கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேட்டிலிருந்து

Page 1


Page 2


Page 3

வீதி,
ஓடைக்கரை
. r-ly!, T, LITLULJITEXTLū.
响 파벨 퀸 武科 } 雪
k, 1
sae
|-| |×s.W龚 影蒙s.
No

Page 4
குறிப்பேட்டிலிருந்து. (இலக்கியக் கட்டுரைகள்) முதற் பதிப்பு : வைகாசி 2007 அலை வெளியீடு இல, 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம். கணினி அச்சுக்கோப்பு : ஜெயந்த் சென்ரர், யாழ்ப்பாணம். அட்டை வடிவமைப்பு, அச்சுப் பதிப்பு : பேஜ் அன்ட் இமேஜ், 202/2B, றோயல் பேர்ள் கார்டன், வத்தளை. விலை : 200/=
அலை வெளியீடு - 10
kurippertilirunthu. (literary articles) first edition: may 2007 alai veliyeedu no. 1, odaikkarai road, gurunagar, jaffna. type setting: jeyanth centre, jaffna. cover design, printing : Page & Image 202/2B, Royal Pearl Garden Wattala
price : 200/=
குறிப்பேட்டிலிருந்து.

எனது கலை - இலக்கியச் செயற்பாடுகளில் உற்றதுணையாய்
இருந்துவரும்
பத்மநாப ஐயருக்கு.
அ.யேசுராசா

Page 5
உள்ளே.
என்னுரை v 1. நேர்காணல் 1 2. ஒரு வாசகனின் அபிப்பிராயம் 25 3. எழுபதுகளில் கலை, இலக்கியம் : ‘இலக்கு கருத்தரங்கு - 1982 29 4. குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை 41 5. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும்
தேசிய இனப் பிரச்சினையும் 50 8. ஈழத்துத் தமிழ்க் கவிதை ஆய்வரங்கு 64 7. சி.வி. வேலுப்பிள்ளையின்
“தேயிலைத் தோட்டத்திலே.’ 81 8. க. நா. சு. 87 9. மற்றவர்க்காய்ப் பட்ட துயர். 89 10. மதிப்புரைகள் 96 11. கிஷன் சந்தர் : ஒர் அஞ்சலி 102 12. சுந்தர ராமசாமி நினைவுகள் 105 13. மனிதனாயிருந்த மனிதன் 111 14. உலகக் கவிதைத் திருவிழா 120 15. அன்னா அக்மதோவா 126 16. "எதை எழுதவேண்டுமென உணர்கிறேனோ
அதையே எழுதுகிறேன்” 129
குறிப்பேட்டிலிருந்து.

என்னுரை
... தேவையற்றுப் போய்விட்ட மதுபானக் கடையைப் போல் இப்போ கலை, இலக்கியக் "கடை" களும் எனக்குத் தேவையற்றுத் தெரிந்தன.” - மு. தளையசிங்கம்
மு. த.வின் ‘பக்குவம்' என்னிட மில்லாததால் இன்னும் இந்தக் கலை, இலக்கியத் துறைகளை என்னால் புறக்கணிக்க இயலவில்லை. ஆனால், சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்க ளில் பெற்ற பட்டறிவினால் எனது ‘நினைவுக் கோப்பை கசப்பில் நிரம்பி வழிகிறது!
எமது கலை, இலக்கியவாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மை யானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட ‘முகங்கள்? பட்டம், பதவி, பணம் - பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் “அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலைநிறுத்த
sey.G3unu85gnTaVFAr

Page 6
முயல்கின்றனர்!
கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலம்மிக்க தந்திரச்செயல்களுடன் - ராஜகம்பீரராய்ப் பெருமை காட்டிப் பவனிவருகின்றனர்; அதிசய ஆடை “அணிந்த” அரசனின் நிர்வாண உண்மைநிலை சொன்ன தூய மனக் குழந்தையாய் நம்மிற்பலர் ஏனில்லை?
நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றுக்கிடையே இடைவெளி
இல்லாத -
இயன்றவரை நேர்மையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டு மென்ற -
அறம்சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.
இந்நிலையில், இலட்சியத்தையும் உன்னதத்தையும் அவாவுகின்ற
எழுத்தாளனை “சர்வாதிகாரி - ஹிட்லர்” எனச் சொல்லும் நோய்க்கூறான ‘பின்நவீனத்துவக் குரல்’ ஒலிக்கத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதே.
(p. 35. ஏ.ஜே. போன்று முன்னுதாரணராய்க் கொள்ளத்தக்க இலக்கியக்காரரே எமக்குத் தேவை: புகழ், பணம், பதவி என‘அந்தரப்படாது' - தமது நம்பிக்கைகளுக்கு இயைய நேர்மையான மனிதராயே அவர்கள் வாழ்ந்தனர். அறவுணர்வுகொண்ட
குறிப்பேட்டிலிருந்து.

அத்தகையோரைக் காண்பது அரிதாகவே உள்ளது!
Ο Ο
‘ஒரு வாசகனின் அபிப்பிராயம்' எனது முதற்கட்டுரையாகும். கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட அக்கட்டுரை, இளைஞனா யிருந்த எனது இலக்கிய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது; அதற்காக அவருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
கலாநிதி க. கைலாசபதியின் ‘சமர் இதழ்க் கட்டுரையொன்றுக்குப் பதிலாக எழுதப்பட்டதே 'குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை'; ஆனால், இக் கட்டுரையை வெளியிட ‘சமர் ஆசிரிய ரான டானியல் அன்ரனி மறுத்துவிட்டார்.
தெல்லிப்பழை ‘கலை, இலக்கியக் களம் ஒழுங்குசெய்த சிறுகதை நாள்' நிகழ்ச்சியில் நானும் கட்டாயம் கட்டுரை வாசிக்கவேண்டுமென வற்புறுத்தி, ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சினையும்’ என்ற தலைப்பி னைத் தந்ததோடு, அதற்குத் துணை செய்யக்கூடிய சிறுகதைகள் பலவற்றைப் படிப்பதற்கும் தந்தவர் கலாநிதி நா. சுப்பிரமணியம்.
-மாணவர் - இளைஞர்களுக்கான
‘சாளரம்’ இதழில் அறிமுகக் கட்டுரை எழுதப்பட்டதே, 3.66.
øy. GunsgressFT

Page 7
வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே.
இறுதியாகவுள்ள மூன்று கட்டுரைகளும் என்னால் மொழி பெயர்க்கப்பட்டவையாகும். திசை வாரப்பத்திரிகையில் கடமையாற்றுகை யில், பத்திரிகைத் தேவையும் பொருத்த மும் கருதி அவற்றை மொழிபெயர்த்தேன்.
எல்லாக் கட்டுரைகளும் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளபோதிலும், தேவைப்பட்ட திருத்தங்களைப் பல கட்டுரைகளில் தற்போது செய்துள்ளேன். இக்கட்டுரைகளை அவ்வப் போது வெளியிட்ட இதழ்களிற்கு எனது நன்றிகள்.
OO
புத்தகத்தை வடிவமைத்தபோது, பொருத்தமான படத்தினையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சேர்க்க விரும்பினேன். பலவற்றை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தபோதிலும், குறிப்பாக பிறமொழி எழுத்தாளரின் படங்களைப் பெறுவதில் சிரமப் பட்டேன். இளம் நண்பன் ஹரிஹர சர்மா இணையத்தளத்திலிருந்து அவற்றைச் சேகரித்துத் தந்துதவினார்; அவருக்கு எனது நன்றிகள். நூலில் பயன்படுத்தப்பட்ட வேறு படங்களுக்காக காலச்சுவடு, காவ்யா வெளியீடு, விம்பம், சி. வி. சில சிந்தனைகள், கைலாசபதியும் நானும், between the lines. gauaupp5)p(3 lb நன்றியுடையேன்.
முதற்பக்கத்தில் காணப்படுவது பிக்காஸோவின் வாசிக்கும் பெண்’ என்ற ஓவியமாகும்.
கணினி வேலைகளைச் செய்துதந்த *ஜெயந்த் சென்ரர் - கு. இராயப்புவிற்கும், அச்சுப்பதிப்பைச் செய்துதந்த நண்பன் எஸ். ரஞ்சகுமாரிற்கும் எனது நன்றிகள் உரியன. அ. யேசுராசா 0.04.2007
இல, 1, ஓடைக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.
குறிப்பேட்டிலிருந்து.
 

நீங்கள் படைப்பாளியாக உருவாகிவந்த காலச் சூழல், படைப்புமுறை பற்றிக் கூறமுடியுமா?
அந்தக் காலத்தில் நிறைய வாசிக்கும் பழக்கம் எனக்கிருந்தது. 87க்குப் பிறகு கொழும்பில் கடமையாற்றுகின்ற பொழுது - பல இலக்கிய நண்பர்களுடன் இணைந்து, "கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம்’ என்ற பெயரில் நாங்கள் இயங்குகின்ற பொழுது - நிரம்ப வாசித்து உரையாடுகின்ற பழக்கம் இருந்தது. என்னுடைய நண்பர்கள் பலர் சிறுகதை எழுதுபவர்களாகவும் கவிதை எழுதுபவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் நான் எழுதுவது குறைவு. நான் கூடுதலாக வாசிப்பதிலும் கருத்துப் பரிமாற்றம் செய்வதிலும் மட்டும்தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்தச் சூழலில் என்னுடைய சொந்த அனுபவங்கள் சார்ந்து எனினுடைய மன உணர்வுகளைச் சிறுகதையாகவும் கவிதையாகவும் வெளிப்படுத்தத் தொடங்கினேன். ஆனால், அவை மிகக் குறைந்த
அ.யேசுராசா

Page 8
எண்ணிக்கையாய் இருந்தாலும் என்னுடைய நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்து அபிப்பிராயங்களைக் கேட்டுக்கொள்வேன் ; பெரும்பாலும் பிரசுரமாகாமலேயே அவை இருந்தன.
முதற் படைப்பு கவிதையாகத்தான் இருந்திருக்க வேண்டும்; ஆனால் இதனைத் திட்டவட்டமாகச் சொல்ல இயலாது. ஏனென்றால், சில மரபுக்கவிதைகளையும் ஒரு சிறுகதையையும் 1988 அளவில் எழுதிய நினைவு. பின்னர் 1968 ஆம் ஆண்டளவில், நான் கொழும்பில் இருந்தபோது எழுதத் தொடங்கினேன். 68 ஆம் ஆண்டிலேயே ‘வரவேற்பு’ என்ற சிறுகதையை நான் எழுதியிருந்தேன். அதே நேரத்தில் 68 ஆம் ஆண்டு புதுக்கவிதையையும் எழுதத் தொடங்கி இருக்கிறேன். அது மாறி மாறி அப்படியே நடந்துபோயிருக்கிறது. ஆனால் இதில் அடிப்படையான விஷயம் படைப்புந்தல்தான். படைப்பு மனநிலை இருக்கின்றபொழுது - வெளிப்படுத்த வேண்டுமென்ற மனநிலை தீவிரமடைகின்ற பொழுது - பெரும்பாலும் ஒரே நாளிலேயே எழுதி முடிக்கப்படுவதாகத்தான் இருந்தது. குறிப்பாக சிறுகதையை எடுத்துக்கொண்டால், நெருக்கடியாக வளர்ந்து - தவிர்க்கவியலாமல் கட்டாயம் வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும் என்ற ஒரு நிலையில். வெள்ளவத்தையில் நான் இருந்த அறையில் மூன்றுபேர் தங்கியிருந்தோம். இரண்டுபேரும் படுத்திருப்பார்கள். இரவு 10-1030 மணிக்குப் பிறகு மேசை லைற்றைப் போட்டு, அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத முறையில், ஒரே முயற்சியில் போய் 12 மணியோ அல்லது ஒரு மணியோ கதைமுடிகிற வரை எழுத்து முயற்சி இருக்கும். ஆனால் அந்த முதற் பிரதி பல்வேறு தடவைகளாக - 25, 30 தடவைகளாகவும் இருக்கும் - திரும்பத் திரும்ப வாசிக்கும்பொழுது திருத்தங்களுக்கு உட்படும். அவை மெல்லிய மெல்லிய திருத்தங்கள், மொழிநடையைச் செப்பனிடுதல். நான் ஒரு வாசகன் என்ற நிலையில் அதைப் பார்க்கின்றபொழுது இயல்பாகவே ஏற்படுகின்ற அந்த திருத்தங்களைச் செய்து வைப்பேன். வெளியிட வேண்டும் என்கின்ற ஆவலெல்லாம் எனக்குப் பெரிதாக இருக்கவில்லை. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் முதல் நிலையில் நானொரு வாசகனாகத்தான் என்னைக் கருதுகிறேன் - படைப்பாளன் என்பதை விடவும்.
கவிதையும் சிறுகதையும் உங்கள் படைப்பாளுமையின் பிரதான தளங்களாக இருந்திருக்கின்றன. படைப்பின்போது கவிதையையும் சிறுகதையையும் உங்கள் மன உணர்வின் அடிப்படையில் எப்படித் தேர்வு செய்கின்றீர்கள்?
புத்திபூர்வமாக நான் வித்தியாசப்படுத்துகிறேன் என்று சொல்ல முடியாது; படைப்பு வெளிப்பாடு புத்திபூர்வமாக நிறைவேறுகின்றது என்றும் நான் நம்பவில்லை. ஆனால் சிறுகதை, கவிதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களுடன் நாங்கள் கொள்கின்ற உறவினாலும், பல்வகையான கருத்துக்களை நாம் உள்வாங்குதலாலும், எங்களுடைய அனுபவ அறிவுக்கு உகந்த முறையில் படைப்புக்கள் உருவாகும். இது யாருக்கும் நிகழும் - அதுபோன்று எனக்கும் நிகழ்ந்திருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் சிறிய மனவுணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பொழுது தானாகவே
குறிப்பேட்டிலிருந்து.
 

ஒரு வடிவமாக - கவிதையாக தேர்ந்துகொள்ளும். சிறுகதை என்று சொல்கின்ற பொழுது அதைவிடச் சற்று விரிவாக - பல்வேறு சம்பவங்களுடன் ஒரு குறிப்பிட்ட மைய வடிவமாக அல்லது விரிவுபடுத்திச் செல்கின்றதாக அமையலாம். அதை நாங்கள் பிரக்ஞைபூர்வமாகத் தீர்மானிக்காமலேயே கவிதையாகவும் கதையாகவும் மாறி வருவதாகத்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் இதை நான் கவிதையாக எழுத வேண்டும், கதையாக எழுத வேண்டுமென்ற முன் குறிப்பு - ஒரு புத்திபூர்வமான அணுகுமுறை - என்னிடம் இல்லை.
நீங்கள் எழுதத் தொடங்கிய காலம் மரபுக்கவிதை தேக்க நிலையிலும், நவீன கவிதை தமிழில் பரவலாகியும் கொண்டிருந்த காலம். மரபுக்கவிதை தொடர்பாக உங்கள் பார்வை எப்படி இருந்தது?
என்னைப் பொறுத்தவரையில் 63 ஆம் ஆண்டு - அதாவது நான் ஏ. எல். படிக்கின்ற காலத்தில் இருந்து யாழ். பொதுநூலகத்தைப் பயன்படுத்துகின்றபோது வாசித்த கவிதைகள் மரபுமுறைக் கவிதைகள்தான். பாரதிதாசன், முடியரசன், கம்பதாசன், வாணிதாசன் இன்னும் பெயர் சொல்ல முடியாத வகையில் பட்டியல் போகும். அதில் பாரதிதாசன் எனக்கு ஈடுபாட்டைத் தந்தவராகத்தான் இருந்தார். அதேமாதிரி இன்னுமொருவர் ச. து. சு. யோகி - அவருடைய கவிதையும் மனதைக் கவர்வதாக இருந்தது. ஆனால் பெரும்பாலும் கவிதைத் தொகுப்புக்களோ, சஞ்சிகைகளோ என்று சொல்கின்றபோது கூடுதலாக தமிழக வெளியீடுகளைத்தான் பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக எங்கள் ஊரின் பின்னணியில் வாசிகசாலைக்கு தி.மு.க. சார்ந்த வெளியீடுகள் கூடுதலாக வரும். அவற்றில் வரும் கவிதைகளெல்லாம் மரபுமுறைக் கவிதைகளாகத்தான் இருக்கும். இந்தக் கவிதைத் தொகுப்புக்களிலும் இயற்கை, காதல், சமூகம் என்ற மாதிரி ஒரு வாய்பாட்டுக்குள்தான் பெரும்பாலானோர் எழுதுகின்றபொழுது, சில அடிப்படைகளிலும் வெளிப்பாட்டு முறையிலும் ஒன்றாகவே இருந்தன. இவ்வாறான கவிதைகளை வாசித்தபோதிலும் பாரதிதாசன் மற்றும் சதுசு. யோகி இருவரையும் தவிர்ந்த பெரும்பாலானோருடைய கவிதைகள் எனக்குச் சலிப்பூட்டுவனவாக இருந்தன. அந்த நிலையில், மரபுமுறைக் கவிதைகள் தொடர்பாக ஒரு அதிருப்தி இருந்துவந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், 67 அல்லது 68 ஆம் ஆண்டளவில், கொழும்பில் ஒரு நண்பரின் ஊடாக 15, 20 எழுத்து இதழ்களை என்னால் பார்க்க முடிந்தது. அந்த இதழ்களில் புதுக்கவிதையை நியாயப்படுத்தியும் மரபுமுறைக் கவிதைகளின் போதாமையை வெளிப்படுத்தியும் பல கட்டுரைகளைப் படிக்கக்கூடியதாக இருந்தபொழுது, ஏற்கெனவே நான் சொன்ன அந்த அதிருப்திக்கு சரியான விளக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையிலேயே எழுதியிருந்தனர். ஆனால், மறுமுகமாக எழுத்தில் பிரசுரமான பல புதுக்கவிதைகள் மனதைக் கவர்வதாக இருக்கவில்லை. எழுத்தில் புதிய கவிதையின் தேவையை வற்புறுத்துகின்ற தெளிவான கருத்துக்களை உள்வாங்க முடிந்தது; ஆனால், அதனுடைய படைப்புக்கள் தெளிவடையச் செய்யவில்லை. இக்காலங்களில்
அ. யேசுராசா

Page 9
முற்போக்கு விமர்சகர்களான நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் புதுக்கவிதையை ஏற்காதவர்களாக இருந்தனர் ; கைலாசபதி, ‘புதுக்கவிதை ஒரு பிற்போக்கு வடிவம்’ என்றுகூடச் சொன்னார் பிறகு 68 ஆம் ஆண்டளவில் கவிஞர் தா. இராமலிங்கம் அவர்களின் காணிக்கை என்ற தொகுப்பை, கொழும்பு புத்தக நிலையமொன்றில் தற்செயலாகக் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்தப் புத்தக நிலையத்தில் இருந்து அக்கவிதைகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கின்றபோது, ஏற்கெனவே எழுத்து முன்வைத்த புதுக்கவிதைக்குரிய சரியான விளக்கங்களை இந்தக் கவிதைகள் கொண்டிருப்பதாகவும், அவை இயல்பாகவே என்னைத் தொற்றிக்கொள்வதான உணர்வையும் பெற்றேன். உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்று படித்தபோது, முதல் முறையாக புதுக்கவிதை தொடர்பான தெளிவான பார்வை என்னைப் பொறுத்தவரையில், அதன் ஊடாகத்தான் கிடைக்கிறது. என்னுடைய புதுக்கவிதை பற்றிய புரிதலில் அல்லது என்னுடைய புதுக்கவிதை வெளிப்பாட்டு முயற்சிகளில் ஒரு ஆதர்சமாக இராமலிங்கம் அவர்களும் அவருடைய அந்த காணிக்கை தொகுப்பும் இருந்தன என்பதை, நான் இங்கு சொல்லுவது மிக முக்கியம் என நம்புகின்றேன்.
தமிழில் நவீன கவிதையின் முன்னோடியாக பாரதி கொள்ளப்படுகின்றார். இலங்கையைப் பொறுத்தவரையில் நவீன கவிதையில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர்கள் யார்?
இங்கே நாம் புதுக்கவிதை என்று சொல்லுவதா? நவீனகவிதை என்று சொல்லுவதா என்ற ஒரு பிரச்சினையும் வருகிறது. நவீன கவிதைகள் என்று நாம் எடுத்துக்கொள்ளுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இப்படிப் பார்க்கின்றபோது மிகப் பிரதானமாக மஹாகவியைத்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் மஹாகவியில் கிடைத்த அனுபவம். அவருடைய குறும்பா கவிதைகள் இதழொன்றில் வந்தபொழுது தொடர்ந்து படிக்கக்கூடியதாக இருந்தது. என்றாலும் அது புத்தக வடிவத்தில் வந்தபொழுது, காலத்தினால் உருவாகக்கூடிய ஒரு வளர்ச்சியினாலும் வாசக அனுபவத்தினாலும் மேலும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியும். அதற்குப் பிறகு அவருடைய கவிதைகள் எம். ஏ. நுஃமான் அவர்களால் நூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டபொழுது, அவை முக்கியமாக நவீன வாழ்வு பற்றிய - எங்களுடைய இந்தக்கால வாழ்வுபற்றிய - சித்திரிப்பாக, நடைமுறை அனுபவங்களை வெளிப்படுத்துவதாக, மிக இலகுவானதொரு வெளிப்பாட்டு முறையைக் கொண்டதாக அமைந்திருக்கின்றதால் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இன்னும் சில விடயங்கள் சொல்வதானால் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் என்ற நூலில் - சாதாரண ஒரு அரசாங்க ஊழியன் பஸ்ஸுக்குக் காத்திருப்பது, இப்படிக்காத்திருப்பதில் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதி கழிந்துவிடுமோ என்ற அவனுடைய ஏக்கம், குறைந்த வருமானத்தில் வாழ்வை ஓட்டவேண்டி இருக்கின்ற நிர்ப்பந்தம், அவனுடைய குறைந்த சம்பளத்துக்கு ஏற்ற முறையிலே வசதிகுறைந்த இடத்தில் அவன் வாழ்வது
குறிப்பேட்டிலிருந்து.

s
இவையெல்லாம் - நகர்ப்புற வாழ்வின் சமகாலத் தன்மை தெரியும் வகையில் - கவிதைகளில் வெளிப்பாடு காண்பதென்பது அரிதாகத்தான் இருக்கிறது. இன்னொரு விடயத்தில், அவரொரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எழுதுவினைஞருடைய வாழ்க்கையை ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தில் வெளிக்கொணர்கிறபொழுது, நானும் நடுத்தரவர்க்க ஊழியனாக கொழும்பில் பல்வேறு வசதிகுறைந்த சூழலில் வாழ்கின்றபொழுது பெற்ற அனுபவங்களுக்கு நெருக்கமானதாக அது இருப்பதை உணர்கிறேன். சிறுகதையில் அல்லது நாவலில் மட்டும் இதுவரை நாங்கள் தரிசித்து இருக்கக்கூடிய நவீன வாழ்வின் வெளிப்பாடுகள், நகர்ப்புற வாழ்வு வெளிப்பாடுகள் என்பன, அதனூடாக வெளிவருகின்றன. அது முக்கியமான அம்சமாக இருக்கின்றது. மற்றையது, கிராமப்புற வாழ்வு - யாழ்ப்பாணம் சார்ந்த நிலைமைகளை வெளிப்படுத்துகின்றபோதுகூட வாழ்வின்மீதான பற்று, உழைப்பு, மானுட இடர் நிலைபற்றிய உணர்வுகளெல்லாம் இலகுபடுத்தப்பட்ட முறையில் வெளிப்படுகின்றமை, மேலும் ஈடுபாட்டைக் கூட்டுவதாக இருக்கிறது. இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தைச் சொல்லவேண்டும். மஹாகவி அதை யாப்பில் எழுதினாலும் நுஃமான் போன்றவர்கள் யாப்பு வடிவ ஒழுங்கை மாற்றி, புதிய வரிவடிவத்தில்தான் அதைப் பிரசுரித்திருக்கிறார்கள். கவிதையின் வடிவ ஒழுங்கை மாற்றுகின்றபோது புதுக்கவிதையை நியாயப்படுத்தச் சொல்லுகின்றதுபோல, பொருள் அடிப்படையில் அல்லது மனவோட்டத்துக்கு உகந்த முறையில் வரியமைப்பு இடம்பெறுகின்றது. யாப்பில் இருந்த கவிதையை ஏன் இவ்வாறு பிரசுரிக்க வேண்டுமென்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், அது புதுக்கவிதையை நியாயப்படுத்துகின்ற முறையில்தான் அமையும் என்றும் நாங்கள் கூறலாம். அந்தவிதமான பாங்கினாலும் அவருடைய கவிதைகள் ஒரு இலகுத்தன்மையையும் தொடர்புறுத்தலையும் கொண்டிருக்கின்றன. மஹாகவி என்னில் தாக்கம் செலுத்துகின்றார் என நான் சொல்லமாட்டேன; ஆனால், மஹாகவி நான் விரும்புகின்ற ஒரு முதன்மைக் கவிஞராக இருக்கிறார்.
அடுத்து நான் முதல் குறிப்பிட்ட தா. இராமலிங்கத்தைச் சொல்ல வேண்டும். இராமலிங்கத்தினுடைய இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. பிற்பாடு உதிரியான பல கவிதைகள் வந்திருக்கின்றன. அலை வந்துகொண்டிருந்த காலங்களில் அவருடன் நாங்கள் தொடர்புகொண்டபோது, அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்ற ஒரு கவிஞராகத்தான் இருப்பதை அறிய முடிந்தது. அவருடைய கவிதையிலும் எனக்கு நிரம்பிய ஈடுபாடு உண்டு. அடுத்து நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது சண்முகம் சிவலிங்கத்தை, சண்முகம் சிவலிங்கம் நான் நேசிக்கின்ற, மிகவும் விரும்புகின்ற ஒரு கவிஞர். அவருடைய கவிதைகள் மிகுந்த நுண்ணுணர்வை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. பல்வேறு சொந்த அனுபவம் சார்ந்ததாக அவருடைய வெளிப்பாடுகள் வருகின்றன. அரசியல் கவிதைகளில் மிக முக்கியமான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கின்றார். பலவிதங்களில் அவர் எனக்கு ஈடுபாட்டைத் தருகின்ற கவிஞராக இருக்கிறார்; இப்படிப் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது இன்னுமொன்றை நான் சொல்லவேண்டும். மிகப் பிடித்தமாக இருக்கின்றது என்று சொல்வதனால் வேறு சிலரை நிராகரித்தல் என்று அர்த்தமில்லை. வெவ்வேறு கவிஞர்களிடம் நான்
அ. யேசுராசா

Page 10
6.
விரும்பக்கூடிய பல கவிதைகள் இருக்கின்றன. அவ்வாறு சொல்லுகின்றபொழுது இலங்கையில் வேறுபல கவிஞர்களும் இருக்கிறார்கள். நுஃமான், மு. பொன்னம்பலம், முருகையன், சிவசேகரம், சு. வில்வரத்தினம், சேரன், ஜெயபாலன், அஸ்வகோஸ், கருணாகரன், புதுவை இரத்தினதுரை, சோலைக்கிளி முதலியோருடைய கவிதைகள் இவ்வாறு கவனம் செலுத்தக்கூடிய கவிதைகளாய் இருக்கின்றன.
உங்கள் படைப்பின் தொடர்ச்சியைப் பார்க்கும்போது பின்வந்த காலங்களில் சிறுகதைத் துறையில் இருந்து விலகி வந்து, கவிதையை அதிகம் கைக்கொண்டிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமாயிற்று?
நான் முன்பு குறிப்பிட்டது போல், அடிப்படையில் முதலில் நான் ஒரு வாசகன்தான் ; படைப்பாளன் என்பது இரண்டாம் பட்சம்தான். படைப்பாளனாக இயங்குவதில் எனக்கு அவ்வளவு அக்கறையிருப்பதாகக் கொள்ளமுடியாது. ஆனால், முன்பு குறிப்பிட்டது போல் ஒரு தவிர்க்க முடியாத நிலையில் படைப்பொன்று உருவாகின்றபோது, படைப்பு மனநிலையில் வெளிப்படுத்துகின்ற தவிப்பு உருவாகின்றபோது, நான் அவற்றைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்; வெளியீடு இரண்டாம் பட்சம்தான். ஏனென்றால், என்னுடைய சிறுகதைத் தொகுப்பு 74 ஆம் ஆண்டு பத்துக் கதைகளுடன் வந்தது. ஆனால், நான்கே நான்கு கதைகள்தான் சஞ்சிகைகளில் வெளிவந்தன; ஆறு கதைகள் வெளிவராமல் தொகுப்பில்தான் முதல்முறையாக வருகின்றன. அவ்வாறு பார்க்கையில் எனக்கு படைப்புந்தல் நிகழுமாயிருக்கின்றபட்சத்தில் நான் இயங்கிக்கொண்டிருக்கின்றேன். ஆனால், எனக்கு பெரிய அவசரமில்லை. கட்டாயமாக எழுத வேண்டும், பிரசுரிக்க வேண்டும், பலருடைய கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது எனக்கு ஒரு முக்கியமான விடயமல்ல. அவ்வாறு பார்க்கையில் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கட்டுரைகள், சில ‘பத்திகள் எழுதியுள்ளேன். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் 1966இல் ஒரு சிறுகதை எழுதினேன். அதை எனது தொகுப்பில் தவிர்த்து விட்டேன் ; ஏனைய கதைகள் என்பது பத்துத்தான். எனது இரண்டாவது கதை 68ஆம் ஆண்டு எழுதப்பட்டது; எனது பதினோராவது கதை - கடைசிக்கதை - 74ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஆனால், கவிதை என்று பார்க்கும்போது நான் கொஞ்சம் நீடித்த காலம் - சிறுகதையையும் விட - எழுதியிருக்கின்றேன். அதற்கென்ன காரணம் என்று சொல்ல முடியவில்லை. 81ஆம் ஆண்டு வரைக்கும் நான் தொடர்ந்து எழுதிய கவிதைகள், அதுவும் எண்ணிக்கையில் குறைவுதான். சுமாராக 45க்கு உட்பட்டவைதான். அவை ஒரு தொகுப்பாக வந்தன. அதற்குப்பிறகு 10-15 கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவை பெரும்பாலும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரு திட்டவட்டமான காரணத்தைச் சொல்ல முடியாது. ஏனென்றால், நான் புத்திபூர்வமாகச் செயற்படவில்லை. அவ்வாறு இருந்தது, இவ்வாறு இருந்தது என்றே சொல்லலாம் ; அதற்கு ஏதாவது காரணம் சொல்ல முடியுமென்று நான் நினைக்கவில்லை.
குறிப்பேட்டிலிருந்து.

படைப்பாளியாக இருக்கும்போதே விமர்சகனாகவும் கால் பதித்திருக்கிறீர்கள். உங்கள் விமர்சனங்களில் ஒரு கட்டிறுக்கம் தெரிகிறது. விமர்சனங்களில் எவ்வாறு ஈடுபடத் தொடங்கினீர்கள்? இவ்விமர்சன மனநிலை உங்கள் படைப்பை அல்லது படைப்பாளி மனத்தைப் பாதித்திருக்கிறதா?
நேரடியாக இதனால்தான் விமர்சனத்திற்குப் போனேன் என்று சொல்ல முடியாது. அடிப்படையில் நான் ஒரு வாசகன் , எனவே, எனக்கு படைப்புக்கள் பற்றியும் ஒரு சொந்தக்கருத்து உருவாகின்றது. அவ்வாறு உருவாகின்றபோது அதற்கு முரணான பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்ற வேளை அதில் ஏற்றுக்கொள்ள முடிந்ததும் இருக்கும்; ஏற்றுக்கொள்ள முடியாததும் இருக்கும். ஆனால் ஒரு நல்ல விடயத்தைத் தட்டி விடும்போது அல்லது மோசம் என்று சொல்லுகின்றபோது, அது பெரிய அந்தரமாகத்தான் இருக்கும். எவ்வாறு நாங்கள் எங்களுடைய சொந்த அனுபவங்கள் சார்ந்து சில மனநிலைகளை சில விஷயங்களை படைப்பில் வெளிப்படுத்த வேண்டுமென குறைந்தளவிலாவது முனைவதுபோல, படைப்புக்கள் தொடர்பான விமர்சனக் கருத்துக்களையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பரிமாறிக்கொள்கிறோம். நண்பர்களுடன் பரிமாறிக்கொள்கிறோம் ; கூட்டங்களில், கருத்தரங்குகளில் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பரிமாறிக்கொள்கின்றோம். அவற்றைப் பத்திரிகைகளுக்கு எழுத வாய்ப்புக் கிடைக்கின்றபோது எழுதுகிறோம்.
69ஆம் ஆண்டளவில் இருக்கலாம். மெளனி சிறுகதைகள் தொகுப்பு بر தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்திருந்தது. தருமு சிவராமூவுடைய, அந்த சிறுகதைத் தொகுப்பு முன்னுரைக்கு மறுப்பாக, அதனைக் காரசாரமாக கண்டித்து நிராகரிக்கின்ற கட்டுரையை தினகரன் வாரமஞ்சரியில் செ. கணேசலிங்கன் எழுதியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில், ரொம்ப வரட்டுத்தனமான பல கருத்துக்கள் அக்கட்டுரையில் இருந்தன. அதுபற்றிய கருத்துக்களை அக்காலத்தில் எனக்கு அறிமுகமான திரு. கே.எஸ். சிவகுமாரனுடன் பகிர்ந்துகொண்டபோது அவர் அதனை கட்டுரை வடிவத்தில் எழுதித் தரும்படி கேட்டார். நான் தயங்கினேன். ஏனென்றால் கணேசலிங்கன் பெயர்பெற்ற எழுத்தாளர். என்னுடைய பெயர் யாருக்குமே தெரியாது. நான் ஒரு வெறும் வாசகன். அவர் சொன்னார், “நீங்கள் சொன்ன கருத்துக்கள் முக்கியமானவை; அவற்றை நீங்கள் எழுத முயலுங்கள்’. நான் ஒரு சுருக்கமான பதிலை எழுதி சிவகுமாரனிடம் கொடுத்தேன். பிறகு அதை தருமு சிவராமூ பார்த்ததாகவும் அறிந்தேன். கே. எஸ் சிவகுமாரனுக்கு அந்தக் கட்டுரை பிடித்துக்கொண்டது. அந்தக் கட்டுரையை அவர் தினகரன் ஆசிரியரிடம் கொடுத்தபொழுது, அதனை அவர் வாசித்துவிட்டு பிரசுரிக்கவில்லை. அதற்கவர் சொன்ன காரணம், “ஒரு பிரபலமில்லாதவரின் கட்டுரையை எப்படி வெளியிடுவது?’ என்பதுதான். இது 89 அளவில் நடந்தது. அந்தக் கட்டுரை தொடர்பாக சிவகுமாரனும் தருமு சிவராமூவும் தெரிவித்த கருத்துக்கள் என்னுடைய தன்னம்பிக்கையைத் தூண்டின. அதன் பிறகுதான் நான் சிறிய விமர்சனக் கட்டுரைகளை எழுதினேன். அந்தக் கட்டுரைகளில் என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினேன். ஒவியக்காட்சிகள், புகைப்படக்காட்சிகள், சில சிங்களப் படங்கள் பற்றி எழுதத் தொடங்கினேன்.
அ. யேசுராசா

Page 11
இவ்வாறான ஒரு வளர்ச்சியில், மேலும் எங்களுடைய வாசிப்புப்பரப்பினூடாக நாங்கள் வருகின்றபோது, நாங்கள் பல அதிர்ச்சியான கருத்துக்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. பல நல்ல படைப்பாளிகள் ஒதுக்கப்படுகின்றார்கள் , சாதாரணமானவர்கள் விதந்துகொள்ளப்படுகின்றார்கள். இந்நிலைமையை எதிர்கொண்டு மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டிய சூழல் வருகின்றது. விமர்சனத்தில் அந்நேரத்தில் முற்போக்கு இலக்கியக் குழு ஆதிக்க சக்தியாக இருந்தது. அதைச் சார்ந்த விமர்சகர்கள் முக்கியமாக கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள்தான் என்றாலும்கூட, அவர்களை ஒட்டி இன்னும் பலர் அவ்வாறான கருத்துக்களைத்தான் தெரிவித்து வந்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாநேரமும் தாங்கள் ஏற்றுக்கொண்ட அரசியல், இலக்கியக் கோட்பாடு என்பவற்றினூடாகப் பார்த்துத்தான் ஏற்றார்கள் - நிராகரித்தார்கள் என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் பாராட்டிய பல எழுத்தாளர்களுடைய படைப்புக்கள், சோஷலிச யதார்த்தவாதத்திற்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்கவில்லை. நான் எனக்குப் பொருத்தமானவற்றைத்தான் இன்னுமொருவர் வெளிப்படுத்த வேண்டும் - வெளிப்படுத்தினால்தான் அது சிறந்ததாக இருக்குமென்று கொள்வேன் என்று, சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் கலைத்துவமில்லாத, அறிவுக்கு முரணான, வரலாற்று வளர்ச்சிக்கு உகந்ததல்லாத, பிற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற அல்லது மானுட விரோதக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற படைப்புக்களைத்தான் முக்கியமற்றவை எனக் கருதுகிறேன். ஆனால் அதில்கூட படைப்பியல் அம்சம் சிறப்பானதாக இருந்தால், படைப்புத் திறமை இருந்தால், நாம் அதைப் பதிவுசெய்யத்தான் வேண்டும்.
அன்றைய வரட்டுவாத அணுகுமுறையில் இவர்கள் முக்கியம் கொடுக்காமல் மறுத்த படைப்பாளிகளான எஸ். பொன்னுத்துரை, வ. அ. இராசரத்தினம், மஹாகவி, தளையசிங்கம், தா.இராமலிங்கம் போன்றவர்கள் பிற்போக்கான கருத்துக்களை வைத்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. தளையசிங்கம் போன்றவர்களின் ஆன்மிகவாத கருத்துக்களை பொருள்முதல்வாதிகள் ஏற்றுக்கொள்ளாமல் விட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் அவர்கள் சமுதாய அநீதிகளுக்கு எதிராக, மனிதாபிமான உணர்வுநிலை நின்று வெளிப்படுத்தியதையுங்கூட பலர் சாதகமாக கணக்கில் எடுக்கவில்லை. அடுத்து, அவர்களுடைய சிறுகதையிலோ அல்லது அவர்களுடைய நாவல்களிலோ காணப்பட்ட படைப்பியல் அம்சங்களைக்கூட அவர்கள் கவனத்தில் எடுக்காமல் விட்டது மிகவும் தவறென்று நாங்கள் மதிப்பிட வேண்டும். இதற்கு அடிப்படையான சோஷலிச யதார்த்தவாதம் என்று குறிப்பிட்ட அந்தக் கொள்கை உண்மையில் தவறானதாகும். சோஷலிச யதார்த்தவாதம் என்பது பொருத்தமானதல்ல என்று, 88ஆம் ஆண்டு, தெல்லிப்பளையில் நடந்த இலக்கியக் கருத்தரங்கில்தான் முதன்முதலாக சிவத்தம்பி ஏற்றுக்கொள்கிறார். தமிழ்நாட்டிலும் தொ. மு. சி. ரகுநாதன் போன்றவர்கள் தவறென்று சொல்லுகின்றார்கள். இந்த அணுகுமுறைக் கோளாறும் இவர்களுடைய மதிப்பீடுகள் தவறாகப் போனதிற்கு ஒரு காரணம். இரண்டாவது, அரசியலில் கையாளுகின்ற மூலோபாயமும் தந்திரோபாயமும் ஆகும். அந்த விடயத்தில் இவர்கள் பல இடங்களில் தந்திரோபாயமான அணுகுமுறையை கலாசாரத்தளத்திலும்
குறிப்பேட்டிலிருந்து.

9
கைக்கொண்டார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் கொள்கையிலும், எனக்கு இது சரிவரும் என்று நம்பிக்கையில்லை. மனித உறவுகள், கலாசார மதிப்பீடுகள், வெளிப்படையாக விவாதிக்கின்ற விடயங்களில் அறிவுபூர்வமானதும் உணர்வுபூர்வமானதும் வெளிப்படையானதுமான திறந்த அணுகுமுறைதான் தேவை. மஹாகவியை நிராகரித்ததற்கு இவர்கள் எக்காரணத்தினையும் சொல்ல முடியாது ; நுஃமான் போன்றவர்களே அவரைச் சரியாக இனங்கண்டனர்.
இன்னுமொன்று, இந்த விமர்சகர்கள் சமுதாய முதன்மை, அரசியல் கண்ணோட்டம், சமுதாய முரண்பாடுகளை விளக்குதல், தீர்வு சொல்லுதல் என்ற கருத்தாக்கங்களை முன்வைத்து 'இறுக்கமாக’ நடந்துகொண்டதால் - படைப்புச் செயற்பாட்டில் அத்தியாவசியமாக இருக்கவேண்டிய ஏனைய கூறுகள், செம்மைக்கான உழைப்பு போன்றவற்றிற்கு இவர்கள் அழுத்தம் கொடுக்காமல் விட்டதனால், மிக வரட்டுத்தனமான படைப்புக்கள்தான் பெருமளவுக்கு வரக்கூடியதாக இருந்தன. விமர்சன அங்கீகாரம், இலக்கிய உலகில் பெயர் எடுக்கவேண்டும் என்று சொன்னால் இந்த குறிப்பிட்ட வட்டத்தில் இருக்கவேண்டுமென்ற முறையில் இவர்களது விமர்சனங்கள் இருந்தன. இரத்தமும் சதையுமாக ஒரு கலைஞன் வெளிப்படுத்தவேண்டிய உணர்வுகளுக்குப் புறம்பாக, அறிவுபூர்வமாக - நிலைமைக்கு உகந்த படைப்புக்கள் என தயாரிப்பதை’ அந்தக் காலத்திலுங்கூட சிலர் நிராகரித்தார்கள் , அது ஒருவிதமான பாதிப்பு. இன்னும் ஒருவிதமான பாதிப்பு என்னவென்றால், இலக்கியப் படைப்பு என்று சொல்லுகின்றபோது இந்தப் படைப்பியல் சார்ந்த அம்சங்கள் அழுத்தப்படாததனால், தொடர்ந்து நாங்கள் அடைந்திருக்கவேணி டிய வளர்ச்சி நிலைமையும் தடைப்பட்டிருக்கின்றது. ஆனால், மறுபக்கம் பார்க்கின்றபொழுது, அந்தநேரத்தில் சாதி முரண்பாடு, வர்க்க முரண்பாடு என்பதற்கு மட்டும் அழுத்தம் கொடுத்து - அதற்கூடாக வருவதுதான் படைப்பு என்று வரையறுத்தது போல, பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இலக்கிய வளர்ச்சிப்போக்கிலும்கூட இத்தகைய தயாரிக்கப்படுகின்ற - கலைத்திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்ற, உள்ளடக்கத்திற்கு மட்டும் முதன்மை கொடுக்கின்ற - ஒரு தவறான போக்கு நிலவுகிறது. ‘மரணத்துள் வாழ்வோம்’, ‘போர் உலா', 'வில்லுக்குளத்துப் பறவை’, ‘அம்மாளக் கும்பிடுறானுகள்’, ‘வடலி’, ‘புதியதோர் உலகம்’, ‘அதிர்ச்சி நோய் எமக்கல்ல’ போன்ற நல்ல படைப்புக்கள் வந்திருந்தாலும் - இவ்வளவு துயரார்ந்த நிகழ்வுகளுக்குப் பிறகும்கூட போதிய எண்ணிக்கையில் உயர்வான கலை, இலக்கியங்கள் வராமல் போனதற்கு, இந்த விமர்சனத் தொடர்ச்சி காரணமாக இருக்கின்றதென்றும் நாங்கள் கருதலாம்.
தீவிர வாசகன் என்ற வகையில் பல நல்ல இலக்கியப் படைப்புக்களுடன் எனக்குப் பரிச்சயம் இருக்கின்றது. நான் குறிப்பாக விரும்பி வாசிப்பது மொழிபெயர்ப்புப் படைப்புக்களைத்தான். இந்திய மொழிகளிலான படைப்புக்கள், ஆங்கில மொழியில் இருந்து தமிழில் வந்த படைப்புக்கள், ஏனைய உலகப் பிரசித்திபெற்ற நூல்கள் என, தமிழில் வந்தவைகளில் பலவற்றை நான் படித்திருக்கிறேன். அத்துடன், தமிழில் முக்கிய பங்காற்றுகின்ற தமிழக எழுத்தாளர்களுடன் எனக்குப் பரிச்சயம் உண்டு;
அ.யேசுராசா

Page 12
()
அவ்வாறு திறமையைக் காட்டுகின்ற ஈழத்து எழுத்தாளர்களுடனும். இலக்கியம் பற்றிய கோட்பாடுகள், விமர்சனங்கள் தொடர்பான பல வெளியீடுகளைப் பார்க்கின்றபொழுது என்னுடைய சொந்த அனுபவ - அறிவு நிலைகளுடன் பொருந்தி வரக்கூடிய விதத்தில், இவர்களுடைய கருத்துக்கள் பற்றியும், இவர்களுடைய இலக்கியப் படைப்புக்கள் பற்றியும் எனக்கு ஒரு பார்வை உருவாகிறது. இயல்பாகவே அதுவொரு விமர்சன மனநிலையை என்னுடைய தன்னுணர்வில் கட்டமைக்கிறது. நான் குறைந்தளவு செயற்பாட்டில் ஈடுபடுகின்றபொழுதும் இந்த விமர்சன மனநிலை என்னுடைய அடிமனதிலிருந்து செயற்படுகின்றது. முக்கியமாக அவ்வாறுதான் படைப்புச்செயல் ஒரு கட்டமைப்புக்குள் செல்லுகின்றது என்றும் சொல்லலாம். எழுதிய பிறகு நான் வெவ்வேறு நாள்களில் - வெவ்வேறு மனநிலைகளில் - வாசிக்கின்றபொழுது ஏற்படுகின்ற திருத்தங்கள் செதுக்கலாக அமைகின்றபோதும் இவற்றை விமர்சன மனநிலைதான் தீர்மானிக்கின்றது. ஆகவே ஈடுபாடுகொண்டு படைப்புச் செயற்பாட்டில் இறங்கவேண்டும். அவ்வாறு இல்லாத - கலைத்துவம் குன்றிய - வரட்டுத்தனமான படைப்புக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை; அவ்வாறான செயற்பாடும் என்னிடம் இல்லை. விமர்சன மனநிலைக் கண்ணோட்டம் என்னிடம் எப்போதும் இருந்துவருகிறது; அது அடிமனதிலும் பதிந்து, வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்குமென்றுதான் சொல்லலாம். படைப்பாளிகளிடம் இத்தகைய நிலை இருக்கவேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன்.
தமிழ்ச் சூழலில் 'அலை’ இதழ் மிகப் பெரிய அதிர்வுகளை உண்டுபண்ணியது. அலை சஞ்சிகையின் உருவாக்கம் பற்றி?
அலையின் முதலாவது இதழ், 1975 கார்த்திகை மாதம் வந்தது. ஆனால், கிட்டத்தட்ட 70ஆம் ஆண்டளவில், முன்னர் குறிப்பிட்ட "கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றபொழுது, இவ்வாறான ஒரு சஞ்சிகையை வெளியிடவேண்டும் என்று நண்பர் சிலர் கருதினார்கள். ஆனால் நானும் ஒருசில நண்பர்களும், இன்னும் சிறிது காலம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்; நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்; ஒரு காத்திரமான சஞ்சிகை வெளிப்பாட்டுக்குரியவர்களாக எங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி, அதனை ஒத்திப்போட்டுக்கொண்டு வந்தோம். ஆனால், 70ஆம் ஆண்டுக்குப் பிறகு - இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு - முற்போக்கு இலக்கியவாதிகளுக்கு ஒரு வலுவான அரசியல் தளம் கிடைக்கின்றபோது, அவர்களுடைய ஆதிக்கம் கலாசாரத் தளத்தில் மிகத்தீவிரமாக வெளிப்பட்டது. அதில் பல தவறான போக்குகள் அரசியல் சார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். அந்த நேரத்தில் தினசரிப் பத்திரிகைகளில், வார வெளியீடுகளில், வானொலியிலெல்லாம் எங்கள் கருத்துக்களைச் சொல்லக்கூடியதாக இருக்கவில்லை. ஏனென்றால், அந்த ஊடகங்களிலும்கூட மதிப்பும் முன்னுரிமையும் பெற்றவர்கள், இந்த முற்போக்கு அணியைச் சேர்ந்த விமர்சகர்களும் படைப்பாளிகளுமே ஆவர்.
குறிப்பேட்டிலிருந்து.

இந்தச் சூழலில் 75ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நண்பர் என்கே. மகாலிங்கம் - இவர் பூரணி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர்; அவரிடம் அச்சுச்சாதனங்கள் இருந்தன. சில அகக்காரணிகளினால் பூரணி இதழ் தொடர்ந்து வெளிவரமுடியாமல் போனபோது - எங்கள்மீது நல்லெண்ணம் கொண்டிருந்தபடியினால், “ஏன் நீங்கள் ஒரு சஞ்சிகையைத் தொடங்கி நடத்தக்கூடாது? என்னிடம் உள்ள அச்சுச்சாதனங்களை உங்களுக்குத் தந்துவிடுகிறேன். நீங்கள் எவ்வளவு காலமானாலும் வைத்துப் பாவிக்கலாம். எந்தவிதமான கருத்துத் திணிப்பையும் உங்களில் நான் மேற்கொள்ளமாட்டேன், நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியுமோ வைத்திருங்கள்” என்று சொன்னார். அது எங்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்தது. ஏனென்றால், சஞ்சிகை வெளிப்பாட்டிலுள்ள பொருளாதாரச் சுமை அச்சுறுத்துவதாக இருந்தபடியினால் சில நண்பர்களுடன் கதைத்துவிட்டு, இந்த அச்சுச்சாதனங்களைப் பாவிப்பதன்மூலம் அச்சுச் செலவை 50% குறைக்கலாம் என்று தெரிந்து, நாங்கள் முன்வந்தோம்.
76ஆம் ஆண்டு, கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எனக்கு இடமாற்றம் கிடைத்தது. என்னுடைய வீட்டிலே அச்சுச் சாதனங்களை வைத்து, மு. புஷ்பராஜன், குப்பிழான் ஐ. சண்முகன், இ. ஜீவகாருணியன், நான் ஆகியோர் அலை ஆசிரியர் குழுவில் இருந்தோம்; நிர்வாக ஆசிரியராக நான் செயற்பட்டேன். அலை வெளியிடுவதற்குரிய முக்கியமான பங்களிப்பாக, எமிலியூஸ் என்ற என்னுடைய பாடசாலைக்கால நண்பன் - அவர் ஒரு சிறந்த அச்சுக்கோப்பாளர் - ‘எங்கள் ஊரில் இருந்து முதல் முறையாக இவ்வாறான இலக்கியச் சஞ்சிகை வெளிவருகின்றது; என்னுடைய பங்களிப்பாகவும் இருக்கட்டும்’ என்று சொல்லி, அந்தநேரத்தில் அச்சுக்கூடங்களில் ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தில் அரைவாசியை மட்டும் தரும்படி சொன்னார் ; அவருடைய உழைப்பும் முக்கியமானதாக அலையில் இருக்கிறது. மூன்றாம் இதழிலிருந்தே அலையை இவ்வாறு வெளியிடத் தொடங்கினோம்; முதல் இரண்டு இதழ்களும் முழுமையாக அச்சகத்திலேயே அச்சிடப்பட்டன. எங்களுக்கு அலையினூடாக என்ன செய்யலாம் என்று சில நோக்கங்கள் இருந்தன. அதில் முக்கியமான விஷயம், கலை இலக்கியத்தில் நவீனத்தன்மைகள் உள்ள படைப்புக்களை - கருத்துக்களை வெளியிடுவதற்கு களமாய் அமைவது. மற்றையது, தேசிய இன ஒடுக்குமுறை கலை - இலக்கியத்தில் உரிய இடம் பெறாத போக்கு இருந்துவந்தது. சாதி ஒடுக்குமுறை பற்றி கதைப்பது, எழுதுவது என்றே பெரும்பாலும் இருந்தது. சாதி ஒடுக்குமுறைகள் பேசப்பட வேண்டும்; இன ஒடுக்குமுறையும் பேசப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்று எங்களுக்கு கருத்து இருந்தது.
அடுத்தது நவீன இலக்கிய விமர்சனப் போக்குகள், கருத்துக்களெல்லாம் தமிழ்நாட்டில் வெளிப்படுத்தப்படுகின்றன; அவையெல்லாம் இங்கு பரிமாற்றப்பட வேண்டும். சினிமா, நாடகம், நவீன ஓவியம் போன்றவற்றிற்கு இடம் அளிக்கப்பட வேண்டும். அவை பற்றிய கருத்துக்கள் பலரையும் சென்றடைய வேண்டும். அடுத்தது, எழுத்தாளன் இயன்றவரை சொல்லுவது போல் வாழவேண்டும்; தன்னுடைய சொல்லுக்கும் செயலுக்குமிடையில் இயன்றளவு இடைவெளியற்ற தன்மையைப் பேணவேண்டும்
அ. யேசுராசா

Page 13
2
என்பதில் நாங்கள் அக்கறை கொண்டோம். அந்தவிதத்தில் எங்களுக்கு தளையசிங்கம் முன்னுதாரணமாயிருந்தார். அவருடைய கருத்துக்கள், அவருடைய செயற்பாட்டு முறைகள் படிப்பினையைத் தந்தன. என்னைப் பொறுத்தவரை அவருடைய ஆன்மிகவாதத் தன்மையை ஏற்றுக்கொள்வதாக இல்லை; அதை நான் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. ஏனென்றால், பிறப்பால் நான் கத்தோலிக்கனாக இருந்தாலும் 1965ஆம் ஆண்டில் - அதாவது என்னுடைய 19ஆவது வயதிலிருந்து - எனக்குக் கடவுள் நம்பிக்கை அற்றுப்போய்விட்டது; இன்றுவரையும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆயினும்கூட தளையசிங்கத்தின் பங்களிப்பாக பலவற்றை நாங்கள் அவரிடமிருந்து பெறுகிறோம். அவரே ஒருமுறை எழுதி இருக்கிறார், “இந்த சீரழிந்த சூழலில் எங்களை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவோம்” என்று. இதை வைத்து நான் பெறுவது என்னவென்றால், முதலில் மனிதன், இயன்றளவு நல்ல மனிதன். நாங்கள்தான் நல்ல மனிதர், புனிதர் என்று தம்பட்டம் அடிக்க முடியாது. நாமும் குறையுள்ள மனிதர்தான்; இருந்தாலும் குறைகளைக் களைதல் முக்கியமாய்ப்படுகிறது. மற்றையது, வெளிப்படையாக கருத்துக்களை சொல்லுகின்றபோது இயன்றவரை அதற்கு உகந்த முறையில் மதிப்பளித்தல். பாரதியார் ‘சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான தூரம்’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்; அதனை நாங்கள் மறுபிரசுரமாக அலையில் வெளியிட்டிருக்கிறோம். எழுத்தாளர்களுடைய நடைமுறைகளில் பல்வேறு வகையான முரண்பாடுகள் தென்படுகின்றபோது அதனைப் பதிவுசெய்துள்ளோம். உதாரணமாக, “சோஷலிச யதார்த்தவாதம் என்ற பெயரால் ஒரு முக்கியமான எழுத்தாளர் புறந்தள்ளப்பட்டு விடுவார்; ஆனால், சுமுகமான உறவுமுறை அல்லது குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்பதனால், பொருத்தமற்ற பலர் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுவார்கள். இவ்வாறு மதிப்பீடுகள் இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபடும். இவை பதிவு செய்யப்படுவதும் எங்கள் நோக்கமாக இருந்தது.
தமிழ் இலக்கியச் சூழலில் சிற்றிதழ்களின் பணி - பங்களிப்பு பற்றிய உங்களின் அனுபவம் சார்ந்த கருத்து யாது?
சிற்றிலக்கிய ஏடுகள் அவற்றிற்குரிய பாத்திரத்தை எப்போதும் வகித்து வந்திருக்கின்றன. வெகுஜன ஊடகங்கள் - வணிக நலன் சார்ந்த வெளியீடுகள்; தீவிரமான கலாசார வெளிப்பாடுகளுக்கோ, கலைஞர்களின் சுதந்திரத்தைப் பேணி புதிய வடிவப் பரிசோதனைகளுக்கெல்லாமோ சரியான களம் அமைத்துக் கொடுக்கமாட்டா. ஏனென்றால், அவற்றின் நோக்கங்களும் நலன்களும் வேறுபட்டவை. அந்நிலையில், சமூகப் பொறுப்புடன் - கலைப்பொறுப்புடன் இயங்கக்கூடிய படைப்பாளனுடைய படைப்புக்கள் வெளிவருவதற்கு, எப்போதும் சிற்றிலக்கிய ஏடுகள்தான் களமாக அமைந்திருக்கின்றன. தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி அத்தகைய சிறு சஞ்சிகைகளுக்கூடாகத்தான், தமிழில் பேசப்படக்கூடிய மிகச் சிறந்த படைப்பாளிகள் உருவாகி வந்திருக்கிறார்கள். அந்தவிதத்தில் மிகக் காத்திரமான கலாசாரச் சூழலை - படைப்புச் சூழலை - விமர்சனச் சூழலைப் பேணுவதற்கு அவை முக்கியமானவை;
குறிப்பேட்டிலிருந்து.

அதில் எந்தவிதமான எதிர்க்கருத்தும் கொள்ளமுடியாது. ஆனால், இதில் ஒரு அபாயமும் இருப்பதாக எனக்குப்படுகிறது. என்னவென்றால் இந்தக் கலாசாரத் தளங்களில் பலர் சமுதாய மாற்றம், அரசியல் மாற்றம் பற்றி தீவிரமாகக் கதைக்கிறார்கள்; சமூகப் பொறுப்பு, இலக்கியப் படைப்புக்களின் சமுதாயப் பாத்திரம் என்றெல்லாம் கதைக்கிறார்கள். ஆனால் சிற்றேடுகள் என்று சொல்லப்படுகின்ற அதனுடைய சொற்பதத்துக்கு உகந்த முறையிலேயே, அதன் பிரதிகளின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருக்கின்றது. 1000 பிரதிகளை அச்சடிக்கின்ற சஞ்சிகைகள் குறைவு; அவையெல்லாம் விற்பனையாகி வாசகர்களைச் சென்றடையும் என்பதுமில்லை. பெருமளவான வாசகர்கள் இப்படிப்பட்ட சிற்றேடுகள் வருவதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது பலர் ஆர்வமாக இவற்றை எடுத்துப் படிப்பதில்லை.
இந்நிலை - சமூகப்பொறுப்பு, கலைப்பொறுப்பு, அரசியல் பொறுப்பு உள்ள சிற்றேடுகள் ஒவ்வொன்றுக்கும் நிகழ்கிறது. அப்படியானால் எத்தகைய தாக்கத்தை பரந்த வாசகர் மீது ஏற்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தைப் பலர் கவனத்திலெடுப்பதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக, இவர்கள் எவ்வளவு தீவிரமாக கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் செயற்பட்டாலும் குறுகிய வட்டத்துக்குள்தான் இவர்களுடைய முயற்சிகள் இருக்கின்றன.
சிற்றேடுகளுடாக உருவாகிவருகின்ற எழுத்தாளர்கள் நூலுருவாகத் தங்களுடைய ஆக்கங்களைக் கொண்டுவருகின்றபொழுதும் இதே நிலைமைதான். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதானால், யாழ். பொது நூலகத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் வாசகரினால் எத்தனை தடவைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற குறிப்பைப் பார்த்தால், சில வருடங்களில் ஒரு நூல், ஒன்று அல்லது இரண்டு தடவைகள் எடுக்கப்பட்டிருக்கும் ; சில வருடங்களில் ஒருவருமே எடுத்திருக்க மாட்டார்கள். 6, 7 வருடங்களைப் பார்த்தாலும் அவ்வாறுதான் இருக்கின்றது! இங்கு, ஒருவிதத்தில் சீரியசான - காத்திரமான - படைப்புக்களை, கருத்துக்களை உயிர்ப்புடன் பேணி சிற்றிலக்கிய இதழ்கள் வளர்ச்சிக்குப் பங்களிக்கின்ற அதேநேரத்தில், அவற்றினுடைய எல்லைப்பாட்டினையும் நாம் துல்லியமாகத் தெரிந்துகொண்டு செயற்பட வேண்டும். அப்படியென்றால் அதற்குச் சமாந்தரமாக இன்னும் பெரிய வட்டத்தில், பெரிய தளத்தில், கூடுதலான பேரை அணுகக்கூடிய செயற்பாடுகளும் எங்களுக்குத் தேவை. அத்தகைய செயற்பாடு பற்றி விழிப்புணர்வு இல்லாமல், அக்கறையில்லாமல்தான் நீண்டகாலமாக இந்தச் சிற்றேடுகள் செயற்பட்டு வருகின்றன; அலைகூட அவ்வாறு என்றுதான் சொல்லுவேன். ஒருவிதத்தில் பங்களிக்கின்றன; ஆனால் அவற்றினுடைய பங்களிப்பு மிகச் சுருங்கிய வட்டத்தினுள் தொடர்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாயில்லை. இதற்கு மாற்றுத்திட்டத்தை மாற்றுவழிகளை கலாசாரவாதிகள், அந்தத் தளத்தில் நிற்பவர்கள் பொறுப்புணர்வோடு சிந்தித்து ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்படியென்றால்தான் சமூகப்பரப்பில் நமது நல்ல நோக்கங்களின் வீச்செல்லை அதிகரிக்கும்;இல்லையென்றால் பெருந்திரள் வாசகர்களுக்கு - நாம் பெருமைப்படக்கூடிய புதுமைப்பித்தனோ, மெளனியோ, அழகிரிசாமியோ, சுந்தர ராமசாமியோ, இலங்கையர்கோனோ, வ. அ. இராசரத்தினமோ,
அ.யேசுராசா

Page 14
4ه |
சி.வி. வேலுப்பிள்ளையோ, மஹாகவியோ மற்றையோரோ அறியப்படாதவர்களாகவே இருப்பர்.
சிற்றிலக்கிய ஏடுகளில் குழு மனப்பான்மை காணப்படுகின்றபொழுது அது கோட்பாடு சார்ந்ததாக, கருத்துக்கள் சார்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அது எல்லா நேரத்திலும் எல்லாக் காலகட்டத்திலும் சரியாக இருப்பதில்லை. உறவுகளில் திருப்தியீனங்கள், ஆளுமைப் போட்டிகள் போன்றவையெல்லாம் குறுக்கிடுகின்ற பொழுது, இவர்கள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றதாய்ச் சொல்லும் அரசியல் அல்லது கலை இலக்கியக் கோட்பாடுகளை ஒதுக்கிவிட்டு, தங்கள் படைப்புக்களை முதன்மைப்படுத்தி முடிக்கின்றவர்களாகவும் ஏனையவர்களை நிராகரிக்கின்றவர்களாகவும் மாறுகிறார்கள். ஈழத்தில் இது குறைவாக இருக்கின்றது எழுத்து வடிவத்தில், ஆனால் வேறு வடிவத்தில் அதேதான் நடக்கின்றது. நிராகரித்தல், விரும்பாவிட்டால் கூட்டங்களுக்கு அழைக்கமாட்டார்கள் அல்லது ஒரு வருடைய படைப் பினைக் கவனத்திலெடுக்கமாட்டார்கள் - புறக்கணித்து விடுவார்கள் அல்லது முக்கியமான படைப்பாளனாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறானதொரு நிலைமை இங்கு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் சிறுசஞ்சிகைகளில் வரும் கடிதங்கள், கட்டுரைகளில் ஒருவரை ஒருவர் நிராகரிக்கின்ற - இவருக்கென்ன தெரியும்? இவர் எழுதியதில் ஒரு வரிகூட இலக்கியம் இல்லை’ என்று சொல்லுகின்ற துருவ நிலைப்பாடுகள் மிக மோசமாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கருத்துக்களிடையிலான மோதலாக இல்லாது, தன்முனைப்புக் கொண்டவர்கள் இடையிலான மோதலாகவே தெரிகின்றன. இந்த விதத்திலும் சிறுசஞ்சிகைகள் சிறப்பான முறையில் செயற்படாத நிலை ஒன்று வளர்ந்து இருக்கிறது.
கவிதை இதழை நடத்தினிர்கள் ; அதுபற்றி உங்களுடைய அனுபவங்கள் யாவை?
சிற்றிலக்கியச் சூழலுக்கு அப்பாற்பட்ட பரந்த வாசகனுக்கு எமது கலை இலக்கிய வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் கொண்டுசெல்லப்படுவது அவசியம் என்று கருதுவது போலவே, ஆர்வமுள்ள - திறமையுள்ள புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென்பதையும் முக்கியமாக நான் கருதுகிறேன். நீண்ட காலம் இந்தக் கலாசாரத் தளங்களில் செயற்படுகின்ற படைப்பாளர்கள் புதியவர்களை இனங்கண்டு, அவர்களுடைய வளர்ச்சியில் அக்கறைகொண்டு ஆற்றுப்படுத்துவதைத் தங்கள் கடமையாகக் கொள்ளவேண்டுமென்ற கருத்தை நான் குறிப்பிடுகின்றேன். அந்தவிதத்தில் 94ஆம் ஆண்டளவில், இளைஞர் பலர் கூடுதலாக கவிதையில் ஆர்வம் காட்டி எழுதிக்கொண்டிருந்த தருணம், அவர்களுக்காக ஒரு இதழை வெளியிட வேண்டுமென்ற நோக்கில் கவிதை இதழை ஆரம்பித்தேன்; 9 இதழ்கள் வந்தன. 95ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வு வரைக்கும் அந்த இதழ் வந்தது. அந்த நேரத்தில் பிரதானமாக - 70% என்று சொல்லலாம் - இளங்கவிஞர்களுடைய ஆக்கங்களுக்கு இடமளித்தும், ஏனைய 30% பக்கங்களில்
குறிப்பேட்டிலிருந்து.

5
அந்த இளங்கவிஞர்கள் அறியக்கூடிய விதத்தில் கவிதை பற்றிய கருத்துக்களையும், முதுகவிஞர்களின் கவிதைகளையும் பிரசுரித்தேன். அந்தக் குறிப்பிட்ட கவிஞரின் முக்கியமான அம்சங்களை கட்டுரை வடிவிலும் வெளியிட்டேன். அதைவிட ‘கவிதைக் கலை’ என்ற கட்டுரைத் தொடரை சோ. பத்மநாதன் சிறப்பாகச் செய்தார். இவ்வாறாக ஒரு தளத்தில் அவர்களுடைய படைப்புக்கள் வெளிவருவதற்குக் களம் அமைத்துக் கொடுத்தும், அவர்கள் கற்றுக்கொண்டு வளர்வதற்கு அவர்களுடைய படிமுறை வளர்ச்சியில் உதவுவதற்காக ஏனைய 30% பக்கங்களையும் வடிவமைத்துச் செயற்பட்டேன். பல நல்ல இளங்கவிஞர்களை அடையாளம் காணமுடிந்தது. திருத்தங்கள் செய்யவேண்டிய இடத்தில் திருத்தங்களையும், அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் அவர்களுடைய வளர்ச்சிப்போக்கிற்கு உதவியாய்ச் செயற்பட்டேன்; அவர்களும் சஞ்சிகை வெளியீட்டில் நிறைய ஒத்துழைப்புத் தந்தார்கள். ஒருவிதத்தில் கூறுவதானால், அலை சஞ்சிகை வெளியிட்டபோது நாங்கள் நிரம்பிய சிரமங்களுக்கு உள்ளானோம். விளம்பரங்களைச் சேகரித்துக்கொள்வதற்கு, ஒரு சஞ்சிகைக்குரிய பொருளாதாரத்தைத் திரட்டிக்கொள்வதற்கு, விநியோகத்திற்கு, சஞ்சிகை வந்தபிறகு அதனுடைய எதிர்வினைகள் - கருத்துக்கள் தொடர்பாக எல்லாம் எங்களுக்கு போதுமான அளவு ஆதரவு இருக்கவில்லை. ஆனால், 94-95 ஐப்பசி வரைக்குமான இந்தச் செயற்பாட்டில் அந்தச் சிரமங்கள் எனக்கு அவ்வளவாக இருக்கவில்லை. 800 பிரதிகளைத்தான் அச்சடித்தேன். தயாரிப்பில் இளைஞர்கள் ஒத்துழைத்தார்கள். கவிதை - இலக்கியத்தோடு தொடர்பானவர்கள் விளம்பரங்களைச் சேகரித்து பிரதிகளை விநியோகமும் செய்தார்கள். இதழ் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பல சஞ்சிகைகள், வெளியீடுகளில் - தமிழ்நாட்டிலிருந்துகூட சாரதா போன்ற சஞ்சிகையில் - சில கவிஞர்களின் கவிதைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அதேபோல் இரண்டாவது இதழில் வெளிவந்த ஏழு கவிதைகளையும், வேறு நான்கைந்து கவிதைகளையும் சேர்த்து, சிங்களப் பத்திரிகையான சிளுமின வாராந்த வெளியீட்டில் “யாழ்ப்பாணக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஒரு முழுப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்கள். இவற்றையெல்லாம் நான் சிறு குறிப்பாக மற்றைய இதழில் பதிவுசெய்தபொழுது, அந்த இளம் பிள்ளைகளுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஏனென்றால், தமிழக சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்கின்றார்கள், கவிதை பற்றிய விமர்சனம் வருகின்றது; அந்த விமர்சனத்தில் சிறப்பம்சங்களை எல்லாம் சுட்டிக் காட்டுகின்றார்கள்; தாங்கள் முதல் முதலாக எழுதிய கவிதை மொழிபெயர்க்கப்படுகின்றது. இவைகளாலெல்லாம் தங்களது ஆற்றல் தொடர்பான நம்பிக்கைகள் அந்தப் பிள்ளைகளுக்கு வருகின்றபொழுது அவர்கள் மேலும் உற்சாகமாக செயற்படக்கூடிய நிலைமைகள் இருந்தன. அந்தவிதத்தில் எனக்கு ‘கவிதை’ இதழ் திருப்தியானதாகவே இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டின் புறச்சூழலினால் அந்த முயற்சியைத் தொடரமுடியாமல் போய்விட்டது.
“அலை சஞ்சிகையின் முடிவு எவ்வாறு ஏற்பட்டது?
75ஆம் ஆண்டு கார்த்திகையில் தொடங்கிய அலை, 90ஆம் ஆண்டு முற்கூறு வரை வெளிவந்தது. 35ஆவது இதழ் அதன் கடைசி இதழாக வந்தது.
அ.யேசுராசா

Page 15
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, முதல் 12 இதழ்கள் வந்தன. 13ஆவது இதழ் ஒரு வருட இடைவெளிக்குப்பின்தான் வந்தது. ஆனால், ஆரம்பத்தில் 28 பக்கங்களைக் கொண்டிருந்தது; 25ஆம் இதழில் இருந்து சராசரி 50க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக பல்வேறு விடயங்களுடன் வெளிவந்தது. காத்திரமாக வந்தாலும் பல்வேறு தரப்பினருடைய அதிருப்திகளை அது எதிர்கொண்டது. அதற்குக் காரணம் எங்களுடைய திறந்த செயற்பாடு - அங்கீகாரம், மதிப்பு, கலாசாரத் தளத்தில் உயர்பீடத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதம் போன்றவைகளை எல்லாம் நாங்கள் பொருட்படுத்தாத வகையில், நாங்கள் நம்பிக்கொண்டதற்கு உகந்ததாக - இயன்றவரை முரண்பாடு இல்லாமல் - செயற்பட வேண்டுமென்று கருதி அவ்வாறு செயற்பட்டிருக்கிறோம்; அதில் எங்களுக்குத் திருப்தி இருக்கின்றது. ஆரம்பத்தில் நால்வருடன் தொடங்கினாலும் சில சில காலங்களில் அது மாற்றமடைந்து, 25 தொடக்கம் 35ஆம் இதழ் வரை நான் மட்டும் தனித்திருந்தேன். ஆனால், ஒன்றாய் இருந்து விலகிச்சென்ற நண்பர்கள் தொடர்ந்து பல்வேறு விதங்களில் உதவியிருக்கின்றார்கள் ; ஆக்கங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றையது மிக முக்கியமான நண்பர்கள் சஞ்சிகையை தயாரிக்க நிதி சேகரிப்பு, விளம்பரங்களைச் சேகரித்தல், புதிய புதிய ஆக்கங்களைப் பெற்றுத்தருதல், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துதல் போன்றவற்றில் நிறையப் பங்களித்திருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்பும் மிக முக்கியமானது. நாங்கள் எதிர்கொண்டது இரண்டுவிதமான பிரச்சினைகளைத்தான். ஒன்று, சஞ்சிகையை தயாரிப்பதில் உள்ள செலவினை ஈடுகட்டுவதற்குரிய பொருளாதாரத் தளம், அதை விளம்பரங்களினூடாகவும், விற்பனையினூடாகவும், எங்களுடைய செயற்பாடு நியாயமானது என்பதை உணர்ந்துகொண்டு உதவிய நண்பர்கள் மூலமும் சமாளிக்கப் பார்த்தோம். பிந்திய காலங்களில் நிதிப் பிரச்சினை நெருக்கடிகளைத் தந்தபடியேதான் இருந்தது. தரமான படைப்புக்களைப் பெற்றுக்கொள்வதிலும் நிரம்பிய சிரமங்கள் இருந்தன. புறச்சூழலினால் என்னிடம் ஒருவித மனத்தளர்ச்சியும் ஏற்படுகிறது. முக்கியமாக திசையில் 89 - 90 வரை நான் வேலைசெய்தபொழுது என்னுடைய கண்ணோட்டம் மாறுகிறது. சிறுகுழுவின் எல்லைக்குள் இருந்து மேலும் அகலித்து பரந்த வாசகர்களை மையப்படுத்திச் செயற்படுவது அவசியமென உணர்ந்தேன். என்னுடைய கண்ணோட்டத்தில் 'திசை காலகட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் நாங்கள் குறுகிய வட்டத்துக்குள்தான் தொடர்ந்து செயற்படுகின்றோம். பெரும்பாலானோரை எங்களுடைய கருத்துக்கள் சென்றடையவில்லை. ஆனால் இதற்கு நாங்கள் கொடுக்கவேண்டிய விலை என்பது, பொருளாதார ரீதியிலும் எம்முடைய முயல்வுச் சக்தி ரீதியிலும் அதிகமாகவுள்ளது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் மிகச் சில நண்பர்களினைத் தவிர, ஒரு இதழ் பற்றிய கருத்து அதாவது எதிர்வினை எங்களை வந்தடைவது குறைவு. மிக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கின்ற நண்பர்களை விட, பெரும்பாலானோர் ஒரு இதழ் வந்தபிறகு எந்தவிதமான அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதும் இல்லை. பாராட்ட வேண்டுமென்றில்லை ; அதனுடைய சரி பிழை, அதனுடைய முக்கியம் முக்கியமற்ற தன்மைகளைப் பற்றிய பரிமாறல்கள்கூட, பெரும்பாலானவர்களால் சொல்லப்படுவதில்லை. இன்னுமொன்று, நிரம்பிய ஒத்துழைப்புத் தந்த பத்மநாப ஐயர்
குறிப்பேட்டிலிருந்து.

7
அவர்களும் யாழ்ப்பாணத்தை விட்டு தூரச்செல்கிறார்; பின்னர் வெளிநாடு செல்கிறார். அவருடைய ஒத்துழைப்பும் குறைவுபடுகிறது. இந்த நிலையில் பொருளாதார ரீதியிலான தாக்குப்பிடித்தலிலும் சிரமம் ஏற்படுகிறது. ஏற்கெனவே என்னுடைய மாறிவிட்ட கருத்துநிலையில் இதைவிடக் கூடுதலான வாசகர்களைச் சென்றடையக்கூடிய தளங்களில் செயற்பட வேண்டுமென்ற கருத்தும் வருகின்றபொழுது, நான் அலையை இத்துடன் நிறுத்தலாம் என நினைத்தேன் ; தொடர்ந்து செயற்படும் ஆர்வம் குன்றிவிட்டது; அலை ஓய்ந்தது.
இந்த இடத்தில் முக்கியமாக நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்களுடைய கலாசார வாழ்வில் கவிதைகளாக இருக்கட்டும், சிறுகதையாக இருக்கட்டும், பலரும் தங்கள் தங்கள் நூல்களை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அப்படிக் காட்டுவது தவறு என்று நான் சொல்லவில்லை; ஆனால், அவ்வாறு அவர்கள் காட்டுகின்ற அக்கறையைப் பல எழுத்தாளர்கள் - கவிஞர்களுடைய படைப்புக்களைத் தாங்கி பொது அக்கறையுடன் வருகின்ற வெளியீடுகளுக்குக் காட்டுவதில்லை. சுமார் 20, 25 வருட அனுபவத்தினால், நான் இதை ஒரு பாரிய குற்றச்சாட்டாக வைக்க விரும்புகின்றேன். இன்றுங்கூட ஒரு முடிவுக்குத்தான் நான் என்னுடைய நீண்ட அனுபவத்துக்குப் பிறகு வருகின்றேன். என்னவென்றால், ஒருவர் தன்னுடைய படைப்பை நூலாகக் கொண்டுவருகின்றபொழுது, அவருக்கு அதில் நிரம்பிய ஆதாயம் ; பண உதவியாக இல்லாவிட்டாலும்கூட அங்கீகாரம், பலரால் பேசப்படுகின்ற ரீதியாக அமைகிறது. இந்தச் சிறுசஞ்சிகை வெளிப்பாடு என்பதைப் பொறுத்தவரைகூட அவர் அதைப் பயன்படுத்துவர்; அவ்வளவுதான். சஞ்சிகைகளுக்கு இயன்றவரை ஆதரவளிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு அற்றவர்களாக படைப்பாளர் பலர் இருக்கிறார்கள்; இது மாறவேண்டிய ஒரு கசப்பான நிலைப்பாடு என்பதை நான் மனக்குறையுடன் சொல்ல விரும்புகின்றேன்.
உங்களுடைய “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்’ என்ற சிறுகதைத் தொகுதி இரண்டு பதிப்புக்களைக் கண்டது. “அறியப்படாதவர்கள் நினைவாக என்ற கவிதைத்தொகுதியையும் தந்திருக்கிறீர்கள். ஒரு குறித்த காலப்பகுதியில் தீவிரமாக எழுதி பின் ஓய்ந்து போனதுதான் உங்களுக்கும் நேர்ந்திருக்கிறதா? இப்போது நீங்கள் அதிகம் எழுதுவதில்லையே?
என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய கலாசார ஈடுபாடு, இலக்கிய ஈடுபாடு என்பது இன்னும் வற்றிப்போகவில்லை. என்னுடைய செயற்பாடு என்பது படைப்புத் தளத்தில் குறைவடைந்து இருக்கின்றது என்பது உண்மை. அது என்னுடைய ஆளுமையுடன் தொடர்புடைய விடயமாக இருக்கலாம் - படைப்புந்தல் நிகழாத பட்சத்தில் செயற்பட முடியாமலும் எழுதுவதற்கு அக்கறை காட்டாமலும் உள்ள என்னுடைய மனப்பாங்காகவும் இருக்கலாம். ஆனால், நான் தொடர்ந்து வாசிக்கின்றேன். சமீபகாலங்களில் சில வசதிக்குறைவுகளினால் எனக்குப் போதியளவு நேரம் கிடைப்பதில்லை என்பது வேறுவிடயம். ஆனால், இயன்றவரை தொடர்ந்து வாசிப்பில் ஈடுபட்டவனாகத்தான்
அ. யேசுராசா

Page 16
8
இருக்கிறேன். அவ்வாறு வருகின்றபொழுது என்னுடைய செயற்பாடுகள் பல்வேறு தளங்களில் இருந்துகொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் ஒரு கலாசாரவாதி அல்லது கலை இலக்கியவாதி படைப்பில் மட்டும்தான் ஈடுபடவேண்டும் என்ற கருத்து இல்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் படைப்பு மனநிலை, படைப்புந்தல் நிகழ்கின்றபொழுது நான் படைப்பாகச் சிலவற்றை வெளிப்படுத்துகிறேன். சிறுகதை, கவிதை எழுதியிருக்கிறேன்; என்னுடைய மொழிபெயர்ப்புக் கவிதைகள் கிட்டத்தட்ட 30அளவில் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த மூன்றையுந்தான் எனது படைப்புச் செயற்பாடாகக் கொள்ளலாம். அதைவிட்டுப் பார்த்தால், “அலை சஞ்சிகை உருவாக்கத்தில் நீண்டகாலம் பல்வேறு அதிருப்திகள், எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்துச் செயற்பட்டிருக்கிறோம். அலை வெளியீடாக ஏழு நூல்களை வெளியிட்டிருக்கிறோம். அதைவிட தமிழியல் என்ற அமைப்பில் பத்மநாப ஐயருடன் இணைந்து நூல் வெளியீடுகளிலும் பணியாற்றியுள்ளேன். "மரணத்துள் வாழ்வோம்’ என்ற தொகுப்பு, ‘தேடலும் படைப்புலகமும்’, ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ என்ற முக்கியமான நூல்களை மற்றவர்களுடன் சேர்ந்தும் , 'காலம் எழுதிய வரிகள்' நூலைத் தனித்தும் தொகுத்திருக்கின்றேன். அதைவிட 89-90 ஆம் ஆண்டுகளில் மு. பொன்னம்பலம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த 'திசை” வார வெளியீட்டில், முக்கியமாக கலாசாரப் பக்கங்களைப் பொறுப்பேற்றதோடு ஏனைய சிலவற்றையும் கவனித்து, அதில் செயற்பட்டிருக்கின்றேன். தொடர்ந்து இலக்கிய விமர்சன ரீதியான கட்டுரைகள், திரைப்படம் சம்பந்தமான விமர்சனங்கள், ‘பதிவுகள்’, ‘தூவானம்’ போன்ற 'பத்தி’களையும் நான் எழுதிவந்திருக்கின்றேன்; அதைவிடப் பல கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றேன். 79-81வரை ஏ. ஜே. கனகரட்ணா அவர்களைத் தலைவராகக்கொண்டு இயங்கிய யாழ். திரைப்பட வட்டத்தின் அமைப்பாளில் ஒருவராக இணைந்து பணியாற்றியுள்ளேன். என்னுடைய ஈடுபாடுகளில் ஒவியம் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென நினைக்கிறேன். மாற்கு மாஸ்ரருடன் இணைந்து ஓவியக்காட்சிகள் போன்றவற்றில் நானும் எனது நண்பர்களும் செயற்பட்டோம். ஆனால், சமகாலத்தில் நாங்கள் வாழ்கின்ற மிக நெருக்கடியான யாழ்ப்பாணச் சூழலில் - பல்வேறு வசதி வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலிலும் கருத்துச் சுதந்திரம் அற்ற நிலையிலும் - எங்களுடைய கருத்துப் பிரச்சினைகள், கடந்தகால கசப்பான அனுபவங்கள், தனிப்பட்ட எழுத்தாளர்களுடனான உறவுமுறைகளில் ஏற்படுகின்ற ஏமாற்றம் போன்றவைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒருவித ஒதுக்கத்தை என்னில் உருவாக்கியுள்ளன. எனினும், இருக்கின்ற சூழலில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தையாவது சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டுமென்பதால், மீண்டும் செயற்பட வேண்டுமென்ற கண்ணோட்டந்தான் மறுபடியும் மேலெழும்புகின்றது என்று சொல்லலாம்.
"திசை வாரப் பதிதிரிகையில் ஒரு வருடகாலமாக இணைந்து
பணியாற்றினீர்கள். திசையின் கலை இலக்கிய அரசியல் தாக்கம்பற்றிய உங்களின்
இன்றைய மதிப்பீடு என்ன?
சுமார் ஒன்றரை வருடகாலம் திசை வந்தபோது மு. பொன்னம்பலம் அவர்கள்
குறிப்பேட்டிலிருந்து.

ஆசிரியராக இருந்தார்; நான் துணை ஆசிரியராக இருந்தேன். தமிழ் வாரப் பத்திரிகை வெளியீட்டில் மறுமலர்ச்சியான போக்குகளை வெளிப்படுத்தி, பல்வேறு சிந்தனைகளையும் கொண்டுவருவதற்கு களமாக இருக்கவேண்டுமெனக் கருதப்பட்டது. அதனுடைய நோக்கங்கள் ஆசிரியரால் முதலாவது இதழில் குறிப்பிடப்பட்டது. அரசியல் என்று பார்க்கின்ற பொழுது தமிழர்கள், முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்ற எண்ணப்பாங்குகளைக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி வாதப் பிரதிவாதங்களை வெளியிடுவதற்கு அது களமாக இருந்திருக்கிறது. கலாசாரத் தளத்திலும் பல்பரிமாணத் தன்மையுள்ள கலை, இலக்கிய வெளிப்பாடுகளைக் கொடுத்திருக்கிறோம். சிங்களம் உட்பட பிறமொழி நாடகங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள் பற்றிய அறிமுகங்கள் வந்துள்ளன. வித்தியாசமான படைப்பு வெளிப்பாடுகளை ஊக்கப்படுத்தி, அக்கலைஞர்களின் கவிதை, சிறுகதை, குறுநாவல் போன்றவற்றிற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அரசியல் ரீதியான விமர்சனங்கள்கூட மிக முக்கியமானவையாக அமைந்திருக்கின்றன. முக்கியமானவற்றை வெளிப்படுத்துகின்ற எவருக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்களையும் அதுபற்றிய தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி இருக்கிறது. கருத்துப் பரிமாற்றத்துக்குரிய தளமாக அது செயற்பட்டிருக்கின்றது. அதனை நீங்கள் பார்க்கின்றபொழுது, வாசகள் கடிதங்களில் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் வந்திருப்பதைக் காணலாம். ஆக்கங்களை எழுதியோரில் 50 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள், இளைஞர்கள் - எங்களுக்கு அறிமுகமானவர்கள் என்று சொல்ல முடியாது, தரமான ஆக்கங்களை அடையாளம் கண்டு நாங்கள் இடம் கொடுத்தபொழுது, பெரும்பாலும் இளைஞர்களுடைய பங்களிப்பாகவே அவை இருந்தன. ஒட்டு மொத்தமாக, எங்களுடைய வாழ்வுடன் தொடர்பான - சமுதாயம் சார்ந்த பல்வேறு விடயங்களும் திசையில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் எங்களுக்கு பெருமளவு திருப்தி இருந்தது. இன்று பார்க்கையில் நாங்கள் அதிருப்தி கொள்ளும்வகையில் இருப்பதாக எதனையும் எனக்குச் சொல்ல முடியவில்லை. ஆனால், வேறொரு மனக்குறை என்னவென்றால், அது 69 இதழ்களுடன் நிற்காமல் தொடர்ந்து வந்திருந்தால் மிகப் பெரிய தாக்கத்தினை விளைவித்திருக்கும். ஏனென்றால், நாங்கள் சிற்றிலக்கிய சூழலில் இயங்கியவர்கள் , ஆசிரியரும் சரி நானும் சரி. முதல் தடவையாக, 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு ஆர்வத்துடன் வாங்கி வாசிக்கப்பட்ட நிலையில் திசை இருந்தது. பரந்த வாசகர்களுடன் தொடர்புகொண்டு செயற்படுகின்ற களம் என்பது எங்களுக்கு முன்பு இருக்கவில்லை. நாங்கள் படிப்படியாக அந்தச் சூழலைப் புரிந்துகொண்டு இசைவாக்கமுற்று மேலும் கால்பதிக்க முனைகின்ற கட்டத்தில்தான், திசை நின்றுபோவது நிகழ்ந்திருக்கின்றது. அது பெருமளவுக்கு இழப்பாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது இன்னும் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டு மேலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து வெளிவரவேண்டிய வாய்ப்பில்லாமல் போன புறச்சூழல் என்பது, கவலைக்குரிய ஒரு விடயமாகத்தான் இருக்கிறது. திசை நிறுவனம் செயற்பட முடியாமல்தான் போய்விட்டது ; அதற்கு பல்வேறு அக புறக் காரணிகள் உண்டு.
9. (3uuasprrvoir

Page 17
சினிமா, ஓவியம் மீதான உங்கள் ஈடுபாட்டை, ஏனைய பல சந்தர்ப்பங்களில் உங்கள் எழுத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளீர்கள். இவை மீதான உங்களின்
ஈடுபாடு பற்றி?
ஒரு கலை இலக்கிய ரசிகன் என்று சொல்லுகின்றபோது என்னுடைய முதற் காதல் சினிமாதான், இரண்டாவது, கவிதை என்று சொல்லலாம். சினிமா என்று சொல்லுகின்ற பொழுது என்னுடைய இளமைக் காலத்தில் பாடசாலை மாணவனாக இருக்கின்றபொழுது, சிவாஜி கணேசனுடைய படங்களை எல்லாம் விரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு வித்தியாசமானதென்று கருதப்பட்ட யூரீதருடைய படங்களில்தான் எனக்கு ஈடுபாடு இருந்தது. இடைக்கிடையே சில இந்திப் படங்கள், ஆங்கிலப் படங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்த இளமைக்காலத்தில் எங்களுடைய ரசனை சரியாக வடிவமைக்கப்படவில்லைதான். 65, 66ஆம் ஆண்டுகளில் தினகரன் வாரமஞ்சரியில் 'மனத்திரை’ என்ற பத்தியை கே.எஸ். சிவகுமாரன் எழுதிவந்தார். அதில் சர்வதேச நாடுகளின் பிறமொழித் திரைப்பட விழாக்கள்பற்றி, முக்கியமான திரைப்படங்கள் பற்றி, முக்கிய நாடகங்கள் பற்றி, சிங்கள நாடகங்கள் பற்றி எல்லாம் எழுதிவந்தார். அவ்வாறு பார்க்கையில் தமிழ்ப்படங்கள் தொடர்பாக அவற்றினுடைய பலவீனங்கள், யதார்த்தமற்ற போக்குகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அவர் முன்கொண்டு வந்தார். உண்மையில், நான் கொண்டிருந்த ரசனையில் குறைபாடுகள் இருக்கின்றன என யோசிக்கவேண்டிய முதலாவது அனுபவம், மனத்திரை என்ற பத்தியின் ஊடாகத்தான் ஏற்படுகின்றது. அதன்மூலமாகத்தான் நாங்கள் பிரதானமாக நினைத்துக்கொண்டிருக்கின்ற அதாவது ஏன் சிவாஜி கணேசன் உலகின் சிறந்த நடிகனாக அங்கீகரிக்கப்படவில்லை? அல்லது ஏன் சில தமிழ்ப்படங்களுக்கு "ஆஸ்கார்’ பரிசு கொடுக்கப்படவில்லை என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்பதை உணரமுடிந்தது. அதன் பின்னர் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. 89ஆம் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன், கொழும்பில் கே. எஸ். சிவகுமாரனைத் தற்செயலாகச் சந்தித்தபொழுது அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்பொழுதுதான் அவர், பிரெஞ்சுத் திரைப்பட விழா நடப்பது பற்றியும் அதனைப் பார்க்கும்படியும் சொன்னார். அதில் நான் முழுப்படங்களையும் பார்க்கவில்லை; இரண்டு மூன்று படங்களைப் பார்த்தேன். அவை எனக்குப் பிடித்துக்கொண்டன. முக்கியமாக ‘ஒபியஸ் நீக்ரோ’, ‘புறொஃவெஷனல் ஹஸாட்ஸ்’ (இதைப் பிரதிபண்ணித்தான் நூற்றுக்கு நூறு படத்தை கே. பாலச்சந்தர் தயாரித்தார்) ஆகிய படங்கள் மறக்கமுடியாத படங்கள். அதிலிருந்து 70ஆம் ஆண்டுவரை நான் கொழும்பில் கடமையாற்றும் வரைக்கும், கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழக நண்பர் சிலருடன், கொழும்பில் நடைபெற்ற திரைப்படவிழாக்களைத் தவறாமல் பார்த்து வந்தேன். அதனூடாக நல்ல கலைத் திரைப்படங்களில் என்னுடைய ஆர்வமும் ரசனையும் வளர்ந்து வந்தது. பேராதனையில் கடமையாற்றிய 71-75ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்கூட பல்கலைக்கழக திரைப்படச் சங்கத்தினூடாக ஏராளமான கதைப்படங்களையும், விவரணப்படங்களையும் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
குறிப்பேட்டிலிருந்து.

21
யாழ்ப்பாணத்துக்குச் சென்ற பிறகும்கூட 1990 வரை, கொழும்பில் நடைபெற்ற திரைப்பட விழாக்களைத் தவறாமல் வந்து பார்க்கின்ற வழக்கம் எனக்கு இருந்தது. இவ்வாறு பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியாகத்தான் யாழ்ப்பாணத்திலும் ஒரு திரைப்படக்கழகம் அமைக்க வேண்டுமென்ற அவாவுடன், ஏ.ஜே. கனகரட்ணா போன்றவர்களுடைய ஒத்துழைப்போடு, 1979 இல், “யாழ். திரைப்பட வட்டத்’தை அமைத்துச் செயற்படக்கூடியதாக இருந்தது. '.
திரைப்படத்தில் நாங்கள் பெறுகின்ற அனுபவம், தாக்கம், ஆளுமை உருவாக்கம் என்பன ஏனைய படைப்புக்களில் பெறுவதைவிட ஆழமானவை என்றுதான் நினைக்கிறேன். திரைப்படங்கள் தரும் கலை அனுபவங்கள் மிக ஆழமாக எமது உள்ளத்தினுள் இறங்கிச் செல்கின்றன. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பான ஏமாற்றம், தமிழ் திரைப்பட உலகு தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கும் இவை உதவி செய்கின்றன. அதேபோல் குறிப்பாக சிங்களத் திரையுலகில் வந்திருக்கின்ற மாறுதலான திரைப்படங்கள், அதற்குப் பங்களித்த நெறியாளர்கள் தொடர்பான ஈடுபாடும் என்னிடம் காணப்படுகின்றது. முக்கியமாக லெஸ்ரர் ஜேம்ஸ் பிஸ் உடைய பெரும்பாலான படங்கள் அவர்மீது மிகுந்த மரியாதையையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதாக அமைகின்றன. பிற்காலத்தில் சிறி குணசிங்க, மஹகமசேகர, செனரத் யாப்பா, தர்மசேன பத்திராஜா, வசந்த ஒபேசேகர, தர்மசிறி பண்டாரநாயக்க போன்றவர்களின் திரைப்படங்களையும் அக்கறையுடனும், மிகுந்த ஈர்ப்புடனும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இரண்டாவது, நாங்கள் சேர்ந்து இயங்கிய எங்களுடைய, ‘கலை இலக்கிய நண்பர் கழக’ நண்பர்களின் ரசனையும் முக்கியமானதாக இருக்கின்றது. அதைப்போலத்தான் கொழும்பில் அந்தக் கழகத்தினூடாகச் செயற்பட்ட வேளையில், பல நவீன ஓவியக்காட்சிகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தமிழர் பகுதிகளில் - எம்மவர் மத்தியில் நவீன ஓவியக்காட்சிகள் அல்லது நவீன ஓவியங்களைக் கையாளுதல் எல்லாம் குறைவாக, பெருமளவுக்கு இல்லையென்றே சொல்ல நேரிடலாம். 87 இல் இருந்து - எங்கள் கொழும்புக் காலகட்டங்களிலிருந்த நிலைமையில், இப்படியான ஒவியங்களை அதிகம் தமிழகச் சிறுசஞ்சிகைகளில் மட்டுமே காணக்கூடியதாகவிருந்தது. முற்றிலும் மாறிய உலக வளர்ச்சிப் போக்குகளை நவீன ஓவியத்தில் பிரதிபலித்தல் எம்மிடமில்லை என்றும், சிங்கள மக்கள் மத்தியில் நிறைய வளர்ச்சி இருக்கின்றது என்றும் காண்கின்றபொழுது, எங்களுக்கொரு ஆற்றாமையும் ஏற்படுகிறது. அந்தநேரத்தில், எனக்கு ஞாபகம் இருக்கிறது. கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள ‘மக்கலம் புத்தகக் கடையின் கண்ணாடிக்குள் சிங்களப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும்; அதைப் பார்த்து ரசிப்பது ஒரு தனி அனுபவம். அந்த நூல்களின் வடிவமைப்பு நவீன ஓவியங்களைக் கொண்டதாக முற்றிலும் புத்தம் புதிதாக இருக்கும். அதேமாதிரி எம். டி. குணசேனா புத்தக நிறுவனத்துக்கு 3, 4 மாதங்களுக்கு ஒரு தடவை இதற்கென்றே போய், புத்தகங்களைப் பார்த்துவிட்டு வருவோம் ; அது ஓவியக் கூடமொன்றைத் தரிசிக்கின்ற அனுபவமாக இருக்கும். இவ்வாறாக ஒவியத்தை ரசிக்கின்ற தன்மை வந்தது. கோட்பாடு, ஒவிய நுணுக்கம் எல்லாம் கொண்டிருந்தோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், ஒரு ரசனைநிலையில், நவீனத் தன்மைகளை
அ. யேசுராசா

Page 18
22
வெளிப்படுத்துகின்ற இத்தகைய ஒவியங்களைப் பார்க்கவும் ரசிக்கவும் நிறையப் பக்குவம் உருவாகிவந்தது. பிறகு அலை வெளிவந்த காலத்தில், அலை 7ஆம் இதழில் இருந்து மாற்கு மாஸ்ரருடன் தொடர்பு ஏற்பட்டிருந்தபொழுது, அவருடைய ஓவியத்தை நாங்கள் வெளியிடத் தொடங்கினோம். பிறகு வந்த இதழ்களிலும் மாற்கு மாஸ்ரரின் ஒவியங்கள், கைலாசநாதன், நிலாந்தன், சுகுணா போன்ற பலருடைய ஓவியங்களை முகப்பில் வெளியிடக்கூடியதாக இருந்தது. மாற்கு மாஸ்ரருடைய மாணவிகளின் ஒவியங்களையும், பிறகு மாற்கு மாஸ்ரருடைய ஓவியங்களையும் காட்சிப்படுத்துவதில் நான் மற்றும் நண்பர்கள் பங்களித்தோம். தொடர்ந்து நவீன ஓவியம் பற்றிய அக்கறை யாழ்ப்பாணத்தில் பரவலடையத் தொடங்கியது. இத்தகைய செயற்பாட்டுத் தளத்தில்தான், எங்களுடைய தமிழியல் வெளியீடாக “தேடலும் படைப்புலகமும்’ என்ற நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
உங்களுடைய ரசனையின் அடிப்படையில் சமகால தமிழ் சினிமா பற்றி.?
என்னைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் தியேட்டரில் எல்லாப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பில்லை. வீடியோ பிரதிகள் உண்டு; ஆனால் வீடியோ பிரதிகளை பார்க்கும் “டெக்” வசதி என்னிடமில்லை. ஆனாலும் பல்வேறு தரப்புகளினூடாக தமிழ் திரைப்படங்களில் நடந்துகொண்டிருக்கின்ற மிக முக்கியமான நிகழ்வுகளை அல்லது பிரதான போக்குகளை ஒரளவுக்கு அறிந்துகொள்கின்றேன் ; ஒருசில படங்களையும் பார்க்கின்றேன். முக்கியமாக, இந்தக் கலைத் திரைப்படங்களைப் பற்றிப் பேசுகின்ற அமைப்புக்கள் அல்லது சிற்றேடுகள் அல்லது சிற்றேடுகள் சார்ந்தவர்கள் பொதுவாக தமிழ்நாட்டிலும் சரி இங்கும் சரி, தமிழ்ப் படங்களை ஒட்டுமொத்தமாக அல்லது பிரதானமாக நிராகரிக்கின்ற தன்மையினையும் பிறமொழிப்படங்கள், வெளிநாட்டுப் படங்கள் என்றால் ‘கிறங்கிப்’ போகின்ற தன்மையையும் காணமுடிகின்றது. 1931 இல் இருந்து நீண்டகாலப் பாரம்பரியம் என்று பார்க்கின்றபொழுது, பிரதானமாக வணிக நலன்களை முதன்மைப்படுத்துகின்ற நிறுவனங்கள் பொழுதுபோக்கு கற்பனாவாத களிப்பூட்டும் படங்களையும், அறிவுக்கு முரணான புராண இதிகாசங்களையும்தான் தமிழில் தயாரித்து வந்திருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு சினிமா ஊடகம் பற்றிய தெளிவான உணர்வும் கலை அக்கறையும் உண்டு என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தமிழ் சினிமா அதனுடைய நீண்டகால வரலாற்றில் ஒன்றையேனும் சாதிக்கவில்லை, வளர்ச்சிக்குரிய அம்சங்கள் தென்படவில்லை என்று சொல்லமுடியாது. வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு விதமான நல்ல தன்மைகளை நாங்கள் தமிழ் சினிமாவில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 50களில் வந்த திரைப்படங்களில்கூட சமூக சீர்திருத்தம், தேசபக்தி, தார்மீக விழுமியங்கள் போன்றவற்றிற்கு அழுத்தந்தருதல் இருக்கின்றதை அறியக்கூடியதாகத்தான் உள்ளது. முற்றிலும் கலைப்படங்கள் என்று சொல்லி வியக்கின்ற படங்கள் இல்லை என்றாலும், மக்களுடைய ரசனையில் இருந்து மிக அந்நியப்படாது சினிமா மொழியை ஓர் அளவுக்கு கையாண்ட படங்கள் இருக்கின்றன. உதாரணம் ‘அந்தநாள்’. பிறகும் இடைநிலைப் படங்கள் பல வந்துள்ளன. இவை
குறிப்பேட்டிலிருந்து.

சரியாக அடையாளங்காணப்பட்டு அவைபற்றிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படவேண்டும். கலைப்பட வளர்ச்சியில் பார்வையாளர்களையும் தயார்ப்படுத்தவேண்டிய செயற்பாட்டை இந்தக் கலாசாரவாதிகள் அல்லது தீவிரமான கலைப்படங்களைப் பற்றிக் கதைக்கிறவர்கள் ஒருபோதுமே செய்யவில்லை.
மகேந்திரனின் உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நண்டு; ருத்ரையாவின் அவள் அப்படித்தான்; பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மூடுபனி; துரையின் பசி ; சிங்கிதம் சீனிவாசராவின் ராஜபார்வை ; மணிரத்தினத்தின் நாயகன் போன்று இன்னும் பல படங்கள் பல்வேறு வித்தியாசமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. நாங்கள் இதில் அவதானமாக இருக்கவேண்டும். இடைநிலைத் திரைப்படங்களை “உயர்புருவ நோக்கினால் தட்டிக் கழிப்பது பொறுப்பற்ற அணுகுமுறையாகும். மேலும், மேலைத் திரைப்பட விமர்சன முறைகளை அப்படியே பாவனை பண்ணாது, எமது சூழலுக்கும் மரபுக்கும் இயைந்த மதிப்பீட்டு முறையினையும் வடிவமைக்கவேண்டும். நம்பத்தகுந்த இயல்பான கதை, பிரச்சினைகள், அவற்றை விலகாது கையாளுதல், பாத்திரங்களை ஒரளவுக்கு செம்மையாக உருவாக்குதல, சில சில குறைபாடுகள் இருந்தாலும் முக்கியமாக சினிமா என்பது ‘காட்சி ஊடகம்’ என்ற விஷயத்தைக் கையாளுதல் போன்றவை, பல திரைப்படங்களில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. சிட்டுக்குருவி, மெல்லத்திறந்தது கதவு, பன்னிர் புஷ்பங்கள், தேவதை, ஜானி போன்றவை இவ்வாறானவைதான். அண்மையில் பார்த்த பவித்ரா, பாரதி ஆகிய படங்கள் என்னில் பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
திரைப்படக் கல்லூரியில் ‘டிப்ளோமா' கற்கை நெறியை முடித்த இளைஞர் பலர், திரைப்படத் துறைக்குள் வந்துள்ளனர். இவர்களிற் பலர் உருவாக்கும் படங்களில் கதையம்சம், காட்சிப்படுத்தும் பண்பு, இயல்பான நடிப்பு, பின்னிசை, தொழில்நுட்ப அம்சங்களில் பாராட்டக்கூடிய பண்புகள் காணப்படுகின்றன. இடையிடையே வரும் சில பொருத்தமில்லாத அம்சங்கள் தவிர்க்க இயலாத நிலையில், இடைச்செருகலாக - வேண்டுமென்றே புகுத்தப்படுவனவாக - இருப்பதையும் நாம் உணரலாம். உரிய நிதி ஒத்துழைப்புடன் ‘சுதந்திரமாக இந்த இளைஞர்களைச் செயற்படவிட்டால் சிறந்த கலைப்படங்களை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இக்கட்டத்தில், 1990-1995 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிதர்சனம்’ அமைப்பினால் வீடியோவில் உருவாக்கப்பட்ட காற்றுவெளி’, ‘முகங்கள்’ ஆகியவற்றையும் ‘நேற்று’ போன்ற குறும்படங்களையும் மனங்கொள்ள வேண்டும்; பல சிறப்பம்சங்களை இவை கொண்டுள்ளன.
வடபகுதியின் கலை, இலக்கியச்சூழல் இன்று எப்படியுள்ளது?
போர்ச்சூழல் உருவாக்கியுள்ள பல்வேறு நெருக்கடிகள், இடப்பெயர்வுகள்,
இராணுவ நிர்வாக இறுக்கம் போன்றவற்றால் பொதுவில் மந்தநிலைமைதான் காணப்படுகின்றது. முந்திய காலத்தைப் போன்ற துடிப்பான செயற்பாடுகள் இல்லை.
அ.யேசுராசா

Page 19
தேவைப்படும் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் பெறும் வாய்ப்பு அரிதாகவுள் ளது ; 'மல்லிகை’ கூட யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை இலக்கிய இதழ் என்ற வகையில் 'தாயகம் மட்டும்தான் அங்கிருந்து வெளியாகிறது. குறைந்த அளவில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்றன. நூல் வெளியீடுகளும் குறைவு. தீவிர இலக்கியச் செயற்பாடுகள் நிகழ்வதாகச் சொல்லமுடியாது. யாழ். பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கழகமொன்று இயங்குகின்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும் கொஞ்சம் வித்தியாசமான தமிழ், பிறமொழிப் படங்கள் வீடியோவில் இலவசமாகக் காட்டப்படுகின்றன. லெஸ்ரரின் “கம்பெரலிய, குருதத்தின் “காகிதமலர்கள்', ஹரிஹரனின் ‘ஒரு வடக்கன் வீர கதா’ போன்ற முக்கியமான படங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்காட்சிகளுக்கும் இருபது முப்பதென மிகக் குறைந்த எண்ணிக்கையான பார்வையாளர்தான் வருகிறார்கள், சிலவேளை ஆறு ஏழு பேர் மட்டும் வந்துள்ளனர்; இரண்டொருவரைத் தவிர இலக்கியக்காரரைக் காண்பதும் அரிது! ஆனால், பல்கலைக்கழகத்தில் நாடகங்கள் தொடர்ந்து மேடையேற்றப்படுகின்றன. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அவலங்கள் அரசியல் கண்ணோட்டத்துடன் நாடகங்களாகின்றன. ஆனால், இவைபற்றிய தகவல்கள் வெளியில் எல்லாரையும் சென்றடைவதில்லை; இதனால் பலவற்றைத் தவறவிட நேர்கிறது.
சந்திப்பு: எம். பெள9ர்
மூன்றாவது மனிதன் சித்திரை - ஆனி 2001
குறிப்பேட்டிலிருந்து.

தினகரன் வாரமஞ்சரியில் (21.05.69) செ. கணேசலிங்கன் எழுதிய ‘சமுதாயமும் இலக்கியப்பணியும்’ என்ற கட்டுரையை வாசித்தபோது எனக்குத் தோன்றிய அபிப்பிராயங்களையே இங்கு எழுத முயல்கின்றேன்.
'கலை கலைக்காக’, ‘கலை மக்களுக்காக” என்ற கோஷங்கள் எமக்குப் பழகியவைதான்; அவற்றைப்பற்றி இப்போது ஆராயத் தேவையில்லை. 'கலை மக்களுக்காக’ என்ற கருத்தை ஆதரிப்பவரான கணேசலிங்கன், அதன் சமுதாயப் பணியை ஆழமாக வற்புறுத்துகின்றார். ஆனால் சமுதாயப்பணி இருப்பதினாலேயே அதனைச் சிறந்த இலக்கியமாகவோ, கலையாகவோ ஒப்புக்கொண்டுவிட முடியாது. சமுதாயப் பணியும் சார்ந்து கலை இலக்கிய வடிவங்கள், ஒரு முழுமையுடன் - நிறைவுடன் இருந்தாலேயே அவற்றைச் சிறந்த கலையாகவோ இலக்கியமாகவோ ஒப்புக்கொள்ள முடியும். அல்லாவிட்டால் சமுதாயப்பணி
OS)
அ.யேசுராசா

Page 20
நிரம்பிய அறச்சொற்பொழிவுகள், ஒழுக்கக் கருத்துக்கள் உடைய மதக்கட்டுரைகள், சமூகச் சீர்திருத்தவாதிகளின் கட்டுரைகள் என்பவற்றிற்கும் இலக்கியப் படைப்புக்களுக்கும்,
வித்தியாசம் இல்லாது போய்விடும்.
‘கலை மக்களுக்காக’ என்பதைக் ‘கலை மனிதனிற்காக’ என்று சொன்னால் இன்னும் பொருத்தமாயிருக்கும் போலத் தோன்றுகின்றது. மனிதனின் ஆசைகள், அல்லல்கள்; வாழ்விற்கான போராட்டத்தில் அவனின் வெற்றிகள், வீழ்ச்சிகள்; அவனின் மனவெழுச்சிகள் என்பவை இலக்கியத்தில் சித்திரிக்கப்பட வேண்டுமென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்; அது, அடிப்படையானதுங்கூட. மானுடத்தின் எழுச்சி வீழ்ச்சிகளை இலக்கியமாக்கும்போது, அதன் அங்கமாகிய தனிமனித வாழ்க்கை இலக்கியத்தின் பொருளாவதும் இயல்பானதே. தன் குழந்தையை இழந்த ஒரு தாயின் சோகம், அவளின் மன உணர்வுகள், இலக்கியத்தில் இடம்பெறக்கூடியதே. அப்படி இடம்பெற்றால் அதில், நாம் என்ன சமுதாயப் பணியை எதிர்பார்க்க முடியுமென்பது, எனக்கு விளங்கவில்லை; அப்படி ஒரு சமுதாயப்பணியை அதில் எதிர்பார்க்கமுடியாததினால் அந்தத் தாயின் சோகமும், மன உணர்வுகளும் தள்ளப்படவேண்டியதொன்றாகிவிடுமா? அத்தாயின் மன உணர்வுகள் கெளரவிக்கப்படவேண்டியது அவசியமே. இந்தத் தாயைப் போலவே மெளனியின் 'அவன்’ என்ற பாத்திரம் இருக்கின்றது. வாழ்வில், ஒரு முழுமையாக இருந்தவள் தன்னை விட்டுப்போனதில் எல்லாமே போய்விட்டதான மனநிலையில், ஆழ்ந்த சோகத்தில் நிலைகொணர்ட பாத்திரமாக அது அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தத் துயர்நிறைந்த மனிதனின் மனவுணர்வுகள் மதிக்கப்பட வேண்டாமா? அந்த மனிதனின் உணர்வுகளுக்கு கெளரவமளிப்பதனால் சமுதாயத்திற்கு என்ன தீங்கு வந்துவிடப்போகின்றது? 'காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று பறவைகளின் மேலும், சடப்பொருள்களின்மேலும் விரிந்த மனோபாவம் காட்டுபவர்கள், மனிதாபிமானத்தைப்பற்றி உரத்து முழக்கமிடுபவர்கள் ; ஒரு துயர் நிறைந்த மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடாதா? அப்படி அந்த மனிதர்களுக்கு மதிப்பளித்துத் தன் படைப்புகளில் சித்திரித்திருக்கும் மெளனியை, நாம் எப்படிக் குறைகூற முடியும்? கணேசலிங்கன் கூறுவதைப்போல் ‘வெறும் முறிந்த காதலைத் தன் படைப்புகளுக்கு கருவாகக் கொள்பவரென’ அவரை எப்படிக் கழித்துவிட முடியும்? இதே முறிந்த காதலைப்பற்றி ஜெயகாந்தன் இப்படிக் கூறுகின்றார் : “கைகூடிக் கரைந்து போகின்ற இன்பமயமான காதல் நடைமுறைகளை விட, கைகூடாமற் போகிற துன்பியல் காதல் உணர்வுகளே காவியங்களுக்கு வித்தாக அமைகின்றன போலும் அந்த ஏக்கங்கள் மகத்தானவை; அந்தத் துன்பங்களும், பெருமூச்சுக்களும், கண்ணீர்த் துளிகளும் வாழ்வின் பயன்கள்.” (பூர்வீகச் சொத்து - முன்னுரை)
மெளனியின் மொழிநடையைச் சிக்கல் நிறைந்து எளிதில் விளங்கமுடியாத சிறப்பற்ற நடையெனக் கணேசலிங்கன் கூறுகின்றார்.
“காலை நேரம் வந்தது. மூலை முடுக்குகளிலும் தோப்பின் இடைவெளிகளிலும் தாமதமாக உலாவி நின்ற மங்கலை ஊர்ந்து துரத்த ஒளி வந்து பரவியது.”
குறிப்பேட்டிலிருந்து.

“இரவின் இருளைத்திரட்டி அடிவானத்தில் நெருப்பிடப்பட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல் கண்டது. காலைச் சூரியன் உதித்தான்.”
“தெரியாததற்கும் அறியமுடியாததற்கும், பெயர் கொடுப்பதனால் தெரிந்ததெனக் கொள்ளும் மனிதர்கள்.”
“உனக்காகத்தான் நான் காத்திருந்தேன்; ஆனால் இப்போது, உனக்காக நான் காத்திருக்கவில்லை.”
என்பது போன்ற வசனங்களில் ஒரு கவித்துவமும், பொருட் செழுமையும் நிறைந்திருப்பதை கீ கணேசலிங்கனால் அவதானிக்க முடியவில்லையா? மறைமலையடிகளின் மொழி நடையை எளிமையானதெனச் சொல்லும் அவர், மெளனியின் நடையைச் சிக்கலானதெனச் சொல்வது அதிசயமே! சிறிது கூர்ந்து நோக்கி நடைநளினங்களையோ கருத்துச் சிறப்புக்களையோ சுவைக்கத் தயாராயில்லாத வெறும் பொழுதுபோக்கு வாசகர்களுக்கு விளங்கவில்லையென்பதற்காக அதனை எளிமையற்றதெனச் சொல்ல முடியாது. நல்லவற்றை வழமையாக இனங்கண்டுகொள்ளும் சிறுபான்மையினரான வாசகர் வட்டத்திற்கு, அது சிக்கல் நிறைந்ததாகவோ அழகற்றதாகவோ இராது.
“மக்களின் இதயத்தை தொடாத அவரது (மெளனியினது) முயற்சியை மீண்டும் தமிழ் மக்கள் ஒதுக்கிவிட்டனர்.”
“அவற்றில் (மெளனியின் 2000 பக்கக்குறிப்பில்) என்ன வெறுமை இருக்கும் என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.”
- “மக்கள் ஒதுக்கிவிட்டதைத்தான் நூலுருவமாக்கி இது நல்ல பிரசாதம் சாப்பிட்டுப்பாருங்கள் என்று காண்பவர்களிடம் கட்டியடிக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் கணேசலிங்கன் கூறுகின்றார். யார் இந்த மக்கள்? சனரஞ்சகச் சஞ்சிகைகளினதும், சாண்டில்யன், மணியன், ஜெகசிற்பியன் போன்ற வெறும் தொடர்கதை எழுத்தாளர்களின் எழுத்துக்களினதும் எல்லையைக் கடந்து வராதவர்கள்தான் இந்த மக்கள். இந்த ‘மக்கள்’ மெளனியை மட்டுமல்ல தரமான விமர்சகர்களும், வாசகர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய மற்றைத் தரமான இலக்கியப்படைப்பாளிகளையும் (கணேசலிங்கன் உட்படத்தான்) புறக்கணித்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதனால் - இந்தப் பொழுதுபோக்கு வாசகர்கள் புறக்கணித்ததினால், மெளனியின் படைப்புத் தரமற்றதாகிவிடாது; மெளனியும், 'மெளனமாக இறந்துகொண்டிருப்பவராக மாட்டார். அதைப்போல, இந்தப் பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பதுதான் சிறந்த இலக்கியப் படைப்புக்கள் என்று கணேசலிங்கன் கருதுவது, உண்மையாகியும் விடாது. பெரும்பான்மையினரின் அபிப்பிராயம் என்பது சனநாயகத்தில் செல்லுபடியாகலாம்; இலக்கிய உலகில் அதற்கு இடமில்லை. இடமளிக்கப்பட்டால், சாணிடில் யனையும் மணியனையும்தான் மிகச்சிறந்த தமிழ்ப் படைப்பிலக்கியக்காரரென ஒப்புக்கொள்ளவேண்டி வரும்.
மேலும், கருத்துக்கள் விமர்சிக்கப்படுதலே வேண்டப்படுதலாயிருக்க அதை மீறி, ஆட்களையும் கணேசலிங்கன் விமர்சித்துள்ளார்.
“தருமுசிவராமு அவர்களுக்குக் கலை பற்றிய தெளிவான, ஆழமான கருத்து
அ.யேசுராசா

Page 21
இல்லை.”
“சுயநினைவற்ற சொற்குவியல்கள்: அவற்றிற்கு உரையாசிரியர்கள் போல் தரகர்களாகத் தோன்றி "ஆ, ா’ என்று தலையில் கைகூப்பும் சில பூசாரிகள்.” என்றெல்லாம் தருமு சிவராமூவைத் தேவையற்ற முறையில் தாக்கியுள்ளார். ஓர் இலக்கியப் படைப்பில் தான் கண்ட சிறப்பைச் சொல்ல முயன்ற ஒரு சுவைஞன் கணேசலிங்கனின் கண்ணோட்டத்தில் “தரகராகவும்’, “மெளனி வழிபாட்டுக்காரராகவும்' ('பக்தராக?’) தென்படுவதும் வியப்பான செயல்களே.
மெளனியையும், அவரின் படைப்பாற்றலை அங்கீகரிப்பவர்களையும், “சிந்தனையைக் குழப்புவோர்”, “வளர்ச்சியைத் தேக்கிப்பிடிக்க முயலுவோர்” என்று வேறு நோக்கங்கள் கொண்டவர்களாகச் சித்திரித்துக் காட்ட முயலுமீ கணேசலிங் கனி இறுதியிலி , “பிற்போக்குவாதிகள்” என்று அரசியல் வாதிகளின் உரத்த தொனியிலும் கூறியுள்ளார். ‘தமிழ் இலக்கிய அக்கறையாளர்கள் என்பதைத்தவிர, வேறு நோக்கங்கள் கொண்டவராக மேற்கூறியவர்களைக் கருத இடமில்லை. சில கோட்பாடுகளுக்குள் எல்லைப்பட்டு நின்று மற்றவர்களையும் எல்லைப்படுத்தக் கணேசலிங்கன் முயல்கின்றார். பல்முனைப்பட்ட ஆர்வமுனைப்புக்களினாலேயே தமிழிலக்கியத்திற்கு நவீனத்துவமும் வளமும் சேரும் என்பதால், விரிந்த களத்தில் நவீனத் தமிழ் இலக்கியத் தேடல் நடைபெறவேண்டுமென்பதையே தரமான வாசகள்
வட்டம் விரும்புகின்றதல்லாமல் - எல்லைப் பிரச்சினைகளையல்ல.
(குறிப்பு : தடித்த எழுத்துக்கள் என்னாலிடப்பட்டவை.)
回
நெய்தல்
1971
குறிப்பேட்டிலிருந்து.

வியாபாரக் கலாசாரத்தினையும் மீட்புவாதப் போக்குகளையும் எதிர்ப்பதற்கும் விஞ்ஞானபூர்வமான - ஆரோக்கியமான கலாசாரத் தோற்றத்திற்கு உழைப்பதற்குமாக அமைக்கப்பட்ட ‘இலக்கு” அமைப்பு, ‘எழுபதுகளில் கலை இலக்கியம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கினை ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடாத்தியது. பல்வேறு கலை இலக்கிய அமைப்புக்களையும் சேர்ந்த கலை இலக்கியக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர். கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த படைப்புக்களை மதிப்பிடுவதோடு, வளர்ச்சிக்கு உதவக் கூடிய அம்சங்களைக் கணிடுபிடிப்பதுமே இதனி நோக்கங்களாயிருந்தன. சிறுகதை, அரங்கு, சினிமா, நாவல், விமர்சனம், கலை இலக்கியமும் மக்கள் இயக்கங்களும், கவிதை, தமிழில் பிறதுறைகள், தமிழ்ப் பத்திரிகை என்ற தலைப்புக்களில் சிலர் முதலில் கட்டுரை வாசித்தல்; தொடர்ந்து சிலர் கருத்துரை வழங்குதல்,
4.
S
s
ge. Gaussurrayfir

Page 22
30
பின்னர் பார்வையாளர்களின் குறிப்புரைகள் என்ற ஒழுங்குமுறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல் நிகழ்ச்சியாக சிறுசஞ்சிகை இயக்கத்தின் முன்னோடியாக விளங்கிய ‘எழுத்து சஞ்சிகை ஆசிரியர் சி. சு. செல்லப்பா கெளரவிக்கப்பட்டார். நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் வகித்த பங்கு நினைவுகூரப்பட்டு மதிக்கப்பட்டது; சிட்டி, செல்லப்பாவைப் பற்றி உரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் சிறுகதை பற்றிய அமர்வு பா. செயப்பிரகாசத்தின் தலைமையில் தொடங்கியது. வாழ்க்கைக்கும் கலைஞனுக்கும் உள்ள உறவை அவர் விளக்கினார். தனிமனித அனுபவங்களே சா. கந்தசாமி, ந. முத்துசாமி ஆகியோரின் எழுத்துக்களில் வெளிப்படுத்தப்படுவதாகவும், கி. ராஜநாராயணனின் எழுத்துக்களில் மனிதன் - சமூக உறவுகள் பிரக்ஞையுடன் வெளிப்படுத்தப்படுவதாகவும் ; பூமணி, வண்ணநிலவன், ஜெயகாந்தன் போன்றோர் சிறுகதையில் சில எல்லைகளைத் தொட்டுள்ளனரென்றும்; வீர. வேலுச்சாமியின் நிறங்கள்’ எழுபதுகளில் வந்த முக்கியமான நூலென்றும், சமூக உறவுகளை அது மிக நன்றாக வெளிப்படுத்துகிறதென்றும் குறிப்பிட்டார்.
சிவசங்கரி, சா. கந்தசாமி, பிரபஞ்சன் ஆகியோர் கட்டுரை வாசித்தனர். சிவசங்கரியின் கட்டுரை ஒரே பட்டியல் மயமாயிருந்தது. சிறுகதை எழுதுகிறவர்கள் எல்லோருடைய பெயர்களையுமே, வஞ்சனை இன்றி அதில் கொடுத்துள்ளார்! கணக்கிலெடுக்கத் தேவையில்லாத கட்டுரை அது, “பிரபலங்களின்’ வகைமாதிரி வெறுமை அதில் பளிச்சிட்டது.
சா. கந்தசாமி அறுபதுகளிற் தொடங்கி, எழுபதுகளிற்கிடையில் ہیمر ஜெயகாந்தன் தன்னை இழந்துவிட்டார். சுந்தர ராமசாமி ஓர் அசலான கலைஞர். பெரிய பத்திரிகைகளில் எழுதியும் தன்னை இழக்காதவர் அசோகமித்திரன். ஜி. நாகராஜனும் முக்கியமானவர். அம்பை ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக உள்ளார். கிராமத்தையும், அதிலிருந்து நகர்ந்து வந்து நகரத்தையும் ந.முத்துசாமி நன்கு வெளிப்படுத்துகின்றார். கி. ராஜநாராயணனில் கிராம வெளியீடு நன்கு நடைபெறுகிறது. வண்ணநிலவன், பூமணி, வண்ணதாசன் போன்றோர் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவர்கள். ‘கோணல்கள்’ நல்ல சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாகும். பொதுவில் சிறுகதை நன்கு வளர்ந்துள்ளது.
பிரபஞ்சன் : பூமணி, செயப்பிரகாசம், கி. ராஜநாராயணன் முக்கியமானவர்கள். எனினும் ஆரம்பத்தில் சிறப்புற்ற பூமணியின் எழுத்து பின்னர் (ரீதி’ தொகுப்பில்) Technical ஆகிவிடுகிறது. செயப்பிரகாசத்தின் எழுத்துக்களில் வார்த்தைகளின் வீணடிப்பு பல இடங்களில் நிகழ்கின்றது. கி. ராஜநாராயணனின் முந்தைய படைப்புக்கள் சிறப்புற்றிருக்க பிந்திய படைப்புக்கள் அலுப்பைத் தருகின்றன. நடுத்தரவர்க்க மனிதனின் நிர்ப்பந்த வாழ்வு வெளிப்படும் முறை அசோகமித்திரனை முக்கியமானவராக்குகின்றது. ந. முத்துசாமி ஆழமான சிறுகதைகளை - மண்ணுக்குச் சொந்தமான கதைகளை எழுதியுள்ளார். ஊர்களையும் மக்களையும் நேரடியாகக் காட்சிப்படுததும் எழுத்து அவருடையது. சார்வாகனும் முக்கியமானவர். சா. கந்தசாமி ‘கோணல்கள்’ இல் நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். நம்பிக்கை, கிராமியம், சிறுவர்களின் உலகம் என்பன இயல்பாய் இவரது
குறிப்பேட்டிலிருந்து.

கதைகளில் வெளிப்பட்டுள்ளன. சிறந்த முற்போக்குக் கதைகளைத் தந்தவர் சா. கந்தசாமி. தேடலையும் புதிய முகத்தையும் காட்டும் எழுத்து சுந்தர ராமசாமியுடையது. முக்கியமானோருள் ஒருவரான வண்ணநிலவனின் கிரியாசக்தியாக கருணை இருக்கிறது. வேறு சிலரும் எழுபதுகளில் புதிய அனுபவங்களைத் தந்தனர்.
கருத்துரை வழங்குகையில் அகிலன், 70களில் தான் நல்ல பணி செய்துள்ளதாகவும், ஏனென்றால் தான் சிறுகதை எழுதவில்லையென்றும், நல்ல படைப்புக்கள் ஏன் மக்களை எட்டமுடியவில்லை? சிறுபத்திரிகைகள், இலக்கு போன்ற அமைப்புக்கள் இதற்கு என்ன செய்துள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.
சுரேஷ்குமார இந்திரஜித்- வர்க்கப்பார்வை, மார்க்சியம் போன்றவற்றை வெளிப்படுத்துபவைதான் இலக்கியம் என்பதைத் தான் நம்பவில்லையென்றும், இலக்கியத்தன்மையே அவசியம் என்றும் சொன்னார்.
பாலகுமாரன் பேசுகையில், வாசகனை எட்டாத எழுத்துக்களால் பயனில்லை என்றும், வர்த்தக சஞ்சிகைகளிலும் 70களில் தரமான எழுத்துக்கள் வந்துள்ளதென்றும், 80களில் மேலும் சாதனை நிகழ்த்தப்படலாம் என்றும் சொன்னார்.
விமலாதித்த மாமல்லன் பேசுகையில், சிறுசஞ்சிகையில் தொடங்கி வர்த்தகச் சஞ்சிகைகளுடன் சமரசம் செய்தவர்களிலொருவர் பாலகுமாரனென்றும், சிவசங்கரியின் கட்டுரையில் ஒன்றுமேயில்லை என்றும், செயப்பிரகாசத்தின் ‘இரவுகள் உடையும்’ துண்டுப்பிரசுரம் போன்றதென்றும், வண்ணநிலவன் அற்புதமான கதைகளை எழுதியுள்ளதாகவும் சொன்னார்.
O O அடுத்து ‘அரங்கு' பற்றிய அமர்வு ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது. கட்டுரை படிக்கவேண்டிய ஞாநி ஆய்வுத்தன்மையில் தனது கருத்துக்களைப் பேச்சாக நிகழ்த்தினார். ஆரம்ப நாடகங்கள், சபாநாடகங்கள், தற்போதைய நவீன நாடகங்கள் பற்றிய விளக்கங்களை அவர் தந்தார். முத்துசாமியின் நாற்காலிக்காரர்’ நிகழ்த்தப்படும் முறை இந்த மண்ணுக்குச் சொந்தமானதாய் இருப்பதாகவும் சொன்னார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் ‘கும்பல்களைத்தான் மகிழ்ச்சிப்படுத்தியதென்றும் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார். பெண்கள் நடிக்க முன்வராமை நவீன நாடகக் குழுக்களிற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதாகவும் சொன்னார்.
கருத்துரை வழங்கிய அறந்தை நாராயணன், சங்கரதாஸ் சுவாமிகளின் மரபில் நிற்கும் ‘கும்பல் கலாசாரத்தைச் சேர்ந்தவன் நான்’ என்பதில் பெருமையடைவதாக சொன்னார். கொஞ்சப்பேர் மட்டும் திரும்பத் திரும்பப் பார்க்கும் மக்களிற்கு விளங்காத நாடகங்கள் நாடகங்களேயல்லவென்றும், ஆவேசமாக(1) பேசினார்.
ந. முத்துசாமி தனது கருத்துரையில், சங்கரதாஸ் சுவாமிகள் வெறும் பாடல்களோடு நின்றுவிட்டவர் - அதுதான் குறையென்றும், முதலில் 300 பேர் திரும்பத் திரும்ப வரட்டுமென்றும், அவர்கள் வேறுபலரோடு பேசுவார்களென்றும், அதனால் இன்னும் கொஞ்சம் பரவுமென்றும் சொன்னார். ‘சுவரொட்டிகள் பற்றிச் சொல்கையில் முதலில் கொஞ்சம் புரிந்தால் காணுமென்றும், முழுவதும் புரிவதற்கு இடையிற் தயார்ப்படுத்துவதாகவும், காலம் செல்லலாமென்றும், தெருக்கூத்து பார்க்க
அ.யேசுராசா

Page 23
எளிமை ஆனால் Concept ஆக உள்ளார்ந்த சிக்கல் நிறைந்ததென்றும், தெருக்கூத்தை - Feudal art ஐ - தான் எடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகிறார்களென்றும், சரியான Drama direction தமிழ்நாட்டில் உருவாகவில்லையென்றும் கூறினார்.
யேசுராசா கருத்துரைக்கையில், இலங்கையின் பாரம்பரிய நாட்டுக்கூத்துக்களில் தொடங்கி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சமூக நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை நவீனப்படுத்தி நகர்ப்புறங்களிற்குக் கொண்டுசென்ற கலாநிதி சு. வித்தியானந்தனின் முயற்சிகள், பொழுதுபோக்கு நாடகங்கள் ஒருபுறத்தில் இருக்கத்தக்கதாகவே கலை அக்கறையுடன் நிகழ்ந்த நாடக முயற்சிகள், வெவ்வேறு நாடுகளின் முக்கியமான - எமது சூழலுக்குப் பொருந்திவரக்கூடிய மொழிபெயர்ப்பு நாடகங்கள் பெற்ற முக்கியத்துவம், அவை கற்றுக்கொடுத்த பாடத்தின் பங்களிப்பு, அது தொடர்பான சர்ச்சைகள், நாடக அரங்கக் கல்லூரியின் சில முயற்சிகள், க. பாலேந்திரா, தாசீசியஸ் போன்ற நெறியாளர்களின் முக்கியத்துவம் என்பவற்றைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில், சுருக்கமாக விளக்கினார்.
O O இரண்டாம் நாள் காலை 'நாவல்' பற்றிய அமர்வு ராஜ்கெளதமன் தலைமையில் நடைபெற்றது. கட்டுரை வாசிக்கவேண்டியவர்களில் ஒருவரான நா. பார்த்தசாரதி வரவில்லை; “ஞானி’ மட்டும்தான் கட்டுரை படித்தார்.
ஞானி : மனித உறவுகளைச் சித்திரித்தல் தி. ஜானகிராமனால் நன்கு செய்யப்படுகின்றது. மரப்பசு’வும் - அதில் வரும் 'அம்மிணி’ போன்றவர்களும் கவனத்திற்குரியவர்கள். எழுபதுகளிலும் ஜானகிராமன் செத்துவிடவில்லை என்று சொல்லலாம். இந்திரா பார்த்தசாரதியின் 'ஹெலிகோப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’, ஆண் - பெண் உறவுச் சிக்கலைச் சித்திரிக்கின்றது. ஒரு கணவன், ஒரு மனைவி உறவுப்பிரச்சினைகள் - இன்றைய நிலையில் இதுபோன்ற இறுக்கமான உறவுகள் அவசியமில்லாதிருக்கலாம் என்பதைச் சொல்லுவதில்தான் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு உலகம், ஒரு வீடு' நாவல் முக்கியமானது. அதில் வரும் "ஹென்றி மனிதப்பண்பு நிறைந்தவன், அன்பு காட்டுபவன்; சிக்கல்களிலிருந்து விடுபட்டவனாக அமைதியை, நிறைவை நாடும் ‘மாதிரி மனிதன்' அவன். அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, ‘18-வது அட்சக்கோடு’, ஆதவனின் 'என்பெயர் ராமசேஷன்’ என்பவை 70களின் மிகச்சிறந்த நாவல்கள். முகமூடிகள், வேஷங்களுடன் வாழும் மனிதர்களையும், நிர்ப்பந்தங்களில் நொறுங்கிப்போகும் மனிதர்களையும் இவை சித்திரிக்கின்றன. வண்ணநிலவனின் மனிதர்கள் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்கள்; அன்பு காட்டுபவர்கள், நொறுங்கிப்போன மனிதர்களைச் சித்திரிக்கின்றார். “கடல்புரத்தில்', 'கம்பா நதி’, ‘ரெயினிஸ் ஐயர் தெரு’ கவனத்திற்குரியவை.
கிருத்திகா, எம். வி. வெங்கட்ராம் இருவரும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவர்கள். இவர்களின் படைப்புக்கள் உருவ அமைதியும், வடிவச் சிறப்பும் கொண்டவை. பூமணியின் பிறகு இயல்பான சித்திரிப்பைக் கொண்டது; சுதந்திரத்திற்குப் பிந்திய வாழ்க்கை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளதால் முக்கியமானதாகின்றது. முற்போக்கு நாவல்களில் மனித உறவுகளை விட பொருளாதாரச் சிக்கல்களே
குறிப்பேட்டிலிருந்து.

33
சொல்லப்படுகின்றன. 'தாகம்’ நாவலின் முதற்பாகம் நன்றாக உள்ளது; பிற்பகுதி சிறப்பாக அமையவில்லை. பொன்னீலனின் “கரிசல்’ நாவலை விடவும் ‘கொள்ளைக்காரர்கள்’ தான் சிறப்பாக வந்துள்ளது. பொதுவில் முற்போக்கு நாவல்கள் “அரசியல் மனிதனையே சித்திரிக்கின்றன; மனிதனின் பல்வேறு தன்மைகள், உறவு நிலைகளைக் காட்டுவதில் தவறிவிடுகின்றன. இ. பா. வின் ‘குருதிப்புனல் பற்றிச் சில மாறுபாடுகள் எனக்கு இருக்கின்றபோதும், அது எடுத்துக்கொண்ட பிரச்சினை கருதி முக்கியமாகின்றது. கீழ்வெண்மணிப் பக்கம் பல முற்போக்கு எழுத்தாளர்கள் போகவேயில்லை! அந்தப் பின்னணியில், அந்தக் கொடுமை மீது எமது கவனத்தை இந்நாவல் கொண்டுசெல்வது குறிப்பிடப்படவேண்டியது. தமிழ் நாவல் சிகரங்களிலொன்று லா. ச. ரா.வின் “அபிதா'. தி. ஜா. அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றவர்களே முற்போக்கினரைவிடச் சிறப்பாக மனித உறவுகளைச் சித்திரிக்கின்றனர். தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்கள் எம்மிடையே இல்லை ; ஆனால் உருவாக உழைக்க வேண்டும். கருத்துரையின்போது சு. சமுத்திரம் ஞானியின் கட்டுரை பயனற்றதென்றும், தனது படைப்புக்களைப் பற்றிச் சொல்லவில்லையென்றும் 'சோற்றுப்பட்டாளம்', 'ஊருக்குள் ஒரு புரட்சி' போன்றவற்றைச் சொல்லவேயில்லையென்றும் கோபப்பட்டார். கந்தசாமி (சா. கந்தசாமியல்ல) பேசுகையில் கீறல்கள்’, ‘சொந்தக்காரன்’ பற்றியும் கூறியிருக்கவேண்டுமெனச் சொன்னார். சாருநிவேதிதா பேசுகையில் நகுலன் - சமூக நெருக்கடிகளினால் மனநோயாளியாகிவிடுபவர்களைச் சித்திரிக்கின்றாரென்றும், தாஸ்தாவெஸ்கி ஏன் தோன்றவில்லையெனக் கேட்கும் ஞானி நகுலனை ஏன் அடிக்கிறார்? இது முரணாக இல்லையா என்று கேட்டார்.
‘இலக்கிய வெளிவட்டம்’ ஆசிரியர் நடராஜன் பேசுகையில், ஞானி சர்வதேச மனிதனை முதன்மைப்படுத்துகிறதையும் - கருத்துலக மனிதனைச் சுட்டுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், வாழ்நிலையிலும் சிந்தனையிலும் பிளவுண்டவனாகவே மனிதன் உள்ளானெனவும், நெருக்கடிகள் பிரச்சினைகளை இனங்காட்டும் படைப்புக்கள் தோன்றவேண்டுமென்றும் சொன்னார். விவேகானந்தன் பேசுகையில், ஞானி ஹென்றி’ பாத்திரம் போல மேலேயே உட்கார்ந்திருக்கிறாரெனவும், சுற்றியுள்ள சிக்கல்களில் மாட்டுப்படவேயில்லையென்றும், தி. ஜா. வின் பாத்திரங்கள் நிலப்பிரபுத்துவக் கருத்துக்களை முகத்தில் அறைவது எமக்கு வலிக்க வேண்டும்-ஆனால், ஞானிக்கு வலிக்கவில்லையென்றும் சொன்னார்.
ஞானியின் கருத்தொன்று தொடர்பாகக் கருத்துரைத்த யேசுராசா பஞ்சமர்’ இல், மேலிருந்து வரும் வெள்ளாள உயர்சாதிவெறிக்குப் பதிலாக கீழிருந்து வரும் பஞ்சமர் சாதி வெறியே அடிப்படையாக இருப்பதனால், பல அம்சங்களில் யதார்த்தமற்றுப் போவதைச் சுட்டிக்காட்டினார். ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’ நாவலிலும் இறுதியில் அதன் அடிப்படையாக சொல்லப்படும் சிங்கள - தமிழ் உறவுப் போராட்டம் உண்மையில் கேலிக்கூத்தென்றும், அதன் யதார்த்தமற்ற வேறு அம்சங்களினாலும் அது ஒரு மோசமான நாவலாக இருக்கிறதெனவும், ஈழத்தின் முக்கிய மார்க்சிய விமர்சகரொருவர், 'ஈழத்து இலக்கியத்தில் நகைச்சுவையின் உச்சமே - போராளிகள் காத்திருக்கும் கட்டம்தான்’ என்று கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். செ. கணேசலிங்கனின் ‘மண்ணும் மக்களும் நாவலும் “அரசியல் மனிதனைக் காட்டும் - கிளிநொச்சிப் பகுதியை பின்னணியாகக்
அ.யேசுராசா

Page 24
34
கொண்ட செயற்கையான நாவலேயென்றும் சொன்னார்.
இறுதியில் ஞானி பதில் வழங்குகையில் வருமாறு குறிப்பிட்டர் : சமுத்திரத்தின் நாவல்களை பாதிக்குமேல் படிக்க முடியவில்லை. சமூகம் மாறவேண்டும் என்பதிலேயோ, மார்க்சியத்தின் அடிப்படைகளை ஏற்றுக்கொள்வதிலேயோ, எனக்குக் கருத்து வேறுபாடே இல்லை. "சாயாவனம் பற்றி எனக்கு நல்ல கருத்துண்டு; துல்லியமான விபரங்கள் அதில் உண்டு. கலைகளை, கவித்துவத்தை, விஞ்ஞானத்தை இன்றுள்ளவர்களே வளர்க்கவேண்டும் ; புரட்சி நிகழ்ந்ததும் திடீரென இவற்றை வளர்க்க முடியாது. அரசியல் மாறுபாடானவர்களின் இத்துறைகளிலான சாதனைகளும் மனிதகுலத்துக்கே சேர்கின்றன. எல்லாம் மக்களிற்குத்தான் ; கழுதை, குதிரைகளிற்காகவல்ல. மனிதன் எனக் குறிப்பிட்டபோது சமூக நெருக்கடிக்குள்ளான மனிதனையே குறிப்பிட்டேன். ஈழத்து நிலைமைகள் பற்றி யேசுராசா சொன்னவற்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும். ரஷ்யாவில் மிக முக்கிய மார்க்சியக் கலை, இலக்கிய விமர்சனங்கள் வருகின்றன; அவற்றைப் படிக்கவேண்டும். ஞானி தனது கருத்துக்களை நிதானமாக வெளிப்படுத்தினர். தேர்ச்சியான அவரது ரசனையும், பக்குவமும், கோஷ்டி சாராமல் நல்லவற்றை எங்கு கண்டாலும் அங்கீகரிக்கும் பண்பும், அவற்றை விளக்கும் முறை என்பனவெல்லாமும் அவர்மீது அக்கறையையும் மதிப்பினையும் கூட்டுகின்றன.
Ο Ο முதல்நாள் நேரமின்மையால் விடுபட்ட சினிமா பற்றிய அமர்வு, அடுத்து நடைபெற்றது; கோமல் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றபோதும் தமிழ்த் திரைப்படத்துறை நம்பிக்கை தரவில்லையென்றும், களிப்பூட்டும் சாதனமாகத்தான் இருக்கிறதென்றும், வங்காள - மலையாளத் திரைப்புரட்சி இங்கு நடக்கவில்லையென்றும் தலைமையுரையின்போது சொன்னார்.
கட்டுரை படிக்கவேண்டிய ப. கங்கைகொண்டான் நேரில் வராததால், அவரது கட்டுரையை “படிகள்’ குழுவைச்சேர்ந்த கிருஷ்ணசாமி வாசித்தார். வெறும் பட்டியல்களும், 100 நாள்கள் ஒடிய படங்களின் விபரங்களும், வசூல் போன்றவையுமே நிறைந்த தரமற்ற கட்டுரையாகவே இது இருந்தது. கருத்துரை வழங்குகையில் ஈழத்தைச் சேர்ந்த எஸ். எம். ஜே. பைஸ்தீன், ஈழத்துத் தமிழ்ப்படங்களை உள்ளடக்காததால் இத்தலைப்பு பொருத்தமற்றதென்றும், “பொன்மணி’ போன்ற முக்கியமான படங்கூட விடுபட்டுவிட்ட குறையையும், ‘சருங்கலே போன்ற இருமொழிப் படங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளமையையும் குறிப்பிட்டார்.
பிரபஞ்சன் கருத்துரை வழங்குகையில், எம் பி. சீனிவாசனின் பங்களிப்புச் சொல்லப்படாததையும், “கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கேஸ்’ என வியாபாரப் படத்தயாரிப்பாளர் ஒருவரால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டதோடு, சிறந்த சிறுகதைகளை 20 நிமிடங்களிலான 16 மி. மீற்றர் படமாக எடுப்பதற்கு 7000 ரூபாய்தான் செலவாகுமென்றும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட படங்களை கிராமங்களிற்கு இலகுவாகக் கொண்டுசென்று பயனுள்ள மாற்றங்களை உருவாக்கலாமென்றும் முக்கியமான ஆலோசனையைத் தெரிவித்தார்.
குறிப்பேட்டிலிருந்து.

நாகூர் ரூமி, தமிழ்ப்படங்களில் சில மாறுதல்கள் நிகழ்ந்து முன்னேற்றமும் காணப்படுகிறதென்றும், முக்கியமாக நட்சத்திர ஆதிக்கம் உடைபட்டு நெறியாளர்கள் செல்வாக்கைப் பெறத்தொடங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
சிறுபத்திரிகைகளின் திரைப்பட விமர்சன மதிப்பீடுகளைப் பரிசீலிக்க வேண்டுமென்றும், தமிழ்ச் சமூக ஈடுபாடு எவையெனக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், எம். ஜி. ஆரின் படங்கள் ஏன் ஓடுகின்றன என்றெல்லாம் ஆராய வேண்டுமென்றும் தமிழவன் சொன்னார்.
கோமல் சுவாமிநாதன் தனது முடிவுரையில் பெர்க்மன், பெலினி போன்றவர்களின் படங்கள் தனக்குப் புரியவில்லையென்றும், ஷியாம் பெனகல்தான் தன்னைக் * கவர்ந்தவரென்றும், அவரைப்போலப் படங்களை எடுப்பதே மக்களிற்குப் பயன்தருமென்றும் சொன்னார்.
O O
அடுத்த அமர்வில் ‘விமர்சனம்’ எடுத்துக்கொள்ளப்பட்டது. ஞானி தலைமை தாங்கினார்; ராஜ்கெளதமன், அம்ஷன்குமார் ஆகியோர் கட்டுரை படித்தனர்.
ராஜ்கெளதமன் - இலக்கியம், விஞ்ஞானக் கருத்துக்கள், படைப்பு முயற்சியின் வேறுபாடு பற்றி விளக்கினார். நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி போன்ற வரட்டு மார்க்சியவாதிகளிற்கெதிராக மூன்றாவது மார்க்சிய இலக்கியக் கோட்பாடு உருவாகிவருகிறதென்றும் குறிப்பிட்டார்.
அம்ஷன் குமார் : விமர்சகர்களில் பலர் தகவல்களையே தருகிறார்கள்; சுயமான கருத்துக்கள் அதிகம் வரவில்லை. வெ. சாமிநாதனிடம் சில சுயகருத்துக்கள் உணர்டு. நமது மரபை ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்களிலிருந்து தொடங்கவேண்டுமென அவர் சொல்கிறார். ஒவியம் பற்றிய அவரது கட்டுரைகள் பயனுள்ளவை. ந. முத்துசாமி கூத்துக்களைப் பற்றியும் அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றியும் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார். க. கைலாசபதி, நா. வானமாமலை போன்றவர்கள் வரட்டு விமர்சகர்களே, புதுக்கவிதையை இதனாலேயே அவர்கள் எதிர்த்தனர். ஞானி, எஸ். வி. ராஜதுரை போன்ற மார்க்சிய விமர்சகர்கள் நம்பிக்கை தருபவர்கள் ; அதிரடி விமர்சனங்களை இவர்கள் தருவதில்லை. 'மானுடம் விஜயகுமார், சாருநிவேதிதா ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
இறுதியில் ஞானி முடிவுரை வழங்குகையில் - கைலாசபதி, க. நா. சு. வைப்பற்றி எழுதியிருப்பது வரட்டுக் குப்பை என்றும், கைலாசபதி போன்றோரின் வரட்டுக் கருத்துக்களை விமர்சிக்கும் நல்ல கட்டுரைகள் “அலை சஞ்சிகையில் வெளிவந்துள்ளனவென்றும், ஜெயகாந்தனையும் மெளனியையும் பற்றிய தளையசிங்கத்தின் விமர்சனம் கவனிக்கப்படவேண்டியதென்றும், ஈழத்து மஹாகவி முக்கியமான கவிஞரென்றும், நுஃமான் நல்ல கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளாரென்றும், அஸ்வகோஷின் சிறுகதைத் தொகுப்பான "பறிமுதல் நல்ல சிறுகதைத் தொகுப்பென்றும், அதன் முன்னுரையில் வளமான மார்க்சியக் கருத்துக்களை அஸ்வகோஷ் வெளிப்படுத்தியுள்ளாரென்றும் குறிப்பிட்டார்.
O O
அ.யேசுராசா

Page 25
இரண்டாம் நாளின் இறுதி அமர்வாக ‘கலை இலக்கியமும் மக்கள் இயக்கங்களும்’ எஸ். வி. ராஜதுரையின் தலைமையில் நடைபெற்றது.
எஸ். வி. ராஜதுரை : பசியைத் தீர்ப்பதில் அரசியல் விடுதலையையே நாம் வேண்டுகின்றோம். கலை இலக்கியங்கள் மூலமாக மக்களுடன் இலகுவில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். கருத்தளவில் பாட்டாளிகளைப் பற்றி எழுதுவது எளிது; ஆனால், அவர்களிற்காக எழுதுவது - அவர்களோடு இரண்டறக் கலக்காது ஆழமான எழுத்துக்களைப் படைத்தல் முடியாது. வீச்சுக்களைப் பரவற்படுத்த சிறுபத்திரிகைகள் ஒன்றிணைய வேண்டும்; முற்போக்குப் பிரயோகங்களிற்குத் தற்போது அர்த்தமில்லை. ‘இலக்கு’ என்பது இன்னும் தெளிவாகவேண்டும் ; உடன்பாட்டு வேலைத்திட்டம் வைக்கப்பட வேண்டும்.
"தடம் பத்திரிகை சார்பில் கட்டுரை படிக்கப்பட்டது. கவிஞர் ஜெனகப்பிரியாவும் பேசினார். அடுத்து ‘நவயுக கலாசாரம்’ பத்திரிகையைச் சேர்ந்த ஜாப்சன் கருத்துரை வழங்கினார். இடையில் எஸ். வி. ராஜதுரை, புரட்சிக்கு முன்பும் பின்பும் மார்க்சியத்தை ஏற்காதவர்களும் அரசியல், வடிவச் சிறப்புக்களை அளிக்கிறார்களென்றும்; எதிர்க்கருத்தோட்டங்களும் மார்க்சியத்தைக் கூர்மைப்படுத்த உதவுவதால் அவைபற்றிக் கடுமையாக இருக்கத் தேவையில்லையென்றும்; தமிழ்ப் பாரம்பரியம், கலாசாரம் பற்றிய விழிப்பைத் தூண்டியதில் திராவிடர் கழகம் ஆற்றிய பங்கை நாம் மறுக்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.
இன்குலாப் கருத்துரை வழங்குகையில், ‘வானம்பாடி' இயக்கத்தினர் 70களில் வீச்சை ஏற்படுத்தினரென்றும், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதும் சிதைந்துவிட்டார்கள் என்றும், இது அவர்கள் முன்னர் சொல்லிய பிரகடனங்களுக்கு மாறானதென்றும், போராடும் மக்களுடன் இணையாதவர்கள் பிழையானவர்கள்தானென்றும், இவர்கள் தங்கள் தனிமனித இயல்பு - முக்கியத்துவத்தை அழுத்துபவர்களாதலால் எதிரானவர்கள்தானென்றும் பாரம்பரியத்தை விமர்சனத்துடன் பார்த்து ஏற்கவேண்டுமென்றும் கலை - இலக்கியங்களினால் புரட்சி நடக்குமெனத் தாம் நம்பவில்லையென்றும், கிராமங்களை நோக்கி நமது கலை இலக்கிய அமைப்புக்கள் போகவேண்டுமென்றும் சொன்னார்.
‘இந்த மக்கள் இயக்கங்கள் கலை - இலக்கியத்திற்கு ஒன்றுமே செய்யவில்லையென்றும், பாரதியார் செய்துள்ளாரென்றும் சி. சு. செல்லப்பா குறிப்புரை வழங்கினார்.
மதிவாணன் பேசுகையில், “சிறுபத்திரிகைகளைப் படிப்பவர்கள் எத்தனைபேர்? கலை மக்களுக்காகவென்று எல்லோரும் இங்கு பேசினார்கள். உங்கள் படிகளில் ஏறிநின்று சொல்கிறீர்கள். மக்களிடையே இவை போகவில்லையே, ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.
எஸ். வி. ராஜதுரை குறிப்புரைக்கையில், நாம் சில எல்லைகளுக்குள் நகர்ப்புறங்களில் இயங்குகின்றோம். அதைப்புரிந்து எல்லைகளை விரிவாக்க எல்லோரும் உதவவேண்டும் என்று வற்புறுத்தினார்.
‘இலக்கு’ அமைப்பின் நோக்கங்களைப் பற்றி ஏற்கெனவே சிலர் எழுப்பிய
குறிப்பேட்டிலிருந்து.

37
கேள்விகளுக்காக, அமைப்பாளர்களில் ஒருவரான ஜி. எஸ். ராமசாமி விளக்கமளித்ததுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.
O O மூன்றாம் நாள் காலையில் ‘கவிதை’ பற்றிய அமர்வு தமிழவன் தலைமையில் தொடங்கியது.
தமிழவன் : எழுபதுகளில் அவசரகால நிலைமை முக்கிய நிகழ்வு. ஆனால் முக்கிய கவிஞர்கள்கூட அதைத் தொடவேயில்லை. வானம்பாடிகளின் வெளியீட்டுத் தோரணை Romantic ஆக இருந்தது. கவிதைகள் எழுதிய தமிழாசிரியர்கள் மேற்கத்திய பாதிப்பினைப் பெறாதவர்கள். ‘எழுத்து’ புதுக்கவிதைகள் அறிவுவாத வகையைச் சேர்ந்தவை. இவற்றின் பிரதான தன்மை புரியாமை. இலங்கைக் கவிதைகள் முக்கியமாகின்றன- சண்முகம் சிவலிங்கம், கவியரசன், ஜெயபாலன், யேசுராசா ஆகியோரின் கவிதைகள். மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதால், அங்கு இத்தகைய தமிழ்க் கவிதை வருகிறதென்பதும் முக்கியமானதாகிறது. சமீபத்திய ‘அழிமதிகள்’ பற்றியெல்லாம் அங்கு கவிதைகள் வருகின்றன; அதில் முக்கியமானது எளிமையும் புரியும் தன்மையும்.
முனைவர் லீலாவதி தன் கட்டுரையில் - புரட்சிக் கவிதைகள் பல சொல் விளையாட்டுகளாய் உள்ளனவென்றும், தொகையளவிற்கு தரமான கவிதைகள் தோன்றவில்லையென்றும், போலச் செய்யும் முறைகளால் தனித்துவம் அற்ற கவிதைகள் கூடியுள்ளதாகவும், சார்புநிலைக் கவிதைகளில் இந்த மண்ணின் இயல்புடன்கூடிய சித்தாந்தத் தன்மை இல்லையென்பதும் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார். எஸ். ஆல்பர்ட்டின் கட்டுரை “மொழியின் சாத்தியப்பாடே கவிதை’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக, விளக்கம் குறைந்ததாக இருந்தது.
அக்கினிபுத்திரன் : பாரதியின் கவிதைப் பாதை முறிய - ‘எழுத்து’க் கவிதைகள் தோன்றுகின்றன. முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளை ‘எழுத்து வெளியிட மறந்ததேன்? பாரதிதாசன் வழிவந்த கவிஞர்கள் மீட்புவாதப் போக்கிலும், ‘எழுத்தில் எழுதியவர்கள் மேற்கில் புகலுறும் தன்மையிலும், வானம்பாடியினர் புரட்சிகர கற்பனாவாதத்திலும் எழுதினர். ‘எழுத்து உருவத்தையே சிலாகிக்கத் தொடங்கியது. தேக்கத்தை உடைத்தவர்களாக ஞானக்கூத்தன், நா. காமராசனைச் சொல்லலாம். தனிமனிதவாதத்தை ஞனக்கூத்தனின் கவிதைகள் உடைக்குமென வெ. சா. தருமு போன்றோர் கருதியதனாலேயே அவரை எதிர்க்கத் தொடங்கினர். புரியாத்தன்மையிலிருந்து விளங்கும் கவிதைகளை வானம்பாடியினரே எழுதினர். தமிழன்பனின் இரண்டாவது கவிதைத் தொகுதி கவனத்துக்குரியது. சிற்பி நடைமுறையில் சமரசவாதியாகவும், கவிதையில் உக்கிரமானவராகவுமுள்ளார். இன்குலாப் அரசியல் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துகிற மக்கள் கவிஞன். புதுக்கவிதையை சமூக நிகழ்வாகக் காணமறுத்த சில கலாநிதிகள்’ ஜோர்ஜ் தொம்சனிடம் கற்றவர்கள் என்பதும் ஆச்சரியந்தான்! எழுபதுகளில் கவிதைத்துறையில் தனித்தன்மை காணப்படுகிறது.
பின்னர் கருத்துரைகள் இடம்பெற்றன. முனைவர் சி. பாலசுப்பிரமணியன் : குறுந்தொகை, பத்துப்பாட்டு போல
அ.யேசுராசா

Page 26
38
புதுக்கவிதைகளின் தேர்ந்த தொகுப்புக்கள் வெளிவர வேண்டும்.
கிருஷ்ணசாமி : மனித நெருக்கடிகளைப் பற்றியவையே சிறந்த கவிதைகளாகி நம்பிக்கை தருவனவாகின்றன.
சிற்பி : வானம்பாடிக் காலம் பரிசோதனைக் காலம். எந்த இயக்கத்தின் ஆரம்பத்திலும் புனைவியல் தன்மை இருக்கும்; அது தவறல்ல.
இன்குலாப் : உள்ளடங்கிய தன்மை கவிதையென்றும், உரத்துச் சொல்பவை கவிதையல்லவென்றும் ஆல்பர்ட் சொன்னார்; இதை ஏற்கமுடியாது.
ஞானி ; மஹாகவியின் கவிதைகள் முக்கியமானவை; இலங்கையில் வேறுபலரும் இத்தன்மையில் எழுதுகிறார்கள்.
யேசுராசா கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கோஷம்போட்ட வானம்பாடியினர் அவசரகால நிலைமை ஏற்பட்டதும் மெளனமாகிவிட்டது போல், இலங்கையிலும் முன்பு கோஷம் போட்ட முற்போக்கினர், 1977க்குப் பின் மெளனமாகிப் போய்விட, இவர்களுடன் இணையாதவர்களிற் பலர்தாம் பின்னர் நடந்த அழிமதிகள் பற்றியெல்லாம் எழுதிவந்திருக்கின்றனரென்றும்; கலாபூர்வமான படைப்புக்களினால் நவீன தமிழ்க்கவிதையை இன்னொரு தளத்திற்கு இவர்கள் நகர்த்தியுள்ளமையை, சமீபத்திய ஈழத்துக் கவிதைகளிற் காணலாமென்றும் குறிப்பிட்டார்.
இறுதியில் தமிழவன் தனது முடிவுரையில், மொழியின் சாத்தியப்பாடு வாசகர்களைக் குறிக்கிறதென்றும், புரியும் சாத்தியம் முக்கியமென்றும், இலங்கைக் கவிதையே முன்னுதாரணம் கொள்ளத்தக்கவையாய் உள்ளதென்றும் கூறிமுடித்தார்.
O O அடுத்து, ‘தமிழில் பிற துறைகள்’ என்ற அமர்வில், கோ. கேசவன் தலைமையில் முதலில் - தமிழ் ஆராய்ச்சி தொடர்பாக முனைவர் இ. அண்ணாமலையின் கட்டுரை வாசிக்கப்பட்டது. முனைவர் அப்துல் ரகுமானும், முனைவர் பொற்கோவும் கருத்துரை வழங்கினர்.
தெ. பொ. மீ. விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டவரென்றும், இதனால் பலரால் தாக்கப்பட்டவரென்றும் எல்லா நிலைகளிலும் துன்பப்பட்டவர் அவரென்றும் முறையான தமிழாராய்ச்சியினை உலக அரங்கிற்கு எடுத்துச்சென்றவரென்றும் பாவாணரையும் குறைத்து மதிப்பிட முடியாதென்றும், அவரது சொல்லாராய்ச்சிகள் முக்கியமானவையென்றும் பொற்கோ கருத்துரையின்போது கூறினார்.
‘இராமாயண சமூகம்’ என்பது வால்மீகியின் சமுதாயத்தை ஆராயும் ஒரு சிறந்த நூலென்றும், இது இலங்கையில் வெளிவந்துள்ளதாகவும் அப்துல் ரகுமான் குறிப்பிட்டார். தமிழவன் கருத்துரைக்கையில், தமிழாராய்ச்சி முறையியல் (Methodology) கிடையாதென்றும், உ. வெ. சா. ராகவையங்கார், தாமோதரம்பிள்ளை, வையாபுரிப்பிள்ளை போன்றோரின் உழைப்பை மதிக்க வேண்டுமென்றும்; நாட்டுப்புறவியல் தனக்குரிய முறையியலை உருவாக்கியது போல், தமிழாராய்ச்சிக்கும் ஒரு முறையியலைக் கட்டாயம் உருவாக்கவேண்டுமென்றும் சொன்னார். மேலும், நா. வானமாமலை, க. கைலாசபதி போன்றோர் சங்கப்பாடல்களில் வர்க்க - சமுதாயப் பார்வைகளிலான ஆய்வை முதலில் செய்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதென்றும், ஆனால் அது
குறிப்பேட்டிலிருந்து.

39
முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்றும், பொருளாதார - மேற்கட்டுமான உறவுகளின் தொடர்பு நோக்கலில்தான் அவர்களிடம் குறைபாடு காணப்படுகிறதென்றும் சொன்னார்.
அடுத்து, “பிற துறை நூல்கள்’ என்ற தலைப்பில் சாருநிவேதிதா கட்டுரை படித்தார்.
சாருநிவேதிதா ; தேவி பிரசாத்தின் நூல் பற்றிய ஞானியின் கட்டுரையும், எஸ். வி. ராஜதுரையின் “கிறிஸ்தவ மனித நேயம்’ என்ற கட்டுரையும் கவனிக்கப்பட வேண்டியவை. எஸ். வி. ராஜதுரையின் ’எக்சிஸ்டென்ஷியலிஸம், ‘மார்க்சியம்: ஓர் அறிமுகம்’, ‘அந்நியமாதல்’ என்பன முக்கியமானவை.
‘இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்’ என்ற ஞானியின் நூலிலுள்ள பல கருத்துக்கள் அபாயகரமானவை; எதிர்க்கவேண்டிய கருத்துக்கள் பலவற்றில் புகலிடம் பெறச்சொல்கிறார். மார்க்சியம் இந்தியமயமாகவில்லையென்றும் சொல்கிறார். ‘மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு' - அபாயகரமான அவரது இன்னொரு நூலாகும். குணாவின் ‘தமிழர் மெய்யியல்’, ‘மார்க்சிய இயங்கியல்' பண்டிதத்தனமானவை; இவற்றின் மொழி புரியாமல் உள்ளது. இசைபற்றி மார்க்சியவாதிகள் அக்கறையற்றிருக்கிறார்கள். வெ. சா.வின் அபத்தக் கருத்துக்களை நிர்மலா நித்தியானந்தன் ஆழமாக விமர்சித்துள்ள கட்டுரை ‘அலை' - 18இல் வெளிவந்துள்ளது ; இது முக்கியமானதொரு கட்டுரையாகும். ஒவியம் பற்றிய வெ. சா.வின் கட்டுரைகள் பயனுள்ளவை. படிகளில் (இதழ் -11) வந்துள்ள ராயனின் ‘மார்க்சியம் : தேடல்களில் எழும் பிரச்சினைகள்’ என்ற கட்டுரையும் சிறப்பானது.
"படிகளைச் சேர்ந்த சிவராமன் இறுதியில், ‘தேவிபிரசாத்தை விமர்சிக்கும் ஞானியின் கட்டுரையில், இந்திய வாழ்க்கையில் மார்க்சியம் தொடர்பான கவனத்திற்குரிய கருத்துக்கள் இருப்பதாகவும், மசானி போன்றவர்கள் சமயத்தையும் மார்க்சியத்தையும் இணைப்பது பற்றி எழுதியுள்ளமையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இறுதி நிகழ்ச்சியாக 'தமிழ்ப் பத்திரிகை’ என்ற அமர்வில் மலர்மன்னன், மாலன், தமிழ்நாடன் ஆகியோர் கட்டுரை படித்தனர். இந்த அமர்வுடன் இலக்கின் மூன்று நாள் கருத்தரங்கு நிறைவுற்றது.
நவீனத் தமிழகக் கலை, இலக்கியத் துறைகளுடன் சம்பந்தமுற்றுள்ள முக்கியமான பலர் இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்ததில், பன்முகப்பாடு கொண்ட வளர்ச்சிப் போக்குகளை இனங்காண முடிந்தது. நிகழ்ச்சி நிரலிற் குறிப்பிடப்பட்டிருந்தபடி வண்ணநிலவன், பூமணி, ராமகிருஷ்ணன், திலீப்குமார், மு. ராமசாமி போன்றோரும் வந்திருந்தால் வேறு சில நோக்குகளையும் அவதானிக்க முடிந்திருக்கும்.
ஈழத்து ஆக்கங்கள் போதிய அளவு பரிசீலனைக்குட்படுத்தப்படாமை கவலைக்குரியது. ஞானி, தமிழவன், சாருநிவேதிதா போன்றோரைத் தவிரகலந்துகொண்டோரில் பலர் ஈழத்து ஆக்கங்களைப் பற்றிக் கருத்துரைக்கவில்லை. தமிழில் பத்தாண்டுகளில் நிகழ்ந்தவற்றை மதிப்பிடும் இதுபோன்ற கருத்தரங்குகளில் ஈழம் விடப்படுவது - மதிப்பீட்டின் முழுமைத்தன்மையைச் சிதைப்பதாகிவிடும்.
அ.யேசுராசா

Page 27
ஆரம்பநாளில் சிறுகதை அமர்வின்போதே இது ‘எழுபதுகளில் தமிழ்க் கலை இலக்கியம்’ பற்றிய கருத்தரங்கா அல்லது ‘எழுபதுகளில் தமிழகக் கலை இலக்கியம்’ பற்றிய கருத்தரங்கா என ஈழத்தைச் சேர்ந்தவர்களால் கேள்வி எழுப்பப்பட்டதில் நியாயமுண்டு. ஆனால் பா. செயப்பிரகாசம், ‘இங்குள்ளவற்றை எடுக்கவே அவகாசமில்லை’ என்ற தோரணையில் பதிலுரைத்ததை ஏற்கமுடியாது. எதிர்காலத்திலாவது இத்தகைய முக்கிய தவறுகள் திருத்தப்பட்டு - பூரண மதிப்பீடுகள் நடைபெற வேண்டும் என்று, ஈழத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஒருவர் கருத்தைத் தெரிவித்துக்கொண்டிருக்கையில் இடையில் இன்னொருவர் குறுக்கிடுவதும், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்களால் அபிப்பிராயம் சொல்வதும் சிலவேளைகளில் நிகழ்ந்தமை கவலைக்குரியது. ஆரம்ப நாளில் சிலரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்திலும் கொச்சையான வர்த்தைப் பிரயோகங்கள் இருந்தன. மாறுபட்ட கருத்துக்களையும் நாகரிகமாக அணுகி விமர்சிக்கும் பண்பு, கலை இலக்கியக்காரரிடையில் வளர்ச்சியுற வேண்டும். எல்லாம் மக்களிற்காக; நாங்கள்தான் மக்களிற்காக நிற்கிறோம்’ என்றமாதிரிச் சொல்லிக்கொண்டு, ஏனைய நேசசக்திகளை ஒரேயடியாகத் தாக்கும் அதிதீவிரத் தன்மையைச் சிலர் வெளிக்காட்டினர். 1977 வரை இலங்கையிலும் இத்தகைய போக்கு தீவிரமாக இருந்தது; இந்த வரட்டுப்போக்கினால் விளைந்த தீமைகளை அரசியலிலும் கலை இலக்கியத்துறையிலும் பலர் இன்று உணர்ந்து, திருத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் அனுபவங்களைக் கவனத்திலெடுப்பது நல்லது.
தொடர்ந்து வேறு பல இடங்களிலும் இதுபோன்ற கருத்தரங்குகள் நடைபெறுமென, அமைப்பாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பல்வேறு அமர்வுகளிலும் தெரிவிக்கப்பட்ட மாறுதலான - சர்ச்சைக்கு உட்பட்ட கருத்துக்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றைத் தனியாக - ஆழமாகப் பரிசீலிக்கும் முயற்சிகளை நிறைவேற்றவிருப்பது பயன் தரக்கூடியதுதான். ஆரோக்கியமானதும், விழிப்பு நிரம்பியதுமான கலாசாரத்தைக் கட்டியெழுப்ப விழையும் முற்போக்கான சகல சக்திகளும் ‘இலக்கு ’டனி இணைந்து செயலாற்றவேணி டியது அவசியமானதாகின்றது.
அலை - 20 தை - பங்குனி 1982
குறிப்பேட்டிலிருந்து.

சமர் 2ஆவது இதழில் (ஆடி 1979) வெளிவந்த முற்போக்கு இலக்கியமும், அழகியல் பிரச்சினைகளும்’ என்ற கலாநிதி க. கைலாசபதியின் கட்டுரையைப் படித்தபோது, அடிப்படையாகச் சில வரட்டுக் கருதீதுக் களிறி கே அழுதீதம் கொடுக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. ‘பிரச்சாரமாயில்லாத இலக்கியம், கலையம்சம் மொழிநடை போன்ற விடயங்கள் முக்கியமில்லாதவை; இவற்றிற்கு அழுத்தங் கொடுப்போரெல்லோரும் பழைமைவாதிகள், சமூக மாற்றத்தை விரும்பாத அரசியற் பிற்போக்காளர்கள், மார்க்சிய எதிர்ப்பாளர்கள்’ என்பனவே அவையாகும். தனது கருத்துக்களிற்கு மாறுபட்ட உடனேயே அப்படியானவர்களெல்லாம் வர்க்க எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இடது தீவிரவாதத்தின் வரட்டுக் குரலே இதுவாகும் (ஆனால், அரசியலில் எந்தவிதச் செயற்பாடுமற்ற நாற்காலிக்காரராயும் வெறும் இலக்கியத்தில் மட்டும் தீவிரமுகம் காட்டுபவராயுமே
Ve
அ.யேசுராசா

Page 28
42
கைலாசபதி உள்ளார்). ரஷ்யாவின் ஸ்தனோவ் தொட்டு 1957-59களின் சீனத் தீவிரவாதிகளிற்கூடாக, 1979இன் இலங்கைக் கைலாசபதி வரையுள்ளவர்களின் இத்தகைய கருத்துக்களிற்கும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியுண்டு; இவற்றுக்கு எதிரான மார்க்சியவாதிகளையும் வரலாற்றுத் தேவை உலகெங்கும் உருவாக்கித் தந்தேயுள்ளது. இந்தவகையில் கைலாசபதியின் குரலும் பழைய குரல்தான். இத்தகைய தீவிரவாதம் “ஷேக்ஸ்பியரின் ஒரு துன்பியல் நாடகத்தைக் காட்டிலும் ஒரு ஜோடி பூட்ஸ் அதிக மதிப்புவாய்ந்தவைகளாகும்” என்றுகூறும் பிழைபட்ட, அதீத முற்போக்குவாதியான பிஸ்ரோவ் போன்றவர்களையே உருவாக்குகிறது. 17ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயப் பூர்ஷ"வாப் 5656m560J 6f 6m5$6i (Bourgeois Philistinism) (5 Jgylf 35/5.76i (எதிர்மறைகளின் ஒற்றுமை). ஆனால், மார்க்சியத்திற்கும் அதன் சிருஷ்டிகரத் தன்மைக்கும் இக்குரல்களுடன் எந்தவித ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. கலையம்சத்தை, மொழிநடையின் முக்கியத்தை மறுக்கும் - வெறும் பிரச்சாரத்தையே இலக்கியமாக்கிக் காட்ட முனையும் இவ்வரட்டுக் குரல்கள், மார்க்சியத்தையும் முற்போக்கிலக்கியத்தையும் கொச்சைப்படுத்த விரும்பும் மார்க்சிய எதிரிகளிற்குச் சாதகமான நிலைமைகளையே உருவாக்குவதோடு, கருத்து வெளிப்பாட்டில் நிலவவேண்டிய “ஜனநாயகத்துவத்தை’ மறுப்பதன்மூலம் - நேச அணியினரைப் பகையணிக்குள்ளும் தள்ளிவிடுகின்றன. சீனாவிலும் இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டபோதே, 1961இல் தோழர் சூ என்லாய் பின்வருமாறு தெரிவித்தார்: “கலைஞன் கட்டாயமாக அனுபவமும் திறமையும் உடையவனாயிருப்பதோடு, நன்கு பணி படுத்தப்பட்டவனாயும் பயிற்சியுடையவனாயும் இருத்தல்வேண்டும்; அல்லாவிடின் அவன் கலைஞனாகவோ, விமர்சகனாகவோ இருக்க முடியாது. ஆனால் தற்போது மக்கள் அனுபவத்தையும், திறமையையும், வினைத்திறனையும் பற்றிப் பேசத் துணிவதில்லை. வெளிப்படையாக வினைத்திறனைப்பற்றிக் குறிப்பிடுவது பூர்ஷவாக் கருத்துவெளிப்பாடெனக் கருதப்படுகிறது; சந்தேகத்திற்கிடமின்றியே, இது தவறானது.”
1979 இல் நிலவும் இலங்கையின் இலக்கியச் சூழலைப் பார்க்கையில், வசதிகருதி நமது எழுத்தாளர்களை நான்கு பிரிவினராக்கலாம்.
1 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் ; பழைமை வாதிகள் ,தூய அழகியல்வாதிகள். 11 மார்க்சியக்காரராயில்லாதபோதும் வர்த்தக, கனவுநிலைப்படாத -
மனிதாபிமானத்தோடு நடப்பியலைச் சித்திரிப்பவர்கள். 111 மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட முற்போக்கிலக்கியக் குழுவினர்.
(அ) கலையம்சத்திற்கு அழுத்தங்கொடுக்காதோர். (ஆ) கலையம்சத்தை அழுத்துவோர். IV மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டுள்ளபோதும் முற்போக்கிலக்கியக் குழுவுடன்
இனங்காட்டாதோர் - கலையம்சத்தை அழுத்துவோர்.
உண்மையில் முதலாம் பிரிவினரும், இரண்டாம் பிரிவினரும் இன்றைய நிலையில் வலிமை பெற்றிருக்கவில்லை. கலையம்சம், மொழிநடை, பிரச்சாரம் பற்றிய
குறிப்பேட்டிலிருந்து.

குற்றச்சாட்டுக்கள் வரும்போது முதலாம் பிரிவினரை இனங்காண்பதும் கடினமானதல்ல; அவர்களின் கருத்துக்களிலேயே அதற்கான முரண்பாடுகள் காணப்படும். இரண்டாம் பிரிவினரின் கருத்துக்கள் நேசபாவத்துடனேயே அணுகப்படவேண்டும். ஆனால், இன்று அழுத்திக் குற்றஞ்சாட்டும் கருத்துக்கள் வெளிவருவதோ மூன்றாம் பிரிவின் ‘ஆ’ பகுதியினரிடமிருந்தும், நான்காம் பிரிவினரிடமிருந்துமே. இந்த யதார்த்தநிலையை அறிந்தும் அவர்களின் கருத்துக்களை வெறுமனே "அரசியற் பிற்போக்காளருடையவை” எனச் சொல்லித் தட்டமுயல்வது, இடது தீவிரவாதத்தின்பாற்படுதலாலேயாகும்; தொடர்பாகவே அதிருப்தியாளர்களின் குற்றச்சாட்டுகள் துருவநிலைப்படுத்தப்பட்டுக் கொச்சையாக்கப்படுகின்றன. உதாரணமாய், பிரச்சாரம் கூடாது என்பது, ‘அரசியலே இடம்பெறக்கூடாது’ எனவும்; அக உலகு சித்திரிக்கப்படலாம் என்பது, "உளவியற் பிரச்சினைகளே நவீன இலக்கியத்திற்கு ஏற்றன’ எனவும் , அனுபவவயப்படாமல் வெறுமனே அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளை வெளிப்படுத்துவதனுடன் உடன்பட மறுப்பது 'சார்பின்மையே கலையின் தத்துவம், அடிப்படை இரகசியம்’ எனவும் கொச்சைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. இத் திரிபுபடுத்தல்களைப் பரிசீலனையின்றியே நாம் தட்டிவிடலாம் ; முக்கியமான ஏனைய மூன்று விடயங்களே, நமது கவனத்திற்குரியன.
1. “எழுத்தாளன் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற வாதமே மிகப்பெரிய பிரச்சாரமாகும். உண்மையில் அவ்வாறு கூறுவோர் பிரச்சாரத்தைக் குறைகூறவில்லை. குறிப்பிட்ட சில கருத்துக்களின் பரம்பலையே வெறுக்கின்றனர். ஏனெனில் கருத்துப்பிரசாரம் கலைவடிவத்திற்கு ஊறுசெய்கின்றது என்று இவர்களால் நிரூபிக்க இயலாது” என்று கைலாசபதி சொல்வதன் மூலம், பிரச்சாரத்திற்கும் கலைக்குமிடையிலுள்ள எல்லைக்கோட்டை மறுக்கிறார். உடன்பாடான கருத்துக்களின் பிரச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்; உடன்பாடில்லாத கருத்துக்கள் எதிர்க்கப்படவேண்டும் என்பதே அவரது கருத்து. ஆனால், “சுலோகமிடுவது கலையல்ல” என்றும், “ஒருவன் அரசியல் மட்டுமே தெரிந்து தனது தொழிலில் தேர்ச்சியில்லாதிருந்து என்னத்தைத்தான் எழுதினாலும், அவை போஸ்ரர்களும் சுலோகங்களும் என்று சொல்லக்கூடியனவையாயே இருக்கும்” என்றும் தோழர் சூ எண்லாய் சொல்லும்போதும் ; “கலையியல் பண்பு குறைந்த கலாசிருஷ்டிகள், அரசியல்ரீதியில் எவ்வளவு முற்போக்குடையவையானாலும் அவ்வளவு சக்தி வாய்ந்தவையல்ல. எனவே, தவறான அரசியல் கண்ணோட்டமுடைய கலாசிருஷ்டிகள், சரியான அரசியல் கண்ணோட்டமுடைய ஆனால் கலையாற்றல் குறைந்த சுவரொட்டி அல்லது சுலோகநடை தழுவிய போக்கு இரண்டையும் நாம் எதிர்க்கிறோம்” என்றும், “மார்க்ஸிஸத்தைக் கற்பது என்பதன் பொருள் உலகையும் சமுதாயத்தையும், இலக்கியத்தையும் கலையையும் நாம் அவதானிப்பதில் இயங்கியல் பொருள்முதல்வாத, சரித்திரவியல் பொருள்முதல்வாதக் கருத்துநிலையைப் பிரயோகிப்பது என்பதாகும். எமது கலை, இலக்கியச் சிருஷ்டிகளிற்குள் தத்துவஞான விரிவுரைகளை எழுதிவைப்பது என்று அர்த்தமில்லை” என்று தோழர் மாஓ சே - துங் சொல்லும்போதும், இருவருமே கலைக்கும் பிரச்சாரத்திற்குமுரிய வேறுபாடுகளைத் தெளிவாகவே
அ.யேசுராசா

Page 29
44
உணர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
'பிரச்சாரம்’ என்ற பதத்திற்குத் திட்டவட்டமான வரையறையைக் கொடுப்பது கடினம்தான், கருத்துகளைக்கொண்டு அரூபமாக விளக்குவதனைவிட சுட்டிப்பாக இரண்டு படைப்புகளை எடுத்து அலசுவது தெளிவாக இருக்கும் ; ஆனால் அதை இங்கு செய்யமுடியாது. குமரன் இதழ்களில் வெளிவந்த பெரும்பாலான கவிதைகளும், சிறுகதைகளும் பிரச்சாரப் படைப்புகளிற்கு உதாரணமாகக்கூடியவை; தமிழீழம், 1977 இனக்கலவரம் தொடர்பாகச் சுடர் இதழ்களில் வெளிவந்த பல படைப்புகளும் இவ்வாறானவையே. எனினும், 'ஸ்தூலமான கருத்து வெளிக்கொட்டல்களையும், வடிவத்தினதும் பாத்திரங்களினதும் இயல்பை மீறித் துருத்துவனவற்றையும் பிரச்சாரமென ஒரளவு கொள்ளலாம். “நிலைக்களனிலிருந்துதான் கோட்பாடும் செயலும் வரவேண்டும்; அதேசமயம் வெளிப்படையாகக் காட்சியாக்கப்பட்டுவிடாமலும் இருக்கவேண்டும்” என்று மின்னாகாட்ஸ்கி என்ற எழுத்தாளிற்கும் ; “படைப்பாளியின் சொந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்கு மறைந்து கிடக்கின்றனவோ அந்த அளவு கலைப்படைப்புக்கு நல்லதுதான்’ என்று மர்கரெட் ஹார்க்னெஸ் என்ற எழுத்தாளிற்கும் எழுதிய கடிதங்களில் எங்கெல்ஸ் குறிப்பிடுவதும் 'பிரச்சாரம்’ என்பதற்கெதிராகத்தான். ‘சிக்காக்கோ’ மேதினத் தியாகிகளின் இறுதி உரையில் வரும், “எமது கல்லறைகளின் மெளனம், எங்கள் சொற்பொழிவுகளைவிட அதிகம் கதை சொல்லும்” என்ற வரிகளிற்கூட, பிரச்சாரத்திற்கும் கலைக்குமுரிய வேறுபாட்டின் சாரம் மறைந்திருப்பதை, நாம் உய்த்துணரலாம்.
2. “கலைத்துவம், கலைநயம், கலையழகு முதலியன இலக்கியத்திற்கு இன்றியமையாதன என்று ஒருவர் கூறியதும் அது யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய வெளிப்படையான நியதி உண்மை என்ற எண்ணமே முதலில் தோன்றும். ஆனால் சிறிது நுனித்து நோக்கும்போதுதான் முற்போக்கிலக்கியத்தைக் குறைகூறி அதற்கு மாசுகற்பிக்கும் கலைவாதிகள் முணுமுணுக்கும் “கலைத்துவம் ‘கலைநுணுக்கம் ‘கலைநயம்’ இவையெல்லாம் உண்மையில் எதைக்குறிக்கின்றன என்று தெரியவரும்.” “கலைவாதி பொதுப்படையாக இலக்கிய சிருஷ்டியில் கலையழகு இருத்தல் அவசியம்’ என்று ஆரவாரத்துடனும் தன்மேட்டிமைத்தனத்துடனும் கூறும்பொழுது அக்கூற்று அறிவாழமிக்கதாகத் தோன்றுகிறது. அதனையே பகுத்துச் சிறுகூறுகளாகப் பார்க்கையில் அதன் சுயரூபம் அம்பலமாகிவிடுகிறது’
“அழகியல் என்பது அவர்களின் பிரம்மாஸ்திரம். ஆழமாக நோக்கினால் கலைவாதிகள் அறிந்தோ அறியாமலோ சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபடும் எழுத்தாளின் ஆக்கங்களையே அழகியலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செயல் நிகழ்ச்சியல்ல; வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது.”
ஆகிய கைலாசபதியின் வரிகள், கலையம்சத்தை வற்புறுத்துவது சமூக மாற்றத்திற்கு எதிரானதென்றதும், அது அவ்வளவு முக்கியமற்றதென்றதுமான தொனியினையே கொண்டிருக்கின்றன. கலை இலக்கியத்தைப் போல இயற்கையையும், மனிதனையும், சமூக நிலைகளையும் பற்றிய மனிதனின் புரிதல்களையே இயற்கை
குறிப்பேட்டிலிருந்து.

45
விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும் வெளிப்படுத்தியபோதிலும் - இவற்றினால் பதிலியாக்கப்பட முடியாத வேறு ஏதோவொன்றிருப்பதனாலேயே நாம், இலக்கியத்தையும் கலையையும் மேலதிகமாகக் கோருகிறோம். பதிலியாக்கப்பட முடியாத அந்த அம்சம் கலைத்துவமும், அது தரும் உணர்வுப் பாதிப்பும்தான். அனுபவப்பாதிப்பு, அதனின் வெளிப்பாடாக வரும் விஷயம், தேர்வு, அழுத்தம், உத்தி, மொழிநடை, வடிவப் பிரக்ஞை என்பன இக்கலையம்சத்தைச் சாத்தியமாக்கும் கூறுகளாகும். இக்கூறுகளின் பூரண இயைபு இல்லாமல், “இலக்கிய வடிவம் எனச் சொல்லப்படும் ஏதோ ஒன்றினுள் சமூக விஞ்ஞானத்தையோ அல்லது இயற்கை விஞ்ஞானத்தையோ வெறுமனே இடம்மாற்றுவதில்’ நாம் திருப்தியடைய முடியாது. பிளக்கனோவ் ஒருமுறை சொன்னதுபோல், “வெறும் சவமாக அல்லாமல் உயிர்த்துடிப்புள்ள வடிவங்களை வெளிப்படுத்துகிறதா?’ என்று கேள்வி எழுப்பவேண்டியது எமக்கும் அவசியம்தான். “மரபுவழி அரசுரிமையில் நம்பிக்கை கொண்டவரும் இருண்ட கத்தோலிக்கப் பார்வைகொண்டவருமான’பால்ஸாக்கின்மீது, முற்போக்குவாதியான எமிலி ஸோலாவைக் காட்டிலும் மார்க்சும் எங்கெல்சும் பெரும் ஈடுபாடுகொண்டதும் இக்கலையம்சத்தினால்தான். “ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை அதன் சொந்த இலக்கிய அளவு கோலினாலேயே தீர்மானிக்கவேண்டும்” என்று ட்ரொட்ஸ்கியும், “நாம் அரசியல், கலை இரண்டினதும் ஐக்கியத்தை, உள்ளடக்கம் வடிவம் இரண்டினதும் ஐக்கியத்தை, புரட்சிகர அரசியல் உள்ளடக்கம் சாத்தியமான அதி உயர்ந்த அளவு பூர்த்தியான கலையியல் வடிவம் இரண்டினதும் ஐக்கியத்தைக் கோருகிறோம்'; “மார்க்ஸிஸம் எவ்வாறு பௌதிகவியலில் அணுத்தத்துவத்தையும், எதிர் மின்னணுத் தத்துவத்தையும் தழுவும் அதேசமயத்தில் அவற்றினிடத்தைத் தான் எடுக்க முடியாதோ, அதேபோல அது கலை இலக்கிய சிருஷ்டியிலும் யதார்த்தத்தைத் தழுவும் அதேசமயத்தில் அதனிடத்தைத் தான் எடுக்கமுடியாது. வெறுமையான, சாரமற்ற, வரட்டுவாதச் சூத்திரங்கள் உண்மையில் சிருஷ்டிகர மனோநிலையை அழிக்கத்தான் செய்கின்றன; அதுமட்டுமல்ல, அவை முதலில் மார்க்ஸிஸத்தை அழித்துவிடுகின்றன” என்று மாஓ சே - துங்கும்; “அரசியல் அளவுகோலே எல்லாமும் என்பதாகாது. இன்னும் அங்கு கலையியல் அளவுகோல் கட்டாயம் இருக்கவேண்டும்.”, “தத்துவார்த்த உள்ளடக்கமும் கலைத்தரமும் இயங்கியல்ரீதியில் இணைந்திருப்பது இலக்கியத்துக்கும், கலைக்கும் தேவையானதாயிருக்கிறது; ஒரு சிறந்த படைப்பு மிகக்கூடுதலான முயற்சியினைக் கோருகிறது” என்று சூ என்லாயும் குறிப்பிடுவனவற்றில், ‘கலையம்சத்தின் முக்கியத்துவம் அழுத்தப்படுகிறது. தீவிரவாதிகளால் இலக்கிய உலகில் நின்றும் 1957 இல் பின்னொதுக்கப்பட்டு, தற்போது மீண்டும் முன்னணிக்கு வந்துள்ள மக்கள் சீனக் கவிஞரான அய்கிங், "அழகியற் சிந்தனை கவித்துவமானது; எழுதுங்கலையில் அது அடிப்படை முறையாகவுங்கூட இருக்கிறது”, “எண்ணத்தின் கலைத்துவமான வெளிப்பாட்டைப் பொறுத்து, கவிதைகள் நித்திய வனப்பினைப் பெறுகின்றன” என்று குறிப்பிடுகையிலும் கலைத்துவம் வற்புறுத்தப்படுவதனைக் காணலாம்.
சமகால அரசியல் நிகழ்வுகளும், மார்க்சிய நோக்கும் கலையம்சத்துடன்
அ. யேசுராசா

Page 30
இணைந்த முற்போக்குப் படைப்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுவதானால் -
‘மண்ணும் மனிதரும் (சண்முகம் சிவலிங்கம் - 'தமிழமுது' , இல. 9, 1972). "தோழர் கியூ சம்பனுக்கு’ (போராளி - “குமரன்’, இலக். 47, 1975). "கண் விழித்திருங்கள்’ (எம். ஏ. நுஃமான் - 'மல்லிகை’, மே 1973), ஆகிய கவிதைகளையும், ‘சிறு தீப்பொறிமூண்டு பெரு நெருப்பாக எரியும்’ (எம். எல். எம். மன்சூர் - 'மல்லிகை’, ஓகஸ்ற் 1974). 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’(நந்தினி சேவியர் - "மல்லிகை’, நொவெம்பள் 1972). போன்ற சிறுகதைகளையும் குறிப்பிடலாம்.
3. ஒவியனுக்கு வர்ணங்களும்; சிற்பிக்கு மரம், கல், மண் என்பனவும்: இசைஞனுக்கு ஒலியும்போல எழுத்துக் கலைஞனுக்குரிய ஊடகமாயிருப்பது மொழியே. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவரும் தமது ஊடகத்தில் தேர்ச்சி காட்டவேண்டியது அவசியமானதாயிருப்பது, எழுத்துக் கலைஞனுக்கும் பொருந்துவதே. ஆகவே, அவன் தனது அனுபவ வெளிப்பாடுகளைச் சித்திரிப்பதில் திட்பநுட்பமான, அழகிய மொழிநடைக்குள்ள முக்கியத்துவம் தவிர்க்கப்பட முடியாததாகிறது; ஆனால், எமது கைலாசபதிக்கு இது முக்கியமாவதில்லை “இலக்கிய ஆக்கத்திலே மொழிநடைக்கு முதன்மை அளிக்கப்படவேண்டும் என்பதை” ஒதுக்கிவிடுகிறார். “நடைபற்றிய பேச்சு உண்மையில் பழைய காவிய இலக்கணங்களின் செல்வாக்கையே காட்டுகிறது', “. ஆனால் கலையழகு நடைச்சிறப்பிலேயே இருக்கிறது என்பது விபரீதமான வாதமாகும். அது ஒருவகையான இலக்கியப் பிரபுத்துவத்தின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும்” என்ற அவரது கருத்துக்களும் இதையே காட்டுகின்றன. கொஞ்சக் காலத்திற்கு முன் மரணமடைந்த சோவியத்ரஷ்ய எழுத்தாளர் கொண்ஸ்டாண்டின் ஃபெடினுடைய கருத்துக்கள், கைலாசபதியின் பல கருத்துக்களை விமர்சித்து மறுப்பதுபோல அமைந்துள்ளன.
“எழுத்தாளனுடைய செய்வினை பற்றிய பேச்சு எப்போதும் மொழியிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். மொழிதான் ஒரு படைப்பின் அடிப்படையம்சமாக எப்போதும் இருக்கும். படைப்பிலக்கியம் என்பது சொற்களாலாகிய கலையே. இலக்கிய உருவம் பற்றிய முக்கிய கொள்கையான கட்டமைப்பு என்பதுகூட, எழுதுவோனுடைய மொழி என்கின்ற தீர்மானம் நிறைந்த, முக்கிய அம்சத்திற்கு இடமளித்தாகவேண்டும்.”
“மொழிபற்றிய ஒரு பொறுப்பான கண்ணோட்டத்தையும், இலக்கியப் படைப்பில் திடனில்லாமையை அனுமதிக்க மறுக்குந் தன்மையையும், சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் சீரியமுயறி சியை மேற் கொள்ளுதலைக் கறி பிக் கும் ஆர்வதி தையும் இழிவுபடுத்துவதற்கென்றே "தூய்மைவாதம்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது.”
“கொள்கையை வெளிப்படுத்தும் தன்மை சொல்லுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் அந்தக்கருத்தை மிகச் சிறந்தமுறையில் வெளிப்படுத்தும் தன்மை அதற்கு
குறிப்பேட்டிலிருந்து.
 

இயல்பாகவே இருக்கிறது என்பதில்லை. அதனைத் தீர்மானிக்கக்கூடிய அம்சம் அதன் தரமேயாகும். ஒரேவிதமான கொள்கையளவினையுடைய இரண்டு கலைப்படைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தால் எதில் மொழியின்தன்மை அதிகச் சிறப்புடன் அமைந்திருக்கிறதோ அதுவே, கலைமதிப்பின்படிச் சிறப்பாக மதிப்பிடப்படக்கூடும். இதனை எழுத்தாளன் நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும்” என்பவை அவரது கருத்துக்களிற் சில. வேறோரிடத்தில் அவர், ‘எழுத்தாளன் கூட்டுறவு வீடுகட்டுவோர் சங்கத்திற்கு எழுதும் விண்ணப்பத்திற்கூட, மொழியில் அக்கறை காட்டவேண்டுமெனச் சொல்கிறபோது, 'படைப்பிலக்கியத்திலேயே மொழிநடைபற்றிய அக்கறையினைக் குற்றமாகக் கைலாசபதி காண்பதும் பெரிய விசித்திரந்தான்! இவரைப் போன்றவர்களுடைய கருத்துக்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கிய நம் எழுத்தாளர் பலரின் படைப்புகளில், தர்க்கரீதியாகவே மொழி சீரழிந்த நிலையினை அடைந்திருப்பதைக் காணலாம்; உதாரணத்திற்கு கே. டானியலை எடுத்துக்கொள்வோம்.
“சுகுணாவுக்கு அடுத்து நிற்பவள் ஒரு சின்னஞ் சிறுக்கி. ஜனநேந்திர உறுப்புக்களில் பெருமாற்றம் இன்றோ நாளையோ நிகழ்ந்துவிடப் போகிறது (உலகங்கள் வெல்லப்படுகின்றன’ சிறுகதையில்).
விரைவில் பெரியபிள்ளையாகலாம் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்; பன்மையினால் நிகழும் தவறும் மிக அபத்தமானது.
‘எங்கோ இருந்துவந்த அவளைப்பற்றி வந்த வதந்திகள் மிக மோசமானவை. அவள் செய்வது மாமிச வியாபாரம் (நிழலின் கதிர்கள்’ சிறுகதையில்).
அவள், இறைச்சிக் கடையேதும் நடாத்தவில்லை; விபச்சாரியாயிருக்கிறாள் என்பதே இவ்வாறு சொல்லப்படுகிறது!
‘எல்லோருமே இதனிடம் (வளர்ப்பு நாயிடம் - எனது குறிப்பு) பிரியமாக இருக்கின்றனர். பிரியமாகவா? உயிரையே வைத்துக் கொண்டிருக்கின்றனர். முகத்தோடு முகமொட்டிக் கொஞ்சுகின்றனர். மட்டர்’ என்ற கொழுப்பையோ ‘யாம்” என்ற பழக்குழம்பையோ உள்ளங்கையில் வைத்து ஊட்டுகின்றனர்' (உலகங்கள் வெல்லப்படுகின்றன’ சிறுகதையில்).
எளிமையின் சீரழிவினை இங்கு காணலாம். பசுவைப்பற்றி எழுதவந்தால், “அது நான்கு கால்களுள்ள மிருகம் ; வெள்ளைநிறப் பாலை அது தரும்’ என்று எழுதினால் அதுகூட ஏற்றுக்கொள்ளப்படும் போலும்!
மொழிநடை பற்றித் தாமே ஒப்புக் கொண்ட விஷயங்களிற் கூட விழிப்பின்மையாலும், ஆற்றலின்மையாலும் நிலவும் தவறுகளிற்குப் பேச்சுமொழி - மண்வாசனை பற்றியவை நல்ல உதாரணங்கள்.
அ) பேச்சுமொழி கையாளப்படுவதில் பலருக்கும் உடன்பாடு. ஆனால், ஆற்றலின்மையால் “பேச்சு வழக்கையும் எழுத்து வழக்கையும் சேர்த்தே பலர் உரையாடலிற் கையாள்கின்றனர். இரண்டு உலகங்களில் வாழும் நிலையாக இதனை அ. சண்முகதாஸ் குறிப்பிடுகிறார் (ஆக்க இலக்கியங்களும் மொழியியலும்’ என்ற
அ.யேசுராசா

Page 31
S
கட்டுரை - 'மல்லிகை’, ஓகஸ்ற் 1976), டொமினிக் ஜீவா, கே. டானியல், திக்குவல்லை கமால் போன்றவர்களின் படைப்புகள் அதில் உதாரணங்களாகத் தரப்பட்டுள்ளன.
ஆ) எமது வாழ்நிலையின் தனித்துவத்தை உணர்த்தும் மண்வாசனைச் சொற்கள் கையாளப்படவேணி டுமென்பது, பெரிதும் வற்புறுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதொன்று. ஆயினும் சாலையின் திருப்பத்தால் திரும்பி, சில கஜதூரம் நடந்து, மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குவதாகவும் (டொமினிக் ஜீவாவின் சிறுகதைகளில்); காப்பி தயாராக இருக்கிறது’, ‘இதனால் பேதுரு எத்தனை காலம் சீக்காகப் படுத்திருந்தான்’, ‘குங்கும மசியும் தடவிக்கொண்டு’, ‘ஸ்டேசன் பிளாட்பாரத்தில் ஏறி’ என்பதாகவும் ("டானியல் கதைகள்’ தொகுதியில்) பலர் எழுதுகிறார்கள். மொழிநடையின் இப்பலவீனங்கள் படைப்பின் தரத்தைக் குறைப்பனவே!
இறுதியாக, இவையெல்லாம் தொடர்பாக ‘இலக்கிய இயங்குமுறை பற்றிச் சில கருத்துக்களையும் சொல்லத் தோன்றுகிறது. உள்ளடக்கம், கலையம்சம், மாறுபாடான அபிப்பிராயங்கொள்ளுதல் தொடர்பான இடது தீவிரவாதத்தினால் தீங்குகளே அதிகம். அரசியலில் ஐக்கிய முன்னணி பற்றிய கருத்தின் அவசியம் உணரப்படுகையில், அச்சூழலில் உள்ள இலக்கியத்தில் அதன் முக்கியத்துவம் ஏன் மறுக்கப்பட வேண்டும்? முற்போக்கில்லாதவையெல்லாம் தூக்கிவீசப்பட வேண்டுமென்பதற்குப் பதிலாக, பிற்போக்கில்லாதவற்றையெல்லாம் நேசபாவத்தோடு ஏற்றுக்கொண்டால் என்ன? இத்துறையில் “கட்சிக்கும் - சோசலிசத்துக்கும் எதிரானதாய் இல்லாதவரை அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதைத் தடைசெய்ய ஒருவருக்கும் உரிமையில்லை” என்ற சூ என்லாயின் கருத்தினைக் கவனத்திலெடுக்க வேண்டும். நிலவுகிற சமூக அமைப்பில் அதிருப்தியடைந்து, இயல்பாக அதனை வெளிப்படுத்தும்போதும் அதில் எதிர்மறையாய் வெளிப்படும் கண்டனம் - முற்போக்கான சமூக வளர்ச்சிக்கு உதவுவதாகவே இருக்கும். கலையம்சத்திலும், வடிவங்களிலும் பல்வகை வெளிப்பாடுகளை அங்கீகரிக்கவும் வேண்டும். நூறுமலர்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் தோன்றட்டும்’ என்பதன் அடிப்படை நோக்கமும் இதுவேதான். முக்கியமான இன்னுமொன்று, ‘வெறும் கோஷ்டிவாதத்தைப் பேணி சமநிலையில் நின்றும் விலகுவது. இத்தகைய அணுகுமுறையினால்தான் தம்மோடு நிற்பவர்களை மட்டுமே முற்போக்கினராகக் காண்பதும், அவர்களின் தவறான படைப்புக்களைக்கூட விமர்சிக்காததும், வெளியில் நின்றவர்களின் படைப்புக்கள் பிற்போக்காளருடையவை என வேண்டுமென்றே ஒதுக்கப்படுவதும், நண்பர்களை எதிரிகளாக்குவதும் எனக் கடந்தகாலத்தில் நிகழ்ந்தன. இந்நிலையில், புகழ்பெற்ற விமர்சகர் ஜோர்ஜ் ஸ்ரைனரின் கருத்தினைச் சுட்டி முடிப்பது பொருத்தமானது :
“கட்சியின் இறுகிய எல்லைகளுக்கு வெளிப்புறத்தில், மார்க்ஸிஸத்தின் சரித்திரபூர்வ 'மித்தோலொஜி'யால் (Mythology), தர்க்கவாத முறையால் கணிசமான அளவு பாதிக்கப்பட்ட அல்லது அதை மையமாகக்கொண்ட சிந்தனை உள்ளவர்களான
குறிப்பேட்டிலிருந்து.

விமர்சகர்கள், கலாரீதியான தத்துவவாதிகள் எணணற்றவர்கள் இருக்கிறார்கள் பல ‘கோட்பாட்டாளர்கள் மற்றும் ‘நடைமுறை விமர்சகர்களும் உள்ளார்கள். இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுள்ள எவரும் இவர்களைப் புறக்கணிப்பாரேல், பெரிதும் தவறு செய்தவராவார்கள்.”
இக்கட்டுரையில் காணப்படும் மாஒ சே - துங், சூ என்லாய், கொன்ஸ்டான்டின் ஃபெடின் ஆகியோரின் கருத்துக்கள் முறையே, பின்வருவனவற்றிலிருந்து பெறப்பட்டன.
1. “யென் ஆண் கலை இலக்கியக் கருத்தரங்கு
உரைகள். 2. ‘கலை, இலக்கியம் பற்றி சூ என்லாய்’ (1961 இல் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு - "பீக்கிங் றிவியூ", இலக். 13, பங்குனி 1979). 3. “கலையும் மொழியும்’ (N. C. B.H. வெளியீடு).
தடிப்பு எழுத்துக்கள் என்னாலிடப்பட்டவை. O
அலை - 13 பங்குனி 1980
9. GusGustafst

Page 32
4.
Vs
4.
4.
தேசிய இனப் பிரச்சினையும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் என்கின்றபோது, ஒரு தேசிய இனம் என்ற ரீதியில், தமிழ் மக்களிற்குக் காலத்திற்குக் காலம் இலங்கையில் இழைக்கப்பட்ட பாரபட்சங்களும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் சிறுகதைகளில் எவ்வாறு இடம்பெற்றிருக்கின்றன என்பதே, பெறப்படுகின்றது. தமிழர்கள் ஒரு தேசிய இனமா? அவர்கள் இழந்த உரிமைகள் ஏதாவது உண்டா? என்ற கேள்விகள் முன்பு சிலரிடம் இருந்தனவாயினும், அவ்வாறு கேட்போர் யாரும் இன்று இல்லை.
1947ஆம் ஆண்டிலிருந்து, திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள்மூலம் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்பட்டு வந்தன. 1948 இல் மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. 1958 இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; அதையொட்டிய கலவரத்தில், தமிழர்கள் 150 பேர் வரை கொல்லப்பட்டனர். 1958 இல் பெரிய இனக்கலவரம்.
குறிப்பேட்டிலிருந்து.
 

1961 இல் சாத்வீகமான சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தால் முறியடிப்பு. 1972 இல் சிங்கள மொழிக்கும் பெளத்தத்திற்கும் முதன்மை கொடுத்து - தமிழர்களின் சிறிய பாதுகாப்பையும் இல்லாமலாக்கும் அரசியலமைப்பு, நடைமுறைக்கு வந்தது; அதே காலங்களில் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்களைத் தகர்க்கும் தரப்படுத்தல் திட்டத்தினதும் அறிமுகம். 1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதல். 1977 இல் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு - ஆயுதப்படைகளின் ஒத்துழைப்புடன் - தமிழர்மீது நடத்தப்பட்ட இன வன்முறை. 1981 இல் தமிழ்ப் பிரதேச நகர்கள் எரிக்கப்பட்டன. 1983 இல் முன்னரெல்லாவற்றையும் விடப் பெரிய இனக்கலவரம் அதன் பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளிற்கெதிராக விடுதலை இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டமும், அரசுப் படைகளால் மக்களின்மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களும் நிகழ்ந்தன. தமிழ் மக்கள் மரணத்துள் வாழ்ந்தனர். 1987 ஆடி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் பிறிதொரு பரிமாணம் ஏற்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி, ஆரம்பத்திலிருந்தே தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளிற்காகவும் குரலெழுப்பி வந்தது , முக்கியமாக, பாரம்பரிய பிரதேசங்கள் என்பதை அதுவே வலியுறுத்தி வந்தது. பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாறி தனிநாட்டுக் கோரிக்கையினையும் முன்வைத்தது; 1977 தேர்தலில் தமிழ் மக்களின் அங்கீகாரமும் கிடைத்தது. ஆரம்பத்தில் தமிழ் மக்களிற்காகக் குரலெழுப்பி வந்த இடதுசாரிக் கட்சிகள், சிங்கள பெளத்தப் பெருந்தேசியவாத உணர்வலைகளின் முன்னால் 1960 களில் சரணடைந்தன. இலங்கையின் முக்கிய - சுதந்திர - மார்க்சிய ஆய்வாளர்களில் ஒருவரான கலாநிதி குமாரி ஜயவர்த்தனா இந்நிலைமைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :
“1985 ஆம் ஆண்டுகளில் பிரதான இடதுசரிக் கட்சிகள் இனவாத அரசியலைச் சரணடைந்தன. 1970 ஆம் ஆண்டுகளிலும் 1980 இன் முற்பகுதியிலும் சிங்கள மேலாதிக்கவெறிவாதத்தின் ஆதிக்கம், சமூகத்தின் சகல வர்க்கத்தினரிடையேயும் செறிந்து பரவியது. தொழிலாளர் வர்க்கக் கட்சிகளுடைய கொள்கைகள் மேலாதிக்கம் பெற்று மக்களால் பரவலாகப் படிக்கப்பட்ட இடதுசாரிப் பத்திரிகைகளால், இனவெறி ஊக்குவிக்கப்பட்டது. நகர்ப்புற, கிராமப்புற சிங்களத் தொழிலாளி மக்களிடையே இடம்பெற்ற இனவாதக் கருத்தியலுக்கு எதிராகச் செயற்படுவது, கடினமாயிற்று”
(இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள், பக். 131-132). இன்னோரிடத்தில் : “எஸ். எல். எவ். பி. எல். எஸ். எஸ். பி. கொம்யூனிஸ்ற் கட்சி ஆகியவை இணைந்த சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணி 1970 ஆம் ஆண்டு, மாபெரும் வெற்றி பெற்றது. நெருக்கடி நிலையை அடைந்த இனப்பிரச்சினைக்கு அவ்வரசு தீர்வு ஏற்படுத்தும் என நம்பப்பட்டது. ஆனால் சிறுபான்மையினர் இக்கூட்டரசின் காலத்தில் (1970-1977) ஏமாற்றமேயடைந்தனர். எதிர்பார்க்கப்பட்ட ‘சோஷலிச ஜனநாயகம்’ சிறுபான்மையினரின் பார்வையில் சிங்களப் பெளத்தர்களுக்கு மட்டும் உரியதாக அமைந்தது. இதனால், அது சோஷலிசமாகவோ அல்லது ஜனநாயகமாகவோ அமையவில்லை.” (மேலது. பக். 148).
அ. யேசுராசா

Page 33
1966 ஜனவரி 8 இல் தமிழ்மொழி விசேட சட்டத்திற்கெதிராக, “தலதெல், மஸாலவடே அப்பிற்ற எப்பா”(“நல்லெண்ணெய் மசாலவடை எங்களுக்கு வேண்டாம்”) என்ற கோஷத்தையும் இவர்கள் முன்வைத்தனர்.
தமிழ்த்தேசியவாத உணர்வுகளை வெளிப்படுத்திவந்த தமிழரசுக் கட்சியோ, பின்னர் வந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ, கலாசார நிறுவனமொன்றைக் கட்டி வளர்ப்பதில் அக்கறை செலுத்தவில்லை ; அவர்களின் பத்திரிகைகளான சுதந்திரனும், சுடரும் கலாசாரத்துறையில் ஓரளவிற்கே செயற்பட்டன. கொம்யூனிஸ்ற் கட்சி சார்பினைக் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ நிறுவன அமைப்பைக் கொண்டிருந்தது ; கலை இலக்கியங்களை “பிரச்சாரக் கருவிகளாகவும் அவர்கள் கருதினர். இந்த அமைப்பினர் தமிழ் மக்களிடையில் விழிப்புப் பெற்றுவந்த தமிழ்த்தேசியவாத உணர்வுகளைப் பிற்போக்கானதாக - இனவெறியாகச் சித்திரித்தனர். இன, மொழி ரீதியான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் கலை, இலக்கியங்கள் படைக்கப்படுவதற்கு எதிராக இயங்கினர், பதிலாக தேசிய ஐக்கியத்தை முன்னிறுத்தினர். இதன் காரணமாக இன ஒடுக்குமுறை பற்றிய படைப்புக்கள் சிறுபான்மையாகவும், இடதுசாரி முற்போக்காளர்கள் வற்புறுத்திய சாதி, வர்க்கப் பிரச்சினைப் படைப்புக்களே பெரும்பான்மையாகவும் வெளிப்பட்டன. ஒருவகையில் இங்கு யதார்த்தம்’ தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனையே “தமிழர் தேசிய ஒடுக்கல், விழிப்புணர்வு பற்றி இலக்கியம் படைத்தால் இனவாதம் பேசுகிறோம் என்று கூறி, சிங்களப் பெருந்தேசியவாதத்துக்கு அடிமையாகிப்போன இலக்கிய விமர்சகர்களின் புண்ணியத்தில், தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வெளிக்கொணரும் ஓரிலக்கியம் வளராமல், முளையிலேயே நசிந்துவிட்டது” என திருமதி நிர்மலா நித்தியானந்தன், ஒரு கோடை விடுமுறை நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
1975 இல் சுடர், அலை போன்ற சஞ்சிகைகளின் தோற்றத்தோடுதான் தேசிய இனப் பிரச்சினை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள், அழுத்தம் பெறத் தொடங்கின. 1983 இனக் கலவரத்தின் பின்னர், குறிப்பாக 1985 மத்தியின் பின்னர் மேலும் பரந்த அளவில், இது முக்கியத்துவம் பெற்றது.
1975 இற்கு முந்திய படைப்புக்கள் தொகுக்கப்படாததால், அவைபற்றிச் சரியான கணிப்புக்களை எடுப்பது கடினமாகவுள்ளது; சிலவற்றைத் தவிர பலதையும் வெறும் தகவல்களாகவே அறியமுடிகிறது. இத்தகைய பின்னணிகளில் படைப்புக்களை நோக்கும்போதும் இலக்கியத்தன்மைக்கு - கலைத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியமானதாகும். “ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்த பின்புதான், மார்க்சியக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை மதிப்பிடுதல் வேண்டும்.” என்ற ட்ரொட்ஸ்கியின் கூற்றை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானதாகும். கடந்த காலங்களில் ‘வெறுமனே உள்ளடக்கத்தைப் பார்ப்பதே மேலாதிக்கங்கொண்டிருந்தது; இன்று அதன் தவறான தன்மை பற்றிய புரிதல்கள் பல மட்டங்களில் ஏற்படத் தொடங்கியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. வசதி கருதி சில பிரிவுகளின் கீழ் சிறுகதைப் படைப்புக்களை நோக்குகிறேன்.
குறிப்பேட்டிலிருந்து.

1. பிரஜா உரிமைப் பிரச்சினை
அ) காளிமுத்துவின் பிரஜா உரிமை என்ற கதையினை அ. செ. மு. எழுதியுள்ளார். பிரஜா உரிமையைப் பெற்றுவிடுவதில் காளிமுத்து அந்தரப்படுகிறான்; ஆனால், அதிகாரிகள் பலவற்றாலும் திருப்திப்படவில்லை . மேலும் அத்தாட்சி கேட்கின்றனர். அரசமரத்தின் கீழ் அவனது பாட்டன் புதைக்கப்பட்டிருந்தான். மரத்தைத் தறித்து அதனடியில் ஆவேசமாகக் கிடங்கு கிண்டியவன், அதனுள் அகப்பட்ட கை எலும்பை அதிகாரிகளிடம் அத்தாட்சியாகக் காட்டுகிறான். அவர்கள் அவனுக்குப் பைத்தியமெனச் சொல்கின்றனர். சில இடங்களில் பேச்சு வழக்கு இயல்பாக இல்லை. ஆனால், பிரஜா உரிமை பற்றிய அவனது தவிப்பு எம்மில் பரவுவதில், நல்ல கதையாகிவிடுகிறது.
ஆ) செந்தூரன் எழுதிய உரிமை எங்கே? சிறுகதையில் சுப்பையா நாயக்கர், தனக்கும் குடும்பத்தாருக்கும் பிரஜா உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்டி அலுவலகத்திற்குப் போகிறார் ; ஆனால் அவரது மகிழ்ச்சி நொருங்குகிறது. உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விளைந்த மகிழ்ச்சியும், ஏமாற்றமும் இதில் நன்கு சொல்லப்படுகிறது. ஆயினும், இறுதிப்பகுதி கருத்துக்கொட்டலாக - பிரச்சாரமாக - வீழ்ச்சியடைகிறது.
2. சிங்களக் குடியேற்றங்களால் தமிழ்ப் பிரதேசங்கள் பறிபோவது
திருக்கோணமலைக்குப் போய் மூன்று நாள்கள் நின்ற ‘சிவம்’ அது சிங்களமயமாகிவிட்டதை எரிச்சலோடு உணர்வதை, சாந்தனின் அந்நியமான உண்மைகள் (1975) சொல்கிறது. நன்றாகச் சொல்லப்பட்டுள்ளபோதும், மேலெழுந்தவாரியான உணர்வே அதில் வெளிப்படுத்தப்படுகிறது. அரச உதவியுடன், திட்டமிட்ட ரீதியில் நடைபெறும் செயற்பாட்டின் விளைவு இது என்ற உணர்வு கோடிகாட்டப்படாதது, இக்கதையின் முக்கிய பலவீனம் , சரியான பார்வையின்மையே இதன் காரணம். வெள்ளவத்தையில் தமிழர்களை அதிகமாகக் காணும் ஒரு சிங்களவரும் இக்கதாநாயகனைப் போல் ஆத்திரப்படலாம்; சாந்தனின் பார்வை இதனையும் நியாயப்படுத்துவதற்குத் துணைசெய்வதாய் உள்ளது. உண்மையில், திருக்கோணமலையின் நிலை அதிலிருந்து வேறுபட்டது. W
3. மொழிப்பிரச்சினை
அ) சாந்தன் எழுதிய கிருஷ்ணன் தூது (1981), ஓர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் கடிதத் தலைப்பில் சிங்களத்துடன் தமிழும் இடம்பெறாமையைச் சுட்டித் தமது உரிமையை நிலைநாட்ட முயலும் சில தமிழ் ஊழியர்களின் நடத்தையைச் சித்திரிக்கிறது. சிங்களவர்கள் ‘தமிழ்’ பற்றிக் காட்டும் அலட்சியம், தவறான மனோபாவம், பயந்த தமிழர்களினதும் சிங்கள அதிகாரியினதும் ஊசலாட்டம் போன்றன செப்பமான மொழியில், இறுக்கமாகவும் தாக்கமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன ; நன்றாக வந்துள்ள
அ.யேசுராசா

Page 34
கதையாகும் இது. “தென்னிலங்கை மக்கள் இவ்விடயம் - அரசகரும மொழியின் சம அந்தஸ்து - தமது முகத்தில் அறைவதாய் உணர்ந்தனர்” என்று, 1956 இல் பண்டாரநாயக்கா சொன்ன கருத்தும் நினைவுக்கு வருவதில், எனக்கு இக்கதை மேலும் முக்கியம் பொருந்தியதாய் ஆகிவிடுகிறது.
ஆ) அப்பே லங்கா என்றொரு கதையைப் புதுமைலோலன் எழுதியிருப்பதாய்த் தெரிகிறது. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்தவர்களை அடக்க அரசு காடையர்களைப் பயன்படுத்துவதை, இது சித்திரிக்கிறதாம் ; படிக்கக் கிடைக்கவில்லை.
இ) மனிதர்கள் - மனங்கள் - மானங்கள் என்ற கதையைச் சாந்தன் எழுதியுள்ளார். சிங்களச் சோதனை எழுதும் அரச ஊழியனைப் பற்றியது இது. கதாநாயகன் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் எழுதுகிறான். இடையில், தான் சிங்களம் படித்த Miss பெரேராவைப் பற்றியும் அவள் தன்னில் காதல் கொண்டதையும், தனது அதிகாரி பெர்னாண்டோ தமிழர்களின் “பெயர்கள் பற்றி - அதன் சிங்களமூலம் பற்றி - குறிப்பிட்டதையும் நினைக்கிறான். பரீட்சை நிலையத்திலிருந்து இவ்வாறெல்லாம் நினைப்பதானது செயற்கைத் தன்மையை எழுப்புகிறது. சிங்கள மொழிச் சட்டத்தின் பாரபட்சம், அதனால் தமிழர்கள் படும் அவலம் பற்றிச் சீரியஸான கருத்தேதுமில்லாத இதன் கதாநாயகன், பீட்சை அலுவலர்கள் இருவர் தமக்குள் “பாரேன் இந்தப் பரிதாபங்களை’ என்று கதைத்ததைக் கேட்டதும், விடைத்தாள்களைப் பேனையால் கோடிட்டு வெட்டிவிட்டுக் கொடுத்துச் செல்வது, நம்பும்படியாக இல்லை : ஒரு செயற்கையான கதையாகவே படுகிறது. r
ஈ) செ. யோகநாதனின் உறை என்ற கதையும் செயற்கையானதாகவே இருக்கிறது. அழகான வண்ணப்படங்கள் உள்ள - ஆனால் சிங்களத்தில் எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட - கடதாசியினால் தனது புத்தகங்களிற்கு உறை போட ஒரு பதின்மூன்று வயதுச் சிறுவன் மறுக்கிறான். அவன், தகப்பனுக்குச் சொல்கிறான் : “ஒரு இடத்திலை கூட தமிழிலை விளக்கமில்லை. இதெல்லாம் அரசாங்க அச்சகத்திலை தான் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு எழுத்துக்கூடத் தமிழிலை இல்லை.” இது 1982 இல் எழுதப்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
4. தமிழர்களின் போராட்ட வரலாற்றில் 1961 இல் நடைபெற்ற ‘சத்தியாக்கிரகம்’ முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய தலைமுறையினரின் சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கையாக அது இருக்கிறது; அத்தோடு, 1953 இல் இடதுசாரிகள் நடத்திய மாபெரும் ஹர்த்தாலுக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற மாபெரும் வெகுஜனப் போராட்டமாக - இரண்டு மாதங்கள் வடக்குக் கிழக்கில் அரசு நிர்வாகத்தினை ஸ்தம்பிக்கச் செய்த - நடவடிக்கையாகவும் அது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வரலாற்று நிகழ்வைச் சில கதைகள் சித்திரிக்கின்றன.
அ) உரிமைக்கு உயிர் என்ற கதை (1962) முத்து சிவஞானத்தினால்
குறிப்பேட்டிலிருந்து.

எழுதப்பட்டிருக்கிறது. சத்தியாக்கிரகத்தில் ‘துரைராசன்’ பங்குபற்றுகிறான். அவனது தங்கை கோமளாவும் பங்குபற்றுகிறாள். இரவு இராணுவம் திடீரெனச் சத்தியாக்கிரகிகளைத் தாக்குகிறது. நோயாளித் தாய், தங்கையின் எதிர்காலம், என்பவற்றை யோசித்து துரைராசன் எழும்பி ஓடுகிறான். தங்கை அசையாதிருந்து அடி வாங்குகிறாள்; பின்னர் ஆஸ்பத்திரியில் இறக்கிறாள். தங்கையின் மரணம் துரைராசனைத் தாக்குகிறது ; போராட்டங்களில் பங்குகொள்ள உறுதிகொள்கிறான். ஆசிரியரின் சம்பவச் சித்திரிப்புத் திறன் பிசிறில்லாமல் செல்கிறது. அவர் கருதிய தாக்கத்தைப் படைப்பு ஏற்படுத்துவதில் நல்ல கதையாக, மனதில் பதிகிறது.
ஆ) செங்கை ஆழியான் நாட்டிற்கு இருவர் (1982) என்ற கதையை எழுதியுள்ளார். சத்தியாக்கிரக ஊர்வலத்தில் கலந்துகொள்ள முனையும் இளைய மகனைத் தாய் தடுக்கிறாள். மூத்த மகன் அரசியலில் ஈடுபடுவதும் அவளிற்குப் பிடிக்கவில்லை. சத்தியாக்கிரகத்தை இராணுவம் தாக்கியதில் மூத்த மகன் இறக்கிறான். அவனைப் பலர் புகழ்கின்றனர் ; தாயின் உணர்வு மாறுகின்றது, தமையன் விட்ட இடத்தை நிரப்பச் சொல்கிறாள். கதையின் அமைப்பும் உரையாடலும் செயற்கையாக இருக்கின்றன. உணர்வு இறுக்கமாக வெளிப்படுத்தப்படாததால், ‘வெறும் கதை'யாகவே இருக்கிறது.
5. இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் - சரியாகச் சொன்னால் தமிழர்மீது நிகழ்த்தப்பட்ட இன வன்முறைகளே, தமிழர் பிரச்சினைகளை உலகெங்கும் தெரியப்படுத்தின. இதுபற்றி பல கதைகள் எழுதப்பட்டுள்ளபோதும், மிகச் சில கதைகள்தான் நல்ல கதைகளாகத் தேறுகின்றன. பெரும்பாலான கதைகள் 'வெறும் உணர்ச்சிக் கதைகளாகவே நின்றுவிடுகின்றன. மு. தளையசிங்கம் எழுதிய ‘இரத்தம்', வரதர் எழுதிய ‘கற்பு’, பிறான்சிஸ் சேவியர் எழுதிய ‘எதிரொலிகள்', ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘பேய்களுக்கு
யார் பயம்?’ ஆகியவை நல்ல கதைகள்.
அ) இரத்தம் - 1958 இனக்கலவரத்தில் எட்டுப்பேரால் கற்பழிக்கப்பட்டு : ‘விசரி’ போலாகிவிட்ட ‘கமலத்’தைக் கண்ட ஓர் இளைஞனின் உணர்வுகளைச் சித்திரிக்கின்றது. கணவன் பொன்னம்பலம் அடித்துக் கொல்லப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டுத் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டு, எளிக்கப்படுகிறான். எமக்குக் காலாதிகாலமாய் ஊட்டப்படும் மரியாதை மரபு, அடங்கிச்செல்லும் பண்பு போன்றவற்றின் கையாலாகாத்தனம் உணர்த்தப்படுகின்றது. பஸ்ஸில் ஏறுகையில் மண்டை அடிபட்டு இரத்தம் வழியும்போது “கொண்டக்டர் - நடத்துநர் - பதற்றப்படுகிறார். இளைஞன் இரத்தத்தைப் பச்சையாகப் பார்க்கிறான் - பதற்றப்படாமல். வழிநடத்துபவரின் சநாதனப் பார்வைக்கு மாறாக, வன்முறையை நோக்கும் புதியபார்வை குறியீடாக வெளிப்படுத்தப்படுகிறது. இறுக்கமான கட்டமைப்பு ; செறிவான மொழி நடை , அழகான கதை.
ஆ) கற்பு கதையும் 1958 கலவரம் பற்றியதே. கணபதி ஐயரின் மனைவியை மூவர் கற்பழிக்கின்றனர். வன்முறையின் முன் பலமிழந்த மனிதர்கள். தன் மனைவி
அ. யேசுராசா

Page 35
மனத்தினால் கற்பிழக்கவில்லையென கணபதி ஐயர் நம்புகிறார் ; தன் நண்பருக்கும் வெளியிடுகிறார். இன்றுவரை தொடரும், எமது பெண்களின்மீதான ’பாலியல் வன்முறை என்ற முக்கிய பிரச்சினையில் ஒரு வெளிச்சத்தினை இக்கதை. ‘காலத்தைக் கடந்தும் பாய்ச்சி நிற்கிறது. மனதில் பதியும் இந்த நல்ல கதையை "வரதர்’ எழுதியுள்ளார்.
இ) எதிரொலிகள் என்ற கதையை பிறான்சிஸ் சேவியர் எழுதியுள்ளார். 1977 கலவரத்தில் கொழும்பிலிருந்து திருமலை பஸ்ஸில் வருகையில் ‘ஹபரணையில் தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள், அதில் தப்பிய தமிழ் இளைஞனை உறுத்துகின்றன. உதவி கோரிய பெண்ணுக்கு உதவவில்லை; வாளால் வெட்டுப்படும்போது அபயமெழுப்பியவனையும் காணாதவனே போல் நின்றான். திருமலைக்கு வந்தபின் 'குற்ற உணர்வில் தவிக்கிறான். திருமலையில் கலவரம் வெடிக்கையில், தன்னுடன் வேலைசெய்யும் சிங்களப் பெண் சோமாவை அவள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் விடுகிறான். தாயை எண்ணிப் பயந்தபடியே தனது ஊரிற்குச் செல்லுகையில், பாதையில் எதிரே இரு தமிழர்கள் வாளால் தாக்கப்படுகின்றனர். ஒடிச்சென்று தடுத்துத் தாக்குகிறான்; காயப்பட்டு மயங்குகிறான். குற்ற உணர்வும், விழிப்பும், மனிதநேசங்கொண்ட செயற்பாடும் ‘எதிரொலிகளாக’ நன்றாக வெளிப்படுத்தப்படுகின்றன.
ஈ) பேய்களுக்கு யார் பயம்? - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதியது (1980), லண்டனில் தனது அறையில் மகாதேவன் பயங்கர நினைவுகளுக்கு உள்ளாகிறான். 1977இல், அனுராதபுரத்தில் கற்பழிக்கப்பட்டு பின்னர் தற்கொலை செய்த தமக்கையின் நினைவு உறுத்துகிறது. பிரமைகளிற்கு உள்ளாகிறான் ; பேய்கள் உலாவுவது போல் கனவுகண்டும் கத்துகிறான். வீட்டுக்காரக் கிழவன், முன்பு அந்த அறையிலிருந்த இலங்கைப் பெண் தற்கொலை செய்ததைக் கூறிவிட்டு, “பேய்க்குப் பயமா?” என்று கேட்கிறான். அவன் வெறுமனே நினைக்கிறான் - ஆசிரியர் பின்வருமாறு எழுதுகிறார் :
மகாதேவன் வெறித்துப் பார்க்கிறான். ‘பேய்களை உண்டாக்கி உலகத்தை உறிஞ்சும் மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டுதான் பயப்படுகிறேன்.
ஒருகாலத்தில், அந்தமாதிரிப் பேய்க்கூட்டத்தை அழிக்க வல்லமையும் உண்மையுமுள்ள பூசாரிகள் உண்டாவாரென நம்புகிறேன் என்று சொன்னால், கிழவனுக்கு விளங்குமா?’
கதை முடிந்துவிடுகிறது. ‘பூசாரிகள் உண்டாக வேண்டுமென்ற உணர்வு எம்முள்ளும் பாய்வதில், கதை வெற்றியடைகிறது.
உ) செ. யோகநாதனின் ‘இன்னொரு மனிதன்', செ. கணேசலிங்கனின் ‘சங்கமம், நவத்தின் ‘நந்தாவதி”, உதயணனின் ‘தேடிவந்த கண்கள்’ ஆகிய கதைகளில், சிங்களப்பாத்திரங்கள் இறக்கின்றன - தமிழர்களைக் காப்பதற்காக அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதற்காக, இவற்றின் கட்டமைப்பில் செயற்கைத்தனங்கள் உள்ளன. சாந்தனின் ‘மனிதர்களும் மனிதர்களும் கதையிலும் ஒருவகைச் செயற்கைத்தனமும்,
குறிப்பேட்டிலிருந்து.
 

பிழையான நோக்குநிலையும் காணப்படுகின்றன. 1977 இனக்கலவரப் பின்னணியில், இது நிகழ்கிறது.
8. தரப்படுத்தல்
70 களில் தமிழ் மாணவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கிய இத்திட்டம் செ. யோகநாதனின் பொய்மையின் நிழலில் என்ற கதையில் கையாளப்படுகிறது. தமிழர்களின் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற கூற்றின் அழுத்தத்தைக் குறைக்கும் முறையில், வேறொரு விளக்கத்தையே ஆசிரியர் முன்வைக்கிறார். மொழி பல இடங்களில் செயற்கையானதாக இருக்கிறது. ஒரு தயாரிப்புக் கதை’ என்ற உணர்வே படித்து முடிக்கையில் எழுகிறது!
7. எழுபதுகளில், நிலச் சுவீகரிப்பு என்ற பெயரில், மலையக மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய முன்னணி அரசு எடுத்தது. ‘தேசிய மயமாய்ப் போலிச் சமதர்மக் காற்று வீசியபோது’ ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றை, எஸ். கே. கருப்பையா எழுதிய எங்கள் இரத்தங்கள் வித்தியாசமானவை என்ற கதை சித்திரிக்கின்றது. சிவனு - இலட்சுமணன் கொல்லப்பட்டதற்கும், டெல்டா தோட்டத்து லயன்கள் எரிக்கப்பட்டதற்கும், பொலிசாரின் மிருகத்தனமான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்து, பாடசாலை மாணவர்கள் ஹட்டனில் ஊர்வலம் நடத்துகின்றனர் ; பொலிசாரும் காடையரும் தாக்கியதில் பலர் காயப்படுகின்றனர். பாதிப்புற்ற பாலா என்ற மாணவன், ‘எங்களிடமும் ஆயுதம் இருந்தால்.’ என்று சிந்திக்கத் தொடங்குகிறான். ஆசிரியரின் உணர்வு ஓரளவு செம்மையாக எம்முடன் பகிரப்படுகின்றது. 1977 இல் இக்கதை வெளிவந்துள்ளமை முக்கியமானது.
8. வரதர் எழுதிய இனி ஒரு புதுயுகம் பிறக்கும் என்ற கதை, யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று, மக்கள்மீது பொலிசார் நடத்திய தாக்குதலைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சி விபரணங்கள் செய்திப் பத்திரிகை அறிக்கை போலிருக்கின்றது; கலையாக்கமாக மாறவில்லை.
9. பிறான்சிஸ் சேவியர் 1980 இல் எழுதிய விடியாத இரவுகள் என்ற கதை, வடக்கில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட ஆரம்ப நாள்களில் சந்திரன் என்ற அரசியல் உணர்வுள்ள இளைஞன், இரவில் வீட்டிலிருந்து பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விடியற்காலை முச்சந்தியில் செத்துக்கிடப்பதைத் தாக்கமாகச் சித்திரிக்கின்றது. அவனது விரிந்த கண்ணோட்டமும், உணர்வும் கூடவே வெளிப்படுத்தப்படுகிறது. மனதில் பதியும் நல்ல கதை.
10. 1983 ஆம் ஆண்டின் பின்னர் தேசிய இனப் பிரச்சினையும், தமிழ்ப் பிரதேச
அ.யேசுராசா

Page 36
நிலைமைகளும் தீவிரமடையத் தொடங்கின. அரசின் ஒடுக்குமுறை இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டன. தனிநாடு பற்றிய மக்களின் நாட்டமும், போராளிகளின் இயக்கரீதியிலான செயற்பாடுகளும் அதிகரித்தன. அரசுப் பயங்கரவாதத்தினால் விளைந்த கொடுமைகள், போராளிகளின் செயற்பாடுகள், தியாகங்கள், புதிய சூழலில் தோன்றும் பிரச்சினைகள், உருவாகும் புதிய மனித ஆளுமைகள், பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றனவெல்லாம் சிறுகதைகளில் இடம்பெறத் தொடங்கின. குறிப்பாக 1985 இன் நடுப்பகுதியில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டதன் பின் புதிய நாளேடுகள், சஞ்சிகைகள் பல வடபகுதியில் தோற்றம் பெற்றன. இவற்றில் இத்தகைய படைப்புக்கள் பெருமளவில் வரத்தொடங்கின. இத்தகைய சூழலின் தாக்கத்தில் முற்போக்குக் குழுவினரின் போக்கிலும் ஓரளவு மாறுதல் ஏற்பட்டது. “படுநாசமான கருத்தொன்று இன்று தமிழ் மக்கள் மத்தியில் விதைதூவப்படுகின்றது.
தனிநாடு பெறுவோம்’ என்ற இந்தக் கருத்துக்குப் பின்னால் சாதி வெறியர்களும், சுரண்டல் கூட்டமும், பிற்போக்கு இனவாதிகளும், சர்வதேச ஏகாதிபத்தியக் கும்பலும் அணிசேர்ந்து நிற்கின்றன” என 1975 மாசியில் எழுதிய ‘முற்போக்கு மல்லிகைகூட, ‘போராளிகளைப் பாராட்டுவதும், அவர்களது நடவடிக்கைகளைச் சித்திரிப்பதுமான கவிதைகளையும் சிறுகதைகளையும் வெளியிடத் தொடங்கியது. அரச வன்முறைகளால் விளைந்த மக்களின் அவலங்களைச் சித்திரிக்கும் படைப்புக்களும் வெளியிடப்பட்டன. இச்சஞ்சிகை சார்ந்துள்ள கொம்யூனிஸ்ற் கட்சியின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான இரண்டக நிலை, இது வெளியிட்ட படைப்புக்களிலும் காணப்படுகிறது. முற்போக்கு எழுத்தாளராகச் சொல்லப்படும் சாந்தனின், எழுதப்பட்ட அத்தியாயங்கள் என்ற ('முரசொலி” வாரமலரில் வெளிவந்த) குறுநாவலின் கதாநாயகனின் - கொம்யூனிஸ்ற் கட்சி உறுப்பினனாக உள்ளவன் - “நான் தனிநாட்டுக்கும் மாறில்லை; ஐக்கிய இலங்கைக்கும் எதிரில்லை” என்ற கூற்றில், இந்த ‘இரண்டக நிலை தெற்றென வெளிப்படுகின்றது. ‘எந்தப் படைப்பும் மக்களின் பிரச்சினைகளிற்குத் தீர்வினைக் காட்ட வேண்டும்’ என்ற கொள்கையைக்கொண்ட முற்போக்காளர்கள் தமது இக்காலப் படைப்புக்களில், எந்தவிதத் தீர்வையும் காட்டாது அவலங்களை வெறுமனே சித்திரித்தார்கள் என்பதையும், இங்கு குறிப்பிடுவது அவசியம். ஒருவிதத்தில், அவர்கள் யதார்த்தவாதிகளாக’ அல்லாது முன்னர் தாம் பரிகசித்த ‘இயற்பண்புவாதிகளாகவே இயங்கினர்!
இத்தகைய பின்னணிகளில் பல்வேறு வெளியீடுகளிலும் ஏராளமான சிறுகதைகள் வந்துள்ளபோதும், பெரும்பாலானவை ‘வெறும் பத்திரிகைத் தரக் கதைகளாகவே உள்ளன. உணர்வுநலனும், மொழிச்சிறப்பும், கலை அமைதியும் கொண்டமைந்த சிறுகதைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. ரஞ்சகுமார் எழுதிய கோசலை, காலம் உனக்கொரு பாட்டெழுதும் ஆகியனவும் நந்தி எழுதிய கேள்விகள் உருவாகின்றனவும் பலராலும் பாராட்டப்பட்ட சிறந்த கதைகள் ; அதிலும், ரஞ்சகுமாரின் கதைகள் புதிய தலைமுறைக்குரிய நவீனத் தன்மையும், வெளிப்பாட்டுத் திறனும் கொண்டவையாய் - தாக்குவலு நிரம்பியனவாய் - அமைந்துள்ளன. ஜனகமகள் சிவஞானம் எழுதிய கோழைகள், எஸ் கே. விக்னேஸ்வரன் எழுதிய வேலிகள் என்பனவும்
குறிப்பேட்டிலிருந்து.

நல்ல கதைகள்.
செ. யோகநாதன் பல கதைகளை எழுதியுள்ளபோதும், அனுபவ உந்தலற்ற - செயற்கைத்தனங்கள் நிறைந்த - தயாரிப்புக்’ கதைகளாகவே, அவைகளிற் பலவும் உள்ளன.
தெணியானின் நேர்த்தி, வந்தி போன்றவையும் தயாரிப்புக் கதைகள்'; இன்றைய சூழலில் நன்கு விலைபோகுமென்று கருதியதால் அவ்வாறு தயாரித்தார் போலும் ச. முருகானந்தன் எழுதிய தரை மீன்கள் கதையும் ஒரு தயாரிப்புக் கதையாகவே இருக்கிறது. மண்டைதீவில் 31 குருநகள் மீனவர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகைச் செய்தியை மட்டும் வைத்துக் கதை எழுதியிருக்கிறர் போலிருக்கிறது! கடற்கரையில் வள்ளங்கள் கவிழ்க்கப்பட்டிருத்தல், கட்டுமரங்கள் பாவிக்கப்படுதல், வீச்சுவலை வீசித் தொழில் செய்தல் என்று அவர் எழுதும்போது - குருநகரின் தொழில்முறைகளுடன் அவரது பரிச்சயமின்மை வெளிப்படுகிறது; பாத்திரங்களின் பேச்சுமொழியும் இவ்வாறே அந்நியமானதாயிருக்கிறது.
சென்ற ஒக்ரோபரிற்குப் பிந்திய நிகழ்வுகளை குமுதனின் நாய்களோ என்ற கதை சித்திரிக்கின்றது. சில குறைபாடுகள் இருக்கின்றபோதும் அவல உணர்வு நன்கு பரிமாற்றப்படுகிறது ; குறிப்பிடவேண்டிய கதை.
சொக்கன் எழுதிய அழைப்பு என்ற கதையும் ஒக்ரோபர் நிகழ்வுச் சூழலைச் சித்திரிக்கின்றது; ஆனால், நன்றாக வராத - மிகச் சாதாரணமான - கதையாகும் இது.
கையாளும் விடயத்துடனான பரிச்சயம், படைப்பு நேர்மை, கலை வடிவங்கள் - கலையாக்க முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு, செய்நேர்த்திக்கான தொடர்ந்த உழைப்பு, விமர்சனக் கண்ணோட்டம் என்பவற்றை முக்கியப்படுத்துவதன்மூலமே தரமான எழுத்தாளர்களின் தொகையினை அதிகரித்தல் சாத்தியமாகலாம் ; அதன் தொடர்ச்சியாகவே, தரமான கலைப்படைப்புகளும் பெருமளவிற் படைக்கப்படக்கூடும்.0
தெல்லிப்பழை கலை, இலக்கியக் களம் ஒழுங்குசெய்த சிறுகதை நாள் (17788) நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கட்டுரை ; சில புதுச்சேர்க்கைகளுடன், இங்கு வெளியிடப்படுகிறது.
அலை - 33 மார்கழி 1988 திசை
1.9, 1989; 8.9.1989
பி. கு. இக்கட்டுரை 'திசையில் வெளிவந்த பின்னரான சாந்தனின் 'எதிர்வினை'யும்,
அதற்கான எனது பதிலும் கீழே தரப்படுகின்றன.
திசை, 1989 மற்றும் 8.989 இதழ்களில் வெளியான ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரை சம்பந்தமாகப் பின்வரும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அ. யேசுராசா

Page 37
6 ()
தாங்கள் மறுபிரசுரம் செய்துள்ள அக்கட்டுரை முதலில் ஒரு கருத்தரங்கில் படிக்கப்பட்டபோது அதனை முழுமையாகச் செவிமடுக்கும் வாய்ப்பினை நான் பெறவில்லை. பின்னர் சஞ்சிகையொன்றில் வெளியான போது - அதில் வந்த காரணத்தால் - அக்கட்டுரை பற்றி அதிகம் அக்கறை கொள்ள நேரவில்லை. ஆனால் இப்போது, நடுநிலை பேணும் பத்திரிகையாகக் கருதப்படும் 'திசையில் அது மறு பிரசுரம் செய்யப்பட்டிருப்பதாலும், தவறான கணிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அவற்றை மெய்ப்பிக்கும் முனைப்புத் தென்படுவதாலும் அதுபற்றி என் கருத்துக்களை இலக்கிய உலகின் முன் வைக்க விழைகின்றேன். தயவுசெய்து பத்திரிகாதர்மம் பேணி ஏற்ற களம் தருவீர்களென நம்புகிறேன்.
(அ) "அந்நியமான உண்மைகள்' - கண்மூடித்தனமான தேசிய ஒருமைப்பாடு என்ற மாயையில் ஈழத்தமிழ் இலக்கிய உலகு மூழ்கிக் கிடந்தவேளையில் (1975) வெளியானதன்மூலம் அப்போது பலத்த கண்டனங்களுக்குள்ளானது. அக்கதையையும் அது கூறிய உண்மையையும் எதிர்கொள்ளத் திராணியற்று அதனை மறுதலிக்கப் பல்வேறு காரணங்களைத் தேடியோர் கடைசியில் ‘கண்டு பிடித்த பலவீனமான ஒரு வாதத்தையே கட்டுரையாசிரியர் இப்போதும் வலியுறுத்துவது வருந்துதற்குரியது. கொழும்பில் தமிழர் குடியேற்றமும் திருகோணமலையில் சிங்களவர் குடியேற்றமும் ஒப்பிட முடியாதவை என்பதை இன்னமுமா கூறிக்கொண்டிருக்க முடியும்? மேலும், “அந்நியமான உண்மைகள்’ சிறுகதையேயன்றி கட்டுரையல்ல.
(ஆ) ‘எழுதப்பட்ட அத்தியாயங்கள் - குறுநாவலில் சொல்லப்படும் கருத்துத் தொடர்பாக ‘இரண்டக நிலை’ எனக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பிரச்சினைக்கான தீர்வை இரண்டிலொரு வழிமூலம் அடைய முடியும் என்பது எப்படி இரண்டக நிலையாகும் என்பது புரியவில்லை (உண்மையில், அது ஒரு வழியே).
(இ) ‘மனிதர்களும் மனிதர்களும்’ - பற்றிக் குறிப்பிடுகையில் ‘ஒருவகைச் செயற்கைத்தனமும் பிழையான நோக்கு நிலையும் காணப்படுகின்றன’ என மொட்டையாக நிறுத்திக்கொள்கிறார். ‘எந்தவகைச் செயற்கைத்தனம்? “சரியான நோக்கு நிலை’ எது?
(ஈ) தேசிய இனப் பிரச்சினையைக் கருவாகக் கொண்ட என் கதைகள் பலவற்றைக் கட்டுரையாளர் குறிப்பிடாமலே விட்டிருக்கிறார். நல்லவற்றையும் அல்லவற்றையும் விமர்சிக்கும் பாங்கு காட்டும் கட்டுரையில் அக்கதைகள் கவனம் பெறாது போனமை எப்படி?
('முளைகள்’ தொகுதியில் இடம்பெற்ற ‘இடையில் ஒரு இருபது வருஷம், ’கிருஷ்ணன் தூது’ தொகுதியில் இடம்பெற்ற ‘தமிழன்’, ‘76 இல் ஒரு விடுமுறைநாளில்’, ‘சமர்' சஞ்சிகையில் வெளியான. ‘ஒரு விருந்தின் முடிவு' போன்றவற்றை இவ்வாறு விடுபட்டவற்றிற்கு உதாரணங்களாகக் கூறலாம்.).
குறிப்பேட்டிலிருந்து.

(உ) தேசிய இனப் பிரச்சினைக் களத்தில், 1974லிலிருந்து இன்றுவரை, பிரக்ஞைபூர்வமான, தொடர்ந்த, ஆக்கங்களைப் படைத்த செயற்பாடுகள் பற்றிய கவனிப்பை மறுக்க முனைவது நியாயமாகாது.
விவேகம், விரிந்த பார்வை, விமர்சன நேர்மை என்பவற்றை
முக்கியத்துவப்படுத்துவதன் மூலமே, தரமான விமர்சனங்களையும் அணுகுமுறைகளையும் உருவாக்குதல் சாத்தியமாகும் என்று படுகிறது.
- சாந்தன்
திசை 13.10.1989
இலங்கை எழுத்தாளர்களிற் பலரும் தம்மை “மாபெரும் படைப்பாளிகளாகவும், தாங்கள் எழுதுவதெல்லாவற்றையும் மாபெரும் படைப்புகளாகவும்"தான் கருதுகிறார்கள்; சாந்தனும் அப்படித்தான் கருதுகிறார் போலிருக்கிறது. சாந்தனும் சமுகந்தந்திருந்த - கலந்துரையாடலுக்கு நேரங்கொடுக்கப்பட்ட - கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கப்பட்டு, பதினான்கு மாதங்கள் சென்ற பின்பு: சஞ்சிகையில் வெளிவந்து ஒன்பது மாதங்களின் பின்பு, வலு ஆறுதலாக உண்மையை நிலைநாட்டிவிட வேண்டுமென்று வந்துள்ள அவரின் ‘உண்மை நாட்டம்’ விநோதமாயிருக்கிறதென்பதை, முதலில் சொல்லியே ஆகவேண்டும்!
(அ) அந்நியமான உண்மைகள் கதையில் சரியான பார்வை இல்லையென்பதே எனது குற்றச்சாட்டு. சாந்தனோ அது சிறுகதையேயன்றி கட்டுரையல்ல என்று, பதில் சொல்கிறார். அப்படியானால், சரியான பார்வையைச் சிறுகதையில் வெளிப்படுத்த முடியாதா? சமகால இலக்கியங்கள் பற்றிய கேள்வித்தொடரில் பதிலளிக்கையில், ஈழமுரசு பத்திரிகையில் (168.1987), சாந்தன் பின்வருமாறு சொன்னார் : “சமகாலமென்ற அடைமொழியைச் சேர்த்திருப்பதால் போராட்டம் அதன் பரிமாணங்கள், முனைப்புக்கள், தாக்கங்கள், அகப்புறக் காரணிகள் இவைபற்றிய தெளிவு அவசியமாகிறது.” சாந்தன் இங்கு சொல்லும் தெளிவு - பார்வைதான் இச்சிறுகதையில் காணப்படவில்லை என்கிறேன்.
மேலும், “கண்மூடித்தனமான தேசிய ஒருமைப்பாடு என்ற மாயையில் ஈழத்தமிழ் இலக்கிய உலகு மூழ்கிக்கிடந்த வேளையில்' சஞ்சிகையொன்றில் வெளிவந்து, 'வகுப்புவாதக் கதை’ என (முற்போக்காளர்களால்) முத்திரை குத்தப்பட்ட அக்கதை, அதன்பின்னர் சாந்தன் வெளியிட்ட நான்கு சிறுகதைத் தொகுப்புகளிலும் இடம்பெறாததன் 'மர்மம்’ என்ன? இந்த மர்மத்தை அவிழ்ப்பது “மாயையில் மூழ்காத” சாந்தனுக்கும் நன்மை பயக்காது
(ஆ) கொம்யூனிஸ்ற் கட்சி உறுப்பினனாகவுள்ள எழுதப்பட்ட அத்தியாயங்கள் குறுநாவலின் கதாநாயகன், “நான் தனிநாட்டுக்கும் மாறில்லை; ஐக்கிய இலங்கைக்கும் எதிரில்லை” என்றே சொல்கிறான். பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு வழியைத்தான் அவன் சொல்லியிருக்க வேண்டும்; ஆனால் அவனோ இரண்டு வழிகளையும் சொல்கிறான். கொம்யூனிஸ்ற் கட்சி உண்மையில் தனிநாட்டுக்கு எதிரானது ; பிரதேச சுயாட்சிதான்
அ.யேசுராசா

Page 38
62
அதனுடைய கொள்கை. ஆனால் நெருக்கடி தீவிரமடைந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக வற்புறுத்தியது போல் தமிழ்ப்பகுதிகளில் அவற்றை அது வற்புறுத்தவில்லை - தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படுமென்பதால். மேலும், இக்கட்சி தமிழ்ப் போராளிகளை தென்னிலங்கையில் "பயங்கரவாதிகள்’ (திரஸ்தவாதி) என்றும், தமிழ்ப்பகுதிகளில் ‘விடுதலைப் போராளிகள்’ என்றும் குறிப்பிடும் இரட்டை நிலையையும் கையாண்டு வந்தது. இதுபோன்ற முரண்நிலையே, இக் கதாநாயகனின் கூற்றிலும் வெளிப்படுகிறது.
(இ) மனிதர்களும் மனிதர்களும் கதையில் இனக்கலவரச் சூழல் மேலோட்டமாகவே சொல்லப்படுகிறது; தாக்கமானதாக அது அமையவில்லை; ஆசிரியர் எதற்கு அழுத்தங்கொடுக்கிறார் என்பதும் தெளிவாயில்லை. ரக்ஸிக்காரச் சிங்களவர் (கார்க்கதவில் கதாநாயகனின் கைவிரல் நசிந்ததற்கு) காட்டும் இரக்க உணர்வையும், ரயிலில் சீற்பிடிக்க அந்தரப்படும் தமிழர்களின் செயல்களையும் ஆசிரியர் எதனுடன் சமப்படுத்த முயல்கிறார்? இனக்கலவர நிகழ்வுகளுடனா?!! பதற்றம் நிலவும் சூழலில், காலையில் ரயிலைப் பிடிக்கச் செல்லவேண்டிய அந்தரத்தில், மீன்தொட்டியிலும் பூஞ்செடியிலும் கதாநாயகன் காட்டும் கரிசனை செயற்கையில்லையா? கதையின் இறுதிப்பகுதியில் ரயில் புறப்படுவதற்குரிய மணி அடித்ததும் பின்வரும் பகுதிகள் தரப்பட்டுள்ளன :
“கதிரமலையானே, பத்திரமாக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு, அப்பு.” ஜெயதேவனின் தாய் கைகளை விரித்தாள்.
“கதிரமலையானும் இங்காலதானே இருக்கிறார். இனி நல்லூரானே சன்னதியானே எண்டு கும்பிடுங்கோ.” கோபால் மெல்லச் சொன்னான்.
தெய்வங்களை வடகி குதி தெற்காகப் பிரித்துப் பேசுவதும் யதார்த்தமானதுதானோ?!
(ஈ) தேசிய இனப் பிரச்சினை பற்றிப் பேசும் எல்லாக் கதைகளையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுதல் யாருக்கும் சாத்தியமானதா? வெளிவந்த எல்லாக் கதைகளையும் படிக்கக்கூடிய வாய்ப்புக்கூட இருக்கிறதா? என்றாலும் சிலரின் உதவியுடன் தேடி, சுமார் நூறு சிறுகதைகள்வரை படித்தேன் - விடுபட்டுவிட்டதாகச் சாந்தன் குறிப்பிடும் அவரது கதைகள் உட்பட 76 இல் ஒரு விடுமுறை நாளில் கதை தேசிய இனப் பிரச்சினை பற்றிய கதையா? அதில் என்ன பிரச்சினை - ஒடுக்குமுறை இருக்கிறது? யாழ். பஸ்நிலையக் கடைகளில் சிங்களப் பொப் பாடல்களைத் தமது விருப்பத்தின்படிதான் கடைக்காரர்கள் ஒலிக்கச் செய்கிறார்கள், யாரும் நிர்ப்பந்திக்கவில்லையே! இடையில் ஒரு இருபது வருஷம் கதையில் இனக்கலவரம் வெறும் செய்தியாகத்தான் வருகிறது. மாறாக, அழுத்தம் பெறுவதோ இளமைக்காலச் சம்பவங்கள் அல்லவா! தமிழன் கதையில் கையாளப்படுவதும் தனிப்பட்ட சிறுபிரச்சினை. இக்கதைகளையெல்லாம் மகத்தான தேசிய இனப் பிரச்சினைக் கதைகள் எனச் சாந்தன் கருதுவது, அவரது ‘பார்வை’பற்றிய சந்தேகத்தையே உறுதிப்படுத்துகிறது.
குறிப்பேட்டிலிருந்து.

(உ) ‘சோஷலிச யதார்த்தவாதக் கோட்பாட்டை நாவலிக்கக் கூவிவந்த விமர்சகர் க. கைலாசபதி அவர்கள், சாந்தனின் முளைகள் தொகுதியின் அணிந்துரையில், “வாழ்க்கை இருந்தவாறு (இயற்பண்புவாததியில் - என்னுடைய குறிப்பு) என்னும் உணர்வை எழுப்பும் இக் கதைகளில்.” என்று விதந்தோதுவதைத்தான் “விவேகம், விரிந்த பார்வை, விமர்சன நேர்மை’ எனச் சாந்தன் நம்புகிறாரென்றால், இவை இல்லாதவனாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன்!
9. Gus UITF st திசை 13.10.1989
மேலுமொரு குறிப்பு :
“. அரச உதவியுடன், திட்டமிட்டரீதியில் நடைபெறும் செயற்பாட்டினி விளைவு இது எனிற உணர்வு கோடிகாட்டப்படாதது, இக்கதையின் முக்கிய பலவீனம். சரியான பார்வையின்மையே இதன் காரணம்” என்ற எனது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த சாந்தன் பின்னர், “அரசாங்கமே திட்டமிட்டுக் குடியேற்றுது. பிறகென்ன?’ என்ற வரியினைச் சேர்த்து அக்கதையினை, தனது ‘காலங்கள்’ (1994 தை) சிறுகதைத் தொகுதியில் வெளியிட்டுள்ளார்.
கதையின் பலவீனமாக இருந்ததொரு முக்கிய விடயம் பத்தொன்பது ஆண்டுகளின் பின்னர்தான் சீர்செய்யப்பட்டுள்ளது; குறிப்பாகச் சொல்லப்போனால், 1989ஆம் ஆண்டிலும் தான் ஏற்க மறுத்ததொரு விமர்சனத்துடன், ஐந்து ஆண்டுகளின் பின்னரே அவர் உடன்பட்டுள்ளார்.
எனினும், இவ்வாறான பின்னணியில் திருத்தம் செய்ததை குறிப்பிடும் ‘நேர்மை’ அவரிடமில்லாததால், “காலங்கள்’ தொகுதியில் இதுபற்றிய தகவலேதும் இல்லை; ஆனால், “சுட்டும்விழி’ (பங்குனி 2004) சஞ்சிகையில் அவர் எழுதிய குறிப்பில், “கதையைச் சீரணித்துக் கொள்வதில் சிரமப்பட்டேர்பாற்கொண்ட அனுதாபத்தால்.” திருத்தம் செய்ததாகத் தனக்கேயுரிய ‘ஹீரோத்தனத்துடன் எள்ளலாய்க் குறிப்பிடுகிறார் D
அ.யேசுராசா

Page 39
"இலக்கியத்தின் அரசி கவிதை” என்று சொல்லுகிறார்கள்; “செம்மையான முறையில் அமைக்கப்பட்ட செம்மையான வார்த்தைகள்தான் கவிதை” என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு கவிதை பற்றி மேலும் பல கருத்துக்கள் உள்ளன.
“பொங்கித் ததும்பி வெளிப்பாய்கிற எல்லையற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடே கவிதை” என வேர்ட்ஸ் வேர்த்தும் -
“கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி, அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உதீ வேகத்தைப் பொறுத்துத் தானி இருக்கிறது” எனப் புதுமைப்பித்தனும்
“கருத்துப் பரிமாற்றம் என்ற சாதாரண வேலையைச் செய்யக் கவிதை தேவை இல்லை. அவ்விதம் பயன்படுவதும்
羲
4.
Vs
4.
40
குறிப்பேட்டிலிருந்து.
 
 

கவிதையாகாது” என மா. அரங்கநாதனும் - “ஆனால் நாம் வசனகவிதையில் காண்பதெல்லாம் அந்த ஷணத்தின் புரட்சிகரமான பிறந்த மேனியான நாடித்துடிப்பைத் தான்’ என டி. எச். லோறன்சும் -
கூறியவை அவற்றுள் சிலவாகும்.
அனுபவ வெளிப்பாடாக அமைவது, சமூக - அரசியற் கருத்துநிலைகளை மட்டும் வெளிப்படுத்துவது, புரியாமை கொண்டிருப்பது, நேரடியான வெளிப்பாடு, படிமங்கள் மூலம் வெளிப்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்டிருப்பது என்பனதான் சிறந்தவை எனவும் சொல்லப்படுகின்றன ; இவற்றுள் சிக்குப்பட நான் விரும்பவில்லை; ஏனெனில், “ஒருவனின் கடவுள் இன்னொருவனின் கடவுள் இல்லை” என்பது யதார்த்தம்.
தன்னுணர்வுமிக்க ஒரு கவிஞன் கருதியது தெளிவாக - இறுக்கமாக - பிசிறல்களற்று வெளிப்படுகிறதா? அவனது உணர்வு என்னைத் தொற்றுகிறதா என்பனவே எனது அக்கறைகள். எனது ஆளுமை, உணர்திறன், இரசனை சார்ந்தனவாகவே எனது மதிப்பீடுகள் இருக்கும் , எனவே அவை அகச்சார்பானவைதான். ஆகையால், இவை பரிசீலனைக்குரிய முன்வைப்புக்களாக மட்டுமே அமையும் ; யாரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயமில்லை.
அமரதாஸ், றஷமி, கருணாகரன், அஸ்வகோஸ் ஆகிய நான்கு கவிஞர்களை மதிப்பிடும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் தொண்ணுறுகளைச் சேர்ந்த கவிஞர்கள், ஒருவர் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதுபவர். பிரதானமாக இவர்களது நூல்கள்மூலமாகவே இவர்களை அணுகுகிறேன். இவர்களது கவிதைகள் சொல்வது என்ன? சொல்லப்பட்டமுறை, எனது இரசனை இவற்றை உள்வாங்குகிறதா? இவற்றின் சிறப்புக்கள் - பலவீனங்கள், படைப்புலகில் இவர்களிற்குரிய இடம் என்பவற்றைப் பார்க்க முயல்கிறேன்.
அ அமரதாஸ்
“எனது வாழ்க்கைப் பயணத்தின் தேடலின் தடயங்களாகவும், சகல தளைகளிலிருந்தும் விடுபட்டு மேன்மையுற விழையும் ஒரு சாதாரண மனித மனத்தின் சாட்சியங்களாகவும், மனிதப் பொது அனுபவ உணர்வுகளின் அழகியல் வெளிப்பாடுகளாகவும் எனது படைப்புகள் இருப்பதை உணர்கிறேன்.” என அமரதாஸ் குறிப்பிடுகிறார்.
வேறு வேறு இடங்களில் பிரிந்துள்ள காதலரின் பிரிவுத்துயர் - ஏக்கம், பெண்ணின் மாயச்சிரிப்பு, புதிதாய் நாடு உருவாக்கல் முயற்சி, அழிவுத் தாக்குதலைத் தடுத்து நிற்றல், யுத்த வெம்மை கருக்கிய இனிய பொழுதுகளிற்கு ஏக்கம், பயன்சொரியும் மரமாக இருத்தல் பற்றிய விருப்பு, பிறரைப் பொருட்டாகக் கருதாது செயலில் ஈடுபடல், மனக்குரங்கின் இயல்பு, காணாமற் போனேரின் உறவினர் துயரம், இயற்கைச் சித்திரிப்புக்கள், தன்னை விட்டகலாத நிழல், புத்தகம் - முகம் - குளம் - வனம் பற்றிய விபரணங்கள், மரங்களை வெட்டுதல், இன உறவிற்கான புரிந்துணர்வு முதலியன இவர் சொல்லவந்த
அ.யேசுராசா

Page 40
66
விடயங்களாகின்றன. இவை பொதுவான கருப்பொருள்கள்தான் ; தனித்த பார்வை, கண்டுபிடிப்பு, புத்தனுபவம், உணர்வொருமை போன்றவற்றைப் பெரும்பாலும் இவை கொண்டிருக்கவில்லை.
நேரடியாக வெளிப்படுத்துவதுதான் இவரது வெளிப்பாட்டுமுறையாக இருக்கிறது. சில கவிதைகள் - “சிலையின் உயிர்’, ‘கரையும் கடலும்’, ‘குரங்கு ஆகியன குறியீட்டுப்பாணியில் அமைந்துள்ளன.
"குயிலுக்குப்போலக் குரல்வளம் எனக்கும் இருப்பதாய் உணர்கிறேன்.
பாடத் தோன்றுகுது பாடிவிட முனைகிறேன்.”
என நேரே கூறுதலும் (‘சுயச்செயல் அல்லது மீறியெழல்’)
“கதவடைத்து இருட்டறையுள் இருந்தென்ன செய்கிறாய்?
. வெளியேறின்
மெய்ரூபத்தை உலகறிந்து தாக்கும்
எனத் தயங்கி
உள்ளே முடங்கி ஒளித்திருக்கிறாயா?”
எனக் கேள்வி கேட்டலும் (விசாரணை’)
“சுற்றிச் சுழன்றடித்து
குத்திப் பதிந்து
கத்திக் கத்திக் கொத்திச் சுவைத்தன
கிளையிலேறி அலகு சொறிந்தன
பிறகும் அவாவிக் கீழிறங்கி
அளைந்து களித்தன அவை”
எனக் காட்சிப்படுத்தல் (பறவைகளின் களிப்பு') ஆகிய முறைகளும் கையாளப்படுகின்றன.
கவிஞன் பரிமாற்ற விழையும் அனுபவ உணர்வு சிதறாமல் - கட்டிறுக்கமாய் - நெருடல்கள் அற்று - வாசகனாகிய என்னில் தொற்றிக்கொள்வது ஒருசில கவிதைகளிலேதான் சாத்தியமாகிறது.
நேசங்கொண்ட ஆணின்மேல் மங்கை கனிவாய் வீசும் சிரிப்பில் ஈர்க்கப்பட்டு நெகிழ்ந்துபோகிறான் அவன்; அந்த வசீகரச் சிரிப்பின் தாக்கத்தையே ‘மாயச் சிரிப்பு’ கவிதை எளிமையாக வெளிப்படுத்துகிறது.
குறிப்பேட்டிலிருந்து.

“வழிநீள விழிவிழுத்தி எங்கேயோ போகிற என்னை அடிக்கடி மறித்து உதடு கனியச் சிரிக்கிறாய் நீ.
. மொட்டெனக் குவிந்த வாயிதழ்கள்
முகையவிழ்ந்து
வசீகரப் பூவாய் விரிந்தசைய ஒலிரும்
நின் மாயச்சிரிப்பின் மெல்லிசையில்
நெடுகவந்தான்
மோனத்தவம் கலைய
நெகிழ்ந்து கரைகிறேன் நான்”
போன்ற வரிகள் கவிஞனின் அனுபவத்தைத் தொற்றவைக்கின்றன. மெல்லியதோர் உணர்வு ஒருமைப்பாட்டுடன், இறுக்கமானதாக, ஒத்திசைவுடன் வெளிப்படுத்தப்படுவது கவிஞனின் திறனைக் காட்டுகிறது; ஒலிரும்’ என்ற புதிய சொல்லாட்சியும் சிறப்பைக் கூட்டுகிறது.
‘விதையுள் விருட்சம்’ என்ற கவிதை - புள்ளி வித்துள் இருந்து பெரிய விருட்சம் வளர்ந்து,
“கனியாக
காற்றாக
நிழலாக
மழையாக
பலதாகப் பயன்சொரியும் அது’ எனச் சித்திரித்து இறுதியில்,
‘விருட்சமென விசாலித்த மெய்வாழ்க்கை
என்று வரும்
மனிதர்கள் பலருக்கு?’ என்பதில் வெளிப்படும் ‘ஆதங்கம்’ என்னுள்ளும் இறங்குவதில், கவிதையாக வெற்றியடைகிறது; எனினும், 'மனிதர்கள்’ என்பதற்குப் பதிலாக மனிதர் என்றிருந்தால் ஒத்திசைவுகூடும். எப்படியாயினும், கருதிய உணர்வினை இறுக்கமாய்ப் பரிமாற்றுவதாக இக்கவிதை உள்ளது.
குரங்கு’ என்ற கவிதையில் குரங்கின் பல்வகைச் செயற்பாடுகள்மூலம் மனதின் இயக்கம் காட்டப்படுகிறது ; குரங்கை மனதின் குறியீடாகக் கொள்ளலாம். தேவையான சொற்களுடன் - ஒத்திசைவுடன் அமைந்துள்ள இக்குறியீட்டுக் கவிதையும் நன்றாகச் சொல்லப்பட்டுள்ளது.
பல்வேறு காரணிகளால் உடைபடும் - முழுமையடையாதுபோகும் . கவிதைகள் பலவற்றில், ஒத்திசைவுடனும் பொருள்புலப்பாட்டுடனும் மனதில் பதியும் வரிகளைக் கவிஞர் எழுதியுள்ளார். உதாரணமாக, “புத்தகம் பற்றி’ என்ற நீண்ட கவிதையில் வரும்,
அ.யேசுராசா

Page 41
“உறை துறந்து
காற்றுவெளி வழியே தன் பக்கச்சிறகுகளை விரித்து விரித்து பறக்கிறது என் புத்தகம்.
எவர் கைக்கும் அகப்படாமல் எல்லோரும் காணும்படி
அற்புதமாய்
அழகாய் உயர உயரப்பறக்கிறது அது” என்ற வரிகள்.
‘விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு’ என்ற கவிதையில் வரும்,
“தறிப்பின் முழக்கம்
பறவைகளின் அலறல்
குஞ்சுகளின் கீச்சிடல்
வில்லர்களின் வெறிக்கூச்சல்
அத்தனையும் குழைந்தலைகிறது
JuJ61)T(U
பேரிடியாய்” என்ற வரிகள்.
கவிஞரின் பலவீனங்களாகப் பலவற்றை அவரது படைப்புக்களில் அடையாளங்காண முடிகிறது; இப்பிசிறல்களால் கவிதை சிதைவுற்று வடிவமுழுமை இல்லாததாகிறது.
1. தெளிவற்ற தன்மை : “மெய் ஞானம்’ என்ற கவிதையில் மாயத்திரை, ஞானப்பொறி,
மெய்ம்மை எவையென்பது தெளிவில்லை. 2. கருதியதல்லாது வேறு பொருள் தருதல் : “அழைப்பு’ கவிதையில் புரிந்துணர் விற்கான வேண்டுகோள், “பகட்டு மேலுடை களைந்து / நிபந்தனையற்று / நிர்வாணமாய் நெருங்கி வா’ என்ற வரிகளினால் பாலுறவிற்கான அழைப்போ எனத் தோன்றுகிறது! 3. வெறும் வசனவரிகள்: “என் அன்பே / எங்கே எப்படி இருப்பாய் இப்போ / உன் திருவுருவ தரிசனத்திற்கான / என் பிரயத்தனங்கள் அத்தனையும் / விரயமாகியே போகின்றன” ('காதலியின் கடிதம் 01). 4. செயற்கையான சொற்பிரயோகம் : ‘காதலியின் கடிதம் 02இல்,
‘விடைபெற்றுப் பிரிதலுற்றாய் பேறே!’ “பொறிகள் மண்டிய வலயமதில் உலவுகிறாய் ஆதரவே!’
குறிப்பேட்டிலிருந்து.

5. தேவையற்ற கொச்சைச் சொற்பிரயோகம் : “புத்தகம் பற்றி கவிதையில்,
“முரட்டுக் கைகளிடை அம்பிட்டு’ ‘இலக்கின்றி மேய்ந்தலையும் இருளடைந்த விழிகளிடை அம்பிடாமல்’ 8. வடிவத்தில் கட்டிறுக்கம் பேணப்படாமை : பல கவிதைகளில் - தேவையற்ற பகுதிகளைச் சேர்ப்பதாலும், நீண்டு போவதாலும், மீளக்கூறுவதாலும் இது நேர்கிறது.
அமரதாஸ் என்கிற கவிஞனை - அவர் கையாளும் கருப்பொருள்களினதும், வெளிப்பாட்டு முறைகளினதும், படைப்புச் செயற்பாட்டின் வினைத்திறனினதும் மதிப்பீடு சார்ந்து - பொதுவான இளங்கவிஞர் வரிசையிலேயே அடையாளப்படுத்த இயலுகிறது!
றஷ்மி இன முரண்பாடுகள் கூர்மையடைந்து பேர், சித்திரவதைகள் என விவடைந்த வன்முறைச் சூழலிலும், நவீன வெளிப்பாட்டு முறைகளைக்கொண்ட படைப்புக்கள் - நூல்களிலும் சிறுசஞ்சிகைகளிலும் (குறிப்பாகத் தமிழ்நாட்டில்) வெளிவரும் பின்னணியிலும், தொண்ணுறுகளிலிருந்து றஷிமி கவிதைகள் எழுதுகிறார் ; அதேவேளை உருவங்களைச்' சிதைத்து நவீன ஓவியங்கள் வரைபவராகவும், எழுத்துக் கலையணியில் மாறுதற் செயற்பாட்டாளராகவும் அவர் இருக்கிறார்.
காதற் பிரிவுத்துயர், காதல்மீதான ஏக்கம், காமம் - பாலுறவுச் செயற்பாடு, இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்களின் அவலம், சித்திரவதை, அச்சமூட்டும் திடீர் மரணங்கள், ஆயுததாரிகளின் பீதியூட்டல்கள், சிங்கத்தின் சந்ததியின் வன்முறை, போர்மீதான வெறுப்பு, போர் இல்லாத நிலையை விழைதல் போன்றன இவர் கவிதைகளில் வெளிப்படுத்தும் பொருள்களாயுள்ளன. எனினும் இவை பொதுவான பாங்கிலல்லாது, அவருக்கேயுரிய தனி ஆளுமையினால் உள்வாங்கப்பட்டு - மாற்றத்திற்குள்ளாகி வெளிப்படுபவையாகவே உள்ளன.
இவரது படைப்புக்கள் நேரடியான முறையிலும், படிமங்கள் - உருவகங்கள்மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன; இவற்றில் சில சிக்கலானதாகவும் சில எளிமையானதாகவும் உள்ளன. மொழிநடையும் எளிமையானதாகவும், தலைகீழாக மாற்றியமைக்கப்படும் வசனத்தினால் சில இடங்களில் சிரமப்படுத்துவதாகவும் இருக்கிறது. படைப்பாளனின் வித்தியாசமான - நூதனமான - ஆளுமையின் உள்வாங்கும் திறன், வெளிப்படுத்தும் முறை என்பனவற்றோடு வாசகநிலையில் தொடர்புறாமல் போகும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சில கவிதைகள் பகுதி புரிவனவாகவும், முழுமையாகப் பர்க்கையில் புரியாத்தன்மை கொண்டனவாகவும் உள்ளன; சில கவிதைகள் பலதடவைகளிலான மீள் வாசிப்பினைக் கோருவனவாகவும் இருக்கின்றன.
கையாளப்படும் பொருளினாலும், வெளிப்படுத்தப்பட்ட முறையினாலும் ‘முழுமையானதென்ற உணர்வில் மனதில் பதியும் கவிதைகளிலும், சிறப்பாக அமைந்த பகுதி’க் கவிதைகளிலும் கவிஞனின் படைப்புத்திறனை அவதானிக்கலாம். வன்முறையும் சித்திரவதைக் கொடுமைகளும் பெருகியுள்ள யதார்த்தத்தை எதிர்கொள்ள 'மனம் பாறையாக
அ. யேசுராசா

Page 42
வேணடும்’ என்பதோடு, இசைவாக்கம் பெற்ற ‘புதிய மனிதப் பிறவி உருவாக்கப்படவேண்டுமெனச் சொல்கிறார் ; இதன்மூலமாகவே எதிர்மறையாகச் சித்திரவதையின் குரூரம் வெளிப்படுத்தப்படுகிறது; அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வரிகள்.
“அச்சத்தில் உறைகிற ஆத்மாவும்
பயத்தில்
வெலவெலத்தே - நடுங்கி
உதறுங்
காலுங் கையும் யார்க்கும் வேண்டாமினி. முறுக்கான முட்கம்பி உள்ளிறங்கிப் புண்ணாக்கும் நோவெடுக்கா குதவழியே எல்லோர்க்கும் வாய்க்கட்டும்.
வெட்ட வெட்டத் தளைக்கிற குறியோடு ஆண்களும், பெண்மகவெலாம் - ஒரே போதில் நாலைந்துபேர் புணர வன் புணர்ச்சிக்கியைபான யோனியோடே இனியெழுக”
- (‘சிங்களத்தீவு')
வெறொரு கவிதையில், சாறம் அணிந்து சைக்கிளில் வந்த சிறுவன், தெருவில் கடப்பட்டதைச் சித்திரிக்கும் செறிவான சொற்கள் இதோ:
“நான் கண்ட போது :
அவனுடைய தொண்டைக்குழியுள் உள்வாங்கப்பட்டிருந்த நா உலர்ந்து தவித்தது. முடிச்சுக்கள் விழுந்த நாவினால் பேசுந்திறனை அவன் இழந்துபோயிருந்தான். அடிநாக்கின் அண்டையில் உட்கார்ந்தபடி உலகிற்கு அவன் சொல்லவிருந்த கடைசி வார்த்தையையும் உதைத்து உள்ளே உள்ளே தள்ளிக்கொண்டிருந்தது சாவு, விழைந்து விழைந்து விழுந்த வார்த்தைகளால் அவன் தண்ணீர் வேண்டுவதாய் முடிவாயிற்று.”
'மரபுவழிப்பட்ட இயல்புகள்’ என்ற கவிதையில், ஆயுததாரிகளின் அச்சமூட்டும் வருகையைச் சொல்லுகையில், “அவர்தம் கண்களில் மதுவின் நெடியிருந்தது” என்கிறார். மேலும்,
குறிப்பேட்டிலிருந்து.

"அவர்கள் முதலடி வைத்தபோது : ஈரம் உலர்ந்து வேர்கள் நாவை நீட்டியபடி பூமிக்குவெளியாகி அலைந்தன.
வானம் நடுங்கி - வெள்ளிகளைத் தவறவிட்டது.
. பிள்ளைகளுக்குப்
படுக்கையில் சிறுநீர் கழிக்கப் பழக்கிய அவர்கள்: இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் தூக்கத்தை மிரட்டப் போதுமானதாயிருந்த தடயங்களைப் பதித்துவிட்டு, ஒசைப்படாது அழுது தேம்பிக் கொண்டிருந்த குழந்தைகளின் அகல விரித்த மிரண்ட விழிகளுக்குள் இறங்கிக்கொண்டார்கள்.
அப்போது நான்
குழந்தைகளுள் ஒருவனாயிருந்தேன்.” என்பதில், இயல்பற்றவையையும் இயல்பானவற்றையும் கலந்து, கருதிய உணர்வைத் தொற்றவைக்கும் முறையைக் காணலாம்.
காதலியால் கைவிடப்பட்டு அனைவராலும் இழிவுடன் குதறப்பட்ட ஒரு காதலனின் மனவலியை, அவளின் துரோகத்தை உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்துகிறது, நீயிருந்த கருமணியும் / இறுதியில் இட்டு விடைபெற்ற முத்தமும்’ என்ற கவிதை, அதில் காதலன் ஓர் ‘எலி’க்கு உவமிக்கப்படுகிறான்; அவன் சொல்கிறான் :
“அருவருத்து, பழங்கடதாசித் துண்டொன்றால் கிள்ளி - வால் நுனியில் பிடித்துத் தூக்கித் தூரமாய்க் கடாசினாய்.”
“ஒரு எலியைப் போல -
ஆம்,
பொறியின் வாயில் துருவில் கூர் மழுங்கிய பற்களோடு, உயிரின் கடைசிச் சொட்டையும் - வாழ்தலுக்காய்ப் போர் நிகழ்த்திச் சிந்துமே - எலி, அது போலத்தான்.”
“. இரத்தவாடை போக - பொறியைத் தீகாட்டி வாட்டி
அ.யேசுராசா

Page 43
மணம் வரச் சுட்ட கருவாட்டை பொறியின் தட்டிற் செருகி நீ வைத்தாய்.
வாழ்தலுக்காய்ப் போர் நிகழ்த்தித் தன் இறுதிச் சொட்டு இரத்தத்தையும் சிந்திற்று காதல்
உனக்குத் தெரியாததா என்ன?”
பாலுணர்வும் பாலுறவும் மானுட வாழ்க்கையில் அடி ஆதாரமான விடயங்கள்தான் ; ஆயினும் அவை தொடர்பாகச் சமூகத்திலும் கலை, இலக்கிய உலகிலும் பல மனத்தடைகள் உள்ளன. அதனால், அவ்வுணர்வுநிலைகள் மானுடவாழ்வின் ஓர் அனுபவப் பகுதி என நுட்பமாகச் சித்திரிக்கப்படுவது அரிதாகவிருக்கிறது. றஷிமியின் அக்கறைக்குரிய கவிதைப் பொருள்களாகக் காதலும், பாலுறவும் இருக்கின்றன. 'மோகினியின் கையிலிருந்த குழந்தையை / வாங்கிய பிறகு.’ என்ற கவிதையில் இச்செயற்பாட்டுணர்வு வெளிப்படுகையில், றஷிமியின் மொழியாட்சித்திறனும் கவிதையில் கட்டிறுக்கத்தைப் பேணும் தன்மையும் சேர்ந்தே வெளிப்படுகின்றன ; அதிற் சில வரிகள் :
“இச்சைதீரா உடலின் ஆழப்பிராந்தியங்களில் நாம் அலைந்துகொண்டிருந்தோம். அனந்தகோடிப் புவிநாட்கள் நம் நொடிக்குள் துடித்தன. "
. பேய்க்கு சதையைப் பலியிடுகிறோம். உறுப்புகளுள் எரிந்து ஓடிச் சத்தமிட்ட குருதியைப் படையலிடுகிறோம்.
இப்படியாக, உடலின் ஆழ்வெளியில் கோடிக் கணக்கில் நரம்புமுடிவிடப் பின்னல்களிலிருந்து நாம் வெளியேறிட நேர்ந்தபோது : பார்வையின் காட்டத்தைத் தாங்கிக்க ஒண்ணாது வெட்கத்தால் - என்
விழிகளை மூடுகிறாய். உதிரம் ஏறிய உன்முகம் சிவந்திருந்தது. சதைகளில் குடியிருந்த சாத்தான் ஓடிற்று இறங்கி.
பிறகு - வேறும் ஒரு உலகம் படைக்கப்பட்டிருந்தது.”
குறிப்பேட்டிலிருந்து.
 

ஆற்றல் வாய்ந்த கவிஞனின் சில கவிதைகள் - “பகுதிகள்’ மட்டும் நன்றாக அமைந்து முழுமை அடையாமற் போவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. படைப்புந்தலின் போதாமையா? படைப்புச் செயற்பாட்டின்போதான அக்கறைமீனமா? படைப்பு வெளிப்பாட்டின் சிக்கற்பாடுகளா? எது காரணம் என்பது தெரியவில்லை. சில கவிதைகளைப் புரிய முடியவில்லை ; உணர்திறன்மிக்க வாசகனும் புரிய முடியாத வகையில் கவிதை இருப்பது வெளிப்பாட்டிலுள்ள பலவீனத்தினால்தானா? இறுக்கமான மொழிவெளிப்பாட்டைப் பல கவிதைகள் கொண்டுள்ளபோதும் சில கவிதைகளில் வெறும் வசனவரிகளையும், ஒத்திசைவற்ற செய்தி விவரணங்களையும் காணமுடிகிறது.
உதாரணமாக :
“அவன்தன் பெயர்
அவனது ஊர் அவன் வளர்க்கப்பட்ட சாதி, மதம் பிரத்தியேக அங்க லட்சணங்கள் அறிதல்கள் எதுவிதமும் இல்லை.”
நீண்டதாகவுள்ள கவிதைகளில் - (உ+ம்) 'சூனியக்காரியுடனான கவிஞனின் காதல் - நான்கு வேறு நாட்கள்) இறுக்கம் குறைந்து தொய்வும் சலிப்பும் ஏற்படுவதையும் பலவீனமாகக் குறிக்கலாம் ; வேறு சில கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புண்டு.
இறுதியாகத் தொகுத்து நோக்குகையில் கையாளும் பொருள், வெளிப்பாட்டு முறைகள், மொழிக்கையாள்கை என்பன ஏற்படுத்தும் - அதிர்ச்சி, வலி, சந்தோஷம், புதிர்த்தன்மைகள், புதிதான அனுபவ உணர்வுத்தாக்கம் ஆகியன காரணமாய் தனித்த படைப்பாளுமைகொண்ட கவிஞனாகவே றஷிமியை அடையாளங்காண முடிகிறது. தொண்ணுறுகளில் வெளித்தெரியவரும் புதிய வெளிப்பாட்டுமுறைக் கவிஞர்களில் இவரிற்கு முக்கிய இடம் உண்டு.
இ கருணாகரன்
கருணாகரனின் இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. “நெருக்கடி மிக்க நம் காலத்தில் - அலைக்கழிந்துகொண்டிருக்கும் என்வாழ்வில் எழுதப்பட்ட கவிதைகளின் ஒரு தொகுதி” என அவர் குறிப்பிட்ட ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் 1999இல் வெளிவந்தது. “இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை போர் உக்கிரம் பெற்றிருந்த சூழலில், வெளியுலகத்திலிருந்து பலவகையிலும் துண்டிக்கப்பட்டிருந்த ஒரு பிரதேசத்திலிருந்து எழுதப்பட்டவை” என அவர்கூறும் கவிதைகளைக் கொண்ட இரண்டாவது தொகுப்பான ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் 2003இலும் வெளிவந்துள்ளது. இவர், நவீன இலக்கியப் படைப்புக்களினதும் சிறுசஞ்சிகைகளினதும் தீவிர வாசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது ; எண்பதுகளின் நடுக்கூற்றிலிருந்து கவிதைகள் எழுதிவருகிறார்.
அ.யேசுராசா

Page 44
அரசியலுக்கு முதன்மை கொடுத்து - கலை இலக்கியப் படைப்புக்களை உருவாக்கும் போக்கு வலுவுடையதாக, இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. கருணாகரனின் கவிதைகளிலும் பேர்ச்சூழல், இராணுவ நடவடிக்கையினால் கைவிடப்பட்ட முக்கிய வீதி, அழிக்கப்பட்ட கிராமங்கள், படையினர் மட்டுமுள்ள ஊர், விமானக் குண்டுவீச்சின் கோரம், விமானங்களைச் சுட்டு வீழ்த்துதல், அகதி வாழ்க்கை, மீள்குடியேறிகளின் கதை, சமாதானம், அரசியல் பேச்சுவார்த்தை என்ற பெயரிலான கடந்தகால - நிகழ்காலச் செயற்பாடுகளின்போது காணப்பட்ட / காணப்படும் கபடம், மாறாத அவலச் சூழல், தொடர் ஷெல் வீச்சின்போது ஓயும் பொழுதிற்குக் காத்திருக்கும் தவிப்புநிலை என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், கருணாகரனின் படைப்பு நோக்கு 'குறுகியதாக இல்லாததால், இவரது படைப்புலகினுள் காதல், பிரிவுத்துயர், நிலக்காட்சி, கடலும் மழையும், பூக்களும் வண்ணத்துப்பூச்சியும், நட்பின் துரோகம், முதுமை போன்றவையும் உணர்திறனுடன் உள்வாங்கப்பட்டுள்ளன.
படிமம், உவமை, உருவகம் என்பன கவிதையில் கட்டாயம் கையாளப்படவேண்டுமென்றோ, ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு முறைதான் இருக்கவேண்டுமென்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த பரிமாணங்களைக் கொண்டிருக்கவேண்டுமென்றோ வலியுறுத்துவது தேவையில்லை என நினைக்கிறேன். கவிஞனின் அனுபவ உணர்வு தன்னியல்பாக வெளிப்பட்டு, ‘முழுமையானதாக வர்சக மனதில் தொற்றவைக்கப்படுவதே முக்கியம். அதிக எண்ணிக்கையில் கருணாகரன் எழுதியுள்ள கவிதைகளில் இந்த அம்சங்கள் பரவிக்கிடக்கின்றன. வேறுபட்ட பொருட்புலப்பாட்டிற்கு ஏற்ப ‘முழுமைகூடிய கவிதைகளின் வரிகள் அமைந்துள்ளதைக் காணலாம்.
‘சாவு’ இவ்வாறு கூறப்படுகிறது :
“எனது ஊரில் எனது தெருக்களில் கருநிழல் படர்ந்த முகத்துடன் எங்கும் மோதி மோதி அலைகிறது.
பச்சைநிற வாகனங்களின் உறுமலில் அது சிரிக்கிறது. அந்த வாகனங்களில் அது வருகிறது வெறிப் பாடலுடன் அந்நிய மொழியின் கூச்சலுடன்.”
அழிமதி புரிந்து மக்களை அவலங்களிற்குள்ளாக்கிய ‘போர் விமானங்கள்’ கடப்பட்டதைச் சொல்லும் வரிகள் :
“கெந்திக் கெந்தி நானோடும் போதெனது உயிர் தேடித் தேடிவந்த பாவத்தின் கூடுகள்
குறிப்பேட்டிலிருந்து.

இன்று அழியுண்டு போவதைப் பார்த்தேன் அஸ்திரங்கள் ஏவிய தேவகுமாரரின் வெற்றியின் கரம்பற்றி உரத்துப் பாடினேன் நன்றியின் உதிரம் கலந்து எண்குரல் திசைகளில் பரவியது.”
காதலரின் தவறான புரிதலையும், பிரிவின் அவலத்தையும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார் :
“என் மனம் நஞ்சூறிப் போயிற்றென்றும் தேம்பி அழுதாய் ; நான் மறுத்தேன்.
உன் மனப்பழத்தைப் பேய் தின்று போயிற்றென்று தவித்தேன்.
. இனி வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகங் கொள்வதெங்ங்ணம்? ஒரு பூக்குஞ்சாக இருந்த உன்முகமும் தலையின் பின்புறம் ஒளிவட்டம் சுழலுதென்று நீசொன்ன என்முகமும் நம் கால்களில் மிதிபட்டுச் செத்தன.”
“காட்சி’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் கருணாகரனின் சித்திரிப்புத்திறனிற்கு வலுவான சாட்சியாக அமைந்துள்ளன :
“கடலைப் பிளந்து ஊடுருவித் தெறிக்கும்
ஒளியில்
தடுமாறி வீழ்கிறது ஒரு பறவை.
சிறகுகளின் நிழல் நடுங்கும் அலைகளில் பிரதிபலித்துத் துடித்தழிகிறது.
. கடல் பேரின்பத்தில் திளைக்கிறது அது காற்றின் மடியில் அசைந்தாடுகிறது கடலில் வீழ்ந்த பறவை ஒளியைக் கவ்வி ஒளியிலேறிப் பறக்கிறது மீண்டும்.”
கருணாகரனின் கவிதைகளிலுள்ள பலவீனங்களை இனிப்பார்ப்போம்.
அ.யேசுராசா

Page 45
7()
1. தெளிவில்லாத கவிதைகள் : 'சூழலின் மறுதலிப்பு’
‘உள்முகத் தீ’ “காற்று அறியும் உண்மை’ 'காலப்பெயர்வு’ போன்றவை.
2. பூக்குங் காலம்’ என்ற கவிதை, RT டெம்ஸ்ரர் எழுதி, சோ. ப. மொழிபெயர்த்துள்ள "நீயும் நானும்’ என்ற கவிதையின் பிரதியாக உள்ளது. பல கவிதைகள் ஏனோ சுந்தர ராமசாமியின் கவிதைகளை ஞாபகப்படுத்துகின்றன : ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் என்ற தொகுப்புப்பெயர், சு. ரா. வின், ‘ஒரு நிலவுக்குக் காத்திருத்தல் கவிதைத் தலைப்பை ஞாபகப்படுத்துகின்றமாதிரி
3. முழுமைகூடாத கவிதைகள் பலவற்றில்,
“பறிக்கப்பட்ட எனது வீடு எனக்கு வேண்டும் அந்த வீட்டையும் தோட்டத்தையும் நான் பெறவேண்டும்
உணவு
96. உறையுள் என்பவற்றுடன் பாதுகாப்பும் மிக மிக அவசியமாகிவிட்டது.”
என்பது போன்ற கவித்துவமற்ற வெறும் கூற்றுக்களும்,
“பெளர்ணமிநாளை
அரசு
புனிதநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது அதனால் பள்ளி அலுவலகம் அனைத்துக்கும் விடுதலை”
என்பதான வெறும் வசன வரிகளும், வெற்று விபரணங்களும் காணப்படுகின்றன.
4. “அழகு’ என்ற கவிதையிலுள்ள,
“மரணத்தின் முத்தம் என் கனவு அதன் ஸ்பரிசம் என் காதல்” என்ற இறுதி வரிகள் "போலி உணர்வு கொண்டதாக உள்ளன.
இவ்வாறே, மரணத்தின் ருசி’ என்ற கவிதையிலும் உள்ளது. ஆரம்பத்தில் ஆட்டுக்குட்டி மீதான கவிஞனின் ‘அனுதாபம் வெளிப்படுகிறது. ஆனால் இறுதியில்
வரும்,
குறிப்பேட்டிலிருந்து.

..
. மடிகிறது அது ருசிக்கிறது நமக்கு”
என்ற வரிகள் கவிஞனின் முந்திய அனுதாபத்தைப் போலியானதாக்கி விடுகின்றன!
5. ‘பகுதிகளாகவுள்ள குறைபாடுகளினால் பல கவிதைகள் ‘முழுமைகூடாதவையாக" உள்ளன ; செப்பனிடுதல் நிகழாமையும் காரணமாகலாம். உதாரணமாக, “விழியோடிருத்தல் என்ற நீண்ட கவிதை சமகால விடயங்களைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது ; ஆனால், அதிலுள்ள சில பகுதிகள் அதன் ‘முழுமையைச் சிதைக்கின்றன. அவை செப்பனிடப்பட்டால், இக்கவிதை மிகுந்த முக்கியத்துவங்கொண்டதாக மாறும் என நம்பலாம்!
தொகையளவில் அதிகமான தனிக்கவிதைகளைக் கருணாகரன் எழுதியுள்ளார். நெகிழ்ச்சியானமுறையில் அவர் கையாண்டுள்ள பல்வகையான கருப்பொருள்களும், அவற்றை வெளிப்படுத்தும் முறைகளும், மொழிப் பிரயோகமும் அவருக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன. இரண்டாவது தொகுதியில் மேலும் ‘புதிதான தன்மையினை உணரமுடிகிறது; ஆயினும், பல கவிதைகள் ‘முழுமைப்படுத்தலுக்கான செப்பனிடுதலைக் கோரி நிற்கின்றன.
இவை எல்லாவற்றுடனும் கருணாகரன் முக்கிய கவனிப்புக்குரிய கவிஞர் என்பதில் ஐயமில்லை!
ஈ அஸ்வகோஸ்
அஸ்வகோஸ் தொண்ணுாறுகளில் கவிதைமூலம் வெளித்தெரியவருகிறார். வனத்தின் அழைப்பு என்ற கவிதைத் தொகுப்பு 1997இல் வெளியாகியுள்ளது; அதன் பின்னர் சில கவிதைகள் சஞ்சிகைகளில் வந்துள்ளன. இவரது நூலை வெளியிட்ட 'நிகரி”, “அஸ்வகோஸ் முற்றுகையிடப்பட்ட பூமியைச் சேர்ந்த கவிஞர்” எனக் குறிப்பிடுகிறது.
உணர்திறன்மிக்க ஒரு படைப்பாளி தன் சூழலை எதிர்கொள்கிறபோது பல்வேறு தாக்கங்களுக்கு உட்படுவான். குறிப்பிட்ட வரையறைகளிற்குள் தன்னை மட்டுப்படுத்தாதவிடத்து அவனது படைப்பாளுமை விசாலமடையும் ; படைப்பு வெளிப்பாடும் தன்னியல்பாக - தனித்தன்மைகளுடன் நிகழும். “என்னை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன்; நொந்துபோன என் நாட்களின் வேதனைச் சுமையினைச் சொல்வேன்’ என்று அஸ்வகோஸ் குறிப்பிடுகிறார். ‘அனுபவ வெளிப்பாட்டிற்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பது இதன்மூலம் தெரிகிறது. ‘அனுபவ வெளிப்பாடு'தான் அவருக்கு முக்கியம் ; இதனால் படிமம், உவமை, உருவகம் என்று அவர் அலட்டிக்கொள்வதில்லை. நேரடியாகவே தன் அனுபவ உணர்வை வெளிப்படுத்துகிறார்; அது என் வாசக மனதைக் கவ்விப்பிடிக்கிறது. இது எனக்கு முக்கியமான அம்சம்; ஏனெனில், யதார்த்தம், சோஷலிச யதார்த்தம், ஆத்மார்த்தம், தமிழ்த் தேசிய இனவிடுதலை என்ற கருத்தாக்கங்களினால் பிரச்சாரப் படைப்புக்களும் அங்கீகாரம் பெறும் சூழல்
அ.யேசுராசா

Page 46
தொடர்ந்தேவருகிறது.
“ஊர்த்தொழவாரங்களைப் பார்க்கப் போன மைந்தரின் நினைவுகளை நான் தருவேன்
அவர்களின் முடிவினை எனக்குக் கூறுங்கள்
. நீங்கள் கூறுங்கள் தாய்மையின் கதறல் கேலிக்குரியதா?
உங்கள் கரங்களில் உயிருடன் இருந்த ஒவ்வோர் கணத்திற்கும் அர்த்தம் கோருவேன்
ஒவ்வொரு கொலையையும் மகிழ்ந்து சொன்னபோது மனிதர்கள் இறந்து போனதாகவே எனக்குக் கேட்டது.”
இது 'இயக்கங்களின்’ அரசியல் - செயற்பாடுகள் பற்றிய காத்திரமான விமர்சனம்தான் ; ஆயினும் விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் போராளிகள் மீதான பரிவையும் பிறிதோர் கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
“தியாகங்கள் மட்டுமே தெரிந்த மைந்தரின் நினைவுகளைப் பழிக்க என்னால் இயலவில்லை
நேற்றுங்கூட இருவர் மாண்டு போயினர்
கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன சேவல் கூவுகின்றது காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன.”
குறிப்பேட்டிலிருந்து.

7 )
அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்திய கவிஞன் தனது சொந்தத்துயரை - காதலி தன்னைக் கைவிட்டுச் சென்ற துயர அனுபவத்தையும் வெளிப்படுத் 6
தலி தன் விட்டுச் சென்ற து னுபவத் ம் வெளிப்படுத்துகிறான்
“சொற்களற்று குரலற்று முகமற்று உணர்வற்று தூரத்துார கண்காணா தேசத்தின் கல்லறை முகவரிகளைத் தேடிக்கொண்டு நீபோனாய்
ஆயிரம் ஆண்டுகள் கதை பேசும் வடுக்களைத் தந்துவிட்டு வெற்று வரிகளில் மயங்கி வெற்றுடலாய் நீ போனாய்”
வேறு கவிதைகளிலும் இத்துயர் பதிவுசெய்யப்படுகிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை; ஏனெனில், காதலும் மனிதனின் வாழ்க்கைப் பரப்பினுள் வருவதே மனித நிலை பற்றிய விழிப்புணர்வுகொண்ட உண்மைப் படைப்பாளி, தனது துயரத்துடன் மட்டும் குறுகிப்போபவன் அல்லன் , அவனது பரிவு சகஜீவிகளின்மேலும் படர்ந்தபடியே இருக்கும். அஸ்வகோஸின் படைப்பாளுமையிலும் இதைக் காணலாம்.
“. அந்தக் கீதங்களைப் பாட நான் விரும்பினேன் தினமும் மரிக்கின்ற தளிர்களும் நோயால் ஜீவனை இழந்த முகங்களும் காட்டு அனலும்
வெயிலும் மனித அவலங்களும் நினைவில் எழ மடுமாதா கோயிலில்
ஒதுங்கிய மனிதர்களின் ஜீவத்துடிப்பாய் எழுந்த கீதங்களில் எனை இழந்தேன்.”
என்று ஒரு கவிதையில் எழுதுகிறார். வெவ்வேறு கவிதைகளிலுள்ள பின்வரும் வரிகளும் அவரது கவிதா ஆற்றலைப் புலப்படுத்துகின்றன. அ) "கனவுகள் என்னைத் தின்றன’ ஆ) ‘முகமூடிகளின் நகரத் தெருக்களில் இ) 'தனித்தலையும்
பறவை தரும் வேதனையை'
அ. யேசுராசா

Page 47
ஈ) ‘கவிதைகள் போலவும்
மனிதர்கள் கடந்து போகையில்’ உ) மரண ஊற்றில் கரைந்தவர் ஊ) ‘எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு
மலரினைச் சாத்துமென்’
அரசியல், சமூக, தன்னிலைத் தளங்களில் காலூன்றி அனுபவ வெளிப்பாட்டிற்கு முதன்மை கொடுப்பவரான அஸ்வகோஸ் - தொண்ணுறுகளில் உருவான கவிஞர்களில் முக்கியம் பெறும் ஒருவராகவே எனக்குத் தெரிகிறார். 回
(தூண்டி' இலக்கிய வட்டம், 01.06.2003இல், யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் நடாத்திய, 'ஈழத்துத் தமிழ்க் கவிதை ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
குறிப்பேட்டிலிருந்து.

1984 கார்த்திகையில், தமது எழுபதாவது வயதினில் காலமான சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள், மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலத்தில் கல்வி கற்று ஆசிரியராக கடமையாற்றிய அவர், முதலில் ஆங்கிலத்திலேயே இலக்கியங்களைப் படைத்தார். 1934இல் கவியரசர் தாகூர் இலங்கை வந்தபோது, தான் ஆங்கிலத்தில் எழுதிய விஸ்மாஜனி என்ற இசை நாடகத்தை அவரிடம் காட்டி, ஆசியினைப் பெற்றார் ; தொடர்ந்து கவிதை, உரைநடைக் கவிதை, நாவல் என்பவற்றை ஆங்கிலத்தில் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதிய ‘சி.வி. இலங்கையிலும் இந்தியாவிலும், சிறந்த இலக்கியவாதி என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர் ; பிற்காலத்தில் தமிழிலும் படைப்புக்களை உருவாக்கினார்.
தனது வாழ்வின் பிந்திய 45 ஆண்டுகளை மலையகத் தமிழரின் வாழ்வு மலர்ச்சிக்காக அர்ப்பணித்து, தொழிற்சங்க - அரசியற்துறைகளில் உழைத்த அவர்,
VI9
அ.யேசுராசா

Page 48
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில், தலவாக்கொல்லை தொகுதி உறுப்பினராகவும் (1947 - 1952) இருந்தார். அவருக்கு மிக்க புகழைப் பெற்றுக் கொடுத்த "In Ceylon's Tea Garden என்ற நீண்ட கவிதை நூலை, மலையகக் கவிஞரும் ஒவியருமான சக்தீ அ. பாலையா தமிழில் அருமையாக மொழிபெயர்த்துள்ளார். அதுவே தேயிலைத் தோட்டத்திலே. என்ற பெயரில், 1969 இல் நூல்வடிவில் வெளிவந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்’ எனக் குறிக்கப்படும் மலையகத் தமிழரின் உண்மையான துயர வரலாறு, 1825 இல் ஆரம்பமாகிறது. அந்த ஆண்டிலிருந்துதான் கோப்பிச் செய்கைக்காக, தமிழ்த் தொழிலாளர்கள், வரட்சியும் பஞ்சமும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து "ஆள்கட்டிகளினால் திரட்டப்பட்டு, இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். “கண்டிச் சீமையில் கோப்பித் தூரில் தேங்காயும் மாசியும் விளைகிறது. ஆற்று மண்ணில் தங்கம் விளைகிறது. காது நிறைய நகை போடலாம். இடுப்பு நிறையச் சேலை கட்டலாம்.” என்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியே, இவர்கள் திரட்டப்பட்டனர். கடற்பயணத்தில் படகுகள் கவிழ்வதிலும், மன்னாரில் தொடங்கிய காட்டுவழி நடைப்பயணத்தில் காட்டு மிருகங்களினாலும் நோய்களினாலும் பட்டினியாலும் ஏராளமானோர் மடிந்தனர். எஞ்சியோரே மலையகத்தை அடைந்து காடுகளை அழித்து, கோப்பி - தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர் ; கட்டடங்களை அமைத்தனர், பாதைகளையும் பாலங்களையும் போட்டனர் ; நகரங்களை உருவாக்கினர். வாழ்நாள் முழுதும் இரத்தமும் வியர்வையும் கண்ணிரும் சிந்தி அவர்கள் உழைத்தபோதும், சவுக்கடிகள் பட்டபடி - உரிமைகளற்றவராய் - கொடிய சுரண்டல்களுக்கு உட்பட்ட ‘மக்கள் கூட்டத்தினராய்' வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பது வரலாறு.
வெறும் தரவுகளாயும், புள்ளிவிபரங்களாயும் இருக்கும் வரலாற்றுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து, உயிரும் உணர்வும் ஊட்டும் பணியினைக் கலை - இலக்கியங்களே செய்யமுடியும். ‘சிவி’ என்ற கவிஞன் கண்டு, கேட்டு, உய்த்து உணர்ந்ததான வாழ்நிலை அனுபவங்கள், மெல்லுணர்வும் கலையுணர்வும் கொண்ட அவரது ஆளுமையினூடாக உருமாறி, கவிதையாக - இலக்கியமாக வெளிப்படுவதையே “தேயிலைத் தோட்டத்திலே. நூலில் காண்கிறோம்.
காலையில் தொழிலாளரை வேலைக்கழைக்கும் பேரிகையின் ஒலி எழுப்பும் எண்ண அதிர்வுகளைப் பதிவுசெய்வதான கட்டமைப்பில் விரியும் இக்கவிதை நூல், இப்படித்தான் ஆரம்பிக்கிறது :
பேரிகைக் கொட்டெழு
பேரொலித் துடிப்பும் புலர்த லுணர்த்தப் புரளுமாம் வைகறை
சஞ்சலம், வேதனை,
சாதல், அழிவு,
குறிப்பேட்டிலிருந்து.

சகலமும் ஒன்றென சார்ந்தவ் வேளைக்கண் -
இன்பமே அறியா
எம்மவர் சீவிய எதிரொலித் துடிப்பென எழும் பேரிகை ஒலி
“இங்கெவர் வாழவோ உழைத்து உழைத்து மாண்டுபோகும் தோட்டத் தொழிலாளியை நினைப்பவர் இல்லை ; பொருட்படுத்துவாரும் இல்லை. அவர்களை யாரும் ஒரு பொருட்டாகவும் மதியாத கசப்பான நிலைமையைக் கழிவிரக்கத்துடன் கூறும் வரிகள், நெஞ்சைப் பிசைவனவாகும்.
புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப்
போற்றும் இரங்கற்
புகல் மொழி இல்லை
பழுதிலா அவர்க் கோர் கல்லறை இல்லை; பரிந்தவர் நினைவுநாள் பகருவார் இல்லை.
ஊனையும் உடலையும்
ஊட்டி இம் மண்ணை உயிர்த்த வர்க்(கு) இங்கே உளங்கசிந் தண்பும்
பூணுவாரில்லை - அவர்
புதைமேட்டிலோர் - கானகப் பூவைப் பறித்துப் போடுவாரில்லையே!
Ο Ο
ஆழப் புதைந்த
தேயிலைச் செடியின் அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல்
அ.யேசுராசா

Page 49
ஏழை மகனும்
ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவன்
சுரண்டலினால், உழைப்போர் நலிந்து மெலிய - சுரண்டுவோர் சுகமாய்க் கொழுப்பது வெறுப்பூட்டும் முதலாளித்துவ அமைப்பின் நியதி. மலைப்புறத்திலும் 'இதே கதைதான்’ நிகழ்கிறது :
பொன்னை விளைக்கும்
எந்தமிழ் மக்களின் பிச்சைக் கரங்கள் பொலிந்த செல்வத்தால்
சின்ன துரைக்கும்
பெரிய துரைக்கும் சித்தம் போலவே சீவியம் உயரும்.
யாரோ சிலரின்
சுவர்க்க இன்பமாய் ஆச்சுதே என் மக்கள்
ஆக்கிய பூமி
ஒருபுறம் உழைப்பின் தாங்காச் சுமையைத் தாமே சுமந்து தளிர் இளம் மாதர்” சோர்கின்றனர் , மறுபுறம் பாலியற் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் :
எழில் மிகு குமரியர்
வாழ்வைக் கெடுப்பதை இங்கவர் சீவியம் பாழ்படச் செய்வதை
பொழியும் வானமும்
அன்னை பூமியும் பொறுக்குமோ உள்ளம் பொறுக்குமோ - அந்தோ!
துயர் நிறைந்த வாழ்க்கைக்கு 'மறுபக்கமும் இருக்கிறது. ‘இடர் களைந்து இனிமை சேர்க்கும் உயிரின் ஓயா முனைப்பிற்கு இவர்களது வாழ்விலும் இடம்
இருக்கிறது.
குறிப்பேட்டிலிருந்து.

வாழ்க்கையின் இனிய
ஆசையை அள்ளி வீசும் நிலவொளி வாலிபர் - குமரியர்
வாழ்க்கைத் துணையையும்
வரிக்கச் செய்வதால் வஞ்சமே இல்லாக் குழந்தைகள் பிறக்கும்
பொங்கல், புத்தாண்டு, தீபாவளிப் பண்டிகை நாள்கள், கசந்த வாழ்வில் மகிழ்ச்சிச் சுடர் வீசுவனவாகும்.
நாட்டுக் கீதமும்
நட்டுவக் கூத்தும் கும்மி ஒயில் கோலாட்டம் முதல்
பாட்டுடன் தம்பூர்
மத்தளம் உறுமி பலப்பல வண்ணப் பண்ணிசை முழங்க.
அந்நாள்களில் மகிழ்ச்சியில் ஆழ்கின்றனர்.
கடந்தகால - நிகழ்காலத் துயரங்களை இல்லாது ஒழிக்கும் நிலைமைகள், மலையகத் தமிழ் மக்களிடையில் ஏற்படும் - ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கைக் குரலுடன், இந்நீண்ட கவிதையைக் கவிஞர் முடித்துவைக்கிறார் :
கட்டி வதைக்கினும்
சுதந்திரத் தீச்சுடர் கனவின் எழுச்சியை அழிக்கவும் போமோ?
தோப்பு மரங்களைப்
பிளந்திடும் போது தெறிக்கும் தீப்பொறி தொடராது போமோ?
அ.யேசுராசா

Page 50
Ο Ο
நூறாண்டு காலமாய்
நுழைந்த இவ்விருட்டை வேரோடழிக்க என்தமிழ் மக்கள்
கூறுவர் சிகர
உச்சியில் ஏறிக் கூறுவர் திடல்கள் யாங்கணு மடுக்கவே.
விடுதலைக் குரலது
வெற்றிக் குரலது வீரக்குரலது விரைந்தெழும் கேட்பீர்!
‘பாட்டினையே பாட்டாய்ப் பெயர்க்கும் பணி பெரிது’ என்றார் எங்கள் மஹாகவி. ஆங்கில மூலத்தின் உணர்வுநலன் சிதையாது, தமிழில் ஆக்கப்பட்ட முதன் நூலே போன்று மறுபடைப்பாக ஆக்கித் தந்த கவிஞர் சக்தீ அ. பாலையா, பாராட்டப்பட வேண்டியவர்.
‘சாளரத்தின் இளைய வாசகர்களே! மலையகத்தின் - இலங்கையின் முக்கிய தமிழ்ப் படைப்பாளியொருவரின் இந்தக் கவிதை நூலை, நூலகத்திலோ புத்தகச் சேகரிப்பாளர் யாரிடமுமோ தேடிப் பெற்றுக் கட்டாயம் வாசியுங்கள். ‘இனிப் படமாட்டேன்’, ‘வீடற்றவன்’, ‘நாடற்றவர் கதை’ என்ற அவரது தமிழ் நூல்களும் வாசிக்கப்பட வேண்டியவையேதான்!
snem gub ஐப்பசி 1992
குறிப்பேட்டிலிருந்து.

1988ஆம் ஆண்டுக்குரிய இந்திய ‘சாஹித்ய அக்கடமி விருது க. நா. சுப்ரமண்யத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்ற நூலிற்கே அது வழங்கப்பட்டுள்ளபோதும், வழமைபோல் எழுத்தாளனின் முழு இலக்கியப் பங்களிப்பும் கவனத்திற்கொள்ளப்பட்டே விருது வழங்கப்பட்டிருக்கும் என்பதை நம்பலாம். தனது வாழ்வின் பெரும்பகுதியை நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணித்த - முழுநேர இலக்கியக்காரராக உழைத்த - அவர், இதற்குத் தகுதியானவர்தான். அவரது கருத்துக்கள், மதிப்பீடுகள்
சிலவற்றை “அலை ஏற்றுக்கொள்ளாத போதிலுங்கூட
இதை அங்கீகரிப்பதில், தயக்கமேதுமில்லை. மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுக்களை அவரிற்குத் தெரிவித்துக்
கொள்கிறோம். ۔۔۔۔۔۔۔۔ــــــــــــــــــــــــہت۔ـــــــــــــــــ۔نہج
மூன்று பிரிவுகளில் அவரது பங்களிப்பு முக்கியமானதாய் இருக்கிறது.
அ. யேசுராசா

Page 51
1. தர வேறுபாடுகள் ஏதுமற்று, எழுதப்படுபவையெல்லாம் இலக்கியமென்று நம்பப்பட்ட சூழலில் - பண்டிதத்தனம் மட்டும் நிறைந்தவர்களாலும், ஜனரஞ்சக எழுத்தாளர்களாலும் திசை திருப்பங்கள் நிலவிய சூழலில் - நல்ல எழுத்தாளர்களை இனம் பிரித்துக் காட்டி அவர்களின் முக்கியத்துவத்தினை நிலைநிறுத்த, விமர்சனங்களின்மூலம் அவர் முயன்றார். “ஒரு மெளனியையோ ஒரு புதுமைப்பித்தனையோ உணர்ந்துகொள்ளாமல், தமிழர்களிற் பெரும்பாலோர் கல்கியையும் குமுதம் கதைகளையும் பாராட்டத் தொடங்கிவிடுகிறார்களே, ஒரு ஷண்முகசுந்தரத்தை அறிந்துகொள்ளாமல் அகிலனைப் பாராட்டத் தொடங்கிவிடுகிறார்களே என்கிற தாபத்தில்தான், நான் விமர்சனத்துறையில் ஈடுபட ஆரம்பித்தேன்’ என்று, அவரே ஓர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ‘இலக்கிய வட்டம்’ போன்ற தனது சஞ்சிகையின்மூலம் விமர்சன இயக்கத்தையே நிகழ்த்திச் சென்றார். ‘எழுத்து முதல் இன்றைய சிறுசஞ்சிகைகளிற் காணப்படும் விமர்சன அக்கறைக்கு அவரது ஆரம்ப முயற்சிகள்தான் ஓர் அடிப்படையை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.
2. ஆங்கிலத்திலும் வேறு ஐரோப்பிய மொழிகளிலும் சாதனை புரிந்துள்ள எழுத்தாளர் பலரின் நூல்களைத் தமிழ் மட்டும் தெரிந்த வாசகனும் பயன்பெறும்வண்ணம், உயிர்த்துடிப்புள்ள மொழிபெயர்ப்புக்களைச்செய்து அளித்துள்ளார். உலக இலக்கிய வளத்தின் ஒரு பகுதியையேனும் தமிழிற்குக் கொண்டுவர முயன்ற அவரது அக்கறையும், உழைப்பும் பிரமிக்கத்தக்கது. நட் ஹம்சன் ("நில வளம்), கத்தரீன் ஆன் போர்ட்டர் (‘குருதிப் பூ"); பேர் லாகர்குவிஸ்டு ("அன்பு வழி’), ஆந்ரே ஜீத் (“குறுகிய வழி'); ஜோர்ஜ் ஓர்வெல் ('விலங்குப் பண்ணை’, ‘1984), ஸெல்மா லாகர் லெவ் ('மதகுரு’), ரோஜர் மார்ட்டின் து கார்டு (தபால்காரன்’); வில்லியம் ஸரோயன் (மனுஷ்ய நாடகம்'); ஆறு அமெரிக்க - ஐரோப்பிய நாடகாசிரியர் ("ஏழு நாடகங்கள்’) போன்ற சிறந்த படைப்பாளர்களுடன், இவர்மூலமே தமிழ் வாசகன் பரிச்சயங்கொள்ள முடிந்தது. மறுதலையாக பல தமிழ்ச் சிறுகதைகளையும், தலைமுறைகள்’ போன்ற நாவல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதன்மூலம், பிறநாட்டு வாசகர்களிற்கும் தமிழ்ப் படைப்பாளிகளைப் பரிச்சயப்படுத்தியிருக்கிறார்.
3. தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக இருக்கிறார். கவிஞராக, சிறுகதையாளராக அவர் வெற்றிபெறவில்லைத்தான்; ஆனால் “பொய்த்தேவு’, ‘அசுரகணம், ‘ஒரு நாள்’ ஆகிய அவரது நாவல்கள் தமிழின் சிறந்த நாவல்களிற் சிலவாகக் கணிக்கப்படுகின்றன.
சமீப ஆண்டுகளாக, சிறந்த தமிழ்ப் படைப்பாளிகள் சாஹித்ய அக்கடமியால் கெளரவிக்கப்பட்டு வருகிறார்கள். முன்பு நிலவிய மோசமான நிலைமைகள் இவ்வாறு மாற்றமுறுவதற்கும் க. நா. சு. போன்றவர்களின் தொடர்ந்த விமர்சன இயக்கமே அடிப்படை என்பதையும், நாம் புறக்கணிக்க முடியாது.
அலை - 30 பங்குனி 1987 திசை
14.01.1989
குறிப்பேட்டிலிருந்து.

நண்பர் இ. பத்மநாப ஐயருக்கு 'இயல் விருது’* வழங்கப்படுவதான செய்தி தெரியவந்தபோது உடனே, பிறிதொரு சம்பவம் நினைவிற்கு வந்தது.
ஒரிரு வருடங்களின் முன்னர் 'தினக்குரல் பத்திரிகையின் வாரவெளியீட்டில் - நான்கு இதழ்களில் தொடர்ச்சியாக - பத்மநாப ஐயரின் விரிவான நேர்காணல் வந்திருந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் எழுத்தாளர் (இவர், சிறுகதைத்துறையில் தன்னை ஒரு ‘ஹீரோ" எழுத்தாளராக நம்புபவர்), 'இவரெல்லாம் (பத்மநாபன்) என்ன செய்திற்றாரெண்டு நேர்காணல் போடுறாங்க. என்று எரிச்சல்பட்டாராம். கதை, கவிதை எழுதுவது மட்டுந்தான் இலக்கியச் செயற்பாடு என்று கருதும்(!) இவர், இப்போது ‘இயல் விருது' அறிவிப்பு வந்துள்ளதை அறிந்ததும் என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லை! --
சிறுகதை, கவிதை எழுதித் தனது பெயரில் ஒருவர் வெளியிடுவதில் ஒருவித சுயநலம் இருக்கிறது.
4)
அ.யேசுராசா

Page 52
ஆனால், தான் “படைப்பாக ஒன்றையுமே எழுதாதபோதிலும் ஏனைய தரமான எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொண்டுவருவதிலும், தரமான நூல்கள் - சஞ்சிகைகளைப் பரவற்படுத்துவதிலும், எழுத்தாளர்களிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பதிலும், ஈழத்துப் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான களத்தைச் சென்றுசேர்வதிலும் தன்னை அர்ப்பணித்துச் சோர்வறியாது பத்மநாபன் செயற்படுவதில், பொதுநல அக்கறையே அடிநாதமாயுள்ளது.
O O
1968இல் சென்னை 'வாசகர் வட்டம் வெளியீடாக வந்த 'அக்கரை இலக்கியம்’ நூலின் பதிப்புரையில், ‘இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுப்பதில் பேரார்வம் காட்டி, பல கதைகள், கட்டுரைகள் பிரதிகளை அனுப்பிவைத்த பூணூரீ. ஆர். பத்மனாபனுக்கு எங்கள் நன்றி உரித்தாகும். என்பதை வாசித்தபோது அவரைப்பற்றிய வேறு விபரமேதும் எனக்குத் தெரியவரவில்லை. 1972இன் பிற்பகுதி அல்லது 1973இன் முற்பகுதியில், இலக்கிய நண்பரான "தில்லைக்கூத்தன்’ மாத்தளைப் பகுதியில் அல்வத்தை என்ற இடத்திலுள்ள பத்மநாப ஐயர் என்பவரிடம், தமிழகச் சிறுசஞ்சிகைகளைப் பெறலாம் என்ற தகவலையும் முகவரியையும் தந்தார். அப்போது நான் பேராதனை அஞ்சலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பத்மநாபனிற்குக் கடிதத்தின்மூலம் அறிவித்துவிட்டு, நானும் எனது அறைத் தோழரான நா. முருகதாஸும் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று மாத்தளைக்குப் பேருந்திற் சென்று, பின் வேறொரு பேருந்தில் அங்கிருந்து ஆறேழு மைல்கள் தொலைவிலுள்ள அல்வத்தைக்குச் சென்றோம்.
சுமார் நாற்பது சிங்கள இளைஞர்களும், நல்லின மாடுகளும், மாடுகளிற்கு உணவாகும் விசேட இனப் புல் வளர்ப்பதற்குரிய விசாலமான நிலப்பரப்பையும் கொண்ட ஒரு கூட்டுறவுப் பண்ணைக்குப் பொறுப்பான 'பிரிவு அலுவலராக’ பத்மநாபன் இருந்தார். அவரது குடும்பத்துடன் தங்கியிருந்த அலுவலர் விடுதிக்குச் சென்றோம் ; அவரும் எம்மை எதிர்பார்த்திருந்தார். அதுதான் அவருடனான எனது முதற்சந்திப்பு.
ஈடுபாட்டுடன் எம்முடன் பழகி தன்னிடமிருந்த ‘எழுத்து’, ‘கசடதபற’, நடை’, ‘அஃக்’, ‘ஞானரதம்’, ‘சதங்கை’, ‘வானம்பாடி’ முதலிய தமிழகச் சிறுசஞ்சிகைகளையும் நூல்களையும் காட்டினார். வேறிடத்தில் பெறுவதற்கரிதான அவற்றைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சியாயிருந்தது. பலவற்றைச் சொந்தமாய்ப் பெற்றுக்கொள்ள முடிந்தது; வேறு சிலவற்றை வாசித்துவிட்டுத் திருப்பித் தரும்படி கொடுத்தார். அங்கேயே மதிய உணவும் அருந்தி, இலக்கியம்பற்றி உரையாடி, மாலையில் பேராதனைக்குத் திரும்பினோம். அதன் பிறகு சில மாதங்களிற்கொரு தடவை சென்று அவரைச் சந்திப்பது வழமையாகியது. எனது நவீன இலக்கிய வாசிப்புத் தாகத்தைத் தீர்ப்பதற்கும் தரமான நூல்களின் சேகரிப்பை விவாக்குவதற்கும் அவருடனான சந்திப்புகள் துணையாயின. இது பிற்காலம் வரை - மிக நீண்டகாலமாய்த் தொடர்கிறது; அதனால் நிறையப் பயன் அடைந்தவன் நான்.
OO
கொழும்பில் கடமையாற்றிக்கொண்டிருந்த நான், 1981 மார்கழியில் நத்தார்ப்
பண்டிகைக்காக, விடுமுறையில் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வந்திருந்தேன். 1982
குறிப்பேட்டிலிருந்து.

தை மாதம் 1, 2, 3ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள எழுபதுகளில் கலை, இலக்கியம்’ என்ற தலைப்பிலான ‘இலக்கு அமைப்பின் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவேண்டுமென்று பத்மநாபன் வற்புறுத்தினார். அப்போது 'அலை’ இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. தமிழகத்திற்கும் டெல்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களுர், திருவனந்தபுரம் போன்ற பிற மாநில நகரங்களிற்கும் சுமார் 200 பிரதிகள்வரை அனுப்பிக்கொண்டிருந்தோம். ஒரே இடத்தில் ஏராளமான எழுத்தாளர்களைச் சந்திக்க முடியுமென்பதாலும், தமிழக - ஈழத்துப் படைப்புகள் பற்றிய எமது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளதென்பதாலும், கட்டாயம் அக்கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவேண்டுமென்பது அவரது நிலைப்பாடு. சில காரணங்களால் நான் தயங்கியபோதிலும், அவரதும் நித்தியானந்தனதும் வற்புறுத்தலுக்கு இணங்க நேர்ந்தது. உடனே கொழும்பு திரும்பினேன். தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு என்பவற்றைப் பெறுவதற்கும் விமானப் பயண ஒழுங்குகளிற்கும் தனது நண்பர்கள்மூலம் ஆவனசெய்தார் ; சென்னையில் “க்ரியா’ ராமகிருஷ்ணனின் வீட்டில் தங்குவதற்குரிய ஒழுங்கினையும் செய்திருந்தார்.
‘இலக்கு கருத்தரங்கின் முதல்நாளே எழுபதுகளில் தமிழ் இலக்கியமா? அல்லது ‘எழுபதுகளில் தமிழக இலக்கியமா?’ என்ற கேள்வியை எழுப்பி, ஈழத்து இலக்கியங்கள் பற்றிய அக்கறை போதிய அளவில் காட்டப்படாததைச் சுட்டிக்காட்ட முடிந்தது. அங்கிருந்த எஸ். எம். ஜே. பைஸ்தீன், கி. பி. அரவிந்தன் ஆகியோரும் இணைந்து குரல் கொடுத்தனர். இக்கருத்தரங்கிலேயே ஞானி, தமிழவன், ஞாநி பிரபஞ்சன், சா. கந்தசாமி, ராஜ்கௌதமன், சாருநிவேதிதா, எஸ். வி. ராஜதுரை, கி. அ. சச்சிதானந்தம், வெ. மு. பொதியவெற்பன் முதலியவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. ஒரு பெரிய சூட்கேஸ் நிறையப் பத்மநாபன் தந்துவிட்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைப் படைப்பாளர் பலரிடமும் கொடுத்தேன்.
OO 1982 பங்குனியில் பத்மநாபன், து. குலசிங்கம், நான் ஆகிய மூவரும் தமிழகத்தின் பல இடங்களிற்கும் சென்றோம். இம்முறை ஏராளமான இலக்கியக்காரரைச் சந்திக்கவும், அவர்களோடு தங்கி உரையாடல் நிகழ்த்தவும் முடிந்தது. பத்மநாபன் கொண்டிருந்த தொடர்புகளும், அவரின் உரிய திட்டமிடலும் எமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், ராஜமார்த்தாண்டன், கி. அ. சச்சிதானந்தம், வேதசகாயகுமார், அ. கா. பெருமாள் முதலியோரை நாகர்கோவிலிலும்: ஆ. மாதவனை திருவனந்தபுரத்திலும்: கி. ராஜநாராயணன், ஜோதிவிநாயகம், தேவதச்சன் முதலியோரைக் கோவில்பட்டியிலும்: சி. மோகன், தி. சு. நடராசன், வைகை குமாரசாமி முதலியோரை மதுரையிலும். சிவகங்கையில் “மீராவையும். எஸ். ஆல்பர்ட், க. பூரணச்சந்திரன், 'மானுடம் விஜயகுமார் முதலியோரைத் திருச்சியிலும்: ஞானி, சிற்பி, புவியரசு முதலியோரை கோவையிலும்: ஜி. எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன், “காவ்யா சண்முகசுந்தரம் முதலியோரைப் பெங்களுரிலும்; அசோகமித்திரன், சா. கந்தசாமி, கோபிகிருஷ்ணன், ‘வாசகர் வட்டம் லக்ஷமி கிருஷ்ணமூர்த்தி, "க்ரியா’ ராமகிருஷ்ணன், திலீப்குமார் முதலியோரைச் சென்னையிலும் சந்திக்க முடிந்தது. இவ்வாறு பெரும்
அ. யேசுராசா

Page 53
எண்ணிக்கையில் எழுத்தாளர்களுடன் - அவர்களிற் பலர் பிரபலமானவர்கள் - பழக முடிந்தமை அரிய வாய்ப்பாகும்; பத்மநாபன் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. OO 1975 கார்த்திகையில் 'அலை’யின் முதலிதழ் வெளிவந்தது. ஆரம்பத்தில் இதற்கு பத்மநாபனின் ஒத்துழைப்பு அதிகளவில் இருக்கவில்லை ; பின்னர் ஒரு கட்டத்திலேயே அவரது ஈடுபாடு அதிகரித்தது. 'அலையின் கருத்துநிலை, அவற்றை வெளிப்படுத்தும் முறை, "அலையின் பல்துறை ஈடுபாடுகள், ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பு என்பவை தனது ஈடுபாட்டை அதிகரித்ததாய்ப் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார். ஆசிரியர் குழுவிற்கு ‘வெளியில்’ இருந்தாலும், அலையுடன் இணைந்த ஒருவர்போலவே - தனக்கேயுரிய தீவிர முனைப்புடன் பின்னர் செயற்பட்டார். ஈழத்திலும் தமிழகத்திலும் எழுத்தாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், விடயங்களைப் பெறுதல், விளம்பரங்கள் சேகரித்தல், விநியோகம் எனப் பலவிதங்களில் ஒத்துழைத்தார். தமிழவன், திலீப்குமார், அசோகமித்திரன், எஸ். வி. ராஜதுரை, ஜோதிவிநாயகம், கோபிகிருஷ்ணன் போன்ற தமிழக எழுத்தாளர்களின் படைப்புகள் 'அலையில் வெளியான பின்னணி இதுதான்.
“அலை வெளியீடாக இதுவரை ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில நூல்கள் வெளியாவதற்குரிய பொருளாதார ஆதரவையும் ஊக்கத்தையும் பத்மநாபனே தந்தார். ‘மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்’, ‘ஒரு கோடை விடுமுறை’, ‘தேசிய இனப்பிரச்சினையும் முஸ்ஸிம் மக்களும்’, ‘அகங்களும் முகங்களும் ஆகிய நூல்கள் இவ்வாறு வெளிவந்தவை.
“அலை’யின் பழைய இதழ்கள் தேவையென இங்கும் தமிழகத்திலுமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். 1 முதல் 12 வரையான இதழ்களை யாழ். புனித வளன் அச்சகத்திலிருந்த "பேபி ஒவ்செற்" இயந்திரத்தின்மூலம் மீள்பதிப்புச் செய்ய பத்மநாபன் முயன்றார். தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு சஞ்சிகை இவ்வாறு மீள்பதிப்புப் பெறுவது இதுதான் முதன்முறை. எனினும் செலவு காரணமாக நான் தயக்கங்காட்டினேன். ஆனால் பத்மநாபன் தானே பொறுப்பெடுத்து, 300 பிரதிகள்வரை அச்சிட்டு, தரமான 'கலிக்கோ' கட்டமைப்புடன், 1986 ஆனியில் அத்தொகுதியை வெளிக்கொண்டுவந்தார்.
இன்றுவரை, எழுத்தாளர் பலரின் படைப்புகள் நூல்வடிவில் வருவதற்குப் பத்மநாபன் காரணராக இருக்கிறார். 1974இல் வெளிவந்த எனது ‘தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத் தொகுதி, அச்சுத் தெளிவீனத்தைக் கொண்டிருந்தது; அதற்கு நல்லதொரு பதிப்பு வருவதன் அவசியத்தை அச்சிறுகதைகளை இரசித்த நண்பர் பலர் சொல்லி வந்தனர். 1989இல், பூரணி வெளியீடாகச் சென்னையில் அதன் திருத்தமான இரண்டாவது பதிப்பை அழகிய முகப்புடன் கொண்டுவந்தவர்கள், நித்தியானந்தனும் ஐயரும். எனது கவிதைகள் ‘அறியப்படாதவர்கள் நினைவாக. என்ற பெயரில் அழகிய பதிப்பாக, புகழ்பெற்ற “க்ரியா’ பதிப்பக வெளியீடாக வருவதற்கும் (1984), நுஃமானும் நானும் தொகுப்பாளராகவுள்ள (உண்மையில், தொகுப்புப் பணியில் ஐயரும் பங்கேற்றிருந்தார்; ஆனால் தனது பெயரைச் சேர்க்க அவர் விரும்பவில்லை)
குறிப்பேட்டிலிருந்து.

93
‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ ‘க்ரியா’ வெளியீடாக (1984) வருவதற்குமுரிய ஒழுங்குகளைச் செய்தவரும் அவர்தான்!
OO ஈழத்தில் பத்மநாபன் இருந்த வேளை, பதிப்புச் செயற்பாடுகளிலும் ஏனைய கலை - இலக்கிய வேலைகளிலும் அவருடன் இணைந்து நீண்டகாலம்
செயற்பட்டிருக்கிறேன்; எம்மிடையே சுமுகமான உறவுநிலை நீடித்துவந்தது. அவர் இலண்டன் சென்றபின், இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குரிய தேவையும் - வசதிகளும் அங்கு இருப்பதாகத் தெரிவித்து, நிரந்தரமாக அங்கு வந்து வசிக்கும்படியும், அதற்குரிய ஒழுங்குகள் யாவற்றையும் எனக்கு எச்சிரமமுமின்றிச் செய்து தருவதாகவும் அறிவித்தார் ; 1992இலும், 1997இலும் இரு தடவைகள் இவ்வாறு வற்புறுத்தினார். ஆனால், வெளிநாடு சென்று நிரந்தரமாகத் தங்குவதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை; உண்மையில், நான் ஏற்றுக்கொண்டிருந்த கருத்துநிலையின்படி, அவ்வாறு நான் வெளியேறிச்செல்வது தவறு என்ற கருத்து என்னிடமிருந்தது.
ஈழத்திலுள்ள எழுத்தாளர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு அழைத்து அங்குள்ள கலை - இலக்கிய - பண்பாட்டுச் சூழலில் அனுபவம் பெறவைப்பது பலவிதங்களில் நன்மை விளைக்கும் என்ற நோக்கில், அவ்வாறானதொரு நிகழ்ச்சிநிரலை வேறு நண்பர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப் பத்மநாபன் முற்பட்டார். அந்தவகையில் ‘தமிழர் தகவல் நடுவம்’ மூலமாக, இலண்டன் வரும் வாய்ப்பினை கவிஞர் சு. வில்வரத்தினத்திற்கும் எனக்கும் 2001இல் ஏற்படுத்தித் தந்தார். பல தடவைகளில் பயன்படுத்தக்கூடிய (Multiple Visa) நான்குமாத விசா பெற்று, அங்கு சென்றோம். அங்கிருந்து பிரான்ஸ், யேர்மனி, ஒல்லாந்து, நேர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிற்குச் சென்றுவரக்கூடிய ஒழுங்குகளையும், தான் தொடர்புவைத்திருந்த கலை - இலக்கியவாதிகள்மூலம் செய்து தந்தார். இதன் காரணமாக, புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாட முடிந்தது; நோர்வே, பேர்கனில் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியச் சந்திப்பிலும் பங்குபற்ற இயலுமானது.
பிக்காஸோ, வான்கோ, முன்ச் ஆகிய உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளிற்கான தனித்தனி அருங்காட்சியகங்கள், இலண்டனிலுள்ள ‘தேசிய கலை அருங்காட்சியகம்’, ‘நவீன கலைகளிற்கான அருங்காட்சியகம்’, பாரிஸிலுள்ள லூவ்ரே' அருங்காட்சியகம் போன்றவற்றில் பெற்ற உன்னத அனுபவத்தை - பேருணர்வை மறக்கவியலாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னும் ஏராளம் இடங்களைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியது. கலைபற்றிய நுண்ணுணர்வும், அறிதல் வேட்கையுங்கொண்ட - தன்னுணர்வுள்ள எவரிற்கும் கிடைக்கவேண்டிய வாய்ப்புத்தான் இது; ஆயினும், பத்மநாபனின் உதவியில்லையேல் இத்தகு வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்குமென்பது சந்தேகமே
O Ο --
தான் எடுக்கும் முடிவுகளைச் செயலாக்குவதில் எப்போதும் தீவிரத்தன்மை
கொண்டவர் பத்மநாபன் ; சோர்வடையாதவர், பணச்செலவையும் உடற்சிரமத்தையும்
அ.யேசுராசா

Page 54
9.
பொருட்படுத்தாதவர்.
சனி, ஞாயிறு, விடுமுறை நாள்களில் இலக்கியக்காரரைச் சந்திப்பதற்கு அல்லது வெளியீட்டு முயற்சிகளிற்காக பொருளாதார உதவிகளைத் திரட்டுவதற்கு பொருத்தமானவர்களைச் சந்தித்து, நோக்கங்களின் பெறுமதியை விளக்குவதற்கென்று - தொலைவிலுள்ள இடங்களிற்கும் சென்றுவிடுவர். அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது முற்பகலில் வீட்டிற்குச் சென்றால், காலையில் கோப்பியை மட்டும் குடித்துவிட்டுச் சென்றிருப்பது தெரியவரும், மாலையில் சென்றால் மத்தியானச் சாப்பாட்டிற்கும் வந்திராதது தெரியவரும். பல தடவைகளில் எனக்கு இவ்வாறான அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது. தனது செளகரியத்தை அலட்சியப்படுத்தியபடிதான் அவர் செயற்பட்டிருக்கிறார்.
1982 பங்குனியில் விமானமூலம் தமிழகம் சென்ற நாங்கள், திரும்பும்போது இராமேஸ்வரத்திலிருந்து கப்பல்மூலம் மன்னார் வந்து சேர்ந்தோம். யாழ். பொது நூலகம், பல்கலைக்கழக 'மறுமலர்ச்சிக் கழகம்’ மற்றும் எமது மூவரின் தேவைக்குரிய நூல்கள், சஞ்சிகைகள், அரிய வெளியீடுகளெனச் சுமார் பன்னிரண்டு சாக்கு மூடைகளில் சேர்த்துக்கொண்டு வந்திருந்தோம். இறங்குதுறையிலிருந்து சுங்க அலுவலகம்வரை அவற்றை எப்படிக் கொண்டுசெல்வது என்று குழப்பமுற்றோம்; ஏனெனில், அலுவலகம் சுமாரான தொலைவிலிருந்தது. பயணிகள் பலரும் தமது குறைந்த பொருள்களுடன் முன்னே சென்றுவிட்டனர். திடீரென ஒரு மூடையைத் தூக்கித் தோளில் வைத்த பத்மநாபன், இன்னொரு மூடையைத் தூக்கித் தனது தோளில் வைக்கும்படி என்னிடம் சொன்னார், இரண்டையும் சுமந்து சென்றார். திகைப்படைந்த நான் அதிலிருந்து விடுபட்டு, ஒரு மூடையைச் சுமந்து சென்றேன். இவ்வாறு இருவரும் எல்லா மூடைகளையும் கொண்டு சேர்த்தோம்; குலசிங்கம் மூடைகளைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
முக்கிய எழுத்தாளர் - கவிஞர்களின் படைப்புக்கள் நூலுருவில் வரவேண்டுமென்பதில் அக்கறைகொண்டவராய், முதலில் அவர்களிடமுள்ள பிரதிகளைப் பெற்றும் வேறு வெளியீடுகளில் வந்தவற்றைத் தேடித் திரட்டியும் - தனது பணத்தைக் கொடுத்துத் தட்டச்சுச் செய்வித்துத் தொகுப்பாகக் கட்டிவைத்திருப்பதில், சலியாது ஈடுபடுவார். இவ்வாறு பலருடைய ஆக்கங்களைப் பேணியுள்ளார். உடற்சிரமத்துடன் பணச்செலவையும் ஏற்படுத்தும் இச்செயற்பாடுகளில் அவர் திருப்தியுடன்தான் ஈடுபட்டார். தன்னலத்தைக் கடந்த இப்பொதுநல அக்கறை சார்ந்த பத்மநாபனின் வாழ்வுப்பணி, ‘மற்றவர்க்காய்ப் பட்ட துயர்.’ என்ற கவிஞர் மஹாகவியின் வரியினை நினைவிற்குக் கொண்டுவருகிறது!
ஆரம்பத்தில் நான் அறிமுகங்கொண்ட பத்மநாபன் நிறைய வாசிப்பவர்; அதுபற்றிய விமர்சன - இரசனைக் குறிப்புகளைப் பரிமாறுபவர். 'கணையாழி’ இதழில் அவர் எழுதிய சில விமர்சனக் கடிதங்கள் பரிசு பெற்றிருக்கின்றன. கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடுகொண்டு இரசிப்பவர் ; அதுபற்றிக் கதைப்பவர். பின்னாளில் - பொது அக்கறைகொண்ட தொடர்புகள், செயற்பாடுகள் விரிவடைய அவரது வாசிப்பு குறைந்துவிட்டது : ஒருவிதத்தில், பொதுநலனிற்காக அவர் கொடுக்க நேர்ந்த விலைகளில் ஒன்றுதான் அது.
குறிப்பேட்டிலிருந்து.

OO
மீண்டும். முதலிற் குறிப்பிட்ட ‘ஹீரோ” எழுத்தாளரைப் போன்றவர்கள் கதைகள் எழுதி, வசதியான பத்திரிகைகள் - சஞ்சிகைகளில் வெளிவரப் பணிணி, தொகுப்புகளாக்கி, ‘உரியவர்களிற்கு இசைவாக நடந்து பெறும் ‘அங்கீகாரங்களைச் சேமித்து, பரிசுகளையும் பெற்றுத் தாம் செளகரியமாக வாழ்வதே பெரிது எனக் கருதலாம்; ஆனால், சாராம்சத்தில் அவையெல்லாம் ‘சுயநலம்’ நிறைந்த செயற்பாடுகளே!
மாறாக, சக படைப்பாளிகளின் மேன்மை, நல்ல படைப்புகளின் - நல்ல இரசனையின் பரவலாக்கம், தமிழைப் பேசுவோராயினும் நிலவெளி கடந்த தனித்துவச் சிறப்பம்சங்களின் கொடுக்கல் - வாங்கல்கள், ஒரு தேசிய இனத்தின் தனித்தன்மைகளைப் படைப்புகள் வாயிலாகப் பிறமொழியினரிடமும் கொண்டுசெல்லும் மொழிமாற்ற முயற்சிகள் போன்றவற்றால் வளர்ச்சிப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும் பத்மநாப ஐயருக்கு 'இயல் விருது' வழங்கப்படுவதானது, என்றும் முன்னிறுத்தவேண்டிய “பொதுநல அக்கறைக்கு வழங்கப்படும் உரிய அங்கீகாரமே!
இந்த அங்கீகாரம் பெருமைக்குரியது!
*கனடிய தமிழ் இலக்கியத்தோட்டம்’, ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் ‘தென்னாசியக் கல்வி மையம்’ ஆகியன இணைந்து, ஆண்டுதோறும் வழங்கிவரும் விருது ; 2004 இற்குரிய விருது பத்மநாப ஐயருக்கு வழங்கப்பட்டது. O
காலம் ஆனி 2005
அ.யேசுராசா

Page 55
காவிகளும் ஒட்டுண்ணிகளும் (புதுக்கவிதைத் தொகுப்பு)
அன்பு ஜவஹர்ஷா
101, புத்தகாயா மாவத்தை, அனுராதபுரம். விலை 2.00 ரூபா
‘எங்களுக்குப் பிரச்சினைகள் உண்டு’ என்று சொல்லியபடி "மக்களின் கஷ்ரங்கள் தொலையப் பாடும் கவிஞர் நாங்கள்’ என்றும் சொல்லுகிற ஜவஹர்ஷா, இத்தொகுப்பினை ‘இது யாருக்காக. / மக்களே. உங்களுக்கே / இது’ என்று மக்களிற் கே சமர்ப்பித்துள்ளார். சரி, இவ்வாறு சொல்லுகின்ற கவிஞர் மக்களின் பிரச்சினைகளின் அடி ஆதாரங்களை விளக்கிக்காட்டுவதோடு, அவற்றை ஒழிப்பதற்குரிய சரியான வழிமுறைகளையும் காட்டியிருக்கவேண்டும்; ஆனால், அவருக்கு அத்தகைய தரிசனம்’
குறிப்பேட்டிலிருந்து.
 

இல்லையென்றே தெரிகிறது. அதனால்தான், ‘சிலருக்கு. / எப்போதும் இன்பம்தான் / பலகோடி ஏழைகளுக்கு / இன்பம் எப்போது?’ என்று எம்மிடமே கேள்வி கேட்பதோடு, பஸ் நிறுத்தத்தில் இளம்பெண்ணின் முன்னால் இளைஞனொருவன் பிச்சைக்காரனுக்குக் காட்டும் தாராளத்தையும் ("தர்மம்), மதங்கடந்து வரவும் தயாரான காதலி ‘சிவமயம்’ என்று தொடங்கிக் கடிதம் எழுதியதையும் (“சலனம்) பற்றி எழுதுகிறார் ; பிரக்ஞை உள்ள வாசகர்களே விளங்காது தவிக்கக்கூடிய தெளிவற்ற கவிதைகளையும் (“காவிகளும் ஒட்டுண்ணிகளும்) எழுதுகிறார். இத்தகைய கவிதைகளால் மக்களுக்கு என்ன பயன் கிட்டப்போகிறது? ‘சிவப்புச் செடி நட்டு / தண்ணீர் வார்த்து / அதுவரை / புரட்சிக் கீதமும்’ நண்பர் பாடுகிறார். செடி வளர “கீதங்கள்’ உதவாதது போல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவப் போவதில்லை; அதற்கு வேறு இயக்கங்கள்தான் தேவை.
‘புதுக்கவிதை’ என்ற பெயரைப் பற்றி நாம் கவலைப்படவில்லை ; இவை ‘கவிதையாகத் தேறுகின்றனவா என்பதிலேயே எமக்கு அக்கறை. இத் தொகுப்பிலேயே “ஆலயத்தில் போதகர். / எல்லாம் ஓதி முடித்தார் / கனவு கலைந்து. / மக்கள் எழுந்து சென்றனர்’ என்ற ஒரு கவிதையிற்றான் (கனவுகள்') கவிதையின் சாயலே தெரிகிறது; மற்றவை எந்தவிதக் கவிதா அனுபவத்தையும் தரவில்லை. இரண்டொன்றில் சில கருத்துக்கள் மட்டும் ("தேர்தல் முடிவு) கவர்கின்றன. தமிழகத்து ‘வானம்பாடிகள்', ‘வெறும்பாடிகள்’, ‘சில உடன்பாடிகளின்’ கவிதைகளைப் போன்று வசனத்தன்மையே இங்கும் தெரிகிறது. புதுக்கவிதைக்கும் ஒசைத்தன்மை உண்டு. கையாளப்படும் பொருளுக்கும், கவிஞனது தனித்த ஆளுமைக்குமேற்ப வித்தியாசங்கொண்டதாய், தொடர்ச்சியான ஒத்திசையாக (அது மரபுக் கவிதையின் சந்தமல்ல) அது அமையுமென்ற பிரக்ஞை பெரும்பாலான புதுக்கவிதைக் கவிஞர்களிடம் இல்லாததுபோல ஜவஹர்ஷாவிடமும், இல்லாதமை தெரிகிறது. அதனால்தான், ‘ஒரு நாள். / தொழிலாள, விவசாயிகளுடன் /அந்த இளம் விவசாயிகள் கூட்டமும், / அல்லல்படும் அனைவரும் கூடி / குன்றுகளைத் தகர்த்து. / பசுமை நிலங்களில். /நவயுகத்தைத் தோற்றுவித்தனர் என்ற வசனப் பந்தியைக் கவிதையென நம்பித் தந்துள்ளார் ; நாம் நம்பமாட்டோம்!
தொகுப்பின் பிற்பகுதியில் ‘கவிதைகள் பற்றி குறிப்பெழுதிய நண்பர், 'கண்ணாடியுள்ளிருந்து மீட்டுவோர்களதும் (தருமு அரூப் சிவராம்), “தோணிகளிற் பவனி வருவோர்களதும்’ (தமிழன்பன்) கவிதைப்போக்கில் இத்தொகுதி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமென்பது நிச்சயமே, என்று சொல்கிறார். மாற்றமென்ன சிறு சலனத்தையே இதனால் எழுப்ப முடியவில்லை ; `வெற்றுச் சிவப்புச் சொற்களாலான தோணிகளை’ விட்டுவிட்டு, தருமு சிவராமு போன்றோரின் புதுக்கவிதைக் கலைமுறையை (உள்ளடக்கத்தை விட்டுவிட ஜவஹர்ஷாவுக்குச் சுதந்திரமுண்டு) கிரகிப்பது, எதிர்காலத்திலாவது அவருக்கு உதவக்கூடும்!
(அடைப்புக் குறிக்குள் உள்ளவை என்னால் இடப்பட்டவை) 回
அலை - 1 கார்த்திகை 1975
அ.யேசுராசா

Page 56
இன்னொரு வெண்ணிரவு சாந்தன் ‘வெண்புறா வெளியீடு’, விலை : ரூபா 10/-
பொதுவாகச் சமூக முரண்பாடுகளையும், குறிப்பாக வர்க்க முரண்பாடுகளையும் சித்திரிக்கும் படைப்புக்களையே முற்போக்கு இலக்கியமாகக் காணும் விமர்சகர்கள் க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் சாந்தனைச் “சிறந்த முற்போக்கு எழுத்தாளர்” என்றே பாராட்டியுள்ளனர். ஆயினும், ‘சமூக முரண்பாடுகளையோ, வர்க்க முரண்பாடுகளையோ’ அவரது பெரும்பாலான படைப்புக்களில் நாம் காணமுடியாது; அதைவிட, தம்முடன் நில்லாத எழுத்தாளர் யாராவது எழுதியிருந்திருந்தால் 'பாலியல் வக்கரிப்புக்கள்’ (Sexual Perversions) என்று சொல்லியிருக்கக்கூடிய கதைகளைச் சாந்தன் எழுதியிருப்பதையும் (The Professional', ‘நீக்கல்’ போன்றவை), அவ்விருவரும் வசதியாக மறந்துவிடுகின்றனர். இன்னொரு பக்கத்தில், மார்க்சிய விமர்சகரான ஏ. ஜே. கனகரட்ணா சாந்தன் பெரும்பாலும் யன்னலால் பார்த்தபடி நிற்கிறார்; அதனால் அவருக்குப் படுவது குறுகிய தரிசனங்கள். யன்னலால் பார்க்கக்கூடாது என்றில்லை; ஆனால், நெடுகவும் அப்படிப் பார்த்தபடி நிற்பதுதான் பலவீனம்’ என்று கூறுவதில், பெரிதும் உண்மையுண்டு. சாந்தனின் பெரும்பாலான கதைகள் குறுகிய தரிசனங்களையே தருவன. சாதாரண விடயங்களைப் புத்திசாலித்தனமாகச் சொல்லமுயலும் - நூதனங் காட்டும் - புதிர்போடும் - தன்மையனவாய் அவற்றில் பலவும் இருப்பதால், உணர்வைச் சலனப்படுத்துவதில்லை. எம். எல். எம். மன்சூர், உமாவரதராஜன், ரஞ்சகுமார் போன்ற எமது சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் செய்வதுபோல் - நுண்மையான வாசகனின் ஒர உணர்வுகளைக் கிளரச்செய்து திரட்ட - சாந்தனின் பெரும்பாலான கதைகள், சக்தியற்றவை ; இத்தொகுப்பிலுள்ள 14 கதைகளிற் பெரும்பாலானவையும் அவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. ஏன், அலுமார், இன்னொரு வெண்ணிரவு, அளத்தல், தோல்வி போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள்.
“எட்டியது' என்ற கதையைத் தவிர்த்து ஏனைய 13 கதைகளிலும் சாந்தனே கதாநாயகனாக வருகிறார். நூதனமாகச் சொல்லவேண்டுமென அவர் அந்தரப்படுகையில், முரணுடன்கூடிய போலித்தன்மைகள் அவர் அறியாமலேயே வெளிப்பட்டுவிடுவதையும் ஆங்காங்கே அவதானிக்க முடிகிறது. உ- ம் : பலா மரத்தின் முக்கியத்துவத்தில் அவ்வளவு கரிசனை காட்டுபவன் அதனை வெட்டச் சம்மதித்திருக்கவே மாட்டான்; அதற்குக்காட்டும் காரணம் வலுவற்றது (நிழல்'); திருவுளச்சீட்டுப் போடுவதைப்பற்றி ஆத்திரப்படும் நான்’ என்ற பாத்திரம், துண்டை எடுக்கும்படி கேட்கப்பட்டதும்
குறிப்பேட்டிலிருந்து.
 

தானும் கலந்துகொள்கிறது ('மெளடிகங்கள்'); தான் போகவேண்டிய திசைக்கு எதிர்த்திசையில் போகும் பஸ்ஸில் வேண்டுமென்றே பயணம்செய்து, அலுவலகத்துக்குப் பிந்திப்போகும் கதாநாயகனின் நடத்தையே பைத்தியக்காரத்தனமானது. ஆனால், ‘எட்டேகால் எட்டரைக் கோடுகளை’ அலுவலக ‘றெஜிஸ்ரரில்" கீறி ஒழுங்கைப் பேணமுயலும் மேலதிகாரியை, அவன் “வெங்காயம்’ என நக்கலாக நினைக்கிறான் ('மீறல்); மோட்டார் சைக்கிளில் போகும் கதாநாயகன், தெருவோரத்தில் கிடக்கும் பழைய காரின் கோதினைக் கண்டதும் இதை யாராவது இன்னும் ஓரமாகத் தள்ளினால் நல்லது’ என நினைத்துக்கொண்டு செல்கிறான் ('யுகங்கள்’) - இதில், சாந்தனின் போலித்தனம் வெளிச்சமாகத் தெரிகிறது. சீர்கேடுகளில் அக்கறை இருப்பதுபோன்று ‘பாவனை’ காட்டவும் வேண்டும் ; ஆனால் அவற்றைக் களைவதில் பங்கேற்கமாட்டார்; அச்சீர்கேட்டை வேறு யாராவதுதான் (அவருக்காகவும்!) அகற்றவேண்டும். போலித்தனமில்லாத ஒருவன் வேறுமாதிரித்தான் - போக்குவரத்துக்கு இடைஞ்சலாகப் போட்டவர்களின் பொறுப்பின்மை மீது ஆத்திரப்பட்டிருப்பான் அல்லது ‘வேறு யாராவது உடன் இருந்திருந்தால் தள்ளிவிட்டிருக்கலாம்’ என்றோ, அவசரமாய்ப் போய்க்கொண்டிருந்தால், ‘இன்னொரு தடவை வரும்போது தள்ளிவிட வேண்டும்’ என்றோதான் - நினைத்திருப்பான்.
'கம்ப இராமாயணம் முதல் கல்குலஸ் வரை எழுத்தாளன் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்கிற சாந்தன், சிறுவர்கள் இப்போது 'சிலேற்’ பாவிப்பதில்லை என்பதை அறியாமலிருப்பது வேடிக்கையாயிருக்கிறது! இன்னொரு வெண்ணிரவு’ (முந்திய வெண்ணிரவு எதுவோ?) கதையினூடாகச் சாந்தன் கூறவரும் செய்தி - தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழனுடனல்லாது சிங்களவருடன் சேர்த்துத் தன்னை அடையாளப்படுத்தவே, இலங்கைத் தமிழன் முயலுவான் என்பது - யதார்த்தமாயில்லை. இந்த நாட்டின் சொந்தக்காரர்களாகத் தமிழர்களையும் தம்முடன் சேர்த்து நோக்கச் சிங்களவர்கள் தயாராயில்லாத யதார்த்த நிலைமையே, இதன் காரணம்.
14 கதைகள் கொண்ட இத்தொகுதியில் உலகங்கள், வாழ்க்கை, யுகங்கள் ஆகிய மூன்று கதைகள் எனக்குப் பிடித்தன; இம்மூன்றில்தான் ‘கலைஞனாக சாந்தன் வெற்றி காண்கிறார். பல கதைகள் 'சிறுகதைகளா’, ‘குட்டிக் கதைகளா’ என்ற கேள்வியினையும் எழுப்புகின்றன. முன்னுரை எழுதியுள்ள அசோகமித்திரன் “சிறிய சிறுகதைகள்’ என்று சப்பைக்கட்டு கட்டுவதையோ, “இவ்வளவு குறுகிய வடிவத்தில் இவ்வளவு மகத்தான செய்திகளை (அது அசோகமித்திரனுக்கே வெளிச்சம்!) தந்துவிடவும் முடியுமா” என்று வியப்பதையோ, பொருட்படுத்த வேண்டியதில்லை; எமது சொந்த அனுபவம் அதை மறுக்கிறது - அசோகமித்திரன் நல்லதொரு படைப்பாளி, அவ்வளவுதான்.
இன்னுமொன்று, புத்தகங்களின் தயாரிப்பில் வரவர முன்னேற்றம் காணப்படும் இன்றைய சூழலில், இப்புத்தகத்தின் தயாரிப்பும் அமைப்பும்கூட திருப்தி தருவதாயில்லைடு
அலை - 33 மார்கழி 1988
அ. யேசுராசா

Page 57
தீம் தரிகிட தித்தோம் செங்கை ஆழியான் “யாழ். இலக்கிய வட்ட வெளியீடு, விலை : ரூபா 15/-
@@ சீரியஸ் எழுதி தாளராகப் ‘பாவனை’ பண்ணுகிறபோதும், வெறும் ஜனரஞ்சக எழுத்தாளராகவே இருக்கிற செங்கை ஆழியானின் புதிய நூலாக, தீம் தரிகிட தித்தோம் நாவல்” (குறுநாவல்?) வெளிவந்துள்ளது.
1956 ஆம் ஆணிடின் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட சூழலும், சுரேந்திரன் - சோமா என்ற தமிழ், சிங்களக் காதலரின் காதல் உடைந்துபோவதும் அதில் சித்திரிக்கப்படுகின்றன. அரசியற் சூழலைக் கொண்டுவருவதற்கு, பெரும்பாலும் ‘ஹன்சார்ட்டையே ஆசிரியர் பாவித்துள்ளார். 8-11, 38-44, 85-67 ஆகிய பக்கங்களில், பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய பேச்சுக்கள் தரப்படுகின்றன; கோப்பாய் உறுப்பினர் கு. வன்னியசிங்கத்தின் பேச்சு மட்டும் பத்துப் பக்கங்களைப் (48-57) பிடித்துவிடுகிறது ஓர் இடத்தில், பதினேழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைத் தொகுதிப் பெயர்களுடன், அடுத்தடுத்துத் தருகிறார். நாவல் எழுத வந்தவர் ஹன்சார்ட்டைப் பார்த்துத் ‘திருப்பி எழுதுவதிலும், எம். பி.க்களின் பெயர்களை வரிசைப்படுத்துவதிலும் 'மினைக்கெட்டுவிட்டது வாசகர்களின் துரதிர்ஷ்டம்தான். ‘மாஓ’வின் மேற்கோள்கள், இடதுசாரிச் சுலோகங்கள், அரசியல் - சாதிப் பிரச்சினைச் சம்பவங்களை வெறுமனே அடுக்கிவைத்துவிட்டு ‘இலக்கியம்’ என்று பம்மாத்துப்பண்ணுபவர்கள் முற்போக்கு முகாமில் இருக்கிறார்கள்தான்; ஆனால், அவர்களிற்குச் சற்றும் சளைக்காத “போலிகள்’ அந்த முகாமிற்கு வெளியிலும் இருக்கிறார்கள் என்பதற்கு, இந்த நூல் நல்ல உதாரணம். அரசியல்,
குறிப்பேட்டிலிருந்து.
 

சமூகப் பிரச்சினைகளைத் தொட்டுவிட்ட மாத்திரத்தில் 'இலக்கிய அந்தஸ்தினை வழங்கிவிடும் மூடத்தனம் இங்கு நிலவுகிறதால்தான், இவ்வாறெல்லாம் எழுதுகிறார்கள்.
வாசகனுக்குச் சுவையான தீனி வழங்க முந்துவது, ஜனரஞ்சக எழுத்தாளர்களின் இயல்புகளில் ஒன்று. அதனால்தான் போலும், இரவு ரயிலில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த (விடிகாலை 5 மணிக்கு) சுரேந்திரன், ‘காதலி சோமாவை உடன் சந்திக்க வேண்டும்’ என்று பரபரக்கிறான் ; கலவரச் சூழலில் பஸ்ஸில் இருந்த தமிழர்கள் பலரைத் தாக்கும் இனவெறியனான "விஜயபால’ (சோமாவின் அண்ணன்) சுரேந்திரனை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறான்! ; இறுதி அத்தியாயத்தில் காதலர் இருவரையும் (செயற்கையாக) கலவரத்தைப் பற்றிப் பேசவைத்து, காதல் உடைந்துபோவதாய் முடித்துவைக்கப்படுகிறது.
“நான் எழுதியவற்றை ஒருமுறையாவது திருத்தி எழுதுவதில்லை’ என்று பொறுப்பில்லாமல் சொல்லுகிற இந்நூலாசிரியரை, “உலகரீதியில் உன்னதமான நாவல் என்று கணிக்கப்படக்கூடிய நாவலை எழுதக்கூடிய இரண்டு ஈழத்து நாவலாசிரியர்களில் ஒருவர்’ என்று, 'நந்தி’ அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார் (மற்றவரும் இவருடைய ரகத்தவரே), நந்தி’ போன்றவர்கள், இவ்வாறெல்லாம் எழுதித் தமது
மதிப்பைக் குறைக்கவேண்டாமே என்று படுகிறது. 回
அலை - 38 மார்கழி 1988
அ.யேசுராசா

Page 58
O2
தமிழ்ப் புனைகதைத்துறையில் மனத்தைப் பிணிக்கும் முற்போக்கிலக்கியக்காரர் யார்? என்று யோசிக்கையில், “ரொம்பச் சங்கடமாய்த்தான் இருக்கிறது. ஓரிருவரை ஏதோ சும்மா சொல்லலாம் ; சிலரின் சில படைப்புகளையும் குறிப்பிடலாம். ஆனால், உருதிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழில் வெளியான ஏழெட்டுப் படைப்புகளுக்கூடாகவே கலை மேதைமையை வெளிக்காட்டுபவராக, இலக்கிய மனத்தை ஆகர்ஷிப்பவராக கிஷன் சந்தர் இருக்கிறார். இலக் கரிய கி கலையினி அடிப் படைகளான அனுபவப்பங்கேற்றல் - தொடர்ந்த அனுபவ உக்கிரஹிப்பு, வடிவப் பிரக்ஞை, எழுத்தை ஆளும் ஆற்றல் பற்றிய பலவீனங்கள் எமது எழுத தாளர்களினி குறைபாடுகளென்றால், இக்குறைபாடுகளற்றவராக கிஷன் சந்தரை நாம் கொள்ள முடியும். நண்பர் ‘பெனடிக்ற்பாலன்’ முன்பொருமுறை கதைக்கையில் ‘அன்பு, காதல் போன்ற அகவய விஷயங்களென்றால்
குறிப்பேட்டிலிருந்து.
 

எழுதுவது சுலபம் , சமூகம், பொருளாதாரம் தொடர்பான விடயங்களை இலக்கியமாக்குவது கடினம். அதனால்தான் முற்போக்கிலக்கியங்களில் கலைத்துவம் குறைகிறது’ என்ற பொருள்படச் சொன்னார் ; வேறுசில ‘அழகியல்வாதிகளும் இவற்றை இலக்கியத்துக்குரிய “பொருள்களாகக் கருதவில்லை. இக்கருத்துகளுக்கெதிரான பதிலாக கிஷன் சந்தரின் படைப்புகள் இருக்கின்றன ; உண்மைக் கலைஞன் இத்தகைய வரையறுப்புகளை நிச்சயம் வெற்றிகொள்வான்தான்.
‘முதலாளித்துவ சக்திகள் மேலும் மேலும் பலமிழக்கின்றன; தொழிலாளர் இயக்கங்கள் மேன்மேலும் முன்னேறிவருகின்றன ; இது, வரலாற்றின் தவிர்க்கவியலாப் போக்கு’ என இடதுசாரி அரசியற் பத்திரிகைகளில் நாம் காணும் சுலோகங்கள் தரும் பாரிய செய்தியையே, அணைந்திடும் சுவாலையில் கிஷன் சந்தர் தருகிறர் ; ஆனால் சுலோகமாக அல்லாமல், கலையாக - சிறுகதை வடிவத்தில். சம்பவங்களின் இயல்பான போக்கில் முதலாளியின் கையாளினது ஆற்றாமையூடாக, கதையின் சாரமாக இது வெளிப்படுத்தப்படுகிறது (இதே ‘செய்தி வேறொரு கலை ஊடகத்தில் - ‘அந்திரேய் வாஜ்தா'வின் “வாக்களிக்கப்பட்ட நிலம்’ (Promised Land) என்ற போலந்துத் திரைப்படத்தில் - கலைத்துவமாக வெளிப்படுத்தப்படுவதனையும் இங்கு நினைவு கூரலாம்).
மனிதனின் ‘சுய இருப்புநிலை உன்னதமானதுதான். மதவாதிகள் சொல்வது போல் ‘உள்ளிருந்து வருபவை’ அல்ல மனிதனைக் கீழ்மையடையச் செய்வது; புறத்திலிருந்து வருபவைதான். அடிப்படைத் தேவைகளின் பூர்த்திக்குத் தடையான புறநிலைமைகள் காரணமாக, 'மனிதநிலையிலிருந்து பிறழ்ந்து போகிறான் ; புறவயத் தேவைகளின் பூர்த்தியில் அவனது ‘சுய மனித இருப்பு’ தோற்றங்கொள்கிறது. கருத்துமுதல்வாதிகளுக்கெதிரான பொருள்முதல்வாதிகளின் ‘புறவய நோக்கு சில பாத்திரங்களின் இயக்கத்தினூடாக, நான் யாரையும் வெறுக்கவில்லை சிறுகதையில் கலாபூர்வமாக வெளிப்படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கும் கலாசாரச் சீரழிவுகளுக்குமெதிரான கொரிய மக்களின் போராட்டத்தினை, ஆசியா விழித்துவிட்டது சொல்கிறது. தலைப்பினூடாகப் பார்க்கையில் ‘கட்டறுக்க முனையும் முழு ஆசியாவினதும் குறியீடாகவே “கொரியாவை’ அவர் காண்பதும் தெரிகிறது. பெரிதாய்ப் பேசப்படும் ‘புனிதக் காதலின்’ நீடித்திராத - எல்லைக்குட்பட்ட - தன்மையை, புறநிலை நிர்ப்பந்தங்களால் அது 'உருவழிந்து போவதை ரோமியோ - ஜூலியற். லைலா - மஜ்னு, இன்னுமொரு உருதுக் காவிய ஜோடி ஆகியோரின் இன்னொருபக்க வாழ்வைக் கற்பனையில் காட்டுவதன்மூலம், காதலுக்கு அப்பால் என்ற நாடகத்தில் எள்ளலாக வெளிப்படுத்துகிறார். துயர் நிறைந்த 1942ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம், நான் சாகமாட்டேன் குறுநாவலில் சித்திரிக்கப்படுகிறது. ஒருவாய் உணவின்றி மக்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிகின்றனர் ; பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் நரிகளுக்கும் அவர்களை இரையாகவிட்டு, உறவினர் செல்கின்றனர். சிலபிடித் தானியங்களுக்காக, ஒருசில காசுகளிற்கு, தாய் தன் குழந்தையை விற்கிறாள் ; கணவன் மனைவியை விற்கிறான் ; சகோதரன் சகோதரியையும், தாய் தன் மகளையும் விற்கிறாள். சமயம்,
அ. யேசுராசா

Page 59
ஒழுக்கம், ஆத்மிகம், தாய்மை என்றெல்லாம் கூறப்படும் வலுமிக்க இலட்சியங்கள் உரிந்தெறியப்பட்டுவிட்ட நிலை. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அவலம் உயிர்ப்புக்கொண்டு எம் நெஞ்சை உலுக்குகிறது , இந்த அவலத்திடையிலும் உல்லாசமாக வாழும் அதிகாரிகளின் போக்கு எமக்கு ஆத்திரத்தையும் எழுப்புகிறது. மக்கள் பட்டினியாற் சாகின்றனர் , அதிக உணவைச் சாப்பிட்டதால் வயிறு வெடித்தே அவர்கள் இறப்பதாக, அதிகாரிகள் கருதுகின்றனர். தம் இருப்பிடத்திற்கு வெளியே மனிதப் பிணங்களின் துர்நாற்றம் ; உள்ளே சென்ற் வாசனை பரவும் இளம் பெண்களுடன் நடனமிடுவது பற்றிய அவர்களின் ஏக்கம். எள்ளல் நிரம்பிய நடையில் கிஷன் சந்தர் இவற்றைச் சுட்டி, எமது கோபத்தைக் கிளறுகிறார். தமது படைப்புகளில் பரிய கருத்துகளைச் செய்திகளாகத் தருகையிலும் ஸ்தூலமான கருத்துக்களாக, வெளியிலிருந்து தரப்படுவனவாக அல்லாமல் கதைப்போக்கில், ‘தன்னியக்கமாக’ - சூசனை உணர்த்தலாகக் கிஷன் சந்தர் தருவதாற்றான், எமக்குக் கலையனுபவம் சித்திக்கின்றது : வாசகநிலையில் எம்மை நிரம்பப் பாதிப்பவராகவும் அமைகிறார்.
மனித இச்சையை மீறிய இறப்பு, அவரையும் கவ்வியது. 08.03.77 இல் அவர் மரணமானார் ; அப்பொழுது அவருக்கு 82 வயது. சமகால எழுத்தாளரும் நெருங்கிய நண்பருமான 'முல்க்ராஜ் ஆனந்”, கிஷன் சந்தரை ஒரு Legend ஆகவே வர்ணிக்கிறார்.
தாய்மொழியாகிய 'உருது’வில் 50க்கு மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார் ; அவற்றில் பல பிற உலகமொழிகளிலும் வெளிவந்துள்ள்ன. இலக்கிய சேவைக்காக பாரத அரசின் ‘பத்ம பூஷண்’ பட்டத்தையும், சோவியத் நாட்டின் ‘நேரு பரிசினையும் அவர் பெற்றிருந்தார்.
கிஷன் சந்தரின் மிகக் குறைந்த படைப்புகளே தமிழில் வந்துள்ளன. வெறும் சுலோகங்களும், கருத்துகளும் நிறைந்த ‘வரட்டுப் படைப்புகளே’ முற்போக்குக் கலையாக நம்பப்படும் நமது மந்தநிலையை மாற்றுவதற்கு, கிஷன் சந்தரின் படைப்புகள் அதிக அளவில் வெளிவருதல் உதவியாக இருக்கும் , அது ஆற்றல்வாய்ந்த அக்கலைஞனுக்கு நாம் செலுத்தும் பெரும் அஞ்சலியாகவும் அமையும் D
அலை - 8 பங்குனி - சித்திரை 1977
குறிப்பேட்டிலிருந்து.

இறந்துவிடும் எல்லா எழுத்தாளரும் அஞ்சலிக்குரியவரென நான் கருதவில்லை. முதலில் எழுதிதாளனின் வாழ்வு மதிப்பிற்குரியதாக அமைந்திருக்கவேண்டும் ; அதன்பிறகு அவனது எழுத்துத்துறைப் பங்களிப்பின் முக்கியத்துவம் பார்க்கப்படவேண்டும்.
சுந்தர ராமசாமி 15.10.2005 இல் காலமானார். அவரது மறைவு ஏற்படுத்திய தாக்கம் பரந்த அளவில் வெளிப்படுததப் பட்டிருக்கிறது.
A
செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், பல்வேறு தரத்து எழுத்தாளர்களால் அவர் பற்றிய மதிப்பார்ந்த உணர்வலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சு.ரா வினி நமீபிக்கைகளிறி குமி வாழி விற்குமிடையே இருந்த ‘இசைவு’ முக்கியமானது ; மலையாளக் கவிஞர் ஆற்றுார் ரவிவர்மாவின் பின்வரும் கூற்றிலும் அது தெரிகிறது.
అEF
4.
赛美
அ. யேசுராசா

Page 60
桑嫔
. "ஜே. ஜே. ; சில குறிப்புகளில் வரும் ஜே. ஜேயைப்போல்தான் சுந்தர ராமசாமியும் என்று எனக்குத் தோன்றியதுண்டு. சிந்தனை, வாக்கு, செயல் ஆகியவற்றை இணைப்பதற்கான தீவிர முயற்சி. தன் குழப்பமான காலகட்டத்திலும் கூட எதையும் மிகைப்படுத்துவதில்லை, இனிப்புச் சேர்ப்பதில்லை.”
கேரளத்தின் பிரபல நாளேடான ‘மாத்ருபூமி’ ஆசிரியர் தலையங்கம் எழுதி (17102005) கெளரவித்துள்ளது. “இதயபூர்வமான உறவிருந்தது சுந்தர ராமசாமிக்கும் மலையாள மொழிக்குமிடையில், நவீனத்துவத்தின் முன்மொழிதலையும் மொழியின் புதிய வகைப்பாடுகளையும் தமிழுக்கு அறிமுகம்செய்த சுந்தர ராமசாமி, மலையாளிகளிடையே மலையாளப் படைப்பாளிகளைப் போலவே அறிமுகம் பெற்றிருந்தார்’ என்று தொடங்கிய அத்தலையங்கம், “...அவரது மறைவு மலையாளிகளைப் பொறுத்தவரை பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சோகமல்ல, தங்கள் வீட்டில் நிகழ்ந்த சோகம்” என்று முடிவடைகிறது. பல்வேறு நோக்குநிலைகொண்ட எழுத்தாளர்களுடனும், வளர்ந்தோர் - இளைஞர் என்ற வேறுபாடு காட்டாது மதிப்புடன் தொடர்புகளைப் பேணிவந்தவர் அவர் ; மற்றவரின் கருத்துக்களிற்கு அக்கறையுடன் செவிகொடுத்து ஊடாட்டம் நிகழ்த்துவார். அவரது எளிமையும் வெளிப்படைத்தன்மையும் உபசரிக்கும் பண்பும் எல்லோரையும் ஆகர்ஷித்ததில் வியப்பேதுமில்லை.
நண்பர் நுஃமான் தனது கலாநிதிப் பட்ட ஆய்விற்காக 1984 இல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவிருந்தார். திருவனந்தபுரம் வழியாக அவர் செல்வதால், நாகர்கோவிலில் சு. ராவுடன் சில நாள்கள் தங்கிச்செல்லுமாறு முதல்நாள் கொழும்பில் சந்திக்கையில் அவரிடம் தெரிவித்தேன் ; அவ்வாறே சில நாள்கள் அங்கு தங்கினார். சில கிழமைகளின் பின் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில், "...உண்மையில் அவர் ஓர் அபூர்வ மனிதர்தான்’ என்று சு. ராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்; முதற்சந்திப்பே நுஃமானில் அத்தகைய பதிவினை உருவாக்கிவிட்டது! ஆயினும், எதிர்மறையான அபிப்பிராயங்களைச் சிலர் க. ரா. பற்றித் தெரிவிக்கின்றனர் ; பிராமணியச் சார்பானவர், கொம்யூனிச எதிர்ப்பாளர் என அவர்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். 'பிள்ளை கெடுத்தாள் விளை’ என்ற அவரது அண்மைக்காலச் சிறுகதை தலித்துகளிற்கு எதிரானது என்ற விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால் சாதி, மத அடையாளங்கள் - உணர்வுகளிற்கு அப்பாற்பட்டவர் சு. ரா. எனப் பலர் தமது அனுபவங்களின் ஊடாகத் தெரிவிக்கின்றனர். ‘தலித்’ இயக்கத்தின் முக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான ரவிக்குமாரும், சு. ரா. சாதி உணர்வுகொண்டவரல்லரெனத் தெரிவிக்கிறார்.
இளமைக்காலத்தில் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட சு. ரா. தமிழ் நாட்டின் பொதுவுடைமைத் தலைவரான ப. ஜீவானந்தத்துடனும் (ஜீவா), கட்சியுடனும் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். பொதுவுடைமைக் கொள்கை மீதான ஈடுபாடும் மதிப்பும் அவரிடம் இறுதிவரை இருந்துவந்தன. ஆனால், 1956 இல் ஹங்கேரியில் நிகழ்ந்த கொடூர ஒடுக்குமுறைகள், ஸ்ராலினால் ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட்டமை போன்றன அவரை மனநெருக்கடிக்குள் தள்ளின. பொதுவுடைமைக் கட்சிகளின் 'இறுகிய தன்மை - நடைமுறைப் பிறழ்வுகள் - இடதுசாரி கலை, இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கொள்கைகளும்
குறிப்பேட்டிலிருந்து.

07
நடைமுறைகளும் என்பன பற்றி சுதந்திரத்தன்மையுடன் அவர் கேள்வி எழுப்பி விசாரணை புரிந்தார்; அவற்றை வெளிப்படுத்தினார் ; இவற்றாலேயே அவர் ‘கொம்யூனிச எதிரி’ எனத் தவறாக குற்றஞ்சாட்டப்படுகிறார். இலங்கையிலும் ‘புதிய பூமி’ பத்திரிகையாலும், மல்லிகையில் டொமினிக் ஜீவாவினாலும் முன்பு தெரிவிக்கப்பட்ட அவதூறுக் குறிப்புகள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல.
அவரது பங்களிப்புகளாக நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனக் கட்டுரைகள், ஆரம்பகால ‘காலச்சுவடு’ இதழ்கள் என்பன உள்ளன. சு. ரா. நவீனத்துவத்தை ஆழமாகப் பிரதிபலித்துள்ளார்; அவர் காட்டிய பல்துறை அக்கறைகளிலும், படைப்புகளிலும், மொழிநடையிலும் இதனைக் காணலாம்.
ஒரு மரத்தை மையமாக வைத்து சமூகமாறுதல்களை வெளிப்படுத்துவதாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் உள்ளது. தமிழ்க் கலாசாரச் சூழல் - அதுபற்றிய கோபமும் எள்ளலுங்கொண்ட விமர்சனம் என்பவற்றை, மலையாளச் சூழலை முன்வைத்து வெளிப்படுத்துவதாக “ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவல் உள்ளது. இரண்டு படைப்புகளுமே நவீனத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
அவரது மொழிநடை இறுக்கமும் கூர்மையும் நிறைந்தது; எள்ளல் விசேடப் பண்பாக அதில் இணைந்து வருவதும் சுவாரசியத்தைத் தூண்டும். உதாரணத்திற்கு, ‘ஜே. ஜே. : சில குறிப்புகள்’ நாவலில் அடிக்குறிப்பாகத் தரப்படும் பகுதி :
*திருச்சூர் கோபாலன் நாயர் : அலெக்சாண்டர் டூமாவின் ‘மூன்று போர்வீரர்’களை அடியொற்றி எழுதப்பட்ட முதல் சரித்திர நாவலின் ஆசிரியர். குதிரையில் கதாநாயகன் பம்பா நதிக்கரையோரம் மாலை மஞ்சள் வெயிலில் சிட்டாய்ப் பறந்து செல்லும் வர்ணனைக்குப் பெயர்போனது. பம்பா நதியில் முதலைகள் வாய் பிளந்து நிற்க, மேலே பலா மரத்தின் உச்சங்கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் இளவரசி உம்மிணிக்குட்டியை, அவளைக் காதலித்துத் துரத்திக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான சிற்றரசர்களை - இதில் மூன்று பேர் பாண்டியர்கள் - கொன்று குவித்துவிட்டு, கதாநாயகன் மரத்தில் தாவியேறி அணைத்துக்கொள்ள, மலை வாயிலில் சூரியனும் விழ, தென்றலும் தவழ, நாவலும் முடிகிறது’ - பக். 20
அவரது படைப்பாற்றலைப் பற்றிக் கதைக்கையில், இரண்டு பிறமொழிப் படைப்புக்களைத் தொடர்புறுத்த விரும்புகிறேன். எஸ். கே. பொற்றெக்காட் என்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், அவளுடைய கேரளம் என்ற சிறுகதையை எழுதியுள்ளார் (சங்கமம் தொகுதி - பக். 220). அதில் மலேயாவில் நீண்டகாலம் வாழும் ஒரு மலையாளியின் வளர்ப்பு மகள், கேரளம் பற்றிய கனவுகளுடன் அங்கு செல்லத் தவிப்பதே மையமாக உள்ளது. சுந்தர ராமசாமி அக்கரைச் சீமையில்' என்ற சிறுகதையை எழுதியுள்ளார் ; அதில் ஆபிரிக்காவில் - றொடீசியா நாட்டில் நீண்டகாலம் வாழும் ஒரு தமிழன், தான் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊரிற்குச் செல்லத் தவிக்கும் உணர்வுகளே மையம். இரண்டையும் படிக்கும்போது சுந்தர ராமசாமியின் எழுத்துத்திறன் மிகுந்த பாதிப்பைத் தருகிறது.
ஒரு புளியமரத்தின் கதை நாவலில் தாமோதர ஆசான்’ முக்கியபாத்திரம்; இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர் பல கதைகளை - செய்திகளைக் கூறியபடி இருப்பார். ஹிந்தி மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளரான 'தர்மவீர் பாரதி” எழுதிய
அ.யேசுராசா

Page 61
நாவலில் ஒன்று ஏழாவது குதிரை; இதில் வரும் மாணிக் முல்லா’ என்ற பாத்திரமும் இளைஞர்களிற்குக் கதைகூறுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாத்திரங்களினதும் உருவாக்கத்தில் - சுந்தர ராமசாமியின் மேலாண்மை ஓங்கியிருப்பதாகவே, ஒரு வாசகனாக உணர்கிறேன்.
தகழியின் "செம்மீன்', 'தோட்டியின் மகன்’ ஆகிய மலையாள நாவல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் உயிர்ப்பு நிறைந்தவை. பல்வேறு மொழிக் கவிதைகளை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்தார். பொருள், தொனி, வடிவ வேறுபாடுகளைத் தமிழ் வாசகரிற்குப் பரிச்சயப்படுத்துபவை அவை ; கவிஞர்களைப் பற்றிய விரிவான குறிப்புகளும் வாசகரின் புரிதல் தளத்தை அகலிப்பவை.
கலைஞன்பெற்ற பாதிப்புகள், அவற்றின் தேர்வுஒழுங்கு, பார்வை என்பவற்றின் வெளிப்பாடாகவே படைப்பு உருவாகும் என்று கருதியவர் சு. ரா. , அதனைப்போல, வாசகனாக ஒரு படைப்பு ஏற்படுத்தும் பாதிப்பு - இரசனையுடன் இணைந்து - அவனது பார்வையுடன் விமர்சனமாக வெளிப்படவேண்டுமென்றும் கருதினார். அவரது விமர்சனக் கட்டுரைகள் இத்தன்மையில் அமைந்தவை ; படைப்புத்திறனும் அவற்றில் இசைந்திருக்கும். புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள', 'காற்றில் கலந்த பேரோசை’ முதலியவற்றில் இப்பண்புகளைச் சிறப்பாய்க் காணமுடிகிறது.
'காலச்சுவடு காலாண்டு இதழை 1988 ஜனவரி - 1989 ஒக்ரோபர் வரை நடாத்தி, எட்டு இதழ்களை வெளியிட்டார் ; 1991 ஒக்ரோபரில் விரிவான சிறப்புமலரும் வெளிவந்தது. “காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக்கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப்போக்கில் இயன்றவரை தரமாகத் தர இது முயலும். தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் ஆகியவற்றின் கலாசாரத்தளங்களைச் சார்ந்த மேலான சிந்தனைகளையும், படைப்புகளையும் தமிழாக்கித் தருவதில் இது கவனம் எடுத்துக்கொள்ளும்’ என முதலிதழில் குறிப்பெழுதினார். மலையாள மார்க்சியச் சிந்தனையாளரும் இலக்கியவாதியுமான எம். கோவிந்தன், லெனின் மதிப்பளித்த மார்க்சியவாதியும் வங்காளியுமான எம். என். ராய், மற்றும் கோசாம்பி முதலிய முக்கிய இந்திய ஆய்வறிவாளரை - அவர்களின் ஆக்கங்கள் சிலவற்றுடனும் - காலச்சுவட்டில் அறிமுகப்படுத்தினார். ரி. எஸ். எலியட், சதாத் ஹசன் மன்ரோ, காஃ வ்கா, பைஸ் அகமத் பைஸ், பை ஜுயி முதலிய புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும் இடம்பெற்றனர்.
ஈழம்பற்றிய அக்கறை கொண்டவராக சு. ரா. இருந்துவந்துள்ளார் ; ஈழத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் பலருடன் தொடர்புகளைப் பேணிவந்தார் ; அவர்களில் இ. பத்மநாப ஐயர் முக்கியமானவர். ஈழத்துப் படைப்பாளிகளில் மு. தளையசிங்கத்தின் மீது உயர்வான மதிப்புக் கொண்டுள்ளார். 1983 இல் இங்கு தமிழர்மீது பாரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனைக் கண்டித்து, கலை - இலக்கியவாதிகள் இணைந்து மதுரையில் கூட்டமொன்றை நடாத்தினர்; அதில், சு. ரா. முக்கிய பங்காற்றினார். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் - அந்த நெருக்கடிச் சூழலில் ஒரு எழுத்தாளனின் மனப்பதிவுகளைக் 'காலச்சுவடு இதழில் வெளியிட விரும்பினர். அவ்வாறு இங்கிருந்து அனுப்பப்பட்ட, நா. அமுதசாகரன்
குறிப்பேட்டிலிருந்து.

() )
எழுதிய ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் என்ற விரிவான கட்டுரையை - இரண்டாவது இதழில் - வெளியிட்டார் ; அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு ‘ஜெயகேரளம்' என்ற மலையாளப் பத்திரிகையிலும் வெளியானது. ஒவியர் மாற்குவைக் கெளரவித்து யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட "தேடலும் படைப்புலகமும் என்ற நூலைப்பற்றி, தமிழக நவீன ஓவியர் எஸ். என். வெங்கட்ராமன் எழுதிய விரிவான கட்டுரையொன்றையும் வெளியிட்டு முக்கியத்துவப்படுத்தினார்.
கனடாவிற்கும் இலண்டனிற்கும் பயணித்தபின், 1993 இல், தாழ்ந்து பறக்கும் தமிழ்க் கொடி’ என்ற கட்டுரையினை சுபமங்களா இதழில் எழுதினார் ; அதில் ஈழத் தமிழர் மீதான கரிசனையும் மதிப்புக்கலந்த வியப்பும் வெளிப்படுகின்றன. அதிலிருந்து ஒரு பகுதி !
“ஈழத்தில் நடக்கும் வீரம்செறிந்த போராட்டங்களின் வீடியோ படங்களின் பகுதிகள் எனக்குப் பார்க்கக்கிடைத்தன. பி. பி. சி. தயாரித்திருந்த செய்திப் படங்களின் பகுதிகளையும் பார்த்தேன். ஈழத்துத் தமிழ் வாழ்க்கை குன்றி அங்கு வெறுமை பரவிக் கிடக்கும் என்ற என் கற்பனைக்கு மாறாக, ஜீவகளை துடிக்கும் வாழ்க்கை இப்போதும் அங்கு இருந்துகொண்டிருப்பது தெரிந்தது. தமிழ் விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. கர்னாடக ராகங்களை அடிப்படையாகக்கொண்ட மெல்லிசைகளில் மனத்தைத்தொடும் கவிதைகளைப் பெண்கள் அற்புதமாகப் பாடுகிறார்கள். இளைஞர்கள் அற்புதமாகப் பாடுகிறார்கள். இப்பாடல்களுக்கு இசையமைத்தவர் மனத்தை அள்ளும் மெட்டுகளைப் புனைவதில் வல்லவர் என்பதில் சந்தேகமேயில்லை.”
ஈழத்தவரின் இலக்கியங்கள் தொடர்பாகத் தமிழகத்தில் உடன் செய்யவேண்டிய ‘மூன்று காரியங்கள்’ பற்றிய குறிப்புகளையும் அதில் முன்வைத்துள்ளார். 1982 பங்குனியில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல்முறையாக அவரைச் சந்தித்தேன் ; பிந்திய ஆண்டுகளிலும் பல தடவைகள் சந்திக்கவும் - அவரது வீட்டில் தங்கவும் வாய்ப்புகள் கிட்டின ; கடிதத் தொடர்பும் இருந்தது. படைப்பாற்றல், வீச்சுநிறைந்த சுயமான கருத்துகள் என்பவை அவர்மீது மதிப்பை ஏற்படுத்துகின்றனதான் ; ஆனாலும் 'பந்தா’ அற்ற எளிமையும், மனந்திறந்த உரையாடலும், மாற்றுக் கருத்துகளிற்கும் அக்கறையுடன் செவிகொடுத்தலும் போன்ற அவரது மேன்மையான ஆளுமைப்பண்புகள் - மதிப்புடன் நேசத்தையும் உருவாக்குகின்றன.
1980 இல் பத்மநாப ஐயரிற்கு எழுதிய கடிதமொன்றில், “. அடுத்த சந்தோஷ அதிர்ச்சி இந்த வருட ஆரம்ப மாதங்களில் கிடைத்தது. அலை’ ஒரு வருட பையின்ட் வால்யூம், ஒரே வாரத்தில் ஆணி அடித்து உட்கார்ந்துகொண்டு படித்தேன். ஆத்மார்த்தமான பதிப்பு. நிதானமும் நுட்பமும்.”
என்று குறிப்பிட்டுள்ள வரிகள் - அலையுடன் சம்பந்தப்பட்டவன் என்பதனால்
- இன்றும் எனக்கு உற்சாகத்தைத் தருவனவாய் உள்ளன!
அவர் இறப்பதற்குச் சில நாள்களின் முன்னர், இலண்டனிலிருந்து தொலைபேசியில் கதைத்த பத்மநாப ஐயர், சுந்தர ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. 15 ஆம் திகதி பின்னேரம், ஏ. ஜே. கனகரத்தினா அவர்கள் ஐயர் தெரிவித்ததாக சு. ராவின் மரணச்செய்தியைத் தொலைபேசியில் சொன்னார்.
அ.யேசுராசா

Page 62
அது நடந்துவிட்டதில் ஒருவித வெறுமை , தொடர்ந்த இழப்புணர்வு. அவர்பற்றிக் கிளர்ந்த நினைவுகள்.
அன்றிரவு ஐயர் தொடர்புகொண்டு மேலதிக விபரங்கள் தந்தார். மறுநாள், தயாரிப்பிலிருந்த ‘தெரிதல்’ இதழில் ஏற்கெனவே சேர்த்திருந்த ஒரு விடயத்தை நீக்கிவிட்டு, சு. ராவிற்கான அஞ்சலிக் குறிப்பை எழுதிச் சேர்த்தேன்.
எப்படியாயினும், இயற்கையின் நியதியை மானுடர் நாம் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லையே! O
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, ‘சுந்தர ராமசாமி நினைவுகள்’ என்ற தலைப்பில், 7.122005 இல் நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்.)
கலைமுகம் ஆடி - மார்கழி 2005
குறிப்பேட்டிலிருந்து.

11.10.2006, மதியம். வீட்டுக்கு வந்த நண்பர் சிவபாலன், “ஏ.ஜே. மாஸ்ரர் இன்றைக்குக் காலம கொழும்பில இறந்திற்றார். இறுதிச்சடங்கு விபரம் பிறகுதான் தெரியும். கிருஷ்ணகுமார் உமக்குச் சொல்லச் சொன்னவர்.” என்று தெரிவித்தார்.
OO
ஏ. ஜே. என மதிப்புடனும் அன்புடனும் எல்லாராலும் அழைக்கப்பட்ட ஏ. ஜே. கனகரத்தினா அவர்களை நினைக்கையில் முதலில் தோன்றுவது, அறவுணர்வுகொண்ட ஓர் உண்மை மனிதனாக அவர் இருந்தார் என்பதே நீதி நியாயமென தனக்குச் சரியெனப் பட்டவற்றையே பற்றி நின்றவர். -
அதிகாரம், பதவி, எதிர்காலம் என்றெல்லாம்
O
--SP
i
ge. Gaussig fresFir

Page 63
ஒருபோதும் அலட்டிக்கொண்டவரோ சமரசம் செய்தவரோ அல்லர். அறுபதில் "டெய்லி நியூஸ்' பத்திரிகையில் வேலைசெய்கையில், கொழும்பு றோயல் கல்லூரி ஆரம்பப் பிரிவிற்கு அகில இலங்கைரீதியில் போட்டிப் பரீட்சைமூலம் மாணவரை அனுமதிக்கும் கல்வி அமைச்சரின் புதிய திட்டத்தை விமர்சித்துக் கட்டுரை எழுதும் பொறுப்பு, நிர்வாக ஆசிரியரால் ஏ. ஜேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றிப் பலரின் கருத்தைத் திரட்டிய ஏ. ஜே. அத்திட்டத்தில் தவறேதும் இல்லையெனக் கருதியதால் கட்டுரையை எழுதவில்லை. ஆசிரியருடனான இம்முரண்பாட்டின் தொடர்ச்சியாக அவர் உள்ளக இடமாற்றத்திற்குள்ளானபோது, தனது பதவியையே தூக்கிவீசி வெளியேறினார் ; யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையிலும், பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிப்பது பற்றிய விடயத்தில் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடுகொண்டு, தானாகவே விலகினார்.
சக மனிதனை மதித்து எப்போதும் உதவி புரிபவராக இருந்தார். முன்பின் தெரியாத சாதாரண தொழிலாளியிலிருந்து, இலக்கியக்காரர், அரசாங்க ஊழியர், பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர்களென அவரிடம் உதவி பெற்றோர் ஏராளமானோர்.
மென்மை, எளிமை, தன்னடக்கம் என்பவை அவரது பண்புகளாயிருந்தன. யாரையும் கடுமையாகக் கோபிப்பதில்லை ; வெறுப்பதில்லை. ஆனால், தனது உடன்பாடின்மையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. எழுத்தாளர் சிலரின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும் சீர்கேடுகளையும் பற்றி நாங்கள் கோபப்பட்டுக் கதைக்கையில், அவரது விமர்சனமோ, "சீ! என்ன இவங்கள்.” என அடங்கிய தொனியிலேயே இருக்கும்.
1981இல், மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்’ என்ற அவரது நூலின் வெளியீட்டு நிகழ்வு யாழ். றிம்மர் மண்டபத்தில் நடைபெற்றபோது, ஏ. ஜே. அந்நிகழ்விற்கு வரவேயில்லை. கூட்டம் முடிந்து வந்தபோது தெருவிலேயே அவரைச் சந்திக்க முடிந்தது. தன்னை முதன்மைப்படுத்தாத அவரது தன்னடக்கப் பண்புக்கு இதுவுமொரு சான்று.
ஏ. ஜே. இடதுசாரிக் கருத்துக்களும் முற்போக்குச் சிந்தனையுங்கொண்ட ஒருவர்தான். எனினும் கத்தோலிக்க வீட்டுச் சூழல், கல்லூரி, தேவாலயம் என்பவற்றில் சிறுபருவத்தில் ஊட்டப்பட்ட கிறிஸ்தவ விழுமியங்கள் அவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் ஆதாரசக்திகளாய் இருந்திருக்க வேண்டும். அவரிடம் சொல்லிலும் செயலிலும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வெளிப்பட்ட அறவுணர்வு, பிறருக்கு உதவும் பண்பு, எளிமை, தன்னடக்கம், அந்தஸ்து - பொருள் பற்றுகளற்ற விடுபட்ட மனநிலை என்பவற்றை இதன் பின்னணியிலேயே தெளிவாய்ப் புரிந்துகொள்ளலாம்.
OO ஏ. ஜே. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டதாரியானவர். கல்லூரி நாள்களிலிருந்தே நல்ல வாசகர்; இறுதிக்காலம் வரை அவரது தீவிர வாசிப்புத் தொடர்ந்தது. பெரும்பாலான வேளைகளில் அவரது கைகளில் நூல்களையோ பருவ இதழ்களையோ காணலாம். இலக்கியம், நாடகம்,
குறிப்பேட்டிலிருந்து.

13
திரைப்படம், ஓவியம், சிற்பம், அரசியல், பொருளியல், சூழலியல், மருந்துகள், வரலாறு, இதழியல் என அவரது வாசிப்பு ஈடுபாடு மிக விரிந்த பரப்பைக் கொண்டிருந்தது. தான் ஆங்கிலத்தில் வாசித்து உள்வாங்கிய முக்கிய விடயங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார் ; அறிமுகப்படுத்தும் கட்டுரைகளையும், தழுவற் கட்டுரைகளையும் தன் மதிப்பீட்டுக் கருத்துக்களுடன் எழுதியுள்ளார். கலாயோகி ஆனந்த குமாரசாமி, றேமன்ட் வில்லியம், அலெக்சாண்டர் புளொக், அலன் ஸ்விஞ்வுட், றெஜி சிறிவர்தன. ஆர்தர் கேஸ்லர், டேவிட் கிறேய்க் , மிலோவண் ஜிலாஸ் , பிக் காஸோ, ஹென்றி மூர், காஃவ்கா, அகிரா குரொஸாவா முதலியோர் - இவ்வாறு என்னைப் போன்ற தமிழ் வாசகரிற்கு அவரால் பரிச்சயப்படுத்தப்பட்ட மிக முக்கிய ஆளுமைகளிற் சிலராவர். தமிழ் மட்டும் தெரிந்தவர்களிடமும் விரிவான தளங்களிலான அறிவைக் கொண்டுசேர்க்கும் ஏ.ஜேயின் இந்தப் பணியை, அறிவுப் பரம்பல் இலக்கியம்' என்ற பிரிவில் முக்கியமானதெனக் கலாநிதி சுரேஷ் கனகராஜா மதிப்பிடுகிறார்.
OO தேசிய இலக்கியம், சமூகச்சார்பை வலியுறுத்தும் முற்போக்கு இலக்கியம் என்பவற்றில் ஏ. ஜே. ஈடுபாடுள்ளவர் ; இவற்றுக்குச் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்தும் செயற்பட்டவர். எனினும், கலைத்துவமோ உருவ அமைதியோ வேறு இலக்கியச் சிறப்போ அற்ற பிரச்சாரப் படைப்புக்களை ஏற்றுக்கொள்பவர் அல்லர். இலங்கை இலக்கியவுலகில் முற்போக்கு அணியினரிடையே செல்வாக்குடன் காணப்பட்ட 'வரட்டுவாத நிலைப்பாடுகளுடன் மாறுபடும் தனது கருத்துக்களை, தான் சுயமாக எழுதிய கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்; தனது கருத்துக்களிற்கு வலுச்சேர்க்கக்கூடிய மொழிபெயர்ப்புக்களையும் செய்துள்ளார். இந்தவிதத்தில் முறையே, மார்க்சியமும் இலக்கியமும்'; 'உருவம், உள்ளடக்கம், மார்க்சிய விமர்சனம்', 'அதிகாரி ஆட்சி, சோசலிசம், இலக்கியம் முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை.
மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்’ என்ற தனது நூலின் ‘என்னுரையில் அவர் குறிப்பிடும் பின்வரும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.
". இக்கட்டுரைகளின் நோக்குக் கோணங்களும், அழுத்தங்களும் மாறுபட்டவை - சில வேளைகளில் முரண்பட்டவையாய்க்கூட இருக்கலாம் - என்பதில் ஐயமில்லை. இயக்கவியலில் நம்பிக்கையுள்ள மார்க்சியவாதிகளுக்கு இது எவ்விதத் தலையிடியையும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், மார்க்சியவாதம் தமது முதுசம், தமது ஏகபோக சொத்து என நம்பும் சில பீடாதிபதிகளுக்கு இது எரிச்சலை ஊட்டலாம். அதற்கெல்லாம் நாம் என்ன செய்வது?”
". நீண்டகாலமாக இங்கு இலக்கியத்துறையிலே மிகக் கொச்சைப்படுத்தப்பட்ட மார்க்சியவாதம் கோலோச்சி வந்திருப்பது எமது அவப்பேறே. இத்தகைய போக்கின் மீது நான் கொண்டிருந்த அதிருப்தியின் வெளிப்பாடே மார்க்சியமும் இலக்கியமும் என்ற கட்டுரை. அந்த அதிருப்திக்குச் சான்றாகவே 1966 இல் வெளிவந்த அக்கட்டுரை எதுவித மாற்றமும் செய்யப்படாது இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றதேயொழிய சுய தம்பட்டம் அடிப்பதற்காகவல்ல."
இங்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலாநிதி க. கைலாசபதி
அ.யேசுராசா

Page 64
முற்போக்கு இலக்கியமும் அழகியற் பிரச்சினைகளும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை 'சமர் சஞ்சிகையில் (1979) எழுதியிருந்தார். அவரது வரட்டுத்தனமான' கருத்துக்களிற்குப் பதிலளிக்கும் கட்டுரையொன்றை நான் எழுதினேன்; மார்க்ஸ், எங்கெல்ஸ், ட்ரொட்ஸ்கி, பிளக்கனோவ், மாவோ, சூ என்லாய் போன்றோரின் கூற்றுக்களையும் அதில் மேற்கோள் காட்டியிருந்தேன். அக்கட்டுரையின் கையெழுத்துப்படியினை முதலில் ஏ. ஜேயிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டபோது அவர், “கட்டுரை நல்லாயிருக்குது . தலைப்பை மாற்றுமன் .' என்று சொன்னார். நான், “என்ன தலைப்புப் போடலாம்?” எனக் கேட்டபோது, "குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை' என்று அவருக்கேயுரிய குறுநகையுடன் சொன்னார் ; பின்னர் அந்தத் தலைப்புடன்தான் அக்கட்டுரை 'அலை இதழில் வெளிவந்தது!
OO இதழியற்றுறை ஏ. ஜே. விருப்பார்வத்துடன் செயற்பட்டதொரு துறையாகும். அறுபதுகளின் ஆரம்பத்தில் "டெய்லி நியூசிலும், 1966 தொடங்கி சுமார் பத்து ஆண்டுக ளாக "கோப்பறேற்றர் பத்திரிகையிலும் பதவிநிலை சார்ந்து பணியாற்றினார். 1982 - 1987 காலகட்டங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த “சற்றடே றிவியூ வாரப்பத்திரிகையில் பதவிசாரா நிலையில் பணிபுரிந்திருக்கிறார்; இதற்கு இக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் பணியிலிருந்தமை காரணமாயிருக்கலாம். நெருக்கடியான சூழலில் - தரத்துடன் பத்திரிகையை வெளிக்கொண்டு வருவதில் தம்முடன் இணைந்து ஏ. ஜே. ஆற்றிய முக்கிய பணியினை, முதலில் ஆசிரியராக இருந்த எஸ். சிவநாயகமும், பின்னர் பொறுப்பேற்ற காமினி நவரத்தினாவும் குறிப்பிட்டுள்ளனர்; செய்திகள் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வு, சுருக்கமாய் எழுத்தில் வெளிப்படுத்தும் திறன், செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் தலைப்பிடும் ஆற்றல் என்பவற்றை அவர்கள் விதந்துரைத்துள்ளனர்.
சற்றடே றிவியூவின் அச்சகத்தில் பலமுறை அவரைச் சந்தித்துள்ளேன். பத்திரிகை அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கையில், அச்சிடப்பட்ட படிவத்தை பல தடவை எடுத்து உற்றுநோக்குவதை பலதடவை கண்டிருக்கிறேன். “ஏன் அடிக்கடி பார்க்கிறீங்க?" என ஒருதடவை கேட்டேன். அவர், "யேசு, உள் விஷயத்தில பிழை வந்தாலும் தலைப்பு, உப தலைப்புகளில . பெயர்களில பிழைவரக்கூடாது. அதால கவனமாப் பார்க்கவேணும்” என்று சொன்னார். எனது இதழியற்றுறைச் செயற்பாடுகளின்போது அடிக்கடி இது நினைவுக்கு வரும்.
1989 - 1990 காலப்பகுதியில் வெளிவந்த திசை வாரப்பத்திரிகையிலும் பதவிசாரா நிலையில், குறிப்பாக முன்பக்க பின்பக்கச் செய்திகள் விடயத்தில் பங்களித்துள்ளார்; அதைவிட பல விடயங்களிலான அவரது ஆலோசனைகளால் திசை ஆசிரியர் மு. பொன்னம்பலமும், துணை ஆசிரியரான நானும் நிறையவே பயன்பெற்றுள்ளோம்.
மல்லிகையின் ஆரம்பகாலத்திலிருந்து சுமார் பத்து ஆண்டுகள் வரை மிக நெருக்கமான தொடர்பு ஏ. ஜேக்கு இருந்திருக்கிறது; அதன் ஆசிரியரான டொமினிக் ஜீவாமீது ஒருவித பரிவுகொண்டிருந்தார். மாலை வேளைகளிலும், விடுமுறை நாள்களிலும் மல்லிகை அலுவலகத்திலிருப்பார். அச்சுப்படி திருத்துவதிலிருந்து, தபாலில் வந்த விடயங்களைப் படித்து உரியவற்றைத் தெரிதல், தகுதியற்றவற்றைப் புறக்கணித்தல்,
குறிப்பேட்டிலிருந்து.

தொடர்புற்ற தகவல்கள் கருத்துக்களை விபரித்தல், பொருத்தமான விடயங்களை அடிக்கடி மொழிபெயர்த்துத் தருதல் போன்றவற்றால் டொமினிக் ஜீவா நிறையப் பயனடைந் தார். அக்காலங்களில் விடயக் கனதியுடன் 'மல்லிகை தரமானதாக வெளிவந்தமைக்கு ஏ. ஜே. முக்கிய காரணர் என்பதை, 'அறிந்தோர் அறிவர். புறச்சான்று வேண்டுமானால், அக்காலத்தில் மல்லிகையில் வந்த சாந்தனின் சிறுகதையொன்று வகுப்புவாதக் கதை எனப் பிரச்சினைக்கு உள்ளானபோதும், ஜானகிராமன் - மாப்பசான் பற்றிய நுஃமானின் கட்டுரை சர்ச்சைக்குள்ளானபோதும் ஏ. ஜேயிடம் காட்டினேன்; அவர் போடுமாறு சொன்னார்’ என டொமினிக் ஜீவா வெளிப்படையாகக் குறிப்பிட்டதைத் தரலாம்.
OO
ஆங்கிலத்திலிருந்து அரிய விடயங்களைத் தமிழில் மொழிபெயர்த்தது போல, ஈழத்துச் சிறுகதைகளையும் கவிதைகளையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த அவரது பணியும் முக்கியமானது ; தமிழ் தெரியாதோர் நவீன ஈழத்தமிழ் இலக்கியத்துடன் பரிச்சயங்கொள்வதற்கான ஒரு புதிய வெளியை அவர் திறந்தார்.
அறுபதுகளில் 'சண்டே ஒப்சேவர், இலஸ்ரேட்டட் வீக்லி ஒஃவ் இண்டியா ஆகிய வெளியீடுகளிலும் ; பின்னர் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் "ஜேணல் ஒஃவ் சவுத் ஏசியன் லிற்றேச்சர்’, ‘சற்றடே றிவியூ", "தேட் ஐ" ஆகியவற்றிலும் அவரது மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன ; அண்மைக்காலத்தில் புதுடெல்லியிலிருந்து வரும் 'லிற்றில் மகஸின்' இதழில் வந்துள்ளன.
r" 'த பென்குயின் நியூ றைற்றிங் இன் சிறி லங்கா', 'ஏ லங்கன் மொஸேய்க்',
லூட் சோங் அன்ட் லமென்ற் ஆகிய தொகுதிகளிலும் பல படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இலண்டனிலுள்ள பத்மநாப ஐயரின் ஊக்குவிப்புக் காரணமாக, அணி மைய வருடங்களில் ஏராளம் சிறுகதைகளையும், கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்புக்களைத் தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியில், பத்மநாப ஐயரும், கனடாவிலுள்ள ஆங்கில விரிவுரையாளரான செல்வா கனகநாயகமும் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
ஏ. ஜேயிடமிருந்த இலக்கிய இரசனைக் கூருணர்வும், ஆங்கில மொழியிலான வெளிப்பாட்டுத்திறனும், பொறுப்புமிக்க உழைப்பும் அவரது மொழியாக்கங்களை உயிர்த்துடிப்புடையனவாக்கிப் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. ஜெயகாந்தனின் போர்வை' சிறுகதைக்கான ஏ. ஜேயின் மொழிபெயர்ப்பை, தமிழகத்தில் மொழிபெயர்ப்புத்துறையில் செயற்பட்ட ஆர். கே. கண்ணன் சிறப்பாகப் பாராட்டியுள்ளார் ; ஜெயகாந்தனும் திருப்தி தெரிவித்திருக்கிறார்.
OO
பொதுவில் அமைப்புகளில் ஈடுபாடு காட்டாது விலகியே நிற்கும் ஏ. ஜே. யாழ். திரைப்பட வட்டம், இலங்கை அவைக்காற்றுகலை கழகம் ஆகிய இரண்டினதும் தலைவராக இருந்தமை ஆச்சரியந்தரும் ஒரு புறநடைதான்! இதற்கு திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அவருக்கிருந்த தீவிர ஈடுபாடும், இவ்விரு அமைப்புகளிலும் சேர்ந்து இயங்கிய - அவர்மீது மதிப்பும் நேசமுங்கொண்டிருந்த - பலரின் உரிமைநிறைந்த வற்புறுத்தல்களுக்கு அவர் இளகியமையும் காரணங்களாகலாம்.
அ.யேசுராசா

Page 65
(
1979 - 1981 வரை இயங்கிய யாழ். திரைப்பட வட்டம் இத்துறையில் ஒரு முன்னோடி அமைப்பாகும் ; அதன் ஆதாரசக்தியாக ஏ. ஜே. இருந்தார். பல்வேறு நாடுகளின் தூதரகங்களுடனான தொடர்புகளைப் பேணியது அவர்தான். இதனால், முதலில் ருமேனியத் திரைப்பட விழா 1979 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது; பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் 25 திரைப்படங்கள் (16 மி. மீ.) மாதாந்தம் ஒன்றென உறுப்பினர்களுக்குக் காட்டப்பட்டன; முதன்முறையாக ஐஸன்ஸ் ரைன், ட்ரூ.வோ, ஜிறி வெயிஸ், செம்பென் உஸ்மான் போன்ற புகழ்பெற்ற நெறியாளர்களின் கலைப்படைப்புக்களை இரசிக்கும் அரிய வாய்ப்பு யாழ்ப்பாணக் கலை ஆர்வலர்களுக்குக் கிட்டியது.
அவைக்காற்றுகலை கழகம் ஒரு பாலை வீடு, கண்ணாடி வார்ப்புகள், யுகதர்மம், முகமில்லாத மனிதர்கள், அரையும் குறையும் முதலிய புகழ்பெற்ற பிறமொழி நாடகங்களை மிகச்சிறப்பாக அளிக்கை செய்தது. ஏ. ஜேயின் உலக நாடக அறிவுப்பகிர்வும் ஆலோசனைகளும் கழகத்தினருக்கு உதவியாயிருந்தன; இது தவிரவும், இந்நாடக முயற்சிகளை விதேசிய மனப்பாங்கின் வெளிப்பாடுகளெனக் கொச்சைப்படுத்தி மதிப்பிறக்கம் செய்ய விழைந்த விமர்சனப் பிரம்மாக்கள் சிலரின் முயற்சிகளைப் பலவீனமாக்கும் தார்மீக வலுவினையும், அவரது தலைமைத்துவம் வழங்கியது.
OO
எண்பதுகளில் ஒருமுறை, இதழ்களில் வெளியான ஏ. ஜேயின் கட்டுரைகளின் ஒருதொகை நிழற்பிரதிகளைப் பத்மநாப ஐயர் என்னிடம் தந்து, ஏ. ஜேயிடம் கொடுத்து நூல் வெளியீட்டிற்குரிய வகையில் ஒழுங்குபடுத்துமாறு கேட்கச்சொன்னார். அவற்றை அவரது மூன்றாம் குறுக்குத் தெரு இல்லத்திற்குச் சென்று கொடுத்தேன். அவற்றை வாங்கிப் புரட்டிப்பார்த்தவர் மெல்லிதாய்ச் சிரித்தபடி, "எல்லோரும் நான் குடிச்சுக்கொண்டு திரியிறதாய்ச் சொல்லுநீங்க . ஆனா கன வேலையும் நடந்துதானே இருக்கு .” என்று சொன்னார். உண்மைதான், வெளித்தெரிந்தும் தெரியவராமலும் நிறையவே அவர் செயற்பட்டிருக்கிறார்!
ஏராளமானவை இன்னும் நூல் வடிவம் பெறாதபோதும் மொழி பெயர்ப்புக்களையும் சுயமான கட்டுரைகளையும் தாங்கி, அவரது பெயரில் இதுவரை ஆறு தனி நூல்கள் வெளிவந்துள்ளன ; அவை வருமாறு :
, மத்து (1970, 2000).
மார்க்சீயவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும் (1978). அவசரகாலம் 79 (பகுதி-1), (1980). மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் (1981).
. எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (1981). 6. செங்காவலர் தலைவர் யேசுநாதர் (2000). இலங்கையின் முக்கிய ஆய்வறிவாளரில் ஒருவரான, மறைந்த றெஜி சிறிவர்தனவின் ஆங்கில எழுத்துக்களைத் தொகுக்கும் பணி, கொழும்பிலுள்ள இனத்துவ ஆய்வுகளிற்கான சர்வதேச நிலையத்தினால் ஏ. ஜேயிடமே கொடுக்கப்பட்டது. றெஜியின்மீது மிக்க அபிமானங்கொண்டிருந்தவரான ஏ. ஜேயின் செம்மையான உழைப்பினால் -
குறிப்பேட்டிலிருந்து.

பெரிய அளவில் - இரண்டு தொகுதிகள் வெளியாகியுள்ளன.
OO
மு. புஷ்பராஜன் மூலம் ஏற்கெனவே ஏ. ஜேயுடன் நான் அறிமுகமாகியிருந்தாலும், 1976 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், கண்டியிலிருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வந்தபின்னரே நெருங்கிப்பழக முடிந்தது. ஏறக்குறைய ஒவ்வொருநாள் மாலையிலும் அவரைச் சந்திப்பதென்றாகியது. அவரது வீட்டில், நீகல் திரையரங்கின் அருகிலிருந்த சிறிய தேநீர்க்கடையில் என (அதை 'ஏ. ஜேயின் கடை' என்றே அழைப்போம்!) அவரைச் சந்திப்பேன்; நுஃமான், மு. நித்தியானந்தன், புஷ்பராஜன், கேதாரநாதன், சட்டநாதன் என வேறு நண்பர்களும் அங்கு வருவார்கள். சிலவேளைகளில் எல்லாரும் உரையாடியபடியே பண்ணைக் கடற்கரை வரை நடந்து செல்வோம். இலக்கியம், திரைப்படம், அரசியல் எனப் பல விடயங்களிலான அறிவை அவருடன் கதைப்பதன்மூலம் திரட்ட முடிந்தது; கலங்கலான எத்தனையோ விடயங்களில் கேள்விகளை எழுப்பி அவரது பதில்களால் தெளிவடையவும் இயலுமானது.
இவ்வாறு அவரிடம் பெற்ற பெரும்பயனிற்குச் சிறிய நன்றியாகவே, 2002 இல் வெளிவந்த எனது பனிமழை (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) நூலை -
'கற்றலும் கேட்டலுமாய
அறிவுத் தேடற் செயற்பாட்டில்
என்வாழ்வில்
கேட்டலின் பயனைப்
பெறவைத்த
மதிப்பு நிறை
ஏ. ஜே. கனகரத்தினா
அவர்களுக்கு . என்ற வரிகளுடன் சமர்ப்பணம் செய்தேன்.
அலை இதழை நாங்கள் வெளியிட்டபோது, பல முக்கிய விடயங்களின் மொழிபெயர்ப்புக்களைத் தாமாகவே தந்துதவினார் ; ஆலோசனைகளுடன், தேவையான தரவுகளையும் அவ்வப்போது பெறமுடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாய், எழுபதுகளிலும் எண்பதுகளின் நடுப்பகுதி வரையிலும் ஆதிக்கம் பெற்றிருந்த இலக்கிய சக்திகளுடன்’ பல விடயங்களில் முரண்பட்டு நின்ற அலைக்கு ஏ. ஜேயுடனான தொடர்பு தார்மீகப் பலத்தை அளித்தது!
ஏ. ஜே. நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை அவருடன் பழகியோர் அறிவர். அவ்வப்போது வேடிக்கையாக - சிரித்தபடியே சிலவற்றைச் சொல்வார்.
* உலகப்புகழ் பெற்ற அகிரா குரொஸாவாவின் "செவன் சமுராய் திரைப்படம்,
1977 ஆம் ஆண்டளவில் யாழ். நீகல் திரையரங்கிற்கு வந்திருந்தது. முதல் நாளே ஏ. ஜேயுடன் சென்று பார்த்தோம். மூன்றாம் நாள் மறுபடியும் நான் அப்படத்திற்குச் சென்று பார்த்தபோது, பல காட்சிகளைக் காணவில்லை; விசாரித்ததில் மூன்று நீல்கள் காட்டப்படவில்லையெனத் தெரிந்தது. இதனை ஏ. ஜேயிடம் தெரிவித்தபோது கேலிப் புன்னகையுடன் அவர் சொன்னார், "இனி இது நீகல் தியேட்டர் அல்ல ; நீல் அகற்றித்
அ.யேசுராசா

Page 66
தியேட்டர்!”
* ஒருமுறை, வியட்நாம் யுத்தம் நடைபெற்றபோது யாழ். முற்றவெளியில் நடந்த அமெரிக்காவைக் கண்டிக்கும் கூட்டமொன்றில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனும் கவிதை வாசித்ததைச் சொல்லிவிட்டு, ". உங்களுக்குத் தெரியுமா ? அவர் அமெரிக்காவே வெளியேறு' என ஆக்ரோஷமாய்க் கவிதை பாடினதில பயந்துதானே அமெரிக்கா வியட்நாமை விட்டு ஓடியது .!” என்று சிரித்தார்.
* 'மல்லிகை கலை, இலக்கிய இதழில் பொருத்தமில்லாத விடயங்கள் பல வந்துகொண்டிருந்தன. மொஸ்கோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது ஒலிம்பிக் சிறப்பிதழ் வெளியிட்டது. 'உங்கள் இளமையின் ரகசியம் என்ன?’ என்ற கேள்விக்கு தூண்டில் பகுதியில் ஜீவா ஆர்வத்துடன் பதிலளித்தார். நீங்கள் ஈழத்து மார்க்சிம் கார்க்கி, 'ஈழத்துப் பாரதி என்று தமிழ்நாட்டிலிருந்து அவரைப் புளுகிச் சிலர் எழுதிய கடிதங்களும் பிரசுரமாகின. இவை போன்றவற்றை நானும் வேறு நண்பர் சிலரும் எரிச்சலுடன் சுட்டிக்காட்டி ஏ. ஜேயுடன் கதைப்போம் ; அப்படிக் கதைத்தபோது ஒருதடவை அவர் குறுஞ்சிரிப்புடன் சொன்னார், "எம்மிடையே இரண்டு 'சிரித்திரன்கள் உண்டு : ஒன்று ஒறிஜினல். ஜீவா இல்லையேல் நமது வாழ்வு சுவைக்காது”
OO
இவ்வாண்டு தைமாத இறுதிப்பகுதியில் சுகவீனங்காரணமாக ஏ. ஜே. யாழ். பொது மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்தது எனக்குத் தெரியாது. அவர் வீடு திரும்பிய பின்னரே செய்தி அறிந்து, திருநெல்வேலியில் அவர் வசித்துவந்த கிருஷ்ணகுமார் வீட்டிற்குச் சென்றேன். இரண்டு நாள்கள் தங்களுடன் தங்கிவிட்டு ரஞ்சித்தின் (ஏ. ஜேயின் தகப்பனார் வீட்டில் சிறுவயது முதல் இருந்த சைமனின் மகன்; பிரதான வீதியில் வசிப்பவர்) வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு சிலநாள்கள் இருப்பாரெனவும் கிருஷண குமார் சொனி னார். அதீதுடனி மருத்துவ வசதி கீ காக ஏ. ஜே. கொழும்பு செல்வது நல்லதெனவும், ஏ. ஜேயின் தம்பியும் கொழும்புக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஏ. ஜே. போகமாட்டேனெனச் சொல்வதாகவும், இதுபற்றி என்னையும் கதைக்குமாறும் சொன்னார். இறுதிக் காலத்தில், கொழும்பில் தம்பியுடன் ஏ. ஜே. தங்குவதே பலவிதங்களிலும் அவருக்கு நன்மையானதென அவருக்கு நெருக்கமான வேறுசிலரும் நானும் கருதினோம். ஏனெனில், அவரது தம்பியின் மனைவியும் ஒரு மருத்துவர் ; மிக வசதியான நிலையிலும் வாழ்பவர்கள். ஆனால் அவரோ யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றுவிடுவதை இதுவரையும் விரும்பாதவர்.
ரஞ்சித்தின் வீடு சென்ற நான் ஏ. ஜேயிடம் பொதுவில் நலன் விசாரித்துவிட்டு, அவரது உடல் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தில் நிலவும் பதற்றச்சூழல் கருதியும் கொழும்பு சென்று சில மாதங்கள் தங்குவது நல்லதெனப்படுவதாக மெல்லிதாய் (வலியுறுத்தாது) சொன்னேன்.
"அப்ப புத்தகங்கள என்ன செய்யிறது?’ என்றுதான் உடனே கேட்டார். அவரிடம் ஏராளமான புத்தகங்கள் உள்ளமை தெரிந்ததே. நான், “புத்தகங்கள விட உங்கட உடல்நலன்தானே முக்கியம். விருப்பமான ஏழெட்டுப் புத்தகங்களக் கொண்டு
குறிப்பேட்டிலிருந்து.

போங்க . அடுத்து முக்கியமானவற்றை எடுத்துவைத்தால், அடிக்கடி கொழும்பு வரும் சிவச்சந்திரன் கொண்டுவந்து தருவார்’ என்று சொன்னேன்.
அவர் மெளனமாயிருந்தார். "சிவத்தம்பி, மு. பொ, கேதாரநாதன், சிவகுமாரன் போன்றோரையும் கொழும்பில சந்திக்கலாம்; இன்னும் கனபேர் வந்து உங்களச் சந்திப்பினம். பிரிட்டிஷ் கவுன்சிலையும் பயன்படுத்தலாம் .” என்று சொல்லிக் கதைத்துவிட்டு வந்தேன். அடுத்தநாளும் சென்று பார்த்து பொதுவாகக் கதைத்துத் திரும்பினேன். அதற்கு அடுத்தநாள் மதியம் எனது வீடுவந்த ரஞ்சித், ஏ. ஜே. கொழும்பு செல்ல உடன்பட்டு பிளேன்ரிக்கற் எடுத்துவிட்டதாயும், அன்று இரவு கிருஷ்ணகுமாரின் வீட்டில் தங்கி மறுநாள் காலை பயணம் செய்வதாகவும் தகவல் தெரிவித்தார் ; திருப்தியாயிருந்தது.
மறுநாள் (மாசி மாத முதல் வாரம்) காலை ஏழரை மணிபோல், விமானப் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சிங்கள மகாவித்தியாலய மைதான நிலையத்திற்குச் சென்றேன். தனது பயணப் பைகளுடன் அங்கே ஏ. ஜே. இருந்தார். அவரிடம் சென்று கதைத்துக்கொண்டிருந்தேன்; இடையில் ரஞ்சித் வந்து கதைத்துச் சென்றார். விமானப் பயண முகவர் அலுவலக ஊழியரும் படையினரும் வந்து உரிய பரிசோதனைகள் முடிந்த பின், நான் படையினரிடம் சிங்களத்தில் சொல்லிவிட்டு (ஏ. ஜே. பலவீனமாக இருந்தார் ; மெல்ல மெல்லத்தான் அவரால் நடக்க முடிந்தது) அவரது பயணப் பைகளையும் எடுத்துக்கொண்டு, அவரது தோளைப் பற்றி நடத்திக்கொண்டு சென்று விமான நிலையத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன்; பக்கத்து இருக்கையில் இருந்தவரிடம், இறங்கும்போது அவருக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டேன். பத்துமணியளவில் பேருந்து சென்றபின்னர் வீடு சென்றேன்.
ஒரு கிழமையின் பின்னர் ஒருதடவை அவருடன் தொலைபேசியில் கதைத்தேன்; பின்னர் இரண்டு முறை கடிதங்கள் எழுதினேன். இடைக்கிடை அவரைப்பற்றிய தகவல்கள் கொழும்பு சென்று திரும்பிய சிலரால் கிடைத்தன.
மறுபடி ஒருமுறையாவது அவரைச் சந்திப்பதற்கிடையில் மரணச்செய்திதான் கிடைத்தது. யாழ்ப்பாணத்தின் அப்போதைய நெருக்கடிச் சூழலில் உடன் பயணம் செய்ய வாய்ப்பில்லாததால், இறுதிச்சடங்கிலும் கலந்துகொள்ள முடியாத துரதிர்ஷ்ட நிலைக்கு, அவர்மீது மதிப்புக்கொண்டுள்ள பலரும் உள்ளாகிவிட்டோம்!
யாழ்ப்பாண மண்ணில் ஆழ வேரூன்றிய உலகக் குடிமகனென' றெஜி சிறிவர்தனவும் -
மிக வேகமாக மறைந்துவரும் ஓர் உயிர்ராசியைச் சேர்ந்தவர் ஏ. ஜே. என எஸ். வி. ராஜதுரையும் - முன்னொருமுறை குறிப்பிட்டுள்ளனர். எனக்கென்றால்ஹங்கேரியக் கவிஞன் 'சாந்தோர் பெட்டோஃவ்வி’யின் 'நீ மனிதனாயின் மனிதனாயிரு’ என்ற கவிதை வரி நினைவில் எழுகிறதில், மனிதனாயிருந்த மனிதனெனச் சொல்லத் தோன்றுகிறது! M W
கலைமுகம் ஆடி - மார்கழி 2006
அ. யேசுராசா

Page 67
அக்தர்-உல்-இமன்
“போபால இன்னமும் துக்கம் அனுஷ்டிக்கிறது; துக்கம் அனுஷ்டிக்கும் ஒரு நகரம் கலாசாரத் திருவிழாக்களில் “விளையாட முடியாது” உலகக் கவிதைத் திருவிழா நடந்த போபால் நகரின் ‘பாரத் பவன்’ கட்டடத்திற்கு அண்மையில், நிலக்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு கிழவர், அவ்வாறு சொன்னார். “கவிதைத் திருவிழா ஆரம்பமான நாளன்று, பாரத் பவனிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய சிறு குழுவில், நானும் இருந்தேன்” என, அவர் மேலும் கூறினார்.
ஆனால், ஒரு கிழமையாக (ஜனவரி 1117), ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங்களை, உலகின் புகழ்பெற்ற சமகாலக் கவிஞர்களைச் செவிமடுப்பதில் செலவளித்த பலருக்கு, அது கவிதைக்குரிய நேரமாய்த்தான் இருந்தது.
ஒவ்வொருநாளும் கவிதை வாசிப்பு காலை 9. 30 மணிக்குத் தொடங்கிற்று. மதிய உணவிற்கான
お
குறிப்பேட்டிலிருந்து.
 

ஓய்விற்குப் பின்னர், தொடர்ந்து நன்கு இருட்டும்வரை அது நடந்தது.
இத்திருவிழாவில் பங்குபற்றிய கவிஞர்கள் சிலருடன் நிகழ்த்திய செவ்வியிலிருந்து, சில பகுதிகள் தரப்படுகின்றன.
முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் ஒருகாலத்தில் முக்கிய உறுப்பினராக இருந்த உருதுக் கவிஞர் அக்தர் - உல் - இமன், சிறிய உரையாடலின்போது பின்வருமாறு சொன்னார் : “இடதுசாரிகள் நலிவுற்றமை கருத்துநிலை வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதனால், வெளிப்படையான அரசியல் அறிவிப்புகளைக் கவிஞன் செய்யமுடியாதுள்ளது. அமைப்புகள் கவிதைகளில் செல்வாக்குச் செலுத்த முடியும். எங்கள் நாட்டில் இடதுசாரி அமைப்பு பெரிய அமைப்பாக இருந்ததால், காத்திரமான எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்தியது. ஆனால் இடதுசாரி அமைப்பு இப்போது தளர்ச்சியுற்றுவிட்டதால், இலக்கிய வெளிப்பாடுகள் மிகவும் தன்னிலைப்பட்டதாக (Personal) மாறிவருகின்றன’ எந்த இஸத்தையும் தான் வரித்துக்கொள்ளவில்லையென்றும், மனிதனின் அவலத்தையே எழுதுவதாகவும் சொன்ன அவர், மேலும் சொன்னார் : “சிலவேளைகளில், யாருக்கு, என்னத்தை எழுதுவது என்ற உணர்வு ஏற்படுகிறது.”
e
ஏர்னெஸ்ற்றோ கர்தினால் நிக்கரகுவா நிக்கரகுவாவின் முன்னணிக் கவிஞனாயும், அந்நாட்டின் கலாசார அமைச்சராயுமுள்ள ஏர்னெஸ்ற்றோ கர்தினால், கவிஞர்கள்தான் நிக்கரகுவாவில் புரட்சியைச் செய்தார்களென்று சொன்னார். “புரட்சி கவிதையாக இருக்கிறது; கவிதை புரட்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், தனது காதல் கவிதைகள்கூட அரசியல்தான் என்றும் கூறுகிறார். கத்தோலிக்க மதகுருவான அவர், எப்படிப் புரட்சிகரக் கவிஞனாக மாறினார் என்று கேட்டதற்கு, அவர் சொன்னார் : “மதத்திற்கும் புரட்சிக்குமிடையே எந்தவித முரண்பாடும் இருக்கவில்லை.”
கபிரியேல் ஒகாரா நைஜீரியா
O 'கருத்துநிலை"ரீதியாக நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்?
இறுக்கமான கருத்துநிலைப் பிரிவுகள் நைஜீரியாவில் இல்லை. தீவிரவாதக்
அ.யேசுராசா

Page 68
கவிஞர்களைப்போல், வலதுசரிகளும் இருக்கிறர்கள். நான் ஒரு நடுநிலைவாதி. எப்போதும் நடுவழி கண்டு செல்வது முடியக்கூடிய ஒன்றெனவே நினைக்கிறேன். உண்மையில், அதன் பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்; நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்.
O உறுதியான நிலையொன்றை எடுக்க, ஏன் தயங்குகிறீர்கள்?
சித்தாந்தத்துக்கு நான் எதிரானவன். தூய கொம்யூனிஸம் இல்லை - ரஷ்யாவில் என்ன நடந்ததென்று பாருங்கள். தூய முதலாளித்துவம் உண்டா? - ‘அமெரிக்க வகையிலும் அது இல்லை. நீங்கள் எந்தநிலையை எடுத்தாலும், தவறு விடும்போது அதை ஒப்புக்கொள்ளக்கூடிய நேர்மை இருக்கவேண்டுமென்பதே, முக்கியமானது. தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, தேவையானால் நிலைப்பாடை மாற்றக்கூடியவனே, ஒரு நல்ல புத்திஜீவி.
O எதிர்ப்புக் கவிதை” இன்றும் உங்கள் நாட்டில் எழுதப்படுகிறதா?
முன்பு அது கொலனித்துவத்துக்கு எதிராக இருந்தது ; இப்போது நாங்கள் எமது அரசாங்கத்தை, அதிகாரவர்க்கத்தை, இவை போன்றவற்றை எதிர்க்கிறோம். கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் எமது புதிய அரசியலமைப்பில் எழுதப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
O நைஜீரியக் கவிதைகளில் நீக்ரோவியம் (Negritude) என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
அதிக முன்னேற்றத்தை அது தரவில்லை. ஆனால், எமது “வேர்களைப் பற்றிய விழிப்புணர்வை அது எம்மில் ஏற்படுத்தியிருப்பது, முக்கியமானது. கறுப்புக் கலாசாரம் என ஒன்று இருக்கிறது. இக்கலாசாரம் இலக்கியத்துக்கூடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் , எங்களுக்குரிய பங்கை நாங்கள் செய்கிறோம். ஆனால் இறுதியில், நல்ல இலக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
டபிள்யூ. எஸ். றெண்ட்றா
இந்தோனேஷியா
O உங்கள் கவிதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
நல்ல கவிதை? (சிரிக்கிறார்).
O உங்கள் கருத்துநிலை என்ன?
நான் இடதுசாரியோ வலதுசாரியோ அல்ல. அரசியல்வாதிகளிடமிருந்து பொறுப்புணர்வை நான் எதிர்பார்க்கிறேன். கவிஞன் அரசியல்மீது செல்வாக்குச் செலுத்துபவனாக இருக்கவேண்டுமேயொழிய, அதனால் செல்வாக்குக்கு உட்படுபவனாக
குறிப்பேட்டிலிருந்து.
 

இருக்கக்கூடாது என்பது, எனது உறுதியான நம்பிக்கை.
O நீங்கள் எழுதும் கவிதைகளால் உங்களிற்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டதா? t
ா ஓம். ஓம். 1978-1985 வரை நான் தடைசெய்யப்பட்டேன் ; ஏனென்றால் எனது கவிதைகள் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லை. நல்ல கவிதை நேர்மையானதாகவும், சரியான மதிப்பீடுகளை வரித்துக்கொண்டதாகவும் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.
O சரியான மதிப்பீடுகள் என்றால் என்ன? ா நல்லது. அடிப்படை மனித மதிப்புகளே சரியான மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. எனது கடப்பாடு சுதந்திரத்துக்கும், நேர்மைக்கும்தான்.
O அதிகளவில் நீங்கள் எழுதுகிறீர்களா?
ஆறு தொகுதிகளை நான் வெளியிட்டுள்ளேன். அதில் ஐந்து ஆங்கிலத்திலும், ஒன்று ஜேர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபன் ஸ்பென்டர் இங்கிலாந்து
O உங்கள் கவிதைக்கென்று வரைவிலக்கணம் உண்டா?
ஓம். முன்பு தெளிவான வரைவிலக்கணம் இருந்தது; ஆனால், இப்போது அதனைக் கைவிட்டுவிட்டேன்.
O அடிப்படைகளை மாற்றியமைத்தல் என்பதிலிருந்து புலன்கடந்த நுண்பொருள் ஆய்வுக்கு (Metaphysics) மாறிவிட்டீர்கள். அரசியல் கவிதை எழுதுவதை ஏன் நிறுத்தினீர்கள்?
வேலையின்மை, ஏழ்மை பற்றி எழுதுவதில் முன்பு சந்தோஷப்பட்டேன். ஆனால் துன்பங்கள் அதிகரித்துச் செல்வதில், வறுமையைப் பற்றி மட்டும் எழுதுவது இழிவானதாகத் தெரிகிறது. துன்பங்களைப்பற்றி எழுதுவதற்கு நீங்களும் துன்பப்படவேண்டும் ; ஆனால் நிகழ்ச்சிப்போக்கில் நீங்களும் அழிவீர்கள். நச்சுப்புகை அடுப்பினுள் வீசப்பட நேர்கையில் மாத்திரமே, நச்சுப் புகைக்கூடத்தினுள் வீசப்படுவதால் வரும் துயரங்களை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும் ; ஆனால், அப்போது அது தாமதமானதாகிவிடும். அதனால்தான் அரசியல் கவிதை எழுதுவதை நிறுத்தினேன். குறித்த சில சூழ்நிலைகளிலேயே அது எழுதப்படமுடியும்.
O மற்றவர்களின் எழுத்துக்களால் நீங்கள் பாதிப்பிற்குள்ளாகிறீர்களா?
நீங்கள் அதிக அளவில் வாசிக்கலாம் ; அதன்மூலம் முடக்குநிலையிலிருந்து மீளலாமென நினைக்கக்கூடும். ஆனால், உங்களின் “சொந்தக் கவிதை'யையே நீங்கள் எழுதவேண்டும்.
ay. Guagtrar

Page 69
செசார் லோப்பஸ் கியூபா
0 சோஷலிச நாடுகளின் இலக்கியங்கள், ‘சோஷலிச யதார்த்தவாதம்’ என்ற கருத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளன? கியூபாவில், உத்தியோகபூர்வமான இலக்கியக் கருத்துநிலை என்ன?
சோஷலிச யதார்த்தவாதத்துடன் தான் இணைந்திருப்பதாகக் கருதிக்கொள்ளும் எந்த எழுத்தாளரும் கவிஞரும், ஒரு சோஷலிசவாதியோ யதார்த்தவாதியோ அல்லர். சோஷலிச யதார்த்தவாதம், இலக்கியத்துக்குப் பெருந்தீங்கைச் செய்துள்ளது. இன்று அத்தகைய உத்தியோகபூர்வமான சித்தாந்தமேதும் இல்லை. நாங்கள் புரட்சிக்குக் கடப்பாடுடையவர்கள் ; அதன் அர்த்தம், வரட்டுத்தனமாக மார்க்சியத்துக்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கவேண்டுமென்பதல்ல. எமது பார்வைகளை வெளிப்படுத்த எமக்குச் சுதந்திரமுண்டு. ஆனால், புரட்சியினைத் தாக்கவோ அழிக்கவோ அனுமதிக்கப்படமாட்டோம். WM O கியூபாவின் அரசாங்க நிறுவனங்களிற்குப் பிடித்தமில்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதற்காக, எழுத்தாளர் பலர் சிறையிலிருப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி ஏதாவது குறிப்பு.?
ா ஓம். மக்களில் சிலர் சிறையிலிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் - கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்பதற்காகவல்ல ; எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்காக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கிறார்கள். தற்செயலாக அவர்களிற் சிலர், கவிஞராகவோ எழுத்தாளராகவோ இருக்கிறார்கள். கியூபாவில் தணிக்கைமுறை இல்லை. ஆனால் சில விமர்சகர்கள், சிலவேளை உங்கள் கருத்துக்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், புரட்சியை நீங்கள் தாக்குவதாக நினைக்கலாம். இவ்வாறு எனக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் அத்தகைய நிலை இன்று இல்லை. வெளியிலிருந்து எதிர்நோக்கிய அச்சுறுத்தல்களுக்கு புத்திஜீவிகளே காரணம் எனச் சிலர் கருதியதன் பிரதிபலிப்புத்தான், அத்தகைய நிலை.
O ஒரு கவிஞன் என்ற முறையில் உங்களுடைய கடப்பாடு என்ன?
தனது சொந்தக் கடப்பாடுபற்றிய கருத்தினைத் தெரிவதற்கு, ஒவ்வொரு கவிஞனுக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும். எனது கடப்பாடு “வேர் நிலை’க்குத்தான்; “வேர்’ என்பது மனிதன். ஒரு நல்ல கவிஞன் மனித கெளரவத்திற்குக் கடப்பாடுடையவனாக இருப்பான்.
O உங்கள் கவிதைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
எனது கவிதைகள் சொந்த அனுபவங்களையும், அரசியலையும்
குறிப்பேட்டிலிருந்து.
 

பற்றியதாயிருக்கின்றன. தனிய, ஒரு அரசியல் கவிஞன் என அழைக்கப்பட நான் விரும்பவில்லை. நான் சிறுகதையாசிரிய னாகவும், கட்டுரையாளனாகவும் இருக்கிறேன்.
ஜுடித் றொட்றிகளப் அவுஸ்திரேலியா
O ஒரு பெண்ணிலைவாதக் கவிஞரென உங்களைச் சொல்லிக்கொள்வீர்களா?
பெண்ணிலைவாதி என்ற முறையில் இதனைக் கட்டாயம் எழுதவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, ஒருபோதுமே நான் கவிதை எழுதியதில்லை. ஆனால், பெண்களின் இருப்பு ஒருவகை ‘உறக்கம்’போல் இருப்பதை அவதானிக்கிறபோது, அதுபற்றிக் கவிதைகள் எழுதியுள்ளேன். தனது வாழ்க்கையை மேலுமீ அர்தீதமுள்ளதாக உருவாக்க விருமீபுமி எந்தப் பெண்ணும் ஒரு பெண்ணிலைவாதி என்பதே, பெண்ணிலைவாதம் பற்றிய எனது வரைவிலக்கணமாகும்.
O எத்தகைய கடப்பாட்டில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?
எனது அப்பிராயத்தில் ஒரு கவிஞன் மனிதத் தன்மைக்குக் கடப்பாடுடையவராக இருக்கவேண்டும் ; அவன் அல்லது அவள் நேர்மையுடையவராக இருக்கவேண்டும். பொய் கூறுமாறு கேட்கப்படும் கவிஞன், மெளனமாக இருக்கவேண்டும்; அதுவும், எதிர்ப்பின் ஒரு வடிவம்தான். உடன்பாடெனப் பொருள் கொள்ளக்கூடிய அபாயம் அதில் இருப்பதையும், உணர்கிறேன்.
— ფog2ovesh ისტa D]
ஃவ்றொன்ற் லைன் திசை - 22.04.1989
அ.யேசுராசா

Page 70
2 (
சென்ற ஆண்டில் செய்திப்பத்திரிகைப் பேட்டியொன்றில் பெல்லா அக்மதுலினா (சோவியத் யூனியனில் இன்று எழுதும் பிரபல்யமான பெண் கவிஞர்)
கூறினார் : “எனக்குத் தெரிந்தவரை, 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எமது கவிஞர்களிருவரும் பெண்கள் - அண்ணா அக்மதோவாவும், மரினா
ஸ்வெத்தயேவாவும்.” நீண்டகாலமாக எனது அபிப்பிராயமும் அதுவாகவே இருந்ததில் நான் மிக மகிழ்ச்சியடைந்தேன். இரண்டு கவிஞர்களின் சில கவிதைகளை நான் மொழிபெயர்த்திருந்தபோதிலும், மிகவும் நெருக்கமுற வெளிப்படுத்திய கவிஞர் அக்மதோவாதான்.
அவருடைய கவிதைகள் இலகுவாக மொழிபெயர்க்கப்படக்கூடியனவல்ல. மேலோட்டமாகப் பார்க் கையில் அவருடைய கவிதைகள் எளிமையானவை; நவீன கவிதைகளில் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிற சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட
குறிப்பேட்டிலிருந்து.
 

- சிக்கலான சொற்றொடர்கள் இல்லாமலும், எந்தவித இருண்மை இல்லாமலும், பளிங்குபோல் மிகத்தெளிவாக அவை இருக்கின்றன. ஆனால், அந்த எளிமை ஏமாற்றிவிடும் தன்மையது. பார்வைக்கு அமைதியானதாகத் தோன்றும் அவரது கவிதைகள், தம்முள்ளே ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டுள்ளன. அவரது கவிதைகள் செட்டானதும் ஒருமுகப்படுத்தப்பட்டவையுமாகும் ; உணர்ச்சிகள் சரியாகக் கட்டுப்படுத்தப்பட்டு தடைப்படுத்தப்பட்டனவுமாகும். தனது சொந்தத் துயரங்களைப் பற்றி அவர் எழுதுகையில்கூட கழிவிரக்கமோ, எந்தவித மிகைப்படுத்தல்களோ அவற்றிலிருப்பதில்லை. அவரது படைப்புக்களிற் காணப்படும் வடிவத்தின் உயர் முழுமை என்பது, அவரது ஆன்மிக ஒழுக்கத்தின் ஒரு பகுதியேயாகும். பூங்காவில் வீழ்ந்து கிடக்கும் சிலையொன்றை நோக்கிச் சொல்லுவதான, அவரது ஆரம்பகாலக் கவிதையொன்றில் அவர் சொல்கிறார்
“குளிர்ந்த ஒன்றே, வெண்ணிறமான ஒன்றே, காத்திரு, நானுங்கூட பளிங்காய் மாறுவேன்”. அந்த ஆசை நிறைவேறியது. அக்மதோவா தனிப்பட்ட உறவுகளையும், குறிப்பாகக் காதலையும் பற்றி எழுதும் கவிஞரானார். இத்தோடு புரட்சிக்கு முந்திய தாராளவாத புத்திஜீவிகள் அணியை அவர் சேர்ந்திருந்த உண்மையும் இணைந்தே, புரட்சிக்குப் பிந்திய நாள்களில் அவரது கவிதைகள் மதிப்புக்குறைவாகப் பேசப்படக் காரணமாயின. அந்தக் காலத்தின் உத்தியோகபூர்வ பொல்ஷெவிக் விமர்சகர்களான ட்ரொட்ஸ்கியும் லூனசர்ஸ்கியும், சமூக முக்கியத்துவம் அற்றிருப்பவையெனக் கூறி, அக்மதோவாவின் கவிதைகளைப் புறக்கணித்தனர். ஸ்டாலினின் ‘சுத்திகரிப்பு’க் காலகட்டத்தில் வரிசையாக அக்மதோவா எழுதிய ‘இரங்கற்பா’ என்ற தலைப்பிலான மிகச் சிறந்த கவிதைகளை வாசிப்பதற்கு ட்ரொட்ஸ்கி உயிரோடு இருந்திருந்தால், அவரைப்பற்றிய தனது கணிப்பீடு பிழையென்பதை ஒப்புக்கொண்டிருப்பார்.
இலக்கிய வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்ததான சூழ்நிலைகளில் ‘இரங்கற்பா’ படைக்கப்பட்டது. அவ்வேளை அக்மதோவாவின் மகன் சிறையில் இருந்தான் (எதிர்ப்புரட்சிச் சதியில் சம்பந்தப்பட்டிருந்ததான குற்றச்சாட்டின்மீது 1921இல் சுட்டுக்கொல்லப்பட்டவரின் மகனாக இருந்ததே, அவனது ஒரே குற்றமாகும்.); அவர் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த காதலனும் கைதுசெய்யப்பட்டான் ; தானும் பெரும் அபாயத்திற்குள் இருப்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஐந்தாண்டுகளாக அந்தத் தொடர்கவிதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கையில், அதை எழுதிவைக்க ஒருபோதுமே அவர் துணியவில்லை. ஏனென்றால், அவரது இருப்பிடம் சோதனையிடப்பட்டு அக்கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட்டிருப்பர். கவிதைகளை மனதில் உருவாக்கி ஞாபகத்தில் பதித்துவைக்கவும் ஞாபகத்தில் வைத்திருக்கும்படி நண்பர்களுக்குச் சொல்லிவைக்கவுமே - தான் இறக்க நேரிட்டாலும் தனது கவிதைகள் உயிர்பிழைத்திருக்கும் என்பதால் - அவரால் முடிந்தது. அவரது நெருங்கிய தோழியான லிடியா சுக்கோவ்ஸ்கயா, கவிஞரைப்பற்றிய தனது நினைவுக் குறிப்பில் வருமாறு குறிப்பிடுகிறார் :
“அன்னா அந்திரிவ்னா எனது இருப்பிடத்திற்கு வருகைதரும்போது, இரங்கற்பா
அ.யேசுராசா

Page 71
கவிதை வரிகளை முணுமுணுக்கும் குரலில் என்னிடம் சொல்வாள். ஆனால், "ஃபொன்ரனிடொம்'மிலுள்ள தனது அறையில் முணுமுணுக்கக்கூட அவளுக்குத் துணிவில்லை. உரையாடலின்போது திடீரென அவள் மெளனமாகிவிடுவாள். கண்களினால் சைகைசெய்து, கூரையையும் சுவர்களையும் எனக்குக் காட்டிவிட்டு, துண்டுக் கடதாசியையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு, சாதாரணமாய்க் கதைக்கிறதுபோல் ‘தேநீர் குடிக்கிறாயா?’ என்றோ, ‘வெயிலில் நல்லாய்க் கறுத்துப் போயிருக்கிறாய் என்றோ, உரத்தகுரலில் சொல்லியபடி, அவசரமாய்க் கடதாசியில் கிறுக்கிவிட்டு என்னிடம் தருவாள். நான் அதிலுள்ள வரிகளை வாசித்து மனதில் பதித்தபின், மெளனமாக அதை அவளிடம் திருப்பிக்கொடுப்பேன். “இந்த வருஷம், இலையுதிர் காலம் கெதியாக வந்துவிட்டது’ என்று அன்னா அந்திரீவ்னா பலமாகச் சொல்லியபடியே, தீக்குச்சியை உரசி, ஆஷ்ட்ரேயில் அக்கடதாசித் துண்டை எரித்துவிடுவாள்.”
உள்நாட்டுப் போர் நடந்த கொடுமையான ஆண்டுகளின்போதோ, ஸ்டாலினிஸப் பயங்கரத்தின்போதோ, தான் மிகவும் நேசித்த தாய்நாட்டை விட்டு ஓடிச்செல்லாததைப் பற்றி, அன்னா அக்மதோவா பெருமிதம் கொண்டிருந்தார். வெளிநாட்டில், 1961இல், ‘இரங்கற்பா’ முதன்முறையாக வெளியிடப்பட்டபோது (சோவியத் யூனியனில் இரண்டு ஆண்டுகளின் முன்னரே அது வெளியிடப்பட்டது), அக்கவிதையின் தொடக்கத்தில் நான்கு வரிகளை அவர் அமைத்தார். தனது நாட்டு மக்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட பெருமையை அவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.
“...இல்லை, இன்னொரு வானக் கூரையின் கீழல்ல, அந்நியச் சிறகுகளின் அணைப்பின் கீழல்ல, எனது மக்களோடு அப்போது இருந்தேன் - அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, அதே இடத்தில்.” அன்னா அக்மதோவா இன்று சோவியத் யூனியனில் உயர்வாக மதிக்கப்படுவதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். அடிமைத்தனமும், முகஸ்துதியும், பொய்ம்மையும் இலக்கியத்தை ஆதிக்கம் செய்த ஒரு காலகட்டத்தில், உயர்வான கவித்துவ நேர்மைக்கு ஓர் உதாரணமாக அவர் இருந்தார் என்ற உண்மையும், இன்னொரு காரணமாகும்.
மற்றவையெல்லாம் அழிய சொல் நீடித்து நிலைக்குமென்ற ஆழமான நம்பிக்கையுடன், தனது கவித்துவப்பணிக்கு உண்மையானவராக அவர் இருந்தார். அவரது முழுநிறைவான தூய்மையை முனைப்பாகக் காட்டுவதான நான்குவரிக் கவிதையொன்றில், இதை அவர் சொல்லியுள்ளார். அதை இவ்வாறு மொழிபெயர்த்துள்ளேன். “தங்கத்தில் களிம்பு பிடிக்கிறது, உருக்கு அழிகிறது, பளிங்கு தூளாகிறது. சாவின் நுகர்வுக்காய் எல்லாமே காத்திருக்கின்றன. துக்கந்தான், பூமியில் மிகத் திண்மையான பொருள். மாட்சிமை உடைய சொல்லே, நீடித்து நிலைத்திருக்கும்.”
[n [Eحuagsریزیگ کی وض6 -
தி ஜலன்ட் திசை
18.08.1989
குறிப்பேட்டிலிருந்து.

கெய்ரோவில், கீழ்த்தளத்தில் அமைந்துள்ள நகிப் மஹீபவுஸின் வசிப்பிடத்தைச் சுற்றிலுமுள்ள வாழ்க்கை, வழமைபோலவே இருக்கிறது. கறுப்புப் பூனையும் ஒரு சோடி செருப்பும் வெளியே வாசலருகில் காணப்படுகின்றன. அந்தக் கட்டடம் - அவரது நாவல்களைப் போலவே - மறைந்துகொண்டு செல்லும் எகிப்தின் மேன்மைகளையும், ஒழுங்கற்று நடைபெறும் நவீனமயமாதல்களையும், உணர்த்தி நிற்கிறது. தொலைபேசி அடுத்தடுத்து ஒலிக்கிறது அல்லது பழுதடைந்து விடுகிறது. “வெளிச்சம் இல்லை” என்று மன்னிப்புக் கேரியபடியே, விருந்தினர் சிலரை "மஹ்பவுஸ்’ வரவேற்றார். இன்றைய நாள் மற்றையவர்களிலிருந்து வித்தியாசமானதாய் மஹர் பவுஸிற்கு இருந்தது எதனாலென்றால், நோபல் பரிசு தனக்கு அளிக்கப்படுகிறது என்பதை நேற்று அறிந்ததில் அவர் அடைந்த ஆச்சரியத்திலிருந்து, இன்னும் மீளமுடியாமலிருப்பதால் ஆகும்.
S
அ.யேசுராசா

Page 72
3)
நோபல் பரிசினைப் பெற்ற முதலாவது அரபு மொழி எழுத்தாளர் மஹ்பவுஸ்தான்; அது அவரைத் தடுமாறச் செய்துவிட்டது. “எனக்கு ஒன்றும் தோன்றவில்லை : யார் பிரேரித்திருப்பார்கள் என்றும் தெரியாது’ என அவர் சொன்னார். ஆனால் அரபு ஆய்வறிவு உலகைச் சேர்ந்த பெரும்பாலார், இதுபற்றி ஆச்சரியப்படவில்லை. 76 வயதுடைய மஹற்பவுஸ், எகிப்தின் மாபெரும் முதிய எழுத்தாளர். மத்திய கிழக்கிற்கு வெளியே இவர் சிறிதளவே அறியப்பட்டிருக்கிறார் என்றால், அதன் காரணம், பிரித்தானிய எழுத்தாளரான ‘ஜோண் ஃவவ்லெஸ்” சொல்வது போல் “மொழியியல் இரும்புத்திரை’தான். அதுவே அரபுமொழிப் படைப்புகளையும், அரபுக் கலாசாரத்தையும் மேற்குலகிலிருந்து மறைத்து வைக்கிறது. எழுதப்பட்ட வடிவத்தில், அரபு மொழி மரபொழுங்கு சார்ந்ததாய் இருப்பதால், சிறப்பான மொழிபெயர்ப்பிற்கு இசைந்து கொடுப்பதாயில்லை. கவிதைதான் நன்கு ஆதரிக்கப்படும் இலக்கிய வடிவம் , நாவல் இலக்கிய வடிவம் ஒரு நூற்றாண்டு காலத்தையே கொண்டுள்ளது. ஆனால் மஹ்பவுஸ், சக்திவாய்ந்த முறையில் படைப்புகளை உருவாக்குவதற்குரிய தேர்ச்சியினை இந்த மொழியில் கொண்டுள்ளார். நோபல் பரிசுப் பாராட்டுக்குறிப்பில் இவ்வாறு காணப்படுகிறது : “பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடியது - தெளிவானதாக உயிர்ப்புடன் இருப்பது, இதுவோ அதுவோ என எமது உணர்வுகளைக் கிளறிவிடுவது. முழு மனிதகுலத்திற்கும் பொருந்திவரக்கூடிய ஒரு அரேபிய விவரணைக் கலைமுறை.”
மஹற்பவுஸும் அவரது கதாபாத்திரங்களும் அரபு உலகில் நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள் அங்கு அவரது நூல்கள் பலவும் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. தமது சர்ச்சைக்குரிய கருத்துகளினால் அடிக்கடி கவனத்தையீர்க்கும் மையமாக, அவர் இருந்துவருகிறார். 1959இல் இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் முரண்பட்டபோது, முதலில் அவர் பிரபலமானார். அப்போது, கோபமுற்ற மதத்தலைவர்களின் நிர்ப்பந்தத்தினால் அவரது ‘தொடர் உருவக’ நூலான (Alegory) கெபலவியின் குழந்தைகள் (The Children of Gebelawi), எகிப்தில் தடைசெய்யப்பட்டது. இக்கதையில், இன்றைய நவீனத் தெருக்களில் நடந்துசெல்லும் ‘குழந்தைகளின் நடுவில் முகம்மது, மோஸஸ், கிறீஸ்து ஆகியோரும் காணப்படுகிறார்கள். பழைமைவாத முஸ்லிம்கள் இதனைக் கடவுள் மறுப்பாகவே கருதுகிறார்கள். ஆனால் அரபு அரசியற்சாயம் பூசப்பட்டவற்றுக்கெதிராக அவர் சென்றது, அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல. 1972இல், இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவேண்டுமெனப் பகிரங்கமாகவே அவர் வாதித்தார் ; அதனால், பல அரபு நாடுகள் அவரது நூல்கள் பலவற்றைத் தடைசெய்தன. நோபல் பரிசைப் பெற்றவர் என்ற முறையில், ‘எத்தகைய அரசியல் நிலைப்பாடு முக்கியமானதென அவர் கருதுகிறார்?’ என்று கேட்டபோது, "இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதில் எகிப்திய உதாரணத்தினை ஏனைய அரபு நாடுகளும் பின்பற்ற வேண்டுமென’ அவர், வெளிப்படையாகவே சொன்னார். அவர் மேலும் சொன்னார்: “பயனற்ற யுத்தங்களில் பணம் விரயமாக்கப்பட்டது போதும்”
மஹ்பவுஸ் பிரபலத்தைத் தேடும் ஒருவர் அல்லர், தன்னை முன்னிறுத்தாத தன்மையும், வாடிவதங்கியது போன்ற தோற்றமுங்கொண்டவர் ; அவரது தோல் இறுக்கமடைந்திருக்கிறது, தனது நோயுற்ற கண்களைப் பாதுகாக்க, வர்ணக் கண்ணாடி
குறிப்பேட்டிலிருந்து.

அணிந்திருந்தார், தனது காது கேட்குங்கருவி கேள்விகளைத் தெளிவாகக் கிரகிப்பதற்கு வசதியாக, பேட்டியாளரை நோக்கிச் சிறிது சரிந்தபடி இருந்தார். தனது உடல்நிலையையும், பயணம் செய்வதிலுள்ள விருப்பக்குறைவினையும் கருதி நோபல் பரிசினைப் பெற சுவீடனுக்குச் செல்ல, அவர் விரும்பவில்லை (தனது வாழ்நாளில் இரண்டு தடவைகள்தான், எகிப்திற்கு வெளியில் பயணம் செய்துள்ளார். கெய்ரோவில் சனநெருக்கடி நிறைந்த இடமொன்றிலுள்ள தனது விருப்பத்துக்குரிய கோப்பிக் கடைக்குத் தினமும் சென்று வருவதையே சிரமமான சோதனையாக, அவர் இப்போது கருதுகிறார்), 'ஸ்ரொக்ஹோமில்’ நடைபெறும் நோபல் பரிசு வழங்கும் வைபவத்தில், தனது இரண்டு புதல்விகளில் ஒருவர் தனக்குப் பதிலாகக் கலந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறார்.
தீவிரத்தன்மையற்றதும் மனிதாபிமானம் மிக்கதுமான தனது அரசியல் கருத்துக்கள், நோபல் பரிசுக் குழுவின் தீர்மானத்தில் ஏதாவது பங்கினை ஆற்றியிருக்கலாமோ என, மஹபவுஸ் - வியப்புத் தெரிவிக்கிறார். அவர் தனது படைப்புகளை “உண்மையில், ஏனைய நவீன அரபு இலக்கியப் படைப்புகளைப் போல நான்காம் ஐந்தாம் தரத்தவை” என்றே மதிப்பிடுகிறார். முன்பு, தன்னைவிடப் பெரிய அரபு எழுத்தாளர்கள் இருந்துள்ளார்கள் என்றும் அவர் உறுதியாகச் சொல்லுகிறார். அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையென்றால், அதற்குக் காரணம் அவர்களது பெயர்கள் பிரேரிக்கப்பட்டபோது, “மேற்கத்திய இலக்கிய உலகில் செல்வாக்குப் பெற்றிருந்தவர்களுக்கெதிராக அவர்கள் நிற்கவேண்டி இருந்தமைதான்.”
உண்மையில், எகிப்திய வாழ்க்கையின் யதார்த்தங்களே இவரது படைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரது பிந்திய நூல்கள், எகிப்திய புத்திஜீவிகளின் அரசியலையும் புலன் கடந்த உணர்வுகளையும் பற்றியதாகவும், ஆழ்ந்த தொடர் உருவகத்தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளனவாயினும், வணிக வர்க்கத்தினரதும் கீழ்மட்ட வகுப்பினரதும் வாழ்க்கை பற்றிய வளமான பதிவுகளே, இவரது சிறப்பின் அடிப்படைகளாகும். 1950இல் வெளியிடப்பட்ட இவரது மாபெரும் படைப்பான கெய்ரோ முத்தொகுதி (The Cairo Trilogy)யின் பின்புலமும் இவைதான். ஒரு வியாபாரியின் மகன் என்றமுறையில் அவர் நன்கு அறிந்த - நூற்றாண்டுகளாக மிகச் சிறிதளவே மாற்றங்கள் நிகழ்ந்துள்ள - ஆனால், ஒவ்வொரு நாளும் ‘மனித நாடகத் துணுக்குகளால் நிரம்பிக்கொண்டிருக்கும் - உலகம் அது. பரந்த அளவில் மொழிபெயர்க்கப்பட்ட மஹபவுஸின் நாவல்களில் ஒன்றான மிடக் சந்து (Midaq Alley), 1947இல் வெளியிடப்பட்டது. இது சக்திவாய்ந்த முறையில் வார்க்கப்பட்டுள்ள விபசாரி, ஹவீஷ் புகைக்கும் தன்னினச் சேர்க்கையாளன், ஷைத்தா” என்ற ஜந்து ஆகிய பாத்திரங்களைக் கொண்டுள்ளது; இத்தகைய பாத்திரங்களைக் கெய்ரோவின் சந்துகளில் இன்றும் காணலாம். இந்தச் சந்துகளும், அதில் வாழ்க்கை நடத்தும் - அலைந்து திரியும் - மனிதர்களும்தான், 'நகிப் மஹ்பவுஸின் உலகை உருவாக்கும் முதற்பொருள்களாகும்.
அவர் சொல்கிறார் : “எதை எழுதவேண்டுமென உணர்கிறேனோ அதையே எழுதுகிறேன்.” அவர் எழுதுபவை சக்திவாய்ந்தவை - நோபல் பரிசைப் பெற்றுத்தருபவை NAVN - கிறிஸ்தோபர் டிக்கே டு
திசை
202989
அ.யேசுராசா

Page 73
ஆசிரியரின் ஏனைய நூல்கள்
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (சிறுகதைத் தொகுப்பு) முதற் பதிப்பு: மார்கழி 1974 குருநகர், யாழ்ப்பாணம்.
இரண்டாம் பதிப்பு: மார்கழி 1989 பூரணி வெளியீடு, சென்னை,
அறியப்படாதவர்கள் நினைவாக.
'கவிதைத் தொகுப்பு) கார்த்திகை 18 க்ரியா, சென்னை.
பனிமழை (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) பங்குனி 2003 அவை வெளியீடு, யாழ்ப்பாணம்,
ರೌಲಟ್ದ
ୱିନିif #...' );
தூவானம் (பத்தி எழுத்துக்கள்) ஆனி20
மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு -2
பதிவுகள்
(பத்தி எழுத்துக்கள்)
மார்கழி 2003 அலை வெளியீடு, யாழ்ப்பாணம்,
குறிப்பேட்டிலிருந்து.
 
 
 


Page 74


Page 75
بھی ܩ
|
 

וריר
ད། །
R3 pbd IIIIIIIIIIIIIIIIII
FELFIPFEF "ILIRUMThij