கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய உலகம்

Page 1
அரசு வெளியீடு
 


Page 2


Page 3

இலக்கிய உலகம்
வி. கந்தவனம்
அ ர சு வெளி யீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, (இலங்கை).

Page 4
அரசு வெளியீடு: 9. முதற் பதிப்பு: டிசம்பர், 1964.
698ou: erb. l-40
Ilakkiya Ulakam
( A Poet's inquiry into Literary Traditions )
Author: POET, V. KANDAVANAM, B. A.
Publisher: ARASU PUBLICATIONS,
231, Wolfendhal Street, Colombo - 13, (Ceylon).
First Edition: 14th December, 1964.
Price: Rs. 1. 40

காணிக்கை
எந்தன் விதிபோலும் என்னை மூவருடன் தந்தை விநாயகரும் தாய்சின் னம்மாவும் சிந்தை விரியாத சின்னப் பருவத்தில் விங்தை உலகத்தில் விட்டுச் சென்றிட்டார்!
முந்தும் அன்போடு முட்டும் நினைவோடு கந்தா விளக்காக கான்செய் கடனுக இந்தக் கவிநூலை இமைப்பிற் கனவான அந்தத் திருத்தாள்கட் கழகாய் வைக்கின்றேன்.

Page 5

பதிப்புரை
கிவிஞர்கள் விசித்திரப் பிறவிகள். உணர்ச்சி மயமானவர்கள். பெண்களிலே இன்றும் அன்ன நடையையும், மின்னலிடையையும், மாவு விழியை யும், கொவ்வை இதழ்களையுங் கண்டே இன்புறுகின் ரு ர்கள். நீல வானமும், பால் சிந்தும் நிலவும்,மந்த மாருதத் தழுவல்களுமே இன்றும் அவர்களுக்கு இன்பக் "கிளுகிளு’ப்பை ஊட்டுகின்றன. தமிழ்க் கவிதா மரபிலே குறிப்பிட்ட சில வருணனைகளும்,உரு வகங்களுங் கால தேச வர்த்த மானங்கsைடுவன்றே நிற்கின்றன. அனுபவ உணர்ச்சியும், அதன் கவிதா வெளிப்பாடும் கவிதைகளைத் தோற்றுவிக்சின்றன. இவை பொது விதியைச் சார்ந்தவை. ஷஇயுண்டா னல் விலக்கு முண்டென்பதற்குத் திருட்டாந்தமாக அமைகின்றது கவிஞர் வி. கந்தவனம் அவர்களு டைய இலக்கிய உலகம் என்னும் இக் கவிதை நூல்.
உணர்ச்சி வெளிப்பாட்டிற்குச் செய்யுளும், அறிவு விசாரணைக்கு உரை நடையும் ஏற்ற ஊட கங்களென்பது பொதுவான நம்பிக்கையாகும். *இலக்கிய உலகில் கவிதா உணர்ச்சியைத் தவிர, வேறு எந்தப் பால் உணர்ச்சியையும் நுகர முடியாது. அதற்கு அப்பால், அறிவு விசாரணையே நடைபெறு கின்றது. ‘இலக்கியம் என்றல் என்ன? ஆதன் மரபு நிலை என்ன?’ என்னும் வாதப் பிரதிவாத துகளுக்குள் ளாகும் வினக்களை எழுப்பி, அவற்றிற்கு மரபு நிலை தவருத செய்யுள் உருவத்தில் விடை கானை விழை தல் ஒரு புதுமையான முயற்சியாகும். இந்த முயற்சி யில், கந்தவனம் அவர்கள் கணிசமான வெற்றிபெற் றுள்ளார்கள்.

Page 6
இக் கவிதை நூல் “அரசு வெளியீட்டின் மூன் ருவது கவிதை நூலாகும். முதலாவதாக என்றும் அழியாத கீதை உபதேசங்களை வெண்பா உருவிற் தந்தோம். இரண்டாவதாக, காதற் சுவைமிக்க தனிப்பாடற் ருெ குதியாக ‘அண்ணல் கவிதை'களை வெளியிட்டோம். நமது கவிதை நூல்களுக்கு வாச கர் மத்தியிலுள்ள வரவேற்பு, ஈழத்தில் கவிதை நூல்களை வரவேற்று இரசிப்பவர்களுடைய தொகை பாராட்டத் தக்கது என்னும் உண்மையைப் புலப் படுத்துகின்றது.
கவிஞர் வி. கந்த வனம் அவர்களை, ஈழத்தின் பழம் பெரும் எழுத்தாளரும், ஈழகேசரியின் முன்னை நாள் ஆசிரியருமான இராஜ. அரியரத்தினம் அவர் கள் உரிய முறையிலே இங்கு அறிமுகப்படுத்தியுள் ளார். அவ்வமுகவுரைக்கு நமது நன்றிகள்.
இந்நூலைக் குறுகிய காலத்தில் அச்சிடவேண்டி யிருந்தமையினுலும், வழக்கமாக நமது நூல்களை அச்சிடும் "ரெயின்போ பிரிண்டர்’ஸில் வேலைகள் அதிக மிருந்தமையினலும், சில பகுதிகளை வேறு அச் சகங்களிலே அச்சிடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டி ருந்தது. இதன் காரணமாக, எதிர்பாராத வகையில் இந்நூலிலே சில அச்சுப் பிழைகள் ஏற்பட்டுவிட்டன. அரசு வெளியீட்டுத் தொடரில் வெளியாகும் புத்த கங்களுள், முதன் முறையாகப் பிழை திருத்தப் பகுதி யையுஞ் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட மைக்கு வருந்துகின்ருேம்.
*அரசு வெளியீட்டின் இப்புதுமைக் கவிதைத் தொகுதியையும், நமது நூல்களைப் பெரிதும் ஆதரிக் கும் வாசகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்களென் பது நமது நம்பிக்கையாகும்,
வணக்கம்.
எம். ஏ. ரஹ்மான் அரசு வெளியீடு.

அணிந்துரை
-modd-mer
பேராதனை, பல்கலைக் கழகச் சிரேட்ட விரிவுரையாளர்,
திரு. வி. செல்வநாயகம், எம். ஏ.
அவர்கள் அளித்தது.
-O-
தமிழிலக்கியத்தை வளம் பெறச் செய்யும் நோக்கமாக இலங்கையில் முயன்று வரும் இளம் எழுத்தாளர்களுள் ஒருவர் திரு வி. கந்த வனம் அவர்கள். அவர்கள் சீரிய ஓசைச் சிறப்புள்ள செய் யுட்களை இயற்றும் வன்மை மிக்குள்ள வர் என்பதற்கு இலக்கிய உலகம் என்னும் இச்சிறு நூலிலுள்ள செய்யுட்கள் யாவும் சான்ருக விளங்குகின்றன. இலங்கை யெழுத்தாளர் அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழ் மரபு பிறழாதவாறு இலக்கியங் கள் பலவற்றை இயற்றித் தமிழையும் தமிழிலக்கியத்தையும் இலங்கையில் விளங்கச் செய்தல் வேண்டும் என்னும் நோக்கம் பெரிது முடையவர் ஆசிரியர் என்பது அவரியற்றிய செய்யுட்களாற் றெரிகின்றது. இலக்கியம் என்பது யாது,

Page 7
இலக்கிய மரபு என்பது யாது என்பன பற்றி நன்கு சிந்தித்து, வாசகர்கள் பாராட்டத் தக்க முறையிலே தம் கருத் துக்களைப் பல செய்யுட்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். “நல்ல இலக்கி யம் இயற்றவேண்டும்; அங்ங்ணம் இயற்று வோரை ஊக்குவிப்போரும் வேண்டும்” என்பது இச் சிறிய நூலின் பொருளாகும். இத்தகைய பொருளே இக்காலச் செய்யுள் முறையில் வேறு யாரும் தெரிவித்த தில்லை. எழுத்தாளர்களை ஒன்று படுத்தி நல்வழிப்படுத்தும் அவர் நோக்கம் பாராட்டத் தக்கது. சிந்தனைச் சிறப்பு டைய செய்யுட்கள் பலவற்றைக் கொண் டுள்ள இந்நூலினைத் தமிழுலகம் ஏற்று, அவரை இப்பணியில் மேன்மேலும் ஊக்
குவதாக,
வி. செல்வாகாயகம். பல்கலைக் கழகம், பேராதனை. 4一5一64,

நன்றி
நூலை மதித்து நுகர்ந்தோர் உரை தந்த சோலை யறிஞர் சுவைஞர் வி. செ, நல் வேலை யழகு விளங்க வெளியிட்ட கோல வரசு ரஹ்மான், குணங்கொண்டு சால வுதவி தகவாய்ப் பல செய்த சில முடைய கவியிற் சிறக்கின்ற நாலு மறிந்த கண்பர் சொக்கர்க்கும் கால மிசைக்கும் நன்றி கணிகின்றேன்!

Page 8
கடவுள் வணக்கம்
மூத்தமகன் அருள் கொழிப்பான்!
எடுத்தபொருள் ஏற்றமுறை பற்றி
எண்ணியதன் இயல்புகளைக் கற்று பிடித்த பெரும் உண்மைகளின் பெற்றி பின்னுமுயர் வாகமிக உன்னி வடித்துவிட வாழ்கவியில் முடிவாய்
வல்லசிவன் மூத்த மகன் வடிவாய் கொடுத்ததிறன் கூர்மதிநல் செழிப்பாய் கூடிவர மேலுமருள் கொழிப்பான்!
கலைவாணி ஆடி நிற்பாள்!
கலையான கலை கட்கு வாணி -வல்ல விலையான கவிபாட விழைந்தென்னைப் பேணி நிலையாக நெஞ்சத்தி லிருப்பாய் -நல்ல தலையான அழகூறத் தவருது சிரிப்பாய் குலையாத குறிக்கோளை நாட்ட -எள்ளிப் புலையான பொருள் போக்கித் தகவான காட்ட சிலையாகச் சிலையாக ஆடாய் -துள்ளி மலையாக மலையாக நான் நன்கு பாட!

இலக்கிய உலகம்
முதலாம் பகுதி
இலக்கியம் என்ருல் என்ன? இலக்கியம் யாராற் பிறக்கின்றது? இலக்கியம் ஏன் பிறக்கிறது? இலக்கியம் எங்கே பிறக்கின்றது? இலக்கியம் எப்பொழுது பிறக்கிறது? இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?

Page 9

இலக்கியம் என்ரூல் என்ன?
இலக்கியம் என்ப தென்ன
இலங்கிடும் உள்ள உணர்வு இலக்கியம் இன்ப ஊற்று
இயற்கையிற் காணும் அழகு இலக்கியம் தூய தெளிவு
ஈர்த்துளம் ஆளு மாற்றல் இலக்கியம் மனித வாழ்க்கை
இவையெல்லாம் பேசும் எழுத்து !
வேறு
கற்றுப் படிப்படி யாகவே-பொறி முற்றிப் பழுத்துயர் வாகையில் பற்றிப் படரும் நினைவுகள்-நிறை வுற்றுப் பிறக்க முனைகையில்
வண்டு மலரைக் குடைதல் போல்-வரக் கண்ட பொருளைக் கடைந்த பின் உண்டு சுவைக்கும் முறையிலே-திறம் கொண்டு கொழித்துப் பெறுவதை

Page 10
觅垒
இலக்கிய உலகம்
கற்றிட இன்பங் கொடுப்பதாய்-உளம் பற்றி இழுத்துப் பிடிப்பதாய் அற்ற உயிரும் முகிழ்வதாய்-கண் பெற்றுக் குருடர் மகிழ்வதாய்
என்றும் அழகு சுரப்பதாய்-நிலை வென்று குறிகள் விரிப்பதாய் நின்று பயன்கள் விளைவதாய்-ஒளி குன்றிலிருந்து பொழிவதாய்
சிந்தை விரிவு புதியதாய்-வளச் சொந்த இயல்பு பதிவதாய் முந்தி மொழிந்த தொழிந்ததாய்-கொண்ட அந்தப் பொருளை அளந்தாய்
ஒட்டி உணர்ந்து குறியுடன்-கலை முட்டி வடியும் முறையிலே இட்டுத் தெரிந்த எழித்திலே-பொருள் கட்டி வடித்தல் இலக்கியம்
இலக்கியம் யாராற் பிறக்கின்றது?
உற்றமுறை கொண்டுணர்ந்து உள்ள பல ஏடுகளைக் கற்றவர்கள் எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருப்பவர்கள்

இலக்கிய உலகம் 15ご
பற்றிவரும் உண்மைகளைப் பண்புடனே ஆய்பவர்கள் பெற்றெடுப்பார் அறிவொழுகும் பீடுடைய இலக்கியங்கள்.
எப்படித்தான் நூல்களை யார் எத்தனைநாட் கற்றிடினும் துப்புடனே நுண்பொருள்கள் துலங்கிடுமா? வாழ்க்கையிலே இப்படியும் அப்படியும் இடறிவிழுந் தெழுந்தவர்கள் செப்பமுடன் இலக்கியங்கள்
தெளிவுடனே ஆக்கிடுவார்.
ஊறிவரும் உந்துணர்வு உருவெடுக்கும் உள் வலிமை ஆறியிருந் தியற்கையிலே ஆழ்பவர்கள் இன்பவெறி கூறிவரப் பெற்றவர்கள் குதித்தெழுந்தே இலக்கியமாம் மீறிவரும் கலையழகு விளங்குமுயிர் விருந்தளிப்பார்.
பருந்தெனவே பறந்துநின்று பார்த்ததெல்லாம் கறந்து நன்கு தெரிந்தவர்கள் உண்மைகளிற் திளைத்துவந்த அனுபவத்தை

Page 11
置6
இலக்கிய உலகம்
அருந்திடநாம் ஆர்வமுடன் அழகுடனே கட்டுதற்குப் பொருந்துதிறன் பூண்டவர்கள் போற்றுமிலக் கியம் பொழிவார்.
பொறிகளை நல் வழிகளிலே பூட்டுபவர் சான்றெனவே நெறியுடையோர் அன்படக்கம் நேர்மையுடன் கருணையுளார் குறியுடையோர் அமைதியெனும் கோபுரத்திற் குடியிருப்போர் முறையுடனே இலக்கியங்கள் முத்துமுத்தாய்ப் பெற்றெடுப்பார்.
கற்பனையில் வல்லவர்கள் கண்டபொருள் மிக்கமிக்க அற்பமென்ற போதுமதற் காற்றலினுல் ஆளவல்ல பொற்புகளைப் பூண்டு புவி போற்றுமெழில் பூர்க்கவ்ைப்பார் முற்படரும் இலக்கியங்கள் முற்பெரியோ ஞய்ப்படைப்பார்.
விட்டவர்கள் கட்சிகளை விரிந்த மனப் பான்மையுடன் தொட்டபொருள் அத்தனையும் துங்கமுடன் ஆய்ந்தவையிற்

இலக்கிய உலகம் 17
பட்டபொருள் துணிவுடனும் பண்புடனும் எடுத்துரைப்பார் கட்டுவரிவ் வுலகினுக்குக் கருத்துநிறை இலக்கியங்கள்.
இலக்கியம் ஏன் பிறக்கிறது?
துள்ளுங் கோடி நினைவுகளை
தூய அறிவின் விளைவுகளை உள்ளம் ஊற்றும் உட்பொருளை
உண்மை உணர்ந்த அனுபவத்தை உள்ளிக் கற்போர் உவகையினுல்
ஊனும் உயிரும் உய்திடவாய் அள்ளிச் சொல்ல இலக்கியமும்
அதுவாய் வந்து பிறக்கிறது!
அழகில் மகிழ்ந்து பிறந்த பயன்
அடைய ஆக்கம் பல பிறக்க உழவர் நிலம் பண் படுத்துதல் போல்
உள்ளப் பண்பை வளப்படுத்த வழியை வகுத்து நல்லறத்தால்
வையம் சிறக்க வாழ்வு பெற அழியக் கொடுமை அறிவோங்க
அமைதி நிலவ இலக்கியங்கள்!

Page 12
18
இலக்கிய உலகம்
சிரிக்க வைக்கச் சிந்தனையைத்
திறக்க நெஞ்சை அப்படியே உருக்க அரிய உண்மைகளை
ஊட்ட அழகைத் திறமையினல் விரிக்க அதிலே வீற்றிருக்க
விளக்கக் குறிகள் உலகியல்பை இருக்கும் படியும் இயற்றியுமாய்
எடுத்துக் காட்ட இலக்கியங்கள்.
ஏனெனிவ் வுலகம் நாமதிலே
ஏன்தான் வந்து பிறந்திட்டோம் ஏன் தாய் பிள்ளைப் பெறுகின்ருள்
ஏனப் பிள்ளை பிறக்கிறது ஏனேன் என்றே இப்படியாய்
எடுத்தாற் கேள்வி என்னவிடை? ஏனே னெனக்கா ரணமுரைத்து
இலக்கியம் பெரிதும் பிறப்பதில்லை !
இலக்கியம் எங்கே பிறக்கின்றது?
இந்தஇடம் அந்த இடம் என்று
இருப்பதில்லை இலக்கியத்திற் கென்று
விந்தைஇதன் பிறப்புமிக விந்தை வீடுகளில் வீதிளிற் கடையில்

இலக்கிய உலகம் 19
சந்துகளிற் பொந்துகளிற் காட்டில்
சாக்கடையின் ஒரமதிற் காவில்
முந்திவரும் நெஞ்சையள்ளும் கிள்ளும்
முகிழ்ந்துவிடும் கற்பனையோர் காற்று!
கோயிலிடம் கொல்லைநிலம் தோட்டம்
குளத்தருகில் வயல்வெளியில் மந்தை மேயுமிடம் மெத்தை இடம் செத்தை வீடுகளில் மடங்குபவர் வெய்யிற் காயுமிடம் மாயுமிடம் மக்கள்
கடைசியிலே ஆட்டமெல்லாம் விட்டு ஒயுமிடம் ஒடிநினை வாட
உயிரெடுக்கும் உள்ள மதிற் கருக்கள்!
ஆலமர நிழலில் அலுத் தலையும்
ஆற்றருகில் அடித்துவிழும் மலையில் ஓலமிடும் கடற்கரையில் எனினும்
உவகையளித் துள்ள மிழுத் தாளும் கோலமெழுந் தமைதியுடன் கூடிக்
கொலு விருக்கும் இடங்களிற்றன் தக்க சீல மிகு இலக்கியத்திற் கேற்ற
சிந்தனைகள் முந்தி எழும் சிறப்பாய் !
来

Page 13
இலக்கியம் எப்பொழுது பிறக்கிறது?
அமைதி நிலவும் பொழுதிருந்து
அழகைச் சுவைக்கும் வேளையிலே சுமையை இறக்கத் துடிக்கையிலே
துணிவு தூய உண்மையுடன் உமையாள் ஆற்றல் பிறக்கையிலே
உள்ளம் தெளிவிற் சிறக்கையிலே அமையும் தனிமை ஆள்கையிலே
ஆகும் அழகாய் இலக்கியங்கள்
சிந்தை விரிந்து சிந்தனையில்
சிட்டாய்ப் பறந்து திரிகையிலே விந்தை உலக வேலைகளை
வெளியில் இருந்து நோக்குகையில் முந்தி அவைகள் உள்ளத்தினை
மொய்த்துப் பிடித்தே கிள்ளுகையில் உந்தும் உயிருக் கோர் உருவம்
உள்ளம் கொள்ள உடன்பிறக்கும்
மண்ணை விண்ணுய் ஆக்கிவிட
மனதிற் கனவு கூடுகையில்
கண்ணைக் கட்டும் கடவுளின் கை
வண்ணம் கண்டே களித்தவை போல்

இலக்கிய உலகம் 2瑾、
எண்ணி எண்ணித் தானுமொரு
இறைவன் ஆகிப் படைப்புகளைப் பண்ணப் பாடு படுகையிற்றம்
பாட்டிற் பிறக்கும் இலக்கியங்கள்
நூலைப் படித்து நுகர்கையிலும்
நூற்றுக் கணக்காய்ச் செய்வதற்கு வேலை இருக்கும் வேளையிலும்
வெளியில் உலவச் செல்கையிலும் காலை மாலை எப்பொழுதும்
கருக்கள் வந்து பிறந்திடினும் ஆலைப் பண்பில் ஆக்குவதற்(கு)
அமைதிப் பொழுது மிக வேண்டும்.
காற்றிற் கலந்து நீராவி
காவப் பட்டு மேலாக ஏற்ற குளிர்ச்சி பெறும் பொழுதே
இயல்பாய் ஒடுங்கி மழையாகும் ஆற்றற் கலைஞர் ஆயிடினும்
அவரை ஆளும் அகநிலைமை போற்றும் படியாய் இருக்கையிற்ருன்
பொழியும் புகழார் இலக்கியங்கள்.
பொழுதிப் பொழுது முக்கியமாம்
பொருந்தும் பொழுதை விட்டுவிட்டால்
அழுது தொழுதே அலைந்திடினும்
அருமப் பொழுதே வந்திடுமF

Page 14
இலக்கிய உலகம்
உழுது விதைத்த விதைகளுக்கு
உற்ற மழைபோற் சிந்தனையை எழுதச் சிறப்பாய் இசைந்துவிட்ட
பொழுதை விட்டாற் ‘போச்சு'
(தெல்லாம்
இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?
அடியிற் பெறுநீரை முடியில் இளநீராய் ஆக்கித் தருந்தென்னைப் போக்கில் இலக்கியமும் உள்ளத் துணர்வுகளைத் தெள்ளித் தெரிந்தெடுத்து ஆற்றற் றிறன்கொன்டு போற்றும் முறைகண்டு இதமாய் எழும் பொருளைப் பதமாய் ஆக்கிடவும்
தாயின் வயிற்றில் வந் தேயும் கருப்பின்னர் உற்ற உடலுயிரைப் பெற்றுக் குறை சற்றும் இன்றி மிகஅழகாய் நன்ரு ய் வளர்ந்தேற்ற காலம் வந்த துவும் ஞாலம் கண்டுவளர்ந் தான்ற வழிநின்று சான்ருே ணுவதுபோல்

இலக்கிய உலகம் 23
ஆளும் கருவைத் தெந் நாளும் ஆராய்ந்தோர் உயிரும் உடலும் வைத் துயரும் முறைபற்றிப் பெயரைப் பெற வென்று அயரா துழைத்திடவும்--
வேலைத் திறத்தாலே ஆலை களிற் பெறுதல் போல முடிந்த பொருள் மூலப் பொருள்கொண்டு எவ்வா றமைப்பது வென் றவ்வா றமைத்திடவும்
தக்க வழிபற்றி மிக்கச் சுவை காண உப்புப் புளிதூளைத் தப்பா தளவுக்கு இட்டும் அடுப்பேற்றி அட்டும் கறி உணவு வீட்டில் இடுவதுபோல் ஏட்டில் வழங்கிடவும்
சிறக்கும் இலக்கியங்கள் பிறக்கின் றனபுவியில்.

Page 15

இலக்கிய உலகம்
இரண்டாம் பகுதி
மரபு என்றல் என்ன ? மரபை மீற வேண்டுமா ? 9. புதுமை வேண்டும் ! 10. மரபிலிருந்தே வந்திடவேண்டும் புதியது 11. இரவல் புதுமையாகாது!

Page 16

மரபு என்றுல் என்ன?
கற்றவர் யாவும் உண்மை
கண்டவர் நுண்மையாக முற்றுறத் தெளிவாய்க் காலம்
மூன்றையும் உணர்ந்த சான்றேர் பெற்றவர் ஆற்றல் நாட்டின்
பெற்றியைப் புரிந்தோர் ஆன்ருேர் பற்றிய பாதை மரபு
பண்புடை வழமை மரபு.
முறைகளின் திறமை மரபு
திறமையின் உச்சி மரபு அறிவதன் அடிக்கல் அதனல்
அனுபவப் பழங்கள் அறிஞர் குறைகளுக் கிடம் வை யாமல்
கூர்மதி யாலே முயன்று நிறைவுறும் அழகைப் படைக்க
நின்றஅந் நிலையே மரபு.
இன்றல நேற்ருே அல்ல
இது பல காலத் தேர்வு
அன்றிருந் தோரிற் பெரியோர்
அறிந்தவர் வல்லோர் ஆன்றேர்

Page 17
28
இலக்கிய உலகம்
சென்றவர் நின்ருேர் வந்தோர்
செய்தது ஆக்கி அழித்து
நன்றெனக் கண்ட நிலையில்
நாட்டினர் நாட்டின் மரபாய்.
செயலினை முறையாய்ச் செய்தல்
செம்மையைப் போற்றல் மரபு நயமுடன் நாட்டின் பண்பை
நாட்டுதல் உண்மை மரபு பயன்பல பயத்தல் மரபு
பழுதெனின் விலக்கல் மரபு இயல்பெனின் ஏற்றல் மரபு
ஏற்றதைப் போற்றல் மரபு.
நல்லதன் உயிர்தான் மரபு
நாட்டெழில் உண்மைப் படைப்பைக் கல்லெனக் காத்தல் மரபு
கடவுளின் இயல்பு மரபு வல்லதை ஈட்டல் மரபு
வளத்தினைக் கூட்டல் மரபு சொல்லினில் எழுத்திற் சிறந்த சுவையினை ஊட்டல் மரபு.
பழமையைப் போற்றல் மரபு
படைத்திடல் புதுமை மரபு வழமையைச் செய்தல் மரபு
வகை பல வடித்தல் மரபு

இலக்கிய உலகம் 29
சுழல்கிற காலப் போக்கில்
சுக்குநூ ருய்ப்போ காமல்
அழகினை என்றும் நின்று
அமிழ்தினில் ஆக்கல் மரபு.
உயிருக்கு ஒழுக்கம் போல
உடலுக்கு உடைகள் போல
பயிருக்கு விதைகள் போல
பாடலுக் கோசை போல
வயலுக்கு வரம்பு போல
வளவுக்கு வேலி போல
செயல்களிற் செம்மை கண்டு
திளைத்திவண் சிறக்க மரபு.
மீனுக்கு விண்ணின் வெளிபோல்
மீன்களும் கோள்கட் காம்போல் ஊனுக்கு மண்ணின் வளம்போல்
உலகுக்கு ஒழுக்க நெறிபோல் கோனுக்குக் குடிகள் திறன்போல்
கோலுக்குச் செம்மை முறை போல் கானுக்குக் காற்றைப் போல் நம்
கருத்தினுக் குண்டாம் மரபு. மரபை மீறவேண்டுமா? சிறந்தது புகழார் பண்டைச்
செந்தமிழ் மரபா மதுவும்
பிறந்தது சான்ருேர் வழக்கால்
பிழையதில் நாமென் கண்டோம் ?

Page 18
30
இலக்கிய உலகம்
கறந்திடக் குற்றம் முறையாய்க்
கண்டவர் நிலைக்கும் மேலாய்ச்
சிறந்துவிட் டோமா என்ன
சிரிப்பரிப் பாரில் ஆன்ருேர்!
ஒட்டிட உந்தை முறையில்
ஒன்றுமே தெரியா தென்றல் ஒட்டிடும் முறையை முதலில்
ஒழுங்குடன் கற்றல் விட்டுப் பாட்டினில் உந்து முழுதும்
பழுதெனக் கதறின் அதனைக் கேட்டிடு வார்தாம் யாரோ
கேட்பவர் நிலையும் அதுவா?
ஒவியம் செய்தான் மிக்க
ஒப்பிலாக் கலைஞன் ஒருவன் மேவிய சிலபேர் கருத்தை
மிக்கநன் றென்ருர் பலரும் தூவிய குறைகள் போக்கத்
துணிந்தனன் கலைஞன் அவ்வா ரு வன செய்தான் முடிவில்
ஆ!படு பாழ்!அக் கதையா?
சொல்வளம் இல்லார் கவிதைச்
சுவையினை அறியார் எந்தக்
கல்வியும் இல்லார் திறமை
கட்டுடன் இல்லார் சற்றும்

இலக்கிய உலகம் 3.
செல்வழி அறியார் நாட்டின்
செவ்வியல் பற்ருர் ஏதோ
நல்வழி கண்டார் போலே
நாலையும் உணர்ந்தார் போலே
தம்முடை நிலைமைக் கேற்பச் சரிவர மரபில் லையதால் கும்மியில் கூத்திற் குழறின்
குலைவது தமிழன் மரபா? எம்முடை மரபுக் கந்த
இயல்புகள் இல்லை மிக்கச் செம்மையில் கறந்து தக்க
செம்மையில் வளர்த்த வான்கண்.
கூறுதல் குறைகள் எளிது
கூட்டிடும் முறைகள் எளிதா? மீறுதல் நன்று வேரு ய்
மிகுந்திடு மாநல் லழகு? சோறு நம் உணவு விட்டால்
சூழலில் வருமா? வேறெவ் வாறிது முடியும் முடிக்க
வல்லமை, காலம் வேண்டும்!
படித்திட முன்னல் எல்லாம்
படைத்திட வேண்டும் என்று
துடித்திட வேண்டாம் மரபு
தடுத்திடும் நெருப்பாய் நின்று

Page 19
32
இலக்கிய உலகம்,
எடுத்ததை இனிதாய் எளிதாகப்
முடித்திட மரபே உதவும்
படித் திடும் முதலில் நன்ரு ய்
பிடித்திடும் பின்னுல் யாவும்!
குறைகளை நீக்கி நீக்கி
கூர் மதி வழமை கொண்டு முறை முறை யாக எங்கள்
முன்னவர் ஆற்றல் கொண்டோர் நிறைவுறத் தந்தார் மரபு
நிற்குது அதனுல் நிலையாய் குறைவறக் கற்ருல் ஈர்த்தாட்
கொண்டிடும் உண்மை உண்மை!
உயர்ந்தது தமிழர் மரபு
உண்மையை உலகம் கண்டு வியந்த்து விளக்கம் இதுதான்:
வேர் மிக இறுக்கம் அதனுல் இயைந்த தெக் காலத் திற்கும் ஏற்றது யார்க்கும் நின்று நயந்தரும் நாட்டைக் காக்கும் நம்மவர் பேறே பேறு!
ஆடுமிவ் வரங்கில் ஊறும்
அழகெனும் முழுமை எங்கள்"
பீடுடை மரபு அதனின்
பெற்றிஇவ் அண்டம். கற்mேs

இலக்கிய உலகம் 33a
தேடிடு மெல்லாம் உங்கள் திறமைகட் கேற்ப வந்து கூடிடும் கூடா விட்டால் குறையும தென்றே உணரும்.
புதுமை வேண்டும்!
புதுமை புதுமை புதுமை வேண்டும் கதைகள் பழையன கழிதல் வேண்டும்) சுற்றிச் சுற்றிச் சுப்பர் கொல்லையைப் பற்றி அதையே பதம் பார்த் திட்டால் பயனென் இந்தப் பாரினில் வேரு ய் நயங்கள் சுவைத்திட நல்லன இலவா திறமை என்பது செத்தா விட்டது?
வறுமை எழுத்தினில் வந்து ற் றதுவா இலக்கியம் பழை தாய் ஏன் தர வேண்டும் துலக்கிடப் புதுமை துணிச்சல் இலையா சுற்றிச் சுற்றிச் தின்பதற் கெல்லாம் முற்றிய முருங்கைக் காய்க்கறி தான இடைக் கிடை வேரு ய் இடுவதற் கெங்கள் அடுக்களை கண்டதுமஷ் வள வாமோ?
காய்கறி பலவாய்க் கடையில் உளவே போயதை வாங்கப் பொருளிலைப் போலும் பொருள் இருந்தாலும் பொல்லாப் பழக்க மருள் புதுவகையை மறுக்குதா மகிழ ?

Page 20
34
இலக்கிய உலகம்
என்னே அடடா எம்மவர் படைப்பு சொன்னல் அதைத்தான் சும்மா சும்மா திருப்பித் திருப்பித் திருகிச் சொல்வார் இருப்புக் கொண்டே சுவைக்கும் இயல்பு இப்பொழு தில்லை இதையறி யாது எப்பொழுதும்போல் எடுப்பார் தொடுப் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன (பார் பாட்டிக் கதைகள் பழையன பழையன!
ஒன்றே பொருள்கள் என்ரு ற் 72. L நன்ரு ய் வெவ்வே ரு கும் நடையில் அமைக்குந் திறமை அற்ருர் சுவையோர் சமையற் காரர் சரிப்பட மாட்டார்!
அறிஞர் புலவர் அனுபவப் பழங்கள் செறிவா யுள்ளார் சிறப்பாய் இலக்கியம் படைத்திடு மென்ரு ற் பாடுகள் பட்டே சுடச் சுடத் தருவார் சொதியும் சம்பலும் சட்டென் றுண்டிடல் தக்கது ஏனெனிற் கெட்டுப் புளித்த பின் கொட்டிய வைபல!
மற்றவர் படைப்போ கற்றையில் வளர்வன பற்றவைத் தாற்தி பெற்றிடும் பயன் பல உப்புச் சப்பாய் ஒன்றும் இல்லாக் கப்பிப் படைப்புகள் துப்பித் தள்ளுமின்!
வம்புப் பெடியள் மடிந்திட மேலாய்க் கம்பர் வள்ளுவக் கல்விப் பெரியோர்

இலக்கிய உலகம் 35
தோன்றிட வேண்டும் சுவைத்திட விரும்பி ஆன்றநல் இலக்கியம் அழகினைக் கடைந்து புதுப்புது முறையிற் பூண்டு நம் பண்பு விதம்வித மாக விளைத்திடல் வேண்டும்!
மரபிலிருந்தே வந்திடவேண்டும் புதியது!
ரே பிலிருந்தே வந்திடவேண்டும் புதியது - எந்த
மண்ணிலுமுள்ள மாற்றிடமுடியா விதியிது!
உருபுடனுயிரும் உய்திடத்தக்க நெறியிலே - புதுமை
உண்மையைஒட்டி உணர்வுடன் படையும் குறியிலே!
மரபினையாக்கல் மனிதர்களன்று இயற்கையே அதனை வல்லமை கொண்டு வெல் லிடவில்லைச் செயற்கையே!
திரிபுகள் யாவும் மரபினுக்குட் தான் நிகழ்ந்திடும் - இந்தச்
செம்மையை உணர்ந்தார் செய்கைகள் நின்று
(திகழ்ந்திடும்,
பரம்பரையாக அனுபவ முறையாற் படித்தவர் - தள்ளிப் பழுதுகள் தக்க பயனுளவற்றைக் கொடுத்தனர்!
வரம்புகள் நன்று வடிவினுக்கென்று செய்கையில்-விட்டால்
வழுக்கிவிழுந்து அழுக்கிலமிழ் வார் மெய்யிது!
குடிகுடியென்று குடித்துமடிந்து சென்றவன் - விதியைக்
கொண்டனன் இனிமேற் குடித்திடமாட்டேன்
(என்றனன்! விடுவிடென்ருேடி விதியினை மறுநாள் மாற்றினுன்-பின்னர் விட்ட பிழைக்கு வருந்தினன் மீண்டும்! ஏற்றதா?

Page 21
36 இலக்கிய உலகம்
பயன்தரவில்லைப் பழையது தென்னை என்பதால்
( - தேங்காய்ப் பாலினைத்தள்ளிக் கறிகளைப்பண்ணும் என்பரா? முயன்றுடன் தேங்காய் மூச்சுடன் நட்டுப் புதியது-நன்முய்
முளைத்திடச் செய்வார் களைத்திடமாட்டார்
! இது பொது
இத்தகைப்புதுமை இயல்புடன் ஒன்றி இயற்றிடும்-பண்பை எள்ளளவேனும் இகழ்ந்திடின் தொல்லை வயிற்றினில்
மெத்த அடிக்கும் வெற்றுடலாகும் எழுத்துகள் - இதனை
மிக்கஉணர்ந்து மேன்மைகள் செய்வார் பழுத்தவர்!
பத்திரம் உயிர்ப்பண் புங்களின் கையில் பார்த்திடும்-என்ன
பாடுகள் பட்டும் கேடுகள் கெட்டும் காத்திடும்! கொத்தி நல்லெருவைக் கொட்டிநீர்பாய்ச்சி அதிலையே
திறமை கொண்டுகொழுத்த விளைவுகள் கொழியும்
புதுமையாய் !
இரவல் புதுமையாகாது!
இதுகளையும் அதுகளையும் இடிந்ததையும் து ைவந்ததையும் விதிகளையும் மீறிமிக வெளியிலுள்ள விழல்கள் பெரும் புதுமையெனப் போற்றியுடன் புகுத்துவதாற் கண்டபொருள் எதுவுமில்லை ஏனதென்றல் ஏற்ற சுவை இவையிலில்லை!

இலக்கிய உலகம் 37
புதுக்குதல் நம் மரபதஞல் போற்றிடுவோம் புதுமைகளை வதக்குவதால் இயல்புகளை வந்திடுமா புதுமை என்ன? எதுக்குமொரு முறையுளது ஏற்றதுவாய் எழிலுமுண்டு அதுக்கதுவாய் ஆக்குதல்தான் ஆற்றல்; அதே ஆன்றவழி!
இங்கிருக்கும் எங்களது இயல்புகளை விட்டுவிட்டு எங்களுடைப் பண்புகளுக்(கு) இழுக்குவரும் முறைகளிலே எங்கிருந்தோ இறக்குமதி இலக்கியத்துக் காகவென்றே துங்கமறச் செய்வதை நாம் தூசியெனத் தள்ளிடுவோம்!
இறக்குமதி செய்திடினும் இருந்துபெறும் நாடுகளே புறக்கணிக்கும் பொருள்களைப்போய்ப் புதுமையென்று வாங்குவதா? சிறக்குமவை தெரிந்து பயன் திறமையினுல் தந்திடுக தறுக்கணிக்கும் பண்பெனிலோ தயவுசெய்து தள்ளிடுக!

Page 22
38
இலக்கிய உலக
இல்லையென்ருல் வாங்கிடலாம் இருக்கு தென்ருல் ஏனிரவல்? நல்லதென்ருல் நாடிடலாம் நாற்றமென்ருல் போற்றுவதேன் ? இல்லையென்ற நிலைமையில்லை ஏற்படமு ன் எம் மதுவாய் வல்லமையால் வளவினுக்குள் வளர்த்தெடுத்தல் நம் மரபு !
வர வரதம் வாழ்வுமுறை வழிபிழைத்துப் போவதினுல் மரபுகளை வலியுறுத்தல் வாழுமெழுத் தாளர்கடன் இரவலைவிட் டெமதுவள இயல்புவயற் கேற்றவிதை புரவலராய்ப் போட்டுழுவீர் பூர்க்கவெழில் இலக்கியங்கள்

2.
13.
i4.
5.
6.
7.
S.
19.
20.
இலக்கிய உலகம்
மூன்றம் பகுதி
ஆற்றல் இல்லையென்று காட்டுவதேன்? நல்லறி வாண்மை இருக்கிறதா? இலக்கியத்தைச் சமைத்துத் தாரும் ! நிலையான இலக்கியம் வேண்டும்! பயனிலக்கியம் படையும் ! தனித்துவம் வேண்டும் !
பெரியோர்
செந்தமிழ் எழுதுக! ஒற்றுமை வேண்டும் !

Page 23

ஆற்றல் இல்லையென்று காட்டுவதேன்? பிச்சைத் தனத்தினை விட்டுவிடும் - தனிப் பீடிருந்தால் அதைத் கட்டிவிடும் ! பச்சைப் படைப்புகள் கொட்டுவதேன்-பயன் பார்த்ததுண்டா அவை வார்த்ததுண்டா 2
ஏதும் எழுதிட வேண்டுமென்று - அற்ப எச்சங்கள் மிச்சங்கள் நோண்டிவந்து ஏதமுடன் தரும் பாண்டல்களால் - இங்கு ஏதுபயன் அட! போதும் விடும் !
பச்சைப் பிழைப்படைப் பெத்தனையோ-அவை: முச்சை கட்டிவிடும் 'பத்திரிகை’’ ! கச்சை கட்டிநின்று கத்திவிட்டால்-பிழைக் காரியம் வீரிய மாகிடுமா ?
சேற்றினிற் சிந்தையை மாட்டுவதேன்-வெறும் சில்லறைக் குப்பைகள் கூட்டுவதேன்?
ஆற்றல் இல்லையென்று காட்டுவதேன்-கொண்ட ஆவலிலே இருள் மேவுவதேன்?
சின்னக் குழந்தைக்கு மன்கலையேன் - கண்கள் செத்தவ ருக்கொரு பொற்சிலையேன்? பென்னம் பெருமர விண்கிளைத்தேன்-நடை பெற்றிலன் எப்படிப் பெற்றிடுவான் ?

Page 24
இலக்கிய உலகம் 42ھ
நல்லறி வாண்மை இருக்கிறதா?
நல்லறி வாண்மை இருக்கிறதா-அது நாளும் வளர்ந்து பெருக்கிறதா? வல்ல திறமைக் கருக்குளதா-எனின் வந்து படைப்புகள் தந்திடலாம் !
நெஞ்சம் பரந்து விரிந்தவரா-பொருள் நேர்மையில் நின்று புரிந்தவரா? கொஞ்சும் எளிமை தெரிந்தவரா-எனின் கோர்த்திடலாம் அதை வார்த்திடலாம் !
இயற்கையி லூாறிப் படுப்பவரா--அதன் இன்பங்கள் தேறிக் குடிப்பவரா? செயற்கையின் துன்பம் அடுப்பவரா-எனின் செய்திடலாம் எழுத் தெய்திடலாம் !
மூச்சு முழுக்க நிறைந்தவரா-தனி **முத்திரை** பெற்றுச் சிறந்தவரா? ஊச்சிநம் பண்பை அறிந்தவரா-எனின் அஊக்குடன் ஆக்குமி லக்கியங்கள் !
கற்பனைக் கம்பனை வெல்லுவரா-பொருள் கல்லி எடுப்பதில் வள்ளுவரா ? கற்புக் கலையுளம் உள்ளவரா-எனின் கையுடன் செய்யுமி லக்கியங்கள் !

இலக்கிய உலகம் 43
இலக்கியத்தைச் சமைத்துத்தாரும் !
எந்தப் பொருளையும் அப்படியே - உல கேற்றிடுமா அது எப்படியாம்? முந்திச் சமைத்தோர் உருப்படியாய்-நன்கு மூட்டிவிடும் திறன் ஏட்டினிலே !
இட்டுச் சுளகிற் பிடைத்தெடுத்து-பண்பு ஏற்கும் சுவைகள் மிகத்தொடுத்து கட்டி அழகிற் பொருள் படைத்து-விடும் கற்றவர் நற்பெயர் பெற்றுவிட !
கையில் இருக்கும் பொருளதனை-உற்றுக் கற்று விரித்துச் சுருள்களையுள் மெய்யை உணர்ந்து மருளொழித்து-அதை வெல்லுஞ் சுவையினிற் சொல்லிவிடும்!
உள்ள பொருள்களில் ஒரழகு-அவை ஊட்டும் முறைகளில் ஒரழகு கொள்ளை அழகுச் சுவை பொழியக்-கலை கோர்த்திடும் பார்த்துச் சுளை சுளையாய்!
கத்தரிக் காயைச் சமைத்திடினும்-அன்னை கருத்து முழுதும மைத்ததனை பத்திரமாக நமக்கிடுவாள்-இந்தப் பான்மை இலக்கியத் தேன்படையும் !

Page 25
44 இலக்கிய உலகம்
நிலையான இலக்கியம் வேண்டும்!
இந்த மழைக்குப் பிறந்துவிட்டு-பினர் இரண்டொரு மாதம் சிறந்துவிட்டு வெந்து புல்பூண்டும் இறந்துவிடும்-வரும்
வெப்பத்தில் வேண்டாமே இப்படைப்பு !
காலக் கருத்துக்கள் வேண்டுவதே - எனின் கட்டுந் திறமையும் வேண்டுவதே ! சாலச் சிறக்கவாண் டாண்டுகளாய்ப்-பொருள்
சான்றவர் போற்றிட ஊன்றிவிடும் !
எள்ளி இகழ்பவை வீசிவிடும்-அவை இட்ட இலக்கியம் துர சிகளே ! உள்ளதை வைத்தெழில் பேசுமெனின் - வெறும் ஊத்தைகள் எங்கும்*ய தார்த்த’ மில்லை!
மூலப் பொருள் மிக அற்பமெனில் - ஒரு மூச்சினை வைத்திட முற்படுமின் ! ஆலம் விதைஅட! அற்ப மன்றே - மரம் ஆண்டுகள் ஆண்டுகள் நிற்கு மன்ருே?
என்றும் நிலைக்கும் இக்கியத்தை - உல கேற்றி வளர்க்கும் இலக்கியத்தை நன்று முயலும் இலக்கு வைத்து - ஒரு நாளினில் மாளும் படைப்புகளேன்?

இலக்கிய உலகம் 4S。
பயனிலக்கியம் படையும்!
பாலைக் கடைந்து பல பயன் - நாம் பக்குவ மாக எடுத்தல்போல் நூலைக் குடைந்து நலந்தரும் - பொருள் நுண்மையிற் கண்டிட வேண்டுமே!
உள்ளத்திற் கோடிகள் ஊறலாம் - அவை: உத்திப் பிறந்திட மீறலாம் பள்ளத்து நீரெனப் பாயலாம் - எனில் பாறிக் கிடக்கப் படைப்பதா?
காத்துக் கணித்துக் கவனமாய் - வாய்க் காலிற் செலுத்திக் கலையுடன் பாத்திப் படுத்திப் பயன் பெற - தாய்ப் பாலென ஊட்டுங் குழந்தைக் கு!
சிக்கற் பொருளென்ற போதிலும் - கடுஞ் சித்தனை கொண்டு விளக்கியே தக்க எளிமையிற் தந்திடும் - சும்மா கக்கிக் கு ைமக்கும் முறைவிடும்!
புண்படக் கொள்கை விளக்குதல் - வெறும் போட்டியிற் பொருளை விலக்குதல் பண்புடைப் பாதையை மாற்றுதல் - இவை: பயன்தரும் இலக்கிய மாகிடா!

Page 26
46 இலக்கிய உலகம்
வேண்டாத கற்பனை ஏதுக்கு - விழல் மேன்மை தருவது யாருக்கு? ஆண்டுகள் ஆயினும் நோக்குடன் - உண்மை ஆளும் படைப்பொன்றை ஆக்கு மின்!
பாலினைப் போற்பல நூல்களை - அரும் பனையுடன் தென்னையைப் போலவாய் ஆலினைப் போற்பல ஆக்கினுல் - பயன் ஆயிரம் ஆயிரம் ஆகுமே!
தனித்துவம் வேண்டும்!
பார்த்துப் பார்த்தே எழுதாதீர்
பள்ளிப் பிள்ளைக் குணமாசீ!
சேர்த்துக் கோர்த்தே அறிவெல்லாம்
திறமாய்ப் படையும் சொந்தத்தில்!
செயற்கைப் பொருள்கள் கைத்தொழிலிற்
செய்வர் அழகாய்ப் பல ஒன்ரு ய்
இயற்கைப் பொருள்கள் ஒருபோதும்
இருக்கா ஒன்ரு ய் இதுகண்டோம்!
இயற்கை செயற்கை எனவிரண்டாய்
எண்ணம் பிறக்கும் என்ருலும்
இயற்கைச் சிந்தை உள்ளவரே
இலக்கியம் படைக்க ஏற்றவராம்!

இலக்கிய உலகம் 47
ஒன்றே காலம் என்ருலும்
ஒன்றே கல்வி என்ருலும்
ஒன்றே பொருளும் என்ருலும்
ஒன்றே குறியும் என்ருலும் -
நோக்கிப் பொருளை ஆய்வதிலே
நுண்மை கண்டு தோய்வதிலே
ஆக்கும் நடையின் அழகினிலே
ஆற்றல் இயல்பாய் வேறுபடும்!
ஆற்றல் இயல்பாய் உள்ளவர்கள்
யாரைப் பற்றி நின்ருலும்
போற்றும் முறையிற் பொருள் சொல்லிப்
புகழும் புவியிற் பெற்றுள்ளார்!
சூழல் கல்வி வயதுநிலை
தொட்ட பட்ட அனுபவங்கள்
வாழும் தலைவர் எனஇவையால்
வகுக்கப் படலாம் நினைவியல்பு!
எனினும் இவையை வல்லமையால்
இழுத்தாட் கொண்டு தனியியல் பாம்
நினைவை நிலைநாட் டும் பெரியோர்
நிகரில்லாதோர் மிக அரியோர்!
நிலைமை எதுவா ருயிடினும்
நெஞ்சை நிறைக்கும் உணர்வுகளைக்
கலையிற் கட்டித் தனித்துவத்தைக்
காட்டல் எழுத்தா ளர்கடமை!

Page 27
48 இலக்கிய உலகம்.
எழுதின் எழுதும் இலக்கியத்தை
ஏற்றி வளர்க்கும் தனித்துவத்தில்
பழுதே பொழுது தன்னியல்பைப்
பழிக்கும் படைப்புப் பயனில்லை!
பெரியோர்
பொழுதோ விடியுது பழுதாய் மடியுது தொழுதா கெடுவது அழுதா படுவது?
சென்ருே?ர் பழமையிற் பொன்றும் வழமையை நன்ரு ய்ச் சீருடன் வென்ருர் யாரடா!
காலம் கடியது காலன் கொடியவன் கோலம் கொண்டதும் ஞாலம் கண்டதும் -
நிலையாய் இருந்திடக் கலையாய் விரிந்திட மலையாய்த் தனித்துவம் சிலையாய் இனித்திட -

இலக்கிய உலகம் 49
அரிதாய்க் கவின்செயல் புரிவார் புவியினில் பெரியோர் என்பதற் குரியோர் மன்பதை!
செந்தமிழ் எழுதுக! நஷ்டமும் கஷ்டமும் வேஷமும் - எங்கள் நற்றமிழ் மொழியினுக் குற்றதோர் குஷ்டமிச் சொற்களைக் குப்பையில் - கொட்டிக் கொளுத்துக தீஇவை கொண்டதால் புஷ்பங்கள் உள்ளன போயின - தூய பூத்தமிழ்ச் சொற்களெங் கோபெரும் இஷ்டங்கொண் டார்வட மொழியினில்-இல்லை' இசைவுநம் மொழியினில் விருப்பிலார்!
வடமொழி வடமொழி வடமொழி - இந்த வடமொழிச் சொற்களைத் தமிழினில் உடனுெழித் திடுகநற் றிடமுடன் - நல்ல உயிர்த்தமிழ்ச் சொல்வர வெளியினில்! உடஞெழிக் கத்தெரி யாதவர் - முந்தி உள்ள நம் சொற்களைத் தேடுக படிப்படி யாயினும் செல்லட்டும் - எங்கள் பைந்தமிழ்ச் சொல் நின்று வெல்லட்டும் !
பக்கத்து வீட்டுக்குச் செல்வீரா - உப்புப் பானையில் முட்டக் கிடக்கையில் தக்கித் திரிந்த வழக்கமா - அன்றி நாக்குத் திரிந்த பழக்கமா?

Page 28
SO இலக்கிய உலகம்
தக்கநற் சொற்களில் லாவிடில் - நல்ல தகைமையிற் தமிழினை ஆய்ந்தபின் மிக்கநல் முறையினில் இரவலை - நன்று மேம்பட நந்தமிழ் கொள்ளுமின்
இலக்கியம் படைந்பவர் எண்ணினுல் - மிக்க இலகுவில் இப்பணி யாற்றலாம் விலக்குக வீண் வட சொற்களை - நன்கு விளக்குக நம்மொழிச் சொற்களை துலக்குக துணிக இப் போதிலே - தக்க தூய்மையிற் றமிழ்மொழி அன்னையை நலக்குறி யோடுகு டைந்திடின் - பண்டை இலக்கியம் வழங்கிடும் சொல்வளம்!
அளவுக்கு மீறிக் கிடக்குது - தமிழின் அழகை உறுஞ்சிக் கெடுக்குது இளமைக்கு இன்னல் விளைக்குது - தனியாய் இயங்கும் இயல்பை மறைக்குது உளமிக்க நற்சுவைச் சொற்களும் - இந்த உலகறி , யாமல் உழுக்கவோ ? வளமிக்க வண்டயிழ் அறிஞர் காள் - உரிய வடிவைத் தமிழ் பெற எழுதுவீர்!
ஒற்றுமை வேண்டும்! ஆன்றெழுத் தாக்கி ஆண்டிடு மென்றன்
அன்புடை அறிஞர்கள் கேளும்
சான்றப முத்த தக்கவராயித் தாரணி மீதினில் நாளும்

இலக்கிய உலகம் 5瑟
ஈன்றெழுத் தாலே புகழ்வரின் என்ன
இல்லையென் ரூலென்ன பாழும்
ஊன்றியு முத்த கொள்கைகள் விட்டு
உண்மையைப் பற்றியே வாழும்!
சண்டைக ளாசீச் சீயெழுத் தாலே
சச்சர வேனிது கெட்ட பெண்டுக ளாமே. அறிஞருக் குள்ள பெற்றிகள் கட்டுடன் விட்டு கொண்டிடுங் கோலம் முறையினில் இல்லை!
குறைகளை நீக்குதற் கிட்ட தண்டமிழ்ப் பண்பைச் சரிவரப் பற்றும் தன்மையில் நன்மைகள் கிட்டும்!
சேட்டைக ளிங்கே வேண்டுவ தார்க்கு செய்கையில் மடைத்தனம் நன்ருே வேட்டையில் முயலை விட்டுவிட் டேபோய் விரைந்தொரு காக்கையைக் கொன்ருல் காட்டுதல் திறமை என்ருெரு கனவர்
கடமையிற் பொறுப்பினில் நின்றே ஈட்டுதல் வேண்டும் ஏற்றன நீங்கள் இலக்கியம் படைப்பவ ரன்ருே?
கற்றவர் உண்மை கண்டவரென்று
கணித்துமைப் போற்றுது சூழல்
முற்றிலும் மாரு ய் வேற்றுமை உம்மில்
மூளுது மூளுது மாள

Page 29
52 இலக்கிய உலகம்
ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும்
உள்ளவர் நான்கெழுத் தாளர்
பற்றுடன் ஒன்றிப் பழகுதல் வேண்டும்
பண்புடன் நாம் பெருந் தோழர் !
நோக்குடன் இங்கே ஒன்றெனக் கூடும்
நொள்ளையரா இந்தப் பொல்லாப் போக்கினை நீக்கிப் புரிந்துநம் பண்பைப்
போற்றியே செயலுடன் சொல்லால் ஆக்கிடல் வேண்டும் பயனுடைப் படைப்பு
ஆர்வுடன் நாம் பெரும் வல்லார் ஊக்குடன் உண்மை உயர்வு நல் லறிவு உள்ளவர் யாவரும் நல்லார்?
படைப்பவ ரேபோய்ப் பண்பினை ஏற்றிப் பழித்திடல் நல்லொரு நோக்கா
அடிப்பவர் பின்னர் அணைப்பரென் றிருந்தால்
அதுவுமே அற்ருெரு போக்கா
நொடிப்புகள் நொட்டை நொய்ச்செயல் வேண் நொடியினில் நொடியினில் போக்கும் (டாம்
துடிப்புடன் எங்கள் குடிப்பெய ரோங்கத்
தூயநல் இலக்கியம் ஆக்கும்!

இலக்கிய உலகம்
நான்காம் பகுதி
ஈழத்து மக்களே ! மதிப்புடன் சுவைப்பவர் வேண்டும் !
கொள்கையற்றேர் படைப்பைப்
படித்துப் பயனென்ன இலக்கிய உலகம்

Page 30

ஈழத்து மக்களே ! ஈழத்து மக்களே எம்மவர் எழுத்துகள்
ஏற்றி நீர் போற்ற வேண்டும் வாழத்த குந்தவை வல்லவர் தருகிருர்
மாண்பினைக் காணவேண்டும் ஆழத்து முத்துகள் அருமையை அழகினை
அறிந்திடும் ஆற்றலின்றிச் சீழொத்த குப்பைகள் சேர்ந்திடக் கரைகளிற்
சிறப்பெனத் திகைப்பதேனே?
ஆங்கிலம் வேண்டுமே யாரதை இல்லையென்
றறைகிரு?ர் ஆயினந்தப் பாங்கினிற் தாங்கிநீர் படுத்திடின் ஆருயிர்ப்
பைந்தமிழ் நூல்கள் இங்கு வாங்(குவர் யாருளர் வளர்ப்பவர் யாருளர்
வாய்மொழிச் சேவை விட்டு வாங்குக நம்மவர் வார்த்திடும் நூல்களை
வண்டமிழ் வாழ்க வென்றே!
இலக்கியக் கூட்டமென் ரு லதை இகழ்ச்சியாய்
6 த்துநீர் என்ன பட்டும் விலக்கிய சென்றறும் வீண் கதை பேசுவீர்
வில்லங்க மாய் இழுத்தால் உலக்கையை வாயினில் ஒட்டுகின் ரு ரெனும்
2.கை வினில் உழன்று நிற்பீர் இலக்கியம் உம்முடை வாழ்க்கைதா னென்பதை
இன்றுமா அறியவில்லை?

Page 31
56 இலக்கிய உலகம்
எத்தனை இலக்கிய இதழ்களிங் குள்ளன.
என்பதை அறிந்ததுண்டா எத்தனை, அவைகளுள் ஏன் பிறந், தோமென
இடையிலே பணமிலாதால் செத்தன என்பதுஞ் செந்தமிழ் மக்களே
தெரியுமா நம் மநாட்டில் எத்தனை முத்தெழுத் தாளர்கள் இருக்கிருர்,
என்ன பேர் சொல்லுவீரா?
நற்றமிழ் மக்களே நம் மெழுத் தாளரை
நடுக்கடல் தள்ளலாமா கற்றிலக் கியச்சுவை கண்டவர் இன்னுமிக்
காலமும் நல்ல நல்ல உற்றபல் நூல்கள் வந் துள்ளன என்பதை
உணர்கிலார் விலைகொடுத்துப் பெற்றிலார் ஒன்றையும் பற்றிலார் விட்டிடின்
பேசுவார் கோடிகோடி!
நோக்குடன் எழுத்தினை நுண்மையில் நம்மவர்
நுகர்ந்திடப் பழகவேண்டும் ஆக்கஇ லக்கியம் ஆர்வுடன் தக்கநல்
ஆற்றலுள் ளோரைமுந்தி ஊக்கிட வேண்டுமப் போதுதான் உண்மையில்
உயர்ந்திடும் உலகு போற்றித் தூக்கிடும் நூல்களைத் தொன்று தொட்
டாக்கிடும் தூய்தமிழ் துலங்கிமேலும்!

இலக்கிய உலகம் 57 மதிப்புடன் சுவைப்பவர் வேண்டும்!
எழுதுகின் ரூர் மிக நன்ரு ய் - அதை எத்தனை பேர் படிக் கின்ருர்? தொழுதுபின் சென்றடிக் காலை - அட தொட்டுவிற் கின்றனர் நூலை !
இங்கிருக் கின்றனர் நல்லார் - பெரும் இலக்கியம் படைப்பதில் வல்லார் துங்கநல் நூல்களைத் தந்தும் - புகழ் சொட்டுமற் ருர் மிக விந்தை !
சொந்தப் பணத்தினைக் கொட்டித் - தனித் துணிவுடன் நூலொன்று விட்டும் வந்துப னங்கொடுத் திங்கே - அதை வாங்கிப் படிப்பவர் எங்கே ?
பண்டைய நூல்களைக் கற்ருர் - பெரும் பண்டிதர் பேர் புகழ் பெற்ருர் இண்டைய இலக்கியப் பெரியார் - பெயர் இரண்டினைக் கேட்டிடின் தெரியார் !
வட்டிக்கி ருக்கிற தானுல் - புது வல்லொரு நூல் கொண்டு போனல் எட்டி நின் றேவிடை சொல்வார் - இது ஏனெமக் கென்றடா கொல் வார்!
இலக்கிய இதழ்களோ நாளும் - படித் தின்புறு வாரின்றி மாளும் !

Page 32
58 இலக்கிய உலகம்
அலக்கழி கின்றனர் எழுத்தை - இவண்: ஆக்கிடக் கொடுத்தவர் கழுத்தை !
செத்த பின் நாட்டுவர் கல்லை - அவர் திறமைகள் காட்டிடும் சொல்லை மெத்த அடுக்குவர் ஆகா - இந்த ** மேன்மைத்’ தனங்கள்விட் டேகா !
அன்றுமின் றும் பெரும் உண்மை - எழுத் தாக்கி வளர்ப்பவர் திண்மை நன்றுள ஒரு சிறு கூட்டம் - அதை நன்றெனச் சுவைத்திடும் கூட்டம் !
அள்ளியள் Oக்கொடுத் தார்கள் - எழுத் தாக்குதற் கூக்குவித் தார்கள் வள்ளல்கள் வள்ளல்கள் அன்று - இந்த வழமைகள் படுத்தன இன்று !
பதிப்பகங் கள் பல வேண்டும் - நூல் பலப்பல வெளிவர ல் வேண்டும்! மதிப்புடன் சுவைப்பவர் வேண்டும் - இனும் மாண்புறும் வழிபல வேண்டும் !
கொள்கையற்றேர் படைப்பைப் படித்துப் பயனென்ன? உலகுக் கொன்றும் தமக்கொன்றும்
உரைக்கும் ஊத்தை எழுத்தாளர் கலகக் கதைகள் கதைக்கின் ருர்
கருத்தில் வாங்கின் காரியங்கள்

இலக்கிய உலகம் 59
அலகிற் தொல்லைக் குள்ளாகும்
அறிவுக் கண்ணுல் அளந்தவரை
விலகிச் செல்வீர் இல்லையென்ருல்
வீட்டுப் பண்பே வீழ்ந்துவிடும் !
ஆகா என்னும் படியாக
அழகின் சுளையாய் இருந்தாலும் சாகா வாழ்வும் பிறபயனும்
தருவான் அமிழ்தே என்ருலும் ஆகா வழியால் வந்ததெனின்
அணுகல் தகுமா ஒழுக்கவழி ஏகா தோரின் எழுத்துகளை
ஏற்றிப் போற்றின் எழுச்சியில்லை!
யாரோ எதையோ சொன்னதினுல்
யாமும் சொல்வோம் என முந்தி ஊரா ருக்காய் அறிவுரைகள்
உலுப்பி உலுப்பிக் கொட்டிடுவார் பேரோ வேண்டும் பொருளுண்மை
தேரார் ஒன்றுந் தம்வாழ்வில் பாரார் பச்சை மடயர்களின்
படைப்பைப் படித்துப் பயனென்ன ?
ஊரா ருக்கோ உனக்கோடி
உரைத்தேன் என் முன் கதைபோல
சீராய் நோக்கம் குறிகொள்கை
சிறிதும் கொள்ளாச் சிறியோரின்

Page 33
NS0 லக்கிய உலகம்
வேரே யில்லா எழுத்துகளில்
விருப்பம் கொண்டால் விளைவிதுதான்: நேராய் உள்ள பாதைகளும்
நெளிவாய் வளைவாய் ஆகிவிடும்!
ஒன்றைச் சொல்லி இன்னென்றை ஒழுகும் பித்தர் எழுத்துக்கள் நன்று ய் இருக்க முடியாது
நடத்தை கெட்டார் அழகைப்போல் என்றைக் கிவரை எழுத்துலகம்
எற்றித் தள்ளி எறிகிறதோ அன்றைக் குத்தான் இலக்கியத்தில்
அழகுக் கற்பு அடியெடுக்கும் !
தூய உள்ளம் கொண்டவரின்
தோற்றம் தெரியும் அவரெழுத்தில் மாயக் கொள்கை உள்ள வர்கள்
மறைந்தே நிற்பார் மருட்சியினுல் போயும் போயும் இவர்களை நாம்
போற்றின் எழுத்திற் புதுமை கெடும் காயும் கருத்தும் கற்பனையும்
கடவுட் கோலம் வறட்சியுறும் !

இலக்கிய உலகம் 6.
இலக்கிய உலகம் 665) Tiss to கொய்து சுவையூட்டிச் செய்தி தருகின்ற பண்பின் இருப்பிடமாம் நண்ப நற்றலைவ!
போற்றிப் புவிபுகழும் ஆற்றற் கவிஞர்களே!
சுவையூ றறிஞர்களே! அவைவை அழகுசெயும் மணக்கும் உயிர்த்தமிழீர்! வணக்கம் செலுத்துகிறேன்.
நன்றி பண்டைப் புகழ்கொண்ட கண்டித் திருநகரில் அமிழ்தாம் விழாவை முத் தமிழ்மன் றம் எடுத்து நடக்கும் கவியரங்கில் படிக்கக் கவிதையென பேர்பேர் கவிஞரெலாம் ஊர் ஊர் இருக்கையிலே தினையைப் போலுள்ள எனயும் அழைத்திட்டார் நன்றி அவர்க்கென்றன் நன்றி தமிழ் வாழ்க!

Page 34
62
இலக்கிய உகலம்
கடவுள் வாழ்த்து
**இலக்கிய உலகம்' என்னும்
ஏற்ருெரு தலைப்பைத் தந்து துலக்கிடும் கருத்தை என்ருர்
துணிந்தனன் துணையாய் என்றன் கலைக்கடல் கருமக் கடவுள்
கரிமுகன் இருப்பான் காத்து விலக்குவன் பிழைகள் பொருளை
விரிக்கையில் அழகாய்க் கவியில்.
இலக்கிய உலகம்
இலக்கிய உலகமும் ஒன்று - அதிலே
இலக்கெனும் பாதையில் அறிஞர்கள் சென்று அலக்கழி வின்றியே மக்கள் - வாழ
ஆக்கங்கள் ஆர்வுடன் அறவழி வைக்க விலக்கிட வீண்துயர் வையம் - பண்பாய்
விண்ணவர் வாழ்க்கையைக் கொண்டிவன் உய்ய துலக்குவர் கொள்கைகள் நன்ரு ய் - இதனைத்
துணிவுடன் முடிக்க முன் கொஞ்சமும் குன்ருர்!
இவ்வுல கத்தினை ஆக்கும் - இந்த
எழிலுடை அறிஞரின் இயல்புடன் போக்கும் எவ்வுலகத்திலுங் காணுேம் - கண்டால்
இவருடன் அவரையும் இணைத்திடல் வேணும் செவ்விய சிந்தனை உள்ளார் - சும்மா
சேட்டைகள் விடுவதில் நாட்டமோ கொள்ளார்" எவ்வழி நல்வழி என்றே - நன்ருய்
அவ்வழி செல்லுவர் ஆற்றலில் வென்றே!

இலக்கிய உலகம் 63.
தலையினைக் கிலேயினைச் சீவார் - உங்கள்
தள்ளாடும் பண்புகள் சற்றுமே மேவார் செலவுகள் உடைகளில் வையார் - உங்கள்
செம்மரிப் போக்கினில் ஒன்றுமே கொய்யார் வலையினை விரித்துங்கள் வட்டம் - இழுத்தால்
வழுகியே செல்லுவார் வாய்க்காது சட்டம் விலையினுக் கேற்பாரா கலகம் - அதனல்
விட்டுமை ஆக்கிஞர் வேருெரு உலகம்!
பசுவினப் போலொரு தன்மை - பின்னர்
பாய்ந்திடும் புலியொரு நொடியினில் உண்மை அசுரரைப் போலொரு நோக்கு - பார்க்க
ஆண்டியே யாயினும் அரசனின் போக்கு அசைவிலாக் கட்டையாய் நிற்பார் - அடடா ஆடுவார் ஓடுவார் அதையிதைக் கற்பார் விசரரைப் போலவே செல்வார் - மனதை
வேகமாய் விட்டொரு கற்பனை வெல்வார்!
உயரவே உயரவே செல்வார் - தேடி
உண்மையை நுண்மையாய் உணர்வுடன் கல்லார் அயர வோ ஆறவோ மாட்டார் - கொள்ளும்
அல்ல?லத் தொல்லையை வெளியினிற் காட்டார்" கயவராய்க் கள்ளராய்த் திரியார் - மானம்
கண்மணியம் கடமையன் பறத்தினுக் குரியார் செயலிலே திறமையோ டுக்கம் - அதனைச்
செய்மையாய்ப் பாரினுக் காக்குதல் நோக்கம்!
அறிவுதான் இவர்களின் வீடு - அதிலே
ஆழ்ந்த நற் சிந்தனை மனைவியைக் கூடிப்
பெறுவரே பிள்ளைகள் தகவாய் - இவர்க்குப்
பெயர்கதை கட்டுரை செய்யுள் நா டகமாம்

Page 35
#64
இலக்கிய உலகம்
நெறிகளை இவைகளில் வார்ப்பார் - நாட்டின்
நேர்மையை நீதியைப் பண்பினைக் காப்பார்
குறைகளைக் குத்தியே காட்டி - அவைகள்
நிறைவுற வழிகளை நீட்டுவார் ஏட்டில்!
துள்ளிடும் தூய்மையில் நடப்பார் - வேண்டும்
சூழலும் வந்திடின் அதிலேயே கிடப்பார் வெள்ளமாய் உணர்வுகள் பொங்கும் - கூட
வேகமாய்ச் சிந்தனை விரிந்திடும் எங்கும் கொள்ளையாய்க் கருத்துகள் மீற - அவையைக்
கோவையில் அழகுநன் ருகவே ஊற அள்ளியே அமிழ் தெனத் தருவார் - அடடா
அத்தகைப் படைப்பினில் ஆண்டவன் தெரிவார்!
கண்டவை நின்றவை யோடு - இங்கே
கடவுளும் நற்பொருள் இலக்கிய மாட
பண்டைய இன்றைய யாவும் - புதிதாய்ப்
படைத்திடத் துடித்திடும் பண்புடை ஆய்வும்
தொண்டுகள் செய்திடும் நோக்கும் - கொடுமை
தொலைத்திடத் துணிந்திடும் தூய நற் போக்கும்
வண்டெனக் கலையுள்ள மலரைக் - குடைய
வல்லையில் இலக்கியத் தேன் மழை பொழியும்
அழகுதான் பார்த்திடும் காட்சி - இவர்கள்
அமிழ்துதான் உண்ணுவர் ஆர்வுடன் காய்ச்சி பழகுதல் நூல்களாம் நண்பர் - இயற்கைப்
படைப்பிலே உள்ளவை யாவுமே அன்பர் வழமையாய் நற்குடிப் பிறந்தோர் - துன்பம்
வந்திடின் நொந்திடார் அறிவிளிற் சிறந்தோர் தொழிலிலே புகழ் மிகச் சேரும் - இருந்தும்
தொன்றுதொட் ளே இவர் ஏழைகள் பாரும்!

இலக்கிய உலகம் 65.
பொதுப்படை இயல்புகள் தந்தேன் - எங்கள்
பொன்தமிழ் இலக்கிய உலகுக்கு வந்தேன் மதிப்புடை அன்பரே சற்று - பொறுத்து
மகிழ்வுடன் கேட்டிடும் இவைகளே உற்று இதற்கென உலகினில் ஈடாய் - எதுவும்
இல்ஃ)யென் றறிஞர்கள் இயம்புவர் பீடாய் பதிப்பி. ற் கரியதாய் வாழும் - எங்கள்
மாண்புடை இலக்கிய வளர்ச்சியைக் கேளும்!
வேறு
வேந்தர்கள் மூவர் கண்ட
மேன்மை கொள் சங்கம் கொண்டு: ஆய்ந்தனர் தமிழை ஆன்ருேர் ஐந்துநூறுக்கும் மேலோர் மந்தினர் காதல் வீரம்
வாழ்சுவை அகவல் மொழியில் Aர்ப்ந்தனர் எட்டாய்ப் பத்தாய்
இறைச்சியில் உவமைச் சிறப்பில்.
பருவிய காலந் தன்னில்
மக்களின் ஒழுக்கம் குன்ற உரியநல் லறங்கள் சொன்னுர்
உயர்ந்தவை இரண்டும் நானும் பெரியதொல் சிலம்பும் மணியும் பெற்றது இந்தக் காலம் அரியவெண் பாவும் இனமும்
அகவலை மீறக் கண்டோம்!

Page 36
«66
இலக்கிய உலகம்
பல்லவர் காலப் பத்தி
பாரினில் இல்லை இன்றும்
வல்லநம் நாயன் மார்கள் ܙ
வைணவ ஆழ்வார் பதிகச்
சொல்லிலா ரியந்தா ழிசையும்
துறையுடன் விருத்தம் வளரக்
கல்லையும் கரைத்தார் இசையில்
கடவுள் மேற் காதல் கொண்டார்!
சிறந்தநற் சோழர் காலம்
செம்மையில் விரிக்க நோக்கம்
பிறந்தன பலகா வியங்கள்
பெரியவர் கம்பர் உரையும் சிறந்தன தத்துவம் வடசொல்
சேர்ந்தது புதுமை எனினும் எறிந்தன ரன்று இயல்பை
இலக்கண நூல்கள் பலவாம்.
அடுத்தநா யக்கர் காலம்
அளித்தபோ தும் வல் அறிஞர் படுத்தது இலக்கிய உலகம்
பழமைதத் துவங்கள் சமயம் பிடித்தனர் வில்லி அருணர்
பிறந்தனர் வசைக்கோர் மேகம் வடித்தனர் விகடம் சிலேடை
வளர்ந்தவை உரைநூல் வடசொல்.

இலக்கிய உலகம் 6
இதன்பிற கெல்லாம் எமது
இலக்கிய உலகம் உரையைப் பதம்பெறச் செய்தே பல வாய்ப்
படைத்தது கதை நா டகங்கள் புதுப்புது நடையில் வழியைப்
புகுந்தமே ஞட்டார் வகுத்தார் இதற்குநா வலர் போன் ருே ரால்
இலங்கையின் பங்கும் பெரிதே!
நீரிது கேட்டீர் புதுமை
நிகழ்ந்தது முன்பும் என்றேன் பாரதி வந்தார் அதுபோல்
பாதையைச் சூழற் கேற்பச் சாரதி யாக நின்று
சரிவர மாற்றிச் சென்ற பேரதைப் பெற்ருர் அவரைப்
பின்னவர் பற்றிக் கொண்டார்!
எம்மொழி என்றும் வாழும்
இன்மொழி எளிமை அழகுச் செம்மொழி அதனுற் பெற்ற
சீரிலக் கியங்கள் போன்று எம்மொழி களிலும் இல்லை
என்றனர் சான் ருேர் கேட்டு பொம்முது செந்நீர் நெஞ்சம்
பூர்க்குது புவியே ஆர்க்கும்!

Page 37
68
இலக்கிய உலகம்.
இலங்கையில் இப்போ துள்ள
இலக்கிய உலகம் நன்கு துலங்கிட வேண்டின் இங்கே
துணிவுடன் சொல்வேன் ஒன்று கலங்கிய நிலையை உடனே
கட்டையில் ஏற்றும் சும்மா மலங்களைப் புதுமை என்னும்
மகிடியில் படைத்தல் விட்டு -
நலங்களைப் பொதுவாய்க் கண்டு
நம்மவர் பண்போ டொன்றி கலங்கரை விளக்காய் நிற்கும்
கற்றவர் முறையிற் சென்று இலங்கிடக் காலம் வென்று
இலக்கியம் படையும் புதிதாய் மலங்கிட வேண்டாம் துணியும்
மறந்திட வேண்டாம் பண்பு!
வணக்கம்
பருந்து போலே நானும் பறந்து நின்றே உண்மை தெரிந்து சொன்னேன் நீங்கள் இருந்து கேட்டீர் பண்பாய் விருந்து நன்ரு ? நன்கு அருந்தி நீரா ? யாவும் புரிந்து கொண்டால் நன்றி பிரிந்து செல்வேன் வணக்கம்.

திருத்தம்
பக்கம்
14. எழித்திலே - எழுத்திலே
50. படைந்பவர் - படைப்பவர்
வண்டயிழ் - வண்டமிழ்
61, அவை வை - அவையை
63. கல்லார் - கல்வார்
செய்மை - செம்மை
64, அறிவிளிற் - அறிவினிற்
தொன்று தொட் ளே இவர்
- தொன்றுதொட் டேஇவர் 65. பதிப்பிடற் - மதிப்பிடற்
தானும் - நாலும்

Page 38


Page 39


Page 40
Lள்ளிக் கூடத் டும்போதே எழுத்து வைத்த விநாயகர் க பைச் சேர்ந்த நுணுவி பிறந்தவர்.
ஈழகேசரிப் ப ஊக்கம் இவர் திறிே லும் பொழுதே ஒல் நூல் ஒன்றினே எழுத வாகனமும் ஏறச் ெ
1952-லிருந்து கவிதைகள் வெளிவ தினகரன் ஆகிய தின் இவக்கிய ஏடுகளிலு! பான கவிதைகள் ெ டுக் குருவிான்ற கவின் இவரது கவிதை பழன
த மிழ் நா ட் கிறித் தவக் கல்லுர தேனிற் தோய்ந்து வனத்தின் நாவன்ன திறனேயும் மஃ:நாடு வருகிறது.
தமிழ் கூறும் செந்தமிழ்மொழி எ வேண்டுமென்பது இ எழுத்துக்கஃளயெல்ல தாளர்களே யும் ஆசிரி மதிக்கும் நல்ல பண் புக்கு நல்லவர் சிற
-g
Printed at the Rain:
 
 

கிற் துள்ளி விளே யா லகில் அடியெடுத்து ந்தவனம் சாவகச்சேரி மேற்கில் 1933-ல்
ாலர் பகுதி ஊட்டிய பக் கல்லூரியிற் பயி 1றறை ரூபாய் என்ற க் திரண்டியது அச்சு சப்தது. ஈழகேசரியில் இவரது T3ாயின. வீரகேசரி, 2ாத்தாள்களிலும் பிற ம் இவருடைய புதுமை விவந்துள்ளன. சிட் கத் தொகுப்பிலும் கிசி A ன் வக்க பார் .
4 லு ன்ன சென்னேக் பிற் பயின்று தமிழ்த் இனிமைபெற்ற கந்த ான யயும் கவிபரங்கத்
நன்கு பயன்படுத்தி
நல்லுலகெங்கணும் விளம்பெற்று விளங்க ரெது ஆசை. நல்ல ாம் சுவைத்து எழுத் iயர்களே பும் போற்றி - படைத் தவிர் தட் ந்த தமிழ் அன்பர்.
இராஜ அரியாத்தினம்.
ID TA' Printers, Colombo - 3