கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிஞ்சிக் குயில்கள்

Page 1


Page 2

தொகுப்பாசிரியர் அந்தனி ஜீவா
மலையக வெளியீட்டகம் த. பெ. இல. 32 கண்டி

Page 3
குறிஞ்சிக்குயில்கள்
(மலையக கவிதாமணிகளின் கவிதைகள்)
முதற் பதிப்பு
அட்டை எழுத்தமைப்பு ஓவியம்
வெளியீடு
KURINJI KUYLGAL
2002 LDTěF 08 (சர்வதேச பெண்கள் தின வெளியீடு)
எஸ். டி. சாமி தர்மசீலன்
எண் 21 மலையக வெளியீட்டகம் த. பெ. இல. 32, கண்டி.
(Hill Country Women Writers Poems)
First Edition
Published by
Printed By
08 March 2002 INTERNATIONAL WOMENSDAY
Anthony Jeeva Hill Country Publishing House
P. O. Box32, Kandy, Sri Lanka.
鲨
Rs... 50/-
Print-ExGraphics, 31/2, De Soyza Lane, Kandy. 074 477303
SBN 955-9084-09-7

பதிப்புரை
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வரும் பெலி படைப்பாளிகளின் பங்களிப்புகள் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை அதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஆக்கங்கள் அதிகமாக நூலுருவிம் பெறுவ இல்லை.
இந்த நிலையை தொடரக் கூடாது என்பதற்காக 2000ம் ஆண்டு சர்வதே பெண்களின் தினத்தில் பன்னிரண்டு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகை கொண்ட குறிஞ்சிமலர்கள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம்.
2001ம் ஆண்டில் அட்டனைச் சேர்ந்த திருமதி. சாந்தராஜின் கதைகளை தொகுத்து “சாந்தாராஜின் கதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டோம்.
2002ம் ஆண்டில் மலையக கவிதாமணிகளின் கவிதைகளைக் கொண் குறிஞ்சிக்குயில்கள் என்ற கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. இந்த தொகுதியி இருப்பத்தொரு பெண் கவிதாமணிகளின் கவிதைகள் இடம் பெறுகின்றன. இந் கவிதைகளில் யதார்த்த பூர்வமான மனவெளிபாடுகள் பதிவாகின்றன.
ஆண்டுதோறும் மலையக பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை கொண்ட ஒரு நூலையாவது வெளியிட வேண்டுமென்ற அவா எமக்குண்டு. எம பணிகள் தொடர உங்களது ஒத்துழைப்பு தேவை.
அந்தனி ஜீவா மலையக வெளியீட்டகம் கண்டி

Page 4
முன்னுரை
மலைமுரசு முதல் மலையக கலை இலக்கிய பேரவை வரை எமது இலக்கியப்பணி தொடர்கிறது. மலையகத்தின் எழுத்து முயற்சியை ஊக்குவித்து மலையக இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பேரவையின் செயற்பாடுகள் மூலம் இளம் தலை முறையினரின் எழுத்து முயற்சிகளுக்கு களம் அமைத்து கொடுத்துள்ளோம். இதற்காக மலையகத்தின் பல இடங்களிலும் பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளோம். அதன் மூலம் பல பெண் எழுத்தாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை நூலுருவில் கொண்டு வர வேண்டும் என்பது எமது அவாவாகும்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் கவிஞர்களின் கவிதைகளடங்கிய குறிஞ்சிக்குயில்கள் கவிதை தொகுப்பு வருகின்றது. அதனை வாழ்த்தி வரவேற்பது உங்களது கடமையாகும்.
எமது இலக்கிய முயற்சிகளுக்கு பேருதவியாக இருந்து வரும் முறி லங்கா சிகாமணி நாகலிங்கம் இரத்தினசபாபதி அவர்களின் துணைவியரான மனித நேயமிக்க பத்மாசனி அம்மாள் அவர்களுக்கு 'குறிஞ்சிக்குயில்கள் கவிதைத் தொகுதியை ஊனாய், உயிராய், உயிர்நாடியாய் எல்லாமும் தானாகி நிற்கும் தாயான அம்மையாருக்கு சமர்ப்பணம் செய்கிறோம்.
க. ப சிவம் ஸ்தாபகத் தலைவர் மலையக கலை இலக்கிய பேரவை கண்டி

συpίύυ αυτώ
பிண்ணில்
26.01.2001
言蒙
* ↔ * జ్ఞా * .8 آخرین
• ل. - * * کې
உருமதி பத்மாசனி இரத்தினசபாபதி
மறைந்தாய் மண்ணில் மடிந்தாய் எனினும் N
நிறைந்தாய் நெஞ்சில் நீ நிலைத்தாய்! . பிரிந்தாய் விண்ணில் பறந்தாய் எனினும் படிந்தாய் கண்ணில் நீர்முத் தாய்! இறந்தால் நானும் பிறந்தால் மீண்டும் இடந்தா! உந்தன் மடி மேலே! இருந்தால் உந்தன் மகனாயிருக்கும் வரந்தான் வேண்டும் புவிமேலே! )கவிஞர் வாலி - ܢܠ

Page 5

கண்டி
மாவலியே மாவலியே
மாவலியே மாவலியே!
மலைமகளின் தலைமகளே! பாவலரின் கவிதையெனப்
படர்பவளே ! பதில் தருவாய் !
மலைமகளின் புகழ்மகளே !
மனத்துளொரு சந்தேகம்
அலையுடுத்த எழிலரசி !
அருள்கூர்ந்தே பதில் தருவாய் !
நீ நடக்கும் பாதையிலே
நிறைந்திருக்கும் உயிர்களிடை
"தீயதிது, நன்றி” தெனத்
தேர்ந்தெடுத்தோ நீர் தருவாய்?
உன்மடியில் நீராட
ஓடிவரும் மனிதரிடையே
“என்னவர்கள், பிறர் "என நீ
இனம்பிரித்துப் பார்ப்பதுண்டோ?
தாகமென வருவோரில்
தண்ணீரைச் சிலரிடத்தும்
நாக நஞ்சைச் சிலரிடத்தும்
நல்கியே நீ மகிழ்வதுண்டோ?
உயர் மலையின் மடியினிலே
ஒயில் நடனம் புரிபவளே!
உயர்வு தாழ்வு கண்டுவக்கும்
உழுத்த குணம் உனக்கு முண்டோ?
உன் உறவில் சுகம் பெற்று
உழைத்த வாழும் மனிதரிடை என்னென்னவோ பேதமெல்லாம்
இடம் பெறுதல் ஏனம்மா? 05

Page 6
06
வளங்கள்பல தருபவளே!
வளரும் நாளை யுகமிங்கே
களங்கமிலா அன்புதனைக்
கரத்திலேந்தி வரவேண்டும்.
முத்துமாரி சுமந்தவளே!
முரண்பாடெல்லாம் அழிந்து
சித்தமெல்லாம் ஒன்றுட்டு
தேசம் வாழ வழிகாட்டு!
நறுஞ் சுனையில் ஊறிவரும்
நதிமகளே ! துவேஷமெனும்
வெறுஞ் சிரங்குப் புண்மாற
வேண்டி நாட்டை நீராட்டு.
★ ★ ★
தெ. மீனாம்பிக்கை
என்று தணியும்
தேயிலைச் செடிகள் மலையகத்தை அடையாளமிடும் மக்கள் வாழ்க்கையோ வறுமையில் வட்டமிடும்
வாக்குரிமை எமக்கிருக்கு வாழ்விடம் கேள்விக்குறியாய் பேருக்காய் வேலைப்புண்டு பெறுமதியற்ற ஊதியமாய் என்று தணியும் இவ்வறுமை எவரால் உயரும் எம்வாழ்வு

மாவனல்லை
ஊமைக் குயில்கள்.?
மலையக மங்கையரே நானும் ஓர் உண்மைதனை உணர்த்த வந்தேன் கேளிரே!
உரிமைகள் இல்லை உதவிகள் இல்லை - என நாளும் நவின்று கொண்டிருக்கின்றீர்களே உங்களுக்கு மட்டுமா உரிமைகள் இல்லை எங்களுக்கும் தான்!
நகர வாழ்கை
எனும் பெயரில்
நரக வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாமும் புரிகிறதா உங்களுக்கு
நீங்கள்
கோரிக்கைகளை விடுத்து கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறீர் - நாட்டுக்குள்ளே.
நாங்கள்
குரல் கொடுக்க முடியாது அடக்கு முறைக்குட்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வீட்டுக்குள்ளே.
இங்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்கையிலும் பார்க்க சிறை வாழ்க்கை
O7

Page 7
08
சிறந்ததென்பேன் நான்.
இனியும் முடியாது - இந்த இருண்ட வாழ்க்கையோடு இதயம் காண்பதற்கு.
தோழிகளே நிமிர்ந்து நடை போடுங்கள். அழகாகப் பிறப்புதொன்றும் பூக்களின் குற்றமல்லவே. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் - என்று எதிர்க் கேள்வி கேளுங்கள்.
சாகடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் நம் உணர்வுகளுக்கு உயிர் கொடுங்கள்.
தடைகளை தகர்த்திடுங்கள். நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமே உள்ளே காயம் 6616s(8u J d'ITuild இனியும் வேண்டாமே இந்த நிலை.
கண்மணிகளே கண் திறங்கள் எங்களுக்கும் ஒரு தினம் மங்கையர் தினம் மனமுவந்து வரவேற்போம்.
ஊமைக் குயில்களும் கூவுகின்ற காலமிது பின்வாங்கும் முயற்சிகளை விடுத்து முன் நோக்கி தன்னம்பிக்கையோடு தடம் பதியுங்கள்.
f5& guild
வெற்றி பெறுவீர்கள்.

மாத்தளை பால ரஞ்சனி சர்மா
ராஜ பிரகடனம்
மலைத்தாயின் மணிவயிற்றிலுதித்த மலையகப் பெட்டங்களே! தேயிலைக் கொழுந்துகள் தான் உங்கள் தேசிய சின்னங்கள் எனினும் சர்வ தேசிய இலச்சினையே நீங்கள் தான் என்பதை உணர்விரா? நாட்டின் சீதன வரம்பை நயமாய் உற்பத்திக்கும் நம் தேச பொருளாதார வரைபுகளே..! இன்றைய உங்கள் “லயன்கள்” அன்றைய யேசு ஜனித்த மாட்டுக் கொட்டகை தான் ! ஆனால்,
இன்றைய உங்கள் வியர்வைத் துகள்கள் நாளைய நாட்டின் உல்லாச புரியின்
உச்ச மேடுகளல்லவா? 硫 亂 மரணித்தும் மீண்டும் ஜனிக்கும்
யேசுக்கள் நீங்கள், சிரசில் தங்குவது முள் கிரீடம் அல்ல. பொருளாதார ராஜ கிரீடம். வாழ்விற்கு உழைப்பென்று
09

Page 8
10
வரைவிலக்கணம் படைத்த மகாத்மாக்களே..! தனம் உங்களிடம் இல்லைத் தான். ஆனால் மனம் தான் உங்களிடம் மலிந்து கிடக்கிறதே! வராலாற்றேட்டில் - தம் வாழ்வைப் பொறித்த மகாத்மாக்கள்ளல்ல நீங்கள்! வாழ்க்கையில் ஓர் வராலாற்றைப் பதித்த காவிய புருஷர்கள்.! பேதைமை போர்வை களைந்து போராடும் மனவல்லமை போர்த்திக் கொண்ட நவீனயுக பாண்டவர்கள். உயிர்கட்கு உயிர் படைக்கும் பிரம்மாகள்.! காலங்கள் உங்களை காலடியில் போட்டு கசக்கிப் பிழிந்திடினும் மரணித்திலும் தூர்களுக்கு உயிர்த்தரும் ஜீவாத்மாக்கள்.! பாட்டாளி வர்க்கத்தின் பரம்பரைக் கதிர்களே.! உங்களுக்காய் நீண்டுவிட்ட சந்தோஷப் பாதையில் ஒளி விடியல் உதயமாகிறது.! ஆஸ்த்தான் பீடம் அமர்ந்த நம் நாட்டு மன்னர்கனே! என்றென்றும் ஒற்றுமையே உங்கள் உணர்வாகட்டும்.!

சமாதானமே உங்கள் மொழியாகட்டும்.! மற்றய உயிர்களே - உங்கள் சுவாஸமாகட்டும். ஒளிவிடியில் தரும் ஆதவ தேவன் முன் நீங்கள் முழங்கப் போகும் பிரகடன வேதங்கள் இவைதானே தோழர்களே..?!
★ 女 ★
யோகேஸ்வரி கிருஷ்ணன்
சமனற்ற சட்டங்கள்
பெண்ணாக பிறந்தால்
அடிமை m ஆணாக பிறந்தால் அதிகாரம் பொய்யான சட்டம் என்றும் ஆனை உயர்த்தியே வைக்கும் பெண்ணை தாழ்த்தியே கூறும் சட்டங்களை இயற்றியது ஆண்களே அதனால் சட்டங்கள் சார்பானது ஆணினத்துக்கே சமனற்ற சட்டத்தை கிழித்தெறிந்தால் விடியலன்றோ பெண்ணினத்துக்கு
11

Page 9
12
புசல்லாவ இஸ்மாலிஹா
அஞ்சலை செல்கிறாள்
அஞ்சலை செல்கிறாள்
அதிதூரம் ஓமானுக்கு
பஞ்சம் தீர்ப்பதற்குப்
பாவமவள் துணிந்திட்டாள்
இத்தனைநாள் இலைக்கிள்ளி
உடம்பெல்லாம் தேய்வடைய
சொத்தான மலையகத்தில்
சுகமின்றி இருந்தவள்தான்
மேட்டுலயம் பள்ளலயம்
முற்றல்இலை மட்டக்கொழுந்து
காட்டுவாகை கரிச்சான்குஞ்சு
கண்டிருப்பாள் கேட்டிருப்பாள்
நகர்புறமும் சில நாட்கள்
நகைவாங்க துணிவாங்க
பகட்டாகப் படம் பார்க்கப்
பலநாட்கள் சென்றிருப்பாள்
என்றாலும் பஸ்போட்டை
பார்த்துச்சொல்ல அறியாதாள்
தன்நாவில் சிங்களமோ
சிக்கித்தானும் கூறாமல்
எந்நாளும் உலகமதில்
உள்ளதொன்றும் அறியாது
தன்னாலே சிருஷ்டித்த
தனியுலகில் வாழ்ந்திருந்தாள்
எட்டவுள்ள சவுக்குமலை
இவள் மாமன் ஊரதனால்
சிற்றாடை வயதிலவள்
சென்றுவந்த நினைவுண்டு

மூக்கமலை, மல்லிகைப்பூ
நல்லதண்ணி ஊரெல்லாம்
பார்க்கவேண்டும் என்றுமட்டும்
பலநாட்கள் கூறிடுவாள்
கையெழுத்தை அறியாது
கைநாட்டு வைக்குமவள்
மெய்யாக ஓமானுக்கு
பணிப்பெண்ணாய்ப் போகின்றாள்
மலைநாட்டு பெண்களெல்லாம்
மக்ககென்று கூறுபவர் தலைநிமிர்ந்து செல்லுமிவள்
தைரியத்தை என்னென்பீர்
பட்டணத்தைப் பார்த்தறியா
பாவையெலாம் பாஸ்போட்டால் எட்டசென்று தொழில்பார்க்கும்
இனிமையைத்தான் என்னென்பீர்
அடிமையென்ற முத்திரையால் இங்கல்ல அங்கும் சென்று
விடிவின்றிகிடக்குஞ் செயல் எண்ணினால் துயர்தானே
★ ★ ★
கெங்கல்லை எஸ். அமராவதி
திருமணம்
ராமனைத் தேடிய
சீதைகள் தான்
நாங்கள் அன்று
ராவணனவாது
கிடைக்கமாட்டானா
என ஏங்கும்
பேதைகள் தான்
நாங்கள் இன்று! 13

Page 10
14.
வட்டகொடை அகன்ஸ் சவரிமுத்து
பகல் வேண்டாம் பகலவனே (துயர் நிறைந்த ஒரு மலையகத் தாயின் ஆதங்கம்)
சந்திரரே சந்திரரே! சர்வலோக தேவர்களே! எந்தன் துயரைக்கொஞ்சம் நின்றுதான் கேளிரே!
காலை முதல் மாலைவரை கஷடப்பட் டுழைக்கின்றேன். கவலைக்கு முடியவில்லை
கஷ்டத்திற்கு விடிவுமில்லை.
வைகறையில் துயிலெழுந்து வீட்டுவேலை தனைமுடித்து மலையேறித் தினம்யானும் LDT LTu sod 60opēšaấ6ör3gp6ör
தலையிலே கூடைச்சுமை வயிற்றிலே பிள்ளைச்சுமை தலைவிதி மாறாது தவிக்கின்றேன் பாரீர்!
கணக்கப்பிள்ளை கங்காணி துரையவரும் துணையாளும் கணப்பொழுது பிசகிடினும் கண்டபடி வைத்திடுவார்.
அஞ்சி பிறந்தவுடன் அஞ்சினேன் பிள்ளைபெற கொஞ்சமும் இரக்கமின்றி கொடுமை செயு மென்கணவர்
நீதிகேட்க யாருமில்லை நிர்க்கதியாய் நிற்கின்றேன்.
 

ஒதிய மந்திரமும் ஒருபயனைக் கொடுக்கவில்லை
கண்ணிரே பரிசாக கண்டபல னல்லாது மண்ணியே யான்பிறந்து மாய்கின்றே னதாலே
பகல்வேண்டாம் பகலவனே (இ) ராவேண்டாம் சந்திரனே துகல்துகலாய் ஆக்கிடுவீர் துயர்மிகுந்த யிவ்வுலகை
★ ★ ★
மணிமேகலாதேவி செல்வத்துரை
இனவாதம்
போதிசத்வர் போதனைகள் புதைக்கப்பட்ட காரணமென்ன? புத்தன் வழி வந்தவர்கள் போர்க்கோலம் பூண்டதென்ன?
சாஸ்திரங்கள் கற்றுத் தேர்ந்த சாதுக்கள் சர்ப்பங்களானதென்ன? காலத்தில் தேவை கொண்டு காவிகள் காக்கி சட்டையான தென்ன?
சமாதானப் புறா எங்கே? சவம் தேடும் கழுகுகள் பறப்பதென்ன? சாதனைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் நேரம் வேதனைகளுக்கு வித்திட்டு செல்வதென்ன?
இத்தனைக்கும் விடை என்ன? இனவாதம் என்பதுவா?
15

Page 11
酸翔
16
360p புவனேஸ்வரி பன்னீர் செல்வம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
மலையகத்தை
பிரமன் மறுபடியும் படைக்க வேண்டும் இங்கு உடல்கள் மாய்வதற்கு முன் உணர்வுகள் மாய்ந்து மண்ணாகி விடுகின்றன எனவே
மறுசீரமைத்து மலையகத்தை மறுபடியும் படைக்க வேண்டும்
இருபத்தியொரம் நூற்றாண்டில் அழுககு லயங்கள கூரையால் கண்ணிர் வடிக்கும் கோடி கோடியாக இலாபங்கள் இவர்களால் குவிக்கப்படுகையில் தாகங்களுக்கு தண்ணிராக கண்ணிர் மட்டுமே
மதுவும் பல நேரம் தாய்பாலுடனேயே தாலாட்டப்படுகின்றது இதனால் ஈரல் கருகிய மரண உர்வலங்கள் மனதை தொடுகின்றன.
இந்நாட்டுப் பொருளாதாரம் கூடையில் இருந்துமென்ன வயிற்றில் தீப்பசி கொடுத்து விட்டெரிகிறது

நாடு செழிக்க பூமியை புரட்டும் கைகள் ஓர் நாள் தன்னாடை கட்டவும் முடியாது தளர்வடைகின்றது.
பொருளாதார பூதம் நிரந்தர விருந்தாளி மதுவுக்கு அடுத்ததான மரணங்களின் கணக்கெடுப்பை பசியும் பட்டினியும் இங்கு நிர்ணயிக்கின்றன.
கல்வி சத்தானதுதான் ஆனால் பசியிருக்கும் போது பத்தில் ஒன்றாக பறந்து விடுகின்றது.
தலைமைகளுக்கு இவர்கள் உயிர்சத்துக்களாவதால் சாக்கடைகளும் சந்தணமாக மணக்கின்றன ஆனால்
சக்கையாகும் இவர்கள் மட்டும் வயிற்றுக்கே உழைத்தும்
பசியுடனே வாழ்கின்றார்கள்.
17

Page 12
18
லுணுகலை றளினா புஹார்
இவளுக்கும் மலரட்டும் புத்தாண்டு
சீதளக்காற்று வந்து சிலிர்த்திடும் வரையில் மோதியப்போது ஆதவனங்கு வந்தெம் அணங்கிளை எட்டிப்பார்ப்பான் பூம்பாளம் பாடியந்த புள்ளினம் விழிக்குமுன்னே புலர்ந்திடா பொழுதிலங்கு - பாரதி புதுமைப்பெண் எழுந்து வந்தாள்!
சாயத்தை ஊற்றியென்றும் சர்க்கரையில்லாத் தேநீர் - கிழிந்த பாயினில் படுத்துறங்கும் பதியவனருகே வைத்தாள் மாவினைப் பிசைந்தெடுத்து மக்களுக்கும் ரொட்டிசுட்டு மாமிக்கு முகம் கழுவியவள் மருந்தையும் தந்துவிட்டு
கூடையை தலைசுமந்து குளிரினை எண்ணிடாதந்த காரிகை நடக்கும்போது கதிரவன் அழுதே விட்டான் நாளினும் இதுவோ வாழ்க்கை.? நல்லநாள் எப்போ தோன்றும்? கேள்வியை கேட்டுக்கொண்டே - பரிதி கீழ்த்திசை இருந்து வந்தான்!
விடியல்கள் வந்ததுண்டு - ஆனால் வெளிச்சங்கள் எப்போ தோன்றும். மிடியினை போக்குவதற்கே - தையல் மடியினில் குழவி கொண்டு பிள்ளை மடுவத்தில் சேர்ந்துவிட்டே படிதனில் ஏறியேறி, தேயிலை

பர்வதம் தன்னைச் சேர்ந்து கொழுந்தினை கிள்ளிச் சோர்வாள்
முற்றிலை எடுத்தாயென்று கொழுந்து கங்காணியுமங்கு பற்றுவாள் சட்டென கரங்களையே பதறுவாள் பத்தினி உடலம் வேர்க்க கற்றிட்ட மனிதர் கூட காமத்தை பற்றுதல், உரசுதல், கிள்ளனென காட்டிட மலைமங்கையங்கு மனதில் அழுதுகொண்டு தலைவிதியெண்ணி தரையத்தைப் பார்த்து நிற்பாள்!
குடியினில் குடும்பத்தலைவனவன் அடியினால் அவளின் வாதை முடிவின்றி நாளும் பாவைக்கு தொடர்வதே வாழ்க்கையாகும். அடித்திடும் தலைவனையும் ஆரணங்கு அன்புடன் அரவணைத்தே வாழ்வான் படித்திடா பாரதிக்கென்றும் பாசங்கள் மட்டும் தெரியும். இருக்கின்ற நாளிலெல்லாம் இப்பெண் இன்பத்தைக் கண்டதில்லை - பூவை வறுக்கின்ற வெயிலில் கூட வறுமையால் உழைத்து தேய்வாள் பிறக்கின்ற புத்தாண்டிலேனும் பேதைக்கு பெருவாழ்வு கிட்ட வேண்டும் இருக்கின்ற வரையிலென்றும் தாய்மைக்கு இன்பங்கள் பொங்க வேண்டும்,
19

Page 13
20
கம்பளை த. சிவமலர்
குவளை விழிக் குற்றாலம்
பெண் என்னும் இயந்திரம் பெறவில்லை இன்னும் சதத்திரம்
ஆறாத ரணங்கள் ஆரணங்கு மனங்களில் ஆதிமுதல் ஆள்பவர் ஆண்கள்
மலை முகடுகளில் மங்கையர் கால் தடங்கள் தோள்களில் கொழுந்து கூடையின் தோழமையான வடுக்கள் பொழுதுகள் பல புலர்ந்தாலும் பொன்னியின் வாழ்வு மட்டும் பொல்லாத இருளில். ஏனோ? பொசுங்கிப் போனது. அர்த்தராத்திரியின் அல்லல்கள் அவனியில் மாறாதோ?.ஒ.
பெண் என்னும் இயந்திரம் பெறவில்லை இன்னும் சுதந்திரம்
குயிலினங்களின் கூவலில் குவலயம் விடிந்தது மங்கை அவள் மனம் LDL(6LÖ
மீளாத்துயிலில் பெண் மனது மென்மையாம் பூவினது தன்மையாம் பொட்டு வைத்த ஒரு வட்டநிலை புலம்பல் கவிஞர்களால் போராடுகின்றன ஒரு நூற்றாண்டுக் கவிதைகள்!

எழுச்சியுடன் விரைந்து எழுந்திரு பெண்ணே! தளிர் பறித்த கரங்கள் தலை நிமிரட்டும்! குவளை விழிகளின் குற்றாலம் குறுகட்டும்!
★ ★ ★
சின்னசாமி சுபத்திராதேவி
எங்கே சமாதானம்
துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில்
நாம் கிள்ளி விடப்பட்டிருக்கிறோம்
அறிவை சொல்லி விளையாடும் பருவத்தில் அமைதியை தேடி அலைகின்றோம்.
குயிலோசை கேட்கும் காலத்தில் குண்டோசை கேட்கின்றோம்
கவியோட்சை கேட்கும் காலத்தில்
கண்ணிவெடி யோசை கேட்கின்றோம்.
சோலைகளை தேடி நாடியபோது
பாலைகளே எங்களுக்கு பரிசாய் கிடைத்தது.
அப்போது வரண்டு போனது பூமி மட்டும் அல்ல
எங்கள் புன்னகையும் தான்
இரண்டு போனது தேசம் மட்டுமல்ல
எங்கள் இதயங்களும் தான்
புரண்டு போனது மலைகள் மட்டுமல்ல
எங்கள் மனங்களும் தான்
சமாதானமே நீ எங்கே
சீக்கிரமே வா நீ இங்கே இருண்ட பூமியின் மேல்
உதயம் தர சமாதானமே நீ வா
இன்பத்தை எங்களுக்குத் தா! 21

Page 14
22
6L6.606
ஆ. புனிதகலா
எழுந்து வா பென்னே
சிட்டுக்கு சிறகெதற்கு? சிறகடித்துப் பறப்பதற்கு கட்டழகு உனக்கெதற்கு? கண்கள் பார்த்து இரசிப்பதற்கா?
அழகுப் பதுமையென ஆயிரம் பேர் இரசித்தாலும் அறிவுச் செல்வமென அடைமொழிகள் தந்தாலும் அவனியிலே உனக்கேதடி முதன்மை?
ugGDD. . . .
என்றும் பதுமைதான் புதுமை செய்ய என்னினாயோ பலர் பார்வையில் நீ சிறுமைதான்
அன்பில் நெகிழ்வதுதான் பெண்மை - ஆனால் வன்முறை ஒழிப்பதும் தான் Qué060D. . . .
தியாகம் என்று
உன்
உணர்வுகளை தியாகம் செய்யாதே பழமையின் காலடியில் பலவீனமாய் விழாதே."
உலகம் முணுமுணுக்கட்டும் ஒன்று திரண்டால் பெண்ணே!

முணுமுணுப்பு வாழ்த்தாகும்.
உடைத்தெறி பெண்ணே உதவாத கட்டுக்களை
அப்போது
உலகம் வரவேற்கும் உன் உன்னதமான சேவைகளை
புது யுகம் படைப்போம் பெண்னே
61 (upbgs 61st
உக்குவளை
பஸ்மினா அன்ஸார்
அன்னை
உதிரத்தை உரமாக்கி உதரத்தில் என்னைச் சுமந்த பெருமைக்குரியவளவள் நான் தத்தித்தவழும் பருவமுதல் அவள் தத்தித்தடுமாறும் முதுமை வரை எனக்கினிய ஆசான் அவளேதான் நோயென நான் விழுந்திட்டால் சிறந்ததாதியும் அவளேதான் எனக்கென பணி செய்யும் உத்தமி யவள் என் உயிரைச்சுமந்த பத்தினியவள்
23

Page 15
క్స్టి
தலாவக்கலை சி. சாரதாம்பாள்
விடியலுக்காய் காத்திருந்த அன்று
சுய பச்சாதாபங்களில் எங்கள் யெளவனங்கள் நகர முடியா ஒட்டுக்ககுள் மெளனித்திருந்த போது திடீரென. துருப்பட்ட கதவுகளும் கிறீச்சிட்டன எங்கள் இறைச்சி பேரினவாதத்தின் நாய்களுக்கே என்று,
விடியலை நோக்கி அமானுஷ்யமான ஒலி எலுப்ப முனைகின்ற அன்றே - அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களை குதறி பதம் பார்க்க முடியாமல் - எங்கள் ஞானேந்திரியங்கள் சிதறி சிவப்புச் சக்தியில் பிசிறிப் படர்ந்தன.
சிதிலடைந்த விலா எலும்புகளை பண்டிகை பட்சணமாய் பச்சையாகத் தின்று தீரத்தவர்களின் முன் எஞ்சியதையும் சுட்டுத தின்பதற்கு வாயூறி மண்டியிட்டு கிடக்கிறது எங்கள் தலைமைகள்

கொட்டகலை மா சந்திரலேகா
மனுசி
சுதந்திரமும் வேண்டாம் விடுதலையும் வேண்டாம் சிறகுகளும் தேவையில்லை சித்திரத்தில் எமையெழுதி முத்தமிட தேவையில்லை இருக்கிறபடியே இப்படியே என்னை இருக்கவிடுங்கள்.
உனக்கேற்றபடி துணிதுவைக்க, சோறாக்க, வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, அல்ல நான்.
உனக்காக நான் கொஞசம் கொஞ்சமாய் என்னை மாற்றிக் கொள்ள வேண்டுமாம்! ஏன் . அப்படி? நாகரிகம் உள்ளபடியே நான் இருந்துவிட்டுப் போகிறேன் உனக்கு அது தடையானால், எனக்கும் என் வளர்ச்சியில் முன்னேற்றத்தில் நீ முட்டுக்கட்டைதான்!
அழகு ராணி போட்டியும் துண்டு துண்டு துணிகளோடு உணர்வில்லாமல் மரச்சவங்கள் கைத்தட்டல்கள்.
(985. . . . . . . . . . . ஒஹோ . பிரமிப்புகள்!! அத்தனை கேவலமாய் உலக சந்தையில் விலைபோக அவளென்ன பொம்மையா?
தடித்த தோள்கள்
25

Page 16
26
கம்பளி போன்ற தேகம் இறுகிப்போன இரும்புப்பிடி இதை உன்னோடு வைத்துக் கொள் இருக்கிற படியே மென்மலராய் நான் இருந்து விட்டுப் போகிறேன்
சிட்னியில் விளையாட்டு விழா இன்னொரு பக்கமும் கோலாகல. விளையாட்டு விழா. கொஞ்சம் கொஞ்சமாய் உரித்தெடுக்கப்பட்ட வெள்ளைக் கோழிகள் ஆணுறைகள் அமுக்கி ஆளுமை செய்த களியாட்ட கண்காட்சி. அவள்தான் கட்சிப் பொருளா?
ஆதரவு தருகிறாயா..? எனக்கெதற்கு வேண்டாம். வேண்டாம்.
சமூகத்துப் பூஞ்சோலையில் மரமாயிருக்க எனக்கும் ஆசைதான் கொழுகொம்பாய் மட்டுமல்ல!
சட்டையை இறுக்கிக் கொண்டு மரக்கையால் காயப்படுத்தினாயே. அந்தத் தழும்புகள் கேட்கின்றன! நீயும் கொஞ்சம் ஆதிக்கத்தால் அமுக்கமாட்டாயா? என்று சீ வேண்டாமென்கின்றேன் என் சிந்தனைகள், என் செயல்கள், என் நினைவுகள், என் உத்திகள், என் கனவுகள், என் நிஜங்கள், என்னுடைய நான், இதமான மென்மை என் கோபம் என் பலம். எல்லாமே இப்படி. Gul இருந்தபடியே இருக்கட்டும்.
ஏழு என்ற பொழுது எழவும் இரு என்ற கணத்தில் இருக்கவும்
5G606õ60 DmT? இல்லை மனுவி.

அக்கரபத்தனை விஜிதாநவமணி
மானுடம்
எ மானுடமே. உன்னை எங்குமே காண முடியவில்லையே நீ மறைந்திருப்பதால் எத்தனை துன்பங்கள் தெரியுமா..?
மண வாழ்வில்லாது வயது போகும் பெண்களுக்கு சீதனம் ஒரு கொடுமையாக இருக்கிறதே! இதைப் பார்த்து நீ மெளனமாவதன் அர்த்தமென்ன?
உன் மெளனத்தால் இன்னும் எத்தனை நீட்டா, கிருஷாந்தி கோணேஸ்வரிகளை நாசமாக்க உடன்படுகின்றாய்...!
பணமும் பதவியும் உயர உயர செல்வதால் மனமும் கருணையும் பாதாளம் நோக்கி செல்வதை வேடிக்கை பார்க்கிறாயோ?
இதனால் தான் உன்னை காண விரும்பினால் நீதி தேவதை தன் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொள்கிறாளோ?
27

Page 17
28
கொட்டகலை
விஜயபாரதி
பொறுத்தது போதும் பெண்ணே
மல்லிகையின் மணங்களுக்கும் உவமைகளாய் அன்று உருவகித்த பெண்ணினங்கள் சுடர் விளக்காய் இல்லாமல் சுட்டெறிக்கப்படுகிறது.
கொட்டும் மழையிலும் கொடிய குளிரினிலும் வரண்ட வெயிலினிலும் வஞ்சியர் கூட்டங்கள் கொங்காணி அணிந்து நிதம் கூடை தூக்கி அலைகிறது. மாதர் நிலையிங்கு மழுவற்று போகின்றது மாண்புற்று பெண்ணினங்கள் மறைக்கப்படுகிறது காலணா துட்டு கொண்டு காலம் உருள்கிறது
ஆங்காங்கே லயமதனில் அரைக்காம்பரா வீட்டதனில் குப்பி விளக்குடனே குடும்பம் நடக்கிறது குடியும் குடித்தனமும் கூடி வாழ்கிறது. இல்லறப் போராட்டங்கள் செல்லரித்த உங்கள் செங்குரல்கள் ஒப்பாரி ஒலங்கள் ஒட்டு மொத்தமாய் அடுப்பங் கரைகளிலே அடுக்கிய விறகுகளாய் எத்தனை நாட்கள் ஏங்கி அழுவீர்கள் இறக்கமில்லா ஈனர்களின்
 

இல் வாழ்வில் இறங்கிடுவீர் விடுதலைக்காய் இருளுகளில் மீண்டிடுவீர்.
★ 女 女
அட்டன் ஜே. பாலரஞ்சனி
GIIDTDTGS•••••
பெண்ணே. இளம் பெண்ணே. அவனன் நிலா பார்த்து ஏங்காதே.
விடியலுக்காய் காத்திருந்து இருள்தியில் வீழ்ந்து நீயும்
சுருங்காதே.
சூரியனின்
ஒளி பகட்டை கொண்டுவந்து கண்ணடிக்கும் வஞ்சகனை நம்பி நீயும் மயங்காதே.
களங்கம் கொண்ட வஞ்சகனை நம்பி நீயும் களங்கம் கொண்டு கடுகப்பார்வை வீச்சுக்களால் திநாக்குப் பேச்சுக்களால் கருகி நீயும் வாடாதே. பள்ளம் மட்டும் உரிமையாகி நிதமும் தேய்ந்து கண்ணிரைச் சிந்த
நீயும்
ஏமாறாதே.
క్స్టి
29

Page 18
30
பண்டாரவளை சாந்தி மோகன்
கூடைக்கு வெளியே.
கூடைக்குள் உலகம் படைத்து கூட்டாக வாழுமெங்கள் தோட்டத்து மாதருக்குக் காதோரம் சொல்ல வந்தேன் இரகசியமாய் கேட்க வந்தேன்
கூடைக்கு வெளியே சற்று எட்டித்தான் பாருங்களேன்.
சாரதி என்ன பைலட் என்ன நாட்டுக்கு நாடு ஜனாதிபதியென்ன வைத்தியம் என்ன வியாபாரம் வரைக்கும் பெண்களின் ஆட்சியம்மா - உலகமே பெண்களின் இராச்சியம்
ஆனால்,
எத்தனை பெண்கள் - எம்மில் இன்று
எம்மையே ஆளுகிறார் - உயர் பதவியை நாடியுள்ளார் - சற்றே சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். நினைத்திட்டால் பெண்கள் முடித்திடல் இலகு, இன்றே முடிவெடுங்கள் - அதற்காய்,
கூடைக்கு வெளியே சற்று எட்டித்தான் பாருங்களேன்.
நாட்டின் கோட்டையெல்லாம் நிமிர்த்தி வரும் தேயிலையால் நாமுயர வழியில்லை . பரவாயில்லை ஆனால், எம்மனக் கோட்டை கூட உயரலையே
லயங்களில் தூங்கிடும்

குதிரையாய் வாழ்ந்து - நாம் துயரினைச் சுமந்தது போதும், மனிதராய் வாழ்ந்திட தனித்து முன்னேறிட தைரியம் பிறந்திடனும்
அடித்து விழுத்திய உள்ளக் குமுறல்கள் எகிறிக் குதித்திடனும் - அதில் நியாயங்கள் பிறந்திடனும் இருட்டினில் மறைந்திடும் உண்மைகள் விரைவில் வெளிச்சம் கண்டிடனும் - எம் பெண்களின் திறமைகள் வெளிப்படனும்.
அதனால், கூடைக்கு வெளியே சுற்று எட்டித்தான் பாருங்களேன்.
அடிமைகள் என்ற போர்வையிலிருந்து எழுந்து நடந்திடனும் - பெண்ணின் குடியைக் கெடுத்திடும் குடியை ஒழித்திட கோதையர் குரல் தரனும் நெஞ்சினில் நேர்மை இருக்க நாம் ஏன் பயந்து நடுங்கிடனும் - யாருக்காய் ஒளித்து ஒடுங்கிடனும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் துணிந்து நடந்திடனும் - எம் மண்ணில் தனித்து வலம் வரனும் - நம் சுவடுகள்
பதித்திடனும்
கூடைக்கு வெளியே சற்று எட்டித்தான் பாருங்களேன்
31

Page 19
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு.
2000 - ம் ஆண்டில். குறிஞ்சி மலர்கள்
மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள்
2001 - ம் ஆண்டில். சாந்தாராஜ் சிறுகதைகள்
2002 - ம் ஆண்டில். குறிஞ்சிக்குயில்கள் (கவிதைகள்)
வெளியீடு
மலையக வெளியீட்டகம் த.பெ. 32, கண்டி


Page 20
மல்பகத்தின் முதல் பேண்மணி
திருமதி
"சட்டமிருக்குது ஏட்டிலே நம்முள் சக்தியிருப்பது கூட்டிே பட்டமிருக்கு வஞ்ச் வெள்ளைப் பவ உருகுது நேரு வேலையிருக்குது நாட்டிலே உங்கள் வினையிருக்குது விட்டி
என்று மீனாட்சி அம்மாள் பாடிய சட்டக் கும்மி"யில் மெய்மறக்காதவர் யா
இலங்கைத் திருநாட்டில் பெண்மணிகளில் ஒருவர் திருமதி மீனாட் மரபகத்தின் மு தொழிற்சங்க தோற்றுவித்தவரும் 6. Հիրել են եւ
திரிகையாளருமா 邸品1。 துணைவியாவார். திருமதி மீனாட்சி அ கருடன் இந்து தொழிற்சங்க சமுதாயப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈ
திருமதி மீனாட்சி அம்மையார் பாடு அல்ல, பாடல்கள் எழுதுவதிலும் வ எழுதிய பாடல் தொகுப்பு இந்தியர்க வாழ்க்கை பின் நிலைமை என்ற தன் வெளிவந்துள்ளது
"இலங்கையில் இந்தியர்களுக்கு இழைக்கபடுமானால் அந்த அநீதிக் டோடும் போராளிகளின் முன் வரி
T L TL HL TT LaaaL L LLLLLS LLLS எம். பெரோ குறிப்பிட்டுள்ளார்.
மலையகப் பெண்மணிகளின் முன் திகழ்ந்த மீனாட்சி அம்மாளை சர்ேே தினமான மார்ச் 8 ஆம் திகதியில் I
நினைவுகூற வேண்டியது கட்டாய கடமை
அந்தனி ஜீனா நூல் "மனதை ITக்கள்
Tī lsīlī
 

சத்திலே
| Lill IT. TIGATI ELIGJILI ன்ே மூத்த :Lago LIII Li | Tŭ ம்மாள் தனது பத்திரிகை பட்டுள்ளார்.
தில் மாத்திரம் வர். இவர்
து இலங்கை էլ լիդի | Վյեն
அநீதிகள் கு எதிராகப் திருமதி ToTag') − '',
னோடியாகவும் + []] lệ?IRậỉI DiTiiiTiT