கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோடுகளும் கோலங்களும்

Page 1


Page 2


Page 3

கோடுகளும் கோலங்களும்
குப்பிழான் ஐ. சண்முகன்
அலை வெளியீடு
6. மத்திய மேற்குத் தெரு, குருநகர், யாழ்ப்பாணம்.

Page 4
அலை வெளியீடு - 2 மார்கழி 1976 விலை: ரூபா 4.50
KõDUKALUM KõLANGKALUM
a collection of short-stories by kuppilan a. shanmugan manicka valavu, karan avai south kara veddi published by alai literary circle cover by ramani printed at bastian press main street, jaffna first edition december 1976 price rupees four cents fifty

தந்தைக்கும் அன்னக்கும்

Page 5
இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது ஒரு றெயில் பயணம் 15 மெளன கீதம் 26 வேட்டைத் திருவிழா 36 தடங்கள் 44 ஒரு பாதையின் கதை 54 உணர்ச்சிகள் 63
இணை 71 இலுப்பைமரமும் இளஞ் சந்ததியும் 79
rdoba assir 88
savsni 97

இருளிலிருந்தே
பிறக்கிறது
"சின்னப்புக் கமக்கா றன்ரை ஒரே பிள்ளை; சகோ தரங்களில்லாதவைெண்டு தான் என்னை எல்லாரும் சொல்லுறவை. எனக்கும் g5ửt 3Gểu Irr தங்கச்சியோ அண்ணையோ அக்காவோ இல்லாதது பெரிய மன வருத்தந்தான். எண்டா லும், எனக்கு ஒருவழியிலை சகோதரம்இருக்குதுதானே, அவள் மங்கையர்க்கரசி, என்னைச் சதாசிவத்தண் ணன் எண்டு கூப்பிடேக்கை எனக்கு எவ்வளவு சந்தோ சமாய் இருக்கும் தெரியுமே. அவள் என்ரை உடன் பிறந்த சகோதரமாய் இல் லாட்டிலும், நான் அவளிலை உயிரையே வைச்சிருக்கி றேன். அவளும் அப்படித் தான் என்னிலை நல்ல பட்

Page 6
2/கோடுகளும் கோலங்களும்
சம். பொயிலைக்கண்டுக் காலத்திலை, நான் தோட்டத்திலை இறைக்கேக்கை, ஆச்சி எனக்குச் சாப்பாடு அனுப்பப் பிந் தினுலும் அவள் விடமாட்டாள்; ‘அண்ணன் பாவம் வெய் யிலுக்கை காயுது" எண்டு சொல்லி, ஆச்சிக்கு கூடமாட ஒத்தாசையாயிருந்து, அவள்தான் எனக்குச் சாப்பாடு அனுப்பிவைப்பள். முந்தி அவள் இராமநாதன் கொலிச் சிலை படிக்கேக்கை, எனக்குப் பிடிக்குமெண்டு புதுப்புதுப் போசிலை எம். சி. ஆறின் ரை படங்களும், நல்ல நல்ல பாட்டுப் புத்தகங்களும் வாங்கித்தாறவள்."
**அவளும் அவையின்ரை குடும்பத்திலை ஒரு பிள்ளைதான். அவளின்ரை அப்பாதான் எங்கடையூர்ப் பள்ளிக்குடத்திலே முதல் வாத்தியார், நாங்களெல்லாம் அவரை முதல்வாத் தியார் எண்டுதான் சொல்லிறது. எங்கட அப்பு, ஆச்சி போன்ற பெரியாக்கள் அவரைத் "திருநீத்துச் சட்டம்பியார்" எண்டுதான் சொல்லுறவை, எந்த நேரமும் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு, நேஷனல் சேட்டு போட்டுக்கொண்டு பள்ளிக்குடத்துக்கு போகேக்கை வரேக்கை அவரை நான் ருேட்டிலை காணுறஞன். அவற்றை நெத்தியிலை பட்டை யாய் பூசிக்கிடக்கிற அந்த மூண்டுகுறித் திருநீத்தையும், நடுவிலை பென்னம்பெரிய வட்டமாய் வைச்சிருக்கிற சந்தணப் பொட்டையும், புடரியிலை அசைந்துகொண்டிருக்கிற அந்தச் சின்னக்குடுமியையும் காணேக்கை எனக்குக் கையெடுத்துக் கும்பிடச்சொல்லிற மாதிரி ஒரு பத்தி இல்லை ஒரு பயம் வரும். வழியிலை எங்கையேன் என்னைக் கண்டால், கண்களை அகல விரித்து, மெல்லிய சிரிப்பு சிரிச்சு, ‘எப்படியடா சதா சிவம்' எண்டு அவர் கேக்கேக்கை, எனக்கு உடம்பெல்லாம் குளிரிறமாதிரி இருக்கும். மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்கும். அப்படிப்பட்ட அவருடைய செல்லப்பிள்ளைதான் மங்கையர்க்கரசி. அவரைப் பாக்கேக்கை ஏதோவொரு சந் தோஷமான பயமாய் இருக்க, அவளைப் பார்க்கப்பார்க்க ஆசையாய் இருக்கும். சதாசிவத்தண்ணன், சதாசிவத் தண்ணன் எண்டு அவள் சொல்லிற கதைகளைக் கேட்கக் கேட்க பசிகூடவராது. அவள் எத்தினை எத்தினை கதை சொல்லுவாள். எம். சீ. ஆர்., சிவாஜி நடிக்கிற படக் கதையஞம் சொல்லுவாள்.'

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது/3
"எங்கடை வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளித்தான், அவையின்ரை புதுக் கல்வீடு இருக்குது. அவள் அவையின்ரை வீட்டிலும் பார்க்க எங்கடை வீட்டிலைதான் அதிகமாய் இருப்பள். பள்ளிக்கூட விடுதலை நாட்களிலை அவள் நித்தமும் எங்கடை வீட்டிலைதான் நிற்பள். ஆக நித்திரை செய்யத் தான் தங்கடை வீட்டுக்குப் போவள். எங்கடை வீட்டிலை ஆச்சிக்குச் சுகமில்லையெண்டால் அவள்தான் சமைப்பள்: மற்றவேலையளிலை ஆச்சிக்கு கூடமாட ஒத்தாசையாக இருப் பாள். பழையது, புதியது, நல்லது நறியது எண்டு பாராமல், "உனக்குக் கூடாது மோனே பழக்கமில்லை' எண்டு ஆச்சி சொன்னலும் கேளாமல் அடம்பிடிச்சுச் சாப்பிடுவள். எங் கடை வீட்டிலை ஏதேன் கொண்டாட்டமெண்டால் அவள் தான் நிண்டு, கலகலவென்று பேசி எல்லாத்தையும் நடத் துவள். எப்பனும் வெக்கமில்லாமல் எல்லாரோடையும் "பகிடிகள்" விடுவள். எத்தினையோபேர் 'திருநீத்து வாத்தி யாற்றை பெடிச்சி நல்ல பிள்ளை எண்டு சொன்னதை நான் கேட்டிருக்கின்றேன். அப்ப எனக்கு சந்தோசம், சந் தோசமாய் வரும். அவள் என்ரை தங்கச்சிதானே எண்டு எனக்குப் புழுகமாயிருக்கும்.'
"அவயின்ரை வீட்டிலை ஏதேன் கொண்டாட்டமெண் டால் என்னைத் தங்கடை வீட்டை வரச்சொல்லி அவள் பிடிவாதம் பிடிப்பள், நான் மாட்டேனெண்டு சொல் றுவென் எண்டு அவளுக்குத் தெரியும். திருநீத்து வாத்தி யார் இருக்கிற இடத்திலே என்குலே இருக்க ஏலாது. உவள் மங்கையர்க்கரசி எப்பிடித்தான் இருக்கிருள் எண்டு நான் யோசிக்கிறஞன். கடவுளுக்குப் பக்கத்திலை இருக்க, அழுக்கு வேட்டி கட்டுக்கொண்டு தோட்டம் செய்யிற அறிவில்லாத ாங்களுக்கென்ன யோக்கியதை இருக்கு எண்டு நான் அவளைக் செப்பேன். "ஐயா, உன்னைப் பார்க்க எவ்வளவு சந்தோசப் படுகிறர் நீ தான் சும்மா கம்மா பயப்படுகிருய் எண்டு அவள் சொல்வாள். எனக்கு அவள் கெஞ்சிறதை பாக்க அழுகை வரும். எண்டாலும், கடவுள் போன்ற வாத்தியாரோடும், அவையின்ரை வீட்டை வாற வெள்ளை வேட்டி கட்டின மற்ற மனிசரோடும் நான் எப்பிடித்தான் புழங்கிறது எண்டு

Page 7
4/கோடுகளும் கோலங்களும்
யோசித்துப் பார்ப்பேன். "என்னுலை முடியாது தங்கச்சி; "என்னை விட்டுவிடு தங்கச்சி" என்பேன், எனது குரல் கம்மும். *சரி அண்ணு' எண்டு அவள் போய்விடுவாள். அவள் ஏமாற் றத்துடன் போவதைப்பார்க்க எனக்கு அழுகை வரும். மூலையிலை ஒழிச்சிருந்து அழுவேன்; நல்லாய் அழுவேன்; நெஞ்சிலை கனக்கிற மாதிரிக்கிடக்கிற அந்தப் பாரம் கரையு மட்டும் அழுவேன்."
"நான் மூண்டாம் வகுப்புமட்டும்தான் படிச்சிருக்கின் றேன், நான் மூண்டாம் வகுப்பிலை படிக்கேக்கை, மங்கை யர்க்கரசி அரிவரியிலைதான் படிச்சவள். அவள் முதலாம் வகுப்புப் படிக்கேக்கையும், இரண்டாம் வகுப்புப் படிக்கேக் கையும் கூட நான் மூண்டுதான் படிச்சஞன். அதுக்குப்பிறகு நான் பள்ளிக்குடத்துக்குப் போகேலை. போக மனம்வரேலை, அப்பு என்னை பள்ளிக்குடத்துக்குப் போகக் சொல்லி அடிச் சார். நான் போகேலை. மங்கையர்க்கரசி கூட கூப்பிட்டாள். நான் போகேலை, ஒரு நாள் முதல் வாத்தியார் கூட 'நாலெழுத்துப் படிச்சால் தானேடா, நல்லாய் இருக்கலாம்; பள்ளிக்குடத்துக்கு வாவேன்ரா' எண்டார். நானெண்டும் சொல்லேலை. அந்தக் காலத்திலையும், நான் அவருக்கு முன்னுலை ஒண்டும் கதைக்க மாட்டேன். அண்டைக்கும் நான் வீட்டை வந்து அழுதேன்; மூலையிலிருந்து விக்கி விக்கி அழுதேன். அப்பு அடிக்கேக்கை கூட நான் அப்படி அழேலை, முதல் வாத்தியார் பள்ளிக்குடத்திற்கு வாவேன்ரா எண்டு சொன்னபோது எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. நல்லாய் அழுதேன். ஆச்சிகூடக் கண்டிட்டு ஏன்ரா அழு கிருய் எண்டு கேட்டா. நான் ஒண்டும் சொல்லேலை. நல்லாய் அழுதேன்.'
"ஒம்பதாம், பத்தாம் வகுப்புகளிலை என்ன படிக்கினம் எண்டு எனக்கு விளங்கேலை, எங்கடை மங்கையர்க்கரசிகூட கண்டியிலை ப்தின்மூண்டாம், பதினலாம் வகுப்பு படிச்சது தானே!. நீங்களெல்லாம் கண்டியிலை என்ன படிக்கிறியள் எண்டு ஒருநாள் அதைக் கேட்டணுன். "அதெல்லாம் உனக்கு விளங்காதடா அண்ணு' எண்டாள். உண்மையிலை எனக்கு

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது/5
விளங்கேலைத்தான். நான்கூட வீரகேசரி, தினகரன், ஈழநாடு பேப்பரெல்லாம் எழுத்துக் கூட்டி வாசிப்பேன்தானே. எம்: சீ. ஆறின்ரை பாட்டுப் புத்தகங்களும் வாசிக்கிறஞன் தானே. மங்கையர்க்கரசியும் என்னைப் போலதானே பெரிய பெரிய கதைப் புத்தகங்களெல்லாம் வாசிக்கும். எனக்கு அதெல் லாம் வாசிக்க ஆசைதான். பதின்மூண்டாம், பதினலாம் வகுப்புப்படிக்கிற மங்கையர்க்கரசி வாசிக்கிற புத்தகங்களை, மூண்டாம் வகுப்புப் படிச்ச என்னலும் வாசிக்க ஏலும் . ஆணுல் எனக்கு நேரமில்லாததாலை நான் வாசிக்கிறேலை. அப்ப, அவை பதின்மூண்டாம், பதினுலாம் வகுப்பிலை என்ன படிக்கிறவை எண்டு எனக்கு விளங்கேலே. "'
"பெரிய வகுப்புகளிலை இங்கிலீசு படிக்கிறதாக்கும் எண்டு நினைச்சிருந்தேன். மூண்டாம் வகுப்புக்கிடையிலை தமிழ் படிச் சா இங்கிலீசு படிக்க ஆரும் வகுப்புப்போதும் தானே. அப்ப ஏன் கனக்க வகுப்புகள்; அப்ப ஏன் மங் கையர்க்கரசி கண்டிக்கு படிக்கப் போகவேணும் , '
"விடுதலையிக்கை ஒருநாள் அது எங்கடைவீட்டை நிக் கேக்கை, அதுக்கு "இங்கிலிசிலை ஒரு கடிதம் வந்தது. நான் தான் கடிதக்காறனிட்டையிருந்து அதைவேண்டி தங்கச்சி யிட்டை கொடுத்தனன். அதிலை கிறுக்கல் கிறுக்கலாய், நெளிஞ்ச நெளிஞ்ச இங்கிலீசு எழுத்துகள் எனக்குக் காய்ச்சல் வந்தால் டிச்பென்சறியிலை மருந்து வேண்டேக்கை, அப் போதிக்கரி ஐயா எழுதித்தாற துண்டிலை, கிறுக்கல் கிறுக் கலாய் கிடக்கிற இங்கிலீசு எழுத்துகள் மாதிரி. என்ரை தங்கச்சிக்கும் இங்கிலீசிலை கடிதம் வந்ததாக்கும் எண்டு எனக்கு நல்ல புழுகம், எனக்குச் சந்தோசத்திலை சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. கடிதத்தை வேண்டிக்கொண்டுபோ கேக்கை நான் சிரிச்சுக்கொண்டுதான் போனஞன். மணிச் சத்தம் கேட்டு வெளியாலை வந்த மங்கையர்க்கரசி ‘ஏண்டா அண்ணை சிரிக்கிருய் எண்டு கேட்டுக்கொண்டே கடிதத்தை வாங்கினள். அவள் இங்கிலீசு படிக்கிறதைப் பாக்க வேணு மெண்டு. எனக்கு ஆசை ஆசையாய் கிடந்தது. "என்ன தங்கச்சி அதிலை எழுதிக்கிடக்கு எண்டேன்.""

Page 8
6 கோடுகளும் கோலங்களும்
"அவள் முகத்தைச் சுழித்தாள் எனக்கு இங்கிலீசு விளங்கேஃ யடா அண்ணு' எண்டாள்.
எனக்கு பெரிய ஏமாத்தமாய்ப் போச்சு , "பின்னே என்னடி பெரிய படிப்புப் படிக்கிருப்' எண்டு சிறினேன். அவள் சிரிச்சாள். எனக்கு அழுகை, அழுகையாய் வந்தது. முகத்தைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஒடினேன் மூல யில் இருந்து அழுதேன்.
அவள் எனக்குப் பின்னுலே வந்ததை நான் கவனிக்கேலே, ஏன் ரா அண்ணே அழுகிருய் எண்டாள். இது பெரிய குழந் தை எண்டு சொல்லி என்னர கண்ணினரத் துடைத்தாள். என்னண்ணு இப்பவும் குழந்தைப் பிள்ளே மாதிரி இருக் கிருயே எண்டு என்னே நாப்பினுள்.
'இங்கிலீசு படியாமல் யூனிவேசிட்டியிலே அதுதான் கண்டியிலே அவை படிக்கிற பள்ளிக்குடம் என்னடி படிக் கிருய் எண்டேன். அதெல்லாம் உனக்கு விளங்காதடா " அண்ணே என்ருள், வெள்ளேக்காறன் போனதின் பின்னுஃ அவன் ரை பாசையை தாங்களேன் படிக்க வேணும் எண்டு கேட்டாள். எங்கடை நாட்டிஃ இருக்கிற தமிழாலும் சிங் களத்தாலும் எல்லா வேலேயும் செய்யலாம்தானே எண்டும் சொன்னுள்
"அது சொன்னதிலே எனக்கு முழுதும் விளங்கேலேத் தான் கொஞ்சந்தான் விளங்கிச்சுது, வெள்ளேக்காறன் போனதின் பின்னுலே அன்ைனர இங்கிலீசு எங்களுக்கு என்னத்திற்கு பெரிய பெரிய கதைப்புத்தகங்களெல்லாம் எழுதுகிற எங்கடை தழிழாலே, சின்னச் சின்ன கடிதங் களெழுதலாம் தானே- மூண்டாம் வகுப்பு படிச்ச நான் இதொண்டும் யோசிக்கேலே, பதின்மூண்டாம், பதின் நாலாம் வகுப்புப் படிக்கிற தங்கச்சிதானே இதையெல்லாம் சொல்லுது, யோசிச்சுப் பாத்தா அது சொல்லிறதெல்லாம் சரியாய்த்தான் கிடக்கு. அப்ப பதின்மூண்டாம். பதின் நாலாம் வகுப்பிலே இதெல்லாம்தான் படிக்கிறவையோ."

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது"
"எங்கடை தோட்டத்துக்கும் வெள்ளேக்காறன் வந்த வனும் முந்தி றெயில் ருேட்டுப்போடேக்கை, அதைப்பாக்க வந்த ஒரு வெள்ளேக்காறன், எங்கடை தோட்டத்துக்கை வந்து பயித்தங்காய் புடுங்கித் திண்டவனும், அப்ப எங்கடை ஆச்சி குமரியாய் இருந்தவவாம். அவா வெள்ளேக்காறனப் பார்த்து பயித்தங்காய்க்கு காசு தரச்சொல்விக் கேட்டா வாம், அவன் ஒரு பயித்தங்காய்க்கு ஒருருபா காசு கொடுத் தானும், கொடுத்திட்டு எதோ இங்கிளிசிலே கேட்டாணும். ஆச்சி வெக்கப்பட்டு வீட்டை ஓடி வந்திட்டாவாம். அப்ப ஒருருபாவுக்கு பத்துக்கொத்து அரிசி வேண்டலாமாம். அப் படிப்பட்ட வெள்ளேக்காறன் போனபின்னுலே இங்கிலீசு
என்னத்திற்கு சரிதான். :
"ஒரு நாள், பொழுது மங்கிற நேரம், தோட்டத்தில் பொயிலேக்கண்டுக்கு இறைக்கிறதுக்காக நான் மம்பெட்டி யோட போசுேக்கை, ருேட்டிலே இரண்டு காச்சட்டை போட்ட பெடியங்கள், எங்கடை வீட்டைப்பார்த்துக் கொண்டு டிசைக்கிளோடே திண்டாங்கள். தங்கச்சி கிணத் தடியில் உடுப்புத் தோய்ச்சுக்கொண்டு நிண்டது. எனக்கு திதிரம் ஆத்திரமாய் வந்தது எங்கடை தங்கச்சியை இவை ான் பாக்க வேணும். நான் அவையஞக்குப் பக்கத்திஃப் பொனென் போங்காற்ரு உன்னர சரக்கு நிக்குது எண்டு ஒருதன் மற்றவனிட்டைச் சொன்னுன், மற்றவன் எங்கட பினத்தடியைப் பார்த்துச் சிரிச்சான், அவருக்கு என்ன சிரிப்பு? நான் சினத்தடியைத் திரும்பிப் பார்த்தேன். எங் கடை தங்கச்சியும் சிரிச்சமாதிரிக் கிடந்தது. நான் சைக் கிள்ளே நிண்டவங்களே முழிசிப் பார்த்தேன். என்ரை கையிலே மம்பெட்டியும் கிடந்தது. அவங்கள் பயந்திட்டாங்கள்போஃ: கிடக்கு விர்றெண்டு சைக்கிளிஃல ஏறிப் போட்டான்கள். அவங்கள் பேந்தும் நிண்டிருந்தால் எனக்கு வந்த கோபத் திற்கு ஒருவேளே மம்பெட்டியை பாவிச்சாலும் பாவிச்சிருப் (r. '"
"அண்டைக்கு பறுவம், அப்படி நிலவிலே எனக்கு தண்ணிகட்ட நல்ல ஆசை எம். சி. பாற்ரை படத்திலே

Page 9
8கோடுகளும் கோலங்களும்
வாற நல்ல நல்ல சினிமாப் பாட்டுக்கள் பாடிக்கொண்டு, அப்படி நிலவிலே தண்ணி கட்ட எனக்கு நல்ல புழுகம் புழுகமாயிருக்கும். ஆணுல் அண்டைக்கு எனக்குச் சரியான மனவருத்தமாய் இருந்தது. மங்கையர்க்கரசி அந்தப் பெடியங்களேப் பார்த்துச் சிரிச்சவளே சிரிச்சமா திரித்தான் கிடந்தது. பொழுது கருகிற நேரத்தில் தற் செயலாய் அவள் நிமிந்து பாத்தது எனக்கு சிரிச்ச மாதிரித் தெரிஞ்சிருக்கும். அவள் சிரிச்சிருக்கமாட்டாள் அவள் திரு நீத்துச்சட்டம்பியாற்றை பெடிச்சி என்ரை தங்கச்சி நெடு கவும் நெடுகலும் அந்த நினேவுகள்தான் வந்தது. துக்கம் துக் கமாய் வந்தது; நெஞ்சை அடைச்சது அழுகை வந்தது. "'
இண்டைக்கு நாஃஞ்சு நாளேக்கு முந்தித்தான் அவளுக்கு மறுமொழி வந்தது. அவள் சோதினே பாஸாம் இனிமேல் அவள் ஒரு வீஏயோ, பீஏயாம். அவள் துள்ளிக்கொண்டு எங்கடை வீட்டை ஓடிவந்தாள். "எங்கே சதாசிவத்தண் ணன்' எண்டு ஆச்சியைக் கேட்டாள், "ஏன்ரி" எண்டேன். "அண்னே நான் சோதினே பாசடா உனக்கொரு பரிசு தரப்போறேனெண்டாள்.' என்ரை தங்கச்சி சோதினே பாசு பண்ணியது எனக்கு நல்ல புழுகம். அவள் தன்ரை கையிலே வைச்சிருந்த பாசலே தாறேனெண்டு சொல்லி நீட்டி, நீட்டி ஏய்ப்புக்காட்டினுள். நான் பாஞ்சு பாசலேப் பறிச்சுப் பிரிச் Grit. '"
"எனக்குச் சந்தோசம், சந்தோசம், சந்தோசமாய் வந்தது. என்ரை தங்கச்சி என்ரை தங்கச்சிதான். அவளே அப்படியே கட்டிப் பிடிச்சுத் தூக்கிகொஞ்ச வேணும்போலே எனக்குப் புழுகம் வந்தது, அவள் அதுக்கிடையிலே ஆச்சி யிட்டை ஓடியிட்டாள். இப்பவும் அண்ணன் குழந்தைதான் எண்டாள். "'
"அவள் எனக்கொரு நில டெர்லின் சேட்டுத்தான் பரிசு தந்தவள். முந்தியும், அவள் யூனிவேசிட்டிக்கு படிக்கப் போ கேக்கையும் எனக்கொரு மஞ்சல் டெர்லின் சேட்டுத் தந்தவள். அதொரு சேட்டுத்தான் நான் இவ்வளவு நாளும்

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது/9
வைச்சிருந்தனுன் நான் ஒரிடமும் சேட்டுப்போட்டுக் கொண்டு போறதுமில்ஃலத்தானே. எப்பவேன். என்னுேடை தொட்டம் செய்யிற பெடியங்களோடை, டபிளிலே செக்கண் சோப் படத்திற்குப் போனுப்போறதுதான். அதுவும் எம் சீ" ஆறின்னர சண்டைப்படம் எண்டாத்தான் நான் போவேன்."" ".
"சிவவோ தங்கரி யூனிவெசிட்டியாலே லீவிலே வந்து நிக்கேக்கை அதோடையும் படத்துக்குப் போறஞன். நான் மாட்டெ மாட்டெனெண்டாலும் அது விடாது. நான் கயவாடா பொறது அண்ணு சும்மா ஒரு ஆம்பிளேத் து.ாக்கு வா எனக்கு எல்லாம் தெரியுமெண்டு கேப் பாள், பின்னே நான் என்ன செய்யிறது, மஞ்சல் டெர்லின் செட்டையும், போக்குவரத்து வேட்டியையும் நல்லாய்த் தொய்ச்சுப் போட்டிட்டு, அதோடை வசுவிலே படத்துக்குப் பொறஞன், அல்லாட்டில் நான், சந்தைக்குக் கூட வசுவில் பொறேலே "
"யாழ்ப்பாணத்திலே அதுக்கு எல்லா இடமும் தெரியும்
அது என்னேயும் ஒருருபா பத்துச் சதத்துத் திக்கேற்றுத்தான் எடுக்கச் சொல்லும். நான் மாட்டேனெண்டு போடுவேன். அறுபத்தைஞ்சு சதத்திற்கு கலறியிலே கிட்ட இருந்துதான் நான் படம் பார்ப்பேன். நான் சிலவேளை பின்னுக்குத் திரும்பி செக்கன் கிளாசைப் பாக்கிறனுன். கடைசியாய்ப் படம் பாக்சுேக்கை ஒரு பொடியன் தங்கச்சியைக் குறுகுறுப் பாய்ப் பார்த்தமாதிரிக் கிடந்தது. பொடியனேயும் எங் கையோ பார்த்தமாதிரி எனக்கு ஞாபசும் வந்தது. எங்கே யெண்டுதான் ஞாபகம் வரேல்லே. அங்கை எல்லாம் அப்பிடித் தானே, ஆம்பிளேயன், பொம்பிளேயன் எண்ட வித்தியாச மில்லாமல் எல்லாரையும் குறுகுறுப்பாய் பாப்பினம்."
"படம் முடிஞ்சு வரேக்கை இரண்டோ, மூண்டு பெட் டயள் மங்கையர்க்கரசி, மங்கையர்க்கரசி, மங்கையர்க் சுரபி எண்டு தங்கச்சியைக் கூப்பிட்டினம். தங்கச்சி "இது கான் நான் சொல்லுற சதாசிவத்தண்ணன்' எண்டு என்னே

Page 10
10/கோடுகளும் கோலங்களும்
சிவையஞக்குக் காட்டிச்சுது. எனக்கு நல்ல சந்தோசம் - வெக்கமாயுமிருந்தது. அந்தப் பெட்டயளிலை மஞ்சள் சீலை கட்டின கண்ணுடி போட்ட, சின்னப்பிள்ளைதான் நல்லபிள்ளே நீலச்சீலை கட்டின பிள்ளையும் ஒருமாதிரி; சின்னச் சட்டை போட்ட மற்றப்பிள்ளை . சீ . எனக்குப்பாக்க அரிகண்ட மாய் இருந்துது. வாயிலையும் எதோ சிவப்புகளைப் பூசி. அவரும் வந்தவர் போலை எண்டு சொல்லி அது சிரிச்சுது: தங்கச்சியும் சிரிச்சுது. எனக்கு ஒண்டும் பிடிக்கவுமில்லை; ஒண்டும் விளங்கவுமில்லை,
"நான் பேந்து தங்கச்சிக்கு அந்த பிள்ளையோடை பழ காதையெண்டு சொன்னஞன். அந்த மஞ்சல் சீலை கட்டின பிள்ளை நல்ல பிள்ளை; அப்பிடிப் பிள்ளையளோடைதான் பழக வேணும் எண்டும் சொன்னஞன். எனக்கு அந்தப்பிள்ளையிலே பிடிச்சுப் போச்சு; அது நல்லபிள்ளை.'"
'தங்கச்சி வீட்டை சிலவேளை சைக்கிள்ளே பெடியங் களும் வாறவங்கள்; அது அவங்களோடை எல்லாம் சிரிச் சுக் கதைக்கும். பகிடியளும் விடும், வீட்டிலை இருத்தி தேத் தண்ணியும் கொடுக்கும். முதல்வாத்தியாரும் அதுக்கு ஒண்டும் பறையிறேலை."
"நீ பொம்பிளைப் பிள்ளையல்லே; பெடியங்களோடை உப்பிடியே பழகிறது எண்டு நான் தங்கச்சியைக் கேட்டனுன். அது பிலத்துச் சிரிச்சது. அண்ணை நீ இப்பவும் குழந்தை யடா. பொம்பிளையரும் ஆம்பிளையஞம் சிரிச்சுப் பழகிறதிலை என்ன பிழையடா. பிழை எண்ட தெல்லாம் அவங்கடை அவங்கடை மனசைப் பொறுத்தது எண்டு அது சொல் லிச்சுது. நானும் பேந்து யோசிச்சுப் பார்த்தனன். பொம் பிளேயரும் ஆம்பிளையஞம் பழகிறதிலை என்ன பிழை? ஒண்டுமில்லைத்தானே. இப்பதான் பதின்மூண்டாம் பதிஞ லாம் வகுப்பிலே என்ன படிப்பிக்கிறவை எண்டு எனக்கு ador dies, ''

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது/11
'நான் நேத்து பொழுது படேக்கை தோட்டத்தாலை வீட்டைவந்து பாத்தா தங்கச்சி அழுகிற மாதிரி நிக்குது. என்னைக் கண்டிட்டு விக்கி, விக்கி அழுதது. எந்த நேரமும் பகிடியள் விட்டுச் சிரிச்சுக்கொண்டிருக்கிற தங்கச்சி, அழு கிறதைப் பாக்க எனக்கு அழுகையாய் வந்தது. நான் அழேக்கையெல்லாம், அழுமூஞ்சி, இப்பவும் குழந்தையோ எண்டு என்னைக் கேட்டு என்னைப் பகிடிபண்ணி என்னை அழாமல் செய்யிற தங்கச்சி, அப்பிடி அழுவதைப் பாக்க" ஏதோ கூடாதது நடந்து போச்சு எண்டு எனக்கு விளங்கி யிட்டுது. "என்னடி நடந்தது எண்டு நானும் அழுகிற மாதிரிக் கேட்டேன். அதின்ரை கண்ணிரைத் துடைத்து, கையைப்பிடிச்சு சொல்லமாட்டியோ எண்டு கெஞ்சிக்கேட் டன். என்னை, "ஐயா கலியாணம் செய்துகொடுக்கப் போரு ராம் எண்டு விக்கி அழுதது.'
"எனக்கு ஒண்டும் விளங்கேல். கலியாணம் செய்கிற தெண்டால் எல்லாருக்கும் புழுகம்தானே. இவள்ஏன் அழு கிருளெண்டு எனக்கு விளங்கேலை. அது நல்லது தானேடி. அதுக்கேன்ரி அழுகிருய் எண்டேன். '
"அவள் அழுகையை நிப்பாட்டி என்னை முழுசிப் பார்த்தாள். எங்கடை பெரிய பள்ளிக்குடத்திலை படிப்பிக் கிற சுப்பிரமணியம்தான் மாப்பிளை எண்டாள்.'
"எனக்கு அவரைத் தெரியும். எங்கடை ஊர்பெரிய பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற நல்ல வாத்திமா ரிலை அவரும் ஒருத்தரெண்டு அங்கை படிக்கிற பொடியங்கள் சொல்லிற வங்கள். நானும் சிலவேளை அவரைக் காணுறஞன். ஆள் சைக்கிள்ளை போகேக்கை, வரேக்கை தேவாரம் மாதிரிப் பாட்டுக்களை மெதுவாய் பாடிக்கொண்டு போறவர். பெரிய பெரிய இங்கிலீசுப் புத்தகங்களும் கொண்டுபோறவர். ஒரு நாள் அவர் சைக்கிள்ளை போகேக்கை புத்தகமொண்டு ' தவறி ருேட்டுலை விழ நான்தான் எடுத்துக்குடுத்தஞன். அவரும் தங்கச்சி மாதிரி பீஏயோ எம்மேயோதாளும். மங் கையர்க்கரசிக்கு நல்ல பொருத்தமான ஆள் அப்பேன் uyavah Jayp Gaugpyb...’”

Page 11
12 கோடுகளும் கோலங்க்ளும்
*"அவர் நல்ல மாதிரி மனிசன் தானேடி உனக்கு நல்ல பொருத்தமான ஆள்; உதுக்கேன்ரீ பேச்சி அழுகிருய் எண்டு நான் கேட்டேன்'
", அவள் தன்ர்ை சட்டைக்குள்ளாலே ஒரு படத்தை எடுத்து என்னைப் பாக்கச் சொல்லிக் காட்டினுள், ஒரு காச்சட்டை போட்ட நெடுவல் பெடியனும், ஒரு பொம் பிளையும். நான் கண்ணைக் கசக்கிப்போட்டு வடிவாய்ப் பார்த்தேன். பொம்பிளே தங்கச்சி, தங்கச்சியேதான்-இரண்டு பேரும் சோடியாய் சிரிச்சுக்கொண்டு நிக்கினம், பெடியனையும் எங்கையோ கண்டமாதிரி-ஒ! ஒருநாள் சைக்கிள்ளை நிண்டு தங்கச்சியைப் பாத்த பெடியன், படம் பாக்கேக்கை குறு குறுப்பாய் பாத்த பெடியன் ; எனக்கு தலை சுத்திச்சுத : மயக்கம் வந்தது; நெஞ்சை அடைச்சது: கண் இருண்டது; அழுகை அழுகை அழுகையாய் வந்தது'
"அழுகையை அடக்கிக்கொண்டு. அவளை நிமிர்ந்து பாத்துக்கேட்டேன் "நீ என்ரை தங்கச்சி தானேடி எண்டு’
"அவள் என்ரை காலிலைவிழுந்து கையாலை காலைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதாள். நான் உன்ரை தங் கச்சி இல்லாட்டா வேறைஆரடா உன்ரை அருமைத் தங் கச்சி எண்டு கேட்டாள். ஐயாவும், நீ என்ரை மேளாடி எண்டு பேசினது எண்டு சொல்லிக் கதறினள். அண்ணை நீ ஒரு தெய்வம் குழந்தை எண்டு நினைச்சேன், நீயுமா என்னை விரட்டிருய் எண்டு கேட்டாள். எனக்கு அடக்க, அடக்க அழுகை வந்தது. அப்ப ஏன் தங்கச்சி உப்பிடிச் செய்தனி எண்டு கேட்டேன். **
**அவள் கண்ணைத் துடைச்சுப் போட்டுச் சொன்னுள்" அது என்னவோடா, அண்ணு எனக்குச் சொல்லத் தெரி யாது. எனக்கு அவரிலை பிடிச்சுப்போச்சு: அவருக்கும் அப் பிடித்தான். தாங்கள் பெத்ததுகளுக்கு கலியாணம் செய்து பார்க்கிறதோடை தாய் தேப்பன்ரை பொறுப்புத்தீர்ந்து போம். குடும்பம் நடத்துகிறது நாங்கள் தானே. எங்க

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது/13
ளோடை குடும்பம் நடத்தக்கூடியவங்களை தெரிஞ்செடுக்க எங்களுக்கு அறிவு காணுதே. நாங்கள் விரும்பியவங்களுடன் நாங்கள் வாழவேணுமடா அண்ணு; ஐயா தான் சொல் லுறவரைத்தான் கலியாணம் செய்ய வேணுமெண்டு சொவ் லுருர். இவர் இல்லாமல் என்னுல் வாழ ஏலாதடா. எண்டு சொல்லிக் கண்கலங்கிச்சுது தங்கச்சி; நானும் எவ்வளவோ மனத்தைக் கல்லாக்கி வைராக்கியமாயிருக்கத்தான் பார்த் தேன். என்னுலை ஏலாமல் போச்சுது. எனக்கும் கண்கலங் கிச்சுது. அது சொல்லுறதும் சரிபோலத்தான் எனக்குத் தெரிஞ்சுது. பதின்மூண்டாம் பதினலாம் வகுப்பிலை என்ன படிப்பிக்கிறவை யெண்டு எனக்கு விளங்கிப்போச்சு. எங் களைப்போலை மூண்டாம் நாலாம் வகுப்புப் படிச்சவை யெல்லாம் இப்பிடி இப்பிடி புதிசு, புதிசாய் யோசிச்சுப் பார்க்க மாட்டினம். கணக்கப் படிச்சவைதான் புதிசு புதி சாப் யோசிப்பினம்போலை, தாங்கள் விரும்பினவையைத் தானே எல்லாரும் கலியாணம் செய்யிறதெண்டால் . எவ் வளவு நல்ல யோசினை."
'எனக்கு இப்ப ஒரு உதவி செய்ய வேண்டுமெண்டு தங்கச்சி கேட்டிது. அந்தப் பெடியன் பக்கத்தூர் பெடியன் தானும், போய் நான் தாற துண்டைக்குடுத்து அவண்ைக் கூட்டியாநியோ எண்டு கேட்டதுi
"நான் ஒமண்டிட்டேன். உந்த இருட்டுகளுக்கெல்லாம் நான் பயப்பிடமாட்டேன். அமவாசை இருட்டிலைகூட கைக் குறிப்பிலை தண்ணிகட்டிறனுன்தானே. ஆக திருநீத்து வாத் தியாரை நினைக்கத்தான் பயமாய் சிடந்தது."
"பேந்தென்ன? அவன் வந்தான் : தங்கச்சியையும் அவனை யும் நான்தான் வழி அனுப்பிவைச்சேன். அதுகள் படிச்சது தானே எங்கேயெண்டாலும் போய் சந்தோசமாய் வாழட்டும் எண்டு நினைச்சேன்,'
'அவை இரண்டு பேருமாய் போகேக்கை தங்கச்சி என்ரை காலிலை விழுந்து கும்பிட்டுது: அண்ணு நீயொரு தெய்வமடா எண்டு சொல்லிச்சுது. ‘எங்களை ஆசீர்வதிச் சுவிடடா அண்ணை எண்டு அது கேட்டது. எனக்கு வெக்

Page 12
14/கோடுகளும் கோலங்களும்
கமாய்த்தான் கிடந்தது. சந்தோசமாயும் கிடந்தது. கண் ணிரும் வந்தது. தங்கச்சி நீ எங்கையெண்டாலும் சந்தோச மாய் இருக்க வேண்டுமெண்டு நான் சொன்னேன். என்ரை குரல் கம்மி இருந்தது.'
**அவையள் அந்த இருட்டிலைபோக வெளிக்கிட்டினம். தங்கச்சியின்ரை புழுகத்தைப் பாத்து எனக்கு சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷமாய் இருந்தாலும், திருநீத்து வாத் தியாரை நினைக்க எனக்கு பயமாய்த்தானிருந்தது."
"தங்கச்சி போகேக்கை சொல்லிச்சிது. அண்ணு! ஐயாவை நினைச்சு பயப்படாதேயடா காலம் மாற மாற அதுக்கேற்ப மனிசனும் மாறத்தானடா வேணும். ஐயாவும் மாறுவார்; அவற்றை கோபமும் அடங்கும் எண்டுதான் நினைக்கிறேன்."
"அழுது கொண்டே- அப்பிடிச் சந்தோசத்திலையும் அவையள் ஏன் அழவேணும் - கையளை ஆட்டிக் கொண்டே அவையள் போச்சினம். நானும் கையளை ஆட்டிக்கொண்டே நிண்டேன். என்னை மறந்துபோய் ஆட்டி, ஆட்டி, ஆட்டி கைவலிக்கத்தான் நிப்பாட்டினேன். என்ரை நெஞ்சு குளிர்ந் திருந்தது."
"நான் இப்ப திருநீத்து வாத்தியாருக்கும் பயப்பட மாட்டேன். தங்கச்சி அவனுேடை ஓடினதைப்பற்றி, அவர் என்னைக் கேட்டா நான் இப்ப அவருக்கு முன்னலை துணிஞ்சு நிண்டு ஞாயம் சொல்லுவேன். ஓம்; உண்மையாச் சொல் லுவேன்."
"இரா முழுக்க நித்திரை வரேல்லை; புரண்டு புரண்டு படுத்தேன். கோழி கூவிச்சிது; குருவி கத்திச்சிது; சாடை சாடையாய் விடிஞ்சது. இருட்டுப் போக வெளிச்சம் வந்தது. ’’
'தங்கச்சியும் அவனும் இப்ப வெளிச்சத்திலை நடப்பினம் எண்டு நான் நினைச்சேன்.""
1969

ஒரு றெயில்
luggo To
க.க.வென்ற இரைச் சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண் களை மேயவிட்டுக் கொண் டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகு திகளைத் துழாவின. ஒடிக் கொண்டிருக்கும் காட்சி களில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்
-gs.

Page 13
16/கோடுகளும் கோலங்களும்
கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில், மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து ஏதேதோ கதைத் துக்கொண்டிருந்தார்கள். காற்சட்டை போட்ட உத்தியோ கம் பார்க்கும் மனிதர்களும், சாரம் அணிந்த சாதாரண தொழிலாளர்களும், கோவணம் தரித்த மீனவரும், பெண் களும், கிழவர்களும், இளைஞரும், குமரிகளும், கிழவிகளும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக, திட்டுத்திட்டாக அமர்ந் திருந்து ஏதேதோ அளவளாவிஞர்கள். மனிதர்கள் பிறந்த நாள் தொடக்கமே கதைத்துக்கொண்டே இருக்கிருர்கள்; ஆதாமும், ஏவாளும் கூடக் கதைத்திருப்பார்கள். இவர்க ளுக்கு எப்போதுதான் இக் கதை முடியுமோவென நான் எண்ணினேன்,
அவர்களில் பலர் சிரிப்பது போலவும், சிலர் உற்சாக மாகச் சத்தமிட்டுக் கதைப்பது போலவும், சிலர் நோயால் வருந்தி முனங்குவது போலவும், சிலர் அழுவது போலவும் எனக்குத் தெரிந்தது. ஆக இந்த மனித சமுதாயத்தின் பல் வேறு விதமான பல்வேறு தரப்பட்ட பிரதிநிதிகளும் அங்கு காட்சி தந்தார்கள்.
றெயில் நெடுமூச்சு விட்டவாறே விரைந்தது. ஏதோ வோர் ஸ்ரேசன் நெருங்கி விட்டதற்கு சமிக்ஞை தருவதைப் போல, கீச்சிடும் குரலெடுத்துக் கூவியது. இறுதியில், ஒரு முக்கல், முனங்கல், குலுங்கலுடன் ஒரு ஸ்ரேசனில் நின் றது. வெளியே மேய்ந்துகொண்டிருந்த என் கண்களை திடீ ரென உள்ளே திருப்பினேன். ஒரு நடுத்தரவயது மனிதரும், வயது இருபது மதிக்கத்தக்க, கண்டவரை மயக்க வல்ல ஒரு வித கவர்ச்சிகொண்ட இளம் சிவப்புநிறச் சேலையணிந்த ஒரு பெண்ணும், என்னுடன் மோதுவதுபோல, வாசல் கதவில் பிடித்து இறங்கிச் சென்றர்கள். வேறும் பலர் அக் கொம் பாட் மென்டிலிருந்து இறங்கினர்கள். என் மனம் அப்பெண் ணிலேயே இலயித்து விட்டது. அவளும், அம்மனிதரும் பிளாட்போமில் தெரிந்த மனிதத் தலைகளுடன் தலைகளாய் வேகமாக தெற்கே சென்று மறைந்தார்கள்.

pro Gpaớdo uuluGREUTüb/17
நான் அவளின் நினைவில் மயங்கிக்கிடந்தேன். வெறுமே ான் கண்கள் பிளாட்போமை நோக்கிக் கொண்டிருந்தன. பிளாட்போமில் கேட்ட வடை. வடை, சோடாச் சத்தங் கள், மெதுவாக என் நினைவுத் திரையில் தட்டின.
புறப்படுவதற்கு ஆயத்தமாக றெயில் கூவியது. வெளியே எட்டிப்பார்த்தேன். றெயிலின் வட அந்தத்திலிருந்த பெட் டியிலிருந்து காட் பச்சைக் கொடியைக் காட்டினர். றெயில் ஒரு குலுக்கலுடன் மெதுவாக ஊர்ந்து புறப்படத் தொடங் கியது, அந்தப் பெண் பிளாட்போமில் எங்காவது தென்படு வாளாவென என்மனம் ஏங்கியது. மெதுவாக ஊர்ந்த றெயில் படிப்படியாக தன் துரித கதியை எட்டிக்கொண் டிருந்தது. பிளாட்போம் மறைந்தது. தூரத்தில் ஸ்ரேசன் என் கண்களிலிருந்து மறையும் வரையும் நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சுடன் தலையை உள்ளே திருப்பினேன். றெயிலில் கூட்டம் குறைந்திருந்தது. என்னைத் தவிர மற்றவர்கள் யாபேரும் ஆசனத்தில் அமர்ந் திருந்தார்கள். எனக்கும் ஆசனம் கிடைக்குமோ எனத் தடவினேன்.
இருஜோடிக்கண்கள் குறுகுறுவென என்னையே உற்றுப் பார்ப்பதைக் கண்ட நான் துணுக்குற்றேன். திடீரென நான் தன்னைப் பார்ப்பதைக் கண்ட அவள் முகம் சிவக்கக் கீழே குனிந்தாள். அவளின் முகம் நிலாவட்டமாக என் மன தில் பதிந்தது. எலுமிச்சம் பழத்திலும் சிறிது மங்கிய நிறம் கொண்டவளாக அவள் இருந்தாள். மெல்லிய கோடுகளாக அவள்நெற்றியில் விபூதிஅணிந்திருந்தாள். நெற்றியின் மையத் தில் சின்னஞ்சிறிய ஒரு கறுப்புப் பொட்டு இட்டிருந்தாள். தலையை நேர்வகிடாய் பிரித்துப் பின்னி, சிவப்பு றிபன் கட்டியிருந்தாள். வெள்ளை நிற அரைப்பாவாடையும், வெள் ளையில் பச்சைப் பூப்போட்ட சட்டையும் அணிந்திருந்தாள், வாழைத்தண்டு போன்ற அவள் கைகளில் இரு புத்தகங் களையும், ஒரு கொப்பியையும் ஏந்தியிருந்தாள். மேலேயிருந்த புத்தகத்தின் பெயரை வாசிக்க முயன்றேன். 'பாரதியும்
2

Page 14
18/கோடுகளும் கோலங்களும்
ஷெல்லியும்" என்றிருந்தது. ஓர் இலக்கிய இரசிகை போலு மென்று எண்ணிக் கொண்டேன். என் கண்கள் அவளை விட்டகல மறுத்தன.
மீண்டும் தலையைத் தூக்கி என்னைப் பார்த்த அவள், நான் தன்னையே பார்ப்பதைக் கண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
நான் புன்முறுவலுடன் தலையை வெளியே திருப்பிக் கொண்டேன். என் மன இயல்பை எண்ணி வியந்தேன். சற்று நேரத்தின் முன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளில் மயங்கி, அவளை இன்ஞேர் முறை பார்க்க மாட்டேனே என்று தவித்த நான, இப்போது இப்பெண்ணைப் பார்த்து, இவள் அழகை அணுவணுவாக இரசித்து, இவளையே பார்க்க வேண்டும் போலத் தவித்துக் கொண்டிருக்கிறேன்?
என் மனம் அவளைப் பார்க்குமாறு தூண்டியது.
என் மனதின் இப்போக்கை எப்படியும் அடக்குவதென்று தீர்மானித்தேன். மனதை அவளின் நினைப்புக்களில் இலயிக்க விடாமல் வலிந்து திருப்ப முயன்றேன்.
மாலை நேரத்து இளம் வெயில் காய்ந்து கொண்டிருந் தது. கடல்நீர் வெயிலில் பளபளத்தது. வெண்ணிற அலைக ளில் பட்ட வெயில் என் முகத்திற்கு நேரே பிரதிபலித்துக் கொண்டிருந்தது. தூரத்தே அடிவானத்திற்கு இப்பால் மங் கலாய், சிறிய புள்ளியாய் ஒரு கப்பல் விரைந்து கொண்டி ருப்பது தெரிந்தது. கரைக்கு அண்மையில் வடமேல் பக்கத் தில் பாய் விரித்த படகொன்று காற்றின் போக்கிற்கு அமைய அசைந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு மனிதர் கள் இருப்பதுபோல மங்கலாக இரு புள்ளிகள் தெரிந்தன. ஆணும் பெண்ணுமாக இரு தம்பதிகள், புகையிரத வீதி யோரத்தில் றெயிலேயே பார்த்தவாறு நின்றனர். அவர்க ளுக்கிடையே நின்ற மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன். றெயிலைப் பார்த்து, கெக்கட்டமிட்டுச் சிரித்த வண்ணம் கையைக் காட்டிஞன்.

ஒரு றெயில் பயணம்/19
றெயில் ஒரு குலுக்கலுடன் அடுத்த ஸ்ரேசனில் நின்றது.
என்னேயே ஒரக்கண்ணுல் பார்த்துக் கொண்டிருந்த அவள் ஒரு புன்னகை பூத்தவண்ணம், அப்பாலே திரும்பி வானத்தைப் பார்த்தாள்.
எனக்குச் சிரிப்பு வந்தது. அதை வலிந்து அடக்கிக் கொண்டு நான் இருப்பதற்காக ஓரிடத்தைத் தேடினேன். அவளுடன் எப்படியாவது பேசித்தான் தீருவது என்று சங் கல்பம் பூண்டுகொண்டேன்.
நல்ல வேளையாக அவளின் அருகிலேயே, அவளை ஒட்டி குற்போல, ஒரு ஆள் இருக்கத்தக்க இடம் காலியாக இருந் தது. அவள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தயங்கியவாறு சென்று அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.
அவள் அலட்சியமாக திரும்பி என்னைப் பார்த்தாள் ! இதை அவள் எதிர்பார்த்திருந்தவள் போலத்தென்பட்டாள். அவள் கண்கள் ஒருவித கிறங்கவைக்கிற அழகைத் தந்து மின்னின. அவளுடன் எனது உடல் உராஞ்சுவதைப்பொறுக் காதவள் போல மெல்ல நெளிந்து கொண்டாள். என்னுடன் ஏதேதோ பேசத் தவிப்பவள்போல அவள் காணப்பட்டாள்.
வண்டி ஒரு குலுக்கலுடன் மீண்டும் புறப்பட்டது. அவள் என்னை அலட்சியம் செய்பவள்போல பழைய படியே ஜன்ன லூடாக அப்பாலே தெரிந்த வானத்தைப் பார்த்துக் கொண் டிருந்தாள். நான் ஒரு பெருமூச்சுடன் என் கண்களை வண் டியினுள்ளே உலாவவிட்டேன். என் பெருமூச்சினல் தன் கவனம் கலைந்தவளைப்போல அவள் என்னைத் திரும்பிப்பார்த் தாள். நான் அவள் பார்ப்பதைக் கவனியாதவன் மாதிரி வண்டிக்குள்ளே எதையோ வெறித்துப்பார்ப்பதாக பாசாங்கு செய்தேன். அவள் என்னை தலையில் இருந்து உள்ளங்கால் வரை அவதானிப்பதை நான் என் ஒரக் கண்களால் கண்டும்
காஞதவன் போலிருந்தேன்.

Page 15
20/கோடுகளும் கோலங்களும்
குழந்தையொன்று அவலக்குரலெழுப்பிஅழுதது. எனக்கு முன்னிருந்த சீற்றில் இருந்த அந்த இளம் தாய். அதை மார்போடு அணைத்து தூங்கவைக்க முயன்ருள். அவளின் அணைப்பின் இதத்தில் சுகங்கண்ட குழந்தையின் அழுகை ஓய, நான் அப்பால் என் கவனத்தைச் சற்றுத் திருப்பினேன். வண்டியில் கூட்டம் கூடியிருந்தது. கடந்த ஸ்ரேசனில்இரண்டு மூன்று பேர்கள் வண்டியில் புதிதாக ஏறியிருப்பார்களென எண்ணினேன். நான் நின்ற இடத்தில் ஒரு வாலிபன் நின்று கொண்டு ஏதேதோ கதைகளில் மூழ்கியிருந்தான். அப்பால் ஒரு மீனவன் தன் வெறுமையான கூடையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தான் சுவீப் ரிக்கெற் விற்கும் பையன் ஒருவன் தன் சுவீப்ரிக்கற்றுக்கள் கொண்ட பலகையை கையில் பிடித்த வண்ணம் கடற்கரையை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன். அவனுக்கு அப்பால் இருந்த ஓர் தாடிக்காரக் கிழவன் என்னையும், அவளையும் வெறிக்கவெறிக்கப் பார்த் துக்கொண்டிருந்தான். யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி ஒரு நவீன சினிமாப் பாடலைப் பாடிய வண்ணம் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள், எனக்கும் அவளுக்கும் முன்னுல் வந்து நின்று கொண்டு அந்தப் பாட்டைப் பாடி கையை நீட்டினுள்.
நான் எனது காற்சட்டைப் பையில் கையை விட்டு துழாவினேன். ஒரு ஐம்பதுசதக்குத்தி தவிர வேறென்றும் கையில் தட்டுப்படவில்லை. அவள் தனக்குப் பக்கத்தில் இருந்த கறுப்பு நிறக்கைப்பையை எடுத்து நாசூக்காகத் திறந்து ஒரு பத்துச்சதக்குத்தியை எடுத்து பிச்சைக்காரியின் கையில் போட்டாள். அவள் அந்தக் கைப்பையை வைத்தி ருந்ததை நான் இதுவரையில் காணவில்லை.
பிச்சைக்காரி என்னைப் பார்த்தாள். நான் 'இல்லை போ" என சைகை செய்தேன், அவளுக்குப் பக்கத்தில் இருந்து அப்படிச் செய்ய எனக்கு, வெட்கமாகத்தான் இருந்தது. ஆனல் என்னுல் வேருேன்றும் செய்ய முடியவில்லை. பெண் களின் கவனத்தை தம்பால் கவரவேண்டுமென்பதற்காக தம் கையில் இருக்கும் எதையும் கொடுத்து விடும் சில "மன்மதக்

ஒரு றெயில் பயணம்/21
குஞ்சுகளை" ப்போல அந்த ஐம்பது சதத்தைக் கொடுக்க எனக்கு மன்ம் வரவில்லை. :
அவள் என்ன நினைத்தாளோ எனக்குத் தெரியாது. ஒரு விதமாக என்னைத் திரும்பி பார்த்தாள். நானும் பார்த் தேன், மெளனமாக தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். பழைய செந்தழிப்பு முகத்தில் தென்படவில்லை. பிச்சைக் காரி அப்பால் சென்று தன் பிலாக்கணத்தை மீண்டும் ஆரம்பித்தாள். நான் மனதில் அப் பிச்சைக்காரியைத்திட்டி னேன்.
வண்டி, அடுத்த ஸ்ரேசனில் நின்றுவிட்டு புறப்பட்டது. பிச்சைக்காரக் கிழவியும் சுவீப் ரிக்கெற் பையனும் இறங்கி யிருந்தார்கள். குழந்தையை வைத்திருந்த பெண் அதை அணைத்த வண்ணம் பின்னுக்கு தலையைச்சாத்தி அமர்ந்திருந் தாள். கூடைக்கார மீனவன் அதில் இருந்த வண்ணம் அப்போ பிரசித்தமாயிருந்த ஒரு சிங்களப்பாடலை முணு முணுத்துக்கொண்டிருந்தான். வாசலில் நின்ற வாலிபன் முன்னைப்போலவே ஏதோ கனவில் ஆழ்ந்திருந்தான். தாடிக்காரக்கிழவன் ஆழ்ந்த தூக்கத்தில் இலயித்திருந்தான்.
அவளைப் பார்த்தேன்; அப்பாலே தெரிந்த காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்தவள்போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அழகிய கைகள், அந்தப் புத் தகங்களையும், கொப்பியையும் இறுகப் பற்றியிருந்தன. இப் போது, அப் பற்றுதலில் அவளின் கைப்பையும் சேர்ந்திருந் திதி
புகையிரதம் கரைப்பகுதியை விட்டு நாட்டுக்குள் புகுந்து ஒடத் தொடங்கியது. அழகிய வயல் பிரதேசங்க ளுக்கூடாக நெழிந்து, வளைந்து செல்லும் தண்டவாளத் தின்மீது அது வேகமாக சென்று கொண்டிருந்தது. இருண்டு வரும் மங்கிய வெளிச்சத்தில், அப்பகுதி அழகிய சோபை பெற்று மிளிர்ந்து கொண்டிருந்தது. நானும் அவளுடன் சேர்ந்து வெளியழகை நோக்கிக் கொண்டிருந்தேன்.

Page 16
22/கோடுகளும் கோலங்களும்
வழியிலிருந்த ஆற்றுப் பாலத்தில் பயங்கரச் சத்தத்தை எழுப்பிக்கொண்டே புகையிரதம் ஒடிக் கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் இரண்டு பெண்கள் குளித்துக்கொண்டிருந் தார்கள், பாதையின் அருகினில் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும் வாழைத் தோட்டங்களும் காணப்பட்டன.
இயற்கையையே பார்த்துப் பார்த்துச் சலித்த நான் மீண் டும் என் கவனத்தை அவள்மேல் திருப்பினேன். அவளின் கோலத்தில் எதுவித மாற்றமும் இல்லை. வெளியே வெறித் துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
'இந்தப் புத்தகத்தை ஒருமுறை தருவீர்களா” என் றேன். எனது குரல் மெல்லிய ஸ்தாயியில் ஒலித்தது. அவள் ஏதோ பிரமையில் இருந்து விடுபட்டவள்போல ஒருமுறை அசைந்து கொடுத்தாள். பின்னல் திரும்பிப் பார்க்காமலே தன் பின்னலில் ஒன்றைத் தூக்கி முன் பக்கம் போட்டு அதை அழகுபடுத்தினுள். அவள் தன் பின்னலைத் தூக்கி முன்னுல் போடும்போது அது என்னைத் தழுவி அணைத்துச் சென்றது. அவள் என்னைத் தழுவ மாட்டாளோவென ஏங் கினேன். நான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை. அது அவளின் காதில் விழவில்லைப்போலும் என எண்ணினேன்.
புகையிரதம் ஒரு குகையில் புகுந்து ஓடியது. அதனல், புகையிரதத்தினுள்ளே ஒரு செயற்கையான இருள் பரந் திருந்தது. அப்போது அவள் தன் முகத்தை உள்ளே திருப்பி இருப்பாளென நினைக்கிறேன். புகையிரதம் குகையை விட்டுக் கழிந்ததும் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள் பார்வையும் பார்வையும் முட்டி மோதிச் சித றின. அவள் நாணம்மிக்க் ஒரு புன்முறுவலுடன் முகத் தைக் கவிழ்த்துக்கொண்டாள்.
கூடையில் இருந்த மீன்காரக்கிழவன் 'ஆதரே மம ஆதரே" (நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன்) என்று முணு முணுத்தான். தாயின் அணைப்பிலிருந்த குழந்தை கையைக் காலை ஆட்டி விளையாடியது. வாசலில் நின்ற இளைஞன் ஏதோ நினைவில் சிரித்துக் கொண்டான்.

ஒரு றெயில் பயணம் 23
நான் அவளைப்பார்த்து "இந்தப் புத்தகத்தை ஒருமுறை தருவீர்களா?" என மீண்டும் வினவினேன். அவள் கைகள் அசைந்தன. அந்தப் புத்தகத்தை எடுத்து பவ்வியமாக என் கையில் தந்தாள். அப்போது கீழே இருந்த புத்தகத்தை அவதானித்தேன். 'இரு மகாகவிகள்"-கலாநிதி க. கைலா சபதி என்றிருந்தது. . நான் நினைத்தது சரிதான். இவள் இலக்கியத்தில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவள்தான் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
புத்தகத்தின் அட்டையைப் புரட்டினேன். "பிரமிளா” என்ற பெயர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிக்கொண்ே "'உங்கள் பெயர் பிரமி ளாவா?" என்றேன். -
ஆமாம் என்று தலையசைத்த அவள் "உங்கள் பெயர் என்ன? வென்ருள் தொடர்ந்து.
"இளங்கோ' என்றேன், "ஓ! சிலப்பதிகாரம் எழுதிய வரின் பெயரையே கொண்டிருக்கிறீர்களே" என்று கூறிச் சிரித்தாள்.
நான் புத்தகத்தின் பக்கங்களைத் தட்டினேன். ஒரெ ழுத்தையாதல் படிக்க மனம் வரவில்லை. அவள் நான் செய் வதையே பார்த்துக்கொண்டிருந்தாள். w
"உங்களுக்குச் சிங்களம் தெரியுமா?’ எனத் திடீரென விஞவினேன். அவள் சொன்ஞள். "எனக்கு இலக்கியத்தில் ஆழ்ந்த பற்று. தமிழ் இலக்கியத்தைப் படித்துக்கொண்டி ருந்த நான் தற்செயலாக ஒருநாள் "வீடு" என்றதோர் கவிதையைப் படிக்க நேர்ந்தது. அந்த அருமையான கவி தையை ஒரு சிங்களக் கவிஞன் எழுதியிருந்தான். நான் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையே படித்தேன். அன்றி லிருந்து நான் சிங்களம் படித்து சிங்கள இலக்கியங்களைப் படிப்பதென்று முடிவுசெய்தேன். இன்று எனக்கு சிங்களம் பெருமளவு தெரியும்!"

Page 17
24/கோடுகளும் கோலங்களும்
** அப்படியாளுல் எனக்கு சிங்களம் படிக்க உதவுகிறீர் களா?' என்றேன் நான்.
அவள் பலத்துச் சிரித்தாள், "நாம் இப்போது றெயி லில்" என்ருள். தொடர்ந்து "இப்பிரயாணத்தில் நானும் நீங்களும் நண்பர்கள், பின் நான் யாரோ நீங்கள் யாரோ" என்று கூறி ஒரு பெருமூச்சு விட்டாள்.
எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிவு வந்ததோ தெரியாது. நான் சொன்னேன். "இந்த றெயில் பயணத் தில் சந்தித்த உன்னை, நான் என் வாழ்க்கைப் பயணத்தி லேயே மறக்கமுடியாது பிரமிளா: நீ என் மனதில் ஏதோ ஒரு விதத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டாய்".
அவள் மெளனமாகச் சிரித்தாள். அவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் பளிச்சிட்டன. என்ன நினைத்தாளோ தெரியாது, என் மார்பில் முகத்தைப் புதைத்து அழுதாள். நான் அவள் தலையைக் கோதினேன்.
தாடிக்காரக் கிழவன் எங்களையே பார்த்துக் கொண்டி ருந்தான். மற்றவர்களை நான் கவனிக்கவில்லை.
றெயிலின் வேகம் குறைந்தது. தன் கண்ணீரைத் துடைத் துக் கொண்ட அவள் "நான் இவ்வளவு நாளும் எதையோ எதிர் பார்த்திருந்தேன், அது இங்கேதான் கிடைத்தது", என்று என் மார்பைத் தொட்டுக் காட்டிஞள்.
பழையபடியே கலகப்பாக அவள் மாறினுள். "என் புத்த கத்தைத் தருவீர்களா ? நான் இறங்கவேண்டிய ஸ்ரேசன் வந்து விட்டது”.
நான் புத்தகத்தை மூடி அவளிடம் கொடுத்தேன். றெயில் நின்று விட்டது.
அவள் இறங்கி என்னைப் பார்த்துச் சொன்னுள். "நீங் கள் சொன்னதுபோல இந்த றெயில் பயணத்தில் சந்தித்த உங்களை, இந்த வாழ்க்கைப்பயணத்திலேயே மறக்கமுடியாது. நான் எதிர்பார்த்ததை உங்களிடமே பெற்றேன். வாழ்க்கை

ஒரு றெயில் பயணம்|25
என்பதே எதிர்பார்ப்புகளில்தானே தங்கியுள்ளது" அவள் கைகளைக்கூப்பி என்னிடம் விடைபெற்ருள்.
அவளின் அழகிய உருவம் என் கண்களிலிருந்து மறைந்து கொண்டது, றெயில் சோகமயமான குரலெடுத்து கூவிக் கொண்டு புறப்பட்டது. அவள் கைகளை அசைத்து விடை கொடுத்தது, கண்ணிரிஞல் நனைந்திருந்த என் கண்களுக்கு மங்கலாகத் தென்பட்டது. நானும் பதிலுக்கு கைகளை அசைத்தேன்.
றெயில் நீண்ட தூரம் வந்துவிட்டது. உள்ளேகவனத்தை திருப்பினேன், கூடைக்கார மீனவனும், குழந்தையை வைத் திருந்த இளம் தாயும், வாலிபனும் இறங்கியிருந்தார்கள் தாடிக்காரக் கிழவன் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்களை வெளியே திருப்பின்ேன், மேகத்திரையினுள்ளே மூன்ரும் பிறைச்சந்திரன் உதயமாக எத்தனித்துக் கொண் டிருந்தான்.
றெயில், தன் பயண இலக்கை நோக்கிவிரைந்து கொண் டிருந்தது. 3k
968

Page 18
மின் விசிறிகள் வேக மாகச் சுழன்று கொண்டி ருக்கின்றன. மின் விளக்கு களின் மஞ்சள் நிறமான வெளிச்சத்தில், அவற்றின் நிழல் கரும்பூதங்களாய் கூரையில் அசைகின்றன. ஏதொவொரு ஸ்வலிப்பான அழகு பெற்றது போன்ற அந்தச் சூழலில் - கலகல வென்று பேசிக் கொண்டி ருக்கும் ஒவ்வீஸ் நண்பர் களின் குரலுக்கு அப்பால்மயங்குகின்ற மோகனமான தொரு மெளன&தமாய், ஏதோவொரு algorrijeg என் இதயத்தின் அடித் தளத்தில் பிறப்பதுபோன்ற அந்த இலயிப்பில், மூடி யிருக்கின்ற கண்ணுடி ஜன் னலுக்கப்பால் பார்க்கின் றேன். "ஒவ்விசில்" எனது இடத்தில் இருந்தவாறே பார்க்கின்றேன்.

மெளன தேம்/27
நெழிந்து, வளைந்து செல்கின்ற அந்த வீதிக்கப்பால், மேடும் பள்ளமுமாக ஒட்டு வீடுகளின் கூரைகள் தெரிகின் றன. வடகீழ் மூலையில் அருகருகாக இருக்கும் பிள்ளையார் கோவில் கோபுரமும், மாதாகோவிலின் சிலுவையும் ஏதோ தத்துவ உபதேசம் செய்வன போல் நிமிர்ந்து நிற்கின்றன. தூரத்தில் துறைமுகக் கம்பத்தில் அந்த மூன்று கொடிக ளும் க்ாற்றில் அசைந்துகொண்டே இருந்தன. ஒட்டு வீடு களின் மத்தியில் ஒற்றை மரமாய் நின்ற தென்னை மரத் தின் பச்சை ஓலைகளும் அசைந்தன. துறைமுகத்தில் நிற் கும் கப்பல் கொடிமரங்களின் நுனிகள் ஒட்டு வீடுகளுக்கு மேலாய்த் தெரிந்தன.
அந்த மெளனகீதத்தில் மனம் கிளுகிளுத்தது. எப்போ தாவது அபூர்வமாக சங்கீதக்கச்சேரிகளில் கேட்கும் வயலி னின் மெல்லிய-மனத்தை உருக்குகின்ற அந்த ஒலிபோல, நாத சக்திகள் எல்லாம் ஒன்று திரண்டு அழுவதுபோல, கள்ளம் கபடமற்ற ஒரு கன்னிப்பெண் மெல்லிய குரலெ டுத்து முளங்குவதுபோல..
வெளியேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பூமியை மூடியிருக்கும் மேகக்கூட்டங்களால் அரையிருட் டுக் கோலம் மெல்லிய தூறலாய் மழை விழுந்து கொண்டு இருக்கிறது. தூரத்தே சினிமாத் தியேட்டரின் சிவப்பு வெளிச்சத்தில் அதன் பேர் பளபளக்கிறது. ருேட்டில் கண்ணுக்கு எட்டிய வளைவில் சிவப்புச்சேலை கட்டி மொட் டாக்குப்போட்ட நடுத்தரவயதுப் பெண்ணுெருத்தி விரைந்து கொண்டிருந்தாள்.
கண்ணை மூடிக்கொண்டேஎன்னுள்ளே பார்க்கின்றேன். மனம் எதற்கோ ஏங்குவதுபோலத் தவிக்கிறது. இந்த உலக வாழ்க்கையில் விரக்திவந்தமாதிரி, உலகத்தையே துறந்து விடவேண்டுமென்ற உத்வேகம் வந்தமாதிரி, திடீரென்று சாவு வந்தால் புன்சிரிப்புடன் அதை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறமாதிரி. பச்சை, சிவப்பு, நீல, மஞ்சள் வர் னங்கள் சுழல்கிறம்ாதிரி. அந்த நிறங்களுக்கும் அந்த

Page 19
28/கோடுகளும் கோலங்களும்
மெளன. கீதத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறமாதிரி அந்த மெளனகீதம் மஞ்சல் நிறமானமாதிரி ஐயோ! தான் கண்களைத் திறக்கின்றேன்.
அபூர்வமான அழகுடன் உலகம் ஜன்னலுக்கப்பால் பரந்து கிடக்கிறது, அரையிருளில் அமிழ்ந்திருந்த உலகத் தில் மெல்லிய தூறலாய் மழை விழுந்து கொண்டிருந்தது. "லூயியாஸ்ரர்" என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற் றைக் கூறும் நூலில் அவன் முதன் முதல் கல்லூரிக்குப் படிக்கப்போகக் கோச்வண்டியில் ஏறியபோது இருந்த சூழல் வர்ணிக்கப்பட்டிருப்பது போன்று, அப்போதும் - நான் ஜன்னலால் வெளியே பார்க்கும்போதும் உலகம் இருந்தது. இயற்கை அழும்போது தன் இலட்சியத்தின் மாருதபிடியு ட்ன் புறப்பட்ட அவன் விஞ்ஞானியாஞன் நாஞே.?
நானும் இயற்கையுடன் அழுகின்றேஞ?
துன்பப்படுகின்ற உள்ளங்கள் அழுகின்றனவா? அப்போ, உலகமும் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றதா? நானும் துன்பப்படுகின்றேஞ ? அப்படியாகில், துன்பம் மோக்ன மானதா? மனேரம்மியமானதா? விபரிக்கமுடியாததவிப்பை
ஏற்படுத்துமா?-இறுதியில். இறுதியில். அமைதியை, ஆனந் தத்தை அளிக்குமா? இயற்கை அழுதால் பின்பு -உலகம் செழிக்குமா?
திடீரென்று ஒரு மின்னல்; உலகம் வெளித்து மீண்டும் இருள்கின்றது. இருள்; ஒளி துன்பம் - இன்பம்; புயல்அமைதி பச்சை-சிகப்பு- நீலம் - மஞ்சள் ஒன்றின்றி ஒன்றில்லை. ஒன்றிலே ஒன்று தங்கியிருக்கிறதா?
நான் அழுகிறேன்: நான் சிரிக்கிறேன்; நான் துன்பப் படுகிறேன்; நான் ஆனந்தமடைகிறேன்;
வாழ்க்கை இருள்; ஒளி; துன்பம்: இன்பம்.
மெளனத்தில் மெளனமான அந்த மெளனத்தைக் கிழித் துக்கொண்டு மாதாகோயில் மணி ஒலித்தது. அந்த ஒலி

மெளன தேம்/29
பரவி ரீங்காரித்து. ரீங்காரித்து, ரீங்காரித்து. என் காதில் இனிப்பதுபோல.
அந்த மெளனகீதம் அற்புதமானதொரு ராகக் குழை வுடன் இதயத்தை உருக்கி ஒலிப்பதுபோல எனக்குக் கேட் டது. எனக்குக் கண்ணீர் அரும்பிற்று. சிலப்பதிகாரத்தில் மாதவியும், கோவலனும் வாசித்த கானல் வரிப் பாட லிஞல் ஏற்பட்ட சோகமான விளைவும் அதன் அனுபவங்களும் போல எனக்கும். எனக்கும்.
நான் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன்.
அந்தத் தளுக்கு நடையுடன் "என்னதான் நடந்தாலும் அச்சமில்லை" என்ற அந்தக் கைவீச்சலுடன் அவள் வந்து சிரிக்கிருள். என் வாழ்க்கைப்பயணத்தில் எப்போதோ குறுக் கிட்டு நீங்காது நிலைத்துவிட்ட அவளுக்கும், மஞ்சள் நிறத் துக்கும், அந்த மெளனகீதத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கத்தான் வேண்டும்
அப்போதும் இப்படி ஒரு நாள்.
அமைதியான, அழகான, மனத்தைஉருக்குகின்ற, மேகங்களால் சூழப் பெற்ற, மழை தூறிக்கொண்டிருக்கின்ற ஒரு நாள், பல்கலைக்கழகத்துக் கலை மண்டபத்துக் கூரை போட்ட முன்றலில் மழைக்கு ஒதுங்கி, பஸ்சிற்காகக் காத்து திற்கின்றேன். அவளும் நிற்கின்ருள் சிலை மாதிரி நிற்கின் ருள் மஞ்சள் சேலைகட்டிக்கொண்டு, மஞ்சள் நிறத்தவளாய் மஞ்சள் மயமாய், ஜோதியாய் என் கண்களுக்குப் பளிச்சிடு கிருள். மெல்லிய குரலில் சோகமான ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டு, கொடிபோல நெழிந்து, சாய்ந்து நிற்கிருள்.
கணங்கள் கரைகின்றன; நிமிஷங்கள் கரைகின்றன: மணித்தியாலங்கள் பிறக்கின்றன. கண்களும் கலந்தமாதிரி.
பஸ் வருகின்றது; இருவரும் ஏறுகின்ருேம், ஒருவர் பின் ஒருவராக ஏறுகின்ருேம். எனக்குப் பின்ஞல் அவள் ஏறு கின்ருள்.

Page 20
30/கோடுகளும் கோலங்களும்
தான் "ரிக்கற்" எடுக்கின்றேன்; அவளுக்குக்கும் எனக் குமாக எடுக்கின்றேன். அவள் மெதுவாகப்புன்னகைத்தாள், 'நன்றி" என்ருள் மெல்லிய குரலில் "பரவாயில்லை" என்றேன் நான்.
இது முதல் அறிமுகம்.
என் மனதில் அவளின் கோலம் பதிந்து விட்டது. ஜெக ஜோதியாய் மினுங்கும் மஞ்சள் நிறத்தில் அவள் என்னுள்ளே நின்று முறுவலிப்பாள். மெல்லிய, சோகமான அந்தச் சினி மாப்பாடல் மெட்டு மெளன கீதமாய்.
வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை மயக்குகின்ற அனுபவங்கள்!
பிறகு.
நானும் அவளும் இணையானுேம், ஒருவருள் ஒருவர் கலந்து ஒருவராளுேம்-ஏகமானுேம்,
அந்த மெளனகீதத்தின் துன்பமான மயக்கில், நான் நன்ருக அடிமனத்தைத் துருவிப் பார்க்கின்றேன்.
ஒருவருள் ஒருவர் கலந்த நிலையிலே வாழ்ந்தோம். அப் படி ஒரு வாழ்க்கை, கவலைகளும், துன்பங்களும் இல்லாத மோகனமானதொரு வாழ்க்கை-அதைவிட்ட பரலோக சுவர்க்கம் இருக்குமென்று நினைக்க முடியாத வாழ்க்கை.
பச்சை போர்த்த மலையடிவாரங்கள், சலசலத்து நெளிந் தோடும் மலையருவிகள், பூக்களாய் பூத்துக் குலுங்கும் மலர் மரங்கள்-புல் பரந்த பூமிகள். அறிவுப் பெட்டகமாக அடுக் கடுக்கான மாடிகள் கொண்ட நூல் நிலையம், விரிவுரை மண்டபங்கள். எங்கும் அவளும் நானும் இணையாய், இணை untü, 92007 (UTü......
நான் சொல்வேன் "ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கையென்று. வாழ்க்கையை வெறுப்

மெளன கீதம்/31
பதெல்லாம் பொய். வாழ்க்கையை வெறுக்கத் தூண்டும் இலக்கியங்களும் பொய். "வாழ்வாவது மாயம்" என்ற வா நாட்டம் எல்லாம் பொய். வாழ்க்கைதான் உண்மை; அது தான் நிசம்; அதுதான் சுவர்க்கம். மஞ்சள்-சிகப்பு-நீலம்பச்சை வர்னபேதங்கள்போல, இன்பம்-துன்பம் - கவலைகளிப்புக் கொண்டதுதான் வாழ்க்கை'
அதன் மகத்தான அனுபவங்கள்.
ஆணும் பெண்ணும் இணைவதற்கு குலம், கோத்திரம், அழகு. சாதகப் பொருத்தம் ஒன்றும் வேண்டாம்; அன்பு வேண்டும். அன்புதான் குலம் - அன்புதான் அழகு - அன்புதான் பொருத்தம்.
நான் அவள் மீது அன்பு கொண்டேன்; அவள் என்மீது அன்பு கொண்டாள். இணைந்தோம். இறுகிளுேம், நான் அழகனல்ல. அவள் அழகி. அவளுக்கு நான் அழகளும், என்னைவிட வேருெருவரும் அழகில்லையாம். நான் சிரித் தேன். அன்பு என்னவென்று புரிந்தது.
நான் கண்ணை மூடியவாறே இருக்கின்றேன். அந்த மெளனகீதம் என்ன என்னவோ செய்கிறது.
ஒரு நாள்.
எனக்கும் அவளுக்கும் ஊடல்.
நூல்நிலையத்தில், ஆங்கிலக்கவிஞன் கீட்சின் நூலொன் றைப் பிரித்துப் படித்தபடி இருக்கின்றேன். அவள் வந்து கெஞ்சுகிருள்-மன்ருடுகிருள். நான் மசியவில்லை. அவள் என்னருகிலிருந்து மெதுவாக முணுமுணுக்கிருள், நாத சக்திகளெல்லாம் அழுவதுபோன்ற மெல்லிய சோகதேமாய் .
நான் என்னை மறந்து அவளை அனைக்க முயல்கிறேன். அவள் சிரிக்கிருள்; வெண்கல மணியின் நாதமாய்-கலீர் AsôlQptskvgy, ..... V

Page 21
32/கோடுகளும் கோலங்களும்
என்னைப் பொறுத்தவரையில் அவளொரு இசைமேதை கலாரசிகை. எத்தனையோ இயற்கையின் அற்புதக் காட்சிகளை அவள் எனக்குக் காட்டி வியாக்கியானங்கள் செய்து இருக் கிருள். ருேட்டின் வடக்கே உயர்ந்த மலைச்சிகரத்தின் புகார் மூடிய கோலங்கள், காலை இளம் பரிதி வெளிச்சத்தில் பளிங் குக்கற்களாய் பளிச்சிடும் மலை அருவிகள், புல்நுனிகளில் மணி களாய் மினுங்கும் பணித்துளிகள், இலைகளே இல்லாமல் பூத் துக்குலுங்கும் மலர்மரங்கள். நிசப்தமான வானத்து அந்த காரத்தில் ஜோடி, ஜோடியாய் பறக்கும் பறவைகள்.
இதையெல்லாம் நாங்கள் தனிமையாக நின்று பார்த் திருக்கிருேம். எங்களை மறந்த நிலையில் ஒன்ருய் நின்று அவற்றில் கலந்துஇலயித்திருக்கிருேம்; அவற்றுக்கு எங்களால் புரியக்கூடிய அர்த்தங்கள்செய்து மகிழ்ந்திருக்கிருேம்.
அவள் சொல்லுவாள் "நீங்கள் ஒரு கலைஞன் என்று' ந்ண்பர்கள் சொல்லுவார்கள். "உன் படைப்புச் சக்தியால் எமது சமுதாய அவலங்களைச் சித்தரியாது, வாழ்க்கைப் போராட்டங்களை வர்ணிக்காது வெறுமனே இயற்கை, காதல், தனிமனித மன உணர்ச்சிகள் என்று உழன்று கொண் டிருக்கிருயே' என்று.
எனது கதைகள், கவிதைகள் அற்புதமாய் இருக்கின் றனவென்று அவள் பாராட்டுவாள். நான் நண்பர்கள் கூறும் குறைகளைக் கூறுவேன். அவள் வானத்துப் பறவைகளைக் காட்டிக் கேட்பாள். "அவைகளுக்கு வாழ்க்கைப்போராட்ட மில்லையா - பசியில்லையா - எவ்வளவு ஆனந்தமாகப்பாடி இயற்கையை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றன" வாழ் கின்றன. வாழ்க்கையிருக்குமட்டும் வாழ்க்கைப் போராட் மும் இருக்குமென்றும் அவள் கூறுவாள். "லளிதகலைகளி ஞல் மட்டுமே வாழ்க்கையில் எம்மை மறந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம்" என்பாள் அவள்.
நான்தலையசைப்பேன், மனப்பூர்வமாக தலையசைப்பேன், வாழ்க்கை, கலை, இலக்கியம் எல்லாவற்றிலும் என் கருத்து களும் அவள் கருத்துக்களும் ஒன்றே. அதனுற்போலும் நாம்

மெளன கீதம்/33
எம்மை மறந்து பரிபூரணமாக ஒருவரில் ஒருவர் கல்க்க முடிந்தது. ஆணும் பெண்ணும் இணைய அன்பு இருந்தால் மட்டும் போதாது. மனப்பொருத்தமும் வேண்டும்தான். இருவர் மனத்தினல், மன உணர்வுகளினல் - அதனுல் உயிரி ஞல் கலப்பதுதான் உண்மையான வாழ்க்கை
மனித வாழ்க்கையின் மன உணர்ச்சிகள், சூழல் பாதிப் புகள், அவற்றின்விளைவுகள் என்பனவற்றைப்பற்றிதீவிரமாகச் சிந்தித்து ஒரு கவிதை எழுதியிருந்தேன் "வாழ்க்கையின் மூச் சுக் காற்று" என்ற மகுடத்தில் எழுதிய அக்கவிதையை, "வாழ்க்கை என்பது கனவின் தொகுதிகள்" என்ற முத்தாய்ப் புடன் முடித்து வைத்தேன்.
அவள் அக்கவிதையைப் பார்த்தாள். அவள் கண்கள் பரவசத்தில் மின்னின. 'வாழ்க்கை என்பதே எத்தனை எத் தனையோ கனவுகளின் தொகுதிகள்தான்' என்ருள். "லைவ் இஸ் மாஸ் ஒவ் றீம்ஸ்" என்று அந்த இறுதிவரியை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்துத் துள்ளினுள். என்னை அளவுக்கு மீறிப் புகழ்ந்தாள் .
* 'இந்தக்கவிதையை நான் மட்டும் எழுதவில்லை; என்னு டன் கலந்த நீயுந்தான் எழுதினய் உன்னுடன் கலந்த அனு பவங்கள்தானேடி இந்தக் கவிதை' என்றேன்.
அவள் கன்னத்தில் செம்மை பரவ முறுவலித்தாள். ஏனுே, எனக்கு முதன் முதலில் அவளைச்சந்தித்தபோது மனதில் பதிந்த அந்த மஞ்சள் நிறமும், அந்தச் சோகமான பாடல் மெட்டும் நினைவில் தட்டின. .
நான் கண்களை மூடியபடியே இருக்கிறேன். மின் விசிறி களின் வீர், வீர் சத்தம் , காதில் விழுகிறது.
இந்த உலகின் ஊனக்கண்களுக்கு, நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தோம். அப்போதும் உலகம் அரையிருட் டில் ஆழ்ந்திருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. அவள் மஞ்சள் சேலை கட்டியிருந்தாள் அந்தப் பாடலை முணு
8

Page 22
34/கோடுகளும் கோலங்களும்
முணுத்துக் கொண்டிருந்தாள். கரிய புகையைக் கக்கிக் கொண்டு புகையிரதம் வந்தது. நான்தான் அவளை வழி யனுப்பி வைத்தேன் அவள் அழவில்லை. நானும் அழவில்லை. நாங்கள் அழக் காரணம் இருக்கவில்லை. ஏன் நாங்கள் அழ வேண்டும்? எங்களுக்குத் துன்பம் வரவில்லை. துன்பம் வந் தாலும் அழவேண்டுமென்று நியதியிருக்கிறதா என்ன?
நான் உண்மையில் ஒருமுறை அழுதிருக்கிறேன். அவளும் அழுதிருக்கிருள். பஸ்சில் அறிமுகமானதின்பின், முதன் முதல் நாங்கள் இருவரும் பூந்தோட்டத்தில் ஒன்ருகச் சந் தித்தபோது-என்னை அவளும், அவளை நானும் புரிந்தபோதுநாங்கள் ஒருவரில் ஒருவராய்க் கலந்தபோது - அப்போது நாங்கள் அழுதிருக்கின்ருேம். எதற்காகவோ அழவேணும் போல இருந்தது. அழுதோம்: அந்தத் தவிப்பு தீருமட்டும் அழுதோம்.
நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிட்டதாக எல் லோரும் சொல்கிருர்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவில்லை. எங்களைப் பிரிக்க ஒருவராலும் முடியாது. நாங்கள் அமரத்துவமான காதலர்கள். என்னுள் அவள் இருக்கிருள்; அவளுள் நான் இருப்பேன்; நிச்சயமாக இருப்பேன்.
நாங்கள் புறவாழ்வில் ஒன்ருக இருக்க முடியாதென்று அறிந்தபோது - இந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீற முடியாது என்று உணர்ந்தபோது நாங்கள் அதை எதிர்த் துப் புரட்சி செய்யவில்லை. எங்களுக்குப் புரட்சி செய்ய வலுவில்லை. நாங்கள் புரட்சிக்காரர்களல்ல. நாங்கள் கலைஞர்கள்.
அப்போது அவள் சொன்னுள், 'நாங்கள் ஒன்ருகவே இணைந்து வாழ்வோம். என்மனதில் நீதான் என்றும் வாழ் வாய்; சமுதாயம் எங்களைப் பழிவாங்க முடியாது. என் ஆத்மா என்றும் உன்னையே நாடி நிற்கும். என் உடலை சமுதாயம் என்ன செய்தாலும் செய்யட்டும் என் உயி ருள்ளவரையில், இந்த உலகின் எங்கோ மூலையில் மான

மெளன கீதம்/35
சிகமாக உன்னுடனே ஒரு கற்புள்ளமனைவியாக நான் QimrybG36Qu6örʼʼ .
அப்போதும் நான் அவளைப் பரிபூரணமாக புரிந்து கொண்டேன். அப்போதும், என் கண்களில் நீர் வடிந்தது. புறவாழ்வில் அவள் யாருக்கோ மனைவியாக இருந்தா லும் உண்மையில் என்மனைவியாகத்தான் அவள் என்றும் இருப்பாள்.
நானும் அவள் கணவனுகவே இருப்பேன்; உலகை மூடிய அரையிருட்டு, தூறும் மழை, மஞ்சள் நிறம், மெளன கீதம் . ‘என்னதம்பி நித்திரையோ' என்ற குரல் கேட்கிறது. கண்ணை விழித்துப் பார்க்கிறேன். கடிகாரம் நாலரை மணியைக் காட்டுகிறது.
ஜன்னலுக்கப்பால் வெளியே பார்க்கிறேன்.
மழை தூறிக்கொண்டிருக்கிறது. உலகம் விரிந்து கிடக்கிறது. மனதில் மெளனகீதம் ஒலிக்கிறது. பச்சை சிவப்பு, நீலம், மஞ்சள் 米
1969

Page 23
4
வேட்டைத் திருவிழா”
"மெய்யடியார்களே.
ஒலிபெருக்கியினூடாக வந்த அந்தக் கம்பீரமான குரலைக்கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. தங் களில் யாரும் மெய்யடியார் களல்ல என்று சொல்வது போல, மீண்டும் பழைய பரபரப்பு அங்கு மேலோங்கி நின்றது. குழந்தைகள் கும் மாளமடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பெண் கள் தேர்த்திருவிழாவுக்கு வரமுடியுமோ வென "நாட் கணக்குப் பார்த் து க் கொண்டும், அடுத்தவளின் சேலை,நகை,கண்ணுேட்டம், ஒய்யாரம் என்பனவற்றைப் பற்றி சல்லாபித்துச் சிரித் துக்கொண்டும் நின்ருர்கள். கோவிலின் தெற்குப்புற அரசமரநிழலிலும், அதற்

வேட்டைத் திருவிழா 37
குக்கிழக்கே நின்ற பூவரசமர நிழலிலும் ஒதுங்கி நின்ற - நகரிலே உத்தியோகம்பார்க்கிற - திருவிழாவுக்காக லீவில் ஊருக்கு வந்திருந்த "வெள்ளைவேட்டி கைக்கடிகார மனிதர் கள்’-நகரின் அரசியல்நிலை பற்றியும் மந்திரிமார்கள் வைத் திருக்கிற இரகசியத் திட்டங்கள்பற்றியும், ஆட்சிப்போக்கி லுள்ள 'மாபெரும் குறைகளைப்பற்றியும், "எல்லாம் தெரிந் தவர்களாக" மற்றவர்களை நம்பச்செய்யப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொல்பவற்றையெல்லாம் வேதவாக்காகச் சிலர் நம்பித் தலையாட்டிக் கொண்டிருந் தார்கள். கிராமத்துப் பத்திமான்கள் சிலர் அங்குமிங்கும் ஒடி அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்,
"எல்லாம் வல்ல எங்கள் பெருமான் வேட்டைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கின்ருர், அழகிய குதிரைவாகனத்தில் அவர் பவனி வரப்போகிருர். அந்த அழகுக்காட்சியைக் காணத் தயாராகுங்கள். உங்கள் மனத்திலுள்ள குறைகளை வேதனைகளை அவனிடம் முறையிட்டு அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்’’.
*வேட்டைக்குக் கிளம்பி, "பவனி வரப்போகின்ற இறை வனிடம், தங்கள் குறைகளை "முறையிட்டு அவற்றை நிவர்த் திக்க அடியார்கள் தயாராஞர்கள்.
இறைவன் குதிரைவாகனத்தில் ஆரோகணித்து எழுந் தருளினன். அவனை வண்ண வண்ண மலர்மாலைகளினுலும், துணிவகைகளினலும் அலங்கரித்திருந்தனர், அவனின் ஒரு கரத்தில் ஒரு நீண்டதண்டைச் செருகியிருந்தனர்; மறுகரத் தில் அம்புடன்கூடிய வில்லொன்றைச் செருகியிருந்தனர்; மறுகரத்திஞல் இறைவன் குதிரைக் கடிவாளத்தைப் பற்றி யிருந்தான்.
இந்த இறைவனுக்கு ஐந்து கரங்கள்; அவன் விக்கினங் களைத் தீர்க்கும் விக்கினேஸ்வரன்; கணபதி; விநாயகன், அவன் சில வேளைகளில் கோபம் கொண்டிருப்பான்; சில வேளைகளில் மிகமிக மகிழ்ச்சியாய் உல்லாசமாய் இருப்பான்; சிலவேளைகளில் தூங்கிவழிந்துகொண்டிருப்பான்; சிலவேளை களில் எதையுமே இலட்சியம் செய்யாத மோனநிலையில்

Page 24
38/கோடுகளும் கோலங்களும்
இருப்பான். இப்போது அவன் சிறிது புன்னகைபூத்த மாதிரி எனக்குத் தெரிந்தது. .
அவனைப்பற்றியும் என்னைப்பற்றியும் நான் இன்னும் நிறையச் சொல்லவேண்டும். அவன் ஊரின் வடக்குப் பகுதி யில் கோவில் கொண்டிருந்தான், எங்கள் கிராமத்தில் ஒரளவு குறிப்பிடக்கூடிய ஒரு பணக்காரனுக்கு இருக்க வேண்டிய அளவுக்கும் கூடுதலான சொத்துக்களைப் பெற் றிருந்தான். இப்போது, நானும் அவனும் கண்ட கண்ணில் குசலம் விசாரிக்கின்ற நண்பர்கள் போலத்தானிருக்கின் ருேம். எந்த நேரமும், ஒரு செல்லப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய செருக்கோடுதான் அவனிருந்தான். அவன் என் னிலும் பார்க்க எத்தனை - எத்தனையோ மடங்கு வயதில் பெரியவன். நான் பிறந்து வளரத் தொடங்கிய காலத்தில் எனக்கு அவனை என் பெற்ருேர் அறிமுகம் செய்துவைத் தனர். அப்போது நான் அவனில் மிகுந்த மதிப்பு வைத் திருந்தேன். உண்மையில், சொல்லப்போளுல் - அவன் எனக்கு ஏதும் செய்துவிடுவானே என்ற பயங்கலந்த மதிப்பு வைத் திருந்தேன். சிறிது காலத்தில் எனது ஆசைகளையும், தேவை *ளையும் நிறைவேற்றுவதற்காக அவனுடைய சகாயத்தை எதிர்பார்த்து அவனை மதித்துவந்தேன். சிலவேளைகளில் எனது தேவைகள் நிறைவேருதபோதும், எனது ஆசைகள் நிறை வேருத நிராசைகளானபோதும் மனங்கொதித்து அவனை அலட்சியப்படுத்தவும் பார்த்தேன். இப்போது எங்கள் உறவு ஒரு செளஜன்யமான நிலையிலுள்ளது. அவன் . வீட்டில் நிகழும் விசேடங்களுக்குப் போகவேண்டுமென்ற அளவுக்கு அவணுேடு இன்னும் கொஞ்சம் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டுமென்ற அளவுக்கு - அந்த உறவு நெருங்க வேண்டுமென்று எனக்கொரு ஆசை
வேட்டை ஊர்வலம் கிளம்பிற்று. குழந்தைகள் 'அரோகராக் கோஷம் எழுப்பினர்; சிலர் வெற்றிக் கொடிகளை முன்னுல் பிடித்து துள்ளித் துள்ளிச் சென்றனர்; சிலர் தீப்பந்தங்களை உயரப்பிடித்து பவ்விய, மாக நடந்தனர். பஜனைக் கோஷ்டி ஒன்று இறைவனைப்.

வேட்டைத் திருவிழா/39
பின்தொடர்ந்தது. ஆண்டவனின் அனுக்கிரகத்துக்கு ஆளாக விரும்பிய, வாட்டசாட்டமான இளைஞர்கள் சிலர் ஒருவர் மாறி ஒருவராய் அவனைச் சுமந்தனர். பெண்கள் கூட்டம் வண்ணங்களாய் அசைந்தது.
இறைவன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குப் புறப் பட்டான். நானும் பரிவாரங்களில் ஒருவனுக அசைந்து நடந்தேன். அங்கங்கு நடந்த வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு நடந்தேன். இடைக்கிடை ஞாபகம் வந்தவனுக எழுந்தருளும் இறைவனின் "திருமுகத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தேன். அவன் முகத்தில், அதே புன்னகை மாருது அப்படியே இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது.
கோவிலின் தென்மேற்குப் புறத்தில், தோட்டக் கிணறு களைச் சுற்றி நின்ற தென்னைமரங்களின் இடைவெளிகளு டாகவும், ஆங்காங்கேயிருந்த வீடுகளைச்சுற்றி சோலையாய்க் கவிந்திருந்த மரங்களினூடாகவும் மாலைச்சூரியன் தன் கதிர் களேப் பரப்பி நின்றன். மெல்லியகாற்று ஊர்ந்தது. இனிய கீத அலைகளாம் நாதஸ்வர ஓசை மிதந்தது.
இயந்திர இயக்கமான நகரவாழ்வின் வேதனைகளால் மரத்த மனதை, கிராமியத்தின் உயிர்துடிக்கும் அழகுகளில், இயக்கங்களில், அப்பாவித்தனங்களில் இலயிக்கவிட்டு என்னை மறந்திருந்தேன் நான். பெண்கள் கூட்டத்தில், இறைவனை நோக்கி சிரசின் மேல் கரங்களைக் குவித்திருந்த அந்தப் பெண்ணின் முகம் திடீரென என் கண்களை உறுத்திற்று.
பிறந்தது முதற்கொண்டு இருபது வயது இளைஞனகும் வரை கிராமத்து அப்பாவி மனிதர்களுள் ஒருவனுகவே நான் வாழ்ந்தேன். அந்தச் சூழலிலேயே துள்ளி விளையாடி னேன்; அந்தச் சூழலிலேயே படித்தேன். அந்தச் சூழலிலேயே அந்தந்தப் பருவத்துக் கனவுகளும் கண்டேன். அந்தச் சூழ லிலேதான் இன்பங்களையும் துன்பங்களையும் சுமக்கும் சுமை தாங்கியாக நான் வளர்ந்தேன். அப்போதெல்லாம்கூட நான் அந்தப் பெண்ணை எதிர்ப்படுவதுண்டு; பழகியதுண்டு: இரண்டொருமுறை அவளுடன் பேசிச் சிரித்த ஞாபகம்கூட
உண்டு.

Page 25
40/கோடுகளும் கோலங்களும்
அப்போதெல்லாம் உறுத்தாத அவளின் அந்த முகம் - சின்ன வாயினுாடாக வெளியே தெரியும் அந்த முன் வாய்ப்பற்களைக்கொண்ட அந்தமுகம் என் கண்களை உறுத் தியது.
அவள் எளிமையான வெளிர்நிற கைத்தறிச் சேலைகட்டி இருந்தாள். என்னிலும்பார்க்க நாலைந்து வயது கூடிய வளாகவிருந்தும், வயதின் முதிர்ச்சி தெரியாத இளம் பெண் போலவே அவள் காட்சிதந்தாள். கரங்களை தலைமேற் குவித்து. கண்களை மூடி தன்னை மறந்து நின்ருள் அவள். அவள் கழுத்தில் தங்கத்தாலி மின்னிற்று.
எப்படி இவ்வளவு நிர்ச்சலனமாக-அமைதியாக இருக்க முடிகிறது அவளால்? எப்படி இவ்வளவு அடக்கமாக-பவ் வியமாக ஆண்டவனை வழிபட முடிகிறது அவளால்? எப் படித் தன்னை மறந்து குதூகலத்தில் திளைக்க முடிகின்றது அவளால்? எப்படித்தான் வாழ்வின் உயிர்த்துவமான இயக் கத்தோடு சங்கமிக்க முடிகிறது அவளால்?
டும் டும் டும்மென மேளம் முழங்கிற்று. வழியில் ஒரு வீட்டின் வாசலில், நிறைகுடம் வைத்திருந்தார்கள். அர்ச் சகர் மந்திர உச்சாடனம்செய்து ஆண்டவனுக்குத் தீபம் காட்டினர். பித்தளை நிறைகுடம் மாலை வெயிலின் இடை நுழைந்த கிரணங்கள் பட்டு மஞ்சளாய் மினுங்கிற்று. ஒருவர் இளைஞர்களின் தோளிலிருந்த, குதிரை வாகனத்தில் ஏறி, சிவந்த பட்டொன்றை ஆண்டவனுக்குச் சாத்தினர். 'அரோ கராக் கோஷம் முழங்கிற்று. அவளும் கைகூப்பி நின்ருள்.
நான் இறைவனைப் பார்த்தேன். அவனின் அந்த மர்மப் புன்னகையே தெரிந்தது.
ஊர்வலம் அசைந்து நகர்ந்தது. ஒரு கார் போவதற் காக வீதியில் ஒர் ஒரமாக ஊர்வலத்தை ஒதுக்கச் சிலர் முனைந்தார்கள். இடுப்பில் கட்டிய சால்வையை அவிழ்த்து உதறி, 'பாதைக்கு அரோகரா, பாதைக்கு அரோகரா’ என்று ஒருவர் சத்தமிட்டார். இன்னெருவர், வீதியோர மாயிருந்த வேலியில் ஒரு பூவரசங்கொப்பைப் பிடுங்கி,

வேட்டைத் திருவிழா/41
"வழியைவிடுங்கோடா' என்று குழந்தைகள் நின்றபக்கமாக உறுமினர்.
ஒருவிதமாக அந்தப் பெரியகார் "பவனியைக் கடத்து சென்றது. அதனுள் ஒர் ஆணும் ஒரு பெண்ணும் முன் சீற்றில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆணே காரைச் செலுத்தினன். பெண் பவனியை வேடிக்கைபார்த்து எதிை யெதையோ ஆணுக்குச் சொன்னுள்.
கோடைவரட்சியினல் காய்ந்திருந்த நிலத்திலிருந்து கார் சென்றதினுல் புழுதி கிளம்பிப் பரவிற்று.
"சரியான புழுதியப்பா' என்ருர் ஒருவர்.
"வேட்டை என்ருல் புழுதி பறக்காதா" என்ருர் மற்றவர்.
ஒரு கூட்டம் குலுங்கிச் சிரித்தது.
நான் எழுந்தருளும் இறைவனைப் பார்த்தேன். சிவனும் அப்படியேதான் சிரித்துக்கொண்டிருந்தான் வேட்டைக்குப் புறப்பட்டவன் முகத்தில் "வீரத்தைக் காணுேம். என்ன அர்த்தம்பொதிந்த பரிகாசமான சிரிப்பு !
வேட்டையாடும் இடத்திற்கு இன்னும் கொஞ்சத் தூரமே இருந்தது. வீதியிலிருந்து இறங்கி, கிழக்கே சிறிது தூரத்தில் தெரியும் கோவிலுக்குப் பின்புறமுள்ள செம்மண் வெளியில் வேட்டைக்கான களம் அமைத்திருந்தார்கள். நிலத்தைக் கூட்டித் துப்புரவு செய்து நீர் தெளித்துப் புனிதப் படுத்தி இருந்தார்கள். வெளியின் நடுவில், கொழுத்த கன்னிவாழை ஒன்றை நட்டு, உரப்படுத்தியிருந்தார்கள். வாழையைச் சுற்றிக் கிட்டத்தட்ட முப்பதுயார் விட்டத்தில் கூட்டம் வட்டமாகக் குழுமிற்று. இறைவன் வட்டமான கூட்டத்தின் நடுவில், பாயப்போகும் புலியாகத் தன் நெருங் கிய பரிவாரங்களுடன் நின்ருன். -
நடப்பட்டிருந்த வாழையைச் சுற்றித் துரிதகதியில் அவனைச் சுமந்துகொண்டு ஒடிஞர்கள்; ஒருவிதமான பெருமித நடையில் மூன்றுமுறை அதனைச் சுற்றி வந்தார்கள். குதிரை

Page 26
42கோடுகளும் கோலங்களும்
முன்னங்கால்களேத் தூக்கித் தூக்கி ஆடிற்று வயதான அர்ச்சகர், கூரான கத்தியைப் பிடித்துக்கொண்டு, வாழைக்கு அருகில் நின்ருர், இறைவனே முன்னும் பின்னுமாகக் கொண்டு ஒடிஞர்கள்.
மூன்ரும்முறையாக இறைவன் பின் சென்று முன் வரு கையில், அர்ச்சகர் கத்தியை ஓங்கி வாழையை வெட்டிஞர்: அதிேகதியில் மறுமுறையும் வெட்டிஞர்; முதல் வெட்டில் துண்டானமாதிரி வாழை அடுத்த வெட்டில் துண்டாக வில்லே, டும், டும் டும்மென மேளம் முழங்கிற்று நாதஸ்வரம் கனராகத்தில் நீண்டொலித்தது; சங்கு ஓங்காரித்தது; கூட்டம் பக்திக்கோஷம் எழுப்பிற்று.
இறைவனுக்குப் பன்னீர் தெளிக்கப்பட்டது; வெட்டப் பட்ட வாழைத்துண்டுகளில் குங்குமத் திரவியங்களிட்டு நீர் ஊற்றப்பட்டது; தொடர்ந்து இறைவனுக்கு "பஞ்சாலாத்தி" தீபம் காட்டப்பட்டது. வேட்டையாடப்பட்ட இரையின் ஒருபகுதி துணியில் பொதியாக குதிரை வாகனத்தின் முன் னங்காலொன்றில் கட்டப்பட்டது.
அந்த முகத்தில் எங்கிருந்து இந்தப் பிரகாசம் வந்தது. அந்த முகம். நாசிலந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பாடசாலைக்குப் போகும் வழியில் எதிர்ப்பட்டு தத்தளிக்கும், அந்தச் சோகம் தோய்ந்த, வரண்ட, விரக்தியான முகம்.? நீல உடைகளின் பின்னணியில், மஞ்சளாய் அவள் தாலி மினுங்க, குங்குமப் பொட்டிட்ட நெற்றிமேடு சுருங்க அவள் புன்னகை பூத்தாள். அவள் இன்னமும் என்னே மறக்கா திருக்கின்ருள். அவள் என்னே மறக்கமுயலாமல் இருக் கின்ருளோ அல்லது முடியாமலிருக்கிருளோ?
வேட்டை முடிந்து ஊர்வலம் கிளம்பிற்று. உயிர்சுமந்த புள்ளிகள் பல்வேறு சுருதிபேதங்களாய் அசைந்தன.
எங்கிருந்து இந்தப் பேரமைதி கவிந்தது. ! எப்படி இந்தப் பரபரப்பு அளித்தது.

வேட்டைத் திருவிழா/43
உணர்ச்சிகள் வடிந்து அடங்கிய பின்னெழும் அமைதி யும் இது போன்றதா.!
உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் பின்னெழும் ஆழ்ந்த அமைதி பூரணத்துவமான அமைதி அழகின்-ஆத்மார்த்த மான கவித்துவம் நிரம்பிய அமைதி.
இதுதானு பேரின்பம் வாழ்க்கையின் சாரமே இதுதானு!
நான் இறைவனேப் பார்த்தேன். அவன் எல்லாம் தெரிந்
தவனுக, அமைதியாக, மெல்லிய புன்னகை பூத்தான்.
அந்த இறைவனுக்கு ஐந்து கரங்கள் அவன் விக்கினங் களேத் தீர்க்கும் விக்கினேஸ்வரன் கணபதி விநாயகன். *
S.

Page 27
5
தடங்கள்
வானம் கறுத்து இருண் டிருந்தது, காற்றுப் பலமா கச்சுற்றிச்சுழன்றுஅடித்தது. நீலக்கடலலைகள் மடிந்து வெண்ணுரை கக்கி கரை யில் மோதித் திரும்பின.
அவனும், நந்தகுமா ரும், பொன்னுத்துரையும் கடற்கரை த் தாழை மர மொன்றின் நிலம் நோக்கிச் சாய்ந்த கிளையில் அமர்ந் திருந்தனர். அவன் ஏதோ நினைவில் மனத்தைப் பறி கொடுத்த இ லயிப் பில், மனத்தில் அடங்காது கட்டு மீறிக் கொப்பளிக்கும் குதுர கலத்தில், வார்த்தைகளில் சிறைப்பிடிக்க முடி யாத அந்த உணர்ச்சிகளின் சுகா னுபவத்தில் மூழ்கிஏதேதோ இராகக் கோலங்களை மனத்

தடங்கள்/48
துள் வரைந்து- அவற்றுக்கு ஒலி அர்த்தம் கொடுக்கும் முனைப் பில் எதைஎதையோ முணுமுணுத்துக் கொண்டு - அந்த முணுமுணுப்பின் சுருதிபேதங்களில் மனத்தைச் சஞ்சரிக்க விட்டு அந்த சுருதிபேதங்களே தனது குதூகல உணர்ச்சிகளே. வார்த்தைகளில் சிறைப்பிடிக்க முடியாத அந்த உணர்ச்சி களை அப்படியே அலாதியாக வெளிக்கொணர்கின்றன என்று நினைத்து, அந்த இன்பத்தில் மூழ்கியிருந்தான். அவன் சுற் ருடலை மறந்திருந்தான். இசை மயமான தன் உணர்ச்சி வெளிப்பாடுகளினுலும், இயற்கையின் அழகுக் கோலங்களி ஞலும் அவன் தன்னை மறந்து இயற்கையுடன் ரகமாகி இருந்தான்.
மலையில் பிறந்து கடலில் கலக்கும் நதியின் வாழ்க்கை வழியினை அவன் எண்ணிப் பார்த்தான். அதன் வழியில் குறுக்கிடும் செங்குத்தான பள்ளங்களில், வைரத் தொங் கல்களாக அவை விழுந்து, வெள்ளி மணிகளாகச் சிதறி. மீண்டும் ஒருங்கிணைந்து ஓம் என்ற தாதமெழுப்பி ஓடும் மலர் சுமக்கும் காடுகளில் சிறு குழந்தைகளாகச் சிரித்து அவை தவழும்; பாறைகளில் முட்டி மோதிச் சுழித்துப் பாயும்; கிராமங்களின் வயற்கால்களில் புகுந்து, மெல்லிய நீர் வளையங்களாகத்துள்ளி விளையாடும்; சங்கமத் துறையில் இவ்வுலக பந்த பாசம்களேதுமற்ற யோகியைப்போல அமை தியாக ஆர்ப்பாட்டமில்லாது கடலோடு கலந்து ஏகமாகும்.
நதியின் உயிர்துடிக்கும் அந்த இயக்கங்களை இசைக் கோலங்களில் அவன் கற்பனை செய்து பார்த்தான். அவன் மனத்தின் நாத அலை ஏற்ற இறக்க கருதி பேதங்களில், நதி ஒடிற்று. நீர் வீழ்ச்சிகளாய் வீழ்ந்து நாதமெழுப்பிற்று. மலர் சுமந்து சிரித்திற்றும் பாறைகளில் மோதி ஒலித்திற்று. வயல் களில் விளையாடிற்று. இறுதியில் கடலுடன்அமைதியாயிற்று. அவன் களிப்பில் மிதந்தான்; ஆகாயத்தில் உயர உயரப் பறப்பதுபோல் உணர்ந்தான். உடல் லேசாகி விட்டமாதி பியும் - உணர்ச்சியேயில்லாத பஞ்சுப் பொதி போலவும் அவ லுக்குப்பட்டது. உரத்துக் குரலெடுத்துப் பாடவேண்டும் போல அவனுக்குப் பட்டது. தாழம் புதர்களின் ஈரலிப்

Page 28
46/கோடுகளும் கோலங்களும்
பான அந்தப் பச்சையில் படுத்துப் புரளவேண்டும் போல அவனுக்குப்பட்டது. அலை அடித்து வடிந்து செல்ல. வானத் தின் வண்ணக் கோலங்களைப் பிரதிபலிக்கும் கடற்கரையின் பளிங்குபோன்ற ஈரமணலில் எழுந்து நின்று துள்ளித்துள்ளி ஆட வேண்டும்போல அவனுக்குப்பட்டது. இறுதியில் தலை யைச்சுற்றி மயக்கம் வருவதாக அவன் உணர்ந்தான்.
தாழைமரக் கிளையைக் கரங்களினுல் இறுகப் பிடித்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். தன் கவித்துவ மான - ஆழமான அந்த மயக்கினின்றும் விடுபட்டு அவன் நண்பர்களைப் பார்த்தான். நந்தகுமார் ஏதோவோர் தமிழ் சஞ்சிகையின் கதையொன்றில் ஆழ்ந்திருந்தான். வலக்கை யில் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, இடது கையால் தலை யைக் கோதிக்கொண்டு தன்னை மறந்திருந்தான் அவன். அவன் முகத்தில் சாந்தம் ததும்பிற்று. அந்த நிலையில் அவன் மிக அழகாக இருந்தான். அவளது கோடிட்டாற்போன்ற அந்த அரும்புமீசை, அவன் முகத்திற்கு ஒரு தனிக்களையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
பொன்னுத்துரை கிளையின் உயரமான பகுதியில் அமர்ந் திருந்தான். காலிரண்டையும் அந்தரத்தில் தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டிருந்தான். ஒரு கையால் கிளையைப்பிடித்துக் கொண்டு, வாடிவதங்கியிருந்த ஒரு தாழம்பூவை அவன் முகத்தருகில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கணங்கள் ஊர்ந்தன. கரையோரத் தண்டவாளத்தில் தெற்குநோக்கி வண்டியொன்று விரைந்தது. மாலை நேரத்து மஞ்சள் வெய்யில், பச்சைத் தாழம்புதர்களில் படர்ந்து பளபளத்தது; வெண்ணுரை கக்கும் அலைகளினூடாக மினு மினுத்தது பருவத்தின் தலைவாயிலில் வந்து நிற்கும் பன் னிரண்டு பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி அலைக்கரங்களின் போக்குக்கேற்ப துள்ளித்துள்ளி விளையா டிக் கொண்டிருந்தாள்.
அவன் அந்த அழகுகளில் மயங்கினன். இந்தப் பிரபஞ் சத்தின் ஆத்மாவே இப்படியான அழகு க் கோ லங்க ள் தானென அவன் எண்ணினன். பொங்கும் புதுப்புனலாக

தடங்கள்/47
பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களாய்ச் சொரியும் மத்தாப்பின் வரவை ஜாலங்களாக - வசந்தகாலத்து உயிர் துடிக்கும் பெரிய பூங்காவாக - மாலைநேரத்து வயல் வெளி யின் பறவைக் கூட்டங்களாக அவன் மனதில் ஏதேதோ இசைக்கோலங்கள் மிதந்தன: மனத்தை வருடி இதம்கொடுத் தன பூரித்து முணுமுணுப்புகளாகச் சிதறின.
அவன் அவளை நினைத்துக்கொண்டான்; அவள் கடைக் கண் பார்வையின் குளுமையை நினைத்துக் கொண்டான்; அவள் நடையின் பாவத்தை நினைத்துக்கொண்டான்; அவள் புன்சிரிப்பின் மோகனத்தை நினைத்துக் கொண்டான் நெஞ் சின் ஆழத்திலிருந்து பிறக்கும் அவள் குரலின் இனிமையான கம்பீரத்தை நினைத்துக் கொண்டான்; எல்லாருடனும் சகஜ மாகப் பழகும் அந்த லாவண்யத்தை நினைத்துக்கொண்டான். அவன் உணர்ச்சிவசப்பட்டவனக நண்பர்களைத் திரும் பிப் பார்த்துத் திடீரெனச் சொன்னுன்.
"கலைகளின் பிறப்பின் அடிப்படை அழகு இலயிப்புகள் தான்; அழகுகளின் வசீகரங்களே மனித மனங்களைக் கிறு கிறுக்கச்செய்து, உணர்ச்சி வசப்பட வைத்து, அவனை கலைக் கோலங்களை ஆக்கத் தூண்டுகின்றது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
பொன்னுத்துரையின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பிற்று.
சஞ்சிகையில் பதிந்திருந்த கண்களைத்தூக்கி ஒருகணம் தயங்கிய நந்தகுமார், தனது வலதுகை மோதிர விரலில் இருந்த தங்க மோதிரத்தை இடது கையால் சுழற்றிக் கொண்டே சொன்ஞன்.
*அழகுகள்தான் கலையின் அடிப்படை என்ற வாதத்தை ஏற்க முடியாது. மனித மனத்தின் உணர்ச்சிக் குமுறல்களும், கொந்தளிப்புகளும் சோகங்களும் கூட உயர்ந்த படைப்பு க்ளின் கருப்பொருளாகியிருக்கின்றன தானே! "

Page 29
48/கோடுகளும் கோலங்களும்
அவன் இடைமறித்தான். 'உண்மைதான்; ஆனல் மணி தன் குதூகலமாக இருக்கும்போதுதான் ஆத்மார்த்த ரீதியாக அவனின் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. ஆதி மனிதன் மகிழ்ச்சியாய் இருக்கும் போதுதான் கலைகளின் அடிப்படையைச் சமைத்திருப்பான். அபிநயம், இசை, ஓவி யம், சிற்பம் என்கின்ற ஒவ்வொரு கலைக்கோலமும் ஏதோ வோர் உணர்ச்சியின் வெளிப்பாடாகத்தானே அமைந்திருக் கும்; இப்போதும் அமைந்திருக்கின்றன".
"அதைத்தான் நானும் சொல்கிறேன்! அழகு இரசனை தான் கலைகளின் அடிப்படை அல்ல; மனிதனின் உணர்ச்சி கள் இன்பம், துன்பம், சோகம், சந்தோஷம் என்கின்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு - அதாவது நவரச வெளிப் பாடே கலையின் அடிப்படை' என்ற நந்தகுமார் தான் சொன்னவற்றின் அர்த்தத்தைப்பற்றி நினைத்துக்கொண்டே, சஞ்சிகையின் ஒற்றைகளை ஒவ்வொன்ருகப் புரட்டினுன்.
அதுவரை மெளனமாக இருந்த பொன்னுத்துரை, கிளை யினின்றும் இறங்கி, கால்களை நிலத்தில் பதித்து, கிளையில் சாய்ந்துகொண்டு, கைகளை நெஞ்சின்மேல் கட்டிக்கொண்டு, புன்னகை பூத்த வண்ணம் தன் கம்பீரமான குரலில் சொன்னன்.
"உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்தான் கலை என்கிறீர் கள். சமுதாய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கலைப்படைப் புகளே உன்னதமானவை என்று நான் சொல்வேன். அவை தான் சமுதாய வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். அவைதான் அடக்குமுறைகளுக்குள்ளாகி அடிமைகள்போல இன்னலுறும் மனிதர்களைச் சிந்திக்க வைக்கும்,சமுதாயசமத்துவம் காணும் முயற்சியில் அவர்களை ஊக்குவிக்கும். இன்றைய சமுதாய அமைப்பில் அடக்கு முறையால் அல்லலுறும் மனிதர்களின் அவல உணர்வுகள்தான். இன்றைய கலைப்படைப்புகளின் ஊடுபாவாக திகழ வேண்டுமென்பேன். வெறும் தனிமனித உணர்வுகளையும், சோகங்களையும் கலைப்படைப்புகளில் கையாள்வதால் சமுதாய முனைப்புகள் திசைதிருப்பப்பட்டுப் பாழாகின்றன".

தடங்கள்/49
'இந்த வாதத்தை என்னுல் ஏற்க முடியாது. சமுதாய வளர்ச்சி என்னும்போது வெறும் உணவுக்கும் - உடைக்கு மான போராட்டங்களும், அவற்றின் வெற்றிகளும்தான் சமுதாய வளர்ச்சியாகாது; உணவையும், உடையையும், சுகபோகங்களையும் அனுபவித்து காலங்கழிக்கும் அந்த *வேடிக்கை தான் உன்னத வாழ்க்கையுமாகாது. வாழ்க் கைக்கு ஓர் அர்த்தம் இருக்கவேணும் நண்பனே, உணவும், உடையும் தேடுவதுதான் வாழ்க்கையின் அர்த்தமாகாது',
இருவரின் கருத்துக்களையும்மெளனமாகக்கேட்டுக்கொண் டிருந்தான் நந்தகுமார், வட்ட நிலாவாக வரையப்பட்டி ருந்த பெண்ணின் முக லாவண்யத்தை சஞ்சிகையின் அட்டை யில் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
கடலலைகள் ஓங்கரித்தன.
சமுதாயத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் கடல் கொந்தளிப்பதுமாதிரி, தார்மீக ஆவேசம் கொண்டுபேசும் பொன்னுத்துரை அன்று மிக அமைதியாகவே சொன்னன் . குரலில் உறுதியும் ஒருவித நையாண்டியும் தொனிக்கச் சொன்னன். “உணவும் உடையும் மறுக்கப்படுகிற மனிதன் அதைப்பற்றித்தானே சிந்திக்க வேணும் உணவிலும், உடை. யிலும் காணும்திருப்திதான் அவன் வாழ்வின் அர்த்தம். உணவில்லாவிட்டால் அவனுக்கு வாழ்க்கையே இல்லை.'
அவனும் அமைதியாக இருந்தான்; வலது காலினல் கீழேயிருந்த கருங்கல்லில் முண்டு கொடுத்துக் கொடுத்து கிளையை ஆட்டிக்கொண்டிருந்தான்; கடலில் அடிவானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். சிவப்புக்கோளமாக சூரியன் கடலில் அஸ்தமிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கறுத்த மேகக் கூட்டங்கள் கலைந்துகொண்டிருந்தன.
அவன் தனக்குள் சிந்தனையுள் மூழ்கியிருந்தான். இந்த வாழ்க்கையின் தாற்பரியம் என்னவாக இருக்குமென அவன் எண்ணிஞன். இந்த உலக சிருஷ்டி இரகசியத்தின் புதிர் முடிச்சு என்னவாக இருக்குமென அவன் எண்ணி
4.

Page 30
50/கோடுகளும் கோலங்களும்
வியந்தான், "எத்தனை எத்தனை ஜீவராசிகள் எத்தனை புல் பூண்டுகள்; எத்தனை மரங்கள் : எத்தனை செடி கொடிகள் எத்தனை வண்ண வண்ண மலர்கள்; எத்தனை ஜந்துக்கள்; எத்தனை பறவைகள்; எத்தனை விதமான மணி தர்கள்; எத்தனை அழகுகள்’ என்றெல்லாம் எண்ணி அவன் ஆச்சரியப்பட்டான்.
"இந்த வாழ்க்கையே ஒரு போராட்டந்தான். வலியதற் கும் மெலியதற்குமான போராட்டத்தில்தான் இவ்வுலக வாழ்வே இயங்குகிறது. சிருஷ்டியே வலியதும் மெலியது மாகப் படைத்துப்போராட வைத்து வேடிக்கை பார்க்கின் றது. சில சந்தர்ப்பங்களில் ஒன்றன் அழிவில்தான் மற்றதன் வாழ்வே தங்கியிருக்கின்றது. அழிவுகள் சோகங்களாகும் போது, இந்த உலகமே ஒருவித சோகச்சாயை பெற்றுத் தானே மிளிர்கின்றது’’ இப்படியெல்லாம் அவன் எண்ணினன் பொன்னுத்துரை கைகளை மார்பில் கட்டிக்கொண்டு மரக்கிளையில் சாய்ந்தபடியே ஏதோ யோசனையில் மூழ்கியி ருந்தான். நந்தகுமார் கால்களை அகல விரித்து இருந்து கொண்டு, சஞ்சிகையைச் சுருட்டி வலது கையில் வைத்துக் கொண்டு, கால்களுக்கிடையில் குனிந்து நிலத்தில் எதையோ தேடுவதுபோல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் அவர்களைப் பார்த்து மெல்லிய குரலில் சொன் ஞன்.
**வலியவருக்கும் மெலியவருக்கும் இடையிலும், இயற் கைக்கும் மனிதருக்குமிடையிலும் நிகழும் போராட்டங் களே சமூக வாழ்வின் நாகரீக வளர்ச்சிப் பரிணுமத்தை இயக் குகின்றன. அது தவிர்க்கமுடியாததும் உண்மையானதும் தான்; உணவும், உடையும் குறைந்தபட்ச வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளும் இல்லாமல் எத்தனையோபேர் மற்ற வர்களால் சுரண்டப்படுகின்ருர்கள்தான்; அவை பற்றிய கலைப்படைப்புகள் அவர்களைச் சிந்திக்கவைத்து அவர்கள் விமோசனத்திற்கு வழிவகுக்கலாம்தான் ஆஞல், அதற்காக அதையே மட்டும்தான் கலைப்படைப்புகளில் கையாளவேண் டும் என்று இல்லைத்தானே. இந்த உலக சிருஷ்டியின் அழகு

slid&56it/51
களையும், சோகங்களையும், இன்பதுன்பங்களையும் "கலை" களாக்கலாம்தானே!
ஒருகணம் தயங்கிய அவன் மீண்டும் தன் மெதுவான - பண்மையின் இலயம் நிறைந்த குரலில் சொன்னன்.
"புறவாழ்வுப் போராட்டங்கள் தவிர்க்கமுடியாதவை: கலைப்படைப்புகளில் அது கையாளப்படத்தான் வேண்டும். அதற்காக மனம் பற்றிய அகவாழ்வு அம்சங்களைக் கலையாக் கக் கூடாது என்று வாதிடக்கூடாது. மனிதன் இயற்கை யிடத்துக் காணும் அழகுகளும், இயற்கையாகவே அங்க வீனர்களாகப் பிறந்துவிட்ட பிறவிகளில் கொள்ளும் இரக் கங்களும், அழிவுகளில் காணுகின்ற ஆத்மார்த்தமான சோகங்களும், அழகுகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஏக்கங்களும், அவற்றில் காணும் தவிப்புகளும் மகத்தான ஏமாற்றங்களும் அருமையான - நித்தியமான கலைச் சிருஷ் டிகளாகின்றன; ஆகிக்கொண்டுமிருக்கின்றன. அழிந்த நாக ரீக எச்சங்களிலும் இதைத்தானே நாம் காண்கிருேம்."
அவர்கள் ஒன்றும் கூருது மெளனமாக இருந்தனர். கணங்கள் ஊர்ந்தன. அவர்களிடையே மெளனம் கனத்தது.
அவன் அவர்கள் ஏதும் கூறுவார்கள் என்று எதிர்பார்த் தான். அவர்கள் முகச்சாடைகளிலிருந்து அவர்கள் ஏதும் கூறமாட்டார்களென்று நினைத்த அவன், வடகீழ்த்திசை யில் தாழம் கிளைகளினூடே தெரிந்த இடைவெளியினூடாக வாணவெளியை வெறித்தான்.
ஸ்ரேஷனின் தென்புற மதிலோடு நிமிர்ந்து நின்ற ஒற் றைத்தூணில், உயரத்தில் மின்விளக்கு மஞ்சளாய் அழுது கொண்டிருந்தது. தூணிலிருந்து புறப்பட்டு மின்விளக்கைத் தாங்கி நிற்கும் கைகாட்டி போன்ற இரும்புக் கம்பி யில் இரண்டு காகங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றின் பின் னணியில் ஸ்ரேஷன் கட்டடத்தில், கிழக்கு மேற்காக ஓடிய முகட்டின் இருபுறங்களிலும், பழையபாணிக் கட்டட முறை யைப் பிரதிபலிக்கும் இரு கூர்நுனிக்கம்பங்கள் நிமிர்ந்து நின்றன.

Page 31
52/கோடுகளும் கோலங்களும்
அவன் கண்களை மூடிக்கொண்டான். வேதனையின் சாரமெலாம் இழைத்த ஏதோ ராகம் அவன் வாயிலிருந்து முணுமுணுப்புகளாகக் கிளம்பின.
இந்தச் சமுதாய வாழ்வின் அவலங்களை அவன் எண்ணி ஞன். ஒழுக்கங்கள், அறங்கள், தர்மங்கள், மதங்கள், நம்பிக்கைகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே பிதற்றிக்கொண்டே - கூக்குரலிட்டுக்கொண்டே, இந்தச் சமுதாயம் ஒழுக்கவீனமாகவும், அறங்கள்-தர்மங்களைப் புறக்கணித்துக் கொண்டும் மனிதனின் தார்மீக நம்பிக்கை களைச் சிதைத்துக்கொண்டுந்தானே வாழ்கின்றது. சமுதா யத்தின் பெரும்பகுதி ஒழுக்கவீனங்கள் விளையும் விளைநில மாகவும், அறங்கள்-தர்மங்கள்- நம்பிக்கைகள் பலியிடப் படும் பலிக்களமாகவும்தானே மாறியிருக்கிறது. அதோடு. இவை பற்றிய பல்லவிகள் .
ஒழுக்கவீனம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒழுக்கவீனம் செய்யலாம்; அறங்கள், தர்மங்கள், நம்பிக் கைகளைச் சிதைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சிதைக் கலாம் அவை முன்னதிலும் பார்க்க மேலானவை. இவ்வா றெல்லாம் அவன் எண்ணினன். འདི་
உண்மையில் அவளின் அழகில், அது தந்த மோகனத் தில், அந்த நளினத்தில் அவன் மயங்கித்தானிருந்தான். அவளிலும் அவன் நண்பர்களிலும் அவன் நம்பிக்கைவைத் திருந்தான். "நானும் நீயுமொன்று: என்வாழ்வின் சாரமே உன்னுேடு வாழ்வதில்தான் இருக்கிறது" என்று அவள் சொன்னதின் பின்னல், அவளும் அவன் நண்பர்களும் பழகுவதை அவன் பூரணமாக அனுமதித்துத்தானிருந்தான்.
அவள் என்னிடம் சொல்லியிருக்கலாம். "உன்னிலும் பார்க்க உன்நண்பன்தான் எனக்குப் பிடித்த மானவளுயிருக்கிருன்’ என்று;
அவன் எனக்கு உணர்த்தி இருக்கலாம்; "மச்சான் அவள் என்னை விரும்புகிருள் - நானும்தான் அவளை விரும்புகிறேனென்று. '

தடங்கள்/53
அவன் தனக்குள் முணுமுணுத்தான். ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், தர்மங்கள், அறங்கள், சிதையும்போது நான் உண்மையில் உணர்ச்சிவசப்படுகின்றேன்; ஆத்திரப்படுகின் றேன்; கழிவிரக்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்.
தாழம்புதர்களின் இடையிலும், கடலும், வானமும் சங்கமிக்கும் மேற்குவானச்சரிவிலும் இருள் சிரித்தது. கறுத்த மேகத் திரள்கள் ஒன்றையொன்று துரத்தின.
அவர்கள் தாழம் கிளையைவிட்டு இறங்கி நடந்தனர்.
அவன், நண்பர்களுக்குப் பின்னல் கடற்கரை மணலில் பதியும் அவர்கள் காலடித் தடங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தான் அந்த வேதனையான இராகத்தை முணுமுணுத் துக்கொண்டே நடந்தான்.
1 97 Ι.

Page 32
52(5 பாதையின்
கதை
"இன்றைய மாலைப் பொழுது எங்கள் எல்லோ ருக்கும் ஒரு இனிய மாலைப் பொழுதுதான். வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ மாலைப் பொழுதுகளை நாம் சந்தித்துவிட்டோம்; இனி மேலும்சந்திப்போம்.கடந்து போனளத்தனையோ மா8லப் பொழுதுகள் உங்கள் மன தில் இனிய ஞாபகங்களைக் கிளர்த் த லாம். ஏதோ வொரு மாலைப்பொழுதில் உங்களுக்கு திருமணம் நடந் திருக்கலாம். ஏதோவொரு மாலைப்பொழுதில் நீங்கள் உங்கள் மனங்கவர்ந்தவரை முதன்முதலில் சந்தித்திருக் கலாம். எப்போதோ ஒரு மாலைப் பொழுதில் உங்கள் முதலாவது மகனை நீங்கள் பிரசவித்து இருக்கலாம்.'

ஒரு பாதையின் கதை/55
*ன்னக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. இன்றைக்கு இருபத் தியேழு வருடங்களுக்கு முந்தி, வளர்பிறைப் பருவத்து ஒரு மாலைப் பொழுதில்தான் அவன் பிறந்தான். எனது தோட் டத்தில் உழுது கொண்டிருந்த அவன் தந்தைக்கு அவன் பிறந்த செய்தியை யாரோ கொண்டு வந்தார்கள். முக மெல்லாம் பல்லாக என்முன்னுல் வந்த அவன் தந்தை "நயினர் எனக்கு மகன் பிறந்திருக்கிறன். நான் வீட்டுக்கு போகவேணும்" என்று சொன்னது எனக்கு நல்ல ஞாபக மாகத்தான் இருக்கிறது. "மகன் பிறந்தால் என்னடா, நீயே போய் மருத்துவம் பார்க்கப் போருய்? செய்த வேலையைச் செய்து முடித்துப்போட்டுப் போடா” என்று சொன்னதும் ஞாபகமிருக்கிறது. அதைக் கேட்ட அவன் மகிழ்ச்சி யெல் லாம் மறைய அவன் முகம் கறுத்திருண்டதுவும் ஞாபக மிருக்கிறது. அதைப் பார்க்க சகிக்காத நான் "போடா போ’ என்று அவனை அனுப்பி வைத்ததும் ஞாபகமிருக்கிறது.’
"இப்போது எனக்கு அறுபது வயது. தலை நரைத்து விட்டது. குரல் தழுதழுத்து விட்டது. மூப்பின் அனுபவ ரேகைகள் என்னைப் பதப்படுத்திவிட்டன. மனிதனைப்பற்றி அவனது ஆசைகளைப்பற்றி, நல்ல வாழ்க்கை பற்றிய அவனது இலட்சியங்களைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன். ஆனல் அந்த நாட்களிலெல்லாம் நான் இப்படிப் பண்பட்டிருந்தது கிடையாது. ஏராளமான சொத்துக்களின் சுகபோக மிதப் பில் ஒரு கெளரவமான பிரபுபோல பயமறியாத இளங் கன் ருகத் துள்ளித் திரிந்த அந்த இளமை நாட்கள். வினே கழிந்துவிட்ட அந்த நாட்களை நினைத்து இப்போது மனவருத் தப்படுகிறேன். அப்போது நான் எத்தனை எத்தனை கூத்துகள் ஆடினேன்; எத்தனை எத்தனை அநியாயங்கள் செய்தேன்; எத்தனை பேரின் வாழ்வைச் சிதைத்திருக்கிறேன்.""
"இந்த இனிய நேரத்தில் என்னைப் பற்றிய அவதூறுகளை நானே சொல்வது உங்களுக்கு வினேதமாகப் படலாம்: ஆணுல் நான் அதையிட்டு கொஞ்சமும் வெட்கப்படவில்லை" மாருக இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றைக் கூறுவது பொருத் தமானது என்றுதான் நினைக்கிறேன். உங்களில் பலர் படித்

Page 33
56/கோடுகளும் கோலங்களும்
தவர்கள் நாகரிகமான உத்தியோகம் பார்ப்பவர்கள் பெரிய பெரிய மனிதப் போர்வைகளில் மறைந்து கிடக்கும் கபடங் களையும், வஞ்சகங்களையும், தன்னலங்களையும் புரிந்துகொள் ளக்கூடியவர்கள் உங்களில் பலர் வெளுத்ததெல்லாம் பாலென்று நினைக்கும் அப்பாவிகள்-உழைப்பாளிகள் உங் களில் பலர் வாழ்க்கையோடு போராடிப் போராடி உரம் பெற்றவர்கள். நீங்ளெல்லாம் ஒரு கறைபடிந்த வாழ்க்கை வாழ்ந்த மனிதன், எப்படிப் புனிதப்படுத்தப்பட்டான் என் பதை அறிவது நல்லதுதான். ஆனல் இந்தச் சந்தர்ப்பத் தில் அவற்றையெல்லாம் சொல்லி உங்கள் மனத்தைச் சோர்வடையச் செய்ய நான் விரும்பவில்லை."
'அன்றும் ஒரு மாலைப் பொழுதுதான். அவன் என் னிடம் வந்தான். அன்று சனிக்கிழமையாக இருக்கவேண்டும். எண்ணெய் தேய்த்துத் தோய்ந்திருந்தேன். மதுபானம் அருந்திச் சாப்பிட்டுவிட்டு தூங்கி விழித்திருந்தேன். ஏதோ வொரு அலுப்பு. கருக்கல் பொழுது, முற்றத்தில் சாய் மனைக் கதிரையைப் போட்டு கிழக்கே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். யார்மேலேயோ வஞ்சம் தீர்த்து, கருவறுத்து குடியெழுப்புதற்கான திட்டம் தீட்டிக் கொண்டிருந்தேன்.
"அப்போதுதான் அவன் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். சைக்கிளை முற்றத்து முல்லைப்பந்தற்காலில் சாத்திவிட்டு என்னருகில் வந்து நின்றன் அவன். வெள்ளை வேட்டி கட்டியிருந்தான்; வெள்ளைச் சேட்டுப் போட்டிருந் தான்; அரும்பு மீசை விட்டிருந்தான். முகத்தில் ஒரு சாந்த பாவம் எவரையும் கவரும் புன்சிரிப்பு."
'நீங்களெல்லாம் அவனை நன்கு அறிவீர்கள். நான் அவனைப் பற்றி இங்கு வர்ணிக்கத்தேவையில்லைத்தான். ஆணுல் குடிவெறி அடங்கிக் கொண்டிருந்த ஒரு மயக்க நிலையில்-மாலை நேரத்தில் அவனை முதன் முதலில் சந்தித் ததை என்னல் மறக்க முடியாது, அதற்கு முன் பல பொழுது களில் அவனை நான் கண்டிருந்தாலும் அன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்ருல் அன்றைய சந்திப்

ஒரு பாதையின் கதை57
பின்போதுதான் நான் அவனுடன் முதன் முதலில் கதைத் தேன்; அன்றைய சந்திப்பில்தான் நான் அவனுல்-அவன் கொள்கைகளால் கவரப்பட்டேன். அன்றைய சந்திப்பின் பின்தான் நான் மனிதனுகத் தொடங்கினேன்.”*
"நான் திரும்பத் திரும்ப என்னைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் எல்லார் மனத்திலும் அவனது நினைவுகள் பொங்கிப் பிரவகிக்கும்போது நானும் அவனேடு தொடர்புடைய எனது நினைவுகளைச் சொல்வது தவிர்க்க முடியாதது என்று நினைக் கிறேன். இந்த இனிய நேரத்தில் அது பொருத்தமானதுவும், ஒருவகையில் அவனுக்குச் செய்யும் அஞ்சலியுமாகுமென்றும் நினைக்கிறேன், !
"அந்த மாலையில் அவன் என்னைச் சந்தித்தபோது "வணக்கம்’ என்று சொல்லிப் பேச ஆரம்பித்தான். நான் பதிலுக்கு "வணக்கம்" சொல்லவில்லை. அவனை உட்காரக் கூடச் சொல்லவில்லை. எனக்கு அப்போது ஒருவித திமிர். ஊரிலுள்ள சங்கங்களெல்லாவற்றுக்கும் நான்தான் கெளரவத் தலைவர். அப்போதைய சூழலில் அவனைப் பற்றி நான் கேள்விப் பட்டதெல்லாம் எனக்கு விரும்பத் தக்கவையாக இருக்கவில்லை. நான் அவனை வெறுப்புடன் பார்த்தேன்."" 'அவன் அவையொன்றையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மாருத, அதே புன்னகையுடன் சொன்ஞன், "ஐயாவுடன் நான் சில விடயங்களைப் பற்றிப்பேசவேணும்'''
'அந்தக் காலத்தில்தான் ஊரின் வட அந்தத்தி லிருந்து கிராமத்தை ஊடறுத்து, தெற்கே பிரதான வீதியை வந்தடையும் இந்த வீதியைப் பற்றிய திட்டங்களை அவன் தீட்டியிருப்பான் என்று நினைக்கிறேன். நான் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருக்க அவன் சொல்லத் தொடங்கிஞன். ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அங்கமங்கமாக விஸ்தார மாகவே சொன்னன். மனத்திரையில் வரைந்த அந்த வீதியில் நடமாடி நடமாடி அனுபவித்தது போன்றதோர் மயக்க நிலையில் அவன் சொல்லிக்கொண்டே போனன்,'

Page 34
58/கோடுகளும் கோலங்களும்
"இதைச்சொல்லும்போது எனக்குத் துக்கம் நெஞ்சை அடைக்கிறது. நீங்களும் கவலைப்படுவதை உங்கள் முகங்கள் எனக்குக் காட்டுகின்றன. உங்களில் யாரிடமோ இருந்து எழுந்த கேவல் சத்தம் எனக்குக் கேட்கிறது. உங்களில் பலர் கண்களைத் துடைத்துக் கொள்கிறீர்கள். இந்த மாலைப் பொழுதில் அவன் நினைவுகள் உங்களுக்குத் துக்கத்தைத் தந்தாலும் அவனின் கனவொன்று நனவாகி விட்டதே யென்று நீங்கள் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும். ஏதோ மாபெரும் இழப்பு நேர்ந்துவிட்டதாகவும், எல்லாமே அழிந்துவிட்டதாகவும் நீங்கள் கவலைப் பட்டுக்கொண் டிருப்பது அவனுக்கே பிடிக்காத ஒன்று என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே."
'அந்தச் காலத்தில் நல்ல வழியாலோ, கெட்ட வழி யாலோ இந்தக்கிராமத்தின் அரைப்பங்கு நிலம் எனக்குத்தான் சொந்தமாக இருந்தது. எனது தகப்பஞரிடம் இருந்து எனக்கு முதுசமாகக் கிடைத்தது அது. அந்தச் சொத்துக்களுக்கெல் லாம் நானே அதிபதி தனிக்காட்டு ராஜா நான் வைத்ததே சட்டம். அப்படிக் கொடி கட்டிப் பறந்த காலத்தில்தான் அவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். எனது காணிகளை ஊடறுத்து அவன் போட நினைத்திருந்த பாதையைப் பற்றி அவன் சொல்லிக் கொண்டே போனன். நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அப்படியொரு மயக்கம்; அப்படி யொரு கவர்ச்சி.
"தர்க்க நியாயங்களுடன் அவன் பேசினன். வாழ்க்கை யைப் பற்றி வாழவேண்டிய முறைகளைப் பற்றி அவன் எடுத்துச் சொன்னன். இன்னல் படுகின்ற மனிதர்களின் துயரங்களை அவன் எடுத்துக் காட்டினன். ஒருகுடம் தண் ணிர் பெறுவதற்காக எனது மேட்டு நிலங்களில் வாழும் குடிசனங்கள் படும்பாட்டை எல்லாம் அவன் எடுத்து விளக் கினன். "இந்தத் துன்பங்களெல்லாம் நிரந்தரமானவையல்ல; இவை களையப்படவேண்டும்; இவை களையப்பட முடியும். இந்தத் துன்பங்கள் இல்லாமற் போகும்போது அந்தச் சனங்கள் அடையப்போகின்ற ஆனந்தத்தை எண்ணிப்பாருங்

ஒரு பாதையின் கதை59
கள்." என்று அவன் சொன்னபோது உண்மையில் நான் என்னை மறந்துதான் இருந்தேன்."
"அவன் பிறந்த செய்தியைக் கேள்விப் பட்டபோது முகமெல்லாம் பல்லாக என்முன்ஞல் வந்து நின்ற அவன் தந்தையின் முகம் தான் எனக்கு ஞாபகம் வந்தது. அர சாங்கப் பணத்தில் மேட்டுக் குடிசனங்களுக்கு என்ற சாட்டில் எனது காணியில் பொதுக்கிணறு ஒன்றை வெட்டியபோது "தங்கமான கமக்காரன்" என்று மகிழ்ச்சியால் பூரித்த அந்த அப்பாவிச் சனங்களின் முகங்கள் தான் எனக்கு ஞாபகம் வந்தது.'
"இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ஏற் பட்ட வெறுப்பு எப்படி மறைந்தது என்று எனக்கே புரிய வில்லை. அந்த நேரக் குடிபோதை மயக்கத்தில் அவ னின் பேச்சு எனக்கு இரம்மியமாகப் பட்டது என்றும் சொல்ல முடியாது, பேச்சினல், பேச்சில் இழையோடும் தர்க்க நியாயங் களிஞல், சக மனிதனின் துயர் கண்டு பொறுக்க முடியாத ஆழ்ந்த மனித நேயத்தால் அவன் எவரையும் கவர்ந்து நின்றன். ஒரொரு சமயங்களில் வினுேபn , காந்தி, லெனின் போன்ற தலைவர்களுடன் நான் அவனை ஒப்பிட்டுப் பார்ப் பதுண்டு. அதற்கு அவன் பொருத்தமானவன்தான் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள். உண்மையில் துன்பப்படுகின்ற மக்களை விமோசனத்திற்கான பாதையில் வழி நடாத்தும் ஒரு தலைவனக அவன் மாறித்தானிருப்பான்".
'நடந்து முடிந்த சோக நினைவுகளில் மறுகுவதில் எது வித பயனுமில்லை என்பதை நானும் அறிவேன் தான். ஆனல் நடந்து முடிந்தவை என்பதற்காக அவனை, அவனேடு தொடர்புடைய நினைவுகளை மறக்க முடியுமா?’
"நான் ஏதோவெல்லாம் சொல்லிக்கொண்டே போகின் றேன். இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் நான் இவற்றை யெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேறு சந்தர்ப்பம் கிடைக்க முடியாது. உங்களில் பலர் என்னை ஏதோ பெரிய கொடை யாளி என்று சொல்லிப் போற்றுவதாக அறிகிறேன். நான்

Page 35
60/கோடுகளும் கோலங்களும்
பெரிய கொடையாளியுமில்லை; மகானுமில்லை, ஒரு சாதாரண மனிதன்தான். முன்பு மனிதத் தன்மையில்லாதவனுக இருந்து பின் மனித நேயம் கொண்ட மனிதனுக மாறிய ஒரு சாதாரணன். அவன் என்னை மனிதனுக்கியபோது அவனின் வேண்டுதலின் பேரில் நான் எனது சொத்துக் களின் பெரும் பகுதியை பொதுக் காரியங்களுக்காகச் செல விட்டேன். எனது காணிகளில் ஒருபகுதியை இந்த வீதி அமைப்பதற்காக ஒதுக்கிக் கொடுத்தேன். இதற்கெல்லாம் தானும் நீங்களும் அவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.'
"ஒருவகையில் பார்க்கப்போஞல் இதற்கெல்லாம் எனது சொத்துக்களென்று நான் உரிமை பாராட்டுவது தவறென் பதை நான் அறிவேன். ஒரு மனிதனின் தேவைக்கதிக மாக அவனிடம் இருக்கும் சொத்துக்கள் சமூக உடமை ஆக்கப்படவேண்டும் என்று அவன் சொல்வான். எத்தனை எத்தனையோ இலட்சம் சனங்கள் உண்ணவும் உடுக்கவும் நிறைவான வாழ்க்கை வாழவும் வழியின்றித் தவிக்கும்போது இயற்கையின் செல்வங்களை தமக்கென முடக்கி, சுகபோக வாழ்வு வாழ்பவர்கள் சமூகத்தின் கயவர்கள் என அவன் ஆத்திரத்துடன் சொல்வான். "எல்லாரும் நிறைவான வாழ்க்கை வாழப்போகும் ஒரு காலம் வரத்தான போகிறது: அந்தக் காலத்தை நாங்கள் தோற்றுவிக்கத் தானே போகின் ருேம்" என்றும் சொல்வான்.”*
"நீங்கள் பரபரப்படைகிறீர்கள். உங்களுக்கும் இங்கு பேச வந்திருக்கும் மற்றவர்களுக்குமிடையில் நெடுநேரம் நிற்பதை நான் விரும்பவில்லை. இந்த வீதித்திறப்பு விழாவில் தலைமையுரையாற்றக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறெனவே கருதுகிறேன். எனது உரையை முடிக்கு முன் இந்தப் பாதையின் உருவாக்கத்திற்காக உழைத்த அவனைப் பற்றிய இன்னும் சில விடயங்களை நான் கூரு விட்டால் எனது பேச்சு பூரணத்துவமாகாது. இனிமேல் இந்த வீதியில் நீங்கள் நடமாடப் போகிறீர்கள், பனங்கூடல் களையும், தோட்டவெளிகளையும், சிறிய பற்றைக் காடு

ஒரு பாதையின் கதை/61
களையும், சிறிய சிறிய குடியிருப்பு மனைகளையும் ஊடறுத்துச் செல்லும் இந்த வீதி இனிமேல் உங்களுக்குப் பயன்படப் போகிறது. உங்களில் பலரின் தேவையில்லாத வசதியீனங்கள் அகலப் போகின்றன. நீங்கள் இனிமேல் ஒரு தபால் போடு வதற்காக ஒன்றரை மைல் நடக்கத் தேவையில்லை. உங்கள் வீதியின் அருகில் கம்பத்தில் தொங்கும் சிவத்தப் பெட்டியில் நீங்கள் தபால் போடுவீர்கள். பிரசவ வேதனை கொண்ட பெண்ணை, பிரதான வீதிக்கு இட்டுச் செல்ல வேண்டிய தேவையின்றி உங்கள் வீதியிலிருந்தே அவளைக் காரிலேற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வீர்கள். உங்கள் துன்பங் களையெல்லாம் கண்டு கண்டுருகி, இவற்றைப் பற்றியெல் லாம் முதன் முதலில் கனவு கண்டவன் அவன் திட்டம் தீட்டியவன் அவன் உழைத்தவன் அவன்! இதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவன் அவன்.'
*கிராமத்தை ஊடறுக்கும் இந்தப் பாதை அழகாக நீண்டு வளைந்து செல்கின்றது. உங்களில் சிறியவர்களைத் தவிர மற்றவர்கள், இது ஒற்றையடிப் பாதையாய் இருந்த காலத்தில் இதன் இலட்சணங்களை அறிந்திருப்பீர்கள். கள்ளி யும், காரையும் கொழுவி இழுக்கும் கருமுட்களைக் கொண்ட காண்டையும் கொண்ட இந்தப் பாதையை பெருப்பித்து விரிவாக்கி, செப்பனிட அவன் ஒருவனே முன்னின்று உழைத் தான். நாளடைவில் அவனேடு அவனையொத்த வாலிபர்கள் ஐந்தாறுபேர் சேர்ந்தார்கள். இப்போது தபால்பெட்டி இருக்கும் அந்த இடத்தில்தான் அவனுக்கு அந்தக் காயம் ஏற்பட்டது. சிறியகாயம் தானே என்று அசட்டையாய் இருந்துவிட்டான்.'
"நிலைமை விபரீதமான காலத்தின்போது ஒருநாள் அவன் எனக்குச் சொன்னவற்றை நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டவன். உங்களுக்கும் எனக்கும் அவன் கடைசியாகச் சொன்ன செய்தி இதுதான். "நான் இனிப் பிழைக்கமாட்டேன் ஐயா". அந்தக் காலத்திலிருந்து இறக்கும் வரைக்கும் அவன் என்னை ஐயாவென்றுதான் அழைத்தான். "நான் சாவதால் விமோசனத்தை நோக்கிய இந்த யாத்திரை

Page 36
82/கோடுகளும் கோலங்களும்
முடிந்துவிட்டதாக யாரையும் கருதவேண்டாமென்று சொல் லுங்கள். விமோசனத்தை அடையும் வரையும் இந்த யாத் திரை நடந்து கொண்டுதாணிருக்கும் என்றும் சொல்லுங்கள். இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிசனும் சந்தோஷமான, நிறைவான வாழ்க்கை வாழக் கூடிய நிலை ஏற்படுமட்டும் இந்த யாத்திரைக்கு முடிவு ஏற்படாது என்றும் சொல் லுங்கள் ** مص
'அவன் சொன்னதைக் கேட்டபோது உண்மையில் என் கண்கள் நிரம்பித்தான் விட்டன. உங்கள் கண்களும் கலங்கு கின்றன போலும், எப்படித்தான் வைராக்கியமாக இருந் தாலும் சில சந்தர்ப்பங்களில் அழவும் வேண்டித்தானிருக் கிறது." 米
1973

7
*உணர்ச்சிகள்”
அவனருகிலிருந்த அவளை, அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண் மைஅவனை என்னவோ செய் தது. அவளிவிருந்து வீசிய *சென்றின் நறுமணத்தை அவன் நுகர்ந்தான். அவ ளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுப வித்தான்.
அவளை எங்கோ கண்
டதுபோல அவனுக்கு ஞாப கம் வந்தது. அவளை உற்றுப் பார்த்துக்கொண்டேஅவளை எங்கே கண்டிருப்பேனென யோசித்தான். அவளி ன் மெல்லிய நீலநிறச் சேலையை யும், கருநிறப் பாம்பாக நீண்ட ஒற்றைப் பின்னலை யும், அதன் தொடக்கத்தில்
சிரிக்கும் வெள்ளை முல்லை
மலர்களையும், அவன் பார்த் தான். மெல்லியதாகசிவத்த

Page 37
64/கோடுகளும் கோலங்களும்
சாயம் பூசப்பட்ட அவள் அதரங்களையும் பார்த்தான்; நிகு நிகுத்துப் பளபளக்கும் நீண்ட கழுத்தில், மெல்லிய மஞ்சள் கோடாக மினுங்கும் தங்கச் சங்கிலியையும் பார்த்தான். பக்கப் பார்வையில் ஒரு பக்கம் தெரிந்த அவள் முகத்தில் நீண்ட மூக்கினையும், காதளவோடிய புருவத்தினையும் பளபளத்துருண்ட ஒருபக்கச் சொக்கினையும் பார்த்தான்.
திடீரென, அவளை ஒரு பரீட்சை மண்டபத்தில் சந்தித் திருப்பதாக அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்றைய பரீட் சையின் இறுதிக் கட்டத்தில், இலக்கிய சம்பந்தமான ஒரு வினவின் விடையை எப்படி அழகாக வார்த்தைகளில் அடக் கலாமென அவன் அண்ணுந்து யோசித்தபோது-அந்த முகத் தையும் அதில் குறுகுறுத்துச்சுழன்ற கருவண்டுக்கண்களையும், அவன் கண்ட ஞாபகம் வந்தது. அப்போது அவனெரு மோகனமான புன்னகை பூத்தான். அவளும் பதிலுக்குச் சிரித்துத் தலை கவிழ்த்துக் கொண்டாள். அந்த அழகான கவிதை போன்ற அனுபவத்தில், திழைத்த விறுவிறுப்பில், அந்த வினவுக்கான விடையை அழகாக எழுதியதும் அ னுக்கு ஞாபகம் வந்தது
பரீட்சை முடிந்ததும் அவளை சந்திக்க முனைந்ததும் அவ னுக்கு ஞாபகம் வந்தது. அவளைப் பின்பு காணுமல் ஏங்கிய தையும், அவன் நினைத்தான். காற்றில் மிதக்கும் சுகமாகஅவளின் புன்னகை நிறைந்த அந்த முகம், இரண்டு மூன்று நாட்களாக மனத்தில் மிதந்து, ஒருவித துன்பங்கலந்த இன்பத்தை அளித்ததையும் அவன் நினைந்தான். அவளை மறந்து, நாளாந்த வாழ்க்கை இயக்கத்தில் எத் தனையோ விதமான கவர்ச்சிகளைக்கண்டு, இரசித்து, அதில் இலயித்த, இந்த வாழ்க்கையின் மோகனமான அந் த ப் பொழுதுகளையும் அவன் நினைத்துப் பார்த்தான்.
அவன் பெருமூச்சு விட்டான். இடக்காலைத்தூக்கி வலக் காலின்மேல் போட்டுக் கொண்டான். வேண்டுமென்றே அவளின் உடலில் படத்தக்கதாக தனது கையைத் தூக்கி விட்டு, அதற்கு வருந்துபவன்போல, "சொறி” என்று சொன்

உணர்ச்சிகள்/65
ஞன். அவளைத் தன்பக்கம் திருப்புவதற்காக அவன் எவ் வளவோ பிரயத்தனங்கள் செய்தான். அவள் அசைந்து கொடுக்கவில்லை. நிகழ்ச்சிகளில் தன்னை மறந்து ஒன்றித் திருப்பவள்போல, அவள் மேடையையே ஆடாமல் அசை யாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் சலிப்புற்றன். சாவகாசமாக மண்டபத்து அலங் காரங்களை மேலோட்டமாக நோட்டம் விட்டான். மாலை யும் இரவும் சந்திக்கும் அந்த அந்திநேரத்தில், மண்டபத்து மின்விளக்குகள் மஞ்சள் முலாம் பூசியதுபோன்ற ஒளியைச் சிந்திக் கொண்டிருந்தன. மண்டபம் தலைகளால் நிறைந் திருந்தது. மேடையில் சலங்கைச் சத்தம் க்ேட்டது. முன் னலிருந்த நடுத்தரவயது மனிதர் வெகு இலாவகமாக சிக றெட் புகையை ஊதிக்கொண்டிருந்தார். அவர் அருகிலி ருந்த அழகான பட்டுச் சேலையணிந்திருந்த பெண்- அவர் மனைவியாக இருக்கவேண்டும். அப் புகையினுல் அருவருப் படைந்தவள்மாதிரி முகந்தை மற்றப்பக்கம் திருப்பிக்கொண் டாள். அவள் அவரிலும் பார்க்க வயது குறைந்தவளாக இளம் பெண்ணுகக் காட்சி தந்தாள். ஒற்றைப் பின்னல் பின்னி அதன் நுனியில் பூக்குஞ்சம் கட்டி, சிவப்பு, வெள்ளை மணிகள்போன்ற சிறிய வட்டக்குண்டுகளால் அதை அலங் கரித்து இருந்தாள் பாவைபோன்ற அழகான பத்துவயதுக் குழந்தையொன்று, ஓடிவந்து அவளை மாமியென்று கட்டிக் கொண்டு சிரித்தது.
அவன் பக்கத்திலிருந்த அவள் "அருமை, அருமை" என்று தன்னை மறந்து கைகொட்டினுள்.
அவன் மேடையைப் பார்த்தான் அலங்கார பூஜிதை யான இளம்பெண் ஒருத்தி, ஒற்றைப் பாதத்தைத் தூக்கி மேடையில் குத்திக்குத்தி கைகளை வளைத்து வளைத்து ஏதோ அபிநய முத்திரை காட்டினுள். பாதச்சலங்கையொலி கலிங் கலிங்கென காதில் இனித்தது. பாடல் பாடிய பெண் இனிய குரலில் இழைந்தாள்.
5

Page 38
66/கோடுகளும் கோலங்களும்
*அழகென்னும் சொல்லுக்கு பொருள் கண்டேனடி: ஆனந்தம் கொண்டேனடி. (3.5mA)!'"
ஆடிய பெண் கால்களை விரித்து இருந்து கைகளினல் ஏதோ கோலங்கள் காட்டிக்கொண்டே எழுந்தாள். உண்மை யிலேயே அது அற்புதமாகத்தான் இருந்தது. அந்த மோகனத் தில் அவனும் மயங்கித் திளைத்தான.
அவன் அவளைப் பார்த்துக் கேட்டான் "அருமையாக ஆடுகிருளே யாரிந்தப்பெண்?"
அவள் முழுதாகத்திரும்பி அவனைப் பார்த்தாள். ஒரு கணம் துணுக்குற்றள். அறிமுகமான புன்னகையுடனே 'யாரோ தெரியவில்லை?" என்ருள்.
அவனும் மெதுவாகச் சிரித்துக்கொண்டான். “அழகாக வும் இருக்கிருள்' என்று சொன்னன்.
அவன் சொன்னதைப் பிடிக்காதவள் போல அவள் திரும் பிப் பார்த்தாள். "இந்த மண்டபமும் அழகாகத்தானே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது’’ என்ருள் வெடுக்கென !
அப்போதுதான் அந்த மண்டபத்தை முழுதாகப் Lumtriou பதுபோல அவன் பார்த்தான் தென்னை, மாவிலைத்தோர ணங்கள் காற்றில் அசைந்தன. வண்ணக் கடதாசிகள் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்து மினுங்கின கலைத்தெய்வமென்று கற்பிக்கப்பட்டகலைமகளின் படம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேடையின் ஒருபக்கத்தில் இருந்தது.
அவன் சொன்னன். "நீர் சொல்வது சரிதான்; இப் படிப் பார்க்கப்போனல் உலகம் எல்லாமே அழகுதானே. ஆடிய பெண்ணின் அழகு உயிர்த்துவமான ஒரு ரகம் மண் டபத்தின் அழகு செயற்கையான வேருேர் ரகம்."
அவளுக்கு விளங்காத விடயத்தை அதிகப் பிரசங்கித் தனமாக சொல்லிவிட்டதுபோல அவன் தவித்தான்.
அவள் திரும்பி அவனை நேருக்குநேர் பார்த்துச் சொன் ஞள். "அழகு என்பது மனம் பற்றிய ஒரு கோட்பாடு."

உணர்ச்சிகள்/67
அவன் உஷா ராஞன். தான் அவளைத் தவருக எடை போட்டு விட்டதை அவன் உணர்ந்தான். இந்த நுணுக்க மான விடயங்களைப்பற்றி, அவளும் அதிகம் அறிந்திருக்கிரு ளென்பதையும் அவன் அறிந்து கொண்டான். முன்பு ஒரு பக்கம் மட்டும் பார்த்த அவளின் முகத்தை நேருக்குநேர் பார்த்துக்கொண்டு - அவள் நெற்றியில் ஆச்சரியக்குறியாக விளங்கிய சிவத்தச் சாந்துப் பொட்டைப் பார்த்துக்கொண்டுமெல்லியதாக மைதீட்டப்பட்ட புருவங்களைப் பார்த்துக் கொண்டு - காதில் அசைந்தாடிய வட்டக் காதணிகளைப் பார்த்துக்கொண்டு-அவள் தலையின் நேர்வகிட்டின் நேர்த் தியைப் பார்த்துக்கொண்டு அவன் சொன்னன்.
"அழகு என்பது மனம் பற்றிய ஒரு கோட்பாடுதான்; எனக்கு அழகாகத்தெரிவது உமக்கு அருவருப்பாகவும், உமக்கு அருவருப்பானது எனக்கு அழகாகவுந் தெரியலாந் தான். நீர் அழகென்று சொல்லி வாதிடாததை நான் அழ கென்று சொல்லி வாதிடலாந்தான் என்ருலுங்கூட இந்த உலகில் நித்தியமான, உயிர்த்துவமான, மோகனமான, எல்லாராலும் அழகென்று ஏற்றுக் கொள்ளக்கூடிய பவித் திரமான அழகுகளும் இருக்கின்றன தானே' " .
அவள் அவன் சொன்னதை அங்கீகரிப்பவள்போல மெளனமாகத் தலைகுனிந்திருந்தாள். அவன் தான் பலத்துப் பேசிவிட்டதுபோல, யாராகிலும் தங்களை அவதானிக்கிருர்க ளோவெனச் சுற்றும்முற்றும் பார்த்தான். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே ஏதேதோ குசுகுசுத்துக்கொண்டிருந்த னர். மேடையைப் பார்த்தான். காற்சட்டை போட்ட, கண்ணுடி அணிந்த முதியவரொருவர், நவராத்திரி பூசையின் தத்துவம் பற்றி, கேட்டுக்கேட்டு புளித்துப்போன விடயங் களைத் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தார்.
'தமிழன் பெண்ணுக்கு முதன்மையிடம் அளித்திருந் தான்; பெண்மையை மதித்தான்; அதனலேதான பெண் சக்திக்கு கோயில் கட்டி வணங்கினன். மனித வாழ்வுக்கு இன்றியமையாத கல்வி, செல்வம், வீரம் என்பனவற்றுக்கும் முறையே கலைமகள், அலைமகள், மலைமகள் எனப் பெண்

Page 39
68/கோடுகளும் கோலங்களும்
தெய்வங்களைப் படைத்தான் மனித வாழ்க்கையோட்டத் தில் பெண்களின் பெரும்பங்கை அறிந்திருந்தான்.
அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். * ஐயோ தாழ்ந்த தமிழகமே." என்று யாரோவொரு கவிஞன், மனங்கொதித்துச்சொன்ன அந்த உணர்ச்சிகரமான வாக்கி யங்களை நினைத்துக் கொண்டான். இப்படியே பேசிப், பேசிப், பேசி.
அவன் அவளைப் பார்த்தான். அவள் மெளனமாகவே குனிந்திருந்தாள்.
**என்னுடன் கோபமா." என்று அவன் மெதுவாகக் கேட்டான்.
* 'இல்லையே." எனறவள் புன்னகை பூத்தாள். ‘'நீ மிக அழகாக இருக்கிருய்' என்ருன் அவன் தொடர்ந்து
"நீங்களுந்தான்." என்றவள் வெட்கித் தலைகுனிந்தாள். அவள் கன்னஞ் சிவந்தது. அவன் மகிழ்ச்சி என்னுங் கடலில் மிதந்தான். இந்த உலக வாழ்வின் சாசுவதமானநித்தியத்துவத்தை உணர்ந்துவிட்ட வன்போல அவன் குதுர கலித்தான். ஒரு அழகான, மனத்திற்கு இதமான பெண் னின் வாயால் கேட்ட, "நீயும் அழகானவன்" என்ற வார்த்தைகளில் ஓர் அற்புதமான கவிதையின் சாரம் இருப் பதுபோல அவனுக்குப் பட்டது. ஓர் அழகான ஒவியத்தைப் பார்த்த-ஒர் அமரத்துவமான இசையைக்கேட்ட - ஒரு சாகாவரம் பெற்ற கதையைப்படித்த உணர்ச்சி மேலிட்டது அவனுக்கு, தன் வாழ்க்கையின் சாரமே அந்தக் கணத்தில் அடங்கியிருப்பதாக அவன் எண்ணினன்.
அவன் மலர்போன்ற அவள் கரத்தைப்பற்றினுன். அவள் அதற்கு விருப்பமில்லாதவள்போல நெளிந்தாள். இடது கால் பெருவிரலால் நிலத்தை உராஞ்சினுள். இடதுகையின் சுட்டுவிரல் நகத்தை வாயில் வைத்துக் கடித்தாள். ஓசை எழாமல் சிணுங்கிஞள்.

உணர்ச்சிகள்/69
மேடையில் யாரோ ஒரு சங்கீத வித்துவான், பரபரவெ னப் பூச்சொரிவதுபோல, ஏதோவெரு இராகத்தை ஆலா பரணம் செய்து கொண்டிருந்தார்.
அவன் அவளின் மென்மையான கரத்தை வருடியவாறே யோசித்தான். இந்த விடயத்திலாதல் தாஞெரு பாக்கிய சாலியென அவன் நம்பினன். அழகான அவளை, தனது அறிவுக்கு சமஞன அறிவுடையவளான அவளை ஒரு "இன்ர லெக்சுவல் கொம்பானியணுக அடைவதில் தான் அதிர்ஷ்ட சாலியென அவன் பெருமிதமுற்ருன். சிந்தனைப் போக்கில் சில விடயங்களில் அவளும் தானும் முரண்பட்டால் கூட , அந்த முரண்பாடுகளும் ஒருவிதமான இன்பந்தானென அவன் எண்ணினன்.
மண்டபம் கலகலக்க சங்கீத வித்துவான் தன் கச்சேரி யை முடித், க்கொண்டார். 'போங்களேன்' என்று சொல்லி அவன் பி1 பிலிருந்து அவள் தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள். விடுவித்த கரத்தை அவள் தன் மற்றக் கரத்தால் தடவியுங் கொண்டாள்.
அவனுக்கு அன்ருெருநாள் கடற்கரைக் ஹோட்டலின், கருங்கற் பாறைகளில் கண்ட காட்சி ஞாபகம் வந்தது. எவ்வளவு ஸ்படிகமாக அந்த வெள்ளைக்காரன், அவளைஅவன் மனைவியாக இருக்கலாம் - முத்தமிட்டான். சிவப்புக் கோளமாக சூரியன் அஸ்தமிக்கும் அந்த நீலக்கடலின் பின் னணியில், எத்தனைபேர் அந்தக் காட்சியைக் கண்டிருப்பார் கள். அவன் கூட அதைக்கண்டு நாணியிருந்தான் இந்த நாட்டின் இளைய சந்ததியினரும் இதைக்கண்டு மாறிவிடு வார்களேயென்று வருந்தியுமிருந்தான்.
"போங்களேன்" என்று சொல்லி தன்கரத்தை விடுவித்த அவளின் நாணங் கலந்த பெண்மையுடன் - எவ்வளவோ பேருக்குமுன் ஒரு ஆடவனை முத்தமிட்ட அந்த வெள்ளைக் காரியின் பெண்மையை ஒப்பிட்டுப்பார்த்தான். இடம், காலம், சூழல், தொடர்ந்த வரலாற்றுப் போக்கு என்பன வற்றுக்கமைய பண்பாட்டுக் கோலங்கள் எப்படி எப்படி அமைந்திருக்கின்றன என்று எண்ணி அவன் வியந்தான்.

Page 40
70/கோடுகளும் கோலங்களும்
"என்ன யோசனை’ என்ற குரல் அவன் காதில் இனித்தது அவன் விழித்துப் பார்த்தான். நிகழ்ச்சிகள் முடிந்து கூட்டம் குலையத் தொடங்கி இருந் தது. அவனுக்காகவும் அவள் தான் பெற்றிருந்த பிரசாத உறையை அவனிடம் நீட்டினுள், 'நான் வரப்போறேன்.' என்று திரும்பினுள். அவளுக்காக அவளைப்போல நாலைந்து பெண்கள் காத்து நின்ருர்கள்.
"ஒரு நிமிஷம்" என்றவன், உங்கள் பெயர் ஒன்றையுமே சொல்லவில்லையே" என்று தயங்கினுள்.
"அவை தேவையில்லையென்று நினைக்கிறேன். எங்களிரு வருக்கும் இந்தப்பொழுதுகள் இன்பமானவை, இனிமேலும் நாம் ஒருவர் வாழ்வில் ஒருவர் குறுக்கிட வேண்டும்தான' என்றவள், திரும்பி தன் தோழிகளை நோக்கி நடந்தாள்.
அவன் இடிவிழுந்ததுபோல விக்கித்து நின்றன். தனது மன உணர்ச்சிகள் மாறி மரப்பதை அவன் உணர்ந்தான். மனித மனப்போக்குகளின்" உணர்ச்சிகளின் விசித்திரங்களை அவன் எண்ணிப்பார்த்துக் கொண்டே, அவர்களைப் பின் தொடர்ந்து நடந்தான். VA
அவர்களின் கவகலவென்ற சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. அவர்கள் எதுவித சஞ்சலமுமில்லாமல் சந்தோஷ மாக, குதூகலமாக சிரித்துக் கதைத்தவாறு கிழக்கே திரும்
Saotri.
அவன் தன்னைப்பற்றி யோசித்தவாறே மேற்கே திரும்பி நடந்தான். தன் மனத்தில் மகிழ்ச்சியோ, துக்கமோ என்று சொல்ல முடியாத ஒர் உணர்ச்சி தேங்கி நிற்பதாக உணர்ந்தான்.
அவளுடன் பழகிய அந்தக் கணங்களின் நினைவு மகிழ்ச் சியைத் தந்தது.
அவள் பிரிந்து செல்கின்ருள் என்ற உணர்வு துக்கத் தைத் தந்தது,
வாழ்க்கை என்பதே உணர்ச்சிகளின் கோலந்தானே என மனத்தைத் தேற்றினன்.
வீதி விளக்குகளின் ஒளியில், ஆடி அசைந்த மர இலை கள் நிழற்கோலம் போட்டன. ポ 1970.

8
இணை
அவனுள் தவிப்பே மேலோங்கி நின்றது. திரு மணமானதின்பின் வந்த இந்த இரண்டு மாதங்களும் ஏதோ நிறைவின்றிக் கழிந் ததுபோல அவனுக்குப்பட் டது.வார்த்தைகளில் சொல் லமுடியாத, நெஞ்சினுள் கெம்பிக்கெம்பி மேலெழும்பு கின்ற, முள்ளாய் உறுத்து கின்ற, மெல்லிய சோக மாய் உள்ளெல்லாம் இழை யூடுகின்ற, அவனுக்கும் அவளுக்குமிடையில் உணர்ச் சிகளின் பூரணமான, உன்ன தமான ஒன்றிப்பைத் தடை செய்கின்ற அந்த 'அது' எது வாக இருக்குமென அவன் சிந்தித்தான்.
அவனுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரி யாத மாதிரியும் இருந்தது.

Page 41
72/கோடுகளும் கோலங்களும்
அவன் ஐந்து வருடங்களாக அவளைக் காதலித்தே கைப் பிடித்தான். "வாழ்ந்தால் அவளுடன்தான் வாழ்வேன்’ என்பதில் அவன் தளராத உறுதி கொண்டிருந்தான். அவளுடன் வாழும் அந்த வாழ்க்கைக்காக அவன் எத் தனையோ இன்னல்களைத் தாங்கி இருந்தான். எத்தனையோ "அன்புக்குரியவர்களின் மனத்தை வருத்தி இருந்தான். எத் தனையோ உறவுப் பிணைப்புகளை மிகுந்த சோகத்துடன்கவலையுடன்-கண்ணிருடன் அறுத்திருந்தான்.
அந்த இலட்சியப் பயணத்தின் வெற்றிக்காக அவளும் அவனுடன் ஒத்துழைத்தாள். அவளும் எத்தனையோ சோகங் களால் உலுக்கப்பட்டிருந்தாள். எத்தனையோ சந்தர்ப்பங் களில் கண் கலங்கி இருந்தாள். எத்தனையோ போதுகளில் மனத்துள் வெதும்பி வெதும்பி அழுதிருந்தாள். எத்தனையோ நாட்கள் பட்டினியாய் - துயிலில்லாமல் கிடந்து உழன்றிருந் தாள.
அதை எல்லாம் அவன் அறிவான். அதை எல்லாம் அவளும் அறிவாள்.
அப்போதெல்லாம் அவர்கள் தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட காதலில் எவ்வளவு பற்றுறுதியுடன் இருந்தார்கள். அவள் சிரித்தால் அவன் சிரித்தான். அவன் அழுதால் அவள் அழுதாள். அவள் சிரிக்க வேண்டுமென் பதற்காக அவனும், அவன் சிரிக்க வேண்டுமென்பதற்காக அவளும் சிரித்தார்கள்,
வசந்த காலத்தின் உலகின்குதூகலத்தை அவர்கள் அனுபவித்தார்கள். சுற்றிச் சுழலும் சுழல் காற்றில், கரு மிருட்டில், கொடூர இடியின் ஒசையைக் கேட்டு அவர்கள் பயந்தார்கள். அமைதியான நீரோட்டத்தில் உல்லாச மாகப் படகில் பாடிக் கொண்டே மிதந்தது போன்ற மகிழ்ச்சியில் திழைத்திருந்தார்கள். காலம் அப்போதெல்லாம் எவ்வளவு விரைவாகச் சென்றது; கணங்களாக அசைந்து ஊர்ந்து சென்றது; அசையாது நினறு அவர்களைப் பார்த்து இரசித்தது.

ളുഞ്ഞ് 178
அவன் வாசல் நிலையில் சாய்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். முற்றத்துக் கிணற்றடியின் தென்னைமர உச்சிகள் இருண்டிருந்தன. மெல்லிய காற்றில் அவை சல சலக்கும் ஒசை விட்டுவிட்டுக் கேட்டது. கண் சிமிட்டும் தாரகைகள். தங்கக் கடுக்கன்களைக் கையில் அள்ளி வாரி இறைத்தது போல வானமெங்கும் பரந்து கிடந்தன.
அவன் அவள் எங்கே இருக்கிருளென்று பார்ப்பதற்காக வீட்டினுள் திரும்பிப்பார்த்தான். கண்ணுடி விளக்கின் மஞ்ச ளொளி மங்கி இருந்தது. ஜன்னல் திரைச்சீலை காற்றில் ஆடஆட, அந்த ஒளிக்கதிர்கள் வெளியே பரவிப் பரவிக் கோலம் போட்டன. வீட்டினுள் ஆழ்ந்த அமைதி கவிந்து கிடந்தது. கிழவி பாக்கு இடிக்கும் சத்தம் மட்டும், அவவின் ஒதுக்குப்புற மூலையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவள் அறையிலிருந்து ஏதாவது புத்தகம் வாசித்துக் கொண்டிருப் Llyfrair.
அவள் கொட்டாவி விட்டாள்.
அப்போதெல்லாம் இப்படி ஒரு தனிமைக்காக அவர்கள் எப்படியெல்லாம் ஏங்கித்தவிப்பார்கள். அப்படிக்கிடைக்கும் அருமையான தனிமைப்போதுகள். எவ்வளவு இன்பங்கள் 9 a , இன்பங்களேதான்; தனிமையின் துயரங்கள், சுமைகள், சோகங்கள், சஞ்சலங்களையெல்லாம் அவளும்-அவனும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும்போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது, கண்ணிர்த் துளிகள் உருண்டு வடிகையில் அவற்றை ஆதரவாகத் துடைத்து விடும் விரல்களின் ஸ்பரிசத்தின்போது, மெல்லிய புன்னகை யின்போது, இணைந்தொலிக்கும் வெண்கலச் சிரிப்பில் தன்னை மறந்த இலயத்தின்போது, இதமான அணைப்பின்போது, மார்பிலோ தோளிலோ முகம் புதைத்து விம்மும்போது, ஊடல்கொண்டு பிணங்கிப் பின் உறவாடும்போது. இன்பங்கள். இன்பங்களேதான். தாம்பத்தியத்தின் . ஏன் வாழ்க்கையின் தாற்பரியமே அதுதானே?
கூட்த்தில் சுவர்க்கடிகாரம் "டிக், டிக்கென ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தது. பல்லியொன்று தன் பாஷையில்

Page 42
74/கோடுகளும் கோலங்களும்
ஏதோ சொல்லிற்று. அடுத்த வீட்டிலிருந்து முதுமையின் கனமேறிய இனிய ஆண்குரலொன்று காற்றில் மிதந்து வந்தது.
"பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தால்மற வாதே நினைக்கின்றேன். 9
அவனுக்கு நினைவு வந்தது. மெல்ல ஆடி அசைந்து ஊர்ந்தது தேர். பஜனைக் கோஷ்டியினர் ஆடிப் பாடினர். கரகாட்டம் நடந்தது. நாதஸ்வரம் மேளத்துடன் காவடி யாட்டம் நிகழ்ந்தது இடைக்கிடை ஊதுவத்தியின் மனம் காற்றில் கலந்து மனத்தை அள்ளிச் சென்றது. சர்க்கரைத் தண்ணிர் பந்தலில் சிறுவர் கூட்டம் கும்மாளமிட்டது. பட்டு வேட்டி சால்வை, பட்டுச் சேலை, வண்ணச் சட்டைக் கூட்டம் அசைந்தது. ஒலிபெருக்கியில் “சின்னத்தனத்துக் கோர், சிங்காரப் பேச்சுக்கோர், சிரித்த முகத்துக்கோராம்." பாட்டுப்பாடியது.அப்போதுதான் அவன் அவளைக்கண்டான்.
வியப்பால் அவன் கண்கள் விரிந்தன.
காலச்சுழற்சி அவளை இவ்வளவு மெருகுபடுத்தி உள்ளதா?
என்னமாதிரி வளர்ந்துவிட்டாள் அவள்! ஒல்லியாய், உயரமாய், சிவப்பாய், கவர்ச்சியாய். அலையலையாக, கறுத் திருண்ட நீளமான தலைமயிர் கற்றையாய்.
அவளும் அவனைக் கண்டு கொண்டாள்.
கருமணிகள் வெட்டிச் சுழன்றன,
மெல்லிய ஒரு புன்னகையுடன் அவள் முகத்தைத் திருப் பிக் கொண்டாள்,
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்புதான் அவன் அவளை இறுதியாகக் கண்டிருந்தான், அப்போதும் ஏதோ திருவிழாவிலோ - கலியான வீட்டிலோதான் அவளைக் கண்ட தாக அவனுக்கு மங்கலாக ஞாபகம் வந்தது. பட்டுப் பாவாடையுடன் சிறுமியாய் அவள் துள்ளித் திரிந்தது ஞாபகம் வந்தது.

gåರಶTI75
"அப்பனே முருகா" என்று கிழவி முனங்குவது கேட்டது. முற்றத்துக் கிணற்றில் அடுத்த வீட்டார் யாரோ தண்ணிர் அள்ளும் சலசலப்புக்கேட்டது. தாழ்வாரத்தில் கொட்டிலில் கட்டியிருந்த மாடுகன்றுகளின் சந்தடியும் கேட்டது.
ஒவ்வொரு நாளும் ஒரு குறித்த நேரத்தில் அவன் சைக்கிளில் பவனி வரத் தொடங்கினன். கிடுகு வேலித் துவாரத்தினுரடாக முதலில் இரண்டு கண்கள் பார்த்துப் பரவசமாயின. நாளசைவில் கண்கள் சிரித்தன. கிடுகு வேலித் துவாரம் பெரிதாக அவள் முகமே செந்தாமரையாய் மலர்ந்து சிரித்தது.
‘எப்பிடிச் சுகம்" என்று அவன் ஒருநாள் கேட்டான். அவள் பதிலுக்கு இதழால் சிரித்துக் கொண்டாள். "எப்படிச் சுகம்' என்று அவன் அடுத்த நாளும் கேட்டான்
'நல்லாய்த்தான் இருக்கிறேன்" என்ருள் அவள். அன்ருேடு அந்த இனிய போராட்ட வாழ்க்கை அவர் களுக்கு ஆரம்பமாயிற்று. இனிய போராட்டங்கள்தான். வாழ்க்கையே இனிய போராட்டங்கள் தானு?
வாசல் நிலையில் சாய்ந்து நின்றவன் வாசல் படியில் இருந்து கொண்டான்.
அந்த இனிய வாழ்க்கை எப்படி போராட்ட வாழ்க் கையானதென அவன் சிந்தித்தான். உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்ற சாதி வேறுபாடுகளைப் பற்றியும் காரணமின்றியே வரட்டுப் பிடிவாதத்திற்காக அவற்றை விடாது பற்றிப் பிடித்திருக்கும் மனிதர்களைப் பற்றியும் அவன் எண்ணிப் பார்த்தான். அதிர்ஷ்டவசமாக அவனும் - அவளும் ஒரே உயர்ந்த சாதியினராக இருந்தாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளினல், அந்தஸ்து வேறுபாடுகளினுல் அவர்கள் சுற்றம்-'அந்தஸ்தில் உயர்ந்தவன்" என்று கருதப் படும் அவனின் சுற்றம் அவர்களின் இணைவுக்கு எதிராகப் படைதிரண்டபோது, அவன் தான் கொண்ட கொள்கையில் பற்றுறுதியாகத்தான் இருந்தான். சகோதர பாசத்தையும், பெற்றவரின் பாசங்களையும், உற்ருரின் பாச வலைகளையும்

Page 43
76/கோடுகளும் கோலங்களும்
மீறி அவன் அவ்ளைக் கரம் பிடித்ததில் உண்மையில் பெருமை கொண்டிருந்தான். உற்ருர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்த போது - ஒன்றன் பின் ஒன்ருக எத்தனையோ இடர்கள் தலை தூக்கியபோது-எவ்வளவு உறுதியுடன், எவ்வளவு திடசித் தத்துடன், எவ்வளவு சாதுரியத்துடன் அவற்றை எல்லாம் கடந்து தான் அவளைக் கரம் பிடித்தேன் என்பதை நினைத் துப் பார்த்தபோது அவன் தன்னைத்தானே வியந்து கொண்டான்.
என்ருலும். என்ருலும். .
அந்த இணைவில் ஏதோவோர் குறை இருப்பதுபோல அவனுக்குப்பட்டது. அவர்களது முதலிரவில் - மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், அவன் அவளை அணைத்துத் தழுவிய போது-உயிரற்ற பாவையாய், அவன் கைகளை அவள் மெல்ல விலக்கி-கண்களில் கண்ணீர் மணிகள் பளிச்சிட அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்த்தபோது - அவளது மனத்தின் ஆழத்தில் ஏதோவோர் தவிப்பை ஊட்டும் சோகம் படிந்திருப்பதை அவன் உணர்ந்து சொண்டான்,
அவன் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தினன். அவள் கண்ணிரைத் துடைத்தாள்.
"பிரமிளா ஏன் நீ அழுகிருய்?"
வாழ்க்கையின் இனிய இந்த நேரத்தில் ஏன் நீ அழ வேண்டும்? இந்த இனிய நாளைப் பற்றியெல்லாம் நாம் எத்தனை கற்பனைகள் செய்திருந்தோம்? அன்ருெரு நாள்அந்தக் கருமிருட்டில் - தனிமையில் நான் எது வெதுவோ செய்ய முற்பட்டபோது நீ சொன்னுய்: "எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரும். அந்தக் காலம் வரும் வரையும் பொறுத் திருங்களேன். எல்லாவற்றிலும் உங்களுக்கேன் இந்த
eyau8FpJTub?ʼ ʼ
அந்த நேரத் தவிப்பில் நான் சொன்னேன். 'நாங்கள் ஒன்ருக வாழ்வது நிச்சயம் தானேடி. நீ ஏன் பயப்படுகிருய்."
நீ ஒன்றுமே சொல்லாது மெளனமாஞய்.

g&st 177
நான் ஒன்றுமே செய்யாது அமைதியானேன். "பிரமிளா ஏன் நீ அழுகிருய்?"
நான் அவளைக் காதலித்துத்தான் கரம் பிடித்தேன். காதலின் அந்த மனுேகரங்களெல்லாம் எனக்குத் தெரியும். அதனுல், உலகின்-இயற்கையின் நியதிகளுக்கு நான் மாறு பட்டவனல்ல. நான் ஆண்; அவள் பெண் எனக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை அறியும் ஆசைகள். கிளர்ந்து தான் இருந்தன. ஆனல், சிருஷ்டியின் நுட்பங்களே அறியும் உந்துதல்தான் ‘ஒன்ருக வாழ்வதின்" -தாம்பத்தியத்தின் முற்றுமுழுதான நோக்கமல்ல என்பதும் எனக்கு தெரியும்
"பிரமிளா ஏன் நீ அழுகிருய்."
அவள் வெறுமே சிரித்தாள். 'அந்தஸ்தில் குறைந்தவர் கள் அந்தஸ்தில் கூடியவர்களோடு இணைவதினுல் சமமான வர்களாகிவிட முடியாதுதானே."
அவனுக்குப் புரிந்தது. அவன் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலேயே தவித்துக்கொண்டிருந்தான். வாழ்க்கையின் பந்தம் பாசம் என்ற உணர்வுகள், உறவுகள். அவனுேடு உறவு கொண்டாடுபவர்கள் அவன் மனைவியான அவளை மதிக்கவில்லைத்தான். அதற்காக.. அவனும். அவளும் ஒரு வரை ஒருவர் புரிந்த ஒருவரை ஒருவர் நேசித்த, ஒருவரில் ஒருவர் ஆறுதல் காண்கின்ற ஒருவருக்காகவே ஒருவர் வாழ் கின்ற தம்பதிகள் ஆனபோது - அவன் அவளுக்காக சில வற்றை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டுமா? இந்த உல கத்தில் தனித்து விடப்பட்டவர்கள் இணைந்து, தனிமைத் துயரங்களை மறந்து, ஒருவரில் ஒருவர் ஆறுதல் காண்பது தானுே தாம்பத்தியம்?
சுவர் மணிக்கூடு ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது. 'சாப்பிட வாருங்கோவேன்.' வாசல்படியில் இருந்தவாறே நிமிர்ந்து பார்த்தான் அவன். அவள் எவ்வளவு அழகாக ஜொலித்துக் கொண் டிருக்கிருள். எவ்வளவு எடுப்பாகப் புன்னகை பூக்கிருள். எவ்வளவு நிஷ்களங்கமானவள் அவள். அவனுக்காகவே

Page 44
78/கோடுகளும் கோலங்களும் தன்னை அர்ப்பணித்து-அவனுக்காகவே வாழ்ந்து கொண் டிருக்கிற - அவனுடையவள் அவள்.
அவனுக்கு எதுவெதுவோ எண்ணங்கள் மனதில் மிதந்தன.
"என்ன அப்பிடிப் பாக்கிறியள். சாப்பிட வாருங்கோ வேன்.'
அவன் எழுந்து அவள் கரத்தைப் பற்றினன். அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான். 'பிரமிளா உன்னைப் புரிந்து கொண்டேன்; உனக்காகவே வாழ்வேன்.'
அவன் கைகளை இறுகப் பற்றியவாறே, அவன் தோளில் முகம் புதைத்து அப்போதும் அழுதாள் அவள். 米 1971

9
இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்
காலை வெளுத்தபின் ஏழுமணிபோல் எழுந்திருந் தான். அவன் சிறிய தங்கை *அண்ணை,அண்ணை'என்று அவனை உருட்டிப் புரட்டி எழுப்பினுள், சோம் பல் முறித் துக் கொண் டு , பாயைச் சுருட்டி சுவர்ப்புற மாக ஒதுக்கி வைத்தான்.
வீ டு கல கலத்து க் கொண்டிருந்தது. சிவ ன் தம்பி, தங்கைகள் பள்ளிக் கூடம் செல்வதற்காகப் பர பரத்துக் கொண்டிருந்தார் கள்,
'அம் மா ஏழேகால் வஸ் போக ப் போ குது. கொஞ்சம் கெ தி யாய் ப் பாசலைக் கட்டித் தாண".
*அண்னை, அண்ணை இண்டைக்கு உன்ரைபேனை யைக் கொண்டு போறன்".

Page 45
80/கோடுகளும் கோலங்களும்
**கீதா குளிச்சு எத்தனை நாளாகுது. இண்டைக்குக் குளியாமல் பள்ளிக்கூடம் போகக் கூடாது."
'அண்ணை வதனி தனக்குக் குளிக்க வாத்து விட ட் Linth.''
'விடிய விடியக் கிடக்கிறது. இப்பதான் எல்லாரும் ஒண்டாய்ப் பரபரக்கிறது.”*
வானத்திலே பனிமூட்டம் கவிந்திருந்தது. காலைக் கதிர் கள் புகைக் கோடுகளாக வீட்டு முன் விருந்தையில் கோலம் போட்டன. மெல்லிய குளிர்காற்று இதமாய் ஊதிச் சென் Ք0ֆl.
வேப்பங்குச்சி ஒன்றை முறித்து வாயில் வைத்து மெல்லத் தொடங்கினன். சிறிய தங்கையைக் கூம்பிட்டுக் குளிப் பாட்டி விட்டான். 'அண்ணை எப்ப வந்தனிங்கள்" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அடுத்த வீட்டுச்சின்னப்பெண். சின்னத் தங்கையின் தோழி.
"நேற் றே வந்துவிட்டேன். நீ காணவில்லையோ' என்ருன். w
"பொய் பொய்' என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கினுள் அவள்.
வீட்டின் கலகலப்பு ஒய்ந்து விட்டது. எல்லாரும் எங் கெங்கோ போய்விட்டார்கள். அம்மா ஆசுவாசமாக உட் கார்ந்து டக்டக்கென்று பாக்குவெட்டியால் பாக்கு வெட் டிக் கொண்டிருந்தாள். சின்னக்கன்று துள்ளிக்கொண்டு ஓடிவந்து தூரநின்று அவனை முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் துள்ளிக்கொண்டு ஓடிற்று. புகைபோக்கிக் குழா யிலிருந்து காகமொன்று கரைந்தது. அம்மா எழு ந் து "கு ச் சூ" வென அதைக் கலைத்தாள்.
**காலமை வெள்ளெனக் காகம் கரையுது".
பொழுது மேலே ஏறி, வெய்யில் உறுத்தத் தொடங் கிற்று. பல் துலக்கிக்கொண்டே முற்றத்துப் பூங்கன்றுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளையும் சிவப்புமாய்

இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்/81
குலைகுலையாய்ப் பூத்துக் குலுங்கும் கலியான மல்லிகையைக் காணவில்லை. அந்த இடத்தில் கொடி மல்லிகையொன்று பசுந்தளிர்விட்டு வளர்ந்துகொண்டிருந்தது. கொய்யா மரத் தில் இளம் பிஞ்சுகள் தொங்கிற்று. நெல்லிமரத்தின் இலை களை ஏதோ பூச்சி அரித்திருந்தது. "இரவு ராணி" இலை யுதிர்த்து நின்றது.
"விடிஞ்சு எவ்வளவு நேரமாயடா போச்சு முகத் தைக் கழுவிப் போட்டு வாவேன்ரா! நானும் என்ரை வேலையைப் பாக்க...!"
மெளனமாக முகம் கழுவச் சென்றன். அன்றைய பொழுதை எப்படிக் கழிக்கலாமென யோசித்தான். சீ. லீவிலை இங்கை வந்தால் நேரமே போகுதில்லை. சைக்கிள் இருந்தாலாவது அங்கினை இங்கினை போகலாம். உங்கை பொடியன்களும் இல்லைத்தானே. அவனவனும் தங்கடை தங்கடை வேலையளுக்குப் போயிருப்பங்கள்."
- சாப்பிட்டு விட்டு, "பாரதியார் கதை" களை எடுத்து வந்து சுவரோடு சாய்ந்திருந்து படிக்கத் தொடங்கினன். ஞானரதம் சின்னச் சங்கரன் கதை, தராசு. மேலோட் டமான ஒரு பார்வை. அச்செழுத்துக்கள் கண்ணை உறுத் தின. கண்களை மூடிக்கொள்ள வேண்டும் போல ஒரு தவிப்பு! அப்படியே சரிந்து நித்திரை கொள்ள வேண்டும் போல. い
"எப்படியும் இப்ப நித்திரை கொள்ளிறேலை. லீவிலை வந்ததற்கு ஆகப் பகல் முழுக்க நித்திரை கொள்ளிறதும், காலையில் நேரஞ்செல்ல எழும்புறதும் தானே வேலை."
மரங்களற்ற வெளியினூடாகத் தொலைவை ஊடுருவிப் பார்த்தான். வளவின் வடகீழ் மூலையில் நின்ற பெரிய இலுப்பை மரம் தறிக்கப்பட்டு விட்டது. இந்த உலகத்தைப் பற்றிய அறிவு சரியாக அவன் மனத்தில் பதியாத காலத்தில் அதை விற்று விட்டார்கள். தோணி செய்வதற்காக அதன் அடி மரத்தைக் கொண்டு செல்வதாகச் சொன்னுர்கள்.
6

Page 46
82/கோடுகளும் கோலங்களும்
அந்த மரத்தின் கீழ் ஒரு கொட்டிலில் அவன் அப்பாச்சி குடியிருந்தாள். அவள் பச்சைக் கோதுமை மாவில் ரொட்டி சுட்டு இரகசியமாக அவனுக்குத் தருவாள். அந்த மரத் துடனேயே அவள் வாழ்க்கை பிணைந்திருந்தது. ஒரு பரு வத்தில் அந்த மரம் பூக்கும்; ஒரு விதமான பாணி மணத் துடன் அந்தப் பூக்கள் உதிரும் காலம் இரம்மியமானது அரும்பு கட்டும்; அரும்புகள் உதிரும்; காய்க்கும் பழுக்கும்; வெளவால்களும் - பறவைகளும் சத்தமிடும்; இலைகள் உதிர் ந்து மொட்டை மரமாய் நிற்கும்; வசந்தக் குறுகுறுப்பில் பச்சைப் பசுந்தளிர்களை ஈனும்.
அப்பாச்சியின் கொட்டிலிலும் இலுப்பம்பூ மணக்கும்; இலுப்பை முத்துக்கள் காயும்; அதை வாங்க வரும் பெண் களின் பேரம் பேசும் குரல் இடைக்கிடை ஒலிக்கும்.
*உன்னுணை ஆச்சி ஒன்றேகால் ரூபாய்க்கு மேல் ஒரு சதமும் தரேன்"
'கிழவி குப்பை என்ன விலை சொல்கிருய்?"
"நாற்பத்தைந்து ரூபா', *சரி சரி நாற்பது ரூபாய் தாறேன், வேறை கதை பேசாதை'.
இரட்டை மாட்டு வண்டியில் குப்பை ஏற்றுவார்கள் மாடுகளைக் கழற்றி, பக்கத்தில் மலை ஆமணக்கில் கட்டி யிருப்பார்கள். மாடுகள் கழுத்து மணிகள் குலுங்க, வாலைச் சுழற்றி முதுகிலிருக்கும் ஈக்களைக் கலைத்துக் கொண்டே மேயும்.
குப்பை விற்ற இரண்டொரு மாதங்களுக்கு அப்பாச்சி பின் கழுத்தில் அந்தப் பவுண் அட்டிகை தொங்கும். அப் போதெல்லாம் அப்பாச்சி மிகவும் சந்தோஷமாக இருப் பாள், மீண்டும் அது அடைவுக்குச் சென்றுவிடும். ஒரு மழைகாலக் காலைப் பொழுதில் அப்பாச்சி செத்துவிட்டாள்.
'தம்பி எப்ப வந்ததாக்கும்?" திடுக்கிட்டுப் பார்த்தான். வெண் தாடியுள் காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்துக்

இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்/88
கொண்டு பெரியான் குழைந்துபோய் நின்ருன். இரண்டு கைகளையும் இடுப்புக்கு மேலால் வயிற்றுடன் இணைத்திருந் தான்.
"நேற்றைய மெயிலிலை வந்தனன் பெரியான்.' "ஒமெண்டுதானக்கும் அங்கை சொன்னவை"
எங்கே என்று கேட்க நினைத்தவன் அது எங்கேயாக இருக்குமென மனதில் தோன்றவும், பேசாது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகள் கிளை பரப்ப முனைந்தன. நெஞ்சில் ஏதோ வேதனை கவிந்து வரு வது போல. தலையைக் குனிந்துகொண்டான்,
தன்னைச் சுதாகரித்து நிமிர்ந்தவனின் பார்வை பெரியா னின் முகத்தில் படிந்தது. அவன் கண்களில் படிந்திருந்த அந்த இரக்கத்தின் சாயை இவனை உறுத்திற்று. அவர்க் ளின் குழந்தைப் பருவத்து இணைவுகளையும் கனவுகளையும் எல்லையில்லாத வாத்சல்யத்துடன் அவதானித்தவனும் மனத் தால் ஆசீர்வதித்தவனும். அவை எதிர்பாராத முறை யில் முடிந்தபோது மெளனமாகவே தன் எல்லையற்ற அனு தாபங்களை தெரிவித்து ஆறுதல் அளித்தவனும் எல்லாம் தெரிந்தவனுயும் எதுவுமே தெரியாதவனைப்போலவும்
பெரியான். , உனக்கு எல்லாம் தெரியும்.”
* தம்பி ஏதோ பழைசுகளை யோசிக்குது போலை'
* 'இல்லைப் பெரியான்' கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான்.
கூனல் விழுந்த முதுகுடன் தா தாவென இரக்கும் கண் களுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்ருன் பெரியான்.
"இப்ப என்ன விலை போகுது பெரியான்?" 'ஐம்பது சதம் தம்பி" பேசாமல் எழுந்து சென்று ஒரு ரூபா நாணயத்தை எடுத்துவந்து பெரியான் கையில் கொடுத்தவன் பழைய படியே சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

Page 47
84/கோடுகளும் கோலங்களும்
"அப்ப நான் வாறனக்கும்"
தம்பி பெரியானக் கொஞ்சம் நிற்கச்சொல்லு" குசி னியிலிருந்து அம்மா சொன்னுள்.
"இல்லைப் பிள்ளை; தம்பி ஒரு ரூபா தந்தது; நான் போகப்போறன்.'
"அப்ப நீ இப்ப தேத்தண்ணி குடியாய்தானே! பின் னைப் போட்டுப் பேந்து வாவேன்'.
"அப்ப நான் வாறன் தம்பி’. * கைகளை வயிற்றுக்கு மேலால் இடுப்புடன் இணைத்த படியே, கூனல் விழுந்த முதுகுடன் அந்தத் தாண்டும் நடை யில் பெரியான், தெற்கு வேலிப் படலையைக் கடப்பது தெரிந்தது. இவன் மனதில் சலிப்பு மேலோங்கியது.
'தம்பி தேத்தண்ணி குடிக்கப் போறியே’’ 'இப்ப வேண்டாம் அம்மா’’. " பின்னை எலுமிச்சம்பழத் தண்ணி கரைச்சுத் தாறதே?? 'இப்ப ஒண்டும் வேண்டாம்". மனம் எங்கெங்கோ அலை பாய்ந்தது. இப்போ ஒவ் விசில் இருந்தால் என்ன செய்துகொண்டருப்பேன்? அந்த இருண்ட மூலையிக்கை இருந்து ஏதாவது வாசித்துக் கொண் டிருப்பேன். இல்லாவிட்டால் கன்ரீனுக்குப் போய் அரசி யலோ இலக்கியமோ பேசிக்கொண்டு நண்பனுடன் தேத் தண்ணி குடிச்சுக் கொண்டிருப்பன்."
"ஒவ்வீசிலை எனக்கு முன்னலை இருக்கிற பெட்டையள் எப்போதும் போலவே சும்மா கலகலத்துக் கொண்டு, சிரித் துக் கொண்டு, ஒருவருக்கொருவர் கடதாசித் துண்டுகளால் எறிந்து கொண்டிருப்பினம்!"
"அவளை ஒருக்கால் பாக்க வேணும் போல இருக்குது. ஏதாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அரைகுறைச் சிங்க ளத்தில் பேசவேணும் போல இருக்குது. அவளுடைய அந்த கிறங்கவைக்கிற, அர்த்தம் செறிந்த, ஆவல் தொனிக்கிற பார்வையையும் புன்னகையையும் பார்த்துப் பதிலுக்குச் சிரிக் கவேணும் போல இருக்குது!"

இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்/85
வளவின் தொடக்கத்தில், புளியமரத்தடியில் அம்மம்மா வந்து கொண்டிருந்தா, தலையில் பெரியதோர் ஒலைக் கடகம், கைகளை ஆட்டி ஆட்டி அசைந்து அசைந்து வந்துகொண் டிருந்தா. வாசல் விருந்தையில் கடகத்தை வைத்து விட்டு அவனைப் பார்த்துத் தலையாட்டிச் சிரித்தா, முகத்தில் இழையோடிய ஒரு பிரகாசம். அவன் வெறுமே சிரித்தான். "எப்பவடா தம்பி வந்தனி?’’ - 'நேற்று வந்தனன் எப்பிடி அம்மம்மா உங்கடை சுவாத்தியம்?*
"எங்கடை சுகத்துக்கு என்னடா குறை?? அவனுக்குப் பக்கத்தில் சுவருடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். ༤ く
'கொழும்புப் பக்கமெல்லாம் சாப்பாடு எப்படிப் போகுது? ஆள் சரியான கேவலம்'.
"நான் நெடுகிலும் இப்படித்தானே’ என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். '
"மனம் சந்தோஷமாக இருந்தால் தானே அம்மம்மா உடம்பும் தேறும்'. ど*
'ஏன் இப்ப உனக்கென்ன குறை?" "எனக்கு இந்த வேலை பிடிக்கேலை படிச்சுப்போட்டு படிப்புக்குத் தக்க வேலை கிடைச்சாத் தானே சந்தாஷமாக இருக்கலாம்.'
"ஏன் இப்ப எவ்வளவு சம்பளம் தாருங்கள்?" "முன்னூறு ரூபாய்க்குக்கிட்ட நான் சம்பளத்திற்காகச் சொல்லேலை அம்மம்மா." - .
சில கணங்கள் மெளனமாக இருந்தான். தன்னுடைய நுணுக்கமான உணர்வுகளை, சோகங்களை எப்படி அவருக்குப் புரியவைக்கலாமென யோசித்தான்."
"அவரவருக்குப் பிடித்தமான வேலை எண்டாத்தானே சந்தோஷமாக இருக்கலாம்",

Page 48
86/கோடுகளும் கோலங்களும்
அம்மம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவனும் மெளன மாகத் தன் நினைவுகளில் ஆழ்ந்தான். வாழ்க்கைதான் எத்தனை அற்புதமாக அமைந்துவிடுகின்றது. எத்தனை வித மான இனிய கனவுகள்; எத்தனை விதமான மயக்கும் எழில் கள்; எத்தனை விதமான சோகங்கள் எத்தனை விதமான அப்பாவித்தனங்கள்; எத்தனை நடிப்புகள்; எத்தனை கள் ளங் கபடமற்ற புனிதங்கள்.
அம்மம்மாவைப் பார்த்தான். அவள் காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைத் தட்டத்தை வைத்து டக் டக்கென்று பாக்கு வெட்டிக் கொண்டிருந்தாள்
'அம்மா அம்மம்மா வந்து நிக்கிரு." பலத்த குரலில் சொன்னன்.
""குஞ்சாச்சி உதில் வெத்திலைத் தட்டம் கிடக்கணை: உவன் தம்பியோடை கதைச்சுக் கொண்டிரணை நான் இந் தக் கையலுவலை முடிச்சுப்போட்டு வாறன்” அம்மா குசினி யிலிருந்து வெளியே வந்து சொன்னுள்,
'அவன் ஒண்டும் கதைக்கிருனில்லையடி பிள்ளை. சும்மா கேட்டதுக்குப் பதில் சொல்லிப் போட்டு இருக்கிருன்.""
"என்னத்தையணை கதைக்கிறது’ அம்மம்மாவும் அம்மாவுடன் குசினிப் பக்கம் சென்ருள். அவன் தனிமையில் விடப்பட்டான். நேரம் கிட்டத்தட்ட பத்து மணியாகிவிட்டிருந்தது. வெளியே வெயில் கானல் எறியத் தொடங்கியிருந்தது. வீட்டு வாசல் முன்பாக சோலையாய் கவிந்திருந்த பலா மரத்தின் கிளைகள் சோழகக் காற்றில் அசைந்து சலசலத் தன. மரத்தின் கீழே ஒளிப் புள்ளிகள் கோலம் போட் டன.
கிழக்கே அடைக்கப்படாத வேலியினூடே தொலையை ஊடுருவினன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் குஞ்சியம்மா வின் வீட்டுக் கிணற்றடித் தென்னஞ்சோலைகள் தெரிந்தன. கிணற்றடியில் யாரோ ஒரு பெண் சலவை செய்து கொண்

இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்/87
டிருந்தாள். அவள் சேலை ஒன்றை தலைக்கு மேலால் தூக்கித் தூக்கி கல்லில் அடித்துக் கொண்டிருந்தாள்.
தூக்கம் கண்ணை மயக்கிற்று. கண்களைக் க ச க் கி க் கொண்டான்.
"குஞ்சியம்மா வீட்டை போன இராணி அல்லது வேவி ஆரேன் இருப்பினம். அவையோடை ஏதேன் கதைக்கலாம்." 'அம்மா ஞானக் குஞ்சியம்மா வீட்டை போட்டு வாறேன்.”
1974

Page 49
O
எல்லைகள்
அந்தக் குருவியின் சுத் தலுடன் அவனுக்கு விழிப் புக் கண்டது. அவன் இடப் புறமாகத் திரும்பிப் படுத் தான். பாதங்கள் குளிர்ந்து சில்லிடுவது போலிருந்தது. போர்வையை இழுத்துப் பாதங்களை மூடிக்கொண் டான். அடுத்த அறையில் மெல்லியதாக கொட்டாவி விடும் சத்தம் கேட்டது. ஆள் அசைவதினுல் கட்டி லின் சரசரப்புக் கேட்டது. முழுவதாகத் தூக்கம் கலை யாத மயக்கத்தில் அவன் கண்களை மூடியிருந்தான். மூடிய கண் இமைகளில் இருள் வட்டங்களும், ஒளி வட்டங்களும் ஒன்ருேடு ஒன்று கலந்தும், கூடியும், பிரிந்தும், மாறுபட்டும் அசைவது போலிருந்தது.

எல்லைகள்/89
ஒருவிதமான அமைதி ஒருவிதமான மயக்கம் ஒருவிதமான இனம்புரியாத அலுப்பு. அந்தக் குருவி மட்டும் டிரிங். டிரிங். என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது. மூடிய கண்ணிமைகளின் ஊடாக ஒளி ஊடுருவிற்று. அவன் திடுக்கிட்டு விழித்தான். அடுத்த அறையில் வெளிச் சம் போடப்பட்டிருந்தது. கதவின் இடைவெளிகளூடாகவும், கூரையை ஒட்டிய இடைவெளியினுாடாகவும் அது இவன் அறையிலும் பரவி இருந்தது. இவன் அறை நண்பன் சிவத் தக் கம்பளியால் உடல் முழுவதையும் மூடி குறங்கி உறங் குவது மங்கலாகத் தெரிந்தது. அடுத்த அறையிலெழுந்த சந்தடியிலிருந்து வீட்டு எஜமானி எழுந்து விட்டாளென இவன் ஊகித்தான்.
இவன் நீட்டி நிமிர்ந்து படுத்தான். கண்களை நன்ருக மலர விழித்துக் கூரை முகட்டைப் பார்த்துக்கொண்டிருந் தான். அன்று இரவு சரியாக உறங்கவில்லைப்போல இவ ணுக்குப் பட்டது. இரவு பதினெரு மணிக்குப் படுக்கப் போகமுன் கடைசியாகப் படித்த கதை இவனுக்கு மங்க லாக ஞாபகம் வந்தது. முதல்நாள் மாலையில் ஒவ்வீகக்கு லீவு போட்டுவிட்டுப் பார்த்த சினிமாப்படம் ஞாபகத்திற்கு வந்தது. முதல் நாள் அவன் நெருங்கிய நண்பனிடமிருந்து வந்த, கண நேரச்சலசலப்பை ஏற்படுத்திய, அவன் மனத் தில் ஏதோ இனம்புரியாத சோகத்தை எற்படுத்திய அந்தக் கடிதம் ஞாபகத்திற்கு வந்தது.
அந்தக் குருவி தொடர்ந்தும் டிரிங். டிரிங். என்று கத்திக்கொண்டே யிருந்தது. இந்த இழவு ஏன் கத்தித் தொலைக்கிறது." என்று நினைத்துக்கொண்டான். தொடர்ந்து அப்படி நினைத்ததற்காக வெட்கப்பட்டான். அந்தக் குருவியின் கத்தலை அவன் மிக ஆழமாகக் கவனித் தான். அதில் பொங்கி வழியும் குதூகலத்தை அவன் உணர்ந் தான். அவனுக்கு அந்தக் குருவியின் மேல் பொருமைப்பட வேண்டும்போல் இருந்தது.
பெருமூச்சு விட்டுக்கொண்டு ஏதோ நினைவில் மூழ்கிக் கிடந்தவன் சரேலென துள்ளி எழுந்துகொண்டான். கண்

Page 50
90/கோடுகளும் கோலங்களும்
களைக் கசக்கிக்கொண்டான். கைகளை முன்னும், மேலும், பக்கவாட்டிலுமாக நீட்டி நீட்டி தேகாப்பியாசம் செய்து கொண்டான். வளைந்து குனிந்து நிமிர்ந்தான். ஒன்று மாறி ஒன்ருக கால்களை முன்னும் பக்கவாட்டிலும், பின்னும் பின்னும் வைத்து எடுத்தான், உடம்பின் அலுப்பு நீங்கி. புத்துணர்ச்சி வந்து விட்டதாக அவன் தனக்குள் தானே நம்பிக்கொண்டான். f
மெதுவாக ஜன்னலின் ஒரு சிறகைத் திறந்து வெளியே பார்த்தான். பலபலவென்று விடிந்துகொண்டிருந்தது. அரையிருட்டில் மிதக்கும் மரங்களும் தென்னைமர ஒலைகளும் எதோ கனவுக் காட்சிபோலிருந்தன. குருவி டிரிங், டிரிங் கென கத்துவது கேட்டது. அவன் மனத்திலும் குதூகலம் பொங்கி வழிவதுபோற் தோன்றிற்று.
அறையினுள் திரும்பி லைற்றைப் போட நினைத்தவன், குறங்கி உறங்கும் நண்பனின் நிலையைப் பார்த்ததும் தன் நினைப்பை மாற்றிக்கொண்டான். போர்வையால் உடம்பை மூடிக்கொண்டு, கண்ணை விழித்துக்கொண்டு அப்படியே நீட்டி நிமிர்ந்து படுக்கவேண்டும்போல அவனுக்குப்பட்டது. எவ் வளவு சாதாரணமாக நண்பன் அந்தக் கடிதத்தை எழுதி யிருந்தான். இந்தத் தேடல்களும், காத்திருத்தல்களும், ஏன் வாழ்க்கையும் அர்த்தமற்றவைபோல அவனுக்குப் பட்டது. சோர்ந்துபோய் கட்டிலில் உட்கார்ந்தான்.
குருவி டிரிங், டிரிங்கென கத்திக்கொண்டிருந்தது. பாத்ரூம் தொட்டியில் சளசளவென்று தண்ணிர் நிரப் பும் சத்தம் கேட்டது; வீட்டு எஜமானி திறந்து விட்டிருப் பாளென நினைத்துக்கொண்டான். அந்த அதிகாலையிலேயே, சில்லிடும் பணிக்குளிரில் குளித்தால் எப்படி இருக்குமென நினைத்துக்கொண்டவன் துவாய்த்துண்டைத் தோளில் போட் டுக்கொண்டு, சோப் பெட்டியையும், பற்பொடியையும் கையிலெடுத்துக்கொண்டு, மெதுவாக அறைக் கதவைத் திறந்தான். அது என்றுமில்லாதவாறு அன்றுதான் சத்தம் போட்டுத் திறந்தது போலிருந்தது. அறை நண்பன் மறு பக்கம் திரும்பிப் படுத்தான். பாத்ரூம் வாசலில் மின்விளக்

எல்லைகள்/91
கின் வெளிச்சம் மங்கலாகப் பரவி இருந்தது. பாத்ருமுக் கும் வீட்டுக்கும் இடைப்பட்ட ஓடையில் வீட்டு எஜமானி பல் துலக்கிக்கொண்டிருப்பது நிழலுருவமாய் தெரிந்தது.
வீட்டு வாசல் முகப்பில் நின்றுகொண்டு இவனும் பல்லைத் துலக்கத் தொடங்கினன். குளிருக்குப் பாதுகாப் பாக துவாயினுல் நெஞ்சை மறைத்துக்கொண்டான். தென்னை மர ஒலைகள் அசைவற்று நிர்ச்சலனமாகக் கிடந் தன. வானத்தில் இரண்டொரு நட்சத்திரங்கள் பளிச்சிட் டன. காக்கைகள் கத்திக்கொண்டு பறந்தன.
முகம் கழுவிக்கொண்டு வந்த எஜமானி இவனை ஏதோ அதிசயமாகப் பார்த்துக்கொண்டு குசினியுள் விரைந்தாள். இவன் குளியலறையில் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். உடம்பு சில்லிட்டு நடுங்கிற்று பற்கள் தாளம் போட்டன. இவன் தண்ணீரைக் கையிஞல் அளைந்தவாறே தயங்கினன். "வாழ்க்கையின் அர்த்தமென்ன? வெறும் நாளாந்த இயக்கங்கள்தான? குளித்து முழுகி, உண்டு உடுத்து, பேசிச் சிரித்து.
சிரித்து. அவள் அழகாகச் சிரிப்பாள். அகத்தின் மலர்ச்சியாய் இதழ்கள் விரிய, கண்கள் பரவச ஒளி பெற்றுத்திகழ, வெண்பற்கள் பளிச்சிட அடித் தொண்டையிலிருந்து மென் மையான ஒரு தொனி கிளம்பி வர..
கடகடவென்று தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றி ஞன். சோப் போட்டு உடம்பைத் தேய்த்துக்கொண்டான். துவாயால் உடம்பை ஒத்திக்கொண்டு அறைக்கு மீண்டான்.
வீட்டு நடுக்ஹோலில் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. நடுக்ஹோலையும், அவன் அறைவாசலையும் பிரிக்கும் இடை வெளியின் திரைச்சீலை அரைகுறையாக இழுத்து மூடப்பட் டிருந்தது. இடைவெளியின் திறந்த பகுதியினூடாக புகை வளையங்கள் கிளம்பிச் சுழன்று, சுழன்று செல்வது தெரிந் தது. மெல்லிய சத்தத்தில் வானெலியிலிருந்து நாத வெள் ளமாய் இன்னிசை கிளம்பி வந்தது.

Page 51
92/கோடுகளும் கோலங்களும்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய். அன்று திருவெம்பாவை ஆரம்பநாளென்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவனுக்கு கோவிலுக்குப் போகவேண் டும் போலிருந்தது. வீட்டின் வேலைக்காரச் சிறுவன் கொண் டுவந்துகொடுத்த ஆவி பறக்கும் தேனீரை மடக்மடக் கென்று குடித்தான். அந்தச் சிறுவனப் பார்க்கையில் அவ னுக்கு அனுதாபமாக இருந்தது. சோகைபிடித்த பையன் போல அவன் இருந்தான். சிறுவனின் க்ண்களில் கலையாத தூக்கத்தின் சாயல் தெரிந்தது.
"வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ" அவளது மெதுமையான நளினமான குரலோசை .
அவன் மளமளவென்று வெளிக்கிட்டுக்கொண்டான். அப்போதுதான் விழித்த அறை நண்பன் கேள்வியைக் கண் னில் தேக்கி இவனைப் பார்த்தான். 'கோவிலுக்குப் போகி றேன்" என்று இவன் சொன்னன். 'சோதனைக்கு இன் னும் இருபது நாள் கிடக்கு, நான் விடிய விடியப் படுக்கி றேன்' என்று துள்ளி எழுந்தான் அவன்.
இவன் தன் உற்சாகத்தைஎல்லாம் இழந்தவனுக அவனைப் பார்த்தான். அவன்கன்னத்திலடித்து அவனைப் பேசாது படுக்கச்சொல்ல வேண்டும்போல இவனுக்குப் பட் டது. சிறிது நேரம் தயங்கி நின்றவன் 'நான் வாறேன்' என்று சொல்லி அறையை விட்டுக் கிளம்பினன்.
வெளியே பணி புகையாய்த் தெரிந்தது. ஒழுங்கையில் முன் தலையில் வழுக்கை விழுந்த ஒருவர் இவனைக் 'கோவி லுக்குப் போகிறீரா?? என்று விசாரித்தார். இவன் ஆமெ னத் தலையசைத்தான். ஒருகூடு கற்பூரத்தை இவன் கையில் திணித்து அவர் பரபரப்புடன், அவசரத்துடன் எங்கோ விரைந்தார்.
இவன் சோர்ந்துபோய் வஸ்ராண்டை நோக்கி நடந் தான்.

எல்லைகள்/98
விடியற்காலை அமைதியில் வீதி நீண்டு கிடந்தது. கரை யிலிருந்த வீதி விளக்குகள் மெளனமாக மினுங்கின. அங் கொன்றும் இங்கொன்றுமாக ஒளிக்கோடுகளாய் வாகனங் கிள் அசைந்தன.
பஸ் ஸ்ராண்டில் சிலர் பஸ்ஸிற்காகக் காத்துநிற்கிருர் கள். அனேகமானுேர் கோவிலுக்குப் போகின்றவர்களாகவே இருந்தார்கள். ஒருசிலர் கைப்பைகளுடன் எங்கோ தொலை தூரம் பயணப்படுபவர்கள்போல நின்றிருந்தார்கள். இரண் டொரு வாலிபர்களைத் தவிர கோவிலுக்குப்போக நின்றிருந் தவர்களில் அனேகர் பெண்கள். குளித்து முழுகி வண்ணங் களினலான பட்டுச் சேலைகள் கட்டியிருந்தார்கள். இளம் பெண்கள் பளபளக்கும் நீண்ட பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தார்கள். அவர்களின் முகங்கள் அப்போதுதான் விரியும் மலர்களாக.
மலர்களாக. குழந்தையின் பேதைமை மாருத அந்தக் காலத்தில் மழைபெய்த ஒரு திருவெம்பாவைக் காலப்பொழு தில், கிராமக் கோவில் வீதியில் பவளமல்லிகை மரத்தின் கீழ் மலர்கள் பொறுக்கிய அவனும் அவளும்.
பஸ் இரைந்துகொண்டுவந்து நின்றது. எல்லோரும் இடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினர். இவன் கடைசியாக ஏறிஞன் இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கப்பால் இறங்கிக் தனியணுக நடந்து கோவிலுக்குச் சென்றன்.
கோவிலுள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாடற்பூசை அதன் இறுதிநிலைக்கு வந்திருந்தது. இறுதிப் பாடலைத் தொடர்ந்து பூசகர் தீபம் காட்டினர். மேளம் முழங்கிற்று. கூட்டம் அரோகரச் சத்தம் இட்டது. இவனுக்கு முன்னுல் நின்றவர் கரங்களைத் தலைக்குமேல் தூக்கி மூன்றுமுறை தன்னைத்தானே சுற்றிவந்தார். இவனும் கரம் கூப்பினன். ஏதோ பொறி தட்டினல்போல : "இதெல்லாம் எதற்காக? எதற்காக?"
விபூதி கொடுத்தனர்; தீர்த்தம் கொடுத்தனர் சந்த னம் கொடுத்தனர்; பிரசாதம் கொடுத்தனர் குசுகுசு கதை

Page 52
94/கோடுகளும் கோலங்களும்
கள் மேலோங்கி நின்றன. மனிதர்கள் நடமாடும் நிழல் களாய் அசைந்தனர். ஒவ்வொரு முகத்தையும் பார்க்க வேண்டும் போலவும். அந்த அந்த மனங்களில் கனக்கும் சோகங்களை அறிய வேண்டும் போலவும். கையைப் பிடித்து வருடி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும்.
கோவிலுக்கு அவனுக்குத் தெரிந்த நெருங்கிய நண்பர் கள் எவரும் வந்திருக்கவில்லை. கோவில் மண்டபத்தை யொட்டிக் கட்டப்பட்டிருக்கும் குந்துச்சுவரில் சிறிதுநேரம் இருக்கவேண்டும் போலிருந்தது5 அசையும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிரிக்கும் முகங்களையும், கதைக் கும் வாய்களையும், தலையாட்டல் புன்முறுவல்களையும், மனத்தைச் சொக்கவைக்கும் வண்ணங்களையும், நளினங்களை யும், கடைக்கண் வீச்சல்களையும் பார்த்துக்கொண்டிருந் தான்.
கூட்டம் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டிருந்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு எழுந்திருந்தான். வீதியை ஒட் டிய கோவில் வாசற்புறத்தை அடைந்தவன் நடந்து போவோமா, பஸ்ஸில் போவோமா என்று ஒரு கணம் தயங்கினுன் , விடியற்புறத்து நடை ஒரு மாறுதலாக விருக்குமென நினைத்தவன் நடக்கத் தொடங்கினன்.
காலை வெளுத்து நகரம் உயிர்த்துவிட்டது. அவசர அவசரமாக மனிதர்கள் வீதியில் நடமாடத் தொடங்கி விட்டார்கள். வாகனங்கள் இடையருத இரைச்சலுடன் ஒடத் தொடங்கிவிட்டன.
அவன் மனதில் கவிந்த தவிப்புடன் நடந்தான் இந்த வாழ்வின் ஒவ்வொரு இயக்கமும் அர்த்தமற்றவை போல வும், சோகம் நிரம்பியவை போலவும் அவனுக்குப் பட்டது. அர்த்தமற்ற இயக்கங்களும், இனிமை கவிந்த சோக்ங்களுந் தான் வாழ்க்கையின் அர்த்தங்கள் போலவும் அவனுக்குப் பட்டது. ஏதோவொரு பாடலை முணுமுணுத்தவாறு நடந் தான்.
வழியில் பாலம் எதிர்ப்பட்டது கால்வாயின் மரங்க ளற்ற இடைவெளியினூடாக துரத்தில் தொழிற்சாலைப்

எல்லைகள்/95
புகைக் குழாயினூடாக புகை சென்றுகொண்டிருந்தது. அது வளைந்து வளைந்து வானத்தில் ஏதோ தேடுவதாக அவனுக்குப் பட்டது. தங்கச் சூரியனின் பொன்னிறக் கதிர் கள் புகைக் கோடுகளாக மர இடைவெளிகளினூடாகக் கோலம் போட்டது.
நேரம் ஏழுமணியாகிக் கொண்டிருந்தது. தனித்த அவன் நடையின் துரிதம் கூடிற்று. கைகளை வீசிக்கொண்டு நடந்தான். எதையும் பார்க்காதவனுக எதையும் மனத்தில் வாங்காதவனக நடந்தான். கையைத் தூக்கி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தான்.
தொழிற்சாலைச் சங்கூதிற்று. இரண்டு மூன்று மாதங் களுக்கு முன்னர் அவன் அந்த வீதியில் குடியிருந்தபோது, அந்தச் சங்கூதலுடன் வீதியில் எதிர்ப்படும் அந்த அழகி, அவன் நினைவுக்கு வந்தாள். சிவந்த நிறமும், இளமை கொஞ்சும் வாளிப்பும், கனவுகளைத் தேக்கிய கண்களும், ஒய்யாரமான கைவீச்சும். அவனைக் கண்டு சில வேளைக ளில் புன்னகை பூப்பள் சிலவேளைகளில் கண்டும் காணு தவளாக முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு செல்வாள். அவன் பார்வை தொலைவை ஊடுருவிற்று. அவள் அசைந்தாடி வருவது தெரிந்தது. அவன் மனத்தில் பரபரப்பு மேலோங் கிற்று. நீண்ட சில நாட்களின் பின் அவளை எதிர்கொள் ளத் தயாராஞன். அவள் அவனை அண்மினுள், உயிரற்ற ஒரு பார்வை; தலை கவிழல் மெளனம்; விரைந்த நடை.
அவனுள் ஏதோ நொறுங்கியது போலிருந்தது. தொழிற் சாலை, பஸ், கார், கைக்கடிகாரம், மூக்குக் கண்ணுடி எல்லாவற்றையும் அடித்து உடைக்க வேண்டும் போலிருந் தது. எல்லா மனிதரையும் பிடித்து வந்து சிரிப்பதற்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் போலிருந்தது.
*அவளும் சிரித்தாள். கோவில் திருவிழாவில் அவன் அவளுக்காகக் காத்திருந்தபோது, அவனுடன் சிரித்தவள்., அவனுடன் திரிந்தவள். வேருேருவனுடன் குலு ங் கி க் குலுங்கிக் குதூகலமாய்ச் சிரித்தாள்.

Page 53
96/கோடுகளும் கோலங்களும்
அவன் தன் கண்களினலேயே கண்டான். "ஐயா! பிச்சை' என்று கை நீண்டது. பாடசாலை மதிற் சுவரில் சாய்ந்திருந்தவன் கந்தல் துணி கட்டியிருந் தான். முகத்தில் நரை மயிர்கள் கண்களில்., பத்துச் சதத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு நடந்தான்.
கைகளை வீசிக் கொண்டு, கால்களை அகல வைத்துக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கன கம்பீரத் துடன் நடந்தான். அவனுக்குத் தன்னிலேயே வெறுப்பு வந்த மாதிரி இருந்தது. "இந்த மனிதர்கள் இந்த மனிதர் கள்" என்று தலையில் அடித்துக் கொள்ளவேண்டும் போலி ருந்தது.
மனிதர்கள் விரைந்துகொண்டிருந்தார்கள். கார்களும், பஸ்களும் விரைந்து கொண்டிருந்தன. அகன்ற அந்த வீதி யைக் கடப்பதற்கான சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து அவன் காத்திருந்தான்.
சந்தியிலிருந்த "சிக்னல் விளக்கில் பச்சையொளி, எல் லாமே பேரிரைச்சலுடன், பிரமாண்டமாக ஓடிக் கொண் டிருப்பதாக... ,
அவன் நடைபாதையில் சிவப்புச் சைகைக்காகக் காத்து நின்றன். - ۔۔۔۔ s
1973

11
வலி
மார்பில் வலப்புறத்தில்
கீழ்ப்பக்கமாக விட்டு விட்
டுத்தான் வலித்தது. சுள் ளிடுவதுபோல, எந்தநேரம் அது வருமென்று சொல்லத் தெரியாது. எந்த நேரமும் வரலாம். நடு இரவில் நல்ல நித்திரையிலிருக்கும் போது கூட வரலாம். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே சுண் g-d...... சுண்டி வலித்து. இந்த வாழ்க்கையே அர்த்த மில்லை என்று நினைக்கத் தூண்டும்படி., குரல் விட் டுக் கத்தவேண்டும் போல. elbont. . . . . . அம்மா என்று முனங்க வேண்டும் போல.
அவன் முகத்தில் மெல் லிய இழையாய் ஒரு வேதனை யின் சாயல் கவிவது தவிர வேருென்றும் தெரியாது இடது கையின் விரல்கள்

Page 54
98 கோடுகளும் கோலங்களும்
அந்த இடத்தைத்தடவுவதையே அறியாது, செய்த வேலை யைச் செய்து கொண்டேயிருப்பான். ஒவ்வீசில் பைல்களைப் புரட்டிக் கொண்டிருப்பான்: றெயிலிலோ வஸ்சிலோ பிர யாணம் செய்து கொண்டிருப்பான். கடற்கரை வெளியில் மாலை கவிந்துவரும் அழகைப் பார்த்துக் கொண்டிருப் பான்; நண்பர்களுடன் சர்ச்சைசெய்து கொண்டிருப்பான். சமயங்களில் சிரிக்கவும் கூடச் செய்வான். அந்தச் சிரிப்பில் நெருடலாக அந்த வேதனை. Ꭶ
அது தொடங்கி மூன்று மாதங்களாகி இருக்கலாம். அதைச் சகித்துச் சகித்துப் பழகி. இப்போது சகிக்க முடி யாததாகி, ஒரு எல்லைக்கப்பால் சகிக்க முடியாத நிலையில் இதற்குப் பரிகாரம் காணவேண்டுமென நினைத்தான். அந்த நினைப்பே ஒரு ஆனந்தம்போல இருந்தது. ஆனல் வழமை யான அசமந்தத்தில் பழக்கமாகிவிட்ட வேதனைச் சகிப்பில் நாட்கள் நீண்டு. நீண்டு.செல்ல.
அவன் நண்பன் அவனைஏசுவான், **இந்த விஞ்ஞான யுகத்தில் ஏன்ரா அப்பாதேவையில்லாமல் கஷ்டப்படுகிருய்’
"எவ்வளவுதான் கொள்கைகள் பேசினலும் நீ சரியான சோம்பேறி'
முதலில் உன்னைத் திருத்திக்கொண்டுதான் பிறகு மற்றவைக்கு சொல்ல வேணும் காணும்'
எல்லா உந்துதல்களினலும் ஒரு நாள் புறப்பட்டான். பத்துமணிப் பொழுதென ஞாபகம். ஒரு மைலளவு தூரத்தை நடந்துதான் சென்ருன். வெயில் உறுத்தாத மப்புக் கவிந்த வானம்; தட்டு வீட்டில் வாழும் குடும்பங் ள்; விதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந்தை கள்; தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரி, சைக்கிள் மணி யோசை, ஸ்டேசன் வாங்கில் காத்திருக்கும் குழந்தையை ஏந்திய இளம் தாய் உயிர் ததும்பும் பகல் நேர இயக்கம்.
"இவ்வளவு நாளும் இந்த உணர்வு ஏன் என்னை உறுத் தவில்லை?’.

aust 99
மார்பின் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டிச் சுண்டி இழுப்பது போன்ற அந்த உணர்வு. வாய்விட்டுக் கத்த வேண்டும்போல. மூன்று நிமிடத்தில் அது அடங்கிற்று.
வானம் வெளித்து வெயிலின் அகோரம்: குளிர்பானத் தொழிற்சாலையின் முன் வீதியோரம் நீண்ட உயர்ந்த மதில்: சோடாக் குடிக்கும் பெண்ணின் படம் போட்ட பெரிய விளம்பரம். கால்வாய்க்கும் வீதிக்குமிடையில் செழித்த சோளப் பயிர்களின் பச்சைப் பரப்பு. நீர் பாச்சும் தொப்பி போட்ட மனிதன். நெருங்கிய அணுகலில் அவன் முகத்தில் முத்தாய்க் கோர்த்து நிற்கும் வியர்வைத் துளிகள், அரச அலுவலகங்கள். மும்மொழிகளிலுமான அறிவிப்புப் பலகை கள். ஒடும் பஸ்கள்; வீதியோரம் மலர் சொரியும் நிழல் மரங்கள்.
ஆஸ்பத்திரியின் ஒரு பக்கத்தில், அடக்கமான ஒரு அறையின் நடுவிலிருந்த கதிரையில், கம்பீரமான உடையில் அந்த மனிதர் அடையாளம் காட்டப்பட்டார். சுற்றிலும் மருந்துக் குப்பிகளும் பரிசோதனைக் குழாய்களும் மூக்கைத் துளைக்கும் மருந்து நெடியுமாய்.
ஒரு புன்முறுவலுடன் நண்பன் தந்த அறிமுகக் கடி தத்தை நீட்டினன். மேலோட்டமான கண் பரவலின் பின் ஊர், பேர், உற்ருர், சுற்றம் சூழல் பற்றிய விசாரணை
டாக்டரின் அறை முன்னுல் குவிந்து நின்ற சனங்களி னுாடாக இவனைக் கூட்டிச் சென்று டாக்டரிடம் அறிமுகப் படுத்தினர். YA
'எனக்குத் தம்பி மூறையானவர் கல்வித் திணைக்களத் தில் வேலை செய்கின்ருர்?
அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந் தார் டாக்டர், "என்ன வருத்தம்'?
அவனும் டாக்டரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்ஞன். அந்த வசீகரிக்கும் கண்களின் ஆழத்தில் ஏதோ சோகம் கவிந்திருப்பது போல இருந்தது." குழுமையாக

Page 55
100 கோடுகளும் கோலங்களும்
அணைப்பது போன்ற கருணை நிறைந்திருப்பதைப் போலவும் பட்டது. டாக்டரின் மூக்கு கொஞ்சம் நீளம் தான்.
மீண்டும் அவனை ஏற இறங்கப் பார்த்தார் முகத்தில் கடுமை, தெரிந்தது
“நல்லாய் குடிக்கிறனிரே ஐஸே? கசிப்பு அடிக்கிற னிரா?' 'இல்லையே' என்று பரிதாபமாகத் தலையாட்டினன் "நான் சிமோக் பண்ணிறதுசுட இல்லை"
'இறைச்சி, நல்ல காரமான சாப்பாடு சாப்பிடுகிற னிராக்கும்" "நான் ஒரு வெஜிரேறியன்" மெதுவாகச் சொன்னன்.
அவன் சொன்ன எதையுமே நம்பத் தயாரில்லாத வரைப் போல டாக்டர் அவனைப் பார்த்தார். தலையை ஆட்டினர். அவனைமட்டும் வெளியே அனுப்பிவிட்டு அவன் "அண்ணரை நிற்கச் சொன்னர்.
தள்ளாடியவனுக வெளியே வந்தான். மார்பின் வலது புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டி இழுப்பதுபோல.
சோர்ந்து வாடித் துவண்டிருக்கும் குழந்தை, லொக்கு லொக்கென இருமி கோழை துப்பும் கிழவன். தலையைச் சுற்றி பண்டேஜ் கட்டுப் போட்டிருக்கும் அரும்பு மீசை இளைஞன். அயர்வு மேலிட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் . இன்னும் சிலர்.கொஞ்சத் தூரத்தில் மூங்கில் கழியின் மேல் பலகை பரவி அதன் மேல் நின்று செங்கற்களை அடுக்கி மாடி எழுப்பும் இரண்டு தொழிலாளர்.
டாக்டரின் அறை வாசலில் காத்து நின்ற அவனை நோக்கி அண்ணர் வந்தார். முகத்தில் ஒரு சோர்வுக்களே. எதுவுமே பேசவில்லை.
டாக்டர் என்ன சொன்னரென்று அண்ணரிடம் விசாரித்தபோதும் அவர் தெளிவான பதிலைத் தரவில்லை. ஏதேதோ சொல்லி மழுப்பினர், சிலவேளை அவன் அறியக் கூடாதவையாக அவன் அறிந்தால் வேதனைப் படலாம் என அவர் எண்ணியிருக்கலாம். உண்மையாகச் சொல்லப்

வலி/10
போனல் அவன்கூட அதில் அவ்வளவு அக்கறை காட்ட வில்லை. அந்த அக்கறையின்மைக்கு வழமையான அசமந்தம் அல்லது என்ன நடந்தாலென்ன என்ற பிடிப்பற்ற போக்குக் காரணமாக இருக்கலாம்.
அடுத்த முறை ஆஸ்பத்திரியில் அண்ணரைச் சந்தித்த போது அவன் சற்று உற்சாகமடைந்தவனுக இருந்தான். முகம் தெளிவடைந்து இருந்தது, கண்களில் படிந்திருந்த அயர்வு அகன்று விட்டது. சொக்கையில் கொஞ்சம் சதைப் பிடிப்பு ஏற்பட்டதுபோலவும் இருந்தது. பேச்சில் கூட ஒரு மிருதுவும், நளினமும், உறுதியுமாய்.
அண்ணர் ஆச்சரியப்பட்டுத்தான் போனர். டாக்ட ரும் அப்படித்தான். ஆளுல் அவர் அதை வெளியே காட் டிக் கொள்ளவில்லை, அந்த வசீகரிக்கும் கண்களால் அவ னை ஆழமாகப் பார்த்துக்கொண்டே சொன்ஞர்.
"நீர் நல்லாய் யோசிக்கிறனிர் போலை, பிரச்சினைகளை இட்டு "வொறி பண்ணக்கூடாது. ஆருக்குத்தான் பிரச் சினேகள் இல்லை'
அவன் எதுவுமே பேசாது நின்ருன், மனத்தில் ஏதேதோ எண்ணங்கள். சோர்ந்து வாடி துவண்டிருக்கும் குழந்தை. கோழை துப்பும் கிழவன், செங்கற்களை அடுக்கி மாடி கட் டும் தொழிலாளர், தொப்பி போட்ட மனிதனின் முகத் தில் முத்தாய் கோர்த்து நிற்கும் வியர்வை. r
'மை டியர் போய்" டாக்டரின் குரலில் ஒரு கம்பீ ரம் தொனித்தது. "யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. மனத்தைப் போட்டு அலட்டாதேயும். நெடுகஷம் வொறி பண்ணிறதும் குடற்புண் வர ஒரு காரணமென்று உமக்குத் தெரியுமா?"
ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது புது மனித ஞகத்தான் வெளியேறினன். உலகம் முழுவதுமே ஒருவித மயக்கும் அழகில் பொலிவதாக நினைத்தான். வாழ்க்கை மிகவும் அர்த்தம் நிறைந்தது என்றும் நினைத்தான், மூன்று மாதமாக நினைவில் வராத அவளின் புன்னகைபூத்த முகம்

Page 56
102/கோடுகளும் கோலங்களும்
கூட நினைவில் தெரிந்தது. ஏதோ பாடல் கூட் முணுமுணுப் பாகக் கிளம்பிற்று! நடையில்கூட ஒரு கம்பீரம்.
அதே வீதி அதே பாதை" வீதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந்தைகள், சாறத்தின் அடிப்பாகத்தை இடது கையால் தூக்கிக் கொண்டு வீதியை வெறித்து நோக்கும், ஒரு வாரமாக "சேவ் எடுக்காத விரக்தி நிறைந்த கண்களையுடைய இளே ஞன்.
நொண்டிப் பிச்சைக்காரன்; தட்டு வீட்டின் கதவுநிலையில் சாய்ந்துகொண்டு, ரக் கத்தோடு போவோர் வருவோரைப் பார்க்கும் கல்யாண மாகாத முப்பது வயதுக் கன்னிப் பெண்.
சிவப்பு எழுத்தில் மதிற் சுவரில் பளிச்சிடும் சிலியில்" மக்களை நசுக்கும் பாஸிஸ் ஆட்சியின் கொடுமைகளைச் சித் திரிக்கும் சுவரொட்டி.
அவனின் முகம் இருண்டது. பாடலின் முணுமுணுப்பு திடீரென்று அடங்கிற்று. கண்களில் வேதனையின் சாயல் கவிய இடது கை விரல்கள் மார்பின் வலது புறத்தில் கீழ்ப்பக்கமாக தடவுவதாக --
ஒரு வாரமாக இல்லாத அந்த வலி மீண்டும் நெருடு வதாக உணர்ந்தான்.
"சைய்-- என்னமாய் வலிக்கிறது’ இதற்கு நிரந்தரமாகவே ஒரு தீர்வு காணவேண்டுமென உறுதி கொண்டான். 兴
1974

நிறைவில் . . . .
வாழ்வின் தேடல்களில், காத்திருப்பு களில் அவ்வப்போது என் சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின் - தவிப்புகளின் தரிசனங்களின் கோலங்களே எள் கதைகள். இந்தக் கதைகளை ஒருசேர உங்கள் முன் வைக்கும்பேரது, உங்கள் மனங்களில் எவ்வித முற்சார்புகளையும் ஏற்ற வேண்டாமென்று பட்டது. அதனுல்தான் இந்த என் கதைக%ா நீங்கள் அனுபவித்த பின், அந்த நிறைவில் உங்களைச் சந்திக்கலாம் என எண்ணினேன். எதுவித*வழிகாட்டலுமின்றியே. இந்தக் கதைகளின் ஆத்மாவை நீங்கள் தொட் டிருப்பீர்கள்தானே! புகைவண்டிகளில் பயணம் செய்திருப்பீர்கள்- மலைகளினதும், நதிகளி னதும், பூஞ்சோலைகளினதும் அழகை இரசித் திருப்பீர்கள். காலை, மாலை, இயற்கைக் காட்சி களில் மனதைப் பறி கொடுத்திருப்பீர்கள், மாறி வரும் உலகின், மனித மனங்களின் உணர்ச்சிக் கோலங்களைக் கண்டு வியந்திருப் பீர்கள். "அழகு இலயிப்புத் தான் இந்தக்கதை களின் உள்ளார்த்தம் என்று நீங்கள் சொல்லக் கூடும். அப்படிச் சொன்னூல், நான் அதை மறுக்கப் போவதில்லைத்தான்.
இந்த என் கதைகளை நூலுருவம் ஆக்கும் எண்ணம் அவை பிறந்த காலத்திலிருந்தே எனக்கு இருந்தாலும் - என் திருமணத்தின் பின் துணைவியினதும், உறவினர்களினதும், நண்பர் களினதும் இடையருத் தூண்டுதலினுலேயே (உண்மையில் நான் சரியான சோம்பேறி) இப்போது கைகூடிற்று. இந்தத் தொகுப்பை "இந்த அளவிலேயே' கொண்டுவர வேண்டு மென்ற பொருளாதார நிர்ப்பந்தத்தினல், என்

Page 57
நல்ல கதை சிலவற்றை இதில் சேர்க்க முடி யாதும் தவிர்க்க வேண்டியதாயிற்று.
இந்தச் சந்தர்ப்பத்தில், என் கதைகளே இனங்கண்டு அவற்றைப் பிரசுரித்த வீரகேசரி, மல்லிகை, ஈழநாடு, சிரித்திரன், அஞ்சலி, இளம் பிறை, கற்பகம், மங்கை, அலை ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன், என் கதையொன்றின் ஆகர்ஷிப்பில் தொடர்பு கொண்டு தொடர்ந்த என் கலை வாழ்வில் என்னை வளப்படுத்தியவரும், இந் நூல் உருவாக்கத்தின் முழு உழைப்பாளனு மான நண்பன் அ. யேசுராசாவிற்கு சம்பிரதாய பூர்வமாக நன்றி சொல்லக் கூச்சப்படுகிறேன், மிகக் குறுகிய காலத்தில் நூலின் முகப்போவி யத்தை வரைந்து உதவிய ஓவிய நண்பருக்கும், அச்சுத் தொழிலாள நண்பர்க்கும் நன்றிகள்,
குப்பிளான் - Be சண்முகன்
மானிக்க வளவு" கரணவாய் தெற்கு, கரவெட்டி,


Page 58


Page 59

ஐயாத்துரை சண்முகலிங்க்ம். ான் ஐ. சண்முகன்"
1948 ஆவணி ான், சுன்னுகம்.
குப்பிழான் விக்கினேஸ்வரா Tafri tij. பக்கட்டுவன் மெ. மி. ப் பாடசாலே, ப்பழை யூனியன் கல்லூரி. கப் பல்கலேக் கழகம்.
எழுதுவினேஞர் அலுவலகம்
ITGBTh.
இலக்கியம், ஓவியம், திரைப்படம், சங்கீதம்