கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவிர 2005.03-04

Page 1

இதழ்-02

Page 2
m Abav
த2ர
[ܕܠܵܐ,ܢ
ஆசிரியர் தானா.விஷ்ணு
ஒவியங்கள்: மாற்கு, சித்தாந்தன், புகழேந்தி (தமிழ் நாடு)
வடிவமைப்பு: விஷால் கணனிப் பதிப்பகம் இமையாணன்.
தொடர்பு முகவரி: தானா - வரி ஷணு 498/1,
நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
TP 0776141776
தேடல் இல்லாமல்
இலக்கியம் இல்லை
“தவிர”வின் இரண்டாவது இதழுடன்
படைப்பாளிகளையும், வாசகர்களையும் சந்திக்கின்றேன். முதலாவது இதழுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாவது இதழை வெளிக்கொண்டுவரத் தூண்டியது.ஆனால் இது தவிரவின் வெற்றியல்ல,தொடர்ந்து இயங்கு வதற்கான நம்பிக்கை மட்டுமே.
இன்று பல இளம் படைப்பாளிகள் கவிதையுலகிற்கு புதிது, புதிதாக காலடி எடுத்த வைக்கின்றார்கள் .அது பெரிதும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும் பலர் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தாக்கத்தைச் உண்டுபண்ணவில்லை. ஆனால் அவர்களிடம் கவிதைக்கான பொறிகள் இல்லாமல் இல்லை, அவர்களிடம் ஆரோக்கியமான வாசிப்பு இல்லை என்பதே இங்கு கவனிக்கவேண்டியதாகும்.
அண்மைக்காலங்களில் வெளிவந்த கவிதைத் தொகுப்புக்களைப் பார்க்கும் போது வெறும் அலங்காரச் சொற்களைக்கொண்டே படைப்பாளிதப்பித்துச் செல்வதும், ஏற்கனவே பழக்கப்பட்ட சொற்களைக் கொண்டு தமது கவிதைகளை வெளிக்கொண்டுவருவதும் தெளிவாகின்றது. இது நவீன கவிதைப் போக்கு, இலக்கியம் பற்றிய அதிகமானதேடல் இல்லை என்பதனையே காட்டி நிற்கின்றது. இந்த நிலமை மாற வேண்டும், ஆரோக் கியமான தேடல் எமது புலத்தில் உருவாக வேண்டும். கவிதை, இலக்கிய உலகத்துக்கு காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொருவரும் தனது படைப்பை மட்டுமல்ல ஏனையோரின் படைப்புகளையும் வாசிப்புக்குட்படுத்த வேண்டும், நவீன இலக்கியம் பற்றிய தேடலையும் அதிகப்படுத்த வேண்டும். தேடல் இல்லாத இடத்தில் ஆரோக்கியமான இலக்கியம் இருப்பதில்லை.
-ஆசிரியர்

ஐபங்குனி-சித்திரைணை
இருப்பின் நதரச்
ஆயிரம் நாகங்கள் என்னை விரட்டுகின்றன காரணங்கள் ஏதுமற்று என் சோலைகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வெறும் மனிதன் என்றாயின் சொறிநாய் கூட, தொந்தரவு படுத்துமா என்ன? என் கால்கள் வலிக்கின்றன. சோர்ந்த மனமும் - தொடரும் துயரும் - எனது குடிநீரில், எனது காலையுணவில், ஒரு குவலை தேனீரில் அனேகமாக நாகங்களின் பார்வை. எனது தேனீரை யாருடனும் பகிர முடியவில்லை சுற்றி வளைக்கப் பட்ட பாசறை போல் என் இருப்பு
எள்ளளவும் இடைவெளிகள்
எனக்கும்
இன்னும் பிறர்க்கும் இல்லை.
கோகுலராகவன்

Page 3
04
தவிர
கவிதை தேடும் பயணம் - 02 றஷ்மியின் கவிதை
மொழி பற்றி.
- Gfuறஇ - W ஒரு கவிஞனின் உள்ளுலகம் ஏனையோரு டையதினின்று மிக வேறுபடுவது, தனித்துவம் மிக்கது. நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை நாம் அனைவருமே தான் புலன் கொள்கிறோம் ஒரு கவிஞனோ தனது தளத்திலிருந்து கொண்டு இந்த வாழ்வின் அசைவுகளைப்பார்ப்பதும் உணர்வதும் அதனுா டான அதிர்வுகளுக்குட்படுவதும் அதை எதிரொலிப்பது மான கிரியைகளில் தனது சுயம் வெளிப்படுமாறு தொழிற்படுகிறான் ‘உள்ளிருந்து வரும் குரலாக அவனது கவிதை வெளிப் படுகிறது. நுண்ணிய அவதானமும் நிதானித்த தேடலும் உடைய ஒருவராக தனது தனித்தன்மை மிகுந்த கவிதை மொழியூடாகக் கலைத்துவம் பழுதுறா வகையில் படைப்பை மேற்கொள்கிற ஒருவராக “காவு கொள்ளப்பட்ட வாழ்வு” எனும் தொகுப்பின் வழி நம்மிடம் வருகிறார் றஷ்மி
நூலின் முன்னுரையில் குறிப்பிடுவது போல தமிழுக்கு மரபாக இருந்து வருகின்ற அகம், புறம் என்னும் பிரிப்பு நிலைகளை நுணுக்கமாக உடைத்து இரண்டையும் நீக்கமறக்கலந்துவிடும் ஒரு படைப்பாளியாக விளங்குகிறார் அவர்.
அவர் கையாளும் மொழியும் அவரது பார்வையும் வாழ்விற் படிந்து போன துயர் குறித்த உறுத்தலும் கவிதை படிப்போரதும், படைப்போரதும் கவனத்தை வேண்டி நிற்பனவாகும்.
ஒருவனிடத்தில் இருக்கக் கூடிய வாழ்தலில் உள்ள ஆர்வமும் பிடிப்பும் சிதைக்கப்படும் போது எழும் வலியும், அரற்றலும், திகைப்பும் கவிதையாய்ப்பதிந்துள்ளன. இத்தொகுப்பில் ‘அசரீரி (28.01.98) எனும் கவிதையில், போருக்கு- திருகி எறி நீயென்று உயிரின் கழுத்தையும்/ துவசம் செய்யவென்று வாழ்வையும் காவுகொடுத்தோர் நாம்.
நமது கவிதைகளில்/மடுவத்து அசூசையும் நம் இரத்தமும் இறுகிக்/கறுப்பாகிக் காய்ந்த நெடியும்/வீசாதோ பின்னே?
 

05 பங்குனி-சித்திரை ஊ
சப்பாத்துக் கால்களின் கீழ்/உயிர் நிலைகள் நசுங்கியும்யோனி சிவந்து குருதி கொப்பளித்தும்நேர்ச்சைகள் பொய்த்து/இஸ்ட தெய்வங்களை எல்லோரும்/நிர்க்கதியில் விட்டுப் புதினம் பார்க்க/வதைத்தே மரிக்கச் செய்யப்பட்ட ஆன்மாக்களின் கனத்தில் காவ ஒண்ணாது காற்றையும் முடத்தில் வீழ்த்திய அலறலைகடைசி ஈனஸ்வரத்தை/உற்றுக் கேட்டதுண்டா நீங்கள்?
பாழுங்கிணற்றுள்ளோ/மலக்குழி ஒன்றுக்குள்ளோ/அன்றில்/இன்னும் கண்டறியப்படா புதை குழி ஒன்றினுள்ளோ/எங்கோ/கொன்று வீசப்பட்ட வர்களுக்காய் காத்திருக்கும்/இனபந்துக்களுக்குச் சொல்லியாற்ற/உங்கள் மொழிகள் வலிவு பெறுமா?
என்று கேட்கின்ற றஷமியின் கவிதைக்குரல் மனுசத்துவத்தின் குரலாய் மனிதனை, வாழ்வை நேசிக்கும் ஒருவனின் குரலாய் ஒலிக்கிறது. கொடிய இவ்வுலகின் குரூரம் தாளாமல், என்னைத்தனியே விடு/நான் உறங்க முடியாதவனாயுள்ளேன்/ஒரு குழந்தையைப் போல அழவிரும்புகிறேன்/அழுதலின் சுகத்தை அவாவி நிற்கிறதென் ஆத்மா. எனஅரற்றும் மென்மனத்தவனாகவும் றஷமி வெளிப்படுகிறார்
முறுக்கான முட் கம்பி உள்ளிறங்கிப் புண் ணாக்கும்/ நோவெடுக்காத குதவழி எல்லோர்க்கும் வாய்க்கட்டும் .
என இன்னோரிடத்தில் கொடுரங்களின் குரூர முகத்தைக் காட்டுகிறது கவிதை.
இவரது கவிதைகள் அனைத்துள்ளும் இவர் கையாழுகின்ற மொழி, சொல்லும் முறை, சொற்தேர்வு இவற்றில் இவர் காட்டும் தனியான அக்கறையும் உள்ளுணர்வுகளுடன் ஒட்டியதாய் அவ்வுணர்வு களின் தொனியைக் காவி வருவனவாய் அமையுமாறு இவர் மேற்கொள்கின்ற உழைப்பு குறிப்பிட்டுக் கூறக் கூடியதாகவும் கவிதை எழுதுகிறவர்களுக்குப் புதிய தடங்களை அறிமுகம் செய்வதாகவும் உள்ளன.
பழகிப் போன காலங்காலமாய் வழக்கிலிருந்து வருகின்ற சொல், மொழி, முதலானவற்றோடு கவிதை எழுதப்படுகின்ற போது அப்படைப்பில் புதுமை ஏதும் இல்லாது போகிறது. அதுமட்டுமன்றி, கவிதை எழுதுகின்ற காரியம் மிகவும் இலகுவானது என யாரும் முடிவெடுத்து விடக்கூடிய சூழலையும் தோற்றுவித்து விடுகின்றது.
தொடரும் இவரது “அசரீரியில்’ இன்னோரிடத்தில் நமது காவிதையிலிருந்து/ நாவைத் தொங்கவிட்டலையும் நாயையும்/ இலை யாண் களின் இரைச் சல களையும் ! எப்படி விரட் டித தூரமாக்கப்போகிறீர்? என அவர் எழுப்பும் கேள்வியிற் புதைந்துளதான அர்த்தம் சிந்தையைக்கிளறுவது.

Page 4
O6
56J Hums
உணர்வு மரத்துப் போனோராய் எல்லாம் மறந்துவிடும் போக்கினை சொல்லுங்கள்/ சவம் புதைத்துத்திரும்பித்/ தடத்தில் சூடு ஆறிப்போம் முன்னம்/அனர்த்தங்களின் அடையாளம் அறவேயற்று கருகிய புள்ளியில் புதிதாய்த் தளிர்க்கவும்/ வாழ்வின் கண் துய்த்துச் சிற்றின்பிக்கவும்/ உதறித்தட்டி சாம்பரையும் மீள வான் நோக்கித் தாவியெழவும் நாமெ ல்லாம் எப்படிக் கற்றுக்கொண்டோம்?
நீங்களே சொல்லுங்கள்./ வழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? என்ற கேள்வியினால் உலுப்புகிறார். -
ஒட்டுமொத்தமாக இவரது அசரீரியைப் படிக்கும் போது எம்முள் விரியும் விளக்கமும், உணரப்படும் புரிதலும், வார்த்தைகளுக்குள் உணர் வைப்பாச்சும் அவரது ஆற்றலை இனம்காட்டுகின்றன.
றஷமியின் "காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்’ தொகுப்பின் கவிதைகளில் கவனிப்பைப் பெறும் தனித்துவப்பண்பாய் பல அம்சங்களை அவதானிக்கமுடியும்.
வாழ்வின் துயரம் பற்றிய பதிவை காதலின் இனிமையை, துயரத்தைப் பேசும் றஷமியின் மொழியில் கூட ஒரு ஆகர்ஷண சக்தி இருப்பதைக் காணமுடியும். அவரது அழகியல் மென்னுணர்வுகளாக வெளிப்படும் கவிதை வரிகள் கூட றஷமி என்கிற கவிஞனின் உலகத்தை நாம் காணத்துாண்டுகின்றன.
றஷமியின் அகம் சார்ந்த காதல், ஆண் பெண் உறவுக்கவிதைகளும் அவர் வரித்துக்கொண்டுள்ள வெளிப்பாட்டு முறையூடாகப் படைப்பாகையில் அழகியலும் யதார்த்தமும் கலந்து ஒரு தனித்தன்மையோடு திகழ்கின்றன. வெறும் கனவுலக மிதப்புகளின் வெளிப்பாடாகவும் அலங்காரச் சோடனைப்படைப்புகளாகவுமே காதற்கவிதைகளைப் பார்த்தும், படைத்தும் பழகிப்போய்விட்ட பலருக்கு றஷமி காட்டும் காதல் உலகம் - காமமும் கூட நிஜம் சார்ந்த சித்தரிப்பாகவும் அதேபோதில் விரசமற்ற வெளிப்பாடாகவும் அமைந்து ஒரு புதிய திசை சுட்டுவதாய்த் தெரிகின்றன.
மென்னுணர்வு சார்ந்த இத்தகைய கவிதைகளில் கூட கவிஞரிடத்து அமைந்த தனித்துவம் ஒளிர்வது குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய ஒரு பண்பு.
வாழ்வின் மீது ஆராத காதலும் மனிதன் மீது ஆழ்ந்த நேசமும் உடைய ஒருவரெனத் தன்னை தனது கவிதைகளின் ஊடாக அறிமுகம் செய்கின்ற றஷமி நல்ல கவிதைகளின் படைப்பாளிகளுடைய வரிசையில் ஒரு பிரதான இடத்தை வகிப்பவராகின்றார்.

ஞானம் கலைந்த இரவு
யசோதரையுடனான கடைசியிரவில் தியானத்தின் ஆழ் நிலையில் ஊறிக்கிட்ந்த புத்தரை அரூப நடனதேவதைகள் இழுத்துச் சென்றன. சூழவும் விருட்சங்கள் வளர்ந்திருந்த இன்பச் சோலையுள் நகக்கணுக்கள் வழியே நுழைந்து மோகக் கனிகளை உண்டு அவர் பசியாறினார். பிறகு தேவதைகள் யசோதரையின் படுக்கையில் அவரைக் கடாசி வீசிவிட்டுப் போயின.
காலை விடிந்ததும் ஞான உறக்கத்திலிருந்து 3560)6]uj Tg5660) தனது தலை மயிர்களினால் மூடி மார்போடணைத்து முத்தமிட்டாள் யசோதரை. புத்தரின் ஞானம் சிதறுண்டு யசோதரையின் கன்னங்களில் முத்தமிட்ட அவரின் ஞான வெளியில் தேவதைகளின் அந்தரங்கங்கள் பூத்து விரிந்தன. அவர் படுக்கையிலிருந்து இறங்கி தேவதைகளின் உலகை தேடி அலையத் தொடங்கினார்.
சித்தாந்தன்

Page 5
08
ண தவிர
நூல் விமர்சனம்
முஜீபமில்லுலிகளைத் தாங்கி. கறிஸ்தத் தொகுப்புக்
9999).....................
போர் ஓய்ந்து சமாதானம் பற்றிப் பேசப்படும் இந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலக்கிய முயற்சிகள் தீவிரம் பெற்று ஓய்ந்து வருகின்றது. சடுதியாக மேற்கிளம்பிய சஞ்சிகைகள் ஓரிரு இதழ்களுடன் நின்று போக பல கவிதைத் தொகுதிகளும், சிறுகதைத் தொகுப்புக்களும், வேறுசில இலக்கிய முயற்சிகளும் இந்தச் சூழலில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது தொகுதியென்ற குறிப் போடு குறஜிபனின் "வலிகளைத்தாங்கி’ கவிதைத் தொகுதி வெளி வந்திருக்கின்றது. முன்னுரையை வாசித்து விட்டு தொகுதியில் நுழையும் போது றஜிபனின் கவிதைகள் பற்றி ஏமாற்றம் மிஞ்சிவிடுவதை தவிர்க்கமுடியவில்லை. அவரின் இரண்டாவது தொகுதி என்பதற்குரிய முதிற்சி கவிதைகளில் இல்லை என்பதே ஏமாற்றமாகிறது.
யாழ்ப்பாண வாழ்வியலின் யதார்த்தத்துடனேயே சாதுளன் றஜிபனின் கவிதையை அணுக வேண்டும். மண்வாசனை என்பது என்ன? கிராமத்தில் வாழும் மக்கள் பேசுகின்ற மொழி மட்டுமே மண்வாசனையாகிவிடுமா? முன்னுரையாளர் சொல்ல வருவது என்ன? பல கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. கிராமிய வாழ்வின் பல்நிலைப்பட்ட கூறுகளும் கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கவில்லை றஜியினின் கவிதை வெறும் விபரிப்பு சார்ந்ததல்ல சொற்களைக் கொட்டி கவிதை மொழியை அழகு படுத்த முனையும் போது கவிதையின் வீரியம் சுருங்குண்டு போய்விடுகின்றது.
நவீன தமிழ்க்கவிதையினது வெளிப்பாடும் அதன் இயங்குதலும் கவிதையினது ஆழ் உணர்வுகளை வாசகனுள் பரவவிடும் வலிமை பெற்றிருக்கிறது. றஜிபனது கவிதைகளைப்
 

Uy
(" , "¬:ශ :______" > • *ாபங்குனி-சித்திரை
படிக்கும் போது ஏற்கனவே பழக்கப்பட்ட அலங்காரங்களையும், வர்ணனை களையும் கவிதைகள் கொண்டு வந்து விடுகின்றன இது றஜிபனது கவிதைகள் என்ற அடையாளத்தை பெற்றுத்தராது இனொருவரை முன்னிறுத்தும் சாயல்த் தன்மையை ஏற்படுத்திவிடும்.
சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் கீழ் நிலைச்செயல்ப்பாடுகளை கவிதைக்குள் கொண்டுவர முயலும் றஜிபன் சமூக மக்கள் சம காலத்தில் எதிர் கொண்ட யுத்தம்), அரசியல் நெருக்கடிகளை எந்தளவிற்கு கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். சிறுவர்கள் பற்றிய அக்கறை றஜீபனது "சிறியவனே இங்கே வா', 'அவிழ்த்து விடுங்கள் போன்ற கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
றஜியனது சமுகத்தின் மீதான பார்வை மரபு நிலைப்பட்டது. பழமைத்தன்மையான கூறுகளை உள்வாங்கிக் கொண்டு கவிதையை எழுதும் போது யதார்த்த தளத்தில் கவிதை சிதறுண்டு போகின்றது. றஜீபனின் பெண்ணிலை சார்ந்த நிலைப்பாடு என்ன? வெறுமனே வர்ணிப்பு சார்ந்ததா? தமிழ் சினிமாய் பாடல். களில் தெறிக்கும் வர்ணணைகளை (ஐஸ் கிறீம் ரிலையே) ஞாபகப் படுத்தும் முறையிலான வர்ணணைகள் கவிதையைப் படிககும் போது நெருடலை ஏற்படுத் துகின்றன (கோலிய கடகமே)
இவர் தனது கவிதைகளில் வெளிப்படுத்தும் உவமைகள் பொருத்தமற்றுக் காணப்படுகின்றன “வாழை நுகர வந்த/ யானைபோல/ என்னை கொத்திவிட் ட கிளியே” இந்த வரியினைப் படிக்கிற வாசகன் உவமை பற்றிய குழப்கங்களுள் ஆட்பட நேரிடும். இவ்வாறு வரும் உவமைகள் கவிதைப் புரிதலைச் சிக்கலாக்கிவிடும். பல கவிதைகளில் புல்லாங்குழல், சலவை, முகாரி, கரைதல் எனப்பல சொற்கள் அடிக்கடி வந்து கவிதைகள் மீதான ஈர்ப்பை கு ைறத்துச் செல்கின்றன.
தொகுதியில் றஜிபன் எடுத்துக் கொண்டுள்ள பல விடயங்கள் கவிதை மொழியினது வலுவின்மை காரணமாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை தொய்ந்து போகின்றன மொழியை சரியாக கையாழ முனைவார் எனின் கவிதைகள் சிறப்பாக வரும் என்பதில் ஐயமில்லை. கவிதைக்கான ஏராளம் பொறிகள் எமது சமுகத்தில்நிeறைந்துள்ளன அவற்றை நுன்னுணர்வுடன் கவிதைகளில் கொண்டு வர வேண்டும். றஜியன் நவீன கவிதை குறித்த தேடலையும் வாசிப்பையும் ஸ்ரிeவு படுத்துவார் எனின் அவரிடமிருந்து பல நல்ல கவிதைகளை வசகள்கள் பெறமுடியும்.

Page 6
O தவிர
நட்சத்திரம்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து சிறு கூடாரம் வானமல்ல வானம் சிறு கூடாரமுமல்ல எப்போம் வாதிட்டுக் கொண்டிருக்க முடியாது உண்மையை விடப் பிடிவாதத்தின் கூர் அதிக காயங்களைத் தரும்
விடைபெறுகிறேன் எந்தத் தோல்வியுமில்லை ஏதொரு வஞ்சனையுமில்லை
கழிவிரக்கங்கள் இனியும் வேண்டாம் கத்தியாகவும் கேடயமாகவும் இருக்கமுடியாது ஒரு பயணிக்கு அது அவசியமில்லை.
கோபங்களில்லாத காடு தீப்பற்றியெரியாத வெளி விசமற்ற நீர்ச்சுனை பொறிகளில்லாத வழி எங்கேனுமிருக்குமென்று தெரியவில்லை.
குலுக்கும் கரங்களில் பளபளக்கின்றன நகங்கள் சினேகத்தின் ஈரமும் அன்பின் நெருக்கமும் இருக்கின்றன.
ჯაჯ228222-ჯs!-ლა-ლ
எல்லாவற்றையும் பிரித்துப் பார்ப்பதில்
அழியவேண்டுமா பொழுது? அதோ பறவைகள் எல்லாவற்றுக்கும் பொறிவைப்பதில் பூக்கள் கசங்க வேண்டுமா மூளையின் மலர். மனிதர்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை குழந்தைகளும் விரிந்த நிலமும் என்னிடமும் எதுவுமில்லை புன்னகைக்கும் மனிதரும்
கொண்டு போவதற்கும்.
வழிமாறிய ஆட்டுடன்
ஞாபகங்களும் வேண்டாம் ஓரிடையன் அலையமுடியாது வலிதரும் நினைவுகளால் என்னலாபம்?
விடைபெறுகிறேன் அலகுகளின்றி உனது சொற்களிலிருந்து ஆகையால் விடைபெறுகிறேன்
எந்த நெருடலுமில்லை செயலின் முகம் எப்போதும்.
 

பங்குனி-சித்திகை
வன்னியின்
மழைக்காட்சி 2004
மரங்களைக் கழுவிய மழை விதியைப் பாழாக்கிற்று வெள்ளம் நிரம்பிய வீதியெங்கும் குண்டும் குழியும் நனைந்தபடி பள்ளிச் சிறுவர்கள் விறகு வியாபாரி
இரண்டு மூதாட்டிகள் குழந்தையுடன் ஒரு பெண் தலையைத் தாழ்த்திய படி ஓடியொதுங்குகிறது ஒருநாய் தலையைத் தாழ்த்தியபடியே மெதுவாக நடக்கின்றன நான்கைந்து மாடுகள்.
வீட்டுச்சுவரோடு ஒதுங்கியபடி நிற்கின்றன கோழிகள்
ஒழுக்கு வீட்டில் ஈர்விறகுகளுடன் புகையில் முகம் புதைக்கும் பெண் அடுப்பைவிடக் கனல்கிறது அவலுடைய இதயம்.
மழை கொட்டுகிறது வானத்துக்கும் பூமிக்குமிடையில் சாம்பாராய் ஒரு படிவு நீலம் பெயர்ந்த வானத்தில் நட்சத்திரமில்லை, நிலவில்லை, சூரியனில்லை, ഖണി |ിഞ്ഞേ. திசைகள் மூடிப் பொழிகிறது மழை.
குமுறும் கடலில் மழையைக் கிழித்து, அலையைக் கிழித்துப் போகின்றன படகுகள் இடிந்த பாலத்தின் மேல் நீர் வழிந்தோட வருகிறது ஒரு புதிய வாகனம் ஏதோ ஆங்கில எழுத்துக்கள் சேர்த்துவாசிக்க முடியவில்லை அதிர்வில் வீழ்கிறது ஊறிய மண்சுவரொன்று அருகிலுள்ள விட்டில்.

Page 7
sa g56y
29làálass6Ooras aséntSocoyஓசப்பானிச*வைரக்கட’ கவிதைகள்.
ச.பூரணச்சந்திரன்
ஜப்பான் என்றதமே பலருக்கு பலவித நினைவுகள் வரக்கூடும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு ஜப்பானியர்களின் உழைப்பு, இரண்டாம் உலகப் போரில் அடிபட்ட ப்ோதும் அது அடைந்த முன்னேற்றம் நினைவு வரும். இளைஞர்களுக்கு ஜூடோ,கராத்தே போன்ற தற்காப்புச் சண்டை முறைகள், எக்ஸ்போ, பொருட்காட்சி நினைவு வரலாம். அழகியல் ஆர்வலர்களுக்கு ஓரிகாமி, இகபானா போன்ற கலைகள் தாவரவியல் ஆர்வலர்களுக்கு போன்சாய் மர வளர்ப்பு முறை ஞாபகம் வரலாம். தத்துவ ஆர்வமுள்ளோர்க்கு ‘ஜென்’ புத்தசமயச் சிந்தனைகள் எழக்கூடும் இதுபோல இலக்கிய ஆர்வம் உள்ளர்க்கு ஜப்பான் என்றதும் ‘நோ’, ‘காபுகி’ நாடக வகைகளும், உலகின் முதல் முதல் நாவலான 'கெஞ்சி கதை"யும், "ஹைக்கூ கவிதைகளும் ஞாபகம் வருவது இயல்பு.
ஜப்பான் இலக்கியம் சுமார் ஆயிரம் வருடம் பழமை கொண்டது. தமிழில் எட்டுத்தொகை - பத்துப்பாட்டு என்ற பழந்தொகுப்பு நூல்கள் போல, ஜப்பானிலும் தொகுப்புக் கவிதை நூல்கள்தான் பழமையானவை. தமிழில் நீண்ட கதைப்பாடல்கள் இருப்பது போல ஜப்பானிய ‘சோகா’(Choka) கவிதைகள். நாட்டுப்புறப்பாடல்கள் 'மின்-யோ’ (min-yo) குழந்தைப்பாடல்கள் “டோ- (3uT” (do-yo).
தமிழில் அகவல்பா போல நீண்டு செல்வது ஜப்பானிய “ரென்கா’ (renga) என்ற கவிதைவடிவம். வெண்பா போலக் குறுமையானது ஹைக்கூ’. பாரதியார்,ஹைக்கூ கவிதைகளைப் பாராட்டியிருப்பதோடு, குறள் வரிகளுடன் இவற்றை ஒப்பிட்டுக்காட்டியுள்ளார்.
ஜப்பானியர்களுக்கு 5அசை, 7அசை கொண்ட அடிகளை அமைப்பது மரபு. ஜப்பானிய கவிதை வடிவங்களில் புகழ் பெற்றவை டன்காவும், ‘ஹைக்கூ’வும் டன்கா’ என்ற கவிதை வடிவம் 31 அசைகள் கொண்டது. அவை 5 அசை - 7 e9i 60ᎧᏑ - 7 e9l 60ᎧᏧ - 7 e9160ᎧᏜ -- 5 ᏯᏕ160ᎧᏑ ' 6Ꭽ 60Ꭲ 5 அடிகளாக வரவேண்டும். ஹைக்கூ கவிதையும் 17 அசைகள் கொண்டது. முதல் அடியில் 5 அசைகள், இரண்டாம் அடியில் 5அசைகள் மூன்றாம் அடியில் 5 அசைகள் என்பது அதன் யாப்பு வடிவம்.
 
 

-
பங்குனி-சித்திரைணை
இந்த ‘ஹக்கூட' என்ற கவிதை வடிவம் ஒரு அற்புதமான விஷயம். இயற்கையான, கட்டுப்பாடில்லாத, பொருளமைப்பு. 3 வரியிலேயே இதயத்தைக் கெளவிப்பிடிக்கும் கம்பீர வடிவம் கொண்டவை. ஒரே ஓட்டமாக இல்லாமல் தத்தித் தத்தி ஓடுபவை. 2 அடிகள் படித்ததும் நிற்க வேண்டும். ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடாது. இரண்டு அடிகள் படித்துக் கொஞ்சம் யோசித்து, மூன்றாவது அடிக்குச் செல்ல வேண்டும். சான்றாக, மேரி டாகே என்ற கவிஞரின் ஒரு ஹைக்கூ:
உதிர்ந்து வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது. இவை முதலிரு வரிகள் நாம் உடனே யோசிக்கிறோம். எப்படி உதிர்ந்த சருகு மலர் கிளைக்குத் திரும்ப முடியும்? விந்தையாக அல்லவா இருக்கிறது? இதோ வருகிறது மூன்றாவது அடி:
ஓ ! பட்டாம் பூச்சி நம் திகைப்பு விடுபடுகிறது. எவ்வளவு சுகமான சிந்தனை இதுதான் ஹைக்கூவின் வடிவ அமைப்பு. மூன்றே வரிகளில் ஒரு பிம்பம் உருவாவது. ஆனால் இந்த மாதிரி ஒரு அழகான பிம்பத்தைத் தோற்றுவிப்பதுதான் ஹைக்கூவின் பயன் என்று நினைக்கலாகாது. கவிதை என்பது சிந்திக்கத் தூண்டுவது. கவிஞனின் படைப்புப் பணியில் வாசகனையும் பங்குகொள்ள வைப்பது. ஹைக்கூ கவிதை ஒவ்வொன்றும் ஆழ்ந்த உட் பொருள் - உள்ளுறைப் பொருள் கொடுப்பது. மேலே கண்ட கவிதைக்கும் ஆழ்ந்த உட்பொருள் உண்டு.
செரி மரத்துப் பூக்கள், ஜப்பானில், வசந்த காலத்தின் சின்னம். எனவே உதிர்ந்து வீழ்ந்த மலர், வசந்தம் சென்று விட்டதை, மரத்தின் இழப்பை உணர்த்துகிறது. இயற்கை, இந்த இழப்புக்கு ஈடு செய்கிறது - பட்டாம் பூச்சியை அந்தக் கிளைக்கு அளித்து அழகை ஈடுசெய்கிறது. இது ஒரு உட்பொருள்.
ஹைக்கூ கவிதை, ஜென் சிந்தனையிலிருந்து தோற்றம் பெற்றது. ஜென் கருத்துக்கள், மேல்- தோற்றத்திற்கு புரியாத தன்மையும், ஆழமான பன்முக அனுபவங்களும் கொண்டவை. இதே ஆழம் ஹைக்கூவிலும் உண்டு. மேற்கண்ட ஹைக்கூவும், வாழ்க்கையில் இழப்புக்கள் தற்காலிகமானவை என்பதையும், இழப்புக்கள் மீண்டும் ஈடுசெய்யப்படுவதே வாழ்வென்றும் விளக்குகிறது. இன்னும் பலவிதப் பொருள்களும் இதற்குள் காணலாம்.
பொதுவாக, ஹைக்கூ கவிதைகள் அதிர்ச்சி மதிப்பு உடையவை - ஓ ஹென்றி கவிதைகளைப் போல, முதலிரு அடிகளில் ஒரு அழகிய பிம்பம். மூன்றாவது அடி ஒரு 'ஷாக்’ தருகிறது சான்றாக:
“இந்த அழகிய மலர்களிடையே ஒரு மரங்கொத்தி தேடுகிறது’

Page 8
TT LLkMSMMMSLSLSLSLSLSLSLSL
இவை முதலிரு வரிகள். எதைத் தேடுகிறது மரங்கொத்தி? மூன்றாவது வரியைக் கவனியுங்கள்.
“செத்த மரத்தை” இந்த அழகிய உலகிலும் தீமைகளையே, செத்த பழமை வாதங்களையே தேடும் வீணர்களை நினைவூட்டவில்லையா,இந்த மரங்கொத்தி?
ஹைக் கூ கவிதைகள் இறுக்கமானவை; செறிவானவை; அழுத்தமானவை. இவற்றின் முதல் வரிகள் மாறிச் செல்லும் காலத்தின் - ‘மின்னி மறையக் கூடிய’ கூடிணத்தின்- ஓரியல்பு பிடிபட்டு நிற்க வேண்டும் என்பது பொதுவான ஹைக்கூ இலக்கணம். இந்த முதலிரு வரிகளின் இயல்புக்கு மாறான மூன்றாவது வரி- கடைசி வரி- அழகெனும் தத்துவத்தின் நிரந்தர இயல்பை - வாழ்வின் நன்னம்பிக்கையை உணர்த்த வேண்டும்சான்றாக "மசாஹிடோ’ என்ற கவிஞனின் ஒரு ஹைக்கூ:
என் வீடு தீப்பட்டெரிந்தது! இப்போது நன்கு காணமுடிகிறது: உதிக்கும் நிலவை. வடிவத்தில் வாமனனாக காணப்பட்டு. அர்த்தத்தில் விசுவரூபம் எடுக்கும் இந்த ஹைக்கூ கவிதையை நேர்த்தி செய்து முழுமையளித்தவர் பாஷோ என்ற 17 ஆம் நூற்றாண்டு ஜென் துறவி. அவரது கவிதைகள் எளிய மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பவை.
இந்த அழகிய கிண்ணத்தில் பூக்களை அடுக்கிவைப்போமே! அரிசிதான் இல்லையே! இன்னும், யோஸா பூஸான், கோபா யாஷிகி ஈஸா, மஸ ஓகோ ஷரிகி, ரைஸான் என்று பல கவிஞர்கள் இந்த வடிவத்தைச் செம்மைப்படுத்தினர். ரைஸானின் கவிதை மாதிரிக்கு:
நாற்று நடும் பெண்கள் எங்கும் சேறு. அவர்கள் பாட்டைத் தவிர. வாழ்க்கையின் புதிர்த்தன்மையை சில ஹைக்கூ கவிதைகள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகின்றன:
தண்ணிரில் நீந்தும் வாத்து, தன் பிம்பத்தை, பதிக்க முயலவில்லை- தண்ணிரும் பிம்பத்தை வைத்துக்கொள்ளவில்லை. குறுகிய வடிவத்திலும், படிம அழகிலும் குறுந்தொகை- ஐங்குறுநூறு போன்ற சங்கக் கவிதையை நினைவூட்டும் இந்த ஹைக்கூ கவிதை, இந்த நூற்றாண்டின் மேலை இலக்கியத்தையும் பாதித்துள்ளது. புதுக்கவிதை தோன்றக் காரணமாக இருந்த “இமேஜிஸ்டு’ இயக்கக் கவிஞர்கள் - குறிப்பாக
 

15
பங்குனி-சித்திரை
எஸ்ராபவுண்டு, ரிச்சர்டு ஆல்டிங்டன், டி.ஈ. ஹல்மே, H.D. போன்றோர் இந்தக் ஹைக்கூ கவிதையால் பாதிப்புப் பெற்றவர்கள். தமிழ்ப் புதுக்கவிஞர்களிடமும் ஹைக்கூ கவிதையின் தாக்கம் உண்டு. "ஹைக்கூ'வின் குறுகிய வடிவையும், அதிர்ச்சி மதிப்பையும், ஞானக்கூத்தனின், பின்வரும் சிறிய கவிதை பயன்படுத்தியுள்ளது:
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் -
பிறர் மேல் விடமாட்டேன். ஆனால் இதில் ஜப்பானியப் படிமத்தன்மை இல்லை. நகுலனின் கவிதை ஒன்று.
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை. இதில் படிமமும், குறிப்புப் பொருளும் இணைந்துள்ளன. ஜப்பானிய ஹைக்கூ போலவே முரண்பொருள் தன்மையையும், வாழ்வின் சிக்கல் தன்மையையும் பிரதிபலிக்கும் தமிழ்ப் புதுக்கவிதை ஒன்று:
காற்று வராதா என்று
ஜன்னலைத் திறந்து வைத்தேன்
காற்று வந்து ஜன்னலைத் சாத்திச் சென்றது. ஹைக்கூவின் சிறந்த பண்புகளைப் பெருமளவு பெற்றுள்ள தமிழ்க் கவிதை ஒன்று- ஆனந்த் எழுதியது:
சற்றைக்கு முன் ஜன்னல் சட்டமிட்ட வானில் பறந்து கொண்டிருந்த பறவை எங்கே?
அது
சற்றைக்கு முன் பறந்து கொண்டிருக்கிறது.
'ஜன்னல் சட்டமிட்ட வான்’ என்ற படிமம் மாறாத நிலைத்தன்மையைக் காட்ட, பறந்து கொண்டிருக்கும் பறவை மாறி வரும் காலங்களுக்கிடையிலான முரண்பாட்டையும், மனிதர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலைத்துவிடுவதையும் காட்டும் குறியீடாகிறது. அப்துல் ரகுமான், அமுதபாரதி போன்றோரும் ஹைக்கூ வடிவத்தில் கவிதைகள் வடித்துள்ளனர்.
ஜப்பானிய ஹைக் கூ கவிதை அமைப் பைத் தமிழில் கொண்டுவரும்போது, மூன்று வரி அல்லது 17 என்பதை விடாப்பிடியாகப்

Page 9
l
6 தவிர ஊா
பற்றிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஜப்பானிய மொழியின் தன்மையும் யாப்பும் வேறு. மின்னி மறையும் கணத்தின் பதிவான ஒரு பிம்பத்தையும், அதற்கு மாறான நிரந்தரத்தின் சாயையையும் கவிதையில் கொண்டுவருவதுதான் அவசியம். வெறும் பிம்பங்களின் அழகை மட்டும் திகட்டத் திகட்டப் பதிவு செய்து விடுவதும் போதாது. வாழ்வின் அர்த்தங்கள் பிடிபட வேண்டும். உள்ளுறையாக.
ஜப்பானியக் கவிதை மரபில் ரென்கா என்ற நீண்ட கவிதை பல கவிஞர்களால் கூட்டாக இயற்றப்படுவது. அதன் முதல் மூன்றடிகள் விடுதலை பெற்ற வடிவமே ஹைக்கூ. பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் பிரசித்திபெறத் தொடங்கிய இக் கவிதை வடிவம், உலக கவிதை இயக்கத்தையே பாதித்து தன் கலாசார முத்திரையைப் பதித்துள்ளது. ஜப்பானில் இன்றைக்குப் ஆயிரக்கணக்கான கவிதை மன்றங்கள் ஹைக்கூ படைப்பதில் ஈடுபட்டுள்ளன ஆனால் கொள்வினை கொடுப்பினை ஒருவழிப் பாதையில்லையே! இன்றைய ஜப்பானிய ஹைக்கூ மேலைநாட்டுச் சிந்தனைத் தாக்கங்களை அதிகப் பெற்றுள்ளன. இன்றைய ஹைக்கூ ஒன்று:
ஆடுகின்ற இந்தத் தொங்குபாலம்
நகள்பவரால் பிணிக்கப்பட்டு
அமைதியாகி விட்டது; நமது பின்னப்பட்ட வாழ்வு போல.
நன்றி :- அலை
நாங்கள் கவிதை புனைவதற்கு கவிஞர்கள் அல்ல கடந்த பல ஆண்டுகளாக எங்கள் எண்ணச் சிறகுகள் அடைபட்டு மறக்க நினைத்தும் முடியாது போன நினைவுகளாலும் மண்ணுக்காய் உயிர்தந்த உத்தமர்களின் நினைவுகளினாலும் எங்கள் நெஞ்சங்கள் கணக்கின்றன.
-தொகுப்பாளர் உரையிலிருந்து
சந்தா விபரம் தனிப்பிரதி ரூபா 10/=
நூல் விமர்சனம்
வருடச்சந்தா ரூபா 60/-
நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்பி வைக்கவேண்டும். ஒரு பிரதி மட்டும் அனுப்பினால் "புதியவை” பகுதியிலேயே இடம் பெறும்.
-ஆசிரியர் -
(தபால்செலவு உட்பட)
சந்தா காசோலை மூலமாகவோ மணிே
மூலமாகவோ அனுப்பலாம்.
്യpaഖി.
த.விஜயசங்கள்
498/1 நாவலர் வீதி
யாழ்ப்பாணம்.
 
 
 
 

BUJT
குலைந்த அழகு
பொருளாசை உந்த அவர்கள் புதுத் தேசத்தை விழுங்கும் எண்ணம் கொண்டலைந்தனர் காட்டுமிராண்டிக் காற்றால் சாய்க்கப்பட்ட மரத்தின் கிளைக் காம்புகள் என முலைகள் வருடிப் போயின கசையடியின் கொடுரம்
அனாதைகளின் வலியை
மரக்கச் செய்தது. இனம் ஒன்றின் அழகு குலைந்தது பணத்தாசைப் பிராமணரின் மந்திர உச்சாடனம்
உச்சஸ்தாயியில் முழங்க,
இன்று இனமொன்றின் அழகு சேடமிழுக்கிறது.
ஆங்கில மூலம் - (f) பக்டிப் மறாஜ்
(கருபியன் கவிஞர்)
தமிழில் - சங்கரன்

Page 10
தவிர
என்மீதான உனது காதலுக்காக ஒரு நிலவாக இருக்காதே உன்னால் முடியுமானால் ஒரு சூரியனாக இரு நீ தேக்கி வைத்திருக்கும் கனவிலிருந்து வெப்பத்தைப் பெற்று இருண்ட காட்டை எரிக்கிறேன்.
எண்மீதான உனது காதலுக்காக ஒரு சிற்றாறாக இருக்காதே உன்னால் முடியுமானால் ஒரு வெள்ளமாக இரு உனது வலிமையான பெருக்கால் கரைதட்டிப் போன கவலைகளை அடித்துச் செல்கிறேன்.
எண்மீதான உனது காதலுக்காக ஒரு மலராக இருக்காதே உன்னால் முடியுமானால் ஒரு இடியாக இரு அதன் முழக்கத்தை எண்மார்பில் தாங்கி போர்க் குரலை எல்லாத் திசைகளிலும் செலுத்துகிறேன்.
எண்மீதான உனது காதலுக்காக ஒரு பறவையாக இருக்காதே உன்னால் முடியுமானால் ஒரு சூறைக்காற்றாக இரு அதன் வேகத்தை என் இதயத்தில் தாங்கி சுரண்டலின் மேல் கட்டப்பட்ட மாளிகையைச் சாய்ப்பேன்.
நிலவும் ஆறும் மலரும், நட்சத்திரமும், பறவையும், கொஞ்ச நாள் வரை தள்ளிவைக்கப்படட்டும் துயரம் தரும் இந்த இருளில் இறுதிப்போர் இன்னமும் நடைபெறவில்லை நம் எளிய குடிசையில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் நெருப்பு:நெருப்பு:நெருப்பு.
தமிழில்:இந்திரன்
நன்றி:காற்றுக்கு திசை இல்
 
 
 
 
 

மேசைப் பூச்சாடி
விழுந்து நொருங்குமெனும் éᏏ6Ꮒl60Ꭰ6b
இனி எவருக்குமில்லை பந்தல் கூட்டுக்குஞ்சுகள் பயந்தொடுங்கி நீண்டநாட்களாயிற்று. கதவோரம் விழுந்து நொருங்கிய பீங்கான் துண்டுகளை பொறுக்கும் அவசரமற்றிருக்கும் உனதருகில் பாத்திரமொன்று கண்ணிரால் நனைகிறது மாலைச் சூரியன் படுத்துப்போகும் உன் முகச்சுவர்களில்
தெறித்தெழுகிறது: ; : “ஒருபிள்ளை போதும்” என நான் சொன்ன வார்த்தைகள்.

Page 11
“箕密羧签然莺》&覆” is Yi S. 鹫段感莓
19ટ્ટો
LD.D81
 ́Veezapathiataat éane, Kondaviello2th,
97a55rna.
O7769 7.79. O2 4
-ܬ
 
 
 
 
 

പു
26xy Geynrese(SOLAT
நவீன டிஜிற்றல் asprm ep6ob புரோலைட் கொணர்டு pSp6b lub
பிடித்திட, ற்றல் முறையில் பிறிண்ட் செய்து அல்பங்கள் கட்டிக் கொள்ள
مجتميز بتن
igital Ahoto
டப்பிடிப்பாளர்
மஸ்
வீரபத்திரர் வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்,
14123
590730
ノ