாண்டு வ் இராணுவத்திற்கும் சோவியத்தின் செர்சேனைக்கும்
பதிலாக
இடையே கடுமையான போர்நடை பெற்றது. இப் போரின் விரைவுத் தன்மை குறித்தும், சோவியத் யூனியன் படைத் தலைவர்களின் யுத்திகள் குறித்தும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ஆறு நாட்கள் கடும் யுத்தத்தின் பின் ஆகஸ்ட் 14 lb திகதியன்று ஜப்பானிய அரசாங்கம் சரண
uமில்டுலம்
டைவது என்று முடிவெடுத்தது. ஆனால் போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறுகட்டளையிடவில்லை போர் தொடர்ந்தது. ஆகஸ்ட் 17ம் திகதி தனது சகல தற்காப்பு எல்லை களையும் குவாண்டுவ் இராணுவம் இழந்தது. சோவியத் யூனியன் தனது தாக்குதலை விரைவுபடுத்தியது. 1945 ஆகஸ்ட் 20ம் திகதி குவாண்டு வ் இராணுவம் மட்டு மன்றி ஜப்பானிய இராணுவமும் முழுமையாக தோல்வி அடைந்தது. ஜப்பான் சோவியத் யூனியனிடம் சரணடைந்தது. உலகப் போரும் முடிவுபெற்றது.
அமெரிக்க அணுகுண்டுகள் அப்பாவி மக்களைக் கொன்றதைத் தவிர வேறெதையும் சாதித்து விடவில்லை. சோவியத் யூனியன் ஜப்பானுடன் போரில் ஈடுபட்டி ருந்த அதேவேளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவையே அன்றி வேறெதையும் செய்யவில்லை. பிரிட்டிஷ் பேராசிரியர் பிலேக்கெட் கூறியபடி 'இந்தக் குண்டு வீச்சுக் கள் இரண்டாம் உலக யுத்தத்தின் கடைசி இராணுவநடவடிக்கையாக இருக்கவில்லை, மாறாக ருஷ்யா வுக்கு எதிரான இராஜதந்திர கெடுபிடி யுத்தத்தின் முதல் நடவடிக்கையாக விளங்கின'.
W"4060 - $ճգՍL - --vu

Page 6
ഗ്ഗങ്ങ് (ഗുണ്
ータ ாஜயசீலன் -
நாமாய் நினைத்து நாள்தோறும் தண்ணிரை ஊற்றாத போதும் உயர்ந்து வளர்கிறது.
கிளைபரப்பி முள்ளுச் செடியொன்று நமக்கிடையில்!
நமக்கிடை முன் நட்புச் செடியொன்று நட்டு வைத்தோம். அதற்கென்று பாத்தி கட்டி, 'அந்தர்க் கணக்காக وPL-L) از - : வாய்க்கால் உருவாக்கி, மூன்றுவேளை நீரூற்றிப் பார்த்தோம். நவீன முறைகளினை பயன்படுத்தி அச்செடி படாமல் இருப்பதற் பிரார்த்தனையும் செய்தோம். அழகாய் அது. மலரை 'நமக்கு நல்கும்’ நம்பிநின்றோம்.
என்றாலும் கிளைபட்டு இலைதளிர்கள் கெட்டு அது வாடிப் போய்யிற்சி
ஆனால் நாம் விரும்பாத போதும் அட நமக்குள் கிளைவிட்டு முள்ளுச் செடிதளைத்துத் தினந்தோறும் வளஞ் செழிக்கிறது. அதைவெட்டும் வழியறியோம். அதைத்தறிக்க முயன்று தோற்றுத் தளர்ந்து போனோம். கிளையொடிக்கப் புறப்பட்டோம்.
முள்கிழிக்கக் காயமுற்றோம். நமதுடலில் அதாற்காயம் வளர்கிறது நிதம்! என்ன நாம் செய்வோம்?
பயில்நிலம் 8 ஜூலை - ஒகஸ்டி - 2005
 
 

ளெம் நிறைந்த திருநாட்டின் செம்பாட்டு கிராமத்து மைந்தன் ஆகாஷ்! அவன் உயர்தர வகுப்பின் புகழ்வாய்ந்த கணித ஆசிரியர்; அம்மாவும் அவனும்
ஈழமணித்
கொண்ட சிறிய குடும்பம் அவனது. ஆகாஷின் அப்பா அவனது சிறுவயதிலேயே ஒரு விபத்தில் இறந்து போனார்! அம்மாதான் மிகவும் கஷ்டப்பட்டு
தங்கையும்
உழைத்து அவனையும் தங்கையை யும் படிக்கவைத்தார். இப்பொழுது ஆகாஷ் தன் உழைப்பில் அம்மாவையும் தங்கையையும் எந்தக் குறையுமின்றி காப்பாற்று கிறான். அவன் வீட்டில் எப்பொழுதும் சந்தோஷம் நிறைந் திருக்கும். தங்கையும் அவனும் அடிக்கடி செல்லச் சண்டைகள் போட்டுக் கொள்ள எப்போதும் கலகலப்பாய் இருக்கும் வீடு இன்று நிசப்தமாய் இருந்தது! ஆகாஷ் காலையிலேயே சோகமாய் தன் அறைக்குள் அமர்ந்திருந்தான்! அவன் உலகமே இருண்டு கிடந்தது.
oமில்டுலம்
ஹவு(பிறைய40 69(ტ
வெண்ணில்(!
- Sitessaort -
அவனது மகிழ்ச்சியான உலகம் நேற்று இரவு அவன் வீட்டிற்கு பக்கத்திலுள்ள வெண்ணிலா வீட்டிற்குப் போனபின்பு காணாமல் போயிருந்தது!
வெண்ணிலா" ஆகாஷின் அயல் வீட்டு தேவதை ஆகாஷ் அடிக்கடி அவள் வீட்டிற்கு சென்று அவள் அப்பாவுடன் உலக விடயங்கள் யாவும் பேசுவான்! வெண்ணிலா சிறுவயதிலேயே தாயை இழந்தவள். அந்தக்குறை தெரியாமல் அவளது அக்காவும் அப்பாவும் அவள் மேல் அன்பைக் கொட்டிவளர்த்தனர்! அவள் காலில் ஒரு முள் தைத்து விட்டாலே பெரிய களேபரம் அந்த வீட்டில் நடக்கும்! அப்படியான செல்லப்பெண்! வெண்ணிலாவின் அக்கா அதிகம் படிக்கவில்லை. தங்கையை நிறைய படிக்க வைத்து ஒரு நல்லவன் கையில் கொடுக்க வேண்டும் என்பதே அவள் ஆசை, தங்கையை வளர்ப்பதற்காய் தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவள்!
வெண்ணிலா படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. உயர்தரத்தில் விசேட
ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 7
சித்திகளுடன் பரீட்சையில் சித்தி “சொல்லாத காதல் செல்லாத
யெய்தினாள். மேலே படித்து ஒரு வைத்தியராக வரவிரும்பினாள். அந்த வேளையில்தான் அவளுக்குப் பிரச்சினை தொடங்கியது! ஊரில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள தன் மகனுக்கு திருமணம் வெண்ணிலாவைப் பெண் கேட்டு
செய்வதற்காக
வந்தார். வெண்ணிலாவின் அப்பா சந்தோஷம். கஷ்டப்பட்டாலும்
வுக்கும் மிகவும் “நாங்கள் வெண்ணிலாவாவது வெளிநாட்டில் போய் நல்லா வாழட்டும்’ என
நினைத்தனர். வர்த்தகருக்கு சம்மதமும் தெரிவித்தனர்.
வெண்ணிலா வீடு வந்ததும்
அக்காவும் அப்பாவும் அவளுக்கு பல அறிவுரைகள் கூறி அவளை திருமணத்துக்கு சம்மதிக்க வைத் தனர். வெண்ணிலா தனது கல்விக் கனவுகளை தன் குடும்பத்தினரின் நிம்மதிக்காய் கலைத்து விட்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித் தாள்!
அடிக்கடி வெண்ணிலா வீட்டுக்குப் போகும் ஆகாஷிற்கு முதல் நாள் இரவு வெண்ணிலாவின் திருமணம் பற்றிக் கூறினார் வெண்ணிலாவின் ஆகாஷ் அதிர்ந்து போனான். எல்லாமே தன் கையை விட்டுப் போனது போல் இருந்தது! ஏனெனில் அவன் மனதில் குடி யிருந்தாள் வெண்ணிலா!
பமில்டுலம்
அப்பா!
y
காசாய் ஆகிவிடும். என்ற திரைப்பட்ப் பாடல் வரி திடீரென அவனுக்கு ஞாபகம் வந்தது.மெல்ல அவள் அப்பாவுடன் வாதாடத் தொடங்கினான்! ‘அங்கிள்! வெண்ணிலா சின்னப் பிள்ளை தானே! ஏன் இப்ப அவசரப்பட்டு கலியாணம் பேசிறியள்?” என்றான். “தம்பி! எங்கட வீட்டு நிலைமை தெரியும் தானே! நாங்கள் தான் கஷ்டப்படுறம்! அவளாவது நல்லா வாழ வேணும்! இந்த சம்மந்தம் நல்ல இடம். பெடியன் வெளிநாட்டில நல்ல வேலையில இருக்கிறான்! பணக்காரப் பையன்! வெண்ணி லாவை மகாராணி மாதிரி பார்த்துக் கொள்ளுவான்! என்றார் வெண்ணிலாவின் அப்பா!
“அங்கிள்! இவ்வளவு காலமும் இங்க வைச்சு செல்லமா வளத்திட் டீங்கள் ஊரிலேயே ஒரு நல்ல
பார்த்து கொடுத்தால் உங்களின்ர கண் ணுக்கு முன்னாலேயே இருப்பா தானே!” என்றான் ஆகாஷ்.
பெடியனை கட்டிக்
“ஊரில உழைக்கிற காசு குடும்பத்துக்கே காணாது! வெண்ணிலா ஆசைப்பட்ட
தெல்லாம் வாங்கிக் கொடுக்க ஊரில் இருந்து உழைக்கிற பெடியன்ர சம்பளம் பத்தாது! வெளிநாட்டு மாப்பிள்ளை தான் சரிவரும் தம்பி!” என்றார் அவர்.
ஜூலை - ஒகஸ்டீ - 2005

அதற்கு மேலும் ஆகாஷால் வாதாட முடியவில்லை! அமைதியாய் விடை பெற்று வீட்டுக்குச் சென்று தன் காதலின் தற்கொலைக்காகவும் வெண்ணிலாவுக்காகவும் அழ மட்டும்தான் முடிந்தது!
வெண்ணிலாவின் திருமணம் இனிதே நிறைவேறியது. மணவறை யில் வெண்ணிலாவையும் அவள்
கணவனையும் சோக விழிகளுடன் வாழ்த்திவிட்டு வந்தான் ஆகாஷ்
கணவனுடன் வெளிநாடு சென்று
தெரிந்தான்! t 泌 猪
இப்படியே மூன்று மாதம் கடந்தது. இப்பொழுதெல்லாம் ஆகாஷ்
வெண்ணிலா வீட்டுக்குப் போவதே
இல்லை. அவள்ை மறப்பதற்கான முயற்சிகளில் அதுவும் ஒன்று
திடீரென ஒரு நாள் காலையில் வெண்ணிலா வீட்டில் அழுகுரல் கேட்டது. ஒடிப்போனான் ஆகாஷ்! அங்கு வெண்ணிலாவைக் கட்டிப் பிடித்து கதறியபடி அவள் அக்காவை யும் கதிரையில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த வெண்ணிலாவின் அப்பாவையும் பார்த்ததும் திகைத் துப் போனான்!
oயில்டுலம்
வெண்ணிலா மெலிந்து குழி விழுந்த 6)յո լգ եւ முகமுமாய் கண்ணிருடன் நின்றாள்!
கண்களும்
ஆகாஷ் மெல்ல அவளது அப்பா வின் அருகில் சென்று "அங்கிள்! என்ன நடந்தது? வெண்ணிலா ஏன் திரும்பி வந்தவா?” என தயங்கித் தயங்கிக் கேட்டான்.
அவர் மெல்ல விக்கி விக்கி கூறினார் “தம்பி அந்தப் பெடியன்
சரியில்லையாம்! அங்க ஏற்கனவே ତ୍ବ ଓ பெண்ணை
கலியாணம்
ய் திருக் கி ற ர ன T ம் ,
வெண்ணிலாவை ஒரு வேலைக்
காரியாய் தான் நடத்தினானாம். வெண்ணிலா எப்படியோ அவனிட ருந்து தப்பிச்சு அங்க இருக்கிற
ம் அகதிகள் முகாமில தங்கி அந்த
முகாம் ட்ெ
ப்ொறுப்பதிகாரிகள் அவளை இங்க அனுப்பி வைச்சிருக்
శ్లో స్థ "భ கினம்!” என்றார்
ஆகாஷ் திகைப்பு மாறாமல்
நின்றான்! “என்ர தங்கச்சியை
மகாராணி மாதிரி வாழவைப்பான் எண்டு அவனுக்கு கட்டி வைச்சமே! இப்ப அவளின்ர வாழ்க்கையே பாழாப் போட்டுது ஆகாஷ். நீங்கள் அன்டைக்குச் சொன்ன மாதிரி ஊர்ப் பெடியனை கலியாணம் பண்ணி இருந்தால் இண்டைக்கு இந்த நிலை எங்களுக்கு வந்திருக்காது!" என்று கதறினாள் வெண்ணிலாவின் அக்கா!
ஜூலை - ஒகஸ்டீ -2005

Page 8
"அக்கா! கவலைப்படாதீங்கோ! எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். நீங்க அழுது வெண்ணிலாவோட கவலையையும் கூட்டாதீங்க!” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி னான்! அதே சம்பவம் நிகழ்ந்து மேலும் ஆறு மாதங்கள் கடந்தது. ஆகாஷ் தன் அம்மாவுடன் வெண்ணிலா வீட்டுக்குச் சென்று தான் வெண்ணிலாவை காதலித் ததையும் அவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை அவர்கள் தேடியதால் தன் காதலை சொல்ல முடியாமல் போனதையும் கூறி அவளை முழு மனதுடன் தான் மனைவியாக ஏற்கத் தயாராக இருப்பதையும் கூறினான்!
வெண்ணிலாவின் அப்பாவும் அக்காவும் மகிழ்ந்து போனார்கள்! ஆனால் வெண்ணிலாவோ “ஆகாஷ்! உங்கட விருப்பத்தை நான் மதிக்கிறன்! ஆனா இப்ப எனக்கு இன்னொரு கலியாணம் செய்ய விருப்பமில்லை! என்ர மனக் காயங்கள் ஆறின பிறகு நீங்களும் காத்திருந்தால் அப்ப கலியாணம் செய்யலாம்!” என்றாள். ஆகாஷ் அவள் கருத்தை ஆதரித்து அவளுக்காய் காத்திருப்பதாய் கூறி அவர்களிடமிருந்து விடை பெற் றான். அந்த ஆகாய வெண்ணிலா வும் மெல்ல வானத்தில் எட்டிப் பார்த்து சிரித்தது பூமியின் வெண்ணிலா வளர்பிறையாக வாழப்போகும் நாளையெண்ணி!
பயில்டுலம்
l.
10.
வினாக்கள்-16 'மெயின்காம்ப்' என்ற நூலின் ஆசிரியர் யார்? 2012ல் ஒலிம்பிக்ஸ் எங்கு நடைபெறவுள்ளது?
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? புகழ் பெற்ற அஜந்தா குகைகள் எத்தனை உள்ளன?
மூதாதையரின் மரபு முறை பற்றிய அறிவியல் துறை எப்பெயரால் அழைக்கப்படுகிறது? அம்மை நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? கொப்பன்கேகனை தலை நகராகவுடைய நாடு எது?
2006 முதல் க.பொ.த.
உயர்தர மாணவர்களுக்கு
நடை பெறும் தகவல் தொழில்நுட்ப பரீட்சை யின் பெயர் என்ன?
போபால் விஷ வாயுக் கசிவு எப்போது ஏற்பட்டது? கடல் மட்டத்திற்கு கீழே அமைந்துள்ள விமானநிலையம் எது?
ஜூலை - ஒகஸ்டி - 2005

ந. ༤ ཚེ་ I ത്ത
シ 袋。′ 。 பன்னெடுங் கால்ம்'
பிரியா தோழிகள் என பலரும் வியப்பர்
இது
நம் நட்புச் செடி நம் நட்புப் பாடல் நம் நட்பின் இடம் என பலப் பல கூறினாய் நம் இருவரின் பெயரினையும் இணைத்து பெரும் புரட்சி செய்ததாய் மேசையிலும் கதிரையிலும் பொறித்து வைத்தாய் ஒர் நாள் நீ மாணவத் தலைவியாவதற்காய் நீ செய்த பிழையின் பழியை என் மீது சுமத்த நம் நட்பு புரட்சியானதென்று பொறுப்பேற்றேன் அன்று
பாவம் அவள் மேடை ஏறுவதில் பெரு விருப்பம் கொண்டவள் நம் நட்பின் அடையாளச் சின்னங்களை எண்ணி என் மனம் பல நாள் பங்கேற்க மறுத்து நின்றது
பயில்டுலம்
பாடசாலைப் பருவத்தை பிரியும் வேளை கூட 'பகிரத் தேவையில்லை நம்' கையெழுத்துப் பிரதியை நாம்தான் என்றுமே பிரியப் போவதில்லையே' என நீகூறிய வார்த்தை இப்போதும் என் மனதில்
வருகின்ற எதிர்காலம் ஆளுமை தர வேண்டி ஆசைகள் பல மனதோடு கொண்டிருந்தேன்
நல்லதோர் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கும் வேளைதனில். என் விருப்பும் வெறுப்பும் நன்கு அறிந்து அதை பொய்யுரைத்தன்றோ பறித்துச் சென்றுவிட்டாய்
இப்போதும் கூட உன்னைப் புரியவே முயற்சிக்கின்றேன் நம் நட்பின் அடையாளங்களையும் உன் புரட்சிகர நட்பின் வார்த்தை ஜாலங்களையும் எண்ணி.
( - 8ീs - 2005

Page 9
దాదాభిమిGది a8 تفتگوlga uఊ 8ARaఉt-anan ଗeଣ୍ଟର୍କ
அப்படியே இரு" என்ற கவிதைத் தொகுப்புக்குப் பின்னர் வேறு தொகுப்புக்களை வெளியிடவில்லை?
அப்படியே இரு கவிதைத் தொகுப்பு சில நண்பர்கள் ஊக்குவித்ததனாலேயே வெளிவந்தது. அன்றைய சூழல் யாழ்ப்பாணத்தில் மிகவும் மோச கரமானதாகவே கருதுகிறேன். யாழ்ப்
பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை எனக்கொள்ளப்பட்ட காலத்திலேயே அந்நூல் வெளிவந்தது. வெறுமனே கோயில் திருவிழாக்களில் மட்டுமே அல்லது சைவத்திருநாட்களில் மட்டுமே १४४ * * *ॐ : * ॐ இரவில் ஊரடங்கு நேரம் தளர்த்தப்பட்டு மக்கள் ஒன்று கூடும் காலம் அது. இத்தகைய சூழலில் யாழ்ப்பாணத்தில் ஒரு துளிர்ப்பை உந்துதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவை நூலாக : அந்நூல் வெளி யீட்டை ஒரு காரணமாக வைத்து ஊரில் ஒரு ஒன்றுகூடலை ஏற்படுத்த வேண்டும் காலையடி மறுமலர்ச்சி மன்ற செயற்பாடுகளையும் முன்னிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஊர்ச்சனத்தை எல்லாம் கூட்டி ஊரிலேயே வெளியீட்டு விழாவை நடத்தினார்கள். அதற்குப்பின் அவ்வாறான தேவைகள் எனக்கோஎனது நண்பர்களுக்கோ எழவில்லை. இன்று நிறைய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிறைய இளைய தலைமுறையினர் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை உற்சாகப்படுத்துவதே எனது முனைப்பாக இருக்கிறது. நூல் வெளியிட வேண்டிய தருணம் வரும்போது எனது இரண்டாவது தொகுப்பு நிச்சயம் வெளிவரும்.
繼
தாயகம் ஆசிரியர் குழுவில் ஒருவர் என்ற வகையில் உங்கள் அனுபவங்கள் எத்தகையது?
தாயகம் இதழ் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே அதன் பிரதம ஆசிரியர் தணிகாசலம் அவர்களின் தணியாத தாகமாக இருந்து வருகிறது. அதற்கு உறுதுணையாக
பயில்டுலம் 4. ജ്ഞേ - ക്ലീം - 2005
 
 
 
 

இருப்பதே எனது பணியாக இருக்கிறது. 1995 இடம் பெயர்வுக்குப் பின் பத்திரிகைகள், சஞ்சிகை வெளியீடுகள் அற்ற சூனியத்தில் சாவகச்சேரியிலிருந்து மீளவந்து குடியமர்ந்த தாயகம் ஆசிரியர் எனது வீடு தேடி வந்து தாயகம் தொடர்ந்து வெளியிடவேண்டிய அவசியத்தையும் இலக்கியப் பணியாற்ற வேண்டிய காலத்தின் தேவையையும் வற்புறுத்தினார். எனது வேலைச் சுமையின் மத்தியில் இதற்கு ஒழுங்காக ஒத்துழைப்பதற்கு முடியாவிட்டாலும் இதழை மாத இதழாக வெளியிட முனைப்புடன் ஈடுபட்டேன். தாயகத்திற்கான அச்சியந்திரம் இல்லாத சூழ்நிலையில் புதிதாக ஒரு அச்சியந்திரம் வாங்கி செயற்பாட்டில் முனைந்தோம். இருப்பினும் எம்மால் இதழை மாத இதழாக வெளிக்கொணர முடியவில்லை. 1997 மே மாதம் தாயகம் இடம்பெயர்வுக்குப் பின் வெளிவந்தது. தாயகம் இதழ் கனதியாகவும் அதே நேரத்தில் மக்கள் மத்தியில் அரசியல் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளிவர வேண்டும் என்பதில் எமது ஆசிரியர் குழு ஆர்வமாக இருந்தமையால் இந்த காலதாமதம் ஏற்பட்டது. 16 பக்கம் அல்லது 28 பக்கத்துள் இதழை வெளியிட்டிருந்தால் இடம் பெயர்வுக்குப் பின் முதல் முதல் வெளிவந்த இதழ் என்ற பெயர் தாயகத்திற்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
தாயகம் விமர்சன அரங்கின்போது தாயகம் இதழின் அமைப்பு துறவிகள் நடத்தும் பத்திரிகை போன்றிருப்பதாக நாடகவியலாளரான ரதிதரன் குறிப்பிட்டிருந்தார். இதனை மாற்றியமைத்து தற்போது தாயகம் இதழ் சிறப்பாக இருக்கிறது என்று எல்லோரையும் சொல்ல வைப்பதே அதன் ஆசிரியர் குழுவில் ஒருவன் என்ற வகையில் எனது பணியாக இருக்கிறது.
உங்கள் இலக்கிய உலக பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
நான் சிறுவனாக இருந்த போது அண்ணன்மார் இளவயதினராக இருந்தார்கள். 60களின் அந்தம் அல்லது 70களின் ஆரம்பமாகலாம் என நினைக்கிறேன். அவ்வப்போது அவர்கள் கே. எம். வி. கே என்ற கழகத்தை உருவாக்கி இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பெருவளவிலிருந்துதுரத்தப்பட்டபோது எனது வீட்டுக்கு முன் உள்ள வளவைத் துப்பரவாக்கினார்கள். அந்த வளவில் சிவராத்திரிநித்திரை முழிப்பிற்கான ஆயத்தம் செய்த போது எமது தாயார் பாம்பு பூச்சிகளுக்குப் பயம்காட்டி ஏசியதால் அந் நிகழ்வை எங்கள் வீட்டுப் போட்டிக்கோவுக்கு மாற்றியிருந்தார்கள்.
பயில்டுலம் 5 ஜூலை - ஒகஸ்டி - 2005

Page 10
பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் நாம் எல்லோரும் கூடியிருந்தோம் புத்தகங்கள் எல்லாம் வைத்திருந்தார்கள் எனது அண்ணன்மார், மைத்துனன்மார், அவர்களது நண்பர்கள் எல்லோரும் பலவிடயங்களை பேசிக் கொண்டிருந்ததாக ஞாபகம். அச்சமயத்தில் கே.எம்.வி.கே என்ற பெயரில் ஒரு கையெழுத்துப்பிரதியை கண்ணுற்றேன். இப்படியும் எம்மால் செய்யமுடியும் என்ற எண்ணம் அப்போதே முகிழ்த்தது. விக்கிரமாதித்தன் கதைகளை வாசித்து அதில் வந்த ஒரு கதையை நாடகமாக்கி வைத்திருந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கோயில்கட்டி விளையாடும் காலம். நானும் எனது நண்பர்களும் இணைந்து மேடை கட்டி நாடகங்கள் எழுதி நடித்தோம்.
1973 டிசம்பர் என நினைக்கிறேன். அப்போது கே.எம்.வி.கே கழகமும் தேவகோபாலகிருஷ்ண நாடக மன்றமும் இணைந்து மறுமலர்ச்சி மன்றம் என்ற அமைப்பு ஊரில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம். கோயிலில் திருவெம்பாவையின் போது வழமைக்கு மாறாக சதுராட்ட நிகழ்வு (சின்னமேளம்) நிகழ்ந்த சமயம் மேடையில் சத்தியாக்கிரகம் செய்த எனது அண்ணன்மாரும் மைத்துனரும் மண்டை உடைபட்டு, பல்லுடைபட்டு, கையுடைபட்டு நின்றபோது ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்த எனக்குள் கடவுள், கோயில் பற்றிய பல கேள்விகள் உருவாகின. இன்றுவரை சமூகத்தில் அக்கேள்விகள் கேள்விகளாகவே இருப்பதாக உணர்கிறேன். இச்சமயத்தில் காயமுற்ற எனது அண்ணன்மாரான அ. சந்திரஹாசன் அவுஸ்ரேலியாவில் கட்டிடகலை வல்லுநராகவும் அ. குலேந்திரன் கொழும்பில் பிரதிச் சுங்கப் பளிப்பாளராகவும் மைத்துனர் ந. இரவீந்திரன் வவுனியாவில் கல்வியியல் விரிவுரையாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இந்த சம்பவம் மட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் நான் ஆன்மீகச் சேற்றுக்குள் வீழ்ந்து என்னை நானே அழித்துக் கொண்டி ருப்பேன். இலங்கை வங்கியில் கூட என்னால் கடமையாற்றியிருக்க முடியாது.
1976ல் என்று நினைக்கிறேன். காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினர் நூலகம் ஒன்றை தார்பீப்பா நகரங்களால் அடைக்கப்பட்ட ஒரு கொட்டிலில் அமைத்திருந்தார்கள். அங்கே "காலைக்கதிர்' என்ற கைழுெத்துப்பிரதி இருக்கக் கண்ணுற்றேன். அதன் இதழ் ஆசிரியராக சோ.தேவராஜா (இன்று அவர் சட்டத்தரணியாகவும் சத்திய ஆணையளராகவும் இருக்கின்றார்) எனக் குறிப்பிட்டிருந்தது. கூச்ச சுபாவம் தனிமைப் போக்கும் உள்ள எனக்கு அவருடன் அதிகம் பேசிப்
பயில்நிலம் ஜூலை - ஒகஸ்டீ - 2005

பழக்கமில்லை. அவ்விதழில் என்னைவிட ஒரு வயது கூடிய அன்பர் பேரம். விஜயநாதன் எழுதிய கவிதையை வாசித்தேன். எனக்குள் ஏற்கனவே முகிழ்ந்திருந்த சஞ்சிகை வெளியிடும் ஆர்வத்தை நண்பர்களுடன் இணைந்து செயற்படுத்தத் தொடங்கினேன். கலைமுத்துக்கள் என்ற சஞ்சிகையை மிகவும் ஆச்சரியப்படத் தக்கவகையில் நடத்தியதாக ஞாபகம். அதில் உண்மைச் சம்பவங்களை கோர்வைப்படுத்தி ஐந்து திருடர்களும் ஒரு மாங்காயும் என்ற தொடர்கதை எழுதி நண்பர்களிடம் வாங்கிக் கட்டியிருக்கிறேன். 1978, 79 களில் புத்தகங்களை தேடித்தேடி இரகசியமாக வாசிக்கும் விடலைப்பருவம் பத்திரிகையும் வானொலியுமே தொடர்பு ஊடகமாக இருந்த காலம் எனலாம். முற்றிலும் நானாகவே ரதன் முத்து என்ற பெயரில் ஒரு கையெழுத்துச் சஞ்சிகையை உருவாக்கி நண்பர்களுக்கு கொடுத்தேன். அப்படி இரண்டு இதழ்கள் வெளியாகின.
1983, 84களில் நண்பர்களுடன் விவாதித்து தர்க்கம் புரிகின்ற இளமைப்பருவத்தில் நானும் பேரம். விஜயநாதனும் இணைந்து சிறுசுகள் என்ற பெயரில் சஞ்சிகையை ஒன்றை கையெழுத்துப் பத்திரிகையாகவும் பின்னர் தட்டெழுத்திலும் வெளியிட்டோம். ஏழு இதழ்கள் வரை வெளிவந்ததாக ஞாபகம். பலர் இதில் எழுதினார்கள். பல நூல்களில் இவ்விதழ் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறே எனது இலக்கிய உலக பிரவேசம் நிகழ்ந்தது. உங்களுடைய கவிதைகளில் சமூக அவலமே கருக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? -
இரண்டாம் உலகயுத்த காலப்பகுதியில் எனது தாயாரின் குடும்பம் கோலாம்பூரில் அவரது தந்தையார் காணாமற் போனபின் கப்பலில் குடும்பமாக ஊர்வந்து சேர்ந்தனர். அவர் வரும்போது ரூபா இரண்டா யிரம் உடன் வந்ததாகவும் தனது மாமனார் ரூபா ஆயிரத்தைப் பெற்று சோக்குப் பண்ணிவிட்டார் என்றும் மிகுதிப் பணத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கியதாகவும் இடியப்பம் தோசை சுட்டு விற்றும் உடுப்புத் தைத்துக் கொடுத்தும் வாழ்ந்ததாகவும் 25 வயதில் மணமுடிந்ததாகவும் அத்திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் கதைகதையாக சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதைகளில் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகள் சமூகத்தில் இருப்பதை என்னால் சிறுவயதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. எனது அண்ணன்மார் அவர்களது நண்பர் பொதுவுடமைச் சிந்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அக்கட்சியின்
பயில்நிலம் w ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 11
கிளையினை ஏற்படுத்தி செயற்பட்டார்கள். அவர்கள் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள் வர்க்க வேறுபாடுகள் நமது நிலை பற்றிய விளக்கங் களைப் பெறக்கூடியதாக இருந்தது. அக்காலத்தில் புதுவை இரத்தின துரையின் ஒரு தோழனின் காதல் கடிதம் என்ற கவிதையினால் கவரப்பட்டேன். முருகையன், சிவசேகரம் ஆகியவர்களின் கவிதைகள் என்மேல் கணிசமான அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. காலையடி மறுமலர்ச்சி மன்ற கூட்டங்களில் கவிதை எழுதி வாசித்து வந்த என்னைதாயகம் இதழுக்கு எழுதுமாறு அதன் ஆசிரியர் குழுவினர் தூண்டினர். இத்தகைய பின்னணிகள் என்னைச் சுற்றியிருந்தமையே எனது கவிதைகளில் சமூக அவலம் கருக்கொண்டிருப்பதற்கான காரணம் எனக் கருதுகிறேன்.
உங்களது முதலாவது கவிதை எச்சூழலில் உருவாகியது ?
முதல் கவிதையைப் பற்றிச் சொல்வதைவிட முதலில் பாதிப்பு ஏற்படுத்திய கவிதையைப் பற்றி சொல்லலாம் எனக் கருதுகிறேன். க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்த நேரம் எனது நண்பன் ஒருவர் நாளைக்கு நடக்கவிருக்கும் பரீட்சையின் பேப்பர் அவுட் ரியூட்டறியில் வகுப்பாம் வந்து சொல்லிவிட்டுப் போறாள். நான் போறன்’ என்று சொல்லிவிட்டு போனான். எனக்கு அது பிடிக்கவில்லை நேர்மை, நியாயம், உண்மை, சத்தியம் என்ற உன்னதங்களைச் சொல்லிச் சொல்லியே எனது தாயார் என்னை வளர்த்திருந்ததால் பேப்பர் அவுட்டாம் என்ற வார்த்தையைக் கேட்ட எனக்கு வெறுப்பும் ஆத்திரமும் பேரிட்டு வந்தது. இதன் எதிரொலியாக பேப்பர் அவுட்டாம் என்ற தலைப்பில் கவிதை எழுதி மறுமலர்ச்சி மன்றக் கூட்டத்தில் வாசித்தேன். எல்லோருமே கவிதையை பாராட்டினார்கள். பின் இக்கவிதையை செப்பனிட்டுதாயகம் இதழில் வெளியிட்டபோது கோமதி அக்கா கோபப்பட்டது எனக்கு இப்பவும் ஞாபகத்தில் உள்ளது. இக்கவிதையே இலக்கிய உலகுக்கு என்னை இனங்காட்டியது எனலாம்.
அப்படியே இரு தொகுப்பின் முன்னுரையில் கவிதை ஒரு கூட்டு முயற்சியாகவே எண்ணத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?
எனது ஒவ்வொரு கவிதையின் பாடுபொருளுக்குள்ளும் பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக அப்படியே இரு தொகுப்பிலுள்ள பெண்ணிலைக் கவிதைகளில் எனது அம்மா, சகோதரிகள், தோழிகள்; எனது மனைவி, என் இளமைக்காலத்தில் நான் ஆர்வப்பட்ட பெண்கள்
பயில்டுலம் 8 ஜூலை - ஒகஸ்டீ - 2005

என பலர் இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஊடுருவியே அவர்களை கவிதைகளில் கொண்டு நிறுத்தியுள்ளேன். அவ்வகையினை நான் கவிதை என்பது கூட்டு முயற்சி எனக் குறிப்பிட் டேன். அவர்களே அனேகமாக எனது கவிதைகளில் பேசியுள்ளார்கள். நான் அவற்றை வெளிக் கொணர்ந்துள்ளேன் அவ்வளவே. இன்றைய ஈழத்து கவிதைபற்றிய உங்களுடைய பார்வை எவ்வாறு உள்ளது?
ஈழத்துக் கவிதை பற்றிய நான் தமிழகத்தில் இருந்த போது பலரும் வியந்து கூறுவதை கேட்டிருக்கின்றேன். இன்று ஈழத்து கவிதைகள் தரமானவையாகவும் அதன் பாடுபொருட்கள் விரிவானதாகவும் இருப்பதாகவும் கருதுகிறேன். ஆயினும் பத்திரிகைகளில் வெளியிடப் பட்ட கவிதைகள்தரமானவையாகவும் விரிந்து நோக்குடையதாகவோ இருப்பதில்லை. குறிப்பாக நாட்களை வெளிநினைவூட்டும் கவிதை களைச் சொல்லவாம். தேர்த்திருவிழாவிற்கு வெளியிடப்படும் கவிதை களை பார்க்கும்போது பத்திரிகைகளில் மேல் கோபமே வருகிறது. பாமுலா கவிதைகளை விட்டுவிட்டு கவித்துவமும் வீச்சும் மிக்க கவிதை களை பத்திரிகைகள் பிரசுரித்தால் ஈழத்துக் கவிதை மேலும் செழுமை யடையும்.
உங்களுக்கு பிடித்தமான கவிஞர்கள்.
ஆரம்ப காலத்தில் வைரமுத்து, மு. மேத்தா, காமராசன், அப்துல் ரஃமான், ஈழத்தில் முருகையன், மஹாகவி, புதுவை இரத்தினதுரை மேமன்கவி, சிவசேகரம் என விரியும்.
பிறகு மனுசயுத்திரன், கலாப்பிரியா, ஈழத்தில் சேரன், சோலைக்கிளி, சோ.பத்மநாதன், இப்ப ஜெயசீலன், கருணாகரன், திருக்குமரன், தணிகையன் என விரியும்.
வங்கித் தொழிலின் நெருக்கடிகள் மத்தியில் ஒரு கவிஞனாக எவ்வாறு உயிர்க்க முடிகிறது?
மனிதனானவன் தனிமனிதன், குடும்பம், சமூகம், தொழிலகம் என்ற நான்கு தளங்களில் வாழவேண்டியவனாக இருக்கிறான். எல்லாமே ஒத்திசைவானதாக இருந்தாலே அவனால் நிறைவாக இருக்கமுடியும். அவ்வகையில் நான் கொடுத்துவைத்தவன் எனவே கருதுகிறேன். இவ்வாறு நான் அனைத்துத் தளங்களிலும் இருந்து கொண்டு வாழுவதற்கு எனது துணைவி உறுதுணையாக இருப்பதாலேயே என்னால் ஒரு கவிஞனாக உயிர்க்க முடிகிறது.
பயில்நிலம் 9 ఫ్లోబణ = భావిdu12 = 2005

Page 12
பயில்நிலம் பற்றிச் சில வார்த்தைகள்?
நான் கையெழுத்துச் சஞ்சிகைகள் வெளியிட்ட காலத்தையும் பயில்நிலம் வரும் காலத்தையும் ஒப்பிட்டுப்ப்ார்க்கும் போது பயில்நிலம் ஒரு மைல்கல் எனவே தோன்றுகிறது. பயில்நிலத்தில் ஒவ்வொரு ஆக்கங்களும் சிறப்பாகவே இருக்கின்றன. ஆயினும் இளைஞர்கள் மானுட விடுதலையை நோக்கி நகரவேண்டிய தருணம் இது. புரிந்து கொள்ள பயில் நிலம் ஊக்குவிக்க வேண்டும்.
இளைஞர்கள் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள மூத்த தலைமுறையினருடன் நெருக்கமான உறவுகளை பேணி அவர்களது அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வது அவசியம் எனவே நான் கருதுகிறேன்.
விடைகள்-16 1. மொஷாட் 6 ஹென்றிறைசிங்கர் 2. அந்தீஸ் மலைத்தொடர் 7. சம்ட் ஹரிரி 3. லிஸ்பன் 8. பிரசன்ன விதானகே 4. ஒஸ்ரொஸ்கி 9. ஸ்டீவ் பக்னர் 5. வில்லியம் ஷேக்ஸ்பியர் IO. 1958
கடந்த இதழில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான இல, 12, ருத்திரா மாவத்தை, விடைகளை எழுதி நூற் w
வெள்ளவத்தை பொதியை பரிசாகப் பெறுபவர் :
செல்வன். யசோதரன்
கருத்து மேடை 10 க.பொ.த. உயர்தரமாணவர்களிற்கு நடைபெறும் பொது ஆங்கிலப்
பரீட்சை (General English) உண்மையில் பயனுடையதுதானா?
oமில்டுலம் 20 ஜூலை - ஒகஸ்டீ - 2005

பிரிவு புரிதல் தரும் ரணம் கிளறும்
உலகம் நோக்கும் ܣܼܿܢ பார்வையின் கோணம் பொறுத்து சரி பிழை நிர்ணயமாகும். k தத்துவ சுகம் தரும் - தாலாட்டு ଦ୍ବିର୍ତ୍ତି
குறை பல கூறும். . இடர் பல வரினும்- இடித்துரையா ஒத்தூதிகள் - துதி பல பாடும்.
காலமும் தேவையுமறியா - திட்டங்கள் தீட்டும், கற்பனையில் சுதந்திரம் வாங்கும் கைதட்டல் கிளர்ச்சி தூண்டும் கைகிழித்து வீரத்திலகமிடும் ஆணிவேரறுத்துப் பின் பசுமை பேசி - போக்கு மாற்றும் தானே விருட்சத்தின் விழுதென்று- ஓர் கட்டுக்கதை வீரநடை போடும். . . மறுசீரமைப்பு சட்டம் ஒழுங்கு. . சாத்தானின் வேதமாகும் வீண்கதை பேசி வீரத்தியாகியாகி. . . சீ. . . . ச்சீ. . இதெல்லாம் தமாசு !!
- Uargar -
tつ。
ܧܼܓܰܠ ܢܠ
பமில்நிலம் 2 ஜூலை - ஒகஸ்டி - 2005
ശ്

Page 13
உலகப் பட்டினி பற்றிய பத்து புனைவுகள்
70 கோடி மக்களுக்கு உண்பதற்குப் போதுமான உணவு இல்லை. பட்டினி என்பது ஒரு புனைவு அல்ல ஆனால் இந்தப் புனைவுகள் பட்டினியை ஒழிக்கவிடாழல் எம்மைத் தடுக்கின்றன.
புனைவு 1 : எல்லோருக்கும் போதுமான உணவு இல்லை.
உண்மை :
புனைவு 2 :
உண்மை :
பமில்நிலம்
பெரும்பாலான மக்களை கொழுக்கச் செய்வதற்கு போதுமான
அளவு உணவு உலகிலே உண்டு.
0
உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது இரண்டு கிலோ உணவு கிடைக்கக் கூடியதாய் உள்ளது. ஒரு கிலோ தானியம், அவரை, கடலை, அரைக் கிலோ பழ வகை, மரக்கறிகள், அரைக் கிலோ பால், முட்டை, இறைச்சி. மிகப் 'பட்டினியால் வாழும் நாடுகள்’ கூட அவர்களின் மக்களுக்குத் தேவையான உணவை கொண்டுள்ளது. இவற்றில் பல உணவை ஏற்றுமதி செய்யும் நாடுகள்.
இயற்கையே குற்றவாளி.
பெறக்கூடிய திறன் உள்ளவர்களுக்கு உணவு என்றுமே
கிடைக்கிறது. கடின காலங்களில் பட்டினி வாட்டம் ஏழைகளையே பாதிக்கின்றது. இது இயற்கை நிகழ்வுகள் எல்லை தாண்டும்போதே நிகழ்கிறது.
0
தெற்காசியா, ஆபிரிக்கா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் பேரிழப்பின் எல்லையிலேயே வாழ் கின்றனர். ஏனெனில் அவர்களுக்குரிய நிலங்கள் வல்லாளர் களிடம் இருப்பதால் அவை மறுக்கப்படுகின்றமை, கடன் பழுவின்பிடியில் சிக்கியுள்ளமை அல்லது அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகின்றமை.
சமூக நிறுவனங்களும் கொள்கைகளுமே யார் உண்பது, யார் பட்டினியால் வாடுவது என்பதைத் தீர்மானிக்கின்றன. மேற்குலகில் பல வீடற்ற மக்கள் ஒவ்வொரு குளிர்
காலத்தின் போதும் குளிரினால் இறக்கின்றனர் ஆனால்
இதன் பொறுப்பை காலநிலையின் மீது செலுத்த முடியாது.
22 ஜூலை - ஒகஸ்டி - 2005

புனைவு 3 அளவுக்கதிகமான மக்கள் தொகையினர்
உண்மை :
உலகம் முழுவதும் பிறப்பு வீதம் விரைவாக சரிந்து வருகிறது. சனத்தொகைப் பரம்பலால் ஒரு பொழுதும் பட்டினியை விளக்க முடிவதில்லை.
6 சில மூன்றாம் உலகப் பிராந்தியங்களில் இடைநிலை
மாற்றங்களை முன்னைய இறப்புவீத வீழ்ச்சியைத் தொடர்ந்து பிறப்புவீத வீழ்ச்சியும் ஆரம்பமாகி உள்ளது. விரைவான மக்கள் தொகைப் பெருக்கம் பல நாடுகளுக்கு கவலை தருவதாக அமைந்துள்ளது. ஆனால் மிக அடர்த்தி யான மக்கள் தொகையையும் பட்டினிக் கொடுமையையும் கொண்டுள்ள ஒவ்வொரு பங்களாதேசுக்கும் இணையாக பட்டினியையும் தொகையான உணவையும் ஒருங்கே கொண்டுள்ள நைஜீரியா, பொலிலியா, பிரேசில் போன்ற நாடுகளும் உள்ளன.
விரைவான மக்கள் தொகைப் பெருக்கம்தான் பட்டினிக் கான மூல வேராகக் கொள்ள முடியாது. பட்டினியைப் போலவே சமத்துவம் இன்மை, மக்களைப் பெரும்பாலும் ஏழைப்பெண்களை அவர்களின் பொருளாதார வாய்ப்புக் கள், பாதுகாப்பு போன்றவற்றில் பயன்பெறுவதில் இருந்து தடுக்கின்றன. காணி உரிமை, தொழில்கள், கல்வி, உடல் நலம் பேணல், முதியோர் பாதுகாப்பு போன்றன பெரும் பாலான மக்களுக்கு கிட்டாமல் போகின்ற சமூகத்தில் மக்கள் பெருக்கமும் பட்டினியும் இணைவான விளைவு களாகவே இருக்கும்.
புனைவு 4 சூழலா அல்லது உணவா என்பது வியாபார நோக்கத்தின்பால்
உண்மை :
LouÔòRadio
முன்வைக்கப்பட்டது ஒன்றை இழந்துதான் மற்றையதைப் பெற (լpւգԱյլb. கைத்தொழில் விவசாயம் மண்ணைத் தரமிறக்கிறது. எமது உணவு ஆக்க மூலங்களை வேரறுக்கிறது. சூழலுக்கு ஏற்புடையதான மாற்று நிலைகள் அழிவை விட ஆக்கப் பாடுகளையே அதிகம் தடுக்கின்றன.
• கொல்லிகள் பெரும்பாலும் ஏற்றுமதிப் பயிர்களுக்கே
பயன்படுத்தப்படுகின்றன. இவை பசியால் வாடும்
23 ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 14
மக்களுக்கு உதவுவதில் ஒரு மிகச் சிறிய பங்கையே ஆற்றுகின்றன. இதேவேளை மேற்குலகம் கறையற்ற அழகுத் தோற்றமுடைய பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு உள்ளடைப்புச் செய்கின்றன. அவற்றில் ஊட்டப் பெறுமானம் பற்றியோ அதன் ஊட்ட மேம்பாடு பற்றியோ அக்கறைப்படுவதே இல்லை.
புனைவு 5 ; பசுமைப் புரட்சிகள் தான் இதற்குச் சரியான தீர்வு. உண்மை : 1960களிலும் 1970களிலும் பசுமைப் புரட்சி ஆக்கப்பாடுகளில் வளர்ச்சியைக் காட்டின. பட்டினிக்கு மூல வேரான சம மின்மைக்கு தொழில்நுட்பத்தால் அறைகூவல் விடுக்க முடியாது. V * சில தானிய உற்பத்தியில் சிறப்பான பாரிய பண்ணைகளில் ஆக்க வளர்ச்சியை சுமைப் புரட்சி ஏற்படுத்தினாலும் நீண்டகாலப்போக்கில் மண்வள இழப்பு, பயிர் பல்வகைமை இழப்பு, என்பன மிக மிக அதிகம். ஒரு சில தானியப் பயிர்களை பாரிய பண்ணைகளில் பயிரிடுவதன் மூலம் ஆக்கப் பெருக்கத்தை அடைந்தாலும் பட்டினியை ஒழித்துவிட முடியாது. ஏனெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட பொருளாதார வலுவே மேலதிக தானியங்களை யார் வாங்குவது என்பதை தீர்மானிக்கின்றது. * பசுமைப் புரட்சி மூலம் பெரிய வெற்றிகளைக் கண்ட இந்தியா, மெக்சிக்கோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தானிய விளைவிப்பும் ஏற்றுமதியும் அதிகரித்த போதும் பட்டினி இன்னும் அங்கே தாண்டவமாடிக் கொண்டே இருக்கின்றமை கண்கூடு. உயிரியற் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன பசுமைப் புரட்சி’ சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும். இது பட்டினிப்பட்டாளத்தை மேலும் அதிகரிக்கும். புனைவு 6 எமக்குப் பாரிய பண்ணைகள் தேவை. உண்மை : சிறிய கமக்காரர்கள் ஏக்கருக்கு நான்கு ஐந்து மடங்கு அதிகமான விளைச்சலை அடைகிறார்கள். காணிச்சீர்திருத்தம் மூலம் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்த முடியும்.
oயில்நிலம் 24 ஜூலை - ஒகஸ்டீ - 2005

புனைவு 7 :
உண்மை :
666O768 :
உண்மை :
uமில்நிலம்
• உரிமைகள் பாதுகாக்கப்படாமல் மூன்றாம் உலக குத்தகைக்
கமக்காரர்களின் மேம்பாடுகள், பயிர் சூழல் மாற்றுச் செய்கை (சுழற்சிப் பயிர்ச் செய்கை), தரிசு நிலங்களை நீண்டகால மண்வளப் பெருக்கத்திற்காக விட்டுவைத்தல் போன்றவற்றுக்கு ஊக்குவிப்புத் தரமுடியாது. காணியை மீள் பதிவு செய்வதன் மூலம் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தலாம். பண்ண்ை நிலங்களை சிறு சேற்று நிலங்களாக மீள் பகிர்வு செய்வதன் மூலம் விளைச்சல் பெருக்கத்தை 80 விகிதமளவில் அதிகரிக்கலாம் என உலக வங்கி பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நடத்திய ஆய்வு மதிப்பீட்டின் மூலம் கண்டறிந்துள்ளது.
திறந்த சந்தை முறைமை பட்டினியை ஒழிக்கும்.
ஏழைகள் உணவுப் பொருட்கள் வாங்க பணம் இருந்தால்தான் சந்தை தொழிற்படமுடியும்.
புவியின் ஒவ்வொரு பொருளாதாரமும் சந்தை முறையுடன் அரசை இணைப்பதன் மூலமே வாடகை ஒதுக்கீட்டையும் பொருட் பகிர்வையும் செய்கின்றன.
பொருளாதார ஓரிடத் திரட்சியை தடுக்கும் முக்கிய செயற்பாடாக உண்மையான வரிகள், கடன்கள், காணிச் சீரமைப்புகள் வழி ஏழைகளின் கொள்ளல் ஆற்றலால் பரந்துபட வைப்பதும் அரசின் இன்றியமையாத கடமை யாகும். தற்போதைய தனியார்மயப்படுத்தலும் அதற்கான விதியாக்கங்களும் எங்களை எதிர்த்திசைக்கே இட்டுச் செல்கின்றன.
கட்டற்ற வியாபாரமே இதற்குப் பதில்
பல வறிய நாடுகளில் உணவுப் பயிர் ஏற்றுமதிகள் உள்ளுர் உணவு உற்பத்தியை நசுக்குவதன் மூலம் செழித்துப் பெருகி யுள்ளது மட்டுமல்லாமல் பட்டினி நிலையும் தொடர்கிறது.
()
வறுமை ஒழிப்பு தொடர்கையில் வியாபார மேம்பாட்டுச் சூத்திரம் கேவலமான தோல்வியைத் தழுவியுள்ளது. இதேவேளை பிரேசிலில் சோயா அவரை உற்பத்தியும் ஏற்றுமதியும் அமோகமாக நடைபெறுகிறது. ஏற்றுமதி
25 ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 15
புனைவு 9 :
உண்மை :
செய்யப்பட்ட சோயா அவரை ஐரோப்பிய, ஜப்பானிய கால்நடைகளுக்கு உணவாகிறது. இதேவேளை பிரேசிலில் பட்டினிப் பிணியால் சிக்கி உழல்பவர்கள் தொகை 1/3 இலிருந்து2/3ஆக அதிகரிக்கின்றது.
பெரும்பாலான மக்கள்தாம் தம் மண்ணில் உற்பத்தி செய்த பொருட்களையே வாங்க முடியாது மிக மிக வறியவர் களாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை விவசாய வளங் களைக் கடடுப்படுத்துவோர் இவற்றை வருவாய்ச் செழிப்புள்ள வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்கின் றமை மறுக்கப்பட முடியாதது. .
பலிக்கடா ஆகிப்போனவர்கள் மிகப் பட்டினியால் வாடுவதால் தங்களது உரிமைக்காகப் போராடுவதில்லை.
எங்கெங்கு மக்கள் அல்லற்பட்டுதுயருருகிறார்களோ அவர்கள் தம் உரிமைக்காக போராடுகிறார்கள் அந்த உரிமைகளைப்
பெறுவதில் உள்ள தடைகளை செல்வந்த உலகம் இல்லாமல்
செய்திட உதவ முடியும்.
0 வறிய மக்கள் உண்மையாக முனைப்பற்று இருந்தால்
அவர்களில் மிகச் சிலரே பிழைத்து வாழ்வார்கள். உலகெங்கும் மெக்சிக்கோவின் சியப்பாசில் (Chiapas) சப்பட்டிஸ்டார்ஸ் (Zapatistas) தொட்டு இந்தியாவின் விவசாயிகள் இயக்கம் போன்ற மாற்றம் வேண்டிய இயக்க முனைப்பாடுகள் நடைபெற்ற வண்ணமேயிருக்கின்றன. மக்களை அவர்கள் பாட்டில் சுதந்திரமாக செயற்பட விட்டால் அவர்கள் தங்களைத் தாங்களே போசித்துக் கொள்வார்கள். இதற்கு தடைகளை ஏற்படுத்துவன பாரிய நிறுவனங்கள், மேலைநாட்டு அரசுகள், உலக வங்கி, சர்வதேசநாணய நிதியக் கொள்கை.
புனைவு 10 : எமக்குத் தேவையானவை மேன்மேலும் நிதியுதவிகளே
உண்மை :
பயில்டுலம்
வெளிநாட்டு உதவி மாறாநிலையினை ஏற்படுத்துவது மட்டு மல்லாமல் நிதியுதவி பெறும் நாட்டின் உள்ளுர் உணவு உற்பத்தியையும் வேரறுக்கிறது.
26 ஜூலை - ஒகஸ்டீ - 2005

o எங்கு அரசு சமூகத்தின் சிறந்த கூட்டத்தினருக்கென
செயற்பாட்டாளராக நடக்கும் போது நிதியுதவிகள் பட்டினி மக்களைச் சென்றடையத் தவறுவது மட்டுமல்லாமல் அம் மக்கள் அரசுக்கு எதிராக செயலுறுத்தும் சக்திகளுக்கு ஆதரவுத் தூணாக செயற்படும் சக்தியாகவும் உருவாவார்கள். அந்த அரசு கட்டற்ற வியாபாரம், கட்டற்ற சந்தைமுறைக் கொள்கை களைச் சுமத்தி உணவு உற்பத்திகளைச் சரித்து அதன் விளைவால் ஏற்றுமதியை மேம்படுத்தி ஆட்சியில் தொடர்ந்து இருக்க ஆயுதங்களை அணிதிரட்டும்.
அவசரத் தேவை உதவிகளின் விளைவுகள் முடிவில் பல்தேசியத் தானியக் கம்பனிகளை செல்வம் கொழிக்கச் செய்வதுடன் மட்டுமல்லாமல் அவ் உதவிகள் பசித்தோரை சென்றடைவதேயில்லை. அத்துடன் உள்ளூர் உற்பத்தியும் கவனத்தில் எடுக்கப்படுவதும் இல்லை.
ep Giv b : World Hunger: 12 Maths தமிழில் : தெ. ஞா
வெளிநாட்டில்.
முழு நிலவின் ஒளியில் முழு நெல்லியின் அடியில் முழுப் பேரும் கூடியிருந்து அனுபவித்த நிலாச் சோறின் மகிமையை மழுங்கடித்து விட்டது
அடுத்த வீட்டில் ஜொலிக்கும் வண்ண வண்ண சேலைகளின் அழகிலும்
புழுங்கும் காசோலைகளின் கனத்திலும்
ஒவ்வொருவரையும் தனது மாய வலைக்குள் இரும்புப் பிடியாக கவர்ந்து கொண்டிருக்கிறது
மொத்தத்தில் மனிதனின் சுயத்தை, நாகரிகத்தை சிலுவையில் ஏற்றி அறைந்துவிட்டது சர்வாதிகாரியாக உலா வருகிறது
பயில்நிலம்
5ؤؤها 5
27 ஜூலை - ஒகஸ்டி - 2005

Page 16
incG ہ:ثداز
இன்றைய நாட்களில் பத்திரிகையை திறந்தவுடன் எமக்கு காணக் கூடியதாக இருக்கும் செய்தி "படுகொலைகள்' அதுவும் தலைநக்ரில் அடிக்கடி நிகழும் இந்த படுகொலைகள் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் நடைபெற்று வருவது, மக்களின் பாதுகாப்பு பற்றிய கேள்வியையே உருவாக்குகிறது. எவரும் எப்போதும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சநிலை இலங்கையில் தோன்றியுள்ளது. தலைநகரின் பாதுகாப்பே இப்படியிருந்தால் தலைநகருக்கு வெளியே சொல்லவுந்தான் வேண்டுமா, அங்கேயும் குறிப்பர்க் வடக்கு கிழக்கில் அரசியல் படுகொலைகள் மலிந்து போயுள்ளன. இந்த கொலைத் தருக்குதல்கள் கொலைச் சங்கிலிகளாக பழிக்குப்பழி என்று தொடர்ந்து கொண்டேயிருப்பது மனித சமூகத்தின் எதிர்கால சமநிலைக்கு நிச்சயமாக ஊறு விளைவிக்கும். ஆனால் சென்ற ஆண்டு கொலை செய்யப்பட்ட நீதிபதி சரத் அம்பேபிட்டிய மற்றும் அவரது மெய்பாதுகாவலர் கொலை சம்பந்தப்பட்ட கைதிகளை பிடித்து அவர்களுக்கு ம ரணதண்டனை வழங்கியிருப்பது முற்றுமுழுதாக காவல் துறையினர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விடும் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நீதிபதியின் கொலை வழக்கில் அக்கறை செலுத்தும்
காவல்துறை ஏறாவூரி:ே1ழைச்சேனையிலோ? அல்லது காலியிலோ?
கொல்லப்படும் குடிமகன் கொலை தொடர்பிலும் குற்றவா ரிகளை இ ண்டு தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இந்தப்படுகொலைகளின் பட்டியல் இனியும் நீளாது தடுக்க முடியும்.
படுகொலை கலா ரத்த ல் மக்களின் மத்தியில் நிலவும் அச்சம் போகும்.
நாட்டு மக்களின் பாதுகாப்பு இவ்வாறு கேள்விக்குறியாகி நிற்கும் சமயத்தில் உலக நாடுகளு ன் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் இராணுவ ஒப்பந்தங் களை செய்து கொள்ள்வு ள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன:இந்த இராணுவ ஒப்பந்தத்தின் போர் ஆயுதங்களை லகுவில் கொள்வனவு செய்யலாம் என்றும் அறியக் கிடைக்கிறது. இந்த செய்திகள் அண்மைக்காலமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் உலக நாடுகளிற்கான பயணங்களை வைத்து பார்க்கும் போது உண்மை போலத் தெரிகின்றன. அத்தோடு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் இவ்விஜயங்கள் குறித்து
uயில்நிலம் 28 ஜூலை - ஒகஸ்டி - 2005
 
 
 
 

அறிக்கைகள் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொடுத்த கேள்விக்கு அரசு உறுதியான பதிலையும் வழங்கியிருக்கவில்லை. இது இவ்வாறிருக்க பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு 67 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன. ஆதரவாக ஐ.தே.க, ஜே.வி.பி. இ.தொ.கா முதலியன வாக்களித்திருந்தன. எதிராக தமிழ் கூட்டமைப்பினருடன் சேர்ந்து ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுடன் இராணுவ ஒப்பந்தங்களை செய்ய முயற்சி செய்து வருவதனையே குறிக்கிறது. பொதுக்கட்டமைப்பு தொடர்பில் இலங்கையின் அரசியலில் கடந்த காலங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தலிட்டு ஆட்சி அமைத்த இன்றைய அரசாங்கத்தில் இருந்து ஐ.ம.சு.கூபங்காளிக்கட்சியான ஜே.வி.பி விலக்கியிருக்கிறது. அத்துடன் நாடாளாவிய ரீதியில் உண்ணா விரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதேசங்களுக் கிடையிலான சமத்துவத்தினை வளர்க்கக்கூடிய பொதுக்கட்டமைப்பு வரைபுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் பலர் குரல் கொடுத்திருந்தமை வேதனைக்கு உரியதாயிருக்கிறது. ஆனால் இத்தனை ஆர்ப்பாட்டங்களையும் மீறி ஜனாதிபதியின் தளராத தன்மையுடன் பொதுக்கட்டமைப்பு மீது நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், ஆண்டாண்டு காலமாக தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல்வாதிகள் மக்களின் நலனில் அக்கறை காட்டி வந்துள்ளமையால் 2006 நவம்பரில் நடப்பதாய் அரசு அறிவித்திருக்கும் ஜனாதிபதி தேர்தல்களுக்கான ஏற்பாடுகளாக இவை இருக்குமோ என்ற சந்தேகமும் மக்களில் இழையோடியிருக்கிறது. ஆக எல்லா அரசியல் வாதிகளும் சுயநலம் என்பது எங்கோ ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஐ.தே.கயின் செயற்பாடுகளும் அதையே கட்டிக் காட்டுகின்றன. 2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறும் ஐ.தே.க அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஐ.தே.க எதிர்க்கட்சியாக இருந்ததில் செய்திருக்கக்கூடிய விடயம் எதுவென்றால் இன்றுவரை ஆளுங்கட்சிமீது
பயில்நிலம் 29 ஜூலை - ஒகஸ்டி - 2005

Page 17
குறை கூறியமைதான் இதற்கு இன்னபிற கட்சிகளும் விதிவிலக்கல்ல. உள்நாட்டு அரசியல் சக்திகள் இவ்வாறு அரசியல் நாமங்களை அரங்கேற்றி கொண்டிருக்கும் வேளையில், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக அறிவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா பொதுக்கட்டமைப்பு நிதியத்திற்கு உதவி வழங்க மறுத்திருப்பது அமெரிக்காவின்குள்ளநரித்தனத்தையே காட்டுகிறது.
இவ்வாறான அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் சேது சமுத்திரத் திட்டம், மேல் கொத்மலை திட்டம் என்ற புவிசார் செயற்திட்டங்களும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு மட்டங்களும் நாட்டு மக்களின் கழுத்தை பிடித்து இறுக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிலெல்லாம் இருந்து விடிவு பிறக்க வேண்டுமென்று சிந்தித்தால் சமூக சிந்தனையுள்ள சாதாரண மனிதர்கள் அரசியல் தலைவர்களாக உருவெடுக்க வேண்டும். அவர்களின் சுயநலமற்ற ஆளுகையில் தான் நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இதுவரை ஊழலும், சுயநலமும் நிறைந்த அரசியல் தூண்டிலில் புழுவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய மீன்களாய் அல்லல்கள் தொடரும்.
3தfபிடுதி
நம் உலகு
உபதேச உலகு அறிவுரைகள் மலிந்திருக்கின்றன! எனக்கு நீயும் உனக்கு நானும் ஞான உபதேசம் செய்து கொள்கிறோம்! ஆனால். மற்றவர் கூறினால், கைகட்டி வாய்பொத்தி கண்மூடி மெளனியாய், செவியே இல்லாது செவிமடுக்கின்றோம்.?
-- UDm60 -
பமில்டுலம் 30 ஜூலை - ஒகஸ்டீ - 2005
 

நிாைங்கெழின்
இளமையிலே நரை ஏன் வந்ததென்று எல்லோரும் கேட்கிறார்கள் எனக்கும் பரம்பரை குறையென்று ஒன்றுமில்லை ஏனெனில் எனது பாட்டன் முப்பாட்டன் எல்லோருக்கும் முப்பது வயதில் வழுக்கை அறுபத்தைந்து வயதைக் கடந்தும் கூட கறுப்பாயிருக்கிறது தந்தையின் முடி
விளம்பரங்களில் மயங்கி வாங்கும் சவர்க்காரங்களிலும் ஷம்புகளிலும் தான் எனக்குப் பெருத்த சந்தேகம்
எங்கள் தேசத்தில் இளமையிலேயே முதுமையின் தோற்றம் எல்லாவற்றுக்கும் உண்டென்று w ஊடகங்கள் அறிவிக்கின்றன
இன்னும் கொஞ்சக் காலம் காலம் தள்ளினால் அனுபவ முதிர்ச்சி என்றும் அறிவுஜீவி என்றும் கூட்டங்களில் முன் வரிசையில் அமர்ந்து பொய்யுரைக்கவும் கருத்துத் தெரிவிக்கவும்
பயில்நிலம் 3. ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 18
எதிர் பரிப்பேறுகின்றி.
: ' உயர்ந்த உள்ளங்களே உங்களிடம் ஒர் கேள்வி தேவையேதும் இன்றி யாரையும் தெரிந்து கொண்டீர்களா?.
எல்லோரையும் - ஏதோ எதிர்பார்ப்புடனேயே தெரிந்து கொள்வதே நாகரிகமாயிற்று.
எதிர்பார்ப்பின்றேல் எதுவுமே இல்லை தேவையேதும் இல்லையென்றால் தெரியவே தேவையில்லை.
கடலலை போல் தோன்றுகின்ற உறவலைகள் எல்லாமே - ஏதோ எதிர்பார்ப்புடனேயே. தொப்புள் கொடி உறவு முதல் நாடிவரும் நட்பு வரை.
பயில்டுலம்
தேவையென்றால் தேடிவரும் - இல்லையென்றால் ஓடிவிடும். நாள்பட்டு தெரிந்த நாகரிக உலகின் நடப்பு.
அன்பு காட்டும் உறவுகள் ஒன்றிரண்டு அகமொன்று புறம் பேசும் உறவுகளே அதிகம் இங்கு.
எதிர்பார்ப்புகளின் இருப்பிடமாய் தேவையோடு நாடிவரும் நடப்புலக உறவுகளில் நாட்டமில்லை.
விதிவிலக்காய் எதிர்பார்ப்பேதுமின்றி உள்ளத்தால் நாடிவரும் உறவொன்றை நாடி.
பார்த்திபன் -
ஜூலை - ஒகஸ்டி - 200
 
 

ag
694шоо) баблойtodb நான் ஒரு பயணியை சியாங்கொங் விமான நிலையத்தில் இறக்கி விட்டுத் திரும்பியபோது யாரோ எனது வாகனத்தை நிறுத்தினார்கள். எனக்கு இன்னுமொரு பயணம் கிடைத்துவிட்டது ஆகா! என்ன அதிஷ்டம். எனது வண்டியில் ஏறும் இளம் பெண்ணை என் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டேன். அவளொன்றும் பேரழகியல்ல, உண்மையைச்
சொல்வதானால் அவள் ஒரு சாதாரண அழகுடையவள்தான்.
'மின்செயிங் மருத்துவமனை' என்று செல்ல வேண்டிய இடத்தை அறிவித்துவிட்டு அவள் இருக்கையில் சார்ந்தபடி கண்களை மூடிக் கொண்டாள். அவள் மிகக் களைப் படைந்தவளாகக் காணப்பட்டாள்.
- சீனாவின் சின்னக் கதைகள்
நான் வழமையை விடக் கவனமாக வாகனத்தைச் செலுத்தத் தொடங்கி
னேன். வாகனத்தின் முன் கண்ணாடி வழியாக அவளைப் பார்ப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை, காரணமும் புரியவில்லை எனது பார்வை அவளை இடையூறு செய்யும் எனப் பயந்தேன். பாதித் தூரம் பயணித்து விட்டது திடீரென, அவள் அழுவதை என்னால் அவதானிக்க முடிந்தது, அவளுக்காக நான் வருத்தப்பட்டேன்.
'நோயாளியைப் பார்க்கச் செல்கிறீர்களா?' எனத் தடுமாற்றத்துடன் கேட்டேன். ஆனால் வழமையாக பயணிகளுடன் பேசுவதை நான் விரும்புவதில்லை. கண்ணிரைத்துடைத்தபடி அவள் மெதுவாக "ஆம்" எனத் தலையசைத்தாள். 'உங்களது நண்பர் எப்படியிருக்கிறார்? " முட்டாள்! நான் இவ்வாறான கேள்விகளையெல்லாம் ஏன் கேட்கிறேன்?, இவ்வளவு கால ஒட்டுனர் தொழிலில் வெறுப்பான விடயம் எதுவெனில் பயணிகளின் கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். சிச்சீ என்னென்ன கெட்ட பழக்கங்களெல்லாம் என்னுடன் தொற்றிக் கொண்டு விட்டன. இப்படியான கேள்விகளை நான் எவ்வாறு கேட்க முடியும்? "அவர் இறந்து கொண்டிருக்கிறார்' வார்த்தைகள் சோகத்துடன்தள்ளாடிய படியே வந்தன. அவள் மடை திறந்த வெள்ளம் போல அழத் தொடங்கி னாள். எனது மனம் சோகத்தால் நிறைந்து போனது.
எனது வாழ்வில் சில இறக்கும் மனிதர்களைக் கண்டிருக்கிறேன். இவர்களிற்கும் இறந்தவர்களிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இவர்கள்
பயில்நிலம் 33 ஜூலை - ஒகஸ்டீ - 2005

Page 19
உடலில் உயிர் இருப்பதே. அவள்தனது அன்புக்குரியவரைக் காண மிகவும் அவசரமாகவும் ஆவலாகவும் இருந்தாள். ஒரு கணத்தாமதம் கூட அவளை பிந்திவிடச் செய்து விடலாம். நான் விரைவாக வாகனத்தை ஒட்டத் தொடங்கினேன். ஒன்றன்பின் ஒன்றாக சமிக்கை விளக்குகளை மதிக்காமல் மீறியதற்கானதண்டனையையும் பெறத்துணிந்து விரைவாக வண்டியைச் செலுத்தினேன். என்னால் முடியுமானவரையில் அவளிற்கு உதவி செய்ய நான் விரும்பினேன்.
நாங்கள் மருத்துவமனை வாசலை அடைந்து விட்டோம், நான் வண்டியை நிறுத்துமிடத்தில் நிறுத்தினேன். வெற்றியின் பெருமை என்னுள்ளே நிறைந்திருந்து. அவளது கண்களில் நன்றியுணர்ச்சியை நான் எதிர்பார்த்தேன் ஆனால் எனக்குக் கிடைத்ததோ கன்னம் நிறைந்த ஒரு கனமான அறை 'நீ கவனமில்லாத ஒட்டுனர் சமிக்கை விளக்குகளை மதிக்காமல் ஒடும் உன் போன்றவர்களே பழிக்குரியவர்கள். உன் போன்ற கேடு கெட்ட சாரதிகள் இல்லாமல் இருந்திருந்தால் எனது கணவர் இன்று மரணப்படுக்கையில் படுத்திருக்கமாட்டார்’ இச் சொற்களுடன் அவள் பணத்தை என்முகத்தில் வீசி எறிந்தாள்குப்பைத் தொட்டியில் குப்பைகளை எறிவது போல.
epoll b : Lou Yanu (Nanjing Daily)
• தமிழில் : பகலவன். இன்னும் இங்கே.
அடுநொந்து போயுள்ளேன் எனது நம்பிக்கைக காற்றிலே சிதறடிக்கப்பட்டுவிட்டன பனி என்னை உறையச் செய்தது சூரியன் என்னை எரித்தது 2 அவர்களிட்ையே இருப்பது போ6 |று என்னையும் மாற்ற முயற்சித்தன! விரும்புவதைத் தடுக் வாழ்வை முடிக்க அவை முயற்சி நான் அவற்றைக்
இன்னும் இங்கே இ
நான் காயப்படுத்தப்ப
G நான்
江 |ဟမှဟီး Gossløsv Höysiv (Langston Hughes)  ః தமிழில்: சீராளன்.
பயில்டுலம் 34 ஜூலை - ஒகஸ்டீ - 2005
 
 
 
 
 
 
 
 
 

பேைைதயில்லவ பேருலகக்
ருைைன అయ్యిం(క్రణ? pamwe
( ܛ பதி
பூமிப்பூங்காவின் அன்புச் செடியில் கருவாகி உருக் கொண்டதோருயிர்! கண்ணை இமை காப்பது போல் கண்மணிக்குள் வளர்ந்திருந்தாள் அன்னையவள்! அம்மொட்டு இதழ்விரிக்கும் நாளெண்ணி காத்திருந்தாள்!
உளம் மகிழ உற்றவர் காத்திருக்க உலகின் நவநாகரிகத்தை நாடிய சிறுமொட்டு நட்பு வட்டத்தின் உல்லாச வேளையில் ஊசியால் தன்னுடலில் ஏற்றியது உயிரை நாளை உருக்கிடும் தீயை
2005 - tSR)8R)ib 35 prov - 9adbuוט

Page 20
மாய அரக்கனின் கோரப்பிடிக்குள் மயங்கிய தம் காதலரை மீட்க முடியாப் பேதைகள் வாழ்வு கண்ணிரில் போராடி முடிந்தது சோகத்தில்!
ஏழைகளின் உழைப்பில் உடல் வளர்த்தான் போதை அரக்கன்!
உலக வாழ்வில் யாவுமே மாயை என தத்துவம் பேசியது போதை உலகம்!
பொன்னான நாட்களைப் பொழுதெல்லாம் தேடி போதை மருந்துடன் மனிதர் வாழ்வும் முடிந்தது!
நாகரிக உலகு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் போதையில் மிதக்கிறது! போதை அரக்கனை ஒழித்து இளைஞர் நாம் புதியதோருலகம் படைக்கும் நாளில் நம் எண்ணம் ஈடேறும் நாளைய விடியலிலே ஆதவன் உதிக்கையிலே போதையிலா பேருலகம் மலராதோ?
பூன் 26த் திகதி உலகப் பேரிதைப் uெnடுஸ் தடுப்பு ஆnவின் நினைவna, எழுதப்படிட2.
பயில்டுலம் 36 grai) - g5dol - 2005

O கருத்துமேடை - 09 மேதின நிகழ்வுகள் களியாட்டமாக நடத்தப்படுவது பற்றி உங்களுடைய அபிப்பிராயங்கள்
கடந்த இதழில் கேட்கப்பட்ட கருத்து மேடைக்கு வாசகர் களிடமிருந்து எமக்குக் கிடைத்த சில எண்ணப் பதிவுகள்
l.
எவ்வாறு உழவர்களைக் கெளரவித்து உழவர் திருநாள் வருகின்றதோ அதுபோல தொழிலாளர்களைக் கெளரவித்து மே தினம் களியாட்டமாகக் கொண்டாடப் படுவதில் தப்பேதும் இல்லை என நான் கருதுகிறேன்.
- மேனகா -
கொட்டேனா,
மேதின நிகழ்வுகள்களி யாட்டமாக நடத்தப்படுவது மிகவும் பிழையானதும் கவலைக்குரியதுமாகும். அதிலும் உழைக்கும் மக்களின் ஒரே ஒரு தினம் கொச்சைப் படுத்தப்படுவது மிகவும் வேதனையானது. இன்று இடது சாரிக்கட்சிகள் கூடதங்கள் மேதினக் கூட்டமேடைகளில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதை விட பெரிய சோகம் வேறெதுவுமில்லை.
- க. வேணி
- ஹற்றன்.
பமில்டுலம்
37
3. இன்றைய நிலையில் ஏகாதிபத்
தியங்கள் மே தினத்தை ஒரு களியாட்ட நிகழ்வாக கொண்டாடியும் கொண்டாடப்படுவதை வலியுறுத்தியும் வருகின்றனர். இதற்கு எங்கள் தேசமும் விதி விலக்கல்ல. முதலாளித்துவ அடிவருடிகள் இதற்கு வக்காளத்து வாங்குவது ஒன்றும் புதுமையானதல்ல. இதைவிட முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் திரிவு வாதப் பாதையில் பயணிக்கத் தொடங்கியதும் மே தினத்தின் உண்மையான முற்போக்குக் கட்சிகளின் செயற்பாடு, தன் முனைப்பு என்பனவெல்லாம் கூட மேதின நிகழ்வை களியாட்டமாக்கிவிட்டன.
- ச. ஈஸ்வரன் நல்லூர்
உண்மையில் இது தேவையற்ற
ஒர் போலி கெளரவமே தொழி லாளர்களே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டு,
- u 'laus)
Gog, ga i'w gasgow,
prawy - !

Page 21
Islaub
ዎጧጋት
6 TT
பால்ய காலம்
பாடாத குயிலாய்
ஓய்ந்து கிடந்தது.
கவிதையாய்
ஆகாத கோடைகள் எல்லாமே தேவையற்றிருந்தது அப்போது பசிய
வயலஸ்ளிப் போன மழையும்.
செத்த
உடலங்களின் ஒப்பாரி நாறிய கடலில் துக்கப்பட்டு குந்தியிருந்தது படகு,
படகே! உனக்குப் புரியுமென் வேதனை.
நீலம் பாரித்த
,is بر
பமில்டுலம் 8. Arafu - godul-2006
 
 
 

பூமில்டுலம்
நிலாப் பொழுதில் தென்றலை மோதி திங்களை நனைக்க இடறும் மனது தொலையும் முகவரி உலகெலாம் அழிய நீ! நான்!
உன் தயவால் தினம் புத்தாடை, தமிழுக்கு தகவல் சொல்லும் நட்சத்திரங்கள்
மழை தூறல் கூறும்
சங்கேத வார்த்தைகள்
இன்ப நினைவில் இரவெலாம் விழிதிறந்து கடிதம் எழுதினாய் விடியும். முகவரி
யார் பெயரில்.
89 BraDR) - Qadvla - 2006

Page 22
GᎠᎫᎢᎧ3Ꭲ
புரடீசிகளின் விளை நிலம் புதுமைகளின் புது நிலம் கற்பனைகளின் கவி நிலம் சிந்தனைகளின் சொல் நிலம் இலக்கிய கலை நிலம்
பண்படிட பயில் நிலம்
பயில்நிலம் இளைஞர் சமுதாயத்தின் புதிய புரட்சி அதன் வளர்ச்சி எம் மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் வாசகி
- சு. ருக்ஷா - தெகிவளை
வைகாசிப் பயில்நிலத்தில் பேட்டி மிகவும் கவர்ச்சியாக இருந்தது. வெறுமனே சாதனை படைத்தவர்களை அன்றி சாதாரண தொழிலாளிகளை பேட்டி கண்டிருப்பது பயில்நிலம்
کكس
கண்ட வெற்றியே.
- பவித்ரா
கிருளப்பனை.
பயில்டுலம்
40
சீனாவின் சின்னக் கதைகள் பகுதியில் கொள்கை வீரன் என்னை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது. நானும் இக் கொள்கை வீரன் போலத்தான் நடந்திருக்கிறேன்.
நிரோசி -
வெள்ளவத்தை.
மே மாத பயில்நிலத்தின் பக்கவடிவமைப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. மீண்டும் எமது ஊரில் பயில்நிலம் வெளியிட வரும்படி வரவேற்கின்றோம்.
— цDп6oš —
ഖഖങ്ങിu.
கடந்த இதழ் என் பார்வைக்கு கிடைத்தது. இளைஞர்கள் இவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களை கொண்டிருப்பதை இட்டு நான் மிகவும் மகிழ்கிறேன்.
சின்னத்தம்பி
-அவிசாவளை,
ஜூலை - ஒகஸ்டீ - 2005

லக்கிப்பேரவையின் { نة
தேசிய கலை இலக்கியப் பேரவை அதன் புத்தகப் பண்பாட்டுப் பயணத்தின்
அடுத்த மைல்கல்லை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்பொருட்டு எதிர்வரும் 19.08. 2005 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு - 06, வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் புத்தக விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் × பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
ரூபா 50,000/- வாசகர் பணப்பரிசு வெல்லும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் 50,000/- ரூபாவை வெல்ல, தேசிய கலை இலக்கியப் பேரவையால் விநியோகிக்கப்பட்டுள்ள நூற்பட்டியலில் இருந்து 1000/- ரூபா பெறுமதியான நூல்களை முன்கூட்டியே கொள்வனவு செய்ய வேண்டும். அவ்விதம் கொள்வனவு செய்பவர்களுக்கு கொள்வனவுச் சிட்டை வழங்கப் படும். இக்கொள்வனவுச் சிட்டையின் அடிக்கட்டைகள் குலுக்கப்பட்டு தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு ரூபா 50,000 பணப்பரிசாக அன்றைய தினம் அதே அரங்கில் வழங்கப்படும். ரூபா 10,000/- இலக்கிய ஆர்வலர் பணப்பரிசு வெல்லும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் கலை, இலக்கியம் மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவை தொடர்பான 25 கேள்விகள் கேட்கப்பட்டு புள்ளிகள் இடப்படும். 10 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்து, அதில் கூடிய புள்ளிகள் பெறுபவர்களுக்கு ரூபா 10,000/- பணப்பரிசு வழங்கப்படும்.
புத்தகப் பண்பாட்டை மேம்படுத்துவோம். அரங்கப் பண்பாட்டை வளப்படுத்துவோம். அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக! பரிசுகள் வெல்க!
இல, 44, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு - 11 ~~ தொ.பே. இல. 2381603, தொலைநகல் 2473757
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 23
MIA
 
 
 

– ! LIĤgȚīgi
*g シ****日*Hī£5 「龍神)이도r******** |*******h 〔g? *韃 역的)主義的)*** &&s&정·日反民主主義的)道的) 9安民主國民主主和)·역:***
**al통改%rr비re a)