கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அற்றுப்போன அழகு

Page 1
அமரர் பத்மாவதி
இயல்வாணன்
 


Page 2

(அம்மா சொன்ன கதைகள்)
இயல்வாணன்
அமரர் பத்மாவதி நினைவு வெணியீடு
بڑھوترڑڑھ کر

Page 3
அமரர் வாழ்வில் முக்கிய கட்டங்கள்
举
02-06-1932ல் சுன்னாகம் தெற்கு செல்லையாஇலட்சுமிப்பிள்ளை தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தார்.
21-03-1938ல் அன்புத்தம்பி அன்னராசா பிறந்தார்.
1948ல் இந்தியத் தலயாத்திரை செய்து, அங்கிருந்து பெற்றோருடன் மலேசியா பயணமானார். 1954ல் இலங்கை திரும்பினார்.
1970ல் ஆதிமயிலிட்டி செல்லையாபொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனான சுப்பிரமணியத்தை மணம் புரிந்தார்.
05-04-1971ல் மகன் பூரீகுமரன் பிறந்தார். 12-11-1972ல் மகள் ஜெயலட்சுமி பிறந்தார். 1996ல் மகனுக்கு ஆசிரிய நியமனமும், 1998ல் மகளுக்கு சமுர்த்தி அலுவலர் நியமனமும் கிடைத்தன.
27-01-1999ல் கைதடி -நுணாவில் தாமோதரம் பிள்ளை தம்பதிகளின் ஏகபுத்திரி சிவரஞ்சினியை மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
03-05-1999ல் அராலி மத்தி ஆறுமுகம் தம்பதிகளின் கனிஷ்டபுதல்வன் சிவநேசனுக்கு மகளை மணமுடித்து, லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.
23-10-1999ல் பேரன் றி பிரியனைக் கண்டு D85pb.5Tj.
18-04-2000 செவ்வாய் இரவு 10.20 மணிக்கு சித்திரைப் பூரணை நன்னாளில் யாழ்-போதனா வைத்தியசாலையில் இறைவனடி சேர்ந்தார்.

தி FIDjúLJ6Mrið M
ఉజ్ఞళ్లజ్కో" శాఖ, 'భట్టి
அமரர்
பத்மாவதி சுப்பிரமணியம் 9ịtổ LDIT ! எங்கள் மகிழ்வில் சுகங்கண்டு எங்களைப் பேணி வாழ்ந்தீர்கள். திங்கள் போல உங்களைத் தேய்த்து சுடராய் ஒளியாய் எமைக் காத்தீர்கள் தங்கள் திருவடிக்கே படையல் செய்தோம் துளிர்த்து வளரும் எம்மில் உங்கள் நினைவே நிற்கும், நிழலாய் நிற்கும்.

Page 4
முன்னிடு
பெளர்ணமி நிலாக்கால இரவுகளில் வீட்டு முற்றத்தில் அம்மாவின் மடியில் நானும் தங்கையும் தலை சாய்த்திருக்க, அம்மா எங்களுக்குச் சொல்லியகதைகளும் பாடியபாடல்களும், பழம்வரலாறுகளும், அனுபவத்தெறிப்புக்களும் எங்களில் ஊறி, நினைவில் நிறைந்திருக்கின்றன. வாசிப்பின் மீதிருந்த அம்மாவின் ஆர்வமே, என்னையும் ஒரளவு தேர்ந்த வாசகனாகவும், அதுவே படைப்பாளியாகவும் ஆக்கிற்று. எனது எழுத்துக்கள் வெளிவருத்தோறும் மெய்யான பெருமையுறும் அம்மாவே எனது முதல் வாசகரும் விமர்சகருமாவார்.
தன்னை ஒறுத்து, தனது நலன்களைப் புறந்தள்ளி, தனது துன்பங்களை உள்ளுக்குள்ளே பூட்டி, எங்களை வளர்த்து மேலுயர்த்திய அம்மா, எங்களில் பெரிதுவந்து வாழ்ந்தார்கள் 4அற்றுப் போன அழகு" அம்மா கூறிய பெருமளவு தகவல்களையும், அம்மாவின் தூண்டுதலால் மேலும் பல முதியவர்களது தகவல்களையும் கொண்டு எழுதப்பட்டது. 1995 சித்திரை முதல் கார்த்திகை வரை வெளிச்சம் இதழ்களில் இது வெளிவந்தது. பிரசுரித்த சஞ்சிகை நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகள்
விரிவாக 25 அத்தியாயங்கள் வரை இதை எழுதத்திட்டமிட்டிருந்தேன். எனினும் 6 அத்தியாயங்கள் எழுதப்பட்டன. கடந்த கால அசாதாரண குழலில் திரட்டிய தகவல்களும் தொலைத்து, அமுதசுரபியான அம்மாவும் அமரத்துவமான பின் எனது திட்டத்தை எப்படித் தொடருவது?
1994ல் தாயகம் இதழில் வெளியான எனது சிறுகதை இப்படி முடிந்தது 4வரும் சித்திரைப் பெளர்ணமியில் விரதமிருக்க நேருமோ என்ற பயத்தில் நான்" い
அது நடந்தே விட்டது. எனினும் அம்மா எங்கள் செயல்களில் நிழலாய், தோன்றாத் துணையாய் இருந்து வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில், அன்னாரின் பாத பத்மங்களில் அவரது ஜீவன் வாழும் இச் சிறுநூலைப் படையல் செய்கிறேன்.
-அன்புமகன்

ஐப்பசி மாதத்தில் பூமி செழித்து விடும். புற்காம்புகள் புதிய கம்பீரம் எடுத்து 蠢 శి, பனித்துளிகளைப் பூந்தேன்களாக்கி -暂 நிற்கும். பள்ள ஒழுங்கைகள் வழியே நுரை சிந்த வெள்ள நீர் ஓடிச் செல்லும். ஐப்பசியில் பெருமழை தொடங்கினால் மார்கழியில்தான் ஒயும். மாதம் மும்மாரி என்றார்களே, அது இதுதான் மும்மாதமாரி, இந்த மூன்று மாதமும்மழைபெய்யாதநாளில்லை. வானம் கிழிந்து, சோனாவாரியாக நீரிறங்கும். வெள்ளம் தொடர்ந்துபாயும். இந்தக் காலப் பகுதி தான் பெருமாரி,
கோப்பாய்ச் சிறுகடல் கோடையில் "எப்பன்" நீருடன் நிற்கும். ஐப்பசியில் அதன் வயிறு பெருக்கும். ஐப்பசிக் கடைசியிலே அது பத்துமாதக் கர்ப்பிணி போலாகிவிடும். எல்லை இல்லாமல் பெருமளவு பிரதேசத்தைக் கையகப் படுத்தி விடும். நீரின் அளவு கூடிவிட்டால் அதற்குப் "பேறுகாலம் "வந்துவிட்டது எனலாம். மெல்ல மெல்ல அது உரும்பிராய், சுன்னாகம் எல்லாம் கடந்து கந்தரோடைக்குப் போகும். அதன் "பெறு வழி” கோடையில் வண்டில் பாதையாகவோ, நடைபாதையாகவோதான் இருக்கும். "கிறவல் கல்லுகள்" போட்ட பாதை. அல்லாவிடில் மண்பாதை.
மழை வெள்ளம் கோப்பாயில் நிறமற்று வந்து , கந்தரோடையில் "செம்புலப்பெயல்நீர்"ஆக வழுக்கியாற்றுடன் இணையும். வழுக்கியாறு வெறும் வெள்ளவாய்க்கால்தான். சற்றுப் பெரிதாக இருந்தது. அதனால அது ஆறாக ஆயிற்று. அளவெட்டிப்பினாக்கைக் குளத்தில் இருந்து அராலி வரைநீண்டு, மேலதிக நீரைக் கடலுக்கனுப்பும் புண்ணிய கைங்கரியம் அதன் பணியாயிற்று.

Page 5
வெள்ளம் நிற்காத இடமில்லை. அங்கிங்கெனாதபடிநிலமெங்கும் நீக்கமற நிற்கும். பொக்கனை வெளியில் நின்று பார்த்தால் கோப்பாய் நாவற்குழி வரைக்கும் நீலமாய் வெள்ளக் காடுதான்.
பொக்கனை வெளியில் தோட்டங்கள் குறைவு. முட்புல்லாந்திப்பற்றைகள்தான் அதிகம். நடுவில் பொக்கனைக் கிணறு. அக்கம் பக்கம் கிடங்காய் இருந்தது. அதற்குள் ஒரு சின்னக் குண்டு.குண்டுக்குள் தண்ணிர் நிற்கும். எவ்வளவு இறைத்தாலும் வற்றாது.
வள்ளிப்பிள்ளை ஆச்சி நெடுகலும் சொல்லுவா. "உதடா மோனை லங்கைக்கு ராமர் வரேக்கை குரங்குப்பட்டாளத்துக்குத் தண்ணி விடாச்சிட்டுது. நாண்டு கொண்டுநிணன்டுதுகள். அவர் வில்லை ஊண்டினார். நிலாவரை வந்தது. உப்பிடி அவர் ஊண்டின ஒண்டுதான் பொக்கனை" பொக்கனையில் தேசிக்காய் போட்டால் கீரிமலையில் மிதக்கும் என்றும் அவர்நம்பிக் கொண்டிருந்தார். வள்ளிப்பிள்ளை ஆச்சியின் மகன் சின்னத்தம்பியர் படித்துச் "சேவையராய்' வந்தார். அவர் தாய்க்கு "இது பொய்யனை”என்றார். ஆச்சிக்கு கோபம் வந்தது.
கண்ட கண்டதுகளைப் படிச்சுப் போட்டுக் கணக்கக் கதையாதை" என்றா."ஆச்சியானை இது எங்கடை கண்ணாம்புக் கல்லு புண்டு நிலத்துக்கை போக, அந்த மட்டத்திலை இருந்து தண்ணி நிக்குது”என்றார். அவர். "போடா உன்ரை போக்கறுந்த படிப்பும் நீயும். அப்ப ஏன் எங்கடை கிணறுகள் வத்துது. எல்லாம் அவன்ரை திருவருளடா” என்றார் ஆச்சி உறுதியாக,
உரும்பிராயில் பொக்கனை. புத்தூரில் நிலாவரை குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்று வற்றாத கிணறுகள்பல உண்டு. வெள்ளக்காடாய் பொக்கனை வெளி இருந்தாலும், அக்கம் பக்கத்து நீர் முழுவதையும் பொக்கனைக் கிணறு
2

தன்னுள் இழுத்துவிடும். அகிழான் புற்றுக்குள் நீர் போவதைப் போல பொக்கனைக் கிணற்றுக்குள் வெள்ளம் போவதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உரும்பிராய்க்கூடாக வருகிற வெள்ளம் மதவடி வெள்ள வாய்க்காலால் அசைந்து செல்லும் போது, மீன்களும் துள்ளியடித்துப் போகும். நெத்தலி, கருந்திரளி, மணலை என்றெல்லாம்நீரைக் கிழித்தபடிபோகும்.
முழங்காலளவு வெள்ளம் பாயும். சிறுவர் பட்டாளமொன்று வெள்ள வாய்க்காலில் நிற்கும். கைகளில் சிரட்டைகளுடன் நிற்கும் அவர்கள் மீனைக் கண்டதும் மீனோடு சேர்த்துச் சிரட்டையை நிலத்தில் அழுத்துவார்கள். மீன்பிடிபட்டால் சரி
வேறு சிலர் பூவரசங்கட்டையால் அடிப்பார்கள். நீர் தெறித்துப் பறக்கும். கெக்கலித்துச் சிரிப்பார்கள். சற்றுத் தள்ளி உடலைச் சரித்தபடி மீன் துடிதுடித்து மிதக்கும். எடுத்துச் சேர்ப்பார்கள். இப்படித்தான் ஒரு நாள் வெள்ள நீர் இடுப்பளவு ஓடிக்கொண்டிருந்த போது u T(3 gT ஒருவன் கூக்குரலிட்டான்."அந்தா பெரிய மீன் ஓடுது” அடுத்து, அவன் காட்டிய இடத்தில் பூவரசங்கட்டைகள் விழ,நீர் தெறித்தது. பலர் வெள்ளநீருக்குள் விழுந்தனர். நீருள் புரண்டுசெல்லும் "அதை' ஒருவன் பிடித்துவிட்டான். மேலே தூக்கியவன்"ஐயோ”என்றான். செத்த பாம்பு
கந்தரோடையில்தான் வெள்ளம் கூட. சில இடங்களில் ஆளை மூடும் தெரியாதவர்கள் யாராவது போனால் குட்டைகளுக்குள் விழுந்து சாக வேண்டியதுதான்.
மழை காலத்தில் தோட்ட வேலைகள் இருக்காது. ஆடு, மாடுகளுக்குத் தீவனம் தேடுவதுதான் பெரும்பாடு. இதற்கென்று குடில் கட்டி வைக்கோல் சேமித்துவைத்திருப்பார்கள். அதற்குப் புறம்பாக இருக்கிறது பனையோலை. எங்கே பார்த்தாலும் யாழ்ப்பாணத்தில் பனையைக் காணாமல் இருக்கமுடியாது. மனிதர்களின் "முழுவியளம்” பனைகளில்தான். பெரும் பெரும்
3

Page 6
பனைகளும் "இந்தா உன்னை முந்துறன்" என வளரும் வடலிகளுமாய் "பனங்கூடல்” நிறைந்திருக்கும். பின்னால் யாழ்ப்பாணத்தான் என்றால் "பனங்கொட்டைத்தமிழன்” என்று கூறப்பட்டது இதற்காகவா? பனையோலைகளை வெட்டி வந்து "கீறிப்” போடுவார்கள். மாரி முடிய மாட்டுக் குடில் பக்கமாக நூற்றுக்கணக்கில் மூரிகளைக் காணலாம். மாடுகளுக்குப் பனையோலை பிரியமானது. தலையை ஆட்டி, அரைத்து அரைத்து அதனைத்தின்னும் அழகோ அழகு
மழை காலத்தில் தோட்ட வேலைகள் இல்லாததால், பொழுது போக்கிற்குச் சில விளையாட்டுக்கள் உள்ளன. தாயம் போடல் , இலுப்பங் கொட்டை சிந்தல், கெந்திப் பிடித்தல், வாரோட்டம், கொக்கான் வெட்டல் என்று விளையாடுவார்கள். வாரோட்டம் என்றால் எதிர்க் கன்னைக் காரனொருவன் வந்து தொட்டு விட்டு ஓடுவான். அவனை, அவன் தனது இடத்தை அடையுமுன்னர் கலைத்து அடிக்க வேண்டும். அடித்தால் ஒரு பழம் கெந்திப்பிடிப்பது ஒன்று. நாலு பெட்டிக் கெந்தல், எட்டுப் பெட்டிக் கெந்தல் என்பன வேறொரு வகையானவை.
சிறிய சல்லிக் கற்களில் கொக்கான் வெட்டுவது அழகானது. பங்கயமக்கா கற்களை மேலே எறிந்து, கையை நிலத்தில் அறைந்து பின் அபிநயம் காட்டி, மயிரிழையில் அக்கற்களை ஏந்துவது ஆச்சரியத்தை அளிக்கும். எங்கள் தெருவில் இரண்டு பங்கயங்கள் இருந்தனர். ஒருவர்உயரமானவர். நன்றாகக் கொக்கான்வெட்டுவார். மற்றவர்கட்டையானவர் பல் மிதப்பாக இருக்கும். இரண்டு பேரும் வேறு சிலரும் கலந்து கொண்ட "தாயம் போடலில் " சரசக்கா “அழாப்பி " விட்டார். உடனே 'கதை வழிப் பட்டு சண்டை வந்து விட்டது. மோதியவர்கள் இருவரும் பங்கயங்கள். பங்கயம்-உன் கீரைப் பிடித்தலைமயிர் பங்கயம் -1 இடம். பங்கயம் -2'திரும்பி தனது கூரியபற்களால் ஒரே கடி"ஆ.”என்றபடி பங்கயம் -1 தலைமயிர் கையை எடுத்தார். பிறகு மற்றவர்கள் இருவரையும் விலக்கி
4

விட்டனர். அதிலிருந்து பங்கயம் 1 கொக்கான் பங்கயமானது. பங்கயம்-2 'பிக்கான் பங்கயமானது.
பெரிய பெண்கள் பெரும்பாலும் இவற்றில் பங்கெடுப்பதில்லை. ஆச்சியோடு சேர்ந்து சமைப்பார்கள். சமைத்து முடிய ஆச்சிகள் அணியொன்று புளியடியில் கூடிக்கதைக்கும். பெரிய பிள்ளைகள் புளியடிக்குச் சற்றுத் தள்ளி இருக்கும் இலுப்பையடியில் அமர்வார்கள்.
粥
வீட்டில் சின்னப் பிள்ளைகள் கெந்திப் பிடிக்கும் போது அருகில் நின்றாலே ஆச்சி ஏசுவார். "இஞ்சாலை வாடி குமரி எக்கணம் கொப்பு வந்தா வேண்டிக் கட்டப் போறாய்.” இலுப்பையடியில் “குமருகள் கூட்டம் முக்கியமாக பன்ன வேலையில் ஈடுபடும். பெட்டி குட்டான், பாய், தடுக்கு என்று ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொன்று உருவாகும். கொட்டப் பெட்டி இழைப்பதில் பூமணியக்கா கெட்டிக்காரி. அவவுக்கு பன்னாலையில் ஒரு வாத்தியாரைத் திருமணம் பேசினார்கள். வாத்தியாரின் ‘அப்புவுமி ஆச்சியும, பெண்ணைப் பார்க்க வந்தனர்.
பூமணியக்கா அப்போதும் கொட்டப் பெட்டி இழைத்துக் கொண்டிருந்தார். வாத்தியாரின் தாய் பெண்ணைப் பார்த்தார். பூமணி கறுப்பி. வாத்தியாரோ சிவலை . தாய்க்கு அவ்வளவு பிடிக்கவில்லை.
பெண்ணைப் பார்த்துவிட்டு , " என்ன கொட்டப் பெட்டியோ?, என்றார். " ஓம்.” என்று சொல்லி, தான் இழைத்த கொட்டப் பெட்டி ஒன்றை அவரிடம் கொடுத்தார் பூமணியக்கா.
அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டனர். " பொம்பிளை கறுப்பியடா.உனக்குச் சரிவராது போலை” என்றார்.
5

Page 7
வாத்தியாரின் ஆச்சி. வாத்தியார் ஆச்சியின் கையிலிருந்த கொட்டப் பெட்டியை வாங்கினார். வாங்கி அதன் அழகைப் LJlrféSIf. “என்னை என்ன.விலை குடுத்து உதை வாங்கினிங்கள்” என்றார். "நான் வாங்கேல்லையடா. அவள் பெட்டைதான் இழைச்சவள் " வாத்தியாருக்குப் பிடித்து விட்டது. "கறுப்பியெண்டாலும் பரவாயில்லை.போய்ச் சரியெண்டு சொல்லனை"பிறகென்ன. பூமணியக்கா வாத்தியார் பெஞ்சாதி ஆனார்.
பெரிய இளைஞர்கள் கிட்டிஅடிப்பார்கள். கிளித்தட்டுமறிப்பார்கள். கிளித்தட்டில் கிளியாய் நிற்பது முக்கியமானது. வேலுப்பிள்ளை அம்மான் கிளியாய் நின்றால் உச்சுவது கடினம். அவர் பொறுத்த இடத்தில் பூட்டுப் போட்டு விடுவார். அவரை "நெடுங்காலர்” என்றுதான் சொல்லுவார்கள். "யாடு” என்று சொல்லி, நடுக் கோட்டால் ஒடி, கரைக்கோட்டுக்குத் தாவிப் பாய்ந்தாரானால் யாராவது ‘அடி வாங்கியே தீருவார்கள்.
மழைகாலத்தில் இளைஞர்களுக்கு வேறொரு பொழுது போக்கும் உண்டு.
M: & மழைகாலத்தின் பொழுது போக்கில்
| م வேட்டையாடல் முக்கியமானது. இளைஞர்
குழுக்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடியது.
-f வேட்டையென்றால் வெள்ளெலி
8 வேட்டைதான் கூட நடக்கும். வெள்ளெலி
சாதாரண எலி போலத்தான் இருக்கும். வயிற்றுப் பக்கம்
வெள்ளையாக இருக்கும். மண்ணில் வளை அமைத்து வாழும்.
எலிவளையானலும் தனிவளை வேணும் என்பது நாட்டு மொழி.
கோரைக்கிழங்கு என்றால் இதற்குக் கொள்ளை ஆசை.
இரவில்தான் வெளியே வரும். நிலவு நாட்களில் தான் வேட்டையாடுவது சுலபம்.
6
 
 

வெள்ளெலிபுத்திசாலி. அது எப்போதும் தனது வளையில் கள்ள வழியொன்றையும் வைத்திருக்கும். பாம்போ அல்லது வேறு பகை விலங்குகளோ வந்தால் கள்ள வழியால் பாய்ந்து விடும். வெள்ளெலிக்கு நீர் என்றால் தாங்கமுடியாது. வாலில் சிறிதளவு நீர்பட்டாலும் வெளியேவந்துவிடும். அதேபோல புகை என்றாலும் அதற்கு ஒத்துவராது.
வெள்ளெலி வேட்டையில் நடுவிலார் வலு விண்ணன். பூவரசங்கட்டையால் எறிந்தாரென்றால் எலியைப் போய்த்துக்கி வரலாம். சின்னப்பரும் சேர்ந்தால் போதும். அவர்களின் பின்னால் பொன்னையா, கந்தையா, அண்ணையர், துரையர் என்று ஒரு பட்டாளமே போகும். பொழுது சாய்ந்த பிறகு "வெளிக்கிட்டால்" நிலவு உச்சிக்கு வரும் வரைக்கும் வேட்டைதான். இடைக்கிடை அகிழான் அகப்படும். உடும்பு அகப்படும். முயலும் பிடிபடும். பாம்புகளும் நிறையக்கொல்லப்படும். நடுவிலார் மீசையை அடிக்கடி தடவிக்கொள்வார். “உசாரடா." என்றபடி முன்னால் போவார். அவரது உரத்த நடையால் விழிப்புப்பெற்ற காடைகளும் கெளதாரிகளும் சத்தமிட்டு ஒடும். "நெடுங்கேணி" வெளியில் நிற்கும் ஆட்காட்டிகள் குரலெழுப்பும். நடுவிலாருக்குப் பாம்பின் வாசனை தெரியும். முட்புல்லாந்தியின் மணமும், புடையன்பாம்பின் கொட்டாவி மணமும் ஒன்றென்பார்கள். நடுவிலார் கொஞ்சத்துாரத்துக்கு முன்னாகவே, "அந்தா.அதுக்கை புடையன் நிக்கடா"என்றால் தவறாது. பிறகென்ன. புடையன் சவமாகும்.
இப்படித்தான் ஒரு நாள். நிலவு உச்சிக்கு வந்த போது வேட்டை முடிந்தது. வேட்டையில் ஏழெட்டு வெள்ளெலிகள் அகப்பட்டன. எடுத்து வந்து நடுவிலார் வீட்டில் பானையொன்றுக்குள் வைத்துவிட்டு, நாற்சாரத்திண்ணையில் ஒவ்வொருவராகப்படுத்து உறங்கி விட்டனர். விடியற்காலையில எல்லோரும் எழுந்து தோட்டப் பக்கம் போய் விட்டனர். அன்றைக்கு கூட்டு இறைப்பு சின்னப்பரின் ' தோட்டத்தில்.
7

Page 8
நடுவிலார் வீட்டுப் பெண்கள் காலைச் சமையல் முடித்து விட்டு, இடை நேரக் கூழ்காச்சத் தயாராகினர். 'கறிக்கடையில் வாங்கி வந்த நண்டும், கொடுவாத்தலையும் தயாராக இருந்தது. நடுவிலாரின் தாய்க்கு வயது போய்விட்டது. கண்ணும் மங்கல். அவர் தான் அடுப்பை மூட்டி, பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார். பயற்றங்காய், பலாக்காய், ஒடியல்மா, கொவ்வை இலை எல்லாம் சேர்த்துக் கூழ் தயாரானது.
அகப்பையை விட்டுத் துளவ ஏதோ தட்டுப்பட்டது. மீன் தலை என்று நன்றாகப் போட்டுநசித்தார். கூழ் காய்ச்சி முடிந்தது. எல்லோரும்குடிக்க அமர்ந்தார்கள். தோட்டத்திலிருந்து வந்த நடுவிலாரும் அடுக்களைக்குள் நுழைந்தார். அன்னப்பிள்ளை அக்காதான் சிரட்டைக்குள் கூழ் விட்டார். சிரட்டைக்குள் கூழ் இறங்கும் போது, எலிக்குடல் தான் மேலே தெரிந்தது. 'அரியண்டத்தில் அன்னப்பிள்ளை சிரட்டையைப் போட்டார். "எலி" எனக் கத்தினார்.
நடுவிலாருக்குவிளங்கிவிட்டது. தாயாரின்"துலைவானே" என்ற வார்த்தை கேட்டதும் , அகப்பை முதுகில் படியுமுன்னர் பாயந்தோடிச் சென்றார். வெள்ளெலி இறைச்சி தனி ருசிதான். நாட்டு மருத்துவர்கள் நாரிப்பிடிப்புக்கு இதைச் சிபார்சு செய்வர். "பிள்ளைத்தாய்ச்சிகளுக்கும்”இது நல்லது. குரக்கன்,தினைக் காலத்தில் இதன் இறைச்சி எண்ணைய் கசிந்து, புது வாசனை வீசும். வெள்ளெலி போலவே அகிழானும். அகிழான் புற்று வேறு மாதிரியானது. அது புற்றின் துவாரத்தை அடைத்து விடும். இலேசில் அதைப் பிடிக்க முடியாது. எங்கெங்கெல்லாமோ துளைத்துத்தப்பிவிடும். அகிழான் இறைச்சிவித்தியாசமான சுவை கொண்டது. பொரித்தால் அதனுடனேயே அன்றைய சாப்பாட்டை முடித்து விடலாம். அவித்தால் மொய்த்த LoGOOILOlọảog)ủh.
அகிழான் , வெள்ளெலி இவைகளைத் தடம் போட்டுப்பிடிப்பார்கள். அனேகமாக அந்தத் தடங்களில்
8

பாம்புகளும் வேறு பிராணிகளுமே பிடிபடும். இவைகள் ஏய்த்து விடும்.
வெள்ளெலியைப் பிடிக்கத் தூக்குக் கட்டையைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கட்டையைப் புற்றின் மீது வைப்பார்கள். தூக்குக் கட்டை வில் லுத்தடி, விசப்புள், கள்ளத்தடம், உண்மைப்பொறி என நான்கு பகுதிகளாய் அமையும்.
புற்றுள்ளிருந்து வெள்ளெலி வெளியே வரும். வரும் வழியில் கள்ளத்தடம் இருக்கும். வெள்ளெலிப் பிள்ளையார் ‘இதென்ன மரவேர் தடுக்குது என்றெண்ணி விசப்புள்ளுடன் இருக்கும் கயிற்றை அறுப்பார். கயிறு அற வில்லுத்தடி மேலெழும்பும். அப்போதுபொறிவெள்ளெலியைக் கவ்விப்பிடிக்கும். அதிலிருந்து அவரால் தப்ப முடியாது.
தூக்குக்கட்டை போலவே ,டார்பொறியும்*ஏற்றுவார்கள். பனைமட்டையால் வரைந்து "டார்” பொறி அமைக்கப்படும். தடியொன்றில் இரையைக் கட்டி டாரில் செருகுவார்கள். இரையை உண்ணும் போது, விசப்புள் தட்டுப்பட , டார் பொறி அமுக்கும். வெள்ளெலி சவமாகும். டார் பொறியில் காடை கௌதாரி, பாம்பு என்றெல்லாம் அகப்படும்.
பெருமாரிக் காலத்தில் வெள்ளெலியைச் சுலபமாகப் பிடித்து விடலாம். பெருமாரியில் மழை சோவெனப் பொழியும். எல்லா இடமும் மழைநீர் வெள்ளமாய் ஒடும். நீர் இல்லாத இடம் இருக்காது. நெடுங்கேணி, விள்ளானை, தேரட்டிவெளியெல்லாம் சிறு பற்றைகள் தலைநீட்ட ஒரே வெள்ளக் காடாய் இருக்கும்.
நடுவிலார் குழு பகல் வேட்டைக்கு மழையின் மத்தியில் புறப்படும். கைகளில் சிறிய பொல்லுகள். நடுவிலார் இடுப்பில் குறு வாள் ஒன்றையும் செருகியிருப்பார்.
வேட்டைக்காரர்கள் வெள்ளெலி இருக்கும் புற்றருகே போய் நிற்கும் போது, கண்னைச் சிமிட்டிச்சிமிட்டி வெள்ளெலி பரிதாபமாகப் பார்க்கும். கீழேயும் பார்க்கும். ஓடமுடியாது. மழை நீர் யமன் போல் நிற்கும். வந்தவர்களில் யாராவது அடிப்பார்கள். பொத்தென்று நீரில் விழும். ஓடமுடியாது தத்தளிக்கும்போது, 9

Page 9
அடுத்த அடி விழும். அதன்பின் உங்க்குள் தூக்கிப் போடப்படும்.
வெள்ளெலிகள் சிலவற்றைப் பிடித்த பின்னர், குழுவினர் தோட்டப்பக்கம் செல்வார்கள். தோட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு இழுக்கப்படும். செம்பாட்டுமண்ணை மழை வெள்ளத்தில் கழுவிய பின்னர், நடுவிலாரின் தோட்டத்துக்குப் போவார்கள். நடுவிலாரின் தோட்டத்தில் பெரியதொரு கொட்டில் உள்ளது. சமைக்கக் கூடியதாக, பத்துப் பேர் படுக்கக் கூடியதாக அது இருந்தது.
கொண்டுவந்தவை அங்கு வைக்கப்படும். நடுவிலார் வெள்ளெலிகளை உரித்து, இறைச்சியாக்குவார். சின்னப்பு மரவள்ளிக் கிழங்கைப் பொல்லம் பொல்லமாக வெட்டுவார். கணபதியும் , வேலுப்பிள்ளையும் மிளகாயும் தேங்காயும்எடுத்து வருவார்கள். கொட்டிலில் தூக்கப்பட்டிருந்த பிடிகாயிலிருந்து வெங்காயம் எடுப்பார்கள். எல்லாவற்றையும்.நடுவிலார் சமைப்பார். மற்றவர்கள் ஒவ்வொருவராகத் தோட்டக்கினற்றில் தோய்வார்கள்.
தோய்ந்து முடிந்து எல்லோரும் வந்துகுந்தச் சமையலும் முடியும். "இருங்கோ தோஞ்சிட்டுவாறன்" என்றுவிட்டுநடுவிலார் போவார். நடுவிலார் காகத் தோச்சல் காரணல்ல. எருமைத் தோச்சல்காரன். ஐம்பது வாளியாவது தலையில் ஊற்றுவார். காகம் நீருக்குள் வந்தமர்ந்து ஒருமுறை இறகைச் சிலிர்த்து, இரண்டு முறை தலையை நீருள் அமிழ்த்திச் சிலிர்த்து விட்டுத் தனது முழுக்கை முடித்து விடும். எருமை நீண்ட நேரமாக நீருள் தன் உடம்பைப் புதைத்து முழுகும். அதுவே, முழுக்கில் எருமையும், காகமும் சம்பந்தப்படக் காரணமாயிற்று.
நடுவிலார் தோய்ந்து முடித்த பின்பே சாப்பிடலாம்.
யாராவது முந்தினால் அவருக்குக் கோபம் வந்துவிடும். எடுத்த
எடுப்பில் அடித்து விடுவார். இப்படித்தான் ஒருநாள்
10

கட்டைக்கணபதி அடி வாங்கினான். அன்றைக்கு வெளவால் இறைச்சி காய்ச்சினார்கள்.நடுவிலார் முழுக்குக்குப் போய் விட்டார். கணபதி உள்ளே போய் வயிறு நிறைய இறைச்சியைச் சாப்பிட்டு விட்டு, வெளியே வந்து இருந்தான்.
நடுவிலார் அடுக்களைக்குள் போனார். இறைச்சி அரைவாசி தீர்ந்து போய் விட்டது. இன்னும் ஆறு பேர் சாப்பிட வேணும். "ஆற்றா எடுத்தது”? என்று உறுமினார். எவரும் பேசவில்லை. நேரே கணபதி அருகே வந்தார். கணபதி எங்கோபார்த்தபடி இருந்தான். இழுத்து விட்டார். கணபதியின் முன்வாயிலிருந்து இரத்தம் கொட்டியது.
அதிலிருந்து யாருக்கும் அந்த எண்ணம் வரவில்லை. நடுவிலார் தோய்ந்து விட்டு வரவும் சாப்பாடு தொடங்கும்.
மாரியில் தோட்ட வேலைகள் ** குறைவு. தோட்டங்களில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டிருக்கும். தோட்டப் ޗް d 镇 பயிர்களை அவிழ்த்து விட்டு வரும் ஆடு ༣རྒྱལ་ மாடுகளும், காட்டுப்பக்கமிருந்து வரும் பன்றிகளும் தின்றழித்துவிடும். ஆட்கள் இல்லாவிட்டால் கள்ளரும் தங்கள் கைவரிசையைக் காட்டி விடுவார்கள். அதனால் இரவுக்காவல் எல்லாத்தோட்டங்களிலும் இருக்கும். நாலைந்து தோட்டக்காரர் ஒன்று சேர்ந்து காவல் இருப்பர்.
பெருமாரியில் மழை பிடிச்சால் ஓயாது. சில ஆண்டுகளில் ஒரு மண்டலம் வரைக்கும் மழை பெய்யும். சிணுங்கியும் இடைக்கிடை சோவெனவானந்தெறிக்குமாறும், சனியன் பிடிச்ச
11

Page 10
மாதிரி தொடர்ந்து பெய்யும். அந்த நாட்களில் கும்மிருட்டாக இருக்கும். பகலில் சூரியனைக் காணேலாது. புகை மூட்டமாக இருள்படர்ந்திருக்கும்.
காணுமிடமெல்லாம் வெள்ளம். வேலைகளே இருக்காது. இலுப்பக்கொட்டை சிந்தியும், கொக்கான் வெட்டியும், பன்ன வேலை செய்தும், இராமாயணம், மகாபாரதம், பெரிய எழுத்துச் சித்திர புத்திரனார் கதை முதலியவற்றை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பாராயணம் பண்ணியும் பொழுது கழியும்
மாரியில் நெருப்பு மூட்டுவதே கடினம். தீப்பெட்டி புழக்கத்துக்கு வராத காலம். கருங்கல்லை உரோஞ்சியும் தீத்தட்டுக் கட்டைகளைப் பயன்படுத்தியும்தான் நெருப்பு மூட்டப்படும். தீத்தட்டுக் கட்டையில் மாரியில் சரியாக நெருப்பு மூளாது.
கதிராமுஅப்பாதான் எங்களூரில் தீத்தட்டுக்கட்டைகளை நேர்த்தியாகச் செய்வார். சீமா வடலி வளவைச் சுற்றி நிறையக் கிளுவை மரங்கள் நின்றன. பாற்கிளுவையும், முட்கிளுவையுமாய் துடையளவு மொத்தத்தில் அவை இருந்தன.
கோடையில் அவற்றைத்தறித்துக் காயவிட்டு, அளவுக்கு பொல்லங்களாய் நறுக்கி வைத்திருப்பார்.
பிறகு ஒவ்வொரு பொல்லமாய் எடுத்து, சீவுளி கொண்டு சீவி மட்டப்படுத்துவார். கை வைத்தால் வழுக்குமாறு அழுத்தமாகச் சீவுவதில் அவர் விண்ணன். அந்தக் கட்டையின் நடுவில் வட்டமாய் ஒரு துளை இடுவார். அதற்குள் வட்டமாய்ச் சீவிய தடியொன்றைக் குத்துப்பாட்டாய்ச் செலுத்துவார். இழை பிசகாமல்இருக்க வேண்டும். இறுக்கமாகவும் இருக்காமல் இடைவெளியுள்ளதாய் இருக்காமலும் அமைப்பது கதிராமு அப்பாவின் தனித்துவம். அதிலும் அந்தத்தில் திரளவிட்டு,
12

அழகாக்கியிருப்பார்.செய்து முடித்த பிறகு, தான் நெருப்பு மூட்டாமல் அவருக்குப் பத்திய படாது. தென்னம் பொச்சுக்களையும்,தும்புத்தூசிகளையும் சேர்த்துவைத்துவிட்டு, இரு காலாலும் கட்டையை அனைத்துப்பிடித்தபடிமத்தில் தயிர் கடைவதைப் போல உருட்டுவார். பொச்சில் தீ மூண்டதும் குழந்தைபோற் சிரிப்பார். அனேகமாகத் தீத்தட்டுக் கட்டைகள் இல்லாத வீடிNல்லை. அவசியம் என்றால் தான் பயன்படுத்தப்படும். காலையில் அடுப்பில் நெருப்புப் பற்ற வைத்தால் இரவு படுக்கைக்குப் போகும் வரை தொடர்ந்து இருக்கும். விறகுக்குத்தானே பஞ்சமில்லை
இரவு நெருப்பு அணைந்துவிடும். அதற்காக படுக்கைக்குப் போகும் போது, ஒரு ஏதனத்துக்குள் உமிபோட்டு நெருப்பு அணையாமல் பாதுகாக்கப்படும். இதற்கென்றுநெல்உமி, வரகுஉமி,தினைஉமி எல்லாம் சேர்த்துவைத்திருப்பார்கள்.
இருள் சூழ்ந்த மழை நாட்களில் வெளியே செல்வது பயமாக இருக்கும். குறுக்காலையும் மறுக்காலையும் ஒடும்பாம்பு பூச்சியளிடம் கடிவாங்க நேரும். ஒற்றையடிப்பாதைகளைக் கண்டு பிடிப்பதே கஸ்டம்.
வெள்ளத்துக்காலையும் சேத்துக்காலையும் மிதியடி போட்டுக்கொண்டு போகேலாது. புதைத்து விடும். இப்படியான நாட்களில்தான் சூள்களின் பலன் தெரியும். எப்பவும், எங்கேயும் சூள்களே பயன்பட்டது. குள் தென்னம்பாளையில் செய்யப்படும். முகத்தாரப்பாநல்லாய்ச்சூள் செய்வார். தென்னம்பாளையைநார் நாராகக் கிழித்து, அவற்றை ஒன்றாய்ச் சேர்த்துப் பின்னி, எரியும் போது உதிராத வண்ணம் அருமையாய்ச் செய்வர் அவர்.
முகத்தாரப்பா செய்த சூளை இங்காலும்அங்காலுமாகக்
காற்றில் சுழற்றியபடி செல்லும்போது, ஆட்களின் நிழல் தெரியுமளவிற்கு வெளிச்சமாய் இருக்கும். இரவில் சூள் கொண்டு
13

Page 11
போகும் போது தூரத்தே வருபவர்கள் கொள்ளிவால்ப் பேய் என்றுதான் நினைப்பர்.
கொள்ளிவால்ப்பேயைத் தான் பார்த்ததாக முகத்தாரப்பா சொன்னார். அவர் பொடியனாய் இருந்த காலத்தில் இது நடந்தது. அன்றைக்குப்பினாக்கை வெளியில் காத்தான் கூத்து. அவரோடு தோட்டக் காவல் இருப்பவர்கள் எல்லோரும் கூத்துப் பார்க்கச் சென்றுவிட்டனர். தேரட்டித்தோட்டத்தில் இரவு தனியக் காவல்.
தென்னம்பாளைச் சூளைக் கொழுத்திக்கையில் பிடித்து ஆட்டியபடி போனார். தவக் கைகளும் பாம்புகளும் கத்திக்கொண்டிருந்தன. தேரட்டி வெளியில் நின்று பார்க்கும் போது விள்ளானைச் சுடலைப் பக்கம் இருளாக இருந்தது.
திடீரென்று சுடலை நேருக்கு ஒளியொன்று தெரிந்தது. யாரோ சூள் கொண்டுபோவது போலிருந்தது. வடிவாகக் கூர்ந்து பார்த்தார். சூள் போல அல்லாமல் ஒரு தலையும் அதற்குக் கீழே வாலுமாய். வால் பேத்தை போல. நெருப்புத் தனலாக அது இருந்தது. ஒரு சீரான வேகத்துடன் உயர்ந்து செல்வது போல இருந்தது. பட்டென்று ஒன்றையும் காணவில்லை. ஒரே இருளாக மாறியது.
முகத்தாரப்பாவுக்கு விளங்கி விட்டது. கொள்ளிவால் பேய்தான். இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
சற்றுத் தள்ளித்தான் வைரவர் கோயில் இருந்தது. "அப்பனே வைரவா. என்னைக் காப்பாத்து" சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடிவந்தார்.
வந்து தலைவாசல் குந்தில் சரிந்தவர்தான். அடுத்தநாள் காய்ச்சலில் வீழ்ந்தார்.
14

தைப்பணி, தலைப்பணியென்றும்,
மாசிப்பனி மூசிப் பெய்யும் என்றும்
/* சொல்வார்கள். தைக்கடைசியில் மழை
4. fs ஓய்ந்து, நிலம் உலர்ந்து விடும். வெயில்
*
தணலாய் எறிக்கும். இரவில் பனிகொட்டித்
தள்ளும். பல்லும் பல்லும் நெருடுபடுவதாய் குளிர் அடிக்கும். பாயில் சுருண்டு கிடப்பதே இதமானது. விடிந்து சூரியன் முகத்தில் அடிக்கும் போதே எழுந்திருக்க மனம் ஆவல்படும்.
அனால், அது நடப்பதில்லை. நடுச்சாமத்திலேயே குரல் கொடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். நாற்சாரத் திண்ணைகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் சோம்பல் முறித்து எழும்புவார்கள். இப்படியே ஏழேட்டுப் பேர் ஒன்றாகினால், நேரே தோட்டத்துக்கு நடக்கலாம்.சீனியண்ணர்தான் முதலில் எழும்புவார். உச்சியில் பூரணை நிலவுநிற்கும் வேளைதான் அவர் கண் விழிக்கும் நேரம். எந்தக் குளிரிலும் வெறும் மேலுடன் நடப்பார். நாலு முழ வேட்டி அதை இழுத்துச் செருகியிருப்பார். அதற்குள் கொட்டப்பெட்டி இருக்கும். கொட்டப்பெட்டிக்குள் வெற்றிலை, பாக்கு, பாக்கென்றால் நாறல் பாக்கு, பிஞ்சுப்பாக்கு, சீவப்பட்டதுள்பாக்கு, சிராய்ப்பாக்கு எல்லாம் தான். பொயிலை, கண்ணாம்பும் இருக்கும்.
சீனியண்ணர் வெற்றிலை சப்புவது அலாதியானது. வெற்றிலையை எடுத்து, பின்புறமாகச் சுண்ணாம்பு தடவுவார். பிறகு காம்பையும் நுனியையும் கிள்ளியெறிவார். வெற்றிலையில் காம்பிலும் நுனியிலும் விசமிருக்கிறது என்பது அவர் கருத்து. அதன்பின் தூள் பாக்கை மூக்கருகே கொண்டு சென்றுமணந்து விட்டு, வாய்க்குள் போடுவார். பின்னர் வெற்றிலையை உட்பக்கமாக இரண்டாக மடித்து, பிறகு அதை நான்காக, எட்டாக
15

Page 12
மடித்து வாய்க்குள் போடுவார். இரண்டு மூன்றுதரம் அசைபோட்டபின் பிஞ்சுப்பாக்குப்போடுவார். பிறகு கொஞ்ச நேரம் கழிய நாறல் பாக்குப் போடுவார். சிராய்ப் பாக்குத் துண்டையும் போடுவார். இறுதியாகப் பொயிலை போடுவார். அரைமணி நேரம் அவரது வாய்க்குள் வெற்றிலை புரள்படும். நடுச்சாமத்தில் பொயிலைச் சுத்தொன்றை மூட்டிக்கொண்டு வந்து "எம்படா .எம்படா" என்று குரல் கொடுத்தால், அது சீனியண்னர்தான். இப்படி ஒவ்வொருவரது குரலிலும் பேசி ஆட்களை எழும்பச் செய்வது கைரகப் பேயின் குணமாம். ஊரில் இப்படிப் பேய்க் கதைகள் பலவுண்டு.
அதனால் சீனியண்ணர் குரல் கொடுத்தாலும் ஒருவரும் எழும்ப மாட்டார்கள். புறுபுறுத்தபடி வந்து ஒவ்வொருவராகத் தட்டி எழுப்பி விடுவார். அதன்பிறகே ஒவ்வொருவராக எழுந்து பட்டைகளை எடுத்துக் கொண்டு புறப்படுவர்.
பணி சொட்டும் அந்தச் சாமத்தில் துலாமிதிப்புத் தொடங்கும். சீனியண்ணர் நாலுமுழத் துண்டை அவிழ்த்து ஆடுகாலில் போட்டுவிட்டு, கச்சையுடன் துலா ஏறுவார். மற்றக் கிணற்றில் தம்பிப்பிள்ளை துலாமிதிப்பார். வேறிருவர்பட்டையால் இறைப்பார்கள். இன்னுமிருவர் தண்ணிகட்டுவர்.
சீனியண்ணரும் தம்பிப்பிள்ளையும் துலா மிதிப்பதில் விண்ணர்கள். தாளம் போட்டுக் கொண்டு, அவர்களின் கால்கள் துலாவில் ஏறிஇறங்கும். அதேநேரம்தேவாரதிருவாசகங்களையும் காத்தான் கூத்துப் பாடல்களையும் இசை கூட்டிப் பாடுவதில் சமர்த்தர்கள்.
இறைப்புத் தொடங்கிக் கொஞ்ச நேரம் கழிய" என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே . " எனச் சீனியண்ணர் இந்தத்துலாவில் நின்று ஆரம்பித்தால், அதைப் திரும்ப. ஒரு இழுவை இழுத்துப்பாடுவார் தம்பிப்பிள்ளை மற்றத்துலாவில்
16

நின்று.சாமக் கோழி கூவி, அதன்பின் பறவைகள் ஆர்ப்பரித்துக் கத்தி சூரியன் பனிமூட்டத்தை ஊடறுத்துக் கதிர்களைப்பாயவிடும் நேரம் இறைப்பு அரைவாசி தாண்டிவிடும்.
காலையில் பழந்தண்ணி கொண்டு வருவார்கள். கயிற்றுக் கைபிடியில் பிடித்துக்கொண்டு முட்டியை எடுத்து வருவது துலா மிதிப்பவர்களுக்குத் தெரியும். உடனே பட்டை இறைப்பு நிற்கும். கடைசியாகக்கோலிய தண்ணீரை எடுத்து, வாயைக்கொப்பளித்து முகம் கழுவுவார்கள். முட்டி ஆடுகாலின் கீழ் வைக்கப்படும். முட்டியை மூடியிருந்த சிரட்டைகளை ஒவ்வொருவரும் தூக்குவர். முட்டியைச் சரித்து ஊற்றும் போதே பழந்தண்ணியின் வாசம் மூக்கிலடிக்கும். செல்லத்தம்பி பழந்தண்ணியை உறுஞ்சிக் குடிப்பார். வாழையிலையில் கோலிக் குடிப்பதே தம்பிப்பிள்ளைக்குப் பிடித்தமானது.
பழந்தண்ணிதான் முதல் ஆகாரம். இரவு சோற்றுக்குத் தண்ணிர் ஊற்றி வைப்பார்கள். விடிய அது ஊறிப் புளித்து, சுவையூட்டி நிற்கும் . அதற்குள் உப்பு, வெங்காயம் , மிளகாய் சேர்த்து,நன்றாகக் கரைத்தால் வருவது பழந்தண்ணி அதுதான் தேசியபானம். உடல்சூட்டுக்குநிவாரணி உடலைக் குளிர்மையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. பழந்தண்ணி குடித்ததும் உடலில் களையெல்லாம் பறந்துவிடும். வெயில் சூட்டுக்கு இதமளிக்கத் தொடங்கும். பிறகு மீண்டும் துலாமிதிப்புத் தொடங்கும். ஒரு நாள். சீனியண்ணர் துலாமிதித்துக் கொண்டிருந்தார். அன்றைக்குத் தன்னி கட்டச் சின்னத்தம்பி வந்திருந்தான். சீனியண்ணர் என்றால் அவனுக்குப் பயம். இடையில் தண்ணிர் கட்டாமல் பிராக்குப்பார்த்தாலே அடித்துப் போடுவார். அன்றைக்கு அவனுக்கு வெளிக்குப் போக வேண்டும் போலிருந்தது. அடக்கி அடக்கிப் பார்த்தான். சரி வரவில்லை. இருட்டு இருந்தது. இவன் தனது தலைப்பட்டையை வைத்து நாலுமுழத் துண்டையும் மண்வெட்டியில் சுற்றி விட்டு, வடலிப் பக்கம் போய்விட்டான். தண்ணிர் பாத்திகளை உடைத்துப் பாய்ந்தது. என்ன செய்வது?
17

Page 13
ஒருபடியாகத் தண்ணி இறைச்சாச்சுது பின்னேரம் தோட்டத்தை வந்து பார்த்தபோது தான் சீனியண்ணர் முழித்தார். அதன் பிறகு சின்னத்தம்பியைத் தேடிப் போனார்.
பங்குனியில் வெயில் கொளுத்தும். வயல்களில் அறுவடை முடிந்து நிலம் * தரிசுபற்றி இருக்கும். ஐயனார் கோயில்
d t f வயலுக்கு நடுவில்தான் உள்ளது. ஐயனார்
கோவில் கொடியேறுகிறபோது, அறுவடை
முடிந்திருக்கும். திருவிழா போட்டி போட்டுக் கொண்டு நடைபெறும். கந்தையா அம்மானின் திருவிழாவில் எட்டுக் கூட்டம் மேளமென்றால், அவரது மைத்துனன் சின்னத்துரையர் சின்னமேளமும் சேர்த்துப்பிடிப்பார். திருவிழா முழுக்க கலகலப்புத்தான்.
திருவிழாவிலே வாணவேடிக்கைதான் பிரதானமானது. வான விளையாட்டு இல்லாமல் சின்னக் கோவிலில் கூடத் திருவிழா இருக்காது. வானத்தை "ஆகாரும் என்றும் சொல்வார்கள். ஆகாசம்செய்வதில் ஒவ்வொரு தொழிநுட்பம் உண்டு. பிரதானமாக கரி, உப்பு, கெந்தகம் மூன்றும் வானத்தின் உள்ளிடுகள். இவற்றுக்கு ஒவ்வொரு அளவுப் பிரமாணம் இருக்கிறது. கெந்தகம் ಊಳ್ದ நிறமானது. சாம்பிராணிக் கட்டி போல இருக்கும். கெந்தகம்,கரியுப்பு, கரி இவைகளை அரைப்பது சுலபமல்ல, பசை போல அரைக்க வேண்டும். பரியாரி இராசர் மருந்து அரைத்துஅனுபவம் உள்ளவர். அவர்தான்வானத்துக்கான மருந்தும் அரைப்பர். ஒரு வானம் செய்யநிறைய நேரமும்நிறையச் செலவு பிடித்தது. முதலில் தோன்றியது முரட்டு ஆகாசம்தான். இதை மூங்கில்ஆகாசம் என்றும் சொல்லுவார்கள். எங்களூரில்
’தாமோதரம் பிள்ளையும், முருகேசு சீனியரும்.
18
 

தெற்பையும் மூங்கில் வானம் செய்வார்கள் . முருகேசு சீனியரின் விட்டு வளவு பெரியது. புளியும், தென்னையும், மாவும், பலாவும் நிறைந்த பெரிய வளவு. எந்த நேரமும் சில்லென்று குளிர் காற்று வீசிக்கொண்டிருக்கும்.
அவருக்கு ஒரு ஆசை. பெரியதொரு மூங்கில் ஆகாசம் செய்யவேண்டும் என்பதே அந்த ஆசை. பெரிய ஆகாசம் என்றால் பெரிய கொட்டு வேண்டும். பலரிடமும் சொல்லி வைத்துவிட்டுக் காவலிருந்தார். அராலியில் இருந்து மயில்வாகன ஆசாரியார் மூலமாக ஒரு கொட்டுக் கிடைத்தது. அதிலிருந்து வேலைகள் ஆரம்பமாயின.ஏற்கனவே இரண்டு நாம்பன் கன்றுகளை விற்று, சேர்த்து வைத்திருந்த பணத்தில் "மருந்து" வாங்கப்பட்டது. மருந்தரைக்கும் வேலை தொடங்கியது. பட்டை இறைப்பு முடிந்து பத்துமணிக்குக்கூடினால் பின்னேரம் வரை ஒரே அரைப்புத்தான். இதற்கென நான்கு அம்மிகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஒரு கிழமையும் சீனியர் வீட்டில்தான் மதியச் சாப்பாடு. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கிழமையில் நான்கு கடகம் மருந்து அரைத்துமுடிந்தது.
மருந்து அளவு சரியா என்பதைப் பார்க்க, இடைக்கிடை சோதனைக் குழாய் விடப்பட்டது. தென்னோலையில் சுருட்டி சிறிய வானம் போல ஆக்கி, அதற்குள் மருந்து அடைந்து பரிசோதனை வானம் விடுவதையே சோதனைக்குழாய் என்பர். வானம் சரியாகச் சென்றால் மருந்து அரைப்பதும் சரிதான். மருந்து அரைத்து முடிய, கொட்டுக்குள் மண்கட்டை அடுக்கி , அதற்கு மேல் மருந்து நிரப்பப்பட்டது.
மருந்து நிரம்பிய பின் அதை இறுக்க வேண்டும். இறுக்குவது சுலபமல்ல. நான்குபேர் தேவை. சுற்றிவர நான்கு பக்கமும்நின்று, பெரிய ஆமாரால் ஒருவர் மாறி ஒருவர் அடிப்பர்கள். அப்படி நீண்ட நேரமாக அடித்ததன் பின்னரே இறுகும். கிட்டத்தட்ட அரைநாள் பொழுது தேவை. முருகேசு சீனியரின்
19

Page 14
முரட்டு ஆகாசம் சரி செய்தாயிற்று. சந்தனை வெளியில் ஏற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
பன்னிரண்டு அடி நீளமான வால் பூவரசந் தடியால் செய்யப்பட்டது. ஆகாசம் ஏற்றத் தயாராகி விட்டது. சந்தனை வைரவர் கோவிலுக்கு முன்பாக எல்லோரும் கூடிவிட்டனர்.
வானத்தைக் கொளுத்தினார் சீனியர். கந்தையரும், நடேசரும் ஈரச்சாக்கைப் போர்த்தியபடி வாலைப் பிடித்தனர். வானம் மெல்லமெல்லச் சீறிக்கொண்டு, மேலெழும்ப இழுத்தது. இழுவை கூடியதும் இருவரும் கையை விட்டனர். ஸ்.என இரைச்சலிட்டு எழுந்தது வானம். எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்றுமண்கட்டை தள்ளியது. வாணம்நிலை தளம்பி வந்து வீழ்ந்தது. ஏதோ பிழை விட்டது. எல்லாம் போச்சுது.
சீனியர் "அழுவாரொண்டாய்”நின்றார். "நீவைரவரைக்கும்பிடேல்ல. அதுதான்காரணம்” என்று யாரோ சொன்னார்.
எல்லாம் முடிந்நது. சீனியர் மனந்தளரவில்லை. அடுத்த மானம்பூவுக்கு பூதராயர் கோவிலின் முன்னால் முரட்டு ஆகாசம் விட்டு, வெற்றியடைந்தார்.
முரட்டு ஆகாசத்துக்கு பிராயம்பற்றையில் ஒரு கிழவியும் பிரபலம். "பிராம்பற்றைக் கிழவி'ஒருமுறை ஏற்றிய வானம்சரிந்து போய் செக்கில் எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்த ஒருவரது உயிரைப் பறித்தது. அதனால் பகிடியாய் "பிராம்பத்தைக் கிழவியின்ர வாணமே விடப்போறாய்?" என்று கேட்பார்கள்.
20


Page 15
gyri J.W.J. துண்டத்தை நீங்கி இன்னலைத் தீர்த்த இனி உதவி அண்ணனர் இறு: அழுதகிரி துதிப் f(x) - விதிகr' பேண் அனைவரைப் பண்ரித்தே"
நன்றி நr
திரு.ஆ.சிவநேசன் திருமதிஜெயலட்சுயிரிண்நேசன் 22, IPSWICH ROAD TOOTING
LONDON SVMYT7 9RH
U.K.
-ܓ݂ܠ
 

பணி நோரின் "" trgovctly for
தாதி ஊழியர்
புரிந்தோர் நரி நிகழ்விப்
தோப்த தோர் உதவி நல்கி ரி வாழ்த் தோர் č. - ň7óý,23ič Jegyfuny 'sў (37ууд,
திரு.செ.சுப்பிரமணியம் திரு.சு.பூரீகுமரன் திரு.செ.அன்னராசா "பதமபதி" சுன்னாகம் தெற்கு,
digit [QIt alli),