கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2004.10

Page 1

| | |
விஞ்ஞானு இதழ்
|
I
I
| ||I/E|| || FN US
MAHIHIHIHI H 「リ
III
TAMMEN
4C/

Page 2
உன்னுடைய பேரால்
உன்னுடைய பேரால்
நாம் ஆக்கிரமித்துள்ளோட விமானங்களுடனும் தாங்க ஒரு நாட்டுக்குட் புகுந்து நம்மை ஏன் அவர்கள் 6ெ
உன்னுடைய பேரால்
கிராமங்களிலும் நகரங்கள பிய்ந்த குழந்தைகளையும் உடைந்த தனது வீட்டினுட் தந்தைக்காக அழுகிற சிறு கைகள் நசுக்கப்பட்ட இை வெய்யில் தீய்த்த வீதிகளி ஒவ்வொரு சாவும் ஒரு ே
உன்னுடைய பேரால்
ஆண்களையும் பெண்க6ை பிற்பகலில் வீட்டுக் கதவுக இரவில் ஆயுதங்களின் சL அவர்களது குழந்தைகளை வீடுகளினின்று வெளிக் கெ
உன்னுடைய பேரால்
அவர்கள் பிழையான இட அவர்களை வெறுப்பவர் எ அவர்களது பார்வையை நம் ஐயத்துக்குரியவர்கை சிறைக்கூண்டுகளில் இட்டு சாகடித்த மாடுகள் போல உடைகளைக் களைந்து மென்மையான உறுப்புக்க தசையைக் கிழிக்கும்படி உன்னுடைய பேரால்

களுடனும் போர்க்கலங்களுடனும்
(86TTLb பறுக்கின்றனர் என மருளுகிறோம்
பெருமைப்படு
ரிலும் குண்டெறிந்து
தாய்மாரின் உப்பிய வயிறுகளையும் கிடக்கும் பவனையும் ளயோரையும் ல் விட்டுள்ளோம் பாராளியை உருவாக்குகிறது
w பெருமைப்படு
ளயும் ளை நொருக்கியும் சடப்பினால் எழுப்பியும் ா அஞ்சி அழவிட்டு காணர்ந்துள்ளோம்
பெருமைப்படு
த்தில் இருந்ததாலோ ாவரோ பேர்களைத் தந்ததாலோ ஒரு படைவீரன் விரும்பாததாலோ ளப் பிடித்துச் jf
தொங்கவிட்டு அம்மணமாக்கி இழிவு செய்து ளில் மின்சாரம் பாய்ச்சி நாய்களை ஏவினோம்
பெருமைப்படு
மிகுதி பின் உள் அட்டையில்.

Page 3
/ー N புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
ÖTUöD கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
பிரதம ஆசிரியர் க.தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு இ.டுடுகையன் ᏧᏄ.ᏜlᎧlᏮᏧᏜᎫlb குழந்தை ம.சண்டுகலிங்கம் 61.6೧][೫] கல்வயல் வே.குமாரசாமி அழ.பகீரதன் ஜெ.சற்குடுநாதன் மாவை வரோதயன்
பக்க வடிவமைப்பு: சிவபரதன்
ஒவியம்: சி.துரைவிரசிங்கம்
விநியோகச் செயலர்: க.ஆனந்தகுமாரசாமி
அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறிண்டேஸ் சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு
6)6იJ67fouტჩ0):
தேசிய கலை இலக்கிய பேரவை 405, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்

கவிதை சோ.ந்மநாதன் டுடுகையன் அழபகீரதன் þTĽđ Tuf விடுத்தன் காலையூரான் தணிகையன்
Of
திடுக்குமரன்
ിgg, LI JIDö சத்தியன் தாட்சாயணி பூரீ *நீ.பி.அடுளானந்தம்
கட்டுரை
ທີ່ີ່ີ່ີ່ ຫຼືລູ6d dy]tງ என்.கே.ரகுநாதன் எம்.சிவகுமார் ந.இரவீந்திரன் ஊரோடி

Page 4
Öst(16tD
கலை இலக்கிய சமூகஃதூள காலாண்டிதழ் !
சேதுசமுத்திரத்திட்டத்த
நீண்டகாலமாக திட்டவடிவில் இருந்துவந்த சேதுசமுத்திர இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்திசெய்ய இந்திய அரசு தீர்மா பொருளாதார, இராணுவப் பாதுகாப்பு நலன்களை அடிப்ப முனைகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள குறுகி அமைக்கப்போகும் இக்கால்வாயின் ஆரம்பக் கட்டுமானம் 107 ஆனால் எப்பொழுதும் இயற்கையின் சீற்றத்தை அடிக்கடி பிரிக்கும் மேடான கடற்பரப்பை ஆழப்படுத்தி அமைக்கப்போகும்
இக்கால்வாய்க்கூடாகச் செல்லும் நீரோட்டமும், பெரும் வேகமாகச் செல்லும்போது நீரோட்டத்திலும், நீர்மட்டத்திலும் எண்ணெய்க்கழிவுகளால் ஏற்படப்போகும் கடல்நீர் மாசன இயற்கையாகவே மீன்வளம் நிறைந்த இப்பகுதி பாதிக்கப்படுவது கடல்வாழ் உயிரினங்கள் யாவற்றின்மீதும் இது பெரும் பாதி குடாநாட்டின் நிலத்தடி நீர் மேலும் விரைவாக உவராகும் ஆ மட்டுமல்ல தென்னிந்தியக் கரையோரப் பிரதேசங்களும் பாதிப் அங்குள்ள சூழலியலாளர்களும் இத்திட்டத்தை எதிர்த்து வரு
வடபகுதி மீனவர்களை மட்டுமல்ல, தென்னிந்திய மீனவ வாழ்வையும் வாழ்நிலங்களையும் பாதிக்கும் இதுபோன்ற பாரியதி ஒரு பரந்த பார்வையில் நின்று இதனை மதிப்பிடவேண்டும். 6 பகுதி பகுதியாக நோக்குவது தவறல்ல. ஒட்டுமொத்தமான பாதிப் பாதிப்படையும்மக்கள் பிளவுபடும்போதுஅதனால் இலாபமடை அதிகாரவர்க்கங்களே. இதனால் பாதிப்படையும் அத்துடன் இப்ப குலைவதுடன், சுற்றுச் சூழல் பாதிப்புகளுக்கெதிரான மக்களின்
மக்களின் இன்றைய வாழ்வுக்குமட்டுமல்ல எதிர்கால ச வேண்டிய இயற்கை வளங்கள் மீதும், சூழல் மீதும் பெரும் தாக்கங் பற்றி கருத்துக்களை வெளியிடும் புத்திஜீவிகள் மிகுந்த சமூகப் ஏகாதிபத்திய உலகமயமாதலின் நிகழ்ச்சிப் போக்கில் மிகமிக நிலைப்பாட்டுக்குத் தள்ளப்படுவதுதான் அரசியல்,பொருளாதார, ஆதிக்கக் கருத்துக்கள், சித்தாந்த நடைமுறைகளை எதிர்ப்பதி நியாயப்படுத்தும் போக்கில் இது வெளிப்படுகிறது. சரிக்கும் எல்லைக்கோட்டை அழித்துவிடும் இவ்விபரீதப்போக்கு அறிவு கலாச்சார வாழ்வுக்கும் தடையாக அமைந்து வருகிறது. இது ே கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.
C 9.

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
இதழ் 51 ஒக்டோபர் 2004
ல் பாதிப்பு இல்லையா?
த்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்து னித்துள்ளது. இந்திய ஆளும்வர்க்கம் தனது அரசியல், டையாகக் கொண்டே இத்திட்டத்தை முன்னெடுக்க
ய எல்லைக்கு நடுவேயுள்ள நீர்ப்பரப்பை ஆழப்படுத்தி மீற்றர் ஆழமும்,300மீற்றர் அகலமும் கொண்டதுதான். வெளிப்படுத்தும் வங்கக் கடலையும் அரபிக்கடலையும் இக்கால்வாயால் விளையப்போகும் அனர்த்தங்கள் பல.
எண்ணிக்கையிலான எடைமிகுந்த பாரிய கப்பல்கள்
ஏற்படப்போகும் மாற்றங்களும், அவைவிட்டுச் செல்லும் டைதலும் பல பக்க விளைவுகளைத் தரவல்லவை. டன் பவளப் பாறைகள், கடற்தாவர வகைகள், ஏனைய ப்பை செலுத்தும். ஏற்கனவே உவரடைந்துவரும் யாழ் பத்தும் ஏற்படும். இதனால் இலங்கையின் வடபகுதி புக்குள்ளாகும். இவற்றின் தாக்கங்களை வெளிப்படுத்தி கின்றனர்.
களையும் சேர்த்தால் பல லட்சக்கணக்கான மக்களின் ட்டங்கள் பற்றிய சாதக பாதகங்களை மதிப்பிடும்பொழுது வட இலங்கை, தென் இலங்கை, தென் இந்தியா என புக்கள் பற்றிய-முழுமையான நோக்கு- இல்லாவிட்டால் பப்போவது இவைபோன்ற திட்டங்களை அமுல்நடத்தும் ாதிப்புகளுக்கெதிராக எழுந்துநிற்கும் மக்களின் மனவுறுதி
விழிப்புணர்வும் மழுங்கடிக்கப்பட்டுவிடுகிறது.
ந்ததிகளின் நல்வாழ்வுக்குமாக பேணிப்பாதுகாக்கப்பட களை விளைவிக்கும்- இதுபோன்ற பாரிய திட்டடங்கள் பொறுப்புடன் அதனை வெளியிடவேண்டும். இன்றைய பயங்கரமான விடயம் அறிவியல் உலகம் சந்தர்ப்பவாத இராணுவ, தகவல் பரிமாற்றப்பலம்மிக்க வல்லரசுகளின் ல் பயனில்லை என்ற முடிவுடன் ஏற்று செயல்படுவதை ) பிழைக்கும் நீதிக்கும் அநீதிக்கும் இடையேயுள்ள ரியலுக்கு மட்டுமல்ல மக்களின் ஆரோக்கியமான சமூக சதுசமுத்திரத் திட்டம் பற்றிய கருத்து வெளிப்பாட்டிலும்
statD - st

Page 5
கிரேக்க
ரோமானிய பேரரசுகள் கொடிகட்டிப் பறந்த காலங்கள்! Cuygyfish
பிரபுக்கள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்ய அடிமைகள் பல்லாயிரவர்
பிரபுக்களும் சீமாட்டிகளும் பார்த்துக் களிக்க களரியில் ஓர் அடிமை கூட்டுக் கதவு திறக்க பாய்ந்து வருகிறது சிங்கம், UfulG!
பிறகென்ன? மனிதனைச் சிங்கம்"கிழித்துப் போடுவதை துடிக்கத் துடிக்க அவனைச் சாப்பிடுவதை
பார்த்துக் களிப்பர் பிரபுக்களும் சீமாட்டிகளும் ஈராயிரம் ஆண்டுக்கு முந்தி நடந்த கதை இது.
அண்மையில் ஒலிம்பிக் போட்டி தாயகம் மீண்டது ஒரே கோலாகலம் போங்கள்! ஒவ்வொரு கறுப்பனும்
கறுப்பியும் வெற்றி ஈட்டுகையில்தம்மை அடிமை கொண்ட
C annuatio - st
 

-சோ.பத்மநாதன்
வெள்ளை இனத்தை ஒதுக்கித்தள்ளி முன்னே வருகையில் பெருமையால் நிமிரும் என் நெஞ்சு
ஆனாலும் நெஞ்சில் ஒரு நெருடல்: சாதனை புரியும் ஒவ்வொரு கறுப்பனும் கறுப்பியும் யாருக்காகப் பாடுபடுகிறார்கள்? நிறத்தின் பேரால் தம்மினத்தை ஒதுக்கி அவமதிக்கும் அமெரிக்காவுக்காக!
உலகம் இருபது நூற்றாண்டுகளில் முன்னேறித்தான் இருக்கிறது: சிங்கம் மனிதனைக் குதறிக் கொல்வதை யாரும் பார்த்து ரசிப்பதில்லை! ஆனால்
மனிதனை
d5LIT CUTG)
சேவல் போல்
DMLlg. Allsbo வெற்றியைத் தனதாய் உறிஞ்சும் அமெரிக்க சிங்கத்தை அல்லவா உச்சாணிக் கொப்பில் வைத்திருக்கிறது உலகம்!

Page 6
சாமர்த்தியம் அடைந்ததில் அனைவருக்கும் மகிழ்வு. வண்ணப் பூச்சில் வீடு நிமிர்ந்தது. அரண்மனையாய் கிடந்தது முற்றத்தில் கூடாரம். பிளாஸ்ரிக் கதிரைகள் பட்டாடை புனைந்த பெண்டிரைச் சுமந்தன. கழுத்தில் சங்கிலி மினுங்க எடுப்பாய் ஆடவர்.
புதிதாய் முளைத்த குளியல் அறையில் பிளாஸ்ரிக் தடாகத்துக்குள் பூக்களின் நடுவே மங்கை அமர்கையில் ஈன்றுவந்த அன்னையின் மகிழ்வு. அழகூட்டும் பெண்டிர் மினுக்கி மினுக்கி எடுக்க தகதகவென ஜொலித்த வதனம் கண்டு பார்வையர் இவள் தந்தை என்னோற்றார் என வியப்பர்.
கொஞ்சி மகிழ்ந்து பெற்றார் நிற்க உற்றவர் அண்ணாந்து பார்க்க மெல்ல நடந்து அன்னமென வருகையில் முன்னே கரங்களில் மலர் தட்டம் ஏந்திடும் சிறுமிய முகத்தினில் நாளை நாயகி ஆகிடும் கனவின் தெறிப்பு!
சொக்கட்டான் பந்தலில் சோடனை மிக்க மங்கைக்கு
UK

ಸ್ಥಿತಿ!
அழ.பகீரதன்
ஆரத்தி எடுக்கும் அரிவையராய் தெரிவானதில் துணை நடிகையர் ஆன லயிப்பு! மணியரங்கில் அரை QlLILLôll:(6 ÁlgŠp மங்கல விளக்கேந்தி நிற்கும்
ஒத்த வயதினர் தோழிப் பாத்திரத்தில் சிலிர்ப்பர்.
உறவினர் உற்றவர் 'குடும்பம்' என்ற தம் அடையாளம் காட்டி மங்கையொடு நிற்பதில் அவர்தம் உடையில், உணர்வில் பெருமிதம் தெரியப் பூரிப்பர். தம் தம் மினிவீடியோ கமராவுள் காட்சிப்படுத்தும் இளவட்டங்களுக்குள் பெரும்கமராமேன் எனும் திருப்தி,
தமிழ் சடங்காச்சாரம் காத்து நவநாகரிகம் காட்ட மேலைத்தேய முறைகூட்டி உடை நடை மாற்றி கேக் வெட்டி தடபுடல் கொண்டாட்டம்.
உற்பத்தி பற்றியும் உழைப்பின் அருமை பற்றியும் அலட்டிக்கொள்ளா மனிதர் ஒருநாள் பொழுது போனதில் புளகாங்கித்து நிற்பர்.
விண் நோக்கிய பயணத்தில் பெண் முயலும் காலமிது எனிலும் மத்திய தர வர்க்கத்து பெண்ணாய் பிறந்ததன் பேறு சடங்கென இங்கு தொடரும்.

Page 7
பார்வதிக்கு கனடாவிலுள்ள அவளது மூத்த மகள் தாலிக்கொடி வாங்கி அனுப்பிவைத்து பலமாதங் களாகி விட்டது. உறவினர்களும் அயலவர் சிலரும் பார்வதியை கொடியை அணியுமாறு கூறியும் அதற்கு அவள் மறுத்து விட்டாள்.
"அக்கா நீங்கள் வெளிப் பகட்டை விரும்பிறேல்லையெண்டு எங்களுக்குத் தெரியும். பிள்ளைய ளின்ரை விருப்பத்துக்காண்டியாதல் கொஞ்ச நாளைக்கு போட் டிருங்கோவன்"
பார்வதியின் தங்கை முறை யான பிறேமா அன்று காலையும் அலுமாரிக்குள் இருந்த தாலியை எடுத்து வந்து பார்வதியின் கைகளில் திணித்தபடி பல நியா யங்களையும் எடுத்துக்கூறி கொடி யை கழுத்தில் அணியுமாறு வலியுறுத்திவிட்டுச் சென்றாள்.
பிறேமா வெளிப்படையாக கூறாவிட்டாலும் “கொஞ்ச நாளைக்கு’ என்ற வார்த்தைக்குப் பின்னால் இருந்த உண்மையை அவள் உணர்ந்த போது பார்வதி மனமொடிந்து போனாள்.
உரத்துக் கத்தினால் அயலவர்கள் ஓடிவருவார்கள் என்பதற்காக "ஐயோ என்ர ராசா" என்று வாய்விட்டுக்கூறி அழுதபடி அவளது கணவன் குமரேசர் படுத்திருக்கும் கட்டிலை நோக்கி ஓடினாள். மயக்க நிலையில் இருக்கும் அவரது கன்னங்களை கைகளால் தடவியபடி கண்ணீர்விட்டு அழுதாள்.
குமரேசர் பக்கவாதத்தால் கட்டிலில் படுத்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆரம்பத்தில் பார்வதி உணவைக் குழைத்துக் கொடுக்க ஒருகையால் வாங்கி உண்ட அவர், அடுத்த கையும் செயலிழந்த போது பார்வதி தனது கையால் தீத்திவிட உண்டுவந்தார். இப்பொழுது உணவே உட்கொள்ளமுடியாத நிலையில், ஊரில் உள்ள தனியார் மருத்துவரின் உதவியுடன் மூக்கினுடாகப் போடப்பட்ட குழாய்க்கூடாகத்தான் அவர் கொடுத்த மருர்
Canuatio - st
 

துடனும், நீராகாரத்துடனும் ஒருவாரத்துக்குமேல் மயக்கமுற்றுக் கிடந்தார்.
குமரேசருக்கு ஏதாவது நடந்தால் மரணச் சடங்கை நடத்தும் பொறுப்பை வெளிநாட்டில் இருக்கும் அவரது பெண்பிள்ளைகள் இருவரும் பிறேமாவிடமே ஒப்படைத் திருந்தனர். காலையில் அவள் வந்து அவ்வாறு வற் புறுத்திச் சென்றமையும் மரணச் சடங்கைச் சிறப்பாகச் செய்வதற்கான முன்தயாரிப்பாகவே இருந்தது. வெளி நாட்டுப் பணவருகையுடன் ஊரில் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது. அவற்றில் முன்பு தாலி கட்டிக் கொள் ளாதவர்கள் அறுபதாம் கலியாணத்தில் அல்லது அதற்கு முன்போ மீண்டும் கட்டிக்கொள்ளும் புதிய வழக்கமும் ஒன்றாக இருந்தது. அவ்வழக்கத்தின்படி குமரேசர் நோய்வாய்ப்படும் முன்னர் அவரிடம் கேட்டபோது அவர் அதற்கு மறுத்துவிட்டார். இப்பொழுது அவரது மரணச் சடங்கின்போது பார்வதி தனது இளமைக்காலத்தில் கூலி வேலைகளுக்குச் செல்லும்போது நட்பாயிருந்த உள்ளுர்க் கமக்காரரின் மகள், கணவனை இழந்தபோது மரணச் சடங்கில் செய்தது போலவே வெள்ளைச் சேலைகட்டி,
5 )

Page 8
கணவனின் கைவிரலால் தனது குங்குமத்தை அழித்து, அவரது மார்பில் தாலியை கழட்டி வைத்துக் கதறி அழும் சடங்கை செய்யவேண்டுமென அவர்கள் விரும்புவதை உணர்ந்தாள். அம்மரணச்சடங்கில் கலந்துகொண்ட போது தனது நண்பிக்குச் செய்யும் கொடுமையாகவே உணர்ந்து அழுதிருந்தாள். இன்று தான் அதைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கும் பிறேமாவின் வற்புறுத்தலை ஏற்று தாலியைக் கழுத்தில் போட்டுக் கொள்ளாவிட்டாலும் எதைச் செய்வது என்று தெரியாத நெருக்கடியான ஒரு நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.
பார்வதி குமரேசர் படுத்திருந்த கட்டிலின் அருகே இருந்த கதிரையில் அமர்ந்தபடி மூச்சுவிட அவதியுற்று சீரற்று உயர்ந்து பதியும் அவரது நெஞ்சை தனது கைகளால் வருடியபடி அமர்ந்திருந்தாள். பிறேமா அவனிடம் கொடுத்த தாலிக்கொடி அவளது மடியில் கிடந்தது.
பார்வதியின் சிறிய தாயின் மகளான பிரேமா உயர்வகுப்பு வரை படிந்திருந்தாள். அவளது கணவன் அரச ஊழியராக இருந்தார். ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் முன்நிற்கும் அவளை உலக நடப்புத் தெரிந்தவளாக எல்லோரும் மதித்தனர். அந்தக் கிரா மத்தில் ஒரு ஒதுக்குப் புறத்தில் ஒரு அரசமர வேரில் வெறும் இரும்புச் சூலமாக வழிபாடு செய்து வந்த வைரவருக்கு பல இலட்ச ரூபாய்கள் சேர்த்து கற்பகக் கிரகம், வெளிமண்டபம், தீர்த்தக் கிணறு யாவும் அமைத்து வீரபத்திரர் ஆலயம் எனப் பெயர் வைத்து குருக்களை அமர்த்தி மூன்றுகாலப் பூசையும் தவறாமல் செய்து வைத்ததில் அவளது பங்கும் முக்கியமானது.
பார்வதியின் தாலிவிடயத்தில் கூட கனடாவில் உள்ள பிறேமாவின் நண்பி தனது கொடியின் பவுண் நிறையை கூட்ட இருப்பதாக அறிந்தபோது அங்குள்ள பார்வதியின் மகளுடன் தொடர்புகொண்டு பதினொரு பவுண் நிறையுள்ள தாலிக்கொடியை வாங்கி அனுப்பி வைத்தவளும் அவள்தான். அவளது சொல்லை மீறுவது என்பது பார்வதிக்கு இயலாததாகவே இருந்தது. ஆனாலும் தனது சினேகிதி மூலம் பெற்ற அனுபவத் துடன், குமரேசருடன் கூடிவாழ்ந்த அந்த முப்பது ஆண்டு களுக்கு மேலான எளிமையும் அன்பும் நிறைந்த வாழ்க்கையில் அவள் பெற்ற அனுபவங்களும் - இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு எதிரானவையாகவும் அர்த்தமுள்ள வையாகவும் அவளுக்குத் தோன்றியது.
அவர்களது பெண்பிள்ளைகள் இருவரும் வெளி நாடு செல்லும் வரை அவர்கள் வசதியற்ற நிலையி லேயே இருந்தனர். கூலித் தொழிலாளியாக இருந்த அவர் நோய்வாய்ப்படுவதற்கு ஓரிரு வருடங்கள் முன்னர்தான் வீட்டோடு சிறிய மரவேலைப் பட்டறை ஒன்றைப் போட்டிருந்தார். அதற்கு முன்பு ஓரிரு நாட்கள் அவர் நோயிற் படுத்தாலே அவரது குடிசை வீட்டின்
C 6

அடுப்புக்குள் பூனை படுக்கும் என்ற நிலை இருந்தது. இன்று அந்த வசதியான வீட்டில் அவருக்காக மேலும் பல வசதிகள் செய்து ஒதுக்கப்பட்ட அறைக்குள் ஓராண்டுக்குமேல் படுக்கையில் இருக்கிறார். அந்த அறைக்குள் இருந்தபடியே ஹோலில் உள்ள தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்க்க வசதி செய்யப்பட்டிருந்ததுடன் மின்விசிறி, வானொலிப் பெட்டி என பல தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. மது அருந்தும் பழக்கம் அவரிடம் இல்லாமல் இருந்தபோதும் அண்மையில் கனடாவில் இருந்து வந்து சென்ற அவரது இளைய மகள் கொண்டுவந்த வெளிநாட்டுக் குடிவகை போத்தல் இன்னும் திறக்கப் படாமல் அடுக்கில் இருந்தது. இத்தனை வசதிகளும் அவருக்கு இருந்த போதும் உழைப்பையே நேசித்து வாழ்ந்த அவருக்கு அந்த நோயும் படுக்கையும் மிகவும் துன்பம் தருவதாகவே இருந்தது.
பார்வதியும் ஓராண்டுக்குமேல் ஒரு நாளாவது முகம் சுழிக்காமல், சலிப்படையாமல் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து வந்தாள். கை கால்கள் வழங்காத நிலையில் அவரைப்போன்ற ஒருவரின் உழைத்துப் பருத்த உடலை தூக்கி நிமிர்த்திப் பரா மரிப்பதென்பது கடினமானதுதான். அவர் நோய் வந்து படுத்த ஆரம்ப நாட்களில் துக்கி உதவ வந்த உறவினர்களும் அயலவர்களும் நாட்கள் செல்ல தத் தமது சோலிகளுடன் ஒதுங்கிக் கொண்டனர். அதன்பின் பார்வதி மட்டுமே தனது உணர்வையும் பலத்தையும் ஒன்று சேர்த்து அவருக்குரிய கடமைகளைச் செய்து வந்தாள். குமரேசரும் பார்வதி தனது தேவைகளுக்காக உதவும் போது தன்னால் முடிந்தளவு அவளுக்கு சிரமம் கொடுப்பதை தவிர்க்க முயற்சிப்பார். இப்படி அவள் சிரமப்படுவதைக் கண்டு வேதனை அடைந்த குமரேசர் அடிக்கடி “நான் உயிரோடை இருந்து உன்னை கஷ்ரப்படுத்துறன்' என்று சொல்லிவந்தார். ஒரு நாள் அவரைப் பார்ப்பதற்கு அடிக்கடி வந்து செல்லும் நண்பர் ஒருவரிடம் நஞ்சு மருந்து வாங்கித்தருமாறு கேட்ட விடயம் பார்வதிக்குத் தெரிந்தபோது “உப்பிடி நீங்கள் முடிவெடுக்க நான் என்ன குறைவிட்டன்" எனக் கதறி அழுதாள். இரு நாட்கள் பட்டினியாகக் கிடந்த அவள் குமரேசர் தனது தவறை ஒப்புக்கொண்டபோதுதான் தனது விரதத்தை முடித்துக் கொண்டாள். அந்தச் சம்பவம் துன்பகரமாக இருந்தாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் இருவரும் புரிந்து கொள்ள உதவுவதாக அமைந்தது.
பார்வதியும் குமரேசரும் ஊரைக்கூட்டி ஓமம் வளர்த்து தாலிகட்டி மணவாழ்வைத் தொடங்கியவர் களல்ல. ஒருவரை ஒருவர் கண்டு விரும்பி சோறு குடுத்தலுடன் ஒன்றாகியவர்கள்தான். குமரேசருடன் குடும்பவாழ்வில் இணையும்வரை வெங்காயம், நாற்றறுநடல், களை பிடுங்கல் என பார்வதியும் தனது
astrado - su D

Page 9
தோழிப் பெண்களுடன் கூலி வேலைகளுக்கு சென்று வந்தாள். அப்படி ஒரு நாள் வெங்காய நடுகைக்குப் போகும்போதுதான் - தண்ணீர் பம்பை இயக்கி நடுகைக்கு பாத்திகளில் நீர் இறைத்துவிடும் வேலையில் ஈடுபட் டிருந்த குமரேசரின் பார்வை பார்வதியின் மேல் பட்டது. தொடர்ந்து பல தோட்டவேலைகள் வயல்வேலைகளில் இருவரும் சந்தித்த பின்னர் தாய் தந்தையரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருவரும் தீர் மானித்தனர். குமரேசரின் உறவினர் ஒருவர் இதுபற்றி பார்வதி வீட்டாருடன் கதைத்தபோது முரட்டுக் குணமுடைய அவளது தந்தையார் சாதி ஒன்றாக இருந்தாலும் குறிச்சி வேறுபாட்டை மிகைப்படுத்திக்கூறி மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த இருவரும் இறுதியில் பார்வதியின் தந்தையாரின் சம்மதமின்றி ஒன்று சேர்வதெனத் தீர்மானித்தனர்.
இன்று பெரிய மண்டபத்துடன் எழுந்து நிற்கும் அன்றைய வைரவகோவில் அரசமரத்தின்கீழ் ஒரு மாலைப்பொழுதில் குமரேசர் சயிக்கிளுடன் காத்திருந்தார். மாலை மங்கிய மையல்பொழுதில் பார்வதி உடுத்த உடையுடன்தான் வந்தாள். இன்றும் அவரது வீட்டின் ஒரு மூலையில் பாதுகாப்பாக நிற்கும் அன்று புத்தம்புதிதாக இருந்த ‘றலி’ சயிக்கிளின் பின்புறத்தில் பார்வதியை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு குமரேசரின் தாய்தந்தையர் காத்திருக்க ‘சோறுகுடுத்தல் சடங்குடன் ஆரம்பித்தது அவர்களது வாழ்க்கைப் பயணம். பார்வதியின் தந்தை ஆரம்பத்தில் மதுவெறியில் வீட்டுக்கு வந்து சிலநாள் முரண்டு பிடித்தாலும், குமரேசரின் ஒழுக்கமும், உறுதியும் நிறைந்த உயர்ந்த குண* நடைகள் பற்றி ஊரார் இடித் துரைத்து கூறிய போது அவரும் தனது மனதை மாற்றிக் கொண்டார்.
அதற்கு பின்பு பார்வதிக்கு கூறை கட்டி தாலிகட்டிப் பார்ப்பதற்கு இருவீட்டாரும் விரும்பி முயன்ற போதும் குமரேசர் அதற்கு மறுத்துவிட்டார். அவரது காலத்தில் அவர் பார்த்த திரைப்படங்கள், பழகிய நண்பர்கள் மூலம் பெற்ற உலகறிவு அனுபவங்களால் அவர் தன்னைப் பண்படுத்திக் கொண்டார். பார்வதியுடனும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அவரது வழக்கம். ஆரம்பத்தில் ஊரே கூடி கோவில் திருவிழாக்களில் நிற்கும்போது மதநம்பிக்கையற்று ஒதுங்கிநிற்கும் குமரேசரின் போக்கு பார்வதிக்குத் தவறாகவே பட்டது.
“வெளிப்பகட்டடுகளிலை என்ன இருக்கு, மனிசற்றை மனங்கள் நல்லா இருக்கவேணும்"
என்று அடிக்கடி சொல்லும் அவரது வார்த் தைகளும், நடத்தைகளும் பார்வதியின் சிந்தனையிலும் சில மாற்றங்களை படிப்படியாக ஏற்படுத்தி இருந்தது.
C apraio - si

அவர் நோயுற்றுப் படுக்கும்வரை பிள்ளைகளோ உறவினர்களோ தாலிபற்றிய பிரச்சினையை பெரிதாக எடுக்கவில்லை. எல்லோரும் பகட்டாக உடை உடுத்தும் திருமண வீடுகளில் கூட பார்வதியின் எளிமையான தோற்றத்துக்கு ஒரு மதிப்பு இருந்தது. இன்று அவர் நோயுற்றபின் அவரது விருப்பங்களுக்கு மாறான பல விடயங்களை அவள் வாழும் சமூகம் தன்மீது திணிக்கப் போவதாக பார்வதி உணர்ந்தாள். தாலியை வாங்கி அனுப்பிய மூத்த மகளும் கனடாவில் இருந்து தந்தை 'யாரைப் பார்க்க இங்குவரப் புறப்பட்டுவிட்டதால் விரைவாகவே தாலிப்பிரச்சனையில் பார்வதி ஒரு முடிவுக்கு வரவேண்டி இருந்தது.
குமரேசரோடு அவள் வாழ்ந்த நாட்களில் அவரது கண்களில் இருந்து கண்ணிர் வருவதை என்றுமே அவள் கண்டதில்லை. நோயுற்ற பின்னர் கூட அந்த மன உறுதி அவரிடம் இருந்தது. குமரேசரின் ஒரே ஒரு தங்கையின் மகள் மாலதி அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்துகொண்டு அவரை ஒருமுறை பார்க்க வந்த போதுதான் விம்மிப் பொருமி அழுததை அவள் கண்டு திைைகத்தாள்.
"மாமா அழாதையுங்கோ" என்று மாலதியும் “ஏனப்பா இப்பிடி அழுகிறியள்" என்று பார்வதியும் மூவரும் சேர்ந்து அழுத அந்தச் சம்பவம் அவளது நினைவுக்கு வந்தது. அவரது கண்ணிருக்கான காரணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த அவரால் முடியாதிருந்த போதும் அவரோடு வாழ்ந்து அவரது மனஉணர்வுகளைப் புரிந்து கொண்டவள் என்ற வகையில் பார்வதியால் அதனை புரிந்துகொள்ள முடிந்தது.
பொதுவாக மற்றவர்கள் துன்பப்படுவதைக் கண்டு. சகிக்காத மனம் படைத்தவர் குமரேசர். அவரது தங் கையின் கணவனும் ஒரு கூலித்தொழிலாளியாகவே இருந்தார். மூன்று பெண்பிள்ளைகளுக்கு தந்தையான அவர் சீதனப்பிரச்சினையால் குமராக இருக்கும் தன் பிள்ளைகளைக் கரை சேர்க்கமுடியாதவராக இருந்தார். மூத்த பெண்ணின் திருமணத்தை குமரேசரே தனது மகள்மாரிடம் உதவி பெற்று நடத்தி வைத்தார். அடுத் தவளான மாலதியின் திருமணமும் சீதனப் பிரச்சனை யாலேயே தடைப்பட்டு நிற்கிறது. அடிக்கடி அவர்களுக்கு உதவி செய்வதை மருமகன்மார் இருவரும் விரும்பவில்லை. வெளிநாட்டுப் பணவருகைக்கு முன் கொண்டும் கொடுத்தும் சமத்துவமாக இருந்த அவர்களது உறவுகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக எழுந்த வெறுப்பும், தனது மருமக்கள் இருவரதும் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்ற ஏக்கமும் அவரது இயலாமையின் காரணமாக அழுகையாக வெடித்ததென்பதை பார்வதி உணர்ந்திருந்தாள். பார்வதி கூட அவர்கள்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவளாக இருந்தாள். அவர்களது திருமணத்துக்கு
7 )

Page 10
உதவுவதற்காக பிள்ளைகள் அவர்களது செலவுக்காக அனுப்பும் பணத்தில் சிறுதொகையை குமரேசரின் அனுமதியுடன் சீட்டுக்கட்டி வந்தாள். குமரேசருடன் கூடி வாழ்ந்த அவளாலும் புதிதாக ஏற்பட்ட அந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் இறைவன் செயல் என்றோ விதி என்றோ மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை.
குமரேசருக்கு மூச்சிழுப்பு மேலும் அதிகரித்தது. அடுத்த வீட்டுக்காரரை உதவிக்கு அழைப்பதற்காக வெளிமுற்றத்துக்கு ஓடிச் சென்றாள்.
“பவளமக்கா ஒருக்கா ஓடியாங்கோ, ஐயோ என்ரை ாாசா என்னை விட்டுட்டுப் போப்போறார்"
அழுதபடி உரத்துக் கத்திச் சொல்லிவிட்டு மீண்டும் குமரேசர் படுத்திருந்த கட்டிலை நோக்கி ஓடினாள். அயலவர்கள் சிலரும் அவளது அவலக் குரல் கேட்டு ஓடிவந்தனர்.
“தேவாரம் படிச்சால் நல்லது" அயலவர் ஒருவர் கூறுகிறார்.
“அவருக்கு உதுகளிலை நம்பிக்கையில்லை"
பார்வதி அந்த வேண்டுகோளை மறுத்துக் கூறுகிறாள்.
மூச்சிழுப்பின் வேகம் ஒருமுறை அதிகரித்து அடங்க கண்களை விழித்து கரத்தை நகர்த்த முயற்சிக்கிறார். “என்னப்பா" என்றபடி பார்வதி அவரது கைகளை பற்றியபடி கேட்க- உடல் சோர்ந்து உயிர் மூச்சு நின்றுவிடுகிறது. கதறி அழமுயன்ற பார்வதியை அயலவர்கள் தடுத்து- ஹோலில் வைப்பதற்கான ஏற்பாடுகள் யாவையும் செய்துவிட்டு குத்துவிளக்கை ஏற்றிவிட்டு- கதறி அழ அனுமதித்தனர்.
குமரேசரது மகளும் குடும்பத்தினரும் முதல்நாளே கொழும்பிலிருந்து இரவு புறப்பட்டுவிட்டதால்- அன்று மதியமே அங்கு வந்துசேர்வார்கள் என எதிர்பார்க்கப் பட்டது.
மறுநாள் தகனக் கிரிகைக்கான ஆயத்தங்கள் நடந்தன. தனது கணவர் குமரேசர் கிரிகைகளில் நம்பிக்கையற்றவர் என்று பார்வதி கூறியபோதும் பிரேமாவும் அயலவர்களும் மகளின் தொலைபேசி அனுமதியுடன் அதற்கான தயாரிப்புக்களைச் செய்தனர். அன்றிரவு மகளும் பிரேமாவும் பார்வதியை தாலியை அணியச் செய்யும் முயற்சியில் தோல்வி கண்டனர். கழுத்தில் அணியாது கைகளில் கொண்டுவந்தாவது மார்பில் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
மறுநாள் பத்திரிகை விளம்பரம், நேரடி அறி வித்தல்களுடன் மரணச் சடங்கில் அதிகமானோர் கலந்து கொண்டனர். வாழை, தோரணங்கள், பறைமேளம், றம் செற், சுடலையில் வைத்து வழங்குவதற்கு சோடா என மரணச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. நிலபாவாடை
C is an

விரிப்பது பற்றிக்கூட சிலர் கதைத்தனர். குமரேசரின் மகளே அதனை மறுத்துவிட்டாள். கிரிகைகள் நடாத் துவதற்கும் பாட்டுக்கள் பாடுவதற்கும் பிரபல்ய மாணவர்களை அடுத்த கிராமத்திலிருந்து அழைத்து வந்தார்கள். பார்வதிக்கு அங்கு நடப்பவை எல்லாமே குமரேசரின் எண்ணங்களுக்கு எதிராக நடப்பவையாகவே பட்டது. அவரது இழப்புக்காக மட்டுமல்ல அவரை அவமதிப்பதற்காகவும் அவள் வேதனைப்பட்டாள்.
ஊரிலுள்ள வாசிகசாலையின் ஆரம்ப உறுப்பினர் என்ற வகையில் அவரது குண இயல்புகளை மதச் சார்பற்றவர் என நினைவுபடுத்தி கண்ணீர் அஞ்சலி அடித்துவிட்டனர். கோவில் விடயங்களில் அவர் ஈடுபாடு காட்டாவிட்டாலும் திருப்பணிக்கு மகள்மார் இருவரும் அதிக நிதியை வழங்கியிருந்தமையயினால் நிர்வாக சபையின் நீண்ட விவாதத்தின் பின்னர் வெளியிடத் தீர்மானித்து பிள்ளைகளின் தந்தையாக நினைவுபடுத்தி வெளியிட்டிருந்தனர்.
கிரிகைகள் செய்வதற்கு பார்வதி மறுத்துவிட்டதால் அவரது மகளே கொள்ளிவைப்பதற்கான கிரிகை களுக்காக ஐயர் முன் அமர்ந்தாள். பார்வதியையும் பக்கத்தில் அமருமாறு வற்புறுத்தியபோதும் அவள் மகளின் அருகே எழுந்து நின்றாள். ஐயரின் பணிப்புரைகள் சிலவற்றிற்கு விருப்பின்றி யந்திரம்போல் இயங்கினாலும் சிலவற்றை அவள் மீறினாள்.
இறுதிநிகழ்வான தாலியை கழற்றி நெஞ்சில் வைத்து பொட்டழிக்கும் சடங்கை செய்யவேண்டி வந்தபோது அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
“காசு வந்தா சனங்கள் திருந்துமெண்டுபார்த்தா, கண்மண் தெரியாமையெல்லே நடக்குதுகள். ஏனப்பா அந்தாளை அவமதிக்கிறியள்"
குமரேசரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கோபத் துடன் உரத்துக்கூறிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பார்வதி தனக்கருகில் அழுதுகொண்டு நின்ற மருமகள் மாலதியை கட்டி அணைத்து கதறி அழுது விட்டு தனது மடியில் செருகியிருந்த வெறுங்கொடியை அவளது மடிக்குள் செருகினாள்.
“இஞ்சை எல்லாம் மாறாத்தான் நடக்குது. அப்பான்ரை விருப்பம் இதுதான் பிள்ளை" என்று மீண்டும் அவளைக் கட்டி அணைத்து அழுதுவிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பூக்களை இரு கைகளாலும் வாரி அள்ளி அவரது நெஞ்சில் வைத்து கதறி அழுதாள்.
“பார்வதி அக்காதான் உவைக்குச்சரி" இவற்றை அவதானித்த ஒரு இளம் பெண் வாய்விட்டுக் கூறிவிட்டு கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். ܟܕ
astruka balio - So Ꭰ

Page 11
தமிழ்த்திரைப்படப் பாடல்களில் பெண்கள்
சி.சிவசேகரம்
பெண்கள் பற்றிய நமது சமூகப் பார்வை ஒருபுறம் நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆணாதிக்கச் சிந்தனையின் தொடர்ச்சியாகவும் மறுபுறம் முதலாளி யத்தின் வருகையையொட்டி உருவாகி இன்று உலக மயமாதலின் கீழ் வெகு வேகமாக விருத்தி பெற்று வருகிற பெண்கள் பற்றிய முதலாளியப் பார்வையின் விளைவாகவும் உருப்பெற்றுள்ளது.
முதலாளியம் மனிதரது உழைப்பாற்றலை விற்பனைக்குரிய ஒரு பண்டமாக்குகிறது. ஆணாதிக்கம் தொடருகிற ஒரு சூழலில், பெண்ணின் உழைப்பு மட்டுமன்றி உடலும் சந்தைப் பொருளாகிவிடுகிறது. மனிதரின் பாலியல் தேவைகள், மனித இனத்தின் இருப்பும் சமூக உறவும் தொடர்பான ஒரு நிலைக்கப்பாற்கொண்டு செல்லப்பட்டு, வணிகப்பண்டமாக மாற்றப்பட்டு வந் துள்ளது. பாலியற் கிளுகிளுப்பு இன்று பண்டங்களின் விற்பனைக்குத் தேவையான ஒரு பொருளாகிவிட்டது.
குறிப்பாகப் பெண்களின் அங்க அவயவங்களும் ஆண்பெண் உறவை ஆபாசமாகச் சித்தரிக்கிற தோற் றங்களும், சினிமா, தொலைக்காட்சி, சஞ்சிகைகள் உட்பட்ட பலவற்றிலும் பயன்படுகின்றன. அதே வேளை சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய மரபு சார்ந்த போதனைகளும் தொடருகின்றன.
பெண், ஆணின் காம இச்சைகளை வெவ்வேறு வகைகளில் துண்டி நிறைவுசெய்யும் ஒரு நுகர் பொருளாகவும் குடும்பம் என்ற அமைப்பின் கீழ் ஆணின் தலைமைக்குப் பணிந்து ஆணாதிக்கக் குடும்ப அமைப்பின் தேவைகளை நிறைவு செய்கிற ஒரு அடிமையாகவும் கருதப்படுவது, நம்முடையது போன்று முதலாளிய விருத்தி பெறத் திணறும் அரை நிலவுடைமைச் சமுதாயங்களில் மிகத் தெளிவாகவே தெரிகிற ஒரு பண்பாகும்.
பெண்ணைப் பற்றிய பார்வை சமுதாயத்தின் முதலாளிய வணிக உறவுகளின் வளர்ச்சியையொட்டி மாறியுள்ளது. பெண்ணை வெறுமனே ஒரு பாலியல் நுகர்வுப் பொருளாகக் கருதுகிற போக்கு, கடந்த இருபது
G aanrusaasio - Es

இன்றைய சினிமாப் பாடலாசிரியர் இன்றைய நுகர்வுப் பொருளாதாரத் துக்கான பண்டங்களின் உற்பத்தியாளர் மட்டுமே. அவருக்கும் ஆபாசமாக
ஆடுகிற ஒரு நடிகைக்ககும் அடிப்படையில் அதிக வேறுபாடு இல்லை என்றே
ఆ_-
ஆண்டுகளுள் மிகவும் வளர்ந்துள்ளதை நாம் தமிழ், இந்தித் திரைப்படங்களில் மிகத் தெளிவாகவே காணலாம். மொழி வேறுபாடில்லாமல் விநியோகிக்கப்படுகிற ஆபாசத் திரைப்படங்கள் இப்போக்கின் ஒரு தொடர்ச்சியேயல் லாமல் வேறெதுவுமல்ல, இந்த மாற்றங்களைத், தமிழ்ச் சினிமாவின் கதைகள், காட்சிகள் போன்று, பாடல்களும் அடைய்ாளங்காட்டி நிற்கின்றன.
பெண்ணைக் கற்புக்கரசி, குடும்ப விளக்கு என்கிற பேர்களில் முகஞ் சுழியாது கணவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் உத்தம ஊழியையாகக் காட்டி வந்த படங்களின் இடத்தில், இன்னமும் அதே விதமான ஏற்றத்தாழ்வைப் பேணிக்கொண்டு, ஆண்களின் மனதில் கிளுகிளுப்பூட்டுவதற்காக எந்த ஆபாசத் தோற்றத்திலும் வரக் கூசாத ஒரு மாமிசப் பண்டமாக்கும் படங்கள் வந் துள்ளன. தமிழ்ப்படங்களினின்று பிரித்தெடுக்க இய லாதுள்ள பாடல்களும் நடனக் காட்சிகளும் இந்தப் போக்கின் இன்னொரு பகுதியாகிவிட்டன. ஆண்களின் ஆபாச நடனங்களிலும் ஆணாதிக்கப் பண்பே வெளி வெளியாகத் தெரியப்படுத்தப் பெறுகிறது.
பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பழகிய பலருக்கும் இன்றைய தலைமுறையிற் சிலருக்குமாவது இவ்வாறான ஆபாசம் அருவருப்பூட்டுகிறது, வானொ லியில் இவற்றுடன் தொடர்புடைய பாடல்களைக் கேட் கும்போதும் மனம் அருவருக்கிறது. இதைக் கண்டிக்கிற பலரும் இன்றைய சினிமாப் பாடலாசிரியர்கள் மீது மட்டுமே குற்றஞ் சுமத்துகின்றனர். இன்றைய சினிமாப்பாடலாசிரியர் இன்றைய நுகர்வுப் பொருளாதாரத்துக்கான பண்டங் களின் உற்பத்தியாளர் மட்டுமே. அவருக்கும் ஆபாசமாக ஆடுகிற ஒரு நடிகைக்ககும் அடிப்படையில் அதிக வேறுபாடு இல்லை என்றே கூறுவேன்.
இன்றைய ஆபாசத்தைக் கண்டிக்கிறவர்கள் அதற்கு முன்னோடியாக இருந்தவர்களைப் பற்றிப்
9 Ꭰ

Page 12
பேசும்போது அவர்கள் இவ்வளவு பச்சையாக இல்லாமல் பண்பான முறையில் பாடல்களை எழுதியதற்காக அவர்களை மெச்சுவதுண்டு. இரட்டைப் பொருளில் அமைந்த சொற்கள் அடங்கிய திரைப்படப்பாடல்கள் மூலம் ஆபாசமான பாடல்களைப் பரவலாக்கியவர்களுள் கண்ணதாசனுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு. தமிழ்த் திரைப்படப்பாடல்களில் ஆபாசத்தின் வளர்ச்சி ஒரு பண்பாட்டுச் சீரழிவின் அடையாளமெனில் அதன் திருப்பு முனையில், வழிகாட்டிகளாக நின்றோர் 1960களிற் சாடையாகவும் 1970களில் மும்முரமாகவும் பண்பான' ஆபாசப்பாடல்களை அறிமுகப்படுத்திப் பரப்பியவர்களே.
நுகர்வுப் பொருளாதாரம் புதிய பண்டங்களை உருவாக்கி அவற்றின் நுகர்வுக்காகப் புதிய தேவைகளை உருவாக்கி இலாபத்தைப் பெருக்குகிறதெனின், அந்த நடைமுறை சினிமாத் துறைக்கும் மிகவும் பொருந்தும். எனவே இன்றைய ஆபாசப் பாடலாசிரியர் ஒவ்வொருவரும் சென்ற தலைமுறையின் ஆபாசப் பாடலாசிரியர்களது மாற்றுக் குறையாத வாரிசுகளே.
இந்த ஆபாசப் பாடல்களில் அவற்றின் காமக் கிளுகிளுப்பூட்டுகிற சொற்களைவிட முக்கியமானது அவற்றுட் பொதிந்துள்ள பெண்கள் பற்றிய பார்வையாகும். இவ்விடயத்தில் சென்ற தலைமுறையின் பண்பான ஆபாசக் கவிஞர்கள் இன்றைய ஆபாசக் கவிஞர் களினின்று வேறுபட்டவர்களல்ல.
முக்கியமான மாற்றம் எங்கே ஏற்பட்டதென்றால் மரபுசார்ந்த, நிலவுடைமைச் சமுதாயத்தின் பதிவிரதை யின் இடத்தில் முதலாளிய சமுதாயத்தின் நுகர்வுப் பண்டமான ‘கவர்ச்சிக் கன்னி' வந்து சேர்ந்த இடத் திலேதான். ஆணினும் தாழ்வானவளாகப் பெண்ணைக் கருதுகிற ஒரு சூழலில், இந்த அடிமைப் பெண்ணின் உருமாற்றம், ஒருவகையான சுரண்டலிலிருந்து இன்னொரு வகையான சுரண்டலை நோக்கிய பெயர்வையே அடையாளப் படுத்துகிறது.
ஆணுக்கும் பெண்ணணுக்குமிடையிலான ஏற்றத் தாழ்வை உளமார மறுக்காத எவராலும் இந்தவிதமான மாற்றத்தை எதிர்த்துப் போராட இயலாது. ஆண்-பெண் சமத்துவத்தை, அதை மறுக்கிற பண்பாட்டுத் தளை களினின்றும் அறுத்தெறிய வேண்டிய தேவை இருக் கிறது. இதை இன்றுள்ள சமூகச் சூழலிற் செய்வதற்குச் சமூக நீதிக்கான பெண்ணுரிமை இயக்கம் வலுப் படவேண்டும். எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட போக்குக் களினின்றும் விடுபட்ட திரைப்படப் பாடலாசிரியர்கள் உள்ளனர்.
காதல் என்பதைச் சமத்துவமான உறவாகக் கண்டு பெண்ணனை ஆணுக்குக் கீழ்ப்பட்ட நிலைகளிலிருந்து விடுவிக்கும் நோக்கில் எழுதியவர்களுள், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மிகவும் குறிப்பிடத்தக்க
C 10

ஒருவரென நினைக்கிறேன். 'கல்யாணப்பரிசு' படத்தில் வரும் 'வாடிக்கை மறந்ததும் ஏனோ", "இரும்புத்திரை' டத்தின் 'நெஞ்சில் குடியிருக்கும்', 'பதிபக்தி" படத்தில் வரும் "கொக்கரக் கொக்கரக்கோ சேவலே போன்ற ாடல்களில் ஒரு பண்பான சமத்துவமான உறவை அடையாளங் காணலாம். 'நாடோடி மன்னன்' படத்தில் வருகிற ‘சம்மதமா" பாடலில் "சரிசமமாக நிழல் போலேநான் கூடவர சம்மதமா?' என்று பானுமதி பாடுவதும் வேடிக்கையாக "தகுந்த துணை என் னைப்போல ஒருகால் அவசியம்' என்பதும் எம்.ஜி. ாமச்சந்திரனின் மறுப்பை அடுத்து "தகுந்த துணை உங்களைப் போலொருகால் அவசியம்' என்று திருத்திப்பாடுவதும், ஒரு சுதந்திரமான பெண்ணாக அறிமுகப்படுத்தப் பட்டு எம்.ஜி.ராமச்சந்திரனுடனான தகராற்றால் அரைவாசிப்படத்தில் சாகடிக்கப்பட்டு சரோஜாதேவிக்கு வழிவிட்ட பானுமதியின் பாத்திரத் துக்கு மட்டுமில்லாமல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமூகம் பற்றிய அறிவுக்கும் நோக்குக்கும் உடன்பாடானது எனலாம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெண்கள் பற்றிய பார்வைக்கும் சமூகம் பற்றிய பார்வைக்கும் நெருக்கமான உறவு உண்டு. தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சமூகநீதி பற்றிய தனது சிந்தனை களைக் கூறுவதற்கு அவர் நன்கு பயன்படுத்தினார். இதுவே பிற பாடலாசிரியர்களை விடவும் அவரை உயர்த்திக் காட்டிய ஒரு பண்பு, பெண்கள் பற்றிய தனது பார்வையை அவர் தனது பாடல்களில் வலிந்து புகுத்தினார் என்பதை விட, அவரது பார்வை தவிர்க்க இயலாமலே அவரது பாடல்களில் பதிவாகியுள்ளது என்று கூறுவது பொருந்தும்.
பட்டுக்கோட்டை கல்யாணசுநதரம் இளவயதிலேயே இறந்துவிட்டார். இப்போது உயிருடனிருந்தால் அவர் அன்றிருந்த உச்சநிலையில் இருந்திருப்பாரோ தெரியாது. எனினும் ஒன்று மட்டும் உறுதி; ‘பண்பாகவோ', பச்சையாகவோ, பெண்களை இழிவுபடுத்துகிற விதமாகவோ, ஆபாசமாகவோ அவர் எழுதியிருக்க மாட்டார்.
தமிழ்ப் படப்பாடல்களில் பெண்கள் பற்றிய பார்வையை விரிவாக ஆராயும் தேவை உள்ளது. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களது சமூக நோக்கையும் பாடல் களில் பெண்கள் பற்றிய வருணனைகள், கருத்து நிலைகள் என்பவற்றையும் ஒப்பிடும் ஆழமான ஆய்வு கள், நமக்குள் பரவலாக நிலைபெற்றுள்ள சில மாயைகளைக் களையவும் ஆண் பெண் சமத்துவச் சிந்தனைக்கு உரமூட்டவும் பயனுள்ளவை என்பேன்.
<ီး <ီk <ီး
4ναταραώ» - Ε. )

Page 13
(iiiiiiii
இடலோ கால்வினோ(இத்தாலிய மொழி ஆங்கிலம் வழி தமிழில் : சத்யன்
தொழிலாளி ஆர்த்துரோ மஸோலரி ஒரு தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு முடிவுறும் Sப்டில் வேலை செய்தான். வீட்டைச் சென்றடைய அவன் நீண்ட துரம் செல்ல வேண்டியிருந்தது. நல்ல சீதோஷ் ணத்தில் அவன் இத்துரத்தை சைக்கிளிலும், மழை மற்றும் குளிர் காலத்தில் ட்ராம் வண்டியிலும் கடந்து சென்றான். ஆறே முக்காலிலிருந்து ஏழு மணிக்குள் ஏதோ ஒரு நேரத்தில் அவன் வீட்டை அடைந்தான். பொதுவாக, அவன் மனைவி எலைட்டை எழுப்ப கடிகாரத்தின் அலாரம் ஒலிப்பதற்கு சில சமயங்களில் முன்பாகவும் சில வேளைகளில் பின்பும் வீட்டிற்குள் நுழைவான்.
பல சமயங்களில் இரண்டு சப்தங்கள். அலாரம் மற்றறும் உள்ளே நுழையும் அவனுடைய காலடிச் சத்தம் எலைட்டின் மூளையில் ஒன்றின் மேல் ஒன்றாகப் பதியும். தலையணையில் முகம் புதைத்து மேலும் ஒரு சில விநாடிகளுக்கு கச்சிதமான காலை நேர உறக்கத் t தைப் பிழிந்தெடுக்க முயலும் அவளுடைய உறக்கத்தின் ஆழத்தை அத்தகைய சப்தம் சென்றடைந்தது. அவள் சடக்கென்று படுக்கையிலிருந்து எழுந்து, தன்னிச் சையாகத் தனது கைகளை உடையினுள் நுழைத்துக் கொண்டு கண்ணை மறைத்து விழுந்திருந்த முடியை ஒதுக்கிக் கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்திருந்த ஆர்த்துரோவின் எதிரில் அவள் அந்தத் தோற்றத்திலேயே காட்சியளித்தாள். அவன் தான் வேலைக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து காலி பாத்திரங்களான சாப்பாடு டப்பி, பிளாஸ்கை வெளியே எடுத்து, கழுவுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியினுள் வைத்தான். அதற்குள் ளாகவே அவன் ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி தயாரிக்க ஆரம்பித்திருந்தான். அவன் அவளைப் பார்த்ததும் அவள் இயல்பாக ஒரு கையால் தலைமுடியைக் கோதிக் கொண்டு கண்களை அகலத் திறந்தாள்.
தன் கணவன் வீட்டிற்கு வந்ததும் காணும் முதல் காட்சியாக, எப்பொழுதுமே தாறுமாறான பாதி உறக்கத் தைத் தேக்கியவாறு தன் முகம் அமைந்ததற்காக அவள் ஒவ்வொருமுறையும் வெட்கப்படுவதைப் போலத் தோன் றியது. இருவர் இணைந்து உறங்கியிருந்தால் அது வேறு மாதிரி- காலையில் இருவரும் அதே துக்கத்திலிருந்து விழிப்பின் மேல்தளத்தைத் தொடும்போது ஒரே சமனில் இருப்பார்கள். சில சமயங்களில் அவன் அலாரம் ஒலி யெழுப்புவதற்குச் சற்று முன்பாகவே அவளை எழுப்ப, ஒரு
O anuario - sa

சிறிய கோப்பை காப்பியு பிறகு எல்லாமே மிக இயல்பாகப்படும். தூக்கத்திலிருந்து வெளிப்படும் போதிருக்கும் முகச்சுளிப்பு ஒருவிதமான சோம்பலான இனிமையாக மாறிப்போகும். சோம்பல் முறிக்க நீளும் நிர்வாணமான கைகள் அவன் கழுத்தை இறுகப் பற்றிக் கொள்ளும்.
எலைட் அவனைத் தழுவிக் கொண்டாள். ஆர்த் துரோ மழை புகாத மேல் கோட் ஒன்றை அணிந்தி ருந்தான். அவனை அவ்வளவு நெருக்கமாக உணரும் போது வானிலை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் எந்த அள விற்கு நனைந்தும் ஜல்லிட்டுப்போயும் இருக்கிறான் என்பதைப் பொறுத்து, வெளியே மழையா அல்லது பணி மூட்டமா அல்லது பனி விழுகிறதா என்பதை அவள் புரிந்து கொள்வாள். ஆனாலும் அவள் அவனைக் கேட்டாள்; “சீதோஷ்ண நிலை எப்படியிருக்கிறது?"
11 )

Page 14
அவன் வழக்கமான பாணியில் முணுமுணுப் போடு எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, பாதி கேலியுடன் கடைசியிலிருந்து துவங்கி சொல்ல ஆரம்பித்தான்: சைக்கிளில் செய்த பயணம், தொழிற்சாலையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட வானிலை, இதற்கும் முந்தைய மாலையிலிருந்த சீதோஷ்ணத்திற்குமிருந்த வேறுபாடு, வேலையின் கஷ் டங்கள், வேலைப்பிரிவில் உலவும் வதந்திகள் இப்படியாக,
அந்நேரத்தில் வீடு சிறிதளவே சூடாக்கப்பட்டி ருந்தது. ஆனால் எலைட் முழுவதுமாக ஆடைகளைக் களைந்து சிறிய குளியலறையில் குளிக்கத் துவங்கி யிருந்தாள். பிறகு அவன் சந்தடியின்றி உள்ளே நுழைந்து, ஆடைகளைக்களைந்து, தொழிற்சாலையின் தூசு மற் றும் கிரீஸ் பிசுக்கினை மெதுவாகத் தேய்த்து அகற்றிய படி குளிக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாய், சிறிது மரத்துப்போய், ஒருவரையொருவர் சமயங்களில் இடித்துக் கொண்டு, ஒருவரிடமிருந்து ஒருவர் சோப்பு பற்பசையை வாங்கியபடி நின்று கொண்டிருந்தனர். பரிமாறிக்கொள்ெளப்பட வேண்டிய செய்திகளைக் கூறும்போது நெருக்கத்தின் கூடிணம் உருவானது. ஒருவர் முதுகை ஒருவர், ஒருவர் மாற்றி ஒருவர் உதவிகரமாகத் தேய்த்துவிடும்போது ஒரு சிறு தழுவல் இடை புகுந்து, பிறகு அணைப்பில் முடிந்தது.
ஆனால் திடீரென எலைட் உரத்த குரலில்
கத்தினாள்: “கடவுளே நேரம் என்னவாயிற்று பாருங்கள்."
அவள் தனது காலுறை கட்டும் பெல்ட்டையும் ஸ்கர்ட் டையும் எடுப்பதற்காக ஓடியபடியே அவசரமாக முடியை பிரஷ்ஷால் நீவி சீராக்கிக் கொண்டு, கொண்டை ஊசிகளை உதடுகளுக்கிடையில் பிடித்தபடி முகம் பார்க்கும் கண்ணாடிக்கு தன் முகத்தைக் காட்டினாள். ஆர்த்துரோ அவள் பின்னால் வந்தான். ஒரு சிகரெட் அவன் வாயில் புகைந்து கொண்டிருந்தது. நின்றபடி அவன் புகைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தான் ஒரு உதவியும் செய்ய முடியாத நிலையிலிருப்பதை நினைத்து சில சமயங்களில் சங் கடமாக உணர்ந்தான். எலைட் தயாராகி, நடைவழியில் மேல் கோட் ஒன்றை அணிந்தவுடன் இருவரும் ஒரு முத்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். அப்புறம் அவள் கதவைத் திறந்து படிகளில் இறங்கி ஓடிச் செல்வது கேட்டது.
ஆர்த்துரோ தனியனாக இருந்தான். படியிறங்கிச் செல்லும் அவளது காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தான். அவளது காலடிச் சத்தத்தை இனியும் கேட்க முடியாதபோது, அவளை அவன் எண்ணங்களில் பின் தொடர்ந்தான். அவளது அந்த விரைவான சிற்றறடிகளை முற்றத்தின் வழியாக, கட்டிடத்தின் வெளிக் கதவின் வழியாக, நடைபாதை மீது,
6
C 12

ராம் நிறுத்தம் வரை தொடர்ந்தான். இதற்கு மாறாக, ராமின் சப்தத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந் து. ட்ராம் க்ரீச்சொலியிட்டபடி நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பணியும் படியை மிதித்து ஏறும் சப்தத்தை அவன் கட்டான். அதோ அவள் ட்ராமைப் பிடித்துவிட்டாள் என னைத்தான். அவளைத் தினந் தோறும் தொழிற் ாலைக்கு இட்டுச்செல்லும் பதினொன் றாம் நம்பர் ட்ராமில் பூண்கள், பெண்கள், தொழிலாளர் கும்பல்களுக்கு த்தியில் தன் மனைவி, ட்ராம் கைப் பிடியைத் தொற்றிக் காண்டு நிற்பதை அவனால் காட்சிப்படுத்த முடிந்தது. 4வன் சிகரெட் துண்டை அணைத்தபின் ஜன்னல் 2ட்டர்களை இழுத்து மூடி, அறையை இருட்டாக்கி, டுக்கையில் விழுந்தான்.
எலைட் எழுந்தபொழுது எப்படி விட்டுச் சன்றாளோ அப்படியே இருந்தது படுக்கை. ஆனால் 4வனுடைய படுக்கைப் பகுதி மட்டும் இப்போதுதான் ரிக்கப்பட்டது போல கசங்கலில்லாமல் இருந்தது. 4வன் படுக்கையின் தனது பகுதியில் சரியாகப் படுத்துக் காண்டான். ஆனால் சிறிது நேரத்தில் படுக்கையில் தன் னைவி விட்டுச் சென்ற வெதுவெதுப்பு நிலைத்திருந்த குதிக்கு ஒரு காலை அவன் நீட்டினான். பிறகு }ன்னொரு காலையும் அங்கே நீட்டினான். எனவே, சிறிது றிதாக அவன் எலைட் படுத்திருந்த பகுதிக்கு, }ன்னமும் அவளுடைய உடலின் வடிவத்தைத் தக்க வத்துக் கொண்டிருக்கிற அந்தக் கதகதப்பின் ழிவிற்குள் முழுவதுமாக நகர்ந்தான். எலைட்டின் லையணைக்குள், அவளுடைய வாசத்திதற்குள் கத்தைப் புதைத்துக் கொண்டே அவன் உறங்கிப் பானான். w
எலைட் மாலையில் வீடு திரும்புகிற நேரத்தில் ஆர்த்துரோ சுறுசுறுப்பாக விட்டில் வளையவந்து காண்டிருந்தான். ஸ்டவ்வைப் பற்ற வைத்துவிட்டு தையோ சமைத்துக் கொண்டிருந்தான். படுக்கையை ழுங்குபடுத்துவது, வீட்டைப் பெருக்குவது. அழுக்குத் பணிகளை ஊற வைப்பது போன்ற சில வேலைகளை ரவு உணவிற்கு முன்பாக அவன் செய்து முடிப்பான். }வை எல்லாவற்றையும் எலைட் விமர்சிப்பாள். ஆனால் பூர்த்துரோ, உண்மையில் இந்த வேலைகளைச் செய்ய குந்த சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. மாறாக வன் அவளுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் செய்யும் ருவிதச் சம்பிரதாயங்கள் அவை. வீட்டின் சுவர் ளுக்குள் இருந்தபடியே அவளை அவன் பாதி வழியில் திர்கொண்டு சந்திப்பதைப் போன்று. மாலையில்தான் டைகளுக்குச் செல்ல முடிகிற பெண்கள் வசிக்கும் ந்தச் சுற்றுவட்டடாரத்தின் தெரு விளக்குகள் எரியத் தாடங்கும்போது, தாமதமாகத்துவங்கிய பரபரப்பான ழலினுடே, எலைட் கடைகளைக் கடந்து வந்து காண்டிருக்கும் நேரத்தில், ஆர்த்துரோ இவ்வேலை
assunado - sa D

Page 15
/一、二.
Fryggő önaggmpu பதிவுகள்
நூல்: ஈழத்து கலைத்துறை தொடர்பான கலைஞர் கெளர விப்புக்கள், நூல்கள் விசேட மலர்கள், அமரத்துவமடைந்த கலைஞர்கள், ஆக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய
நூல் நூலாசிரியர்: சங்கீத கலாவித் தகர் எஸ்.சிவானந்தராஜா வெளியீடு: வரதர் வெளியீடு,
84/3, uDIgoslUTs &IgDM, யாழ்ப்பாணம் விலை: ரூ.200/-
களைச் செய்வான்.
இறுதியில் மாடிப்படிகளில் அவளுடைய காலடிச் சத்தத்தை அவன் கேட்டான். இச்சத்தம் காலையில் இருந்ததை விட முற்றிலும் வேறாக கனமாகக் கேட்டது. ஏனெனில், எலைட் ஒரு நாளைய உழைப்பிற்குப் பின் களைத்துப் போயும் கடைகளில் வாங்கிய பொருட் களின் கனத்தைச் சுமந்தபடியும் மாடிப்படியேறி வந்தாள். ஆர்த்துரோ மாடிப்படிகளின் மட்டப் பகுதிக்குச் சென்று பொருட்கள் நிறைந்த பையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு பேசியவாறே அவளுடன் வீட்டினுள் நுழைந்தான். எலைட் தன் கோட்டைக் கூடக் கழற்றாமல் சமையலறையின் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். அவன் பையிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். பிறகு எலைட் “சரி, நாமிருவரும் சற்று சுதாக ரித்துக் கொள்வோம்" என்றாள். அவள் எழுந்து நின்று மேல் கோட்டைக் கழற்றி வீட்டினுள் அணியும் அங்கியைப் போட்டுக் கொண்டாள். அவர்கள் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிருவருக்குமான இரவு உணவு, தொழிற்சாலையில் இரவு ஒரு மணி இடைவேளையில் அவன் சாப்பிட எடுத்துச் செல்லும் உணவு, மற்றும் அவன் துங்கி எழும்போது தயாராக இருக்கப் போகும் காலை பலகாரம் ஆகியவற்றைத் தயாரித்தனர்.
அவன் விட்டுவிட்டுச்சிறு சிறு வேலைகளைச் செய்தபின் சற்று நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அவன் என்ன வேலை செய்யவேண்டும் எனக் கூறினாள். இதற்கு மாறாக அவனைப் பொறுத்தவரை அவன் ஓய்வாக உணர்ந்தான். தீர்மானத்தோடு காரியங்களைச் செய்தான். ஆனால் எப்போதுமே சிறிய மறதியாய், அவன் மனது பிற விஷயங்களில் ஈடுபட்டவாறிருந்தது. இத்தகைய சமயங் களில் ஒருவர் மற்றவரை எரிச்சலடையச் செய்து, கடுமையான வசைகளைப் பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில் அவன் செய்யும்
O anuaio - S
 

காரியங்களில் மேலும் அதிக கவனம் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள். அல்லது அவன் தன்னிடம் மேலும் பிணைப்பாகவும், நெருக்கமாகவும் இருந்து தன்னை அதிகப்படியாக ஆறுதல் படுத்தவேண்டுமென்று அவள் விரும்பினாள். ஆனால் எலைட் வீட்டிற்குள் நுழைந்த போதிருந்த முதல் உத்வேகத்திற்குப் பிறகு, அவனுடைய மனம் அதற்குள்ளாகவே வீட்டிற்கு வெளியே அலைபாய்ந்தது. அவன் சிறிது நேரத்தில் வேலைக்குச் சென்றாக வேண்டியிருப்பதால் தன்னைத் துரிதப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.
உணவருந்துவதற்கான மேசையைத் தயார் செய்து, பின்னர் அவர்கள் மேசையிலிருந்து எழவேண்டியில்லா தபடிக்கு, சமைக்கப்பட்ட உணவுகளைக் கைக்கெட்டும் துரத்தில் வைத்தனர். அப்புறம் வந்தது அவர்களிரு வரையும் ஏக்கத்தில் மூழ்கடித்த கணம். இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் மிகக் குறைவானது என்ற சிந்தனையினாலும், அவ்விடத்திலேயே இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்பினாலும் உணவு நிரம்பிய ஸ்பூனை வாயருகே கொண்டு செல்வது கூடச் சிரமமாக இருந்தது.
ஆனால் பாத்திரத்தில் காபி பொங்கி வழிவதற்கு முன்பாகவே அவன் தன் சைக்கிளினருகே சென்று எல் லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு இருவரும் இறுக்கத் தழுவிக் கொண்டனர். அப்போதுதான், தன் மனைவி எவ்வளவு மிருதுவாகவும் கதகதப்பாகவும் இருக்கிறாளென்பதை ஆர்த்துரோ உணர்ந்த மாதிரி தோன்றியது. ஆனால் உடனே அவன் சைக்கிளைத் தோளில் சுமந்து எச்சரிக்கையுடன் படியிறங்கிப் போனான்.
எலைட் பாத்திரங்களைக் கழுவினாள். வீடு முழுவதையும் மேற்பார்வையிட்டாள். மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்து ஆர்த்துரோ செய்து விட்டுச் சென்ற வேலைகளை மறுபடியும் சீர்படுத்தினாள். இப்பொழுது அவன் விளக்குகள் குறைவான தெருக்களின் வழியே விரைந்து சென்று கொண்டிருந்தான். ஒருவேளை அவன் அதற்குள்ளாக காஸ்டாங்கைக் கடந்து சென்றிருக்கக் கூடும்.
எலைட் படுக்கையில் படுத்து விளக்கை யணைத்தாள். தனது பகுதியில் படுத்திருந்த அவள் கணவனுடைய கதகதப்பைத் தேடி, ஒரு காலை அவன் படுக்கும் பகுதிக்கு நகர்த்தினாள். ஆனால் ஒவ்வொரு முறையும் தான் உறங்கும் இடம்தான் அதிக கதகதப்பாக இருப்பதை உணர்ந்தாள். ஆர்த்துரோவும் அங்கே உறங்கியதற்கான அடையாளத்தினால் அவள் பெரும் மன நெகிழ்ச்சியை உணர்ந்தாள்.
நன்றி. சுபமங்களா மொழிபெயர்ப்புக் கதைகள்’
13 D

Page 16
rifau af Gau GUF,
கைலாசபதி அழைக்கவில்
எண்பதுகளில் பேராசிரியர் கைலாசபதியின் மறைவுக் எதிர்ப்பு முனைப்படைந்தது. இலக்கிய உலகில் சை ஆரோக்கியமான விமர்சனங்கள் அல்ல அவதுறுகளு பிரபல்யத்துக்கு வசதியாக அமைந்தன. அத் சம்பந்தப்பட்டவர் எனக் கருதப்பட்டவராலேயே அம்
நிலவிலே பேசுவோம் என்ற எனது சிறுகதை யின் கருக்களம் பற்றி நீண்ட காலமாக ஒரு தவறான கணிப்பீடு நிலவிக் கொண்டிருக்கிறது. அண்மையில் அதன் வெளிப்பாடு அதிகரித்து வருவதால் அதன் உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ஒரு காந்தி பக்தர் மது ஒழிப்புப் பிரசாரக் கூட் டத்தில் மதுவின் கொடுமைகளைப் பற்றி காரசாரமாகப் பேசிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் காந்தி பக்த
ரானதால் மதுவருந்துவதனால் ஏற்படும் தீமைகள் பற்றி
விபரித்துக் கூறினார். வீட்டுக்கு வந்தவர் உணவருந்து வதற்குத் தயாரான வேளையில், வீட்டுப் படலைக்கு வெளியே நாலைந்து இளைஞர்கள் வந்து நின்று "ஐயா..!" என்று அழைப்பதை அவதானிக்கிறார். அவர்கள் படலையைத் திறந்து முற்றத்தில் நின்று “மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மட்டும் பேசினீர்கள். மது ஒழிப்பதால்கள் இறக்கும் தொழிலாளிகளாகிய எங்களது கதி என்ன? நாங்கள் எப்படிப் பிழைப்பது? எங்களுக்குக் கூலி வேலை கூடத் தரமாட்டீர்களே! ஒரு இரும்புக் கடையில் கூட, இரும்பிலும் தீட்டுப்பட்டு விடுமென்று வேலை கொடுக்கமாட்டிர்களே!" என்று ஆவேசமாகக் குரல் எழுப்புகிறார்கள்.
காந்தி பக்தரின் பாடு தர்ம சங்கடமாகியது. அவர் களை உள்ளே அழைத்து ஆசனங்களில் இருத்திக் கதைக்கமுடியுமா? மிகவும் பதற்றமுற்று, “வாருங்கள்! வெளியே நல்ல நிலவு. அங்குபோய் இருந்து கதைக் கலாம்!" என்று கால்களை நகர்த்தி வெளியே வர எத்தனிக்கிறார். வந்தவர்கள் கோபாவேசத்துடன், “காந்தியின் பெயரைச் சொல்லி மது ஒழிக்கக் கிளம்பி விட்டீர்கள், முதலில் தீண்டாமையை ஒழிக்க வேண் டாமா?" என்று அழுத்தமாகக் கூறிவிட்டு வெளியே நடந்தார்கள். இதுதான் ‘நிலவிலே பேசுவோம்" கதை.
கதையில் வரும் காந்தி பக்தராக கைலாசபதியை உருவகப்படுத்திக் கதை பரப்புவதற்குப்பின்னணியாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 1960களில் கைலாசபதி தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி முற்போக்கு எழுத்
C 14

6ՍՈՍ -என்.கே.ரகுநாதன்
குப் பின்னர் சிறுபத்திரிகைச் சூழலில் மாக்சிய லாசபதி அதற்கு அடையாளமாக இருந்தார். நம் பொய்யுரைகளுமே சிலருக்கு இலகுவான தகைய பொய்யுரைகளில் ஒன்று அதில் L6)LDTépg5).
ாளர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் வெளிக் காணர்ந்தார். அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு ணைந்திருந்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற் ாடுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். கைலாசபதி தின ரனுக்கு வருமுன் சுதந்திரன் பத்திரிகையே முற்போக்கு ழுத்தாளர்களுக்குக் களமாய் அமைந்திருந்தது. கைலா பதி தினகரனுக்கு வந்ததும் மிகவும் ஆர்வத்தோடு அந்த ழுத்தாளர்கள் அனைவரையும் அரவணைத்தார்.
அந்நாட்களில் எனது பல கதைகள் தினகரனில் ரசுரமாயின. அவ்வேளை நான் கொழும்பிலுள்ள விவே ானந்தாக் கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். தனால், அடிக்கடி தினகரன் அலுவலகத்துக்குப் ாேய் கலாசபதியுடன் உரையாடி மகிழ்ந்து வருவேன். கலாசபதியும் பத்திரிகை சம்பந்தமான முன்னெடுப்புகளை ன்னிடம் கூறி எனது கருத்துகளையும் கேட்டறிவார்.
1962இல் கைலாசபதிக்கு திருமணம் நடந்திருக்க வண்டும். இக்காலத்தில் ஒரு நாள் மாலை, கைலாச தியையும் அவர் துணைவியாரையும் சந்தித்து வருவ ற்காக வெள்ளவத்தைக்குப் போனேன். வெள்ளவத்தை 2ஆவது ஒழுங்கையில் தான் அவர்கள் வீடு. அதாவது, ர்வமங்களத்தின் வீடு. நான் அங்கு சென்றபோது ட்டுவாசலுக்கு முன்பாகவுள்ள போட்டிக்கோ முகப்பில் ள்ள அரைச்சுவரில் (3அடி உயரமிருக்கும்) இருவரும் ருெந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். சர்வத்துக்கு ன்னை முன்பின் தெரியாது. கைலாஸ் என்னை 4ன்போடு வரவேற்றுக் கதைத்ததும், சர்வம் உடனே ழுந்து எனக்கு இருக்க இடம் கொடுத்தார். நானும் கலாசபதியும் கதைத்துக் கொண்டிருக்க உள்ளே போய் தநீர் தயாரித்துக் கொண்டு வந்து தந்தார். சிறிது நேரம் ரையாடி விட்டு நான் திரும்பிவிட்டேன்.
அந்நாட்களில் நான் யாழ்ப்பாணம் போன ந்தர்ப்பத்தில், எழுத்தாளர்கள் வந்து போகும் முக்கிய இடமான டொமினிக் ஜீவாவின் கடைக்குப்போனேன். அங்கு, கதையோடு கதையாக கைலாசபதி வீட்டுக்குப்
aprunasio - su D

Page 17
போனதையும், போட்டிக்கோ முகப்புத் திண்ணை யிலிருந்து கதைத்து வந்ததையும் சொல்லி விட்டேன். அவ்வேளை, நிலவிலே பேசுவோம் என்ற என் சிறுகதைத் தொகுதி வெளிவந்து விட்டது. கைலாசபதியின் வீடு கடற்கரை யோரமாக இருநதபடியால், என் கதையில் வரும் காந்தி பக்தராகக் கைலாசபதியைக் கற்பனை பண்ணி எல்லோருக்கும் சொல்லிக் கதை பரப்பிவிட்டார்கள். கதை பரப்பிய முக்கியஸ் தர்களில் ஒருவரை அணுகி, இதன் உண்மையைச் சொல்லித் தவறான தகவலைப் பரப்ப வேண் டாமென்றும் கூறினேன். 40வருடங்களைத் தாண்டி விட்டது. கதை அடிபட்டுக்கொண்டேயிருக்கிறது. நான் இப்போது கனடாவில் வசித்து வருகிறேன். ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான தெளிவத்தை ஜோசப், சென்ற ஆண்டு இங்கு வந்திருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிவிட்டுப் போனார். நானும் அவரைச் சந்தித்து மகிழ்ந்தேன். அவர் போய்ச் சில நாட்களின் பின், இங்குள்ள இரண்டு நண்பர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து, “கைலாசபதி நிலவிலே பேச உங்களை அழைத்தவராம். அதுதான் உங்கள் நிலவிலே பேசுவோம் கதையாம். அப்படித் தானே? என்று வினவினார்கள். அவர்களுக்கு உண்மை நிலைவரத்தைச் சொன்னேன். அப்போதே இதைத் தெளிவுபடுத்தி எழுத வேண்டுமென்ற ஓர் உந்து தல் ஏற்பட்டாலும் மிகவும் பழையவிடயம் என்றபடியால் தவிர்த்து விட்டேன்.
இப்போது "தேடல்’ என்ற பெயருடைய ஒரு புத்தகத்தை வாசித்த போது, இதை எழுத வேண்டும் என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு எழுதுகிறேன். சென்னையிலுள்ள மித்ர வெளியீடு என்ற பிரசுராலயம் இதனை வெளியிட்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர் எஸ்.பொ இதன் உரிமையாளர். தேடல் சில உண்மைகள் என்ற பெயரில் வெளி வந்துள்ள இந்த நூல் 300 பக்கங்களைக் கொண்டது. இதற்கு வெங்கட்சாமிநாதன் ‘காலத் தின் காளான்களையும் மீறி’ என்ற மகுடமிட்டு முன்னிடு எழுதியுள்ளார். அந்த முன்னிட்டில் மூன்று தடவைகள், வாருங்கள் நிலவினிலே பேசுவோம், நிலவிலே கதைப்போம் வாருங்கள் என்று கைலாசபதியின் ஜாதிய நடைமுறைகள் பற்றி எதையோவெல்லாம் வெப்பிசாரமாகச் சொல்லிக் குற்றம் சாட்டுகிறார்.
சொல்ல வந்த முக்கியமான விடயத்தை இங்கு சொல்லுகிறேன். கைலாசபதியை அவரு டைய வீட்டில் போய்ச் சந்தித்தது 1962இல், என்னுடைய நிலவிலே பேசுவோம் சிறுகதைத்
dSLGG கண்டு LIDG தீர்வறி
(5600
FJLD60 Qf6
LT புல்லே
மாடே Digby பூடெ6 ԼՄ Գ3 TLId உன் (
ஏதேனு இல்ை ஏதும் என் ே Nதொகுதி 1951இல் வெளிவந் இணைத் 1951 61 நிலவிவ வைக்கப்
நா புத்தகம் (p6LDT&E இறுதியி எழுதினே வைத்த கிடைத்த
6) கண்டன பெற்றிரு பாதகமா (SLö66)JT:
ரையை ர
C annuatio - so

O
Կ6խ
ரினைக் கண்டவர்கள் தேவர் வரை போகும் 'திருவே கண்டுகுத்தபடி உனை நினைத்தால் MIDTič OdТ660 ஆகுமோ பிறப்பிற்கு பா முதற்பிறப்பை "ஆமான காரணங்கள்? த்துள் இருக்கும் உன்பிறப்பை நினைத்தால் ம கடவுளிற்கு ஒரு நொடியிற் சித்தாந்தம் முண்டென்று சின்னா பின்னமாகிப் னகதை உண்மையென்றால் போகு மென்றால் ப பிறப்பெடுக்க "விதைபிளத்தல் நீ என் செய்தாய்? உண்ணாணை உனக்கு ரி நசித்ததற்கு ஒருபெரிய வேலையில்லை. ரத் தண்ட மென்றால், ஆனால், ான செய்ததுவாம் உன்னை நேர் பார்க்கையிலே, பூகிப் போவதற்கு? ஒரு மிதியில் முடிக்கையிலே
மரமாகி வரும் வரையில் என் மண்ணான செயல்கள் மூளைக்குத் தான் ம் கன்மம் செய்ததுவா? இந்த மயிரொண்டும் ல யெனில் விளங்கு தில்லை!
செய்யாததனால் O பான்ற fpůUT? திருக்குமரன் ار
வெளிவந்ததும் 1962இல்தான். ஆனால் அந்தக் கதை ல் சுதந்திரனில் பிரசுரமானது. சிறுகதைத் தொகுதியில் த கதைகளினடியில், கதை பிரசுரமான ஆண்டுகளை திருக்கிறேன். நிலவிலே பேசுவோம் கதையினடியில் ன்று பிரசுரமாகியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ரும் ஓர் அபத்தப் பிரசாரத்துக்கு முத்தாப்பு படுகின்றது. ன் கொழும்பிலிருந்த பொழுது தேடல் என்ற இந்தப் பற்றி விளம்பர மூலமாகவோ அன்றி, விமர்சன வோ அறிந்து, ஒரு பிரதி வாங்கத் தேடியலைந்து, ல் மித்ர விலாசத்துக்கு எஸ்.பொவுக்கு ஒரு கடிதம் ான். எஸ்.பொ தான் இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி ார். இதனை இப்போதுதான் வாசிக்கத் தருணம் Ֆl. கலாசபதியைப் பற்றியும் டொமினிக் ஜீவாவைப் பற்றியுமான க் கணைகள் தான் புத்தகம் முழுவதும் இடம் $கின்றன. இந்தக் கணைகளுக்குச் சாதகமாகவோ, கவோ நான் பதிலளிக்க விரும்பவில்லை. நிலவிலே ம் பற்றி உண்மை நிலையைத் தெளிவுபடுத்திக் கட்டு நிறைவு செய்கிறேன்.
நன்றி. 'தினக்குரல்"
15 )

Page 18
அட்டைப்படம்: ‘அகம் புறம் சமகாலக் காண்பியல் கண்காட்சியில் இடம்பெற்ற பி.பிரதீப் சந்திரசிறி ‘முறிந்த கரங்கள்' எனும் தாபனப் படைப்பின் ஒருபக்கத் தோற்றம், கண்காட்சியின் ஏனைய ஓவியங்களும் தாபனப்படைப்புக்களும் பின் அட்டையை அலங்கரிக்கின்றன.
அகம், புறம் என்ற இரு சொற்களுக்கும் தமிழிலக்கியத்தில் நீண்ட வரலாறும், மரபும் உண்டு. சங்க இலக்கியங்களில் காதல் என்பதை அகமாகவும் வீரயுகப்பாடல்கள் புறமாகவும் வகுக்கப்பட்டிருந்தன. அகமென்பது உள்ளுறைவது. உள்ஆள் உள்ளிருப்பவர் என்பதையும் குறிக்கின்றது. அகம், புறம் என்ற பிரிப்பு வீடும், உலகும் என்ற பிரிப்பாகவுங் கூடக் கொள்ளப் படலாம். இவை இரண்டும் துருவ நிலைப்பட்டாலும் உண்மையில் அவை தம்முள் இணைந்திருப்பவை மட்டுமல்லாது ஒன்று மற்றையதைக் கட்டமைப்பதாகவும் உள்ளது.
ஆசியாவிலுள்ள ஏனைய மரபுக்குப்பிந்திய சமூகங்களைப் போலவே இலங்கையிலும் நம்மவர், பிறத்தியார் என்னும் பிரக்ஞை சிக்கலானது. இதனுடைய மூலங்களை பாரம்பரிய சாதியமைப்பு போன்ற சமூக அடுக்கமைவுகளிலும், பல நூற்றாண்டுகளாக காலனித் துவம் உருவாக்கிவிட்ட சமூகச் சிக்கல்களிலும் நாங்கள் தேடிக்கொள்ள முடியும். சுதந்திரத்திற்கு பின்னான
காலகட்டத்தில் அகம்,புறம் என்கிற பிரக்ஞை இனத்துவ
மற்றும் மதம் சார்ந்த அடையாளங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
அகம்-புறம் என்ற அரூப அமைப்பில் ஒருவர் தன்னை எப்படி கட்டியமைத்துக் கொள்கிறார். அறிக்கை செய்து கொள்கிறார் என்பதிலும்தான் ஒருவரது அடையாளம் தங்கியிருக்கிறது. இலங்கையின் ஒவ்வொரு இனத்துவ அல்லது மதக்குழுமமும் மற்றவைற்றைப் புறம் என்பதாகவே கருதுகிறது. பிரதான இனத்துவக் குழுக்களுக்கிடையில் பதட்டம் கூர்மையடையும்போது அகத்திற்கும் புறத்திற்குமான இடைவெளி மேலும் விரிவடைவதுடன் ஆழமாகின்றது.
எனினும் பல ஆண்டுகளாக வன்முறைகளையும், சமூகக் கொந்தளிப்புகளையும், குழப்பத்தையும், இழப்புக்களையும், துன்பத்தையும் அனுபவித்திருந்தாலும் வாழ்வின் உயிர்த்துடிப்பையும் நாம் இன்னும் இழந்து விடவில்லை என்பது மட்டுமின்றி அகம்-புறம் என்பதற்கு புதிய அர்த்தங்களும் உருவாகியுள்ளன என்பதையுத் காண்கிறோம். இலங்கைப் பண்பாட்டின் மையமாக
அகம் PURAM
C 16
 

පුරම්
சேது காண்பியக் கலைக்கான கற்கைப்புலமும், தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பும் இணைந்து ‘அகம்புறம்" என்ற சமகாலக் காண்பியல் கலைக்காட்சியை செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை யாழ். பொதுசன நூலகத்தின் மேல்மாடியில் நடத்தினர். தென்னிலங்கைக் கல்ைஞர்களின் 60க்கு மேற்பட்ட படைப்புக்களும் வடபகுதிக் கலைஞர்கள் மக்களுடன் இணைந்து உருவாக்கிய 'வரலாறுகளின் வரலாற்று' எனும் தாபனக் கலைப்படைப்பும் இதில் இடம்பெற்றது. யாழ். குடாநாட்டிலுள்ள 500 வீடுகளிலிருந்து சேர்க்கப்பட்ட பல்வேறு சிறு பொருட்களைச் சேர்த்து உருவாக்கிய இப்படைப்புகளில் இழப்புகளும் நெருக்கடிகளும் நிறைந்த இருபது ஆண்டுகளின் வரலாற்று நினைவுகளை மீட்டுப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதுபோன்றே தென்னிலங்கை மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள் ஒடுக்குதல்களுக்கு எதிரான கலைஞர்கள் கலை வெளிப்பாடுகளையும் ஒரே அரங்கில் காணமுடிந்தது. பெரும்பாலும் பின்நவீனத்துவக் கருத்தியலின் வெளிப்பாடு களாக அமைந்த இக்கலை வெளிப்பாடுகளின் முழுமை பான மதிப்பீட்டை மக்கள் மத்தியிலான இதன் பிரிதிபலிப்பிலிருந்தே காணமுடியும்.
بر
இருந்துவந்த அகமும் புறமும் இன்று, ஒன்றின் விம்பம் தான் பற்றயது என்ற வகையில் மாற்றம் பெற்றுவிட்டன. வேறு வார்த்தைகளால் சொல்வதானால் அகத்தின் இருப்பும், அர்த்தமும் புறத்தில் தங்கியிருக்கிறது மட்டுமல்ல. அகமே |றத்தையும் உள்ளடக்கியுள்ளது. எனவே அகத்தின் நுண்புலங்களைப் புரிந்துகொள்ள முற்படுகையில், அது றத்தை நோக்கி எங்களை இட்டுச் செல்கிறது. புறத்தை ாதிர்கொள்ளும் போது எமக்கு ஏற்படுகின்ற சஞ்சலமும், rந்தேகங்களும் அகத்தின் அர்த்தங்களை எமக்கு உணர்த்து கின்றன.
இக்காட்சியில் இடம்பெற்றுள 60க்கு மேற்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும், தாபன படைப்புக்களும் இலங்கைச் சமூகத்தின் சிந்தனை அடுக்கில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தைக் காட்டுகின்றன. இவ்வளவு நொய் மையானதாக இருந்தாலும் அறம்பிறழ்ந்த நிகழ்காலத்தின் அர்த்தங்களைத் தேடுகிற முயற்சியே இக்கண்காட்சியின் ஒரேயொரு நோக்கம். இறந்த காலத்தையோ அன்றி எதிர்காலத்தையோ இந்தக்காட்சி கவனம் செலுத்த வில்லை. மாறாக அதத்திற்கும் புறத்திற்கும் இடையேயான மாறும் காலமே இந்தக் காட்சியின் கவனமாக அமைகிறது.
-அறிமுகத்தில் ஜெகத் வீரசிங்க, தா.சனாதனன்
asmusando - sa D

Page 19
சினிமா பாடத்திட்டம் :
சிந்தனைகள்
எம்.சிவகுமார்
சென்ற நூற்றாண்டில் மனிதனின் மாபெரும் கவலையெல்லாம் ‘விடுதலை”, “பாதுகாப்பு', 'கல்வி’, போன்றவை. ஆனால் தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதனின் ஒரே கவலை "பொழுதுபோக்கு" பொழுதை எப்படி சுவையாய்ப்போக்குவது என்பதுதான். நோய், வறுமை, மரணம் இவற்றையெல்லாம் மீறி மனிதனை வாட்டி எடுப்பது சுவையின்றி, மகிழ்வின்றி, தெம்பில்லாமல் பொழுதைப் போக்க நேரிடுவதுதான் மனதுக்குப் பிடித்த நிகழ்வுகள் அடுத்த சில மணி நேரங்களில், அடுத்த சில நாட்களில் நடக்கப் போவதில்லையெனில் அவனுக்கு வாழ்க்கை மெதுவாக, மிக மெதுவாக நகர்கிறது. கைகளில் கொட்டிக்கிடக்கும் காலம், என்ன செய்வதென்று தெரியாத நிலை, சந்தோஷமாய் நேரத்தை எப்படி செலவிடுவது என்ற
56.606).
எல்லோரும், எப்போதும் சந்தோஷமாய் நேரத்தைச் செலவழிக்க விரும்புகின்றனர். பெரிய கம்பெனிகள் தங்கள் வியாபாரக் கூட்டங்களை வேகமாய், துரிதமாய் நடத் துகின்றன. கம்பியூட்டர் உதவியோடு பெரிய திரைகளில் அனிமெஷன் மற்றும் கிராஃபிக்ஸ் உதவியோடு புள்ளி விவரங்களை விறுவிறுப்பாய் சொல்கின்றனர். இல்லை யென்றால் நிர்வாகிகள் துரங்கப் போய்விடுவார்கள். அடுக்கு மாடிக் கடைகளில் வியாபாரத்தை நவீனப் பொழுது போக்காய் நடத்துகின்றனர். குளிர்சாதன வசதி, தானி யங்கிப் படிக்கட்டுகள், அழகுப் பெண்கள், வண்ண விளக்குகள், சுண்டியிழுக்கும் விளம்பரம் என வியா பாரத்தை நுகர்வோரைக் கவரும் வகையில் நடத்து கின்றனர். அவர்கள் கவலையெல்லாம் நுகர்வோருக்குப் போராடிக்கக்கூடாது என்பதுதான்.
டெலிவிஷன் கேமராக்கள் தினசரி வாடிக்கையாகிப் போன பின்பு ஐம்பது வயதுக்குமேற்பட்ட அரசியல்வாதிகள் எதை மறந்தாலும் தங்கள் தலைமுடிக்கும், மீசைக்கும் ’கறுப்பு டை’ அடிக்க மறுப்பதில்லை. அவர்கள் நடிகர் களின் ஒப்பனையோடு, குரல் ஏற்ற இறக்கத்தோடு நமக்கு போராடிக்காத விஷயங்களை மட்டுமே சொல்கின்றனர்.
C onradi» - si

96ðrg & GD a LLUIT OG GIT பொழுதுபோக்கு ஏதும் இல்லாத போது மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அறிவு மற்றும் உணர்வு ரீதியான சூன்யத்தை நோக்கிப் பயணிக்கும் பயங்கரம் இது. இவற்றைப் புரிந்துகொள்ள, ஆராய பண்பாடு குறித்த புதிய புரிதல் தேவைப்படுகிறது. சினிமா, டெலிவிஷன் உட்பட அதன் பல்வேறு அவதாரங்கள் குறித்த அடிப்படை அறிவு தேவைப் படுகிறது.
டெலிவிஷனுக்குப் பழகிப்போன, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடத்தை விறுவிறுப்பாக நடத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வகுப்புக்கே வரமாட்டார்கள். கொஞ்சம் போரடித்தால்கூட டெலிவிஷன் சனலை மாற்றுவது போல தங்கள் நம்பிக்கையை, கட்சியை, எல்லாவற்றையும் மக்கள் மாற்றிக்கொள்கிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில், நம்(இந்திய) நாட்டின் நகர்ப்புறங்களில் அறிவுச்சூழல் என்பது தற்போது மேற்கூறிய ஆபத்தான நிலையில் உள்ளது.
போரடிக்கக்கூடாது. மேலும் மேலும் சுவையான பொழுதுபோக்கு வேண்டும் என்ற இந்த தேடல் எப்போது நிற்கப்போகிறது? சினிமா, நடிகன், நடிகை மோகம் எப்போது விலகப்போகிறது?
இன்று சுவையாய் உள்ள பொழுதுபோக்கு ஏதும் இல்லாத போது மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? அறிவு மற்றும் உணர்வு ரீதியான சூன்யத்தை நோக்கிப் பயணிக்கும் பயங்கரம் இது. இவற்றைப் புரிந்துகொள்ள, ஆராய பண்பாடு குறித்த புதிய புரிதல் தேவைப்படுகிறது. சினிமா, டெலிவிஷன் உட்பட அதன் பல்வேறு அவதாரங் கள் குறித்த அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. ஆனால் நம்(இந்திய) நாட்டில் பல படித்த பண்பாட்டாளர்கள் உட்பட சினி மாவை ஏதோ லாஹிரி வஸ்து போல நினைக் கின்றனர். அது குறித்த படிப்பு, ஆய்வின் முக்கியத்து வத்தைப் பலர் உணர்வதேயில்லை.
சில நாட்களுக்கு முன் “ஹிந்து" பத்திரிகையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டிய செய்தி: “பூனா திரைப்
17 )

Page 20
படக் கல்லூரியில் தீ விபத்து ஆயிரக்கணக்கான பட நெகட்டிவ் சுருள்கள் எரிந்து சாம்பலாயின".
வேறு பத்திரிகை எதிலும் இச்செய்தியைப் பார்த்ததாக நினைவில்லை. விபத்தைக் குறித்த தொடர்ந்த செய்திகளும் பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. 1950, 60களில் எடுக்கப்பட்ட பல இந்திப்படங்களின் மூலமான நெகட்டிவ் படச்சுருள்கள்தான் இந்த விபத்தில் எரிந்து பேயின.
இச்செய்தி என்னை ரொம்பவே பாதித்தது. எத்தனை பேருக்கு இச்செய்தி தெரிந்திருக்கும்? அதில் எத்தனை பேருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்?
சினிமா எல்லோர் வாழ்விலும், எல்லா நேரமும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அது ஒரு மாபெரும் கலை. மற்ற கலைகளுக்கு (இசை, ஓவியம், இலக்கியம்.) சளைத்ததல்ல. அது ஒரு பண்பாட்டுப் பதிவு ஆவணம் என்பதை உணர்ந்தவர்கள் இன்றளவும் மிகச் சிலரே உள்ளனர். இந்நிலையில் மேற்கூறிய செய்தி ஒரு சிலருக்கே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் நினைத்தால் அதில் அகந்தையோ, அறியாமையோ நிச்சயம் இல்லை. மாறாக இது போன்றதொரு விபத்து வேறு ஏதாவது தேசிய ஆவணக்கூடத்திலோ அல்லது சோதனைக்கூடத்திலோ நிகழ்ந்திருந்தால் நிச்சயம் அது மிகப் பெரிய செய்தியாய் இருந்திருக்கும், பலரின் கவனத்தை ஈர்ந்திருக்கும்.
சினிமா கடந்த ஒரு நூற்றாண்டாய் வேறு எந்த கலையாலும் முடியாத அளவுக்கு மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. ஆனாலும் இன்றளவும் இந்தியா வில் பொதுவான பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சினிமா குறித்து கிட்டத்தட்ட எதுவுமே இல்லை என்று சொல் லலாம். செக்ஸ் கல்வி அவசியமா? என்பது போல் சினிமா கல்வி அவசியமா? என்று கூட யாரும் விவாதிப்பதில்லை. அதனால்தான் மெத்தப் படித்தவர்கள் கூட சினிமாவைக் கண்டுபிடித்தது தாமஸ் அல்வா எடிசன் என்கிறார்கள். பாவம், எடிசன் அடிப்படை திரைப்பட காமிராவை மட்டுமே கண்டுபிடித்தார். சினிமா, சினிமா வரலாறு பற்றி ஒரு சில பாடங்கள், பாடத்திட்டத்தில் இருந்தால் கூட சினி மாவைக் கண்டு பிடித்தது, வெறும் எடிசன் மாத்திரம் அல்ல, லூமியர் சகோதரர்கள், ஜியார்ஜ்மீலியே, கிரிஃபித், புதோவ்கின், ஜஸன்ஸ்டைன். என்று நீண்ட பட்டியலே கொடுத்திருப்பார்கள்.
ஏன் சினிமாவை பொதுவான பாடத்திட்டத்தில் வைக்கவேண்டும்? பலர் இக்கேள்வியைக் கேட்கலாம். பொதுவான நம் பள்ளி பாடத்திட்டத்தில் நாம் படிப்பது என்ன? தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல் இவைதான். இவற்றை நாம் ஏன் பயிலுகிறோம்? தாய்மொழி அவசியமானது. தினசரி வாழ்வில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவுவது
U
8
C 18

ய்மொழியே. அது குறித்த புரிதலை நாம் வளர்த்துக் காள்வது அவசியம். ஆங்கிலம், அந்நிய மொழியாய் ருந்தாலும் படித்தவர்களுக்கு அது இரண்டாம் ாய்மொழியாகிவிட்டது. ஆங்கிலம் இன்றி உயர் ல்விபயில முடியாது. அறிவு சார்ந்த பல துறைகளில் ற்பன்னராக முடியாது. ஆங்கிலத்தில்தான் எல்லாத் றைகள் சம்பந்தமான நூல்களும் எளிதில் கிடைக் ன்றன. என்ஊர், மாநிலம் என்ற குறுகிய வட்டத்தைத் ாண்டிச் செயல்படவும் ஆங்கிலம் இன்றியமையாததாகி டுகிறது. எனவே ஆங்கிலமும் அவசியம். கணிதம் நம் |ன்றாட வாழ்வுக்கு, நடைமுறைக்கு தேவை. பால் ாரனுக்குத் தரவேண்டிய தொகையைக் கணக்கிடு திலிருந்து பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதுவரை, நரடியாகவோ, மறைமுகமாகவோ கணிதம் எல்லா ற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே கணிதமும் வசியம். அறிவியலும் அப்படியே. நம்மைச் சுற்றியுள்ள ண்மைகளை, விந்தைகளைப் புரிந்து கொள்ள அறிவி லே உதவுகிறது. வரலாறு, புவியியல் இவையிரண்டும் டைமுறை வாழ்வுக்கு உதவாத வகையில் சலிப்பு தரும் லையில் சொல்லித் தரப்படுகின்றன.
ஆனால் அடிப்படையில் அவை அவசியம். ஆனால் ண்பாடு (culture) குறித்து பள்ளி, கல்லூரி பொதுப் டத்திட்டடத்தில் பாடப்பிரிவு இல்லை என்பது புரியாத நிர்தான். நம் வாழ்வு, உணவு,உடை, பழக்கவழக் ங்கள், வளிக் காரணங்களால் இவற்றில் ஏற்படும் மாற்ற கள். }வை குறித்து ஆய்வது பண்பாடு பற்றிய படிப்டாக ருக்கலாம். பண்பாட்டைக் குறித்து ஒருவர் பயிலும் பாது, அதில் வரலாறு, அரசியல், நாடகம், இசை, னிமா, தொழில்நுட்பம் என பல விஷயங்கள் வரும்.
பண்பாடு பற்றி ஒரு பிரிவு இருந்து அதிலே சினிமா றித்து ஒரு விசேஷ பிரிவு பள்ளி, கல்லூரி பொதுப் டத்திட்டத்தில் இருக்கலாம், அல்லது சினிமாவைப் ற்றி மட்டுமே கூட ஒரு விசேஷ பிரிவு பள்ளி, கல்லூரி பாதுப்பாடத்திட்டத்தில் இருக்கலாம், என்று ஆசைப்படு வர்கள் பலர். மெத்தப் படித்த பண்பாட்டாளர்கள், ரலாற்றாசிரியர்கள், கலைஞர்கள் எனப் பலர் இதில் Hடங்குவர்.
திரைப்படக் கலையை மட்டும் பயிலுவதற்கென சேஷ கல்வி நிலையங்கள் இந்தியாவில் இருப்பது .ண்மைதான். பூனா,சென்னை - அடையாறு திரைப்படக் ல்லூரிகள். யாதவபுரி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் ட்டப் படிப்பில் சினிமாவுக்கென்று தனிப் பிரிவு உள்ளது. ற்ற பல்கலைக்கழகங்களில் இதழியல், வெகுஜன தாடர்பு சாதனங்கள் குறித்த துறைகளில் சினிமா குறித்து ரளவு பேசப்படுகிறது.
மேற்கூறிய சினிமா குறித்த படிப்பு ஒரு சிலருக்கு ருகுறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே பயன்படுகிறது. நாம்
annuatio - so D

Page 21
யாழ்.பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்களின் வெறுவெளி அரங்குக் குழுவினரால் 17-07-2004 அன்று கைலாசபதி கலை அரங்கில் ‘சிகப்புவிளக்கு’ நாடகம் மேடையோற்றப்பட்டது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு கறத்தரனால் நெறியாள்கை செயயப்பட்ட இந்நாடகம் சீனப்பாரம்பரிய உடைகள், ஒப்பனை களைக் கொண்டே அமைந்திருந்தது.
பார்வையாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட இந்நாடகம் சீனப்பொதுவுடமைப் புரட்சியில் யப்பானுக்கெதிரான தேசவிடுதலைப் போராட்டகால அனுபவங்கள் சில எமது இருபதாண்டுகால தேசிய ஒடுக்குமுறைக்கெதிரான யுத்த அனுபவங்களுடன் ஒன்றிணைவது, அதில் பங்குகொண்டு சிறப்பாக நடித்த நடிக நடிகையர்களிலும் பார்வையாளர்களது உணர்வு களிலும் வெளிப்பட்டது.
பொதுவுடமைப் புரட்சிக்காகத் தம்மை அர்ப் பணித்துச் செயற்படும் பாட்டி, தந்தை, மகள் மூவர் இணைந்த அந்த குடும்பம் இரத்த உறவுகளால் அமையாது, யுத்த ஒடுக்குமுறைகளின் விளைவால் ஒடுக்கப்படும் மூன்று தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதாக காட்டப்படுவது தேசிய இனங்களிடையே ஒற்றுமையையும், சமத்துவத்தையும் வலியுறுத் துவதாக அமைகிறது. வர்க்க உணர்வால் ஒன்றி ணைக்கப்படும் இப்பாத்திரங்களின் உரையாடல்களும் உணர்வும் மானுடத்தின் விடுதலைக் குரலாக மேலெழுகின்றன.
சீனாவில் அறுபதுகளின் மத்தியில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சியின் போது முன்னுதாரணமாகக் கொளப்பட்ட நாடகங்கள் சிலவற்றுள் இதுவும் ஒன்றாகும்.
O anuadio - sa
 

இங்கு அழுத்தமாகப் பரிந்துரைப்பது பொதுவான பள்ளி-கல்லுரிப் பாடத்திட்டத்தில் சினிமா குறித்த பாடப் பிரிவாகும்.
பாடப்புத்தகத்தில் சினிமாவா? அப்படியென்றால் நடிகர், நடிகை படமெல்லாம் பாடப்புத்தகத்தில் வந்து விடுமா என யாரும் பயப்படவேண்டாம். அப்படியே ஒரு சில நடிகர், நடிகை படம் அவசியம் கருதி வந்தாலும் அதில் தவறேதும் இல்லை.
நான் சினிமா குறித்து பாடப்புத்தகத்தில் வேண்டும் என்பது, சினிமா என்ற கலையின் தோற்றம், வளர்ச்சி, அது உருவாக்கியமாபெரும் கலைஞர்கள். சினிமா எப்படி ஒரே நூற்றாண்டில் மாபெரும் மொழியாக, இதுவரை புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை காட்சி, ஒலி மூலம் இப்போது புரிந்துகொள்ள உதவும் தொழில்நுட்பமாக வளர்ச்சியடைந்தது- போன்ற விஷயங்கள்தான்.
21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியில் சினிமா பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளது. அந்த புதிய அவதாரங்கள் அன்றாட வாழ்க்கையில் எல்லோரையும் பாடாய்ப் படுத்துகிறது. டெலிவிஷன், செயற்கைக்கோள் பற்றிய அறிவு சினிமா பற்றிய அறிவின் தொடர்ச்சியாக மாறிவிட்டது. எனவே சினிமா குறித்துப் பயிலும்போது, தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு துறைகளைத் தொட வேண்டியுள்ளது.
சினிமா மற்றும் சினிமா அழகியல் குறித்து பாடத்தில் சேர்க்க வேண்டும் என முதலில் கொடுத்தவர் ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த பேலபேலாஸ் (Bela Balazs) ஆவார். இவர் ஒரு எழுத்தாளர், தத்துவ ஆசிரியர், சினிமா கோட்பாட்டாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். அவர் இவ்வாறு குரல் கொடுத்தது இன்று நேற்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு.
58ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவின் பொன்விழா ஆண்டு வந்தது. அப்போது அதைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெரிய விழாவாகக் கொண் டாடவேண்டும் என அவர் விரும்பினார். அப்போது அவர் சினிமாவின் பொன்விழா ஏன் முக்கியமானது என்பது குறித்து வரலாற்றுப் பேராசிரியர் ஒருவருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகள், இன்றளவும் சினிமா ஏன் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும் என்ற வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாய் உள்ளன.
“...சினிமா குறித்து பல்கலைக்கழகங்களில் எப்போதாவது பேசப்படலாம். ஆனால் அதற்குரிய கல்வி அந்தஸ்து தரப்படவில்லை. அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழும் இடங்களில் இக்கலை ஏற்புடையதாய் இல்லை. நம் இளைய தலைமுறை ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டடிருக்கிறார்கள் என்றால் அது
19 )

Page 22
சினிமாதான். ஆனால் பள்ளிப் பாடத்தில் சினிமா பற்றி எதுவுமே கிடையாது. ஆனால் சினிமா மக்கள்:
கலையாக உள்ளது. காரணம் மக்கள் அல்தைப்
பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. மாறாக
t)
துரதிஷ்டிவுசமாக மக்களை அது பயன்படுத்திக் கொள்கிற்து. 'மக்களின் மனோ நிலையை, கருத்துக்களை சினிமா உருவாக்குகிறது. சினிமா குறித்த ரஸனை மக்களுக்கு இல்லை. அது அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சினிமா சக்தியின் முன் அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.
சினிமா கடந்த 50ஆண்டுகளில் முக்கிய
சக்திவாய்ந்த கலையாய் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது, ஆனால் பண்பாட்டின் அங்கமாய் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என் இனிய நண்பரே! இசை, இலக்கியம், ஓவியம் பற்றி ஒன்றுமே அறியாதவரைக் கற்றறிந்தவராக ஏற்றுக் கொள்வீர்
களா? இரு பெரிய பட்டங்கள் பெற்ற உங்களுக்கு
சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றறிந்த மேதையாக உங்களை எல்லோரும் கருதுகிறார்கள். அது தவறு 1895ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் முதன் முதலில் ஒளிரும் பிம்பங்களை திரையில் காண்பித்தபோது பிறந்தது ஒரு புதிய கலை மட்டுமல்ல. அப்போது மனித மூளையில் உணர்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு புதிய அமைப்பு தோன்றியது. அதன் மூலம் மானுட வளர்ச்சிக்கான புதிய பாதை போடப்பட்டது. ‘நல்ல இசை உணர்வுக்கு அடிப்படைச் சூழ்நிலையும், இசை உணர்வுக்கான மூலமும், இசையறிவும் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இசை நழ்காதுகளை அதை ரசிப்பதற்கேற்றவாறு வளப் படுத்துகிறது. மாற்றுகின்றது' என்ற கார்ல் மார்க்ஸின் அற்புதம்ான்"கூற்றுசினிமாவுக்கும் பொருந்தும். கடந்த 50 ஆண்டுகளில் சினி ாவின் வளர்ச்சி அதை
O y ነ}” ይ{) ህr) - நிரூபித்துள்ளது.
இன்று ஐந்து வயது குழந்தைகூட புல்வேறு
செயற்கைக் கோள் சேனல்களில் காட்டூன் படங்களை, ஆங்கிலப் படங்களை பார்க்கின்றது. கார்ட்டூன் கதா
பாத்திரங்களுக்கு மரணம் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிவர். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் எது என்பது அவர்கட்குத் தெரியும். இந்தப்புரிதல் பேலபெலாஸ் சொல்லியது போல், சினிமாவின் கடந்த நூறு ஆண்டு வளர்ச்சி காரணமாக மனித மூளையில் ஏற்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சி என்றே சொல்லலாம்.
ஒருபுறம் சினிமா மற்றும் அதன் அழகியல் பற்றிய ஆய்வு என்பது ஏதோ நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கலையைப் பற்றியதோ அல்லது பொழுதுபோக்கு தொழில்நுட்பச் சாதனத்தைப் பற்றியதோ
C 20

4ல்ல, 9ng நம் பண்பாடு பற்றியது. சினிமாவால் பழக்கவுழ்க்கங்கள் உடை, பார்ப்பது, கேட்பது என்று ல்லாவற்றிலும் மீாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டி க்கின்றன. சினிமாவால் இருந்த இடத்திலிருந்தே வவ்வேறு இடங்களுக்கு, காலத்திற்குச் செல்கிறோம். ந்த அடிப்படையில் சினிமா பற்றிய ஆய்வு அறிவியலும் ழகியலும் கலந்த வினோத ஊடகத்தைப் பற்றியது. னிமாவின் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் டலிவிஷன் சேனல்கள் உண்மைகளை தங்கள் பிருப்பத்திற்கேற்றவாறு திருத்தியும் புதிய வடிவிலும் ருவதால் மக்கள் மத்தியிலே மாபெரும் கருத்து ாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் னிமா குறித்த படிப்பு, ஆய்வு என்பது சமூகவியல், அரசியல் குறித்த ஆய்வாகும். s
சினிமா குறித்த படிப்பு, ஆய்வு என்பது அரசியல், அழகியல், தொழில்நுட்பம், அறிவியல், பண்பாடு, மூகவியல். என்று பல துறைகளை உள்ளிட்ட பன்முக ஆய்வாகும். இதை உணராத பலரே சினிமாவை ஏன் ாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அக்கறை பில்லாமல் சொல்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை னிமா என்றால் ஏதோ லட்சங்களை, கோடிகளை வாங் க்கொண்டு நடிகர், நடிகையர் நடிக்கும் பொழுதுபோக்குப் டங்கள் மட்டும்தான். அதனால் அதனைப் பாடத் திட்டத்தில் சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லை ான்று கருதுகின்றனர். ஆனால் சினிமாவின் உலகளாவிய நூறாண்டு கால வளர்ச்சியைப் படித்தால் அது வெறும் பாழுதுபோக்குச் சாதனம் மட்டுமல்ல. அக்கறையோடு வனம் செலுத்தவேண்டிய மாபெரும் கலை, ஊடகம் ான்பதை அறிவோம்.
சினிமா என்றாலே கேவலம், பண்பாட்டுச் சீரழிவு ான்று சொல்லும் மெத்தப் படித்தவர்களும், புகைப் டித்தல், மது அருந்துதல் போன்று சினிமா பார்ப்பதும் கட்ட பழக்கம் என்று சொல்லும் பெற்றோர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நல்ல சினிமா, நல்ல விஷயங்களைச் சொல்லும் னிமா,'உன்னதங்களைச் சொல்லும் உலக சினிமா இவற்றிற்கெல்லாம் இன்றளவும் பெரும்பாலான மக்க ரிடையே ஆதரவு கிடையாது.
சினிமா பற்றிய சரியான கண்ணோட்டம் சிறு வயதிலிருந்தே பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கட்குத் நரப்படுமெனில், மிக நவீன கலையை, அதன் தாக்கத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதன் மூலம் அவர்களின் ன்னோக்குக் கண்ணோட்டமும் நவீனமாகிறது. அதன் முலம் நல்ல, நவீன சினிமாவிற்கு எதிர்கால சந்ததி பினரின் ஆதரவு தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்கும்.
நன்றி: "கரும்பலகைக்குப் பின்னால்.
annuato - sa D

Page 23
தாயகத்தின் வளர்ச்சிக்கு உழைத்த தோழர் நவத்துக்கு அஞ்சலி
தாயகம் சஞ்சிகை 1974ல் வெளிவந்தபோது கந்தர்மடம், ஆத்திசூடி வீதியில் உள்ள அவரது வீட்டு முகவரியைக் கொண்டே வெளிவந்தது. புத்தகங்களை வாசிப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த அவர் 'தாயகம்' வெளிவந்தவுடன் வரிக்கு வரி படித்து விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைப்பதுடன் மேலும் சிறப்பாக வெளிவர ஆலோ சனைகள் கூறுவார். அத்துடன் நின்றுவிடாது அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவும் அதன் தொடர்ச்சியான வருகையை உறுதிப்படுத்தும் விற்பனை நிதிக்காகவும் தாயகம் விநியோகத்திலும் மிகுந்த அக்கறையாக இருந்தார். தனது ஜீவனோபாயத் தொழிலுக்கான நேரத்தையும் தாயகம் விநியோகத் துக்காகச் செலவிடுவார்.
83க்குப்பின்னர் ஏற்பட்ட யுத்தச் சூழலில் தாயகம்
விநியோகத்தை பல நெருக்கடிகளுக்குட்பட்டே செய்ய வேண்டி இருந்தது. இந்தியப்படை இங்கு நிலை கொண்டிருந்த காலத்தில் அவர்களுக் கெதிரான கருத்துக்களை தாங்கி தாயகம்" வெளிவந்தது. அவர் களது யாழ். மருத்துவமனைக் கொலைகள் பற்றிய சிறுகதையை உள்ளடக்கிய தாயகத்தை சுன்னாகம் பகுதியில் விநியோகிக்கச் சென்றபோது இந்தியப் படையினரால் தோழர் நவரத்தினமும் தோழர் ந. இரவீந்திரனும் (இன்று வவுனியா கல்வியியற் கல்லூரி விரிவுரையாளராக உள்ளார்) நாள் முழுவதும் வைத்து விசாரணைக் குட்படுத்தப்பட்டனர். இது போன்று பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து தாயகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தோழர் நவரத்தினம் 9.11.2004ல் தனது 60வது வயதில் மாரடைப்பால் காலமானார். பாட்டாளிவர்க்கப் பண்பாட்டாளராக-ஒரு புதிய பண்பாட்டாளராக வாழ்ந்து மறைந்த அவருக்கு தாயகம் தனது இதயம் நெகிழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.
Conradio - si
 

தோழர் நவத்துக்கு அஞ்சலி
(ר
தணிகையன்
மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்ட தோழர் உமக்கெம் அஞ்சலிகள்
நாளும் மறவாதுன் பணிகள் நாமும் தொடரும் உறுதியுடன் நான்கு தசாப்தம் முன்பாக நாய்வாலைப் போல் நிமிராமல் ஊறிப் பழமைச் சேற்றினிலே நாறிக் கடந்தது நம் சமூகம். தீண்டாமைப் பேய் போயகல திரண்டெம் மக்கள் எழும்வரை சாதிகள் நூறு பெயர்சொல்லி பலகூறாய் கிடந்தது தமிழரினம் அறியாமைப் பேரிருளுக்குள் அடக்குமுறை சிறைகளுக்குள் அடங்கி ஒடுங்கி உணர்விழந்து உறங்கிக் கிடந்தது நம்சமூகம்.
உறங்கிக் கிடந்த சமூகத்தை உருட்டி எழுப்பும் பெரும் புயலாய் எழுந்த பொதுமைப் புரட்சியிலே இணைந்து ஒன்றாய் கலந்தவன்நீ. குனிந்து வளைந்து வாழ்ந்தவரின் கூனை நிIர்த்தும் போரினிலே உயர்ந்த கரத்தில் ஒன்றாக எழுந்த கரம் இன்றோய்ந்ததுவே. தோழர் நண்பர் உறவுகளை தென்றலாக அணைக்கும் நீ ஒடுக்குமுறைகள் அநீதி கண்டால் பொங்கிப் புயலாய் எழுவாயே. உருக்குப் போன்ற உன் கரத்தால் உருவாகியவை பல மனைகள்
நீ இருக்கும் வீடோ சிறுகுடிலாய் இருக்கிவ் அமைப்பின் வெளிப்பாடாய்.
பணத்தால் உன்னை அளப்பவர்கள் பகுத்தறிவில்லாப் படு மூடர் பண்பால் குணத்தால் அளப்பவரோ வியப்பார் உந்தன் உயர்நிலையை. உனது பிரிவின் துயர் நெஞ்சில் நெருப்பாய் எழுந்து தகித்தாலும் மணிதம் மண்ணில் உயரும் வரை உனது பணியை நாம் தொடர்வோம்.
21
الم.

Page 24
( திய பண்பாட்டுக் கவிதைகள்- 0)
காலத்துக்கேற்றவகைகள் அவ்வக்காலத்துக்கேற்ற ஒழுக்கமு பண்பாடு பற்றிய இயங்கியல் வரிகள். புதிய பண்பாட்டை ( கவிஞர்கள் பலரிடம் மேலும் விரிவடைந்து வெளிப்படைந்
மீள் பிரசுரம் செய்கிறோம்
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற் போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம் தேட்டம் என்று நம்பி, சிதைந்த பழம்பொருளின் ஒட்டை, உடைசல்,உளுத்த இறவல்கள், பித்தல், பிறுதல், பிசகி உதிர்ந்தவைகள் நைந்த கந்தல், நன்றாக நாறிப் பழுதுபட்டுச் சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகைஇப்படியான இவற்றையெல்லாம் சேகரித்து மூட்டை கட்டி, அந்த முழுப்பாரம் கண் பிதுக்கக் காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.
இரண்டாயிரம்ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார் ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும் பாதை நடையின் பயணத் துயர் அறியா மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள். ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள் மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள் பற்றி, முயன்று, பகை களைந்து, மேலேறி விண்வெளியை எட்டி வெளிச்செல்லும் முன்பாக, மண்தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும், வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும், ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும் நெஞ்சம் இசைந்தார்,
நிகழ்த்தினார் நீள் பயணம். பின்முதுகிற் பாரப் பெருமை இலாதவர்கள் இத்தனையும் செய்தார்
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்.
இவை கண்டும்,
j5ITGèLDIT இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும்
6.gados Ulmus
U600011 őjI60)
ܗ
C 22
 

)நூலும் என்பது பாரதியின் உணர்வில்பட்டுத்தெறித்த நாக்கிய அவ்வுணர்வுத் தெறிப்புக்கள் எமது சமகாலக் துள்ளது. அத்தகைய கவிதைகளை பயன்கருதி இங்கு
ம் ஆண்டுப் ம எங்களுக்கு
முருகையன்
ற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஒய்வு பெற்றுப் த்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்.
மலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக் காட்டி உதறிக் குவிகின்ற கூளத்துள் வண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி ப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ ற்றேனும் இல்லோம். லிப்பும் வ்லிப்பும் எழ, V lன்முதுகைப் பாரம் பெரிதும் இடர்ப்படுத்த அருகிறோம்; ஊருகிறோம்- ஓயாமல் ஊருகிறோம்.
ரந்த உலகோர் பலரும்
மையைச் ருங்கும்படியாய்க் குறைத்துச் சிறிதாக்கிக் கப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில், வற்றுக்கை கொண்டும் வியப்புகளை ஆக்குகையில், த்தி நுட்பம், செய்கை நுட்பம், போக்கு நுட்பம் ன்பவற்றால்த்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில், ாங்கள் எனிலோ நலிந்து மிக இரங்கி, ன் முதுகைப் பாரம் பெரிதும் இடர்ப்படுத்த அருகிறோம், ஊருகிறோம்
யவில்லை.
வருகிறோம்.
வண்டாத குப்பை விலக்கி, ணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவோ குறைவு.
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு; ண்பாட்டின் பேராற் பல சோலி எங்களுக்கு.
1972
anrusando - sa D

Page 25
இனி என்ன தான் செய்வது
செய்வதற்கெதுவுமில்லை. தமை தனமாய வடிதத கண்ணிருக்கு அளவு கணக்கில்லை. இரவுகளில் மெளனமாய் வடிகின்ற கண்ணிர் தலையணைக்குள் ஐக்கி யமாகிவிடுகிறது. யாருக்கும் தெரியாமல், எத்தனை நாட் களுக்குத்தான் இப்படி உள்ளே குமுறிக்கொண்டிருக் முடியும்.
எதிலும் லயிக்க முடியாமல், பாட்டோ கதையோ எதிலும் ஒன்ற முடியாமல் போனது. யாரும் எதுவும் கதைக்கையில் பொருத்தமில்லாமல் எதை எதையோ கதைத்துத் திகைத்தாள். எதிலுமே நாட்டமில்லாமற் போனது. திடீர் திடீரென்று கண்கள் கலங்கிப் போயின. தடிமன் எனச் சொல்லிக் கண்கள் மூடி விழிநீரை உள்வாங்கி, மூக்கை இழுத்துக் களைத்துப் போனாள். இன்னும் எத்தனை நாட்களுக்கு.? எப்போது இரவு வருமெனக் காத்திருந்து, கண்மூடிப்படுத்து, எல்லாரும் உறங்கிவிட்டானபின், அந்த இருட்டுக்குள் குமுறிக் குமுறிக் கொட்டியதெல்லாம் யாரறிவார்.? பெற்ற தாய்க்குக் கூடத் தெரியாமல், இந்தத் துன்பம் தாங்க அவள் எங்கே கற்றாள்...? சின்னப்பொம்மை உடைந்துபோகும்போது கூடத் தாய்மடி தேடி ஏங்கும் உள்ளம் இப்போது மட்டும் ஏன் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போயிற்று.?
C amusassi» - st
 

இடம், பொருள், ஏவல் அறியாமல் நினைத்த பொழுதில் கண்ணிர் புறப்பட்டு விடுகிறது. ஏதேனும் ஒரு வார்த்தை அல்லது நினைவு, உணர்ச்சி நரம்புகளைச் சுண்டுகையில் கண்கள் கரைந்தாற் போலாகிவிடுகின்றன. உள்ளத்துத் துயரத்தைத் துண்டிவிடக்கூடிய நரம்பு உடலில் எங்கிருக்கக் கூடும். எதிர்பாராத வேளைகளில் ஏக்கம் எட்டிக் கதறிவிடத் தோன்றுகிறது.
தனிமை வேண்டும் போலிருக்கிறது. எல்லா மனிதர்களிடமிருந்தும் விடுபட்டு, யாருமற்ற தொலைவில் வெறும் வெளியொன்றில் துக்கம் இறங்கும் வரைக்கும் கதறியழ வேண்டும். தலையைப் பாறையிலடித்து மண்டைக்குள் குடையும், துயர்ப் பூச்சிகளை நசுக்கிவிடவேண்டும். எதுவுமேயின்றி, புத்தம் புதிதாய் எங்கேனும் மறுபடி பிறக்கவேண்டும்.
அம்மாவின் பரிவான முகம் ஞாபகத்துக்கு வருகிறது. அம்மாவின் துக்கத்தைக் கூட்டக்கூடாது என்றுதானே அவள் அம்மாவிடமே அதை மறைத்தாள். பிறகும் அம்மாவுக்குத் துன்பத்தையா கொடுக்க வேண்டும்.?
23 )

Page 26
எங்காவது, கடற்கரையோரம் அமைதியாய் நடந்துசென்று இந்த மனம் குமுறத் தொடங்கும்போது கடலுக்குள் குதித்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும். அந்தக் கடலலைகளின் குமுறலோடு அவளது குமுறலும் காலம் உள்ளவரைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். எங்கே கடல்..? அவளுள்ளே குமுறிக்கொண்டி ருக்கின்ற அந்தக்கடலில் கரை எங்கே..?
பைத்தியம் பிடித்து விட்டாற் போலிருப்பதை உணரமுடிகிறது. உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிட்டதா..? அல்லது இனித்தான் பைத்தியம் பிடிக்கப் போகிறதா..?
இத்தனை வருடமாய்க் காதல் வார்த்தைகளை அள்ளி வீசியவன் எப்படி வெறும் நண்பனாக மட்டும் மாறினான்.
இதை அவள் எதிர்பார்த்திருக்கவேண்டுமா? கலியாணச் சந்தையில் சீதன விலையின் ஏற்ற இறக்கங்களோடு, காதலும் தள்ளாடிக்கொண்டிருப்பதை அவள் ஊகித்திருக்க வேண்டுமா..?
தன்னைவிட அதிகமாயல்லவா அவள் அவனை நம்பினாள். இறுதி வரைக்கும் கூட வரும் துணை எனும் எண்ணம்தானே அவனை ஆசை ஆசையாய்க் காதலிக்க வைத்தது. அந்த ஆசைகள் இப்போது நிராசையாய் நொறுங்கிப் போய்விட்டன. அவன் பேரில் தப்புச் சொல்லவும் முடியவில்லை.
முப்பத்தைந்தைத் தாண்டிய நிலையில் முழுவாழ்வு காணமுடியாமல் அவன் அக்கா.1
இவன் தன்னை விற்கவேண்டி ஏற்பட்டுவிட்டதா..? 'தம்பி பிறந்ததே தனக்காகத்தான்’ என நினைக்கும் அந்த அக்காவின் கனவைச் சிதறடித்து இவள் அங்கு போனால் அவளுக்குக்கூட மனதில் நிம்மதியிருக்காதே! பத்து வருடங்கள் அக்காவின் வாழ்வை அவன் தேடிக்கொண்டிருந்தான்.
ஐந்து வருடங்களாக இவளும் அவனுக்காகக் காத்திருக்கிறாள். ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி அம்மாவிடம் தன் திருமணப் பேச்சுக்களைத் தவிர்த் திருந்தாள்.
ஆனால், அவனது அக்காவின் வயது ஏறிக்கொண்டிருந்தது. அக்காவின் வயதுக்கு ஏற்றபடி இனி எங்கு போய்த்தேடுவது என்ற நிலையில்தான் அந்த மாற்றுச் சம்பந்தத்திற்கு அவன் முகம் கொடுக்க வேண்டி வந்தது.
இப்படியாகுமென்பதைச் சிறிதுகூட நினைத்தி
ருக்கவில்லை அவள். எப்படியேனும் தன் அக்காவின் வாழ்வை அவன் ஒப்பேற்றிவிட்டு வரும்வரை நெடுங்காலத்திற்கு காத்திருக்கவேண்டி வருமென்று
C 24

ண்ணினாளே தவிர, ஒரேயடியாய் அவன் லகிவிடக்கூடுமென்று எங்ங்ணம் இவள் எதிர்பார்த் ாள்.
ஆங்காரமான அழுகை, கோபம் இவற்றுள் தைத்தான் அவன்மீது காட்டமுடியும்.? அவன் வேறு ற்ற உணர்வில் குறுகிக் கிடக்கலாம். இப்போது போய் ந்த நொந்த மனதில் இன்னும் நோவைக் கூட்டுவதா..? தற்காகவா அவள் அவனைக் காதலித்தாள்.? தற்காகவா அவள் அவனை நெஞ்சு நிறைய ஆரா த்தாள்..? மகிழ்வை மனதாரப்பகிரவும், வாழ்தலின் லிக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்கவுமென, அவள் ண்ணியிருந்த வாழ்வு கிடைக்கவில்லை என்பதற்காக, வன் மீது பழிபோடவா முடியும்.? இப்படி நேரு மன்பதை அவனும் எதிர்பார்த்திருக்கக் கூடுமா..?
விதி எத்தனை பேரின் வாழ்க்கையை இப்படிச் திராடிப்போட்டிருக்கிறது. இப்படியெல்லாம் நடக்கு மன்பது தெரிந்திருந்தால், இருவருமே அந்தக் காதல் தையில் விலத்திப் போயிருக்கலாமோ..? இருவருடைய ாழ்க்கையுமே வெவ்வேறு திசைகளில் இருக்கிற தனப்புரிந்து, எந்த உணர்வுமின்றிப் பிரிந்திருக் லாமோ..? அப்படியெனின் இந்த வலி தோன்றி ருக்காது. இன்று தனித்துப் போய்விட்ட உணர்வும் தான்றாது. அவனோ சகோதரிக்கான தியா'மென ருத்திக்கு வாழ்வு கொடுக்கப் போகிறான். இவளால் ன்னதான் செய்யமுடியும்?
மனதில் வேர்விட்ட அவனது நினைவுகளைப் டுங்கிப்போட முடியுமா? எப்படி முடியும் அவளால். }வனை எடுத்துவிட்டு, இன்னொருவனை மனதில் ாட்ட எப்படிச் சம்மதிக்கும் மனம். இல்லை. அவன் }ன்னொருத்தியை மணந்தால் என்ன...? அவள் வனை மறக்கப் போவதில்லை. அவன் இவளது நஞ்சுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பான். அதை ாரால் தட்டிப்பறிக்க முடியும்.?
மனதுக்குள் ஆறுதல் படிந்தது. உள்ளே ருப்பவனை யாரும் எடுத்துப் போக முடியாதெனும் ண்ணம் சற்றே பெருமிதமாய் எட்டிப்பார்த்தது. விதியை வல்ல முடியாவிட்டாலும், விதியைப் பழிவாங்கி ட்டதாய்த் திருப்தி கொண்டாள். தன்னைச் சுக்கு றாக்கிய காலத்தை, ‘இனி என்ன செய்வாய்?’ என்று லை நிமிர்த்திக் கேட்டாள்.
‘இந்தத் துன்பத்தை விடவா நீ பெருந்துன்பம் ருவாய். சரிதான், வா பார்ப்போம்..!" என்று மரணத்தை நாக்கி எக்காளமிட்டாள்.
கர்வம் மடிந்து ஓய்ந்துபோன இரவுகளில் எதுவோ னதை அலைக்கக் கதறி அழுதாள்.
துக்கமின்றிப் புரண்டாள். கனவுகள் அலைக்க 4லைக்கத் துயர் வெளியில் மிதந்தாள்.
astrabó se )

Page 27
ஒரு கனவு. இவள் அவனோடு நடந்து கொண் டிருக்கிறாள். அவனுடனான வாழ்வு மனமாலை கோர்த்த புதிய வாழ்வு. யாருமில்லை. அவன் அக்கா. அம்மா. அவன் வாழ்வை எடுக்க எவருமில்லை. குதுகலமாய் அவள் அவன் கரம் சேர்த்து நடக்கிறாள். இதமான கண்ணிர் ஒருதுளி மகிழ்வின் அர்த்தமாய் கண்களில் வழிகிறது. புன்னகை இதழுறி நெகிழ்கிறது. என்ன ஆனந்தமான பயணம். என்ன ஆனந்தமான வாழ்வு. திடிரென்று கடற்கரை மணல் வெளியில் அந்தப்பெண். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண், அவள் நெஞ்சில் படர்ந் திருக்கும் சங்கிலி, அதில் க்ோர்க்கப்பட்ட பதக்கத்தில் 'அவனது முகம். அந்த முகத்தின் வியாபகம் பெரிதாகிப் பெரிதாகி இவள் கண்களுள் படர, இவள் அருகிலிருந்த அவனது உருவம் சுருங்கிக் காற்றாக. e
படாரென்று விழித்துக் கொண்டாள். எதுவுமே செய்யத் தோன்றவில்லை. மூளை சடுதியாய் விறைத் துப்போனது. தலையெல்லாம் பாரமாயிருந்தது. என்ன நடந்ததென்பது புரியவில்லை. எல்லாம் கனவென உணரச் சிறிது நேரம் எடுத்தது.
மனதை ஒருநிலையாக்கி யோசிக்கச் “சுள்ளென்று ஊசியால் குத்தியது போல வலித்தது.
அந்த மணப்பெண்ணிடத்தில் தான் இருக்கப் போவதில்லை என்பது தெரிந்தபோதும், அநதக்கணத்தில் அப்போது தோன்றிய வலி மீண்டும் தோன்றிற்று. அவனை மணக்கப் போகின்றவள், யாரோ எவளோ அவளுக்கும் இதே மன உணர்ச்சி தானே தோன்றக்கூடும். அவனது உருவப் படத்தை இன்னொருத்தி சங்கிலிப்பதக்கத்தில் போட்டிருக்கிறாள் என்பதே, இவளுக்குத் தாங்காம லிருக்கிறபோது, இன்னொருத்திக்குக் கணவனாகப் போகிற அவனை, தான் தன் மனதிலேயே வைத்திருப்பது அந்த இன்னொருத்திக்கு, எவ்வளவு மனவேதனையை ஊட்டடக்கூடும். அதைவிட இன்னொருத்திக்குச் சொந்த மான அவனை இனித்தன் மனதில் சுமப்பது எஎவ்வளவு பெரிய தப்பாகிவிடும்.
மனதைப் பாறாங்கல் ஒன்று நசுக்கினாற் போலி ருந்தது. நசுங்கிய வேகத்தில் முக்கால் வாசிக்குப் பெயர்ந்துபோன அவனது நினைவுகளின் வேரை அவள் இறுக்கி இழுத்தாள். வேர் இடறுகையில் இரத்தம் கசிந்தது. தசைத்துணுக்குகள் சிதறின. இருப்பினும் வேர் எனும் அவன் நினைப்பு வெளியே வந்தது.
"அவளேனும் நிம்மதியாய் இருக்கட்டும்." இவள் வேர் பிடுங்கிய ரணம் ஆறப் படுக்கையில் சரிந்தாள்.
米

"about another matter'
நூல்: தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு 5IGoldffuit: df.dflaIGdd5Jub வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை விலை: ரூ.200/-
பேராசிரியர் சி.சிவசேகரம் நாடறிந்த கவிஞர். சிறந்த மார்க்சிய விமர்சகர். 1977ல் இருந்து அவர் எழுதிய கவிதைகள் ஏற்கனவே நூல்களாக வெளிவந்துள்ளன. அத்துடன் சமூக நீதிக்காக உலகம் முழுவதும் குரல் கொடுத்துப் போராடி வரும் பன்மொழிக் கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றை ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து நூல்களாகவும் தந்துள்ளார். இப்போது சிவசேகரத்தின் 56 தமிழ்க் கவிதைகளின் ஆங்கில QIDT LOTfbps 45605 IGDT5 'about another matter வெளி வந்துள்ளது.
ஒடுக்கு முறைகளுக்கு எதிரான இக் கவிதைகள் சமூக நீதிக்கான போர்க்குரலாக அமைந்துள்ளன. தமிழில் காணப்பட்ட கருத்துச் செறிவும் கவித்துவ வீச்சும் இவ் ஆங்கில மொழி மாற்றத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இதனை இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள ஆங்கிலப்புலமையாளரும், சமூக அக்கறை மிக்க கல்வியாளருமான ஏ.ஜே. கனகரட்ணா மிகுந்த அவதானிப்புடன் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நூல் தமிழ்ப்பரப்புக்கும் அப்பால் சென்று குறிப்பாக சிங்கள மக்களுக்கு ஒடுக்கு முறைக்கு உள்ளாகிநிற்கு தமிழ் மக்களின் நிலையைச் சுட்டிக் காட்டவும் பரந்த மனிதநேயத்தை எடுத்தியம்பவும் பணியாற்றும் என்று துணிந்து கூறலாம்.
25

Page 28
சமூகச் செயற்பாடுகளை விரிவாக்கும் கட்டைவேலி- நெல்லியடி ட.நோ.கூ. சங்கம்
அடிமையாக இருக்கமாட்டேன். அதே நேரத்தில் அடிமையாகவும் மாட்டேன் எனக்கூறிய ஆபிரகாம் லிங்கனின் கூற்றுப்போல ஒரு கூட்டுறவாளன் சுரண்டப்படாமலும் அதே நேரத்தில் மற்றவர்களை சுரண்டாமலும் வாழும் உயர் நோக்குத்தான் கூட்டுறவுக்கு அடிப்படையானது.
மனித குலத்தின் அமைதியான சுபீட்சம் நிறைந்த வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் நீக்கி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவியுடன் அறவழி சார்ந்த நடவடிக்கைகளாற் பொருளாதார சமூக கலாசார துறைகளில் முன்னேற்றமடைந்த ஜனநாயக ரீதியான சமுதாயத்தை உருவாக்குவதே கூட்டுறவின் உயர்ந்த லட்சியம்.
அந்த வகையில் நோக்குகையில் கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூட்டுறவு சங்கம் மற்றைய சங்கங்களுக்கு முன்மாதிரியான சங்கமாக இயங்கிவருகிறது. மக்களுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருட்களை, அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் விநியோகம் செய்யாது மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான சகல விடயங்களிலும் தமது சேவையை விரிவாக்கம் செய்து மக்கள் பயன்பட சேவையாற்றும் செயல் மற்றைய சங்கங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
குறிப்பாக கல்வி யில் மேம்பாடுள்ள வடமாராட்சி என்பதனை எடுத்துக் காட்டும் முகமாக இச்சங்கம் கல்விச் செயற்பாடுகளில் மிகவும் மதிநுட்பமாக தன் செயற்பாடுகளை
'ఐarGmp"
:
விரிவாக்கம் செய்துள்ளது.
நமது வட்டாரத் தைச் சேர்ந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறந்த மாணவர் களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதோடு அவர்களுக்கு வெகு மதியளித்தும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாது வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டும் தேடல், ஆயுவுகள் மேற்கொள்வதற்கும் மிகச்சிறந்த நூலக சேவையையும் நடாத்துகின்றார்கள். கிராமிய வங்கியின் மூலம் கடன் பெற்று தமது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் தாம் விரும்பிய கைத்தொழில்களை ஆரம்பிக்கவும் உதவி செய்கிறார்கள்.
C 26
 

éFoopé5 நிறுவனங்களும் சமூகச் செயற்பாடுகளும் - 4
இவ்வாறு பொதுவாக நோக்கின் பின் வரும் பிடயங்களில் சங்கச் செயற்பாடுகள் விரிவடைந்துள்ளது. நுகர்ச்சிப்பொருள் விநியோகம், நிவாரணப்பொருள் விநியோகம், sட்டிடப் பொருள் விநியோகம், எரிபொருள் விநியோகம், விவசாயப் பசளை கிருமிநாசினி விநியோகம், விவசாயப் பாருள் சந்தைப்படுத்தல், கிராமிய வங்கிச் சேவை, கடன் பழங்கல் சேவை, சிற்றுண்டிச்சாலை, புத்தக உபகரணங்கள் பிற்பனை
நூலக சேவை, பாண் உற்பத்தி, கைத்தறி நெசவு, ஒப்பந்த வலை, மோட்டார் விாகன சேவை, உடை தயாரிக்கும் சவை, பாலர் கல்வி நிலையம், கோழித்தீன் உற்பத்தி, அங்காடி, பிடவை விற்பனை, டெலிபோன், கொம்பபியூட்டர் சவை, மாதாந்த திரைப்படக் காண்பியல் , கருத்தரங்கு, லாசார பெருமன்றம், எனப்பலவேறு சமூகப்பணிகளிலும் டுபட்டுவருகிறது. −
இவைதவிர ஊழியர் பலன் கருதி பண்டிகை முற்பணம், இலாபத்தில் நற்றொழில் வேதனம், கடமை நேரத்தில் தேனிர் பழங்கல், சங்கத்தின் விருப்புக்குரிய சம்பள உயர்வு, ஊழியர்களின் சுகதுக்கங்களில் அனைவரும் கலந்து காள்ளல், இலவச தளபாட பந்தல் சேவை, ஊழியர் வினைத்திறன் அறிவு வளர்ச்சி என்பனவற்றின் பொருட்டு ாலத்துக்கு காலம் பியிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள் ான இச்சங்கத்தின் பணிகள் விரிவடைந்துள்ளன.
இவர்களது இந்நன்முயற்சிகளுக்கு மக்கள் தமது ஒத்து ழைப்பை வழங்கி இவர் களது செயற்பாடுகள் சிறப்புற உதவுவதுடன் ஏனைய ப.நோ.கூ. சங்கங்களும் தமது மூகப்பணிகளை விரிவாக்கிக் கொள்வது கூட்டுறவுணர்வை க்க ளிடம் வளர்ப்பதற்கு உதவுவதாக அமையும்.

Page 29
சாதியமும் சமூக மாற்றமும்
-நஇரவீந்திரன்
இயற்கையுடன் இயைந்தும், அதனை மாற்றிப் புனைந்தும் தனது வாழ்வாதார வளங்களை விருத்தி செய்தபடி மனிதகுலம் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இந்தச் செயற்பாட்டில் மக்கள் தமக்குள் இறுக்கமான சமூக உறவைப் பேண்வருவர். வளவிருத்தியிலும், பகிர்விலும் நுட்பத்திறன் வாய்ந்த கருவிகளின் பயன்பாடு அறிமுகமானதிலிருந்து சமூக உறவில் உடைமையாளர்வெறும் உழைப்பாளர் என்ற பேதம் பிறந்து வளர்ந்தது. உடைமைப் பண்புக்கு ஏற்ப சமூக அமைப்புகள் மாற்றம் பெற்றன. பழைய சமூக அமைப்பு தொடர் வளர்ச்சிக்குத் தடையாக ஆனபோது, அதைத் தகர்த்துப் புதிய சமூக அமைப்பை மக்கள் எழுச்சியுறச் செய்தனர். அது குறிப்பிட்ட காலம் வரை வளர்ச்சிக்கு உத்தரவாதமளித்துப் பின்னர் கெட்டிபட்டுப்போய் இறுக்கமடைந்த பிற்போக்கு அமைப் பாகும்போது புதிய வேறொரு சமூக அமைப்பின் தேவை எழும்.
ஒரு சமூக அமைப்பு இவ்வாறு உருவாகிப் பூவாயிருந்து காயாகிக் கனிந்ததும் தானாக விழுந்து அடுத்த ஒரு சமூக அமைப்புக்கு இடம்விட்டுத் தந்து விடுவதில்லை. அந்தச் சமூக அமைப்பின் அதிகாரத்தரப்பு தமது சுகபோகங்களை மட்டுப்படுத்த மறுத்து மாற் றத்துக்கு எதிராகத் தமது ஆதிக்கக் கரங்களை வலுப்படுத்தி அடக்குமுறைகளைத் திணித்து வந்துள் ளன. அதனை ஏற்கமுடியாமல் எழுச்சி கொண்ட மக்கள் சக்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரட்சியை நிகழ்த்தியே புதிய சமூக அமைப்பை நிதர்சனமாக்கிற்று. அவ்வாறு உருப்பெற்ற புதிய சமூக அமைப்பினுள் உழைக்கும் மக்கள் உற்பத்தி சக்தியை விருத்தி செய்து வளர்த்து வந்ததன் பேறாகவே தமக்கு மேலும் சுதந்திரத்தை ஈட்டித்தரும் மற்றுமொரு புதிய சமூக அமைப்பை எட்டும் புரட்சியை நிகழ்த்த வல்லவர் ஆயினர். அந்த வகையில் எப்போதும் மக்களே வரலாற்றின் உந்து சக்தியாக விளங்கிவந்தனர் வர்க்க சமூக வரலாறு
இவ்வாறு கிரேக்க- ரோம் அடிமைப் புரட்சிகள் வாயிலாக அடிமைச் சமூகத்தைத் தகர்த்து நில பிரபுத்துவ அமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளின் முல் உருவாக்கிக் கொண்டது உலகு. மகத்தான பிரெஞ்சு
Caraio - si

đófuslib sig TDRUK , வெள்ளாளர் எனும் இரு சாதி SD GIT di 5QéLDT5di G5TGILபிரமிட்டு வடிவக் கூம்பகக் கோபுரத்தின் கீழிறக்கத்தில் I fDLDuspi5 UGO ETg அடிநிலை சாதிகள் இருப்ப தாக அமைந்துள்ளன. இந்தச் சாதியச் சமூக முறைமை நிலப் பிரபுத்துவ வர்க்கத்தினருக்கு அபரிமிதமான வளப்பெருக் கத்தை அபகரிக்க ஏற்ற
அமைப்பாய் இருந்தது.
புரட்சி 1789-ல் நிலப்பிரபுத்துவத்தைத் துக்கியெறிந்து முதலாளித்துவ சமூக அமைப்பை உருவாக்கியது. உலகைக் குலுக்கிய ரஷ்யாவின் 1917 அக்டோபர் புரட்சி முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கானதும் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோசலிச சமூகத்தினது எழுச்சிக்கானதுமான கட்டியம் கூறலாக அமைந்தது. ஏனைய பிராந்தியங்களிலும் இத்தகைய மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வந்தபடியேதான் சமூக மாற்றங்கள் சாத்தியப்பட்டு வரலாற்று வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது. நிலவுடைமைச் சமூகம் நிலையூன்றி வலுப்பெற்றதும் ஆண்டான், அடிமை ஆகிய பழைய வர்க்கங்கள் இல் லாதொழிந்து புதிதாக நிலச் சொந்தக்காரரான நிலப்பிரபு வர்க்கமும் நிலத்துடன் பிணைக்கப்பட்ட பண்ணையடிமை வர்க்கமும் தோன்றின. இவ்வாறு தோற்றம் பெற்ற இரு வர்க்கங்களும் முதலாளித்துவ அமைப்புக் கட்டி யெழுப்பப்பட்டபோது இல்லாமற் போகப் புதிதாய் மூல தனத்தைக் கொண்டுள்ள முதலாளி வர்க்கமும் கூலிபெறும் “சுதந்திரமான தொழிலாளர் வர்க்கமும் உதயமாகின. (நிலத்துடன் பிணைக்கப் பட்டிருந்த பண்ணையடிமையை ஏனைய சொத்துக்களைப்போல வாங்கவும் விற்கவும் முடிந்தது. எங்கே, எவருக்கு உழைப்பது என்பது பண்ணையடிமையின் தீர்வல்ல. அவருக்கு அப்பாற்பட்ட விசயம் அது. முன்னர் அடி மையை கொல்லும் அதிகாரம்கூட ஆண்டானுக்கு இருந்தது). இவ்வாறு ஏடறிந்த மனிதகுல வரலாறு வர்க்கங்களதும் வர்க்கப் போராட்டங்களினதும் வரலாறாகவே இருந்து வந்துள்ளது. இதனை வலியுறுத்தியிருந்த மார்க்ஸ், ஏங்கெலஸ் ஆகியோர் முன்னதாக வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயம் ஒன்று இருந்ததையும் எடுத்துக்காட்டினர். எதிர்காலத்தில் பாட்டாளி வர்க்க அரசு புரட்சியினுடாகத்
27

Page 30
தோன்றி வர்க்க ஏற்றத்தாழ்வைத் தகர்த்தெறிந்து எல்லோரும் ஓர்குலம் ஆகும்படி பொதுவுடைமைச் சமூகத்தைச் சிருஷ்டிக்கும் எனவும் அவர்கள் வலி யுறுத்தியிருந்தனர். சாதிய சமூகத்தில் அதிகார மாற்றங்கள்
இவ்வாறு ஐரோப்பிய சமூகம் கண்டறிந்து காட்டிய சமூக மாற்ற வரலாற்றினை அறிந்துகொண்ட விவே கானந்தர் இதேமுறையில் இல்லையெனினும் இதை யொத்த மாற்றமொன்றை இந்திய சமூக வளர்ச்சியில் கண்டறிந்து காட்டியிருந்தார். வர்க்க பேதத்தை வர்ணக் கோட்பாட்டின் அடிப்படையில் சாதியப்படி நிலை வாயிலாக வெளிப்படுத்திய இந்திய சமூகத்தின் நால் வர்ணங்களின் தலைமைப் பண்பை அடிப்படையாகக் கொண்டு, முதலில் பிராமணர்களது அதிகாரமும் பின்னர், சத்திரியர்களது அதி காரமும் நிலவி, பிரித்தானியராட்சிக் காலத்தில் வைசியர் ஆட்சி ஏற்பட்டிருப்பதைக் கூறி, எதிர்காலத்தில் சூத்திரர் ஆட்சி தோன்றுமென விவேகானந்தர் வலியுறுத்தினார். வியாபாரத்துக்கு வந்த ஆங்கில அரசை உழைக்கும் வர்க்கம் தகர்த்து சூத்திரர் ஆட்சியின் கீழ் சுதந்திர இந்தியாவைக் கட்டியெழுப்பும் என அவர் கனவு கண்டது பலிக்காமல் இன்றும் பண முதலைகளான வைசியர் ஆட்சியே நீடிக்கின்றது. ஆயினும், எதிர் காலத்தில் உழைப்பாளர்களாகிய சூத்திரர் கையில் அரசதிகாரம் மாறும் என்பது மெய்.
அதிகார அமைப்பு மாற்றம் என்ற வகையில் இந்திய சமூக மாறுதலை ஐரோப்பாவுடன் இவ்வகையில் ஒப்பிட முடிந்தாலும் ஐரோப்பிய வரலாற்றிலிருந்து ஒரு அடிப் படையான வேறுபாடு இங்கே இருந்திருப்பதை அவதானிக்கமுடியும். சமூக மாற்றத்துடன் பழைய வர்க் கங்கள் முற்றாக இல்லாதொழிந்தன. அங்கே இன்றைய ஐரோப்பிய சமூகத்தில் முற்றிலும் புதிய வர்க்கங்களே காணப்படுவன. இங்கே பழைய அதிகார மற்றும் உழைக்கும் சாதிகளாய் இருந்தவை இன்றுவரை தொடர்வன, பிராமணர் சமூகத்தின் முதனமை நிலை பெற்றிருந்த இருக்கு வேதகாலந்தொட்டு இன்றுவரை பிராமணர் ஒரு சாதியாக இருந்து வருகின்றனர். வடஇந்தியாவின் சத்திரியர்களான வெவ்வேறு சாதிகள் இன்றும் உண்டு. (விவேகானந்தர் சத்திரியர் என்பது குறிப்பிடத்தக்கது). தென்னிந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததுடன் நிலவுடைமையாளர்களாயும் இருந்த வெள்ளாளர் இன்றும் உள்ளனர். நிலப்பிரபுக்க ளாய் அதிகாரம் செலுத்திய தமிழ்ப்பிராமணரும் தொடர்ந்து ஆதிக்கப் பதவிகளில் இன்றுவரை நீடிக்கின்றனர். அவ்வாறே, இரண்டாயிரம் ஆண்டின் முன்னர், நிலவுடைமைச் சமூகம் அதிகாரத்தை கி.பி.3ஆம் நூற்றாண்டிலிருந்து கையகப்படுத்தியதற்கு முன்னதாக ஆதிக்கம் செலுத்திய வணிகப் பிரிவினரான வடக்கின் பணியாக்களும் தெற்கின் செட்டியார்களும், நிலப்பிரபுத்துவ
E
C 28

முகத்தில் ஆளும் நிலைமை இழந்தாலும் தொடர்ந்து fல்வாக்குச் செலுத்தியதுடன் இன்று மூலதனப் பெருக் த்தில் முன்னிலை பெற முடிந்திருக்கிறது. உழைக்கும் திப் பிரிவுகளும், மற்றும் இடைச் சாதிகளும் தொன் தொட்டு இன்றுவரை இருந்து வருவனவே.
இத்தகைய சாதிப்பிரிவுகள் அன்றுமுதல் இன்று ரை தொடர்ந்து இருப்பதும், கிராமிய வளப்பங்கீட்டில் ருவகை பொதுவுடைமைப் பண்பு நிலவியதும், னக்குழு குல வழிபாட்டு அடிப்படையில் குரங்கையும் சுவையும் மரங்களையும் வழிபடுவதும் காரணமாக இங்கே ராதன பொதுவுடைமை அமைப்பின் தொடர்ச்சியே டிப்பதாகவும், சமூக மாற்றங்கள் ஏற்படாத தேங்கிப் பான பிற்போக்கான அமைப்பே தொன்றுதொட்டு லவிவருவதாகவும் ஒருகாலத்தில் காலனித்துவ றிவாளிகளால் சித்திரிக்கப்பட்டு வந்ததுண்டு. xவ்வாறன்றிப் பாரிய சமூக மாற்றங்களும், ஏற்றத்தாழ் ான வர்க்க பேதமும், மிக உச்சமான நிலவுடைமை *மைப்பும் இந்திய சமூகத்திலும் இருந்து வந்துள்ளமை ல ஆய்வுகளால் இன்று நிரூபணமாகிவிட்டுள்ளது.
ஆயினும் புதிய புதிய வர்க்கங்கள் உருவாக )டியாமல் ஒரேவகைச் சாதிகளே சமூக மாற்றங்க நடன் தொடர்ந்து இருந்துவர முடிந்தது எவ்வாறு? கூர்மையான வர்க்கப் போராட்டமோ சமூகப் புரட்சிகளோ வடிக்காமலே சமூக மாற்றங்கள் இங்கே 1ற்பட மடிந்ததா? தொழிலாளி வர்க்கத் தலைமையில் ரான ரட்சிக்கு இங்கே அவசியம் இல்லையா? எமக்கன மூக மாற்றத்துக்கான பொது வேலைத்திட்டத்தை தாழிலாளி வர்க்க முன்னணிப்படை எவ்வாறு வரை றுக்கமுடியும்? திய சமூக அமைப்பில் பழைய சாதிகள் அதிகார ாற்றங்கள்
எமது சமூக மாற்றப் போக்கையும் வேறுபட்ட அமைப்பாக்கத்தின் தனித்துவப் பண்புகளையும் தெளி பாக வரையறுத்துக் கொண்டால் மட்டுமே இந்த பினாக்களுக்கான பதில்களைக் கண்டடைவோம். சல்வக் குவிப்பில் ஆண்டான்கள் அடிமைகளை பிலைக்குப் பெறுவதும், நிலவுடைமையும் பண்ணையடி மைத்தனமும், இன்று முதலாளிகளும் தொழிலாளிகளும் இங்கே காணப்படும் வகையில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு பந்திருப்பது தெளிவு. ஆயினும் தெளிவான வர்க்கப் பிளவு ாற்படாத காரணத்தால் பழைய வர்க்கங்கள் இல்லா தாழிந்து புதியன தோன்றுவதாகவன்றி, ஒரேவகைச் ாதிகளிடையே மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. கூர்மையான வர்க்கப்போராட்டமும் கொந்தளிக்கும் அரசியல் புரட்சியும் சமூக மாற்றத்துக்குக் காரணியாய் அமைவது வெளிப்படாமல், கருத்தியல் தளத்திலான டுமையான போராட்டங்களும், ஆன்மீகப் பண்பு
apruando - sa D

Page 31
மாற்றங்களுமே அரசியல் - சமூக மாற்றறங்களை வெளிப்படுத்துவனவாக இங்கே அமைந்துள்ளன. இந்தியா எனில் ஆன்மீகம் என மிகையழுத்தம் பெற இது ஒருவகையில் காரணமாகிறது.
உணவு சேகரிப்பிலிருந்து நிலத்தை உடை மையாக்கத்தக்க விவசாய முறை தோற்றம் பெற்றபோது பிராமணர்கள் சமூகத்தலைமைச் சக்திகளாயும் விவசாய மாற்றத்துக்கான உந்து சக்திகளாயும் விளங்கினர். வேள்வி நடத்தித் தீயில் விலங்குகளைப் பலியாக்கி அவற்றின் இறைச்சியைப் போதையூட்டும் மதுவுடன் உண்டு களிப்பது பிராமணச் சடங்காக அப்போது இருந்தது. ஆயினும் அது விவசாயப் பெருக்கத்துக்குரிய நிலவுடைமைச் சமூகம் அல்ல. அப்போது வணிகத்தினால் செல்வத்தைக் குவித்த பணியாக்கள் முதலிய வைசியர், சமூக அதிகாரம் மிக்க சக்தியாக வளர்ந்திருந்தனர். இந்தப் புதிய வர்க்கப்பிரிவின் கருத்தியலாக பெளத்தம், சமணம், ஆசீவகம் எழுச்சி பெற்று வைதீக எதிர்ப்பு மதங்களே அதிகாரம் பெற்றதான பொதுப்போக்கு உருவாகியிருந்தது. கொலை, களவு முதலிய பஞ்சமா பாதகங்களைக் கண்டித்து வேள்வியையும் பழித்து ரைத்து வைதீகத்தை வீழ்ச்சியுறச் செய்தன இப்புதிய சமயங்கள்.
தொடர் மாற்றத்தில் நிலவுடைமைச் சமூகம் எழுச்சி கொள்ளவும், வேள்வியில் தானியங்களையும் விலங் குகளையும் எரிப்பது விவசாயப் பெருக்கத்துக்குத் தடையாக அமைவதைக் கண்டும், மீள ஆட்சி பெறவும் புலாலுண்ணலை ஒழித்துப் புதிய வடிவில் பக்திக் கோட்பாட்டுடன் அரங்குக்கு வந்தது வைதீக நெறி. தமிழ்நாட்டின் இனக்குழு வழிபாட்டு நெறி பக்திக் கோட்பாட்டை உள்வாங்கிப் புதிய தள விரிவாக்கமுடைய பக்திப் பேரியக்கமாக விருத்தி செய்து கொண்டது. இந்த மாற்றத்தில் தலைமை தாங்கிய ஆட்சியாளரின் சாதியான வெள்ளாளர் நிலவுடைமையாளர்களானதுடன், தமது பங்காளிகளான பிராமணரையும் நிலவுடைமையாளர் களாக்கிக் கொண்டனர். வெள்ளாளரின் ஆன்மீகப் பிரதிநிதியாய் அன்று விளங்கிய நாவுக்கரசர் முன்னதாக சமணப் பள்ளியில் தன் அறிவை விருத்தி செய்தவர் என்பது கவனிப்புக்குரியது. வைதீக நெறித் தத்துவமான வேதக்கல்வி, பிராமணர்க்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டது. பின்னர் வைதீகநெறியில் ஆன்மீகத் தளத்திலும் தமது அறிவுத் தலைமையைத் தக்கவைக்க வேண்டி யதன் அவசியத்தை வெள்ளாளர் புரிந்து கொண்டனர். வேதத்துக்குக் குறைவற்ற வகையில் தமக்கான தத்துவத் தளமாக சைவ சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்துக் கொண்டனர். இவ்வாறு சமூகத் தளத்தின் ஆட்சி யாளர்களாகிவிட்ட பிராமணர்க்கு வேதம்- வேதாந்தம் ஆன்மீகத் தலைமையை உத்தர வாதப்படுத்தியது போல, சைவ சித்தாந்தம் வெள்ளாளரைத் தலைமை
Capanrusadio - si

நகரம்
-விருத்தன் நலம் தேடி வரும் நபர்கள் பிறர் நலம் நோக்கா வாழ்வில் சிக்கும் பெரு நகரம்
வசதி வேண்டி வசதி கூட்டி வசதியே வசதியீனமாகநுகர்வு வலைக்குள் வீழ வைக்கும்
பெரு நகரம்
உயர்வு நாடி உயர்வாய் நினைத்து மனம்
ஒப்பா வாழ்வே வாழத் தூண்டும் பெரு நகரம் போலிக்குள் சிக்கி போக்குகள் மாற்றி நடிப்பே வாழ்வாக்கி நாகரிகம் காக்கும் பெரு நகரம் பூமிப் பந்தின் பூரிப்பை இழந்து மனித நேயம் தவிர்த்து குச்சறைகளுக்குள் குறுகிப் போகும் மனித உருக்களொடு பெருநகரம்
لر - ܢܠ
கொள்ள வைத்தது. இந்த மாற்றப் போக்கில் தமது ஆதரவுத் தளத்தை மாற்றுவது அரசர்க்கு ஒரு பிரச்சனையாக இல்லை. முன்னதாக வணிக ஆதரவு அரசியலை வழிநடத்திய காலத்தில் சமணராய் இருந்த இந்த அரசர்களும் வெவ்வேறு பிரிவினரான வெள்ளாளரே என்பதால் செட்டியாளர்களுக்கான வணிகப் பாதுகாப்பு அரசியலை ஒழித்து பக்திப்பேரியக்க எழுச்சியுடன் வெள்ளாளர்க்கும் பிராமணர்க்கும் உரியதான விவ சாயத்துக்கான அரசியலை முதன்மைப்படுத்திக் கொண் டனர். தாமும் சைவ சமயிகளாக மாறிக் கொண்டனர்.
அந்தவகையில் பக்திப் பேரியக்கம் சமூக மாற்றத்துக்கான புரட்சியில் ஒரு வடிவமே; இத்த
29 )

Page 32
கைய பண்பாட்டுப் புரட்சியின் வாயிலாகப் பெறப்பட்ட
அரசியல் வெற்றியைக் கொண்டு அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகப் பெளத்த-சமணப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டும் அவற்றின் ஆன்மீகத் தலை வர்கள் நூற்றுக்கணக்கில் கழுவிவேற்றப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்டும் மதமாற்றத்துக்கு அடிகோலிப் புதிய அதிகார வர்க்கம் தனது தலைமையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. பின்னர் வைதீக நெறி வரையறுத்த சாதியப்படிநிலை வலுவான அரச ஒடுக்கு முறைக்கு அவசியமற்ற வகையில் நிலவுடைமைச் சமூகக் கட்டமைப்பைப் பேணி வளர்க்க முடிந்தது.
சாதிய உறவு முறை நிலவுடைமை அமைப்புக்கு மிகவும் உகந்ததாக அமைந்தது. ஆயினும் சாதிகள் நிலவுடைமைச் சமூக உருவாக்கத்துக்கு முன்னரே இருந்து வந்தவைதாம். கிரேக்க-ரோம் சமூகங்களில் போல இங்கே இனக்குழுக்கள் தகர்ந்து வர்க்கங்களாகத் தொடரும் வரலாறொன்றை இந்து சமயத்தால் தொடர வைக்க முடியுமாயிற்று. வெற்றி பெற்றவை சுரண்டும் சாதிகளாகித் தோற்கடிக்கப்பட்டவற்றை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக்கிக் கொண்டன. நிலவுடைமையாளர்களான பிராமணர்களும் வெள்ளா ளர்களும், வணிகம் செய்த செட்டியார்களும் மட்டுமல்ல நிலத்துடன் பிணைக்கப்பட்டு பண்ணையடிமைகளாக் கப்பட்ட பறையர்களும் முன்னதாக வீரயுகக் காலந் தொட்டு இருந்துவரும் சாதிப்பிரிவினர்தாம். அப்பழைய காலத்தில் கருங்கை சிவக்கப் பறை முழங்கும் அவர்கள் கொற்றவை வழிபாட்டின் வெறியாட்டுக் களத்தில் முதனிலை பெற்ற ஆன்மீகப் புனிதம் மிக்கவர்களாயும், அரசுடன் சம ஆசனம் பெற்றவர்களாயும் விளங்கியவர் கள் என்ற அடிப்படை வேறுபாடு கவனிப்புக்குரியது. “பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதியானான்" என்ற சொலவடை இதனை உணர்த்தும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலத்தோடு நிலமாக உரிமை இழந்த கூட்டமாய் உழைக்க ஏற்றதாகப் பின்னர் அவர்கள் அடிநிலைச் சாதியினராக்கப்பட்டது தனிநிலை ஆய்வுக்குரியது.
அவ்வாறே பண்ணையடிமைகளாக்கப்பட்டுள்ள மற்றொரு தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கும் சாதிப்பிரிவினர்களான பள்ளர்கள் நிலவுடைமை உச்சம் பெறும் வரை அவ்வாறு ஒரு நிலை பெறாத பழைய சுதந்திரம்மிக்க சாதிப்பிரிவின் தொடர்ச்சியினரே. பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளின் முன்வரை பள்ளர் எனும் குழுவினரே அவர்கள் எனவும், பள்ளப் பகுதிகளில் வாழ்ந்து உயர் விளைச்சல் பெறமுடியாமல் ஒடுக்கப்பட்டுவிட்ட வெள்ளாளரின் ஒரு பிரிவினரே அவர்கள் எனவும், இருவேறு கருத்துக்கள் உண்டு. இவ்வாறு மாற்றம் பெற்றோ, அல்லது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கான வாழ்முறை மாற்றத்தால் கிளை
C 30

ட்டோ பழைய சுதந்திரம்மிக்க சாதிப்பிரிவின் ஒரு நாடர்ச்சியே பள்ளர் சாதி என உருவாகியிருக்கிறது ன்பது மறுக்க முடியாதது. சாதிகளது இருப்பு அந்தஸ்து றுபட்டபோதிலும் பழைய குழு முறைத் தொடர்ச்சி டிப்பதை இவை காட்டுகின்றன. அந்த வகையில் தனி Eதனாக உடைத்த வர்க்கப் பிளவாகவன்றி முழு னக்குழுவும் உயர்சாதியாகவோ அல்லது படிநிலை றக்கத்துடன் உரிமை இழக்கும் சாதிகளாகவோ க்கப்பட்டது இந்திய வாழ்முறை ஆயிற்று.
ஏறத்தாழ ஆயிரத்தைனுறு வருட வரலாற்றை டைய நிலவுடைமை அமைப்பில் சாதியம் அதற்குரிய லுவான கருத்தியலை வளர்த்தெடுத்துள்ளது. காலப் ாக்கில் அரச அதிகாரத்தைக் கொண்டும் சாதியக் நத்தியல் மூலமாகவும் நிலத்தைவிட்டு வெளியேற டியாதவர்களாய் பண்ணையடிமைச் சாதியினரும் கவினைஞர்களான இடைச்சாதியினரும் மாற்றப் டார்கள். தீண்டாமையும் உரிமைகளின் வரையறையும் வற்றுக்கு அனுசரணையாக அமைந்தன. ஒரு தியினருக்குரிய உரிமை மீறல் அதிகாரச் சாதியை டவும் அருகிலுள்ள அடுத்தவொரு நெருக்கமான தியினாலேயே கண்காணிக்கப்படுவதாய் இருந்தது. யர் தளத்தில் இருந்த ஆதிக்க சக்திகளுடனான )ாதலைவிட மற்றொரு உரிமை மறுக்கப்பட்ட சாதியுடன் வ்வொரு உழைக்கும் சாதியும் போராட வேண்டி ருந்தது. இவ்வாறு உச்சியில் பிராமணர், வெள்ள ஊர் னும் இரு சாதிகளைக் கவசமாகக் கொண்ட பிரமிட்டு ஒவக் கூம்பகக் கோபுரத்தின் கீழிறக்கத்தில் உரிமை ழந்த பல நூறு அடிநிலை சாதிகள் இருப்பதாக மைந்துள்ளன. இந்தச் சாதியச் சமூக முறைமை லப்பிரபுத்துவ வர்க்கத்தினருக்கு அபரிமிதமான ளப்பெருக்கத்தை அபகரிக்க ஏற்ற அமைப்பாய் ருந்தது.
இந்த அமைப்பினுள் வணிக வர்க்கத்திடம் வளர்ந்த ணிக மூலதனத்தை தொழில் மூலதனமாக மாற்றவும், கவினைச் சாதிகள் பட்டறைத் தொழில் விருத்தியூடாக தலாளி வர்க்க உருவாக்கத்துக்கு மாறவும் தடைகள் ருந்ததைப் போலவே சாதக அம்சங்களும் இருந்தன. 5ட்டி தட்டிப்போன சாதியம் தடையாயினும் வர்ணக் ாட்பாடு சமூக மாற்றத்துடன் மாறக்கூடிய கருத்தியல் தாக்கத்துக்கு இடமளித்துவந்ததினால் புதிய சமூக ருவாக்கத்துக்கு புதிய சக்திகள் வழிகோலியிராது ன்பதில்லை. ஆயினும் வரலாறு அதற்கு வாய்ப்பை ழங்காமலே காலனித்துவத்தினுடாக புதிய வர்க்க றவையும் அதனுடன் இணைந்த மாற்றங்களையும் றிமுகப்படுத்திவிட்டது.
நன்றி சமூக-பண்பாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல்வரிசை வெளியீடான 'சாதியமும் சமூக மாற்றமும்'
anrusando - su D

Page 33
மீன்களுடன் ஒரு நடைப்பயணம்
-யூரீ
இது பத்து வருடங்கட்கும் முன்பு நடந்த கதை. நான் அதிகம் பயணஞ் செய்கிறவனல்ல. பயணஞ் செய்கிற உந்துதலும் குறைவு. என்றாலும் தொழிலுக் காக வெளிநாடுகட்குச் சில தடவைகள் போய் வந்தி ருக்கிறேன். சீனாவில் ஷென்ஜென் நகருக்கு ஒரு வேலையாகப் போகவேண்டியிருந்தது. என் பழைய நண்பர் ஞானம், ஹொங்கொங் நகரில், நீண்ட காலமாக ஒரு நெடுமாடிக் கட்டடத்தில் ஒரு மனையில் தனியாக வாழ்ந்து வந்தார். அவருடன் கடிதத்தொடர்பு இருந்து வந்தது. ஷென்ஜென் ஹொங்கொங்கிற்கு அண்டிய நகரம் என்பதால், ஹொங்கொங் வழியாக செல்வதே மிக வசதியாயிருந்தது.
என் பயணம் பற்றி ஞானத்துக்கு எழுதினேன். தன்னுடன் ஓரிரு நாட்களாவது தங்கிச் செல்லுமாறு கேட்டு மறுமொழி எழுதினார். எனவே திரும்பி வரும் வழியில் அவருடன் தங்குவதற்கு ஏற்றபடி, என் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டேன்.
சீனா பற்றி எனக்கு இருந்த நல்ல எண்ணமெல்லாம் ஷென்ஜென்னில் அடியெடுத்து வைத்த போதே குலைந்துவிட்டது. புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறியதும், நான் கண்ட முதலாவது காட்சி, ஒரு பெண் குப்பைத் தொட்டிக்குள் கையைவிட்டு அதற்குள் வீசியெறியப்பட்ட உணவை எடுத்து உண்டது. அதன் பின்பு தெருவழியே பிச்சைக்காரர்களைக் கண்டபோது எனக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை.
அகலமான நடைபாதைகளின் முழு நீளத்திற் கும் சீனாவின் மறு கோடியிலிருந்து வந்த உய்குர் இனத்து வியாபாரிகள் கடை விரித்திருந்தார்கள். உலர் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், த்டைசெய்யப்பட்ட பொருட்களான, விலங்குகளின் உடல் உறுப்புக்கள் பலவும் பரவி வைக்கப்பட்டிருந்தன. பொலிஸ்காரர்கள் அதைக் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை.
புகையிரத நிலையத்துக்கு அருகிலிருந்த ஒரு ஹோட்டலில் தான் எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை உணவுக்காக வெளியே போகவேண்டியிருந்தது.
C annuatio - st

விடுதலை செய்வதற்காக எவ்வளவு மீன்கள் பிடிக்கப்படு கின்றன, எத்தனை பறவைகள் பிடிக்கப்பட்டுக் கூண்டில் அடைக் கப்படுகின்றன என்ற எண்ணம் மனதில் எழுந்தது. மீன்களைப் பிடிக்கும்போதும் விடுவிக்கும் போதும் எத்தனை மீன்கள் இறக் கின்றன? பறவைகளைப் பிடிக்கும் முயற்சியில் எத்தனை பறவைகள் முடமாக்கப்படுகின்றன, அல்லது இறக்கின்றன? விலங்குகளை விடு விக்கிறவர்கள் தமது இரக்க உணர் வைக் காட்டுவதற்காகவே விலங்கு களைச் சிறைப்பிடிக்க நேருகிற தென்றால், அவர்கள் செய்கிற புண் னியத்தைவிடப் பாவம் அதிக மில்லையா?
போகிற வழியில், ஆண்களும் பெண்களும் என்னை நெருங்கி வந்து, சத்தமாக ஏதோ சொன்னார்கள். ஒன்றும் , விளங்கவில்லை. அருகாக நடந்துகொண்டிருந்த ஒரு ஐரோப்பியரிடம் கேட்டேன். சிரித்துக் கொண்டு, “உமக்குப் பெண் துணை வேண்டுமா என்று கேட்கிறார்கள்" என்றார். இவ்வளவு பகிரங்கமாக விபசாரம் நடக்குமென எதிர்பாராத எனக்கு, ஒன்றுமட்டும் தெளிவாகியது. சினா மிகவும் முன்னேறிவிட்டடது- அடையாளந் தெரியாதளவுக்கு
அதற்குப்பிறகு, எப்போது திரும்புவோம் என்ற நினைவு மட்டுமே மனதில் மிஞ்சியிருந்தது. உயர்ந்த கட்டடங்களையும் அகலமான வீதிகளையும் விலை யுயர்ந்த மோட்டார் வண்டிகளையும் விட, மனித இருப்பு எவ்வளவு தூரம் இழிந்து போய்விட்டது என்பதே என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
வாழ்க்கை என்னவோ துரிதகதியில் ஓடிக் கொண்டிருந்தாலும், ஹொங்கொங் உயிரோட்டமுள்ள ஒரு பெருநகரமாயிருந்தது. சிங்கப்பூரின் இயந்திர வாழ்வையோ ஷென்ஜென்னின் சமூகச் சீரழிவையோ அங்கு வெளிவெளியாக அடையாளங்காணக்கூடியதாக இருக்கவில்லை. நான் ஒரு சனிக்கிழமை காலை அங்குபோனதால், நாள்முழுவதும் என்னுடன் சுற்றித்
31 )

Page 34
திரிந்த பிறகு, ஞாயிறு காலை, தன்னுடன் ஒரு நீண்ட நடைப்பயணத்துக்கு வருவேனா என்று ஞானம் கேட்டார். ஹொங்கொங்ாBல் செய்வதற்கு எனக்கு எதுவும் இருக்கவுமில்லை. ஷென் ஜென் அனுபவத்தின் தாக்கத்திலிருந்து என் மனத்தை ஆற்றுவதற்கு இந்த உலாத்துப் பயன்படும் போல தோன்றியது. தயங்காமல் ஒமென்றேன்.
மறுநாட்காலை சீனப் பெண் ஒருவர் வந்தார். "இவர்தான் என் சின்ேகிதி லெஸ்லி" என்று எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார். ஆளுக்காள் மிகவும் உதவுகிற ஒரு நெருக்கமான நட்பு அவர்களிடையே இருப்பதாகத் தோன்றியது. மாதத்தில் ஒரு ஞாயிறு லெஸ்லியுடன் இந்த நடைப்பயணம் போவதாகவும் இந்த ஞாயிறு அதற்குரிய நாளென்றும் ஞானம் விளக்கினார், லெஸ்லி தெளிவாக ஆங்கிலம் பேசியதால் நாம் உரையாடுவதிற் சிரமம் இருக்கவில்லை. நடைப் பயணம் முடிந்த பின்பு, ஒரு பெளத்த மரக்கறி உணவு விடுதியில் சாப்பிடுவோம் என்று ஞானம் சொன்னார். எனவே ஒரு சிறிய துண்டுப் பாணை உண்டு தேநீரையும் பருகி விட்டுப் புறப்பட்டடேன். ஞானமும் லெஸ்லியும் எதையுமே உட்கொள்ளவில்லை.
பஸ் ஒன்றிலேறி ஒரு மலைப்பகுதிக்குச் சென்றோம். கொஞ்சம் உயர நடந்து சென்றபோது, அங்கே ஒரு சிறிய கட்டிடத்தருகே இருபது முப்பது பேரளவில் நின்றார்கள். “நாங்கள் நடப்போமா?" என்று கேட்டேன். “இன்னும் கொஞ்ச நேரத்தில், வேறு சிலரும் வர வேண்டும்" என்று லெஸ்லி விளக்கினார். “சரி” என்று சொல்லிவிட்டு அந்த அயலில் நடப்பதைக் கவனித்தேன். ஞானமும் லெஸ்லியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பெரிய வாளிகள் நிறைய நீருடன் நாலைந்து பேர் நின்றார்கள். குடிப்பதற்கான தண்ணீராக இராது என்பது மட்டும் நிச்சயமாயிருந்தது. வேறு சிலர் கூண்டுகளில் பறவைகளை வைத்திருந்தார்கள். உலாத்தப் போகி றவர்கள் போலத் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் ஓரிருவர் அவர்களிடம் சென்று கூண்டுகளுடன் பறவைகளை வாங்கினார்கள். ஞானமும் லெஸ்லியும் என்னை வாளிகளை வைத்திருந்தவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வாளிகள் நிரம்பச் சாம்பல் நிறத்தில் மூன்று நாலங்குல நீள மீன்கள் கிடந்தன. ஞானம் மூன்று பொலித்தீன் பைகளில் மீன்களை வாங்கி, லெஸ்லியிடமும் என்னிடமும் ஒவ்வொன்றைத் தந்தார். மற்றவர்களும் மீன்களை வாங்கிய பிறகு, அந்தக் குழுவின் தலைவர் போலத் தெரிந்த ஒருவர் முன்னே நடக்க, எல்லாரும் அவருக்குப் பின்னால் நடந்தோம்.
கீழ் நோக்கிச் செல்லும் சரிவான கொங்கிறீற் பாதை வழியே எல்லாரும் நடந்து போனோம். போகிற வழியில், "இந்த மீன்களை என்ன செய்கிறது?" என்று ஞானத்
C 32

திருக்குமரன் கவிதைகள்
நூல்: கவிதைத் தொகுப்பு நூலாசிரியர்:திதிருக்குமரன் விலை: ரூ.150/- 'திருக்குமரனின் கவிதை கள் அவர் இக்காலப்பகுதி யில் பிறந்ததற்காக பெரு மைப்படுகிற காலத்தை பிரதிபலிக்கின்ற கவிதை களை கொண்ட தொகுப் பாகத் திகழ்கின்றது. கவிஞன் காலத்தைப் பிரதி பலிப்பதுடன் நின்றுவிடாது மாற்றுவதற்கான உந்து சக் தியாகவும் திகழ வேண்டும் என்ற வகையில் சில கவி தைகள் கவனிப்புக்கு ரியன. அகநிலைப்பட்ட கவிதைகளில் கவித்துவ வீச்சு இலாவகமாக அமைந்துள்ளதுடன் வெளிப்படுத்துகை யுக்தி மிக்கதாகவும் கவிதைகள் ரசனைக்கு உரியனவாகவும் ஆழமான வாசிப்புக்குரியனவாகவும் திகழ்கின்றன.
لم ܢܠ
திடம் கேட்டேன். "நிச்சயமாகச் சாப்பிடமாட்டோம்." என்று வேடிக்கையாகச் சொன்னார். “இன்னுங் கொஞ்ச நேரத் தில் எல்லாம் தெரிய வரும்" என்று லெஸ்லி சொன்னார்.
ஒரு திகிலூட்டும் நாவலின் இறுதி அத்தியாயத்தை நோக்கி விரைகிற துடிப்புடன் இல்லாவிட்டாலும், ஏதோ அந்த மாதிரி ஒரு உணர்வுடன், மீன்கள் இருந்த பையை இடையிடையே பார்த்துக் கொண்டு நடந்தேன். நிழல் மரங்கள் அடர்ந்த பாதை. இரண்டு, மூன்று கிலோ மீற்றர் நடந்திருப்போமென நினைக்கிறேன். பாதையோரமாகத் துப்பரவாக்கப்பட்ட சிறிய வெளியொன்று இருந்தது. கொஞ்சத் துரத்தில் ஒரு நீரோடை சலசலத்தது. பாதை அதற்கு மேலாக ஒரு பாலத்தின் வழியே தொடர்ந்தது.
எங்களுக்கு முன்னாற் போனவர்கள், அந்த வெளியிற் போய் நின்றார்கள். என்கையிலிருந்த பையைப் பார்த்தேன். மீன்களில் அரைவாசி துடித்துக்கொண்டிருந்தன. மற்றவை அசைவின்றிக் கிடந்தன. எங்களுடன் வந்த எல்லாரும் அங்கு கூடியபிறகு, காவியுடுத்த ஒருவர் அங்குவந்து சேர்ந்தார். அவருடன் வந்தவர்கள் சில புத்தகங்களை எங்களிடையே விநியோகித்தார்கள். அதில் எல்லாமே திபெத்திய எழுத்துக்களில் இருந்தன.
annuatio - se D

Page 35
வந்தவர் ஒரு திபெத்திய லாமா என்று தெரிந்தது. அவர் புத்தகத்தைப் பார்த்து ஓதத் தொடங்கினார், வந்தவர்களில், சிலர், அவருடன் சேர்ந்து ஓதினார்கள். வேறு சிலர் வாயை மட்டும் அசைத்தார்கள். எனக்கு மீன்களைப் பற்றியே யோசனையாக இருந்தது. சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் இல்லாமல் எல்லாமே இறந்துவிட்டன என்று நினைத்துக் கொஞ்சம் மனவருத்தமாக இருந்தது.
அரைமணி நேரமாக ஒதியவற்றில் ஒருசில சொற்கள் மட்டும் விளங்கின. அதை வைத்து, அவை பெளத்த சூத்திங்கள் என்று ஊகித்துக்கொண்டேன். மனம் மட்டும் மீன்களிடமே இருந்தது.
ஓதி முடிந்த பின்பு, ஒவ்வொருவரும் பெளத் தத்துறவியிடம் போனார்கள். ஒரு கமண்டலத்தில் வைத்திருந்த நீரை மீன்கள் இருந்த பைகள் மீதும் கூண்டுகளில் இருந்த பறவைகள் மீதும் தெளித்து ஆசீர்வதித்தார். என்னுடைய பையிலிருந்த மீன்களும் ஆசீர்வதிக்கப்பட்டன, ஆனால் அசையவில்லை. பின்பு எல்லாரும் பாதையருகே இருந்த படிக்கட்டின் வழியாக இறங்கி, நீரோடை வரை சென்று, மீன்களை நீரில் கொட்டினார்கள். நானுங் கொட்டினேன். மீன்கள் கணப்பொழுதில் மயக்கந் தெளிந்து துள்ளி நீந்தத் தொடங்கின. ஒரு சில இறந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது பற்றி யாரிடமும் சொல்ல மனம் வரவில்லை.
மேலே பறவைக்கூண்டுகளுடன் நின்றவர்கள் கூண்டுகளைத்திறந்து பறவைகளைப் பறக்கவிட்டனர். அதன்பின்பு, எல்லாருமாகப் பாலத்தைக் கடந்து சென்று, பெளத்த உணவு விடுதியை அடைந்தோம். மாமிசம் போல தயாரிக்கப்பட்ட சோயா உணவு உட்பட்ட பல்வேறு உணவு வகைகள் இருந்தன. ஞானமும் லெஸ்லியும் நானும் எங்களுக்கு விரும்பியவற்றை வாங்கிக்கொண்டுவந்து சாப்பிடத் தொடங்கினோம்.
சாப்பாட்டின்போது, நாம் கலந்துகொண்ட சடங்குபற்றி ஞானம் எனக்கு விளக்கினார். ஞானம் ஏதாவது விவரத்தைப் பிழையாகச் சொன்னால், லெஸ்லி அதைத் திருத்தினார். விஷயம் என்னவென்றால், வளர்ப்புப் பிராணிகளாகப் பறவைகளையும் மீன்களை யும் வைத்திருப்பது கிழக்காசியாவில் பரவலாக நடைமுறையில் உள்ளது. இது விலங்குகட்குக் கொடுமையானது என்பதால், அதைத் திருத்துவதற் காகச், சிறைப்பட்ட வளர்ப்புப் பிராணிகளை விடு விக்கும் ஒரு இயக்கம் ஒரு பெளத்தத் துறவியால் தொடங்கப்பட்டது. அதை அடையாளப்படுத்தும் முறையில் இவ்வாறு மீன்களையும் பறவைகளையும் விடுவிக்கும் இச்சடங்கு நடக்கிறது. ஞானமும் லெஸலியும், என்னையும் இந்தப் புண்ணிய காரியத்தில்
( anuaio - se

இரை மீட்கலாம்
-காலையூரான்
நனவிடைத் தோய்ந்து நலம் பெறலாம் அமைதி நிலவுமென்ற 67660Tb QuNTgUL நிகழ்வுகள் இன்று நிம்மதி குலைக்குமெனில் வேறென்ன!
உறவுகள் உருவம் மாறுமெனில் 6ğMüyü ஏமாற்றமாயின் குத்துவெட்டுக்குள் நேயமழிந்திட இறந்த காலத்துள் தேடித்திரியலாம் உறவுகளை
உலகம் சுருங்க ஆளை ஆள் ஆள உறவுகள் விலக்கும் உலக ஒழுங்குக்குள் பந்தங்களை எங்கு தேட
இன்றைய தொடர்ச்சியில் இனிவரும் நாட்கள் எங்கனம் மாறுமோ?
டிஜிற்றல் நுட்ப யுகத்தில் வீழும் நாளைய மனிதர் அதிகாரம் இல்லா அன்பில் சமத்துவ நெறியில் உணர்வரோ உறவின் மேன்மை.
நாளை நமக்கு கற்பனையில் மட்டுமே உறவு!
வேறென்ன மானிடர் எழுந்து Ꮥ ᏮᎠᎦᎠᏧᏏ மாற்றிடா வரையில் இணையம் மூலம் இறந்த காலத்தை இரை மீட்டு இன்புறுவோம்!
33

Page 36
ஓ, அவனை அவனுடனு வருடக்கண அவன் கலை தன் தந்தை, தன் மக்கள், கடைசியாக தன் வீடு, சே பாதி திறந்த அனைத்தை 956060T 6 கதவைத் திற அவர்கள் அ பிரான்சிலும் திரிந்தபோது பப்லோ நெருடா அவன் இறர் (Pablo Neruda) முகத் வனது உ (சிலே தேசத்தவர்) திடீரென ஒரு வெண்பனி ப GD66) DITE நெருடாவின் நூறாவது பிறந்த தினத்தை குதிரை மேல் (12.07.2004) ஒட்டி இக்கவிதை நெடுந்தொை பிரசுரமாகின்றது. அங்கே என் அவனது மு அவனது உ அவனது நா அல்லலுக்க நாடு கடத்த கல்லாய்ச்ச6
இணைத்த பெருமையுடன், ஆளுக்காள் முறுவலித்துக் கொண்டார்கள்.
எனக்கு முதலில் இது ஒரு மிக நல்ல காரியம் போலத் தெரிந்தது. பிறகு யோசித்தபோது, இவர்கள் விடுதலை செய்வதற்காக எவ்வளவு மீன்கள் பிடிக் கப்படுகின்றன, எத்தனை பறவைகள் பிடிக்கப்பட்டுக் கூண்டில் அடைக்கப்படுகின்றன என்ற எண்ணம் மனதில் எழுந்தது. மீன்களைப் பிடிக்கும்போதும் விடுவிக்கும் போதும் எத்தனை மீன்கள் இறக்கின்றன? பறவை களைப் பிடிக்கும் முயற்சியில் எத்தனை பறவைகள் முடமாக்கப்படுகின்றன, அல்லது இறக்கின்றன?
C 34
 

பாறையிலோர் உருவப்படம்
நன்றாக அறிவேன் ) அவனுடைய தங்கமான உறுதியான தன்மையுடனும் $கிற் பழகியிருக்கிறேன்
ாப்புற்ற ஒரு மனிதன்
தாய்
மருமக்கள்
வந்த சம்பந்திகள்
ாழிகள்
சில புத்தகங்கள் யும் பரஹரவாயில் விட்டு வந்தவன் சலுக்கு அழைத்தனர் ந்ததும் அவனைப் பொல்சார் கொண்டு சென்றனர் வணை உதைத்த உதையில் டென்மார்க்கிலும் ஸ்பெயினிலும் இத்தாலியிலும் இரத்தங்கக்கினான்
து போனான் தைக் காண்பதை நான் நிறுத்தினேன் ன்னதமான மெளனத்தை நான் கேட்பது முடிவடைந்தது டு நாள ரவக் கடுமையாகக் காற்றடித்த ஒரு இரவில் ன போர்வை மூட மலை மீது
) அமர்ந்து, அங்கே
லவை நோக்கினேன்
நண்பன்
கம் கல்லில் உருவாகியிருந்தது. ருவம் கொடிய பருவநிலைக்குப் பணிய மறுத்தது funj) 6.jpg 1ளானோரின் முனகல்களைத் திணித்தது பட்டவன் அங்கு தரைக்கு வந்தான் மைந்து தன் தாய்நாட்டில் வாழ்கிறான்
விலங்குகளை விடுவிக்கிறவர்கள் தமது இரக்க உணர்வைக் காட்டுவதற்காகவே விலங்குகளைச் சிறைப்பிடிக்க நேருகிறதென்றால், அவர்கள் செய்கிற புண்ணியத்தைவிடப் பாவம் அதிகமில்லையா?
ஞானத்துடனும் லெஸ்லியுடனும் என் எண்ணங் களைப் பகிர மனம் வரவில்லை. அவர்களுக்கு மன நிறைவு தந்த ஒரு காலைப்பொழுதை அவர்களுடைய விருந்தாளியாகச் சென்ற நான் பழுதாக்குவது சரியென்று தோன்றவில்லை.
மனம் ஷென் ஜென்னுக்கு மீண்டது.

Page 37
நீ.பி. அருளா
வீசிக்கொண்டிருந்த காற்றினால் அசைந்த பனையோலைகளின் சலசலப்புச் சத்தத்தைக் கேட்டபடி, முருகனின் படத்தைப் பார்த்துக் கொண்டு பசுபதி கட்டிலின் மீது படுத்துக்கிடந்தார். பூஜையறையென்று மட்டு மில்லாது படுக்கையறையிலும் வேல் பிடித்து நிற்கின்ற இந்த வேலவனின் படத்தை, இப்பொழுது அவர் தன் கண் பார்வையில் எந்நேரமும் படும்படி இருக்கின்றதாயிருக்க நடுச்சுவரில் மாட்டிவைத்துக் கொண்டு விட்டார்.
இலைகள் உதிர்ந்து முட்கள் மட்டுமே எஞ்சி யதைப்போலிருக்கும் முதிர்ந்த இந்த வயதில், முருகனின் திருவுருவைக் காணும் போதெல்லாம் அவரது இதயம் பண்ணிசைத்து மகிழ்கிறது.
இரவில் படுக்கையிலும் படத்தினடியில் இருந்து வரும் அந்த அகல் வெளிச்சத்தில் முருகனைப் பார்த்துக் கொண்டே, ஒவ்வோரிரவும் கண்மூடித் துயில்வதுதான் இப்போதேல்லாம் அவரது வாழ்வின் வழமையான செயல்.
பசுபதி கட்டிலின் மேல் ஒருக்களித்துப் படுத்தவாறு கீழே நிலத்தில் பாயை விரித்துப் படுத்துக்கிடந்த தன் மனைவியையும் பார்த்தார். தன் இதயக் குரலைத் தானே உற்றுக் கேட்பவள் போல் இடது தோள் பட்டையை நோக் கித்தான் தலையை சாய்த்துக்கொண்டு அவள் நித்திரை கொள்வாள். அவருக்கு இரவில் விழிப்பு வரும்போ தெல்லாம், அவளது முகத்தைப் பார்த்து ஆறுதலடைய இயலுமானதாக இருந்தது.
G asmutati» - si
 

னந்தம்
இந்த முதிர் வயதில், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சேர்த்து ஒருங்கே பிணைத்து நெய்துவிட்டது போன்ற தன் மனைவியினுடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவருடைய மனம் சாந்தியடைகிறது.
மனைவியின் முகத்தில் பதிந்திருந்த தன் பார்வையை விலக்கி மீண்டும் முருகனின் திருவுருவில் பதியவைத்தார் சுபதி. ஒருகாலம், இன்பமாக இலங்கிய தன் வாழ்க்கை இன்று துன்பச் சுழிப்புக்குள் அகப்பட்டு வேதனைப் படுகிறதே என்று அவர் மனம் அப்போது வெம்பியது. உடனே பற்களற்ற வாய்க்குள் புதைந்து விட்ட அவரது உதடுகள், இதனால் சோகத்தில் துடிதுடித்தன. சன்னலின் ஊடே வீசிய மென் காற்று முருகனின் படத் துக்குக் கீழே அகலிலிருந்து வந்த வெளிச்ச வட்டத்தை அங்குமிங்கும் ஆட வைத்தது. ஒரு பக்கம் ஒளிகாட்டி இன்னொரு பக்கம் இருள் காட்டிக் கொண்டிருந்தது அந்த அகல்.
அவரும் உறங்குதற்கு இமை பொருந்தாததால், பட்டுக்கையில் படுத்திருக்க விருப்புக் கொள்ளாமல் எழுந்து சம்மணமிட்டவாறு உட்கார்ந்து கொண்டார்.
படத்தினடியில் இருந்து அலைபாயும் அந்த வெளிச் சத்தில் கட்டிலிலிருந்தவாறு குனிந்து தன் மனைவியின் முகத்தைப் பார்த்தபோது, கண்களை மூடியபடி நைந்து தளர்த்த விழிக்குழிகளிலிருந்து மெளனமாக அவள் கண்ணிர் விடுவது தெரிந்தது. உடனே திடுக்கிட்டுப் போய்ப்
35 )

Page 38
பொட்டணம் போல் அசையாமல் கிடக்கும், அவளது மேனியிலே அவர் கைவைத்து அவளை உலுப்பினார்.
“என்ன. என்ன?"
கேட்கும் பொழுதே - மனைவியின் தோள் மீது பதிந்திருந்த அவரது கையும் இலேசாக நடுங்கியது. அவளைக் கண்ணிர் சிந்த வைத்திருக்கும் காரணம், அவருக்கும் தெரியாமலா இருக்கும்? அனிச்சையாக அவரின் வாய்தான் ‘என்ன ஏது' என்று அவள் அழுதற்குரிய காரணத்தை கேட்டு வைத்ததேயொழிய, மனதிலே அவருக்கு அவள் அழுவதற்கான முழுக்கார ணமும் இதுதானென்று நிச்சயமாகத் தெரிந்தது.
“என்ன நடந்ததுனக்கு. இந்த ஏமம் சாமத்திலை ஏன் அழுகிறாய்?"
எல்லாம் தெரிந்திருந்தும் திரும்பவும் அவரால் இப்படி மாத்திரம் கேட்காதிருக்க முடியவில்லை! அழுத கண் களாக இருக்கும் அவளை கொஞ்சம் ஆற்றித் தேற்று வதற்கு, ஆறுதல்வார்த்தைகள் உதவும் என்பதை அப் போது அவர் உணர்ந்தார்.
“நீங்கள் படுத்து நித்திரை கொள்ளுங்கோ. சாமப் பொழுதாகவெல்லே ஆகுது. இப்பவும் ஏன் முழிச் சிருக்கிறியள்?"
“நீயிப்பிடி அழுது கொண்டிருக்கிறதைப் பாத்தாப்பிறகு எனக்கெப்பிடியினி நித்திரை வரும். இப்பிடியே நீ உதுக ளையெல்லாம் நெச்சுக் கவலைப்பட்டுத்தான் என்ன புண்ணியம்?"
“நீங்க இப்பிடிச் சொல்லுறியள் ஆனா, என்னாலை அதுகளை நெக்காமலிருக்க முடியேல்லையே, இந்தப் பிள்ளையளைப் பெத்து ஆமானதாய் வர வளத்து விடுறத்துக்கு நான் எவ்வளவு பாடுபட்டன். அதை யெல்லாம் இப்ப அதுகள் மறந்து போன மாதிரியெல்லே கதைக்குதுகள்"
“பிள்ளையஸ் உப்பிடித்தான். என்னிலும் பிழை கனக்கவாய் இருக்கு. பிற்காலத்திலை கையிலை மடியிலை இருக்கவேணுமெண்டுற நினைப்பு காசு பணத்தை உழைக்கேக்கிள்ளை எனக்கு அப்ப இல்லாமப் போச்சுது. அந்த நேரம் ஆவ் ஆவெண்டு பறந்து பறந்து உழைச்சும் அதுகளை நான் கண்விண் தெரியாம சில வழிச்சதாலதான் இப்ப எங்களுக்கு படு இடைஞ்சல்பாடு
வந்திருக்கு. இனி என்னதான் செய்யிறது. கை
காலிலையும் எனக்குப் பெலனில்லாமல் போச்சுது. நெஞ்சும் பறமேளமடிச்சதுமாதிரி படபடவெண்டுமடிக்குது உப்புடியெல்லாமே இருக்கிற வருத்தத்தையெல்லாம் வைச்சுக் கொண்டு இனிமேல உழைப்புப் பிழைப்புக் கெண்டு என்ன வேலையைத்தான் என்னால செய்யேலும்"
சொல்லிவிட்டு பசுபதி ஒரு ஏக்கப் பெருமூச்சை வெளியேற்றினார்.
C 36

“சீச்சீ ஏன் உப்பிடியெல்லாம் கதைக்கிறியள். இதுதான் நான் ஒண்டும் உங்களுக்குச்ச் சொல் றேல்லை. இப்பிடியிப்பிடிக் கதைச்சு நீங்க இனி உங்களுக்குள்ள வருத்தத்தையும் பெருப்பிக்கப்போறியள்"
*ம். இந்தச் சீவனைப்பிடிச்சு வைச்சுக் கொண்டு இப்பிடியே கிடந்து அவஸ்தைப்பட்டுத்தான் என்ன இனிவரப்போகுது எனக்கு. படுக்கையே பாடையாப் போகிற கடைசி நேரமாகவும் வந்திட்டுது. என்ன இந்தப் பிள்ளையன் எங்களை யோசிச்சுப் பாக்குதுகளில்ல. நாங்கள் அதுகளுக்குச் செய்ததுகளையெல்லாம் மறந்திட்டு எங்களுக்குத் தாங்கள் செய்யவேண்டியது களையெல்லாம் அதுகளிப்ப கணக்குப் போட்டுப்பாக்கு துகள். சீவிக்க ஒரு வழியும் எங்களுக்கு இல்லை யெண்டு நல்லாத் தெரிஞ்சும் அனுப்புற காசுகளுக்கு கணக்கும் கட்டுப்பாடும் வைச்சுக் கொண்டு எல்லாருமா. ஏன். எப்பிடியெண்டெல்லாம் மாதச் செலவுக்கணக்குக் கேக்குதுகள்"
இப்படிச் சொல்லிவிட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு கொட்டடாவி விட்டபடி படுக்கையில் உட்கார்ந்து கொண்டார் பசுபதி. இதற்குப்பிறது சிறிது நேரம் முன்னம் இருந்த அளவல் அவர்கள் இருவருக்கும் இடையே இல்லாது போனது. இதுவிதமாக தங்கள் மனக் குறைகளை இருவரும் வெளியே கொட்டித்தீர்த்துக் கொண்டதால் மனத்தில் சிறிது நேரம் வீசிய புயல் ஓய்ந்து அமைதி வாய்த்ததைப் போல் இருந்தது அவர்களுக்கு. அந்த நிம்மதியில் வாரம், மாதம், வருடம் என வழிநடந்த காலத்தில் தங்களது வாழ்வில் அநுபவித்த பல சம்ப வங்களைத் திரும்பவும் ஒரு முறை மனத்தில் மீட்டெ டுத்துக்கொண்டு ஒருவாறு இருவரும் படுத்துக்கொண்டு கண்களை மூடினார்கள். இந்நேரம் அகல் விளக்கின் எண்ணெய்யும் தீர்ந்து கொண்டிருந்தது. வெளிச்சம் நூரும் தருவாய்க்கு வந்துவிட்டது. சிறிது நேரத்தின் பின்பு எல்லாமே மங்கிக் கொண்டு போய் அசைவிழக்க தாளசுரத்துடன் குறட்டை விட்டுக் கொண்டு பசுபதி துங்கிவிட- அடுத்து அன்னலட்சுமியும் நன்றாக நித்திரை யாகிவிட்டாள்.
காலையில் எழுந்ததும் இரவு முழுக்கவும் இருந்த மன வேதனைகள் தீர்ந்துவிட்டது போல அவர்களுக்கு இருந்தது. நேற்று வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் அனுப்பிவைத்த பணத்தில் மூன்று மாதங்களுக்குள்ளான கறிப்புளிச் செலவையும், இதர மருந்துச் செலவையும் எப்படிச் சமாளிப்பது என்று பசுபதி மூளையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அன்னலட்சுமி குஞ்சும்கம்புமாய் பரட்டை பற்றித்தெரிகிற அடிவளவில் உள்ள வேலியடியில் நின்று கொண்டிருந்தாள். ஒரு குஞ்சுக் கடகத்தை கையில் வைத்துக் கொண்டு அங்கே உள்ள அந்த வடலியில் ஒலைகள் பற்றியேறிச் சூழ்ந்து
as Labio - St.

Page 39
யூன் 2004 இதழில் தனிமனித ஆளுமையும் மேம்பாடும் என்ற கட்டுரை சம்பந்தமாக சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். ஆசிரி யர்கள் மாணவர்கள் காரியாலயங்களில் வேலை செய்பவர்கள் சமூக அமைப்புக்களில் வேலை செய்பவர்கள் ஆளுமையை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். முதலில் மற்றவர்கள் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். மிகவும் சுருக்கமாக பேசவேண்டும். தேவை ஏற்படின் பிற்பாடு விளக்கி கொண்டே போகலாம். சமூக பொருளாதார விடயங் களை நன்றாக தெரிந்து வைத்திருக்கவேண்டும். எப்படி பிரச்சனைகளை தீர்க்கலாம் என்பதை மற்ற வர்களுடன் உரையாட முன்வர வேண்டும். உங்கள் நிலைப்பாட்டை பலரிடம் எடுத்துக் கூற முன்வர வேண்டும்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள் புத்தகங்கள் நிறைய வாசிக்கவேண்டும். மற்றவர்களிடம் கொடுத்து வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலவேண்டும். பாறாங்கல்லில் கொண்டுபோய் தலையை முட்டி மோதி உடைத்துக் கொள்ள கூடாது. மாற்று வழிகளை கண் டுபிடிக்கவேண்டும். சட்டங்கள், ஒழுங்கு விதிகளை துக்கிப் பிடிக்ககூடாது. அவை வெறும் வழி காட்டல்களே. ஒடுக்கப்பட்ட மக்கள் நசுக்கப் பட்டவர்களை தேடிச்செல்ல வேண்டும். இது வகுப்பறையாக இருக்கலாம். காரியாலயமாக இருக்கலாம். அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலையிலேயே சேவை செய்யத்
தயாராக வேண்டும். உறங்கும் வரை மனதளவில்
உழைக்கவேண்டும். தகுதி பார்க்க கூடாது. யாரிடமும் உரையாட முன்வர வேண்டும். கோப, தாபங்களை வைத்துக்கொள்ள கூடாது. மற்றவர்கள் சொல்வதை யிட்டு கவலைப்பட கூடாது. தவறுகளை திருத்த முன்வர வேண்டும். நான் இலங்கை வங்கியில் ஆறு மாகாணங்களில் 12க்கு மேற்பட்ட கிளைகளில் வேலை செய்துள்ளேன். மேற்கண்ட கொள்கைகளை கடைப்பிடித்து வெற்றி பெற்றுளேன். சொந்தவாழ்விலும் கடைப்பிடித்து வெற்றிபெற்றுள்ளேன். கொம்யூனிஸ்ட் கார்த்திகேயனின் மாணவன் நான்.
சி.குமாரலிங்கம்
96, செட்டித்தெரு, நல்லூர்
 

கிடக்கும் முசுட்டைக் கொடிகளிலிருந்து இலைகளை அவள் பறித்தெடுத்துக் கொண்டிருந்தாள். ‘செல்' அடி பட்டு மொட்டையாய் முனை இழந்து காணப்பட்ட மிகவுயர்ந்த பல பெண் பனைகளுக்குள்ளே அந்தச் சாவட்டையான சிறு வடலி ஒன்றுதான் இப்பொழுது அங்கே உயிர்ப்புடன் நிற்கிறது. அந்த வடலியைச்சுற்றி கூடையாகக் குவிந்து கிடக்கின்ற அந்தக் கொழுத்த கொடியின் இலைப்படுகையிலிருந்து இலைகளை ஆய்ந்து போட்டு கடகத்தில் பாதியை நிரப்பிக் கொண்டாள் அவள். இலைக்களிக்கு ஆய்ந்த இலைக் கணக்கு சரியானதும் அதைக் கொண்டு குசினிப் பக்கம் அவள் போனாள். அந்த இலைக்கறியோடு விட்டிலிருந்து கொண்டே கறிக்கு மீன் வாங்கி சமைக்கக் கூடிய வசதி அந்த ஊரிலே இருந்தது. ‘செம்பி’ என்பவள் வீடு வீடாகப் போய் அவ்விடமெல்லாம் பலசாதி மீன்களையும் சிறு குவியலாக வைத்து விலை சொல்லி விற்பாள்.
அவளிடமே வாடிக்கையாக அன்னலட்சுமியும் வீட்டி லிருந்தபடியே மீன்வாங்குவாள். காலை வெயில் நீட்டிப்போக மீனைக் கொண்டு ச்ெம்பி வீட்டுக்கு வருவாள் என்பதால் இலையரியும் வேலையை விறாந்தையில் இருந்தவாறு செய்யும் நோக்கில் பலகையையும் சுளகையும் எடுத்துக் கொண்டு அவள் அவ்விடமாகப் போனாள். இந்நேரம் விறாந்தையில் கிடந்த தனிக் கதிரையில் முதுகு சரித்து இருந்து கொண்டு பசுபதி காலைப் பத்திரிகையில் தலையை மறைத்துக்கொண்டிருந்தார். பணக்கவர்டமென்றாலும் தினப்பத்திரிகைக்கு மாதாந்தம் அவர் ரொக்கப் பணம் கட்டி விடுவார். அவர் பால் கோப்பி குடித்து முடிக்க பத்திரிகையும் அந்த நேரம் தலைவாசல் பக்கமாக நடை பாதையில் வந்து விழும். பத்திரி கையைப்போட்டு சயிக்கிள் மணியை கிலுக்கி விட்டு பேப்பர் போடுபவன் போய்விடுவான். அதே முறையில் இன்றைய பொழுதும் அவர் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருக்க அன்னலட்சுமியும் இலை பறித்துக் கொண்டுவந்த குஞ்சுக் கடகத்துடன் சுளகு சகிதமாக வந்து விறாந்தை நிலத்திலே எல்லாவற்றையும் பரப்பி வைத்துவிட்டு சுவரில் முதுகை சார்த்தியபடி கீழே நிலத்தில் குந்தினாள். பின்பு பலகை மேலே இலைகளைக் குவித்து வைத்து நடுங்குகின்ற தன் கையால் இலைச்சுருளை பிடித்துக்கொண்டு மயிர் மயிராக கத்தியால் அவைகளை அரிந்தெடுக்கத் தொடங்கினாள் அவள்.
பசுபதி பத்திரிகை படிப்பதிலேயே தன் கவனத்தை யெல்லாம் வைத்திருந்தார். அன்றைய தலைப்புச் செய்தியை படித்துக்கொண்டு போகும்போது அவர் மனம் மிகவும் குழம்பி விட்டது. கிறிஸ்தவ கோயில் சொரூ பங்களை உடைத்தார்கள். அங்கேயுள்ள தளபாடங்களை சேதப்படுத்தி ஆலயத்துள் நின்று வெறியாட்டமாடினார்கள் என்ற செய்தி மிகவும் அவர் மனதை மனம் நோகும்படி செய்தது. ‘எச்சமயமானாலுமென்ன இச்செய்கை ஒரு
37 )

Page 40
நீதியோ" என்று அவர் வாய் முணுமுணுத்தது. அந்த அவரது திட்டலுடன் கூடவானதாய் மேலும் கீழே கட்டமிடப்பட்ட சிறிய செய்தியை உன்னித்துப் பார்த்து படிக்கும்போது அவருக்குச் சிரிப்பும் இதழ்களில் சுழித்தது. ‘கோயிலுக்குப் பொலிஸ் பாதுகாப்பு' என்ற அந்த செய்தியை படித்த பின்பு அவர் வெகுவாகச் சிந்தித்தார். “கடவுளுக்கும் இநத மனிதன் பாதுகாப்பு கெடுக்க வேண்டிய காலமாகிவிட்டதே' என்று இந்த கலி யுகத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்தார்.
இவர் பத்திரிகை படிப்பதையும் அன்னலட்சுமி கீரை அரிவதையும் நிறுத்தும்படியாகிவிட்டது. அவர்கள் வீட்டு வாசலில் கேட்ட குரல் “செம்பி வந்திருக்கிறன்." என்கிற அவளது குரலைக் கேட்டவுடன்,
“செம்பி வந்திட்டுது கறியை வாங்குவம்" - என்று சொல்லிக்கொண்டு இலையரியும் வேலையைவிட்டு எழுந்தாள் அன்னலட்சுமி.
பசுபதியும் படித்துக்கொண்டிருந்த பத்திரிகையை இரண்டு மடிப்பாக மடித்து அதைக் கீழே நிலத்தில் வைத்தார். அவருக்கும் இன்றைய கறிப்பாட்டில் ஆர்வம் மிகுந்தது. பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து அனுப்பி, கைக்குக் காசு வந்தால், நான்கு நாளைக்கு இவர்கள் வீட்டுச் சமையலில் ஆனமான முன்னேற்றம் இருக்கும். இந்த ஓரிரு நாட்களுக்கு அவரும்தான் செம்பியிடம் மீன் பார்த்து வாங்குவார். வழமையாக வாங்கும் 'சூடை” மீனையும், “காரல்’ மீனையும் போன்ற பொடி மீன்களை தள்ளுபடி செய்து விட்டு கட்டிக் குழம்பு வைக்க "சுறாவும்", இலுப்பெண்ணெயில் பொரித்தெடுக்கவென்று ‘பால் முரலும் சொதிக்கும் கீரைக்குமாகச் சேர்த்து ‘இறால்’ பங்கும் மற்றைய நாளிலே போல் அரும் பொட்டாயிராமல் தங்கள் இருவருக்கும் திருப்தியான முறையில் காணு மளவிற்கு நிறையவும் அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இறால் மூஞ்சிகளைப்போட்டு மணங்குணம்ாக அன்னலட்சுமி வைக்கின்ற இறால் சொதியில் பசுபதிக்கு மிகவும் விருப்பம். இதனால் செம்பிவைக்கும் இறால் கூறிலே அன்றும் பசுபதி குறியாக இருந்தார்.
“என்ன ஒல்லுப்போல வைச்சுக்கொண்டு கணக் கடிக்கிறாய் இன்னும் கொஞ்சம் வையன்!" என்று அதட்டல் சத்தம் வைத்தார். அவரோடு இணையாக அன்னலட்சுமியும் ‘காணாது உது படுநட்டம் இன்னும் கொஞ்சம் வடிவா வை!"- என்று அவருக்குப் பலமாய் ஒத்துதினாள். செம்பிக்கும் இதனால் தலையிடிதான்! என்னவானாலும் தன்கையை ஒறுக்கும்படியாக வைத்துக் கொண்டு சாட்டுக்கு இரண்டு இறால்களை குவியலில் சேர்த்துவிட்டு “உங்களுக்கெல்லாம் மருதிதான் மீன் விக்கச் சரி அவளிட்டயெண்டா ஒண்டுங் கதைக்காம வாயப் பொத்திக்கொண்டு கறிவாங்குவியள். அவள் வைச்சசதை அப்பிடியே சட்டிக்குள்ளை அள்ளிப்
C 38

போட்டுக்கொண்டு காசை நீட்டுவியள்" என்று தனக்குப் போட்டியாக அவ்விடத்தில் மீன் வியாபாரம் செய்யும் மருதியையும் ஒருமுறை திட்டித் தீர்த்து வாய்ச்சாலமாகப் பேசி வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவள் வெளிக்கிட்டாள். அன்னலட்சுமி கறிச்சட்டியுடன் வீட்டைச் சுற்றி கோடிப்பக்கமாக நடந்து குசினிப் பக்கம் போய்க் கொண்டிருக்க, அவர்களது வீட்டுப் பூனையும் அவ ளுக்குப்பின்னாலே மின்வாசனை பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தது.
“உந்தா பார் உந்தக் கள்ளப் பூனையும் உனக்குப் பிறகாலை வருகுது கறியை குசினிக்கை மூடிவை. இல்லாட்டி ஆசை அருமையாய் வாங்கித் தின்ன வைச்சதை அது பேந்து தட்டி விழுத்திச்சாப்பிட்டுப் போடும்" என்று விறாந்தையில் இருந்தவாறே மனை விக்குக் கேட்கும்படியாக குரல் கொடுத்தார் பசுபதி. பிறகு மடித்து வைத்த பத்திரிகையை திரும்பவும் கையி லெடுத்து கதிரையில் இருந்தவாறு மொத்தையான ஒரு செய்தியைப் படிப்பதில் மூழ்கினார் அவர். என்றாலும் பத்திரிகையை கவனம் வைத்து படிக்க முடியாதபடி முற்றத்தில் நின்ற சேவல்கள் இரண்டும் சண்டை போட்டுக் குழப்படி செய்தன. அந்த இரண்டு சேவல்களிலே ஒன்றான செங்கொண்டைச் சேவல் எதிர்ச் சேவலை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இறக்கை படபடக்க எகிறி செட்டையோடு ஒரு வெட்டு வெட்டடியது. அடிவாங்கிய கறுப்புச் சேவலின் இறகுகள் இதனால் பிய்ந்து காற்றில் பறந்தன. அதற்குப்பின் அந்தக் கறுப்புச் சேவல் தலை யைத் தொங்கப் போட்டபடி பின் வாங்க அதைத் துரத்திக் கொண்டு அந்த விறாந்தையில் ஏறியது செங்கொண்டைச் சேவல், களைத்து ஓடிவந்த கறுப்புச் சேவல் முசுட்டை இலையிருந்த சுளகில் மிதித்துப் போனது.
“இலைநாசம். சனிக்கோழி. ஊருக்க உள்ள கோழியள் எல்லாத்துக்கும் என்ரை வீட்டு முற்றந்தான் வாய்ப்பு" என்று திட்டியபடி. கையிலிருந்த பத்திரிகையால் சாமரம் விசிறி “சூய். ஹாய்" என்றார் அவர். அவரது விரட்டலுக்குப் பயந்து இரண்டு கோழிகளும் குடு குடு பாய்ச்சலாக ஓடி திண்ணையிலிருந்து குதித்து கால் மடித்துப் பதுங்கியபடி விரைந்தன. அவர் கீழே சிதறிக்கிடந்த இலைகளை சேர்த்தெடுத்து சுளகில் வைத்து விட்டு நிமிர்ந்தார். அவரது நிமிர்ந்த பார்வை ஒரு முறை படலைப்பக்கமாகவும் நீண்டு பதிந்தது. அங்கே தகரக் கேற்றுக்கு அப்பால் கண்ட தலைக்கறுப்போடு கூப்பிடு குரலும் அவருக்குக் கேட்டது. அந்தக் குரலுக் குரியவர் கந்தவனம் தான் என்று அடையாளம் பிடித்தார் பசுபதி. அவருக்குத் தெரியும். இன்று கந்தவனம் கட்டாயம் வருவாரென்று. எனவே விரைவாகப் போய்ப் படலையைத்திறந்தார்.
அதைத்திறந்த கையோடு அவ்வமயம் அவரை இவர்காணவும் “பசுபதியண்ணை" என்று இவரது பெயரைச்
asaruatio - 5 D

Page 41
சொல்லிக்கொண்டு மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டு கால்பாதம் வரை தழைய விட்டார் கந்தவனம்.
“வாங்கோ. உள்ளவாருங்கோ.!" பசுபதியின் அகம் அலர்ந்தது. குரலில் அதிக ஆர்வமும் பெரிய எதிர்பார்ப்பும் அப்போது அவருக்கு இருந்தது.
இதையெல்லாம் அக்கறையாகக் கவனித்துக் கொண்டு கந்தவனமும் பண்பாக பதிலுக்குச் சிரித்தபடி, “எப்படி உங்கட பாடு பறப்பெல்லாம் போகுது" என்று கேட்டவாறு உள்நுழைந்தார். மாவடிக்குக் கீழே தனிச்சேவல் ஒன்று நின்று கொண்டு கழுத்தை வளைத்து நிமிர்த்தி பெரிய சத்தமாகக் கூவியது. பக்கத்தில் பேடு ஒன்றும் இல்லாததால் வேறு பராக்கில்லாமல் மீண்டும் கூவவேண்டும் என்கிற நினைப் பில் அதற்குப்பிறகும் ஒருமுறை கொக்கரக்கோ- வென கூவி வைத்தது.
அந்தச் சேவல் கூவுவதைப் பார்த்தபடி நின்றவாறு கந்தவனமும் “நேரம் போகுது. நேரம் போகுது. ஊரிப்பட்ட வேலையள் கிடக்கு" என்று பாச்சலும் பறவையுமான நிலையில் அவசரப்பட்டடார். “என்ன வந்த வுடனை ஆத்துப் பறக்கவா நிக்கிறீர். இருந்து வடிவாய் எல்லாத்தையும் கதைச்சுப்போட்டு ஆத்திகேட்டுக்கு தேத்தண்ணியும் குடிச்சிட்டு ஆறுதலாய்ப் போகலாந் தானே?" என்று விட்டு.
"அன்னம் வாருங்கோ இங்காலைப்பக்கமா விறாந் தைக் கொருக்கா" என்று அழைத்தார் பசுபதி!
அவரின் குரல் கேட்டு அன்னம் வரும்போதே வாசல் கதவு வழியாக கந்தவனத்தைக் கண்டு கொண்டாள். எனவே கையோடு வரும்போது ஒரு கதிரையையும் உள்ளேயிருந்து துக்கிக்கொண்டு வந்து விறாந்தையில் வைத்தாள்.
“இந்த வயசுவழிய ஏன் இங்கினையா தனியக் கிடந்து கயிற்றபடுகிறியள். உங்கடை பெடியளுக்கு இருக்கிற காணியளை சமமI புறிச்சுக் குடுத்திருக்கிறியள். பெம்புளப்பிள்ளையளையும் சீதனபாதனத்தோட கலியாணம் முடிச்சுக் குடுத்திருக்கிறியள். மருமகள்மார்தான் உங்களுக்கு ஒத்து வருகுதில்லையெண்டாலும் மகள் மாரியிலயாவது ஆரோடையும் சரி ஒருவரோட நீங்கள் போய் இருந்துகொளலாம்தானே?"
“வந்ததிற்கு இப்படியாகவேனும் அவர்களிலே அக்கறை இருக்கின்றதாகக் காட்டிக்கொண்டு ஒரு கதையைத் தொடங்குவம்'. என்கிற யோசனையில் இப்படியாக அவர்களை குசலம் விசாரித்தார் கந்தவனம். இப்படி ஒரு கதையைப் போட்டதாலே எவ்வளவு
G anrusali» - si

வதை காலம்
5TL'éFTLIGOf
எனது குரல் நாண்கள் அறுந்தன. உனது குரல் கூர்வாளான போது.!
எனது மூச்சை அள்ளிப் போயிற்று உனது மூச்சு. நான் பேச்சற்றுப் போனேன்.
சுவாசத்திற்காகத் தடுமாறுகிறேன் நான். நீ வாசத்திற்காக என் பூக்களைப் பறித்தாய்!
நீ. நினைத்ததை நடத்தினாய்! நான் நடைப்பிணமானேன்!
இனி நீ. இது உன் காலம்..!
எனதுஇறுதி அத்தியாயங்களை நீயே எழுது
உயிர்போகும் வரைதானே வதைக்க முடியும் உன்னால்..!
bumm أص
விருத்தாந்தம் அவர்களிடமிருந்து வாய்வழியாக வெளியே வரும் என்கிற எதிர்பார்ப்பும் அவாவும் கூடுதலாக அவரிடம் இருந்தது.
அவர் இப்படிக் கேட்டு விட்டதற்கு பதில் சொல்ல பசுபதி வாயைத் திறக்கவில்லை! அன்னலட்சுமிதான் அவருக்குப்பதிலாக தங்கள் குறையை அவரிடம் சொல்லி அழுது வைத்தாள். பொருந்தாத சட்டங்கள் மாதிரி இருக்கும் தன்பிள்ளைகளின் போக்கையும் சொல்லிச் சலித்தாள்.
“தங்களோடை வந்திருக்கச் சொல்லித்தான், பிள்ளையளெல்லாம் எங்களைக் கூப்பிட்டுக்கொண்டு இருக்குதுகள் தம்பி! அதுகள் அப்பிடிக் கூப்பிடுறது மாதிரி- எனக்கெண்டா அந்தக் குளிருக்குப் பறவாயில்லை சமாளிச்சுக் கொண்டு போவனெண்டு சொல்லலாம். ஆனா வாதம் வந்து கிடந்த இவருக்கேலுமே தம்பி. சொல்லுங்கோ பாப்பம். இனியும் என்னப்பு அங்க வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை பிள்ளையஞக்கை ஒரு பிள்ளை மட்டுந்தான் அங்கினை கொஞ்சம் வசதியாயிருக்கிறா. அவதான் தம்பி முழுக்காசையும் போட்டு அங்க நாங்கள் போறத்துக்கு ரிக்கற்றுக்கு காசு
39 )

Page 42
அனுப்புறாவாம். இப்படி அவ தன்ரை காசை அனுப்புறதாலை வேறு ஒரு பிள்ளையளின்ரை வீட்டையும் நாங்கள் போக வரக்கூடாதாம். தன்னோடதான் சாகுமட்டிலும் இருக்க வேணுமெண்டு அவ சொல்றா. இது எங்களுக்குச் சரி வருமே?. எல்லாருமே எங்கடை பிள்ளையன்தானே. உப்புடி ஒரவஞ்சம் காட்டி நாங்கள் நடக்கேலுமே சொல்லுங்கோ பாப்பம். அதுநான் அங்கினையா ஒரு இடமும் போக வேண்டாமெண்டு நினைச்சு இங்கினையே கடைசிக் காலத்திலை கிடந்து சாவம் எண்டு நாங்கள் இருந்திட்டம். ஆனா, அதுகள் எங்களை விறாய்ப்புப் பிடிச்சதுகள் வீம்பு காட்டிக் கொண்டு டெக்குதுகள்-எண்டு பேசிக்கொண்டு படட்டும் பாடெண்டு எங்களை இப்படியே விட்டிட்டுதுகள். இப்பிடிப் பிள்ளையளைப் பெத்து வளத்து என்ன சுகம் எங்களுக்கு வந்தது? இண்டைக்கு இப்பிடிக்கிடந்து உலைஞ்சல்படுறம்"
என்று ஆதங்க உலுக்கலுடன் சொன்னாள் அன்னலட்சுமி
“நீங்க சொல்லுறதும் சரிதான். உங்களுக்கு இங்கினையா ஊரோடை இருந்து கொள்ளுறதும் பறவாயில்லைத்தானே. சைய், அந்த நாடுவழிய அம்மாடி அநத மாதிரிக்குளிர்வழிய. ஆறக்கிறவெளிக்கிட்டு வெளியாலை போய்வரவுமேலாது கொள்ளேலாது. அது உங்களுக்கெல்லாம் எவ்வளவு பெரிய கயிற்றம். ஆனா, இங்கினையிருந்தா நீங்க ஒரு மன ஆறுதலுக்கு சந்நிதியானிட்டையும் நல்லூரானிட்டையும் போய்வரக் கொள்ளலாம். அது உங்களுக்கு எவ்வளவு ஆறுதலா யிருக்கும். இப்பிடி உங்களுக்கெல்லாம் இங்கினை வசதி கிடக்கேக்கிள்ளை அதுகளை சும்மா நினைச்சேன் கவலைப்பட்டு இந்த வயசிலையும் கயிற்றபடுறியள். சும்மா ஏன் அந்தக் கதையளையெல்லாம் இப்ப எடுக்கிறியள் அதுகளை விடுங்கோ. விடுங்கோ."
“அது சரிதான் ராசா நீர் சொல்லுறதும் நியாயந்தான். எண்டாலும் தம்பி எங்களுக்கு இந்தக் காசுப்பிரச் சினையெல்லே இருக்கையா. இதுகளையெல்லாம் ஆருக்கும் தெரியுமே. மாதம் முடிய பிள்ளையளிட்ட விருந்து பொத்தியடிச்சாப்போல காசுவந்து கொண்டிருக்கு எண்டதாத்தான் ஊருக்குள்ள இங்க கனபேரிண்டை கதையள் சலசலப்புகள் இருக்குது. ஆனா நாங்கள் படுகிறபாடு அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்."
அன்னலட்சுமி தன் அகக்கிடக்கையில் உள்ளதை கந்தவனத்திடம் வெளிப்படையாகச் சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு அவரும். “ஓமோம். எல்லாத்தையும் உப்பிடி எல்லாரிட்டையும் சொல்லேலுமே. நானெண்டா ஆரிட்டையும் உதுகளையெல்லாம் வாய்திறவன். ஆற் றையும் கதையளைக் கதைச்சு எனக்கென்ன லாபம்!. அது வடிவே சொல்லுங்கோ. அசிங்கமென்ன!. முதல்
C 40

இப்பிடி ஆற்றையும் கதையளை கதைச்சுக்கொண்டு திரிஞ்சால் என்னை என்ன மாதிரி இங்க சனங்கள் கணக்கெடுப்பினம். சரி உதுகளை விடுவம். விசயத்துக்கு வாங்கோ பசுபதியண்ணை. இந்த உங்கடை காணியளை எனக்குக் குததகைக்குத்தாற விசயம் என்னமாதிரி. அந்த விசயத்துக்கு நீங்க வாங்கோ."
“நான் என்ன சொல்லுறது கந்தப்பு. நீர்தான் அதைப்பற்றிச் சொல்லவேணும். உமக்குத்தெரியும். என்ரை தோட்டக்காணிகளைப்பற்றி. அந்தத் தறையெல்லாம் அருமையான செம்பாட்டு மண்ணெல்லே. அந்தக் காணி வழிய முந்தியெல்லாம் நான் எவ்வளவு பயிரை வைச் செடுத்தனான். எதையந்தத் தரையில் வைச்சாலும் விளைச்சல் குறைச்சலில்லாமல் வந்து கையிலை அப் பத்தைக்கு அதுகளை வித்தெடுத்து எவ்வளவு காசு புழங்கிச்சுது. என்ன செய்யிறது. பேந்து உந்தக் கிரகம் பிடிச்சதுமாதிரி அந்தள்ளுப்படு நாசமாப்போவார் கொண் டாந்து உந்த மிதிவெடியளைத் தாட்டதோடதான் எல்லாம் அநியாயமாப்போய் தோட்டம் செய்யிறதும் துலைஞ்சுது. பிறகு ஏதோ கடவுள் கண்பார்த்தில்ல. அவங்களும் அதுகளைக் கிண்டியெடுத்து காணியிலை இப்ப என்னவும் வைச்செடுக்கக் கூடியதாய் வந்திருக்கு. ஆனாலும் என்ன செய்யிறது தம்பி. இப்ப எனக்கும் வயசு போட்டுது. இனியெங்க நான் காணி துப்பரவாக்கிறதும் செய்யிறதும். அதெல்லாம் என்னால இனி நடவாது. அதுதான் என்ரை காணியளை உம்மைக் குத்தகைக்கெடுத்துச் செய்யும் மெண்டனான்"
அவர் இப்படிச் சொன்ன கையோடு மனைவி அன்னலட்சுமியும் தயவாக அவரிடம் சில கதைகளைக் கூறினாள்.
“உம்மைத்தான் தம்பி இவர் நல்லபடியா சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நாளையிலை இருந்து உம்மோடதானே தம்பி இவர் நல்ல வாரப்பாடு. இங்க ஊருக்க இருக்கிறவயளிலை ஊரிப்பட்ட பேர் இவரிட்ட வந்து காணியளைக் குத்தகைக்குத் தாருங்கோ வெண்டுதான் கேட்டவயள். ஆனா இவருக்கு அவயள் ஒருத்தரிட்டையும் தறையளைக் குடுக்கவிருப்பமில்லை. உவயள் கதைக்கேக்கை பெரிசாய் வாயடிப்பினம். பேந்து நாங்கள் நம்பி காணியளைச் செய்யக் குடுத்தாப்பிறகு குத்தகைக் காசுக்குப் போகைக்கை ரெக்கிலாசும் பேசிக் கொண்டு இழுத்தடிப்பினம். பிறகும் அப்பிடித்தானும் அதுகள் தாற காசை செஞ்சு கரிஞ்சுகொண்டுதான் தருங் கள். அதாலதான் எங்களுக்கு அவேயளிட்டக் குடுக்கப் பயம். வயசுபோன இவர் பேந்து அவயளோட இழுபறிப் படேலுமே அது இவருக்கும் சங்கை குறைவெல்லே. உங்க உதுகளுக்கு வாயுஞ் சரியில்லை. இவர் வய சாளியாச்சேயெண்டு ஒரு மட்டு மரியாதையுமில்லாமக் கதைக்குங்கள். அதேனந்தக் கரைச்சல்களை. அது
அாயகம். எ D

Page 43
தான் தம்பீட்டத் தரவேணுமெண்ட நோக்கத்திலை இவர்
பார்க்கிறார்."
அன்னலட்சுமி இப்படிச் சொல்லவும் கந்தவனத்தின் முகம் மகிழ்ச்சியில் சாதுவாய்ச் சிவத்தது. இப்படி தன்னைப்பற்றியெல்லாம் உயர்வாக இவர்கள் மதிப்பு வைத் திருக்கிறார்களே - என்று நினைக்க தருக்கும் செருக்கும் அவருள் ததும்பி வழிந்தன.
இதனால் ஒரு வகைச்சசுதியில் உல்லாசமாய் தன் பித்தவெடிப்பு மிகுந்த கால்களையும் ஆட்டிக்கொண்டு கதிரையில் கொஞ்சம் நிமிர்ந்தும் உட்கார்ந்தார். இதுவிதமாக அவருக்கு வந்த உஷாரில் உதட்டில் சிரிப்போடு ஒரு கதையையும் வெளிவிட்டார்.
“நீங்கள் அச்சொட்டாய் எல்லாரையும் கணக்குப் பண்ணித்தான் வைச்சிருக்கிறியள். அல்லாட்டி ஊருக்க உந்தச் சனத்தோடை சீவிக்கேலுமே. அப்பிடியெல்லாம் தெரிஞ்சுபோட்டு அதுகளின்ரை கைவழிய காணியைக் குடுத்தா கூழ்ப்பானேக்கை போய் விழுந்த ஞாயமாத்தான் போகும். நான் சாதிமரபில கொஞ்சங்கூட வழுவில்லாத ஆளெண்டு தெரியுந்தானே உங்களுக்கு. அப்பிடியான நான் எப்பவும் சொன்னா சொன்னமாதிரி நடப்பன். மற்றவயள் மாதிரி “சப்பளாசளபுளா வெண்டெல்லாம் நான் நடக்கன். காணியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு குத்தகைக் காசை மாத்திரம் தாறதோடை நான் விட்டிடுவனே. அதோட அதில வாற விளைச்சலிலை நாலு பிடி வெங்காயமெண்டாலும் உங்கடை வீட்டுக்கு நான் அனுப்பமாட்டனே. அதோடை நாலு கட்டை மரவள்ளிக் கிழங்கும் இழுத்துக் குடுத்துவிடுவன். ராசவள்ளிக் கிழங்கும் அனுப்பி வைப்பன் இப்பிடி இப்பிடி உங்களுக்கு எவ்வளவு சலுகையெல்லாம் என்னாலை இருக்குதெண்டு பாருங்கோ!"
என்று இப்படியாகவெல்லாம் கந்தவனம் தன்னைப் பற்றி பெரிதாக அளக்கும் போது அவரது மனத்திலே சில எண்ண அரவங்கள் நெளிகின்றதைப் பற்றி பசுபதி அறிய வில்லை. எப்படியும் கந்தவனம் தன்காணியை குத் தகைக்கு எடுத்துக் கொண்டு தவணை தவறாமல் பணத்தை எண்ணி நீட்டுவார் - இன்னும் பல சலுகை களையும் அவர் தனக்குச் செய்வார், என்ற எண்ணத்தில் ‘உச்சபட்ச மகிழ்ச்சியில் அவர் இருந்தார். இந்த வேளையில் கதைப்பராக்கில் கோப்பி போட்டுக் கொண்டு வர மறந்து விட்டதை நினைத்து அன்னலட்சுமி பரபரப்படைந்தாள். தனக்கு முன்னால் விறாந்தையில் கிடந்த இலைக்கடகத்தையும், சுளகு கத்தியையும் எடுத்துக் கொண்டு “ஐய்யய்யோ. கோப்பிபோட்டர மறந்திட்டன். இந்தா வாறன்" என்று சொல்லிக் கொண்டு குசினிக்கட்டுக்கு அரக்கப்பரக்கப் போய்ச் சேர்ந்தாள். அங்கே தனலடுப்பில நாலு விறகுச் சுள்ளிகளை
உடைத்துப்போட்டு, ஊமலையும் கருக்கு மட்டையையும்
(3
:
C annuatio - st

பயில்நிலம் மாத இதழ் வெளியீடு: பயில்நிலம், 59/3, வைத்திய வீதி,
தெகிவளை YA விலை: ரூ.20/- சந்தா 6 மாதம்- ரூ.130/-12 மாதம்-ரூ.250/-
புதிய எழுத்தாளர்களை மாற்றங்களை வேண்டி எழுதத் தூண்டும் இதழ். இளையோரே உங்கள் சிந்தையில் உதிக்கும் கதை, கட்டுரை, கவிதை என்பவற்றை எழுதி அனுப்புங்கள், !
أر
வத்து ஊதாங்குழலால் ஊதி எரித்துவிட்டு, ண்ணீருடன் கேற்றிலை அடுப்பேற்றினாள். சுள்ளி விற கரித்தால் தண்ணிர் சிறிது நேரத்தில் மல மலத்துக் காதித்தது. உடனே அளவான கோப்பி சீனியை கோப் பயில் போட்டு ‘சுர்சுர்’ எனக் கேற்றிலிலிருந்து துடிக்கும் ரை ஊற்றி கோப்பி போட்டுக் கொண்டுவந்து கண ருக்கும் கந்தவனத்துக்குமாகக் கொடுத்துவிட்டு துங்கி ஒரு பக்கமாக அவள் நின்றாள்.
“என்ன கதை விட்டுப்போச்சு முடிவைச் சொல் பங்களன்!" என்று பசுபதியைப் பார்த்துக் கேட்டார் ந்தவனம்.
தான் கோப்பி போட்டுக் கொண்டுவர குசினிக்குப் பாயிருந்த நேரத்தில் கந்தவனம் என்ன முடிவு சால்லியிருப்பார் என்று அன்னலட்சுமிக்குத் தெரிய ல்லை!. அவள் கணவனின் முகத்தைப்பார்த்தாள். வருடைய முகம் சற்று முன் இருந்த செழுமையற்று ாடிச் சுருங்கியிருந்தது. அதைக் கண்டதும் ஆட்டம் ண்ட நம்பிக்கை அவளிடம் அறவே சாய்ந்தது.
“என்ன மாதிரித் தம்பி ஏதேனும் பிரச்சினையே?"
என்று குரலைத் தாழ்த்திக் கேட்டுக் கொண்டு
44 Ꭰ

Page 44
கந்தவனத்தின் காலிலிருந்து முகம் வரையாக பரிதாபமாக அவரைப் பார்த்தாள் அவள்,
இந்த நேரம் தன் மனைவியைப்பார்க்க பரிதாபமாக இருந்தது பசுபதிக்கு, நல்ல எதிர்பார்ப்புடன் இருந்த வளுக்குகந்தவனத்தின் கதைபேச்சு ஏமாற்றம் கொடுக்கப் போகின்றதே என்ற நினைப்பில் அவருக்கும் தொண் லடயில் சளி அடைத்ததைப் போல் இருந்தது. அதைப் போக்கிட அவர் பெரிதாய்ச் செருமியபோது முற்றத்தில் பலாச் சருகுகளுடன் சேர்த்து குவிந்த குவியல்களை கிளறிக் தொண்டிருந்த கோழி பயந்து “கொக்கொக் கொக்குறுக்’ என்றவாறு கத்திக் கொண்டு வேலிப் பொட்டுக்காலே புகுந்து மற்றக் காணிப்பக்கமாக ஓடியது. “நான் கேட்டமாதிரிக்கு ஓம் பட்டா நீங்க தறையை எனக்குக் குத்தகைக்குத் தாங்கோ. நானும் ஒரு ஞாயத்தை வைச்சசுக் கொண்டு தான் உங்களோடை கதைக்கிறன். வேறமாதிரி உங்களை நான் அமடுதுமடு பண்ணிறதாயில்லை!" என்றார் கந்தவனம்!
அவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு "சாச்சாய் அப்பிடியெல்லாம் நான் நெக்கேல்லை. உங்களை நான் அப்பிடி நெப்பனே. நான் எனக்குள்ள இருக்கிற இந்த கஸ்டத்தை வைச்சுக் கொண்டுதான் இப்பவாய்பலதையும் பத்தையும் யோச்சிச்சுப் பாக்கிறன். சும்மா கிடக்கிற அந்தக் காணியளிலை நாலு பயிராவது விளைஞ்சிட்டுப் போகட்டும். அது எத்தினை பேருக்கு சாப்பிடக் கீப்பிடப் பிரயோசனமாவெண்டாலும் போகும். சொல்லுங் கோபாப்பம். முருகா. ம். சரி சரி உங்கடை விருப்பப்ப டியே செய்யிங்கோ. ஆறப்போகுது கோப்பியைக் குடியுங்கோ. 1" என்றார் பசுபதி,
இதமான சூடோடு கோப்பி இருந்ததால் கப்பை கையிலெடுத்து கோப்பியை நாலு முரடில் குடித்து முடித்தார் கந்தவனம். அதற்குப்பிறகு அப்படி இருந் தபடியே நாற்காலியின் இருபக்கத்துச் சட்டத்தின் மேலும் கொடிகளை முறுக்கிச் செய்தது போன்றிருந்த தன் கைகளை வைத்துக்கொண்டு விரல்களால் அதில் தாளம் போட்டார். வந்த அலுவல் முடிந்ததால் இனிக் கிளம்ப வேண்டும் அன்ற அவசரம் அவருக்கு இருந்தது. கீழே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பின்பு சற்று நிமிர்ந்து "அப்ப நான் வெளிக்கிடப்போறன் வெளியால ஊரிப்பட்ட வேலையள் கிடக்கு அதையெல்லாம் நான் போய்த்தான் பாக்க வேணும் அண்ணை" என்றார்.
பசுபதி தனக்குவந்த பெருமூச்சை வெளியே வராமல் அடக்கிக் கொண்டு சோகமாகத் தன் கைகளைக்கூப்பி “போயிற்று வாருங்கோ" என்றார். அன்னலட்சுமிக்கு இது வரையில் அவர்களுக்கிடையே நடந்த கதை பேச்சு களொன்றும் ஒன்றுமாக விளங்கவில்லை. கந்தவனம் போனகையோடு இதைப்பற்றி கணவரிடம் கேட்டறிய வேண்டுமென்கின்ற அவசரத்தில் அவள் இருந்தாள்.
C 42

கந்தவனம் வெளிக்கிடும் போது அன்னலட்சுமியைப்
பார்த்து.
"அப்ப நான் போயிற்று வாறனக்கா" என்று விடை
பெற்றறுக் கொண்டு தான் வெளிக்கிட்டார்.
அப்பிடிப்போகும் போது ஒரு மகிழ்ச்சிச் சுமையைச் சுமந்து கொண்டு போகிற ஒரு உணர்வோடு அவர் சென்றார். அவர் வேலிப்படலையைத் திறந்து கொண்டு வெளியே வீதியினுடாடப போகையில் வேலிப் பூவரசுச் சடைச்சலுக்கு ம்றைவில், அவரது வெள்ளை வேட்டி மட்டும் கொஞ்சம் பசுபதியின் கண்களுக்குத் தெரிந்தது. அப்பிடியாக அவர் தன் பார்வையை அங்குமிங்கும் படர வைத்தபடி திரும்பிய போது. *
அன்னலட்சுமி நெட்டுக் குத்தலாக கணவரைப்
பார்த்துக் கொண்டு விக்கித்தக்கியபடி.
“என்ன முடிவு சொல்லிட்டுப் போறாருங்கோ அவர்.?" என்று கேட்டாள்.
“எல்லாப்பக்கமும் எங்களுக்கு நெருக்கு வாரமாய்த்தான் வருகுது அன்னம். அவர் எங்கடை காணியளை குத்தகைக்கெடுத்துச் செய்யிறாராம். ஆனாலும் தருகிற காணிக்குத்தகைக் காசை ரெண்டு வருசத்துக்குத் தராராம். இந்த ரெண்டுவருசத்துக்கு காடு பத்திப் போய்க் கிடந்ததான அந்தக் காணிக்கிள்ளை கனக்க வேலையிருக்கு கணிசமாய் காணியை செம்மையாய் திருத்தியெடுக்க வேணுமெண்டுறார். இப்ப காணிக்கையிருந்து மிதிவெடியளை எடுத் திருந்தாலும். அந்த மிதிவெடியள் கிடந்த காணிக் கிள்ளை முதல் முதலாப் போய் காலை வைச்சு தோட்டம் செய்யிறதெல்லாம் பயமாம். தானெண்டபடியா இதைத் துணிஞ்சு செய்யிறாராம். அப்பிடி இப்பிடியெல்லாம் சொல்லி இடுக்கெட்டுப் பூட்டுப் போட்டிட்டுப் போறார் மனுசன். என்ன செய்யிறது கயிற்றத்தோட கயிற்றமா இந்த ரெண்டு வருசத்தையும் தள்ள வேண்டியதுதான். வேற என்ன செய்யிறது." என்று விவேகானந்தர் மாதிரி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றபடி மனம் சலித்தார் U3U$.
அவருடைய நிலைதானே இதைக் கேட்டதும் அன்னலட்சுமிக்கும் இருக்கும்.
அவளும் தன் சூம்பிய கை விரல்களை சொக்கையில் வைத்து அழுத்திக் கொண்டு,
“ம். என்னதான் செய்யிறது.!" என்று பெரு மூச்சு விட்டவாறு கூறியபடி, முதுமையின் தளர்ச்சி முழுவதையும் திடீரென அனுபவித்த உணர்வுடன் நின்ற இடத்திலேயே அசையாத ஆணியானாள்.

Page 45
இப்போது தமிழில் நிறைய நேர்காணல்கள் வருகின்றன. நேர்காணல்களை வைத்தே சில ஏடுகள் நடத்தப்படுகின்றன. எனினும் அவற்றிற் பல உண்மை யாகவே நேர்காணல்களல்ல. பெரும்பாலும் கேள்வி-பதில் பகுதிகள் மாதிரி ஏற்கெனவே எழுதிவைத்த கேள்விக்கு முன்கூட்டியே தயாரித்துவைத்த விடைகளின் தொகுப்புப் போல பல அமைந்துவிடுகின்றன. உண்மையிலேயே, சில எழுதி அனுப்பிய கேள்விகட்கு எழுத்தில் கிடைத்த விடைகள் தாம். இதற்கும் மேலாகச், சில நேர்காணல் களின்போது சொன்னவற்றைப் பிரதியெடுத்து அச்சுக்கு அனுப்புமுன்பு பார்வைக்கு அனுப்பினால் தாம் சொன்ன வற்றில் கணிசமான பகுதியை நீக்கிவிட்டுப் புதிதாக எதையாவது சேர்ப்பது பற்றியும் அறிந்திருக்கிறேன். இது, நமது ஆய்வறிவாளர்களது அவலநிலை. தங்கள் கருத் துக்களுக்குத் தாங்களே அஞ்சுகிற அவல நிலை பெரு மளவும் ஏற்படுகின்றது. ஏனென்றால் மற்றவர்கள் நடுவே தங்களைப் பற்றிய ஒரு படிமத்தை உருவாக்கவும் அதற் குக் கேடில்லாமலும் தமது நேர்காணல் அமையவேண்டும் என்ற ‘சுய வழிபாட்டு மனநிலையினாலே தான்.
வானொலி, தொலைக்காட்சி நேர்காணல்களில் நேரடி ஒலிபரப்பில் அந்தவிதமான திருத்தங்கட்கு இடமில்லை. எனினும் பதிவாகி ஒலிபரப்பப்படுகிற நேர்காணல்களின் பகுதிகள் நீக்கப்படவோ சிலசமயங்களில் மீளப் பதிவு செய்யப்படவோ வாய்ப்புண்டு. எனினும், நேரம் போதாமை காரணமான நீக்கங்களே கூடுதலானவை எனலாம்.
இளையதம்பி தயானந்தா அண்மைக்காலத் தமிழ் ஒலிபரப்பாளர்களுள் நூல்களை வாசிப்பவராகவும் குறிப் பிடத்தக்க இலக்கிய உணர்வு உள்ளவராகவும் இருக் கிறார். அதன் விளைவாக நேர்காணல்களின்போது அவர் எழுப்புகிற கேள்விகள் தொடர்ந்து ஒரு உரையாடலாக விரிவடையும் வாய்ப்புண்டு. அவருடைய நேர்காணல்களின் தொகுப்பில் பெருவாரியான நேர்காணல்கள் படைப்பாளி
ՈIII
მნცII நாட்
LIGO தமி bLபட்ட நேர்
ᏑᏏᏁᎢ6Ꮈ
UT É
தரம
C ontadio - si
 

னலையின்
ü56T
சி.சிவசேகரம்
ால் வானொலி நேர்காணல்களின் தொகுப்பு நர்காண்பவர்: இளையதம்பி தயானந்தா வளியீடு: ஆரபி பதிப்பகம், சென்னை 003 ஏப்ரல், பக்கம் 223 விலை: குறிப்பிடப்படவில்லை
டனானது. நேர்காணப்பட்ட பதினெண்மரும் தமிழ் டவரே என்பதும் கவனத்துக்குரியது.
பல நேர்காணல்கள் ஒலிபரப்பின் கால வரை றயால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனபோற் தெரிகின்றன. ழ் இனி 2000 மாநாட்டிற்கு தயானந்தா சென்றவேளை த்திய நேர்காணல்கள் காலவரையறைக்குட் வைபோலவே தெரிகின்றன. ஜெயகாந்தனுடனான காணல் மட்டுமே விரிவானதும் நீளமானதும் எனலாம்.
நேர்காணப்படுபவரை மடக்கிப்பிடிப்பதற்கான ஒரு ாடர்பாடலை தயானந்தாவின் நேர்காணல்கள் }ங்கை வானொலியில் உருவாக்கியதாக முன்னு பில் குறிப்பிடுகிற சிவத்தம்பி, தயானந்தாவின் நேர் ால்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்றும் அவர் றுகிறார். நேர்காணுபவரை மடக்கிப்பிடிப்பது சாட்சி க் குறுக்குவிசாரணை செய்கிற வக்கீலுக்கு முக்கி நேர்காணலுக்கு அல்ல. எந்தவகையான உலகத்தரம் சிவத்தம்பி பேசுகிறாரோ தெரியவில்லை. எனக்குத் ய ஒரு நல்ல நேர்காணல் ஒருவர் எது தொடர்பாக காணப்பட்டாரோ அது தொடர்பாக அவரது உண்மை ா எண்ணங்களை அறிவதற்கு உதவும். நோக்கத்தி வுக்கு மட்டுமே ஒரு நேர்காணல் பயனுள்ளதாய் )IDuụñ.
மூடி மறைத்தல் உள்ள இடத்தில் மடக்கிப்பிடிக்கும் வை உண்டு. அல்லாதபோது நேர்காணல் நீதிமன்றக் க்கு விசாரணை போல “சுவைபட', ஆயினும் தரக் ]றவாக, அமைய இடமுண்டு. இன்று மேலை களில் இவ்வாறான நேர்காணல்கள் அதிகம். நேர் ண்பவர் தன்னை எல்லாமறிந்த ஒருவரின் தானத்தில் த்துக்கொண்டு நேர் காணப்பட்டவரைச் சோதிக்கிற கில் நடந்து கொள்வது மேலைநாடுகளில் லகத்தரமாக இருக்கலாம். ஆனால் அது )ானதல்ல.
43 ) .

Page 46
தயானந்தாவின் கேள்விகள் பண்பானவை. நேர்காணப்பட்டவர் சொல்லத்தவறிய அல்லது சொல் லத்தயங்குகிற விடயங்களைத் தெளிவுபடுத்துகிற தொனியிலேயே அவரது கேள்விகள் அமைகின்றன. தமிழ் ஒலிபரப்புத்துறையில் உள்ளவர்களிடையே பொது விடயங்கள் தொடர்பான அறிவும் அக்கறையும் குறைவு. இன்று நிலைமை மோசமாகி வருகிறது. இதன் பின்னணியிலேயே தயானந்தாவின் வாசிப்பும் பல்துறை சார்ந்த அக்கறையும் முக்கியமாகத் தனது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காமல் இருக்கும் பண்பும் அவரைப் பெரும்பாலான ஒலிபரப்பாளர்களினின்று மிகவும் வேறு படுத்துகிறது.
தனித்தனியே ஒவ்வொரு நேர்காணல் பற்றியும் இங்கு கூறுவது இயலாது. எனினும் பொதுவான ஒருவிடயம், தமிழகத்துக் கலைஞர்களிடமோ இலக்கியவாதிகளிடமோ ஈழத்துக் கலை இலக்கியத் துறைகள் பற்றி உள்ள அக்கறை மிக மேம்போக்கானது. ஒரு சிலரைபற்றிச் சந்தர்ப்பவசமாகவோ தனிப்பட்ட தேவை கருதியோ இரண்டாங்கை, மூன்றாங்கையாகவோ கேள்விப்பட்டுள்ள அளவுக்கு எந்தத்துறையிலும் ஈழத்துப் பங்களிப்புப் பற்றிய ஆழமான அக்கறை இல்லை என்று இந்த நேர் காணல்கள் மூலம் அறியலாம்.
மற்றது, தமிழகக் கலைஞர்கள், படைப்பாளிகள் நடுவே தன்முனைப்பு மிகுதியாகவும் மற்றவர்களை விடத் தம்மை உயர்த்திக் காட்டுகிற ஒரு நிர்ப்பந்தம் உள் ளதாகவும் தெரிகிறது. ஈழத்தவர்கள் விலக்கானவர்கள் என நான் கூறவில்லை. எனினும் இங்கு தன்னடக்கமாக தம்மைப்பற்றிப் பேசுகிறவர்களைக் கூடியளவிற் கண் டிருக்கிறேன்.
ஜெயகாந்தனின் நேர்காணலின் பிற்பகுதியில் அவரது சிந்தனைக்குழப்பம் துலாம்பரமாக வெளிவருகிறது. எனினும் அது குழம்பிய சிந்தனையா அல்லது நேர்மையற்ற சிந்தனையை மூடிமறைக்கும் பரிதாபகர மான முயற்சியா என்று சொல்வது ஜெயகாந்தனை ஒவ்வொருவர் அறிந்து வைத்துள்ள முறையுடன் தொடர்புடையது.
திராவிட இயக்கம் முழுவதையுமே தட்டிக்கழிக்கிற பிரபஞ்சனால் ஜெயகாந்தன் போன்றவர்களது சீரழிவை விமர்சிக்கத் தெம்பில்லாமல் இருப்பதும் கருத்து நிலைப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலாகத் தனிப்பட்ட உறவும் அனுபவங்களுஞ் சார்ந்த விமர்சனங்களே பலராலும் முன்வைக்கப்படுவது முக்கியமானது. விலக்காக, சோ, குலோத்துங்கன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சோவால் எப்படி ஈழத்தமிழருடைய பிரச்சனையில் தமிழர்கட்குச் சார்பாளன் என்ற படிமத்துடன் நழுவ முடிகிறது என்பது வியப்புக்குரியது.
C 44

ஆமைக்குணம்
L_農リー。 リawリる、あ
丽丽冢爱>
நூல் சிறுகதைத் தொகுதி நூலாசிரியர்: நீ.பி. அருளானந்தம் வெளியீடு: திருமகள் பதிப்பகம்,
இல,144, 2ம் குறுக்குத் தெரு, வவுனியா விலை: ரூ.200/- இனவெறியும் அதிகாரவெறியும் கொண்டவர்களின் போக்கு களினால் அப்பாவி மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே பலவா றான பாதிப்புகளுக்கும் ஆளாகி, அகதிகளாய், ஊர் விட்டு ஊர் சென்று அனுபவிக்க நேர்ந்துள்ள கொடுமைகளையும், அவலங் களையும், சிறுமைகளையும் நீ.பி.அருளானந்தம் உணர்ச்சி கரமான கதைகளில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். அகண்ட நோக்குடனும், ஆழ்ந்த கூரிய பார்வையுடனும், மனிதர்களின் இயல்புகளையும் வாழ்க்கை யதார்த்தங்களையும் சீர்தூக்கி, சிந்தனை ஒளியும் கற்பனை வர்ணமும் ஏற்றி, நல்ல கதைகளை உருவாக்கியிருக்கிறார் நீ.பி.அருளானந்தம்.
-முன்னுரையில் வல்லிக்கண்ணன் لر ܢܠ
இந்த நூல் மூலம் முக்கியமான தமிழ்ப்படைப்பாளிகள் சிலரது சிந்தனைகளும் ஆளுமையும் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிட்டுகிறது என்பது நூலின் சிறப்பு. அதை விடவும், நேர்காணல்களை நடத்துகிறவர்கள் முன் ஆயத்தத்துடன் போவதன் பயனையும் இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.
ஒரு நேர்காணல் விவாதமாகவிடாமல் இருப்பதும் அதே வேளை ஆசிரியரிடம் மாணவர்கள் ஐயங்க ளைத் தெளிவாக்கிற விதமாக அமையாததும் அவசியம். தயானந்தா எல்லோருடனும் சமமாகவும் பண்பாகவும் உரையாடும் தனது ஆற்றலை நன்கு உணர்த்தியுள்ளார்.
நூலின் இறுதியில் வருகிற நூலாசிரியர் பற்றிய பகுதிகள் நூலின் நோக்கத்துக்கு ஊறு செய்வன என்றே நினைக்கிறேன். அவருடனான சிறப்பான நேர்காணல் தவிர்ந்து.

Page 47
முன் உள் அட்டைத் தொடர்ச்சி.
நீ இப்படித்தான் ஆகின்றாய் உன்னையல்லாது வேறெவரும் இன உன்னுடைய பேரால் நெவார்க்கிலும் ஸான்டஸ்க்கியிலிரு அவர்களை நடத்திச் சென்ற இடங் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். உன்னுடைய பேரால் டெற்றொய்ற்றிலிருந்து வந்த ஒரு குண்டு வெடிப்பில் சிதைகிறது உன்னுடைய பேரால் சுரங்கத்தில் தொழில் இல்லாத டை கண்ணி வெடிகள்மேற் கால் வைக் உன்னுடைய பேரால் அவர்களது உடல்கள் திருப்பி அணு உன்னுடைய பேரால் ஊனமுற்றும் பார்வை இழந்தும் மூ தந்தையர் மைந்தரிடம் மீளுகின்ற6
ஓஹையோவிலல்ல, அதென்ஸிலோ மனிதர் உன்னை முறைத்துப் பார்: இதுவே உன் கடவுச்சீட்டு அடைய குருதி மண்ணுடன் கலக்கவும் எலும்பு சேற்றுடன் கலக்கவும் ஆணையிட அனுமதிக்கிறவன்.
உன்னுடைய பேரால்
இப்போது இத்தனையும் நடத்தப்படு இங்கே நாம் இருக்கையில், கதைக செயற்படாத ஒவ்வொரு நாளும் ந இல்லை என்னாத ஒவ்வொரு நாளு

தை அனுமதிக்கவில்லை
நந்தும் வந்த பையன்கள் களில் உள்ளோரால்
பெண்ணின் உடல்
மந்தர்கள் கிறார்கள்
றுப்பப்படுகின்றன
)ளை பாதிப்புற்றும் னர்.
லீமாவிலோ தெருவழியே க்கையில் நீ இவ்வாறுள்ளாய். ாளப்படுத்தும் ஆள்:
}கிறது. க்கையில், துயில்கையில் ாம் அனுமதிக்கிறோம் நம் நாம் ஒமென்கிறோம்
பெருமைப்படு
Dாஜ் பியேர்ஸி மெரிக்கப் பெண் நாவலாசிரியர், கவிஞர் ig5 : Monthly Review, Sept. 2004. லிழில் : மணி

Page 48
I III |UA ||LINEAR |闻
IIIIIIIIIIIIIIIIIIHUIIIIIIIIIIIIII"
I | T III ہے // ]\ A پیکچی
!!!!!!!
HEHEHA