கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2006.07-09

Page 1

humi
T
| .

Page 2
జో
ಡಾ.ಜಿ.
H 岛【
醬 I M
| I
Kien
မျို !!!!!!!!!!!!! ார் |ali.
W N
 


Page 3
33வது இலக்கியச் சந்திப்பு ஈழத்தமிழ் இலக்கியத்தில்
சமகால முஸ்லிம் படைப்புகள்
ஆபிரிக்க நாவலாசிரியை Fatou Diome தண்ணிரின் விலை 1300 லெபனான் உயிர்கள் நீங்காத சில நினைவுகள் கற்றனைத்து ஊறும் அறிவு நுால் மதிப்புரை 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 40வது ஆண்( இரண்டு மரணங்களும் அஞ்சலிக் குறிப்பும் கடைசிப் புகலி
டாக்டர் முத்துலகூழ்மி ரெட்டி ஒரு காலத்தின் உயிர்ப்பு தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் எதை நோக் L6auJITFIT geodeoGOOT,
நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ܫ . விஜியுடன் ஒரு சந்திப்பு செப்டெம்பர் 26, 2006
வெப்பம் உண்டு வெளிச்சம் இல்லை.
Michael Moore - ஓர் குறுக்குவெட்டு
கண்டனக் கட்டம் - 17.09.2006
தேசிய எல்லைகளைக் கேள்விக்குட்படுத்தும்
புலம்பெயர் சமூகங்கள் தேர்த் திருவிழா-சமாதான வேண்டிகள்
- போர் விரும்பிகள்
நுால் அறிமுகம் - வேட்டைக்குப்பின்.
- Lost (35T6)Lib
- உதிர்ந்தும் உயிர்த்தல் எதிர்வினை நிழல்கள்
இதழ் 24
 
 

印?
ந. சுசீந்திரன்
எம். பெளஸர்
மாளவிகா
கலையரசன்
பரா குமாரசாமி
யமுனா ராஜேந்திரன்
செ. க. சித்தன்
சி.கா. செந்திவேல்
இளைய அப்துல்லாஹற்
கிரிந்திமணி
மீனாள் நித்தியானந்தன்
வினோதன்
வி.சிவல்ங்கம்
சந்துாஷ்
மானசி
Tifsof
ரதன்
என். யதார்த்தன்
Voice of antiwar
ராஜேஸ் பாலா
VOLVI-N 3 SSUE 24 1 Juillet-Septembre 2006 :
05
16
28
35
38
44
47
54
56
62
66
68
74
75
78
79
85
86
90
92
97
103
உயிர் நிழல் ( யூலை - செப்டெம்பர் 2006|03

Page 4
Vol. V No. 3
July - Sept. 2006 அட்டை வடிவமைப்பு: பிரதீபன் உள் வடிவமைப்பு: லகூழ்மி, பிரதீபன்
, , தயாரிப்பில் உதவி:
தொகுப்பாசிரியர்கள்: பிரியதர்ஷிணி லகூழ்மி தயாநிதி கலைச்செல்வன் ஜெயந்தி N
04உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

William Klein
தொடர்புகளுக்கு: EXIL 27-Rue Jean Moulin 92400 COUrbeVOie
FranCe. e-mail: uyirnizhal.exil @WanadoO.fr
அன்பளிப்பு: வருட சந்தா - 15 euros (4 பிரதிகள் : தபாற் செலவு உட்பட)
Ο d'enregistrement de l'association : 13023204

Page 5
33°து இலக்கி இல
23.09.2006
பதினெட்டு வருடங்கள் தொடர்ச்சியாக ஒரு நிகழ்வு இடம்பெயர்ந்த மக்களுக்கு மத்தியில் நடந்து வருகின்றது. இப்படி ஒரு சந்திப்பினைப் பற்றி ஐரோப்பாவில் உள்ள வேறு சில இடம்பெயர்ந்த சமூகத்தினருக்கும், மற்றும் பலருக்கும் சொன்னால் அவர்கள்வாய்பிளந்துநிற்கின்றனர். இதுவரை கலந்து பேசிய விடயங்களையும், நிகழ்வுகளில் பேசுவதற்கும் கருத்தாடுவதற்கும் எடுத்துக் கொண்ட விடயங்கள்ை யும் இன்று திரும்பிப் பார்க்கும்போது எங்களுக்கும் அதிசயமாகத்தான் இருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்களின் சகலவித சமூகத் தேவைகளையும் ஈடு செய்வதற்கு உருவாகிய அமைப்புக்கள் இன்றெல்லாம் நிறுவனங்களாகி நிற்கின்றன. ஆனால், அவர்களது அரசியல், சமூக, பொருளாதார, உலக அறிவு பற்றிய வளர்ச்சிக்கு அல்லது அவர்களது தொடர்கல்விக்கு அவர்கள் குடியேறிய நாடுகள் சட்டரீதியாகவே அனுமதி மறுத்தன. பத்தாம் வகுப்புவரையோ அல்லது பல்கலைக்கழக புகுமுக வகுப்பு வரையோ படித்த பெரும்பாலான இளைஞர்கள் அவர்கள் குடியேறிய அந்தந்தநாடுகளின் மலிவான கூலிகளின் ஒருபகுதித் தேவையினைப் பூர்த்திசெய்தனர். இருப்பினும் சிறு சஞ்சிகைகள், மற்றும் இலக்கியச் சந்திப்பு, ஒரு சில நிபுணத்துவக் கருத்தரங்குகள் போன்றவையே இந்த
இதழ் 24
 

யச் சந்திப்பு ண்டன்
- 24[892006
- ந.சுசீந்திரன் -
இடம்பெயர்ந்த மக்களுக்கு பள்ளிக்கும், பல்கலைக் கழகத்துக்கும் அப்பால் அறிவூட்டும் கல்விக் கூடங் களாகின.
நெருக்குவாரங்கள் நிறைந்த ஒரு கால இடை வெட்டைநாங்கள் தாண்டியாயிற்று. இப்போதெல்லாம் இரண்டாவது தலைமுறையின் ஊடிருத்தல்கள் தெளி வாகவே தெரிகின்றன. இலக்கியச் சந்திப்பும் தன் கால நிர்ப்பந்தத்தின் கடமையினை ஒரளவேனும் செய்திருக் கின்றது என்று பெருமை கொள்ளலாம்.
இந்த இலக்கியச் சந்திப்பின் 33வது தொடர் இம்முறை இலண்டனில் ஆசியநாட்டவர்கள் அதிகம் செறிந்து வாழும் ஈஸ்ட்ஹாம் என்ற நகரத்தின் ஈஸ்ட் ஹாம்பல்கலைக்கழக வளாகத்தில் அந்தப்பல்கலைக் கழகத்தின் உதவியுடன் இரண்டுநாட்கள், செப்டெம்பர் 23ம், 24ம் திகதிகளில் நடைபெற்றது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, டென்மார்க், இலங்கை, மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்வலர்கள் கலந்து கொண்டி ருந்தனர்.
இந்த நிகழ்வு நடந்தேறுவதற்கு ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், சிவலிங்கம், கே.கே. ராஜா, பவுநீர், நித்தி, ராகவன், நிர்மலா மற்றும் பலர் முன்னின்று உழைத்தனர். -
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 (05

Page 6
ராஜேஸ் பாலாவின் தலைமையுரையைத் தெ மாநகரசபை உறுப்பினர் போல் சத்தியநேசன் அவர் வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தியது.
'மனித உரிமைகள் என்ற தலைப்பிற்கு அழுத்தம் இலக்கியச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. அதனா ரைகள் மனித உரிமையில் ஏதோவொரு வகையில் பை புகலிட இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணியம் இலக்கியம், இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு இழை மைகள், இரண்டாவது தலைமுறையினரின் அடைய போன்ற விடயங்கள் இந்த இரண்டுநாட்கள் சந்திப்பில் எடுக்கப்பட்டன.
உண்மையில் இலக்கியச் சந்திப்பு தமிழர்களின் அல்ல! அது இலங்கையர்களினதும் அல்ல! அது உ என்றே சொல்லத் தோன்றுகின்றது.
1980களின் மத்தியில் சுமார் இருபதுக்கும் மேற் ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிரு ஆசிரியர்களும் வாசகர்களும் மற்றும் இலக்கி சந்திப்பதற்காக முதலில் ஏற்பாடு செய்யப்பட்டதே 1988ம் ஆண்டு ஜெர்மனியின் ஹேர்ணஎன்ற நகரில் அ6 நிர்வாகத்திற்குட்பட்ட அமைப்பொன்றில் தற்காலி இருந்த இலங்கையைச் சேர்ந்தபீற்றர் ஜெயரத்தினம் என முதலில் ஒழுங்கு செய்யப்பட்டது. இதுவே பின்னர் மூ ஒருமுறை ஜெர்மனியின் பல்வேறு இடங்களில் ஆர்வமு நடாத்தப்படும் இலக்கியச் சந்திப்பானது. சுதந் பரிமாற்றத்திற்கான ஒரு களமாக, எப்போதுமே ஒரு திற இலக்கியச் சந்திப்பு இருந்து வருகின்றது. ஒரு நீ முற்கூட்டியே கலந்து கொள்வதற்கான விண்ணப்ப அதன் நடைமுறை.
இலக்கியச்சந்திப்பில் எந்த விடயமோ, எந்த ந யாக்கமோ, எந்த வயதினரோ, எந்தப்பிரதேசத்தவர்க படுத்தப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் சமஉரிமை அதன் ஆன்மா போன்றது.
ஒரு குறித்த சமூகத்தில் வன்முறையின் அச்ச நிற்கின்ற காலவேளையில் இலக்கியச் சந்திப்பினை எடுக்கப்பட்டதற்காலிக ஒழுங்குகள் இலக்கியச் சர் வரையறையை சட்டகப்படுத்துவதாக அமையக்கூடா கருத்தையும் கூட பேசுகின்ற உரிமையை உயிரினைப் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற வோல்ரயரின் ( சந்திப்பு ஒரு மெளனப்பிரகடனமாகவே எடுத்தியங்கு 33வது இலக்கியச் சந்திப்பின் முதல் நாள் நி சந்திப்பில் நீண்ட நாட்களாகவே தன்னை இன 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலின் ஆ அவர்களுக்கான அஞ்சலியின் போது ‘உயிர்நிழல்' லகூழ்மி அவர்கள் சி. புஸ்பராஜா அவர்களுடன் தொடக்கம் அடிக்கடி இலக்கியச் சந்திப்பின் பொருட இடங்களுக்கும் மேற்கொண்ட நீண்ட தூரப் பயண தொகுப்புக்கள் மற்றும் 'ஈழப்போராட்டத்தில் எனது 8 போன்றவற்றின் கணனியாக்கலை மற்றும் இலக்கி பெண்ணுரிமைச் சர்ச்சைகளை நினைவு கூர்ந்தார். வாழ்ந்து இவ்வருடத் தொடக்கத்தில் மரணமான முல் பற்றிய அறிமுகத் தகவல்களை இனி சஞ்சிகை ஆ பகிர்ந்து கொண்டார்.
ஜெர்மனி-பெர்லினைச் சேர்ந்த சந்துாஸ்குமார் இலக்கியம்: ஒரு மெளனத்தின் குரல் என்ற தலைப்பில் இவருடைய அமர்வுக்குராஜேஸ்வரிபாலசுப்ரமணியம் சந்தூஸ்குமார் அவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கில
06|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

தாடர்ந்து நியூஹாம் களின் ஆரம்ப உரை
கொடுத்து இம்முறை ல், அநேக கருத்து Dயங்கொண்டிருந்தன. , ஈழத்தின் மலையக க்கப்படுகின்ற கொடு ாளப் பிரச்சினைகள் ல் பேசுபொருட்களாக
ராஜேஸ் பாலா
இலக்கியச் சந்திப்பு உலகப் பொதுவானது
ற்பட்ட சஞ்சிகைகள் நந்தன. அவற்றின் யெ ஆர்வலர்களும் இலக்கியச் சந்திப்பு. மைந்த ஒரு தேவாலய க வேலையொன்றில் பவரால் ஒரு சந்திப்பு ஜாஸ்பீர் பானேசர் முன்று மாதங்களிற்கு முள்ள புதியவர்களால் திரமான கருத்துப் ந்த விவாத அரங்காக ர்வாக வசதிக்காக ங்கள் கோரப்படுவது
பரோ, எந்தக் கலை 5ளோமுக்கியத்துவப் என்பது உண்மையில்
போல் சத்தியநேசன் ாறுத்தல் மேலோங்கி நடாத்தி முடிப்பதற்கு திப்பிற்கான நிரந்தர து. உடன்பட முடியாத பணயம் வைத்தேனும் கூற்றினை இலக்கியச் கின்றது. கழ்வில் இலக்கியச் ணைத்துக் கொண்ட பூசிரியர் சி.புஸ்பராஜா
சஞ்சிகை ஆசிரியர் ப.சந்துாஸ்குமார் தொண்ணுறுகளில் ட்டு ஐரோப்பாவின் பல ங்களை, இலக்கியத் Fாட்சியம்' என்ற நூல் ய, அரசியல், சமூக, டென்மார்க் நாட்டில் }லையூரான் அவர்கள் பூசிரியர் கரவைதாசன்
அவர்கள் "புகலிட கட்டுரை வாசித்தார். அ. தேவதாசன் தலைமை தாங்கினார். ம், ஜெர்மன் முதலிய
இதழ் 24

Page 7
மொழிகள் அறிந்தவர், நல்ல கவிஞர், பாடகர், ெ இலங்கையில் இல்லாத ஒரு ஜனநாயகச் சூழல் பு களுக்கு வாய்த்திருப்பதாகவும், அதனால் அங்கு குரல்களாக இங்குள்ள புகலிடப் படைப்பாளிகள் இ காட்டினார்.
தலித் இலக்கியம் பற்றிய கருத்தரங்கு அசுரா6 பட்டது. அநிச்ச சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் தலித் இலக்கியத்தின் தோற்றம், தமிழில் அதன்வரவு! இலக்கியத்தை எதிர்கொண்ட விதம் மற்றும் இன்றைய சமூகவியல் பரிமாணங்களை எடுத்துக் காட்டினார் யுரையில் பேராசிரியர் சிவத்தம்பிஅவர்களின்புத்திஜி அப்பட்டமான மனிதவிரோதக் கருத்தோட்டங்களை மாகத் தமிழ்ச் சிந்தனைப் பரப்பில் விதைத்துச் செ இலகு வடிவில் விளக்கினார்.
பெண்கள் அமர்வு மீனாள் நித்தியானந்தன் அ தாங்கப்பட்டது. இலங்கைப் பேராதனைப்பல்கலைக் சுமதி, இலங்கையின் கல்வியியல் துறையைச் சேர்ந்த பெண்களுக்கான நிகழ்வுகளில் பங்கேற்றனர். ஈழத் கவிதைகளிலும், முஸ்லிம் பெண்கள் கவிதைகள் அடையாள நிர்ணயத்தின் அவசியம், அது எவ்வ படுகின்றது, அந்த நிர்ணயத்தின் எல்லைகள், இயங் எது அடையாளம் என்பதில் தொடங்கி, எது என் என்பதில் வந்து நிற்பது வரை தெரிதாவின் கோட் ஒன்றிப்பினைக் காட்டினார். பெண்கள் ஒரு குறித்தகு சுய அடையாள மீட்பிற்காக தாம் மேற்கொண்ட களவே சுல்பிகா அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
இலக்கிய விமர்சகர் மு. நித்தியானந்தன் அவர்கள் ஈழத்தமிழ்ப்படைப்புக்களும் என்ற பொருளில் உரை இலங்கையில் சிறுபான்மை இனங்களின் உரிமைக் மனித உரிமைகள் பற்றிய புரிதல்கள் மற்றும் வெளி வற்றினை இலக்கியச் சாட்சியங்களினுடு விபரித்த கையின் சோல்பரி அரசியல் யாப்பில் 29வது சட்டம் பாதுகாப்பிற்கு உறுதியளித்தபோதும் 1948ல்மலையக பிரஜாவுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது போன்றே வரல அதிகாரங்கள் தாங்கள் வேண்டியபோது மனித சாதுர்யமாக மேற்கொள்கின்றன என்பதை மலையகப எஸ். நடேசன் அவர்களின் நூல் குறித்து வைத்துள் படைகள் இலங்கையில் இருந்தபோது "இன்று உங்க என்பது எங்களால் வழங்கப்பட்டிருக்கும் மனிதாபிம இந்திய ஜெனரல் ஒருவரின் நேர்கூற்றினை புலிக கலாநிதி ராஜனி திராணகம அவர்கள் முறிந்த ப வைத்திருப்பதையும், தாகூரின் புகழ்பெற்ற கவிை காட்டக் கூடியவர்களே அதிகாரத்தின் இறுமா உரிமைகளினைப்பார்க்கின்றனர் என்ற முரண்நகைச் சொல்லிப் போனார். அவரது பேச்சு கலாநிதி ராஜ களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
'மூன்றாவது மனிதன்' சஞ்சிகையின் ஆசிரியர் களின் 'ஈழத்தமிழ் இலக்கியமும் முஸ்லிம் படைப்பு இம்முறைநடந்த இலக்கியச்சந்திப்பின் சிறப்பு அம்சம பதுறுஷமான்அவர்கள் தலைமையேற்றுநடத்தினார். 8 அவல வாழ்வின் சோகங்களும் அரசியல் சமூக இருப்பு எவ்வாறு தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் உள்வா என்பதை ஆராய்ந்திருந்தார். (இவருடைய கட்டுரை இவ் சனிக்கிழமை மாலை "புகலிட வாழ்வில் இளர் அடையாளம்' பற்றி நோர்வே வாழ் அருள்நேசன் உளவியல், சமூகவியல் அணுகுமுறையில் எவ்வா
இதழ் 24

மாழிபெயர்ப்பாளர். கலிடப் படைப்பாளி ள்ள மெளனத்தின் Iருப்பதை எடுத்துக்
பினால் வழிநடத்தப் சேர்ந்த தேவதாசன் பாழ்ப்பாணியம் தலித் தமிழ்ச் சமூகத்தின் . அசுரா தன் நெறி பிதம் என்ற பாணியில் எவ்வாறு நுணுக்க ல்கின்றார் என்பதை
வர்களால் தலைமை கழக விரிவுரையாளர் சுல்பிகா ஆகியோர் தமிழ்ப் பெண்களின் ரிலும் "நான்" என்ற ாறு மேற்கொள்ளப் கு வெளிகள், மற்றும் அடையாளம் அல்ல பாடுகளில் இவற்றின் ழுவாக, அவர்களின் லை அனுபவங்களை
'மனித உரிமைகளும் பாற்றினார். சுதந்திர கான வரலாற்றினுடு ரிப்பாடுகள் போன்ற தார். சுதந்திர இலங் சிறுபான்மையினரின் மக்களுக்கு எதிராக ாறு நெடுக எவ்வாறு உரிமை மீறல்களை ]க்கள் வரலாறு என்ற ாளதையும், இந்தியப் ாது உயிர்வாழ்க்கை ானச் சலுகை" என்ற ாால் கொல்லப்பட்ட னை நூலில் பதிந்து தகளை மேற்கோள் ப்பில் எப்படி மனித ளை தன் பேச்சினுடு னி திராணகம அவர்
ாம். பெளஸர் அவர் களும்' என்ற பேச்சு
ாகும். இந்த அமர்வை
ழத்துமுஸ்லிம்களின்
ன் போராட்டங்களும்,
வ்கப்பட்டிருக்கின்றது விதழில் பிரசுரமாகிறது) தலைமுறையினரின் வர்களது விரிவுரை இளந் தலைமுறை உயிர்நிழல்
சுமதி ராஜசிங்கம்
சுல்பிகா
மு. நித்தியானந்தன்
0 யூலை - செப்டெம்பர் 200607

Page 8
யினரின் அடையாளத்தேடல்கள் நோக்கப்படலாம் என்ற அமைந்தது.
இலக்கியச்சந்திப்பு பொதுவாகவே பேச்சாளர்கை வதல்ல, மாறாக அங்கு பிரசன்னமாயிருக்கும் அனை யாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொள்வர். ம களையும் மூர்க்கமான எதிர்வினைகளையும் அவதானி பின்னர் கலந்துகொண்டவர்களுக்கிடையில் நிலவுக புதியவர்களை அதிசயத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. இ சந்திப்பு நடந்த விரிவுரைக்கூடமானது அதற்கான மி வழங்கவில்லையாயினும் நிறையப்பேர் இங்கு நடந்த தலைப்புகளில் மேலதிகமாக இணைத்தோ அல்லது ெ பேசியது அநேக கருத்தரங்குகளுக்கு முன்மாதிரியாக நிர்மலா, வாசுகி, சுசீந்திரன், திருமதி. மகேஸ்வரி பாலசி ரவி, சண் (புதியவன்), ஐ.ரி.சம்பந்தன், நஜா முகமட், Tal தேவதாசன், நந்திகேசன், வேலு, எம்.ஆர்.ஸ்ராலின், நித்தியானந்தன், ஜெயஅழகி, லகூழ்மி, அசுரா, பஷீர், சி போல் சத்தியநேசன், பெளஸர், கரவைதாசன் ஆகியே களின்போது பங்குகொண்டு அமர்வுகளைச் சிறப்பித்த இரண்டுநாட்களும் மாலையில் கலைநிகழ்வுகள் இடம் சிவலிங்கத்தின் ஆக்காண்டி! ஆக்காண்டி கவிதைை ராணி அவைக்களித்த கவிதா நடனத்தில் பங்குகொண் நவீனா, கிருத்திகா, ஜீவநதி, பைரவி, அநாமிகா, ஆகியோர். சுமதியின் நெறியாள்கையில் ஒரு சிறிய கை மனதைக் கவர்ந்தது. அதில் நிர்மலா, சுமதி, வாசுகி, ந மஞ்சு ஆகியோர் பங்கு பற்றினர். ஸ்ராலின் சத்தியதாஸ் பொப்மார்லியின் பாடல்களைப் பாடினார். சத்தியேந்திர சந்துாஸ், கரவைதாசன், சாந்தகுணம் மற்றும் பலரின் இ6 புதியவனின் 'மண்படத்தின் சில காட்சிகள் அனுப இலக்கியச்சந்திப்புக்குப்பின்னான நேர் நேர் விவாதங் மாத இறுதியிலும் அபூர்வமாகச் சூரியன் விழுந்த இரண நிரம்பிநின்றன.
08உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

0அறிமுகப்பாடமாக
ளக் கொண்டு அமை எவருமே கலந்துரை )ாறுபட்ட கருத்துக் ப்பதென்பதும், அதன் ன்ெற நட்புச்சூழலும் இம்முறை இலக்கியச் தந்த சாத்தியத்தை த கலந்துரையாடல் வட்டியும் ஒட்டியுமோ அமைந்துவிடலாம். ங்கம், பரராஜசிங்கம், milTimeS JTTggJBITuLa5ub, அருள்நேசன், சுமதி, வலிங்கம், நஸ்முதீன், ார் கலந்துரையாடல் னர். )பெற்றன. சண்முகம் யை நடன ஆசிரியை டவர்கள் நாகேஸ்வரி, ஒவியா, பாவனா விதை-இசைநாடகம் ர்மதா, சத்யேந்திரன், கிற்றார் வாசித்தபடி வின் தபேலா இசை, ன்னிசைப் பாடல்கள், விக்க கிடைத்தன. கள் என்று புரட்டாதி ர்டு வெயில்நாட்கள்
எம். பெளஸர்
கரவைதாசன்-லசுஷ்மி
இதழ் 24)

Page 9
33வது இலக்கிய து
23 * Sep 2006 (Sa நிகழ்ச்சிகள்
The European Tamil Literary Conference 33
09.30 தல்வரவு - தேதீச் 1991 வரவேற்புரை
gregob Frax தலைலர், லணர்டன் தி ர்ே கிழக்கு லண்டனி பல்! மைக் தோர்ண் பு 33வது இலக்கிய சந்திப்பு 1825 லண்டன் தமிழ் இ ம்ை.ண் awகலுை: ୫tଶଞt୫ u୩ ଜ୍ଞଜw& 9.38 போல் சத்தியநே8
ஈழத் தமிழ் இலக்கியத்தில் 10.40 அறிமுகம்
taifa SiegfriBot" 11.00 அஞ்சலி: *{URAN EIGHS IN சி. புஷ்பராஜன், SES LANKÁN “Táý, LTTERATURE? 1120 புகலிட இலக்கியம்
பக சந்தூஸ்குமt 1840 இடைவேளை
base articine: 1200 கலந்துரையs.ண் 23rd & 24 of September 2006 : ... on the 23:09:30aa-230 a. அ. தேவதாசன் on the 24:09:30ain-20pm 133ர் புகலிடத் தலித் இச் 46 is 62nd Qigos the Wenue: 1509 கலாச்சாரத்தளத்தில் University of East lordon கமதி, கல்பிகள்
East iоadori tampus 1830 கலத்துரை:ாடல் Stratord, Roxtoyd Road, lordon E15 183ழ் இடைவேளை Казахf Futte: čistkж. Визаs 2&&& 8.4 புகலிடவாழ்வில்
இனம் தலைமுறை
டி. அருள்தேசன்
Ue tra Partnership wieħ t?05 48;s600 tug Los Na toNexoNTARAFAŁtfrERARYfpRMER 1868 கலாச்சார நிகழ்ச்சி 3. st. 3, therestry or Essr i ospot 228 முடிவு
\-
இலக்கியச் சந்திப்பின் 34வது தொடர் கோடை 20 தீர்மானிக்கப்பட்டது.
ஆக்காண்டி ஆக்கா பங்கு கொண்டவர்கள்: நாகேஸ்வரி, நவீனா, கிரு
இதழ் 24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Úà - 6V6Gé-6ði.
ay)
க்கழகத் துணை வேந்தச் 帕ö磁脉.风o旷 ப மன்றமும் கிழக்கு கமும்
கில பல்கலைக்கழகம் 24th Sep 2006 (Sunday) திழலும் கவுன்சிலச் : - -
! நிகழ்ச்சிகள்
s - 49.30 நல்வரவு - தேதீர் »aagaas
1889 ஆரக்ஷரை மளனத்தின்
ததன குரல் #, తPఇపటిist
1628 usfs s. fønlagti
ஈழத் தமிழ்ப் படைப்புக்களும் மு. நித்தியானத்தன் 50 வேளை க்கியம் இடை
1110 கலத்துரையாடல் கியம் பற்றிய 12.45 மதிய உணவு
1845 ஈழத்தமிழ் இலக்கியமும் sæłKafèt urşi...và முஸ்லிம் படைப்பானிகளும்
மஹற்ருள் புெளசர், எம். ஐ. ஜாபிர் 14:20, faifigis) gairt sé 1829 இடைவேளை 1840 அடுத்த இலக்கிய சந்திப்பு பற்றிய பினரின் அடையாளம் தரித்துரையாடல்
t7.18 தன்றியுரை
ab. Kósargyfgos ள் 1780 கலாச்சார நிகழ்ச்சிகள்
21 08 pôly
07இல் ஜெர்மனி-பேர்லினில் நடைபெறும் என்று
டி - கவிதா நடனம் கா, ஜீவநதி, பைரவி, அநாமிகா, ஒவியா, பாவனா
உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.09

Page 10
10|உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

33வது இலக்கியச் சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
18 வருடங்களிற்கு மேலாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு பகுதி மக்களின் இருப்பாகவும், இருப்பின் குரலாகவும் இருக்கின்ற இலக்கியச் சந்திப்பு 33வது முறையாக இரண்டு நாட்கள் 2006ம் ஆண்டு செப்டெம்பர் 23ம், 24ம் திகதிகளில் கிழக்கு இலண்டன்பகுதியில் உள்ள ஸ்ராட்போட் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று கீழ்வரும் தீர்மா னங்களை ஒருமனதாக நிறைவேற்றுகின்றது.
1. இலங்கையில் நடைபெற்று வரும் யுத்த நிறுத்த மீறல்கள் மற்றும் யுத்தத்தை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் மேற்கொள்ளு மாறும் இலங்கையின் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர ஜனநாயக அரசியல் தீர்வினை முன்வைக் குமாறும் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் இவ்விலக்கியச் சந்திப்பு கேட்டுக் கொள்கின்றது.
2. அண்மையில் நடைபெற்ற கெப்பிட்டிக் கொலாவ, மூதூர், முல்லைத்தீவு, பொத்துவில் போன்ற இடங்களில் நடைபெற்ற அப்பாவி மக்களின் மீதான படுகொலைகளை இவ்விலக்கியச் சந்திப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் இவை போன்ற படு கொலைகள் இனி ஒருபோதும் இடம்பெறாத வாறு உறுதியளிக்கும்படி இலங்கை அரசி னையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கேட்டுக் கொள்கின்றது.
3. வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதியில்
விசாரணையின் பேரால் கைது செய்வதையும் வெள்ளை வானில் கடத்துவது, காணாமற் போகச் செய்வது, கொல்லுவது, இனந் தெரியாதோர் மற்றும் பல்வேறுபட்ட படைகள் என்ற போர்வையில்நடத்தப்படும் கொலைகள் போன்றவை உடனே நிறுத்தப்பட வேண்டும்.
4. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்கள் தங்கள் இடங்களில் பாதுகாப் புடனும் இறைமையுடனும் வாழ வழிசெய்ய வேண்டும்.
5.இலங்கையில்நடைபெறும் சட்டப்புறம்பான படுகொலைகள் அனைத்தும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்புநிறுத்தப்படவேண்டும்.
என்று இச்சந்திப்பு இன்றுதன் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.
இலண்டன், 24.09.2006
ඖෂg 24]

Page 11
இலண்டனில் நடைபெற்ற 33வது இலக்கிய அன்று மூன்றாவது மனிதன்' சஞ்சிகை படிக்கப்பட்ட கட்டுரை நன்றி
கிடந்த 18 வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர்கள், இலக்கிய வாதிகள், சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர் களால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த இலக்கியச் சந்திப்பு பல்வேறு வகைகளில் முக்கியத்துவமானது. விளிம்புநிலை மக்கள், பெண்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள், மற்றும் இளைய தலைமுறையினரின் முக்கியத்துவமான பிரச்சினைகள் பற்றிப் பேசுவ தற்கும். அவர்களுக்கான நம்பிக்கையான சூழலை ஏற்படுத்துவதற்குமாக நீங்கள் காட்டுகிற மனிதநேய மிக்க அக்கறை விசேடத்துவமானது.
இந்த அமர்வில் எனக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு ஈழத்தமிழ் இலக்கியமும் முஸ்லிம் படைப்பாளிகளும் என்பதாகும். மிக விரிவான அர்த்தங்களைக் கிளப்பு கிற இத்தலைப்பானது அடிப்படையில் விரிந்த பேசுபொருளுக்குரியது. ஈழத்தமிழ் இலக்கியமும் முஸ்லிம் படைப்பாளிகளும் என்பதனை ஈழத்தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் படைப்புகள் என்று நோக்கு வது அதிக பொருத்தப்பாட்டைத் தரும் என்று நான் கருதுகிறேன். தனித்தனி படைப்பாளிகளின் ஆளுமை களை, அவர்களது பார்வைகளை அடையாளம் காண்பதற்கு முன்பு - ஈழத்தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் படைப்புகளின் பொதுவெளிப்பாடுகளும் அதன் கருத்துநிலையும் அதுமுன்னிருத்துகின்ற அதன் குரலின் ஊடான விடயங்களும் கலைவெளிப்பாடும் பார்க்கப்படல் வேண்டும்.
** * * * 责
ஈழத்தமிழ் , லக்கியம் என்பது, ஒற்றைப் பரிமாணமுடைய ஒரு திணையியல் அல்ல. அது பன்மைத்துவமானது, பல்வேறு கருத்துநிலைகள் சார்ந்தது. மூன்று தேசிய இனங்களினதும் (தமிழ், முஸ்லிம், மலையக) வெவ்வேறுபட்ட பிராந்தியங் களினதும் சேர்க்கையைக் கொண்டதுமாகவே ஈழத்தமிழ் இலக்கியம் உள்ளது. புலம்பெயர் இலக்கியம் என்ற, 1980க்கு முன் ஈழத்தமிழ் இலக்கி இதழ் 24
 

ச் சந்திப்பில் 24.09.2006 ஞாயிற்றுக்கிழமை
ஆசிரியர் எம். பெளஸர் அவர்களினால்
யுடன் இங்கு பிரசுரமாகிறது
யத்தில் இல்லாத, புதிதான உட்கூறும் இப்போது இதில் அடங்கும். ஈழத்தமிழ் இலக்கியத்தில் உள்ள இந்தப் பன்மைத்துவத்தைப் புரிந்து கொள்வதும், பகுதி பகுதியாக ஈழத்தமிழ் இலக்கியத்தை பகுத்தாய்வு செய்வதும் அதனுாடாக ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இலக்கியத்தை மதிப்பீடு செய்வதுமே ஆரோக்கியமான மதிப்பீடாகும்.
ஈழத்தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் படைப்புகள் பற்றிய ஆய்வு ஒரு முக்கியமான அனுபவம் மட்டுமல்ல. உண்மையில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வும் அதன் அரசியலும் அதனுாடாக எழுந்த போக்குகளும் எப்படி எப்படியாக மாற்றம் பெற்று வந்துள்ளன என்பதை சமூகவியல், மானுடவியல்ரீதயாகப் புரிந்து கொள்வ தற்குமான வாய்ப்ப்பான ஆவணமாக இன்றைய முஸ்லிம் படைப்புகள் உள்ளன.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் இன்றைய முதன் மையான பிரச்சினைகள் என்ன?
எந்தெந்த விடயங்களில் அம்மக்களின் வாழ்வு சவால்களை எதிர் கொள்கிறது?
இப்படைப்புகளினுாடாக முஸ்லிம் கலைஞர்கள் படைப்பாளிகள் வெளிப்படுத்துகின்ற செய்திகள் என்ன?
இக்கேள்விகள் எமக்கு முக்கியமாகின்றன. முஸ்லிம் என்கின்ற அடையாளமானது மத அடை யாளமல்ல. அது முஸ்லிம் மக்களின் இனத்துவ அடை யாளம் (ethnicidentity) ஆகும்.இஸ்லாமியர்கள் என்கின்ற அவர்களுடைய மத அடையாளத்துடனும் அவர்கள் எதிர்கொள்கின்ற அரசியல் சமூகப் பொருளாதார பண் பாட்டுப் பிரச்சினைகள் தனித்துவங்களுடனும் மேற் கிளம்பி நிற்பதே இந்த 'முஸ்லிம்' இன அடையாள மாகும். இந்த 'முஸ்லிம்' என்கின்ற இன அடையா ளத்தைக் கூர்மைப்படுத்தி நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தை சிங்கள இன மேலாதிக்கமும் குறுந் தமிழ்த் தேசியவாதமும் ஏற்படுத்தின. இதில் குறுந் தமிழ்த் தேசியவாதம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் இருப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் முஸ்லிம் உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.11

Page 12
படைப்பாளிகளின் படைப்புகளில் ஏற்படுத்தி உள்ள மாற்றங்கள் என்று இன்று பிரதானப்படுத்துகின்ற விடயங்கள் அரசியல் சார்ந்த சமூக இருப்பை வலியுறுத்துவதாகவும் ஒடுக்குமுறைமீதான காட் டமான 'எதிர்ப்புக் குரலாகவும் பெருமளவில் உள்ள தைக் காண முடியும்.
இன்றைய இலங்கைச் சூழலில் மனிதர்கள் பெருமளவில் தமது அடிப்படை உரிமைகளை இழந்து வருகின்றனர். பேச்சுரிமை, எழுத்துரிமை என்பன மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மீதான அச்சு றுத்தல்கள் அதிகரித்துள்ளன. சுயாதீனமாக அவர்களது பணியைச் செய்வதில் இருந்து அவர்கள் தடுக்கப்படுகின்றனர். சுதந்திரமான எழுத்து, கருத்து வெளிப்பாட்டுக்கான சூழல் அங்கில்லை. துப்பாக்கி களினுாடான அதிகாரமும் கொலைவெறியும் அங்கு மக்களின் வாழ்வையும் படைப்பாளிகளின் சிந்தனை யாளர்களின் செயற்பாட்டையும் மிகமோசமாக அழித்தொழிப்புச் செய்து வருகிறது. எங்களைப் போன்ற பல முஸ்லிம் கலைஞர்கள், பத்திரிகை யாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு பல வருடங் களாக இந்த மோசமான உயிர் அச்சுறுத்தல்கள் உள்ளன.
முஸ்லிம்மக்களின் உண்மையான பிரச்சினையைப் பார்க்கத் தவறி உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஊடகங்களின் துணையுடனும் தனிநபர்களுக் கூடாகவும் எம்மைப்பற்றி எதை அவர்கள் (எம்மை ஒடுக்குகின்ற ஆதிக்கத்தரப்பினர்) சித்தரிக்க விரும்பு கின்றார்களோ அதாகவே நாங்கள் சித்தரிக்கப் படுகிறோம். இவை வெறுக்கத்தக்க மோசமான கதை யாடல்களாக மாற்றப்படுகிறது. மனித மூளை களுக்குள் இத்திரிபுகள் திட்டமிட்டுச் செலுத்தப்படுவ தனுாடாக, உண்மையை அறிவதில் ஆர்வம் கொண் டோரை திசை திருப்புவதும் ஆதிக்கத் தரப்பினரின் கபட நோக்கங்களை அம்பலப்படுத்தும் செயற்பாடு களைப் பின்னுக்குத் தள்ளுவதுமே இதன் நோக்க மாகும். இதை எந்த நோக்கத்திற்காக இவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்கிற பார்வை எமக்கு இருப்பதால் இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் பணிக்கு நாங்கள் முன்பிலும் பார்க்க அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டி உள்ளது. அந்த முக்கியத்துவம் கருதித்தான்நாங்கள் இங்கு வந்துள் ளோம். வடக்கு, கிழக்குத் தாயக மண்ணில் தமிழ், முஸ்லிம் மக்களின் சமத்துவமான இணைந்த வாழ்வை நாங்கள் மிக ஆழமாக மனதார விரும்புகிறோம். வடக்கு, கிழக்கில் வாழ்கின்றதமிழ், முஸ்லிம் மக்கள் கடந்த கால அனுபவங்கள் தந்த பாடத்தினுாடாக இந்த உணர்வை, தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்த வாழ்வை, இப்போது அதிகம் அதிகம் வெளிப்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
1970களில் எழுதத் தொடங்கிய பசீல் காரியப்பர் 1994இல் எழுதிய கவிதையொன்றைப் பாருங்கள்.
துறைநிலாவணையிலிருந்து ஒரு துளசிச் செழ கொண்டு வந்தேன்.
12உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

வேர் நொந்துபோகாமல் நிர்வார்த்து ஒரமாய்க் கெல்லி ஈர மண்ணோடு உசுப்பாமல் கொண்டு வந்து எங்கள் இல்லம் இருக்கும் கல்முனைக்குழமண்ணைக் கெல்லி அதன் உள்வைத்தேன்.
அம் மண்கள் கலந்தன, மனிதரைப் பழித்தன துளசியின் இலைகள் என்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கின்றன"
இந்தக் கவிதை மிகத் தெளிவாக தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான வாழ்வை அதன் நேற்றைய இன்றைய நிலையை இயற்கையுடன் பொருத்தி சித்தரிக்கின்றது. துறைநீலாவணை நுாறுவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற மண், கல்முனைக்குடி நுாறுவீதம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற மண். இந்தக் கவிதை பிறந்ததற்கான அரசியல் சூழலையும் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்த செயல்களையும் நாம் அறிவோம். 1985களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயான இணைந்த வாழ்வும் நட்பும் முரண்பாடுகளுக்கு வழி விடத் தொடங்கியது. 1990களில் விடுதலைப் புலிகளின் முஸ்லிம்கள்மீதான இனப்படுகொலையும் வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளி யேற்றிய இனச் சுத்திகரிப்பும் அதன் கருத்தியல் ஆதிக்கப் போக்குகளும் செயற்பாடுகளும் இரு இன மக்களிடையேயும் கணிசமான கசப்புணர்வையும்
பிளவையும் ஏற்படுத்திற்று.
1990க்குப்பின்னான காலம். மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் சம்பவங்களையும் இருப்பு நெருக்கடி யையும் கொண்டு வந்து சேர்த்தன. இதன் பின்னான ஒவ்வொரு சம்பவங்களிலும் எல்லோரும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் கள் தவறு விடவில்லை எனச் சொல்ல வரவில்லை. எதிரும் புதிருமாக ஒருவரின் இருப்பிலும் நலனிலும் மற்றவர்கள் அத்துமீறித் தலையீடு செய்கின்ற நிகழ்வுகள் உள்ளன. இந்தப்பிரிவிற்கான அடிப்படை அரசியல் பொருளாதார சமூகக் காரணிகளை நாம் ஆழமாக நோக்குகின்ற பொழுது எங்கெங்கு தவறு விடப்பட்டுள்ளது. இந்த நிலையைத் தோற்றுவிப்ப தனுாடாக ஆதிக்க சக்திகள் அடைந்த, அடையவுள்ள நன்மைகள் பற்றியும் அவர்களின் அரசியலும் துலக்கம்
பெறுகின்றன.
மற்றவர்களின் கருத்தையும் அவர்களது தனித்து வமான வாழ்வையும் மதிக்கின்ற போக்கும் மனிதா பிமானமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் துயர வாழ்வை ஆழமாக ஊக்கி வைக்கின்ற வகையில் முஸ்லிம் படைப்புகள் 90க்குப் பின் வந்துள்ளன. மனித உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கு இலக்கிய வடிவங்கள் துணை புரிகின்றன. இவை கவிதையாக, நாவல்களாக, சிறுகதைகளாக, உரைநடை இலக்கியங்களாக வெளிப்படுகின்றன. நவீன கவிதை வடிவம் இந்த உணர்வுகளை வெளிப் படுத்த, பகிர்ந்து கொள்ள ஏற்ற வசதியான வடிவமாக உள்ளது. எண்பதுகளுக்குப்பின் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் நவீன கவிதை மிகப் பரவலாக - இதழ் 24

Page 13
கைக்கொள்ளப்படும் இலக்கிய வடிவமாக உள்ளது. பெருமளவில் இங்கு தமிழில் எழுதுபவர்கள், புதிதாக எழுத வருபவர்கள், நவீன கவிதை ஊடாகவே தமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். கவிதை களினுாடாக வெளிவருகின்ற விடயங்கள் இன்னொரு வகையில் வேறெந்த இலக்கிய வடிவத்திலும் எழுதப்படாத விடயங்களாகவும் உள்ளன.
இன மேலாதிக்க, அடக்குமுறைச்சூழலில் இருந்து பிறந்த கவிதைகளை நாம் படிக்கின்றபோது இந்த அடையாள அரசியலை அதன் மனிதாபிமானக் குரலைப் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு முஸ்லிம் அரசியல் சூழலில், அவர்களின் வாழ்வு நெருக்கடியில் இருந்து பிறந்த ஒரு சில கவிதைகளை அடையாளம் காட்டலாம் என நினைக்கிறேன். முஸ்லிம் சூழலில் இருந்து எழுதப்படுகின்ற பெருமளவிலான கவிதைகள் அரசியல் பேசுபவையாக, அரசியல்சார் கவிதைகளாக உள்ளன. இதற்கான அடிப்படையை நீங்கள் அறிவீர்கள். இக்கவிதைகளின் உணர்வு நிலை மிக மோசமாக ஒடுக்கப்படுகின்ற மனிதாத்மாவின் குரலாகவே நோக்கப்படவேண்டி இருக்கிறது. அப்படியே முஸ்லிம் பிரச்சினையை நோக்குமாறும் இக்கவிதைகள் கேட்கின்றன.
ஈழப்போராட்டமும் தமிழ் மக்கள்மீதான அடக்கு முறையும் பல நவீன தமிழ்க் கவிதைகளை நமக்குக் கொண்டு வந்து சேர்த்தது. யேசுராசா, ஜெயபாலன், சேரன், கி. பி. அரவிந்தன், சண்முகம் சிவலிங்கம், இளவாலை விஜயேந்திரன், வில்வரத்தினம். அதேபோன்றுதான் முஸ்லிம்கள்மீதான அரசியல், சமூக அடக்குமுறைகளும் பல முஸ்லிம் படைப்பாளி களை கொணர்ந்து சேர்த்துள்ளது. இவர்களது கவிதைகளை நாம் தொகுத்துப் படிக்கின்றபொழுது, ஆய்வு செய்கின்ற போது முஸ்லிம் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளலாம். தமிழ்பேசும் மக்கள் என்கின்ற வகையில் 1980களில் எழுத முற்பட்ட பல முஸ்லிம் இளம் கவிஞர்கள் கூட பின்னாளில் குறுந்தமிழ்த் தேசியவாதத்தின் காரணமாய் 'முஸ்லிம்' அடையா ளத்தைப் பிரதானப்படுத்தி எழுதினர்.
சதக்கா போர்காலப்பாடல்' என்கிற தனது இரண்டாவது கவிதைத்தொகுதியின் முன்னுரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
"எண்பதுகளில் தமிழ் பேசும் மக்கள்மீதான ஒடுக்குமுறை கண்டு, அப்போதுதான் அரும்பி இருந்த எனது மீசை துடித்தது, நெஞ்சம் கொதித்தது. எனது முதல் தொகுதியான இமைக்குள் ஒர் இதயம் இந்தக் கொதிப்பின் குழந்தைகளே. அவை தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தில்நம்பிக்கை சுடர் விட்டதால் மக்களின் ஒருமித்த அவலங்களின் கல்வெட்டு களாகவோ கிறுக்கலாகவோ அமைந்தன. தொண் ணுாறுகளில் என" அந்த நம்பிக்கை ஈவிரக்கமின்றி நாடு கடத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி என்னை மட்டுமல்ல எனது சமூகத்தையே தீவிரமாக ஆட்டி வைத்திருக்கிறது. ஒரு தசாப்தத்திற்குப் பிற்பாடு வெளிவரும்போர்க்காலப்பாடல் இந்த அதிர்ச்சியின் அறுவடைதான். ஏனெனில் போர்க்காலப் பாடல் நிராயுதபாணியான, நிரபராதியான ஒரு சமூகத்தின் பாடலும்தான்" என்கிறார்.
இதழ் 24

ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் வழங்கிவந்துள்ள பங்களிப்பை எல்லோரும் அறிவர். தமிழ்மொழி முஸ்லிம்களுடைய தாய்மொழியுமாகும். வடக்கு கிழக்குப் பிரதேசம் முஸ்லிம்களுடைய தாயகப் பிரதேசமுமாகும். இதுவரையான முஸ்லிம் படைப்புகளில். " தமிழ் பேசும் மக்கள் என்கின்ற கருத்து நிலையில் இருந்து எழுந்த படைப்புகள் " முஸ்லிம் இன அடையாளத்தைத் துாக்கலாக வெளிப்படுத்தாத, ஆனால் அதேநேரம், தமதுமக்களின் வாழ்வை அதன் துயரத்தை வெளிப்படுத்துகின்ற படைப்புகள் " முஸ்லிம் இன் அடையாளத்தை அழுத்திவலியுறுத்து கின்றதும் குறுந்தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்கின்ற உணர்வை வெளிப்படுத்துகின்ற படைப்புகள் " முஸ்லிம் சமூக அகத்திற்குள் உள்ள மதத்தின் பெயராலான அடக்குமுறை, பொருளாதார அடக்கு முறை, ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான படைப்புகள்
இன, சமூக அடையாளங்களைப்பற்றிப் பேசாது அழகியல் சார்ந்த மென்மனித உணர்வுகளுக்கு
என முஸ்லிம் படைப்புச்சூழலில் வெளிவந்த
படைப்புகளை அடையாளம் காணலாம் என நினைக்கிறேன்.
பெருமளவிலான முஸ்லிம் படைப்புகளின் இன்றைய பேசுபொருள் என்ன?
சமகால முஸ்லிம் படைப்பாளிகளின் பிரதான பேசுபொருளே, முஸ்லிம் மக்களின் இருப்பையும் அவர்களது வாழ்வையும் அச்சுறுத்துகின்ற விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திற்கு எதிரான குரலாகவே இருக்கிறது. முஸ்லிம்களை அடக்குகின்ற பிரதான ஆதிக்க சக்தியாக விடுதலைப் புலிகளே உள்ளனர். சிங்கள பெளத்த மேலாதிக்க நிலை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அத்துடன் முஸ்லிம் படைப்புகளினுாடாக வெளிப்படுகின்ற இக்குரல்கள், தமிழ் மக்களுக்கு எதிரானதாகவோ, அவர்கள்மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துவதாகவோ அமையவில்லை என்பதுடன் வடக்குக் கிழக்குத் தாயக மண்ணில் தமிழ் முஸ்லிம்களின் சமத்துவமான இணைந்த வாழ்வை வலியுறுத்துவதாகவும் கடந்த காலப் பசுமைமிகு வாழ்வை நினைவுபடுத்து பவையாகவும் அந்த வாழ்விற்காக ஏங்குபவையாகவும் உள்ளன.
முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை, கட்சி அடிப்படையில் வலியுறுத்தியபூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபிதத்திற்குத் தலைமை ஏற்ற எம். எச். எம். அஷ்ரப், எம். எச். சேகுஸ்ஸதீன் (வேதாந்தி) ஆகியோரும் படைப்பாளிகளாகவே (Cருந்தனர். 'தொண்ணுாறின் மாதங்கள்' என்ற வேதாந்தியின் கவிதை இப்படி வெளிப்படுகிறது. .
நியும் நானும் தமிழர்கள்தான்
அந்த ஆழ்ந்த நம்பிக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வேளை,
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200613

Page 14
என்னை ஒரேயடியாகத் திருக்கிட்டு எழச் செய்தது யார்? பின்னர், நான் துாங்கப் பயந்தேன் எனது நம்பிக்கையை, இன்னொரு தடவை சோதிக்கவிட நான் தயங்கினேன்
யாரின் கெடுபிடிகள் எனது தமிழை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றன?
யாரை நான் கண்டு அச்சமுறுகிறேன்?
இங்கு தமிழ் முஸ்லிம் வாழ்வில், மொழியடிப் படையிலான சமத்துவம் மறுக்கப்படுகின்றபோது இன அடிப்படையிலான அடையாளம் மேற்கிளம்புகிறது. இந்த யதார்த்தத்தை பல நூற்றாண்டுமொழி,கலாசார உறவைக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் களின் வாழ்விலிருந்து காண்கிறோம்.
பலர் கவனிக்கத் தவறுகின்ற ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடலாமெனநினைக்கிறேன். 1985க்குமுன் முஸ்லிம்மக்களைப்பொறுத்தவகையிலும் பொதுவான அரச இயந்திர அடக்குமுறைச் சக்தியாக சிங்கள மேலாதிக்கமே இருந்தது. பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமும் அஷ்ரப் போன்றவர்களின் அரசியல்பிரவேசமும் இந்த அடிப்படைத்தளத்திலேயே நிகழ்ந்தது. சிங்களக் குடியேற்றம், சிங்கள பெளத்த அரசியல் தலைமைகளின் நலன்களைப் பிரதிநிதித் துவப்படுத்திய கொழும்பு முஸ்லிம் மேட்டுக்குடி அரசியல் தலைமைகள், கல்வி, பொருளாதாரம், தொழில் வாய்ப்பு, வளப்பங்கீடுபோன்றவற்றில் சிங்கள பெளத்த மேலாதிக்கம் காட்டிய பாரிய புறக்கணிப்பு, தமிழ் மக்களுக்குள் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்ச்சி என்பன முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அஷ்ரப்பின் தொடக்க அரசியலும் சிங்கள அரசின் இந்த அடக்குமுறையை எதிர்க்கும் பிரதிநிதியாகவே தன்னை அடையாளப்படுத்தியது. 1978, 80களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையுடன் இணைந்த அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது. 1985க்குப் பின் ஏற்பட்ட நிலைமைகள் முஸ்லிம் படைப்பாளிகளின் படைப்புகளை எந்தளவு திசைதிருப்பியதோ அந்தளவிற்கு முஸ்லிம் அரசியலையும் திசைதிருப்பியது.
நடைமுறை அரசியல் சூழலை எந்தளவு பாதிக்கின்றது என்பதும், அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு எதிர்வினையாற்ற அரசியலாளர்களை, படைப்பாளி களை வரலாறு எப்படி மாற்றுகிறது என்பதற்கும் இந்த உண்மை சாட்சியாகிறது. எம். எச். எம். அஷ்ரப்பின் ‘மணியோசை கேட்கிறது என்கிற கவிதை தீகவாவி சிங்களக்குடியேற்றம்பற்றிய உணர்வை வெளிப்படுத்தி யதுடன், இக்கவிதை ஆரம்பகால (1981, 1982) முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார மேடைகளிலும் வாசிக்கப் பட்டது. முஸ்லிம் காங்கிரஸினுடைய பின்னான துரித வளர்ச்சிக்கு தமிழ் மேலாதிக்கம் வழங்கிய நெருக்கடி அதிக ஊக்கியைத் தந்தது. 1985க்குப்பின் குறுந்தமிழ் மேலாதிக்கம் பிரதான அடக்குமுறைச் சக்தியாக வெளிப்பட்டது. அப்போது அரசியல் சூழலின் நடை
14உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

முறை யதார்த்தமான அடக்குமுறையாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் முன்னுக்கு வந்தது.
நான்முதலில் அடையாளப்படுத்திய"தமிழ் பேசும் மக்கள்" என்கிற கருதுநிலையிலிருந்து எழுதிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கு எம். ஏ. நுஃமானின் புத்தரின் படுகொலை(1981), வரலாற்றுக் குருடர் (1980), துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்(1977) போன்ற கவிதைகளைக் காட்டலாம். இப்போது எம்.ஏ. நுட்மானால் மட்டுமல்ல, பெருமளவிலான முஸ்லிம் படைப்பாளிகளால் பொதுநிலைப்பட்ட அதாவது அடக்குமுறை சக்திகள் தொடர்பாக பிரிப்பற்றபடைப்பு களை எழுத முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதற்கான அடிப்படைகளை நாம் புரிந்து கொள்வதும் இந்த நிலையை மாற்ற சிந்திப்பதும் இன்று அவசியமாகி உள்ளது.
சோலைக்கிளி ஈழத்துத் தமிழ்க் கவிதை இலக்கி யத்தில் தோன்றியமிக முக்கியமான படைப்பாளி. தமிழ் முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்டு அரசியல் நலன்களிற்காக தோற்றுவிக்கப்பட்ட நிலைகுறித்து இப்படி எழுதுகிறார்:
தென்னை மரத்தை பனைமரம் அழுத்துத் தள்ளியது குலை தெறித்து அது சாக உலகில் தேங்காயே இருக்கக்கூடாது என்றுகத்தியது
நுங்கு தள்ளிய பனைமரம் ஏனோ, இன்று அதற்கு வெறி
ஒலைகள் ஒரு தரம் சடசடவென அழத்தது 'பொத்தடாவாயை' என்று திட்டியது இன்னொரு தென்னம் பிள்ளையை
6τ6ύ6υτώ ஒரு தோட்டத்தில் நின்ற மரங்கள்தான் என்ன நடந்ததோ நானறியேன்
சோலைக்கிளி படிமங்களின் ஊடாக வெளிப் படுத்தி நிற்கிற 1990களின் பின்னான நிலைமை யதார்த்தமான காலச்சூழலை அதன் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதுடன் "எல்லாம் ஒரு தோட்டத்தில் நின்ற மரங்கள்தான்" என்பது தமிழ் முஸ்லிம்மக்களின் தாயகத்துடன் ஒன்றான வாழ்வை வெளிப்படுத்துகிறது. முற்றிலும் இருப்பு சார்ந்த முஸ்லிம் அடையாளத்தை அழுத்திவரையுறுத்துகின்றபடைப்புகள்தொண்ணுாறு களின் பின் கணிசமாக முஸ்லிம் படைப்பாளிகளி டமிருந்து வெளிவந்துள்ளன.1990களில் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நிகழ்வு, காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர், அழிஞ்ச பொத்தான முஸ்லிம் கிராமங்கள் மீதான இனப்படுகொலைகளுடன் தொண்ணுாறுகளிற்குப் பிறகு நிலவுகின்ற விடுதலைப்புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் இத்தகைய உணர்வுசார்ந்த படைப்புகளுக்கு அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றது. இப்போதும் நிகழ்ந்து வருகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் முஸ்லிம்களின் உணர்வு களை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
1985ம் ஆண்டில் 31 கவிஞர்களின் 82 அரசியல்
கவிகைகளை கொகத்து வெளிவங்க 'மாணக்கள்
இதழ் 24

Page 15
வாழ்வோம் தொகுப்பினைப் போன்று 2002ம் ஆண்டு உலக இஸ்லாமியத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட 50 கவிஞர்களின் 100 கவிதைகளைக் கொண்ட "மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் தொகுதி இதற்கு முக்கிய ஆவணச் சாட்சியமாக உள்ளது. அத்தொகுதியின் முன்னுரை இப்படிச் சொல்கிறது "சமகாலத்தில் இங்கு துப்பாக்கியை ஆயுதமாகக் கொண்டுள்ள ஒரு பேரினவாதத்தின் முன், மூன்றாம் இனமானது தனக்கு எதிரான ஒடுக்குதல்களை எதிர்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் தமிழ்ப் பேரின் வாதத்தின் கால்களிற்குக் கீழே நசுக்கப்படுகின்ற ஒவ்வொரு பொழுதும் உணர்வின் வலிகளையும் உயிரின் அலறலையும் சுமந்து மனிதத்துவத்தின் செவிகளை மோதி நமது கவிதை சொல்கின்ற சேதி, துப்பாக்கிக் குண்டுகளை விட வலிமை பொருந்திய தாகும். ஈழத்துப் புதுக்கவிதை மரபின் முன்னோடி எம். ஏ. நு.மான் தொடக்கம் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட தனது தந்தையின் நினைவாக முதற் கவிதை எழுதிய மகன் எம். எச். ஜாபிர் வரையான படைப்பாளிகள் இதில் அடக்கம்"
முஸ்லிம்கள்மீதான அடக்குமுறைக்கெதிராக முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதப்படுகின்ற படைப்பு களில் இந்த அடக்குமுறைக்கு முன் கையாலாகாத வகையில்நிற்கின்ற சொந்த மக்களை மறந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீதான தீவிர விமர்சனங்களும் உள்ளன. இதனை நாம் பலவேறு படைப்புகளிலும் காணலாம். ஒட்டமாவடி அரபாத்தின் 'கழுதைகளின் விஜயம் என்ற சிறுகதையின் ஒரு பந்தியை இங்கு எடுத்துக் காட்டலாம்.
"ஊருக்குள் ஜனாகரக்கள் தீப்பெட்டி போல ஒரே வரிசையில் அடுக்கப்பட்டு கிரிகைகள் நடந்தன. அப்போது இந்தக் கழுதைகளில் ஒரு கழுதையேனும் இங்கு வந்து ஆறுதல் சொல்லவில்லை. அப்படி ஒன்று தான் வளர்ந்துவந்த கிராமத்தில்தவிடும்புண்ணாக்கும் தந்து வளர்த்த மக்களுக்கு நடந்ததாக எந்தக் கழுதையும் அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை"
ஈழப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பை என். ஏ. திரனின் மாவீரர் மேஜர் அன்பு என்கிற முகம்மது அன்வர் ஞாபகமாக. என்ற கவிதை யும் முல்லைத்தீவைச் சேர்ந்த முல்லை முஸ்ரிபாவின் மயூரா என்றாகிவிட்ட ஹிஸ்மியாவுக்கு. என்கிற கவிதையும் எடுத்துக்காட்டாக இங்கு குறித்துக் காட்டப்பட வேண்டியவை. முஸ்லிம் படைப்புகளில் பெண்களின் நிலை, மதத்தின் பேராலான அடக்கு முறைகள்,நிலவுடைமையாளர்களின்சுரண்டல்பற்றிய குரல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சுல்பிகா, அனார், பஹிமா ஜஹான், பெண்ணியா, கலைமகள் ஹிதாயா, பாலையூற்று அஷ்ரபா, சித்தி றபீக்கா போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பெண் முஸ்லிம் படைப்பாளிகளாக உள்ளனர். இவர்களின் கவிதை களிலும் குறுந்தமிழ்த் தேசியத்திற்கெதிரான குரல்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒலிப்பதைக் காணலாம்.
இதழ் 24

* * 女 故 k
இங்கு இன்னும் ஒரு முக்கியமான பணியையும் பங்களிப்பையும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். ஈழத்தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை சக கலைஞர்கள் என்கிற வகையில் மனிதாபிமானத்தின் தளத்தில் நின்று பல தமிழ்ப் படைப்பாளிகள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ஜெயபாலன், சக்கரவர்த்தி, கலாமோகன், ஷோபா சக்தி, சேரன், வில்வரத்தினம், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் போன்ற கலைஞர்களுடன் இன்னு மின்னுமான சிந்தனைவாதிகளும் எழுத்தாளர்களும் வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக எழுத வருகின்ற இளம் தலைமுறையைச் சார்ந்த தமிழ்ப் படைப்பாளிகளும் முஸ்லிம்களின்மீதான அழுத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது பதிவுசெய்யப்படவேண்டிய ஒன்று. படைப்புகளிலும் எழுத்துக்களிலும் முஸ்லிம்களின் தனித்துவத்தையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தும் முன்மாதிரியான வழிமுறைக்கு ஆரம்ப ஊக்கமாக இருந்தவர்கள் தமிழ் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும்தான். என்பதை நாம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிற இலக்கியப் படைப்புகளை மதிப்பிடுகின்றபோது காணக்கூடிய அழியா உண்மையாக இருக்கிறது. புகலிடத்தில் இருந்து வெளிவந்த பல்வேறு சஞ்சிகைகள் பத்திரிகைகளுடன் சரிநிகர் பத்திரிகையும் அதிகம்பங்களித்துள்ளன.
இறுதியாக, ஒட்டு மொத்த ஈழத்தமிழ் இலக்கி யத்தில் முஸ்லிம் படைப்புகள் வகிக்கின்ற வகிபாகம் குறித்து ஒரு சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன். இன்றைய எமது ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பல்வேறு காலகட்ட அனுபவங்கள், நெருக்கடிகள் ஊடாக மாற்றமுற்றுள்ளது. அதன் வடிவம் அதன் மொழி, அதன் அழகியல், அவற்றின் பேசுபொருள் என்பன கணிசமான மாற்றத்தைக் கண்டுள்ளன. ஈழத்தமிழ் இலக்கியத்தின் இரண்டு தசாப்தங்களுக்கு மேலான அதன் பேசுபொருளை இலங்கையில் நிலவுகின்ற அரசியல் நிலைகள், செயற்பாடுகள் பெரிதும் தீர்மானித்துள்ளன. மொழி அடிப்படையிலான தேசிய இனப்பிரச்சினை இப்போது இன அடையாளம் சார்ந்த அரசியல்பிரச்சினையாகவும் அதன் விளைவான அடிப்படை உரிமை மீறல்கள் மனித உரிமை மீறல்களின் பிரச்சினையாகவும் வெவ்வேறு வடிவம் எடுத்தள்ளன. அனுபவம் சிந்தனை மொழி இணைந்த ஒரு தளமாக நாம் இலக்கியத்தை அணுகு கின்ற பொழுது அது கிளர்த்துகின்ற வாசிப்பு அனுப வங்கள் தமிழ்நாடு, மலேசியா போன்ற தமிழ்மொழி இலங்கியங்களில் இருந்துமாறுபட்டுநிற்பதைக் காண் கிறோம். ஆகவேஈழத்தமிழ் இலக்கியம் என்பதுமனிதர் களின் பிரச்சினைகளுடன் அவர்களது காலத்தில் அவர்கள் வாழ்கின்ற சூழலை முன்னிறுத்தி அவற்றின் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த வகையில்தான் முஸ்லிம் படைப்புகள் உள்ளன.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200615

Page 16
ஒரு அதிசய இலக்கியத் தோற்றம் என்று வர்ணி 1968இல் செனகல் நாட்டில் பிறந்தார். இவருடைய ப கொடுமைகளுக்குட்படுத்தப்படும் குழந்தைகள் பட்டியலில் பாடசாலைக்கு கள்ளமாகச் சென்று பிரெஞ்சுமொழியைக் அவர் விரட்டியடிக்கப்பட்டார். ஆனால் அவருடைய வி அவரைப் பாடசாலைக்குள் அனுமதிக்கிறார். தன்னுடைய வேலை செய்யத் தொடங்குகிறார். ஒரு பிரெஞ்சு நாட்ட6 Strasbourgக்கு வருகிறார். நிறவாதிகளான அவருடைய க ஏற்பட்டது. அவர் பிரான்சிலேயே தங்கிவிட முடிவு செய்கிற படிப்பைத் தொடருகிறார் இவருடைய மூன்று நுால்கள் வெளிவந்துள்ளன.
1. La Préférence nationale - donj560)g55 Gg5Té5ÜL
2. La Ventre de l'atlantique - BT6)16ù
3.Ketala - நாவல்
இவருடைய எழுத்தையும் இவரையும் பற்றிய ஒரு ஒவ்வொன்றினதும் பின்னான இவருடனான சந்திப்புகள்
། ། ༥
La Préfi
Paris/Da
ISBN 2
இந்தச் நிச்சயமா கடினமான அனுபவங் வந்த கதை ஆபிரிக்க களாகின்ற அனுபவா களுமில்ல படுகின்றன இவரது பிர
” எந்த நிை
அல்ச செய்துகெ இவரை ந உள்ள C கொண்டிரு
16 உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 

- மாளவிகா -
bகப்படும் ஆபிரிக்க நாவலாசிரியை Fatou Diome. இவர் ாட்டியால் வளர்க்கப்பட்டார். அப்படியில்லாவிடில் இவர் போய்ச் சேர்ந்திருப்பார். இவர் தன்னுடைய கிராமத்திலுள்ள கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். ஒவ்வொரு தடவையும் பிடாமுயற்சியைக் கண்டுகொண்ட ஆசிரியர் இறுதியில்
படிப்புச் செலவுகளுக்காக பதின்மூன்றாவது வயதிலேயே வரைத் திருமணம் செய்துகொண்டு இருபத்தாறு வயதில் ணவனின் குடும்பத்தினால் மிக விரைவில் திருமண முறிவு ர். அங்கு வீட்டுவேலைகள் செய்து தனது பல்கலைக்கழகப்
பரந்த அறிமுகத்திற்கான நோக்கில், இவ் வெளியீடுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன,
N
érence nationale. kar: Présence Africaine, 2001 (96p.). '087-0722-1.
சிறுகதைத் தொகுப்பில் ஆறு சிறுகதைகள் உள்ளன. ன விடுதலை ஒன்றை நோக்கிய பயணத்தில் மிகக் ா பாதையைக் கடந்து வந்த ஒரு பெண்ணின் களைக் கூறுகின்றன. ஆபிரிக்காவில் வழக்கில் இருந்து 5 சொல்லும்முறையில்இக்கதைகள் சொல்லப்படுகின்றன. ாவும் பிரான்சும் இக் கதைகளின் கதைப்புலன் ன. இவருடைய கதைகளில்பயணிப்பதுவாசகருக்கு புதிய களைத் தருகின்றன. எந்தவிதமான அலங்காரங் ாத கொடூரமான நளினத்துடன் கதைகள் சொல்லப் 1. வர்ணிப்புகளும் வெட்டுமொழியும் ஒன்றிணைந்திருப்பது த்தியேகத்தை முன்நிறுத்துகிறது.
* 事 * 事 肇 லமைகளில் நீங்கள் பிராண்சுக்கு வந்தீர்கள்? rஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் ாண்டபின் 1994இல், நான் Strasbourgநகரத்திற்கு வந்தேன். “ன் டக்காரில் சந்தித்தேன். நான் அப்போது டக்காரில் eikh Anta Diop பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் ந்தேன். நான் எப்போதுமே பிரான்சிற்கு வரவேண்டும்
இதழ் 24

Page 17
என்று கனவு கண்டதில்லை. ஒருவேளை, இந்த நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு. ஒரு சுற்றுலாப் பயணியாக தற்காலிகமாகப் பயணம் செய்திருக்கக்கூடும், என்னுடைய பட்டப் படிப்பை முடித்த பின்பு ஒரு விரிவுரையாளராக ஒரு வேளை வந்திருக்கக்கூடும். நான் வாசித்த எழுத்தாளர்கள் வாழ்ந்த நாடு என்ற அடிப்படையில் அது பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஒருவேளைவந்திருக்கக்கூடும். ஆனால், நான் நினைத்திருந்ததற்கு முன்னதாகவே பிரான்ஸ் நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டேன். நான் எனது பட்டப்படிப்பின் இரண்டாண்டுகளை ஏற்கனவே முடித்து விட்டிருந்தேன். ஆனால் இங்கு அதனைத் தொடர்வதற்குத் திரும்பவும் எனது படிப்பை ஆரம்பிக்க வேண்டி இருந்தது.
" இங்கு வந்து சேர்ந்ததும் உங்களுக்கு கஷ்டமாக இருக்கவில்லையா?
உண்மையில் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. காலநிலையே மிகவும் பிரச்சினை யாகிப் போனது. டக்காரின் வெய்யிலையும் கடற்கரை களையும் விட்டுவிட்டு மழையும் குளிரும் கூடிய அல்சாஸ் பிரதேசத்துக்கு வந்து வசிப்பதென்பது சுலபமான விடயமல்ல. அதைவிட முக்கியமாக, இங்கு நான் சந்தித்தவர்களுடைய மனோபாவங்கள் எனக்கு மிகவும் அதிர்ச்சி தருவதாக இருந்தன.
" அதிகம் படிக்காத நாகரிகமற்றவர்கள்தான் நிறவாதிகளாக இருக்கிறார்கள் என்ற தொனி உங்களுடைய புத்தகத்தில் வெளிப்படுகின்றது. நீங்கள் மாணவியாக இருந்தபோது உங்களுக்கு எதிராக வீசப்பட்ட தொடர் அவமானங்களுக்கு எதிராக எந்த விதமான எதிர்ப்பையும் தராமல் இருந்தவர்கள் இவர்கள். நிறவாதிகளையும் வெளிநாட்டவர்களிற்கு எதிரானவர்களையும் பற்றி இப்படித்தான் அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்களா?
இவ்வளவு குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் ந |ா க ரபி க ம |ா ன வ |ா ரட் க ள |ா க வே ரா பண்பாடுள்ளவர்களாகவோ இருக்க முடியாது. அடுத்தவர் பற்றிய அக்கறையின்மை அல்லது புறக்கணிப்பில் இருந்துதான் இனவாதம் வருகின்றது. இது தங்களைத் தவிர்ந்த, மற்றவர்களைப் புரிந்து கொள்ளத் தெரியாததில் இருந்துதான் வருகின்றது. பரந்த மனப்பான்மையுள்ளவர்களில் குறைந்தளவினர்தான் இனவாதிகளாக இருக்கிறார்கள். நான் நிறவாதிகளாகச் சந்தித்தவர்கள் பொதுவாக நாகரிகத்தில் மிகவும் கீழ்நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் அதேநேரம் கல்வியாலும் உத்தியோகத்தாலும் உயர்நிலையில் உள்ளவர்களும் இனவாதிகளாக இருக்கிறார்கள்,
சொற்ப அளவினர் என்றாலும் கூட.
951 starš3 La Présérence Nationale Qač வரும் ஒரு கதையை ஞாபகப்படுத்து கின்றது. அதில் பாணி கடைக்காரர் ஒருவர் பிரெஞ்சு மொழியுடன் அல்சாசிய பிரதேச மொழியும் பேசுபவராக இருக்கக்கூடிய ஒருவரை வேலைக்குத் தேடுகிறார். அவர்
 

பிரதேச மொழி பேசவேண்டும் என்பது நிபந்தனை. இப்படி யான ஒரு அசெளகரியமான சந்தர்ப்பத்தை நீங்கள் சந்தித்திருக்கின்றீர்களா, கதையில் விபரித்ததுபோல?
ஆம். உங்களுக்குத் தெரியும், நாங்கள் வேலை தேடும்போது இலவசமான விளம்பரப் பத்திரிகை களைத் தேடி எடுத்து அதில்தான் பார்ப்போம். சில் வேளைகளில் இந்த அறிவித்தல்களில் பிரதேச மொழி விரும்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். பிரதேச மொழி அந்த இடத்தில் அல்சாஸிய மொழி. எத்த னையோ பிரெஞ்சுக்காரர்கள் அல்சாஸிய மொழி தெரியாமல் பத்து வருடங்களிற்கு மேலாக அங்கு வசிக்கிறார்கள். ஆனால் ஒரு கறுப்புப் பெண் வந்திறங்கியதும் அவர்களுக்கு அது உறுத்துகின்றது. அவளிடம் அல்சாசிய மொழியை எதிர்பார்க்கிறார்கள். ஒருநாள் ஒருவர் என்னிடம் வந்து நான் அல்சாஸிய மொழி பேசுவேனா என்று கேட்டார். அதற்கு நான் அவருக்குப் பதிலளித்தேன். "நான் பிரெஞ்சு மொழி பேசுவேன். அதுவே அதிகம். அப்படி இல்லையா?" என்று.
" நீங்கள் இங்கு வந்ததன் பின்பு அல்சாஸிய மொழியைக் கற்றுக் கொணர்டீர்களா?
இல்லை. துப்புரவாக இல்லை. ஆனால் எனக்கு அதில் பாவிக்கும் துாஷண வார்த்தைகளைச் சொல்லித்தந்தார்கள்.
" நீங்கள் கலைஇலக்கியத்துறையில் டாக்டர் பட்டம் பெறுவ தற்கான படிப்பில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நீங்கள் சிறுகதை எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் ஏதாவதற்கு ஏற்கனவே சென்றிருக்கிறீர்களா?
இல்லை. ஆனால் நான் எப்போதும் எழுதிக்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.17

Page 18
கொண்டே இருந்திருக்கிறேன். 13 வயதில் என்னுடைய முதலாவது டயறியை எழுத ஆரம்பித்தேன். எனக்கு மட்டுமே விளங்கக்கூடிய மோசமான பிரெஞ்சில் ஏதோ எழுதினேன். என்னுடைய பல்கலைக்கழகக் கல்வியை நான் என்னுடைய எழுத்துக்கு பயன்படுத்தவில்லை. ஏனெனில், என்னுடைய எழுத்துகள் மிகவும் இயல்பாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஓரளவு ஆபிரிக்காவில் கதை சொல்லப்படுகின்ற முறைபோல் அமைந்ததாக இருக்கவேண்டுமென்று.
" சிறுகதை எழுதுவதற்கான விதிகளைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு இது ஒரு தடையாக இருக்கவில்லையா? உங்களுடைய ஒவ்வொரு கதைகளிலும் உச்சப்புள்ளியொன்று வரும். பிறகு அந்த அதிலிருந்து இறங்கி வருவதுபோல் கதை முடியும், ஒரு பாடம் போதிப்பதுபோல் சில வேளைகளில்.
ஆபிரிக்காவில் கதைகள் என்பது எப்போதும் ஒரு விடயத்தைக் கற்றுக் கொடுப்பதாகத்தான் இருக்கும். என்னுடைய பாட்டிதான் என்னை வளர்த்தா. பாட்டி சொன்ன கதைகள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆபிரிக்கநாட்டுக் கதைகளில் எப்போதும் நல்வழி ஒன்றைப் பின்பற்றுவதைச் சொல்வதாக இருக்கும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்வதாக இருக்கும். விரும்பியோ விரும்பாமலோ, எந்தக் கேள்விகளும் இல்லாமல், நான் ஓரளவு ஒழுக்கவாதியாக இருந்திருக்கிறேன். உண்மைதான், என்னுடைய எழுத்துகளின் முடிவில் வாசகர் ஒரு முடிவை எடுப்பதற்குத் தள்ளப்படுகின்றார்.
பதிப்பாளருடனான உங்கள் அனுபவம் எப்படியானது? அந்தச் சந்திப்பு எப்படி இருந்தது?
ஒரு பதிப்பாளரை எப்படித் தேடுவது என்பதுபற்றிய முன் அனுபவங்கள் ஏதும் எனக்கு இல்லை. எனக்கு அது தெரிந்திருக்கவும் இல்லை. என்னுடைய கையெழுத்துப்பிரதியைப் பதிப்பாளருக்குத் தபாலில் அனுப்பநான் விரும்பவில்லை. என்ன காரணத்திற்காக என்று எனக்குத் தெரியவில்லை. என் எழுத்துப் பிரதிகளுடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன்
18 உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

என்று சொல்லலாம். அது முதல் முறை. எனவே நான் எனது கையெழுத்துப்பிரதிகளைக் கொண்டு அவரிடம் நேரடியாகச் சென்றேன். அவர் அவற்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அடிவயிற்றைப் பிசைந்தது. ஆனால், அவர்களுக்கு என் எழுத்துப் பிடித்துப் போயிற்று. பிறகென்ன அப்படியே அச்சுக்குப் போயிற்று.
* La Préférence Nationale sů sp6nurghi Lupibió sgefassLDT35 பேசப்படுவதாக உணருகிறோம். ஆனால் கதாபாத்திரம் எப்போதும் இச்சந்தர்ப்பங்களை வெல்கின்றார் - ஒவ்வொரு தடவையும் அவள் அவமானப்படுத்தப்பட்டபோது அவள் நிறவாதிகளுக்குப் பாடம் புகட்டுகிறாள்.?
நான் இந்தப்புத்தகத்தை எழுதும்போது, நாங்கள் எல்லாற்றையும் இழந்ததுநிறவாதத்தால்தான் என்று சொல்லும் ஆபிரிக்கர்களையும் மனதில்கொண்டுதான் எழுதினேன். இது முற்றாகத் தவறானது. எந்த விடயத்தில் நீங்கள் ஈடுபடுவதாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து போராடும்போது, அதில் உங்கள் கெட்டித்தனத்தைக் காட்டவேண்டும் அல்லது நீங்கள் தொலைந்து விடுவீர்கள். நிறவாதிகள் கூட ஒரு கட்டத்தில் உங்களை எதுவும் செய்துவிட முடியாது. அத்துடன் என்னைப் போன்ற நிலையில் இருப்பவர் களுடன் என்னைப்பகிர்ந்துகொள்ளவும் விரும்பினேன். இக்கதைகளின் பின்னுக்கு நிறவாதம் ஒரு படலமாக இருக்கின்றது. ஆனால் அவை மனிதர்களின் மூடத்தனத்தைத்தான் ஒட்டுமொத்தமாச் சுட்டி நிற்கின்றன. முட்டாள்கள் எப்போதும் எதிலும் தோற்றுத்தான்போவார்கள். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம்நான்காட்டுவதற்கு விரும்பியதுஎன்னவென்றால், இந்த இளம் பெண்ணானவள் ஒவ்வொருவரும் அவள்மீது புகைச்சலை அள்ளிக் கொட்டியபோது அதைத் துணிவுடன் எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்தத்துணிந்திருந்ததை. உங்களைக் கொடுமைப் படுத்துபவர்களை விட நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது அவசியம் எனபதைத்தான்.
" உங்களுடைய எழுத்துக்களில் பிரெஞ்சு நாட்டவர்கள் பற்றிய ஒரு வன்மமான பார்வை சில இடங்களில் இருக்கின்றது. கலப்புத் திருமணங்கள் ஒரு தவறை நோக்கியதானது என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள். முக்கியமாக உங்களுடைய கணவர், இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையா?
நான் உங்களிற்கு ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு மறந்துவிட்டேன், குறிப்பாக எனது கணவர்பற்றி. எங்கள் திருமணம், அது ஒரு வார்ப்புப் பிழை. 1996ம் ஆண்டு தொடக்கம் நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம். நான் இங்கு வந்து சேர்ந்தபொழுது என் கணவரின் வீட்டில் எனக்கு மிக மோசமான வரவேற்புக் கிடைத்தது. மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு கலப்புத் திருமணத்தின் பிடியில் இருந்து தப்பிய ஒருத்தியாகத்தான்நான் என்னைக் கருதுகிறேன் அல்லது ஒரு தவறு செய்து
இதழ் 24

Page 19
விட்டதாக எண்ணுகிறேன். ஏனெனில் நிறவாதத்தின் ஒரு பகுதிதான் எங்கள் தாம்பத்தியத்தைக் குலைத்தது. தங்கள் குடும்பத்தினுள் ஒரு கறுப்பி வந்திருக்கக் கூடாது. அதுவும் படித்த.
" இது ஏன் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது? ar
அது கேள்வி? என்னுடைய மாமியார் எனது மேற்படிப்பைநிற்பாட்டும்படி என்னிடம் கேட்டார். தானாகவே எங்கேயோ எனக் கென்று சில்லறை வேலை ஒன்றைத் தேடி இருந்தார்.
நான் அப்போதே அவரைக் கேட்டிருக்க வேண்டும், அவருடைய மகன் என்னைச் சந்திக்கும்போதே நான் படித்துக் கொண்டி ருந்தேன் அல்லவா என்று.
நான் எனது படிப்பைத் தொடர்வதற்கு வசதிகள் வாய்ப்புகள் இல்லாத ஆபிரிக்காவிலேயே எவ்வளவு போராடி இவ்வளவு துாரம் வந்திருக்கிறேன். இவ்வாறு படிப்பைத் தொடர்ந்த நான் இப்போது பிரான்சில் ஒரு கணவனின் பேரால் எனது படிப்பை நிறுத்தப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன்.
" இத்தொகுப்பில் வரும் கதைகள் எல்லாவற்றிலுமே கலைஇலக்கியத் துறையில் மாணவியாக இருக்கும் ஒரு பெண்பிள்ளை வருகின்றாள். இது உங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதா? அல்லது அது எவ்வளவு துாரம் இவற்றில் பங்கு வகிக்கின்றது?
அந்தத் தொகுப்பை எடுத்துக் கொண்டால் அதில் 90% என் கதை. ஏனெனில் பிறகு மிகுதியில் கற்பனை, சிருஷ்டிப்பு, மற்றும் ஒரு சிக்கலான நிலைமையின்மீது விடயங்களைப் பொருத்தி சிந்தனையை ஆழப் படுத்துதல் என்பன கலந்துதான் கதையாக உருப் பெறுகின்றது.
ஆனால் எந்தவித கூச்சமும் இன்றி La Preference Nationale என் சொந்தக் கதைதான் என்று சொல்லலாம். நான் சிறுகதைக்கும் நாவலுக்கும் இடையிலான வரையறைகளை ஒரளவு உடைக்க விரும்பினேன். அதனால்தான் அந்தப் பெண்பிள்ளை சிறுகதை களினுாடே படிப்படியாக வளர்வதுபோல் படைத்திருக் கிறேன். இது ஒரு குறுநாவலாகவும் படிக்கப்பட முடியும். மேலும் பத்திரிகையாளர்கள், தவறுதலாக, இதைச் சிறுகதைத் தொகுப்பாக அடையாளப்படுத்தி இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
" இந்தப் புத்தகத்தை, செனகல் நாட்டில் இருக்கும், உங்களுடைய குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள்?
என்னுடைய மிகப் பெரிய குடும்பத் தில், வாசிக்கத் தெரிந்தவர்கள் புத்தகத்தைப்படித்துமிகவும்ஆச்சரியப் பட்டர்ர்கள். என்னால் எதைச் சொல்ல முடியும், எப்படிச் சொல்ல முடியும் என்பதை நான் உணர்ந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் எனக்கு ஒரு சந்தர்ப் பமாக அமைந்தது. ஏனெனில்
 
 
 
 
 
 
 

செனகலில், என்னை யாரும் கேட்பதில்லை, என்னை வெளிப்படுத்துவதற்கு அனுமதிப்பதில்லை. ஏனென் றால் நான் ஒரு பெண். என்னுடைய சகோதரன் களையோ, சகோதரிகளையோ எடுத்துக்கொண்டால் அவர்கள் என்னுடைய எழுத்துக்களைப் படிக்க முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. நான் ஒருத்தி மட்டும்தான் எங்கள் குடும்பத்தில் பிரெஞ்சு கதைக்கத் தெரிந்தவள்.
உங்களுடைய தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பான La Preference Nationale என்பதையே புத்தகத்தின் தலைப்பாகவும் வைத்திருக்கிறீர்கள்?
பிரெஞ்சு மொழி செழுமையானது. சிலேடையான 5D/T db Lju 16ör LuGBb. La Préference Nationale – ggból பிரான்சில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்சிக்குப்பிரியமான விடயதானமாகும் என்பதை உங்களுக்குநான் ஞாபகப் படுத்தத் தேவையில்லை. இந்தத் தலைப்பானது தேசியங்களுக்கு ஆதரவானதென்றுநாகரிகம்புரியாத ஒருவர் எண்ணக்கூடும். உண்மையில் நான் நினைக் கிறேன்,இதுதன்னை எதிர்மறையாக வரைபுபடுத்தும் ஒரு கோட்பாடு என்று. ஏனெனில் இது ஒரு சாராருக்கு அனுகூலமாக இருப்பது என்பதை விடவும் மற்றவர் களைப் புறக்கணிப்பது அல்லது புறந்தள்ளுவது என்பதுதான்.
பிரான்சில் நடப்பதாக எழுதப்பட்ட நான்கு கதை களிலும் இந்தத் தேசியத்தை விரும்புவதென்பது - அதற்கு முன்னுரிமை கொடுப்பதென்பது - ஏனைய வற்றைத் தவிர்த்தல் என்பதைத்தான் நடைமுறை யாகக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
" நீங்கள் இலக்கியத்துக்குள் எப்படி வந்தீர்கள்?
நான் இலக்கியத்துக்கு வரவில்லை. அதுதான் என்னிடம் வந்தது.நான்என்னுடைய கிராமத்தை விட்டு வெளிக்கிட்டபோது எழுதுவதற்குத் தொடங்கினேன். அதாவது, எனக்கு பதின்மூன்று வயதாக இருந்த பொழுது செனகலில்எனது படிப்பின்நிமித்தமாக வேறு கிராமங்களுக்கோ,நகரங்களுக்கோ செல்ல நேர்ந்த பொழுது நான் அநேகமாக மிகவும் தனியாகத்தான் இருந்தேன். எனவே அப்போது நான் நிறைய
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200619

Page 20
வாசித்தேன். அது எனக்குக் கதைகளை எழுதுவ தற்கான ஆர்வத்தைக் கொடுத்தது. இப்படித்தான் சிறிதுசிறிதாக எழுத்துஎனக்குள் வந்தது. அப்போதில் இருந்து எப்போதும்நான் எழுதுவதை நிறுத்தவில்லை. அது என்னை எங்கே கொண்டு வந்து விடும் அல்லது எங்கே கொண்டு போகும் என்பதனை நான் அறிந்தே இருக்கவில்லை.
" உங்கள் எழுத்துலக வாழ்வின் ஆரம்பத்திலேயே இவ்வளவு நம்பிக்கையைத் தந்திருக்கும் நீங்கள் தொடர்ந்து எதைத் தருவதற்கு விரும்புகிறீர்கள்?
என்னுடைய சிறியபிரதிகளைத் தொடர்ந்தும் எழுத விரும்புகிறேன், அதே சுதந்திரத்துடன். ஒடியோடி எழுதிக் குவிக்கும் எண்ணம் இல்லை. எழுதும்போது சுதந்திரமாக இருப்பதற்கு விரும்புகிறேன். எவற்றைப் பற்றி மிகவும் தாழ்வாகக் கருதுகிறார்களோ அவை பற்றி உயர்த்திக் கூற விரும்புகிறேன்.
། ། ། ། །
Leventre de l'Atlantique. Paris : Anne Carrière, 2003. (300p.). ISBN 2-84337-238-0
பிரான்சில் வசிக்கும் ஒரு சகோதரியைத் தன் வெளிநாட்டு வாழ்க்கைக் கனவுகளுக்காக நம்பி
அவனுக்கு எப்படி இந்த வெளிநாட்டு வாழ்க்கையின் அவலங்களைச் சொல்ல முடியும் என்ற சகோதரியின் தடுமாற்றங்கள். எங்கு சென்றாலும் இன்னொருவனாக அல்லது இன்னொருத்தியாக வாழவேண்டிய புலம்பெயர்வாழ்வின் அவலங்கள் என்பனவற்றினுாடாக உக்கிரமான நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். இந்த அவலங்கள் தொடருகின்ற போதிலும்
புலப்பெயர்வை நோக்கிய பயணங்கள் தொடர்ந்தவண்ணம் இருப்பதற்கானநிலைமைகள்.
a
" இதற்கு முன்பாக வெளிவந்த உங்களுடைய LaPreference Nationale (ஓரளவு சர்ச்சைக்கான தலைப்பு) பெரிய வெற்றியை ஈட்டியது. இலக்கியச் சூழலுக்குள் உங்களுக்கு இது ஒரு அங்கீகாரத்தை வழங்கியது. இந்த வெற்றியை எப்படி உங்களால் ஜீரணிக்க முடிந்தது?
உண்மையிலே அப்படி ஜீரணிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. வாழ்க்கை உங்கள் கன்னத்தில் அறையும்போது அதை எப்படி ஏற்றுக்கொண்டு அதனோடு வாழ்கிறீர்களோ, அதுபோல்தான் நீங்கள் வெற்றியடையும்போதோ அல்லது உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்போதோ அதையும் அப்படித் தான் அனுமதிக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டு போவது என்பதுதான் முக்கியம். எதுவும் தரித்து நின்றுவிடக் கூடாது. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கு விரும்பியபடி நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
" உங்களுடைய புதிய நாவலான, LaVentre d'Atlantiqueஇல் நீங்கள் குறிப்பாக புலம்பெயர்தல் என்பது ஆபிரிக்கர்களுக்கு
20|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

மிகவும் அதிக செலவான ஒரு விடயம் என்பது குறித்துப் பேசுகிறீர்கள். ஏன் இந்தக் கருவைத் தெரிவு செய்தீர்கள்?
இது ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரை, மிகவும் கிராக்கியான கருதான். ஆனால் ஒவ்வொரு ஆபிரிக் கரும் அதை அவரவருக்குரிய விதத்தில் அணுகு கின்றார்கள். இந்தக்கருவைப்பொறுத்தவரையில் அது தனக்கே அசலானதாய் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். இதைக் கையாளுகின்ற முறை, இதுபற்றிப் பேசுவது என்பனதான் இக் கருவை அசலானதாக்கும். இது தொடர்பான சில பார்வைகள் என்னிடம் ஒரளவுக்கு இருந்தன. அதாவது, புலம் பெயர்தல் என்பது தனியே வறியவர்கள் சுரண்டப் படுவது என்பது மட்டுமல்ல, எப்போதும் அது அப்படி இல்லை.புலம்பெயர்தல் என்பதை எடுத்துக் கொண் டால், தங்களுடைய அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறுவதற்காக சிலர் போகிறார்கள், சிலர் தங்கள் சுதந்திரத்திற்காகப் போகிறார்கள், இப்படி இன்னும் எத்தனையோ காரணங்களுக்காகப் புறப் படுகிறார்கள். இந்தக்காரணங்களில்எல்லாவற்றையும் புலம்பெயரிகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. உண்மை, பொருளாதாரக் காரணங்களுக்காக புலம்ப்ெயர் பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதேவேளை அதைவிடவும் மோசமான நிலையில் வாழமுடியாத வேறு காரண்ங்களுக்காகவும் புலம்பெயர்கிறார்கள். இந்த நாவலில் வரும் பெண்பாத்திரம் அப்படியாகப் படைக்கப்பட்ட ஒரு பாத்திரம்தான்.
அத்துடன் நான் ஐரோப்பாவில் வசிக்கும்
புலம்பெயரிகளுக்கும் நாட்டில் தங்கி க்கம்
இதழ் 24

Page 21
அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையிலான உறவுகள் பற்றியும் சொல்வதற்கு எண்ணினேன். எப்போதும் நாங்கள் Sans-Papiers (வதிவிட அனுமதி கிடைக்காதவர்கள்) பற்றிப் பேசுகிறோம், ஆனால் அவர்கள் ஏன் வெளியேறினார்கள் என்பதும் தெரியாது. அவர்கள் திரும்பித் தங்கள்நாட்டுக்கு வரும்பொழுது எதையெல்லாம் எதிர்நோக்க வேண்டி இருக்கிறது என்பதும் தெரியாது. இவைபற்றிய கரிசனை அவர்கள் போய்ச் சேர்ந்திருக்கும் நாட்டுக்குப் பெரிய அளவில் இருப்பதில்லை. இந்த விடயங்கள்பற்றி வெளிப்படுத்த விரும்பினேன்.
" உங்களுடைய இரண்டாவது நாவலில் எங்களுக்கு நீங்கள் தரும் எழுத்து நடையையும், அதில் நீங்கள் கதை சொல்லும் விதத்தையும் எது தீர்மானித்தது?
தெரு நான் நினைக்கிறேன், ஒழுங்கமைக்கப்பட்ட மனிதர்கள் அவர்கள் எப்படிப் பேசவேண்டுமென்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அப்படிப் பேசுகி றார்கள் என்று. நான் அப்படி ஒழுங்கமைக்கப் படவில்லை.நான் எனது கிராமத்தை விட்டுப்புறப்பட்ட பொழுது நான் எல்லாமாக குறைந்த பட்சம் மூன்று வெவ்வேறு குடும்பங்களுடன் வெவ்வேறு சந்தர்ப் பங்களில் இருக்க வேண்டி இருந்தது. அப்பொழு தெல்லாம்நான்தான் எனக்குப் பொறுப்பாக இருந்தேன். நான் இளம்பிராயத்தினளாக இருந்தபொழுது, நான் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தனியே சமாளித்தேன். இப்படி வாழும்போது நிச்சயமாக நிர்வாணமான ஒரு சமூகத்திற்கு முன்னால் உங்களை முன்நிறுத்துகிறீர்கள். அது எந்த அலங்காரப் பூச்சுகளுமில்லாதது. நீங்கள் அது உள்ளபடியே அதனை எதிர்கொள்கிறீர்கள். அது மிகவும் dblq60TLDIT60igil.
நான் எழுதும்பொழுது,நான் எனக்கு நேர்மையாக இருப்பதற்கு முயற்சிக்கின்றேன். நான் எனக்கு முழுச் சதந்திரத்தையும் கொடுக்கிறேன். இதைப்பற்றி பின்னால் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி நான் அக்கறைப்படுவதேயில்லை. எனவே நான் உண்மை யாக எழுதுகிறேன். ஏனெனில் நான் எப்படி உணர்கி றேனோ அப்படியே எழுதுகிறேன். குறிப்பிட்ட சமூக நாகரிகம் எதிர்பார்ப்பதையும் எழுதவில்லை அல்லது விடயதானமில்லாத புலம்பல்களையும் எழுதவில்லை. இது முற்றிலும் எதிர்பாராத பின்விளைவுகளைத் தரக்கூடும். −
” ஒரு உதைபந்தாட்டப்போட்டி, மிகவும் சாதாரணமான ஒரு விடயம். நீங்கள் விவரணங்களுடன் அதை விபரிக்கும் பாங்கு, அதை ஒரு நாவல் என்று சொல்ல முடியாது. அதை வாசிக்கும் போது நாங்கள் கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தையே மனதில் விரிய விடும் அ6:விற்கு உங்கள் விபரிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. இந்தத் தன்மை எப்படி கைவந்தது என்பது குறித்துத்தான் ஆரம்பத்தில் உங்களிடம் கேட்டோம்?
இதை நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில்நான் சினிமா பற்றி ஏற்கனவே கொஞ்சம்
 
 
 
 
 

கற்றிருக்கிறேன். பிரதிமைகள்மீது எனக்கு நிறையப் பிரியம் உண்டு. குறிப்பிட்ட சில பந்திகளை நான் எழுதினேன் ஏனென்றால் எனக்கு ஒரு விடயத்தைச் சித்திரமாக வரையத் தெரியவில்லை, ஒருவேளை அதனால் அவற்றை இப்படி விபரிக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது. எனக்கு ஓவியக்கலையிலும் ஈடுபாடுண்டு. ஆனால் எனக்கு வரையத் தெரியாது. நான் எழுதும்பொழுது, நான் எழுதும் விடயங்களை என்னுடைய மனதிற்குள் காட்சிப்படுத்திய பின் அவற்றை எழுத்தின் துணையுடன் வெளிக்கொணரு கிறேன். என்னால் விபரிக்க முடிந்த அந்தக் கிராமங் களினதும் தெருக்களினதும் வாசத்தை நான் உணரு கிறேன்என்பதை உங்களுக்குநான் சொல்லலாம்.நான் அந்த வாசனையை மீண்டும் நுகர்கிறேன். அந்த வண்ணங்களைக் காண்கிறேன்.
எனக்கு இரண்டு படிநிலைகளில் அவை ஒன்றன் மேலொன்று போர்த்தியிருக்குமாறு எழுதுவது பிடிக்கும், அங்கு ஒரு தெளிவான விடயமும் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு செய்தியும் இருக்கும். இது என்னுடைய எழுத்து வடிவம், அதாவது கதையில் உயிரும் சதையுமாக உலவும் ஒரு ஆளுக்கும் கதாபாத் திரத்துக்கும் இடையில் ஒரு இடைவெளியை வைப்பது. ஒரு அறிவாளியாக உண்மையாக இருப்பதற்கு, கொஞ்சம் விடயங்களில் இருந்து விலகி இருந்து பார்ப்பதற்கான சாமர்த்தியம் வேண்டும், அல்லது ஆபிரிக்காவில் நடக்கும் விடயங்களை நான் விமர்சிக்க முடியாது. குழுவாதியாகவோ அல்லது
இனக் குழுவாதியாகவோ இருப்பது விமர்சனத்தை - உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.21

Page 22
உடைத்து விடும். இப்படியான விடயங்களை புத்தி சாலித்தனமாக உரைப்பதற்கு நான் நகைப்பையும் காஸ்யத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
" அப்படிப் பார்த்தால் நீங்கள் உங்களுடைய LaVentre de 'Atlantique நாவலின் கதாபாத்திரமான சலியுடன் மிக நெருங்கியவளாக இருக்கிறீர்களா?
சலி ஓரளவுக்கு நான்தான். அந்தக் கதையும் கிட்டத்தட்ட என்னுடையதுதான். ஆனால் முழுமை யாக அல்ல. கதை முழுவதும் உண்மைகளை வடிகட்டிச் சொல்லி இருக்கிறேன். ஏனெனில் வாசகர் எப்போதும் எனக்கு அருகில் இருப்பதாக உணர வேண்டுமே அன்றி ஒருபோதும் என்னுடைய இடத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக.
* La Ventre de "Atlantiqueநாவலுக்கு ஆபிரிக்காவில் எப்படி வரவேற்பு இருந்தது?
அது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமான விடயம். எனக்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது, எழுத்து வாசனையற்ற பெண்களிடம் இருந்துகூட. வானொலியில் என்னைப்பற்றிக் கூறியதைக்கேட்டு நான் கலந்து கொண்ட சந்திப்பில் என்னைக் கேட்பதற்காக இந்தப் பெண்கள் வந்திருந்தார்கள். என்னுடைய கலகங்கள் அல்லது எதிர்ப்புகள் நான் சார்ந்திருக்கும் சந்ததியினருக்கு எவ்வளவு அந்நி யோந்நியமாக இருக்கின்றதென்பதைப் புரிந்து கொண்டேன்.
உங்களின் இந்த வெற்றியை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? சனங்களின் கண்களில்தான் இந்த வெற்றி இருக்கின்றது. ஆபிரிக்காவில் நான் சிறிது அதிகமாக தொந்தரவுக்குள்ளாகுகிறேன். சிலர் தங்களை ஸ்தாபித்துக் கொள்ள உதவுவதற்காக நான் சில கடைகளையும் கொஞ்ச ஒற்றைப்படகுகள் போன்ற வற்றை வாங்கி இருக்கின்றேன். ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் என்னால் தீர்க்க முடியாது. என்னுடைய உள்ளில் நான் மாறவில்லை. என் எழுத்தைப் பொறுத்தவரையில் நான் திட்டமான இலக்கை நோக்கி இப்போதும் இருக்கிறேன். ஆனால் நான் இப்போது தனிமையைக் குறைவாக உணர்கிறேன். ஏனெனில் இப்போதுவாசகர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு உறவு ஏற்பட்டுள்ளது.
། ། ། ། །
KETALA Paris: Flammarion, 2006 (286p) ISBN: 2-08-0689932-2. Roman
ஒருத்தியின் மரணத்துக்குப்பின் முஸ்லிம்களின் கலாச்சாரத்தின்படி அவருடைய உடமைகள் உறவினர்களுக்கிடையில் பகிரப்படும் சடங்குபற்றியும் அந்தநிகழ்வின்போதுஅப்பெண்ணின் வீட்டில்இருக்கு பொருட்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கும் அவளுக்கு இடையில் இருந்த உறவுகள் பற்றியும் அவள் பற்றித தாங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்வ 2உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

னுாடாக நாவலை நகரத்திச் செல்கிறார் ஆசிரியை. கவித்துவமானதும்இசை இழையோடுகின்றதுமான ஒரு நடையிலும் இந்த நாவல் எழுதப்பட்டிருப்பது மறுக்க முடியாதது.
* * 帝 事 事
ஒரு பெண்ணின் கதையைச் சொல்வதற்கு ஏன் அவளுடைய வீட்டுத் தளபாடங்களைத் தெரிவு செய்கின்றீர்கள்?
நான் மனித வாழ்வின்சுவடுகள் பற்றி ஒரு புத்தகம் எழுதுவதற்கு விரும்பினேன். என்னுடைய இல்லா மையை எதனால் பிரதியீடு செய்யலாம்? மனிதர்கள் இன்னும் இன்னும் தனித்துக்கொண்டுபோய்வாழும் ஒரு காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒருவருடைய மரணத்துக்குப் பின்பு அவர் பாவித்த பொருட்களும் தளபாடங்களும்தான் அவர் இருந்ததற்குச் சாட்சி u ITá56ip607.
" நீங்கள் மூட நம்பிக்கையுள்ளவரா?
இல்லை. முஸ்லிம்களின் பாரம்பரியத்தில் ஒருவர் மரிக்கும்போது அவர் பாவித்த பொருட்களை உறவினர்களுக்கிடையில் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருக்கின்றது. அந்த நிகழ்வு KETALA என்றழைக்கப்படுகின்றது. எங்கிருந்து இந்தக் கேள்வி? மரித்தவரிடம் இருந்து என்ன எஞ்சி இருக்கப் போகின்றது? Memoria - மெமோரியா (நினைவுகளுடன் தொடர்புடைய) என்ற பெயரை நான் கதாபாத் திரத்துக்கு தெரிவுசெய்தேன். இது உண்மையான ஒரு

Page 23
நபரல்ல. இது எங்களுடைய சுவட்டின் உருவகம். இந்தப்புத்தகம் ஞாபகங்கள் பற்றிய தேடல், பொருட்கள்தான் தொட்டுணரக் கூடிய ஞாபகங்கள்.
"ஒருவர் மரணிக்கும்போது அவருடைய தளபாடங்களின் துக்கம்பற்றி யாரும் கவலைப் படுவதில்லை" இப்படியாக உங்களுடைய நாவல் தொடங்குகின்றது. இந்த மேற்கோள் குறித்த விளக்கத்தை எங்களுக்குத் தருவீர்களா? v
நிச்சயமாக,
உங்களிடம் அநேகமாக கழுத்தணிகள் இருக்கும். நீங்கள் மிகவும் நேசத்துடன் அவற்றை வைத்திருப்பீர்கள். உங்களிடம் மிகவும் பிரத்தியேக காரணங்களுக்காகத் தெரிவு செய்து வாங்கிய தளபாடங்கள் இருக்கும். ஒருவர் மரணித்தபின், அவருடைய சொத்துகள் அவருடைய குடும்பத்தினருக்குப் பங்கிடப்படுகின்றன. அவர்கள் தங்களுக்கு விரும்பிய படி அவற்றைப் பாவிப்பார்கள். ஏனெனில், மரித்தவர் அந்தப் பொருட்கள்மீது எவ்வளவுபிடிப்பாக இருந்தார் என்பதோ அவற்றை எப்படிப் பாவித்தார் என்பதோ அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிய வராது. ஒருவர் மரித்த பின் அவர் எப்படி இருந்தார் என்பதுபற்றியாரும் கவலை கொள்வதில்லை. ஆனால் அவருக்குப் பின்னால் விட்டுச் சென்ற தளபாடங்கள் போன்ற சாமான்களை மறப்பதில்லை.
ஒரு சுற்றுவட்டமாக இருக்கும் இந்த நாவலின் இறுதியில், நான் ஒரு பதிலைக் கொண்டு வருகின்றேன். என்னவென்றால் ஒருவர் ஞாபகத்தை இழந்து விடுகிறார் அல்லது மறந்து விடுகிறார். அதாவது மரித்தவர் படிப்படியாக மறக்கப்பட்டு விடுகிறார். ஒரு மனித உயிரியானது மறத்தலுக்கு ஏதுவானதுதான் என்பதைத்தான் இறுதியில் நான் ஒரு பதிலாகச் சொல்ல வருகிறேன்.
Ketalaவிற்கு முன்பான ஏழு நாட்களும் என்ன நடக்கும்?
என்னுடைய மொழியில் Ketala என்பது "பொதுக் கூட்டம்" என்று பொருள்படும்.நாவலின் ஒரு இடத்தில், பழைய ஆபிரிக்க முகமுடி சொல்கிறது, அதனுடைய கலாச்சாரத்தில், உங்களுடையவர்களை நீங்கள் உங்களுடனேயே எடுத்துச் செல்ல முடியாதென்பதால், ஒருவருடைய ஞாபகங்களை எப்போதும் கொண்டு செல்கிறோம். மரித்தவளுடைய கணவனின் மனநிலை ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு இருக்கின்றதென்பதை அங்குள்ள சாமான்கள் பாத்திரங்களாகி வெளிப் படுத்துகின்றன. அங்கு மூடநம்பிக்கைள் திரும்ப வருகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தன்மை, இன்மை, இவைகள் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொள்ளும் விதம் என்பவற்றின் மீதான தத்துவ விசா ரத்தை மனிதர்கள்மீது அங்குள்ள சாமான்கள் வைக்கின்றன.
மோசமான தருணமொன்று எப்போ தென்றால், இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டி
 
 

இருக்கும்பொழுது. அதிகாரத்திற்கான விருப்பை இல்லை என்பது பொய். சமூகத்தில், பொதுவாக, ஒவ்வொருவரும் எதற்கோ தலைவராக அல்லது எதையோ நடத்துபவராக இருக்க விரும்புகிறார். உதாரணத்துக்கு, மதத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஒவ்வொருவரும் மற்றவர்களை விடத் தாங்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருப்பதாக நம்புகிறார்கள். இதே தன்மையைநாங்கள் இங்கு பொருட்களிடத்தில் காண்கிறோம்.
வெள்ளைச் சட்டை சொல்கிறது "அவள் தனது பிரார்த்தனையின்போது என்னைத்தான் அணிந்தி ருந்தாள்." பிரார்த்தனையின்போது அவள் போர்த்தி யிருந்த மொட்டாக்குத் துணி சொல்கிறது "தலை பிரார்த்தனையின் இருப்பிடம்" பழைய முகமூடி சொல் கிறது "நான் எல்லோரையும் விட முதியவர்". முதியவர்கள் தங்களுடைய முடிவுகளை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு உரிமையுடையவர்கள், அவர் களிடம் நியாயமான காரணங்கள் இல்லாமலிருந்த பொழுதிலும் கூட. இது மாற்றப்பட வேண்டிய ஒரு விடயம்.
அங்கிருக்கும் தளபாடங்களும் மற்றச் சாமான் களும்தாங்கள் மெமோரியாவுடன் கழித்த மிகநெருக்க மான பொழுதுகள் பற்றிப் பேசுகின்றன. நீங்கள் அவற்றிற்கு பெயர்சூட்டி இருப்பதை அவதானிக்கலாம். சாப்பாட்டுக் கோப்பை சொல்கிறது, "ஒரு நேரத்தில் இந்த மணிசர், தங்கடை சொந்தப் பேரை விட்டிட்டு பூரீஅன்பேஸி எண்டிற மாதிரி செல்லப் பேர்களை வைச்சு நடிக்கினம்" கோப்பை கேட்கிறது, "அப்பிடியெண்டா என்ன?" என்று, அதற்கான தொடர்புகளைத் தேடுகிறது. CoumbaDJiguene பெருத்த மார்பகங்களைக் கொண்ட, வட்டமாகத் தலை இழுக்கப்பட்டு ஒரு வெள்ளைப் பொட்டுடன் இருக்கும் ஒரு கறுப்புச் சிலை. அதனுாடாக ஒரு கறுப்பினக் கலாச்சாரத்தை காண்கிறோம். Coumba Diguene) என்பது என்னுடைய மொழியில் திருமணம் செய்யவும் தாயாகவும் ஆவதற்கான வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் பருவத்தைக் குறிக்கிறது. Dialdial பாடல், அது Tassou, இது செனகலில் இருக்கிறது. இதைக் கிட்டத்தட்ட ராப் இசையுடன் பொருத்திப்பார்க்கலாம்.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.23

Page 24
Dialdialdi என்பது பெண்கள் இடையைச் சுற்றி அணியும்
முத்துக்களாலான ஒரு ஆபரணம் அல்லது ஒரு
பாலிச்சைத் துாண்டலுக்கான சரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிற்றாடை.
சம பாலுறவுக்காரன் ஒருவனைத் திருமணம் செய்து குடும்பமாகும் ஒரு பெண்ணின் கதையை நீங்கள் ஏன் தெரிவு செய்தீர்கள்? இதன்மூலம் எதனைச் சொல்ல வருகிறீர்கள்?
ஆபிரிக்காவில் இப்படிப்பட்ட சம்பவங்களை இன்னுமின்னும் அதிகமாகக் கேள்விப்படுகிறோம். ஓரினச் சேர்க்கையாளர்கள் அந்தச் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள். அதனால் இவர்கள் இந்த விடயங்களை மறைத்துத்தான் வைக்கிறார்கள். அப்படி இருக்கும்போதுதங்கள்குடும்பகெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு திருமண பந்தத்தில் தங்களைப் பிணைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்களுடைய கோழைத்தனத்திற்கு விலைகொடுப் பவர்களாகப் பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவ்வகையான சம பாலுறவுகளை அங்கீகரித்து மனித உணர்வுகளை மதிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவருடைய தவறென்று கருதப் படுவதை மறைக்க இன்னொருவருடைய வாழ்க்கை பலியிடப்படுவது பொருத்தமானதல்ல.
எனக்கு, இது பிரச்சினை ஒன்றை விசாரிப்புக் குள்ளாக்கும் ஒரு முறை. குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்கும் ஆண்களின் ஆண்மையைப் பாதுகாப்பதற்கும் பெண்களைத்தியாகம் செய்வதை நிற்பாட்டவேண்டும்
" மெமோரியா மக்கூவைக் கட்டாய மண்ம் செய்திருக்கிறாள். அவன் ஒருபாலுறவுக்காரனாக இருந்தபோதும்?
அவன் இதற்குச் சம்மதிக்கிறான். ஏனென்றால் அது அவனுக்கு வசதியானது. ஒரு வர்த்தகப் பிரமுக தந்தை. ஒரு டாக்டர் தாய். இவர்களின் மகன் மக்கூ, தன்னுடைய ஒருபாலுறவை இரகசியமாகப் பேணிக் கொள்கிறான். ஆனால் அவனுடைய பெற்றோருக்கு இது தெரிந்திருந்தது. தங்களுடைய குடும்பத்தின் கெளரவத்தைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் இதனை மறைக்க வேண்டும். அதற்காக ஒரு மச்சாள்காரிக்கு அவனைக் கலியாணம் கட்டிக் கொடுக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் மெமோரியா முதலில் மறுக் கிறாள். பிறகு அவளுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அவள் இறுதியில் இணங்கிப் போகிறாள். அவனால் கவரப்பட்டு பிறகு அவன்மேல் காதல் கொள்கிறாள். பின்பு அவனுடைய ஒரு பாலுறவுபற்றிக் கண்டுபிடித்தபொழுது அவனை விவாகரத்துச் செய்ய விரும்புகிறாள். ஆனால் பிறகு இதுபற்றி மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில், இருவரும் பாரிஸ்க்குச் சென்று வாழ்வதென்று முடிவு செய்கி றார்கள். அங்கு போனால் மக்கூவின் பாலுணர்வுத் தன்மையை திசை திருப்பலாம் என்று மெமோரியா நம்பிக்கொண்டு போகிறாள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, அவனுக்கு - தன்னுடைய ஒருபாலுறவுத் தேவைகளுக்கு- அது இன்னும் வசதியாகிப்போகிறது.
" நீங்கள் மெமேரியாவுக்கு மிகவும் நெருங்கியவளாக
24உயிர்நிழல் O யுலை - Qg : QbU 2006

உங்களை உணருகிறீர்களா?
என்னுடைய எல்லாப் பாத்திரங்களுடனும் எனக்கொரு நெருக்கம் உண்டு. நான் அவர்களைச் சீர்துாக்கிப் பார்ப்பதில்லை. வாசகர்கள் தங்கள் அபிப்பிராயத்தைக்கொள்வார்கள். மெமோரியாமிகவும் செருக்குடையவள். தன்னுடைய கணவனாக இல்லாத ஒருவனை'என் கணவன் என்று சொல்வதற்கு பிடிவா தமாக விரும்ப வைக்கப்படுகிறாள். அதன்பின்பு அவள் பிரான்சிற்கு வந்து வாழும்போது அவளுடைய தந்தை யின் கட்டளைகளுக்குப் பணிக்கிறாள். தந்தை அவளிடம் இருந்து பணத்தை எதிர்பார்க்கின்றார். அவள் எதுவுமற்றவளாதலால் அவளால் எதையும் மறுக்க முடியவில்லை. எதைக் கொடுத்தும் அவள் பணம் சேர்க்க வேண்டியவளாக்கப்படுகிறாள்.
" இப்படிப் பணம் கொடுப்பது அல்லது பணம் கேட்பது மிகவும் சாதாரணமாக எப்போதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு விடயமா?
ஆம். பெற்றோர்கள் இந்த விடயத்தில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களை யறியாமலே இந்தப் பண விடயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஏன் மெமோரியா இதற்குப் பணிந்து போகிறாள்? தன்னுடைய குடும்பத் தினால் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்கிற அச்சம். பெண்கள் இப்படியான விடயங்களைத் துாக்கி எறிந்து விட்டு, முகத்திலறைவது போல் நடந்துகொள்வ தற்கான துணிச்சலைக் கையில் எடுக்காவிடில் பெண்களின் இந்த நிலை மாறப் போவதில்லை. மெமோரியா தன் குடும்பத்துடன் பிணைக்கப்பட்டி ருக்கிறாள். தன் கணவனுடன் பிணைக்கப் பட்டிருக்கிறாள். எவ்விதமான அர்த்தமும் இல்லாத தன்னுடைய பாடுகளினோடும் பிணைக்கப்பட்டி ருக்கிறாள். அவள் தனக்கென்று வரையப்பட்டி ருக்கின்ற பாதையில் செல்விதில் பிடிவாதமாய் இருக்கிறாள். ஏனெனில் அது அவளுக்கும் மிகவும் இலகுவாக இருக்கின்றது.
" என்னதான் இருந்தாலும் விபச்சாரத்திடம் தஞ்சமடைவ தென்பது அவ்வளவு இலகுவான விடயமல்லவே?
இது ஒரு முன்னனுமானம். இங்கு மறைவாக 'விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆபிரிக்கப் பெண்களைப் பற்றிப் பேச விரும்பினேன். வேறு வேலைகள் செய்ய விருப்பமில்லாததால் நிறையப் பெண்கள் இதில் ஈடுபடுகின்றார்கள். அத்துடன் இதனால் நிறையச் சம்பாதிக்கலாம் என்று எண்ணு கிறார்கள். இதை இலகுவில் விட்டுவிட முடியும் எப்போதென்றால் தங்களுடைய குடும்பத்தினருக்கு இப்படிச் சொல்வதற்கான துணிவு வரவேண்டும் : "உங்களுக்கு நிலவைப் பிடித்துக் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் ஒரு நட்சத்திரத்தின் பாதிகூட என்னிடம் இன்னும் இல்லை! நான் ஒரு வீட்டுவேன்)லக்காரியாகத்தான் இங்கு இருக்கிறேன்" என்று.
நானும் எனது மேற்படிப்புக்காக வீட்டுவேலைகள் செய்துதான் செலவைச் சமாளித்தேன் 12 வருடங்களாக.
இதழ் 24

Page 25
இவ்வளவு திடீர்த் திருப்பங்கள் எல்லாம் இருந்தும் கதையின் கடைசியில் KETALAநடக்கவில்லை. இதென்ன தர்க்க நியாயம்? இதிலுள்ள தர்க்க நியாயம் என்னவென்றால், சாமான்கள் ஒரு அனுபவத்துடன் கூடிய, வாழுகின்ற, துடிப்புடனான ஒரு ஞாபகத்தைக் கொண்டுள்ளன. அவை எங்களுடைய வாழ்க்கையில் ஒரே சமயத் திலோ ஒரே விதமாகவோ வருவதில்லை. அவை ஒவ்வொன்றும் எங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியையும் தங்களுடையதையும் சொல்லலாம். இது எனக்கு ஒரு பாங்கு. வெறுமையின்மீதும் இன்மையின் மீதும் என்னைக் கேள்வி கேட்பதற்கு ஏதுவான ஒரு வடிவமாக இருந்தது. உதாரணத்துக்கு, ஐரோப்பிய சமூகத்தை எடுத்துக் கொண்டால், சிலர் தனியாகவே மரணித்துப்போகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை யின் தடயங்களை எங்கு தேடமுடியும்? அது தவிர, கதையின் ஆரம்பத்தை மக்கூதான்வழிநடத்துகிறான். அவன் தன்னுடைய பெற்றோர்களின் வாழ்க்கையை சோதிக்கிறான். சமூக கலாச்சார வழக்கங்கள் அவனைச் சோதிக்கின்றன. ஐரோப்பாவில்கூட அவன் முற்றாகச் சுதந்திரமாக இல்லை. எல்லாமே திணிக்கப் பட்டவைதான். மெமோரியாவினால் அவன் தன்னைப் பற்றி நிறைய அறிந்து கொள்கிறான். அவனுடைய வாழ்க்கையை அவள் இன்னொரு விதமாக உயிர்ப் பிக்கிறாள். இதை அவன் உணர்ந்துகொண்டு, இறுதியில் தன்னுடைய மனைவியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதென்று முடிவு செய்கிறான். ஏனெனில் இதுதான் அவனுக்குத் தன்னை மீண்டும் கண்டு கொள்ள வழிவகுத்திருக்கிறது. மெமோரியா என்பது ஒரு ஆண் பாத்திரமாகக்கூட இருந்திருக்க முடியும். மெமோரியா என்பது லத்தீன் மொழியில் நினைவின்சாரம்.
" இந்த KETALA சடங்கினுடாக நீங்கள் எதைக் கடத்த விரும்பினீர்கள்?
இஸ்லாம் மதத்தினதும், கிறிஸ்தவ மதத்தினதும் வருகைக்கு முன்பே ஆபிரிக்கா தனக்கேயுரிய சொந்த ஆன்மீக விசாரங்களைக் கொண்டிருந்ததென்பதை நான் சிலவேளை சொல்வதற்கு விரும்பி இருக்கலாம். மூடநம்பிக்கை என்பது ஒருவகையில் உடலை வாழ்க்கையுடனும் இயற்கையுடனும் இணைக்கும் ஒரு மரபுதான். எங்களுடைய முன்னோர் தங்களுக்குரிய விதத்தில் தத்துவ விசாரிப்புகளைக் கொண்டி ருந்தார்கள். விளக்கங்களைத் தேடும் முறைகளையும் கொண்டிருந்தார்கள்.
故放火赏菇放责★k*赏
உங்கள் இளமைக்காலத்தில் உங்களை ஆகர்ஷித்த எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா?
இதை எல்லோரும் என்னிடம் * கேட்கின்றனர். எனக்கு இந்தக் கேள்வி பிடிப்பதில்லை. இந்தக் கேள்வி எனக்கு எப்போதுமே எரிச்சலுாட்டும் ஒன்று. ஏனெனில் நான் இலக்கியத்துறையில் மாணவியாக இருக்கும் ஒருத்தி. இப்போது என்னுடைய பட்டப் படிப்பிற் கான வியாசத்தை எழுதிக் கொண்டி
 
 
 
 

ருக்கிறேன். எனவே கட்டாயமாக ஒரு தொகை எழுத்தாளர்களை வாசிக்க வேண்டி இருக்கும். எனவே அத்தனை எழுத்தாளர்களுக்கிடையில் ஒரு பத்துப் பேரையாவது எங்களுக்கு நிச்சயம் அதிகமாகப் பிடித்திருக்கும். ஆனால் நான் உங்களுக்கு இப்படிச் சொல்லலாம், யாரைப்பிடிக்கிறது என்பதை விட்டுவிட்டு எனக்கு இலக்கியத்தில் என்ன பிடிக்கும் என்று.
Notre besoin de Consolation est impossible de rassassier எழுதியசுவீடன்நாட்டு எழுத்தாளரானSigDagemannஜய் பிடிக்கும். நான் இவரை மதிக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் எத்தனையோ அவமானங்களைச் சந்தித்த எனக்கு, அவர் சொல்பவைகள் உண்மை என்பதை நான் காண்பதற்கு எனக்கு எப்படியோ ஒரு நேரம் கிடைத்தது.Senghorஐ எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஏதோ ஒன்றுக்கான ஒரு பாதையை எனக்குத் திறந்தார். எனக்கு Marama Baவை ரொம்பப் பிடிக்கும், ஏனெனில் என்னைப் போல் அவரும் ஒரு ஆபிரிக்கப் பெண்என்பதும்நான்சிறுவயதினளாக இருக்கும்போது, நான் தெளிவற்றதாக அல்லது குழப்பமாக உணர்ந்த பல விடயங்கள்பற்றி அவர் எழுதியிருக்கிறார். அவரும் எனக்கொரு பாதையைத் திறந்தார். எனக்குMarguerte Yourcenerஐ மிகவும் பிடித்தது. ஏனெனில் அவர் ஒரு பிடிவாத குணமுள்ள பெண். தான் நினைத்தபடியே தன்னுடைய வழியில் கடைசிவரை வாழ்ந்தார்.
Hemingwayயைப் பிடிக்கும். நீங்கள் சொல்வீர்கள் அவருடைய வசனநடைக்காக என்று. அதுதான் இல்லை. மிகவும் சாதாரணமாகச் சொன்னால், நான் அவருடைய 'கடலும் கிழவனும் படிக்கும்போது அவர் என்னுடைய பாட்டனாரைப் பற்றிப் பேசுவது போல் உணர்ந்தேன். என்னுடைய பாட்டனார் ஒரு மீன்பிடி காரன். அவர் கடலுக்குப் போகும்போது என்னையும் கூட்டிச் செல்வார். ஒரு எழுத்தாளரை விரும்புவதற்கு ஐம்பதினாயிரம் காரணங்கள் இருக்கும். s எனக்குMarivauxவைமிகவும் பிடிக்கும், அவருடைய நகைப்பின் கூர்மைக்காக, அவர் 18ம் நூற்றாண்டின் சமூகத்தை எப்படிப் பார்த்திருக்கிறார் என்பதும் பிடித்துப் போனது. பின்நோக்கிச் சென்று, ஹாஸ்யத் துடன், நகைப்புடன். பொதுவாக இவருடைய பாத்தி ரங்கள் எவ்வளவுமுட்டாள்தனமாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு உண்மையுரைக்கும் பாத்திரங்களாக இருக்கிறார்கள். Voltaireஜமிகவும் பிடிக்கும். ஏனெனில் அவருடைய Candideஐ வாசிக்கும்போது அது முற்றுமுழுதாக சமகாலத்து நாவலாக இருப்பதை கண்டுகொள்ள முடிகிறது. எங்களுடைய ஆபிரிக்கச் சகோதரர்களுக்குள் நிறைய Candideகள் இருக் கிறார்கள். இதைச் சில சமயங்களில் சொல்லத்தான்
வேண்டும்.
" இன்றைய ஆபிரிக்கச் இலக்கியச் சூழலுக்குள் பெண்களின் இடம்பற்றி நீங்கள் எப்படி பகுத்தாய்கிறீர்கள்? அவர்களுக் குரிய இடம் கிடைத்திருக்கின்றதா? அல்லது இன்னும் நிறையப் பெண்கள் எழுதுவதற்கு முன்வரவேண்டுமா?
இது தங்களுடைய விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் கேட்கும் கேள்வி. பெண்களுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பது மற்றவர்களல்ல. அவர்கள்தான் தங்கள்
உயிர்நிழல் பூெலை - செப்டெம்பர் 2006 25

Page 26
இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு நியாயமான பெண்நிலைவாதி. சில பெண்நிலை வாதிகள் கையில் பந்து விளையாடும் மட்டையைத் துாக்கிக்கொண்டு ஆம்பிளையளைக் கொல்லுறத் துக்குத் தேடிக்கொண்டு திரிகிறார்கள். நான் அந்த வகையைச் சேர்ந்தவள் அல்ல. ஒரு பெண் மதிக்கப் படுவாளாய் இருந்தால் அவள் வேறு யாருக்காகவும் மண்டையைப் போட்டுக் குழப்பத் தேவையில்லை என்றுதான் கருதுகிறேன். ஒருத்திக்கு மரியாதை செலுத்துவதற்கு அவள் அங்கே பிரசன்னமாய் இருக்க வேண்டும். ஆபிரிக்க இலக்கியத்தில் பெண்களிற்கான இடம்பற்றிய விடயத்திற்குத் திரும்ப வருவோம். 1975ம் ஆண்டு வரையிலும்-ஐ.நா. அமைப்பினால் சர்வதேச பெண்கள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட வருடம் - பெண் எழுத்தாளர்கள் இருக்கவில்லை. ஆண்கள் தான் எங்களைப்பற்றிப் பேசினார்கள். நான் இதை "படர்க்கை நிலையில் பெண்" என்று அழைக்கிறேன்.
ஆண் எழுத்தாளர்கள் எங்களைப்பற்றிப்பேசினார் கள், ஆனால் படர்க்கைநிலையில் வைத்து. அவர்கள் தங்களுடைய பாத்திரங்களை - பெண்கள் பற்றி அவர்களுக்குள் படிந்திருந்த பிரதிமைகள், அவர் களுக்கு இசைவாக இருந்த உண்மைகள் என்பவற்றை பெண்பாத்திரங்களோடு பொருந்த வைத்து அவற்றை உருவாக்கினார்கள். அவர்கள் பெண்களை எப்படி அவதரிப்பிக்க விரும்பினார்களோ அதனடிப்படையில் இந்தப் பாத்திரங்கள் அமைந்தனவேயன்றி, யதார்த் தத்தில் பெண்கள் எப்படி இருந்தார்கள் என்பதன் அடிப்படையில் அல்ல.
இந்த குறிப்பிட்ட ஆண்டுகள் தொடக்கம் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை எழுதத் தொடங்கினார்கள். ஏனெனில் அவர்கள் தங்களைச் சுற்றி இருப்பவற்றைப் பார்க்கத் தொடங்குவதற்கு முன்பு தங்கள் அடிவயிற்றில் கிடந்தவற்றை அலறிக் கொட்டிவிடத் துடித்தார்கள். இப்போது அவர்கள் தங்களைச் சூழவுள்ளவைகளைக் காண்கிறார்கள். அவரகள் இப்போது ஆண்களைப்போல, ஏன் அதை விடவும் திறமையாக பகுத்தாய்வு செய்கிறார்கள். அவர்கள் இப்போது பேசுவதற்குத் திராணியுள்ள வர்களாக இருக்கிறார்கள். இனனுமின்னும் அதிகமான பெண்கள் வருகிறார்கள். நான் இது சிறப்பான விடயம் என்று நினைக்கிறேன்.
" செனகல் நாட்டு இலக்கியம் மிகவும் செழுமை வாய்ந்ததாகத் (65st pópudorfišfpgI. Mariama Ba, Ken Bugul, Aminata Sow Fal. போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் இருப்பதை எப்படி விளங்கப்படுத்துகிறீர்கள்?
பிரெஞ்சு இலக்கியச் சூழலில் பெருந்தொகையில் பெண்கள் இருப்பதற்கு நீங்கள் எப்படி விளக்கம் சொல்கிறீர்கள்? அவர்கள் புத்திக் கூர்மையுடை யவர்கள், நாங்களும்தான். அது அங்கேயும் நடக்கும். மேற்குநாடுகளில் உள்ள பெண்களுக்குக் கிடைத்தது போல் அவர்களுடைய அபிப்பிராயங்களை மேன்மைப் படுத்துவதற்கான வசதிகள் எங்களுக்கும் கிடைக்கும் போது இன்னும் அதிகமானவர்களாக நாங்கள் இருப்போம். அதிகமான பெண்கள் எழுத வரும்போது, கலை இலக்கியப் பரப்பில் தங்கள் கால்களைப்
26|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

பதிக்கும்போது எங்களுடைய குரல்கள் அதிகமாகக் கேட்கப்படும், எங்களுடைய பிரச்சினைகள் அதிகமாக கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு வருடமும் புதிய இளம்பெண்களின் வருகை ஆபிரிக்க எழுத்துலகிற்கு இருக்குமாயின் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
Fatou Diome அணிமையில் என்ன வாசித்தார் என்று
தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறோம்?
இதைச் சொன்னால், நீங்கள் அப்பதான் உங்க ளுடைய வாசகர்களுக்குச் சொல்லாம், இந்தப் புத்தகங்களைப் போய் வாசியுங்கள் ஏனென்றால் Fatou Diome அதை வாசித்திருக்கிறார் என்று.
இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவ தில்லை. ஏனென்றால் வாசிப்பு என்பது ஒரு தனிப்பட்ட விடயம்.நான்வாசிப்பதை வைத்து என்மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டு கொள்வீர்கள். எனவே நான் அதை மறுக்கிறேன். (சிரிப்பு)
உண்மையில் நான் நிறைய ஆபிரிக்க எழுத்தாளர் களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் வாசிக்கிறேன். நான் மிகவும் தெரிந்தெடுத்துத்தான் வாசிப்பேன். நான் வேற்றுக் கலாச்சாரம், வேற்று நாடு களின் எழுத்தாளர்களையும் அதிகமாக வாசிக் கிறேன். அது எனக்கு மிகவும் பேராசையான விடயம். சமகாலத்தின் ஒரேவிதமான பிரச்சினைகளை ஒரு சீன எழுத்தாளர், ஒரு செனகல் நாட்டு எழுத்தாளர், ஒரு பிரெஞ்சு எழுத்தாளர், இன்னும் ஒரு அமெரிக்க எழுத்தாளர் எப்படி அணுகுகிறார் என்பதை அறிந்து கொள்வது. என்னுடைய வாசிப்பு பலதரப்பட்டது. எனவேதான் எனக்குப்பிடித்த இலக்கியவகை அல்லது எழுத்து வகை என்று உங்களுக்கு வகைப்படுத்தி எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
" செனகலில் உள்ள உங்களுடைய பாட்டி உங்களைப் பற்றி ஊடகங்கள் எல்லாம் பேசுவதைக் கேட்டு , "திரும்பவும் என்ன குழப்படி செய்து விட்டாய்" என்று உங்களிடம் கேட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். நீங்கள் அவருக்கு எப்படிப் பதிலளித்தீர்கள்?
நான் அவருக்குத் தைரியமுட்டினேன். நான் நினைக்கிறேன்என்னை மிக அதிகமாகத் தெரிந்தநபர் பாட்டிதான். அவர்தான் என்னைப் படிக்க வைத்தார். என்னுடைய மனோநிலை பற்றி அவருக்குத் தெரியும். மிகவும் கட்டுப்பாட்டுடன் என்னை வளர்த்தவர். நான் எதிலும் நேர்மையாக இருப்பேன் என்று அவருக்குத் தெரியும். நான் நினைக்கிறேன் அவர் என்னிடம் இதுபற்றிக் கேட்டது அதனை உறுதிப் படுத்திக் கொள்ளவும், மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும் தான். நான் எப்படிப்பட்டவள் என்று அவர் ஒரு எண்ணத்தை வைத்திருக்கிறார். அதற்குப்பாதகமாக நான் எப்போதும் இருக்க மாட்டேன். அவருக்கு நான் ஏமாற்றத்தை அளிக்க முடியாது. அவர் எனது வழி காட்டி. அவர் என்னை மிகப் பெரிய பாதையொன்றில் வழிநடத்தி இருக்கின்றார். அவருக்கு மேல் நான் வைத்திருக்கும் மரியாதைக்காக நான் அப்படியே
தொடரவேண்டும். ஏனென்றால் இப்போது நடப்ப
* இதழ் 24

Page 27
வைகள் எல்லாம் அவருடைய கட்டுப்பாடு களிற்குள் இல்லை. அவருக்குத் தொலை வாக இவைகள் நடக்கின்றன. நான்கூட இதை எதிர்பார்க்கவில்லை. இப்போது சற்று நேரத்திற்கு முன்பு நான் அவருடன் பேசும்போது சொன்னேன், "எல்லோரும் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுகி றார்கள். எனவே எனக்குத் தலைக்கணம் வந்துவிடப்போகிறது" என்று.
இதை நான் பகிடிக்குத்தான் சொல்கி றேன்.நான் எப்போதுமெFatouDiome சாதார ணமாக இருப்பதைத் தான் விரும்புவேன் நான் எப்படி இருக்கிறேனோ அப்படி என்னை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். என்னு டைய பாட்டி தான் வளர்த்த பெண்ணாக என்னை அடையாளம் காணக்கூடியதாக இருப்பதையே எப்போதும் விரும்புவேன்.
தற்போது பிரான்சுக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி உள்ளது?
கலாச்சாரரீதியாக எனக்கு இங்கு பிடித்தது என்னவென்றால் அதுசுதந்திரம் - ஒருவர் அவராகவே இருக்க முடிவதற் கான சாத்தியம். ஒரு பெண்ணாக, நாங்கள் இன்னொன்றாக எங்களை உணர வைக்கும் ஒரு சூழல் இங்கு கிடைத்திருக் கின்றது. நிச்சயமாக, என் துன்பங்கள் எனக்கு நிறைய இருந்தன, ஆனால் நான் கற்றுக்கொண்ட அல்லது பெற்றுக் கொண்டவைகளிற்காக கொடுக்க வேண்டியிருந்த விலைகள் அவை. இந்தப் பிரபஞ்சத்தில் எங்காவது தன்னை ஒருவர் நிலைநிறுத்திக் கொள்வதற்கு நிறையப் போராட வேண்டும்.நிறவாதம் என்பது நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் நிறையப்
இதழ் 24
பிரச்சினை
" நீங்கள் இ
ஒரு க கொள்ளமு அதைப் ெ பச்சை அ பழிப்பதை
உங்களுல் உணருகி வாழ்க்கை
வாழ்க் முட்டவே அதனை செய்வதற்
" நீங்கள் உணருகி நான்
பிராண்ச் முடிகிறது 2560Ꭰ6 நான்ஸ்ட் இருப்பத தாளில் ே எனக்கு எழுத்தி மூன்றுத நான் எழு மாதிரிய சுயநலச் மறுதை அதிகம
 

ܕ ܚܝܐ
களில் ஒன்றுதான்.
ன்னும் இந்த நிறவாதத்தினால் பாதிக்கப்படுகிறீர்களா? றுப்பினப் பெண் வெற்றி பெறுவதைத் தாங்கிக் Dடியாதவர்கள் இங்கு இருக்கின்றார்கள். ஆனால் நான் பரிதுபடுத்தவில்லை. ஏனெனில் அது அநீதியானது, ஒரு ப்பிளைப் பார்த்து அது ஏன் சிவப்பாக இல்லை என்று ப்போலத்தான்.
டைய நாவல்களில் பெரும்பாலும் சோகங்கள் கவிந்திருப்பதாக ன்றோம். இது உங்களது இயல்பா? நீங்கள் மிகவும் யை முற்றாய் நேசித்து வாழ்வதாகத் தோற்றமளிக்கும்போது.
கை, அதைச் சிரிக்க வைப்பதற்கு அதற்கு கிச்சு கிச்சு ண்டும். ஆனால், அது என்னை அவமதிக்கும்போதுநான் 9னுமதிக்காது திருப்பி அடிகொடுக்கிறேன். அப்படி அது கு அனுமதித்தால் அது எங்களைச் சாப்பிட்டுவிடும்!
பிரெஞ்சு எழுத்தாள சமூகத்திற்குள் நுழைந்து விட்டதாக ர்களா?
கவும் தனித்துவமானவள்.
கும் செனகலிற்கும் இடையில் எப்படி நீங்கள் ஒடித் திரிய
நகரத்தின் சந்தடிகளில் இருந்து விலகி இருப்பதற்காக ாஸ்பூக்கில் வசிக்கிறேன்.நான் எப்போதும் பயணத்தில் 5 உணருகிறேன். என்னுடைய நாட்டைநான் வெள்ளைத் டுகின்றேன். எனக்கும் ஆபிரிக்காவுக்குமான உறவையும் பிரான்சுக்குமான தொடர்பையும் நான் எனது ால்தான் இணைக்கிறேன்.வருடத்திற்கு இரண்டு அல்லது வைகள் நான் செனகலுக்குப் போவேன். அங்கு போனால் நுவதில்லை. என்னுடைய ஊரில் எழுதுவதென்பதை ஒரு 5த்தான்பார்ப்பார்கள். அப்படி இருந்தால் உங்களை ஒரு ாரராகத்தான் கருதுவார்கள். ஆனால் அது அப்படியல்ல, பாக, மற்றவர்கள் பற்றிய அவதானிப்பும் அக்கறையும்
இருக்க வேண்டும் எழுதுவதற்கு.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200627
*

Page 28
1 997 ஆண்டு இஸ்ரேலியப் படைகளின் ஆக்கிரமிப்புக்குள் இருந்த தெற்கு லெபனானியப் பிரதேசத்தின் எங்கோ ஒரு கிராமத்தில் இஸ்ரேலியப் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் நடந்த திடீர் மோதல் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட போராளிகளில் ஒருவர் ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் நஸ்ரல்லாவின் மகன் என்ற விபரம், சில மணிநேரங்களில் இஸ்ரேலியப் படைகளுக்குத் தெரியவந்தது. படையினர் மகனின் உடலை வைத்துக் கொண்டு நஸ்ரல்லாவுடன் பேரம் பேசினர். ஆனால் தனது 18வயது மகனைப் பலி கொடுத்த அந்தத் துயரத்திலும், தலைவர் நஸ்ரல்லா மகனின் உடலைப் பெற்றுக்கொண்டுபிடித்துவைத்தி ருந்த இஸ்ரேலியப் போர்வீரர்களை விடுவிக்க இணங்க வில்லை. அன்றைய தினம் தொலைக்காட்சியில் தோன்றிய நஸ்ரல்லா என்றும்போல எந்த உணர்ச்சி யையும் வெளிக்காட்டாத குரலில் உரையாற்றினார். தாய்நாட்டின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாகவும் இதுவரை கால போராட்டத்தில் தமது புதல்வர்களைத் தியாகம் செய்த பல குடும்பங்களின் துயரத்தில் தனது குடும்பமும்பங்கெடுக்க சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் தனது உரையில் தெரிவித்தார். அன்று அந்த உரையைக் கேட்ட பல்லாயிரம் லெபனானியர்கள் விம்மி விம்மி அழுதார்கள்.
இன்றைக்கும்கூட பெரும்பான்மையான லெபனான் மக்களால் (ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் அல்லாத வர்கள் கூட) போற்றப்படும், மதிக்கப்படும் தலைவராக நஸ்ரல்லா இருக்கிறார். அவரது தன்னலம் கருதாத அர்ப்பணிப்பு, எதற்கும் கலங்காத நெஞ்சுறுதி போன்ற குணங்களுக்காக மட்டுமல்ல, பிற அரசியல் தலைவர் களைப் போல ஊழல் செய்யாத, ஆடம்பர வாழ்க்கை வாழாத ஒரு தலைவராக நஸ்ரல்லாவை மட்டுமே சுட்டிக் காட்டலாம். அவரது பலரையும் கவரும் ஆளுமை, அறிவுபூர்வமான பேச்சாற்றல், ஊகிக்க முடியாத தந்திரோபாயங்கள் என்பன ஹிஸ்புல்லா இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது. சிலர் நஸ்ரல்லாவை ஒரு மதகுருவாகப் பார்க்கலாம் அல்லது வீரத்தளபதியாகப் பார்க்கலாம். அதே நேரம் அவர் ஒரு சிறந்த படிப்பாளியும் கூட. அவர் வாசித்த 28|உயிர்நிழல் யூலை - செப்டெம்பர் 2006
 

நுால் பட்டியலில் ஜென்ம விரோதியும் முன்னாள் இஸ்ரேல் பிரதமருமான ஆரியல் ஷரோனின் சுயசரிதையும் அடக்கம். −
2006ம் ஆண்டு யூலை மாதம் ஹிஸ்புல்லா இயக்கத்தை அடியோடு அழித்தே திருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இஸ்ரேலிய இராணுவம் போரில் குதித்தபோது எண்ணிப் பத்தே நாட்களில் இந்தப் போர் முடிந்துவிடும் என்றுதான் இஸ்ரேலில் எல்லோரும் (அரசாங்கம் முதல் சாதாரண மக்கள் வரை) நம்பினார்கள். ஒரு சில நாட்கள் மட்டும் பங்கர் வாழ்க்கையைப் பொறுத்துக் கொள்வோம் என்று நினைத்த மக்கள் மாதக் கணக்கில் பங்கர் வாசம் செய்ய நேரிட்டது. தம்மைக் கண்டால் ஹிஸ்புல் லாக்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுவார்கள் என்று எதிர்பார்த்த இஸ்ரேலிய இராணுவம் எதையுமே சாதிக்காமல் பின்வாங்க நேரிட்டது. இஸ்ரேல் தோன்றிய காலத்தில் (1948) இருந்து, போர்க்களங் களில் துரித வெற்றிகள் குவித்த மத்திய கிழக்கின் பலமான இராணுவம் தொடர்ந்து ஒரு மாதமாக ஒரு சிறிய கொரில்லாக் குழுவுடன் போரிட்டு வெல்ல முடியவில்லை. இஸ்ரேலிய இராணுவச் சரித்திரத்தில் ஏற்பட்ட முதலாவது தோல்வியான ஹிஸ்புல்லா வுடனான யுத்தம் "யானைக்கும் அடி சறுக்கும்" என்ற பழமொழியை மெய்ப்பித்தது. அந்தப் பிரதேசத்தின் புராணக்கதையான கோலியத் ராட்சதனை வென்ற டேவிட் சிறுவனின் கதையை வேறொரு கோணத்தில் பார்க்க வைத்தது.
இஸ்ரேலிய கோலியத்தை வென்ற ஹிஸ்புல்லா டேவிட் யார்?உண்மையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டதே இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புத்தான். 1982க்கு முன்னர் லெபனானிய ஹிஸ்புல்லா என்றுயாரும் இருக்கவில்லை. ஹிஸ்புல்லா உருவான கதையைநஸ்ரல்லா வாயாலேயே சொல்லக் கேட்போம்."தெற்கு லெபனான் 18 வருடங்களாக (19822000) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த காலமது. அப்போதெனக்குப் 18 வயதிருக்கும். என்னை ஒத்த வயதுடைய இளைஞர்கள் சிலர் சேர்ந்து இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்த முடிவெடுத்தபோது பலர் நம்ப மறுத்தனர். இந்தப் பெடியங்கள் பலம் வாய்ந்த ராணுவத்துடன் மோதி
இதழ் 24

Page 29
விடுதலை வாங்கித் தருவதாவது என்று பரிகசித்தனர். எமது குழுவில் இருந்தவர்களின் அதிக பட்ச வயது முப்பதாக இருந்தது" - இவ்வருடத் தொடக்கத்தில் அமெரிக்க ராஜதந்திரியுடனான சந்திப்பின்போது நஸ்ரல்லா கூறியவை.
ஆமாம்! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று அப்போது பரிகசித்த வயதானவர்கள் இப்போது இளைஞர்களைத் தமது வழிகாட்டிகளாக போற்றுகின்றனர். தன்னம்பிக்கையுடன் களமிறங்கிய வர்கள் இளைஞர்களேயானாலும் உலக சரித்திரத்தை மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். விடுதலைக்கானதுாய அர்ப்பணிப்பு இன்று இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்க உறுப்பினர்களிடமும் காணப்படுகிறது. இந்த உண்மையைக் கடைசியாக நடந்த போரில் சில இஸ்ரேலிய போர்வீரர்களே ஒத்துக் கொள்கின்றனர். இந்த உண்மையை மறுத்து சர்வதேச ஊடகங்களும் மேற்கத்தைய அரசுகளும் ஹிஸ்புல்லா ஈரான் கொடுக்கும் பணத்திற்காக சண்டையிடும் அடியாள் படை என்பதுபோல பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஹிஸ்புல்லாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு ஊரறிந்த விடயம். இதனை யாரும் மறுக்க வில்லை. நஸ்ரல்லா உட்படப் பல தலைவர்கள் புலமைப் பரிசில் பற்று இஸ்லாமிய கற்கைக்கான மேற்படிப்புக்காக ஈரான்சென்று வந்தவர்கள்தான். பல முதன்மைப் போராளிகள் ஈரானில் கொமாண்டோ இராணுவப் பயிற்சி பெற்றவர்கள்தான். இருப்பினும் ஈரானின் இராணுவப் பயிற்சியாளர்கள் ஆயிரக் கணக்கில் லெபனான் வந்து பயிற்சி முகாம்களை நடத்துவதாகக் கூறப்படும் செய்தி இதுவரை ஊர்ஜிதப்
இதழ் 24
 

படுத்தப்படவில்லை. பால்பெக் நகரில் ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் நடத்தும் நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை மட்டுமே ஈரானியத் தலையீடு பற்றிப்பகிரங்கமாகக் காட்டக்கூடியது. இதைத் தவிர இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆயத்தெல்லா கொமெய்னியின் உருவப்படங்கள் ஷியா முஸ்லிம்கள் வாழும் தெருக்களில் எல்லாம் காணப்படுகின்றன.
லெபனான் சனத்தொகையில் 40வீதமான வழியா முஸ்லிம்கள் பிற மதத்தினரை விடக் கணிசமான பெரும்பான்மையைக் கொண்டிருந்தபோதும் அரசியல் பொருளாதார பலமற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். பெரும் பணக்காரர்கள் முதலாளிகள் மற்றும் கைநிறைய சம்பாதிக்கும் மத்தியதர வர்க்கம் சுன்னி முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சுன்னி முஸ்லிம்கள் மேற்குலக ஆதரவாளர்களாகவும், கிறிஸ்தவர்கள் முன்னாள் காலனிய நாடான பிரான்ஸின் விசுவாசி களாகவும் இருப்பதில் இருந்து அவர்களது வர்க்க பாசத்தைப் புரிந்து கொள்ளலாம். 2005ம் ஆண்டு முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான ஹரிரீகார்க் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதும் தொடர்ந்து சிரிய இராணுவத்தை வெளியேற்றிய 'புரட்சியில் ஈடுபட்ட வர்கள் மேற்படி வர்க்கத்தினர் தாம். மேற்குலகத் தொலைக்காட்சிகளில் சிரியா, ஹிஸ்புல்லாவிற்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களும் அவர்கள்தான் என்பது சொல்லாமலே புரியும்.
லெபனானில் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஆண்டாண்டு காலம் ஒடுக்கப்பட்ட மக்களாக, ஏழைகளாக, கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்தனர். இதனால் அவர்களில் பலர் செல்வம் தேட
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 29

Page 30
உலகம் முழுவதும் சென்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களாகவும் ஆபிரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் பல தரப்பட்ட வியாபா ரங்களில் ஈடுபட்டு பொருளிட்டிய இந்தப்புலம்பெயர்ந்த மக்களில் பலர்ஹிஸ்புல்லா இயக்கத்திற்கான நிதியில் கணிசமான பங்கைச் செலுத்தி வருகின்றனர். அத்தோடுநில்லாது, சிலர் கறுப்புச் சந்தையில் (அமெ ரிக்கா) ஆயுதங்களையும் வாங்கி அனுப்புகின்றனர். மேலும் இவர்களில் பலர் தாயகம் திரும்பி அங்கே வசதியான வீடுகளைக் கட்டிக்கொண்டு வர்த்தகம், தொழிற்துறை போன்ற முயற்சிகளில் முதலீடு செய்து வந்ததால்தான் பின்தங்கி இருந்த தெற்கு லெபனான் பகுதி வளம்பெற்றது. இவ்வாறு தமது வசதிவாய்ப்பைப் பெருக்கிக் கொண்டவர்கள் அரசியலில் அக்கறை யில்லாதுவிட்டாலும் தமது இருப்பிற்காகவேனும் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவளித்து வந்ததை மறுக்க முடியாது. நிலைமை இவ்வாறிருக்க ஈரானும் சிரியாவும் மட்டுமே ஹிஸ்புல்லாவின் நிதி மற்றும் ஆயுத உதவி களை வழங்கி ஆதரித்து வருவதாகவும் அதைத் துண்டித்துவிட்டால் ஹிஸ்புல்லா இயங்க முடியாது என்பது போலவும் இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் பிரச்சாரம் செய்து வருவதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
"புதிய மத்திய கிழக்கு என்னும் குழந்தை பிறக்கப் போவதற்கான அறிகுறிதான் தற்போது நடக்கும் யுத்தம். இந்தப்பிரசவவலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்" இவ்வாறு கவிதை நயத்துடன் கூறிய அமெ ரிக்க வெளிவிவகார அமைச்சர் கொன்டலீசா ரைஸின் உரையை ரசிக்கும் மனநிலையில் லெபனான் மக்கள் இல்லை. சர்வதேசநாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் கோரிய காலத்தில் அதற்கு ஏற்ற தருணம் இப்போதில்லை என அமைச்சர் தட்டிக் கழித்ததை அவர்கள் மறக்கவில்லை. இன்னும் எத்தனை மக்கள் சாகவேண்டும் என்று கொன்டலீசா அம்மையார் எதிர்பார்த்தாரோ தெரியாது. அவர்குறிப்பிட்டமத்திய கிழக்குக் குழந்தை எதிர்காலத்தில் தற்போதுள்ள தேச எல்லைகளைக்கூட மாற்றியமைத்து அமெரிக்க
அது உண்மையாக இருந்தால், இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் ஜேர்மன் நாசிப்படைகளுக்கு அடிபணிந்து போயிருப்பார்கள். அன்று கற்பனைக்கெட்டாத பேரழிவைச் சந்தித்த சோவியத் யூனியனின் பல்வேறு இனமொழிமத வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடியது சரித்திரம். அதேபோல, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பல்வேறு மதங்களைச் சேர்ந்த லெபனான் மக்களை ஒன்று சேர்த்துள்ளது.
30|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

சாம்ராஜ்யத்திற்கு அடிபணியும் சிற்றரசுகளை உருவாக்கும். அதன் முதல் முயற்சியாக சுண்டு விரல் அளவுநாடான லெபனானைச் சுருங்க வைத்து அதன் தெற்குப்பகுதியை அகண்ட இஸ்ரேலுடன் இணைக்கும் சதி தற்போது அரங்கேறுகிறது.
மத்திய கிழக்கு என்ற பெயரைக் கேட்டாலே பணத்தில் புரளும் ஷேக்குகளும் மதக்கட்டுப்பாடு களுடன் குறுகிய வட்டத்தினுள் வாழும் மக்களும் ஞாபகத்திற்கு வருமென்று ஒரு பக்கமாகச் சிந்திக்கும் வெளியுலக மக்கள், ஒருமுறை லெபனான் போய் வந் தால் தமது தப்பான எண்ணத்தை மாற்றிக் கொள் வார்கள். பெய்ரூட் மாநகரம் மத்திய கிழக்கின் பாரிஸ் என்று அழைக்குமளவிற்கு ஐரோப்பிய நாகரிகத்தை தமது கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு, பல்வேறுபட்ட கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளுக்குப் பொதுத் தேர்தல்களில் வாக்களித்துப் பழக்கப்பட்ட ஜனநாயகப் பாரம்பரியம் கொண்டவர்கள் லெபனான் மக்கள். அப்படி இருக்கையில் இஸ்ரேல் அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்து சுதந்திரமும் ஜனநாய கமும் தாராளமாகக் கிடைக்கும் சொர்க்கபுரியை உருவாக்கித்தர விரும்புவதுபோல அமெரிக்கா பிதற்று வது காலத்திற்கொவ்வாத நகைச்சுவை.
ஹிஸ்புல்லாவை அழிக்க முடியாது என்று அனுபவத்தில் உணர்ந்துகொண்ட இஸ்ரேலிய இராணுவம் மீளமுடியாத யுத்த சகதிக்குள் மாட்டிக் கொண்டதை உணர்ந்துகொண்டபோது தொடர்ந்து போர் புரியுமாறு அமெரிக்கா ஊக்கப்படுத்தியது. லெபனானுக்கு அடிப்பதுடன் நிற்காது சிரியா, ஈரான் என்று போய்த்தாக்குமாறு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கா தான் செய்ய விரும்பாத அசிங்கமான வேலையை தன்னைக் கொண்டு செய்வ தாக இஸ்ரேல் உணர்ந்தபோது காலம் கடந்து விட்டி ருந்தது. அன்று காலனியவாதிகள் பல்வேறு இனங்களை மோதவிட்டு இலாபமடைந்தது போலவே அமெரிக்காவும் நடந்து கொள்கின்றது. லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் போட்ட குண்டுகள் அமெரிக்காவில் செய்யப்பட்டவை. இஸ்ரேலின் முதலாவது ஆயுத விநியோகஸ்தரான அமெரிக்காமீது யாரும் குற்றம் சாட்டத் துணியவில்லை. அதேநேரம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களைவது ஈரான். சிரியாவில் இருந்து வரும் ஆயுத விநியோகத்தைத் தடுப்பது இவைதான் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை என்பதுபோல ஐ.நா. சபை உட்பட்ட சர்வதேச சமூகம் இப்போதும் கூறி வருகின்றமை இங்கே கவனிக்கத் தக்கது. அதாவது போர் மூலமாகவோ அல்லது ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவோ தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே இஸ்ரேலும் அமெரிக்காவும் நேரடியாகவோ, தமது சகாக்கள் ஊடாகவோ பாடுபடுகின்றன.
மத்திய கிழக்கில் அரபுக்களுக்கு பிஞ்சாயத்து நடத்தும் அமெரிக்க சகாக்களான சவூதிஅராபியா, ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகள் ஆரம்பத்தில் ஹிஸ்புல்லாவின் சாகசங்களைக் கண்டித்துவந்தனர். ஆனால், தமது சொந்த மக்கள் பெருமளவில் ஹிஸ்புல் லாவை ஆதரிப்பதைக் கண்டு தமது ஆட்சிக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயந்து பின்னர் தமது
இதழ் 24|

Page 31
நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். ஆட்சியாளர் களால் சாகசவாதிகளாகவும் குடிமக்களால் "ஆண்மையுள்ள அரபுக்களாகவும் பார்க்கப்பட்ட ஹிஸ்புல்லாக்களின் போராட்டம் வருடக்கணக்கில் தொடருமாயின் பிற அரபுநாடுகளிலும் மக்கள் புரட்சிகள் வெடிக்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை. அதனால்தான் போர் வந்தவுடன் சவுதி அராபியா லெபனானின் மீள்கட்டுமானப் பணிகளுக்கு அள்ளிக் கொடுக்கின்றது. மீள்கட்டுமானப்பணிகளில் ஏற்கனவே இறங்கிவிட்ட ஈரான்-ஹிஸ்புல்லாவின் செல்வாக்கைத் தடுப்பதற்காக அமெரிக்கா தனது சகாக்களை உதவி செய்யுமாறு கோரிவருகின்றது. இருப்பினும் அமெரிக்க சகாக்களின் உதவி லெபனானுக்கு வருவதற்கு முன்னரே ஹிஸ்புல்லா தொண்டர்கள் புல்டோஸரில் களத்தில் இறங்கிவிட்டனர்.
யுத்தத்தால் வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகட்டித் தருவதுடன் 10000 டொலர்கள் வரை நட்டஈடும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது ஹிஸ்புல்லா. அனைத்தையும் இழந்த மக்களுக்கு தற்காலிக இட வசதி, இலவச மருத்துவ சேவை போன்றவற்றின் மூலம் மக்களின் நம்பிக் கைக்குப் பாத்திரமானவர்களாக ஹிஸ்புல்லாவின் செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான் ஹிஸ்புல்லாவை அழிப்பதென்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பன்னாட்டு அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். முதலில் அந்த இயக்கத்தின் யெயர்'ஹிஸ்ப்-இ-அல்லாஹ் (கடவுளின் கட்சி) என்றிருப்பதை அவதானிக்க வேண்டும். அப்படியாயின் 'ஜெய்ஸ்-இ-அல்லாஹ்' கடவுளின் இராணுவம்) என்று பெயரிட்டிருக்க வேண்டும். கட்சி என்பது பரந்துபட்ட மக்கள் அமைப்பு. ஹிஸ்புல்லா உறுப்பினர்களில் 7000 பேர் மட்டுமே ஆயுதம் ஏந்திய போராளிகள். அதைவிட இன்னும் 10000 பேர் அளவில் இராணுவப் பயிற்சி பெற்றுவிட்டு வேறுதுறைகளில் தொழில்புரியும் தொண்டர்கள். இவர்களைவிட ஹிஸ்புல்லாவால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை களிலும் கிளினிக்குகளிலும் கடமை புரியும் மருத்துவ நிபுணர்கள், தாதிகள் மற்றும் அல்-மனான் தொலைக் காட்சி அல்-நூார் வானொலி ஆகியவற்றில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இவர்கள் எல்லோருமே ஹிஸ் புல்லா உறுப்பினர்கள்தான். ஆகவே இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை இராணுவரீதியாகத் தோற்கடித்தாலும் அது அரசியல் கட்சியாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும் ஹிஸ்புல்லாவை இராணு வரீதியாகத் தோற்கடிப்பதையே ஒரு மாதகால போை
"லெபனானில் இருந்து எங்கள் இராணுவத்தை வெளியேற்றலாம் அங்கே ஜனநாயகத்தை நிலைநாட்டலாம் ஆனால் அந்த நாட்டில், அடுத்தது என்ன நடக்க வேண்டும் என்பதை எம்மால் தீர்மானிக்க முடியும்" இவ்வாறு சிரிய ஜனாதிபதி பவீர்
இதழ் 24

முடிவுக்குக் கொண்டு வந்த ஐ.நா. சபையின் சட்ட வாணையும் நோக்கமாகக் கொண்டிருப்பது ஒரு முரண்நகை. இஸ்ரேலுக்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் லெபனானுக்கு அல்லது ஹிஸ்புல்லாவுக்கு அதே உரிமை இல்லாதது போலவும்தான் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியாவில் இருந்து ஆயுதங்கள் கடத்தப் படுவதைத் தடுக்கும் நோக்கோடு லெபனான், சிரிய எல்லையோரம் சர்வதேசப் படையணிகள் நிறுத்தப் படலாம். இதைக் கேள்விப்பட்ட சிரியா எல்லைகளை ஒரேயடியாக மூடிவிட்டு லெபனானில் பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கப்போவதாக மிரட்டியதை அடுத்து அந்த யோசனை இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவ்வாறான குறைபாடுகள் இருந்தபோதிலும் லெபனான் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த ஹிஸ்புல்லா ஐ.நா.சபை ஆணையை ஏற்றுக் கொண் டது. லெபனான் அரசு தேசிய பாதுகாப்புப் படைகள் ஹிஸ்புல்லா இவற்றிற்கிடையேயுள்ள புரிந்துணர்வும் நட்புறவும்தான்பிரச்சனையை (தற்காலிகமாகவேனும்) முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களைய வல்லமையுள்ள இஸ்ரேலிய இராணுவத்தாலேயே முடியாதபோது, பலவீனமான லெபனான் தேசிய இராணுவமோ அல்லது தேவை யில்லாத பிரச்சின்னகளில் மாட்டிக்கொள்ள விரும்பாத வெளிநாட்டுப் படைகளோ அதற்குத் துணியமாட்டா என்பது வெள்ளிடைமலை, லெபனானின் தேசியப்பாது காப்புப்படையின் கீழ்மட்ட அதிகாரிகளும் போர் வீரர்களும் ஷியா முஸ்லிம்கள் என்பதோடு அவர்களில் கணிசமான அளவில் சீருடை தரித்த ஹிஸ்புல்லா உறுப்பினர்களும் உள்ளனர். இஸ்ரேலிய விமானக் குண்டு வீச்சு ஆரம்பமான உடனேயே சுறுசுறுப்பாக இயங்கிய தேசிய படைவீரர்கள் நாடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடி பெரும்பாலான இஸ்ரேலிய உளவாளிகளைக் கைது செய்தனர். இதனால் புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்காத இஸ்ரேலிய விமானப் படைகள் கண்டபடி குண்டுவீசி சர்வதேச கண்டனங்களை வாங்கிக் கட்டினர்.
லெபனான் போரில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் ஆகிய இருதரப்புமே தாமே வென்றதாக அறிவித்துள்ளன. இஸ்ரேல், தான் ஹிஸ்புல்லாவின் பெருமளவான ஆயுதத் தளபாடங்களை அழித்து விட்டதாகவும் மீள்விநியோகத்தைத் தடுத்து விட்டதாகவும் மறுபக்கத்தில், பொதுமக்களின் உயிரிழப்பு, சொத் தழிவுகாரணமாக லெபனான்மக்கள்ஹிஸ்புல்லாவுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்காவும் சந்தேகத்திற்கிடமின்றி இஸ்ரேலின் கருத்துக்களைப் பிரதிபலித்தது. உலகில் எல்லா ஆக்கிரமிப்பு இராணுவமும் இவ்வாறுதான் சிந்திக் கிறது. அது உண்மையாக இருந்தால், இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் ஜேர்மன் நாசிப் படைகளுக்கு அடிபணிந்து போயிருப்பார்கள். அன்று கற்பனைக் கெட்டாத பேரழிவை சந்தித்த சோவியத் யூனியனின் பல்வேறு இனமொழிமத வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்
உயிர்நிழல் டெயூலை - செப்டெம்பர் 2006.31

Page 32
களை எதிர்த்துப் போராடியது சரித்திரம். அதேபோல, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பல்வேறு மதங்களைச் சேர்ந்த லெபனான் மக்களை ஒன்று சேர்த்துள்ளது. வழியா முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற மதத்தினரும் பெருமளவில் ஹிஸ்புல்லாவை ஆதரிப்பது பல கருத்துக் கணிப்புகளில் வெளிப்பட்டுள்ளது. தற்போது போர்நிறுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து சமூக சேவைகளினுாடாக மக்களின் மனங்களை வெல்லும் ஹிஸ்புல்லா ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் எதிர் பார்க்கும் நோக்கத்தை (இழப்புகள் காரணமாக ஹிஸ்புல்லாவைக் குற்றம் சாட்டும் மக்கள்) நிறைவேற முடியாமல் செய்துள்ளது. ஹிஸ்புல்லா சண்டை பிடிப்பதில் மட்டுமல்ல சனங்களுக்கு உதவுவதிலும் தேர்ச்சி பெற்ற இயக்கமென்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்கா தனது உதவி நிறுவனங்களை லெபனா னுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் லெபனான் அரசுக்கு நேரடியாக நிதி உதவியையும் அழித் துள்ளது. அதன் அர்த்தம் நிவாரணப் பணிகளை அரசாங்கம் அமெரிக்கநிதியைக் கொண்டு முன்னெடுப் பதன்மூலம் மக்களை ஹிஸ்புல்லா பக்கம் செல்ல விடாது தடுக்கலாம் என்பதுதான். அதனைப் புரிந்து கொண்ட ஹிஸ்புல்லா கட்டிட இடிபாடுகள்மீது &Madein Americax என்ற பதாகைகளைத் தொங்க விட்டிருந்தது. இந்தக் கட்டடங்களை இஸ்ரேலிய விமானங்கள் அமெரிக்க குண்டுகளைக் கொண்டு தகர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போரின்போது அமெரிக்காமீது வெறுப்புற்றிருந்த மக்களை மீண்டும் மேற்குலக சார்பானவர்களாக மாற்றும் முயற்சியில் லெபனான் அரசாங்கம் ஈடுபடுகின்றது. அப்படியான அரசாங்கம் பணத்திற்கு விலைபோகும் ஊழல்வாதிகளைக்
32உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

கொண்டதென்று தற்போது சாதாரண மக்கள் புரிந்து கொள்கின்றனர். இந்த மேற்குலக நலன் விரும்பிகள் முன்னாள் பிரதமர், காலம் சென்ற ரவீக் ஹரீரியின் புதல்வன் சாட் ஹரியினால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவக் கும்பல் அவர்கள் தமது நாடு எத்தனை அழிவுகளைச் சந்தித்தாலும் அமெரிக்க உத்தரவுகளுக்கு அடிபணிந்து இஸ்ரேலுடன் சமர சமாகப் போகத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் பூரணமாக நிறைவேற வேண்டு மாயின் லெபனான் அரசியலமைப்பை மாற்றியாக வேண்டும். அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.
லெபனானிய மயமாக்கல்' என்ற புதிய சொற்பதம் அகராதியில் இடம் பிடித்துள்ளது. இதன் அர்த்தம் ஒரு நாட்டினுள் பல்வேறு இன, மத குழுக்கள் தத்தமது நலன்களுக்காகவும் அரசியல் அதிகாரத்திற்காகவும் ஒன்றோடொன்று சண்டையிடுகின்றமை ஆகும். மிகச் சிறிய நாடான லெபனானில் எந்த மதத்தைச் சேர்ந்த வர்கள் எத்தனை வீதம் என்ற சனத்தொகைக் கணக் கெடுப்பை இதுவரை யாரும் நடத்தியதில்லை. கிறிஸ்த வர்கள் என்றெடுத்தால் மரோணி, கத்தோலிக்க (கிரேக்க) ஒர்தோடொக்ஸ் என்று பல்வேறு உட் பிரிவுகள். முஸ்லிம்கள் என்றெடுத்தால் சுன்னி, ஷியா போன்ற அதிகம் தெரிந்த பிரிவுகள் மட்டுமல்லாது அலாவித், டுரூசியர்கள் போன்ற அந்தப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற சிறு பிரிவுகளும் அடக்கம். பெரும்பான்மை முஸ்லிம் பிரிவுகள் (சுன்னி, ஷியா) டுருசியர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வ தில்லை. அவர்களும் தம்மைத்தனித்தன்மை வாய்ந்த மதமாக கருதிக் கொள்கின்றனர். டுரூசியர்கள் தென் கிழக்கு மலைப்பிரதேசங்களில் கணிசமான அளவில்
இதழ் 24)

Page 33
வாழ்வதால் தமது அரசியல் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளனர். இந்தப் பிரிவுகளனைத்தும் தசாப் தங்களாக நடந்த லெபனானின் உள்நாட்டுப் போரில் ஆயுதக் குழுக்கள் அமைத்துப்போராடியவர்கள்தாம். உள்நாட்டுப் போர் எழுபதுகளில் நடந்த காலத்தில் வழியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தியது அமல் என்ற ஆயுதக் குழு. மதச் சார்பற்ற சோசலிச, அரபுதேசியவாத, அமல் இயக்கத்தில் இருந்து கருத்து முரண்பாடுகளால் பிரிந்த சிலர் பின்னர் மத அடிப்படை வாத ஹிஸ்புல்லாவை உருவாக்கினர். இன்று கூட வழியா சமூகத்தில் மத நம்பிக்கையுடையவர்கள் ஹிஸ்புல்லாவையும் மதச் சார்பற்றவர்கள் அமல் கட்சியையும் ஆதரிக்கின்றனர். இவ்விரு இயக்கங் களுக்கிடையிலும் ஆரம்பத்தில் சில வன்முறைசார்ந்த முரண்பாடுகள் வெடித்தபோதிலும், தற்போது நெருங்கியநட்புறவுகாணப்படுகின்றது. அமல்தலைவர் நபி பெரிபாராளுமன்ற சபாநாயகராகவும், அவரது சகா பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஹிஸ்புல்லாவிற்கு அரசாங்க மட்ட ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் இனிவரப்போகும் காலங்களிலும் லெபனான் அரசாங்கம் கொண்டு வரும் எந்த ஒரு தீர்மானமும் ஹிஸ்புல்லாவைப்பாதிக்குமாறு இருக்கப் போவதில்லை. ஹிஸ்புல்லா மட்டுமல்ல சில முக்கிய (பாதுகாப்பு வெளிநாட்டு விவகாரம்) அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்களும் சிரியாவிற்கு விசுவாசமானவர்கள்தான். "லெபனானில் இருந்து எங்கள் இராணுவத்தை வெளியேற்றலாம். அங்கே ஜனநாயகத்தை நிலைநாட்டலாம். ஆனால் அந்த நாட்டில் அடுத்தது என்ன நடக்க வேண்டும் என்பதை எம்மால் தீர்மானிக்க முடியும்" இவ்வாறு சிரிய ஜனாதிபதி பவரீர் கூறிய கருத்துக்கள் தற்போது
 

நிதர்சனமாகிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. முதலில் லெபனான் சிரியாவின் ஒரு பகுதி என்ற உரிமை கோரல், பிரெஞ்சுக் காலனியவாதிகள் லெப னானை சிரியாவில் இருந்து பிரித்து தனிநாடாக்கிய வரலாற்றுச் சம்பவத்தில் இருந்து தொடர்கிறது. இன்றுவரை லெபனானில் சிரியா தனது துாதுவரா லயத்தை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேலைச் சுற்றியுள்ளநாடுகளில் சிரியாவும் லெபனானும் இதுவரை எந்தவொரு நட்புறவு ஒப்பந் தத்துக்கும் சம்மதிக்கவில்லை. இதிலிருந்து இஸ் ரேலுக்கு எதிராகத் தொடரும் அரபுக்களின் போராட் டத்தை சிரியாவும் அதற்குக் கட்டுப்பட்ட லெபனானும் இன்றுவரை விடாமல் தொடர்கின்றமை தெளிவாகும். அனுமார் வால்போல இழுபட்டுக் கொண்டு போகும் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் அரபு நிலங்களைத் திருப்பிக் கொடுப்பதுதான் என்ற வாதம் அவர்களின் சார்பாக முன்வைக்கப்படுகின்றது. 1967ம் ஆண்டு போரில் இஸ்ரேல் கைப்பற்றிய சிரியாவிற்கு 'கோலான் குன்றுகள் அதன் வடமேற்கு மலைச்சரிவுகளில் லெபனான் உரிமை கோரும் 14கிலோமீற்றர் நீளமும் 2.5 கிலோமீற்றர் அகலமும் உடைய 'ஷெபா வயல்கள் என்பனதான் இன்று பிரச்சினைக்குரிய அரபுநிலங்கள். 2000ஆண்டு வரையில்'வெஷபா வயல்கள் பற்றியாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவ்வாண்டு இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமித்திருந்த தெற்கு லெபனானில் இருந்து வெளியேறிய பின்புதான், ஷெபா பகுதியில் இராணுவம் இன்னமும் நிலைகொண்டுள்ளது என்ற செய்தி சர்வதேச சர்ச்சைகளில் ஒன்றானது. அந்தச் சர்ச்சையைக் காரணம் காட்டி இஸ்ரேலுக்கெதிரான தனது போராட்டம் தொடரும் என்றது ஹிஸ்புல்லா.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006|33

Page 34
அவ்வமைப்புதனது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு இராணுவப்பிரிவைக் கலைத்துவிட மறுப்பதற்கும் அது சாட்டாகப் பயன்பட்டது. இதனால் ஹிஸ்புல்லா தனது இராணுவ பலத்தைத் தொடர்ந்து தக்க வைக்கும் நோக்கோடு கண்டுபிடித்த காரணம்தான் ஷெபா வயல்கள் விவகாரம் என்றது இஸ்ரேல், வழக்கம்போல, அமெரிக்காவும் அதை ஆதரித்தது. ஹிஸ்புல்லாவின் பக்கம் லெபனான் அரசும் சிரியாவும் சேர்ந்துகொண்டு ஷெபா வயல்கள் லெபனானுக்குச் சொந்தமான நிலங்கள் என்று கோரஸ் பாடின. அதற்கு ஆதாரமாக இஸ்ரேலிய இராணுவம் 1967ம் ஆண்டு போரில் கைப்பற்றுவதற்கு முன்பு அந்த வயல்களில் பயிரிட்டு வந்த விவசாயிகள் லெபனான் குடியுரிமை பெற்றிருந் ததைக் காட்டினர். இஸ்ரேலோ, இல்லை இது சிரியா விற்குச் சொந்தமான கோலான்குன்றுகளின் ஒரு பகுதி என்று வாதாடியது.
இந்தச் சர்ச்சையை வருடக் கணக்காக இழுத்துக் கொண்டு போகாமல், முக்கியமாக, ஹிஸ்புல்லா ஆயு தங்களை வைத்திருக்க ஒரு காரணமாக விட்டுக் கொடுக்காமல் இஸ்ரேல் அந்த நிலத்தை விட்டு ஏன் பின் வாங்கவில்லை? இந்தச் சிறிய துண்டு நிலத்திற் காக இரண்டுநாடுகளிலும் ஆயிரக்கணக்காக மக்கள் சாக வேண்டுமா? ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களையச் சொல்லி உலகநாடுகளைக் கூட்டி வராமல் இந்தப் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்திருக்கலா மல்லவா?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் ஷெபா வயல்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதுதான். இஸ்ரேல், லெபனான், சிரியா ஆகிய மூன்று நாடுகளினதும் எல்லைகள் சந்திக்குமிடத்தில் ஷெபா வயல்கள் உள்ளன. அது மட்டுமல்லாது 2000அடி உயரமுள்ள மலைப்பகுதியில் அமைந்துள் ளதால் அதனை ஹிஸ்புல்லா கைப்பற்றும் பட்சத்தில் கீழே இருக்கும் இஸ்ரேலியக் கிராமங்கள்மீது இராணுவ ஆதிக்கத்தைச் செலுத்தலாம். இன்றுவர்ை ஷெபா வயல்கள் இஸ்ரேலிய அரசினால் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கே இராணு வத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர. அந்த வலயம் இன்னொரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது கெர்மொன் மலையும் அதன் பணி படர்ந்த சிகரங் களுமாகும். கெர்மோன்மலைச்சிகரங்களின்பனியுருகி அருவிகளாகி ஜோர்தான் நதியுடன் கலக்கின்றன.
34|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

இஸ்ரேல் அந்த நிலத்தை விட்டு ஏன் பின் வாங்கவில்லை? இந்தச் சிறிய துண்டு நிலத்திற்காக இரண்டு நாடுகளிலும் ஆயிரக் கணக்காக மக்கள் சாக வேண்டுமா? ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களையச் சொல்லி உலக நாடுகளைக் கட்டி வராமல் இந்தப் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்திருக்கலாமல்லவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் ஷெபா வயல்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதுதான்.
ஷெபா வயல்கள் உட்பட்ட மலைப்பகுதி இயற்கை நீரூற்றுகளும் வளமான விவசாயநிலங்களும்நிறைந்த செழிப்பான பூமி. இந்த நீரூற்றுகள் இஸ்ரேலின் மூன்றிலிரண்டு பங்கு தண்ணிர்த் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இதுபோன்ற இயற்கையானநீர்நிலைகள் இல்லாவிட்டால் இஸ்ரேல் கடல்நீரைச் சுத்திகரித்துக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். வற்றாத ஜீவநதிகளைக் கொண்ட கோலான் குன்றுகளை சிரியாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டால் இஸ்ரேல் அந்நாட்டிடம் தண்ணிருக்காகக் கையேந்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
21ம் நூற்றாண்டில் தண்ணிருக்கான யுத்தங்கள் ஏற்படுமென்று ஆரூடம் கூறியது உலக வங்கி தண்ணிர் உலகில் அரிதாகக் கிடைக்கும் இயற்கை வளமல்ல. ஆனால் அந்த வளத்தின்மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில்தான் போட்டி நிலவுகின்றது. கோலான் குன்று நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் இஸ்ரேல் ஜெபா வயல்களை உயர்பாதுகாப்பு வலயமாக்கி உள்ளதும், எல்லையில் இருந்து 30கிமீ துாரத்தில் லெபனானினுள் இருக்கும் இன்னொரு நீர்நிலையான லித்தானிய ஆற்றைக் கைப்பற்றும் எண்ணத்தோடும் இஸ்ரேல் லெபனான்மீது மீண்டும் மீண்டும் படையெடுக்கக் காத்திருக்கின்றது என்பதும் ஹிஸ்புல்லாவிற்குத் தெரியும்.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளிற்கு தண்ணீர்ப் பிரச்சினை மட்டும் காரணமல்ல. அகண்ட இஸ்ரேலியக் கனவுகளோடு லெபனான் சிரியாவைப் போரில் தோற்கடித்து மேலதிக நிலங்களைக் கைப்பற்றி தனது தேசஎல்லைகளை விரிவாக்கு வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனைத் தான் புதிய மத்திய கிழக்கின் பிறப்பாக கொண்டலிசா ரைஸ் கருதினார் போலும். ஏற்கனவே ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மீளமுடியாத சிக்கலில் தத்தளிக்கின்றன. அவை ஒரு காலத்தில் சுதந்திர நாடானாலும் பலமற்று இஸ்ரேலிற்கு கப்பம் கட்டும் “சிற்றரசாகவே இருக்கும். ஹிஸ்புல்லாவின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டால் லெபனானுக்கும் அந்த நிலை உருவாகும். அடுத்தது சிரியா. அதையும் ஒரு வழி பண்ணிவிட்டால் ஈரானுக்குச் செக் வைக்கலாம். இஸ்ரேலிய அரசாங்கமே கூறுவதுபோல போர் இன்னும் ஒயவில்லை. அதன் முதலாவது சுற்று ஆட்டம்தான் தற்போது முடிந்துள்ளது.
இதழ் 24

Page 35
ႏွိႏွစ္ႏွစ္ ႏွမ္း% 'စွာ် န္တိ ရွီး % ႏွ% ဗျွိ
32வது இலக்கியச் சந்திப்பு முடிந்துவிட்டது. மறுநாள் அதிகாலை நேரம். நெடுஞ்சாலையில் மோட்டார் கார் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக் கின்றது. அளவுக்கு அதிகமான வேகம். 'பளிச் பளிச்செனலைற் அடிக்கிறது. ஒவ்வொரு தரம் லைற் அடிக்கும் பொழுதும் அதிவேகமாகப் போனதிற்கு பொலிசார் விதிக்கப் போகும் அபராதம் கூடிக்கொண்டு போகிறது. இவ்வளவு வேகம் வேண்டாம் என்று நான் எச்சரிக்கின்றேன்."எத்தனை மணிக்கு உங்களுக்குப் பிளேன்?" என்று கேட்கிறார்.நான் நேரத்தைச் சொல்லி அதிவேகமாக ஓட வேண்டாமெனக் கேட்கின்றேன்.
பிரான்ஸ் ஒர்லிவிமானநிலையத்தில் கையசைத்து விடைபெறும் பொழுது, தோழர் புஷ்பராஜாவிடமிருந்து இறுதியாக விடைபெறுகின்றேன் என்று நான் கனவி லும் நினைக்கவில்லை. அதுதான் எங்களது இறுதிச் சந்திப்பாக இருந்தது.
மார்ச் 10ம் திகதி இரவு, கொழும்பில் தோழர் சுகு டெலிபோனில் அழைத்து புஷ்பராஜாவின் மறைவை
சி. புஸ்பராஜா - 32வது இலக்கியச்
இதழ் 24
 
 

அறிவித்தார். ஒரு வெறுமை மனதில் தோன்றியது. என்ன பிரச்சினையென்றாலும் புஷ்பராஜாவுடன் கருத்துப் பரிமாறிக் கொள்வேன். பிரச்சினை என்ன, எப்படி அதை எதிர் கொள்வது என்று விவாதித்துத் தீர்மானித்துக்கொள்வோம். பாரிஸில் அவர் எமக்கு ஒரு கலங்கரை விளக்கு. நாம் நம்பிக்கையுடன் இறங்கும் துறைமுகம். சுகு கூறிய மரணச் செய்தி எனக்கு துறைமுகமே தாண்டு போனதான உணர்வை ஏற்படுத் தியது. மனதில் ஒரு வெறுமைதான் தோன்றியது. இட்டு நிரப்ப முடியாத வெறுமை.
妆壳 麦 女 *
1980களின் முற்பகுதி. யாழ்நகரம் மீண்டும் எரிந்து கொண்டிருந்தது. இனங்களுக்குள் நீதிக்கும் சமத்து வத்திற்குமான இயக்கத்தில் (மேர்ஜ் - MRJE) அரச பயங்கரவாதத்திற்கும் மனிதஉரிமை மீறல்களுக்கும் எதிராக நாம் வேலை செய்து கொண்டிருந்த நேரம், மேர்ஜ் இயக்கத்திற்கான யாழ்ப்பாண அறிக்கைகளை தட்டச்சு இயந் திரத்தில் அடித்துக் கொண்டி ருந்தேன். நிர்மலா ஒரு இளைஞ ருடன் வீட்டிற்கு வந்தார். நிர்மலா அழைத்து வந்த இளைஞரை அறிமுகப்படுத்தினார். "இவர்தான் புஷ்பராஜா". மேடைகளில் மிகப் பிரபல்யமாக இருந்த அந்த முகத்தை அப்பொழுதுதான் மிக அருகில் பார்த்தேன். வெட்கப்படும் சுபாவம் உள்ளவர் போல் தோன்றி னார். உள்ளேயிருந்தது உரமான நெஞ்சு என்பதை வரலாறு எமக்குக் காட்டியுள்ளது. அப்பொழுது நான் வாசித்துக் கொண்டிருந்த 'லத்தீன் அமெரிக்காவில்கெரில்லாப் போராட் டத்தின் தோல்விகள் என்ற புத்தகம் திறந்தபடியே இருந்தது. லத்தின் சந்திப்பு அமெரிக்கப் போராட்டங்கள் பற்றி
உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 35

Page 36
டென்மார்க்கில் கலைச்செல்வன்,
நிர்மலாவுடன் நான் விவாதித்தேன். இளைஞர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மீது நாம் கடுமையாக விமர்சனங்கள் வைத்துக் கொண்டிருந்த காலமது. எங்களுடைய பேச்சு அவருக்கு உவப்பாக இருந்தி ருக்க முடியாது.
இதன் காரணமாக, அவரின் அரசியல் நடவடிக்கை களுடன் எமக்கு மிகுந்த ஈடுபாடும் இருக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணியினர் தனிநாட்டுக்கோரிக் கையை வெறும் அரசியல் கோஷமாக முன்வைத்தனரே அன்றி, ஒரு தனிநாடு அமைப்பதில் எந்தவிதமான அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதே எமது கருத்தாக இருந்தது. மக்களையும் இளைஞர்களையும் இந்தக் கோஷத்தினால் தம்பால் இழுப்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. தமிழீழமென்ற கோஷத்தை முன்வைத்தவர்கள் அதை எப்படி அடையலாம் என்ற வழிமுறைகளைக்காட்டவுமில்லை, அப்படியான திட் டங்கள் அவர்களிடம் இருக்கவுமில் ார்த்தமான” அரசியலில் அவர்கள் செய்து எல்லாம் அதிகாரப்பகிர்வை அடிப்படையாகக்கொண்டி ருந்தனவேயன்றி தனிநாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.
தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியில் ஆரம் பித்த தோழர் புஷ்பராஜாவின் அரசியல், இளைஞர் பேரவை, பின்பு தலைமைகளின் போக்குடன் வித்தி யாசப்பட்டு தமிழீழ விடுதலை இயக்கம் அமைத்தல் எனத் தொடர்ந்தது. 36|உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

பரா, கோபாலன், அனு, புஸ்பராஜா
புகலிடத்தில் 1983களிலிருந்து ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியுடன் அவர் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் மீண்டும் அவரின் தொடர் புகள் ஏற்பட்டது. 1992ம் ஆண்டு பொண் (ஜேர்மனி) நகரத்தில் நடைபெற்ற 13வது இலக்கியச்சந்திப்புக் கூட்டத்தில் அவரை மீண்டும் சந்தித்தேன். சபாலிங் கத்துடன் வந்திருந்தார். அன்றிலிருந்து அவர் இறுதி யாகப் பங்குகொண்ட 32வது இலக்கியச்சந்திப்புவரை தனது முழுமனதுடன் அச்சந்திப்புக்களின் வெற்றிக் காகப் பாடுபட்டார். புகலிடத்தில் சுதந்திரமாகக் கருத்துக்களைப்பரிமாறவும் மனித உரிமைகளுக்காக் குரல் கொடுக்கவும் உரிய இடமாக இலக்கியச்சந்திப்பு இருக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். திரு.சபாலிங்கம்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட பொழுது-அச்செய்தியை சர்வதேச அளவில் அறிவித்து அவரின் இறுதிநிகழ்வுகளையும் முன்நின்று நடத்தினார். அவர் கொலையுண்ட ஐந்தாண்டு நிறைவில் 'தோற்றுத்தான் போவோமா என்ற தொகுப்பை அவர் நினைவாக வெளிக்கொண்டு வந்தார்.அவரின் இந்த வன்முறைக் கெதிரான் நிலைப்பாடு அவரின் இறுதி வார்த்தைகளிலும் கூட, நிறுத்துங்களடா கொலைகளை ' என்று ஒலித்தது. தோழர் புஷ்பராஜா வன்முறையை வாயளவில் மட்டும் எதிர்க்கவில்லை. வன்முறையை எதிர்கொண்டு அதற்கு முகம் கொடுத்து நேரடியாகவும் எதிர்த்தார். வன்முறைசெய்தவர்களை நேரில்பேசி வெட்கித்தலை குனிய வைத்தார்.
இதழ் 24

Page 37
தமிழீழமென்ற கோஷத்தை மு அடையலாம் என்ற வழிமுறைகை
திட்டங்கள் அவர்களிடம் இ அரசியலில் அவர்கள் செய்து அதிகாரப் பகிர்வை அடிப்படை 56tfbst'60DL sigfiLIGOLLIT
டென்மார்க், ஆல்போக் நகரில் நடைபெற்ற29வது இலக்கியச்சந்திப்பிற்கு தோழர் புஷ்பராஜாவுடன் காரில் போவதாக ஏற்பாடு செய்திருந்தேன். அவருக்கு ஜேர்மனியில் பிரேமன் நகரத்திற்கு வரவேண்டிய வேலையிருந்தபடியால் அவரை அங்கு சந்தித்து டென்மார்க் செல்வதாக ஏற்பாடுசெய்திருந்தோம்.
பிரேமன் நகரத்திற்கு அவர் கலைச்செல்வன், சேரன் ஆகியோருடன் வந்திருந்தார்.நான் அவர்களை, 1980களில் வெளிவந்த எண்ணம் பத்திரிகை ஆசிரியர் மகாதேவாவுடன் சென்று சந்தித்தேன். மகாதேவாவைச் சந்திக்கவே கலைச்செல்வனும் புஷ்பராஜாவும் அங்கு வந்திருந்தார்கள். காரணம் உமாகாந்தனின் உடல் நிலை. உமாகாந்தனும் மகாதேவாவும் நெருங்கிய நண்பர்கள். உமாகாந்தனின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் மகாதேவா பாரிஸிற்கு வந்து அவரை உடனடியாகப் பார்க்க வேணடுமென்றும் வற்புறுத்தி னார்கள். −
(மகாதேவா குடும்பத்துடன் சென்று உமாகாந்த னைப் பார்த்து அவரை வைத்திய சிகிச்சை செய்ய வற்புறுத்தியதாகவும் கேள்விப்பட்டேன். உமாகாந்த னின் உடல்நிலையில அவ்வளவு அக்கறை காட்டிய இருநண்பர்களின் முடிவும் விரைவில் வரும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?)
பிரேமனில் புஷ்பராஜா இராப்போசனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். விருந்து தந்தவர் நன்றாக உபசரித்தார். அவருக்கு நல்ல குடும்பம், வளர்ந்த பிள்ளைகள். சாப்பாடு முடியும் பொழுது புஷ்பராஜா என்னிடம் கேட்டார்,
"இவர் யாரென்று உமக்குத் தெரியுமா?" என்று. விருந்து தந்தவரை முன்பின் நான் கண்டது இல்லை.
"தெரியாது" என்று சொன்னேன். "1980களில் உங்களுடன் வேலை செய்தவர்களின் மண்டையில் அடித்தும், மற்றவரின் கையை முறித்தவூர் களின் கோஷ்டியைச் சேர்ந்தவர்தான் இவர்" என்றார். விருந்துதந்தர் கூனிக்குறுகிப்போனார். வளர்ந்த பிள்ளைகளுக்கு எங்கள் பேச்சுக்கள் கேட்டுவிடுமோ எனச் சுற்றிப்பார்த்துக் கொண்டார்."இப்ப அதெல்லாம் விட்டாச்சு" என்று சமாதானம் சொன்னார். தோழர் புஷ்பராஜாவுக்கு மக்கள் தொடர்பு அதிகம். நல்ல வன்,கெட்டவன்.திருந்தியவன். திருந்தமாட்டாதவன் எல்லோரையும் அவருக்குத் தெரியும். இதழ் 24

ன்வைத்தவர்கள் அதை எப்படி ளக் காட்டவுமில்லை, அப்படியான நக்கவுமில்லை. யதார்த்தமான கொண்ட ஒப்பந்தங்கள் எல்லாம் பாகக் கொண்டிருந்தனவேயன்றி கக் கொண்டிருக்கவில்லை.
தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக சிறை செல்லவும் சித்திரவதைப்படவும் தயாராக இருந்தவர் தோழர் புஷ்பராஜா. அவர் வெறும் சித்தாந்தவாதி யல்ல. செயற்பாட்டாளர். எடுத்த எந்தக் கருமத்தையும் திறம்படச் செய்தார். அவரின் அழியாத சாதனை, அவர் எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூல். இன்றைய கோபல்ஸ்கள் தமக்கேற்றபடி
வரலாற்றைத் திரிக்க முற்படும் பொழுது இந்த நூல்
தமிழர் மத்தியில் முக்கியமானதொரு வரலாற்று
ஆவணமாக என்றும் இருக்கும். அந்த நூலை வாசித்து முடித்த பின்பு அவரிடம் எனது விமர்சனங்களைக் கூறினேன். அவர் சிலவிடயங்களை ஒரு தேசியவாதி யாகவே நோக்கியிருந்தது எனது விமர்சனமாக இருந்தது. எனினும் தோழர் தாம் இளமைக்காலத்தில் விட்ட சில தவறுகளுக்காக சுயவிமர்சனம் செய்து கொண்டது பாராட்டத்தக்கதாக இருந்தது.
உதாரணமாக, (முதற்பதிப்பு) பக்.231இல் "நியாய பூர்வமான தமிழ் மக்களுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அப்பாவித் தமிழ் மக்களை அழித் தொழித்துவரும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்களுக்கு நிகராக அப்பாவிச் சிங்கள மக்க ளுக்கெதிராக துவேஷ மனப்பான்மை எம்மிடையே இருக்கக்கூடாது.நான் எனது பேச்சுக்காக இன்றுமணம் வருந்துகிறேன்" என்று எழுதியுள்ளார்.
உரமான நெஞ்சுடைய அவருக்குள் ஒரு குழந்தை போல பழகும் பண்பும் அன்பு செலுத்தும் உள்ளமும் இருந்தது.
டென்மார்க் இலக்கியச்சந்திப்பில்இருந்துதிரும்பும் பொழுது தன்னுடன் படித்த நண்பர் ஒருவரைத் தேடி பலமைல்கள் பிரயாணம் செய்து சென்று சந்தித்தார். இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர். உணவருந்தும் போது ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டனர். பிரியும் போது ஒ! என்று அழுது விட்டனர். அந்த நண்பர் தோழரின் பிரிவை எப்படி ஏற்றுக் கொண்டாரோ தெரியவில்லை.
மரணத்தை நேரில்சந்தித்துஅதனுடன்விவாதித்து பின் எம்மிடம் விடை பெற்றுக் கொண்டவர் தோழர்.
இன்று எமக்கு மிஞ்சிஇருப்பதெல்லாம்நீங்காத சில நினைவுகள்தான்.
பரா குமாரசாமி 12.09.2006 —
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200637

Page 38
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நேர்ந்த ஒரு மி வலை (worldWideWeb) கண்டுபிடிக்கப்பட்டதாகும். இங் பெர்னார்ஸ்லீ1991ம் ஆண்டு இணையவலைத்தளத்தை வலைத்தளம் பொதுமகனுக்கு என அர்ப்பணிக்கப்பட் சமன்பாட்டை என்றென்றும் குலைத்தது என்று சொல்லல் மிகப்பெரிய கொடை இது. அறிவுலகின் வரைபடத்தை நிகழ்வு உலகவரலாற்றில் என்றுமில்லாத வகையில் மா இந்த மாற்றம் மிகப்பெரும் சவால்களை முன்வைத்தது குவிந்துகொண்டிருக்கும் சர்வதேசியத் தகவல் உற் மெய்மைகாண்வாசிப்பின் சாத்தியம் என்பது எவ்வாறாக சவால், சவால்கள் நிஜமாகவே நிலவுகிற ஒரு உல: நகல்போலிப் படிப்பாளிகளும் நகல்போலிக் கலைஞ நகல்போலிகளின் வெளிப்பாட்டுக்கான மிக முக்கியமான கசப்பான எதிர்மறை உண்மையாகும்.
38|உயிர்நிழல் யூெலை - செப்டெம்பர் 2006
 
 

- யமுனா ராஜேந்தரன் -
க முக்கியமான மாற்றம் அல்லது நிகழ்வு உலக விரிவு கிலாந்தைச் சேர்ந்த மூலக்கூறு பெளதிகவியலாளர் உலகின் பொதுமகனுக்கென அர்ப்பணித்தார். இணைய ட இந்த நிகழ்வு அறிவுசார்ந்த உலகின் அதிகாரச் ாம். உலகின் சாதாரணக் குடிமகனுக்கு அவர் அருளிய பம் தனிமனிதனின் அறிவுசார் அதிகாரத்தையும் இந்த ற்றி அமைத்தது. புத்திபூர்வமாகச் சிந்திப்பவர்களுக்கு து. எந்தவிதமான விமர்சன மதிப்பீடுமற்று கணணியில் பத்திச் சூழலில் விமர்சனபூர்வமான வாசிப்பு அல்லது இருக்க முடியும் என்பது சிந்திப்பவர்கள் எதிர்கொள்ளும் கச் சூழலில்தான் நகல்போலிச் சிந்தனாவாதிகளும் ர்களும் எங்கெங்கும் முளைத்திருக்கிறார்கள். இந்த ா காரணமாக இருப்பது இணையவெளி என்பது ஒரு மிகக்
I தமிழில் எழுதி வருபவர்களில் பரவலாக இணையவெளி இறக்கு மதி (download) எழுத்தாளர்கள் என இருவர் அழைக்கப் பெறுகிறார்கள். அநேகமாக இன்று அதிகமும் எழுதி வருகிற எழுத்தாளர்களில் கணணி பாவிக்காதவர்களும் இணைய வெளியைப் பயன்படுத்தாதவர் களும் மிகக் குறைவு. இருப்பினும் இந்த இருவர் மட்டுமே இறக்குமதி எழுத்தாளர்கள் என அழைக்கப் பெற என்னதான் காரணம்?முதலா மவர், காமலீலைக் கதைகளை பொதுப்புத்தி மட்டத்திலுள்ள வாச கனை கிளுகிளுப்பூட்ட வெனவே எழுதுகிற இவர் அவ்வப்போது நிறையத் தகவல்களை அள்ளித் தெளித்து பரந்துபட்ட வாசிப்பனு பவம் அல்லது பார்வையனுபவம் எதுவுமற்று அங்கங்கே பெரிய படைப்பாளிகளின் பெயர்களையும் படைப்புகளின் பெயர்களையும் உதிர்ப்பவர். நிறைய வாசிப்பனு
இதழ் 24

Page 39
பவமும் பார்வையனுபவமும் உள்ளவர்களுக்கு இவர் ஒரு நகல்போலி எழுத்தாளர் என்கிற விசயம் தெளிவாகவே தெரியும். குறிப்பாக அவர் அடிக்கடி இடைக்கிடையில் ஆங்காங்கே உதிர்க்கும் மூன்று பெயர்களை மட்டுமே எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.
(ypt56AD1T6B5 Tat5 uDĪTijdél6mö Iọ (8aFi. (Marquis de Sade), இரண்டாவதாக பாவ்லோ பஸோலினி (Paolo Pasolini). மூன்றாவது எல்பிரட் ஜெலினக் (EfriedeJeinek). மார்கிஸ் நாவலாசிரியர். அவரது படைப்புகளின் அடிப்படையில் மட்டும் குறைந்த பட்சம் 8 திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். பாவ்லோ பஸோலினி திரைப்பட இயக்குனர், சமப்பாலுறவாளர், மார்க்சியர். அனைத் துக்கும் மேலாக அவர் பாசிஸ்ட் எதிர்ப்புக் கலைஞன். தனது Salo எனும் திரைப்படம் மார்கிஸின் 120 days of Sodomநாவலை அடிப்படையாகக் கொண்டது என்றா லும் வரலாற்று நோக்கிலும் கருத்தியல் நோக்கிலும் (historicaly and ideologicaly) தனது பார்வை மார்கிஸி லிருந்து மாறுபாடானது எனத் திட்டவட்டமாக பஸோலினி தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, மார்கி ஸின் பார்வை பாலுறவு வேட்கை தொடர்பானதாக இருக்க, பஸோலினியின் பார்வைபாலுறவுவக்கிரத்தின் கருத்தியல் பற்றிப் பேசுவதாகிறது. இந்தக் குறிப்பிட்ட நகல்போலிஎழுத்தாளர் மார்கிஸின்பாலுறவுவேட்கை பற்றித்தான் அதிகம் சிலாகிப்பவர். மார்கிஸின் நாவலை ஆழ்நது படித்தவனும் பஸோலினியின் திரைப்படத்தினை ஆழ்ந்துபார்த்து அனுபவித்தவனும்
Е -НЕ)E - JE NIJEK
 

PASOLINI
இந்த வித்தியாசத்தை நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியும். இன்னும் அசலாக நாவலையும் திரைப்படத் தையும் பார்த்தவர்களின் நினைவுகளில் பதியும் தனித்துவமுள்ள நுட்பமான கலைப்பதிவுகளை வெறும் தகவல்களின் அடிப்படையில் எழுதுகிறவர் களிடம் பாரக்கவியலாது. குறிப்பாக இத்தாலிய பாசிஸ்ட்முஸோலினி பற்றியபஸோலினியின்நக்கலும் போல்ஷ்விக்குகள் பற்றிய திரைப்படப் பாத்திரங் களின் வன்மமும் குறித்த பதிவுகளை படம் பார்த்த அனுபவம் உள்ளவன் மட்டுமே பதியமுடியும். ஆனால் குறிப்பிட்ட இந்த இணையவெளி இறக்குமதி எழுத்தா ளரிடம் இந்த இரு படைப்பாளிகள் குறித்த வெற்று ஆரவாரங்களையும் தகவல்களையும் மட்டுமேதான் நாம் பெறமுடியுமேயொழிய குறிப்பிட்ட படைப்புகள் குறித்த எந்த ஆழ்ந்த உண்மைகளையும் நாம் தரிசிக்க முடியாது.
இந்தப் போலி அடிக்கடி குறிப்பிடும் பிறிதொரு எழுத்தாளரான எல்பிரட் ஜெலினக் ஆஸ்திரிய நாவலாசிரியர். பெண்நிலைவாதி. ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மார்க்சியர். தனது தந்தை மனநலக் காப்பகத்தில் மரணமுறத் தனது வாலிபக் காலங்களையும் இவர் மனநலக் காப்பகத்தில் கழித்தவர். அனைத்துக்கும் மேலாக இலக்கியதத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் இவர். இவரது தி பியானோ டீச்சர் (The Piano Teacher) எனும் நாவல் ஆஸ்திரிய சமூகத்தில் இடம்பெற்றி ருக்கும் இசைசார்ந்த சமூகத்தின் போலி மதிப்பீடுகள் பற்றியும், அதனிடையில் சிக்கிய ஒரு பெண் ரகசி யத்தில் பாலுறவு வறுமையினால் விளைந்த வக்கிரம் கொள்கிறவளாக மாறுவதும் என்பதாக ஜெலினிக்கின்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 39

Page 40
நாவல் விரிகிறது. இந்த நாவலில் மையப்பாத்திரமான இசை ஆசிரியையான பெண்ணிற்கும் அவளது தாய்க்கும் இருக்கும் அதிகாரமும் பாசமும் சார்ந்த விநோதமான உறவையும் பாலுறுவு விகாரமாக வெளிப்படுவதையும் நாவல் சித்தரிக்கிறது. ஒரு கட்டத்தில் தாயுடன்பாலுறவு கொள்வதான சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஜெலினக் மிகத் திட்டவட்டமான சொற்களில் அந்தப் பெண்ணின் அந்த நடவடிக்கை வேட்கை சார்ந்தது அல்ல, குறிப்பாக ஆர்கஸம் சார்ந்ததுஅல்ல (not for Orgasm) என்பதைச் சொல்கிறார். மறுபடியும் தாயின் வயிற்றினுள்ளேயே சென்று விடுவதற்கான எத்தனமாகவே அவளது நடவடிக்கை அமைகிறது. திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தினை ஏற்று நடித்த பிரெஞ்சு நடிகையும் ஆஸ்திரிய இயக்குனரான மைக்கேல் ஹெனக்கும் இதை மிகத் தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள். நாவலை முழுயைாக வாசித்தவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட காட்சி பாலுறவு வேட்கை தொடர்பானதென்றோ அல்லது இரத்த உறவுகளுக்குள்முறைசாராப்பாலுறவு (incest) என்று புரிந்துகொள்வதற்குமோ எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் இணையத்தில் கிடைக்கிற ஒரு மேற்கோளை அப்படியே ஆங்கி லத்தில் அப்படியே வெட்டி ஒட்டிவிட்டு இந்த நகல்போலி எழுத்தாளர் தாயைப் புணரும் மகளது செய்கையாக இதனை விளக்கும் போது நாவலை வாசித்தவனுக்கும் திரைப்படம் பார்த்தவனுக்கும் அருவருப்பாக இருக்கிறது. நிஜத்தில் இந்த மாபெரும் ஆளுமைகளை எழுத்திலும் திரையிலும் அனுபவித்த வர்களுக்கு இந்த நகல்போலி எழுத்தாளனின் சொற்கள் வாசிப்பற்ற வெறும் இணையவெளித் தகவல்கள் மட்டுமே என்று புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமுமில்லை.
40|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

பிறிதொரு எழுத்தாளர் வெகுஜனப் பத்திரிகை களிலும் சிறுபத்திரிகைகளிலும் சமஅளவில் எழுதி வருபவர். இவரது தடிமனான சினிமாப்புத்தகம் போட்ட பதிப்பாளராலேயே, தனிப்பட்ட பேச்சில், இவர் ஒரு இணையவெளி இறக்குமதி எழுத்தாளர் என அழைக்கப் பெற்றவர். இவர் வரலாற்றையும் நிகழ்வுகளையும் கூட புனைவு கலந்து எழுதுவதாகப் பிரகடனப்படுத்திக் கொள்பவர். தார்க்காவ்ஸ்க்கியையும் சூப்பர் ஸ்டாரையும் சமநிலையில் வைத்து இவரால் மட்டுமே விதந்தோதமுடியும். அடிக்கடி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ழாக் லக்கான் பற்றியும் மிசேல் பூக்கோ பற்றியும் தனது புனைவுக் கட்டுரைகளின் இடையே இவர் பேசுவார். இவர் மூன்று ஆளுமைகள் குறித்து எழுதியிருக்கும் விடயங்களை எடுத்துக் காட்டாகக் காட்ட நினைக்கிறேன். முதலாவதாக துருக்கிய bIT 66uor ffuu TT GOT PITIT 6ö Lu T(ypsiö (Orhan Pamuk). இரண்டாவதாக, தென்னாபிரிக்க நாவலாசிரியான. கோயெட்சி (Coetzee), மூன்றாவதாகச் சீனத்திரைப்பட இயக்குனரான ஸாங் இமு (ZhangYimou). இந்த மூன்று படைப்பாளிகளும். முக்கியத்துவம் பெறக் காரணம் அவர்கள் இயங்க நேர்ந்த படைப்புச் சூழலும் அவர்கள் கையாளும் குறிப்பிட்ட தேசியக் கலாச்சாரச் சூழலிலான கதைமாந்தர்களும்தான்.
துருக்கிய நாடு அடிப்படைவாதச் சட்டங்களை இன்னும் கொண்டிருக்கும் நாடு. துருக்கிய தேசியத் திற்கு எதிராகப் பேசியதற்காகவும் இஸ்லாமிய வாழ் முறைகளுக்கு எதிராகப் பேசியதாலும் அரசினால் வேட்டையாடப்படுபவர் ஒரான் பாமுக், படைப்பில் உன்னத மனிதர்களையோ உன்னதங்களையோ பேச வேண்டியதில்லை என்பவர் அவர். மை நேம் இஸ் ரெட் (My name is Red), 6rt) (8bit (Snow) (3LT6ip60, -96.Jgy நாவல்கள். இந்தப் பின்னணிகள் எதுவும் இல்லாமல் அவரது பல்லடுக்கு நாவல்களையோ சம்பவங்களை திருகிச் திருகிச் சொல்லும் அவரது சொல்லும்

Page 41
முறையையோ புரிந்து கொள்வது கடினம். கோயெட்சி தென்னாபிரிக் காவின் வெள்ளைநிற எழுத்தாளர்.நிற ஒதுக்கலுக்குப்பின்பான (postapartheid) தெனனாபிரிக்க வாழ்வின் வன்முறை யையும் அறத்தின் வீழச்சியையும்
பேசுவதால்தான் இவரது நாவல்கள்
மேற்கத்திய வெள்ளையினத்தவர் களால் விதந்து போற்றப்படுகிறது. இவரது நாவல்களில் கறுப்பின மக்களின் பெயர்களோ குறிப்பான
அடையாளங்களோ குறிப்பிடப்படுவ
தில்லை. குறிப்பாக அவரது டிஸ் கிரேஸ் (Disgrace) எனும் நாவலில் கறுப்பர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வெள்ளை யினப் பெண்ணின் வாழ்வு சித்தரிப்புப் பெறுகிறது. கறுப்பு மற்றும் வெள்ளை யினத்தவரின் பாரம்பரிய உலக நோக்கு குறித்துத் தீவிரமாக விசாரிக் கும் அந்த நாவலில் வெள்ளையினத்த வருக்குப் பெயர்களும் குறிப்பிட்ட அடையாளமும் உண்டு. கறுப்பினத் தவர் அருவ மனிதர்களாகவே அந்நாவலில் நடமாடுவர். இந்தக் குறிப்பிட்ட பின்னணி எதுவுமில்லாமல் இந்த நாவல்கள் பற்றிய இணைய வெளித் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தநாவல்களின் எழுதுமுறை பற்றி ஒரு சில வரிகளில் இவர் சொல்லிக்கொண்டு போகிறார். ஆச்சரியம் என்னவென்றால், உலகின் மிக முக்கியமான ஐந்து படைப்பாளி களிடமும் இவர் தேர்ந்து கொள்வது நாவலின் சொல்முறைதான். அதிலும் ஆச்சரியம் ஐந்து மகத்தான படைப்பா ளிகள் பற்றி இவரால் ஐந்து பக்கக் கட்டுரையிலேயே முழுமையாகச் சொல்லிவிட முடிகிறது.
இவரது உ தயாரிக்கப்ட தயாரிக்கப் பார்ப்பவர்கள் சீன இயக்குை முக்கியத்துவ சித்தரிக்கு கலாச்சாரப் அவமானகர அவர். சீன சீனாவின் அ எடுப்பவர். இ அந்தகர், குழ g96) IT L IL AħJc d605uildT607 சினிமாத்தய d5L (660)Tu IIT தகவல்கள் மதிக் கட்டுை செய்யும் தன்
தகவல்க கரமான நிை கட்டுரைகள் வேறுவேறு 6 யவர்களுக்கு சாதாரண ப இத்தகைய மானதாகும். தாம் மெத்த இரண்டாவத யனுபவத்துக் இன்னொரு ே போன்றவர்க உண்மையி பெருநகரத்த உறவுகளை எழுதிக்கொ பற்றியும் அே இவர். இன்:ெ சாரி அரசிய பாலஸ்தீன (
அரசியல் ப
ஹமாஸ்-ஹி இதுவெல்ல இணையவுெ பார்த்தும் எ கூடிய உண்:
எக்கால வாழ்வனுப GoldvFu 16ö68, y Té அச்சுக்க:ை ஆதார ஊற் வெளி அை கனவான்கஞ்
 

லக சினிமாக்கட்டுரைகள் இணையவெளியை வைத்துத் ட்ட கட்டுரைகள் அல்லது பிறரின் உழைப்பைச் சுரண்டி பட்ட கட்டுரைகள் என்பது தொடர்ந்து திரைப்படம் ால் சாதாரணமாக அவதானிக்கக்கூடியதாகும். குறிப்பாக ர் ஸாங் இமுவை எடுத்துக்கொள்வோம். ஸாங் இமுவின் ம் அவர் மாவோவுக்குப்பின்(postMao) வந்த சீன வாழ்வைச் அற்புதமான இயக்குநர் என்பதுதான். குறிப்பாகக் புரட்சி குறித்தும் அது சீன வாழ்வில் ஏற்படுத்திய் ான பாத்திரம் குறித்தும் காத்திரமான படங்கள் எடுத்தவர் அரசினால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருபவர். நிகார வர்க்க நடத்தைகள் குறித்தும் நுட்பமாகப் படம் ன்று சீனாவில் மறக்கப்பட்டு வரும் கிராமிய மக்கள், ந்தைகள் பற்றி அற்புதமான படங்களை எடுத்தவர் அவர். 5ளில் வரும் கதை மாந்தரின் பின்னுள்ள இரத்தமும் இந்த வரலாற்று அனுபவங்கள்எதனையும் பதியாமல் தமிழ் ாரிப்பாளனுக்குக் கதை சொல்கிற பாணியில் எழுதப்பட்ட க ஸாங் இமு பற்றிய கட்டுரை உள்ளது. வெற்றுத் >ட்டுமே நிரம்பிய இம்மாதிரியான இணையவெளி இறக்கு ர அந்த மகத்தான சீனப்படைப்பாளிக்கு அவமரியாதை மைகொண்டதாகும். ளையே அறிவு எனக் காட்டிக்கொள்ளும் ஒரு அவமான லைமையை இத்தகைய இணையவெளி இறக்குமதிக் கொண்டிருக்கின்றன. மேற்கத்தியநாடுகள் போலவோ, விதங்களில் இணையவெளியை மேய்வதற்கு இத்தகை கிடைத்திருக்கும் வாய்ப்பைப்போலவோ, தமிழகத்தினது டிப்பாளிக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்காத சூழலில், எழுத்துக்கள் உருவாக்கும் விளைவுகள் கேவல முதலாவதாக, இதன் வழி சம்பந்தப்பட்ட நகல்போலிகள் தப் படித்தவர்கள் எனக் காட்டிக் கொள்கிறார்கள். ாக, வெற்றுத் தகவல்களையே படிப்புக்கும் பார்வை bகும் மாற்றாக முன்வைக்கிறார்கள். இதே வகையிலான மட்டுக்குடி எழுத்தாளரின் நடத்தை ஸார்த்தர், தெரிதா ளைப் பற்றியும் ஒரிரு பத்திகளில் எழுதவைக்கிறது. ல் அவரது துணிச்சல் மலைப்புக்குரியது. முன்பாக நிலுள்ள புத்தகக் கடைகளையும் தனது வெளிநாட்டு யும் தங்கி.விந்துத்துளி பற்றி ஆராய்ந்து பதில்கள் ண்டிருந்தது போல இப்போது தெரிதா பற்றியும் ஸார்த்தர் ரைவேக்காட்டுத்தனமான தகவல்களை அடுக்குகிறார் னாரு வேடிக்கை, விடுதலைப் போராட்டங்களிலோ இடது பல் இயககங்களிலோ முற்றிலும் ஈடுபாடற்ற ஒருவர் விடுதலையின் வரலாற்றையும் செப்டம்பர் பதினொன்றின் ற்றியும் எழுத முடிகிறது. அதுமட்டுமல்ல அல்கைதாஸ்புல்லா என வரலாற்று நூல்களையும் எழுத முடிகிறது. ம் இணையவெளி இறக்குமதி எழுத்துக்கள் என்பதை ளி தோன்றுவதற்கு முன்பிருந்தே ஈடுபாட்டுடன் படித்தும் ழதியும் வருபவர்களால் சாதாரணமாக அவதானிக்கக்
மகளாகும்.
III
த்திலும் அறிவு என்பதற்கான ஆதார ஊற்றாக சொந்த வமும் மனிதன் தன்னை உருவாக்கிக் கொள்கிற கில் பெறப்படும் சிருஷ்டி அனுபவமும் இருந்திருக்கிறது. )யும் திரைக்கலையும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அறிவின் றுக்களை அவை அகலித்தன. ஒரு வகையில் இணைய த இன்னும் அகலித்திருக்கிறது. கல்வித்துறை சார்ந்த நக்கும் கைநிறையக் காசு வைத்திருக்கும்நபர்களுக்கும்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200641

Page 42
என மட்டுமே கிடைத்து வந்த தகவல்களை இப்போ குடிமகன்சாதாரணமாகவே பெறக்கூடியதாகவிருக்கிறது தொடர்புகள் கொண்டிருந்தவர் அல்லது மேல்தட்டு அல்லது மேல்சாதியினர் அல்லது அமைப்புக்களின் தவர்க்கு மட்டுமே கிடைத்துவந்த மிகமிக ஆதாரமான உலகத்தரம் வாய்ந்த படைப்புகள், திரைப்படங்கள் தையுமே இன்று இணையவெளியில் ஒருவர்கண்டடையமு கொடுமுடிகளான தத்துவவாதிகள், படைப்பாளிகள், போன்றவர்களின் ஆதார நுால்கள் அனைத்து இணையத்தில் கிடைக்கின்றன. கலை இலக்கியப்படை தையும் ஒரு தேடலுள்ள வாசகன் தனது அறைக்குள் வாசித்துவிட முடியும். இவ்வகையில் அறிவைப் பெறுவதி குடித்தனத்தையும் அதிகாரத்தையும் இணையம் உடை என்பதனை நிச்சயமாகவே ஒருவர் வலியுறுத்திச்செ முறைப்படியான கல்வித்துறை ஆய்வாளனுக்கும் தேடலு: குடிமகனுக்குமான அறிவு சார்ந்த தொலைவை இணை தாக்கியிருக்கிறது. உலகின் தலைசிறந்த இயக்குநர் படங்களை வீட்டிலிருந்தபடியே ஒருவர் பெற்றுப் பார்த் இந்தப் பெறுமானங்கள் சாதாரணமாகக் கிடைக்கிறபடி படைப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள் தெ அசட்டையான தேர்வை பலர் மேற்கொண்டு வருகிறார்க இணையத்தில் இடம்பெறும் அறிவு ஊற்றுக்களை நா வகைப்படுத்தலாம். ஒன்று ஆதாரமான புத்தகங் படைப்புகள். மற்றையது இவை பற்றிய எந்தவித வாசிப்புகளும் அற்ற உதிரித் தகவல்கள். ஒரு சோம் அல்லது மேம்போக்காக விசயங்களை வாசிப்பதின் வழி பெரிய படைப்பாளியாக அல்லது படிப்பாளியாகக் க விளைகிறவன் ஆதாரமான விரிந்த படிப்பு அல்லதுதிரை ஏதுமற்ற நிலையிலேயே தன்னை ஊதிப்பெருக்கிக் க முடியும். மேலாக, கடினமான ஆதாரமான புத்தக திரைப்படப்பார்வை அனுபவத்துக்கும் மாற்றாக தகவல் படிப்பனுபவமாகவும் படைப்பனுபவமாகவும் ஒருவர் விடமுடியும். இணையவெளித் தகவல்களை ஒருவ படிப்புக்கும் பார்வையனுபவத்துக்கும் மாற்றாக வைத்து இத்தகைய அவலம் தமிழ்ச் சூழலில் அதிகரித்து வரு வெளி நிச்சயமாக ஆதாரமான படிப்பையும் பார்வைய மாற்றீடுசெய்துவிட முடியாது. இணையவெளிமாற்றிடு மனிதஇடையீட்டுநிலையை (humanefort) நாம் இவ்வாறு மிகப்பெரிய சிறப்புத்துறை நூலகங்கள் உலகெங்கிலு பெரியநகரங்களில் உள்ளன. இதில் வைக்கப்பட்டிருக் முன்பு ஒருவர் எளிதில் பெற முடியாது. இன்று இணை ஒருவர் பெறுதல் முடியும். இது அறிவுப் பரம்பலில் ட பாய்ச்சல், ஆனால் நூல்களைப் பெறுவதும் பெறாம6 தற்கு அப்பால் நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு முக்கி மனிதன் அந்தநூல்களைச் சொந்தமாக வாசிப்பதின் மூ பெறுதல் சாத்தியம். இணையத்தில் நீங்கள் குறிப்பிட் திரைப்படம் எங்கேயிருக்கிறது எவ்வாறு பெற முடியும் களை வெகுசாதாரணமாகப்பெறமுடியும். அடுத்ததாக, ரங்களில் தேடித் திரிந்தால் அதனைப் பெறவும் முடியு பதும் படிப்பதும் எனும் ஆதாரமான செயல்போக்கை இ; முடியாது. புத்தகங்கள், திரைப்படங்கள் தொடர்ப ஆதாரமான பிரதிகள் என்பதற்கும் அப்பால் இை மட்டுமல்ல, இனி எந்தவெளிவந்தாலும் ஒருவர் அடைய ஒன்று உண்டு. சமகால அனுபவங்களினுடனான அ விமர்சனங்கள் போன்றவற்றை நீங்கள் அறிந்து கொ களுக்கும் திரையரங்குகளுக்கும் ஊர்வலங்களுக் 42உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

சாதாரணக் வெளிநாட்டுத் வர்க்கத்தவர் உயர்மட்டத் மூலநூல்கள், என அனைத் டியும். உலகின் விஞ்ஞானிகள் ம் தற்போது புகள் அனைத் ளிருந்தபடியே லுள்ள மேட்டுக் த் திருக்கிறது ால்ல முடியும், Tள சாதாரணக் சுயம் இல்லாத களின் திரைப் துவிட முடியும். யினால் இந்தப் ாடர்பான ஒரு ள். bஇருவகையில் 1கள் மற்றும் )ான விமர்சன பேறி வாசகன் தன்னை மிகப் ாட்டிக்கொள்ள ாப்பட அனுபவம் ாட்டிக்கொள்ள ப் படிப்புக்கும் களையே திரட்டி முன்வைத்து ர் ஆதாரமான வேசம் கட்டும் கிறது. இணைய. னுபவத்தையும் செய்யமுடியாத விளக்க முடியும்: ம் உள்ள மிகப் கும் நூல்களை யவெளி மூலம கப்பெரிய ஒரு ருப்பதும் என்ப பமான விடயம் லமே அறிவைப் நுால் அல்லது என்கிற தகவல் தடுதல்இயந்தி . egą,60TIT 6U LIITUTU மாற்றீடுசெய்ய ன தகவல்கள், ாய வெளியில் Dடியாத விடயம் ப்ெபிராயங்கள், ா கருத்தரங்கு ம் நிச்சயமாக
ORHAN
நீங்கள் செல்லத்தான் வேண்டும். நூல்களதுவாசிப்பையும் திரை அனுப வத்தையும் இன்னும் அகலிக்கச் செய்யும் அனுபவம் இணையவெளிக்கு வெளியில்தான் இருக்கிறது. இந்த மனித அனுபவத்தையும் வரலாற்று மெய்மையையும் வெற்று வார்த் தைகளில் முன்வைப்பவர்களாகவே கலாச்சார நகல்போலிகள் தமிழ்ச் சூழலில் தோன்றியிருக்கிறார்கள்.
சமவேளையில் பிறிதொரு நீட்சி யிலிருந்து இணைய வெளியில் பரந்திருக்கும் விடயங்கள் குறித்த ஒரு அசட்டையான போக்கும் நிலவு d5mgl. dnd56f65ubibgol (google search engine) கட்டுரைகளை எழுதி விடுகி றவர்கள் எனும் குற்றச்சாட்டு சாதார ணமாக அனைத்து விடயங்கள் மீதும் வீசப்படுகிறது. சிலர் கூகிள் தகவல் களை அப்படியே வெட்டி ஒட்டி உரல் களை அடுக்கி கட்டுரை எழுதுகிறார் கள். மேற்கோள்களை வைத்தும் வெற்றுத் தகவல்களை வைத்தும் கட்டுரைகள் தயாரிக்கும் பாணி இது. இவர்கள் பிரச்சினைக்குரிய ஆதார மான நூல்களை அசலாக வாசிப்ப தில்லை. பேசும் திரைப்படங்களைப் பார்ப்பதுமில்லை. இணையவெளி தொடர்பான சில விடயங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இணையத்தில் தகவல்கள் கொட்டப் படுகிற அதே பொழுதில் மரபார்ந்த ஆதாரத் தத்துவ நூல்களும் இலக் கியப் படைப்புகளும் (classic texts) நமக்குக் கிடைக்கின்றன. இதுவன்றி மாற்றுச் சமூகம் பற்றிப் பேசுகிறவர் களின்விமர்சனபூர்வமான அற்புதமான கட்டுரைகளும் கிடைக்கிறது. எல்லா மாற்று இதழ்களையும் கைக்காசு இதழ் 24

Page 43
செலவுசெய்தோ அல்லது நூலகங்களிலிருந்தோ பெற முடியாதவர்களுக்கு அந்த இதழ்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் இணைய வெளியில் கிடைக்கிறது. இவைகளிருந்து கிடைக்கும் கட்டுரைகள் மேலதிக மாகத் தேடிப்படிக்கிறவனுக்குக் கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரும் அறிவுக்கொடையாகும்.
இணைய வெளியில் இதுவன்றி சமகால அறிவுபெற நினைக்கிறவனுக்கும் வரலாற்றுத் தகவல்களும் அதன் மீதான சிறப்புத் தேர்ச்சியாளர்களின் விமர்சனங் களும் நமக்குக் கிடைக்கிறது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் புகழ்வாய்ந்ததும்நம்பகமானதுமான நாளிதழ்களை நாம் இணையத்தில் உடனுக்குடன் தொடர்புபடுத்தி தகவல்களைச்சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இணையம் மூலம் பெறப்படும் அறிவு என்பது ஏற்கனவே புத்தகப் படிப்பையும் பார்வையனு பவத்தையும் உலகு குறித்த தத்துவ நோக்கையும் சார்ந்திருக்கிறவனுக்கு மேலதிகமானதானதும் உடனடியானதும் அனுபந்தமானதுமானதும் (supplementary) ஆக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. புத்தகப் படிப்பையும் பார்வையனுபவத்தையும் முதலாவதாகக் கொள்ளும் ஒரு ஏழை ஆய்வாளனுக்கு, ஒரு கீழ்மத்தியதர
பின் குறிப்பு: அதிகரித்து வரும் ஒரு போலி இலக்கியப் ே விசயங்களும்தான் முக்கியம் என்பதால் நா இவர்கள் போல் எழுதுகிற இறக்குமதி எழுத் கவலையிருந்து பிறந்ததே இக்கட்டுரை.
 

வர்க்க மனிதனுக்கு இணையும் ஒரு அறிவுச் சுணை. ஆனால் செயல்நோக்கையும் கிளர்ச்சி (3.5missoa5ub (practical and protest) GausflushGib பெரும் அறிவு இணையத்திற்கு வெளியில்தான் உள்ளது. அதுமட்டுமன்று சமகால நாவல்கள், தத்துவ நூல்கள், விரிவான விஞ்ஞான நூல்கள் எதனையும் ஒருவர் இணையத்தில் பெற முடியாது. இந்த நுால்கள் தொடர்பான விமர்சனங்கள், தகவல்கள் போன்றவற்றை நாம் இணையத்தில் பெற முடிந்தாலும் அசலான வாசிப்புக்கு நாம் ஆதார நூல்களையே தேடிச் செல்ல வேண்டும்.
'கற்றனைத்து ஊறும் அறிவு என்பதும்,‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'என்பதுவும் அனுபவங்களை முன்னிறுத்திப் பேசும் முதுமொழிகள். வாசித்தலும் பார்வையனுபவமும் கலைத்தன்மை வாய்ந்தது. கடினமானது. இணையத்தில் தேடி நமக் கானதைக் கண்டடைவதும் கலைநடவடிக்கைதான்.
கடினமானது. பிறர் நினைப்பது போல் இணையத்தில் நாம் விரும்புகிறவற்றைத் தேடிக் கண்டடைவது அவ்வளவு சுலபமானது அல்ல. அதற்குப் பயிற்சியும் முன்படிப்பும் எமது சந்தேகம் என்ன என்கிற திட்ட வட்டமான நோக்கும் வேண்டும்.
பாக்கைச் சுட்ட, விவாதப் புள்ளிகளும் விவாதிக்கப்படும் ான் எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. நதாளர்கள் தமிழில் அதிகரித்து வருகிறார்கள். அந்தக்
செப்டெம்பர் 2006

Page 44
வாசுதேவனின் கவிதைத் ெ தொலைவில்
LTரிஸ் அகிலன் என்ற புனைபெயரில் சில காலம் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதியவர் வாசுதேவன். வாசுதேவனின் கவிதை உலகம் தத்துவ நதியில் கால் நனைத்துச் செல்வது. இன்றைய தன்னுணர்வுக் கவிதைகளின் கழி விரக்கம், பச்சாதாபம், முரண்தொடைத் துயரங் கள் போன்ற சமாச்சாரங்கள் இவரது கவிதை களில் இல்லை என்றே சொல்லலாம்.
உலக இலக்கியப் பரப்பில் சில தேர்தெடுத்த படைப்புக்களின் உட்பொதிந்த சுருக்கம், காட்சிகள் மற்றும் அதில் வருகின்ற பாத்திரங். களினது பெயர்கள் போன்றவை பொருத்தமான தருணங்களில் தவிர்க்க முடியாத கூறாகி வாசு தேவனின் கவிதைகளில் இடம்பிடிக்கின்றன. இத் தேர்வு வெறும் தற்செயலானதும் அல்ல. கவர்ச்சிக் காக அணியப்பட்டவையுமல்ல. மாறாக இக் குறிப் பான்கள் வாசுதேவன்ன் கவிதை உலகின் தத்துவ நோக்கின் திசைவழியினை எமக்குச் சுட்டி நிற்கின்றன.
சாமுவேல் பெக்கட்டின் 'கோடோவிற்காகக் காத்திருத்தல், பிரீட்றிச் நீட்சேயின் 'அவ்வாறு உரைத்தான் ஸ்ரத்துஸ் ட்ரா', ஹேர்மான் ஹெஸ்ஸவின் ‘சித்தார்த்தா', காவ்காவின் ‘உரு மாற்றம் பெறுகின்ற கரப்பான் பூச்சி, ஹெம்மிங்வே யின் 'கிழவனும் கடலும் புதினத்தில் வருகின்ற சந்தியாகோ, மு. தளையசிங்கத்தின் 'மெய்யுள், ‘போர்ப்பறை', Claude Debussy அவர்களின் நிலவொளி என்ற பியானோ இசை, Van Gogh (வன்கோ)இன் ஒவியத்தில் இருந்து புறப்படும் காகங்கள், கள்ளுண்டு Ragge இசைக்கும் மொஸாட் என்றெல்லாம் கவிதைகளுக்குள் விரவி, கவிதைகளின் நிறைவான புரிதல் விரும்பின், எமது முன்னறிவைக் கேட்டுநிற்கின்றன.
44உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

தாகுப்பு:
காலச்சுவடு வெளியீடு நாகர் கோவில்
செ. க. சித்தன்
சாமுவேல் பெக்கெற் அவர்களின் 'கோடோ விற்காக் காத்திருத்தல்' இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின்னர் எழுந்த முக்கிய நாடகங்களில் ஒன்று. எதற்காக நாம் காத்திருக் கின்றோம் என்று எமக்குத் தெரியாத போதும் நாம் காத்துக் கிடக்கின்றோம். காத்திருப்பு பயனுள் ளதுதானா என்பதற்கான விடையெதுவுமின்றியே காத்திருப்புக்கு நாம் தயாராகி விடுகின்றோம். அந்த நாடகத்தில் எப்போதென்றும் இல்லாது, எங்கேயென்றுமில்லாது ஒரு தேடுவோரற்ற ஒரு வீதியோர மரநிழலில் வீடுவாசலற்ற இரண்டு கோமாளிகள் கோடோவுக்காகக் காத்திருக் கின்றனர். கோடோ வரவேண்டியது அந்த நாள் தானா, யார் இந்தக் கோடோ, அவன் எப்போதாவது வரக்கூடுமா என்பதெதுவும் தெரியாமலே இரு வரும் காத்திருக்கின்றனர். இந்த நாடகம் 1950களில் முதன்முதலில் மேடையேற்றப்பட்ட போது, இது எதனைப் பூடமாகச் சொல்கிறது . என்பதில் புத்திஜீவிகளிடத்தில் மிகுந்த ஆர்வங் காட்டப்பட்டது. நாடகாசிரியர் பெக்கட் பொது வாகவே எந்த அபிப்பிராயமும் சொல்லாதவர், பேட்டிகளையே விரும்பாதவர். இதற்குள் எதுவுமே யில்லை என்று சொல்லிவிட்டார். ஆனாலும் விமர்சகர்கள் இந்தக் காத்திருப்பவர்களாக உருவகப்படுத்துவது பிரான்சின் இடதுசாரிக் கட்சிகளே என்றனர்.
இதழ் 24

Page 45
வாசுதேவனின் கவிதையிலும்,
ஒரு தலை வளர்த்தவனுடனும், இன்னொரு தாழ வைத்தவனுடனும் கரைகளில் நின்று ஊரிகளைச் சேகரிப்பதில் களைத்துவிட்டேன் , அவர்கள் கூட இப்போது கோடோவிற்காகக் காத்திருக்கிறார்கள்
என்று எழுதுவதால் இது வாசுதேவனின், தற்கால அரசியல் பற்றிய தன்நிலை விளக்கமோ என்றும் ஊகிக்கப்படுவதற்கான தரவுகள் நிறையவே காணப்படுகின்றன.
எவடம்? எவடம்? புளியடி! புளியடி! என்பது சிறார்களின் விளையாட்டு. ஒரு பிள்ளை இரண்டு கைகளிலும் மண்ணை அள்ளி வைத்துக்கொண்டு கண்களை மூடவேண்டும். கைகளில் மண் உள்ள அந்தப் பிள்ளையின் மூடிய கண்களை இன்னொரு பிள்ளை இறுகப் பொத்தியவாறே திசைமாற்றித் திசைமாற்றிக் கொண்டலைந்தவாறே ஒரு இடத்தில் அந்த கையளவு மண்கும்பியைக் கீழே வைக்கச் சொல்லுவர். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்து அந்த்ப் பிள்ளையின் கண்களை விடுவிப்பர். இப்போது மண்கும்பி வைக்கப்பட்ட இடத்தை அந்தப் பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும். மண்கும்பியைக் கொண்டு
அலைக்கழிக்கும் போது அந்தப் பிள்ளை எவடம்? இதழ் 24
 

எவடம்? என்று கேட்கும். புளியடி புளியடி! என்று பதில் சொல்வார்கள் மற்றைய பிள்ளைகள். இந்த விளையாட்டில் வருகின்ற புளியடி என்பது ஒரு போக்குக் காட்டுவதற்காகச் சொல்லப்படலாம். அந்தப் புளியடிக்கு எந்த அர்த்தமும் இல்லை.
எவடம் ? எவடம்? புளியடி! புளியடி! என்ற கவிதையுடன் ஆரம்பிக்கின்றது 'தொலைவில் என்ற வாசுதேவனின் கவிதைத் தொகுப்பு. எவடம், எவடம் என்றே வட்டார வழக்கில் இது ஒசைபெறும். ஆனால் கவிதையில் இது எவ்விடம், எவ்விடம் என்று மாறும்போது குறை விழுகிறது. ஆனாலும் ஒரு சொல், ஒரு கேள்வியின் பதில், தன் கருத்தி ழந்து தன் குறியீடிழந்து இடப்பெயர்வின் இன்றைய கொடூர யதார்த்தத்தை அறைகின்றது.
கணிமூடிக் கொண்டே நாம் கையிருந்த மண்ணிழந்தோம், 3
புலம்பெயர் இருளில் தடம் இழந்திழந்து தவிப்பதுவன்றி,
திக்கெல்லாம் பரந்து தொலைவதைத் தவிர, கண்மூழ எங்கோ கைவிட்ட மண்ணைக் கண்டடையோம் இனி, போக்கிடம் நமக்கினிப் புளியழயே
போன்றவை முதற் கவிதையின் இடையிடை வரிகள்.
அநேக கவிதைகள் கருத்தாடலின் உப விளைவுகள் போலவும் அதன் பதிவுகள் போலவுங்கூட வாசகர்களால் உள்வாங்கப் படலாம்.
தத்துவவியலின் மீதான நாட்டமும் ஐரோப்பிய இலக்கியங்களை பிரெஞ்சு மொழியூடாக கசடறக் கற்றலின் முயற்சியும் இவரின் கவிதைகளுக்கு பெருமளவு ஊட்டத்தை நல்கியிருக்கின்றன. குறிப்பாக, நீட்சேயின் கவிதைகளிலும் ஆக்கங் களிலும் வாசுதேவனின் நிறைந்த ஈடுபாடு மொழியின் செழுமைக்கு உரமூட்டியிருக்கின்றது. “Also sprach Zarathustra" 6T6öLg5) solo (35ufl5ö "அதிமானுடன்" பற்றிய எடுகோளினை வலியுறுத்த எழுந்த இலக்கியம், ஜெர்மன் தத்துவஞானி நீட்சே அவர்களின் தத்துவப் புத்தகம். கவித்துவத்தின் கொடுமுடி. கிறிஸ்தவ மதத்தைக் காட்டி மனித குலத்திற்குக் கருவில் இருந்தே ஊட்டிய அடக் கமும் பணிவும் அதன் வளர்ச்சியைக் குறுக்கி விட்டது. இதனை நொருக்கிவிட நீட்சேயிடம் இருந்து புறப்பட்டு வருகிறான் ஸ்ரத்துஸ்த்ரா. உண்மையில் ஸ்ரத்துஸ்த்ரா என்ற ஒரு பாரசீகத் தீர்க்கதரிசி ஒருவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கிறார். தத்துவஞானி நீட்சே கூர்ப்பின் அடுத்த கட்ட மனிதனான அதிமானு டனின் வரவிற்கு கட்டியம் கூறும் தன் பிரசங்கியாக ஸ்ரத்துாஸ்த்ராவை இலக்கியத்தில் உயிர்ப் பித்தார்.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 45

Page 46
ஸரத்துஸ்த்ரா 10 வருட நாடோடி வாழ்விற்குப் பின், தான் பெற்றுக் கொண்ட அறிவினை மக்களுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கு மலையில் இருந்து கிராமம் நோக்கி இறங்கி வருகின்றான்.
கயிற்றில் நடக்கும் சாகச வித்தைகாணக் குழுமியிருந்த மக்களுக்கு மத்தியில் அவன் தனது 'அதிமானுடனின் வருகை பற்றிப் பிரசங்கிக் கின்றான். கிராமத்து மக்களின் கவனத்தை அவனால் ஈர்க்கமுடியவில்லை. அவனைக் கேட்க மக்கள் தயாரில்லை. இதனால் அவன் மனிதர் களுக்கு மத்தியில் இனி இது பற்றிப் பேசுவதில்லை என்ற முடிவோடு மீண்டும் பயணப்படுகின்றான். மீண்டொருதடவை அந்தக் களைக் கூத்தாடியின் பிணத்துடன் அலைகிறான். 'அவ்வாறுரைத்தான் ஸரத்துஸ்த்ரா என்ற அந்த நீட்சேயின் நான்கு நூல்களும் கவித்துவத்தின் உச்சங்கள். அவற்றில் தேவாலயம், அரசு, விஞ்ஞானம், கலை எனும் வாழ்வின் அனைத்து அம்சங்களும் விமர்சனத்துக் குள்ளாகின்றன.
நீட்சேயின் மொழியின் ஆழத்தை அவரது ஆக்கங்களில் கண்டு தொடர்ந்து சிலாகிப்பவர் வாசுதேவன். அதனால் கவிதைகள் எல்லாவற் றிலும் நீட்சேயின் பாதிப்பினைக் காட்டமுடிகிறது.
இடையில் சேர்த்தவற்றையும் கொண்டு முடிவற்ற ՍԱյ600Iփ.
பாதைகள் மனிதர்களிடமிருந்து தேர்வு, தொலைந்தும் தொலைவு கருவில் இருந்து கற்பிக்கப்பட்ட ஆதிச் சோகம்: உயிரை விட்டுப் Uரிக்க αρριμ6)).6ύ60)6υ.
தகரக் கூரையில் பெருமழை, தூக்கம் இல்லை. வீட்டுப் பாடம் செய்யாது பள்ளிசெல்லும் சிறுவன் மனோ நிலை
மொழியினர் பெருவெளியில் தோல்வி கண்ட பிரக்ஞை -
வயலில் இறங்காமல் வரப்Uல் தடுமாறி நிரந்தரமற்ற எல்லைகளில் அலைவதும் தொலை வதும் அதையே விரும்புவதுமாய்.
இருள் படமுனி வீடு செல்லும் எண்ணம் தொலைUயணம்
என்ற வரிகள் நீளம் நீட்சேயின் மொழிவலுவைச் சந்திக்க முடிகிறது.
நீட்சேயின் தலைப்பான "அவ்வாறுரைத்தான் ஸரத்துஸ்த்ரா" என்ற தலைப்பில் நீட்சேயின் அதே புனைவடிவில் தனது சுய வரலற்றினை ஒரு அரைச் சூட்சுமமான அழகிய மொழியில் நீள் கவிதை யாகச் சொல்கிறார். அது இந்த நூலில் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. நீட்சேயின் ஸரத்து ஸ்த் ராவின் வார்த்தைப் படிமங்களுடன்.
46|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

'யாதும் ஊரல்ல யாவருங் கேளிர்' என்ற இன்னொரு கவிதையிலும்
ஊரற்றவர்களே,
எவ்வூரும் உங்கள் ஊரல்ல
நீங்கள் ஊரற்றவர்கள் அவ்வளவுதான்
உங்களுக்கு ஊரிருந்தால் மட்டும் உரையுங்கள்
யாதும் ஊரென்றும் யாவருங் கேளிரென்றும்
இக் கவிதையிலும் இன்னும் ஒரு சில கவிதைகளிலும் புகலிட இலக்கியங்களுக்கே உரிய சில அடிப்படைப் பண்புகளைக் காணமுடிகின்றது. அ-காலம் அதேசம் அஊர் அகதி போன்றவை மனிதத்திடம் நிகழ்த்தும் தாற்பரியங்களின் வெளிப்பாட்டுகள் அவை.
'தொலைவில் என்ற கவிதையில்
தொலைவில் சத்தமின்றி உடைந்து நொருங்கிய யதார்த்தத்தினர் இன்னமும் மிதக்கும் துண்டுகள் போல்,
பட்டுப்போன மரமொன்றின் கூடு போல், வேம்பு, பூவரசு வேங்கை, கிணறு, கடதாசிப்பூ, சிதைந்த கதியால் வேலி இன்னமும் பயணப் Uொதிக்குள்,
என்ற வாசகங்களைக் காணும் போது நமது சங்க இலக்கிய,
அத்த நண்ணிய அங்குடிச் சீறுர் மக்கள் போகிய அணிலாடு முன்றில் என்ற விழுதுான்றிய வாழ்வு தொலைத்து வேரோடு கிளம்பிய மக்கள் அற்ற அணில் ஆடும் முற்றங்களும்,
வேதாளஞ் சேர்ந்து வெள்ளெருக்குப் பூத்து பாதாள மூலிபடர்ந்து கிடக்கின்ற வளவுகளும் மற்றும்
காற்றுக்கு வந்த சோகத்தில் சு வில்வரத் தினத்தின்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக் கிடக்கின்ற குரலிழந்த கிராமத்துக் காட்சிகளும் எம் கண்முன்னே வருகின்றன.
துணையற்ற பயணங்கள் என்ற தலைப்புடைய கவிதை மிக நன்றாக லயிக்கத் தக்க கவிதை. நித்தம் நித்தம் பொய்களில் கழிகின்றது நமது வாழ்வு. பொய்களில் பல்வேறு மட்டங்களை வேறு நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
இரண்டு கண்டங்களின் கல்யாண, காதல் இணைவுகளில் பகிர்ந்து கொள்ளப்படும் சமாச்சா ரங்கள் மொழியினதும், கலாசார அறிவினதும் பற்றாக் குறையினால் கோணல் மாணலான மனப் படங்களை உருவாக்கிவிடுவது சகஜமானது. இந்தப் புனைவுகளை எங்கு கொண்டுபோய்க் கொட்டுவது? ஆனாலும் இறுதியில் கலில் கிப்ரான் பேசுகிறார்:
"தணர்னந்தனியாகவும் சமாந்தரமாகவும் பயணிப்போம். யாருக்கும் யாரும் துணையின்றி"
இதழ் 24

Page 47
1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ம் நாள் இலங்கையின் பெற்றது. அவ்வெழுச்சியானது நீடித்துவந்த இலங்கைத் ஏற்படுத்தியது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகாலப்பழை தீண்டாமையை எதிர்த்தும் அறைகூவல் விடுத்தே அவ்ெ மத்தியில் சாதி தீண்டாமையினால் ஒடுக்கப்பட்டு உரி வந்ததாழ்த்தப்பட்ட மக்களின்விழிப்புணர்வுக்கும்போரா ஒட்டு மொத்தத் தமிழர்களின் இன ஒடுக்குமுறைக் திறக்கப்படுவதற்கும் இவ்வெழுச்சி வரலாற்றுவழிகாட்
அவ்வ்ெழுச்சிக்கு அழைப்பு விடுத்து அதனை முன் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாகும். அறுபதுகளின் ஆர பாதையா? அல்லது பாராளுமன்றப் பாதையா? என்னு அடிப்படையில் கட்சிகளிடையே பிளவுகள் ஏற்பட்டன. பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டது. புரட்சிகரப்ப புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. இதற்கு ஆதரவு கிடைத்திருந்தது.
இதே காலகட்டத்தில் இன முரண்பாடு வளர்திசை தமிழ்த்தேசிய அரசியல் ஆதிக்க சக்திகள் தமதுபார அரசியலை முன்னெடுத்தனர். குறிப்பிட்டுக் கூறுவதாய தமிழ்க் காங்கிரசும், பின்பு சைவ கிறிஸ்தவ வேளாள ே தமிழ்த் தேசியத்தின் பெயரால் பிரதிநிதித்துவம் செய உரிமைகள் பற்றியும் அகிம்சைப் போராட்டங்கள் பாரா மத்தியில் சாதிய தீண்டாமையின் காரணமாக உரிமை அக்கறையும் காட்ட முன் வரவில்லை.
அதே வேளை இன முரண்பாட்டையும் மேவியநிை படிப்படியாக முன்னுக்கு வந்து கொண்டது. இலங்ை சதவீதத்தினரானதாழ்த்தப்பட்ட மக்கள்சாதிய ஒடுக்கு வந்தனர். அவர்களின் அடிப்படை ஜனநாயக மனித உ கொண்ட ஒருமக்கள் சமூகமாக தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டே அம்மக்கள் அழைக்கப்பட்டனர். உழைக்கு பொருளாதார, அரசியல், சமூக பண்பாட்டுத்துறைகt வாழ்வுடனேயே அன்றைய சமூகச் சூழலில் தாழ்த்தப்ட
இவ்விடத்திலே இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வ பற்றி எடுத்துக் கூறுவது அவசியம். இலங்கைக்கு இந் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி சிங்கள வாதிகளால் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழி ம காணப்படுகின்றது. ஆனால் தீண்டாமையுடன் கூடிய சா அதிலும் குறிப்பாக, வடபுலத்துதமிழர் பரப்பிலே உறுதி போன்று சாதியப்படிநிலை இலங்கையிலும் பேணப்பட்ட அதனைப் பாதுகாக்கும் நிலவுடைமை ஆட்சியமைப்ப ஆதிக்கம் உச்சநிலையில் இருப்பதுபோன்று இலங்ை இதழ் 24
 

சி.கா. செந்திவேல்
வடபுலத்திலே மிகப்பெரும் புரட்சிகர எழுச்சி ஒன்று இடம் 5 தமிழர்களின் வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை D வாய்ந்த சாதிய அமைப்பின்மீதும் அதன் கொடுமையான வழுச்சி இடம்பெற்றது. இவ்வெழுச்சியானது தமிழர்களின் மைகள் மறுக்கப்பட்டு அடிமைத்தனங்களுடன் வாழ்ந்து ட்டங்களுக்கும் சங்கநாதமாக விளங்கியது. அதேவேளை கு எதிரான போராட்டப் பாதையில் புதிய முனைகள் டியாகவும் அமைந்தது. -
னெடுத்தது தோழர் நா.சண்முகதாசன் தலைமையிலான rம்பத்துடன் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புரட்சிகரப் றும் மாபெரும் விவாதம் இடம் பெற்று வந்தது. அதன் இலங்கையின் பழைய கம்யூனிஸ்ட் கட்சிபாராளுமன்றப் ாதையில் பயணிப்பது என தோழர் சண் தலைமையிலான தெற்கிலும் மலையகத்திலும் வடக்கு கிழக்கிலும் அதிக
நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. அவ்வளர்ச்சியினை ாளுமன்றப்பதவிகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திவர்க்க பின் சைவவேளாள மேட்டுக்குடி உயர்வர்க்க அரசியலை மட்டுக்குடி உயர்வர்க்க அரசியலை தமிழரசுக் கட்சியும் ப்து நின்றன. இத்தகையவர்கள் தமிழர்களின் ஒற்றுமை ாளுமன்றப் போட்டிகள் பற்றியும் பேசிய வேளையிலும் தம் கள் மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி எவ்வித
லயில் சாதிய முரண்பாடு அறுபதுகளின் ஆரம்பத்துடன் கத் தமிழர்களில் மொத்த எண்ணிக்கையில் முப்பது முறையின்கீழ்தீண்டாமைக்கொடுமைகளை அனுபவித்து உரிமைகள் மறுக்கப்பட்டன. சமத்துவமும் சமூக நீதியும் ாமதிக்கப்படவில்லை.'அதுகள் என்ற அறிணைப் பெயர் ம் அடிநிலை வர்க்கமாகவும் சாதிய ஒடுக்குமுறையாலும் ள் அனைத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் துயர ட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர்.
ாலாற்றுரீதியில் அமைப்புவாயிலாகநீடித்துவந்த சாதியம் தியப் பெருநிலப்பரப்பிலிருந்தே சாதியம் பரவியது. அது வர்களிடையேயும் வேர் விட்டு வளர்ந்தது. காலனித்துவ லையகத் தமிழர்கள் மத்தியிலும் இச்சாதியம் இன்னும் திய ஆதிக்க இறுக்கம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், பெற்றதாக இருந்துவந்துள்ளது. இந்தியாவில் அமைந்தது து. அதற்கான அடிப்படை இந்து மதக் கருத்தியலாகவும் ாகவும் இருந்தது. ஆனால், இந்தியச் சூழலில் பிராமணிய கயில் இருக்கவில்லை. இங்கு சைவவேளாள மேட்டுக்குடி
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006/47

Page 48
0தமிழ் மக்கள் மத்தியில் ஆண்டாண் அடிமை குடிமைகளாகவும் தீண்டத் த வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தமது போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்க
மறு கன்னத்தைக் கொடுக்கும் நிலை நிலையைத் தாழ்த்தப்பட்ட மக்கள் எடுக்க
எதிர்த்து தீண்டாமையை ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னெடுப்பதற்கு தாங்கும்00 இவ்வாறு கட்சியின் சார்பா தனது உரையில் அை
ஆதிக்கமே உச்சமாக இருந்து வந்துள்ளது. இந்த சக்திகளே வர்க்கரீதியில் நிலவுடைமையாளர் களாகவும் ஆட்சியாளர்களாகவும் இருந்து வந்துள் ளனர். சிங்களவர்கள் மத்தியிலும் 'கொவிகம் எனப்படும் நிலவுடைமை உயர் ஆதிக்க சாதியினரே வேளாளர் அந்தஸ்தில் ஆளுவோராக இருந்து வந்துள்ளனர். இந்த அடிப்படையே தமிழ் சிங்கள மேட்டுக்குடி உயர்வர்க்க சக்திகளது ஐக்கியத்தின் இணை புள்ளியுமாகும்.
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியத் தின் வரலாற்று வளர்ச்சியைக் காணும் நேர்மையான வரலாற்றாய்வாளர்கள் எவரும் அதன்பிரதான கூறாகச் சாதியம் ஒரு அமைப்பாக இருந்துவந்துள்ளமையைப் புறக்கணிக்க மாட்டார்கள். ஆறுமுகநாவலர் தொடங்கி பொன்னம்பலம் இராமநாதன் ஊடாக ஜி.ஜி. பொன்னம்பலம் வரை சாதியத்தைப் பேணிப்பாதுகாத்த சைவ வேளாள மேட்டுக்குடி ஆதிக்கமாக இருந்து வந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியத்தை உயர்த்திய வேளையிலும் அங்கே சைவ-கிறிஸ்தவ உயர் வேளாள ஆதிக்கமாகச்செயல்பட்டே சாதியத்தைப்பாதுகாத்து வந்தனர். தமிழ்த்தேசியத்திற்கான ஆயுதப்போராட்டம் முன்னேறிச் சென்ற சூழலிலும்கூட இத்தகைய சைவகிறிஸ்தவ உயர் வேளாள ஆதிக்கமும் அதற்கான அடிப்படைக் கருத்தியலும் அற்றுப்போய்விடவில்லை என்பது நோக்குதற்குரியதாகும்;~ட
இலங்கைத் தமிழர்களின் சாதிய அமைப்பில் உயர் நிலையுச்ச சாதியாக வேளாளரே இருந்து வருகின் றனர். இரண்டாம் மூன்றாம் தர நிலையில் உள்ள வேளாளரும் சிறு தொகையினரான பிராமணர்களும் மேல்நிலைச் சாதியினராகக் கணிக்கப்படுக்கின்றனர். இவர்களது எண்ணிக்கை 40 சதவிகிதமாகும். அதற்கு அடுத்ததாக, இடைநிலைச் சாதியினர் 30 சதவீதத்தி னராவார். மிகுதியான 30 சதவீதத்தினர் உழைப்பாளி களான அடிநிலை வாழ்வைக் கொண்டதாழ்த்தப்பட்ட மக்களாவர். இவர்கள்மீதுதான் சாதிய ஒடுக்குமுறை களும் தீண்டாமைக் கொடுமைகளும் உழைப்புச் சுரண்டலும் இருந்துவந்திருக்கிறது. இத்தகைய சாதிய அமைப்பும் அதன் முரண்பாடும் ஒடுக்கு முறையும் அன்றைய சமூகச் சூழலில் ஒரு போராட்டத்தின் அவசி யத்தை வேண்டிநின்றது. அத்தகைய ஒரு போராட்டம் வரலாற்றுத் தேவையாகவும் காணப்பட்டது.
மேற்கூறிய சமூக யதார்த்த சூழலையும் சாதிய 48 உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

டு காலமாக சாதியடக்கு முறையின் கீழ் Bாதவர்களாகவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு
ரிமைகளை வென்றெடுக்க புரட்சிகரப் வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் யை மாற்றி அடித்தால் திருப்பி அடிக்கும்
வேண்டும். அப்பொழுதுதான் சாதியத்தை முடியும். அதற்கான போராட்டங்களை
கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டி தலைமை க பொதுச் செயலாளர் நா.சண்முகதாசன் றகவல் விடுத்திருந்தார்.
முரண்பாட்டின் கூர்மையடைந்த நிலையையும் முழுமையாகக் கவனத்தில் கொண்டே புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீர்மானித்தது. சாதியத்தின் வலுவான கோட்டை யாக இருந்து வந்த வடபுலத்தில் முன்னெடுக்கவும் முடிவுசெய்யப்பட்டது. அதற்கான முழுப்பொறுப்பையும் அன்றைய கட்சியின் வடபிரதேசத் தலைமையிடம் மத்திய குழு ஒப்படைத்தது.
1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ம் நாள் எழுச்சியை தோற்றுவிக்கும் நாளாக நிர்ணயிக்கப்பட்டது. வட புலத்தின் விவசாயிகளின் ஒரு பிரதான நகரான சுன்னாகத்திலிருந்து சாதியத்திண்டாமைக்கு எதிரான ஊர்வலத்தை நடத்தி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் பொதுக் கூட்டத்தை நடத்தவும் முடிவாகியது. அவற்றுக்கான போலீஸ் அனுமதியையும் கட்சி கோரியது. ஆனால் ஊர்வலத்திற்கு அனுமதிமறுக்கப் பட்டு, கூட்டம் மட்டும் நடத்த போலிஸ் அனுமதித்து அந்த ஊர்வல அனுமதி மறுப்பின் பின்னால் உயர்சாதி ஆதிக்க சக்திகளின் அரசியல் விருப்பங்கள் மறைந் திருந்தன.
ஆனால், போலிஸ் தடையையும் மீறி ஊர்வலத்தை நடத்துவது என்ற கட்சியின் முடிவை முன்னெடுத்துச் செல்ல ஆயிரத்திற்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சகல அணியினரும் திரண்டிருந்தனர். செஞ்சட்டைகள், செங்கொடிகள், செம்பதாகைகள் தாங்கிய இளைஞர் களும் மக்களும் மிகுந்த புரட்சிகர உணர்வுடனும் உத்வேகத்துடனும் தயாராகினர். ஊர்வலத்தை
ஒழுங் ந்துவதில் ஈடுபட்டிருந்த உற்சாகமிக்க இளம் தோழர்களில் ம் ஒருவனாக முன்னணியில்
ஆனால், எனது பதினெட்டாவது வயதில் பாடசாலை மாணவக் காலத்தில் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப் பட்டேன். நான் பிறந்து வளர்ந்த, கவிழ்டமான உழைக் கும் வர்க்க குடும்பநிலை, சாதிய தீண்டாமை நிறைந்த கிராமியச் சூழல் ஏற்றத்தாழ்வுமிக்க சமூகநீதி மறுப்புக் கள், இவற்றினால் அன்றாட வாழ்வில் அனுபவித்த துன்ப துயரங்கள் என்னுள் பல்வேறு கேள்விகளை எழுப்பிநின்றன. அவற்றுக்கு விடைதேடும் முயற்சியில் இறங்கியதன் விளைவாகவே மாக்சிசத்தை உள் வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. மார்க்சியம் வெறுமனே படிப்பதற்கும் ரசிப்பதற்கும் உரிய ஒன்றல்ல. அது இன்றைய சமூக அமைப்பின் கொடுமைகள், கோரத்தனங்கள், சுரண்டல், ஏற்றத்தாழ்வுகள் அனைத்
இதழ் 24

Page 49
தையும் தெளிவாக்கிக்காட்டியது. அத்துடன் அவற்றை மாற்றியமைப்பதற்கான போராட்ட வழிமுறைகளையும் சுட்டிக்காட்டி நின்றது. புரட்சிகரமான மாற்றங்களுக்கு மார்க்சியமும் அதன் வளர்ச்சியான லெனினிசமும் வழிகாட்டிநின்றன.நான் ஒரு முழுமையான மார்க்சிய லெனினியவாதியாக வளர்ச்சி பெறும் பாதையில் காலடி வைத்து பயணிக்க அந்தப் பதினெட்டாவது வயதில் தயாராகினேன். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாகத் தோற்றம் பெற்ற தோழர்நா.சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் மாணவர் அமைப்பிலும்பின் வாலிபர் இயக்கத்திலும் இணைந்து தீவிர செயற் பாட்டாளர்களில் ஒருவனாக்கிக் கொண்டேன். 1965ல் எனக்கு கட்சிஉறுப்புரிமை வழங்கப்பட்டதுடன் அதே ஆண்டில் கட்சியின் முழு நேர அரசியல் ஊழியனாகச் செயல்படும் எனது கோரிக்கையையும் கட்சி ஏற்றுக் கொண்டது. அப்பொழுது கட்சியின் வடபிரதேச செய லாளராக தோழர் மு. கார்த்திகேசன் பணிபுரிந்தார். தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம், வி.ஏ.கந்தசாமி, டாக்டர் சு.வே.சீனிவாசகம், எம்.குமாரசுவாமி, நீர்வை பொன்னையன், கே.டானியல், வெ. சின்னத்தம்பி, எம்.செல்லத்தம்பி போன்றவர்கள் தலைமைக் குழுத் தோழர்களாக இருந்தனர். எனது செயற்பாடுகளை நெறிப்படுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று கட்சிப் பணியாற்றக்கூடிய தோழர் களை உருவாக்குவதில் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் முன்முயற்சியுடன் செயல்பட்டு வந்த ஒரு தலைமைத் தோழராக இருந்து வந்தார்.நான்மட்டுமின்றி பல இளம் தோழர்கள் மிகுந்த இலட்சியத் தாகத்துடனும் போராட்டத்திடசங்கட்பத்துடனும் செயலாற்றுவதற்கு அன்றைய தேசிய நிலைமைகளும் சர்வ தேசியப் போராட்டங்களின் சூழல்களும் சாதகமாகப் பங்களித்தன.
இத்தகைய ஒரு சூழலில்தான் ஒக்ரோபர் 21 எழுச்சியை முன்னெடுக்கும் தீர்மானம் வந்தது. அதுவும் போலீஸ் தடையை மீறி ஊர்வலத்தை நடத்தும் கட்சியின் முடிவு கட்சியின் சகல அணிகளுக்கும் மிகுந்தபுரட்சிகர உற்சாகத்தை வழங்கியது.
அன்றைய தினம் பி.ப.5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து சாதி அமைப்புத் ட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும் என்னும் செம்பதாகை
சிறுபான்மைத் தமிழர் மகாசபை, திருவள்ளுவர் மகாசபை, அருந்ததியர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம் போன்றன தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன. ஆனால், அவற்றினால் முழுமையான உரிமைகளையோ அன்றி அவற்றுக்கான உறுதிமிக்கப் போராட்டங்களையோ முன்னெடுக்க முடியவில்லை.
இதழ் 24

உயர்த்திநிற்க அதன் கீழ் எழுச்சிமிக்க அவ்ஊர்வலம் புரட்சிகர முழக்கங்களுடன் புறப்ப்ட்டு யாழ்நகர் நோக்கி பிரதான வீதியில் முன்னேறியது. ஊர்வலத்தின் முன்னணியில் கட்சியின் தலைமைத் தோழர்களான கே.ஏ.சுப்பிரமணியம், டாக்டர் சு.வே.சீனிவாசகம், வி.ஏ. கந்தசாமி, கே.டானியல், டி.டி. பெரேரா, இ.கா. சூடா மணி இவர்களுடன் தோழர் எஸ்.ரி.என்.நாகரட்ணமும் முன்னணியில் சென்று கொண்டிருந்தனர். அடுத்து வாலிபர் இயக்கத்தின் வடபிரதேச தலைமைக் குழுத் தோழர்களான சி.கா.செந்திவேல், எம்.ஏ.சி.இக்பால், நா.யோகேந்திரநாதன், கு.சிவராஜா, கி.சிவஞானம், தி.குணரட்ணம். சி.நவரட்ணம், பி.பசுபதி, தா.தரும லிங்கம், ப.கிருஷ்ணன். எஸ்.கெளரிகாந்தன், சூ.மார்க் போன்றோர் சென்றனர்.
சாதியமைப்பையும் தீண்டாமையையும் எதிர்த்த புரட்சிகர முழக்கங்கள் அப்பகுதி முழுவதையும் அதிர வைத்தன. பிரதானவீதியில் அமைந்திருந்த சுன்னாகம் பொலீஸ் நிலையத்தை அண்மித்ததும் வீதிக்கு குறுக்கே அணிவகுத்து நின்ற போலீஸ் படை ஊர்வலத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தது. குண்டாந்தடிகள், துப்பாக்கிப்பிடிகள் என்பனவற்றால் ஊர்வலத்தினர் தாக்கப்பட்டனர். தலைமை தாங்கிச் சென்ற தோழர்களின் தலைகளில் இருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தன. சில தோழர்களின் மேல் சட்டைகள் கிழித்தெறியப்பட்டன. பதிலுக்கு ஊர்வ லத்தின் பின்பக்கத்தில் இருந்து போலீசாரை நோக்கி சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. போலீஸ் நிலையம் முன்பாக சுமார் இருபதுநிமிடங்கள் வரை போர்க்களம் போன்று காட்சியளித்தது. இரத்தம் சொட்டச் சொட்ட தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம், வி.ஏ.கந்தசாமி, இ.கா.சூடாமணி ஆகியோரை போலீஸ் அதிகாரிகள் இழுத்துச் சென்று போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்தனர்.
இத்தனைக்குப் பின்பும் அடி காயங்கள் பட்ட நிலையிலும் ஊர்வலத்தில் திரண்டோர் கலைந்து செல்ல மறுத்து யாழ்நகர் நோக்கிச் செல்வதற்காக போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் எமக்கு வீழ்ந்த அடிகள் வலியாகவோ வேதனையாகவோ தெரிய வில்லை. அந்தளவுக்கு புரட்சிகர உணர்வும் இலட்சிய வேட்கையும் மேலோங்கி இருந்தது. எனது புரட்சிகர அரசியல் பயணத்தில் முதன்முதலாக ஆளும் வர்க்க அரசு யந்திரத்தின் போலீஸ் மூலம் வீழ்ந்த முதல் தடவையான அடிகளாக அவை அமைந்துகொண்டன. அந்த அடிகளின் அடுத்த நாள் வலிகளும் வேதனை களும் இன்றும் நினைவு கூரத்தக்க அளவுக்கு அமைந்திருந்தது. -
மீண்டும் ஒரு மோதலுக்கான சூழல் உருவாகி வருவதைக் கண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் முழக்கங்கள் இன்றியாழ்நகர்நோக்கிச் செல்ல அனும திக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர். ஊர்வலம் மாலை ஆறரை மணிக்கு யாழ்நகரை வந்தடைந்தது. ஊர்வலம் முடியும் தறுவாயில் மூன்று மடங்காகி இருந்தது. நகரின் எல்லையிலேயே மீண்டும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. யாழ் முற்ற வெளியில் அமைக் கப்பட்டிருந்த மேடையில் கொட்டும் மழையிலும்
உயிர்நிழல் டெயூலை - செப்டெம்பர் 2006.49

Page 50
வடபுலத்தின் பிரதான ஆலயங்களில் ஒன்றான மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் ஆலயப்பிரவேசப் போராட்டம் மூன்று ஆண்டுகளாக இடம் பெற்றது. அக்காலப் பகுதியில் கோவில் பூட்டப்பட்டே இருந்தது. மட்டுவில் அம்மன் கோவிலும் அவ்வாறே தொடர்ந்தது. தொண்டமானாறு செல்வச்சன்னதி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில் போன்றவை போராட்டத்தால் திறக்கப்பட்டன.
பொதுக்கூட்டம் தோழர் சு.வே.சீனிவாசகம் தலைமை யில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் நா.சண்முகதாசன், கே.டானியல், சி.கா. செந்திவேல், ஆகிய மூவரும் உரையாற்றினர். "தமிழ் மக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக சாதியடக்கு முறையின் கீழ் அடிமை குடிமைகளாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெ டுக்க புரட்சிகரப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெ டுக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடுக்கும்நிலையை மாற்றி, அடித்தால் திருப்பி அடிக்கும் நிலையைத் தாழ்த்தப்பட்ட மக்கள் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சாதியத்தை எதிர்த்து தீண்டாமையை ஒழிக்க முடியும். அதற்கான போராட்டங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னெ டுப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டி தலைமை தாங்கும்" இவ்வாறு கட்சியின் சார்பாக பொதுச் செயலாளர் நா.சண்முகதாசன் தனது உரையில் அறைகூவல் விடுத்திருந்தார்.
போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட தலைமைத் தோழர்கள் மூவரும் அன்று இரவு 12 மணியளவில் அடிகாயங்களுக்கு எவ்வித சிகிச்சையும் வழங்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டனர்.
அன்று சாதியத்திற்கு எதிரான அவ் ஊர்வலத்தின் மீது வீழ்ந்த அடியானது "பிட்டுக்கு மண் சுமந்த --சிவன்மீது பட்ட அடி ஜீவராசிகள் அனைத்து-மீதும் வீழ்ந்த அடியாகிக் கொண்டது" என்ற புராணக் கதையில் வருவதுபோன்று சாதிய அடக்குறையின்கீழ் வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியிலான தாழ்த்தப்பட்ட் மக்கள் அனைவர் மீதும் வீழ்ந்த அடியாகிக்கொண்டது. இனிமேலும் சாதிய ஒடுக்குமுறையையும் தீண்டாமைக் கொடுமைகளையும் பொறுக்க முடியாது. எனவே எமது உரிமைகளை போராட்டங்கள் மூலம் வென்றெடுப்பது தான் ஒரே வழி என்றநிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் வருவதற்கு 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி ஒரு உறுதியான திசைகாட்டியாக அமைந்தது.
நாற்பது வருடங்களின் முன்பு இடம் பெற்ற அப் புரட்சிகர எழுச்சிநாள் இன்றும் எனக்கும் என் போன்ற வர்களுக்கும் பசுமையானதாக இருக்கின்றது. அதில்
50'உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

கலந்து கொண்டு இடி தாங்கிகளாக முன்னணியில் தலைமை தாங்கிச் சென்ற தோழர்களில் ஓரிருவரை தவிர ஏனையோர் மறைந்து விட்டனர். அவ்வாறே அவ்வெழுச்சி ஊர்வலத்தில் உறுதியும்புரட்சிகர உணர் வுடனும் கலந்து கொண்டவர்களில் சிலர் மறைந்து விட்டனர். ஆனால், இப்பொழுதும் அவ்வெழுச்சியில் பங்கு கொண்டவர்களில் பலர் மறக்க முடியாத அப்புரட் சிகர அனுபவத்தை நினைவு கூர்ந்து தொடர்ந்தும் அப்பாதையை விட்டு விலகாத நிலையில் செயல் பட்டுக் கொண்டிருக்கும் தோழர்களாக, நண்பர்களாக, இருந்து வருகின்றார்கள். ஒரு சிலர் பாதை மாறிச் சென்று ஒதுங்கிக்கொண்டும் உள்ளனர்.
1966 ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி என்பது அன்று டன்நின்றுபோன ஒரு நிகழ்வு அல்ல. அது இலங்கைத் தமிழர்களின் நீண்ட வரலாற்றில் படிந்து படிநிலைச் சாதிகளாக இறுகிப் பின்பற்றப்பட்டு வந்த சாதிய அமைப்பின்மீது தொடுக்கப்பட்ட மிகப் பெரும் புரட்சி கரத்தாக்குதலாக அமைந்து கொண்டமைதான் அதன் வரலாற்றுமுக்கியத்துவமாகும். அதற்கு முன்பு அவ்வப் போது சாதியத்தை எதிர்த்தும் தீண்டாமையை மறுத் தும் பல்வேறு முயற்சிகள் இடம் பெற்று வந்துள்ளமை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் 1920களில் உரு வாகிய யாழ்ப்பாணம் மாணவர்-வாலிபர் காங்கிரஸ் தீண்டாமைக்கு எதிரான செயற்பாடுகளில் அமைப்பு ரீதியாக செயலாற்றி நின்றமை குறிப்பிடக் கூடிய ஒரு சமூக நிகழ்வாகும். அது தேசியத்தின் முற்போக்கான கூறாகவும் காந்தியத்தை கடைப்பிடித்த போக்காகவும் அமைந்திருந்தது. அதன் பின் கல்வி கற்ற தாழ்த்தப் பட்டவரான யோவல் போல் தலைமையிலான அமைப் பினர் மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ணம் கொண்டோர். அவ்வப்போது சாதிய தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளனர். அதன் பின் வடபுலத்தில் முதல் உருவாகிய இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி. சி. தர்மகுலசிங்கம் தலைமையில் சாதியதிண்டா மையை எதிர்த்து செயல்பட்டிருந்தனர். ஆனால், 1945இல் கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணத்தில் தோழர் மு.கார்த்திகேசன் தலைமையில் ஆரம்பித்த பின் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தமதுஅரசியல் சமூக வேலைகளை விரிவுபடுத்தி முன்னெடுத்தனர். அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சிற்சில சமுக அமைப்புகள் உரிமைகளுக்கான கோரிக்கை களை அவற்றுள் செல்வாக்குடையதும் சில கோரிக் கைகளை அழுத்தியும் முன்வைத்துவந்த அமைப்பாக சிறுபான்மைத் தமிழர் மகாசபை விளங்கியது. அதற்கான பின்புல ஆதரவு சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வந்தது.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை, திருவள்ளுவர் மகாசபை, அருந்ததியர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம் போன்றன தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன. ஆனால், அவற்றினால் முழுமையான உரிமைகளையோ அன்றி அவற்றுக்கான உறுதிமிக்கப் போராட்டங்களையோ முன்னெடுக்க முடியவில்லை. அவ்வப்போது சில சீர்திருத்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்க முடிந்தது. 1957ம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்க
இதழ் 24

Page 51
காலத்தில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் யாழ் நகரின் சில குறிப்பிட்ட தேனீர்க் கடைகள், உணவ கங்கள் சமத்துவமாகத் திறக்க வைக்கப்பட்டன. அதனை முன்னெடுத்தவர்கள் மகாசபையினரும் கம்யூனிஸ்ட் கட்சியினருமேயாவர். அதற்கு அப்பால் நிலைமைகள் மாற்றமடையவில்லை. கடுமையான முயற்சிகளுக்குப் பின்பே நல்லூர் கந்தசாமி கோவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்து விடப்பட்டது. ஏனைய கோவில்களின் கதவுகள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இறுகமூடப்பட்டே இருந்து வந்தது.
இந்நிலையில் தோற்றுவிக்கப்பட்ட 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியைத் தொடர்ந்து வடபுலத்தின் சகல பகுதிகளிலும் சாதிய தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்சியாலும் வாலிபர் இயக்கத்தினாலும் முன்னெடுக்கப்பட்டன. போராட்டப்பாதையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதன் அவசியம் வலியுறுத்தப் பட்டது. இத்தகைய பிரச்சார இயக்கம் சாதி ஆதிக்க சக்திகள் போலீஸ் மற்றும் சாதி வெறியர்கள் என்போரது எதிர்ப்புகள் குறுக்கீடுகள் தடைகள் மத்தியிலேயே முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி எழுச்சியானது அடுத்த கட்டப் போராட்டத்தை நோக்கிநகர்ந்தது. அதாவது நடைமுறையில் எவ்வாறு போராட்டங்களை முன்னெ டுப்பது என்பதாகும். எந்தவொரு சமூக விடுதலை இயக்கமும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது அதன் ஆரம்ப புள்ளியும் அடிப்படையும் சரியான கொள்கையாக அமைதல் வேண்டும். துர நோக்குடனும் யதார்த்தத்திற்கு அமைவானதுமான கொள்கையும் நடைமுறையும் அவசியமானவையாகும். அந்த வகையில் சாதியதீண்டாமைக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களுக்கான கொள்கையும் நடைமுறை களும் கட்சியால் வகுக்கப்பட்டது. அவற்றை பின்வருமாறு தொகுத்துத் கூறலாம். ா தமிழர் சனத் தொகையில் முப்பது வீதத்தினரான தாழ்த்தப்பட்ட மக்கள் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாகவும் சாதிய அடிமைத்தனத்தில் அடிநிலை மக்களாகவும் உள்ளனர். அவர்களது பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டு நிலைகள் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அவர்களே போராட்டங்களின் மையப்பகுதி மக்களாவர் என்பது தெளிவாக்கப்பட்டது. ா மார்க்சிய, லெனினிய அடிப்படையில் வர்க்கப்போரா ட்ட நிலை நின்று சாதிய திண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது உறுதி செய்யப் பட்டது. வெறும் சாதிவாதக் கண்ணோட்டமோ அல்லது பாராளுமன்ற சந்தர்ப்பவாதநிலைப்பாடோ இன்றி அடிப் படை ஜனநாயக மனித உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களையே முன்னெடுப்பது எனத் தீர்மா னிக்கப்பட்டது. ப மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்ட அரசியலையும் வரித்துக் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்கள் இப்போராட்டத்தில், 'உயர் சாதியினர்', 'தாழ்த்தப்பட்டோர் என்ற வகைப்படுத் தலுக்கு அப்பால் அனைத்து ஒடுக்கு முறைகளையும் இதழ் 24

எந்தவொரு சமூக விடுதலை இயக்கமும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது அதன் ஆரம்ப புள்ளியும் அடிப்படையும் சரியான கொள்கையாக அமைதல் வேண்டும்.
துார நோக்குடனும் யதார்த்தத்திற்கு அமைவானதுமான கொள்கையும் நடைமுறையும் அவசியமானவையாகும். அந்த வகையில்,
சாதிய தீண்டாமைக்கு எதிரான
வெகுஜனப் போராட்டங்களுக்கான கொள்கையும் நடைமுறைகளும்
கட்சியால் வகுக்கப்பட்டது.
எதிர்த்துப் போராடுவதில் முன் நிற்பவர்கள் என்ற அவர்களுக்கே இயல்பான நிலைப்பாட்டை அன்றைய புரட்கர கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப்பற்றிநின்றது. ா முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் யார் எதிரி கள் யார்?நண்பர்கள் யார்?என்பது தெளிவாகத்திரமா னிக்கப்பட்டமை மிக முக்கியமானதாக அமைந்தது. "உயர்சாதியினர் எதிர் தாழ்த்தப்பட்டோர் என்ற சாதிவாதக் கண்ணோட்டம் எவ்வகையிலும் மேற்கிளம் பாதவாறு கொள்கை வகுக்கப்பட்டது. இப்போராட் டங்களில் உயர் சாதியினர் எனப்படுவோரில் சாதி ஆதிக்க விரும்பிகளும் அவர்களால் வழிநடத்தப்படும் சாதி வெறியர்களுமே எதிரிகள் என்ற வகைக்குள் அடக்கப்பட்டனர். அதே வேளை உயர்சாதியினர் என்போரின் மத்தியில் இருந்து வரும் ஜனநாயக முற்போக்கு நல்லெண்ணம் கொண்ட சக்திகளை போராட்டத்தின் நட்பு ஆதரவு சக்திகளாக வென்றெ டுத்துச் செல்வது என்றும் வகுக்கப்பட்டது. ா போராட்டத்தின் வடிவம் மக்களை அணிதிரட் மக்கள் போராட்டங்களாகவே முன்னெடுப்பது சட்டப்பூர்வமானவற்றையும் சட்ட மறுப்பானவற்றையும் முன்னெடுப்பது எனவும் தீர்மானமாக்கப்பட்டது. ா கட்சி இப்போராட்டங்களுக்கான தலைமைத்துவத் தையும் வழிகாட்டல்களையும் வழங்கும் அதே வேளை சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தி பரந்து பட்ட நிலையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஓர் வெகுஜன அமைப்பைத் தோற்றுவிப்பது முக்கியமான தாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தோற்றுவிக் கப்பட்டதே. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாகும். ா இப் போராட்டங்களை முதலில் சாதிய தீண்டா மைக் கொடுமைகளை அப்பட்டமாக நடைமுறைப் படுத்தி வரும் தேனீர்க் கடைகள், உணவகங்கள், பெரும் கோவில்கள், மற்றும் பொது இடங்களில் இருந்தே ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ா வெகுஜனப் போராட்டங்களின்போது இழப்புகளும் தியாகங்களும் தவிர்க்க முடியாதவைகள். ஆனால், அநாவசியமான இழப்புகளைத் தவிர்த்து தனிநபர் வீர சாகச வழிகளில் அன்றி மக்கள் மயப்பட்ட போராட் டங்களாக மக்களிடம் தங்கி இருந்து முன்னெடுப்பது
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200651

Page 52
வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக மக்கள் விரோத அல்லது மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எவ்வித போராட்ட நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படாதிருப்பது அவசிய மாக்கப்பட்டது.
மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் ஒரிரு நாட்களில் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தீர்மானிக்கப்பட்டவை அல்ல. தொடர்ச்சியான விவாதங்களும் நடைமுறை அனுபவங்களும் பட்டறிவுகளும் அவ்வப்போது விவாதிக்கப்படுவதன் வாயிலாகவுே சரியானவற்றையும் தவறானவற்றையும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. மக்களிடம் செல்வது மக்களுக்காகச் சேவை செய்வது மக்களி டமிருந்து கற்றுக்கொள்வது நம்மை நாமே மீண்டும் மீண்டும் சுயவிமர்சனம் செய்துகொள்வது என்ற தோழர் மாஒவின் வழிகாட்டல்கள் இப்போராட்ட காலத்தில் எமக்கு பேருதவிபுரிந்தன.
ஒக்ரோபர் 21 எழுச்சி உருவாகிய ஒரு வருட காலத்திற்கு உள்ளாகவே அதன் பரந்து விரிந்த உத்வேகத்தின்காரணமான போராட்டங்கள் இடம்பெற ஆரம்பித்தன. 1967ம் ஆண்டின் நடுக்கூறிலே தேனீர்க் கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் என ஆரம்பித்து விட்டன. குறிப்பாக, சங்கானை தேனீர்க்கடைப் பிரவேசத்தின் மூலம் நேரடியான போராட்ட மோதல் நிலை உருவாகியது. சாதிவெறியர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு சங்கானை நிச்சாமத்தில் சின்னர் கார்த்திகேசு என்பவர் இலக்காகி உயிர் நீர்த்தார். ஒக்ரோபர் 21 எழுச்சியின் முதல் தியாகியான அவரது பெயரிலான அரங்கிலேயே யாழ் நகர மண்டபத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உருவாக்கப் பட்டதன் முதல் மாநாடு 1967ல் நடைபெற்றது. இம்மாநாட்டிலேயே கம்யூனிஸ்ட் ஆதரவாளரும் சாதிய தீண்டாமையை உறுதியாக எதிர்த்து வந்த சமூக அக்கறையாளருமான தோழர் எஸ்.ரி.என்.நாகரட்ணம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவ ராகத் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவர்களாக தோழர்கள் டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.ஏ.சுப்பிர மணியம், நா.முத்தையா (மேன்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இணைச்செயலாளர்களாக மட்டுவில் சின்னையாவும் அல்வாய் கணேசனும் தெரிவாகினர். தோழர்கேடானியல் அமைப்பாளராகத் தெரிவுசெய்யப் பட்டார். முப்பத்தைந்து பேர் வரையான பொதுக்குழுவும் அதற்கான செயற்குழுவும் உருவாக்கப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்பது குறுகிய சாதி-வாரியான அடிப்படையில் அன்றி பாராளுமன்ற நோக்கின் அடிப்படையிலோ அல்லது சலுகைகள் பட்டங்கள் பதவிகள் பெறும் நோக்கின் வழியாகவே உருவாகிய ஒரு அமைப்பு அல்ல. சாதியத்தையு தீண்டாமையையும் எதிர்த்து நிராகரித்த அனை6 ரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த போராட்ட வெகுஜ6 அமைப்பாகவே உருவாக்கப்பட்டது. அதில் பண யாற்றிய அனைவரும் தமக்குமுன்னால் உள்ள சமூக கடமையை பொறுப்புடன் உணர்ந்துமுன்னெடுத்தன அர்ப்பணிப்பு, தியாகம், வீரம், பொதுநலம், கடுமையா போராட்ட உழைப்பு என்பவற்றைக் கூட்டாக வழங் நின்றனர். அக்கால கட்டத்தில், ஒரு புரட்சிகர 52 உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் இப்போராட்டங்களுக்கு எவ்வகையிலும்
ஆதரவோ அனுதாபமோ தெரிவித்து நிற்கவில்லை. பின் வந்த தமிழ்த்தேசிய
தீவிரவாத இளைஞர் அமைப்புகளும் கூட அவ்வெகுஜனப் போராட்டங்களின்
வரலாற்று முக்கியத்துவத்தையோ
அன்றி கொள்கை கோட்பாடு போராட்ட வழிமுறைகள் தந்திரோபாயங்களையோ
முன் அனுபவமாகக் பெற்றுக்கொள்ள
முன் வரவில்லை.
போராட்ட சூழலில் காணக்கூடிய உயர்ந்த பட்ச உணர் வுகளையும் செயல்பாடுகளையும் அவ் இளைமைக் காலத்தில் நானும் என் போன்ற தோழர்களும் அனுபவித்த நினைவுகள் இன்றும் பசுமையானவை களாகவே உள்ளன. அது மட்டுமின்றி இன்றுவரை யிலான எங்களது தொடர்ந்த புரட்சிகர அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சிக்கும் பொது வாழ்வுக்கும் அன்றைய போராட்ட அனுபவங்களே எமது தொட்டில் களாகவும் அமைந்திருந்தன என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.
சங்கானைப் போராட்டத்தை தொடர்ந்து சிறு பொறி காட்டுத் தியானது போன்று சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி, பண்டத்தரிப்பு, கரவெட்டி, நெல்லியடி, உரும்பிராய், மருதனார்மடம், சுன்னாகம், காங்கேசன்துறை, தெல்லிப்பளை, சித்தன்கேணி, வட்டுக்கோட்டை உட்பட யாழ்நகரின் சமத்துவம் வழங்கப்படாதிருந்து வந்த தேனீர்க் கடைகளில் சமத்துவத்திற்கான போராட்டங்கள் இடம் பெற்றன. இவ்வாறான சமத்துவக் கோரிக்கைகளையும் ஜனநாயக மனித உரிமை வற்புறுத்தல்களையும் சாதி ஆதிக்க சக்திகள் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. சங்கானை, கொடிகாமம், மந்துவில், அச்சுவேலி, கரவெட்டி - கன்பொல்லை, நெல்லியடி போன்ற பிரதேசங்களில் போராட்டங்கள் நேரடி மோதல்களாகி நீடித்துச் சென்றன. முன்னின்று போராடிய போராளி களில் 15 பேர்வரை போராட்டத்தின்தியாகிகள் ஆனார் கள். சிறைகளில் பலர் அடைக்கப்பட்டனர். பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை செய்யப்பட்டனர். பலர் படுகாயங்கள் பட்டனர். பெண்கள் பலர் போராட்டங் களில் முன் நின்றனர். அதேவேளை சாதி வெறியர் களும் தாக்கி அழிக்கப்பட்டனர்.
மேலும் வடபுலத்தின் பிரதான ஆலயங்களில் ஒன்றான மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் ஆலயப் பிரவேசப் போராட்டம் மூன்று ஆண்டுகளாக இடம் பெற்றது. அக்காலப் பகுதியில் கோவில் பூட்டப்பட்டே இருந்தது. மட்டுவில் அம்மன் கோவிலும் அவ்வாறே தொடர்ந்தது. தொண்டைமானாறு செல்வச்சன்னதி கோவில் வல்லிபுர ஆழ்வார் கோவில் போன்றவை போராட்டத்தால் திறக்கப்பட்டன. வேறு சிற்சில கோவில்கள் போராட்ட வேகம் காரணமாக சமாதான மாகவே திறந்துவிடப்பட்டன.
இதழ் 24

Page 53
சாதியத்தின் பேரால் இரண்டாம் தரமாக நடத்தப்பட்டு வந்த மக்களுக்கு ஒரு சமத்துவமான சமூக
அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதில் ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்றுப் பங்களிப்பு என்றும்
போற்றுதலுக்கும் நினைவு கரலுக்கும்
உரிமையுடையதாகும்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை வழி காட்டலில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுத்த போராட்டங்கள் பல்வேறுபட்ட அனுப வங்களையும் பட்டறிவுகளையும் தந்தது. சுமார் ஐந்து வருடங்களாக (1966 - 1971) இடம் பெற்ற அவ் வெகு ஜனப் போராட்டங்கள் தமிழர்கள் மத்தியிலான சாதிய தீண்டாமை வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இப்போராட்டங்களின்போது தாழ்த்தப் பட்ட மக்கள் மத்தியில் அரசியல், சமூக, பண்பாட்டு துறைகளில் அதிகபட்ச விழிப்புணர்வுகள் ஏற்பட்டன. கலை இலக்கியங்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டி நின்றன. சிறுகதைகள் , நாவல்கள், கவிதைகள் என்பன இலக்கியப் பணி ஆற்றின. சங்காரம், கந்தன் கருணை, கடுழியம், குடிநிலம் போன்ற நாடகங்கள் போராட்டங்களை மையப்படுத்தியவைகளாக அமைந்திருந்தன. போராட்டங்களின் உச்சநிலையான 1969ம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தனது இரண்டாவது மாநாட்டை தியாகி இரத்தினம் அரங்கில் யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. அதனை யொட்டி நடாத்தப்பட்ட ஒவியக் கண்காட்சி சாதியத் தீண்டாமையை அம்பலப்படுத்திய ஒன்றாக அமைந்தி ருந்தது. இக் கண்காட்சி கொழும்பில் மூன்று நாட்களுக்கு மேல் இடம்பெற்றமை பெரும் தாக்கத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்திநின்றது.
இவ்வாறு ஒக்ரோபர் 21 எழுச்சியும் அதன் வழியிலான வெகுஜனப் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களின் சாதியத் தீண்டாமை வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்து கொண்டன. ஆனால், தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் இப் போராட்டங்களுக்கு எவ்வகையிலும் ஆதரவோ அனுதாபமோ தெரிவித்து நிற்கவில்லை. பின் வந்த தமிழ்த்தேசிய தீவிரவாத இளைஞர் அமைப்புகளும் கூட அவ்வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்று முக்கியத்துவத்தையோ அன்றி கொள்கை கோட்பாடு போராட்ட வழிமுறைகள் தந்திரோபாயங்களையோ முன்அனுபவமாகக் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால், இன ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடும் ஒரு புதிய சூழலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவிப்பதற்கு சாதிய தீண்டாமைக்கு எதிரான புரட்சிகர வெகுஜன போராட்டங்கள் முன்னுதார ணமாகக் கொள்ளப்பட்டது என்பதை மறுக்க முடியாது. 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியும் அதன் ஊடான வெகுஜனப் போராட்டங்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிய தீண்டாமை வரலாற்றில் மறுக்கப் பட்ட சமத்துவ ஜனநாயக மனித உரிமைகளை
இதழ் 24

வென்றெடுத்து நிலை நாட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைத்தனம் நிறைந்த துன்பதுயர வாழ்வில் இருந்து முடிந்த அளவுக்கு விடுபட வழி வகுத்தது. பொருளாதார, கல்வி, சமூக முன்னேற்றங் களுக்கு கட்டியம் கூறிநின்றது. சாதியத்தின் பேரால் இரண்டாம் தரமாக நடத்தப்பட்டுவந்த மக்களுக்கு ஒரு சமத்துவமான சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப் பதில் ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்றுப்பங்களிப்பு என்றும் போற்றுதலுக்கும் நினைவுகூரலுக்கும் உரிமை யுடையதாகும்.
இருப்பினும் நாற்பது ஆண்டுகள் கடந்த நிலை யிலும் சாதியம் தமிழர்கள் மத்தியில் இருந்து முற்று முழுதாக அழிந்து விடவில்லை என்ற சமூக யதார்த் தத்தை எதிர்கொண்டேயாக வேண்டும். பொருளாதார மாற்றங்களும் தமிழ்த்தேசியப் போராட்ட சூழலும் சாதியம் அற்றுப்போய் விட்டது என்ற தோற்றத்தை வழங்க முற்பட்டாலும் உண்மைநிலை அவ்வாறில்லை என்பதை நடைமுறை வாழ்வு எடுத்துக் காட்டி நிற்கின்றது. நிலவுடைமைக் காலத்தில் மிக இறுக் கமாக கட்டியெழுப்பட்ட இந்து மத சாதிய அமைப் பிற்கான அடிப்படைக் கருத்தியல் நீடித்துநிலைக்கும் வரை சாதியத்தை ஒழிக்கவியலாது. வர்க்கப் போராட்ட அடிப்படையில் சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் வாயிலாகவே சாதியத்தை வேரனுக்க முடியும், அதற் கான ஒரு வரலாற்று முன்னுதாரமாக ஒக்ரோபர் 21 எழுச்சியை எடுத்துக் கொள்ளமுடியும்.
தமிழ்த்தேசிய இன விடுதலைப்போராட்டம்முன்னெ டுக்கப்படும் நெருக்கடி மிக்க இன்றைய சூழலில் கொள்கை, குறிக்கோள், போராட்ட வழிமுறைகள், எதிர்காலம் போன்ற பல முனைகளிலும் ஆழ்ந்த பார்வைகள் செலுத்தப்படும் சூழல் தோன்றியுள்ளது. தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் இருந்து வரும் வர்க்க, சாதிய, பெண்ணடிமை மற்றும் பிரதேச முரண்பாடுகள் யாவற்றையும் கைவிட்டு தமிழ்த் தேசியம் என்பதன் கீழ் அதனைத் தாரக மந்திரமாக கொண்டு தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சில அதிமேதைகளான புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இக்கூற்று சமூக முரண்பாடு களையும் அவற்றின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்குகளையும் அவற்றின் எதிர் விளைவுகளையும் கணக்கில் கொள்ளாத குறுகிய பார்வையே தவிர வேறில்லை.
எனவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உரிய பாதையில் பயணிக்க வேண்டுமாயின் உள் முரண்பாடுகள் உரியவாறு அடையாளம் காணப் படுவதும் அவற்றைத் தீர்ப்பதற்குரிய அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதும் அவசியமாகும். அத்துடன் பரந்துபட்ட ஐக்கியமும் மக்கள் சார்பு போராட்ட தந்திரோபாயங்களும் பின்பற்றப்படல் வேண்டும். அதற்கு ஒக்ரோபர் 21 எழுச்சி காட்டிய திசையும் பாதையும் பயணமும் பயன் உள்ளவாறு படிக்கப்படல் வேண்டும்.
12.09, 2006 கொழும்பு
உயிர்நிழல் டெயூலை - செப்டெம்பர் 200653

Page 54
உண்மையில் மரணித்தவரின் வீட்டுக்குத் தொலைபேசி எடுத்து எவ்வாறு அஞ்சலிசெலுத்துவது என்பது தொடர்பாக நான் இன்னும் குழம்பியே போய் இருக்கிறேன்.
"ஹலோ" என்றவுடன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது நடைபெற்ற மரணத்துக்கான அஞ்சலி என்பதாகவா? 6Ti sig?
இது ஒரு சங்கடமான நிலைமைதான். அப்படி பேசும்போது எதிர்முனையில் இருப்பவர் அழுது விட்டால் எப்படி அடுத்த கதையை ஆரம்பிப்பதுகுறித்து எனக்கு இன்னும் மனதுக்கு விளங்கவில்லை.
துக்கப்பட்டுக் கிடக்கும் உறவினர்களை மேலும்
துக்கப்பட வைப்பதாகவே விசாரிப்பு அமைந்து விடுமோ எனும் பயம் எனக்கு இருக்கிறது.
அதனால்தான் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளாமல் புஷ்பராஜாவின் மகன் விதுரனுக்கு ஈமெயில் மூலம் துக்கச்செய்தி அனுப்பினேன்.
அதனால்தான் லசுஷ்மியிடம் நான் தொலைபேசியில் துக்கம் விசாரிக்கவில்லை.
责安兹兹赛安安波克
புஷ்பராஜா இறந்தபோது நான் மனதளவில் மிகுந்த பாதிப்பை உணர்ந்தேன். நித்தி,மீனா எல்லோருமே மிகுந்ததுக்கமன்டந்திருந்தார்கள்.
ஃபிராங்போட் ரஞ்சினி அழுது கொண்டேயிருந்தாள். முதலில் இந்த சேதியை சொன்னது ரஞ்சினிதான்.
உடனடியாக நான் சார்ந்த தொலைக்காட்சியில் (நித்தி எழுதித் தந்தார்) செய்தியை போட்டுவிட்டு பின்னர் வ. ஐ. ச ஜெயபாலனுடையதும் என்னதும் ரஞ்சியுடையதும் கவிதை களோடு புஸ்பராஜா தொடர்பான தகவல் களையும் சேர்த்து ஒரு அஞ்சலிநிகழ்ச்சி
54|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 

செய்தேன். இதுவெல்லாம் புஸ்பா என் மீது கொண்ட கரிசனைக்கு சமமாகாது.
1997ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க புஸ்பராஜா யோசித் திருக்கிறார். தொண்ணுாறுகளில் இருந்து புலம்பெயர் சஞ்சிகைகளில் எனக்கிருந்த தொடர்பின் காரணமாக என்னை அழைக்க யோசித்தி ருப்பார் என்று நினைக்கிறேன்.
எனக்கு எனது பூமி தொடர்பாகவும் ஒழிக்காமல், பயப்படாமல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு புலம்பெயர் சஞ்சிகைகள்தான் திறந்த வழிகளைத் தந்தன.

Page 55
1990ம் ஆண்டிலிருந்து புலம்பெயர் சஞ்சிகை களுடனான பரிச்சயம் ஏற்பட்டது. யார் யார் என்ன இயக்கம் என்று தேடாமல் எல்லாச் சஞ்சிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதியனுப்புவேன். கிட்டத்தட்ட 25 சஞ்சிகைகள்.
1997இல் பாரிஸ் 0க்கு என்னை அழைப்பதற்கு ஸ்பொன்ஸர் லெட்டர் எல்லாம் அனுப்பிவிட்டார் புஸ்பராஜா. மேரி லெட்டர் கேட்டார்கள். அது வரத் தாமதமானதில் பிரான்ஸ் பயணம் தடைப்பட்டது.
நான் லண்டனில் இருக்கும்போதும் பிரான்ஸில் இருந்தபோதும் தொலைபேசி மூலமாக என்னுடன் தொடர்பு கொண்டு உரையாடியபடியே இருப்பார். இப்பொழுதும் காதுக்குள் கேட்கிறது அவரின் குரல்.
பாரிஸ் இலக்கியச் சந்திப்புக்கு வர முடியாமல் போன பின்பு ஜெர்மனியில 1998 இல் நடைபெற்ற இலக்கியசந்திப்புக்கு என்னை அழைக்க தொடர்ந்தும் முயற்சி செய்தார் புஸ்பராஜா,
பாரதி - ரஞ்சினி ஊடாக அந்த வேலைகள் நடந்தது. 1998 மே மாதம் 30ம் திகதிதான் நான் முதன்முதலில் புஸ்பராஜாவை ஜெர்மனியில் சந்தித்தேன். அதுவரைக்கும் கடிதத் தொடர்பு மட்டும்தான்.
ஜெர்மனியில் இலக்கியச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் என்னை பாரிஸ் 0க்கு கொண்டுபோய் எல்லா இடங்களையும் அக்கறையோடுகாண்பித்தார். மிகவும் அக்கறையோடுநண்பர்களை அறிமுகப்படுத்தினார்
பின்னர் நான் லண்டன் வந்து தீபம் தொலைக் காட்சியில் இவ்வளவு பிரபல்யமாவதற்கு காரணமாக இருந்தவர் புஸ்பராஜா.
 

தன்னை விட மற்றவர்களின்மேல் மிகவும் கரிசனை கொண்டவர் புஸ்பராஜா. அந்தநல்லெண்ணத்தோற்றம் என்னுள்ளே பதிந்து போய்க்கிடக்கிறது.
இறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பும் என்னை பாரிஸ் இலக்கியச் சந்திப்புக்கு வருமாறு கூறி எனக்கு ஸ்பொன்ஸர் லெட்டர் லகூடிமியைக்கொண்டு அனுப்பி என்னை அழைப்பதற்கு முயற்சி செய்தார் ஆனால் அது லண்டனில் இருந்த போது கைகூடவில்லை.
புஸ்பாவின் நோய் பற்றி கேள்விப்பட்ட உடனேயே புஸ்பா மரணமாகி விடக்கூடாதே என்ற எண்ணம் மனதில் வந்து போனது. ஆனந்த விகடனில் 'விடை பெறக்காத்திருக்கிறேன்' என்ற புஸ்பராஜாவின் பேட்டியை பார்த்ததன் பின்பு எனக்குள் பயமாகவே இருந்தது. மரணம் வரும் என்பது எவ்வளவு உறுதியானது.
费 紫 * 紫 费 *
கலைச்செல்வனை "ப்ராங்போட் நகரில் இலக்கியச்சந்திப்பின்போதுகண்டுகதைத்தது நேற்றுப் போலுள்ளது. அதன்பிறகு கலைச்செல்வனின் வீட்டுக்கு புஸ்பராஜா கூட்டிச் சென்றது. அங்குலக்ஷமி கலைச்செல்வனோடு இரவுணவு உண்டது, இலக்கியம், அரசியல் கதைத்தது என்று எல்லாம் அப்படியே மனதினுள்ளே பத்திரமாக இருக்கிறது.
கலைச்செல்வன் லண்டன் வந்த போதுநான் வந்த அனுபவப்பயணமாகிய கென்டயினர் பயணத்தை எழுதி கலைச்செல்வனிடம் கொடுத்தேன் அது வித்தியா சமாக இருக்கிறது என்று பாராட்டிவிட்டு பிரான்ஸ் கொண்டு போனார். அது எக்ஸிலில் வெளிவந்தது. அதற்குப் பிறகு இலங்கையில் பல பத்திரிகைகள் அதனை மறுபிரசுரம் செய்தன.
நான் பாரிஸில் இருந்தபோதும் லண்டன் வந்தபோதும் என்னை எழுதச் சொல்லுவார். கட்டிப்பிடித்து கொஞ்சி பொய்மையில்லாத ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்தி அரவணைப்பதில் கலைச்செல்வனைப் போல யாரையும் நான் பார்க்கவில்லை.
உயிருடன் நெருக்கமாக எம்மோடு பழகியவர்கள் எம்மோடு ஒரே மேசையில் இருந்து உணவருந்தியவர்கள் எம்மோடு கூட இருந்து அன்பு செலுத்தியவர்கள் கண் முன்னால் மரணமாகிப்போவது எவ்வளவு வேதனையானது. எனது மனதில் பதிந்து போன இரண்டு நண்பர்களின் மரணங்களிவை,
உண்மையிலேயே இவர்களோடு கூட வாழ்ந்தவர்களுக்கு எப்பேர்ப்பட்ட இழப்பு இது. இப்படித்தானே இருக்கும் எம்மோடு வாழ்பவர்களுக்கும் எமது மரணம்.
இளைய அப்துல்லாஹற் - இலங்கை
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 55

Page 56
கிடைசி அராபியப்புகலி-அவன் உண்மையில் ஒரு பேர்பேர் - இன்று பிரெஞ்சு மண்ணை விட்டுப்புறப்பட்டு விட்டான்.
திருவாளர் மொகமட் லெமிகிரிக்கு பிரான்ஸ் நாட்டின் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்து, உத்தியோகபூர்வமாக வழியனுப்புவதற்கு, முதல மைச்சரும் அவருடன் சேர்ந்து உள்நாட்டமைச்சரும் வருகை தந்திருந்தார்கள். மொகமட் கலங்கவோ, கோபப்படவோ இல்லை. அவனுடைய சொந்த நாட்டுக்குநிரந்தரமாகத்திரும்பிப் போகும் இயல்பான மகிழ்ச்சியில் இருந்தான். அவனுக்கு அன்பளிப்பாக மயிரினாலான ஒட்டகப் பொம்மை ஒன்றும் ஒரு பக்கம் நீலம்-வெள்ளை-சிவப்பும் மறுபக்கம் சிவப்பின் நடுவே ஒரு பச்சை நட்சத்திரமும் போட்ட ஒரு சிறுகொடியும் கிடைத்தன. அவனிடம் இருந்து பெரிய சிரிப்பொன்றை வருவிப்பதற்காக அவனைக் கட்டாயப்படுத்திய தொலைக்காட்சிக் கமராக்களுக்கும் புகைப்படப் பிடிப்பாளர்களுக்கும் முன்பு குற்றவுணர்ச்சி இல்லாமல் இருந்தான் அவன். அட்டகாசமாகச் சிரித்தபடி அந்த இரட்டைக்கொடியைத் தனது பழைய கோட்டின் சட்டைப்பையினுள் திணித்தான் அவன். பிரான்ஸ் ஆசுவாசம் கொள்கிறது! எந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தன்னைத் தயார்ப்படுத்தாமல் இருந்ததோ, அவற்றை இனித் தீர்க்கத் தேவையில்லை.
அது தன்னுடைய காலனித்துவ வரலாற்றின் கனத்த பக்கம் ஒன்றைப் புரட்டுகிறது. இப்போது ஒரு மந்திரவாதியின் சொடுக்கைப் போன்ற ஒரு அசைவின் மூலம் பிரான்சில் ஒரு நுாற்றாண்டு கால அராபிய வியாபகம் துடைக்கப்பட்டு விட்டது. அடைப்புக் குறி மூடப்பட்டது.
காரசாரமான சமையலின் மசாலாமணங்களினால் இனி நாடு குழப்பப்பட மாட்டாது. விநோதமான கலாச்சாரம் கொண்ட மக்கள் கும்பலினால் இனிநாடு ஆக்கிரமிக்கப்படமாட்டாது. தங்களுடைய அதிருப் தியை வெளிப்படுத்துவதற்கு இனி இனவாதம் அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கப் போவ தில்லை.
ஆபிரிக்கர்கள், ஆசியர்கள் மற்றும் சில கிழக்கை ரோப்பியக் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றார்கள்.
56|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

ஆனால் இவர்கள் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவ தில்லையாக்கும். ஆபிரிக்கர்கள் தங்களை அமைதி யாக வைத்திருக்கின்றார்கள். ஏனெனில் அராபியர் களைப் போல்தாங்களும் துன்பம் அனுபவிக்க நேரிடும் எனும் பயத்தில். பாழடைந்த கட்டிடங்களில் சட்டத் திற்குப் புறம்பாக குடியேறிய இவர்களில் அநேகமா னவர்கள் அவர்களுடைய குழந்தைகளுடன்நித்திரை யில் கருகிப் போனார்கள். ஆசியர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் தொந்தரவில்லாமல் தங்களு
டைய பாட்டில் இருக்கிறார்கள்.
இலட்சக் கணக்கான மொரோக்கர்களின் வெளியேற்றம் பற்றிக் கவலைப்படும் ஒன்றே ஒன்று தீவிர வலதுசாரிக்கட்சிதான். அவர்களின் அதியுயர் பெறுமதி வாய்ந்த ஆசைகளில் ஒன்று நிறைவேற்றப்
இதழ் 24

Page 57
தனது Harrou MOnde
இ
960) பாரிஸ நடைே எதிர்ப் தகார் பென் ஜெலுன் அல்ஜி
பிரெஞ்சு-மொரோக்க எழுத்தாளர், La Nut கருத் Sacree என்னும் நூலுக்கு 1980இல் கிடைத்த ஆட்சி GOncourt விருதுக்குப் பின்பு, பரவலாக பிரான்சில் தொட அறியப்பட்டவர். இவரது
இவர் 1944இல் இல் FeSஇல் பிறந்து தன் lumier இளமைக்காலத்தை Tangerஇல் வாழ்ந்தார். இவர் நேர்ந் தத்துவவியலாளர். இவர் பல்கலைக்கழக சமூக
பட்டதைக் கண்டு திருப்தியடையும் அதேவேளை, அதனுடைய வேலைத்திட்டத்தின் பாரியபகுதி ஒன்று கழன்று போய்விட்டதை உணருகின்றது. அவர்கள் இருந்ததனால், அது தன்னை முன்னேற்றவும், தேர்தல் அபிப்பிராய வாக்கெடுப்புகளில் முன்னிடத்தை வகிக் கவும், ஏன் இன்னும் 2002ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்றுவரையிலும் வரவும் முடிந்திருக்கிறது. தங்களை ஒரு அரசியல் சக்தியாகத் தக்க வைத்துக் கொள்வதற்கு. வட ஆபிரிக்கப் புகலிகள் இல்லாதபோது, அவர்கள் பிரெஞ்சு மக்க ளுக்கு இப்போது எந்த வெருளியைக் காட்சிப்படுத்து வார்கள். கோழைத்தனமும் துவேஷமும் கொண்ட கட்சியானது திடீரென்று கையறு நிலைக்குப் போயிற்று. அதனுடைய திடீர்மாற்றத்துக்கும் திடீர் மனிதாபிமானத்துக்கும் இது விளக்கமளிக்கும். அக்கட்சியின் ஆதரவாளர்கள் சில கூட்டங்களை ஒழுங்கு செய்தார்கள், முக்கியமாக மார் செய் நகரத்தில், அவர்கள் தாங்கியிருந்த பதாகைகளில் இப்படி எழுதியிருந்தார்கள்:
"நாங்கள் மிகவும் நேசிக்கும் எங்களுடைய அராபியர்களை எங்களிடம் திருப்பித்தாருங்கள்",
"பிரான்ஸ் முன்பிருந்ததுபோல் இப்போது இல்லை. அங்கு அராபியர்களின் மூலைக்கடைகள் இல்லாத குறை தெரிகின்றது" V
பழைய சுவரொட்டியொன்றின் "3 மில்லியன் வேலையற்றவர்கள் = 3 மில்லியன் மேலதிக அராபியர்கள்" என்று எழுதப்பட்டிருந்ததைக் கிறுக்கிவிட்டு"அராபியர்கள் தேவை" என்று சேர்க்கப் பட்டது. இன்னொரு முகம் தெரியாத கரமொன்று "துவேஷம் தேவை" என்றும் வரைந்தது.
இதழ் 24
 

வராக இருந்தபோது இராணுவமுகாமில் 18 மாதம் |க்காவலில் இருந்தார். அங்குதான் இவர் எழுதத் ங்கினார். 71இல் பாரிஸ்இற்கு வருகிறார். அங்கு அவர் சமூக ானத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடருகிறார். அவர் டைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு மூன்று வருடங்களில் ம் தனது நாட்டுக்குத் திரும்புவதாகத்தான் இருந்தார். 1972இல் முதலாவது கவிதைத் தொகுப்பையும் அதைத் தொடர்ந்து da என்னும் நாவலையும் வெளியிடுகிறார். அடிக்கடி Le இல் எழுதி வந்தார். வர் ஒரு சமூக அக்கறையுள்ள புத்திஜீவியாகத் தன்னை யாளப்படுத்துகிறார். இவர் இங்குள்ள இனவாதம் மற்றும் ன்ெ சுற்றுநகரங்களில் (நிறவாதத்தை மையப்படுத்தி) பெறும் பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்து தனது பைத் தெரிவித்து வந்திருக்கிறார். செச்செனியா மற்றும் ரியா தொடர்பாகக்கூட இவர் மிகவும் அக்கறையாக துகள் தெரிவித்திருக்கிறார். ஆனால் இரண்டாம் ஹசனின் யின் போதிருந்த மொரோக்கோவின் இருண்ட காலங்கள் ர்பாக எந்த அபிப்பிராயங்களையும் தெரிவிக்கவில்லை. 5 955 QLD6T60TLD où6)(560)Luu Cette aveuglante absence de நூல் வெளியீட்டின்போது நிறைய வசைகளைப் பெற தது. இவருடைய அநேகமான நூல்கள் மொரோக்கோ த்தினரில் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நாட்டைத் துப்புரவு செய்வதற்கு சில மாதங்கள் எடுத்தன. ஆனால், எல்லாரும் ஏற்றுக் கொண்டது : கிட்டத்தட்ட ஒழுங்கான நிலைமைகளில் எல்லா விடயங்களும் நடந்தேறின. உண்மையில், புகலி களிற்கு அங்கு தெரிவு இருக்கவில்லை. ஒன்றில் போவதை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது'சிலிநாட்டின் சந்தியாகோ' என்று பட்டப் பேரிடப்பட்ட, ஒருவிதமான வதைமுகாம் போன்ற, வாழ்நாள் தடுப்புக் காவல் மையமொன்றில் இருத்தல் என்பதாகத்தான் இருந்தது. எல்லாமே தயாராக இருந்தன; தடித்த சீலைகளினால் மூடிக் கட்டப்பட்ட லொறிகள், சாம்பல் நிறக் கூடாரங் கள், முட்கம்பிகள், காவலாளிகள், சவம் மூடும் வெண் சீலைகள் என்று. இந்தப் பயணங்கள் பெரும்பாலும் இவழ்டப்பட்டவைதான். அவர்களது நாடு பற்றிய அவர்களது திமிரினதும் பெருமையினதும் பெயரால் தான்! கெளரவம் வெகுதுாரத்தில் இல்லை. மூக்கு நுனியில்தான் இருக்கிறது.
இடதுசாரிகளினதும், தீவிர இடதுசாரிகளினதும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த சில முக்கியமானவர்களினதும் வழமையான எதிர்ப்புகள், அரசாங்கத்தைப் பணியச் செய்யவில்லை. முதல மைச்சர் சொன்னதுபோல் அரசாங்கம் நிமிர்ந்து நேராக சரியாகத்தான் இருந்தது.
உள்நாட்டமைச்சர் பிரகடனப்படுத்தினார்: "அல்ஜீரிய மொழியில் எழுதப்பட்ட இந்தப்பக்கத்தைப் புரட்டுவதில் இறுதியில் பிரான்ஸ் வெற்றி கண்டிருக் கின்றது" அந்த மொழி எது என்று உள்நாட்ட மைச்சரிடம் ஒருவர் கேட்டபோது அதற்கு அவர், "அது எங்களுக்குச் சொந்தமாக இருந்து நாங்கள் தொலைத்த ஒரு பூமியின்மீது சிந்திய குருதியின் உயிர்நிழல் யூெலை - செப்டெம்பர் 2006 57

Page 58
மொழி! காலனித்துவத்தின்நன்மைகளை விசேடமாக அனுபவித்த ஒரு பூமி" என்று பதிலளித்தார்.
இந்தப் புறப்பாடுகள் நாட்டில் மிகத் தீவிரமான பிரச்சினைகளைத் தோற்றுவித்தாலும், அரசாங்கம் எந்தவிதமான பதற்றங்களிற்கான அடையாளங் களையும் வெளித்தெரிய விடவில்லை. உண்மையில், கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருந்தன, தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டி இருந்தன. கம்பெனிகள் தங்களுடைய வேலையாட்களில் கணிசமானவர்களை வேலைநீக்கம் செய்யவேண்டி இருந்தன, இறைச்சிக் கடைகளும் மளிகைச் சரக்குக் கடைகளும் மறைந்தன, அவற்றில் சில முடிதிருத்து நிலையங்களாகவும் தொலைபேசி விற்பனை நிலையங்களாகவும் உருமாறின, குப்பைகள் வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே இனி அகற்றப்படும், வேலையாட்களில் முக்கால்வாசிப்பேர் இல்லாததால் ருவாஸி விமானநிலையம் மெதுவாக இயங்கியது. ஆஸ்பத்திரிகளில் பணியாளர்களினதும் வைத்தியர் களினதும் பற்றாக்குறை.
ஆனால், நாடு நன்றாக இருக்கின்றது. எத்தனையோ விடயங்கள் இல்லாத குறை இருக்கின்றது.
ஆனால் பிரான்ஸ் சுதந்திரமாக இருப்பதான அல்லது பிரதானமாய் விடுதலையடைந்து விட்டதான உணர்வில் இருக்கின்றது.
போகட்டும், இந்தத் தியாகங்கள் தேவைதான். இறுக்கமான வலதுசாரி அமைப்பின் தலைவர் ஒருவர், மூக்காற் பேசியபோது சொன்னதுபோல், "ஒன்றில் இந்தப் பெருவாரியான வெளியேற்றம், பிரான்ஸின் திடுக்காட்டம், அல்லது எங்கள் நாட்டின் இஸ்லாமிய மயமாக்கல் என்பதாகத்தான் இருந்திருக்கமுடியும்"
இப்போது தொடக்கம், வடஆபிரிக்கப் புகலிகள் இங்கில்லாதிருந்த காலத்தைப் போல், வேலையில் மீண்டும் ஈடுபடுவதற்கு சனங்கள், கற்றுக் கொள்கி றார்கள். பிரெஞ்சு, மக்கள் தங்களுடைய பொருளா தாரத்தை மறுபடியும் ஆரம்பிப்பதற்குத் தேவையான சக்தியை மீளப்பெற்றுக் கொண்டார்கள். முயற்சி செய்வதற்கும் வளைந்து கொடுப்புக்கும் பழகிக் கொண்டார்கள். 35 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்வதென்பதைக் கைவிடுவதற்குரிய தைரியத்தைப் பெற்றிருந்தார்கள், அரசியற் கட்சிகள் நம்பிக்கைக்குரியவைகளாகின, தொழிற்சங்கங்கள்
W باد، ماه ேேகாr, 6789 جJ/ލިޑ
T"~
58|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

சமரச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. வேலைநிறுத் தங்கள் இல்லை. எதிர்ப்பு ஊர்வலங்கள் இல்லை. மனிதக் காட்சியானது வெள்ளையாக, நம்பிக்கை யானதாக, அற்புதமாக தோற்றமளித்தது. பாரிஸ் வாசிகள் இப்போது, குறிப்பாக நாகரிகமாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள். காரோட்டிகளை இம் சிக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் நகரசபைக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. வடஆபிரிக்கர்கள் தங்கள் முயற் கூடுகள் போன்ற இருப்பிடங்களை விட்டு வெளியே வருவதற்குத் துணிவில்லாமல் இருந்த காலத்தில் இருந்தது போன்ற பிரான்ஸிற்கே இப்போது அது திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாமே நன்றாக இருக்கிறது அல்லது ஒரளவுக்கு.
ஒருவிதமான சோகம் காற்றில் கவிந்திருந்தது. ஆனால் இதற்கான காரணத்தை புகலிகளின் வெளியேற்றத்தின்மீதா அல்லது நிலையற்ற காலநிலையின்மீதா சுமத்துவதென்பது தெரியவில்லை.
சம்பவங்கள் நடைபெற்றன. தொலைக்காட்சியினதும் வானொலியினதும் ஊடகவியலாளர்கள் தங்களுடைய வசனங்களுக்கிடையில் இடைவெளிகளை விட்டனர்.
ஒட்டைகள். குறைகள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது விளங்கவில்லை. அவர்களுடைய பேச்சுக்களில் சொற்கள் அல்லது முற்றுமுழுதான சொற்றொடர்கள் இல்லாதிருந்தன.
அவர்கள் மன்னிப்புக் கோருகின்றார்கள். பின்பு தொடர்கிறார்கள், இடையில் ஏதோ ஒரு இருமல் அல்லது தவறுதலான மறதி வந்தது என்பதுபோல், இந்தக் குழப்பமானது எல்லோரையும், ஆண்களைப் போல் பெண்களையும் தொற்றிக் கொள்கிறது.
எழுத்துத்துறையை எடுத்துக் கொண்டால் இந்தத் தொலைந்த சொற்கள், சுற்றிவளைத்த விபரிப்புகளால் பிரதியீடு செய்யப்படுகின்றன.
இப்படி: "கோடைகால ஆரம்பத்தை உணர்த்தும் இந்தப் பழம் (1) சந்தைக்கு வரவில்லை. அதை எப்படிச் சொல்வதென்று எனக்கு இப்போது மறந்துவிட்டது"
அல்லது இப்படி: "------- (2) பாவனை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்"
இதழ் 24

Page 59
-(3) பாலுடன் கலப்பது ஈரலுக்கு கூடாது"
"மிருதுவான, நிறைய ருசிகொண்ட, இந்த சிவப்பு நிற வாசனைத் திரவியம் (4) பிரான்ஸின் மளிகைக் கடைகளில் இப்போது கிடைக்கவில்லை"
"சிறுவர்கள் அதிகளவில் ------- (5) குடிப்பது நல்லதல்ல"
"சாப்பாட்டின் இறுதியில் ஒரு-(6) சாப்பிடுவது சமிபாட்டுக்கு உதவும் என்று கருதப்படுகிறது."
"வங்கிகள் இனிமேல் ---------(7) களிற்கு பணம் கொடுப்பார்கள்"
ஜொனி துரதிர்ஷ்டக்காரன். அவனுடைய கடைசி இசை நிகழ்ச்சியின்போது, அவனுடைய - (8) களவாடப்பட்டு விட்டது"
"ஆசிரியர்கள் இனி --------- (9)வையோ ---------
(10)வையோ கற்பிக்கமாட்டார்கள். சொற்கள் பறந்து போய்விட்டன்"
"கவனம்" உள்நாட்டமைச்சர் சொன்னார் "இது செய்பவர்கள், எப்படிச் சொல்வது, சரி, முஸ்லிம் களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் -- (11) செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்" -
"பிரசித்தமான பாடகர்கள் உருவாகும், பெரும் இசைவிழாக்கள், கச்சேரிகள் நடைபெறும் பிரமாண்ட மான மண்டபம் ------ (12) திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது"
"- (13) இற்குப் பிறந்தவர்கள் தங்களுடைய தாயாரின் குடும்பப் பெயரை வைத்திருப்பதற்கு உரிமையுடையவர்கள்"
"France Culture 6)TGl60IT6öStéphane Mallarmé-------(14) இன் பிரசித்தமான கவிதை பற்றிய நிகழ்வை ரத்துச் செய்துள்ளது"
பிரெஞ்சுமொழியில், வழக்கத்தில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இப்போது பொத்தல்களாக வந்து விட்டன.
என்னதான்நடந்தது? _ー下
・一ーニエ எப்படித் திடீரென்று, இந்த ஞாபகமற பொதுமைப்படுத்தப்படுகின்றது?
இது ஒரு நுாதனம்,
பிரெஞ்சுமொழி சொற்களை இழந்து விட்டது
என்பதைக் கண்டுகொள்வதற்கு பத்திரிகைத்
துறைக்கு காலம் எடுத்தது. மொழிவல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் எவரும் நம்பிக்கையூட்டக்கூடிய விளக்கத்தைக் கொடுக்கவில்லை. Rennesஇன் சுற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமமான Saint-Brice -enCogles என்னுமிடத்தில் இருந்த ஒரு நூல்நிலையத்தில் gbbgb lgjögöt5 gÐGBáibáé76io @(abbgb Grand Robert, Grand LaOusse, Hachete போன்ற அகராதிகள்விழுவதை அந்த நுால்நிலையப் பொறுப்பாளர் காணும் வரை, அரசியல்வாதிகள் இதனை மிகவும் சிறியளவில்தான் கணக்கிலெடுத்திருந்தார்கள். அவைகள் புத்தக அடுக்கில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன. அவைகளை அடுக்கில் வைத்திருப்பது இயலாமல் இருந்தது. ஒரு சக்தி அவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவைகளை நிலத்தில் தள்ளியது.
)。 &
e 8 ዴ
G ንጸ
虏
66
66
9. (6)
óF6。
<尖円
-திரி
d
ଗk
c
நி
LJt
(ଗ)
இதழ் 24

t
t i.
t
鲷
5
~~
ar
8.عع* శా
i a
صچه
நுால்நிலையப் பொறுப்பாளர் அவற்றை பவொன்றாக எடுத்துப் பரிசீலித்தார். அவர் குறிப்பாக தையும் காணவில்லை. அவைகளை மீண்டும் வைகளுக்குரிய இடத்தில் வைக்கும் போது ால்லசைகளின் கூட்டங்கள்தப்பியோடியதை, அவை ர்க்காரக் குமிழிகள் போல நிலத்தில் பரவியதை வர் கண்டார் அல்லதுகண்டதாக நம்பினார். அது ஒரு சனம், களைப்பினால் ஏற்பட்ட ஒரு மயக்கம், ஒரு கணத்தின் பின் அவர் Robertஐத் திறந்தார், கங்கள் வெறுமையாக இருந்ததைக் கண்டார். கங்கள் ஒரே வெள்ளையாக இருந்தன. அது *சகத்தின்தவறாக இருக்கவேண்டும் என்றுதனக்குச் ால்லிக் கொண்டார். ஆனால், மற்ற இரு கராதிகளும் ஒரெழுத்துக்கூட இல்லாத கங்களைக் கொண்டிருந்தன. சொல்லசைகள் பத்தில் இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை. பறந்து போய்விட்டன. காற்றில் தொலைந்துவிட்டன.
வெளியேறிச் சென்ற புகலிகளின் 1ணப்பெட்டிகளுடன் அவை வேறெங்கோ ன்றுவிட்டன.
பிரான்ஸ் திக்குகின்றது. பிரான்ஸ் சுற்றுவசனத்தில் பேசுகின்றது.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 59

Page 60
அதனுடைய மொழிக்குள் குடியேறி இருந்த அரபுச் சொற்கள் அவற்றினுடைய முறை வரும்போது மறைந்துவிட்டன, அவைகள் தப்பியோடி விட்டன.
அவைகள் திரும்பி வருவதற்கு என்ன செய்வது? இந்த மொழி தன்னுடைய ஆரோக்கியத்தை, சந்தத்தை, நுட்பங்களை மீளப்பெறுவதற்கு எந்த மொழிவல்லுநர்களால் அவற்றைப் பிரதியீடு செய்ய முடியும்?
நாங்கள் இவைகளைக் கடந்து செல்ல முடியுமா? இது தொடர்பான மந்திரிசபைக் கூட்டம் நீண்ட நேரமாக நடைபெற்றது. எந்தவிதமான திருப்திகரமான தீர்வும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.
சட்டக்கல்விப் பீடத்தின் தலைவர் தன்னைக் கேட்டுக் கொண்டார்:"ஆனாலும், ஒரு சொல் யாருக்குச் சொந்தமானது? அதைக் கண்டு பிடித்தவருக்கா அல்லது அதனைப் பாவிப்பருக்கா? அல்லாமலும், இந்தப் புகலிகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. அவர்கள் அப்படி இருந்திருந்தால், எங்கள் நாட்டுக்கு வந்து வேலைக்காக எங்களிடம் மண்டியிட்டிருக்க மாட்டார்கள்"
"சாதாரணமாக" அவருக்குப் பதிலளித்த GLDItgo) sigubj Alain Ray (15), Grand Robert (36ir Gypció5u புலமையாளர்களில் ஒருவர், "ஒரு சொல் குறிப்பாக யாருக்கும் சொந்தமானதல்ல. ஒரு சொல்லானது பாவனையில் இருக்கும்போது மட்டும்தான் அதற்கு வாழ்வுண்டு. சொற்கள் காணாமற் போயின அல்லது மறைந்து போய்விட்டன ஏனெனில் அவற்றை யாரும் பாவிக்கவில்லை. ஆனால் நாங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை எங்களுடைய தகைமைகளுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் இது ஒரு அரசியல்ரீதியான பிரச்சினை, மொழிரீதியான பிரச்சி னையல்ல. புகலிகளைத் திட்டுவதால், பீடாதிபதி அவர்கள் பிரச்சினையில் இருந்து விலகிச் செல்கிறார். இது, இல்லாமற்போன அரபுச் சொற்களுக்காக வேறு சொற்களைப் பிரதியீடு செய்வதென்பதல்ல. மொழியானது தனது இருப்பின் சமநிலையைப் பேணிக்கொண்டு மீளவும் அகராதிகளையும், நாவல் களையும், பேச்சுகளையும், அன்றாட சம்பாஷணை களையும் (ஏனெனில் தொலைந்து போன சொற்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையவை) சேர வேண்டும். நிச்சயமாக, அவற்றிற் சில விஞ்ஞானரீதி யானவையும் இராணுவரீதியானவையும் ஆகும். அவை சரளமாகப்பாவிக்கப்படவில்லை. ஆனால் ஏனையவை எங்களுடைய நாளாந்த வாழ்க்கையின் அங்கமாக இருக்கின்றன.
"இஞ்சார்,நான் ஒரு கறுப்புத்தண்ணி-இல்லாது எடுக்கிறேன். மிகவும் அசெளகரியமாக ஒரு ------இல் அமர்ந்தபடி, நான் ஒரு ------- இல் அல்லது ஒரு சாதாரணமான -இல் அல்லது வசதியான ஒரு - நிற --------- வில் ஒரு ------- 6)tb ---------- வும் சேர்ந்த பூங்கொத்தொன்றின் முன்னால் அமர்ந்திருப்பதை விரும்பி இருப்பேன்"
ஒரு கணம் அவர் நிறுத்தினார், ஒரு விரைவான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய உதவியாளரைப் பார்த்தார். பின்பு திரும்பவும்
60 உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

வாசித்தார், ஒவ்வொரு அரபுச்சொல்வரும் இடத்திலும் ஒரு தரம் கைகளைத் தட்டியபடி.
நான் சீனி இல்லாமல் கொஞ்சம் கோப்பி குடிப்பேன். ஒரு முக்காலியின் மேல் மிகவும் அசெளகரியமாக அமர்ந்தபடி, நான் ஒரு சாய்கதிரையில் அல்லது ஒரு சாதாரணமான மெத்தையில் அல்லது வசதியான ஒரு கரமுவாஸ் நிற சோபாவில் லில் லாக்களும் கமெலியாக்களும் கலந்த பூங்கொத்தொன்றின் முன்னால் அமர்ந்திருப்பதை விரும்பி இருப்பேன்."
பீடாதிபதி Alain Rayயைத் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
"சேதமடைந்திருக்கும் ஒரு கப்பலைப் போன்று இருக்கும் உங்களுடைய அரசியலுடன் எப்படி முன்னோக்கி நகர முடியும்? உங்களுடைய பேச்சுக் களின்போது நீங்கள் பென்னாம்பெரிய துவக்குகளை வெளியே எடுக்கிறீர்கள், நீங்கள் வைரக்கல்லையும் சாம்பிராணிக் கட்டியையும் கலக்கிறீர்கள், அம்பரை எப்படிப்பட்ட காரத்துடனும் கலக்கிறீர்கள். நீங்கள் தாறுமாறாக எல்லாவற்றையும் செய்வதுடன் இளம் குற்றவாளிகளுக்கு மிகவும் அதிகபட்ச அபராதம் விதிக்கிறீர்கள், அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்த வர்கள் என்பதற்காக மட்டும். உங்களுக்கு அவர்கள் எல்லோருமே போதைவஸ்து விற்பவர்கள்தான். உங்களுக்கு புனுகுக்கும் பூனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இரத்தினத்திற்கும் கற்பூரத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை, நீங்கள் உங்களுடைய எலுமிச்சம்பழப்பானத்திற்குள் அல்ககோலை விடுகிறீர்கள். ஏனெனில் சிலர் தங்களை மந்திரி மட்டத்தில் எண்ணிக் கொள்கிறார்கள். மற்றும் சிலர் சுல்தான்களாகவோ அல்லது போர்த்தளபதி களாகவோ, ஒரு காலி'பை ஒழித்து அந்த இடத்தைக்

Page 61
கைப்பற்ற நினைக்கும் இன்னொரு காலிஃப். எனவே இவர்கள் ஒரு டாக்குத்தரைப் பார்ப்பதும் அத்துடன் வெளிநாட்டவர்களை நாய்களாக நினைப்பதை நிறுத்துவதும் நல்லது. உங்களுடைய அரசியலுக்கு நான் புள்ளிகள் இடுவதாயின் அது சைபராகத்தான் இருக்கும்"
Alain Ray இல்லாமற் போன சொற்களை ஏன் மீண்டும் கண்டுபிடித்தார் என்று ஒருவர் கேட்டார், அவரைப் பார்க்காமலே Alain சொல்கிறார்: "இது ஏனெனில், எனக்கு முன்மதிப்பீடுகள் எதுவும் இல்லை. எனக்கு மொழிகளின்மீது விருப்பம் உண்டு. மொழிகளைக் காவிச் செல்பவர்களிலும்கூட. மொழிவல்லுநர் என்ற அடிப்படையிலும் வரலாற்றாசிரியர் என்ற அடிப்படை யிலும் சொற்களின் மூலங்களில் எனக்கு ஆர்வமுண்டு. நுாற்றுக்கணக்கான அரபுச் சொற்கள் எங்களுடைய மொழிக்குள் எந்த விசாவும் இன்றி, போர்டர் கட்டுப் பாடுகள் எதுவும் இன்றி வந்து சேர்ந்தன. அவைகள் இல்லாமல் விஞ்ஞானம் சரியாகச் செல்ல முடியாது. அரபு இல்லாமல், இலக்கங்கள் இல்லாமல், அட்சரம் இல்லாமல், கணித சாஸ்திரம் இல்லாமல், கணிதம் என்பது இல்லை. மிகவும் இயல்பாக அவை பிரெஞ்சு மொழிக்குள் வந்தமர்ந்து விட்டன. அதனை வளம் படுத்தின. மிகவும் சாதாரணமாக அவை தவிர்க்க முடியாதவையாகி விட்டன. நாங்கள் அவைகளை எடுத்துக்கொண்டு வந்தோம் அல்லது மிகச் சரியாகச் சொன்னால் கடன் வேண்டினோம். ஏனெனில் எங்க ளுக்கு அவற்றின் தேவை இருந்தது. ஒரு நாள் அவற்றை விரட்டுவோம் அல்லது பிரான்சின் உளரீதி யான சமநிலையை அச்சுறுத்தும் அளவுக்கு எங்களை விட்டு வெளியேறும் என்று எப்போதும் யாரும் யோசித்ததில்லை."
- தன்னுடைய குறுக்குச் சொற்றொடர் விளை யாட்டை முடித்துக் கொள்ளமுடியாமல் இருக்கும். கலாச்சார அமைச்சர் கேட்கிறார், "அப்போது என்ன செய்வது?"
- அல்ஜீரியவம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமைச்சர் சொல்கிறார். "அப்போ! வெளியேற்றப்பட்ட புகலிகள் மீண்டும் வருவது"
-"இது சாத்தியமென்று எனக்குத் தோன்றவில்லை" Alain Ray குறிப்பிடுகின்றார்."அவர்களுடைய செருக்கும் அவர்களுடைய பெருமையும் அவர்களுக்கு இருக்கின்றது."
- தன்னுடைய சொற்சித்திர விளையாட்டுடன் பிணைந்து கொண்டிருக்கும் இன்னொரு அமைச்சர் சொல்கிறார்."ஆனால்பிரான்ஸ்,பிரான்ஸ் தனது மொழி இப்படி நறுக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ளாது!"
-"நான் இனிScrabble விளையாட முடியாது" என்று கல்வியமைச்சர் அவருடன் சேர்ந்து கொள்கிறார்.
- "பிரான்ஸ்! ஆனால் பிரான்ஸ் தன்னுடைய மொழியைப் பேசும் தன்னுடைய மொழியை எழுதும் தன்னுடைய மொழியை அழகுபடுத்தும் இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை"AlainRay உரத்துச் சொல்கிறார். பிரான்ஸ் இந்த நெருக்கடி நிலையை, சிந்திப்பதற்கும், தன்னுடைய அரசியலில் ஒரு பொருத்தப்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்து
இதழ் 24

வதன்மூலம் அல்ல, அதனுடைய எண்ணத்துக்கும் மதிப்புகளுக்கும் கெளரவம் அளிக்க முடியும்."
பேரெதிர்ப்புகளின் ஆர்ப்பரிப்புகள் கேட்கின்றன. Alain Ray கூட்டத்தை விட்டுப் போகிறார், உயரதிகாரிகள் எல்லோரையும் குழப்பத்திற்குள் விட்டுவிட்டு. ஒரு வாரத்தின் பின்பு நாட்டின் தலைவர் இரவு 8.00 மணி தொலைக்காட்சிச் செய்திகளில் தோன்றுகிறார். அவருடைய முகம் கலவரத்தில் கிடந்தது.
"பிரெஞ்சுப் பெண்களே! பிரெஞ்சு ஆண்களே! என் அன்புக்குரிய என் தேசத்தவர்களே! ASSalam AlikOum! ஆம்! உங்களுக்கு நான் சொல்வது நன்றாகக் கேட்டது! அஸ்ஸலாம் அலைக்கும்!
இது அராபிய மொழியில்'மாலைவணக்கம் அல்லது மிகச் சரியாக'உங்களில் அமைதியுண்டாகட்டும்
Saydati! Sadati! அம்மணிகளே! ஐயாமார்களே!
BT6őT 3ībä55LDTB3F GIFTGüÉG&p6őr. La OutoWilla Alikum! பிரான்ஸ் ஒரு முக்கியமான தவறு செய்துவிட்டது. Lf5abGöDITöFLDIT 60I g94É5g5, dholumun kabir! 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதிக்குப் பின், சிலர் சொன்னார்கள் "நாங்கள் எல்லோரும் அமெரிக்கர்கள்" என்று.
நான் இன்று சொல்கிறேன்: “Koulouna arab!” நாங்கள் எல்லோரும் அராபியர்கள்! “Koulounamouhâjiroun" நாங்கள் எல்லோரும் புகலிகள். அவர்களுடைய கெளரவத்தில் 5cm)の五 வைக்குமளவுக்கு நாங்கள் செயற்பட்ட விதத்தினால் எங்களுடைய ஆன்மாவையும் கெளரவத்தையும் இழந்துவிட்டோம், நான் என்ன சொல்ல விரும்புகிறேன் 6T6öpioikaramatouna.
எனக்குத் தெரியும் நான் மீண்டும் தேர்தலில் தெரிவு செய்யப்படமாட்டேன் என்று. எப்படியும் இருக்கட்டும். நான் தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை.நான் அரபுக் கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் மரியாதை செலுத்துகிறேன்-பிரான்ஸை அதன் காலடியில் கொண்டுவந்து மீளவைப்பதற்கு, ச் சிலர் ஏற்றுக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையோடு.
Assalâm Alikoum!Yahya FrançalYahya al Maghrebl(16)"
1. Abricot-2. Alcool-3. Café - 4. Safran-5. Soda 6. Sorbet -7. Chèque -8. Guitare -9. Algèbre 10. Chimie -11. Amalgame - 12. Zénith - 13.X-14. AZur
15. France Interஇன் தலைமை இப்போது சிறிது நேரத்திற்கு முன் தான் Alain Rayக்கு தனது நன்றியைச் செலுத்தியது. தன்னுடைய அறிவையும் புத்திக்கூர்மையையும் சிறப் பையும் முன்வந்து சொல்வதற்கான அந்த முடிவு, அவரையும் விட வேறு அறிவாளர்களால் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். 16. சந்திப்போம்! பிரான்ஸ் வாழ்க! மக்ரெப் வாழ்க!
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 61

Page 62
இந்தியப் பெண் இய
இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்ட மாபெரும் முன்னோடியாக டாக்டர் முத்துலக்ஷமி ரெட்டி திகழ் கின்றார். நவீன இந்தியாவை பெண்களின் அபிவிருத்தித்தளத்தில் கட்டியெழுப்பமுயன்ற சிறந்த சமூகச் சிற்பியாக டாக்டர் முத்துலக்ஷமி என்றும் நினைவுகூரப்படுவார். -- கூர்மையான அறிவு, துணிச்சல், முற்போக்கான சிந்தனை, சமூக அக்கறை, ஏழை எளியவர்களுக்கு உதவும் பரோபகாரம் போன்ற குணாம்சங்களின் வடிவமாக முத்துலதடிமிதிகழ்ந்தார். டபிரிட்டிஷ் இந்தியாவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இழிவான சமூகமாக கருதப்பட்ட தேவதாசி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்தியாவின். முதல் பெண்மருத்துவராக உயர்ந்ததும், பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னோடியாக செயல்பட்டதும் டாக்டர் முத்துலகூடிமி ரெட்டியின் மகத்தான சாதனையாகும்.
1886ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவதாசிகுலத்தில் தோன்றியமுத்துலகூடிமி ஆரம்பக் கல்வியைதனது தந்தை வாயிலாகவே கற்றிருக்கிறார். பெண்கல்வி என்ற சிந்தனை தமிழ்நாட்டில்நினைத்தும் பார்த்திருக்க முடியாத சூழலில் டாக்டர் முத்துலக்ஷமி கல்வியிலேயே கவனம் செலுத்துகின்றார். பெண்களை பாடசாலைக்கு அனுப்ப மறுக்கும் பழக்கம் வேரூன்றிப்போன ஒரு சூழ்நிலையில் டாக்டர் முத்துலகூடிமி ரெட்டிதன் கல்வியை தொடர முடிந்தது
62|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 

க்கத்தின் முன்னோடி
அவரது அசாத்தியமான துணிச்சலையே காட்டுகிறது. ஆரம்பக் கல்வியில் பெரும் திறமையைக் காட்டி முத்துலகூடிமி புதுக்கோட்டை இடைநிலைக் கல்லூரியில் தன் படிப்பைத் தொடர விரும்பினார். ஆண்களுக்கு மட்டுமே கல்வி அனுமதிக்கப்பட்டிருந்த சேர்ந்து படிப்பதற்கு புதுக்கோட்டை மகாராஜாவின்
அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.
மேற்கத்தைய வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டிருந்த புதுக்கோட்டை மகாராஜா, முத்துலக்ஷமி இடைநிலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விசேட அனுமதி வழங்கினார். இங்கும் முதற்தரமான மாணவியாக முத்துலக்ஷமிதிகழ்ந்தார். முத்துலகூடிமி கல்லூரியில் சேர்ந்து வடிப்பதற்கு அவரது தாயார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவந்தார். 1907ஆம் ஆண்டு தனது 21வது வயதில் புதுக்கோட்டை மகாராஜாவின் நிதி உபகாரத்தின் கீழ் சென்னை மருத்துவமனையில் டாக்டர் முத்துலக்ஷமி சேர்ந்து பயின்றார். 1912ஆம் ஆண்டுமருத்துவப்பட்டம்பெற்றார். இந்தியாவின் முதல் மருத்துவப்பட்டம் பெற்ற இந்தியப் பெண்மணி என்ற சரித்திரப் பெருமையை டாக்டர்
முத்துலகூடிமி பெறுகிறார்.
மருத்துவர் ஆனதும் சென்னை எழும்பூரில் டாக்டர் முத்துலகூடிமி கிளினிக்கை ஆரம்பித்து ஒரு சிறு மருத்துவமனையை தொடங்கினார். இந்த சிறிய மருத்துவமனை விரைவில் பிரபல்யமானது. இந்த ஆண்டிலேயே இந்தியாவில் FRCS பட்டத்தைப் பெற்ற இதழ் 24

Page 63
*
Muthulakshmi as a Medical Student ia Madras.
முதலாவது இந்தியரான டாக்டர் ரி.சுந்தர் ரெட்டி முத்துலகூடிமியை மணம் முடிக்க விரும்புகிறார்.திருமண பந்தத்தை ஆரம்பத்தில் விரும்பாத டாக்டர் முத்துலகூடிமி தந்தையின் அறிவுரையை ஏற்றுஆனாலும், சில நிபந்தனைகளுடன் இந்த திருமணத்திற்கு இணக்கம் தெரிவித்தார். தன்னை சமத்துவமாக நடத்த வேண்டும் என்றும், தனது விருப்பு வெறுப்புக்களில் தலையிடக் கூடாது என்றும் டாக்டர் முத்துலக்ஷமி தெரிவித்து இருந்தார்.
இருவரும் 1914ம் ஆண்டு திருமணம் புரிந்தனர். புதுக்கோட்டையில் பிரதம மருத்துவ அதிகாரியாக பதவி நியமனம் பெற்ற டாக்டர் சுந்தர் ரெட்டி அங்கு பிரபல்யம் மிக்கவராக திகழ்ந்தார். 1914ம் ஆண்டு முதலாவது மகளைப் பெற்ற முத்துலக்ஷமி புதுக்கோட்டையில் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவப் பணிகளில் ஈடுபட்டார். கஷ்டமான பிரசவங்களையும், குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பணிபுரிந்தார்.
பின்னாளில் முத்துலகூடிமி புற்றுநோய் ஆய்வின் முன்னோடியாகத் திகழ்வதற்கு அவரது சொந்த வாழ்க்கையின் துயர நிகழ்வு ஒன்றே காரணமாக இருந்தது. அவரது பாசமிக்க தங்கை 23 வயதில் புற்றுநோய்க்கு இரையான கொடுமையை இரவுபகலாக ஓராண்டு காலம் அவருக்கு அருகே இருந்து பார்த்து முத்துலகூடிமி மிகவும் கவலையில் ஆழ்ந்திருந்தார்.
இதழ் 24
 
 

1923இல் அவரது அன்புக்குரிய சகோதரி மறைந்த நிகழ்வை தனது வாழ்வின் மிகவும் துயரமானசம்பவம் என்று டாக்டர் முத்துலக்ஷமிகுறிப்பிட்டிருக்கின்றார்.
புற்றுநோய்க்கு எதிரான மருத்துவ வளர்ச்சிக்காக டாக்டர் முத்துலகூடிமி தன் வாழ்நாள் முழுவதும் போராடி வந்திருக்கின்றார்.
இந்த வேளையில்தான் இந்திய அரசின் நி உபகாரத்தின் கீழ் டாக்டர் முத்துலகூடிமியும் அவரது கணவரும் 1925ம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் வந்தார்கள். முத்துலக்ஷமியின் லண்டன் கல்வி அவரின் முற்போக்கான சிந்தனைக்கு தூபமிட்டது. மருத்துவ மனைகள் இங்கிலாந்தில் நிர்வகிக்கப்படும் முறை அவரை மிகவும் கவர்ந்தது. இங்கிலாந்தின் ஒழுங்கும் இங்கு காணப்பட்ட சிறந்த குடியியல் பண்பும் அவரை வெகுவாக ஈர்த்தன.
அப்போது சென்னையில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள் சங்கத்தில் ஆங்கிலேய பெண்மணி களே தலைமைப்பதவி வகித்தனர். இந்த சங்கத்தின் முதலாவது இந்தியப்பெண்மணியாக திகழ்ந்த டாக்டர் முத்துலக்ஷமி அதன் செயலாளராகவும், பின் அதன் தலைவியாகவும் நீண்ட காலம் பணியாற்றினார். இங்கிலாந்தில் பயின்றபோது பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொள்ளும் பெருமையும் பெற்றார்.
உலகின் 42 நாடுகளைச் சேர்ந்த ஆற்றல் மிக்க பெண்மணிகளைச் சந்தித்து அவர்களோடு நடத்திய கலந்துரையாடல்கள் டாக்டர் முத்துலக்ஷமிக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்கின.
இந்தியாவிற்கு திரும்பிய டாக்டர் முத்துலக்ஷமி தனது மருத்துவப் பணியினை கைவிட்டு அரசியல் களத்தில் பிரவேசித்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் சட்ட நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் அரசியல்வாதியாக டாக்டர் முத்துலகூடிமி திகழ்ந்தார். சென்னை நிர்வாக சபையின் பிரதித் தலைவியாக அவர் ஏகமனதாக தெரிவு செய்யப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் உலகத்திலேயே இத்தகைய உயர் அரசியல் அந்தஸ்து கொண்ட ஒரே ஒரு பெண்மணியாக டாக்டர் முத்துலக்ஷமிதிகழ்ந்தார். இந்தியப் பெண்களில் கோஹினுார் வைரம் என்று முத்துலகூடிமி பாராட்டப்பட்டிருக்கின்றார். சென்னை சட்ட நிர்வாக சபையில் மூன்றரை வருடங்களே முத்துலக்ஷமி பணியாற்றி இருந்தாலும் பெண்களின் வளர்ச்சிக்காகவும், குழந்தைகளின் நலனுக்காகவும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை வேறு எவரும் செய்திருக்க முடியாது. பெண்களின் கல்விக்காகவும், சென்னையில் பெண்களின் அமைப்புகளுக்குதாராள நிதி வழங்குவதற்கும் டாக்டர் முத்துலக்ஷமி கடுமை யாக போராடினார்.
இந்தியாவில் தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய மகத்தான போராட்ட நாயகியாக டாக்டர் முத்துலகூடிமி திகழ்ந்தார். தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கோவில்களில் கடவுளுக்காக பொட்டுக் கட்டி விடப்படும் கொடுமையான அநீதிக்கு எதிராக அவர் சளைக்காமல் போராடினார். இந்தியா வின் தேசிய இயக்கத்தில் பெண்களின் பிரச்சினை
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 63

Page 64
களை முன்வைத்து போராடிய பெண்ணியவாதியாக அவர் திகழ்ந்தார்.
இந்திய தேசிய போராட்டத்தின்போதுகாங்கிரஸ் கட்சியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு கல்கத்தாவின் விலைமாதர்கள் ஆதரவு வழங்க முன் வந்தபோது தேசிய இயக்கத் தலைவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இத்தகைய ஒரு காங்கிரஸ் அரசியலின் மத்தியில்தான் தேவதாசிமுறை ஒழியவேண்டும் என்று முத்துலக்ஷமி போராடியிருக்கின்றார். தேவதாசி முறை ஒழிப்பு பற்றி முத்துலக்ஷமி குரல் எழுப்பியபோது தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியிலேயே அவருக்கு ஆதரவு இருக்க வில்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவரான ராஜகோபாலச்சாரி தேவதாசிப் பிரச்சினையை காங்கிரஸ் கமிட்டியில் எழுப்புவதற்கே எதிர்ப்பு தெரிவித்தார்.தமிழ்நாட்டின் பிரபலம் மிக்க காங்கிரஸ் தலைவராகத் திகழ்ந்த எஸ்.சத்தியமூர்த்திதேவதாசி முறையை ஒழிப்பதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்திருக்கின்றார். தேவதாசி முறை தேசியக் கலையையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பது என்பதால் தேவதாசி முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஒவ்வொரு தேவதாசியும் இன்னுமொரு பெண்ணை எதிர்காலத் தேவதாசியாக்க வேண்டும் என்று எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.
சட்டநிர்வாக சபையில் சத்தியமூர்த்தியும் டாக்டர் முத்துலக்ஷமியும் இரண்டு கடுமையான எதிரெதிர்
Dr. (Mrs.) Reddi, President of th addressing a large gathering
64உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

முகாம்களில் நின்றார்கள். இந்துக் கலாசாரத்தை தேவதாசிகளான நாங்கள் இவ்வளவு காலமும் காத்து வந்தது போதும். அந்தக் கலாசாரம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று சத்தியமூர்த்தி விரும்பினால் அவருடைய சொந்தக் குடும்பத்தில் ஒரு பெண்ணை பொட்டுக்கட்டி தேவதாசி ஆக்கட்டும் என்று டாக்டர் முத்துலக்ஷமி பதில் கொடுத்தார். தேவதாசி முறையை அவர் எந்தக் கண்ணோட்டத்தில் எதிர்த்தார் என்பது குறித்து வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் தேவதாசி முறையை ஒழித்ததில் அவரின் பங்கு மகத்தானது.
1928ஆம் ஆண்டு இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றி ஆராயும் உயர்மட்ட ஆராய்ச்சி குழுவில் டாக்டர் முத்துலக்ஷமியின் பெயரை இந்திய ஆளுநர் தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் கல்வித்துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் ஆர்வத்தை அவருக்கு இந்த நியமனம் வழங்கியது.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பின் அந்த சமூகத் தைச் சேர்ந்த பெண்கள் கல்வி பெறும் முகமாகவும் புதியவாழ்க்கையைத் தேடியும் சென்னை சென்றபோது டாக்டர் முத்துலகூடிமியே அவர்களின் அன்னையாக இருந்து செயற்பட்டார். அப்போது சென்னையில் இருந்த இரண்டு பெண்கள் விடுதிகளுக்கு இந்த தேவதாசிப் பெண்கள் அனுப்பப்பட்ட போது விடுதி நிர்வாகம் அவர்களை அனுமதிக்க மறுத்தது. அந்தப் பெண்கள் கண்ணிரோடு L-IT di5 Li முத்துலக்ஷமியிடம்
x x x
Women's Indian Association of women in M. :

Page 65
திரும்பியபோது அந்தப் பெண்களுக்கு தனது வீட்டிலேயே வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருந்தகையாளராக அவர் திகழ்ந்தார்.
அநாதைச் சிறுவர்களை பேணி வளர்க்கவும், வறுமை கொண்ட சிறுமிகளைப்பாதுகாக்கவும் டாக்டர் முத்துலக்ஷமி மேற்கொண்ட பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவையாகும். அடையாறில் இன்று இயங்கும் ஒளவை இல்லம் டாக்டர் முத்துலக்ஷமியின் பெருமைக்கு என்றென்றும் ஆதாரமாக திகழ்கின்றது. இந்த ஒளவை இல்லத்தில் இருந்து பெண்கள் ஆசிரியைகளாகவும், மருத்துவ தாதிகளாகவும், சுகாதார சேவகிகளாகவும் பயிற்றப்பட்டு சமூகப் பணியாற்றி வருகின்றனர்.
1934ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய பெண்கள் அமைப்பின் பிரதிநிதியாக டாக்டர் முத்துலக்ஷமி தெரிவு செய்யப்பட்டார். லண்டனில் நடைபெற்ற மூன்றாவது வட்டமேசை மகாநாட்டில் இந்தியப் பெண்களின் நிலையை எடுத்துரைக்கும் சரித்திரப் பொறுப்பு முத்துலக்ஷமிமீது சுமத்தப்பட்டது. சிக்கா கோவில் இடம்பெற்ற உலக பெண்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு டாக்டர் முத்துலக்ஷமி ஆற்றிய உரை பெரிதும் பாராட்டப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் முதலாவது பெண்மணி யாக 1937ல் அவர் தெரிவு செய்யப்பட்டார். சென்னை மருத்துவமனைகளை சீர்திருத்தவும், தொழுநோயாளி களையும், வியாதி கொண்ட யாசகர்களையும் காப்பாற் றுவதற்காக நடவடிக்கை எடுத்தார். சாதாரண ஏழை மக்களின் மருத்துவ வசதிக்காக அடையாறில் அவர் ஆரம்பித்த ஒளவை கிராமிய மருந்தகம் ஒரு முன்னோடி முயற்சியாக பாராட்டப்பட்டது.
1943ல் டாக்டர் முத்துலக்ஷமியின் கணவர் இறந்த பின்னரும் அவர் ஆர்வம் கொண்டிருந்த ஒளவை கிராமிய மருந்தகத்தை தனது சொந்த நகைகளை விற்று ஆரம்பித்ததியாக மனப்பான்மை கொண்டவராக டாக்டர் முத்துலக்ஷமிதிகழ்ந்தார்.
40 ஆண்டு காலமாக இந்தியப் பெண்கள் சங்கத் தின் தலைவியாக டாக்டர் முத்துலகூடிமி அம்மையார் ஆற்றிய பணிகள் இந்தியப் பெண்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை யாகும். டாக்டர் அன்னி பெசன்ற் அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் டாக்டர் முத்துலக்ஷமிதுணிவோடு செயற்பட்டிருக்கிறார். பெண்கள் சமூகத்தில் தங்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதனையும், பெண்கள் தங்களின் சொந்த கருத்துகளை துணிச்ச லாக வெளியிட வேண்டும் என்பதனையும் டாக்டர் முத்துலக்ஷமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தி ருக்கின்றார்.
இந்தியப் பெண்களுக்கு, ஆண்களுக்கு சமமான வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியலில் பங்கு கொள்ளும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்றும், இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சிமுன் வாதாடிய பெண்கள் குழுவின் டாக்டர் முத்துலகூடிமி முக்கிய ம்ானவராகத் திகழ்ந்தார்.
1927ம் ஆண்டு அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை சென்னை இந்தியப் பெண்கள் சங்கமே ஆரம்பித்துவைத்தமைக்கு டாக்டர் முத்துலக்ஷமியின்
இதழ் 24

Mrs. Reddi sa casessor af Avisory Board during $457 and sheates adrastegislative councii (Second Time)
அயராத உழைப்பே காரணமாகும். புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை சென்னையில் ஆரம்பிப்பதற்காக அவர் பெரும் கஷ்டங்களிலும் அவர் விடுத்த வேண்டுகோள்கள் பலனளிக்கவில்லை. 5ம் ஜோர்ஜ் மன்னர் நினைவு நிதியத்தில் இருந்து இந்த புற்றுநோய் ஆராய்ச்சிநிறுவனத்திற்கு உதவி வழங்கு மாறு விடுத்த வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டது. ஆனாலும், மனம் தளர்ந்துபோகாத முத்துலக்ஷமி அம்மையார் இந்தியப் பெண்கள் சங்கத்தின் மூலமாக புற்றுநோய்நிவாரணநிதியத்தை உருவாக்கினார்.
1952ம் ஆண்டு பிரதமர் நேரு அடையாறில் புற்று நோய் ஆய்வு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் புற்றுநோய்க்கு எதிரான போராட் டத்தின் முதற்பெரும் சாதனையாக இது அமைந்தது. இன்று இந்தியாவின்புற்றுநோய் ஆராய்ச்சியின் தேசிய மையமாக இது திகழ்கிறது.
மருத்துவத்துறையிலும், கல்வித்துறையிலும், சமூகத்துறையிலும், அரசியல்துறையிலும் அரும்பெரும் பணி புரிந்த டாக்டர் முத்துலக்ஷமியின் சேவையைப் பாராட்டி 1956ம் அண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கெளரவித்தது. தனது 80வது வயதிலும் கூட சென்னையில் முதியோர் காப்பகத்தை நிறுவிய அந்த மாபெரும் தியாகச் சுடரை பெண்சமூகம் ஒருபோதும் மறப்பதற்கு இல்லை. 1968ம் ஆண்டு பெங்களுரில் டாக்டர் முத்துலக்ஷமி காலமானபோது பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய ஒரு தலைமகளின் சரித்திரம் முற்று பெற்றது. டாக்டர் முத்துலக்ஷமியின் வரலாறு இந்தியப் பெண் இயக்கத்தின் வரலாறாகவே அமைகிறது.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.65

Page 66
இடம்: மலையின் உச்சி காலம்: வசந்தம் இயங்கிகள்: திலீப் குமார், தர்ஷன், சத்யா இயக்கியவர்: பா. அ. ஜயகரன்
இயங்கி 1: திலீப் குமார்
மிகச்சிறந்த இயங்கி எனப் பெயர்பெற்றவர். கடந்த பதினைந்து வருடங்களாகப் பல்வேறு நெறியாளர் களின் நெறியாள்கையில் இயங்கியவர். படைப்பைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்தவர்.
இயங்கி 2 : தர்ஷன்
பத்திரிகையாளர். கடந்த சில வருடங்களாக நாடக நுணுக்கங்களை அறிந்தவர். 6) நெறியாளர்களின் நெறியாள்கையில் இயங்கியவர்.
இயங்கி 3 : சத்யா
குறும் பட உலகில் பலரும் அறிந்த சிறந்த நடிகை. கடந்த வருடக் குறும்பட விழாவில் சிறந்த நடிகை விருதைப்பெற்றவர்.நீண்டநாடக அனுபவம் பெற்றவர்.
இயல்புக்கு மாறான இடத்தைத், தற்கொலைக்காக நாடியுள்ள இளைஞன், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள முதியவர். இவர்கள் சந்திக்கும்பொழுது என்ன பேசிக் கொள்வார்கள்? ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்வார்கள். விசாரணையின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பார்கள். இளைஞன் மரணத்தைத் தேடி மலையுச்சியில், அங்கு நம்பிக்கையுடன் முதியவர். வாழ்க்கையின் முரண்நிலைகள் இங்கு விசாரிக்கப் படுகின்றது. இரு வேறு தளங்களில் இவர்கள். மேடையில் ஒரு பாதியில் ஒருவர், மறுபாதியில் மற்றவர். முதியவர்மறுபாதிக்கு வந்த போதினிலும், இளைஞன் மறுபாதிக்குச் செல்லவில்லை. இது அவனது மரணத் தைப் பற்றிய உறுதியை வெளிப்படுத்துகிறது.
மலையின் உச்சியில் முதியவர் என்ன செய்து கொண்டிருப்பார்? இயற்கை அழகை இரசிப்பார். பறவைகளை இரசிப்பார், அவை பற்றி அறிந்து கொள்வார். இவரது தனிமையைக் கலைக்க ஒரு இளைஞன் மலையேறி வரும்பொழுது அவரது விசாரணைகளில் அவனது மரணத்தைத் தடுக்கும்
66|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

1ள் உயிர்ப்பு
நாடக அரங்கு
. வினோதன் -
6of 3b, 4th 555 - 2006
அக்கறை என்பதைவிடத் தனது நினைவுகளின் குற்ற உணர்வில் தோன்றிய விசாரணையாகவே வெளிப்படும். இதன் முரண்நிலை இளைஞனுக்கு, அவனது விசாரணைகளும் தனது இருப்பை நிலைப்படுத்தும் வெளிப்பாடாக வெளிப்படும்.
மலை உச்சிக்குபறவைகளை பற்றிய ஆய்வுக்காக வரும் இளைஞ, அவளது செயல்பாடுகள், இளைஞ னுக்கு நம்பிக்கையளிக்கின்றன. இங்கும் மீண்டும் ஓர் முரண்நிலை. இவர்களது விசாரணைக்கு முன்பாகவே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். அவள் காவி வந்த செய்தி முதியவரின் காதலைப்பற்றியது, அவரது அரவணைப்பில் சில காலங்களைக் கழித்த பேராசி ரியையைப் பற்றியது. முதியவரின் நினைவுகளுடன் மீண்டும்நாடகம் தொடங்குகிறது.
போலந்து நாட்டு நாடகர் Grotowski ஒரு நாடகத் துக்குத் தேவையானது நடிகனும் பார்வையாளனும் மட்டும் தான் என்றார். இவர் ஏழைநாடக மேடை என்று கூறிக்கொண்டு மிகவும் எளிமையாக நாடகங்களை யளித்தார். வீதிநாடகங்கள் Grotowskiயால் மெருகூட்டப் பட்டது. இந்த நாடக உத்திகளை ஜெயகரனும் கையாண்டுள்ளார்.
தமிழ் மேடைநாடகம் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தில், "சோற்றுச்செருக்கல்லவோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே" என்றும், பரிபாடலில், "தேரிமாண்தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்பரிமா நிரையிற்பரந்தன்றுமையை" என்பவை சில சான்றுகள். ஆனால் கி.மு. 384-322 காலப்பகுதியில் வாழ்ந்த அரிஸ்டோட்டல் நாடத்தின் வாய்ப்பாடுகள் ஏழினை குறிப்பிட்டுள்ளார்.
1. நாடகத் தொடக்கம், நடு, முடிவு 2. பாத்திரங்களின் அமைப்புமுறை 3. காட்சிமுறை 4. சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் 5. மேடை அமைப்புமுறை 6.நடிகர்களின் இலக்கணம் 7. நாடக ஆசிரியரின் உத்திகள்
இதழ் 24

Page 67
SSL LL00 0L0 TLSYSSLY L CLA AALSS qS eTSS LLA Tr S :: Na a ; ai Works in de he at f e Preserts
* பி.ஜே.டிகரிப் குமார் தர் ஷண் சிலருகுநாதணி
* கதீடிா தல  ைலதா தனி
: . ) if p k is a : . has sha A Si was u : un a th: in
- 5 stays h : : a is t is sy
a seasen's F2 vívat
க்கம். இக்கல் டி. ஆ. ஜ:கன் itten and directed by:PAJayakaran
ல் கிழமை யூண் 3, 2008 மாலை 6:00மணி இieற்றுக்கிழமை பூண் 4, 2008 பி.u 4:00 மணி
Saturday June 3rd, 2006 6,00 P.M. Sunday June 4th, 2006 4:00 P.M.
York woods library Theatre
1 785 Firch Ave. West (trubetween jame & Keede)
asrseyägi Info:416275-007o4164005406
இவ்வாறான நாடக வரலாற்றில் இருந்து தன் விடுவித்துக்கொண்டுஜயகரன்நடிகர்களையும், கருத்ை மிகக் குறைந்த தொழில் நுட்ப வசதி களு இயக்கியுள்ளார். சோவியத் அறிஞர் Maxim Gorky இன் நாடகங்கள் Stanislavsky இன் அரங்க முறையிே மேடையேற்றப்பட்டன. -
இப்பிரதி Abstract வகையைச் சார்ந்தது. இதனை ( முனைப்புடன் கையாண்டுள்ளார் இயக்குநர். இது இ சொந்தப் பிரதியாகும். தமிழில் மிகச்சிலரே தமது சொ பிரதிகளை நெறியாள்கை செய்பவர்கள். தமிழில் வெளி மிகச்சிறந்த பிரதிகளில் இது வும் ஒன்று. இt பிரதிகளுக்குள்ளும் இது சிறந்தது.
மேடையில் திலீப்குமார், தமது சிறந்த ஆளுமை நாடகத்தின் உரைஞராகவும், வழிகாட்டியாகவும், சமயங்களில் மேடை இயக்குநராகவும் செயல்பட்டுள்ள இவரது ஒப்பனை கூட வழமைக்கு மாறான ( தோற்றத்தைக் கொடுத்தாலும், நெறியாளரை நாடகத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். 2 இயக்கம், குரல், முக பாவங்கள் என்பன இவர் ஓர் சி நடிகர் என்பதை வெளிக்காட்டுகிறது.
தர்ஷன் மேடையின் பின்பக்கம், வலது.இடதுபக்க மறந்தும்கூடப் பார்க்கவில்லை. மரபு நாடகமுை கையாண்டுள்ளார். இவரது குரலில் இருக்கும் தே முகத்தில் தெரியவில்லை. இவர் கத்தும் பொழுது ச தெளிவாகக் கேட்கவில்லை. இவரது உடல் இயக்கம் ஒ இவரது நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இ ஆளுமை சிறப்பாக வெளிப்படின்நாடகத்தின்தளத்தை படி உயர்த்தியிருப்பார்.
சத்யா தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள நம்பிக்கை என்பது ஒரு பெண்ணைக் கண்ட6 வந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது. உயிர்ப்புக்கு பிடிமானம் தேவை. அந்த நம்பிக்கையின் பிடிமானமா
இதழ் 24
 
 
 
 
 
 
 

தயும் நடன் சில லயே
வெகு
5) ligibl ந்தப்
6)bgt)
DT.gif
பெண். ஒரு குறியீடாக. அதே சமயம் பெண்
என்பவள் ஆண்களுக்கு நம்பிக் கையளிப் பவளாக. இது ஒரு விமர்சனமாகவும் வெளிப்படு கிறது. அங்கு பெண் வந்திருக்காவிடில் அவன் தற்கொலை செய்திருப்பானா?பெண்வருவதற்கு முன்பாகவே அவன் தனது முடிவில் மாறி யிருந்தான்.
ஒருவர் மீது ஒருவர் விசாரணையிலேயே தத்தம் முரண்நிலையில் மாறியிருந்தார்கள்.
சாதாரண சமூகத்தை வெறுத்து தற் கொலைக்கு வரும் ஒருவருக்கு. பறவையைப் பார், இயற்கையை ரசி, வாழ்வில் பிடிப்பை ஏற்ப டுத்திக் கொள் எனக் கூறுவது சரியா? அந்த மனிதரைத் தற்கொலைக்குத் துாண்டிய சமூ கத்தை விமர்சிக்காது, தற்கொலை பற்றிய ஆய்வுவெற்று கோஷமே.
நாங்கள் எழுந்தோம் உலகை மாற்ற அல்ல இன்னொரு இரவை நோக்கி என்று கூறி புத்திசாலித்தனமான கடைசி மனிதனும் இறந்துகொண்டிருக்கின்றான் என்று இறந்துபோன சிவரமணியும்
மூச்சை மெலிதாக இழுத்து விடுங்கள் இங்கு எல்லாமே சரியாக உள்ளது. என்று கூறித் தற்கொலை செய்து கொண்ட ஆத்மாநாமும் இந்த நாடகத்தின் சாட்சிகளே.
நாடகம் முடிந்து வீடு வரும்வரை என்னருகில் திலீப்குமார். அவரது விசாரணைகள் என்னையும் தொற்றிக் கொண்டன.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200667

Page 68
ஒற்றையாட்சி - சமஷ்டி - தமிழீழம் இலங்கையின் அரசியல் பிரச்சினையானது மேற் கொண்டிருக்கிறது. இவற்றின் அரசியல்பரிமாணங்கள்த பேசப்படுகிறது. இனப்பிரச்சினையை மையமாக வைத்ே படுகின்றது. அதுமட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளி அதனால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசிய விவாதங்களை எடுத்துச் செல்ல முடியாமல் தடுத்துவ நாட்டில் நிலவிவரும் ஒற்றையாட்சித் தத்துவம் இன மட்டுமல்லாமல் ஒரு நிலையான ஆட்சி மாற்றத்தையு தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சி அரசுக்குள் இன்னொரு அரசு கட்சித்தாவல்கள், ஆட்சி நடத்த முடியாத அவலங்கள் கூர்மையடைந்து சென்ற { பெற்று நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையாகத் தோழ பலவீனமாகக் காணப்பட்டன.
பாராளுமன்ற ஆட்சிமுறை தோற்றுவிட்டதாகவும் ே கையாளமுடியாது எனவும் கூறிமாற்றுவழியிலான புதிய கொண்ட ஜனாதிபதி ஆட்சி அரசியலமைப்பு கொண்டுவ செயல்பாட்டில் இருந்த நிலையில் 25 ஆண்டுகள் ஆய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமு அது மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக விதத்தில் நிறைவேற்றப்படாமையாலும் அமைந்த அ பிரச்சினை பூதாகரமாக வளர்ந்ததோடு அதற்கான தீர் எனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தி முறையில் இருந்துமாறிச்செல்ல வேண்டியநிர்ப்பந்தத்த மாறிச் செல்வதென்பது இலகுவான காரியமல்ல. நாட் அவசியமும் மக்கள் அதற்கு பரிச்சயப்படுத்திக் கொ வளர்ச்சியினுாடாகவே ஏற்படுத்த முடியும். இவ்வாறான கொள்கைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டு மிகவும் வெளிப்படையாக விவாதிக்கப்படவேண்டும்.இ மத்தியில் காணப்படுகின்ற போதிலும் நாட்டின் அவச வேண்டும். இவ்வாறான மற்றொன்றைக் கோரி நிற் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் ! ஒரு சாராரும்JVPயினரும் ஒற்றையாட்சிக்குள் இனப்பிரச் சகலருக்கும் சம வாய்ப்பை வழங்குவதன்மூலம் இ வாதிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், வடக்கு கிழ மாகாணங்களில் பெருந்தொகையான தமிழ் பேசும் ம சிறுபான்மையோரின் கோரிக்கையாக அது அமைவதி விரிசல்களை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறை போலவும் JVPயினரின் இந்த வாதங்கள் யாவும் உரிய மு: பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்திசமத்துவத்தை 68|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

{
குறித்த மூன்று அம்சங்களைச் சுற்றியே வலம்வந்து த்தமது நோக்கங்களுக்கேற்றவாறு சுருக்கியும் விரித்தும் 5இவ்வாட்சித்தத்துவங்களின் உள்ளடக்கம் விவரிக்கப் ற்கும் மேலாக இடம்பெற்று வரும் ஆயுதப் போராட்டமும் ற் தாக்கங்களும் இப் பிரச்சினை குறித்த ஆழமான நகின்றன.
சங்கள் மத்தியிலே நல்லிணக்கத்தைத் தரத் தவறியது ம் தரவில்லை. 1977ம் ஆண்டு தேர்தலின்போது ஐக்கிய Fாரங்கள் இதையே உணர்த்தின. உட்கட்சிப் பூசல்கள், பிலுள்ள அரசு தனது பூரண ஆட்சிக்காலத்தை முழுதாக இனப்பிரச்சினையானது வன்முறை பயங்கரமாக மாற்றம் ற்றம் பெற்றமை என்பன ஒற்றையாட்சித் தத்துவத்தின்
மலே குறிப்பிட்ட பிரச்சினைகளைப்பாராளுமன்றத்தினால் ஆட்சிமுறை அவசியமெனக் கூறிநிறைவேற்று அதிகாரம் ரப்பட்டது. இந்த அரசியலமைப்புகடந்த 28 ஆண்டுகளாக தப் போராட்டமும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் றையும் அதன் எதிர்பார்த்த பலனைத் தரத் தவறிவிட்டது. ம், மாவட்ட சபை போன்ற கோரிக்கைகள் உறுதியான "சுகளின் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகளாலும் வுகளும் முன்னெப்போதையும் விட சிக்கலாகி உள்ளன. வு ஒற்றையாட்சித் தத்துவ அடிப்படையிலான அணுகு ல் உள்ளது. இருப்பினும் ஒற்றையாட்சிமுறையில் இருந்து டு நிர்வாகக் கட்டுமானம் மறுசீரமைக்கப்பட வேண்டிய ர்ள வேண்டிய தேவையும் உள்ளது. இதனைப் படிமுறை மாற்றம் ஒன்றைத் துாண்டுவதற்கு அரசியற் கட்சிகளின் 5.ஒற்றையாட்சிக்கோட்பாடுகளில் உள்ள பலவீனங்கள். ரவதற்போதுமிகவும் ஆரம்பக் கட்டத்தில் சில கட்சிகள் பம் கருதி முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்கப்பட நம் கட்சிகள், அமைப்புகள் என்பன இதற்கு எதிரான ள்ளது. உதாரணமாக, சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சினையைத் திர்க்க முடியும் எனவும் இன, மத வேறுபாடின்றி னச்சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என அவர்கள் கில் வாழும் தமிழ் பேசும் மக்களை விட ஏனைய ஏழு கள் வாழ்வதால் சமஷ்டி என்பது தமிழ் பேசும் மக்களில் கவும் கூறி சமஷ்டி என்பது இனங்களுக்கிடையே மேலும் பாதிடுகின்றனர். றயில் விவாதிக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சிக்குள் ருவாக்குவதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் இதழ் 24)

Page 69
s இலங்கையின் இனப்பிரச்சிை தத்துவ அடிப்படையிலான அணுகுமுறை
நிர்ப்பந்தத்தில் உள்ளது. இருப்பினும்,
செல்வதென்பது இலகுவான காரியம மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசிய
கொள்ளவேண்டிய இதனைப் படிமுறை வளர்ச்சியி
என்பது ஒரு கற்பனையாகும். இலங்கையில் இன்று நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாகும். சமச்சீரற்ற வளர்ச்சியே அதன் அடிப்படைத் தோற்றப்பாடாகும். சமச்சீரற்ற பொருளாதாரக் கட்டு மானமும் வர்க்க நலன் சார்ந்த ஆட்சிக் கட்டுமானமும் நிலவும் ஓர் நாட்டில் பொருளாதார சமத்துவத்தை உருவாக்கலாம் எனக் கூறுவது அவர்கள் தமது கையைத் தாமே சுட்டுக் கொள்வதற்கு ஒப்பானதாகும். மார்க்சிய, அரசியற், பொருளாதாரக் கோட்பாடுகளை தமது கொள்கைகளாகக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு அரசியற்கட்சிமுதலாளித்துவம் சார்ந்த அரசியற் கட்டுமானத்தின் பங்காளர்களாகவும் அதனைப் பலப்படுத்துபவர்களாகவும் இருக்கையில் பொருளா தார சமத்துவத்தை ஏற்படுத்துவோம் என்பதுபொருத்த மற்ற வாதமாகும். இலங்கையின் இறைமை குறித்தும் இவர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். சமஷ்டி அல்லது அதிகாரப் பரவலாக்கம் என்பது நாட்டின் இறைமையைக் கூறு போடும் முயற்சி எனவும் அங்கலாய்க்கின்றனர். தேசத்தின் முக்கியமான மூல வளங்கள், உற்பத்தித்துறைகள், வங்கிகள் என்பன தனியார் மயமாக்கப்பட்டு வெளிநாடுகளின் கட்டுப் பாட்டில் உள்ள நிலையில் நாட்டின் பணப் புழக்கம் தொடர்பான தீர்மானங்களை உலக வங்கியும் சர்வ தேச நாணய நிதியமும் தீர்மானிக்கும் பின்னணியில் இறைமை பற்றிப் பேசுவது அர்த்தமற்ற ஒன்றாகும். எனவே, சமஷ்டி முறையோ அல்லது அதிகாரப் பரவலாக்கமோ தேசிய இறைமையைப் பாதித்துவிடும் என எழுப்பும் குரல்கள் மிகவும் போலியானவை. இதற்கான காரணங்கள் குறுகிய அரசியல் நோக்கங் களே அன்றி, வேறு எவையும் அல்ல. -
இதேபோன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பனவும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தாம் ஆதரிப்பதாகத் தெரிவிக்கின்ற போதிலும் அவ்வாறான அடிப்படையிலான தீர்வொன் றினை முன்வைக்கத் தவறி வருகின்றன. குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக் காலத்தில், அதாவது திருமதி சந்திரிக்கா அவர்கள் ஜனாதி பதியாக இருந்த ஆடசிக்காலத்தில், சில முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்படும் என்பது பூரணமாகத் தெரிந்த சூழலிலேயே முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி செயற் படுத்தக் கூடிய மாற்றங்களைத்தானும் நிறைவேற்ற வில்லை. இது ஒற்றையாட்சி அமைப்பிலுள்ள பலவீனம் என்பதே அதன் முக்கிய அம்சமாகும்.
நாம் எல்லோரும் இலங்கையர் என்ற உணர்வைக்
இதழ் 24

ாக்கான தீர்வு ஒற்றையாட்சித் பில் இருந்து மாறிச் செல்ல வேண்டிய ஒற்றையாட்சி முறையில் இருந்து மாறிச் ல்ல. நாட்டின் நிர்வாகக் கட்டுமானம் மும் மக்கள் அதற்கு பரிச்சயப்படுத்திக் தேவையும் உள்ளது. னுாடாகவே ஏற்படுத்த முடியும். Jy
கட்டி எழுப்பவதற்கு ஒற்றையாட்சித் தத்துவம் தவறிவிட்டது. ஒற்றையாட்சியில் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற பாராளுமன்றக் கோட்பாடும் இனவாத சக்திகளின் நோக்கத்துக்கே பயன்படுத்தப் பட்டன. கடந்த 50 வருட காலத்திற்கு மேலாக இடம் பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் இனவாத நிகழ்ச்சிநிரலைப் பூர்த்தி செய்யவும் உதவவில்லை என்பதே இன்றைய நிலையாகும். ஒற்றையாட்சிக் கோட்பாடானது மொத்தத்தில் நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் போக்கை முன்னேற்ற உதவவில்லை என்பதே முடிவாக உள்ளது. ஒற்றை யாட்சி அதிகார முறை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக நாம் ஏற்றுக் கொள்வோமாயின் இத்தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளை நாம் ஆராய்வது அவசியமாகிறது. நாட்டில் சமஷ்டி அடிப் படையிலான ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்குப் போதுமான ஆதாரம் இல்லையென்பது நாம் ஏற்றுக் கொள்ளவேண்டியதாகும். சமஷ்டி என்ற பெயரிலான மாற்றங்களை ஏற்க பெரும்பானமை சமூகமும் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளும் தயாராக இல்லை என்பதும் கண்கூடு. ஆனாலும் இன்றைய ஆட்சிமுறையின் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் என்பதும் அவை தீர்க்கப்பட வேண்டுமாயின் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதியபாதையில் நாடு திருப்பப்படவேண்டும் என்பதும் அரசியற் கட்சிகளின் நோக்கமாகவும் அதற்கான தயாரிப்பு வேலைகளை அரசியற் கட்சிகள் மேற் கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும். மிகநீண்ட காலமாக நீடித்துள்ள இனப்பிரச்சினை காரணமாக, தேசியப் பொருளாதாரம் மிகவும் சீரழிந்துள்ளதை சகலரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், மிக முன்னேற்றமான நாடுகளில், ஒன்றாக இருந்த இலங்கை தோல்வியடைந்த் ஆட்சியதி காரத்தைக் கொண்டிருக்கும்நாடுகளின் வரிசைக்குள் தள்ளப்பட்டுள்ளது இந்த நிலையை மாற்றி நாட்டில் வாழும் சகல தேசிய இனங்களும் இணைந்து வாழ்வ தற்கான புதிய அணுகுமுறை தேவையாகிறது. மிகநீண்ட காலப்பிரச்சினைக்கான தீர்வுகள் உடனடியாக நிறைவேற்ற முடியாவிடினும் துார நோக்கோடு கூடிய தீர்வுகளை நோக்கிநிலைமைகள் மாற்றப்படவேண்டும். அதிகாரத்தைப்பங்கீடுசெய்வது, சுயாட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது வேற்றுமை யில் ஒற்றுமையை வளர்ப்பது என்பன ஒன்றிணைந்த ஒரு தேசியஅரசினால் மட்டுமே சாத்தியமாகும். வெவ்வேறு நிர்வாக அலகுகளைக் கொண்ட ஒர் மத்திய அரசின்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 69

Page 70
மூலமாக அதிகாரப்பிரயோகம் நிலவும்போதுநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுவதற்கான அடித்தளம் போடப்படுகிறது. இன்றுள்ள சூழலில் தேசம் தழுவிய ரீதியில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டிய தேவை உண்டு. ஒற்றையாட்சி முறை அதிகாரக் குவிப்பை மையமாகக் கொண்டிருப்பதால் அதிகார துஷ் பிரயோகம், ஊழல் என்பன அரசியல் நடவடிக்கை களின் அங்கமாகவும் காணப்படுகின்றன. முதலா ளித்துவ பொருளாதாரக் கோட்பாட்டுத் தெரிவை முதன்மைப்படுத்துகிறது. தான் விரும்பியதைத் தேர்வு செய்யும் உரிமை தனிமனிதனுக்கு உண்டு எனக் கூறுகிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது தனக்குப் பொருத்தமான அரசியல் பொறிமுறையை தேர்ந்தெடுப்பதற்கும் வாக்களிப்பதற்கும் சமஷ்டி ரீதியிலான கட்டுமானங்கள் வாய்ப்பை அளிக்கின்றன. பிரஜைஒருவரின் அதிகாரம் அல்லது இறைமை என்பது அவரது வாக்குறுதியில்தான் தங்கியுள்ளது. தனக்குரிய சுதந்திரமான தீர்மானத்தினடிப்படையில் தான் தேர்வு செய்யும் அரசியல் பொறிமுறையை ஆதரிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. தான் தேர்வு செய்யும் ஆட்சிப் பொறிமுறையை ஆதரித்து வாக்க ளிக்கும் உரிமை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு முக்கியத்துவம் அப்பொறிமுறையில் இருந்து விலகுவதற்கும் உண்டு. இதனைச் சற்று விபரமாகக் கூறுவதனால் சமஷ்டி ஆட்சிப் பொறிமுறையை ஆதரித்து இணைந்து வாழ்வதற்கு எவ்வளவு உரிமையுண்டோ அதைவிட அதிகமான உரிமை சமஷ்டியில் இருந்து பிரிவதற்கும் வழங்கப்படுகிறது. உதாரணமாக, சோவியத் சோசலிசக் குடியரசில் இணைந்திருந்த பல குடியரசுகள் அங்கு ஏற்பட்ட மாற்றங்களின் பின்னர் தாமாகப் பிரிந்து தனிக் குடியரசாக மாறின. பெரும்பான்மைச் சமூகம் இந்த ஆபத்தை மனதில் கொண்டு செயற்படுவது அவசியம் என்பதையே இவை உணர்த்துகின்றன. சுயேச்சையான நிர்வாக அமைப்புகள் இருப்பதனால் புதிய புதிய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதும், குறிப்பாக, சமூகப் பொருளாதார அரசியற்துறைகளில் மாற்றங் களை மேற்கொள்வது சாத்தியமாகிறது. சமூகமாற்றம் என்பதும் மாற்றுத் தேடுதல்களின் தெரிவாக ஆகிறது. இதனால் நாடு ஒரு இறுக்கமான பாதைக்குள் செல்லாது வளைந்து கொடுக்கும் போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் பலதரப்பட்ட மாற்றங் களைத் தன்னகத்தே ஏற்றுக்கொள்ள குறிப்பாக பொருளாதாரத் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த ஏதுவாக மாறுகின்றது. நாம் இலங்கையின் அனுபவங் களை மையமாக வைத்துப் பார்க்கையில், அதிகார உருவாக்கம் என்பது ஒரு குழுவினரின் கையில் சென்றடைவதையும், அதன் காரணமாக, நாடு எவ்வாறு சர்வாதிகார சகதிக்குள் சிக்கியது என்பதையும் ஜே
மார்க்சிய, அரசியற், பொருள்ாதாரக் கொண்டிருப்பதாகக் கறும் ஒரு அரசி கட்டுமானத்தின் பங்காளர்களாகவும் அத பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்து
70|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

ஆர். பிரேமதாசா ஆட்சிக் காலங்களில் பார்த்தோம். தன்னிச்சையான அதிகாரப் பிரயோகம் தடுக்கப்பட் வேண்டுமெனில் சுயாட்சி அதிகார அமைப்புகள் தோற்றுவிக்கப்படவேண்டியது அவசியமாகிறது. சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் படிமுறைகள் இவ்வாறான எதேச்சாதிகாரச் சக்திகள் அதிகாரத் தைக் கைப்பற்றுவதைத்தடுக்க உதவுகிறது. இதனால் ஒரு நிலையான அதிகார அமைப்பு தொடர்ந்து செயற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
சமஷ்டி அடிப்படையிலான மாற்றங்கள் நாட்டின் பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுகளாகக் காட்டப் படினும் அவற்றை அமுல்படுத்துவதென்பது மிகச் சிக்கலான காரியமாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போல, இம்மாற்றங்களின் பலாபலன்கள் பற்றிய அறிவூட்டலும் குறிப்பாக பெரும்பான்மை இனத்தில் காணப்படும் சந்தேகங்களும் தீர்க்கப்படவேண்டியது அவசியமாகும். இச் சந்தேகங்களை நீக்குவது சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் கடமையாகிறது. இனவாத அரசியலால் நாடு படும் அவலங்களை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் உணர்ந்து வருவதுபோலவே தமிழர்களும் உணர்வது அவசியம். இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள், அணுகு முறைகள் என்பன தோல்வியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றன. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. தமிழ்பேசும்மக்கள் மத்தியிலே காணப்பட்ட சமூகப் பொருளாதார முரண்பாடுகளை அடையாளப்படுத்தும் அரசியல்சக்திகள் தோன்று வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டமை. அடுத்தது தமிழ்ப்பிரதேசங்களின் சமூகப்பொருளாதார அரசியல் துறைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் ஆதிக்கம் செலுத்தியமை. இவ்விரு போக்குகளும் ஒன்றோ டொன்று தொடர்புடையவை என்ற போதிலும் பொருளாதார ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்த மக்கள் ஏன் வீறுகொண்டெழவில்லை என்ற கேள்வி எழுகிறது. முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் பூர்சுவா சமுகத்தின் உள்முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். அதாவது, ஆலயப் பிரவேசம் என்ற போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் இச்சமூகத்தின் போக்கு ஊசலாட்டமடைந்தது. பிளவுகள் தற்காலிகமாக ஏற்பட்டன. இப்போராட்டங்கள் தணிந்தபோது இப்பிளவுகளும் மறைந்தன. இங்குள்ள முக்கிய அம்சம் என்னவெனில், தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலே பொரு ளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், அந்நிய சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என்பன முளை விடாமைக்குக் காரணம் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையாகும். சிங்களப் பேரினவாத, பெளத்த மத மேலாதிக்கத் தாக்கங்கள் தமிழ் மக்கள் மத்தி யிலுள்ள ஆதிக்க சக்திகளை நேரடியாகத் தாக்கிய
காட்பாடுகளை தமது கொள்கைகளாகக் ற்கட்சி முதலாளித்துவம் சார்ந்த அரசியற் னப் பலப்படுத்துபவர்களகவும் இருக்கையில் வாம் என்பது பொருத்தமற்ற வாதமாகும்.
இதழ் 24

Page 71
தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலே பொருளாதா அந்நிய சுரண்டலுக்கு எதி முளைவிடாம்ைக்குக் காரணம் சிங்களப் சிங்களப் பேரினவாத, பெளத்த மத ே மத்தியிலுள்ள ஆதிக்க சக்திகளை அவை தமிழர் என்ற வகையில்
போதிலும் அவைதமிழர் என்றவகையில் சகலதரப்பின ரையும் தாக்கியது. இதனால் தமிழ்ப்பிரதேச ஆதிக்க சக்திகளால் சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட கோசங்களின் பின்னால் சகல மக்களும் பின்தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. இவை கடந்தகால நிகழ்வுகளாக இருந்தபோதிலும், அவை தொடர்ந்தும் காணப்படுகின்றன என்பதை நாம் அவதானிக்க வேண்டும். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற பேரில் இன்றைய போராட்டம்
வர்ணிக்கப்படுகின்ற போதிலும்தேசிய விடுதலை
என்பது சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறைக்குள் சுருக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். மனிதத்திற்கு எதிரான சகல வகையான ஒடுக்கு
முறைக்கும் எதிரான போராட்டமே விடுதலை என்ற
வார்த்தையின் அர்த்தமாகும். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் அத்தகைய அம்சங்களைக்
கொண்டிருக்கவில்லை. ஏன் அவ்வாறான அம்சங்கள்
காணப்படவில்லை? இன்றைய போராட்டத்தை
நடத்துவது தமிழ் ஆதிக்க சக்திகளா? என்ற
கேள்விகள் எழுகின்றன. இன்றைய போராட்டத்திற்கு நிதியை வழங்கும் சமூகப்பிரிவினர் யார்? முன்னணி ஆதரவாளர்கள் யார்? இவர்களின் சமூகப் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேடுவோ மாயின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளலாம். மக்களுக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லாமல் நிலைமைகள் சென்று கொண்டிருப்பதன் அடிப்படை என்ன? போர் தேவையா, சமாதானம் தேவையா
என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? எப்போது
தீர்மானிக்கிறார்கள்? தமிழ்த் தேசியத்தின்விடுதலை எனில் அத்தேசியத்திற்கும் விடுதலைக்கும் இடையேயுள்ள உறவுநிலை என்ன? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்கள் தொடர்ச்சியான சந்தேகத்தையே பதிவாகத் தருகின்றன.
எனவே இப்போராட்டம் மக்கள் சார்ந்த ஒன்று அல் என்பதும் சமூகத்தின் ஒரு சாராரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஓர் போராட்டமாக அது மாற்றம் பெற்றுள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். இதன் முக்கிய அம்சம் என்னவெனில், இப்போராட்டம் பிரத்தி யேகநலன்கள் சார்ந்த ஒன்றாக இருந்தபோதிலும் அது தனது நலன்களை பேணுவதற்காக மொத்த சமுகத் தையும் பலிகொடுக்க விளையும் போக்கே அவதானிக் கத்தக்கது.
தமிழ்த் தேசியம், தமிழ் ஈழம் என்ற கோட்பாடுகள் பொதுநலன் சார்ந்ததாக பார்வைக்குத் தென்படினும் அவை வர்க்க நலன் சார்ந்ததாகவே அடிப்படையில் உள்ளன. இக் கோஷங்கள், எவ்வாறு தமிழரசுக் கட்சி பொருளாதார சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான சக்தி இதழ் 24

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், ான போராட்டம் என்பன
பேரினவாதத்தின் ஒடுக்குமுறையாகும். மலாதிக்கத் தாக்கங்கள் தமிழ் மக்கள்
நேரடியாகத் தாக்கிய போதிலும் சகல தரப்பினரையும் தாக்கியது.
களை நசுக்கியதோ அதேபோன்ற ஒடுக்கு முறையின் தளங்களாக இன்றைய அமைப்புகளும் உள்ளன. இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுரண்டலுக்கு எதிரான போராட்டம் தேசிய மூலவளங்கள் மீளப்பெறுவதற்கான போராட்டங்கள் சிங்களப்பகுதியில் இடம்பெற்றபோதிலும் அவ்வாறான போராட்டங்களுக்கு ஆதரவான போக்கு தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெறாமைக்குக் காரணம் தமிழ்ப் பிரதேச அதிகார வர்க்கங்களின் நலன்களுக்கும் இவை எதிரானதாக இருந்தமையே ஆகும்.
இதனால் பொருளாதார ஒடுக்குமுறைக்குள் அகப் பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட முடியாத நிலை மிகவும் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு இன்னும் அந்த நிலையே தொடர் கின்றது. தமிழர்களுக்குத் தனிஅரசு என்ற பொய்த் தோற்றத்தை அளிக்கும் வகையில் தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது. தமிழ் அரசு உருவாக்கத்துக்கான எந்தவித வேலைத் திட்டங்களும் இல்லாமலேயே தமிழரசுக்கட்சி செயற்பட்டது. சிங்கள பேரினவாதத் திற்கெதிரான குரலாக மட்டுமே செயற்படமுடிந்தது. தனது இருப்புக்கான நியாயத்தை அது சிங்கள பேரினவாதத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. சுருங்கக் கூறின் தமிழரசுக் கட்சியின் செயற்பாட் டுக்கான உந்துசக்தி சிங்களப் பேரினவாதத்தால் வழங்கப்பட்டது எனக் குறிப்பிடலாம். உலக அளவி லான ஏகாதிபத்திய சக்திகள் தமது ஆதிக்கத்தை விஸ்தரிப்பதற்கான நியாயங்களாக கம்யூனிச எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தன. கம்யூனிச வீழ்ச்சிக்குப்பின்னர் ஆதிக்கவிஸ்தரிப்புக்கான புதிய நியாயங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தேர்ந்தெடுத்துள்ளன. இதே போன்ற நிலைமை தமிழ்த் தேசியவாதத்தின்போக்கிலும் உள்ளது. - தனது உயிர்வாழ்தலுக்கான நியாயங்களாக JVP சிங்கள உறுமய போன்ற அமைப்புகளின் தோற்றத் தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இனப் பிரச்சினை சம்பந்தமான விவகாரங்களில் மிகவும் தீவிர அக்கறை செலுத்திவந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன பழைய பாணியில் இன ஒடுக்குதலை மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்துகொண்டு புதிய அணுகுமுறைகளைத் தேடி அலையும் சூழலில் தமிழ்க் குறுந்தேசியவாதமும் தனக்கான புதிய எதிரிகளைத் தேர்வுசெய்கின்றது.
எனவே தமிழ்த் தேசியம், தமிழ் ஈழம் என்ற கோட் பாடுகள் வெறும் அரசியல் சூழ்ச்சித் தந்திரங்களே தவிர வேறேதும் அல்ல. உதாரணமாக அரசாங்கத் துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுத் தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அதனைத்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 71

Page 72
தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் தமிழ்த் தேசிய உருவாக்கத்தைப் பற்றியதாகவோ அல்லது தமிழ் ஈழத்தை நோக்கியதாகவோ அமையவில்லை. அத்துடன் சிங்கள அரசு நியாயமான தீர்வைத் தராவிடில் தமிழ் ஈழம் காண்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதே தொடர்ச்சியான தர்க்கவாதமாக உள்ளது. நியாயமான தீர்வு கிடைக்காது என்ற தீர்க்கமான தீர்மானத்தின் பின்னரேயே தமிழ்ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்னமும் நியாயமான தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது. நியாயமான தீர்வை எதிர் பார்த்தால்அதனை அடைவதற்கான வழிகளை ஆராய வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்காது என்ற முடிவின் பின்னர் மாற்று வழி தேர்ந்தெடுத்தால் அதாவது தமிழ்ஈழத்தைப்பெறுவதற்கான பாதையைத் தொடரவேண்டும். ஆனால் இன்னமும் இந்த இருவழிப் பாதை பற்றிப் பேசப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? சமாதான ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகள், சர்வதேசத் தலையீடுகளைக் கோருதல் என்பன தமிழ் ஈழத்தை நோக்கிய பாதைகளாக இல்லை. எனவே தமிழ்ஈழம் என்ற கோஷங்கள் பேச்சுவார்த்தைமூலமான தீர்வை நோக்கிச் செல்வதற்கான தந்திரோபாயமாகும். இத்தந்திரோபாயம் தமிழ்ஈழக் கோரிக்கையின் பலவீனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளின் விளை பொருளாகவே உள்ளது. ஒஸ்லோவில் எட்டப்பட்ட உடன்பாடுகள் தமிழ்ஈழக் கோரிக்கையின் பலவீ னத்தை உணர்ாத்தின. பொருத்தமான மாற்றுத் தீர்வு களைத் தேடத் தான் தயாராக இருப்பதாகவும் அதனடிப்படையில் உள்ள சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு சமஷ்டி அடிப் படையிலான தீர்வை நோக்கிபார்வையைச் செலுத்த தாம் தயார் என விடுதலைப் புலிகள் தெரிவித்தி ருந்தனர். எனவே தமிழ்ஈழக் கோரிக்கை என்பது எந்நேரத்திலும் கைவிடக்கூடிய ஒன்றாகவே தொடர்ந்து காணப்பட்டது. இதனை நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் காணலாம். தமிழ்ஈழமே முடிந்த முடிவு என அம்மாநாட்டில் தீர்மானித்த பின்னரும் ஜே.ஆர். அவர்களால் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாட்டில் தமிழர் அரசியல் தலைமை கலந்துகொண்டது. தமிழர் கூட்டணி, தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் எனபன தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை வைத்திருப் பதாகக் கூறிக்கொண்ட நிலையில் தமது அடிப்படை நிலைப்பாடுகளை விட்டுக் கொடுக்கத் தயாராகவே இருந்தன. இந்த அணுகுமுறையானது பொருத்தமான தீர்வை அடைவதற்கான தந்திரோபாயமாகக் கூறப்படினும் இத்தந்திரோபாயமே இப்பிரச்சினைக்கான தீர்வுகளுக்குத் தடையாகவும் உள்ளது. ஆயுதப் -போராட்டமும் பேச்சுவார்த்தையில் காட்டப்படும் விசுவாசமற்ற போக்கும் வன்னியில் முப்படைகளைக்
ஆயுதப் போராட்டமும் பேச்சுவார்த்தையி வன்னியில் முப்படைகளைக் கொண்ட
நிலைப்பாடுகளும் ஓர் குழப்பமான தோற்றுவிக்கின்றன. சமாதானத்தில் ஈ பேச்சுவார்த்தை நடைபெறும்போது போர் நடைபெறுகிறது. போர்நிறுத்த ஒ 72 உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

கொண்ட அரசு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நிலைப்பாடுகளும் ஓர் குழப்பமான அரசியல் நிலையையே தொடர்ந்து தோற்றுவிக்கின்றன. சமாதானத்தில் ஈடுபடும்போது போரும் நடை பெறுகிறது. போரா சமாதானமா என்ற கேள்வி எழு கிறது. பேச்சுவார்த்தைநடைபெறும்போதுதமிழ்ஈழமும் வற்புறுத்தப்படுகிறது. பேச்சுவார்த்தை என்பது தமிழ்ஈழத்தை அடையவா எனக் கேட்கப்படுகிறது. போர் நடைபெறுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறானால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அர்த்தம் என்ன எனக் கேட்கப்படுகின்றது. ஏனிந்தக் குழப்பநிலை. இக்குழப்ப நிலைக்குப் பிரதான காரணம் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடும் குறிப்பாக அரசியல் கொள்கைகளுக்கும் தந்திரோபாயங்களுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் யாவற்றிற்கும் காரணம் விடுதலைப் புலிகள் மத்தியிலே காணப்படும் நெகிழ்வற்ற அரசியல் கட்டுமானமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அரசியல் கொள்கை சார்ந்த ஒன்றாகும். இவை மிகவும் தீர்க்கமாக விவாதிக்கப்பட வேண்டியவைகளாகும். கட்டுமானத்தின் தோற்றம் என்பது அரசியல் இலக்கை அடைவதைத் துரிதப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட கருவியாகும். அரசியல் கட்டுமானமே இராணுவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் இந்நிலை விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லை. அரசியல் பிரச்சினைகள் யாவும் இராணுவ அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன. மாற்று அரசியல் கருத்துக் கொண்டோர், மாற்று அரசியல் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்பவற்றின் செயற்பாடுகள் என்பன துணைப் படைகள், ஒட்டுப்படைகள் என்ற சொற்பதங்களின் மூலம் எதிரிகளாக இனங்காட்டப்படுவதும் அச்சக்தி களை ஒழிக்க முயற்சிப்பதும் இராணுவ அடிப்படை யிலான கண்ணோட்டத்தின் விளைவுகள் ஆகும்.
தமிழ்த் தேசியத்திற்கான குறுகிய விளக்கங்கள் தமிழீழம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளின் உள்நோக்கங்கள் என்பன ஜனநாயகத்தின் குறியீடு களாக இல்லை. அதுமட்டுமல்லாமல் அவை மக்கள் சார்ந்ததாகவும் இல்லை. பதிலாக அவை மண் சார்ந்த தாகவே உள்ளன. தமிழ்ப்பிரதேசத்தின் 70சதவீத நிலப்பரப்பின் கட்டுப்பாடு தம்வசம் இருப்பதாகவும் வன்னியில் ஒர் அரசு இருப்பதாகவும் முன்வைக்கப்படும் வாதங்கள் அந்த நிலப்பரப்பில் எத்தனை சதவீத தமிழ்மக்கள் வாழ்கிறார்கள்? இந்த மக்களுக்கும் அங்குள்ள அரசுக்கும் இடையே நிலவும் உறவு என்ன? இவை எதுவுsே முன்வைக்கப்படுவதில்லை. எனவே இம்முரண்பாடுகள் மேலும் மேலும்-புவி சிக்கலான நிலைமைகளையே உருவாக்குகின்றன. ஒற்றை யாட்சிக் கோட்பாடு நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. அதே ல் காட்டப்படும் விசுவாசமற்ற போக்கும் அரசு இருப்பதாகக் கறிக்கொள்ளும் அரசியல் நிலையையே தொடர்ந்து டுபடும்போது போரும் நடைபெறுகிறது.
தமிழ்ஈழமும் வற்புறுத்தப்படுகிறது. ப்பந்தம் இருப்பதாகக் கறப்படுகின்றது.
இதழ் 24

Page 73
போன்றே தமிழ்ஈழக் கோட்பாடு சிங்கள மக்களுக்கு சந்தேகத்தையும் வளர்த்துள்ளதே தவிர தமிழ்பேசும் மக்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தைத் தரவில்லை.
ஆகவே தமிழ்பேசும் மக்கள் புதிய வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கித் தமது கவனத்தைச் செலுத்தவேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னர் அமைந்த அரசுகள் மேற்கொண்ட இனவாத அரசியல் சிந்தனைகள் அவர்களது இலட்சியங்களை நிறைவேற்ற உதவவில்லை. பதிலாக நாடு பின் நோக்கித் தள்ளப்பட்டது. இதேபோன்று சிங்கள பேரினவாதத்திற்கெதிராக உருவாகிய தமிழ்த் தலைமைகளால் அப்பேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தைத் தோற்றுவிக்க முடிந்ததே தவிர உறுதியான தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை உருவாக்கத் தவறிவிட்டது.
இவையாவும் தோல்வி அடைந்தமைக்குக் காரணம் அவை மக்கள் சார்ந்ததாக அமையவில்லை. பதிலாக இருபுறத்திலும் காணப்பட்ட அதிகார வர்க்கங்கள். தமது இருப்பைப் பேணுவதற்காக மேற்கொண்ட உத்திகளாகும். சிங்களத் தேசியவாத அதிகார சக்திகளும் தமிழ்த் தேசியவாத அதிகார சக்திகளும் ஒன்றில் மற்றொன்று தங்கியே செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. சாதாரண சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து செல்ல முடியாதவாறு இந்த அதிகார வர்க்கங்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. சிங்களவர்களோடு வாழமுடியாதென g(5 புறத்திலும் தமிழர்கள் சிங்கள தேசத்தைப் பிரிக்கி றார்கள்என மறுபுறத்திலும் இந்த அதிகாரவர்க்கங்கள் தமது சூழ்ச்சி அரசியலை நடத்தி வருகின்றன. இச் சூழ்ச்சி அரசியலில் பலிகொள்ளப்படுவது சாதாரண குடும்பங்களைச் சார்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகும்.இக் கூறுபோடும் அரசியலை இனம் கண்டு அதற்கு எதிராகச் செயற்படவேண்டியது இந்த மூன்று இனங்களிலும் காணப்படும் ஜனநாயக சக்திகளாகும். மக்களின் நலன்களுக்கு எதிராகச் செற்படும் அரசியற் சக்திகளையும் அவர்களது அரசியல் கோட்பாடுகளை யும்நிராகரிக்க வேண்டியது இவ்ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.ஒற்றையாட்சிக் கோட்பாடுகளும் தமிழ் ஈழக் கோட்பாடுகளும் தோல்வி அடைந்துள்ளதைநாம் வற்புறுத்த வேண்டும். கோட்பாடுகள் நிலைக்க முடியாதவை என்பது நிதர்சனமாய் உள்ளதால் தமது இறுதி ஆயுதமாக இராணுவ வலிமையை பயன்படுத்த தயாராக உள்ளனர். இந்த இரு சாராரும் நடத்தும் இப்பேரம் மக்களுக்கு உதவப் போவதில்லை. அப்பாவி மக்களே இக்கொடுமையான பரிசோதனைக்கு இரையாகப் போகிறார்கள். எனவே இதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும்.
இதற்கான ஒரே வழி இலங்கையில் ஜனநாய கத்தைப் பலப்படுத்துவதற்கான மாற்றுவழிகளைத் தேரந்தெடுப்பதுதான். ஒற்றையபாட்சியில் காணப்பட்ட
ாத அம்சங்கள் ஜனநாயக விரோத அம்சங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டுமாயின் மத்திய அரசில் குவிக்கப்பட்டுள்ள் அதிகாரங்கள் பரவலாக்கப்பட
வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பிரதேசங்களில் நிர்வாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அங்கு மீண்டும் ஜனநாயகம் இதழ் 24

தழைக்க வழிகோல வேண்டும். இதன்மூலமே மத்தியில் சர்வாதிகார ஆட்சி தோற்றாமலும் பிரதேசங்களில் பிரிவினைவாதம் தலைதுாக்காமலும் தடுக்க முடியும்.
இவ்வாறான அம்சங்கள் சமஷ்டி ஆட்சித் தத்துவங்களில் நிறையவே காணப்படுகின்றன. இலங்கையில் சமஷ்டி ஆட்சி தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தைவிட சமஷ்டி ஆட்சித் தத்துவங்கள் இலங்கை அரசியல் அமைப்பில் இணைக்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்துவதே பொருத்தமான அணுகுமுறையாகவும் இருக்க முடியும். சமஷ்டிக் கோட்பாடுகள் அல்லது சமஷ்டி ஆட்சிமுறை நாட்டுப்பிரச்சினைக்கான வாய்ப்பாக அமையும் என்பது பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. அதில் சிலநியாயங்கள் உண்டு.
ஆனால் இனப்பிரச்சினையின் கூர்மையைத் தணிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்காமல், முன்வைக்கும் கருத்துகளை இனரீதியாகப் பார்ப்பதும் எதிர்ப்பதும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. உதாரணமாக, அதிகாரப் பரவலாக்கத் தையோ சமஷ்டி ஆட்சி முறையையோ தாம் ஏற்கப் போவதில்லை எனவும் இவை யாவும் மேலும் இன விரிசல்களை ஏற்படுத்து எனவும் வாதிக்கின்றனர். வடக்கு கிழக்கிற்கு வெளியில் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்வதால் வடக்கு கிழக்கிற்கான அதிகாரப்பரவலாக்கமோ அல்லது சமஷ்டிரீதியிலான தீர்வுகளோ தமிழர்களில் சிறுபான்மையினருக்கான தீர்வாக அமையும் எனவும் இதனால் ஏனைய ஏழு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் வட கிழக்கு மக்களுக்கும் இடையே விரிசல்கள் ஏற்படும் எனபதே அவர்களது வாதமாகும்
சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிக் கோட்பாடு களை இனரீதியான பார்வையினுாடாக மட்டுமே ஜேவிபியினர் பார்க்கின்றனர். அதற்கு அப்பாலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். நாட்டை இனப்பிரச்சினை மட்டுமல்ல, பெரும்பான்மை என்கின்ற சர்வாதிகாரம் ஜனநாயக வழிகள்ைத் தனது நலன் களுக்கு உபயோகப்படுத்துவதும் நடந்தேறுகிறது. சிங்களப் பெரும்பான்மை என்பது சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. வாக்குப் பெரும்பான்மை என்பதால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி என்ற பேரால் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. இதனால் ஜேவிபியின் தலைவர்கள் ஒழிக்கப்பட்டார்கள். கடந்த 25ஆண்டு களுக்கு மேலாக இலங்கையில் ஒரு நிலையான அரசு தோற்றம் பெறவில்லை. இதன் காரணம் நாட்டில் நிலவிவரும் ஆட்சி அமைப்புமுறையாகும்.
இந்த ஆட்சி அமைப்புமுறை மாற்றப்படவேண்டும் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியிலே வாழும். ஜனநாயக சக்திகள் மத்தியிலே ஆழமாக வேரூன்றி வருகிறது. இவ் ஆட்சிமுறை மாற்றம் நாட்டின் தேசிய இனங்களின் நலன்களுக்கும் உகந்தது என்பதால் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இவ் ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வேண்டும். பெரும் சக்தியாக மாற்றம் பெறவேண்டும் இந்த இறுதி நேரத்திலாவது இம்முயற்சிகள் தீவிரமாக்கப்படாவிடில் நிலைமை மோசமாகிவிடும்.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 73

Page 74
அன்புடன் புஸ்பராசா அண்ணைக்கு,
உங்கள் கடைசிக் கடிதம் கிடைத்தது. சீனிப்பேணிக்குள் கடிதம் எழுதி வைத்து விட்டுச் சொல்லாமல் இயக்கத்துக்குப் போன பொடியங்களைப்போல கடிதம் வைத்துப் போனது நீங்களும் அடிப்படையில் ஒரு ஈழப் போராளி என்பதை நினைவுபடுத்தவா?
எழுபதுகளின் கடைசியில் பத்திரிகைகளின் தலைப்புகளில் அறியப்பட்ட அதே ஆளெனத் தெரியாமல் எண்பதுகளின் தொடக்கத்தில் MIRJEஇல் வேலை செய்து கொண்டிருந்த என் அப்பாவை சந்திக்க வந்துகொண்டிருந்த பலருள் மெலிந்த முழுக்கை சேட் அணிந்த உருவமாக என் நினைவினில் இருந்த புஸ்ப ராசா அண்ணை, ஐரோப்பாவின் இயக்கக் காலத்தில் நான் புஸ்பராஜாத் தோழர் பேசுகி றேன் என்று தொலைபேசியில் அறிமுகமான புஸ்பராசாண்ணை, இலக்கியச் சந்திப்புகளில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று கருத் துப் பரிமாறிக் கொண்ட புஸ்பராசா அண்ணைசபாலிங்கத்தின் கொலை தந்த அதிர்வுகளுடன் வரண்டு விடுமோ என்றிருந்த புகலிடத்தின் மாற்றுக் கருத்துச் சுதந்திரத்தை ”தோற்றுத்தான் போவோமா" என நெஞ்சை நிமிர்த்தி உயிர்க்கச் செய்வதில் சிதறியிருந்த சின்னச் சின்ன நம்பிக்கைகளையும் துணிவு களையும் கோர்த்தெடுத்த முயற்சியில் மூச்சி றைக்க ஒடித் திரிந்த புஸ்பராசாண்ணை என்று எனக்கு நீங்கள் தமிழரின் அரசியல் வரலாற் றின் ஒரு பரிமாணமாகவே தெரிகிறீர்கள். தேசிய விடுதலையில் தொடங்கி அதன்மீதான சுயவிமர்சனம் அடுத்த கட்டத்திற்கான நகர்வு சகிப்புத் தன்மை மாற்றுக் கருத்தை அங்கீ கரித்தல் போன்ற அம்சங்களை தமிழ் அரசி யலில் இன்றும் இனங்காணக் கூடியதை உங்கள் செயற்பாடுகள் உணர்த்தின. 74உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

UJIJI aNGaiGnGION, பசிக் கொண்டிருக்கிறீகள்
மிதவாத அரசியலை நீங்கள் நம்பியதை விட அதன் தலைவர்கள்மீது உங்களுக்கிருந்த நம்பிக்கையைப்பற்றிக் காரசாரமான விவாதம் நடத்தியது நினைவிருக்கிறதா?
ஈழப் போராட்டத்தின் வரலாறு ஒற்றைத்தன மானதல்ல என்பதை உங்கள் 'ஈழப்போராட் டத்தில் எனது சாட்சியம்' சாட்சி சொன்னது. "நீங்கள் மிதவாதத்தை இறுகத் தழுவிக் கொண்டிருப்பதால் அந்த சாட்சியத்தின் பல இடங்களில் உங்களைக் காணமுடியவில்லை" என என் ஆதங்கத்தைத் தெரிவித்தபோது நீங்கள் கொடுத்த விளக்கங்கள் குறிப்பாக துரையப்பா தொடர்பான கருத்துக்கள் ஒரு ஆழமான விவாதத்திற்கு பயன்படக் கூடியவை.
பெரும் கதையாடல்களுடன் மனிதர்களை இணைத்து முத்திரை குத்துவதைவிட பெருங் கதையாடல்களை ஒவ்வொரு சமூகக் குழுவும் எப்படி மொழிபெயர்த்துக் (interpret) கொள்கிறது என்பதை அவ்விவாதம் புரிய வைத்தது
நீங்கள் தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு பகுதி. குழந்தைகளை விழுங்கியதால் ஒரு காலத்தையே விழுங்கிய சுனாமிபோல உங் களின் இழப்புடன் அந்த இயங்கலின் தொடர்ச்சி யைக் குறித்து நின்ற அப்பகுதியைக் காலம் விழுங்கிவிட்டது.
கடைசிக் கடிதத்தைக்கூட ஒரு அரசியல் கோரிக்கையாக மாற்ற உங்களால்தான் முடித் திருக்கிறது.
இக்கடிதத்திற்குப் பதில்போட உங்களுக்கு நேரமிருக்காது. இங்கிருக்கும் நிலைமைகளை நாங்கள் உங்களுக்கு எழுதிக் கொண்டிருப் போம். ஏனெனில், மனித சுதந்திரத்தின் எல்லை கள் குறுக்கப்பட்டு இன்னுமொரு நண்பன் தொலையக் கூடிய ஒரு அபத்தமான சூழலில் உங்கள் செயற்பாடுகள் மூலம் புஸ்பராசா அண்ணை நீங்கள் (3Udfldj5 கொண்டிருக்கிறீர்கள்!
இதழ் 24

Page 75
விஜியுடன் ஒரு சந்திப்பு
சுனாமிக்குப்பின்னா பெண்கள் உரிமைகள்
சந்தித்தவர் அகிலன் கதிர்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் பெண் முருகையா) ஒக்டோபர் 2005இல் நேர்கண்டவர், ir இணையாசிரியரான அகிலன் கதிர்காமர். சுனாமிக்கு கொள்ளும் ஒரு முயற்சி இந்த நேர்முகம். இவர் தற்
lines: சுனாமி பற்றிய உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? அந்தச் சமயத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? அது எப்படி நடந்தது? விஜி: சுனாமி தாக்கியபோது நான் ஒரு நண்பரின் வீட்டில் தங்கி இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டது. அத்துடன் எங்கள்நாய் அமைதியில்லாமல் இருந்தது. சத்தம் கேட்டபோது ஒருவேளை யுத்தம் திரும்ப ஆரம்பித்துவிட்டதென்றும் எனவே சண்டை நடக்கின்ற தென்றும் நான்நினைத்தேன். ஆனால் நான் அப்போது தென்னைமர உயரமளவிற்கு தண்ணிரைக் கண்டேன். ஏன் அவ்வளவு தண்ணிர் வந்ததென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தத் தண்ணிர் கடலில் இருந்து வருகின்றதென்று பிறகு கண்டேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடினேன். ரவுனுக்குப் போவதற்கு ஒரு வாகனம் கிடைத்தது. சில நிமிடங் களின் பின்பு நான் கண்டதை என்னால் தாங்க முடிய வில்லை, வாகனங்களில் உடல்களை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்த காட்சியை. நாங்கள் இன்னொரு வீட்டுக்கு நகர்ந்தபொழுது மீனுக்காகக் காத்துநிற்பதுபோல் கரைகளில் காத்துக்கொண்டு நின்றார்கள். ஆனால் அவர்கள் காத்திருந்தது உடல் களுக்காக, கொல்லப்பட்டவர்களில் அநேகமா னவர்கள் பெண்களாகவும் குழந்தைகளாகவும் இருந்தார்கள். அது ஏனென்றால் அவர்களுக்கு நீந்த முடியவில்லை. பெண்களுக்கு நீண்ட தலைமுடி இருந்ததனால் அது சிக்குப்பட்டு அவர்கள்தப்புவதைக் கடினமாக்கி இருக்கின்றது. உடல்கள் ட்ரக்குகளில் ஒரேயடியாக ஏற்றப்பட்டன. அவை மொத்தமாக எரிக்கப்பட்டன.
lines: சுனாமிக்குப்பின்பு உடனடிநிவாரணத்திற்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்? உங்கள் பகுதியில் எந்த அமைப்புகள் வேலை செய்தன? விஜி: சுனாமிக்குப்பின் உடனடியாக, தெற்கில் இருந்த சாதாரண மக்கள் உணவு, உடை, மருந்து சகிதம் வாகனங்களில் வந்தார்கள். இந்த வகையான உதவி
இதழ் 24
 

மற்றும் உள்ளூர் அரசி
STTLD (www.lines-smagazine.Org)
- தமிழில்: மானசி -
கள் உரிமைகள் செயற்பாட்டாளர் விஜியை (விஜயகுமாரி les 860D600LLuë sé5Âsosuffisir (www.lines-magazine.org) ப் பின்னான புனர்நிர்மானத்தின் அரசியலைப் புரிந்து சமயம் கனடாவில் வசித்து வருகிறார்.
கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளிற்குத் தொடர்ந்தது. Sg96JODg56 TRO, ZOA, GTZ, OXFAM (3LIIT 6ösm 596oo DŮu களும் ஏனைய சர்வதேச NGOக்களும் நிவாரண வேலைகளில் ஈடுபட்டன. பிறகு உலகின் எல்லாப் பாகங்களிலும் இருந்தும் பல வைத்தியர்கள் வந்து சேர்ந்தார்கள். அத்துடன் சில வைத்தியர் களுக்கு. உள்ளுர்த் தேவைகளைப் புரிந்து கொள்ளப் போதியளவு அவகாசம் இல்லாமையால் வைத்தியக் கவனிப்புகளிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. மீண்டும் போதியளவு ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. கூடாரங்கள் வந்து சேர்ந்தன. ஆனால் அவைகள் உள்ளுர்க்காலநிலைகளிற்குப் பொருந்திவரவில்லை. பின்பு இந்த அமைப்புகள் தற்காலிக வதிவிடங்களை (கூடாரங்களை) குடிசைகளை அமைத்தன. இந்த நிவாரண முயற்சிகளில் சிலவற்றை ஒருங்கிணைப் பதற்கு ஆலோசனைக் கூட்டங்களினுாடாக அரசாங் கம் முயற்சி செய்தது. ஆனால் ஒருங்கிணைப்பு சர்வ தேசNGOக்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டன. உள்ளுர் அமைப்புகளிற்கு எந்தப்பணியும் வழங்கப்படவில்லை. எனவே ஆரம்பத்தில் உள்ளுர் அமைப்புகள் தாங்க ளாகவே சில பணிகளை மேற்கொண்டன. அதே நேரத்தில் சர்வதேச NGOக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணி புரிந்தன. பின்பு நாங்கள் இந்த கூட்டங்களை ஆட்சேபித்தோம். எங்களையும் அந்தச் சந்திப்புகளிலும் விவாதங்களிலும் பங்குபற்ற அனும திக்கும்படியும் அவைகள்பற்றி அறியத் தரும்படியும் வேண்டுகோள் விடுத்தோம். ܓ
நாங்கள் பெண்களுடைய கூட்டிணைப்பு ஒன்றையும் அமைத்தோம். இங்கு எவ்வாறுநாங்கள் செல்வாக்குச் செலுத்தலாம் என்பதில் அதிக கவனத்தைக் குவித்தோம், நாங்கள் ஒரு ஒப்பந்தப் பத்திரத்தைத் தயாரிப்பதில் எங்கள் வேலையை ஆரம்பித்தோம். அது எல்லா நிவாரணப் பிரிவுகளிலும் பெண்களின் பிரச்சி னைகள் பேசப்பட வேண்டும் என்பதற்கான உரிமை யைக் கோரியது. இப்பெண்களுடைய கூட்டிணைப்பில் உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006.75

Page 76
இடம் பெயர்ந்தவர்களுக்கான பல்வேறு முகாம்களில் இருந்தும் பிரதிநிதிகள் இருந்தார்கள். முகாம்களில் இருந்த நிர்வாகக் குழுக்களிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று கோரினோம். ஒவ்வொரு முகாமிலிருந்தும் குறைந்த பட்சம் இரண்டு பேர் பெண்களின் கூட்டிணைப்பில் இருந்தார்கள். இவர்கள் தங்கள் முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளை எங்களுக்குத் தெரிவிப்பவர்களாக இருந்தார்கள். எங்களுடைய வழமையான கூட்டங்களை விடவும், கோரிக்கைகளை உருவாக்கி அவற்றை அரசாங்கத்தின் அதிகாரி களுக்கு அனுப்பினோம்.
எப்படி இருப்பினும், காலப்போக்கில் சர்வதேச NGOக்களின் பங்கு பெருகியது. அவர்கள் பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தொடங்கியபொழுது இதுபற்றி எந்தவித ஆலோசனைகளோ விவாதங் களோ உள்ளுர்க் குழுக்களுடன் இருக்கவில்லை. சர்வதேச NGOக்கள் பணத்தை வாரி இறைப்பதற்குத் தயாராக இருந்தன. அவர்கள் இதனைத் தொடங்கிய பொழுது, உள்ளுர்க்காரர்களை வேலைக்கு அமர்த் துவது அவர்களிற்கு இலகுவாக இருந்தது. இது உள்ளுர் அமைப்புகளையும் உள்ளுர் அடிக்கட்டு மானங்களையும் பிளவுக்குக் கொண்டு சென்றது. உள்ளூரில் 5000ருபா வரையில் சம்பளம் கொடுக்கும் வேலைக்கு சர்வதேச NGOக்கள் இருபது அல்லது இருபத்தையாயிரம் வரையில் ஊதியம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்
அடுத்து சர்வதேச NGOக்கள் அளவுக்கு மிக அதிகமான வாடகைகள் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருக்கும் வீடுகளை சனங்கள் சர்வதேச NGOக் களுக்கு வாடகைக்கு கொடுக்கத் தொடங்கியதால் இது வீட்டு நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. 3000 ரூபாய்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட ஒரு வீடு அதைப்போல் 20 மடங்கு வாடகைக்கு விடப்படக்கூடிய தாயிற்று. வீட்டுச் சொந்தக்காரர்கள் எற்கனவே வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றி சர்வதேச NGOக்களுக்கு வாடகைக்கு கொடுத்தார்கள்.
lines: உங்களுடைய பெண்களின் கூட்டிணைப் 76|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

எவ்வகையான கொள்கைப் பணியை முன்னெடுத்தது?
விஜி; நிலப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருந்தது. சுனா மிக்கு முன்பு 75வீதமான நிலமும் வீடுகளும் பெண்களுக்குச் சொந்த மாக இருந்தன. அரசாங்கம் நஷ்ட ஈட்டை பணமாகவோ அல்லது மாற்று நிலத்திற்கான உரிமை களையோ குடும்பத்தின் தலை வரின் பெயருக்குத்தான் கொடுத் தன, அதாவது ஆண்களுக்கு. இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. குடும்பத்தைப்பொறுத்த வரையில். இது ஆண், பெண் இருவரது பெயரிலும் வழங்கப் படவேண்டும் என்றுநாங்கள் கோரிக்கை வைத்தோம், எப்படி இருந்தாலும், இன்னும் இந்தப்பிரச்சினைதிர்க்கப் படாமலே உள்ளது.
lines: உள்ளுர் அதிகாரங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?
விஜி: GS, DS என்பவர்களைப் போன்ற உள்ளுர் அதிகாரிகளை எதிர்கொள்வதில் நிறையப் பிரச்சி னைகள் உண்டு. உள்ளுர் அதிகாரிகள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருக்கின்றார்கள். அவர் களுடன் பணிபுரிவதுமிகக் கடினம்.
உதாரணத்திற்கு, சேதங்களைப் பற்றிய மதிப்பீடு களில் ஊழல் நடைபெறும்போது நாங்கள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இது எப்படியோ நீண்ட காலத்திற்கு இழுபடும். உள்ளுர் அதிகாரிகளுக் கெதிராக சில கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவித் தார்கள். இது கிராமசேவகரை இடமாற்றும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஆனால் இப்படியான எதிர்ப்புகள் அரிது.
lines: சுனாமியால்பாதிக்கப்பட்டவர்கள் வேறென்ன பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்?யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சுனாமியால் பாதிக்கப்பட் டவர்களையும் நடத்தும்விதத்தில் சில பாகுபாடுகள் காட்டப்படுவதாக நாங்கள் அறிகிறோம். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சுனாமி யாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இடம் பெயர்ந்த சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சிறிது கூற முடியுமா?
விஜி: யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் தற்காலிக குடியிருப்புக்ளில் கடலுக்கு அருகாமையில் வசித்துவந்தார்கள். எப்படி இருந்தாலும் இந்த வசிப்பிடங்கள் ஒரு நிரந்தர குடியிருப்புகளாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப் பட்டிருக்கவில்லை. இப்படி யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களின் நிலஉரிமைகள் பற்றிக் கூறுவதற்கு அரசாங்கத்திடம் எந்தக் கொள்கையும் கிடையாது. அவர்கள் மீண்டும் தற்காலிகமான குடிசைகளில்தான் வசிக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிலம் வழங்குவது பற்றி எந்தக் கொள்கையையும் கருத்திற் கொள்ள வில்லை. அடுத்து வாடகை வீடுகளில் கூடி
இதழ் 24

Page 77
வர்கள் இடம்பெயர்ந்தபோது அவர்கள் நிவாரணமோ அல்லது நிலஉரிமை பெறுவதற்கோ எந்தவிதமான வழிவகைகளும் இல்லை. இப்படியான பிரச்சினைகள் அரசாங்கத்தினால் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
அடுத்து, அரசியல் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்கள், அரசியல் கருத்து வேற்றுமையுள்ள வர்கள் போன்றவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. இவர்கள் தொடர்ந்தும் ஆபத்தான சூழ்நிலை களைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. அவர் களுக்குப்போதியளவு பாதுகாப்பும் காவலும் வழங்கப் படவேண்டும்.
lines இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? விஜி: இந்த முகாம்களில் இருக்கும் பெண்களுக்கு மிகக் குறைவான வசதிகளே உள்ளன.தனியான இடம் என்று எதுவும் இவர்களுக்கு இல்லை. இது குடும்ப வன்முறைக்கும் இட்டுச் செல்கின்றது. எவ்வளவோ துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன. முக்கியமாக குடும்பத்தில் துஷ்பிரயோகம். பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. பெண்களுக்கெதிரானபாலியல்பலாத்காரம்நடந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.
lines:இந்த முகாம்களில் எப்படிப்பட்ட பாதுகாப்புப் பொறிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன? விஜி:சில முகாம்களில் இராணுவம் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கின்றது. ஏனைய முகாம்களில் TRO பொறுப்பாக இருக்கின்றது. எப்படி இருப்பினும் பெண்க ளுக்கான பாதுகாப்பு விடயம் முன்வைக்கப்படவில்லை. இராணுவம் பாதுகாப்பு வழங்கும்போது அது அரசியல் பிரச்சினைகளக்கு இட்டுச் செல்கின்றது. ஒரு முகாமில் அண்மையில் இராணுவப்பாதுகாப்பில்இருந்த ஒருமுகாமில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தி ருக்கிறார்கள். இராணுவம் அவர்களை நோக்கிச் சுட்டபோது 4 பிள்ளைகள் காயம்பட்டிருக்கிறார்கள். இப்படியான ஆபத்துகள் தொடருகின்றன. வன் முறைகள் உண்மையிலேயே புனரமைப்புப் பணிகளை முடக்கி இருக்கின்றன.
lines: பிள்ளைகள் எதிர்நோக்கும் சில பிரச்சி னைகள் எவை? அவர்கள் மீண்டும் பாட சாலைக்கு செல்லத் தொடங்கிவிட்டார்களா? விஜி பாடசாலைகள் நடை பெற்றுக்கொண் டிருக்கும்போது, பாடசாலைகளிற்குச் செல்வதற்கு பிள்ளைகள் நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டும். அரசாங்கம் இந்தப் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற் கான எந்தப் பிரயாண வசதியையும் செய்து கொடுக்கவில்லை. எனவே அநேகமான பிள்ளைகள்ப்ாட சாலைக்குப் போவதில்லை. அநாதையாக்கப்பட்ட பிள்ளைகளின் தேவை களும் நிவர்த்திசெய்யப்படவில்லை. இந்தக் குழந்தைகளை UNICEF நிறுவனம் பதிவு செய்யும் அதேநேரம், நிறையப் பிள்ளைகள் தங்களுடைய உறவினர்களுடன் தங்கி விடுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்து வசிக்கக்கூடிய எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. இதழ் 24
 

lines:சுனாமிக்குப் பின்னான ஒரு வருடத் தில் சர்வதேச NGOக்களுக்கும் உள்ளுர் அமைப்பு களிற்கும் இடையிலான உறவுகள் எப்படி மாற்ற மடைந்திருக்கின்றன? விஜி சர்வதேச NGOக்கள் உள்ளுர் அமைப்புகளின் பணிகளை எதிர்மறையாகப் பாதித்திருக்கின்றன. நாங்கள் கிராமங்களிற்குச் சென்று கூட்டங்கள் வைப்பதுண்டு, கிராமத்தவர்களைக் கலந்தாலோசிப் பதற்கு சர்வதேச NGOக்களும் அப்படியான சந்திப்பு களை வைக்கத் தொடங்கி, பங்குபற்றுபவர்களுக்கு தலா 1000 ரூபாய்கள் கொடுத்தார்கள். அதன்பின்பு நாங்கள் திரும்பவும் அங்கே போகும் பொழுது, உதவிப்பணம் இல்லாமல் கிராமத்தவர்கள் எங்கள் கூட்டங்களில் பங்குபற்ற விரும்பவில்லை. இரண்டு கிராமங்களில் நாங்கள் ஜீவனோபாயத்திட்டங்களில் பணிபுரிந்தோம். அங்கிருந்த ஒருங்கிணைப்பாளருக்கு 5000 ரூபாய்கள் ஊதியம் வழங்கினோம். அவர்களுக்கு சர்வதேச NGOக்கள் 15000 ரூபாய்களை ஊதியமாகக் கொடுத்தார்கள். எனவே அவ்ஒருங்கிணைப்பாளர்கள் எங்களிடமிருந்தும் அதேயளவு ஊதியத்தை எதிர்பார்த் தார்கள். எங்களால் அதைச் சமாளிக்க முடியவில்லை. இது எங்களுடைய வேலைத்திட்டத்தை இடை நிறுத்தியது.
சர்வதேச NGOக்களின் பணி தொடர்ந்தும் மிகவும் ஆறுதலாகவே நடைபெறுகின்றது. பணத்தைக் கொடுத்துத்தான் வேலை பெற்றுக்கொள்ளும் சில பணிகளை ஆரம்பித்தார்கள். மீண்டும், இப்படிச் செய்வது விடயங்களை முன்னோக்கிநகர்த்தாது.
lines: சர்வதேச NGOக்களை எதிர்கொள்வதற்கு உள்ளுரில் ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட்டனவா? விஜி:கூட்டங்கள், சந்திப்புகள், பெட்டிசன்கள் என்று நடந்தன. ஆனால் அது மிகவும் கஷ்டம், சர்வதேச NGOக்கள் மிகப் பலம் வாய்ந்தவை. அப்படி அறுப துக்கும் மேற்பட்ட NGOக்கள் உள்ளன. சர்வதேச NGOக்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றபோதும், மட்டுப்படுத்தப்பட்ட நேரத் தில் சகல பிரச்சினைகளையும் பற்றி பிரஸ்தாபிப்பது மிகவும் கடினம். இன்னும் அநேகமாக கூட்டங்கள் ஆங்கிலத்தில்தான் நடைபெறும். எனவே மீண்டும் எல்லா உள்ளுர்க்காரர்களும் பங்கு பற்ற முடியாது.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006|77

Page 78
கிTலையில் வந்த இருவருடன் உரையாடிவிட்டு அடுத்த நகருக்கு அலுவலுக்காகப் புறப்படுகிறேன். நகரம் எனது இடத்திலிருந்து அரை மணிநேர ரயில் பயணத்தில் அமைந்திருந்தது. இந்த நகரம் பற்றி மிக நல்ல வதந்திகள். வளமிக்க, வளர்ச்சியடைந்து வரும் மதிப்பு மிக்க குடிமக்களைக் கொண்ட நகரம் அது. புகையிரதம் விரைவாகக் கொண்டு வந்து என்னை உரிய இடத்தில் சேர்த்தது. நான் போகவேண்டிய இடத்திற்கான முகவரியைக் கூறி வலைய வரை படத்தை அனுப்பி வைக்கும்படி தகவல் வழங்கும் சேவையினரிடம் கோருகிறேன். அவர்கள் வரை படத்துடன் இணையத் தொடர்பையும் அனுப்பி வைக்கி றார்கள். மிக ஒழுங்காக கட்டிடங்களுடன் குப்பை கூளங்கள் எதுவுமின்றி காட்சியளிக்கிறது அந்த நகரம். மிகவும் பெரிதல்ல. பாதையை கண்டுபிடித்து விட்டேன். முதல் ஒரு போதும் வந்திராத எனக்கு குறிப்பிட்ட இலக்கத்தைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வழியில் செல்வோரை விசாரிக்கிறேன். எல்லோரும் எனக்கு வழிகாட்டுவதில் மிகவும் அக்கறையாக இருந்தார்கள். பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னுடன் கூடவே வந்து பாதையைக் காட்டினார். ஆனால் உரிய இடமாக அது இருக்கவில்லை. இறுதியாகச் சந்தித்த வயோதிப மாது என் கையைப் பிடித்துக் கவலையுடன் மன்னிப்புக் கோரினார். என்னுடைய வாழ்க்கைக் காலம் முழுவதையும் இங்கே கழித்த என்னால் உனக்கு உதவி முடியவில்லையே என அங்கலாய்த்துக் கொண்டார். நான் அவரைத் தேற்றவேண்டியதாகிற்று. இறுதியாக வீதி விற்பன்னர்களான வாடகைக்கார் சாரதி கூட்டத்தில் வினவினேன். உடனேயே பாதை வெளித்துவிட்டது.
எனது வரவை அறிவித்து வேலைக்குரிய அடை யாள அட்டையைக் காட்டி என்னை அடையாளப் படுத்துகிறேன். உள்ளிருந்து வந்த ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கே பென்னம்பெரிய மேசை யைச் சுற்றி இரு இலங்கையரும் ஐந்து இந்நாட்டவர் களும் அமர்ந்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்தவர் என்னைக் கண்டதும் என்னுடைய அலுவல்களை கவனிப்பவர் நீங்கள் இல்லையே, என்னைக் கவனிப் பவர் பத்து நிமிடங்கள் பிந்தி வருவதாக காலையில் எனக்கு அறிவித்தவர் எனக் கூறியபடி இடத்தை விட்டு எழும்பி குறுக்கும் நெடுக்கும் உலாவத் தொடங்கிய அவர் வெளியே சென்று விட்டார். அவர் சொல்வதில் உண்மையிருந்தது. நான் அவருக்கு பொறுப்பானவர் அல்லத்தான். இந்தக் கூட்டத்திற்கு என்னுடன் பணி புரியும் மற்றவர் சமூகமளித்திருந்தால் நன்றாக இருந்தி ருக்கும். அவர் இந்த நோயாளியின் வரலாற்றை அறிந் தவர். எவ்வித கஸ்டங்களை அவர் எதிர்நோக்குகிறார் என்பது பற்றி அவர் நன்றாகத் தெரிந்திருப்பவர்.
அவர் துணைவி நிலைமையைக் கண்கலங்க கூறுகிறார். அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இறுத யாக சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பும் ஒழு குகள் முடியும் தறுவாயில் இந்நபருக்கு உயிர் கொல்ல நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனா அந்தத் திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட் விட்டதாகவும் கூறினார். இந்நோய் ஏற்பட்ட பின் சோறு கறியை மென்று விழுங்க இயலாது போ அவலத்தை விபரித்துக் கொண்டிருக்கையில் அள உள்ளே வந்தார். துணைவியை, 'வெளியே பே வெளியே போ!' என்று நச்சரிக்கத் தொடங்கினா கூட்டம் ஒருவாறு ஆரம்பிக்கப்பட்டது. அவசர அவ
78உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

'க, "எனக்கு என்ன நடக்கும்? நான் எப்படி சோறு ப்பிடுவது?எப்போது நான் சோறு சாப்பிடலாம்?" எனக் கள்விகளை சராமரியாகத் தொடுத்தார். இவர் பட்ட வசரத்தில் குறிப்பிட்ட மருத்துவ மனையில் அவ க்கு வழங்கப்பட்ட நேரத்தையும் அவரது குடும்ப ருத்துவரிடம் செல்ல வேண்டிய நேரத்தையும் வழங் க் கூடியதாக இருந்ததே தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. அவர் துணைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஏதோ கடைசி ரயிலைப் பிடிப்பவர் பால் அவசர அவசரமாய் வெளியேறினார். உண்மை பிலேயே எதற்காக இந்த அவசரம்? அவருடைய நலனையும் எதிர்பார்ப்புக்களையும் எதிர்காலம் பற்றிய எண்ணங்களையும் ஆராய்வதற்கான கூட்டம் அது.
அகதி முகாமில் ஒரு அறையிலேயே சமையல், சாப்பாடு, படுக்கையுடனான சீவியம். அத்துடன் அவருக்கு இருக்கும் ஏனைய நோய்கள் உட்பட உயிர் கொல்லிக்கான நாளாந்த சிகிச்சை வழங்க வந்து போகும் மருத்துவதாதி ஒருநாளைக்கு இரண்டு தடவை கள் இவர்களுடன். பெற்றோரைத் தம்முடன் வைத்து பராமரிக்க சட்டம் அனுமதிக்காத நாட்டில் வெவ்வேறு நாடுகளில் பிள்ளைகள். வசிப்பதற்கு அனுமதி கிடைக் காத, மொழிபுரியாத, சட்ட திட்டங்கள் புரியாத, எங்கே எனது உடல் புதைக்கப்படும் என்பது பற்றி எதுவுமே இல்லாத ஓர் நிலையில் அந்த மனிதன்.
பிறந்த மண்ணில் இறக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவது தனியே சென்ரிமென்ரலுடன் சம்பந்தப் பட்டதல்ல. பிறந்த மண்ணில் உற்றார், உறவினர் புடைசூழ இறுதி ஊர்வலம் நடக்க வேண்டும் என்ற விருப்பம் ஒன்றும் அபத்தமானதல்ல. மனிதர்களோடு நல்ல உறவுகளைப் பேணவேண்டும். சபை சந்திக்கு நாலு பேர் வேண்டும் என அம்மம்மா கூறும் போது எனக்குப் புரியாத பல விடயங்கள் இப்போ புரியத் தொடங்குகிறது. எங்களுடைய ஐயா (அம்மாவின் அப்பா) கோணேசரின் மணி ஒலி கேட்கக் கூடிய இடத் தில் என்னைத் தகனம் செய்யுங்கோ, என்ர பேரப் பிள்ளைகள் எனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும், ஐயாவிற்கு சீவன் போகேக்கை என்னை 'பால் நினைந்துாட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ பாவியே. தேவாரம் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதாகவும் நான் அழுதழுது பாடி முடித்ததாகவும் அம்மா சொல்லக் கேட்டிருக் கிறேன்.
மனித வாழ்வின் இறுதிப் பயணம் எவ்வளவு முக்கிய மானது.
பனிச்சுரங்கத்தில் உயிர் விடப்போகும் எனக்கு என்ன நடக்கும்?
உயிரடங்கி விட்டது என்பதை மருத்துவர் ஊர்ஜி தம் செய்ததும் பெயர்ப்பட்டிகையிலும் காலிலும் கட்டப் படும். மருத்துவத்தாதி உடலிலுள்ள துவாரங்களை பஞ்சு வைத்து அடைப்பார். குளிர் அறைக்குள் போடப் படுவேன். மரணச் சடங்கு முகவர்கள் வருவார்கள், என்னை அலங்கரிப்பார்கள். நான் வசிக்கும் பகுதிக் குரிய பிணம் எரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டு அங்குள்ள இயந்திரத்திலிட்டு எரிப்பார்கள்.
எத்தாயார் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவல் நல்லார்
செத்தால் வந்துதவ்வாார் ஒருவரில்லை சிறுவிறகால் தீமூட்டி செல்லா நிற்பார்.
LITfGof - செப்டெம்பர் 26, 2006 இதழ் 24

Page 79
வெப்ப ଜୋରାଣୀf
Micha
மைக்கல் மூர் அமெரிக்க மிச்சிக்கன் மாநில தொ முதலாவது படமானRoger & Meஐ வெளிக்கொணர்ந் சம்பளமாகப் பெற்றுக் கொண்டிருந்தார். உலகில் இவரு எவரும் எடுக்கவில்லை எனக் கூறுமளவிற்கு இவரது ப
விவரணத் திரைப்படமும் அதன் கறுகளும்
இது ஒரு புனைகதையற்ற திரைவடிவம். இதன் வை
எல்லைகளற்றது மக்கள், இடம், சம்பவங்கள் ஆகியன கற்பனைய சம்பவங்கள் நடைபெறும்பொழுது அங்கேயேட
சமர்ப்பிக்கப்படுகின்றன. பொதுவாக நெறியாளர்கள்
வகிக்க முடியாது.
இங்கும் உரைஞர் இருப்பதால் இவை பிரச்சாரட்
இவரது விவரணத்திரைப்படங்கள் reflexive விவர g6i6i6ODB5, J6ODLA 56oo6T Bertolt Brecht, Jean-Luc Godard (3. u திரைப்படப் படைப்பாளிகளிடம் மிகவும் பிரசித்தமான ஜனநாயக முதலாளித்துவ அமைப்பில் வெளிக்கொணர செலுத்துகின்ற அரசியல் கோட்பாடுகளையும் சமூக நுகர்வதைத் தடுக்கிறார். இவை மிகவும் அவத பத்திரிகையாளர் போல் நீண்ட ஆய்வுகளை மேற் மேலெழுந்தவாரியான தொடர்பூடகங்களால் உள்வா முன்வைக்க உதவுகின்றது.
வழமையான விவரணப்படங்களில்உரைஞர்கள் சு
உண்மைச்சம்பவங்களை நேரடியாகக்காட்டுகின்றார்.உ செனட்டரிடம் நேரடியாகவே, "உமது மகன் அமெரிக் அதேபோல் இராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்ப முன்னால்நின்று Columbine துப்பாக்கிச்சம்பவத்தில் பாத இவரது படங்களில் இவரும் ஒரு நடிகராக இருப்பது என் நெருக்கத்தைக் கொடுக்கின்றது. இதனால்தான் இவ சாதனை படைத்துள்ளன..பரினைற்9/11 திரைப்படமான திரைப்படச் சரித்திரத்தில் BOXOfficeஇல் முதல் வாரம்மு இதுவே.
இவர் மத்திய, தொழிலாளர்வர்க்கத்தினருள் ஒருவ பெரும்பாலும், பெரும் அரசியல் வர்த்தக பிரமுகர்களை வைக்கின்றது. இவர் ஒருவரே கம்பெனி அமைப்புகளை கம்பெனி அமைப்புகளை விமர்சிக்கின்றது. ஆனால் பா என்ற கேள்வி பலமாகவே எழுப்பப்படுகின்றது. இவ்விரு விளக்குகின்றார்.
இதழ் 24
 

Ιύ Φβή(5, fdl G.
el Moore - 9i фš90a (8
- ரதன் o
Nல் நகரமான Fintஇல் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது தபொழுது இவர் கிழமைக்கு 99 அமெரிக்க டொலர்களை க்குநிகராக மிகச்சிறப்பாக விவரணத்திரைப்படங்களை டைப்புலகம் அமைந்துள்ளது.
Tu j6oosmótõ6ir
பற்ற உண்மையானவை. டம்பிடிக்கப்படுகின்றன. இச்சம்பவங்கள் ஆதாரத்துடன் ர் தங்கள் கற்பனைகளையோ மன ஓட்டத்தையோ இதில்
படங்களாகவும் பல சமயங்களில் உள்ளன.
"ணத் திரைப்படங்களாகும். (செயல் மீதே தாக்குதல்) ான்றவர்கள்படைத்துள்ளனர்.இவ்வகையானது இடதுசாரி து. இவை சமூகத்தின் சமூக, அரசியல், உண்மைகளை பெரிதும் உதவிபுரிகின்றன. மைக்கல் மூர், செல்வாக்குச் அரசியல் பிரச்சாரங்களையும் தமது பார்வையாளர்கள் “னத்துடன் கையாளப்படுகின்றன. ஓர் புலனாய்வுப் கொள்கிறார். இது அமெரிக்காவின் கற்பனைவாத, ங்கப்பட்ட விடயங்களின் மறுபக்கத்தை நுகர்வோர்மீது
றுவதை இவர் தவிர்க்கின்றார். மாறாக, தமது படங்களில் தாரணத்துக்கு..'யரணைற் 9/11 என்றபடத்தில் அமெரிக்க க இராணுவத்தில் உள்ளாரா?" எனக் கேட்கின்றார். படிவங்களுடன் செனட் வாசலில் நிற்கின்றார்.KMartக்கு க்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றார். பது பார்வையாளர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு து படங்கள் வர்த்தகரீதியிலான படங்கள் அளவுக்கு து 113 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்தது. தலாவது இடத்தைப் பெற்ற முதல் விவரணத்திரைப்படம்
ாக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். இவரது படங்கள் நரடியாக அவர்கள் மூலமாகவே அவர்களை விமர்சிக்க ம் அரசியலையும் விமர்சிப்பவர். Roger&Me நேரடியாகவே திக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசு என்ன செய்தது சமூகங்களுக்கான தொடர்புகளை இவர் பின்வருமாறு
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 79

Page 80
அரசியல்வாதிகள்
அரசாங்கத்தில்
is * தேர்தலுக்கான நிதியுத பாதிப்புச் செலுத்துதல்
இந்த வடிவத்தைத் தனது..பரனைற்9/11இல் முன் வைக்கின்றார்.இவர் நேரடியாக மார்க்சியக் கருத்துக்களை முன்வைக்காமல் அரசியல் பிரச்சி னைகளை அதன் உண்மைகளுடன் மக்கள் முன் சமர்ப் பிக்கின்றார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சமூகத்தை உண்மையை நோக்கிச் செல்லத் துாண்டுகின்றார்.
முதலாளித்துவத்தின் தோல்வியையும் தொடர்பு சாதனங்களின் போலித்தன்மையையும் இவர் உடைக்கின்றார்.
போர் என்பது உண்மையான போரா என்ற கேள்வி. ஒருபுறம் வெற்றிக்கான போரா என்பதுதான்முக்கியம் என்பது மறுபுறம். ஆளும் கட்சியினரால் தமது சொந்த நலன்களுக்காக நடத்தப்படுபவையே போர். எனவே போர் தொடரவேண்டும். பட்டினிக்கான தேடலில் மக்கள் இருக்கவேண்டும். எனவே தொடருதலே போர். கடந்த பல தசாப்தங்களில் முடிவுக்கு வந்த போர்கள் வெகு குறைவே. பாலஸ்தீனம், காஷ்மீர், இலங்கை, வளைகுடா யுத்தங்கள், இடதுசாரிகளுக்கு எதிரான யுத்தம். ..பரணைற் 9/11இல் மைக்கல் மூர் முன்வைப்பது இதுவே. மக்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஒரு போரைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதுவே அரசின் கவனமாக உள்ளது.
இவர் தனது படங்களில் மூன்று படிகளில் விமர்சனங்களை வைக்கின்றார். " உண்மைகளைக் கூறுதல் " அதற்கான காரணங்களைக் கூறுதல்
எங்கிருந்து வருகின்றது என்ற தொடர்புகளை வெளிப்படுத்துதல்
(36-ygbiT6örg LILIrist6tfallb (Farenheit 9/11, Canadian Bacon, Roger & Me, Bowling of Colombine) (96.6JTDIT607 வடிவத்தைக் கையாண்டுள்ளார். ..பரணைற் 9/11 படத்திற்கு பதிலளித்த Condolezza Rice; "9/11 க்கும், ஈராக்குக்கும் தொடர்புண்டு. இதில் சதாம் நேரடியாக சம்பந்தப்படவில்லை. இது கருத்தியல்ரீதியாக அமெ ரிக்காவுக்கு எதிராக எழுந்துள்ள வெறுப்பே இந்த9/11" இது மைக்கல் மூரின் திரைப்பட வடிவத்துக்கு கிடைத்த வெற்றி. இப் படத்தை ரெக்ஸாஸ் மாநிலத் தின் விசேட காட்சி ஒன்றில் ஜோர்ஜ் புஷ் கலந்து கொள்ள ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்க அதிபர் மறுத்துவிட்டார். 80|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 
 
 

வன்முறையை உருவாக்குதல்
இப்படத்தைத் தயாரித்த Miramax (Disneyஇன் துணை நிறுவனம்) இப்படத்தைத் திரையிட மறுத்து விட்டது. பின்னர் Miramaxநிறுவன அதிகாரிகள் இருவர் தமது சொந்த நிறுவனத்தின் பெயரில் விநியோ கித்தனர்.
Disneyநிறுவனம் அமைந்துள்ள."ப்ளோரிடா மாநில கவர்னர் புஷ்ஷின் சகோதரர். எனவே வரிச் சலுகை களை எதிரபார்க்க முடியாது என்பதே Disneyஇன்
B660)6),
இவரது நுாலை அமெரிக்க ஊடகங்கள் மதிப்பீடு செய்ய மறுத்திருந்தும் பல இலட்சம்பிரதிகள் விற்பனை யாகி விட்டன. இதனைப் பதிப்பித்த் நிறுவனம், மீள்பதிப்பின்போது பல சட்டங்களைப் பிறப்பித்தது. நுாலின் 50வீதமானது திருத்தி எழுதப்படவேண்டும், Stupid White Men 676öIJD g560D6U/JL uDITsbIDIUL (360/6oöCBb. அத்துடன்ஏற்கனவேபதிப்பிக்கப்பட்ட பிரதிகளுக்காக

Page 81
100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கவேண்டும் போன்றன, இவரது பலத்திற்கான உதாரணங்கள். ஒரு படைப்பாளியாக பல நெருக்கடிகளைச் சந்தித்த மூர் ஒரு போராளியும் கூட. இவர் தமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாகவே பயன்படுத்தியுள்ளார். சிறந்த விவரணப் படத் திற்கான ஒஸ்கார் விருதைப் பெற்றபொழுது, "நாங்கள் பொய் சார்ந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொய்யான தேர்தல் முடிவு கள், பொய்யாகத் தேர்வுசெய்யப்பட்ட அதிபர், பொய்யான காரணங்களுக்காக மனிதர்களைப் போருக்கு அனுப்புகின்றோம். Shame on you Mr. Bush,Shameonyou" எனக் கூறிவிட்டே மேடையை விட்டு இறங்கினார்.
இதன்பின் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்"நான் ஒர் அமெரிக்கன்"எனக் கூறிய பொழுது"அவ்வளவுதானா?" என ஒர் பத்திரிகை யாளர் கேட்டார். அதற்கு மூர்"அதுவே அதிகம்" எனப் பதிலளித்துவிட்டு "நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஜனநாயகத்தை நேசிக்கிறேன்" எனக் கூறினார். இவரது இந்தப் போர்க் குணாம் சத்தை வேறுபடைப்பாளிகளிடம் காண்பதரிது. அவர் கூறும் ஜனநாயகம் என்ற வார்த்தை அவர் பிரயோகிக்கும் ஓர் அம்பு,
இவரது படங்களில் உலகமயமாதல், நிற
வாதம் போன்றவை விமர்சிக்கப்படுகின்றன. துப்பாக்கிக்கலாச்சாரத்தில் வெள்ளையர்களின் பங்கைத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டி யுள்ளார். அதேபோல் .”. பரனைற் 9/11இல் சம்பவத்தின் அமெரிக்க அரசின் பங்கையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தொழிலாளர்கள், மத்தியதர வர்க்க மக்க ளின் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் அரசி யல் பிரச்சாரமற்ற தன்மையுடன் வெளிப்படுத்தி யுள்ளார்.
Roger & Me
இப்படத்தைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்பு பின்வரும் விடயங்களைப் பார்ப்பதுநல்லது.
Roger Smith: 1981-19906),60J 9, GLDjlds as மோட்டார் கார்நிறுவனமான General Motors என்ற மிகப் பெரிய நிறுவனத்தின் அதிபராக 19811990வரை கடமையாற்றினார். இவர் ஆரம்ப காலங்களில் அமெரிக்க கடற் படையில் பணி புரிந்துள்ளார். இவரது காலத்தில் இவர் கொரிய, யப்பானிய நிறுவனங்களுடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டார். இவர் தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து அதன் பேறாக அதிக லாபத்தைப் பெறும் நோக்குடன் செயற்பட்டார். கனடா, மெக்சிக்கோ போன்ற அயல் நாடுகளில் தொழிற் சாலைகளை லாபநோக்குடன் ஸ்தாபித்தார். இத் தொழிற்சாலைகள் காலப்போக்கில் இப்போது சீனாவிற்கு மாற்றலாகி விட்டன. மெக்சிக்கோ வில் தொழிலாளர் சட்டங்கள் உறுதியற்ற
வே
கெ
கார
பெற்
எள் Smit
இதழ் 24
 

http://www.iraqbodyCount.net/
யாக உள்ளன. சீனாவின் தொழிலாளர்களுக்கான தியம் மிகமிகக் குறைவு.
அமெரிக்காவில் மிச்சிக்கன் மாநிலத்தில் உள்ள ாழிற்சாலைகள் அதிகம் நிறைந்தநகரம். General Motors வனம் 1908ம் ஆண்டு இந்த நகரத்தில்தான் ஆரம்பிக்கப் து. மைக்கல் மூர் இந்த நகரத்திலேயே பிறந்தவர். Tg5, Gugb(8spitjab6f General Motors (36 Flint Ggbirgii) )லகளில் பணிபுரிந்தார்கள். இவரது தாத்தாவும் General Sஇல்தான் வேலை பார்த்தவர்.
r Smithஉம்மைக்கல் மூரும்: 988இல் Fintஇல் உள்ள GM தொழிற்சாலையை Roger மூடினார். இதனால் சுமார் 33,000 பேர் வேலை இழந்தனர். ஆண்டு புதிய தொழிற்சாலைகள் கனடாவில் ரொறன் விற்கு அருகில் உள்ள ஒவடிாவாநகரிலும் மெக்சிக்கோ ம் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றிற்கு இந்நாடுகளின் வீக்கம், ஸ்திரமற்ற தொழிலாளர் சட்டங்கள், குறைந்த னம் போன்றவற்றுடன் இவை அண்டைநாடுகள். M வேலைநீக்கத்துக்கான காரணமாக யப்பானிய, ரிய, ஐரோப்பிய கார்களின் இறக்குமதி போன்ற பல ணங்களை முன் வைத்தது. ஆனால் இதே ஆண்டு GM லாபமாக 4.87 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் }Ֆl. ger&Me இந்தத்துயரமான வேலை இழப்புச்சம்பவத்தை லுடன் விவரணப் படமாக்கியுள்ளது. GM அதிபர் Roger மைக்கல் மூரைச் சந்திக்க மறுத்துவிட்டார்.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 81

Page 82
இதே ஆண்டு பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட வேலைநிறுத்தங்கள்(GMஇன் உற்பத்தியை சில காலம் பாதித்தது. சுமார் 29 தொழிற்சாலைகளில் உற்பத்தி அறவே நின்று போய்விட்டது. ஆனால் பின்னர் United Auto Workers தொழிற்சங்கத்துடன் GM பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இன்று இவ்வாறான வேலைநிறுத்தங்கள் உற்பத்தி யைப் பாதிக்காத வண்ணம் தொழிற்சாலைகளில் பலவற்றை ஆசிய நாடுகளில் அமைத்துள்ளது.
Corporate Worldஐப்பற்றி மிக ஆழமாக விமர்சித்தது இத்திரைப்படமே.
Canadian Bacon (1995)
இவரது அரசியல் நகைச்சுவைப் படம். அமெரிக்க அதிபர் கனடிய அமெரிக்க எல்லை நகரான நயகரா நீர்வீழ்ச்சிப்பகுதியில் அமைந்துள்ள ஆயுதத் தொழிற் சாலையைப் பார்வையிட வருகின்றார்.இந்தத் தொழிற் சாலை பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது.இவரது வருகையின்போது இவரது ஆலோசகர்கள் பலர் போர் ஒன்றின் தேவையை வலியுறுத்துகின்றனர். எந்த நாட்டுடன் என்பது கேள்வியாகின்றது. சோவியத் யூனியன் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டது, "நாங்கள் உங்களிடம் தோல்வியடைந்து விட்டோம். இப்போது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது தேவை" என்று. எந்த நாடு என்ற கேள்விக்கு ஏற்கனவே கனடாவிற்கு அணுஆயுத உற்பத்தி இரகசியங்களை விற்பனை செய்த தொழில் நுட்பவியலாளர் உட்படப் பலர் கனடாவைப் பரிந்து ரைக்கின்றனர்.
சில காலம் போரின்றிக் காலம் கழித்த அதிபர் கனடாவுடன் போர் தொடுக்கின்றார். கனடாவில் NDP என்ற தேசிய ஜனநாயகக்கட்சி என்ற இடதுசாரிக்கட்சி உண்டு என்பது போன்ற உப்புச் சப்பற்ற காரணங் களுடன் கனடாவைப் பயங்கரவாதமான நாடு என்று காட்டுவதற்காக அனைத்துக் காரணங்களையும் தொடர்பு சாதனங்கள் முன்வைக்கின்றன.
இப்படத்தில் மறைந்த Alan Adaஅமெரிக்க அதிபராக சிறப்பாக நடித்திருந்தார். இவருடன் John Cardy, Rhea Perleman போன்றோரும் சிறப்புற நடித்திருந்தனர். 82உயிர்நிழல்  ெயூலை - செப்டெம்பர் 2006
 

இப்படம் அமெரிக்க அரசியலின் அவலங்களையும் புலனாய்வு நிறுவ னங்களையும் வெகுசன தொடர்புச் சாதனங்களின் செய்தித் திரிபுக ளையும் நகைச்சுவையுடன் கேலி செய்கின்றது. மறுபுறம் கனடிய புலனாய்வுநிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை.
Bowling of Columbine
Columbine SD u uji LuIT FT60D6uousl6ö Bowling (மாணவர்கள் விரும்பினால் இந்த விளையாட்டை ஒர் பாடமாக Jigdisab6|Tib - elective Course) 6).Jgsful sir போதுநடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் ஆரம்பமாகி, அமெரிக்க வன்முறைக் கலாச்சாரத்தை, அதன் கூறுகளை ஆராய்கின்றது இந்த விவரணத்திரைப்படம். இதற்கு கனடியர்கள் பண உதவிசெய்துதயாரித்துள்ளனர். இப்படம் 55வது கான் திரைப்பட விழாவில் சிறந்த விவரணத் திரைப்பட விருதையும், ரொறன்ரோ திரைப்பட விழாவில் மிகச் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது.
ஃபரனைற்9/11இல் மூர் முன்வைக்கும் ஆதாரங்கள்:
' .'ப்ளோரிடா மாநிலத்தில் புஷ் இன் வெற்றியை FOX தொலைக்காட்சிநிறுவனம்தான் கூறியது. அதற்கு முன்பாக வேறு பல நிறுவனங்கள் கோர் வெற்றி பெற்றதாகவே அறிவித்தன.
FOXஇல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரியாக இருந்தவர் புஷ்ஷின் ஒன்றுவிட்ட சகோதரர்.
40வீதமான நாட்களை புஷ் விடுமுறைகளில் கழிக்கின்றார்.
" முதலாவது விமானம் உலக வர்த்தக மையத்தை தாக்கிவிட்டது என்ற செய்தி தெரிந்த பின்னரும் புஷ் பள்ளி மாணவர்களுடன்நின்றுபடம் எடுத்துக்கொண்டி ருந்தார்.
" மு.ப. 9.05க்கு இரண்டாவது விமானமும் தாக்கி விட்டது என்று தெரிந்த பின்னரும் புஷ் பள்ளி மாணவர் களுக்கு My Pet Goat என்ற பாடத்தை வாசித்துக் கொண்டிருந்தார். -
06.08.2001இல் - அதாவது தாக்குதல் நடை பெறுவதற்கு சிலநாட்களுக்கு முன்பாகவே-இதனை புஷ் அறிந்திருந்தார். . " 06.08.2001இல் புஷ் மீன் பிடிப்பதற்காகச் சென்றிருந்தார்.
பின்லாடனுக்கு ஆயுதங்களை வழங்கியவர் இவரது தந்தையே,
புஷ் ஃப்ளோரிடா மாநிலத்தின் கவர்னராக இருந்தபொழுது பின்லாடன் அங்கு விஜயம் செய்தார். அவருக்கு அந்த மாநிலத்தைச் சுற்றிக் காண்பித்தது புஷ்ஷின் "ப்ளோரிடா அரசே,
11 செப்டெம்பர் 2001 நிகழ்வின் பின் அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் விசேட விமானத்தின் மூலம் பின்லாடன் குடும்பம் சவூதிக்கு சென்றனர்.
இதழ் 24

Page 83
13.09.2001இல் சுமார் 12 விமானங்களில் 142 சவூதிப் பிரஜைகள் சவூதி சென்றனர். இவர்களில் 24 பேர்பின்லாடனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
2001ம் ஆண்டில் பின்லாடனின் மகனின் திரு மணத்துக்கு புஷ்ஷின் குடும்ப உறவினர்களும் சென்றனர்.
" 2000ம் ஆண்டிலும் 2004ம் ஆண்டிலும் வெளியிடப் பட்ட அறிக்கைகளில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. (படத்தில் மூலமும் பிரதியும் காட்டப்பட்டன) மூலத்தில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டது பிரசுரிக்கப்பட்டிருந்தது.
James R. Bath - Texas Money Manager. 36.115th புஷ்உம் நெருங்கிய நண்பர்கள். அத்துடன் இவர் பின்லாடனின் வர்த்தக ஆலோசகர்.
பாத்தும் புஷ்உம் பின்லாடன் குழுவினருக்கு விமானங்களை விற்றுள்ளனர்.
ரெக்ஸாஸ் எண்ணெய் நிறுவனமான ARBUTO புஷ்இன் சொந்த நிறுவனம்.
The Carlyle Group போன்ற எண்ணெய் நிறுவனங் களில் புஷ் அதிகாரப் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கும் பின்லாடனுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்தன.
செப்டெம்பர் 11ம் திகதி காலை Carlyle Group நிறுவனத்தின் பங்குதாரர்களின் கூட்டத்தில் பின்லாடனின் சகோதரர் ஷாட்பிக் பின்லாடன் கலந்து கொண்டார். ஜேம்ஸ் பேக்கரும் இவரும் செப்டெம்பர் 11 சம்பவத்தை ஒன்றாக இருந்து பார்த்தனர்.
Carlyle Group க்கும் பின்லாடனுக்கும் நெருக்கமான உறவுகள் உள்ளன. இந் நிறுவனம் ஆயுத விற்பனையையும்மேற்கொண்டுள்ளன.
" சவூதி அரேபியா சுமார் 860 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. இது மொத்த முதலீட்டில் 7%ஆகும்.
City Group, AOL, Time Warner ö625us6ö 9gab முதலீடுகளைப் பெற்றுள்ளன.
 

இவை படத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் சில. இவரது ஆதாரங்களை நிரூபிக்கும் வண்ணம் கனடியWisionTV, CBC போன்றனவும் பல ஆதாரங்களை வெளிப்படுத்தின.
மைக்கல் மூரின் கருத்தியல்: பயங்கரவாதம்:
மைக்கல் மூர் பிளேபோய்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் (ஆடி 2004) பின்வருமாறு தெரிவிக்கிறார்:
"அமெரிக்காவில் பயங்கரவாதம் இல்லை என்று கூறவில்லை. ஆனால், அதன்பின்நடைபெறுபவையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 87 வயது பெண்மணி யின் சப்பாத்தை கழற்றச் சொல்லி சோதனை செய்கி றார்கள். எங்களது மக்களையே, நாங்கள் உளவு பார்க்கின்றோம். அமெரிக்காவை, முன்னரைவிட இப்பொழுது அதிக உலக மக்கள் வெறுக்கிறார்கள்" "அமெரிக்காவின் அதிபர்கள் பொய் கூறுகின் றார்கள். கிளின்டன்-அந்த பெண்ணுடன் உறவுகொள் ளவில்லை என்றாார். புஷ் - ஈராக்கில அணு ஆயதம் உணடு என்றார்."
"பயங்கரவாதத்தைநிறுத்த, பின்லாடனைகொல்ல இஸ்ரேலை அழையுங்கள். அவர்கள் ஹமாஸ் 560D6AD6JGODIJ, Sheik Ahmed Yassin, GaBT6öADTÍTđ56ĩi. FBI @6ör கருத்துப்படி மொத்தம் 190 அல்கைய்டா உறுப்பினர் களே உள்ளார்கள். இதனைச் செய்ய இஸ்ரேலே தகுதியானது"
அதேசமயம் 9/11 இன் பின்னணியில் இஸ்ரேலின் பங்கு பற்றியும் முன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மூர், லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரரைக் கொல்லும் பொழுது பாதிரிமாரையும், கிறிஸ்தவ சகோதரி களையும் கொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள் கிறார். ஏன் மக்களைக் கொல்ல வேண்டாம் எனக் கேட்கவில்லை?
உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 83

Page 84
இவரது இரண்டு நூல்களில் ஒன்றானDude, Where's my Country என்ற புத்தகத்தில் கியூபாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பையும் ஆதரித்து கருத்து வெளியிட் டுள்ளார். s
பாலஸ்தீனிய மக்கள் உரிமைகளை நிராகரித்து, பாலஸ்தீனமும், இஸ்ரேலும் அமெரிக்காவை நரகத் துக்கு அனுப்பிவிட்டன எனத் தனது நுாலில் குறிப்பிடுகிறார்.
அமெரிக்க தேர்தல்:
கடந்த தேர்தலில் மைக்கல் மூர், ஜோர்ஜ் புஷ்ஷை தோற்கடிப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் இவர் கெரியை ஆதரித்துப்பேசினார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் கெரி திட்டவட்டமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை வெளியேற்றுவது நல்ல தல்ல என்ற கருத்தையும் ஜோன் கெரி முன்வைத் துள்ளார். ஜோர்ஜ் புஷ்ஷின் Republican கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் கொள்கையளவில் கடந்த தேர்தலளவில் பெருத்த வேறுபாடுகள் காணப்பட வில்லை. இதைத் தவிர தேர்தலில் போட்டியிட்ட 12 கட்சிகள் முன்வைத்த நல்ல கருத்துக்கள் பற்றி கூட இவர் கருத்து தெரிக்கவில்லை. இது இவரது அரசியல் தெளிவின்மையைக் காட்டுகிறது. (http://www.politics1.com/p2004.htm)
உலகமயமாதல்:
இன்று இரண்டு பொருளாதார ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன.
1. அமெரிக்கமயமாதல்
2.உலகமயமாதல்
அமெரிக்க மக்களின் தொழில் வாய்ப்புக்கள் மூன்றாம் உலக நாடுகளை நோக்கிச் செல்கின்றன என்ற கவலையை மைக்கல் மூர் தனது இரு நுால் களிலும் வெளிப்படுத்தியுள்ளார். உலகமயமாதல், அமெரிக்கமயமாதல் ஆகியவற்றால் மூன்றாம் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற கவலையை இவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இவர் அமெரிக்கமயமாதலை விரும்புகினறார்.
கனடாவியல்:
கனடா ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பவில்லை. அப்போதைய பிரதமர், ஈராக்கில் அணுவாயுதம் இருப்பதுநிரூபிக்கப்படவில்லை, எனவே படையை அனுப்பமாட்டோம் எனக்கூறினார். இவர் கியூபெக் என்ற பிரெஞ்ச் மாநிலத்தைச் சேர்ந்தவர். பெரும்பாலான கனடிய பிரதமர்கள் பிரெஞ்ச் மொழி பேசுபவர்களே. பொதுவாக இவர்கள் அமெரிக்க எதிர்ப்பாளர்களே. இதே பிரதமரின் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானுக்கு படைகள் அனுப்பப்பட்டன. மைக்கலுக்கு கனடாமேல் ஒரு காதல். இவர் பிறந்த மிச்சிக்கன் மாநிலத்துக்கு அருகில்தான் கனடாவின் ஒன்ராரியோ உள்ளது. இவர் J6). தடவைகள் கனடா பற்றியதனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். கனடாவும் ஓர் முதலாளித்துவ நாடு. அதுவும் நிறத் துவேசம் கொண்ட பழமைவாதக் கட்சி ஆட்சி
84|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

நடத்துகிறது. கனடா பற்றி இவர் பல தவறான கணிப்பீடுகளை கொண்டுள்ளார்.
தரகு முதாளித்துவம்:
பெரும் வணிக நிறுவனங்களின் குளறுபடிகளை துணிச்சலுடன் வெளிப்படுத்தியுள்ளார். GM இன் Fint தொழிற்சாலை வேலைநீக்கத்தை தனது முதலாவது விவரணச்சித்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது தொலைக்காட்சித் தொடரிலும் (The AwfulTruth) இந்த குளறுபடிகளை வெளிப்படுத்தியுள்ளார். தனது நூல் களிலும் பெரும் நிறுவனங்களின் குளறுபடிகளை வெளிப்படுத்தியுள்ளார். CEOக்கள் கூடுதலான போனஸ் பெறுவதற்காகவும், லாபத்தை அதிகம் காட்டுவதற் காகவும், சுலபமான வழியான வேலை நீக்கத்தை செய்கின்றார்கள். இதனைத் தரவுகளுடன் வெளிப் படுத்தியுள்ளார். இவரது இந்த பார்வையே இவரை ஓர் இடதுசாரியாகக் காட்டுகிறது.
இவரை ஓர் இடதுசாரியாகக் கருத முடியாது. இவர் ஒர் புரட்சியாளர்கூட இல்லை. ஒலிவர் ஸ்ரோனைப் போல் இவர் கியூபா சென்று உண்மைகளைக் கூற வில்லை. வியட்நாம் போரின் மறுபக்கத்தை காட்ட வில்லை. 9/11இல் அரசுக்கும் பங்கு உண்டு என்றே கூறினார். புஷ்ஷின் ஆட்சியைத் தோற்கடிப்பதே முக்கியம் என்று தெரிவித்தார். அடுத்து என்ன? அமெரிக்க சாம்ராஜ்ஜியம் என்பது நீண்ட கால திட்டமிடப்பட்ட தயாரிப்பு. இதனை ஓர் ஆட்சி மாற்றத்துடன் மாற்றலாம் என்பது ஒர் அரசியல் தெளிவின்மையையே காட்டுகிறது.
இவர் ஒர் மனித உரிமைவாதியே. அதுவும் அமெரிக்க மனித உரிமைவாதி.
இதழ் 24

Page 85
இலங்கையில் நடக்கும் அனைத்துப் படுகொலைகளு
ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கண்டனக் கட்டம் 17. o9. 2oo6
புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் லோகநாதன் கேதீஸ்வரன் நினைவாக பாரிஸில் 17.09.2006 ஞாயிற்றுக்கிழமை அன்றுட இலங்கையில் நடக்கும் அனைத்துப் படுகொலைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும், எதிரான கண்டனக் கூட்டம்) நடைபெற்றது.
பாரிஸ் நண்பர்கள் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்டனக் கூட்டம் அசோக்கின் நெறிப்படுத்தலோடு ஆரம்பமானது.
தோழர் கேதீஸ்வரனின் அரசியல் மற்றும் கல்விசார் புலமைத்துவ ஆற்றல் எவ்வாறு இலங்கை அரசியல் களத்தில் செயற்பட்டது என்பது பற்றியும் தோழர் கேதீஸின் அரசியல் செயற்பாடுகள் பற்றியுமான குறிப்புக்களை அசோக் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய யோகரட்ணம் இவ்வாறான கொலைகளால்தமிழ்ச்சமூகம்புத்திஜீவிகளை இழந்து வருகிறது எனவும், இவ்வாறுதான் தனது நண்பனும் தோழனுமாகிய வினோதன்படுகொலைசெய்யப்பட்டா ரெனவும் இப்படுகொலைகள் தமிழ்ச் சமுதாயத்தினுள் பீடித்துள்ள நோய் என்றும் இதற்கு எதிராக மாற்று ஜனநாயக சக்திகள் போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
உதயகுமார் பேசுகையில் துரையப்பா கொலை யுடன் ஆரம்பமான கொலைக் கலாச்சாரம் 31வருடங்
“..。 அவர் மரணித்த அன்று காலையில் நடைபெறுகிறது என்று கேட்டிருந்தார். அன்றைய கேட்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என அன்றிரவு அவரது மரணச் செய்தி கேட்டு ஒரு பாரிய வெறுமை உணர்வை ஏற்படுத்தியது. உலகின் மாபெரும் சிந்தனையாளன் இன்றுதா அந்த மரணத்தின் இழப்பை ஒரு வார்த்தையில் வி மரணமும் அவ்வாறுதான். எமது சமூகத்தின் எ அக்கறை செலுத்திய ஒரு உன்னத மனிதன், 创 சிந்தனையை நிறுத்திக் கொண்டார்."
- ஹரீதரன் (சுகு) - தோழர் கேதீஸ் சில நினைவுகள்
இதழ் 24

களாகத் தொடர்கின்றது எனவும் இதன் தொடர்ச்சி தான் கேதீஸ்வரனின் கொலை எனவும் இவ்வாறான கொலைகள் ஏற்படுத்தும் அரசியல், சமூக பிரச்சனை களை தமிழ்ச் சமூகம் காணத் தவறுகிறது எனவும் குறிப்பிட்டார்.
அடுத்துபாரிஸ் நண்பர்கள் வட்டத்தினால் தோழர் கேதீஸ்வரனின் படுகொலையைக் கண்டித்து வெளியி டப்பட்ட கண்டன அறிக்கை லசுஷ்மியினால் வாசிக்கப் பட்டது.
லோகராஜா பேசும்போது, தோழர் கேதீஸ்வரன்
1993ம் ஆண்டளவில் தன்னை முற்றுமுழுதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் அர்ப் பணித்து செயலாற்றினார் என்றும் அவருடனான தனது அனுபவங்களையும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியத்தின் இன்றைய பிற்போக்குத் தலைமை எவ்வாறு எமது சமூகத்தில் அதிகாரத்துவ சக்திகளாக இருக்கின்றதென்பதையும் இவ்வாறான தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் தேவதாசும் ஞானமும் உரையாற்றி னார்கள். மேலும் கிருபன், விஜி,நாதன், சுகன், மோகன், கோட்வின் ஆகியோர் இலங்கையில் நடைபெறும் படுகொலைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
வட ஊர்காவற்றுறையில், மண்டைதீவில் என்ன தினம்தான் அவருடைய குரலை நான் இறுதியாக தனது பிரியாவிடையை அவர் அறிவித்தாரோ என் மனம் துன்புற்றது. அவரது மரணச்செய்தி கார்ல் மார்க்ஸ் மரணித்தபோது, ஏங்கல்ஸ் ஒரு ன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான் என்று பரித்திருந்தார். எம்மைப் பொறுத்தவரை கேதீஸின் கிர்காலம் நல்வாழ்வு தொடர்பில் இதயபூர்வமாக லக மானிடன் 2006 ஆகஸ்ட் 12 இல் தனது
b6g: www.lines-magazine.org
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200685

Page 86
புலம்பெயர் சமூகம் என்னும் கூறானது உலக மயமாக்கலின்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது இன்னும் தீவிர விசாரிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரு பரிமாணம். பலநாடுகளிற் கிடையிலான மூலதனத்துடனும் சரக்குகளுடனும் சம்பந்தப்பட்ட முதலீடுகள் இன்னும் பண்டமாற்றுகள் என்பனவற்றின் தீவிரம், அவற்றின் ஆர்முடுகல் என்பனபற்றி மிகப் பொருத்தப்பாட்டுடன் ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன் இந்தப் பந்தயங்களை எதிர்கொள்ளக் குறிவைக்கப் பட்ட சர்வதேசரீதியிலான ஒத்துழைப்புடன் கூடிய இவ்வகையான முன்னெடுப்புகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ஆய்வுகள் சுளுவாக வெளித்தோன்றும் சமூகங்களிற் கிடையேயான பிணைப்புகள் மற்றும் அவற்றின் அடையாளங்களிற்கிடையிலான தொடர்புகள் என்பனபற்றி அபூர்வமாகவே அக்கறை காட்டி இருக்கின்றன, தனிநபர்களாகவோ, அன்றி குழுக் களாகவோ இந்தப்புலம்பெயரிகள் எல்லைகள்தாண்டி விஸ்தரித்திருக்கும் செயற்பாடுகளின் தொடர்புகள் அலட்சியம் செய்யப்பட முடியாதவை. சீனர்கள் நீண்டகாலமாக உலகின் பல பாகங்களிலும் தங்க ளுடையவர்த்தகரீதியான விஸ்தரிப்புகளைச் செய்து வந்துள்ளார்கள். இவர்களின் இந்த விஸ்தரிப்புக்கான வலைப்பின்னல் ஆரம்பத்தில் சீனாவில் உள்ள நகரங்களில் இனக்குழுமங்களுக்கிடையிலான நட்பு ரீதியான ஒரு நடைமுறையாக இருந்தது. மேலும் குர்திஸ்தான் தீவிரவாதிகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் அமைப்புகளாக இருக்கின்றனர்,
புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த
தொடர்புகள் : பட டிவிடிக்கள், பாட்டு சி கசெற்றுகள், புத்தகங்கள், பத்திரிகைகள், உ நிலையங்கள், ரெஸ்ரோறன்ற்கள், அரசியல் பரிமாற்றங்கள். இத்தியாதி. இந்தப் புலம்ெ பொருளாதார ரீதியான விளைவுகளை இ பெரும்பாலும் ஆய்வுகளின்போது உல கொள்ளப்படாம:ே
36|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

குர்திஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதன் அடிப்படையில், தாங்கள் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளின் அரசாங்கங் களையும் அதேநேரம் துருக்கிய ஆட்சியாளர்களையும் தங்கள் அழுத்தங்களைக் கணக்கிலெடுக்கக் கூறி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபடி இருக்கிறார்கள். இன்னும் ஐக்கிய இராச்சியத்தில் தெற்காசியாவில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்களினால் உருவாக்கப் பட்டிருக்கும் அமைப்புகள் ஒரு உலகளாவியரீதியிலான இஸ்லாம் விசுவாசிகளின் அமைப்புக்கான அந்தஸ்து ஒன்றைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த அனுபவங்கள் எதைக் கற்றுத் தருகின்ற தென்றால் 'எல்லைகள் கடந்த சமூக வெளி என்று எதைக் குறிப்பிடலாம் என்பதை. இந்தப் பதத்தினால் கருதப்படுவது என்னவென்றால், தனிநபர்களாலும், அமைப்புகளாலும், வர்த்தக வலைப்பின்னல்களாலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டபடி பேணப்படும் தொடர்புகள் அலட்சியப்படுத்தப்பட முடியாதவை என்பதைத்தான். எனவே அரசுகள்-தேசியங்களின் எல்லைகள் கடந்த செயற்பாடு-இப்படியான எண்ணற்ற புலங்கள் புலம்பெயரிகளால் ஏற்படுத்தப்பட்டிருக் கின்றன என்பது இலகுவாக கண்டுகொள்ளக்கூடியது. இது சுட்டி நிற்பதென்னவென்றால், புலம்பெயர்வது என்பது ஒரு வழிப் பயணமல்ல என்பதும், இது ஒரு முடிந்த முடிபல்ல என்பதும் தான். அங்கும் - இங்கும் என வாழும் இந்த வாழ்க்கைகள் என்பது தப்பிப்பிழைத்து உயிர்வாழ்தலின் அல்லது சமூக-பொருளாதார நிலைகளில் முன்நோக்கிச் செல்வதன் பொறிமுறை களாகவே வந்துவிடக் கூடும்.
ாடுகளுடன் கொண்டிருக்கும் பல்வேறுவிதமான pக்கள், சின்னத் திரைத் தொடர் வீடியோக் டை வகைகள், மளிகைச் சரக்குகள், முடிதிருத்து அரசியல் சாரா அமைப்புகள் குழுக்கள், நிதிப் பர்சமூகங்கள் கணிசமான கலாச்சார, அரசியல், பங்கும் அங்கும் ஏற்படுத்தி இருந்தபோதிலும், மயமாக்கலின் இந்தக் கறானது கருத்தில்
இருந்திருக்கின்றது.
இதழ் 24

Page 87
தங்களுடைய சொந்த நாடுகளை விட்டு நீண்ட க முன்பு வெளியேறிய புலம்பெயரிகளும் அகதிகளும் ெ அந்த உறவுகளை இறுக்கமாகப் பேணிக்கொள்வதை கூடியதாக இருக்கின்றது. இந்தத் தொடர்புகள் தனிநபர்கள் தங்கள் குடும்பங்களுடன் மேற்கொண உறவுகளாகவும் மறுபுறம்நிறுவனப்படுத்தப்பட்ட அரசிய அமைப்புகள் பல நாடுகளில் தோற்றம் கொண்டு அை சொந்த நாட்டுடன் அரசியல்ரீதியான தொடர்பை கொள்வதாகவும் இருக்கின்றது. −
இப்படியான தொடர்புகளைத் தொடர்ந்து பேண ஒருவரிடம் இருந்து மறைந்துவிடாது. இச்செயற்பாடுநா பலவீனப்பட்டுப் போகும் என்று அரசுகள் - தேசியங்க காலத்திற்கு முன்புநம்பின. புலம்பெயர் சமூகக் குழுமமா காலப் போக்கில் தங்கள் சொந்த நாடுகளுடனான அவிழ்ந்து புலம்பெயர்ந்த இடத்து மக்களுடனும் 6 முறையுடனும் கலந்து கரைந்துவிடும் என்று எண்ணினா எப்போதுமே அப்படி நடந்திருக்காதபோதும், பல தேசி சமூகவெளிகள் இன்றைய காலகட்டத்தில் பிரத்திே சாதகமான ஒரு இடத்தை கண்டடைந்திருக்கின்றன சாதனங்களின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி ( கேபிள் தொலைக்காட்சிகள், தொலைபேசி, தொ கைத்தொலைபேசி, இணையம்)யும், அத்துடன் பூகோள தொலைவில் இருக்கும் கலாச்சாரப் பண்பாட்டு வெளி நபர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான தொட பேணிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் போக்குவரத்துவ நவீனமும் அவற்றின் மலிவான விலைகளும் இவற்றை படுத்துகின்றன. மிதவாத அரசியலிலும் இது பாதிப்புச் கின்றது - பல்லினத்தவருக்கான உரிமைகளை முன்
இதழ் 24
 

ாலத்திற்கு தொடர்ந்து
dis diss60055 ஒரு புறம் ாடிருககும ல்ரீதியான வ தங்கள் ப் பேணிக்
ல் என்பது ளடைவில் கள் நீண்ட னதுநீண்ட முடிப்புகள் பாழ்க்கை ர்கள், அது யங்களின்
Այծ5ւDIT&Ժ .
தொடர்பு நற்றலைட், லைநகல், ரீதியாகத் களுக்கும் ர்புகளைப் சதிகளின் ச் சாதகப் செலுத்து னுரிமைப்
படுத்தல், அத்துடன் புறக்கணிப்புகளுக்கு எதிரான போராட்டம் என. ஏனெனில் இவை அடையாளங்களின் பன்மைத்துவத்தை ஸ்திரப்படுத்துவதனை ஊக்கப்படுத்தும். கலாச்சாரரீதியான புறக்கணிப்புகள் இருப்பதும் சமூக-பொருளாதாரரீதியான தவிர்ப்பும் அபத்தமாய்த் தோன்றுகிற ஒரே விளைவைத்தான் தோற்றுவிக்கும். அதாவது புலம்பெயரிகளை அவர்களு டைய தேசங்கள் கடந்த தங்கள் பிணைப் பின்மீது இன்னும் இறுக்கமாக கட்டிப் போடும்.
முடிவாக, புலம்பெயர் சமூகங்களை உருவாக்கும் நாடுகள் கடந்த சில பத்தாண்டுகளாக பணப் பரிமாற்றங்கள், முதலீடுகள், அரசியல் ஆதரவு என்ப வற்றை வெளிநாடுகளில் உள்ள புலம் பெயரிகளிடம் வேண்டிநிற்பதன்மூலம் ஒரு சாதகமான பங்கை வகிக்கின்றன.
இன்னும் கணக்கில் எடுக்கப்படாத, பல் தேசிய சமூகவெளிகளின் இருப்பு அநேக பின்விளைவுகளைக் கொண்டிருக் கின்றது. சொந்தநாடுகளுடனான அல்லது வேறு நாடுகளில் உள்ள அதே புலம்பெயர் சமூகங்களுடனான இணைப்பின் நிரந் தரமும் ஆழமும் அவர்கள் தாங்கள் புலம் பெயர்ந்திருக்கும்நாட்டினருடன் பூரணமாக இணைவதனை அபாயத்துக்குள் ளாக்கி புலம்பெயரிகளின் கலாச்சார நடைமுறை களைப் பாதிக்கமாட்டாதா? தங்களைத் தத்தெடுத் துக்கொண்ட நாட்டின் மீதான புலம்பெயர் மக்கள் கூட்டத்தினரின் தேசபக்தி கேள்விக்குள்ளாக்கப்பட மாட் டாதா? முடிவாக, தங்களை வரவேற்கும் நாடு களை நோக்கிய புலம்பெயரிகளின் நிதி இடமாற்றீடு என்னவிதமான விளைவை ஏற்படுத்த முடியும்?
கலாச்சாரப் பண்பாடுகளின் வெளிப் பாடுகள், கலப்பு அடையாளங்கள் என்பவற் றுடன் இணைந்தே இந்தப் புலப்பெயர்வு செல்லும். இந்தப் புதிய தோற்றங்கள் தற்காலிகமானதும் மறைந்து போகக் கூடியதாகவும் இருக்க முடியும் அல்லது காலப்போக்கில் நிரந்தரமாகத் தங்கி விடவும் கூடும். இது சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது குழுக்கள் சுயவரைபு செய்து கொள்ளும் முறையில் தங்கியுள்ளது. ஆனாலும், புலம்பெயரிகளை எதிர் கொள்ளும் நாட்டினர் இவற்றை எப்படிக் கருதுகிறார்கள் என்னும் தன்மையிலும் இவை செலுத்தும் தாக்கம் தங்கியுள்ளது. இவற்றில் இருந்து நாங்கள் கிட்டத்தட்ட இப்படியான ஒரு கருத்துக்கு வர முடியும். அதாவது, பல்தேசியங்கள் கொண்ட சமூக வெளிகள் கலாச்சார ஓடைகளை அமைக் கின்றன. அவற்றினுாடே நபர்கள், குறியீடு
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200687

Page 88
புலம்பெயர் சமூகங்கள் தேசியங்களுக்குச் சாவு வந்த புலம்பெயர் சமூகங்களுக்கும் அவர்க தொடர்பைப் பேணிக்கொள்ளவோ, ஃபாஷ புரியவோ அல்லது அரசியல் செய்வதற்கோ, போக்குவரவுச் சாதனங்களும் அனுமதிக்
யுகத்தின் சமூக அரசியல் ஒழுங்கின் மாதிரி
இது குறித்து அவசரமாய்ச் செயற்பட வேண் கருதுகின்றார்கள். நாடுகளின் எல்லைகை எண்ணற்ற தொடர்புகள் இன்று, கலாச்சாரங் நிர்வாகங்கள் போன்றவற்றின் 'ஸ்திரத்தை குல குறித்து இன்னும் கரிசனை கொள்ளாமல் இரு தேசியங்கள் என்பதற்கான வரைவிலக் இப்புலம்பெயரிகள் உ
கள், நடைமுறைகள், கலை இலக்கியங்கள் என்பன உலா வருகின்றன. பகிர்ந்து கொள்ளப்படும் நம்பிக் கைகள், உள்ளுர் மட்டத்தில் மட்டுமல்ல, ஆனால் எல்லை கடந்தும், புலம்பெயர்ந்த சமூகத்தின் வழியாக இங்கு வந்து சேர்ந்து விடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்தக் கலாச்சாரப் பரம்பலுக்கு பலவிதமான பதில்களைக் கொள்ளலாம். புலம்பெயரிகள் வந்து சேரும் நாடுகளின் கலாச்சாரத்துடன் கலந்து போதல் அவர்களுடைய தனித்துவமான கலாச்சாரத்தை இல்லாமலாக்கும். இந்தப் பதிலானது நீண்டகாலமாக அரசுகள்-தேசியங்களினால் முன்னுரிமை வழங்கப் பட்ட பதிலாகும், அவர்களுடைய (தேசிய) இருப்புக் கானநிபந்தனையாக ஒரே சீரான கலாச்சாரத்தன்மை இருக்கவேண்டும் என்று கருதியதன்படி, கலாச்சா ரத்தின் பன்முகத்தன்மை என்பது இரண்டாவது பதிலாகின்றது. அதாவது, சிறுபான்மையினரின் கலாச்சாரங்களை அவர்கள் அப்படியே பாதுகாத்தல், அது அவர்களுடைய நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது அல்லது அந்தநாட்டிலேயேநீண்டகாலமாக சந்ததிசந்ததியாக வாழுபவர்கள் கொண்டு வந்த கலாச்சார கீற்று களையும் அடிப்படையான அடையாளங்களையும் பாதுகாக்க எண்ணுதல். பல்கலாச்சாரத்தன்மை என்பது பரந்த தளத்தில் ஒரு புரிதலைத் தருகின்றது. இந்த இரண்டுமாதிரிகளும் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுள்ளன. கலாச்சாரங்களின் சகவாழ்வு என்பது ஒரு தேசியவட்டத்திற்குள்தான் என்பது. ஒரு தடவை அது எல்லை தாண்டியதும், ஒன்றில் புலம்பெயரியின் கலாச்சாரம் அழிகின்றது அல்லது அது அப்படியே காப்பாற்றப்படுகின்றது. எல்லைகடந்த தேசியம் என்பது வேறொரு மாதிரியை தேர்வு செய்கின்றது. அதாவது, புலம்பெயர்ந்த நாட்டின் கலாச்சாரத்துடன் பல உபகலாச்சாரங்கள் சகவாழ்வு வாழ்தல். இவ்வுப கலாச்சாரங்கள் புலம்பெயரிகளின் சொந்த நாட்டு டனான, தொடர்ந்த மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டி ருக்கும் தொடர்பாலும், அத்துடன் ஏனைய நாடுகளில் உள்ள அந்தச் சமூகங்களுடனான தொடர்புகளி னாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
புலம்பெயரிகளின் கலாச்சாரமானது அவர்களின் புலப்பெயர்வின்போது அவர்கள் கொண்டு வரும் பயண 88 உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

புமணியடிக்கின்றனவா? எந்த நாட்டில் இருந்து ஊருடைய சொந்த நாட்டுடனான நெருக்கமான ன்களைப் பின்பற்றிக் கொள்ளவோ, வர்த்தகம்
புதிய தொழில்நுட்பங்களும் நவீனப்படுத்தப்பட்ட கின்றன. இதனடிப்படையில் ஒரு பின்தேசிய ஒன்று புலம்பெயர் சமூகத்தினுள் தென்படுகிறது. நிம் என்று சில சமூகவிஞ்ஞான அவதானிகள் ளக் கடந்து புலம்பெயரிகள் பின்னியிருக்கும் கள், அரசியல் செயற்பாடுகள், பெரநளதார லைக்கின்ற நிலையில், எல்லை கடந்த தேசியம் க்க முடியாது. இன்றைய நிலையில் அரசுகள்கணம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்பதை ணர்த்தி நிற்கிறார்கள்.
முடிச்சுகளுடன் சேர்ந்து வந்து (வேருடன் பிடுங்கி) இங்கு இறக்கி வைக்கப்பட்டவை அல்லது இங்கு மீண்டும் நாட்டப்பட்டவை. மற்றும் சொந்த நாட்டில் இருந்தும் வந்து சேர்ந்த நாட்டில் இருந்தும் பெற்றுக் கொண்டவைகளின் கலப்பு. கலப்பு அடையாளம் என்பது ஒரு படியில் அடைந்து விடும் செயற்பாடல்ல. இது ஒரு மாற்றத்துக்குள்ளாவதன் இடைப்படிநிலைஒரு பொது அடையாளத்திற்கும் மற்றதற்கும் இடையில் ஊசலாடும். எல்லைகள் கடந்து வாழும் இப் புலம்பெயரிகளுக்கு பல்வேறு சமூகக் குழுமங்களின் கலாச்சாரங்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு இலகு வாகக் கிட்டுகிறது.
இப்படியான கலாச்சாரச் சந்திப்புகள் நவீன கலை வடிவங்களுக்கும் சடங்குகளின் புதுவடிவங்களுக்கும் வழிசமைக்கின்றது. அதாவது, புலம்பெயரிகள் வந்து சேர்ந்திருக்கும் நாட்டின் நடைமுறைகளிற்கு ஏற்றவாறு தங்கள் சடங்குகளின் வடிவங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் வடிவங்கள் மாறுகின்றன. தங்கள் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்வதென்பதும் புலம் பெயர் நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒத்துப்போவ தென்பதும் ஒன்றுக்கொன்று எதிரான செயற்பாடுகள் அல்லது விளைவுகள் என்று கொள்ள முடியாது. பொருளாதார மட்டத்தில் புலம்பெயர்நாட்டில் முற்றாக இணைந்துகொண்டு கலாச்சாரக் கலப்பு வடிவங்களை
மேலெடுத்துச் செல்ல முடியும்.
இப்போது அரசியல் மட்டத்தை எடுத்துக் கொண் டால், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரைவா சிக்கும் அதிகமான நாடுகள் இரட்டைக் குடியுரிமை என்னும் கோட்பாட்டை (இன்னும் பல்குடியுரிமையை) சகிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வளர்ச்சி ஆச்சரி யப்பட வைப்பது, குடியுரிமை என்பது நீண்ட காலமாக பிரத்தியேகமான தேசபக்தியின் அடிப்படையில் ஒரு அரசுக்கு அமைந்திருந்தது. இந்தப் பல்குடியுரிமைக் ö5厂6夺门 நகர்வானது இந்த எல்லை கடந்த தேசியங்களின் பரவலினால் ஏற்பட்டதென்றுதான் கொள்ள வேண்டும். இந்தப் பல்குடியுரிமையானது இப்புலம்பெயரிகளின் சந்ததியினரை தங்கள் சொந்த நாட்டிற்கும் வந்து சேர்ந்த நாட்டிற்கும் இடையில் தேர்வுகளை ஏற்படுத் தும் சந்தர்ப்பங்களை இதழ் 24

Page 89
வழங்குகிறது. அதே சமயம் இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் வாழக்கூடிய வசதியையும் அளிக்கிறது.
முதலில், அரசியல் குடியியல் உரிமைகளில் சமத்துவத்திற்கான நோக்கம் உறுதியாக எழுப்பப்பட்டது. அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடக்கம் திருமணபந்தத்தினால் வந்து சேர்ந்த பெண்கள் குழந்தைகள்வரை இரட்டைக்குடியுரிமைக்கு உரிமையுள்ளவர்களாகினர். தங்கள் சொந்தநாட்டின் குடியுரிமையை விட்டுவிட முடியாதவர்கள் எத்தனையோ பேர்கள் இந்த இரட்டைக் குடியுரிமைக்கு சகித்துக் கொள்ளப்பட்டவர்கள். புலம்பெயரிகளின் சொந்த நாடுகள் தெரிவித்த காரணங்கள் அதிகம் பொருத்தமாக இருந்தன. ஆனால் புலம்பெயரிகள் வந்து சேர்ந்த நாடுகளிற் சில அரசுகளின் அதிகார வர்க்கம் தங்களுடைய புலம்பெயரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. புலம்பெயரிகளினால் ஏற்படும் பொருளாதாரரீதியான பலன்கள் புறக்கண்க்கப்பட முடியாதவை. புலம்பெயரி களினால் தங்கள் சொந்தநாடுகளிற்கு அனுப்பப்படும் பெருந்தொகையானபணம் தொடர்பாக, மிகுந்தநன்மை பயக்கும்விடயமாகவே, அது சம்பந்தப்பட்ட அரசுகளும், ஏன் இன்னும், உலகவங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களும் கருதுகின்றன. தொண்ணுாறுகளில் இந்தப் பணம் இரட்டிப்பாய் அதிகரித்தது. இப்போது இன்னும் அதிகரித்து விட்டது. இந்த புலம்பெயரிகள் தங்கள் நாடுகளுக்கு தனிப்பட்டரீதியில் (அதாவது தங்கள்குடும்பங்களுக்கு) செய்யும் பொருளாதாரரியான பங்களிப்பு இந்தப் பணப் பாய்ச்சல்களுக்கும் மேலாக அமைகின்றது. ஏனெனில் இவர்களின் சமூகரீதியான இடமாற்றங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்பரீதியான இன்னும் தொழில்ரீதி யானதுமான கொடுப்பனவுகளும் கருத்தில்
இதழ் 24
 

கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.
இக் கொடுப்பனவுகள் அரசியல்ரீதியானவை களும்கூட. உதாரணத்துக்கு, அரசின் உரிமைகள், ஜனநாயகம், நல்லதிகாரம், மனித உரிமைகள் போன்றவை தொடர்பான கருத்துகள் போன்றன. சிலவேளைகளில், அரசியல் பங்களிப்புச் செய்பவர்கள் புலம்பெயர் சமூகத்தில் உருவாகிய நிலையில் - அரசியல் தஞ்சம் கோரியவர்கள், அரசியல் அகதிகள், அல்லது தொழிலுக்காக குடியேறியவர்கள் - உள்ளுர் அரசியல் பிரச்சினைகளில் மத்தியஸ்தர்களாக தோன்றுகிறார்கள். இப்படியான தலையீடுகள் மங்கலாகத்தான் தெரிகின்ற போதிலும், அகதி களையும் அரசியல் தஞ்சம் கோரியவர்களையும் கொண்ட இனக்குழுமங்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்கான யுத்த நீடிப்புகளுக்கான வளங்களை புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் இருந்து வழங்கி தனிநாட்டுக் கோரிக்கைளை ஊக்குவிக்கின்றனர்.
தேசிய எல்லைகளைக் கடந்த இந்தப் புலப்பெயர்வுகள் புலம்பெயரிகளின் ஒன்றுகலப்பிலும் வடக்கு-தெற்கு பகுதிகளின் உறவில் ஏற்படும் வளர்ச்சியிலும் எத்தனையோ நன்மையான பக்கங்களைக் கொண்டிருந்தாலும், அதேசமயம் அபாயங்களையும் காவிக்கொண்டு வருகின்றன. பொருளாதாரரீதியான பரிமாற்றங்களும் அரசியல் ரீதியான பங்களிப்புகளும் உலகினை புரட்டிப் போடவல்ல பங்களிப்புகளைச் செய்ய வல்லனவாக இருக்கப்போகின்றன. இப்புலம்பெயரிகள் தங்களுடைய நாட்டை நோக்கி மட்டும் செயற்படாமல் தாங்கள் இருக்கும் நாட்டிலும் இந்தப் பங்களிப்புகளை விஸ்தரிப்பார்கள் என்றால் மட்டும்தான் இப்புலம் பெயரிகளுக்கு நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக அமையும்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200689

Page 90
90|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

இதழ் 24

Page 91
2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் திகதி ஞாய பாரிஸ் வீதிகளில் தேருலா, ஆயிரக்கணக்கான புலம்பெயர்தமிழ்மக்கள்திரளு ஒரு விடயமாகப்பாவிக்க எண்ணி,அத்தேருலா வரும்வி Woice of Anti-War அமைப்பு தனது சுவரொட்டிகளை இ வெகுநேரமாகியும் இந்தச் சுவரொட்டி தெரிவித்த செய் போக, அவற்றைப் பார்வையிடWoice of Anti-warஇன் பிர; சுவரின் ஒட்டிகளில் சில இடங்களில் பிரபாகரனுக்கு இடங்களில் பிரபாகரனும் மகிந்தவும் இருந்த இடத்த பெரியாருடைய பெயரைக் கொண்டு இருக்கும் கல்வி 6 பெரியார் கலகக்காரராக இருந்ததனால் அரசியல் இப் பெரியார் கல்வி வட்டம் புரிந்து கொண்டது போலு மக்கள் கொல்லப்படுவதென்பதும், மேலும் தாங்கள் இருந்து கொண்டு. அங்கு அவர்கள் உயிரைக் கொடுக் புரிந்துகொள்ளச் சொல்கிறதா?
நமது தாயக தேசத்தில் ஒவ்வொரு கணத்திலும் உரிமைக்காக இங்கு தெருக்களில் ஆர்ப்பாட்டங்கை தேங்காய் உடைத்து தேர் ஊர்வலத்தில் பங்கு கொள் அங்குநடத்தப்படும்படுகொலைகளையும் மனித உரிமை WoiceofAnt-warஅமைப்பினரின் சுவரொட்டிகளின்மீது ஒட் மறைக்க முடியாத இடங்களில் கிழித்தும் பெரியாரின் புதைத்துள்ளனர்.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இச் செயலை பிரதிநிதிகள் அடையாளம் கண்டு தொலைபேசியிலும் ே ஒட்டுவேலையைச் செய்யவில்லை என்று மறுத்தாலு பிராயச்சித்தம் வேண்டுமென்றாலும் செய்வதற்குத் த அடியுங்கள் என்று முதுகைக் காட்டினார்கள். மன்னிட் சொல்லுங்கள், அதற்கும் அடிபணிகிறோம் என்றார்கள். தாருங்கள், அதை நீங்கள் எங்கெல்லாம் ஒட்டியிருந்தீர்க எல்லாம் கேட்பதற்கும் கதை எழுதுவதற்கும் நன்றாக of Antwar பிரதிநிதிகளை இந்தப் பெரியார் கல்விவட்டக்க மன்னிப்புக் கேட்டிருப்பார்கள். இவர்கள் தாங்கள்தான் எ காட்டுங்கள் விழுகிறோம் என்றார்கள். இவைகள் இவர் இவர்கள் கடதாசிகளில் மட்டும் சத்தியம் வார்ப்பவர்க தங்களை ஜனநாயகத்தின் (எந்த ஜனநாயகம் என்பது விளிம்புநிலை மக்களின் விடுதலைக்குத் தங்களை அர் வாழ்வதாகவும் மற்றவர்களிற்குத் தங்களை அடை 'வன்மை'யையும் பேச்சு “வன்மை'யையும் கொண்டு ஸ்தானங்களில் இவர்கள் வைக்கப்படுவதற்கான கைா கைவந்த கலையாயிற்று.
சிலர் தங்களைப்பற்றி யாராவது பேசிக் கொண்டே சாகசங்கள் புரிந்து அதனால் பேசப்படச் செய்து கொ பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் என்று தங்கள் (பொதுமக்கள் நலனில்) அக்கறை கொண்டவர்களை மு வாருவது என்று ஏதோ ஒரு வழியில் தொடர்ந்த முயற்சி சுருங்கக் கூறின், போரைநிறுத்திசமாதானத்தைக் ே மரணங்களையும், குழந்தைகளின் போர்ச்சூழல் வாழ் குழந்தைகளாக, போர்ச் சிறுவர்களாக, போர் இளை வதற்கான ஒரு எத்தனிப்பாக சமாதானத்தை வேண்டிய சமாதான விரும்பிகள் அல்லர் என்பதையும் இவர்கள் ( அடைகிறார்கள் என்பதையும் புலனாய்வுத்துறை ஆரா அப்படித்தான் இருப்பார்கள். நாம்தான் எச்சரிக்கையாக அடையாளம் காட்டியது பொதுநலன் சார்ந்து உண்மைய
Voice of Antiwar 12.09, 2006
இதழ் 24

றுக்கிழமை.
ஒரு சந்தர்ப்பத்தை, செய்திகளைப்பரவச்செய்வதற்கான திகளில் சுவரொட்டிகள்மூலம் செய்தி தெரிவிக்க எண்ணிய வோடிரவாக ஒட்டிச் சென்றது. மறுநாள் தேர் முடிந்து நிதொடர்பான எந்தத் தகவலும் யாரிடமிருந்தும் வராமற் நிதிகளில் சிலர் மீண்டும் அவ்வீதிகளுக்கு வந்தபோது, | மகிந்தவுக்கும் மேல் பெரியார் அல்லது இன்னும் சில ல் பெரியார். பெரியாரை அண்மித்துப் பார்த்தால், அது ட்டம் ஒன்றின் சுவரொட்டி.
தீர்வுகளையும் சமாதானத்தையும் விரும்பமாட்டார் என்று }. அதாவது, சமரில் அல்லது சமர் காரணியாக அப்பாவி இங்கே வந்து இன்னொரு நாட்டு அரசின் பாதுகாப்பில் கட்டும் அல்லது அவர்கள் உயிர் எடுக்கப்படட்டும் என்று
மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது. அவர்களின் ாயும் ஊர்வலங்களையும் நடாத்துவதை விடுத்து, இங்கு வதை எதிர்த்து இங்கு ஆத்திரம் கொள்ளும் இவர்கள் - மீறல்களையும் ஜனநாயக மறுப்புக்களையும் கண்டிக்கும் }தலைச் செய்தும், ஒட்டுதலைச்செய்து சுவரொட்டிகளை சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் குழிதோண்டிப்
ச் செய்த நபர்களை Woice of Anti-war பிரெஞ்சுக்கிளைப் நரிலும் பேசியபொழுது, முதலில் அவர்கள்தாங்கள் இந்த ம் பின்பு ஒருவாறு ஒத்துக்கொண்டு, அதற்கு என்ன பாராக இருப்பதாகவும் கூறினார்கள். அடிப்பதென்றால் புக் கேட்பதென்றால் எப்படி மன்னிப்புக் கேட்பதென்று வேண்டுமென்றால் அந்தச் சுவரொட்டிகளை எங்களிடம் களோ அங்கெல்லாம்நாங்கள் ஒட்டுகிறோம் என்றார்கள். 5த்தான் இருக்கின்றது. இப்போது கேள்வி இதுதான்.Woice ாரர் சந்தித்திருக்காவிட்டால் இவர்கள் எப்போது யாரிடம் ன்று Voice of Antwarஅடையாளம் கண்டதும், ஏன் காலைக் கள்மீது பெரும் சந்தேகத்தை எழுப்பும் கேள்விகள். 5ள் என்பதை மீண்டும் ஒருமுறைநிரூபித்திருக்கிறார்கள். து அவர்களுக்குத்தான் வெளிச்சம்) காப்பாளர்களாக, பணிப்பவர்களாக, இன்னும் தாங்கள் விளிம்புநிலையில் யாளம் காட்டிக்கொண்டும் தங்களுடைய எழுத்து 5ாங்கள் குறிவைக்கும் சகலரிடமும் இருந்து உயர் கரியங்களை எப்படிச் செய்வதென்பதும் இவர்களுக்கு
இருக்கவேண்டும் என்பதற்காகச் சாகசங்கள். சிலர் ன்டிருப்பவர்கள். இதில் எதை எடுத்துக் கொண்டாலும் ளக் காட்டிக் கொண்டு, உண்மையாகப் பொதுநலனில் டிந்தால் போர்த்தி மறைப்பது அல்லது காலில் விழுந்து ளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரி, அநியாயக் கொலைகளையும், அப்பாவிமக்களின் பின் அவலத்தையும், எதிர்கால சந்ததிகளை போர்க் ர்களாக உருவாக்கும் தொடர்ச்சியையும் நிற்பாட்டு ice of Antwar இன் சுவரொட்டியை அடித்து ஒட்டியவர்கள் ார் நிகழ்ந்து கொண்டிருப்பதில் ஏதோ ஆதாயத்தை ச்சிகளால் கண்டுபிடிக்கத் தேவையில்லை. அவர்கள் ருக்கவேண்டும் என்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை கச் செயற்படுபவர்களுக்கு பயனுடைத்தே.
voiceofantiwaroyahoo.fr
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200691

Page 92
SPLILIDIT6bЈg வேட்டைக்
அறபாத்தின் வேட்டைக்குப்பின் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் இருந்து ஒரு பகுதி:
"1980களுக்குப் பிந்திய ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபில் எதிர்ப்புக் கவிதைகள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஈழத்தின் சமூக அரசியல் வரலாறு 80களில் முக்கியமானதொரு மாற்றத்தை எதிர் கொண்டது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு சூழலிலே மக்களது வாழ்வுநிலையை சமூக அதிகார
g2|உயிர் நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 

அறபாத்தின் குப்பின்.
மேலாதிக்கங்கள் பாதிப்புறச் செய்தபோது எழுந்த எதிர்ப்புணர்வுகளைச் சித்தரிக்கும் முகமாகவே இத்தகைய கவிதைகள் தோற்றம் பெற்றன.
தமிழ்ச் சூழலில் எதிர்ப்புக் கவிதைகளின் வரவுக்கு ஆதாரமாக அமைந்த மிக முக்கியமான நுால் பேராசிரியர் எம்.ஏ.நுஹற்மான் மொழிபெயர்த்து வெளியிட்ட பாலஸ்தீனக் கவிதைகளாகும். இதன் பின்னரே மிகப்பெரிய வீச்சுடன் ஈழத் தமிழ்ச் சமூகம் சிங்கள மேலாதிக்கத்தினால் அடைந்த துன்பங் களையும் துயரங்களையும் சித்தரிக்கும் பல கவிதைகளை வெளிக்கொண்டு வந்தது. இந்த வகையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கவிதைத் தொகுதி மரணத்துள் வாழ்வோம். காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் 1960களில் எழுதிய மொழியுணர்வுக்கு அப்பாலே தமிழ் சமூகத்தின் மொத்தமான விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கும் கவிதைகளாக"மரணத்துள்வாழ்வோம் என்ற தொகுதி யில் உள்ளடங்கிய கவிதைகள் அமைகின்றன.
80களில் முனைப்புப் பெற்றிருந்த தமிழ் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் இணைந்தே இருந்தனர். சக போராளிகளாகவும் நிதி வழங்குபவர்களாகவும் புகலிடம் வழங்குபவர் களாகவும் முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய பங்க ளிப்பினை தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு வழங்கி வந்திருக்கின்றது. முஸ்லிம்களின் பெரும்பான்மையான அரசியல் பண்பாட்டு கல்வி இலக்கியம் அனைத்தும் தமிழர்களோடு இணைந்த தாகவே இருந்தது. இந்தச் சூழ்நிலை 1985இன் பின்னர் முற்றாக மாற்றம் பெற்றது.
85க்கு முன்னர் கிழக் கிலும் கிழக்கிற்கு வெளியே யும். நிகழ்ந்த தமிழ் முஸ்லிம் கலவரங்கள் அடுத்த வீட்டுப் பிரச்சினையாகவும் குடும்பத்

Page 93
திற்குள் சகோதரர்களிற் கிடையில் நிகழ்ந்த சம்ட வங்களைப் போன்றதாகவுமே கருதத்தக்கன.
ஆனால் 1985க்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங் களைப் பார்க்கின்றபொழுது அது அப்படியாக அமையவில்லை. தமிழ் இயக்கங்களினால் முஸ்லிம் களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட கலவரங்கள்துவக்கி வைக்கப்பட்டன. ஆட்கடத்தல் முதல் பலவந்த வெளியேற்றம் வரை இந்த சூழ்நிலை தொடர்ந்தது. 90கள் இன்னும் ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்தது. பாரம்பரிய முஸ்லிம் கிராமங்களில் இருந்த பலர் கும்பலாகக் கொலை செய்யப்பட்டதில் இருந்து, வடமாகாணத்தில் இருந்து முற்றாக முஸ்லிம் சமூகம் பலவந்தமாக வெளி யேற்றப்பட்டமை வரை இந்த சம்பவங்கள் தொடர்ந்தன.
சிங்கள சமூகத்தின் மேலாதிக்கத்தையும் அடக்கு முறையையும் எதிர்த்து எழுந்த தமிழ்க்கவிதைகள் போல தமிழ் சமூகத்தின் மேலாதிக்கத்தையும் அடக்கு முறையையும் எதிர்த்து பலர் கவிதைகள் எழுதத் தொடங்கினர். இக்கவிதைகளின் வரவிலே ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களின் மிக முக்கியமான ஒரு பங் கினைக் கண்டுகொள்ள முடிந்தது. சிங்கள மேலாதிக் கத்தின் கொடுமைகளை தமிழ் சமூகக் கவிஞர் களோடு எம். ஏ. நுஹற்மான், எம். எச். எம். அஷ்ரப் முதலான கவிஞர்களும் ஒன்று சேர்ந்து பல கவிதை களை எழுதியுள்ளனர். அதேபோன்று தமிழ் சமூகத்தினரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சித்தரிக்கும் பல கவிதைகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்து எழுந்த அதே வேளை, சிவசேகரம், சேரன், சு. வில்வரத்தினம், வ.ஐ.ச. ஜெயபாலன் முதலான தமிழ் சமூகக் கவிஞர்களிட மிருந்தும் எழுகின்றன. இது ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு முக்கியமான விடயம். அடக்குமுறைக் கெதிராக நமது கவிஞர்கள் ஒன்று திரண்டிருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகிறது முஸ்லிம்கள்மீதான தமிழர்களின் அடக்குமுறையினை வெளிப்படுத்தி கவிதைகள் வெளிவருவதற்கு முன்னமே சிங்களவர்களின் அடக்குமுறையினை வெளிப்படுத்தும் பல கவிதைகள் வெளிவந்தன.
அந்த வகையில் 1980இல் வெளிவந்த எம்.எச்.எம். அஷ்ரப்பின் ‘மணியோசை என்பது முக்கியமான ஒரு கவிதை. அதேபோல எம். ஏ. நுஹற்மானின் 'புத்தரின் படுகொலை' என்ற கவிதை அதிர்வு மிக முக்கிய மானது. பின்னர் தமிழர் மேலாதிக்கத்திற்கெதிராக எழுந்த முக்கியமான ஒரு கவிதையாக அஷ்ரப் ஷிகாப்தீனின் 'சைத்துான்'என்ற கவிதையை சொல்லவேண்டும். 'சைத்துான்' என்ற கவிதையில் இருந்துதான் இன்று வரையான முஸ்லிம் தேசத்தை அல்லது அதன் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல கவிதைகளைக் கண்டுகொள்கிறோம்.
இவ்வாறான கவிதைகளைத் தொகுத்து வெளி வந்த'மீஸான்கட்டைகளின்மீளனழும்பாடல்கள்'என்ற தொகுதிமுக்கியமானது. எப்படி ஈழத்துத்தமிழ் சமூகத் தின் சோகங்களை மரணத்துள் வாழ்வோம்'என்ற தொகுதி வெளிப்படுத்துகிறதோ, அதேபோல முஸ்லிம் சமூகத்தின் சோகங்களை சித்தரிப்பதாக'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் என்ற தொகுதி
இதழ் 24

அமைந்துள்ளது. இந்தப் பின்னணியோடுதான் ஒட்ட மாவடி அறபாத்தின்"வேட்டைக்குப்பின்என்ற கவிதைத் தொகுதியைப் பார்க்கவேண்டி இருக்கின்றது."
றமீஸ் அப்துல்லாஹற் மொழித்துறை தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
% 96 % 96 %
வேட்டைக்குப்பின்இல் இருந்து. இரண்டு கவிதைகள்
நிச்சயிக்கப்பட்ட முடிவு
நீஎன்னைக் கொல்வது நித்தியமாயிற்று.
உன் மரணக்கரங்கள் என் பிடரியைக் கவ்வுகின்றவரை ஓய்ந்திடமாட்டாய்.
விடுதலையின் பெயரால் மண்ணின் பெயரால் நீகொன்றொழித்த பச்சிளங்குருத்துவரை நானறிவேன் உன் வீரத்தை,
பின்தொடரும் எண்நிழலிடை உன் ஆயுதத்தின் தீமூச்சு என் முதுகைச் சுடுகிறது
என்னுடன் கைகுலுக்கிச் சிரிப்போர் ஒரு புன்னகையில் நட்பைப் பகிர்வோர் எண் தெருக்காரன்
விருந்தினன்
சகலரிலும் உன் கழுகுக் கண்கள் படர்கின்றன
அவிழ்த்துவிடப்பட்ட மந்தைகளைத் தொடரும் மேய்ப்Uன்போல் உண்சைன்யம் என்னைத் தொடர்கிறது
எனினும்
எனக்குள் இருக்கும் ஒரு சொட்டு சிந்தனையைக்கூட
உன்னால் மோப்பமிடவியலாது என்பதைத் தெரிந்தபின்னும், என்னை நீதொடர்வதுதான் மிகப் பெரிய அதிசயமாய் உள்ளது
எனக்கு.
% % % % %
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 |93

Page 94
uൺമിഖി
எமக்கென்றே நித்தியமான புல்வெளி
குடிசைகளும் கொட்டுக்கிணறும் உரசிக்கொண்டு அழகு காட்டிய புல்வெளி
அழுத்துப் பறித்த மாம்பிஞ்சு, தட்டியில் காயும் மானிறைச்சி, முறுகக் காய்ச்சிய பாலின் மணம் எல்லாவற்றையும் ரசித்துக் கிடந்துோம் அப்புல்வெளியில்
பனித்துளி விழும் ஓசை புல்லின் நுனியில் எதிரொலிக்கும் பூக்கள் விழுந்து, புரள புல்வெளிக்கு
கிணற்று நீர் பாயும்
துகிலற்ற வனத்தின் சிக்கலான வரைபடத்தை மல்லாந்தபடி நான் அளவெடுத்தபுல்வெளி
கதைசொல்லிப்பாட்டியின் அந்தப்புரமும் இதுதான் முரட்டுக்கால்கள் அழுந்தி புல்வெளிமழயும் மட்டும் இதுவே எம் அழகிய கனவு
U60.607(T6ffs பணிவிழா இரவுகளில் ஒப்பாரியும் அரற்றலுமாய் புல்வெளி அந்தரப்பட்டது
கொட்டுக் கிணற்றில் தசைகள் நிறைந்து, நீரற்று உருக்குலைந்துகிடக்கிறது.புல்வெளி
எமக்கென்றிருந்த புல்வெளியில் இப்போது எஞ்சியிருப்பது தரிசு நிலங்களும் காடைந்த மண்ணும், மற்றும் சில அபலைப் பெண்களின் கதறலுமே
இ
UL
60,
Ժi
% % 96 % 9%
"மனிதத்தின் மனச்சாட்சியுள்ள குரலாக கவிதைகள் பேச வேண்டும் என்ற எண் அடங்கா வெறி ேெவட்டைக்குப்பின் 0மூலம் ஓரளவு தணிந்துள்ளது என்பதில் ஆசுவாசம்.
தவிர, இது கவிதைகள் மட்டுமல்ல, என் சமூகத்தின் ஒரு ஆவணமும்கூட."
- ஒட்டமாவடி அறபாத் 94உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 

ஆ. அமிர்தராஜின்
LDSITC3SIT6Ob
உதிர்ந்தும் உயிர்த்தல்
கிடைக்குமிடம்: விருட்சம் 7ராகவன் காலனி மேற்கு மாம்பலம் சென்னை - 33 தமிழ்நாடு இந்தியா
5ா கோலத்திற்கு ப்ரதீபா ஜெயச்சந்திரன்:
அமிர்தராஜின் கவிதைகள் முப்பரிமாண பக்கம் கொண்டவை. இப்படிப்பட்ட கவிதை ஸ் படைப்பது மனவளத்தையும், ஆற்றலை ம், புத்திசாலித்தனத்தையும், அதீத கற்பனை யயும் முன் நிபந்தனைகளாகக் கோரக் டியவைகளாகும்.
இக்கவிதைகள் பார்த்த மாத்திரத்தில், எளி மயான புரிதலைக் கொண்டும், அடுத்தடுத்த ாசிப்புகளில், வாசகனின் மனோரீதியான ளர்ச்சிகளை வார்த்தைகளில் அடையாளம் ண்டு, மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூடியன ாகவும், பின்னர் கவித்துவப் புள்ளிகளைத் நாட்டு, புலன்களைக் கடந்த, மனத்தின் சம ச்சு அலைகளின் விஸ்தாரங்களின் தான் தான்றியாய் சஞ்சரிக்கவும் பாதை போட்டுக் காடுக்கும் திறன் கொண்டவையாகும்.
- இதழ் 24

Page 95
பொருட்களின் வாதம்
பார்வையில் பளபளக்கும் கண்ணாடியும் குழிவட்ட பீங்கான தட்டும் திட பொருட்களாய் வேறு என்றாலும் ஒரே தாய் மண்ணின் மக்கள் வெளிச்சம் தெறித்து மீண்டால் ά56ώί600ττιρ வெளிச்சத்தைக் களிமண் பசியில் விழுங்கினால்
தட்டு
யார் யார் எந்தக் கண்ணாழமில் பார்க்கிறார்களோ அதன்பழயே பார்வை இம்மானுவேல் காண்ட்-ன் ஜெர்மன்குரலில் பேசியது
அலங்கார மாதிரியாய் விலைக்குறிப்பொட்டி அலமாரி நின்ற
தட்டு எத்தனை முறை இதைக் கேட்பதென அலுத்தது உள்ளே மறுஒரம் பதிந்திருந்த கண்ணாடி
காலத்திற்கேற்ப
Uொழக் கண்ணாடி மாட்டி நெட்டையாய் ஒருவன்குள்ள மனைவியுடன் கும்Uலில் வந்தான் கடைக்குள்
கண்ணாடியின் மாயவெளியோ எதிர்த்திசையிலிருந்து அவர்களை கூட்டத்தோடு கூட்டமாய் நகரும் நெட்டைமனைவிகுள்ளக் கணவன் அதேகுட்டிக் கண்ணாழயென மாற்றி
Ս6ITU6ITéՖՖ)
முண்டி நகர்ந்தபடி ஒரு நொடி ஒரக்கண் வீசி தம்மையேயாரோவாய்நம்பி
% %
உதிர்ந்தும் உயிர்த்தலுக்கு பிரம்மராஜன்:
படிமங்களைக் கலை நுட்பத்துடன் பிரயோகிக்கு கையாள்வதில்கைதேர்ந்த ஒவியனைப்போலவும் கவிை பளிச்செனத்தெரிகிறார். ஒற்றைக்கவிப்பொருளை மைய நூலில் தொய்வின்றி எழுதியிருக்கிறார். கவிதைக் அமிர்தராஜின்தலைப்புகளே கவிதைகளாகின்றன. ஏற்க மற்றும் மகாகோலம் ஆகியவற்றில் அவர் மேற்கொன போடமுடியாத வார்த்தைகள், அவற்றின் இடப்பொரு அமிர்தராஜின் கவித்துவப் பக்குவத்திற்குச் சான்றா கவிதைகளாகவும் தொடர் -நீள் கவிதையாகவும் சரிச பயன்படுத்தும் மொழி கட்டிறுக்கமானது மட்டுமல்ல - தன்மையும் கொண்டு விளங்குவது, கவனச் செறிவும் அமிர்தராஜின் கவிதைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்
இதழ் 24

ஏழாம் பொருத்தம் என நகைத்து அவசரத்தில் எட்டிக் கடந்தன முதல் நெட்டையும் குட்டையும்
நான் நினைத்தால் காண்ட் தம்பதியையும் குழப்ப முழயுமென சிரித்தது கண்ணாடி
உன் கண் திரையில் ஏற்கனவே இடவல மாற்றம் மேலும் எதற்கு நெட்டைகுட்டை திரிபு வாதம்?
சாழயது காண்டியத் தட்டு
ஆதாரப் பிழை எனதல்ல பாலியத் திரிபிற்கும் நானா பொறுப்பு நம்மூரில் என்றும் நல்ல பெண்ணுக்கு பொல்லாத புருஷன் காண்ட அறிவாரா தாம்பத்தியத்தை நீள அகலத்தால் அளக்கும் நம்மூர்காலவெளி நியதி? நடுநிலைக்கண்ணாடிநாண்) என்றும் நல்லவனுக்கு நல்லவன் என நவீனம் மீறிய நியாயம் பேசியது கண்ணாடி வெளி தனக்கு ஆகாத உணவை மனைவி தட்டிலும் போடாமையைப் பொறுத்தது கணவனின் நல்லதும் பொல்லாததும் தட்டின் நவீன தர்க்கம் புதுவட்டமாய் விரிந்தது எந்தத் தமிழ் கணவன் கையிலே பரிமாற இருந்தது காண்ட்டின் தங்கக்கரண்டி என தட்டின் பேச்சை தட்டிக்குழப்பியது கண்ணாடி
% % %
விதத்தில் ஒரு சிற்பியைப்போலவும், வர்ணங்களைக் எழுதும் அமிர்தராஜ்பல அமெச்சூர் கவிஞர்களிடமிருந்து மாகக் கொண்ட நீள்கவிதையை உதிர்ந்தும் உயிர்த்தல் தத் தலைப்பின்றி பலர் எழுதிக் கொண்டிருக்கையில் வேஅவரதுமுந்தையஇரு தொகுதிகளான பொற்கணம் ாட பயிற்சி கைகூடி வந்திருப்பது தெரிகிறது. மாற்றிப் தம், வரிகளின் சந்திப்பில் உள்ள லயம் போன்றவை கின்றன. இத் தொகுதியில் உள்ளவை தனித் தனிக் மமான வகையில் வெற்றிபெற்றுநிற்பவை, அமிர்தராஜ் அது ஒரே சமயத்தில் நூாதனத் தன்மையும் பண்டைத் முன்தயாரிப்பும் உள்ள வாசகனுக்கான கவிதானுபவம் றெது.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 200695

Page 96
O ܐ இன்றும் நிறை பிரை
ஏனின்று இடையிடையே எனக்கான சொல்லற்றுப் போகிறாய்?
தேழயழுத்தித் தொலைபேசியில் சரளமாய் நீஒலித்தும் நேய நடுவழியில் நாவில் சொல்லற்றவளாகி திக்காத எத்தெளிவை இக்கணம் உரைக்கிறாய்?
இம்மோன இடைவெளிகளை எக் கூட்டலால் யார் நிரப்பினாலும் ஆசை மறுமொழிகள் வீண் ஆபரணங்களாவதாலா?
சராசரி ஈர்ப்பிர்தான் ഗ്രഖഖങ്ങg് முறிவின் புற ஐயங்களும் புத்த பயங்களும் என்கிறாயா? சரீர சுமரணையிலுமினி நமக்கேன் சாதாக் கேள்வி பதில்களின்
96/உயிர்நிழல்  ெயூலை - செப்டெம்பர் 2006
 

சிரம சிறு திறப்பும் திரா ஒளிவும் மறைவுமென பெருமூச்சிடுகிறது உன்னில் உண்மத்த மெளன மோகம்()
திடுதிப்பென நமக்கிடையே பிறந்ததிலிருந்தே தன் பச்சிளம் Uஞ்சுடலில் தனியிருவரின்
கீறல் ரணமற்ற உற்சவ நேயம் நமக்கு
மாயச் செழிப்பின் மரபு மொழியென முகப் புலன்களில் குத்தித் திருகிடும் Uொன்னணிகளை நீவேருடன் வெறுப்பதைக் கேட்ட நாளிலிருந்தே புரிந்திருக்க வேண்டும் உன் மாற்றற்ற மெளனமும் முழு சொர்ண முகமும் துளியும் மூளியல்ல
உன் மொழி.

Page 97
எதிர்
'உயிர்நிழல் ஏப்ரல்-யூன் 2006 இதழில் வெளிவந் எழுதியிருக்கும் சில விடயங்கள், இந்தச் சிறுகுறிப்டை இயற்கையின் பேதங்களைப்பற்றியும், அந்த இயற்ை தொடக்கம் அத்தனை படைப்புகளும் தங்கள்'பேதங்க என்னதான் வித்தியாசங்கள் இருந்தாலும் குடும்ப உறவு சேர்ந்து வாழ்வதுநல்லது என்ற புத்திமதியின் எழுத்துச் ஆண்-பெண் சமநிலை பற்றிக் கட்டுரையாசிரியர் ெ படுத்தும் சகல சமய, சமூகக் கோட்பாடுகளையும் பேசுபவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து, சமூகக் கட (கண்டபாட்டுக்கு) தனியே வாழ்பவர்கள், வாழ ஆசைப் கட்டுரை'பேதம்.
மனிதனைத் தவிர வேறு உயிரினங்கள் பேதம் பார் பேதம் பார்த்து ஒன்றையொன்று அடக்கவும் அழிக்க வருகிறார் என்று நினைக்கிறேன். தங்களுக்குள் உள்ள இன்னொரு மிருகத்தை வேட்டையாடி வாழ்கின்றது எ6 பார்ப்பதில்லை என்ற ஆசிரியரின் கூற்றைத் தூக்கியடி பெண்ணியச் சிந்தனைகள் சட்டென்று நேற்றோ இன் தங்கள் குழுமங்களின் பாதுகாப்பு மற்றும் இருப்புக்கா இடைப்பட்ட காலத்தில், அதாவது சமயங்கள் பரவத் ெ பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். சமய, சமூகக் கோ பிரஜைகளாக்கியது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்துக் கடைசியி பல விடயங்களைத் தொட்டுச் செல்லும் இக்கட்டுை எழுதப்பட்ட கட்டுரை என்பது நிதர்சனம்,
"ஆணும் பெண்ணும் இரு வேறு பிறவிகள். உடலி இயற்கையின் சமநிலைக்குத் தேவையானது. அதேபோ6 முடியாது. ஏனென்றால் அவை சேர்ந்தே வந்தளை வேண்டியவை. சேர்ப்பதை விட்டுவிட்டு மறித்து வைத்த கட்டுரையாளர். இருபிறவிகளும் உடலியலில்ரீதியில்க உடல் வலிமையின் ஆளுமையை முன்னிலைப்படுத்துக் அதுமட்டுமன்றி, பெண்கள் தாங்கள்"பெற்றபிள்ளை என்று சட்டம் பேசுகிறார். "தாய்ப்பால் கொடுப்பது" புரிந்துகொள்ள வேண்டும். மேலும் தாய்ப்பால் கொடுப் சிதைந்து விடும் என்பதற்காக வாடகைத் தாய்மார்க காலத்தில் இருந்து வழக்கிற்கு வந்தது. உயிரியல்ரீ பெண்ணுறுப்பும் ஆண்களுக்கு ஆணுறுப்பும் இருக்கி இருப்பதனால், ஒரு உயிரைத் தாங்கி உலகுக் உறுதிப்படுத்துகிறது.
பெண்களைப்போல் ஆண்களும் இருக்கவேண்டும்.இ என்பதற்காகப் பலவிதமான முயற்சிகளும் காலத்துக்
இதழ் 24
 

DOT
e
6 m
த அருண் என்பவரின் 'பேதம்' என்ற கட்டுரையில் அவர்
எழுத என்னைத் தூண்டியது. கையின் நியதிப்படி தாவரங்கள் முதல், பறப்பன, ஊர்வன ளுக்குள் ஒற்றுமையுடன் வாழ்கின்றன என்று ஆரம்பித்து, களிற் பேதங்களைக் காட்டிப்பிரிவினை என்று போகாமல் க்கோர்வைதான் அவரின் கட்டுரை. சொல்லியிருக்கும் பல விடயங்கள் பெண்களை அடிமைப் ஆதரிப்பதாகப் பிரதிபலிக்கின்றன. பெண்ணியவாதம் ட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டுதான்நினைத்தபடி படுபவர்கள் என்ற தொனியை உரத்துச் சொல்ல எழுதிய
ாப்பதில்லை என்கிறார் அருண். அதாவது தங்களுக்குள் 5வும் முயலவில்லை என்பதைத்தான் அப்படிச் சொல்ல வலிமையின் பேதங்களைப் பாவித்துத்தான் ஒரு மிருகம் ன்ற நடைமுறை நிதர்சனமானது'வேறு இனங்கள் பேதம் த்துவிடுகிறது.
றோ முளைத்ததல்ல, ஆதிகாலம் தொடக்கம் பெண்கள் ன சகல விடயங்களையும் முன்னெடுத்திருக்கிறார்கள். தாடங்கிய காலகட்டத்தில் - உலகிற் பல பாகங்களிலும் ட்பாடுகளின் நியதிகள் அவர்களை இரண்டாந்தரப்
ல் மனிதரைக் கடிக்கும் அணுகுமுறைத் தந்திரத்துடன், ர, பெண்ணியவாதத்தை எதிர்க்கவும் முறியடிக்கவும்
பல் ரீதியில் சமமானவையல்ல. இது இயற்கையானது. U அறிவும் ஆளுமையும் பறிபோய்விட்டதென்று கூக்குரலிட பயல்ல. இயற்கையானவையல்ல. சேர்த்துக்கொள்ள திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டமுடியாது" என்கிறார் மமானவையல்ல என்பதன்மூலம் ஆசிரியர் ஆண்களின், கிறார். ” ܚ
ாக்குப்பாலூட்ட மாட்டேன் என்று அடம்பிடிக்க முடியாது" என்ற பிரச்சாரத்துக்குப் பின்னுள்ள அரசியலை இவர் பதை வற்புறுத்தும் அதே சமயம், பெண்ணுடலின் அழகு ளைக் கொண்டு பாலுாட்டிய விடயங்கள் விக்டோரியா தியான வேறுபாட்டை நோக்கும்போது பெண்களுக்குப் ன்றன என்பதற்கு அப்பால், பெண்களுக்குக் கருப்பை தக் கொடுக்கும் வலிமையுள்ளவர்கள் என்பதை
ருக்க முடியும் அல்லது இருப்பதாகப்பாவனை செய்யலாம் காலம் முன்னெடுக்கப்பட்டன. பெண்களின் மாதவிடாயும்
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 97

Page 98
கர்ப்பமும் ஆண்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. தாங்களும் பெண்களைப்போல் இருக்க ஆசைப்பட்டார்கள். பெண்களுக்கு மாதவிடாயின் போது குருதி வெளியேறுவதுபோல் ஆண்களும் ஏதோ ஒரு விதத்தில் "குருதியைக் காணவேண்டும் - காட்ட வேண்டும்" என்ற அடிப்படையில் ஆதிகால மத்திய தரைக் கடற் பிராந்திய மக்களால் தொடங்கப்பட்டது தான் இன்று யூத, முஸ்லிம் மக்களிடையே கடைப் பிடிக்கப்படும் 'சுன்னத்து என்ற சடங்காகும். இது யூத மக்களிடையே ஆண்குழந்தையின் பதின்மூன்றாவது வயதில் நடக்கிறது. (அன்றைய காலகட்டத்தில், பெண்கள் பருவம் அடைவது 12-13 வயதிலாகும். இப்போது அது 9-10 வயதாகவும் உள்ளது). பெண்களின் "வலிமை' என்பது குழந்தை பெற்றுக் கொடுப்பதிலமைந்திருக்கிறது என்பதால், ஆண் கடவுள்கள் 'பிள்ளைகள் பெற்ற விடயத்தைத் தொடர்ந்து வரும் பந்திகளில் எழுதியிருக்கிறேன்.
ஒன்பது மாதங்களும் ஒன்பது நாட்களும் ஒரு உயிரைத் தாங்கி, அந்த உயிர் அவளுக்குள் வளர்ச்சி யடையும்போது, ஒரு பெண்ணுக்குள் நடக்கும் மாற்றங் களுக்கு விளக்கம் சொல்ல விஞ்ஞானரீதியாகச் சில பரிசோதனைகளைச் செய்து, உடம்பில் நடக்கும் சுரப்பிகளின் மாற்றங்கள், இரத்த அமுக்கம், பசி, நித்திரை போன்ற நாளாந்த விடயங்களில் நடக்கும் மாற்றங்களைக் காட்டலாம். ஆனால் ஒரு பெண்ணின் மன உறுதி, வளரும் உயிருடன் தொடரும் உறவு என்பனவற்றை அளவிட எந்த விதமான கருவியும் உலகில் இல்லை. இன்று மருத்துவத்துறை, விஞ்ஞா னத்துறை என்பவற்றைத் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருக்கும் ஆண்வர்க்கத்தால் பெண்களின் சமூகவிருத்தியின் பங்களிப்பு மிகவும் அற்ப விடய மாகவும் ஆதாயம் தரும் விடயமாகவும் பரவலாக்கப் பட்டிருக்கிறது. பெண்களின் உடலில் நடக்கும் மிகவும் சிக்கலும் கடினதுமான பரிணாம மாற்றங்கள் ஆண் களால் கிரகிக்கவும் விளங்கிக் கொள்ளவும் முடியாத விடயமாகும். இதைப்புரிந்து கொள்ளாமற் தங்களின் உடல் வலிமையை 'ஆண்களின் ஆளுமை' என்று ஸ்திரப்படுத்துவது பொருத்தமானதாக இல்லை.
இய்ற்கையின் படைப்பில் மேற்குறிப்பிட்ட பெருமாற்றத்தை விட, இருசாராரின் உடலிலும் ஆண். பெண் வித்தியாசமின்றி, ஒரே அளவிலான, இருநூறு விதமான, உயிர்க்கலங்கள்தான் இருக்கின்றன. இருவரின் மூளையின் எடையும், அவரவர்களின் உடல் நிறைக்கு ஏற்றவிதத்திற்தான் படைக்கப்பட்டி ருக்கிறது. அதாவது ஒரு மனிதப்பிறவியின் மூளை, 1314 கிராம்களாக இருக்கும். ஆண்களுக்குப் பெரிய மூளையும் பெண்களுக்குச் சிறிய மூளையும் இருப்ப தென்பது வெறும் பழைய பாட்டிகளின் கிராமத்துக் கதைகளுக்குச் சமமாகும்.
மேலும் ஆண்-பெண்வித்தியாசமின்றி, ஒரு மனிதப் பிறவியின் உடலில் ஒடிக்கொண்டிருக்கும் உதிரம் கிட்டத்தட்ட 5.6 லீற்றர்கள். இது ஒருநாளைக்கு 12000 மைல்கள் ஒடித்தள்ளும். ஒரு மனிதப்பிறவியின் இருதயம், ஆண் - பெண் என்ற வித்தியாசமின்றி, ஒரு வருடத்திற்கு 35 கோடி முறைகள் துடிக்கும். ஒரு மனிதப்பிறவியின் ஒருநிமிட சுவாசம் 16-20 தடவைகள்
98உயிர்நிழல்  ெயூலை - செப்டெம்பர் 2006

உள்வாங்கி வெளியிடப்படுகின்றன. இதற்கு ஆண் - பெண் முத்திரைகள் கிடையாது.
அறிவு வளர்ச்சிக்கு ஆண் - பெண் என்ற வித்தி யாசம் இல்லை. அவர்கள் பிறந்த சூழ்நிலை, அவர் களின் குடும்பத்தின் பொருளாதாரநிலை, சமய நம்பிக்கைகள், சமூகக் கோட்பாடுகள் என்பன 'மனிதத்தை உருவகப்படுத்துகிறது. இயற்கையில் உடலில் இருக்கும் வித்தியாசங்கள் இனவிருத்திக் கான மாற்றங்கள் மட்டுமே.
உள வளர்ச்சிக்குப் பல காரணிகள் அடிப்படை யாகின்றன. மனிதனால் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் உள்ளுணர்வின் உந்துதல்கள் மூலம்தான் மனிதரின் செயற்பாடுகள் அமைகின்றன என்று குப்றோயிட் தியறிகள் சொல்லலாம். அப்படியில்லை, மனிதன் வாழும் சூழ்நிலைதான் அவனை உருவாக்குகிறது என்று எரிக்சன் போன்ற குழந்தைகள் மனவளர்ச்சி அறிஞர்கள் வாதாடலாம். அப்படியுமில்லை, மனிதன் எப்படிப் பிறந்தாலும் , எப்படித்தான் வாழ்ந்தாலும் தனக்குத் தேவையானவற்றையும் தனக்குப் பிடித்தவற்றையும் எடுத்துக்கொள்ள எப்படியும் போராடுவான் என்று பியாஜே போன்ற குழந்தைநல வல்லுனர்கள் சொல்லலாம்.
இன்றுள்ள உலகம் ஆண்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்திசெய்யும் செயற்பாடுகளைக் கொண்ட உலகமாகும். அதற்காக, அவர்கள் யாரையும் அடக்கிவைப்பார்கள். ஆண்கள் தங்கள் தேவைகளை முன்னெடுக்கச் சாதி, சமய, நிற, மொழி, பால் வேற்றுமைகள், தேசியம், தனிமனித வழிபாடு என்றுபல தரப்பட்ட ஆயுதங்களைப் பாவிப்பார்கள். இவ்வேறு பாடுகளின் தீவிரத்தை மிகவும் கவனமாக ஒன்றோ டொன்று இணைத்துப் பின்னி வைப்பார்கள். இதை மீறுபவர்களைத் தண்டிக்க ஆதிக்க சமூகத்தினால் (ஆண்) உருவாக்கிஸ்திரப்படுத்தப்பட்டிருக்கும் சமய சமூகக் கோட்பாடுகளையே பாவிப்பார்கள்.
அடக்கப்பட்ட இனம் எப்போதும் தனது அடக்கு முறைக்கு எதிராகப் போராடுவது இயல்பு. ஆதி காலத்தில் பெண்களின் கைகளிலிருந்த குடும்ப, சமுதாயப் பொறுப்புக்களைத் தங்கள் கைகளுக்கு எடுக்க மேற்கண்ட பேதங்களையே ஆண்கள் பாவித்தார்கள்.
அபிப்பிராய பேதங்களை முன்னெடுத்துப் பெண் ணியம் போன்ற கருத்துக்களைக் காட்டிப் பெண்கள் ஆண்களுடன்சமத்துவமாக இருக்கமுடியாதுஎன்பதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கட்டுரையா சிரியர் முன்வைக்கிறார். இவருக்கு, மக்களின் ஆதிகால வாழ்க்கை முறை, அதன்பின்,நிலத்தில் பயிர் போடத் தெரிந்ததும் அந்த நிலத்தின் உரிமையுடன் தொடங்கிய ஆதிக்க, அதிகார உறவுப் படிமங்கள், சமயங்கள் பரவத்தொடங்கியதும் அவற்றின் கோட்பா டுகள், சமூகக் கட்டுப்பாடுகள் எப்படிவளர்ந்தன. அவை பெண்களை அடிமை கொள்ள எப்படிப்பாவிக்கப்பட்டன என்பதும், படுவேகமாக விருத்தியடைந்து செல்லும் இவ்வுலகில் பெண்களின் சிந்தனைகள் எப்படி வளர் கின்றன என்பதும், அதன் பிரதிபலிப்புத்தான்'பெண்ணி யவாதம் என்பதும் பற்றிய விளக்கம் சரியாகத் தெரிய வில்லை என்பது அவரின் கட்டுரையிற் புலனாகிறது.
இதழ் 24

Page 99
'பெண்ணியவாதிகளும் ஆணியவாதிகளும்பிரிந்தே இருப்பது சுகம் என்பது போலவும் தனித்து வாழ்வதே சுதந்திரம் என்பது போலவும் எழுதியும் கதைத்தும் இயங்கியும் கொள்வதனால் தனித்த தாய்மார்கள் தனித்த தகப்பன்மார்கள் என்று ஒற்றைப் பெற்றோர் (singleparents) வாழ்வுமுறை அதிகரித்துவருகிறது.இது ஆரோக்கியமல்ல" என்று இவர் எழுதுவதில் குடும்பங் கள் பிரிவதற்கும் விவாகரத்துக்கள் நடப்பதற்கும் தனிப்பட்ட மனிதர்கள் சுதந்திரமாக வாழஆசைப்படு வதுதான் காரணம் என்பதைத் தெளிவாகச் சொல் கிறார். பெரும்பாலான குடும்பங்களின் பிரச்சினைக்கும் பிரிவுக்கும் தனிமனித சுதந்திர வாழ்க்கையின் வேட்கைதான் காரணி என்று சொல்வது, இன்று பல காரணங்களாற் பிரிந்து வாழும் தாய், தகப்பன்மாரை அவமானம் செய்வதாகும்.
சிலரின்திருமணம் பெற்றோர்களால் 'பேசி ஒழுங்கு பண்ணி நடந்திருக்கலாம். சிலர் காதல் கல்யாணம் செய்திருக்கலாம். உலகில் பெரும்பாலான மனிதர்கள், தங்களுக்கென்று ஒரு குழந்தை வந்தபின் அந்தக் குழந்தையின் நலத்திற்காகவே வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு, ஒரு சீரானதும் பாதுகாப்பா னதுமான எதிர்காலத்தைத்தான் பெற்றோர்கள் விரும்பு வார்கள். சமத்துவத்தைப் பேணும் குடும்பம்தான்சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கமுடியும். சிறந்த சமுதா யம்தான் வலிமையானதும், பலதரத்திலும் வளர்ச்சி காணும் தேசியத்தின் அத்திவாரம். இந்த நியதியிற் தான் இப்பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தனிமனித ஆசைகளும் சுதந்திரமும் வளர்ச்சி யடைந்த ஆண் - பெண் சமத்துவத்தைப் பேணும் சமுதாயத்தில் பேணப்படத் தடைகள் இருப்பதில்லை. இன்றைய சமுதாயத்தில் விவாகரத்துக்களும் பிரிந்து வாழ்வதும் அதிகரித்துக்கொண்டு வருவதற்கு, குடும்ப உறவில் ஒருத்தரை ஒருத்தர் அடக்கி வைக்க முயல்வதும் அந்தப் பிடியிலிருந்து அடக்கப்பட்டவர் வெளியேறுவதும் ஒரு காரணியாகும். பொருளாதார ரீதியாக ஆணில் தங்கியிருந்த பெண்கள் இன்று பெண்களின் கல்வி முன்னேற்றத்தினால் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாகிறார்கள். இது அவர்கள் துணிந்து முடிவுகளை எடுக்க உந்துதலாக இருக்கின்றது.
"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்ற பழைய தாரக மந்திரத்தைச் சொல்லிப் பெண்களை இனியும் அடக்க முடியாது. 'மற்றவர் களுக்காகத் தன்வாழ்க்கையைப்பாழாக்கிக்கொள்ள இன்றைய பெண்கள் தயாரில்லை. பரந்த உலகம் ஒரு சிறு கிராமம் மாதிரிச் சுருங்கி வரும்போது வாழ்க்கை யைப்பற்றிய பலவிதமான கருத்துகளும் மோதிச்சிதறி ஒரு புதிய வடிவெடுக்கும்போது அந்தத் தெளிவு தனிமனித சுதந்திரத்தின் ஆளுமையை நன்கு பிரதிபலிக்கிறது. அது ஒரு மனிதனின் 'சிந்தனைச் சுதந்திரத்தின் அத்திவாரம்,
இன்று பெண்களின் சிந்தனைத் தெளிவை ஆராயப் பல்லாயிர வருட சரித்திரத்தின் பின்னணி தெரிந்தி ருக்க வேண்டும். பெண்ணின் ஆளுமையில் வளர்ந்த சமுதாயம் எப்படி ஆணாதிக்கக் கட்டுக்கோப்புக்குள் திணிக்கப்பட்டது?அதனால் பெண்கள் எப்படி அடிமைப்
இதழ் 24

படுத்தப்பட்டார்கள்? அதற்குப் பொருளாதார விருத்தியும் சமயக் கருத்துக்களும் எப்படி உதவின என்பதை அறிந்து வைத்தல் கட்டுரையாளருக்குப் பிரயோசனமாயிருக்கும்.
பல்வேறு கலைகள், பாதுகாப்பு, மருத்துவ அறிவு என்பவற்றால் சமூகத்தில் முன்னிடத்தில் வைக்கப் பட்டிருந்த பெண்கள், ஆதிகாலத்தில் தெய்வீக நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள், கிறிஸ்தவ மதத்தின் பரவலால் எப்படி சூனியக்காரிகளாக, ஐரோப்பியநாடுகளில் உயிருடன் எரிக்கப்பட்டார்கள் (15-16ம் நூற்றாண்டுகள்), பெண்ணியச் சிந்தனைகள், கருத்துக்கள் எப்படி நசுக்கப்பட்டன என்பதை அறிய கட்டுரையாசிரியர் சில சரித்திரக் குறிப்புக்களைப் படித்தல் நல்லது.
ஆதிகால மனிதர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில், பெண்கள் ‘குழந்தை பெறும் தன்மை யுடைய காரணத்தால்- இன்னொரு உயிரைத் தரும் தகைமையிருந்ததால், தெய்வத்திற்குச் சமமாக மதிக்கப்பட்டார்கள். கூட்டங்களைப் பாதுகாக்கும் - அவள் சார்ந்திருக்கும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பொறுப்பும் பெண்களிடமேயிருந்தது.
ஆரம்பகாலத்தில் ஆண்-பெண்வித்தியாசமின்றி எல்லோரும் வேட்டையாடிப்பிழைத்தார்கள்.நாகரீகம் வளர்ச்சியடையாத அக்காலத்தில், வேட்டைக் குழுவின் தலைவியாகவும், மூலிகைகளைப் பாவித்து நோய்களைக் குணப்படுத்தும் அறிவுள்ளவளாகவும் பெண்ணிருந்தாள். −
அக்காலகட்டத்தில், பெண்களின் மாதவிடாயின் போதுவெளியேறும் கழிவிரத்தத்தை மோப்பம் பிடித்து வந்த மிருகங்கள், கூட்டமாய் வாழ்ந்த மனிதரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததால் மாதவிடாய் வரும் காலகட்டத்தில் பெண்கள் வேட்டைக்குப் போவதைத் தடுத்தார்கள். காலக்கிரமத்தில், ஆண்கள் வெளியே போய் வேட்டையாடும் வேலை யையும் பெண்கள் வீட்டிலிருந்து குழந்தைகள், மற்றும் வயதுபோன அல்லது நோய்நொடியுள்ள குடும்பத்தி னரைப் பராமரிக்கவும் என்று தங்கள் கடமைகளை வரித்துக் கொண்டார்கள்.
நன்னீர் தேடுவதிலிருந்து பிள்ளைப்பேறு பார்ப்பது வரை பெண்களே செய்தார்கள். மருத்துவம் பார்ப்ப வர்கள் 'அக்கா (பாட்டி, முதிய மாது, பெரிய பெண்) என்றழைக்கப்பட்டாள் (கிரேக்க மொழியிலும் 'அக்கோ அல்லது'அக்கா', அத்துடன் மிருகங்களின் தோலைக் கொண்டு குடும்பத்துக்குத் தேவையான ஆடைகளையும் பெண்களே செய்தார்கள்.
'அறிவும் ஆற்றலும் ஆண்களுக்குரியது என்று எழுதும் 'பேதம்' கட்டுரையாசிரியர், மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் பெண்களின் சமூக, சமயப் பங்கீடுகள். சிந்தனை வளர்ச்சிப் பங்குபற்றி அறிந்தி ருத்தல் நல்லது.
கூட்டங்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் சமூகத்தின் தலைமை பெண்களின் கையிலிருந்தது. சட்ட திட்டங்கள், கட்டுக்கோப்புகள் என்பன பெண்களால் வரையறுக்கப்பட்டன. அதனால், அவர்கள் வாழ்ந்த இடங்கள் பெண்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006/99

Page 100
என்ற பெயர்கள் சில உதாரணங்கள். அதேபோல், மனிதர்கள் கூட்டமாகவிருந்த இடங்களை அண்டி யிருந்த நதிகளும் மலைகளும் பெண்களின் பெயரில் அழைக்கப்பட்டன. சரஸ்வதி, யமுனா, காவேரி, வைகை நதிகளும், அன்னபூர்ணா (இமாலயா), ஒலிம்பஸ் (கிரேக்) மலைமுகடுகளும் ஒரு சில உதாரணங்க ளாகும். நகரங்களும் பெண்களின் பெயர்களைக் கொண்டிருந்தன. கிரேக்கத் தலைநகரான ஏதன்ஸ் என்பது பெண்ணின் பெயராகும். பின்னர், ஆண்களால் முன்னெடுக்கப்பட்ட இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்கள் ஆதிகாலத்தில் பெண்களின் கையிலிருந்த சமுதாயப் பொறுப்பைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். பெண்களாற் கடைப்பிடிக்கப்பட்ட சில சமுதாய வரைமுறை களையும் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். அதற்கு ஒரு சிறு உதாரணம், இஸ்லாம் வர முதல், ஈராக், ஈரான், சிரியா மட்டுமல்லாது உலகத்தில் பெரும்பான்மையான இடங்களில் தாய்வழி மரபு நடைமுறையிலிருந்தது. பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வாழ்வதும் அவளின் கணவன் அவளின் வீட்டிற்கு வந்து அடிக்கடி வந்து அவளைச் சந்திப்பதும் புணர்வதும் மரபாகவிருந்தது.
ஒரு பெண்ணுக்கு அவளின் 'கணவரைப் பிடிக்கா விட்டால் அவர் வரும்போது அவள் கிழக்கு நோக்கிப் படுத்திருப்பாள். இப்படி மூன்று இரவுகள் தொடர்ந்து நடந்தால் அவளுக்கு அவரைப்பிடிக்கவில்லை என்று அர்த்தமாகும். அதன் பின்னர் அவரின் வருகை தடை செய்யப்படும்- அல்லது தடுக்கப்படும். இஸ்லாமிய சமயம் பரவத் தொடங்கியதும் ஆண்கள் இதே பண்பாட்டைக் கடைப்பிடித்து.தனக்கு விருப்பமில்லாத பெண்ணை மூன்றுதரம் 'தலாக்' செய்து விட்டால் விவாகரத்தாகி விடும் என்ற சட்டத்தைக்கொண்டு வந்தார்கள்.
இந்தியாவில், கேரளாப்பகுதியில் வாழும்நம்பூதிரி களிடையே கடந்த நூற்றாண்டுவரை தாய்வழி மரபிருந்தது. பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் வாழ்வார்கள். அந்தச் சமுதாயத்தில் பெண்ணின் கணவர் பெண் வீட்டுக்கு வந்து வாழ்வார். குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையைக் கவனிப்பது, அந்தக் குழந்தையின் தாயினதும் அவள் குடும்பத்தினரினதும் (மாமாவின்) கடமையாகும். தாயின் சொத்து பெண்களுக்கே போய்ச் சேரும். பிரிட்டிஷ் அரசு அந்த மரபை மாற்றித் தகப்பன் பெயரை (Surname) வைக்கச் சட்டம் போட்டதால் கேரளாவில் தாய்வழி மரபு மறைந்து விட்டது. இலங்கையில் மட்டக்களப்பில் இன்னும் தாய்வழி மரபு நடைமுறையிலிருக்கிறது, அதாவது, சொத்துக்கள் பெண்ணுக்குப்போய்ச்சேரும், ஆண்களுக்குப்போகாது.
மேற்குநாட்டில்நடைமுறையிலிருந்ததாய்வழிமரபு உரோமர் ஆட்சிப் பரவலாக்குதலால் அழித்தொழிக் கப்பட்டது. மத்தியதரைக்கடற்பகுதியில் (இஸ்ரேல்) 'ஆபிரஹாம் (அபு-தகப்பன், பிரஹாம்-மகன் அல்லது பரம்பரை) வழித்தோன்றல்களின் கலாச்சாரம் கிழக்கே பரவியது. இந்தியாவில், ஆரிய பரம்பரை பிரமனைக் கடவுளாக்கியது.(அ-பிரமன்) 'பிராமன் கலாச்சாரம் 'பிராமணியக் கலாச்சாரமானது
100|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

ஆண்வழிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன. எகிப்திய, ஈரானியக் கடவுளான சூரியன் பிராமணியச் சடங்குகளில் முன்னெடுக்கப்பட்டு, இந்தியப் பெண் தெய்வங்கள் மறைக்கப்பட்டார்கள். சூரியனின் பெண்வடிவான ரீகாயத்ரியின் மந்திரம் பிராமணர் களால் உச்சாடனம் செய்யப்பட்டது. நிற அடிப் படையில் வர்ண குலப்பிரிவினையை முன்னெடுத்த பிராமணர்கள் தங்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பாவிக்க முடியாத மகாசக்தி வாய்ந்த பூரீகாயத்ரி மந்திரத்தை இரகசியமாக வைத்துக் கொண்டார்கள். பிராமணிய முறைப்படி திருமணங்கள் ஆண்களின் நன்மைகளை முன்னிலைப்படுத்தி வரையறுக்கப் பட்டன. திராவிடக் கலாச்சாரத்தில் பெண்களுக் கிருந்த சுதந்திரமான'சுயம்வரமுறைத்திருமணமுறை ஒழிக்கப்பட்டது.
பெண்களின் அறிவையும் ஆற்றலையும் மழுங். கடிக்கும் திட்டங்கள் மனித நாகரீகத்தின் வளர்ச்சி யுடன் தொடர்புள்ளது. ஆதிகாலத்தில் ஆண்-பெண் சக்திகளுக்குச் சம பங்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்துசமயத்தில் சிவமும் சக்தியும் (அர்த்தநாரீஸ்வரர்) போல், சீனா நாட்டுத் தாவோயிசத்தில் 'யிங்- யாங் (வேறுபட்ட இருசக்திகள்) இருந்தன. எகிப்தியநாட்டில் ஜஸிஸ்-ஒளிமிரிஸ் இருந்தார்கள். கிரேக்கநாட்டில் அட்டமிஸ்-அப்பொல்லோ, டையானா- டையனிஸ் என்றுபலதரப்பட்ட ஒருமித்த ஆண்-பெண் சங்கமித்த கடவுள்கள் இருந்தார்கள்.
பெண்மை தெய்வீகமாயிருந்தது. பெண் தெய்வங் களின் வழிபாடுகள் பல நாடுகளிலும் பரவியிருந்தன. இந்துசமயத்தில் மிருகங்களைப் படைக்கும் சரண்யு என்ற தெய்வம் இருந்ததாகச் சொல்லப்படுவதுபோல், கிரேக்க சமுதாயத்தில் டையானா என்ற பெண் தெய்வம் இருந்தது. கிரேக்கநம்பிக்கையில்காதலுக்கு அபோறைட்ஸ் என்ற பெண்தெய்வம் இருந்தது. பழைய மத்தியதரைக் கடற் பகுதி மக்கள் தேவதைகளை நம்பியதுபோல் இந்துசமயத்திலும் வானுலக அப்சரஸ் கள் இருந்தார்கள். இந்துசமயத்தில், கல்விக்குச் சரஸ்வதி, செல்வத்திற்கு லக்ஷ்மி, வீரத்துக்குக் காளி (துர்க்கா). எகிப்தில் ஹாதோர் என்ற பெண்தெய்வம் தேவலோகத் தெய்வமாக வணங்கப்பட்டாள்.
இந்த நம்பிக்கைகளைத் தவிடு பொடியாக்க, சமூகத்தில் பெண்கள்மீது இருந்த தெய்வீக நம்பிக் கையை அழித்தொழிக்க, ஆண்களும் ஆண் கடவுள் களும் உயிர்களைப் படைத்ததாக வரலாறுகளை உண்டாக்கினார்கள். அது மட்டுமல்லாது, ஆண் கடவுள்களுக்குத்தாய்கிடையாதுஎன்ற வரலாற்றைச் சொன்னார்கள். உதாரணமாக, பிராமணர்களின் இருக்குவேதத்தின்படி இந்து சமயத்தின்முதற் கடவுள் பிரம்மாதாமரை மலரில் இருந்து பிறந்தார். இந்துசமயப் பத்ம புராணத்தின்படி சிவனின் வயிற்றில் நூறு வருடம் வளர்ந்த சுக்கிரன் சிவனின் ஆணுறுப்பின்துவாரத்தால் பூமியில் அவதரித்தார். கந்தபுராணத்தின்படி சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து கந்தபெருமாள் பிறந்தார். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ஐயப்பனை உண்டாக்கி னார்கள்.
கிறிஸ்தவ பைபிளின்படி ஆதாம் என்ற ஆணின் விலாஎலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார்கள்.
இதழ் 24)

Page 101
இன்றுள்ள உலகம் ஆண்களின் பூர்த்திசெய்யும் செயற்பாடுக அதற்காக, அவர்கள் யான ஆண்கள் தங்கள் தே சாதி, சமய, நிற, மொ தேசியம், தனிமனி பல தரப்பட்ட ஆயுத இவ்வேறுபாடுகளின் தீவி ஒன்றோடொன்று இணை இதை மீறுபவர் ஆதிக்க சமூகத்தினால் ஸ்திரப்படுத் FLDu feupsis (3.5IIILITC
கிரேக்க நாட்டுக் கடவுள்களில் ஒருத்தரான டையனஸ்ஸ் கிரேக்கப் பெரும் கடவுள் ஷலூஸ் என்பவரின் தொடையிலிருந்து பிறந்தார். சீனாவில், வைமிர் என்ற ஆண் பூதம், தன் உடலிலிருந்து உலகையும், பூதத்தின் குருதியிலிருந்துநதிகளையும், பூதத்தின் எலும்பிலிருந்து மலைகளையும் படைத்துத் தன்தலையால் உலகைத்தாங்குவதாக வரலாறுண்டு. தென்னாசிய நாடுகளின், இன்றைய நவநாகரீ கத்தின் முதற்படிகள் இந்திய, சீனா நாகரீகங்கள். பிராமணர்கள் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் சமமான சமூக அமைப்பி ருந்தது. அவர்கள் செய்யும் தொழில்ரீதியாக மக்கள் பிரிந்திருந்தார்களே தவிர "சாதி (வர்ண) அடிப்ப டையில் பிரிபட்டிருக்கவில்லை. பெண்களுக்குத் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை V, யிருந்தது. பல்லாயிர ஆண்டு நாகரீக பரம்பரையைக் கொண்ட எகிப்தில் ஆண்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் பெண்களுக்குமிருந்தது.
எகிப்திய நாகரீகத்தைப் பின்பற்றித் தொடர்ந்த கிரேக்க நாகரீகமும், அதன்பின் அதைத் தொடர்ந்து உரோம ஏகாதிபத்திய விரிவாக்கலும் நடந்தபோது பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும் பரவலாக் கப்பட்டது. உரோமர்கள் வெற்றிகொண்ட இடங்களில் பெண்களுக்கு முன்னிடம் கொடுக்கும் ஆதிகால வழிபாட்டு முறைகள் அழிக்கப்பட்டன. சமூகத்தில் பெண்களின் பங்கு பின்தள்ளப்பட்டது. 4ம் நூற்றாண் டில் கிறிஸ்தவ மதம் உரோமர்களால் புனித மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டபின் ஆண்மையின் பரிசுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பலநூறு வருடங்கள் பெண்களின் நிலை மிகவும் பின்தள்ளப் பட்டது. பெண்தெய்வங்களின் கோயில்கள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டன. இன்று பாரிஸ்நகரில் உள்ள நொத்ரடாம் தேவாலயம் ஆதிகாலத்தில் பெண்தெய்வக் கோயிலாக இருந்தது. இங்கிலாந்தில் பெண்களை முன்னிலைப்படுத்திய'ஆட்றுயுட்ஸ் என்ற ஆதிமதவாதிகளின் வழிபாட்டுத் தலங்கள், ஆங்கில அரசியாயிருந்த பூடிசிக்கா உரோமருடன் போர் தொடுத்த பின் அழித்தொழிக்கப்பட்டன.
இதழ் 24

ஆசைகளையும் தேவைகளையும் ளைக் கொண்ட உலகமாகும். ரயும் அடக்கி வைப்பார்கள். வைகளை முன்னெடுக்கச் ழி, பால் வேற்றுமைகள், த வழிபாடு என்று ங்களைப் பாவிப்பார்கள். ரத்தை மிகவும் கவனமாக ந்துப் பின்னி வைப்பார்கள். களைத் தண்டிக்க b (ஆண்) உருவாக்கி நப்பட்டிருக்கும் நிகளையே பாவிப்பார்கள்.
கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப்பின், மேற்கு நாடுகளில் பரவலாக்கப்பட்ட கிறிஸ்தவ சமயம், வழிபாட்டுத் தலங்கள், சமய, சமூகப் பொருளாதார நிலைகள் என்பன பெண்களை அடக்குவதற்காகப் பாவிக்கப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில், ஐரோப்பியர் அமெரிக்காவைக் கண்டுபிடித்து, அமெரிக்காவில் பரவிய பொருளாதார மாற்றங்கள் பெண்களின் விடுதலை உணர்ச்சியைத் தோற்று வித்தது. புதிதாக உண்டாக்கப்பட்ட தொழிற் சாலைகளில் குறைந்த சம்பளத்திற்கு அதிகப் படியான நேர வேலை செய்யமுடியாதென்று போராடிய பெண்கள், பொருளாதார இலாபத்திற்குத் தாங்கள் அடிமைகளாக வேலை செய்வதை எதிர்த்தார்கள்.
பல நூற்றாண்டுகால அடிமைத்தனத்தில் ஆண்களின் நலன்களிற்காகப் பாவிக்கப்பட்ட பெண்கள் தங்கள் நலன்களை முன்னிறுத்தித் தங்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறியப் பல போராட்டங்களைச் செய்யவேண்டியிருந்தது. 1914ம் ஆண்டு ஆரம்பித்த முதலாம் உலக யுத்தம், ஐரோப்பிய பெண்களை வீட்டிலிருந்து வெளியே வரப் பண்ணியது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கூறு போட ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் போன்றநாடுகள் போட்டி போட்டன. ஐரோப்பிய ஆயுத தொழிற்ச ாலைகளைப் பெண்கள் நிறைத்தார்கள். கடினமாக உழைத்தார்கள், ஊதியம் பெற்றார்கள், தங்கள் கால்களில் நிற்க முடியும் என்று உணர்ந்தார்கள். இங்கிலாந்தில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டுமென்று போராடினார்கள், வெற்றியும் பெற்றார்கள்.
அதைத் தொடர்ந்து மேற்குநாடுகளில் உண்டான தொழிலாளர் போராட்டங்கள் (இங்கிலாந்து 1927) பணத்தேக்கம் (அமெரிக்கா 1931) என்பன புதிய வாழ்க்கை மாற்றங்களையுண்டாக்கின. 1905ல் உலகப்பெயர்பெற்ற உளவியலாளர் சிக்மன்ட்ப்ராயிட் என்பவரின் மருமகன் எட்வேர்ட் பேர்னேய் என்பவர் விளம்பர உலகைக் கண்டுபிடித்து, வியாபாரப் பொருட்களை விற்கும் விளம்பரத்திற்குப் பெண்ணு டலைப்பாவிப்பதை அறிமுகம் செய்தார்.
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 101
لہ

Page 102
மனிதனின் ஆழ்மன ஆசைகள்தான் மனிதனை ஆட்டிப் படைக்கிறது என்ற தத்துவத்திற்கிணங்கப் பெண்களைப் பாவித்து (அதாவது, ஆண்களின் பாலியல் இச்சைகளைத் தூண்டும்) வியாபாரத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கினார். அன்றி லிருந்து பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை யாரும் சொல்லத் தேவையில்லை.
இன்று கணனிமூலம், படிப்பு, உழைப்பு, காதல், கல்யாணம், வியாபாரம், என்று எத்தனையோ செய்ய லாம் என்ற நியதியும் வசதியும் வந்தபின் சாதாரண மக்களும் பலதரப்பட்ட அறிவுகளைப் பெறுகிறார்கள். சர்வதேச மயப்படுத்தப்பட்ட வியாபாரங்கள், மனிதர்களின் தொடர்புகளையும் உறவுகளையும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறது.
இக்காலகட்டத்தில், 'வாழ்க்கையில் எத்தனை பேதங்கள் இருந்தாலும், ஏதோ சமாளித்துவாழுங்கள் என்ற தோரணையில் கட்டுரைகள் எழுதினால் என்ன Ligueir? -
பேதம்' கட்டுரையில் இலங்கைப் பிரச்சினையும் பேசப்படுகிறது. 'பேசும் மொழியைவிட எமக்கும் அவர்களுக்கும் (சிங்களவர்கள்) என்ன வேற்றுமை? அவர்களும் மனிதர்களே! மொழியைத் தவிர்த்து, மக்கள்முன்னேற்றக் கொள்கைகளுடன்நாடுதழுவிய கட்சியை உருவாக்கி முழு இலங்கை மக்களினதும் ஆதரவையும் பெற்று ஆட்சி அமைத்திட எந்தத் தமிழனும் ஏன் முன் வரவில்லை? என்று ஆதங்கப் படுகிறார் கட்டுரையாசிரியர்.
காலம் கடந்து பிறந்த ஞானம் என்றாலும் இவர் கேட்ட கேள்வியில் தொக்கிநிற்கும் 'ஆட்சி அமைத் திட' என்ற சொல், இவரின் ஆழ்மனத்தில் உள்ள 'ஆண்ட இனம் ஆளவேண்டும்' என்ற ஆசையைக் காட்டுகின்றதே தவிர, ஒருநாட்டிற்பிறந்த அத்தனை பேரும் ஏன் சகோரத்துவத்துடன் ஒற்றுமை யாய் வாழ முடியவில்லை என்று கேட்கவில்லை. பெண்களையும் சிங்களவர்களையும்'ஆட்சி செய்வதைவிட, அணை த்து நடந்து கொள்ளும் சிந்தனை ஏன் பிறக்காது?
"குடும்பத்தைக் குலைப்பதே பெண்-ஆண் நிலை வாதம் எனில் அதை ஒழித்து விடவேண்டும்' என்று கட்டுரையாசிரியர் திட்டவட்டமாகச் சொல்கிறார். மார்க்சியம் அனைத்து மக்களும் சமமாக வாழ வேண்டும் என்று போதிக்கிறது. ரஷ்யாவில் அந்தக் கோட்பாடு பல காரணங்களாற் தோற்றுவிட்டது என்ப தற்காக மார்க்சிய தத்துவமே பிழை, அதைப்பற்றிப் பேசுவது தடை செய்யப்படவேண்டும் என்பது முறை யல்ல. அதேரீதியில் பெண்ணியவாத சிந்தனைகள் மனிதகுலத்தை மேம்படுத்தும் சிந்தனைகள்என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது.
(ஆசிரியர் சொல்லும் ஆண்நில்ைவாதம்' நடை முறையில் இருப்பது எனக்குத் தெரியாது, ஆணா திக்கம் என்னும் பதத்தை கட்டுரையாசிரியர் விலக்கி பெண்ணியவாதத்தை முறியடிக்க எடுத்திருக்கும் முயற்சி சந்தேகத்திற்குரியது)
மனுதர்ம சாஸ்திரம் உலகிற்குப் பணிகள் செய்வதற்கும் பாதுகாப்பையும் கொடுப்பதற்கு ஆண் படைக்கப்பட்டான் என்றும் அவனுக்குத் தேவையான 102உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006

பணிவிடைகளைச் செய்வதற்குத்தான் பெண் படைக் கப்பட்டாள் என்றும் சொல்கிறது. இந்துமதமானது இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் 'நல்ல பெண்ணுக்கு வைத்திருக்கும் விதிமுறைகள் எப்போ தும் பெண்கள் தம் சுயமையை இழப்பதற்கான கட்டு மானங்களாகவே உள்ளன. சமத்துவத்தை முன்னெ டுத்த சமண சமயம் இந்துமதவாதிகளால் அழித்தொ ழிக்கப்பட்டது. சமணர்களைக் கழுவில் ஏற்றிய வரலாறு தெரியாத இந்துக்கள் இருக்க முடியாது. சமய, சமூகக் கட்டுக்கோப்புக்குள்ள்ரிருந்து பல விடயங்களைத் தங்கள் நன்மைக்குப் பாவிக்கும் ஆண்கள், 'தர்மசாஸ்திரத்தில் ஆண்கள் கடைசி வரைக்கும் செய்ய முடியாத, செய்யக் கூடாத பாவங்கள் என்று குறிப்பிட்டிருக்கும் பெண் கொலை களைத் தாராளமாகத் தொடர்கிறார்கள். பெண் கொலை மிகப்பாவமானது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐயாயிரம் பெண்கள் சீதனக் கொடுமையால் புகுந்த வீட்டாரால் - மணப்பெண்ணின் கணவராலும் அவரின் குடும்பத்தினரான மாமனார், மாமியார், மைத்துணி களாற் கொலை செய்யப்படுகிறார்கள் என்று அகில உலகச் சுகாதார சபை சொல்லியிருக்கிறது. பெண் குழந்தை பிறக்க வேண்டாம் என்பதனால், கருவறை யிலேயே 60 கோடிச் சிசுக்கள் கடந்த ஐம்பது வருட காலத்தில் இந்தியாவில் கொலை செய்யப் பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. பெண் குழந்தைகளைக் குப்பையிற் போடுவதும் இந்தியா, சீனா போன்ற நாடுகளிற் தொடர்கிறது. அத்துடன் வயது வராத சிறு பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும், அவர்களை விபச்சார விடுதிகளுக்கு விற்றுவிடுவதும் நாகாரீகமடைந்த இக்காலத்திலும் தாராளமாக நடக்கிறது.
இலங்கையில் நடக்கும் போரில் கிட்டத்தட்ட ஐயாயிரம் சிறு குழந்தைகள் போர்ப்பயிற்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், இற்ந்திருக்கிறார்கள். இதிற் கணிசமானவர்கள் இளம் பெண்கள். 14. 08, 2006இல் பயிற்சி (?) என்ற பெயரில் வள்ளிபுனத்திற்குக் கொண்டு போகப்பட்டு அரசபடையின் விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் 16-21 வயதுடைய எதிர்காலப் பயிர்கள் தமிழர்களின் எதிர்காலச் சொத்துக்கள். இன்று தமிழ்ப்பகுதிகளில் உளவாளிகள்' என்ற பெயரிலும், பாலியல் வியாபாரம் செய்தவர் என்ற பெயரிலும், மாற்றுக் கருத்தோர் என்ற பெயரிலும் தெருவில்நாய்களாகச் சுடப்படும் பெண்கள் ஏராளம். பெண் குழந்தைகளைப் போர்க்களத்திற்கும் பயிற்சிக்கும், கர்ப்பவதியைத் தற்கொலைத்தாக்குதல் களுக்கும் அனுப்புவர்களுக்குத் தர்மசாஸ்திரம்பற்றி ஏதும் தெரிந்திருந்தால் நல்லது.
பெண்நிலைவாதம் எண்பது பெண்களை அடக்கி வைத்திருக்கும் கட்டுமானங்களை உடைக்கவும், அவர்களின் விடுதலைக்காகவும், இன்னும் சாதி, மத, இன, மொழி போன்ற இன்னபிற பேதங்களில் அடக்கப்பட்டிருக்கும் விளிம்புநிலையாளர்களின் விடுதலையை நோக்கிய போராட்டமே,
இதழ் 24

Page 103
உயிர்நிழல் - 23 மீதான ஒரு வேகமான பார்வை
பொ.கருணாகரமூர்த்தி பெர்லின்
உயிர்நிழல்-22க்கும் -23 க்குமிடையேயான இடைவெளி சற்றே அதிகந்தான், அது சிறுபத்திரி கைகளின் இயல்பேயெனினும் அதன் வருகை சிறுபத்திரிகை வாசகர்களிடையே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாகவுள்ளது.
இதழின் முதல் கட்டுரையாக ந.சுசீந்திரனின் கலைச்செல்வன் பற்றிய நினைவுகூரலின் இரண்டாம் பாகம் பல அரிய புகைப்படங்களுடன் உயர்வு நவிற்சிகள் எதுவுமின்றி அவ் எளிய மனிதனை இன்னொருமுறை எம் மனக்கண்முன் நிறுத்துகிறது. கலையரசனின் ஒரு நாடோடியின் நாட்குறிப்பு எனும் தலைப்பிலான நீண்ட அரசியல் கட்டுரை டென்மார்க் பத்திரிகை முகமது நபியைக்கேலிச்சித்திரமாக வரைந்தது முதல் கிறிஸ்தவ மதத்தின் பிற்போக்குக் கூறுகள், முஸ்லிம் நாடுகள் மீதான அமெரிக்காவின் பாரபட்சமான போக்குகள் போன்றவற்றைச் சாடி, மிலோசோவிச்சின் மீதான விசாரணைகள், ஐரோப் பியத் தொழிலாளர்கள்மீதான ஒடுக்குமுறைகள்பற்றிச் சீறி புரட்சியின் தேவை பற்றிக்கூறி ஓய்கிறது. இவை இரண்டு கட்டுரைகளுக்கும் இடையில் வரும் 'ஏன்? என்கிற கவிதையில் முதல் பாதி வசந்தம், பூக்கள், அழகு, பருவங்கள் ஏன் வகைமாதிரிகள்? ஏன் நான்? விசாரத்தில் கவிதைத்தனம் தெரியவே செய்கிறது. கவிதையின் மறுபாதி இவ்வுடல் உழலவல்ல சாக் கடை உலகத்தைக்காட்டி (ஞானமும், உயிர்ப்புமற்ற வெற்றுடல்) பிரகிருதியை ஜடம் என்றும் அதன் வேதி யியலை நிறுவிக் கவி தையை முறித்துப்போட்டு விடுவதோடு, கேள்வி யையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிவிடுவதன் மூலமும், எனவே நான்! ஜடம்/எதிர்பார்ப்பில்லாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரும்புவதற்கும் (விருப்பம் எதிர்பார்ப்புகளில் விளை வதா?) என்கிற வார்த்தைகளை மிகையாகச் சூடி கவிதையைச் சுவாரஸ்யம் அற்றதாக ஆக்கினாலும் 'உன் சிநேகம்' என்கிற கவிதையில் எதிர்பார்ப்புகள் எதுவுமற்ற சிநேகிதத்தைகாதலையாசித்து அசத்து கிறார் அஜாதிகா.
சந்துஸ்லின் கவிதைகள் இரண்டிலும் கந்து வட்டி வாங்கும் நபர் யேசுவுக்கு ஒளிவிழா எடுக்கும் கவிதை சிறப்பானது. ரஜின்குமாரின் கவிதைகளில் 'வெறும் மழைத்தல்களால் மயிரைத்தான் நனைக்கலாம் மெளனத்தையல்ல என்கிற இடத்தில் அவர் முத்தி ரையை பதிவாகிறது.
சமகாலக் கவிஞர்களில் எவராலும் ஒதுக்கப்பட முடியாதவர் தோழர் மஹற்மூட் தார்வீஷ். தற்கொடை யாளர்களைப்பற்றிக்குறிப்பிடும்போது அவர் சொல்வார்: அவர்களின் செயலை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன், ஆனாலும் அவர்களை அவ்வாறு செய்ய உந்தும் கொடுமைகளின் தார்மீகத்தை மறுதலிப்ப தில்லை. அவரது பேட்டியின் மொழிபெயர்ப்பு உயிர் நிழலில் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
'யேசுவின் உயிர்த்தெழும் நாளும் நானும்' எனும் பாமினியின் Naration பாணியிலான கதை, படைப்பாளி என்னதான் பெண்பெயரில் ஒளிந்திருந்தாலும் படைப் பில் அவர் அவாவும் வாழ்க்கைமுறை-AL இல் குறைந்த பட்சம் 3A பெற்றவர்க்கே வாய்க்கும் கற்கைநெறி கிடைத்த பெருமிதம் - அவரது தொழில் - Volvo கார்பணக்காரசமூகத்தின் மையத்தில் புதிய வீடு வாங்கும் கனவு ஆகிய Superstitionsகளில் ஆண்களுக்கேயுரிய மேலாண்மைகள்தானாகவே வெளிப்பட்டுவிடுகின்றன. கதைசொல்லிநீண்டகாலத்தின்பின் ஆவலோடுபோய்ச் சந்திக்கும் நண்பன்"நீஎன் அருகில் இருந்து அப்போது வழிப்படுத்தியிருந்தால் அவளைநான்கட்டவேண்டியும் வந்திருக்காது, (இப்போதைய பிரிவால்) என் வாழ்வும் சீரழிந்து போயிருந்திருக்காது" என்றொரு குற்றச் சாட்டை இவர்மீது துக்கிப்போடுகிறான்.
ஏறத்தாழ இதையொத்த பிரச்சினை ஒன்றை நானும் முகம் கொள்ள நேர்ந்தது. எனது ஒரு Diabatic சுகயினமுள்ள நண்பனைத் தமது மகளுக்கு மாப் பிள்ளையாக்க விரும்பிய ஒரு குடும்பம் எனது சிபாரிசைக் கேட்டது. Diabatic ஆனது நாளாகஆக
உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006 103

Page 104
பாலியல் (drives) செயற்பாடுகளைத்தணிக்கும் என்பது இரகசியமல்ல. என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பிய நான் இப் பிரச்சினையை இணைவலையின் ஆலோசனை மையமொன்றில் வைத்தேன். எமது கலாச்சாரத்தில் உள்ள proposals மணமுறையை அறியாத சிலர் முதலில் கேட்டது "நீஎன்ன matrimonial Service நடத்துகிறாயா?" என்பது மீதிப்பேர்"அதுமணம் செய்துகொள்ள வேண்டிய ஆணும் பெண்ணும் சேர்ந்து தீர்மானிக்கவேண்டிய பிரச்சினை,நீஎதுக்கு நடுவில்? என்றனர்.
ஒரு இணை ஒன்றுக்குள் ஏற்படக்கூடிய உளவியல், உடலியல், பொருளியல் பிரச்சனைகள் எதுவாயினும் அதற்கான ஊற்றுக்களும், காரணிகளும் , தீர்மானங் களும் அவர்களையே சார்ந்தனசேர்ந்தன. அதற்கு இன்னொருவரைக் கை காட்டுவதுபழிபோடுவது எத் தனை பொருத்தமானது என்பது சிந்திக்க வேண்டியது. துடைப்பானின்"தோழர்புஷ்பராஜாவின்நினைவாக கட்டுரையில் உணர்ச்சி உந்தியநிலையில் ஓரிடத்தில் அவரை அறிந்தவர் கட்டுரையாளர் யாரென்று அறியும் படியாக செய்துவிடுகிறார். புஷ்பராஜா தொடர்பான லக்ஷர்மியின் கட்டுரையும் நிறைவானது. தமிழ் வாசகர்களுக்கு அதிகமும் பரிச்சயமில்லாத பல சிங்கள இயக்குநர்களை அறிமுகம் செய்கிறது ரதனின் கட்டுரை. உயிர்நிழல் வாசகர்கள் சிமோன் தி போவுவாவை அறிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை, தப்பியொட்டி யாராவது இருப்பார்களாயின் அவர் களுக்கு அவரைப் பற்றிய அநாமிகாவின் கட்டுரை உதவும் , .
நிசங்க விஜயமானேயின் சிறுகதை'பொறகுக்குள சிங்களத்திலிருந்து ஆங்கிலத்துக்குப்போய் மீண்டும் தமிழுக்கு வர நேர்ந்தாலும், கதை நிகழும் பகைப் புலனைத் மொழிபெயர்ப்பாளர் கதி துல்லியமாக அறிந் திருந்ததனால் அதன் சுவை கெடாமல் தரமுடிந் திருக்கிறது அவரால் 'சண்டைக்கோழி'யைப்பற்றி அண்மையில் சூரிச்சில் ஒரு சந்திப்பில் நான் சிலாகிக் கையில் நான் முடிக்குமட்டும் முழுவதையும் கேட்டு விட்டு அது தான்தான் என்றார் அடக்கத்துடன் அதைமொழிபெயர்த்த அந்நண்பர்.
கதை எழுதப்பட்ட காலம் எங்கும் குறிப்பிடப்பட வில்லையாயினும் சந்தி ரிகா குமாரதுங்க (இங்கே சிற்றாவினதும் கோபாலி னதும் சண்டைக்கோழி களைப் பிடுங்கிப்போடும் பார்வதி) தான் எப்பாடுபட் டாயினும் நாட்டில் சமாதா னத்தையும் சுபீட்சத்தையும் கொண்டு வருவேன் என்று முழங்கி வெற்றிபெற்றுநாட் டின் தலைவியானபோது ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவான உருவகமோ
104|உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 
 

வென எண்ண வைக்கிறது கதையின் எடுப்பும் . தொடுப்பும், நாம் போர் ஓய்வாகக்கொள்ளலாம் அதன் முடிப்பை. உக்கிரமான கோழிச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது மைதானத்தில், மக்கள் சூழநின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சூழவிருந்த பாறைகளும் மரங்களும் வேலிகளும் சூழ நின்றிருந்தோரின் சாரத்திலுள்ள துவாரங்களி னுரடாகச் சண்டையைப் பார்த்து ரசித்தன என்கிற இயல்பான நகைச்சுவை வரிகளினுடு அம்மக்களின் வாழ்க்கைத்தரம் எளிய முறையில் காட்சிப்படுத்தப் படுகிறது.
'கண் கேட்காது என்கிற சிறுகதையை சித்ரா சுதாகர் பிரத்தியேக வார்த்தைத் தவங்கள் எதுவும் புரியாமல் "அவ அந்த மாதிரிச் சமைப்பாளெண்டாய் இங்கை வாயிலை வைக்க ஏலாது" "சரியான நோனா வாக இருக்கிறா", "அவ தனக்கும் நோகாமல் தும்புக் கட்டைக்கும் நோகாமல்தான் கூட்டுவா” - என்பது போன்ற நடப்பியல் வார்த்தைகளால் நெய்து விட்டி ருக்கிறார். திருமணமானபின் இவர்கள்என்னிடம் (சமை யல், நடனம், தையல், வீடுபராமரித்தல்) எல்லாவற் றையும் தன்னிடம் ஏன் எதிர்பார்க்கவேண்டும் என்கிற தார்மீகக் கோபத்தில், வீம்பில், ஆற்றாமையில் அவள் அவைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் பாசாங்கு பண்ணலாம். பிறந்ததிலிருந்தே மிக மோசமான திக்குவாயுடன் இருந்த பெண் ஒருத்தி தானாகவே முயற்சியெடுத்து அதை வென்று இயல் பாக்கிய பின்னால் மருத்துவம் கூடப்பயின்றதை நான் அறிவேன். ஒருத்தி தனது கண்சிமிட்டலை வெல்வ தற்கான பகிரத முயற்சியில்தான் கற்றிருந்த அழகியல் கலைக்ளையெல்லாம் மறந்து போகிறாளென்கிற வாதம் தர்க்க, அறிவியல் அடிப்படையில் மிகவும் பல வீனமானதும், மனித மூளையின் திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும். இருந்தும் ஆசிரியை யின் "ஏன் இவர்கள் இந்திராவை அவளின் குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?" என்கிற ஆதங்கம் வெளிப்படுவதில் படைப்பில் வேறொரு தடைகளுமில்லை. தமிழ்ப்பெண்ணினது கதைக்கு ஐரோப்பிய/அமெரிக்கப்பெண்ணின் சாயலிலான ஒவியத்தைத் தவிர்த்திருக்கலாம்.
உயிர்நிழல் - 24 மேலான எதிர்பார்ப்பும், காதலும் அதிகமாகிறது.
* * * * 女
எஸ். ஜெயசங்கர் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.
அன்புடன் நண்பர்களிற்கு, V−
உயிர்நிழல் ஏப்ரல்-யூன் 2006 இதழ் கிடைத்தது. நனறி.
இன்னும் இரண்டு பிரதிகள் ஜெயந்தி மூலமாகவும்
கிடைத்தன. இவை மூன்றாவது கண் அங்கத்தவர் இதழ் 24

Page 105
களுக்கிடையிலும் பல்கலைக்கழக மாணவர்களுக் கிடையிலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் சுற்றுக்குச் செல்கின்றன. இந்த இதழ் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. என்னுடைய வாழ்த்துக்களை பிரதீபனுக்குத் தெரிவிக்கவும் - அவருடைய காத்திர மான நுண்ணறிவுகளுக்கும் காட்சித் தோற்றங் களையும் கொணர்ந்ததற்கு ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
நேரடிபிரெஞ்சுபொழிபெயர்ப்புகளின்தேவைஇன்று அதிகமாக அவசியமாகின்றது.
புலம்பெயர் எதிர்கால சந்ததிக்கான வருடாந்த கலை இலக்கிய விழா ஒன்றைப்பற்றித் தயவு செய்து யோசியுங்கள்.நாங்கள் எப்படி வெவ்வேறு மொழிபேசும் வருங்கால சந்ததியினரை இணைக்கப்போகின்றோம்? தமிழும் இணையமும் இதை அடைவதற்கான சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கும். ஆனால் நேரடித் தொடர்புகளும் இணைப்புகளும் எதிர்கால சந்ததி களுக்கு மிக முக்கியமானதாகின்றது. மொழி பெயர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். இவர்களுடனான தொடர்பை ஏற்படுத்த முடியுமா?
* * * * ★
ஒட்டமாவடி அறபாத் வாழைச்சேனை 02/08/06
உயிர்நிழல் ஏப்ரல்-யூன் 2006 இதழ் படித்தேன். மரணம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் வெற்றிடங்களை மீளவும் நிரப்ப முடியாது. பல ஆகிருதிகளை மரணம் தன்வசம் அழைத்துக் கொண்டது. பிடரி நரம்பைவிட அண்மித்திருக்கும் அதன் வலிய கரங்கள் எந்நேரமும் நமது கழுத்தைத் திருகலாம். கலைச்செல்வன், புஸ்பராஜா, உமாகாந்தன் போன்றோரின் இழப்பின் வலியை கண்ணிருடன் சொல்லி இருக்கின்றீர்கள்.
சண்டைச்சேவல் அண்மையில் படித்த சிங்களச் சிறுகதைகளில் ஒன்று. நுட்பமான உணர்வுகள், குறியீட்டு மொழியுடன் ஆழமாகச் செதுக்கப்பட் டுள்ளது. தமிழ் இனத்தின் புரிந்துணர்வும் சிங்கள மேலாதிக்கத்தின் சரணா கதியும் நுண்ணியமாகச் செதுக்கப்பட்டிருப்பதை நான் அனுபவித்தேன். தமிழ்த் தேசியமும் சிங்க ளத் திரைப்படமும் கட்டு ரையும் சிறப்பாக உள்ளது. கட்டுரையின் இறுதிப்பந்தி களை உரத்துக் கேட்க வேண்டியுள்ளது. சர்வ தேசத் தேசிய கலை இலக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிய அரசியல் விடயங்களையும் புலம்பெயர் இலக் கிய முயற்சிகளையும் ஒருசேரப் படித்ததில் நிறைவு - உயிர்நிழலின் அடுத்த வருகையை எதிர்பார்க்க இதுவும் பிரதான காரணம்.
安安 安安‘赏
பின்தொடரும் உயிர்நிழல்
வீரகேசரி - உயிர்எழுத்து
16O7.2OO6 நவீன ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தோற்றுவித்ததில் ஈழத்தமிழர்களின் உலகளாவிய இடப்பெயர்வுக்கு கணிசமான பாத்திரம் இருக்கிறது. தீவிரமான விமர்சனத்திற்கும் பரந்துபட்ட திறந்த கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங் களுக்கும் உட்படுத்த வேண்டிய புதிய உலகங்களின் விவரணம், புதிய கோணத்திலிருந்தான படைப்பு மொழிதல், நிகழ் வாழ்க்கைக்கும் நினைவலை களுக்கும் இடையிலாக நிர்ணயமின்றித் தொடரும் படைப்பான்மா போன்றவற்றைத்தாண்டி ஒட்டுமொத்த ஈழத்து நவீன இலக்கியத் தளத்திலும் அதன் பாதிப்பு புறக்கணிக்க முடியாதது. ஈழத்துப் படைப்புகளின் உலகு தழுவிய பண்புமாற்றத்தில் மொழிபெயர்ப்பு ஆக்கங்களோடு சேர்ந்தும் பதிப்பு வெளியீட்டு முயற்சிகளில் அவற்றின் நவீன தொழில் நுட்பம் அழகியல் இலகு ஆக்கம் ஆகியவற்றோடு சேர்த்தும் இதை நோக்கலாம். தொண்ணுாறுகளில் புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த மொத்த சஞ்சிகை களின் எண்ணிக்கை இருபத்தைந்துக்கும் சற்று மேற்பட்டதாக இருக்கக்கூடும்.நான்காவது பரிமாணம், அஆஇ. அம்மா, காலம், உயிர்ப்பு போன்ற பெயர்கள் ஆழ்மனதில் இருந்து ஞாபகம் வருகின்றன. தீவிரமான பிரக்ஞைகளுடனும் சில போதுகளில் வெற்றார்வத் துடனும் என்றும் எண்ணத்தக்க விதத்தில் வெளிவந்து கொண்டிருந்த இவற்றில் பெரும்பாலானவை ஏறக் குறைய நின்றுவிட்டிருந்த காலத்திலேயே எக்ஸில் புதிய முனைப்புகளுடன் பிரான்சில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பின்னர் உயிர்நிழல் என்ற பெயரில் இருமாத இதழாகத் தொடர்ந்து பின் சடுதியாகநின்று கடந்த ஜனவரி முதல் காலாண்டிதழாக இரு இதழ்களைத் தந்திருக்கிறது. அண்மையில் நண்பர் பெளஸர் ஊடாக இவ்வாண்டுக்கான உயிர்நிழலின் இரண்டாவது காலாண்டிதழை (ஏப்ரல்-பூன்) பார்க்கக் கிடைத்தது.
ந. சுசீந்திரனின் கலைச்செல்வன் பற்றிய நினைவுகள் மனதை நெருடுகின்றன.
கலையரசன்'ஒருநாடோடியின்நாட்குறிப்புகளாக எழுதி இருப்பவை வெறும் நாட்குறிப்புகளல்ல என்று மட்டும் அவசியம் சொல்லவேண்டும்.
'தமிழ்த் தேசியமும் சிங்களத் திரைப்படங் களும்'என்ற ரதனின் கட்டுரை நவீன சிங்கள சினிமாவின் அரசியல் குறித்த திறந்ததொரு பரவலான
உயிர்நிழல் டெயூலை - செப்டெம்பர் 2006105

Page 106
அறிமுகத்தைச் செய்யமுயல்கிறதாயினும்'நொமியன மினிசுன் போன்ற தமிழர்களது உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை கீழ்த்தரமாக வியாபாரம் செய்ய முயன்ற மூன்றாந்தர சினிமாப் போலிகளையும் சோமரட்ண திசநாயக்க போன்ற கொடும் சிங்களத் தேசியவாதிகளது நீலிக் கண்ணிர்களையும் வரலாற் றில் உள்ள சினிமாக்களுடன் சமதையாக இருத்த முயன்று கருத்தியல் குளறுபடி செய்கிறது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் எதை நோக்கி என்ற வி. சிவலிங்கத்தின் கட்டுரை தமிழர் களையும் முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் ஒரு சேரத் தமிழ் பேசும் மக்களென விழித்துரைத்து வரும் அரசியல் வஞ்சகத்தை தனது முகவுரையிலேயே நேர்மையாகத் துவம்சம் செய்கிறது. 'சொல்லித் தானாக வேண்டும்' என்ற தலைப்பில் சபாலிங்கம் நண்பர்கள் வட்டம் தொகுத்திருக்கும் தோற்றுத்தான் போவோமா?வின்முன்னுரை இத்தனைகாலம்கடந்தும் மீளப்பிரசுரிக்கும் சூழ்நிலை தொடர்ந்திருப்பதுமாற்றுக் குரலாளர்கள் ஜனநாயக சக்திகளின் எதிர்காலம் குறித்த கொலை நடுங்கும் கேள்விகளையும் இரட்டை வேடப் பச்சோந்தி மாற்றுக்குரல் போலிகளின் துரோகத்தனங்களையும் மீள் உணர்த்துகிறது. தொடர்ந்து லகூழ்மியின் புஸ்பராஜா அண்ணையின் நினைவுகள் இன்னும் நெஞ்சுலரும் துயர் இருளை மனதில் படர்த்துகிறது.
புதியவனின் 'மண் திரைப்படம் பற்றிய குறிப்புகள் மற்றும் தமிழில் ஏற்கனவே புளித்துப் போன கவிதைப் பெண்நிலை விவரணங்களான ரஞ்சினி கவிதைகள் குறித்த சித்தனின் அலட்டல்கள் என்பன, முன் படைப்புகள் பற்றிய தேடல் படைப்பாளிகளுக்கு மாத்திரமன்றி இத்தகைய பெரும்பாலான குறிப்பாளர் களுக்கும் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. கவிதைகள் எதுவும் புதியவையாக இல்லை. கவிதை களில் புதிய பிரச்சனைகளை புதிய விதத்தில் மொழிய இயலாவிட்டால் அவற்றைக் குறிப்புகளாக எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போகலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. தமிழில் இப்போதைக்கு இருக்கிற மாதிரிகளில் வெளிவந்துவிட்ட கவிதைகளாவது சலிப்பானவையாக மாறிவிடாதிருக்க இந்த உதவியையாவது செய் தால் என்ன? இல்லா விட்டால் உயிர்நிழலில் ஒளிப்படங்களால் கவிதை (ypu 16ölsó (bábGíb MEISELAS Susan, Philip Jones Griffiths, Steve MCCURRY (8 JT6, முயன்று பார்க்கலாம். சிறுகதைகளும் மொழி பெயர்ப்புச் சிறுகதைகளும் சு மா ரா ன  ைவ ய ர க இருக்கின்றன. பால் மை தொடர்பான கட்டுரைகள்,
106உயிர்நிழல் 0 யூலை - செப்டெம்பர் 2006
 
 

நேர்காணல் என்பன மிகக் காத்திரமாக வந்திருக்கின்றன. ரவீந் திரன் பிரதீபனுடனான ஒளிப்படக் கலை தொடர்பான நேர்காணலும் குறிப் பிடத்தக்கது. உயிர்நிழலில் இருந்து நன்றி சொல்ல மறந்து கடந்த 02.07.2006இல் உயிர் எழுத்து மீள்பிரசுரித்திருந்த மஹற்மூத்தார்வீஷின் நேர்காணல் தந்திருக்கக்கூடிய அதிர்வலைகளில் இருந்து வாசகர்கள் மீண்டிருக்க முடியாத நிலையில் அது குறித்துவிவரிக்க வேண்டியதில்லை.
* 茨 * 兹 刘
எங்கள் தேசம்
GFüGlLibus 1-14, 2OO6
W இலங்கை நமது படிப்பாளிகளும் படைப்பாளிகளும் தற்போது தங்களது படிப்பிலும் படைப்பிலும் கஞ்சத்தன மிக்கவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இதுவரையிலும் காத்திரமான இலக்கிய சஞ்சிகைகள் பெருமளவில் இலங்கையில் வெளிவருவ தில்லை என்ற குறைபாடு எல்லோரையும் ஆக்கிர மித்துக் கொண்டிருக்கும் வேளை பிரான்ஸ் நாட்டில் இருந்து உயிர்நிழல் என்னும் சஞ்சிகைலகூழ்மி, கலைச் செல்வன் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவருகின்றது.
சஞ்சிகை என்றால் கவிதையா சிறுகதையா என்று மட்டுப்படுத்த முடியாதவாறு பல தளங்களில் விரிந்து பலதை பகிர்ந்து சிந்தித்து விவாதிக்கவும் வைத்தி ருக்கிறது. ஈழப் போராட்டத்தில் முஸ்லிம் களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சி. புஸ்பராஜா வெளிப் படையாக எழுதியதை அரசியல் நாட் குறிப்பேட்டில் பதித்திருக்கிறார்கள். சமகால மாபெரும் அரபுக் கவிஞர்களுள் ஒருவரான டார்விஷ் மஹற்மூட்டின் நேர்காணல், தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டம் குறித்த வி. சிவலிங்கத்தின் கட்டுரை, தோழர் புஸ்பராஜாவின் நினைவுகளை துடைப்பான், லகூழ்மி போன்றோர் பகிர்ந்து கொள்கிறார்கள். அஜாதிகா, சந்துாஸ், ராசன் றஜின்குமார், அனார் போன்றோரின் கவிதைகளோடு பாமினியுடைய சிறுகதையும் சிறப்புச் சேர்த்து நிற்கிறது. மற்றும் விமர்சனம், சினிமா, நூால் அறிமுகம், கடிதங்கள்என பல்வேறுபட்ட தளங்களிலும் பேனா புகுந்து புத்தகத்தை முழுமையடையச் செய்திருக்கிறது.
சஞ்சிகைகளின் வரவுபோல்அது நின்று போய் விடுவதும் வழக்கமாகிவிட்ட நமது இலக்கியச் சூழலில் இப்படியான சஞ்சிகைகள் நிலைத்துநிற்கவும் வேண்டும். அதனை நாம் உணரவும் கடமைப்பட்டுள் ளோம். நமதுவாழ்வில் ஒய்வின்றி அலையும்நாட்களின் இரவில் சில விநாடிகளையாவது உயிர்நிழலுக்காக விழித்திருப்போம்.
இதழ் 24)

Page 107


Page 108
புகடந்துப் பெண்கள் பங்கீதத் தொகுப்பு
LELJILI I LJILILI 19°2
iiiT iiiiiILIT Li Ligijuq il GLUTIGAdil lill
lil Tile Titi
Phill
| Inihil
| எனக்குள் ம்ெமை ய . Lagin kinisi W
gigsigsi ni
Hiligi GLILITA Asiat iiiiiiiiiiiiiiii
புழlராஜேந்தின்
Liiiiiiiii || 18 EXII PL WI27 Rue
|924미
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||el-Tail||alexi |
கிருஷ்:த்தி பிளாட்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாப்புக்குறிகளின் U LILLIGRTI IT
தமிழில் தரிப்புக்குறிகளின் LILIIGILITOG
சிசிடிசேகரம்
ଶ୍ନ'][i] = !!!!!!!!!!
யினுடையவை
ILLILL|||||||||||||
:Ñ!
புதுபுள்
BLICATION 150 - w | Jean Moulin||||||||||||||||||||||||||||||||||||||Wè-22|| | CCL rite Woje|||||| I M
Francё. pub@gmail.com. W M
|||||||||||||||||||||||IMMMM
|ೇ
I INA