கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீரிமலையினிலே

Page 1


Page 2


Page 3

கவிஞர் வி. கந்தவனம்
அவர்களின்
கீரிமலையினிலே!

Page 4

கீரிமலையினிலே !
வி. கக் த வனம்
யாழ். இலக்கிய வட்டம் மாநகரசபை யாழ்ப்பாணம்

Page 5
யாழ். இலக்கிய வட்ட வெளியீடு முதற் பதிப்பு மார்கழி, 1969 உரிமை : க. வாரணன் ஏக விற்பனையாளர் : தனலக்குமி புத்தகசாலை,
சுன்னுகம்.
KEERMALAY NILE
Author : Poet V. Kandavanam, B. A.
Publishers : Yarl Ilakkiya Waddam, Municipal Office, Jafna.
First Edition : December, 1969
Sole Distributors: Thanaluckumy Book Depot, Chunnakam.
Price : Rs. 2-00

DTD6óT பெருநினைவுக்கு இந்நூல்
ஆடலிலும் பாடலிலும்
ஆற்றல் வாய்ந்தோன் அயலூரும் பிறவூரும் ஆன்றேன் என்றும் நாடியுள சிக்கல்களை
நயமாய்த் தீர்க்கும் கல்லகுண வல்லாளன் நாதன் என்றும் தேடிவருஞ் சிறப்புடைய
செம்மல் மிக்கப் பீடுடைய தம்பிஜயா தம்பாப் பிள்ளை ஈடிணையி லன்புடைய
என்றன் மாமன் என்றுமுள பெருகினவுக் கிந்நூல் வைத்தேன்.

Page 6

பதிப்புரை
-beam
யாழ். இலக்கிய வட்டம் கடந்த நான்கு ஆண்டுக ளாக ஆக்கபூர்வமான பல இலக்கிய சாதனைகளைச் செய்திருக்கிறது. அவற்றுள் ஒன்று நல்ல தரமான நூல்களை வெளியிட்டமையாகும்.
யாழ். இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்கள் பலர் ஈழத்திலும் தமிழகத்திலும் பற்பல போட்டிகளி லெல்லாம் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி, இலங்கைக் குப் பெருமை தேடித் தந்திருக்கிருர்கள். அப்படிப் பெருமை தேடித்தந்த ஒருவரான கவிஞர் வி. கந்தவனத் தின் கீரிமலையினிலே’ என்னும் காவியத்தை யாழ். இலக்கிய வட்டம் தனது 14ஆவது வெளியீடாகத் தருகிறது.
கவியரங்கத்துக்கொரு கந்தவனம், கருத்து மிக்க சொற்பொழிவுக்கொரு கந்தவனம், நகைச்சுவைக்கொரு கந்தவனம், இனிய, எளிய, செந்தமிழ்ப் பாடல் களுக்கொரு கந்தவனம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலத் தமது கவிதைகள் மூலம் கூறி, சமூகத்தின் ஊழல்களைச் சாடுவதற்கு ஒரு கந்தவனம் என்றெல்லாம் அறிஞர்கள் பலராலும் பாராட்டப் பெறும் இவர் யாழ். இலக்கிய வட்டத்தின் இன்றைய தலைவராவர்.

Page 7
4. பதிப்புரை
அடக்கமும் உயரிய பண்பும் வாய்ந்த கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எந்தவித ஆடம்பரமோ விளம்பரமோ இன்றித் தனது வருவாயில் ஒரு கணிச மான பகுதியை இலக்கியப் பணிக்காகச் செலவு செய்வதை அவருடன் கூடிப் பழகும் யாவரும் அறிவர். இத்தகையவரின் நூலை யாழ். இலக்கிய வட்டம் தனது வெளியீடாகத் தருவதிற் பெரும் மகிழ்ச்சியடைகிறது.
எமது முன்னைய படைப்புக்களை எல்லாம் வாங்கி ஆதரித்து ஊக்குவித்த இலக்கிய அன்பர்கள் இந்தச் சிறந்த காவிய நூலையும் வாங்கி ஆதரிக்கவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்ருேம்.
காரை செ. சுந்தரம்பிள்ளை இணைச் செயலாளர் யாழ். இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம்.

அணிந்துரை
கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்ரோட்டில் ஒரு நாள் இளைஞன் ஒருவனேடு உரையாடிக் கொண்டிருந்தார். பேச்சுப் பலபல கோணங்களுக்கும் பரந்து சென்று ஈற்றில் மனிதனில் வந்துநின்றது. * "அதுசரி, மனிதன் என்பவன் யார்?' என்று அரிஸ் ரோட்டில் இளைஞனைக் கேட்டார். இளைஞன் சற்றே சிந்தித்த பின் 'மனிதன் இறக்கையில்லாத இரண்டு காற் பிராணி' என்ருன். ஞானி புன்னகைபூத்து விட்டு, வீட்டினுள்ளே சென்று திரும்பிவந்தார். அவர் கையிலே இறக்கைகள் வெட்டப்பட்ட கோழியொன்று இருந்தது. அவர் அதைத் தூக்கிப்பிடித்து 'இது மனிதனு?' என்று கேட்டார். இளைஞனுக்குச் சிரிப்பு வந்தது. பின்னர் நீண்டநேரம் மனிதன் யார் என்பது பற்றி இருவரும் சர்ச்சை செய்தனர். பலபல வரை விலக்கணங்கள் வந்து வந்து வலுவிழந்து போயின. ஒன்றுமே மனதுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஈற்றில், மனிதனை இப்படியன் என்று வரையறைசெய்து எல்லை கட்டிக் கூறல் இயலாது என்ற முடிவுக்கு வந்தனர். மனிதனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் : வருணிக்கலாம் . ஆனல் இப்படியிருந்தால் அவன் மனிதனவான் என்று கூறுதல் சாத்தியமன்று என்ற முடிவுக்கு வந்தனர்.
கவிதையின் கதையும் இதுதான்.
இந்தக் கவிதை என்ற பண்டத்தைப் பற்றி, எத்தனை இலக்கணங்கள் ! எத்தனை ஆய்வுகள் ! எத்தனை திறனுய்வுகள் ! எத்தனை சர்ச்சைகள். இவற்

Page 8
அணிந்துரை
றுள் ஒன்றுதானும், இரண்டும் இரண்டும் நாலு என்பதுபோல, கவிதை இதுதான் என்று திட்டமாகக் கூறுவதில்லை. எனவே, மனிதன் யார் என்பதன் விடை சமன் கவிதை எது என்பதன் விடை.
இஃது இவ்வாருக,
*" பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும் '' - இவ்வாறு காணிநிலம் வேண்டிய பாரதியார் உலகைப் " பாலிக்கும் அளவுக்கு மன விசாலம் பெற்று, பராசக்தியிடம் வரம் வேண்டுகிருர் .
திறம், திறனுமாம். திறம் - மேன்மை; திறன் - வலிமை. இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரம். திறமானது திறனுகும் திறனனது திறமாகும். மேன்மையே வலிமை வலிமையே மேன்மை.
அதனல் முடிவிலே இரண்டும் ஒன்று.
பாலித்தல் - அருள்செய்தல்; காத்தல்.
கவிதை எது என்ற வின மனிதன் யார் என்ற வினவைப் போன்றது. அதற்கு விடைகாண நான் uustri ?
ஆகவே, கவிதையின் திறம் எது? திறன் எது? வையத்தைப் பாலிப்பதுதான் கவிதையின் திறமும் திறனும் புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மனித மனங்களைக் காத்து, ஆட்கொள்வது தான் திறமும் திறனும் . ஏனெனில், கவிதை மனத்தோடு சம்பந்தங் கொண்டது. மனங்களி லிருந்துதான் உலகம் உதிக்கிறது. உலகம் அல்லது வையம் என்றது இடத்தையன்று இடத்திலுள்ள மக்களையுமன்று ; அந்த மக்களின் வாழ்க்கையை. ஆமாம், மனம்போலத்தானே வாழ்வு.

அணிந்துரை 7.
மனங்களினல் மனங்களை, உலகத்தை வாழவைத்த கதைதான் கவிதையின் கதை. தமிழிலே அந்தக் கதைக்கு மிக நீண்ட விசாலமானதொரு பரம்பரை யுண்டு. அது வாழ்கிறது : வாழும். வாழவைக்கிறது : வாழவைக்கும். அது வாழ்க !
இஃது இவ்வாருக,
மனத்து நிகழ்ச்சிகளை இரு வகைப்படுத்தலாம். ஒன்று கருத்துக்கள் ; மற்றையது உணர்ச்சிகள். வேண்டுமானல் முன்னையதை அறிவென்றும் பின்னை யதைக் கலையென்றும் கூறுவோமாக.
இன்று அறிவுலகமும் உணர்வுலகமும் வெவ் வேருனவை என்றதொரு மாயைத்தோற்றம் தெரி கிறது. மாயத்தையே மெய்யென்று நம்பி வாதிடு வோரும் உண்டு. உண்மையில் இந்த இரு வேறு உலகத்தையும் சீனத்து நெடுஞ்சுவர் போன்றதொன்று பிரித்து விடவில்லை. வானவில்லின் நிற வேறுபாடு போன்றதே இவையிரண்டின் வேறுபாடு. இரண்டும் ஒன்ருேடொன்று கலக்கும். அறிவு உணர்வோடும் சேரும்; உணர்வு அறிவோடும் சேரும். அன்றேல் மனம் வாழ்வது எப்படி? வாழ்வு மலர்வது எப்படி?
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் " என்பதில் ஆரியம் அறிவு; தமிழ் உணர்வு என விளக்கம் காட்டுவார்கள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.
அறிவுலகம் உணர்வுலகத்துள் மூழ்கிக் கலந்து தனது அகங்கரிப்பையும் விசாரணையையும் விட்டு விட்டால் கவிதையன்றி ஏனைக் கலைகளும் பிறக்கும்
6 of D.

Page 9
母一 அணித்துரை
உணர்வுலகம் அறிவுலகத்துள் மூழ்கி விசாரிக்கத் தொடங்குமானல் கவிதையோ, கலையோ பிறக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
உணர்வுலகம், தாய் அறிவுலகம், தந்தை. இருவரும் ஒருவராகிப் புணர்ந்த புணர்ச்சியின்பயன் இலக்கியங்கள்.
பண்டுதொட்டு இலக்கியங்கள் பிறந்த கதை இது.
பண்டுதொட்டு வளர்ந்து வந்த அறிவு உள் நோக்கும் அறிவு; ஆன்மாவைநோக்கும் அறிவு ; ஆன் மீக அறிவு. இன்று வளர்ந்துவரும் அறிவு ‘ வெளி நோக்கும் அறிவு "; விண்வெளியை நோக்கிச் செல்லும் அளவுக்கு வளர்ந்த அறிவு, ஆன்மீக அறிவு, உணர் வுடன் புணர்ந்தமைக்குப் பலபல எச்சங்கள் உண்டு. ஆக, இன்று வளரும் வெளிநோக்கும் அறிவு, உணர்வுலகத்துடன் புணருமோ? காணுதனவெல்லாம் பிறக்குமோ?
எச்சங்களிற் சில தோன்றியவுடன் மறைந்து விடுவனவுமுண்டு. அற்பாயுசாய்ப் போவனவும் உண்டு. நெடுங்காலம் நிலைத்து, சிரஞ்சீவித்துவம் பெறுவனவும் உண்டு. இந்நிலைகளுக்குக் காரணம் அந்தந்த எச்சங் களின் திறமும் திறனும் எனலாம்.
தமிழ்க் கவிதையின் தொடர் சரிதத்திலே தோன்றிய கவிமலர்கள் அத்தனையும் வாடாமலர்க ளல்ல, மண மலர்களல்ல; கடதாசிப் பூக்களும் உண்டு; கண்கவர் நிறங்கொண்டு மணங்கொள்ளாத மேனுட்டு மலர் வகையுமுண்டு. கடதாசிப் பூக்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டில் இடமில்லை. மேனுட்டு மலர்வகைகள் தமிழ் மண்ணில் வேர் கொள்வதில்லை. ஆக, திறமும் திறனுமுள்ள, அழகும் மணமுங் கொண்ட கவிமலர்

அணிந்துரை 9
களே வாழுகின்றன ; மனங்களால், மனங்களில் காலமெல்லாம் வாழ்கின்றன. ஒன்று காலமெல்லாம் வாழுமா என்பதற்குக் காலந்தான் சாட்சி.
இஃது இவ்வாருக,
கவிஞர் கந்தவனத்தாரின் கீரிமலையினிலே " என்னும் கவிதை நூல் காலமெல்லாம் வாழுமா? வாழாதா? என்பதை ஆரூடம் பார்த்துச் சொல் லவும் நாடி பிடித்துப் பார்த்துச் சொல்லவும் விமர் சகர்கள் இருக்கிருர்கள். எனக்கேன் அந்த வேலை? என்வேலை, பிறந்த குழந்தையைச் சீராட்டுவது; தட்டிக்கொடுப்பது.
கவிஞர் கந்தவனத்துக்கு மாத்திரமன்று என்னைப் போன்ற " சுணை யற்ற மனம் படைத்த அரசிகர் களுக்குமே கீரிமலைக் கடற்கரை கிளுகிளுப்புண்டாக் குவது கூச்சம் காட்டிச் சிரிக்க வைப்பது ; சிந்திக்கவும் வைப்பது; யோகநிலை சித்திக்கச் செய்வது. கற்பனைத்தேரேற்றிக் காணுதனவெல்லாம் காணத் தூண்டுவது. ஆனல் என்னிடம் அவை யொன்றும் தாக்கம் பெறுவதில்லை; அதனல் என்னில் கவிதை மலர்வதுமில்லை.
இந்த இளங் கவிஞருக்கு ஒருநாள் அந்தக் கீரிமலைக் கடற்கரை, அவரைக் கற்பனைத் தேரேற்றிக் காணுத காட்சி ஒன்றைக் காண வைத்தது.
அந்தக் காட்சி :
* கீரி மலையினிலே நலந்தரும் கேணி யருகினிலே", * நினைவுகள் பூத்துக் குலுங்கையிலே 1, * மெள்ள மெள்ளச் சூழல் கடந்து ‘, ‘மாலை மகள் வரைந்த ஒவிய வானத்தை " மறந்து, ' கதைசொன்ன காற் றையும் துறந்து, 'ஒதைசெய் மக்களையும் ' மறந்து, என்னென்னவோ நினைத்து, எங்கெங்கெல்லாமோ அலைகிருர் கவிஞர். அஃதாவது கற்பனைத்தேர் ஏறி

Page 10
10 அணிந்துரை
விடுகிருர் . ஏதோ ஒரு எண்ணவுலகின் அத்தாணி மண்டப வாயிலிலே தேர் நிற்கிறது. கவிஞர் வேந்த ஞகிவிடுகிருர் . " கொலுவினில் வீற்றிருந் தாட்சி " செய்து, " மாந்தரின் இன்னலெல்லாம் மறுகணம் மாற வழி சமைக்கிருர் . அந்த ஆட்சியிலே புன்மை இருட்கணமும் தன்னலப் பேய்க்கணமும் போயகல, ஞால மெல்லாம் தமிழ்மொழி, நாளும் பவனிவர * யாரெனப் போற்றமிழை வளர்த்தவர் யாரென ஆர்ப்பரித்துச் செம்மாந்திருக்கிருர் .
அப்போது, ‘வாரும் வணக்கமென்றே, சடையப்ப வள்ளல் முன் வந்து நின்ருர், கவிஞர், "வாழ்க வருக வள்ளல் பெரும, வருக வருக வருக என்று வரவேற் கிருர். அவரை நெஞ்சார வாயாரப் போற்றிசெய்து, ஈழத்திலே தமிழின் நிலையை, தமிழரின் நிலையை வேதனையோடு கூறுகிருர், "என்னும்போதில் வள்ளல் சென்ற தென்கொ லென்ன முன்னர், கன்னற் கம்பர் கண்முன் நிற்கக் கண்டு போற்றி செய்கிருர் .
காட்சி மாறுகிறது.
* கலையொழுகு தமிழ்க்கடலே கனலாய்க் காற் ருய்க் கரைபுரளுங் கற்பனையே " என்று உள்ளம் உருக வாழ்த்திவிட்டு இமயமலைக் காப்பியமுன் னிராமர் காதை இயல்புகளை எடுத்தியம்ப எனக்கென் ஞற்றல்' என்று கம்பராமாயணத் திறம்பற்றிக் கவிஞர் பேசும் போது, " நிறுத்துக பேச்சை ' என்று முழங்குகிருர் கம்பர். ஒன்றும் புரியாது சிறுத்துச் சிறுகுரங்காய் "பொறுத்தருள் செய்க வையப் பொருளறி புலவோய்' என்று கவிஞர் இரக்கிருர் . கம்பர் புன்னகை செய்து * உங்களுக் கென்ன தம்பி உள்ளதே வாய்வாய் என்று தொடங்கி, ' இக்காலத் தமிழரும் கம்ப

அணிந்துரை
ராமாயணமும் ' என்னும் பொருள் குறித்துக் கண்டனப் பிரசங்கமொன்று செய்துவிட்டு, சிறிது தூரம் சென்றனர். சென்றவர்தம்மைக் கவிஞர் கண்டிலர். கம்பர் சென்றுபோய்ச் சேர்ந்தவத் திக்கினை நோக்கியபோது, கண்ணனைக் கார்முகில் வண்ணனைத் திருவுடன் கண்ணினுற் கண்டு , பலபடப் போற்றி செய்து, ' கண்ணினை மூடியே கையெடுத் திறைஞ்சு ’கிருர்.
களிப்பினுல் விழித்தபோது " -
* கீரி மலையினிலே - நலந்தரும்
கேணி யருகினிலே ஊருறங்கும் இருட்டில் - இருப்பதை உற்றுணர்ந் தே ? எழுகிருர் கவிஞர். ஆமாம் ; கவிஞர் மனிதராஞர்.
இந்தக் காட்சியின் உரிப்பொருள் அன்பு ; தமிழ்ச் சமுதாயத்தின்மீது கொண்ட அன்பு ; தமிழ் மீது கொண்ட அன்பு.
அந்த அன்பு வெளிப்படுமாறு, "நெருப்பெடுத்தல்".
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் போலி வாழ்க்கை, போலித் தமிழுணர்வு, ஒன்றையும் முடி வுறக் கல்லாது எல்லாவற்றையும் கற்றர் போன்று * வாய் காட்டும் போலியனுபவம் ஆகிய முத்திறப் போலிகள் மீதும், சமுதாயத்தின்மீது கொண்ட வற்ருத அன்பு காரணமாகக் கவிஞர் நெருப்பெடுக் கிருர் , தானுய் நின்றும் கம்பனுய் நின்றும் .
பாவம் ! இக்காலத் தமிழரைப்பற்றி ஒன்றுந் தெரியாத சடையப்பவள்ளலுக்கு, கவிஞர் 'தானப்" நின்று சொல்லுகிருர்,

Page 11
10 அணிந்துரை
விடுகிருர். ஏதோ ஒரு எண்ணவுலகின் அத்தாணி மண்டப வாயிலிலே தேர் நிற்கிறது. கவிஞர் வேந்த ஞகிவிடுகிருர் . " கொலுவினில் வீற்றிருந் தாட்சி" செய்து, " மாந்தரின் இன்னலெல்லாம் மறுகணம் மாற வழி சமைக்கிருர் . அந்த ஆட்சியிலே புன்மை இருட்கணமும் தன்னலப் பேய்க்கணமும் போயகல, ஞால மெல்லாம் தமிழ்மொழி, நாளும் பவனிவர , * யாரெனப் போற்றமிழை வளர்த்தவர் யாரென ' ஆர்ப்பரித்துச் செம்மாந்திருக்கிருர் .
அப்போது, ‘வாரும் வணக்கமென்றே, சடையப்ப வள்ளல் முன் வந்து நின்ருர். கவிஞர், "வாழ்க வருக வள்ளல் பெரும, வருக வருக வருக’ என்று வரவேற் கிருர், அவரை நெஞ்சார வாயாரப் போற்றிசெய்து, ஈழத்திலே தமிழின் நிலையை, தமிழரின் நிலையை வேதனையோடு கூறுகிருர், "என்னும்போதில் வள்ளல் சென்ற தென்கொ லென்ன முன்னர், கன்னற் கம்பர் கண்முன் நிற்கக் கண்டு போற்றி செய்கிருர்,
காட்சி மாறுகிறது.
* கலையொழுகு தமிழ்க்கடலே கனலாய்க் காற் முய்க் கரைபுரளுங் கற்பனையே " என்று உள்ளம் உருக வாழ்த்திவிட்டு இமயமலைக் காப்பியமுன் னிராமர் காதை இயல்புகளை எடுத்தியம்ப எனக்கென் ஞற்றல்' என்று கம்பராமாயணத் திறம்பற்றிக் கவிஞர் பேசும் போது, ' நிறுத்துக பேச்சை ' என்று முழங்குகிருர் கம்பர். ஒன்றும் புரியாது சிறுத்துச் சிறுகுரங்காய் "பொறுத்தருள் செய்க வையப் பொருளறி புலவோய்' என்று கவிஞர் இரக்கிருர் . கம்பர் புன்னகை செய்து * உங்களுக் கென்ன தம்பி உள்ளதே வாய்வாய் என்று தொடங்கி, ' இக்காலத் தமிழரும் கம்ப

அணிந்துரை
ராமாயணமும் ' என்னும் பொருள் குறித்துக் கண்டனப் பிரசங்கமொன்று செய்துவிட்டு, சிறிது தூரம் சென்றனர். சென்றவர்தம்மைக் கவிஞர் கண்டிலர். கம்பர் சென்றுபோய்ச் சேர்ந்தவத் திக்கினை நோக்கியபோது, கண்ணனைக் கார்முகில் வண்ணனைத் திருவுடன் கண்ணினற் கண்டு , பலபடப் போற்றி செய்து, ' கண்ணினை மூடியே கையெடுத் திறைஞ்சு ’கிருர் .
களிப்பினுல் விழித்தபோது "-
* கீரி மலையினிலே - கலந்தரும்
கேணி யருகினிலே ஊருறங்கும் இருட்டில் - இருப்பதை உற்றுணர்க் தே ? எழுகிருர் கவிஞர். ஆமாம் : கவிஞர் மனிதரானர்.
இந்தக் காட்சியின் உரிப்பொருள் அன்பு ; தமிழ்ச் சமுதாயத்தின்மீது கொண்ட அன்பு ; தமிழ் மீது கொண்ட அன்பு,
அந்த அன்பு வெளிப்படுமாறு, "நெருப்பெடுத்தல்".
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் போலி வாழ்க்கை, போலித் தமிழுணர்வு, ஒன்றையும் முடி வுறக் கல்லாது எல்லாவற்றையும் கற்ருர் போன்று * வாய் காட்டும் போலியனுபவம் ஆகிய முத்திறப் போலிகள் மீதும், சமுதாயத்தின்மீது கொண்ட வற்ருத அன்பு காரணமாகக் கவிஞர் நெருப்பெடுக் கிருர் " , தானுய் நின்றும் கம்பனுய் நின்றும் .
பாவம் ! இக்காலத் தமிழரைப்பற்றி ஒன்றுத் தெரியாத சடையப்பவள்ளலுக்கு, கவிஞர் 'தானுய்" நின்று சொல்லுகிருர் .

Page 12
重2 அணிந்துரை
* பெற்ற பிள்ளை கட்கு வைக்கும்
பேருந் தமிழி லில்லை உற்ற மேன்மை விற்று வாழும்
ஒர்ம மற்ற சாதி. * பின்னர், இக்காலத் தமிழரைப்பற்றி, எல்லாம் அறிந்த கம்ப்ராய் மாறி,
“ துங்கநல் நூல்தந் தாலும்
சுவைத்திடு மாற்ற லில்லா உங்களுக் கென்ன தம்பி
உள்ளதே வாய்வாய் இந்த ’’ * வாய்தானு மில்லை யென்றல்
வந்துநாய் இழுத்துக் கொண்டு போய்கடுத் தெருவி லும்மைப்
போட்டிருக் காதோ ? என்றும்,
* தண்டமிழ் ஈழ நாட்டிற்
சலசலப் பதிக மென்பேன் சொண்டினல் வெட்டி வீழ்த்திச்
சுருட்டிவான் மதியைக் கையிற் கொண்டுபோங் கொள்கை யுள்ளார்
குடத்தில்ரீர் நிறைய இல்லார் சண்டைகள் பிடித்து வீணே
தாழ்கின்றர் தமிழைக் கல்லார் ?? என்றும் நெருப்பெடுக்கிருர் .
நெருப்பெடுப்பதில் மாத்திரமன்றி, தென்றல் போற் கொஞ்சி, தமிழ்போல் இனித்து, பூம்புனல் போற் குளிர்ந்து, மனேரஞ்சிதம்போல் மணம்பரப்பிச் செல்லும் கவிதைகளால் உச்சி குளிரச் செய்வதும் இக் கவிஞருக்குக் கைவந்தவொன்று.

அணிந்துரை 13
* கலையொழுகு தமிழ்க்கடலே கனலாய்க் காற்ருய்க் கரைபுரளுங் கற்பனையே கற்கக் கற்க அலைகெழுமி யமிழ்தமெழ வதிலே தோயு
மனைவரையு மமரரென வாக்கி நின்று தலைமைகிலை வகித்தினிது தமிழ்செய் கின்ற
தரணிபுகழ் காப்பியத்தைத் தந்தே யெம்மைத் தலைநிமிரச் செய்ததவப் புலவ ரேறே
சங்கநிதி நீயெமக்கு வாழி வாழி. * என்று கவிஞர் பாடும்போது உண்மையாகவே " உச்சி குளிருகிறது பாட்டிலே தேங்கிக் கிடக்கும் அமைதி சம பூமியிலே ஒல்கி ஒல்கிச் செல்லும் ஆற்றின் அமைதி ; நல்ல பெண்மணியின் தெய்வீக அமைதி,
*கீரிமலையினிலே கவிஞர் நையாண்டியையும் நகைச் சுவையையும் அள்ளியள்ளிச் சொரிகிருர் . கம்பராய் மாறி நின்று ஈழத்திருநாட்டின் தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பார்த்து, " " ஒகோ, தமிழர்களே, நீங்கள்,
* சொண்டினுல் வெட்டி வீழ்த்திச்
சுருட்டிவான் மதியைக் கையிற் கொண்டுபோங் கொள்கை
உள்ள கெட்டிக்காரர் ' என்கிருர் ; நையாண்டி பீறிடுகிறது.
இலங்கைத் தமிழர்க்குக் கம்பராமாயணம்
முற்றும் தெரியுமாம் ; பாலகாண்டம் தொடக்கம் யுத்த காண்டம் வரை தெரியுமாம்-எப்படித் தெரியும்? கவிஞரே நகைச்சுவை தெறிக்கச் சொல்லுகிருர் : கேட்போம். கம்பராமாயணத்தைக் கற்றவர்கள்,

Page 13
14 அணிந்துரை
எண்ணிலிங் கிருவர் மூவர்
இருக்கின்றர் இன்னு மென்பேன் மண்ணிலே மற்றை யோர்கள்
மாண்புறக் கற்ற தென்னே அண்ணலும் நோக்கி னுனென்
றடியினை யன்றி வேறு -1 மேலும் தொடர்கிருர் :
* என்னதா னறிவார் பால
காண்டத்திற் பின்னர் உள்ள
மன்னுபேர் யுத்த காண்டம்
வடிவுறக் கற்றர் போன்று
இன்னுமோர் அடியைக் கண்டார்
இன்றுபோய் நாளை வாவென்
றுன்னுவார் இவற்றை விட்டால்
ஒன்றுமே அறிகி லாதார். *
இவ்வாறு தொட்டுக் காட்டப் பலவிடங்களுண்டு. எல்லாமே கேலியிற் பிறந்த நகை; ஆரோக்கியமான நகை; பயன் விளைவிக்கக்கூடிய நகை.
ஐயோ ! கவிஞர் ஆங்காங்கு மின்னவிடும் உவமை களை என்னென்பது! எல்லா உவமைகளிலும் புதுமை பளிச்சிடும்; முழுக்க முழுக்க மண்வாசனை பரிம ளிக்கும்; காட்சிகளை மிக எளிதாகப் படம் பிடிக்கும். பதம் பார்க்க வேண்டுமா? அதற்கென்ன; இதோ -
செக்கர் வானம், கவிஞருக்குப் பாயிற் பனங் களி யாய்த் தெரிகிறது ;

அணிந்துரை 5
* சாவகச் சேரிமண்ணை - மேற்கினைச்
சார்ந்தசெம் பாட்டு மண்ணை தூவிய தோகொணர்ந்து - வரிசையிற் சோழக மென்பது வாய்'த் தெரிகிறது, அந்த அந்திவானம்; மேலும், “லேப்பட் டாடையிலே - பழுத்தப
லாலித்தக் காளி யெல்லாம் சாலப் பிசைந் தெறிந்தது'
போலவும் தோற்றுகிறது.
அரைத்த மாவையே அரைக்காமல், புத்துவமை களைக் காட்டும்போது, புதுமை விளைவோடு நயக்க முடிகிறது.
கீரிமலை பற்றிப் பேசப்படும் பல்வகை வரலாற்றுக் கதைகளை மாலைமகள் வரைந்த ஓவிய வானத்திற் காட்டும் உத்தியிலும் புதுமை பளிச்சிடுகிறது.
இறுதியாக, எங்கிருந்தோ ஒரு குரல், ' எல்லாம் சரி, கீரிமலையினிலே இரிமலைக் கடல்போல உணர்ச்சி பெருக்கெடுக்கிறதா ? ? என்று மெல்லத் தயங்கித் தயங்கிக் கேட்கிறது.
நல்லது; இந்தக் கேள்விக்கு விடை, ‘கற்கண்டிலே இனிமையுண்டா என்ற வின.
இந்த விஞவோடு எனது பணியை முடித்துக் கொள்ளுகிறேன். இனி, சுவைஞர்கள் சுவைக்கட்டும்; விமர்சகர்கள் விமர்சிக்கட்டும்.
зrшиb.
நாவற்குழி, சு. வே. I2ーI2ーI 969。

Page 14
கவிஞர் வி. க. அவர்களின் பிற நூல்கள்
1 ரூபாய் (குறுநாவல்) சிட்டுக்குருவி (கவிதை) இலக்கிய உலகம் ( , , ) ஏனிந்தப் பெருமூச்சு ( , , ) கொடிய கூணியின் கடிய சாதனை
(சொற்பொழிவு) உய்யும் வழி (கவிதை - அச்சில்)

கீரிமலையினிலே!
விநாயகர் வணக்கம்
தேன்கவிகள் நான்சொரிய வேண்டும்
-கேட்பவர்கள் ஊனுயிரி லவைசுவற வேண்டும் ! வான்மழையைப் போற்பொழிய வேண்டும்
-மண்ணிலதன் மேன்மைகளைப் போல்வளர வேண்டும் ! கூன்குருடர் செவிடர்களுக் கெல்லாம்
-வலிமைதரும் பான்மையிலென் பாட்டமைய வேண்டும் ! கோன்கவிகள் கொண்டுபுவி யாள
-ஆனைமுகன் கூடவிருந் தேயருள வேண்டும் !
2

Page 15
கலைமகள் வணக்கம்
கல்லுக்குள் ளிரமுங் காட்டுவாய்
-அடர் காட்டுக்குள் வீட்டையும் நாட்டுவாய் தொல்லைக்குள் ளின்பமு மூட்டுவாய்
-கம்பன் தோய்ந்தவ ருட்கலை வாணியே சொல்லுக்குள் தெய்வப் பொருள்வைத்து
-நெஞ்சைத் தொட்டுப் பிணைக்கு மணியிட்டுப் பல்லக்கில் வேந்தன் பவனியை
-ஒத்த பாட்டுப் பிறந்திட வேண்டுவேன்.

8ifl Loðvufløðfl(Bøv
நலந்தருங் கேணி யருகினிலே மாரி மழையதனல்
மலர்ந்தெழும் மண்ணினைப் போலவுள்ளம்
பூரித்து நிற்கையிலே நினைவுகள் பூத்துக் குலுங்கையிலே
தூரத் தொடர்ந்துசென்றேன்
மெள்ளமெள்ளச் சூழல் கடந்துநின்றேன் !

Page 16
20 ரிேமலையினிலே
கஞ்ச மலர்க்குளத்திற்
சூரிய காந்திக் குடங்கள்கொண்டு வஞ்சிக் கொடிகள்தண்ணீர்
அள்ளிப்பயிர் வார்க்க நடப்பதுவாய்- 3
பொன்னிற நெற்றியிலே
குங்குமப் பொட்டினை வைத்துவிட்டுப் பின்னர் அழித்ததுமேன்
பாவமிப் பெண்ணென வெண்ணிடவாய்- 4
பாயிற் பனங்களியோ
வருமிருள் பாருக்கு ணர்த்தவந்த ஆயநற் செங்கொடியோ
இதுவென ஆங்குளம் திக்கிடவாய்- 5

கிரிமலயினிலே
சாவகச் சேரிமண்ணை
மேற்கினைச் சார்ந்தசெம் பாட்டுமண்ணைத் தூவிய தோகொணர்ந்து
வரிசையிற் சோழக மென்பதுவாய்- 6
நீலப்பட் டாடையிலே
பழுத்தப லாலித்தக் காளியெல்லாம் சாலப் பிசைந்தெறிந்தார்
யாரெனத் தானையம் மேலெழவாய்- 7
நீரினில் மூழ்கியொரு முனிவர்தங் கீரிமு கக்க்ோலம் தீர மகிழ்ந்துசிவன் Girtuad சேர்ந்து வணங்குதல்போல்- 8

Page 17
22
63a fluparolasif GBano !
இராமபி ரான்கணையால்
இழந்துகை யின்றிநின் றேங்கையிலே இராவணன் வீணையினைக்
கவர்ந்துசித் திராங்கதன் மீட்பதுபோல்- 9
ஆட்டுங் கலிதொலைய
நிடதநன் ஞட்டு நளன் துயர்கள் ஒட்டு மருள்நகுலே சரைவரங் கேட்டு வணங்குதல்போல்- 0.
மாமுக வல்லியொரு
கேணியில் வந்துவந் தேமுழுகி
மாமுகந் தாமரையாய்
அடவங்கு
மாற மகிழ்வதைப்போல் -

faba of Gas @3
மாலை மகள்வரைந்த
ஒவிய வானத்தை நான்மறந்தேன் காலை வருடியின்பக்
கதைசொன்ன
காற்றையும் நான்துறந்தேன் ! 12
கத்துங் கடலலைகள்
திவலைகள்
காறி யுமிழ்வதையும் மத்தப் பெருக்கினிலே
ஒதைசெய்
மக்களை யும்மறந்தேன் ! H 3
கோடுக ளிட்டநிரை முறையினிற் கூடு திரும்புகின்ற கேடிற் பறவையினம்
புகட்டிடும் பாடம் மனதுவைத்தும்- 4

Page 18
24
á3áfubavaíefl(sv !
தீதில் வடமீனின்
திறமுடைச் செம்மனக் கண்ணகிபால்
கோதிற் குழவிமொழி
வருந்திமுன் கூடிப் பயின்றுவந்த- 5
கிள்ளைக் குழாம்பொழிந்த
மழலையில் துள்ளி மனந்திரிந்தும் கள்ளில் விழுந்தவண்டாய்க்
கிடந்தருங் காட்சிக ளிற்கலந்தேன் ! 16
மன்னும் இயற்கையன்னை
மடியினில் மண்டித் திளைத்திருந்தேன் என்னென்ன வோநினைத்தேன்
நொடியினில் எங்கெங்கெல் லாம்லைந்தேன்! 7

வேந்தனைப் போலொருகால்
கொலுவினில் வீற்றிருந் தாட்சிசெய்தேன் மாந்தரின் இன்னலெல்லாம்
மறுகணம் மாற வழிசமைத்தேன் ! 8
இன்மையென் வெப்பத்தினுல்
வதங்கிட ஏழைப் பயிர்களில்லை புன்மைப் புயலடித்தே
ஒடிந்துபுல் பூண்டுகள் வீழ்ந்ததில்லை ! 9

Page 19
26
sirdsvanafsuo
சாதி சமயத்திலே
வேற்றுமை சாதிப்ப வர்களில்லை
நீதி நெறியொழுக்கம்
யார்தனும் நீங்கி வெதும்பவில்லை ! 2 O
நாட்டுப்பற் றற்றவர்கள்
இனத்தினைக் காட்டிக் கொடுப்பவர்கள் கூட்டுப் பொறுப்புணர்வு
பொதுத்தொண்டுக் கொள்கை சிறிதுமில்லார்- 21
தன்னலப் பேய்க்கணங்கள்
புகழ்ச்சியைச் சாப்பிட்டு வாழ்பவர்கள்
சன்னதப் போட்டியினல்
வளர்ச்சியைத்
தள்ளி மிதிப்பவர்கள்- 22

áfraosif Gao
காலையில் மூச்சுடனே சொன்னதை மாலையில் மாற்றிடுவார் வேலையில் லாதுவெறும்
பேச்சினில் வில்லங்க மாய்ப்பொழுதை
வீணிற் கழிப்பவர்கள்
அமைதியை மெல்லக் குலைப்பவர்கள்
காணுஞ் செயலிலெல்லாம்
ஒருகுற்றம் காணத் துடிப்பவர்கள்
தூங்கி வழிபவர்கள் பலவகைச் சூழ்ச்சியில் வல்லுநர்கள் ஓங்கி யுயர்ந்துநிற்க
வாய்ப்பின்றி ஏங்கித் தவிப்பவர்கள்
23
24
25

Page 20
2校
áfrava asfGaz
அஞ்சி அழிபவர்கள் பதவிக்குக் கெஞ்சி அலைபவர்கள் பிஞ்சிற் பழுப்பவர்கள் அரைகுறைப் பேதை அறிஞரென்பார்- 26
யாரையுங் காணவில்லை
எனதர
சாட்சியின் மாட்சியிலே சீரிய நோக்குடனே
நல்லறம்
செய்துமக் கள்சிறந்தார் ! 27
மானமண் ணிற்பிறந்தும்
அன்பெனும் மாமழை யாற்சிறந்தும்
ஆனநன் னிதியென்னுங்
கதிரொளி
யாற்குடி யோங்கக்கண்டேன்! 28

念9
உய்ய வழியுரைத்த வள்ளுவன் உண்மை யறத்தில்நின்றே வையத்து மக்களெல்லாம்
வானுறை தெய்வங்க ளாய்த்திகழ்ந்தார்! 29
சீரிளஞ் செந்தமிழ்த்தாய்
திகழ்ந்தனள் பேரரி யாசனத்தில்
பாரினிற் பைந்தமிழ்த்தேன்
பாய்ந்திடப்
பாதை பலவகுத்தேன் ! 30
தூயநல் நூல்புதிதாய்
நிலைத்திடத் தோற்றுவிக் கும்பெரியோர் ஆய தமிழ்க்கலைகள் விளங்கிட
ஆன்ற பணிகள் செய்வோர் 31

Page 21
80
கீரிமலையினிலே
என்றிவர் மேன்மைகளை
முறையுடன்
ஏற்றி மனங்குளிர நன்றிந்த ஞாலமெல்லாம்
தமிழ்மொழி
நாளும் பவனிவர- 32
வாரி வழங்கிநின்றேன்
கடையெழு வள்ளல்கள் நாணிச்சென்ருர் கூரிய வாள்கொடுத்தே
தலையினைக் கொய்யென்ற கொற்றவனின்- 33
தெள்ளு தமிழுறுதி
எண்ணியெண்ணி உள்ளதெல் லாமுவந்தே அள்ளியள் விரிக்கொடுத்தேன்
புலவரின் ஆற்றலன் பால்வளர்த்தேன் ! 34

கீரிமலையினிலே! 3
யாரெனப் போற்றமிழை
வளர்த்தவர் யாரென ஆர்ப்பரித்தேன் வாரும் வணக்கமென்றே
சடையப்ப வள்ளல்முன் வந்துநின்ருர் ! 35
ஒலக்கம் விட்டுடனே
ஒடிச்சென் ருேடிச்சென் றேவணங்கி ஞாலத் தமிழ்வளர்த்த உயர்நெஞ்சை யான்வர வேற்றுநின்றேன் ! 36

Page 22
வாழ்க வருக வள்ளல் பெரும
வருக வருக வருக வாழ்க வாற்றல் வாய்ந்த பேரை
வளர்த்த நெஞ்ச மாண்பு சூழ்க வெங்கு மென்றும் நின்றன் தொண்டைப் பற்றும் பாங்கு வாழ்க செந்த மிழ்க்கு வாய்த்த
வான்கை வள்ள லேறே ! 37
வாழ்நி லத்தைப் பாழ்நி லத்தை வகுத்துப் பெய்யும் மாரி சூழ்நி லத்தில் முழங்கி மின்னிச்
சொல்லி மேலும் பெய்யும் ஆழ்க வந்தப் பான்மை யென்று
போலும் ஐய வான்ற ஆழ்க டல்நி கர்த்த செய்கை
யாற்றி யோங்கி நின்ருய் ! 38

கிரிமலயினிலே ! $$
வாடும் முல்லைக் கோங்கு தேரை
வாழ வைத்த பாரி ஈடிற் கொல்லிச் செல்வம் யார்க்கு
மீந்த வல்வில் ஓரி தேடும் யாவுங் கொடுத்துத் தீர்க்குந்
திறன்மி குந்த காரி பாடும் ஒளவைக் கரிய நெல்லி
பயத்த குதிரைக் கோமான் - 39
ஆடுந் தோகைக் காடை போர்த்த
அருட்கல் நாடன் பேகன் ஈடென் றறத்தைக் கூடக் கொள்ள
லின்றி ஈந்த நல்லாய் நாடு வோரின் நலிவு தீர்த்த
நள்ளி என்று வையம் பாடி யேற்று மெழுவர் பான்மை
பாரித் தோம்பி வந்தே- 40
தமிழுக் காகத் தலையு வந்து தந்த குமணன் பின்னே தமிழைக் காத்த பெருமை நின்னைச்
சாரும் வள்ளல் பெரும தமிழின் மேன்மை எடுத்துக் காட்டத்
தக்க கம்பன் றன்னை இமிழ்ப ரப்பிற் கண்டெடுத்த
ஏற்றம் நின்ன தன்ருே ? 4】

Page 23
ரிேம&லயினிலே!
சோழ னுக்குக் கம்ப ஞற்றல்
சொல்லி ராமர் காதை
ஆழி சூழ்நல் லுலகும் வானும் ஆர்க்கப் பாடு வித்து
வாழ வைத்த மேன்மை யொன்று
மட்டும் போது மைய
சூழுங் கால மென்றும் நின்றன்
தொண்டு போற்று மன்றே ?
நிலைமை இந்தக் காலம் மாறி
நெஞ்சை வாட்டு மீழக் கலைக ளான்ற தமிழி லோங்கக்
காசை வாரி வீச இலரிங் கொருவ ரேனு மான்ற இராம நாதன் பின்னே கலக லத்துப் பண்டை மாண்பிற் கண்து யில்கின் ருர்கள் !
அற்றுப் போக வில்லை யின்னு
மாங்கி லத்தின் மோகம் பற்று வைத்துத் தமிழைக் கற்றுப்
பார்ப்ப தேனு மில்லை பெற்ற பிள்ளை கட்கு வைக்கும்
பேருந் தமிழி லில்லை உற்ற மேன்மை விற்று வாழும்
ஒர்ம மற்ற சாதி !
42
43
44

ரிேமலையினிலே 35
தமிழை மட்டுங் கற்ற மக்கள்
தாழ்வை யென்ன சொல்வேன் தமிழைப் பாடும் புலவர் வாடுந்
தன்மை சொல்லப் போமோ தமிழை விற்கத் தயக்க மின்றித்
தலைகொ டுக்கப் போவார் தமிழ ரென்று சொல்ல வெள்கித்
தலைகு னிந்து தாழ்வார் ! 45
உன்னி யுள்ள நிலைமை சற்று
முணரு வார்க ளில்லைச் சொன்ன சொல்லைச் செய்கை தன்னில்
தொடரு வார்க் வில்லை உன்னி யுன்னி மேடைப் பேச்சில்
உளறு வாரை நம்பி என்ன கண்ட மிச்சஞ் சிச்சீ
என்ன வாழ்வி தையா ! 46
வீரத் தமிழை யாரத் தமிழை
வெல்லுந் தெய்வத் தமிழை மாரித் தமிழை மானத் தமிழை
வாழுங் கம்பன் தமிழைப் பாரி லுள்ள மொழிக ஞக்குப்
பண்பு சொல்லுந் தமிழை வாரி யள்ளி யஸ்ளி யுண்டு
வாழ்வு கொள்ளு வாரோ ? 47

Page 24
S3
கீரிமலையினிலே
மன்னு நூலைத் தந்த கம்பர் தன்னைப் பேணிக் காத்த நின்னை யிங்கு காண ஏழை
என்ன பேறு பெற்றேன் என்னும் போதில் வள்ளல் சென்ற
தென்கொ லென்ன முன்னர் கன்னற் கம்பர் கண்முன் நிற்கக்
கண்டு போற்றி நின்றேன் ! 48

கலையொழுகு தமிழ்க்கடலே
கனலாய்க் காற்ருய்க் கரைபுரளு கற்பனையே
கற்கக் கற்க அலைகெழுமி யமிழ்தமெழ
வதிலே தோயு மனைவரையு மமரரென வாக்கி நின்று தலைமைநிலை வகித்தினிது
தமிழ்செய் கின்ற தரணிபுகழ் காப்பியத்தைத் தந்தே யெம்மைத் தலைநிமிரச் செய்ததவப்
புலவ ரேறே சங்கநிதி நீயெமக்கு
வாழி வாழி ! 49

Page 25
8
ரிேமலையினிலே
இமயமலைக் காப்பியமுன்
னிராமர் காதை இயல்புகளை எடுத்தியம்ப
எனக்கென் ஞற்றல் அமையுமதி லனைத்துலக
வளங்கள் யாவு மறிவியலும் புவியியலும்
வரலாற் ருேடு சமையுமிடம் வேற்றுமையைச்
சாதிப் போரால் சச்சரவுஞ் சிலசமய
முண்டே யானல் அமைதிதரும் நின்கவிதை யாற்ற லெம்மை ஆள்கிறதி ராமர்புக
ழமிழ்தை யூட்டி ! 50
உள்ளமுட னுறவாடி ஊனே டூறி உயிரொன்றி உய்விக்க
வென்றே ஆன்ற உள்ளபெரு முண்மைநெறி
உற்றே ஆய்ந்த உலகியலின் நுண்மைகளை
ஒப்பில் லாத

கீரிமலையினிலே ! 39
தெள்ளுதமிழ் விருத்தமெனுந்
தீம்பாட் டாலே செம்மையுற வூட்டியதன் திறன்சொல் வேனே கொள்ளைகொளும் பாத்திரநற்
குணஞ்சொல் வேனே கூரறிவு கொலுக்கொள்ளும்
வகைசொல் வேனே ! 5.
கல்விவளம் வந்தவொரு
கடலென் பேனே கற்பனையில் வல்லபெருங்
காற்றென் பேனே சொல்வளணிற் சோமாரி
யெனச்சொல் வேனே சுவைபொருளில் தொடர்கின்ற
சுரங்கந் தானே பல்கிளையிற் பாயுமொரு
பாட்டா ருமோ பாட்டுவள மூட்டியருள்
காட்ட வந்த செல்விகலை வாணியவள்
செல்வப் பேறே திகழுலக இலக்கியமே
தமிழாந் தேனே! 52

Page 26
62 foasualifical
மைவண்ணன் மாவீர
மெண்ணப் போமோ மணியான வாய்வண்ணம்
சொல்லப் போமோ கைவண்ணம் கால்வண்ணம்
கூறப் போமோ கண்டாரை யுய்விக்குங்
காந்த சத்தி மெய்வண்ண மிகுமேன்மை
விளம்பப் போமோ மேலான பெருநன்மை
மேவும் யாவும் செய்வண்ணத் திறனுரத்
தேரப் போமோ திருராமத் தேனர் வம்
தீரப் போமோ? 53
ஆனகுல ராமன்ற
னடக்க மென்னே அன்புள்ள தம்பியரின்
பண்பு மென்னே சானகியின் கற்பென்னுந்
திண்மை யென்னே தசரதனின் அறங்காக்கும்
வாய்மை யென்னே

ShabákabufsfGa) ' 41
ஈனமழிக் கின்றசிவன்
நன்கு வந்த இராவணனின் இணையற்ற
இசைதா னென்னே மானமிகு வீடணனின்
தனிமாண் பென்னே மாகும்ப கர்ணன்செய்
நன்றி யென்னே! 54
இராமரு ய ராரமுத
மூட்டும் மேன்மை இலக்குவனின் துணைமாண்பு காட்டும் பான்மை இராவணனின் பத்தியினைத்
தீட்டுஞ் சீர்மை இனியவனு மான்ருெண்டு நாட்டும் நீர்மை பராவுநலக் கைகேயி
பாவிக் கோலம் படுகூனி மதிநுட்பச்
சாலம் எல்லாம் விராவிவரப் பெருமுண்மை
விளக்கங் கொண்டு மெய்ஞ்ஞானம் பெற்றுய்ய
வைத்தாய் மேலோய் ! 55

Page 27
49
ரிேமலையினிலே
ஓர்பெரிய நாடகத்தை
உலகுக் கீந்தாய் ஒற்றுமையை ஒர்குடையில்
உலக மொன்றைச் சீருறநற் சிந்தனைகள்
சிறக்கச் செய்தாய் திறமைமிகு ஆசிரிய ஞகித் தேர்ந்த பேரரிய இயக்குநனய்ப்
பெருமை சான்ற பிறவிநடி கனுமாகிப்
பின்னு முள்ள நேர்கலைஞர் பலராகி
நிகழுங் கூத்தாய் நிகரற்ற சுவைஞனுமாய்
நிற்கின் ருயே! 56
வேறு
என்றெல்லாம் பொங்கி ஏமுற்
றியம்பினேன் இறைஞ்சி மேலும்
நின்றுநான் கூறக் கம்பர்
நிறுத்துக பேச்சை யென்ருர்
ஒன்றுமே புரிய வில்லை
உருக்குலைந் தொடுங்கி ஊன்றி
மென்றுமிழ் நீர்வி ழுங்கி
மிரண்டுமெய் சிலிர்க்க நின்றேன் ! 57

கீரிமலையினிலே − 婆3
குறித்தவென் மொழியி லேதுங்
குற்றமோ குறுக்கிட் டாங்கே மறித்ததன் பொருளு மென்னே மாபெரும் புலவன் முன்னே சிறுத்துநான் சிறுகு ரங்காய்த்
தேய்வதை உணர்ந்து முந்திப் பொறுத்தருள் செய்க வையப்
பொருளறி புலவோய் என்றேன் ! 58
தங்கொளிர் முகத்தில் ஞானத்
தண்ணகை தவழ அன்பு பொங்கிடும் பார்வை வார்த்துப்
புதுக்கியென் நிலைபு கல்வார் துங்கநல் நூல்தந் தாலும்
சுவைத்திடு மாற்ற லில்லா உங்களுக் கென்ன தம்பி
உள்ளதே வாய்வாய் இந்த - 59
வாய்தனு மில்லை யென்றல்
வந்துநாய் இழுத்துக் கொண்டு போய்நடுத் தெருவி லும்மைப்
போட்டிருக் காதோ ஏதோ தாய்தமிழ் உச்சி மோந்து
தந்தபால் வலுவி னலே வாயினல் வெளுத்து வாங்கி
வாழ்கிறீர் வாழி வாழி! 60

Page 28
44
என்னிரா மாய ணத்தை
இமயமென் றேற்றி நின்ருய் உன்னுடை யாற்ற லாலோர்
உச்சியைத் தன்னு மேறிக் கண்ணினுற் கண்ட துண்டோ கருத்துடன் கற்றி டாதிங் கென்னதான் பேசி ஞலும்
என்னப்பா இராம னுக்கே! 6 I
நுண்ணிதின் உணர்ந்த சான்றேர்
நுகர்ந்திடும் போதில் வந்து நண்ணிய அனுப வத்தை
நயமுடன் சொல்லக் கேட்டுக் கண்ணறக் கலவாய் போன்று கருத்தினை விட்டு வீணில் எண்ணிய வாறு பேசின்
என்னப்பா இராம னுக்கே! 62
தண்டமிழ் ஈழ நாட்டிற்
சலசலப் பதிக மென்பேன் சொண்டினல் வெட்டி வீழ்த்திச்
சுருட்டிவான் மதியைக் கையிற் கொண்டுபோங் கொள்கை யுள்ளார்
குடத்தில்ரீர் நிறைய இல்லார் சண்டைகள் பிடித்து வீணே
காழ்கிருர் தமிழைக் கல்லார்! 63

கீரிமலையினிலே 45
கண்டவன் ஒருவன் உள்ளான்
கம்பனைக் கருத்து வைத்துப் பண்டித மணிநற் கங்கை
பாய்ந்துசெய் தொண்டைப் போலே உண்டுதொல் புகழி ராமன்
உன்னத வமிழ்தை யள்ளிக் கொண்டுவந் துலகத் தார்க்குக்
குவிக்கின்றன் குவிக்கின் ருனே! 64
மறந்தனை வீழ்த்தி மண்ணில் மக்களைத் தேவ ராக்கும் அறந்தனை ஆள வைக்கும்
அழகுரா மாய ணத்தின் சிறந்தநற் றத்து வத்தைத்
தெருவெலாம் முழக்கஞ் செய்யப் பிறந்தவன் பெரிய தம்பிப்
பெருமையும் வாழ்க மாதோ! 65
இத்தரை எழுத்தாற் பேச்சால்
பாட்டினுல் எழுந்தோன் என்மேல் வைத்தவன் உண்மை அன்பு
மழைமுகில் வண்ணன் வேதம் மெத்தவே கற்ற மேதை
மேன்மைகொள் நயங்கள் கூறும் வித்துவான் வேந்த ஞரும்
விண்ணவ ஞகி ஞனே! 66

Page 29
46 கீரிமலையினிலே!
கண்ணில்நீர் மல்கக் கம்பர்
கதையினைக் கூறி நின்றர் எண்ணிலிங் கிருவர் மூவர்
இருக்கிருர் இன்னு மென்பேன் மண்ணிலே மற்றை யோர்கள்
மாண்புறக் கற்ற தென்னே அண்ணலும் நோக்கி ஞனென்
றடியினை யன்றி வேறு - 67
என்னதா னறிவர் பால
காண்டத்திற் பின்னர் உள்ள மன்னுபேர் யுத்த காண்டம்
வடிவுறக் கற்ருர் போன்று இன்னுமோர் அடியைக் கண்டார் இன்றுபோய் நாளை வாவென் றுன்னுவார் இவற்றை விட்டால்
ஒன்றுமே அறிகி லாதார்! 68
செந்தமிழ் நாடு கண்ட
சிறந்தவல் லறிஞர் தம்மை வந்துரை செய்க வென்று
வரவழைத் தவர்கள் கூறும் சொந்தநற் கருத்தி லெல்லாஞ்
சொக்கிநீர் வீழ்ந்த பின்னுஞ் சிந்தைகொண் டுமது பாங்கிற்
சிறப்புகள் கண்ட துண்டோ ? 69

கீரிமலையினிலே !
கேட்டதை வைத்துக் கொண்டு கெட்டித்த னங்கள் பேசிக் காட்டலில் வல்ல நீவிர்
கருத்துடன் கவினி ராமன் பாட்டிலே எவற்றை ஊன்றிப்
படித்துளிர் எதுவு மில்லை நாட்டிலே இராமன் நீதி
நலிவுறல் கூறுஞ் சான்றே!
எதனையிங் கியம்பி னுலும்
இன்றமிழ்ப் புலவ ரேறே இதனையான் பொறுத்தற் கில்லை
ஈழநன் னுட்டி லுள்ள முதியவர் சிறுவ ரீருய்
முறையுடன் கம்ப னுாலும் கதியெனக் கண்ணி லொற்றிக்
கற்றுவாழ் கின்ரு ரன்றே !
கற்றிட முயலு கின்ற
கருத்தினைச் சொல்கின் முயோ கற்றுவாழ் கின்ரு ரென்ற
கணக்கினைத் தவிர்ப்பா யாக உற்றவோர் பற்றி லூறும்
உணர்ச்சியிற் பேசு கின்ருய் மற்றுநந் தமிழர் பெற்றி
மாசற அறிவேன் கண்டாய்!
鲨7
70
7 I
72

Page 30
48
கீரிமலையினிலே!
ஒற்றுமை தன்னை ஊட்டி
ஒர்குடை உலகைக் காட்டும் பெற்றியென் பாட்டிற் கண்டு
பெருமிதங் கொள்கின் ருயே பற்றியக் கொள்கை வாழ்விற்
பண்புடன் ஒங்கும் எண்ணம் அற்றிவர் அல்லற் பட்டே
அலைவதும் அறிகி லாயோ? 73
கோதிலா நெறிகள் மாந்தர்
கொள்ளவே காட்டிப் போந்தும் சாதியால் மொழியாற் கொண்ட சமயத்தாற் சண்டை யிட்டு நீதியைத் திரித்து நேர்மை
நிலைகெடத் தாழ்கின் ருரே! ஆதியாந் தமிழர் பண்பு
அறமுறை குன்றிற் ருமோ? 74
சொல்வதைச் சொல்நின் ஞர்வத் துடிப்பினை அடக்கப் போந்த னல்லனிவ் வார்வ முள்ள
அனைவருங் கொள்ளின் தூய கல்வியு மோங்கும் பற்றும்
வல்வினை நீங்கும் வீரச் செல்வனின் சிறப்பைப் போற்றிச்
செம்மையாய்க் கற்கி னன்ருே? 75

கீரிம&லயினிலே 49
செம்மையாய்க் கற்ற பேர்கள் சிலர் மிகச் சிலரே யாயின் அம்மநின் னுரலிற் பன்னி
ராயிர முண்டே பாட்டு இம்மையே கற்கப் போதா
தென்றவோர் கவலை யாலே விம்மிநாம் மீண்டும் வந்து
மிகுதியைக் கற்க ஆசை - 7 6
உற்றனம் நின்றன் பாட்டின்
உயிர்த்துடிப் பவ்வா றுண்டே நெற்றியை நிமிர்த்திக் கம்பர்
நெருங்கியென் தோளில் தட்டிப் பெற்றனம் மகிழ்ச்சி யேதும்
பெறுவையேற் கேள்தி யென்ருர் கற்றிடும் போதி லாங்கே
உற்றபல் ஐய முண்டே - 77
எண்ணினேன் அவற்று ளெண்ணி
எழுந்தவா றென்றைக் கேட்டேன் அண்ணலும் நோக்கி ஞனென் றடியிலே இராமர் தன்னை அண்ணலென் றழைக்குந் தாங்கள் அவளெனச் சீதை தன்னை எண்ணிய வாறு மென்னே
இதற்கொரு விளக்கம் வேண்டும் ! 78

Page 31
莎份
கீரிமலையினிலே !
அண்ணலி னடிமை யானுள்
ஆதலால் அவளாய் நின்ருள் அண்ணல் பின் வில்மு றித்தே
அடைவனென் றறியா துன்னி யெண்ணியே அங்க லாய்த்தாள் ஏங்கினுள் இன்னும் கேள்தி அண்ணலை நோக்க லாற்பின்
ஆவதை யறியா தார்த்து - 79
நின்றவப் பேதை பெற்றி
நினைத்திடின் அவள் குறிக்கும்
என்றிவை யெண்ணி யெண்ணி இளைஞவிக் கவிதை தன்னை
அன்றுயான் பாட வில்லை
அவளென்ருற் சீதை யப்பா நன்றுயான் நினைத்த தீதே
ஒன்றுனக் குரைத்தல் வேண்டும். 80
வில்லைவிட் டேகு மம்பு
குறிப்பொருள் வீழ்த்தி யப்பாற் செல்லுமோர் பொருளைக் கொய்தல் தற்செயல் நிகழ்ச்சி தேராய் கல்லிலே நாரு ரித்துப்
பொருளினைக் காண வேண்டாம் சொல்லதன் சுளையை விட்டுத்
தோலினைக் காந்த வேண்டாம்! 81

ரிேம&லயினிலே 51
தக்கநற் படைப்பை ஊன்றிச்
சரிவரச் சுவைப்ப தற்கும் மிக்கபல் தகைமை வேண்டும் மேவுறு நயங்கள் யாவும் சிக்கறத் தேர முன்னர்
எக்கருத் தேனுங் கூறல் தக்கதோ எதற்கும் வாய்ந்த
தகைமையென் றென்றுண் டன்றே?
எதையுமெப் பொழுது மெங்கும்
யாருங்கற் றுணரு வாரோ மதிநலம் புலமை ஞானம்
மானுயர் அனுப வங்கள் பொதுமனப் பான்மை ஆர்வம்
பொருந்துவார் நூலை நோக்கும் விதமும்வே ருவர் நோக்கும்
விதமுமொன் ருகு மாமோ ? 83
ஆக்கநூ லாடப் பாட h− அவையிலே யேறிப் பேச நீக்கிநெஞ் சழுக்குந் துன்பும்
நேர்மையை நாட்ட வல்ல மீக்குறு கலைகட் கெல்லாம்
வேண்டுவான் தகைமை போன்று நோக்கிட நுணுகித் தேர
நுகர்ந்திடத் தகைமை வேண்டும்! 84

Page 32
52
62 foastaff (a)
அடுப்படி வேலைக் கேனும்
அடிப்படை யறிவு வேண்டும் படிப்பது வேறு கூர்ந்து
படித்துநூ லாய்தல் வேறு படிப்பது பயக்கு மின்பம்
பயனுடன் எடுத்துச் சொல்லி முடிப்பது வேறு மூண்ட
முகில்குளிர்ந் திறைத்தல் போன்றே!
குதிரையைக் கழுதை யென்பார்
குடித்திடின் கள்ளே யென்பார் முதிரைபோல் தான்பி டித்த
முயற்குக்கால் மூன்றே யென்பார் "உதுக"ளுஞ் செல்வ மாமோ
உயர்ந்ததென் செல்வ மென்பார் கொதிகலம் போன்ற நெஞ்சங்
கொண்டவர் மொழிவ தெல்லாம்
பத்தியோ டேற்ப ராலே
பாழ்சுவைத் திறனிங் கென்பேன் பித்தநா வதற்கு நன்கு
தித்திக்கும் பாலும் கைக்கும் வைத் தெலாத் திறனும் யாத்த
வித்தைநூற் பொருளும் பாங்கும் இத்தகைப் பான்மை யோர்க்கு
எட்டுமோ இவர்கள் யாரோ ? 87

கீரிமலையினிலே ! 58
பதியுநூற் பாங்கு காணும்
பான்மையோர் கலைநம் முன்னேர் விதிவகை கூட வைத்தார்
விளங்குநூல் கொண்ட மேன்மை இதமுடன் காண்டற் கென்றே
இவையறி யாதார் கையில் மதியென வைக்கும் நூலின்
கதியதோ கதிதா னந்தோ! 88
ஆனதாய் ஆய வேண்டும்
அரும்பய னிட்ட வென்றே போனதோ தமிழர் மாட்சி
புகுந்ததோ போலி ஞானம் ஆனதோ இராம ராட்சி
அழிந்ததோ அல்ல லின்னும் ஏணிதை எண்ணு கின்ரு
ரில்லைநீ நினைத்த துண்டோ ? 89

Page 33
என்றவர் நன்றுநீ
வாழிய செல்லுவேன் என்றனர் சிறிது தூரம் சென்றனர் சென்றவர்
தன்னைநான் காண்கிலேன் திருவருள் போலு மன்னர் சென்றுபோய்ச் சேர்ந்தவத்
திக்கினை நோக்கினேன் செஞ்சுடர் ஒன்று தோன்றி வென்றெலாப் பக்கமுஞ்
சோதியாய் விளங்கிடும் விந்தையிற் புந்தி கெட்டேன். 90

55
கெட்டுவான் சோதியில்
எட்டுணைப் பார்வையும் பட்டுயான் வீழ முன்னர் மட்டிலாப் பேரொளி
மங்கவும் பொங்குமோர் பட்டொளிக் கற்றை தோன்றி வட்டவான் மதிநிலை
விட்டெதிர் சுற்றியே கிட்டவா யோங்கி வந்தே தொட்டுளம் ஈர்க்கையில்
துப்பினைச் சேர்க்கையில் துள்ளிநா னுர்த்து நின்றேன்! 91
ஆர்த்துநா னவலில்
அவ்விடம் நிற்கையில் அரியவோர் காட்சி கண்டேன் பார்த்ததும் நெஞ்சினைப்
பற்றியே ஈர்த்தது பாவையாய் மெய்ம்ம றந்தேன் வேர்த்தது மெய்மயிர்
சிலிர்த்தது கைகளுஞ் சேர்ந்தன வுச்சி மீதே நேர்த்தியாய் மாவலி
செருக்கினைத் தீர்த்தவன் நீள்கழல் காட்டி நின்ருன்! 92

Page 34
58
மாற்றிமன் னிதகள்
மானிடர் தேவரின் வாழ்வுகே டாகி வீழ
ஆற்ருெணுத் தொல்லைகள் ஆற்றும ரக்கரின் ஆணவம் பட்டு மாள வீற்றிருந் தேயறம்
நாற்றிசை யெங்கணும் மேன்மைகள் நல்கி யாள ஏற்றிரா மன்வடி
விப்புவி வந்தவோர் ஐயனே யென்ற வேளை - 93
அண்ணலைத் தசரதன்
கண்ணினை ஆவியை அயோத்தியின் பெருவி ருந்தை பெண்ணிலா வெருவரு
தாடகைப் பெண்ணினைப் பிளந்தவோ ரரும ருந்தை எண்ணரு நலத்தினுள்
இன்னுயிர்க் கேள்வன இராவணர்க் கருளி ஞனைக் கண்ணனைக் கார்முகில்
வண்ணனைத் திருவுடன் கண்ணினற் கண்டெ னம்மா! 94

ரிேமலையினிலே ! 57
அம்மடங் கியமலர்
தன்னிலும் மும்மடங் கானதோர் ஒளிமு கத்தை இம்மென வில்லினை
இறுத்தகைத் துப்பினை இயைந்ததோள் மலைக ளோடு செம்மணச் சீதையைச்
சேர்ந்தவம் மார்பினைத் தேடியே சென்ற தாளை வெம்மையைப் பண்புடன்
வீழ்த்திய மேன்மைகொள் வீரனைக் கண்டுகொண் டேன்! 95
உற்றகால் வண்ணமும்
பற்றுகை வண்ணமும் உள்ளவோர் மாத வத்தைக் கற்றவர் மற்றவர்
யாவரும் காதல்கொள் கவியமை காளை தன்னை குற்றமில் லாதநல்
லெழுவரைத் தழுவியே குணமுடைத் தம்பி மாராய்ப் பெற்றெலா வுலகுமோர்
சுற்றமென் ருக்கிய கொற்றவன் தன்னைக் கண்டேன்! 96

Page 35
58
அன்பிலே தாயினை
அமுதிலே சேயினை ஆறுதல் சொல்லி யுள்ள என்பையும் இடர்வரின்
ஈவதில் நண்பனை எதற்குமோர் தந்தை யானை வன்பகைப் பேயையும்
வந்துறும் நோயையும் மாற்றிடும் மாம ருந்தை மன்பதை உய்யவல்
லருளொளிச் சோதியை மாசறக் கண்ட னேயோ!
பொன்னினைப் பூவினைப்
பொருவிலாப் பொலிவினைப் பொங்குமோர் பால்நி லாவை மின்னினை வில்லினை
வேலினைக் கணியினை மிளிருமீர் காந்தள் தம்மை

59
மன்னுபேர் மிதிலையின்
மாணெழிற் கொடியினை Loug&ord Ggir2) LDnt&OT
அன்னையை அண்ணலின்
அரியநல் லழகியை ஆங்குநான் அம்ம கண்டேன்! 98
சொற்றிறம் பாதவோர்
துன்னருந் தூய்மையைத் துணிவினைப் பணிவை வல்ல கொற்றவன் நஞ்சினைக்
கொண்டவன் அமிழ்தினைக் கூடியிப் பெண்மை பெற்ற நற்றவப் பேற்றினை
நந்தலில் விளக்கினை நங்கையர் நங்கை தன்னை உற்றவோ ரொப்பிலாத்
தாமரைச் செல்வியை
உண்மையிற் கண்டெ னம்மா ! 99

Page 36
80
கீரிமலையினிலே
மண்ணிலே மிதிலையில்
மலர்ந்தவக் காட்சியின் மாண்பினைக் காட்டி நின்ருர் அண்ணலும் நோக்கினன்
அழகியும் நோக்கினுள் அவ்வடிப் பொருள றிந்தேன் அண்ணலும் அவளுமின்
னருளுடன் ஏழையை நோக்கினர் அமிழ்தை யுண்டேன் கண்ணினை மூடியே
கையெடுத் திறைஞ்சினேன் களிப்பினுல் விழித்த போது - 100
வேறு
கீரி மலையினிலே - நலந்தரும் கேணி யருகினிலே ஊருறங் கும்இருட்டில் - இருப்பதை உற்றுணர்ந் தேயெழுந்தேன்! 101


Page 37


Page 38
ທີ່ມີມວນ பினி
பற்றிச் சிந்தனேச் செம்மல் சு. வேலுப்பிள்ளே (சு விே
கீரிமவேயினிலே ந "நினேவுகள் பூத்து மெள்ளச் சூழல் க ஒவிய வானத்தை " விரியும் துற்ந்து " என்னென்னவோ
அலேகிருர் கவிஞர்.
இன்றைய தமிழ்ச் ச போவித் தமிழுண கல்லாது எல்லா "வாய்" காட்டும் ே போலிகள் மீதும், வற்ருத அன்பு கார கிருர், தாஞய் நின் நெருப்பெடுப்பதில்
கொஞ்சி, தமிழ்பே
குளிர்ந்து, மஞே செல்லும் கவிதைகள் இக் கவிஞருக்குக் ை பாட்டிலே தேங்கி பூமியிலே ஒல்கி ஒல் நல்ல பெண்மனியி நீரிமயிரிவே " க சுவையையும் அள்ளி எல்லாமே கேலியிற் நகை பயன் விளே ஐமோ கவிஞர் களே என்னென்பது பளிச்சிடும் முழுக் கும் காட்சிகளே .

1) அவர்கள்
வந்தரும் கேணி யருகினிலே " க் குலுங்கையிலே' , ' மெள்ள டந்து", மாலே மகள் வரைந்த
மறந்து, " கதைசொன்ன காற் ஒதைசெய் மக்களேயும் " மறந்து நினைத்து, எங்கெங்கெல்லாமோ
முதாயத்தின் போலி வாழ்க்கை, ார்வு, ஒன்றையும் முடிவுறக் வற்றையும் கற்ருர் போன்று பாலியனுபவம் ஆகிய முத்திறப் சமுதாயத்தின்மீது கொண்ட னமாகக் கவிஞர் நெருப்பெடுக் ன்றும் கம்பனுய் நின்றும். மாத்திரமன்றி, தென்றல் போற் ால் இனித்து, பூம்புனல் போற் ரஞ்சிதம்போல் மனம்பரப்பிச் ாால் உச்சி குளிரச்" செய்வதும் மகவந்தவொன்று. விக் கிடக்கும் அமைதி சம கிச் செல்லும் ஆற்றின் அமைதி: ன் தெய்வீக அமைதி. விஞர் நையாண்டியையும் நகைச் ரியள்ளிச் சொரிகிருர். . . பிறந்த நகை ஆரோக்கியமான விக்கக்கூடிய நகை. ஆங்காங்கு மின்னவிடும் உவமை எல்லா உவமைகளிலும் புதுமை சு முழுக்க மண்வாசன பரிமளிக் மிக எளிதாகப் படம் பிடிக்கும்.
ஈன்னுகம்