கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2004.01

Page 1
|
 

W

Page 2
கல்ெ
சர்வ வல்லமையுடைய பேரரசி அணு ஆயுத வல்லமையுடனும் அவற்றைக் காவிச் செல்லும் ( இஸ்ரேல் பலஸ்தீனத்தின் விடுதலைப் டே பலஸ்தீனத்தின் ஒவ்வொரு அர குண்டு துளையாத கவச வாக போராளிகளின் இருப்பிடங்க6ை ஒவ்வொரு பலஸ்தீன நகரத்ை உளவுச் செய்மதிகள் வழிகாட் போராளிகளின் வாகனங்கள் மி அதிவேக விசைப்படகுகள் அை குறிதவறாத எறிகணைகள் போராளிகளின் பயிற்சிப் பாசன பலஸ்தீன அகதி முகாங்களை ஸியோனிஸத்தின் உளவு நிறு தனது தகவற் தொழில் நுட்ப ஒவ்வொரு பலஸ்தீனியனையும் பலஸ்தீனம் சுவர் சூழ்ந்த ஒரு சுவருக்கு அப்பால் இஸ்ரேலும் போராளிகள் ஆயுதமேந்தி உ போராளிகள் ஆயுதங்களாகி 2 ஸியோனிசம் இன்னும் உக்கிர போராளிகளை இலக்கு வைக் பலஸ்தீனத்தை இலக்கு வைக் விடுதலை இன்னும் வெகு தெ அரசியல் அவதானிகள்
தனது மண்ணைக் குறிவைக்கு ஆயுதமேந்திய அயலவன்மீது ஒரு பலஸ்தீனச் சிறுவன் விடுதலை கூப்பிடு தொலைவி என்கிறேன் நான்.
 
 

லறி துரம்
ன் ஆசியுடனும்
வுகனைகளுடனும்
ாராளிகளை இலக்கு வைக்கிறது ாபியனையும் இலக்கு வைக்கிறது னங்கள்
ாத் தகர்க்கின்றன. நயும் தரைமட்டமாக்குகின்றன டலுடன் உலங்கு வானூர்திகள் து குண்டெறிகின்றன. லைகளை ஆளுகையில்
றகளை நிர்மூலமாக்குகின்றன
யும் நிர்மூலமாக்குகின்றன.
வனம்
வல்லமையுடன்.
ஒரு பயங்கரவாதியாக நோக்குகிறது சிறைக் கூடமாகிறது
ஒரு சிறைக்கூடமாகிறது.
லாவுகிறார்கள்
உலாவுகிறார்கள்
LDT35
கிறது
கிறது
ாலைவில் என்கிறார்கள்
ம் கல்லெறிகிறான்
ல், கல்லெறி தொலைவில்
- சிவா -

Page 3
புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதியபண்பாடு
குனபே இம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான காலாண்டிதழ்
பிரதம ஆசிரியர்: க.தணிகாசலம் தொ.பே,இல. 021-2223629
ஆசிரியர் குழு: இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் சோ.தேவராஜா கல்வயல் வே.குமாரசாமி அழ.பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன்
பக்க வடிவமைப்பு: சிவபரதன் நகுலன் விநியோகச் செயலர்: க.ஆனந்தகுமாரசாமி
6)66fuSG: தேசிய கலை இலக்கியப் பேரவை 405, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்
அச்சுப்பதிவு: ஜே.எஸ். பிறிண்டேஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு.
伊三 " S
சந்தா விபரம் உள்நாடு: ஓர் ஆண்டு ரூ160.00 4 இதழ்கள் ஈர் ஆண்டு ரூ300.00 8 இதழ்கள்
வெளிநாடு: ஒர் ஆண்டு 8 அமெரிக்க டொலர்

உள்ளே.
കഖിഞ്ഞുക്ര
சோ.பத்மநாதன் த.ஜெயசீலன் பவித்திரன் வனஜா நடராஜா பொ.கோபிநாத் பிரசன்னாவரூன் கரவைதாசன் தங்கேஸ்வரன் பார்த்தீபன் அதிசயன் செல்வராசன் அரங்கா றாதா மு.தியாகராசா ஞாலசீர்த்தி மீநிலங்கோ சிவசேகரம்
്%കഞ്ഞുക്ര
பரமன்
LD 60of
வனஜா நடராஜா நீ.பி.அருளானந்தம் தாட்சாயணி
கட்டுரை
அண்ணா இராசேந்திரம் திருமதி சாந்தினி சிவநேசன் தணிகையன் குழந்தை ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா XINX பொன்.கோபிநாத் க.வேல்தஞ்சன் றஜனி
மெய்யவன் ஊரோடி
تھ4 سے رنز سے6974 yیے /4ڑ کے صZی
கொழும்பில் நடைபெற்ற சிங்கள தமிழ் கலைக்கூடல்

Page 4
ଔ୩ (Uଞ୍ଜି(କ୍ତି ।
கலை இலக்கிய சமூகவிந்ஞான காலாண்டிதழ்
EFLD Tgs T6OT (LD Ld sel;
இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த சமாதானத்துக்கா நடவடிக்கைகயும் ஒரு காரணமாகதுரதிஸ்டமே. எனினும் மீண் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து, பேச்சுவார்த்தையை மீண்( நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற உதவுவதாக அமைகிறது. இருபதாண்டு யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்த இல விரும்புகின்றனர். சமாதானத்துக்கும், அரசியல் தீர்வுக்கும் 6 சக்திகளும் மக்களின் வெறுப்புக்குள்ளாகும் நிலை இன்று குரலை பல்வேறு சக்திகளும் பல்வேறு நோக்கங்களுடன் நோக்கிய நகர்வில் - பல்லின மக்களிடையே பரஸ்பர புரிந்துை எட்டுவதற்கான வழியில் அக்கறையற்று, துரவிலகி நின்றபடி கவனமாக உள்ளனர்.
யுத்தநிறுத்தம், சமாதானம் என்பவை இனமுரண்பாட்டு இறுதிநிலை அல்ல. இருபதாண்டு யுத்தத்தில் யுத்தநிறுத்த முன்பும் பலதடவைகள் முன்னெடுக்கப்பட்டு தோல்வி கண்டவை முயற்சியில் திறந்த மனத்துடன் செயற்படுவதே நிரந்தர சம தீர்வுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்கள் ஏதுமின்றி காலத் வாய்ப்பாக அமையலாம்.
ஒரு அரசியல் தீர்வை முழுமையாக முன்னெடுக்கும் ஆண்டுகள் முன்.தள்ளி வந்துள்ளார். மேலும் பத்து ஆ இழுத்தடித்துச் செல்ல இருந்த தனது திட்டத்தை ஜன ஆண்டுக்கூட்டத்தில் ஆதங்கப்பட்டுள்ளார். அடுத்த ஜனாதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமரால் ஒ வெளிப்படுத்த தருணம் பார்த்திருந்த ஜனாதிபதி, பிரதமரின் இலங்கை அரசியலில் இருந்துவரும் இந்திய - அமெரிக்க ஆசியுடன் - அதிகாரப் போட்டிக் களத்தில் ஜனாதிபதி இ கொண்டுள்ளார்.
அந்நிய ஆதிக்க சக்திகளைச் சார்ந்து தமது அதிகாரங் பற்றியோ, தேசத்தின் இறைமை, சுதந்திரம் பற்றியோ இவர்கள் மேலாக இனமுறுகல் நிலை நீண்டு தொடர்வதற்கு அடிப்படை குழப்புகின்ற - அரைநூற்றாண்டு கால அரசியல் அதிகார இ மக்கள் என்பது மனங்கொள்ளப்பட வேண்டும். அதுவும் பராளு ‘அரசியல் நாடகத்தை’ இருபதாண்டு யுத்த அழிவுகளின் பின் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டியது என்னும் அதன் இருக்கும் ஒரு நிலையில்தான் இந்த இரண்டு ஆண்டுகா கட்சிகளும் அதிகாரச்சமநிலை பெற்றிருக்கும் இவ்வாய்ப்பை முன்வைக்க முடியும். அவ்வாறன்றி மீண்டும் தேர்தல் மூலம் தத் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்ல விளைவுகளைத் தரப்போ6 குரலை அம்மக்களிடையே வேறுபாடுகளை விதைத்துப் பெறு ஒத்துழைப்புடனும் நசுக்க எண்ணுவது - அரை நூற்றாண் எனும் வரலாற்றுப் புண்ணை அடுத்த சந்ததிக்கும் தொற்ற 6ை
یهوده- کی-2لایحه تکیه جمعیتی ”شکک مسلڑے>---Dترجیہ خیرتھے۔ Dر حصہ۔لا2 سہے لیے

4./95) u I gega or дв Г. u J-5 Lö
Ly Sulu L u Glasör 4.-/ nr GT5)
இதழ் 49 ஐனவரி 2004
திகார இழுபறியும்
 ைமுயற்சிகள் தடைப்படுவதற்கு ஜனாதிபதியின் அதிரடி ாடும் ‘சமாதானத்துக்கான யுத்தம்’ எனப் பிரகடனப்படுத்தாமல் நிம் தொடர்வதற்கான முயற்சிகளுக்கு உதவுவதாக கூறுவது
ங்கையின் சகல இன மக்களும் இன்று சமாதானத்தையே ாதிராக நிற்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, வெளிநாட்டுச் வளர்ந்துவருகிறது. இதனால் இன்று சமாதானத்துக்கான வலியுறுத்தி நிற்கின்றன. அதிலும் நிரந்தர சமாதானத்தை ணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி - அரசியல் தீர்வை
தத்தமது அதிகாரங்களை நிலைநிறுத்துவதிலேயே இவர்கள்
யுத்தத்தில் ஓர் இடைநிலை. அதுவே சமாதானத்துக்கான ம், சமாதானம் என்பது புதிய ஒன்றல்ல. அவை இதற்கு தான். எனவே நீதியான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான ாதானத்துக்கான ஒரே வழியாகும். இதை விடுத்து அரசியல் ந்தை நீட்டிச்செல்வது முறுகல்நிலையை மீண்டும் தோற்றுவிக்க
அதிகாரமற்ற பிரதமர் சமாதானத்துக்கான நகர்வை இரண்டு ண்டுகள் - அமெரிக்காவின் ஆசியுடன் - சமாதானத்தை ாதிபதி முறியடித்து விட்டதாக பிரதமர் தனது கட்சியின் பதியாக அமர்வதற்கான அரசியல் முன்னெடுப்பு அவருடையது. ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்த தனது அதிகாரத்தை
அமெரிக்க விஜயத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆதிக்கக் காய் நகர்த்துதலைப் பயன்படுத்தி - இந்தியாவின் }றங்கியுள்ளார். இதற்கு ஜே.வி.பியினரையும் துணையாக்கிக்
களை தக்கவைக்க முடிவதால் தேசத்து மக்களின் ஒற்றுமை அக்கறை கொள்வதில்லை. இதுவே அரைநூற்றாண்டுகளுக்கு க் காரணமாகும். ஆளுங்கட்சி தீர்வை வைத்தால், எதிர்க்கட்சி }ழுபறிக்கு பலியாகி வந்திருப்பவர்கள் தமிழ், சிங்கள, முஸ்லீம் மன்ற ஆசனங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த இனவாத னரும் தொடர்வது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். ன் சூத்திரத்தால் - இருகட்சிகளின் கைகளிலும் அதிகாரம் ல சமாதானம் இன்னும் நீடிக்கிறது. ஓரளவுக்கேனும் இரு பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்டு தீர்வினை தமது அரசியல், பதவி, அதிகாரத்தை பலப்படுத்த எண்ணுவது வதில்லை. தேசிய இனங்களின் சுதந்திரமான இருப்புக்கான ம் பெரும்பான்மை பலத்துடனும், அந்நிய ஆதிக்க சக்திகளின் டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கும் - இனவாதம் வப்பதாகவே அமையும்.
2ూత్రా 2@(O4)- 2

Page 5
விற்பனை தொடங்கியது 6td)) (T6) (DGustict வெடித்த விம்மல்கள் வேதனையையும் துயரத்தையும் வெளியிட, பாதுகாப்பற்று தாழ்வுற்று நின்றனர் இளம் பெண்கள்,
அருமைக் குழந்தைகள் விலைபோவதைக் கண்டு கண்ணிள் ஆறாய்ப் பெருக அன்னையர் நின்றனர் கொடுங்கோலர் தம்மைப் பொன்னுக்கு விற்கையில் எழுந்த கசந்த ஒலங்கள் கேட்பாரற்று நலிந்து போயின.
வாலிபம் கொழிக்கும் தன் மணாளனை காதலும் உண்மையும் கனிய சொல்லில் அடங்கா சோகத்தோரு அப்பெண்
நெடிது நோக்கினாள்.
கடவுளின் கை செய்த குற்றத்தால் பாவப்பட்ட கறுப்பரான ஆண்களும் கீச்சிடும் நலிந்த குழந்தை களும் கூடட அத்துயர் சும்மந்த கட்டத்தில்.
அன்புக்குரியவர்கள் முரட்டுத்தனமாகப் பறிக்கப்படுகையில் அந்த இதயம் அனுபவிக்கும் வேதனை அன்பு வற்றிய உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
அன்பு மனைவியரைப்
Úlgfuyubu listůUsbólđồ đòÜUÜlu கணவருடைய கையறு நிலையும் அவர்கள் நெஞ்சை அமுக்கும் சுமையும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
eild go up60tb: Frances E.W.Harper தமிழாக்கம் : சோ.ப.
зева га о ев сži
 

ரின் ஏலம்
இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆரிக்காவி விருந்து கொண்டு செல்லப்பட்ட அடிமை களை" அமெரிக்காவில் விலைபேசி a/Ölüğ5/Tav alaylbLUd da/6)TTL 12
இப்பொழுதுதான் வைன்வாட் றைஸ் கோஸ்ரிலிருந்து வந்துள்ள தேர்ந் தெடுக்கப்பட்ட சரக்கு - நல்ல ஆரோக்கி யமுள்ள 250 நீக்ரோக்கள் . அஸ்பெலி படகுத்துறைக்கு அருகே பான்ஸ் வியான் கப்பற்தளத்தில் மே மாதம் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட இருக்கிறது. பெரியம்மை நோய்த் தொற்றிலிருந்து மிகக் கூடிய கவனத்துடன் தொடர்ச்சி யாக பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது. முன் கூட்டியே தொடர்புகொள்ளவும்.
TO BE SOLD on board the
Ship Baare"land, on tucsday the 6th of Mey nex, at Mły Ferry i chcie cargo of about so fine healthy
NEGROES, it arried from the
Windward & Rice Coast, -The utmost care has already been take, and
hall be contiaüed, tio keep thém telefono
heeft danger of being infected with th
SMALL-POX no boa having been on
board and all other communitii
people from Charlergøvre preyented.
Media,
aret, & apply.
-2<2-segaPasar-ass>>upaso 32 GÓ 2 GÓ 9حکیم سلوےے ------«

Page 6
இற்கும் ஏற்க
இங்கே:
இடி இடிக்குது மின்னல் வெட்டுது மழையும் கொட்டுது ஏழை எங்கள் குடிசை கூரை எங்கும ஒழுகுது ஒட்டை வழி வானும் கொட்டுது குடிசைத் திண்ணை ஊறிநனையுது வெளிச்சமில்லாக் குடிசைக்குள்ளே மின்னல் கீற்று எம்மைக் காட்டுது குடிசைத்தட்டி, பத்தி எல்லாம் இத்து விழுகுது குளிர் அடிக்குது கூதல் ஓடுது உடலும் விறைக்குது.
என்றன் தம்பி தங்கை போர்வை இன்றி குளிரில் நடுங்கி குந்தியிருப்பவர் மாடாய் உழைத்து ஓடாய்ப் போன எங்கள் அப்பா இப்ப மூன்று நாளாய்க் காச்சலிலே முடங்கிப் போனாரே மருந்து வாங்க காசுமில்லை வாய் நனைக்க வழியுமில்லை அப்பா அருகில் அம்மாநின்று வெம்பி வெம்பி விசும்புவாரே அம்மா என்ன செய்வார், பாவம் எங்கு போவார் வழியிருப்பின் கூறிர்1
அடுப்படியில் பூனை நன்றாய் தூங்குதல்லோ நமது வாயும் வயிறும் பசியால் ஒட்டுதல்லோ
பிச்சை எடுத்து பசியைப் போக்க எம்மால் ஆகாது இல்லார் எல்லாம் உள்ளார் ஆக மாறுவதெப்போது?
வல்லான் வகுத்தது சட்டமென்றால் நல்லான் எங்கே
-ஞாலசீர்த்தி
ജൂത-ഭാഷെ,-ഭ)-♔ ge:PasasZyra521

அல்கும்
מט לג
ஏதிலிகள் நாம் உயர வழியுந்தான் எங்கே
eit (35:
நாட்டைச் சுரண்டி ஊரைச் சுரண்டி உழைப்பைச் சுரண்டி கொழுத்த கூட்டம் மாடி வீடு கோடி பணம் சேர்த்த கூட்டம் வாக்குக் கேட்டு வேட்டு வைக்க வந்த கூட்டம் அவர் போகும் ஊர்தி வாழும் வசதி பேசும் பெருங்கூட்டம்
இங்கே ஏழை மக்கள் கந்தலுடன் ஏதிலியாய் ஏங்கும் நிலை இதைப் பார்த்தும் ஏனோ ஆண்டவனோ அம்மனையில் தூங்குகிறாரே
எங்கே:
ஏழை வாழ உலகம் உண்டா தெரிந்தால் சொல்லும் சாதி குலம் நோக்கா ஞாலம் கண்டால் கூறும்.
மாடி வாழ்க்கை சேரி வாழ்க்கை இல்லா நாடுண்டா? ஏய்த்துப் பிழைக்கும் பாவிகள் வாழாத் தேசமிங்குண்டா?
மதத்தை விட்டு மதியை நாடி வாழும் மக்கள் எங்கே?
ஊரும் வாழ உலகும் வாழ வழிகள் காண்போர் வாரீர்
மீநிற்ைகோ
(് 2©©<-

Page 7
"பறமன்
இரண்டு சோதனைச் சாவடிகளையும் தாண்டி பஸ் மீண்டும் புறப்பட்டது. போகும் போது இருந்த உற்சாகமான மனோநிலை பயண அலுப்பாலும் உறக்கமின்மையாலும் எல்லோரிடமும் சற்றுக் குறைந்திருந்தது. இளைஞர்கள் சிலர் மட்டும் அது ஒரு பிரத்தியேக பஸ் என்பதை வெளிப்படுத்துவது போல்
பஸ்ஸின் இரச்சலையும் மீறி உரத்துக் கத்தி பகிடிகள் விட்டு கலகலப்பாக இருக்க முயற்சித்தனர். அவர்களது பகிடிகள் ரமேஸின் காதில் விழுந்தாலும் அவையும் பயணக்களைப்பால் அர்த்தமற்றவையாக தொய்ந்து போவதாகவே அவனால் உணர முடிந்தது. கொழும் புக்குச் செல்லும் போது அவனும் அந்த நண்பர்களோடு சேர்ந்து பயணத்தைக் கலகலப்பாக்குவதில் மிகவும் உற்சாகமாகவே இருந்தான். வரும்பொழுது பயண இடைவெளியில் தேனீர் அருந்துவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட போது அடுத்த பஸ்ஸில் வந்து இறங்கிய மூத்த கலைஞர் ஒருவருடன் நடந்த குறுகிய நேர உரையாடலில் அவர் கேட்ட கேள்வி ரமேசுக்குள் உறங்கிக்கிடந்த வாழ்வின் அறிவார்ந்த அனுபவ உணர்வுகளை தட்டி எழுப்பிவிட்டிருந்தது.
“தம்பி எங்கடை வயசுக்கு இப்படிப் பயண அனுபவங்கள் புதிசில்லை நீர் இந்த பிரச்சனைக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவர் எண்டு நினைக்கிறன். இந்த ஒன்றுகூடலிலை உங்கடை அனுபவம் எப்பிடி?”
ஒ. புது அனுபவங்கள் நிறைய என்னாலை சடுதியாக இதுக்குப் பதில் சொல்லமுடியேல்லை. மொத்தத்திலை. இது எங்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிதான்”
பஸ்சாரதி ' கோணை அடித்து மீண்டும் புறப்படத் தயாரான போது அவசரமாக ரமேஸ் தனது பதிலை சுருக்கமாக முடிக்க. இருவரும் அவரவர் பஸ்ஸில் ஏறிக்கொண்டனர். அவனது மனம் மட்டும் அவரது கேள்விக்கான விடையை நோக்கி விரிந்து கொண்டிருந்தது.
5 s25ar 622 up as 62
 

“என்னடா ரமேஸ் கனவுலகத்திலை இருக்கிறான்"
“அப்பிடிக் கனவுலக ஆக்களைக் காண இஞ்சை வாய்ப்பில்லையே “ AO
“வெளிக்கிட்டு மூண்டு நாள் அம்மா அப்பான்ரை ஞாபகம் வந்திருக்கும்.”
“அங்கை நடந்த அடி தடியிலை பெடியன் பயந்து போனான். வீட்டை போய்த்தான் பார்வை பார்க்க வேணும்'
பகிடிகளை அவிழ்த்துவிட்ட மனக்கிளர்ச்சியில் 'ஓ.,ஒ.' என்று கத்தி பஸ்ஸிற்குள் எல்லோரும் ஆரவாரிக்கிறார்கள்- அவன் மெளனமாக இருந்ததால் ஆரம்பத்தில் அவனை நோக்கி வந்த பகிடிகள் திசை மாறி எங்கெங்கோ சென்று இடையிடையே அவனை நோக்கி வந்து போனாலும் அந்த கலைஞர்களின் ஒன்று கூடலில் நடந்த சம்பவங்களையும் அனுபவங்களையும் அசைபோடுவதில் ரமேஸின் மனம் உள்ளூர மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒன்று கூடலுக்கு புறப்படுவதற்கு முன் வீட்டில் நடந்த உரையாடல் அவனது நினைவில் வந்தது.
“மகன் கொழும்புக்கு கூட்டத்துக்கு போகப் போறாராம்.”
“உவரை ஏன் அங்கை, அவங்களைக் கண்டிட்டு 'ம்' எண்டு இருக்கவே”
“இவற்றை சிநேகிதரெல்லாம் போகினமாம்"
“பேப்பருகளைப் பாத்தாப் பிரச்சனை ஏதாலும் நடக்கும் போலை கிடக்கு, நாங்கள் மறிச்சாப் போலை நிக்கப் போறாரே, கவனமாப் போட்டு வரட்டன்’
அவன் புறப்படும் போது அவனது தந்தையார் சொன்ன வார்த்தைகளில் அர்த்தங்கள் பொதிந்துதான் இருந்தது. புத்தகங்கள் பத்திரிகைகள் என்று இன்னும் வாசிப்புப் பழக்கத்தை கைவிடாத அவர் நாட்டு
-)<)ള്ള ബി-ക്കുള്ള ( *Gl)G (نیوکلیجےے ۔ سہ «

Page 8
நடப்புக்களை முன்னறிந்து சொல்வதில் மட்டுமல்ல, ரமேஸினது சுபாவத்தையும் நன்றாகக் கணித்து வைத்திருந்தார்.
இராணுவ நடவடிக்கையின் போது தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து மீண்டும் வீடுகளுக்குத் திரும்பி வந்த பின் அடிக்கடி சுற்றி வளைப்புக்களும், தேடுதல்களும் இடம்பெற்றன. ஒவ்வொரு நாளும் அதிகாலை விடியலில் வீட்டைச் சுற்றி படையினர் நிற்பார்களோ என்ற அச்சத்துடன்தான் பொழுது விடிந்தது. இப்படி ஒரு அதிகாலைச் சுற்றிவளைப்பின் போது ரமேஸின் பாடசாலை நண்பன் ஒருவன் சுடப்பட்டு இறந்திருந்தான். இவைகளால் படையினர் மீது அவனுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு நாள் சுற்றிவளைப்பில் அவன் பிடிபட்டு விசாரிக்கப்பட்ட போது அவனது முகத்தில் வெளிப்பட்ட வெறுப்புக்காகவே சந்தேகிக்கப்பட்டு படையினரால் துன்புறுத்தப்பட்டான். அது அவனது இயல்பு என்று கூறி அவனது தந்தையாரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிங்களம் தெரிந்த அவரது நண்பரும் செய்த நீண்ட பிரயத்தனத்துக்குப் பின்னர் தான் அவன் விடுவிக்கப்பட்டான்.
ரமேஸின் தந்தையார் அவனால் அப்படிச் சிரமத்துக்குள்ளான போதும் அவனுக்கு அவர்கள் மீதிருந்த வெறுப்புக்காக அவனைக் கடிந்து கொள்ளவில்லை. அவனது தாயார் மட்டும் ஊர் அயலில் நடப்பவற்றைக் கேள்வியுற்று அச்சமடைந்தவளாய் “ தம்பி அவங்களுக்கு முன்னாலை உப்பிடி விறைச்ச படி நில்லாதையடா’ என்று அவனை மன்றாடிக் கேட்டுக் கொண்டாள்.
இப்படி ஒரு சுபாவமுடையவன் என்பதற்காகவே சமாதான ஒப்பந்தம் ஏற்படும் வரை உறவினர்கள் பல முறை அழைத்தும் அவன் கொழும்புக்குச் செல்வதை அவனது பெற்றோர் விரும்பவில்லை. சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்புதான் மூன்று நான்கு தடவைகள் அவன் கொழும்புக்குச் சென்று வந்தான். அதுவும் தமிழர்கள் அதிகம் பயணிக்கும் யாழ். கொழும்பு பஸ்ஸில் ஏறி வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிவிட்டுத் திரும்பி விடுவதால் சிங்கள மக்களுடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு அவனுக்கு ஏற்படவில்லை.
இதனால் அவனது தந்தையார் கூறியது போன்று
அந்த மன இறுக்கத்திலிருந்து விடுபடாத மன
நிலையிலேயே அவன் இருந்தான். கடந்த இரண்டு
நாட்களாக நடந்த சிங்களக் கலைஞர்களின் ஒன்றுகூடலில்
பெற்ற புதிய அனுபவங்களின் அடிப்படையில் முன்பு
ஒரு முறை கொழும்புப் பயணத்தின் போது நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான்.
米米 米米 米米
வழமை போல குணசிங்கபுரத்திலிருந்து வவுனியா தாண்டிக்குளம் சோதனைச் சாவடி வரை செல்லும் இரவு நேர இறுதி பஸ்ஸில் பதிவுசெய்யப்பட்ட இருக்கையில் சென்று ரமேஸ் அமர்ந்தான். இருக்கைகள் யாவும்
24.age:Pasarabă ”شکسےہے ---ص............... لادتحترمہ خیبرقیہ oور سحچ۔ لاسیقیڑیے

நிரம்பிய பின் வந்து ஏறிய நோயாளித் தாயாரும் இளம் பெண்ணும் முன்புறத்திலிருந்த இருக்கைக் கம்பிகளைப் பிடித்த படி நின்றனர். ஆடம்பரமான ஆடை அணிகள் எதுவுமில்லாமல் வறுமையின் நிழல் படிந்த அவர்களின் தோற்றம் சிங்களப் பெண்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தையே ரமேஸிடம் ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் நின்ற இடத்துக்கு அருகே இருந்த ஒருவர் தான் எழுந்து நின்று கொண்டு அந்த இளம் பெண்ணின் தாயாருக்கு இடமளித்த போது அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் அவனது ஊகத்தைப் பொய்ப்பித்தது. வழமை போல அனுராதபுரத்துக்கு இடையில் இறங்கும் சிங்கள, முஸ்லிம் பயணிகள் பஸ்ஸின் எஞ்சிய இடங்களைப் அடைத்துக் கொண்டனர். அவர்களுள் மது போதையில் ஏறிய சிங்கள இளைஞனும் அவனது நண்பர்களும் ஏறும் போதே சிங்களத்தில் உரையாடிய அந்த உரத்த தொனி மொழி தெரியாததால் தங்களைக் கிண்டல் செய்வதாக இருக்குமோ என்ற ஐயத்தை ரமேஸ் மனதில் ஏற்படுத்தி இருந்தது
பஸ் புறப்பட்டு சிலாபத்தை தாண்டிச் சென்று கொண்டிருந்த போது பஸ்ஸின் பின் புற வரிசையிலிருந்து முன் நோக்கி நகர்ந்த படி மதுபோதையில் நின்ற சிங்கள இளைஞன் தாயாரின் இருக்கையைப் பிடித்த படி நின்று கொண்டு பயணம் செய்த அந்த இளம் பெண்ணின் அருகே வந்து நின்றான். சிறிது நேரம் நிதானமாக நின்ற அவன் பின்னர் பஸ்ஸின் வேக மாற்றங்களிலும், திருப்பங்களிலும் ஏற்படும்.சாய்வுகளைப் பயன்படுத்தி அந்தப் பெண் மீது சரிந்து அவளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான்.
அதனை அவதானித்துக் கொண்டிருந்த ரமேஸின் மனதில் ஆத்திர உணர்வு பொங்கி எழுந்தாலும் நண்பர்களின் பலத்துடன் நிற்கும் அவனுடன் மோத முற்பட்டால் தனியாகவே பயணம் செய்யும் தான் பாதிப்படைய நேரிடுமோ என்ற எண்ணம் அவனுக்குள் எழ மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தான். அவனது இருக்கைக்கு நேரே நின்ற திடகாத்திரமான ஒரு சிங்கள இளைஞன் ரமேஸைப் போலவே மது போதையில் நிற்பவனது நடத்தைகளை அவதானித்துக் கொண்டிருந்தான். ரமே ஸலின் அவதானிப்பையும் மனக்குமுறலையும் அவனது முகபாவத்திலிருந்தே கண்டு கொண்டவனாக முகத்தை திருப்பி தனது முகபாவனையால் போதையில் நிற்பவனைக் காட்டிவிட்டு ரமேஸைப் பார்த்து நட்புடன் சிரித்தான். அந்தச் சிரிப்பைக்கூட போதையில் நிற்பவனோடு வந்த ஒரு சிங்கள இளைஞனின் “உன்னால் அவனை என்ன செய்ய முடியம்.’ என்ற சவாலுடனான ஏளனச் சிரிப்பாகவே அவனால் உணரமுடிந்தது. இதனால் அவனது சிரிப்புக்குப் பதிலாக சிறுபுன்னகையைக் கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் ரமேஸ் முகத்தை 'ம்' என்று வைத்தபடி திருப்பிக்கொண்டான்.
சிறிதுதுரம் சென்றபின் மதுபோதையில் நின்ற இளைஞன் மீண்டும் அந்தப் பெண்ணின் மீது சாய்ந்து
് 2©©

Page 9
அவள் அச்சத்துடனும் அருவருப்புடனும் விலகிக் கொண்ட போதும் தூங்கி விழுவது போல சரிந்து அவளது கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ரமேஸின் அருகே நின்ற அந்த சிங்கள இளைஞன் உரத்த குரலில் கோபம் தெறிக்க பேசியபடி அவனை நெருங்கினான். பதிலுக்கு போதையில் நின்றவனும் அவனது நண்பர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அடிபிடிக்கும் தயாரான போது சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி வந்தான். உரத்தகுரலில் உறுதியுடன் அவனது செய்கையை கண்டித்த அந்த இளைஞன் கூறிய நியாயத்தை பலர் ஏற்க்க முன் வந்தனர். இதனால் போதையில் வந்த அந்த இளைஞனை அவனது நண்பர்களில் ஒருவனே அடித்து கண்டித்து அடக்கிய போதுதான் அங்கு அமைதி மீண்டும் நிலவியது.
பஸ் புறப்பட்டபோது அவளது தாயாரின் அருகே இருந்த ஒருவர் தனது இருக்கையை அந்த இளம் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றார். மீண்டும் ரமேஸின் இருக்கைக்கு அருகே வந்து நின்ற அந்த இளைஞன் ரமேஸைப் பார்த்து சிரித்தான். இம்முறை ஒரு இயந்திரத்தனமான சிரிப்பையாவது வெளிக் காட்டவேண்டிய நிலைக்கு ரமேஸ் தள்ளப்பட்டான். அந்த சிங்கள இளைஞனின் நியாயத்துக்கான கலகக் குரலால் மோசமான் துன்புறுத்தலில் இருந்து அந்தப் பெண் விடுவிக்கப்பட்டதற்காக ரமேஸ் உள்ளூர மகிழ்ந்தாலும் அவனது ஆளுமையை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு அவனால் வரமுடியவில்லை. ரமேஸ் கற்றிருந்த உளவியல் கல்வி அந்த இளைஞனது கலகக்குரலை பாலியல் அடிப்படையில் எழுந்த ஒரு பொறாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றே அவனை எண்ணவைத்தது.
米米 冰冰 米米
அப்படி ஒரு இறுக்கமான மனநிலையில் தான் இருந்ததற்காக இப்பொழுது அவன் வெட்கமும் வேதனையும் அடைந்தான். தனது இனத்தைச் சேர்ந்தவன் என்றும் பாராமல் அந்த இளம் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வனமுறைக்கு எதிராக குரல் கொடுத்த அந்த நட்பு நிறைந்த முகத்துக்குரிய இளைஞனை நினைவுபடுத்திக் கொண்டான். எப்பொழுதாவது காண நேர்ந்தால் அவனது செயலுக்கு நன்றி கூறுவதுடன் தனது நிலைப்பாட்டுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணினான்.
இந்த ஒன்று கூடல் பயணத்துக்கு அவன் வருவதற்கு விரும்பியதே தங்களைப் போன்ற இளம் எழுத் தாளர்கள், மூத்த கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடிச் சென்று வரும் பொாழுது பெறும் அறிமுகங்கள் அனுபவப்பகிர்வுகளுக்கான நல்லதொரு வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதாகவே முதலில் அமைந்திருந்தது. ஆனால் அதையும் மீறி, ஒடுக்குமுறைகளுக் கெதிரான உணர்வுடன் அவன் விரும்பும் அந்த சுதந்திரமான வாழ்வுக்காக தம்முடன்
7 ജ്ഞത് ശ.-ഷ A

ཡོད
கூலிக்கு வந்தவன்
ஈழத்தின் முக்கிய மரபுக் கவிஞர் களில் ஒருவரான ச.வே.பஞ்சாட் சரம் அவர்களின் முதல் நாவலாக கூலிக்கு வந்தவன்' வெளிவந் துள்ளது.
விலை ரூ.170 வெளியீடு: தூண்டி இலக்கிய வட்டம்
لر கை கோர்த்து நிற்கும் சிங்கள இளைஞர்கள், யுவதிகள்,கலைஞர்கள் பயணக் களைப்பில் சென்ற அவர்களை வரவேற்று உபசரித்த போது முற்றிலும் ஒரு புதிய சூழலில் தான் இருப்பதாக அவன் உணர்ந்தான். உணவளித்து தங்குமிட வசதிகள் செய்து உரையாடி ஒன்றுபட்டு அவர்கள் பழகிய போது அவனது இளமைப் பருவத்திலிருந்தே அவன் பழகி அறியாத அந்த இனத்தவர் மீது கொண்டிருந்த வெறுப்புணர்விலிருந்து அவன் விடுபடுவதை உணர்ந்தான். மறுநாள் ஒன்று கூட லில் நடந்த சம்பவங்கள் மேலும் அந்த உணர்வுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.
மறுநாள் அந்த மண்டபத்துக்குள் நுழையும் போதே “ஏதாவது நடக்கலாம்" என்ற தந்தையாரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தாலும், அவனுக்குள் எழுந்த அந்தப் புதிய உணர்வுக்கு தென்பையும் தெளிவையும் தருகின்ற வரவேற்புரைகள், இசைப்பாடல்கள் என நிகழ்ச்சிகள் தொடர்ந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
மண்டபத்தின் பின் புறம் எழுந்த உரத்த கோசங்களும் வாக்குவாதங்களும் ஒலிபெருக்கியின் ஒலியையும் மீறி எழ மண்டபத்தை நிறைத்திருந்த மக்களிடையே சிறு பதற்ற நிலையைத் தோற்றுவித்தது. மேடையின் முன்புறம் இருந்த சிங்கள இளைஞர்கள் சிலர் வேகமாக பின்புறம் விரைந்தனர். இரவு வரவேற்பு நிகழ்வில் குளிர்பானம் வழங்கிய ஒரு இளம் பெண்ணும் சுத்தியலை கையில் எடுத்து இடுப்பில் மறைத்துக் கொண்டு கோபத்துடன் விரைந்து சென்றதை ரமேஸ் அவதானித்தான். அது அவனது ஊரில் உள்ள பெண் போராளிகளை
நினைவூட்டுவதாக இருந்தது.
“அமைதியாக இருங்கள், உங்களது இருக்கைகளில் அமருங்கள், அது ஒரு சிறிய சலசலப்புத்தான் அதை எமது தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள், அமைதி யாக உங்கள் இருக்கைகளில் அமருங்கள்.”
நிகழ்ச்சியை குழப்பவிடாமல் தடுப்பதற்காக மண்டப மேடையில் நின்று ஏற்பாட்டாளர்களில் ஒருவர் ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்தார். ரமேஸ் தனது சொந்த அனுபவத்தின் மூலம் அந்த ஒன்று கூடலின் உயர்வான நோக்கைப் புரிந்து கொண்டு அதைக் குழப்ப முனைந்தவர் மீது மிகுந்த வெறுப்படைந்தான். -)2624( 2 agpasas Faso u as 22چیکكحس0ك>--

Page 10
“தயவு செய்து இருங்கோ, அவங்கடை நோக்கத் துக்கு நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது. தயவு செய்து இருங்கோ’
இருக்கையிலிருந்து எழுந்து நிற்பவர்களையும், எழுந்து செல்ல முயல் பவர்களையும் ரமேஸ் அமைதிப்படுத்தி அமரவைத்தான்.
“பேரினவாதம் ஒழிக, தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமை வாழ்க’
இரவு அவர்களுக்கு உணவு இருப்பிட வசதிகள் செய்வதில் முன்னின்ற சிகப்பு ரீசேட் அணிந்த ஒரு சிங்கள இளைஞன் மண்டப வாசலில் இருந்த கதிரை ஒன்றின் மீது ஏறி ஏனைய தோழர்களுடன் இணைந்து ஆவேசத்துடன் சிங்கள மொழியில் உரத்தகுரலில் வெளிப்படுத்திய சுலோகங்களுடன் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
மண்டபத்துக்கு வெளியே நடைபெற்ற மோதலில் 'சிஹல உறுமய'வினரின் காடைத்தனத்தை எதிர்கொண்டு கத்திக் குத்துக்கும் பொல்லடிகளுக்கும் இலக்காகி காய மடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் கூறிய போது ரமேஸ் உணர்ச்சி வசப்பட்டது போலவே மண்டபத்தில் கூடி இருந்த அனைவரும் சமாதானத்துக்கும் இனங்களின் ஒற்றுமைக்காகவும் இரத்தம் சிந்திய அந்த இளைஞர்களை நினைவு கூர்ந்தனர். இரவு ரமேஸ் தங்கியிருந்த விடுதியில் தொலைக்காட்சிச் செய்தியிலும் மறுநாள் பத்திரிகைகளிலும் மண்டபத்துக்கு வெளியே நடந்த மோதலின் போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்திருந்தான். பஸ்ஸில் அவன் சந்தித்த அந்த சிங்கள இளைஞன் முதல் அந்நிகழ்ச்சியை குழப்பவிடாமல் தடுப்பதற்கு முன்னின்ற அந்த இளைஞர்களின் செயல்கள் யாவும் ஆழமான மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அவனுகுப் பட்டது. அத்தகைய உயர்ந்த உணர்வை ஏற்படுத்த வகைசெய்யும் அந்த நிகழ்ச்சியை எதிர்ப்பதில் பெளத்த பிக்குகள் பலரும் இணைந்திருந்தது ரமேசுக்கு வியப்பாக இருந்தது.
இறுதிநாள் நிகழ்ச்சிகள் முடிந்ததும் அந்த ஏற்பாட்டாளர்களிடம் விடை பெறுவதற்காக பலர் கூடி நின்றனர் பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் கூச்ச சுபாவத்துடன் ஒதுங்கிக்கொள்ளும் ரமேசும், உணர்வுபூர்வமாக கைகளைக் கொடுத்தும் கட்டி அணைத்தும் விடை பெறுபவர்களுள் ஒருவனாக நின்றான். ரீசேட் அணிந்த ஒரு இளைஞருக்கு கைகொடுத்து விட்டு, தமிழ் தெரிந்த அந்த ஏற்பாட்டாளரிடம் கைகளை நீட்டி “உங்களது நல்ல முயற்சிக்கு நன்றி” என ரமேஸ் கூறியபோது முன்பின் பழகி அறியாத இருவரும் உணர்வு மேலீட்டால் கட்டியணைத்து விடை பெற்றுக்கொண்டதை நினைவுபடுத்திப் பார்த்தான்.
“ரமேஸ் நான் இறங்கப்போறன்’
262-24 gaggpgasca ”شعیکک_-9ے>--- لاتحترمہ بھیجتے سے دور مکے ۔ لاسپینے

பயணப்பையைத் தோழில் மாட்டிக்கொண்டு அவனது இருக்கைக்கு அருகே வந்துநின்ற ரவியின் வார்த்தைகள் ரமேஸின் நினைவோட்டத்தைக் குலைக்க சந்தேகத்துடன் பஸ்ஸின் ஜன்னலுக்கூடாக வெளியே அவதானித்தான் ரமேஸ். மாம்பழம் சந்திக் காவலரண்களை பஸ் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவனோடு யாழ்நகரில் இறங்கி திருநெல்வேலிக்குச் செல்லவேண்டிய ரவி இடையில் ஏன் இறங்குகிறான் என்ற கேள்வி அவனுள் எழுகிறது.
“ஏன் ரவி இதிலை இறங்கிறீர்”
“இஞ்சைதான் இப்ப வீடு எடுத்திருக்கிறம், அந்த வீட்டைத் திருத்திப் போட்டு கூடின வாடகைக்கு குடுக்கப்போகினமாம்”
“உங்கடை சொந்தக்காறற்றை வீடுதானே அது?”
“சொந்தமும் பந்தமும், எல்லாம் பண உறவுகள்தான் ரமேஸ்”
தெல்லிப்பளையில் பாதுகாப்பு வலயத்துக்குள் அகப்பட்டுவிட்ட அவனது வீட்டைவிட்டு வெளியேறி பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மா, பலா, வேம்பு, விழாத்தி, இலுப்பை, இலந்தை என பசுமரச்சோலையாகவே இருந்த பெரிய வளவோடு கூடிய அவனது வீட்டு நிலத்துடன் அவனுக்கு இருந்த இனிய நினைவுகளை ரமேசுடன் அவன் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறான். இடப்பெயர்வுக்குப் பின் நிரந்தரமாக ஓரிடத்தில் இருக்கமுடியாத நிலையில் அவனது குடும்பம் அலைந்தது. இது ஆறாவது இருப்பிடமாக இருந்தது. அவனது இளமைக் காலம் முழுவதும் இப்படியே கழிந்ததால் அவனது வார்த்தையிலும் வெளிப்பட்ட வெறுப்பும் சோகமும் ரமேஸின் மனத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
“அது இருக்கட்டும் ரமேஸ், சஞ்சிகை இனி வராதோ எண்டு கேக்கிறாங்கள், கதை எப்ப தாரீர்?”
“இந்தக் கிழமைக்கை எப்பிடியும் தாறன், நடந்த கதைதான்”
“அதுதான் நல்லது, கெதியாத் தந்தாச் சரி, அந்தா அதுதான் ரமேஸ் வீடு. அண்ணை அந்தக் கேற்றடியிலை நிப்பாட்டுங்கோ. எல்லாருக்கும் போட்டுவாறன்’
மிதிபலகையில் நின்றபடி எல்லோருக்கும் கையசைத்துக் கூறிவிட்டு அவசரமாக இறங்குகிறான் ரவி.
தெருவோரத்து வீடுதான். ஆனால் ஷெல்லினால் பாதிக்கப்பட்ட ஒருபகுதி இன்னும் திருத்தப்படாமலே இருக்கிறது. அதுவும் திருத்தப்படும்போது.
மீண்டும் ரமேஸின் மனதில் ஏற்படும் இறுக்கம் அவனது முகத்தில் வெளிப்படுகிறது. அது ஒரு ஆழமான புரிதலுடன் மட்டுமல்ல, தெளிதலுடனும்,
2ూనా లై@@4)-

Page 11
/ー 緩 N
ఉురలళ్మరల நிந் தி) கெ9ண்ருத90).
என் மனதில் | தேசிய கல்லெறிந்தது நீதான் ఫ్లో ஜன்னிக்கும்போது "ಟ್ಗ வெள்ளைப் பளிங்காய் நூல்கள் என் உள்ளம் இடம்டெ உடலாலும் உள்ளத்தாலும் நான் வளர வளர இந்நிக இடம்ெ சமுதாயமே அறிமுக பளிங்கான என் மனதில் அறிமுக நீதானே கல்லெறிந்தாய் அறிமுக அறிமுக ஓ! அன்று | அறிமு: s 够 அறிமுக பேதமற்று d56T6TablóbullDOO பங்கெடு 6TGOT (D60Tg5 எழுத்தா இன்றோ இரும்புப்பிடிக்குள் இதனை அதற்கு காரணம் நீதான். படுத்தப் விழுமியங்களை உணர்த்தல் 9 điĩ đbLỦUITdb. /ー ஆனால் நீதான் đJabu-apoob அநாகரிகத்தையும் விலங்குணர்வுகளையும் என் பளிங்கு மனசுள் உட்செலுத்தினாய்
உன்னால்த்தான் d Tidb60Lutd5 6.hua)6 ೧T8 உணர்ந்த நான் இதழ் GUTOMTO GUATOT. சஞ்சி என்மனகுை பளிங்காக்கிக்கொண்டு. நீ எப்பொழுது திருந்த உத்தேசம் அல்லது கல்லெறிந்து கொண்டுதான்.
GIGOT8T bug.8
حا لر ܢܠ
9 agsa2a upas (2

புத்தகப்பண்பாட்டுத் திருவிழா
கலை இலக்கியப் பேரவையின் 30வது ஆண்டு நிறைவாக க எழுத்தாளர்களின் 'புத்தகப் பண்பாட்டுத் திருவிழா' புத் தமிழ்ச்சங்கத்தில் 2003, மார்கழி 29 முதல் 2004 வரை சிறப்பாக நடந்தேறியது. ஈழத்து எழுத்தாளரின் கண்காட்சி இலங்கையில் முதல் தடவையாக பற்றமை குறிப்பிடத்தக்கது.
ழ்வில் தினந்தோறும் நூல்கள் அறிமுக நிகழ்வும் பற்றது. கவிஞர் சுபத்திரன் அரங்கில் கவிதை நூல்கள் மும் பா.சத்தியசீலன் அரங்கில் பிள்ளை இலக்கிய நூல்கள் மும் யோ.பெனடிக்ற்பாலன் அரங்கில் சிறுகதை நூல்கள் $முப் பொன்.கந்தையா அரங்கில் அரசியல் நூல்கள் கமும் ஏ.ரி.பொன்னுத்துரை அரங்கில் நாடகநூல்கள் கமும் க.கைலாசபதி அரங்கில் திறனாய்வு நூல்கள் மும் நிகழ்ந்தமையும் இதில் இளைய தலைமுறையினர் }த்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான இலங்கை ‘ளர் புத்தகக் கண்காட்சி வருடந்தோறும் நடாத்துவதோடு ா வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கும் விரிவு படுவதும் அவசியமாகும்
மட்டக்களப்பில் 'தாயகம் கிடைக்குமிடம்
கர்கள், விற்பனையாளர்கள் மட்டக்களப்பில் 'தாயகம் களை பெற்றுக்கொள்ள 'சுவைத்திரன்' நகைச்சுவைச் கை அலுவலகத்தோடு தொடர்பு கொள்ளவும்
தொடர்புகள்: திக்கவயல் சி.தர்மு சுவைத்திரன் கவிதேசம் 481, Lumỹ c$9,
மட்டக்களப்பு
-sePassasszir-s>>up2SP 22 GÓ 29 GK2P429 ”حج کے29ےے-۔ (

Page 12
சமூக நிறுவனங்களும் சமூகச் செயற்பாடுகளும்
பொன்விழாக் கானும் ஆத்திசூடி, கலைமகள் சனசமூகநிலையம்
யாழ்நகரின் வடக்கில் கந்தர்மடம் ஆத்திசூடிப் பகுதியில் அமைந்துள்ள கலைமகள் சனசமூக நிலையம் கடந்த 2003, டிசம்பர் 28ம் திகதி கதன் பொன் விழாவை சிறப்பாக நடத்தியது. யாழ். பல்கலைக் கழகம் உட்பட பல கல்வி நிறுவனங்கள் சூழ அமைந்துள்ள இந்நிலையம் இப் பகுதி மக்களின் கல்வி கலை பண்பாட்டு வளர்ச்சியில் சிறப்பான பங்கை வகித்து வநதுள்ளது.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் (1953ம் ஆண்டு) இவ்வூர் இளைஞர்கள் பெரியவர்களின் முயற்சியால் இந்நிலையம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒலைக்கொட்டிலாக இருந்த இந்நிலையம் படிப்படியாக வளர்ச்சிகண்டு பொன்விழா நினைவாக அமைக்கப்பட்ட மேல்மாடிக் கட்டிடம், பின்புறத்தில் கேட்போர்கூடம் என விரிவடைந்து அழகுறக் காட்சி தருகிறது.
இதன் ஆரம்ப கால் வளர்ச்சியில் பல அறிஞர்கள் அக்கறை கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவராக இவ்வூரின் அயல்பகுதியில் வாழ்ந்த பொதுவுடை மைவாதியும், அறிஞருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்களைக் குறிப்பிடலாம். இந்நிலையத்தின் கீழ் மாதர்சங்கம், கலைக்குழு, விளையாட்டுக்கழகம் போன்ற பல அமைப்புக்களை ஏற்படுத்தி பல்வேறு பணிகளை முன்னெடுத்து வந்தனர். கலை இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், ஊர்மக்களுக்கு தொழில் வாய்ப்பைத் தரும் கைத்தொழில் முயற்சிகள் என இப்பணிகள் பலவாக அமைந்தன. இந்நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட இசை, நாடக, இலக்கியப் போட்டிகள், விளையாட்டுப்போட்டிகளில் 'இளைஞர்கள், பெண்கள், மாணவர்களை பங்கொள்ளவைப்பதன் மூலம் ஆழுமை மிக்கவர்களாக அவர்களை உருவாக்க இந் நிலையம் உதவிவந்துள்ளது.
இச்செயற்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதில் நவலியூர் செல்லத்துரை, கிங்ஸ்லி செல்வம், மறைந்த நாடகக் கலைஞர் ஜெயக்குமார், சோ. தேவராஜா, க. தணிகாசலம்,
aggpasgoza 2-pa ”شمسکک س9ے کے سس۔ (ترجہ چھوٹے Dرجحصہ۔--29 سی قدرتی

-ஊரோடி
ஆகியோரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 'தாயகம்' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆரம்ப இதழ்கள் ஆத்திசூடி முகவரியிலிருந்தே வெளிவந்தது. இக்கலைமகள் சனசமூகநிலைய இளைஞர்கள் தமது ஊர்மக்களின் நலன்களில் மட்டும் அக்கறை கொண்டவர்களாக மட்டும் நின்றுவிடாமல் நிலப்பிரபுத்துவ சாதிய ஒடுக்குமுறை, ஆதிக்க அரசியல் போன்றவற்றை தகர்த்தெறியும் முயற்சியிலும், சமூகவிடுதலை, மற்றும் புதிய பண்பாட்டு அறிவியல் விழிப்புணர்வை வளர்ப்பதிலும் பெரும் அக் கறை கொண்டிருந்தனர். குறிப்பாக அறுபதுகளில் நடந்த சமூகவிடுதலைக்கான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டத்தில் இந்நிலைய இளைஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதன்மூலம் அரச ஒடுக்குமுறைகள், இன்னல்களை எதர்கொள்ள வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டபோதும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளில் இவர்கள் சோர்வடையாது முன்னின்றனர். இதுபோன்றே தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதரான போராட்டத்திலும் - யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உலர் உணவு, ஆடைகள் போன்றவற்றை சேகரித்து வழங்குதல், காயமுற்றவர் களுக்கு இரத்த தானம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் இந்நிலையம் தனது பங்கை ஆற்றியது.
இவ்வாறு பல்வேறு பணிகளைச்செய்து ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்து பொன் விழாக் காணும் இக்கலைமகள் சனசமூக நிலையம் தொடர்ந்தும் தனது பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து மக்களின் கல்வி, கலை பண்பாட்டு வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்கள் சமூக அரசியல் விழிப்புணர்வுடன் சுதந்திரமும், சுபீட்சமும் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் ஒரு நிலையமாக தனது பணியை தொடர விழைகிறது.
来
o 22:24- 10

Page 13
நான் இந்த வீட்டில் தான் வேலை செய்யிறன். கொஞ்சம் போல படிச்சன். கலியாணம் எண்டு வந்தது. அதோட படிப்புச் சரி. `பெண்பிளையஞக்குப் படிப்பென்ன, உத்தியோகம் பாக்கவோ... எண்டு எல்லாருமாச் சொல்லி, இந்த ஆளுக்குக் கட்டிக் குடுத்தினம். அதோட அவையஞடைய கடமை முடிஞ்சுதெண்டு அவையஞக்குத் திறுத்தி, பெம்பிளைப் பிள்ளையை வீட்டால கழட்டி விட்டால் பொறுப்பு முடிஞ் சுது. நான் படுகிற பாட்டை ஆரிட்டைச் சொல்ல
மெய்மெய்யா இந்த மனிசன் ஆகலும் பிழையில்லை. கொஞ்சம் குடிக்கும். கொஞ்சமென்ன, நல்லாக் குடிக்கும். குடிவெறி இல்லாத நேரம் தங்கமான மனிசன், தண்ணி மெத்திப்போனா வேற கதை. சிலநேரம். இல்லை, கிட்டத்தட்ட எப்பவுமே கண்மண் தெரியாமல் என்னை மொத்திப்போடும். என்னை அடியாத நேரம் அன்பாத்தான் இருக்கும். குடிக்க காசு தேவையெண்டா வலும் அன்பா இருக்கும். காசை வாங்கிக்கொண்டு குடிக்கப் போனபிறகு கதை வேற.
எங்களுக்குப் பிள்ளையள் இல்லை. இருந்தா ஆறுதலா இருக்கும் எண்டு நினைக்கிறனான். இந்த மனிசன்ட அடியை நினைச்சால் ஒரு வழியில பிள்ளையஸ் இல்லாததும் நல்லது எண்டு தான் நினைக்கிறன். இருந்தால் என்னோட சேர்ந்து அதுகளுக்கும் நித்திய பூசை விழும். ஒரு வேளை இந்தாள் திருந்தியும் இருக்கும். ஆர் கண்டது
துவக்கத்தில சம்பளத்தோட உத்தியோகம் பாக்கேக்க குடியும் அளவோட இருந்தது. என்ன நடந்ததோ தெரியாது. குடியும் கொஞ்சங் கொஞ்சமாக் கூடிப்போச்சு. சினேகிதரால் தான் பழுதாப் போனார் எண்டு சொல் லிச்சினம். சினேகிதர்களின்ட ஆக்களக் கேட்டா இந்த மனிசனால தான் அவையள் பழுதாப்போயினம் எண்டு சொல்லுவினமாக்கும். பிறகு வேலையும் இல்லாமப் போச்சு. குடியாலதான் எண்டு சொல்லிச்சினம். கொம்பனி நட்டத்தில ஓடினதால எண்டுஞ் சொல்லிச்சினம். எதை நம்பிறது எண்டாலும் அங்கை இங்கை ஒடி நாலுகாசு உழைச்சுக்கொண்டு வரும். பிறகு அதுவுங் குறைஞ்சு போச்சு. வீட்டுச் சிலவுக்கு காசு கேக்காமலும் ஏலாது. கேட்டாலும் விழும். வீட்டுச் சிலவுக்கு இல்லாட்டியும் சாராயச் சிலவுக்கு மட்டும் எப்பிடிக் கிடைக்குதெண்டு
11 ജൂത-ഭ_pഭsര
 

ஒருநாள் கேட்டுப் போட்டன். விழுந்த அடிக்குப்பிறகு அந்தக் கதையையே எடுக்கிறதில்லை. நானா எதையும் உழைக்கிறது தான் வழியெண்டு முடிவு பண்ணினன்.
கொஞ்சங் கூடப் படிச்சிருந்தனெண்டா ஒரு வேளை காசு நல்லா உழைச்சிருப்பன். உழைச்சுக்கொண்டு வந்து தான் என்ன! அதையுஞ் சாராயக்கடைக்குக் கொண்டுபோய்க் குடுத்துப்போட்டு வரும். அதோட அது ஆம்பிளை, ஒரு பொம்பிளையல்லோ உத்தியோகம் பாத்து உன்னைக் காப்பாத்திறா எண்டு ஆரேன் சொன்னாலும் எல்லாம் பிழையாப்போம். காசு போறதும் பத்தாமல் அதுக்குஞ் சேர்த்தல்லோ வாங்கித்தெளிய வேணும்.
டிவோஸ் எடடி எண்டு அக்கா சொன்னவா. ஒரு நாள் யோசியாமல் இந்த மனிசனிட்ட அக்காவும் அப்பிடிச் சொல்லிறா எண்டு சொல்லிப்போட்டன். அடுத்தமுறை அக்கா என்னைப் பாக்க வந்த நேரம், இந்த மனிசன் போட்ட சத்தத்தில அவ நடுங்கிப் போயிட்டா. இனி அவ இந்தப் பக்கம் காலடி வைக்கப் பிடாது எண்டு சொல்லிக் கட்டளை, அவவும் வரேல்லை. அவவுக்கு என்ன விசரா? நான்தான் போறனான். எண்டாலும் டிவோஸ் கதை பிறகு ஒரு நானுங் கதைக்கேல்லை.
அக்கா ஆரெண்டு சொல்ல மறந்திட்டன். அவ சொந்த அக்கா இல்லை. சொந்தமும் இல்லை. நான் வேலை செய்யிறது அவவின்ட வீட்டில தான். துவக்கத்தில அம்மா எண்டுதான் கூப்பிடுவன். அப்பிடிக் கூப்பிடுறது வடிவில்லை எண்டு அவ தன்னை மடம் எண்டு கூப்பிடச்சொன்னா. நான் மடம், மடம், மடம் எண்டு கூப்பிடத் துவங்கினதோட, அவ ஐயோ, வேணாம். அக்கா எண்டு கூப்பிடு எண்டு சொல்லிப்போட்டா அவ்வின்ட ஆளை சேர் எண்டுதான் இன்னமுங் கூப்பிடுறன். அது பிளையில்லைப் போல.
சேரும் அக்காவும் சண்டை பிடிப்பினந்தான். எண்டாலுஞ் சேர் இந்த மனுசன் மாதிரிக் கை நீட்டமாட்டார். முதலில் அக்காவுக்குப் பயம் எண்டு தான் நினைச்சன். பிறகுதான் மரியாதை எண்டு விளங்கிச்சுது. அக்காவும் ஆரும் தனக்குக் கைநீட்டாத மாதிரி நடந்து கொள்ளுறதாலயாயும் இருக்கும். சத்தமாச் சண்டை
-goasay-a-P4° 262C240 902ےے--

Page 14
Y- N
"ஆணும் பெண்ணுஞ் சம மெண்டா, ஏழை மனிசியும் ஏழை மனிசனும் சமம், காசுள்ள (D80fìđì[[[[D đb(Tđì6ò6òITC) (Da)fì đẹ)ID đ(D(3UDIT? đồíTđì6ò60mơ) மனிசியும் காசுள்ள மனிசனும் ő (Duda 6l60TC8uDIT3 Glucflu9) öől 8uum dòD Umöödfóg) GAUDÚD6"Tuu ளெல்லாம் எங்களை ஆண் பெண் வித்தியாசமில்லாமல் தூசாத்தானே மதிக்கினம்.”
الم ܢܠ
பிடிப்பினம். பிறகு கொஞ்ச நேரம் கதையே இராது. அதோட சரியாப்போம்.
அக்கா பெண்ணிலைக்காறி எண்டு சொல்லுகினம், சிலருக்கு அவவை அறவே பிடியாது. சிலருக்கு நல்ல விருப்பம். பல மாதிரி ஆக்களும் இங்க வந்து போவினம். பெரும்பாலும் பெம்பிளையள் தான். சில பேர் தங்கட பிரச்சினையளோட வருவினம். மற்றவை கனநேரமா இருந்து பலதுங் கதைப்பினம். சில கதையள் கேக்க முசுப்பாத்தியாகவும் பிரயோசனமாகவும் இருக்கும் சில நேரத்தில எல்லாங் குழப்பமா இருக்கும்.
அண்டைக்கு ஒரு நாள் நாலைஞ்சுபேராக் கூடி ஆணும் பெண்ணும் எப்பிடிச் சமமாச் சீவிக்க வேணும் எண்டு கதைச்சினம். நடுவில உச்சிக் கொண்டை கட்டின ஒரு ஸ்ற்றைலான பெம்பிளை ஆணும் பெண்ணும் சமமா ஒண்டாச் சீவிக்கிற மாதிரிச் சமமான ரெண்டுபேர் ஒண்டாச் சீவிக்க உரிமை இருக்க வேணும். எண்டு சொன்னா. முதலில அது எனக்கு விளங்கேல்லை. பிறகுதான், அவ பெண்ணும் பெண்ணுமோ, ஆணும் ஆணுமோ புருசன் பெஞ்சாதி மாதிரிச் சீவிக்கிறதைத் தான் சொன்னா எண்டு விளங்கிச்சுது. அதுக்குள்ள தலையைக் குறோப் பண்ணின பெம்பிளை, கலியாணமே தேவையில்லை எண்டு சொல்லுற நாங்கள் பிறகு ஏன் கலியாணக் கதை கதைக்க வேணும்? எண்டு கேட்டா. அதுக்கு, உச்சிக் கொண்டை வைச்சவ மேற்கு நாடுகளில எல்லாம் அதுதான் நாகரிகமாகி வருகுது எண்டு விளக்கஞ் சொன்னா. அங்க செய்யிற எல்லாம் இங்கையுஞ் செய்ய வேணுமா எண்டு கனநேரமாக் கதை நடந்துது. அதால நான் வீட்ட போகவும் பிந்திப் போச்சுது. வீட்டில நடந்ததை நான் சொல்லாமலே அறிவியள் தானே.
gasoceõ2592252-P2 شکسڑک>---------- (درحقیقت ھے> pحصے ۔ لاسپینے

அந்த ஊர்களில எல்லாம் இப்ப கலியாணம் முடியாமல் கூடி இருந்து பிள்ளையஞம் பெத்து வளப்பினமாம். சில நேரம் பிரிஞ்சும் போவினமாம். டிவோஸ் எடுக்கிற கோட்டு வழக்குச் சிலவு இல்லை. பிள்ளையளின்ட நிலைமை என்ன எண்டு யோசிச்சன். முடிச்சு டிவோஸ் எடுத்தாலும் அதே கதைதானே! எடாமல் சண்டை பிடிச்சுக் கொண்டிருந்தா மட்டும் என்ன நன்மையோ?
இப்பிடி ஒரு கூட்டத்துக்குப் பிறகு சேருக்கும் அக்காவுக்கும் நடுவில பெரிய வாக்குவாதம். இந்த மாதிரி நடந்தால் பெம்பிளையஞக்குத்தான் நட்டம் எண்டு சேர் சொன்னார். நீர் ஒரு முழு ஆணாதிக்கப் பண்டி எண்டு அக்கா இங்கிலீசில திருப்பி அடிச்சா. சேர், `இந்த மாதிரி எல்லாங் கதைச்சா என்னால ஏலாது.... எண்டு எழும்பிப் போட்டார். டிவோஸில போய்த்தான் முடியுமோ எண்டு நினைச்சன். இந்த மாதிரிச் சண்டை பிடிக்கிற ஆக்கள் தனித்தனியா இருந்தாச் சினேகிதமா இருப்பினம். ஒண்டா இருந்தாத்தான் சண்டை வலுக்கும் எண்டுதான் நினைச்சன். எண்டாலும் பிறகு ஒத்துமையாப் போயிட்டினம்.
இன்னொருநாள், சமுதாயத்தில ஆம்பிளையஞக்கு உள்ள வசதியள் பெம்பிளையஞக்கு இல்லையெண்டு இன்னொரு அக்கா சொன்னதைக் கேட்டுப் போட்டு, அந்தத் துணிவில எண்ட சம்பளத்தைக் கூட்டித்தரச் சொல்லி அக்காவிட்டக் கேட்டன். சேரிட்டைக் கதைச் சுத்தான் சொல்லேலும் எண்டா, பிறகு அவவுஞ் சொல் லேல்லை. நானுங்கேக்கேல்லை. இந்த இடத்திலும் மரியா தையான வேற இடங்கிடைக்கிறதுங் கஷ்டம். எங்கையும் வீட்டு வேலைக்காறருக்கு என்ன சம்பளம் கிடைக்கும்? சம்பளங் கூட எடுத்தென்ன, இந்த மனிசன் குடிச்சுத் தள்ளும் எண்டுபோட்டுப், பேசாமல் விட்டிட்டன்.
பிறகொருநாள் ஒரு படிச்ச பெம்பிளை வந்தா. உயர்பதவியில உள்ள பெம்பிளையளின்ட தொகை பத்தாது எண்டு அக்கான்ட ஆலோசனை கேக்க வந்தாவாம். அக்கா, இது பொதுவான பிரச்சினை எண்டதால எல்லாருக்குஞ் சேர்த்துத் தீர்மானம் எடுத்துச் சண்டை பிடிப்பம் எண்டா. வந்தவவுக்கு அது பிடிக்கேல்லை. ஒவ்வொருவருடைய பிரச்சினையுங் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் எண்டபடியாத் தனித்தனியாத் தான் எடுத்து வழக்காட வேணும் எண்டா. அக்கா யோசிப்பம் எண்டு சொன்னா.
கொஞ்ச நாளில அந்தப் பெம்பிளை திரும்பவும் வந்தா. அக்கா தனிப்பட்ட ஆக்கள் பதவியளைப் பெற வேண்டிச் சங்கத்தைப் பாவிக்க விடமாட்டன் எண்டு கண்டிப்பாச் சொல்லிப்போட்டா. வந்தவ விசுக்கிக்கொண்டு எழும்பிப் போயிட்டா. அக்காவுக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியாப்போயிட்டுது. அப்பதான் சேரும் வர, அக்கா கதை முழுதையும் அவரிட்ட அவிட்டுக் கொட்டிப் போட்டா.
வந்த ஆள் கஸ்ற்றம்ஸில வேலை. இண்டுவரையும் அங்கை உயர் அதிகாரியளில ஒரு பெம்பிளையும் இல்
So 2C2C242- 12

Page 15
நினைவுள்
கவிதை நூல் ஆக்கம் : தான யுத்தத்தை வெறு அதனைப் பற்றிய கவிதைகளில் உ
விலை : ரூ.75.
ஒரு பயணியின் நிகழ்காலக் கு
கவிதை நூல்
ஆக்கம் : கருணாகரன் இதிலுள்ள பெரும்பாலான கலிதைகள் யுத்தத்தை வாழ்க்கைச் சூழலிலிருந்தும் வாழ்நிலைகளிலிரு
விலை : ரூ.70.00
ܢܠ
லையாம். அதில, ஒரு பெண் உயர் அதிகாரிப் பதவி உண்டாக்கப்படவேணும் எண்டு சண்டை பிடிக்கக் கேட்டாவாம். அக்காவுக்குச் சரியான கொதி. சேர், அப்ப அவ தான் அந்தப் பதவிக்குக் கியூவில முன்னுக்கு நிக் கிறா எண்டு சொல்லும் எண்டு சாத்திரம் பாத்த மாதிரிச் சொல்ல, அக்காவுக்கு ஒரு பக்கம் தன்ட மனிசன் சரியாச் சொல்லிப்போட்டுது எண்ட சந்தோசம். மற்றப்பக்கம் தங்களை நக்கலடிக்கிறார் எண்ட நினைப்பில கோவம்.
உங்களின்ட ஆம்பிளையளின்ட தொழிற் சங்கங்களிலை இப்பிடி மற்றவையளைப் பாவிச்சுத் தங்களை வளர்க்கிறவை இல்லையோ? எண்டு ஆத்திரமாக் கேட்டா. சேர் ஒண்டும் பேசேல்லை. கோவிச்சமாதிரியும் தெரி யேல்லை. அந்தப் பொம்பிளையும் பிறகு வரேல்லை.
அக்காவுக்கு நல்ல மனந்தான், எண்டாலும் பெம்பிளையளின்ட பிரச்சினை எண்டு அவ நினைக்கிற தெல்லாம் கொஞ்சம் படிச்ச, வசதியான ஆக்களின்ட அலுவல்களாத்தான் தெரியுது. எப்பவேன் எங்கள் தரவழி யளின்ட பிரச்சனையளைப் பற்றிக் கூடிக் கதைச்சாலும், ஒண்டுஞ் செய்யிற மாதிரித் தெரியேல்லை. ஆம்பிளை பெம்பிளைப் பிரச்சினை எல்லா இடமும் ஒரேமாதிரி யாகவோ இருக்குது? ஏழைப்பட்ட பெம்பிளையஞக்கு எல்லாப் பக்கத்தாலும் இடி. இது ஏன் இவைக்கு விளங்க மாட்டனென்குது. காசு உள்ளவை இல்லாதவை, சாதி வித்தியாசம், சிங்களவர் தமிழர் எண்டெல்லாம் பிரச்சினைப்படேக்கை அதையெல்லாம் விட்டுப்போட்டுக்
13 g5arazazupassazżbd
 

மிள்தல் ༽
விஸ்ணு ம் அழிவாகவோ சிதிலங்களாகவோ காணாது
ஆழமான தீர்க்கம் நோக்கிய பார்வை இவரது iðT(8)
O
றிப்புகள்
நாங்கள் எதிர்கொண்ட நந்தும் எழுதப்பட்டவை.
žábusůiš திகழ்க்க்ைகறிப்பு
لم
கொஞ்சம் வசதியானவையிண்ட பிரச்சனையளை மட்டுந்தானே திரும்பத் திரும்பக் கதைக்கினம்.
ஆணும் பெண்ணுஞ் சமமெண்ண்டா, ஏழை மனிசியும் ஏழை மனிசனும் சமம். காசுள்ள மனிசியும் காசில்லாத மனிசனும் சமமோ? காசில்லாத மனிசியும் காசுள்ள மனிசனும் சமமாவினமோ? பெரிய உத்தியோகம் பாக்கிற பெம்பிளையளெல்லாம் எங்களை ஆண்பெண் வித்தியாசமில்லாமல் தூசாத்தானே மதிக்கினம்.
நாங்களும் இதெல்லாம் எங்கள் எங்களின்ட தலை விதி எண்டு நினைச்சு எங்களைச் சமாதானப் படுத்திக்கொள்ளுறம். கடவுளிட்டையும் வேண்டிக் கொள்ளளுறம், கும்பிடாத கோயிலில்லை. அந்தோணியார் கோயிலுக்குக்கூட இந்த மனிசன் குடியாமல் விட்டாத் தவறாமல் மெழுகுதிரி கொழுத்துவன் எண்டு நினைச்சிருக்கிறன்.
மெய்மெய்யா எனக்குள்ள தலையிடி இந்த மனிசன் என்ட உழைப்பையெல்லாங் குடிச்சுப் பாழாக்கிப்போடுது எண்டதில்லை. நான் காசு குடுத்தாலுங் குடிச்சுப்போட்டு அடிக்குது. குடியா விட்டாலும் குடிக்கேல்லை எண்டு அடிக்குது.
உங்களுக்குப் புண்ணியங் கிடைக்கும். ஆரேன் போய் இந்த மனிசனைப் புத்தி சொல்லிக் குடியாமல் நிப்பாட்ட ஏலுமோ? அது ஏலாவிட்டாலும் என்ன அடியாதை எண்டேனுஞ் சொல்லி நிப்பாட்ட ஏலுமோ?
-ജുബ്-െീ 2©©<ി ”شکسڑھےے ۔۔۔۔۔

Page 16
வெறியின் திரைவிலகும்
எனக்குள்ளே ஒரு அமைதி! மானுடம் தொலைந்து போன உன்னதத்தைத் தேடிய வலைவீச்சு மதம் கடந்த மானுடத்தை நோக்கி!
மானுடம் உன்னை மனிதனாய் தான் மதிப்பது மனிதனாய் உன்னை நான் நினைப்பது இருவரிடையேயும்- ஒரு உணர்வு ரீதியான உறவு இன்று உறங்கிப்போனது மானுடம்!
மதம் என்னவென்று சொல்வது! நெறி என்பதா? இல்லை வெறி என்பதா? வெறி என்பதே உங்கள் முகக்குறி தந்த அறிகுறி ஆக வெறி கடந்த மானுடம் நோக்கி
மதத்தின் உணர்வால் மறைவது- LDLD605 இன்று மதமதன் பெயரால் வளர்வது மமதை
ஒரு தாயின் பத்து திங்கள் கனவு ஒரு மரபணுவின் தொடர் வரவு ஒரு உயிர்! அந்த உன்னத உணர்வை நெறியதன் போர்வை Gd5/167 (6. உயிர்கள் உணவின்றி உழலும் நிலையில் உடையின்றி அலையும் உலகில் மதத்தின் நிழலில் குளிர்காய்வதா?
உழலும் ஒருவன் எம்மதமாயினும் சங்கையின்றி சேவை செய்வோம்! இதில் என்ன சிக்கல்? வளர்ந்த நெறி எதுவாயினினும் தவிக்கின்ற வாய்க்கு தாமதியாது தண்ணீர் கொடுப்போம்! இது மானுடந்தானே!
மனிதா! முன்னை உன்னை மனிதனாய் நினை! மதி உலகே விரியும் உன் கண்ணில் மானுடமாய் அப்போது
வெறியின் திரை விலகும்- உயர் நெறியின் ஒளி பரவும்
பிரசன்னாவரூன்
ജ്ഞr"൫-൧൮ -<ി-ടP agapasaras2-up a

எச்சரிக்கை வேண்டும்
சிதறிக் கிடக்கும் இவ் வாழ்விடத்தில், மதமேறிய மதமெனும் மலையினின்று மானுடத்திற்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளே தேவை இன்று.
இந்தியாவின் பாபர் மசூதியில் எரிந்த முகம்மதியர் உடல் பார்த்த இந்துக்கள் சிந்திய கண்ணிர் மானுடம் அந்நிலை கண்ட இந்துக்களின் ஆரவாரம் அது மதம்.
அயோத்தியில் இரத்தத்தை பூமிக்கிரையாக்கிய இந்துக்கள் உடலை பார்த்த முகமதியன் வடித்த கண்ணிர் மானுடம் அந்நிலை கண்ட முகமதியன் கண்ணில் திரளும் ஆனந்தம் அது மதம்.
மதம் மீதான மதம்.
இப்படியாய் மறக்காது மறக்கடிக்கப்பட்ட மானுடம் பிறக்கும் போதும் இறக்கும் போதும் éflo)JITU UbLDULJIT
அல்லாகூ
ஓ கர்த்தரே
பெருமைக்குரிய புத்தரே! என்றெலாம் பெயர் பல கூறி அடையாளம் காட்டிக் கொள்ளும் மதம் மானுடத்தை மறந்திருக்க வைத்ததனால் மதம் மீதான மதம் பற்றி சிறு எச்சரிக்கை நுேண்டும்
பொ.கோபிநாத்
கொழும்பில் தேசிய கலை இலக்கிய பேரவையினால் புதியவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் வகையில் 'மதம் கடந்த மானுடத்தை நோக்கி’ எனும் தலைப்பில் கவியரங்கம் இரா.சடகோபன் தலைமையில் நடாத்தப்பட்டது. அதில் ஒலித்த சில பகுகள் இங்கு பயில்நிலம்' எனும் பகுதியில் ஆங்காங்கே பிரசுரமாகிறது.
家is 三や○○今)- 14

Page 17
பொய்யில் புலவன் - செந்நாப்போதன்- திருவள் ளுவரின் குறள்களுக்கு தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு உரையாசிரியரும் உரை எழுதியுள்ளார்கள். உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகள் பற்றிய அறிவு ஏதுமின்றி தாம் பிறந்து வாழும் சூழல், தாம் நம்பிக்கை கொண்டுள்ள மதக் கருத்துக்கள் போன்றவற்றின் அடிப்படையிலேயே குறள்களுக்கு உரை எழுதியுள்ளார்கள். ஒப்பீட்டு அடிப்படையிலோ திறனாய்வு அடிப்படையிலேயோ - வள்ளுவர் காலத்து நடப்பியல் படியோ உரை எழுதத் தவறிவிட்டார்கள். ஆதலால் வள்ளுவர் எதனைக் கூறினார் - எதற்காகக் கூறினார் போன்றவற்றைத் திறனாயாமல் எழுந்த மானமாக உரை எழுதிய உரையாசிரியர்கள் வள்ளு வரின் கருத்துக்களைக் 'கொலை செய்துள்ளார்கள். அவற்றுள் சில குறள்களையும் உரையாசிரியரின் பொருந்தா உரைகளையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்” ( குறள் - 969)
வள்ளுவரின் கருத்தையே பெருங்கதையும் குறிப்பிடுகிறது.
“வான் மயிர் துடக்கில் தானுயிர்
வாழாப் பெருத்தகைக் கவரி” (35வது பாடல்) மேற்படி குறளில் வரும் “கவரி” என்பது எத்தகைய விலங்கு? அது விலங்குக் கூட்டத்துள் “மான்’ வகை யைச் சேர்ந்ததா? அல்லவா? விலங்கியல் அடிப் படையில் அவ் விலங்கின் தன்மை யாது? போன்றவற்றை எல்லாம் நன்குணர்ந்துதான் வள்ளுவர் தம் குறளில் “கவரிமா” என்றே அவ்விலங்கு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கவரிமாவின் அதாவது கவரி என்ற விலங்கு எத்தகைய காலநிலையில் வாழ்கின்ற விலங்கு? அதன் உடலமைப்பு எத்தகையது? உலகத்தில் அல்லது இந்தியாவில் எங்கே வாழ்கின்ற விலங்கு போன்றவற்றை எல்லாம் நன்குணர்ந்துதான் வள்ளுவர் மேற்படி குறளில் அவ்விலங்கு பற்றி எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றை யெல்லாம் நன்குணராத உரையாசிரியர்கள்- கிணற்றுத் தவளை மனப்பான்மையுடன் உரை எழுதிப்போனார்கள்.
அறிவியற்துறையில் ஈடுபாடுகொள்வோரிலும் பெரும்பா மீறி சிந்திக்கமுடிவதில்லை. வல்லான் வகுத்ததே வா! மீண்டும் மீண்டும் சுழல்வதே அறிவியல் உலகின் 6 முன்வைப்போர் மிகச்சிலரே. அவர்களுள் ஒருவராக மை கந்தபுராண பாடல்களை விமர்சித்து கந்தரசம் என்ற நு அவரது முதலாண்டு நினைவாக அவரது இக்கட்டுரை
15 gњoro dze-Daељdrži
 

அண்ணா இராசேந்திரம்
“புகழ் பெற்ற உரையாசிரியர்” எனப் போற் றப்படுகின்ற பரிமேலழகர் கூறும் உரையாவது:- “தனது மயிர்த்திரளின் ஒரு மயிரைத் தானும் நீப்பினும் உயிர்வாழாக் கவரிமாவை ஒப்பார், மானம் எய்துங்கால் உயிர்நீப்பர்” என்பதாகும். திருக்குறளுக்கு உரை செய்தோர் ஆரம்பத்தில் பத்துப் பேர் என்று கூறுவர். அவர்களின் உரைகளின் அடிப்படை ஒன்றே.
“ஒரு மயிரை இழந்தாலும் கவரி விலங்கு உயிரை விட்டுவிடுமாம். மயிரை இழப்பதுடன் அதற்கு இழப்பால் ஏற்பட்ட மானம் (ரோசம்) இருக்கிறதே அதனாலேயே உடனடி யாகத் தனது உயிரை விட்டு விடுமாம்” என்பது உரையாசிரியர்களின் அறியாமைக் கருத்து. ஒரு மயிரை இழத்தலும் உயிரை விடுதலும் இரு வேறு நிகழ்வுகள். ஒரு மயிரை இழந்ததுமே மானம் ஏற்பட்டு ஒரு விலங்கு தனது உயிரை விடும் என்பது எந்தவொரு விலங்கியலாளரும் (Zoologist) இன்றுவரை கூறாத கருத்து. உரையாசிரியர்கள் ஒரு மயிரில் மாத்திரம் பிடித்துக் தொங்கிக் கொண்டு நின்றார்கள்.
வள்ளுவர் கூறவந்த கருத்து யாது? “கவரி என்று பெயர் பெறும் விலங்கானது தனது உடலில் உள்ள மயிர்களை ஏறக்குறைய முற்றாக இழந்து விடுமானால் கடுங்குளிர் கால நிலையின் தாக்கத்தால் உயிர் நீங்கி விடும். அது போல் உயர்ந்த பண்பாளருக்கு மானத்தை இழந்து விடும் நிலை ஏற்படுமானால் உயிர்ப்பினை நீத்து இயற்கை எய்திவிடுவர்” என்பதாகும். வள்ளுவர் ஒரு போதும் “ஒரு மயிரை இழந்ததுமே கவரிக்கு மானம் "பொதுக்கென வந்து உயிர் விடும். அது "ரோசம்' உள்ள விலங்கு” என்று கூறவில்லை. உரையாசிரியர், “மயிர் நீப்பின்’ என்பதில் வரும் 'மயிர்' என்பதை ஒருமை என்று கருதியதால் இந்நிலை ஏற்பட்டது. 'கள்' விகுதி சேர்க்கப்படாததால் ஒருமை என்றே உரையாசிரியர்கள் கருதிவிட்டார்கள். 'உடுக்கை இழந்தவன் கைபோல். என்பதில் 'கை' என்று ஒருமையிலேயே வள்ளுவர் கூறியுள்ளார். எனவே, இதனை ஒரு கையாலேயே ஒருவன் தனது இடுப்பிலிருந்து அவிழ்ந்து விழுந்த ஆடையை எடுத்து உடுப்பான் என்று கூறுவதற்கு ஒப் பாகும். ஒருபோதும், ஆடை இடுப்பிலிருந்து அவிழ்ந்து
லானோர் சமூகத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கும் கருத்தியலை ய்க்கால் என்று பழைய மரபுவாத எல்லைக்குள் நின்று விதியாக உள்ளது. இதனை மீறி மாற்றுக்கருத்துக்களை றந்த அண்ணா இராசேந்திரம் அவர்களைக் குறிப்பிடலாம். ாலை எழுதிய இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
பிரசுரமாகிறது.
-9<)ജൂട്ടര്ബയ്ക്ക് (PCC 9حک90ھے۔۔۔

Page 18
விழுந்த பின்னர் எவரும் ஒற்றைக்கையால் மாத்திரம் (ஒற்றைக் கையரைத் தவிர) எடுத்து உடுக்க மாட்டார்கள். குனிந்து தம் இரு கைகளாலும் ஆடையை எடுத்து உடுத்து தம் மானம் காப்பர். எனவே கைகள் என்ற பொருளிலேயே வள்ளுவர் 'உடுக்கை இழந்தவன் கை' எனக் குறிப்பிட்டார். அது போலவே 'மயிர் நீப்பின்' என்ற தொடரில் வரும் 'மயிர்' என்பதை “மயிர்களை நீப்பின்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்.
‘கவரி" என்ற விலங்கு எத்தகையது? எங்கே வாழ்வது? அவ் விலங்கு நம் ஊர் மாடுகளை ஒத்த தோற்றமுடையது. ஆனால் திரட்சியான நீண்ட மயிர்களையுடைய விலங்கு, அது குளிர் மிகுந்த பனிப்பகுதியான இமாலயப் பகுதியில் வாழ்வது. திபேத்திய மொழியில் அதனை 'யாக்'-(சீகிரி) என அழைப்பர். பனிக்கட்டிகளை போர்வையாகக் கொண்ட இமயமலைப் பகுதியில் கடுங்குளிரிலிருந்து பாதுகாப்பாக வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தன்னைத் தயாரித்துக் கொள்வதற்க்காக யாக் விலங்கிற்க்கு நீளமானதும் திரட்சியானது மான மயிர்கள் உடலில் தோன்றின. யாக் என்ற கவரியையே வள்ளுவர் மேற்படி குறளில் எடுத்துக்காட்டியுள்ளார். மா என்றால் விலங்கு என்று பொருள்படும். அதனாலேயே 'கவரிமா' எனக் குறித்தார். வள்ளுவர் இக்குறளை எழுதும்போது இமய மலைப்பகுதியில் வாழுகின்ற மேற்ப்படி விலங்கைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அக்கவரிமா தனது உடலில் உள்ள மயிர்களை இழந்து விடவேண்டியநிலைக்கு வந்தால் கொடிய பனிக்குளிரினால் இறந்து விடும் என்பது ஓர் இயற்க்கை நியதி. இதுபற்றித் தெளிவான அறிவு வள்ளுவருக்கு இருந்தது. ஆனால் உரை எழுதிய ஆசிரியர்களுக்கு (?) தெளிவான கருத்து எதுவும் இருக்கவில்லை. பரிமேலழகர், அக்கிரகாரச் சூழலில் மாத்திரம் வாழ்ந்தவர். (உலகம் பற்றி விரிந்த அறிவும் அன்று இல்லை. அத்துடன் அவருக்கு உலகம் பற்றி சிந்திக்கும் அறிவும் இருக்கவில்லை.) வட இந்தியாவின் நிலயியல், காலநிலையியல் அங்கே வாழ்கின்ற உயிர் களின் வரலாறு போன்ற அறிவு அவருக்கு மிகவும் மத்திமம். அதனாற்றான் அவர் கவரிமானின் ஒரு மயிரில் பிடித்துத் தொங்கிக்கொண்டு நின்று திருக்குறளுக்கு உரை எழுதினார். ஏனைய உரையாசிரியர்களும் அதே ஒரு மயிரைத்தான் சிக்கெனப்பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு நிற்கின்றார்கள். இன்றைய கல்லூரித் தமிழ் ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட திருக்குறள் உரையாசிரியர்களையே பொன்னெனப் போற்றிக் கொண்டு வலம்வருகின்றார்களேயொழிய சிந்தித்துப் புதுக்கருத்துக்களைக் கூறத்தவறிவிடுகின் றார்கள். இதனால் அவர்களிடம் பாடங்கற்கும் மாணவர் சமுதாயம், குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளாத சமு தாயமாகவே காணப்படுகிறது.
திருக்குறளுக்கு 20ம் நூற்றாண்டிலே உரைதெளிவுரை எழுதிய தமிழ் அறிஞர்களும் அதே தவறுகளையே விட்டுள்ளார்கள். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளையின் உரையாவது. “(தன்னு டலிலுள்ள) மயிரை (யாராவது) நீக்கினால் (உடனே)
త్తాP(5టెUTడ52_Pడ్డ ”شکک{9یےے ۔نسس۔ (ترجیہ خیبرتتےے۔ (رحیح - 29 سے تیرتے

உயிரை விட்டுவிடுகின்ற கவரிமாவைப் போன்ற வர்கள் மானம் (கெட) வந்தால் உயிரை விட்டுவிடுவார்கள்.” என்பதாகும். விளக்கவுரை எழுதும்பொழுது ‘கவரிமா என்பது ஒருவகை மான்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளுக்கு நாவலர் நெடுஞ்செழியன் - எம்.ஏ. 1991 இல் எழுதிய தெளிவுரையில், “தனது மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிரை வைத்துக்கொண்டிராத கவரிமான் போன்ற இயல்புடைய்வர்கள் தாம் உயிர் விடுவதனாலேயே மானம் நிலைக்கு மானால் தமது உயிரையும் விட்டுவிடு வார்கள்.” என்றே குறிப்பிட்டுள்ளார். நாமக் கல் கவிஞரும், நாவலர் நெடுஞ்செழியனும் திருக்குறளுக்கு விளக்க் உரை எழுதும்போது கவரிமாவை, “கவரிமான்” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். பதிற்றுப்பத்திற்க்கு ஆராய்ச்சி உரை எழுதிய சு. அருளம்பலனாரும், ஒளவை துரைசாமிப்பிள்ளையும் பெருங்கதை (பாடல் இல,50) ஆசிரியர் போல் கவரிமாவை “கவரிமான்” என்றே சுட்டியுள்ளார்கள். ஆனால் கலைக்களஞ்சியக்காரர் கவரிமாவை திபேத்திய நாட்டில் வாழும் 'எருதுவகை என்றே குறிப்பிட்டுள்ளார்கள். இந்த 20 ம் நூற்றாண்டிலே கூட உலகம் சுற்றிவந் தோருக்கே கவரிவிலங்கு மான்வகையா, மாடுவகையா என்று பிரித்தறிய முடியாதி ருக்கும்போது பரிமேலழகர் அவர் வாழ்ந்த- கி.பி 13ம் நூற்றாண்டு காலத்தில்- உலகம் தெரியாத காலத்தில் - எவ்வளவு அறியாமையுடன் இருந்திருப்பார் பகுத்தறிவுப் பாசறையிலிருந்த நாவலர் நெடுஞ்செழியன் கூட கவரியின் ஒரு மயிரிலேயே பிடித்துத் தொங்கிக் கொண்டு நிற்கின்றார் என்றால் பரிமேலழகர் ஒரு மயிரில் பிடித்து நின்று தொங்கியதில் வியப்பொன்றுமில்லை.
திருவள்ளுவர் காலத்துக்குப் பல்நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள், நுண்மான்நுழைபுலத்துடன் கவரிமா பற்றி எவ்வளவு தெளிவாகவும் இயற்கையாகவும் கருத்துக்களைக் கூறி உள்ளார்கள். அக் கருத்துக்களை பரிமேலழகர் உட்பட எந்தவொரு உரையாசிரியரும் அறிந்திருக்கவில்லை.
புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, கலித்தொகை போன்ற நூல்களிலும் வள்ளுவருக்குப் பிற்காலத்து நூலான பெருங்கதை, சீவகசிந்தாமணி போன்றவற்றிலும் கவரி பற்றிய செய்திகள் வந்துள்ளன. முதலில் கலைக்களஞ்சியம் கூறுவதை நோக்கியபின், மேற்கூறிய நூல்கள் கூறிய வற்றை நோக்கலாம். “கவரிமா- இது திபெத் நாட்டின் மிக உயர்ந்த மலைகளில் வாழும் எருதுவகையாகும். இது உலகத்தில் மிகக் குளிர்ந்தவையும், மிக உயர்ந்தவையுமான மலைகளில் வாழும் விலங்குகளுள் ஒன்று. இது மிக குளிர்காலத்தில் கூட 14,000 - 20,000 அடிகளுக்குள் கீழே வருவதில்லை. தற்போது இது லடாக் பகுதியில் 'சங்கசென்மோ' பள்ளத்தாக்கில் மட்டுமே காணப் படுகின்றது. உடல் முழுக்க கரிய, கரும் பழுப்பான நீண்ட மயிர்களைத் திரட்சியாகக் கொண்டது. மயிர்கள் மிருதுவானவை. பட்டுப் போன்றவை. மயிர்கள் தரையைத்தொடும். அவை இரு வகை:
1) காட்டுக்கவரி 2) வீட்டுக்கவரி வீட்டுக்கவரியின் நெஞ்சிலும், வாலிலும் வெள்ளை 愛ー> 三や○○<リー 16

Page 19
நிற மயிர்கள் அதிகம். அம்மயிர்களே சவரியாகவும், சாமரமாகவும் பயன்படுகிறது. 'பொஸ் குறுன்னியன்ஸ்' ( BOS Grunniens) என்ற விலங்கின வகையைச் சார்ந்தது. “GTeằTậpg| 365)6)ắ5G|Té5áu.JIb. Yak Large massively built ox family. Yakbulls and cows-Encycleopaedia Britanica .
புறநானூறு 132ம் செய்யுளில், “நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா, குவளைப் பூவையுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து அதன் பக்கத்திலுள்ள தகரமரத்தினது குளிர்ந்த நிழலின் கண் தன் பிணையுடனே தங்கும் வடதிசைக்கண்ணதாகிய வானைப்பொருந்தும் இமயமலை”
“முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேனே நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகியகல தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசையதுவே வான்றோயிமயம்." புறம் -132 பதிற்றுப்பத்து - 2ம் பத்து வரி 21 - 3
“...கவிர்ததை சிலம்பிற்றுஞ்சும் கவரி பரந்திலங்கருவியொடு நரந்தங்கனவும் ஆரியர் நுவன்றிய பேரிசையிமயம்’ முள்முருக்க மரங்கள் நெருங்கி வளர்ந்து காணப்படுகின்ற பக்கமலையில் உறங்குகின்ற கவரிமா பரந்து விளங்கும் அருவியையும் நரந்தம்புல்லையும் கனவினில் காணும் ஆரியர் நிறைந்த மிகப்புகழையுடைய இமயமலை. அதாவது பக்கமலைகளில் இனிதாக உறங்குகின்ற கவரிமா பகற்காலத்து தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையும் கனவினில் காண்பதற்க்கு இடமாக அமைந்த இமயமலை.
பதிற்றுப்பத்து 5ம் பத்து 43வது வரியில் “கவரி முச்சிக்கார் விரிகூந்தல் ஊசல் மேவல் சேயிழை மகளிர். கடவுள் நிலைய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமையமாக.” (கவரி மயிர்போலும் கொண்டை முடியாகிய கருமை விரிந்த கூந்தலினையும், ஊஞ்சலை விரும்பி ஆடுதலையும் செய்ய அணிகலங் களையுமுடைய மகளிர், நெடிய சிகரங் களையுடைய நெடிதுயர்ந்த வடதிசையில் எல்லையாக உள்ள இமயப் பகுதியில் வாழ்தலைக் குறிப்பிடுகிறது
பதிற்றுப்பத்து 9ம் பத்து வரி 36ல் “ஆய்மயிர் கவரிப்பாய்மா மேல்கொண்டு. அழகிய கவரிமயிராலாகிய குச்சியையும் அணிந்த பாய்ந்து செல்லும் குதிரைமீது ஏறிக்கொண்டிருப்பவன்
எ-று. அதாவது குதிரையின் நெற்றி மீது அதன் உச்சியில் கவரிமாவின் மயிரால் தயாரிக்கப்பட்ட மெல்லிய மயிர்களாலான குஞ்சம் கட்டப்பட்டுள்ளது.
அகநாநூறு 156 செய்யுளில், “முரசுடைச் செல்வர் புரவிச்சூட்டு முட்டுறு கவரி" என்றும், கலித்தொகை 69ல் “ஆய்துவி” (மெல்லிதாகிய சூட்டுமயிர் என்று வருகிறது) சீவகசிந்தாமணி 1860ல், “பானிறக் கவரி நெற்றிப் பசுங்கிளி நிறத்த பாய்மா” என்றும் 2228ல் “கவரி நெற்றிய இளைமயிர் புரவி'
17 g5ar?» «Ze-Does Grž

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருங்கதை பாடல் 35 ல், “வான் மயிர் நுடக்கிற்றாயினுயிர்
வாழாப் பெருந்தகைக் கவரி” என்றும், பாடல் 50ல், “கவரிமானேறு கண் படைகொள்ளும் தகரங்கவினிய தண்வரைச் சாரல்’ என்றும் கவரி பற்றி பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள் ளார்கள். எனவே, இத்தகைய அறிவியல் நோக்குடன் பண்டைப்புலவர்கள் கவரி பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டதன் அடிப்படையை ஒட்டியே வள்ளுவரும் கவரி பற்றி அறிவியல் அடிப்படையில் குறிப்பிட் டிருக்க, உரையாசிரியர் வள்ளுவரைப் புரியாமல் அறி யாமையுடன் குறளுக்கு உரை எழுதியிருப்பதைக் கற்றோர் நன்குணர்வர் என்பது தெளிவு.
18ம் பக்கத் தொeர். மகா வித்துவான் கலாபூஷணம்.
பெருமைமிக்க 21ம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் சாகித்திய கர்த்தா அவர். அவருடைய பெருமைகளை எழுத்தில் அடக்கமுடியாது. அவரது ஆக்கத்தில் உருவான பாடல் களையே தெரிவு செய்யும்படி 2002ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்தினப்போட்டி விதிகளில் குறிப்பிட்டிருந்ததும் அவரது இசை ஆற்றலுக்கு பெருமை சேர்க்கிறது. இத்துடன் நில்லாது இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவில் தமிழ் நாட்டின் பெயர்பெற்ற தலங்களின் மீதும் பாடல்களை இயற்றி யுள்ளார். அவற்றுள், ஊஞ்சற்பாட்டு, திருமண மங்கல வாழ்த்து, பாராட்டுவிழா, சஷ்டியப்த பூர்த்தி, உபநயனம், பாடசாலை கீதம், வட இல. சங், சபை கீதம், தேசிய கல்வியிற்கல்லூரி கீதம், நூற்றாண்டுவிழா கீதம் என்பன இயற்றி இசையமைத்து ஒலிப்பதிவும் செய்து கொடுத்த பெருமைக்குரியவர். அத்தோடு எழுச்சிப்பாடல்களும் இயற்றி இசையமைத்தவர், இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்குப் பாடல் எழுதியதன்மூலம் அத்துறையிலும் பணியாற்றியவர். பிறந்த குழந்தைகளுக்கு வேண்டிய பெயரை சோதிட விதிகளுக்கு அமையத் தெரிவுசெய்து கொடுப்பார். மேலும் ஆய்வுக்கட்டுரைகளுக்குத் தகவல் சேகரிக்கச் செல்பவர்களுக்குக்கூட மனங்கோணாது இன்முகத்தோடு வரவேற்று செய்திகளைப் பரிமாறுவார். இத்தகைய பெருந்தகையாளனுக்குக் கிடைத்த பட்டங்களும் எண் ணிலடங்காது. அவர் இறப்பதற்கு சிலகாலங்களுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டில் அவருக்கு விழா எடுத்து கெளரவித்தனர். இதைவிட இந்து கலாச்சார அமைச்சின் உயர் விருது கலாபூஷணம், கலாரத்னா, யாழ்.பல்கலைக் கழகம் வழங்கிய கெளரவ விருதான முதுகலைமாணி போன்ற பட்டங்களைவிட சமூக சமய ஸ்தாபனங்களும் பாடசாலை களும் கூட சிறப்புப்பட்டங்களையும் வழங்கி கெளரவித் துள்ளன. அத்தகைய பெருந்தகையாளன் இன்று நம்மத்தியில் இல்லை. எனினும் அவரது இனிய பாடல்கள் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும். அவரது ஏனைய பாடல்களுக்கும் இசைவடிவமும் நாட்டியவடிவமும் கொடுப்பது தமிழ்க் கலைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.
0.
0x8
-249 gag:Passass2r-asup2SP 22 GO112 GÓ ”شککےم{ڑےے میس۔D

Page 20
மகா வித்துவான் கலாபூஷணி
SuDgsí virúbudugf árár, -ðjudæf
அவர்களின் நினைவலைகள்
திரும
கலை என்பது அழகியல் நோக்குக்கொண்டதும் அரியனவற்றை எளியனவாக ஆக்கி எல்லோருக்கும் ஏற்றவகையில் வழங்கி வெறும் அறிவு நிலையோடு நில்லாமல் செயல் திறனையும் இணைத்து உணர்வு வயப்பட்டதாகவும் விளங்குவது. கலையில் அறிவுத்திறத்தினைவிடச் செயல் திறத்திற்கே முதன்மையான இடம் தரப்படுகின்றது.
மனிதன் தனது உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் கலையாகும். இக்கலை நிலையான ஒன்றெனினும் வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட ஒரு சாதனம். அத்தோடு கலையானது காலவரையறையற்ற தன்மை கொண்டது.
மனித நாகரிகம் தொடங்கியதிலிருந்து கலை வடிவங்களும் ஒவ்வொரு சமூகத்திலும் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்வை இரசிக்கவும் அதிலிருந்து பின்வாங்காதிருக்கவும் மட்டுமன்றி மனித உள்ளத்தைப் பண்படுத்தி நேர் வழி கொண்டு செல்வது கலையாகும். அது மனித மனதினைச் சாந்தப்படுத்தி உன்னதமான மனநிலையை வழங்கும் ஒரு சாதனம். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கலைவடிவினைக் கற்பது அவசியம் எனத் தற்போது விதந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு கலையில் தேர்ந்த மனிதன் கலைஞன் ஆகிறான்.
இந்த வகையில் இயல், இசை, நாடகக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்தான் அண்மையில் காலஞ்சென்றவரான மகாவித்துவான் இயல் இசைவாரிதி பிரம்மழறி என். வீரமணி ஐயர் அவர்கள். இவர் கலைக்குப் பெயர்பெற்ற இடமான இணுவையம்பதியை பிறப்பிடமாகக் கொண்டவர். இளமை யிலேயே கலையார்வம் மிக்கவராகக் காணப்பட்டார். இவர் தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பயின்றார். அங்கு பயிலும் காலத்தில் சகல துறைகளிலும், சிறந்து விளங்கியமையால், கல்லூரி அதிபரினால் சிறந்த பல்துறை மாணவர் என்ற விருதினையும் பெற்றுக்கொண்டவர். இவர் இளமையில் பெற்றோரை இழந்தும் தனது தமையனாரின் ஆசிகளோடு பாரதம் சென்று தமிழ் நாட்டில் `கலா ஷேத்திரா நடனப்பள்ளியில் இணைந்து `ழரீமதி ருக்மணிதேவி அருண்டேல்... அம்மையாரின் வழிகாட்டலில் இசை, நடன கலையைப் பயின்றார். இங்கு பல சிறந்த இன்ச விற்பன்னர்களிடம் இசை பயின்று பட்டம் பெற்றார். அவர்களில் எம்.டி.இராமநாத ஐயரிடம் இசையும் 20ஆம் நூற்றாண்டின் பிரபல சாகித்திய கர்த்தாவான குரு பாபநாசம் சிவன் அவர்களிடமும் நேரடியாகப் பெற்ற அனுபவங்களோடு தாய் நாடு திரும்பி மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இசை, நடன ஆசிரியராக பணிபுரிந்தார். அங்கு பணிபுரியும் காலத்தில்தான் அவருக்கு அரச நியமனம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடன விரிவுரையாளராக கிடைத்தது. அதன்பின்பு நுண்கலைத்துறை கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு agapasco 2fas2 upg ”شککس لیےے --- <2ترمبکہ خیریت سی دورہ میرے حلاتر سپہ یقینی کے

gиfї
தி சந்தினி சிலுநேசன்
கையளிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு ஓய்வு பெறும் வரை விரிவுரையாளராக கடமையாற்றினார்.
வீரமணி ஐயர் அவர்கள் விரிவுரையாளராகப் பணியேற்ற நாட்களில் நடனம் கட்டாய பாடமாகப் பாடசாலைகளில் புகுத்தப்படவில்லை. ஆகவே அந்நாளைய கல்வி மந்திரிக்கு சிபார்சு செய்து நடனபாடத்தை அழகியற் கல்வி எனும் பாடப்பபரப்பில் இடம்பெறச் செய்த பெருமை அவருடையது. அதற்கு வேண்டிய பாடத்திட்டங்களை வகுத்து க.பொ.த. சாதாரணம் வரையும் ஒரு பகுதியாகவும் க.பொ.த. உயர்தரம் வரையும் மறுபகுதியாகவும் வரையறை செய்து பாடத்திட்டங்களை வகுத்துக்கொடுத்தவர் அவர். அத்துடன் இதே வகுப்புகளுக்கு பரத நாட்டிய பரீட்சைகளுக்கு அறிமுறை, செய்முறை ரீதியாக பரீட்சை கட்டுப்பாட்டாளராகவும், தேர்வாளராகவும் கடமை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.பரீட்சைப் பயத்தைப்போக்கி சாதாரண உளநிலையோடு மாணவர்களைத் தேர்வுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதற்காக ஐயா அவர்கள் தேர்வாளராகக் கடமையாற்று கின்றபோது பரீட்சார்த்திகளின் மனம் நோகாவண்ணம் மிகமென்மையாக அன்பாக உரையாடுவார். இதுவும் அவரது உயர்குணங்களில் ஒன்றாகும். இதற்கு அவரிடம் காணப்பட்ட நல்ல மனப்பான்மையும் அனுபவங்களுமே காரணங்களாகும். அவர் விரிவுரையாளராகக் கடமையாற்றும் போதுதான் நம் தமிழ் மாணவச் செல்வங்களுக்கென நுண்கலைக்கல்லூரி அவசியம் தேவை எனக்கருதி, கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் மஹற்மூத் அவர்களிடம் சிபார்சு செய்தார். அதற்கான பத்திரிகை விமர்சனத்தையும் அவரே எனக்கு நேரடியாகக் காட்டி நான் வாசித்திருக்கிறேன். இன்று பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகத் திகழும் இராமநாதன் நுண்கலைப்பீடம் அவரது சிபார்சின் பேரில் ஏற்பட்டதுதான். அத்துடன் அவர் காலமாகும்வரை அங்கு வெளிவாரிப் பரீட்சகராகவும், அதிதி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
வட இலங்கை சங்கீத சபை நடனபாடத்திட்டம் வகுத்த குழுவின் தலைவராகவும் இருந்ததோடு நில்லாது தேர்வாளராகவும் வினாத்தாள் தயாரிப்பவராகவும் அங்கம் வகித்துள்ளார். அவர் ஒரு முத்தமிழ் வித்தகர். அவர் எண்ண னிலடங்காத ஏராளமான நாட்டியநாடகங்கள், கீர்த்தனங்கள், பதங்கள் இயற்றி இசையமைத்துள்ளார்கள். எந்த கலை விழாக்களானாலும் சரி, கவிதை அரங்கமாக இருந்தாலும் சரி மிருதங்க இசை நடன அரங்கேற்ற வைபவங்களானாலும் சரி அவர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். இதற்கு அவரது பல்துறைசார்ந்த அனுபவங்களே காரணமாகும். அவருடைய பாடல்களைப் பாடாத இசைக் கலைஞரும் இல்லை. அவற்றிற்கு நடனம் அமைக்காத நாட் டியக் கலைஞரும் இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட
77ம் பக்கம் மர்க்க.
്ട് 2©©ഭു). 18

Page 21
சிங்கள தமிழ் கலைக்கூடல்
முகிழ்த்து எழுவோம் சோதர உறவுகளுடன் என்ற மகுட வாசகத்துடன் கடந்த அக்டோபர் 2003, 29,30ம் திகதிகளில் கொழும்பு
புதிய நகர மண்டபத்தில் சிங்கள
தமிழ்க்கலைக்கூடல் நடைபெற்றது. ஹிரு என்ற இடதுசாரி அமைப்பினர் பலரது ஒத்துழைப்புடனும் இவ் ஒன்று கூடலுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். இலங்கையின் இனவாத பாராளுமன்ற அரசியலாலும் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட பேரினவாத யுத்தத்தின் விளைவு களாலும் சீரழிக்கப்பட்ட இனத்துவ உறவுகளை சீர்செய்யும் நோக்குடன்
முன்னெடுக்கப்பட்ட ஒரு பயனுள்ள
நிகழ்வாக இவ் ஒன்றுகூடல் அமைந்தது. இவ்ஒன்றுகூடல் நடை பெறுவதற்கு முன்பே இனவாதப் பத்திரிகைகளின் தொடர்ச்சியற்ற பிரச்சாரங்கள் ஒரு பதற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது. எதிர்பார்த்தது போன்றே முதல் நாட்காலை வணபிதா யூட்லாலின் வரவேற்பு ரையைத் தொடர்ந்து சிறுகதை அமர்வில் செ. யோகநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது குழப்பம் ஏற்பட்டது. இந்நிகழ்வை குழப்ப முயன்ற சிஹல உறுமய பேரினவாத அமைப்பின் எதிர்ப்பை முறியடித்து இவ் ஒன்றுகூடல் நடை பெற்றமை இந்நிகழ்வுக்கு வலுச் சேர்த்ததுடன் இனத்துவ உறவுகளின் யதார்த்தத்தையும் வெளிப்படுத்துவ தாக அமைந்தது.
அன்று காலனித்துவத்துக்கு எதிராக தேசிய இனங்கள் ஒன்றுபட்டு எழாமலே கிடைத்த ஆட்சி அதி காரமும், இன்றுவரை எந்த வல்லா திக்கத்தைச் சார்ந்தாவது தமது ஆளும் வர்க்க பேரினவாத ஆட்சி
f U66960T
யில் உள்ள மக்களது ஐக் விடுதலை ை படையாகக் ெ யல் செல்நெறி இனத்தின் பூர லைக்கும் எதிர லாக சகல ே களதும் தேசிய உரிமையை
அதனை உண் தத்தில் சாத்தி இதன் மூல
வடிவம் பெற --ܠ
19 ജ്ഞത് "ത.ജര
 
 

பற்றிய- சில குறிப்புக்கள்
மக்கள் மத்தி) ஒடுக் கப்படும் கியத்தையும் tu uyup 9y (q. U காண்ட அரசி எந்த தேசிய ணமான விடுத ானதல்ல. பதி தேசிய இனங் ப சுயநிர்ணய
மதித்தலும், pupus or 90s யப்படுத் தலும் மே செயல்
cpco-dych.
”میکسیکھیے--سس
அதிகாரத்தை நிலைநிறுத்த எண்ணும் பலவீனமான இலங்கைத் தேசியமும் இனங்களின் ஐக்கியத்தை பேண விழையாததில் வியப்பில்லை. அத் தகைய பல்லின மக்களின் ஒற்றுமை தமது ஆட்சி அதிகாரத்துக்கு உலை
வைக்கும் போர்வாள் என்பதை அவர்கள் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்தே சரியாக உணர்ந் திருந்தனர். இதனால் இனங்களைப்
பிளவுபடுத்தும் அரசியலையே இவர்கள் இன்றுவரை மக்களிடம் திணித்தனர். அதுபோன்றே இன ஒடுக்குமுறைக்கு எதிராகச் சிந்தித்த தமிழ்த் தலைவர் களும் சாதரணமக்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. சிங்கள இனவாத அரசியற் தலைவர்களின் நல்லெண் ணத்தையும் மன மாற்றத் தையும் எதிர்பார்த்ததுடன், காலனித்துவ எஜமானர்களையும், பிராந்திய, உலக ஆதிக்க சக்திகளையுமே பெரிதாக நம்பினர். ஏற்றத்தாழ்வான இச்சமூக அமைப்பில், பல்லின மக்கள் மத்தி யிலுள்ள ஒடுக்கப்படும் மக்களையும், மனித நேயமுள்ளவர்களையும், சமூக மாற்றத்தை விரும்புவோரையும் விடுதலைக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடிய அரசியல் வழிமுறையை
இவர்கள் என்றும் நாடவில்லை.
இதனால் இலங்கையில் இனங்களுக்கிடையேயான ஐக்கியம் மட்டுமல்ல, மனிதநேயத்துடனான உறவுகளே தீங்கான ஒன்றாகவும் அதற்கும் அப்பால் இன முரண்பாடுகள் கூர்மை அடையும் போது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு செயலாகவுமே அனைத்துத் தரப்பாராலும் கருதப்பட்டு வந்தது. அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கிய வெளிப்பாடுகளிலும் இதுவே நிலையாக இருந்தது. இதனால் மக்களிடம் இயல்பாகவே எழும் மனிதாபிமான உணர்வுகளும், மானுட

Page 22
நேயமும் கூட மழுங்கடிக்கப்படும் ஒரு சூழல் உருவாகியது. இச்சூழலில் இனங் களுக்கிடையிலான ஐக்கியம் என்பது மிகச்சிறுபான் மையினரான தத்துவத்தின் பின்புலத்தில் இயங்கும் இடதுசாரிகளதும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஆன்மீக, அறச் செயற்பாட்டாளர்களது கருத்தாகவுமே குறுகிப்போய் இருந்தது. ஆனால் அரசியல் வாதிகளால் மாசுபடுத்தப்பட்டாலும் வெகு ஜனங்கள் மத்தியில் மனிதாபிமானத்துக்கான ஊற்றுக்கண் எப்பொழுதும் இருந்து வந்தது.
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை முழுதான இன ஒன்று கலத்தலாகவும், வேறுபடுதலை முற்றான பிரிதலாகவும் கருதும் முதலாளித்துவ ஒரு முனைவாத கண்ணோட்டமே இவ்இனமுரண் நிலைக்குக் காரணமாகும். பல்லின மக்கள் மத்தியில் உள்ள ஒடுக்கப்படும் மக்களது ஐக்கியத்தையும் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் செல்நெறி எந்த தேசிய இனத்தின் பூரணமான விடுதலைக்கும் எதிரானதல்ல. பதிலாக சகல தேசிய இனங்களதும் தேசிய சுயநிர்ணய உரிமையை மதித்தலும், அதனை உண்மையான அர்த்தத்தில் சாத்தியப்படுத்தலும் இதன் மூலமே செயல்வடிவம் பெறமுடியும். இன்றைய உலகமயமாதல் சூழலிலும் எத்தகைய மேலாதிக்கங்களுக்கும் இடந்தராத சுதந்திரமான தேசியத்தையும் அர்த்தமுள்ள முழுமையான ஜனநாயக அமைப்பையும் இதன் மூலமே ஏற்படுத்தமுடியும்.
இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே கலைக்கூடல் நிகழ்ச்சிகள் அமைந்தன. நகர மண்டப மேடையில் கரிய சாம்பல் நிறமும் வெள்ளைநிறமும் கலந்த ஒரு திரை கிழிக்கப்பட்டு தொங்குவது போன்றும், அதன் பின்னணியில் சிகப்புத்திரை தெரிய அதன் முன்னால் நான்கு தேசிய இனங்களைக்குறிக்கும் நான்கு மனித உருவங்கள் ஒடுக்கப்படும் நிலையைக் குறிப்பது போன்று கைகளைக் கட்டியபடி எலும்புக் கூடுகளாக உருச்சிதைந்து நிற்கும் ஒரு தோற்றம் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. சாதி, இன, மத வேறுபாடுகள் கடந்து சகல இனங்களையும் நேசிக்கும் ஒரு புரட்சியாளனின் இதயத்தைக் கிழித்துவைத்தது போன்று அமைக்கப்பட்ட அவ்வுருவமைப்பே கலைக்கூடலில் பங்கு கொண்டோருக்கு புத்துணர்வை ஊட்டுவதாக அமைந்தது.
`இன்றுதான் சூரியன் சரியாக உதிக்கிறது... இது ஒரு மனிதாபிமானத்தின் கூட்டு முயற்சி என்ற ஹிரு அமைப்பினரின் வரவேற்புரையுடன் ஆரம்பித்த இவ்ஒன்றுகூடல்- ஆய்வுரைகள், இசைப்பாடல்கள், நடனம், நாடகம் என பல்சுவை நிறைந்ததாக அமைந்தது. ஆய்வுகளில் புனைகதை, கவிதை, இசைப்பாடல்கள், சினிமா, நாடகம்,தொடர்பு ஊடகம் என பன் முகப்பாங்கான தலைப்புக்களில் விடயங்கள் ஆராயப் பட்டன. அவை யாவும் அவ்வத்துறைகளின் வளர்ச்சி பற்றிய வெளிப்படுத்தல்களாகவும் விமர்சனங்களாகவும் அமைந்தாலும் இனங்களுக்கிடையேயான ஐக்கியம் என்ற அடிப்பொருளைத் தொட்டுச் சென்றன.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை அவை மூன்று வகையான அணுகுமுறையுடன் தொற்ற வைக்க முனைந்தன.
áéPCe5<ž>27gestoupá ”حج کسی کے -س-لاترحیم قوتھے (اور جرحہ۔کلاسیکی

1. அரசின் பேரினவாத நிலைப்பாட்டால் எழுந்த போரின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி- அழிவுகளில் இருந்து பாடம் பெறுவதில் ஏற்படும் ஐக்கியநிலை.
2. அனைத்து மதநெறிகளிலும் நிற்கும் யாவரும் அதன் வழி நடந்தால், அத்தகைய ஆன்மநேய ஒருமைப்பாட்டில் ஏற்படும். ஐக்கிய நிலை.
3. காலனித்துவத்துக்கெதிராக ஒன்றுபடாத இனங்கள், இன்று அனைவரையும் பாதிக்கும் புதிய காலனித்துவ முறையான உலகமயமாதலும் அதனை அமுல்ப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடுவதன் மூலம் பரஸ்பர உரிமைகளை அங்கீகரிப்பதில் ஏற்படும் ஐக்கியநிலை என்பவையாகும்.
இவற்றில் முதலாவது வகையான போரின் துயர், அழிவு, அச்சம் என்பவற்றை வெளிப்படுத்தி ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான ஐக்கியத்தை வலியுறுத்தி பெரும்பாலான தமிழ்க்கலைஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். உணர்வுபூர்வமான பாடல்களாக, உரைகளாக அவை வெளிப்பட்டன. அடுத்த தலைமுறையினருக்கு இத்தகைய துயர் நிலையை விட்டுச் செல்லக்கூடாது என்ற உணர்வு அங்கு மேலெழுந்தது. கலாநிதி என்.சண்முகலிங்கம், கவிஞர்.சோ.பத்மநாதன் போன்றோர் இவ்வுணர்வை நன்கு வெளிப்படுத்தினர். கவிஞர் ஆரியவன்ச ரணவீர மனித வாழ்க்கை பன்முகப்பாங்கானது. ஒரே நிறமலர்கள் பூத்துக்குலுங்கும் பூங்காவின் அழகுக் குறைபாடுடையது. பல நிறமலர்கள் பூத்துக்குலுங்கும் பூங்காவாக தன்னடையாளத்துடன் பன்முகப்பாங்கையும் பேணும் நிலை இங்கு உரு வாகவேண்டும் என்றார்.
ஊடகத்துறை பற்றி உரையாற்றிய நிலாந்தன், தென்னிலங்கையின் மையநீரோட்ட ஊடகங்கள் எப் பொழுதும் தமிழ் மக்களது கருத்துக்களைப் பிரதிபலிப் பதில்லை என்றும், இன்று ஏற்பட்டிருக்கும் உலகு தழுவிய தமிழ் ஊடக வளர்ச்சி நிலை பற்றியும் குறிப்பிட்டார்.
கவிதை பற்றிய கருத்துரையில் கவிஞர் சு.வில்வரத்தினம் புத்தரைக் குறியீடாக்க் கொண்ட தனது கவிதைகளை நினைவுபடுத்தி பெளத்த தத்துவத்தின் மீது தனக்கு இருக்கும்பிடிப்பையும் வெளிப்படுத்தினார். பெளத்தத்தை சிங்களத்துடன் மட்டும் அடைய்ாளம் காணாது பெளத்த தத்துவத்தின் வழிநடந்தால் தேசியக்கூட்டு ஆன்மா, தேசிய ஆன்மா, உலக ஆன்மா என விரிந்து செல்லும் விடுதலை நோக்கு வளரும் என்பதையும் குறிப்பிட்டார். அடையாளங்களுக்கு அப்பால் தமிழ்க் கவிதை சென்றுவிட்டது எனவும், உலகுடன் ஐக்கியப்பட்ட பின்னர், அயலவர்களுடன் ஐக்கியப்படுவது கடினமல்ல. செந்தமிழும், சிங்களமும் என இரு இறக்கைகள் கொண்ட பறவையாக நாம் பறக்கத் தொடங்குவோம் என்றார்.
இரண்டாம் நாள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் சிவத்தம்பி செப்பு மொழி பதினெட்டு டையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவு படுத்தி பதினெட்டு மொழி பேசுபவர்கள் ஒரு சிந்தனையைக் கொண்டிருக்க
്ട് 2©©ഞ്ഞു- 20

Page 23
முடியுமானால் இரு மொழி ஒரு சிந்தனையுடன் த6 பேணி ஒற்றுமையாக ஏன் வாழமுடியாது என்றும், நாம் தட முஸ்லிம்களாக இருக்கும் அதேவேளை மானுடர்களாக காலனித்துவத்தின் தேவை காரணமாக தனித்து வேறுபாடுகளையும் பேசினோம் ஒருமைப்பாடுகளைக் கான இச்சமாதான இடைவெளி இவற்றைச் சிந்திப்பதற்கு அவக என்றார்.
நாடகம் பற்றிய அமர்வில் உரையாற்றிய குழந்தை ம. தமிழ் நாடக வளர்ச்சி பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டது இன்று அனைவராலும் பேசப்படுகிறது. நல்ல விட பணத்துக்காகவும் சமாதானம் பேசப்படுகிறது. உண்மைய என்பது இங்கிருந்து வரவேண்டும் என நெஞ்சைத்த்ெ சழ்மாதானத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி அமைந்த
முதல் நாள் புனைகதை இலக்கியம் பற்றிப் பேசி சுசரித கமலத், எழுத்தாளர் குணதாச அமரசேகரவின் சிறுக விமர்சனம் செய்த போது இலங்கை தமிழர்களு களவர்களுக்கோ தாய்நாடாக இல்லாமல் பல்தேசியக்கம்பீ இருக்கிறது என்றார்.
திரைப்படம் பற்றிய அமர்வில் உரையாற்றிய அயே தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சிபற்றி குறிப்பிட்டதுடன் u வெளிவந்த மாவீரர்களின் நிகழ்வை மதிக்கும் ஒரு இராணு மனநிலையை வெளிக்காட்டும் தமிழோசை எனும் திரை குறிப்பிட்டார். புரசந்த கலுவற என்ற திரைப்படத்தை அ விதானகேயின் உரை ஒரு சமூகப்பார்வையுள்ள கலைஞ6 ஐக்கியத்தை அவாவும் கருத்து வெளிப்பாடாக உலகமயமாதலின் கீழ் எவ்வாறு அமெரிக்காவின் சினி உலகப்படத்தில் சிறு புள்ளியாகத் தெரியும இலங்கை வ வருகின்றதென்றும் இந்தியாவுடன் அவர்களது கூட்டு மு குறிப்பிட்டார். இத்தகைய ஆதிக்கங்களுக்கு எதிராக 1980க ஆசிய சினிமா (Asian cinema)அமெரிக்க ஈராக் போ ஆதரவு நிலைப்பாட்டின்பின் பலவீனம் அடைந்ததெ6 அமைக்கப்பட்ட தென்னாசிய ஒருங்கிணப்பு என்பதும் இலாபமீட்டவே வகைசெய்தது என்றும் குறிப்பிட்டார். பெரு படங்களை இலங்கை இறக்குமதி செய்யும்போது ஆ படங்களைக்கூட இந்தியா ஏற்க முன்வரவில்லை என்று படமான லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸின் படத்தைக்கூட இந் காட்சியில் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டா கோலாவுக்கு எதிர்ப்புத்தெரிவிப்பதுபோன்று உலகமயமா சினிமாத்துறையிலும் நாம் ஒன்றுபடவேண்டும் எனத் கலைத்துறை, தொழில் அனுபவங்களுக்கூடாகவே அ சென்றமை கலைக்கூடலின் ஐக்கியம், புரிந்துணர்வை ஏற்ட செயல்வடிவ நோக்கை வெளிப்படுத்துவதாக அமைந்தது
இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வுக்க இதறகு முன்பும் பல்வேறு தரப்பினாலும் முன்னெடுக்கப்பட் நீண்ட போர் இடைவெளிக்குப்பின் தமிழ், சிங்கள எழுத்தாளர்கள், கல்வியாளர்களை இணைக்க எடுத் பயனுள்ளது. இதுபோன்ற பணிகளை அரசியலாளர்கள், நிறுவனங்களிடம் மட்டும் விட்டுவிட்டுவிடாமல் பல்கை பாடசாலைகள் போன்ற கல்விசார் அமைப்புக்களு முன்னெடுக்கப்படும் போதே- அரைநூற்றாண்டுக்கு மேல இனவிரிசலை நீக்கி மக்களுக்கிடையிலான புரிந்துணர் முடியும். இதன்மூலமே அரசியல் தீர்வுடன் சமாதானத்தை வழியை இலகுபடுத்த முடியும்.
21 ♔ത്രr-ഷs@ീ

ரித்துவங்களைப் மிழர், சிங்களவர்,
இருக்கிறோம், துவங்களையும் ணத் தவறினோம். ாசம் தந்துள்ளது
சண்முகலிங்கம் -ன் சமாதானம் யம். என்.ஜி.ஓ பில் சமாதானம் தாட்டு கூறியது 5g).
ய பேராசிரியர் தை நாவல்களை ளூக்கோ, சிங் னிகளின் நாடாக
சுராசா ஈழத்துத் புத்தச் சூழலிலும் வத் தளபதியின் ப்படம் பற்றியும் புளித்த பிரசன்ன ரின் இயல்பான அமைந்தது. ரிமா ஆதிக்கம் ரை வியாபித்து 2யற்சி பற்றியும் ளில் ஆரம்பித்த ரில் யப்பானின் ன்றும், பின்னர் இந்தியா அதிக நம்தொகையான ண்டுக்கு ஐந்து ம் விருதுபெற்ற திய தொலைக் ர். கொக்கோ தலுக்கு எதிராக தான சாரநத வர் சொல்லிச் படுத்துவதற்கான
.
‘ன முயற்சிகள் டு வந்தபோதும் கலைஞர்கள், த இம்முயற்சி அரசு சார்பற்ற லக கழகங்கள், க் கூடாகவும் க நீண்டுவரும் வை ஏற்படுத்த நிலைநிறுத்தும் தணிகையன்
-<- ?
வர்ணங்கள்
நெடிய மரத்து இலைகள்
அடியில்தான் வீழும். பித்தெறிந்த போதுதான் பாரின் துருவமெங்கும்.
ULb 606õg பூச்சொரிந்து U86D60656.
தூண் நிறுத்தி சுடரை கிழித்து , கோபுரங்கள்.
மூன்னொருபோதும் போகாத IbnGöT தேர் ஊர்ந்தபோது சென்றேன்.
மகளுக்கு காட்டினேன்
Bleon இதுதானம்மா , எங்கள் திராவிடக் கலைகள்.
பின்னொரு நிசை - திரும்பியபோது கயிறு கட்டி
பலகை தொங்கியது.
அலுவலர்கள் மட்டும் நிறுத்திய தூண்களில் நான்கு வர்ணங்கள் கண்டேன்.
இப்போ
[ộff6fI நிலாவுக்கு முன்னால் (studes 606 (UTC3GOG.
கரஉைதாசன்
ജുട്ബ്-െീ 2©©ങ്ങു.

Page 24
தேவையுடன்.
மனமொன்றைப் பிளந்து ரணங்களை சுமந்து
தாயின்
கர்ப்பம் கிழிக்கும் வாழ்க்கை தேவையா. உயிர் ஒன்றைக் கொண்டு உடலுருகும் தசைகள்- நாளை கட்டையில் வேகும் காகிதமாய் அலைபாயும். விழியோடு ஏனிந்த விளையாட்டு தினம் பசியோடு உயிர் ஒழுகும் பசுமை நிலை கேட்டு நினைவெல்லாம் கருகிப்போய் நீண்டநாள் ஆச்சு இதன் நினைவோடு- புதுக்கவிதை பல நாட்கள் பாடியாச்சு. ஒடுகின்ற ஆற்றோடு கரைகின்ற தேகம் ஒடையின் இரு சுவரில் ஏங்கி உடல் வேகும் வாழ்க்கை யெனும் எச்சத்தைப் போட்டுவிட்டான் யாரோ.? இதனைப் புனிதமாக்கி தினமும் தேடுபவன் நீ யாரோ.? உருகுகின்ற துளிகளெல்லாம் ஒன்றாய் சேரும். வாழ்க்கை கண்ணிரில் தினம் தினம் காவியங்கள் பாடும் -ஏதோ தேவையுடன்.
அரங்கா றாதா சங்கானை
gapasas 262 up a ”میکس9ےے --- Pیجرحہ خیریت ھے۔ (و حیح>~~<2 سے قوتے

இந்துத்துவம், இந்துசமயம் சமூக மாற்றங்கள் ஆய்வுக்கட்டுரைகள் ஆசிரியர்: ந.இரவீந்திரன்
இந்து மத வரலாற்றில் கேடுகள்தான் மலிந்து கிடந்ததா, சமூக மாற் றங்களை எதிர்த்து வரலாற்று வளர்ச்சியைத் தடுக்கும் விலங்கா கத்தான் எல்லாக் காலங்களிலும் இந்து நெறி விளங்கியதா, அல்லது மாற்றங்களின் கருவியாகவும் வளர்ச்சியின் வழிகாட்டியாகவும் இந்து மதத்தால் இருக்க முடிந்ததா என்பதை கண்டறிய இந்த ஆய்வு ஏடு முயல்கிறது
ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை ஆசிரியர்
எஸ்.எம்.கோபாலரத்தினம் இது ஒரு சுவாரசியமான சிறு நூல் 1987ஆம் வருடத் தொடக்கத் திலும் இலங்கை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த உணர்திறன் மிக்க ஒரு பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துரைக்கிறது.
ஓலை கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மடல்
தொடர்புகளுக்கு. கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7.57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு-06
് 2©©൧- 22

Page 25
வரவுப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நிமிர்கையில் அவரைப்பார்க்க நேர்ந்தது. சற்றே இறுகிய முகம், நரைத்த தலைமுடி, முள்முள்ளாய் அரும்பியிருந்த வெள்ளைத்தாடி, தோளில் கொளுவிய துணிப்பை யோடும், சால்வையோடும், சிகப்புப் பூப்பூத்து விரிந்த குடையாய் நின்றிருந்த அந்த மரத்தின் கீழ் அவர் நின்றிருந்தார். அசப்பில் அப்பாவைப்போலிருந்தது. அப்பாவை நினைத்ததும் கோபம் வந்தது. விறுவிறென்று விலத்திக்கொண்டு உள்ளே போய்விட்டான்.
இரவின் கோபம் இன்னமும் மீதமிருந்தது. உறக்கம் பாதிக்கோபத்தை மட்டுமே தின்றிருந்தது. அசதி உடலை முறித்துப்போட்டிருந்தது. என்ன இருந்து என்ன..? எல்லாம் இருந்தும் அதைப் பயன்படுத்தத்தெரியாத மனிதர்களோடு என்ன பேசித்தான் லாபம்.? எதற்கும் அப்பா அப்படிப் பேசியிருக்கவேண்டாம். இரவின் உரத்த கூச்சல்களாய் அந்தச்சச்சரவு வெளிகளை ஊடுருவிக்கேட்டிருக்குமோ..? யோசித்துப்பார்த்தால் அந்த அளவிற்கு அவனும் கத்தியிருக்க வேண்டிய தில்லை என்றே படுகிறது. எப்போதும் அமைதியை விரும்புகின்ற மனம் தேவைகள் பூர்த்தியாகாத நிராசையில் சுத்தமாய் எல்லை தாண்டி விடுகிறது. எந்தவித சூழல் பற்றிய பிரக்ஞைகளுமின்றி வார்த்தைகளைச் சுட்டுப்போட்டு விடுகிறது.
அப்பாவுக்கு ஏன்தான் இந்த வைராக்கியப் புத்தியோ தெரியவில்லை. மற்றவர்களிடம் பேசி அலுவல் பார்ப்பது குறித்து ஏன் இவ்வளவு இளக்காரமாய் நினைக்க வேண்டும். யார் யாரோ எப்படி எப்படியோ காக்கா பிடித்துக் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவர் என்னவென்றால் ஏற்கனவே பழகிய ஒருவர் காதில் இரண்டு வார்த்தைகளைப் போட்டு வைப்பதற்கு இவ்வளவு தடிப்புக் காட்டுகிறார்.
Tஎழுதிப்போட்டனி தானே ட்ரான்ஸருக்கு. அது வாறநேரத்திலை வரும்.` என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல் வேதாந்தியாய் காத்திருக்க அவனால் முடியுமா? போன மாதம் சந்திரன் தான் விரும்பியபடியே திருகோணமலைக்கு மாற்றல் எடுத்துக்கொண்டு போய்விட்டான். வன்னியில் வேலை
23 g412auassožd
 

baru'r arwarf
பார்த்துக்கொண்டிருந்த மித்திரன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு வரப்போகிறான். இவன் மட்டும் முகமாலை பஸ்ஸில் நசிபட்டு, பளை க்குப் போய்வரவேண்டுமா, பஸ்ஸில் படுகிற கஷ்டத்தை நினைத்து பளையிலேயே வீடெடுத்து தங்கலாமென்றால் அது சங்கீதாவுக்குக் கஷ்டமாகிவிடும். அவள் யாழ்ப்பாணப் பாடசாலைக்குப் போகவேண்டிய நிலை. இருவேறு துருவங்களில் இருவரது வேலைத்தலங்களும் இருப்பதால் இவர்கள் படுகின்ற கஷ்டம் அப்பாவுக்கு எங்கே தெரியப்போகிறது.?
அப்பா கொஞ்சமாவது யோசித்துப்பார்க்கலாம். இந்த மாற்றம் மட்டும் கிடைத்தால் அவனது வாழ்க்கை எவ்வளவு இலகுவாக இருக்கும் என்று. எவ்வளவு நேரத்தையும், பஸ் காசையும் மிச்சம் பிடிக்கலாமென்று. எவ்வளவு ஆரோக்கியமாக நெரிசலற்ற வாழ்க்கை வாழலா மென்று. ஆனால் அப்பாவின் எண்ணம் வேறுவிதமாக இருக்கும், கடந்த காலத்தை விட்டு இறங்கிவர மறுக்கின்ற பிடிவாதத்தனம் அவரது பேச்சில் தெரியும்.
`நாங்களெல்லாம் படிக்கிற காலத்திலை எவ்வளவு தூரம் நடந்து பள்ளிக்கூடம் போயிருப்பம் தெரியு மோடா. கஷ்ரப்பட்டாத்தான் வாழ்க்கையிலை பக்குவம் வரும்.`
Tநீங்கள் அப்பிடியிருந்தா நாங்களும் அப்பிடியோ இருக்கோணும்.... வாய்வரை வந்துவிடும் வார்த்தைகள். முதுமையைப் புண்படுத்துகிறோம் எனும் எண்ணமெல்லாம் துளிகூட இல்லாமல் வார்த்தைகள் சதிராடும்.
திருகோணமலையில் உயர்பதவியில் இருக்கும் கதிரேசனைப்பற்றிக் கதைத்தபோதுதான் அவனுள் அந்த யோசனை பளிச்சிட்டது. அப்பாவுக்கு அவரைத் தெரியுமென்றால், அப்பா சொன்னால் அவர் ட்ரான் ஸருக்கு உதவி செய்யமாட்டாரா?
ஒருக்கா அவருக்கு கோல் எடுத்துச் சொல்லிவிடுங்கோ அப்பா. அவரைப்பிடிச்சால் ட்ரான்ஸர் எடுத்திடலாம்.`
-)<©©2 ള്ബ്-െയ്ത് ”شکس{ڑھےے ۔یس۔

Page 26
மலையகச் சிறார்கள்
பள்ளிக் கொழுந்துகள்
கிள்ளி எடுக்கப் பட்டு
கடைகளில் நடப்படுகிறது
ச.மணிசேகரன்
الصر ܢܠ ܃
அவங்களிட்டை மண்டாடித்தான் ட்ரான்ஸர் எடுக்கோணுமெண்டா உனக்கு ட்ரான்ஸர் வேண்டாம். உனக்கென்ன குறை இப்ப, பஸ்ஸிலை போய் வந்துகொண்டிரு. ட்ரான்ஸர் வாறநேரம் வரட்டும்.`
சீ. என்று போயிற்று. அப்பாவாம் அப்பா. இப்படி ஒரு அப்பா இருப்பாரா எங்காவது..? அப்போதிலிருந்து இப்படித்தான் அப்பா, எந்த ஒரு விஷயத்தைத்தான் அவனால் அப்பாவின் மூலம் சாதிக்க முடிந்திருக்கிறது.
ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரீட்சையில் அவன் எடுத்த புள்ளிகளைக் காட்டிலும் குறைவாக எடுத்த மாதவன் பெரிய பாடசாலை ஒன்றில் அனுமதி பெற்றபோது அவன் விட்டுக்கு வந்து குமுறினான்.
`என்னை விடக்குறைய மாக்ஸ் எடுத்தவன்
அந்தப்பள்ளிக் கூடத்திலை சேர, நான் வேறையிலை
சேருறதோ அப்பா....
`அதுக்கென்னடா செய்யிறது? எங்கை படிச்சாலும் கவனமாப் படிச்சால் முன்னுக்கு வரலாம்.`
`எனக்கு அந்தப் பள்ளிக்கூடத்திலை தான் படிக்கோணும்.`
`அங்கை சேர்க்காட்டில் என்னப்பன் செய்யிறது.?...
Tமாதவன்ரை அப்பா ஆரையோ பிடிச்சுத்தானை அங்கை சேர்ப்பிச்சவர். அப்பிடி நீங்களும் ஆரையாவது பிடிச்சு....
`அந்தாள், கெஞ்சிக்கூத்தாடி எல்லாருக்கும் பல்லிளிச்சு அந்த இடத்தை வாங்கீற்றான் எண்டால் என்னையும் அப்பிடிச்செய்யச் சொல்லுறியேடா. மானம், மரியாதை இல்லாமல் கெஞ்சுகிற வேலையெல்லாம் எனக்குச் சிரிவராது.`
இதுதான் அவனது நினைப்பில் விழுந்த முதல் அடி, அதன்பிறகு எத்தனையோ? வாழ்வில் சந்தித்த பல தருணங்களில் அப்பாவின் வைராக்கியம் நெகிழ்ந்து கொடுக்காமல், கிடுக்கிப்பிடியாய் இறுக்கிய வேளைகளில் நொருங்கி விழுந்த கனவுகள் எத்தனை.?
கோவைகளுக்குள்ளிருந்து விடுபட்டு நிமிர்ந்த ஒரு தற்செயலான கணப்பொழுதில் அவன் மீண்டும் அவரைக்
,gapasas 2 aboup ضحکہ ح{2ےے-س-لاترحہ ختھے۔ طور جھے-دوسرے قڑے

கண்டான். கணக்காளரின் மேசைக்குமுன் அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த முகத்தில் இறுகியிருந்த இறுக்கம் இப்போது தளர்ந்திருந்தது. லேசான சுருக்கங்கள் விழுந்து, எல்லாவற்றையும் கைவிட்டதனால், அமைதி நிலை கூடி வந்தது போல் இருந்தாலும் உள்ளூர ஒரு சோகம் இழை யோடியிருந்ததோ..?
அப்பாவிடமுள்ள முதுமையா இவரை அப்பா போல் தோன்றச்செய்கிறது. முகத்திலிருக்கின்ற உறுதியா? இல்லையே அப்பாவின் முகத்தில் இன்னும் கூடுதல் உறுதியிருக்குமே! அந்தக்கண்களா..?
நாசியா..? உதடுகளா..? எவை அப்பாவைப்போல் இவரைத் தோற்றமளிக்கச் செய்கின்றன. இவன் நெற்றியைப் பிசைந்தபடி யோசித்தான்.
எதுவாயுமிருக்கட்டும். எனக்கென்ன..? என்று மீண்டும் வேலையில் ஈடுபடுகையிலும் முகம் இடையிடையே நிமிர்ந்து நோட்டமிட்டது. இடையிடையே அவர் உதட்டில் அவிழ்கின்ற புன்னகை ஒரு, வெகுளிச்சாயையோடு இஷ்டமில்லாமல் புன்னகைப்பது போல் ஒரு பிரமை. கண்டவர் களிடமெல்லாம் போய் பல்லிளிக்கமாட்டேன் என்று அப்பா சொல்வது ஞாபகம் வருகிறது. இவரும் ஒரு காலத்தில் அப்படி நின்னத்தவராய் இருக்கக்கூடும். இப்போது, ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தால் சிரிப்பவர் போலல்லவா தெரிகிறது.
அதுசரி, யார் அவர்.? கணக்காளருக்குத் தெரிந்தவராயிருக்குமோ? இந்தச் சிடுமூஞ்சி கணக்காளரிடமிருந்து அந்த ஆள் பாவம் எப்போது விடுபடப்போகின்றாரோ?
சட்டென்று ஒரு பிரகாசம் பரவிற்று உள்ளுக்குள். அது என்னவென்று உணர்ந்து அதற்கான காரண காரியங்களை உத்தேசித்து விளைவுகளை ஜீரணித்துப் பார்ப்பதற்குள் பூலோகன் குறுக்கிட்டான்.
`நான் ஷோட் லீவிலை போறனடா. அக்ரிங் சைன் வைச்சுத்தா.... அவனது குறுக்கீட்டினிடையில் மனதுக்குள் ஒளிர்ந்த பிரகாசத்தின் மையப்புள்ளி எதுவென்பதை உய்த்துணர்வதில் சற்றே சிரமப்பாடு தோன்றியது. பூலோகனுக்காக ஷோட் லீவு ரெஜிஸ்தரில் கையொப்பமிட்டுக் கொடுத்தபோதும் மூளைக்குள் சிந்தனை வட்டம் சுழன்றது. என்ன யோசித்தேன்.? எது எனக்குள் 69CC வெளிச்சத்தைப் பரப்பிற்று எனும் எண்ணத்துடன் அவரை மீண்டும் உற்றுப்பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை. தற்செயலாகத் திரும்பிய அவர் இவன் தன்னைப்பார்ப்பதைக் கண்டதும், மிக லேசாய் சிரித்தார். அவரது அந்தச்சிரிப்பு இவனுள் மீண்டும் அந்தப் பிரகாசத்தைத் தோற்றுவித்தது. அந்த அதிர்வில் இவனால் பதிலுக்குச் சிரிக்கக்கூட முடியாமல் போகக் குனிந்து கொண்டான். ஏன். ஏன். தன்னால் சிரிக்க முடியாமல் போயிற்று. நட்பாய் சிரித்த ஒரு மனிதரிடம் பதில் மலர்வு காட்டக்கூட முடியாத சிடுமூஞ்சியாகவா மாறிவிட்டோம். தன் மீதே கோபம் வர. அவருக்கு இதமாய் ஒரு புன்முறுவல் கொடுக்க இவன் நிமிர்ந்தபோது அவர் ്ട് 2©©

Page 27
மறுபுறம் திரும்பியிருந்தார். இவன் கூனிக்குறுகினான்.
இவனை சிரிக்கக்கூட செய்யாமல் அவனுள் விழுந்த அந்த அதிர்வு, அவனது தந்தை கூட இப்படி ஆகிவிட முடியும் என்கின்ற எண்ணமா? ஏன் இல்லை. ஏதோ ஒரு ஒற்றுமை, ஏதோ ஒரு ஒற்றுமை என்று உள்ளுக்குள் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த மனதுக்கு விடை கிடைத்துவிட்டது. இன்னும் சற்றுக்காலம் போய் அப்பா முதிர்ந்து நெற்றி சுருக்கி அவரது வைராக்கியம் தளர்ந்து இப்படி யாரிடமேனும் வந்து கதைக்கின்றபோது இப் படிதான் இருக்குமோ? இப்படி எதற்கேனும் மற்ற வர்களின் தயவுக்காக காத்திருப்பாரா அப்பா. இதுவரை சொந்தப் பிள்ளைக்காகக் கூட மற்றவர்களிடம் இரங்காதவருக்கு இனிமேலா இப்படி ஒரு நிலைவரும்? அவரது மிடுக்கும், கம்பீரமும் குலைந்து தளர்ந்து, அவரroபது.? இப்படி ஆவதாவது?
`தம்பி.` என்கின்ற அழைப்போடு பியோன் ராமசாமி இவனருகே வந்தான். அவனது கைகளில் சில தாள்களும், பணநோட்டுக்களுமிருந்தன.
`என்ன அண்ணை.... என்றபோது கையிலுள்ள தாள்களை நீட்டினான். ஏதோ நிதி திரட்டப்படுகின்றது எனபது மட்டும் புரிய தாள்களைப்பார்த்தான். முதலாவது தாளில், `தம்பிராஜா சுதர்சன் என்பவரது இருதய சத்திர சிகிச்சைக்காக நிதி அன்பளிப்புச் செய்வோர்’ என்ற தலைப்பின் கீழ் அவனது அலுவலக உத்தி யோகத்தர்களின் பெயர்களும் பதிவாகியிருந்தன. இவன் அடுத்துள்ள போட்டோப்பிரதித் தாள்களைப்புரட்டினான். அந்த சுதர்சனது புகைப்படம், அவனது இதயத்தின் புகைப்படம், அதன் அமைப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றிய விளக்கங்கள் . மருத்துவ அறிக்கைகள் என்பன இணைக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே இவை பற்றிய விபரங்களைப் பத்திரி கையில் ரோட்டறிக்ட் கழக அறிவிப்பு மூலம் பார்த்த ஞாபகத்தில் பெயரைப் பதிந்துவிட்டு பொக்கற்றுக்குள் கையை விட்டு நூறு ரூபாத்தாள் ஒன்றை எடுத்தான். ராமசாமியிடம் அதைக்கொடுக்க நிமிர்கையில் அந்த மனிதர் இவனை ஆர்வமாகப்பார்த்தது தெரிந்தது. அவர் சிரிக்கக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பை அடக்கிக்கொண்டு அவன் கடமையில் கண்ணானான். முகம் தெரியாத அந்த சுதர்சனுக்காக மனம் பச்சாதாபப்பட்டுக் கொண்டிருக்க சில கணங்களுக்கு அவர் நினைவை விட்டு நீங்கியிருந்தார்.
`மிச்சம் பெரிய உபகாரம் ஐயா, நான் வாறன் அப்ப.` கொஞ்சம் உரத்த இந்தக் குரலினூடு அவன் நிமிர்கையில், ராமசாமியிடமிருந்து அந்த ஆவணங்களை வாங்கி தனது துணிப்பையினுள் பத்திரப்படுத்தி பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர் செல்வது தெரிந்தது.
இவனுள் பட்டென்று ஒரு அதிர்வு. இவருக்கா ராமசாமி இந்தக்காசு சேர்த்தான்.?
Tஅண்ணை இஞ்சை வாங்கோ... ராமசாமி கிட்டே வந்தான்.
25 segљеzo razr-Degњdrž2

பாடசாலையில் மழை
வான் மூத்திரத்தில் வாங்குகள் நனைகின்றன மாணவர்கள் குளிரில்
ச.மணிசேகரன்
المـ ܢܠ
`இப்ப காசு சேர்த்ததை அவருக்கோ குடுத் தனிங்கள். ஆருக்கு ஹாட் வருத்தம்.`
`இப்ப வந்து இதிலை இருந்திட்டுப்போறாரே தம்பி. அவரிண்டை மோனுக்குத்தான் வருத்தம். மனுசன் பாவம். பெடியனைக் காப்பாத்திப்போடோனுமெண்டு ஒவ்வொரு ஒவ்விஸ் ஒவ்விசா ஏறி இறங்குது. இந்த வெய்யிலுக்கை.`
தூரத்தில் தோளில் துணிப்பாக்கைக் கொளுவியபடி சால்வையைத் தலைக்குப்போட்டுக் கொண்டு அந்த மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். சில வேளை அவர் திரும்பிச் சிரிக்கக்கூடுமோ..? இவன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலே அவர் சிரிக்கக்கூடும். முன்னொரு தரம் சிரித்தாரே அதேபோல. ஆனால் அப்படிச்சிரிக்க வைத்தாலே அவன் பா வியாகி விடுவானோ?
எது எதற்காகவோ வைராக்கியம் கொண்டிருந்த வரை விதி இளக்கி, நெகிழ்த்திவிட அதைச் சாட்டாகக்கொண்டு அவரை சிரிக்கும்படி கேட்பதே பாவம்மோ..?
இவனுக்குச்சட்டென்று அப்பா ஞாபகம் வந்தது. அந்த மனிதர் கூட ஒரு காலத்தில் அப்பாவைப்போல இருந்திருக்கலாம். யாரிடத்திலும் எதுவும் இரந்து அறியாதவராய், யாரிடமும் பல்லிளிக்க வேண்டிய தேவை இல்லாதவராய், தானுண்டு தன்பாடுண்டு என்று வைராக்கியமாய் வாழ்ந்திருக்கலாம், இன்று பிள்ளையின் உயிர் என்ற ஒன்றுக்காக அவர் இவ்வளவிற்கு இறங்கி யிருக்கிறார் என்றால். அவனுக்குத் தொண்டை அடைத்தது.
அப்பாமேல் எதற்குக் கோபப்பட வேண்டும். பெரிய பாடசாலையில் இடம் வாங்கித்தரவில்லையென்றா..? அல்லது ட்ரான்ஸர் எடுத்துத் தரவில்லையென்றா..? இதெல்லாம் எவ்வளவு சின்னப் பிரச்சினைகள். ஒருநாள் வந்தால், இந்த வைராக்கியமெல்லாம் தளர்ந்துபோய், இதோ வந்தாரே! அந்த மனிதரைப்போல அலுவலகம் அலுவலகமாய் ஏறி, ஒவ்வொருவருக்கும் சிரித்து. அப்பா. அப்பா. இவனுக்கு உடனடியாக அப்பாவைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.
-ള്ള ഭക്ഷ്"(് 2©©<ി لاش کی۔9ھ کے --- (

Page 28
இளைய தலைமு 'பண்டைத்தமிழர்
ஒவ்வொரு காலத்திலும் படைக்கப்படும் இலக்கியங்கள் எதிர்கால நிகழ்வுகளிற்கு கையேடுகளாய் அமையுமென்றால் அதுவே அந்த படைப்பாளியின் வெற்றியாகும். இராமாயணம், மகாபாரதம் என்ற இலக்கியங்களினூடாக தமிழர் பரம்பரையின் வீரப் பிரதாயங்களை கூறி பெருமைப்பட்டு கொண்டிருக்கும் கற்பனாவாத உலகில் மெய்ம்மை பற்றிய தெளிவினைப் பெற்றுக்கொள்ளும் பணியினை பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற நூல் நிறைவேற்றியிருக்கிறது என்றே கூற வேண்டும்.
இந்நூல் பேராசிரியர் க.கைலாசபதியினால் பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட சில கட்டுரைகளின் தொகுப்பாகும். இது பேராசிரியரின் முகவுரையூடாக எமக்கு அறியக் கிடைக்கிறது.
இந்நூலில் பேராசிரியர் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற பரிசீலனையில் மொத்தமாக எட்டு கட்டுரைகளைத் தொகுத்தளித்திருக்கிறார். அவை ஒவ்வொன்றிலும் தமிழரின் பண்டைத்தெய்வங்கள், வாழ்க்கை நிலை, அரசியல் நடைமுறைகள், வழிபாடுகள், இலக்கியப்பண்புகள் என்பன பற்றிய உண்மைகளை அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குறிப்புகளுடன் தந்திருக்கிறார்.
இந்நூலின் முதலாவது கட்டுரையாக அமைந்துள்ள தெய்வமென்பமோர் சித்தமுண்டாகி. எனும் கட்டுரையில் பண்டைத்தமிழரின் தெய்வம் பற்றிய செய்திகளைத்தருகிறார். கி.மு.2500-1500 காலப்பகுதிகளில் நிலவிய சிந்துவெளி நாகரிகத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் பேராசிரியர் சிவனை பரம்பொருளாக கொண்ட சைவசமயம் பற்றிய வரலாறு தேடிச் சென்ற தான் சிவனுக்கு சிறப்பிடமற்று தமிழர் வழிபாட்டுத் தெய்வமாக அன்னை வழிபாடு சிந்து வெளிநாகரிகத்தில் நிலவியதை அறிந்து கொண்டதாக கூறுகிறார். சிந்துவெளி நாகரிகத்தில் அன்னை வழிபாடு நிலவியமைக்கு முக்கிய காரணம் அக்காலத்தில் நிலவிய சமூகவியல் நிலைமையான தாய்வழி முறையே என கூறும் பேராசிரியர் கி.மு. 500யின் பின்னரான ஆரியர் வருகையின் காரணமாக சமூகவியல் நிலைமை தந்தை வழிமுறையாக மாற்றம் பெற சிவன் எனும் தெய்வம் பரம்பொருளாக மாற்றம் அடைகிறது என்கிறார் ஆசிரியர். கி.பி முதலாம் நூற்றாண்டுக்கு பின் நிலவிய சைவ வைணவப்போர், சமணபெளத்தருக்கும் சைவ வைணவருக்கும் இடையிலான போர் என்பவற்றை களப்படுத்தி அரச பரம்பரை மதமாக விளங்கிய சைவமதம் அழியாது நிலைபெற்றது என்றும் பெயர் தெரியாத சிந்துவெளி கடவுளான சிவன் பெயரும் குணமும் பெற்ற சிதம்பரநாதனாக மாறிவிடுகிறான் என நிறைவு செய்கிறார்.
அழிவும் ஆக்கமும் எனும் இரண்டாவது கட்டுரையில் அரசர்களின் கருத்துப்பரப்பிகளாக இருந்த புலவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பண்டைத்தமிழர்களின் அரசியலில் புலவருக்கு இருந்த பிணைப்பினை இலக்கியங்களில் உள்ள உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
eepasarovasalvat¿ ”شکس9ھے سنسس-لامترجہ تھے۔ اور جگہ۔لاسپینے
 

றையினரின் பார்வையில்
வாழ்வும் வழிபாடும்"
-பொன் கோபிநாத்
போர்க்களங்களிற்கு சென்று மன்னனுக்காய் இறப்பது சிறப்பது’ என்றும் போர் முடிவில் மன்னன் புகழைமட்டும் பாடியதில் இருந்தும் புலவர்கள் அன்றைய காலத்தில் ஆளும் வர்க்கத்தின் சார்பாளராக பணி செய்திருந்தனர் என்ற உண்மையினை காட்டுகிறார்.
வீர வணக்கம் என்ற அடுத்த கட்டுரையில் பண்டைத்தமிழரின் வழிபாட்டு முறையின் வழியாய் இன்று நிலைபெற்றிருக்கும் சிறுதெய்வ வழிபாட்டின் உருவாக் கத்தினை நெளிவுபடுத்தியிருக்கிறார் பேராசிரியர். இறுதிச் சடங்குகளே வீரவணக்கத்தின் விளைநிலம் என்றும் போரில் இறந்த வீரனுக்காய் அமைக்கப்பெற்ற நடுகல் களும் சிறுதெய்வ வழிபாட்டிற்கு மூலவேர்களாய் அமைந்தன எனக் கூறுகிறார் பேராசிரியர். இன்று கிராமங்களில் வழங்கி வரும் ஐயனார், மதுரை வீரன், இருளன், கறுப்பன்,நொண்டி எனப்படும் சிறு தெய்வங்கள் இந்த நடுகற்கள் வழிபாடு முறையில் வந்தனவே என்கிறார் பேராசிரியர்.
பேய்மகளிர் என்ற கட்டுரையில் பண்டைத்தமிழரின் ஆணாதிக்க நிலையையும் பெண்ண்டிமைத் தனத்தினையும் காட்டுகிறார். சமூகம் பற்றிய சிந்தனையுடன் ஒரு பெண் கிளர்ந்தெழும் போது அவளை பேய் என்றும் சூனியக்காறி என்றும் சமூகம் ஒதுக்கி வைத்ததை பற்றி பேராசிரியர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
`நாடும் நாயன்மாரும் எனும் கட்டுரையிலே ஆசிரியர் திருமுறைகள் படைத்த நாயன்மார்கள் மனதில் நிலவிய பக்கச்சார்பு தன்மையினை அவர்களது பாடல்களினூடாக வெளிப்படுவதை பேராசிரியர் எடுத்துக்காட்டியுள்ளளார்.
அறமும் அரசியலும் என்ற நூலின் ஆறாவது கட்டுரையில் பண்டைத்தமிழர் வாழ்வில் அறம் எனும் பதத்தால் பிரயோகிக்கப்பட்டிருந்த அரசியல் அதிகாரம் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை’ எனும் இரட்டைக் காப்பியங்களின் சம்பவங்களின் ஊடாக முன்வைத்திருக்கிறார்.
இந்நூலின் ஏழாவது கட்டுரையாக அமையப் பெற்றுள்ள பேரரசும் பெருந்தத்துவமும் என்ற கட்டுரையில் மன்னர்களின் ஆதிக்க வெறியினையும், மன்னராட்சி என்ற பெயரில் நிலவிய ஒடுக்குமுறை ஆட்சி அமைப்பினையும் எடுத்துக்காட்டுகிறார் பேராசிரியர்.
இறுதிக்கட்டுரையாக அமைந்துள்ள பொய்மையும் மெய்மையும் என்ற கட்டுரையில் பண்டைத்தமிழர் இலக்கியங்களில் மிகுந்திருந்த கற்பனைகள் பற்றியும், பேய்கள் பற்றியுமான கருத்துக்களை ஆய்வறிவுத்தளத்தில் நின்று எடுத்துக்கூறும் பேராசிரியர் இன்றைய இலக்கியங்கள் மக்கள் பற்றியும் யதார்த்த வாழ்நிலை பற்றியதாகவும் அமைதல் வேண்டும் என்கிறார். O
சிகாழும் இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைசியந்ந பேராசிரியர் க. கைசிகாசபதியின் உவது நினைவுதினக் கருத்துரையின் சுருக்கம்
So 2C2242- 26

Page 29
ਹੋ ।
என் மரியாதைக்குரிய விருந்தினர்களே, செய்தி வாசிப்பவர் தனது கடைசி அறி பக்தாத்திற் கடல் இல்லை, முத்துக்களோ ஒரு தீவோ கூட இல்லை, சிறு தெய்வச் சின்னங்களது அரசிகள் ! மாணிக்கப், பவளத் தீவுகள் பற்றியும் சுல்தானின் கரங்களினின்றும் வழியும் அ சிந்துபாத் சொன்ன அனைத்தும் எனது சிற்றுாரின் வேனிற்கால வெக்கை நண்பகற் சூரியனின் தீய்ந்துபோன நிழ நாடுகடத்தப்பட்ட நட்சத்திரங்களது மோ "நம்மிடம் ஒரு காலத்தில் ஒரு கடலும் முத்துக்களும் மினுக்கியெ( மாலையில் மீண்டு வரும் மீனவர் இரு செய்தி வாசிப்பவன் தனது கடைசி அ "நம்மிடம் ஒரு காலத்தில் வஞ்சகமற்ற ஒரு கனவுச் சுவர்க்கம் இ ஏனேனில், என் மரியாதைக்குரிய விரு மீண்டும் பிறப்பதற்காக நாம் பொய்யுை தம்மிடம் ஒரு காலத்தில் ஒரு கடலும் சிப்பிகளும் முத்துக்களும்
என் மரியாதைக்குரிய விருந்தினர்களே, செய்தி வாசிப்பவர் தனது கடைசி அ பக்தாத்திற் கடல் இல்லை. முத்துக்களோ ஒரு தீவோ கூட இல்லை.
Bலோண்ட் அல்-ஹைடரி (பிறப்பால் ஈராக்கிய லெட்
27 sa Taupassa

வண்டுகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன், க்கையிற் பொய்யுரைத்துள்ளார்:
பற்றியும்
ஆயிரமாயிரம் தீவுகள் பற்றியும்
பில்,
ஸ்களில், ன இரவுகளிற் பிறந்த கட்டுக்கதையே.
டுத்த நிலவும் இருந்தன. ந்தனர்.
றிக்கையில், இன்னும்
ருந்தது' என்றும் உரைத்தார். ந்தினர்களே,
ரக்கிறோம்
பிறந்த நேரமும் இருந்தன.
மன்னிக்க வேண்டுகிறேன். நிக்கையிற் பொய்யுரைத்துள்ளார்:
னான் நாட்டவர்
-2626243 P seaso aduatsحک-{مجھے --س

Page 30
* நல்வ திரைப்படமெ.
`விரும்பியோ விரும்பாமலோ தென்னிந்தியத் திரைப்படங்கள் நல்லனவோ அல்லனவோ எமது விடுகளுக்குள் இழைந்து விடுகிற காலம் இது திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கிற வழமை பலரிடம் இல்லாதொழிந்துவிட்டது. காலவிரயம் பண விரயம் அதிக அலைச்சல் முதலானவற்றைக் காரணம் காட்டியும்- வீட்டில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இருந் தால் அடிக்கடி படம்பார்க்க இப்போதிருக்கிற வசதிகளைக் கருதியும் பலரும் அரங்கு சென்று படம் பார்ப்பதைத் தவிர்த்து ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கியிருக் கிறார்கள். வீடியோ டெக்வசதிகளும் இருந்தால் விரும்பிய கொப்பி எடுத்துப்பார்க்கவும் வசதி.
பரவலாக அடிபடுகிற அபிப்பிராயங்கள் விமர்சனங்கள் மற்றும் நடிக நடிகையர் பற்றி மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிற பதிவுகள் இவற்றின் அடிப்படையில் ஒரு படம் நல்ல படமாய் இருக்கும் என்று திரைப்பட ரசிகர்கள் தீர்மானித்து விடுகிறார்கள். ஒரு நல்ல படம் என்பது இப்படியிருக்கும் என்று கூட ஆளுக்காள் வேறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டிருக் கிறார்கள். திரைப்பட ரசனையும் காலத்துக்குகாலம் மாறிவருகிறது.
இந்த நிலையில் இப்போதெல்லாம் வெளிவருகிற திரைப்படங்கள் பெரும்பாலானவை நன்கு முன்னேறியுள்ள தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் பார்வையாளரின் வரவேற்புக்குரிய அம்சங்களைப் பரவலாகத்தூவி உருவாக்கப்படுகின்றவையாக இருக்கின்றன. அடிப்படையில் பார்வையாளரின் அறிவு, சாதாரண வாழ்வு பற்றிய மனப்பாங்கு இவற்றை வெகுவாகப் பின்தள்ளிய போக்கே இவற்றின் பண்பாக உள்ளபோதும் சில வித்தியாசமான அம்சங்களையும் செருகிய தயாரிப்புகளாகவே அவை அமைந் திருக்கின்றன.
அண்மையில் வெளிவந்த பிதாமகள் அப்படியான ஒரு திரைப் படமாகவே திகழ்கிறது.
இடுகாட்டிலேயே பிறந்து வளர்ந்து பிரேதங் களை எரிக்கும் தனது வளர்ப்புத் தந்தையின் வாரிசாக உருவாகும் ஒருவன் வாழ்வின் சோபித மான பண்புகள் எதனையும் அறிந்திராத, சராசரி உலக அறிவோ மனித இயல்பு களோ மிகமிகக் குறைந்த வனாக உள்ள ஒருவன்மாறுபட்ட ஒரு சூழலில் வாழ நேர்ந்த போது அனுபவிக்கின்ற மனித நேயம், அன்பு, பரிவு, உதவும் இயல்பு இவற்றிளால்
%א%8%אי
g? (sayuaeg شکست 9ےکے--Dتحترمہ خیبرتتے رجحصيلا2 سمیہ نقشے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

607A2/66/16.
மெம்மலுன்
உள்ளூரக்கவரப்படுகிறான். கள்ளம் கபடமில்லாத அவனிடம் விபரமறியாத முரட்டுத் தனமொன்றே காணப்படுகிறது. தன்னை நேசித்த அன்பு செலுத்தி உதவிய ஒரு நண்பன் வஞ்சகமாகக் கொல்லப்படுவதை அறிய நேர்ந்த போது அந்தக் கொலைகாறரை இனம் கண்டு கொலைசெய்து பழிதீர்த்துக் கொள்கிறான் என்பமே மையக் கதை. ‘சித்தன்' என்னும் பெயர் கொண்ட அந்தப் பாத்திரச்சித்தரிப்பு- அந்தப் பாத்திர மாகவே மாறிவிடும் விக்ரம்- அவரது நுண்ணிய பண்பு கள் பல கொண்ட குணச்சித்திரம்- அதை அவர் வெளிக் காட்டிய விதம். இவையெல்லாம் பாராட்டுக்குரிய தாகவே உள்ளன.
ஆனால் இந்தத் திரைப்படத்தில் பொருந்தாத துண்டுகளாகத்துருத்தித் தெரியும் நகைச்சுவை மற்றும் பாடற்காட்சிகள் இந்தத் திரைப்படத்தின் நல்லம்சங்களை மேவிவிடுகின்றன. அதுபோலவே சித்தனின் முரட்டுத் தனத்தை மிகையாகச்சித்தரிக்கும் தன்மையும் படத்தின் இயல்பான தன்மைக்கு குந்தகம் விளைவிக்கின்றன, பொதுவாகவே தென்னிந்திய தமிழ்ச்சினிமாவில் முற் போக்கான பார்வை என்று ஒரு கருத்தை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட ஒருவனை முதன்மைப்படுத்தும் தன்மையில் தரப்படும் படைப்பொன்று வரவேற்புப்பெறும் என்ற எதிர்பார்ப்பில் படங்கள் தயாரிக்கும் போக்குக் காணப்படுகிறது. இதற்குப்பல உதாரணங்களைக் காட்டலாம். அண்மையில் சர்ச்சையைக்கிளப்பிய சண்டியர், தேவர்மகன் முதலானவை இதனை அடிநோக்காக்க் கொண்டு உருவாக்கப்பட்டவை என் பதைப்பலரும் அறிவார்கள். பிதாமகள் என்னும் பெயருக்கூடாக உருவாக்கப்பட எதிர்பார்க்கப்பட்டது எது என்பதும் யோசிக்கவேண்டிய விடயம்தான்.
தற்போதெல்லாம் தமிழ்ச்சினிமாவின் நகைச்சுவை தரமிறங்கி அதளபாதாளத்துக்குப் போய்விட்ட விடயம். இந்தப் படத்தில் மிகவும் ரசாபாச மாகத் தரங்குறைந்து போயிருப்பதும்- கக்கூசுக்குப் போதல் என்பதை வெளிப் படையாகச் சொல்லுவது ஒரு நகைச்சுவை அம்சமாகிப் போகின்ற துரதிஷ்ட நிலை யாகி விட்டதும் கவனிக்கப்பட வேண்டிய குறைபாடாகும்.
இன்னொரு விடயம். பழி வாங்கல் என்ற நடவடிக் கையை மையப்படுத்தியே நிறையத் திரைப்படங்கள் வந்து விட்டன. இனியாவது பார்வையைத்திசை திருப்பி உலகத்தரத் தில் வருகின்ற நல்ல சினிமா க் களைக் கவனித்து ஓரளவுக் காவது நல்ல படைப்பைத்தர முயலக் கூடாதா?
28

Page 31
* சிங்கள தமிழ்
நாடக அரங்கு எப்பவுமே தனது காலத்தின், தான் வாழும் சமூகத்தின் உள்ளுணர்வின் உயிர் மூச்சுக்களை வெளிக்கொணர்ந்தவாறே இருக்கும், இருக்கவேண்டும். காலம் தவறுமிடத்து கலையும் தவறுவதுண்டு. இருப்பினும், தமது காலத்தின் சமூகத்துள் நின்றுகொண்டு, அதன் உள்ளுணர்வின் உயிர்மூச்சைச் சுவாசித் துணர்ந்துவிட்டு, அக்காலத்துள் வளர்ந்து விடாது, கருக்கொண்டு பிரசவிக்கப்படும் படைப்புக்கள்தான் காலத்தை வழிநடத்தும். அவ்வாறு இல்லாதவை காலத்தோடு கரைந்துவிடும்.
இன்று எமது தேசம் நீண்ட காலத்தின்பின், கைநழுவிப்போக விட்டு விட்டு நின்று ஏங்க முடியாததொரு அரும்வாய்ப்பினை துரும்பிளை ஒன்றில் தொங்கவிட்டுவிட்டுத் தவித்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு அறுந்து விழுந்துவிடுமோ என்ற ஏக்கம் நல்ல நெஞ்சங்களை வாட்டுகிறது. அந்த ஏக்கத்தின் விளைவே இந்த ஒன்றுகூடல். ஆகி முடிந்தவற்றை அவசரமாகக் கணக்கெடுத்துப் பார்த்துவிட்டு, இனி ஆகவேண்டியவற்றை வகுத் தமைத்துக்கொள்வதே இதன் நோக்கு என நாம் நினைத்துக்கொள்ளலாம்.
இணைந்து கருமமாற்றுதல் என்றுமே நல்லது. நாடகம் கூட்டுக்கலை என்பதால் கூடிச்செயல்புரியும் பண்பை அது வளர்த்துவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தும் நாடகக் கலைஞர் மத்தியிலும் பிளவும் பிரிவினையும் நிலவுகிறது. அப்படி இருந்துகொண்டு எப்படி நாம் அரசியல் வாதிகளைப்பார்த்து ஒன்றுபடுங்கள் என்று கேட்க்க (փlգեւյth?
இதுதான் நிலைமை என்பதற்காக நாம் பேசாது இருந்துவிட முடியாது. கூடிப்பேச முடிந்தவர் முதலில் கூடிப்பேசுவோம். முடிந்தவற்றைப்பேச முற்படும்போது நடந்த தவறுகளை நல்ல முன்னேற்றத்துக்கான படிக்கட்டுக்களாக அமைத்துக்கொண்டு அவற்றின் மீது பாதம் வைத்து நடந்து மேல்நோக்கிச் செல்ல முற்படுவோம், முன்னேறுவோம்.
29 ags/^29 Taz