கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2004.06

Page 1


Page 2
Iീബ് 2ണ് ബീ',
அரக்கன் ஒருவன் அடிபட்டு வீழ்ந்ததென தெருவின் குறுக்கே திசைநடுங்கப் பாறிவீழ்ந்து கிடக்கிறது இருநூறு கிளைவிட்ட பெருவிருட் இந்த விருட்சத்தை என் நினைவு தெரிந்திருந்த அன்றிருந்து நேற்றுவரை கண்டுவிட்டுப் போu இந்த விருட்சத்தில்
எண்ணிறந்தே மலர்ந்த பொன்னிற மலர்களிடம் என்னை இழந்துள்ே இந்த மரத்தில் இழைந்து பிறந்துவந்து எண்ணற்ற குருவிகளின் இசையில் இலயித்துள்ளேன். இவ்விருட்சம் எத்தனையோ புயல்களினை எ இவ்விடம் விட்டோட்டிவிட்ட இறுமாப்பிற் சிலிர்த்துள்ளேன். இந்த விருட்சத்தின் நிழலில் என் தலைமுை குந்தி எழுந்ததையும் கண்டுள்ளேன். நான்கூட நின்று இளைப்பாறி நிமிர்ந்து நடந்துள்ளேன். எத்தனை காலத்தை, இடையறா வரலாற்றை, இத்தரையின் மாற்றத்தை, எதார்த்தத்தை, கண்டுகண்டு உயிர்த்த அதனழகுக்கு உவமைத்தேடித் த இன்றித் தெருவை
இரண்டாய்ப் பிளந்தபடி எப்படியோ வீழ்ந்து சேடம் இழுத்தபடி பெருமுச்சு விட்டு
இறப்பை அழைத்துவிட்டு தனதிருப் பிழந்து தனதிடத்தில் வெற்றிடத்ை நிறைத்தபடி
நிழலும் இழந்திருக்கும்
விருட்சத்தைக் கண்டுவிட்டுக் கண்ணிர் துடைத்தபடி அரு வீதிக் கிடைஞ்சலென வெட்டும் பணி தொடங்க ஏதேதோ சொல்வதற்கு எத்தனித்து இயலாமல் விறகுகளாய் மாறும் விருட்சத்தைப் பார்த்த வரலாற்றை நொந்தபடி, மருங்கில்நான் நிற்கின்றேன்.

சம்.
硫 研 &G "통
ளன்.
றகள்
வித்துள்ளேன்.
தெ
லுள்ளேன்.
g
த. ஜெயசீலன்

Page 3
Y- N புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
தாயகம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
பிரதம ஆசிரியர் க.தணிகாசலம்
தொ.யே. 021-2223629 ஆசிரியர் குழு இ.முருகையன் ເກີ.@&ງບໍ່ குழந்தை ம.சண்டுகலிங்கம் 63 T.6p3 JT8T கல்வயல் வே.குமாரசாமி அழபகீரதன் ஜெ.சற்குடுநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு:
-- சிவபரதன்
ஒவியம்: சி.துரைவிரசிங்கம் விநியோகச் செயலர்: க.ஆனந்தகுமாரசாமி 6)იJ6ოfouტ70): தேசிய கலை இலக்கிய பேரவை 405, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறிண்டேஸ் சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு
المحكم

உள்ஏே.
கவிதை
Dí ܗܝ மாவை லரோதயன் சாடுமதி
த.ஜெயசீலன் அழ.பகீரதன்
đпJiћ காவத்தையூர் மகேந்திரன் தி.திடுக்குமரன் இ.சிவலிங்கம் சிவபாலன் கி.கிடுபானந்த் எஸ்.பி.பாலடுடுகன் மீநிலா
ിg()
க.சட்டநாதன் * ச.முடுகானந்தன்
சாந்தன் வனஜா நடராஜா
கட்டுரை
இ.டுடுகையன் ந.சுரேந்திரன் க.வேல்தஞ்சன் சாந்தன் அ.க.தெய்வேந்திரன், லெனின் மதிவானம் சீராளன் w மிதுனி க.வே.தனஞ்சயன்

Page 4
Öst(16D
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
50வது இது
தாயகம் 50வது இதழ் வெளிவருகிறது. எண்ணிக்
எனினும் தாயகம் ஏற்றுக்கொண்ட இலக்கையும், பயணி
விமர்சகர்களின் கண்களுக்கு அது படாவிட்டாலும் - கணித்துக்கொள்கிறது.
ஈழத்து இலக்கியப் பரப்பில் தாயகம் கால்பதித்த உலகரீதியாகவும் தேசியரீதியாகவும் ஏற்பட்ட இருபெரும் நேர்ந்தது.
தாயகம் தனது இலக்கியச் செல்நெறியாக ஏற்றுக்கெ பெற்று ஒய்வடைய ஆரம்பித்த எழுபதுகளின் நடுப்பகுதி பின்னடைவைச்சந்தித்த காலத்திலும் நம்பிக்கையுடன் தன் கருதி - இருத்தலியல், அமைப்பியல், பின்நவீனத்துவம் வலுவூட்டும் தனிமனிதவாத கருத்தியல்களை முன்வைத்து விடுதலைக்கான தத்துவமாக மாக்சியத்தை தாயகம் அ6
பட்டியல் போடாவிட்டாலும் கலை இலக்கியத்துறை தாயகம் உருவாக்கியது. முன்பே இத்துறையில் ஈடுபட்டிரு சமூகவிஞ்ஞான நோக்கோடு விரிந்த உலகப்பார்வையை ( உற்சாகத்தையும் உந்துதலையும் தருவதற்கு தாயகம் மு
பேரினவாத, இந்தியப் பிராந்தியவாத மேலாதிக்க யுத்த அவற்றுக்கெதிரான கருத்துக்களைத் தாங்கி தாயகம் வெ: போரட்டத்தை ஆதரித்து வந்ததுடன் - தத்துவார்த்த விமர்சனங்களை இடையிடையே முன்வைத்து வந்துள்ள கருதிக்கொண்ட சில தனிமனிதவாத, பழமைவாத ம உட்படவேண்டி இருந்தது.
ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும்நிறைந்த ஒரு ச நிறுவனங்களோ, கருத்தியல்களோ இருக்கமுடியாது. அரசி இது பொருந்தும். தாயகம் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பா நோக்கி மக்கள் கலை இலக்கியத்தை மேம்படுத்துவதே அ தடைகளை விலக்கி தாயகம் தொடர்ந்து வரும். இதுவை 4டைம்/7ணிகளுக்கும் வாசகர்களுக்கும் 4ன்றி கூறுவது எதிர்பார்க்கிறது.

புதிய ஜனநாயகம்
புதிய வாழ்வு
புதிய பண்பாடு இதழ் 50 ஜூலை 2004
ழாக தாயகம்
கை, வருகை ஒழுங்கில் இது ஒரு சாதனை அல்ல. த்துவந்த காலகட்டத்தையும் வைத்து நோக்கும்போது - தனது வருகைக்கு ஒரு பெறுமானம் உண்டு எனக்
காலத்திலிருந்து இன்றுவரை அதன் இடை வெளியில் நெருக்கடிகள் நிறைந்த காலப்பகுதிக் கூடாக பயணிக்க
ாண்ட பொதுவுடமைத் தத்துவம் உலகெங்கும் எழுச்சி பில் வெளிவர ஆரம்பித்தது. எண்பதுகளில் தற்காலிக பணிதொடர்ந்தது. அப்பின்னடைவுச் சூழலை வாய்ப்பாகக் , கட்டுடைப்பு என ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு - மாக்சியத்தை நிராகரிக்க முயன்ற போதும், மானுட DLIGIth SILIlg fisipy.
யில் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டு ஈடுபடும் பலரை ந்த பலருக்கு நம்பிக்கையூட்டும் களமாக இது அமைந்தது. பெற விரும்பிய இளம் எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு பன்றது.
கால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இம்மண்ணிலிருந்து ரிவந்தது. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் அரசியல் தளத்தில் நின்று அவ்வப்போது நட்பு ரீதியான து. இதனால் பரமசிவன் கழுத்திலிருப்பதாக தம்மைக் ாக்சிய எதிர்ப்பாளர்களின் சொல்லடிகளுக்கு தாயகம்
மூகத்தில் சார்பற்ற, நடுநிலையான,பொதுமைப்படுத்தப்பட்ட பல் அதிகாரம், அறிவியல், கலை பண்பாடு யாவற்றுக்கும் னது. புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாட்டை தன் இலக்கு. அதனை அடையும் பாதையில் ஏற்படும் தாயகத்தின் வருகைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த 4ன் மேலும் புதியவர்களிடமிருந்தும் அதனை தMதம்
Obstugbo. 50

Page 5
மஹற்மூட் டர்வீவர்
தெளிவான தெருவொன்று ஒரு சிறுமி ஒரு சிறுமி
போகின்றாள், போகின்றாள்
சுவடிழந்து போயினதே
ஒரு தேசம், ஒரு தேசம்,
தேசமுள்ள இடமும் வெகு
தொலைவினிலே தொலைவினிலே
கசப்பான கனவொன்று
குரலொன்று குரலொன்று
பாறையிலே இடையொன்றைச்
செதுக்குகிடுதே செதுக்குகிடுதே
கண்ணே என் கண்ணிமைமேல்
இல்லையெனின் இல்லையெனின்
போவாயே போவாயே.
கொலைகார நிலவொன்று
நெடுமோனம் நெடுமோனம்
கையினிலே கையினிலே
ஆற்றினைஓர் ஊசியென
மாற்றிடுதே மாற்றிடுதே.
மிதக்கின்ற சுவரொன்று
 
 

இசைப்பாடல்
subplab: LDari
பார்த்ததன்பின் கண்மறைவாய்
போயினதே போயினதே
எம்மை அவர் ஒருவேளை
கொல்லுவரோ கொல்லுவரோ
ஒழுங்கையிலே வழிதவறிக்
செல்லுவரே செல்லுவரோ
இழிவான யுகமொன்று
ஒரு மரணம் ஒரு மரணம் கடந்து செல்லும் எங்களையும்
விழைகிறதே விழைகிறதே எல்லாமும் இப்போதே
முடிந்தனவே முடிந்தனவே நாடோடிப் பயணமிதும்
முடிந்ததுவே முடிந்ததுவே பயணங்கள் செய்தே நாம்
அலுத்தோமே அலுத்தோமே
தெளிவான தெருவொன்று ஒரு சிறுமி ஒரு சிறுமி என் உடலின் சுவர் மீதே
என் உடலின் சுவர்மீதே படங்களையும் ஒட்டிடவே
கிளம்புகிறாள் கிளம்புகிறாள் என்னுடைய கூடாரங்கள்
வெகுதுலைவில் வெகுதுலைவில் சுவடிழந்த கூடாரங்கள்,
சுவடிழந்த கூடாரங்கள்

Page 6
சமுதாயப் பொறுப்போடு
மீநிலா
அதிகாலை:
பாணுக்கு வரிசையில் நிற்கிறேன் நேரம் கடக்கிறது கடை திறக்கவில்லை இன்னும் அருகில் நின்றவர் சொல்கிறார் 'நேரத்திற்கு கடை திறக்காமல். மற்றவர்களைப் பற்றி யோசனையே இல்லை'
Ꮿ56Ꮫ6Ꮱ06ᏓᎫ:
அவசர அலுவலொன்றிற்காய் அலுவலகமொன்றினுள் நுழைகிறேன் ஒரே கூட்டம்
விசாரிக்கிறேன் பணிசெய்ய வேண்டியவர் பணியை விடுத்து தேநீர் பருகுகிறார் யார் அவர்? எட்டிப் பார்க்கிறேன் காலையில் திட்டிய அதே மனிதர்
ノ ܢܠ

ஐ.சி. செயல்வகை
-மாவை.வரோதயன்
ரிந்கொரு கோயிலில் கும்பிடப் போகையில் ரீந்திரு அடையாள அட்டை!
சின்றிக் கடைத்தெரு போனாலும் ஐடென்றி சிற்குள் பேணிடப் பழகு!
மொழி பொறித்ததோர் அடையாள அட்டை ருமிடர்க் காக்கிடும் பகை!
ாலிஸ்ஏட்டுப் பதிவாக அடையாள அட்டையும் காலக் காவல்தம் குடிக்கு!
வனைத் தேய்வும் படமுக மாற்றமும் வினைக் கேதுவாம் தினம்!
க்கக் கனாவிலும் கடன்காரத் தட்டலாய் ட்கும் ஐசியைப் படை!
நாட்டு மாந்தரே ஆனாலும் கடிவர் ர்நாட்டு ஐசியைக் கேட்டு!
ண்ணப்பம் போட்டபின் வாராது வந்திடும் ானாற்போய் கையூட்டற் பின்!
மையாய் இதனை எங்கெலாம் கோருவர் மையில் கள்வரும் கேட்பர்!
க்பொயின்றில் ஈதின்றி இன்னலாம் பணங்கொண்ட பொக்கற் காரனும் புரிவான்!
ட்டிடும் போதெலாம் காட்டிடும் ஐசிக்கு- கள்ள ாட்டிட மட்டுமே விலக்கு

Page 7
அவன் தொண்ணுற்றெட்டில் அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினான். lகொண்டிசன்ட், ஹொண்டா C50. கொஞ்சம் புதிசு மாதிரி. அவனுக்குப் புதிசா எதையும் வைத்திருக்க ராசி இல்லை. அவனுடைய சைக்கிள் கூடப் பழசுதான்.றலி. எழுபதில், நூற்றிநாப்பது ரூபாவுக்கு வாங்கியது. இப்போதும் அதை வைத்திருப்பதிலும் பராமரிப்பதிலும் அவனுக்கு ஒரு திருப்தி இருந்தது.
மோட்டார் சைக்கிள் வாங்கியதிலிருந்து அவனது சைக்கிள் ஓட்டம் குறைந்துவிட்டது. அதனால் அவனுக்கு லேசான தொந்தி. நடப்பதிலும் சிரமம் இருந்தது. மூச்சுவாங்கியது. “தொந்தி கரைய உடற்பயிற்சி வேணும். சைக்கிள் ஓடலாம். சிவராசா புத்திமதி கூறினான்.
சிவராசாவின் ஆலோசனைகளுக்கு முன்னதாகவே, சைக்கிளை அவன் அதிகம் பயன்படுத்த வேண்டி வந்துவிட்டது. மோட்டார் சைக்கிளுடன் வீதியில் இறங்கப் பயமாக இருந்தது. வீதிப் பழக்க வழக்கம் தாறு மாறாக இருந்ததொரு காரணம். இன்னொரு காரணம். காக்கிச் சட்டைக்காரர்களின் கெடுபிடி. பொலிஸார் பல விஷயங் களில் பல் உடைபட்டாலும் ஒரு விஷயத்தில் மட்டும் உசாராயிருந்தார்கள். அது வாகன அனுமதிப்பத்திரப் பரிசோதனை. வீதி முனைவுகளிலும் முடக்குகளிலும் திடீரெனத் தோன்றி, வளைத்துப்போட்டு, ஹிம்சை செய்தார்கள். 'சப்போர்ட். சப்போர்ட்." என்று கூவினார்கள். அந்தக் கூவுகை சிலருக்குப் புரிந்தது; பலருக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் ஒரு மஞ்சள் நோட்டை, காவலர்களின் கையில் ஒரு ரகசியப் பேணுகையுடன் பொதித்துவிட்டுத்தப்பித்துக் கொண்டார்கள். புரியாதவர்கள், காவல் நிலையத்துக்கும் தபாலகத்துக்கும் தண்டப் பணத்துடன் அலைந்து திரிந்தார்கள்,
 

அனுமதி
“இப்படிப்பட்ட வல்லமை எனக்கு இருக்கிறதா.'
அனுமதிப்பத்திரம் இல்லாமல் சில நாளாவது சமாளிக்க முடியுமா?
அவனுக்கு மலைப்பாக இருந்தது.
இந்த ஐந்து வருஷகாலமாக, அவனது வாகனம் பாதசாரிகளையோ, வாகனங்களையோ லேசாக முகரப்பார்த்த போதும்- அழுத்தமாக முத்தமிடவில்லை. இதுக்கெல்லாம் அவனது நிதானமும் வேகம் குறைந்த ஓட்டமுமே காரணமாய் இருந்தன. என்ன இருந்தென்ன, வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் வீதியில் இறங்க முடியாத நிலை. அவனிடம் ரக்ஸ், இன்சூரன்ஸ், வாகனப் பதிவுப் பத்திரம் எல்லாம் இருந்தன. இவை எல்லாம் பொலிஸாரை மசியவைக்கா தென்பது இவனுக்குத் தெரிந்திருந்தது.
அனுமதிப்பத்திரம் இல்லாது அவன் பொலிஸாருடன் கண்ணாமூச்சி விளையாடினான். அப்படியான பல சந்தர்ப்பங்கள் அவனது ஞாபகத்தில் இருந்தன. அவனது இரண்டு கண்களுமே பொட்டைக்கண்கள், கண்களில் புரைவளர்ந்து, சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவன். இருந்தும், எவ்வளவு தூரத்தில் வைத்தும் அவனால் காக்கிச்சட்டைகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. பொலிசாரைக் கண்டமாத்திரத்தில், சைக்கிளைப் பூட்டிவைத்துவிட்டு- எவ்வளவு துரமானாலும் நடந்து சென்று, தனது கருமத்தை முடித்துத் திரும்புவான். சைக்கிளை எப்பொழுதும் தனது கண்பார்வைப் புலத்தினுள்ளேயே வைத்திருக்க விரும்புவான். இப்படித் துரப்படுதல் அவனுக்குப் பல சந்தேகங்களைக் கிளர்த்திவிடும். “சைக்கிள் களவு போய்விட்டால் என்ன செய்வது. பதட்டப்படும் அவன் போன காரியத்தை அரைகுறையாக முடித்துக்கொண்டு சைக்கிள் இருக்குமிடம் திரும்பிவிடுவான்.
மோட்டார் சைக்கிள் வாங்கிய ஆரம்பநாட்களில் “எல்’ போர்ட் போட்டு ஓடியது ஞாபகம் வர, அவன் புதிதாக ஒரு “எல்’ போர்ட்டைத் தயார் செய்து, சைக்கிளில் மாட்டிப்பார்த்தான். கொஞ்சம் அனுகூலம் இருந்தபோதும்

Page 8
அவனுக்கு அது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. “எல்’ போட்டைக் கழட்டி, தூரவீசிவிட்டு ஓடத்தொடங்கினான். ஒரு சமயம், எதிரும் புதிருமாக, பொலிஸைச் சந்திக்க நேர்ந்துவிட்டது. பதட்டப்பட்ட இவன் பாதசாரி ஒருவரின் இடதுகாலை இடிப்பதுபோல மோட்டார் சைக்கிளை நிறுத்தவேண்டிவந்துவிட்டது. நிறுத்தியவன், இறங்கி மோட்டார் சைக்கிளை உருட்டியபடி நடந்துசென்றான். பொலிஸ் அவனைக் கண்டு கொள்ளவில்லை. கடவுள் என்ற கருத்துருவத்தில் அதிக நம்பிக்கை இல்லாதவனாக அவன் இருந்தபோதும் கடவுள்தான் அன்று தன்னைக் காப்பாற்றியதாக, இன்றுவரை அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
பாடசாலை முடிந்த கையுடன், மாலை ரியூசன் வகுப்புக்குப் போய், மாணவர்களிடம் மல்லுக்கட்டி விட்டு, வீடுவந்தபோது- மனைவி பல வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாக இவனுக்கு ஏவினாள். சிவப்பிரகாசம் பத்தரிடம் போய் 'எஸ்' போடக்கொடுத்த அவளது சங்கிலியை வாங்கிவரும்படி கூறினாள். அது முடிந்த கையுடன், ‘அப்பன் முன்பக்கத்துப் பூக்கண்டுகளுக்கு கொஞ்சம் தண்ணிவிடுங்க...' என்றாள். செடிகளுக்கு நீர்வார்த்ததும், சுடச்சுடப் பசுப்பால் கோப்பி தந்தாள். கோப்பி குடித்ததும் அலுப்புச் சற்றுத் தளர்ந்தது போலிருநதது.
பிரம்புக்கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு, ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்துடன் உட்கார்ந்தான். பக்கங்களுள் நுழைய முடியாத சோர்வும் சோம்பலும் கண்களைச் சுழட்ட, கதிரையில் இருந்தபடி, துங்கி வழிந்தான். ரி.வியில் செய்தி பார்க்கும் அக்கறையும் அவனுக்கு அன்று ஏனோ இல்லாமல் இருந்தது.
குளிர்ந்த கைகள் அவனைத் தீண்டின. விழித்துக்கொண்டான். ‘சாப்பிடவாருங்க. செல்விதான் அழைத்தாள். அவளது கண் மலர்களிலும் ஈரமான உதடுகளிலும் முத்தமிட மனசு மறுகியது. ‘இந்தக்கூத்து இப்போதைக்கு வேண்டாமே.’ எனும் நினைப்பு உடன்வர, அவளைப் பின் தொடர்ந்தான்.
சாப்பாட்டு மேசையில் ஆவிபறந்தபடிக்கு அரிசி மாப்பிட்டும் முட்டைப்பொரியலும். அவற்றுடன் ஒரு சிறு கண்ணாடிக் குவளையில் ஒரு அவுன்ஸ் அளவிலான ஸ்கொச் விஸ்கி. அவன் அதிகம் களைப்படைந்திருந்தால் அவள் இப்படி உபசரிப்பாள்.
விஸ்கியை லபக்கென ஒரு மிடறில் விழுங்கியவன், பிட்டைப் பொரியலுடன் சேர்த்துச் சாப்பிட்டான். இஞ்சி சேர்த்தரைத்த பச்சை மிளகாய் சம்பலையும் தொட்டுக் கொண்டான். எல்லாமே வாய்க்கு இதமாகவும் ருசியாகவும் இருந்தது. அதிக அளவு சாப்பிட்ட உணர்வுடன் எழுந்து, கையை அலம்பிக் கொண்டான். -
பெட்ரூமுக்குச் சென்றவனைத் தொடர்ந்தவள், கட்டிலைத் தட்டி, சீற்றைவிரித்துவிட்டாள். ஏறிப்படுத்தவன் அவளை அணைத்து, அவளது கண்களில் ஆழ்ந்து முத்தமிட்டான். உதடுகளுடன் உதடுகள் பொருந்தியபோது மெதுவாக இவனைத் தள்ளியபடி கூறினாள்:

எட்டடிச்சுப் பழகுங்களப்பா. லைசன்ஸ் எடுக்காமல் மோட்டார் சைக்கிளோடை றோட்டிலை இறங்கேலாது. ஆத்திரம் அவசரத்துக்கு நீங்க பொலிஸுக்குப் பயந்து. பயந்து ஓடிறது எனக்குச் சரியான எரிச்சலாய் இருக்கு." பட்டென எல்லாமே இறுகி உறைந்து போனதான உணர்வு அவனுக்கு, அந்த மார்கழி மாதக்குளிரிலும் அவனுக்கு வேர்த்தது. அவனது கையாலாகாத் தனத்தை அவள் இடித்துக் காட்டுகிறாளா? அவளுடன் அப்படி என்ன ‘அந்த இது வேண்டிக்கிடக்கிறது! காயப்பட்ட நானின் உளைச்சலுடன் அவன் திரும்பிப்படுத்துக் கொண்டான்.
‘கோவமா..? அடுப்படிவேலை முடியேல்லை. கொஞ்சம் பொறுங்க ராசன்.”
குழைந்தவள், அவனது நெற்றியில் முத்தமிட்டபடி விலகிப்போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் இடையில் விழித்துக் கொண்டான். செல்வி எப்பொழுது வந்து படுத்தாள்? அவளது வலது கரம் இவனது மார்பில் படர்ந்து கிடந்தது. அவளைக் குழப்பாது கையை எடுத்துக் கட்டிலில் வைத்தவன், எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவளது குழந்தைத் தனமான உறக்கத்தை ஒருகணநேரம் ரசிப்புடன் பார்த்தவன், மீளவும் படுத்துக் கொண்டான். அரைகுறைத் துக்கத்தில் உழன்ற அவனுக்கு அந்தக் கனவு வந்தது.
நல்லூர் கந்தசாமி கோவில் மேற்கு வீதி, அதை, அரசடி வீதி தொடும் சந்தி. இளங்காலை. பனி சுமந்த ஈரமும் குளிரும். இவன் மோட்டார் சைக்கிளில் அல்ல சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். இவனுக்கு முன்பாக யமகிங்கரர்போல இருவர். கறுத்த உருவம், கொம்புகளும் அவர்களுக்கு இருந்தன. அண்டா அளவு முழிசல் கண். அவை சிவந்து கிடந்தன. தொந்தியை மேலும் கீழுமாகத் தடவியபடி நின்றார்கள். அவர்கள் பக்கமாக ஒரு பழைய மோட்டார் சைக்கிள். அது அவர்களுடையதுதான். கோவணதாரிகளான அவர்களது கோவணத் துண்டைப் பார்த்தான். அது காக்கி நிறத்தில் இருந்தது. அவர்கள் இவனுக்குப்புரியாத அந்நிய பாஷை பேசினார்கள். அவர்கள் ப்ேசியபோது, நிணவாடையுடன் இரத்தவெடிலும் அடித்தது அந்த வெடில் இவனது மூக்கில் முட்டிமோதியது. அதிர்ந்த அவன் - பொய்மூக்கு உடைந்து, இரத்தம் கசிவதை உணர்ந்தான். அவனுக்குச் சட்டென எல்லாமே வெளிச்சசமாகியது.
அவர்கள் பொலிஸ்காரர்கள்! லேசாகத்திரும்பியவன், அரசடி வீதியில், அதிவேகமாக வந்த பல்ஸ்ரைக் கண்டான். அதில் ஒரு இளசு மிதந்தது. சிவன்கோவிலை நெருங்கிய அந்த இளசு, பொலிஸாரைக் கவனங்கொண்டிருக்க வேண்டும். சடாரென வட்டமடித்து, வந்த திசைக்கு எதிர்த் திசையில் அது பாய்ந்தது
*அந்த இளசும் என்னைப் போலத்தானா..? அதனிடமும் லைசன்ஸ் இல்லையா? இவனுள் இழையும் நினைவுகள்.

Page 9
உசாரான பொலீஸார், மாறி மாறிவிசிலடித்தார்கள். பல்ஸரின் பதிவெண்ணைப் பார்த்து எழுத முயற்சித்தார்கள். எதுவுமே பலிதமாகவில்லை. ஒரு பொலிஸ்காரன் - அங்கு பக்கத்தில் நின்ற, மோட்டார் சைக்கிளை இயக்க முயற்சித்தான். அவனது நோக்கம் இவனுக்குப் புரிந்தது. பல்ஸரைத் தொடர்ந்து சென்று, அந்த இளசை மடக்க விரும்புகிறான் போலும். அவனது மோட்டார் சைக்கிள் இயங்க மறுத்தது. மக்கர் செய்தது. காபரேட்டருடன் இணைந்திருந்த ரப்பர்குளாயை மற்றக் காக்கி தம்பிடித்து ஊதியது. பதகளிப்பில் அதன் கோவணம் அவிழ்ந்து தொங்கியது. சுதாகரித்துக் கொண்ட அது, கோவணத் துண்டைச் சரிசெய்து கொண்டது. மண்ணெண்ணையில் இயங்கும் சைக்கிள் போலும்; 'பொக். பொக்.’ என ஒசை எழுப்பிய வாகில் அது மூச்சுப்பாறி நின்றது. அப்பொழுது பல்ஸரில் வந்தவன் காற்றில் கரைந்த மாயம் நடந்தது.
இவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
இவனது பக்கமாகப் புரண்டுபடுத்திருந்த செல்வி இவனை அணைத்தபடி கேட்டாள்:
‘என்னப்பா வயிறு குலுங்கிற சிரிப்பா இருக்கு. கனவுகினவு கண்டனியளே..?’’
*’கனவுதான்..!’ அவனது குரலில் லேசான பதகளிப்பு. அவன் கனவுகண்டால் அதிகமாக அது பலித்துவிடுவதுண்டு. ஒருசமயம் அவன் கண்ட கனவு வித்தியாசமானது. w
ஊர் முத்துமாரி அம்மன், தண்டிகையில்- அலங்கார பூசிதையாய்- வீதி உலா வருகின்றாள். திடீரென அம்மன் முகம் அழிய இவனது அம்மாவே தண்டிகையில் வருவது போலிருந்தது. அம்மா இறந்த செய்தி காலையில் கிடைத்தபோது இவன் அதிர்ந்துபோனான்.
அந்த ஞாபக இழை அவனுக்குப் பயந்தருவதாய் இருந்தது. ‘நனவிலி மனதின் ஆழத்தில், புதைந்துகிடந்தமோட்டார் சையிக்கிள் பற்றிய எண்ணங்களின் சடைவுதான், கட்டவிழ்ந்து இப்படிக்கனவாக விரிகிறதோ..?”
மனதில் லேசான பதட்ட உணர்வு படர, சில தீர்மானங்களை அவன் எடுத்துக் கொண்டான்.
“காலையில் எக்காரணம் கொண்டும் மோட்டார் சைக்கிளை எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும்- பொலிஸ் ரோந்து இல்லாத பகுதியாகப் பார்த்து ஓடவேணும்.'
பலயோசனைகளின் அடைசலால் அலைப்புண்ட அவன், நித்திரை இல்லாது உழன்றான்,
செல்வியின் ஆழ்ந்த நித்திரை அவனுக்கு எரிச்சலுட்டுவதாய் இருந்தது. அடுத்த கணம். 'பாவம் அவள்.துங்கட்டும். பாடசாலை, வீடு என்று அடித்துக் கொடுத்து உடைந்து போய்விட்டாள்’ என நினைத்துக் கொள்ளவும் செய்தான்.
காலையில் எழுந்ததும் செல்வி குழைந்தபடி கூறினாள்:
. oudstid. 50 . . . . .
 

பேதமைக்கும் அழகுக்கும் காலத்தைத் தவிர எதிரியில்லை
யேட்ஸ்
“பங்குக்குப போகவேணுமப்பா..! 'பாங்குக்கா..? இண்டைக்குச் சனிக்கிழமை." “சனிக்கிழமையிலும் இப்ப வேலை செய்யினம்.' காலை, சாப்பாடானதும் இலங்கை வங்கி, பிரதான கிளைக்குப் புறப்பட்டார்கள், அங்குதான் அவர்களது நடைமுறைக்கணக்கு இருந்தது.
வங்கிக்குப் போவதற்கு- கோவில் வீதி, கொஞ்சம் நாவலர் வீதி, ராசாவின் தோட்டம், ஆஸ்பத்திரி வீதி என எடுப்பது, பொலிஸ் தொந்தரவு இல்லாத பாதுகாப்பான பாதை என்பதுடன், மிகவும் அனுகூலமானதாகவும் அவனுக்குத் தோன்றியது.
அன்று காலையும் அப்படியே அவன் கோவில்வீதியால் வந்து, நாவலர் வீதியில் இறங்கி, இராசாவின் தோட்டத்தில் ஏறியபொழுது, காக்கிச் சட்டைகளின் சிலமன் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். மோட்டார் சைக்கிளைச் சற்றுத்துரிதப்படுத்தினான். வேகம் கொண்ட சைக்கிள், ஸ்ரேசன் சந்தியை அண்மித்த பொழுது கைக்கெட்டிய துரத்தில் அவர்கள்; அந்தக் கனவுலக வாசிகள். கொம்புகள், கோவணம் ஏதுமில்லை. காக்கிச் சட்டைகள் மட்டும் அணிந்திருந்தார்கள்.
இவனை கைஅமர்த்தி மறித்தான். ஓர் உள்ளுணர்வின் சொடுக்கல். சடுதியில் ஒரு 'எஸ்' வெட்டு வெட்டி, சைக்கிளின் அக்ஸிலறேற்ரறை முறுக்கினான். போனபாதை வழியே திரும்பிய வாகனம் காற்றில் மிதந்தது. றோட்டு வளைவுகளில், பாதசாரிகளையும் வாகனங்களையும் முட்டி மோதாமல், அவனது துணிவும் லாவகமும் - அவனையும் அவனது செல்வியையும் கைலாசபிள்ளையார் கோவில் சந்திவரை கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.
குலுங்கி, முகஞ்சிவந்து, சிரித்தபடி செல்வி சொன்னாள்: ‘போதும் போதுமப்பா. வேகத்தைக்குறையுங்க. இந்த வெட்டும் ஓட்டமும் போதும். உங்களாலை நிச்சயமா எட்டடிக்கேலும். கச்சேரியிலை லைசன்ஸ் எடுக்க விண்ணப்பத்தைக் கொடுங்க.’
“சரிசரி அம்மா. வங்கி அலுவலையும் திங்கள்தான் பாக்கவேணும்.’’ என்று கூறியவன் மிகமெதுவாக வாகனத்தை வீடு நோக்கிச் செலுத்தினான். V
‘அனுமதிப்பத்திரம் கட்டாயம் எடுக்கவேணும். இனியும் சாக்குப்போக்குச் சொல்லிக் காலங்கடத்தேலாது.'
செல்வி புலம்பினாள். அவளது புலம்பல் அவனுக்குச் சரியானதாகவே பட்டது.
அவன் அவளை வாஞ்சையுடன் திரும்பிப் பார்த்தான். அவளது உதடுகளில் உடையும் மெல்லிய சிரிப்பு, அந்த அழகும் சிரிப்பும் அவனுக்குப் பிடித்தமாய் இருந்தது.
{

Page 10
நூல் நோக்கு:
‘சிறுகதை’
ஆசிரியர்: சி.சுதந்திரராஜா
இலக்கியத்தையும் எழுத்தையும் தன்னை ( தன்பெயர் - புகழையோ வளர்க்கும் ஒன்றாக பயன்படு முனையாது, தன் ஆத்ம திருப்திக்கும் தான் சார்ந்த ச நலனுக்கும் என்றே பயன்படுத்துவது ஒரு யோ இலக்கிய யோகம்.
இந்த மிகச்சிறுபான்மையைச் சேர்ந்தவர் சி.சுதந்திரா ஏறத்தாழ மூன்று தசாப்தங்கட்கு மேல் தீவிர இலக் வாதியாகச் செயற்பட்டுவருபவர். அவருடைய இந் தீவிரத்திலிருந்து எள்ளளவும் குறையாதது அவருை அமைதி.
எந்த ஆர்ப்பாட்டம், விளம்பரம், சண்டை, சச்சரவுக் போகாமல்; கலை-இலக்கியத்தைக் காபந்து பண்ணுவ கடைத்தேற்றுவதும் தன்மீது சுமத்தப்பட்ட சிலுவை எ பிரமைகளோ பிராந்திகளோ அற்று; தானுண்டு, தி வாசிப்புண்டு, தன் எழுத்துண்டு - என்ற நிறைவுட வாழ்பவர். எழுத்தும் வாசிப்பும் அவர் வாழ்வின் இயல்ப சேதன செயற்பாடுகளாகி விட்டவை.
தனக்குச் சரியென்று பட்டதை, தனக்குக் கை வ முறையில், தன் இயல்புக்கேற்ப- எந்த முகமூடி, ஜிகில் பந்தாவோ இன்றி- அப்படியே படைப்பவர். அந்தத் துய்ன் போற்றுதற்குரியது; அகம்-புறம் இரண்டிலும்.
‘மழைக்குறி” நாவல்,‘சிறுகதை’ என்ற சிறுகை தொகுப்பு- இவற்றை எழுதி வெளியிட்ட சுதந்திரா இப்போதும் 'சிறுகதை’ என்றே இன்னொரு தொகுப் வெளியிட்டுள்ளார். இங்கே அவர் (s தவறிழைத்திருக்கிறார். இரண்டு தொகுப்புகளும் தலை ஒன்றேயாதலின், இரண்டும் ஒன்றே என்றே வாச கருதுவர். நான் கூட முதலில் அவ்வாறுதான் நினைத்தே தொகுதி.1, தொகுதி 2 என்றாவது குறைந்த பட்சம் வைத் இக்குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், தி கதைகளுக்கு- அழகழகாக தலைப்புகள் சூட்டியுள்ள அ இவ்வாறு ஏன் செய்தாரென்பது புரியவில்லை.
இந்த இரண்டாவது - "சிறுகதை’ தொகுப்ட் பதினைந்து கதைகள் நாற்பது பக்கங்களுக்குள்ளாக
 

J T த்த pőb
Ĥuj தத் LUJ
Ꭳ|
என்றாலும் , அவை யாவும் ஆசிரியரின் சமூக பொறுப்பபுணர்ச்சியையும், அநுபவ விசாலிப்பையும், பார்வையின் ஆழத்தையும் எடுத்துக் காட்டுபவை.
அவருடைய மும்மொழி ஆற்றல், கலையார்வம், அரசியல் தளம் போன்றவை பல்வேறு கோணங்களில் எமது சமகால வாழ்வைத் தரிசிக்கும் வாய்ப்பை வாசகர்கட்குத் தருகின்றன. இத்தொகுப்பின் பதினைந்து கதைகளுமே இவ்வாறானவைதாம்.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொன்று ஆசிரியரின் கதை சொல்லும் பாணியும் நடையும். இது பற்றி மாறுபட்ட கருத்துக்களிருக்கக் கூடுமெனினும் (எதில்தான் மாறுபட்ட கருத்துக்களில்லை?) இவை அவரது இயல்பின் இயல்பான வெளிப்பாடென்றே தோன்றுகிறது.
சி.சு.வின் மொழிநடையானது அதன் தனித்துவம் காரணமாக அவ்வப்போது எஸ். அகத்தியரின் ‘உணர்வுபூற்று உருவகச் சித்திரமான நீ, மற்றும் எஸ்.பொன்னுத்துரையின் பல்வேறு படைப்புக்களை நினைவூட்டுகிறது.
ஏலவே குறிப்பிட்டது போல இத்தொகுப்பிலுள்ள அநேக கதைத் தலைப்புகள் கவிதைக் கவர்ச்சியொன்றினைக் கொண்டிலங்குகின்றன - 'தணலின் துளிரிலை, கவிதையின் ஒளிநகல், வாசலின் வாசல் இவ்வாறு.
‘கவிதையின் ஒளிநகல், பன்முக ஆற்றல் கொண்ட இளங்கவிஞன் றிச்சட் டீ ஸொய்ஸாவை நினைவூட்டுவது. ஏனைய கதைகளும் இவ்வாறே காலத்தின் பதிவு களாயமைவன. முழுவதையும் படித்து முடித்தபோது இன்றைய இலங்கையின் நெடுக்குவெட்டுமுகத்தை நோக்கிய உணர்வு படிந்தது.
அத்தோடு,
தன் கதை பற்றிய பிரக்ஞை, சுதந்திரராஜாவுக்குத் தெளிவாகவே உள்ளது- என்பதும்
-சாந்தன்
Gmudblod. 50

Page 11
கதைப்பதில் நான் சிறந்த தகுநிலை உள்ளவன் அல்லன்; விரிவுரை ஆற்றுவதும் எனக்குப் பழக்கப்பட்ட செயற்பாடல்ல. ஆசிரியத் தொழிலை நான் ஒருபோதும் செய்தவனுமல்லன். யப்பானுக்கு இந்தத்தடவை வருகை தந்தபோது, ‘ஓர் எழுத்தாளனாக எனது 50 ஆண்டு வாழ்க்கை' என்ற தலைப்பில் டோக்கியோ நகரில் அசாகி மண்டபத்தில் நான் ஆற்றிய உரை இதற்கு விதிவிலக்கு. தமது நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த அனைத்து யப்பானிய நண்பர்களுக்கும் எனது நன்றி யறிதலை தெரிவிக்குமுகமாகவே இந்த உரையை நான் ஆற்றினேன். 'கலாச்சாரப் புரட்சியின்’ போது எனது பதவியிலிருந்து நான் அகற்றப்பட்டு 'விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். தெருக்களில் எனது முகமறிந்த நண்பர்கள் என்னைக் கடந்துசெல்லும்போது, என்னுடன் கதைக்காமல் கடந்துசென்றார்கள். அப்போது எனது யப்பானிய நண்பர்கள், எனது நலம்பற்றி விசாரித்ததோடு என்னைப் பார்ப்பதற்கு வருகை தருவதற்கும் கோரிக்கை
விடுத் தன ர் . என்னை முற்று
1966ல் சீனாவில் இடம்பெற்ற பாட்டா:
ԱՔԱՔՖII 5 ` ԱՔԼջ A rV B த்து விடுவதற்கு வரலாற்றில் எழுந்த மாபெரும் சிந்தை “4 O எழுந்தது, பாஜின் கூறுவது போன்று அ
y 6b[I 6OLUI ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது சீ (ՖԱՔ ம்- 1 மானுட சமுதாயத்தின் மீதும் தாக்கத்6
டிக்கை எடுக் காமல் போன தற்கு இத்தகைய பல விசாரணை கள் என்னைப் பற்றி மேற்கொள் ள ப் பட்ட தே ஒருக்கால் ஒரு & II (J 6001 Լ0 II ծ இருந்திருக்க லாம். இதனை
மக்களின் அனுபவங்களைப்பெற்று ம வைக்கப்பட்ட புரட்சி அதனை முன்னெ எதிர்விளைவுகளையே உண்டுபண்ணிய அறிஞர்களும், கலை இலக்கிய வாதிக உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 6 பாதிக்கப்பட்டு வெளிவந்தவர்களுள் மை
அவரது அனுபவங்களுக்கூடாக அவ
அவரது உணர்வு வெளிப்பாட்டையும் அ
நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இவ்வாறாக எனது யப்பானிய நண்பர்கள் என்னை மேலும் புரிந்து கொள்வதற்கு
fUlUbUD. 50
 

வாழ்வும் ugú
-பாஜின் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு: டொன் ஜே.கொஹற்ன் தமிழாக்கம் : ந.சுரேந்திரன்
உதவியாக என்னைப்பற்றி அந்தக் கூட்டத்தில் நான் பேசியதோடு என்னைப்பற்றி, எனது உணர்வுகள்,
சிந்தனைகள் பற்றி அக்குவேறு ஆணிவேறாய் அந்த
உரையில் பிளந்து காட்டினேன்.
உரையாற்றுவதில் நான் திறமையுடையவன் அல்லன் என்பதாலும் உரைகளின்போது, எனது உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத தன்மையை நான் கொண்டி ருப்பதாலும்- துல்லியமாக இதே காரணத்துக்காகவே நான் எழுத்துத்துறையில் ஈடுபட்டேன். எனது விருப்புகள், வெறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி முறையாக கதைகளை நான் பயன்படுத்தினேன். ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து ஓர் எழுத்தாளனாக நான் மலர்ந்தேன். எனது முதலாவது நாவலான அழிவு (டெஸ்ட்றக்ஷன்) 1928ம் ஆண்டு பிரான்சில் என்னால் எழுதப்பட்டது. இதனை நான் சீனாவில் உள்ள ஒரு நண்பருக்கு அனுப்பினேன். அவர் செல்வாக்கான “சிறுகதை சஞ்சிகை’ என்ற
இதழில் இந்தக்
ரிவர்க்க கலாச்சாரப் புரட்சி மனிதகுல னப் புரட்சிக்கான அறைகூவலாகவே க்"கலாச்சாரப் புரட்சி மானிட வரலாற்றில் னமக்கள் மீது மட்டும் அல்லாது முழு தை ஏற்படுத்தியது. சீன உழைப்பாளி ாஒசேதுங் அவர்களால் ஆரம்பித்து ாடுத்தவர்களின் அதிதீவிரப் போக்கால் பது. சீனப்புரட்சிக்குப் பங்களித்த பல ளும் மிக மோசமான வன்முறைகளுக்கு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு றந்த சீன எழுத்தாளர் பாஜினும் ஒருவர். ரது நிலைப்பாட்டையும் பாதிக்கப்பட்ட 2றியமுடிகிறது.
ஆர். குழு
க  ைத  ைய ப் பிரசுரித் திருந்தார். இலக்கிய உல கில் எனது இலகு வான நுழைவை இது குறித்தது.
விரைவாக, சஞ்சிகைகளில் ஆசிரியர் க ள் க ைத க  ைள ப் பிரசுரிக்கத் தரு மாறு என்னிடம் கோ ரி க்  ைக
விடுக்க ஆரம் பித்தார்கள். இதன்
விளைவாக எனது படைப்புக்களை வேறு யார் மூலமாவது அனுப்ப வேண்டிய தேவை எழாதுபோயிற்று. நான்
s- - N-Uses

Page 12
ஒருபோதும் இலக்கியங்களை முறைமையாக படிக்கவில்லை. அத்தோடு சீன மொழியில் எழுதுவதற்கா6 நல்ல தகுநிலை உடையவனாகவும் நான் இருக்கவில்லை எனக்கிருந்த ஒரேயொரு வாய்ப்பு நிலை என்னவென்றால் எனக்குக் கிடைக்கக்கூடிய சீனமொழிக் கதைகள், அன்னி மொழிக் கதைகள் ஆகியவற்றை படிக்கக்கூடியவனா இருந்தேன் என்பதுதான். அஃதோடன்று நான் இவ்வா படித்தவற்றை நினைவில் வைத்திருப்பதற்கும் என்னா6 முடிந்தது. எனது மூளை, இலக்கியக் களஞ்சியங்களில் ஒரு குவியலால் நிரப்பப்பட்டிருந்தது.
சீவனோபாயத்துக்காக எழுதவேண்டிய நிலையில் நால் இருக்கவில்லை. அல்லது பெயரெடுப்பதற்காக எனது எழுத்தைப் பயன்படுத்த நான் விழையவுமில்லை. எனது உணவு, உடை, உறையுள் ஆகியவற்றுக்கு நான் ஆதார தேடவேண்டியவனாய் இருந்தபோதிலும் 40 அக6ை கள்வரை நான் திருமணம் செய்யாதிருந்ததால் திருமண செய்யாதவன் என்றவகையில் எனது தேவைகளுக்கு நால் அதிகம் தேடவேண்டி யிருக்கவில்லை. எனது எதிரிகளுடன் போரிடுவதற்காகவே நான் எழுதினேன். நான் கூறிய அந்தக் களஞ்சியக் குவியலை, படைக்கலன்கள் நிறைந்த ஒரு படைக்கலச்சாலையாக நீங்கள் கருதினால் நான், எனது சமர்களில் எனக்குக் கிடைக்கக்கூடிய அத்தனை படைக்கலன்களையும் பயன்படுத்தக் கூடிய வனாக இருந்தேன் என்பதுதான் உண்மை.
ஒருசிலநாட்களுக்கு முன்பாக யப்பானிய நூலா சிரிய ஒருவர்; ‘பல, வேறுபட்ட பிரிவுகளைப் பின்பற்றுட நூலாசிரியர்களையும் நூல்களையும் எவ்வாறு உம்மால் விதந்து பாராட்டமுடிகின்றது' என்று என்னிடம் கேட்டார் இந்த வினாவை எழுப்பியவர், புகழ்பெற்ற யப்பானிய நாடகாசிரியரான கினோஷிட்டா ஜ"ன்ஜி ஆவார். ஒரு ஏப்ரல் 6ம்நாள், ரோக்கியோவில் உள்ள நியூ ஒற்றானி விடுதியில் 39வது தளத்தில் ஒரு முழுக்காலை நேரத்தையும் நாங்கள் இருவரும் ‘உரையாடுவதில் கழித்தோம். அசாஹி மண்டபத்தில் ஓர் எழுத்தாளனாக 50வருடங்கள்’ என் தலைப்பில் ஆற்றிய உரையில் பின்வரும் அறிக்கையை நான் விடுத்தேன்: ‘நத்சுமி சொசெக்கி, தெயாமா கத்தாய் அக்குத்தாகாவா றியோனோசுக்கி, முஷாக்குஷி, சனியாத் ஆகியோரோடு குறிப்பாக அறிவழிமா தக்கியோ ஆகிய யப்பானிய ஆசிரியர்களின் நூல்களை நான் படித்திருக்கின்றேன். அறிஷிமாஅவர்களின் ஆக்கங்களில் மிகச்சிலவற்றையே நான் படித்திருந்தபோதும் அவரது சிறுகதையான 'இளைஞர்களோடு இதயபூர்வ உறவுடன் என்ற ஆக்கத்தின் சில பகுதிகள் இப்போதும் எனது மனதில் நிறைந்து, நீங்கா இடம் பெற்றுள்ளன. இதனாலேே கினோஷிட்டா, 'பல்வேறு பிரிவுகளை(கோட்பாடுகளைட் பின்பற்றும் நூலாசிரியர்களையும் நூல்களையும் எவ்வாறு உம்மால் விதந்து பாராட்ட முடிகின்றது” என்று கேட்டார். இந்த வினாவுக்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன். நான் ஒரு இலக்கிய வாதி அல்லன்; புலமைமிகு அறிஞனு அல்லன். அத்தோடு நான் எந்தக் கோட்பாட்டுப் பிரிவை

丽
சேர்ந்தவனும் அல்லன். இதன் காரணமாக எனது எழுத்துருவாக்கங்கள் எந்த ஒரு கோட்பாட்டாலும் மட்டுப்படுத்தப்படவில்லை’, மீண்டும் அவர் என்னிடம் ஒரு வினா எழுப்பினார். ‘நீங்கள் ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஓர் இலக்கியவாதி அல்லன்’ என எவ்வாறு கூறுவீர்கள்?’ எனது விடை பின்வருமாறு அமைந்தது ‘நான் ஓர் இலக்கியவாதியாக இல்லாதவரை இலக்கியத்தின் விதிமுறைகள் எதற்கும் நான் கட்டுப்பாடு உடையவனாக இருக்கமாட்டேன். அத்தோடு எந்தவொரு இலக்கிய வட்டத்திலிருந்தும் வெளியேற்றப்படுவேன் என்று நான் அச்சப்படவேண்டிய அவசியமில்லை’ காலத்துக்கு ஒவ்வாத மரபு முறையான சிந்தனைகள், சமூக முன்னேற்றத்தையும் மானிட அபிவிருத்தியையும் தடைசெய்யும் பகுத்தறிவுக்கு மாறான கட்டமைப்புக்கள், அன்பு, பாசம், நட்பு, காதல் ஆகியவற்றை மோதிIதிக்கும் சக்திகள்- இவை அனைத்துமே எனது எதிரிகள். இந்த எதிரிகளை வெளிப்படையாக்க் கண்டித்தல், அவற்றின் வெறுமையை வெளிப்படுத்தல், அத்தோடு அவற்றின் மீது தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றை மேற்கொள்வதே உள்ளார்ந்த நோக்கமாகக் கொண்டவையே எனது நூல்கள்.
1929க்கும் 1948க்கும் இடைப்பட்ட 20 வருட காலப்பகுதியில் நான் மிகவிரைவாக ஏராளமாக ஆக்கங்களைப் படைத்தேன். அந்தக் காலப் பகுதியில் எனது சிந்தனையை ஏதோ நாலு கிளறிவிடுவதற்காக சவுக்கால் அடிப்பதுபோலவும் எனது எழுத்தாணியை ஒரு பிசாசு கையகப்படுத்திக் கொண்டது போலவும் எனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு நட்டஈடு பெற்றுத் தருவது போல எனது மனம் செயல்படுவதாகவும் நான் உணர்ந்தேன். எனது ஆக்கங்களின் பிரதான கதா பத்திரங்களோடு சேர்ந்து நான் சிரித்தேன்; அழுதேன். பல சமயங்களில் மிகவும் மனச் சோர்வடைந்தவனாகத் தலையைச் சொறிந்து கொண்டேன்.
எனது வாழ்க்கையுடன் இசைவுடையதாகவே நான் எனது ஆக்கங்களை உருவாக்குகின்றேன் என்று கூறும்போது, அத்தோடு ஓர் இலக்கியப் படைப்பின் உச்சக் குறிக்கோளை எட்டுவதாயின் ஒரு படைப்பாளி தனது வாசகர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்விடயத்தில் நான் ஓர் அடிப்படை
ஆக்கக்கூறாக வலியுறுத்தும் கருத்து, படைப்பாளிக்கும்
அவர்களது நூல்களும் ஒருபோதும் பொய்கூறக்கூடாது என்பதைத்தான்.
ஒரு கலையின் உச்ச நிலைப்பாடு என்பது அதன் வெளிப்பாட்டில் இயற்கை அல்லாத தன்மை இருக்கக் கூடாது என்பதுதான் என அண்மையில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நான் கூறியிருந்தேன். பல தசாப்தங்களுக்கு முன்பு இதுவிடயமாக எனது நண்பர் ஒருவருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது ‘உடல்ரீதியாகக் கவர்ச்சிகரமானவர்களுக்கு ஒப்பனை எதுவும் தேவை யில்லை' என்று கூறியிருந்தேன். எனது ஆக்கங்கள்
M LJUD. 50

Page 13
அகோர அரக்கன் ஒருவனது தோற்றத்தைக் கொண் டிருந்ததாலும் அவை ஒப்பனை, அலங்காரம் ஏதுமில்லா நிலையில் உண்மையில் அது சிந்தி சிறப்பான தோற் றத்தைக் கொண்டிருக்கின்றது என்றும் அவரிடம் கூறினேன். இதற்கான அவரது பதில் பின்வருமாறு அமைந்திருந்தது; ‘இலக்கியப் படைப்புக்கள் கால ஓட்டத்தின் வேகத்தால் பாதிப்புறாமல் நிலைத்து நிற்பதற்கு அவை திறமையாக எழுதப்பட்டிருப்பதே காரணமாகும். ஏறத்தாழ நூறு ஆண்டு களுக்கு முன்பு வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்கு இதில் யார் அக்கறை காட்டு கிறார்கள்? இந்த வினா எழுப்பலை நான் ஏற்கமாட்டேன். ஒரு கதையில் பிரதிபலிக்கும் வாழ்க்கையையும் அதன் பிரதான கதாப்பாத்திரங்களுக்கும் என்ன நடக்கின்றது என்பதையும் படிக்கும் வாசகர்கள் அதனால் இயக்க எழுச்சி பெறுகின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால் இட்டுக்கட்டப்படுதல், போலித்தன்மை, இனிமையும் கவர்ச்சியும் நிறைந்த மொழி ஆளுமை ஆகியவற்றை நான் எதிர்க்கின்றேன் என்பதுதான். தமது பொய்கள் போல் மக்களை ஏமாற்ற முயலும் பெருமை, புகழ் தேடும் எழுத்தாளர்களை நான் மிகக் கடுமையாக வெறுக்கின்றேன்.
எனது சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்நான் ஓர் எழுத்தாளனாக எனது முதல் எழுத்துலக 20 ஆண்டுகளில் எழுதியவை 14 நூல் தொகுதிகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எனது இரண்டாவது எழுத்துலக 20 ஆண்டுக் காலகட்டம் மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதோடு உதயமாகியது. இந்தச் சந்தர்ப்பத்தில் எனது வாழ்க்கையில் அனைத்தும் மாற்றத்துக்குள்ளாயின. ஒவ்வொன்றில் இருளார்ந்த வெளிப்பாடுகளை மட்டுமே அதுவரை எழுதிவந்த நான், அதனை நிறுத்த முயற்சிக்கும் பணியில் புதிய விடயங்கள், புதிய மக்களைப்பற்றி எழுத ஆரம்பித்தேன். ஆனால் இந்தப் புதிய சமுதாயத்தைப்பற்றி நான் சரியாக அறிந் திருக்கவில்லை. அதனால் அதனுடன் அதிகளவுக்குக் கலந்துறவாடுவதில் நான் மிகுந்த சிரமப்பட்டேன். இதன் விளைவாக நான் எழுதிய எழுத்தாக்கலிலே நான் திருப்தியடையவில்லை. இதற்கு மேலதிகமாக நான் பல சமூகச் செயற்பாடுகளில் பங்குபற்றுவதில் எனது நேரத்தைக் கணிசமான அளவில் செலவிட்டதால், எழுதுவதற்கு எனக்கு மிகக்குறைவான கால அவகாசமே கிடைத்தது.
நான் மீண்டும் மீண்டும் பல திட்டங்களைத் தீட்டி, எழுதுவதற்கு நான் மேலும் கூடுதலான நேரத்தை ஒதுக்குவேன் என்று அறிவித்தேன். ஆனால் எனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே, 'கலாசாரப் புரட்சி ஆரம்பமாகிவிட்டது. ஒரு காலத்தில் நான் ‘இலக்கியக்கொடுங்கோலன்’ ஆகவும் "வர்க்க விரோதி’ ஆகவும் ‘மாற்றப்பட்டுவிட்டேன். அடிக்கடி நான்இழுத்துச்செல்லப்பட்டு, பொது இடங்களில் வைத்துக் கண்டனம் செய்யப்பட்டேன். விரைவில் ஷாங்ஹாயில் உள்ள 'நால்வர் கும்பலை பிரதிநிதித்துவப்படுத்தும் வாங்
ÜUD. 50

முட்டாள்கள் நிறைந்த தேசத்தில் அறிஞர் கடவுளாகிறான். எல்லோரும் அவனை வணங்குவார்கள். எவரும் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாட்டார்கள்.
பெர்னாட்ஷா
ஹொங்வென் மற்றும் மேலும் 5 பேர் அடங்கிய "பொறுப்பான மனிதார்களால் நான் ஒரு "எதிர்ப்புரட்சிவாதி' என்று குற்றம் சாட்டப்பட்டதோடு, இலக்கிய, கலைத்துறைச் செயற்பாடுகள் எவற்றிலும் கலந்துகொள்வதிலிருந்து வெளியேற்றப்பட்டேன். கலகக்காரர்கள் என்று அழைக் கப்பட்டவர்களும் நால்வர் கும்பலைப் பின்பற்றுபவர்களும் என்னைக் கண்டிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களால் சுவரொட்டிகளை ஒட்டியதோடு. என்னைத் துரோகி என்றும் ‘எதிர்ப்புரட்சியாளன்’ என்றும் சுட்டுகின்ற பெரிய சுவரொட்டிகளைப் பிரதான வீதிகளில் ஒட்டினார்கள். சாங் சுங்கியோ பொது அரங்கில் வெளிப்படையாக, "நான் இனிமேல் எழுத முடியாது என்று அறிவித்தார். ஆனால் வாசகர்கள் மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தார்கள். சாங் சுங்கியோ எவ்வளவுதான் அதிகாரம் மிக்கவராக இருந்தபோதிலும் என்னை, வாசகர்களின் மனதிலிருந்து முழுமையாக அகற்ற முடியாது போய்விட்டது. ‘நால்வர் கும்பல் வீழ்ச்சியடைந்த பின்பு எனது வாசகர்களின் நம்பிக்கையை நான் மீளப்பெற்றேன். 'எனது வாசகர்களின்’ எதிர்பார்ப்புக்கள்தான் எனது படைப்புக்களின் பிரதான உந்து சக்தி என நான் அடிக்கடி கூறிவந்திருக்கிறேன். நான் எழுதவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் ஒவ்வொரு உயரதிகாரியிடமிருந்தும் நான் எழுதுவதற்கு அனுமதி பெறும்வரை காத்திருக்கத் தயாரில்லை. ‘நால்வர் கும்பல்” இப்போது இல்லை. எனது நூல்கள் மீளப் பிரசுரமாயின; வாசகர் தொகையும் அதிகரித்தது.
இரண்டாவது தடவையாக, நான் “விடுவிக்கப் பட்டிருந்த' போதிலும் அது ஏறத்தாழ 10 முழுமையாக வீணாக்கப்பட்ட ஆண்டுகளுக்குப் பின்பே இடம்பெற்றது. ஒரு கோரக்கனவிலிருந்து நான் விடுபட்டபோது, முதுமை என்னை ஆக்கிரமித்து வருவதை நான் கண்டேன். எனக்கு இப்போது 76 அகவைகள். எதனையாவது சாதிப்பதற்கு எனக்கு மிகக் குறைந்த காலப்பகுதியே எஞ்சியிருக்கின்றது. எஞ்சியிருக்கும் இநதக் காலப் பகுதியை நான் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். என்னால் முடிந்ததை கூடுதலாக எழுதவேண்டும்.
நான் ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தை வைத்திருக்கிறேன். அதன்படி நான் எட்டு நூல்களை (இரண்டு நாவல்கள் உட்பட) எழுத விருக்கின்றேன். அத்தோடு அலெக்சாண்டர் ஹெர்சென் அவ்வர்களின் 'எனது கடந்த காலமும் சிந்தனைகளும்’ என்ற நூலின் 5 தொகுப்புக்களை மொழி பெயர்க்கப்போகின்றேன். பொதுவாகப் படைப்பாளிகள்

Page 14
தாங்கள் என்ன பணியில் ஈடுபட்டிருக்கின்றோம் என் விபரத்தைப் பரப்புரை செய்யத் தேவையில்லை. இதை நா6 ஒரு பெரிய நிகழ்வாக மாற்ற விரும்புவதால், மக்களுடை கருத்தைக் கிளர்ந்தெழச் செய்ய விரும்புவதால் நா6 அமைதியாக இருந்து இந்தப் பணியைத் தொடர்வை யாரும் குறுக்கிடவோ, தடுக்கவோ கூடாது என்று நம்புகின்றேன். எழுதுவதற்கு மேலும் கூடுதலான நேரத்ை ஒதுக்குவதற்கு மேலும் கூடுதலான நேரத்ை ஒதுக்குவதற்கான எனது போராட்டம் இதுவாகும்.
நான் மேலும் கூடுதலாக எழுதவேண்டும். ஆனால் நான் எதை எழுத விரும்புகின்றேன்? எனது சொந்த ‘மனப்போக்குச் சிந்தனைகள்’ நூலின் 5 தொகுப்புகள் வாழ்க்கையில் நான் மேற்கொண்ட ஆய்வுப்பயணத்தின் பெறுபேறுகளாய் அமைந்திருக்கும். இரண்டு நாவல்கள் ‘கலாச்சாரப் புரட்சியில்’ எனது அனுபவங்களை பிரதிபலிப்பனவாய் இருக்கும். இதில் இடம்பெறுப கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கற்பனையாக இருக்கும் ஆனால் நான் 'சாத்தியக்கூறுகளின் ஆதிக்கத்தை அவை கொண்டிருக்கக் கூடியதாக இந்த நூல்களின் ஆளுமைட் பரப்பை வரையறை செய்திடுவேன்.
எனது கருத்தின்படி, பத்து ஆண்டுகள் நீடித்த இந்தக் “கலாச்சாரப் புரட்சி மானிட வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது சீன மக்கள் மீது மட்டும் அல்லாது முழு மானிட சமுதாயத்தின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வேறு ஏதோ சந்தர்ப்பத்தில் இது வேறு ஏதோ ஓரிடத்திலும் ஏற்பட்டிருக்கலாம். நான் இதுபற்றி யப்பானிய நண்பர் ஒருவரிடம் பின்வருமாறு கூறினேன்: “இது எமக்கு ஏற்பட்ட ஒரு மாபெரும் துரதிஸ்டம். உலகில் வாழும் ஏனைய மக்கள் இந்தப் பேரழிவிலிருந்து தப்பிவிட்டார்கள். உண்மையில் சீனா ஒருவகை எதிர்மறை எடுத்துக்காட்டாக விளங்கியது’ நான் இதுபற்றி அவரிடம் மேலும் கூறுகையில் இந்த விடயத்தில் சீனா பெருமைப் படவேண்டிய ஓர் ஆக்கக்கூறும் உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள படைப்பாளிகள், வரலாற்றுக் காலம் முழுவதும் இத்தகைய அச்சுறுத்தலையும் ஏளனப் படுத்தலையும் எதிர்கொண்டார்களா? இத்தகைய வெறியாட்டத்தையும் சித்திரவதையையும் அனுபவித் தார்களா? இதில் அகப்படுவதிலிருந்து சீனப் படைப் பாளிகளில் ஒருவர் கூடத் தப்பித்துக் கொள்ளவில்லை. இவர்கள்மீது பகிரங்கமாக்க் குற்றச்சாட்டுக்களை (இவர்களைப் பகிரங்கமாக நிறுத்தி-) மேற்கொண்டதன் மூலம் இந்த மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள் களாக்கிக் கொண்டார்கள். இவர்கள் புண்படுத்தப்பட்டார்கள்; சிலர் தமது வாழ்வையே தற்கொடைசெய்துகொண்டார்கள். ஆயினும் இந்த வெறியாட்டத்திலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பல முக்கிய படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது நான் கூறியவற்றையும் செய்தவற்றையும் ஏனையோர் கூறியவற்றையும் செய்த வற்றையும் மனதில் மீட்டுப் பார்க்கின்றேன். இவை அனைத்தையும் புரிந்து கொள்வதில் நான் மிகுந்த

சிரமப்படுகின்றேன். நான் இந்தளவுக்கு முட்டாளாகவும் சாதுரியம் அற்றவனாகவும் செயற்கையான முறையில் மயக்கப்பட்டிருந்ததால் என்மீதான கொடூரமும் இழிவு படுத்தலும் சரியானதாகவும் பொருத்தமாகவும் எனக்குத் தோன்றியது.
நான் எனக்குள் கூறிக்கொண்டேன். இந்தப் பத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுமை அனுபவித்த வேதனைபற்றி சில முடிவுகளை நான் எடுக்காதுபோனால், உண்மையில் அப்போது என்ன நடந்தது என்பது பற்றி ஒரு முழுமையான சுயவிமர்சனத்தின் மூலம் எனக்கு நான் தெளிவாக்கிக்கொள்ளாதுபோனால், ஒருக்கால் ஏதோ ஒருநாள் நிலைமை திடீரென்று மாற்றமடையும்போது நான் மீண்டும் எனது சுயநினைவு இழக்கச் செய்யப்படலாம். அத்தோடு எதுவித காரணமு மின்றி நான் வேறொரு மனிதராக மாற்றப்பட்டும் விடலாம். எத்தகைய அச்சமூட்டும் ஒரு சிந்தனை. இது எனது ஆன்மாவைக் கடுமையாக உறுத்தும் ஒரு கடன் சுமை யாக இருக்கின்றது. நான் எவ்வளவு விரைவாக அந்தக் கடனை திருப்பிச் செலுத்துகின்றேனோ அந்தளவுக்கு நல்லது. எனது சிந்தனையில் சாட்டையடி விழுவது போல நம் மணிக்கூடு 50ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் திருப்பப்பட்டிருப்பது போலவும் நான் உணருகிறேன். “எழுது, எழுது!’ என்ற சொற்கள்- யாரோ ஒருவர் எனது காதுகளில் கத்துவதுபோல்- மீண்டும் மீண்டும் எனக்குக் கேட்கின்றது.
பின்பு நான் 1944ம் ஆண்டில் எனது வாசகர்களுக்கு அளித்த வாக்குறுதியை நினைவு கூருகின்றேன். ஓர் எழுத்தாளனிடமிருந்து வாசகர்கள் எதிர்பார்த்ததை அவர்களுக்கு வழங்குவதற்கு நான் அவர்களது குரல்களையே பயன்படுத்தினேன்; “நீ உனது கைகளில் அவர்களது இதயங்களை வைத்திருக்கின்றாய்; மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள நீ உதவுகின்றாய்; குளிரார்ந்த நாட்களில் அவர்களுக்கு களைப்பை உருவாக்குவதற்காகக் கரியை வழங்குகின்றாய்; நோயினால் அவதிப்படுபவர்களை நீ ஆசுவாசப் படுத்துகின்றாய்.” நான் எழுதுவேன். நான் எனது எழுதுகோலை எடுத்து எழுதுவேன். ஆனால் முதலில் நான் கருணையுள்ளவனாக, தூய்மையானவனாக, ஏனையோருக்கு மேலும் உதவு பவனாக இருக்க விரும்புகின்றேன்’
விரைவில் நான் எனது வாழ்வின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிடுவேன். வெறுங்கையுடன் இந்த உலகத்திலிருந்து விடைபெறுவதை நான் வெறுக்கின்றேன். நான் எழுதுவேன்; தொடர்ந்து எழுதுவேன். எனது எழுதுகோல் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறுவதை நான்விரும்புகின்றேன். அந்தத் தீப்பிழம்புகள் இரக்கமற்ற முறையில் என்னை விழுங்குவதற்கு நான் அனுமதிப்பேன். நான் வெறுமனே ஒரு சாம்பல் மேடாகக் கிடக்கும்போதும் எனது அன்பும் வெறுப்பும் எப்போதும் இந்த உலகில்
தொடர்ந்து நிலைத்து நிற்கும்.
Ö(TUlőbtD. 50

Page 15
தனிமனித ஆளுமையும் மேம்பாடும்
-அ.க.தெய்வேந்திரன்
ஆளுமை என்றதற்கு திருத்தமான முடிவான வரைவிலக்கணம் கூறுவது மிகவும் கடினமானதாகும். ஆளுமை என்பது ஒருவனுடைய உடற் பண்புகள் உளப் பண்புகள், மனப்போக்குகள், சமூக அறநெறிப் பண்புகள் போன்ற எல்லாவகையான பண்புகளின் இணைப்பாகத்தான் இருக்கிறது. ஒரு மனிதனுடைய உடற்தோற்றம் , உள்ளம், உணர்ச்சி, இயல்பூக்கங்கள் அனைத்துமே அவனுடைய ஆளுமையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.
ஆளுமையானது அடிப்படையில் இரு காரணிகளில் தங்கியுள்ளது. ஒன்று மரபு நிலைப்பட்ட காரணிகள் மற்றொன்று சூழ்நிலைப்பட்டகாரணிகள். ஒருவருடைய ஆளுமை வளர்ச்சியில் மரபு நிலைக்கு முக்கியமான பங்கு உண்டு. ஒருவருடைய உடல் அமைப்புகள், உறுப்புக்களின் வளர்ச்சிப்போக்கு போன்ற மரபுநிலை சார்ந்தன. உயரம், பருமன், தோற்றம், உடற்பண்புகள் போன்றன அவனுடைய ஆளுமை விருத்தியில் பாரிய செல்வாக்கைச் செலுத்துகின்றன. ஒருவனுடைய உடலைமைப்பில் காணப்படும் குறைபாடுகள் அவனுடைய நடத்தையிலும் ஆளுமையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதேேேபாலவே சூழ்நிலையும் ஆளுமை விருத்தியில் முக்கிய இடம்பெறுகிறது. வாழுகின்ற சமூகத்தின் தன்மை, அச்சமூகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் நடைமுறைகள், அவர்களது பண்பாடு போன்றவற்றிற்கு ஏற்ப ஆளுமையில் மாற்றங் கள் காணப்படுவது உண் மையே. பொதுவாகப் பார்க்குமிடத்து ஆளுமை வளர்ச்சி என்பது ஒருவன் தனக்கே உரித்தான நடத் தைக் கோலங்களைப் பெறும் ஒரு தொடர்ச் சியான செயன்முறை யாகும்.
தேசிய கலை இலக் ஆய்வரங்கில் 18.10.200 இராமகிருஷ்ண மிஷ பத்தில் வாசிக்கப்பட்
பதிவாகிறது.
தனிமனித ஆளுமை எமக்கு ஏன் அவசியம் என நோக்குகின்ற போது நாங்கள் ஒருவருடன் உரையாடச் செல்கின்ற போது அவர் எம்முடன் மகிழ்வாகப் பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இதேபோல் அவரும் இதை எம்மிடம் எதிர்பார்க்கின்றார். எனவே இவ்வகையான
 
 
 
 
 
 
 

நிலைமைகில் நாம் எம்மை இந்நிலைமைகளுக்கு தயார் படுத்தி வைத் திருக்கவேண்டிய தேவை இருக்கின்றது. SS PLEASING PERSONALITY 660 -960) på åbil படுகின்றது. இவ்வாறு மகிழ்வான தொடர்பாடலை வைத்திருக்கும்போதே எமது தேவைகளையும் அவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யமுடிகின்றது. ஆளுமையானது மேம்பட்ட நிலையில் காணப்படும்போதே மகிழ்வான தொடர்பாடலை தொடர்ந்து மேற்கொள்ள முடிகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முகங்கள் உண்டு. முதலாவது ஒரு மனிதன் தன்னைப்பற்றி தான் உள்வாங்கி வைத்திருக்கும் முகம். இது அவனே தன்னைப் பற்றிய எண்ணமாகக் கொண்டிருக்கும் முகம். இரண்டாவது அவன் மற்றவர்களுக்கு தன்னை எப்படி வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக வைத்திருக்கும் முகம். அதாவது அவன்தான் வெளி உலகிற்கு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னை அமைத்துக்கொண்டுள்ள முகம். மூன்றாவது அவனைப் பற்றி மற்றவர்கள் கொண்டுள்ள எண்ணங்களால் அமையப் பெற்ற முகம். அடிப்படையில் இம்மூன்று முகங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகக்கூடிய வகையில் ஒரேமாதிரியாக அமைகின்ற பட்சத்தில் அவனிடம் ஆளுமைகள் விருத்தி அடைந்தனவாய் காணப்படும். ஆனால் நிஜத்தில் அவ்வாறு அமைவது மிகக் குறைவு.
கியப் பேரவையின் 3 அன்று கொழும்பில் ன் விரிவுரை மண்ட ட கட்டுரை இங்கு
மனிதனுடைய மூன்று முகங் களும் வேறுபட்ட வகையில் காண ப் படுகின் ற து . இதனால் ஒரு மனிதனிடமே முரண்பாடுகள் காணப் படுகின்றன. இவ் விடத்தில்
கூறவேண்டிய முக்கியமான விடயம் எது வெனில் தனிமனித ஆளுமையும் மேம்பாடும் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வினாக்கொத்து ஒன்று வழங்கப்பட்டு பலரிடமிருந்து விடைகள் பெறப் பட்டிருந்தன. இச்செயற்பாட்டின்போது கண்டுகொண்ட உண்மை என்னவெனில் பலர் அறிந்த விடைகள் தாங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக

Page 16
நாங்கள் பதர்வித்துக்களல்ல எஸ்.பி.பாலமுருகன்
நல்விதைகளை போல தான் நாங்கள் இருக்கின்றோம் வாழ்தகவுடன் உறங்கு நிலையில் உறுதியாய்த்தான் இருக்கிறோம்
வாழ்தகவுடைய வித்துகளுக்கு நீர், ஈரப்பதன், வளி கிடைக்கும்போது அது முளைத்து விருட்சமாகிவிடும்
எங்களுக்கும் உரிமைகள், உதவிகள், கல்வி என்பன கிடைத்தால் விழுதுவிட்டு விருட்சமாகிவிடுவோம் உறக்கத்திலிருந்து விழித்துவிடுவோமென பேரினராட்சியம் எமக்கு எதுவும் கொடுக்கவில்லை.
எம்மை கொத்தடிமையாக்கி உழைப்பை உறிஞ்சியும் எம்மினத்தை திட்டமிட்டு குறைக்கிறது.
நாங்கள் பதர்வித்துக்களல்ல வாழ்தகவுடன் இருக்கின்றோம்
ܥ
வழங்கப்பட்டவையாக இருந்தனவே ஒழிய நாங்கள் எப்படி இருக்கின்றோம் என்பதற்கு விடையளிக்கவில்லை. இது தங்களைத் தாங்கள் உணரவில்லை என்பதற்கு சான்றாக அமைந்துவிடுகின்றது. மனிதன் தன்னைத் தானே உணராதபோதே அடிப்படையில் அவன் தன்னைப்பற்றி வைத்திருக்கின்ற முகமே தெளிவற்றதாகிப் போய் விடுகின்றது. எனவே தன்னைத்தான் உள்வாங்கிய பின்னர் சமூகத்தை உள்வாங்கும்போது அவனும் மற்றைய இரு முகங்களும் ஒத்துப்போவதாய் அமையும். மூன்று முகங்களும் ஒத்துப்போவது மனிதனுடைய ஆளுமை விருத்தியின் மேம்பாடான ஒரு நிலையை எய்த வழிசெய்யும்.
ஆளுமை மேம்பாட்டில் முக்கியமான ஒன்று ஒத்திசைவு என்பதாகும். எங்கள் சுய எண்ணத்துக்கும் யதார்த்தத் துக்கும் இடையில் ஒத்திசைவு காணப்படல் வேண்டும். அவ்வாறு இரண்டுக்குமிடையில் ஒத்திசைவு காணப்படும் போது எவ்வித எண்ணங்கள் நிறைவு செய்யப்படுகின்றன. அவ்வாறு நிகழும்போது திருப்தி ஏற்படுகிறது. இத்திருப்தி புதியவிடயங்களை மேற்கொள்ளவும் நம்பிக்கை உருவாகவும் வழிசெய்கின்றது. மாறாக யதார்த்தத்துடன் ஒத்திசையாத எண்ணங்கள் எம் மிடத்தில் வேண்டும் போது எம் எண்ணங்கள் நிறை வேறுவதில்லை. இதன் விளைவாக விரக்தி மனதில் கவலை போன்றன ஏற்படுகின்றன. எனவே
C 14

ஆளுமை விருத்தியடைய வேண்டும் எனும் போது முதலில் யதார்த்தத்துடன் ஒத்துவரக்கூடியவாறான எண்ணங்களை நாம் எம்மளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகள் எம் ஆளுமை விருத்தியில் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன.
ஆளுமையின் மேம்பாடு எனப்படுகின்ற போது அது எவ்வாறு ஏற்படுகின்றது? எப்படி ஆளுமையை மேம்பாடு செய்யலாம்? போன்ற பல வினாக்கள் எம்மனதில் எழுவது இயற்கையே. ஆளுமை மேம்பட வேண்டுமாயின் எம்மிடம் சில பண்புகள் காணப்படவேண்டும். அவ்வாறு காணப்படாத போது அவற்றை விருத்தி செய்ய நாமே முயற்சி செய்தல் வேண்டும். எம்மிடத்தில் எத்தனை பேரிடம் பாராட்டும் உள்ளம் இருக்கின்றது. ஒரு மனிதன் ஒரு விடயத்தை நல்ல முறையில் நிறைவு செய்தபோது அவனை மனந்திறந்து பாராட்டும் உள்ளம் இருத்தல் வேண்டும். இந்த நேரத்தில் எம்மிடம் பாராட்டும் உள்ளம் இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் எல்லோரிடமும் பாராட்டும் உள்ளம் இருக்கிறது. ஆனால் மனந்திறந்து பாராட்டும் உள்ளம் இருக்கிறதா என சிந்தித்துப் பாருங்கள். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பாராட்டும் போது மனசில் ஒரு ஏக்கமோ, கோபமோ, கவலையோ, பொறாமையோ ஒட்டிக்கொள்கிறது. இதை நாங்கள் தவிர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். இது எம்மிடம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லை என்பதை காட்டுகிறது. ஒருவிடயம் நடைபெறும் போது அதை ஏற்றுக்கொள்ளப்பழகிக்கொள்ள வேண்டும். சிலர் மற்றவர்கள் நல்ல விடயங்களைச் செய்யும்போது ஏற்றுக்கொள்வதில்லை. இது ஒரு ஆளுமைக் குறைபாடே என்பது இவ்விடத்தில் நோக்கற்பாலது.
இன்றைய நிலையில் பலரிடம் காணப்படும் ஒரு மிகப் பெரிய குறைபாடு தாழ்வு மனப்பான்மை. குறிப்பாக இன்றைய இளைஞர்களின் மத்தியில் காணப்படும் பெரிய சிக்கலே தாழ்வுமனப்பான்மையாகத்தான் இருக்கிறது. இந்தக் குறைபாட்டுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக இன்றைய கல்வியாளர்களும் இன்றைய கல்வி முறையும் இருக்கின்றது. புத்தக அறிவை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு வாழச்சொல்லிக் கொடுக்காத கல்வி முறையின் பாரிய விளைவுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும்போதே பலருக்கு எம்மால் முடியுமா? என்ற கேள்வி மனதில் விழுகின்றது.நம்மால் முடியும் என்பதற்கும் நம்மால் முடியுமா என்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. நம்மால் முடியும் என்பது நம்பிக்கை நம்மால் முடியுமா என்பது சந்தேகம். முடியுமா என்று சந்தேகம் குடிகொள்ளத்தொடங்கியவுடனே முழுமையாக அச் செயற்பாட்டை செய்ய முடிவதில்லை எனவே எந்தவொரு விடயத்தையோ செயற்பாட்டையோ செய்ய முயலும்போது முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கப் பழகவேண்டும். ஏன் முடியவில்லை? என்பதற்கு ‘எல்லாம் நேரம்தான்’ என்பது நித்திரைக்குப் போனவரின் கூற்று. நினைத்தால்
ItlöbtD. 50

Page 17
முடியும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
மனிதரிடத்தில் சளைக்காத மனம் இருக்கவேண்டும் ஆளுமையில் மேம்பாடான நிலையில் இருப்பதற்கு சளைக்காத மனம் வேண்டும். இது ஒரு விடயத்தை செயயவோ சிந்திக்கவோ எமக்கு உறுதியைத் தருகின்றது உறுதியான மனம் உள்ள ஒருவன் பல அரிய செயல் களையெல்லாம் செய்யக்கூடிய தகுதியுடையவன் ஆகிறான். "ஆயிரம் மைல் பயணம் என்பது முதல் மைலை கடப்பதிலே தங்கியுள்ளது' என்ற மா சே துங்கின் கூற்று இங்கு முக்கியமானது. ஆயிரம் மைல் எனத் திகைத்து நின்றோமானால் எமது பயணத்தை தொடர முடிவதில்லை சளைக்காத மனத்துடன் பயணத்தில் முதல் மைலைக் கடப்போமெனில் வெற்றியடையலாம். எனவே சளைக்காத மனம் ஆளுமை விருத்தியில் முன்னேற்றமான நிலையை ஏற்படுத்த உதவுகிறது.
நாங்கள் அடிக்கடி கூறிக்கொள்கிற ஒரு புகழ்பெற்ற வாக்கியம் 'பிரச்சினை என்பது பிரச்சனை அல்ல பிரச்சனையை பார்க்கும் விதத்தில்தான் பிரச்சனை. இக்கூற்றைச் சொன்னவர் புகழ்பெற்ற கிரேக்க தத்துவ வாதியான எபிகூரஸ் என்பவர். ஆளுமை மேம்பாட்டில் பிரச்சனையைத் தீர்கிறது என்பது முக்கியமான விடயமாக இருக்கிறது. ஏனெனில் பிரச்சனைகளை இலகுவில் சிந்திக்கும்போது மனம் சிக்கலில்லாமல் தெளிவாக இருக்கும்போது ஆளுமை உயர் நிலையில் இருக்கும் பிரச்சனைகளை இரண்டுவகையாகப் பார்க்கலாம். ஒன்று நடைமுறைகள். மற்றொன்று உணர்வுகள். நாம் பல பிரச்சனைகளை உணர்வு சார்பாகப் பார்த்துப் பழகிவிட்டோம் நடைமுறை சார்பாகப் பார்ப்பதில்லை. உதாரணமாக ஒரு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்றபோது அவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்றோ எனக்கு அந்த விழாவிற்கு போக தகுதியில்லை என்றோ அல்லது வேண்டுமென்று இப்படிச் செய்துவிட்டார்கள் என்றோ உணர்வு சார்பாகப் பிரச்சனையை பார்க்கிறோமே தவிர தபால் பிந்தியதால் வரவில்லை என்றோ தவறுதலாக தவற விடப்பட்டேனா என்று நடைமுறை சார்பாக பிரச்சனையைப் பார்ப்பதில்லை. எனவே பிரச்சனையை நடைமுறை சார்பாகப் பார்க்கிறதன் மூலம் பிரச்சனைகளுக்குரிய தீர்வை இலகுவில் தேடிக்கொள்ளலாம். “உண்மைக்குப் புறம்பாக பல மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டு அவற்றை ஊடு பார்பதே பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.’ என்கிறார் எபிகூரஸ். யதார்த்தமாக என்ன செய்யலாம் எனப் பார்க்க மறுப்பதே பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது. எந்தவொரு விடயத்தையும் யதார்த்தமாக நோக்குவதன் மூலம் பிரச்சனைகள் வராமல் இருக்கவும் வருகின்ற பிரச் னைகளை இலகுவில் தீர்க்கவும் முடிகின்றது.

ஆயிரம் மொக்குகள் அவிழ்ந்து சிறகெறிந்து அண்ணார்ந்து பரிதியுடன் பாஷை கொள்ள விளைந்த காற்று விணாய்ப் போகாமல் உரிந்து சென்ற வசநத மனததை களவு செய்த பருவத்தின் படலையைத் திறந்தபோதுதான் ரையும் இந்த டிகளும் ஒலிகளும் என்னை எதிர்கொண்டு அழைத்தன.
மொக்குகள் மூடின இலைகள் உதிர்ந்த றோசாச் செடிகள் தடிகளாய் மிஞ்சின வேர்த்த முகத்தைத் துடைத்த போது காற்றில் பிணங்களே மணந்தன.
பருவ வளர்ச்சியில் பரிணாமம் பாய்ந்து முதுமைத்தனம் மூச்சில் கலந்தது துயரச் சுமைகள் தோள்களை அமுக்கின.
醫 துவே.-
லங்கைத்தீவில்
எனக்கு இருப்பாக்கப் பட்டாயிற்று.

Page 18
சமூக நிறுவனங்களும் சமூகச் செயற்பாடுகளும்-3
முப்பது ஆண்டுகள் நிறைவில் காலையடி மறுமலர்ச்சி மன்றம்
யாழ் குடாநாட்டினுள் யாழ்ப்பாண நகரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் துரத்திலுள்ளது பண்டத்தரிப்பு எனும் சிறிய நகரம் அதன் இரண்டுகிலோமீட்டர் துரத்திலுள்ள கிராமம் காலையடி அங்கே பள்ளிக்கூடப் படிப்பின் இறுதி நிலையில் கற்கும் ஒன்பதாம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் முருகன் விளையாட்டுக் கழகம் ஒன்றை நடத்துவர், அதற்கான நிதி திரட்டவும் விஞ்ஞான அறிவுத் துண்டலினால் உந்தப்பட்டும் விஞ்ஞானப் பொருட்காட்சியொன்றை நடத்தினர். தத்தமது பாடசாலைகள் நடாத்திய பிரமாண்டமான காட்சிப்படுத்தலின் நகல்தான் இதுவெனினும் முழு ஆர்வத்துடன் அதனைச் செய்தனர். அவர்களது ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் விடப் பன்மடங்கு உற்சாகத்துடன் ஊர் பங்கெடுத்துப் பார்த்து அவர்களை அதிரவைத்தது. அது மனிதன் சந்திரனில் கால்வைத்ததை ஆர்வத்துடன் அசைபோட்டுக் கொண்டிருந்த 1969. அவர்களும் சந்திரமண்டலத்துக்கும் சைக்கிளில் போய்வந்து கொண்டிருந்தார்கள். கனவுகளில் விளையாட்டுக் கழகம் தான். அதற்கான நிதித் தேட்டத்துக்கும் விஞ்ஞானக் குதுகலிப்புக்கு மாகத்தான் அந்த விஞ்ஞானப் பொருட்காட்சி. ஆயினும் அவர்களை அறியாமல் கிராமத்தைத் தமது தேவைக்காக ஈர்க்குறோம் என நினைத்த அவர்கள் கிராமத்தினுள் முழுதாகத் தத்தெடுக்கப் பட்டார்கள்.
அதேகாலத்தில் பொருளாதார ரீதியில் அடிமட்டத்தில் குடிசைகளில் வாழ்ந்துவந்த மக்களின் பிள்ளைகள் ஒன்றுசேர்ந்து நாடகங்களை பதின்மூன்றுவயதினராக இருந்தகாலத்தில் நடித்து தேவகோபால கிருஷ்ணநாடக மன்றம் அமைத்து நாடக விழாக் களை நடாத்தி கிராமத்தில் பேரெடுத்துக்கொண்டிருந்தனர். இரண்டு மன்றங்களும் இணைந்து 1972.09.17 அன்று காலையடி மறுமலர்ச்சி மன்றம்’ என்பதை உருவாக்கினர்.
விளையாட்டு, நாடகம், சிரமதானம், நிதி திரட்டலுக்காக வயல்களில் அருவிவெட்டு மற்றும் இரவுப்பாடசாலை என்பதுடன் தீபாவளிதினத்தில் ஊர் பூராவும் ‘தீபாவளித்திருநாளா மதுவரக்கன் வெறிநாளா’ எனக் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் எனக்கிராமத்தின் அடையாளத்தைப் புரட்டியெடுத்தது மன்றம். வேகம்பெற்ற எழுச்சி நிலையில் கிராமத்து இளைஞர்- யுவதிகள் அனைவரும் கூடும் வகையில் மாதமிருமுறை கலை இலக்கிய கருத்தாடல்கள் நிறைத்த கூட்டம் கூடினர். கையெழுத்துப் பிரதிகள் வெளியிட்டனர். இவ்வாறாக அந்தச்சிற்றுருக்கான பலமுனைக் கலாசார புரட்சியை நடாத்தியபடி அந்த இளைஞர்களையும் யுவதிகளையும் வளர்த்தெடுத்தது மன்றம்.
மன்றம் இயங்கியது பலகுடும்பங்களாகப் பிரிந்த ஒரு பரம்பரை யினருக்கான ஒருவகையில் தானாகப் பொதுக்காணியாக ஆகிய பெரியதொரு வளவில் அதனை அந்த வேளையில் பராமரித்தவர் ஆறுமுகம் கந்தசாமி ஆசிரியர் (ஊரார் அழைப்பது கந்தையா வாத்தியார்) மத நம்பிக்கை சார்ந்த பழைமைப் பிடிப்பையுடையவராக இருந்த அதேவேளை மிகுந்த முற்போக்காளர். அவரும் அந்த வளவின் பரம்பரையினரும் அயற்கிராமத்தவர். ஆசிரியர் என்பதால் அவர் வேறுபாடு காட்டாமல் அந்தக் கிராமத்தின் பண்பாட்டெழுச்சிக்கு அந்தவளவைத் திறந்துவிட்டார். அவருக்கு முன் அந்த வளவில் ஊரவர்கால் பட்டதில்லை. அவருக்கான பராமரிப்புக்கடம்ை அங்குள்ள சிறிய முருகன் கோயில் மடாலயப் பூசை புனஸ்காரக் கவனிப்பு மட்டுமே. அந்த நேரம்போக ஏனைய பொழுதுகளில் அந்த இளைஞர்களை உற்சாகமூட்டி வளர்த்திருக்கிறார்.

மன்றம் சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிராக குரல்கொடுக்கும் வகையில் இயங்கியது. இக்கிராமத்தவரின் ஆலய திருவெம் பாவை விழாவில் சின்னமேளம் என்ற சதுராட்டத்துக்கெதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆலயத்தில் இருந்துவந்த வெறியாட்டத்தினரால் மண்டை உடைபட்டு காயப்பட்டு நின்றனர். கேள்விகள், விவாதங்கள் மூலம் சாதிய, பெண்ணொ டுக்குமுறைகளை களைந்தனர்.பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் இருக்கக் கூடிய சாதிய வேறுபாடுகள் ஓரளவுக்கு இல்லாதொழிக்கப்பட்டன என்றே சொல்லலாம். சமத்துவ சமுகத்துக்காக இன்றும் இக்கிராம இளைஞர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்றால் அது மன்றத்தின் வழிகாட்டலே என புலம்பெயர்ந்த மக்கள் கூறுகிறார்கள்.
1975 இல் ‘காகிதப்புலிகள்’ என்ற நவீன நாடகத்தை உருவாக்கி அதனை யாழ்குடாநாட்டிலுள்ள கிராமங்கள் தோறும் நிகழ்த்தி சமூகமாற்றத்துக்கான உந்துதலை அளித்தனர். ஜம் பிற்காலத்தில் பொலிஸ் இராணுவ கெடுபிடிகளுக்கஞ்சி 1982ஆம் ஆண்டில் மீண்டும் பாரதி' என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடக்கூடியது. மன்ற ஆண்டுவிழாக்களிலும் முற்போக்கான நாடகங்கள் மேடையேற்றப்பட்டதுடன் தெருநாடங்கள், குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய சிறுவர் நாடகங்கள், பாரதி விழா, கலை இலக்கியவட்டம், “காலைக்கதிர்' சஞ்சிகை என செயப்பாடுகள் அமைந்திருந்தன. 1985இல் புலம்பெயர்ந்த மன்ற உறுப்பினர்கள், கிராமமக்களின் ஒத்துழைப்புடன் எதுவித அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் இன்றி அமரர் ஆறுமுகம் கந்தசாமி ஞாபகார்த்த கலாசார மண்டபத்தையும் பொதுநூலகத் தையும் நிர்மாணித்து 1988இல் அவரது பாரியாரான அமரர் செல்லம்மா கந்தசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இன்று கிராம இளைஞர்களாலும் சிறுவர்களாலும் பயன்படுத்தப் பட்டுவருகிறது.
இலக்கிய கருத்தரங்குகள், நூல்வெளியீட்டு அறிமுக அரங் குகள் என்பவற்றையும் நடாத்தி புத்தக பண்பாட்டையும் வளர்க்க முனைந்துள்ளார்கள்.
மன்ற மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டலில் புலம்பெயர்ந்த மக்கள் அவர்களது பிள்ளைகளும் உள்ளூரில் இருக்கக்கூர்ய பிள்ளைகளும் இணைந்துபங்குபற்றும் வகையில் சென்ற ஆண்டு ஆடிமாத்தில் ‘பணிப்புலம் கிராமிய சங்கமம் -2003 நிகழ்வை நடத்தினர். முதல்நாள் விளையாட்டு நிகழ்வுகளும் அடுத்த நாள் கலைநிகழ்வுகளாகவும் நிகழ்ந்த இந்நிகழ்வு இவ்வருடமும் 17,22ந்திகதிகளில் நடாத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்து சிறார்களுக்கு பயன்படும் வகையில் கணினிபயிலகம் ஒன்றையும் அமைத்து ஆவலுடன் ஈடுபடும் இவர்கள் சமூக ஏற்றந்தாழ்வுகளை ஒழித்து வீறுநடைபோடுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் இக்கிராமத்தின் முற்போக்கு எண்ணம் கொண்ட 6) JT856.

Page 19
மலையக சமூகஅமைப்பில் நிலவும் ஒரு கூட்டு அமைப்பு முறையானது உழைப்புடன், அல்லது உற்பத்தியுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்போது அதன் வெளிப்பாடாக பீறிட்டு எழுகின்ற கலை இலக்கிய உணர்வுகளும் இவ் அம்சத்தினை பிரதிபலிப்பதாகவே அமையும் அக்கூட்டு அமைப்பு முறையானது சோகத்தை இசைத்தாலும், அவைகூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாகவே அமையும்.
இவ்வகையில் மலையக இலக்கியத்தினை பின்வரும் அடிப்படை கொண்டு நோக்குதல் பயன்மிக்கதொன்றாகும். சமூக மாற்ற செயற்பாடுகளில் இலக்கியத்தின் பங்கு முக்கியமானதொன்றாக இருப்பதோடு, சமூகத்தின் அசைவியக்கத்திற்கும் இலக்கியம் வழிகாட்ட வேண்டும். எனவே தான் இலக்கியம் காலத்தைப் பிரதிபலிப்பதாக மட்டுமன்றி அதனை உருவாக்குகின்ற பணியினையும் ஆற்றுகின்றது. இரசிய புரட்சியின் விளைபொருளான மார்க்ஸிம் கார்க்கியின் 'தாய்’ நாவல் அப்புரட்சியின் திசைமார்க்கத்தினை காட்டி செல்வதிலும் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. இப் பண்பு மலையக இலக்கியத்திற்கும்
பொருந்தும்.
மலையக இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்குகின்றபோது அவ்விலக்கிய தொகுதி இரு வகையினரால் எழுதப்பட்டு வந்துள்ளது. அவை வருமாறு:
1.மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டு, அந்த பண்பாட்டுக்குள் தோற்றம்பெற்ற இலக்கியப் படைப் பாளிகள். 2.மலையகத்தைப் பிறப்பிடமாக கொள்ளாத, அதே சமயம் மலையகத்தோடு தொடர்பு கொண்ட இலக்கியப் படைப்பாளிகள்.
இவ்விருவகைப்பட்ட எழுத்தாளர்களாலும், வளர்ச்சி பெற்றுள்ளது என்ற விடயம் ஒருபுறமிருக்க, மலைய கத்து சமூகவமைப்பு குறித்து புரிந்து கொள்வதில் காணப்படுகின்ற வேறுபாடுகள் குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதொன்றாகும்.
 

նՍՍԱti ல இலக்கியத்தில் தாங்த நிலைப்பாடுகள்
-லெனின் மதிவானம்
முதலாவது பிரிவில் சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமையா. சாரல்நாடன், அந்தனிஜ்வா, மல்லிகை சி.குமார், சு.முரளிதரன், மரியதாஸ், முத்துவேல், மாத்தளை வடிவேலன், கேகாலை கைலைநாதன், லெனின் மதிவானம், இராகலை பன்னிர், முருகவேள் இராமையா முதலானோரைக்குறிப்பிடலாம்.
இரண்டாவது பிரிவில், யோ.பெனடிக்பாலன், செ.கணேசலிங்கன், நந்தி, புலோலியூர் க.சதாசிவம், தி. ஞானசேகரன், வ. அ.இராசரத்தினம், அ.செ.முரு கானந்தம், சுபத்திரன், டானியல், இ. நாகராஜன். வ.ஐ.ச.ஜெயபாலன் முதலானோரைக் குறிப்பிடலாம்.
‘இந்த இரண்டு எழுத்தாளர்களிடையேயும், சிற்.சில வேறுபாடுகள் கண்டுக் கொள்ளத்தக்கனவாய் உள்ளன என எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மலையக சமூகவமைப்பின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவு என்பனவற்றினையும், அதனடியாக எழும் வாழ்வியல் அம்சங்களை புரிந்துக் கொள்வதினூடே அவ்வேறுபாடு காணப்படுகின்றது.
மலையக பண்பாட்டிற்குள் நின்று, அம்மக்கள் பற்றி இலக்கியம் படைத்தவர்கள், மலையக வாழ்வியலை உள்நின்று சித்தரிக்க முனைவதனை காணலாம். யதார்த்த நோக்கு, சமூக அசைவியக்கம், வர்க்க முரண்பாடு என்பனவற்றினை புரிந்து இலக்கிய படைப்பாக்குவதில் இவர்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் உண்டு என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதாகும்.
இவர்களின் சிந்தனைத் தெளிவு, பார்வை என்பன வற்றை அடிப்படையாக கொண்டு பின்வரும் இரு பிரிவுகளாக வகைப்படுத்திக் காட்டலாம்.
1. முற்போக்குவாத சிந்தனை நிலைநின்று இலக்கியம் படைத்தவர்கள். 2. மார்க்ஸிய சித்தாந்த நிலைநின்று இலக்கியம் படைத்தவர்கள்.
இவ்விடத்தில் முற்போக்குவாதம்','மார்க்ஸிய வாதம்’ ஆகிய சிந்தனை தொழிற்பாடுகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது.

Page 20
‘முற்போக்குவாதம் பற்றிய ஆய்வு, அது சிந்தை தெளிவு நிலை (மாத்திரமே) என்பதை நி: நிறுத்துகின்றது. மாக்ஸியத்தை விபரிக்கும் அறிஞார் அதனை அரசியல் நடவடிக்கைக்கான வழிகா அன்றேல், அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்ப என்பர். மாக்ஸியத்தை திரிகரண சுத்தியாக ஏற் கொள்ளும் போது, அவ்வாதத்தினை அடிப்படை யா கொண்டு உலகை மாற்றி மனித சமுதாயத்தின் முற்போ பாதையினை உறுதிப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகt ஏற்றுக்கொள்ளுதல் இயல்பாகின்றது. ஆன முற்போக்குவாதம் பற்றிய எண்ணத் தொடர்பு நில அத்தகைய நேரடி நிலையினைச் சுட்டிநிற்பதில்ை மார்க்ஸியவாதிகள் முற்போக்குவாதிகளே. ஆன முற்போக்குவாதிகளோ மார்க்ஸியவாதம் வற்புறுத்து உலகமாற்றத்துக்கான அரசியல் மாற்றத்தினை, நே இயக்க முறைகள் மூலம் நிலைநிறுத்தும் இயக்கவாதிய தொழிற்படுவதில்லை. முற்போக்குவாதம் பற்றிய எண்ணி துய்ப்பும் செயற்பாடும் ஒருவரை அதனைப் பூரணம நடைமுறைப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாளர மாற்றலாம். ஆனால் முற்போக்குவாத நிலை அ நிலையைக் குறிக்காது.”
அவ்வகையில் முதலாவது பிரிவினர் மலை இலக்கியத்தினை முற்போக்கு உணர்வுடன் நோக்கியதோ மண்வாசனைமிக்க படைப்புக்களை வெளிக்கொணர்வதி முக்கியத்துவம் உடையவர்களாகக் காணப்படுகின்றன இப்பிரிவில் சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமை சாரல்நாடன், அந்தனிஜிவா, மல்லிகை சி.குமா தெளிவத்தை யோசப், மாத்தளை வடிவேலன், சு.முரளித முதலானோரை குறிப்பிடலாம். குறிப்பாக மலைய படைப்பிலக்கியத் துறையில் சி.வி.வேலுப்பிள்ை என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புக்களி மேற்குறிப்பிட்ட ஏனைய எழுத்தாளர்களைவிட மலை மக்களது வாழ்வியலும், உணர்வுகளும், மிகவ நுண்ணயத்துடன் தீட்டப்பட் டுள்ளன என்பது இவ்விடத்தில் மனங்கொள்ளத் தக்கதாகும்.
மலையக சமூகம் குறித்த தீட்சண்யம் மிக்கது யதார்த்த பூர்வமானதுமான தத்துவார்த்த பார்வையிை கொண்டிராமை காரணமாக இச்சமூக அமைப்பில் நிலவ உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள் என்பனவற்றி அடியாக எழும் சமூக அரசியல் கலாசாரம் குறித் விஞ்ஞான பூர்வமான தெளிவற்றோராய் காணப்பட்டன இவ்வணியினரின் பலவீனமாகும்.
இவ்விடத்தில் தான் இரண்டாவது அணியில் முக்கியத்துவம் உடையவர்களாக காணப்படுகின்றன மாக்ஸியத்தின், உள்ளடக்க கூறுகள் பற்றி லெனி கூறியதை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதி ஐயமில்லை.
‘வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்ற தத்துவ காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியி

前
விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து இதைவிட உயர்தரமான சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கின்றது என்பதை அது காட்டுகின்றது. இயற்கை என்பது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும். பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும். (அதாவது தத்துவவியல், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமான மனிதர் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போத னைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கின்றது. அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொருளாதார அஸ்திவாரத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும்.'
இவ்வாறானதொரு நிலைப்பாட்டினை ஏற்றறுக் கொண்டு அவற்றினை மாறிவருகின்ற மலையகச் சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகிப்பவர்களாக இப்பிரிவினர் காணப்படுகின்றனர், இப்பிரிவில் மரியதாஸ், எல்.சாந்திகுமார் (இன்று இந்நிலைப்பாட்டுக்கு எதிரானவராக சிதைந்து விட்டார்) கேகாலை கயிலைநாதன், எம்.முத்துவேல், சிவ.இராஜேந்திரன் போன்றோருடன் இதன் அடுத்த கட்ட பரிமாணத்தை 90களின் ஆரம்பத்தில் சுவடு பதிக்க தொடங்கிய இளம் தளிர்களான லெனின்மதிவானம், ஜெ.சற்குருநாதன், இராகலை பன்னீர், ஜெ.ட்ரொட்ஸ்கி, முருகவேல், இராமையா முதலானோரையும் குறிப்பிடலாம். இவர்களிடையே சிற்சில நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படினும், பொதுவுடமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு அதன் வழி இலக்கியம் படைப்பதில் முனைப்பு கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
மலையகத்தை பிறப்பிடமாக கொள்ளாத அதேசமயம் அதனோடு தொடர்பு கொண்ட இலக்கிய கர்த்தாக்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களை அடிப்படையாக கொண்டு நோக்கும்போது, இம்மக்களின் மீதான நேசபூர்வமான உணர்வுகள் கொண்டுள்ள அதே சமயம், மலையக மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்வதில் இடர்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வடகிழக்கு சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் இம் மக்கள் குறித்த கரிசனை காணப்படுகின்ற அதே சமயம் நிலவுடமை சார்ந்து ஒரு விவசாய வர்க்கத்திற்குரிய சிந்தனையையே அவர்கள் முன் வைப்பதனை அவர்களின் படைப்புகளை ஆதாரமாக கொண்டு நோக்குகின்ற போது அறியக்கூடியதாக உள்ளன.
யோ.பெனடிக்பாலனின் “சொந்தக்காரன்’, தி.ஞான சேகரனின் ‘குருதிமலை’ முதலிய நாவல்களில் இப்பண்பு முனைப்புற்றிருப்பதை காணலாம். ஒரு காலகட்ட ஆற்பரிப்பில் உழைக்கும் மக்கள் நலன்சார்ந்த பதாகையை உயர்த்தி பிடித்த கவிஞர்களில் ஒருவரான 1977 இல் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இரையான சிவனு லெச்சுமணன் குறித்து கவிஞனின் உணர்வு இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது.

Page 21
'சிவனு எதனைக் கேட்டான்? அவன் உழைத்த பூமியிலே அதற்கு முன்னால் அவன் பூட்டன் சமாதியிலே தனக்கும் ஒரு துண்டு தா என்று கேட்டான்.
துண்டு நிலம் தான் கேட்டான் துவக்கால் அடித்து அவனை தேயிலைக்கு உரமாக்கி திருப்தி அடைந்தீரே' இவ்விடத்தில் "துண்டு நிலம்’ எனும் கூற்று முக்கியமானதொன்றாகும். இங்கு நிலத்துக்கான போராட்டப எனும் விவசாயவர்க்கத்துக்குரிய கோரிக்கை முன் வைக்கப்பட்டன. மலையக மக்களின் வாழ்வியலுடனுப உணர்வுடனும் இணைந்திருந்த தனியுடமைக்கு எதிரான போராட்டம் என்பதனை முன்வைக்க தவறிவிடுகின்றனர் இதன் காரணமாக இவர்களின் படைப்புக்களில் யதார்த்தி சிதைவுகள் காணப்படுகின்றன. கே. ஆர். டேவிட்டின் ‘வரலாறு அவனைத் தோற்றுவித்தது' என்ற நாவல் இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். பொதுவாக நிலவுடமை சார்ந்த விவசாய வர்க்கத்துக்குரிய சிந்தனையை வலியுறுத்துவதில் இப்படைப்பாளிகளிடையே சித்தாந்த ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன என்ற போதினும், நிலம் சார்ந்த சிந்தனையை முனைப்பு படுத்துவதில் ஒற்றுபை யுடையவர்களாக காணப்படுகின்றனர்.
தற்காலப் போக்கில், மலையகத்தில் உருவாகி வருகின்ற மத்தியதர வர்க்கமும் நிலம் சார்ந்த சிந்தனையை முன்வைத்து வருகின்றனர். வே.இராமரின் ‘காணி நிலப வேண்டும்’ என்ற கவிதை இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.
மலையக இலக்கியம் என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட சமூக வமைப்பின் இலக்கிய தொகுதியாக காணப்படு கின்றபை யினால் பாட்டாளி வர்க்கம் சார்ந்த தத்துவ சிந்தனைகள் வேகமாகவும் ஆழமாகவும் மலையக புத்திஜீவிகளின் சிந்தனைகளில் செல்வாக்கு செலுத்தி யுள்ளன. இதன் காரணமாகத்தான் உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக தோன்றிய சித்தாந்தங்களை துய அழகியல் கோட்பாடு, அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் இருத் தலியம் முதலிய கோட்பாட்டு சாம்பார் குவியல்கள் மலைய கத்தில் வேரூன்ற முடியாமல் போனமை ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல.

சாவிற்கு நன்றி
மெதுவாய்க் காதுரசிச் செல்கின்றது சாவு இப்படித்தான் வயதின் மென்நர்த்தனம் இளமையின் உச்சப்பிரதேசத்தில் ஆயினும் சாவுரசிப் போகின்றது என்னை நேற்றுக்கூட மிக அருகிலாகி என் காதுகளில் ஊதிய வாகனத்திலேறி வந்து விரலுரசிப் போயிற்று அது. விழுந்தேன் வாய்க்காலோரமாய். இலையுதிர் காலத்தில் காற்றலைக்கின்ற பழுத்த இலைகள் முதிர்வும் மூப்பும் சொல்லி உயிரைக் குலுக்கின. உள்ளாத்மா. உறைநிலைப்பட்ட மனதுள் உட்கார்ந்து நடுங்கிற்று நடக்கவும் ஒடவும் நான் நினைக்கையில் சடுதியாய் பறக்கிறது காலம் நாவரண்ட என் அழைப்பை எச்சிலாய்க் கருதி வீசிவிட்டு. நிச்சயமாய் நாளை சாவென்னைத் தொற்றும் உடல் அழுகும் w அடடே! வாழ்வை பாம்பாய்ச் சுற்றிற்றா சாவு? கழுத்தைத் தடவினேன் விரலிடுக்கில் வழுவழுப்பாய்ச் சிக்கிற்று அது. உணர்ந்ததில் எழுந்தேன் என் ஜீவிதம் நிலைப்புற. சாவிற்குச் சொன்னேன் நன்றியென. என் வாழ்விலுண்மை சுட்டி ஒளிக்கு நகர்த்திற்றாதலில்!
ச.சாரங்கா
أص

Page 22
r பட்டறிவு
ஆச்சரியம் கூட ஆச்சரியப்படுமளவு வீச்சுவலி கொண்டிறந்த வீரர்காள்! உம்முட்ைய பேச்சு, பெருந்தன்மை, (560). 260 - U1660)60Tas6 அச்சமென் றொன்றறியா ஆண்மையுள்ள சிந்தனைகள் உலகே விதந்துரைக்கும் ஊடுருவல் நுட்பங்கள் விலையே சொல்வேலா விதைப்பு அறுவடைகள் களை என்று நீர் கருதும் களை அழித்தல், மறுப்பின்றிப் பிழை சரிகள் கேட்காமல் பெரியோன் சொல்பின்பற்றல்
உள்ளே படு கொலைகள் எள்ளி நகையாடும் அளவிற்கு இடவாதம்- ஆயிடினும் தந்கை தாய் துறந்து தாராளப்போக்கோடு எந்தை தாய் மட்டுமல்ல இனிதான சுகங்களெல்லாம் சொந்த மண்மீட்பே எனச் சொல்லிப் போய் முடிந்தீர்.
இந்த மனநிலையில் எத்தனை சா இதுவரையில்? இதற்குள்ளே அகப்பட்ட இருபத்தைந்தாண்டுகளில் * எத்தனையை இழந்திருப்போம்?
எந்தத் தலைமையின்கீழ் எம்முயிரைக் கொடுத்தோமோ எந்தத் தலைமையினை எம் வீரமாய் நினைத்தோமோ
కీళ్ల எம்முடைய வேண்டுதல்கள் சொந்தமாய் ஓர் முடிவை, போனவரின் மெய்க்கனவை, எந்தப்பாடுபட்டும் எடுத்து நிலை கொள்ளாட்டில் காலம் தன்கையில் சேறடித்துச் செருப்பெறிந்து கொலைகாரன் கள்ளனென்று பட்டமிடும் இதுவழமை, வரலாறு. இருக்கிறவன் ஒரு பெரிய மயிரில்லை நாளைக்கே எருக்கலம் பூவாய் மாறிப்போவான் வாய்ப்புண்டு ஆதலினால் மாண்டவரின் கனவை ஆண்டவனே மனதிருத்தி வேண்டியதைத் தருக 'வெங்காயம் ஆறுதற்குள்
தி.திருக்குமரன் لر  ܼܲܢܠ

(5GT Lib
ஜீ. கிருபானந்த்
வெள்ளி ரதமொன்று- மெல்ல வரும் நேரம் துள்ளும் முத்துக்களின், கலகலக்கும் சத்தங்களை, அள்ளி களிக்கும் மழலைகளின் கோலம் காதல் திருவாளன்
பரிவடம் பிடித்து தேன் கிண்ணம் தனைத் தந்திடவே பாய்ந்து வரும் கனா சொல்லும் கன்னி மன வானில்- கானம்.
துள்ளும் புள்ளிமான்கள் வெருளும் கன்னிமான்கள் அள்ள நினைக்கும் காளைகள் கள்ளி போகும் பேதைகள்.
ஆண்ட அதாண்டவத்தில் சிதறிப்போகும் தேங்காய்ச் சத்தமிடையில் அள்ளி உருட்டும் திருடர்கள்.
எட்டுநாள் திருவிழாவின் எட்டாம்நாள் இன்றென்று ஒன்பதாம்நாள் உண்டிக்காய் அங்கலாய்க்கும் பிச்சைகள் அவை பட்டுப்பூச்சிகள்.
இத்தனைக்கு மிடையில் எல்லாளன் நாட்டு தள்ளாத கிழவன் கல்லாத பிணமாய், செல்லாத காசாய் சேற்றிடையில்!
பட்டாம் பூச்சியோர் மனது
...Jقیقی قیبلہ ( ஏந்திப் பிடித்திட எட்டிப் பாய்ந்திட தன் கட்டை கால் தடுக்கி கரகரக்குது தன் சக்கர நாற்காலிச் சில்லு சேற்றிடையில் கரகரக்குது முன்னொருநாள் அடம்பிடிக்க அந்நினைவால் கதகதக்கு தன் மனது கதகதக்குது. འདི་
எழுந்து வந்த சிரிப்பலையால் சலசலக்குது உளம் கலக்குது இன்னுமந்த வெள்ளிரதம்
பளபளகசூது பாரிக்கொடியங்கே சரசரக்கு சருகாய் சரசரக்குது முல்லைக்கொடியேதோ முணுமுணுக்குது.

Page 23
நெஞ்சு வெடித்தது நாகராஜனுக்கு. பிறரிடம் சொல்லவும் இயலவில்லை. தன்னால் தன் மனதை ஆற்றிக் கொள்ளவும் முடியவில்லை. குறுக்கும் நெடுக்குமாகவும் அவன் நடை பயிலவில்லை. கோபம் வந்தால் தானே அப்படி நடப்பான் அவன். ஓர் இடத்தில் உட்காரவும் அவனால் இயலவில்லை. மனம் தவிக்கையில் எப்படி உட்காருவது? இப்படியாக நாகராஜன் அவஸ்தைப்பட்டான்.
எப்படியாவது மனதில் ஒரு வழி பிறக்கும்தானே. அதுதானே மன இயல்பு. நாகராஜனுக்கு எப்போதும் ஆறுதல் அளிப்பது, வீட்டின் முகப்பில் நிழல் பரப்பிச் சடைத்திருக்கும் மாமரம் தான். காய்க்காத மரம்தான் அது ஆனால் நாகராஜன் அந்த மரத்தை தறிக்கவில்லை. ஏனெனில் அந்த மாமரம் அவன் அண்ணனால் தரையில் பதித்து வளர்க்கப்பட்டது. நாகராஜன் மாமரத்தின் கீழ் கட்டப்பட்டிருந்த நீள்சதுர சீமந்துக் கல்லின் மேல் அமர்ந்தான். (உட்காருவதற்காக அது கட்டப்பட்டது)
`அண்ணா இத்தனை நாட்களாக என் வீட்டுக்கு வரவில்லைத்தான். அதற்கு ஒரு காரணம் இருக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இன்று அப்பாவின் ஆண்டுத்திவசத்திற்கு வராததில் இருந்துதான் தெரிகிறது
{ij[[löbD. 50
 
 

இடைவெளி
-GGH2T LJNg
அந்தக் கோபம் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டான் நாகராஜன்.
மாமரத்திற்கு நேர் எதிரே வீட்டுப்படலை. இரும்புப் படலைதான். படலையைத் தாண்டினால் வீதிக்குச் செல்லும் ஒழுங்கை.
பொழுது சாயும் நேரமல்லவா? நாகராஜன் வீட்டு ஒழுங்கையில் வசிக்கும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் விளையாட்டு ரசிகர்களாக அந்த ஒழுங்கையில் வசிக்கும் குஞ்சு குருமன்கள் இருந்தார்கள்.
நாகராஜனின் மூத்தவன் கண்ணன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். கண்ணனுக்கு வயது பத்தை நெருங்கிவிட்டது. வீட்டு ஹோலுக்குள்ளும் கிரிக்கெட் விளையாடுவான். அபபடி ஒரு கிரிக்கெட் பைத்தியம்.
அவன் விளையாட்டு வீட்டின் கண்ணாடி யன் னல்களைப் பதம் பார்ப்பதும் உண்டு. அந்த வேளைகளில் நாகராஜனிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொள்வான்.
நாகராஜனுடைய இளையவன் குமரன். தன் அண்ணனின் பரம ரசிகன். தமையனின் விளையாட்டுத்தனம் வீட்டு கண்ணாடி யன்னல்களைப் பதம் பார்க்கையில் குமரன் குதுகலிப்பான். இப்போது கூட தமையன் விளையாடுவதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டுதாணிருக்கிறான்.
குமரன், கண்ணனை விட நாலு வயது இளையவன். `கண்ணனும் குமரனும் வலு நட்பு என்பதை
நினைக்கையில் நாகராஜனுக்கு நெஞ்சில் இருந்த வலி
அதிகரித்தது. `நானும் என் அண்ணனும் எவ்வளவு ஐக்கியம். நானும் அண்ணனின் ரசிகன் தானே.சிறுவயதில் அண்ணன் விளையாடும் போது அவன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்தேன்.
முன்னர் எங்கள் ஊர்த் தரவையில் என் அண்ணனும் அண்ணனின் வயதொத்த பொடியன்களும் கிளித்தட்டு

Page 24
விளையாடுவார்கள். நானும் அண்ணன் பின்னால் இழுபடுவேன். தலையில் தொப்பி ஒன்றைப் போட்டுச் கொண்டு ஒதுங்கி அமர்ந்து இருப்பேன். அண்ணன் விளையாடுவான். நான் கைவிரலால் தரையில் வைரவ சூலம் வரைந்து “ஆல வைரவா சுழட்டிக் கொடடா என்று திரும்ப திரும்ப அண்ணன் வெற்றி பெறும் மட்டுப வாய் உழைய உழைய மனதுக்குள் சொல்லி இருக்கிறேன் தரையில் சூலம் கீறுவதை எனக்குப் பக்கத்தில் இருக்குப் பெடியன்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக மனது அப்போது பட்ட அவஸ்தை. சூலம் கீறுவதை பிறர் பார்த்து விட்டால் அந்த முயற்சி பலிக்காதே. நினைத்துப் பார்க்கையில் கண்ணிர்த்துளிகள் எட்டிப் பார்த்தன நாகராஜனுக்கு.
`அண்ணன் ஹச் பிடிச்சுப்போட்டான்; எங்கடை அண்ணா ஹச் பிடிச்சுப்போட்டான்’ குமரன் தன் தொண்டை கிழியக் கத்துகிறான். தன் அண்ணன் அணியில் தன் அண்ணன் திறமையாக விளையாடுகையில் வழமையைவிட கூடுதலாகக் குமரனின் வாய் திறக்கும். குமரனும் கண்ணனும் வளர்ந்து ஆளானதன் பிறகு எங்களைப் போல.... நினைத்துப் பார்க்க நாகராஜனின் மனம் இடம் கொடுப்பதாயில்லை.
குமரன் மறுபடியும் கத்துகிறான். `அண்ணா விக்கெட் விழுத்திப் போட்டான். இது இரண்டாவது விக்கெட் குமரன் திரும்பத் திரும்பக் கத்துகிறான். `என்ை அண்ணன் மூன்று விக்கெட் விழுத்தினவன்’ குமரனின் வயதொத்த அயல்வீட்டு பெடியன் குமரனுக்கு மேலாக கூறுகிறான்! அந்தப் பெடியனின் அண்ணனும் கிரிக்கெட் விளையாடுகிறான்.
`பாற்ரா என்ரை அண்ணன் இன்னும் விக்கட் விழுத்தாட்டில்.... குமரன் அவனுடன் சண்டைக்குட் போகிறான்.
நாகராசன் தன் காலத்துக்குச் சென்றான்.
米米家 米米 冰壮
அப்பொழுதெல்லாம் நான் அண்ணனுக்குப் பிறகால் வால் பிடித்துக்கொண்டு திரிந்தேன். அண்ணனுக்கு மட்டும் என்னவாம். நான் அவன் பின்னால் இழுபடாவிட்டால் அவனால் இயங்க முடியாதே.
நாகராஜன் இந்தச் சம்பவத்தை அடிக்கடி நினைத்துக் கொள்வான்.
நாகராஜன் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். `அண்ணனுடன் தானும் ரவுண் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும் இது நாகராஜனின் அவா. அவன் அண்ணனுக்கும் தம்பி தன்னுடைய பள்ளிக்கூடத்தில் தான் படிக்க வேண்டும் என்று ஆசை தம்பியுடன் கூடிக் கதைச்சுச் சிரித்தபடி பள்ளிக்கூடம் போக.
அம்மா. நான் அண்ணாவின்ரை பள்ளிக்கூடத்திலை

படிக்கப் போறன்’ என்று நாகராஜன் வீட்டில் தாயிடம் நச்சரிக்கத் தொடங்கினான்.
`இன்னம் கொஞ்சம் வளர்ந்ததன் பிறகுதான் நீ அண்ணாவின்ரை பள்ளிக்கூடத்திற்குப் போறது... அம்மா சொன்னாள்.
”அம்மா நான் தம்பியை கவனமாய் கூட்டிக்கொண்டு போய் வர மாட்டேனா என்று அண்ணா எனக்காக அம்மாவுடன் சினந்து வாதாடினான். இறுதியில் நான் அண்ணாவின் ரவுண் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டேன். எனக்குச் சரியான சந்தோஷம்.
நான், அண்ணாவுடன் முதன் முதலாக நகரத்து பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போனேன். பரந்தாமன் எங்கள் ஊர்ப்பொடியன். ரவுண் பள்ளிக் கூடத்தில் தான் அவனும் படித்தான். எனக்குப் பரந்தாமனின் பக்கத்தில் தான் உட்கார இடம் தரப்பட்டது.
நான் பரந்தாமனுக்குப் பக்கத்தில் உட்கார மறுத்து விட்டேன். நான் பரந்தாமனுடன் கதைப்பதும் இல்லை. அம்மா அடிக்கடி என்னை ஏசுவாள். `உன் அண்ணா பரந்தாமனின் அண்ணனுடன் கோபம் என்பதற்காக நீ ஏன் பரந்தாமனுடன் கதைக்காமல் விடவேண்டும்’
நான் கத்துவேன்! ... அண்ணா கதைக்காத பெடியன்களோடை நான் கதைக்கமாட்டேன். அவையின்ரை தம்பிமாரோடையும் நான் கதைக்க மாட்டேன்... அம்மா என்காட்டுக் கத்தலுக்குப் பயந்து மறுபேச்சுக் கதைக்க மாட்டாள்.
அண்ணன் மட்டும் என்ன குறைச்சலோ? எனக்கு ஒத்து வராத பெடியன்களின் தமையன்மார் அவனுடன் படித்தபோதும் கதைப்பதில்லையே.
ஏன் இப்போது மட்டும் எனக்கு என்ன குறைச்சல், அண்ணனுடைய கந்தோரில் வேலை பார்க்கும் சதாசிவத்திற்கும் அண்ணாவுக்கும் இடையில் முறுகல். சதாசிவத்துடன் நான் கதைப்பதில்லை. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகியும்.
சிறுவயதில் அண்ணாவும் நானும் இணைந்து தான் சாப்பிடுவோம்; விளையாடுவோம்; படிப்போம்; ஊர் சுற்றுவோம். எல்லாவற்றிலும் இணைவு. அதில் ஒரு சந்தோஷத்தை உணர்ந்தோம்.
அண்ணாவும் நானும் ஒருபாயில்தான் படுப்போம். நான் அண்ணாவுடன் கதை பேசிக் கொண்டே நித்தி ரையாகிவிடுவேன். நாங்கள் வளர்ந்ததன் பிறகு சிறு வித்தியாசம். அண்ணாவும் நானும் வேறு வேறு பாயில். ஆனால் அருகருகேதான் பாயை விரித்துக் கொள்வோம். `என்னடா உங்களுக்கு வெட்கம் இல்லையோ' என்று அம்மா பேசுவாள். நாம் அதை எல்லாம் பொருட்படுத்துவதில்லை.
அண்ணாவுக்கும் எனக்கும் இடையில் ஐந்துவயது இடைவெளி என்றாலும் நான் அண்ணாவை `டேய்’ என்று
GMTUdbUD. 50

Page 25
சிறுகதைத்தொகுப்புக்கான போட்டியில் பரிசு பெற்ற சாரங்கா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு
أص ܥ
தான் அழைப்பேன். வயதுக்கு மூத்தவனை இப்படியா கூப்பிடுவது` என்று அம்மா கடிந்து கொள்வாள். சிறுவயதில் தான் இப்படி என்றால் வளர்ந்ததன் பிறகும் அப்படியேதான். அம்மாவுக்கு என்மீது சரியான கோபம். நான் அண்ணாவை `டேய்’ என்று கூப்பிடும் பொழுது வயது வந்தும்.` என்று ஆரம்பித்து அம்மா பேசுவாள். அண்ணா சொண்டால் சிரிப்பான். எனக்கு அந்தச் சிரிப்பைக் காணச் சந்தோஷமாய் இருக்கும்.
அண்ணாவின் படிப்பு முடிந்தவுடன் அவனுக்கு கிளறிக்கல் போஸ்ற் கிடைத்துவிட்டது. அப்பொழுது நான் தான் அண்ணாவை விட அதிகமாகச் சந்தோஷப்பட்டேன். என்னுடைய சந்தோஷத்தைப் பார்த்து அம்மா, என்னடா அண்ணன் ஏதோ உனக்கு உழைத்துத் தரப்போறான் போலை சந்தோசப் படுகிறாய். நீ உழைத்தால் தானே உனக்கு கையிலை காசுசேரும்` என்றாள்.
நான் அதை எல்லாம் சட்டை செய்யவில்லை. அண்ணனின் சம்பளத்தில் தாராளமாகச் செலவு செய்வேன். அண்ணாவின் அனுமதி இன்றி அவனின் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் காசு எடுப்பேன்.
இதைக் கவனித்த அம்மா 'உனக்கு அண்ணன் நல்லாய் இடம் தந்திட்டான்’ என்று அண்ணனின் எதிரில் சொன்னாள். நான் தோளைக் குலுக்கிக் கொண்டு அண்ணாவைப் பார்த்தேன். அண்ணா என்னை ஆழமாக நோக்கினான். நான் மென்மையாக புன்னகைத்தேன்.
ஆனால் அண்ணா கலியாணம் கட்டியவுடன் என்னால் அப்படி அவனின் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கைவைக்க முடியவில்லை. அண்ணி மிகவும் நல்லவர் என்னை தன் சகோதரராய் பாவித்தார். அப்படி எடுத்தால் அண்ணாவோ, அண்ணியோ கோபிக்க மாட்டார்கள். அண்ணாவின் மனசு நன்றாக எனக்குத் தெரியும். கலியாணம் கட்டியதன் பிறகும்
 

அண்ணா தாராளமாய் என் செலவுக்குக் காசு தந்தவன். ஆனால் அவனைக் கேட்டே காசு வாங்கத் தொடங்கினேன்.
ஏன் அண்ணா கலியாணம் கட்டியதன் பிறகு அண்ணாவை ‘டேய்’ என்று அழைப்பதை நிறுத்திக் கொண்டேன். அப்படி அழைக்கக் கூடாது என்று எண்ணி மரியாலதப் பன்மை கொடுக்கவில்லைநான். என்னுள் தன்னிச்சையாக நிகழ்ந்த மாற்றம் இது.
சரி, இனிப் பிரச்சனைக்கு வருவோம். அதற்கு முன்னர் இன்னும் ஒன்று உள்ளது.
நானும், அண்ணனும் சகோதர உறவுக்குள் என்னென்ன விடயங்கள் அலசப்படக்கூடாதோ, அவற்றை எல்லாம் அலசி இருக்கிறோம். பெண்கள் பற்றி, எதிர்கால வாழ்க்கைத் துணை குறித்து. ஆழமாகப் பேசி இருக்கிறோம்.
இப்பொழுது என்ரைமனிசியின்ரை குறைகளையோ, நிறைகளையோ நான் அண்ணனுடன் பகிர்ந்து கொள்வ தில்லை. ஆனால் இப்படி எல்லாம் கதைக்க வேண்டும் என்று நாம் இருவரும் முன்பு தீர்மானித்திருந்தோம்.
இனிப் பிரச்சினைக்கு வருகிறேன். இதுதான் எனக்கும் அண்ணனுக்கும் இடையில் உள்ள பிரச்சனை.
நாங்கள் அதுதான் அண்ணனும் நானும் கலியாணம் கட்டி நல்ல ஒற்றுமையாக இருந்தோம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அண்ணன் துடித்துப் போய்விடுவான். நானும் அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறிவிடுவேன். ஊருக்குள் எங்கள் மீது சற்று பொறாமை கூட. இப்பொழுது நினைக்கிறேன், எங்கள் ஒற்றுமையைப் பரீட்சிக்கும் நிகழ்வுகள் நிகழவில்லையோ என்று.
நடந்து முடிந்த நிகழ்வுகளை மீள் பரிசீலனைக்கு எடுத்துப் பார்க்கிறேன். அப்படித்தான் போல தெரிகிறது. இப்பொழுது நடந்ததோ சிறு பிரச்சனை. மிகச் சிறு பிரச்சனை.
அண்ணனின் கந்தோரில் வேலை பார்க்கும் சதாசிவத்திற்கும் அண்ணனுக்கும் இடையில் சிறுபூசல், சதாசிவம் எங்கள் உறவுக்காரன் தான். ஆனால் எங்களுக்குள் போக்குவரத்து இல்லை.
சதாசிவம் படு நஞ்சன். பிறர் நன்றாக இருப்பதைப் பொறுக்கமாட்டான். எதிலும் தன் நலத்தையே கருதுவான். அண்ணனை அவன் மதிப்பது இல்லை. சதாசிவம் அண்ணனின் கந்தோரில்தான் வேலை பார்க்கிறான்.
எங்கள் ஊரிலை நல்ல தண்ணீர் கிணறு இல்லை. கிணறு வெட்ட எங்கள் ஊர்க் கிராம அபிவிருத்திச் சங்கம் முடிவு எடுத்தது. சதாசிவமும் என் அண்ணனும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள். சதாசிவம் தன்னுடைய வீட்டுக்கு அண்மையில் கிணறு வெட்ட முயற்சித்தான். அண்ணனோ பொதுவான இடத்தில்தான் கிணறு வெட்ட வேண்டும் என்று அடித்துக்கூறிவிட்டான். இதுதான் என் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் உள்ள பிரச்சனை. ஆனால் சதாசிவம் இதனை நஞ்சுப் பகையாகக் கருதினான்.

Page 26
அண்ணனைப் பற்றி ஊரில் அவதூறு கிளப் கந்தோரில் வேலை பார்க்கும் பெண் ஒருத் அண்ணனுக்கும் இடையில் கள்ளத் தொடர்பு இருட் கதைகட்டி ஊரில் உலாவ விட்டான். என்னால் இ பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் சதாசிவ எச்சரிக்கை விடுத்தேன். அந்த நாள் பருவநிலை 6
அண்ணனுக்கு ஏனோ இது பிடிக்கவில்லை. என்னுடைய விஷயத்திலை தலையிடுகிறாய்...என்
’ஏன்டா, நான் உன்ரை விஷயத்திலை தை கூடாதோ? உனக்கு வந்தது எனக்கு வந்ததுத என்றேன். என் மனசால் இந்தக் கேள்வியைத் த கொள்ள முடியவில்லை.
‘'நீ இப்ப மாறிப்போனாய்’ என்றான் அண்ணன் ஒருமாதிரியாக,
`மாறினது நீதான். உன்ரை விஷயம், என்ரை வ
எனப் பிரித்து பேசுகிறாய். உனக்கு ஏற்பட்ட அ எனக்கு ஏற்பட்டதல்லவோ'
`நான் அதற்குச் சொல்லவில்லை` என அண்ணன்.நான் ஒன்றும் புரியாமல் `அப்பட்என்றே6
...மரியாதை இல்லாமல் `டேய்’ என்கிறாய்... எ அண்ணன். நான் அதிர்ந்துவிட்டேன்.
எங்கள் இருவரதும் சண்டையை எதிர்பாரா; அதிர்ச்சியுடன் நின்று பார்த்துக் கொண்டிருந்த அ `எல்லாம் உவனுக்கு நீ கொடுத்த இடம்தான்.இப்ெ உணர்ந்து கொள்’ என்றாள்.
அண்ணன் அன்றைக்குப் பிறகு என் வீட் வருவதில்லை. இன்று அப்பாவின் திவசத்திற்கு வ போனதில் இருந்துதான் எனக்கு அண்ணனின் ே புரிகிறது.
எனக்கு இப்பொழுது புரிகிறது. பருவகாலங்கள் வாழ்விலும் பருவகாலங்கள் வந்து போகின்றன. அன்று கூட்டுக்குள்ளான அண்ணன் தம்பி உறவு இன்று வேறு கூட்டுக்குள்ளான அண்ணன்-தம்பி உறவு. காலங்கள் மாறுவது போன்று உறவின் பருவகாலங் விரிசல்கள். உணர்ந்தபோது நெஞ்சு இன்னும் அதி வலித்தது. w
நான் நிகழ் காலத்திற்குவர, விளையாட்டு மு கண்ணனும், குமரனும் வீட்டுக்கு வருகிறார்கள். ' அண்ணா நீ நாலு விக்கெட் விழுத்திப்போட்டாய். ச கெட்டிக்காரனடா குமரன் தமையனுக்குக் கூற அ6 நெருக்கம் எனக்குள் வலியை எழுப்புகிறது.

னான். க்கும் தாகக் னைப் ந்திற்கு னககு. நீ ஏன்
T60.
)யிடக் (360' ாங்கிக்
சற்று
|ஷயம் gill ()
ாறான்
ன்றான்
ததால் ம்மா, T(95
டுக்கு ராமல் காபம்
மாதிரி | j ଔରily Lk[b6]] ளுள் bDíőb
உந்து டேய் uJT60T ர்கள்
அசைவு
இரும்பு இயந்திரங்களுடன் மனிதனும் இயந்திரமாய்.
ஊதியம் என்பது வாங்கும்போதுமட்டுமே எண்ணிப் பார்த்துக்கொள்ளப்பட வேண்டியது.
உழைப்பு என்பது உடலையும் உள்ளத்தையும் வருத்தித்தர வேண்டிய தானம்.
எவர் உடைந்தாலும் இயந்திரம் வாழவேண்டுமென எண்ணும் இரும்புப் பெட்டகம்.
தான் அள்ளியெடுக்க கிள்ளிக் கொடுக்கும் முதலாளி.
ஒரு நிமிட தாமதத்துக்காய் ஒரு மணிநேர உழைப்பைக் கழிக்க சம்மதிக்கும் வறிய கரங்கள்.
விரயமின்றிய உற்பத்திக்காய் கண்களில் எண்ணெயூற்றிக் காவலிருக்கும் கோடீஸ்வரக் குஞ்சுகள்.
பொன் நகைகளையே சுமந்து களைத்துப் போயிருக்கும் அவன் குழந்தை.
ஈவுஇரக்கம் என்பதையே தொலைத்துவிட்ட இருக்கும் வர்க்கம்.
கர்ண கடூரப் பார்வையுடன் கல்நெஞ்சத்து வார்த்தையுடன் கருமத்தில் கண்ணாயிருக்கும் அடிவருடிக் கங்காணிகள்.
தாகந்தீர்க்கவும் தயவுகாட்டாத தர்க்கத்தீட்டிகள்.
அத்தனை கொடுமைகளையும் துச்சமாய் மதித்து வாடும். அக்காளின் கல்யாணத்துக்காய் தம்பியின் மனம்.
இ.சிவலிங்கம் சிவபாலன் -பரிஸ்
56jbUD - 50

Page 27
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்" -குறள்.
வந்தனாவின் மனதில் ஒரு தீர்மானம் உறுதியாகப் பற்றிக் கொண்டது. நாதனின் இம்சைகளைப் பொறுத்துக்கொண்டு இன்னும் எத்தனை காலம் தான் இந்த நரக வாழ்வில் கிடந்து உழல்வது?
இந்த ஒட்டுறவிலிருந்து நிரந்தரமாக நீங்கிவிடும் எண்ணம் கடந்த சில நாட்களாகவே வலுப் பெற்றுக்கொண்டு வந்தது. திருமண பந்தம் ஏற்படுத்திய தெய்வீக உறவிலிருந்து விடுபட்டு ஒரு பெண் தன் கணவனிடமிருந்து விவகாரத்துக் கோருவது தவறு என்று நீங்கள் கூறலாம். ஆணாதிக்க சிந்தனையின் பாற்பட்ட இந்த உலகத்தோரிடமிருந்து வேறு என்ன அபிப்பிராயத்தை எதிர்பார்க்க முடியும்?
உறவே வெறும் உடல் சம்மந்தப் பட்டதாக இருந்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அதையும் மீறி ஒரு அடிமையாகி, ஆணின் வக்கிரகங்களுக்கெல்லாம் அடிபணிந்து, அடியுதைபட்டு வாழ்ந்துதான் எமது பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமா?
“எத்தனை தடவை கூப்பிடுகிறேன்?" இன்னும் லேசாய்க் குனிந்த தலையோடு புத்தகத்தில் கவனமாயிருப்பது போல பார்வையைப் பதிய விட்டிருந்தாள் அவனது எதிர்பார்ப்புக்களை எல்லாம் மறுத்து புறக்கணிக்கும் ஒரு உணர்வு அவளில் படிந்திருந்ததைச் கண்ட அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் மேலெழுந்தது.
“வந்தனா." அவனது குரலில் கடூரம்.
 

ந்ேது நாளும் வந்திடாதோ?
.ഗ്രീക%9മ്രൽ)
அவள் அசையவில்லை. படித்துக்கொண்டிருந்த கதையோடு ஒன்றிப்போயிருப்பதை உறுதிப்படுத்துமாப் போல் ஒரு பக்கத்தைப் புரட்டிவிட்டு, தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள்.
நாதனுக்குக் கோபம் தலைக்கு ஏறியது. எனினும் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட, நாறிப் போயிருக்கும் சண்டை தொடரக்கூடாது என்ற உள்ளுணர்வின் எச்சரிக்கையில் கோபத்தின் வேகத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் முகட்டை வெறித்தபடி படுத்திருந்தான்.
இரவின் அமைதியில் உலகம் உறங்கிக்கொண்டி ருந்தது. அவர்கள் இருவர் மனதிலும் அமைதியின்றி, பிரளயம் குடிகொண்டு தூக்கத்தை தொலைதுரம் விரட்டிக் கொண்டிருந்தது.
முதுகுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் கட்டிலில் கணவன் ஒருக்களித்துப்ப படுத்திருப்பதும், அவன் வரவை எதிர்பார்த்திருப்பதும் வந்தனாவுக்குப் புரிகிறது. அவனது ஒவ்வொரு உணர்வலையும் மனமின்றி தன் மறுப்பினை சொல்லாமல் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
பெண், மனைவி என்றால் வெறும் போகப் பொருளா? அவளால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.
கடந்த ஓரிரு தினங்களாகவே அவளது மனப்பரப்பு முழுக்க ஒரு எரிமலையின் வெம்மை வெடித்தெழத் தொடங்கியிருப்பதை வந்தனா உணர்ந்து கொண்டிருந் தமையினால், அவனைப் புறக்கணித்து, அதனால் தன் மன வெம்மைக்கு ஏதோ ஒருவித வடிகாலாக இதைச் சாதித்துக் கொண்டிருந்தாள்.
அவள் எழுந்து சென்று அவனிடம் சரணடைந்து விட்டால் இந்தக் கணத்தில் இறுக்கம் தளரலாம். எனினும் முருங்கை மரமேறும் வேதாளமாக மறுபடியும் பின்னர் வீறு கொண்டு எரிக்கும் வெயிலாக மாறித் தவித்த கடந்த சில நாட்களின் அனுபவப் பட்டறிவானது, பணிந்து போய் உடலால் சங்கமமாவதைத் தடுத்தது.

Page 28
விரித்து வைத்திருந்த புத்தகத்தில் அவளையும் மீறி கண்ணிர்த் துளிகள் முத்தமிட்டன. வாழ்க்கையின் வசந்தம் என்பது வசீகரமான வார்த்தைகள்! அந்த வசந்தம் தான் வாழ்வில் தொலைந்துவிட்டதாக அவளுக்கு ஒரு குமைச்சல், பைத்தியம் பிடிக்காதது தான் ஒரு குறை. மற்றும்படி எல்லாச் சித்திரவதைகளையும் ஒரு தமிழ் சிறைக்கைதி போல் அனுபவித்தாயிற்று.
அவன் அருகில் இல்லாத வேளைகளில் விசித்து விசித்து அழுது தீர்ப்பாள். அப்படி அழுது தீர்க்கும் போது அவளது நெஞ்ச அழுத்தம் குறைந்து மனசு லேசாகி, கொஞ்சம் தெம்பு ஏற்படும்.
ஆனால் அவன் அருகில் இருக்கின்ற போது, அவன் முன்னே அழக்கூட அவளது தன் முனைப்பு விடுவதில்லை. எவ்வளவு தான் மனதைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் விரக்தியின் தீச்சுவாலைகள் அதற்கு இடம் அளிக்காமல் ஆழ் மனதைக் கருக்கியது.
காலையில் முதல் பஸ்சிலேயே புறப்பட்டு, அண்ணாவிடம் செல்லவேண்டும். அண்ணியின் தோழில் முகம் புதைத்து அழுது அழுது ஆறுதலடைய வேண்டும். அண்ணாவை நினைக்கும் போதெல்லாம் அவளது மனம் பாகாய் உருகும். சின்ன வயதில் அம்மா பொம்மர் குண்டு வீச்சில் பலியாகிப் போன பின்னர், அந்தக்குறை தெரியாமல் அவளை உருவாக்கியது அண்ணா ஆனந்தன் தான், அந்த இனிய நினைவுகள்.
வந்தனா, இந்தப் புடவை உனக்குச் சுப்பராய் இருக்கடி அன்று பாடசாலைக்குச் சென்ற அவளைச் சக ஆசிரியைகளெல்லாம் பாராட்டினார்கள்.
அந்தச் சேலை புது வருடத்துக்காக அண்ணா அவளுக்கு வாங்கித் தந்தது. அதிக விலை என்று சொல்லிவிட முடியாத, ஆனால் அற்புதமான தெரிவு! அண்ணா இப்படித்தான், அவன் அவளுக்கு எதைச் செய்தாலும் சிறப்பாகவே இருக்கும். அவளது மனதுக்கு எது பிடிக்கும், எது மச் ஆகும் என்று அவனுக்குத் தெரியும். அப்படி ஒரு திறமை அவளிடம் இருப்பதை வந்தனா பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறாள்.
ஆனந்தனை நினைக்க அவளுக்குப் பெருமிதமாக இருக்கும். அவள் மீது எல்லையில்லாத அன்பைக் கொட்டி அவன் செய்யும் காரியங்கள், அவளுக்கு, அவன்மீது பாசத்தையும் மதிப்பையும் பல மடங்காக அதிகரித்திருந்தது. அவன் தனது நண்பன் நாதனை அவள் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, இவனை உனக்குப் பிடித் திருக்கா? என்று கேட்டபோது, அவள் வேறு எதையும் பற்றி சிந்திக்கவில்லை. அண்ணாவின் தெரிவு அற்புதமாகத் தானிருக்கும் என்று உறுதியுடன் பச்சைக் கொடி காட்டினாள். நாதனும் நல்ல ஒரு கணவனாகத் தான இனித்தான். இவள் இழுத்த பாட்டிற்கெல்லாம் தலையசைத்தான், வந்தனா வசந்தம் வந்ததென பூரித்தாள்.

எதுவுமே அதன் ஒழுங்குடன், அதனதன் சுவாரஸ்யத்துடன், அதனதன் இயல்பான உணர்வு கெடாமல் இருந்தால்தானே அழகு? மாறுபடும் விருப்பு வெறுப்புகள் முரண்பட்டு, உடைவுகள் ஏற்படுகின்ற போது அது கோபத்திற்கான மூல வேராகி விடுவது நிதர்சனமானது அல்லவா?
இவர்கள் இனிய வாழ்விலும், மனதில் வலிகள் ஏற்படக் காரணமான முரண்பட்ட ரசனைப் போக்குகள், கோபதாபங்களுக்கு வித்திட்டன.
துயிலுரியும் துச்சாதனனாகப் பல இரவுகளில் உறவு கொள்ள உடலை ஒரு சாதனமாக மட்டும் பார்க்கின்ற நாதனின் போக்கு, மோக மயக்கத்தில் முதல் சில மாதங்களில் புரியாதுவிட்டாலும், காலப் போக்கில் அவளுக்கு இது புரிய வந்த போது வெறுப்பும் வேதனையும்தான் மிஞ்சியது. சேலை தரும் கண்ணபரமார்த்தாவாகத் தன் கணவன் இருக்க வேண்டும் என்று கற்பனை உலகில் சிறகடித்துக் காத்திருந்த வந்தனா, கெளரவர் சபையில் கைவிடப்பட்ட பாஞ்சாலியாக தன்னை உணர்ந்தாள்.
பெண்ணுக்கும் ஒரு மனதுண்டு, அவளும் ஆணைப் போல் சகல அபிலாசைகளும் நிறைந்த ஒரு பிறவிதான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக நாதனின் சுய விம்பம் வெளிப்பட்ட போது அவளது வானவில் கனவுகள் கண்ணிர் மழையில் மங்கி மறைந்து போனது.
அடிக்கடி ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும், தன்னை நெறிப்படுத்தவும் அவள் மேல் கொண்ட விட்டுக் கொடுப்புகள் கூட விழலுக்கு இறைத்த நீராகிப் போனது. கடந்த சில நாட்களாக, அவள், வாழ்வே பிடிப்பற்ற நிலையில் ஊமையாய் மனதில் அழுது அழுது வெடித்தால், அவ்வப்போது அவளின் தாக்குதலால் உடலில் ஏற்பட்ட காயங்களைவிட, உள்ளத்தின் காயங்கள் சீழாய் வலித்தது.
சமூக நிர்ப்பந்தங்கள் தான் இன்றுவரை உறவை வாடவிடாமல் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இது தொடர்ந்து சாத்தியமாகும் போல் வந்தனாவுக்குத் தோன்றவில்லை.
இன்று பிரிவை எண்ண வைப்பதும்கூட, மனதில் ஏற்படுகின்ற நிர்ப்பந்தங்கள்தான்! வாடிக்கொண்டிருக்கும் மரம், ஒன்றில் மீளத் தளிர்க்கவேண்டும், இன்றே பட்டுவிட வேண்டும். எத்தனை நாளுக்குத்தான் வாடிக்கொண்டே இருக்க முடியும்? இது சாத்தியமில்லைத்தானே?
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்ட முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. ஆண் பெண் மோதல்களுக்குத் தீர்வாக, விவாக ரத்து உரிமை பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்று எங்கோ படித்தது மனதை ஆக்கிரமித்திருந்த இவ்வேளையில், பிரிதல் ஒன்றே பிணக்குகளுக்குத் தீர்வு என்ற முனைப்பில், சரியான தீர்வு ‘புரிதல்' தான் என்பதை ஏற்க அவள் மனம் மூர்க்கமாய் மறுத்தது.
studioUD- 50

Page 29
குடும்ப உறவின் அச்சாணி உடைந்து தெறிக்கு இவ்வேளையில் இரத்த உறவின் பால் மனம் நாடியது நினைவுச் சுழற்சியில் நெஞ்சில் மாறா ரணங்கள் வலியையும் எரிச்சலையும் தந்தபோது, ஒத்தடமாய் அண்ணாவின் அன் முகம் தரிசனமானது.
இவள் யோசித்துக் கொண்டிருக்கையில், நாதன் ஏதோ ஒரு முடிவுடன் கட்டிலை விட்டெழுந்து அவளருே வந்தான். கிளர்ந்தெழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக் முடியாமல் வந்தனாவும் அவனை எதிர்த்து நிற்க தயாரானாள்.
சாதுப் பிள்ளை போல் அவளருகில் வந்த நாதன் அவள் சற்றும் எதிர்பார்க்காதவாறு அவளை அப்படிே துக்கிக் கொண்டு படுக்கையறைக்குத் திரும்பினான்.
அவனது தொடுகையில், அவளது உடலில் ஒருவி சிலிர்ப்பு சுர்’ என்று ஏறியது. இதுவரை தனது வாழ்க்ை குறித்து குழம்பித் தவித்த நிலையில் மாற்றம் கண்டது போல், தனது வாழ்வின் தரிப்பிடம் அவனது திசையி: திரும்புவதாய் உணர்ந்தாள்.
அவனது கண்களும், முகமும் சினுங்கலும், பொ இறுக்கமும் காட்டினாலும், சினப்பு எதுவுமின் மலர்ச்சியடைந்ததைக் கண்ட நாதனின் மனதிலும் கோப சீலங்கள் ஒடுங்கி, மனது ஒப்பரவாகிட, செல்லமா அவளை நோக்கினான்.
நடந்து முடிந்துவிட்ட யுத்த காண்டத்தை நினைக் நினைக்க யாவும் அநாவசியமான அத்தியாயங்களாய் விசித்திரமாய் உணர்ந்து மனது லேசாகியது. நடந்தை நிஜங்கள்தான் என்ற எண்ணம் மனதில் பூதாகாரமாகாமல் கணவன் மனைவி என்கிற ஆத்மார்த்த பிணைப்பானது சகலதையும் மன்னித்து மறக்கத் தயாராகிவிட் வினோதத்தை இருவரும் உணர்ந்தனர்.
கைச்சாத்திடாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எதுவித சட்ட திட்டங்களுமின்றி அமுலாக்கப்படுகின்ற இ இனிய வேளையிலே, மனதின் ஆழத்தில் ஏதோ ஒ( நெருடலையும் வந்தனா உணர்ந்தாள். எனிலும் அது விசுவரூப மெடுக்காமல், உடலின் தகிர்ப்பில் அமுங்கி போனது.
ஏதோ கிறீச்சிட்டுப் பறக்க இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு சிட்டுக்குருவிகள், கூடு ஒன்ை அமைக்கும் பணியில் ஒன்றாய் இணைந்து செயற்பட்டு கொண்டிருந்தன. பரஸ்பர ஒத்துழைப்பும், பங்களிப்பும் தா6 உலக ஆனந்தத்தின் அச்சாரம் என்பது அந்தச் சிட்டு குருவிகளுக்குத் தெரிந்திருப்பது போல ஆறறிவு படைத் எமக்குப் புரிந்திருக்கவில்லையே என்ற எண்ண மேலோங்கியது.
குழப்பங்களும் கவலைகளுமின்றி மனது ஒருவி தெளிவுக்கு வந்தபோது, மகிழ்வால் முகமும் அழகா மலர்ந்தது. அந்த மகிழ்வுக்கிடையிலும் கூட குளம் கட் நின்ற கண்களை மறைக்க முயல்கிற வந்தனா தோற்று போனாள்.

f பெருகிவரும் அவள் கண்ணிரைத் துடைத்தபடி, 1. பார்வையால் நாதன் அவளைத் தேற்றினான். அந்தக் , கணத்தில், சற்று முன்னர் மூர்க்கமாக அவன் தன்னைத் பு தாக்கினான் என்ற எண்ணம் நினைவில் வந்து மனதை முட்டி மோதிய போது, மடை திறந்த வெள்ளம் போல் குமுறிக் , குமுறி அழ ஆரம்பித்தாள் வந்தனா.
கட்டுக்கடங்காத உடைப்பெடுத்த அவள் கண்ணீர்க் க கங்கையில் அவன் அமிழ்ந்து, குற்ற உணர்வுடன் த் தன்னையே கடிந்து கொண்டான்.
அவனது அன்புப் பரிமாற்றத்தில் கிளர்ந்து எழுந்த ா, உடலும், பூரிப்படைந்த உள்ளமும் ஆயிரம் மடைகள் ஒரே ய நேரத்தில் திறந்து விட்டாற் போல் பொங்கியது. அந்த மோகனமான நிசப்தத்தைக் கலைக்க ஒரு வார்த்தை தானும் அங்கு பேசப்படவில்லை.
அன்புத் தழுவலில் அந்தக் கணத்தில் எல்லாம் மறந்து இன்ப மழையிலே இருவரும் நனைந்தனர். உறவும் பிரிவும் நிலையானதில்லை என்று அவனது மனது நெகிழ்ந்து, ஏறேறு சங்கிலி, இறங்கிறங்கு சங்கிலிக் கனவுகளாகி முதலிரவுக் கணவனாக நாதன் வந்தனாவின் மனத் திரையில் தரிசனமானான்.
ஒரு வாரமாக மனதில் வெறுப்பாய் அரும்பி, கடந்த சில ய் நாட்களுக்குள்ளாகவே பூவாகி, பிஞ்சாகி, காயாகிப் பழமாகி இதோ அழுகி விழுகிறேன் என்ற நிலையிலிருந்த கசப்புணர்வானது, அந்தக் கணத்தில் எங்கோ தொலைந்து காணாமல் போக, அழுகி விழுந்த பழத்தின் முற்றிய வித்து, சில காலம் தரிசாகக் கிடந்த விளை நிலத்தில் பதிந்தது. இந்த இரவும் இனித்ததன் விளைவாய் இல்லறம் நல்லறமானது.
கால சூழல் பயிர் முளைக்க உகந்ததாக இருந்த அந்த சூழ் நிலையில், விதையிலிருந்து சிறு முளை புறப்பட்ட போது, புது உறவுக்கான வரவை அறிவிக்குமாற் போல, வந்தனா வாந்தியும், மசக்கையுமாகத் தவிக்கையில் நாதன் துடி துடித்துப் போனான்.
தன் வாரீசைச் சுமக்கின்ற அன்பு மனைவியைப் பக்குவமாக அணைத்து, வந்தனா, நான் பாவி, பல சந்தர்ப்பங்களில் உன்னோடு மிருகமாய் நடந்திட்டன். என்னை மன்னிச்சுக் கொள்ளம்மா.... என்று குரல் தளதளக்கக் கூறினான். VM
`இஞ்சாருங்கோ, நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பதா? நான் உங்கட பெண்சாதி, என்னைத்தான் நீங்கள் மன்னிக்க வேணும்.’’ என்று அவனது வாயைத் தன் தளிர் கரங்களால் பொத்தினாள் வந்தனா.
நாதன் குனிந்து இவள் பிள்ளை வயிற்றைத் தடவும் இந்த இனியவேளையில் அண்ணாவை மறந்துபோனாள். அந்நியமாகிப் போனது, பெண்ணியச் சிந்தனைகளும்தான்!
業

Page 30
உடன்படிக்ன பெயரால்.
இன்றைய நிலையில் அடிக்கடி பேசப்படும் ஒரு விடயமாக அமைவது உடன்படிக்கை என்பதாகும். அடிக்கடி எம்மிடையே பயன்படுத்தப்படும் சொல்லாக மட்டுமன்றி உலகியல் வரலாற்றில் பெரிய மாற்றங்களை, திருப்பங்கள்ை, போர்களை, அமைதியை என பலவற்றைத் தந்த பெருமை உடன்படிக்கைகளைச் சாரும். நாம் கடந்துவந்த காலத்தில் மட்டுமன்றி இனி நாம் காணப்போகும், கடக்கப்பொகும் காலங்களிலும் பல நிகழ்வுகளுக்கு இந்த உடன் படிக்கைகள் வழியமைக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்வியலில் வாழ்க்கை முறையியலில் என எல்லாவற்றிலுமாய் ஆழப் பதிந்துவிட்ட இந்த உடன்படிக்கைகள் பற்றிய சில செய்திகளையும் சில உண்மைகளையும் வரலாற்று வளர்ச்சியில் வைத்துப் பார்ப்பது பயனுள்ளது.
உடன்படிக்கைகளின் ஆரம்பத்தை நாங்கள் கி.மு.3000ம் ஆண்டளவில் காணக் கூடியதாய் இருக்கிறது. அக்காலத்தில் சுமேரிய நாகரிகம் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. அவர்கள் இடையே உட்பூசல்கள் நிறைந்து காணப்பட்டது. தங்களுடைய உட்பூசல்களைத் தீர்க்கும் முகமாக லகாஷ் மன்னரும் உம்மா மன்னரும் மூன்றாம் நாட்டு மன்னரான கிஷ் மன்னரை நடுவராகக் கொண்டு தங்கள் எல்லைச் சிக்கலைத் தீர்க்க விளைந்தனர். கிஷ் மன்னனின் தீர்ப்பின்படி சிக்கல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உடன்படிக்கை எழுதப்பட்டது. இவர்களுடைய உடன்படிக்கையின் உண்மைச் சுவடுகள் (Actual Text) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடன்படிக்கை எழுதப்பட்டு சில ஆண்டுகளில் மீண்டும் இவ்விரு அரசுகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் லகாஷ் வெற்றிபெற லகாஷ் உம்மா அரசு மீது பலவந்தமாக ஒரு உடன்படிக்கையை புகுத்தியது. அதன் மூலம் லகாஷ் புதிய எல்லைகளை வகுத்துக் கொண்டது. இவ்வுடன்படிக்கை புகுத்தப்பட்டு சில ஆண்டுகளில் உம்மாவின் வீரர்கள் லகாஷைத் தோற் கடித்து புதிய எல்லைகளை தாங்கள் வகுத்தனர். இன்று போலவே அன்றும் உடன்படிக்கைகள் வெறும் பத்திரங்களாக மட்டுமே இருந்தனவேயன்றி நடைமுறைச் சாத்தியம் அற்றனவாக இருந்தன என்பதற்கு எமக்கு சான்றாகக் கிடைக்கும் முதலாவது உடன்படிக்கையே காணப்படுவது நோக்கற்பாலது. அதேபோல் இரு பகுதியினரிடையேயான

Buf6I
சீராளன்
பிரச்சனைகளுக்கு மூன்றாம் தரப்பை நாடும் பழக்கம் அன்றே காணப்பட்டது என்பதும் முக்கியமானது.
அடுத்த முக்கியமான உடன்படிக்கையை நாங்கள் எகிப்திய நாகரிகத்தில் காணலாம். எகிப்திய மன்னர்கள் வடக்கிலும் கிழக்கிலும் போரிட்டு அங்குள்ள பண்டைய அரசுகளை இணைத்து நிலமானிய அடிப்படையிலான பலமான அரசுகளை நிறுவி வந்தனர். அக்காலத்தில் இருந்த சுமேரியப் பண்பாடுடைய கிட்டைட்டி அரசு (Kingdom of Hittites) எகிப்தியருக்கு பலத்த எதிரியாக விளங்கியது. இப்படைகள் கி.மு. 1750 இல் பாபி லோனியாவை சூறையாடின. இவ்விரு வல்லரசு களுக்குமிடையே சிரியாக் கரையோரத்தில் மிட்டாரியர் களுடைய அரசு இருந்தது. இம் மூவருக்கிடையிலும் போர்கள் மூள கி.மு. 1400ம் ஆண்டளவில் இம் மூவரும் தம்முள் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இதை மிட்டாரிய அரசில் கண்டெடுக்கப்பட்டுள்ள களிமண் படிவுகளில் காணலாம். உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டாலும் இம்மூவரிடையே போர் ஓயவில்லை. போர் தொடர்ந்தது. இறுதியில் கிட்டைட்டி அரசனான 3ம் காட்டுசிலிஸ் எகிப்திய மன்னனான 2ம் ராமிசெகடன் கி.மு. 1280இல் ஒரு உடன்படிக்கையைசெய்துகொண்டான். உடன்படிக்கையின் நகல்கள் எகிப்திய மற்றும கிட்டைட்டி மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவரையொருவர் ஆக்கிரமியாது இருத்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேறு அரசுகள் ஒரு நாட்டின் மீது போர்தொடுத்தால் இரு அரசுகளுமாய் சேர்ந்து போர் தொடுத்த அரசுக்கெதிராய் போரிடல், புரட்சி, ஆக்கிரமிப்பு போன்றவற்றை நிறுத்தல், ஒரு நாட்டைச் சேர்ந்தவர் மற்ற நாட்டினுள் நுழைந்தால் அவருக்கு புகலிடம் வழங்காமல் அவரை மீள ஒப்படைத்தல் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இன்றைக்கு கிட்டத்தட்ட 23 நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு உடன்படிக்கை தற்கால உடன்படிக்கைகளில் பல அம்சங்களை தன்னகத்தே கொண்டிருப்பது வியப்பளிக்கின்றது.
இவ்வாறாக பண்டைய காலம் தொட்டு காணப்பட்டு வந்த உடன்படிக்கைகள் காலப்போக்கில் உலகில் போரைத் தொடங்கும் ஆயுதமாகவும் சமாதானத்தைப் பேணும் ஆவணமாகவும் பயன்பட்டுள்ளது. உடன்படிக்கைகள் காலப்போக்கில் போர், சமாதானம், எல்லைப் பிரச்சினை

Page 31
என்பவற்றை எல்லாம் தாண்டி பொருளாதாரம், சமூகவிய தன்மைகள், பண்பாட்டுப் பாதுகாப்பு போன்ற ப விடயங்களுக்காகவும் எழுதப்படத்தொடங்கின. இ நிலையில் உடன்படிக்கைகள் பற்றி வாசிங்டன் இர்வி சொன்ன கூற்று முக்கியமானது.
“தன்னுடைய படைவலிமையைக் கையாண் ஒருநாடு மற்றொரு நாட்டிடமிருந்து பெறக்கூடி நன்மைகளை அமைதியாக இருந்து கொண்ே சூழ்ச்சியாலும் மந்திரி சபையின் கரவுச் செயல்களாலு அடைந்து விடக்கூடிய தந்திரமான வழியே உடன்படிக்ை என்பது இது தன் அண்டை வீட்டான் சொத்ை பகிரங்கமாக தன்முரட்டுத்தனத்தால் கைப்பற்றும் ஒ திருடன், சாதுவான கண்ணியம் மிக்க கீர்த்தி பெற் குடிமகனாக மாறி அதையே மோசடி செய்வதை ஒத்ததாகு இன்று உலகில் அமைதியைக் குலைக்கும் ஒ நீண்டகாலப் பிரச்சனையாக இருந்து வருவது இஸ்ரேலிய பலஸ்தீனப் பிரச்சனையே. இப்பிரச்சனைக்குரிய விதையை துவியது ஒரு உடன்படிக்கை என்பது பலர் அறியா விடயம். முதலாம் உலகப் போரின் போது ஜேர்மனியை தோற்கடிக்கும் நோக்கோடு பிரித்தானிய மந்திரிகளி ஒருவரான பெல்போர்(Belfour) என்பவர் ஜேர்மனி யூதர்களுடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி கொண்டார். இது “பெல்போர் உடன்படிக்கை" எ அழைக்கப்படுகிறது. இதன்படி போரில் பிரித்தானிய வெல்வதற்கு ஜேர்மனியில் இருக்கும் யூதர்க உதவிசெய்வார்கள் எனின் அவர்களுக்கு படிப்படியா தனிநாடு ஒன்றை பிரித்தானியா ஏற்படுத்திக் கொடுக்கு எனக் கூறப்பட்டு இருந்தது. இவ்வுடன்படிக்கையி பெயரிலேயே ஜேர்மனியில் உள்ள யூதர்கள் முதலா உலகப்போரில் ஜேர்மனி தோல்வியடைவதற்கு பிரித்தானியா வெற்றிபெறுவதற்கும் வழியமைத்து கொடுத்தனர். இவ்விடத்தில் ஒரு வாதத்ை முன்வைக்கலாம் எவரும். இரண்டாம் உலகப்போரின் போது பல இலட்சம் யூதர்களை கிட்லர் கொன்று குவித்தது சரியானது என்பதே அவ்வாதமாகும். முதலாம் உலக போரில் ஜேர்மனியைக் காட்டிக் கொடுத்த யூதர்கள் மீண்டு ஒரு தடவை அவ்வாறான ஒரு செயலை செய்யக்கூடாது என்பதற்காகவே கிடலர் யூதர்களை கொன்றான் என் கிடலர் சார்பான வாதத்தை வைப்பது கூட தவறில்லை எ6 ஆகிவிடும். எது எவ்வாறாயினும் இறுதியில் பல இலட்ச உயிர்கள் காவு கொள்ளப் படுவதற்கும் தொடர்ச்சியா6 குழப்பத்திற்கும் வழிவகுத்த பெருமை பெல்போர் உடன்படிக்கையைச் சாரும் என்பதில் ஐயம் இல்லை.
இவ்வாறாக பல பிரச்சனைகளை தோற்றுவிப்பதா நீண்டகால கசப்புணர்வுகளுக்கான விதைகளை விதை பதாகவே நாம் உடன்படிக்கைகளைக் காண்கின்றோப தற்காலத்தில் உடன்படிக்கைகள் மிகவும் அழகா6 முறையில் புகுத்தப்படுகின்றன. வல்லரசு நாடுகள் தங்க ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்தும் முகமாக வளர்மு நாடுகளில் தங்கள் கட்டுப்பாட்டைப் பேண நேரடியா
tj(Udt). 50 .

T
அல்லாமல் மறைமுகமாக அதாவது சர்வதேச நிறுவனங்கள் மூலம் வலுக்கட்டாயமாக உடன் படிக்கைகளைத் திணிக் கின்றன. உலக வங்கி நாடுகளுக்கு உதவி செய்தல் என்பதன் பெயரால் நடைபெறுவது உண்மையில் அதிகாரத் திணிப்பே, வளர்முக நாடுகளும் வேறு வழியின்றி உலக வங்கி தருகின்ற பணத்திற்காக அவர்களுடைய கோரிக்கைகளுக்கு உடன்படுகின்றன. உண்மையில் உடன்படிக்கைகளின் பெயரால் வளச்சுரண்டலும், உழைப்புச் சுரண்டலும், பண்பாட்டுச் சீரழிவுமே எஞ்சுகின்றன. ஆனால் இன்றைய நிலையில் உடன்படிக்கைகளே அரசியலின் துண்களாக அமைந் திருப்பதால் இவ்வாறாக பாதிப்பை ஏற்படுத்துகின்ற உடன்படிக்கைகள் தொடரும் என்பதில் ஐயமில்லை. இவ்வவிடயத்தை கவிஞர் சோ.பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த ‘ஆபிரிக்காவின் கோரிக்கை” என்ற லைபீரிய நாட்டுக் கவிஞனின் ஆபிரிக்க கவிதை அழகாய் சொல்கிறது.
நான் நீயல்ல
ஆனால் நான் நானாக இருப்பதற்கு
நீ ஒரு சந்தர்ப்பம் தருகிறாயில்லை.
సీత: விஷயங்களில் தலையிடுகிறாய் ஏதோ அவை உன் விஷயங்கள் போலவும் நீ நான் போலவும்
நான் நீயாக இருந்தால். உனக்குத் தெரியும் நான் நீயல்ல என்றாலும்
என்னை நானாக இருக்க விடுகிறாயில்லை.
நான் நீயாகலாம் உன்னைப்போல் போகலாம் நடக்கலாம் சிந்திக்கலாம்
என எண்ணும் உனக்குப் புத்தியில்லை உன் பக்கம் நியாயமுமில்லை.
கடவுள் என்னை நானாகவும் உன்னை நீயாகவும் படைத்தார் கடவுள் பேரால் கேட்கிறேன் என்னை நானாக இருக்கவிடு.

Page 32
کے IB6OT6).J
சில்வண்டு ஒன்று மெல்லமெல்ல வர் இருட்காடு மண்டி எங்கும் நிசப்தம் ( அங்கங்கள் சோர் அயர்ந்து சுருண்டு ஏதோ மணமொன் "புல்லாந்தி பூத்தா சொல்வாளென் ஆ அப்பு. அது புடை பாம்பினது கொட் நானறியேன். எத நானிருக்கும் சூழலிலே இப்போ குறண்டிக் கிடக்கின் காற்றென் குடிசை கற்றைக் குழல்நீவி அயலில் சரசரப்பு வேலி பிரித்தேதோ நுழைவது ஒருவேளை கொட் புடையன் வருகிறதோ வாசலு சற்றுமுன்பைக் கா சடுதியாக அந்த ம சுற்றுமுற்றுஞ் சூழ புல்லாந்திப் பூப்பே புடையனது கொட் தானோ கவிகிறது. கேட்டுமனஞ் சாகி
 

ழும் நாட்கள்
த.ஜெயசீலன்
திகைத்து அலறிற்று. தி ற்று. ருந்து. வேர் ஊன்றிற்று. 3து ர்ளேன்.
று எனைச்சூழ்ந்து பரவுகுது. b புறப்படும் மணம் என்று பூச்சி;
யன் டாவி மணமென்று பரபரப்பார். ன்வாசம் என்பதனை!
அந்தமணஞ் சுரக்கக் irறேன். யதன்
விளக்கை அணைத்திற்று! ஒன்றெழுந்து
வாய் மிரட்ட. எழுந்துகொண்டேன். டாவி விட்டபடி
ரக்கு? அரண்டு விழிக்கின்றேன்.
6 موت S00Tüb என்மூச்சுத் திணறுகுது ፕ? டாவி ..?
2து
புதிய தரிசனம் ல இலக்கிய அறிவியல்ச் சஞ்சிகை
தொடர்புகளுக்கு: ஆசிரியர், புதிய தரிசனம் வதிரி கரவெட்டி
ÖttlötD. 50

Page 33
காலை பகலாகும் வேளை, ஜமெய்க்காவின் அந்தக் குடியிருப்பின் காய்ந்து வரண்ட காணியில் ஒரு சோகை பிடித்த மாமரத்தின் கீழ் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அமளிப்படும் பெண்களுக்கும் அங்கு மிங்கும் அலைந்தபடி கஞ்சா அடிக்கும் ஆண்களுக்கும் அதைக் கவனிக்க நேரமில்லை.
ரோனிதான் ஆசிரியர். சிறிய உருவம். பதினேழு வயது. முரட்டுத்தனம் தெரிகிற தோற்றம். கல்லில் உட்கார்ந்து தன் மாணவர்களுக்குப் போதனை நிகழ்த்திக் கொண்டிருக் கிறான்.இலேசாக எண்ணெய் தேய்த்த துணியினால் அவன் கரங்கள் ஒரு துப்பாக்கியை அன்புடன் துடைத்துக் கொண்டிருக்கின்றன.
நாலு பையன்கள்தான் வகுப்பில். ஒன்பதுக்கும் பதினாலுக்கும் இடைப்பட்ட வயது. கிழிந்துபோன காற் சட்டைகளுடன் அழுக்குக் காட்போட் துண்டுகளில் உட்கார்ந்தபடி முன்னாலிருக்கிற தங்கள் ஹீரோவைட் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிப்பும் பரவசமும் மின்னும் கண்கள்,
“நீங்கள் எப்பவும் உங்கட ஆயுதத்தை சுத்தம வைச்சிருக்கவேணும்", ரோனி விளக்குகிறான்.
“ஒரு சுத்தமான துப்பாக்கிக்கு எப்பவுமே மதிப்பிருக்கு நேற்று ராத்திரி ஒரு அலுவலகம் போனபோது ராக்ஸிச் காரன்ரை தலைல இதை நீட்ட வேண்டி வந்தது. அந்த நேரம் இது அழுக்காயிருந்திருந்தா அவன் என்னை ஒரு தொழில் தெரிஞ்சவன் எண்டே நம்பியிருக்க மாட்டான்"
மாணவர்கள் ஆளை, ஆள் பார்த்துப் புன்ன
 

w"wrvo 8மேய்க்கக் கதை. மைக்கல் றெக்கோட் தமிழில்: சாந்தன்
கைத்தார்கள். ரோனி, தொழில் தெரிந்த ஆள் என்பது
அவர்களுக்குத் தெரியும்.
“அதாலைதான் வேறகதையில்லாம வாகனத்தைத்
தந்திட்டான்."
ஒன்பது வயதுப் பையன் கையை உயர்த்தினான். "அவனைக் கொண்டிட்டீங்களா?"
ரோனி தலையசைக்கிறான். தோட்டாக்கள் சரியான விலையுள்ள சாமான்கள் என்பதை அவன் சுட்டிக் காட்டினான். நீங்கள் அதுகளை வீணாக்கக்கூடாது.
பையன்கள் புரிந்துகொண்டவர்களாய்த் தலையாட் டினார்கள்.
துப்பாக்கிக் குழாய்க்குள் துணியை நுழைத்தவாறே ரோனி சொல்கிறான்.
“பாருங்கோ, இந்த ஓட்டை எவ்வளவு சின்னது. ஆனா, இது உங்கட மூஞ்சைக்கு இரண்டங்குலத்துக்கு முன்னாலை இருக்கேக்கை, ஆள்விழுங்கிக் கிடங்கு போலத் தெரியும்"
ஏதோ நினைவு வந்தவனாக அவன் சிரிக்கிறான். “அந்தச் கடைக்காரனைக் கேட்டுப்பாத்தால் தெரியும். இரவுக் கடை பூட்டுறநேரம். காரைக் கொண்டுபோய் முன் னாலை விட்டிட்டு, என்ஜினையும் நிப்பாட்டாமல் ஆளிலை பாய்ஞ்சன்"
காசுங்கடைச்சாமான்களுமாய்த் தான் அடித்த மின்னல்வேகக் கொள்ளையை விபரித்துவிட்டு ரோனி தொடர்கிறான்.

Page 34
“எல்லாம் முடிச்சிட்டு. நான் புறங்காட்டிக் கொண்( கடைக்கு வெளியாலை மெல்லமெல்ல வாறன், என்ை துவக்கு அவனைக் கவனிச்சபடி அவனும் அதைத்தான் கவனிச்சபடி. என்ர முகத்தைக்கூடப் பாத்திரான், நிச்சயமn துவக்கின் கைப்பிடியை மினுக்கியபடி ரோனி சொல் கிறான்.
“தொழில் செய்யிறவனுக்கு ஆயுதந்தான் முக்கியம் அதைத் துடைச்சுத் துப்புரவா வைச்சிருக்க வேணும் இண்டைக்கு காலைச்சாப்பாடு இது தந்ததுதான். காை அம்மாட்டக் குடுத்தன், ஷெல்லிக்கும் மாவினுக்கும் இந் மாதம் பள்ளிக்காசு கட்ட"
பதினாலு வயதுக்காரன் கேட்கிறான். “இது உங்களுக்கு எப்பிடிக் கிடைச்சுது, ரோனி?" “நியூயோக்கிலையிருந்து அப்பா அனுப்பினது கஸ்ரம்ஸ் கெடுபிடியள் இறுக முந்தி."
பத்து வயதுக்காரன் முதல் தடவையாகப் பேசுகிறான் “இதை ராத்திரிப் பாவிச்ச நீங்களோ, ரோனி?" சுத்தமாக்கும் வேலை தொடங்கமுதல் அதிலிருந்து கிளம்பிய காந்தல் மணம் நினைவுக்கு வநதவர்களாய் ஆவலுடன் ரோனியின் முகத்தை நோக்கினார்கள் பையன்கள். ரோனி தலையாட்டுகிறான். இதயங்கள் படபடக்கின்றன. இதோ வருகிறது உச்சகட்டம்.
“நான் கிங்ஸ்ரனுக்குத் திரும்பிக் கொண்டிருக்கேக்கை ஒரு சிவப்பு லைற் பின்னாலை வந்துகொண்டிருக்கு. பாத்தா பொலிஸ்காரன். கலைச்சுக்கொண்டு வாறான். என்ர கார் சறுக்கி ஒரு விளக்குக்கம்பத்திலை மோதிற்றுது.
பொலிஸ்கார் வந்து பின்னாலை நிக்குது. ஒருத்தன் இறங்கி வாறான்.
‘ஐஸியைக் காட்டு’ எண்டான். என்னைச் சோதிக்க வேணுமெண்டான்.
‘வடிவாச் சோதியுங்கோ, ஐயா, காராலை இறங்கினன் நான் பிறகும் மறியலுக்குப் போனா அம்மா பாடு என்னாகும் எண்டு யோசினை வந்துது. ஆள் கிட்டவர. மெல்ல எடுத்தன். "
பையன்கள் மூச்சுவிட மறந்து கேட்டுக்கொண்டி ருக்கிறார்கள் - இதுதான் இடம்.
ரோனி துவக்கை உயர்த்துகிறான். “நெஞ்சிலை ஒரு சூடு, " அவன் கை இழுத்துக்கொள்கிறது.
ஒன்பது வயது கிளுக்கிட்டது. “அப்ப, ஆள் சரியா?" "வேறென்ன?’ என்பதுபோல் ரோனி தோள்களைச் குலுக்ககினான்.
பதினாலு வயது, ஒன்பது வயதை அதட்டியது,
“ஆயுதம் சரியில்லையெண்டா, சூடு தவறியிருக்கும் அவன் என்னைப் போட்டிருப்பான்."

விடுதலை ஆசிரியர்: அன்ரன் பாலசிங்கம்
அரசியல் தத்துவார்த்த கட்டுரைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு
“ரோனி" பதினாலு வயது மெல்லக்கேட்டது. T '66160?"
“அடுத்தமுறை தொழிலுக்குப் போகேக்கை என்னையுங் கூட்டிக் கொண்டு போறிங்களா?"
ரோனி, வேண்டுகோளைப் பரிசீலிக்கிறான். பதினாலு வயது? அப்ப, ஆயத்தமாகத்தான் வேணும்.
“உனக்கு ஒரு ஆயுதம் வேணுமே, சட்ஸ்" பையன் ஆமோதிப்பது போலத் தலையாட்டினான். “பாப்பம்", என்கிறான் ரோனி, சட்சின் கண்களில் நம்பிக்கை ஒளி தோன்றுகிறது. “உங்களிட்ட வேறை இருக்கா?" ரோனி, தலையைக் கதவுப்பக்கம் காட்டுகிறான். “உள்ளே."
சட்சுக்கு மகிழ்ச்சியில் தொண்டை அடைத்துக் கொண்டு, சொற்கள் வெளிவரக் கஷ்டப்பட்டன.
“எப்ப?. எங்கே?." “பொலிஸ்காரன்ரை?" ரோனி சொல்கிறான், "அதை விட்டுட்டு வருவனெண்டு நினைச்சியா? இதைத்துடைச்சு
முடிச்சிட்டு எடுத்துக் கொண்டு வந்து தாறன். நீ அதைத் துடை"
米

Page 35
நூல் நோக்கு
இலட்சி
'குலோத்துங்கன் கவிதைகள்’ (முழுத்திரட்டு) 2002 யூலையில் வெளியாயிற்று. எனினும் அதைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குச் சற்று காலந்தாழ்த்தியே கிடைத்தது. அது துர-கால இடைவெளியின் பேறான ஒரு சிறு சுணக்கம். சென்ற ஆண்டின் இறுதிவாக்கில் இந்தப்புத்தகம் கிடைத்தவுடன் பேராவலுடன், அதே வேலையாக உட்கார்ந்து இதனைப்படித்து முடித்தேன். “பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி” ஆகிய குலோத்துங்கன் அன்று தொட்டு இன்று மட்டும் இயற்றித்தந்த கவிதைகளை அள்ளி அள்ளிப் பருகி நுகர்ந்தேன். அவற்றின் பண்புகளையும் பயன்களையும் இனங்கான முயன்றேன். அக் கவிதைகள் பற்றி என் கருத்தையும் கணிப்பீட்டையும் கவிஞர் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்ற செய்தியும் எனக்கு எட்டிற்று. அதுபற்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வமும் உண்டாயிற்று.
கவிதைகள் பல - ஏறத்தாழ அறுநூறு பக்கங்கள். அவை பலதிறப்பட்டவை; பல்வேறு காலப்பகுதிகளைச் சார்ந்தவை; பல்வேறு அக்கறைகளையும் பொருள்களையும் உணர்வுகளையும் தழுவி எழுந்தவை; பல்வேறு விருப்பு வெறுப்புக்களையும், ஆர்வங்களையும் அங்கலாய்ப்புக் களையும், இலட்சிய தாகங்களையும் பற்றித் தோன்றியவை; இவற்றை எல்லாம் பகுத்தறிவதும் உட்புகுந்து உணர்வதும், ஒன்றி நின்று துய்ப்பதும், காய்தல் உவத்தல் இன்றி மதிப்பிடுவதும் சுலபமான காரியங்கள் அல்ல. அவசரக் கோலத்தில் எதையாவது சொல்லிவிட்டுப் போவது முறையாகாது. பல்காற் பயின்று நுணுகி ஆய்வதே சரியான அணுகலாய் இருக்கும்.
அவ்வாறானதோர் ஆய்வாக இக்கட்டுரையை அமைப்பதில் தனிப்பட்ட வசதியீனங்கள் இப்பொழுது எனக்கு உண்டு. ஆகையால் குலோத்துங்கன் கவிதை களின் உயிரனைய பண்புகள் எவையெவை என்று இனங்கண்டு காட்டி அமையலாம் என்று கருதுகிறேன்.
I குலோத்துங்கன் கவிதைகளின் முதன்மையான பண்புகள் என எனக்குத் தோன்றுவன, அவற்றின் இலட்சிய வீறும் அறச் சீற்றமும் ஆகும்.
(UUD 50
 

ப வீறும் அறச்சீற்றமும்
கவிஞன் இ. முருகையன்
இலட்சியம் என்பது வெற்றுவெளியிலே - வெறும் சூனியத்திலிருந்து பிறப்பதல்ல. நம்மைச் சூழவுள்ள சாதாரண உலகை நாம் பார்க்கிறோம். பாரதிதாசனார் கூறுவதுபோல், தொற்று நோயும் ஏழ்மையும் பணக்காரர் தொல்லையும் என்றவாறு நானுறு தொல்லைகள் நமக்கு. நடைமுறை உலகத்தின் உண்மை அதுதான். சரியாகச் சொல்லப்போனால், நடப்பியல் உலகம் - அதன் நிலைமை அப்படி ஒன்றும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை. அதனாலேதான், குலோத்துங்கன் கூறுவார் - "விண்ணிலே உள்ளதெனும் மாளிகையை எண்ணி மேலேபார்த் திருப்பவரை வேண்டுவதொன்றில்லை மண்ணிலே தாமாக மாளிகை ஒன்றாக்க மனங்கொண்ட சிற்பிகளை வரவேற்க வந்தோம்" என்று, "பசிக்கின்ற உயிர்கண்டு பதைக்கின்ற நெஞ்சர் பகுத்துண்பர், பலசெல்வம் படைத்துண்பர் வருக இருக்கின்ற துயரெதுவும் இல்லாத வையம் இந்நிலத்தில் இப்பிறப்பில் இயலும் என்பர் வருக" இது நம் கவிஞரின் அழைப்பொலி; அவருடைய ஆன்ம நாதம்.
“தேடிச் சோறு நிதம் தின்று - சில / சின்னஞ் சிறு கதைகள் பேசி / வாடித் தொழில்கள் சில செய்து-பிறர் / வாடத் தொழில்கள் பல புரிந்து மாய்ந்து விழும் வேடிக்கை மாந்தர்களைப்பற்றி பாரதிப் புலவன் பாடினான். குலோத் துங்கன் குரலும் அதே சுருதியிலேதான் பேசுகிறது.
"வேடிக்கை மனிதரை யாம் வேண்டுவதொன்றில்லை வினையாளர், புத்துலக வேட்பாளர் வருக! வாடிக்கை, நடைமுறை நம் மரபென்ய யாவும் வளருவன; மாறுவன மாற்றுபவர் வருக" இப்படி அறைகூவி அறைகூவி அழைக்கின்றார் நம் கவிஞர்.
'விண்சமைப்போர்’ வருக என்பது குலோத்துங்கனின் அழைப்பு: அவருடைய அறைகூவல்;
விண்வெளிவரை எட்டி விரிந்து முழங்கும் அழைப்பொலி; விழிப்பையும் விடுதலையையும் வேண்டி நிற்கும் விளிப்பு. வீரவாசகம்.

Page 36
குலோத்துங்கன் கவிதைகள் பலவற்றிலும் இந் இலட்சியவிறு, குறிக்கோள் விளக்கம், இலக்கு முழக்க விரவி அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.
இலட்சிய வீறு மிக்க நம் கவிஞரின் ஆக்கங்களிே தவிர்க்க இயலாதவாறு வந்து பொருந்திவிடும் மற்றொ போக்கையும் - அதாவது பண்பினையும் - நாம் கவனிக்க தவறக்கூடாது. நடப்பியலின் கோர சொரூபங்களை சற் தொலைவில் நின்று சுட்டிக்காட்டும் இவர்த கலையாக்கங்களில், துன்பதுயரங்கள் நெருக்கமாகவே நுணுக்கமாகவோ படஞ்செய்யப்படுதல் ஒப்பீட்டளவி குறைவாகவே உள்ளன என்று சொல்லலாம். பஞ்சமு நோயும் பரிதவிப்பும் பொதுமை கூடிய நிலையிலே சுட்டி சொல்லப்படுகின்றனவே தவிர நுட்ப விபரங்கை துலக்கமாகக் காட்டும் அண்மைக் காட்சிகளாக 'குளோசப்புகளாக வருதல் குறைவு. இது இவருடை கவிதை ஆக்க முறையின் ஓர் இயல்பு என நாம் அமை, காணலாம்.
இந்தப் பண்பின் மற்றொரு பரிமாணமாக, இவருடை கவிதை மொழிவிலே பயின்றுவரும் சொல்லாட்சியில் தன்மையை நாம் காணலாம்.
I
தமிழ் வழக்குகளைவிபரிக்க முற்பட் திறனாய்வாளர்கள் ‘செந்தமிழ்’ என்றும் ‘கொடுந்தமிழ் என்றும் பாகுபடுத்தி ஒருகாலத்திலே பேசியதுண்டு ஆனால் புனைகதை இலக்கியத்தைப் பொறுத்தவை நியமமான செம்மொழி வழக்குக்குஅப்பால், சாதாரண பேச் மொழி வடிவங்களும் கணிசமாய் இடம்பெறுவதுண்டு குறிப்பாக, கதைமாந்தர்களின் உரையாடல்களிலே இயல்பான பேச்சு வழக்கு வடிவங்கள் அப்படியப்படியே அனுமதிக்கப்படுவதை நாம் அறிவோம். ஆனால் செய்யுள்களிலே அவை அருமையாகவே இடம் பெறும் இருந்தபோதிலும் சிலவகைப் பாட்டுக் களிலே எடுத்துக்காட்டாக, கொத்தமங்கலம் சுப்பு, சுரபி, என். எஸ் கிருஷ்ணன் முதலியோரின் பாடல்களிலே கொச்சை மொழ என்றும் இழிசனர் வழக்கு என்றும் சுட்டப்படும் பேச்சியல் வடிவங்கள் கணிசமான அளவு கையாளப்பட்டமயை நாட நினைவு கூரலாம்.
அது எப்படி இருந்தபோதும், கவிஞர்கள் எனப்படுவோர் கையாளும் மொழி - ஒப்பீட்டளவிலே சிதைவில்லாத செம்மொழியாக அமைவதே இயல்பு என்று கருதப்படுகிறது. ஆனாலும் கவிஞர்களிற் சில பேச்சுவழக்குப் பிரயோகங்களை அளவறிந்து பயன்படுத்தி பார்த்துள்ளனர். இதற்குத் தமிழ் இலக்கியத்திலுL சான்றுகள் இல்லாமல் இல்லை. இந்த இடத்திலே பாவேந்தர் பாரதிதாசனார் செய்து பார்த்த ஒரு சிறு பரிசோதனையைக்கூட எடுத்துக் காட்டலாம்.
‘வீரத்தாய் நாடகத்திலே காளிமுத்து என்ற பாத்திரம் காளிமுத்து பேசுகிறான். எப்படி?
"என்ன கெழவா? பொடியனெங்கே? இங்கே வா!

t
5
கன்னா பின்னா இண்ணு கத்துறியே என்னாது? மாடுவுளை மேய்க்க வுடு மாந்தோப்பில் ஆட வுடு காடுவுளே சுத்தவிடு கல்வி சொல்லித் தாராதே
ஆனா நீ போய் வா அழைச்சிப்போ பையனையும் ஒநாய் இல்லாத இடம் ஒட்டு" இங்கு கல்வி அறிவில்லாத காளிமுத்துவின் பேச்சாகப்
பாவேந்தர் இந்தப் பகுதியை அமைத்துக் காட்டியிருக்கிறார்.
மொழிச் சிதைவுகள் இருந்தாலும் காளிமுத்துவின் பேச்சைக்கூட ஒப்ப செப்பமான வெண்பா யாப்பிலே பாவேந்தர் அமைத்துக் காட்டியுள்ளார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன? நியம மொழியின் மாற்று வடிவங்களைக் கூட, பேச்சு வழக்கினைத் தழுவி அமைத்துக் கொண்டு, கவிதை இலக்கியத்துக்கு வளம் சேர்க்கலாம். ஆனால், தமிழ்க் கவிதைக் கலைஞர்கள் இந்தவிதமான பரிசோதனைகளில் அதிகம் நம்பிக்கை வைக்கவில்லை.
அதே சமயம் 'குலோத்துங்கன் தமிழ் பொதுமக்களின் மொழிப் பிரயோகத்துடன் அதிகம் நெருங்கிப் போகாமல், புலமையாளரின் போக்குகளையே அதிகம் தழுவியதாய் உள்ளது. இதனால், சாமானியர்களின் சொல்லாடற் போக்குகளிற் பெரிதும் தோய்ந்து நில்லாமல், கற்றறிவாளர்களின் சொல்லாடற் புலத்திலேதான் புழங்கிக் கொண்டிருக்கிறது.
அல்லாமலும், 'குலோத்துங்கன் தமிழ்’ பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான செம்மொழிப் படைப்புகளின் தன்மைகள் சிலவற்றைக் கொண்டு விளங்குகிறது. இதையே வேறொரு விதத்திலே சொல்வதானால், சொல்வளத்தைப் பொறுத்தவரையில் பண்டைத் தமிழ் வழக்குகளை அதிகம் தழுவியவையாக, குலோத்துங்கன் கவிதைகள் உள்ளன. இதை ஒரு குறையாகவோ பாராட்டாகவோ யான் இந்த இடத்திலே எடுத்துப் பேசவில்லை. நடுநிலையானதோர் அவதானிப்பாகவே சுட்டிச் செல்ல விரும்புகிறேன்.
வேறொரு வாய்பாட்டினாலே சொல்வதானால், மொழிச்செம்மையும் மொழிப்பொதுமையும் நடையியலின் இரு முனைகளாக (poles) நாம் கொள்வோம் எனின், "குலோத்துங்கன் தமிழ்’ ‘செம்மை’ என்னும் முனைவுக்கு அண்மையிலும், ‘பொதுமை’ என்னும் முனைவுக்குச் சேய்மையிலும் உள்ளதென இனங்காட்டலாம்.
III
குலோத்துங்கன் கவிதைகள் இலட்சிய வீறுள்ளவை என ஏலவே நாம் கண்டுள்ளோம். இந்த இலட்சியப்பற்றின் தவிர்க்க இயலாத ஒரு துணைக்கூறாக அவருடைய அறச்சீற்றம் அமைகிறது.
இலட்சியச் சிகரங்களுக்கு அண்மையில் உயர்ந்து நிற்கும் அவருடைய எண்ணங்கள், சிறுமை கண்டு பொங்குகின்றன. அது இயல்புதானே!

Page 37
சிறுமைகண்டு பொங்குதல் வேண்டும் என் தெரிவித்தவர் சுப்பிரமணிய பாரதியார். அவர் வழி வந் பாரதிதாசனாரும் சுரண்டலையும் சூதையும் அறியாை யையும் மூடத்தனங்களையும் கண்டு சீறியவர். மூட தனத்தை முடுக்கிவிடுவன மதங்களாயின் அவற்ை நிர்மூலப்படுத்த வேண்டும் என்று முழங்கியவ பாரதிதாசனில் பற்றுக்கொண்ட குலோத்துங்கணு சமூகத்தில் நிலவும் அறியாமைகளைக் கண் வெகுண்டெழுந்து பாடுகிறார்; ஆற்றாமைகண்டு சீற்ற கொள்கிறார்; கோழைத்தனத்தைக் கண்டு கோபிக்கிறா குள்ளத்தனங்களை முனிந்து சபிக்கிறார். இவ்வா கவிஞரின் அறச்சீற்றம் பல்வேறு பரிமாணங்கை எடுக்கிறது.
‘மணிதம் எரிகிறது' என்னும் கவிதை கடு கோபத்துடன் நெருப்பெடுக்கறது. இது ஈழத்தில் நிகழ்ந்த நிகழும் அநியாயங்களை உணர்ச்சி வீச்சாகிச் சாடுகிறது
"கனவெல்லாம் ஈழத்தின் அவலக் காட்சி கண்விழித்தால் உயிர் பற்றி எரிவதேபோல் மனமெல்லாம் வேகிறது; கயவர் செய்கை மனிதத்தை எரிக்கிறது; வையம் காணா ஈனத்தின் ஈனத்தின் ஈனம்: ஆட்சி ஏற்றவர் தம் கொலைவெறியின் கோரக்கூத்து சாணத்தில் நெளிகின்ற புழுவும் கூடத் தாங்காது துடித்தெழும் புன் கொடுமைச் செய்கை. கடுங்கோபத்துடன் எழுந்த இக்கவிதை ந கவிஞரின் உணர்ச்சி வீறு எவ்வளவு காரமானது என்பதை புலப்படுத்தி நிற்கிறது. ‘மனிதம் எரிகிறது' என்னும் இ கவிதை கோபாவேசத்தின் கொடுமுடி என்று கொள்ளப்பட தக்கதன்றோ? அரச பயங்கர சங்காரத்தின் இழிை இதைவிடக் கடுமையாகக் கண்டிக்க முடியாதல்லவா? "சுமைதாங்கிகள்’ என்னும் கவிதை வன்செய மதவெறி, வறுமைச்சுமை ஆகிய துன்பங்களை நோக் அவற்றைத் தீர்க்கத்தெரியாது திணறும் அசமந்த போக்கினைச் சாடுகிறது.
"அன்பென்ன, அருளென்ன, மதங்கள் போற்றும் ஆண்டவனின் பெயர் கூறிப் பகைமை சேர்ப்போ வன்முறையின், மதவெறியின் பாரம் தாங்கி வளைந்துள்ள 'சுமைதாங்கி வழிக்கல் நாங்கள்.
வளர்ந்துளது மானுடம் என்றுரைப்பார்; எல்லாம் வார்த்தையடா வறுமையினைத் தாங்கித் தாங்கி தளர்ந்துள்ளோம்; கண்ணிருளப் பசியின் பாரம் தாளாது முனகும் 'சுமைதாங்கி நாங்கள்" என்பார் கவிஞர். இதனை வெறும் தன்னிர உணர்வென்று தள்ளிவிட முடியாதன்றோ? கவிஞர் கூற்று மானுட இனத்தின் மனச்சான்றைத் துயில் எழு அதனைச் சீற்றங்கொள்ள வைக்கும் திருக்கு அல்லவோ!
'மதம் எதற்கு மொழி எதற்கு' என்னும் மற்றெ கவிதை உட்பகையை வளர்க்கும் பிரிவினைகள்

s
கொடுமையையும் இழிவையும் பிட்டுக் காட்டுகிறது.
"மதம் எதற்கு, மொழி எதற்கு, நாடுதான் ஏன்? மானுடர்தம் வளர்ச்சிக்கு வழிவகுக்க உதவுதற்கு நாம் படைத்தோம், அவயே நம்முள் உட்பகையை வளர்ப்பதெனின் ஒழிதல் நன்று
பாலருந்தும் மழலையையும் பிரித்துப் பேசும் பாதகத்தை மதப்பற்று, மொழிப்பற்றென்போர் காலனிலும் கொடியர்; அவர் இருக்கும் பக்கம் கண்திறந்து பார்ப்பதற்கும் கூசுகின்றேன்" கொடுமைகளையும் அநீதிகளையும் சிறுமைகளையும்
கண்டு பொங்கும் கவியுள்ளம் மிகவும் உன்னதமானது
அன்றோ!
V இதுகாறும் கூறியவை நம் கவிஞர் நீதியின் தரப்புக்காக எழுந்துநின்று வாதாடுபவர் என்பதை உறுதிசெய்தன. அதேவேளை அவருடைய இலட்சிய வீறின் மறுபக்கமாக அவர் கவிதைகளில் முனைப்பாகத் தோன்றி மேலெழும் அறச்சீற்றத்தையும் நாம் இனங்கண்டுள்ளோம். இனி அவருடைய அறிவியல் விழிப்புக்கும் புலமைச் சார்புக்கும் அவருடைய கலையாக்க நெறிகளுக்கும் இடையே அமைந்துகிடக்கும் தொடர்புகள்மீது நம் கவனத்தைச் செலுத்துவோம்.
குலோத்துங்கன் கவிதைகளை - இன்றலெக்ஷ°வல் பொயெட்ரி - புலமை(த்துவ)க் கவிதை என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. குழந்தைசாமி அவர்கள் விஞ்ஞானி ஆகை யால், அவர் ஒரு புலமையாளர். அறிவியல் துறையில் அவர் கொண்டுள்ள புலமை கவிதைத்துறையில் எவையேனும் செல்வாக்கைச் செலுத்துகிறதா? இதுதான் கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடைகாணுமுன் புலமைக்கும் கலையாக்கத்துக்கும் இடையேயுள்ள தொடர்புகளை நாம் சற்றுத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
புலமை என்பது கற்றறிவு. நுண்ணிய நூல்கள் பலவற்றைக் கற்பதனாலும் உணர்வதாலும் விருத்தி ஆவது. கலையாக்கத்திலே கற்பனை ஆற்றல் மேலாண்மை பெறுகிறது. இப்பொழுது, கற்பனையின்.பரிமாணங்கள்பற்றி விளங்கிக்கொள்வது அவசியமாகும்.
“இமேஜ்" என்னும் படிமங்களைப் படைத்துக்கொள்ளும் ஆற்றலே கற்பனை (imagination) எனலாம். கவிதைத் துறையில் வரும் படிமங்கள் யாவை?கவிதைக் கலை யைப் பொறுத்தவரையில், உவமை, உருவகம், குறியீடு ஆகியவற்றை ஆக்கும் செயல்முறையே கற்பனை எனப்படும். படிமங்கள் என்பன மனப்படங்கள். மனப் படங்களை அல்லது எண்ணப்படங்களைத் தோற்று விக்கும் செயற்பாடே படிமவாக்கம்; அதுவே கற்பனை.
இன்னதென இனங்காட்ட இயலாத புகைச்சலான மனவுந்தல்களுக்கும் திடமான வடிவங்களைக் கொடுக்கும் செயற்பாட்டினையே நாம் கற்பனை என்று கூறுகிறோம்.

Page 38
இந்தக் கருத்திலேதான் கலைத்துறைகள் யாவற்றிலுே எண்ணப்படவாக்கம் அல்லது படிமவாக்கம் என்று குறிப்பிடக்கூடிய ‘கற்பனை’ முக்கியத்துவம் பெறுகிறது குலோத்துங்கன் கவிதைகளிலே கற்பனையின் பங் எவ்வளவுக்கு உள்ளது என்னும் கேள்வியை எழுப் விடைகாணுவது இந்த இடத்திலே பயனுள்ளதாகு கவிதைக் கலையில் 'எடுத்துக்காட்டுவதற்கும்', இயற்றி காட்டுவதற்கும் கணிசமான வாய்ப்புகளும் தேவைகளு உள்ளன.
கலைஞர் ஒருவர் ஒரு காட்சியை இயற்றிக் காட்டு போது அங்கு முன்பில்லாத ஏதோ ஒரு பதிய பண்ட படைக்கப்படுகிறது எனலாம். இதே கலைஞர் உதாரண விளக்கம்போல ஒரு குறியீட்டையோ உருவகத்தையே உவமையையோ எடுத்துக்காட்டும்போது கலங்கலா இருந்த விடயம் தெளிவாகிறது; மங்கலாய் இருந் சங்கதிகள் வரயறைபெறுகின்றன; புகைச்சலாய் இருந் பொருள்கள் திண்மையும் நுண்மையும் பெறுகின்றன.
கலைத்துறையில் மாத்திரமன்றி, அறிவியல், தொழில் நுட்பம், தத்துவம் உட்பட்ட சகல துறைகளிலு புகைச்சலான சங்கதிகளை இறுக்கமாக்கி உணர்த்து உத்தி பயன்படுகிறது. ஆனால் கலைத்துறைகள் தவிர்ந் பிற அறிவுத்துறைகளில் விருப்பு, வெறுப்பு, கோபதாபம் அன்பு - ஆதரவு முதலான உணர்ச்சிச் சாய்வுகள தவிர்க்கப்படுகின்றன. சமூகவிஞ்ஞானம் தவிர்ந் சடப்பொருள் அறிவியலில், உதாரணமாக ‘எஞ்சினியரிங் துறையில், மனிதமன எழுச்சிகள் குறுக்கிடுவதில்லை.
ஆனால், குழந்தைசாமி அவர்கள் 'குலோத்துங்கன் ஆக இயங்கும் போது ஈழத்தமிழரின் அவலங்கள் கண்டு அவர்தம் மனம் பரிவுகொள்ளும்; அறச்சீற்றம் அடையும் ‘ஈனத்தின் ஈனத்தின் ஈனம்’ என்று அவர் நெருப்பை கக்குவார். ‘ஈன நிலைகண்டு துள்ளும் இந்த அறச்சீற்றம் அவருடைய புலமைமயமான ஆளுமையையும் மீறி பீறிப்பெருகும். ‘புலமைத்துவக் கவிதைப் பண்பு' என்று சிவத்தம்பி அவர்கள் கூறுவது இதைத்தான் போலும்.
இந்த வகையான கவிதை வீச்சுக்குச் சில மட்டுப்பாடுகளும் உண்டு என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது. சிலவிதமான கவிஞர்கள், கதையம்சமும் நாட அம்சமும் கொண்ட காப்பியங்களையும் கூத்துக்களையு ஆக்கித் தருவதுண்டு. தன்னையே ஒரு பாத்திரமாக பாவனை செய்து, தனியாள் நிலைப்பட்ட சிறு நாடகங்களை (அல்லது நாடகக் குஞ்சுகளை ) ஆக்கித் தருவது உண்டு. இப்படிப்பட்ட படைப்புகள் குலோத்துங்கல் கவிதைகளில் வரவில்லை.
உண்மையைச் சொல்லப்போனால், குலோத்துங்கன் கனதியான கவிதைகளுடன் நிறுத்திக்கொள்ளும் ஒரு சிந்தனைச் சிற்பி. கேலிக்கோ கிண்டலுக்கோ வேடிக்கை விளையாட்டுகளுக்கோ அவருடைய ஆக்கங்களில் இடமில்லை. ‘சிறியன சிந்தியாதான்’ என்னுட புனைபெயரை நாம் குலோத்துங்கனுக்கும் கொடுத்து விடலாம். அவருக்கும் அந்தப்பெயர் பொருந்தும்.

y
சுருக்கமாகச் சொல்வதானால், குலோத்துங்கன் கவிதைகள் அனைத்துமே ஓராள் நாடகங்கள்தான் என்றும் கொள்ளப்படலாம். அதனால் அவை தற்கூற்று வடிவத்தில் அமைந்து விடுகின்றன. தற்கூற்றே ஆயினும் அவற்றின் பேசுநர் (persana) முனைவர் குழந்தைசாமி என்ற விஞ்ஞானி அல்ல; எஞ்சினியரும் அல்ல; ‘கவிதைச் சன்னதம்' கொண்ட ஒரு பாத்திரம் அவர்தான் கவிதையின் பேசுநர்.
V எது எப்படி இருப்பினும் எஞ்சினியரையும் கவிஞரையும் நாம் தனித்தனிப் பொருள்களாகப் பிரித்துக்காண முடியாது. திறனாய்வு ‘கூடத்திலே’ நாம் அவ்வாறு செய்ய முயன்றாலும்அது வெற்றிகரமான பிரிப்பாக அமைவது அரிது. ஏனென்றால், இந்த விஞ்ஞானியும் கவிஞரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.
விஞ்ஞானி தம்முடைய ஆய்கூடத்திலே தம்முடன் நீக்கமற ஒன்றியுள்ள கலைஞரைப் பிரித்து (ஒதுக்கி) வைக்க முயன்றாலும் அது தற்காலிகமான - தேவை நோக்கிய ஓர் ஒதுக்கலாகவே அமையும். ஆய்கூடத்தில் மாத்திம் கலைஞர் வாய்பொத்தி மவுனியாய் இருப்பார். ஆய்கூடத்துக்கு வெளியாலே வந்ததும் அவர் கலைஞராய் மாறிவிடுவார். தத்துவம் பேசுவார்; தருமம் பேசுவார்; உத்தமராய் இரும் என்றும் ஒதுவார். சிற்சில வேளையில் சிந்தை நோவுற, அத்தகு நோவினை அழுதும் கூறுவார்
ஆம். ‘வெறுமை விரிவு' என்னும் கவிதையைத் தொடர்ந்து வரும் ஆக்கங்கள் பல, 6J 6O)6OTU படைப்புக்களை விடச் சற்று வித்தியாசம் ஆனவை. அவை உலகின் துயர்களைப் பொதுப்படப் பேசாமல், கவிஞரின் சொந்த உணர்வுகளை - ஆழ்நிலைப்பட்ட ஆதங்கங்களைப் பதிவு செய்துள்ளன. கண்ணிர் என்னும் கவிதையின் ஒரு பகுதியை வகைமாதிரியாகத் தரலாம்.
'பிறந்தபோது அழுதேன்' சுற்றம் பெற்றவர் நண்பர் மண்ணைத் துறந்தபோது அழுதேன்; அன்பு தோய நான் புரந்தோர் என்னை மறந்தபோது அழுதேன்; கண்கள் வறுமையின் கொடுமை காணத் திறந்தபோதெல்லாம் ஏழை தேம்பியே அழுதனம்மா!
அழுவதில் அமைதி கண்டேன் அருவி போல் கண்ணிர் பொங்கத் தொழுவதில் இன்பம் கண்டேன் தூய்மையின் வழியினின்று வழுவிய பொழுதிற் சேர்ந்த மையெலாம் விழியின் நீராற் கழுவினேன்; கண் சொரிந்த கங்கையால் புனிதன் ஆனேன்"

Page 39
இங்கு தமது தனிப்பட்ட துன்பதுயரங்களைக் கவிட் பொருளாக்கியுள்ளார், குலோத்துங்கன். இந்தவிதமான சொந்த உணர்ச்சிகளை உருமாற்றியோ உருமாற்றாமலோ தம் கவிதைகளில் வெளியிடுவது நமது கவிஞரின் வழமையான கலையாக்க முறைமை அல்ல. அற்பமான மனச் சலனங்களைத் தமது கலைப் படைப்பின் உள்ளடக்கமாகக் கொள்வதில் அவ்வளவு நாட்டம் இல்லாதவர் குழந்தைசாமி, என்றாலும் பாரதூரமான இழப்புகளையும் அவை தரும் இதய வேதனைகளையும் முற்றாக ஒதுக்கி வைப்பதும் அவருடைய இதயத்தின் மென்மையான தன்மைக்கு இசைந்த ஒன்றாகட் படவில்லைப் போலும். எனவேதான் அவர் தமது பிரத்தியேகமான (சொந்த) உணர்ச்சிகளையும், தமக்கு வாலாயமான கலை வடிவத்திலே (அதாவது கவிதை யிலே) பதிந்து வைக்கத் தவறவில்லை. என்றாலும் அவை வெறும் ஒப்பாரியாகவோ மிகை உணர்ச்சிப் புலம்பலாக வோ படியிறக்கம் பெறவில்லை. அளவு கணக்காக - அதே வேளை - உண்மைப் பண்பு கொண்ட கவுரவமான கவிதைகளாக அவை அமைந்துவிடுகின்றன.
V குலோத்துங்கன் கவிதைகளின் பிறிதொரு பரிமாணத்தை இனி நாம் நோக்குவோம். அவருடைய இனப்பற்றையும் மொழிப்பற்றையும் நாம் கவனிக்காது புறக்கணித்துவிட முடியாது. பழந்தமிழின் கலை வளத்தின்மீதும் அதன் அருமை பெருமைகள் மீதும் கொண்ட பற்றையும் பாசத்தையும் நாம் எடுத்து நோக்குதல் வேண்டும்.
'விதியே விதியே தமிழச் சாதியை’ எனும் பாட்டு நம் சிறப்புக் கவனத்துக்கு உரியது.
“இனத்தின் ஆசைகள் , இன்றைய நாளைய தினத்தின் தேவைகள் தெளிந்து. எத்திசை ஏகினும் எந்நிலம் வாழினும் முத்தமிழ்ப் பண்பின் மூலம் தொடர. தமிழுலகனைத்தும் தம்வழி ஈர்த்துத் தமிழினம் உயர்த்தும் தலைவர் காணுவீர்" என்று அறைகூவல் விடுக்கிறார் கவிஞர். இனமேன்மை பற்றிய பெருமிதம் இருந்தாலும் நிகழ்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் குறைபாடுகளையும் பலவீனங்களையும் கண்டு மனங்கசந்து இடித்துரைப்பதற்கும் குலோத்துங்கன் தயங்குவதில்லை இன்றைய தமிழர்களிடையே இடம் பெறும் உட்பூசல்களை நோக்கும் கவிஞர் தமிழர்களை ‘நவக்கிரக இனத்தவர் என்று ஒரு கவிதையிலே கிண்டல் பண்ணுகிறார். “செத்த நாகமும் சிறிது சீறலாம் சிதையில் ஏறிய சடலம் துள்ளலாம் ஒத்த நோக்குடன் தமிழகம் திரண்டு உரிமை கோரிய சரிதை ஏதடா?"
UdbtD. 50
 
 

என்று தம் வழமையான அறச் சீற்றத்துடன் கேள்வி தொடுக்கிறார், குலோத்துங்கன்.
திருமணத்திலும் சேர்ந்து பழகமாட்டார்கள்; திருவிழாவிலும் கூடிக் குலவிப் பேசமாட்டார்கள்; ஒவ்வொருவர் ஒரு திசையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குரலோடு சிதறி நின்று வன்மம் சாதிப்பார்கள்.
“பாலை வெண் மணல் சோலை ஆகலாம் பசுமை போர்த்திய பழனம் தோன்றலாம். வாலை நற்றமிழ் மாந்தர் சேர்ந்து நம் வளம் பெருக்கிய சரிதை உள்ளதா?" என்று காரசாரமாகக் கண்டனம் செய்வார், கவிஞர். தமிழின மாண்புபற்றிய இறுமாப்பும் தன்மானமும் கொண்ட வர்தான் குலோத்துங்கன். அந்த அபிமானம் காரண மாகவே நம்மினத்தின் பலவீனங்களையும் சிறுமைகளையும் பிட்டுக்காட்டி இடித்துரைக்கும் போக்கினையும் கவிஞர் கொண்டுள்ளார். மாண்பு கண்டு நிமிரும் பற்றுறுதியும் நலிவுகள் கண்டு குமுறும் கடூரமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இதனாலேதான் தமிழினத்தார் புதுமைகளை வரவேற்பதிற் காட்டும் தயக்கத்தையும் சோம்பலையும் அசமந்தப் போக்கினையும் தீவிரமாகக் கண்டிக்கிறார், கவிஞர்.
“வையத்தின் துருவத்தின் முனையில் எங்கோ மலர்கிறது புதுமை எனின், மறுநாள் யாவும் ஐயத்திற் கிடமின்றி தமிழில் சேர்க்க அடிப்படையும் உத்திகளும் அமைக்குங்காலம்
தரமான கல்வி வளம் துறைகள் தோறும் தமிழ் மொழியின் வழி காணத் தரணி ஏங்கும் வரலாறு புதிதாகப் படைக்கும் காலம் மலைபோல நம் கண்முன் வளர்ந்து நிற்கும்" என்பார் கவிஞர். வரலாறு படைக்கவேண்டிய காலத்திலே நம்மவர்கள் வருநாளின் தேவைகளை மனங்கொள்ளாமல் சங்ககாலச் சிறப்புகளை மாத்திரம் பேசிப்பேசிப் பொழுது போக்கும் பேதமைக்கு இரங்கி நிற்பார், குலோத்துங்கன்.
இந்த இடத்திலே, யான் எனது இளம் பராயத்திலே (பதினெட்டாவது வயதில்) எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. ‘அந்தோ தமிழகமே என்னும் கவிதையிலிருந்து சில வரிகளை இங்கு தருகிறேன்.
“புதுமை என்றா சொல்லுகிறான்? விட்டுத் தள்ளு
புட்பக விமானம் தமிழ்ச் சொத்துத் தானே! இதை மறுப்பான் யார்? அவனைக் கேள் இக்கேள்வி.
இராவணன் ஒரு தமிழனன்றோ? ஏனோ அய்யம்? முதல் முதலில் தமிழனடா உலகில் வாழ்ந்தான் முதற்குரங்கு தமிழ்க் குரங்கு- சாட்சி கூறும் இதுவன்றோ உனது நிலை தமிழர் நாடே!

Page 40
ஏன் இன்னும் வீண் பெருமை பேசுகின்றாய்?
மேல் நாட்டில் வளர் கலைகள் இல்லை, எங்கள் மேன்மையுறு தமிழ்மொழியில்; ஆனால் என்ன? வால் கட்டித் தமிழுக்கு வாழ்த்துப்பாட வாழுகிறோம் பல பேர்கள்; குறைவே இல்லை
சால நன்று எனும்படியாய்ப் புதுமை காணும் தமிழன் இல்லை - அறிவியலை ஆய்வான் இல்லை குலோத்துங்கனின் ஏக்கங்களை ஒத்த சில ஏக்கங்களும் அங்கலாய்ப்புகளும் எனக்கும் இருந்தை நினைவுக்கு வந்தபடியால் அன்று யான் எழுதிய வரிகள் சிலவற்றை இங்கு மேற்கோளாகத் தந்துள்ளேன்.
தம்மினத்தின் அருமை பெருமைகளை உணர் துள்ள அதேவேளை, அவ்வினத்தின் பின்னடை6 களையும் நினைத்துப் பார்த்து விழிப்பினை வேண்டிப்பாடு 'குலோத்துங்கனின் உணர்வுகளை நாம் சரியாக விளங்கி கொள்ளல் வேண்டும். போலித்தனமான சுயதிருப் யினால் ஒரு பயனும் இல்லை. தம்மவர்களின் கன் ணுறக்கங்களையும் கனவுப்போலிகளையும் விட்டொழிக்கு முழுவிழிப்புத்தான் இன்று நம் இனத்தின் உடனடி தேவையாய் உள்ளது.
உலக அரங்கில் இடம் பெற்று வரும் அறிவிய6 விழிப்பினை நன்கு உணர்ந்துகொண்ட இனமானி’ என் முறையில், குலோத்துங்கனின் உணர்வுந்தல்களு அந்த உந்தல்களை மையமாக்கி எழும் அலைகளு மிகவும் ஆரோக்கியமானவை; அத்தியாவசியம் ஆனவை
V நம் கவிஞரின் ஆழ்ந்த அக்கறைக்கு உள்ளாகு மற்றுமொரு முக்கிய பிரச்சனை மாந்தரிடை நிலவு ஏற்றத்தாழ்வுகள் பற்றியதாகும். வேறு சொற்களி கூறுவதானால், வையகமெங்கும் பரந்து வாட்டு வறுமைத்துயர் கவிஞர் குழந்தைசாமியின் சிந்தைை இடையீடின்றி உறுத்திக்கொண்டிருக்கும் ஒன்று எனலாப இது பற்றிய பாட்டுகள் பலவற்றைப் பல்வேறு தலைப்புகளி அவர் தந்துள்ளார். “வாழ்ந்தறியோம்" எனும் கவிதையி: வறுமைத் துயரில் வாடுவோரின் வருத்தங்க பேசப்படுகின்றன.
"வீடுகட்டி நகரெடுத்தோம் குடிசை இல்லை: விளைத்திட்டோம் கூழில்லை; வியர்வை சிந்திக் காடு வெட்டிப் பருத்தி தந்தோம்- கந்தை இல்லை கை சலித்துப் பாடுபட்டு மெய்யும் நோவப் பாடுபட்டுப் பள்ளி செய்தோம்; எங்கள் மக்கள் பயின்றதில்லை: வாழ்நாளில் ஒரு நாளேனும் ஏடு தொட்டுக் கண்டதில்லை: எல்லாம் செய்தோம் ஏது மற்றோம். வாழ்ந்தறியோம்; ஏழை நாங்கள்"

üb
iல்
இது குலோத்துங்கன் கவிதைகளிலே கேட்கும் ஏழைகளின் முறைப்பாடு "காய்ந்த இதழ், உலர்ந்த முகம், கலங்கும் கண்கள் கலைந்த குழல்; ஆயினும் வற்றாத அன்பில் தோய்ந்த உளத் துணைவியர் கையணைப்பில், மண்ணில் துவள் குழந்தை இளஞ்சிரிப்பில், கார்வானத்தில் பாய்ந்து மறை மின்னலென மனித வாழ்வுப் பண்பு கண்ட உணர்வு வரும் மறு கணத்தில் தேய்ந்த உடல், இருள் வறட்சி, இறக்கவில்லை: இருக்கின்றோம்: வாழவில்லை, ஏழை நாங்கள்"
“வாழ்ந்தறியோம்" என்ற பாட்டில் வரும் வரிகள், மேற் காட்டியவை.
‘கோடி தலைகள் பிதற்றுகிறாய்’ என்று தலைப்பிடப்பட்ட மற்றொரு பாட்டு வறுமைத் துயரின் கோரத்தை நிதரிசனமாகப் படம் பிடிக்கிறது.
"சேற்றுப் புழுக்களும் பூச்சிகளும் - சிறு
தேரை இனங்களும் வாழுதடா காற்றுத் தவழ்ந்திடும் வானத்திலே - திரி காகம் பசித்து உயிர் விட்டதில்லை - பெரும் ஆற்று வளம் நிறை பொன் வயல்கள் - மணி அள்ளிக் கொடுத்திடும் வையத்திலே சோற்றுக்கு மானிடர் வாடுவதா? மனம் சொல்ல கொதிப்பதை யாருணர்வார் ? " பச்சை மரக்கிளைக் கூட்டினிலே துக்கணாங் குருவி தன் குஞ்சுகளுடன் கொஞ்சுகிறது. குன்றிலுள்ள குகைகளிலே விலங்கினம் நித்திரை கொள்ளும். உச்சி வெயில் கொளுத்தும் நேரத்திலும், குளிரால் நடுங்கும் குளிர்காலத்திலும் தக்க இருப்பிடம் இல்லாமல் தவிக் கிறார்களே மானிடர்கள்! சீ, இது என்ன கொடுமை என்று நம் கவிஞரின் சிந்தை சீறுகிறது.
சுற்று முற்றும் பார்க்கிறார், கவிஞர். மண்ணுலகெங்கும் பஞ்சம் பசி பட்டினி, தொற்றுநோய் ஏழ்மை, பணக்காரர் தொல்லை! இவற்றிடையே துடித்துப் பதைக்கிறார்கள் ஏழைகள்.
பஞ்சமும் பசியும் நோயும் பழியெனத் தொடர மண்ணில் துஞ்சிடும் வறியர் துன்பம் துடைப்பதும் இயல்வதின்றேல் விஞ்சையும் கலையும், ஒதும் வேதமும் செய்வதென்ன ? பொங்கியெழும் புலவனின் புண்பட்ட நெஞ்சத்தின் பொருமலை, இதனை விஞ்சிய தாக்க வலுவுடன் எடுத்து இயம்பிட இயலாதன்றோ!
மனித குலம் உடையார் என்றும் கிடையார் என்றும் இருதலைப்பட்டு வர்க்கங்களாகி வருந்துகிறது. இதனை ‘விரிசல் நிதமும் மிகுகிறது' என்று பேசுகிறார், கவிஞர். கரிசல் வயல் நிலம் வெடிக்கிறதைப் போல “நம் கண்முன் மானிடம் பிளக்கிறது". இது கவிஞர் கூற்று. ஒரே பிழம்பாக,

Page 41
உறுதியாக, வலிமை குன்றாமல் இருக்க வேண்டிய மானுட விரிசல் கண்டு பிளவு படுவதென்றால், அது எவ்வளவ பயங்கரமான அவலம்!
இந்த விதமான விரிசல் எத்தனை விபரீதமானது கடூரமானது
"கட்டிய கோபுரம் அதிர்கிறது- அதன் கலசம் கவிழ்ந்து சரிகிறது ஒட்டிய வயிற்றின் பசி நெருப்பில்-நம் உயர்வும் கனவும் வேகிறது" என்று அழுகிறது. குலோத்துங்கன் கவிதை நெஞ்சம் “ஒன்றே குலம்" என்று நீதி திறம்பாமல் நிமிர்ந்து நிற் வேண்டிய மனித சமுதாயம் ஏழை என்றும் அடிமை என்று ஒரு சாராரைத் தோற்றுவித்து அவர்களின் முதுகில் ஏறியமர்ந்து சவாரி செய்ய எண்ணுவது எவ்வள6 ஈனத்தனமானது! இந்த அநீதியினை ஆணித்தரமா எடுத்துரைக்கும் வர்க்க விழிப்புணர்வு நம் கவிஞரிட இருப்பது கூர்ந்து நோக்கிடத்தக்கது. அவர் பாடுவார்.
"அறிவன்றி ஒளி ஒலி எதுவும் அறியோம்; இன்றெ ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும் தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித் திசை எங்கும் அலைபவர் யாம்; திறந்த நெஞ்சர் விரிகின்ற கொள்கையினர் ; மாற்றமில்லா விதி எதையும் எக்காலும் ஒப்போம் ; சாலச் சிறிதென்ற துரும்பொன்றில் பார் புரக்கும் செல்வம் எல்லாம் காண்கின்ற திறத்தவர் யாம்" இன்னும் சொல்வார். 'எண்ணுவதும் படைப்பதும் நம் பணிகள் யாங்கும் எல்லோர்க்கும் சம வாய்ப்பு நிறைந்ததான மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நா6ை வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி உழைப்பதுவோ யாம் மகிழும் இன்பம்; மற்றும் விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை மீளாத நரகென்றும் பயந்தோமில்லை" குலோத்துங்கனின் கொள்கைப் பிரகடனம் என்றே நா இதனைக் கூறிவிடலாம்.
VI
உண்மையில் குலோத்துங்கனை எனக்கு அறிமுக செய்து வைத்ததே இந்தக் கவிதைதான்.
ஆம்; அந்தச் சம்பவம் சுவாரசியமானது. அ 1969ஆம் ஆண்டு. “தாமரை” ஆகிய முன்னணி முற்போக் இலக்கிய சஞ்சிகையில் “விண்ணுலகம் உண்டெனினு என்ற மேற்படி கவிதை வெளியாகி இருந்தது. அே இதழின் அட்டைப்படமாக என்னுடைய ஒளிப்படத்ை (போட்டோவை) பிரசுரித்திருந்தார்கள். உள்ளே எ கவிதைப் பணிகள் பற்றிய சிறு குறிப்பும் வெளியா இருந்தது. அந்தக் காலத்திலும் ‘தாமரை” பொதுமைய தாயுடைய திங்கள் இதழாக ஒளி வீசிக்கொண்டிருந்தது

ό
‘புதிய கதைகள்’
மலை மகள்' ஆக்கத்தில் உரு வான சிறுகதைகளின் தொகுப்பு.
தாமரையிலுள்ள அபிமானம் காரணமாக அதில் வரும் அனைத்து விடயங்களையும் கருத்துன்றிப் படிப்பது என் பழக்கமாய் இருந்தது. குலோத்துங்கன் கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்துச் சுவைத்தேன். அது எனக்கு மனப்பாடமாகி விட்டது. பின்னர் அதை அன்பர் கைலாசபதிக்கும் சொல்லிக்காட்டினேன். அவருக்கும் அது பிடித்துக் கொண்டது. பிறகு கைலாசும் நானுமாக, “கவிதை நயம்’ என்னும் புத்தகத்தை எழுதிய வேளை சில கவிதை விமர்சனக் கோட்பாடுகளுக்கு உதாரண விளக்கமாக, குலோத்துங்கன் கவிதையினை மேற்கோள் காட்டி எழுதினோம். குலோத்துங்கனின் அந்தக் கவிதை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டோம்.
இக்கவிதையில் உணர்ச்சிக்கு அதிக இடத்தை கவிஞர் கொடுத்தாரில்லை. உணர்ச்சிக்கு மேலாக, சிந்தனையே - அதாவது கருத்தே ஓங்கி நிற்கிறது. உணர்ச்சியோ மிகைப்பட்டு வெளித்தோன்றாமல் பின்னணியில் நின்று செயற்படுகிறது. ஆயினும் இங்கும் உணர்ச்சி உண்டு.
இந்த மதிப்பீட்டினை கா. சிவத்தம்பி அவர்களும் பிறரும் வழிமொழிந்துள்ளனர்.
குலோத்துங்கனைக் கைலாசும் நானும் அறிந்து கொள்ள நேர்ந்த சந்தர்ப்பத்தையும் சூழலையும் மீள நோக்கி நினைவு கூர்வதும் ‘நாம் மகிழும் இன்பங்களுள் ஒன்றாக அமையலாயிற்று என்று நினைந்து பார்க்கும்போது பெருமை உண்டாகிறது.
குலோத்துங்கனின் அறிவுலக வாழ்வு பற்றிச் சீர்துக்கிப் பார்க்குந்தோறும், புத்தியாளராக ஒளி வீசும் அதே வேளை ‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’ ஆகவும் வலிமையான உணர்ச்சிகள் கொண்ட கலைஞராகவும் அவர் மிளிர்வதை நோக்கித் தமிழர்களாகிய யாம் எல்லோரும் அவரைப் போற்றி மதித்தல் தகும்.
'குலோத்துங்கன் கவிதைகள் -முழுத்திரட்டு’ பொதுமை யறப்பற்றுள்ள அனைத்துத் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் பெருவிருந்தாய் அமைகிறது என்பதை மீளவலியுறுத்தி இந்த விமரிசனக் குறிப்பை நிறைவு செய்கிறேன்.
兼

Page 42
நூல் நோக்கு:
ஆய்வு அணுகுமுறைகளில் இலக்கியம்- இலக்கிய கர்த்தா - இலக்கியகர்த்தா வாழும் சமூகவியல் பின்புலம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. முதலில் இலக்கியத் தையும் இலக்கியகர்த்தாவையும் உருவாக்குகின்ற அவ்வக்காலத்திய சமூக, பொருளாதார, அரசியல் சூழமைவை விளங்கிக்கொண்டு இயலுமானளவு சாத்தியமான தீர்மானத்துக்கு வரவேண்டிய அவசியம் உண்டு.
கவிஞர் த. ஜெயசீலனையும் அவரது படைப்பையும் புரிந்துகொள்வதற்காக அவருக்கு முன்னும் அவரது சமகாலத்திலும் எமது தேசிய அரசியல் அசைவியக்கத்தின் பெரும்பாகமான பெரும்பான்மை ஓட்டம், தமிழ்த் தேசியவாத அரசியல் சுழற்சிக்குள் நின்றமையும், அவரை உருவாக்கிய யாழ். சமூகவியற் பின்புலம் பெரிதும் சாதியப் பிளவுகள் போன்ற முரண்பாடுகள் நிறைந்த சைவசமய ஆசாரபூதித்தனங்களுடன் கூடிய மரபுவாத தொன்மைத் துவச் சூழலாக உள்ளமையும் கவனிக்கத்தக்கன.
மாக்சியத் தளங்கொண்ட சஞ்சிகைகள் ஒரு சிலவற்றில் த. ஜெயசீலன் சில ஆக்கங்களை எழுதியிருந்தாலும், தமிழ்த்தேசியத் தளங்கொண்ட இலத்திரனியல் ஊடகமொன்றில் ஆரம்பத்திலும் பின்னர் தமிழ்த்தேசியத் தளங்கொண்ட அச்சு ஊடகங்களில் தனக்கான கவிதைத் தளங்களைக் கொண்டிருந்தார். இனப்போர் காலத்துள் யாழ் இந்துக்கல்லூரியில் கற்று, யாழ்.பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியாகப் பயின்றவர். இனப் போரின் சகல பரிமாணங்களிலும் ஒரு சாதாரண சிவிலியன் என்ற வகையில் அனுபவங்களைச் சம்பாதித்தவர்.இவரை கவிதைத் துறையில் பாடசாலை வாழ்நிலையில் ஊக்குவித்த ஊக்கியாக பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் இடம் பெறுகின்றார். மேலும் மிகவும் popular Stages ஆக திகழ்ந்த கம்பன் கழகத்தின் ஜெயராஜ் அவர்கள் ஒழுங்குபடுத்தும் அரங்குகளும் த. ஜெயசீலனின் தொடக்கங்கள் எனலாம்.
இதற்கப்பால் இவரது காலத்திற்கு சற்று முந்திய இவரது சமகாலத்தய சில ஈழக்கவிஞர்களை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவரது காலத்துக்கு
 

கைகளுக்குள் சிக்காத காற்று
க.வேல்தஞ்சன்
2004அன்று நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற சீலனின் ‘கைகளுக்குள் சிக்காத காற்று கவிதைத் S வெளியிட்டு வைபவத்தின்போது க.வேல்
நிகழ்த்திய னாய்வு உரையின் சாராம்சம்
முந்தியவர்களும் சமகாலத்தவர்களுமான கவிஞர்களிடம் இவரது ஈடுபாடு கணிசமான அளவு இருந்திருக்கும்.இந்தப் பின் புலத்தில் இவர் ஆரம்பத்தில் தந்த கவியரங்க கவிதைகளும் இலத்திரனியல் ஊடக வழியும் அச்சு ஊடகங்கள் வழியும் தந்த கவிதைகளும் மரபு பேணுபவையாக இருந்துள்ளன. இவரது முதலாவது கவிதைத் தொகுதியான 'கனவுகளின் எல்லை’ கவிதைகளில் மரபு பேணப்பட முற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவ்வாறே தற்போது அவர் வெளியிடும் இத்தொகுதியிலும் மரபில் அவரது அக்கறை வெளிப்படுகிறது. “வானம் எம் வசத்தில்" தொகுப்பில் உள்ள ஜெயசீலனின் கவிதையில் மரபின் செழுமை தெரிகிறது.
மேலும் சீலன் தான் ஒரு சைவ சமயி என்பதில் உறுதியானவர். அவரது இக்கவிதைத் தொகுதியிலும் தெய்வ அனுட்டான ஆசாரத்தின் தீவிர வெளிப்பாடுகளை தரிசிக்கலாம் கனவுகளின் எல்லையில் 'கவி மூலம்’ என்பதன் கீழ் பார்க்கலாம். இந்த வெளியீட்டில் 'துணை தருக" என்றே தொடங்குகிறார். எனினும் இத் தொகுதியின் ‘ஓமமும் வேள்வியும்’ என்ற கவிதையில் წ9([ჩ வித்தியாசமான அதிர்வை சீலன் முன்வைக்கிறார்.
“ஆறும் நானும் கவிதையில் ‘மூன்று முறை துப்பி முழுதாய்ச் சபித்துவிட்டு நடக்கின்றேன்! ஆற்றின் எதிர்த்திசையில் நடக்கின்றேன்.” ஏன் எதிர்த்திசையில் நடக்க முடிவெடுக்கிறார் ; என்பதில் வியப்பேதும் இல்லைத்தான்! போரின் அழிவையும் அதன் அரசியல் பரிமாணத்தில் ஒருவித அர்த்தமிழப்பையும் கவிஞன் உணர்வதாய் தோன்றுகிறது. பக்கம் 65ல் 'கழுத்தறுந்த சேவல் தரும் அவலமும் மிகப்பெரியது.
தொடர்ந்து வரும் கவிதைகளான ‘கொள்ளை போன குளம்' , 'கண்ணீரின் பாடல்’, ‘புலம்பல்’ போன்ற கவிதைகளும் அரசியல் ரீதியில் அர்த்தம் கொடுபடாத பல புலம்பல்களைத்தான் வெளியிடுகின்றன.
பக்கம் 9இல் இரண்டாம் பந்தியும் மூன்றாம் பந்தியும். கனவுகளின் எல்லைவரை சென்ற கவிஞன் ஜெயசீலன் இனியெமக்குத் துயரா எல்லை? என்று கேட்கிறார்.
JòUD. 50

Page 43
தார், மறத்தல் ஆகிய கவிதைகளும் அரசியல் கவிதைகளாகப் பரிணமிக்கின்றன.
‘மெய்யுறவு’ என்ற கவிதை போரும் அவலங்களும் அழிவுகளும் சூழ்ந்து கவிந்திருக்கின்ற காலப் பகுதியின் அகம் சார் விடய மொன்றையும் அதன் தொடர்புப் பங்காளிகளின் மெய்யுற வையும் சரிவரப் பேசுகின்றது.
அடுத்து வரும் இல்லாத இதம்’ என்ற கவிதை இத் தீவில் நடந்த போர் ஒரு இனத்தின் பிராந்தியத்தை சுடுகாடாக்கியதையும் மற்றைய இனத்தின் பிராந்தியம் அசல் அழகோடு செழித்து ஓங்குவதையும் ஒலிக்கிறது.
‘நெருடல்’ என்ற கவிதையில் கவிஞன் காலி முகத்திடலில் நின்று தன்னினத்தின் அழிவால் ஏங்குவதைச் சுட்டுகிறது. ‘கண்டி வீதியில் கவிந்த கவிதை” இத்தீவின் இரு தேசிய இனங்களின் போராட்டக்காரர்கள் மடிந்த கதை கூறுகிறது.
தற்போது நடைபெறும் அரசியல் பேச்சுவார்த்தை களிலோ சமாதானத் தீர்விலோ பெரியளவு நம்பகத்தன்மை கொள்ளாத யதார்த்தத்தை கவிஞர் நன்றாகப் பிரதிபலிக்கிறார்.
ஊர்வலம், உருவேற்றல்,கேள்விகள்,நிகழ்காலம், நியாயங்கள், உங்களது கைகோர்ப்பு, வெளிநாட்டுப் பறவைகள் ஆகிய கவிதைகள் சமாதானமும் போருமற்ற இச் சூழலில் ஒரு பொதுத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெரும்பான்மை இனத்தின் புத்திஜீவிகளும் மத்திய வகுப்பினரும் ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர பெளத்த சிங்களத் தேசியத்தின் 9 பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள நிலையில் அவ்வினத்தின் விவசாயிகள், கடற்றொழி லாளர்கள், தொழிலாளர்கள், ஏழைவர்க்கத்தினர் மற்றுமொரு தீவிர சிங்களத் தேசியவாத சக்தியான ஜே.வி.பியின் 39 பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள நிலையில் சமாதானத்தின் போலிபற்றி அரசியல் கவிதைகளுக்கூடாக யதார்த்தமாக பேசப்படுவது சமூகத்தின் செவிகளுக்கு விழ வேண்டிய விடயமாகிறது.
இந்த இடத்தில் 1985 நவம்பரில் ஏறத்தாழ 19 வருடங் களுக்கு முன்பு உ.சேரன், அ.யேசுராசா முதலியோரால் தொகுக்கப்பட்ட'மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பில் சேரன் வழங்கிய முன்னுரையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையினங்கள் வெளிப் பட்டிருந்தன.
உரிமைப் பேச்சு வார்த்தைகள் சாத்தியமற்றுப் போகும் நிலமையை வெளிப்படுத்தும் ஜெயசீலனும் பல கேள்வி களைக் கேட்கத் துண்டுகிறார்.
'பாலுற்றும் பாட்டு’, ‘வல்லமைகளுக்கு வரவேற்பு ஆகிய கவிதைகள் ஏதோ ஒருவகை நம்பிக்கையூட்டு வதற்கு முனைந்தாலும் காரிருளில் ஒரு சின்னஞ்சிறு வெளிச்சமாக மங்கிவிடுகின்றன. இவ்விரு கவிதைகளிலும் பெரும்பாலும் மரபு பேணப்பட்டுள்ளது. “எமது பாடல்கள்’ என்ற கவிதையும் நம்பிக்கைத் தொடர்பை அறவிடாது காக்க முயல்கிறது.
இவற்றுக்கப்பால் இயற்கை, தொழில்வர்ணனை என்பனவற்றை சிறப்பாக அழகியலுடன் விபரிக்கும் நல்ல கவிதைகளாக நம்புதல், கற்றுவரும்காலம், துணை, புதிதாய் மலர்ந்த ஆறு, அபிமான வீரன்,குயிலி என்பன

உள்ளன. இதற்குள் குயிலி என்ற கவிதையை வாசிக்கையில் இயற்கையில் மூழ்கி குயிலியின் தவிப்பில் தவிக்கும் கவிஞனின் தவிப்பு எமக்குள்ளும் தொற்றி விடுகிறது.வெளிப்பு என்ற கவிதை விவசாயியின் தொழில் அழகையும் தொடர் முயற்சியையும் விபரிக்கின்றது. ஆறுதல் என்ற கவிதை நல்லூர் கோவில் களத்தை இயற்கை வனப்போடு விபரிக்கிறது. கார்த்திகை மழை என்பது தமிழ் மண்ணின் மாரிகாலத்தை விபரிக்கிறது. எனினும் “நீயில்லை. இங்குன் நிழலில்லை! ஆனால் நீ ‘கார்த்திகை நாள் தீபத்தில் ‘கண் திறப்பாய்’ என்பதிலே எனக்கையம் இல்லை!" எனும் வரிகள் மாவீரர் நினைவிருப்பை தொட்டுயிர்க்க வைக்கிறது. ஒரு மார்கழித்திருவெம்பா காலத்தை விபரிக்கும் கண்ணம்மா என்ற கவிதை ஒரு சைவத் தமிழ்ப் பெண்ணின் அப்பாவித் தனமான இல்லறப் பற்றையும் அதனுடாக பெண்ணியல் சிந்தனை அதிர்வொன்றையும் ஏற்படுத்தும் ஒரு வித்தியாசமான வெளிப்பாடாக உள்ளது. துயரின் கனம், துண்டிற்தாலிஅகம்பாடும் இரு ஏக்கங்கள் படிந்து கிடக்கின்றன.
இவ்வாறாகப் பல கவிதைகள் தொடர்கின்றன. எனினும் சமூக அரசியல் பரிமாணத்தில் ஜெயசீலனின் கைகளுக்குள் சிக்காத காற்றை பகுப்பாய்வு செய்ய முயற்சிப்பதே பலன் தரும் என்று நினைக்கிறேன்.
‘நாட்டுக்குரைத்தல்' அருமைத் தாய்நாட்டை நினைக்க பாவமாயும் பயமாகவும் இருக்கிறது என்று கூறுகிறார் கவிஞர் ஜெயசீலன். தாய் நாட்டின் அழுகை, துயர்கள் என்பன சமூகத்தின் ஒரு தரப்பாரால் தமக்கான சுயநலங்களைப் பேணவும் வளர்க்கவும் உதவுகிறது என்கிறார். தாய் நாட்டின் பசி, வலி என்பனவும் அத்தரப்பால் தமக்கான உணவு மருந்து போன்ற தேவைகளை ஈட்டிக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார். தாய் நாட்டின் அலைச்சலால்தான் ஒரு தொகுதி மக்கள் உலகெல்லாம் குடியுரிமை பெற்றார்; குலம் வளர்த்தார் என்றும் கவிஞர் உரைக்கிறார். “உன் துடிப்பால். தம் கதிரை ஆடாமற் காக்கிறார்கள், உன்னைப் புளுகு வோர்கள்." என்று சாட்டையடி போடுகிறார் ஜெயசீலன்.
சமூக பொருளாதார ரீதியில் தாழ்ந்த வகுப்பினராக இருக்கும் சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரும் மத்திய வகுப்பைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வீதத்தினரும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மலினமான கூலிகளாகப் பயன் படுத்தப்படுகின்றனர். அக் கண்டங்களில் வழங்கப்படும் அவர்களின் உழைப்பு அக்கண்டங்களில் அந்நியமாகிப் போகிறது. அங்கு அதிக பட்ச சுரண்டல் இடம்பெறுகிறது. அவர்களுக்கு அக் கண்டங்களில் வழங்கப்படும் அவர்களின் உழைப்பின் ஒரு சிறு பகுதியான கூலி, அவர்களது குடும்பங்களுக்குரிய பொருளாதார பேணுகைக்கு அனுப்பப்பட, அதையும் திறந்த சந்தையின் நுகர்வுக் கலாச்சாரம் இங்கு விழுங்கிவிடுகிறது, கட்டுப் படுத்தப் படாததாகவும் மத்திய திட்டமிடல் இல்லாததாகவுமுள்ள, நாம் அரசியல் ரீதியாக எதிரி என்று கருதுபவனின் பொருளா தாரத்தின் ஒரு பகுதியினால் எமது சுயநிர்ணயப் பிராந்தி யமும் இன்னமும் கட்டுப்படுத்தப்படுவதனால் தாய் நாடு பற்றிய அரசியல் பொருளாதார திட்டமிடல் பற்றிய எந்தத்

Page 44
தெளிவுமற்ற கீழ் மற்றும் மத்திய குடும்பங்களிலிருந்து மலிவான கூலிகளாகச் சென்றோர் அரசியல் சூனியத்துள் நின்று, குளிர்க் கொடுமைக்குள் நாடி நரம்பு உறைய அல்லலுறுகின்றனர். தமது Tean ages இலும் இருபது வயதுகள் கடந்த நிலையிலும் ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களுக்கு மலிவான கூலிகளாக உள்வாங்கப் பட்ட தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் உழைத்து வலித்து களைத்து என்றோ ஒரு காலகட்டத்தில் இங்கு மீள வந்திறங்கலாம். அன்றேல் குடியுரிமைகளைப் பெற்று சந்ததிகள் அங்கு தொடர்ந்து வாழலாம் போராட்டம், போரிடும் மண்ணின் தனித்தனி வெவ்வேறான சிறு அளவிலான நலன்புரி நடவடிக்கைகள் என்பனவற்றுக் கான நிதி சேகரிப்பு போன்றவற்றுக்கான பயன்படுத்துகை கூட தொடர்ந்து சில ஆண்டுகளுக்கே நீடிக்கலாம். அடுத்த அடுத்த சந்ததிகளின் அந்த நாடுகளின் சமூக பொருளாதாரச் சூழ்நிலையும் அரசியல் அந்நியப்பாடுகளும் இதற்கும் இடம்கொடுக்கப்போவதில்லை.தாய் நாட்டுக்கு மீள இங்கு வருவோர் கணிசமான அளவில் அரசியல் சீரழிப்புக்கும் உள்ளாகி இருப்பர் என்பது நிதானமான உண்மைதான். அவ்வாறான சீரழிப்புக்களுக்கு உள்ளா காதவர்களும் கூட பொருளாதாரத் தளத்தில் அரசியலைப் பார்க்கும் திராணியற்றவர்களாக வழமை போல வெறுமுணர்ச்சிக் கொந்தளிப்புக்காரர்களாகவும் தங்களது பங்களிப்புக்கள் பற்றி மிகைபடக் கூறி தம்பட்டம் அடித்துத் திரிபவர்களாகவுமே இருப்பர்.
கவிஞர் ஜெயசீலன் தாய் நாட்டின் அழுகை துயர்கள், பசி ,வலி ,அலைச்சல் இவை எவ்வகையில் அரசியல் தஞ்சம் கோருதல், அகதி அந்தஸ்து கோருதல் என்பவற்றினூடாக ஒரு பொருளாதார அம்சமாகிறது என்பதை சேய்களின் மகிழ்ச்சி,புதல்வர்களின் பாடல், மைந்தர்களின் உணவு, தணயர்களின் மருந்து ஆகிய சொற்றொடர்கள் ஊடாக, குறியீட்டு யுக்தியினுடாக உரைக்கிறார்." உன் மைந்தன் குடியுரிமை பெற்றமை உனது அலைச்சலால் தான்" என்றும் தெரிவிக்கிறார். இங்கு சீலன் தாய்நாடு மூலமாக உருவகிக்க முனைவது போனவர் போக எஞ்சியிருப்போர். இவ்வாறு எஞ்சியிருப்போரில் அவர்களது செயற்பாட்டளவில் இரு தரப்பாரை அவர் அறிமுகம் செய்கிறார். “உன் துடிப்பால். தம்கதிரை ஆடாமற் காக்கிறார்கள்,உன்னைப் புளுகுவோர்கள்"
புளுகிப் புளுகி கதிரை ஆடாமல் பார்க்கின்ற இந்தக் கூட்டத்தைத்தவிர, ஒரு தியாகத்தனமான அர்ப்பணிப்புச் "சூழ்நிலையில் “என்னருமைத் தாய் நாடே! உனக்காய் உயிர் சிந்திச் சின்னவரோ மெழுகானார் ! என்று கவிஞன் பேசுகிறபோது வேதனை வரம்புடைக்கிறது. “மாற்று டைக்கும் நேற்று வழியற்றிருக்கையிலே காற்றடிக்கும் திசையெல்லாம் கைநனைத்த பெரியோர்." பற்றிச் சீலன் கூறும்பொழுது கொடுப்புக்குள் ஒரு நையாண்டிச் சிரிப்போடு கவிஞன் தோன்றுகிறான். என்னவனின் அடிமடியில் கால் மிதிக்கப்படும் நிலையில், இல்லமும் இல்லறமும் இருப்பும் காப்பாற்றப்படும் வகையில் வரையப்படாத அரசியல் விதியின் சொந்தக்காரர்களாக சூத்தைபட்டுப் போயுள்ளோம். சிலபேர்வழிகள் தங்களுக்கு மொழிகளுக்கு

இடையில் வேறுபாடுகள் புரிவதில்லை என்றும் கலாசாரங் களுக்கடையில் மாறுபாடுகள் புரிவதில்லை என்றும் சர்வதேசக் கனவான்களாக அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளைத் துரைத்தனத்திடம் விருதுகள்பெற துடிப்போடு திரியத்தொடங்கி விட்டனர். அவ்வாறு ஏற்கனவே திரிந்த சிலரையும், பேரினவாத முதலாளிய அடிவருடும் அரசியல் மூலங்களோடு தோழமை கொண்டாடும் அரசியல் விபச்சாரகர்களயும் “காற்றடிக்கும் திசையல்லாம் கைநனைத்த பேரியோர்."என சீலன் விழித்துள்ளமை பொருத்தமாக அமைந்துள்ளது.
அந்தக் கவிதையின் இறுதியில் இத்தமிழ்த் தேசியம் இன்னும் நின்று நிலைப்பதற்காக இந்த மண்ணில் எஞ்சியிருந்தோர் பற்றியும் அவர்கள்தான் ‘இந்நாட்டு மன்னர். திரையரங்கில் ஏழைகள் போல் பின்னுக்கு நிற்கின்றார். “பின்னுக்கு பின்னே நான்.உந்தன் நிசச்சிரிப்பை ஓர் தடவை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் தேடி எட்டி எட்டிப் பார்க்கின்றேன்." என்று தனது நிலைகூறி, அக்கவிதையை நிறைவு செய்கிறார்.
ஒரு அரசியல் கவிதை என்ற வகையில் முப்பதுக்கும் உட்பட்ட வரிகளில் தமிழ்த்தேசியத்தின் நிலைமையை அச்சொட்டாகப் பதிந்திருக்கிறார் கவிஞர். யதார்த்தமாக உள்ள வர்க்கச்சிந்தனைத் தளத்தில், ஒரு பொருளாதார அரசியல் பரிமாணத்தின் வெளிப்பாடாக கவிஞனின் வரிகள் வெளிவருகின்றன.
இந்தவகையில் தமிழ்த்தேசியவாதம் பிரசவித்த பெரும்பாலான கவிஞர்கள் அன்றுதொட்டு இன்றுவரை யதார்த்தத்தை மேலோட்டமாக பதிவுசெய்துவிட்டு தமது இலக்கியப்பணி நிறைவுபெற்றுவிட்டதாகத் கருதி திருப்தியடைகின்றனர். முன்பே இருந்துவந்த சாதிசமயப் பிளவுகள், பிரதேச இன வேறுபாடுகள் முற்றாக இன்னும் மறையவில்லை. இப்பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் வரலாற்று இயங்கியல், பொருள்முதல்வாத இயங்கியல் அடிப்படையிலான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப் படவில்லை. அந்த வகையில் எந்தவிதமான தத்துவார்த்த அடிப்படையிலும் ஒன்றிக்காத, தமக்கான அசைவியக்கத் துக்கான சரியான கோட் பாடுகளை இனங்காண முடியாத எழுத்துக்காரர்கள் அன்றுதொட்டு இன்றுவரை இருந்து வருகிறார்கள். அழகியலோடு சம்பவங்களையும் உணர்வு களையும் பதிவுசெய்வதுடன் ஒரு எழுத்தாளனின் பணி முடிந்து விடமுடியாது. எழுத்தில் சமூக அசைவியக் கத்துக்கான திசை உந்தல் இருக்கவேண்டும். எழுத் தாளனும் அரசியல் அசைவியக்கத்தின் பங்காளியாக வேண்டும்.
எனினும் மேலே குறிப்பிட்டது போன்று தத்துவார்த்த அடிப்படைபற்றி எவ்வித கரிசனையும் கொள்ளாது- தமிழ்த் தேசியச் சட்டகத்துள் நின்று கொண்டு , தேசிய உணர்ச்சி என்ற நூலில் கோர்க்கப்பட்ட வைரமணிகளாக விளங்கும் ச. வே. பஞ்சாட்டரம், காசி ஆனந்தன் போன்ற சிரேஷ்ட கவிஞர்களிலிருந்து, கனிஷ்ட கவிஞர்கள் வரிசையில் இடம்பெறுகின்ற ஜெயசீலன்கள் வரையில் தங்கள் எழுத்துக்களின் மூலமாக தாங்கள் சார்ந்து நின்ற அரசியல் சுற்றோட்டத்துக்கூடாகவோ பெண்ணடிமைத்தனம், சாதிய

Page 45
( மூத்த எழுத்தாளர் கே.கணேஸ்
அவர்களுக்கு அஞ்சலி
净
魏
இந்திய சுதந்திரப் போராட்டம், உலகரீதியான பொதுவுடமை புரட்சி இயக்கங்கள் எழுச்சி பெற்ற ஐம்பதுகளின் முற்பகுதியில் முற்போக்கு இலக்கியப் பணிகளில் கால் பதித்த எழுத்தாளர் கே.கணேஸ் அவர்கள் ஈழத்து முற்போக்கு எழுத்தியக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும் விளங்கினார்.
ஈழத்து சஞ்சிகை வரவில் 'மறுமலர்ச்சி’ வெளிவந்த காலத்திலேயே முற்போக்குத் தளம் கொண்ட பத்திரிகையான 'பாரதி' என்ற இதழை அவர் வெளிக்கொணர்ந்தார்
இவரது மொழிபெயர்ப்புகளுக்கூடாக வெளிவந்த பலநூல்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெருமை சேர்ப்பனவாக அமைந்தன. தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக ‘எத்தனை நாள் துயின் றிருப்பாய் என்னருமைத்திருநாடே', 'இளைஞர் எர்கையனின் திருமணம்’, ‘கூனற்பிறை', 'உடலும் உணர்வும்’, ‘சீன அறிஞர் லூசுனின் சிறுகதைத் தொகுப்பு' போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.
இத்தகைய பங்களிப்புக்களை செய்து மறைந்த கணேஸ் அவர்களுக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையும் தாயகம் சஞ்சிகையும் தமது அஞ்சலியை செலுத்துகின்றது.
ܓ
சமயப் பிளவுகள், பிரதேசவாதம் என்பன தொடர்பா6 சீராக்கங்களின் திசைகளைத் தொட்டுக் காட்டவே செயற்படவோ முடியவில்லை. எனது குருவான கவிஞ ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் பற்றியோ, கவிஞர் கா ஆனந்தன் அவர்கள்பற்றியோ, அவர்களிடம் தமிழுணர்ச்சியு தமிழ்க்கவிதைச் சுவையும் மிதமிஞ்சி நின்றமைபற்றியே ‘போஸ்மோட்டம்’ செய்வது அழகோ பண்போ ஆகாது.
எனினும் இவர்களது கவிதைகளின் பொதுவா இயல்புகளுடன் ஜெயசீலனது கவிதைகளையும் ஒப்பி டுப்பார்க்கலாம். இச்சட்டகத்துள் நிற்போரில் ஒருவ ஏனைய சமூக ஒடுக்குமுறைகள்பற்றி அதையேன் பா வேண்டும் , அப்படி ஒன்று இல்லையே - அதுதா எப்பவோ முடிந்தவிட்டதே' என்பார். மற்றொருவ அதைப்பாடுவர் - அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்லுவ அது ஒழியவேண்டும் என்றும் உரக்கக்கூறுவார் - திரி
 

இவரிடம் இருக்காது. பிந்திய இன்னொருவர் “அதைப் பழிப்பார் - அப்படியொன்று இருப்பதால் சமூகத்தை விமர்சிப்பார் - தான் அதனின்றும் விலகி நிற்பதாக பிரகடனம் செய்வர்.
எடுத்துக்காட்டாக கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் “கவிஞன் குரல்" என்ற கவிதையில்,
காய்ந்து சருகாகி காலமெனும் வெப்பினிலே மாய்ந்து மடிந்துவிடும் வலிமையிலா இலக்கியங்கள் ஆய்ந்து சரியாக அறிவீர்! வலுவற்றுத் தேய்ந்தே ஒழிகின்ற சிறுசாதிப் பிரச்சினையப் பாடிச் சிதைந்துவிட்ட பாம்படிக்கும் பாட்டுத்தான் மூடுசவக் குழிதிறந்து மூக்கைநாம் பொத்துவதா? குத்தும் முள்ளென்றே கொளுத்திவிட்டோம் சாதியினை குத்தும் அதன் சாம்பல் கூடவென்று கருவமைத்து கத்தும் மடமையினைக் கைவிடுவீர் தோழர்காள்! மெத்தியெழும் விதம்விதமாய் புதிய சிக்கல் தமைப்பாடீர்!" என இவர் சாதியம் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே சிதைந்த பாம்பாகி விட்டது. அதற்கு நல்லடக்கம முடிந்துவிட்டது என்கிறார்.
அதே காலப்பகுதியில் ( முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்) 'சாதிப்பிரிவினை எதிர்ப்பு' என்னும் கவிதையில் கவிஞர் காசி ஆனந்தன்
"என்னருந் தோழா! உனக்கொன் றுரைப்பன். இது கேள் நீ களத்திலே பன்னெடுங் காலம் அலைந்த அனைத்தும் பாழடா. குதிக்கின்றாய்! சின்னக் கதைகள் வளர்க்கிறாய் ! இது சிறுமையல்லவோ மூடா? உன்னையே நூறாய் பிரிக்கின்றவன் நீ ஒருவனே. அட பாவி!" என அதன் இருப்பை வெளிப்படுத்துகிறார். அத்துடன் பிரதேச உணர்வுகள் பற்றி,
மட்டக்களப்பும் யாழ்நகர் மண்ணும் மரபில் வேறுபட்டவை யென்றொரு கட்டித்தலைவன் குழப்புவா னங்கே. குன்றஞ் சூழ்ந்த மலை நாட்டானை திட்டுவானொரு சிறு மகன். மன்னார் திருமலையெனச் செந்தமிழக் கூட்டம் எட்டுப்பத்தாய்ப் பிரிந்தது மாற்றான் இருந்த களத்தில் எரிந்தது நெஞ்சே! என்று குறிப்படுகிறார். ‘கைகளுக்குள் சிக்காத காற்றிலும் (பக். 72) ஜெயசீலன் சமூகத்தைப் பழிக்கிறார். அப்படி இருப்பதால் சமூகத்தை விமர்சிக்கிறார். நிலாந்தன் யேசுராசா பற்றி ('பதிவுகள் முன்னுரையில்) கூறியதுபோல ஜெயசீலனும் முரணியாக தனியனாக போய்விடுகிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

Page 46
ச.வே.பஞ்சாட்சரம் சாதியத்தைக் கொளுத்தியதாக சொன்னார் - அவருக்கு சமகாலத்தவரான காசி ஆனந்தல் இருப்பதாகச் சொன்னார் - கைகளுக்குள் சிக்காத காற்றில் “சமூகமே உன்னோடொட்டிக் கொள்ளாமல் என்பாட்டில் நடக்கிறேன்" என்று பிரகடனம் செய்கிறார் ஜெயசீலன் தமிழ்த்தேசியவாத ஓட்டத்துக்குள் தனது அறிவுக்கு ஊட்டம் சேர்த்த ஒரு விமர்சகரான நிலாந்தன் , யேசுராச அவர்களை சமூகத்ததைப்பொறுத்தவரை முரணி தனியல் என்கிறார்.
இங்கே ஜெயசீலன் “தாமரை இலையின்மே6 தண்ணீராய் சமூகமே உன்னோடு ஒட்டிக்கொள்ளாமல் ‘என்பாட்டில்’ நடக்கிறேன் என்று பிரகடனம் செய்கிறார் அவ்வாறானால் கடந்த முப்பது நாற்பது வருடங்களா என்னதான் நடந்தது? தமிழ்த்தேசிய விடுதலை போராட்டச்சூழலின் இலக்கிய இயக்கத்தில் ஏன் சமூ மாற்றத்துக்கான அறிவியல் ரீதியான முறையியல் முன்னெடுக்கப்படவில்லை?
இதற்க்கும் அப்பால் தமிழுணர்ச்சி, தமது இருப் என்பவற்றை விட்டொதுக்கி ஆக்க இலக்கிய அப் ளங்களை ஆங்கிலப் பெயர்ப்புக்குடபடுத்தி சர்வதேசிய வா இலக்கியத்துக்குள் அணிவகுக்கும் ஆவலுடன் எழுந்துள்ளனர் சிலர். தமிழுணர்ச்சி என்ற நூலில் கோர் கப்பட்ட வைரமணிகள் உணர்ச்சி நரம்பு அறும்பொழுது எங்கெங்கோ சிதறி திசைக்கொன்றாய் செல்லும் நிலைய இது?
வெறுமனே முரணிகளாயும் தனியன்களாயும் இருந்து விட்டு சமூகத்தில் மாற்றம் எதுவும் நிகழவில்லையே என்று ஏங்கி விரக்தியுற்று செய்வதறியாது துற்றி அழுவதுடன் நின்றுவிடுவதா?
எங்களை நாங்கள் மறுவாசிப்புச்செய்து சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதை ஜெயசீலனின் 'கைகளுக்குள் சிக்காத காற்று அவசரமாக உணர்த்தி நிற்கிறது உண்மையில் இத்தொகுப்பில் இடம்பெறும் இக்கவிதை 40 50 வருடங்களுக்கு மேல் அறியாமையோடு அல்லது அறிந்தும்
தீர்வு தெரியாமையோடு இருந்த எமது சமூகத்துக்குள் புரையோடிப்போயிருந்த நோய் ஒன்றின் தெளிவான அறிகுறிதான். இக்கவிதையே இத்தொகுப்பின் Them Poem ஆகவும் இருப்பது இதன் முக்கியத்துவத்ை இன்னமும் வலியுறுத்துகிறது. சமதர்ம அரசியல் பாரம்பரியத்துக்குள் கால்பதித்து நின்றுகொண்( தமிழ்த்தேசியச் சட்டகத்துள் சமூகநீதிக்கும் சுய நிர்ணய துக்கும் சிந்திக்கும் வலுவுள்ள எங்களின் கொள்ை வகுப்புக்கவிஞர்களாக இருக்கும் Philosophical capacit உள்ள கவிஞர் இ. முருகையன், சோ.ப. போன்றவர்களிட மேலும் முரணிகளும் தனியன்களும் உருவாகிவிடா படிக்கான தத்துவார்த்தரீதியான சிந்தனைப்பரப்புக்கள் எப்படி விரியக்கூடும் என்பதற்கான ஆலோசனைகள் இருக்கக்கூடும்.
இன்று உயிரியல் விஞ்ஞான தத்துவார்த் அம்சங்களின் அடிப்படையிலோ, சமூகபொருளாதா தத்துவார்த்த அம்சங்களின் அடிப்படையிலோ, அரசிய

l
9
l
b
இடாணுவக்கொள்கைசார் தத்துவார்த்தங்களின் அடிப் படையிலோ - மிகவும் அதிநவீன தொழினுட்பவியல் சார்ந்த தகவல்யுகத்தை தளமாகக்கொண்ட முகாமைத்துவ நிர்வாக உலகமாக எமது பூகோளம் சுழல்கிறது. முதலில் மனிதன் சமூக விலங்கு என இனங்காணப்பட்டான். அரசியல் கோட்பாடுகள் சமூகங்களை வழிகாட்டவும் நிர்வகிக்கவும் தேவையென தத்துவங்களும் அரசுகளும் தோற்றங் கொண்டபோது மனிதன் ஒரு சமூக விலங்குமட்டுமல்ல சமூக அரசியல் விலங்கு எனவும் விபரிக்கப்பட்டான். அனைத்துமே நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள், இயக்கங்கள், சங்கங்கள், சபைகள் என்று ஒரு நிர்வாகச் சீர்கொண்ட முகாமைத்துவப் பண்புக்குள் வந்து சேர்ந்துவிடுகின்றன. இதற்கும் அப்பால் மிகப்பாரிய அளவில் வளர்த்தபடி இருக்கும் உற்பத்தி முறமைகளும், நுகர்வுக் கலாசார போக்குகளும் எங்கெங்கோ எல்லாம் வளர்ந்து சிக்கலாகி எம்முன்னே பூதா காரமான பிரச்சனைகளாக மாறியுள்ள நிலையில் நாம் எம்மை எப்படி மீள்பரிசீலிப்பது? எமது தேசிய சமூகங்களின் உயிரியல், அரசியல் இருப்புக்காக எம்மை நாம் எப்படி முகாமைத்துவச் சீராக்கத்துக்கு உட்படுத்தப்போகிறோம்? எம்மை வல்லாதிக்க சக்திகளின் சுரண்டலுக்கும், ஒடுக்கலுக்கும் உட்படுத்தப்படுவதிலிருந்தும், எமது மக்களின் உழைப்பின் பயன்கள் அவர்களிடமிருந்து அன்னியப்படுவதைத் தவிர்ப்பதற்கும், வல்லது தப்பிப்பிழைக்கும் அதுவே மேலும் சிறந்து சிறந்து பரிணாமம் பெறும் " என்பதில் எமது சீராக்கங்கள் எப்படி அமையப்போகிறது ? இவ்வாறெல்லாம் கனமான கேள்விகள் எழுகின்ற போது இவற்றுக்கொல்லாம் தீர்க்கமான தத்துவார்த்தங்களின் அடிப்படையில் விடைகள் காணவேண்டிய காலகட்டத்தில் இலங்கையின் சமூகங்கள் இருக்கின்ற வேளையில் சமூகப்பொறுப்புள்ள ஆக்ககர்த்தாக்கள் “தாமரை இலையின்மேல் தண்ணீராக சமூகத்தோடு ஒட்டிக்கொள்ளாமல் “ இருப்பதாக கூறிக்கொள்வதும், முரணி, தனியன் எனச் சொல்லிக் கொள்வதும் வேதணயும் வியப்பும் தரும் விடயங்களாக விருக்கின்றன. ஏனெனில் எந்த ஒரு மனிதனும் இவ்வாறு சமூகத்திலிருந்து தனித்திருக்கமுடியாது.
அதிலும் எழுத்துலகம் என்பது உலக சமூகங்களுள் தோன்றி அதற்குள் வளர்ந்து அதற்காக பல்துறை அறிவியல் வளர்ச்சியில் நின்றுகொண்டு சீர்திருத்தங்களுக்கும் மனித மேம்பாட்டுக்கும் உழைக்கவேண்டிய துறையாகும். எழுத் தாளர்களும் கலைஞர்களும் கற்கக் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டியவர்கள். சாவின் இறுதிவரை சமூக மாற்றத்துக்காக உழைக்கவேண்டியவர்கள்.
ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆகவும், கவிதைப் படைப்பாளியாகவும் விளங்கும் கவிஞர் ஜெயசீலன் சமூகத் தோடு ஒட்டிவாழ்ந்து நோயறிந்து சிகிச்சை செய்யும் ஒரு சமூகப்படைப்பாளியாக தன்னை மேலும் நிலை நிறுத் திக்கொள்ள 'கைகளுக்குள் சிக்காத காற்று' கவிதைத் தொகுதி அடிப்படையாக அமையவேண்டும்.
米

Page 47
தண்ணீர்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என விளையாட்டாகச் சொல்வார்கள். இல்லை, அது உண்மையே என்பதற்கு கீழ்வரும் ஆக்கம் பதில் கூறும். எந்தவொரு பொருளும் இலகுவாகவும் அதிகமாகவும் மலிவாகவும் கிடைக்கும்போது மனிதனுக்கு அதன் அருமை விளங்குவகே இல்லை. நீர் எமக்கு கிடைத்த அரும்பெரும் செல்வமாகும். ஆனால் நாங்கள் அதை காலங்காலமாய் வீணாக்கியுள்ளோம். இப்போது நீர் பற்றாக்குறை ஏற்படவே அதைப் பற்றறிச் சிந்திக்க தொடங்கியுள்ளோம்.
புவிக்கோளத்தில் % பகுதி நீரினாலேயே சூழப்பட்டது. ஆனால் மனிதன் பயன்படுத்த முடியாத கடல்நீர் 97.3 வீதமும், மனிதபயன்பாட்டிற்கு உதவக்கூடிய நீர் 2.7 வீதமுமே காணப்படுகின்றது. இவ்வாறு மனிதனுக்கு பயனைத் தரக்கூடிய 2.7 வீதமானது பனிக்கட்டிகள், நிலத்தடி நீர் என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது. எனவே மனிதன் புவியின் மேற்பரப்பில் காணப்படுகின்ற ஆறுகள், குளங்கள், ஏரிகள், அணைக்கட்டுகள், குட்டைகள் என்பவற்றினூடாக பெறும் நீர் 0.28 வீதம் மட்டுமே. இவ்வளவு சொற்பமாக காணப்படுகின்ற நீரை நாம் வீண்விரயம் செய்வதோடு மட்டுமன்றி மாசுபடுத்திய வண்ணமும் இருக்கின்றோம்.
மழை நீரானது மாசற்றது, துய்மையானது, கலப்படமற்றது, தீங்கிழைக்காதது போன்ற கோட்பாடுகளை அமில மழை இன்று பொய்யாக்கிவிட்டது. தொழிற்சாலை புகைகள், நிலக்கரி, எரிபொருட்கள் கக்கும் புகைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஜன், கந்தகம் கூட்டுப் பொருட்கள் போன்றவை காற்றோடு கலந்து மேகங்களுடன் சேர்ந்து அமிலமழையாகப் பெய்கின்றன. அமிலத்தன்மை மழையாகவும், பனியாகவும், மூடு பணியாகவும் பூமியை வந்தடைகின்றன. சில நாடுகள் சல்பர் காணப்படும் நிலக்கரியின் புகையே அமில மழைக்கு காரணம் என கண்டு இந்நிலக்கரியினை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன. நோர்வேயில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஏரிகளிலும், ஸ்வீடனில் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட ஏரிகளிலும் அமிலத்தன்மை கலந்துள்ளன. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. அத்துடன் அந்நீரினை கிரகித்து வாழும் தாவரங்களும் நச்சுத் தன்மை பெற்று விடுகின்றன. இத்தகைய கொடிய அமில மழையினைப்

படும்பாடு
மிதுனி
புராதன சின்னங்களும் சிறிது சிறிதாக சிதைத்து விடுகின்றன. ஏதென்ஸின் அக்ரா போலீஸ், பாரத்தினான், தாஜ்மகால், ரோமின்கலோசம், லிங்கன் மெமோரியல், வோஷிங்டன் நினைவுச் சின்னம் போன்றவை இத்தகைய தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. அது மட்டுமன்றி இலங்கை யிற்கூட நுவரெலியா குன்றுகள், பண்டாரவளை, அனுரா தபுரம், மகா இலுப்பள்ளம் ஆகிய பிரதேசங்களிலும் அமில மழை பொழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவித் துள்ளன.
துய்மையான மழை நீரின் ஒரு பகுதி நிலத்தினால் உறுஞ்சப்படுகின்றது. இதுவே நிலத்தடி நீராகும். நிலத்தடி நீரானது சில பிரதேசங்களில் குறைந்த ஆழத்திலும், சில பிரதேசங்களில் அதிக ஆழத்திலும் காணப்படுகின்றன. நிலத்தடி நீரினை ஆழ்குழாய்க் கிணறுகளின் மூலம் அதிக அளவில் உறிஞ்சி எடுக்கப்பட்டு விடுவதனால் நிலத்தின் சமநிலை பாதிக்கப்பட்டு கடல்நீர் நிலத்தடி நீரோட்டத்துடன் கலந்துவிடுகின்றது. அதுமட்டடுமன்றி நீரை அதிகம் எடுப்பதனால் நிலம் திடீரென உள்வாங்கிக் கொள்வதுடன் பூமியில் விரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டுவிடுகின்றன. எனவே ஆழ்குழாய்க் கிணறுகள் கிண்டப்படுகின்ற போது நிலத்தடி நீர் வல்லுனரிடம் கலந்து ஆலோசிக்கப்படுதல் வேண்டும். மேலும் மழைநீரை சேமித்து உருவாக்குகின்ற குளங்களிலே மக்களும், விலங்குகளும் நீராடுவதுடன் அவற்றை தம் கழிப்பிடங்களாகவும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய அசுத்த நீரினால் கல்லீரல் பாதிக்கப்படுவதுடன் நச்சுக் காய்ச்சல், வாந்தி பேதி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் அசுத்த நீரில் வசிக்கும் நுளம்புகள் கடிப்பதனால் மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன. கவலைக்குரிய விடயம் யாதெனில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டட கணிப்பீட்டின்படி உலக மக்களில் 2 கோடி பேர்கள் ஆண்டு தோறும் மாசுபட்ட நீரைப் பயன்படுத்துவதானால் இறந்து போகின்றனர் என்பதாகும்.
புவியின் மேற்பரப்பில் காணப்படுகின்ற இயற்கை அன்னையின் கொடையாகிய நதி நீரினை மனிதன் தன் சுயநலத்தாலும், அறியாமையினாலும் நாளுக்கு நாள் மாசாக்கிய வண்ணமே இருக்கின்றான். ஆற்றங்கரை களை சூழ வாழ்கின்ற நகர மக்கள் அந்த, நீரினையே தம் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆற்றிலே நீர் வற்றிய காலத்திலே அப்பிரதேசத்தை தம் கழிப்பிடங்

Page 48
களாக்குகின்றர். அது சாக்கடையாகி பின்னர் ஆற்றுநீருடன் கலந்து நீரினை மாசுபடுத்துகின்றது. இவ்வாறு மக்கள் தம் அறியாமையினால் நீரினை தாமே மாசுபடுத்தி தாமே பயன்படுத்துகின்றனர். நாட்டின் அபிவிருத்திக்காய் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் வாய்ச் காலினூடாக ஆறுகளிலே கலக்கப்படுகின்றன. இவ்வாறு சுத்தம் செய்யாது விடப்படும் கழிவுகளினால் எத்தனையே மனித உயிர்கள் பலியாகின்றன. இத்தகைய கழிவு நீரினில் யூரியா, அமோனியா, பாதரசம், குளோரின், ஈயம் போன்ற ஏராளமான நச்சுக்கள் மனித சுயநலத்தினால் நதிகளில் காக்கப்படுகின்றன. மேலும் பூச்சி கொல்லிகளான பி. எச் சி, டி.டி.டீ போன்ற நச்சுத் தன்மை பொருந்தியவற்றை பயன்படுத்தும்போது செடியில் விழுகின்ற 30 வீதமும் காற்றில் செல்லும் 20 வீதமும் நிலத்தில் விழும் 50 வீதமும் நீரினால் கழுவப்பட்டு ஆற்றுடன் கலக்கப்பபட்டு நீரினை மாசுபடுத்துகின்றது.
இத்தகைய நதி நீர் இறுதியில் சங்கமிக்கும் இடம் கடலே. புவிக் கோளத்தை பெரிதும் சூழ்ந்திருக்கும் உலகின் தாய் என வர்ணிக்கப்படும் கடல்நீரிலே சோடியம் குளோரின், மக்னீசியம், கந்தகம், கல்சியம், பொட்டாசியம் போன்றவை அதிக அளவிலும் கரி, சிலிக்கன், அலுமினியம் ஃபுளூரின், அயோடின் போன்றவை மிகச் சிறிய அளவில் காணப்படுகின்றது. கடல் நீர் இல்லையேல் மழை இல்லை. மழை இல்லாவிடில் நதி இல்லை. நதி இல்லை யென்றாலோ ஏனைய உயிரினங்களும் தாவரங்களும் இல்லை. இத்தகைய கடலும் தற்போது மாசாகிய வண்ணமே காணப்படுகின்றது.
நதிகள் காவிச் செல்லும் கழிவுகள் கடல்களிலே கலப்பதனாலும், எண்ணெய் கழிவுகளினாலும் கடல்நீர் மாசடைகின்றது. இவை கடலின் அடியில் படிந்து கடல் வாழ் உயிரினங்களுக்கு மாசினை ஏற்படுத்துகின்றது. இதனால் அதை உண்டு வளரும் மனிதனும் நோய் வாய்ப்படுகின்றான். கடலிலே 800மீ ஆழத்திற்கு மேல் எப்போதும் இருட்டாகவே இருக்கும். சூரிய ஒளியின் சிவப்ப நிறம் முதலில் வடிகட்டப்படுகின்றது. அடுத்து பச்சை கடைசியில் மிஞ்சுவது கருநீல வண்ணமே. கடலில் 700மி ஆழத்தில் வாழும் வெள்ளியைப்போன்று மின்னக்கூடிய ஹாச்செட் என்ற மீன் தற்போது எண்ணெய்க் கழிவுகளினால் நிறம் மாறி பழுப்பேறுகிறது. இதனை விட சிமோரா மீன் துடுப்பு மீன், டிரகன் மீன், விளக்கு மீன், அவோசெட் ஈல் போன்ற மீன்களும் கடலில் ஆழத்தில் படியக்கூடிய எண்ணெய் கழிவுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன உலகை முதன்முதலில் சுற்றிவந்த மெகல்லன் பசுபிச் கடலினுள் புகுந்த போது அக்கடலின் அமைதியை கண்டு *அமைதி” என்னும் பொருளில் “பசுபிக்” என அழைத்தார் ஆனால் இன்றோ அமெரிக்காவினாலும், பிரிட்டனி னாலும், பிரான்ஸினாலும் மேற்கொள்ளப்படுகின்ற அணு குண்டுப் பரிசோதனைகளினால் கடலின் அமைதி பறந்துபோய் கொந்தளிக்கும் கடலாய் காட்சி அளிக்கின்றது அணுக் கழிவுகளை பல நாடுகள் இரகசியமாக கடலுச்

மனத்தை பக்தி செய்வீர்
ஒவ்வொரு புலர்தல் முதல்
அதன் தொலைதல் வரை
உன்னை இறைஞ்சும்
m எனதின் சுயநலம்
வெள்ளையடித்திடும் பக்தியென்று தவறுகளுக்கு விடுவிப்பு
உறவுகளுக்கு நல்வாழ்வு
பணச் செழிப்பு
இந்த என் கெஞ்சுதலை
கீறுவிழுந்த இசைத்தட்டாய்- நீ கேட்டுப்புளித்திருப்பாய்
அதனால், இன்று என் ஆத்ம விரோதியை
) அழித்தொழிக்க,
ஆயுதமாக்கினேன் உன்னை. அவனை கொன்று விடு இன்றேல். கைகால்கள் முடமாக்கு நீ உண்மை எனில் என் வேண்டுதல் நிறைவேற்று.
உருகி வழியும் பக்தனை பார்த்து
இறுகிப் போன கடவுள் சொன்னார் எனனை. மதங்களால் கூறு செய்தவர்களே! மனங்களை தானும் வளருங்கள் சுயம் செழிக்க மனிதம் தொலைக்கும், நிலை கலைத்து
மானுடம
செழிக்க மனிதத்தை பக்தி செய்வீர். உயிர்த்திருப்பேன் உம்மிடைதான்.
காவத்தையூர் மகேந்திரன்
) கடியில் போட்டுவருகின்றன. இதனால் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் மட்டுமல்ல தீவுகளில் உள்ள மக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இன்று தண்ணிர் படும்பாடோ பெரும்பாடாய் இருக்கின்றது. எனவே தண்ணீர் தொடர்பில் மிகவும் அவதானம் இருக்கத் தவறும் இடத்து தண்ணிர் இன்றி அவதிப்பட வேண்டிய நிலை மனித குலத்திற்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனவே முழு மனித குலத்திற்காக மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்
கும் என்பதால் நாங்கள் நீரை மிகவும் கவனமாக பயன்படுத்துவோமாக!

Page 49
உலகப் பொருளாதா
abf uDẫGLITối (Harry தேர்முகம் கண்டவர் -ஹ
தமிழில்: ஹரி மகடொவ் அவர்களை நேர்முகம் கண்ட ஹக் bip67 (36) iQLDTGöri (The University of Vermont) பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கிறார். அவர் அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் அங்கத்தவரான பேர்னாட் சன்டேர்ஸ் என்பவரின் சிரேஷ்ட உதவி உத்தியோகத்தராக கடமைபுரிந்திருந்தார். இந்தியாவின் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்ரேற்ஸ்மன் (The Statesman) இதழின் அரசியல் பத்தி எழுத்தாளராகவுமிருந்தவரும் ஹக் கட்மன் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வெளிவரும் ‘வைகறை'(Dawn) எனும் அரசியல் செய்தி இதழின் ஆசிரிய பகுதி ஆக்கங்களுக்கும் ஒழுங்காகப் பங்களிப்பு செய்கிறார். செயலுக்கம் மிக்க இணையத்தளமான "Common Dreams இலும் தனது அரசியல் கட்டுரைகளை இவர் வெளியிட்டுவருகிறார். ஹச் botD6 “Sanders ofOutsiderin the House” (Verso 1977) எனும் நூற்பதிப்பின் இணைநூலாசிரியரும் ஆவார் “Technologies of the Self: A Seminar with Miche Foucault (University of Massachusetts Press 1988)’ எனும் வெளியீட்டின் இணை ஆசிரியராகவும் இவ அனுபவத்தை வளர்த்தவர்.
ஹரி மக்டொவ் ஏப்பிரல் 2003 இல் தனது தொண்ணுறாவது பிறந்தநாளை எட்டினார். அவரது தொண்ணுறாவது பிறந்தநாளை கெளரவிக்குமுகமா 'Monthly Review' 61 golf 626, 9 golf JGOGOOTulg ‘இன்று ஏகாதிபத்தியவாதம்” (ImperialismToday)எனு விடயத்தில் ஆய்வரங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது அந்த ஆய்வரங்குக்கு மூன்று வாரங்கள் முன்பதாக ஹ மக்டொவ் நேர்முகம் வழங்குவதற்காக வீடியோ கமராவி
dbib. 50
 
 
 
 
 

JLDIT86 முதலாளித்துவம்
Magdoft)ລprບໍ່ສົມ Gpü(pai åb a5d6õT(Huck Gutman)
E.
தனஞ்சயன்
முன் உட்கார்ந்தார். ஆய்வரங்கின் நேர்முகம் ஒரு பெரிய திரையில் காண்பிக்கப்பபடவும் ஏற்பாடாகியிருந்தது. அந்நேர்முகத்தின் ஒருபகுதி, எப்படி அவர் ஒரு சோசலிஸ்ட் ஆனார் என்பதை விளக்குவதாக அமைந்தது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியவாதம், ஐக்கிய அமெரிக்க நாடு- அத்துடன் ஈராக் போன்ற விடயங்களில் தனது எண்ணங்களை நேர்முகத்தின் ஏனைய பகுதிகளில் வெளியிட்டுள்ளார் ஹரி. (குறிப்பு- அவரது அந்நேர்முகத்தின் எழுத்துவடிவப் பிரதி கீழே தரப்படுகிறது. மக்டொவ் அவர்களின் நேர்முகத்தின் எழுத்துவடிவப் பிரதியை, வீடியோ நேர்முகத்திலிருந்து- நீக்கவேண்டியது நீக்கி சேர்க்கவேண்டியது சேர்த்து-(எழுத்துவடிவத்திற்கு ஏற்றதாக) அவரே தயாரித்துள்ளார்)
`வீடியோவுக்கான நேர்முகத்தின்போது ஹரி மக்டொவ் கமராவையும் கமராக்காரரையும் முற்றாக மறந்து இயல்பாகவே பேசினார். தளர்வான சேட்டும் கருநீல நிறமான பருத்தித்துணியிலான நீளக்காற்சட்டையும் அணிந்திருந்த அவர் மிக ஆற்றோட்டமாக இலகுமொழி நடையில் கருத்துக்களை முன்வைத்தார்.தொண்ணுறு வயதுகளை அடைந்துவிட்ட அந்த சோசலிஷவாதி, நீண்ட நித்திரையற்ற இரவுகளின் சொந்தக்காரராக இருப்பினும் அவரது மனம் தெளிந்த நீரோடையாகவும், அவரது வார்த்தைகள் புத்துக்கமும் உறுதியும் நிறைந்தவையாகவும் அவரது பார்வை பலமானதாகவும் இருந்தது’ - ஹக் கட்மன்(நேர்முகம் கண்டவர்). ஹக் கட்மன்: ஹரி! ஒரு உலகப்பொருளாதாரமாக முதலாளித்துவம் செயற்படத் தொடங்கியது என்ற

Page 50
தங்களது கருத்தின் விளக்கப்படுத்துகையுடன் நாங்கள் எமது கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். ' . . . . . ஹரிமக்டொவ் ஆம், முதலாளித்துவம் உலகப் பொருளா தாரத்துக்குள்தான் தோன்றியது. எவ்வாறாயினும் வணிக முதலாளித்துவத்துக்கும் (merchant Capitalism) கைத்தொழில் முதலாளித்துவத்துக்கும் (industral capitalism) இடையில் நாங்கள் தெளிவான வித்தியாச முள்ளதை புரிந்து கொள்ளவேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட மாற்றங்களுடன், சமுத்திரங் களுக்கு மத்தியிலான தொலைதூரங்களுக்கிடையில் பெருமளவான கப்பற் பணியாட் தொகுதியினரையும் சரக்குகளையும் காவிச் செல்லக்கூடிய தகைமையுள்ள நன்கு ஆயுதம் தரித்த கப்பல்கள் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், கடற்படை சார் போரியல் நடவடிக்கைகளுக்காகவும் மிகவும் ஊக்கமாகவும் உற்சாகமாகவும் பயன்படத் தொடங்கின. ஐரோப்பாவின் புதிய புதிய கப்பல்கள் இலாபங்களையும் சூறையாடலையும் (profits and plunder) (3,519 S-6) digit 6 (p LD5T சமுத்திரங்களெங்கணும் பரவியலைந்தன. “புதிய கண்டுபிடிப்பபுக்களின் சகாப்தமாகவும் (age ofdiscovery) அதேவேளை ‘கைப்பற்றி வெற்றி கொள்ளும் சகாப்தமாகவும் (age of conquest)-அந்தக்காலம் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. உலகளாவிய பொருளாதார அடிப்படையில் வணிக முதலாளித்துவத்தின் எழுச்சியை குறிக்கும் காலமும் அதுதான். மேற்கு ஐரோப்பாவின் செல்வாக்குகளும் செல்வச்செழிப்பும் ‘அள்ளு கொள்ளையென கடுகதி வேகத்தில் வளர்ந்தது. தங்கமும் வெள்ளியும் தென் அமெரிக்காவிலிருந்து அள்ளி யெடுக்கப்பட்டு வங்கிகளில் நிறைக்கப்பட்டன.
அடிமைத்தொழிலாளிகள் பெறப்பட்டனர். மேற்கு ஐரோப்பாவின் வேலைத் தளங்களுக்கான மூலப் GUTibu6606Tub (raw materials) obgpib (bibigay பொருட்களையும் (consumer goods) உற்பத்தி செய்வதற்காக அடிமைகள் கொண்டுவரப்பட்டனர். பழைய காலனித்துவ பிரதேசங்களை விஸ்தரிப்பதன்மூலமும் புதிய புதிய கால்னித்துவப் பிரதேசங்களை அமைப்பதன் மூலமும், மிகப் பரவலாக அடிமைத்தொழிலாளிகளின் பயன்படுத்துகைமூலமும் அதே வேளை அப்பட்டமான கொள்ளையடிப்புக்கள் வாயிலாகவும் சர்வதேச வியாபாரம் துரித வளர்ச்சி கண்டது. கைத்தொழில் முதலாளித்து வத்துக்கு முந்திய இருநூறு வருடங்களாக பரிணாம வளர்ச்சியடைந்த உலகச்சந்தைகளின் விசேட குணாம் சங்கள் இவைகளாகவே இருநதன. முதலாளித்துவத் தினுடைய வணிகநிலையில் முக்கிய இயல்பு ஒன்று உள்ளது. வணிக முதலாளித்துவம் வெறுமனே சந்தைகளை மட்டும் வழங்காமல், 1700களின் மத்தியில் ஆரம்பித்த கைத்தொழிற்புரட்சியை ஊட்டப்படுத்தக்கூடிய செல்வத்தையும் வளங்களையும் அது வழங்கியமையே அந்த முக்கிய இயல்பாகும்.
கைத்தொழில் முதலாளித்துவம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வளர்ச்சியுற்றது.

அதனுடைய இயல்புகளைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் இயல்பும் அனுபவமும் மற்றொரு நாட்டின் இயல்புக்கும் அனுபவத்துக்கும் ஒத்ததாக ஒரேமாதிரியானதாக இருக்கவில்லை. ஆனால் எல்லாநாடுகளுக்கும் பொதுவான குணாம்சம் ஒன்று இருநதது. கைத்தொழில் முதலாளித்துவத்தின் அசைவோட்டத்தின் கீழான விதிகள் பொதுவானவையாகவே இருந்தன. முதலீடு, நுகர்வு என்பவற்றுக்கும் நிதிக்கும் இடையிலான சமநிலை ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்பட்டது. முக்கியமான இயல்புகள் இச்சமநிலைக்கு அப்பால் வெளியேறிச் செல்லுமெனில் நீங்கள் பொருளாதார நெருக்கடி (an economic crisis) ஒன்றை எதிர்கொள்வீர்கள். இந்த நெருக்கடிகள் எதிர்காலத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி எதிர்காலத்தை வடிவமைக்கும். ஆனால் அசை வோட்டத்தின் அடிப்படை விதிகளிலிருந்த மிகத் தொலைவுக்கு இந்த நெருக்கடிகள் அலைவுற்றுச் செல்லமுடியாதவையாகும். இவ்வாறான சமநிலையற்ற தன்மைகளைத் தாண்டி அப்பாற் செல்வதற்கான பாதைகள் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் ஊடாகவே தேடப் படுகின்றன. புதுப் புது சந்தைகளை கண்டுபிடித்தல், புதிய முதலீட்டு வாய்ப்புக்களை கண்டுபிடித்தல் ஆகியன அந்நடவடிக்கைகளாகும். நாடுகளிடையே நிலவும் மிகத்தீவிரமான போட்டி காரணமாக இந்நடவடிக்கைகள் அவசரமான துண்டுகைக்குரியதாக இருக்கின்றன. இந்த அமைப்பு முறைமையின் உள்ளக நியாயப்பாட்டிலிருந்து தப்பிப்பிழைத்தலுக்கான சந்தர்ப்பம் கிடையாது. முத லாளித்துவத்தின் தீமைகளை வெற்றிகொள்ளுதலுக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. அனைத்து மனித சமூகங்களது அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்வதில் அடிப்படையாக அர்ப்பணிக்கத்தக்க அதிகார மாற்றம் ஒன்றின் அடிப்படையில், கூர்மையான, வித்தி யாசமான சமூகத்தை உருவாக்குவதற்கான அழைப்பே அதுவாகும். இலாபத்தை உச்சநிலைக்கு கொண்டுவரும் நோக்கம் கொண்ட சந்தைகளின் சர்வாதிகாரங்களை அகற்றறுவது என்பதே இதன் அர்த்தமாகிறது.
முதலாளித்துவத்தின் திசையிலேயே எடுத்து வைக்கப்படும் ஓரடி எப்படி இன்னொன்றுக்கு வழி சமைக்கிறது என்பதற்கு சீனா ஒரு உதாரணமாக உள்ளது.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சீன கொம்யூனிஸ்ட் கட்சியினால் நிர்வாகிக்கப்படும் மத்திய திட்டமிடலின்கீழ், பொருளாதாரத்தின் கட்டளைச் சிகரங்களும் உயர்துறை நடவடிக்கைகளும் நேரடியாகக் கட்டுப்படுததப்படுவதும் அதேவேளை சமூகத்தின் ஏனைய துறைகள் தனியார் முதலீட்டுத்துறைக்கும் தனியார் முயற்சியாண்மைக்கும் திறந்துவிடப்படுவதும் ஆகிய இரண்டு முறைமைகளை உருவாக்குவதற்கே தீர்மானிக்கப்பட்டது. அரசினாலும் வெளிநாட்டு முதலீட்டினாலும் ஊக்குவிக்கப்பட்ட உதவி செய்யப்பட்ட தனியார் துறை துரிதகதியில் விரிவாக்ககப்பட்டது. என்ன பொருள் உற்பத்தி செய்யவேண்டும், எவ்வளவு பொருள் உற்பத்தி செய்யவேண்டும் என்பன போன்றவற்றறை உச்ச
dudbib. 50

Page 51
360TL5 (3.565 dig055(36T (profit-seeking markets தீர்மானிக்கின்ற நிலைமையேற்பட்டது. பொருளாதார இந்த பாணியில் வளர்ந்ததனால் ஒரு மூலதனச் சந்ை தேவைப்பட்டது. அதற்காக பங்குச்சந்தையும் வணி வங்கித்துறையும் ஆரம்பிக்கப்பட்டன. சர்வதே வர்த்தகத்தில் போட்டியிடுவதற்கான தமக்குச் சாதகமான பல்வேறான பலாபலன்களை அந்நிய முதலீட்டாளர்கள் பெற்றுக்கொண்டனர். அந்நியமுதலீட்டாளர்கள் தொ லாளர்களுக்கு வழங்கிய மிகவும் தாழ்ந்த கூலி மூலமான đTTgbabLDTGOT LIGADITUGD6örab60d6MT (advantage of the ver low Wages) அடைந்தமை முதலில் கவனிக் வேண்டியது ஆகும்.
பொருளாதார நிலைமாறுகை, ஏற்றுமதிகள் மீதில் சார்ந்திருக்கும் போக்குடையதாகியமை சர்வதேச வர்த்த sh;5Tu607 gig Lár (World Trade Organization இணைந்து கொள்வதற்கும் அந்த ஸதாபனத்தில் விதிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் பின்பற் வதற்கும் வழிவகுத்தது. முதலாளித்துவ வர்த்தகத்தில் விதிமுறைகளுக்கு பணிந்து செல்லும் வகையில் அந்நி முதலீட்டாளர்கள், அந்நிய முதலீடுகள் மீதான சீனாவில் கட்டுப்பாடுகள் பலவீனப்பட்டன.
உலகமயமாதலின் அழுத்தங்களுக்கு ஈ( கொடுக்கும் வகையில் அரசாங்க தொழிற்துறைக்கு அதன் முயற்சியாண்மைத்துறைகளும் சீனாவில் தனியா மயப்பட்டவண்ணமிருக்கின்றன. வர்க்க அடையாளங்களு (Class distinctions) 6ñåb&b(86 gp_T(Babbuð (Clas differences) மக்கள் மத்தியில் மேலும் மேலு விரிவடைந்து சென்றன. தனியார் உற்பத் தொழிற்றுறைகளையும் தனியார் முயற்சியாண்மைகளையு ஊக்குவிக்கின்ற இவ்வாறான பாதையை பின்பற் வதனால், ஒட்டுமொத்தமாக முழுச்சனத்தொகைக்குமா? கல்வி, மருத்துவ உதவிகள் போன்ற சமூக நலன்ட நடவடிக்கைகள் தேய்ந்து செல்லத்தொடங்கின.
வேலைவாய்ப்பின்மையும் பட்டினியும் வளர்ந்தது ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ளதைப்போன்ற தவறா 6bor60ůuálé6ab6D67 (maldistribution ofincom கொண்ட ஒரு சமூக அமைப்பு முறையினை நோக் சீனாவினுடைய சமதர்மக் கோட்பாட்டு சமூக அமை முறை (egalitarian Society) செல்லத் தொடங்கியது
ஹக் கட்மன்: ஒரு பொருளாதாரத்தினுடைய வளர்ச் யைத்துண்டுவதற்கு மிகத்திறன் வாய்ந்த வழிவகைய முதலாளித்துவம் இருக்கிறது என நாங்கள் அடிக்க கேள்விப்படுகிறோமே!
ஹரி மக்டொவ் முதலாளித்துவம் வளர்ச்சியை தருவதற்குரியதாக இருக்கிறது என்பதை ஒரு ஆளு சிந்தனை வலியுறுத்துகிறது. உற்பத்தி, வர்த்த: துறைகளைச் சேர்ந்த தனிநபர்கள் ஒரு புதிய சிந்தனைடு ஆதரிக்கிறார்கள். ஒரு புதிய கண்டுபிடிப்பை ஆதரிக்கி கள். தொழிற்சாலைகளைக் கட்டி எழுப்புகிறார்க அதிகரித்துச் செல்லும் நிரம்பல் (Supply) மற்று கேள்விகளினுடைய (demand) ஒன்றன்மீது ஒன்ற
ötrudbb. 50

9.
T
i.
முதலாளித்துவத்தின் தீமைகளை வெற்றி கொள்ளுதலுக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. அனைத்து மனித சமூகங்களது அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்வதில் அடிப்படை ய்ாக அர்ப்பணிக்கத்தக்க அதிகார மாற்றம் ஒன் றின் அடிப்படையில், கூர்மையான, வித்தியாச மான சமூகத்தை உருவாக்குவதற்கான அழைப்பே அதுவாகும். இலாபத்தை உச்சநிலைக்கு கொண்டுவரும் நோக்கம் கொண்ட சந்தைகளின் சர்வாதிகாரங்களை அகற்றறுவது என்பதே இதன் அர்த்தமாகிறது.
சிக்கலுக்குள் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் சிதைவடைந்துவிடுகிறார்கள். உண்மையில் இந்த அமைப்பின் கீழுள்ள உணரக்கூடிய விடயமொன்று உள்ளது. ஆனால், இது ஒரு மாதிரி மட்டுமே!
யதார்த்தமல்ல; முதலாளித்துவ வளர்ச்சியினுடைய
அசைவாக்கமென்பது முதலிடாகும்.
ஆனால், முதலீட்டின் வீதம், சாதாரண சகஜ நிலையிலிருந்து மிகவும் தொலைதுரத்திலேயே இருக்கிறது. விலை அமைப்புக்களைத் தாங்கிக் கொண்டு உறபத்திகளை விலைகொடுத்து வாங்கக்கூடிய போதிய அளவு வாடிக்கையாளர்கள் இல்லாதபோது, முதலீட்டின் வேகம் குறைந்துவிடுகிறது. அதன் காரணமாகவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுடைய உள்ளூர் விற்பனைகள், அனைவருக்கும் அறிமுகமான மாதிரி களைப் பொதுவாகப் பின்பற்றுகிறது.
ஒரு உற்பத்தி மாதிரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனைகளும் வெளியீடுகளும் அதிகரித்தபடி செல்லும். பின்னர் இறுதியாக அந்த விற்பனைகளும் வெளியீடுகளும் சிறிது சிறிதாக வீழ்ச்சி காண்பதுபோன்ற தோற்றப்பாட்டைக் காட்டும். இவ்வாறான நிலை அதுதொடர்பான கணித வளையியிலும் புலப்பபடும்வகையில் இருக்கும்.
இது உயர்ந்துசென்றுபின் தாழ்ந்துவிடும் வளையியாகும் (ஹரியினுடைய கரம் ஓரளவு நிலைக்குத்தாக உயர்ந்து பின்னர் மட்டப்படுகிறது)
. உதாரணமாக குளிரூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டமையை
எடுத்துக்கொள்ளுங்கள். ஐக்கிய அமெரிக்க நாட் டினுடைய சில பிரதேசங்களை அபிவிருத்தி செய்வ தில்குளிரூட்டிகள் மிக முக்கியமான பங்கை வக்கித்தன. அதனால் அங்கு தேசிய சந்தைகள் தோற்றம் கொண்டன. எமது இத்தகைய கருத்தாடலுக்காக, நான் வீட்டுப் பாவனைக்குரிய குளிரூட்டிகளை உதாரணமாக எடுக்க விரும்புகிறேன். குளிரூட்டி ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருந்தபோது ஐக்கிய அமெரிக்க நாட்டினுடைய முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்ற வகையில் பார்த்தால், அதுமிகவும் முக்கியமானதாக

Page 52
இருந்தது. ஆனால் எத்தனை குளிரூட்டிகளை மக்கள் வைத்திருக்கிறார்கள்? எத்தனை குளிரூட்டிகள் குடும்பப் பயன்பாட்டுக்கு உதவமுடியும்? நீங்கள் பணக்காரராக இருந்தால் வீட்டினுடைய கீழ்த்தளத்தில் ஒரு குளிரூட்டியும் சமையலறையில் ஒரு குளிரூட்டியும் வைத்திருக்கலாம். அல்லது சிலவேளை இரண்டு சமையலறைகள் இருந்தால் இரண்டு குளிரூட்டிகளை வைத்திருக்கலாம். ஆனால் இன்றும் அவ்வாறு பல குளிரூட்டிகளையோ ஒன்றையோ உங்கள் வீட்டிற்காக வாங்கிப் பேணமுடியவில்லைத்தானே! குளிரூட்டிகளை வாங்கக்கூடிய வகையில், அதன் விலைகளைத் தாங்கக்கூடிய மக்கள் அவற்றை வாங்கிக் கொண்ட பிறகு அவற்றை மாற்றீடு செய்து எங்கே எங்கே வைப்பது என்ற பிரச்சினை எழும். ஏனெனில் வளர்ந்து செல்லும் சனத்தொகையோடு புதிய புதிய குடும்பங்களின் தோற்றமும் நிகழ்கிறது. ஒரு இளம் கணவனும், ஒரு இளம் மனைவியும் தங்களுக்கான வசிப்பிடத்தின் பகுதியொன்றைப் பெற்றுக் கொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களால் ஒரு குளிரூட்டியின் விலையைத் தாங்கிக் கொள்ளமுடியும் எனவும் வைத்துக்கொள்வோம். அவர்கள் ஒரு புதிய குளிரூட்டியை விலைகொடுத்து வாங்குவார்கள். இதேபோல ஒவ்வொரு புதிய குடும்பங்களும் உருவாக, உருவாக அப்புதிய புதிய கணவன் - மனைவியர் ஒவ்வொரு குளிரூட்டிகளை எப்போதும் வாங்குவார்கள் என்றில்லை. இதனால் அப்பொருளுக்கான கேள்வி குறைவடைந்து செல்கிறது. ஆகவே இதன்வழி வினாக்கள் எழுகின்றன. அதாவது எப்படி நீங்கள் உங்கள் வர்த்தகத்தை தொடர்ந்தும் பேணிக் கொள்ளப்போகிறீர்கள்? எப்படி உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தப்போகிறீர்கள். இங்குதான் வெளிநாட்டிலி ருந்து ஒரு திணிப்பு வந்து சேர்கிறது. ஹக் கட்மன். ஆகவே ஏகாதிபத்தியத்தினுடைய ஊக்குசக்தி யும் அதன் உள்ளக அசைவியக்கமும் எப்பொழுதும் ஸ்தம்பித்தலை நோக்கிய ஒரு நிலையையே கொண்டிருக்கிறதா? ஹரி மக்டொவ் ஆம், நீங்கள் கூறுவது மட்டுந்தான் விடயமல்ல. அந்த ஸ்தம்பிப்பை நோக்கிய நிலையே மேலும் மேலும் ஏகாதிபத்தியத்தை நோக்கி விடயங்களை நகரச்செய்யும் மிகப்பிரதான காரணியாக இருக்கிறது. நான் முன்னரே சொன்னதுபோல, முதலாளித்துவ முதலீடுதான் ஒரு முதலாளியை பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அசைவியக்கமாக இருக்கிறது. ஆகையினால் புதிய முதலீட்டுக்கான தேவை குறிப்பிட்ட எல்லைகளை அடைகின்ற போது முதலாளிய வளர்ச்சியினுடைய மேலதிக முன்னோக்கிய பாய்ச்சல் புதிய உற்ப்பத்திகளிலும், புதிய கண்டுபிடிப்புக்களிலும் நிச்சயமாகத் தங்கியிருக்கிறது. கைப்பற்றி வைத்திருப்பதற்கான பெரும் சனத்தொகையும் தேவைப்படுகிறது. மிகவும் வளமுள்ள முதலாளிய பொருளாதார நாடுகள், வெளிநாட்டுச் சந்தைகளுக்குள் ஊடுருவுவதன் மூலமாக தங்களது வளர்ச்சி வீதங்களை பேணிக்கொள்கின்றன. இதனை ஜோன் றொபின்சன் விளக்கியுள்ளார். `கடந்த இருநூறு

ஆண்டுகளினுடைய 'பென்னம்பெரிய பொருளியல் செழியன் சகாப்தம்' என புலமைசார் பொருளியல் அறிஞர்கள் என்று அழைக்கின்றார்களோ அதன் பிரதான ஊற்றுக்கள் என்பது, முதலாளியத்தினுடைய விஸ்தரிப்பு புதிய, பரி ஆள்புல எல்லைகளுக்குள் சென்றமைதான் என்பதை நிராகரிப்போர் எவருமில்லை’
என்று ஒரு போடுபோடுகிறார் ஜோன்றொபிள் சன். அமெரிக்க ஐக்கிய நாட்டின் புறநகரங்களினுடைய வளர்ச்சி, இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டது. இதுவும் இவ்வாறு கூறுவதற்கான பிரதான தூண்டலாக உள்ளது. ஆனால் புதிய உற்பத்திகளோ அன்றேல் புதிய தொழில்நுட்பமோ நின்று நிலைக்கும் வளர்ச்சி சரியான ஒழுங்கில் வந்து சேர்வதற்கு போதியதாக இல்லை. ஆகையால் 'ஓட்டுமாட்டு வழிகளில்" (byhook Orby Crook) மிகப்பிடிவாதத்தனத்துடன் கூடிய நடவடிக் கைகளுக்கூடாக புதிய புதிய சந்தைகளையும் புதிய புதிய முதலீட்டு வாய்ப்புக்களையும் அந்நிய நாடுகளில் உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. அதாவது, கைத்தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்ட முதலாளித் துவ நாடுகள் ‘புதிய உலகங்களை கைப்பற்றி வெற்றி கொள்வதற்கான தாகத்தைக் கொண்டுள்ளன. இந்த விடயமே அடிப்படையானதாக இருக்கின்றது. தாங்கள் தங்கள் முதலாளிய இயந்திரங்களை முன்னகர்த்துவதற்கு வெற்றிகரமான ஒவ்வொரு முதலாளித்துவ நாடும் புதிய புதிய சந்தைகளைப் பெறுகின்றன. போட்டிச்சந்தை அமைப்புகள் உடைகின்றன. நீராவி இயந்திரத்தினுடைய கண்டுபிடிப்பும் விருத்தியும் கைத்தொழில் புரட்சியில் இங்கிலாந்தினுடைய மிகப்பெரிய வெற்றியாகும். புடவை உற்பத்தி அங்கு இயந்திரமயப்படுத்தப்பட்டது. நெசவுக் கைத்தொழிலும் இயந்திரமயப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொன்றும் இயந்திரமயப்படுத்தப்பபட்டது. ஆங்கி லேயர்கள் தாங்கள் உற்பத்தி செய்த புடவைகளைச் சந்தைப்படுத்துவதற்கு புதிய புதிய சந்தைகளைத் தேடினர். விற்பனை செய்வதற்குப் பொருத்தமான இடங்களைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் எல்லாக் காலங்களிலும் நீங்கள் ஒரே பொருளை உற்பத்தி செய்வதை தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. அல்லாவிட்டால் வர்த்தக நடவடிக்கைகளை விட்டு வெளியேறிவிட வேண்டியதாகிறது. அதே விடயமே இங்கிலாந்திலும் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட புடவைகளுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்வதற்காக, இந்திய புடவைக் கைத்தொழில் துறை அழிக்கப்பட்டது.
உண்மையில் இந்தியா மிகத் தரமான புடவை உற்பத்தித்துறையைக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட புடவைகளைக் காட்டிலும் இந்தியா தயாரித்த புடவைகள் மிகவும் அழகானவையாக இருந்தன.
இதேபோலத்தான் பிரித்தானியர்களுக்கும் ஏனைய ஐரோப்பியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும், அமெரிக் கர்களுக்கும் தத்தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவு

Page 53
படுத்துவதற்காக புதிய புதிய சந்தைகளையும் புதிய புதி: முதலீட்டுவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளுகின்ற நோக்கத்துடன் மிகப்பல நாடுகளினுடைய பொருளாதார வாழ்க்கைப் பாங்குகள் மாற்றப்பட்டுள்ளன. முதலாளித் துவம் வளர்ந்தோங்க வேண்டியிருக்கிறது என்பதற்காகவே இவை செய்யப்பட்டடன.
அல்லாவிட்டால், வர்த்தகத் தொழில்துறைகள் அமிழ்ந்து போயிருக்கும். அவர்களினுடைய உற்பத்தியும் இலாபங்களும் வீழ்ச்சிகண்டிருக்கும். வங்கிகளும் கூட கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும்.
Quibb bit p(p&cbib (Great Depression) என்பது நிகழ்வதுபோல் முதலாளித்துவ பொருளா தாரத்தில் நிகழத்தக்கதும் அதுதான்.ஹக்! நீங்கள் இப்பொழுது அவதானிக்கவேண்டியவை உள்ளன. உண்மையில் மேலும் பல சிக்கல்களும் சில்லெடுப் புக்களும் உள்ளன. ஏகாதிபத்தியத்தின் சிக்கல் தன்மைபற்றி ஒரு விரிவுரையை வழங்குவதற்கு நான் தொடங்கவில்லை. காலனித்துவ பிராந்தியங்களையும் நாடுகளையும் கைப்பற்றித் தம்மகத்தே வைத்துக் கொள்வதைப் பெரிதும் துண்டும் விடயமொன்றுள்ளது. மூலப்பொருள் நிரம்பல், வழங்கலை நிச்சசயப்படுத் திக்கொள்வதில் தத்தமது கை ஓங்கவுேண்டும் என்பதே அதுவாகும். ஒரு காலத்தின் பின்னர், வாசனைச் சரக்குகள், தேயிலை, புகையிலை போன்றவூற்றை வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை.
கைத்தொழில் புரட்சியினால் உருவான தொழிற் சாலைகளுக்கு பருத்தி, செம்பு, நாகம் போன்ற மூலப்பொருட்களே தேவைப்பட்டன. முதலில் அத்தொழிற்ச்சாலைகளுக்கு நிலக்கரி தேவைப்பட்டது. அது பிரிட்டனிடம் போதிய அளவு நிரம்பலுற்றிருந்தது. பிறகு அவைகளுக்கு இரும்பு, செம்பு, நாகம் (Zing), நிக்கல் போன்ற உலோகங்கள் தேவைப்பட்டன. எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் உற்பத்திப் பொருட்கள் தொழினுட்ப ரீதியாக முன்னேற்றகரமானவையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு போதியளவு மூலகங்கள் புதிய கலப்புலோகங்களை (alloys) உருவாக்குவதற்கு தேவையாகிறது. போதியளவு மூலகங்களை பெறுவதென்பது மிகக் கடினமான விடயமாகும். ஒருகுறிப்பிட்ட கலப்புலோகத்தை உருவாக்குவதற்கு ஒரு சிறிய அளவு நிக்கல் தேவைட் படலாம். அன்றேல் பெருமளவு நிக்கல் தேவைப்படலாம். முதலாளித்துவ உற்பத்திகளுக்கு இதேபோல மூலட் பொருட்கள் தேவையாகிறது. அதனால் முதலாளித்துவம் மேலும் மேலும் இவற்றைப் பெறுவதற்கு வெளி நாடுகளையே நாடுகிறது. இவ்வாறான அத்தி யாவசிய வழங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வேறுவேறான வழிவகைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வேறுவேறான வழிகள் இருப்பினும் தேவைப்படுகின்ற போதெல்லாம் தடையின்றி தளம்பலின்றி மூலப்பொருட்களின் வழங்கலை நிச்சயப்படுத்தி உறுதிப் படுத்தக்கூடிய கட்டுப்பாடு ஒன்றையே முதலாளித்துவவாதிகள் வேண்டிநிற்கிறார்கள்
dbITULdbtib. 50

மிகமிகக்குறைந்தளவான கூலிகளிடமிருந்து சாதகமான நிலைமைகளை எங்கெல்லாம் பெறமுடியுமோ அங்கெல்லாம் கால்பதித்து விடுகிறது முதலாளித்துவம். வெளிநாடுகளில் முதலிடப்படும் மூலதனம், முழுக் காலனித்துவ நாடுகளினதும் அரைக்காலனித்துவ நாடுகளினதும் உள்நாட்டு அபிவிருத்தியை நிலைத்துநிற்கும் தகுதிப்பாடுகளை சிதைத்துக் குழப்பிவிடுகின்றது.
ஹக் கட்மன்: முதலாளித்துவப் பொருளாதாரம் ஸ்தம்பித மடைந்துபோவதை சமாளித்துமேவும் பதில் யுக்தியாக (as a counter to stagnation) fui lêu o bob களுக்கான தேவை இருப்பது என்பதும் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான தேவை உள்ளது என்பதும் முதலாளித்துவத்தை வெளிநாடுகளை நோக்கி துண்டிச் செயற்படுத்துகிறதா? ஹரிமக்டொவ் ஆம், புதிய புதிய சந்தைகளும் தேவைப்படும்
மூலப்பொருட்களின் தொடர்வரிசைத் தன்மையும் மையவிடயங்களாகவிருக்கின்றன. ஆனால் மூன்றாவது விடயமூலமொன்றும் உள்ளது. ஒருநாட்டில் முதலாளித்துவம் விருத்தி காண்கின்ற வேளையில் G5 T56)Tss Giddisb, plus in 68 (higher wages) குறைந்த மணித்தியாலங்களுக்கான வேலை மற்றும் நிவாரணிகளை சர்வாதிகார உயர் பீடத்திலிருந்து எதிர்பார்த்து போராடுகின்றன. இப்போராட்டம் வெற்றியளிக்கும்போது உயர்வான கூலி, மற்றும் ஏனைய நன்மைகளை சமூக நலனோம்புகையின் ஒரு வடிவமாக பெறுகிறார்கள். அந்நிலையில் தமது இலாபங்களை அதிகரித்துக்கொள்வதற்காக அபிவிருத்தி குன்றிய JBTGS86sgöl (undeveloped countries) fisi (3D.gif 56), Gd boflád, Jijgil L606 (more intense exploitation) மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் மிகமிகக்குறைந்தளவான கூலிகளிடமிருந்து சாதகமான நிலைமைகளையும் எங்கெல்லாம் பெறமுடியுமோ அங்கெல்லாம் கால்பதித்து விடுகிறது முதலாளித்துவம். வெளிநாடுகளில் முதலிடப்படும் மூலதனம், முழுக் காலனித்துவ நாடுகளினதும் அரைக்காலனித்துவ நாடுகளினதும் உள்நாட்டு அபிவிருத்தியை நிலைத் துநிற்கும் தகுதிப்பாடுகளை சிதைத்துக் குழப்பிவிடு கின்றது.பல்வேறு காரணங்களால் மனித இனத்தின் வரலாற்றில் அபிவிருத்தியின் பாங்குகளும் வீதங்களும் வேறுபட்டே வருகின்றன. ஆனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலாளித்துவம் நுழைகின்றபோது அது பலவிடயங்களை கையேற்றுவிடுகிறது. அது ஒவ்வொன்றையும் நேரடியாகக் கையேற்காமலும் விடலாம். ஆனால் அது காலுன்றும் நாடுகளின் பொருளாதாரச் செல்நெறியில் மிக அச்சொட்டாகத் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட அந்த முதலாளித்துவ

Page 54
நாட்டில் தங்கியிருக்கும் நிலைமையை உருவாக் குவதுடன் பொதுமக்கள் மத்தியில் பெரும் வறுமையை (greater poverty of the masses) 6 peoLDuTei, விளைவிக்கிறது. அதேவேளையில் அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஹக் கட்மன் ஆகவே ஏகாதிபத்தியவாதம், முதலாளித்துவ நாடுகளிலுள்ள உயர் பெறுமதியான கூலியை ஈடுசெய்து நிவாரணமளிப்பதற்காக மலிவான கூலியை தேடிவரு கிறது. ஆனால் ஏகாதிபத்தியவாதம் விருத்தியடைந்த வேளையில் அதன் வடிவம் தன்பாட்டில் மாற்றம் காணவில்லையா? ஹரி மக்டொவ் ஆம், ஐரோப்பாவின் மேற்குப் பகுதியிலும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து சென்ற மக்கள் குடியேறிய அமெரிக்க ஐக்கியநாடு, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஜப்பானிலும் கைத்தொழில் முதலாளித் துவத்தினுடைய பரப்புகையும் எழுச்சியுமே முதலாவது பெரிய மாற்றமாக திகழ்ந்தது. ஆனால் இந்தக்கட்டத்தில் இந்த உலகம் எவராவதுதணித்த ஒரு சாராரால் கைப்பற்றி கட்டுப்படுத்தத்தக்க வகையில் free ஆக இல்லை (free for conquest). எந்த எந்த நாடெல்லாம் எங்கே எங்கே போய்க்காலூன்ற விரும்புகிறதோ அந்த அந்த நாடெல்லாம் அங்கு அங்கெல்லாம் போய்க் காலூன் றத்தக்கதாக முற்றாக திறந்த நிலையில் இந்த பூகோளம் இருக்கப் போவதில்லை. ஏனெனில் இங்கிலாந்து போன்ற நாடுகள் அவ்வாறு காலூன்றி தம்மை விஸ்தரிக்க முனைந்தால் பிரான்ஸ்,ஜேர்மனி போன்ற ஏனைய வல்லரசுகளும் தத்தமக்கான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய நிலையில் உள்ளன. ஆகவே செல்வம் நிறைந்த வல்லரசுகள் போட்டியிடுகின்றன. உதாரணமாக 1850 களிலும் 1860களிலும் நீராவிக்கப்பல் விருத்தி செய்யப்பட்டதுடன்பிரிட்டனைப்போல ஏனைய ஒவ்வொரு நாடும் தங்கள் பழைய கப்பல்கள் காலாவதி யாகிவிட்டன என்று திடீரென்று கண்டுகொண்டன. இரும்பினாலான நீராவிக்கப்பல்களை அந்த நாடுகள் அவசரகதியில் உற்பத்தி செய்யவேண்டியிருந்தன. முதலாவது உலகமகாயுத்தம் தொடங்கும்வரை பிரிட்டன் கப்பல் கட்டும் துறையில் தனியுரிமையை வகித்துவந்தது. உலகளாவிய கப்பல் கட்டும் துறையில் பிரிட்டனின் பங்கு 1840களில் 25%ஆக இருநதது; அந்த அளவிலிருந்து பிரிட்டனின் பங்கு 1850களில் தொடங்கி முதலாவது உலக மகாயுத்தம் வரைக்கும் 40%-50% ஆக உயர்ந்தது. எனினும் கப்பல் கட்டும் துறையிலும் கட்டப்படும் கப்பல்களின் பரிமாணத்திலும் முதன்மை வகித்துவந்த பிரிட்டன் புதிய நூற்றாண்டில் அத்துறையில் வீழ்ச்சி கண்டது. ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கநாடு, பிரான்ஸ், ஜப்பான் போன்ற ஏனைய நாடுகள் பிரிட்டன் முந்திய நூற்றாண்டில் வகித்துவந்த அத்துறை சார்ந்த விடயங்களை தங்கள் வசம் பெற்றுக்கொண்டு வளர்ச்சியடையத் தொடங்கின. ஒரு புதிய நிலைமட்டம் கொண்ட போட்டிச்சூழல் உருவாகியது. நீராவிக்

கப்பல்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல அந்த நீராவிக்கப்பல்கள் எங்கெல்லாம் சுற்றித்திரிந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியுமோ அவ்வாறான இடங்களை தத்தமக்கு உரியதாக கைப்பற்றிக் கொள்வதிலும் பெரும்போட்டிச்சூழல் உருவாகியது. இத்தறுவாயில் புதிய கேள்வி எழுந்தது. “உலகின் எந்தப் பகுதியை நீ கைப்பற்றிக் கையேற்கப் போகிறாய்?’ என்பதே அக்கேள்வி. உதாரணமாக ஆபிரிக்காக் கண்டம் எந்த வகை உள் நுழைவுக்கும் கைப்பற்றுகைக்கும் தயாராக இலகுவான வகையில் திறந்தே கிடந்தது. அடிமைகளைப் பிடிப்பதற்கு இலகுவான வகையில் திறந்து கிடந்தது ஆபிரிக்கா, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு இங்குவான வகையில் திறந்து கிடந்தது. ஆபிரிக்கா முதலாளிதுதவம் நிலைகொண்டிருந்த உலகின் வெவ்வேறு மையங்களில் நிலவிய சமமற்ற வளர்ச்சி போட்டாபோட்டியின் புதுப்புது சிகரங்களை நோக்கிச் சென்றது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆபிரிக்காக் கண்டத்தையும் உலகின் ஏனைய பிராந்தியங்களையும் காலனித்துவ ஆட்சிப் பகுதிகளாக பிரித்துப் பங்குபோட்டுக்கொள்ளும் போட்டாபோட்டிச் சூழலை மேற்படி நாடுகள் தமக்கிடையே ஏற்படுத்திக்கொண்டன. வெளிநாடுகளின் ஆள்புலப் பிரதேசங்களை காலனித்துவ ஆட்சிப்பகுதிகளாக கைப்பற்றுதல் என்பதே வணிக முதலாளித்துவத்தின் மத்திய உபாயமாக இருந்தது. அதுவே கைத்தொழில் முதலாளித்துவத்தின் ஆரம்பக் கட்டமாகவும் இருந்தது. அந்த ஆரம்பக்கட்டத்தில் இன்னமும் கைப்பற்றப்பட்டு காலனித்துவப் பிரதேச மாக்கப்படாத, உலகின் பெரும்பகுதி எஞ்சியிருந்தது. 15ம் நூற்றாண்டிலிருந்து காலனித்துவப் பிரதேசங்களாக மாற்றுவதற்காக ஆக்கிரமித்துக் கைப்பற்றுதல் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. எனினும் முதலாளித்துவ வல்லரசுகள் திட்டமிட்டு காலனித்துவப் பிரதேசங்களை அமைக்கத் தொடங்கிய வேளையில் கைப்பற்றப்படும் சதுரமைல்களின் அளவில் பாரிய உயர்ச்சி ஏற்பட்டது. இராட்சத வர்த்தக கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள், தனியுரிமைக் கட்டுப்பாடுகள் என்பன ஸ்தாபிக்கப் பட்டதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் இந்தப் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது. முதலாளித்துவ வல்லரசுகள் காலனித்துவப் பிரதேசங் களைக் கைப்பற்றி தம் வசப்படுத்தும் நடவடிக்கைகள், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் 300%(முந்நூறு வீதம்) ஆக அதிகரித்திருந்தது. 19ம் நூற்றாண்டின் முதல் எழுபத் தைந்து வருடங்களில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 83000 சதுர மைல்களே முதலாளித்துவ வல்லரசுகளால் கைப்பற்றப்பட்டது.19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும் 20ம் நூற்றறாண்டின் ஆரம்பப்பகுதியும் உள்ளடங்கும். 1870ம் ஆண்டையடுத்த நாற்பத்தைந்து வருடங்களில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 240000 சதுரமைல்கள் முதலாளித்துவத்தால் காலனித்துவ ஆட்சிப் பிரதேசங் களாகக் கைப்பற்றப்பட்டன.
(அடுத்த இதழில்)

Page 55
ஊருக்குப் பொதுவா
கூடி வாழ்ந்த காலம் தேடி நண்பர் உற்றாருடன் பேசி மகிழ்ந்திரு நேற்றுப் போலிருக்கிறது ஆற்றல் எமக்குள் கூட்டி உதவி ஒத்தாசை உறவுடன் மகிழ்ந்த காலம் பணம் இல்லை பல வசதி இல்லை குணம் ஒன்றே எம் சொத்தாய் கூடி வாழ்ந்திருந்தோம் குடிசையில் மரநிழலில் குளிர்மையில் குதூக ஒரு நேரச் சோறெனிலும் வயிறார சூழ்ந்திரு எம் உறவுகள் பற்றி எம் பிரச்சினை பற்றி எம் ஏழ்மை பற்றி எம் அடிமை நிலை பற்றி எம் உரிமை பற்றி நிலவொளியில் பேசியிருந் இன்றோ
தேசவிடுதலை யுத்தம் ஓய்ந்த காலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிலர் உயர் குடிசைகள் வீடுகள் ஆயின எல்லைகள் காட்ட மதில்கள் எழுந்தன உள்வீட்டில் நலம் விசாரிக்காது வானொலி சக்தி வாந்தி எடுக்கும் தென்னிந்திய மேட்டுக் குடிகளின் சின்னவீ எங்கள் வீட்டு சின்னத்திரைக்குள் எங்கள் உறவுகள் கூடுதல் இல்லை உரிமைகள் பற்றிப் பேச்சில்லை உறவுகள் ஏழ்மை நிலையில் அக்கறை ஏதும் இன்றி சொத்து சேர்க்குப் ஏழைகள் பாடு அவர்பாடு 2ளருக்குப் பொதுவாய் கோயில் வான்முட்ட ஏற்றம் எமக்கெனும் எண்ணம்!!

ந்த காலம்
புரிந்து
லித்தோம் நந்துண்டோம்
தோம்
ந்தார்
லியில் நலம் கேட்கும் கோலம்
ட்டு பிரச்சினைகள் | பேச்சாயின
) மும்மரம்
- எழுந்தால் போதும்
அழ. பகிரதன்

Page 56
Frned by Gawry Printers, 207, Sarawaramulhu M5, Colombo 3.