கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவிர 2005.01-02

Page 1
தை-மாசி
 
 

இதழ்-01
இருதிங்களிதழ்

Page 2
தவிர
ஆசிரியர் தானா.விஷ்ணு
ஒவியங்கள்: செல்வன்,புகழேந்தி (தழிழ் நாடு)
வடிவமைப்பு: விஷால் கணனிப் பதிப்பகம் இமையாணன்.
தொடர்பு முகவரி: தானா. விஷணு 498/1, நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.
கவிதைக்கான இடம்
கவிதை ஒரு ஆத்மார்த்தமான தேடல்
வெறுமனையே உள்ளக்கிடக்கைகளை கொட்டித்தீர்த்து விடாமல் நேர்த்தியாகவும் கலை நுணுக்கத்தோடும் வெளிக்கொண்டு வரும் முயற்சியிலேயே கவிதை வெற்றி பெறுகின்றது.
இன்றைய இளைய தலைமுறையினர் கவிதை பற்றிய தேடல்களினை சரியான முறையில் நிகழ்த்தமுடியாமல் இருக்கின்றனர் இன்றைய நாளிதழ்கள், வாராந்தப் பத்திரிகைகள் கவிதைக்கான சரியான அந்தஸ் தினை வழங்காமல் வெறுமனே தமது வியாபார நோக்கத்தினை மட்டும் கருத்தில் கொண்டு மலினமான கவிதைகளையும், கவிதை பற்றிய அறிமுகங்களையும் பிரசுரம் செய்கின்றபோது இளையவர்கள் அவற்றினையே கவிதை என்று நம்பி விடும் அபத்தமான ஒரு நிலமை எமது புலத்திலே தோன்றுவதனையும் நாம் அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி சில மலினமான கவிதைத் தொகுப்புகளுக்கு சில மூத்த படைப்பாளிகள் உச்சமாகப் புகழ்ந்துமுன்னுரை எழுதும் ஒரு நிலமையும் கவிதைக்கான அடுத்த கட்ட தேடலினை தடுத்து விடுவதும் இன்னொரு காரணமாகக் கொள்ளலாம்.
இந்த நிலமைகளில் இருந்து மாறுபட்டு நல்ல கவிதைகள் பற்றிய அறிமுகங்களையும், ஆரம்ப கட்ட படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான சந்தர்ப்பங்களையும், உற்சாகத்தினையும் “தவிர” வழங்கும்.
வாசகர்கள், படைப்பாளிகள் என்றும் “தவிர”வுடன் பலம் சேர்த்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், என்பவற்றினை உங்களிடமிருந்து “தவிர” எதிர்பார்த்து நிற்கின்றது.
-ஆசிரியர்
 

03
நீ சிரித்தபடியிருக்கும் ஒரு நாளில் அலையை வெறித்திருக்கும் எனது கண்களில் மீன்களின் ஒலம் தெறிக்கிறது. உனது சிரிப்பே எனதுமாயிருக்கும் காலத்தில் உனது இருதயத்தில் நீ மறைத்து வைத்திருக்கும் கூரிய கத்தியை ኣ பளிச்சிடும் துப்பாக்கியை கண்ணுக்குப் புலப்படாத பழியுணர்ச்சியை நான் அடையாளம் கண்டதைப்போல
நீயும்
எனது சிரிப்பை எனது நம்பிக்கையின்மையை உணர்வாய்.
நீ சிரித்தபடியிருக்கும் ஒரு நாளில் அலையை வெறித்திருக்கும் எனது கண்களில் மீன்களின் ஒலம் தெறிக்கிறது. நீயோ எனது சிரிப்பைக் கேட்கிறாய்; அது, அவமானங்களும் இம்சையும் துயரங்களும் நிறைந்ததாயினும் அதில் உன்னால் வாழமுடியும். நான் நம்பிக்கையிழந்து போகிறேன்; உன் மீதான எனது நம்பிக்கையை மீன்களின் ஒலம் கொன்றுவிட்டது.
ஒரு நாள் உனது இருப்பின் ஒளிமங்கிய என்னில் அது கருமையாய் உறையும் நான் காண்கிறேன், கருமையின் ஒளியில் ஆந்தைகள் விழித்திருக்கின்றன, இருவருடைய கண்களிலும் ஆந்தைகள் மட்டுமே விழித்திருக்கின்றன, ஆந்தைகள், போர்க்குணம் கொண்ட ஆந்தைகள்.
1
கவிதையின் ஒளிமிகு நாட்களை நான் இழந்துவிட்டேன் ஒரு பிச்சைக்காரன் தனது கவளங்களை இழக்கும் துயரோடு என்னுள் அது நிகழ்ந்தது. எல்லாம் பழைய வார்த்தைகளாயின; மிகப்பழைய வார்த்தைகள். இப்போது உனது மண்பானை உடைந்துவிட்டது;
அது தேனால் நிறைக்கப்பட்டிருந்தாலும் கள்ளில் ஊறிக்கிடந்தாலும் இசையின் வலியைச் சிதறல்கள் தரா, வலியற்ற உனது வார்த்தைகள் வீரியமற்றுப் போகின்றன. உன்னிடமிருந்து நான் பெற்ற வலிமையான துயரின் நிழலில் நான் உடுத்திய கந்தல்களில் ஒரு பசிய புல்லின் இதழைப் பரிசாய்ப்பெறுவேன். நான் நம்பிக்கை கொள்வதைப்போல, நீ உணர்கிறாயா காற்றிலிருந்து இறங்கும் ஒரு கழுகின், இரையாய் வலியறியாது காத்திருக்கின்றன உனது வார்த்தைகள்

Page 3
04 தவிர
கவிதை தேடும் பயணம் - 01
..........{(نس مصنفovعمnتھ2 فلمی فضvہم؟ دشمطGنcدشمD
- ૭---
மனிதமனத்தின் உணர்பனுப்வத்தை வெளிப்படுத்த உதவும் சாதனமாக விளங்குவது கலை, கலைகளுள் மொழியினுடான வெளிப்பாடுகளாக உருவாகின்றவற்றுள் கவிதை முதன்மை பெறுகின்றது. கவிதையின் சக்தி ஒருபடைப்பாளியினால் சொற்களுக்குள் ஊடு செலுத்தப் படுகின்றது. அந்த சொற்களுக்குள்ளும், புறமும் சொற்களிடை தேங்கும் மெளனத்துள்ளும் கவிதையெனும் அனுபவசாரம் ஊறி ஊறிப் பரவுகின்றது. தான் அனுபவித்ததை மொழியினுTடாக வெளிப்படுத்த முனையும் ஒருவன் தனது கவிதையின் சொல்முறை, சொற்தேர்வு, தனது கலையுணர்வு என்பவற்றின் ஊடாக அடுத்தவர்க்கு தொற்றவைக்க முனைகின்றான். அத்தகைய தொற்றுகை வெற்றிகரமாக நிகழும் போது உணர்த்தலும், உணர்தலும் ஆகிய கவிதைசார் கிரியை நிகழ்ந்தேறுகின்றது. ஒரு நல்ல கவிதையினுடாக மேற் சொன்ன காரியங்கள் சாத்தியப்படுகின்றன. கவிதை ரசிப்பினை நாடுகின்றவற்கு கவிதை தொடர்பான தோடல் உடையவர்களுக்கு அவ்வப்போது இந்த அனுபவம் சித்திக்கின்றது.
அஸ்வகோஸி நமது மணர்ணில் பரவலாக அறியப்பட்ட ஒரு
நல்ல கவிஞர். "நிகரி” வெளியீடாக வந்த அவரது ‘வனத்தின் அழைப்பு தொகுதியில் பல நல்ல கவிதைகள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் 'இருள்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதை கிளர்த்திய உணர்வு அனுபவமே இந்தக் கட்டுரையின் ஊற்றுக்கணி.
‘சிதழுறும் காயங்களிடையே நானிருந்தேன் சிதைந்து போன மைந்தரின் வேதனை ஒலங்கள் என்னை உறுத்தின
 

05.
LSLSLSLSLSLSLSLSLSLSLSLTJLTT L SLSLSLSLSLSLSL
என ஆரம்பிக்கும் கவிஞர் தியாகங்கள் மட்டுமே தெரிந்த மைந்தரின் நினைவுகளை பழிக்க என்னால் இயலவில்லை’
எனத் தொடர்ந்து
‘நேற்றுங் கூட இருவர்
மாண்டு போயினர் நான் விபரமாகக் கேட்கவில்லை
கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன சேவல் கூவுகின்றது காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன.” எனத் தன் வாழ்வின் தரிசனங்களைச் சொல்லிச் செல்கின்றார். நமது வாழ்வில் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றவற்றின் வரிசையில் மரணமும் இணைந்து கொள்வதான துயர நிலை இங்கு சுட்டிக்காட்டப் படுகின்றது. இதனூடாக அந்தக் கொடுமையின் துயர அழுத்தத்தை நம்மையும் உணருமாறு செய்வதில் கவிஞரின் எத்தனம் வெற்றி பெறுகின்றது. அவருடைய சொற்களில், அவற்றின் இடைவெளியில் தேங்கும் மெளனத்தில் கவிதை பளிச்செனத் தெரிகின்றது. அவருள் விளைந்த உணர்வொன்று எம்முள்ளும் பரவுகின்றது. அந்த வலியை நாமும் உணருகின்றோம்.
தேர்வு செயதெடுத்த சொற்களின் ஊடாக அஸ்வகோஸ் விரிக்கும் உலகம் நம்முடையதும் ஆகுமென உணர்வுள் உறைக்கும் தருணத்தில் நாமும் பயணிக்கின்றோம்.
‘என்னை ஒறுத்து ஒறுத்து அழித்துக் கொள்கையில் எண் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப்படுத்தவென்று
என் கனவுகள் வீழவுமி மணர்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்.

Page 4
06 தவிர
சிதழுறும் காயங்கள் பேசும் மொழியினில் என்னைப் பேசவிடுங்கள்
இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது
இரத்த முறிஞ்ச நுளம்புகள் வரவில்லை
ஈக்களை அணிட
நான் விடவில்லை.
என முடிகிறது கவிதை
ஒரு தந்தையின், இந்த மண்ணில் வாழும் ஒரு மனிதனின் துயரம், தாய் மண்ணை நேசிக்கும் ஒரு இதயத்தின் அப்பழுக்கற்ற தியாகம் இவையெல்லாம் தன்னுள் விளைத்ததை எம்முள் விளைவிக்கும் முயற்சியில் அஸ்வகோஸ் வெற்றி பெறுகின்றார். அது எவ்வாறெனின், இந்தப் படைப்பில் வெறும் உணர்வினை மாத்திரமோ, மொழியின் சிறப்புக்களை மாத்திரமோ தன் உத்திகளாகக் கொள்ளாமல் அவையெல்லாம் கலந்த ஒரு கலை முயற்சியை ஆத்மார்த்தமான உழைப்பாக அவர் மேற்க் கொணர்டதன் மூலமாகத்தான் சாத்தியமாயிற்று ۔ ۔
இவ்வாறன படைப்புச் சார்ந்த அர்ப்பணிப்பும், உழைப்பும்
இன்றைய இளம் கவிதைப் படைப்பாளிகளிடத்தில் எவ்வளவு தூரம் இருக்கின்றன? உணர்வில் தைத்த ஒன்றை உள்ளேயே ஊறப்போட்டு மீட்டு மீட்டு அதை மொழிக்குள் செலுத்தி அதற்கொரு வடிவம் கொடுக்கின்ற முயற்சியில் நாம் எத்தனை பேர் ஈடுபடுகின்றோம்? கவிதை எழுதுகின்றோம் என்றும், தொகுப்பு வெளியிடுகின்றோம் என்றும் 'எனது கவிதை இப்படித்தான் இருக்கும் பிடித்திருந்தால் படி இல்லை என்றால் விடு” என மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு உணர்மையில் நாம் வளர்ந்திருக்கின்றோமா? யோசிப்போம்.

LSLSLSSLSLSSLSLSSLSLSSLSCSCSGLL LLTLTLS DDTaf
பிதா
சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
சபிக்கப்பட்ட சனங்களின் செபிப்பொலி கண்ணிரையும் கரித்துக் கொண்டிருந்தது. ஆசீர்வதிக்கப்படாத சிலுவைகளை சுமந்தபடி ஒலிவ் மரச்சோலை நோக்கிய கண்ணிர் ததும்புகிற பயணம் நிகழ்கிறது.
யாருமே எதிர்பார்த்திராத கணத்தில் சாத்தான்களால் சிலுவையில் அறையப்பட்ட யேசு பிரானின் மீளுயிர்ப்பில் முள் முடிகளின் காலம் சிதைந்து போனது.
சனங்கள் திரும்புகிறார்கள் நாளைய சிலுவை சுமக்கும் படலத்திற்காய். சிலுவைகளையும், முள் முடிகளையும் தயாரித்துக் கொண்டு சாத்தான்களை சிலுவைகளில் அறைவதற்காய்.
07
மீளுயிர்ப்பு
யாத்திரீகன்

Page 5
08
gilt) த்விதைத் Göttötebdog.......
“95 இல் இடம் பெயர்ந்து வன்னியில் எனதிருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கையில் எனக்கேற்ப்பட்ட இழப்பும், ஊருறவின் பிரிவும் ஆழமாய் கவிவித்தை என்னுள் விதைக்க நான் வேர்விடத் தொடங்கினேன்” என குறிப்பிடும் பொலிகையூர் சு.க.சிந்துதாசன் ‘ஓரிடம்’ எனும் தனது கவிதைத் தொகுப்பின் ஊடாக கவிதை உலகிற்குள் காலடி எடுத்து வைக்கின்றார். போர், போர் தந்த வலி, இழப்புக்கள், இதனையும் விட சமூகம் சார்ந்த அக்கறை என்பவற்றினை தனது கவிதைக்கான கருவாகக் கொண்டு கவிதை யாத்திருக்கின்றார். இன்றைய பல இளம் படைப்பாளிகள் வைரமுத்து, மேத்தாவை தமது ஆஸ்தான கவிஞர்களாகக் கொண்டு அவர்களது மொழிகளைக் கொண்டே கவிதை எழுதி அதனைத் தொகுப்பாகவும் போடும் இன்றைய சூழ்நிலைகளில். சற்று மாறுபட்ட கவிதைகளை கவிஞர் தந்திருப்பது மனதிற்குத் திருப்தியைத் தருகின்றது
கவிதை உள்ளுணர்வு சார்ந்த மொழிகளில்
பேசுவது. எப்போதும் செய்தி சொல்வது என்பது கவிதையாகிவிடமாட்டாது. எம்மவர்களில் பலர் ஷார்ங்கின் செய்திகளையே கவிதையாக்கிக் கொண்டு வருகின்றனர்.
அந்த நிலைமைகளினை இவரது சில கவிதைகளிலும் காணக்கிடக்கின்றது. மனதுள்தோன்றும் விடயங்களைக் கொட்டித்தீர்த்துவிடவேண்டும் என்ற ஆதங்கமும் இவரது கவிதைகளுக்குள் துருத்திக் கொண்டு நிற்கின்றது கவிதையென்பது ஒரு யாகம் அதில் எப்போதும் நிதானம் தேவையாகின்றது. எமக்குள் ஊடுருவிச் சென்ற ஒன்றை கலை நேர்த்தியுடன் வெளிக் கொண்டு வரும்போது அது நல்ல கவிதையாகின்றது. அந்த நிலமையினை எட்டுவதற்கு. சிந்துதாசன் தனது கலை வாழ்க்கையில் நிறைந்த தேடலையும், ஆழமான வாசிப்பையும் நிகழ்த்த வேண்டியிருக்கின்றது. ஆனாலும் இன்றைய இளம் படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கவிஞராக தன்னை அடையாளப்படுத்தவும் இவர் தவறவில்லை.
தவிர
 

09
தை-மாசி
6)Uv4dö ஆலன்
பூமிக்காய் அய்யய்யோ நீள் சுமந்து வந்த காற்றடிக்கிறதே! நதியின் பாதையில் பல்நூறு மைல்க்கப்பால் கொடூரம்மிக்க மனிதர்கள் காலன் கடுகதியில்
தேர் ஓட்டி வருகின்றான் போதும் − பனை மரத்தை
என் கரைகளைச் சிதைத்தவர்க்கு
துளிகளைச் சிதறடித்தவர்க்கு என் புறப்பாடுகளை
மரங்கொத்தி துளைக்கிறதே!
புயல் வந்து மோதுகுது
அறியத் தந்தேன் அயல் வந்து சேர்ந்து விட்டான்! விடை பெறுகையில் அயல் வந்து சேர்ந்து விட்டான்! என் கரைகளில் தலை சாய்த்த அய்யய்யோ நாணல்களிடம் Uഞ്ഞത്.ഗ്രസ്ത്രങ്ങൾ மன்னிப்புக் கோருவேன் மரங்கொத்தி துளைக்கிறதே! என் சீற்றம் பொறுத்ததற்காய் பனைமரத்தை என் மடியில் தவழும் மரங்கொத்தி துளைக்கிறதே! குழந்தைகளிடமும் மண்டியிடுவேன்
என் பிரிதழுக்காய்
இமைகளை அடித்துச் சாத்தி மூச்சுப்பேச்சு ஒடுங்கி நின்று
அன்பென்ற பொய்க்க
60Tolu6og bluffuetsS இடைநீக்கி எட்டிப் பார்க்க.
பழக்கப் பட்ட மனதின்
சிடுக்குகளினின்றும்
என்னை விடுவித்துக் கொண்டேன் காற்றடிக்கிறது! காலன் கடுகதியில்
உங்களுடன் என்னால் பல் நூறு மைல்க்கப்பால்
கரம் கோர்க்க முடியவில்லை போய்விட்டான்
வெறுமனே န္တိမ္ပိန္တိမ္ပိ அப்-பா-டா!
கலந்து கொள்ளத்தான் முடிகிறது.
தா. இராமலிங்கம் நன்றி காணிக்கை

Page 6
10
தவிர
நவீன க்டிேய கவிதை அவர்கள் நம் காலத்துக்கொரு பெண்ணை உருவாக்குகிறார்கள்
签
அவர்கள் நம் காலத்துக்கு ஒரு பெண்ணை உருவாக்குகிறார்கள் நிறைய எலுமிச்சைகளுடனும் நவீன கருவிகளுடனும் நிறைய ஒயர்களுடனும் பொய் முழகளுடனும் பருத்தி முலைகளுடனும் மர வடிவுகளுடனும் அவளுடைய முகம் ஒபீலியாவின் வெகுளித்தனமும் கைகள் ஹெலனின் பகட்டான நளினமும் கொண்டிருக்கும் அவள் மூன்று மொழிகளில் பேசுவாள் வில்லாளியைப் போல கையில் துப்பாக்கி வைத்திருப்பாள் அவர்கள் நம் காலத்துக்கு ஒரு பெண்ணை உருவாக்குகிறார்கள் அவள் அரசியலைப் புரிந்து கொள்வாள் கொஞ்சம் தத்துவத்தையும் கூட
பேச்சில் தவறிழைக்க மாட்டாள் பாக்கெட் கண்ணாடியை பார்க்காமலே விமானப் பணிப்பெண்ணின் பில்லை சமாளிப்பாள் அவள் தினமும் செய்தித்தாள் படிப்பாள் s பாலியல் உறவில் சுதந்திரம் கொண்டவள் ஆனால் எந்த ஆணுடனும் தவறான நிலை எடுக்கமாட்டாள் இப்படியான செய்நேர்த்திகளுடன் பெரிய வித்தியாசங்கள் இல்லாமல் நம் காலத்துக்கென ஒரு பெண் வருவாள்.
diul I (ellomol: Belkis cuza mala தமிழில் ரெங்கராஜன்
 


Page 7
12
STT LSSLSLSSLSLSSLSLSSLSLSSL
சந்திப்பு: சித்தாந்தன்
ந.சத்தியபாலன் ஓர் ஆங்கில ஆசிரியர். கவிதை, சிறுகதை கட்டுரை, நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு பத்திகள் என இலக்கியத்தில் தன்னை விரித்துக் கொணர்டவர் அதிகம் தன்னைப்பற்றி அலட்டிக் கொள்ளாதவர் இவரை இவரது வீட்டில் சென்று சந்தித்தேன் இவருடன் உரையாடியதில்
இருந்து.
உங்களைப் படைப்புத்துறைக்குள் எவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டீர்கள்?
சிறுவயது முதலே வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்து வருகிறது. எனது தந்தையார் நான் ஐந்தாம் தரம் பயிலும் பொழுதே விவேகானந்தரின் வரலாறு சொல்லும் சிறுவர்களுக்கான நூலொன்றை வாங்கிக் கொடுத்தார் ‘கல்கத்தாவில் நெரிசல் வீதியொன்றில் திடீரெனப் பரபரப்பு எழுந்தது' எனத் தொடங்கும் அந்த நூலின் முகப்பு உள்ளேயிருந்த படங்கள் எல்லாமும் எனது மனதில் இன்றும் அழியாது உள்ளன. அன்றிலிருந்து இன்றுவரை நான் வாசிப்பை மேற்கொண்டு வருகின்றேன். எனது வீட்டில் அறுபதுகளில் கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், போன்ற சஞ்சிகைகளை வாங்குவார் எனது தந்தையர்.
எட்டாம் வகுப்புப் படிக்கும் போது நான் படித்த ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்’ என்னை மிகவும் கவர்ந்த முதலாவது நாவல். அவ்வாறான கதைகள் என்னை எழுதும்படி தூண்டின. நான் எழுதிய முதலாவது சிறுகதை ஒரு நகைச்சுவைக் கதை. அதைப்பார்த்த எனது தந்தையார் சிறிய கொப்பியொன்று கட்டி அதில் சிற்றலைகள் என்று மகுடமிட்டு 'நல்லைப்பாலன்’ என்ற பெயரில் தொடர்ந்து எழுதும்படி என்னைத்தூண்டினார் அந்த நாட்களில் எனது உறவினரான திரு. க. நடராஜா(தற்போது ஓய்வு பெற்ற முன்னால் நிர்வாகி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) அவர் "கட்டைவண்டி’ என்னும் சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டிருந்தார். அவரிடம் என்னைப் பற்றிக் கூறி எனது தந்தையார் ஆற்றுப்படுத்தினார். க.பொ.த சாதாரண தரத்துக்கு வந்த போது எழுத்தாளர் திரு. பாலமனோகரன் அவர்களது சகோதரர் ஆசிரியர் திருமதி. பாலராணி சண்முகராஜா என்னுடைய எமுத்துத் திறனைக் கண்டு, தொடர்ந்து எழுத வேண்டுமென்று என்னை ஊக்குவித்தார். அதிலிருந்து வானொலிக்கு எமுத ஆரம்பித்தேன். திரு. அப்துல்கமிட் அவர்கள் நடாத்திய ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் எனது முதலாவது சிறுகதை 'ரசிகன்’ ஒலிபரப்பானது. தொடர்ந்து என் இலக்கியத் தேடலில் ஜானகிராமனும், லா.ச.ராவும் , புதுமைப் பரிதி தனும் , கவிஞர்களான அப்துல்ரகுமான், மீரா,நமது நாட்டின் சு.வில்வரத்தினம், புதுவைரத்தினதுரை, போன்றோர் அறிமுகமானார்கள். சிறுகதையைத் தொடர்ந்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதத் தொடங்கினேன். திசையில் யேசுராசா அவர்கள்
 

تلـ ET-عه كــــــــــــــــــــــــــ என்னை அடையாலம் கண்டு மேலும் ஊக்குவித்தார். இவரது ‘கவிதை' இதழிலும், பின்வந்த சஞ்சீவிபோன்றவற்றிலும். கவிதை எழுதினேன். பின்னர் நமது ஈழநாட்டில் ரகுராம்அவர்கள் எனது பத்தி எழுத்தை ஊக்குவித்தார். பின்னர் வெளிச்சம் கருணாகரன, இவ்வாறாக மொழிபெயர்ப்பு ஆக்கம் என எனது எமுத்துப் பணி மிக மெதுவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் கவிதைகளு' சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறீர்கள். ஒரு விடயத்தை கவிதையாக்குவதிலும்,
சிறுகதையாக்குவதிலும் உள்ள வேறுபாடு..? ཊིར་
சிறுகதை, கட்டுரை, கவிதை எனும் மூன்று வேறுபட்ட துறைகளிலும் ஒருவிடய அனுபவம் கலையழகோடு வெளிப்படுத்த முடியு ட்டுரையில்
கலையழகு தெரிய எழுதுபவர்களுள் சுந்தரராமசாமி மிக முககியமானவர்) கவிதை என்பதுதான் இவற்றுள் மிக நுண்ணியது கவிதைக்கு மொழியும் சொல்லும் துணை வரும். சொல்லைக் கொண்டு மொழியினூடாக கவிதை படைப்பாகும் போது சொன்னதன் உள்ளும் சொல்லாததன் உள்ளும், இடைவெளி மற்றும் மெளனத்துள்ளும் கவிதை உறையும். படைப்பாளனும் வாசகனும் கவிதையினுாடான ஒரு அத்யந்த உறவை ஸ்தாபித்துக் கொள்கின்றனர். அவ்வாறான சொற்களினூடாக் அளவெல்லைகள் தாண்டிய அனுபவப்பேறு ஒரு நல்ல கவிதையினூடு ஒரு படைப்பாளிக்கும் அவனது வாசகனுக்கும் சித்திக்கிறது. சிறுகதையில் கவித்துவம் மிளிரவாய்ப்புண்டு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சாத்தியமாவது படைப்பாளியின் அகம் சார்ந்த விடயம். (லா.ச.ராவுக்கு அது பெரிதும் கைவரும்)
சமகாலத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள், கவிதைகள் என நீங்கள்
கருதுவது..?
நமது கவிஞர்களில் என்றுமே என்னை மிகவும் பாதித்தவர், மனசு
தொட எழுதுபவர்களுள் சண்முகம் சிவலிங்கம் மிக முக்கியமானவர் அவரை அடுத்து சு.வில்வரத்திம் ஜூ ஜூ (அவரது நுண்ணுணர்வு சார்ந்த கவிதை நடைக்கு நான் தலை வணங்குபவன்) தற்போது மிளிர்பவர்களுள் பல இளையவர்களைச் சொல்லலாம். சேரன், கருணாகரன், பா.அகிலன், ற'மி, எனப் பட்டியல் நீள இன்னமும் இடமுண்டு அகிலனின் பதுங்குகுழி நாட்கள் என்னை மிகவும் தொட்ட் தொகுப்பு. தென்னிந்தியக் கவிஞர்களுள் சுகுமாரன், கலாப்பிரியா, மனுஷ்யபுத்திரன், யூமா வாசுகி என்பவர் உள்ளனர்.
கவிதை விளங்குவதில்லை அல்லது இருண்மைத்தன்மை கொண்டுள்ளன எனச் சொல்லப்படும் சூழல் உள்ளது இதற்கான காரணம்.
முதலில் ஒன்றைத் திறந்த மனசோடு புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எனைய மொழி சார் கலைவடிவங்களைக் காட்டிலும் படைப்புக்கும் (படிப்புக்கும் கூட) மிகவும் கூர்ந்த அவதானம், படைப்பாளி தொட எத்தனிக்கும்

Page 8
எல்லையை அடையாளம் காணும் பக்குவம் இதெல்லாம் ஒரு நல்ல நவீன கவிதையைப் புரிந்து கொள்ள அவசியமாகிறது. இதெல்லாம் இல்லையென்றால் இருள்தான் தெரியும் அடுத்தபடியாக லா.ச.ரா சொல்வது போல புரிந்து கொள்ளல் என்பது அவரவர் நெஞ்சின் மீட்டலுக்கு ஏற்ப சம்பவிக்கும் ஒன்று எடுத்த எடுப்பில் எல்லாம் ஸ்பவுட்டமாகப் புரிந்து போகும் ஒரு படைப்பு நவீன கவிதை என்னும் சட்டகத்துக்குள் அடக்க முடியாத ஒன்று என்பதே எனது கருத்து.
நவீன கவிதையில் படிமம் குறியீடு என்பன எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது..?
படிமம், குறியீடு நவீன கவிதையில் செல்வாக்குச் செலுத்துகின்ற பிரதானமான அம்சமாகும். காலத்துக்குக் காலம் கவிதையும் தனது வடிவம் செல்பரப்பு தொனி இவை குறித்த எல்லைகளை மாற்றியே வந்துள்ளது. அடிப்படையில் அனுபவம் ஆகுதலில் எல்லாம் ஒரு தளத்துக்கு வருதல் சாத்தியமாயினும் இன்று சொல்லப்படும் கவிதைகளுக்கான உத்தி பெரிதும் படிமம், குறியீடு சார்ந்தே காணப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். மேற்படி விடயங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாமையும் நவீன கவிதையில் இருண்மைத் தன்மை உண்டென்ற குறை கூறலுக்குக் காரணமாகும்.
சம காலத்தில் மென்ணுணர்வு சார்ந்த கவிதைகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டுப் பற்றி.
யுத்த காலம, போருள் வாழும் சூழல் அவ்விதமான மென்னுணர்வு மற்றும் சுயம் சார்ந்த கவிதைகள் அதிக அளவில் எழுதப்பட அல்லது பிரசுரமாக வாய்ப்பில்லாது போயிருக்கலாம. ஆனால் முற்றாக வரவேயில்லை என்று கூறிவிட முடியாது. அத்தகைய கவிதைகள் முதன்மைப் படுத்தப்படவில்லை என்று கூறலாம். இப்படி எழுதினால்தான் பிரசுரிக்கப்படும் என்ற கருத்தின் அடிப்படையில் எழுதுவோரும் பிரசுரிப்போரும் தொழிற்ப்பட்ட காலகட்டத்தில் பெருமளவில் கோஷமாகவும் உணர்ச்சிப்பிரகடனங்களாகவும் வெளிப்படும் படைப்புகள் முதன்மைப்படுத்தப்பட்ட நிலை ஒன்று இருந்தது 260660)LD.
எமது உணர்வுகளை வெளிக்கொணர்வதற்கு எங்களிடம் உள்ள கவிதை மொழி குறித்து.
கவிதையில் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனித்துவப் பாணியை வகுத்துக் கொள்வதே நியாயம. ஆயினும் பொதுப் பண்புகளின் அடிப்படையில் ‘எமது கவிதை மொழி’ என்று பார்த்தால் போதுமானதாக இல்லை என்றுதான் கூறவேண்டும் பழகிப் போன சொற்தேர்வுமுறை, உவமைகள, மிகைத்தன்மை வாய்ந்த வெளிப்பாட்டு உத்தியென இன்னமும் நைந்து போன விடயங்களை நம்மில் பலர் கையாழுகின்றனர். அது மாற வேண்டும். அதேபோலவே மேத்தா, வைரமுத்து பாணியினாலான கவிதை முறையை இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தன்மையிலிந்தும் வெளியே வரவேண்டும் அப்போதுதான் எமக்கென ஒரு ஆரோக்கியமான மொழித்தளத்தை உறுதி செய்து கொள்ளமுடியும். w

15
LSL TLJCTTTMSLLSSS
உங்களின் கவிதை மொழியை எவ்வாறு கண்டடைந்தீர்கள்?
இதுவரையில் நான் எழுதிய கவிதைகள் எண்ணிக்கையில் குறிகியவைதான் அதிலும் வெளிவந்தவை பிரசுரமானவை மிகச் சொற்பம் ஆனாலும் எனக்கென ஒரு கவிதை மொழியை விரித்துக் கொள்ளும் எத்தனம் சிறிது சிறிதாய் வெற்றிபெறுகின்றது எமது கவிஞர்கள் கவிதையில் சாதனை புரிந்த கவிஞர்களது மொழி, பார்வை, தொனி இவற்றைப் பயின்றுதான் அவற்றுடன் பரிச்சயம் கொண்டுதான் எனக்கென ஒரு கவிதை மொழியை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.
நீங்கள் ஒரு கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள் உங்களின் கவிதைகளில் மொழிபெயர்ப்பின் செல்வாக்கை உணர்ந்துள்ளிர்களா? | ஒரு கவிதையைப் படைப்பதற்கும் ஏற்கனவே o!
کیمبر
வேறு மொழியில் எழுதியதைத் தமிழில் கொண்டு வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு १
படைப்பென்பது உள்ளுந்தலின் வேகத்தோடும் தவிர்க்க
இயலாமையோடும் நிகழ்வது. மொழி பெயர்ப்பதென்பது அவ்வாறு உந்தலில் இன்னொருவர் படைத்ததை அதே உணர்வோடு அதே எல்லைகளைக் காட்ட முனையும் எத்தனம் எனவே சொந்தமாகப் படைக்கும் முயற்சியில் மொழிபெயர்ப்புத் தாக்கம் நேரிடுவதில்லை இரண்டும் வேறு வேறு தன்மை கொண்டவை.
தற்கால கவிதைக்ள், கவிஞர்கள் தொடர்பாக.
கவிதைகள் என்ற மகுடத்தோடு நிறையவே வாரப்பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகிறவற்றைப் பார்க்கின்றோம் கவிதை என்ற கலையை ஒரு அக்கறையோடும், அவதானத்தோடும் அணுகாமல் அளவில் சிறியதாய் இருப்பதாலும் பலரும் துணிந்து முனைவதாலும் இன்று பலர் கவிதையில் துணிந்து கைவைக்கிறார்கள் அது கவிதைக்கு நேரிடும் ஒரு ஆபத்து
கரிசனையோடும் கவிதைற்றிய உள்ளுணர்வோடும் மிக எச்சரிக்கையோடும் ஈடுபடவேண்டிய ஒரு முயற்சி. அது பக்க நிரப்பிகளாகவோ இடை நிரப்பிகளாகவோ கவிதைகளைக் கொள்ளாமல் அவற்றை பிரதானமான என்ற கருத்தோடு அணுகுதல் அவசியம். நிறையவே எழுதுவதும் நிறையவே வெளிவருவதும் புத்தகங்கள் ஆவதும் மட்டும் அந்தக் கலையை வளர்ப்பதாகி விடாது என்பதை யாவரும் உணர்ந்தாக வேண்டும்,
சந்தா விபர
நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் தனிப்பிரதி ரூபா 10's இரண்டு பிரதிகளை" அனுப்பி வருடச்சந்தா ரூபா 59 வைக்கவேண்டும். ஒரு பிரதி மட்டும் (தபால்செலவு உட்பட) அனுப்பினால் "புதியவை” பகுதியிலேயே சந்தா காசோலை மூலமாகவோ D6 Guit. இடம் பெறும், மூலமாகவோ அனுப்பலாம்.
မွို....... `ဒ္ဒိဒ္ဓိ முகவரி: த.விஜயசங்கள்
-ஆசிரியர்- 498/1 நாவலர் விதி
பாம்ப்பாணம்.

Page 9
16
தவிர
ஒளிரும் ஓவியங்களை
p LIITĪTäsaELDT" G36i எழுகிற ତୁରfilli) அது என் ஓவியம்
A அருவ உருக்களுக்குள் 960) U (plgul T35 வெப்பத்தியை என்னுள் கீறி விட்டுப் போன ஒவியம்.
தொலைவிலிருந்து ஒளிரும் மஞ்சள் சிவப்புப் புள்ளியாய். தீண்ட முடியாத என் உறவினை வரைந்துவிட்டுப்போன ஒவியம்.
நேற்றிலிருந்து திடிரென வெளிப்பட்டு நிற்கின்றது ஒப்பாரிப் பாடல்களை
திடிரென கிளறிவிட்டு என்னுள் மாய்க்கும் வேதனையாய்...... வெளிப்பட்டு நிற்கிறது.
நீ மனிதனல்ல
அதீத நம்பிக்கையில்
உன்னிடம் ஒப்படைத்து
தோற்றுப்போன என் வாழ்வு
த.மலர்ச்செல்வன் மீண்டும் திமிர்கிறது உன் சீற்றம் கண்டு
நீ, ராட்சகன்
நீ, துரோகி ஒளிரும் என் ஓவியங்களைக் காவுகொண்டு என் தலை மீது விதியெழ முயல்வது எத்தனை தகும்! சொல்
 

17
605-DrTafo mmmmmmmm
ஞாபகத்தின் சுவடுகள்
நா.ஜனனி தரம் 10 யா/இந்து மகளிர் கல்லூரி
மூச்செல்லாம் அள்ளி வந்து விட்டதே ஆனால் உயிர் மட்டும்தான் வரவில்லை பல்லாயிரக் கணக்கான உயிரின் கனவே இந்தக் கனவு கூட்டினுள் அடைத்து விட்டு பிறருக்கு கூறு
கனவு ஒரு கூடு என்று
மனிதர்களின் குடிசையில் ஒரு உயிரை சேர்த்து விட்டால் கனவின் துன்பம் தெரிகின்றது.
அரசன் தன் கட்டளையை செய் என்கிறான்
கனவின் பாசம் நீங்கவில்லை கூட்டில் சென்ற துன்பம் போக்கவில்லை இந்த யோகத்தின் பிறப்பு மனிதப் பிறப்பிலே ஞாபகத்தின் என்னவென்று தெரியவில்லை சுவடுகள் பெருகுகின்றன.
பாசத்தை காவிக்கொண்டு துன்பத்தை அனுபவிக்க முடியாது.
உயிருக்குப் பிறம்பாயும் நேருக்கு நேராயும்
வாழ்ந்து வருகின்ற ஓசையின் ஒலியைத்தேடுகின்றேன் கனவினது யோகத்திற்கு கிடைக்கவில்லை.
தெரிவதில்லை நறுமணங்களைத் தேடியலைகிறது அது எப்போதும் அலைகளின் சித்திரங்கள்
பாயும் போது உன் சிறகுகளை அடைத்து விட்ட
தன் ஒலியைப் பரப்பிக்
ஒரு உயிரினது பிறப்பு கொண்டு அலைகிறது என்பதை
என்னவென்று தெரியவில்லை எனக்கு.

Page 10
மீண்டும் வரும் நாட்கள் (கவிதைகள்) ஆசிரியர் - மு. புஷ்பராஜன் வெளிய °டு காலச்சுவடு பதிப்பகம் விலை: 60 ரூபா (இந்திய விலை)
இன ஒடுக்குமுறைக்கு எதிரான கனற்பொறிகளைக் கவிதையிலே தூவிவிட்டிருக்கும் புஸ்பராஜனின் தார்மீக ஆவேசம் மெய்யானது. காவலுக்கு வந்தவர்கள் கதிரறுத்த கதையை’ ஒப்ப மறுக்கும் நெஞ்சம் அவருடையது. புகலிட வாழ்வின் சோகங்களை மெல்லிய நீர் வட்டங்களாய் விரித்துப் பேசும் அவரின் கவிதைகள் உள்ளொளியின் விகCப்புகள்.
(பதிப்புரையிலிருந்து)
மற்றுமொரு மாலை (கவிதைகள்) ஆசிரியர்: செ.சுதர்சன்
ഖണിuീ6; jbങ്ങബഖങ്ങ
விலை 100 ரூபா சுதர்சனின் கவிதைகளுக்கு ஒரு பொதுவான இயல்பு உண்டு. தாம் கூறவந்தது இதுதான் என்று வெட்ட வெளிச்சமாகவே தெரிவித்துவிடாது, கவிதையின் (3. É a(36) (Eu 39کہ{ g56آئ தொணியையும் , பொருளாழத்தையும் வாசகள் உணர்ந்து கொளாளுமாறு செய்வது.
w (முன்னுரையிலிருந்து)
ஓவியம் வரையாத தூரிகை (கவிதைகள்) ஆசிரியர் - அனார் வெளியீடு: மூன்றாவது மனிதன் வெளியீட்டகம் விலை 100 ரூபா
‘ஓவியம் வரையாத துTரிகை பெண் ணின் ஆத்மார்த்தமான குரலினை பல்வேறு வடிவங்களில் கேட்க முடிகிறது. இக்குரல் விளிம்பு நிலை வாழ்வை பல வழிகளில் பதிவு செய்கிறது. அதாவது பெண் என்ற வகையில் இப் பதிவு பால் ரீதியானதாகவும் , கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் தமிழ்ப்பெண் என்ற வகையில் பிரதேசம் , மத, இன மொழிfதியானிதாகவும் அமைகிறது
st (முன்னுரையிலிருந்து)
 
 
 

19
Goss-DrTeif Mmmmmmmmmmmmmmmmmmmmmmini
பகிர்தல்
“இரண்டு அந்நியர்கள் ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமென நினைக்கிறாயா?” தமயந்தியிடம் கேட்டாள் சாவித்திரி வெட்கமுற்றவளாய் இனிய ரகசிய எண்ணங்களை மனதிற் படரவிட்டபடி காதலின் நினைவுக் கிறக்கத்துடன் பதில் தந்தாள் தமயந்தி “இல்லை நான் அப்படி நினைக்கவில்லை” ஒரு பதிவிரதையுடையதை தன் பெயராய்க் கொண்ட இவள் யன்னலூடு வெறித்தபடி கூறினாள் “ஒவ்வோர் இரவிலும் எங்கள் விட்டில் நான் அதைச் செய்கிறேன்” ‘என்ன..? தமயந்தி அதிர்ந்தாள் “ஒரு அந்நியனோடுதான் இரட்டைப்படுக்கையில் தினமும் படுக்கிறேன்”.
ஆங்கிலத்தில்:- சீதாகுலதுங்க
தமிழில்:- ந.சத்தியபாலன்

Page 11
தொடர்புக்கு: T.P. O776175313
 

ட்டியில் ஓர் ர்னதமான டிங் சென்ரர் றையில் பதிவு ய்யப்பட்ட போன்றவற்றினைப் காள்ள நீங்கள் வேண்டிய இதுவே.