கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதியபாதை

Page 1
ZVN"
 

حمق" تھا مگر جھم)SCS"r = 22 گھ
2
' "محصص S.
*
त्र्/%ॐ
g52)6O6)&O 596

Page 2


Page 3

ugচষ্টjumps

Page 4
திக்குவல்லை கமால் - நூல்கள்
* கோடையும் வரம்புகளை உடைக்கும்
(சிறுகதைகள்)
* குருட்டு வெளிச்சம்
(சிறுகதைகள்)
* ஒளி பரவுகிறது
(நாவல்)
* விடுதலை
(சிறுகதைகள்)
* விடை பிழைத்த கணக்கு
(சிறுகதைகள்)
* புதிய பாதை
(சிறுகதைகள்)
- 1984
1993 ܗ
1995
- 1996
1996
1997

திக்குவல்லை கமால்

Page 5
இந்நூல் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகையுடன் அச்சிடப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்கியுள்ள பொருள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கமாட்டாது என்பதனை கவனத்திற் கொள்ளவும்.
புதிய பாதை (சிறுகதைகள்) உரிமை : திக்குவல்லை கமால் முதற் பதிப்பு : மே - 1997 அட்டைப்படம் : ஏ. எம். றவுமி அச்சுப்திப்பு : குயிக் கிரஃபிக்ஸ் பக்கங்கள்: 68+1O = 78
pDUTIYA DA ATHAI (Short Stories) CopyRight: Dikwella Kamal First Edition: May - 1997 ISBN No : 955-95926-1-0, Cover Disigned by: A. M. Rashmi Pages : 68+10 = 78
Printed by: Quick Graphics Print 5-1/20, Super Market, Kotahena, Colombo - 13. Price: Rs. 60/=

FDī6b
காலஞ்சென்ற எனது தகப்பனார்
ஏ. ஆர். முஹம்மது ஜெலாலுத்தீன் அவர்களுக்கு

Page 6

திறவுகோல். திறவுகோல். திறவுகோல்
வாழ்க்கைப் பயணம் என்றும் ஒன்று போல அமைந்து விடுவதில்லை. வேகமான மாற்றங்களுக்கு சமூகம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் அனுபவங்களும் புதுமை பெறுகின்றன. அந்த அனுபவங்கள் கலைவடிவம் பெற்று சிறுகதைகளாக அறுவடையாகின்றன.
சமூக நோக்கும் யதார்த்தப் பண்புகளும் இல்லாமல் சிறுகதைகள் மட்டுமல்ல எந்த இலக்கிய படைப்பும் உருவாக (Մ)Iգա IITՖl.
இந்தப் பின்னணியிலேயே இத்தொகுப்பில் உள்ளடக் கியுள்ள கதைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெறும் சிறுகதைகள் அனைத்தும் 1995ம் ஆண்டில் எழுதப்பட்டவையாகும்.
இத்தொகுப்பு ழரீலங்கா தேசிய நூலக சேவைகள் சபையின் புத்தக வெளியீட்டு உதவித் திட்டத்தின் கீழ் வெளிவருகிறது.
தேசிய நூலக சேவைகள் சபையினரும் சிறந்த முறையில் பதிப்பித்த அச்சகத்தினரும் தட்டச்சு பிரதி தயாரித்த சகோதரர் எம். எம். ஹிதாயத்துல்லா அவர்களும் நன்றிக்குரியவர்கள்.
இலக்கிய தாகமே இமய தாகம்.
திக்குவல்லை கமால்
191/8 - அட்டுலுகம, பண்டாரகம - 0785 இலங்கை,

Page 7
கதவுகள். கதவுகள். கதவுகள்.
O.
O2.
O3.
O4.
05.
O6.
O7.
O8. 09.
1 O.
1.
எதிர் வீடு
விடிவை நோக்கி.
மன்னிப்பு
விருந்து
புதிய பாதை
... first
பெற்ற மனம்
கதவுகள்
ஒரு நாள் நகர்ந்தது
நாற்பது நாள்
அற்புதங்கள் ஆயிரம்
15
21
27
31
38
45
51
57
63

எதிர் விரு
அடுப்பிலிருந்து புட்டை இறக்கி வைத்தாள் ரஹிமா, ஏற்கனவே துருவி வைத்திருந்த தேங்காயை பிழிந்து கோப்பை நிறைய தலைப்பால் எடுத்து வைத்தாள். ..பிரிஜிலே வாலைப்பழச்சிப்பு அப்படியே இருந்தது.
அவளது கணவனுக்கு பால் பழத்தோடு மணிப்புட்டு சாப்பிடுவதென்றால் கொள்ளை இன்பம்.
குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் சற்றே ஓய்வு. கோப்பி குடித்துவிட்டு சுபஹ" தொழப்போன கணவன் இன்னும் திரும்பவில்லை. வியாபார விடயமாக சம்பந்தப்பட்ட வர்களை சந்திக்கும் வேளை இதுதான்.
மூலை ஆசனத்தில் அமர்ந்தாள் ரஹிமா. ஜன்னல் சீலையை விலக்கி ஒரு கைதியைப்போல் உலகத்தைப்

Page 8
புதிய பாதை
பார்தாள். பாதையும் எதிர்வீடும்தான் அவளுக்குத் தெரிந்தது. இன்னும் சூரியன் பிரகாசிக்கவில்லை. மெல்லிய குளிர் இழையோடியது.
எதிர்வீட்டு மனிதன் அடுத்த வீட்டு கிணற்றால் நீர் அள்ளிக்கொண்டு வருவது தெரிந்தது. ஒரு கையில் வாளி. மறுகையில் பிளாஸ்டிக் கொள்கலன். வீட்டுத் தேவைக்கு தண்ணிர் நிறைக்கிறார் போலும்.
அந்த மனிதனின் பெயுர் என்னவென்று அவளுக்குத் தெரியாது. அவர் மனைவியின் பெயரும் கூட தெரியாது. அவர்கள் ஊருக்குப் பதியவர்கள். இன்னும் சரளமாகப் பழகிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை.
மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களென்று சிலர் கதைத்துக் கொண்டார்கள். அவர் மக்கள் வங்கியிலும் அவர் மனைவி ஆசிரியையாகவும் வேலை செய்கின்றார்களாம். இருவருமே தொழில் செய்வதால் கெளரவ அகதிகள் போலும். இல்லாவிட்டால் இப்படி கூலிக்கு வீடெடுக்க முடியுமா?
சனிக்கிழமையாக இருந்தாலும் மனைவி வீட்டில் இல்லைபோல் தெரிகிறது. முகம் கழுவ வந்த பிள்ளை பல்துல க்காமல் அடம்பிடித்தான். அவர் விட்டுக்கொடுக்காமல் இறுக்கிப் பிடித்து பற்துலக்கிவிட்டார். முகம் கழுவினார். துடைத்து உள்ளே அனுப்பினார்.
ரஹீமா கூர்ந்து அவதானித்துக்கொண்டிருந்தாள். சில நாட்களாக அவதானித்தே வருகிறாள்.
எந்தக் கூச்சமுமின்றி விளக்குமாற்றால் முற்றம் கூட்டத் தொடங்கினார் அவர். வீட்டு வேலை எதுவாக இருந்தாலும் அவருக்கு அது இரண்டாம் பட்சமாக இல்லை.
அந்த பொம்புளக்கி எவளவு லேசன். எல்லா ஆம்பிளயஞ ம் இப்பிடில்லேன்' அவள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். மாலை நேரங்களில் மெல்ல கதைத்துச் சிரித்தபடி இருவரும் ரோட்டைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
செய்தி போகும் நேரங்களில் அவர்களது வானொலி
2

திக்குவல்லைகமால்
பலமாகச் சத்தமிடும். பாட்டுக்களையும் விரும்பிக் கேட்பார்கள். அவ்வப்போது நான்கே வயதளவு மகளோடு இருவரும் வெளியே போய் வருவார்கள். WW
பரபரப்போ பதட்டமே அவர்களிடமில்லை. "வீல்" என்று அவளது குழந்தை அழத்தொடங்கியது. ஆறு மாதக் குழந்தைதான்.
கொஞ்சம் செல்லம் கொஞ்சி பால் போத்தலை வாயில் வைத்தவிட்டு வந்தபோது ஏழரையாகிருந்தது.
இதற்குமேல் அவள் உட்கார்ந்திருக்க முடியாது? இரவு நனைத்துப்போட்ட பிடவைத் துண்டுகளால் பிளாஸ்திக் பேஸன் நிரம்பி வழிந்தது. அதை அப்படியே தூக்கிக்கொண்டு பின்புற பைப்படிக்கு வந்தாள். ஒவ்வொன்றாகக் கழுவி இன்னொரு பேஸனிலே போட்டாள். வெய்யில் படும் இடமாகப் பார்த்து அவற்றைக் காயப்போட்டாள்.
போகிற போக்கில் எட்டிப் பார்த்தபோது குழந்தை மீண்டும் , தூங்கிப்போயிருந்தது.
..பிரிஜிலிருந்து இறைச்சியை எடுத்துக்கொண்டு குசுனியிலே குந்தினாள். பின்னர் குழம்புக்கேற்றபடி கழுவி வெட்டினாள். அதே கைப்பட கூட்டி அடுப்பில் வைத்தாள்.
குழந்தை விழிப்பதும் தூங்குவதும் நேர ஒழுங்குக்கு உட்பட்டதல்லவே. அதனால் அவளது வேலையும் முன்பின்னாகிவிடுதுண்டு. கிடைக்கும் நேரத்தில் ஒவ்வொரு வேலையாக முடித்துக்கொள்வாள்.
அவள் திருமணமாகி ஒன்றரை வருடங்கள்தான். வசதியான இடத்தில் அவளுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். வசதி இருந்தாலும் வீட்டுக்கு வேலைக் காரியொன்று வைத்துக் கொள்வதை அவர் விரும்பவில்லை. குழந்தை பிறந்தபின்பு அவள் இயந்திரமாகிப் போய்விட்டாள். வீட்டுவேலை, குழந்தையின் வேலையென்று அவதிப்படாள்.
கணவன் வருவதற்கிடையில அரிசியையும்
3

Page 9
புதிய பாதை
அரித்துவைத்தால் நல்லதுபோல் பட்டது அவளுக்கு. இரண்டு சுண்டு அரிசியை அள்ளிப் போடும்போது.
"ட்றீங்" ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள். சந்தேகமில்லை கணவனேதான்.
"எங்கியன் நேத்து கழுகத் தந்த சேட்" "ஆ. இந்தாங்கொ." என்றவாறு உள்ளேயிருந்து கொண்டுவந்து நீட்டினான் ரஹிமா.
"இன்டக்கி போட்டுக்கொணுபொக கழுகத் தந்த. இத அயன் பண்ணல்லயா” கைக்கு எடுக்காமலேயே கத்தினார்.
"நில்லுங்கொ அயன் பண்ணித்தாரன்” "ஆ. நான் அயன் பண்ணங்காட்டீம் நீங்க புட்டுத் தின்னுங்கொ" மேசையை தயார் பண்ணியபடியே அவள் சொன்னாள்.
அயன் பொக்ஸின் பல்ப் எரிந்தது. அவள் சேட்டை விரித்துத் தயாரானாள்.
"எங்கியன் கரண்டி?” "கரண்டி வெச்சில்லயா. அ. இந்தாங்கொ" "செய்த வேலய ஒழுங்காச் செய்ங்கொ. இல்லாட்டி சும்மிரீங்கொ”
அவள் மெளனமாக அயன் பிடித்தாள். அயன் பொக்ஸைப் போலவே அவளது மனமும் கொஞ்சம் சூடாகியது.
"டியா பிளேன்டியா குடிக்கிய." அவள் கேட்டாள். "பிளேன்டிதான் நல்லம். பச்செஞ்சி போட்டு ஊத்துங்கொ அம்மி கடகடத்து. தேநீர்த் தட்டோடு வந்தபோது முன்வாசலில் அவர் அமர்ந்திருந்தார்.
கணவனுக்கு கொடுத்துவிட்டு அவளும் தேநீர்க் கோப்பையோடு மூலை ஆசனத்தில் அமர்ந்தாள்.
தேநீரை உறிஞ்சியபடியே கணவனின் முகத்தை அவதானித்தாள். முகத்தில் கடுகடுப்பு தெரியவில்லை.
yy)
4

திக்குவல்லைகமால்
தேநீரை உறிஞ்சியபடியே ஜன்னலுக் கூடாகப் பார்த்தபோது.
"இதப் பாருங்கொலே" மனைவியின் கண்போன திக்கில் அவரது கண்ணும் போனது. அங்கே எதிர் வீட்டு மனிதன் கொடியிலே, தோய்த்த உடுப்புக்களை காயப் போட்டுக்கொண்டிருந்தார்.
"நீங்கேத்துக்கன் அந்த மனிசனப் பாக்கிய?” "அந்த மனிசனப் பாக்கல்ல. செய்த வேலயப் பாத்த" அவள் பட்டென்று சொன்னாள்.
"இஹி..ஹி” “எனத்தியன் சிரிக்கிய நீங்க” "இல்ல பொம்புள வேல செய்தத்தப் பாத்துத்தான் சிரிப்பு வந்த” நையாண்டியாகச் சொன்னார்.
"ஆம்பிளயஸ் இப்பிடி வேல செய்தென்டா எவளவு லேசன்" அவள் ஆதங்கத்தோடு சொன்னாள்.
"பொணாட்டி ஜொப் செய்த, இனி வேலசெய்யாமேலுமா. அதுதான் செல்லிய. பொணாட்டிமாரு சம்பரிச்சியெண்டா மாப்புளமாரு பொண்ணயனாப் போற. எனக்கு எத்தின டீச்சர்மாரப் பேசினள். அதுதான் நான் வாணான்ட”
அவளது நெஞ்சில் ஓங்கிக் குத்தியதுபோல் ஒரு வேதனை.
அவளும் படித்தவள் தான் தொழிலி செய்ய வேண்டுமென்று விரும்பியவள்தான்.
திருமணம் நடந்த புதிதில் எல்லாமே பெற்றுவிட்டது போல் ஒரு பூரிப்பு அவளுக்கு. இப்பொழுது எல்லாமே இழந்துவிட்டது போன்ற தவிப்பு.
அவர் எழுந்து முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி நடந்தார்.

Page 10
விடிவை நோக்கி.
“மஸ்னவி நானட மகனுக்கு நேத்துராவு. ஒசர வளவு ஹல்மும்மட மகள காவினெழுதினாம்"
பொலபொலவென்று விடிவதோடு இந்தச் செய்தி எங்கும் ஒழுகத் தொடங்கியது.
சுபஹ" தொழுதுவிட் டு பள்ளிவாசலிலிருந்து வெளியிறங்கும் வரை மஸ்னவி நானாவுக்கு எதுவுமே தெரியவில்லை.
ஆங்காங்கே இரண்டுடொருவர் கூடிக் குசுகுசுப்பதும் அவரைக் கண்டு ஒரு மாதிரியாக மிரளுவதும் அவருக்கு எதையுமே உணர்த்திவிடவில்லை.
“எனத்தியன் செய்தி." என்றவாறு தொழுதுவிட்டு பள்ளியடியில் நின்ற ஜெஸ"லி நானா மெல்ல அவரோடு
6

திக்குவல்லைகமால்
இணைந்து நடைபோட்டார்.
அவருடைய நெருக்கத் திலி ஏதோவொன்று உறைந்திருப்பது மஸ்னவி நானாவுக்கு விளங்கிவிட்டது.
"ஓங்களோட செல்லாமேம் ஏல” என்று ஜெஸ"லி நானா பீடிகை போட்டபோது, நின்று திரும்பி வியப்போடு பார்த்தார் @lഖi. -
"நேத்து ராவு ஹல்மும்மட மகளுக்கு காவினெழுதீட்டாம்" "ஆ. தாருக்கன்." ஒரு விதமான சலனமுமில்லாமல் தான் அவர் கேட்டார்,
ஆகிரம் துணியா ஒன்டுமே இந்த மனிசுனுக்குத் தெரியா இப்படி நினைத்தபடி ஜெஸ"லி நானா தடுமாறினார்.
"தாருக்கென்டு கேட்ட” தனது கேள்விக்கு மீண்டுமொரு முறை அழுத்தம் கொடுத்தார் மஸ்னவி நானா.
"ஓங்கட மகனுக்கென்டுதான் கேள்வி" “எனத்த சென்ன?” மஸ்னவி நானாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபம் முகத்தில் கொதித்தது. அவமானமும் வெட்கமும் ஒன்று கலந்த நிலை. ஆத்திரத்தை யெல்லாம் அவர் மேல் அள்ளிக் கொட்டுவதில் அர்த்தமில்லையே. அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வழமையாக அவருக்கென்று காத்திருக்கும் கோப்பிக் கோப்பை அன்று காணப்படவில்லை. ஸித்திபதூல் இடிந்துபோய் ஒரு பக்கமாக அமர்ந்திருந்தாள். அவரது மூன்று குமர்ப் பிள்ளைகளும் காம்பராவுக்குள் ஒரே கட்டிலில் இருந்து அழுதுகொண்டிருந்தார்கள். யன்னல்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
சூரியன் கம்பீரமாக உதித்து வந்தான். சைக்கிள்களும் கார் வாகனங்களும் விரைந்தன. சனங்கள் தம் அலுவல்களுக்காக வெளிப்பட்டனர். ஊள் வழமைபோல் துயில் கலைந்திருந்தது.
“எப்பிடியன் மகன் செஞ்சீக்கிய கெட்டித்தனம்"
7

Page 11
புதிய பாதை
யாருக்கு யார் குற்றம் சொல்வது. ஆயினும் மனைவியின் மேல் கொஞ்சம் பாய்ந்து ஆட்டைக் குறைக்க முனைந்தார்.
"ம். இப்பிடி நடக்குமென்டு மனாவிலயாலும் நெனச்சா. ஊட்டுக்குள்ள மூணு கொமரு ஈக்கச் செல்லே லேசா மாப்பிள புடிச்சிக்கொண்டீக்கி. கள்ள மாப்பிள எடுத்துப் பழகின தத்துவானிக் கூட்டம். பன்னெண்டு மணி ஜாமத்தில மாத்தறேக் கூட்டிக்கொணு பெய்த்தாம் காவினெழுதீக்கிய" ஸித்தி பதூல் திட்டித் தீர்க்கத் தொடங்கினாள். ,
"தாருக்காலும் குத்தம் செல்லி வேலில்ல. எங்கடவன்ட குத்தமேன். கொஞ்நாளா அவன் ஊடு வாசலுக்கில்லாம திரியச்செல்லே நான் யோசிச்சதான். குடும்பத்துக்கு மூத்தவன். அவனுக்கு எவளவு பொறுப்பீக்கியன். எல்லாத்தேம் அப்பிடியப்பிடியே வெச்சிட்டு அவன் பொண்ணெடுத்தாச் சரிவாரோ" குடும்பத்தின் எதிர்கால ஒளிவிளக்கு அஸ்தமித்துப் போய் எல்லாப் பாரமும் வந்து அழுத்துவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
"எங்களுக்கெட்ட வாய்தொறந்து சென்னா அவன். செல்லிந்தா நாங்க யோசின பண்ணிப் பாக்கியதானே.
"ம். கூட்டாளிமாரோட நாலெடத்துக்கும் போறவார. இப்பிடியாகுமென் டு தாரன் வழிபாத் த. அறிஞ்ச தெரிஞ்சவனியஞம் சும்மவாலும் எங்களுக்கட்ட செல்லல்ல. எல்லம் ஹஸது புடிச்சவனியள்." ஸித்தி பதூலின் ஆத்திரம் இன்னொரு பக்கம் திசைதிரும்பியது.
மஸ்னவி நானா தனது மகனுக்கு ஒதல் படிப்பென்று அதிகம் ஊக்கம் கொடுக்கவில்லை. அல்லா ரஸ"லென்று வாழ்ந்தால் போதுமென்று எதிர்பார்த்தார். வாய்பாவைப் போலவே அவனும் மாதம் ஒரு தடவை மூன்று நாள் ஜமாஅத்தில் சென்றான். வாராவாரம் ஜும்ஆ ராத்திரியில் கலந்துகொண்டான். சின்னச் சின்ன வியாபாரங்கள் செய்து உம்மாவின் கையில் வீட்டுச் செலவுக்கு கொடுத்தான்.
8

திக்குவல்லைகமால்
"எனா எல்லம் கொழுவாப் பெய்த்து பாத்துக்கோ நிக்கிய. இவளவு காலமும் கஷ்டப்பட்டு வளத்த ஒரேயொரு ஆம்பளப்புள்ளய அவளியலுக்கு சும்ம குடுக்கவா. ஊட்டுக்குள்ள சொரசொரெண்டு மூணுகொமரீக்கியது பொட்டயாப் பெய்த்தா. ஜாமத்தில கொணுபெய்த்து காவினெழுதினது போதாத்துக்கு பொண்ணேம் மாப்புளேம் எங்கியோ உட்டிட்டு வந்திக்காம்" பரபரப்பாக ஓடிவந்த சித்தி பதுரலின் தங்கை உம்முரதியா பொருமி வெடித்தாள்.
அப்போதுதான் அந்த வீடு கலகலப்பாகியது. அக்கம் பக்கத்தவர்களும் இதுதான் வாய்ப்பென்று நெருங்கி வந்தனர். அனுதாபம் தெரிவித்தனர். ஆலோசனை முன்வைத்தனர். எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் மஸ்னவி நானா.
★★女★ ஆஸாத் அந்தக் குடும்பத்துக்கு ஒரே ஆண்பிள்ளை குடும்பப் பொறுப்பை அவன் அறியாதவனல்ல.
யார் யாரோவெல்லாம் சொல்வதுபோல் அவனால் குடும்பத்துக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை.
அவன் முறைகேடாக நடந்துகொள்ளவில்லை. ஓடிப்போகவுமில்லை. தனது உம்மா வாப்பாவிடம் சொல்லிக் கொள்ளவில்லை. அவ்வளவுதான்.
சொல்லியிருந்தால். “ஒன்ட ஒரு தங்கச்சியச் சரி குடுத்திட்டு நீ கலியாணம்: புடிச்சிக்கோ.”
சந்தேகமில்ல்ை; இப்படித்தான் சொல்லியிருப்பார்கள். ஒரு தங்கைக்காவது திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் அது அவனால் முடிகிற காரியமா என்ன?
“சி.பா எங்கட கலியாணத்த சீக்கிரம் எடுக்கோணும். அவன் அன்று சொன்னான்.
"ஓங்கட தங்கச்சிமாரீக்கச் செல்லே நாங்க கலியாணம்

Page 12
புதிய பாதை
புடிக்கேலுமா." ஒரேயடியாக சி.பா இப்படித்தான் திருப்பிக் கேட்டாள்.
நான்கு வருடங்களாக அவர்கள் ஒருவரையொருவர் விரும்பிவந்தனர். அவர்களது தொடர்புக்கு ஆஸாதும் அன்வரும் நண்பர்களாக இருந்தமையும் முக்கிய காரணமா கியது.
இவர்கள் வசதி வாய்ந்தவர்களல்ல. ஆஸாதோடு ஒப்பிடு கையில் எல்லாவகையிலும் வாழ்க்கை வசதிகளில் குறைந்த வர்கள்தான்.
ஆஸாத் முன்மொழிந்த விடயத்தை சிஃபா, தன் குடுபத்தவர்களுக்கு எடுத்துரைத்தாள். அது பலவாராக அவசப்பட்டதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட முடிவு இது.
A A k k "சிஃபா. நாங்க எந்த நாளும் இப்டி ஒளிச்சொளிச் சீக்கேல”
கணவன் எதற்காக இப்படிச் சொல்கிறாரென்று சி. பாவுக்குப் புரியவேயில்லை. எதுவுமே பேசாமல் அவர் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள்.
"எங்கடுட்டுக்கு நாளக்கிப் பொகோணும்" மீண்டும் சொன்னான் ஆஸாத்.
"ஓங்கடுட்டுக்கு பொகவாணான்டு நான் எப்ப சரி சென்னா ஓங்களுக்கு" ஏதோ தன்னைக் குற்றம் சாட்டுவதாக நினைத்துக்கொண்டு திருப்பிக் கேட்டாள் இப்படி,
அவர்களது திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகத்தான் ஒரு வாரம் மறைந்திருக்க நேர்ந்தது. அதன் பின்பு ஊருக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.
நடந்து முடிந்த பின்பு பிரச்சினைப்பட்டு என்ன அர்த்தம். அது பழங்கதையாகிப் போய்விட்டது.
"ஸ்பூர் பண்ணிக்கோங்கொ அல்லா ஒரு நலவு
1 Ο

திக்குவல்லைகமால்
வெச்சிப்பான்" மஸ்னவி நானாவுக்கு இப்படித்தான் பலரும் ஆறுதல் சொன்னார்கள்.
என்னதான் சொன்னலும் மூன்று குமர்களையும் நினைக்கும் போது அவரது நெஞ்சம் எரிமலையாய் கனன்றது. "அவன் நெனச்ச மூப்புக்கு கலியாணம் புடிச்சிக் கொண்டாலும் உம்ம வாப்பவ கையுடுகியல்ல." அடிக்கடி சித்திபதூல் தன் நம்பிக்கைக்கு வெளிச்சம் போட்டுக் கொள்வதுண்டு.
"கைல ஒழுங்கான தொழில் தொறவில்லாம கலியாணம்பபுடிச்சிட்டு உம்ம வாப்பவ பாக்கேலுமா. அவன் வராமீக்கியதே நல்லம். இன்னமீக்கிய சாமன்சட்டியேம் தூக்கிக்கொணுபோறொன்டும்" மஸ்னவி நானாவின் நெஞ்சு இன்னமும் நிதானப்படவில்லை.
"நான் சென்னது வெளங்கினா ஒங்களுக்கு. பொகாம்
வராமீக்கவாணம். உம்ம வாப்போட ஒத்துமயாகிக் கோங்கொ”
மனைவியின் குரல் அவனை நிஜத்துக்கு கொண்டு வந்தது.
6
ஓ.. நாளக்கி நான் எங்கடுட்டுக்கு பொகப்போற. நீங்களும் என்னோட வரோணும்"
அவள் திடுக்கிட்டாள். அவளை அடித்தே கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் அவர்களுக்கு. இந்த நிலையில் அவள்.
"எனக்கேலா. பயம்" "என்னோடதானே போற எனத்துக்கன் பயப்புடுகிய" "நீங்க கூப்பிடியென் டா வாரன்" உள்ளுக்குள் பயந்தபடிதான் அவள் இப்படிச் சொன்னாள்.
மனைவியின் சம்மதம் அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. கொழும்புக்கு.போய் வந்ததும் வராததுமாக கணவனின் இந்த வேண்டுகோளுக்கான பின்னணி அவளுக்குத் தெரியவில்லை. இனி இரவில்தான் விளக்கம்பெற அவளுக்கு
1 1

Page 13
புதிய் பாதை வாய்ப்புக்கிட்டும்.
★★女★ வா” என்று அழைக்கவோ "போ” என்று விரட்டவோ முடியாதபடி தடுமாறினாள் சித்திபதூல்.
வாசலில் ஆஸாத் தன் மனைவியோடு வந்து நின்றான். தங்கச் சிமார் மூவரும் வீட்டுக் குள் ளிருந்து போட்டிபோட்டுக்கொண்டு கதவிடையால் பார்த்தனர்.
'செஞ்ச கெட்டித்தனம் போதாத்துக்கு கூட்டிக்கொண்டு வந்திக்கிய. இப்படி அவள் மனம் பிரலாபித்தது.
"வாப்பெங்கியனும்மா." அவன் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
"நிக்கிய உள்ளுக்கு" அவள் பார்த்தும் பார்க்காமலும் சொன்னாள்.
அழைப்பு இல்லாதபோதும் இருவரும் உரிமையோடு உள்ளே வந்து அமர்ந்துகொண்டனர்.
சியாவுக்கு தலையை நிமிர்த்தவே வெட்கமாக இருந்தது. மாமா வந்து கத்தி விரட்டிவிடுவாரோ என்று கூடப் பயந்தாள். இரவு ஒன்பதரைக்குமேல் ஊர் அடங்கிவரும் வேளை. "இது ஆஸாது பொண்ணேம் கூட்டிக்கொணுவந்தீக்கி. வந்து பாருங்கொளே”
சுருட்டு இழுத்தபடி சாய்ந்துகொண்டிருந்த கணவனுக்கு தகவல் சொன்னாள் அவள். அவருக்கும் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை. ஆயினும் நிதானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்துகொண்டு வருவதுபோல.
"ஆ. பொண் கூட்டி வந்திக்கா. அப்ப சங்க செஞ்சி உள்ளுக்கெடுங்கொ" கிண்டல் பண்ணினார் மஸ்னவி நானா. “வந்து எனான்டு கேளுங்கொ. வாசலுக்கு வந்தாப் பொறகு பேசாமீக்கப்படாதேன்"
"செய்யவேண்டியதெல்லம் செஞ்சிட்டு வந்திக்கா. அவனோட பெய்த்து நான் பேசவா. எனக்கு ரோட்டில
1 2

திக்குவல்லைகமால்
போரத்துக்காலும் எடம் வெச்சா அவன். அவனுக்கு பொண் தேவயென்டு செல்லிந்தா எவளவு நல்ல நல்ல எடமியளிக்கன் செஞ்சிகுடுக்க”
அவரின் சத்தம் வரவரக் கூடிக்கொண்டு வந்தது. முன்வாசலுக்கு கேட்டுவிடுமோ என்று பயந்தாள் அவள். என்ன நடந்தாலும் ஆண் பிள்ளையல்லவா.
"ஓங்களோட பேசியத்துக்கு ஒங்கட காலடிக்கி வந்தீக்கி. வெட்டிப் போட்டாலும் ஒங்கட ரெத்தமேன்"
சித்திபதூல் மேற்கொண்ட முயற்சியில் அவள் தோற்றுவிடவில்லை. கணவனை எப்படியோ முன்வாசலுக்கு இழுத்துக்கொண்டு வந்து சேர்த்தாள்.
வாப்பாவை கண்டதும் இருவரும் எழுந்து நின்றனர். ജൂഖ് வாய் திறந்து வேறு திசைக்கு இழுத்துவிட முன் விடயத்துக்கு வந்தான் ஆஸாத்.
"வாப்பா. நாங்க ரெண்டுபேரும் செளதி பொகப்போற. செல்லீட்டுப் பொகத்தான் வந்த”
எல்லோருக்குமேயொரு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது அது. அப்போதுதான் துயில் கலைந்து எழுப்புவது போல ஒவ்வொருவரும் மிரள மிரள விழித்தனர்.
"போற போறென் டு எவளவு காலமா செல்லிச் செல்லிக்கியன்” இது சித்திபதூல்.
"சென்னத்துக்கும்மா தனியப் போறென்டா நாப்பது அம்பது கெட் டித் தான் பொகோணும் . எனக் கட் டிக் கா ஒங்களுக்கட்டிக்கா. ஜோடு போரென்டா லேசாப் பொகேலும். அதுதான் நான் சீக்கரமா கலியாணம் புடிச்ச.”
உள்ளே நின்ற தங்கைமார் மூவரும் இப்பொழுது வெளியே வந்து நின்றனர். புதியதோர் வெளிச்சத்தில் கண்கள் கூசி நின்றார் மஸ்னவி நானா. சவுதிச் சல்லி வரப்போகும் பெருமை சித்திபதூலுக்கு.
"டிகட்டெல்லம் ஒகே. நாங்க ரெண்டுபேரும் இப்பிடிப் போறது தங்கச்சிமாரட விஷயங்கள முடிக்கத்தான் வாப்பா.
1. 3

Page 14
புதிய பாதை
இத உடடா எங்களுக்கு வேறெனத்தியனிக்கிய வழி. எங்களுக்கு நல்ல மாதிரி எடம் கெடக்கியத்துக்கு எல்லாருமா துவாச் செஞ்சிக்கோங்கொ" நிதானமாகத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான் ஆஸாத்.
ஆயிரமாயிரம் துஆக்கள் அந்த நெஞ்சங்களிலே அலைமோதின. புதுவாழ்வுபெற்று சந்தோஷத்தில் பூரிப்பது போன்ற உணர்வு தங்கைமாருக்கு.
"அல்லாட காவல்ல பெய்த்திட்டு வா புள்ள" வாய்நிறைய வாழ்த்திவிட்டு உள்ளே போனார் மஸ்னவி நானா. இனி பிரிவும் உறவும் இரண்டொரு மணிநேரம் அங்கே அலைமோதுமென்று அவருக்கு தெரியாதா என்ன?
"எனேத்தெரீம் ஏன்ட புள்ள என்ன கையுடுகியல்ல" என்றவாறு மகனை வாரித்தழுவிக் கொண்டாள் சித்திபதூல்.
4

மன்னிப்பு
ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஹஜ்ஜுக்கு செல்வோரின் அமர்களம்தான். ஸலாம் சொல்லி வழியனுப்பு வதில் யாருக்குத்தான் அக்கறையில்லை.
"ஹஜ்ஜுக்குச் செல்லும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் ஹஜ்ஜாஜிகளுக்கு ஸலாம் சொல்லி வழியனுப்பிற பாக்கியத்தை நாங்க தவறவிடக் கூடாது." இப்படி சக்கூர் ஆலிம் சென்றவாரம் ஜும்ஆ பிரசங்கத்தில் கூறியது ஜனவேகத்தை மேலும் அதிகரித்திருந்தது.
பாடசாலை வேலைகளில் ஈடுபட்டிருந்த ஹஸன் மாஸ்டரின் சிந்தனை வெளிக் களேபரங்களால் சிதறடிக்கப் பட்டது. அவர் ஜன்னலுக்கூடாக தனது கண்ணோட்டத்தைச் செலுத்தினார்.
1 5

Page 15
புதிய பாதை
எதிர்ப்பக்கமாக இரண்டு வீடு தள்ளி அமைந்திருந்த வீட்டில் மினிஜெனரேட்டர் மேலதிக விளக்குகளுக்கு ஒளி கொடுத்தது. சிறுவர்களும் பெரியவர்களும் ஏன் பெண்களும் கூடத்தான் அங்கே ஊர்வலம் நடத்தினர்.
இரண்டொரு வாகனங்களும் முன்னே நின்றன. புதிய பணக்காரன் புவாத் கானும் மக்காவுக்கு போகிறாராம். நான்கு விஷயங்களுக்கு அள்ளி வீசியதுதான் தாமதம் அவரை பள்ளிவாசலுக்கு தர்மகர்த்தாவாக்கி விட்டார்கள். அவருக்கு பிடித்ததுதான் சரி. அதுதான் நடக்கவேண்டுமென்பதை காலப்போக்கில் நியதியாக்கிக் கொண்டார். அவரோடு கைமாற்றுப் பண்ணும் சிலதுகள் அவருக்காக யாரோடும் கைகலப்புச் செய்யவும் தயாராகவே நின்றாகள். இந்தப் பின்னணியோடு பார்க்கும் போது அவர் ஒரு அல்ஹாஜாகவும் இருக்க வேண்டியது ஓர் அவசரத் தேவைதான்.
"நாளக்கி பிளேனாம். நீங்க ஸலாம் செல்லப் பொகல்லயா.” மனைவி கேட்டு நின்றாள்.
"ம். நான் செல்லோண்டியவங்களோட செல்லீட்டான்.” அவர் நிதானமாகவே சொன்னார்.
“ஊருச் சனமெல்லம் வார. அசல் மனிசன். நீங்க பொகாட்டிச் சரில்ல." அவள் நியாயம் சொன்னாள்.
"நான் ஒங்களோட எல்லம் செல்லீக்கி. சும்மா பள்ளில எழும்பி கொறகுத்தம் செஞ்சீந்தா மன்னிச்சிக்கோங்கோன்டு சரிவாரல்ல" அவர் தன் நிலைப்பாட்டிலிருந்து இன்னுமே தளர்ந்ததாக இல்லை.
அவளது முயற்சி இன்னொரு தடவை தோல்வி கண்டது. மனத்தாபங்களை துடைத்துக்கொள்ள இதுதான் வாய்ப்பு என்பது அவள் வாதம்.
ஹஸன் மாஸ்டரும் ஒரு காலத்தில் யாராவது ஹஜ்ஜுக்குப் போவதென்றால் ஓடியோடி ஸலாம் சொன்னவர் தான். காலப்போக்கில் இதுவொரு சடங்காகவும் ஏன்
1 6

திக்குவல்லைகமால்
கேளிக்கூத்தாகவும் மாறிவிட்டபின், ஊரோடு ஒத்தோட அவரால் முடியவில்லை.
ஹஸன் மாஸ்டர் படிப்பித்தலோடு மாத்திரம் தனது கடமை முடிந்ததாக நினைப்பவரல்ல. ஒரு சமூகப் பொறுப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் அக்கறை மிக்கவர். பல்வேறு சமகாலக் கருத்தோட்டங்களை கருத்துப் பரிமாறல் செய்து தேசிய நீரோட்டத்திற்கேற்ப வாய்க்கால் வெட்டுபவர். "இளைஞர் எழுச்சி இயக்கும் இந்த அடிப்படையில்தான் உருப்பெற்றது. சிந்திக்கத் தெரிந்த வாலிபர்கள் அதில் ஒன்று கூடினர். சில சமூகப் போலிகளால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
"வஹற்ஹாபியளுக்கு எடம் குடுக்ககேல. பொடியன்மார அசடாக்கிப் போடியொன்டும்" இப்படி ஊரிலே புகை மூட்டப் ul-gil.
“ஸேர் வாப்ப செல்லியத்த கேக்காமீக்கேல ஸேர்" "செயலூக்கமுள்ள ஒவ்வொருவராக வந்து குடும்ப நெருக்குதல்களை காரணம் காட்டி மெல்ல மெல்ல ஒதுங்கிக் கொண்டனர்.
தங்களது போலித்தனங்களை தோலுரித்தக் காட்டும் நிலைக்கு இவர்கள் வளர்ந்துவிடுவார்களோ என்று புவாத்கான் போன்றவர்கள் பயப்பட்டதில் அர்த்தமிருக்கத்தான் செய்தது. தடைக்கற்களையே படிக்கற்களாய் வைத்துக் கொண் டாடும் சமூகத்துக்கு வைத்தியம் பார்க்க இன்னொரு பரிணா மத்தை தேடவேண்டியிருந்தது ஹஸன் மாஸ்டரால்.
“மகேன்" என்றவாறு அறைக்குள் அவனது உம்மா வந்து புகுந்தார்.
"சரில்ல மகன். அவரு என்ன குத்தம் செஞ்சீந்தாலும் குத்தமில்ல. எதுக்கும் பெய்த்திட்டு வாங்கொ. போனாக் கொறஞ்சி போறா."
"உம்மா. குத்தம் செஞ்சவங்களுக்கிட்ட அவங்கதான் மன்னிப்புக் கேக்கோணும். அல்லாவுக்காக ஹஜ்ஜிக்குப் போ
7

Page 16
புதிய பாதை றென்டா அந்தப் பயம் அவங்கட மனசீல ஈக்கும்”
மகனின் வார்த்தைகள் எதுவும் அவளுக்குத் திருப்தி தரவில்லை. அதற்காக அடித்து நெறிப்படுத்த அவன் சின்னப்
6i,6061Turf 6T6607?
ஸலாம் சொல்லும் நடைமுறைகளை நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.
வீட்டில் வரிசை ஒழுங்குப் பிரகாரம் கதிரைகள் போடப்பட்டிருக்கும். எடுபிடி ஆட்கள் ஏராளம்.
வருபவர்கள் வரிசையாக அமர்ந்திருப்பர். தின்பண்டங்க ளும் பானங்களும் பரிமாறப்படும்.
கணிசமான பேர் வந்து சேர்ந்த பின் உள்ளே இருந்து வருவார் ஹஜ்ஜாஜி. அவர் வருமுன்பே அத்தர் வாசம் அங்கே பரவும். மடிப்புக் கலையா உடையும் தொப்பியுமாக ஸலாம் சொன்னபடி வருவார் அவர்.
"அல்லா எனக்கு ஹஜ்ஜிக்கு போற பாக்கியத்த தந்தீக்கி. என்னால கொற குத்தங்கள் நடந்தீந்தா மன்னிச்சுக் கோங்கொ. ஏன்ட ஹஜ்ஜி நெறவேற நீங்கெல்லாரும் துஆச் செய்யோணும். எல்லாருக்கும் ஹஜ்ஜிப் பாக்கியம் கெடக்க நான் துஆச் செய்தன்" இப்படி பாடம் கொடுத்துவிடுவார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக ஸலாம் சொல்லி முஸாபஹாச் செய்து பூரண திருப்தியோடு வெளியேறுவார்கள். "இன்ன் ஒங்கலதாரோ தேடிவந்திக்கி. காரிலதான போல” மனைவி வந்து சொன்னாள். ஹஸன் மாஸ்டருக்கு ஆச்சரியமாக இருந்தது.
வெளியே வந்து பார்த்த போது விஷயம் உண்மைதான். முப்பது முப்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு வாலிபன். முகத்திலே அளவான தாடி. தெளிவான புன்னகை.
உள்ளே வரவேற்று அமரச் செய்த போதும் யாரென்றே அவருக்குப் புரியவில்லை. நினைவு ஏட்டை வேகவேகமாகப் புரட்டியும் தட்டுப்படவில்லை. “ஸேர் என்னத்திட்டமா”
18

திக்குவல்லைகமால்
ற ஒரு மாணவன் என்பது மாத்திரம் அவருக்கு உறுதியாயிற்று. இருபத்தைந்து வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் அவர் சேவையாற்றியவராயிற்றே. அப்போது சின்ன மாணவர்களாக இருந்தவர்களெல்லாம் இப்பொழுது பெரிய மனிதர்கள்.
“எனக்குத் திட்டம் வரல்லயே”
"நான் மல்வானஹின்ன. ஒங்களுக்கிட்ட் எட்டாம் வகுப்பு படிச்ச ஸேர்"
ஹஸன் மாஸ்டர் இருபது வயதில் முதல் நியமனம் பெற்றுச் சென்று கண்டிப் பகுதியில் படிப்பித்த பாடசாலைதான் Ցl35l.
"ஓங்கட பேரு”
“ஸத்தார் ஸேர்"
"எப்பிடியன் தேடிக் கொணு வந்த”
"ஓங்கட பேரச்செல்லி விசாரிச்சு. கூட்டிக் கொணுவந்தே உட்டிட்டாங்க."
"எனத்தியன் விஷயம். திடீரென்டு.”
"நான் ஹஜ்ஜிக்கு பொகப்போற ஸேர்"
"அல்ஹம்துலில்லா" அவருக்கு பெரும் பூரிப்பாக இருந்தது.
"நீங்க என்ன மன்னிச்சுக்கொளோணும் ஸேர்"
அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரேயொரு வருடம் தான் அவர் அங்கு கற்பித்தார். அந்த நேரத்தில் இந்த சிறுவன் என்ன தவறு செய்திருப்பான் என்பதை அவரால் நினைத்துப் பர்க்கவே முடியவில்லை.
“எட்டாம் வகுப்பு படிச்ச நீங்க அப்பிடி பெரிய குத்தமொன்டும் செய்தீக்கேல ஸத்தார்"
"தெரியாத்தனமா ஒங்களப் பத்தி கரும்பலகேல சொகரிலயெல்லம் ஒருநாள் எழுதின ஸேர். அது இப்பவும் ஏன்ட மனசீல பெரிய குத்தமாக இருக்கி ஸேர். அத மனசீல வெச்சிக்கொண்டு நானெப்பிடியன் ஹஜ்ஜிக்குப் போற."
1 9

Page 17
புதிய பாதை
அவனது குரலிலே ஒரு தளர்வு. வேதனையின் சாயல்.
ஹஸன் மாஸ்டர் எழுந்து அவனது கைகளைத் தொட்டு ஸலாம் சொல்லி இறுக அணைத்து மூன்று முறை முஸாபஹா செய்து கொண்டார்.
"யாஅல்லா இந்தப் புள்ளேட ஹஜ்ஜ நீ அங்கீகரிச்சுக்கோ யாஅல்லா." உள்ளம் உருகி துஆச் செய்து கைகளை முகத்தில் தடவினார்.
அவரது உம்மாவும் மனைவியும் நிலைப்படியில் சாய்ந்தபடி இந்தக் காட்சியை கண்டு மெளனித்து நின்றனர். “ஸத்தார் நீங்க ராவக்கி சாப்பாடு தின்டிட்டுத்தான் பொகோணும் . ..பரீதா உள்ள மாதிரி சாப்பாட்ட ரெடியாக்குங்கொ"
இனி சந்தோஷமாக் இறுதிக் கடமை ஹஜ்ஜை நிறைவே ற்றலாம் என்ற நிறைவு ஸத்தாருக்கு.
2Ο

விருந்து
“சீ. படுக்குடமாட்டானியள். குட்டியளுக்கு வெளாட் டென்டா வருத்தமாலும் வெளங்கியல்ல. ஸொபஹ"க்கே கூத்தாட தொடங்கிருவானியள்"
புறுபுறுத்தபடியே எழுந்தாள் ரஹ"மா.
தொழுவதற்காக எழும்பும் வழக்கத்துக்கு மறுதலையாக தூங்குவதற்காக சுபஹ" தொழுவது நோன்பு காலத்தில்தான். ஆனாலும் தூங்குவதற்கு இந்த சின்னஞ் சிறுசுகள் விட்டால்தானே.
அப்போது ஆறு மணி நகர்ந்திருந்தது.
என்றும்போல் கழுவிக் கவிழ்த்திருந்த பேஸனை கையிலெடுத்தபடி வெளியிறங்கினாள் ரஹ"மா. ஹாஜியார் வீட்டுக்குத்தான்.
2 1

Page 18
புதிய பாதை
இப்பொழுதெல்லாம் ஹாஜிகள் கணக்கில்லாமல் பல்கிப் பெருகியிருந்தாலும் அவளைப் பொறுத்தமட்டில் ஹாஜியார் வீடென்றால் அது இஸ்மத் ஹாஜி வீடுதான்.
பின் கேற்றைத்திறந்துகொண்டு உள்ளே புகுந்தாள் ரஹ"மா. அது அவளுக்கு சொந்த வீடு மாதிரிதான். அவள் போனால் வெறும் கையோடு அனுப்பிய நாளே இல்ல்ை. அது அவர்களது அனுபவப் பயம்.
அள்ளிக் கொடுக்கும் நாட்கள் ஆயிரம். ஒருநாள் தவறினால் போதும் ரஹமாவின் வாய் சும்மா இருக்காது.
"ஆ. ரஹ"ம தாத்தா வாங்கொ" ஹாஜம்மா சந்தோஷ மாக வரவேற்றார்.
ஏதோ ஒரு ஸ்பெஷல் இருப்பது ரஹ"மாவுக்கு புரிந்துவிட்டது.
"நோம்பு நாளென்டு ஆக்கியாக்கிப்போடிய, புள்ளயஸ் வாயிலயாலும் வெக்கியல்ல. ஆக்கினதெல்லம் அப்பிடியே. நோம்பு நாளேல தீன்தண்ணிய அநியாயமாக்கேம் அசடு"
ஹாஜும்மாவின் வியாக்கியானம் அவளது நெஞ்சில் தேன் வார்ப்பதுபோலிருந்தது.
"மெயப் தான் ஹாஜ"ம்மா. புள்ளயஸ் நோம் பு தொரந்தத்திலிந்து காக்கப்பொல காக்கப்பொலயென்டு. கள்ளக் கடயாப்பமேன் தின்னிய. இனி சோறு கறி தின்னேலுமா." ரஹ"மாவும் பக்க வாத்தியம் இசைத்தாள்.
"இந்தாங்கவா. எல்லாத்தேம் வழிச்சிப் போட்டுக்கோங்கொ. கறியள எதுக்கும் சூடாக்கிக்கொண்டா நல்லம். ஜாமத்தில ஆக்கினதேன்"
அவள் எதையுமே விட்டுவைக்கவில்லை. இன்று சுமக்கமுடியாதபடி கனமாகவே இருந்தது.
"அல்லா எழுதி வெச்சது. எனக்கும் பரக்கத்தா கெடச்சிப்போற" பெருமிதம் பிடிபடவில்லை அவளுக்கு.
ரஹமா அறுபதைத் தாண்டிய பிரகிருதி. அந்தப் பகுதியில் எல்லோராலுமே நன்கு அறியப்பட்டவள்.
22

திக்குவல்லைகமால்
யாரும் வாய் கொடுத்து தப்பிக் கொள்ள முடியாது. பேச்சென்றால் கன்னத்திலடித்ததுபோல் பேச்சு. அதனால்தான் யாருமே அவளோடு முட்டிக் கொள்வதில்லை.
இருபது வயதில் வாழ்க்கைப்பட்டு முப்பது வருடம் வாழ்ந்து கணவனை பறிகொடுத்தவள். ஒரு பிள்ளைகூட இல்லை.
கணவன் எதையும் சேர்த்து வைக்காமல் போனாலும் கூட அவளுக்கு வாய்ச் சோற்றுக்கு பஞ்சமே இல்லை.
ஊருக்கே அவளொரு விருந்தாளி. கடைசி காலத்தில் பாக்கக் கேக்க ஒரு பிள்ளை வேண்டாமா? அதனால்தான் பிறந்தபோதே தாய் இறந்துபோன ஒரு வறுமைப்பட்ட குழந்தையை எடுத்து வளர்த்தாள். அதற்குக்கூட இப்போது பத்து வருடம் பூர்தியாகிவிட்டது.
"நோனி இன்னேம் படுக்கியாடி" என்றவாறே வீட்டுக்குள் புகுந்தாள்.
கைச்சுமைகளை மேசையில் வைத்து வட்டிசையால் மூடிவைத்து நிமிர்ந்தாள்.
கயிற்றுக் கட்டிலில் புரண்டுகொண்டிருந்த நோனியின் மூக்கை சாப்பாட்டு நெடி துளைத்தது. என்றாலும் தூக்கம் கலைந்து அவள் எழுந்துவிடவில்லை.
உம்மாவைக் கண்டறியாத நோனிக்கு உம்மா, வாப்பா எல்லாமே ரஹ"மாதான்.
முன்பக்கத்தால் வந்த உம்மா பின்பக்கத்தால் வெளியேறுவதை மெல்ல நோட்டம் பிடித்தாள் அவள். மெல்ல எழுந்து பின் கதவால் எட்டிப் பார்த்தாள். உம்மா ஸொஹர தாத்தா வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது.
கதவைச் சாத்திவிட்டு வந்தவள் மெல்ல வட்டிசையை திறந்து பார்த்தாள். தானும் நோன்பு என்பதை அவள் ஒரு கணம் மறந்தே போனாள்.
அவளது வாயூறியது. நாக்குப் புரண்டது. நேற்றும் இப்படித்தான் ஹாஜும்மா வீட்டால் கொண்டுவந்த
2 3

Page 19
புதிய பாதை
கடலைக்கறியை தின்பதற்கு எவ்வளவோ ஆவலோடு காத்திருந்தாள். நோன்பு திறந்து சாப்பிட உட்கார்ந்த போது அது அப்படியே நாறிப் போயிருந்தது. இருந்தும் உம்மாவின் கண் னைக் கட் டிவிட் டு கொஞ்சம் வாயரில் போட்டுக்கொள்ளத்தான் செய்தாள். இந்தக் கறிகளுக்கும் இதேகதி நேர்ந்தால்.
மூடிவைத்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு ஏறினாள். இனியென்ன தூக்கம். உருண்டு புரண்டாள். கட்டிலும் அதற்கேற்ப தாளம் போட்டது.
"நோனி இன்னேம் படுக்கியாடீ" ரஹமா கதவைத் தள்ளிக் கொண்டு புகுந்தாள்.
“பொகுத்து நோவுதும்மா" நோனி புறுபுறுத்தாள். "எனத்தியன்” என்றவாறே ரஹ"மா அருகே ஓடிவந்தாள். "பொகுத்து நோகிய".” "ம். பத்து நோம்பேம் ஜாதியா புடிச்சிட்டு. இன்டக்கி அநியாயமாக்கிக்கொளப்போறா. y
“எனக்கேலா. நோகிய." "பொறுத்துக்கோ மகள் பொறுத்துக்கோ" என்றவாறு மகளின் வயித்தைத் தடவிக்கொடுத்தாள்.
'பாவம் மெய்யாயிக்கும். அவள் பொய் செல்லியல்ல. ஒழுங்கா ஆக்கித் தின்னியா நாங்க. அங்கலிங்கள கெடக்கிய தீச்ச கறியளத்தானே தின்னிய அவள் மனம் கருகியது.
“இப்ப லேசா.” "இல்லும்மா." "அப்ப எனத்தியன் செய்த. அந்த அஸமோதக ஸ்பிரீட்டாலயாலும் குடி." என்றவாறு எழுந்தாள் ரஹ"மா.
அவளுக்கும் இருந்திருந்துவிட்டு லேசாக வயிற்றுவலி எடுப்பதுண்டுதான். அதற்காக அவள் 'தொஸ்தர் மாரிடம் ஓடுவதில்லை. அசமோதக ஸ்பிரிட்தான் கைகண்ட நிவாரணி. குசுனி ராக்கையில் வைத்திருந்த ஸ்பிரிட் போத்தலையும் கரண்டியையும் கொண்டு வந்தாள். போத்தல் புகை
24

திக்குவல்லைகமால்
பிடித்திருந்தது. பிடவைத்துண்டால் அழுத்தித் துடைத்தாள். நன்றாகக் குலுக்கி இரண்டு தடவை வார்த்து கரண்டியாள் பருக்கிவிட்டாள். தொண்டையை பதம் பார்த்துக் கொண்டு அது இறங்கியது.
"பயப்புடாதே அஜீரணமாயிருக்கும். நோம்புக்காரப் புள்ள அல்லா லேசாக்கியொன்டும்"
நோனி முகத்தைச் சுளித்தாள். புறுபுறுத்தாள். அடிக்கடி ரஹ"மா அவளது முகத்தை கூர்ந்து பார்தாள்.
கொஞ்சநேரம் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அமைதியாக நின்றாள் அவள்.
"இப்பெப்பிடியன் மகள்." "இப்ப கொஞ்சம் லேசும்மா” என்றவாறு அவள் மெல்ல எழுந்தமர்ந்தாள்.
"அதுதானே அஸமோதக ஸ்பிரிட் பட்டொடன வேண்டியொத்தருக்கு சொகமாகிய." சிரித்தபடியே சொன்னாள்
ரஹ"மா.
"பசி வாறமாதிரி உம்மா. "இந்த மருந்துக்கு பசியெடுக்கியதான். அது ஹாஜும்மூட்டால கொணுவந்த சோறுகறி அப்பிடியே ஈக்கி. தின்னு"
“எனக்கு வாண. பழய சோத்தத் தின்டு மறுபேனம் பெளத்து நோவு புடிக்கியத்துக்கா.”
"பழய சோறல்லடி. சொபஹ" நாலு மணிக்காக்கினது. இப்ப இன்னேம் ஏழு மணியாலும் ஆகல்லேன். மொகத்த கழுவிக்கொண்டு தின்னு"
கட்டிலிலிருந்து இறங்கினாள் நோனி. பற்துலக்கி முகம் கழுவிக்கொண்டு தயாரானாள். வாளியைக் கவிழ்த்துவிட்டு அவள் உள்ளே வரும்போது ரஹ"மா சாப்பாட்டு மேசையை விரித்திருந்தாள்.
"தின்டிட்டு கறிய சூடாக்கி வெய் முன்னந்திக்கெடுக்க. நான் கஞ்சிக்கெல கொஞசம் புடுங்கிக்கொணுவாரன்.
炒
25

Page 20
புதிய பாதை
வெய்லேறினாக் கஷ்டம்" என்றவாறு உமலை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் ரஹ"மா.
முன்னாலும் பின்னாலும் கதவை அடைத்துக் கொண்டாள் நோணி.
கொஞ்சம் கொஞ்சம் இடுங்கியபடி பொரித்த கோழித்தொடைகள். எண்ணெயில் வதக்கிய கிழங்கு. அண்ணா சிச் சம்பல். மெல்லிய வெண்சோறு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சவ்வரிசிப் பால் கோப்பை,
ஒரு கணம் கண்களால் மேய்ந்தவள் மகிழ்ச்சி பொங்க கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
கோழித் தொடையொன்றை தூக்கி சதைத்துண்டொன்றை இடுங்கி இழுத்துச் சுவைத்தாள். அப்பாடா என்ன சுவை.
ஒரு துளியும் வைக்காமல் எல்லாமே தின்றுவிட வேண்டுமென்ற பேராசை.
26

புதியபாதை
ஒரு மாதத்துக்கு முன்பு சோகம் கவிந்த மையத்து வீடாகத் திகழ்ந்த அப்துல் காதர் முதலாளி வீடு அன்று கல்யாண வீடாகத் கலகலத்தது.
இன்னும் பத்தே நாட்கள். நாற்பதாம் கத்தத்தை எப்படி சிறப்பாக நடத்துவதென்பதைப் பற்றி ஆலோசனை அரங்கேறிக்கொண்டிருந்தது.
"ஏன்ட மட்டும் பஸந்தாச் செய்யோணும். வாப்பட பேரால ஊரு மனிசரெல்லம் பசியாறோணும்" மூத்த மகன் முர்ஸி தன் அபிப்பிராயத்தை முன் மொழிந்தார்.
"நல்ல யோசின. ஆம்பிளயள மட்டும் கூப்பிட்டு சாப்பாடு குடுத்து வேலில்ல. பொம்புளயள புள்ளயலெல்லம் கூப்பிட்டு செய்தென்டாலும் செரியான கஷ்டம். அப்ப கிடுகுதான்
27

Page 21
புதிய பாதை
குடுக்கோணும்" மகள் மஸிதா இன்னும் அதனைச் செம்மை ப்படுத்தினாள்.
இதற்கென்றே சீனன்கோட்டை, எஹலியகொட, மாத்தறை போன்ற இடங்களில் கல்யாணம் செய்திருந்த அப்துல் காதர் முதலாளியின் பிள்ளைகள் வந்து சேர்ந்திருந்தார்கள்.
"சரி அப்பிடிச் செய்தென்டா எவளவு செலவுபோறென்டு தலப்புக்கு பாக்கோமே" இளைய மகன் இஃப்லால் அதனை நெறிப்படுத்தினான்.
இன்னும் கல்யாணம் செய்யாத வாலிபனாக இருப்பவன் அவன் மாத்திரம்தான். ஊரிலிருந்து தனது தொடர்பை அறுத்துக் கொள்ளாமலிருப்பவனும் அவன் மாத்திரம்தான்.
"எங்கட குடும்பத்திலேம் ஒத்தன்சரி படிக்கோணும்" என்ற வாப்பாவின் ஆசைப்படி படித்து பட்டதாரியாக இன்று அவன் வலம் வருகிறான்.
"சரி ஒரு அம்பதினாயிரம் பொகும். நாங்க ஒவ்வொரு எடத்தில கடவெச்சி யாவாரம் பண்ணியென்டாலும் தாத்த தங்கச்சிமார அது போல குடுத்தென்டாலும் எல்லம் வாப்பட சம்பரிப்பாலதான். இனி வாப்பட பேரில இதச் செய்யாட்டி வேலில்லேன்" இ.'ப்லால் முழுப் பொறுப்பையும் தன் தலையில் சுமந்துகொண்டான்.
சும்மாவல்ல அவனோடு சேர்ந்து ஒன்பது சகோதர சகோதரிகள். ஒருவரையொருவர் தோற்காத வசதி வாய்ப்போடு வாழ்பவர்கள்.
"அப்ப இட்ய்லால் எல்லம் பாத்துக் கேட்டு செய்யோணும். நாங்க எங்கட ஹக்க அனுப்பி வெக்கிய சரி நாங்க மறுபேணம் எப்பேக்கன் வரோணும்" மூத்தவர் கேட்டார்.
"நீங்க நாப்பதாம் கத்தத்துக்கு ரெண்டு நாளாக்கி முந்தி வந்தாப் போதும்"
பூரண திருப்தியோடு அன்றைய அரங்கு நிறைவு பெற்றது.
★女★★
28

திக்குவல்லைகமால்
அப்துல் காதர் முதலாளி நீடித்த வாழ்வு வாழ்ந்து எண்பத்திரண்டு வயதில் மெளத்தாகிப் போனார்.
யாரும் குறை சொல்லாதபடி எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒன்று போல் வழி காட்டி வைத்தவர்.
கடைசி வரையில் அல்லாவின் பாதையில் தன் வாழ்வை கொண்டு நடாத்தியவர்.
பள்ளிவாசல் பொறுப்பாளராகவும் தன் உடலில் பலமிரு க்கும் வரையில் உழைத்தவர்.
அவரின் மையத்தின் போது ஊரே கவலையில் அமிழ்ந்து போய் ஊர்வலம் நடத்தியது.
★★大★ குறிப்பிட்டதுபோல் நாற்பதாம் கத்தத்துக்கு இரண்டு நாளிருக்கும் போது எல்லோருமே குடும்ப சகிதம் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
"இஃப்லால் எங்கியன்?" எல்லோரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். எப்படிக் கேட்காமலிருக்க முடியும்!
ஏற்பாடுகளெல்லாம் ஐருராக நடந்து கொண்டிருக்க வேண்டிய நேரம். அங்கு எதுவுமே நடத்திருக்கவில்லை.
ஒரு மூடை அரிசியைக் கூட காணவில்லை. கத்தமுல் குர்ஆன் வைபவத்துக்கான அழைப்புக்காட்கூட அடிக்கப்பட்டிரு க்கவில்லை.
"இவன் எல்ல்ம் பாரமெடுத்துப்போட்டு இவளவு நாளும் எனத்தியன் செஞ்ச” எல்லோரும் கோபத்தோடு கள்ச்சித்தனர். இத்தா வீட்டுக்குள்ளிருக்கும் உம்மாவால் என்ன பதில்தான் சொல்ல முடியும்?
இரவு பத்துமணிக் கெல்லாம் ஆடிப்பாடி வந்து சேர்ந்தான் இ.'ப்லால்.
"எனத்தியன் நீ இப்பிடி திரீத. நாலன்டக்கி கத்தம். ஒன்டும் ரெடியாக்கல்லயா” முர்ஸி கடுங்கோபத்தோடு கேட்டார்.
29

Page 22
புதிய பாதை
தாத்தா, நானா மார்களெல்லாம் கேள்விக் கணைகளை முகத்தில் தூக்கியபடி தயாராக நின்றனர்.
"எல்லம் ரெடி வாங்க காட்ட" என்றபடி திறப்பை எடுத்து தனது அறையைத் திறந்தான்.
ஆவல் பொங்க எல்லோரும் எட்டிப் பார்த்தனர். அங்கே நூற்றுக் கணக்கில் புத்தம் புதுப் புத்தகங்கள் குவிந்து கிடந்தன.
"இதெனத்தியன்?" "பொஸ்தகம். சாப்பாடு குடுக்கோணுமென்டு கட்டாயமில்ல. அம்பதாயிரத்துக்கும் எல்லா ஜாதிப் பொஸ்தகமும் வாங்கிக்கி இத ஸ்கூல் லைப்ரரிக்கி குடுக்கப் போற. வாய்படபேரில புள்ளளயள் படிக்கட்டும்" அவன் அமைதியாகச் சொன்னான்.
எல்லோரும் அந்தும் குந்துமாய் நின்றனர். அவனோடு அதற்குமேல் என்னதான் பேசுவது? அவன் தான் 'படிச்சி மிஞ்சின வனாயிற்றே.
3O

...gif
முற்றத்தில் கார்ச் சத்தம் கேட்டது. மேல்மாடி அறையிலிருந்து ஜன்னல் சீலையை நீக்கிப் பார்த்தாள் சிராஸா.
"எங்கடுட்டுக்குத்தான் தாரோ வந்திக்கி, ஒங்கட கூட்டாளி ரிஸ்கி ஹாஜி போலிக்கி"
"எனத்தியோ தெரிய." என்வாறு கட்டிலிலிருந்து எழுந்து சேட்டை அறையும் குறையுமாகப் போட்டுக் கொண்டு தடதடவென்று இறங்கினான் சிஃபான்.
முந்தானைத் துண்டை இழுத்துப்போட்டுக் கொண்டு கணவனின் பின்னால் படியிறங்கினாள் சிராஸா,
கணவனின் நண்பர்கள் வந்தால் அவர்களோடு கொஞ்சம் முகம் காட்டிக் கதைக்காவிட்டால் அவருக்குப் பிடிக்காதே.
3 1.

Page 23
புதிய பாதை
"ட்றீங்.." அதற்கிடையில் பெல் காதைக் கிழித்தது. "ஹலோ வாங்கொ வாங்கொ" கைக்குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர். "சொணங்கேல. தங்கச்சீட கலியாணம். ரெண்டு பேரும் நேரகாலத்தோட வந்திரோணும்"
சிராஸாவையும் பார்த்துப் பார்த்துச் சொன்னார் அவர். "இன்னம் எத்தினயோ எடத்துக்குப் பொகோணும். நான் வாரன் மசான்”
பகலக்கி சாப்பாடடிச்சிட்டு பொகேலும்” குறுக்கிட்டு சிராஸா சொன்னாள்.
"ஐயோ. வேறொரு டைமுக்கு வாரனே" நண்பர் சென்றதும் முன்வாசல் குசன் கதிரையில் அமர்ந்தனர் இருவரும்.
"எங்கியன் கலியாணம்" அவள் கேட்டாள். “கல்லு யாவாரியள்ட கலியாணமென்டா கேக்கோணுமா. ம். கொழும்பில ஃபிளய்யிங் ஸ்டார் ஹோட்டல்ல" பெருமையோடு சொன்னான் சி.பான்.
"ஓங்களக் கலியாணம் முடிச்சி ரெண்டு வருஷமாகல்ல. அதுக்கெடேல எத்தின ஹோட்டல் கலியாணத்துக்கு போனன்” தனக்கும் பெரிய அந்தஸ்து வாய்த்துவிட்ட பூரிப்போடு சொன்னாள் அவள்.
"எல்லாத்துக்கும் போனதான். இதுக்கு எப்பிடியன் போறென்டுதான் எனக்கு யோசினயா ஈக்கி"
எங்கோ பார்த்தபடி சொன்னான் அவன். அது ஏனென்று அவளுக்குப் புரியவில்லை.
★★女女 கணவனின் வரவை என்றுமில்லாதது போல் எதிர்பார்த்து நின்றாள் சிராஸா.
"இந்தக் கல்லுத்துண்ட அம்பதுக்காலும் வித்தா ஒடம சாமானியள கழட்டிக் கொளேலும்”
32

திக்குவல்லைகமால்
கணவன் காலையில் போகும் போது சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன. w
எப்படியாவது நகைகளை மீள எடுத்தால் தான் கெளரவமாக கலியாணத்துக்கு போக முடியும் இல்லையா. எப்படியோ போய்த்தான் ஆக வேண்டிய கல்யாணமும்கூட. அவர்களின் தராதரத்துக்கு நகைகளை இரவல் கேட்கவும் முடியாது. கல்யாணம் ஆகி இந்தச் சில நாட்களுக்குள் நகைகள் வட்டிக்கடையிலா என்று எத்தனையோ பேர் கேட்க இருக்கிறார்கள்.
சி.'யான் ஒரு மாணிக்க வியாபாரி ஈரோட்டி வியாபாரமாகத் தொடங்கி அடுத்தடுத்து பல 'வாசிகள் வாய்த்ததால் வீடு கட்டி. கார் வாங்கி கல்யாணச் சந்தையில் பேரம் பேசப்பட்ட போதும், சிராஸாவின் அழகு எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றிக் கொடி நாட்டியது.
ஆயினும் முற்றுமுழுதாக இல்லாமையைக் காட்டிக் கொள்ளாமல் கொஞ்சம் தராதரத்தோடு அவளின் கல்யாணத்தை அவள் பெற்றோரும் ஒப்பேற்றினர்.
"சிராஸா அவசரமான யாவாரமொன்டு வந்தீக்கி. அம்பதுணாயிரம் இருந்தா விஷயம் சரி." இப்படி ஒருநாள் சொன்னான் அவன்.
எதற்காக என்றுமில்லாதபடி பிஸ்னஸ் விடயமாக தன்னோடு ஆலோசிக்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. "கலியாணத்துக்கு கொஞ்சநஞ்சம் செலவாணா. இதில யாவாரம் கொஞ்சம் படுத்திட்ட” மேலும் அவர் சொன்னார்.
ஆடம்பரமாக செய்த திருமணமும் அதனோடொட்டிய வாழ்க்கையிலும் எந்தத் தொய்வும் ஏற்பட்டதாக அவளுக்கு தெரியவில்லை.
“யாவாரமென்டா அப்பிடித்தானே எந்த நாளும் ஒரு மாதிரியா.? ஆறுதல் படுத்துவதற்காக அவளும் இப்படிச் சொல்லி வைத்தாள்.
"சிராஸா. இப்பேக்கு ஒங்கட ஒடமயள வெச்சி சல்லி
3 3

Page 24
புதிய பாதை
கொஞ்சம் எடுக்கோம். வாசி பட்டொடன் மூளியதானே."
இப்பொழுதுதான் அவளுக்கு சாடையாக விஷயம் பிடிபட்டது.
"நகநட்டு வெச்சி பஸந்து பாக்கவா. ஆபத்தந்தரத்துக்கு எடுக்கோனுந்தானே."
நகைகள் பரம ரகசியமாக வட்டிக் கடையில் தஞ்சமடைந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. காரும் கூட இப்பொழுது ஒரு நண்பனுக்கு பங்காகிவிட்டது.
՞լլյ...." வெளியே கேட்ட ஹோன் ஒலிக்கு டக்கென்று எட்டிப்பார்த்தாள். அது கணவனின் கார் அல்ல.
"இந்தக் கல்லுத்துண்ட அம்பதுக்காலும் வித்தா ஒடமசாமன கழட்டிக் கொளேலும்" இந்த வார்த்தைகள் மீண்டும் அவளது காதுகளில்.
★ Yr Yr Ar
"Ay IT6mosT....... "வாங்கொ தாத்தா" சர்வசாதாரண உடையோடு வந்திருந்த தனது தாத்தா வைக் கண்டதும் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
மறுகணம் மச்சான் வீட்டில் இல்லையே என்பதால் ஒரு திருப்தி.
"ஏத்தியன் தாத்தா நிண்டவாக்கில வந்த" வரவின் நோக்கை அறியும் ஆவல்.
அவள் அங்குமிங்கும் பார்த்துவிட்டு மெல்ல அமர்ந்து கொண்டாள். ஏதோ ஒரு தேவைக்காக வந்திருக்கிறா ளென்பது அவளுக்கு புரிந்துவிட்டது.
"கலியான ஊடொன்டுக்கு பொகோனும் ஒன்ட மாலயேம் காப்பேம் கொஞ்சம் எடுத்துக் கொணுபொக வந்த"
அதள பாதாளத்தில் விழுந்துவிட்டது போல் அதிர்ந்தாள் அவள். என்ன செய்வது. சொல்வதென்று தெரியாமல்
4

திக்குவல்லைகமால்
தடுமாறிப் போனாள்.
"எனத்தியன் இந்த மாதிரி யோசிக்கிய. எடுத்துக்கொளக் கேக் கல்ல" சகோதரியின் வார்த்தைகள் அவளை இன்னுமொருபடி வதைத்தது.
"தாத்தக்கு நான் பொய் செல்லல்ல. மச்சன்ட கூட்டாளியொன்டு எடுத்துக்கொணுபோன அவங்கட தங்கச்ச பொண் பாக்க வாராமெண்டு" அவளுக்கும் சிறிது கற்பனை வளம் இருக்கத்தான் செய்தது.
"ம். மச்சன்ட கூட்டாளியென்டா கல்லுயாவரியாத்தானி க்கும். அவங்களுக்கிட்ட இல்லாத்துக்கா ஒன்டத்த கொணுபோற" கோபித்த முகத்தோடு இப்படி இரைந்தாள்.
"இல்லாத்துக்கல்ல தாத்தா. ஏன்ட ஒடம சாமான் புதிய டிசைனென்டு கொணுபோன”
அதையெல்லாம் அவள் ஏற்கத் தயாராக இருக்க்வில்லை. "அடி ஒன்ன அதுபோல குடுக்கோணுமென்டு எங்களுக் கிட்டிந்த நகநட்டுக்களேம் போட்டுத்தான் ஒனக்கு சரிபண்ணித்தந்த, ஒனக்கு இப்பெல்லாம் மறந்து பெய்த்து. சல்லி சாமனக் கண்டு. இன்னம் கொஞ்சம் நாளில உம்மவாப்பாம் மறந்து பொகும்” அதற்கு மேல் அவள் நிற்காமல் வெளியே பாய்ந்தாள்.
"தாத்தா இங்க வாங்கொ தாத்தா" அவளுடைய அழைப்பு எடுபடவில்லை. திரும்பிப் பார்க் காமலேயே பரபரவென்று நடந்தாள்.
"சீ எனத்தியன் செய்தென்டு வெளங்கியல்ல" அலுப்போடு அமர்ந்தாள் சிராஸா. எதிர்பார்க்காத ஒரு இடி அவள் தலையில் விழுந்துவிட்டதே. அவள் சொன்ன நியாயத்தை வீட்டில் யார்தான் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். 'ஒடம சாமன் கொஞ்சமும் எப்பேக்கு கைக்கு வந்து சேருமோ தெரிய மனம் பிரலாபித்தது.
Yr Yr Ar yr
35

Page 25
புதிய பாதை
அவள் பிளயிங் ஸ்டார் ஹோட்டலுக்கு திருமணத்துக்குப் போவதற்காக தயாராகி நின்றாள்; கார் வரும் வரையில்.
நேற்று இரவாகியும் கல்யாணத்துக்குப் போவது நிச்சயமில்லாமலேயே இருந்தது.
"சிராஸா. கையூம் ஹாஜியார் பொணாட்டிம் போறாம். அவங்கட காரில எங்களுக்கும் பொகேலும்."
"அப்ப எங்கட காரு. " அவள் எதிர்பார்ப்போடு கேட்டாள்.
“எங்கட கார ஸேவிஸ"க்கு போட்டீக்கிம். கொழும்புக்கு பெய்த்திட்டு வாரென்டாலும் எவளவு செலவன். அத உடுங்கே. ஒடமயொன்டுமில்லாம எப்பிடியன் போறென்டேன் நான் யோசிக்கிய. மத்தவங்க எனத்த நெனச்சுமன்." தராதரத்தை காக்கவும் முடியாமல் அதிலிருந்து இறங்கவும் முடியாமல் தவித்தான் சி.பான்.
"அதப்பத்தி நீங்க யோசிக்க வாண. நான் எல்லம் ரெடி பண்ணிக்கி."
"தாருக்கட்டயாலும் எடுத்தோ.” அதிர்ந்து போய்க் கேட்டான்.
"அப்பிடி எடுக்கியா. எங்களபத்தி எனத்த நெனக்குமன்" அவனுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஏதோ சமார்த்தியமாகச் சாதிக்கப் போகிறாள் என்பது மாத்திரம் உறுதியாயிற்று.
“பீப். பீப்." கார் வந்துவிட்டது. அவள் கீழே இறங்கவில்லை. கணவன் மேலே வரும் வரையில் சற்றே பொறுத்திருந்தாள்.
"சிராஸா ரெடியா" என்றபடி மேலே வந்தவர் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார்.
முழு உடலையும் மறைக்கும் மெல்லிய இளநீல உடுப்பு அணிந்திருந்தாள். ஹிஜாப் முகம் தவிர்ந்த பாகங்களை மறைத் திருந்து. அவளது ஒயிலான உடலுக்கு அது
36

திக்குவல்லைகமால்
அழகாகவுந்தானிருந்தது.
மாலை, தோடு, காப்பு இப்படி அலங்கரிக்க எந்த அங்கமும் வெளியே தெரியவில்லை.
“ğFff (3 umTLíbʼ இருவரும் கலகலப்போடு காரை நோக்கி வந்தனர்.
37

Page 26
பெற்றமணம்
எங்கட உம்ம செரியான ஒரமான பொம்புள். எல்லாத்துக்கும் அவ சண்ட புடிக்கிய அசல் மனிசரெல்லம் அவக்கு பயம், வாப்பாம் அப்பிடித்தான். அவருக்கு உம்மோட பேசித் தப்பேல. கடசில உம்ம செல்லியத்தத்தான் அவருக்கு கேக்கவாகிய,
சின்னக் காலத்திலிந்தே நானும் பாத்துப் பாத்து வார. நானமாரும் உம்மவென்டா நடுங்கிய, வாப்பாக்கிட்ட வேண்டியத்தச் செல்லி ஒரு மாதிரி தப்பிக்கொளேலும். பளிக்கொடத்துக்கு ஸ்கூலுக்குப் பொகாட்டி நாங்க முடிவு. எங்கடும்ம ரோட்டு நெடுக அடிச்சடிச்சி இழுத்துக்கொணு போற.
செலநாளக்கி உம்மாம்வாப்பாம் கொரோட்டுக்கொளுகிய
38

திக்குவல்லைகமால்
இனி வாப்ப கோச்சிக்கொணுபோற. உம்மாம் சோறாக்காம நிக்கிய, நாங்க பசியெண்டா எங்களுக்கும் அடிதான் கெடக்கிய, உம்மும்முடு ஈக்கிய சொட்டிம் நல்லம். எனத்த சரி கொஞ்சம் தின்டுக்கொளேலும்.
எங்கட வாப்ப லொறில டைவர் வேலதான் செஞ்ச. வெளணக்கிப் போனா ராவக்கித்தான் வார. செல நாளக்கி வாரல்ல. மம்மது நானட மாட்டு லொறிதான் ஒட்டிய. எந்தநாளும் களுத்தறக்கி மாடேத்திய,
ஒருநாள் லொறி வயலொண்டுக்குள்ள புழுந்து வாப்பட கையொடஞ்ச. வலது கைதான். மூணு மாஸம் இஸ்புர்தாலேல நிண்டுதான் சொகமாக்கின. உம்மோட சண்டபுடிச்சிட்டு டோப்படிச்சிக்கொண்டு ஒட்டித்தான் லொறி புழுந்தாமெண்டு மனிசரு ராசியமா பேசிக்கொண்ட
இந்தப் பொம்புளேட சண்டதக்கம் இதுப்பொறகு சரி நிற்குமோ தெரியாண்டு பொம்புளயஞம் பேசிக்கொண்ட,
6.OTT dubLDL 6JTUÜ SELỄlab606No.
கை ஒடஞ்செண்டு வாப்ப ஊட்டுக்குள்ள நிக்கல்ல. உம்ம நிக்குடல்ல. லொறி ஒட்டேலாட்டிம் வாப்ப அந்த லொறில போனவந்த மாட்டு யாவாரமெல்லம் வாப்பக்கு நல்லாத் தெரீம். மம்மது மொதலாளி வாப்பவ கையுடல்ல. கையொடஞ்சது வாப்பக்கு செரியான மனசிவருத்தம். அதுப்பொறகு அவரு எந்தநாளும் குடிக்கவாகிட்ட,
லொறில பொகவான ஊட்டில நில்லுங்கோண்டு நான மாறு சென்ன. அதுக்கும் உம்ம புரியப்படல்ல.
காலொடஞ்சாத்தானே ஊட்டில் நிக்கோனுமெண்டு செல்லிட்ட
நானமாரு ரெண்டுபேரும் ஏழாம் எட்டாம் வகுப்போட ஸ்கூலுக்குப் பொகல்ல. அவங்களுக்கு படிப்பும் அவளவு ஏறல்ல. அவங்க நாட்டில பெய்த்து கோழி, ஆடு கொணுவரத் தொடங்கின. அதில அவங்களுக்கு நல்ல நயம் வந்த,
39

Page 27
புதிய பாதை
அவங்க சம்பரிக்கியத்தில ஊட்டுச் செலவுக்கு குடுத்த. சாமன்சட்டி கொணந்து போட்ட வாப்பக்கும் லேசாகீட்டு. முந்தியப்போல வாப்ப எந்த நாளும் லொறில பொகல்ல. செலநாளக்கித்தான் போற.
உம்ம நானாமாரோடேம் சண்ட புடிக்கத் தொடங்கிட்ட சல்லியெல்லம் அவட கைலதரச்செல்லித்தான் சண்ட அவங்க குடுக்கியல்ல. வாப்ப தேவப்பட்டாத்தான் கேக்கிய, வாப்ப கேட்டா நானமாரு இல்லயெண்டியல்ல. வாப்பாம் கணக்காத்தான் கேக்கிய, அவருக்கு பீடி. சிகரேட்டு செலவுதான். தொழிலுக்குப் பொகாத்துப் பொறகு அவரு மிச்சம் குடிக்கியல்ல.
நாங்க நிக்கிய ஊடு தோட்டமியள் வாப்பக்கு அரசாங்கத்தால கெடச்சதாம். அந்தக் காலத்தில ஊடில்லாதவங்க நாப்பது பேருக்கு இப்பிடிக் குடுத்தாம். இன்டக்கு இது பெரிய ஊரு. நூத்தம்பது குடும்பம் மட்டீக்கி. பள்ளி. ஸ்கூலெல்லம் பொறகு பொறகுதான் கெட்டிக்கி. ஒலயால சின்னோரு குச்சில் கெட்டிக்கொண்டுதான் வாப்ப வந்தீக்கி. காடெல்லம் வெட்டி உண்டுபண்ணினெ தெல்லம் வாப்பதான். கொஞ்சம் கொஞ்மா சம்பரிச்சி அடித்தாளம் போட்டு, கடோலால ஊடுகெட்டினாப் பொறகுதான் கலியாணம் புடிச்சீக்கி.
ஒரு கெழமக்கி ரெண்டு வாழக்கொல சரி இப்பேம் வெட்டிய, தென்ன மரம் தம்பிலி மரமெல்லம் ஈக்கி. கறி சாமன் மய்யொக்கா பதலயெல்லம் ஒரொரு காலத்துக்கு நாட்டிய. மரம்மட்டயால காலம் கொணுபொகேலுமெண்டு வாப்ப ஒரே செல்லிய, ஊட்டுப் பின்னாலிக்கிய பிலாமரத்த இப்பேம் இருவத்தஞ்சிக்கி கேக்கிய.
வாப்பட உம்ம வாப்பவெல்லம் மெளத்தாப் பெய்த்து. அவருக்கு கூடப் பொறந்தவங்க ஒத்தருமில்ல.
உம்மக்கு அப்பிடியல்ல, வாப்ப மட்டுந்தான் இல்லாத. அவட தாத்த தங்கச்சிமாரு எதினயோ பேரு பொறத்தி
4 Ο

திக்குவல்லைகமால்
ஊரில கலியாணம் புடிச்சீக்கி. அவங்க எடக்கெட எங்களப் பாக்க வார வந்தா உம்ம சும்மனுப்பியல்ல. கோணிப்படி சாமன் கெட்டி பஸ்ஸில ஏத்துடுகிய நான தம்பிமாரு வந்து உம்மாக்கிட்ட சல்லிம் எடுத்துக்கொணுபோற. அதப்பத்தி ஒன்டும் கேக்கேல. தாருசரி கேட்ட அவங்கள பிச்சித்தின்னிய, நானட யாவாரம் பொகப்பொக நல்லா வந்திட்ட. இருவத்தஞ்சி முப்பதென்டு ஒடருக்கு கோழி குடுக்கிய.
கிட்ட நட்டுள்ள ஊரியல்லிந்து செலநேத்தக்கி கலியான ஒடரும் வார. அப்பிடிவந்தா அம்பது நூறும் குடுக்கவாகிய, நானக்கு கலியாணப் பேச்சியளும் வரவாகீட்ட, உம்மட மோட்டுத் தனமான பேச்சியலாலே நல்லவிஷயம் எத்தினயோ ஒடஞ்சி பெய்த்த உம்மவ நம்பி நின்டா ஒன்டும் நடக்கியல்ல யென்டு நானக்கு வெளங்கிட்ட
நின்டேநிக்க ஒருநாள் நான சிங்களக் குட்டியொன்ட பாச்சிக்கொணு பெய்தாமென்டு ஊரெல்லம் கதயாகீட்ட. உம்மக்கு தின்னக்கோவம். வாப்பக்கு விஷயம் வெளப்பம். அவரொண்டும் பேசல்ல. பொண் கொணுவந்து இந்தப் பொம்புளயோட காலம் கொணுபொகேலான்டு அந்தப் பொடியனுக்கு தெரிஞ்ச சொட் டீந்தான் இப் பிடிப் பெய்த்திக்கென்டு எல்லாருமே பேசிக்கொண்ட
ரெண்டு கெழமேப் பொறகு நான ஊட்டுக்கு வந்த நானாக் கண்டொடன உம்ம மொகத்தில பாஞ்சு
நான ஒன்டும் பேசல்ல. நீ வந்ததுக்கு போனதுக்கு காரியமில்ல அந்த வேசய மட்டும் இந்த எலுகமானத்துக்காலும் கூட்டிக்கொணுவராதேன்டு செல்லிட்டா. மதினி ஊட்டுக்கே வரல்ல. நான வாரதும் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சிட்ட அதுாப்பொறகு சின்னான தனிய யாவரம் செய்யத் தொடங்கீட்ட அந்த யாவாரமேதான். நானில்லாத கொற ஒத்தருக்காலும் வெளங்கல்ல. நானும் கொஞ்சம் கொஞ்சம் ஒதவி செஞ்ச. ஆனா எனக்கு சிங்களசலுக்கு போறவாரத்துத்த அவளவு புரியமில்லை.

Page 28
புதிய பாதை
ஒருநாள் சின்னான தாரோடயோ நல்லமென்டு உம்ம அவங்கடுட்டுக்கே பெய்த்து கண்ட நின்ட மாதிரி ஏசீட்டா. சின்னானக்கு வந்த கோவத்தில ஒத்தருக்கும் தெரியாம அந்தக் குட்டிய காவினெழுதிக் கொண்டிட்ட,
ஊரு மனிசரு சும்மீக்கியா. இந்த மனிசி புள்ள குட்டியேம் நாசமாக்கியென்டு ஏசத் தொடங்கீட்டாங்க. உம்மக்கு அதொண்டும் கணக்கில்ல.
நான் யோசிச்சி யோசிச்சிப் பாத்த உம்மோட நல்ல மொறக்கி நடந்துகொளோணுமென்டு நெனச்ச.
எங்கட குடும்பம் ஒரு மோசமான குடும்பமென்டு செல்லியத்த எப்பிடிச் சரி இல்லாமாக்கோணுமென்டு யோசிச்ச. கோழியாவாரத்த அப்பிடியே நான் கையுட்டிட்டன். வாழக்கொல சேத்தி பொலக்கி கொணுபொகத் தொடங்கின. ஒரு டிப்புக்கு பதினஞ்சிருவது கொணுபோற. ஒரு கரத்த நெறய கொணுபோற. ஒரு கெழமக்கி இந்தப் பொக்கத்தில முனு பொல நடக்கிய யாவாரம் அப்பிடியே ஏறிட்டு.
சல்லியக் கொணுவந்து உம்மட கைலதான் நான் குடுக்கிய, உம் மக்கு சரிப் பூளகம். தேவப்பட்டா உம்மாக்கட்டத்தான் சல்லி எடுத்துக் கொணுபோற. உம்மாக்கிட்ட நல்லா சல்லி பொலங்கத் தொடங்கிட்ட
ரெணுமுணு வருஷமா இப்பிடியே நான் செஞ்சிக் கொணு வந்த,
உம்ம சீட்டுப்போடேம் தொடங்கீட்ட, ஒலக்கூரய மாத்திட்டு தகரம் போட்டுக்கொண்ட, கபேட் மேசயெல்லாம் வாங்கின. உம்ம மாலப்பட்டொன்டும் எடுத்த.
ஊடு வாசல்ெலம் சின்னவனுக்குத்தான் குடுக்கிய. மத்தவனியள் வரட்டும் பாக்கவென்டு உம்ம செல்லத் தொடங்கீட்டா.
அந்தக் குடும்பத்துக்கே ஒரு தங்கமான பொடியனென்டு எல்லாரும் செல்லத் தொடங்கீட்ட. கலியாணமும் பேசி வரவாகிட்ட, கரச்சலில்லாத நல்லோரெடுத்தில கலியாணம்
42

திக்குவல்லைகமால்
புடிக்கோணுமென்டுதான் எனக்கும் ஆச. ஊரு மனிசரெல்லம் கூப்பிட்டு சாப்பாடு குடுக்கோணுமென்டும் ஆச.
அப்பிடீம் இப்பிடிம் எனக்கு இருவத்தெட்டு வருஷமாகிட்ட ரெணுமுணு வருஷமா கலியாணம் பேசிப்பேசி வந்தும் உம்ம ஒன்டுக்காலும் புரியம் குடுக்கல்ல,
ஊடு காணி எங்களுக்குத் தேவில்ல. இந்துாடு அவனுக்குத்தான். வாரவங்களுக்கு நோனமாதிரி நிக்கேலுமிங்க. சல்லி மட்டுந்தான் எங்களுக்கு வேணுமென்டு உம்ம பயப்புடாம செல்லீருவா,
இப்ப பேசியதென்டா ஜாதிவிஷயம். படிச்ச குட்டி. பஸந்தான குட்டி. ஊடு வாசல குட்டிட பேருக்கு எழுதி வெச்சிக்காம் ஊட்டோட சேத்தி கடக்காம்பராவொன்டுகெட்டிக்கி. அதில கட போட்டுக் குடுக்கியாம்.
எனக்கென்டா நல்ல புரியம். பொலக்கிப்பொல திரீதத்தப் பாக்க ஒரெடத்தில நின்டு யாவாரம் பண்ணியென்டா நல்லந்தானே. கூட்டாளிமாரும் நல்ல விஷயம் கையுடாதேன்டு செல்லிய,
அதுக்கும் உம்ம புரியப்படுகியமாதிரில்ல. எங்களுக்கு ஊடும் ஈக்கி தொழிலுமீக்கி. எல்லாத்துக்கும் சேத்தி சல்லியக் கூட்டித்தாங்கோன்டுதான் உம்ம கேக்கிய,
என்ன எப்பிடிச்சரி அவட கைக்குள்ள வெச்சிக்கொளதான் உம்ம பாக்கிய, உம்மோட நான் தாளமா செல்லிச் செல்லிப் பாத்த, அவ கேக்கியல்ல. இதக் கையுட்டா இதப்போலொரு விஷயம் சரிவாரது செல்லேல.
இதப்பத்தித்தான் நேத்து நான் மிச்சம் நேரம் பேசிக்கோ நின்ட, அவன் நல்ல யோசினுள்ள பொடியன்.
மொதலாம் வகுப்பிலிந்தே நானும் அவனும் ஒன்டுக்குத்தான் படிச்ச. ஓதல் படிப்பில கெட்டிக்காரன்.
இப்ப அவன் கோமேந்து ஜொப் செய்த. பாத்துப் பாத்திக்காம செஞ்சிபோடச்செல்லித்தான் அவனும் சென்ன. உம்மட மனசு நோவிக்கப்பட்டாதென்டு எனேத் தெரீழ்,
4 3

Page 29
புதிய பாதை
அதுதான் நான் இந்த மட்டும் பாத்த, எங்கடும்ம எந்த ஜாதிப் பொம்புளயோ எனேத் தெரிய,
இத நல்ல விஷயமென்டு வாப்பாம் செல்லிட்டாரு. அவருக்கும் இப்ப வயஸாகீட்டு. கண் தெரிபடுகியதும் கொறவு. அந்த மனிசனும் பாவம். நான் எனத்த செய்யவன்.
நான் உம்ம வாப்பாக் கையுடுகியல்ல. உசிரீக்கம் காட்டிம் அவங்களப் பாத்துக்கொளுகிய,
நானும் கையுட்டா அவங்களுக்கு தாரனிக்கி. எல்லம் யோசிச்சித்தான் நான் கடசி முடிவெடுத்த. ஒ. நாளக்கி அந்தக் குட்டிய கலியாணம் புடிக்கியத்துக்கு எல்லம் ஸெட் பண்ணிக்கி. உம்மக்கு ஒரு செய்தீம் தெரிய.
4 4

கதவுகள்
“... lu...”
கார் ஹோன் சத்தம் கேட்டது. முட்டிக் கடைக்கு முன்னால் கார்களில் வந்த சாமான் வேண்டிச் செல்லும் அளவுக்கு கடை வளர்ந்துவிட்டதா என்ன..?
கடைக்குள்ளிருந்து முதலாளி' வெளியே பாய்ந்தார். அப்படி யாரும் சொல்லாது போனாலும் கூட தொழிலாளியைவிட தேய்ந்து போன தோற்றம். பிஜாமா சாரமும் கைபனியனும்தான் அவரது யுனிபோம்.
மம்மாசி நானா என்றால் குஞ்சி குறுமான்களுக்கெல்லாம் தெரியும்!
"எனத்தியன் ஹாஜியார்?” ஆரவாரமாகக் கேட்டார். ஹாஜியார் ஏதேதோ சொன்னதைத் தொடர்ந்து இரண்டு
45

Page 30
புதிய பாதை
கேன்களோடு கடைக்குள் ஓடினார் அவர்.
எற்கனவே கடைக்கு வந்திருந்த இரண்டொருவர் தங்கள் தேவைகளை மறந்து வேடிக்கையில் லயித்தனர்.
மண்ணெண்ணெய், தேங்காயெண்ணெய் சீனி இரண்டு கிலோ, பருப்பு இப்படியாக காருக்குள் கொண்டு போய் வைத்த பின்பே அவருக்கு நிம்மதி.
"கண்டா பெரிய பெரிய ஹாஜியாரெல்லம் இட்ப இங்கதான் சாமன் வேங்க வார” மம்மாசிக்கு மகிழ்ச்சி ததும்பி வழிந்தது.
"எனக்கு சீனி இருநூத்தம்பதும் வெங்காயம் நூறும்" "லாம்பெண்ண ஒரு போத்தல் தாங்கொளே” "நீலச் செளக்காரக் கட்டியொன்டு” எத்தனை பேரையும் சமாளிக்கக் கூடிய சக்தி அவருக்குண்டு. வேடிக்கை பேசிப்பேசி எல்லோரையுமே இருத்திக் கொள்வார். பெண்களுக்கும் அவரை நல்ல பிடி.
"நாளாக்கி கடபூட்டி. கார்பஸ்ஸொன்டும் ஒடியல்ல. நோட்டிஸ் போட்டிக்காம். மறுக கதவத்தட்டவாண வந்து. நானும் புள்ள குட்டிக்காரன்” வேலையோடு வேலையாக இதையும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
மம்மாசியின் கடை ஒரு சட்டி பானை கடையாகத்தான் ஆரம்பித்ததென்று பலரும் சொல்வார்கள். இன்று உடைந்த சட் டித் துணி டைக் கூட அங்கு காண முடியாது. ஊர்ச்சனங்களுக்கு நாளாந்தம் என்னவெல்லாம் தேவைப்படுமோ அத்தனையும் அங்கே இருக்கும்.
விறகு கட்டுக்கள் ஒரு பக்கமிருக்கும். வாழைக் குலையும் தொங்கும். ஸ்கூல் பேக் கொப்பி புத்தகங்களும் இல்லாம லில்லை. கசாயப் பக்கற். மூக்குத்தூளுக்கும் கூட நம்பிக்கை யோடு நாடலாம்.
என்ன சாமான் எங்கே எங்கே இருக்குமென்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நடமாடும் கம்பியூட்டர் என்றுகூடச் Gafsteiososoftb.
ஏதாவது சாமான்களுக்கு தட்டுப்பாடு எற்பட்டால் விலை
46

திக்குவல்லைகமால் எப்படிப் போனாலும் அவரிடம் நிச்சயமாக அந்த சாமான் கிடைக்கும். எங்கிருந்தாவது அதைத் தேடிக்கொண்டு வந்து போடும் அசகாய சூரன் அவர்.
"மம்மாசி நானா ஒங்களுக்குத்தான் வாசி. நாளக்கி கட மூடோணுமாம்" என்றபடி இன்னும் நாலைந்து பேர் வந்த சேர்ந்துவிட்டார்கள்.
பக்கத்திலிருந்த கோப்பையால் பிளேன்டி ஒரு டம் அடித்துக்கொண்டு மீண்டும் தயாரானார்.
★★★★ பஸில் ஹாஜியாரின் கார் புறப்பட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
"ஹாஜிமார் வந்து இப்பிடி கிலோ கணக்கில சாமனக் கொணுபோனா கடசில எங்களுக்கு ஒன்டுமில்லாப் பொகும்" ஒருவன் அடித்துச் சொன்னான்.
"ஒ. ஒ. போன பைனம் அப்பிடித்தான் நடந்த, இதுக்கு எடமுடப்படாது" இன்னொருவன் அழுத்தம் கொடுத்தான்.
உண்மைதான். அந்தப் பகுதிக்கு ஒரேயொரு கடை இதுதான். அந்தப் பகுதியில் எல்லோருமே சர்வ சாதாரண சனங்கள்தான்.
காலையில் கூலித் தொழிலுக்கு அல்லது சிறிய வியாபாரங்களுக்கு புறப்பட்டால் மாலையில் வந்து சேர்வார்கள். தேடிக் கொண்டு வந்ததில் கொஞ்சம் கொஞ்சம் சாமான் வேண்டி அன்றைய பொழுதைக் கழிப்பார்கள். அடுத்தநாள் பழைய பல்லவிதான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பும் இப்படித்தான். திடீரென்று ஒருநாள் கடைபூட்டும் படியும் வாகனம் செலுத்த வேண்டாமென்றும் இரவில் விளக்குகளை அணைக்கும்படியும் துண்டுப் பிரசுரம் போட்டிருந்தார்கள்.
முட்டிக் கடை காலியாகி விட்டது. பலமாதங்களாக அவிந்தவிந்திருந்த கருவாட்டுக்கும் அதிர்ஷ்டம் அடித்து

Page 31
புதிய பாதை
விட்டது. விற்க முடியாமல் ஒதுக்கி வைத்திருந்த எத்தனையோ சாமான்கள் பொன் போல் மணிபோல் பெறுமதியாக விற்கப்பட்டன.
விசேஷம் என்னவென்றால் முட்டிக் கடையை வாழ வைத்துக்கொண்டிருந்த அண்டை அயலவர்கள் தொழிலுக்குப் போய்வந்து விஷயம் கேள்விப்பட்டு விழுந்தடித்துக்கொண்டு வந்தபோது எங்கிருந்தோ யார் யாரோவெல்லாம் வந்து சாமான்களை அள்ளிக் கொண்டு போயிருந்தார்கள்.
"மசான் பாத்துக்கொண்டு நின்டு சரிவாரல்ல. கார் காரா வரத் தொடங்க முந்தி மம்மாசிக்கு பெய்த்துச் செல்லோம்" மீண்டும் உணர்வு பெற்றார்கள்.
"நான் செல்லியன். மெய்தான் எல்லாரும் வரோணும்.” ஒருவன் முன்வந்தான்.
போக்கடியில் குந்திக்கொண்டு மகாநாடு நடத்தியவர்கள், அதற்குச் செயல்வடிவம் கொடுக்க எழுந்து தயாராகினர்.
கடையை நெருங்க முடியவில்லை. பெண்களும் சிறுவர்களுமாக மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் மம்மாசியின் சிரிப்பும் கலகலப்பும் வேறு. “DubLDTaf BT6OTIT.....” "வாங்கொ வாங்கொ. எல்லாருக்கும் சாமன் தாரன். நான் ஒன்டும் ஊட்டுக்கு கொணுபோறல்ல”
யாரென்றே பார்க்காமல் பதில் சொன்னபடியே தன் காரியத்தில் கண்ணாக இருந்தார்.
"ஆ அம்பத்து ரெண்டுருவா அம்பைசாம்" எழுதிக் கணக்குப் போட்டுக் கூட்டும் பழக்கம் அவரிடமி ல்லை. எத்தனை சாமான் எடுத்தாலும் அதையெல்லாம் மனதுக்குள்ளேயே கூட்டிக் கூட்டிக் கடைசியாக முழுத்தொ கையை சொல்லிவிடுவார்.
"மம்மாசி நானா" சற்றுப் பலமாகவே அக்குரல் மீண்டும் ஒலித்தது.
அப்போது அண்ணார்ந்து பார்த்தார் அவர். அவர் மட்டுமா
48

திக்குவல்லைகமால்
எல்லோருந்தான் திரும்பிப் பார்த்தார்கள்.
"இங்க இவடத்திலீக்கிய"மனிசருக்கு கொஞ்சம் கொஞ்சமா பங்கிட்டுக் குடுங்கொ. இன்னம் மனிசரு வாரொண்டும். காரியல்ல வாரவங்களுக்கு பொட்டிக் கணக்கில கிலோக்கணக்கில மட்டும் குடுக்கவான.
"போன பைனம் நீங்க அப்பிடித்தான் செஞ்ச. எங்களுக்கு நக்கிக் கொண்டு குடிக்க சீனி கொஞ்சமாவது கெடக்கல்ல. அன்ன செல்லல்லயென்டு செல்லவாண"
மம்மாசிக்கு வேர்த்துப் போட்டது. இவ்வளவு காலமும் இப்படியொரு குரலை யாருமே அவருக்கு முன்வைக்கவி ல்லை.
அவர் நினைத்துப் பார்த்தார். போன தடவை நடந்தது தவறென்று பட்டென்று அவருக்கு விளங்கியது. அந்த நாலைந்து முகம்களிலும் ஆத்திரம் கனல்வது அவருக்கு பிழையாகப் படவில்லை.
"நானும் யோசின. பண்ணல்ல மகன். போன பைனம் அப்பிடி நடந்ததான். இதுக்குப் பொறகு அப்பிடி நடந்தா பெட்டோல ஊத்தி நெருப்பு வெய்ங்கொ கடக்கி"
மம்மாசி நானா இப்படிச் சொன்னபின் அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது. வெற்றி நடையோடு அவர்கள் திரும்பினர்; பழைய இடத்தை நோக்கி.
"பருப்பு நூறு தேங்கெண்ண காபோத்தல்" "மம்மாசி நானா பச்சரிசி ஒரு கிலோ." "தேங்க ஒன்டும் கொச்சிக்கத்துாள் அம்பதும்" கம்பியூட்டர் பழையபடி வேலை செய்யத் தொடங்கியது.
★★女★ மாலை மங்களாகி வந்தது. பரபரப்பான சன நடமாட்டம். ஆறு மணிக்கே எல்லோரும் வீடுளூக்குள் அடங்கிவிடும் அவசரம். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பிதி.
“பீப். பீப்."
49

Page 32
புதிய பாதை
மம்மாசிநானாவின் காதுகளுக்குள் துல்லியமாக விழத்தான் செய்தது. அவர் ஆடவுமில்லை அசையவுமில்லை.
“பீப். பீப்." தலையை நிமிர்த்திப் பார்த்தார் அவர். பைஸர் ஹாஜி யாரின் கார்தான். வெளியிறங்கி வந்து காரை நெருங்கினார். "இந்தப் பைனம் எத்தின நாளக்கி ஊட்டுக்குள்ள நிக்கவாகுமோ தெரிய. இவடத்திலிக்கிய மனிசருக்கு எப்பிடிம் குடுக்கோனுமேன்"
மம்மாசியின் பேச்சைக் கேட்டதும் பைஸர் ஹாஜியாரின் முகம் சிவந்து போய்விட்டது.
"நான் வரச்செல்ல பாஸில்ஹாஜி அம்புட்ட. அவருதான் சென்ன சீக்கரம் பொகச்சேல்லி. ம். நான் கடனுக்கா கேக்கிய. கொஞ்சம் கொஞ்சம் பங்கிட்டு பங்கிட்டு நிக்கியத்தப் பாக்க ஒரேடியாத் தந்தா ஒங்களுக்கும் லேசிதானே." பைஸர் ஹாஜியாரின் நியாயம் இது. -
"அது செய்யேல ஹாஜி. இப்பிடிப்பட்ட நாளக்கிதான் நீங்களியள் வார. இது எந்தநாளும் வாரவங்க" மம்மாசி நானாவின் கடைசி வார்த்தைகள்.
நான்கு சோடிக் கண்கள் தூரத்திலிருந்து இந்தக் காட்சியை காணத் தவறவில்லை.
கார் கோபத்தோடு இரைந்து பும்மென்று விரைந்தது. மம்மாசியின் மனக்கதவுகள் மூடிக் கொண்டதேனென்று பைஸர் ஹாஜிக்கு விளங்கவேயில்லை.
எந்தக் கவலையுமின்றி மீண்டும் சுறுசுறுப்படைந்தார் அவள். “எனக்கு நெத்தலிக் கருவடு அம்பது தாங்கொ" "நெருப்பெட்டி ஒன்டும் மொழுகு திரியொன்டும்" "வெறகு ரெண்டு கெட்டு”
5 Ο

ஒரு நாள் நகர்ந்தது
"எனத்தியன் பாத்துப் பாத்து நிக்கிய, சோத்தத்தின்டா டக்கென்டு பளிக்கொடத்துக்குப் போ. மூணு மணியாகப்போற"
சுற்றிச் சுற்றி நின்றவனின் காதுகளுக்குள் இந்த வார்த்தைகள் ஓங்காரமாய் ஒலித்தது.
"பொகத்தான் பாக்கிய" அவனும் கடுகடுப்போடு கத்தினான்.
மூன்றாம் ஆண்டு வகுப்பில் படிக்கும் அம்ஜத் யாரும் சொல்லாமலேயே பாடசாலைக்குப் போகத் தயாராகிவிடுவான். ஒதல்பள்ளியென்றால் அவனுக்கு கொலைக்களத்துக்குப் போவது போல.
"S6T66OTib GuTas6)6OuJITLT.” DlbLDIT Lissoir(6b 6Tfbg விழுந்தாள்.
5

Page 33
புதிய பாதை
"தொப்பிய தேடியவா." அவன் நியாயம் சொன்னான். “ஒரு எடமென்டு வெக்கோணேன். ஆ இந்தா” மேசைப் புத்தகங்களுக்கிடையில் சிக்கியிருந்த தொப்பியை எடுத்து நீட்டினாள்.
“ვr6ზ65)” "ம். ஒதல் படிப்பு எப்பிடிப் போனாலும் சல்லி குடுத்தி ரோணும்" முந்தானையில் முடிந்திருந்த ஒரு ரூபாக் குற்றியொ ன்றை அவிழ்த்துக் கொடுத்தாள்.
அப்பாடா. அம்ஜத் பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்டு விட்டான்.
பாயிஸ் நானாவின் கடையடியில் சிறிது நேரம், பள்ளத்து ரோட்டில் கிரிக்கட் அடிப்பதை கொஞ்சநேரம் பார்த்துவிட்டு பள்ளிக்கூடத்தை நெருங்கும்போது "நவ்விர் இலா ஆஸமா” பைத்தோதுவது கேட்டது. ஒரே ஓட்டத்தில் ஓடிப்போய்ச் சேர்ந்து கொண்டான் அம்ஜத்.
இன்னும் ஒரு நிமிடம் சுணங்கியிருருந்தால் ஒரு அடிபோட்டுத்தான் உள்ளே எடுத்திருப்பார் லெப்பை.
"ஆ எல்லாரும் ஒங்கொடொங்கட எடத்தில் இருந்து ஒதுங்கொ. இப்ப பாடம் கேக்கப் போற"
அவனது மேல்கையெல்லாம் நடுநடுங்கியது. லெப்பை பாடம் கேட்டால் அவன் அடிபடாத நாளே இல்லை.
த.லீமுல் குர்ஆனை விரித்து ஒதிப் பார்த்தான். அலி. ப். பேயைத் தவிர அவனுக்கு வேறெதுவுமே தெரியவில்லை. பள்ளிவாசலின் பின் இணைப்பாக அந்தப் பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டிருந்தது. தகரக் கூரையும் அரை மதிலும் சீமெந்துத் தரையுமாக அது நீண்ட காலம் வாழ்ந்து வருகிறது. பிள்ளைகள் ஒஹோவென்று ஓதிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு சத்தமாக ஒதுகிறார்களோ அந்தளவுக்கு லெப்பைக்கு சந்தோஷம்.
அம்ஜத் கள்ளக் கண்களால் லெப்பையை அடிக்கடி பார்த்துக் கொண்ட்ான். பெரிய ஜூஸ் ஒதும் பிள்ளைகள்
52

திக்குவல்லைகமால்
அவரைச் சூழ்ந்த நின்றனர்.
"ஆ. இக்பால் தட்லிமு குர்ஆனுக்கு போ. பாத்திமா ஜஸ் காரருக்கிட்டப் போ.." இப்படி நியமனம் வழங்கினார் G6)60)u. W
அம்ஜதுக்கு பெரிய சந்தோஷம். அவர்களிடம் பாடம் கேட்கப் போகிறவன் இக்பால். வயதில் கொஞ்சம் கூடினாலும் பரிச்சயமானவனாயிற்றே.
அவன் வந்து ஒவ்வொருவரிடமும் பாடம் கேட்க தொடங்கி கினான். பெரிய கண்டிப்பானவன் போல லெப்பைக்குக் காட்டிக்கொள்வான். அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சிரிப்பான்.
சாக்கிர் ஒரு பெரலிக்காயை கொடுத்தபோது டக்கென்று வாயில் போட்டுக்கொண்டு அவுஷ்ரஃபிடம் பாடம் கேட்டான். அம்ஜத் தன் களிசான் சாக்கில் சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த புல்டோ ஒன்றை நீட்டினான். இனியென்ன அவனும் பாடங்கொடுத்த பட்டியலிலே சேர்ந்துவிட்டான்.
கையில் பிரம்போடு லெப்பை ஒரு சுற்று சுற்றிவந்தார். அம்ஜதுக்கு மீண்டும் நடுக்கம்.
"ஆ. தாரன் பாடம் குடுக்காத." "எல்லாரும் பாடந்தந்த லெப்ப." அம்ஜதின் நெஞ்சு குளிர்ந்தது. இன்னொரு டொஃபி கொடுப்பதாக உடனடியாக திர்மானித்துவிட்டான்.
"அல்லாஹ” அக்பர்” அஸருக்கான பாங்கொலித்தபோது பள்ளிக் கூடம் அமைதிக் கடலாகியது.
இனியென்ன லெப்பை தொழுதுவிட்டு வரும் வரையில் இன்ரவல்தான்.
★女★★ தொழுதுவிட் டு லெப்பை வருவதைக் கண்டதும் அங்குமிங்குமாக விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைக ளெல்லாம் பள்ளிக்கூடத்துக்குள் வந்துவிட்டார்கள்.
53.

Page 34
புதிய பாதை
ஆ எல்லாரும் பழம் பாடம் ஒதுங்கொ. பழம் பாடம் தெரியாதவங்கள தலப்பிலிந்து போடிய."
ஹோஹோவென்று பழம் பாடம் தொடர்ந்தது. அம்ஜதுகு பழம்பாடம் புதுப்பாடமென்று ஒன்றும் தெரியாது. அவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.
உம்மாவிடம் தப்புவதற்காக பள்ளிக்கூடம் வருவான். லெப்பையிடம் தப்புவதற்காக எத்தனையோ உபாயங்களைக் கையாளுவான்.
"மருந்துக்குப் பொக உம்ம வரச்சென்ன லெப்ப" இப்படி ஒரு நாளைக்கு சொல்வான்.
"பெளத்து வலி" என்று இன்னொரு நாளைக்கு கத்துவான்.
சிலபோது அடுத்தவனை வலிய சண்டைக்கு இழுத்துவிட்டு தேம்பித்தேம்பி அழுவான்.
"எல்லாரும் இங்க பாருங்கொ" பிரம்பை மூன்றுமுறை மேசையில் தட்டிக் சொன்னார் லெப்பை,
"மாஸ்தேச் சல்லி கொணந்தவங்க எடுத்துக் கொணு வாங்கொ"
அம்ஜத் சேப்பை தொட்டுப் பார்த்தான். நேற்றும் கூட லெப்பை சொல்லிவிட்டபோதும் அவன் கொண்டுவரவில்லை. சிலவேளை கொண்டுவராதவர்களை லெப்பை வீட்டுக்கனுப்பு வார். அந்த வரிசையில் சேரவே அவனுக்கு விருப்பம்.
நாளைந்து பேர் லெப்பையின் மேசையை சூழ்ந்துகொண் LT866i.
லெப்பை எந்த புத்தகத்திலும் கணக்கு வழக்குகளை குறித்துக் கொள்வதில்லை. ஆனால் யார் யார் கொண்டுவந்தா கள், யார் யார் கொண்டுவரவில்லையென்ற விடயங்கள் அவ ருக்கு தண்ணிர் பட்டபாடு.
சும்மாவல்ல நாற்பது வருஷசேவிஸ். சுமார் நூற்றைம்பது பிள்ளைகள் ஒதும் அங்கு
6S
54

திக்குவல்லைகமால்
ஒவ்வொருநாளும் குறைந்தது ஐந்துபேராவது கொண்டு வராமல் விடமாட்டார்கள். ஐம்பது அறுபது ரூபாத்தேறும். அன்றைய செலவுக்கு அதுசரி.
"மாஸ்தேச் சல்லி கொணுவராதவங்க எழும்புங்கொ" லெப்பை கழுகு போல சுற்றி சுற்றிப் பார்த்தார்.
அம்ஜதும் ஒருவனாய் எழுந்த நின்றான். "நாளக்கி வரசெல்லே எல்லாரும் கொணுவரோணும் சரியா. ஒங்களியலுக்கு ஸ்கூல்ல கொணுவரச்சென்னா எவளவென்டாலும் சரி கொணுபெய்த்துக் குடுக்கிய இங்கமாஸ் தேச் சல்லியாலும் ஒழுங்கா கொணுவாரல்ல. அடே அது துணியா. இது ஆகிரம் வெளங்கினா”
வழமைபோல் ஒரு லெக்ஷர் அடித்தார் லெப்பை. அம்ஜதின் முகத்தில் அசடு வழிந்தது. அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லையே.
"இக்பால் இங்க வா. கலிமாச் செல்லிக் குடு" பிள்ளைகளுக்கு உற்சாகம் தலைக்கேறிவிட்டது. பள்ளிக்கூடம் விடும்வேளை நெருங்கினால்தான் இப்படியான பொது அம்சங்கள் இடம்பெறும்.
"அவ்வல் கலிமா தையூப்" இது இக்பால். "அவ்வல் கலிமா தையூப்” எல்லோருமாக தொண்டை கிழியக் கத்தினார்கள்.
"டேய் டேய்” மேசையில் மூன்று பிரம்படிகள். வெடிக்கப் போகும் சிரிப்பை அடக்கிக்கொண்டு அம்ஜத் கீழே பார்த்துக்கொண்டான்.
"ஏத்தியன் தொண்ட கிழியக் கொரோடிய. பிஸ்ஸன் கொரட்டுவேல மாதிரி. சத்தம் போடியவனியள நிப்பட்டி வெப்பன். ஆறு மணியாகங் காட்டிம். ம். சரி செல்லிக்குடு" லெப்பையை "கொழப்பி விட்ட சந்தோஷம் சிலருக்கு. அதற்கான தண்டனையை அனுபவிக்க மாத்திரம் எவரும் விரும்பவில்லை.
"லா இலாஹ." இது இக்பால்.
55

Page 35
புதிய பாதை
"லா இலாஹ." நிதானமாக எல்லோரும் சொன்னனர். இப்படியாக ஐந்து கலிமாவும் ஒப்பேறியாயிற்று. அம்ஜத் த.லிமுல் குர்ஆனை சுருட்டி இடுப்பிலடித்து சேட்டை இழுத்து வெளியே போட்டுக்கொண்டான்.
"செல்லுங்கொ ஸலவாத்து" ஸலவாத்து ஓய்ந்ததோடு வெளியே பாயத் தயாராகி நின்றனர் எல்லோரும்.
"எல்லாரும் பொக வாண. மொனிட்டர்மாரு பாயியள சுருட்டி வைங்கோ."
அம்ஜத் மொனிட்டரா என்ன. லெப்பையைப் பார்த்தபடியே நாலுபேரைத் தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தவன் இளைத்திளைத்து வீட்டு வாசலில்தான் வந்து நின்றான்.
"ஆ. பள்ளிக்கொடமுட்டா. பாஞ்சி வந்தா" உம்மா கேட்டாள்.
"அது பாருங்கொ எல்லாரும் வார” அவன் சொன்னான். "பாடம் குடுத்தா” "ஓ. ஒ." "நல்ல புள்ள. அப்பிடித்தானிக்கோணும். அன்ன மேசேல தேத்தண்ணி ஊத்தி வெச்சீக்கி."
விளையாடப் போகும் அவசரம் அம்ஜதுக்கு.

நாற்பது நாள்
விடிந்ததும் விடியாததுமாக ஓடோடிப்போய் செய்தியை அறிந்துவிட வேண்டுமென்ற ஆவல் அஸிந்தாத்தாவுக்கு. விடிகாலையில் வீட்டிலிருந்து அப்படி இலகுவாக விடுபட முடியுமா என்ன?
அடுப்பிலிருந்த ரொட்டியை ஆவிபறக்கப்பறக்க இறக்கி மேசையை தயார்படுத்திவிட்டு போது அவளுக்கு சற்றே நிம்மதி.
"நான் அங்கல கொஞ்சம் பெய்த்திட்டுவாரன். வாப்பக் கடியாப்பத்த தின்னக் குடு”
எஞ்சிய பொறுப்புக்களை மகளின் தலையில் தூக்கிவைத்துவிட்டு குசினிப் பக்கத்தால் வெளியே பாய்ந்தாள் அளிந்தாத்தா. பிடவையை இழுத்துச் செருகி சரிப்படுத்திக் கொண்டு நடந்தாள்.
57

Page 36
புதிய பாதை
ரசீது நானா வீட்டுக்குள் புகும் போதே அவரது மகள் ருஸ்னாதான் எதிர்ப்பட்டாள். முகத்தில் தவழ்ந்த மகிழ்ச்சியே காரியம் சித்தித்துள்ளதை பறை கொட்டியது.
"போன விஷயம் ஹைரா?” பாய்ந்து கொடுத்தக் கொண்டு கேட்டாள்.
"ஓ மாமி. நாளன்டக்கி பிளேன். லேஸ்தியாகிக் கொளவாலும் டைமில்ல" அவளுக்குள் ஒரு வித படபடப்பு. "நேத்து ராவு பத்து மணி வாட்பாம் மகளும் வரச்செல்லே. வரங்காட்டிம் எனக்கு தீன்தண்ணி எரங்கல்ல" அஸ்மும்மாவும் ஓடிவந்து இணைந்து கொண்டாள்.
ருஸி னாவுக்கு கலி யாணம் காட்சி அப்படி இப்படியென்றெல்லாம் ஒடியாடி அலுத்துப் போன வேளையில் அஸிந்தாத்தாதான் இந்த ஆலோசனையை முன்வைத்தாள். அன்று முதல் அஸிந்தாத்தாவின் ஒவ்வொரு பேச்சும் அவர்களுக்கு மந்நிரமாயிற்று.
"டுபாய் போறென்டு எல்லாருக்கும் சரிப்போறல்ல. நல்லோரு நிய்யத்துக்கடன் வெச்சிக்கோ. ரெணுமுணு வருஷம் நிண்டிட்டு வந்தா சொரசொரெண்டு சல்லியேன். அதுப் பொறகு மாப்பிளமாரு தேடிவாரொண்டு. இல்லாட்டி இந்நக் காலத்தில கொமரு குடுக்கியது லேசான வேலயா” அஸிந்தாத்தா மேலும் உற்சாகமூட்டினாள்.
"மெய்தானே ஒரு கரச்சலுமில்லாம பெய்த்திட்டு வாரத்துக்கு அல்லா கிருப செய்யோனும்"
என்ன சொன்னாலும் அளில் மும்மாவின் மனம் திக்திக்கென்றபடிதான்.
"எதுக்கும் அத்துமஜீது லெப்பேக்கட்ட பெய்த்து செல்லியது நல்லம். செல மனிசரு அதீது சென்னாலும் அந்த மனிசன்ட ஒதலியள் வந்த சேரங்காட்டிம் நல்ல பரக்கத்து" அஸிந்தாத்தாவின் இந்த வார்த்தைகள் அஸ்மும்மாவின் மனதிலே நிலவிய பெரியதொரு இடைவெளியை நிறைத்துவிட்டது போலிருந்தது. வேலையோடு வேலையாக
58

திக்குவல்லைகமால்
அவரிடம் ஓட வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
★★★★ "ஆ. அஸ்மும்மா எனா செய்தி மிச்சநாளேப் பொறகு இந்தப் பொகத்துக்கு"
கண்ணாடியை கழற்றியபடி அத்துமஜீது லெப்பை கேட்டார். இந்தக் குரலைக் கேட்டதும் உள்ளேயிருந்து லெப்பை பொணாட்டியும் யாரென்று பார்க்க வந்த சேர்ந்தாள்.
"ஆ. அஸ்மும்மவா" "ஓ. லெப்ப பொணாட்டி. எங்கட மகளும் டுபாய் பொகப் போறேன். கண்ணெட்டாத் தூரத்துக்குப் போறென்டா இனி வந்து சேரங்காட்டீம் நெருப்பேன்."
லெப்பைக்கு விஷயம் விளங்கிவிட்டது. "இதுக்கொண்டும் யோசிக்க வாண அஸ்மும்மா. நாப்பது நாளாக்கி பதுரியா மெளலுாது ஓதி தமாம் செஞ்சி போடுங்கொ. போற வார எடத்தில ஒரு கரச்சலுமில்லாம வந்து சேரங்காட்டிம் காவல்பாடுதான்”
அஸ்மும்மாவின் மனதிலே குடிகொண்டிருந்த அச்சத்தை அப்படியே கிள்ளியெறிந்தார் லெப்பை.
"லெப்பேட ஒதலப்பத்தி எத்தினயோ பேரு சென்ன. அதுதான் நான் வேலவெட்டிக்குள்ள ஓடிவந்த”
"எனக்கும் ஒன் டு ரெண்டு வேலயா. நானே ஒதோணுமெண்டில்ல."
"அப்படிச் சரிவாரா லெப்ப. என்ன வேலிந்தாலும் நீங்களே வந்து ஒதினாத்தான் நல்லம்"
"நீங்க செல்லியெண்டா இனி வராமேல. அப்ப எப்பேக்கன் பயணம்" விட்டுப் பிடித்தார் லெப்பை.
“நாளண்ட ராவக்கி" ܚ "ஆ. அப்ப நான் வாரனே" அஸ்மும்மாவின் நெத்த நிறைந்தது.
★★★如
59

Page 37
புதிய பாதை
ருஸ்ணாவை சுமந்து கொண்டு வாகனம் கட்டுநாயக்கா நோக்கிப் பறந்தது.
துஆ ஓதி வழியனுப்பியபின் அடுத்த கட்டம் அத்துமஜீது லெப்பைக்காக காத்திருந்தது.
அஸ்மும்மாவும் இளைய மகளும் மாத்திரம்தான் வீட்டுக்குப் பொறுப்பாக இருந்தார்கள்.
சாம்பிராணிப் புகை எழுந்து பரவியது. சுப்பரா விரித்து பாயிலமர்ந்தபடி ராகமெடுத்து பதுரியா மெளலுாது ஓதிக்கொண்டிருந்தார் லெப்பை.
சீனி போடாத இறுக்கக் கோப்பி கொண்டு வந்து வைத்தாள் அஸ்மும்மா.
"இது வெளங்கினா. நாப்பது நாளாக்கி ஒதோணும். எந்த நாளும் வந்து வந்திக்கத் தேவில்ல நான் ஊட்டிலயே ஒதியன். அந்தப் பொறக் கலண்டர கொஞ்சம் எடுங்கொ பாக்க”
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலண்டரை எடுத்துக் கொடுத்தாள் அஸ்மும்மா.
"ம். ஒன்டு ரெண்டு முனு. நாப்பது. ம். பாருங்கொ பாக்க. நாப்பதாம் நாள் சரியா வெள்ளிக் கெழம வார. எவளவு பரக்கத்தன். அன்டக்கி நான் வந்து தமாமாக்கிப் போடியன்."
"நெனவு வெச்சிக்கோங்கொ. வார மாஸம் பன்னண்டாம் தெய்தி. எதுக்கும் கொஞ்சம் வந்து நெனவூட்டுங்கொ"
ஒரே மூச்சில் சொல்லி முடித்து, கடைசி டம் கோப்பியையும் குடித்துவிட்டு எழுந்தார் லெப்பை.
அஸ்மும்மாவுக்கு பூரண திருப்தி. அதைப் பகிர்ந்துகொ ள்ள அஸிந்தாத்தா எப்போது வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். JP ve ★大大★ ருஸ்ணா வெளிநாடு சென்று நாளைக்கு சரியாக நாற்பது
6 Ο

திக்குவல்லைகமால்
நாட்கள். இரண்டொரு கடிதங்கள் வந்தபோதும், இன்னும் சல்லிகில்லி என்று எதுவும் வந்து சேராதது அஸ்மும்மாவுக்கு பெரிய யோசனையாக இருந்தது.
இதையெல்லாம் நெஞ்சிலே சுமந்து கொண்டு அஸிந்தாத்தா வீட்டுக்குள் காலடி வைத்தாள் அவள்.
"பாருங்கொலே கண்ணுக்குத் தெரியாம நாப்பது நாளாகீட்டேன்" மனப்பாரத்தை அஸ்ந்தாத்தாவுக்கு இடம் பெயர்த்தாள்.
"அப்ப இனி மெளலூத தமாம் செய்ங்கொ. சொணக்க வான” தன் ஆலோசனையை முன்னவத்தாள்.
"மகள் அனுப்பிய சல்லியால செய்யோணுமென்டேன். நிண்ட"
"அது சரி முந்திப் பிந்தியதான். எப்பிடிச் சரி செஞ்சி போடியதுதான் நல்லம். ஒசர வளவு ரைஹானட மகளும் அப்பிடித்தான். சல்லியனுப்பல் லயாம். கடன் பட்டு தமாமாக்கிக்கி. அன்டக்கே பத்தாயிரம் அனுப்பீந்தாம்"
அஸ்மும்மாவுக்கு உற்சாகம் தலைக்கேறிவிட்டது. பிற்போடுவோமா என்ற கேள்வியோடுதான் இங்கே வந்து தட்டிப்பார்த்தாள். ஒரு ஆயிரம் ரூபா கடன்பட்டாலென்ன என்ற யோசனை இப்போது.
"ஒ. இனி லெப்பய மட்டும் கூப்பிட்டு செய்யேமேல. அசல் மனிசரும் பாத்துக்கோ நிக்கிய நாலஞ்சி கலத்துக்காலும் செய்யோணும். அந்த மனிசனுக்கு ஒரு ஐநூறாலும்"
"இல்லாட் டி. நாப்பதுநாள் ஒதியென்டா லேசா. மனசொடக்கப்படாது"
"அப்ப நாள வெள்னோம வாங்கொ . வேல வெட்டிம் ஈக்கேன்”
அஸிந்தாத்தாவுக்கு அடித்தது சான்ஸ். சாப்பிட்டுவிட்டு சோற்றுக் கோப்பையொன்றையும் கட்டிக்கொண்டு வந்தால் அன்றைய கதை சரி.
6 1

Page 38
புதிய பாதை
ஆயிரம் ரூபா யாரிடம் கேட்பது என்ற யோசனையோடு நடந்தாள் அஸ்மும்மா.
★★女★ தமாம் வைபவத்தை சிறப்பாகச் செய்த திருப்தியோடு அயர்ந்து தூங்கிய அஸ்மும்மாவுக்கு யாரோ கதவை இடிப்பதுபோல் கேட்டது.
பொலபொலவென்று விடிந்திருந்தது. ஓடிவந்து கதவைத் திறந்தாள். கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள்.
கனவல்ல; ருஸ்ணா வந்திருந்தாள். அதற்கிடையில் ரசீது நானாவும் இளைய மகளும் கூட எழுந்து வந்துவிட்டார்கள்.
உடல் களைந்து மெலிந்து சோர்வோடு அமர்ந்தாள் ருஸ்ணா. கையோடு கொண்டுபோன பேக் கட்டிலின் மேல் கிடந்தது.
"வாப்பா நீங்க ஜாதி ஏஜென்ஸியொன்டத் தான் புடிச்சீக்கி. உசிர தப்பிச்சுக் கொண்டு வந்தது பெரிய செய்தி. கரச்சல் பொறுக்கேலாம ஊட்டால பாஞ்சிக்கொண்டு பொலுஸாக்கு பெய்த்து. வந்து சேரங்காட்டீம் நம்பல்ல." அஸ்மும்மாவின் கண்கள் இருட்டி. தலை கிறுகிறுத்து. அதற்குமேல் எதுவுமே அவளுக்கு விளங்கவில்லை.
62

அற்புதங்கள் ஆயிரம்
சிற்றுார்தான். ஆயினும் இந்த ஒரே வாரத்துக்குள்
அது எவ்வளவோ பிரபல்யமடைந்துவிட்டது. அந்தப் பிரபலத்தை வைத்துக்கொண்டுதான் மிக இலகுவாகத் தேடிக்கொள்ளவும் முடிந்தது.
அதற்குமேல் போக முடியாதென்றளவுக்கு கார் நுழைந்தவிட்டது. தோட்டம், வீட்டு முற்றம். இடுக்கு முடுக்கெ ல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. திருவிழாக் காட்சிகளாக கானுமிடமெல்லாம் தலைகள்.
"நாங்க முன்னுக்குப் போற. கார இவடத்தில எங்கசரி பாத்துப் போடுங்கொ"
மூவரும் இறங்கி நடந்தனர். நோயாளியான ஸெய்துநானாவும் கூடத்தான். வாதம் மூட்டுவலி. சதைப்பிடிப்பு
6 3

Page 39
புதிய பாதை
இப்படி பல நோய்களின் சங்கமம். பல்வேறு மருத்துவங்களை யும் பல்வேறு மருத்துவர்களையும் கண்டாகிவிட்டது.
ஒன்று கட்டுப்பாட்டுக்குள் வரும்போது இன்னொன்று தலைதூக்கும் நிலை. வயதின் தளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டால் அப்பிடித்தானே.
நாலைந்து வருடங்களாக அலைந்துதிரிந்து இதற்குமேல் என்ன வைத்தியமென்று ஒதுங்கிய வேளையில்தான் எல்லா நோய்களுக்கும் இஸம் மூலம் சிகிச்சையளிக்கும் பாகிஸ்தான் சேஹ" வந்துசேர்ந்திருந்தார்.
கையால் தொட்டவுடன். ஓதி ஊதியவுடன். குணமாகும் அற்புதங்கள் கதைகதையாய் ஊரெங்கும் பரவியது. அந்தக் கிராமம் தாங்க முடியாதபடி நாளாந்தம் வந்து குவியும் சனம். "சேஹாங்கள சந்திக்க நிக்கிய போலின பாருங்கொளே” இக்பாலும் தான் அவதானித்ததை உறுதிப்படுத்தினான்.
முடிவே இல்லாத கியூ வரிசை பாம்பாய் நீண்டு தெரிந்தது. மணிக் கணக்காக காத்துநிற்பதாக கூடியிருந்தோர் கதைத்துக்கொண்டனர்.
வீட்டுக்கு முன்னே பாதையைக் குறுக்கறுத்து மேலே விரிப்புக் கட்டப்பட்டிருந்தது. நெடுநேரம் நின்றிருக்க முடியாத நோயாளிகள் அங்கே கதிரைகளில் அமர்ந்திருந்தார்கள். இடையிடையே அவசர நோயாளர்கள் கதிரைகளில் இருத்தி தூக்கிச் செல்லப்பட்டார்கள்.
ஏகப்பட்ட தொண்டர்கள் உனக்கெனக்கென்று இயங்கிய வண்ணமிருந்தனர். விசேட ஒலிபரப்புச் சேவை கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதிலும் சேஹின் வல்லமையை வலியுறுத்துவதி லும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது.
"எனக்கென்டா போலின் நிக்கேலா" ஸெய்து நானா பயந்து போய்விட்டார்.
"இதில நிண்டுக்கோ நின்டா நசக்காரனெல்லம் சீக்கரமா மெளத்தாப் போறொன்டும்" இக்பால் அதை ஆமோதித்தான். "நான் செல்லவா, நீங்க கொஞ்சம் ஒரு பொகத்துக்காகி
6 4.

திக்குவல்லைகமால்
நில்லுங்கொ. நாங்க ஒரு ரெளன் அடிச்சிட்டு வார. தெரிஞ்சாக்கள் தாராலும் நிக்கியான்டு பாக்க” அன்வர் இன்னொரு கோணத்தில் யோசித்தான்.
பச்சை வர்ணப் பூச்சு வீட்டின் முற்றத்தில் இடமொன்று தேடி கைலேஞ்சை விரித்து அமர்ந்துக்கொண்டார் ஸெய்து நானா.
அன்வரும் இக்பாலும் ஒரு சுற்று சுற்றினர். வீடுகளெல்லாம் தேநீர் கடைகளாகத் தோற்றம் பெற்றிருந்தன. இடத்துக்கிடம் பீங்கான் பீரிஸ் யாவாரிகள்.
இஸ"ம் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளும் மத்திய நிலையங்களாக சில வீடுகள். இன்னும் சில வீடுகளில் இஸம் எழுதும் பீங்கான்களைக் கையேற்கும் நிலையங்களாக மாறியிருந்தன.
"பெளத்து வலியால துடிச்சிக்கொணுவந்த. சேஹாங்க தடவினொடன சிரிச்சிக் கொண்டெழும்பிட்ட."
இப்படி எத்தனையோ அற்புதங்கள் அவர்களின் காதுகளைத் துளைத்தன.
"இங்கபாருங்கொ ஸெய்து நானவ எப்பிடிச்சரி காட்டி இஸ"மெடுத்துக்கொண்டுதான் பொகோணும். இல்லாட்டி செலவழிச்சிக்கொண்டு இவளவு தூரம் வந்தத்திலேம் வேலில்லேன்" என்ன செய்வதென்று புரியாத நிலைப்பாட்டில் இக்பால் பிரஸ்தாபித்தான்.
"எனக்கென்டா ஒரு யோசின வரகுது. சரிசரி வாங்கொளே” ஏதோ தீர்மானத்துக்கு வந்த நிலையில் அன்வர் அழைத்தான். ★女★女 "கடுமயான நோயாளியொன்ட தூக்கிக்கொணுவார. எட முடுங்கொ எடமுடுங்கொ. படிபடியால ஏற ஒதவி செய்ங்கோ." ஒலிபெருக்கியில் இந்த விவரணம் ஒலிபரப்பாகியபோது உதவிக்கு நாளைந்து பேர் ஓடிவந்து சேர்ந்து விட்டார்கள்.
அன்வருக்கும் இக்பாலுக்கும் லேசாகிப் போய்விட்டது.
65

Page 40
புதிய பாதை
எவ்வளவு கஷ்டப்பட்ட கதிரையில் இருத்தி நோயாளியை சுமந்துகொண்டு வந்தவர்களாயிற்றே. தொண்டர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட போது, விலகிவிடாது அவர்களும் ஒட்டினாற்போல சென்று உள்ளே புகுந்துவிட்டார்கள்.
ஃபேன்கள் சூழலும் வசதியான வாசல். சேஹைச்சூழ சிஷ்ய கோடிகள். தனியே அவரால் மாத்திரம் முயாதென்ற அளவுக்கு ஜனவெள்ளம் பெருக்கெடுத்ததால் இடையில் சிஷ்யர்கள் பலபேர் வருவிக்கப்பட்டார்களாம்.
ஸெய்துநானா நேரே கொண்டுபோய் சேஹறின் முன் நிறுத்தப்பட்டார். அவரின் முகத்திலே வேதனையின் ஆக்கிரமிப்பு. உபாதையினை நெளிந்து வளைந்து வெளிக்காட்டினார்.
உதவியாளர்கள் அவருடைய பெயரையும் அவரது உம்மாவின் பெயரையும் கேட்டெழுதி துண்டை சேஹறின் கையிலே கொடுத்தனர்.
மொழிபெயர்ப்பாளர்களாக உருது தெரிந்த பல மெளலவிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
சிவந்த மெலிந்த வெண்தாடி படர்ந்த தோற்றத்தில் சேஹ" வீற்றிருந்தார்.
இக்பால் அவருடைய வருத்தங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல அதெல்லாம் உருது வடிவில் சேஹறின் செவிகளில் சேகரமாயின.
அவள் சில துண்டுகளை எழுதிக் கொடுத்தார். இதற்குரிய இஸம்களைப் பெற்றுக்கொள்ளும்படி உதவியாளர்கள் லேசாக சொல்லிவைத்தார்கள்.
சேஹ" ஒரு சிஷயனின் முகத்தைப் பார்த்தபோது அவள் தணல் சட்டியையும் சாம்பிராணிப் போத்தலையும் எடுத்த நீட்டினார்.
புகை ஹோவென்று எழுந்தபோது. ஏதோ ஒதி புகைக்கூடாக மூன்றுமுறை நோயாளியின்
6 6.

திக்குவல்லைகமால்
முகத்தில் ஊதினார்.
ஒரே நிசப்தம். எதிர்பார்ப்பு.
ஏதோ சொல்லி கையை நீட்டி விரல்களை மேல்நோக்கி உயர்த்தினார்.
"ஒழும்புங்கொ. ஒழும்புங்கொ. மொல்ல மொல்ல" ஸெய்துநானா விசை கொடுத்த பொம்மை போல் மெல்ல மெல்ல எழுந்து நின்றார். அவரை அறியாமலேயே எல்லோரையும் பார்த்து ஓர் அருமையான சிரிப்பு.
"நடவுங்கொ நடவுங்கொ. புடிக்கவான புடிக்கவாண. திரும்பிப்பாக்கவான."
ஸெய்து நானா மெல்ல மெல்ல நடந்தார். "அல்லாஹ" அக்பர்." இக்பாலும் அன்வரும் அவரது பின்னாலேயே வந்தனர். "எல்லாரும் கவனிங்கொ. மாபெரிய கிருப. இப்ப நாலஞ்சி பேரு சேந்து தூக்கிக்கொணுவந்த நோயாளி நடந்து வாராரு. படியாளேம் எறங்கியாரு." ஒலி பெருக்கியில் நேர்முக வர்ணனை தொடர்ந்தது.
"அல்லாஹ" அக்பர்." வெளியே நிரம்பியிருந்த சனத்தின் கோரஸ். "பார்சவாத புடிச்சி நடக்கேலாம ஆறுமாஸ்மா வாட்டில நின்ட மனிசனாம். லெச்சக் கணக்கில செலவழிச்சாம். ஒரு நிமிஷத்தில சொகமாக்கினேன்."
காதுகளைப் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது இருவருக்கும். என்ன சொல்வதென்று புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"சரி நான் இதக்குடுத்து இஸம் எடுத்துக்கொணுவா ரன். நீங்க ஸெய்து நானாக் கூட்டிக்கொண்டு காருக்கட்டப் போங்கொ"
இருவரையும் வழியனுப்பிவிட்டு இக்பால் இஸம் எடுக்கச்
67

Page 41
புதிய பாதை சென்றான்.
சனம் சற்றுமே குறைந்தபாடாக இல்லை. கியூ வரிசைகளும் வரவர நீண்டுகொண்டே சென்றன. மினிமினி யாவாரிகளும் எக்கச்சக்கம். அப்பாடா. இஸ"ம் கியூவிலிருந்த அரை மணி நேரத்துக்குப் பின் மீட்சி பெற்றான் இக்பால்.
★★女★ "பெரிய புதினமாயிக்கி. அந்த எல்ஃப் வேன்காரரு நேத்து அந்தி நேரம் வந்ததாம். ம். நீங்க முனு மணித்தியாலத்தில எல்லம் முடிச்சிக்கொணுவந்த" டிரைவர் வியப்போடு கேட்டார். "சரிசரி இவடத்தால முந்தி பொறப்புடுவோம். பொறகு பெசிக் கொளேலேன்" இக்பால் கதையை வளர்க்க விரும்பவில்லை. w
கார் புறப்பட்டது. வெள்ளவத்தையில் காலை ஒன்பது மணிக்குக் கூட இந்த நெருக்கடி இல்லை.
கிராமத்திலிருந்து டவுனுக்கு வந்த போதுதான் எல்லோராலும் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது.
இக்பால் உசாராகிவிட்டான். "வெளங்கினா. ஒருட்டால புட்டுவமொன்டெடுத்து ஸெய்து நானவ அதில இருப்பாட்டி நாங்க ரெண்டு பேரும் தூக்கிக்கொணுபோன. இல்லாட்டி எங்களுக்கு கிட்டவாகேம் கெடக்கியல்ல."
இக்பாலின் விளக்கம் டிரைவருக்கு வியப்பாக இருந்தது. ஸெய்து நானா ஒரு பாட்டம் சிரித்து ஓய்ந்தார். கார் விரைந்தது.


Page 42


Page 43
"படைட் வானத்திலிருந்து
மக்களில் மக்கள் வாழ் மகத்தான இலி
உருவாகி மகத்தான படை வாங்குவ எந்தப் படை எழுதத் தேை
3) - ճյIճillID|LITET படைப்பாக்கம்ெ
{ے
மகத்தான
அமைந்து
 
 
 
 
 
 
 
 

JLJITGif
குதிப்பவனல்ல. ஒருவனே. விலிருந்தே Lக்கியங்கள் கின்றன. ப்பென்ற பெயர் தற்காக ப்பாளனும் 0வயில்லை.
ானாக அவன் செய்யும் போது
து
5LLU F5 துவிடும்"