கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாய்மொழி மரபில் விடுகதைகள்

Page 1

= GëF66)J||22||

Page 2

வாய்மொழி மரபில் விடுகதைகள்
என். செல்வராஜா
g6sconsolver Gesaemuflu fulLrTeamrijreais6ri:
அயோத்தி நூலக சேவைகள்
ஐக்கிய இராச்சியம்,
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள்
(தனியார்) கம்பனி இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி 0094-81-2493746 தொலைநகல் 0094-81-2497246
ン* ‘சிந்தனை வட்டத்திண் 225 வது வெளியீடு'

Page 3
வாய்மொழி மரபில் விடுகதைகள்
ஆசிரியர் :
பதிப்பு : இணை வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
அட்டை வடிவமைப்பு: ISBN :
பக்கங்கள் : விலை :
என். செல்வராஜா 1ம் பதிப்பு - செப்டெம்பர் 2006 அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம். சிந்தனை வட்டம். 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, யூரீலங்கா. ஸஜிர் அஹற்மட் 955-8913-37-5
76 140/-
Vaimoli Maraphil Vidukadaikal
Subject : The place of traditional verbal riddles in falk Literature among SriLakan Tamils
Author : Printers & Publishers :
Co. Publishers:
Edition : Language : Cover Design : ISBN : Pages : Price :
Nadarajah. Selvarajah.
Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. Ayothy Library Services
Luton, United Kingdom.
1st Edition September 2006
Tamil
Sajeer Ahmed
955-8913-37-5
76
140/- E 5. OO
C. N.Selvarajah, 2006
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

பதிப்புரை
பிரித்தானியாவின் அயோத்தி நூலக சேவைகளுடனி இணைந்து சிந்தனை வடடத்தின 225வது வெளியீடாக பிரபல எழுத்தாளரும், நூலகவியலாளரும், பனினுரலாசிரி யருமான திரு. எனி. செல்வராஜா அவர்களினி வாய்மொழி மரபில் விடுகதைகள்’ எனும் இந்நூலினை வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேனர்.
கிராமிய இலக்கியப் பரப்பில் விடுகதைகளை எடுத்துநோக்கு மிடத்து அவை மனித சிந்தனையின் ஆய்வுத் திறனை வளர்க்கும் ஒரு கருவியாக விளங்கி வந்துள்ளது. காலங்காலமாக மக்களினி வாய்மொழி வழக்காகப் பேணப்பட்டு வந்த பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என்பன கிராமத்து மக்களினி உணர்வுடனி சங்கமித்தவை. ஆழமாக நோக்குமிடத்து இலக்கிய இரசனையுடன் உள்ளார்த் தமான சிந்தனை வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்க .bاړUموا90)
பெருளமவுக்கு இத்தகைய பணிபுகளைக் கொணிட விடுகதைகள் வாய் மொழி மரபாக இருந்து வந்துள்ளமையினால் இவை அழிவுறக்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் O3

Page 4
கூடிய ஆபத்தினை எதிர்நோக்கி வருவதால் எதிரகாலச் சந்ததியினருக்கு இவைகள் பற்றித் தெரியாமலே போய்விடலாம்.
இந் நிலையைக் கருத்திற் கொண டு “வாய் மொழி மரபில் காணப்படும் விடுகதைகளுக்கு எழுத்து ரூபம் கொடுத்து - இலக்கிய சுவை ததும்ப நூலாசிரியர் செல்வராஜா இந்நூலில் தந்துள்ளார். இங்கே விடுகதையில் விலங்குகள், அவயங்கள், தொழில்கள், தாவரங்கள் போன்றன எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்பதை மிகவும் அழகான முறையில் தொகுத்து விளக்கியுள்ளார்.
அத்துடனி ஈழத்து தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணப் பதிவான தனது 'நூல்தேட்டம்’ நூற்றொடரில் இடம்பெற்ற நாட்டாரியல் தொடர்பாக ஈழத்தில் வெளிவந்த நூல்களை அட்டவணைப்படுத்தித் தந்திருப்பது ஒரு விசேட அம்சமாகும். சிந்தனை வட்டத் தினர் ஏனைய வெளியீடுகள் போலவே இந்நூலும் வாசகரிடையே பெரும் வரவேற்பைப் பெரும் என்பது எனது அசையா நம்பிக்கை.
கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்
முகாமைத்துவப் பணிப்பாளர்
சிந்தனை வட்டம்
O1.09.2006
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 04

முன்னுரை
ஈழத்தமிழரின் ஆரம்பகால இலக்கியங் களான வாய் மொழி இலக்கியங்கள் செழுமைமிக்கவை. மணி வாசனையை மாத்திரமன்றி, அருகி வரும் எமது பாரம்பரியப் பணிபாட்டுக் கூறுகளையும் தணினகத்தே பொதித்துவைத்து, காலம் காலமாக, தலைமுறை வழியாகக் காவிவரப்பட்டு எமது கைகளில் இன்று தரப்பட்டுள்ளன. இவை வழக்கொழிந்துவிடாது எமது அடுத்த தலை முறைக்குப் பாதுகாப்பாக விட்டுச் செல்லப்பட வேணடுமானால் அவை பரவலாக எழுத்துருவிலும், நூலுருவிலும் வெளிவந்தாக வேண்டும். ஜனரஞ்சகமாக மக்களிடையே அவை எடுத்துச் செல்லப்பட வேணிடும். இதுவே எமது முன்னோர்கள் எம்முன் விட்டுச் சென்றுள்ள பணியாகும்.
இத்தகைய சிந்தனைகளினி வெளிப்பாடாக அணிமைக்காலத்தில் சில நாட்டார் இலக்கிய நூல்கள் வெளிவந் துள்ளன. வாய்மொழி மரபில் விடுகதைகள் என்ற இந்நூலின் உள்ளடக்கம் லண்டனி லிருந்து வெளிவரும் வடலி’ என்ற மாதப் பத்திரிகையில் ஜூலை 2003 முதல் மே 2004 வரை பதினொரு அங்கங்களாகத் தொடர்ந்து பிரசுரமாகியிருந்தது.
நூலுருவில் வெளிவருமிடத்து இது பரந்த வாசகரை அடையும் என்ற ஆலோச னைக்கேற்ப இத்தொடர் இன்று நூலுருப்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள்
05

Page 5
பெற்று உங்கள் கரங்களில் தவழ்கின்றது. இத்தொடரை நூலுருவாக்க விரும்பி முனிவந்த சிந்தனை வட்டம் தாபகர் திரு. பீ.எம்.புனினியாமீன் அவர்களுக்கு எனது நன்றி.
ஆரம்பத்தில் இத்தொடர் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ்ச் சிறார்களை முன்வைத்தே எழுதப்பட்ட தாயினும், காலப்போக்கில் இக்கட்டுரைத்தொடரின் வாசகர் அணியில் வளர்ந்தோரே இடம்பிடித்துக் கொண்டனர்.
இந்நூலின் பின்னிணைப்பாக, ஈழத்து நாட்டார் இலக்கியம் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்கள் சிலவற்றினி நூல்தேட்டப் பதிவுகள் மீள்பிரசுரம் கண்டுள்ளன. நாட்டார் இலக்கிய ஆய்வில் ஈடுபடும் மாணவர்களின் மேலதிகத் தேடலுக்கு இந்நூற்பட்டியல் பயன்தரும் என்றே கருதுகின்றேன்.
எனது மற்றைய நூல்களைப் போனிறே இந்நூலுக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குணிடு. இந்நூலைத் தாயகத்தில் வெளியிட முன்வந்த சிந்தனை வட்டம் இயக்குநர் கலாபூஷணம் பீ.எம்.புனினியாமீன், இச்சிறுநூலுக்கு அருமையான அணிந்துரையை வழங்கிய திருமதி மளிதா புன்னியாமீனி ஆகியோருக்கும் எனது நன்றி.
என்.செல்வராஜா
48, Hallwicks Road
Luton, LU29BH United Kingdom
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள்
28 August 2006

அணிந்துரை
நொடி என்று பேச்சு வழக்கிலும், விடுகதை என்று இலக்கண வடிவிலும், புதிர் என்று நவீனமாகவும் அழைக்கப்படும் விடுகதைகள், காலமுள்ளவரை புதிதுபுதிதாகத் தோனிறிக் கொணிடே இருந்தாலும் மொழிப்புலமையை அளவிடுகின்ற அம்சங்களில் ஒன்றாகவே அதனையும் கருத வேண்டியுள்ளது. பொழுது போக்குவதற்காகவும், சிறுவர்களைப் பெரியவர்கள் குஷிப்படுத்துவதற்காகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்வதற்காகவும், சிந்தனையை விருத்தி செய்து கொள்ள வழிவகுப்பதற்காகவும் விடுகதைகள் துணைபுரிந்த போதிலும், விடுகதைகளில் காணப்படக்கூடிய சொற் பிரயோகங்கள், ஒசைநயம், கருத்தாழம் என்பவற்றைக் கருத்திற் கொண்டால் விசாலமான இலக்கியப் பரப்பு அல்லாவிடினும் - விடுகதைகள் இலக்கியத்தோடு உரசப்பட்டவையே.
மக்களினி அன்றாட வாழ்க்கையில் ஐக்கியமான ஒரு நிலைப்பாடாக விடுகதைகளைக் கருத முடியும். இலங்கையில் தமிழ்மொழியில் மாத்திரமின்றி சிங்கள, ஆங்கில மொழிகளிலும் கூட இத்தகைய விடுகதைகள் வழக்கிலுள்ளன. நாட்டாரிலக்கி யத்தில் மரபுவழி வந்த கதைகள், பாட்டுகள், பழமொழிகள் போலவே விடுகதைகளும் இலக்கிய ரசம் சொட்டச்சொட்ட அமைந்திருக்கின்றன என்ற உணர்மையை திருவாளர் எனி. செல்வராஜா அவர்களின் இந்நூலை வாசிப்பவர்கள் தெட்டனப் புரிந்து கொள்வார்கள். நாட்டார்கதைகளை நூலாக்கியவர்கள், கிராமத்துப் பாடல்களை பணிணிசைத்துப் பாடி உயிரூட்டு பவர்கள் வரிசையில் வாய்மொழி மரபில் வந்த விடுகதைகளை ஆய்வு செய்து நூலாக்கம் செய்யும் இந்நூலாசிரியரும் இணைந்து
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 07

Page 6
கொள்கின்றார்.
தற்போது அறிவுசார் ரீதியில் விடுகதைகள் உருவாக்கப் படுகின்றன. நேரடியான சொற்பிரயோகத்தில் அவை அமைந்து விடுவதால், விடைகளை இலகுவாகப் பிடித்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் இயற்றியவரை அடையாளம் காட்டாத வாய்மொழி மரபு விடுகதைகளில் சில சொற்பிரயோகங்கள் பொருள் தராமல் - கருத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்து ள்ளன. உதாரணமாக - "தத்தக்கா பித்தக்கா நாலுகால்.” என்பதில் தவழும் பிள்ளையின் நடையின் ஒசையே அது என்பது சட்டெனப் புலனாவதில்லை. இதே போனிறு, மூட்டைப் பூச்சியைக் குறிப்பதற்காக.
‘வட்ட வட்டச் சிக்குனா
வாலில்லாச் சிக்குனா
எனினை வந்து கிள்ளினா” என்று வரும் விடுகதையில்
சிக்குனா என்பது ஒசை நயத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு வார்த்தையாகவே இங்கு காணமுடிகின்றது.
“சிக் சிக் எனிறதாம் ஒரு குருவி
சீறிப்பாயுதாம் ஒரு குருவி வட்டமாகுதாம் ஒரு குருவி வாலில்லாக் குருவி என்ன குருவி?”
கிராமப் புறங்களில் இன்றும் வழக்கிலிருக்கினிற ஒரு விடுகதை இது. இல்லங்களில் சுப காரியங்களினி போது பொரிக்கப்படும் பலகாரத்தையே இது சுட்டி நிற்கின்றது. அவிழ்த்து விட்டாலன்றி இதன் விடையைக் கூறுவது சுலபமான காரியம் அல்ல.
இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்று வருகின்ற தரம் 5 புலமைப் பரிசிற் பரீட்சைக்காக அரசாங்க வினாப்பத் திரங்களில் அணிமைக் காலத்திலிருந்து விடுகதைகள் வினாக்க
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 08

ளாக மாணவர்களிடம் வினவப்படுகின்றமையை இங்கே சுட்டிக் காட்டுவதற்கு விரும்புகினிறேன். ‘முதல் எழுத்தால் பால் அருந்தலாம் கடையிரணிடால் கானகம் செல்லலாம்’ என்று இந்நூலில் இடம்பெற்றுள்ள வினாவைப் போன்று கடந்த கால தரம் 5 பரீட்சை வினாத்தாளிலும் ஒரு வினா இடம்பெற்றிருந் தது. எழுத்துக்களை நீக்கியும், சேர்த்தும் விடையைக் கணிடு பிடிப்பதற்கு சிறுவர்கள் சற்றுப் பிரயத்தனப்படத்தான் வேண்டும். எனினும் விடையைக் கண்டுபிடித்தவுடன் பெறும் ஆனந்தமும் சிறார்களினி உளவிருத்திக்கு வேண்டியதே. இலங்கையில் தேசியக் கல்வி நிறுவனத்தினால் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் கல்வித்திட்டத்திலும் இவற்றைக் காணமுடிகின்றது. இத்தகைய விடுகதைகள், சொல்லட்டை விளையாட்டுக்களினூடாகவும் மாணாக்கர் மத்தியில் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. இவை மாணாக்கரின் உளத் திறனை அபிவிருத்தி செய்யும் ஏற்பாடாகவே உள்ளதெனிறால் மிகையாகாது.
விடுகதைகள் சிறுவர்கள் மத்தியில் மாத்திரமல்ல வயதெல்லையைத் தாணி டியதான பலதரத்தவர்களுக்கும் பொதுவானதொன்றாகவே இருக்கின்றன. தான் கற்கும் விடுகதை களை சிறார்கள் பெரியவர்களிடம் கேட்டு, பெரியவர்கள் திக்குமுக்காடும் சந்தர்ப்பங்களும் உள.
சண்டையில்லாமல்
வழக்கில்லாமல்
குடுமி பிடிப்பவனி யார்.?
நாவிதனைக் குறிக்கும் இந்த விடுகதையைப் போன்ற விடுகதைகள் எம்மையும் திணறவைக்குமல்லவா?
மொத்தத்தில் காலப்போக்கில் வழக்கொழிந்து போகக் கூடிய வாய் மொழி மரபிலமைந்த விடுகதைகளை ஆபத்திலிருந்துகாக்கும் சிக்கலான பணியினை சிக்கனமாக மேற்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் O9

Page 7
கொண்டுள்ளார் நூலாசிரியர் எண் செல்வராஜா அவர்கள். இவர் ஏற்கெனவே உருமாறும் பழமொழிகள்’ எனும் புத்தகத்தினூடாக இதுபோன்ற பணியினை நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்கது.
திரு எண். செல்வராஜா அவர்கள் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் கடந்த ஒன்றரைத் தசாப்தங்களுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் வசித்துவருகின்றார். இந்த அடிப்படையில் நோக்கும்போது, தான் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தாயகமணிணினி மரபு ரீதியான இத்தகைய விடுகதைகளைச் சேகரித்து, ஆழமான ஆய்வுக்குட்படுத்தி கணனியுக சந்ததியினரும் சுவாரஸ்யமாகத் தெரிந்து இன்புறக் கூடிய, காலத்தால் அழியாத அறிவின் தேட்டமாக முன்வைத் திருப்பது எமது ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
- மஸ்தா புன்னியாமினர்.
(பன்னூலாசிரியையும், கவிஞரும், எழுத்தாளரும்)
இல 14 உடத்தலவின்னை மடிகே
உடத்தலவின்னை ரீலங்கா
2006 - 09 - 01
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 10

அறிமுகம்
கிராமியப் பண்பின் உயிர்ப்பாக விளங்குவன கிராமிய இலக்கியங்களாகும். இவை சாதாரண மக்களின் உள்ளத்துணர்வின் வெளிப்பாடாக மெல்ல முகிழ்ந்து காலப்போக்கில் நிலைபெற்று வந்திருக்கின்றன. இக்கிராமிய இலக்கியங்கள் அனைத்தும் அனுபவ வெளிப்பாடாக அமைந்து மக்களுக்குச் சிறந்த பயன் தருவதாகவும் இனிய பொழுதுபோக்குக்கு வழிவகுப்பதாகவும் விளங்கிவந்துள்ளன.
கிராமிய இலக் கரியங்களில் விடுகதைகளை எடுத்துக்கொண்டால், அவை மனித சிந்தனையின் ஆய்வுத் திறன் வளர்க்கும் சிறந்த சாதனமாக விளங்கி வந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
காலத்தொடராக, மக்களிடையே வாய்மொழியாக வழங்கிப் பேணப்பட்டுவரும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள் ஆகியன கிராமிய மக்களின் அந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தே வளர்ந்து வந்துள்ளன.
வாழ்க்கையின் நிகழ்வுகளின் அடியாகத் தோற்றம் பெற்று மக்களின் உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ள வாய்மொழி இலக்கியங்களே இன்றைய அனைத்து இலக்கிய வடிவங்களின் மூலமாக விளங்குகின்றன. உலகில் முதலில் தோன்றிய இலக்கியங்கள் இவையே. எழுத்து மொழி வழக்கில் வருவதற்கு முன்னர் வாய்மொழி இலக்கியங்களே நடைமுறையில் இருந்து மக்களின் சிந்தனையையும் கற்பனை ஆற்றலையும் வளம்படுத்தின என்பர் சமூகவியலாய்வாளர்கள். இவை ஓசை நயமுடையன வாகவும், எளிமையான சொற்களைக் கொண்ட ஆழ்ந்த
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 1

Page 8
கருத்துக்களமைந்த இலக்கியங்களாகவும் திகழ்ந்துள்ளன.
வாய்மொழி மரபில் வழங்குவதும், ஆசிரியர் யார் எனத் தெரியாததும் வாய்மொழி இலக்கியத்துக்குரிய பண்பாகும். மேலும் இசை ஒலிநயம், பாடல் அடிகளோ அல்லது கருத்துக்களோ திரும்பத் திரும்ப வருதல், எதுகை மோனை அமைப்பு என்பனவும் வாய்மொழிப் பாடல்களுக்கு இயல்பாகவே அமைந்த சிறப்பினை உடையது.
இவ் வாயப் மொழி இலக்கியங்களுள் அறிவுரீதியான சிந்தனையோட்டத்திற்கு சிறந்த பாதையாய் அமைந்தது விடுகதை எனலாம். கிராமியப் பண்பாட்டு வளர்ச்சிப் போக்குக்கு நாட்டுப் பாடல்களும் அனுபவ அறிவு முதிர்ச்சி நிலைக்கு எடுத்துக் காட்டாகப் பழமொழிகளும் அமைந்திருந்தன. இவை போன்று, இக்கிராமிய மக்களின் சிந்தனை வளர்ச்சிக்கும் அறிவுத் தேட்டத்திற்கும் ஆய்வு உளப்பாங்கின் தூண்டுதல்களுக்கும் சிறந்ததொரு அத்திவாரமாக இந்த விடுகதைகள் விளங்கியிருக்கின்றன.
இவ் விடுகதையானது இலக்கியத்தில் புதிர் என வழங்கப்படுகின்றது. விடையை மறைத்து நிற்கும் கதையைப் புதிர் எனக் கொள்ளுதல் வழக்காகும். இக்கருத்தினை தொல்காப்பியர் பிசி என்று குறிப்பிடுகின்றார். உவமை போல வருவது ஒன்று வெளிப்படையாக இருப்பது மற்றொன்று என இரண்டு வகையானதாக விடுகதையைத் தொல்காப்பியர் பிரித்துள்ளார். இவை உள்ளுறை உவமை கொண்டவையாக கருத்தாழம் மிக்க வையாக விளங்குகின்றன.
சிறுவர்களுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் ஆர்வத்தையும் சிந்தனைத் தூண்டலையும் ஏற்படுத்துவனவாக விடுகதைகள் அமைந்துள்ளன. மேலும், இவை மக்களின் பண்பாட்டு உணர்வுகள், அவர்களின் சமய வழிபாடு, சாதி அமைப்புக்கள், தொழில்முறைகள், எண்ணறிவு, புராணச் செய்திகள், கலையுணர்வு, அறியாமை போன்ற பல்வேறுபட்ட வாழ்க்கைப் பண்புகளை எடுத்துக் காட்டுவதாக, இலக்கியநயத்தோடு அமைந்து காணப்படுகின்றன.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 12

வாய்மொழி மரபில்
குடும்பத்தில் திருமண விழாவென்றால் அனைவருக்கும் குதுாகலம் தான்.
பெரியவர்கள் அவசர காரியங்களில் இயந்திரமாக ஒடியாடித் திரிய சின்னஞ்சிறுசுகள் பந்தலில் மூலையில் வட்டமாக அமர்ந்திருந்து தமக்குள் விடுகதைகளை விடுப்பதும் அதை அவிழ்க்கும் நோக்குடன் சிந்தனையை விரித்துச் செல்வதும் புத்திசாலித்தனமான ஒரு சிறியவனோ, சிறியவளோ விடையை அனுமானித்து விடுவதும், அதை கண்டுபிடித்ததும் தனது திறமையைத்தானே மெச்சி வானத்தை எட்டக் குதிப்பதும் சிறுவயதுக் குதூகலங்கள்.
பட்டுப்புடவையும் கொசுவி உடுத்துப் பதினாறு தொங்கலும் தொங்கவிட்டுச் செட்டித் தெருவுக்குப் போகின்ற பெண்ணுக்கு திரும்பிப்பார்க்க முடியாது.
என்று ஒரு விடுகதையை பெண்ணுடன் தொடர்புபடுத்தக் கூடியதான தளத்தில் தவறாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் விடுத்துவிட்டு இதற்கான விடையைத் தேடுவதற்கு அவர்களை எங்கெல்லாமோ அலைபாயவைத்து, இறுதியில் அது ஊர்ந்து வரும் தேர் என்று முடிப்பாள் ஒருத்தி. தேரின் பல்வேறு காட்சிப்பிம்பங்களை பெண்ணுக்கு உவமையாகக் கொண்டு கேட்போரை பிழையான திசையில் தன் கற்பனாவளத்தால் திசைதிருப்பி விடுவதில் அவளது வெற்றி தங்கியிருக்கின்றது.
ஆறுசக்கரம் உருண்டுவர குதிரை பாய்ந்து வர
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 13

Page 9
கொடிகள் பறந்துவர நாதஸ்வரம் ஊதிவர நாலாயிரம்பேர் ஹரஹரவெனக் கூவிவர
அசைந்து அசைந்து வருகிறது அது எனின?
என்பான் மற்றொரு கற்றுக்குட்டிச் சிறுவன். அந்த வட்டனின் விடுகதையில் விடை நிதர்சனமாகத் தெரிந்தாலும், சுற்றியிருப்போர் உடனே விடைக்கு இறங்கிவிட மாட்டார்கள். சுவாரஸ்யம் போய்விடுமல்லவா? அறிந்த விடையை சுற்றிவளைத்துக் கூறுவதிலும் ஓர் இன்பம்,
இவர்கள் தேரைச் சொன்னால் நான் கோவிலைச் சொல்வேன் என்று இறங்குவாள் இன்னொரு புத்திசாலிப் பிள்ளை.
முதல் எழுத்தால் பால் அருந்தலாம் கடையிரணிடால் கானகம் செல்லலாம் முதலும் முடிவும் தாத்தாவுக்கு முன்னால் மூன்றெழுத்தில் ஒரு வார்த்தை அது எனின?
என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு எங்கே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று இறுமாப்புடன் நிற்பாள் அவள். கோ- என்றால் அது பசுவைக் குறிக்கும். அதைக் கண்டு பிடித்து விட்டால் அவர்கள் வென்று விடுவார்கள்.
முதல் முதல் கற்றபொருள் முடிவிலும் அறியாப்ஜாg
தந்தைக்கு முனினே தரணியில் நிற்பானி ( பிள்ளையார்)
போன்ற ஒரு வரி விடுகதைகளும் இந்தச் சிறுவர்களைக் கவர்வனவேயானாலும், எதுகை மோனையுடன் பாவடிவில் அமையும் விடுகதைகளை எளிதில் மனனஞ்செய்து பின்னாளில் வேறு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவென்றே மூளையில் பதித்துக் கொள்வார்கள் இந்தப் புத்திசாலிகள்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 4.

விடுகதையில் விலங்குகள்- 1
விலங்குகள் தொடர்பான விடுகதைகள் தமிழில் நிறையவே இருக்கின்றன. குரங்கைக் குறிக்கும் ஒரு விடுகதையை குரங்காரின் குணாதிசயங்கள், உருவகம், ஆகியனவற்றை வேறு விலங்குகளுடன் ஒப்பிட்டுக் குழப்பியடித்துத் தருவார்கள்.
உடம்பெல்லாம் மயிருண்டு கரடியல்ல
உயரத்தில் தாவிடுவானி அணிலுமனிறு மரங்களிலே தொங்கிடுவானி வெளவாலனிறு பழம் திண்பானி பல்லிளிப்பானி மனிதனன்று.
குறிப்பிட்ட குணாதிசயங்களை ஒப்பிடும் போது, கரடி, அணில், வெளவால், மனிதன் என்று ஒப்பிடும்போதே மனதில் இது ஒரு மிருகம் என்று முதலில் பதிந்து விடுகின்றது. அதன் பின்னர் அது என்ன மிருகம் என்று ஒப்பிட்டுச் சிந்திக்க வைக்கின்றது.
கூத்தாடிப் பணம்பறிக்கும் தாசியல்ல
குந்தி சற்றும் இருக்காது நாயும் அல்ல போற்றுகின்ற கொடியாகும் கருடனல்ல போர்புரிந்து ஐயமாகும் ராஜனி அல்ல சாற்றுகின்ற இக்கதையின் பயனைச் சொனினால்
சரணமெனிறே அவரடியைச் சாரலாமே
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் - 5

Page 10
இது குரங்கை அனுமானுடனும் இராமாயணத்துடனும் இணைத்து வழங்கும் தமிழகத்து விடுகதை ஒன்று.
விடுகதைகள் தமிழகத்திலும் இலங்கையிலும் பிற்காலத்தில் பிரபல்யம் பெறத் தமிழகத்துச் சிறுவர் சஞ்சிகைகள் துணை புரிந்துள்ளன. அம்புலிமாமா, கண்ணன், போன்றவற்றுடன், வளர்ந்தோ ருக்கான கலைமகள் கல்கி போன்ற சஞ்சிகைகளின் சிறுவர் பகுதிகளில் கூட இத்தகைய விடுகதைகள் ஏராளமாக அந்நாளில் விதைக்கப்பட்டிருந்தன. இவை சிற்சில பிராந்திய மொழிமாற்றத்துடன் ஈழத்தில் உள்வாங்கப்பட்டன.
காட்டெருமைக் கொம்பை வெட்டி மேட்டுமேலே
போட்டு
கெளரியம்மாள் மயிரெடுத்துச் சனின பின்னல் ஆக்கி
அரக்கு_முத்துத் தாவடங்கள் கழுத்து நிறையப் போட்டு
அழகான வெள்ளியம்மனி பரதேசம் போகினிறாள்.
இது பசுவைக் குறிப்பதான ஒரு விடுகதை. இதில் பசுமாட்டின் அலங்காரம் முதன்மைப்படுத்தப்படுகின்றதை அவதானிக்க முடியும்.
கரடியின் அடர்ந்த தோலை முதன்மைப்படுத்தி ஒரு விடுகதை உள்ளது.
மலைமேல் இருக்கிற மங்காத்தாவுக்கு
ஈருமில்லை பேணுமில்லை எடுத்துக் குத்துவார் யாருமில்லை.
தமிழகத்து விடுகதைகளில் மங்காத்தா என்ற பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றதை அவதானிக்கமுடிகின்றது
மரம் ஏறும் மங்காத்தாளுக்கு முதுகில் மூன்று சூடு
(அணில்)
16
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள்

இவ்வாறே விலங்குகளின் குணாதிசயங்களையும் உருவ அமைப்பையும் முதன்மைப்படுத்தும் விடுகதைகள் பல உள்ளன.
ஏறேறு சங்கிலி இறங்கிறங்கு சங்கிலி
எட்டாத கொப்பெல்லாம் தட்டிவா சங்கிலி
என்ற விடுகதையும் அணிலைக் குறிக்கும் மற்றொரு விடுகதையாகும்.
மேலும் சில விடுகதைகளாவன.
பிறைகவிவி மலை நடக்கும் (யானை)
நோய் நொடி இல்லாமல் முக்கித் திரிகின்றானி ஒருவன (பன்றி)
பிள்ளை பிறந்தவுடன் எழுந்து நான்கு பேரைக் கடித்தது (கணிறுக்குட்டி, தென்னம்பிள்ளை)
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 17

Page 11
விடுகதையில் விலங்குகள் - 2
சிறுவர்களை எளிதில் கவர்பவை விலங்குகள் பற்றிய
கதைகளாகும். பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து, ஈசாப் நீதிக்கதைகள் வழியாக இன்று வோல்ட் டிஸ்னி கார்ட்டூன் வரைக்கும் விலங்குலகத்தை சிறுவர்களுக்கேற்றவாறு வடிவமைத்துத் தருவதில் சிறுவர் இலக்கியவாதிகள் என்றும் சோடைபோகவில்லை. நாட்டாரியலிலும், குறிப்பாக விடுகதைகளில் விலங்குகளின் பயன்பாடு மிகவும் செறிவாகக் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும்.
’அடி அடி தென்னஞ்சோலை
அதில் ஒரு பையனி காவல் அப்பையா முதலி காவல், முத்தையா செட்டி காவல் இத்தனை காவலுக்குள்ளே எப்படி வந்தாயப் பெணினே? குருவியும் கூணிடிறங்கிக்
குறவனும் கணிசாய யாகசாலை வாசலுக்குள்ளே சந்தோஷமாக வந்தேனி.”
இது பெருச்சாளியைக் குறித்த ஒரு விடுகதையாகும். இங்கு கவிதைநயம் சொரிய ஆழமான கருத்துப் பொதிந்ததாக விடுகதை
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 18
 

ஆக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். பெருச்சாளியின் உயிர்கொல்லிகளான குறவரும், குருவியும் தூங்கச் சென்றதும் பாதுகாப்பாகத் தமது யாகசாலையான தென்னஞ்சோலைக்குள் தமது தானிய வேட்டைக்காக வந்து சேர்ந்த பெருச்சாளியை பெண்ணாக உருவகித்து கேள்வி தொடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
“மூன்று தம்பியும் ஒரு முகம், மூத்த தம்பி ஆற்றிலே வாது செய்வானி காட்டிலே,
வார்த்தை சொல்வானி வீட்டிலே’
என்ற விடுகதை, உருவத்தால் ஒத்த ஒரே இனக்குடும்பத்தைச் சேர்ந்த ஊர்வனவான முதலை, உடும்பு, பல்லி ஆகியனவற்றை குறிப்பிடும் இந்த விடுகதையில் ஒவ்வொரு விலங்கின் உறைவிடச் சிறப்பியல்புகளையும் விடுகதை தொட்டு நிற்கின்றது.
“முன்பிறந்தவர் ஆற்றிலே, நாவுக்கினியவர் காட்டிலே,
நண்மொழி சொல்பவர் வீட்டிலே’
என்றும் இதே விடுகதை உருமாறிய வடிவத்திலும் வழக்கிலிருக்கின்றது. பல்லியானது சாஸ்திரத்தில் இடம்பெறும் ஒரு உயிரினம். பல்லி சொல்லில் பலன் பார்க்கும் இனம் எங்களது. இதனைக் குறிப்பிடுவதாக இவ்விடுகதை அமைந்திருப்பதை
“வார்த்தை சொல்வானி வீட்டிலே’, ‘நனிமொழி சொல்பவர் வீட்டிலே’
ஆகிய சொற்பிரயோகங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
பல விலங்குகளை இணைத்து வழங்கும் சில சிக்கலான விடுகதைகள் இன்னும் பல உள்ளன. இத்தகைய விடுகதைகளுக்கான
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 19

Page 12
மற்றொரு உதாரணமாக, பாம்பு, தவளை, நண்டு ஆகிய மூன்றையும் குறிக்கும் விடுகதையொன்றைப் பார்க்கலாம்.
”காலில்லாதவனி காலுள்ளவனைப் பிடித்தானி. அதைப்பார்த்துத் தலையில்லாதவனி சிரித்தானி”
என்ற இந்த விடுகதையில் காலில்லாத பாம்பு, காலுள்ள தவளையைத் தன் இரைக்காகப் பிடித்ததை தலையில்லாத நண்டு பார்த்துச் சிரித்ததாக விடுகதையை அழகாகத் தொடர்புபடுத்தி அமைத்திருக்கின்றார்கள்.
'காளைக்குக் கழுத்து மட்டும் தணிணிர”
என்பது தவைைளயைக் குறிப்பது. எறும்பின் ஊர்வலத்தை குறிப்பதாக அமையும்
”காட்டுக்கும் மேட்டுக்கும் ஒரே சங்கிலி’
என்ற விடுகதை, சிறுவர்களுக்கு எளிதில் விடையைத் தேடித் தந்து விடும்.
”மணினுக்குள்ளே மக்காத கயிறு”
என்று மண்புழுவைக் குறிப்பதாக ஒரு விடுகதை உண்டு. பாம்பைக் குறிப்பிடும் ஒரு நொடியில், பிறந்த அன்றிலிருந்தே வயிற்றாலே போகின்றது என்பர் சிலேடையாக.
மரவட்டையின் மயிர்க்கால்களைக் குறித்து நிற்பதான
”தொட்டால் சுருங்கிக்குத் தொனினூறு கால்கள்”
என்ற விடுகதை அமைகின்றது. ஊர்ந்து செல்லும் மரவட்டையைத் தொட்டதும் அது தற்பாதுகாப்பின் நிமித்தம் உடனே சுரண்டு விடும் இயல்புடையது. அதையே ”தொட்டால் சுருங்கி” என்ற அடைமொழியில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பதம், இயல்பாகவே ஒருவரை தொட்டாற் சுருங்கி என்ற செடியையொட்டித்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 20

தன் சிந்தனையைத் திசைமாற்ற வழிசெய்து விடுகின்றது.
“மொச்சைச் செடிக்கு அர்ச்சனை செய்யும் பூசாரி
மோடம் போட்டால் முதல் திருவிழா உங்களுக்கா?”
என்று பச்சைத் தாவரத்தில் ஊர்ந்து திரியும் புழுவைப் பார்த்து கேட்கும் ஹைக்கூ கவிதை போல அமையும் இந்தக் கேள்வியும் ஒரு விடுகதை தான்.
நத்தைகள் எமது அன்றாடத் தொல்லை. இவை விடுகதையில் நிறையவே பேசப்பட்டுள்ளன.
“வெள்ளாடு புல்மேயக் கணிடீரோ மந்திரி இரண்டு கொம்போடு மேயக் கணிடேனே ராசாவே”
என்று நத்தை பற்றிய ஒரு விடுகதை உள்ளது. நத்தை பற்றிய மற்றொரு விடுகதை கவிச்சுவையுடன் கூடியது.
“முதுகதனில் பொதிசுமக்கும் ஒட்டகமல்ல முளையான கொம்புண்டு எருதுமல்ல விதிவசத்தால் ஓடெடுக்கும் சிவனுமல்ல வெற்றிச் சங்கு தானுர்தும் புரவலனல்ல.”
இதே பாவரியில் சற்று மருவியதான மற்றொரு விடுகதை “தட்டினால் தலையிழுக்கும் ஆமையல்ல நல்லதோர் ஒடிருக்கும் நண்டுமல்ல முனினிரண்டு கொம்பிருக்கும் யானையல்ல"
என்பதாக அமைகின்றது.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 21

Page 13
நத்தை பற்றிய விடுகதைகள் ஆமை தொடர்பான விடுகதைகளிலிருந்து சிறிதே மாறுபட்டாலும் மேல்ஒடு, ஊர்தல் போன்ற பொதுப்பண்புகள் பல உள்ளனவாதலால் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் தன்மை உள்ளது.
'காட்டோரம் போகினிற கள்ளக் கடாவுக்கு
கிள்ளிப்பிடிக்க மயிரில்லை”
என்பது ஆமைக்கான விடுகதையான போதிலும், அதற்கு விடையாக நத்தை என்று பகன்றாலும் ஏற்றேயாக வேண்டும்.
‘நிலத்தில் வாழும் நீரிலும் வாழும் தவளையல்ல நீட்டியதன் தலையிழுக்கும் நத்தையல்ல பலத்தவோர் ஒடிருக்கும் தேங்காயல்ல
பாய்ந்துவர முடியாது பாம்புமல்ல’’ என்ற விடுகதை ஆமையின் வடிவத்தை அழகான வரிகளில் புலப்படுத்துகின்றன. இதே போல் மற்றொரு விடுகதையில்
“நானிகுகால் முதுகுயர்ந்தோனி நடமாடிடுவானி தனியாக நணிபரேயும்மைக் கணிடால் ஒனிறுமில்லாக் கல்லேயாகும் நன்மையிதைக் கணிடுரைப்பீர்
நலமாய்த் தானே.”
என்று ஆமை பற்றிய இவ்விடுகதையில் குறிப்பிடப்படுகின்றது.
ஈழத்தில் நாட்டார் வழக்கியல் பற்றிய ஆரம்பகால உணர்வு கற்றோர் மத்தியில் மிகவும் பிற்பட்டதாக இருந்துவந்துள்ளது. அது கிராமியம் சார்ந்தது, சமயம் சார்ந்தது, பாமரமக்களின் இயல்புகளைக்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 22

கூறுவது, மூடநம்பிக்கைகளுக்கு உட்பட்டது. எனவே ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்றதொரு எண்ணம் அக்காலகட்டத்தில் இருந்தமையால், போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எந்தவொரு மொழியினதும் இலக்கிய வடிவங்கள் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களிலிருந்தே தோன்றியிருக்கின்றன என்ற வரலாற்று உண்மை அண்மைக் காலத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்டது.
பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலும் நாட்டுப்புற இலக்கியச் செய்திகள் பல வருகின்றன. இந்நூல் ஏழு யாப்பு வகைகளை விளக்குகின்றது. ’அடிவரையில்லனவாகக் கூறும் வகைகள் பன்னெடுங்காலமாக வழக்கில் இருக்கின்றது. நூல், உரை, பசி, முதுமொழி, மந்திரம், குறுப்புமொழி, எனப்பெறும் ஆறினுள் பசி என்பது விடுகதை என்பதையும் முதுமொழி என்பது பழமொழியையும் குறிக்கும்” என்கிறார் பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம். (ஈழத்து நாட்டார் இலக்கியத்தின் தோந்தமும் வளர்ச்சியும், திருக்கோணமலை, 2000) W
கிராமத்தில் சிறுவர்கள், பெண்களின் கூந்தலின் பரா மரிப்பு என்பது ஒரு பொழுதுபோக்காகவும், அன்றாட வாழ்வின் மிக முக்கிய பணியாகவும் கருதப்படுகின்றது. தலைவாரிப் பூச்சூடிப் பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு வாயிலில் வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கும் அன்னையரை நாம் கிராமத்துத் தெருக்களில் கண்டிருக்கின்றோம். மாலையில் ஒருவருக்கொருவர் தலைவாரி, பேன் பார்த்து, கூந்தலில் ஈரெடுத்தவாறே ஊர்க்கதைபேசும் கன்னியரையும் கிராமத்துத் திண்ணைகளிலும், மரநிழல்களிலும் கண்டிருக்கின்றோம். கிராமியக் கூந்தல் என்றதும் பேனுக்குக் குறையிராதென்பதாலோ என்னவோ, பேன் பற்றிய விடுகதைகள் தமிழில் ஏராளமாக உள்ளன.
“கணுவில்லா மரத்திலே எலும்பில்லாதவனி ஏறுகின்றானி”
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 23

Page 14
என்பது பொதுவாகப் பேனுக்கான ஒரு விடுகதையாகும்.
“மார்முட்டும் கோரையிலே மயிலைக்காளை மேயுது”
என்பது தமிழகத்து விடுகதையாகும். இதுவே திரிபடைந்து ஈழத்தில்
“பாறைமேல் கோரை, கோரைக்குள்ளே குறவனி’
என வழங்குகின்றது.
இதுவே சற்று விரிவாகப் பின்வருமாறு இன்று வழக்கிலுள்ளது.
“சடசட சட்டப்பாறை எமனி கொடுத்த பாறை
சட்டப் பாறைக்கும் மேலே குண்டுப்பாறை
குண்டுப்பாறைக்கும் மேலே கோரைப்பூணிடு
கோரைப்பூண்டுக்குள்ளே குதிரைக்குட்டி’
இதில் குண்டுப்பாறை-மண்டையோட்டையும், கோரைப்பூண்டு மயிர்க்கற்றையையும், குதிரைக்குட்டி பேனையும் குறித்து நிற்கின்றது.
"இருணிடதோர் காட்டில்
மிரண்டதோர் பன்றியை
எட்டுப்பேர் வளைக்க
இரண்டுபேர் குத்தினார்கள்”
என்று மற்றொரு விடுகதைக்கு இணையானதாக இன்னுமொரு விடுகதை பின்வருமாறு அமைகின்றது.
“கறுத்த மேனியனி காலாறுடையோனி
உருக்க மணிடை ஒட்டினில் உணர்பவனி
பெருத்த பாரம் சுமக்கும் பித்தனை
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 24

இருவர் கொணிடுமே ஈட்டினார் அதை."
என்று விரிகின்றது. இதில் வரும் ‘மண்டை ஒட்டினில் உண்பவன்” என்ற பதம் சிலேடைக்கருத்தைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். முன்னைய விடுகதையில் ’எட்டுப்பேர் வளைக்க இரண்டுபேர் குத்தினார்கள்” என்ற அடிகள் நம் கைவிரல்களைக் குறித்து நிற்கின்றது. பின்னைய விடுகதையில் "இருவர் கொண்டுமே
ஈட்டினார் அதை” என்று முடியும் அடிகளும் இதே கருத்தைக் கொண்டவையே.
“அரையடிப்புல்லில் ஏறுவானி இறங்குவாணி’,
“இருட்டுக் காட்டில் குருட்டுப்பன்றி மேயுது”,
“எலும்பில்லாத மனிதனி கிளையில்லாத மரத்தில் ஏறுகின்றானி’,
“காட்டிலே பெணி பிறந்து கணினியர் கையாலே குத்துப்படுகுது’
போன்றவையும் பேன் தொடர்பானவையாம்.
“எனிமேல் ஒரு குண்டு குண்டுமேலே பாறை, பாறைமேலே கோரை, அந்தக் கோரைக்குள்ளே மீனி,
அது கால்வயிறுதலை அது என்ன?”
என்ற விடுகதையில் பேனை விழிக்கும்போது, ”கால், வயிறு,
தலை” என்ற குறிப்பு இரட்டைத்தொனிப்பொருள் கொண்டதாக உருவகிக்கப்பட்டுள்ளது.
பேனுக்கு அடுத்ததாக நமக்குத் தொல்லை தருவது நுளம்பாகும். நுளம்பின் கடியை வைத்தியரின் ஊசிக்கு உவமையாகக் கொண்ட விடுகதைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 25

Page 15
“டாக்டர் வந்தார் ஊசிபோட்டார், காசு வாங்காமல் (3c JrrưỦ6ớc Lt_ớỹ”
என்பது சிறுவரிடையே பிரபல்யமானதொரு விடுகதையாகும்.
நுளம்பு போன்றே ஈக்களும் எமக்கு அன்றாடம் தொல்லைதரும் ஓர் உயிரினமாகும்.
“ஆறகால் நாலு இறக்கை அடிக்கடி மேலேபாயும்
ஈயெனிறு இளிச்சவாயா இக்கதை விளம்புவாயே’
என்றவாறு விடையையும் விடுகதைக்குள்ளேயே பொதித்து வினாவும் வகையில் இது அமைந்துள்ளது. ஈயென்று இளிச்சவாயா” என்று நொடிக்கு விடைபகர்வோனைச் சீண்டுவதாக இது அமைவதுபோலத் தோன்றினாலும், இந்த விடுகதைக்கான விடையும் அதனுள்ளேயே பொதிந்துகிடக்கின்றது. இதே விடுகதை வேறு வகை யிலும் கிராமங்களில் புளக்கத்திலுண்டு.
'காலாறு சிறகிரணிடு
கணிகளிரணிடும் கடுகுபோல
ஈயடா இளிச்சவாயா இனினுமா தெரியவில்லை”
“ஊசிபோல் வால் உத்திராட்சம் போல் வயிறு
பாசி போல் இறக்கை பந்துபோல் ஆட்டம்”
என்பது பறந்து திரியும் தும்பிக்குரிய விடுகதையாகும்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 26

OS விடுகதையில் விலங்குகள - 3
தமிழரின் சமூகவாழ்வில் வாழையும் மிகமுக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றது. குலைவாழைமரத்தை வாசலில் மாவிலைத் தோரணங்களுடன் கட்டி மங்களநிகழ்வுகளுக்கும், காய்வாழையை அமங்கலநிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவர். விருந்துக்கு வாழைஇலை விரித்தே உணவு பரிமாறுவர். வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைப்பழம் என்று வாழையின் ஒவ்வொரு அம்சமும் தமிழரின் சமூக கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் தொடர்புபட்டுள்ளன.
“கனங்களமரத்தில் ஏறுமாம் மயில்
கையினால் குத்துப்பட்டுச் சாகுமாம் மயில் கலிங்கஞ்சோறு தினினுமாம் மயில்
புறக்கடையில் இழுபட்டுக் கிடக்குமாம் மயில்’
இது வாழை இலை பற்றியதொரு விடுகதை. வாழைஇலை இங்கு மயிலாக (தோகையாக) உருவகிக்கப்படுகின்றது. விருந்தில் உணவுபரிமாறப்பட்டு இறுதியில் புழக்கடையில் எச்சிலையாக விழுவதாக முடிகின்றது.
வாழைமரம் பற்றிய பல விடுகதைகள் வழக்கில் உள்ளன.
“இலையுண்டு கிளையில்லை பூவுண்டு மணமில்லை
காயுணிடு விதையில்லை பட்டையுண்டு
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 27

Page 16
கட்டையில்லை கணிறுணிடு பசுவில்லை அது எனின?”
என்ற நொடியில் வாழையின் பண்புகள் அழகாக விபரிக்கப் படுக்கின்றன.
“அம்மிக்குழவிபோல் பூப்பூக்கும் அரிவாள்பிடிபோல் காயப்காய்க்கும்” “ஏறினால் வழுக்கும் இலைசுருளும், காய்துவர்க்கும் பழம் இனிக்கும்” “மரமுணிடு அடுப்பெரிக்க விரகுமாகாது சீப்புண்டு தலைகோதி வாரமுடியாது பூவுணிடு கொணிடையிலே சூடமுடியாது” “ஓங்கி வளருவாள் ஒருபிள்ளை பெறுவாள் தாலி அறுப்பாள் தலைகீழாய் நிற்பாள்.” “ஒருபிள்ளை பெற்றாள், பெற்றதெனிறு சொனினாள் அறுத்துச்செத்தாள்’ இவை போன்ற பல விடுகதைகள் வாழைமரத்தின் பல்வேறு
சிறப்பம்சங்களை நொடியின் கருவாகக்கொண்டு வழக்கில் இருந்து வந்துள்ளன.
வாழைப்பூ, தமிழரின் உணவுப்பழக்கவழக்கங்களில் சிறப்பானது. வறையாகவும், வடகமாகவும், பருப்புக்கறியுடனும் உணவில் இடம்பெறுகின்றது. நார்த்தன்மையுள்ள இது மலச்சிக்கலுக்கு சிறந்த பரிகாரமுமாகின்றது.
சித்தவைத்தியப்பாடல் ஒன்றில் வாழைப்பூ பற்றி நம்முன் னோர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 28

'வாழையினி பூவினாலேவளர் பெரும்பாடு போங்காய்
சூழுறு மரிய மூலப் பிரமேகந் தொலைக்கு மித்தணி
டாழுறு மலக்கட்டெல்லா மகற்றும்’
(கலாநிதி சே சிவசண்முகராஜா, யாழ்ப்பாண மக்களின் சைவஊடனவுப் பழக்கவழக்கங்கள், யாழ்ப்பாணம், 2002)
”அடிமலர்ந்து நுனிமலராத பூ எனினபூ”
என்றும்
“பட்டையைப் பட்டையை நீக்கி
பதினாறு பட்டையை நீக்கி முத்துப்பட்டையை நீக்கி
முனினே வாறாள் தேவடியாள்’
என்றும் வாழைப்பூவையும் விடுகதையாக ஆக்கி வைத்திருக் கிறார்கள் நம்மவர்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் வாழைப் பழம் ஒன்று. அதனால் அவர்களுக்குப் பிடித்த விடுகதைகளிலும் வாழைப்பழம் புகுந்து விளையாடியிருக்கின்றது.
“சட்டையைக் கழற்றினாள் கிணற்றுக்குள் விழுந்தாள்”
“வைத்தியர் வந்தார், கோட்டைக் கழற்றினார்,
கேணிக்குள் குதித்தார்”
“தோல் இருக்க களை விழுங்க”
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 29

Page 17
என்று வாழைப்பழத்தை உரித்துத் தோல்நீக்கித் தின்பதையே விடுகதையாக்கி தத்தமது போக்கில் விடுகதைகளை உருவாக்கி மகிழ்பவர்கள் எங்கள் மழலைகள்.
“மஞ்சள் குருவி ஊஞ்சலாடும் மாதேவனுக்கும் பூசைக்காகும்” “மூக்கனுக்கு மூன்றுமுளநீளம், மூக்கணிபொணினுக்கு முறத்து அகலம்.”
என்பன போன்ற வாழை தொடர்பான விடுகதைகள் மலையகக் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளன.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 30

விடுகதையில் அவயவங்கள் மனிதரின் உடல் உறுப்புக்களின் முக்கிய இயல்புகன்ள, வடிவங்களை நம் முன்னோர் தாங்கள் அன்றாடம் கண்டு களித்த இயற்கையின் வளத்துடன் ஒப்பிட்டு விடுகதைகளாக உருவாக்கித் தந்திருக்கின்றார்கள்.
ஆற்றுக்கு அக்கரையில் ஐந்தாறு தென்னைமரம்
காய்க்காது பூக்காது கணினுக்கும் எட்டாது
என்று ஒரு விடுகதையை அறிந்திருப்பீர்கள். இதில் ஆறு, அக் கரை, காயப் க்கவோ பூக்கவோ செய்யாத ஐந்தாறு தென்னைமரங்கள், என்பன ஏதோ ஒரு காட்சிப்படிமத்தை எம்முன் நிறுத்த முனைகின்றன. குறிப்பாக இந்தத் தென்னை மரம் கண்ணுக்கும் எட்டாதாம். இது எட்டாத் தொலைவில் உள்ளமையைக் குறிக்கின்றது. விடுகதைக்குச் செவிமடுப்போரின் சிந்தனையை எங்கெங்கோ அலைபாயவிட்டு இறுதியில் கண் இமைகளில் விடையைத் தந்து நிற்கின்றது.
கண் இமையில் உள்ள மயிர்களை தென்னை மரத்துக்கு உவமையாக்கியிருக்கிறார்கள். தெனி னநி தோட்டத்தில் எம் மைக் கவர்வது நேர்த்தியான நிரைகளில் அமைந்த அந்தத் தென்னைகளே. இமை மயிரும் அவ்வாறு தானே உள்ளது. இதில் கண்ணுக்கு எட்டாது என்ற பதம் தொலைவில் மாத்திரமல்ல, மிக அருகில் இருந்தாலும் கண்ணுக்கு எட்டாது என்பதை எமக்குப் புரிய வைக்கின்றது.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 3.

Page 18
பட்டணத்து வேப்பமரம் வெட்ட வெட்டத் தளிர்க்கும் என்பதுவும், வளைக்கலாம் நிமிர்த்தலாம்,
ஒடிக்க முடியாது என்பதுவும்,
தலை மயிரைக் குறிக்கும் வேறு விடுகதைகளாக அமைகின்றன.
அழகாக வகிடெடுத்த தலை மயிரைக்குறிக்கும் மற்றொரு விடுகதை
அடர்ந்த காட்டினி நடுவே ஒரு பாதை என்பதாகும்.
தென்னை மரத்தின் நேரிய நிரைகளைப் பற்களுக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
மோடூர் வீதியிலே முப்பது தென்னைமரம் காய்க்காது பூக்காது அத்தனையும் வெள்ளைமரம். என்பது பல்வரிசையைக் குறிக்கும் ஒரு விடுகதை. முப்பத்தி இரண்டு என்றால் விரைவில் கண்டறிந்து விடுவார்கள் என்பதாலோ என்னவோ இதை 30 என்று அண்ணளவாக வைத்திருக்கின்றார்கள். பற்களைக் குறிக்கும் வேறு விடுகதைகளும் உள்ளன. மாதிரிக்குச் 9ിബ; s
கொத்துக் கொத்து ஈச்சங்காய், கோடரி ஈச்சங்காய்,
மதுரைக்குப் போனாலும் வாடாத ஈச்சங்காயப்
உழவனி விதைக்காத விதை, கொத்தனி கட்டாத
وظام اتاق
வணிணானி வெழுக்காத வெள்ளை, சிற்பி செதுக்காத கல். என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 32

இவை பற்களின் இயல்பை மறைமுகமாக விளக்கி நிற்கும் விடுகதைகளாகும்.
விரல்களைக் குறிக்கும் விடுகதைகளில் பொதுவான அம்சமாக அந்த ஐந்து விரல்களின் பிணைப்பு சுட்டப் படுகின்றன.
ஐந்து வீட்டுக்கு ஒரு முற்றம் என்றும்
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஐந்து வாழை மரங்கள்,
ஆட்டினாலும் ஆட்டலாம் ஆனால் பிடுங்க முடியாது
என்றும் கை விரல்களைக் குறிப்பிடும் விடுகதைகள் உள் ளன. கைவிரல்கள் பற்றிய சுவையான ஒரு விடுகதையைக் கீழே பார்க்கலாம்.
ஐவருடன் பிறந்தானி தருமனி அல்ல
அதிலொருவனி சாட்சிசொல்வானி மனிதனி அல்ல
தனி சுவையைத் தானி சுவைப்பானி ஞானியல்ல
தரணியெங்கும் புல் சுமப்பானி சண்டாளனல்ல
கணினியரை மணம்புரிவான கடைசித்தம்பி
கணிடுசொல்வாளவளே எனர் தங்கையாமே
என்ற விடுகதை வரிகளில் கைவிரல்களின் ஒவ்வொரு விரலின் பயன்பாடும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளதை உற்றுப்பார்த்தால் நன்கு அவதானிக்கலாம்.
இரணியனைப் பிளந்தவனை அறுத்தெடுத்து வருவாயேல்
மனம் மகிழ இரு கைக்கும் வெகுமானம் தந்திடுவேன்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 33

Page 19
இதில் இரணியனைப் பிளந்ததும், இருகைகளுக்கும் வெகுமானம் தருவதுமாகிய அடைமொழிகள் விரல் நகத்தை நாடிய எமது சிந்தனைக்கு எம்மை இழுத்துச் செல்கின்றன.
அவ்வாறே,
கிட்டடியில் பட்டணம் திரும்பிப்பார்க்க முடியாது
என்ற விடுகதை, எமது பரந்த முதுகை நாமே பார்க்க முடியாது என்ற நிலைமையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும்.
கல்லுறங்கும் புல்லுறங்கும் கான மயிலுறங்கும் கணிகள் இரண்டு மட்டும் கடைசி வரை உறங்கவில்லை
என்ற விடுகதை, கண்களின் உறக்கமின்மையைக் குறிப்பிட வில்லை. கண்ணுறங்கினாலும் தானுறங்காது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் இயல்பைக் கொண்ட மூக்குத் துவாரத் தையே இங்கு கண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித அவயங்களைக் குறிக்கும் வேறும் பல விடு கதைகள் உள்ளன.
மனித உடலைக் குறிக்கும் சில சுவையான விடுகதைகளை இனிப் பார்ப்போம்.
காலையில் நான்கு காலோடு, பகலிலே இரண்டு காலோடு,
மாலையில் மூன்று காலோடு, முடிவிலே எட்டுக்காலோடு
என்று ஒரு விடுகதை உள்ளது.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 34

இதில் காலை, பகல், மாலை, முடிவு (இரவு) என்பன கால வேளைகளைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக மனிதனின் வளர்ச்சிப் பருவங்களைக் குறிப்பிடுவதை அவதானிக்கலாம்.
தவழும் பருவத்தில் நான்கு கால்கள் பயன்படுத்தப்படுவதா கவும், இளமைப்பருவத்தில் இரண்டு கால்களையும், முதுமையில் கைத்தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிடும் இந்த விடுகதையின் முடிவில் எட்டுக்கால்கள் மனித உடலை இறுதி யாத்திரையில் தாங்கிக் கொண்டு செல்லும் அந்த நால்வரின் கால்களைக்குறிப்பிடுவதையும் அவதானிக்கலாம்.
இதே விடுகதை வேறொரு உருவிலும் வழக்கிலுள்ளது
தத்தக்கா பித்தக்கா நாலு கால்
தானா முளைத்தது இரண்டுகால் முத்தின மரத்துக்கு மூன்றுகால் முடிவாய்ப் போகையில் எட்டுக்கால்
மனிதனுடைய வாழ்வில் இயங்கலுக்கு முக்கியமான குருதியைக் குறிக்கும் ஒரு விடுகதை,
உள்ளே இருந்தால் ஒடித்திரிவானி
வெளியில் வந்தால் விரைவில் மடிவானி
என்ற எளியதொரு வடிவில் குறிப்பிடப்படுகின்றது.
மனித அவயவங்களில் கண்களைக் குறிக்கும் மேலும் சில விடுகதைகள்.
திருவணிணாமலை மேலே
திணிணை வழிக்கிற பெணிணே
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 35

Page 20
உனது புருவத்துக்குக் கீழே இருபத்தி இரண்டு கணிகள்
என்று ஒரு தமிழகத்து விடுகதை உள்ளது. கண்கள் என்றதும் பொதுவாக முகத்திலிருக்கும் இரண்டு கண்களையும் தான் நினைவில் உடனடியாக நிறுத்துவோம். கையில் பத்தும் காலில் பத்துமாக இருபது நகக்கண்கள் இருப்பதை பெரும்பாலும் அவ்வேளையில் சிந்திக்கமாட்டோம்.
நாம் சிந்திக்கத் தவறும் கோணங்களில் தான் பெரும்பாலான விடுகதைகளின் விடைகள் ஆழப்புதையுண்டு கிடக்கும் என்பது பொதுவானதொரு குறிப்பாகும். விடுகதை பகர் வோன் எவ்வளவுக்கெவ்வளவு உங்களை விடை அறியும் கோணத்திலிருந்து தூர விலகிய சிந்தனையைத் தூண்டுபவனாக இருபபானோ அவ்வளவு எளிதில் அவன் வெற்றியை ஈட்டிக்கொள்வான்.
அக்காள் தங்கை உறவுணர்டு, அணிடை அணிடை வீடுமாய் இருந்ததுணிடு, கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள முடியாது. இது கண்களைக் குறிக்கும் மற்றும் ஒரு விடுகதையாகும். கண்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பார்க்க முடியாது என்ற கருத்தையும், அதே வேளை ஒருவர் மனிதரின் எந்த அவயவத்தைத் தொட்டாலும் ஏற்படாத தீங்கு கண்களைத் தொட்டால் வந்து விடும் என்பதால்,
கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாது என்ற பதத்தின் வாயிலாக அறுதியிட்டு விடுகின்றார்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 36

வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்குள் விளக்கேற்ற முடியாது கறுப்புப் பிள்ளையார் கோவிலுக்குள்
கால் வைக்க முடியாது
என்பதும் கண்களைக் குறிக்கும் ஒரு விடுகதை தான். இங்கு கறுப்பு வெள்ளை என்ற இரு பதப்பிரயோகங்களின் வாயிலாக விழியையும் கருவிழியையும் குறியீடாக்கியிருக்கின்றார்கள் என்பதை அவதானிக்கலாம். கருவிழியே எமக்குப் பார்வையைத் தருவதால் அதாவது ஒளியைத் தருவதால், வெள்ளைப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கேற்ற முடியாது என்று அதன் இயலாமையை மறைபொருளில் உணர்த்தியுள்ளார்கள்.
கண்களைக் குறிக்கும் மற்றொரு விடுகதை,
தச்சனி செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி
என்பதாகும்.
விழிகள் மூடித்திறப்பது அனிச்சைச் செயல் என்பதை இங்கு முக்கிய விடைக்கான முடிச்சாக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
கிணற்றைச் சுற்றிப் பைத்தங்கொடி என்பதும் கண்களுக்கான விடுகதைகளில் ஒன்று தான்.
விடுகதைகளில் கண்ணைப் போன்றே நாக்கும் அதிகம் பேரின் வாயினுள் நுழைந்து சிந்தையை கசக்கிப் பிழிந்து வரும் ஒரு விடுகதைக் கருப்பொருளாகும்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 37

Page 21
கட்டாத சுவருக்குள்ளே
வற்றாத ஊற்றுக்குள்ளே
எலும்பில்லாத மனிதனி
எகிறி எகிறிக் குதிக்கின்றானி.
என்ற பழமொழியில் நரம்பில்லாத நாக்கை எலும்பில்லாத நாக்காக்கி விடையைத் தேடி ஒட வைக்கின்றார்கள். வற்றாத ஊற்று, கட்டாத சுவர் என்பன நாக்கின் இருப்பிடத்தை நாடி இலகுவில் கண்டறியக்கூடியதாக இருக்கின்றது.
குண்டுச் சட்டியில் கெணிடை மீனி என்பதும்
ஒரு சாணி குட்டையிலே ஒரு முழு வரால்
என்பதும் நாக்கைக் குறிக்கும் விடுகதைகளாகும். கெண்டை, வரால் மீன்களை நாக்குடன் ஒப்பிட்டு நிற்கும் விடுகதைகள் இவை. பிரதேச வழக்கில் குறிப்பிடப்படும் மீன் வகை வசதிக்காக மருவி மாறிவிட்டிருக்கின்றது. இது போன்றே,
மேலறை கீழறை நடுவிலே நெளிபாம்பு என்பதும், மேல் பலகை கீழ்பலகை நடுவில் நெளிபாம்பு
என்பதும் பிரதேச வழக்கிற்கேற்ப மாறி நிற்கும் விடுகதைகள் தான்.
அடே புடே எனிபானி வீட்டைவிட்டு வெளிவரமாட்டானி
என்ற விடுகதையில் யாகாவாராயினும் நாகாக்க என்ற முதுமொழி தொக்கி நிற்கிறது. வாய்க்குள் பாதுகாப்பாக இருந்தபடி எது வேண்டுமானாலும் பேசும் நாக்கு வெளியே மட்டும் வந்து விடமுடியாது.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 38

விடுகதையில் தொழில்கள்
பண்டைய பாரம்பரியக் கல்வி முறையைப் பெற்றுக்கொள்ளாத பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருந்த பெரும்பாலான கிராமத்து மக்கள் கேள்வி ஞானத்தினுடாகவே அண்மைக்காலம் வரை தங்களது அறிவை வளர்த்து வந்துள்ளார்கள். இவ்விதத்தில் கிராமத்து மக்கள் மத்தியில் வாய்மொழிப்பாடல்களும், விடுகதைகளும் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தன. மக்கள் தம் தேடல்களை விரிவுபடுத்தவும் சிந்தனைக்குதிரையை எல்லையற்றுப் பாயவிடவும் விடுகதைகள் அந்நாளில் உதவிவந்துள்ளன.
இவ்வகையில் புகலிடத்தில் இயந்திரவாழ்க்கை வாழும் எம்மிடையே மரபழிந்து செல்லும் விடுகதைப் பாரம்பரியத்தை இரைமீட்பது போல அமையும் இத்தொடரில் இன்று, குறிப்பிட்ட சில கிராமியத் தொழில் தொழிலாளர் சார்ந்தமைந்த சில விடுகதைகளைக் காண்போம்.
ஐரோப்பியரிடையே ஒரு நவீன கலையாக இன்று மலர்ந்துள்ள Tattoo என்று கூறப்படும் பச்சை குத்துதல் பற்றி நாம் சங்க இலக்கியங்களிலேயே அறிந்திருக்கின்றோம். கீழைத்தேய நாடுகளில் இது மிகப் பழமையானதொரு கலையாக மிளிர்ந்திருக்கின்றது. தமிழிலும் இந்த பச்சை குத்துதல் பற்றி ஒரு விடுகதை உண்டு.
“நடலாம் பிடுங்க முடியாது”
என்ற அந்த விடுகதை பச்சைகுத்துதலைக் குறிப்பதாக அமைகின்றது.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 39

Page 22
சலவைத் தொழிலாளியைக் குறிக்கும் ஒரு விடுகதை. "நோயில்லாமல் நொடியில்லாமல் அனத்துபவன் யார்” என்பதாகும். இங்கு அனத்துபவன் என்பது ஈழத்துக் கிராமிய வழக்கில் அனுங்குபவன் என்றும் வழக்கிலுள்ளது. ஆற்றங்கரையில் துணியை துவைகல்லில் அடித்து சலவை செய்யும் போது ஏற்படும் காற்றொலியே இவ்விடுகதையின் அடிநாதமாகின்றது. இதே சந்தத்தில்,
“சண்டையில்லாமல் வழக்கில்லாமல் குடுமி பிடிப்பவனி
9
(ርጋጠ9 ̆
எண் றொரு விடுகதை நா விதரைக் குறித் து வழக்கிலுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறே பொற்கொல்லரைக் குறிப்பிடும் வகையில் அமைந்த விடுகதை,
“குளிர் இல்லாமல் கூதல் இல்லாமல் குளிர்காயப்பவர்
uaj?”
என்பதாகும். இவை அனைத்தும் தொழிற்றுறையின் குறிப்பிட்டசிறப்பம்சத்தை மையமாக்கி உருவான விடுகதைகளாகும். நெசவாளரின் கைத்தறியைக் குறிப்பதாக பின்வரும் விடுகதை அமைகின்றது.
“மணிடையிலே மயிரில்லாக் கொணிடைக்காரி மனிதரோடு பேசாத மகிமைக்காரி
கொணிடவனைக் கணிடால் குலுக்கென்று சிரிப்பாள்.” பானை வடிக்கும் குயவனைக் குறிக்கும் விடுகதை ஒன்று
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 40

“கோயில் குளம் இல்லாமல்
கொட்டித் திரிகின்றானி ஒருவன்.”
என்பதாகும். இதே வனைதல் தொழில் சார்ந்த மற்றொரு விடுகதை,
“வட்டமாகச் சுற்றிவரும் கருடனல்ல
வாய்மூக்குச் சிவந்திருக்கும் கிளியும் அல்ல
கொட்டுணர்டு முழக்குண்டு கோயிலல்ல
ஏறுவான் இறங்குவாணி குதிரையல்ல.”
என்பதாகும்.
வனைதல் தொழிலில் பயன்படுத்தப்படும் தொழில்சார் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து இவ் விடுகதை அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
தையல்காரர் ஒருவரைக் குறிப்பதாக அமைவது
“கழுத்தை வெட்டுவானி, கையை வெட்டுவானி
அவனை ஏனெனிறு கேட்பார் எவருமில்லை”
என்பதாகும்.
இங்கு கழுத்து, கை என்று வெட்டப்படும் அவயவங்க ளைப் பிரஸ்தாபிக்கும் போது அங்கு விடைபகர்வோரின் மனதில் சட்டைக் கழுத்தும் சட்டைக்கையும் எங்கே நினைவில் வந்து தெலைக்கப்போகின்றது? இப்படியாக, கிராமத்தில் அன்றாடம் நாம் காணுத் தொழிலாளர்களை, அவர்களின் தொழிலின் பண்புகளை, அவர்களது தொழிற்கருவிகளின் தன்மைகளை விபரிப்பதாக இன்னும் பல விடுகதைகள் நிலவுகின்றன.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 41

Page 23
விடுகதையில் தாவரங்கள்
ஈழத்தில் நாட்டார் வழக்கியல் விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் தமது அனுபவத்தின் பேறாகப் பல விடுகதைக ளையும் பழமொழிகளையும் ஆக்கிவைத்துள்ளனர். ஆடிமாதத்தில் முதல்மழை பெய்தபின்பு காய்ந்திருந்த வயல்நிலம் பொருமியிருக்கும். அப்பொழுதே முதல் உழவு செய்தல் வேண்டும். தொடர்ந்து மழை பெய்தபின்னர் நிலம் இறுகிவிடும்.
இதனைக் கருத்திற்கொண்டே “ஆடியுழவைத் தேடி உழு’
என்னும் பழமொழி வழக்கில் வந்தது. காலத்தே பயிர்செய்யும் பணியில் ஈடுபடாமல் சோம்பித்திரியும் விவசாயக்குடிமக்களுக்கென்றே ஒரு பழமொழியும் கிராமத்து வழக்கிலுண்டு.
“உழுகிற நேரம் ஊர்வழி போனால்
அறுக்கிற நேரம் ஆளே வேண்டாம்”
என்ற ஒரு பழமொழி காலத்தே பயிர்செய்யாதவனுக்கு அறுவடைக்காலத்தில் அரிவிவெட்டுக்கு ஆள்தேவையில்லை. பயிர் விளைந்தால்தானே அவனுக்கு அறுவடைக்கு ஆள்தேவை.
பழமொழிகள் போலவே விடுகதைகளும் கிராமிய இலக்கி யத்தில் விவசாயம் பயிர்ச்செய்கை தொடர்பாகத் தாராளமாக வழக்கிலுள்ளன. நெற்பயிர் தொடர்பான நல்லதொரு விடுகதை வருமாறு;
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 42
 

‘அப்பா எங்கே? அவர் தனினை வளர்ப்பானைத் தானி வளர்க்கப் போயுள்ளார்.”
என்ற விடுகதை விவசாயத்தின் பெருமையை எளிதில் உணர வைக்கும் ஒன்றாகும்.
“மாரி இல்லாமல் ஆமைகெட்டது ஆமை இல்லாமல் சீமை கெட்டது.”
என்ற விடுகதையில் 'ஆமை' என்ற பதம் வெள்ளாண்மை (வேளாண்மை)யைக் குறித்து நிற்கின்றது. மாரி பொய்த்தால் வானம்பார்த்த விவசாயியின் வேளாண்மை கெட்டுவிடும். அதனால் மொத்த நாடே பஞ்சத்தில் உழலவேண்டி ஏற்படும் என்ற அரியகருத்தை இவ்விடுகதை தாங்கிநிற்கின்றது.
விவசாயமக்கள் ஓரளவு செழிப்புடன் வாழ்வது அரிவி வெட்டுக்காலத்தில் தான் என்பர். சொந்த நிலம் கொண்ட விவசாயியானால் வெட்டியநெல்லைச் சேமித்து வைத்து விதை நெல்போக எஞ்சியதை ஆண்டுமுழுவதும் பயன்படுத்துவான். நிலமில்லாத விவசாயக் கூலியாளராயின் அவர்களுக்கு வருவாய்தரும் காலம் இந்த அரிவிவெட்டுக்காலம் தான். அதிகாலையிலேயே வயலை நோக்கிக் கிளம்பிவிடுவார்கள் அரிவிவெட்டுக்கு!
‘அம்மா அம்மா எங்கே போகிறாய்? நேற்றுக்கழுத்தறுபட்டவனை பிழைக்கவைக்கப்போகினிறேனர்.”
இது அரிவிவெட்டுக்காலத்து விடுகதையாகும். அரிவி வெட்டுக்காலம் முடிந்தவுடன் அப்பாவி விவசாயக் கூலியாளரின் நிலைமையும் கவலைக்கிடமாகிவிடும். இதை அருமையானதொரு
என். செல்வராஜா வாய்மொழி மரபில் விடுகதைகள் 43

Page 24
பழமொழியிலும் பதிந்துவைத்திருக்கிறார்கள். “அரிவாளும் ஆடுமட்டும் குடுவையும் ஆடும்’
என்ற பழமொழி இந்த அரிவிவெட்டுக்காலச் செழுமையைப் பிரதிபலிப்பதாகும்.
“காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகமிருக்கக் கொப்பில்லை”
என்பது நெற்கதிருக்கான பிரபல்யமான விடுகதையாகும். இதே விடுகதை சற்று கவிநயத்துடன்,
“நீரோடி நிலம்பாய்ந்து
நிலத்து வாழைக் குருத்தோடி
காம்போடிக் கயிறோடிக்
காக்கை குந்த வாதில்லை.”
என்பதாக அமைகின்றது.
“சூரியனே சந்திரனே மந்திரிமகளைப் பாரு
அவள் எனின சாதி? அறுத்துக்கட்டுகிற சாதி
கோட்டைக்குள்ளே போனால் குத்துப்பட்டுச் சாவாள்.”
என்பது நெல்நாற்றைப் பார்த்து, அதன் எதிர்காலத்தை எண்ணி
நகைத்து விடுக்கும் நொடியாகும். கண்ணும் கருத்துமாக விவசாயி
கண்காணிக்கும் நெல் நாற்றை மந்திரிமகளாகப் பாவித்து அறுவடையின்பின் அவளுக்கு நிகழப்போவதை முன்கூட்டியே கூறி
இங்கே நகைக்கிறார்கள்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 44

நெல்மணிகளைத் தாங்கி நாணத்துடன் வளைந்து நிற்கும் முற்றிய நெற்பயிருக்கான சில விடுகதைகளைக் கீழே காண்போம்.
“தோப்புத் துலாமரம்
தொங்குது மாமரம்
காயப்கனத்த கைபட்டால்
கொட்டிப்போகும்.”
“456fuss d56ftus (66 பிள்ளை பெற்றாளே
தாங்கமாட்டாமல்
காய்ந்து போனாளே”
“அடுப்புவெட்டி வாரி வெட்டி
வணினிமரம் தோப்பாக்கி
காயறுத்துக் கணக்குப்பார்த்தால் லட்சமோ லட்சம்’
நெல் அரிசியாகிப் பின் சாதமாகும் அந்த பரிணாமத்தைக் குறிக்கும் ஒரு விடுகதை பின்வருமாறு அமைகின்றது.
“மரகதமணியாய்ப் பிறந்து
பொன்மணியாய் வளர்ந்து முத்துமணியாய் வெடித்துப்
பால்மணியாய் பக்குவமாய்
தரணிகாக்கும் தாயானேணி”
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 45

Page 25
என்று முடியும் இவ்விடுகதையில் நெல்லரிசிச் சாதத்தின் வாழ்க்கையே மணியாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
“அடிகாட்டில்,
நடுமாட்டில்,
நுனிவீட்டில்’
என்ற விடுகதையில் அடி என்பது அறுவடையின் பின் எஞ்சிய நெற்பதர். அது அடுத்த உளவுமட்டிலும் வயற்காட்டிலே தங்கி உக்கிவிடுகின்றது. நடுப்பகுதி-வைக் கோலாக மாட்டுக்கு உணவாகின்றது. நுனி நெற்கதிர் அதுதானே வீடுவரை செல்கிறது?
“ஆமைபோய் ஆறுமாதம்
ஆய்தாரை அப்படியே இருக்கிறது’
என்ற பழமொழி வயலுக்குள் ஒடும் வாய்க்காலைக் குறிப்பிடு கின்றது. வயலுக்கு நீர்பாய்ச்சும் வாய்க்கால் வேளாண்மை முடிந்தபின்னரும் தடம்பதித்துத் தூர்ந்து கிடப்பதைச் சுட்டிநிற்கும் இவ்விடுகதையிலும் 'ஆமை” என்ற பதம் வேளாண்மையைக் குறிக்கின்றது. சில பிரதேசங்களில் குறிப்பாக வன்னிப்பகுதியில் இவ்விடுகதையில் 'ஆமை' என்ற பதம் 'ஆனை' என்று மருவியும் வழக்கிலுள்ளது.
அறுவடை முடிந்ததும் வைக்கோல் பொதிகள் வயலில் கட்டுண்டு சேர்ந்து மலைபோல் கிடப்பதை நாம் காணமுடியும். இவை காலக்கிரமத்தில் விவசாயின் வீட்டுக்கொல்லைப்புறத்தில் மாடுக ளுக்குத் தீனிக்காக எடுத்துச் செல்லப்பட்டுப் பாதுகாக்கப் படுவதுண்டு.
“எங்கள் அம்மானி அகத்துக் கொல்லையிலே
மதயானை செத்துக்கிடக்கிறது”
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 46

என்ற விடுகதை இந்த வைக்கோற்போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். வைக்கோலையும் நெல்லையும் இணைத்தொரு விடுகதையும் வழக்கிலுண்டு.
“தாய் தெருவிலே
மகள் கொலுவிலே”
என்றும் 'தாய் குப்பையிலே
மகள் சந்தையிலே’
என்றும் இந்த விடுகதை அமைகின்றது.
“வாயப்க்கால் கட்டி
வரம்பு வெட்டி
வைகாசிமாதம் தோப்புவெட்டி
ஈக்கி குத்தி இடைசிறுத்து
இனவாழைக் குருத்துவெட்டி
பாக்கி முத்துப்பழம் பழுத்து
பாணர்டியராஜனி கடையிலே’
என்பதுவும், “கட்டிக்களம் போர்புரியும் வீரனன்று தரணியெங்கும் சுற்றிவரும் கடம்பனனிறு
இட்டமுடன் மனையகலும் புருடனனிறு
இரப்பவர்மேல் துகள்தொடுக்கும் பித்தனன்று
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 47

Page 26
சட்டமுடன் குத்துக்கே சளைக்கமாட்டானி சகலருக்கும் வயிற்றெரிச்சல் தள்ளிக்காப்பானி அட்டதிக்கும் சுற்றிவரும் மதிக்கொப்பான அறிவொளியே இக்கதையை அறிந்திடாயே’
என்பதுவும் மிகவும் ஆழமான கருத்துச்செறிவுமிக்க விடுகதை களாகும்.
கிராமிய இலக்கியங்களின் வளத்தினை முறையாக ஆய்வு செய்யமுன்வரும் எவருக்கும் கடலின் அடியில் காத்திருக்கும் நன்முத்துப்போல இதுபோன்ற பல அரிய இலக்கியங்கள் காத்துக்கிடக்கின்றன.
தாயகத்தில் இலைக்கறி வகைகளில் முக்கியமாகக் கீரை வகைகள் தேகாரோக்கியத்திற்கு அவசியமானவை என்ற காரணத்தால் அன்றாடம் எமது உணவுகளில் சேர்க்கப்பட்டிருந்தது. தோட்டக்கீரை, பொன்னாங்காணி, வல்லாரை, கரிசலாங்கண்ணி, புதினாக்கீரை, சாரணை, பயிரி, வள்ளல்கீரை, பனங்கீரை, தொய்யில்கீரை, அரைக் கீரை, சிறுகீரை, முளைக் கீரை, முசுட்டையிலை, முடக்கொத்தான், பிரண்டைக்கொழுந்து, கறிமுல்லையிலை, பசளி, தூதுவளை, மொசுமொசுக்கை, சண்டியிலை, தவசிமுருங்கையிலை, முருங்கையிலை, அகத்தியிலை, மணித்தக்காளி, கறிவேப்பிலை, பொன்னாவாரையிலை என்பன எமது மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் இலைக்கறிவகைகளாகும்.
‘பச்சைத்துலுக்கணி பாய்போட்டுத் துரங்குகிறான்.”
என்ற விடுகதை பொதுவாகப் பச்சைப்பசேலென்று தோட்டத்தில் ஒரு மூலையில் கம்பளம்போல் செழித்து வளரும் கீரைப்பாத்தியைச் சுட்டுவதாக அமைகின்றது.
என். செல்வராஜா வாய்மொழி மரபில் விடுகதைகள் 48

எம்மவரிடையே முருங்கையிலை கீரையாகவும், கஞ்சியாகவும் உட்கொள்ளப்படுகின்றது.
“பொட்டுப்போல் இலையிருக்கும்
பொரிபோலப் பூப்பூக்கும்
திணினக் காயப்காய்க்கும்
தினினாத பழம் பழுக்கும்”
என்பது முருங்கைக்கானதொரு விடுகதையாகும். பொட்டுப் போலுள்ள அந்த முருங்கையிலையில் தான் எத்தனை சத்துக்கள் அடங்கியிருக்கின்றன? கல்சியம், இரும்பு, உயிர்ச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சீ என்பன நிறைந்திருப்பதாக நவீன ஆய்வுகள் இன்று தெரிவிக்கின்றன.
முன்னைய விடுகதை போன்றதே
“காசுபோல் இலையுணர்டு
கவரிபோல் பூவுண்டு
காயுண்டு பழமில்லை”
என்ற மற்றொருவிடுகதையுமாகும். முருங்கையின் பூவையும் உணவாக உட்கொள்வதை கீழ்க்கண்ட மற்றொரு விடுகதை விளக்குகின்றது.
"நீரோடு நிலம்கறுத்து
நிலத்துவாழைக் குருத்தெறிந்து
காரோடும் பட்டணத்தில்
காய்தினிபர், பூதினிபர், பழம் திணினார்.”
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 49.

Page 27
மேலுள்ள இரண்டு விடுகதையிலும் முருங்கையின் காய்தான் உணவாகின்றது. முற்றிப்பழுத்தால் அது வித்தாகி விடுகின்றது என்ற
“காயென்று கணிடதுணிடு
கனியெனிறு தின்றதில்லை”
என்ற மற்றொரு விடுகதையும் இதையே சொல்லிநிற்கின்றது
மரக்கறி வகைகளும் எமது மக்களின் வாழ்வில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுவகையாகும். .
“பந்தலைச்சுற்றிப் பாம்பு தொங்குது’’
என்பது புடலைப் பந்தலில் நெளிந்து நீண்டு வளரும் புடலங்காயை வைத்து உருவான விடுகதையாகும். புடலங்காய் வளையாது நீண்டுவளர அதன் நுனியில் சிறு கல்லினைக்கட்டி விடுவார்கள்.
“வெள்ளைப்பாம்பு கல்லைத் துரக்குது’’
என்ற மற்றொரு விடுகதை இந்த யுக்தியை உள்வாங்கிக் கொண்டுள்ளது.
புடலங்காயை வைத்து உருவான கவிநயம்பொருந்திய விடுகதையொன்றை இனிக் காண்போம்.
“பச்சைநிறமாயிருக்கும் திருமாலல்ல
பலகாலும் கொழுந்து கிள்ளும் கொடிக்காலல்ல
வைத்தகல் சுமந்திருக்கும் மனிதனல்ல
வாரையில் தலைகீழ்த்தொங்கும் வெளவால் அல்ல
உச்சியிலே பூமுடிக்கும் பெண்ணுமல்ல
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 50

'உண்மையாய் இக்கதையை விடுவிப்பீரே என்பது அந்த விடுகதையாகும். புடலங்காய் பற்றி எவ்வளவு நுண்மையான விபரிப்பை நம்முன்னோர் இவ்விடுகதைவழியாக சிலேடையாகத் தந்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா?
பூசணிக்கொடி பற்றிய இரண்டு விடுகதைகள் நினைவில் உள்ளன.
“எங்கள் அப்பனி ஊர்சுற்றி,
எங்கள் அம்மாள் குந்தாணி”
“எங்கம்மாள்
பிள்ளைத்தாச்சி,
எங்கள் அப்பா சுவரேறிக் குதிப்பானி.”
இவ்விரு நொடிகளிலும், பூசணிக்கொடியின் காடுமேடெல்லாம் நீண்டு வளர்ந்து பற்றிப்படரும் இயல்பை ஊர்சுற்றிக் கணவனாகவும், அதன் படர்கையின் வாயிலாகத் தேவையான சத்தைப்பெற்று உருண்டு திரண்டு நிலத்தில் தங்கிப் பெருக்கும் பூசணிக்காயை
மனைவியாகவும், குறிப்பாகக் கர்ப்பிணியாகவும் உருவகித்துள்ள நகைச்சுவை நமது சிந்தையைக் கிள்ளுகின்றது.
பூசணிக்காய் போலவே, கரணைக்கிழங்கும் (Amorphophalus Campanulatus Roxb) FF p556ù (5ńûu Ta5 uJTypùusT6001556ù பிரபல்யமான உணவாகும். இங்கு சட்டிக்கரணை என்று அழைக்கப் படும் இதுவே தமிழகத்தில் சேனைக்கிழங்கு எனப்படும். தமிழகத்தில் சட்டிக்கரணை சிறியவடிவிலான ஒரு கிழங்குவகையாகும்.
”கருணையின் கிழங்கு மூலமுட்டணத்தை யோட்டும்” என்பது சித்த வைத்தியத்தின் ஒருவிதியாகும்.
மூலரோகம், உஷ்ணம், போன்ற வருத்தங்களுக்கு கரணைக் கிழங்கு பெயர்பெற்றது என்பார்கள் சித்தவைத்தியர்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 51

Page 28
“முட்டையும் இடுவாள் குஞ்சு பொரிப்பாள் மூனிறு மாதம் அடையும் கிடப்பாள்
வட்டமுள்ள குடையும் பிடிப்பாள்
வகைக்கு ஏற்ற கறிக்கும் ஆவாள்”
என்பது கரணைக்கிழங்கைப் பற்றி வாய்மொழியாக வந்த விடுகதையாகும்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 52

நாட்டாரியல் தொடர்பாக ஈழத்தில் வெளிவந்த நூல்கள்
(தலைப்பு அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது)
ஈழத்தமிழ் நூற்பட்டியலான நூல்தேட்டம் தொகுதிகளில் பதிவாகியுள்ள நாட்டாரியல் தொடர்பாக ஈழத்தில் வெளிவந்த நூல் விபரங்களின் மீள்பிரசுரம் இதுவாகும். இப்பட்டியலில் இடம்பெறாத நூல்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் பகிர்ந்துகொள்ள விரும்பினால் இந்நூலாசிரியருடன் தொடர்பு கொள்ளவும்.
1. ஆனையை அடக்கிய அரியாத்தை. செல்லையா மெற்றாஸ்மயில், யாழ்ப்பாணம்: பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 365 கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஐப்பசி 1995. (யாழ்ப்பாணம்: மணிஓசை, 12 சென் பற்றிக்ஸ் வீதி). 100 பக்கம், விலை: ரூபா 65. அளவு: 21x14 செ.மீ.
வேலைப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை மேல் ஒப்பாரி என்ற வன்னிப்பிரதேச நாட்டார் இலக்கியம் பற்றிய வரலாற்று ஆய்வு இது பண்டார வன்னியனுக்கு முன்பிருந்து ஆட்சி செய்த சின்ன வன்னியனுடைய ஆட்சிக் காலப்பகுதியில் ஆண்களால் அடக்க முடியாதென்று கருதப்பட்ட ஒரு கொம்பன் யானையை அடக்கிய அரியாத்தை என்ற பணிக்கர் குலப் பெண்ணொருத்தியின் கதை இது. இக்கதையின் மூலாதாரமாகக் கருதப்படும் நாட்டாரியல் கதைப் பாடலொன்றினை அடிப்படையாக வைத்து வன்னிப்பிரதேச வரலாற்றுப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பற்றிய அதிகம் அறியப்படாத பல உண்மைகளை வெளிக் கொண்டுவரும் ஆய்வு முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.
2. இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள். எஸ்.முத்துமீரான். சென்னை 600017: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை. கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், தியாகராயநகர், 1வது பதிப்பு, மே 2005 (சென்னை 600014: சபரி புரொஸஸ்)
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 53

Page 29
208 பக்கம், விலை: இந்திய ரூபா 350. அளவு: 21.5x14 செ.மீ. ISBN: 955-828-02-6.
இலங்கையின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஊர்களில் 65 தகவலாளர்களிடமிருந்து அரிதின் முயன்று சேகரித்த 206 பழமொழிகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். இவற்றுள் 92 பழமொழிகளுக்கு அரிய விளக்கங்கள் தந்துள்ளார். நாய் பற்றிய 30 பழமொழிகளுக்குச் சிறு குறிப்பு எழுதியுள்ள இவர், இலங்கை கிராமத்து முஸ்லீம்கள் அன்றாடம் பயன்படுத்தும் 84 பழமொழிகளையும் பட்டியலிட்டுள்ளார். நூலின் முற்பகுதியில் பழமொழிகளின் பண்பு, வரலாறு முதலியவற்றை விளக்கியுள்ள ஆசிரியர், முஸ்லீம்களின் பழமொழிகளை நான்காக வகைப்படுத்துகின்றார். தொடர்ந்து சுமார் 200 பக்கங்களில் 92 பழமொழிகளைத் தனித்தனியே விளக்கியுள்ளார்.
3. இலங்கை நாட்டார் கதைகள் (சிங்களம்-தமிழ்). எஸ்.விஜேசூரியா, ஏ.ஜே.குணவர்த்தன, பெ.கணநாதபிள்ளை (பதிப்பாசிரியர் குழு). கோட்டே பங்களிப்பிலான அபிவிருத்திக் கழகம், 51, தலவத்துகொட வீதி, மிரிஹான, பதிப்பு விபரம் அறியமுடியவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி) 74 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 18x12 செ.மீ. ISBN 955-9140-03-05.
நாட்டார் கதைத் தொடர் வரிசையில் இரண்டாவது நூலாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் இலங்கைக்கேயுரிய 25 நாட்டாரியல் சிறுகதைகளைக் கொண்ட தொகுதியாகும். கர்ணபரம்பரைக் கதைகளாக அமைந்த 25 சிறுகதைகளையும் அவற்றைச் சொல்லிய கிராமவாசிகளின் பெயர் விபரங்களும் கதையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
4. இலங்கை நாட்டுப் பாடல்கள். வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம். கொழும்பு 6: மு.இராமலிங்கம், அயோத்தியா, 15 ஹாமர்ஸ் அவெனியு, 1வது பதிப்பு, 1951. (கொழும்பு சுதந்திரன் அச்சகம், தட்டா தெரு). (4), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 23.5x18.5 செ.ம.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 54

நூலாசிரியர் நான்காவது தமிழ்விழா மலருக்கென எழுதி அனுப்பிவைத்த கட்டுரையின் முழுமையான வடிவமாக இது அமைகின்றது. நாட்டார் வழக்கியல் வழிவந்த இந்த இலக்கியங்களின் வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது நாட்டார் வழக்கியல் வரம்புக்குட்பட்ட சில பாடல்களும் சுவைபடத் தரப்பட்டுள்ளன.
5. இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல். கார்த்திகேசு சிவத்தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (கல்லச்சுப்பிரதி). 364 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 31x21 செ.மீ.
இலங்கைத்தமிழ் நாட்டார் வழக்கியல் பற்றி இடம்பெற்ற பேராசிரியர் கணபதிப்பிள்ளை நினைவுக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 15 கட்டுரை களின் தொகுப்பு.
6. இலங்கைத் தெனாலிராமன் கதைகள். சந்திரிகா சோமசுந்தரம். சென்னை 60007: அநுராகம், இல.10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1988. (சென்னை: 600024: அலைகள் அச்சகம்) 32 பக்கம். விலை: இந்திய ரூபா 2.50. அளவு: 17x12 செ.மீ.
புத்திக்கூர்மையுள்ள ‘அந்தரே இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கைத் தெனாலிராமன் என்று ஒப்பிடப்படும் பாத்திரம் இது. அந்தரே பற்றிய கதைகள் சிங்கள மக்களால் இன்றும் நாட்டாரிலக்கியமாக வழங்கி வருகின்றன. இக்கதைகள் நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்து நீதியையும் போதிக்கின்றன. அத்தகைய 22 குட்டிக்கதைகளின் தொகுப்பு இந்நூலாகும்.
7. ஈழத்து வாய்மொழிப்பாடல் மரபு. செ.யோகராஜா. திருக்கோணமலை: பண்பாட்டுத் திணைக்களம், கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை, இளைஞர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (திருக்கோணமலை; பதிப்பகத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம்). XVi + 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20.5x14.5 செ.மீ.
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மொழியியல்துறையின் முதுநிலை விரிவுரையாளரான தொகுப்பாசிரியர் எழுத்துநிலை பெற்ற ஈழத்து வாய்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 55

Page 30
மொழி மரபுப் பாடல்களைத் தொகுத்திருக்கின்றார். ஈழத்து நாட்டார் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கான மூலச்சான்றாக அமையும் பாடல்களைத் தேடித் தொகுத்து நூலுருவில் கொண்டுவரும் ஒரு முயற்சி இது.
8. உலகத்து நாட்டார் கதைகள். நீர்வை பொன்னையன்.கொழும்பு 6:
மீரா பதிப்பகம், 191.23 ஹைலெவல் வீதி, கிருல்லப்பனை. 1வது பதிப்பு,
2001 (கொழும்பு 13: பேஜ்செட்டர்ஸ், 113 ஜிந்துப்பிட்டி வீதி)
xvi+ 352 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350. அளவு: 17x12.5 செ.மீ.
நாட்டார்கதைகள், எவரது விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டநிலையில் தமது மதிநுட்பம், உணர்ச்சிச்செப்பம், வாழ்க்கைநோக்கு என்பவற்றுக்கமைய, தம்மியல்பாகவே படைக்கப்பட்டதும் நீதி, நியாயம், நன்மை, தீமை பற்றித் தாம் அனுபவ வாயிலாகத் தேடிப்பெற்றுக்கொண்ட விழுமியங்களை வெளிப்படுத்தும் உந்தலினால் இயற்கையாக உலகளாவிய மக்கள் மனங்களில் உதித்தவை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கர்ணபரம் பரையாகக் காவிச்செல்லப்பட்டவை. உலகளாவிக் கிடக்கும் இந்த நாட்டார் கதைகள் 250 இந்நூலில் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன.
9. உருமாறும் பழமொழிகள். என். செல்வராஜா. ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1988.யாழ்ப்பாணம், அச்சக விபரம் தரப்படவில்லை). V+30 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 21x14 செ.மீ.
பழமொழிகள், மரபுத்தொடர்கள் போன்றவற்றில் காலப்போக்கில் ஒரிரு எழுத்துக்கள் சேர்வதாலோ, அல்லது விடுபடுவதாலோ சொற்களில் இரட்டை அர்த்தம் தொனிப்பதாலோ பழமொழிகளில் திரிபுகள் ஏற்படுகின்றன. காலத்துக்குக்காலம் சமுதாயத்தில் ஏற்படும் கருத்து மாற்றங்களுக்கு ஏற்பவும் பழமொழிகள் உருமாற்றம் பெற்றுள்ளன. இன்று நடைமுறையில் இப்படியாக உருமாற்றம் பெற்ற பழமொழிகள், உவமைத்தொடர்கள், மரபுத்தொடர்கள் போன்றவற்றைத் தொகுத்து, அவற்றின் மூலக்கருத்துக் களையும் தற்காலக் கருத்துக்களையும் இலக்கிய, நாட்டாரியல் சான்றாதா ரங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் நூல்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 56

10. கஞ்சன் அம்மானை. சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்), பேராதனை: சு.வித்தியானந்தன், 1வது பதிப்பு, ஜனவரி 1970. (கண்டி: ரோயல் அச்சகம், 190 கொழும்பு வீதி) xxxiv, 248 பக்கம், விலை: ரூபா 7.50. அளவு: 22x14 செ.மீ
நீதியரசர் பொன். ரீஸ்கந்தராஜா அவர்களின் துணைவியார் திருமதி கண்மணி ரீஸ்கந்தராஜா அவர்கள் நினைவு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பதிப்பிற்கான மூல ஏடு திமிலதீவு மகாவிஷ்ணு கோவிலிலிருந்து பெறப்பட்டது என்ற குறிப்பும் காணப்படு கின்றது.
11. கண்டி அரசன். நீமிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்; நாட்டுக்கூத்து ஒன்றியம், பாஷையூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1978. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி). (14), 118 பக்கம், தகடு, விலை: ரூபா 2.50., அளவு: 18.5x12.5 செ.மீ
கர்நாடக சங்கீத இராகங்களை அடிப்படையாகக் கொண்டதாயமைந்துள்ள கண்டி அரசன் நாடகம் 'விலாசம்’ என்னும் நாட்டார் இலக்கியப் பிரிவுக்குட்பட்டதாக கண்டி அரசன் (கண்ணுச்சாமி) கீர்த்தி ரீ இராசசிங்கனின் வாழ்க்கை வரலாறு இசையுடன் கலந்து சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலான கீர்த்தனங்கள், தருக்கள் போன்றவற்றிற்குத் தாளம், இராகம் என்பன போன்ற விபரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
12. கண்ணகி அம்மன் கஞ்சிவார்ப்புத் தண்டற் பாட்டு, த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை. கந்தசாமி கோவிலடி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்) 12 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5x12 செ.மீ.
மாவிட்டபுரம் வீனியவரை கண்ணகிஅம்மை கஞ்சிவார்ப்புத்தண்டற் பாட்டும் அது பற்றிய அறிமுகக் குறிப்பும்.
13. கம்பன் மகன் (நாட்டுக்கூத்து). யோயோண்சன் ராஜ்குமார், அ.பேக்மன் ஜெயராசா.யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (யாழ். புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) Xx, 80 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 21.5x14.5 செ.மீ. (ISBN 9559262-23-8)
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 57

Page 31
நாட்டுக்கூத்து நூல்வரிசையில் புதிய வரவு. தென்மோடி நாட்டுக்கூத்தாக அமைந்த இது மேடையில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் உரிய குறிப்புகளுடன் காணப்படுகின்றது. மறைமலை அடிகளாரின் ‘அம்பிகாபதி. அமராவதி” நாடக எழுத்துருவின் கதையை பெருமளவில் அடியொற்றி ஆக்கப்பட்ட கதையம்சம். கம்பரின் மகனான அம்பிகாபதியினதும், குலோத்துங்க மன்னனின் மகள் அமராவதியினதும் காதல் இக்கூத்தின் அடிநாதமாக அமைகின்றது.
14. கனிந்த காதல். ஆ.மு.ஷரிபுத்தீன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, 1985. (வெள்ளவத்தை சாமரஅச்சகம், 22ஏ, மல்லிகா ஒழுங்கை).
72 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x13 செ.மீ. மட்டக்களப்புப் பிரதேசத்தில் களவொழுக்கம் குறித்துப் பாடப்பட்டுள்ள கிராமியப் பாடல்களின் தொகுப்பு இதுவாகும். கதவு திற கண்மணியே, கதைத்திருக்க வாங்க மச்சான் என்ற இரண்டு தலைப்புக்களில் முறையே கற்பும், களவும் விளங்க இரு கதைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
15. காமன் கூத்து: ஓர் கள ஆய்வு. சந்தனம் சத்தியநாதன். கண்டி: ஞானம் பதிப்பகம், 1947 பேராதனை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கம்பொல; அடோப் கிரப்பிக் டிசைனிங், 30, கடுகண்ணாவை வீதி). 47 பக்கம், விலை: ரூபா 160. அளவு 20.5x14.5 செ.மீ. ISBN 955-8354.
1-2.
மலையக பாரம்பரியக் கலைகளில் ஒன்றான காமன் கூத்து தெய்வ பக்தியோடு பின்பற்றப்படும் ஒரு கலையாகும். வாய்மொழி இலக்கியமாகவே மக்கள் பயன்படுத்தி வந்த இக்கலையில் காமன் கூத்துப் பாடல்களுக்கு ஒரு எழுத்து வடிவம் கொடுத்துத் தமது சிந்தனைக்கு எட்டிய வகையில் ஒர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். சங்குவாரி தோட்டத்தின் (கீழ்ப் பிரிவு) காமன்கூத்து ஆசிரியராக இருந்த வ.ஆ.பெருமாள் அவர்களிடமிருந்து வாய்ப்பாட்டாகப் பெறப்பட்ட 30 பாடல்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
16. கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள். வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம். கொழும்பு 6: மு.இராமலிங்கம், அயோத்தியா, 15 ஹாமர்ஸ்
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 58

அவெனியு, 1வது பதிப்பு, 1960. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், தட்டாதெரு). (v), 95 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 21.5x14 செ.மீ.
இது நாட்டுப்பாடல்களில் ஒரு வகையான ஒப்பாரிப் பாடல்களின் தொகுப்பு. அபலையின் அவலம், மருமகள் மீது வஞ்சம், மருமகளும் மற்றோரும் இரங்கல், தந்தம் கவலை, இனமில் இளம்பெண் ஒலம், அமங்கலி விலக்கு, யாவரும் ஒருமித்தல், பெறாமகன் கொள்ளி, எரிமூட்டியபின் என்று வகைப்படுத்தி 9 ஒப்பாரிப் பாடல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். .
17. கிராமத்தின் இதயம்: நாட்டார் பாடல்கள். அந்தோனிப்பிள்ளை. மன்னார்: நித்தியா புத்தகசாலை, 25, புதிய பேருந்து நிலையம், 1வது பதிப்பு, டிசம்பர் 2001 (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.1.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர) (4), 30 பக்கம், விலை: ரூபா 40. அளவு: 22x14.5 செ.மீ. பாடசாலை மொழித்தின நிகழ்ச்சிகளுக்கு உதவக்கூடிய 16 நாட்டார் பாடல்களின் தொகுப்பு. மழலையைத் தாலாட்டுவதிலிருந்து மனிதனின் வாழ்நாளில் இடம்பெறும் தொழில், கலை, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளைப் பற்றிய நாட்டார் பாடல்கள் இதில் அடங்கியுள்ளன.
18. கிராமிய மணம். பேராதனை ஷர்புன்னிசா. (இயற்பெயர்: சித்தி ஸர்தாபி) கொழும்பு 01300: பேசும்பேனா வெளியீடு, 5-1/20, சுப்பர் மார்க்கட், கொட்டஹென, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (Colombo 01300: Quick Graphics Print, 5-1/20 Super Market, Kotahena) xvi, 56 பக்கம், விலை: ரூபா 80, அளவு: 17.5x13 செ.மீ, ISBN 955950-05.3.
கிழக்கிலங்கை முஸ்லீம் பெண்களிடையே வழிவழியாக வழங்கிவந்த நாட்டார் பாடல்களை 12 கதைகளில் அமைத்து ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். காதல், ஏக்கம், தாபம், சல்லாபம், என்று கிழக்கிலங்கை மகளிர் அனுபவிக்கும் பாடுகள் இப்பாடல்களில் பண்பாடுகின்றன. 1948 முதல் எழுத்துலகில் பிரகாசிக்கும் இவர் கிழக்கிலங்கைப் பெண் எழுத்தாளர்களின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 59

Page 32
19. கிழக்கு ஈழ மரபுவழி: இருபாங்குக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு. ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், ரொரன்ரோ, 1வது பதிப்பு, 6Juj6) 2001. (560TLIT M5S 2B3: Reflex Printing, 109 Bay Street, Toronto). XXi+ 540 பக்கம், வண்ணத் தகடுகள், விளக்கப்படங்கள், விலை: கனடிய டாலர் 10, அளவு: 21.5x14.5 செ.மீ
வடமோடி, தென் மோடி கூத்து மரபுகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்கான பல அடிப்படைத் தகவல்களைக் கொண்ட ஆவணம். கனடிய-மட்டக்களப்புத் தமிழர் சமூக இலக்கிய வட்டத்தினதும், மட்டக்களப்பு அன்பு வெளியீட்டகத்தினதும் ஆதரவுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
20. சின்னவனா பெரியவனா? நா.செல்லத்துரை. யாழ்ப்பாணம் வெண்ணிலா வெளியீட்டாளர்கள், 2வது பதிப்பு, டிசம்பர் 2000, 1வது ப்திப்பு, ஜனவரி 2000. (யாழ்ப்பாணம்: யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபை அச்சகம், 40/1 நாவலர் வீதி).
88 பக்கம், விலை: ரூபா 100. அளவு; 21x14 செ.மீ.
காத்தான் கூத்தையடுத்து நூலுருவில் வெளிவந்த முதலாவது சிந்து நடைக் கூத்தாகக் கருதப்படும் இந்நூல், கிறிஸ்தவ வேதாகமத்தில் காணப்படும் "தாவீது கோலியாத்து வரலாற்றினை இனிய பாடல்கள். மூலமும் உரைநடை மூலமும் கிராமிய இலக்கியமாகப் பதிவு செய்கின்றது. இஸ்ரவேலரின் எதிரிகளான பெலிஸ்தரின் வீரர்களில் ஒருவன் கோலியாத்து. இராட்சத உருவம் கொண்டவன். இஸ்ரவேலரின் இடைச் சிறுவனாகிய தாவீது, கவண் வீசிக் கல்லெறிந்து கோலியாத்தினைச் சாய்க்கின்ற சம்பவமே இவ்விலக்கியத்தின் உட்பொருளாக அமைந்துள்ளது.
21. ஞானத் திறவுகோல்: தென்பாங்குக் கூத்து. பா. அமிர்தநாயகம். யாழ்ப்பாணம்: பா.அமிர்தநாயகம், இல. 15, மதிமலர் இல்லம், இராசாவின் தோட்டம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2001 (கொழும்பு 13: யுOAPublications, 55, St. Lucia's Street).(10), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 20x14.5 செ.ம.
4.3.1993 இல் பாடிய இப்பாடல் 12.10.2001இல் அச்சுப்பதிவு கண்டுள்ளது. பாவினங்களாலும் இசையோடமைந்த வசனங்களாலும் எழுதப்பட்ட கூத்து என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 60

வடிவம் இது, 3மணி நேரத்தில் நிறைவடையக்கூடய கூத்து. புனித பிரான்சிசுக்கு அசீசியாரின் வரலாற்றைச் சுருக்கி கத்தோலிக்க பாங்கு முறையில் எழுதப்பட்டது.
22. தாய் தரும் தாலாட்டு. அநு.வை. நாகராஜன். தெல்லிப்பழை: வைரமான் வெளியீடு, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, மே 1988. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
16 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு; 21x14 செ.மீ.
அரிய நாட்டாரிலக்கியப் படைப்பான தாலாட்டுப் பாடல் பற்றிய சிறு நூல். (தாலாட்டுதால்ஆட்டு. தால் நாக்கு, ஆட்டு-அடக்குதல், ஆட்டுதல்) தமிழிலும் பிறமொழிகளிலும் வழங்கும் தாலாட்டுக்கள், தாலாட்டின் இலக்கிய நயம் பற்றி விளக்கும் கட்டுரை.
23. தாலாட்டுக் கள் . சனி முகம் ஜெயதாசன் , சுலோஜனா ஜெயதாசன்.மாவிட்டபுரம்: புதுவிடு, கருகம்பனை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988.(யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) 32 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x12.5
இலங்கைத் தமிழரிடையே வழங்கி வரும் 20 தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு.
24. தாளக்காவடி. ஏ.ரி.பொன்னுத்துரை. குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, அக்டோபர் 1988. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) 32 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5x12.5 செ.மீ.
கிராமியக் கோலங்களும் கலைத்துவமும் இணைந்த கலைவடிவம் தாளக்காவடியாகும். ஆசிரியர் காலத்துக்குக்காலம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளையும் ஒரு வானொலி உரையையும் உள்ளடக்கிய சிறுநூல். தாளக்காவடிக்கலை, அண்ணாவிமாரின் கலைப்பங்களிப்பு, உடுக்கின் பெருமை, அரங்குகளும் அவைகளும் ஆகிய விடயங்கள் கட்டுரைகளின் கருப்பொருளாக அமைந்துள்ளன.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 6

Page 33
25. Eqb'LT55 gstidyasib or A Collection of Proverbs in Tamil with their translation in English. Li.(BLujá6i6). u TpüLT600Ti b: Jaffna Book Society 1வது பதிப்பு, 1843. (யாழ்ப்பாணம் அமெரிக்க மிஷன் அச்சகம்). (4), 266 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x11.5 செ.மீ.
இலங்கையில் அச்சிட்டு வெளியான ஆரம்பகால நூல்களில் குறிப்பிடத்தக்க இந்நூல் ஈழத்துத் தமிழ்ப் பழமொழிகளின் முதலாவது தொகுப்பு என்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்த 1873 தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து அவற்றுக்கான ஆங்கில விளக்கத்துடனும் ஆங்கிலத்திலான முன்னுரையுடனும் பேர்சிவல் பாதிரியார் இந்நூலை உருவாக்கியுள்ளார். தமிழ் அகர வரிசை ஒழுங்கில் 1809 பழமொழிகள்“அ” முதல் “வெள’ வரையில் தொகுக்கப்பட்டுள்ளன. அநுபந்தமாக 1810 முதல் 1873 வரை மேலும் சில பழமொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. (பிரித்தானிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. பதிவிலக்கம் 14172 d 433)
26. நாட்டார் இசை இயல்பும் பயன்பாடும். இளையதம்பி பாலசுந்தரம். யாழ்ப்பாணம்: நாட்டார் வழக்கியல் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1991 (யாழ்ப்பாணம்: மேர்க்குரி பிரின்டர்ஸ்) 132 பக்கம். விலை: ரூபா 75. அளவு; 21x14 செ.மீ.
நாட்டார் இசையின் தோற்றம்-வளர்ச்சி, அதன் வகைகளும் பயன்பாடும், தனித்துவமும் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. நாட்டார் இசை வாய்ப்பாடுகள், அதன் பண்பாட்டில் வளர்ந்த இசைக்கருவிகள் போன்றன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
27. நாட்டார் இலக்கியத்தில் மழை இரங்கிப்பாடல். த.சண்முக சுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவைக் கந்தசுவாமி கோவிலடி, 1வது பதிப்பு, தை 1984. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்) 24 பக்கம். விலை: ரூபா 8. அளவு: 18.5x12.5 செ.மீ.
கட்டுவன் வீரபத்திரர் வசந்தன், மாரியம்மன் மழை இரங்கிப்பாடல், மாருதப்புரவல்லிப் பாடல், கொடும்பாவிப்பாட்டு ஆகிய நான்கு வகை மழை இரங்கிப் பாடல்கள் பற்றிய விளக்கத்தை வழங்கும் நூல்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 62

28. நாட்டார் வழக்காற்றியல்: ஓர் அறிமுகம். கிருஷ்ணபிள்ளை விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 565, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி) xi 172 பக்கம், விலை: ரூபா 300, அளவு: 21.5x15 செ.மீ., ISBN: 955
07-00-X.
நாட்டார் வழக்காற்றியலைப் பொதுநிலையில் அறிமுகம் செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது. நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காற்றியல் வகைப்பாடு, கள ஆய்வு, வாய்மொழி வழக்காறுகள், நாட்டுப்புற நம்பிக்கைகள், நாட்டுப்புறச் சமயம், நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற விளையாட்டு, பெயராய்வு என 10 இயல்களில் இந்நூலின் விடயப்பரப்புகள் அணுகப்பட்டுள்ளன.
29. நாட்டாரியல் ஆய்வு; ஆய்வரங்கக் கட்டுரைகள்
2000. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வட-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). V, 178 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு 21x14.5 செ.மீ.
மேற்படி அமைச்சின் 2000ம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் நாட்டாரியல் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றது. அதில் 12 அறிஞர்களின் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் தேர்ந்த ஏழு கட்டுரைகளின் நூல்வடிவம். பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளுதல் (சிமெளனகுரு), முல்லை மாவட்ட நாட்டார் இலக்கியம் (முல்லைமணி), நாட்டார் இலக்கியப் பண்புகளும் வடக்கில் அதன் செல்வாக்கும் (ந.அனந்தராஜ்), மட்டக்களப்புப் பிரதேச எண்ணெய்ச் சிந்து ஒரு பன்முக நோக்கு (செ.யோகராசா), தமிழ்மொழியின் கட்டமைப்புப் பண்பும் இலக்கியத்தில் அதன் செல்வாக்கும் (அ.சண்முகதாஸ்), மட்டக்களப்பில் மறைந்துவரும் கொம்பு விளையாட்டு, (கமகேஸ்வரஸிங்கம்), ஈழத்து நாட்டார் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (இரா.வை.கனகரத்தினம்), ஆகிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 63

Page 34
30. நாடகம்: நாட்டாரியற் சிந்தனைகள். சு.வித்தியானந்தன், அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: எஸ்.குணநிதி, தமிழகம் வெளியீடு, வீமன்காமம், 1வது பதிப்பு, தை 1990. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்) vi,112 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 18x12.5 செ.மீ.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களது நாடகம், தமிழ்க்கூத்து மரபு, பாரம்பரிய இசை போன்றவை தொடர்பான நாட்டாரியல் சிந்தனைகளை உள்ளடக்கிய 10 கட்டுரைகளின் தொகுப்பு.
31. நொடியும் விடையும். கோப்பாய் சிவம் (இயற்பெயர்: பா.சிவானந்த சர்மா). ஆவரங்கால்: பா.சிவானந்த சர்மா, 1வது பதிப்பு, 1989. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்.) 32 பக்கம். விலை: ரூபா 10. அளவு 17x12 செ.மீ.
ஈழத்துக் கிராமங்களில் நிலவி வரும் பழமையானதும் புதியதுமான விடுகதைகளின் தொகுப்பு. சிறுவர்களுக்கு உகந்தது.
32. பண்டாரவன்னியன்-குருவிச்சி நாச்சியார்: வன்னிப் பிராந்தியத்து வரலாற்று நாடகம். அருணா செல்லத்துரை. கொழும்பு 8: அருணா வெளியீட்டகம், A 15A 1/1A மனிங் ரவுன் வீடமைப்புத் தொகுதி, மங்கள வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்). XVi, 122 பக்கம், வரைபடம், விலை: ரூபா 200. அளவு: 22x14 செ.மீ. (ISBN 955-96159-7-1)
வன்னிவள நாட்டின் இறுதி மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் வரலாறு ஈழத்தமிழரின் விடுதலை வேட்கையின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒட்டுசுட்டானுக்கு அண்மையில் உள்ள காதலியார் சம்மளங்குளத்தில் வாழ்ந்த குருவிச்சி நாச்சியார் எனினும் பெண்ணை பணி டாரவன் னியன் காதலித்ததாகவும் , போர்க்களத்திற்கு வீரத்திலகமிட்டு அனுப்பி வைத்த குருவிச்சி நாச்சியார், போரில் வென்று வந்ததும் தன்னைத் திருமணம் புரிவதாக பண்டாரவன்னியனிடம் வாக்குறுதி பெற்றிருந்ததாகவும் துர் அதிர்ஷ்டவசமாக பண்டாரவன்னியன் போரில் வீரமரணமடைந்து விடவே குருவிச்சி நாச்சியார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பாரம்பரியக் கதை அமைகின்றது. குருவிச்சி நாச்சியாரின் பூவுடல் அந்நியரின் கைகளை
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 64

எட்டக்கூடாது என்பதற்காக அவளது உடலை பேராற்றின் கிளையொன்றில் அவளது பெற்றோர் விட்டு விடுகின்றனர். (தற்போது இது குருவிச்சி ஆறு என்று வழங்கப்படுகின்றது) கர்ணபரம்பரைக் கதையாக வழங்கி வந்த இது வரலாற்றுக் குறிப்புகளுடனான நாடக வடிவமாக இப்போது மலர்ந்திருக் கின்றது. நாடகத்திற்கான வரலாற்றுச் சான்றுகள், வன்னியிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் நாச்சிமார் வழிபாடு பற்றிய குறிப்புக்கள், நூலின் தரத்தை உயர்த்துகின்றன. குருவிச்சி நாச்சியார் சலிப்பு, வட்டுவாகல் நாச்சிமார் கோவில் வரலாறு, அடங்காப்பற்று வன்னி வரைபடங்கள், என்பன மேலும் இந்நூலுக்கு அணிசேர்க்கின்றன.
33. பண்ணைப்பாலக்கும்மி. சிவரீ சி.அகிலேஸ்வர சர்மா(மூலம்), வே.இ.பாக்கியநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.இ.பாக்கிய நாதன், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: காயத்ரி அச்சகம்) 22 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 24x14 செ.மீ.
இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முற்பட்ட இக்கும்மி, அந்நாளில் யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றாகிய மண்டைதீவையும் யாழ்ப்பாண நகரையும் இணைக்கும் பண்ணைப்பாலத்தின் தேவையை வலியுறுத்தி ஆக்கப் பெற்றதாகும்.
34. பாட்டி சொன்ன கதைகள (உருவகம்). முருகபூபதி. கொழும்பு 13: மல்லிகைப்பந்தல், 201, 1/1 ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (சென்னை 26: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது வீதி, குமரன் காலனி, வடபழநி) 96 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12.5 செ.மீ.
இக்கதைகளில் வரும் மிருகங்களும் பறவைகளும் மற்றும் உயிரினங்களும் மரம்-செடி-கொடிகளும் பேசுகின்றன.தத்தமக்கேயுரிய பண்பைப் போதிக்கின்றன. கதையில் நாம் அன்றாடம் சந்திக்கும் அரசியல், சமூகம், குடும்பம், மனிதர்களை நாம் இங்கு இனம் காண முடிகின்றது.
35. மக்கள் வாழ்வில் பழமொழிகள்: பழமொழிக் கட்டுரைகள். க.சத்தியானந்தசிவம் (சச்சி மாஸ்டர்). யாழ்ப்பாணம்: சுகிர்தா பதிப்பகம்,
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 65

Page 35
40, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்) 128 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 18x12 செ.மீ.
தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ள தமிழ்ப் பழமொழிக ளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கான விளக்கங்கள் கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளன. மக்களின் மனப்பாங்குகளைப் பொதுவாகவும், யாழ்ப் பாணத்துத் தமிழரின் மனப்பாங்கினைக் குறிப்பாகவும் வெளிப்படுத்தும் சமூக, பண்பாட்டுக் கட்டுரைகள்.
36. மலைநாட்டு மக்கள் பாடல்கள். சி.வி.வேலுப்பிள்ளை, சென்னை 17: கலைஞன் பதிப்பகம், 54, பாண்டிபஜார், 1வது பதிப்பு, 1983. (சென்னை17: தமிழோசை அச்சகம், 84, ஹபிபுள்ளா வீதி) 104 பக்கம். விலை: இந்திய ரூபா 7. அளவு 18x12 செ.மீ.
மலையகத்தில் வாய்மொழியாக வழங்கிவரும் நாட்டார் பாடல்களின் தொகுப்பு.
37. மலையக பாரம்பரியக் கலைகள். மாத்தளை வடிவேலன். கொழும்பு 13: குறிஞ்சிப் பதிப்பக வெளியீடு, 129/25, ஜெம்பட்டா வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1992 (கொழும்பு 14: த பெர்னாண்டோ அச்சகம், 79 சென் ஜோசப் வீதி).
vi, 42 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 18x12.5 செ.மீ.
மலையகத்தின் பாரம்பரியக் கலைகள் பற்றி அவ்வப்போது வீரகேசரி, குறிஞ்சிப்பரல்கள், பகுதியில் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலையகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள், கரகக் கலை, பொன்னர் சங்கர் கூத்து, அர்ச்சுனன் தபசு, கும்மி, கோலாட்டம், காவடி முதலான சிற்றாட்டங்கள், சிலம்பக்கலை, காமன்கூத்து, ஆகியன பற்றிய அறிமுகத்தை வழங்கும் நூல்.
38. மலையக வாய்மொழி இலக்கியம். சாரல்நாடன். சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1993, (சென்னை02: சூர்யா அச்சகம்)
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 66

88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 செ.மீ.
எழுத்தறிவற்ற பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் நாட்டார் பாடல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இன மக்களிடையேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழி இலக்கியமாக இருந்து வருகின்றது. தென்னிந்தியத் தமிழ்மக்களின் வம்சாவளியினர் என்பதால் தென்னிந்திய தமிழக நாட்டார் பாடல்களையொத்த பல பாடல்கள் இவர் தம்வாய்மொழி வழக்கில் இருந்துவந்துள்ளன. தம் வாழ்க்கைச்சூழல் இயல்புகளுக்கேற்ப அவை திரிபடைந்து மலையக மக்களுக்கேயுரிய தனித்துவமான பாடல்களாக மிளிர்வதைக் காணலாம். மலையக மக்களின் வாய்மொழி இலக்கியம் பற்றிய 12 கட்டுரைகளும் இதை ஆய்வு ரீதியாக வெளிக்கொணர்கின்றது.
39. மாருதப்புரவல்லி கப்பற்பாட்டு. த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்)
X,36 பக்கம். விலை: ரூபா 4. அளவு: 18x12.5 செ.மீ.
மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள் என்ற தொடரில் முதல் நூலாக வெளிவந்துள்ளது. மக்கள் கலைகளின் மறுமலர்ச்சிக்கான தேவை பற்றிய ஆசிரியரின் கருத்தும் கப்பற்பாட்டும் இதில் இடம் பெற்றுள்ளன.
40. மாவை முருகன் காவடிப்பாட்டு.த.சண்முகசுந்தரம். தெல்லிப் பழை: அருள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1981. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்) 18 பக்கம். விலை: ரூபா 2.50. அளவு: 18.5x12 செ.மீ.
மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள் தொடரில் 3வது நூல். காவடிக்கலை பற்றிய தகவல்களும் ஈழத்தில் காவடிப்பாட்டுக்களின் வரலாறும் மாவிட்டபுரம் முருகன் மேற்பாடப்பெற்ற காவடிப் பாட்டும் இடம் பெறுகின்றன.
41. முள்ளில் படுக்கையிட்டு. S. நஜிமுதீன். சாய்ந்தமருது: டீன்ஸ் பதிப்பகம், கலை இலக்கிய வட்டம், அக்கரைப்பற்று, 1வது பதிப்பு, ஜூலை 2000. (அக்கரைப்பற்று: செலக்ஷன் அச்சகம்).
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 67

Page 36
XV, 86 பக்கம், விலை: ரூபா 80. அளவு: 19.5x14 செ.மீ.
கிராமப்புற மக்களின் பண்பாட்டுக் கோலங்களுள் கவி எனப்படும் பாடல்கள், மற்றும் பழமொழிகள், மூதுரைகள், விடுகதைகள், மரபுக்கதைகள், கதைப்பாடல்கள், குழச் சொற்கள் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. அம்மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை, பண்பாடு, மரபுகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த இவை உதவுகின்றன. இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் இத்தகைய நாட்டுப்புற பண்பாட்டியல் கவிதைகள் கிழக்கு மாகாணத்தில் வெகுவாகக் காணப்பட் டன. வாய்மொழிப்பாடல்களாகவே காணப்பட்ட இத்தகைய நாட்டார் கவிதைகள் அழிவுற்றுவரும் இக்காலத்தில் இத்தகைய பாடல்களைத் தொகுத்து கலாநிதி எஸ். நஜிமுதீன் அவர்கள் இந்நூலில் வழங்கியுள்ளார். ஒரு சமூகத்தின் வாழ்வுமறை இங்கு நன்கு பிரதிபலிக்கின்றது. தமிழ் மொழியுடன் எவ்வித முறிவும் இல்லாது கிழக்கிலங்கை முஸ்லீம்கள் இரண்டறக் கலந்து நிற்பதை இந்நூலிலுள்ள நாட்டார் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
42. மூன்று நாடகங்கள்: தென்பாங்குக் கூத்து. பா.அமிர்தநாயகம். யாழ்ப்பாணம்: பா.அமிர்தநாயகம், இல. 15, மதிமலர் இல்லம், இராசாவின் தோட்டம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). xvi, 317 பக்கம், விலை: ரூபா 300, அளவு: 22x14.5 செ.ம.
பனங்காமத்து அரசன், கவிஞன் கண்ட கனவு, ஞானசவுந்தரி ஆகிய மூன்று தென்பாங்குக் கூத்து நாடகங்களின் தொகுப்பு. தென்பாங்குக் கூத்துக்களைப் பாடிய புலவர்களும் அவர்கள் வாழ்ந்த இடங்களும் காலங்களும் இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் அரும்பதச் சொற்களுக்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
43. வட இலங்கை நாட்டார் அரங்கு. காரை செ.சுந்தரம்பிள்ளை.சென்னை 26: குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2000.(சென்னை 5: தேவா ஒப்செட் அச்சகம்) 403 பக்கம், விளக்கப்படங்களும் புகைப்படங்களும். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21x13.5 செ.மீ.
வட இலங்கை நாட்டார் அரங்கின் பாரம்பரியம் பற்றி இந்நூல் முழுமையாக
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 68

ஆய்வு செய்கின்றது.
44. வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள். வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம். கொழும்பு 6: மு.இராமலிங்கம், 15 ஹாமர்ஸ் அவெனியு, 1வது பதிப்பு, டிசெம்பர் 1961. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xi, 88 பக்கம், விலை: ரூபா 2.50. அளவு: 21.5x14 செ.மீ.
ஒன்பது இயல்களில் அமைந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு நூல். தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிகள், வயல் வேலைகளோடு தொடர்புடைய பாடல்கள், கொடும்பாவிப் பாடல்கள், மணமக்களும் குடிமக்களும், பிரிவாற்றாமை, கப்பற் பாடல்கள், நெல் குற்றும் பாடல்கள், ஆகிய நாட்டார் பாடல்கள் இதில் அடங்கியுள்ளன.
45. வடபுல நாட்டார் வழக்கு. வல்வை ந.அனந்தராஜ். வல்வெட்டித்துறை: நந்தி பதிப்பகம், தெணியம்பைத் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப்). x, 154 பக்கம், விலை: ரூபா 180, அளவு: 20x14.5 செ.மீ. ISBN: 95596845-2-3.
ஈழத்தமிழர்களின் குறிப்பாக வடபுல மக்களின் பாரம்பரிய நாட்டுப்புற வழக்காறுகள் பற்றி சுவைபட இந்நூலை எழுதியுள்ளார். நாட்டாரிலக் கியத்தின் தோற்றுவாய், அதன் பண்புகள், அவை எவ்வாறு வடபுலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பவை பற்றியும் பிரசவச் சடங்கு, தாலாட்டு, பூப்புனித நீராட்டு, திருமணம், தொழில்சார்ந்த வழக்காறுகள், வழிபாடு, ஒப்பாரி, விளையாட்டுக்கள் என்பன தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற வடபுல பிரதேச மக்களின் பாரம்பரிய வழக்காறுகள் பற்றி ஆதாரங்களுடன் எழுதப்பட் டுள்ளன. முதுமானிப் பட்டம் பெற்று தமிழில் சிறந்த புலமை பெற்றுள்ள வல்வை.ந.அனந்தராஜ் அவர்களின் மொழி ஆளுமையும், லாவகமான நடையும் இந்நூலினூடாகப் புலப்படுகின்றன.
46. வதனமார் வழிபாடு: ஒரு மதிப்பீடு. ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், ரொரன்ரோ, 1வது பதிப்பு, புரட்டாதி 2000. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், # 3, 1292. Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6).
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 69

Page 37
72 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 20, அளவு: 21x14 செ.மீ.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழக்கிலிருந்து வந்த வதனமார் வழிபாடு பற்றிய நாட்டாரியல் ஆய்வுக்கான முன்னோடி நூல் இதுவாகும். கிழக்கிலங்கைப் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் கைதொழும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஹவதனமார் தொடர்பான சடங்குகள், பட்டிகளில் பட்டியின் காவல் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள் போன்ற நடைமுறைகள் பற்றி நாட்டாரியல் பார்வையில் இச்சிறுநூல் பேசுகின்றது.
47. வரவும் வாழ்வும்: மலையக நாட்டாரியல் சிந்தனைகள். சு.முரளிதரன். கொட்டகலை: சாரல் வெளியீட்டகம், இல.7, ரொசிட்டா பல்கூட்டுச் சந்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (ஹட்டன்: காயத்திரி பிரின்டர்ஸ், இல.50, டன்பார் ரோட்). (2), 62 பக்கம், விலை: ரூபா 160, அளவு: 195x14 செ.மீ. ISBN: 9558589-02-0
மலையக நாட்டாரியல் கூறுகளான கூத்துக்கள், வழிபாடுகள், நாட்டார் பாடல்கள் பற்றிய காத்திரமான புதிய சிந்தனைகள், தேடல்கள் கொண்டதாக இந்நூல் காணப்படுகின்றது. வரவும் வாழ்வும் மலையக கலாச்சாரம் குறித்த பார்வை, நாட்டாரியல் வெளிச்சத்தில் மலையகத்தை அணுகுதல், மலையகத்தின் காமன் கூத்து சில அர்த்தங் கோடல்கள், மலையக இதிகாச கலாச்சாரத்தின் ஒரு கூறு: விவரணப் பார்வையில் அருச்சுணன் தபசு, தோட்டப் பகுதியில் மாரியம்மன் வழிபாடு: சிறுதெய்வ மரபும் பெருந்தெய்வ மரபும், கடவுள்களை சாட்சியாகக் கொண்டு மனிதர்கள் க்ைகுலுக்கிக் கொள்ளல், தொழிற் சமூக உளநிலைகளும் மலையக நாட்டார் பாடல்களும் ஆகிய ஏழு கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கி யுள்ளது.
48. வன்னிப்பிராந்தியக் கூத்துக்கள்: பாரம்பரியத் தேடல். அருணா செல்லத்துரை. கொழும்பு 8: அருணா வெளியீட்டகம், A15/1/1 Maning Town Housing Complex, Mangala Road, 16 g Lugitil, 2000 (G35TQpubl: யுனி ஆர்ட்ஸ்) XVi,133 பக்கம், விலை: ரூபா 150. அளவு: 22x14.5 செ.மீ. 1SBN 95596159-3-9
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 70

வன்னியின் வரலாறும், வரலாற்றிற்கூடாக அவ் வளநாட்டில் முகிழ்ந்தெழுந்த கலைகளும் சிறப்பாகக் கூத்து, இசை, நாடகம், நவீன நாடகக் கலைகளும் அவற்றின் இன்றைய போக்குகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தான் தயாரித்த நாடகங்கள் சம்பந்தமாக ஏனையோர் கூறிய தகவல்களையும் ஆசிரியர் இதில் தந்துள்ளார்.
49. வன்னிவள நாட்டுப்பாடல்கள். செ.மெற்றாஸ் மெயில். ஒட்டு சுட்டான்: முல்லை இலக்கிய வட்டம், மிதிலை. 1வது பதிப்பு, 1980.(யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி) XXXX,132 பக்கம், விளக்கப்படம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 15, நூலகப்பதிப்பு: ரூபா 20. அளவு: 21x14 செ.மீ.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் வழக்கிலுள்ள நாட்டார்பாடல்களின் தொகுப்பு.
50. விறகு வெட்டி: ஒரு தமிழ் நாடோடிக்கதை. ஜெகதீஸ்வரம் பிள்ளை. 6)60iiL6: The Refugee Council, 3 Bond way, London SW8 lS.J., 16...g5 பதிப்பு, 1998. (அச்சக விபரம் அறியமுடியவில்லை) 16 பக்கம், வண்ணப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 2.70. அளவு: 29.5x21 Gls.LÉ.
பிரபல தமிழ் நாடோடிக்கதைகளில் ஒன்றான விறகு வெட்டியின் கதை ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வண்ணப்படங்களுடனும் வெளியிடப்பட் டுள்ளது. பின்னிணைப்பாக இலங்கையின் வரலாற்றுக் குறிப்பு இறுதி இரு பக்கங்களில் ஆங்கிலத்தில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
51. வெறியாட்டு: பாட்டுக்கூத்து. இ.முருகையன். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலககியப் பேரவை, 1வது பதிப்பு, ஜூலை 1986. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், 407 ஸ்ரான்லி வீதி) 46 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 20.5x13 செ.மீ.
”வேலியே பயிரை மேய்வது போல” என்பது காலங்காலமாகத் தமிழ் மக்களிடையே வழங்கி வரும் ஓர் உவமைத்தொடர். இதில் வரும் உவமையை விரிவாக்கி அழுத்தம் தந்து காட்சிப்படுத்துவதே இந்த நாடகம். நமது மக்கள் வாழ்விலே அழியாத வடுக்களையும் தாக்கங்களையும் சேதங்களையும் உண்டு பண்ணி வரும் நிகழ்ச்சிகள் யாவற்றின் கூட்டு என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 71

Page 38
மொத்தமே இதன் உள்ளடக்கமாகும். - ஆசிரியர் (முன்னுரையில்)
1981-ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் பேரினவெறியர்களால் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்வதாகக் காட்சிப்படுத்தப்பட்டு பாட்டுக்கூத்தாக யாழ்ப்பாணம் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.
சிந்தனைவட்டம் நாளைய சந்ததியின் இன்றைய சக்தி
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 72
 

நூலாசிரியர் பற்றி
நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் பணியொன்றினை, தமிழரான தனியொருவரால் மேற்கொள்ளவும் முடியும் என்பதை செயலில் காட்டி சாதனை படைத்து வருபவர் மூத்த நூலகவியலாளரான திரு. எனி.செல்வராஜா அவர்கள். ஈழத்தவரின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990இல் தொடங்கி 2006 வரை நான்கு தொகுதிகளை, ஒவ்வொன ரிலும் ஆயிரம் நூல்களாக ‘நூல்தேட்டம்” எனற பெயரில் இவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் வெளியான 150 சிறப்புமலர்களினி விபரங்களைத் தொகுத்து சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி (தொகுதி 0) எனும் இந் நூலை எழுதியதனூடாக ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் மற்றுமொரு பக்கத்துக்கு இவர் உரித்துடையவராகின்றார். (இந்நூலினை வெகுவிரைவில் அயோத்தி நூலக சேவைகளுடன் இணைந்து சிந்தனை வட்டம் வெளியிடவுள்ளது)
1970களில் இலங்கை நூலகச் சங்கத்தினி நூலகவியல் நூலக விஞ்ஞானத் துறையில் டிப்ளோமா பயிற்சி பெற்ற இவர், சுன்னாகம் இராமநாதன் பெணிகள் கல்லூரி, சர்வோதய யாழ். மாவட்ட நூலகம் ஆகியவற்றில் பணியாற்றிய பின்னர் இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகர் பதவியை ஏற்று சிலகாலம் திருமலை மாவட்டத்திலும் பதவி வகித்தார்.
1981 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபையின் UNDP Volunteer Project இனி கீழ் இந்தோனேஷியாவிற்கு கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகச் சென்று, அங்குள்ள பணிடுங் மாநிலத்தில் கிராம நூலகத் திட்டமொன்றை வெற்றிகரமாக அறிமுகம் செய்து வைத்தார்.
1982இல் நாடு திரும்பிய பின்னர், இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் யாழ். மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாளராகப் பதவியேற்று 12*சிளை நூலகங்களை’ UNESCO திட்டத்தினி உதவியுடனி உருவாக்கியிருந்தார். 1983 இல் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட ஈவ்லின
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 73

Page 39
இரத்தினம் பல்லினப் பணிபாட்டியல் நிறுவனத்தினி ஆய்வு நூலகப் பொறுப்பாளர் பதவியை ஏற்ற இவர் குடாநாட்டினி போர்ச் சூழலால் 1990இல் கொழும்பிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். அங்கும் International Centre for Ethnic Studies, gag) scocu assusiast 9.gy66)66i அமைச்சு, கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பைப் பொறுப்பேற்று அந்நிறுவன வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருந்தார்.
யாழ்ப்பாணப் பொதுநூலக ஆலோசனைக் குழு உறுப்பினர், இலண்டனர் தமிழர் தகவல் நிலைய நூலக சேவைகளின் ஆவணக் காப்பகப் பிரிவினி இயக்குநர், ஜேர்மனியிலுள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் சங்க ஆலோசகர், ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கக் காப்பாளர், அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகர்-நிர்வாக இயக்குநர் எனினும் பல பதவிகளை சமூக நோக்குடன் வகித்துவந்துள்ள திரு. செல்வராஜா, நூல்தேட்டம் 5வது தொகுதியின் தொகுப்புப் பணியினையும், ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களைப் பட்டியலிடும் பணியினையும், மலேஷிய எழுத்தாளர் சங்கத்துக்காக, மலேசிய நூல்தேட்டம் ஒன்றினைத் தொகுத்து வெளியிடும் பணியினையும் தற்போது மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தின் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் IBC அனைத்துலக ஒலிபரப்புச் சேவையில் வாராந்த “காலைக் கலசம்” இலக்கியத் தகவல் திரட்டினை 2002 முதல் வழங்கி வருகிறார். தாயகத்திலும் புகலிடத் திலும் ஊடகங்களில் பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருகின் றார.
நூல்தேட்டம் (நான்கு தொகுதிகள்) உருமாறும் பழமொழிகள், கிராம நூலகங்களின் அபிவிருத்தி, நூலகப் பயிற்சியாளர் கைநூல், கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான கைநூல், நூலகர்களுக்கான வழிகாட்டி, சனசமூக நிலையங்களுக்கான கைநூல், ஆரம்ப நூலகர் கைநூல், யாழ்ப்பாணப் பொது நூலகம்- ஒரு வரலாற்றுத் தொகுப்பு, மலேசியத் தமிழ் இலக்கியம் (தேசம் dou)c53g), (JT65u6) Udayas 6i, A Select Bibliography of Dr. James T.Rutnam, Rising from the Ashes, sedu606) go, 6)66)666 g/ 96.666 (6) இலங்கையிலும், இங்கிலாந்திலும் எழுதி வெளியிடப்பட்ட நூல்களில் சிலவாகும்.
திரு செல்வராஜாவினி நூலக சேவை, எழுத்துப்பணி, வெளியீட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கெளரவிக்கும் வகையில் 2004இல் கனடாவின் ‘தமிழர் தகவல்” சிறப்பு விருதும், 2005இல் இலங்கையில் சிந்தனை வட்டம் “எழுத்தியல் வித்தகர்” விருதும் வழங்கப்பட்டன. தற்போது தமது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வரும் இவர் பிரித்தானியாவினர் (Royal Mail) தபால்துறையின் அந்நிய நாணயப் பிரிவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 74

f ്. شعبھی\
சிந்தனை வட்ட வெளியீடுகள்
கையிருப்பில் உள்ளவை.
நிஜங்களினி நிழல் (கவிதைத் தொகுதி) த. திரேஸ்குமார் ஆப்கானி மீதான அமெரிக்கத் தாக்குதல்(ஆய்வு) புன்னியாமீன்
புதுப்புனல் (கவிதைத் தொகுப்பு) நாச்சியாதீவு பர்வீன்/ பஸ்மினா எண்ணச்சிதறல்கள் (கவிதைத் தொகுப்பு) சுமைரா அன்வர் திசைமாறிய தீர்மானங்கள் (சிறுகதைத் தொகுப்பு) சுலைமா சமி இக்பால். ISBN 955-8913-02-2 தங்கப்பாளம் (கவிதைத் தொகுதி) மூதூர் கலைமேகம் ISBN 955-8913-07-3 நெற்றிக் கணி (கவிதைத் தொகுதி) நாகபூஷணி கருப்பையா ISBN 955-8913-08-1 வாழ்க்கை வணிணங்கள் (சிறுகதைத் தொகுதி) கலாபூஷணம் நயீமா சித்திக் ISBN 955-8913-21-9 பொது அறிவுச்சரம் (தொகுதி 1)
புன்னியாமீன் ISBN 955-8913-50-2 பொது அறிவுச்சரம் (தொகுதி 2)
புன்னியாமீன் ISBN 955-8913-51-0 பொது அறிவுச்சரம் (தொகுதி 3)
புன்னியாமீன் ISBN 955-8913-52-9 பொது அறிவுச்சரம் (தொகுதி 4)
புன்னியாமீன் ISBN 955-8913-53-7 பொது அறிவுச்சரம் (தொகுதி 5)
புன்னியாமீன் ISBN 955-8913-56-1 பொது அறிவுச்சரம் (தொகுதி 6 ) புன்னியாமீன் ISBN 955-8913-57-X
பொது அறிவு நிகழ்காலத் தகவல்துளிகள் (தொகுதி 1)
புன்னியாமீன் ISBN 955-8913-58-8
என். செல்வராஜா
- வாய்மொழி மரபில் விடுகதைகள்
80/-
100/-
100/-
100/-
100/-
60/-
100/-
120/-
60/-
60/-
60/-
60/-
60/-
60/-
60/-
75

Page 40
:
இலங்கை முளப்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு - தொகுதி 1 கலாபூஷணம் புன்னியாமீன் ISBN 955-8913-14-6 200/- இலங்கை முளப்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு - தொகுதி 2 கலாபூஷணம் புன்னியாமீன் ISBN 955-8913-16-2 200/- இலங்கை முளப்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு - தொகுதி 3
கலாபூஷணம் புன்னியாமீன் ISBN 955-8913-20-3 200/- மலைச் சுவடுகள் (கவிதைத் தொகுதி) மாரிமுத்து சிவகுமார் ISBN 955-8913-13-8 120/- பொது அறிவுக்களஞ்சியம் எஸ்.எல்.எம். மஹற்ரூப் ISBN 955-8913-49-9 260/- அடையாளம் (கவிதைத் தொகுதி) செல்வி எஸ். சுதாகினி ISBN 955-8913-29.4 70/- புலமை தீபம் (திருத்திய 4ம் பதிப்பு) புன்னியாமீன் / மஸீதா புன்னியாமீன் ISBN 955-8913-17-0 260/- நூலியல் பதிவுகள் (ஆய்வுக் கட்டுரைகள்) என். செல்வராஜா SBN 955-8913-28-6 200/- மனங்களினி ஊசல்கள் தாரிகா மர்ஸ்க் ISBN 955-8913-18-9 200/- ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள்
ISBN 955-8913-35-9 200/- Some Basic Techniques for a modern Librarian Komathy Murugathas ISBN 955-8913-41-3 160/- விஞ்ஞான வினாச்சரம் மஸிதா புன்னியாமீன் ISBN 955-8913-54-5 190/- வாய்மொழி மரபில் விடுகதைகள் என்.செல்வராஜா ISBN 955-893-37-5 140/- இளப்லாமிய கதைகள் (3ம் பதிப்பு) ஜே. மீராமொஹதீன் ISBN 955-8913-06-5 100/- २’---- வாசிகசாலைகளுக்கு 25% விசேட கழிவு
தொடர்புகளுக்கு
The Secratary C.V. PUBLISHERS (PVT) LIMITED 14, Udatalawinna Madige, Udatalawinna -20802
என். செல்வராஜா - வாய்மொழி மரபில் விடுகதைகள் 76
 


Page 41


Page 42


Page 43
நிறுவன ரீதிய பணியொன்றி பேற்கொள்ள சாதனை பை திரு என்.செ III|IûኒዄJI፡i፡ü] [ilI
தேே
ஒவ்வொன்றிலு என்ற பெயரில்
| է IIIH. நூலகவியல் ಭಕ್ಷ್ಣ್ಣ Hi, ii ենյIII]], */ । ନାଁ: உள்ளுராட்சி சிலகாலம் திருமலை மாவட்டத்திலும் பத bII (64,67 g zouu76ër UNDP Woltinteer T கிராமிய பொது நூலகத் திட்டமொன்றை ெ
1982இல் நாடு திரும்பிய பின் சங்கத்தின் யாழ் மாவட்ட மத்திய நூலகம் நூலகங்களை' UNF%() ?": திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட ஈவ் நிறுவனத்தின் ஆய்வு நூலகப் போறுப்பாள சூழலால் 1990இல் கொழும்பிற்கு
LLLLLLLLL SL LLLLL LL LLLLL LLLLLLLLSSY கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றி அந்நிறுவன வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்
யாழ்ப்பானப் பொதுநூலக ஆே தமிழர் தகவல் நிலைப்ப நூலக சேவைகள் ஜேர்மனியிலுள்ள் சர்வதேச புiம்பெயர் : எழுத்தாளர் சங்கக் காப்பாளர், அயோத் இயக்குநர் என்னும் பல பதவிகளை ச செல்வராஜா, நூல்தேட்டம் 3வது ே ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களைப் எழுத்தாளர் சங்கத்துக்காக, மலேசிய நூல் ப3ரியினையும், இப்ங்கையில் விெய தொகுத்து ': வழிகா பணியினையும் தற்போது மேற்கோண்டுள்ள
இங்கிலாந்தின் லண்டனிலிருந்து ஒலிபர சேவையின் வாராந்த "காணல்க் கலசம்' வழங்கி வருகிறார். தாயகத்திலும் புகலிட தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். வெளியிடப்பட்டுள்ளன. இத்தன; "தமிழர் தகவல்" சிறப்பு விருதும், ! ' எழுத்தியல் வித்தகர்' விருதும் வழங்கி ெ
தற்போது தமது குடும்புத்துடன் பு இவர் பிரித்தானியாவின் sä Mai || உயர் அதிக்ாரியாகப் பணியாற்றுகின்றார்.
 
 

பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் னை. தமிழரான தனியொருவரால் பும் முடியும் என்பதை சேபவில் காட்டி டத்து வருபவர் முத்த நூலகவியலாளரான ஸ்வராஜா அவர்கள். ஆத்தரின் தமிழ் ஆவணப்படுத்தும் | Iեմl1|նյ1 || | | ']''}{Yჭჯნას. HDr. հllf:1}]] நான்த தொகுதிகளை, ம் ஆயிரம் நூல்களாக "நூல்தேட்டம்"
இவர வெளியிட்டுள்ளார்.
னில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலக விஞ்ஞானத் துறையில் டிப்ளோமா இவர, சுன்னாகம் இராமநாதன் பெனர்கள் சர்வோதய யாழ். மாவட் நூலகம் பணியாற்றிய பின்னர் *і,6:Піѣлx+ அமைச்சின் நூலகர் பதவியை ஏற்று வி வகித்தார். 1981 பெப்ரவரியில் ஐக்கிய 11:1 இன் கீழ் இந்தோனேஷியாவிற்கு வற்றிகரமாக அறிமுகம் செய்து வைத்தார்,
ானர். இப்ங்கை சர்வோதய சிரமதானச் ப் பொறுப்பாளராகப் பதவியேற்று 12 கிளை தவியுடன் உருவாக்கியிருந்தார். 1983 இல் வின் இரத்தினம் பல்லினப் பன்ைபாட்டியல் ர் பதவியை ஏற்ற இவர் குடாநாட்டின் போர்ச் தடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். அங்கும் நது சமய கலாசார அலுவலகளே அமைசக, ஒன் நூலகப் புனரமைப்பைப் பொறுப்பேற்று றினார்.
லோசனைக் குழு உறுப்பினர், இலண்டன் பின் ஆவணக் காப்பகப் பிரிவின் இயக்குநர், சங்க ஆலோசகர், ஜேர்மன் தமிழ் த்தி நூலக சேவையின் எய்தாபகர்-நிர்வாக முக நோக்குடன் வகித்துவந்துள்ள திரு. தாகுதியின் தொகுப்புப் பணியினையும், பட்டியலிடும் பணியினையும், MCCCCFF" தேட்டம் ஒன்றினைத் தொகுத்து வெளியிடும் ன 131) சிறப்பு:ப்ர்களின் விபரங்களைத் ட்டி (தொகுதி II எனும் நூலை வெளியிடும் III || .
ப்பாகும் 13 அனைத்துலக ஒலிபரப்புச் இலக்கியத் தகவல் திரட்டினை 21 முதல் த்திலும் ஊடகங்களில் பல கட்டுரைகளைத் இதுவரை இவரால் 17 நூல்கள் எழுதி கய பணிகளுக்காக 2004இல் கனடாவின் 15இல் இலங்கையில் சிந்தனை வட்டம் களரவித்தன.
ப்ெபம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வரும் பால்துறையின் அந்நிய நாணயப் பிரிவில்
ISBN 955-893-37-5