கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாரி

Page 1
__
அம
EGIT றி மகா மாரியம் ஆலய கும்பாவிே
 


Page 2

மாரி
அமிர்தகழி, புண்ணைச்சோலை முறிநீ மகா மாரியம்மன்
ஆலய புனராவர்த்தன புனருத்தாரண மகா கும்ITபிஷேக சிறுப்பு மலர்
23.03.2OO7
懿
காப்பு
மகாமாரித்தாய் மாதுமையம்மன் மகேஸ்வரனுடனிணைந்து வானகமேகி வையகம் தந்த காரானைமுகத்தோன் கணபதியே இந்நூலின் காப்பு

Page 3
நூல் :ー
விடயம் سے
ஆசிரியர் :-
முதற்பதிப்பு :-
வெளியீடு :-
பக்கங்கள் :-
அளவு :-
பிரதிகள் :-
அட்டை
வடிவமைப்பு, :- ஒளிப்படங்கள்
நூல் வடிவமைப்பு:-
கணினிப்பதிப்பு :-
அச்சுப்பதிப்பு :-
விலை :-
Lomýl
கும்பாபிஷேக சிறப்பு மலர்
ந. தயாளசிங்கம்
சித்திரை 2007
அமிர்தகழி, புன்னைச்சோலை ரீ கண்ணகியம்மன்,
ரீமகா மாரியம்மன் ஆலய பரிபாலன சபை
48
A5
500
சுசிமன் நிர்மலவாசன்
து. கெளரீஸ்வரன்
afrtisff. T
வணசிங்கா அச்சகம், மட்டக்களப்பு.
8O.OO
பதிப்புரிமை - ஆலய நிர்வாக சபையினருக்கே

சமர்ப்பணம்
அமிர்தகழி ஹரீமாமாங்கேஸ்வரர் பேராலயம்,
அமிர்தகழி புன்னைச்சோலை
ரீகண்ணகியம்மன், பூரீ மகாமாரியம்மன் ஆலயங்களின்
வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவருக்காகவும்
இந்நூல் சமர்ப்பணமாகிறது.

Page 4
ஆசிரியர்
ந. தயாளசிங்கம்
இச்சிறப்பு மலர் வெளிவர பண உதவி நல்கிய பெயர் கூற விரும்பாத அன்பருக்கும், அதனை ஏற்பாடு செய்து தந்த திரு. ஜரோசன் பியோடிஸ் அவர்கட்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அன்னையின் ஆசியும் அருளும் நிலைபெறுவதாக.
எல்லாம் வல்ல ஆதிபராசக்தி முறி மகாமாரியம்மன் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிஷேகம் 23.03.2007 அன்று நடைபெற அம்பாள் அருள் பாலித்ததையிட்டு பெருமையும், புளகாங்கிதமும் அடைகின்றேன். இயற்கை அனர்த்தங்களால் அழிவுறும்நிலையில் இருந்த எமது ஆலயத்தையும், எமது இந்து சமய சின்னங்களையும் கண்ணுற்று புதிய ஆலயமாக அமைத்து காணர்போர் வியக்கும் வணிணமும், அடியார்களது உள்ளத்தில் பக்தியும் இறைவிசுவாசமும் பெருகும் விதமும் அமைத்துள்ள ஆலய நிர்வாக சபையினருக்கும் பொதுமக்களுக்கும் அம்பாள் என்றென்றும் நல்லாசிகளை வழங்குவாராக. அத்துடன் இந்த சிறப்பு மலரை உருவாக்கிய நூலாசிரியருக்கும் ஆசியுரை வாழ்த்துரை, ஆய்வுக்கட்டுரைகளை தயார் செய்து அம்பாளின் பழமையையும் பெருமையையும் மகிமையையும் உலகறியச் செய்த அனைவருக்கும் அன்னை மகாமாரித்தாயின் ஆசியும் அருளும் என்றும்நிலைபெறுவதாக
நன்றி
செ.நல்லையா பிரதம பூசகர்

Page 5
ஆசியுரை
சீதளேத்வம் ஜகன் மாதா
திதனேத்வம் ஜகத்பிதா
சீதளேத்வம் ஜகத்தாத்ரி
சீதனாயை நமோ நமக்
இந்தப் பூவுலகில் நாங்கள் செய்யும் நல்வினைதீவினைக்கேற்ப பிறப்புக்கள் அமைகின்றன. அதிலும் அரிது அரிதுமானுடனாக பிறப்பது அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு(மலடு இல்லாமல் இருப்பதே இறைவன் அருள் என்றுதான் கூற வேண்டும். மற்றைய மிருகங்களுக்கு ஓர்அறிவு, ஈர்அறிவு, மூவறிவு என்றும் மனிதனுக்கு மாத்திரம் ஆறாம் அறிவு பகுத்தறிவை இறைவன் கொடுத்திருக்கிறான். இது இப்படி இது என்று பகுத்து அறிய முடியாத மிருக உணர்வோடும் எம்மத்தியில் பலர் வாழ்கின்றனர். உதாரணமாக பசுமாடு தெய்வீகமானது. அது தாவர உணவைச் சேர்த்து அதில் இருந்து பஞ்சகெளவியம் என்று கூறப்படும்பால் - தயிர் - நெய் - கோசல கோமேயம் என்பன பெறப்படுகின்றன. ஆனால் நாயும் பசுவை போல்தான் சாப்பிடுகிறது. குட்டிபோடுகிறது. ஏன்? நாங்கள் நாய் சாணியை எடுப்பதில்லை. நாய் ஒரு மாமிச விரும்பி இதை பகுத்து அறியாத மாந்தர்கள் இவ்வுலகில் உள்ளார். ஒர் மனிதனின் உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இதனால்தான் விரத நாட்களில் உணவை விடுத்தும் சுருக்கியும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அமிர்தகழி மகாமாரி அம்மன் ஆலய பஞ்சகுண்டபசுஷ் மகா கும்பாபிஷேகத்தைகாணநாங்கள் புண்ணியம் செய்தவர்கள் இவ்விழாவை நூல் உருவில் மலர அடியார்களும் மெய்யன்பர்களும் விரும்பி நிற்கும் நிலையில் எல்லா மக்களுக்கும் முறி மகாமாரி அம்பாள் அருள் கிடைக்க அம்பாளை வணங்கி ஆசிகளை வழங்கி வையத்தில் நல்ல வண்ணம் வாழவும் நன்றிகள் பல.
மஹாராஜபூரீசுப்பிரமணிய இரத்தினபூர்ண சந்திரானந்தசுவாமினி IDIndmastib
0-2-0

ஆசியுரை
அமிர்தகழிப் பதியில் அமர்ந்து அல்லலுறும் அடியார்கள் வினைதீர்க்கும் அன்னை பராசக்கி மகாமாரியம்மன் ஆலய புனரா வர்த்தன புனருத்தாரண மகா கும்பாபிஷேகம் அன்னையின் அருளால் நடைபெறும் இத்தினத்தில் இந்த ஆலய நிர்வாக சபையினர், ஆலய பூசகர்கள் ஆலய தொண்டர்கள், அடியார்கள், சன்னதகாரர்கள், அன்ன தானக் குழுவினர், சிவாச்சாரியார்கள், ஆலயம் சூழ உள்ள பெரியோர்கள், குழந்தைகள், இளைஞர்கள், தாய்மார்கள், பெண்கள், மாணவர்கள் எல்லோருக்கும் அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று அவர்கள் வாழ்வில் எல்லாத்துன்பங்களும் நீங்கிமகிழ்ச்சியடைய என் மனங்கனிந்த நல்லாசிகள்.
சுபம்.
லோகா - சமாப்தா - சுகினோ பவத்து
சிவபூணி காசிமா பஞ்சாட்சர சர்மா பூரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயம், அமிர்தகழி, புன்னைச்சோலை 23.03.2007

Page 6
ஆசியுரை
அம்மனின் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலைபெறுவதாக,
1800ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் அமிர்தகழி ஆத்திமர நிழலில் அமர்ந்து அனைத்து மக்களுக்கும் அனைத்து தலைமுறை யினருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அன்னை பராசக்தி மகாமாரியம்மன் ஆலயத்தை புனரமைத்து அம்மனின் அவதாரங்களை அருள்வடிவம் அமைத்து மெருகூட்டி கும்பாபிஷேகம் நடாத்தியுள்ளனர் எம்மக்கள். காற்றில் ஆடும் சுடரைப்போல் தடுமாறும் நிர்வாகத்தினருக்கு வழிகாட்டிய எம் அன்னை தமது ஆலயத்தை செவ்வனே நிறைவேற்ற வைத்துள்ளார். எம் அனைத்து மக்களும் அம்பாளின் அருள் பெற்று சுபீட்சத்துடன் வாழவும் நாட்டில் சாந்தியும், சமாதானமும்நிலைபெறவும் முறி மகாமாரியம்மனின் அருள் கிடைக்க பிராத்திக்கின்றேன்.
நன்றி.
6. 5LDITFT தற்போதைய உபதலைவரும், முன்னாள் தலைவரும் பூgகண்ணகியம்மன் பூரீமகாமாரியம்மன் ஆலய நிர்வாகசபை

வாழ்த்துச் செய்தி
“நீங்கள் இறைவனோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார் நீங்கள் அவரை தேடினால் அவர் உங்களுக்கு காட்சியளிப்பார். அவரை விட்டீர்களானால் உங்களையும் விட்டுவிடுவார்.”
எல்லாம் வல்ல ஆதிபராசக்தி அன்னை மகாமாரி தனது இஷ்ட தெய்வங்களாகிய விநாயகர், முருகன், வீரமாகாளி, பேச்சி, பத்தினி, காத்தவராயன், வீரபத்திரர், நாகதம்பிரான், நரசிங்கவைரவர், சிங்கநாத வைரவர், ருநீராமர், ஐயனார் ஆகியோருடன் எமது ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். அன்னைக்கான புது தேவாலய மும், பந்தல்களும், ஏனைய வேலைத்திட்டங்கள் அமைக்கும் பெரும் பணியில் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு அன்னையிடம் சிரம் தாழ்த்துகின்றேன். யாராலும் எதிர்பார்க்க முடியாத இப்பெரும் பணி நிறைவு பெருவதற்கு 100 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணமும், பலரது உடல் உழைப்பும் ஆலோசனையும் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இவற்றையெல் லாம் எமக்கு அளித்த எமது கிராம மக்களுக்கும், அயல்கிராம மக்களுக்கும் இலங்கையின் அனைத்துபாகங்களிலும் உள்ள மக்களுக்கும், வெளிநாடு களில் வாழும் மக்களுக்கும் அம்பாளின் ஆசிவேண்டிநன்றிகூற கடமைப் பட்டுள்ளேன்.
அன்புசெய், சேவைசெய், பிறருக்குவழங்கு, கடமையை செய், பலனை எதிர்பாராதே எனும் பகவத்கீதை சாரத்தை சிரமேற்கொண்டு அனைவரும் இப்பெரும்பணி நிறைவுற உளம்கொண்டு ஐந்து வருடங்க ளுக்குள் இதை நிறைவு செய்து 23.3.2007 அன்று மகாகும்பாபிஷேகத் தைக்காண ஆவலாய் நின்றதைக்காண என்மனம் மகிழ்ச்சி அடைகிறது. எனவே இனிவரும் காலங்களில் இவ்வாலயம் மேன்மேலும் வளர்ச்சிய டையவும் பழைய புதியவழிபாட்டுமுறைகளை மேற்கொள்ளவும், இந்துசமய சமூக, கலை கலாசார, பொருளாதார விழுமியங்கள் இவ்வாலயத்தின் மூலம் வளர்க்கப்படவும் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் எனக் கேட்டு இச்சிறிய கதையை முன்வைக்கின்றேன்.
திருப்பதி உண்டியலில் காசு ஆயிரக்கணக்கில் விழுவதை
பார்த்த ஒரு ஏழை கடவுளைக் காண இவ்வளவு காசு கொடுக்க வேண்டுமா

Page 7
என்னிடம் ஒரு சதம் கூட இல்லையே! நான் என்ன செய்வேன். சாப்பிட்டு இரண்டு நாளாகிறதே என தனக்குள் சிந்தித்தபடி நடந்தான். வெகுதூரம் நடந்த களைப்பில் ஒரு மரத்தின்கீழ் தூங்கி விட்டான். கனவில் ஒருவர் தோன்றி உனக்கு கை நிறைய பணம்வேண்டுமா? அல்லது அதற்குப் பதிலாக ஆரோக்கியமான உடலும் நல்ல மனமும் வேண்டுமா என்று கேட்டார். பதில் சொல்ல முடியாது கண்விழித்துப் பார்த்தபோது கண்முன்னே ஒரு சடலத்தை மக்கள் காவிக்கொண்டு போவது அவனுக்கு தெரிந்தது, யாரின் சடலமப்பா அது? என்று போன கூட்டத்தில் ஒருவனைக் கேட்டான் அவன். அது ஒரு செல்வந்தருடைய சடலம். தீர்க்க முடியாத நோயினால் பல காலம் அழுந்தியவர். பணத்தை வைத்திருந்தும் அனுபவிக்க முடியாத வர். தீய வழியில் மக்களை ஏமாற்றி சேர்த்த பணமாகையால் அவருக்கு அந்ததீராத நோய் வந்துவிட்டது. போய்திருப்பதிஉண்டியலில் பணத்தைப் போட்டு செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடு என்று யாரோ புத்திமதி சொல்ல அதன்படி மலை ஏறி பணத்தை உண்டியலில் போட்டுவிட்டுதிரும்பும் போது மயக்கம் போட்டு கீழே விழுந்து இறந்து போனார் என்றான். கூட்டத்தில் ஒருவன். ஏழை அதை கேட்டதும் நல்ல காலம் நான் பணக்காரனாக இருக்க வில்லை எனக்கும் அதே கதிதான் வந்திருக்குமோ எனதனக்குள் கடவுளை வேண்டினான்.
சுபம்
நதயாளசிங்கம் கணக்காய்வாளரும்
முன்னாள் தலைவரும் 2001 - 2005
AbA AA

வாழததுரை
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
என் அன்பிற்குரிய அன்னையின் அடியார்களே !
மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் கண் அமிர்தகழிபுன்னைச் சோலை பகுதியிலே ஆத்திமரநிழலமர்ந்து அடியார்கட்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அன்னை ருநீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தற்போதைய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு ஒரு வருடகாலம் நிறைவு பெற்று விட்ட நிலையில் அம்மனின் ஆலய கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருப்பதையிட்டு பெருமையடைகிறேன்.
இதற்கு முந்திய நிர்வாகத்தினரும் தொண்டர்களும் பொது மக்களும் மடாலயமாக இருந்த இவ் ஆலயத்தை தேவாலயமாக மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்டுச் சென்ற இப் பெரும் பணியை என் தலமையிலான நிர்வாகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு பூர்த்தி செய்துள்ளோம். எனது தந்தையாகிய அமரர் திரு அப்பாசாமி மாணிக்கம் அவர்கள் இவ்வாலயத்தில் 48 வருடங்களாக தொண்டாற்றி யதன் பலனாகவும், அம்பாளின் திருவருளினாலும் எனக்கு இவ்வாலய பரிபாலன சபை தலைவராக கடமையாற்றும் பாக்கியம் கிடைத்ததையிட்டு மனநிறைவு அடைகிறேன்.
இவ்வாலயத்தின் வளர்ச்சிக்காக கடமையாற்றி வரும் பூசகர்கள், தொண்டர்கள், இளைஞர்கள், சன்னதகாரர்கள், நிர்வாகசபை உறுப்பினர் கள் அம்பாளின் பக்தர்கள் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அம்பாளின் அருள்கிடைக்க பிராத்திக்கின்றேன்.
நன்றி.
மா. மகேந்திரன் (தலைவர்)
ബ്ര മര്ത്തമഗത്@്ഥaസflമര് മൃതu ഗ്രfu0തു് ?രuം
O
7
O

Page 8
மாரியம்மன் வழிபாடு
- ஓர் அறிமுகம் - திரு.சீ.பாலசுப்பிரமணியம்,ர.P (ஒய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகஸ்தர்)
“மலையிலேதான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே”
இப்பூவுலகின் கண்ணே எண்ணற்ற புண்ணிய தலங்கள் உள்ளன. இலங்கைத்தீவின் கிழக்கே அமைந்த மட்டக்களப்பில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற பூரீ மாமாங்கேஸ்வரர் வீற்றிருக்கும் அமிர்தகழிப் பகுதியில் அமைந்துள்ளது பூரீ மகாமாரியம்மன் ஆலயம். இவ்வாலயம் திருக்குடமுழுக்குக் காணும் இவ்வேளை வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு இக் கட்டுரையை எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததைப் பெரும்பாக்கியமாக கருதுகிறேன்.
மாரியம்மன் வழிபாடு ஆரம்பத்தில் தமிழ் நாட்டிலேயே ஆரம்பமாகியது என்பது வரலாற்றுச் சான்று. பண்டையநாட்டில் மாரிமழை குன்றும் போதெல்லாம் கண்ணகியம்மனுக்கு வேள்வி செய்வது மரபு. இத்தகைய வேள்வியால் மாரிமழை பொழியவே மாரியைத் தந்த கண்ணகி மாரியம்மன் என அழைக்கப்படலானாள் என ம.பொ.சி குறிப்பிடுகின்றார்.
பண்டைய நாளில் மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த ஆதிக் குடிகளாகிய வேடர், விவசாய அன்னை என மாரியை வழிபட்டு வந்தனர் என அறியப்படுகிறது. இவ்வாறு ஆதிதிராவிட மக்களிடம் பரவலாக காணப்பட்ட விவசாய அன்னை வழிபாடும், பாண்டிய நாட்டில் கண்ணகி வழிபாட்டிலிருந்து தோன்றிய மாரி வழிபாடும் இணைந்ததே இன்றைய மாரியம்மன் வழிபாடாகும்.
மேலும் மாரியம்மன் உமாதேவியெனவும் நாராயணன் தங்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. “வீசு புகழ் உறு இராஜசிங்கனும் வாழி” என்ற மாரியம்மன் வாழி பாடல் வரிகள் இரண்டாம் இராஜசிங்க
-0-8-0

அரசன் கண்டியை ஆட்சி செய்த 1635 - 1644 காலப்பகுதியையும், “அமிர்தபரி பூரணி” காவியப்பாடல் பாடப்பெற்ற காலப்பகுதியை நோக்கும்போது 17ம் நூற்றாண்டுக்கு முன்னர் மாரியம்மன் கோயில்கள் எதுவும் மட்டக்களப்பில் தோற்றம் பெற்றதாக தகவல்கள் இல்லை மாரியம்மன் ஆலயங்கள் 350 ஆண்டுகளுக்கு உட்பட்டதான வரலாற்றினை உடையதாகவே காணப்படுகின்றன. தற்போது மட்டக் களப்பில் மட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட மாரியம்மன் ஆலயங்கள் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பில் மாரியம்மன் ஆலயங்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணங்கள்
1. இங்கு அடிக்கடி தோன்றிய அம்மன் நோயும், பிற
தொற்று நோய்களும்.
2. மாரியம்மன் வழிபாட்டினை கொண்ட கண்டிநாயக்க மன்னர்களும், அவர்களது கலாச்சாரச் செல்வாக்கும்
3. மாரியம்மன் வழிபாடு எழுச்சி பெற்றிருந்த தமிழ்
நாட்டுப்பகுதிகளோடு ஏற்பட்ட தொடர்பு
மாரியம்மன் தனது அருளாட்சியில் மூன்று முக்கிய கடமைகளை செய்தருளுவதாக மக்கள் நம்புகின்றனர்.
1. மழைபொழியச் செய்து அதனால் விளைபொருட்கள்
அதிகரிக்க அருள்புரிதல்.
2. நோய்கள் வராமல் காத்தலும், நோய்களிலிருந்து
விடுபட அருளலும்.
3. துஷட நிக்கிரக இவழ்டபரிபாலனம் செய்தருளுதல்
இக்கைங்காரியத்தை செய்வதற்கு மாரியம்மன் கடுந்தவம் இருந்து 18 முத்துக்களையும் 4448 வியாதிகளையும் கோர்த்த கண்டசர மாலையை சிவபெருமானிடமிருந்து பெற்றார் என்பது ஐதிகம்.
மூல மூர்த்தியாக அமர்ந்திருந்து அளவிலா அருள்பாலிக்கும் அமிர்தகழி பூரீ மகாமாரியம்மன் ஆலயம் 17ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோற்றம் பெற்றதாக சான்றுகள் பகருகின்றன. புராதன ஆலயங்களுள் ஒன்றான பூரீ மகாமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டுப் புனராவர்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேகம்
-o- 9 -o

Page 9
23.03.2007 அன்று நிகழ்வதை இட்டு மனம் பக்தி பூர்வமாக மகிழ்ச்சியடைகிறது. வேதனையும், சோதனையும் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் ஆலயத்தின் புனரமைப்புக்கும், கும்பாபிஷேக ஒழுங்குகளுக்கும் அல்லும் பகலும் அயராது உழைத்த ஆலய பரிபாலன சபையினருக்கும் அதற்கு பொருளுதவியும், உடலுதவியும் வழங்கி ஆலோசனைகளும் வழங்கி ஒத்துழைத்த அனைவருக்கும் அன்னையின் அருளும் ஆசியும் கிடைக்கப் பிராத்திப்பதோடு அம்பாளின் மகாகும்பாபிஷேக பெருவிழாவினைக் கண்டு தரிசிப்பதற்கு நாம் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
சுபம்
ஆலய விமானத்தில் உள்ள சிற்பம்
4-1 (H-
 

அமிர்தகழி மாரியம்மன் ஆலய பரிபாலனம்
வ.மாசிலாமணி -ஒர் வரலாற்றுப் பார்வை. (பூசகர்)
மீன்பாடும் தேனாட்டில் அமையப்பெற்ற அமிர்தகழிக் கிராமத்தில் கதிர்காமர் வீதியில் ஆத்திமர நிழலில் அமர்ந்திருந்து அடியவர்க்கு அருள்பாலிக்கும் அன்னை ரீ மகாமாரியம்மன் ஆலயம் 1800ஆம் ஆண்டுகளில் அமிர்தகழி, புன்னைச்சோலை, நாவலடி, மட்டிக்களி வாழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெரும் திருத்தலமாகும் மேற்கூறப்பட்ட கிராம மக்கள் இவ்வாலயத்தில் ஆனிமாதப் பூரணையை இறுதி நாளாகக் கொண்டு ஐந்துநாள் சடங்கும் சமுத்திரத்தில் கும்பம் சொரியும் விழாவினையும் நடாத்தி வந்தனர். மாந்திரிகத்தில் பாண்டித்தியம் பெற்ற பூசகர்களினால் பத்ததிமுறைக்கு அமைவாக சடங்குகள் நடைபெற்று வந்தன.
இந்தக்காலப் பகுதியில் தங்கள் தங்கள் கிராமத்திலும் ஒவ்வோர் ஆலயம் அமைய வேண்டுமென அன்னையும் அவரது அடியார்களும் விரும்பியமையால் நாவலடியில் மாரி கடலாட்சியம்மன் ஆலயமும், மட்டிக்களியில் ரீதுரோபதாதேவி ஆலயமும் அமையப்பெற்றது. இத்தருணத்தில் புன்னைச்சோலை வாழ் சமூகத்தவர்களும் தமது பகுதியில் ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். இது வரலாறு.
இங்கு சடங்குகளில் முதலாம் நாள் சடங்கு திரு. க. சின்னையா குடும்பத்தவர்களாலும், இரண்டாம் நாள் சடங்கு மாமாங்கம் பகுதி பொதுமக்களாலும், மூன்றாம் நாள் சடங்கு முன்னர் வாலிபர்களாலும், பின்னர் ஒடக்கரைவாழ் பொதுமக்களாலும் நான்காம்நாள் சடங்கு அமிர்தகழி வாழ் பொதுமக்களாலும், இறுதிச் சடங்கு புன்னைச்சோலை வாழ் பொதுமக்களாலும் மிகவும் சிறப்பாக இற்றைவரையிலும் நடைபெற்று வருகின்றது.
இவ் ஆலய பரிபாலனத்தை நோக்கினால் ஆரம்பத்தில் வண்ணக்குமார், கங்காணிமார்களினால் பரிபாலிக்கப்பட்டுவந்துள்ளது. இந்த வகையில்
திரு.வை.சின்னத்தம்பி
திரு.அ.பொன்னுத்துரை
திரு.க.தம்பிப்பிள்ளை
திரு.இ.கணபதிப்பிள்ளை
திரு.வ.வன்னமணி ஆகியோர்கள் கடமையாற்றியுள்ளனர்.

Page 10
இவர்களது காலத்தின் பின்னர் பொது மக்களால் ஆலயத்துக் கான உபவிதி (யாப்பு) ஏற்படுத்தப்பட்டு நிர்வாகசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன்படியே அன்று முதல் இன்றுவரையிலும் ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதன் தலைவர்களாக பின்வருவோர் கடமையாற்றி உள்ளனர்.
திரு.ச.ஏரம்பமூர்த்தி
திரு.சீ.கீர்த்திசிங்கம்
திரு.க.இராசதுரை
திரு.சி.சிவசுப்பிரமணியம்
திரு.க.ஏகாம்பரம்
திரு.க.நடராசா
திரு.வ.கிருஷ்ணமூர்த்தி '.
திரு.நதயாளசிங்கம் ஆகியோர்களும் தற்போது திரு.மா.மகேந்திரன் அவர்கள் தலைமையில் நிாவாக சபையினர் ஆலயத்தினை பராமரித்து வருகின்றனர்.
இங்கு தெய்வம் ஆடுதல், வாக்குச் சொல்லுதல், கண்ணிமார் வழிபாடு, தீராதநோய்களுக்கு தெய்வீக சுகமளித்தல், விநாயகர் பொங்கல் பானை விசேடவழிபாடு, பள்ளையம் படைத்தல். என்பன பாரம் பரியமாக ஆகமவழிபாடு அல்லாத கிராமத்து சடங்குமுறை வழிபாட்டுடன் கூடியதாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மடாலயமாக இருந்த இவ்வாலயம் தேவாலயமாக மிளிர வேண்டுமென அன்னை திருவருள் பாலித்தமையினால் இவ்வாலயத்தில் பங்கு கொண்ட அன்பர்கள், அடியார்கள், 2001 தொடக்கம் 2005 காலப்பகுதி வரையான நிர்வாக சபையினர், ஆலய பூசகர் திரு.செ. நல்லையா அவர்கள், இக்கிராம இளைஞர்கள் ஆகியோரது அயராத முயற்சியாலும், ஒத்துழைப்பாலும் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போதைய நிர்வாக சபையினரின் முழு முயற்சியினால் பூரணத்துவம் பெற்று 23.03.2007 மகா கும்பாபிஷேகம் பூரி மாமாங்கேஸ்வரர் பேராலய பிரதம குருவினால் நடைபெறுவது பெருமகிழ்சியை அளிக்கின்றது. இத்திருப்பணியில் தங்களை அர்ப்பணித்த அனைவரும் அம்பாளின் ஆசிக்கும் அருளுக்கும் உரித்துடையவர்கள்.

மாரியம்மன் உற்பத்தி
- ஓர் அறிமுகம் -
சிவமுந், காசிமா பஞ்சாட்சர சர்மா
மாரியம்மன் வழிபாடுபற்றி ஆராய்ந்தறிந்த மூதறிஞர்கள் மாரியம்மன் வழிபாடு 1800 காலப்பகுதியில் இலங்கையில் தோற்றம் பெற்றது என கண்டறிந்துள்ளனர். இதற்கு வரலாற்று நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும், மாரியம்மன் பாடல் வரிகளும் சான்று பகர்கின்றன.
மாரியம்மன் வழிபாட்டின் தோற்றுவாய் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மகாவிஷ்ணுவின் அவதாரமாகி தோன்றிய பரசுராமனின் தாயாகிய யமதக்கனி முனிவரின் மனைவியான ரேணுகா தேவி, காத்வீரியசுரனால் கொல்லப்பட்ட கணவருக்காக தனக்குத்தானே சிதை மூட்டி தானே அனல்மூட்டி எரிந்தபோது வருணபகவானின் உக்கிர மான மழைவீழ்ச்சியால் சிதையில் இருந்து எழுந்து நகருக்குள் வந்த பொழுது ஒரு மாடு மேய்க்கும் இடைச்சிறுவனிடம் எனக்கு பசியாக இருக்கிறது உனது வீட்டுக்கு சென்று பழஞ்சோறும், பனங்கட்டியும், புளித்தயிரும் கொண்டுவா என்று கூற அவன் கொண்டுவந்து கொடுத்த பழம்சோற்றையும் பனங்கட்டியையும், புளித்தயிரையும் சாப்பிட்டு விட்டு எனக்கு தலை கடிக்கின்றது. பேன் பார்த்து விடடா என்று அந்த சிறுவனிடம் கூற அவனும் தலையை பார்த்தபோது தலைமுழுவதும் கண்களாகத் தெரிந்ததாம் அவனும் பயப்பட்டு அழுதபோது அம்மன் அவனைத் தேற்றி நான்தான் காவல்தெய்வம் மாரியம்மன் பயப்படாதே இந்த வேப்பமர நிழலில் நான் இருப்பேன் எனக்கு நீ பூசை செய்து நைவேத்தியமாக பழஞ்சோறும், பனங்கட்டியும், புளித்தயிரும் வைத்து வழிபடு என்று கூறி மறைந்ததாக இந்தவழிப்பத்ததி கூறுகின்றது.
அடுத்த பகுதி சிவபெருமானின் சாபத்தால் காத்தவராயனுடன் பூலோகத்திற்கு வந்த மாதுமை என்னும் மகாசக்தி மாறாத காதல் வயப்பட்ட மகன் காத்தவராயனை கழுமரத்தில் இருந்து மீட்டு மக்களின் வினை தீர்க்கும் மாரியம்மனாக அவதாரம் எடுத்த புகழ்கூறும் பத்ததியும் வழிபாட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர், ஏறாவூர், முறக்கொட்டாஞ்சேனை, வாழைச "சேனை பகுதியில் மாரியம்மனுடன் பரிவார மூர்த்திகளில் ஒன்றாக காத்தவராயனை மேடையில் களுமரம் அமைத்து கும்பம் சொரிந்து வழிபாடு செய்யப்பட்டு வர வெல்லாவெளி பழுகாமம் போரதீவு மண்டுர், நீலாவணை, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில் உள்ள ஆலயங்களில் அம்மன் வெள்ளைச்சீலை உடுத்து உயரமான ஏணியில் ஏறி தவம்
O-13-0

Page 11
செய்யும் நிகழ்வும் பேச்சியம்மனுக்கு வெளிவீதியில் வடக்கு பக்கமாக பந்தல் போட்டு சுடுசோறு, சக்கரை, புளித்த தயிர், பலகாரம், கொழுக்கட்டை, மதுபானம் வைத்து கருவறையை முடி பூசை செய்து, தீமிதித்து, குளுர்த்திபாடி வழிபாடு செய்யும் முறையும் இடம்பெற்று வருகின்றது.
எனவே மிகவும் சக்திபெற்ற மாரியம்மன் வழிபாடு உலகமக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த ஆன்மீக ஈடேற்றத்திற்கு எமது முதாதையர் காட்டிய ஒரு வழிபாடு என்பதை மனதில் கொண்டு இந்த கும்பாபிஷேக நன்நாளில் மாரியம்மனையும், அவரது பரிவார தெய்வங்களையும் வழிபட்டு உயர்வோமாக
2ாம் orಙ್' ஓம்சந்தி ஒரேசீர்த்தி
 

ஆளுமை மிக்க மனித உருவாக்கத்தில் சடங்குகளின் பங்களிப்பு
- ஓர் அனுபவப் பகிர்வு - கி. புவிக்குமார்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதற்கிணங்க ஆலய வழிபாடு முக்கியமாகும். ஆலயம் செல்வதன் மூலம் மக்களின் துயரம் குறைகின்றது. மனம் அமைதியடைகின்றது.
அம்மன் ஆலயங்களில் இடம்பெறும் பத்ததிச் சடங்குகளில் இளைஞர்களே முன் நின்று செயற்படுகின்றனர். தொடக்கம் முதல் இறுதி வரை இரவு பகலாக அயராது தமது தொண்டுகளை அர்ப்பணிப் புடன் செய்கின்றனர்.
சடங்குகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சிரம தானம் என்ற வகையில் கூட்டுதல் பெருக்குதல், துடைத்தல், கழுவுதல், வர்ணம் தீட்டுதல், தோரணம் கட்டுதல், அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை முன்நின்று தமது தனிப்பட்ட வேலைகளை புறம் தள்ளி வைத்துவிட்டு ஆலய திருப்பணி, தொண்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
ஆலயம் திருக்கதவு திறப்புடன் ஆரம்பமாகி 6 நாட்கள் இடம் பெறும் கடைசி நாள் அதாவது வைகாசி திங்கள், ஆணித் திங்கள் போன்ற தினம் கண்ணகி, மாரியம்மனுக்கு முக்கியமாகும் இறுதி தினத்தை மையமாக வைத்து சடங்கு நாட்களை பொருளாதாரங்க குளுக்கும், சமூக மக்களுக்கு உகந்த வகையில் முடிவு செய்வர் பொதுவாக மூன்று நாள், ஆறு நாள், ஏழு நாள், பத்து நாள் என சடங்குக் காலங்களை நீடிப்பர்.
ஆலய பிரதம பூசகரை அவரது வீட்டில் இருந்து தவில் அடித்து வரவழைத்து வருவார்கள். அவர் சடங்குகளுக்குத் தேவையான பொருட்களையும் வேறு பொருட்களை எல்லாம் எடுத்துவருவார் அவர் சடங்கு முடிந்த கடைசியில் தான் தன்வீட்டுக்குச் செல்வார்.
அதே போன்றே, துணைப்பூசகர், தொண்டர்கள், அயலவர்கள், ஏனைய சமூகத்தினை உடையவர்கள், முதியோர்கள், இதே போன்று முன்பு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உற்றார் உறவினர்கள் போல் சடங்குகாலங்களில் ஒன்றாக உண்டு, குடித்து முன்னைய காலங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றி
H15

Page 12
கூறுவார்கள். எமக்குத் தெரியாது பிறர்க்குத் தெரிந்த பல விடயங்களை நாம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
பகல் பூசை முடிந்தவுடன் சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டு அடுத்த இரவுப் பூசைக்கு தயாராக பூசைப் பொருட்கள், பிரசாதம் போன்ற பல பொருட்களையும் தயார் செய்யத் தொடங்குவார்கள் இதேபோன்று ஆறு நாளும் அயராது சலிப்படையாமல் கடமையை செய் பயனை எதிர்பாராதே என்பதைப் போல் செயற்படுவார்கள், அப்போது எதனையோ சாதித்த பெருமிதம் ஒவ்வொருவருக்கு உண்டாகும். அந்த மகிழ்ச்சியை கூறுவதற்கு வார்த்தைகள் போதாது பொதுவாக மாணவர்களே இவ்வாறான நிகழ்வில் முன்னிற் கின்றனர் ஏனெனில் பாடசாலைகளில் முகாமைத்துவம் செய்வதற்கு அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை ஆனால் இங்கு ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கின்றனர். இது அவர்களுக்கு முகாமைத்துவப் பயிற்ச்சி பெற அடிப்படையாக இருக்கின்றது.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கை யிலே நல்லவராவதும் தீயவராவதும் சூழலின் வளர்ப்பினிலே என்பது போல ஆலயங்களுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டியது அவசிய மானது. ஆனால் இப்போதைய நிலையில் சிலர். ஆலய வழிபாடுகளின் மகிமை தெரியாதவர்களாகவே உள்ளனர். அதிலும் சிலர் உலக மயமாக்கலில் வெளிநாட்டு மோகம் கொண்டு தமது கலாசாரம், வழிபாட்டு முறை, பண்பாடு, வரலாறுகள், பிரதேச சிறப்பு போன்றவை களைக் கேட்டால் தெரியாதவர்களாக, வாய் பிதற்றுகின்றார்கள். இவை கள் எல்லாம் ஏற்படக் காரணம் இறை வழிபாடுகள், பிரதேசநிகழ்வுகள் பற்றி அறிந்திருக்காதவர்களாகவும், ஆர்வம் அற்றவர்களாகவும் இருக் கின்றமையே ஆகும். எமது கலாசாரம், பண்பாடு, நாகரிகம் மருவிக் கொண்டு செல்ல இதுவும் ஒருகாரணமாக அமைந்து விடுகின்றது.
புதுமை தேடும் புதிய இளைஞர்கள் பழயவைகளையெல்லாம் அநாகரிகமாகவும் வெளிநாட்டு மோகம் நாகரிகம் என்றும் அடிமை களாகப் போகின்றனர்.
பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் வழங்காத நடைமுறைச் சாத்தியமான முகாமைத்துவ அறிவை செயற்பாட்டுக் கல்வியாக பத்ததிச்சடங்குகள் வழங்குகின்றன. ஆலயங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளை தாமே முன்னின்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதனாலும், ஆர்வம் காட்டுவதனாலும் தலமைத்துவம்
a-1 4- a vir VJ V7

சிறப்பாக வளர்க்கப்படுகின்றது.
சொல்லொண்ணா துயரம் ஆயிரம் இருந்தாலும் ஆலயம்" வந்தால் அமைதி அடையும் என்பதை எவராலும் மறுக்க முடியாது." பத்தாசிச் சடங்குகளிலே இரண்டாம் நாள் கல்யாணக்கால் இதனை சமூகத்தவர்கள் யாராவது ஒருவரின் வீட்டில் சென்று வெட்டி வருவார்கள் இதன் போது உதவி செய்வதற்கு இளைய சமூதாயத் தினரே பெரும் பங்கு வகிக்கின்றனர்.
பொதுவாக சில இளைஞர்கள் வீட்டில் இருக்கின்றனர். பாடசாலை சென்று வந்து பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பி வருவார்கள் திறமை உள்ளவர்களாக இருந்தாலும் திறமை முடங்கி வீட்டோடேயே இருந்து விடுகின்றனர்.
இதனால் பிற்காலத்தில் அவர்கள் திறமை அற்றவர்களாகவும் தன்நம்பிக்கை இல்லாதவர்களாகவும், பயந்த சுபாவமுடையவர்க ளாகவும் உள்ள ஒரு சமூக பிரசையாக உருவாகின்றனர்.
ஆனால் ஆலயங்களில் முன்பு கூறிய பல செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் தாழ்மை மனப்பான்மை அகல்கின்றது. கூச்ச சுபாவ முடையவர்கள் கூச்சம் தெளிந்தவர்களாகவும் தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவர்களாகவும் உருவாகின்றார்கள்.
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்பதைப்போல் இளமையிலேயே அதாவது மாணவ பராயத்திலே “பதர் நீக்கிய நெல்லைப்போல்” நம்மை பண்படுத்தியவர்களாகவும், சிறந்த சமூகப் பிரசையாகவும் உருவாக ஆலய வழிபாடு வழிகோருகின்றது.
ஆலயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதால் தீயவழியில் ஈடுபடுவது குறைக்கப்படுகின்றது. இதனால் பெரிய பதவி வகிப்பவர் களாக உருவாக்கப்பட்டு முகாமைத்துவம் நன்றாக இருக்கும் என்பது தான் உண்மை.
நமது கிராமப்புறங்களில் நடக்கும் நம் கலாசாரம், மரபு, பண்பாடுகளில் ஆர்வம் காட்டாதிருப்பவர்கள் தம்மை தாமே ஏமாற்றி கொள்கின்றார்கள். இனிப்பு சுவை தெரியாதவர்களிடம் தேன் சுவை எப்படியிருக்கும் என்று கேட்பதினால் என்ன பயன்? இதனால் நமது கிராமம், பிரதேச நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
வெளிநாட்டவர்கள் நம் கலாசாரங்களை விரும்புகின்றனர். ஆனால் நாமோ வெளிநாட்டு மோகம் கொண்டுள்ளோம்.
எதனைப் பெறுவதானாலும் முயற்சியும், ஆர்வமும் இருக்க
a 1. As a wr v

Page 13
வேண்டும். ஆனாலும் எந்த நேரத்தில் கிடைக்கும் என்று கூறமுடியாது. அதற்கு உகந்த காலம் வரவேண்டும். சடங்குகளில் நாம் நம் வாழ்க் கைக்குத் தேவையான பல விடயங்களைப் பெற்றுக் கொள்கின்றோம். அத்திவாரம் ஒழுங்காக இருந்தால்தான் வீடு, உறுதியாக இருக்கும். ஒவ்வொரு மனிதருடைய அடிப்படையும் வளர்ச்சியும் ஆலயங்களிலும், பொது வேலைகளிலும் செயற்படுவதிலேயே கிடைக்கின்றது.
இது எமக்கு நமது வாழ்க்கையின் பின்பும் நமது பிள்ளைக ஞக்கு கூறுவதற்கும் நமது குடும்பங்களை சிறப்பாகவும், பிரதேசத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கும் உதவுகின்றது.
இப்போது ஆலயங்களில் இவ்வாறான தொண்டுகளிலும், ஆலய கருமங்களில் ஈடுபடுபவர்கள் பலபேர் அரச அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் போன்ற இடங்களுள் இருக்கின்றனர்.
 

பூசகர்களின் பாரம்பரியம் பற்றி.
வ. மாசிலாமணி
(பூசகர்)
எமது யூரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கும் றி கண்ணகியம்பாள் ஆலயத்திற்கும் ஒரே நிர்வாக சபைதான் பராமரித்து வருவதுபோல இவ்விரு ஆலயங்களிலும் ஒரே பூசகர் குழுவினர் தான் பூசைகளை நடாத்தி வருகின்றனர். இந்த வகையில் ஆலயம் தோன்றிய காலப்பகுதி பூசகர்களின் விபரங்கள் எழுத்தில் பேணப்படாத காரணத்தினால் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததை இட்டு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். 1900ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகாமாரியின் அருள் பெற்ற புன்னைச்சோலையில் வசித்துவந்த திரு.முருகேசு என்பவர் பூசகரா கவும், அதன்பின் அமிர்தகழியை சேர்ந்த தொண்டர் என அழைக்கப்படும் திரு.எ.கனகரெட்ணம் அவர்கள் பூசகராகவும், பின்னர் புன்னைச்சோலையை சேர்ந்த திரு.கு.சுப்பிரமணியம் (சுக்குறுவர்) பூசகராகவும் துணைப்பூசகராக ஓடக்கரையை சேர்ந்த திரு பொன்னையா அவர்களும் கடமையாற் றியுள்ளனர்.
இவர்கள் இறைவனடி எய்திய பின்னர் கல்லடியை சேர்ந்த திரு. நாகமணி வைத்தியர் பூசகராகவும் துணைப்பூசகராக திரு. நா. வை. கணபதிப்பிள்ளை அவர்களும் இரண்டு ஆண்டுகள் கடமையாற்றினர். அதன் பின்னர் நாவலடியைச் சேர்ந்த திரு.செ.சோமசுந்தரம் அவர்கள் பூசகராகவும் துணைப்பூசகராக புன்னைச்சோலையை சோந்த திரு. ஓ. இளையதம்பி அவர்களும் கடமையாற்றினர். இக்காலப் பகுதியில் திரு.சோமசுந்தரப் பூசாரியார் அவர்கள் நாவலடி மாரி கடலாட்சி அம்மன் ஆலய பூசகராக கடமையேற்க திரு.ஒ.இளையதம்பி அவர்கள் பிரதம பூசகராகவும் புன்னைச்சோலையைச் சேர்ந்த திரு.வ.மாசிலாமணி அவர்கள் துணைப் பூசகராகவும் கடமையாற்றி வந்தனர்.
இவர்களிருவருக்கும் பின்னர் புன்னைச்சோலையை சேர்ந்த திரு செ.நல்லையா அவர்கள் பிரதம பூசகராகவும், வ.மாசிலாமணி அவர்கள் துணைப்பூசகராகவும் 1970 காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை தமது தொண்டினை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுச் சடங்கு விழாக்கள், விசேடபூசைகள், பூரணைப்பூசைகள், வெள்ளிக்கிழமைப் பூசைகள் அனைத்தையும் திறம்பட செய்து வருவதுடன் இரு ஆலய வளர்ச்சிக்கும் அயராது உழைத்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் பூசை நேரத்தில் திறம்பட செய்வதற்கு திரு. வ. கிருஷ்ணமூர்த்தி, திரு.ந.தருமதாஸ் ஆகிய
H9H

Page 14
இருவரும் ஏனைய இளைஞர் குழுக்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின் றனர்.
இதற்கிடையில் பூசகர்களுக்கு ஆலயத்துள் வந்து பூசைகளை நடாத்த முடியாத சந்தர்ப்பங்களில் ஆண்டுச் சடங்கை பின்வருவோர் ஒருவருடம் நடாத்தி உதவி புரிந்துள்ளனர்.
1. திரு.ம. நல்லதம்பி சோதிடர்
2. திரு.கார்த்திகேசு பூசகர்
3. திரு. சின்னத்தம்பி பூசகர் (கல்லாறு)
4. திரு.ஓ.வேலுப்பிள்ளை பூசகர் ஆகியோர்கள்.
எமது இரு ஆலயங்களும் சிறப்புற அமைய வேண்டும் என அரும்பாடுபட்டு சிவபதம் அடைந்தவர்களையும் இத்தருணத்தில் நினைவு கூறுதல் எமது கடமையாகும். புன்னைச்சோலையை சேர்ந்த திரு.சி.விநாயக முர்த்தி, திரு.சி.கந்தசாமி, திரு.த.கந்தையா திரு. இராசையா, திரு.த.வேல் முருகு, திரு.த.தியாகராசா, அமிர்தகளியை சேர்ந்த திரு.சின்னத்துரை ஆசிரியர், திரு.சி.துரைச்சாமி, திரு.ஆனந்தம், திரு.குழந்தைவேல் கங்காணியார், மட்டிக் கழியைச் சேர்ந்த திரு. வைத்தியலிங்கம், திரு.செல்லத்தம்பி ஓடாவியார், திரு.கணபதிப்பிள்ளை. திரு.கதிர்காமத்தம்பி, திரு.கு.கிருஷ னப்பிள்ளை, மாமாங்கம் பகுதி திருதம் பிராசா, திரு.க.பேரின்பநாயகம், திரு.சிவகுரு, திரு.இ.அழகையா திரு.அன்னதுரை ஆகியோர்கள் நினைவுகூற வேண்டியவர்கள். திரு.அப்பாசாமி மாணிக்கம் அவர்கள் எமது இரு ஆலயங்களிலும் பூரணைப்பூசை, வெள்ளிக்கிழமை பூசைகள், விசேடபூசைகள், செவ்வனே நடைபெறுவதற்கு நிர்வாக சபையின ருடனும், பூசகர்களுடனும் இணைந்து அரும்பாடுபட்டவர் என்பதை இத் தருணத்தில் குறிப்பிடவேண்டியுள்ளது.
மேலும் இரு ஆலயங்களிலும் சன்னதகாரராக கடமையாற்றி ஆலய வளர்ச்சியில் பங்கெடுத்தவர்களையும் குறிப்பிட்டாக வேண்டும்.
திரு.கணபதிப்பிள்ளை
திரு.கணபதிமுத்தர்
திரு.க.வயிரமுத்து
திரு.க.வைரமுத்து (வைரவர்)
திரு.கு.ஏரம்பமூர்த்தி
திரு.ச.ஏரம்பமூர்த்தி
திரு.யறுமர்
திரு.சி.சவுந்தரராசா
திரு.நாகமணியும் அவரது மனைவியும்
திரு.க.சின்னையா
திரு.அ.மாணிக்கம்
H2OH.

திரு.இராசையா (ராசன்)
திரு.பொன்னையா
திரு.செல்லத்துரை
திரு.க.அல்லிமுத்து
திரு.சா.அருளப்பு
திரு.க.தங்கவேல்
திரு.மு.ஈஸ்வரன்
திரு.கந்தசாமி
திரு.த.சிவநாதன் தவிர தற்போது சன்னதகாரராக கடமையாற்றிக் கொண்டிருப்பவர்கள்
திரு.க.வடிவேல்
திரு.ம.கிருஷ்ணகுமார்
திரு.த.சிவராசா
திரு.சு.ஜெயநேசன்
திரு.நி.ரமேஸ்
எமது ஆய்வுக்கு உட்பட்ட காலத்திற்கு முந்திய தகவல்களை எம்மால் பெற முடிந்திருந்தால் இந்த ஆய்வு இன்னும் சிறப்பாக அமைந் திருக்கும் கிடைக்கப்பெறாததால் ஒரு நூற்றாண்டு காலப்பகுதி தகவல்கள் குறிப்பிட முடியாமல் போனமைக்கு வருந்துகின்றோம். இனிவரும் சந்ததி பயினராவது இத்தகவல்களை மனதில் பதிய வேண்டும் என்பதற்காக
சிங்கநாத வைரவர்பந்தல்

Page 15
சடங்குகள் இன்றைய நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்காலத் தேவைகள் உரையாடலுக்கான அறிமுகம்
சி. ஜெயசங்கர் சிரேஷ்ட விரிவுரையாளர், கி.ப.கழகம்
மட்டக்களப்பு சூழலில் சடங்குகள் மிகவும் பிரசிததம் வாய்ந்த வையாக இன்றும் நடைபெற்று வருகின்றன. இப்பிரசித்தத்திற்குப் பல்வேறு விடையங்கள் காரணிகளாக அமைகின்றன. அவற்றுள் மனிதர்கள் இந்தப் பூமியில் மனஅழுத்தங்களை நீங்கி, மனமகிழ்ச்சி யுடனும், நோய் நொடிகளின்றி ஆரோக்கியத்துடனும் ஒன்றுகூடி வாழ்த லுக்கான பக்திமயமான கொண்டாட்டமாகச் சடங்குகள் விளங்கி வருவது முக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றது. அதேவேளை மேற்கத்தேய நவீன அறிவு ஆதிக்கம் காரணமாக மேற்படி சடங்குகள் பிற்போக்கானவையாக, அறிவு பூர்வமற்றவையாக, நாகரீகமற்றவையாக குறிப்பாக இச்சடங்குகள் மூடநம்பிக்கைகள் எனக் கதையாடல்களை நிகழ்த்துவதும்; அதன் விளைவுகளும் கவனத்திற்குரியனவாகின்றன. இதன் காரணமாக சடங்குக் கோயில்கள் பல பிராமண மயப்படுத்தப்பட்டு “நவீனப்படுத்தப்படுகிறது” அதாவது “நாகரிகப் படுத்தப்படுகின்றது” இது சடங்குக் கோயில்கள் கொண்டிருந்த பல ஆக்கபூர்வமான அம்சங்கள் கைவிடப்பட்டு அழிந்து போவதற்குக் காரணமாகிறது. மனிதர்களுக்கும், மனிதர்களுக்கு அப்பாலான சக்திக் குமான நெருக்கமான நேரடி உறவு தவிர்க்கப்பட்டு “ஐயர்” என்பவர் இடைத் தரகர் ஆக்கப்படுவதும் நடந்தேறிவருகிறது.
பக்த்திபூர்வமான வாழ்க்கை முறையாலும், பயிற்சியாலும் எவருமே பூசாரியாக வரக்கூடிய சடங்கு வழிபாட்டுச் சூழல் இல்லா தொழிக்கப்பட்டு, பிறப்பால் பொருத்தமானவரே பூசகராகும் உரிமை நிலை நிறுத்தப்படுவதன் ஊடாக சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான அம்சங் கள் இங்கு சாதியின் பெயரால் பலப்படுத்தப்படுவதற்கு வழிகோலப் படுகிறது.
மிகவும் எளிமையானதும், இயற்கையுடன் ஒத்திசைந்ததும்; இன்னும் பல ஆக்கபூர்வமான அம்சங்களைக் கொண்டிருப்பதும்: குறிப்பாக மக்கள் மையப்பட்டதாக சடங்கு இருப்பதும்; சடங்கு ஏன்? என்ற கேள்வியை எழுப்பி ஆராய வேண்டிய தேவையை அது ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு இச் சடங்குகளின் தோற்றம், வளர்ச்சி,
-0-22-0-

தொழிற்பாடுகள் பற்றிய அறிதலுக்கான உரையாடலும், சடங்கு உருவாக்கத்திலும், தொழிற்பாட்டிலும் உள் நின்றியங்கும் உள்ளுர் அறிவு முறைபற்றிய அறிதலுக்கான உரையாடலும் முக்கிய கவனத்திற் குள்ளாக்கப்பட்ட வேண்டியிருக்கின்றன. இதேவேளை இச்சடங்கு ஒழுங்கு முறைகளுள் தொழிற்படும் பால் பாகுபாடு, சாதி மற்றும் குடிப்பாகுபாடு என்பவை பலத்த கேள்விகளை உருவாக்கி யிருக்கின்றன.
கண்ணகி, காளி, மாரி, துரோபதை, எனப் பெரும்பாலும் பெண் தெய்வச் சடங்குகளே காணப்படினும் இச்சடங்குகளில் பெண்கள் அனுபவிக்கும் பாராபட்சம் என்பது மிகுந்த கவனிப்பிற்குரியது. உரையாடலுக்கு உட்படுத்த வேண்டியதாக இருக்கிறது. சடங்குகள் தூய்மையாகச் செய்யப்பட வேண்டியவை. அதில் “தூசுதுடக்கு வரக் கூடிய பெண்கள் ஈடுபடுவது தூய்மையைக் கெடுத்துவிடும்” என்ற கருத்து மிகவும் வலிதாக மக்கள் மனங்களில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. பெண்களுக்கு வரக்கூடிய “தூசு துடக்கு” என்பது உயிர் உற்பத்திக்குத் தவறிய உயிரணுக்களின் வெளியேறலாகும். இதனை மாதவிடாய் என்கிறார்கள். உயிர் உற்பத்திக்குத் தவறிய உயிரணுக்கள் துடக்குக்குரியவை என்ற கேள்வியும் ஆழமான சிந்தனைக்குரியதாகி இருக்கின்றது.
மேலும் சாதி, குடி ரீதியாக காட்டப்படும் பாராபட்சங்கள் குறிப் பாக குடிமைத் தொழில் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஒழுக்க முறைகளும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவையாகக் கொள்ளப் படுகின்றன. குடி ஒழுங்குமுறை காரணமாக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகார அடுக்குகளும் இங்கு குறிப்பாகக் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது. சமூக ஒழுங்கு என்பது பால், சாதி மற்றும் குடி அடுக்கு முறை காரணமாக சமூக ஒடுக்கு முறையாக அல்லாமல் சமத்து வத்தைப், பன்மைத் தன்மைகளை, வித்தியாசங்களை மதிப்பதாகக் கொண்டாடுவதாக அவை மாற்றம் பெறுவது மானுட விடுதலையுடன் தொடர்புபடுவதாக அமைகிறது.
இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஆரம்பக்கள நிலமாகவும், பொருத்தமான சமூக ஊடகமாகவும் சடங்குகள் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் சடங்குகள் சொர்க்கம், நரகம் பற்றிப் பேசுவதில்லை. இந்தப் பூமியில் மனிதர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்தல் பற்றியே பேசுகின்றன. ஆயினும் இந்தப் பூமியில் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூக அதிகார அடுக்குகளைப் பேணிக் கொண்டு மனிதர்களது மகிழ்ச்சிகரமான வாழ்தலென்பது எந்தளவிற்குச் சாத்திய
0-23 ܥܫ

Page 16
மானது? மனிதர்களைச் செயற்பாடற்ற பிண்டங்களாகவும்: நுகர்வுச் சக்திகளாகவும் ஆக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இதனை எதிர்கொண்டு இதயங்களுடன் கூடிய மனிதர்களை உருவாக்குவதில் சடங்குகள் வகிக்கப்போகும் பங்கு எத்தகையது?
சடங்குகளைப் பிராமணிய மயப்படுத்துவதன் மூலமாக நாகரிக மயப்படுத்துவது என்ற சிந்தனைப்போக்கு அடிமைப்படுத்தப்பட்ட எமது சிந்தனைப் போக்குகளின் தெளிவான வெளிப்பாடுகளாகும்.
எங்களது சிந்தனை முறைமைகளை மாற்றியமைப்பதன் மூலமா கவும் எங்களது பாரம்பரியங்களை நாகரிகமற்றவையாக அல்லது காட்டுமிராண்டித்தனமானவையாக எங்களைப் பார்க்க வைப்பது காலனியம் அறிமுகப்படுத்திவிட்ட நவீன அறிவுமுறைமையின் நோக்க மாயிருக்கிறது.
பத்தாசி முறையிலான சடங்குக் கோயில்களை ஆகம முறை மைக்கு கொண்டு வருகின்ற ஊர்களில் நிகழும் செயற்பாடுகளில் இதனைத் தெளிவாகக் காணமுடியும். பண்பாட்டு அடையாளம், தேசிய அடையாளம் சார்ந்த உரையாடல்களில் சடங்குகள் சார்ந்தும், சடங்கு கள் ஆகம முறைக்குள் கொண்டு வருவது சார்ந்தும், சடங்குகளை நடத்தும் பூசாரிகளுக்கு பூணுல் அணிவிப்பதும் பத்தாதி முறைக்கு அப்பாற்பட்டு மந்திரப் பயிற்சிகள் வழங்குவதும் இதன் காரணமாக ஏற்படும் பண்பாட்டுச் சிக்கல்கள், சமூக முரண்பாடுகள், குழப்பங்கள் பற்றிய அவசரமானதும், அவசியமானதுமான உரையாடல்கள் நிகழ்த் தப்பட வேண்டியிருக்கிறது.
ஏனெனில் பாரம்பரியங்கள், பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்த விடயங்கள் என்பவை மேலோட்டமான அரசியல் காட்சிப்படுத்தல் களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான விளம்பரப்படுத்தல்களுக்கும் விற்பனைக்குரியவையும் அல்ல.
அவை சுயாதீனமான வாழ்தலின் அம்சங்களாக இருப்பதன் மூலமாகப் பண்பாட்டு அடையாளப்படுத்தல்களாகவும், தேசிய அடையா ளப்படுத்தல்களாகவும் அமைகின்றன. இந்த நோக்கத்திற் கமைய சடங்கு எவ்வாறு மீளுருவாக்கம் பெறப்போகின்றது? மிகப்பெரும் உரையாடலுக்கும் செயற்பாட்டுக்குமான தொடக்கப் பொறிகள் சிலவற்றின் பகிர்வு இது.
O
2
4
O

மட்டக்களப்பு பத்தறிமுறைச் சடங்குகளின் காலத்தேவை
து. கெளரீஸ்வரன் இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்களது பண்பாட்டில் வைகாசிமாதம் பிறந்து விட்டால் ஒருவித உற்சாகமும், குதுாகலிப்பும் ஏற்படுவது வழமையான நிகழ்வாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளமும் உற்சாகத்து டனும் குதூகலத்துடனும் திகழ்வதைக் காணமுடியும்.
இத்தகைய உற்சாகத்திற்கும், குதூகலத்திற்கும் அடிப் படையாய் அமைவது கிழக்கின் ஒவ்வொரு கிராமங்களிலும் காணப்படும் பத்ததிவழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகளே ஆகும். இவ்விதம் வருடத்தின் வைகாசி மாதத்துடன் ஆரம்பமாகும் கோவில் சடங்குகள் கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் சமூகங்க ளிடையே மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டதாக நிகழ்ந்து வருவதைக் காணலாம்.
கிழக்கின் பன்மைப்பண்பாடுகளுடன் திகழ்ந்துவரும் பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகளின் முன்னெடுத்தல் பற்றி இன்றைய சூழலில் மிகவும் கவனம் செலுத்துதல் அவசியமானதாக உள்ளது.
இந்தவகையில் ஏன் பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகள் பற்றிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய ஆக்கபூர்வமான உரையாடலினை மேற்கொள்ளும் வகையி லேயே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
இதன்படி கிழக்குமாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகளின் இன்றைய முக்கியத்துவம் பற்றி விளங்கிக் கொள்வதற்கு முன்னோடியாக இன்றைய உலகத்தின் போக்குப்பற்றி நாம் விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதாக அமைகின்றது.
இன்றைய உலகத்தின் போக்கு என்பது அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் கொண்டதாக இயங்கி வருவதை அவதானிக்க முடியும்.

Page 17
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய வர்த்தகத்தைத் தங்கு தடைகளின்றி சகல துறைகளிலும் செவ்வனே மேற்கொள்வ தற்குரிய வகையிலான ஓர் நுகர்வுப் பண்பாட்டினை உருவாக்கும் முழுநோக்குடன் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதி பத்திய சக்திகள் பல்வேறு முனைகளில், பல்வேறு தந்திரோ பாயங்கள் மூலமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் உலகம் முழுவதும் உள்ள வித்தியாசமான சுயசார்புடன் திகழும் பண்பாட்டு வாழ்வியல்களை இல்லாது ஒழிக்கும் செயற்பாடாகும். இதற்கு உதாரணங்களாக, ஏகாதிபத்தியத்தின் உலக ளாவிய பால்மா வர்த்தகத்திற்குச் சவாலாக விளங்கும் சுயாதீனமான எமது மாட்டுப்பட்டிகளை இல்லாது ஒழிக்கும் நோக்குடனான மரபணு மாற்றங்களுடனான கலப்பின மாடுகளை எமது விவசாயி களிடம் அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளையும்,
ஏகாதிபத்தியத்தின், உலகம் முழுவதற்குமான உணவுக் கட்டுப்பாட்டை தம்வசம் வைத்தலுக்குத் தடையாக இருந்துவரும் உள்ளூர் பல்வகைத் தானியங்களை இல்லாது ஒழிக்கும் நோக்குட னான மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்கள், விதையினங்கள் என்பவற்றின் அறிமுகங்களையும், இதுபோன்ற இன்னும் பல்வேறு பட்ட எடுத்துக்காட்டுக்களையும் கூறலாம்.
உலகம் எங்கிலும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழ்கின்ற பல்வேறு சமூகங்களினதும் சுயாதீனமான வாழ்வியல் பண்பாடுகள் என்பவை இச்சமூகங்களின் சுயசார்பான பொருளாதாரத் தன்மைகளுடன் உள்ளதனைக் காண 6)Tib.
அதாவது குறித்த ஒரு சமூகத்தின் தனித்துவமான பண்பாடு எனும்போது அதில் முக்கியம்சமாக அச்சமூகத்தின் தனித்துவமான சுயசார்புத் தன்மைகளுடனான பொருளாதார வாழ்வியல் அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(உதாரணமாக கிழக்கின் விவசாயிகளது பண்பாடுகள் எனும்போது அது காலங்காலமாகப் பட்டறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்ளூர் நெல் விதையினங்களுடனும்,
0-26-0

மாட்டுப்பட்டிகளுடனும் சம்பந்தப்பட்டதாக உள்ளதனைக் கூறலாம்) ஒரு சமூகத்தின் சுயசார்புமிக்க பொருளியல் தன்மையை அழிக்க வேண்டுமானால் அச்சமூகத்தின் பண்பாட்டை மாற்றுதல் அல்லது இல்லாமல் செய்தல் என்பது அவசியமானதாக அமைகின்
D5.
இந்த நோக்கிற்கு ஏற்பவே இன்றைய உலகின் ஏகாதிபத்திய சக்திகள் உலகம் முழுவதுமுள்ள பன்மைப்பண்பாடுகளை இல்லாது ஒழித்து உலகமயமாக்கம் என்கின்ற பெயரில் ஒரேயொரு நுகர்வுப் பண்பாட்டினை உருவாக்கும் வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த ஏகாதிபத்தியத்தின் இலக்கினை அடைவதற்கான உபாயங்களுள் ஒன்றாகவே ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன்அமெரிக்க நாடுகளில் இடம்பெற்றுவரும் தேசிய விடுதலைப் போராட்டங் களையும் உலக ஏகாதிபத்தியம் கையாண்டு வருகின்றது.
கடந்தகால, நிகழ்கால அனுபவங்கள் ஊடாகப் பார்க்கும் போது, தேசிய விடுதலைப் போராட்டங்கள் இடம்பெறும் நாடுகளில் உலக ஏகாதிபத்திய சக்திகளின் பார்வை என்பது அதனுடைய ஏகாதிபத்திய வர்த்தகக் கொள்கைக்கு ஏற்பவே தீர்மானிக்கப்பட்டு வருவதனைக் காணலாம்.
இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்றுவரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், தேசியவிடுதலைப் போராட்டங்கள் என்பவை குறித்து ஏகாதிபத்திய சக்திகள் காட்டுகின்ற வெவ்வேறுவிதமான முன்னுக்குப்பின் முரணான நிகழ்கால அணுகுமுறைகளை நுணுக்கமாகப் பார்த்தால் இந்த உண்மை தெளிவாகத் தெரிந்துவிடும்.
இவ்வாறு இன்றைய உலகச்சூழல் என்பது உலகின் பன்மைப் பண்பாடுகளை இல்லாமலாக்கும் ஏகாதிபத்திய நவகால னித்துவ ஆக்கிரமிப்புடன் சம்பந்தப்பட்டதாக உள்ளதனை நாங்கள் காண்கின்றோம்.
இத்தகைய ஆபத்தான ஆனால் மிகவும் லாபகமாக மேற் கொள்ளப்பட்டுவரும் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து எம்மை நாம் விடுவித்தல் என்பது எமது சுதந்திரமான வாழ்வியலை அர்த்த முள்ளதாக உருவாக்குதலுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடு என்பதை நாம் கவனத்தில் எடுத்தல் இன்றியமையாததாகும்.
e-27-0

Page 18
இந்தவகையில் எமது புலன்களுக்குள் இலேசாகப் புலப்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து எமது சுதந்திரமான வாழ்வைத்தக்க வைத்தலுக்கான போராட்டத்தின் ஓர் அம்சமாகவே எமது பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகளை முன்னெடுத்தலும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பின்னணியில் கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே மேற்கொள்ளப்பட்டுவரும் பத்ததிமுறைகளுடனான கோவில் சடங்கு களானவை இக்கோவில்களை மையப்படுத்தி இயங்கிவரும் பல்வேறு சமூகங்களினதும் சுயசார்பான வாழ்வியலுடன் பின்னிப் பிணைந் ததாக உள்ளதனைக் காணமுடியும்.
கிழக்கின் மட்பாண்டக்கைத்தொழிலுக்கும், பெட்டி, பாய் பின்னும் கைவினைத் தொழிலுக்கும் பத்ததிமுறை சார்ந்த கோவில் சடங்குகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.
அதாவது மட்டக்களப்புக் கோவில் சடங்குகளில் மண்ணால் செய்யப்பட்ட முட்டிகளின் பாவனை பிரதானமானது, முட்டிக்கு நூற்சுற்றி பத்ததி முறைப்படி தெய்வத்தை அம்முட்டியில் வைக்கப் படும் கும்பத்தில் வரப்பண்ணும் “கும்பச்சடங்கு பிரதானமான சடங்காகும். கிழக்கில் உள்ள பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகளில் களிமண்முட்டி இன்றியமையாததாக பல நூற்றுக் கணக்கில் தேவையாக உள்ளதால், கிழக்கின் கோவில் சடங்குக்காலம் என்பது சுயசார்புமிக்க கிழக்கின் மட்பாண்டத் தொழிலாளர் சமூகத்திற்கு வருடாந்தம் பல்லாயிரங்களை வருவாயா கப் பெறுவதற்கான சந்தர்ப்பமாக இருந்து வருகின்றது.
கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் மட்பாண்டக்கைத் தொழிலைத் தமது ஜீவாதாரத் தொழிலாக மேற்கொண்டுவரும் சமூகத்தினர் வைகாசியிலிருந்து ஆரம்பிக்கும் கோவில் சடங்குகளை தமது உற்பத்திகளுக்கான சந்தையாகக் கொண்டு உற்பத்திகளில் ஈடுபட்டு வரும் ஓர் ஒழுங்கினைக் காணலாம்.
இதேபோல் கோவில் சடங்குகளில் புதிய ஓலைப்பெட்டி, கடகம், ஓலைப்பாய் என்பவற்றின் பாவனை முக்கியமானது ஒவ்வொரு சடங்கின்போதும் பெரிய பனை ஓலைக் கடகங்களில்

மடைப்பெட்டி’ எடுத்து வருதல் பிரதானமான சடங்கு இதனால் பெட்டி, பாய் உற்பத்தியாளர்களுக்கான வருடாந்த வருமானத்தை வழங்கும் நிலையங்களாக கிழக்கின் கோவில் சடங்குகள் திகழ்ந்து வருகின்றன.
இவ்விதம் கிழக்குமாகாணத்தின் சுயசார்பான பொருளாதா ரத்தினை முன்கொண்டு செல்வதில் பத்ததி மரபுக் கோவில் சடங்குகள் பிரதான பங்கு வகித்து வருகின்றன. இந்தத் தன்மை யானது, இன்றைய உலகமயமாக்க உலோகப் பாத்திரங்களின் வர்த்தக விரிவாக்கத்தின் ஊடாகப் பாதிக்கப்படும் சுயாதீனமான மட்பாண்டக்கைத்தொழில் சமூகங்களை பட்டினியிலிருந்து பாதுகாக்கும் பாரிய பணியைப்புரிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கின் கோவில் சடங்கு நாட்கள் ஆனவை குறித்த சமூகங்களின் பாரம்பரிய அறிவுமுறைமைகள், வித்தியாசமான ஆளுமைகள், சுயாதீனமான கலை ஆளுமைகள் ஒன்றுசேரும் இடமாகவும் இத்தகைய அறிவுமுறைகள், ஆளுமைகள் என்பன அடுத்த தலைமுறையினருக்கு செயற்பாட்டினுாடாக கையளிக்கப் படும் களங்களாகவும் விளங்கி வருகின்றன.
கோவில் சடங்கினை அடிப்படையாகக் கொண்டு கோவில் வளாகத்தை துப்பரவு செய்தல் தொடங்கி சுற்றுச்சூழலை அலங்கரித்தல், தோரணம் கட்டுதல், சடங்குநாள் இராக்காலங்களில் இடம் பெறவேண்டிய கலையளிக்கைகளுக்காக கூத்தாடச் சட்டங்கொடுத்தல், தொடர்ந்து கூத்துப்பழகுதல், சதங்கை அணிதல், கோவில் வளாகத்தில் அரங்கேற்றுதல் என்று கோவில் சடங்கை மையப்படுத்திப் பல்வேறு கூட்டுச் செயற்பாடுகள் குறித்த சமூகங்கள் மத்தியில் இடம் பெற்றுவருவதனைக் காணமுடியும்.
இத்தகைய கூட்டுவாழ்வியல் முறை என்பது இன்றைய நவகாலனித்துவ ஆக்கிரமிப்புச் சூழலில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதாவது இன்று ஏகாதிபத்திய நலன்சார் கல்விக் கொள்கைகளும், ஏகாதிபத்திய தொடர்பூடகப் பண்பாடும் சமூகத்தில் மனிதர்களைத் தனிமைப்படுத்தும் நுகர்வுப் பண்பாட்டிற்கான அடிப் படையினைப் புரிந்து வருகின்றன.
உதாரணமாக, சுமக்க முடியாத பாரத்துடன் ஆரம்பக்
o-29-0

Page 19
கல்விமுறை, குறிப்பாக ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஓயாத கல்விச் சுமைகளுடன் சூழலுடன் இணையாது தனது சமூகத்தவரை இன்னார் யாரெனத் தெரியாத வகையில் எமது இளந்தலைமுறையினர் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உருவாக் கப்பட்டு வருகின்றார்கள்.
இத்தகைய தனிமைப்படுத்தல்களை இல்லாமலாக்கி சமூகத்தின் உறவுகளுடனும் ஏனைய உறுப்பினர்களுடனும் தொடர்பு களை ஏற்படுத்தி சமூகத்தின் வித்தியாசமான ஆளுமை மிக்கவர் களுடன் உறவுகளைப் பேணி இதனுடாக ஆக்க பூர்வமான ஆளுமைமிக்க மனித உருவாக்கத்திற்கான அடிப்படை ஆற்றல் களை அனுபவங்களை வழங்கும் இடங்களாக எமது பத்ததி வழி பாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகள் இயங்கி வருகின்றன. கோவில் சடங்குகள் தொடங்கிவிட்டால் கோவில்வெளி அச் சமூகத்தின் சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடி மகிழும் களங்களாக மாறிவிடுகின்றன. வயது வந்தவர்கள், முதியவர்கள் என சமூகத்தின் சகல தரப்பினரும் ஒன்று கூடித் தமது உணர்வு களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான நிலையங்களாக வருடாந்தச் சடங்கு நிகழ்வுகள் அமைந்துவருகின்றன. மொத்தத்தில் இன்றைய உலகமயமாக்க இலக்குச் சாதிக்க முனையும் மனிதத் தனிமைப்படுத்தலை சாத்தியமற்றதாக ஆக்கி ஒரு சமூகத்தின் ஊடாட்டங்களுக்கான மத்திய நிலையங்களாக எமது சடங்குக் கோவில்கள் திகழ்ந்து வருகின்றன.
இத்துடன் இன்றைய மனிதவாழ்வில் ஏற்படும் செயற்கை யான மற்றும் இயற்கையான அனர்த்தங்களின் இழப்புக்கள் மற்றும் உளத்தாக்கங்கள் என்பவற்றிலிருந்து மனிதர்களை இயல்பாகவே விடுவித்துவரும் சமூக உளவள நிலையங்களாக எமது கோவில் சடங்குகள் திகழ்ந்து வருகின்றன.
1990ம் ஆண்டிலிருந்து கிழக்கிலே நிலவிய அசாதாரணமான எதுவும் நிச்சயமற்ற ஓர் பயங்கரமான சூழலில் கிழக்குமாகாண மக்களில் பெருமளமானவர்கட்கு வாழ்தலுக்கான நம்பிக்கையை ஊட்டிய செயற்பாடாக கோவில் சடங்குகளே விளங்கி வந்தன என்றால் அதனை மறுக்க முடியாது. 1990 களுக்குப் பின்னர் கிழக்கிலே பிரசித்தி பெற்ற சடங்குகோவில்களின் தன்மைகளை

நோக்குவதனூடாக இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ள (փլգեւկլք.
இந்த இடத்திலேயே கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. சி.ஜெயசங்கர் அவர்கள் பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகள் பற்றிக் கூறும் கருத்து கவனத்திற்குரியதாக உள்ளது.
அதாவது “கிழக்கின் கோவில் சடங்குகள் சொர்க்கம் நரகம் பற்றிப் பேசுவதில்லை மாறாக இவ்வுலகத்தில் மனிதர்களாகிய நாம் எவ்விதம் எமது வாழ்வைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான வழிமுறைகள் பற்றியே கவனம் செலுத்தி வருகின்றதே முக்கிய விடயமாக உள்ளது” என்று கூறியுள்ளார். மேற்படி சடங்குகள் பற்றிய விரிவுரையாளரது கருத்து இன்றைய உலகச் சூழலில் மிகவும் முக்கியத்துவமுடையதாக உள்ளது. அதாவது வாழப்பிறந்த மனிதர்களாகிய நாம் எவ்வாறு இவ்வுலகின் ஏனைய உயிர்களையும் இயற்கையினையும் மதித்து மகிழ்வாக வாழ முடியும் என்கிற வாழ்தலுக்கான தத்துவத்தை நடைமுறையூடாகச் செய்துவரும் நிகழ்வுகளாக கிழக்கின் கோவில் சடங்குகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உளத் தாக்கங்களின் விடுதலைக்காக என்று மேற்கு ஐரோப்பிய உளவள ஆலோசகர்கள் தங்களது பரிவாரங்களுடன் பலகோடிப்பணச் செலவு களுடன் ஒருசில நாட்களுக்கான ஆற்றுப்படுத்தல் விஜயங் களை மேற்கொள்ளும் விநோதமான சூழலில் எத்தகைய நிபுணர்களதும் ஆற்றுப்படுத்தல்களின்றி பாதிக்கப்பட்ட மக்களது உளத்தாக் கங்களை விடுவிக்கக் கூடிய நிகழ்வுகளாக கிழக்கின் கோவில் சடங்குகள் இடம் பெற்று வருகின்றமை விசேட விடயமாகும்.
இவ்விதம் பல்வேறு வகைகளில் எமது பத்ததி வழிபாட்டு மரபுகளுடனான கோவில் சடங்குகள் இன்றைய உலகத்தின் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு மாற்றான சுயசார்புமிக்க வாழ்வியல் முறைகளை தக்கவைத்து முன்னெடுத்து வருகின்றன. இத்தகைய முக்கிய அம்சங்களைக் கொண்ட கோவில் சடங்குகளை ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுத்தல் என்பது இன்றைய டி.லகச் சூழலில் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வியலுக்கு
0-31-0

Page 20
அடிப்படையானதாக அமையும்.
இத்தகைய முன்னெடுத்தல் என்பது வெறுமனே சடங்குகளில் உள்ள பிற்போக்கான அம்சங்களுடன் கொண்டுசெல்வதாக அல்லாமல் அத்தகைய பிற்போக்குத் தனங்களை இல்லாமலாக்கி ஆக்கபூர்வமான வகையில் மீளுருவாக்கி முன்னெடுக்கும் செயற்பாடாக அமைதல் மிகமிக அவசியமானது.
அதாவது பெண்களது பங்குபற்றலை ஆண்களது நோக்கில் வரையறுத்துச் செய்யப்படும் சடங்குப்பண்பாடு என்பது அம்மனுக்குச் செய்யப்படும் சடங்கில் அவ்வம்மனின் இனமாகிய பெண்களையும் முழுக்க முழுக்கப் பங்குகொள்ள வைப்பதாக மீளமைக்கப்படல் வேண்டும்.
இத்துடன் சடங்கு வாழ்வின் சாதகமான தன்மைகளை அறிந்து கொள்ள முற்படாது வெறும் பகட்டிற்காக மட்டும் சடங்குக் கோவில்களை சமஷ்கிருதமயப்படுத்தும் தன்மைகளிலிருந்தும் விடுவித்து பத்ததி வழிபாட்டு மரபுகளுடன் முன்கொண்டு செல்வதன் ஊடாகவே இதனைச் சாத்தியமாக்க முடியும்.
 

மட்டக்களப்பு பத்ததிச் சடங்கில் பூசாரியாரும்,
கட்டுச்சொல்லுதலும்
ஆறுமுகம்ாத - ஓர் அறிமுகம் -
மட்டக்களப்புப் பிரதேசத்தில் எமது மூதாதையர்களினால் கட்டிக்காக்கப் பட்டு தொன்றுதொட்டு இன்று வரை முன் னெடுக்கப்பட்டுவருவது பத்ததிச் சடங்கு முறை வழிபாடாகும்.
இவ்வழிபாட்டை நுட்பமாக நோக்கும் போது மனித வாழ்வுக்குத் தேவை யான சகல அம்சங்களும் இதில் பொருந்தியுள்ளதனைக் காண முடியும். இவற்றில் நாம் இப்போது ஆராயவிருப்பது பத்ததிச் சடங்குகளில் தேவாதி தேவதைகளால் மொழியப்படும் கட்டுச் சொல்லுதல் என்னும் நிகழ்வாகும்.
இதற்கு ஆதாரமாக விளங்குவது மந்திரதந்திரமாகும், இதில் மருந்து, மாறணம், மோகனம், தம்பனம், கக்கிசம், குறளி தொட்டியம் போன்ற வித்தை களெல்லாம் பின்னிப்பினைந்துள்ளன.
இவ்வித்தைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு கிளைகளாகப் பிரியும், இவை யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்களை எமது முன்னோர் பூசாரி, அல்லது பூசகர் என அழைத்திருக்கின்றார்கள். இவர்கள் பத்ததிச் சடங்குக் கோவில்களில் பூசை புனக்காரங்கள் புரிபவராக இருப்பார்கள்.
இதேவேளை மேற்படி வித்தைகளைக் கற்றுவிட்டு இறைதொண்டை விடுத்து தியவழியில் பிரயோகிப்போரும் உள்ளனர். இவர்களை எமது முன்னோர் மந்திரவாதிகள் என்றே அழைத்து வந்துள்ளனர்.
இவர்களுள் பூசாரிமார்களே சடங்குக் காலங்களில் தேவாதிகள் கூறும் நல்வாக்குகளைக் கேட்டு மக்களுக்கு விபரிப்பவர்களாக அமைகின்றனர். மனித வாழ்வின் இறந்தகால, நிகழ்கால, எதிர் கால நிகழ்வுகளைப்பற்றி தேவாதிகள் சொல்லும் நல்வாக்குகளை (கட்டுச் சொல்லல் தேவாதிகளுக்கூடாக வரப் பண்ணி சடங்கை நிகழ்த்துபவர்களாக பூசாரிமாரே தொழிற்படுகின்றனர்.
பூசாரிமார் முதலில் முழுகி மாத்துடுத்து, தீர்த்தக் கலசத்திலே புத்தம் புதிய நீர் எடுத்து கோவிலுக்குள் நுழைந்து குருவை நினைத்து கிழக்கு முகமாக இருந்து தீர்த்தக் கலசத்தை எதிரே வைத்து, அதனுள்ளே திருநீறு, மஞ்சள், சந்தனம், குங்குமம் என்பவையிட்டு அட்சரம் தாவித் துடக்கறுத்து, சலம் அரட்டி குருசித்தி மந்திரம் சொல்லி உயிர் பிரணவம் கொடுத்து தமது இஸ்ட தேவதையை அழைத்து தரிக்கச்செய்து கும்பிட்டு மன்றாடித் தனது குருவை நினைத்து விபூதி எடுத்து இடது உள்ளங்கையிலே பரவித் தமது வாலாய தேவாதிக்குரிய அட்சரத்தைத்தாவி தனது குரு சித்தியை உச்சரிப்பார்கள். பின்பு கணபதிசித்தி சொல்லி பிரணவம் கொடுத்து விபூதியை உருட்டி நெற்றி பொட்டிலே வைத்து வாலாய தேவதையை முறைப்படி அழைத்து தன்னுடன் இருத்தித் தரித்துக்
4-33

Page 21
கொள்வார்கள். மற்றும் பல சிவ சின்னங்களையும் குருமுறை அறிந்து தரித்துக் கொள்வார்கள்.
பின்பு பத்ததிமுறைப்படி திருக்கதவு திறந்து மூலதேவதையின் விக்கிரகத்தைத் தரிசித்து பேரானந்தம் அடைந்து வாலாய உருக்கொண்டு தவித்துத் தத்தளிப்பார்கள். இவ்வேளை பூசை, புனக்காரங்களில் தொண்டு செய்யும், தேவாதிகளின் வாலாயங் கொண்ட மாந்தர்களும் உரு ஏறி திரு நடனம் புரிந்தாடுவார்கள். சிறிது நேரத்தில் இத்தகைய ஆரவாரங்கள் தணிந்து விடும்.
பின்னர் பூசாரியார் முறைப்படி அபிசேகம் செய்து, அலங்காரம் பண்ணி வெள்ளை விரித்து அரிசி பரவி இயந்திரம் தாவி குருமுறைப்படி மந்திரம் சொல்லி கும்பத்தை உருப்படுத்தி அட்சரத்திலே நிறுத்துவார். பின்னர் பத்ததி முறைப்படி மடைப் பிரிவுகளுடன் மடைகட்டி அலங்காரம் பண்ணி முக்கண்ணன் நீர் ஆகாரப் பலி கொடுத்து தூப தீப நெய்வேத்தியம் பண்ணிக் கும்பிட்டு வணங்கிக் கொள்வார்கள்.
இவற்றிலே கும்பம் வைக்கும் முறை விரிவாக விளக்கப்படவேண்டியது. இருந்தாலும் கூறவந்த விடயம் இதுவல்ல என்பதால் மேலோட்டமாகக் கூறியுள்ளேன்.
பூசாரிமாரால் கும்பம் உருப்பண்ணி உச்சக்கட்டத்தை அடையும் போது கும்பத்தில் குடிதங்கச் செய்யும் தேவதைக்குத் தலைசுற்றும் பூமரம், என அழைக்கப்படும் தேவாதிபிடித்துள்ள மனிதர்களுக்கு ஏதேனுமோர் ஈர்ப்பு ஏற்படும் இவ்வேளை தம்மையறியாமலே சன்னதம் உண்டாகி உரு ஏறி ஆடிக்கொண்டு கும்பத்தை நோக்கி ஓடுவார்கள். கும்பத்தைப் பூசாரியார் அட்சரத்தில் நிறுத்தி யவுடன் தலைசுற்றும் தேவதை தணிந்துவிடும்.
பூசாரிமார் கும்பத்தை உருப் பண்ணும் போது சன்னதம் உண்டாகி உருஎறியே அட்சரத்தில் நிலைநிறுத்துவார்கள். இவ்வேளை தேவதைகள் பிடித்த மாந்தர்கள் கூட உருஎறி ஆடுவதனையும் காணலாம். இதனுடாக தேவதை பிடித்த மனிதர்களை அடையாளங் காணமுடியும்.
இவ்விதமாக தேவாதி பரிகலங்களின் மடை, பூசை, புனக்காரங்களை பத்ததிமுறைப்படி செய்து முடித்தபின்னர் தெய்வக்காரர்களை ஆயத்தமாகுமாறு கூறுவார்கள்.
தெய்வக்காரர்கள் மாத்துடுப்பு எடுத்து முறைப்படி கொடுக்கை கட்டி கோவில் கிணற்றில் தலைமுழுகியதும் தலைத் தெய்வக்காரர் முன்னே செல்ல பிரதான கோவிலை நோக்கிச் செல்வர் இதன்போது தலைப்பூசகர் தனது தீர்த்தக் கலசத்தை மந்திர முறைப்படி எடுத்து உருப்படுத்தி தெய்வக்காரர்களின் உச்சந் தலையில் சிறிது ஊற்றுவார். இதைத் தொடர்ந்து முறைப்படி உபதேசம் சொல்லி உருவேற்றி, வாடை காட்டி, மரியாதை பண்ணி, வணங்கி தீப துாபம் காட்டித் தலை சுற்றி ஆடச் செய்வார்கள்.
3
4
O

இவ்வேளையில் மந்திரங்களைக் கற்றறிந்த ஏனைய மாந்தர்களில் சிலர் பூசைக்கு எழுந்து வரும் தேவதைகளை வரப்பண்ணாமல் தடைசெய்வார்கள். இவற்றில் பல படிமுறைக்கட்டு மந்திரங்களும், மருந்துகளும், பற்பல பயங்கரத் தேவாதிகளின் ஆணை கொண்ட கட்டு மந்திரங்களும் உண்டு. இத்தகைய மந்திரங்களால் வராது தடைப்படுத்தப்படும் தேவாதிகளை பூசாரிமார் தடை வெட்டு, எழுப்பு, அகோரம் எழுப்பு, உச்சாடனம், மாறனம், எதிரேற்று, அறவிழி, கட்டுக்கு வெட்டு, அகவல், மண்டாட்டு போன்ற மந்திரச் செயற்பாடுகளினூடாக சகல தேவைகளையும் அழைத்து தடையறுத்து, எதிர்த்த சத்திராதிகளின் வலுவைக் குறைத்து வாணாலை வாங்கி, தேவதைகளின் வலுவைக் கூட்டி ஆணை இட்டு ஆடச் செய்து கோவில் திரை திறந்து அலங்காரத் தீப ஆராதனை, தோத்திரப்பாக்கள் அர்ச்சனை நாமங்கள் போன்ற படிமுறைகள் நிகழும்
இந்நேரத்தில் தேவாதிகள் தலை சிதறி ஆடுவார்கள். இவ்வேளை தேவதைகளுக்குரிய தாலாட்டு, காவியம், அகவல் போன்ற படிமுறைகளைக் கற்றுக்கொண்ட கோவில் தொண்டர்கள் தேவாதிகளை நோக்கிப் பாடித் துதிப்பார்கள். இவ்வாறு பாடும் போது தேவாதிகளின் வலு அதிகரித்து ஆடல் உக்கிரம் பெறும்.
இவ்வேளை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ என்னும் பஞ்சாட்சர உயிர் எழுத்துக்களி னால் ஆரம்பித்து தேவாதிகள் நாப்பறியும் சத்தம் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்பும் இன்னும் பறை, சொர்ணாளி, உடுகு, அம்மானைக்காய், சிலம்பு, மணி முதலிய நாத ஓசைகளும் பூசாரிமார்களது உச்சாடன மந்திர ஒலிகளும் இணையும் போது ஒர் பேரானந்தப் பரிபக்குவ நிலை ஏற்படும். இடையிடையே பூசையில் பங்கு கொள்ளும் மனிதர்களின் குரவை, அரோகரா ஒலியும் சேர்ந்து கொள்ளும்
இவ்வாறு அலங்காரப் பூசை முடிவு பெற்றதும் மூல தேவாதியின் மூலஸ்தான வாசலிலே கட்டாடியாரால் வெள்ளை விரிக்கப்படும், விரிக்கப்பட்ட வெள்ளையிலே தலைசுற்றும் தேவாதிகளை முறைப்படி அமரச்செய்து மூலதேவ தையின் வெள்ளிப்பிரம்பு, காற்சிலம்பு, அம்மானைக்காய், பத்திரம் போன்ற அடையாளங்களின் உதவிகொண்டு அவற்றுக்குரிய மந்திரங்களை விதிமுறைப் படி உச்சரித்து அடையாளம் வைத்து தேவதைகளை இனங்கண்டு துஸ்ட தேவதைகளை முறைப்படி விரட்டி ஆதரிக்கவல்ல தேவ தைகளை முறைப்படி ஆதரித்து அம்மனின் அடையாளங்களிலே சன்னதக்காரர்களின் இருகரங்க களையும் பதியச்செய்து தானும் இரு கைகளாலும் பற்றிக்கொண்டு தலைப் பூசாரியாரால் குருவாணை பெறப்படும்.
இக்குருவாணைக்குக் கட்டுப்பட்டே தேவதைகள் தலைசுற்றும். இங்கே பூசாரியார் குருவாகவும் தேவாதிகள் மாணாக்கராகவும் ஓர் உறவு நிலை பேணப் படும். தேவாதிகள் பூசகர்களை கப்புவன், ஆசான் என்று பலவாறாக அழைப்பர். முதலில் இப்பூசாரிமாருக்கு தேவதைகள் சில வாக்குகளைச் சொல்வர். பின்னர் தலைப் பூசாரியாரின் அனுமதியுடன் தத்தமக்கு விருப்பமான, வேண்டுதல்க
a as a w OS-or

Page 22
ளுடன் வந்துள்ள மானிட வரைத்தேடி தீர்த்தம் தெளித்து மூலதேவதையிடம் விடைபெற்று குறித்த மானுடரின் எண்ணங்களையும் வேண்டுதல்களையும் தானே கூறி இதற்கான நன்மை, தீமைகள் பற்றியும் எடுத்துக் கூறி மானிடவரின் உள்ளத்தின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்களை நிறை வேற்றுவதாக மனதினைச் சமாதானப்படுத்துவதாக தேவாதிகளின் கட்டுச் சொல்லுதல் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
இதிலே மானிடவருக்குக் கட்டுச் சொல்லாத சில தேவாதிகளும் உண்டு. புதிதாகத் தலை சுற்றும் தேவாதிகளைக் கட்டுச் சொல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை, குறித்த காலத்தின் பின்னர் கட்டுச் சொல்வதற்கான பக்குவம் புதிய தேவாதிகளுக்கு கிடைத்துள்ளது என்று தலைப் பூசாரியாரும், தலைத் தேவாதியும், கருதும் பட்சத்திலேயே கட்டுச்சொல்ல அனுமதி வழங்கப்படும் கட்டுச்சொல்லும் தேவாதிகள் திருமணமான ஆண்களைப் பேதையா னவன் என்றும், திருமணமான பெண்களைப் பேதையானவள் எனவும், குழந்தைக ளைக் குஞ்சான் என்றும், நாட்களைச் சூரியன் என்றும், மாதங்களைச் சந்திரன் எனவும், வருடங்களை ஆண்டுகள் என்றும், பொதுவாக மனிதர்களைப் பூமரம் எனவும் தேவாதிகளுக்குரிய வார்த்தைகளாலேயே அழைத்து உரையாடுவர்.
இப்படிக் கட்டுச்சொல்லும் தேவதைகள் தன்னை நம்புவோருக்கு “ஒரு முள்ளுக் கொப்பும் முறியாமல் காப்பேன்’ (அதாவது எந்தத் தீமைகளும் நிகழாமல் காப்பேன்) என்று பரிவுடன் உறுதிமொழி வழங்கி கட்டுக் கேட்கும் மனிதர்களின் நிகழ்கால வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். கட்டுச்சொல்லும் தேவாதிகள் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தனது கரங்களிலே உள்ள கமுகம் பாளை, திரு வேப்பங்குழை, வெள்ளிப்பிரம்பு கொண்டு பக்தர்களின் உடலைத் தடவி இதனூடாக அவர்களது உடல் உபாதை கள் நீங்குவதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குவது கண்கூடு.
ஆனால் இக்கலையை ஐயந்திரி பறக் கற்காமல் தவறான கிரியை முறைகளைப் புகுத்தி மக்களை ஏமாற்றுபவர்கள் சிலரால் தியமாய சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி இறுதியில் கேடுகளே விளைகின்றன. தற்போது உலகம் முழுவதும் ஏமாற்றுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள்.
இக்கலையில் உண்மையானவர்களையும் உண்மையான தேவாதிகளை யும் இனங்காணுவதும் அவற்றை நல்ல நோக்கில் பயன்படுத்துவதும் எளிதில் முடியாதவை. இக்கலையை ஓரளவேனும் சத்தியத்துடன் பயின்று கொண்டவர் களால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
உண்மையை அறிந்து உலகம் உய்யட்டும்.
நன்றி. மூன்றாவது கண் - மடல்
O
3
6

அமிர்தகழி முநீ மகாமாரியம்மன் காவடிப் பாடல்
Ch. uDmTafleomTLDGOf
வெண்பா குருந்த மர நிழல் அமர்ந்து குறைதீர்க்கும் சித்திமுத்தி குருகுலத்தோர் தன்னைக் காக்கும் அரனார் மைந்தா மகாமாரிதன் சிந்து பாட வரமருள வேண்டுமையா மாயவனார் தன் மருகா மலர்பாதம் போற்றினேனே.
Tago
1.அறுமுகவனின் அன்னையென வந்த தாயே அடியவர்க்கு அருள்புரியும் அன்னை நீயே பூவுலகில் வந்துதித்த பூவை நீயே பொற்கொடியே உன்பாதம் துதித்தேன் அம்மா வாடுகின்றேன் உன் முகத்தை காண்பதற்கு வந்திடுவாய் என்முன்னே புலிமேல் ஏறி நாடினேன் உன்பாதம் தன்னைத்தானே நாயகியே வரமருள வருவாய் தாயே
2. ஆத்திமர நிழலதனில் அமர்ந்திருந்தாய் அரிய வைரவரை அருகே வைத்தாய் காத்தானை உன் எதிரில் கொலுவில் வைத்தாய் கன்னிமாரை உன் உடனே கூடவைத்தாய் பாவையவள் காளியரை பக்கம் வைத்தாய் பரிவுடனே எங்களை நீர் காக்கவென்று தானமர்ந்தாய் அமிர்தநதி தன்னிலே தான் தாயாரே வரமருள வருவாய் தாயே
3. இரங்குமம்மா உன்மனது மாரித்தாயே இன்னமும் நான் படும் துயரம் பாராதேனோ நொந்து தயராகவே தான் வாடுகின்றேன் நொடியதனில் என் முன்னே வந்து தோன்றி சிந்தையது மகிழ்ந்திடவே காட்சிதாரும் தேவியரே உன்பாதம் துதித்தேன் அம்மா ஆதிபராசக்தியரே மாரித்தாயே அடியவருக்கு வரமருள வருவாய் தாயே
alta vir - Vr

Page 23
4. ஈசருக்கே முத்தெறிந்த உமையாள் நீயே ஈடுஇணை இல்லாத சக்தி நீயே வினாயகனார் அருகிருக்கும் தாயும் நீயே வேலவரை அணைத்தெடுத்த சக்தி நீயே அரனாரின் தேவியராய் வந்தாய் நீயே அழகு பெறும் காளியாக உதித்தாய் நீயே நாடினேன் உன்பாதம் தன்னைத் தானே நாயகியே வரமருள வருவாய் தாயே
5. உதவியில்லாப் பிறவியானேன் இவ்வுலகில் உன் மைந்தன் படும் துயரம் பாராதேனோ பத்தினியே பாருமம்மா உந்தன் கண்ணால் பாலகன் நான் படும் துயரம் பார்க்கொண்ணாதோ நாடினேன் உன் பாதம் தன்னைத்தானே நாராயணண் தங்கையரே மனது வைத்து சிந்தையது மகிழ்ந்திடவே எங்கள் முன்னே தேவியரே வரமருள வருவாய் தாயே
6. ஊரவர்கள் எல்லோரும் ஒன்று சேந்து உனக்காக பொங்கலிட்டோம் இன்று தாயே நானறியப் பல நூறு வருடம் முன்னே நாயகியே வந்தமர்ந்தாய் கொலுவின் மீதே ஏழையல்லோ நாங்களம்மா வருந்துகின்றோம் இன்னமும் தான் உன்மனது இரங்காததேனோ பாலகரைக் காப்பதற்காய் பாரில் வாராய் பார்வதியே வரமருள வருவாய் தாயே.
7. என்னம்மா உன்மனது இரும்புதானோ எள்ளளவும் இன்னமும் தான் இளகாததேனோ மக்கள் படும் துயரமது தெரிந்து நீயும் மனமது இரங்காமல் இருப்பதேனோ கத்துகின்றோம் கலங்குகின்றோம் மக்கள் நாங்கள் காத்திடவே வாருமம்மா எங்கள் முன்னே ஆதி மகாமாரியரே தாயே போற்றி அடியவர்க்கு வரமருள வருவாய் தாயே
O
3
8
()

8. ஏந்திணையே பார்வதியே என்ன செய்வோம் எரிகிறதே உடம்பெல்லாம் வெந்து புண்ணாய் பாரம்மா உன் கண்ணால் எங்களைத்தான் பாவையரே கோபாலன் தங்கையாளே எப்பிழைகள் செய்தாலும் பொறுத்து எம்மை ஈடேற்ற வேணுமம்மா இரக்கம் வைத்து நாடினேன் உன்பாதம் தன்னைத்தானே நாயகியே வரமருள வருவாய் தாயே
9. ஐயனுடன் சுடலை தன்னில் ஆடும் தாயே அரிவையரே மாரியரே வாரும் தாயே மெய்யாக என் உடம்பு வருந்துதம்மா மேதினியில் உன்னையன்றி யாருமில்லை கள்ளமில்லா என் உள்ளம் வருந்தி நானும் கதறுகிறேன் பதறுகிறேன் கருணைவைத்து வாருமம்மா என்முன்னே மாரித்தாயே வந்து வரம் அருள் செய்வாய் தாயே போற்றி
10. ஒளியாகி நின்றதொரு உமையாள் நீயே உலகளந்தோன் மாயவனின் தங்கை நீயே அரவமதை தான் அணிந்த பரமன் பாகம் அமர்ந்திருக்கும் அரியதொரு தேவி நீயே கருமாரியாக உரு உற்றாய் நீயே காத்தானின் இனியதொரு தாயும் நீயே நம்பினேன் உன்பாதம் தன்னைத்தானே நாராயணன் தங்கையரே வருவாய் தாயே
11. ஒடியே வந்திடுவாய் எங்கள் தாயே ஓலமிட்டோம் உனை நம்பி நாங்களம்மா அறியாத பாலரம்மா உன் மைந்தர் ஆறுகுற்றம் நூறு பிழை செய்ததெல்லாம் பரிவுடனே நீர் பொறுத்து எங்களைத்தான் பாதுகாக்க வேணுமம்மா பட்சம் வைத்து அரிவையரே அம்பிகையே மாரித்தாயே அன்புடனே வந்து வரம் அருள் செய்வாயே.
O
R
fA a

Page 24
“பாணக்கம்’ ஓர் அறிமுகக் குறிப்பு
யற்கையின் பகுதியாய் மனிதர்கள் வாழ்கிறோம்' எனும் சுற்றுக்கமைய எமது வாழ்க்கையானது இயற்கையுடன் இணைந்த இயற்கையின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது.
ஆயினும் இன்றைய உலகின் உலகமயமாக்க சிந்த னைகளானது எமது உலகை கிராமமாக்குகின்றது என கூறிக் கொண்டு எம்மை, எமது வாழ்க் II கையை இயறர் கையிலிருந்து பிரித்து வியாதியர்களாகவும், சுய சிந்தனைகளற்றவர்களாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உணர்மையில் எமது வாழ்க்கை முறையானது இப்பொழுது எங் கேயோ போய்க் கொண்டிருக்கிறது எமது உணவு முறைகள் எமது சூழலுக்கு ஒவ்வாதனவாக, எமது உடலுக்கு ஒவ்வாதனவாக காணப் படுகின்றன. விரைவு உணவுகளும், கிருமிநாசினிகள் பாவிக்கப்பட்ட காய் கறிகளும் எமது வாழ் நாட்களை சுருக்கிக் கொண்டு செல்கின்றன.
இருந்தபோதும், எமக்கு சற்று நிம்மதியை தருவதாக அமைந்திருக்கின்றது யாதெனில், எமது பகுதிகளில், குறிப்பாக மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற கிராமிய வழிபாட்டு முறைகளும் அவற்றுடன் இணைந்த உணவுப் பழக்க வழக்கங்களும்தான் இண்வகையான கிராமிய வழிபாட்டு முறைகளுடன் இணைந்த உணவுப் பழக்க வழக்கங்களுக்கு காரணகாரிய ரீதியான விளக்கங்களும் காணப்படுகின்றன. இது இவ்வாறு இருக்க கிராமிய வழிபாட்டு முறையான சடங்கு விழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தக் கிராமமே வேப்பிலை மஞ்சள் உடன் கலந்து பாணக்கம் எனும் பானத்தின் வாடையில் திளைத்திருக்கும். இங்கு குறிப்பிட்ட இந்த பாணக்கம் எனப்படுவது பழங்கள் பலவற்றின் கலவையினாலமைந்த ஒரு விதமான பானமாக தெய்வங்களிற்கு படையல் பண்ணுகின்ற
--4--
 

பிரசாதமாகும். இந்தப் பாணக்கத்தை பானகம்' என்றும் அழைப்பர். சடங்கு விழாக்களில் மிகவும் பிரதான மான பிரசாதமாக படைக்கப்பட்டு மின்னர் பகிரப்படுகின்ற பாணக்கத்தை சகல வயதினரும் ஆவலோடு பருதுவார்கள் எண்பது கண்டறிந்த உண்மை.
கிழக்கிலங்கையில், பெரும்பாலும் மட்டக்களப்பிலே ஆண்டு தோறும் பல்வேறு பிரதேசங்களிலே இச் சடங்கு விழாக்கள் பெரும்பாலும் வெப்பகாலமாகிய சித்திரை மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரையான காலப்பகுதியிலேயே நடைபெறுகின்றன. இக் காலப்பகுதியை அக்கினி நாட்கள் எனவும் சுறுவர். இக்காலப்பகுதியில் தான் எமது நீர் நிலைகளில் நீர் வற்றும், மழை இராது, வெப்பம் தகிக்கும் எனவேதான் இக் காலப்பகுதியில் மக்கள் மாரியம்மன், காளியம்மன், வைரவர், விரயத்திரர், பேச்சியம்மன் கண்ணகையம்மன் போன்ற தெய்வங்களுக்கு சடங்கு விழாக்கள் கொண்டாடி மழையை வேண்டி நிற்பர்.
இத்தகைய விழாக்களில் தான் பாணக்கம் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சடங்குகளின் பத்ததி முறையிலே பாணக்கத்தை அமிர்தம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. பாணக்கமானது அமிர்தம் என்று அழைக்கப்படுகின்றது என்றால் அது எமது உடலிலுள்ள பல நோய்களுக்கு நிவாரணியாக தொழிற்பட வேண்டுமல்லவா. நிச்சயமாக பாணக்கம் பல்வேறு நோய்களுக்கு நோப் கட்டுப்பாடாகவும், நேரப் நிவாரணியாகவும் தொழிற்படுகின்றது.
பாணக்கம் தயாரிப்பின் போது பல்வேறு விதமான பழ வகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. உண்மையில், இந்தக் காலத்தில் அதாவது சடங்கு காலங்களில்தான் எமது பிரதேசங்களில் பல்வேறு விதமான பழங்களும் மிகவும் அதிகமாக கிடைக்கின்றன. இயற்கையானது எமது சூழலுக்கு ஏற்றவகையில் எமக்கு நன்மையே செய்யும். உதாரணமாக, மிகவும் வெப்பகாலமான சித்திரை தொடக்கம் ஜப்பசி வரையும் எமது உடலை, சூழலை குளிரவைப்பதற்காகவே இக்காலங்களில் எமக்குத் தேவையானவற்றை நல்குகிறது.
இவ்வாறு இயற்கை செப்கின்ற நண்மையை ஊருக்கு தொகுத்து வழங்குகின்ற ஒரு சிறந்த விடயமாகவே சடங்குகள் அமை
ன்ெறன.
பாணக்கர் எனும் மருத்துவ குன மிக்க பானத்தை Wெறுத்தவரையில் எமது உடலை வெப்பத்திலிருந்து காக்கிரது மட்டுமல்லாது, எமது உடலியக்கத்தையும் சீர்செய்கிறது. பாணக்கத் WWரிப்பானது. பல விதமான பழவகைகளுடன் குறிப்பாக மT பலW.
---

Page 25
வாழை, மாதுளை, அன்னாசி தோடை, தேசி, போன்ற பழங்களுடன் கரும்புச்சாறு, பனங்கற்கண்டு, கற்கண்டு, சர்க்கரை, இளநீர் முத லியவற்றை சேர்த்து கலவையாக்கி தயாரிக்கப்படுகிறது. இதில் வெங்காயம் கலக்கப்படல் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. சில சடங்கு நடைபெறும் கோயில்களிலே மேற்படி கலவையுடன் தேங்காய்ப் பாலும் கலப்பதுண்டு, இப்படியாக தயாரிக்கப்டுகின்ற பாணக்கமானது மிகவும் சுவையானதாகவும் சத்து நிறைந்த பானமாகவும் காணப்படு கின்றது.
குறிப்பாக எம்மவரது உடல் உவர்ணத்தை குறைக்கவல்ல பழ வகைகளான மாதுளை, அன்னாசி போன்றவற்றாலும் எமது வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைான மலச் சிக்கல், வயிற்றுளைவு போன்ற உஷ்ண வருத்தங்களையும் போக்க வல்லது இந்த பாணக்கமே குறிப்பாக உவர்ணகாலத்தில் எமது உடலானது உஷ்ணத்தை தாங்கவல்லதாக மாற வேண்டின் இந்த பாணக்கமானது மிகச் சிறந்த மருந்தாகும். உண்மையில் சடங்கு காலங்களில் சடங்கு பூசை வேலைகளில், தொண்டுக ளில் ஈடுபடும் மக்கள் அந்தச் சடங்குகளில் பிரயோகிக்கப்படும் மந்திர உச்சாடனங்களின் வெப்பங்களை தாங்குவதற்காகவும் குளிரப்படுத்தலுக் காகவும் கூட இந்தப் பாணக்கம் கை கொடுக்கின்றது.
இங்கு மேலே சில சடங்கு விழாக்கோயில்களிலே பாணக்கத் திற்கு தேங்காப்பால் கலப்பதாக குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் காரணங் களை வகுத்துள்ளனர் எம் முதாதையர். அதாவது, எமது வயிற்றில் ஏற்படக்கூடிய வயிற்றுப் புண், வயிற்றெரிவு முதலியவற்றை இல்லாமல் செய்யக்கூடிய தன்மை தேங்காய்பாலுடன் பனங்கற்கண்டு சேர்க்கும்போது உண்டாகின்றது என்பதாகும். எமது உடலில் தூசுகளால் ஏற்படும் கரி, சன்னி போன்ற வியாதிகளை இளநீருடன் பனங்கற்கண்டும் கருப்பஞ்சாறும் வெங்காயமும் சேரும் போது அறுத்து விடுகிறது என்பதும் உண்மை என வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறெல்லாம் மருத்துவ குணம் நிறைந்த, இயற்கையுடன் இணைந்த இந்த பானம் அதாவது பாணக்க மானது எமது பிரதேசங்களில் சடங்குவிழாக்கள் நடைபெறும் கோயில்களில் மிகவும் பிரதானமான பிரசாதமாக பயன்படுத்தப்படுவதன் முக்கியத் துவம் எமக்கு சிறிதளவு புலப்பட்டிருந்தாலும், இன்னும் பல விடயங்கள் அறியப்படக் கூடியதாகவே உள்ளது. எனினும் இந்த விளக்கங்கள் முலம் பாணக்கமானது எமது சூழலுக்கு எமது உடலுக்கு எவ்வளவு உகந்தது, முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.
நன்றி. மூன்றாவது கண் - மடல்-05
-O-42-0

நன்றிகள் பல நவில்லின்றோம்
மட்டக்களப்பு அமிர்தகழி புன்னைச்சோலை 4 மகாமாரியம்மன் ஆலயம் அழிவுறும் நிலையிலிருந்ததைக் கண்ட பொதுமக்களும் அக்கால நிர்வாக சபையினரும் தொண்டர்களும் இந்த ஆலயத்தை மாற்றி புதிய தேவாலயமாக நிர்மாணிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதே வேளை அம்பாளும் திருவுளம் கொண்டாள், இதன் பயனாய் இப்புதிய ஆலயம் இலங்கை இந்திய கட்டிட நிபுணர்களையும் ஆச்சாரிய சிப்பந்திகளையும் கொண்டு அமைக்கப்பட்டு அம்பாள் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
கட்டிட வேலைகள் முடிவுற்று கும்பாவிஷேகம், மண்டலாபி ஷேகம், சங்காபிஷேகம் அனைத்தும் மிகவும் சிறப்பாகவே நடைபெற்று முடிந்துள்ளது. இவ்வாலயம் அமைக்கத் தொடங்கிய காலம் தொடக்கம் சங்காபிஷேக காலம் வரை இப்பெரும் பணிக்காக தமது உடல் பொருள், உழைப்பு, அனைத்தையும் இன்முகத்துடன் எமக்கு அளித்தவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம். இற்றைவரை ஒருகோடி ரூபாய்க்கு மேல் இப்பெரும் பணிக்கு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை யாவரும் அறிவீர்கள்.
எனவே எமக்கு வேண்டிய பணம், கட்டிடப் பொருட்கள், மின்சாரப் பொருட்கள், உபகரணங்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம். மேலும் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய வேறு ஆலய நிர்வாகத்தினருக்கும் பொது அமைப்புகளுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இளைஞர் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டு உள்ளோம்.
மேலும் அனைத்து கிரியைகளையும் திருவிழாக்களையும் நடாத்தி முடித்த சிவாச்சாரியார்களுக்கும், பூசகர்களுக்கும், தொண்டர்க ளுக்கும் திருவிழா உபயகாரர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
(0-43-0

Page 26
அடுத்து விசேடமாக இச்சிறப்பு மலர் உருவாக ஆலோசனை வழங்கியவர்களுக்கும், பணம் கிடைக்க ஏற்பாடு செய்தவருக்கும் பணத்தை வழங்கியவர்களுக்கும், இம்மலருக்கு ஆசியுரைகளை கட்டுரைகளை, வழங்கியவர்களுக்கும் இம்மலர் அழகாக உருவாகி அனைவரது கரங்களிலும் மிளிர வழிசெய்த தொகுப்பாசிரியர்களுக்கும் அச்சகத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
ஓம்சக்தி ஓம்பராசக்தி
இவ்வண்ணம் இ. சிவசுப்பிரமணியப செயலாளர் ஆலய நிர்வாகசடை
ஆலய விமானத்தில் உள்ள சிற்பம்
r
4.
4.
 

AMTMANN'NING M"
T ݂ ݂
"Y

Page 27