கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடராஜ வடிவம்

Page 1
s
விபுலாநந்த
வேல திருவாட்டி சண்முகம்
நினைவு ( 02-0
 

அடிகள்
னேயூர் பிள்ளை பொன்னம்மா
வெளியீடு
3-1985

Page 2

நடராஜ வடிவம்
தி ல் லைத் திரு நட னம்
விபுலா ந ந் த அடிகள்

Page 3
1940 ஆம் ஆண்டு சென்னை பூரீ ராமகிருஷ்ண மடத்துத் தலைவரால் பிரசுரிக்கப்பட்ட நூல் நன்றியுடன் இலவச வெளியீடாக மலர்கிறது.
U2 - 03 - 1985

திருவிருத்தம்
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மானிலத்தே.

Page 4


Page 5

வெளியீட்டுரை
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வான்மொழிக்கு வாழி லக்கியமாய்த் திகழ்ந்தவர் திருவாட்டி பொன்னம்மா சண்முகம் பிள்ளை அவர்கள். தம்மைக் கொண்டவரின் வளத்துக்குத் தக வாழ்ந்து வளத்தை வளர்த்துப் பிள்ளைகள் பதின்மரைச் சான் ருேராய் உருவாக்கி அவர்களை வாழ்வாங்கு வாழவைத்த மாதரசி இவர் .
பெருங்குளம் முத்துமாரி அம்பாள் கோயிலிலே தம் கண வர் தொடக்கிய நடராஜத் திருவுருவப் பிரதிட்டையினை அவர் மறைந்த பின்னரும் முன்னின்று தொடர்ந்து முற்று வித்த பெருமையும் இவ்வம்மையார்க்கு உண்டு
தில்லை நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதக் குளிர் நிழ லினைச் சேர்ந்துவிட்ட இவரின் நினைவாக இவரின் மக்கள் விபுலாநந்த அடிகள் எழுதிய "நடராஜ வடிவம் - தில்லைத் தரிசனம்" என்ற சிறுநூலை வெளியிடுவது சாலப் பொருத்தமே
1941 இல் இராமகிருஷ்ண மட வெளியீடாக மலர்ந்த இந்நூல் அம்ந்க பொருளமைதியும் , சமய உணர்வும் கொண் டது. இன்று இசு கிடைப்பது அரிது என்பதால் கிருவாட்டி பொன்னம்மா சண்முகம்பிள்ளை அவர்களின் மக்கள் பனி "காலக் காற் செய்க பேருகவி' என்பதற்க ஐயம் இல்லை. அவர்களுக்குச் சைவக் தமிழ் கூறும் நல்லுலகின் சார்பில் இதயங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிறப்பாக அம்மையாரின் கனிட்ட புதல்வரும் கணித்தமிழ் வல்லாருமான திரு . ச. பாலசுந்தரம் அவர்களுக்கு அவரின் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் ஆழ்ந்க நன்றிகள் கூறுவது என் கடன். நண்பர் மயிலங்கூடலூர் பி. நடராசன் நூற்பிரதியை உதவியமைக்கு அவருக்கும் கடப்பாடுடையேன்
நூலை அழகுற வெளியிட்ட பூரீகாந்தா அச்சகத்தினர்க்கும் அன்புடன் கூடிய நன்றி உரியதாகுக.
நாயன்மார்கட்டு, க. சொக்கலிங்கம் யாழ்ப்பாணம். (சொக்கன்) 02 - 03 - 85

Page 6

al
திருச்சிற்றம்பலம்
நடராஜ வடிவம்
'பூங்கமலத் தயனுமலர் புண்டரிகக் கண்ணுனும்
தாங்கு பல புவனமுமேற் சகலமுமா யகலாத ஓங்குமொளி வெளியேநின் றுலகுதொழ நடமாடு ந் தேங்கமழும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலம்போற்றி.
"ஆரணங்கண் முடிந்தபதத் தானந்த வொளியுலகிற்
காரணங்கற் பனைகடந்த கருணைதிரு வுருவாகிப் பேரணங்கி னுடனடும் பெரும்பற்றப் புலியூர்சேர் சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம் பலம்போற்றி,"
சிவாகமங்களின் முடிபு சிற்சபேசன்
ஆகமங்கள் இலக்கண நூல்கள் சிற்சபேசனும் சிற்றம்பலமும் அவ்விலக்கணங்களாற் கூறப்படுகின்ற இலக்கியங்கள். இலக்கிய ஆராய்ச்சியில்லாதோர் இலக்கண நூலறிவு நிரம்பப்பெருர்; அதுபோலச் சிற்சபேசனத் தெரியாத மாந்தர் சிவாகமப் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார். இனி, இலக்கிய நூலு ணர்ச்சிக்கு இலக்கணவுணர்ச்சி இன்றியமையாதிருப் பது போலச் சிற்சபேசனகிய நடராஜப் பெரு மானுடைய அருள்வடிவத்தினியல்பினைச் சிறிதாவது உணர்ந்து கொள்வதற்குச் சிவாகமவுணர்ச்சி இன்றி யமையாததாகின்றது. சிவாகமங்கள் சிவவாக்கு முற் றறிவஞகிய இறைவன் வேதாகமங்களை அருளிச் செய் திலனேல், சிற்றறிவராகிய யாம் அவனையுணர்ந்து அவனது திருவடிக் கமலத்தை யடைதல் இயலாத தொன்ருகும். பிற்காலத்தில் மதுரையிலிருந்து தமிழா ராய்ந்த புலவரது கவற்சியை நீக்கத் திருவுளங்

Page 7
- 4 -
கொண்டு அருந்தமிழிலக்கண நூலாகிய களவியலை அருளிச் செய்த தலைவன் ஆதிநாளில் வேதசிவாகமங் களையருளிச் செய்தனன்.
"மதியியலு நெடும்புரிசை மணிமாட
மதுரைநகர் மருவு சங்கம் விதியியலு மிலக்கணநூற் பொருளியலை யுணர்ந்துய்ய மேலோர்க் கின்பம் பொதியியலின் றமிழியலுங் களவியலை
யுவந்தளித்த புலவன் முன்னுட் பதியியலும் பசுவியலும் பந்தத்தி
னியலுமுற்றும் பகர்ந்தான் மன்ஞே."
இறைவனல் அருளிச் செய்யப்பட்ட சிவாகமங் களும் அவற்றின் வழி நூல்களும் இறைவனுக்கு உரு “வத் திருமேனி யுண்டென்றும் அவ்வுருவத் திருமேனி *நடராஜர், சந்திரசேகரர், உமாமகேசர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, ஜலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசுவரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கஜமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகா சனர், தகதிணமூர்த்தி. இலிங்கோற்பவர்' என இரு பத்தைந்து வகைப்படும் என்றுங் கூறுகின்றன.
உருவத்திருமேனியைக் காட்சியாற் காணலாம்
ஆகவே, இறைவனுக்கு நடராஜ வடிவமாகிய உருவத்திருமேனியுண்டென்று ஆகமப்பிரமாணத்தின லறிகின்ருேம். "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்," என்னும் ஒரு சாரார், “இறைவனுக்கு உரு வத்திருமேனியுளதாயின், அது எம்மாற் காணப்படுவ தாகவேண்டும்; நாம் கண்டிலம். ஆதலினல் இறை வனுக்கு உருவத்திருமேனியில்லை' என்பார். ஒரு சார் மத நூல்களும் "கடவுள் அரூபி, சிலை முதலிய விக்கிரகங்களாற் கடவுளைக் குறியீடு செய்து வழி

- 5 -
படுகின்ற மார்க்கம் அஞ்ஞான மார்க்கம்" என்று அங்காடிஞானம் பேசத் தலைப்படுகின்றன. இங்ங்ணம் பேசுகின்ற மத நூல்கள் தம்மை மறந்து, இறைவன் நெருப்புச் சுவாலை வடிவமாக ஒருவர் கண்முன் தோற்றினனெனவும், புரு வடிவமாக மற்ருெருவர் தலைமீது இறங்கினனெனவுங் கூறுகின்றன. "கடவுள் எங்கண்ணுக்குத் தோற்றவில்லை. ஆதலாற் கடவுளுக்கு உருவமில்லை" என்று சொல்பவர் சற்று ஊன்றி யோசிப்பாராயின், காட்சியின்மை காட்சிப்பொருளி னின்மையினல் மாத்திரம் எய்துவதல்ல; பிறகாரணங் களாலும் காட்சியின்மையுண்டாதல் கூ டு மென அறிந்துகொள்வார். ஒருவனுடைய கண்கள் துணி யினுற் கட்டப்பட்டிருக்கும் பொழுது அவன் தன் முன் வைக்கப்பட்ட பொருளைக் காணமாட்டாதவன கின்றன். இருட்டறையினுள்ளேயடைபட்டிருப்பவன் அவ்வறையின் சுவர்களிலே தொங்குகின்ற சித்திரங்களி ன ழ கை யொருவாற்ருனுமறியமாட்டான். நமது இருதயமாகிய அறை பேரந்தகாரமாகிய மலத்தினுல் மறைப்புண்டிருக்கிறது. நம்முயிர்க்குயிராகிய இறை வன் நமது இருதய கமலத்தின்மீது உறைகின்ருனெணி னும் அந்தகாரத்தினுட்பட்ட யாம் அவனைக் காண்ப தில்லை. அவனது திருவருள் விளக்கமாகிய பகலவன் நமது இருதயத்தினுட் பிரகாசிக்கும்போது நாம் இறைவனைக் காண்போம்; நமது கண்கள் பாவமாகிய துணியினுற் கட்டப்பட்டிருக்கின்றன; ஞானுசாரியனு கிய அருட்குரவன் கட்டை யவிழ்த்து விடுவானுயின், நாம் கடவுளை நேராகக் கண்டு தரிசிப்போம். திரு ஞானசம்பந்தப் பிள்ளையாரும் பூரீராமகிருஷ்ண பரம ஹம்ச தேவரும் கடவுளை நேராகக் கண்டார்கள். சீகாழிப் பெருவாழ்வாகிய திருஞான சம்பந்தப் பிள்ளை யார் தங் கண்முன் தோன்றிய இறைவனது உருவத் திருமேனியை இன்ன இன்ன இலக்ஷணமுடையதென அழகுபொருந்திய தேவாரத் திருப்பதிகங்களினல் விரித்துக் கூறியிருக்கின்ருர், பூரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் எந்தக் காரியந் தொடங்கும்போதும், அன்னை

Page 8
- -
யைக் கேட்டுவிட்டு வருகிறேனென்று சொல்லி, உலக மாதாவை நினைப்பர்; அகிலாண்டேசுவரி தனது தெய்வ வுருவத்தோடு அவர் கண்முன் தோன்றி, அவர் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு மறைவாள். மனமாசு நீங்கிய பெரியோர் கண்முன்ருேன்றிய தெய்வ வுருவம் ஒன்றல்ல; பலவாகும். முழுமுதற் பொருளா கிய கடவுளைக் காவற் கடவுளாகக்கண்ட ஞானிகள், எம்பெருமானை சங்கு, சக்கரம், கதை, கட்கம், கோதண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை யேந்திய நீலநிறத் திருமேனி பொருந்திய விஷ்ணுமூர்த்தமாகக் கண்டு தரிசித்தார்கள். அக்கினிச் சுவாலையின் நிற மும், சூலமும், பினகமும், டமருகமும் அக்கினியும் ஏந்திய திருக்கரங்களும், மான் மழுவும், அக்குமாலை யும் என்னும் இவற்ருேடு கூடிய உருத்திர மூர்த்த மாகக்கண்டு வழிபட்டார் ஒருசாரார். உமாதேவியார் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்கத் தருமதேவதையின் உருவமாகிய வெள்ளை விடையின்மேல் ஆரோகணித்து, இளம்பிறைச் சந்திரனும் கங்காநதியும் சடையின்மீது விளங்கப் பவளம் போன்ற திருமேனியில் வெள்ளிய திருநீறு பொலிந்திருப்பத் தோன்றிய திருவுருவத்தைத் தவத்தின் மிக்கார் பலர் கண்டு கைதொழுதார். இந்த உமாமஹேஸ்வர வடிவமே மூவர் தேவாரங்களிலும் பெருகக் கூறப்படுவது. மாணிக்கவாசக சுவாமிகள் தம்மையாட்கொண்ட குரு வடிவத்தையும் வேத மாகிய குதிரையின் மீதேறிவந்த திருவுருவத்தையும் நினைந்து மனமுருகிப் பாடியிருக்கின்றர். சிதம்பரத் திலே கனகசபையின் கண்ணே ஆநந்த நடனஞ் செய் யும் திருவுருவத்தின் இயல்பைச் சமயகுரவரும் சந்தான சாரியரும் பிறரும் அழகுபெறச் சொல்லியிருக்கின்ருர்
96.
அநுமானப் பிரமாணத்தினுலும் அறியலாம்
ஆகமப் பிரமாணத்தினலும், காட்சிப் பிரமாணத் தினுலும் உருவத்திருமேனியின் உண்மை நிச்சயிக்கப்

ܚ 7 ----
படத்தக்கது எனக் காட்டினம் இனி, இவ்வுண்மை அநுமானப் பிரமாணத்தினலும் அறியப்படுவது எனக் காட்டுவாம். சடமுஞ் சித்துமாகிய சேதனசேதனப் பிரபஞ்சம் தோன்றி நின்றழிவதைக் காண்கின்ருேம்; பிரபஞ்சத்தைப் பஞ்சகிருத்தியப்படுத்துகின்ற தலைவன் ஒருவனுளன் எனவும், அறிவினல் நிச்சயித்துக் கொள்ளுகிருேம் இந்தத் தலைவன் குணங்குறி கடந்த வளு,ை குணங்குறியோடு கூடினவன என ஆராய்தல் வேண்டும். குணங்குறி கடந்த நிலையிற் செயலில்லை. செயல் தோற் று ம் போது குணமுமுடன் ருேற்று கிறது. குணம் உருவத்தைச் சார்ந்து நிற்பது குண வேறுபாட்டினலேதான் உருவ வேறுபாடு தோற்று கின்றது. இங்ங்னம் ஆராயும்போது குணங்குறி கடந்த நிர்க்குண நிலை உருவமற்ற நிஷ்கள நிலையா மெனவும், குணங்குறியோடு கூடிய சகுணநிலை உரு வத் திருமேனியோடு கூடிய சகள நிலையாமெனவும் அறிகின்ருேம். இவையிரண்டினுக்கும் இடையாய நிஷ்களசகளத் திருமேனியும் ஒன்று உண்டு எனப் பின்னர்க் காட்டுவோம். நிஷ்களம், நிஷ்களசகளம், சகளம் என்பவற்றை முறையே அருவம், அருவுரு வம், உருவம் என வழங்குவாம். இனி உயிர்களா கிய நமக்குத் தனது பூரணவியல்பையுணர்த்தும் பொருட்டு ஞானசாரியனுக வருகின்ற எல்லையில், பரமபதியாகிய இறைவன் மானிடச்சட்டை சாத்தி நம்மனேரைப்போல, "ஊண், உறக்கம், இன்பதுன் பம், பேர் ஊர் ஆதி ஒவ்விட" வருவது இன்றியமை யாததாகின்றது.
காணரிய வல்லவெல்லாந் தானே கட்டுக்
கட்டாக விளையுமதைக் கட்டோ டேதான் வீணினிற்கர்ப் பூரமலை படுதீப் பட்ட
விந்தையெனக் காணவொரு விவேகங் காட்ட ஊணுறக்க மின்பதுன்பம் பேரூ ராதி
யொவ்விடவு மெனப்போல வுருவங் காட்டிக் கோணறவோர் மான் காட்டி மானை யீர்க்குங்"
கொள்கையென வருண்மெளன குருவாய் வந்து **

Page 9
- 8 -
எனத் தாயுமான சுவாமிகள் கூறியதனை நோக் குக. இனி மானிடராகிய நம்முடைய வடிவம் தானுக எழுந்த மூல வடிவமா, அன்றேல், பிறிதொரு வடி வத்தைப் பார்த்து அமைக்கப்பட்ட வடிவமா, என ஆராய்தல் வேண்டும். சித்திர மெழுதுவோன் ஒரு வடிவத்தை நேரிற் பார்த்தோ நினைவிற்ை பார்த்தோ மற்ருெரு வடிவத்தை யெழுதுகிருன் படைத்தற் கடவுளாகிய பிரமதேவன் எந்த மூலவுருவத்தைப் பார்த்து ஆண் பெண்பாலராகிய மானிடரது உரு வத்தை யமைத்தான் என்று விசாரிப்போமாயின், அநாதியாக அமைந்து நின்ற சிவ வடிவத்தையும், சக்தி வடிவத்யுைம் பார்த்து அமைத்தானென அறிந்து கொள்வோம்.
உருவத்திருமேனி அருள்வடிவம்
இறைவனுக்கு உருவத்திருமேனி யுண்டென அறிந் தாம். அவ்வுருவம் நம்மனேருக்குரிய உருவத்தைப் போன்றதாயின், அதனை உண்டாக்குதற்கு ஒரு கருத்தா வேண்டும். நமது உருவம் மாயாகாரிய வடிவ மாகும்; இறைவன் நின்மலனதலினல் அவனுடைய உருவத் திருமேனி மாயாகாரிய வடிவமன்று. நிறைந்த ஞானமுஞ் செயலுமுடைய முதல்வன் உயிர்கண்மாட்டு வைத்த கருணையினல் தான் நினைந்ததொரு திருமேனி யைக் கொண்டருளுவன்.
குறித்ததொன் ருகமாட்டாக் குறைவில ஞத லாலும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும் வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுத லிலாமை யானும் நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி ஞலே
முதல்வனது திருவுரு அருள் வடிவ மாதலால், அவ் வுருவிலே தோன்றும் குணங்கள், உணர்வு, கருமம், கரசரணுதி, சாங்கோபாங்கம் அனைத்தும் அருள் வடி வமேயாம். இவற்றையெல்லாம் இறைவன் உயிர்களின் பொருட்டென்றே யெடுத்துக்கொண்டனன்.

一 9一
உருவருள் குணங்க ளோடு முணர்வரு ஞருவிற் ருேன்றுங் கருமமு மருள ரன்றன் கரசர ணுதி சாங்கந் தருமரு ஞபாங்க மெல்லாந் தானரு டனக்கொன் றின்றி அருளுரு வுயிருக் கென்றே யாக்கின னசிந்த னன்றே.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அரு ளல் ஆகிய பஞ்சகிருத்தியங்களைச் செய்தற் பொருட்டும், மெய்யடியார் தியான பாவனை செய்தற்பொருட்டும், வேதாகமங்களின் பொருளை யுணர்த்தற் பொருட்டும், ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடுத்துப் பாசத் தைக் கெடுத்து முத்தியை அளித்தற் பொருட்டும்,முதல் வன் உருவத் திருமேனி கொள்ளவேண்டியது இன்றிய மையாததாமெனச் சைவசித்தாந்த வழி நூல் கூறும்.
படைப்பாதித் தொழிலும் பக்தர்க் கருளும்பா வனையு நூலும் இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும் அடைப்பான மதுவு முத்தியளித்திடும் யோகும் பாசந் துடைப்பானுந் தொழிலு மேனி தொடக்கானேற்
சொல்லொ னுதே,
சிவ பேதங்கள் ஒன்பது
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அரு ளல் என்னும் ஐந்தொழிலையுஞ் செய்கின்ற நிலையில் தனிப் பரம்பொருளாகிய இறைவன் முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து மூர்த்திகளாக விளங்குவான். இவையைந்தும் சிவம், சக்தி, நாதம், விந்து என நான்கும் ஆகிய ஒன் பது பேதங்களாகவும் நடிப்பவன் முழுமுதற் கடவுளா கிய ஒருவனே யாவன்.
சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் றிகழு மீசன் உவந்தரு ஞருத்தி ரன்ருன் மாலய னென்றி னென்ருய்ப் பவந்தரு மருவ நாலிங் குருவரா லுபய மொன்ரும் நவந்தரு பேத மேக நாதனே நடிப்ப னென்பர்.
சிவம், சத்தி, நாதம், விந்து என்னும் நான்கும் அருவத் திருமேனி சதாசிவமூர்த்தம் அருவுருவத் திரு

Page 10
سی۔ 10 ----
மேனி; மகேசுவரன் உருத்திரன், மால், பிரமன் நான்கும் உருவத்திருமேனி. இவை ஒன்றிலிருந்தொன்ரு கத்தோற் றும் முறையைத் "தில்லைத் திருநடனம்" என்னும் வியா சத்தினுட் காட்டுவாம். பிரமா படைத்தற் ருெழிலொன் றினை மாத்திரம் உடையர் விஷ்ணு படைத்தல் காத்த லுக்குரியர்; உருத்திரர் முத் தொழிலுக்குரியர் மகேசு வரர் நாற்ருெழிலுக்குரியர்; சதாசிவர் ஐந்தொழிலுக் குரியர். பஞ்சகிருத்தியங்களையுந் தன்னுள்ளடக்கி அவற் றுக்கு அப்பாலாகவும் நிற்பது முதல்வனது உண்மை வடிவம். ஆதலினல், பிரம விஷ்ணுக்களாலே அடிமுடி தேடிக் காண்டற் கரிய முழுமுதற் கடவுளது திருமேனி யைக் குறிப்பிடுகின்ற உருவம் பஞ்சகிருத்தியங்களையும் காட்டி அவற்றுக்கு அப்பாலாகவும் நிற்கவேண்டும். சிற் சபையில் நடனஞ் செய்கின்ற ஆனந்த நடராஜனது திரு வுருவம் பஞ்சகிருத்தியங்களையும் காட்டுவதோடு ஞான மயமாகிய சிதாகாசத்தின் இயல்பையும் அறிவுறுத்து வது. ஆதலினல் நடராஜ மூர்த்தம் ஏனைய மூர்த்தங்களி னும் பார்க்கச் சிறப்புடையதாயிற்று.
மந்திர வடிவம்; அத்துவா வடிவம்
இறைவனது மந்திர வடிவத்தைப் பற்றி ஒரு சில குறிப்புக்கள் கூறி யப்பாற் செல்வாம். மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணுத்துவா, புவனத்துவா, தத்துவாத் துவா, கலாத்துவா என ஆறு அத்துவாக்களுள. மந் திரங்கள் பதங்களாலும், பதங்கள் வர்ணங்களாலும், வர்ணங்கள் புவனங்களாலும், புவனங்கள் தத்துவங்க ளாலும், தத்துவங்கள் கலைகளாலும் வியாபிக்கப்பட் டனவென்று ஆகம நூல்கள் கூறுகின்றன. சப்தகோடி மகா மந்திரங்களும் மந்திராத்துவா வெனப்படுவன. இவற்றினுள் வியாபித்து நின்ற அநேக பேதங்களை யுடைய பதங்கள் பதாத்துவா வெனப்படுவன. பதங்க ளுள் வியாபித்து நின்ற அகராதி ஹகாராந்தமாயுள்ள (வடமொழி நெடுங்கணக்கு) ஐம்பது அக்ஷரங்கள் வர்

ணுத்துவா வெனப்படுவன. இவற்றினுள் வியாபித்து நின்ற புவனங்கள் புவனத்துவா எனப்படுவன. இவற்றி னுள் வியாபித்து நின்ற சிவ தத்துவம் முதற் பிரகிருதி தத்துவம் இறுதியாகவுள்ள தத்துவம் முப்பத்தாறும் தத்துவாத்துவா. தத்துவரத்துவாவினுள் வியாபித்து நின்ற சிருஷ்டி சக்கரமாகிய நிவிர்த்திகலை, ஸ்துதி சக் கரமாகிய பிரதிஷ்டாகலை, சங்கார சக்கரமாகிய வித்தி யாகலை, திரோபவ சக்கரமாகிய சாந்திகலை, அநுக்கிரக சக்கரமாகிய சாந்தியாதீதகலை ஆகிய ஐந்தும் கலாத் துவா எனப்படுவன. இவ்வாறு அத்துவாக்களையும் முதல்வனுக்குரிய வடிவமாக வேதாகமங்கள் கூறுகின் றன. உலகெலாமாகி நிற்றலும், அவற்றின் வேருய் நிற்றலும், உடன் நிற்றலும் ஆகிய மூன்றும் இறை வனுக்குரிய இலக்கணங்களாதலின், வேதாகமங்கள் அவ் வண்ணம் உரைத்தன என அறிக. உலகுயிர்களெங்கும் அத்துவிதமாய்க் கலந்து பிரிவின்றி நின்றனவெனினும், இறைவன் உலகுயிர்களாகிய இவற்றின் றன்மைகள் தன்கட் பொருந்துதலின்றி நின்மலய்ை நிற்பான் என அறிக.
உலகெலா மாகி வேரு யுடனுமா யொளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையி னமர்ந்து செல்லத் தலைவன யிவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீ ரமலனகி நின்றன rைங்கா தெங்கும்:
அத்துவா வடிவங்களுள்ளே மந்திர வடிவங்கள்சிறந் தன. சுத்த மாயையிலே தோன்றிய முதன்மையுடை யனவாதலாலும், சிவசத்தி இவற்றைய திட்டித்து நின்று சாதகருக்குப் போகமோக்ஷங்களை யளித்தலாலும் ஏனைய அத்துவா வடிவங்களிலும் பார்க்க மந்திர வடிவங்கள் சிறப்பெய்தின. இவற்றினுள் உயிர்க்குறுதி பயக்கும் மகா மந்திரமாகிய பஞ்சாக்ஷரம் நடராஜ வடிவமாக அமைந்து நின்றது.
பஞ்சாக்கர வடிவம்; பஞ்சகிருத்திய வடிவம் பஞ்சாக்கர வடிவத்தினிலக்கணத்தையும், பஞ்ச கிருத்திய வடிவத்தினிலக்க்ணத்தையும், "உண்மை.

Page 11
----- || 2 |-
விளக்க” நூலாசிரியராகிய திருவதிகை 'மனவாசகங் கடந்தார்’ என்னும் பெரியார் உரைத்த செய்யுட்களி னுதவியால் ஆராய்ந்துணர்வாம்.
ஆடும் படிகேணல் லம்பலத்தா னையனே நாடுந் திருவடியி லேநகரங் - கூடு மகர முகரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.
(ஐயனே! எல்லா நன்மைகளுக்கும் ஆதாரமாகிய திருச்சிற்றம்பலவன் நடனஞ் செய்யும் முறைமையாகக் கொண்ட திருவுருவத்தின் இயல்பினைச் சொல்லு கிறேன் கேட்பாயாக, நினைத்தற்கரிய திருப்பாதத்திலே ந காரம் பொருந்தும்; திருவயிற்றிலே ம காரம் பொருந் தும்; வளர்ந்து தோன்றும் திருத்தோளிலே சி காரம் பொருந்தும்; சொல்லப்பட்ட திருமுகத்திலே வ காரம் பொருந்தும்; திருமுடியிலே ய காரம் பொருந்தும்.)
அஞ்செழுத்தே யாகம மு மண்ண லருமறையும் அஞ்செழுத்தே யாதிபுரா ணம்மனைத்து - மஞ்செழுத்தே ஆனந்தத் தாண்டவமும் யாவைக்கு மப்பாலா
மோனந்த மாமுத்தி யும்.
என்பதனுல் ஐந்தெழுத்தே ஆனந்தத் தாண்டவமா மென அறிகின்ரும்.
சிவனரு ளாவி திரோதல மமைந்தும் அவனெழுத் தஞ்சினடை வாம்.
என்றமையால் சிகார முதலாகிய ஐந்தக் கரங்களும் சிவன், அருள், ஆன்மா, திரோதம், மலம் எனும் ஐந்து மாம் என அறிக.

- 3 -
தோற்றந் துடியதனிற் ருேயுந் திதியமைப்பிற் சாற்றியிடு மங்கியிலே சங்காரம் - ஊற்றமா பூன்று மலர்ப்பதத்திலுற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.
(டமருக மேந்திய திருக்கரத்திலே படைத்தற் ருெழிலையும், அமைத்த திருக்கரத்திலே காத்தற்ருெழிலை யும், அக்கினியேந்திய திருக்கரத்திலே சங்காரத் தொழி லையும், உறுதியாயூன்றிய திருப் பாதத்திலே மறைத் தற்ருெழிலையும், தூக்கிய திருப்பாதத்திலே அருளற் ருெழிலையும் ஆராய்ந்தறிவாயாக.)
ܓ 「ス。

Page 12
தில்லைத் திருநடனம்
--au-Saad-up--
ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யானு மாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி. கற்பனை கடந்த சோதி கருணையே வடிவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து னின்று பொற்புறு நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
2-ரைமன மிறந்து நின்றவொரு தனிக்கடவுள் ஆன்மாக்கள் மீது வைத்த பேரருளினலே அவ்வருளே வடிவமாகத் தோற்றுவான் என்னும் உண்மையை நடராஜ வடிவம் என்னும் வியாசத்தினுள் ஆராய்ந் துணர்ந்தாம் ஆங்கு உருவம் பற்றி யாராய்ந்தாம். தில்லைத் திருநடனம் என்னும் இத்தலைப் பெயர்க் கீழ்த் தொழில் பற்றி யாராய்வாம்.
சிதம்பர ஸ்தலம்
முதலில் தெரிசிக்க முத்திதரும் ஸ்தலமாகிய சிதம்பர ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிச் சில குறிப் புக்கள் கூறி யப்பாற் செல்வாம். நிலவுலகத்திலுள்ள ஆன்மாக்களுக்கு அநுக்கிரகிக்கும் வண்ணம், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் ஸ்தலங்களுள்ளே மிகச் சிறந்த ஸ்தலம் சிதம்பர ஸ்தலமாம். இது முன்ளிைல் தில்லைக் காடாகவிருந்த காரணம் பற்றித் தில்லைவனம் எனவும் வழங்கப்படும். புலிக்கால் முனிவராகிய வியாக்கிர பாதரும் ஆதிசேஷனுடைய அவதாரமாகிய பதஞ்சலி மகா முனிவரும் தவம் புரிந்து நடராஜ மூர்த்தியைக் கண்டு தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்ற இடம் இத் தில்லைவனமென்ப. இந்தத் தில்லைவனமானது விராட் புருடனுக்கு நடுநாடியாகிய சுழுமுனை நாடியாக அமைந் தது. இந்த ஸ்தலத்திலே மூல லிங்கத்துக்குத் தெற்கே

- 15 -
வேதங்களுங் காணுத நிலைபெற்ற சபையொன்றுண்டு; அச்சபையின் கண்ணே எம்மையாளுடைய ஐயன் எக் காலத்தும் ஆநந்த நிருத்தஞ் செய்தருளுவான் இவ் வுண்மையை,
நாடரு நடுவி ஞடி நலங்கிளர் தில்லை நேர்போய்க் கூடுமங் கதனின் மூலக் குறியுள ததற்குத் தென்னர் மாடுறு மறைகள் காணு மன்னுமம் பலமொன் றுண்டங் காடுது மென்று மென்ரு னென்னையா ளுடைய வையன்,
என்னுங் கோயிற் புராணச் செய்யுள் இறைவ னுடைய திருவாக்காக எடுத்துக் கூறும். அண்டமும் பிண்டமும் தம்முள் ஒப்புடைய வாதலினலே, பிண் டத்தில் அமைந்திருக்கின்ற இடைநாடி, பிங்கலைநாடி, சுழுமுனை நாடியென்னும் இவற்றிற்கு நேரொப்பாக இலங்கை. இமயம், தில்லையாகிய மூன்று தலங்களும் அண்டத்தில் அமைந்திருக்கின்றன இடைநாடி இலங் கைக்கு நேராகச் செல்லும், பிங்கலைநாடி நன்மைமிக்க இமயமலைக்கு நேராகப் போகும், நாடுதற்கரிய சுழு முனைநாடி தில்லை வனத்திற்கு நேரே போய்க்கூடும் எனவும், தாம் அத்திருத்தலத்தில் சதா ஆநந்த நிருத் தம் செய்வதாகவும் நடராஜமூர்த்தி ஆதிசேஷனுக் குக் கூறினர். சுழுமுனை நாடியிற் பிராணனை நிறுத் திய யோகிகளுக்குப் பேரின்பப் பெரும்பேறு வந்து எய்துவதை யொப்பச் சிதம்பர ஸ்தலத்தையடைந்து தரிசித்த பேருக்கு முத்தியின்பங் கைகூடுமாதலினல், அண்டத்திலுள்ள சிதம்பரமும் பிண்டத்திலுள்ள சுழு முனை நாடியும் தம்முள் ஒத்து நடப்பன.
எண்டரு பூந்த மைது மெய்திய நாடி மூன்று மண்டல மூன்று மாகி மன்னிய புணர்ப்பி ஞலே பிண்டமு மண்ட மாகும் பிரமனுே டைவ ராகக் கண்டவர் நின்ற வாறு மிரண்டினுங் காண லாகும்.
சித + அம்பரம் = சிதம்பரம். அம்பரம் என்னும் மொழி, ஆகாசம், வெளி யெனப் பொருள்படும்.

Page 13
- 16 -
சிற்சபை பிரமபுரம்
இச்சொல் அம்பலம் எனத் திரிவு பட்டும் நடக் கும். சிதம்பரம் சிற்றம்பலமாகும். ஹிருதய கமலத் திலே சிதாகாச வடிவமாகிய பரவெளி யமைந்திருக் கின்றது. இது அனைத்தினுக்கும் ஆதாரம். சாந்தோக் கியோபநிடதத்தின் எட்டாவது பிரபாடகத்தின் முதற் காண்டம் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்து கின்றது. அக்காண்டத்தை மொழி பெயர்த்துத் தரு 6 TD 3
1. ஓம் பிரமபுரமாகிய இச்சரீரத்திலுள்ள தகர மாகிய புண்டரீக வீட்டினுள்ளே ஆகாசம் இருக்கின் றது. அவ்வாகாசத்தினுள்ளே யிருக்கிற பொருளைத் தேடியறிதல் வேண்டும்.
2. "பிரமபுரமாகிய இச்சரீரத்திலுள்ள தகர மாகிய புண்டரீக வீட்டினுள்ளே ஆகாசம் இருக்கிறது, அவ்வாகாசகத்தினுள்ளே எதனைத் தேடி யறிதல் வேண் டும்?' என (மாணுக்கர்) விசாரிப்பாரெனின்,
3. ‘புறத்தே யிருக்கிற ஆகாசம் எவ்வளவு விரி வாயிருக்கிறதோ, இருதயத்தினுள்ளே யிருக்கிற ஆகாச மும் அவ்வளவு விரிவாயிருக்கிறது: மண்ணுலகமும் வானுலகமும் காற்றும் நெருப்பும் சூரியனும் சந் திரனும் மின்னற்கொடியும் நக்ஷத்திரக் கூட்டமும் என்று புறத்தே தோன்றுகின்றவும் இனிமேல் தோற் றப் போகின்றவுமாகிய அனைத்தும் அதனுள்ளே யிருக் கின்றன’’ என்று (ஆசிரியன்) கூறுவான்.
4. "எல்லாப் பிராணிகளும் எல்லா விருப்பங் களுமாகிய அனைத்தும் (இச்சரீரமாகிய) பிரமபுரத்தி னுள்ளிருக்கின்றன வென்றல், வயது முதிர்ந்து உடல் விழும்போது யாது சம்பவிக்கின்றது?’ என (அவர்கள்) விச்ாரித்தால், அதற்கு மறுமொழி வருமாறு:

ܚܘ 7 1 ܚܙܩ.
5. "இதனுடைய மூப்பினுல் அது மூப்படைவ தில்லை; இதனுடைய மரணத்தினுல் அது மரண மடைவதில்லை. (இருதயகமலத்தினுள்ளிருக்கும் உண் மைப் பொருளாகிய) அதுவே உண்மையான பிரம புரம். அது தீங்கற்றதாய், மூப்புச் சாக்காடற்றதாய், துன்பமற்றதாய், பசிதாகமற்றதாய் உண்மையை விரும்பி உண்மைத் தீர்மானங்களைக் கைக்கொள்ளும். (இங்குள்ளார் இடந் தேசங்களின்மேற் பற்று வைத் துக் கட்டளைக் கமைந்து நடப்பது போல.)"
6. "இவ்வுலகத்திற் பாடுபட்டுத் தேடிய பொருள் அழிந்துபோவது போலப் புண்ணிய பலத்தினுல் வந்த மேலுலக வாழ்க்கையும் அழிந்துபோம். ஆன்மாவாகிய உண்மைப் பொருளை யறியாது இவ்வுலக வாழ்க்கை யினின்று நீங்குவோர் மற்ற உலகங்களிலும் பந்த முற் றவராவார். இவ்வுலக வாழ்க்கையில் ஆன்ம ஞானத்தை யடைந்தவர் எல்லா உலகங்களிலும் பந்தமற்ற வீட்டு நிலையை யடைந்தவராவார்.”*
மேலே சுருதியுரைத்த ஆகாசமே சிதாகாசமெனப் படுவது.
சித்தாகாசம், பூதாகாசம் என வேறு இருவகை ஆகாசங்கள் இருக்கின்றன. நம்முடைய இயல்பினை நோக்கும்போது நாம் ஒருவரில் மூவராயிருக்கின்ற தன் மையை யறிவோம். சீதோஷ்ணங்களால் வருந்தும் போதும் நோயுற்றபோதும் உடலமே நாமென்று நினைத்துத் துன்புறுவோம்.
பஞ்சபூத பரிணுமம்
ஞான சாஸ்திரங்களை யாராயும்போது அவற்றின் மேற் கருத்துப் பதியச் சரீரத்தை மறந்து மனமே நாமென்னு மெண்ண முற்றிருப்போம். மனம் மடிந்த சமாதி நிலையில் சிவத்தோடு அத்துவிதமாக நின்ற நமது உண்மை நிலையை யறிவோம். மேலே (யெடுத்துக் காட்டிய சுருதியினல் அறிவுறுத்தப்பட்டது அவ்வுண்மை

Page 14
நிலையேயாம். இம்மூன்று நிலைக்கு மொப்பவே மூவகை யாகாசமும் நிலைபெற்று நின்றன. பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாகிய மாயையும் மூன்று. அவை சுத்த மாயை (மகாமாயை, பரப்பிரகிருதி, விந்து, குண்ட லினி, வித்தை, மாயை, பரை, பரவாகீசுவரி என்பன பரியாய நாமங்கள்), அசுத்தமாயை (சூக்குமப் பிர கிருதி, மோகினி), பிரகிருதிமாயை (தூலப்பிரகிருதி, மகத்) என்பன. தூலப் பிரகிருதியினுட் சூக்குமப் பிரகிருதியும் சூக்குமப் பிரகிருதியினுள் மகாமாயையும் வியாபித்து நிற்பது போலப் பூதாகாசத்தினுட் சித்தா சாசமும் சித்தா காசத்தினுட் சிதாகாசமும் வியாபித்து நிற்பன. ஆதலினல் சிதாகாசமே அனைத்தினுக்கும் ஆதாரமானது. ஆகாசத்தினின்று வாயுவும் வாயுவி னின்று தேயுவும் தேயுவினின்று அப்பும் அப்பினின்று பிருதுவியுந் தோற்றுவன வென்பது சமயநூலுக்கும் பெளதிக சாஸ்திரத்துக்கும் ஒப்ப முடிந்ததாதலின், பருப் பொருளாகிய பிரபஞ்சத் தோற்றமாக நங்கண் முன்னே தோற்றுகிற மண், நீர், நெருப்பு. காற்று என்னும் நான்கு மகா பூதங்களும் அருவுருவடிவவான பூதாகாசத்தினின்று தோற்றின வென்பது புலப்படு கின்றது. ஆசாச (Ether) ப் பரப்பிலே நீரிற் சுழிகள் போற்ருேன்றி நின்ற நுண்ணிய மின்னுருக் (Electrons) களின் கூட்டமாகிய அணுக்களா (Atoms) லமைந்தன அனைத்துச் சடப்பொருட்களுமெனத் தற்காலத்து விஞ் ஞான நூலாசிரியருங் கூறுவர். சிதாகாச சித்தாகா சங்களினியல்பை அன்னரறியார்.
பஞ்சகிருத்தியத் தலைவர்
இனித் தோற்றக் கிரமத்தை யாராயும்போது அதுவும் தூலசிருஷ்டி, சூக்குமசிருஷ்டியென இருவகைப் படுமென்றறிவாம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களும் மண், நீர், அனல் வாயு, ஆகாசம் என்னும் பஞ்ச

سست۔ 19 سےسسے
பூதங்களும் நிரனிறையாக ஒன்றினுேடொன்று தொடர் புற்று நிற்பன. அருவுருவமாகிய ஆகாயத்தினின்று உருவ பூதங்களாகிய வாயு, தேயு, அப்பு, பிருதுவி யென்னுமிவை முறையே தோற்றியது போல நிஷ்கள, சகள வடிவினராகிய சதாசிவ மூர்த்தியிடத்தினின்று மகேசுவரர், உருத்திரர், விஷ்ணு, பிரமா என்னுஞ் சகள மூர்த்திகள் நால்வரும் முறையே தோற்றுவர். பிருதுவி தத்துவத்தினுள் வியாபித்து நின்ற நிவிர்த்தி கலையை யதிஷ்டித்த பிரமதேவர் உலகங்களைப் படைப் பார். நாராயண (நீரிற்றேன்றிய) மூர்த்தி உலகங்களைக் காப்பார். அக்கினி நிறத்தினராய் அக்கினி புவனத் திலிருக்கும் உருத்திரர் அழித்தற்ருெழிலைச் செய்வார். வாயு புவனத்தினின்ற மகேசுரர் மறைத்தற் ருெழிலைச் செய்வார். ஆகாய புவனத்தில் வசிக்கும் சதாசிவர் அநுக்கிரகத் தொழிலைச் செய்வார்.
பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி உரைமன மிறந்து நின்ற வொருசிவ லிங்கந் தன்னின் வரு முயர் சதாசிவன் ருன் மற்றவன் றனைப்பொருந்தும் அருமைகொண் ஞானசத்தி யவர்களாற் சிவனு திப்பன்.
( சிவனென்றது மகேசுவரரை )
சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியவ் விருவரானுந் தோற்றுவ னுருத்தி ரன்ருன் சொல்லிய விவர்க்குச் சத்தி மாற்றருங் கிரியை யென்ப மற்றிவ ரிருவர் பாலும் போற்றுறு மரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால்
அத்திரு மாலு மாவு மளிப்பவந் துதிப்பன் வண்டு மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச் சத்திவெண் கமலையின் ஞர் தரவரு முலகத் தோற்றம் நித்தனங் குருகு கேச னினைவுமாத் திரையி னுமால்.
திருநடனத்திஞலே பஞ்சகிருத்தியமும் நடைபெறுவன
"அவனன்றி யோரணுவு மசையாது’ என்னும் வியூப்தர் வாக்கின்படி பஞ்சகிருத்தியத் தலைவர் பரமபதி பாகிய இறைவனுடைய அருட்சத்தியினலே ஐந்தொழி

Page 15
- 20 -
லும் நிறைவேற்றுவர். அவன் இயக்காவிட்டாற் பஞ்ச கிருத்தியங்களும் நடைபெறமாட்டா. முதல்வன் உயி ருக்குயிராகி நின்றமையினல் அவன்மேற் பட்ட அடி சர்வ ஜீவகோடிகள் மேலும் பட்டது; அவன் சனகர் முதலிய முனிந்திரர் நால்வருக்கும் ஞானபாதத்தை யுபதேசித்த பொழுது ஒருகண நேரத்துக்கு யோக நிலையிலிருக்க விண்ணுலகத்துத் தேவரும், மண்ணகத்து மானிடரும் காமப் பற்றின்றியிருந்தனர்; உமாதேவி யார் இறைவனது கண்ணினே மறைக்க எல்லாவுலகங் களிலும் இருள் சூழ்ந்து கொண்டது.
நாயகன் கண்ணை யப்பா னயகி புதைப்ப வெங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தி ஞலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னுர்,
கண்ணுதல் யோகி ருப்பக் காமனின் றிடவேட் கைக்கு விண்ணுறு தேவ காதி மெலிந்தமை யோரார் மாருன் எண்ணிவேண் மதனை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்துயிர்க்குப் பேரின்பமளித்த தோரார்.
போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரித லோரார் யோகியா யோக முத்தி யுதவுத லதுவு மோரார் வேகியா ஞற்போற் செய்த வினையினை வீட்ட லோரார் ஊகியா மூட ரெல்லா மும்பரி னுெருவ னென்பார்,
உலகமே யுருவ மாக யோநிக ஞறுப்ப தாக இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக அலகிலா வுயிர்கட் கெல்லா மறிவினை யாக்கி யைந்து நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப ஞதன்.
அரங்கத்திலே புகுந்து நடிக்கின்ற கூத்தற்கு உருவு முறுப்பும் கரணமும் பயனுந் தொழிலும் அமைந்த வாறே, சிதா காசமாகிய அரங்கத்து நடிக்கும் பரம நாடகனகிய முதல்வனுக்கும் அசித்துப் பிரபஞ்சம்

- 2 -
தூல உருவமாகவும் சித்துப் பிரபஞ்சம் உறுப்புக்களா கவும், இச்சை ஞானக் கிரியைகள் கரணமாகவும் உயிர்கட்கு அறிவினையாக்கி வைத்தல் பயனுகவும் பஞ்ச திருத்திய விரிவே தொழிலாகவும் அமைந்துநின்றன.
பஞ்சகிருத்திய வடிவத்தின் இலக்ஷணம்
தோற்றப் பொருளனைத்தினுக்கும் ஆகாசம் ஆதார மென முன்னர்க் கூறினம். இவ்வாகாசம் ஒலிபற்றி யெழுவது; ஆதலால் இறைவனுடைய கையிலேந்திய டமருகம் ஒலிக்குறிப்பின் வழிவந்த ஆகாசத்துக்கு உற்பத்தித் தானமானது. ஆதலால் அனைத்துப் பொருட்களுக்கும் உற்பத்தித் தானமாயிற்று. "அஞ் சன்மின்" என்னுங் குறிப்பினைக் காட்டும் அபயகரம்" காத்தற் ருெழிலைச் செய்கின்றது. கையிலேந்திய அக் கினி சங்காரத் தொழிலைச் செய்வது. முயலகன் ஆணவ வடிவம்; அவனை மிதித்த திருப்பாதம் மறைத்தற் ருெழிலைக் காட்டுவது. தூக்கிய திருப்பாதத்தின் நீழ லில் இந்தக் கலியுகத்திற்ருனும் திருநாளைப் போவார் நாயனரென்னும் நந்தனரும், திருவாதவூரடிகளும் அடைந்தார்கள்.
சிதம்பர ரகசியம்
சிதம்பரத்தில் சிற்சபையிலே, நடராஜமூர்த்திக்கு வலப்பக்கத்திலே மாசுபடியா ஆகாய மூர்த்தமாகிய சிதம்பர ரகசியம் இருக்கின்றது. இம் மூர்த்தம் நாம ரூப விகற்பப்படாதது; ஆதலினுல் அனைவராலும் வழிபடற்குரியது.
சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமயகங்கே ளப்பொருளுந் தானென் முகப்
பன்மார்க்க நெறியிலுங் கண்ட தில்லை
பகர்வுரிய தில்லைமன்றுட் பார்த்த போதங்

Page 16
கென் மார்க்க மிருக்குதெல்லாம் வெளியே யென்ன
வெச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்
கன்மார்க்க நெஞ்சமுள வெனக்குந் தானே
கண்டவுட னனந்தங் காண்ட லாகும்
எனத் தாயுமான சுவாமிகள் கூறிய செய்யுளை நோக் குக. காஞ்சியிற் பிருதுவி மூர்த்தமாகவும் திருவா னேக்காவில் அப்பு மூர்த்தமாகவும் திருவண்ணுமலையிற் றேயுமூர்த்தமாகவும் திருக்காளத்தியில் வாயு மூர்த்த மாகவும் சூரிய விம்பத்திற் சூரிய மூர்த்தமாகவும் சோமநாதத்திற் சந்திரமூர்த்தமாகவும் அனைத்துயிர் களிடத்திலும் பசுபதியாகவும் அமர்ந்த முதல்வன் சிதம்பர ரகசியத்தில் ஆகாய மூர்த்தமாக விளங்கு 6:ff'aðf.
ஆநந்த நடனம்
ஐந்தொழில்களும் ஆநந்த நடனத்தினுல் நடந் தேறுகின்றன வெனவுணர்ந்தோம். நாம் சூத்திரப் பாவை; கயிற்றை யியக்கி நம்மை யாட்டுபவன் நட ராஜன். தில்லைமன்றுணடிக்கின்ற திருநடனத்தைக் கண்டு தரிசித்தோர் மேலான உண்மைப் பொருளைக் கண்டு தெளிந்து பிறவிப் பயனைப் பெறுவார்களாத லினல் "தெரிசிக்க முத்திதரும் சிவசிதம்பரம்" என ஆன்ருேர் கூறினர்.
செய்ஞ்ஞன்ற நீல மலர்கின் தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞன்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞன் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்ருன் கைஞ்ஞன்ற வாடல்கண் டாற்பிள்ளைக் கண்கொண்டு
(காண்பதென்னே:
தில்லைத் திருநடனத்தைக் கண்டு தரிசித்த கண்ணி ஞலே பின்னர்க் காண்பதற்குத் தகுந்த பொருள் வேறு இல்லையாதலால், மைதீட்டிய ஒள்ளிய கண்ணினை

- 23 -
|கடைய உமாதேவியார் கண்டு மகிழ்ந்து நிற்ப, எம் மிறைவன் கனகசபையின் கண்ணே எந்நாளும் செய் ன்ெற ஆனந்த நடனத்தைக் காண்பதே கண்ணினைப் பெற்ற பயனுகும்.
குணித்த புருவமுங் கொவ்வைச் செவ் வாயிற் குமிழ்சிரிப்பும் டனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்த பொற் பாதமுங் காணப்பெற்ருல் மணித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த வையகத்தே,
திருச்சிற்றம்பலம்,
浆
*
蒙染

Page 17

பஞ்சபுராணம்
திருமுறை
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெஞ் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிரவென் கண் குளிர்ந்தனவே.
திருவாசகம்
தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா யார்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன் றென்பாற் சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான்
திருப்பெருந் துறையுறு சிவனே எந்தையே ஈசா வுடலிடங் கொண்டாய் யாணிதற் கிலனுெர்கைம் மாறே.
திருவிசைப்பா
செங்கணு போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற்றிருந்த வங்கணு போற்றி யமரனே போற்றி
யமரர் கடலைவனே போற்றி நீங்களுன் மறைநூல் சகலமுங் கற்ருேர்
சாட்டியக் குடியிருந்தருளு மெய்கணுயகனே போற்றி யேழிருக்கை
யிறைவனே போற்றியே போற்றி,

Page 18
திருப்பல்லாண்டு
*ாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் போற்கடல் ஈந்தபிரான் ாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே யிடமாகப் H7லித்து நட்ட-ம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
பெரியபுராணம்
ந்ேதுபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக இந்து வாழ் சடை-யான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

திதி வெண்பா
இரத்தாட்சித் தைபதினெட் டேய்ந்த முப்பத் தொன்ருென்றெண் பத்தைந்து தேர்பூர்வ பத்துதிதி - உத்தமஞர் வேலணையூர்ச் சண்முகத்தார் வேட்டபொன்னம் மாசேர்ந்தார் காலனே முன் காய்ந்தான் கழல்

Page 19

திருவாட்டி சண்முகம்பிள்ளை பொன்னம்மா
தோற்றம்: மறைவு:
18 - 11 - 1902 31 - 01 - 1985

Page 20

எங்கள் அம்மா ஒர் காவியம்
யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் வடபால் அமைந்துள்ள நீவுக் கூட்டங்களில் ஒன்ருகிய வேலணைத் தீவுக்கு ஓர் தனிச் சிறப்பு உண்டு. அது என்னவெனில் சைவமுந் தமிழும் வளர்ந் தோங்குவதே. வேலணைத் தீவுப் பெருங்குடி மக்கள் யாவரும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். தமிழையும் அதன் வழிச் சைவத்தையும் தம் இரு கண்போல் காத்தனர்; காத்து வருகின் றனர்.
இவ்வரிய பரம்பரையிலே வேலணை இழக்கில் வேளாண்குடிச் சைவ மரபில் தோன்றியவர் எம் அன்னை, தந்தையார் ஆறு முகம், தாயார் அன்னப்பிள்ளை பிறந்தது 1902ஆம் ஆண்டு கார்த்திகை 18ஆம் திகதி, -
இருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப காலத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கிராமங்கள், எத்தகைய அரசியல் பொருளா தார சமூக சூழ்நிலையிற் காணப்பட்டனவோ, அத்தகைய குச் நிலையிலேயும் அமைப்பிலேயுமே வேலணைத் தீவும் விளங்கியது. கிராமியப் பொருளாதாரம், தன்னிறைவு கொண்ட வாழ்க்கை முறை, இயற்கைச் சூழலுடன் இயைந்த வாழ்வு. இத்தகைய வாழ்வையும் எம் அன்னை முழுமையாக இளமைக் காலத்தில் அனுபவிக்க இறைவன் வழிவ குக்கவில்லை.பிஞ்சுப் பருவத்திலேயே தன் அருமைத் தந்தையை இழந்தார்.
இல்லறம்
அக்காலத்தில் பால்ய விவாகம் தமிழ்ச் சமூகத்தில் மிக உர மாக இடம்பெற்றிருந்தமை யாம் அறிந்ததே. இதற்கமைய ஏற்கனவே தந்தையார் உயிருடன் இருக்கும் காலகட்டத்தி லேயே நிச்சயம்பண்ணியிருந்த முறை மாப்பிள்ளையானவரும் இடாலை குட்டி முதலாளியுமான கிரு. கதிரேசு சண்முகம்பிள் %ளயை 1915ஆம் ஆண்டு தைத் திங்கள் திருமணம் புரிந்து கொண்டார். அம்மா தன் திருமண விழா பற்றிப் பெருமை யுடன் பல கதைகள் சொல்வார்கள். அன்று அடை மழை. இரட் டைக் குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியில் திருமணத் தம்பதி களின் ஊர்வலம் நடைபெற்றதாம். ஊர்வலத்தைக் குறைக்கத் தான் விரும்பியபோதும் தந்தையார் இணங்கவில்லையாம். ஊர் மக்கள் போற்றி ஆர்ப்பரிக்கக், கொட்டும் மழையில் இனிதே திருமண விழா முடிவுற்றது:

Page 21
- 4 -
அன்று தொடங்கிய எம் அன்னையின் இல்லற வாழ்வு 10-4-1970 வரை ஐம்பத்தைந்து ஆண்டுகளாக யாதொரு குறையும்இன்றி இனிதே நடைபெற்றது.
திருமணத்தின் பின் இடாலையில் வியாபாரஞ் செய்துவந்த எம் தந்தையார் தன் நண்பரொருவருக்கு அவ்விடத்தை வழங்கி விட்டு, இடாலையிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள நிவிற்றிக்கலை என்னும் சிங்கள குக்கிராமத்தில் 1918ஆம் ஆண்டு தம் வியாபாரத்தைத் தொடங்கினர். இதிலிருந்தே எம் பெற்ருேரின் வாழ்வு தளிர்விடத் தொடங்கியது. ஈட்டிய பொரு ளைக் கண்போல் பேணிக் காத்து வளப்படுத்திய பெருமை எம் அன்னைக்கே யுரியது. பல நீண்ட மாதங்கள் பிரிந்து, தொழில் நிலையத்திலிருந்து தந்தை ஈட்டி அனுப்பிய பொருளைத் தக்க இடத்தில் முதலீடு செய்து பாதுகாத்த பெருமையும் எம் அரு மைத் தாயாருக்கே உரியது. அது அவருக்குக் கை வந்த கலை.
மக்கட் செல்வம்
இத்தகைய இன்ப வாழ்வில் 1920ஆம் ஆண்டளவில் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார் எம் அன்னை. ஒரு வருடத்தில் அம் மகவு காலன் வாய்ப்பட்டது. தம் முதுமையிலும் அம் மகவைப்பற்றிய கவலை எம் தாயாரிடம் குடி கொண்டிருந் தது. தாய்க்கு தலை மகவு ஆணுக இருக்க வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர், குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் பாங்கு அக்குழந்தையிடமே காணப் படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்:
அடுத்து 1922ஆம் ஆண்டு ஒரு பெண் மகவைப் பெற் றெடுத்தார். தம்பதியினர் இருவரும் சிவபக்தியில் ஊறியவர் கள் ஆகையினலும் சிவனது அருளால் இக் குழந்தை பிறந் தது என்ற நம்பிக்கையினலும் "சிவபாக்கியம்" எனப் பெய ரிட்டனர். அடுத்து யோகவதி, மீனம்பிகை என்னும் இரு பெண் குழந்தைகளைப் பெற்றனர் எம் பெற்றேர்.
"ஐயோ மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று விட் டோமே" என்று கலங்கினுள் அன்னை. தந்தை தேற்றினர். தந்தையின் தேற்றத்தின் மத்தியில் பல விரதங்களை மேற் கொண்டாள் எம் அன்னை. முருகனை வேண்டி உளம் கழன்ருள். ஆண் குழந்தை வேண்டிக் கதிர்காமக் கந்தனிடம் யாத்திரை மேற்கொண்டனர் தம்பதியர். கதிர்காமக் கந்தவேள் தனக்கு ஆண் மகவுப் பேற்றுக்களை வழங்கிய தன்மையினை உளங்கனி யப் பலரிடம் கூறியுள்ளார் எம் அம்மா .

5 -
செல்லக் கதிர்காமத்தில் படுத்துறங்கும் வேளையிலே முரு கன் பாலவடிவிலே தோன்றி ‘பொன்னம்மா நீ ஒரு மணி கேட்கிருய். இந்தா பிடி இந்தக் கொத்து மணியை" எனக் கூறிப் பல மணிகள் அடங்கிய ஒரு மணிக்கோவையை வழங்கின ராம், இக் கதை நம் ஊர்ப் பெருமக்கள் பலர் அறிந்தது. யாத்திரையால் திரும்பிய தம்பதியினருக்கு 1933ஆம் ஆண்டு ஒர் ஆண் மகவு பிறந்தது. கதிர்காமக் கந்தனின் பேரரு ளால் கிடைத்த ஆண் மகவு ஆகையினுல் அவ்வாண் மக வுக்குக் கதிர்காமநாதன் எனப் பெயரிட்டு மகிழ்வு கொண்ட னர் எம் பெற்றேர். இதன் பின் அடுத்து ஆறு ஆண் குழந் தைகள் பிறந்தனர். (தர்மபாலன், கோபாலபிள்ளை, விமலே ந்திரன், சோமநாதன், தியாகராசா, பாலசுந்தரம்) குறைவிலா மக்கட் பேற்றைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தார் எம் அன்னை,
கல்வி
கல்விக்கு எம்பெற்றேர் கொடுத்த முக்கியத்துவம் எழுத் தில் எழுதும் தரமன்று. இளமைக் காலத்தில் தம் தந்தையை இழந்தமையால் தான் கல்விகற்க முடியவில்லையே என்ற மன ஆதங்கத்தினலும் கல்வி உயிரினும் ஒம்பப்படும் என்ற கோட் பாட்டில் அசைவிலாப் பற்றுக் கொண்டிருந்த காரணத்தின லும் தம் குழந்தைகளுக்கு அசைவற்ற கல்விச் செல்வத்தை வழங்க வேண்டும் என்பதில் தம்பதியர் இருவரும் மிக ஆழ மான மனப் பாங்கைக் கொண்டிருந்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் எமது பெரிய தந்தையார் காலஞ் சென்ற திரு. நா. இளைய தம்பி அவர்களை நினைவு கூரல் சாலச் சிறந்தது. வேலணைத் தமிழ்ப் பெருங்குடி மக்களால் சட்டம் பியார் என மிகச் செல்லமாகவும் கெளரவமாகவும் அழைக் கப்பட்ட இப்பெரியார் இன்றும் உயிருடன் வாழும் வேலணைப் பண்டித பரம்பரைக்குக் குருவாக விளங்கியவர். இவரது அரவணைப்பும் சகோதரர் களுக்கிடையேயிருந்த ஒருமைப்பா டும் தங்கள் குழந்தைகளாகிய எமது கல்வி வளர்ச்சிக்கு மிக உந்துதலாக இருந்தன என்பது மறுக்கற் பாலதன்று.
இப் பின்னணியிலே எம் பெற்றேர் தமது முதல் மகளை 1936 ஆம் ஆண்டளவில் உடுவில் மகளிர் கல்லூரியில் சேர்த் துக் கல்வி கற்பித்தனர். அன்று தொடங்கிய இவர்களது கல் விப்பணி கடைசி மகனின் பல்கலைக் கழகப் படிப்பு முடியும் வரை தொடர்ந்தது (1970 வரை) முப்பத்து நான்கு ஆண்டு களாகப் பெரும் பொருளை எங்கள் கல்விக்காக அர்ப்பணித்

Page 22
- 6 ܚ
தீர்கள். கிராமத்தில் வாழ்ந்து நகர்ப்புறத்தை நாடாமல், ஆனல் எம் அனைவரையும் நகர்ப்புறப் பாரம்பரிய கலாசாலை களில் இட்டுக் கல்வி கற்பித்தமை நீங்கள் உலக இச்சைகளில் இருந்து அடங்கியிருந்தமையை உலகுக்கு உணர்த்தும், இத் தொண்டு கைங்கரியம். யாம் இப் பூமியில் உள்ள வரைநெஞ்சிருக்கும் வரை - நினைவிலிருக்கும்.
பொருள்
ஒரு குடும்பத்தின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் அடிப்படை யாக அமைவது தாயே என்பர் பெரியோர். இதேைலயே இல்லக்கிழத்தி எனத்தாயை அழைப்பர். பொருள் ஈட்டுதலில் முன்னணியில் நின்ற எம் தந்தைக்கு அதைப் பேணிக் காக் கும் அரும்பணியைச் செய்துள்ளார் எம் தாயார். இந்த அரும் பணி காரணமாக யாம் அடைந்த நன்மைகளோ பல. தந்தை அடிக்கடி கூறுவார், எழுதுவார். "டாம்பீக வாழ்வு தந்திடும் தாழ்வு" என இக்கோட்பாட்டுக்கு இலக்கணமாக வாழ்ந்தார் எம் தாய். ஒரு தனவந்தனுக்கு வாழ்க்கைப்பட்டும் எதுவித படாடோபமான வாழ்க்கையை வாழ்ந்ததும் இல்லை. வாழ நினைத்ததும் இல்லை. எளிமை, சிக்கனம், உள்ளத்திற் திருப்தி காணும் உயர்ந்த கோட்பாடு, இவை அவரிடம் யாம் படிக்க வேண்டிய பாடங்கள், சாதாரண பெண்களுக்கு இருக்கும் ஆசைகளில் எதனையும் கொண்டிருக்கவில்லை. இத்தகைய ஆசை களில் ஒன்றையாவது எமக்கு எம் தாயார் ஊட்டி வளர்த் ததும் இல்லை.
அவரது மரணத்தின் முன்பும் சரி, பின்பும் சரி எத்த கைய பொருளாதாரச் சிக்கலையும் எமக்குத் தந்ததில்லை. இத்த கைய நம் தாயார் விண்ணில் பரிபூரணனந்தத்தைப் பெற வேண்டும் என எல்லாம் வல்ல பரம் பொருளைத் தியானிக் கின்ருேம்.
சமயப்பணி
**கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என் பது முதுமொழி. இதற்கிணங்க எம் தாயார் கோயில் அயலி லேயே நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். அவரையும் அவரது குடும்பத்தாரையும் "கோயிற் புலத்தார்" என்றே அழைத்த னர். வேலணை கிழக்கு, பெருங்குளம் முத்துமாரி அம்பாள் கோவில் அயலில் வாழ்ந்து அக் கோவில் அம்பாளையே தம் குலதெய்வமாகக் கொண்டிருந்தார்கள். இக் கோவிலுக்கு எம் பெற்றேர் செய்த திருத்தொண்டுகள் பல. கோவிலை

- 7 -
விட்டுச் செல்லலாகாது என்ற காரணத்தினலேயே , அவர்கள் குழந்தைகளாகிய யாம் புலம் பெயர்ந்த போதிலும், அவர் கள் அக் கிராமத்தை விட்டு அகலாது இறுதிக்காலம் வரை யும் அங்கிருந்தார்கள். சிவன் வேறு சக்தி வேறு அல்ல என்ற கோட்பாட்டிற்கு அமைய எம் பெற்றேர் சிவ வணக்கத்தை உள்ளார்த்தமாகக் கொண்டிருந்தார்கள். நம் தந்தையின் உள்ளத்திலே குடி கொண்டிருந்த, முத்துமாரி அம்பாள் கோவி வில் நடராஜ விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர் இறந்ததன் பின் தனித்து நின்று நிறைவேற்றினர்கள் எம் தாய். இத் திருப்பணித் தொண்டா னது அம்பிகையின் அடியார்கள் மத்தியிலேயே என்றும் நிலைத் திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பல முறை சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானின் திருவருளைப் பெற்றிருந்தார்கள். இறுதிக் காலத்தில் "கோவி லைக் கைவிடாதீர்கள், கோவிலைக் கைவிடாதீர்கள்" என்று அடிக்கடி கூறிய கூற்றுக்கள் இன்றும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன; என்றும் ஒலிக்கும்.
அன்புத் தெய்வமே! அருமைத் தாயே!
பெற்றேரின் எண்ணங்களை, உணர்வுகளைத் தகுதி காண் நன் மக்கள் நிறைவேற்றுவர் என்பது சான்றேர் தீர்வு. இரு பதாம் நூற்றண்டின் பெரும் பகுதியினைத் தங்கள் வாழ் நாளாகக் கொண்டிருந்த தங்களிடம் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் பல. எந்தப் பல்கலைக் கழகமும் தந்திராத பல சிந்தனைகளை, வாழ்க்கைத் தத்துவங்களை, வாழ்வு முறைகளை எங்களுக்குக் கற்பித்துச் சென்றுள்ளீர்கள். இதற்கு அமைவாக எங்கள் எதிர்கால வாழ்வினை அமைத்துக் கொள்வதற்கு தங் கள் ஆத்மா என்றும் ஆசி வழங்க வேண்டும் என்பதே எங் கள் வேணவா. எமது வேணவாவினை வேண்டுகேளாக ஏற்று நிறைவேற்றுவீர்கள் என்று இதயபூர்வமாக நம்புகின்முேம்,
அம்மா தாங்கள் நடராஜ வடிவம் பற்றி அடிக்கடி கூறு வதற்கமையவே தங்களது ஆத்ம சாந்திக்காகவும் இதனைப் பற்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டிய நோக்கத்திற் காகவும் "நடராஜ வடிவம், தில்லை தரிசனம்" என்ற இந்நூ வினைத் தங்களின் நினைவுக் காணிக்கையாய் இன்று வெளியிடு கின்றேம் ஏற்றருள்க.
வணக்கம்
அன்பு மக்கள்.

Page 23
எங்கள் அன்புத் தாயாரின் மரணச் செய்தி யைக் கேட்டு நேரில் வந்தும், தந்திகள் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்ட நண் பர்களுக்கும் உறவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
எம் அன்னை நோய்வாய்ப்பட்டிருக்குங்கால் தங்களாலான சகல கைங்கரியங்களையும் புரிந்த ஆனைப்பந்தி தனியார் வைத்தியசாலையைச் சேர்ந்த சகல வைத்திய அதிகாரிகளுக்கும் தாதிமார்களுக்கும் சிறப்பாக பேராசிரியர் சிறீகரன் அவர்களுக்கும் எம் இதய நன்றி.
விபுலாநந்த அடிகள் தமிழ் கூறும் நல்லுலகத் தின் முதற்றமிழ் பேராசிரியர். அவர் தமிழுக்கும் தமிழிசைக்கும் செய்த தொண்டு அளப்பரியது. அவ ரது நூல் ஒன்றினை வெளியிடும் பாக்கியம் எமக்குக் கிட்டியதிற் பெரும் மகிழ்ச்சி அடைகின்ருேம்.
கடந்த 25 வருடங்களாக எமக்கு ஆசானுக, இலக்கியத் தோழனுக, நண்பனுக விளங்குபவர் திரு. க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள். குடும் பத் தலைவனக, கல்லூரி அதிபராக, ஆக்க இலக்கிய கர்த்தாவாக, ஆய்வாளனுக, பல்வேறு வகையில் மிளி ரும் சொக்கன் தன் பல்வேறு வகைப்பட்ட சிரமங் களின் மத்தியிலே இந்நூலின் பிரசுரத்திற்கு உதவி யமைக்கு மிக நன்றியுடையோம். அடுத்து நூற்பிரதி யைத் தந்து உதவிய திரு. மயிலங்கூடலூர் நடராசா அவர்கட்கும் நன்றி.
வணக்கம்
மக்கள்.
பூரீ காந்தா அச்சகம், யாழ்ப்பாணம்


Page 24