கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அனைத்துலக நீதிச் சபை முன் இலங்கைத்தமிழர் பிரச்சினை

Page 1

T
ཀ་བ་

Page 2


Page 3

م۔م۔م۔م۔ م۔م۔- . சிங்கள I 5 IŠLI ULI
அனைத் பற்றி
த்துலக நீதிச்சை
முன் தமிழர் கூட்டணி
சமர்ப்பித்த
முறையீடு
தமிழாக்கம் !
இ . ஏ
9

Page 4
உரிமை பதிவு முதற் பதிப்பு ஜூலை, 1974
விலை ரூபா 2/=

அனைத்துலக நீதி ஆணைக்குழு
V ஜெனீவா
1973 lb GLD 15 தொடர்புகள் 6/32/0 (எஸ் 3076)
பாகுபாடு பற்றிய ஆய்வு
அன்புள்ள திரு. செல்வநாயகம் அவர்கள்,
சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் பற்றியும் பாகுபாட் டைத் தடுப்பதுபற்றியும் உலக நாடுகள் அவையில் துணை ஆணைக்குழுவொன்றுளது. சிறுபான்மைக் குழுக்களாயுள்ள மக்களின் உரிமைகள் பற்றி இத்துணைக்குழுவின் சிறப்புத் தொடர்பாளர் ஆராய்ந்து வருகின்ருர், இந்த ஆய்வுக்குத் தேவையான விபரங்களைச் சேகரித்து உதவுமாறு அனைத் துலக நீதி ஆணைக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அழைப்பை நாம் உவப்புடன் ஏற்றுக் கொண் G, nruh. உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகளின் அரசு கள் தான், உலக நாடுகள் அவைக்கு விபரங்களைத் தருகின்றன எனினும், சிறுபான்மையினரைப் பற்றிய விபரங்களை நாடு களின் அரசுகள் தரும்பொழுது, அந்த விபரங்கள் முழுமை யானதாக அமையாமல் ஒருதலைப்பட்சமாக இருப்பதால், அந்நாடுகளில் அரசு தவிர்ந்த ஏனைய அமைப்புக்களிடமிருந் தும் விபரங்களைச் சேகரிப்பது முக்கியமானது என நாம் கருதுகின்ருேம்.
சிறுபான்மைக் குழுக்களின் உரிமைகள் பற்றியும் அவர் கட்கெதிரான பாகுபாட்டு முறைமைகள் பற்றியும் அறிந்து விசாரிப்பதற்கு எமக்கு இது நல்லதோர் வாய்ப்பு. முக்கிய மான சிறுபான்மை இனமொன்றின் நிலைபற்றி மிக நன்கு தெரிந்தவர்களுள், த T 1ங் க ளு ம் ஒ ரு வ ர் என நாம் அறிகின்ருேம்.
பாகுபாடு காட்டப்படக்கூடிய இடங்கள் அனைத்தை டிம் பற்றிய விபரங்களைச் சேர்ப்பதே இக்கேள்விக் கொத்தின்

Page 5
i i
நோக்கமாகும். அதிலுள்ள வினக்கள் பரவலாக வகுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய தக வல்களை விரிவாகக் கொடுக்கலாம். ஒவ்வொரு கேள்விக்கும் குறிப்பிட்டு விடையளிக்கக் கூடியதாகக் கோவைகள் கொடுக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் கேள்விக் கொத்திற்கு எவ்வளவு முழுமையாக விடையளிக்க முடியுமோ அவ்வளவு விடைகளையும் தருக. சில இடங்களில் உங்களுக்கு விபரங்களை விரிவாகத் தெரியா விடின் தெரிந்ததை தருக.
நீங்கள் அக்கறை கொண்டுள்ள குழுவின் நிலைபற்றி விப ரம் தரக்கூடிய பிறர் இருப்பின் அவர்கட்கும் இக்கேள்விக் கொத்தைக் காட்டினல் நன்றியுடையவராவோம். நீங்கள் விரும்பினுல் இக்கேள்விக் கொத்தில் மேலதிக பிரதிகளே இங்கிருந்தே மேல் கூறும் முகவரிகட்கு அனுப்பிவைக்கி ருேம்.
பல்வேறு சமூகங்களில் பயன்படுத்தப்படும் பாகுபாட்டு வழிகளை ஒப்பிட்டு நோக்குவதே எமது ஆய்வின் முக்கிய நோக்கமாக இரு க்குமாதலால் நீதித் துறையில் ஈடுபட்ட வர்களும் சமூகவியல் விஞ்ஞானிகளும் இக்கேள்விக் கொத் திற்கு விடைதயாரிப்பதில் ஈடுபடுவதை நாம் பெரிதும் விரும்புவோம்.
இத்துறையில் தாங்கள் விபரங்களைத் தரவிருக்கின்றிர் களா என்பதையும், எச் சிறுபான்மைக்குழு அல்லது குழு க் கள் பற்றி விபரங்களைத் தரவுள்ளிர்கள் என்பது பற்றியும் உடனே எமக்கு எழுதினல் உதவியாக இருக்கும். ஆங்கி லம் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகேசம் ஆகிய நான்கில் ஏதாவதொரு மொழியில் உங்கள் விடைகளை அனுப்பவும்.
உங்கள் உண்மையுள்ள திரு.சா. ஜே. வே. செல்வநாயகம் லீ. சுவெப்சிரன் அல்பிரட்ஹவுஸ் தோட்டம், சட்ட அலுவலர்.
கொழும்பு-3. (Qa à D4).

iii
16, அல் பிரட் ஹவுஸ் கார்டின்,
கொழும்பு- 3. (இலங்கை.) 1973ம் செப்டெம்பர் 4
லீ. சுவெப்சிரன் அவர்கள் சட்ட அலுவலர்,
அனைத்துலக நீதி ஆணைக்குழு, ஜெனீவா.
அன்புடையீர்,
பாகுபாடு பற்றிய ஆய்வு(தொடர்பு 6/32/0-எஸ். குறித்து 3076) 15.5-1973ல் தாங்கள் எழுதிய கடிதம் தொடர்பாக, இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினர்க்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடு பற்றிய ஒரு சிறு தொகுப்புரையை இத்துடன் இணைத்துள்ளேன். தமிழர் கூட்டணியைச் சேர்ந்த பலரும் சிறப்பாக திரு. நேசையா அவர்களும் இத்தொகுப் புரையில் கூறப்பட்டதை ஒத்துக்கொள்கின்றனர். காலம் தாழ்த்தியதைப் பொருட்டற் க. எனினும் இத்தொகுப் புரை தங்கட்கு உதவியாக இருக்கும். எனவே எளியதோர் இத் தொகுப்புரையில் கூறப்பட்ட வற்றிற்கு மேலும் விளக்கங்கள்
தேவைப்படின் கூசாது கேளுங்கள்.
உங்கள் உண்மையுள்ள,
சா. ஜே. வே. செல்வநாயகம்

Page 6

1. அறிமுகம்
திமிழர்கள் இலங்கையில் வாழ்கின் ருர்கள்; சிங்களவர் களும் இலங்கையில் வாழ்கின்ருர் கள்; தமிழரும் சிங்கள வரும் வெவ்வேறு இனங்கள் - முற்றிலும் வேறு பட்ட இனங்கள். மொழியால், மதத்தால், பண்பாட்டினல், வரலாற் றினல் வழக்காறுகளினல் இவ்விரு இனங்களும் தனித்தனி யானவை. தனித்துவம் உடைய இனமாக இலங்கையில் வாழும் தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளனர்.
நிலப்பகுதி
தமிழர்களுக்கெனத் தனியான நிலப்பகுதி இலங்கையில் உண்டு. இலங்கையில் ஆங்கிலேய ஆட்சி தொடங்கிய காலங் களில், 1799 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கிளெக்கோர்ன் குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
*இலங்கைத் தீவானது இரு வெவ்வேறு நாட்டினங் களால் வெவ்வேறு பகுதிகளாக ஆட்சி செய்யப்பட் டன. இத்தீவின் நடுப்பகுதியும், தெற்குப்பகுதியும், வளவை ஆற்றில் இருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும், சிங்களவரால் ஆட்சி செய் யப்பட்ட பகுதியாகும். இத்தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள், மலபாரிகளால் (தமிழர்களால்) ஆட்சி

Page 7
( 2 )
செய்யப்பட்ட பகுதியாகும். இவ்விரு நாட்டினங் களும், மதத்தாலும் மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டிருந்தனர்”.
தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் மொழி வழித் தமிழர் களே. முஸ்லிம்களில் பெரும்பான்மையான வர்கள் தமிழர் களின் பராம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசுகின்றனர். உலகின் மிகப் பழமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. வளர்ச்சி பெற்ற, வளமுடைய தமிழ் மொழி, திராவிட மொழிக்குழு இனங்களுள் ஒன்ரு கும்.
இலங்கையின் மக்கள் தொகையில் பெரும்பான்மையின ரான சிங்களவர்கள், சிங்கள மொழியைப் பேசுகின்றனர். இந்தோ-ஆரிய மொழிக்குழுவைச் சேர்ந்தது எனக் கருதப் படும் சிங்கள மொழியில் திராவிடக் கலப்பு ஏராளமாக உண்டு.
பண்பாடு
தமிழர்களுட் பெரும்பான்மையானவர்கள் சைவசமயத் த வர்கள்; சிங்களவர்களுட் பெரும்பான்மையானவர்களோ, பெளத்த சமயத்தவர்கள். தமிழர்களுட் சிறுபான்மையினர் கிறிஸ்தவர்களாக இருப்பினும், இவர்கள் ஏனைய தமிழர் களுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டைப் பேணுகின்றனர். இலங்கைத் தமிழர்கட்கெனத் தனியான பண்பாடும், வாழ்வு முறைகளும் உண்டு. இவை தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையனவாகும்.
வரலாற்றுத் தொடக்க காலம் தொட்டே தமிழர்கள் இலங்கை யில் தன்னுட்சியும் தனித்துவமும் உடையவர்களாக வாழ்த்து வந் துள்ளார்கள். வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி தமிழர்களின் ஆட்சி யில் இருந்து வந்தது. இந்நிலப்பகுதியைத் தமிழ் அரசர்கள் ஆண்ட னர். தனித்த நாட்டினமான தமிழர்கள், இன்று இத்தீவில் சிறு பான்மை இனமாக்கப்பட்டுள்ளனர்.
வகையும் தொகையும்
கள்" எனவும் ‘இந்தியத் தமிழர்கள்’ எனவும் இருவகைப்

( 3 ) படுத்துவதுண்டு. வரலாற்றுத் தொடக்க காலம் தொட்டு, இத்தீவைத் தமது தாயகமாகக் கொண்டு, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து, தம்மைத் தாமே ஆட்சி செய்த தமிழர் களின் இன்றைய வழித் தோன்றல்கள் தான் ‘இலங்கைத் தமி ழர்கள்".
இலங்கையின் மலையகத்தில், ஆங்கிலேயரால் தொடங்கப் பட்ட காப்பி, தேயிலை இறப்பர் தோட்டங்களில் பணிபுரி வதற்காக, 1837 ஆம் ஆண்டு தொடக்கம் தென்னிந்தியாவி லிருந்து கொண்டுவரப்பட்ட, அதுவும் அத்தோட்டங்களே வளர்ச்சியடையச் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட, தமி ழர்களின் இன்றைய வழித் தோன்றல்கள் தான் "இந்தியத் தமிழர்கள்’.
இலங்கை அரசின் குடிசனப் புள்ளிவிபர மதிப்பீட்டுத் திணைக்களம் 1969/70இல் ஆண்டுக் காலத்தில் மேற்கொண்ட சமூக பொருளாதாரக் கணிப்பின் தொடக்கநிலை அறிக்கை களில், பின் வரும் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலக் கைத் தமிழர்களின் எண்ணிக்கை 1,571,100 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 12.7 சதவீதத்தினர் இலங்கைத் தமி ழர்கள். இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 1,162,300 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9.4 சதவீதத்தினர் இந்தியத் தமிழர்கள் .
இலங்கைத் தமிழர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் களாக எடுத்து நோக்கினல், யாழ்ப்பாண மாவட்டம், மன்னர் மாவட்டம், வவுனியா மாவட்டம் திருகோணமலை மாவட் டம், மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 86.8 சதவீதத்தினர் இலங்கைத் தமிழர்கள். இந்த ஐந்து மாவட்டங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 1,091,000 ஆகும்,
கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருனுக்கலை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் இந்தி யத் தமிழர்கள் குவிந்து வாழ்கின்றர்கள். இம்மாவட்டங் கள் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு ஏராள மான தோட்டங்கள் உள்ளன. இந்த ஏழு மாவட்டங்களிலும் உள்ள மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதமானவர்கள் இந்தியத் தமிழர்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கை

Page 8
( 4 )
1,024, 100 ஆகும். இந்த ஏழு மாவட்டங்களிலும் நுவரெ லியா, பதுளை ஆகிய இரு மாவட்டங்களிலும் இந்தியத் தமி ழர்கள் மிக அதிகமாக வாழ்கின்றனர்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் மொத்த எண் ணிக்கை 2,733,400 ஆகும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 22.1 சதவீதமானவர்கள் தமிழர்கள். கணி சமான தொகையினரான இந்தியத் தமிழர்களைப் பதினைந்து ஆண்டுகளுள், இந்தியாவிற்கு மீள அனுப்புவதற்காக இலங்கை அரசு இந்திய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய் துள்ளது.
வரலாற்றுக் குறிப்புகள்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் இலங்தைத் தமிழர்கள் இலங்கையிலேயே வாழ்ந்து வருகின்றர்கள். முற் காலத்தில் திராவிடர்களின் நாடாகவே இலங்கை இருந்தது என வரலாற்ருசிரியர்கள் கருதுகின்றர்கள். சிங்களவர்களின் வரலாற்று நூல் மகாவமிசம், இது சிங்கள பெளத்தர்களால் எழுதப்பட்டது. இலங்கையில் தமிழர் ஆட்சி கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே இருந்தது என இந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழர்கள் மீதும் சைவர்கள் மீதும் காழ்ப்புக் கொண்ட பெளத்த ஆசிரியர்களால் எழுதப்பட்ட இந்நூலி லேயே தமிழர் ஆட்சிபற்றியும் தமிழ் மொழிபற்றியும் கூறப் பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் தமிழர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆட்சி செய்தது உண்மையே. இலங்கைத் தமிழர்கள் தமக்கென தனி அரசை நிறுவி, யாழ்ப் பாணக் குடாநாட்டில் தலைநகரை அமைந்து ஆட்சி செய்து வந்தனர். 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் படையெடுப்பால் கைப்பற்றப்படும் வரை தமிழர் ஆட்சி, தமிழரின் நிலப்பகுதிகளில் செம்மையாகவும்,சிறப்பாகவும்,சீருடையதாகவும், வளமுள்ள வாழ்வு தருவதாகவும் அமைந்திருந்தது.
யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா, மட்டக்களப்பு, திரு கோணமலை மாவட்டங்கள் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கும் இறைமைக்கும் உட்பட்டன. இதனுல்தான் இன்றும் இம் மாவட்டங்களில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். இந் நிலப்பகுதிகளை ஆட்சி செய்து வந்த அந்நிய ஆட்சியாளர்கள் கூட 1833 ஆம் ஆண்டு வரை இந்நிலப்பகுதிகளைத் தனியான ஆட்சிப்பகுதியாகக் கொண்டிருந்தனர். இக் காலம் வரை இந்நிலப்பகுதிகளைப், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆங்கி

( 5 )
லேயர் ஆகிய மூன்று ஆட்சியாளரும் தனியான பகுதியாகவே ஆட்சிசெய்து வந்தனர். 1833 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர், நிர் வாக வசதிக்காகத் தமிழரின் பராம்பரியமான நிலப்பகுதிகளை இலங்கையின் ஏனைய நிலப்பகுதிகளுடன் ஒன்றிணைத்து ஆட் சிப்படுத்தினர்.
1837 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியத் தமிழர்களைத் தென் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த ஆங்கிலேய அரசு, புதிதாக அமைத்த காப்பி, இறப்பர்த் தோட்டங்களில் பணிக்கு ஈடுபடுத்தியது. இந்தியத் தமிழரின் கடும் உழைப்பி ணுலேயே, பல புதிய தோட்டங்கள் திறக்கப்பட்டன; வளர்ச்சியடைந்தன. கப்பல் வழிவந்த இந்தியத் தமிழர்கள் மன்னரில் இறங்கி, அங்கிருந்து மலையகம் சென்றனர். மன் ஞரில் இருந்து மலையகத்துக்குச் செல்லுகையில், வழியில் ஏற் பட்ட சொல்லொணுத் துன்பங்களினலும் தொற்று நோய் களினலும் ஆயிரக்காணக்கான இந்தியத் தமிழர் உயிரிழந் தனர். தென் இந்தியாவில் உள்ள கிராமங்களில் இலங்கைக் குச் செல்வதற்காக ஆள்சேர்க்கப்பட்டபோது, இலங்கைக்கு வந்த பின், இலங்கையில் வாழ்கின்ற ஏனைய மக்களுடன் சரிநிகர் சமானமான உரிமைகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழி இவர் கட்கு அளிக்கப்பட்டது.
இந்தியத் தமிழர்கள் என இன்று அழைக்கப்படுகின்ற வர்கள், அந்நாளில் வந்த தோட்டத் தொழிலாளர்களின் வழித்தோன்றல்களே. இன்று இந்த வழித்தோன்றல்கள் தென் இந்தியாவைப்பற்றிப் பெயரளவில் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர். குடிபெயர்ந்து இங்கு வந்து தோட்டங் களில் பணிபுரிவதையே நோக்கமாக அவர்கள் கொண்டிருந் ததால் தான், இன்றும் அவர்கள், தோட்டங்கள் அடர்த்தி யாக உள்ள மாவட்டங்களான, கண்டி நுவரெலியா, மார், தினோ, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பெருந்தொகையினராக வாழ்கின்ருர்கள்.
வாழ்வுக்கு வளம் தேடல்
இலங்கைத் தமிழர்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் நன்ருகத் தெரிந்து வைத்துள்ளார்கள். காலனி ஆட்சிக் காலத்தில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் ஆங்கில அறிவு பெற்றிருந்தமையால் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகட்கும் அதைப்போன்ற தூரகிழக்கில் உள்ள ஏனைய

Page 9
( 6 )
பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நாடுகட்கும் வேலைவாய்ப்புத் தேடிச் சென்றனர். வேலைவாய்ப்பும் பெற்றனர். இன்றும் கூடத் தொழில் வளங்களில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதாலும், த ல் வாழ்வு வழங்கப்படாமையாலும் இலங்கைத் தமிழர்கள் பலர் பிரிட்டன், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஆபிரிக்க நாடுகள் ஆகியவற்றிற்கு வேலைதேடிக் குடிபெயர் கின்றனர். 1948 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்த பின், அரச சேவை யில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து சிந்துள்ளதுடன், விகிதாசாரமும் குறைந்துகொண்டே வந்துள் ளது. உயர்ந்த தொழில் துறைகளிலிருந்தும், பதவிகளிலிருந் தும் தமிழர்களை ஒழித்துக்கட்டவேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகின்றது அரசு. இலங் கைத் தமிழர்களுட் பெரும்பாலோர் இலங்கையின் வடக்குப் பகுதிகளில் வேளாண்மை செய்தும், மீன் பிடித்தலில் ஈடுபட் டும் வாழ்ந்து வருகின்றவர்களே.
இலங்கையில் மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்கள் "லயகத் தோட்டங்களில் பணிபுரியும் இந்தியத் தமிழர் "ளே. இவர்கள் கல்விபெறும் வாய்ப்புக்குறைவு. கல்வி பெறும் வாய்ப்புள்ள இடங்களில் வழங்கப்படும் கல்வியின் தராதரம் மிகக் குறைவாக உள்ளது. இதல்ை இந்தியத் தமிழர்கள் படிப்பறிவு அற்றவர்களாக உள்ளனர். குழந் தைகள் இறப்பு விகிதம் மலையகத்தில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்களிடையேதான் மிக அதிகமானதாகும். ஊதி யம் மிகக் குறைவாகப் பெறுவதால் இவர்களின் வாழ்க்கைத் தரம் மிகக் குறைவானதாகும். இலங்கை பெறுகின்ற அந்நி யச் செலாவணியில் ஏறத்தாழ அறுபது சதவீதமான அந்நியச் செலாவணியைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்பே வழங்கி லுைம், நாட்டில் மிகவும் உதாசீனம் செய்யப்படும் வர்க்கத் தினராகத் தோட்டத் தொழிலாளர்களாகிய இந்தியத் தமி ழர்கள் வாழ்கின்றனர். இதல்ை இவர்களின் பொருளாதார நிலை மிக மோசமாகவே உள்ளது.
கல்வித் தராதரத்திலும், பொருளாதார நிலையிலும், இந்தியத் தமிழர்கட்கும் இலங்கைத் தமிழர்கட்கும் இடையே வேறுபாடுகள் இருப்பினும், இனத்தால், மதத்தால், மொழி யால், பண்பாட்டினல், வாழ்வு வழக்காறுகளினல் இவ்விரு சமூ கங்களும் வேறறப் பின்னிப்பிணைந்துள்ளன. இவர்களின் வாழ் வும் வளமும் ஒன்ருக இணைந்துள்ளன. இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் பொதுவான நீண்ட வளம் நிறைந்த

( 7 )
பண்பாட்டையும், நிறைந்து விருத்தியடைந்த மொழியையும், இடையீடற்ற இலக்கிய மரபையும் கொண்டுள்ளனர். கடந்த மூவாயிரம் ஆண்டுகட்டு மேல காத் தொடர்ந்து வரும் இந்த வாழ்வுப் பண்பாடுகள் இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரின் வற்ருத செல்வங்கள் ஆகும்.
சிங்களவர்களின் கைகளில் ஆட்சி
தமிழர்கள் தம் மொழிபற்றியும் பண்பாடு பற்றியும் பெருமை உடையவர்களாக இருந்தனர். தமது பண்பாட் டுத் தனித்துவத்தைப் போற்றி வளர்த்தனர். 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், நாட் டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களின் கை களில் அரசின் அதிகாரம் சென்றடைந்தது. தொடர்ந்து அட்சி செய்து வந்த அரசுகள் அனைத்தும் சிங்களவர் களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தமையால், தமி ழர்களை மதிக்கவில்லை: தமிழர்களின் பண்பாட்டுத் தனித்து
வத்தை சீர் குலைக்க (மயன்று வந்துள்ளன. இங்க ளத்தை நாட்டின் ஆட்சிமொழியாக்கிக், குடி மக்கள் அனை வரும் - சிறப்பாகச் சிறுபான்மை இனமான தமிழர்கள் அனைவரும் - சிங்கள மொழி அறிவுடையவர்களாக
வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினர். தமிழ் கற்பிக்கப் படுவதற்குரிய வசதிகள் படிப்படியாகக் குறைந்து வருகின் றன. சிறப்பாகச் சிங்களப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழைப் படிக்க முடியாத நிலை வந்து கொண்டிருக்கின்றது. இதல்ை சிங்களப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள் சிங்களத் தையே படிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அண் மைக் காலங்களில், வடக்குக் கிழக்கு மாக 1ா ன ங் க ளி ல் உள்ள தமிழர்களில் ஒரு பகுதியினர்க்குச் சிங்களத்தைப் பாடமொழியாக்கிச் சிங்கள மொழிமூலம் கல்வி புகட்டுவதற் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தென் இந்தி யாவில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி யுடன் இலங்கைத் தமிழர்கள் கொண்டுள்ள தொடர்புகளை அறுத்து, அதன் மூலம், இலங்கைத் தமிழர்களின் பண் பாட்டு வளர்ச்சியைப் பிரித்து வேருக்கி நிர்மூலமாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்நிய ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் தம் பண்பாட்டுத் தனித்துவத்தை இடர்ப்பாடதிக மின்றிப் பேணினர். எனினும் சுதந்திர இலங்கையில், சிங்கள ஆட்சியில், தமிழர் தம் தனித்

Page 10
سس۔ 8 ------
துவத்தை தைப் பேணுவது எளிதானதாகத் தோன்றவில்ஜல. இலங்கையில் உள்ள தமிழர்களின் தனித்துவத்தைப் பேண வும், உரிமை மீளப்பெறப் G3L-1 TU T L Gayub, பெற்ற தைப் பேணும் நோக்கத்துடனும், இலங்கையில் இரண்டு அரசியல் கட்சி கல் தோன்றின. ஒன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி; மற்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. இந்தக் கட்சி கள் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் செயற் பட்டு வருகின்றன. இலங்கையின் நடுப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளிகளாகிய தமிழர்களின் நலம் பேண வும், உரிமைகட்காகப் போராடவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணவுமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. இன்று இந்த மூன்று அமைப்புக்களும் ஒன்றுசேர்ந்துள்ளன. தமிழரின் உரிமைகளுக்காகப் போராடவும் பேணவுமாக இவை ஒன்றுசேர்ந்து தமிழர் கூட்டணி அமைத்துள் வான, தமிழ் இனத்தின் சுதந்திரம், உரிமைகள் தனித்துவம் என் பனவற்றை போராடிப் பெறுவதும் பேணுவதுமே தமிழர் கூட்டணி
நோக்கமாகும்.
茨“茄“

2. சட்டங்களும் தமிழர்களும்
சிறுபான்மையினராக ஏற்றுக் கொள்ளுதல்
அந்நிய ஆட்சியாளராகிய ஆங்கிலேயர், 1833 ஆம் ஆண்டில், தீவு முழுவதையும் ஒரே ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இணைத்தனர்; வலிந்து இணைத்தனர். இந்த இணைப்பு ஏற்படும் வரை இலங்கைத் தீவில் இரண்டு நாட்டு இனங்கள் இருந்தன. தமிழ் நாட்டினம், சிங்கள நாட்டினம் என இரு நாட்டினங்கள் இருந்தன. இது வரலாறு காட்டும் உண்மை . 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் இலங்கைக்குக் கிடைக்க முன்பாயினும், பின்பாயினும், எந்த அரசும் இலங்கையில் தமிழ்ப் பேசும் இனம் சிறுபான்மையினராக வாழ்கின்றதை எந்தச் சட்டத்திலும் குறிப்பிடவில்லை. எனினும் இத் தீவில் பல்வேறு சிறுபான்மை ச் சமூகங்கள் வாழ்கின்றன என்பதை LD 69 fly (på LD Téb ஏற்றுக்கொள்ள அரசோ, அரசின் ஆணை யாளர்களோ தயங்கியதில்லை.
ஆங்கிலேய ஆட்சியில், 1833 தொடக்கம் 1931 வரை யுள்ள காலத்தில், சட்டப் பேரவைக்கான தெரிவுகள் சமூகங் களின் அடிப்படையில் அமைந்திருந்தன. கரையோரச் இங் களவர், கண்டியச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கி 'யர், மேலைநாட்டவர் என்ற அடிப்படையிலேயே இத் தெரி
வுகள் அமைந்திருந்தன.

Page 11
(10)
அரசியல் அமைப்பில் சிறுபான்மை இனங்கள்
அரசியல் அமைப்பில் சீர்திருத்தங்களை விதந்துரைக்கும் அறிக்கைகளில் இலங்கையில் உள்ள சிறுபான்மைச் சமூகங் கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, 1945 ஆம் ஆண்டில் சோல்பரிப் பிரபு தலைமையிலான அர ஒயலமைப்புச் சீர் திருத்தக் குழுவின் அறிக்கையில் சிறுபான்மை யினரைப்பற்றித் தனியாக ஓர் அத்தியாயமே (7வது அத்தி யாயம்) உள்ளது. பின்வரும் சிறுபான்மை இனங்கள் பற்றி இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன:-
இலங்கைத் தமிழர்கள்: இலங்கைத் தமிழர்கள் வடக் குக் கிழக்கு மாகாணங்களில் நெருங்கி வாழ்கின்றவர்கள். அமைப்பும் இறுகிய பிணைப்பும் உள்ள சமூகத்தவர்கள்.
இந்தியத் தமிழர்கள்: 1837 ஆம் ஆண்டிற்குப் பின் னர் இலங்கைக்கு வந்து மலையகத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள்; இலங்கைத் தமிழர் களுடன் இனத்தால் மொழியால் பண்பாட்டினல் தொடர் பும் பிணைப்பும் உடையவர்கள், அனைத்துலக நீதி ஆணைக்குழு, 1961 ஆம் ஆண்டில் வெளியிட்ட 12-ஆம் எண் வெளியீட்டில் உள்ள இலங்கைப் படத்
தில், கருமையாக்கிக் காட்டப்பட்டுள்ள நிலப்பகுதி களிலே இலங்கைத் தமிழரும் இந்தியத் தமிழரும் நெருங்கி வாழ்கின்றனர்.
முஸ்லிம்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் கள்; இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழ் பவர்கள். கிழக்கு மாகாணம், கொழும்பு, புத்தளம், மன் ஞர் ஆகிய இடங்களில் இவர்கள் பெரும் எண்ணிக்கை யாக நெருங்கி வாழ்கின்றனர்.
பறங்கிகளும் மேலே நாட்டவரும் ஏனைய சிறுபான்மையின ராக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர் இவர்கள் இப் பொழுது ஒருங்கிணைந்த சமூகமாக இல்லை. என்றே கூற லாம். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பின் மேலை நாட்டவர் கள் தத்தம் நாடுகட்கும், பறங்கிகள் பெருமளவில் ஆஸ்தி ரேலியாவிற்கும் குடிபெய்ர்ந்துள்ளனர்.
இலங்கை அரசியல் அமைப்பு
சமயச் சார்பான சமூகங்கள், பிற அடிப்படையில்  ை! ந்த சமூகங்கள் இலங்கையில் இருப்பதை மேற்படி

( 11)
ஒழுங்குகளில் மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தைக் கட்டுப் படுத்துவதற்கான விதிகள் உள்ளன. அரசியலமைப்பின் 29 (2) ஆம் பிரிவில் பின்வருமாறு விதிக்கப்பட்டுள்ளது.
“அத்தகைய சட்டங்கள் எதுவும் (அ) சமயங்களைத் தாம் விரும்பியவாறு எவரும் கைக்கொள்வதைத் தடை செய்யலாகாது; கட்டுப்படுத்தலாகாது. அல்லது (ஆ) ஏதாவது சமூகத்தை அல்லது சமயத்தைச் சேர்ந்த மக்கள், பிறிதொரு சமூகத்தை அல்லது சமயத்தைச் சேர்ந்தவர் உட்படாத உரிமைக்குறைபாடுகளுக்கு, அல் லது கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது. (இ) ஏதாவது ஒரு சமயத்த வர்கள் அல்லது சமூகத்த வர் கட்குக் கொடுக்கப்படும் சிறப்புரிமைகள் மற்ருெரு சமூகத்தவர்கட்கு அல்லது சமயத்தார்கட்குக் கொடுக் கப்படாமல் விடக் கூடாது.
ஒப்பந்தங்கள்
இலங்கை சுதந்திரம் அடைந்த பின், தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியற் தலைவர்களும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதுண்டு. இவை அனைத்திலும் இலங்கையில் தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் உள்ளமை ஏற் றுக்கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனத்தின் பாரம்பரிய உறைவிடங்களாகவும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. மேலும், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெறக் கூடாது என்பதும் ஏற் றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த காலஞ் சென்ற திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுடன், இலங்கை ல் உள்ள சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக, 1957 இல் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பின்வரும் விதிகளும் இருந்தன:-
(i) இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களின்
மொழியான தமிழ் மொழிக்கு உரிய இடத்தை ஏற்றுக் கொள்வது;

Page 12
( 12 )
(i) வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் ஆட்சி மொழியாகத் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்ற சிறப்பு விதி, மொழி பற்றிய சட்டவாக்கத்தில் இணைக்கப்படு தல். காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, கைத் தொழில், கடற்ருெழில், போன்ற துறைகளை, அமைக்கப்பட விருக்கும் மாநில அவைகளின் பொறுப்பில் விடுவது.
வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும், தமிழரின் பாடு தொடர்ந்து இருப்பதற்கு ஒப்பந்தம் வழிவகுத்தது. அங்கு தமிழரின் பண்பாடும் வாழ்வுமுறையும் இருப்பதை ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முந்திய அரசினல் பெருமளவில் இப்பகுதிகளில், மேற்கொண்ட சிங்களக் குடி யேற்றம் தடைசெய்யப்பட இதன் மூலம் வழிவகுக்கப் .lنjق سLLلL
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக இருந்த காலஞ் சென்ற திரு. டட்லி சேனணுயக்காவிற்கும் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும் இடையே 1965 ஆம் ஆண்டில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட அதே கொள்கைகள் பெருமளவு இந்த ஒப்பந்தத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மொழி யைப் பற்றிய விதிகள் அதே மாதிரியாகவே அமைந்திருந் தன. காணி அபிவிருத்திச் சட்டங்களில் ஏற்ற மாற்றங் களைச் செய்வதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதை முற்ருகத் தடை செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது.
முக்கிய குறிப்பு:- : இந்த ஒப்பந்தங்கள் எவையும் நடைமுறைப்
படுத்தப்படவேயில்லை.
1972 இன் அரசியலமைப்பு :
1972 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்பில் தமிழ்ப் பேசும் மக்களைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிய, மொழிபற்றிய விதிகள், இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினர் இருக், கின் ருர்கள் என்பதை ஏற்றுக்கொண்டது.
சிறுபான்மை இனமாகத் தமிழ்ப்பேசும் இனம் இலங்கை யில் இருப்பதை 1972 ஆம் ஆண்டின் புதிய அரசியல் அமைப்பு ஏற்றுக் கொண்டாலும் அச்சிறுபான்மை இனம் தனது பண்பாட்டை விருத்தி செய்து வளர்ப்பதற்குரிய நிலை

(13)
அங்கு ஏற்படுத்தப்படவில்லை. பொதுவாக இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் சிறுபான்மை இனமாகத் தமிழ்ப்பேசும் இனம் இருப்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டே வந்துள்ளன. இவ்வாறு ஏற்றுக்கொண்டபோதி லும் தமிழர்கள் தம் பாரம்பரியம் நிறைந்த பண்பாட்டை விருத்தி செய்வதும், வளர்ச்சியடையச் செய்யவேண்டும் என் பதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சிறுபான்மை இனத்த argu தமிழர்கள், தங்கள் "பண்பாட்டைப் பாதுகாக்க வும், பேணவும், மொழியைப் பயன்படுத்தவும், அரசிய லமைப்பில் விதிக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பின் 29 ஆம் 30ஆம் பிரிவுகளில், இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனங்களின் உரிமைகள், பண்பாட்டு முறைகள் பாதுகாக்கப் பட்டுள்ளன. அதையொத்த விதிகள், இலங்கையின் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.
சிறுபான்மை இனத்தவராகிய தமிழர்கள், g5rrħ விரும்பியவாறு, தமது பண்பாட்டு வளர்ச்சிக்குகந்த வகையில், கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாதபடி சட்டம் தடை செய்கின்ற க. 1961 ஆம் ஆண்டின் 8 வது சட்டத்தின் 25 ஆம் 27 ஆம் பிரிவுகளில், 5 க்கும் 14 க்கும் உட்பட்ட வயதுடைய மாணவர்கட்குரிய கல்வி நிறுவனங்களை எவரா வது தொடங்கினல் அஃது ஒர் தண்டனைக்குரிய குற்றமாகக் ருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1946 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 29 ஆம் பிரிவில் உள்ள விதிகளை 1972 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்பி னுள் உள்ளடக்கவில்லை. இந்த 29 ஆம் பிரிவு விதிகள் பற்றி இந்த நூலின் 9ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1946 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 29 ஆம் பிரிவில் உள்ள விதிகள், சமயம் சார்ந்த சமூகங்கட்கும் சிறுபாது காப்பை வழங்கியிருந்தது எனலாம். அப்பாதுகாப்புக்கூட 1972 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்பில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
1972 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்பின் மூலகர்த் தாக்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. 1946 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 29 ஆம் பிரிவு விதிகட்குப் பதிலாக, 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் நான்காம் அத்தி யாயத்தில் ப்படை உரிமைகள் பற்றிய விதிகள் உள் ளடக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிருர்கள். உண்மை

Page 13
( 14 )
அதுவல்ல. ஏனெனில், முந்தைய அரசியலமைப்பின் 29 ஆம் பிரிவை மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை வாக்கு களினலும் மாற்ற முடியாது எனப் பிரிவுக்கவுன்சில் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது; ஆனல், 1972 ஆம் ஆண் டின் அரசியலமைப்பின் 18 (1) ஆம் பிரிவில் உள்ளடக்கிய அடிப்படை உரிமைகளை மீறுகின்ற சட்டங்கள், 18 (2) ஆம் பிரிவுக்கமையச் செல்லுபடியாகும் என அரசியலமைப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அரசியலமைப் புக்கு முரண்பாடுடைய சட்டங்களைத் தேசிய அரசுப் பேரவை யில் நிறைவேற்றலாம் எனவும், அச்சட்டங்களை எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாமல் செய்யமுடியாது எனவும் அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

3. குடியுரிமையும் வாக்குரிமையும்
சிறுபான்மையினர்க்கான கொள்கை
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் சிறுபான்மை இனத்தவர்க் கெனத் தனியான கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. சிறுபான்மை இனத்தவர்கள் இவ்வாறு தான் இந்நாட்டில் மதிக்கப்படுவர், நடாத்தப்படுவர் என்று எந்த அரசும் அறி விக்கவில்லை. எனினும் பல இடங்களில் பல்வேறு காலங் களில், பெரும்பான்மை மக்களின் தலைவர்களாக இருந்தவர் கள், சிறுபான்மை இனத்தவர்கள் பாகுபாடின்றி நடாத்தப் படுவர்; சமமான குடிமக்களாகக் கருதப்படுவர் என்றெல் லாம் கூறிவந்துள்ளனர். இக்கூற்றுக்கள் செல்லாக் காசுக ளாயின. சிங்களத் தலைவர்கட்கும் தமிழ்த் தலைவர்கட்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களைப் போலத்தான் இக்கூற் றுக்களும் ஒரு பொழுதும் நடைமுறைப்படுத்தப் படவே யில்லை.
"நாடு சுதந்திரம் பெற்ற பின் ஆட்சி ஏற்ற ஐக்கிய தேசி 1க்கட்சி அரசாயிலென்ன, பின் ஆட்சி செய்த பூரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாயிலென்ன, அல்லது பின் வந்த முரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் மார்க்கஸியக் கட்சிகளி வதும் கூட்டணி அரசாயிருந்தாலென்ன, எந்த ஆட்சி

Page 14
( 18)
பின்வரும் சந்தர்ப்பங்களில் குடியுரிமையை நிலை நிறுத்து மாறு அரச அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றர்கள்.
1. அரசிலும் தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு
பெறுதல்.
2. கடவுச்சீட்டும் ஏனைய பயணப்பத்திரங்களும் வழங்கு
த ல்.
3. குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்குதல்.
4. அரிசிப் பங்கீட்டுப் புத்தகங்கள் வழங்குதல்.
5. வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் குறித்தல்.
சொத்துக்களையும் பங்குகளையும் மாற்றம் செய்தல்
இலங்கை வர்த்தகர்களைப் பதிவு செய்தல்.
இலங்கையருக்காக முழுதும் அல்லது ஓரளவு ஒதுக்கப் பட்ட ஆலைகள் (ஆணைப்பத்திரம் எண் 18, 5 ஆம் பந்தி)
வேலைவாய்ப்பு, தொழில், வர்த்தகம் என்பனவற்றினை இலங்கையர் மயமாக்கவேண்டும் என்கின்ற கொள்கையை அடுத் தடுத்து வந்த அரசுகள் கைக்கொண்டன. தமிழ்ப் பேசும் மக்கள் தங்களின் குடியுரிமையை நிலைநிறுத்துவதில் ஏற்படும் தொல்லைகள் காரணமாக, இலங்கையர் மயமாக்கல் என்பது உண்மையில் சிங்களமயமாக்கலாகவே உள்ளது.
குடியுரிமையை நிலைநிறுத்துவதில் உள்ள துன்பங்கள் தொல்லைகள் பற்றிப் பல்லாண்டு காலமாகப் பலமுறை எடுத் துக் கூறியதன் விளைவாக, 1964 ஆம் ஆண்டு இதுபற்றி ஆராயக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. விசாரணையின் பின் இக்குழு அறிக்கை (பத்திரம் 18, 1965) ஒன்றைத் தயாரித்தது. குடியுரிமையை நிலைநாட்டுவதில் தமிழ்ப்பேசும் மக்கள் படும் துன்பங்களை நீக்குவதற்குரிய பதினன்கு விதப்புரைகளை இந்த அறிக்கையில் அக் குழு கூறியிருந்தது. இன்று வரை, எந்த அரசும் இந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடற்றவர்கள்
இந்தியாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல் களான தமிழர்களின் குடியுரிமையை இந்தச் சட்டம் பெரிதும்

( 19 )
பாதித்தது. இச்சட்டத்தினல் பத்துலட்சத்துக்கும் அதிகமான கமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெறும் வரை இந்தியத் தமிழர்களும் ஏனைய மக்களைப்போல் சமமான உரிமைகளை அனுபவித்து வந்திருக்கின்றனர்; அரசியல் அதிகாரம் பெற்றிருந்தனர்; வாக்குரிமை பெற்றிருந்தனர்; சட்டப்பேரவைக்குத் தங்களது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர். இலங்கையே தமது தாய் நாடு எனவும், இலங்கைக் குடியுரிமையே தமக்கு வேண்டும் எனவும், 700,000த்துக்கும் அதிகமானேர் இரண்டு முறை பகிரங்கமாகத் தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர்.
1948 ஆம் ஆண்டின் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களான தமிழர்களின் குடியுரிமையை மறுப்பதற்காகவே திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டது. இதனுல் ஏராளமான தோட்டத் தொழி லாளர்களான தமிழர்கள் தமது குடியுரிமையை இழந்த னர். பிறப்பால் இலங்கையரான ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் குடியுரிமையை நிலைநிறுத்த முடிய வில்லை. ஏனெனில் அச்சட்டத்தின் விதிகள் மிகக் கடுமையான வையாக இருந்தன. கேட்டிருந்த தகைமைகளோ, நிலைநிறுத் தக்கூடியனவாக அமையவில்லை. :
இந்திய பாகிஸ்தானியரின் குடியுரிமைச் சட்டம்
1948 ன் குடியுரிமைச் சட்டத்தால் பத்துலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். எனி னும் 1949 ஆம் ஆண்டின் 3 வது சட்டமான இந்திய பாகிஸ் தானிய குடியிருப்பாளர்களின் (குடியுரிமைச்) சட்டத்தின் மூலம் ஏறத்தாழ 140,000 பேருக்குக் குடியுரிமை வழக்கப் பட்டது. இச்சட்டம் நீதிநியாயமற்றதாகும்.
குடியுரிமையைப் பதிவு செய்யும் ஆணையாளர் இச்சட்டத் தைப் பிழையான முறையில் பலமுறை பொருள் கொண் டுள்ளார் என உயர்நீதிமன்றமும், பிரிவிக் கவுன்சில் நீதிமன்ற மும் தீர்ப்பு வழங்கியிருந்தன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக் கமையவும் பிரிவுக் கவுன்சிலின் தீர்ப்புக்கமையவும் செயற் படுமாறு குடியுரிமைப் பதிவு ஆணையாளருக்கு அரசு ஆணை பிடவில்ஜல. அதற்குப் பதிலாக, அந்நீதிக் கட்டளைகள் செயற்
படாவண்ணம், அதுவும், 1949 ஆம் ஆண்டில் இருந்தே செயற் படாவண்ணம், 1952 ஆம் ஆண்டின் 45 ஆம் சட்டத்திை அரசு நிறைவேற்றியது.

Page 15
( 20 )
உயர் நீதிமன்ற நீதியரசர்கள், பலமுறையும் இந்திக் குடியுரிமைப் பதிவு அதிகாரிகளின் நடத்தை பற்றிக் குறை கூறியும் அரசு இது பற்றிக் கவனிக்கவேயில்லே. குடியுரிமைபற்றி முறையீடுகள் உயர்நீதிமன்றத்துக்குச் செய்யப்பட்டபோது இத்தகைய குறைபாடுகளை நீதியரசர் கள் தெரிவித்தனர். பதிவு செய்யும் அதிகாரிகளும் தொடர்ந்து குடியுரிமை விண்ணப்பங்களை உதாசீனம் செய்தனர். பொருநி தாத காரணங்களைக் கூறிக் குடியுரிமையைப் பலருக்கு வழி" காமல் விட்டனர். இதனுல் பத்துலட்சத்துக்கும் அதிகமானோ குடியுரிமை இன்றி நாடற்றவர்க்களாகப் பட்டனர்.
குடியுரிமை இழத்தல்
1948 ஆம் ஆண்டின் 18 வது சட்டத்தின் 24 (1) ஆம் பிரிவுக்கமையக், குடியுரிமையைப் பதிவுமூலம் பெற்ற ஒருவர் அமைச்சரின் பிரகடனத்தின் மூலம் குடியுரிமையை இழக் கலாம். எடுத்துக்காட்டாக, 24 (1) (ஜி) பிரிவுக்கமைய, “இலங்கையின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதாக நடந்து கொண்ட” பதிவுபெற்ற குடிமக்களின் குடியுரிமைப் பதிவை நீக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு. 1972 ஆம் ஆண்டில் ஆக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு இந்த நிலையைத் தொடரச் செய்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பின் 67 ஆம் பிரிவுக்கமைய,
“குடியுரிமை பற்றியும், குடிமக்களின் உரிமை பற்றியும் இந்த அரசியலமைப்புச் செயல்படத் தொடங்கு முன் இருந்த சட்டங்கள், தேசிய அரசுப் பேரவையினுல் வேறுவிதமாகத் தீர்மானிக்கப்படும் வரை, எதுவித மாற்ற முமின்றி, நடைமுறையில் இருக்கும்.”
@应卢口 பிரிவுக்குரிய ஏற்பாடாக, “தேசிய அரசுப் பேர வையில் எந்தச் சட்டமும், இலங்கையின் பிறப்புக் குடியுரிமை பெற்றுள்ளவர்களின் குடியுரிமையை இழக்கச் செய்ய முடி யாது.” என்ற விதமாக அமைந்துள்ளது. இதனல் என்ன தெரி கின்றது? இலங்கையில் குடிமகனுகப் பதிவுசெய்த ஒவ்வொரு வரும், சாதாரண நிர்வாகக் கட்டளை யொன்றின் மூலம் தனது குடியுரிமையை இழக்கலாம். அல்லது, தேசிய அரசுப்பேர வையில்சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் சட்டத்தின் மூலம் குடியுரிமையை இழக்கலாம்.

( 21 )
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் சட்டமாகிய குடிவரவு (நடிய கல்வுச் சட்டத்தைத் திருத்திய 1955 ஆம் ஆண்டின் 16 ஆம் சட்டத்தினுலும், ஏராளமான தமிழ்ப் பேசும் மக்கள் இம்சைக்குள்ளாயினர். திருத்திய சட்டத்தின் 20 ஆம் பிரி விம்கமையக் கள்ளக்குடியேற்ற வாசி எனச் சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்ட ஒருவர், தான் சட்டபூர்வமான குடி மகன் என்பதை நிரூபிக்கவேண்டும். பொது இடங்களில் நின்ற தமிழ்ப் பேசும் மக்கள் பலர் திடீரெனக் கைது செய் !!ப்பட்டுக், கள்ளக் குடியேற்ற வாசி எனக் குற்றம் சாட்டப் 1.பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். குடியுரிமையை நிரூ பிக்க முடியாத பலர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர் இவ்வாறு இந்தியா சென்ற இலங்கைத் தமிழர்கள், இந்திய அரசுக்குத் தம் நிலையை எடுத்துக்கூறி இலங்கை மீண்டனர் இத்தகைய நீதிநியாயமற்ற நாடுகடத்தலைத் தவிர்க்க எண் னிய இந்திய அரசு, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே போக்குவரவு செய்வோருக்கான கடவுச்சீட்டு விதிகளை நடை முறைக்குக் கொண்டு வந்தது.
1949 ஆம் ஆண்டின் 48 வது சட்டம்; இலங்கை (நாடாளு மன்றத்) தேர்தல் சட்டம்
பத்துலட்சம் மக்களின் குடியுரிமை யைப் பறித்த அரசு மேற்கூறிய சட்டத்தை நிறைவேற்றி, குடியுரிமை உள்ளவர் கள் மட்டுமே வாக்களிக்கலாம் எனவும் விதித்தது. இலங் கையின் நடுப்பகுதி மாவட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தின்மூலம் வாக்களிக்கும் உரி மையை இழந்தனர். 1952 ஆம் ஆண்டின் பின், அதுவரை நாடாளுமன்றத்தில் பெற்றிருந்த பிரதிநிதிகளையும் இழந் தனர். சாதாரண சட்டமொன்றை இயற்றித் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் தேர்தல் இடாப்புகளில் திருத்தம் செய்யும் பொழுது, 1949 ஆம் ஆண்டின் 48 வது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனல் வாக்காளர் பதிவு இடாப்பில் உள்ள எல்லாத் தமிழ்ப் பெயர்களும் நீக்கப்பட்டன. தனது பெயரை மீள வும் வாக்காளர் பதிவு இடாப்பில் சேர்க்கவிரும்பிய எவரும் தனது குடியுரிமைக்கான தகைமைகளை நிறுவ வேண்டி இருந்தது. இத்திருத்தச் சட்டத்தினுலும், அதையொட்டி வாக்காளர் பதிவு இடங்களில் 1950 ஆம் ஆண்டில் செய்த திருத்தத்திஞ்றலும் ஏற்பட்ட வாக்காளர் தொகை மாற்றங் களை பின்வரும் தொகுப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

Page 16
தொகுதிகள் 1947ஆம் ஆண்டுப் 1950ம் ஆண்டில் 1950ஆம் ஆண்டு பொதுத்eேர்தலில் திருத்தப்பட்ட பின் திருத்தத்துக்கு பின் வாக்காளர் a Yi, Y Giri தமிழ் வாக்காளர் எண்ணிக்கை ଗୀ ଘଞ ଜୀଆଁ & ଜୀ) &, எண்ணிக்கை"
1. நுவரெலியா 24,295 9,279 3.19 2. தல வாக்
கொல்லை 19,299 2,914 244 3. கொட்டகெல 17.092 7, 738 I 37 4. நாவலப்பிட்டி 22,580 9,935 675 5. மஸ்கெலியா 24,427 8,691 2 Ol 6. அப்புத்தளை 1,123 7,049 322 7. பதுளை 43,396 28, 134 1,291
தேர்தல் தொகுதிகள்
இலங்கைக்குச் சுதந்திரம்பெறுவது தொடர்பாக ஆங்கி லேய அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்தியது சுதந்திரம் பெறுவதற்கு முன் பிருந்தே அரசு அவையின் அமைச் சர் குழுவாகும். இப்பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் களின் வாக்குரிமை பறிக்கப்படும் எனச் சாடைமாடை யாகக் கூட இந்த அமைச்சர் குழு ஆங்கிலேய அரசுக்குத் தெரி விக்கவில்லை. அரசியலமைப்புச் சீர்திருத்தம்பற்றி ஆங்கிலேய அரசுக்கு அனுப்பிய கருத்துத் தொகுப்பில், சிங்களவர்கட்கு, 58 பிரதிநிதிகளும், இலங்கை தமிழர்க்குப் 15 பிரதிநிதிகளும் இந்தியத் தமிழருக்குப் 14 பிரதிநிதிகளும், முஸ்லிம்களுக்கு 8 பிரதிநிதிகளும், ஆக அடங்கிய 95 தேர்ந்தெடுத்தனுப்பிய உறுப்பினர்களைக்கொண்ட பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கி யிருந்தனர். இந்த அமைச்சர் குழுவின் கருத்துத் தொகுப்புக்கு அமையத்தான் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்படவேண் டும் என்று சோல்பரி அறிக்கை அமைந்தது. அந்த அறிக்கை யில் 100 ஆழ் பக்கத்தில், ‘கருத்துத் தொகுப்பில் கூறியதற் கமையத், தேர்தற் தொகுதி எல்லை அமைச்சர் குழுவின் நிர்ணய ஆணைக் குழு அமைக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள் ளது.
95 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், 29 தமிழ் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனலும், சோல்பரி அரசியலமைப்பிற்கு அமைய 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற முதற் பொதுத்தேர்தலில் இந்த நினைப்புப் பொய்யாக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்

( 23 )
கான முதற் பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்குமாகாணங் களில் இருந்து 12 உறுப்பினர்களும், தோட்டப்பகுதிகளில் 8 உறுப்பினர்களும் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர். தேர் தற் சட்டத்துக்குரிய 1949 ஆம் ஆண்டின் திருத்தத்துக்குப் பின், 1952 ஆம் ஆண்டின் நாடாளுமன்றப் பொதுத்தேர் தலில், வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மட்டுமே தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிந்து அனுப்பப்பட்டனர். தோட்டப் பகுதி களில் இருந்து தெரிந்தனுப்பப்பட்ட எட்டு தமிழ் உறுப்பினர் கட்குப் பதிலாக எட்டுச் சிங்கள உறுப்பினர்கள் தெரிந்தனுப் பப்பட்டனர்.
தேர்தல் தொகுதிகட்கான எல்லைகள்
தொகுதிகளை நிர்ணயிக்க முயல்கையில், சோல்பரி ஆஃலனக் குழுவினர், தமிழ்ப்பேசும் சிறுபான்மையினருக்கு, வசதி செய் யும் முகமாகத் தொகுதிகளை, மக்கள் தொகையின் அடிப்படை யிலும் பரப்பளவின் அடிப்படையிலும் நிர்ணயித்தனர். குடி யுரிமை மறுக்கப்பட்டு, வாக்குரிமை பறிக்கப்பட்டுத் தமிழர் கள் நாடற்றவர்களாக, வாக்குரிமையற்றவர்களாக்கப் பட்ட பின்னரும், இலங்கையின் இன்றைய அரசியலமைப்பில், தேர் த ல் தொகுதி நிர்ணயம், மக்கள் தொகையின் அடிப்படை. யிலும், பரப்பளவு அடிப்படையிலும் தான் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.
மாகாண அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக் கப்படுகின்றன. தேர்தல் தொகுதி ஒன்றிற்கு 75, 000 மக்களும் மாகாணம் ஒன்றில் 1000 சதுர மைல் பரப்பளவுக்கு குறை யாத பரப்பும் இருக்கக் கூடியதாக நிர்ணயிக்கப்படுகின்றன. தேர்தல் தொகுதி நிர்ணயிக்கப்படும்பொழுது முன்னர்,தோட் டத்தொழிலாளர்களான பத்துலட்சம் தமிழ்ப்பேசும் மக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இப்பொழுது அவர் கட்கு வாக்குரிமை இல்லை. அந்தத் தொகுதிகளில் இப்பொழுது சிங்களப் பிரதிநிதிகளே இடம்பெற்றுள்ளனர். இதனல் நாடாளு மன்றத்தில் சிங்களப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பெருமள வால் உயர்ந்தது. இன்றைய தேசிய அரசுப் பேரவைக் குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் 124 பேர் சிங்களவர்களாவர். மக்கள் தொகையில் எழுபது சதவீதமானவர்களாக உள்ள சிங்கள மக்களின் பிரதிநிதிகள், தேசிய அரசுப்பேரவையில் 80 சதவீதத்துக்குமதிகமான பிரதிநிதித்துவத்தைக் கொண் டுள்ளனர்.

Page 17
( 24 )
பிரதிநிதித்துவ முறையில், சிறுபான்மைச் சமூகத்தினரின் இடங்களைப் பயன்படுத்திப் பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் பிரதிநிதித்துவம் பெறும் ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கவேண்டும். இதனுல்தான் சிறுபான்மையினரான தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகட்கும் எண்ணங்கட்கும் மதிப்புக் கொடுக்காமல் பெரும்பான்மைச் சமூகத்தினர் நாட்டை ஆட்சி செய்து வரக் கூடியதாக உள்ளது.

4. சிங்களக் குடியேற்றம்
தமிழர்களின் வாக்குப்பலத்தையும் அரசியல் பலத்தை யும் மேலும் குறைத்துத், தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதி களில் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதே இந்தக் குடியேற்றக் கொள்கையின் அடிப்படை நோக்கமாகும்.
இலங்கையின் நடுப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாக்கு வலிமையையும் அரசியல் வலிமையையும் பெருமளவு குறைப்பதில் வெற்றிகண்ட அரசு, அதன் பின்னர் இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதியான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களின் மீது தனது கவனத்தைத் திருப்பியது.
கல்லோயாக் குடியேற்றம்
இதற்காக அரசு ஒரு திட்டத்தை அமைத்துக் கொண் டது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள காட்டு நிலங் களை அபிவிருத்தி செய்து அங்குள்ள பழுதடைந்த பாரிய குளங்களைத் திருத்தியமைத்தது. அங்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டு சென்று குடியேற்றியது. இங்கு நெல் விளைவிப்பதற்குரிய சகல வசதிகளும் இச் சிங்கள மக் களுக்குச் செய்து கொடுக்கப்பட்டது. அரசு ஆதரவுடன் வளம் பெற்ற குடியேற்றத் திட்டங்கள் மூலம், தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதிகளில் ஏராளமான சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர்.

Page 18
(26)
உணவு உற்பத்திக்காகத்தான் இத்தகைய திட்டங்களை மேற்கொண்டோம் என அரசு சமாதானம் கூறலாம். இலங் கையின் இக்கால அரசியல் சூழலை எடுத்துநோக்கும் எவரும், இந்தக் கொள்கையின் மறைபொருளை உணராது விடார் கள். இத்தகைய குடியேற்றங்கள் மூலம், சட்டப் பேரவை யினைச் சிங்கள மயமாக்கிச் சிங்கள மக்களின் அரசியல் அதி காரத்தை வளர்ப்பதே அரசின் அடிப்படை நோக்கமாகும்
இலங்கை சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளுக்குள், இழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் பெருமளவில் நடந்தது. 1950 ஆம் ஆண்டு முடிவடைய முன்னர், கிழக் கிலங்கையின் தென்பகுதியில் உள்ள கல்லோயாத் திட்டத்தின் மூலம், சிங்கள மக்கள் குடியேற்றத்தால் சிங்களப் பாராளு மன்ற உறுப்பினரை அனுப்பக்கூடிய தொகுதி அம்பாறை யில் உருவாக்கப்பட்டது.
திருகோணமலை பறிபோகின்றது
கிழக்கிலங்கையில் உள்ள இயற்கைத் துறைமுகமான திருகோணமலை, உலகிலேயே மிகச் சிறந்த இயற்கையான துறைமுகங்களுள் ஒன்ரு கும், கிழக்கிலங்கையின் வடபால் உள்ள அந்த மாவட்டத்தில், இலங்கை சுதந்திரம் அடைய முன்பு ஓராயிரம் சிங்களவர்கள் கூட இருக்கவில்லை. சுதந் திரத்துக்குப்பின், அல்லே, கந்தளாய் ஆகிய இடங்களில் ஏற் படுத்தப்பட்ட அரசு ஆதரவுடனன குடியேற்றங்களினல் அந்த மாவட்டத்தின் சிங்கள மக்கள் தொகையானது, பல் லாயிரமாகக் கூடியது. 1960க்குப் பின் நடந்த ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் மூதூர்த் தொகுதியிலும் திருகோண மலைத் தொகுதியிலும் சிங்கள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டதுண்டு. மூதூர்த் தொகுதி இரட்டை உறுப் பினர் தொகுதியாகும். இங்கு போட்டியிட்ட சிங்கள வேட் பாளர், 1965 ஆம் ஆண்டுத் தேர்தலில், 19,000 வாக்குக் கட்கு மேற் பெற்றுள்ளார். இவர் தம்முடன் போட்டியிட்ட தமிழ் உறுப்பினரால் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றர். இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்திற்குள் தேர்தற் தொகுதிகள் மீண்டும் புதிதாக நிர்ணயிக்கப்படும். அப்பொழுது, திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் கட்கான தேர்தற் தொகுதியொன்று நிர்ணயிக்கப்பட்டுவிடும். அங்கு சிங்களவர் ஒருவர் நிச்சயமாக வெற்றிபெறும் வாய்ப்பை பெறுவர்.

( 27 )
மன்னர் மாவட்டமும் வவுனியா மாவட்டமும் வடக்கு rகாணத்தில் உள்ளவை. பெருமளவு காட்டுப்பகுதியாகவும் பந்து வெளிகளாகவும் அமைந்துள்ள இந்த மாவட்டங் சு: ) அரசு ஆதரவுடனுன திட்டமிடப்பட்ட குடியேற்றங் டிகள் நடைபெறுவதுண்டு. இத் திட்டங்கள் தொடக்கநிலையி sh. gjir GST. பாரியதாக இன்னும் அமையவில்லை. இதனல்ல் இம்மாவட்டங்களின் இனத் தொகுப்பு அதிகம் மாறவில்லை.
அரசு ஆதரவுடன் இல்லாமல் பிற வழிகளிலும் சிங்கள குடியேற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்றன. 4. 11 தமிழ்ப் பகுதிகளிலும் இத்தகைய குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.
பெளத்த ஏகாதிபத்தியம்
பண்டைய வரலாற்று நூலொன்றில் கூறப்பட்டுள்ள பெளத்த கோவிலின் சுவடுகளைக் கண்டு பிடித்துள்ளதாக, அதுவும் தமிழ் நிலப்பகுதிகளில் கண்டு பிடித்துள்ளதாக, பெளத்த சங்கமோ, சிங்கள வரலாற்ற சிரியரோ, அல்லது பெளத்த பிக்கு ஒருவரோ அறிவிக்கின் ருர் எனின், உடனே அந்த இடத்தில் பெளத்த ஆலயம் ஒன்று கட்டியெழுப்பப் படுகின்றது. அதுவும் அந்த இடத்தில் வாழ்கின்ற தமிழர் கள் அதிகம் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், பெளத்த சங்கத்தினர் பெளத்த கோவிலே அமைக்கின்றனர், அக்கோவது லைச் சுற்றி, அரசின் ஆதரவுடன், சில நூறு சிங்கள-பெளத்த குடும்பங்களைக் குடியேற்றுகின்றனர். சில நூறு சிங்க பெளத்த குடும்பங்களின் ஆதரவுடன் மட்டுமே அக்கோவிலை யும், கோவிலில் உள்ள குருமாரையும் பேணலாம் எனக் காரணம் காட்டி இக் குடியேற்றம் நடைபெறுகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வற்புறுத்தியதன் பேரில் 1960 ஆம் ஆண்டின் பின் வந்த அரசுகள், திட்டமிட சிங்களக் குடியேற்றத்தினைப் பெருமளவில், நடாத்தவில்ஜ எனினும் தமிழ்ப்பகுதிகளில் சிங்களவர்கள் இன்னமும் @49、 யேறுகின்றனர். சட்டத்துக்குப் புறம்பான முறையில் காடு வெட்டிக் குடியேறும் ஆயிரக்கணக்கான சிங்களக் குடும்பங் களுக்கு அரசு அனுதாபம் காட்டுகிறது. இவர்களைத் தண்டிக் கவோ இவர்களே இச்சட்டவிரோதக் குடியேற்றக்கானிகளில் இருந்து வெளியேற்றவோ அரசு மறுக்கின்றது. இவ்வாறு தமிழ்ப் பகுதிகளில் சட்டத்துக்கு மாரு ன குடியேற்றம்

Page 19
(28)
நடைபெறுவதை இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முறை நாடாளுமன்றத்திலும், அமைச்சர்களிடமும் அதிகாரிகளிட மும் எடுத்துக் கூறியுள்ளது. எனினும் அரசு இத்தகைய சட்டவிரோதக் காணிக்காரரைத் தண்டிக்க முன் வரவில்லை, மாருக இந்தக் காணிக்காரர்களுக்கு, அக்காணிகளைச் சட்ட பூர்வமாக வழங்கியது. இதனுல் ஆயிரக் கணக்கான வர்கள், சில ஆண்டுகள் குடியிருந்த பின், முடிக்குரிய காணிகளைத் தம்முடைய தாக்கிக் கொண்டனர். திருக்கோணமலை நகரத் திலும் சுற்ருடலிலும் வாழ்கின்ற சிங்கள மக்களும் பெரும் பாலோர் இத்தகைய சட்டவிரோதக் காணிக்காரர்களே.
தமிழர்க்கு ஒரு நீதி
இவ்வாறிருக்க, தமிழ்ப்பகுதிகளில் உள்ள அரசுக்குரிய தரிசு நிலங்களை வெட்டிப் பயிரிட முயன்ற தமிழர்கள் மீது அரசு மிகக் கடுமையான போக்கைக் கையாண்டது. சட்ட விரோதமாகக் காணிகளை அடைத்து வாழ்ந்த தமிழ்க் குடும் பங்களின் குடிசைகளை அரசு அதிகாரிகள், எரிப்பித் தனர். குடும்பங்களை வெளியேற்றினர். அதிகாரிகள் இவ் வாறு செய்வதற்கு எவ்வித சட்டரீதியான அடிப்படையும் இல்லை.
காணிகளை அரசுடைமையாக்குதல், குடியேற்றம், சட்ட விரோதமாகக் காணிகளை அடைத்தல் போன்ற விஷயங் களில் அரசாங்கம் பாகுபாடுகாட்டுகின்றது. தமிழர்க்கு ஒரு நீதி, சிங்களவர்க்கு ஒரு நீதி என்ற வகையில் நடந்து வரு கின்றது. அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இதனைத் தெளிவாக்கியுள்ளது.
இலங்கை அரசின் காணி விவசாய அமைச்சர், திரு. கொப்பக்கடுவை, ஏராளமான தேயிலைத் தோட்டங்களை அரசுடைமை ஆக்கிக் கொண்டு வருகின்ருர்கள். கண்டிப் பகுதிகளில் உள்ள சிங்கள ஊர்களை விஸ்தரிப்பதற்காகத் தோட்டங்களை அரசுடையாக்கியதாகக் கூறினர். தமிழர்கள் மீது ஆத்திரம் கொண்டுதான் தோட்டங்களைத் தேச உடை மையாக்கினர் என்பதை அவரின் பேச்சுக்கள் தெளிவாக் கின. 1-8-73ஆம் நாள் ஆங்கில நாளிதழான "டெயிலிமிரர்’ நாளிதழில் திரு. கொப்பக்கடுவை கூறிய கருத்துக்கள் தரப் பட்டிருக்கின்றன. இவை த வருன கருத்துக்கள் எனத் திரு. கொப்பகடுவை மறுக்கவில்லை. அங்கு கூறப்பட்டதை அப் படியே இங்கு தருகிருேம்.

29 )
“தமிழர் கூட்டணியின் தலைவர்களான திரு. செல்வநாய கமும், திரு. தொண்டமானும் இந்த நாட்டைப் பிரிக் கப்பார்க்கிருர்கள். இதற்கான அரசியலமைப்பு ஒன் றைத் தயாரிக்கவும் அவர்கள் முயற்சிப்பதாகக் கூறப் படுகின்றது. இதனைப் பார்த்துக் கொண்டு அரசு வாழா விருக்க முடியாது. நாட்டின் ஒற்றுமையை இந்நட வடிக்கை குலைத்துவிடும். கம்பளை தொடக்கம் நுவரெ லிய்ாவரையுள்ள தோட்டங்களின் பெரும்பகுதி இத்
தமிழ்த் தலைவர்களுடையதாகும். இவற்றை அரசுடை மையாக்குவதன் மூலம் கண்டிப்பகுதிகளில் இத் தலைவர் களின் பலத்தை உடைத்துவிடலாம். இக் காணிகள், கண்டிப்பகுதி விவசாயிகட்குப் பகிர்ந்தளிக்கப்படும். அவர்கள்தானே அக்காணிகளின் பூர்வீகச் சொந்தக் காரர்கள்’.
இவ்வாறு அரசினரால் பல தேயிலைத் தோட்டங்கள் கையேற்கப்பட்டன. எதையும் சீராகச் செய்ய முடியாத தால், தோட்டத் தொழிலாளிகட்கு முழுமையான வேலை வாய்ப்பை அரசு வழங்க முடியவில்லை. வேலையின்றித் தவித்த @屿西605小 தொழிலாளர்களில் 400 பேர், கிழக்கு மாகாணத் குக் குடிபெய்ர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதிகளில் குடி யேற முயற்சித்தனர். இவர்கள் அனைவரும் பதிவு பெற்ற குடியுரிமை உடையவர்கள். இந்த 400 பேரும் காணிகளைச் பட்டவிரோதமாகத் தமதாக்கியுள்ளதை அறிந்த அரசு, LaST guild அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி 19.6.73இன், 64/7 ஆம் எண் வர்த்தமானியில் வெளியிட்ட 1973ஆம் ஆண்டின் 1ஆம் விதியின் மூலம், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. 400 பதிவுக் குடிமக்கள் குடி யேறிய இடத்துக்கு மட்டுமே இந்த விதிஅமைந்தது. பல ஆண்டு காலமாகப் பல்லாயிரக்கணக்கான சிங்களக் குடியேற்ற வாசிகள் சட்ட- விரோதமாகக் காணிகளைத் தமதாக்கிக் கொண்டு கிழக்கிலங்கையில் வாழ்ந்து வருவதை அரசு Gou if? தாகக் கொள்ளவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால், தம் வாழ்வுக்கு வழிதேடும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதியான கிழக்கிலங்கைக்கு வந்த தமிழர்கள் மீது அரசு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி வெளியேற்றி யது. எனினும் அரசியல் வாதிகளும் தொழிற்சங்க வாதிகளும் தொழிலாளிகள் சார்பில் பரிந்துபேசி, இத்தொழிலாளிகள் தொல்லைப்படாது பார்த்துக் கொாண்டனர், அவசரகாலச் +ட்டத்தைப் பயன்படுத்தாமலே பிரச்சினே தீர்க்கப்பட்டது.

Page 20
5. மொழிச் சட்டங்கள்
இலங்கையின் மொழிச் சட்டங்களினல், இலங்கையில் தமிழர்கள் தாழ்ந்த இனத்தவராக்கப்பட்டுள்ளனர். இச்சட் உங்களின் ஆட்சியினல் தமிழர் சொல்லொணுத் துய்ருக்கும் உள்ள உளைச்சலுக்கும் ஆளாகின்றர்கள்.
சரிநிகர் சமானம்
ஏறத்தாழ ஒன்றரை நூற்ருண்டு காலமாக, ஆங்கில மொழி ஆட்சி மொழியாக இலங்கையில் இருந்தது. ஆளுபவர் களின் மொழியாகவும், பயன்பாட்டில் உள்ள மொழியாகவும் ஆட்சிப் பணிகளில் பெருமை பெற்றிருந்தமையாலும்,ஆங்கிலம் ஆட்சி மொழியாயிற்று. இதற்குரிய சட்டம் எதுவும் இருக்க வில்லை. இலங்கை மக்களின் மொழியாகச் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப்பெற்றிருந்தன. 1944ஆம் ஆண்டில் ஆங்கிலேய மொழிக்குப் பதிலாகத் தேசிய மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதப்பட்டது. 1944 இல், ‘சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும்’ என்ற மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இருமொழிகளும் சம அந் தஸ்து உடையனவாக இருக்கவேண்டும் எனவும் கருதப் பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னும், அரசியல் கட்சி கள் அனைத்தும் இருமொழிகட்குமான சம அந்தஸ்துக் கொள் கையை ஏற்றுக்கொண்டன. சிங்களவர்களின் அரசியல்

(31 )
கட்சிகள் அனைத்தும் சம அந்தஸ்துக்கொள்கையை ஏற்றுக் கொண்டன.
சிங்களம் மட்டும்
முதன் முதலாக 1955 ஆம் ஆண்டு, இலங்கையில் உள்ள இரு பெரும் அரசியற் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சியும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஆட்சி மொழிபற்றிய தமது கொள்கையை மாற்றிச், சிங்களம் மட்டுமே இந்நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டன. அந்நேரம் அரசியல் அதிகாரத்தை யார் கைப்பற் றுவது என்பதே பிரச்சினையாக இருந்தது. இதனுல்தான் மொழிக்கொள்கையில் அடிப்படையான மாற்றத்தை இக் கட்சிகள் மேற்கொண்டன. இன்ருே, சிங்களத் தலைவர்களைக் கொண்ட அரசியற் கட்சிகள் அனைத்தும் சிங்களம் மட்டும் கொள்கையைத் தமது கட்சிக்கொள்கையாகக் கொண் டுள்ளன.
பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மகாஜன எக்சத்பெரமுனை என்ற கூட்டு முன்னணி 1956 இல் ஆட்சிக்கு வந்தது. இவர்கள் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களுள், சிங் களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழியாகச் சட்ட மியற்றப்பட்டது. ‘சிங்களம் மட்டுமே இலங்கையின் தனியொரு ஆட்சிமொழியாக இருக்கும்’ என 1958 ஆம் ஆண்டின் 33 ஆம் சட்டமாக்கிய ஆட்சிமொழிச் சட்டம் கூறுகின்றது. இந்த நடவடிக் கையைத் தமிழ்ப்பேசும் மக்கள் அனைவரும் எதிர்த்தனர். மிக வன்மையாகக் கண்டித்தனர்.
தமிழ் மொழிச் சிறப்பு விதிகள்
தமிழரின் எதிர்ப்புக் கடுமையானது. தமிழர் போராட்டங் களை நடாத்தினர். தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பட்டனர். தமிழரின் வன்மையான எதிர்ப்பைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டின் 28 ஆம் சட்டமாக தமிழ்மொழி விசேட விதிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட தேவை கட்குத் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம் என இவ்விதிகள் விதித்தன. எனினும், 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் சட்டத் துடன் முரண்படாது செயற்படவேண்டும் என இவ்விதிகளில் கூறப்பட்டது.

Page 21
(32)
1966 ஆம் ஆண்டு வரை, 1958 ஆம் ஆண்டின் 28ஆம் சட் டம் எவ்விதமாயும் செயற்படுத்தப் படவில்லை. 1966 ஆம் ஆண்டில் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரமாணங் கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனினும் இந்தப் பிரமாணங்களையும் ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்தவேயில்லை. பிரமாணங்கள் சட்டமாக்கப்படும்பொழுது பூரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. அப் பிரமாணங்கள் சட்டமாக்கப்படுவதை வன்மையாக இக்கட்சி எதிர்த்தது. இப்பிரமாணங்களின்படி, தமிழ் பயன்படுத்தப் படுவது கட்டாயமாக உள்ளது என்பதை எடுத்துக் கூறினர் இக்கட்சியினர்.
புதிய அரசியலமைப்பில் தமிழ் மொழி
1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் மொழிபற்றிப் பின்வரும் விதிகள் உள்ளன.
“சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சிமொழியாக இருக்கும். 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் சட்டத்திற்கமைய இஃதிருக்கும்” என அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.
*1958 ஆம் ஆண்டின் 28 வது சட்டமாகிய, தமிழ்மொழி விசேட விதிகள் சட்டத்துக்கு அமையவே தமிழ்மொழி பயன் படுத்தப்படும்’ என 8 (1) ஆம் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள் ளது. (குறிப்பு:- எந்தத் தேவைகட்காகத், தமிழ் பயன்படுத் தப்படல் வேண்டும் என்ற பிரமாணங்கள் சட்டமாக்கப்பட்
டாலன்றி இச்சட்டம்நிடைமுறைப்படுத்தமுடியாது.)
1966 ஆம் ஆண்டில் தமிழ்மொழி (விசேட விதிகள்) பற் றிய பிரமாணங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஆயினும் தற் போதைய பூரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இப்பிர மாணங்களை ஏற்றுக்கொள்ளவுமில்லை. இருப்பதாகக் கருதவு மில்லை. 8 (2) ஆம் பிரிவுக்கமைய, 1958 ஆம் ஆண்டின் 28 ஆம் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பிரமாணங்கள் அரசிய லமைப்பில் ஒரு பகுதியாக இருக்கமுடியாதவாறு திட்ட மிட்டு நீக்கப்பட்டுள்ளன. -
இப்படிப்பார்க்கையில் ஆட்சி மொழிபற்றிய இன்றைய நில என்ன? சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சிமொழி. தமிழைப் பயன்படுத்துவது பற்றி விதிகள் விதிகளாகவே உள்ளன. செயற்படுத் தப்படுவதில்லை என்பதே இன்றைய நிலையாகும்.

(33) சிங்களமே நீதிமன்ற மொழி
நடைமுறை ஒழுங்குகள் பற்றிய சட்டத்தின் கீழ், 1961ஆம் ஆண்டுவரை நீதிமன்ற மொழி ஆங்கிலமாக இருந்தது.
1961ஆம் ஆண்டின் 3ஆம் சட்டம் நீதிமன்றங்களில் வழங்குதற்குரிய மொழிபற்றியது. இலங்கையில் உள்ள எந்த நீதிமன்றமும், சிங்களத்தில் செயற்படுவதற்குத் தேவையான அலுவலகங்களும், பதிவு செய்வதற்குரிய உப கரணங்களும், போதுமான அளவு உள்ளது என நீதி அமைச் சர் திருப்தியடைந்தால், அந்த நீதிமன்றத்தில் சிங்களத்தைப் பயன்படுத்துமாறு நீதி அமைச்சர் பணிப்பதற்கு இச்சட்டம் வசதிசெய்கின்றது. இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டபோதும், சில கிராம நீதிமன்றங்கள் மட்டும் சிங்களத்தில் செயற்படுமாறு 1970ஆம் ஆண்டுவரை பணிக் கப்பட்டிருந்தன. 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில நீதவான் கோடுகள் சிங்களத்தில் செயற்படத் தொடங்கின.
1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 11ஆம் பிரிவுக் கமைய, இலங்கையில் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் சிங்களமே நீதிமன்ற மொழியாக இருக்கும். இதற்கமைய, விண்ணப்பங்கள் நடைமுறை ஒழுங்குகள், விசாரணைகள், தீர்ப்புகள், கட்டளைகள், என்பனவற்றின் பதிவுகளும், நீதிப் பணிப்புகள் அமைச்சரின் பணிப்புக்கள் என்பனவற்றின் பதிவுகள் யாவும் சிங்களத்திலேயே இருக்கும்.
1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 11ஆம் பிரிவின் ஏற்பாட்டுக்கமையத், தேசிய அரசுப் பேரவையானது, சட்டங் களை இயற்றி, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதி வழங்கும் மன்றங்களில், சிங்களம் மட்டும் மொழிக் கொள்கை யைச் சிறிதே தளர்த்தலாம். தளர்த்துதல் என்பது தமிழை யும் பயன்படுத்துதல் எனவே கொள்ளப்படவேண்டும்.
சிங்களம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் நீதிமன்றம் பதிவு களை வைத் திருப்பது அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட வில்லை. எனினும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வேண்டு தல்கள், விண்ணப்பங்கள் முன்மொழிவுகள், முறைப்பாடுகள் என்பனவற்றைத் தமிழிற் செய்யவும்; முஸ்லிம்களின் விவாக, விவாகரத்துச் சட்டத்திற்கு அமைய விசாரணை நடத்தும்

Page 22
(34)
ஒருவர் நீதிமன்றங்களின் வேண்டுதல்கள் விண்ணப்பங்கள், முன்மொழிவுகள், முறைப்பாடுகள், என்பன தமிழில் வழங் கவும் அரசியலமைப்பின் 11ஆம் பிரிவின் உபபிரிவுகள் வழி செய்கின்றன. எனினும் இவ்விடங்களில், நீதிமன்றத்தின் பயன்பாட்டிற்காக, நீதிமன்றம் இவற்றின் சிங்கள மொழி பெயர்ப்பை வைத் திருக்கும். வடக்குக் கிழக்கு மாகாணங் ளில் உள்ள வழக்கறிஞர்களும் நீதிநாடிவரும் மக்களும் சிங்களத்தில் பணிபுரிய முடியாதவர்கள். சிங்களத்தையே இங்கு நீதிமன்ற மொழியாக்கினுல் நீதி நிர்வாகம் முற்ற கச் சீர்குலைந்து விடும். நீதி நிர்வாகம் சீர் குலையாமல செயற்படு வதற்காகத்தான், இவ்வுபயிரிவுகள் அரசியலமைப்பில் உள்ளனவேயன்றி தமlழர்கட்கு அரசியலமைப்பில் உரிமை களே வழங்குவதற்காக அல்ல.
புதிய அரசியலமைப்பின் பதினுேராம் பிரிவின் ஏற்பாடு கட்கமையத் தேசிய அரசுப் பேரவையில், நித மன்ற மொழி (விசேட பிரிவுகள்) சட்டம், 1973 ஆம் ஆண்டின் 14 ஆம் சட்டமாக இயற்றப்பட்டது. வடக்குக்கிழக்கு மாகாணங் களில் உள்ள நீதிமன்றங்களின் நீதிமன்ற மொழி தமழாக இருக்கும் வகையில் தீர்மானித்துப் பணிப்பதற்கு அமைச் சருக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்கியது. இச்சட்டம் 1973 ஆம் ஆண்டு பங்குனிமாதம் இயற்றப்பட்டது. எனினும் இன்று வரை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் தமிழை நீதிமன்ற மொழியாகப் பயன் படுத்த அமைச்சர் பணிக்கவில்லை. அல்லது இந்த நீதிமன்றங் கள் தமிழில் செயற்படுவதற்குத் தேவையான வசதிகளைக் கூடச் செய்யவில்லை.
மொழிச் சட்டங்களின் ஆட்சி:
தமிழ்ப் பேசும் மக்களுக்கு எவ்வித துன்பமும் இன்றியே மொழிச் சட்டங்கள் அமுல் நடத்தப்படும் எனப் பலமுறை அரசு உறுதியளித் திருந்தபோதும், மொழிச் சட்டங்கள் மிக உறுதியாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழர்கள் தம் நாட்டிலேயே அந்நியர்களாக மதிக்கப்படுவதாக உணர்கின் றனர்.
சிங்களம் மட்டும் மொழிக் கொள்கையை மிகக் கடுமை யாகக் கடைப்பிடிப்பதன் மூலம் தமிழர்கள் அடையும் உறுத் தல்கள், கஷ்டங்கள், அருவருப்புகள், தொல்லைகள் என்பன எண்ணிலடங்கா. பிறப்பு. இறப்பு, திருமணம் என்பவற்றின்

(35)
பதிவுகள், சான்றிதழ்கள், கொடுப்பனவுக்குரிய பற்றுச்சீட்டுக் கள் , கொடுப்பனவுக்கட்டளைகள், காசோலைகள், அனுமதிகள், உரிமைச்சான்றிதழ்கள், அரசுத் திணைக் களங்களில் இருந்து வரும் பெரும்பாலான கடிதத் தொடர்புகள் என்பன, சிறப் பாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பகுதி யில், அதுவும் தலைநகரான கொழும்பில் இருந்து வருவன யாவும், சிங்களத்திலேயே இருக்கின்றன. தமிழரில் வெகு சிலரே சிங்களத்தைத் தெரிந்துள்ளனர். எனவே பெரும் பாலான தமிழர்கள் அரசின் கடிதங்களையோ பிற பத்திரங் களையோ வாசித்துத் தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அரச நிர்வாகம் தலைநகரான கொழும்பில் குவிந்துள்ளது. இத ஞல் அரசின் தொடர்புகள் அனைத்தும் சிங்களத்திலேயே இருக்கின்றன. w
கல்வி மொழிச்சட்டம்
தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் மொழி மூலம் கல்வி, புகட்டப்பட வேண்டும் என்பது சட்டம். எனினும் இத் தகைய தமிழ் மூலக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுப் பதற்கு சட்டபூர்வமாக அரசு கடமைப்படவில்லை. எனவே சட்டமூலம் வழங்கப்பட்ட உரிமை வலிவற்றதாகி நடைமுறையற்றதாகி, பொருளற்றதாகி விடுகின்றது. கல்வி யானது அரசின் தனியுடைமையாகும். எவரும் புதிய பாடசாலை களைத் தொடங்க முடியாது. தமிழ் மாணவருக்குத் தமிழ் மூலம் கல்வி வழங்குவதை அரசு புறக்கணித்து வருவதால், வடக்குக் கிழக்கு மாகாணங்கட்கு வெளியேயுள்ள ஆயிரக் கணக்கான தமிழ்மாணவர்கள், சிங்கள மொழிமூலம் கல்வி பயிலுமாறு வலியுறுத்தப்படுகின்றர்கள்.
1973 ஆம் ஆண்டில் திடீரென்று, புத்தூரில் உள்ள தமிழ்ப் பாடசாலையில் முதல் வகுப்பில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பிக்கத் தொடங்கப்பட்டது. வடக்கு மாகா -ணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊரே புத்தூர், தமிழர் கூட்டணியினர் உடனடியாக சட்ட மறுப்புச் செய் தனர். சிங்களப் பாடசாலைக்கு அண்மையில் தமிழ்ப் பாட சாலை ஒன்றைச் சட்டத்துக்கு முரண்பாடாக நிறுவினர். இப் பாடசாலையில் முதலாம் வகுப்பில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

Page 23
(38)
மான பணம் செலவிடுகின்றது. எடுத்துக்காட்டாகக் காங் கேயன் துறையில் அண்மையில் கட்டியெழுப்பப்பட்ட பெளத்த விகாரையைக் குறிப்பிடலாம். இந்து மாணவர்கட்கும் பெளத்தம் கற்பிக்க அரசு முனைகின்றது. பெளத்தச் சங்கங் களின் வேண்டுகோளின் பேரில்தான் இதனைச் செய்வதாக அரசு கூறுகின்றது. இந்துக்களிடையே பெளத்த சங்கங்கள் எவ்வாறு செயற்படுகின்றது என்பது அரசுக்குத் தான் வெளிச் சம், சிங்களத்தையும் பெளத்தத்தையும் தமிழ்-இந்து மாண வர்களிடையே திணிப்பதற்கு அரசு முனைந்துள்ளது. அண் மைக் காலங்களில் அரசினல், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள புத்தூர், அச்சுவேலி, அல் வாய் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட அரசினர் பாடசாலைகளில் பெளத்த சிங்களத் திணிப்பு நடைபெறுகின்றது.
பெளத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், ஆகிய நான்கு மதங்களைப் பாதுகாத்து வளர்ப்பதற்கேதுவாக, இலங்கைக் குடியரசு மதச்சார்பற்ற குடியரசாக அமையவேண்டும்’ எனத் தமிழ் மக்கள் ஏகோபித்து வேண்டுகோள் விடுத்தனர். 1972 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பு இயற்றப்படும் போது இவ்வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அந்த அரசி பல் அமைப்பின் 6 ஆம் பிரிவில், இலங்கையில்
“பெளத்தத்துக்கு முதலிடம் வழங்கப்படும். இதற்கமைய, பெளத்த மதத்தைப் பாதுகாத்துப் பேணுவது அரசின் கடமையாகும். எனினும் ஏனைய மதத்தவர்களின் உரி மைகள் 18 (1) (ஈ) பிரிவுக்கமைய உறுதிப்படுத்தப்படும்’
அரசியலமைப்பின் 12 (1) ஆம் பிரிவில் உறுதியளிக்கப் பட்டுள்ள, அடிப்படை மனித உரிமைகள் செல்லுபடியாகாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் இதுபற்றி அரசியலமைப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புப்பற்றியும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. இனப்பாகுபாட்டுச் சட்டங்களுக்கு எதிராக நீதி கேட்டல்:
முன்னர் கூறிய, 1948 ஆம் ஆண்டின் 18 வது சட்ட மாகிய இலங்கைக் குடியுரிமைச் சட்டமும், 1949 ஆம் ஆண் டின் 48 ஆம் சட்டமாகிய இலங்கை நாடாளுமன்றத் தேர் தற் திருத்தச்சட்டமும், 1946 ஆம் ஆண்டின் அரசியலமைப் பின் 29 (2) (ஆ) பிரிவுக்கு முரண்பட்டவை என நீதிமன்றத் தில் முறையிட்டு, இங்கிலாந்தில் உள்ள, பிரிவிக்கவுன்சில் வரை சென்று நீதி கோரப்பட்டதெனினும், வழக்குகள் தோல்வியடைந்தன. இச்சட்டங்கள் 29 ஆம் பிரிவுக்கு முரண் பட்டவையல்ல என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1956 ஆம் ஆண்டின் 33 ஆம் சட்டமாகிய ஆட்சிமொழிச் சட்டம் சிறுபான்மையினராக தமிழர்கட்குத் துன்பத்தையும் தொல்லையையும் கொடுக்கின்றது என்பது, கோடிஸ் வரனின் வழக்கில் எடுத்துக் காட்டப்பட்டது. 1972 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் செயற்படத் தொடங்கியுள்ளதால் இவ்வழக்குகளின் முடிவு ஒன்றும் பெறப்படவில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கமைய, பிரிவுக்கவுன்சிலுக்கு விண்ணப்பிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பாகுபாடு காட் டும் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கமுடியாது. ஏனெனில் (1) நாடாளுமன்றம் நாட்

Page 24
( 4 0 )
டின் மிக உயர்ந்த அமைப்பு (2) நாடாளுமன்றத்தின் அதி காரங்கட்கு வரைவு இல்லை; அதன் நடைமுறை ஒழுங்குகளை எந்த நீதி மன்றத்திலும் எடுத்து நோக்க முடியாது.
இனப்பாகுபாட்டுச் சட்டங்கள் நாடுமுழுவதற்குமானவை
தேசிய அரசுப் பேரவையால் இயற்றப்படும் சட்டங் கள் அனைத்தும் நாடு முழுவதற்குமாகவே இயற்றப்படு கின்றன.
இலங்கையின் அனைத்துலகக் கடமைகள்
உலக நாடுகள் அவையில் இலங்கை உறுப்புரிமை பெற் றுள்ளது. மனித உரிமைகள் பற்றிய உறுதியுரையை இலங் கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் சிறுபான்மை இனத்தவர் பற்றிய வேறெந்த அனைத்துலகக் கொள்கையை யும் ஏற்றுக்கொண்டு செயற்படவில்லை.
சிறுபான்மை இனத்தொகுப்பு
இனம் அல்லது இனக்குழு என்பனவற்றின் அடிப்படை, யில் தான் ஒரு இனத்தின் உறுப்புரிமை தீர்மானிக்கப்படும்.
மொழியையும் இ த ர் கு அ டி ப் ப  ைட யா க க் கொள்ளலாம். சில சமயங்களில் மதத்தையும் அடிப்படை யாகக் கொள்ளலாம். எனினும் இலங்கையில் ஒருவரின்
பெயரைக் கொண்டே அவர் எந்த இனக் குழுவைச் சார்ந்த வர் என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

8. தமிழரின் கல்வி நிலை
1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்தது. இதே ஆண்டில் தான் “மனித உரிமைகள் பற்றி அனைத் துலக உறுதியுரையும்' ஏற்பட்டது. கல்விபற்றிய கொள்கை கள் ஒருதலைப்பட்சமாகக், கல்விமான்களின் ஆலோசனையின் றியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவும் நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இவ்வாறு நடைபெற்று வரு கின்றது. இனம் மொழி, மதம், அரசியல் அல்லது பிற அடிப் 1டையில் கல்வி வழங்குதல் மறுக்கப்படுவது மனித உரிமை களைப் பறிப்பதாகும் என மனித உரிமைகள் உறுதியுரை யின் 2வது விதியில் கூறப்பட்டுள்ளது. அரசு எண்ணங்களும் தகவல்களும் எல்லாருக்கும்கிடைக்க வேண்டும் என 19 வது உறுதியுரையும், கல்விக்குச் சமமான வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என 26 (1) ஆம் உறுதியுரையும், கூறுகின்றது. 1960 ஆம் ஆண்டி ன் யூனெஸ்கோ மாநாட்டுத் தீர்மானங்கட்கு எதிராகவும், கல்விக் கொள்கைகளை அரசு கடைப் பிடித்து வருகின்றது. w
கல்வி அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண் டும்; மதங்கள் எதுவானுலும் அவை கூறும் நல்ல கருத்துக் கள்ை மதிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை இலங்கையின் இருபெரும் மதங்களான இந்து மதமும் பெளத்த மதமும் கூறிவருகின்றன. இந்தியாவிலும் இத்தகைய பாரம் பசியமான கொள்கைகள் உண்டு. இந்திய அரசியலமைப்

Page 25
(42)
பின் 29 ஆம் 30 ஆம் பிரிவுகளில், உள்ள அடிப்படை மனித உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில், இக்கொள்கைகள் பிரதி பலிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனங்கள், மொழி அடிப்படையிலோ மத அடிப்படையிலோ அமைந்திருந்தாலென்ன, தத்தம் கலாச்சாரத்தைப் பேணக் கூடிய வகையில், கல்வி நிறுவனங்களை நிறுவித், தாம் விரும்பி u u L u Lq கல்வி வழங்கி, அதற்குரிய உதவிகளை அரசிடமும் பெற லாம் . அதுவும் சம அளவில் பெறலாம் என இந்திய அரசி யலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள்
1960 ஆம் ஆண்டு மாநாட்டிலும் கல்வியில் பாகுபாடு காட்டுதல் தடுக்கப்படுதல் வேண்டும் எனக் கூறப்பட்டுள் ளது. மேலும், ஒரு நாட்டில் வாழ்கின்ற வெளி நாட்டவர் கள், அந்த நாட்டுக் குடிமக்கள் பெறுகின்ற அதேயளவு கல்வி வசதியைப் பெறவேண்டும் எனவும் மேலும் குறிப் பிடப்பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டிலும் 1961 ஆம் ஆண்டிலும் கொண்டு
வரப்பட்ட இரு சட்டங்கள் எமது பராம்பரியக் கல்வி முறைகளைத் தகர்த்தெறிந்தன. இவை பழிவாங்கும் நோக் குடன் கொண்டுவரப்பட்ட சட்டங்களாகும். இச்சட்டங்
கள் மூலம் கல்வி தேசியமயமாக்கப்பட்ட அமைப்பினுள் வந்தது. 1960 ஆம் ஆண்டின் 5-ஆம் சட்டமும் 1961ஆம் ஆண்டின் 8 ஆம் சட்டமும் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவந்தன. நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் தேசியமயமாக்கப்பட்ட பொழுதும், பெளத்த சிங்கள பிரிவேனுக்கள் தாமாக இயங்க அனுமதிக்கப்பட்டன. இவற். றிற்கு அரச உதவியும் வழங்கப்பட்டது. தமிழ்த் தோட் டத் தொழிலாளிகளின் பிள்ளைகளின் கல்விக் கூறுகளான தோட்டப் பாடசாலைகளைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. குடியுரிமை பறிக்கப்பட்ட இத் தொழிலாளர்களின் பிள்ளை கள் கல்வி வசதி எதுவுமின்றித் தொல்லையுறுவதற்கு இப் பள்ளிகளின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணமாகும். இந்தப் பாடசாலைகளைத் தோட்டச் சொந்தக்காரர்களே நடாத்து கின்றனர். சட்டத்தின் தேவையை நிறைவு செய்வதற்காக மட்டுமே நடாத்தப்படும் இப்பாடசாலைகள் மோசமான நிலையில் உள்ளன. கல்வித்துறையில் அரசு அதிகமாகத் தலை? யிடுவதால், இன மதப்பாகுபாடுகள் அதிகரித்துள்ளன. பாகு 7Tr. qðIOT எதிர்ப்பதற்கு ஆதாரக்கல்வி அவசியம். ஆனல்

( 43 )
இன்று கல்வியைப் பயன்படுத்திப் பாகுபாட்டையும் இன ஒதுக்கலையும் அரசு எளிதாகச் செயற்படுத்திவருகின்றது.
கல்வி புகட்டும் மொழி :
1973 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 4 ஆம் நாள், யாழ்ப் பாணம் நகர மண்டபத்தில், பெற்ருர்களும், பொதுமக்களும் பெரும் திரளாகக் கூடிப், பின்வரும் இத் தீர்மானங்களை மேற் கொண்டனர். இத்தீர்மானங்களில் முதலாவது தாய்மொழி பற்றியது. மற்றது பல்கலைக்கழகப் அனுமதிபற்றியது. இத் தீர்மானங்களைக் கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றினர்கள். மொழிபற்றிய தீர்மானத்தில், -
“புத்தூர் அல்வாய், அச்சுவேலி, கரவெட்டி ஆகிய இடங் களில் உள்ள நான்கு பாடசாலைகளில், முதலாம் வகுப்பு மாணவர்கட்குத் தாய்மொழிக்குப் பதிலாகச் சிங்கள மொழியைப் புகட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தக் கூட்டம் வன்மையாக எதிர்ப்பதுடன், இந்த நான்கு பாடசாலைகளிலும், தமிழ்மொழி மூலம் மான வர்கள் கல்விபயில வாய்ப்பளித்துத் தாய்மொழி மூலக் கல்விக்கு உரிய இடத்தை வழங்குமாறு கேட்டுக்கொள் கின்றது.”
நான்கு பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்
.கு தாய்மொழியான தமிழுக்குப் பதிலாகச் சிங்கள மொழியை புகட்ட முயற்சித்தது. இப்பாடசாலைகள் அகில இலங்கைப் பெளத்த காங்கிரசுடன் இணைந்த சங்கம் ஒன்றி ஞல் தொடக்கப்பட்டவையாகும். அரசின் கல்வித்திணைக் களத்தில் உள்ள உயர் மட்ட ஊழியர்களுட் சிலரும் ஊக்க மெடுத்து இப்பாடசாலைகளைத் தோற்றுவித்தனர்-இந்த நான்கு ஊரில் உள்ள தமிழ்ச் சைவர்கள் பெளத்தர்களாக மாற்றப் பட்டனர். ஆசிரியர்களாயும், பிற துறைகளிலும் அவ்வூர் களில் உள்ள இளைஞர்கட்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். என்ற உறுதிமொழியுடன் இவர்கள் பெளத்தர்களாக மதம் மாற்றப்பட்டனர். இவ்வாறு மாற்றப்பட்டவர்கள், தமிழர்” கட்கிடையே உள்ள தாழ்ந்த சாதி மக்களாவர். இவர்கள் சாதிப்பாகுபாட்டில் இருந்து எவ்வழியிலாவது விடுபட விழைந்தனர். இதல்ை இவர்களை மதம் மாற்றுவது எளிதாக, இருந்தது.

Page 26
(44)
உயர் கல்வி வசதிகள்
இலங்கைப் பல்கலைக் கழக வளர்ச்சிபற்றிக் கலாநிதி டி. எல். ஜயசூரியா மேற்கொண்ட ஆய்வில், 1965 ஆம் ஆண்டளவில் சிங்கள மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மேலதிமாக இருந்தார் எனக் கண்டு கூறினர். விஞ்ஞானம் பொறியியல், மருத்துவத் துறைகளில் மட்டும் தமிழர்கள் தொகை சிறிது அதிகமாக இருந்தது. தற்போ தைய அரசாங்கம் 1970 ஆம் ஆண்டில் பதவியேற்ற பின், பல்கலைக்கழக அனுமதியில் பெரும்பாகுபாடு காட்டியது. 1970 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் அனுமதிபெற்றேர் இன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர். சிங்கள மாணவர் குறைந்த புள்ளி பெற்றிருந் தாலும் தெரிவுசெய் யப்பட்டனர். தமிழ் மாணவர் கூடிய புள்ளிபெற்றும் தள் ளப்பட்டனர். 1970-ம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதிக் குச் சிங்கள - தமிழ் மாணவர் பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் பற்றிய விபரம் வருமாறு.
Lui è ~്. தமிழர் சிங்களவர் பேராதனை - பொறியியல் る50 227 கட்டுப்பெத்தை பொறியியல் 232 212 மருத்துவமும் - பல்மருத்துவமும் 250 229 வேளாண்துறை, மிருகவைத்தியம், உயிரியல் 184 75 பெளதிக விஞ்ஞானம் W 2O4 83
கட்டடக்கலை 180 .94 ܗܝ
(ஹன்சாட், தொகுதி 83 எண் 5, 514 - 518 - 6.1,71)
1970 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள், மனித உரிமை கள் தினமாக யாழ்ப்பாண நகர மண்டபத்தில் கொண் டாடப்பட்டது. அன்று கூடியிருந்த மக்கள், பல்கலைக்கழக அனுமதி விடயத்தில் பிரதம மந்திரி தலையிட்டு நீதி வழங்கவேண்டும் எனத் தீர்மானித்தனர். பிரதம மந்திரி இதற்குச் செவிசாய்க்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள சென்ட் ஜோன்ஸ் கல்லூரியில் இருந்து வழக்கமாகப் பெருமளவு மாணவர் பல்கலைக்கழக அனுமதி பெறுவதுண்டு. 1971 ஆம் ஆண்டுப் பல்கலைக் கழகங்கள் அனுமதிபற்றி அக்கல்லூரி முதல்வர் பரிசளிப்பின் போது சமர்ப்பித்த அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

( 45)
"1971 இல் பல்கலைக்கழக அனுமதியானது குறுக்கு வழிகளைக் கையாண்டு ஏமாற்றுமுறையில் அமைந்த தாகும். ஒரே வினத்தாளுக்கு ஒரேநாளில் ஒரே தேர் வில் எழுதப்பட்ட விடைகட்கு, ஒரே மாதிரியான புள்ளி யிடல் முறையில் கொடுக்கப்பட்ட புள்ளிகளைப் பயன் படுத்தி, இனப்பாகுபாட்டு அடிப்படையில் இரு இனங் களுக்காகத் தராதரப்படுத்துவது பிழையான தொன் ருகும். இத்தகைய வேறுபாடுடைய தரப்படுத்தலினல் ஒரு மொழிமூலம் தேர்வுக்கத் தோற்றுபவர் பெறும் சாதா ரணச் சித் தியோ திறமைச் சித்தியாகக் கருதப்படும்" மற்ற மொழி மூலம் தேர்வுக் குத் தோற்றுபவர் பெறும் திறமைச்சித் தியோ பெறுமதிபற்ற தாகிவிடும். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட புள்ளிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு
அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் உயர்மட்டச் சான்றிதழ்த் தேர்வில் தராதரம் அறியவும் உதவுகின்றன.
தேர்தலில் தரம் குறைக்கப்படுவதால் தரப்படுத்தப் படுவதால், பல்கலைக்கழக அனுமதி மட்டுமல்ல, வேலை பெறு வதற்கான வாய்ப்புக் கூட வெகுவாகக் குறைந்துவிடுகின் றது என்பனவும் நோக்கவேண்டும்.
1972 இன் பல்கலைக்கழக அனுமதியில் உள்ள குறை பாடுகளை எடுத்து நோக்கி, ஐந்து அம்சத் தீர்மானம் ஒன்று 3-2-73 அன்று யாழ்ப்பாணத்தில் கூடிய பொதுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் முதல்பகுதி வருமாறு.
பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகிய துறை களுக்கு அனுமதி வழங்கப்படுகையில் தமிழ்மொழி மூலம் பயின்ற மாணவர்கட்குக் காட்டிய பாகுபாட்டை இக் கூட் டம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மொழி அடிப்படை யில் இத் தெரிவு அமைந்துள்ளதால், புள்ளிகளைத் தரப் படுத்துதல் மூலமும் பிற வழிப்புள்ளி மாற்றங்கள் மூலமும் தமிழ் மாணவர் தொகை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக் கப்படுவது கணிசமான அளவு குறைந்துள்ளது. 99
இடைநிலைக் கல்விக்கு மேற்பட்ட அதாவது, Jr Frég5r ரண மட்டச் சான்றிதழ்த் தேர்வுக்கும் அடுத்த நிலையான கல்வியை வழங்குவதில் மாவட்ட ரீதியாக இடம் ஒதுக்குவது

Page 27
( 46 )
எனத் தீர்மானிக்கப்பட்ட து. இப்படி நேர்ந்தால் தமிழ் " வரின் நிலை பரிதாபகரமாக இருக்கும். எடுத்துக்காட்டாகக் கட் டுப் பெத்தையிலும் ஹார்டி நிலையத்திலும், 459 மாணவரை அனுமதிக்கலாம். இங்கு தமிழ்ப்பேசும் மாணவர்கட்கான எண்ணிக்கை, மொத்தமாக 50 ஆகும். யாழ்ப்பாணத்துக்கு 32, மன்னருக்கு 2, வவுனியாவிற்கு 2, மட்டக்களப்பு 9, திருகோணமலைக்கு 5, என்ற அடிப்படையில் வழங்கப்படும். இது வழமையான தொகையை விட மிக மிக குறைவான தொகையாகும்.
பாடசாலைகள் போதுமான அளவு இல்லை.
மாவட்டங்கள் அனைத்தும் சமமமான கல்வி வசதிகளை உடையனவாக இருந்தால், மாவட்ட்ங்களுக்கென இடங்களை ஒதுக்குவதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். கமிழர் நெருங்கி வாழ்கின்ற நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களில் கல்வி வசதிகள் மிகக் குறைவு ஆகும். இலங்கையில் ஆகக் குறைந்த கல்வி வசதிகள் உடைய மாவட்டங்களள், இவை யும் அடங்கும். தொடக்கநிலைக் கல்வியும் இடைநிலைக் கல்வி யும் வழங்கும் பாடசாலைகட்கு யாழ்ப்பாண (கடாநாட்டில் குறைவில்லை. கிறிஸ்தவ மிஷனரிமாாநம் பின்னர் இந்துப் பெரியார்களும் முயற்சி செய்தமையால் யாழ்ப்பாணக் (கடா நாட்டில் தேவையான அளவ பாடசாலைகள் உள்ளன என லாம். எனினும் ஏனைய தமிழ் மாவட்டங்களில் நிலைமை இவ்வாறில்லை. ஒராயிரம் மக்களுக்கு எத்தனை மாணவர்கள் வீதம், 11 ஆம் 12 ஆம் வகுப்புகளில் சேர்ந்து படிக்கின்ருர் கள் என்பதையும் அவர்களுள் எத்தனை பேர் விஞ்ஞானக் கல்வி பெறுகிறர்கள் என்பதையும் பின் வரும் தொகுப்புத் தெளிவாக்குகிறது. w
In fa! Clth எல்லாமர்க, ஆயிரம் விஞ்ஞானம் ஆயிரம்
மக்களுக்கு. மக்களுக்கு, மன்னர் 0.1 0.0 வவுனியா 0.5 0.0 மட்டக்களப்பு 1. I 0.8 திருகோணமலை 0.7 0.2
சிங்களவர் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகட்குக் கல்வி வாய்ப்புகள் மிகமிகக்

( 47)
குறைவு ஆகும். தமிழர் பெரும்பான்மையாக வாழ்கின்ற தோட்டப்பகுதி மாவட்டங்களில் கூடத் தமிழர்கட்கான கல்வி வாய்ப்பு மிகக் குறைவே. தோட்டக் தொழிலாளிகளான கமிழர்கள், தமிழ்க் குழந்தைகட்க (மறையான தொடக்க நிலைக் கல்வி வழங்க முடியாதுள்ளனர். இடைநிலைக் கல்வி என் பக அபூர்வமாகவே வழங்கப்படும். விஞ்ஞானக் கல்வியைப் பற்றி கூறத் தேவையில்லை.
சிங்களப் பக கிகளில் உள்ள பாடசாலைகளில் கமிழர் களின் குழந்கைகள் தமிழ்மொமி அமலம் பயில வசதி இருந் கத. படிப்படியாகக் கறைந்து கொண்டு வந்த இவ்வசதி, ப்ெபொழுது ல்ெலையென்றே கூறலாம். கொமம்பில் உள்ள ாே?யல் கல் லாரியில் சிங்க ள த மிம் க் குழந்ை ககளின் விகிதாசா ரம் 2:1 ஆக ருெக்க க. இப்பொமக 6:1 ஆக மாறியுள்ளது. எனிம்ை, சொாமம் பில் சிங்களவரும் தமி மரும் மக்கள் தொகையில் 1:1 என்று விகிதாசாரத்தில் வாழ்கின்றனர்.
அசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் போகமான தமிழ் அசிரியர்கள் பயிற்றுவிக்கப்படாததால், தமிமரின் கல்வி எதிர்காலக் க்ல் மோசமடையும். இலங்கையில் 70 சகவீத மானவர்கள் சிங்களவர்கள். இலங்கைத் கமிமரும் இந்தியத் தமிழாகம் 22%, (மஸ்லிம்கள் 6% ஆக இருக்கின்றனர். எனி ம்ை 1972 ஆம் அண்டில், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் தொடக்கநிலைப்பயிற்சி பெற்றவர்க்கள், 2262 சிங்களவர்கள், 162 தமிழர்கள், 247 முஸ்லிம்கள் இருந்தனர்.
ஆசிரியப் பயிற்சி
பல்கலைக்கழக மட்டக்கிலம் ஆசிரியர்கட்கான பயிற்சி பில் பாாக பாடு காட்டப்படுகின்றது. கல்வி டிப்புளேமா பயி லும் 325 பட்டதாரி ஆசிரியர்களுள், 45 முஸ்லிம்கள் 30 தமி ழர்கள் உள்ளனர். ஏனையோர் சிங்களவர்கள். பி. இடி. பட்டதற்காகப் படிக்கின்ற 1 000 மாணவர்களுள்' 15 பேர் மட்டுமே கமிழர்கள். இவர்கள் பேராதனை வளா கத்தில் பயிற்றப்படுகின்றனர்.
பாடநூல்கள் தமிழ்ப் பாடநூல்களை அச்சிட்டு வெளியிடும் தனியுரிமை அரசினுடையதாகும். இவ்வாறு வெளியிடப்படும் தமிழ்ப் பாடநூல்கள், அதை யொத்த சிங்களப் பா.நூல்களைவிட

Page 28
( 48 )
விலை அதிகமானது. தமிழர் தொகை குறைவா தால் வெளியிடும் செலவு அதிகமாக உள்ளது.
தமிழரற்ற ஆலோசனைக்குழுக்கள்
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், கல்விக் கெ உருவாக்குவதில் தமிழர் பங்குகொள்ளவில்லை. கல் கைகளை நடைமுறைப் படுத்துவதிலும் பங்குகொ ஆலோசனை வழங்குவதற்கான ஆக்கங்கள் கொண்டே போயுள்ளன. பல்கலைக்கழகம், தில் ஒலிபரப்புதல் ஆகியவற்றின் ஆலோசனைச் சபைகளி தமிழர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். கல்வியைத் வதற்கு மாவட்ட அடிப்படையில் குழுக்கள் இல் திட்டமிடப்படுவதில் மக்கள் நேரடியாகவோ மாகவோ பங்குகொள்வதில்லை. அரசாங்கப் பா நிர்வகிப்பதற்கு முகாமைக் குழுக்களும் அமைக்கப் அவை நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன.
 

க இருப்ப
ாள்கைகளை விக் கொள்
ள்ளவில்லை.
குறைந்து
85) JJT t I LI i — LD, ல் இருந்த திட்டமிடு லை, கல்வி
மறைமுக டசாலைகளை
படவில்லை,

Page 29
--
--
--
--
இது தமிழர் கூட்டணிக்காக ெ நாயக்க விதியில் இருக்கும் ଦତ୍ତ றில் பதிப்பித்து திரு. வி. த

கொழும் பு-18, 19 A, பண்டார லாக் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெற் ருமலிங்கம், பா. உ. அவர்களால்
ப் பெற்றது.