கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பலாத்காரம்

Page 1


Page 2


Page 3

O ,28,船仪79 பல ர தகர ர ம
(சிறுகதைத் தொகுப்பு)
சுதாராஜ்
வெளியீடு: தமிழ்ப்பணிமனை 28,4山 ஒழுங்கை, அரசடி வீதி,
யாழ்ப்பாணம்.

Page 4
பலாத்காரம்
(சிறுகதைத் தொகுப்பு)
- வெளியீடு: தமிழ்ப்பணி மணே
ஆசிரியர் : சி. இராஜசிங்கம் (சுதாராஜ்)
ஓவியர் : சி. குணசிங்கம் (ரக்)
அச்சுப்பதிப்பு:
கலாநிலையப் பதிப்ப்கம்
303, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.
பதிப்புரிமை: ஆசிரியருக்கு
முதற் பதிப்பு: 10-07-1977
விலை ரூபா 4-15

என்
அன்புப் பெற்றேருக்கு இந்நூல்
சமர்ப்பணம்

Page 5
வணக்கம்
நண்பர் சுதாராஜ் எழுதிய பத்துச் சிறுகதை கள் நூலுருப்பெற்று வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிருேம்.
இனிமையாகப் பேசி, பண்பாகப் பழகி ,பிறருக்கு உதவி செய்கின்ற சுபாவத்தினுல் அவர் பல நண்பர் களைச் சம்பாதித்திருக்கிறர். சிறுமைத்தனங்களை நேரடி யாகச் சாடுகின்ற நேர்மைத்திறனுல் சிலர் இவரை விரோதித்துமிருக்கின்றனர்! எழுத்தளவில், பேச்சளவில் மாத்திரமின்றி செயலிலும் பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறர்.
ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தொடர்ந் தும் நூலுருவில் வெளியிடவேண்டுமென்பது தமிழ்ப் பணிமனையின் குறிக்கோள். வாசகர்களின் ஆதரவு கை கொடுக்கும் என்பதும் எமது அசையாத நம்பிக்கை.
நன்றி.
மு. சிவலோகநாதன் தமிழ்ப்பணிமனையினருக்காக.

படித்தேன்: சொல்கிறேன்
ஆசிரியர் :
* பலாத்காரம்” என்ற இந்நூலின் ஆசிரியர் சி. இராஜசிங்கம் (சுதாராஜ்) என் மாணவர். இவரின் தமிழ் ஆற்றலும் ஆர்வமும் எனக்கு நன்கு தெரிந் தவை. * யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற முனைப்போடு * தமிழ்ப்பணிமனை” என்ற கலை இலக்கிய ஆர்வலர் ஒன்றியம் என்ற நிறுவனத்தை அமைத்து, அதன் பணியாளராகப் பணியாற்றி தமிழ் பரப்பும், வளர்க்கும் சேவையும் நாடறிந்தது. அத்துடன் சிறு கதைப்போட்டிகள் பலவற்றிலும் இவர் வெற்றியீட்டி யி” க்கிருர். அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி இது.
கதைக்கரு :
இந்நூலில் உள்ள பத்துக்கதைகளில் ஆறு சமூகக்குறைபாடுகள் பற்றியவை. இரண்டு பாலியல் தொடர்பானவை வீண் சந்தேகத்தினுல் ஒரு குடும்பம் குலைவது இன்ணுெரு கதை. சமூகப்பலவீனம் பற்றியது மற்றது. ஆகவே தனக்குத்தெரிந்த விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறர் என்பது தெளிவு. சமூகக் குறைபாடுகளை சாடுகிருர், நையாண்டி செய்கிருர், நகைச்சுவை படவும் சொல்கிறர். தன்னைச் சுற்றி இருப்பவர்களை, நடப்பனவற்றை கூர்ந்து நோக்குகிருர் என்பதும் அவற்றுக்கு அநாயாசமாக ஒரு கலைவடிவம் கொடுக்கிருர் என்பதும் இந்நூலை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியவரும். அநியாயத்தை, ஒழுக்கக் கேட்டை கண்டு இவர் சீறுவதும் குமுறுவதும் நன்கு புலனுகிறது.

Page 6
கதைக்களம் :
இவருடைய கதைகளில் ஐந்து கொழும்பு மாநகரிலும் நான்கு யாழ்ப்பாணத்திலும் ஒன்று கொழும்பு - யாழ்ப்பாண மெயில் வண்டியிலும் நடை பெறுகின்றன. இவருக்கு நன்கு பரிச்சயமான இவ் விடங்கள் கதைகளுக்கு ஒரு உண்மைத்தன்மையை கொடுக்கின்றன.
பாத் திரங்கள் :
முடமான பிச்சைக்காரன், பிச்சைக்கார கண் மணி, சண்டியன் கண்ணன், தூயகாதலி வனிதா, சின்னும்பி (சின்னத்தம்பியின் மருவல் ), சிங்களப் பரீட்சையில் கோட்டைவிடும் எழுத்தன், அவன் மனைவி லலிதா, நாகரீகநங்கை வத்சலா, மற்றவர் குடியைக் கெடுக்கும் சபாபதி - குஞ்சுப்பிள்ளை சோடி, பெட்டைக் கோழியின் மனைவியாக வரும் மிஸஸ் அருள்நாயகம், பிள்ளையில்லாத திருவாட்டி சொர்ணம் தில்லைக்கூத்தன், ரயில் பயணிகள் - எல்லோருமே எம்மைச்சுற்றி நடமாடுபவர்கள்தான். எப்பொழுதோ நாம் சந்தித்த பேர்வழிகள்தான் - அதனுலும் இக்கதைகளில் எவ்வித போலித் தன்மையையும் காணமுடியாது.
கதை சொல்லும் பாணி :
சுற்றி வளேக்காமல், நேரடியாக, ஆனல் கவர்ச்சி யாக கதைகளைச் சொல்லும் திறன் இவருக்கு கைவந் திருக்கிறது. அசிங்கமெனப்படும் விஷயங்களைக் கூட " நாசூக்காக, மறைக்காமல் ஆனல் மொட்டையாயில்
லாமல் சொல்லிவிடுகிருர்.

மொழி நடை:
சிக்கல், சிடுக்கு இல்லை. சம்பாஷணைகளை கதைகளில் தாராளமாக கையாளுகிருர். இதனுல் இவற் றில் ஒரு இயற்கைத்தன்மை காணப்படுகிறது.
பேச்சு மொழிப் பிரயோகம் :
சாடைமாடையாக, தேத்தண்ணி அடிக்கலாம், படு ஆத்திரம், படுமொக்கு, ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு, அறுதி பொறுதியாக இருந்து, அடுகிடை படு கிடையாகக் கிடந்து, மன்னே, பைம்பல் போன்ற பேச்சு வழக்குப் பிரயோகங்கள் தாராளமாக இடம்பெறுகின் றன. எத்தகைய அதிர்ச்சியும் தராதவகையில் இவை நுழைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தோடு இவர் எவ் வளவு தூரம் ஒன்றியுள்ளார் என்பதைக் காணமுடி கிறது. 'போச்சடா’ என்று அடிக்கடி சொல்லும் ஒரு பாத்திரம் அது எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாத இயலாத்தன்மையின் வெளிப்பாடென்பது அலாதியாய் ஒலிக்கிறது.
ஆங்கிலச் சொற்பிரயோகம் :
திறில், பணக்காரருக்கு கடவுள் சைட் ", * ருேலிங் போன்ற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தேடியிருந்தால் அந்த சந்தர்ப்பங்களின் எஃபெக்ட் முற்ருகப் போயிருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அந்நிய மொழிச் சொற்கள் தமிழில் நடமாடுவதும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அவை பிரதிநிதித்துவப் படுத்துவதும் மறுக்க முடியாத உண்மைகள்.

Page 7
உத்திகள் :
நேரடியாகக் கதை சொன்னுலும் முத்தாய்ப்பு களை சுவையாக அமைத்திருப்பது வியக்கத் தக்கதா யிருக்கிறது. உதாரணமாக; அடியும் மிதியும் பட்ட வேலைக்காரப் பையன் சுந்தரம் கடைசியாக வெளியே றும் போது " நாணயக்கயிறு அறுந்தது. இனி, மாடு அதன் எண்ணத்துக்கு ஒடும்” என்று முடித்திருப் பதும், திருமணமான வத்சலா அதற்கு முன்னர் உற வாடிய சத்தியனை 'தம்பி” என்றழைப்பதும் ' உள்ளங் களும் உணர்ச்சிகளும் கூட காலத்துக்கு ஏற்றவாறு மாற வேண்டுமா?’ என்று புழுங்குவதும், கவிதா மீது காதல் கொண்ட குணம், பணக்காரணுெருவனின் ஏமாற்றினுல் வாங்கிய காணியை இழக்க வேண்டிவரும் போது பலாத்காரத்தினுல் அதைமீட்ட பின் திருமணமாகாத தன் அக்காளின் வாழ்வு மலரும் என்ற நிலையில் * இனி அவள் எப்போதுமே சிரிப்பாள். என் மனம் கவிதாவை நாடிப்பறக்கிறது” என்று நிறைவு செய் யும் போதும் வாசகனின் மனமும் நிறைவு காண்கிறது. “மாற்ருன் தோட்டத்துமலரில் ” வரும், திருவாட்டி சொர்ணம் தில்லைக்கூத்தனுக்கு பிள்ளையில்லை. ‘அவரை, இவரை'ப்பார்த்து தராதரப் பத்திரமற்ற ஆசிரியர் பதவி பெற்ற பின், மூன்ருவது மாதமும் மூன்ருவது கிழமை யும் கடந்த பிறகு தில்லைக்கூத்தன் ‘* எந்த மடைச் சாத்திரி எனக்குப் பிள்ளையில்லை யெண்டவன் ?” என்று கூத்தடிக்கும் நிலை உருவாகிறது. தலைப்பை மீண்டும் பார்க்கும்வரை இந்தக் கதையின் மர்மம் எந்த வாசக னுக்கும் புரியாத வகையில் கதையை வார்த்திருப்பது பிரமாதம்.

சிந்தனைத் தெளிவு
அவதான நேர்மையின் விளைவாக ‘செவ்வரத் தம் பூவை வெட்டி கறி காய்ச்சி ஐயா அம்மா விெ யாட்டு விளையாடும் சிறுவர்களேக் காணும் இவர் ‘பெரும் பான்மையினரின் மத்தியில் சிறுபான்மையினரின் நியா யங்களுக்கு இடமில்லையா ?” என்று அங்கலாய்க்க “பய ணத்தில்' தேர்ந்து கொண்ட சந்தர்ப்பமும், வெவ்வேறு சாதிநாய்கள் கூடி விளையாடுவதையும், கோழிகளும் ஒன்ருய்த் திரிஞ்சு தீன் பொறுக்குவதையும், பெரியவர் கள் வீட்டு விருந்தையிலும் ஏறக்கூடாதவர்களின் பிளா வில் பெரியவர்கள் கள்ளுக்குடிப்பதையும் விண்டு காட்டு கிருர். இவையெல்லாம் இவருடைய கருத்துப்படிவத் தின் நேர்மையையே காட்டுகின்றன.
இத்தொகுதி :
மொத்தத்தில் “பலாத்காரம்’ தமிழுக்கு ஒரு புதிய அணி. எதிர்காலத்தில் பிரகாசிக்கப்போகிற ஒரு எழுத்தாளருக்கு ஒரு கட்டியம். அணி சேராத இலக்கிய நேர்மைக்கு ஒரு விளக்கம். இதற்கு கண்டிப் பாக தமிழ் வாசகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள்
வாழ்க திரு. இராஜசிங்கத்தின் தமிழ்ப்பணி!
* தேவன் - யாழ்ப்பாணம்.
** கோகுலம் ” திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம், 25-6-77.

Page 8
அன்புள்ள வாசக நண்பர்களுக்கு
வணக்கம்,
இந்நூலில் கடந்த ஐந்து வருடங்களில் நான் எழுதியவற்றில் பத்து சிறுகதைகள் அடங்கியுள்ளன.
நாங்கள் வாழ்கின்ற சமூகத்தையும் - எங்களைச் சூழ உள்ள மனிதர்களையும் நாம் நேசிக்கின்ருேம்; நேசிக்க வேண்டும். ஆனல் அங்கேயும் பல சீர்கேடுகள், பொருமை, குரோதங்கள், வர்க்க பேதங்கள் நிறைந்து போயிருக்கின்றன ! சிலருக்கு சில விஷயங்களில் மனது குறுகிவிடுகின்றது. பரந்த மனப்பான்மை இல்லை. விட்டுக் கொடுத்து வாழ்கின்ற பக்குவம் - மற்றவர்களையும் தங் களப்போலக் கருதுகின்ற பெருந்தன்மை மிகக் குறைவு. இவை குறைபாடுகள் அல்ல - பலவீனங்கள். இப்படியான வற்றை அவதானித்த சந்தர்ப்பங்களே என்னை எழுதத் தூண்டியிருக்கின்றன.
நான் உபதேசிக்கவில்லை; உண்மையான நிலைமை யைத்தான் உங்கள் சிந்தனைக்கு சமர்ப்பித்திருக்கிறேன்.
கதைகளை அவ்வப்போது பிரசுரித்த ஈழத்து சஞ்சிகைகளையும், நான் பங்குபற்றிய சிறுகதைப் போட்டிகளின் அமைப்பாளர்களையும் இத் தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

மகிழ்வுடன் அக்கதைகளேயெல்லாம் பிரதியெடுத் துத் தந்துதவிய சகோதரிக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்.
மனமுவந்து இத்தொகுதியை மதிப்பீடு செய்த என் மதிப்புக்குரிய ஆசிரியர் தேவன்-யாழ்ப்பாணம்’ அவர்களுக்கு நான் நன்றியுடையவன்.
ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நல்கிய நண்பர் ஞானரதனுக்கும், ஓவியங்களை வரைந்துதவிய தம்பி சி. குணசிங்கம் (ரக்), தமிழ்ப்பணிமனையைச் சேர்ந்த, த. செல்வராசா மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரியது.
இந் நூலை நல்லமுறையில் அச்சிட்டு உதவிய கலாநிலைய அச்சக முகாமையாளர் திரு. பா. சிவானந் தன் அவர்களுக்கும், அச்சக ஊழியர்கட்கும், இதை வாசிக்கப் போகின்ற உங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன் சுதாராஜ். 23, வடக்கு வீதி, புத்தளம். 10-0 7 - 1 9 77 .

Page 9
பத்துக் கதைகளும்
| 0
பக்க விபரங்களும்
கதை
தேவைகள் - -
பலாத்காரம் is s
அந்த நிலவை நான் பார்த்தால்
புதுச்சட்டை e saw wr
சோதனை
உள்ளங்களும் உணர்ச்சிகளும்
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்த்தாலும்
நாணயக்கயிறு a ♦yr &F
மாற்ருன் தோட்டத்த மலர்
ι μιμοδοτιf: st
Y
இரசும் . . .
as
பக்கம்
30
41
51
60
72
3む

இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத் தமிழ்ச் சங்கத்தினுல், 50-வது ஆண்டு நிறைவு விழாவை யொட்டி அகில இலங்கை ரீதியாக நடாக்கப்பட்ட சிறுகதைப் போட்டியில் 3-வது பரிசு பெற்றது.
舆
தேவைகள்
நேரம் பதினெரு மணிக்கு மேலிருக்கும் " என அவன் நினைத்துக் கொண்டான். இரவு. கர்லி வீதியில் கொள்ளுப் பிட்டியை அண்மிய இடங்களில் இன்னும் சன நடமாட்டம் குறையவில்லை. இரத்மலானைவரை இப்படித்தான் இருக்கும். ஒரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானுல் இன்னும் ஒரிரு மணித்தியாலங்களாவது செல்ல வேண்டும். அவன் அதற் காகக் காத்திருந்தான். அமைதி என்ருலும் அதைப் பூரண அமைதி என்று சொல்ல முடியாது. அடிக்கடி ஏதாவது வாகனங் கள் விரைந்து கொண்டிருக்கும். இரவின் அமைதியில் அவற்

Page 10
2 V. பலாத்காரம்
றின் ஒலி பூமியையே அதிரச் செய்வது போலிருக்கும். அதைக் கூடச் சமாளித்து விடலாம். பழகிப்போன சங்கதிதான். பூரணை தினத்து இரவு போல வீதியெங்கும் நிரம்பியிருக்கும் வெள்ளை ஒளியை என்ன செய்வது? காலி வீதியில் இருளையே காண முடியாதா - அப்படி நினைக்கத் தோன்றுமளவுக்கு தொடர்ச்சியாக * மேர்க்கூரி ? லைட்டுக்களின் வெளிச்சம்; அந்த வெளிச்சமே இப்பொழுது அவனுக்கு ஒரு பிரச்சனைதான்.
-முழு இருளிலே உறங்குவதென்ருல் அதில் எவ்வள வொரு இயற்கையான சுகம் இருக்கின்றது. அந்த வாய்ப்புக்களை அவன் அனுபவித்து எவ்வளவோ காலமிருக்கும். சொல்லப் போனுல் . அதை அவன் ஒரு அத்தியாவசிய தேவையாக எதிர் பார்க்கவில்லை எனலாம். ஆயினும், ஏனே சில சந்தர்ப்பங்களில் இருள் மிக முக்கியமான ஒன்ருகத் தேவைப்படுகின்றது !
காலி வீதி வழியாக இரவு பன்னிரண்டு மணியளவில் நடந்து சென்றல், வீதியோரங்களில் நடைபாதைகளிலும், கடை வாசல்களிலும் உறங்கிக் கொண்டும் விழித்துக்கொண்டும் இருக் கும் எத்தனையோ சனங்களைக் காணலாம்.
- அந்தச் சனங்களில் ஒருவன்தான் அவனும், அவனுக்கு உழைத்து வாழமுடியாதபடி ஏதோ ஒரு குறையிருக்கும். இருக்க வீடு வசதியும் இல்லாமலிருக்கும். எப்படி அவன் இந்நிலைக்கு வந்தான் என்பதற்கு யாரும் சுலபமாகப் பதில் சொல்லிவிட முடியாது. அவனிடமிருந்துகூட அதற்குச் சரியான காரணத்தை அறிந்து கொள்ள முடியாது.
அவன் ஓர் அனுதாபத்திற்குரிய பிறவி. (பிச்சைக்காரன் எனச் சாதாரணமாக அழைக்கப்படுவான் ) உடுத் தி யிருந்த (பழைய) சாரத்தினல் கால்களை மூடிக்கொண்டு, இன்னுமொரு சாரத்தினுல் தோள்வரை இழுத்து மூடி, குறண்டியவாறே ஒரு கடை வாசற் சுவரோடு சாய்ந்திருந்தான். (பழசுகள் இரண் டும் அவனுடைய சொத்துக்கள். )
உறங்குவதானுல் இப்படியே குறண்டியவாறு சரிந்து, கையை அணை யாகத் தலைக்கு வைத்துக் கொண்டு படுக்க

சுதாரா ஜ் 3
வேண்டியதுதான். உறக்கம் ? அதற்காக அவன் முயன்று முயன்று தோல்வியடைந்துகொண்டிருந்தான். ܝ
இன்றைய இரவு இப்படி ஏன் அவனுக்குத் தொல்லை கொடுக்கவேண்டும்? சில இரவுகள் இப்படித் தொல்லை நிறைந்த தாக இருப்பது தவிர்க்க முடியாததாய் இருக்கின்றது.
அவள் அவனுக்கும் அண்மையில் தரையிற் படுத்திருந் தாள். உறங்கிவிடவில்லை. சீமேந்துத் தரையின் குளிரும், வீசி வரும் குளிர்காற்றின் ஊடுருவலும் அவள் உறக்கத்தைத் தடை செய்து கொண்டிருந்தன. குளிர்ச்சியின் தாக்கம் உடலையும், பசியின் தாக்கம் வயிற்றையும் வருத்தின.
விரைந்து வந்த வாகனமொன்றின் வெளிச்சம் அவள் கண்களைக் கூசச் செய்து கொண்டு போனது. மறுபக்கமாகத் திரும்பிக் குறண்டினுள்.
அவன் அவளைப் பார்த்தான்
. வயது அதிகம் இருக்காது. கறுப்பி என்ருலும் எடுப் பான உடல். "ஒழுங்கான சாப்பாடு இன்றிப் பறக்கும் இவ ளுடைய உடம்பு எப்படித்தான் இவ்வளவு மினுக்கமாக இருக் கின்றதோ ! ?
அவன் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தான். போர்த் திக் கொள்வதற்குப் போதுமான துணியின்றி அரை குறையாகத் தெரிந்த அவள் காலின் பகுதிகளை கள்ளத்தனமாக இரசித்தான்.
ஒரிரு தரங்கள் தற்செயலாகத் திரும்பிய பொழுது அவனது கள்ளப் பார்வைகளை அவள் புரிந்து கொண்டாள். அது உள்ளத்தில் ஒர் இன்பக் குமுறலை ஏற்படுத்தியது - சடுதி யாகத்தான். பசியின் ஆக்கிரமிப்பு மறுகணமே அந்த அனுப விப்பை மறக்கச் செய்தது.
அவனுல் அவளை மறக்கமுடியாது. இன்று அவனுக்குப் பசியில்லை. யாரோ ஒரு புண்ணியவானுடைய (அவனுடைய

Page 11
4. பலாத்காரம்
பாஷையில்) உபயத்தில் 'நன்முக வயிறு புடைக்கப் போட்டா யிற்று. (**நல்லாயிருப்பீங்க சாமி! ' )
அவளுடைய தேவையின் அவசியத்தை சூழ்நிலையின் குளிர்ச்சி இன்னும் அவனுக்கு நிச்சயப்படுத்திக் கொண்டிருந் தது. உடற் பசியைத் தீர்த்துக் கொள்ள முயல்வது தவறென் ருல். வயிற்றுப் பசிக்காக நிரம்பச் சோறு போட்டதும் தவறு தானே?
தேவைகள் ஒவ்வொன்றும் பூர்த்தி செய்ய ப் படும் பொழுது இன்னுமொரு தேவை தோன்றுகின்றது. ஏக்கத்துடன் அவளை மீண்டும் நோக்கினன். விலத்திக்கொண்டு செல்லும் வாகனங்களும் வெளிச்சமும் ஒரு பெரிய தடையல்ல. அவளே யொட்டினுற் போலப் படுத்திருக்கும் பொடியனைப் பார்த் து எரிச்சலடைந்தான்; ‘* சனியன் ? ? என மனதாரத் திட்டினன்.
சிறுவனுக்கு ஆறு வயது மதிக்கலாம். குளிரின் தாக்கத் தினுல் அம்மாவை இறுக்கி அனைத்துப் படுத்தபொழுது, o GP ! வெலகிப் படுடா !' என அவள் உறுமினுள். மிரட்சியுடன் விலகினன். பசி உறக்கத்தைப் பறக்கடித்துக் கொண்டிருந்தது. அம்மாவினுல் அவனது பசியைத் தீர்க்க முடிவதில்லை. பகலில் அம்மாவினுடைய உழைப்பில் (** ஐயா. தர்மம் போடுங்க சாமீ. ' ) அவனுக்கும் நியாயமான பங்கு உள்ளது. எனினும் வயிற்றுக்குப் போதியளவு கிடைப் பதில் லை. அம்மாவினல் முடிந்தது அவ்வளவுதான்.
எழுந்து உட்கார்ந்து கொண்டு வீதியைப் பராக்குப் பார்த்தான். விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள் வேடிக் கையான காட்சியாயிருந்தும் மனம் அதில் லயித்துப்போகவில்லை. * ஆ* வென்று ஒரு கொட்டாவி வெளிப்பட்டது. தலையைச் சொறிந்து கொண்டான். அடிக்கடி அம்மாவையும் பார்த்துக் கொண்டான். பகலிற் கண்ட சாப்பாட்டுக்கடைக் காட்சி நினைவில் வந்தது. சாப்பிடுபவர்களிடம் ' பிச்சை எடுப்பதற் காகக் கடைவாசலில் நிற்பது வழக்கம். சிகரட் வேண்டி மிகுதி யாகும் ஒரு இரு சதங்களையேனும் சிலர் " போடுவர் '. மறக்கா

சுதா ராஜ 5
மல் எல்லோருக்கும், ** புண்ணியவான் நல்லாயிருப்பீங்க துரே *. எனச் சொல்லிக்கொள்வான். அது அவனுக்கு மனனம் செய்யப் பட்ட ஒர் உயிருள்ள கீதத்தைப்போல, அவனுடைய சீவனைக்
காக்கும் கீதம் அது என்பது அவனுடைய நம்பிக்கை
சில வேளைகளில் பசி வேகத்தில் கடை வாசலுக்கே போய் விடுவான். உள்ளே ல்பக் கென உற்சாகத்துடன் 5Fft tu பிட்டுக் கொண்டிருப்போரை ஏக்கத்துடன் பார்ப்பான். வாழை இலையில் எல்லாவற்றையும் குழைத்துக் கூட்டி அள்ளித் தின்னும் அழகைப் பார்த்தால் நரக்கில் ஜலம் ஊறும். மிகுதியை வீசு வதற்காக எடுத்துச் செல்லும்பொழுது “ எனக்குத் தரமாட்டார் களா ? என மனதுக்குள்ளே அங்கலாய்த்துக் கொள்வான்.
அந்தக் கடை நினைவில் வந்தது; ' இப்பொழுதும் அப் படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்களோ ? இது இரவா பகலா? பக்கத்தில் இவ்வளவு பேரும் ஏன் மொய்த்துக் கொண் டிருக்கிருர்கள்? இங்கு என்ன சாப்பாடு போடப் போகிறர்களா? அவர்கள் நித்திரையோ? அம்ம: வும் நித் திரையாய் இருக்கின்ருளே! அந்கக் கடையில் இப்பொழுது சாப்பிட்டுக் கொண்டிருப்பார் $ଙt # ''
பொடியன் அசுகையின்றி நழுவுவகை மலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
மனிதனுக்கு எத்தனை விதமான தேவைகள் ! அவற்றிலே தவிர்க்க முடியாத தேவைகளும் பல. சமூகத்தின் உயர் மட் டத்திலுள்ளவர்கள் தங்களது தேவைகளே ஆடம்பரமாக நிவர்த் தித்துக் கொள்கிருர்கள். நடுத்தர வர்க்கத்தினர் ஏனேதானுே என்று ஒரு கடமையாய் நிறைவேற்றிக் கொள்கின்றனர். சமூகத் தின் கீழ் மட்டத்திலுள்ள ஒருவனே தனது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வசதியின்றி அத்தேவையின் அவசியத்திற்காக ஏங்குகின்றன். அந்நிலையில் அது ஒரு வெறியாகவே உருவெடுத்து 61ப்படியாவது அதை நிவர்த்தித்துக் கொள்ள முற்படும் பொழுது தான் சில விரும்பத்தகாத சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

Page 12
6 பலாத்காரம்
எத்தனையோ தேவைகளின் சேர்க்கைதான் வாழ்க்கை யெனில் அவற்றை நிவர்த்தித்துக் கொள்வதில் இத்தனை இடை யூறுகளா ?
அவனுடைய பார்வை மீண்டும் அவள் பக்கம் தாபத்துடன் சென்றது. அவள் பெரியதொரு அழகியாகவே மாறிவிட்டது போன்ற எண்ணங்கள். சலனமற்ற தூக்கத்தில் உயர்ந்து பதியும் அவள் மார்பைக் கண்டதும் இன்ப ஏக்கம் இன்னும் அதிகரித் தது. அப்படியே அணைத்து அவள் கன்னத்தைக் கடிக்கவேண் டும் போல ஒரு துருதுருப்பு.
' கண்மணி " - " என்ன அழகான பெயர் ! ?
கண்மணி எனும் அவளுடைய பெயரை ஆசையுடன் சொல்லும் பொழுது கண்மணி என மாறிவிடுகின்றது.
கள்ளத்தனமாக அவள் அண்மையில் அசைந்தான், அவளே விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும். கைகளிலே பதட்டம் தோன்றியது. வரும் எதிர்ப்புக்களையும் சமாளிக்கத் தயாராயிருக்க வேண்டும்.
இருபக்கமும் பார்த்துவிட்டு மெதுவாக. 'கண்மணி"-
அவளது கையை வருடினன். அவள் விழித்துக் கொண்டு, மறு
பக்கம் திரும்பிப் படுத்தாள். சற்று பின்வாங்கி, மீண்டும் *" கண்மணி ' என்ருன்.
திடுதிப்பென்று எழுந்தவள், ' இன்னுய்யா நீ? . சும்மா இருய்யா " எனச் சத்தமிட்டாள். இச் சந்தர்ப்பத்தில் விழித் துக் கொண்ட, அவர்கள் அண்  ைம யி லி ரு ந் த சிலர் இந்த வழக்கங்களில் கவனம் செலுத்தாமல் மீண்டும் படுத்துக் கொண்டனர். - வீதியில் மற்றவர் கட்டிக் கொஞ்சுவதையும் கவனிக்காதது போலிருப்பதும் நாகரிகமென்ருல், இவர்களும் நாகரிகத்துடன் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள் !
சடுதியான எதிர்ப்பினல் பின் வாங்கிய அவன் சற்று நேர மெளனத்திற்குப் பின்னர் மீண்டும். " கண்மணி. இந்

சுதாராஜ் 7
தாம்மே இந்த லைட்டிலே தூங்கமாட்டே. வா. ஒதுக்குக்குப் போகலாம் " என்ருன். .
அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. இவனுக்கு எப்படித் தன் பெயர் தெரியும் என நினைத்தாள். தூக்கக் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான். சில தினங்களுக்கு முன்னர் கண்டஞாபகம். அதற்கு முன்னரும் எங்கேயோ பார்த்தது போலவுமிருந்தது.
*" கண்மணி, உன்மேல எனக்குக் கொள்ளை ஆசை. நீ இவ்வளவு அழகா இருக்கியே! ' - இதை அவன் அவளுடைய கைகளைப் பிடித்து காதிற்கு மிக அண்மையிற் சென்று இரகசிய மாகச் சொன்னன். குளிர்ந்த காற்று ஊடுருவிய பொழுது அவனுடைய அணைப்பின் அவசியத்தை அவள் உணர்ந்தாள். சற்று முன்னர் பிள்ளையின் அணைப்பில் எரிச்சலடைந்தவள், ஏனே அவனுடைய அணைப்பைப் பிரியத்துடன் ஏற்றுக் கொள்கின்ருள் !
அவன், அணைப்பை மெல்ல இறுக்கியவாறே அவளை ஒரு ஒதுக்குப் புறமாக அழைத்தான். அவள் சற்றுத் தயங்கி *னுள்.
* பய இருந்தானே?"
** அவன் போயிட்டான் ."
அவளுக்குத் தெரியும் - பொடியன் எங்காவது இரை தேடப் போயிருப்பான். அதை இப்பொழுதெல்லாம் அவள் கண்டும் காணுமல் விட்டுவிடுகின்ருள். எப்படியாவது பிள்ளையி னுடைய பசி தீரட்டும் என்ற எண்ணம்,
* கண்மணி ' "
அவனுடைய அழைப்பு விடுக்கும் பார்வையினுள் அவள் நாணினுள். கூச்சத்துடன் நின்ற அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அவன் நடக்க முற்பட்டான். அவன் நடப்பதற்கும் அவள்தான் உதவி செய்ய வேண்டியிருந்தது. அவனுடைய ஒரு

Page 13
8 பலாத்காரப்
கால் முடம். அவளும் ஏதோ மந்திரத்தினுட் கட்டுண்டவளைப் போல அவனைத் தாங்கியவாறே தொடர்ந்தாள்.
குடும்பக் கட்டுப் பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் சமூகம் ஒரு பிச்சைக்காரன் விஷயத்தில் அசட்டையாக இருந்து விடுகின்றது. அதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளாமையி னல் இங்கே இன்னுமொரு சந்ததி பிச்சைக்காரர்கள் உருவாகு கின்ருர்கள்.
சிறுவன் ஒட்டமும் நடையுமாகத் தனது குறி  ைய நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
' ഉ !'
கடை பூட்டப்பட்டிருக்கின்றதா? இங்கே சாப்பிடுபவர்கள் இல்லையா ? அவர்கள் மிச்சச் சோற்றை வீசமாட்டார்களா ?
பக்கத்தில் இரண்டு நாய்கள் கடித் து க் குதறிக் கொண்டன. திரும்பிய பொழுது அவையும் சாப்பாட்டிற்காகப் போட்டியிடுவது தெரிந்தது. இனி, மாநகரசபை லொறி தகரத்தினுள் போடப்பட்டிருக்கும் எச்சிலிலைகளை எடுத்துச் செல்ல வரும். -
காலி வீதியிலிருந்து பிரியும் ஒழுங்கையொன்றின் திருப் பத்தில் இருளில் இறங்கி அவனும் அவளும் (** அவர்கள் **) வசதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்த பொழுது.
. சிறுவன் அந்தப் பிரதான சாப்பாட்டுக் கடையின் முன்னல் தகரத்தினுள் போடப்பட்டிருந்த எச்சில் இலைகளுடன் கூடிய சோற்றை வழித்து ஆவேசத்துடன் சாப்பிட்டுக் கொண் டிருந்தான்.
இன்னும் சில காலங்களில் தெருவில் வீசப்படும் எச்சில் இலைகளைச் சுவைப்பதற்கு இன்னுமொரு உயிரை அவள் தரக்
கூடும்.
y y
கலா வல்லி 19?? )

6&V.'
நீர்ப்பாசனத் திஃணக்களத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய 1975-ம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி யில் இரண்டாவது பரிசுபெற்ற கதை.
عبے M
P
பலாத்காரம்
Φ டனடியாக வருமாறு அம்மா கடிதம் எழுதியிருந் தமையாற் தான் இப்பொழுது ஊருக்குப் போகிறேன். யாழ்ப் பாணம் போய் சரியாக ஏழு மாதம் இருக்கும். அடிக்கடி போக ஆசைதான். ஆனல் பணப்பிரச்சனை அந்த ஆசையைத் தடை செய்துவிடும். அரசாங்க லிகிதர் சேவையில் புதிதாக நியமனம் பெற்ற - அதாவது. ஒரு வருடம் இருக்கும் - உத்தியோகத்தன் என்ற முறையில் எனது சம்பளத்தை நீங்கள் ஊகிக்க முடியும். மாதா மாதம் வீட்டிற்கு ஏதாவது அனுப்புவதற்கே பெரியபாடு படுவதுண்டு, இந்நிலையில் கொழும்புச் சீவியம் நடத்து

Page 14
O பலாத்காரம்
கிறேனென்றல் எனது கஷ்டத்தை (அல்லது கெட்டித்தனத்தை) நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
உடனடியாக வரும்படி கடிதம் எழுதியுள்ளபடியால் ஏதாவது ' சம்பந்த விஷயமாகவும் இருக்கலாம். ** சம்பந்தம் ** என்றதும் எனக்குக் கவிதாவினுடைய நினைவுதான் வருகிறது. கவிதா என் காதலி. எங்கள் வீட்டிற்கு அண்மையில்தான் இருக் கிருள். அவள் எனது மனுசியாக இருக்கும் கற்பனைகள் அடிக் கடி தோன்றுவதுண்டு. அந்தக் கற்பனையிலான குடும்பவாழ்வில் எனக்கு ஒரு திருப்தி. அந்த நினைவுகளே என்னை ஒரு பற்று டன் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அட, நானுெரு சுத்த மடையன். (ஒரு கதைக்காக அப்படிச் சொன்னலும் நண்பன் உதயகுமார் கேட்டால் அதுதான் உண்மையென்றும் வாதிப்பான், என்னை மடையணுக்கிப் பார்ப்பதில் அவனுக்கு ஒர் அலாதி இன்பம். ) என்னை மடையனென ஏன் சொன்னேனென்றல், இன்னும் திருமணமாகாமல் அக்கா ஒருத்தியும் எனக்கு இருக்கும் பொழுது நான் எனது திருமணத்தைப் பற்றி யோசிக்கிறேன்(!) அக்காவிற்கு இருபத்தெட்டு வயதாகியும் கலியாணம் முடியாமல் இருப்பதற்குக் காரணம் வழக்கமான சீதனப் பிரச்சனைதான். அதற்காக எனக்கு ‘* கலியாண ஆசை ** இருக்கக் கூடாதென்ற நியதியில்லையே? வெளிப்படையாகக் கூற வெட்கப்படலாம். எனக்கும் வயது வந்துவிட்டபடியால் உள்ளார்ந்த ஆசை இருக்கத் தானே செய்யும் ? அதற்காகவேனும் விரைவில் அக்காவி னுடைய பிரச்சனையை முடிக்க வேண்டும் என நான் நினைப் பதுண்டு.
* ஒ*, ஒருவேளை அக்காவினுடைய கலியாண விஷயமாகத் தான் அம்மா என்னை வரச்சொல்லி எழுதியிருக்கக் கூடும். பாவம் அக்கா, வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கொண்டு இந்த இருபத்தெட்டு வருடங்களையும் எப்படிக் கடத்தினளோ ? இனி யும் எத்தனை வருடங்கள் இப்படியே இருப்பாள் ? மிஞ்சி மிஞ்சிப் போனல் நல்லூர்க் கோயிலைத்தான் கண்டிருப்பாள். கோயில் என்ற சாக்கிலாவது அவள் இடைக்கிடை வெளி யு ல கைக் கானட்டுமே என நான் ஆதங்கப்படுவதுண்டு. இல்லாவிட்டால்

சுதாராஜ்
நான் இந்த உலகமெல்லாம் போய்த்திரிந்தும், (உலகம் என்று சொன்னவுடன் நான் ஏதோ பரதேசம் சென்று வந்ததாக நினைக்க வேண்டாம். நான் ஒரு சாதாரணன். அதற்கெல்லாம் பாத்தியதை ஏது ? தம்மா கொழும்பு வரைதான்.) சில வேளை களில் * விசர் " பிடித்து விடும் போலிருக்கிறது. அவள் எப் படித்தான் அந்த அடைபட்டிருக்கும் வெறுமையைச் சகிக் கிருளோ! அந்தப் பரிதாப்த்தை எண்ணி வீட்டிற்குப் போயிருக் கும் சமயங்களில் அவளை எங்காவது ' படத்துக்குக் கிடத்துக்கு ? வரச்சொல்லிக் கேட்டால் மாட்டேனென்று கூச்சப்படுவாள். கூச்சமெல்லாம் இந்த அக்கம்பக்கத்துச் சனங்களை எண்ணித்தான் ! பின்னர் " குமர்ப்பிள்ளை உப்பிடி ஆடித்திரியிருள், உந்த ஆட்டத் துக்குத்தான் இன்னும் உப்பிடியே இருக்குது என நூற்றி யெட்டு’க் கதைகளைக் கதைப்பினமே என்ற பயந்தான் அவளுக்கு.
கதையோடு கதையாக புகையிரத நிலையம் வந்ததே தெரியவில்லை. " றெயினிலே ஏறும்பொழுது ஒரு குதூகலம் வந்து ஆட்கொள்கிறது. அது, கனகாலத்திற்குப் பிறகு யாழ்ப் பாணம் போகிறேன், கவிதாவைக் காணலாம் என்ற காரண மாகத்தான் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது, கவிதாவை நினைக்கும் பொழுதுகளிலே ஒரு ** திறில் "* தான். நான் அடிக் கடி ஊருக்குப் போக ஆசைப் படுவதே அவளுக்காகத்தான், என்னைப் பெற்று, அன்போடு. வளர்த்து, பாசத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் அம்மாவையும், அக்காவையும் விட அவள் நினைவு முன்னுக்கு ஓடி வந்து நிற்கும். அதற்காக நான் வெட் கப்படுவதுமுண்டு. அது தவிர்க்க முடியாத எண்ணங்கள் என்று பின்னர் சமாதானமாகிக் கொள்வேன். அதற்காக நான் அம்மாவிலோ, அக்காவிலோ பாசமற்றிருக்கிறேன் என்று அர்த்த மில்லேயே ?
கவிதா எனக்காகவே காத்திருப்பதில் எனக்கு எவ் வளவோ பெருமை. நான் ஓர் அழக்னே அல்லது ஓர் உயர் மட்ட உத்தியோகத்தனே அல்ல. என்னிடம் அப்படி என்னத் தைக் கண்டு * அவரைத்தான் கட்டுவேன் " என ஒற்றைக் காலில் நிக்கிருள்? இப்படியான ஒருத்திக்காக என் உயிரைக்

Page 15
2 பலாத்காரம்
கூடப் பணயம் வைக்கலாமே? ஒரு முறை வீடு சென்றிருந்த பொழுது ஒரு மாற்றுச் சம்பந்த விஷயமாக அம்மா என் னுடன் கதைத்தா. அதனுல் அக்காவினுடைய பிரச்சனையும் தீர்ந்து விடுமென்பது அம்மாவினுடைய வாதம். அதிலுள்ள நல்லது கெட்டதுகளைப் பற்றி யோசிக்க நான் தயாராயில்லை. *உந்தப் பேய்க் கதைகளைக் கதைத்தால் நான் இந்தப் பக்கமே வரமாட்டேன்’ என ஒரு வெருட்டு விட்டேன். அம்மா அடங்கிப் போய்விட்டா. எனது காதல் விஷயமும் * சாடைமாடை ‘ யாய் வீட்டிலே தெரியும். ** அம்மா ஏனனை இப்ப கத்துருய். எனக்கு இப்ப கலியாணம் வேண்டாம். நான் இப்படியே இருப்பன் ' என அக்கா எனக்குப் பரிந்து கொண்டு கதைத்தா.
அக்கா பாவம். எப்படியும் அவளுடைய கலியாணத்தை முடித்துக் க்ொண்டுதான் நான் செய்யிறது என நினைத்திருக் கிறேன். உங்களுக்குத் தெரியும்தானே; இந்தச் சீதனக் கரைசச லாலை எத்தனையோ " குமர் காரியம் " " ஒப்பேருமல் இருப்பது ? அதற்காக நாங்களும் பேசாமல் இருந்து விட முடியுமா ? நாங் கள் ஏழைகள் - அதாவது பொருளாதார ரீதியாக வசதியற்றவர் கள். சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். சீவிப்பது கோயில் காணியில். “ கோயில் காணி? என்ருல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன். கோயிலுக்குச் சொந்தமான காணியை இடவசதியற்றவர்கள் மிகவும் குறைந்த குத்தகையில் எடுத்து இருக்கலாம். பரம்பரையாகச் சீவிக்கலாம். ஆனல் * சீதனம் பாதனமாகக் கொடுக்கேலாது. அக்காவிற்குக் கலியா ணம் செய்து கொடுப்பதென்றல், எங்காவது ஒரு காணித் துண்டு வாங்கி ஒரு சிறிய வீடென்ருலும் கட்டியாக வேண்டி யிருந்தது. இதற்காக அம்மா ? படாத பாடு " பட்டா. பாவம் அவவை நாங்கள் தெய்வமாகக் கும்பிட வேண்டும். இந்த ஏலாத வயதிலும் எவ்வளவு முயற்சி !
வீட்டுக்கு அண்மையில் ஒரு காணி விலைக்கு வந்தது. இரண்டோ மூன்று பரப்புத் துண்டென்று நினைக்கிறேன். அவ்வளவு திறமெண்டும் சொல்லேலாது. ஒரு மாதிரி பதினலா யிரத்துக்குத் தீர்த்து எண்ணுயிரம் உடன் காசும் கொடுக்கப்

பலாத்காரம் 13
பட்டது. ஐயா இருந்த பொழுது சேர்த்து வைத்த சொற்பமும் பின்னர் அம்மாவினுடைய முயற்சியில் சேர்த்ததுமான தொகை தான் அது. மிகுதி ஆருயிரமும் தவணைமுறையில் கட்டுவதென் றும், பணம் முழுதும் செலுத்தியதும் காணி எங்களுக்குச் சொந்தமாகும் என்பதும் உடன்படிக்கை. இன்னும் இரண்டொரு மாதத்தில் காசு கட்டி முடிந்துவிடும் என அம்மா முன்னர் எழுதியிருந்தா. எனவே அந்தப் பிரச்சனை யும் இப்பொழுது தீர்ந்திருக்கும். அக்காவினுடைய திருமணத்துக்காகத்தான் ஏதா வது ஒழுங்குகள் செய்திருக்கக்கூடுமென நினைக்கிறேன். அந்த நினைவே இனிக்கிறது. என் ஆருயிர் அக்கா கலியாணம் செய்யப் போகிருள் - அடுத்தது எனக்கு 1 சீ, அதற்குள்ளும் ஒரு சுயநல மான கற்பனை எழத்தான் செய்கிறது.
இது போன்ற இன்பமும், துன்பமானதுமான நினைவு களுடன் றெயினுக்குள்ளே உறங்கிப் போயிருக்க வேண்டும். மீண்டும் எழ, யாழ்ப்பாணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரேசனில் இறங்கிய பொழுது டக்குடக் ' என்று நெஞ்சினுள் பயம் அதிகரிக்கிறது. செய்தி என்னவோ ஏதோ என்ற எண் ணம் தான். கணப்பொழுதில் கவிதாவினுடைய நினைவும் வந்து ஓர் ஆனந்தத்தை ஊட்டி மறைகிறது. ஆரியகுளத்துச் சந்தியில் பஸ் " சிற்குக் கூட நிற்கப் பொறுமையில்லாமல் ' விறுவிறு ?
என்று நடையைக் கட்டுகிறேன். நடந்து கொண்டிருக்கும் பொழுது பஸ் வந்து விலத்த, நிண்டிருக்கலாமே ' என்ற
எண்ணம் தோன்றுகிறது. எனது அவசரத்தை எண்ணி எரிச்ச லடைந்தவாறே கந்தர்மடம் சந்தியை நெருங்கிவிட்டேன். ஒரு }தத் தண்ணி " அடிக்கலா "மென்ருல் சின்னத்தம்பியின் கடை பூட்டியிருக்கிறது. இன்னும் எரிச்சலுடன் வீட்டை நோக்கி நடக்கிறேன். v
வீட்டில் அம்மாவிலும் அக்காவிலும் ஒரு சோகமான அ ைம தி யை த் தான் காணக்கூடியதாக விருக்கிறது. என்ன விஷயமோவென நெஞ்சு பரபரப்படைகிறது. சில வே ஃா விஷயம் என்னைப்பற்றியதாக இருந்தாலும் என்ற எண்ணத்தில் அவர்கள் சொல்லும் வரை பேசாமலிருக்கிறேன்.

Page 16
4 பலாத்காரம்
தேத்தண்ணியுடன் வந்த அம்மா சொன்ன * உவர் தர்மலிங்கத்தாரெல்லோ எங்களை ஏமாத்திப் போட்டார். *
** என்ன ???- நான் புரியாமல் நோக்குகிறேன்.
அம்மா விஷயத்தை விளக்கமாகக் கூறியதும் எனக்கு அவன் மேல் படு ஆத்திரம் ஏற்படுகிறது. (தர்மலிங்கம் என்னை விட வயதுக்கு மூத்தவனுயினும் இனியும் ** ர் ** போட்டு மரி யாதையாகக் கதைக்க எனக்கு விருப்பமில்லை.)
விஷயம் இதுதான்; தர்மலிங்கம் காணிச் சொந்தக் காரன். காணி எங்களுக்கு விற்கப்பட்டபொழுது எழுதிய பத்திரத்தில் உடன்பட்டபடி எண்ணுயிரம் காசு செலுத்தப்பட்ட தாகவும், மிகுதி தவணை முறையிற் செலுத்தப்பட்டதும் காணி எங்களுக்குச் சொந்தமாகும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அம்மா செய்த மடைத்தனம் என்னவென்றல், பின்னர் கட்டிய பண்ங் களுக்குப் பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளாதது தான். இப் பொழுது அவன்; நாங்கள் காசு கட்டவில்லை என நிற்கிருஞம்.
A
எவ்வளவு கஷ்டப்பட்டு அம்மா இப்பணத்தைச் சேர்த்தா! நான் கூட இதற்காகப் பட்ட கடன்கள் இன்னும் தலைக்கு மேல் இருக்கின்றனவே!
இனி அக்காவினுடைய வாழ்வில் ஒரு சந்தோஷமான நாள் விடியாதா ?
எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. அப்படியொரு வேகமான ஆத்திரம்; வேதனை. வழக்குப் போட்டும் பிரயோசன மில்லை. பிடி அவனது பக்கம். இரண்டொரு பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போய் ஆதர வாகக் கதைத்துப் பார்த்த பொழுது, ' சரி ?? எங்களுடைய ஏழ்மையைக் கருதி, ஒரு சலுகை செய்வதாகச் சொன்னன். அது, மூவாயிரம் ரூபா இன்னும் செலுத்திய பின்னர் காணியை எங்களுக்குத் தருவதாகவும், அதுவரை காணியில் எங்களை

சுதாராஜ் 15
இருக்கலாமேன்றும், அதற்கு ஒருவாறு உடன்பட்டுக் கொண்டு வந்தேன்.
X
புதிய காணியில் அம்மாவையும் அக்காவையும் இருப்ப தற்கு ஒழுங்குகள் செய்து விட்டு நான் கொழும்பு வந்துவிட் டேன். ஆனல் ஒரு மாத காலத்துக்குள்ளேயே மீண்டும் ஒரு பிரச்சனை தலைதூக்கியது. தனக்கு எதிராக ஒர் ** அப்புக்காத்து நோட்டீஸ் ** வந்திருப்பதாக அம்மா எழுதின. பணம் முழுதும் கட்டிமுடியாமல் காணியில் இருப்பதாக தர்மலிங்கம் வழக்குப் போட்டிருக்கிருன், (இதற்காக நான் பின்னர் யாழ்ப்பாணத் துக்கும் கோழும்புக்கும் ஒடுப்பட்டுத் திரிந்த கதை தேவையில்லை என நினைக்கிறேன். )
வழக்கு முதல் விசாரணை முடிந்து தவணை போடப் :பட்டிருந்த காலம்.
இப்படியொரு பிரச்சனைக்கு ஆட்படுத்தப்பட்டு விட் டோமே எனக் கவலையாயிருந்தது. இந்த அக்கிரமங்கள் எப் பொழுதுதான் அழியும் ? தமிழின ஒற்றுமை பற்றி மேடை களில் விளாசித் தள்ளுபவர்களுக்கு இது தெரியவில்லையா ? எம்முள் ம விந்து போயிருக்கும் இந்தப் பயங்கர சுரண்டல்கள் அழியும் வரை விடிவு ஏது? நான் சாதாரணன். இதையெல் லாம் சிந்தித்து வருந்துவதைத் தவிர வேறு என்ன பிரயோசனம் எனத் தோன்றியது.
எனக்கு எனது பிரச்சனை.
இரண்டு மூன்று நாட்கள் பித்துப் பிடித்தவனைப் போலத் திரிந்தேன். பின்னர்தான் கண்ணனைச் சந்தித்தேன்.
கண்ணன் சிறுவயதில் என்னுடன் படித்த நண்பன். இப் பொழுது காடையன், களிசறை என எல்லோராலும் ஒதுக்கப் படுபவன். ஆள் ஒரு ‘* சண்டியன் ' என்று ஊருக்குள்ளே
பெயர். ஒரு வேகத்தில் அவனிடமே விஷயத்தைச் சொன்னேன்,
X

Page 17
6 பலாத்காரம்
இரவு மீண்டும் சந்திக்கிருேம். சாராயப் போத்தல் கை மாறி. அது உள்ளே இறங்க அவன் அபார துணிவுடன் தோன்று கிமுன்.
"மச்சான் குணம், நீயும் வா ! இப்ப அங்கை போக லாம் ' என்கிறன் . x^
* எங்கை ??? - நான் ஒருவித கலவரத்துட்ன் வினவு கிறேன்.
* தர்மலிங்கத்தின் வீட்டை '
தேரமோ இரவு. என்ன அசம்பாவிதம் நடக்குமோ எனப் பயந்தாலும் ' ரெண்டத்தா ஒண்டு ‘*’ என்ற நினைவில்
அவன் பின்னலேயே செல்கிறேன். ஒரு பெரிய வில்லுக்கத்தியை எடுத்து சாரத்தினுள் செருகிக் கொள்கிருன். அதைக் கண்டதும், திரும்பி ஓடிவிடலாமா என்று கூட ஒரு கணம் யோசிக்கிறேன். பொலிஸ், ஜீப், சிறை, வேலை எல்லாம் கற்பனையில் சுழல்கின்றன.
** மச்சான் அவனுக்கு ஒண்டும் செய்து போடாதை, உன்னைக் கும்பிட்டன் '
* சும்மா வாடா பயந்த கழுதை ’’ என்கிருன்! நடுங்கிக்
கொண்டே (கழுதையைப் போல) அவனைத் தொடர்கிறேன்.
தர்மலிங்கத்தினுடைய வீ ட் டி ல் வலு நிதானமாகக் கதவைத் தட்டுகிருன் கண்ணன். அவனுடைய மனைவி வந்து கதவைத் திறக்கிருள்.
* தர்மலிங்கம் நிற்கிருனே ???
கண்ணனைக் கண்டதுமே மனுசிக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போய்விட்டது போலும் !
' அவரையேன் இப்ப உமக்கு ? ??
விசுக்கென்று கத்தியை இழுத்த பொழுது, லைட் வெளிச் சத்தில் அது பளிச்சிட்டு கண்ணைக் கூசச் செய்கிறது.

சுதாராஜ் 17
** இதுக்குத்தான். அவரென்ன பெரிய ஆளோ ? ஏழையளை ஏமாத்தப்பாக்கிறியளே. இவன்  ைர காணிப் பிணக்குத் தீர வேணும். இல்லாட்டி உன்ரை தாலி அறும். ? ?
அவள் வெலவெலத்துப் போகிருள்.
* உன் ரை பிள்ளையன் பள்ளிக்கூடத்துக்குப் போகையிக்கை சதக் சதக்கெண்டு வெட்டி விழுத்துவன் " எனத் தொடர்கிருஜன், கண்ணன்.
* ? ஐயோ ! இகென்ன அநியாயம், இதைக் கேட்க ஆவில்லையே ? ? என என்னை அவள் பார்த்த பொழுது நான் மெளனம் சாதிக்கிறேன். அதற்கிடையில் இரண்டொரு முறை “ டேய். தர்மலிங்கம் ** எனச் சத்தமிடுகிருன் கண்ணன்.
** நீங்கள் இதைப் பொ லி சிலை சொல்லலாமெண்டு நினே யாதை யுங்கோ. பொலிசிலை சொல்லி என்னைப் புடிச்சுக் குடுக்கலாம். ஆனல் திரும்பிவந்து சும்மா இருப்பனே. உன்ரை (சடும்பத்தைக் குலைப்பன். ஒவ்வொருத்தராய் உயிரெடுப்பன். இலன்ரை காணிப்பிரச்சனை தீர வேணும். '
w
கண்ணனுடைய அட்டகாசத்தைக் கண்டு குழந்தைகள் ாறுகின்றன. இவன் ஏதாவது ஏறுக்குமாருய்ச் செய்தாலும் ? ன்ற எண்ணத்தில் வாடா போதும் " என அவனை இழுக் 'ேெறன். -
தெருவில் இறங்கியவன் இரண்டொரு கற்களை எடுத்து
சடாரென வீட்டு ஒட்டின்மேல் எறிந்து ஆர்ப்பாட்டம் செய்த
'ாறே வருகிருன்.
Y.
இந்தக் களிசடை வேலைக்கு நீங்கள் என்ன எதிர்ப்புச் சொல்லுவியளோ தெரியாது. ஆணுல் இன்று (அடுத்த நாள் ) கலை தர்மலிங்கம் ஓடி வந்த ஓட்டத்தைப் பார்க்கவேண்டுமே!

Page 18
பலாத்காரம்
அவன் போன பின்னர் ** அடுத்த வழக்குத் தவணையில் சமாதானமாய்ப் போருராம். இப்ப காணி எழுதித் தந்திருக் கிரர் ' என்று சொன்ன அம்மா, ** ஏனடா உந்தக் காவாலி சுடப்புளியளோடை சேர்ந்து மோட்டுவேலை பார்க்கிறனி? ' கனத் துள்ளியடிக்கிரு.
* அக்கிரமங்கள் தலைதூக்கும் பொழுது அவற்றை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுத ந் தா ன் பலாத் காரம் என கண்ண பரமாத்மாவே பார்தத்தில் நிரூபித்திருக் கிருரே " என நான் அம்மாவினுடைய பாணியிலேயே விளக்கம் அளித்ததைக் கேட்டு அக்கா சிரிக்கிருள்.
ஓ ! இனி அவள் எப்போதுமே சிரிப்பாள். என் மனம் கவிதாவை நாடிப் பறக்கிறது.
) A ܥ݂ܳ
(சிரித்திரன் 1976

அந்த நிலவை நான் பார்த்தால்.
சிப்பிடுவதற்கென்று அமர்ந்துவிட்டால், இந்தச் சனியன் பிடித்த நாய் வந்து முன்னே இருந்து விடுகிறது. நான் வளர்த்த நாய்தான் - இப்பொழுது ஒரே குட்டையும் சொறி யும். ' அது முன்னுல் இருக்கும்பொழுது சாப்பிடுவதற்கே அருவருப்பாயிருந்தது. அடித்தேன். அடியின் வலி தாங்க முடியாமற் குளறிவிட்டு மீண்டும் என் காலடியிலேயே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி வந்தது. எனக்கு எரிச்சலாயிருந்தது. மீண்டும் அந்த விறகுக் கட்டையால் ஓங்கினேன். அது.

Page 19
20 பலாத்காரம்
தலையைக் குனிந்து பயத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது. அதன் கண்களிலிருந்து கண்ணிர்கூட வழிவது போலிருந்தது. எனக்கு இரக்கம் மேலிட்டது.
- இந்த நாய்க்கு அடித்தால், அது என்ன செய்யும் ? வலி பொறுக்க முடியாமற் குளறும். மீண்டும் என்னேயே சுற்றி வரும். அது, நான் சோறு போட்டு வளர்த்த நாய். எப்படி அடித்தாலும் நன்றியை மறக்காது.
பேசாமல் வந்து கதிரையில் அமர்ந்தேன். நாயும் வந்து என் காலடியிற் சுருண்டு படுத்துக் கொண்டது- என்னுள்ளத் தில் அவள் நினைவு.
- அவளுக்கும் அன்று கண்மண் தெரியாமல் அடித்
தேன். ** நாயே, என் வீட்டை விட்டுப் போய்விடு!" என்று ஏசினேன்.
அவள் அழுதாள், " என்னை அடியுங்கோ. உதை யுங்கே? .. நாயே, பேயே எண்டெல்லாம் பேசுங்கோ. அதுக் கெல்லாம் உங்களுக்கு உரிமை இருக்குது. உங்களை விட்டுப்
டோக மாத்திரம் சொல்லாதையுங்கோ ! எனக்கு உங்களைத் தவிர வேறை ஆர் இருக்கினம் ?' என்ருள்.
எனது ஆத்திரம் வெடித்தது :
* ஏன் ?. அவன் சிவானந்தளுேடை போய் இரன்!”*
や ** எதுக்காக அதையே திரும்பத் திரும்பச் சொல்லி என்ரை வேதனையைக் கூட்டுறீங்கள்?’ என அழுதாள்.
* துரோகி ! உனக்கு வேதனையாயிருக்குதா ? என்ர வாழ்க்கையையே பாழாக்கிப் போட்டியே. ’’ என ஒரேயடியாகக்
கத்தினேன்.
அவள் போய்விட்டாள்.

சுகாராஜ் 21
அப்படி அவளைக் கலைத்திருக்கக் கூடாது. இன்று தனிமையிலிருக்கும் பொழுதுதான் அவளுடைய அருமையை உணர முடிகிறது. அவள் என்னைப் பிரிந்து ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. இப்பொழுது, அவளை மறந்துவிட வேண்டு மென முயல்கிறேன். முடியவில்லை.
ஆறு வருடங்களுக்கு முன்னர்தான் அளுெடைய பழக்கம் ஏற்பட்டது.
.யாழ் புகையிரத நிலையத்தை விட்டு மெயில் வண்டி கிளம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் எனது நண்பர்களும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்காக, கண்டிக்குப் பிரயாணம் செய்கிருேம். யாழ் நிலையத்தில் ஏறிய வனிதாவும் அவள் சிநேகிதிகள் சிலரும் இருக்க இடமின்றி வந்து கொண்டிருக் கிருர்கள். வனிதாவை அதற்கு முதல் * ரியூசன் கிளாசில் ' கண்டிருக்கிறேன். அவளுடன் கதைக்க வேண்டுமென, எனக்குப் பல நாட்களாகவே அடங்காத துடிப்பு. அதற்குச் சந்தர்ப்பம் வந்ததே என மனது குதூகலித்தது.
** இருக்க இடமில்லையா வனித் ??? என்றேன், த் ல் ஓர் அழுத்தம் போட்டவாறே. அப்படி ஆசையாக அழைப் பதில் எனக்கே, ஒரு தனி உரிமை இருப்பதாக எண்ணம் !
* இல்லை 1 என்றவாறே சிரித்தாள்.
அது போதும் எங்களுக்கு உடனேயே தாராள மனப் பான்மை வந்து விட்டது. தயாள சிந்தையுடன் நாங்கள் ஓர் இருக்கையில் நெருங்கியிருந்தவாறே முன் இருக்கையை அவ(ர்க)ளுக்கு அர்ப்பணித்தோம். ஒவ்வொரு விடயங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாகக் கதை வளர்ந்தது. கெரியாத அரசி யலைப்பற்றியும் விவாதித்தோம். எனக்கிருக்கும் தமிழ்ப்பற்றைக் கண்டு அவள் புகழ்ந்தாள். எனக்குப் பெருமையாக இருத்தது.
பொல்காவலையில் இறங்கி புகையிரதம் மாறியபொழு தும், கண்டியில் இறங்கிய பின்னரும் அவள் பெட்டியைக் காவியது நான்தான் ! காதலி(யி)ன் முன்னே, அவையொன்றும் எனக்குக் கேவலமாகப் படவில்லை.

Page 20
22 பலாத்காரம்
பரீட்சை முடிந்ததும், பேராதனைப் பூந்தோட்டத்திற் சந்தித்தோம். கதையோடு கதையாக, ** நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா வனிதா ?' என்றேன். "ஆம்! என்பது போல தலையை அசைத்தாள். எனக்குக் கவலையாயிருந்தது. அதை அறிந்து கொள்ளாமற் பழகி விட்டோமே என எண்ணினேன். மனவருத்தத்துடன், * அது, யாரென்று எனக்குச் சொல்ல லாமா ?? " என்றேன். ** நீங்கள்தான் !" என்றவாறே எனது நெஞ்சிலே தனது பிஞ்சு விரலைப் பதித்தாள். அந்த மென்மை தந்த ஸ்பரிசம் அல்லது அவளது வார்த்தையினல் மனது அடைந்த ஸ்பரிசமாயிருக்கலாம், இன்ப வானத்திலே மிதந்து பறக்கின் றேனே என்ற உணர்வையடைந்தேன். ஆனந்த மிகுதியால் அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்
தது.
* வனித் ! என் அன்புப் பரிசாக ஏதாவது தரவேணும் போலிருக்கு, என்ன வேண்டும் ??? என்றேன்.
* இந்த இதயத்தை எனக்கு நிரந்தரமாகவே சந்து விடுங்கோ, போதும் !" என மீண்டும் என் நெஞ்சிலே தனது விரலைப் பதித்தாள்.
அந்தக் கையை ஆதரவுடன் பற்றிக் கொண்டே ; * வனித் ! . வனித் ! ... ??
- உணர்ச்சிப் பரவசத்தில் திடீரென எழுந்து கொண் டதில், காலடியிற் படுத்திருந்த நாயையும் மிதித்து விட்டேன். அது கத்திய சத்தத்திற்தான் மீண்டும் சுயநினைவுக்கு வருகிறேன்.
வானத்திலே முழுமதி சிரிக்கிறது.
நிலவு பகலாக எறிக்கிறது.
இளம் தென்றலின் தழுவலில் நழுவி, ஆடுகின்ற தென்னை
யிளம் கீற்றுக்கள் வண்ண மதியைத் தொட்டு விளையாடுவது
போலிருக்கின்றன. நிலவு ஒலைகளில் பட்டுத் தெறிக்கிறது. அந்த நிலவு என்ன சொல்கிறது.

சுதாராஜ் 23
- நான் பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட் டேன். வனிதா பரீட்சையிற் தேறவில்லை. தொடர்ந்து வீட்டி லிருக்க விரும்பாமல் தட்டெழுத்துப் பழகி ஒரு நிறுவனத்தில் வேலைக்கமர்ந்தாள்.
திருமணமாகியதும் அவளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டேன். மனைவி எனக்கு மாத்திரம்தான் சேவை செய்ய வேண்டுமென்பது எனது சுயநலமர்ண ஆசை !
திருமணத்திற்குப் பின்னர் இனிமையாகக் கழிந்தவை எட்டு மாதங்கள்தான். அதன் பின்னர்தான் அந்தச் சூருவளி எங்கள் இன்ப வாழ்வைக் குலைத்தெறிந்தது.
ஒவானந்தனை ஒரு நாள் காண நேர்ந்தது - எனது பழைய நண்பன். வனிதாவுடன் அவளுடைய அலுவலகத்தில் வேலை பார்த்தவன். ஆனல். என் திருமணத்துக்கோ, அதன் பின் எடுரா அவன் என் வீட்டுக்கு வரவில்லை. விரக்தியுற்றவன் போலக் காணப்பட்டான். கேட்டால், ஏதோ சாட்டுச் சொல்லி, எதையோ மறைக்க முயன்றன்.
பொறுமையாக வற்புறுத்தினேன்.
ஓர் எரிமலை வெடித்தது* உன்ரை மனிசி வனிதா. என்னைக் காதலிச்சவள். *
சிவா ! என்ன இது ?*
** உனக்கு ஆத்திரமாய்த்தான் இருக்கும். ஆனல் சத்தியமாய்ச் சொல்லுறன். இது உண்மை !'
** அதை. நீதானே சொல்லுருய்.. ??"
அவள், எப்பிடிச் சொல்லுவாள்?. நீ இன்ஜினியர் . நான் ஒரு கிளார்க்தானே ??? :

Page 21
24 . பலாத்காரம்
வனிதாவைக் காணநேர்ந்த நாளிலிருந்தே. எனிதா எனக்கு மாத்திரம் உரிய சொத்தாக வேண்டும்" என்ற உணர் வுடன் இருந்தவன் நான். அதனற்தான் அவளையே மணமுடித் தேன். ஆனல். அவள் சிவானந்தனையும் காதலித்திருக் கிருளாம் ! எனக்குக் கடிதமெழுதிக்கொண்டு, அலுவலகத்திலும் நடனமாடியிருக்கிருள்.
* வனிதா எனக்குக் கடிதம்கூட எழுதியிருக்கிருள் ?? என்ருன் சிவானந்தன்.
அந்த ஆவேசத்து. ன் வீடு சென்றேன். அதன் விளைவு வனிதாவை அவள் பெற்றேர் வீட்டுக்கு அனுப்ப வைத்தது. அந்தச் செய்கைதான் அப்போதைக்கு எனக்கு நிம்மதியாகத் தோன்றியது.
தனிமையில் இருக்கும் பொழுது வனிதாவின் நினைவு வந்து வெறுப்1ை.1 ஊட்டும். காலம் செல்லச் செல்ல அவ் வெறுப்பு ஷ்ரளவு மாறிக் கொண்டு ந்ெ:ச. வெறுமையான வீட் டில் உலாவும் பொழுது, அவள் இருந்க காலம் நினைவில் வந்து நெஞ்சை உறுத் தம். வேதனே இதயத்தைப் பிய்க்கும். முன்னர் அவள் எனக்கு எழுதிய கடிதங்களை எடுத்து வாசிப்டேன். என்னை எப்படியெல்லாம் ஏற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிருள் ! தான் வணங்கும் தெய்வமென்றும். தன் இதயத்துச் சக்கரவர்த்தி என்றும் ! இவளா இன்னுருவனுக்குக் கடிதம் எழுதக் கூடியவள் ?
சிந்தனை விரிந்தது -
* ஐயோ! ... நான் அவருக்குக் கடிதம் எழுதினேன. அலுவலகப் பழக்கத்திலை சும்மா கதைச்சுச் சிரிக்கிறனுன் தான். அப்பிடியெண்டால் அந்தக் கடிதங்களையே வேண்டிப் பாருங்கோவன் ' என அவள் அழுதது நினைவில் வந்தது.
அப்பொழுது இவையெல்லாம் என் சிந்தனைக்கு எட்ட வில்லை. அவள் எது சொன்னலும் ஆத்திரமாகவே வந்தது. அவள் பேயாகக் காட்சியளித்தாள் எனக்கு.

சுதா ராஜ் 25
சிவானந்தனிடம் சென்று அக்கடிதங்களை வேண்டிப் பார்க்கலாமா என எண்ணினேன்.
கடிதங்களைப் பார்த்ததுமே பெரிய அதிர்ச்சி! அவை வனிதாவினுடைய எழுத்தல்ல.
** இது வனிதாவுடைய கையெழுத்தல்ல ** என்றேன்.
* அவளுடைய கையில்லாமல் காலா இதையெல்லர்ம் எழுதியது? ? ? எனக் கிண்டல் செய்தான் சிவானந்தன்.
(LP5ll gil ந
நான் சற்றுப் பொறுமையாக அவனிடம் கேட்டேன்; * சிவா, இது விளையாட்டில்லை. என்ர குடும்பப் பிரச்சினை. தயவுசெய்து சொல்லு, இதையெல்லாம் அவளே எழுதி உன்னட்டைத் தந்தாளா ? ”*
** எங்கடை ஒபீஸ் பீயோன்தான் தூது. அவனையே கேட்டுப்பார் !" என்ருன் .
பீயோன் பெடியன் சண்முகத்தினுடைய வீட்டுக்குச் சிவானந்தனையும் அழைத்து க் கொண்டு சென்றேன். அவனிடம் விஷயத்தைக் கேட்ட பொழுது, அவனும், ' கடிதமெல்லாம் வனிதாதான் கொடுத்தா " என்றன். எவ்வளவோ கேட்டும் அவன் ஒரே பிடியாகத்தான் நின்றன். எனக்கோ நம்பிக்கை யில்லை. கோபமும் பீறிட்டுக் கொண்டு வந்தது.
தலைமயிரைப் பிடித்து இழுத்து , அவன் கன்னங்களில் மாறிமாறி விளாசினேன்.
ஐயோ! அடியாதையுங்கோ. உண்மையைச் சொல் லுறன் ? ? என்ருன்.
** இந்தக் கடிதங்களை அவ தரவில்லை. "
** பின்னை ஆர் தந்தது ?"
** நான்தான் எழுதுவேன். '

Page 22
26 பலாத்காரம்
3 2 ஏன் ???
* சிவானந்தன் ஐயா தருகிற கடிதங்களை வனிதாவுக்குக் கொடுப்பதால் அவர் எனக்குப் பல விஷயங்களிலை " சப்போட் " பண்ணினர். ஆனல் அவற்றை கடிதங்களுக்கு வனிதா பதில் தரமாட்டா என்பதும் எனக்குத் தெரியும். அவஷக்கு வேறு காதலர் இருந்தார். அவருக்கு அவ எழுதிற கடிதங்களையும் நானே சில வேளைகளில் போஸ்ட் பண்ணியிருக்கிறேன். அதனல் அவற்றை கடிதங்களுக்கு நானே பதில் எழுதிக் கொடுத்தேன். '
சிவானந்தன் ஒரு வெட்கப்பட்ட பேர்வளி. மடையன், தானே சென்று வனிகாவுடன் விஷயத்தைக் கதைத்திருந்தால் அவள் உள்ளதைச் சொல்லியிருப்பாள். வெட்கத்தில் பீயோனி டம் கடிதத்தைக் கொடுத்திருக்கிருன் , அலுவலகப் பழக்கத் தில் வனிதா சிரிக்கும்போதெல்லாம் காதல் என்று வாயைப் பிளந்து விட்டிருக்கிருன்.
* வனித் ! என் கண்ணே, என்னை மன்னித்து விடு. என் இதயம் நிரந்தரமாகவே உனக்குத்தான். ** - மனது மெளனமாக. அழுதது.
வனிதாவைக் கூட்டிவர அவள் தாய் வீட்டுக்குப் போனேன். அங்கே அவள் இல்லை. பிரசவத்திற்காக "ஆஸ்பத் திரிக்குக் கொண்டு சென்றிருந்தார்கள் என அறிந்து சென்றேன்.
ஒப்பிரேசன் ? செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டுமாம். டாக்டரிடம் விசாரித்தேன். ' பிரசவ காலத்தில் மனைவியைக் கவனமாகப் பார்க்க வேண்டும். எங்கேயோ கிணற் றடியில் விழுந்ததாகச் சொன்னுள். குழந்தையை ஒப்பிரேசன் செய்துதான் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனல் குழந்தை இறந்திருக்கிறது. *
** என்ன டாக்டர் ? என் குழந்தை இறந்து விட்டதா? . வனிதா என்னவானள்?’

சுதாராஜ் 27
** இப்பொழுது சென்று தொல்லை கொடுக்க வேண்டாம். உங்கள் மனைவி களைப்புற்றிருக்கிருள். *
* ஐயோ. எனக்காக இல்லாவிட்டாலும், என்வயிற்றில் வளரும் உங்கள் குழந்தைக்காகவாவது என்னை அடியாதை யுங்கோ, உங்களைக் கும்பிடுறன் . - அன்று ஆத்திரவேகத்தில், நிதானமிழந்து அடித்த பொழுது அவளது வயிற்றிலும் அடி பட்டு விட்டது. அதன் தாக்கம் இப்பொழுது எனது வயிற் றில் அடித்தது.
வனிதா 1 மலரிலும் மெல்லிய உன் மனத்தை வருத் தினேன். மலர்கள் இறைவனுக்கு பூஜிக்கப்பட வேண்டியவை. அதை அவமதித்ததற்கு எனக்குக் கிடைத்த தண்டனை போதும்.
சிறிது நேரத்தில் தாதியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றேன். என்னரிய வனித் கட்டிலிற் கிடந்தாள். அமைதியாக. அசையாமல், . உறங்குகின்ற மலரைப்போல். கன்னங்கள் சிவந்து வீங்கிப் போயிருந்தன. பாவம் ! நன்ருக அழுதிருக்கிருள். .
** நல்ல சத்தான சாப்பாடே சாப்பிடுவதில்லையா.
உங்கடை மிஸ்ஸிஸ்) ? பிரசவகாலத்தில் சாப்பாட்டு விஷயத் தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒழுங்கான உறக்
கமோ. உணவோ இல்லாமல் வலிமையை இழந்து விட்டாள். பாவம்' -இது தாதியினுடைய அனுதாபம்.
என்னைப் பிரிந்து இருக்க முடியாதென்பாயே வனித்..? எனக்காக, இந்த ஆத்திரக்கார மடையனுக்காக. நீ ஏன் ஊணுே உறக்கமோ இன்றி இருந்தாய்? உனக்கு என்னைத் தெரியாதா வனித் ..? காரணமில்லாத காரணங்களுக்கெல்
லாம் சட்டெனக் கோபப்பட்டுவிடுவேனே. பின்னர் அதற் காக. அந்தக் கோபத்தால் உன்னை வருத்தியதற்காக எவ்வளவு கவலைப்படுவேன். நீ. என்னைப்புரிந்து கொண்டவள். எனது கோபம் ஆறிய பொழுது, ஏன் என்னைச் சமாதானப் படுத் தாமல் விட்ட ப்? , வனிதா. உனது பொறுமையும் எல்லே
கடந்து விட்டதா ?

Page 23
፰ ዶ; பலாத்காரம்
அவள் கண்விழிக்கும் நேரத்தை எதிர்பார்த்சபடியே கன்னங்களைத் தடவிக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் கண்கள் திறந்தன. "வனித் வனித் !" என அவள் தலையை அணைத் துக் கொண்டேன். நெற்றியில் ஆதரவுடன் முத்தமிட்டேன். அப்பொழுது எனது கண்ணிர் அவள் முகத்தில் விழுந்து எனது தவறுக்காக மன்னிப்புக் கோரியது.
** நான் உங்களுக்குத் துரோகம் செய்யவில்லை. சத்தியமாகத் துரோகம் செய்யவில்லை. என்னை நம்புவீங்களா அத்தான் ??? - அவள் முனகலுடன் அழுதாள்.
** @ຄໍາທີ່ດ) வனித் 1. எனக்கு எல்லாம் தெரியும். என் இதயம் நிரந்தரமாகவே உனக்குத்தான். '
** அத்தான். இனி, நீங்கள் எனக்கு அடிக்கமாட்டிங் களே?. என்னைக் கலைக்கமாட்டீங்களே. *
* வனித் என்னை ஏணிப்படி வதைக்கிருய் ? என்னைப் பார்த்துச் சிரிக்கமாட்டாயா ? நான் இனி என்றுமே உன்னை விட்டுப் பிரியமாட்டேன். '
வனிதா சிரிக்கவில்லை. அப்படியே பார்த்துக் கொண் டிருந்தாள்.
" ஏன் வனித் சிரிக்கமாட்டாயாம்? எனக்குப் பயமாக இருக்கிறது. வனித் வனித் ! . அவளுடைய அந்தக் கண்கள். அவை ஏன்.? அவை என்னை விட்டு எங்கேயோ. ஒ வனிதா,
நான். , நான் என் உயிருக்காக ஒலமிடுவதையும் பொருட்படுத் தாமல் அவள் செத்துக் கொண்டே இருந்தாள்.
என் வனிதா செத்துப் போய் விட்டாள்.
அவள் இறந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இன்னமும் மறக்க முடியவில்லை. என்னையும் மீறி
அடிக்கடி அழுது விடுகிறேன். கண்ணிர்த்துளிகள் முன்னே படுத்திருந்த நாயின் முகத்தில் விழுந்ததும். அது என்னை

சுதாராஜ் 29
நிமிர்ந்து பார்த்து, என் கால்களை நக்கிக்கொடுக்கிறது. தேற்று கிறது ? இப்பொழுது அதுதானே எனக்குத் துணை. மடையன், அதைக்கூட அடிக்கத் துணிந்தேனே.
...மனம் நிம்மதியின்றி. ஏகாந்தத்தை நாடுகிறது. எழுந்து, தென்னங் கன்றுகளினுாடு செல்கிறேன். ஒலைகளினூடு பால் நிலவு என்னை, எட்டி எட்டிப் பார்க்கிறது.
அந்த நிலவு என்ன சொல்கிறது.
என் நிலையைப் பார்த்தா நிலவு சிரிக்கிறது ?. அதில் வனிதாவின் நினைவுகளுடன் எனது இதயம் கரைந்து கொண்டி ருக்கிறது.
குவிந்து நிற்கும் மரங்களின் ஒலைகள் சலசலத்துக் கொள்கின்றன. அவற்றை ஊடுருவி வந்த குளிர்ந்த காற்று என்னைத் தழுவிக் கொள்கின்றது. என் பின்னே வந்த நாய் எதற்காகவோ ஊளையிடுகிறது. அதன் அழுகையில் எனது உடல் மயிர்க் கூச்செறிகிறது. என் இதயத்தை நிரந்தரமாக அவளிடம் கொடுத்து விட்டேன் - அவள் என்னை விட்டுப் போய்விடவா போகிருள் ?
Y.
(மாணிக்கம் 1973

Page 24
புதுச்சட்டை
நிரளைக்குப் புதுவருடம்.
அவனுக்கு அழுகைதான் வருகிறது! அதோ. குமார் தனது தந்தையுடன் காரிலே செல்கிரு:ன். அவன் பெரிய கடைக் குச் செல்வான். புதுச்சட்டை, சப்பாத்து எல்லாம் வாங்குவான், பள்ளிக்கூடத்துக்கும் அதைப் போட்டுக் கொண்டு வருவான். , .வேண்டித்தந்த புதுச்சட்டை என்று புளுகுவான் חו ש29 *
 

சுதாராஜ் 31
அவனுக்கு அழுகைதான் வருகிறது.
அவனுக்கும் ஐயா வீட்டில் இருந்தால் எவ்வ்ளவு நல்ல தாய் இருக்கும். அவர் சைக்கிளிலே சென்று புதுச்சட்டை வேண்டிவருவார். அவன் போடுவான்; ' ஆனல் ஐயாதான் பொலீஸ் ஸ்டேசனில் இருக்கிருரே. பொலீஸ் பிடிச்சு ஐயாவை ஆறுமாசமாய் அடைச்சு வைச்சிருக்குது. *
- ஐயா !. ஐயா!. என நினைத்துக் கொண்டு தேம் பித் தேம்பி அழுதான். அந்த அழுகை நீடிக்கு முன்பே ஒரு சந்தோஷ உணர்வும் மேலிட்டது; நாளேக்கு ஐயா வருவாராம். இண்டையோடை மறியல் முடியுதாம். அம்மாதான் சொன்னு,
எல்லாம் அந்தக் குமாருடைய அம்மா செய்த வேலை தான். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள். அப்படித் தான் அவனுக்குத் தோன்றுகிறது. * கடவுளே! அவையஞக்குக் காசோடை சேர்த்துக் கெட்ட குணத்தையும் படைச்சனியா ?? என்று நினைத்தான்.
அம்மா சொல்லுவா; கடவுள் நல்லவராம். அவர்தான் எங்களையெல்லாம் படைச்சவராம். அவரை ஒவ்வொரு நாளும் கும்பிட்டால் நாங்கள் கேட்கிறதெல்லாம் தருவாராம் ! ' பணக் கார ஆக்கள் நெடுகலும் கும்பிட்டுக் கும்பிட்டுத்தான் காசு சேர்த்திருக்கினம் போலை " என்று நினைத்தான். ** அப்பூ. சாமி! எங்களுக்கும் கன காசு தா. குமார் அவையளுக்குக் குடுத்தது போலை வீடு, கார் எல்லாம் தா!' - அவனும் தான் ஒவ்வொரு நாளும் கும்பிடுகிருன். ஆனல், கடவுள் ஏன் கண் திறக்கிருரில்லை ? அவரும் பணக்காரருக்குத்தான் சைட் ப்ண்ணு ருரோ?
米 率 水
அவன் மூன்றும் வகுப்பிற் படித்துக் கொண்டிருக்கிருன்பெயரளவிற் தான். பள்ளிக்கூடம் என்ருல் வேப்பங்காய் ! காலமை விடியுமுன்பே அம்மா வந்து அவனைத்தட்டி எழுப்புவா:

Page 25
32 பலாத்காரம்
* சின்னும்பி 1. டேய், எழும்படா !. பள்ளிக்கு நேரம் போகுது. '
பிறப்புப் பத்திரத்தில் அவனுடைய பெயர் சின்னத் தம்பி. அது வீட்டிலே " சின்னம்பி " ஆக மருவியது. பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் * கறுவல் ? என்றுதான் அழைக்கப்படுகிறன். ஆக, அவனுக்குத் தனது சரியான பெயர் இன்னும் தெரியாது.
அம்மா எழுப்பும் பொழுது சினந்துகொண்டே எழும்பு வான்: ‘* நான் போகமாட்டன் . . . போணை; " " அம்மா விட மாட்டா. ஏதாவது சமாதானம் சொல்லி அனுப்பி விடுவா. சில வேளைகளில் "நாரிமுறிய இரண்டு கொடுக்க வேண்டியும் வரும்.
மண் குந்தின் புழுதிகள் உடம்பு முழுவதும் ஒட்டியிருக் கும். ‘ஒரு இடத்திலை கிடந்து நித்திரை கொள்ளத் தெரியாது. நாலு பக்கமும் உழத்தினுல்தான் உனக்கு நித்திரை வரும். ' எனத் திட்டியபடியே, அம்மா வாளியில் தண்ணீர் எடுத்து மேலைக் கழுவி விடுவா. சட்டைபோட்டு அனுப்பி விடுவா . வழக்கமான பழைய கசங்கிய சட்டைதான். பள்ளிக்கூடத்தில் மற்றப் பெடியளுடன் தன்னை ஒப்பிடும் பொழுது கூச்சமாயிருக் கும். அதனுற்த்ானே என்னவோ, வாத்திமாரெல்லாம் அவனைக் கடைசி வாங்கில் தனியாகத்தான் இருக்கச் சொல்கிருர்கள். கடைசியிலே இருந்து விட்டால் அவனுக்கு வேறு பிராக்கு. வாத்தியார், அதையே சாட்டாக வைத்துக் கொண்டு, 'கறுவல், வெளியாலை போய் வெயிலுக்கை நில்லடா !" என்று அனுப்பி விடுவார்; சின்னத்தம்பிக்கு பள்ளிக்கூடம் கசக்கும்.
事 岑 宰
பள்ளிக்கூடம் விட்டதும் குமாரினுடைய வீட்டு வழி யாகவே சின்னம்பி வருவான். குமார் தன் ஐயாவுடன் முதலிலே காரில் வந்து விடுவான்.

சுதாராஜ் - 3ጋ
.குமாரினுடைய வீட்டு விருந்தையில் ஒரு சின்ன வீடு வடிவாகக் கட்டப்பட்டிருக்கிறது. நிற நிற ரியூஸ்களால் அவன் அதைச் சோடித்திருக்கிமுன். அதுதானும் குமாரும் தங்கச்சியும் * அம்மா ஐயா ? விளையாட்டு விளையாடுகின்ற வீடு. அவனுக் கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனல். அம்மா அடிப்பாவே 1 அங்கே அவன் போகக் கூடாதாம். போனல், குமாரின் அம்மா அவனுக்கு அடிப்பா வாம். ? அப்படித்தான் குமாரின் அம்மா என்ன கூடாதவளா? போய்த்தான் பார்க்கலாமே ??
* குமார். நானும் விளையாட வாட்டேடா ? ? என்ற வாறே உள்ளே போனன். கோயிலிலே விற்கிற சின்னச் சின்னப் பானை சட்டியெல்லாம் வைத்திருந்தார்கள். செவ்வரத்தம் பூவை நறுக்கி ஒரு சின்னச்சட்டியிலே போட்டு, ஒலை நெட்டிகளால் எரித்துக் கொண்டிருந்தாள் குமாரின் தங்கச்சி. இவனைக் கண்ட தும், சீ. சனியன், நீ வேண்டாம் போ!' என்று ஏசினுள். சின்னம்பிக்கு மூக்கு முட்டக் கோபம் வந்தது. அவளுடைய முதுகில் அப்படியே ஓங்கிக் குத்த வேண்டும் போலிருந்தது.
** இல்லை. அவனும் வரட்டும். அவன்தான் எங்கடை வேலைக்காறனும் . என்ன ?’ என்று தங்கையைச் சமாதானப் படுத்தினன் குமார். அவர்களுடைய "அம்மா ஐயா ? விளை யாட்டில் அவன் வேலைக்காரணுகச் சேர்ந்து கொண்டான்.
**டேய் ! கறுவல், இந்தக் காரை ஒருக்காய்த் துடைத்து விடடா " என்று கட்டளையிட்டான் குமார். நல்ல வடிவான சின்னக் கார் . பளபளத்துக் கொண்டிருந்தது. அவனது ஐயா வேண்டிக் கொடுத்த காராம். அதிலே ஏறி $هL- வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
**டேய், குமார். ஒருக்காய் ஒடிப் பாக்கட்டேடா? என்று கேட்டான். ** டேய் ! மூதேசி 1. அம்மா ஐயா விளை யாட்டிலை இப்பிடியே கதைக்கிறது ?. நீ வேலைக்காறன். என்னை ஐயா எண்டெல்லோ கூப்பிட வேணும்' என்ருன்
குமார்.

Page 26
34 பலாத்காரம்
'ஐயா !. இந்தக் காரை ஓடிப்பாக்கட்டா ???
* சரி!” என்று முதலாளிபாணியில் அனுமதித்தான் குமார். சின்னத்தம்பி காரினுள் ஏறி, அமத்தி உளக்கி ஒடினன். இன்பத்தின் எல்லையில் இருப்பது போன்ற உணர்வு !
அப்போது குமாரின் அம்மா வந்தாள் சிங்கம்போல : "இந்தக் கழுதையை ஏன் குமார் சேர்த்து விளையாடுறணி ??? என்று கர்ச்சித்தாள். அவனது இடது கையைப் பிடித்துத் தூக்கி, தொப் " என்று கீழே போட்டாள். அவன் பயந்து, அவளை நிமிர்ந்து பார்த்தான். அவ்ஸ் மள மள வென்று அவன் முதுகிலே அடித்தாள். அவன் குளறத் தொடங்கினன்.
** இந்தக் கீழ்சாதி நாய%ள ஏன் குமார் விருந்தையிலை ஏற விட்டனி ?? - அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அவன் படியிலே தடக்குப்பட்டு விழுந்தான். அப்பொழுது கதிரையிலே படுத்திருந்த பெரிய நாயொன்று பாய்ந்து வந்தது. அவன்
எழும்புவதற்கு முதலே, அவுக் கெனக் கவ்வியது. ** ஐயோ .
அம்மா!' என்று ஈனமாக அவன் குளறத் தொடங்கினன். குமார் நாயை அதட்டினுன்.
சின்னத்தம்பி அழுது கொண்டே வீட்டுக்கு நடந்தான். நாய் கடித்த இடத்திலிருந்து வழியும் இரத்தத்தைப் பார்த்து விக்கி விக்கி அழுதான். அம்மாவினுடைய சொல்லைக் கேட்காமல் போனபடியாற்தான் இவ்வளவும் நடந்தது என்று நினைக்க, பெரிய துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. "அம்மா " என்று குளறியவாறு வீட்டுக்கு வந்தான்.
அம்மா, என்னவோ ஏதோவென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தா. ** என்ன ராசா ?. என்ன நடந்தது ??? என்று துடிச்சுப் பதைச்சுக் கேட்டா. சீலைத்தலைப்பினுல் கண்ணிரையும் புழுதியையும் துடைத்து விட்டா.
- குமாரின்ரை அம்மா. அடிச்சுப்போட்டா. * சின்னும்பியின் அழுகை அம்மாவைக் கண்டதும் இன்னும் கூடி யது.

சுதாராஜ் 35
அம்மா சீறின; பொங்கிவந்த ஆத்திரத்தைச் சின்னும்பி மேலேயே தீர்த்தா ! W
** உன்னையெல்லே அங்கை போகவேண்டாமெண்ட ஞன். மெய்ய?. இனி அங்கை போவியே ?. மெய்யடா?. சொல்லு !. இனி அங்கை போவியே ???
6 6. ஐயோ ... போகையில்லையம்மா. அடியாதை யணை. ’ எனக் குளறியவாறே காலிலே கசிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் துடைத்தான்.
** என்னடா. உது ?"
** அவையின்ரை நாய் கடிச்சுப் போட்டுது. ’’
அம்மாவுக்கும் அழுகை வந்தது. நாய்கடித்த இடத்தி லிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டு சீலைத்துணியால் கட்டிவிட்டா.
** பொறு!... , அந்தத் தேவடியாவிட்டைக் கேட்டுக் கொண்டு வாறன் !' என்றவாறே வெளியேறினுள். சின்னம்பியும் பின்னே ஓடினன்.
** மெய்யேணை? உனக்கு ஈவிரக்கம் இல்லையே?. ஏன் இந்தப் பிள்ளையை இப்பிடிப் போட்டு அடிச்சுக் கொண்டனி?... உனக்குப் பிள்ளை குட்டியள் இல்லையோ?...”*
** நளத்திக்கு வைச்ச வாய்க்கொழுப்பைப் பாரன் ! ... உன்ரை பிள்ளை பெரிய திரவியம் எண்டால் ஏன்ரி வீடு விடாய் நக்க விடுறணி. அவையஞம் பெரிய ஆக்கள் எண்டு கதைக்க வந்திட்டினம் !.. இதிலை நிண்டு ஊரைக் கூப்பிடாமல் போடி தோறை ! "
நாய்கள் அமர்க்களமாகக் குரைத்தன.
சின்னம்பி அம்மாவைப் பிடித்து இழுத்தான்; ' வாணை ... போவம் !" அம்மா மண்ணை அள்ளி வீசி, ** நாசமாய்ப்

Page 27
36 பலாத்காரம்
போங்கோ ? ? என்று சபித்தவாறே வந்தா. " பொறுங்கோ ! உங்களுக்குக் காட்டித்தாறன் ' என்று குமாரின் அம்மா ஏதோ சபதம் எடுத்தாள்.
来 米 来
சின்னத்தம்பியின் மனதிற்குள்ளிருந்து ஏதோ கிண்டியது. தங்களில் ஏதோ குறைபாடு இருப்பதாக அவன் நினைத்தான். பள்ளிக்கூடத்தில் தன்னைப் பின்வாங்கில் தனியாக இருக்கச் செய்வதற்கும், ' கறுவலோடை சேரக்கூடாது ' என்று * சக மாணவர்கள் வாத்திமாரின் சொல்லைக் கேட்டு ஒதுங்கிக் கொள் வதற்கும் ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டும். தான் குமாரின் வீட்டினுள் ஏறி விஃாயாடியதும் குமாரின் அம்மா பேய்போல நிற்பதற்கும் ஏதோ காரணம் இருக்கவே செய்கிறது. அம்மா கூட அடிக்கடி, 'அங்கை போகாதை . அவையள் அடிப்பினம் ' என்று சொல்லுவா, அப்படியானல் அவவும் அந்தக் காரணத்தைத் செரிந்து வைத்துக்கொண்டு தனக்குச் சொல்லாமல் மறைக்கின்ரு போலும் ! கால், கை, மூக்கு, கண் எல்லாம் தனக்கும் குமாருக்கும் ஒரே மாதிரித்தானே இருக் கிறது. குமாரைப் போலவே தானும் குரல் கொடுத்துக் கதைக் கிமுன். தான் கொஞ்சம் கறுப்பு - அவ்வளவுதான் ! ஆனல் அவர்களுடைய தாயும் கறுப்புத்தானே ! அது வலு குசாலாகக் கதிரையிலே படுத்திருக்கிறது.
அம்மாவிடம் கேட்டான்.
** அம்மா . . . ஏன் எங்களை ஒருத்தரும் சேர்க்கின மில்லை ?*
* நாங்கள் கூடாத சாதி, அவையள் நல்ல சாதி. அது தான் சேர்க்கினமில்லை. "
அவனது மனம் இன்னும் குழம்பியது
* சாதி எண்டால் என்ன ???

சுதாராஜ் 37
அப்பொழுதுதான் அம்மாவினுடைய நெஞ்சிலும் அந்தக் கேள்வி இடித்தது. தன் புத்திக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தாள்; :
* ....நாய்களிலை, அலிசேசன் நாய் ... பறை நாய் எண்டு வெவ்வேறை சாதி இருக்கிறதுதானே ?. . . கோழியளிலை யும் லைக்கோன் கோழி. பறைக்கோழி எண்டு சொல்லுறம் தானே ?. அது மாதிரித்தான் மணிசரிலையும்...”*
அம்மா சொல்லி முடிக்கவில்லை. அவன் ‘டக் கென்று கேட்டான் :
** அப்படியெண் டால் ... நாய்கள் எல்லாம் ஒண்டாய்ச் சேர்ந்து விளையாடுறதுதானே ?. கோழியளும் ஒண்டாய்த் திரிஞ்சு தீன் பொறுக்குதுதானே?. *
அவனுடைய கேள்வி அம்மாவையும் குழப்பியது. அவன் இன்னும் ஏதோ சிந்தணைவயப்பட்டவன் போலச் சொன்னன்:
* நாய்கள் . . . கோழியள் மிருகங்களிலையெண்டாலும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமிருக்கு. அப்பிடியிருந்தும் அது கள் சேர்ந்து திரியுதுகள். ஆளுல் மணிசர் எல்லாரும் ஒரு மாதிரித்தானே?"
இந்த முளையானுக்கு இருக்கிற புத்தியைப் பாரன் ! ?
என்று அம்மா ஆச்சரியப்பட்டா. பின்னர்; ' என்னவோ தம்பி. அவையள்தான் சேரக்கூடாதெண்டுகினம். ஆர்
கண்டது ' என பேச்சுக்கு முற்றுப்புள் வைக்கப் பார்த்தாள்.
* ஏன் ??’ என்று அவன் தொடர்ந்தான்.
* உன்ரை கொப்பர் மரத்திலை ஏறிக் கள்ளுச் சீவிற படியால். '
சின்னத் தம்பிக்கு ஆச்சரியம் மேலிட்டது. guir வினுடைய வேலை அது. அவர் கள்ளுச்சீவி விற்காவிட்டால்

Page 28
38 பலாத்காரம்
இவனுக்குச் சாப்பாடு ஏது? கள்ளையும் அவையள்தானே குடிக் கினம் ? எத்தனையோ முறை பல பெரிய மணிசர்கள் ? - இவன் வீடு தேடி வந்து தகப்பனிடம் " பிளா ? விலே கள்ளு வேண்டி உறிஞ்சி உறிஞ்சிக் குடித்ததை இவன் பார்த்திருக்கிருன். ஒராள் குடிச்ச பிளாவிலேயே எல்லாரும் சூப்பிக் குடிப்பதைப் பார்த்து இவன் " அரியண்டப்பட்டிருக்கிருன்.
** நாங்கள் அவையின்ரை விருந்தையிலை ஏறக்கூடாது. அவையள் வீட்டிலை ஒண்டும் தொடக்கூடாது. எங்களோடை சேரக்கூடாது எண்டு சொல்லிப் போட்டுப் பேந்து எங்களிட் டையே வேண்டிக் குடிக்கினம்தானே ???
அம்மாவுக்கு அவனுடைய கேள்வி சங்கடமாயிருந்தது.
* அது ஒருத்தருக்கும் தெரியாமைத்தானே தம்பி குடிக் கினம். நீ. பே. 1. உன்ரை வேலையைப் பார் ? ? என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.
இருளுகின்ற நேரம் போல ஒரு ஜீப் வந்து சின்னத்தம்பி யின் வீட்டிற்கு முன்னல் நின்றது. பொலிஸ்காரர்கள் தொப்புத் தொப்பென்று இறங்கி வந்தார்கள். r
*அடே 1. முத்தையா !. '
*" என்ன ஐயா?" என்றவாறே இவனுடைய ஐயா வெளியே போனர்.
** என்னடா ?. நீங்களெல்லாம் பெரிய ஆக்களோ ?... என்னடா சண்டித்தனம் ? " என்றவாறே ஒருவன் ஐயாவி னுடைய நெஞ்சிலே குத்தினன்.
* ஐயோ!... அடியாதையுங்கோ ஐயா... ' என்று ஐயா கும்பிடத் தொடங்கினர். அந்த மடையன்கள், ஐயா கும்பிடக் கும்பிட பிடரியிலையும், நெஞ்சிலையும் குத்தினங்கள். அம்மா அழுதுகொண்டு ஒடிஞ. அவன் பிடித்து இழுத்தான். பயமாக விருந்தது. அவங்கள் அம்மாவுக்கும் அடித்துப் போட்டால் என்ன செய்வது ?

சுதாராஜ் 39
ஐயாவை ஜீப்புக்குள்ளே தள்ளினங்கள். ஒரு மூலையில் சுருண்டு விழுந்தார் அவர். சின்னம்பியும் அம்மாவும் அழுது குளறத் தொடங்கினர். ஜீப் சென்று விட்டது.
பின்னர் வழக்கு நடந்தது . ஐயாவுக்கு ஆறு மாதம் மறியல் தீர்ந்தது. என்னத்துக்கென்றே அவனுக்குத் தெரியாது.
.ஐயா நாளைக்கு வருவாராம்.
அவனுக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது; ஐயா
வருவார், அவனுக்குப் புதுச்சட்டை வேண்டித் தருவார். நாளைக்குப் புதுவருடத்துக்கு அவன் புதுச்சட்டை போடுவான்.
V I ! !
இன்று வருடப்பிறப்பு.
எல்லோரும் புதுச்சட்டைகளுடன் போகிருர்கள், பச்சை, சிவப்பு, மஞ்சள் ! எவ்வளவு வடிவான சட்டைகள் ! சின்னத் தம்பி நித்திரை முளித்தது முதல் வீட்டுவாசலிலேயே நிற்கிருன். இன்னும் முகங்கூட கழுவவில்லை. ஐயா இப்ப வருவார் ! பசிக் கிறது; சாப்பிடக்கூட மனம் வரவில்லை. . . புதுச்சட்டை ?
...குமாரும் தங்கச்சியும் நல்ல வடிவான புதுச்சட்டை போட்டுக்கொண்டு போகிருர்கள். இவனைக் கண்டதும், சப்பாத் துக்களை " டொக்கு டொக்" என்று சத்தமிடும்படி தேய்த்து நடக்கிருர்கள். இவன் தனது கசங்கிப் போன மண்ணிறக் களிசானைப் பரிதாபமாகப் பார்க்கிருன். குமாரின் தங்கை, இவனைக் காட்டி ஏதோ கூறுகிருள். இவன் டக் என்று ஒரு மரத்துக்குப் பின்னல் ஒழித்துக் கொள்கிருன் . ஒழித்து நின்று கொண்டே எட்டிப் பார்க்கிமுன். அவர்கள் சிரிக்கிருர்கள். சின் னத்தம்பிக்கு அழுகை வருகிறது. கலங்கிய கண்களைத் துடைத் துக்கொள்கிருன்.
....அதோ தூரத்தில் ஐயா வருவது போலத் தெரி கிறது; ஆஹா . . . ஐயாவேதான் ! சின்னம்பி சிரித்துக் கொண்டே ஒடுகிறன். ஒடும் பொழுது அவிண்டு விழுந்த களிசானைத் தூக்

Page 29
0
பலாத்காரம்
கிப் பிடித்துக் கொண்டு ஒடுகிறன். ஒடிப்போய். அப்படியே ஜயாவைக் கட்டியணைப்பான். அவர், அவன்ைத் தூக்கிக் கொஞ்சு வார். குளித் துவிட்டுப் போய் புதுச்சட்டை வேண்டிவருவார்.
அவனுக்குப் பிடித்த இரத்தச்சிவப்பு நிறத்தில் வேண்டிவருவார்.
** ஐயா !. ஐயா !... ' ஆசை பொங்க அழைத்துக் கொண்டே ஒடுகிருன், ஐயாவைக் கட்டியணைத்து அவர் இடுப் பைப் பிடித்துக் கொண்டு தனது கால்களை உயர்த்தி அப்படியே தூங்குகிருன்.
ஐயா, அவனைத் தூக்கவில்லை ? கொஞ்சவில்லை ?
* சீச்சீ. தம்பி என்னிலை முட்டாதை அங்காலை போ ! "
இதென்ன இது ? ஐயாவும் மாறிவிட்டார் ! ஐயாவைப் பார்த்துக் கொண்டே அவர் பின்னல் நடந்து செல்கிருன். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு. . . இவன் கண்களில் நீர் திரையிடுகிறது.
தாடி வளர்ந்து, கண்கள் உள்ளே சென்று, இருமி இருமி. இரத்தமாகத் துப்புகிருர் ஐயா! வீட்டுக்கு வந்ததும், உள்ளே வரவில்லை. அம்மா ஓடிவந்தா -
** அன்னம் !. நான் இனி உங்களோடை இருக் கேலாது. கசம் பிடிச்சிட்டுது. இனிக் கசாஸ்பத்திரிக்குத்தான் போகவேணும். **
- முற்றத்து மரத்திலே ஐயா சாய்த்து கொண்டிருக் கிறர். ஒரு பேணியில் கோப்பி கொண்டு வருகின்ற அம்மா. அதைச் சிரட்டையில் ஊற்றிக் குடிக்கிருர் அவர். ஐயா, அவ னுடைய வீட்டாலும் ஒதுக்கப்பட்டு விட்டாரா ?
சிவந்துபோன அவர் கண்கள் அவனைப் பார்த்தபொழுது சின்னத்தம்பி விம்மி விம்மி அழத்தொடங்குகிருன்.
...அவனுடைய கண்களும் சிவந்து விட்டன.
Y

நீர்ப்பாசனத் திணைக் களத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் அகில இலங்கை ரீதி பாக நடத்திய 1974-h ஆண்டிற்கான சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்
19து.
ബഴ്ച முன்னேற வேண்டுமென்று யாருக்குத்தான் விருப்பமிருக்காது? மூன்று வருடங்களாக அதற்கென (பதவி உயர்விற்காக) படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறேன் . பலன் ?
- இன்று சிங்களத் தராதரப் பரீட்சை முடிவுகள் வெளி யாகின. நீங்கள் நம்பமாட்டீர்கள்; எங்கள் அலுவலகத்தில் ஆருவது முறையாகவும் முதலாம் தரப் பரீட்சையிற் தோல்வி யடைந்து மீண்டும் ஒரு சாதனையை நிலைநாட்டிவிட்டேன்!

Page 30
42 பலாத்காரம்
என்ன செய்வது ? நாலு பிள்ளைகளைப் பெற்ற பின்ன (ரும், படியடா’ என்று மனுசனைச் சொன்னல், யாராற்கான் முடியும் ? - கண்மண் தெரியாமல் இன்கிறீமென்ட் °டைக் கட் " பண்ணிவிட்டார்கள். நான் நான்கு பிள்ளைகளுடனும் ஒரு மனைவியுடனும், (சத்தியமாக ) விலைவாசிகள் உயர்ந்து கொண்டி ருக்கும் இக்காலத்தில் வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல், திண்டாடுகிறேன்.
விதி 1 அரச கட்டளை அப்படி - நான் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் உரிய ஓர் அரச சேவகனல்லவா :
- அரசகரும மொழித் திணைக்களத்தின் கற்பித்தற் பிரிவினுற் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் தமிழ் மூலம் சிங் களம் முதலாம் தரச் சிங்களத் தேர்ச்சிக்கான பாடங்களை எடுத் துக் கொண்டு மேசை முன் அமர்ந்தேன்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன், மரத்தின் மீதேறி அங்கே தொங்கிக் கொண்டிருந்த உடலைத் தள்ளி வீழ்த்தினன். பின்னர், அந்த உடலைச் சுமந்து கொண்டு செல்ல, அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து ".
* மடையா ! அம்புலிமாமா படிக்கிற நேரமே இது ? பாடப் புத்தகத்தை எடுத்துப் படி ' - எனது பலமான அதட் டலில் பயந்துபோன மூத்தமகன் சுதர்ஸன் சிணுங்கியபடி எழுத்து சென்றன். -
* உங்களுக்கு இப்ப என்ன வந்திட்டுது? ஏன் பிள்ளை யளைப் போட்டு இப்படித் திட்டிறியள்?' என்றவாறே அடுப் படியில் இருந்து வெளியே தோன்றினுள் என் மனைவி.
* லலிதா, பிள்ளைகளா இதுகள்? ஒரே கறிக்கடை மாதிரி ! கீயோ மாயோவெண்டு சத்தம் போட்டுக் கொண்டு என்னைப் படிக்கவும் விடாமல். '
* உங்கடை படிப்பும் நீங்களும் ! அந்த விசித்திரம் தானே இண்டைக்கு வெளிவந்திருக்குது !' V

சுதாராஜ் 43
** போச்சடா !?? இவள் கூட என்னைக் கிண்டல் செய் 4த் தொடங்கி விட்டாள். இனி யார்தான் என்ன சொல்ல மாட்டார்கள்; எனக்கும் ரோசம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும் ? எதுவுமே பேசாமல் புத்தகத்தினுள்ளே மூழ்கினேன்.
பிள்ளைகள் ஒவ்வொன்ருக நித்திரைக்குச் சென்றன.
விருந்தையில் அப்படியே புத்ககத்துடன் நித்திண்ரயாகி விட்ட சுதர்ஸனே எழுப்பி சாப்பாடு கொடுத்துப் படுக்க வைத் தாள் லலிதா.
படிப்பதற்கு உகந்த ஒரு சூழ்நிலை உருவாகியதைப் போலிருந்தது. மலர்ச்செடிகளினூடு வீசி வந்த குளிர்ந்த தென்றல் உடலுக்கு இதத்தை அளித்தது. ஒரு சிகரட்டைப் 1ற்ற வைத்து அதில் இலயித்தவாறே, பாடத்திற் கவனத்தைச் செலுத்தினேன். m
** இஞ்சருங்கோ வந்து சாப்பிடுங்கோவன்
* இப்ப வேண்டாம் லலிதா. கொஞ்சம் பொறுத்துச் Frių Gvinrub. ”” r
** மத்தியானம் காச்சின சோறு, வேர்த்துப் போடும் வந்து சாப்பிட்டிட்டு இருங்கோ. '
எனக்கு இரவில் சோறு சாப்பிடுவது அவ்வளவாகப் பிடிப்பதில்லை" ஏதாவது ப்லகாரம் சாப்பிடவேண்டும்.
* லலிதா; ஏன் இண்டைக்கு இடியப்பம் கிடியப்பம் அவிக்கயில்லையே ??"
** ஒ! நீங்கள், இஞ்சை சிலவுக்குக் காசு தாற விசித் திரத்திலை. மா வாங்கி, வாய்க்கு இதமா ? கிடியப்பம் * அவிச்சு வைச்சிருக்கிறன். வாருங்கோ ??
- அதற்கு மேல் நான் பேசவில்லை. வாழ்க்கைப் பிரச் சனை தொடங்கிவிட்டால், நான் மெளனியாகி விடுவது வழக்கம்.
* சரி. சரி. இரு வாறன் ‘*

Page 31
Mf பலாத்காரம்
அதற்கு மேலும் படிப்பில் நாட்டம் செல்ல வில்லை. நி? அகள் எங்கோ.
எத்தனை பிரச்சனைகள் ?
சோற்றுப் பிரச்சனைதான் சோசலிசத்தின் அடிப்படை என் கிருர்கள்; ஒரு வேளை சாப்பாட்டிற்காக என்ன பாடுபட வேண்டிக் கிடக்கிறது ! அங்கு இங்கு என்று அலைந்து ஆருே ஏழு ரூபாய்கள் கொடுத்து ஒரு கொத்து அரிசி வேண்ட உடலும் உள்ளமும் அலுத்துப் போய்விடும். அரிசிக்காக அன்ருடம் மாறிய ஐந்தோ பத்தோ.. எவ்வளவு கடன் அடைக்க வேண்டியிருக்கிறது !
இஞ்சருங்கோ... ! ?
-இதமான தென்றலும் அரை நிழலான பால் நிலவும் அத்துக் கொண்டிருந்த இரம்மியமான சூழலில் லலிதா எனக்கு ஒரு புது அழகுடன் தோன்றினுள்.
** என்ன லலி... ?? - என்னையும் மீறியதொரு கொஞ்சல் என் வார்த்தையிற் புகுந்து கொண்டது.
A
சாப்பிட வாங்கோவன் ??...
அவளுடைய அழைப்பு விடுக்கும் பார்வை என்னை வச ரிழக்கச் செய்தது. இறைவா சுய உணர்வுகளிலிருந்து இழுத் துச் சென்று இன்ப மயக்கம் அளிக்கும் இவள் அழகு மருந் லிருந்து மீட்டு என்னைப் படிக்க வைக்க மாட்டாயா ? ? -
முடியவில்லை !
படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டு மூடிவைத்து விட்டு துருதுருப்புடன் எழுந்து செல்கிறேன்.
* ※ ※
கேட்டானே ஒரு கேள்வி !

சுதாராஜ் 45
என்னுடைய மூத்த மகனைப் பற்றித்தான் கூறுகிறேன். படுமொக்கு 1 இன்று அவனுடைய பாடசாலேத் தவணை விடு முறை. *றிப்போர்ட்டைப் பார்க்கவே தேவையில்லை.
* ஏன்ரா கழுதை உனக்குப் படிக்கிறதுக்கு என்ன ? இப்பிடி அஞ்சும் பத்துமாக மாக்ஸ் வேண்டினல். எங்கை உருப்படப் போருய் ?? " என்றேன்.
அவன்; வலு நிதானத்துடன், ‘அம்மா !. அப்பா கூட சிங்களச் சோதினை பெயில் தானே ??? என்ரு:ன். வந்த ஆத்திரத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. கைக்கு வந்த வாக்கில் இரண்டு வைத்தேன்.
* தகப்பனைப் போலைத்தானே பிள்ளையும் இருக்கும் " என்று அம்மா வந்து பிள்ளையை இழுத்துத் தடவிக் கொடுத் தாள்.
எனக்கு எரிச்சலாயிருந்தது; யாரை நொந்து என்ன பயன்? அரசாங்க உத்தியோகத்தனுடைய தலையெழுத்து அட் LJц Н
மனவருத்தத்துடன் கதிரையில் அமர்ந்தேன்.
** அப்பா ! நான் முதலாம் பிள்ளை . . . “ என்றவாறே வந்தாள் அடுத்தவள். அவள் கெட்டிக்காரிதான். நல்ல புள்ளி கள் எடுத்திருந்தாள். அவளைப் புகழ்ந்து முதுகிலே தட்டிக் கொடுத்தேன்.
** அப்பா!... முதலாம் பிள்ளையாய் வந்தால் புதுச் சட்டை வேண்டித் தாறனெண்டனீங்கள் தானே ???
** போச்சடா!" (சுபாவம்: அடிக்கடி எனக்கு இந்தப் போச்சடா ? வந்து கொண்டிருக்கும் ! எதையுமே உருப்படி யாகச் சாதிக்க முடியாத இயலாத்தனம்தான் போலும்.)
இதுக்கு நான் என்ன செய்ய?
* சரிடா. கவிதாக்குஞ்சு ... பேந்து நான் பிள்ளைக்கு வேண்டித்தாறன் ?’ எனச் சமாளித்தேன்.

Page 32
46 பலாத்காரம்
ஒரு பிஞ்சு உள்ளத்தை ஏமாற்றவும் மனது இசைய வில்லை. ஒரு நாளைய சீவியத்தை ஒட்டுவதே பெரிய பாடாக இருக்கும் விசித்திரத்தில் உடுப்பு வேரு ?
நீங்கள் என்னை நேரிலே காண நேரிட்டால்... எனக் காகப் பரிதாபப் படுவீர்கள்; அல்லது. பரிகாசம் செய்வீர்கள். எனது உடுப்பு அப்படி ! கிழியல்களுக்குத் தையல் போட்டுப் போட்டு, லலிதாவுக்கும் அலுத்துப் போயிருக்கும்.
அவள் அடிக்கடி சொல்வாள்; ** இந்தச் சம்பளத் தோடையெண்டாலும் ஒரு சேட்டு வேண்டுங்கோ * என்று. எப்படி முடியும் ? நாளாந்தச் செலவுகளுக்காக அவனிடம் ஐம்பது இவனிடம் நூறு என ருேலிங் 7. மாதமுடிவில் சம்பளம் எடுத்தால், கையில் ஒரு சதம் மிஞ்சாது.
** இஞ்சருங்கோ...!"
** என்ன லலிதா ?*
* நல்ல படமொண்டு வந்திருக்காம். *
** அதுக்கு இப்ப என்ன ???
** இண்டைக்குச் சம்பளம் எடுத்தனிங்கள் தானே. Gurray Guo ? * *
** என்ன லலிதா ?. நீயும் அதுகளைப் போலை சின்னக்
குழந்தையே? மனிசன்ரை கஷ்டம் தெரியாமல் கதைக்கிருய்?"
** அதுக்கேன் இப்ப இப்பிடிக் கத்துறியள் ? கூட்டிக் கொண்டு போக விருப்பமில்லையெண்டால். இல்லையெண்டு சொல்லுங்கோவன் !" ... "
எனக்கு விருப்பமில்லாமலா ?
என் மனைவியை எங்காவது ஆசையுடன் உல்லாசமாக அழைத்துச் செல்ல வேண்டுமென எனக்கு ஆவல் இருக்கத் தானே செய்யும் ?
ஆனல். கையாலாகாத்தனம் என்னை வாட்டியது.

சுதாராஜ் 47
முன்பெல்லாம் சம்பளநாள் ஒரு சந்தோஷமான நாளா யிருக்கும். விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் நான் ஒரு சாதாரண எழுத்தன் (கிளார்க் ) என்னத்தைச் சாதித்துவிட முடியும் ?
இப்பொழுது; கவலையான ஒரு நாள் சம்பள நாட்தான். கடன் காரருடைய தொல்லையைச் சமாளிக்க முடியாத நாள் ! அவர்களுக்கு சமாதானம் சொல்லி அனுப்புவதற்குள் போதும் போதுமென்ருகிவிடும். கையிலே காசு வந்தால் போகின்ற வழி தெரியாது ! •
நான் பலமுறை கனவுகள் கண்டிருக்கிறேன். அந்தக் கனவுகள் மனதுக்கு இதமாக இருக்கும்.
** இந்தச் சிங்களச் சோதினையை எப்படியாவது பாஸ் பண்ணிவிட்டால்.. ??
நிறுத்தி வைக்கப்பட்ட " இன்கிறீமென்ட் அரியேஸ் கிடைக்கும் ! பதவி உயர்வு கிடைக்கும் !
அப்படி ஒரு நிலை வந்தால் என் மனைவியையும் பிள்ளை களையும் எவ்வளவு சந்தோஷமாக வாழவைப்பேன் !
- அந்தக் கனவுகள் மாத்திரம் பலித்துவிட்டால் இன்ப வானிலே மிதந்து பறக்கமாட்டேன? ஆனல். அவைகளெல் லாம் கனவோடு சரி.
நிம்மதி -
என் போன்ற சாதாரண அரச ஊழியனுடைய வாழ் வில் அது எங்கே இருக்கிறது ?
இரவு வந்து நீண்டு கொண்டிருக்கிறது. கடமைக்காக புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்; ' விடிந்தாற் பொழுதறுதியும் " வாழ்க்கைப் பிரச்சனைகளின் தாக்கம் மனதிற்கு அலுப்பை ஊட்டி விடுகின்றது.
சிந்தனை, சிந்தனை -

Page 33
8 பலாத்காரம்
ஒரு சுவாரஸ்யத்தை ஊட்டுவதற்காக சிகரட்டைப் பற்ற வைத்தேன். களைப்புற்ற மனதுக்கு சற்று உற்சாகம் 0ளட்டுவதைப் போலிருந்தாலும், எம்மட்டுக்குத்தான் அதிலே யும் இலயிக்க முடியும் ?
**இப்ப என்னத் துக்கு யோசிச்சுக் கொண்டிருக்கிறியள் ? இ ' உங்களுக்கு மாத்திரம் வந்த கேடே ? ஊரோடை ஒத்தது ', 'னே ' ',
- என் மனைவி லலிதா.
உண்மையிலேயே அவள் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்.
அவள் இல்லையென்றல், நான் எப்பொழுதோ தற் கொலை செய்திருக்கக்கூடும். -
அவளுடைய துணை எனக்குப் பெரிய நிம்மதி. என் பக்கத்தில் கதிரைச் சட்டத்தில் இருந்து. ஆதரவுடன் அணைத்து இரக்கத்துடன் தலைமயிாைக் கோதிவிட்டாள். நெற்றியில் துளிர்த்து வந்த வியர்வையை பரிவோடு உணர்த்தி விட்டாள்.
அவளுடைய இகமான தேற்றுதல் என்னை ஒரு பிரச் சனையற்ற உலகத் துக்கு அழைத்துப் போவதைப் போலிருந்தது. இப்படியான நேரங்களில் என் மனதுக்குக் கிடைக்கும் இதம், சொகுசு . . . வேறு எப்பொழுதும் கிடைப்பதில்லை.
- ஒரு குழந்தையைப் போல, என் கண்மணியின் மடியிலே தலையை வைத்து, அவளை அணைத்துக் கொண்டேன்.
§ද කුද්ද 3:
(இக்கதையின் ஆரம்பத்துக்கும், இனி அடுத்து வரும் பகுதிக்கும் இடைவெளி ஒரு வருடம். )
..அறிவிப்புப் பலகையில் என்னுடைய பெயர் இன்னும் அப்படியே இருக்கிறது ! சென்ற கிழமை சிங்களப் பரீட்சை

சுதாராஜ் 49
முடிவுகள் வெளியாகின. (நீங்கள் : ஒரு வேளை நான் சித்தி யடைந்திருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யக்கூடும். )
கடந்த ஒரு வருடமாக எவ்வ்ளவு கஷ்டப்பட்டும், முயற்சிகள் எல்லாம் வீணுயின. வழக்கம்போலவே இம் முறையும் கோட்டை விட்டாயிற்று.
நான் என்ன தனிமனிதனு ?
மனைவி, பிள்ளை, குடும்பம், வாழ்க்கை, பிரச்சனை என உழலும் ஒரு குடும்ப்ஸ்தனல் எப்படி மனதை ஒரு நிலைப்படுத் திப் படிப்பதைப் புரிந்து கொள்ள முடியும் ?
பரீட்சையிற் கோல்வியடைந்ததை விட ஒரு சோக மான செய்தி சொல்லப் போகிறேன்.
அது - w எனக்குக் காலக்கெடு தந்திருக்கிறர்கள்.
இன்னும் ஆறு மாதங்களுக்குள் நான் சிங்களச் சோதனையில் சித்திய.ை யாவிட்டால் வேலையிலிருந்து நிறுத்தப் படுவேன், எனத் தலைமை அலுவலகத்திலிருந்து அறிவித்திருக் கிருர்கள். ( ' போச்சடா ? ? )
பேரிடியான இச் செய்தியை லலிதா எப்படித்தான் தாங்கிக் கொள்வாளோ !
- * ஒ ls
- வாய்விட்டு அழுதாலும் இந்த வேதனை தீராது. என் நிலை இப்பொழுது பரிதாபமானது. இதை லலிதா தாங்கிக் கொள்ள மாட்டாள். -
இல்லை. என் கவலைக்கு லலிதாவினற்தான் மருத்து தரமுடியும். அவளுடைய தேற்றுதலில் இது ஒரு பெரிய விஷ யம் போலவே தெரியாது. தன்னுடைய துயரங்களையெல்லாம் எப்படித்தான் மனதினுட் புதைத்துக் கொள்கிருளோ ! அவ

Page 34
l, () பலாத்காரம்
ளுடைய இதயம் அப்படி விசாலமானதா ? அல்லது மனைவி " களின் மனது இப்படி விரிவடைகிறதா. !
- வீட்டுக்கு வந்த பொழுது அங்கு லலிதா இருக்க வில்லை.
நான் தேடிவந்த ஆறுதல் எங்கே?
" அப்பா!. அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு
போட்டினம்..”*
- அடுத்த பிரசவத்துக்காக அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்தாயிற்ரும்! பிரசவச் செலவுகளுக்காக இனிப் பறக்க வேண்டுமே!
** சோதனைமேற் சோதனை போதுமடா சாமி. வேதனை தான் வாழ்க்கையென்ருல் தாங்காது பூமி.' என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது !
( 5-f 1977)
X X X

உள்ளங்களும் உணர்ச்சிகளும்.
ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம்.
அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான்.
- ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல அப்பறவை அலறிக் கொண்டு சென்ருலும். அதிலும் ஓர் இனிமை இருந்தது. V.
இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது - சத்தியன் கட்டிலிற் புரண்டு படுத்தான். நேரத்தைப் பார்த்துவிட்டு, இனி உறங்க வேண்டும் என நினைத்தான், உறக்கம் வரமறுத்ததால் ஒவ்வொரு

Page 35
ያን 9 ነ பலாத்காரம்
பக்கமாகப் புரண்டு படுத்துக் கண்களை மூடிப்பார்த்தான். கட்டிலின் சொகுசு அவளுடைய நினைவை இன்னும் இனிமை யு.ண் கொண்டு வந்தது.
* வத்சலா 1 என மனதுக்குள்ளே ஆசையாக அழைத்து உணர்ச்சி வசப்பட்டான். அமைதி குலைந்த உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு அந்த அறையின் அமைதியையும் குஃலப்பதைப் போலிருந்தது.
...கொட்டுமேளம் கொட்ட, சுற்றிநின்ற பெரியவர்கள் மலர்தூவி வாழ்த்துரைக்க வத்சலாவின் கழுத்தில் தாலி ஏறு:
கின்ற காட்சி அவன் கண் முன்னே ஓடிவந்தது.
* பொருத்தமான சோடி, !. ' - வந்திருந்தவர்களின் 1ாராட்டு இது.
* சாய் !. என்ன அழகான பொம்புளை. தங்க விக்கிரகம் மாதிரி !
* அவ. குனிந்து. பணிந்திருக்கிற பண்பும். அழகும். மாப்பிள்ளைப் பெடியன் குடுத்து வைச்சிருக்க வேணும் ??
* பொம்புளேயெண்டால். இப்படித்தான் இருக்க வேணும் !. இந்தக் காலத்திய பெட்டையள் ஆடுற ஆட்டங் களைப் பார்க்க வேண்டுமே ... ! ??
வத்சலாவின் கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் மனம் நிறைந்து பாராட்டியது சத்தியனின் மனதில் பட்டும் படாமலும் தட்டிக் கொள்கிறது.
வத்சலாவுக்கு, (திரு) மணம் முடிந்து விட்டது. மண வீட்டுக்கு சத்தியனும் சென்றிருந்தான். வத்சலா அவனைக் கவனிக்காதது போலவே இருந்து விட்டாள். அது அவனுக்குப் பெரிய தவிப்பாக இருந்தது. எப்படியும் அவளைக் கண்டு கதைக்கவேண்டும் போலத் துடிப்பு மேலிட்டது.

சுதாராஜ் 53
இரவு மீண்டும் சென்றன். க வியாண வீட்டுச் சந்தடி அடங்கி விடவில்லை. ஆயினும் வத்சலாவும் கணவனும் தனிமையிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
. தன் தோளினல் மெல்ல அவள் தோளிலே தட்ட, அவள் நளினமாகத் திரும்பும் நேரம் பார்த்து. கன்னத்திலே சட்டெனக் கிள்ளி, அதனல் அவள் சிணுங்குவதை அவன் ரசித் துக் கொண்டிருக்கும் ஓர் இக்கட்டான நேரத்தில் போகவேண்டி ஏற்பட்டு விட்டதால். சத்தியன் செருமிக்கொண்டான்.
சத்தியனைக் கண்டதும், ஏதோ தவறு செய்து விட்ட வளைப் போல அவசரமாக எழுந்து நின்ருள் வத்சலா. சத்திய னுக்குக் கவலை பொங்கிக் கொண்டு வந்தது. அவனது கண்கள் -, கலங்கி கண்ணிர் இமைகளில் முட்டியது. இன்னெருவனுடைய அணைப்பில் வத்சலாவைக் கண்டதும் உள்ளம் குமுறியது. அவள் கண்கள் அவனது கண்களை ஊடுருவிச் சென்ற பொழுது கண் னிர் பொலு பொலுவென கன்னத்தில் வழியத் தொடங்கியது. வத்சலாவின் முகமும் சிவந்தது - கண்கள் கலங்கின.
'' séSurr !''
சத்தியனல் கதைக்க முடியவில்லை. கதைக்க பாத்தனித் தால் அழுகை வெடிக்கும்போலத் தோன்றியது. அந்த அளவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது.
வத்சலா மீண்டும் கூப்பிட்டாள்.
\ * தம்பி ...! ஏன் அழுகிருய். ? நீ அழுதால் எனக் கும் அழுகை வருகுது. சத்தியா அழாதை ! "
- பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிச்சத்தம், அவன் தலையைச் சிதற உடைப்பது போன்ற அதிர்ச்சியில் அவளைத் திரும்பிப் பார்க்கிருன்.
வெளியே விளையாட்டு நடக்கிறது. "அவளும் என்ன, தன்னேடு விளையாடுகிருளா ? ** தம்பி. ’’ என அவள் அழைத் தது மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க...

Page 36
பலாத்காரம்
ஓடுவது போல் ஜாலவித்தை காட்டிக் கொண்டிருந்த வர்ணவிளக்குகள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கிறது. கண்ணிரைத் துடைத்துக் கொண்டான்.
* தம்பி . ஏன் அழுகிருய்?. " - வத்சலா மீண்டும் தேற்றினுள். அவனை ஆதரவாக அணைத்துக் கண்ணிரைத் துடைத்து விட வேண்டும்போல் அவள் கைகள் துடிக்கின்றன. தனிமையிலென்ருல் அவனும் அப்படியொரு ஸ்பரிசத்தை எதிர் பார்த்திருப்பான்.
** அக்கா, ... எல்லாரும் உங்களுக்குப் பெரிய பரிசெல் லாம் தந்தினம். . . நான் என்னத்தைத் தரமுடியும் ?' - அவளு டைய பாணியிலேயே அவன் கதைக்கிருன்.
* சத்தியா 1. அதுக்காகவா அழுகிருய் ?. நீ எனக் குத் தம்பியாகக் கிடைத்ததே ஒரு விலைமதிப்பற்ற பரிசு தானே. *
* இல்லையக்கா. இனி நீங்கள் என்னை மறந்திடுவீங் கள். அதை நினைக்கயிக்கைதான் பெரிய கவலையாயிருக்கு. ? ?
** இல்லை சத்தியா... நான் எங்கேயும் போகமாட்டன்
tւ! இங்கேதான் இருப்பன். நீ எந்த நேரத்திலும் என்னை வந்து
பார்க்கலாம். **
அவர்கள் இருவரையும் பார்த்தவாறு அதிர்ச்சியடைந்த வன் போலிருந்தான் அவள் கணவன் - அவள் அறிமுகம் செய்து வைத்தாள்.
" சத்தியன், முன் வீட்டிற்தான் இருக்கிருன், அக்கா, அக்க்ா என்று சகா இங்கேயே கிடப்பான். பாவம், கலியாணச் சந்தடியில் ரெண்டு நாளாய்ப் பார்க்கவேயில்லை. *
- அந்தப் பறவை மீண்டும் இனிமையாக அலறிக் கொண்டு செல்கிறது. சத்தியனுக்குச் சிரிப்புத்தான் வருகிறது: அந்த அவலமான பாடலை இதமாக ரசித்தான்.

சுதாராஜ் K 55
நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் சத்தியன் முதலில் வத்சலாவைக் காண நேர்ந்தது. அப்பொழுது அவன் தந்தை வேலை மாற்றலாகி கொழும்புக்கு வந்த பொழுது, அவர்கள் குடும்பத்துடன் வெள்ளவத்தைக்குக் குடிவந்தார்கள். அவன் இருத்த ஒழுங்கையிலேயே முன்வீட்டில் அவளும் இருந்தாள். கொழும்பு வந்த புதிது - புதுமைகளை இரசிப்பதில் ஒரு துடிப்பு இருக்கும் ! :
வத்சலாவும் அவன் கண்களுக்கு ஒரு புதுமையான அழகிலே தென்பட்டாள். குலுங்குகின்ற உடல் கொப்பளித்துத் தெரியக் கூடியதாய் இறுக்கிய உடைகள்தான் அணிவாள். கேசம். சுருண்டு தோளிலே தவழ்ந்து கொஞ்சும் ! கண்களை மூடி நிற்கும் கறுப்புக் கண்ணுடி கவரும் ! கால்களில் ஒளி மஞ்சளாகப் பட்டுத் தெறிக்கும். நடக்கும் பொழுது முழங்கால் கள் இரண்டும் தட்டிக் கொள்ளும் . கொள்ளை அழகு!
அவளுடன் கதைக்க் வேண்டும். பழகவேண்டும் என விரும்பினன் சத்தியன். அதுவும் வீண்போகவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை கோவிலில் காண நேர்ந்த பொழுது, அவளே வந்து சத்தியனுடன் கதைத்தாள். தங்கள் வீட்டுக்கும் அவனை அழைத்தாள்.
அடுத்தநாள் சத்தியன் அவள் வீட்டுக்குப் போன பொழுது, எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தாள். அதன் பின்னர் அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்று வருவது வழக்க LDrr669u .L-gi .
வத்சலாவும் சத்தியனும் கரம் விளையாடிக் கொண்டே யிருப்பார்கள். அவள். அவனைப் பார்த்துக் கொண்டேயிருப் பாள். கண்களினுற் கலந்து, சொண்டுக்குள்ளே சிரிப்பாள். சத்தியன் கூச்சத்திலே தன் கால்களை இழுத்துக் கொள்வான். - மலரிலும் மென்மையாக, அவள் தன் கால்களினல் அவன் கால் களுக்தக் கொடுத்த காதல் இன்பம், சத்தியனுக்கு இழக்க முடி யாத தொன்ருய்ச் சுவைத்தது. அதனல். அவனே திரும்பவும் தன் கால்களை அவள் பக்கமாகக் கொண்டு செல்வான்.

Page 37
56 பலாத்காரம்
அந்த நாட்கள் இனிமையாக வளர்ந்தன. ஒரு வெள் விக்கிழமை மாலை, சத்தியனைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள் வத்சலா. அவன் சென்ற பொழுது வீட்டில் அவள் மாத்திரம் இருந்தாள். மற்றவர்கள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள். வத்சலா, தன்க்குத் தலையிடி " என சாட்டுச் சொல்லி விட்டுச் செல்லாமல் நின்றிருக்கிருள். எதற்காகத் தன்னை வரச்சொல்லி யிருக்கிமூள் என சத்தியனுக்கு ஓரளவு புரிந்தது.
பயமும் இன்பமும் கலந்த உணர்வொன்று அவள் மனதை ஆட்கொண்டது. அன்று தன்னைச் சற்று அதிகமாகவே அலங்கரித்திருந்தாள் வத்சலா 1 சத்தியனைக் கண்டதும் மலர்ச்சி யுடன் ஒடி வந்தாள்; பின்னர் நாணமடைந்தவள் போல சிவந்த கத்துடன் நின்ருள். சத்தியனும் செய்வதறியாது நின்றன்.
* வாங்கோ. சத்தியா ! ??
சத்தியன் அவளைத் தொடர்ந்தான்.
அவசர அவசரமாக அவனுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். தேநீரின் சுவை வழக்கத்தை விட அப்பொழுது இனிப்பு அதிகமாக இருப்பது போலத் தெரிந்தது.
* சத்தியா, நீங்கள். நல்ல ஸ்மாட் ஆக இருக் கிறீங்க V
* என்ன? இண்டைக்கு மாத்திரமா அப்படி இருக் கிறேன்' - என சிரிக்க முயற்சித்தான் சத்தியன்.
* இல்லை என்றுமே ! ' என அவள் அழகு காட்டினள்.
** நீங்களும் தான் ??
‘ என்ன. நானும் ???
** அழகின் கேரம் !??
- அவளுக்கு உடல் சிலிர்த்தது. அவனை இழுத்து அனைத்துக் கொள்ளவேண்டும் போல ஒர் உணர்ச்சி பிறந்தது.

சுதாராஜ் 57
** நல்லாய்க் கதைக்கிறீங்க சத்தியா. இப்படிக் கதைக்க எங்கை பழகினீங்க?' என்றவாறே அவன் கைகளைப் பிடித்தாள் வத்சலா.
- சாதுவான நடுக்கம். ஒரு பக்கம் இன்ப உணர்வு. . . வியர்வை - சத்தியன் படபடத்தான்.
* என்ன பயப்படுறிங்களா ???
* 'இல்லையே! "
சத்தியனின் கைய்ைப் பிடித்து உள் அறைப்பக்கம் கூட்டிச் சென்ருள். உள்ளே அறையில் ஒரு நிலைக்கண்ணுடி இருந்தது. அதன்முன்னே அவனை இழுத்துச் சென்று பக்கத்
திலே தானும் நின்ருள். அவள் கை சத்தியனின் இடுப்பை முதுகுப்பக்கமாக வளைத்துக் கொண்டு வந்தது. ,
** சத்தியா, ருங்கள் . எவ்வளவு வடிவாய் இருக் கிறம் ?. உங்களுக்குப் பக்கத்திலை நின்று அழகு பார்க்க வேண் மென்று எவ்வளவு நாளாக ஆசைப்பட்டேன்." என கண்ணுடி
யைக் காட்டினுள்.
சத்தியன் கண்ணுடியைப் பார்த்துவிட்டுத் திரும்பி அவள் முகத்தை நோக்கினன்.
"சத்தியா .. பிளிஸ் என்னை அணையுங்க ??
இப்பொழுது மெதுவாக அவன் கைகள் அவள் இடுப் பில் ஊர்ந்தன. அறையில் இருந்த கட்டிலில் அவனையும் அணைத்துக் கொண்டு இருந்தாள்.
*சத்தியா !'அவள் கைகள் அவன் முதுகைச் சுற்றி வளைத்து இறுக்கின. இன்னும் நெருக்கமாக... வந்து கொண்டி ருந்தாள் . இதழ்கள் துடித்தன.
இன்னும் நெருங்கிக் கொண்டே வந்து . நெருங்கிக் கொண்டே. w
*சத்தியா ! . பிளிஸ்.'

Page 38
Y6 ኖ பலாத்காரம்
"" என்ன வத்சலா ???
தன்னை முத்தமிடுமாறு கண்களினல் உணர்த்தினுள். சத்தியனின் அணைப்பும் இறுகியது.
**வத்ஸி.** என ஆசை பொங்க அழைத்த பொழுது அந்த ஓசையையும் மீறிக்கொண்டு பெரிதாக மூச்சுக்கள் வெளிப்பட்டன.
அவள் தடவியிருந்த நறுமணப் பவுடரின் வாசம் அவன் மேலும் வீசத் தொடங்கியது.
சத்தியன் கேட்டான், ‘வத்சலா. இது பிழையல்லவா?*
*இல்லை சத்தியா, வெளியிலே தெரிந்தாற்தானே தவறு என்று சொல்லுவினம்' - எனச் சமாத்தாள்.
**வெளியிலை தெரியவந்தால் ??? **நீங்கள் சொல்லாதவரை ஒருக்காலும் தெரியவராது, " சத்தியன் சிறிதுநேரம் மெளனமாயிருந்தான். பின்னர் கேட்டான்
**வத்சலா ... உங்களுக்கு ஒண்டும் நடக்காதா??? **நீங்கள் என்ன கேக்கிறீங்கள் எண்டு விளங்குது, அப்படி ஒன்றுமே எனக்கு நடக்காது."
*எப்படி? " - இவன் ஆச்சரியப்பட்டான்.
‘என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியாதா???
சத்தியன் மெளனமாகிவிட்டான்.
அதன் பின்னரும் ஒருசில வெள்ளிக்கிழமைகளில் வத்ச லாவுக்குத் தலையிடி வருவது வழக்கமாகிவிட்டது.
- "அவ. குனிந்து பணிந்திருக்கிற பண்பும் அழகும் மாப்பிள்ளைப்பொடியன் குடுத்து வைச்சிருக்க வேணும்!' -மன வீட்டிற்கு வந்திருந்தவர்கiேன் கருத்து மீண்டும் சத்தியனின் காதில் ஒலித்துக்கொள்கிறது.

சுதாராஜ் t 59
* இப்படி எத்தனை கேவலங்கள்தான் மறைமுகமாக நடந்துகொண்டிருக்கின்றனவோ ! சோசல் மூவிங் “ எனும் பண் :பான பெயரில் எத்தனை பண்பற்ற காரியங்கள் நடந்து முடி கின்றன. ஆடைக்குறைப்பு தமிழர் பண்பாட்டைப் பாதிக்கிற தென்ருல், அது காலத்துக்கேற்ற மாற்றம் என்கிருர்க்ள். ஏற் றுக்கொள்ளலாம். ஆனல் உள்ளங்களும் உணர்ச்சிகளும் கூட காலத்துக்கேற்றவாறு மாறவேண்டுமா?
* பெண்கள் பூப்போல இருக்கவேண்டியவர்கள், பருவத் தில் எல்லோருக்கும் காமஉணர்ச்சி இருப்பது இயற்கைதான். அதை உணர்ந்து. உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வாழ்க்கை யில் வெல்வதிலன்ருே பெருமை இருக்கிறது. பெண்மை " யே கற்பைக் காத்துக் கொள்வதிற்தானே தங்கியிருக்கிறது ?"
-ஏதோ ஞானம் பிறந்துவிட்டவனைப்போல் இப்படி யெல்லாம் சிந்தித்தான். மறுகணமே வத்சலாவின் நினைவு வந்த தும் உணர்ச்சிவசப்பட்டான். "அவள் எங்கேயும் போகமாட்டா ளாம். எந்த நேரத்திலும் வந்து சந்திக்கலாமாம் ". என ஆனந்தமாக நினைத்தான்.
"மனிதர்களுடைய சுபாவம்தான். தன்னைப் பாதிக்காத வரையில், எவ்விதமான இலாபங்களையும், சுகங்களையும் தட்டிக் கொண்டுபோகக் காத்திருக்கும் சுயநலமான எண்ணங் கொண்ட ஆண்களும் உள்ளவரை இது போன்ற சீர்கேடுகள் மறையப் போவதில்லைத்தான்’ எனும் நியாயம் தோன்றினலும் அதை அவனுல் ஜீரணிக்க முடியவில்லை.
கட்டிலின் சொகுசு அவளுடைய நினைவை இன்னும் இனிமையாகக் கொண்டு வருகிறது.
-அந்தப் பறவை இனிமையாக அலறிக்கொண்டு செல் கிறது.
-x Y.

Page 39
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்.
s .
10ர்ப்பி%ள வீட்டுக்காறர் வருகினம்!" எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர். ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர்.
 

சுதாராஜ் * . 61
**ம்ாப்பிளை வீட்டுக்காறர் வருகினமாம் ! " - செய்தி குசினிவரை ஓடியது .
ஒழுங்கையின் செம்மண் புழுதியைக் கிளப்பிவிட்ட வாறு வளவினுள் புகுந்து புளியமரத்து நிழலில் நின்றது அந் தக் கார். அங்கு விளையாடிக் கொண்டு நின்ற குஞ்சுகுருமானு களெல்லாம் அதைக் கண்டு குதூகலத்துடன் அண்மையில் ஓடி ர்ைகள். வண்டியிலிருந்து இறங்குபவர்களைச் சுற்றி நின்று வினேதமாகப் பார்த்தார்கள். ஒருவன், காருக்கு முன்பக்க மாகச் சென்று அதிலிருந்து எழும் பெற்றேல் மணத்தை நுகர்ந்து, அதன் சுவையை மற்றவனுக்குச் சொன்னன். இன்னுமொரு பொடியன் ஆவலுடன் கிட்ட ஒடினன்.
* தம்பி, காறிலை தொடாமல் அங்காலை போங்கோ " எனச் சினந்தான் கார்ச்சாரதி.** டேய் ! அங்காலை போங்கோடா கழுதையள் 1. ஒரு மனிசரைத் தெரியாதமாதிரி ஒடி வந்துட் டுதுகள்! " எனச் சிறுவர்களை அதட்டிக்கொண்டே வந்தவர்களை வரவேற்க வந்தார் சபாபதி.
sk
பெண்ணின் தகப்பனர் - இராசதுரை - அடுப்படிக்கு ஓடிச்சென்று மனைவியை அழைத்தார். "இஞ்சரும் ! அவைய ளெல்லே, வந்திட்டினம்! "
* எடி பிள்ளை! நானெல்லே சொன்னனன் . இதை விட்டிட்டுப் போய் முன் அலுவல்களைப் பார் எண்டு !' என பவளத்துக்குக் கட்டளையிட்டாள் குஞ்சுப்பிள்ளை-சபாபதியரின் மனைவி.
பவளம் அவசர அவசரமாகக் கைகளை அலம்பிக்கொண்டு இடுப்பிற் செருகியிருந்த சீலைத்தலைப்பை இழுத்துக் கை ஈரத்தைத் துடைத்தவாறே ஓடிவந்தாள். இராசதுரை மனைவி பவளத்து டன் முன்னுக்கு வந்தபொழுது சபாபதி மாப்பிள்ளை வீட்டுக்கா ரரை அழைத்துக்கொண்டு வந்தார்.
** சபாபதியம்மான் இல்லாட்டி ஒரு கை முறிஞ்ச

Page 40
62 பலாத்காரம்
மாதிரித்தான்! " எனத் தனக்குள்ளே பெருமைப்பட்டுக் கொண் டார் இராசதுரை. ** மனுசன். நல்ல உதவி! "
மணப்பெண்ணின் தம்பிமுறையான பொடியன், புற் பாய்கள் சிலதைக் கொண்டுவந்து விருந்கையில் விரித்தான்.
* பொம்பிளை பார்க்க ? வந்த ஒன்பதுபேரில் ஒருவர்தான் பெண். அவளுடைய கையை ஆதரவாகப் பற்றி முகத்தில் சிரிப்பை மலரவிட்டு, ' வாங்கோ! ' என அழைத்துச் சென்ருள் பவளம். ** உவ, மாப்பிளைக்குச் சிறியதாய் முறையாம்' என இந்தப் பகுதியில் யாரோ கிசுகிசுத்தனர்.
*" என்ன ? பிந்திப்போனிங்கள் போலை .? " என சம்பிர தாயமாக விசாரித்தார் இராசதுரை.
* ஒம் !. தெரியாதே, எங்கடை ஆக்களில் ாை அyவ லெல்லாம் உப்பிடித்தானே. சுணங்கிறது ?? - எல்' 1ாரும் முகஸ் துதியாகச் சிரித்தனர்.
வெற்றிலைத் தட்டங்கள் வந்திறங்கின. புதிய "பால்ரின் ? உடைக்கப்பட்டு, தேநீர் கலக்கும் சத்தம் குசினியிற் கேட்டது.
* அப்ப ஏன் சபாபதியம்மான் . சுணங்குவான்? பேசி றதைப் பேசி முடிக்க வேண்டியதுதானே! " என, பு க்கர் கந்தையா ஆரம்பித்தார்.
** எப்பன் பொறுமன் புருேக்கர்! ... என்ன அவசரம்? இனிச் சாப்பாடும் முடிஞ்சிடும் . சாப்பிட்டிட்டு ஆ தலாய்க் கதைக்கலாம். ' , '
கறிகளுக்குத் தாளித்துப் போடுகின்ற சரக் பின் மணத்தில் நாக்கு ஊறியது.
* உங்கடை கதையைப் பார்த்தால் நாங்கள் இண் டைக்குப் போனபாடில்லைப் போலையிருக்குது! "
* ஆர் போகவேண்டாமெண்டு சொன்னது? .இதென்ன அவசரமாய்க் கதைச்சு முடிக்கிற கருமமே?. வந்தனீங்கள் அறுதி

சுதாராஜ் 63
பொறுதியாயிருந்து 3) ੭58 அவசரப் படுகிறீங்கள்? " எனக் கூறிவிட்டுக் காரணமின்றிப் பெலமாகச் சிரித்தார் சபாபதி. மற்ற வர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.
சபாபதி இருப்புக்கொள்ளாமல் எழுந்து அடுப்படிப் பக். கம் போஞர். சமையல் தடல்புடலாக நடந்துகொண்டிருந்தது. தனது பெண்சாதி குஞ்சுப்பிள்ளையே சமையல் வேலையை நிர்வகித் துக் கொண்டிருப்பதைக் காண இவருக்குப் பெருமையாக இருந்
தீது, s
** என்னப்பா? இன்னும்முடியயில்லையே?. இப்ப மணி என்ன தெரியுமே?. விடியத் தொடங்கி சமைக்கிறியள். ஒரு முடிவையும் காணயில்லை??’ எனச் சாலக் கோபம் கொண்டார்.
** இல்லை . எங்களாலை சுணக்கமில்லை. நீங்கள் சாப் பாட்டுக்காறரை ஆயுத்தப் படுத்துங்கோ .. ? ? எனக் குஞ்சுப் பிள்ளை சொன்னுள்.
சபாபதியின் கால்கள் ஓர் இடத்தில் நிற்காமல் சுழன் றன. அயலட்டையில் நல்ல நாள் பெருநாளென்று வந்தால்
அவர்தான் முன்னுக்கு நிற்பார். ' வயது போட்டுதெண்டாலும் மனுசன் வலு 2-சார் . ஒரு கருமத்தைத் திறமையாய் ஒப்
பேற்றுறதெண்டால் அந்தாளைக் கேட்டுத்தான்!” என்பது அயல வரின் அபிப்பிராயம்.
மாப்பிள்ளையின் தகப்பன் புருேக்கரையும் அழைத்துக் "கொண்டு தனிமையாகப் போனர். இருபக்கத்து இரகசியங்களை
யும் கேட்டு மறக்க வேண்டியவர் புழுேக்கர்!
கந்தையாண்ணை! நான் சொன்னது நினைவிருக்கே? முந்திச் சொன்னமாதிரி கடும்பிடி பிடிக்கத் தேவையில்லை. இது இடமும் நல்லதுபோலை இருக்குது. ஒரு மாதிரிப் பார்த்து ஒழுங்குபடுத்திவிடு! "

Page 41
64 பலாத்காரம்
அவர் சீதன விஷயம்ாகத்தான் கதைக்கிருர் என்பது புருேக்கருக்குப் புரிந்தது. மென்மையான ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டே சொன்னர்;
*" என்ன கனகு?. வீடுவளவைக் கண்டவுடனை மருண் டிட்டாய் போலை கிடக்கு?. நாங்கள் கேக்கிறதைக் கேப்பம். அவையள் தரக்கூடியதைத் தரட்டன்.""
** பேந்தும் பாரன்!. கந்தையாண்ணை. படிச்சுப் படிச் சுச் சொல்லியும் நாசங்கட்டின உனக்கு விளங்க மாட்டனெண் டுது!.. இப்பிடியே எல்லாத்தையும் தட்டிக் கழிச்சுக்கொண்டு போகேலாது. விசயமெல்லே முத்திப்போச்சுதெண்டனுன்.”*
w
** எட நீயேன் பயப்பிடுருய்? . அவன் ஆம்பிளப் பிள்ளைதானே? இண்டைக்கில்லையெண்டாலும் எத்தனையோ பேர் கொத்திக் கொண்டு போக நிப்பினம்."
*கந்தையாண்ணை!. உன்ரை விழல்ஞாயங்களைவிடு! மாப் பிளை எடுக்கிறவையள் முகட்டைப் பாத்துக்கொண்டே பொம் பிளை தருவினம்?. அந்த நாசங்கட்டுவான், சிங்களம் படிக்கிற னெண்டு ஒருத்தியிட்டைப் போய்த் திரிஞ்சவளும்ை, இப்ப சங்கதி பிழைச்சுப்போச்சுது. அவளோடை கன நாளாய்த் தொடுசலாம்!"
" ஓம்! ஓம்! இது முந்தின காலமில்லை. உதுக்குத்தான் சொல்லுறது. காலாகாலத்திலை செய்யவேண்டிய கருமங்களைச் செய்துபோடவேணுமெண்டு!. இனிக் கனகு வயது வந்த பெடியளை. ஊருக்கு வெளியிலை உத்தியோகத்துக்கெண்டு அனுப்புறதும் பயமெண்டுருய்?"
" ஒமெண்டுறன்! அந்தப் பெடியனைப்பற்றி எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தனன். பூனை மாதிரித் திரிஞ்சவன். எல் லாம் போச்சு. இப்ப, மற்றதுகளும் பாவிக்கிருனெண்டு கேள்வி.."

சுதாராஜ் 65
** மெய்யே!. உன்ரை குணத்துக்கு, ܬܘܗ வந்து வாய்ச்ச மாதிரியைப் பாரன் ! ??
** கந்தையாண்ணை!. இது எனக்கு வேணும்!. மற்றவை யளைப் பழிச்சுக்கொண்டு திரிஞ்சன். அந்தப் பலன்தான் இது. அவன் சிங்களத்தியைக் கொண்டு வரப்போறன் எண்டெல்லே நிக்கிருன்!. நோனுவுக்கு நாலு மாசமாம்! " - கனகு மேற் கொண்டு கதைக்கமுடியாமல் விக்கித்தார். அந்த மாப்பிள்ளையை வைத்துக்கொண்டு அவர் எத்தனை கோட்டைகள்தான் கட்டி யிருப்பாரோ: ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. அவரையும் மீறி அந்த வயதுபோன கண்கள் கலங்கின. இதைக் கந்தையர் அவதானித்து நிலைமையைச் சமாளித்தார்.
* இதென்ன கனகு ?. குழந்தைப்பிள்ளைமாதிரி. ஒண்
டுக்கும் யோசியாதை. ஆம்பிளைப் பிள்ளைதானே. சேத்தைக் கண்ட இடத்திலை மிதிச்சு. தண்ணியைக்கண்ட இடத்திலை கழுவிப்போட்டுப் போவான். நான் இருக்கிறன். எல்லாம்
வெண்டுதாறன், பயப்பிடாதை!'
**கதைச்சது காணும். வாருங்கோ சாப்பிடலாம்" என்ற வாறே சபாபதி வந்தார், "" தம்பி! அந்தச் செம்பையும் தண்ணி யையும் கொண்டு வந்து இஞ்சாலை குடு!" செம்புகளில் தண்ணீர்வந்தது. சுவையான விருந்து தான். மாப்பிள்ளை வீட்டுக் காரரின் வருகைக்காகப் பிரத்தியேக கவனிப்பில் ஆக்கப்பட்ட சாப்பாடென்ருல் சும்மாவா!
பேச்சுக்கால் ஆரம்பமாகியது. புருேக்கர் தனது புரா னத்தைப் பாடினர்;
**தம்பி, இராசதுரை. வடிவாய்க் கேள்! இப்பிடி ஒரு மருமேன் உனக்குக் கிடைக்கிறதெண்டால், குடுத்துவைச்சிருக்க வேணும். கவுண்மேந்து உத்தியோகக்காறன். இனியில்லையெண் டாலும் அம்பது பவுண் உழைப்பான்., ஆள் உரிச்சுப்படைச்சு

Page 42
66 லாத்காரம்
ப்பனைப் போலைதான்., ஒரு பீடி, சுருட்டோ. தண்ணி ன்னியோ கிடையாது. . . ஒரு வயதுக்கு மூத்தவையோடை 1. நிமிர்ந்து கதைக்க மாட்டான். தானும் தன்ரை பாடும் தான். மற்றவயின்ரை சோலிசுறட்டுக்குப் போகாத பெடி..??
- ருேக்கரின் அளவையை சபாபதி தடுத்தாட்கொண் lin ri.
* அதெல்லாம் எங்களுக்குத் திருப்திதான் புருேக்கர். உங்கடை நோக்கம் என்னெண்டு சொல்லுங்கோவன்???
* ஏதோ. நல்லபடியாய்க் கருமம் ஒப்பேறினல் எனக் கும் சந்தோஷம்தான். ரெண்டு பகுதியும் சா." hம் பாத்திருக் கிறீங்கள். பொருத்தங்கள் உத்தமம் எண்டு சா', .iரிமார் சொல் லியிருக்கிருங்கள். உங்களலை இயண்டதைக் குடுத்துவிடுங்கோ வன். இனி நீங்கள் ஆருக்கோ குடுத்துவிடப் போரீங்களே. உங்கடை பிள்ளைக்குத்தானே. அவரும் கடும்பிடி பிடிக்க வேண் டாமாம்.’’ எனச் சிரித்தவாறே கனகுவைப் பார்த்தார். அவரும் பதிலுக்குச் சிரித்தார். இராசதுரையின் முகம் மலர். து.
இருக்கிற வீடும், அதோடு சேர்ந்த ஆறு பரப்புக் காலரி եւյւb கொடுத்து ஏதோ தன்னுலியன்றதைப் பிள்ளேக்குக் கையிலை கழுத்திலை போட்டுவிடுவதாக இராசதுரை சொன்னர் .
பேச்சு வளர்ந்தது
வீடு வளவும் இருபதினுயிரம் காசும், பொம்பிளேக்குப் பதினையாயிரத்திற்கு நகையும் போட்டுவிடவேண்டுமெக் கேட் கப்பட்டது. இதைவிட, மாப்பிள்ளையின் தகப்பனு. .ப்பத்தாயி ரம் டொனேசன் , கொடுக்க வேண்டுமென்பதும் நிபந்தன.
இராசதுரைக்கு நாடி விழுந்து விட்டது. என்ருலும் சோர்ந்துபோய் விடவில்லை. இப்படி எத்தனை சம்பந்தங்கள் பேச் சுக்காலிலேயே குழம்பிப் போயிருக்கின்றன. பிள்ளைக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது. உத்தியோக மாப்பிள்ளையைக் கை நழுவ விடவும் மனமில்லை.

சுதாராஜ் 67
இறுதியாக; வீடுவளவும், ஐயாயிரம் காசும், பத்தாயி ரத்துக்கு நகையும் போட்டு மாமனுக்கு ஐயாயிரம் இணும் கொடுப்பதென்ற ஒப்பந்தத்துடன் பேரம் பேசுதல் முடிவுற்றது. இராசதுரையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய தொகை தான். இப்படி இருக்கிறதெல்லாவற்றையும் வித்துச்சுட்டு ஒரு பிள்ளைக்குக் கொடுத்துவிட்டால் மற்றதுகளுக்கு என்ன செய்யிறது என்ற கவலையும் அவருக்குத் தட்டியது. எனினும் தனது மூத்தமகளுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதை நினைக்க உச்சி குளிர்ந்தது. இனி வரப்போகின்ற சம்பிரதாயபூர்வமான நல்ல காரியங்களுக்கு நாள் வைக்க வேண்டும். ' தம்பி அந்தப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண் டுவா! ? ? என உற்சாகமாகக் குரல் கொடுத்தார்.
-இப்பொழுது சபாபதி அதிர்ந்தார்.
* எட! இனி ராசதுரையனைப் பிடிக்கேலாது!"
-சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்த நாடகமொன்று துக்கமாக முடிந்துவிட்ட ைகப் போலிருந்தது அவருக்கு.
மனது பொறுக்கவில்லை. தனது தர்ம பத்தினியாகிய கஞ்சுப்பிள்ளையிடம் ஓடினர். இரகசியமாக விஷயத்தைச் சொன் னர். குண்டு வெடித்தது; குஞ்சுப்பிள்ளை தலையிலே கையை வைத்தாள்.
* அந்தக் குமரி ஆடித்திரிஞ்ச ஆட்டத்துக்கு. இனி,
அவையளைப் பிடிக்கேலாது." என ஆற்றமையாகப் புலம்பினள். இருவருடைய மூளையும் ஒன்ருக ஓடி வேலை செய்தது!
மெய்யேனே! வந்தவையஞக்கு அந்தக் கதை யொண்டும் தெரியாதே?' எனப் புருசனைப் பார்த்துக் கேட்டாள் குஞ்சுப்பிள்ளை. சபாபதி அந்தக் கதையை நினைத்தார்.
米 水、本

Page 43
68 பலாத்காரம்
மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்தது
** இஞ்சருங்கோ!... ராசதுரையின்ரை பெடிச்சியின்ரை சங்கதி கேள்விப் பட்டனீங்களே?? - ஊர்ச் சங்கதிகளை நுட்ப மாகச் ‘சூந்து பிடித்து, இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து சபாபதியின் காதிலும், மற்றவர்கள் காதிலும் போடுவது குஞ்சுப்பிள்ளையின் சுவையான பொழுது போக்கு.
* ? என்ன சங்கதி???
* உவள் புனிதவதியெல்லே அவன் ரகுநாதனேடை தொடுசலாம்!"
** எந்த ரகுநாதனைச் சொல்லுருய்? p
**உவன்தான் ஆசையற்றை மூத்தமோனைத் தெரியாதே???
* ஓம்! ஒம்!. தெரியும், அவன் அவ்வளவு பிழையான பொடியனில்லைக் குஞ்சுப்பிள்ளை... வலு கெட்டிக்காறன். ஊரி&ல ஒரு சனசமூக நிலையம் திறந்து நாலுசனம் வாசிக்கக்கூடியதாய் அண்டண்டாடம் பேப்பர், புத்தகங்கள் வேண்டிப் போடுறவன். இனி. வேலை வில்லட்டி இல்லாமல் திரியிற பொடியளைச் சேர்த்து நாடகம் போடுறது அது இதெண்டு நல்ல புத்தி காட்டு கிருன் எண்டும் கேள்வி...”*
* உங்களிட்டை இப்ப உந்தக் கதையை ஆர் கேட்டது? அப்ப ஊரிலை பொய்யையே கதைக்கினம்?"
** என்ன கதைக்கினம்?"
*" ரகுநாதன் அடுகிடை படுகிடையாய் ராசதுரையன் வீட்டிலைதான் கிடக்கிருணும். ராசதுரையரும் கண்டும் காணுக மாதிரி விட்டிருக்கிருஜராம்."
* பின்னை அவனும் உத்தியோகக்காறன் தானே. அமத் திற யோசினை போலை. "

சுகாராஜ் 69
* ஒமெண்டுறன்!"
- இது இருவருக்குமே பெரிய அநியாயமாகப்பட்டது. * பக்கத்துவீட்டு ராசதுரையின் மகளுக்கு உத்தியோக மாப் பிள்ளையா? சீதனக் கரைச்சலில்லாமல் அந்தக் குமர் காரியம் ஒப் பேறப் போகிறதா? அநீதி! அநீதி!
- தூது பறந்தது.
* எடிபிள்ளை! உன்ரை மனுசன் இந்த ஊர் விண்ணுண மெல்லாம் கதைப்பார். இப்ப என்ன கண் கெட்டுப்போச்சே? உன்ரை குமரி ஆடுற ஆட்டம் சந்தி சிரிக்குது’ - குஞ்சுப்பிள்ளை பவளத்திடம் அங்கலாய்த்தாள்.
சபாபதியும் சொல்லிப் பார்த்தார்.
இராசதுரை சற்று முற்போக்கான கொள்கையுடையவர். சபாபதியருக்குச் சுடக்கூடியதாகவே சொல்லிவிட்டார்.
** அம்மான், உதென்ன பேய்க்கதை கதைக்கிறியள்?... ஆரேன் சொல்லுகினமெண்டால் உங்களுக்கும் மதியில்லையே? சோதினை கிட்டுது. பிள்ளைக்கு அந்தப் பாடங்களைக் கொஞ்சம் சொல்லிக் குடுக்கச்சொல்லி நான்தான் அவனைப் பிடிச்சுவிட்ட ஞன். இனியில்லையெண்டு, நீங்கள் சொல்லுறமாதிரித்தான் அது கள் ரெண்டும் மனமொத்திட்டால், அதுக்கு நான்தான் என்ன செய்யிறது,. நீங்கள்தான்என்ன செய்யிறது?*
சபாபதி குறுகிப் போனர்.
அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
ரகுநாதன் ஒரு நாடகம், கூட்டமென்ருல் முன்னுக்கு நிற்பவன்; ' தமிழ்! தமிழ்! " என அசையாத மொழிப்பற்றுள்ள இளைஞன்.
-நாலு பெட்டிசன் ” Gఎడి செய்தது;

Page 44
70 பலாத்காரம்
நாலாம் நாள் பொலிஸ்காரர் ஜீப்பில் வந்து ஏற்றிக் கொண்டு போனர்கள். ஒரு கல்லிலே இரு மாங்காய் கிடைத்த சந்தோஷம் சபாபதி தம்பதியருக்கு.
**அரசாங்கத்துக்கு எதிராய் ஏதோ கூட்டம் போட்டவ ஞம். உவங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?’ எனச் சபாபதியருடன் சேர்ந்து ஊர் கதைத்துக்கொண்டது .
** இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையோ?* எனக் கவலையுடன் குமுறின சில நல்ல உள்ளங்கள்.
- மூன்று வருடங்களுக்கு மேல் கடந்து விட்டன. ரகு நாதன் வெளியில் வந்தபாடில்லை.
** உதென்ன?. கப்பல் கவுண்டமாதிரி யோசிச்சுக்
கொண்டிருக்கிறியள். போய்ப் பார்க்க வேண்டிய கருமத்தைப்
பாருங்கோவன் ' சபாபதியரை உருக்கூட்டிவிட்டாள் குஞ்சுப்
பிள்ளை.
சபாபதி வெளியே வந்தார். கருமங்கள் யாவும் இனிது நிறைவேறிக்கொண்டிருந்தன. மாப்பிள்ளை பகுதி, சம்பிாதாயத் திற்குப் பெண்ணைப் பார்க்கப் போகிருர்கள். இராசதுரை குதுர கலத்துடன் உள்ளே போனர். ** இஞ்சரும்! பிள்ளையை வெளிக் கிடுத்திக்கொண்டு வாரும்!" என மனைவிக்குக் கட்டளையிட்டார்.
இந்த நேரம் பார்த்து சபாபதி மாப்பிள்ளையின் தகப்ப னைத் தனிமையாக அழைத்தார்.
* நல்ல காரியம். குழப்பிறனெண்டு நினைக்கக்கூடாது. உங்களைப் பார்த்தால் நல்ல சனம்மாதிரி இருக்குது. பக்கத்திலை இருக்கிறநாங்கள் சொல்லாமல் விட்டிட்டம் எண்டு பிறகு குறை சொல்லுவியள். உந்தப் பெடிச்சி முந்தி ஒருத்களுேடை ஆடித் திரிஞ்சவள். அவனும் ஒரு உதவாக்கரை. பொலிசிஃல பிடிச்சு மூண்டு வருசமாய் அடைச்சு வைச்சிருக்கிருங்கள். அவள் கெட்ட

சதாராஜ் 71
கேட்டுக்கு இப்ப கலியாணம் பேசித்திரியினம். வேறை என்னத் ஆக்கு ராசதுரை இவ்வளவையும் வித்துச் சுட்டு உந்தச் சீதனம் தாருனெண்டு நினைக்கிறியள். இப்படிக் க ைபகுதி வந்து சம்பந்
தம் பேசினவையள்தான். பிறகு சங்கதியைக் கேள்விப்பட்டாப் டோலை விட்டிட்டுப் போட்டினம். எனக்குச் சொல்லாமல் இருக்க மனம் கேக்குதில்லை. இனி உங்கடை விருப்பம். '
இராசதுரை உற்சாகத்துடன் வெளியே வந்தார். ** அப்ப பிள்ளையை வரச்சொல்லட்டோ?* •
**இல்லை!. வேண்டாம், இப்ப என்ன அவசரம்?. இன்னெரு நாளைக்குப் பாக்கலாம் தானே???
-இரகசியமாக அறையினுள்ளிருந்தவாறே வெளியே நடக்கும் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த புனிதவதி யின் நெஞ்சில் இடி விழுந்தது,
அவளுக்குத் தெரியும் - " பொம்பிளை பார்க்க வந்த எத்தனையோ பகுதி இப்படித் திரும்பிப் போகின்ற இரகசியம் அவளுக்குத் தெரியும். சபாபதியம்மான் தனது கருமத்தைத் திற மையாக ஒப்பேற்றியிருப்பார்.
'மாப்பிளை வீட்டுக்காறர் போகப் போகினம். ? ?
-எத்தனை நாட்களுக்குத்தான் அறையினுள் இருந்து கொண்டு உளச் சோர்வுடன் தனது அலங்கரிப்புகளை அகற்றிக் கொண்டிருக்க முடியும்?
அறையில் ஒரு பகுதியில் தோட்டத்துக்கு வாங்கப்பட்ட களை கொல்லி மருந்து சிரித்துக் கொண்டிருந்தது.
பயிர்களுடன் சேர்ந்து வளர்கின்ற களைகள் அழிக்கப் படாதவரை பயிர்களுக்கு நாசம்தான். ஆற்ருமையினுல், பயி  ையே அழித்து விட்டால் களைகளின் நாசவேஃயைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என இந்தப் பேதை நினைத்து விட்டாளா?
k k
- "வயித்திலை பிள்ளையாம். அதுதான் மருந்து குடிச் சவள் !" என சபாபதி தம்பதியருடன் சேர்ந்து ஊர் கதைத்துக்
கொண்டது.
Y y.

Page 45
இலங்கைக் கலாச்சாரப் பேரவையினுல் நடத்தப்பட்ட 1976-ம் ஆண்டிற்கான சிறு கதைப் போட்டியில் இரண்டா வது பரிசு பெற்ற கதை.
நாணயக்கயிறு
i. டா ! டேய் . . . எழும்படா !
** நான் கத்துறன் கத்துறன் அவன் விறுமகட்டை மாதிரிக் கிடக்கிருன் . . . எழும்பன்ரா எருமை!

சுதாராஜ் 73
** மூதேவியாருக்கு நித்திரையெண்டால் போதும்!. மாடுமாதிரிக் கிடக்குது.
** ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ ?. பொறும் வாறன் !"
- அம்மாவினுடைய அதட்டலில் மாடு இன்னும் எழும்பவில்லை; நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு நிலவிய மெளனம் * அம்மா " அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகின்ரு என்பதை உணர்த்தியது.
வெளியே கடுமையான பணி பெய்கிறது. இன்னும் இருள் அகலாத அதிகாலை, போர்வையை இழுத்து உடலை மூடிக்கொண்டு சொகுசைத் தேடுகிறேன். வெளியே, சீமெந்துத் தரையில் சீற்றுப் பழசொன்றைப் போட்டுக் குறண்டிக்கொண்டி ருக்கும் சுந்தரத்தினுடைய நிலை பரிதாபமாக இருந்தது. /
* அம்மா"வினல் * மாடு " என அழைக்கப்பட்டவன் சுந்தரம்தான். இந்த வீட்டு வேலைக்காரன். பத்தோ பன்னி ரண்டு வயது மதிக்கத்தக்க பொடியன். அம்மா இந்த வீட்டு அல்லிராணி.
நான் உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தவன். என்னைப்போல இன்னும் ஏழோ எட்டுப் பேர் இந்த வீட்டில்
வாசம் செய்கின்ருேம். கொழும்புக்கு வேலையாகி வந்த புதிதில், அறையொன்று தேடி அலைந்தபொழுது மிஸ்ஸிஸ் அருள்நாயகம் " வீட்டில் இடம் இருக்கிறது என இங்கே
கொண்டுவந்து சேர்த்துவிட்டான் நண்பனுெருவன்" சந்தேகப் பட வேண்டாம்; மிஸ்டர் அருள்நாயகம்தான் அம்மாவினுடைய * அவர் -வீட்டிலே குடியிருக்கும் எங்களால் * பெட்டைக் கோழி " என செல்லமாகக் கதைக்கப்படும் பேறு பெற்றவர்.
அவர் இவ்வீட்டில் "மிஸ்டர்’ ஆக இருந்தாலும் எவராலும் கதைக்கப்படும் பொழுது "மிஸ்ஸிஸ் அருள்நாயகம் வீடு எனத் தான் குறிப்பிடப்படும் ! அது; இந்த வீட்டு அல்லிராணி இராச்

Page 46
74 பலாத்காரம்
சியத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் அவரும் முன்பு உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தவர்தானம். ராணி அம்மா அப் பொழுது குமரியாக இருந்தபொழுது, அவவுக்கும் இவருக்கும் ஏதோ ஒரு சின்னத் தொடர்பாம் ! பிறகு பார்த்தால் விஷயம் முத்திப்போச்சுது! இவரும் நல்ல உத்தியோகம்தானே என்று " புடிச்சுக் கட்டிவைச்சாச்சு!" ராணி அம்மா அவையஞம் யாழ்ப்பாணத்து ஆக்கள்தான். அந்தக் காலத்திலேயே கொழும் புக்கு வந்து, ‘ செற்றில்ட்டெளன். இது, அவர்களுடைய வீடு தான். ஐயாவுக்கு அதைக் கண்ணலை காட்டி 'அமத்திப் போட்டினம்.
வீடு, முன்னுக்குப் பார்த்தால் வடிவாய்த்தான் இருக், கும். அழகான வாசல், பொலிஷ் பண்ரிைய சீமெந்து, பூச் சாடிகள், பூக்கள், படங்கள், பறவைகள், ஃப்பிரிஜ், வானெலி இப்படி எத்தனையோ அலங்காரப் பொருட்கள் (கவனிக்கவும்: குளிர்பெட்டியும் வானெ பியும்கூட ராணி அம்மாவைப் பொறுத் தவரை அலங்காரப் பொருட்கள்தான் !)
வாசற் கதவில் " கடிநாய்கள் கவனம் ? என அழகாக எழுதப்பட்ட ஒரு பலகை தொங்குகிறது. அது கூட ; அலங் காரத்திற்காகத்தான்! உள்ளே வந்தாற்தான் "மிஸ்ஸிஸ் அருள் நாயகம் 3 என்ற ஒரே ஒரு கடிநாய்தான் இருக்கின்ற உண்மை தெரியும், அவ, கடிநாயாக இருந்தாலும், எங்கிளைப் பொறுத்த வரையில் (அதாவது, வீட்டில் வாடகைக்கு இருக்கின்றவர்களைப் பொறுத்தவரையில்) பச்சைத்தண்ணி ஒவ்வொரு வார்த்தை யிலும் அன்பு ஒழுகும். அதுதான் எங்களை மடக்கி வைத்திருக் கின்ற மந்திரமும் கூட கொழும்பிலே அறை தேடி 61. ப்பது குதிரைக் கொம்புதானென்ருலும். இப்படி, வீட்டுக் கோடியி னுள்ளே அறைகளாகப் புனருத்தாரணம் செய்யப்பட்ட கொட் டில்களினுள்ளும் கோழிக்கூடுகளினுள்ளும் நாங்கள் அடைந்து கிடக்கின்ற விசித்திரத்துக்கும் ஏதாவது காரணம் வேண்டுமே !
** மாடு 1 எழும்பு. எருமை மாதிரி விடிய விடியக் கிடக்காமல்.. ? ? என்றவாறே பாத்திரத்திலிருந்து தண்ணீரை

சுதாராஜ் 75
ஊற்றுகின்ற சத்தம் கேட்கிறது. இதைத் தொடர்ந்து; * ஐயோ.. அம்மா !... ' என்ற சுந்தரத்தினுடைய அலறல், அவன் இந்த “ அம்மா 'வையா, தன்னுடைய சொந்த அம்மா வையா அழைக்கின்றன் என்பது கடவுளுக்குத்தான் வெளி சம். பகல் முழுவதும் அயராது உழைக்கின்ற அலுப்புத்தான், அவன் இந்தக் கடும் குளிரிலும் சீமெந்துத் தரையில் மாடு மாதிரி ? உறங்குவதன் இரகசியம் ! அப்படி ஆழ்ந்து தூங்கிக் கொண்டி ருப்பவனின் முகத்தில் சடுதியாக குளிர்ந்த நீரையும் ஊற்றினல் எப்படி இருக்கும் ? இது வழக்கமான சங்கதிதான்.
போ! மாடு, தேத்தண்ணிக்குத் தண்ணியை வை." ராணி அம்மாவினுடைய அதட்டல் தான்.
சுந்தரம் பாத்திரங்கள் கழுவத் தொடங்கிவிட்டான். குளிர் தாங்கமுடியாமற் போலும். பாத்திரங்கள் சிணுங்கு கின்றன.
அவன் இவ்வீட்டிற்குத் * தொட்டாட்டு வேலைகள், செய்வதற்கு என்றுதான் எடுக்கப்பட்டவனும். ஆணுல். . . டாவம்
அவனுடைய வயதுக்கு, அவனுடைய சக்திக்கும் மீறியே வேலை வாங்கப்படுகிருன், அவன் ராணி அம்மாவுக்காக மாடாகத்தான் உழைக்கின்றன்.
** ராணி அம்மா அசையமாட்டா அலுவல் செய்தால் அவவுக்கு முறிஞ்சுபோடும் ! பாவம் !. இந்தப் பொடியனைப் போட்டு என்ன பாடு படுத்துருள். ’’ இப்படி எனது சக அறைவாசிகள் கதைத்துக்கொள்வார்கள். ராணியிடம் கதைக்கத் துணிவு வராது. e
* ஐயா ... கண்ணன் ஐயா !”
எனது அறைக்கதவு தட்டப்படுகிறது; சுந்தரம் சேநீ ருடன் வந்திருப்பான்.
* ஆரது ?. சுந்தரமே?. வா ராசா!. "

Page 47
76 பலாத்காரம்
நான் அவனுடன் கதைக்கும் பொழுதுகளில் அவனுக்கு இனிக்கக்கூடியதாக அன்பைத் தாராளமாகவே கலந்து விடுவேன். பாவம்; எங்களுடன் கதைக்கும் போதாயினும் ஆறுதலடையட் டுமே என்ற எண்ணத்தில்.
* சுந்தரம் !. நீ தேத்தண்ணி குடிச்சிட்டியே ? ?"
நான் மிகவும் கரிசனையோடு கேட்க, அவன் அதில் வெட்கமடைகிருன். இப்படித்தான்; அவன்மேற் கரிசனைப்பட்டு அக்கறையோடு நாங்கள் ஏதாவது கேட்டால், பதிலளிக்க முடியாமல் வெட்கப்படுவான் - ஏதோ கே லிக்குட்படுபவனைப் போல தன்னிலும் கரிசனைப்படக்கூடிய " ஐயாக்கள் இருக் கின்றர்களே என்ற அதிசயம் போலும்.
தேநீரை அருந்தி விட்டு கோப்பையைக் கொடுக்கும் பொழுது அவனது சொக்கிலே தட்டி எனது நன்றியைச் செலுத்துகிறேன். அவன் ஏதோ தவறுக்குத் தான் உடந்தையாகு பவனைப் போல வெருண்டுகொண்டு ஒடுகிரு:ன்.
வேலைக்குப் போகின்றவர்களுக்கு சாப்பாடு போடுவதற் காக சுந்தரம் ஒற்றைக்காலில் நின்று சுழலத் தொடங்கிவிட் டான். இதற்குள்ளே. தவறுதலாக, தேனீர்ப்பாத்திரமொன் றைப் போட்டு உடைத்திருக்கவேண்டும்; ராணி அம்மாவி னுடைய பத்திரகாளித்தனம் தொடங்கிவிட்டது. எனக்கு இதைப்பார்க்கச் சகிக்கவில்லை:
* ஏன் இப்படி அடிக்கிறீங்கள். பாவம். " என் கிறேன்.
* பாவமோ?. இவன்ரை திமிரைப் பாருங்கோவன்!. என்ன குறை வைச்சனன் ?. விழுங்கக் குடுக்கிறதிலை குறைவே ? . . . சாப்பிட வழியில்லாமல் கிடந்த நாய்க்கு. நேரத்துக்கு நேரம் விழுங்கக் குடுத்தால். கொழுப்பு வைக் கும்தானே....”*
* ஐயோ!... அம்மா... அடிக்காதீங்கம்மா... "

சுதாராஜ் 77
* சரி, சரி! இனி விடுங்கோ. போதும்! "
** இவனுக்கு நாரிமுறியக் குடுக்காட்டித் திருந்தமாட் டான். இப்பிடித்தான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்டைப் போட்டு உடைக்குது, மாடு!"
- ஒரு பாத்திரம் தவறுதலாக் விழுந்து உடைந்ததற்கு இவ்வளவு தண்டனையா? பக்குவமாகச் சொல்லித் திருத்தலாமே; * உங்கடை பிள்ளையும் தவறி எதையாவது உடைச்சால் இப் பிடித்தான் அடிப்பியளோ ? ? என்று கேட்கவேண்டும் போலி ருக்கிறது. கேட்கவில்லை. கேட்டால் ராணி அம்மாவினு டைய பத்திரகாவித்தனம் என்மேற் திரும்பிவிடுமோ என்ற Ljuuth !
* ஐயோ ! அம்மா... அடிக்காதீங்க... நான் போறேங்க... அடிக்காதீங்கம்மா, நான் போறேங்க !...”*
* என்னடா ? போகப்போறியோ ?. . இஞ்சை திண்டு திண்டு கொழுப்பு வைச்சிட்டுதல்லே?. இனி உப்பிடித்தான் சொல்லுவாய்!. மெய்யடா? போகப்போறியே?...
f - டேய் மாடா, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லிப் போட்டு அழடா!... போகப் போறியே ???
சுந்தரம் அடிவிழுந்த இடங்களை உரசி உரசி அழுது கொண்டிருக்கிருன்.
"உவன் சரியான சாலக்காறன் பாருங்கோ!. அடிக் கயிக்கை போகப்போறன், போகப்போறன் எண்டு கத்துவன் ... பேந்து கேட்டால் மாட்டனெண்டிடுவன் ! அங்கை போனுல் .தின்னக் குடிக்க வழியில்லாமல் கிடந்து சாகவேணுமெல்லே!.
'உவன்ரை தமையனுெருத்தன் அழகப்பன் எண்டு பேர். முந்தி இவற்றை தேப்பனேடை நிண்டவன். இப்ப நல்லாயிருக்கிருன்... இவனையும் அவன்தான் கொண்டு வந்து சேத்து விட்டவன்...

Page 48
78 பலாத்காரம்
** இக்கணம் அவனுக்குச் சொன்னமெண்டால் தோலை
உரிச்செடுத்துப் போடுவன்... உப்பிடித்தான். இவர் முந்தியுமொருக்கால். . . போகப்போறனெண்டு. ஒடப் பார்த்த வர்..., பிறகு அவன் தமையனைக் கூப்பிட்டுச் சொன்னம்; நல்ல
வடிவாய்க் குடுத்திட்டுத்தான் போனவன். அவன்ரை ஒவ்வொரு உதைக்கும் என்னமாதிரிச் சுருண்டு கொண்டு விழுந்தவன் தெரி புமே.., நாங்கள் பாவத்தைப் பாத்து எப்பன் தட்டினவுடன. அவருக்குக் கோபம் வந்திடுது.
* மெய்யேடா? சொல்லன், போகப்போறியே?. அப் பிடியெண்டால் சொல்லு கொண்ணனைக் கூப்பிடுவம்."
சுந்தரத்தினுடைய அழுகையின் சுருதி குறையத்தொடங் கியது.
*சொல்லன்ரா கெதியாய்!. இஞ்சை உன்ரை வாயைப் பாத்துக்கொண்டு நிக்க எங்களுக்கு நேரமில்லை. !'
.** அம்மா! அடியாதையுங்க, நான் போகயில்லீங் sub por ” ”
* பாத்தீங்களே!. தமையனுக்கெண்டால் சரியான பயம். அவன் கேள்விப்பட்டால், கொண்டுபோடுவன் ...??
" போ! மூதேவி. போய் அலுவலைப் பார்!" சுந்தரம் அழுதுகொண்டே குசினிக்குள் செல்கிருன்.
சுந்தரத்தினுடைய அண்ணனை நினைக்க எனக்கு எரிச்சல் மேலிடுகிறது. மடையன், அவனும் இந்தப் பாலs) .தப் போட்டு உதைத்திருக்கிருனே! ராணி அம்மா ? இல்லாத0,யும் பொல் ாததையும் * சொல் வியிருப்பா. அவவுடைய சுபாவமே அது நான், ‘இவன் தம்பி. ஒரு அலுவலும் செய்யிருவில்லை. எந்த நேரமும் வீட்டை போகப்போறன் வீட்டை போகப்போறன் எண்டுதான் நிக்கிருன் " என்ருல், அது போதுமே அவனுக்கு. வீட்டிற் சாப்பாட்டுக்கு வழியில்லை. இங்கு இதாவது கிடைப்பது கடவுள் புண்ணிய்ம்! இதையும் விட்டால் எங்கே போவது என்ற ஆத்திரத்தில் உதைத்திருப்பான்.

சுதாராஜ் w 79
சுந்தரத்தினுடைய பலவீனம் இதுதான். அடியிலும் உதையிலும் வதைப்பட்டாலும், பின்னர் சாப்பாட்டின் தேவை வரும்பொழுது அந்த வேதனைகளை மறந்து விடுகிருன் போலும் , இந்தக் காட்டுமிராண்டித்தனத்தையெல்லாம் அவன் சகித்துக் கொள்வதைப் பார்த்தால் முன்னர் பசியின் கொடுமையை எவ்வ ளவு உணர்ந்திருப்பான் என்று தோன்றியது.
ராணி அம்மாவினுடைய நாணயக்கயிறும் அதுதான். மாடுமாதிரி வேலை வாங்குவா, விருப்பம்போல அடிப்பா. உதைப்பா. சாப்பாட்டை அளந்து போடுவா. சாப்பாட்டைக் குறைத்துக் கூட்டி (இதிலே, ‘கூட" என்பது அவனுடைய வயிற் றுக்குப் போதுமான அளவைக் குறிக்கிறது.), தனது எண்ணத் துக்கு ஆடவைப்பா. அதில் அவன் சுழலுவான். சொன்னபடி நிற்பான்.
மாடு வண்டில் இழுக்கிறதுதான். எவ்வளவோ பாரத்தை அது; எசமான் சாப்பாடு போடுகின்ற நன்றியுணர்வுடனும், கட மையுணர்வுடனும் இழுத்தாலும் ஏனே வண்டிக்காரன் ஏதோ நியதிக்குட்பட்டவன் போல அதை அடிக்கொருதரம் அடித்து இம்சைப் படுத்துகிருன்? வண்டி இழுக்கின்ற மாட்டினுடைய கட்டுப்பாடும் அவனுடைய கையிற்கான். அதன் மூக்கினுாடு துளையிட்டுச் செலுத்தப்பட்ட கயிறு (நாணயக்கயிறு) அவன் கையிலிருக்கும். அதைச் சுண்டி இழுப்பதன் மூலமும், அசைப் பதன் மூலமும் மாடு போக வேண்டிய திசையையும், நிற்க வேண்டிய இடத்தையும் அவனே நிர்ணயிப்பான்.
சுந்தரத்தினுடைய நாணயக்கயிறு ராணி அம்மாவினு டைய கையிலிருக்கிறது. காரணமற்ற அடியிலும் உதையிலும் இம்சைப்பட்டுப் போகவேண்டும் என முனைபவன், பின்னர் சாப்பாட்டு மந்திரத்தில் அடங்கி விடு, ஓன்.
இப்படிச் சிந்தித்தவாறே இருந்கபொழுது ‘அங்கிள்" என்றவாறே ஒடிவந்து பாய்ந்தான் ராணி அம்மாவினுடைய புத்திர பாக்கியம். பாலர் பாடசாலைக்குப் போகின்ற வயதுச் சிறுவன்தான். அம்மாவினுடைய செல்லக் குஞ்சு.

Page 49
80 பலாத்காரம்
* சும்மா போ தம்பி அங்காலை. மணிசருக்குக் கரைச் ஈல் தராமல்.’’ என்கிறேன், எரிச்சலுடன். பெடியன் "இங்கி லிசில்? சிணுங்கிக்கொண்டு போகிருன் . இதைப்பார்த்துக்கொண்டு நின்ற ராணி அம்மாவுக்கு “மன்னை'யாகப் போய் விட்டது. பெடி யனுடைய இங்கிலீஷ் பெயரைச்சொல்லி, அவனேடு அன்போடு கதைக்கவில்லை என்ற கோபம்தான். அவனுடைய பெயரைச் சொன்னல் எனக்கு நாக்கு கொழுவிவிடும் என்ற பயம்!
இவன் கொழும்பிலே ஒரு பாலர் பாடசாலையிற் படிக் கின்றன். சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இவனுடைய "ரீச்சர் பாடசாலையில் எதற் காகவோ அடித்துப்போட்டாவாம். பெடியன் சரியான குழப்படி தான். அம்மாவுக்குத் தாங்கவில்லை. ‘கொடுக்கிழுத்துக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டா.
*பிள்ளையன் பிழை விட்டால் ரீச்சர் அடிக்கிறதுதானே?? எனச் சமாதானம் சொல்லிப்பார்த்தேன்.
* பிள்ளையளை அங்கை படிப்பிக்க அனுப்புறஞங்களோ... அடிச்சுக்கொல்ல அனுப்புறணுங்களோ.. அவளவையள் 'னச்ச மாதிரி அடிச்சுக் கொல்லுறத்துக்கே இஞ்சை பெத்துப் போட்டி ருக்கிறம்!. அவளவை அங்கை படிப்பிக்க வாரு?ளவையோ.. ஆடுறதுக்கு வாருளவையோ...' என சம்பந்த மில்லாத நியா யமெல்லாம் வளர்த்துக்கொண்டு போன. பின்னர் ஏதோ சாதனை செய்து விட்டதுபோல ‘நாச்சியாருக்கு நல்ல வடிவாய்க் குடுத் திருக்கிறன் ... எனி அடங்கிக்கொண்டு இருப்பா" என்றவாறே திரும்பி வந்தா.
“தனக்கொரு நீதி பிறர்க்கொரு நியாயம் என இவர்க ளால் எப்படி இருக்க முடிகிறது? எல்லோரையும் போலவே, இரத்தமும், எலும்பும், தசையும் உணர்ச்சிகளும் சேர்ந்து ஒரு தாயின் வயிற்றில் உருவாகிப்பிறந்து இன்னெரு குழந்தைக்குத் தாயாகின்றவர்கள்தானே இவர்களும்? ... அல்லது காங்களெல்லாம் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் என்ற நினைவோ?’ என எரிச்சலுடன் எண்ணியவாறே நான் அலுவல் களில் ஈடுபடுகிறேன்.

சுதாராஜ் 8
..இனி வேலைக்குப் போகவேண்டும், ஆயத்தமாகிக் கொண்டு *டைனிங் ரேபிளில் அமர்கிறேன்.
டேய்! கெதியிலை சாப்பாட்டை வையன்ரா!,.. ஐயா அவையள் வேலைக்குப் போகவேனும், .. ' ராணிஅம்மா 643ð) L. If அகட்டல்தான். சுந்தரம் சாப்பாட்டுமேசைக்கு ஒடி.
வருகிருன்.
‘அங்கை பாருங்கோ. அவன்ரை வண்டியை... ராத் திரிச் சனப்பிட்டது இன்னும் செமிக்கயில்லை. அதுதான் உந்தத்திமிர். . . "
அவனுடைய வயிற்றின் பருமனைக் குறிப்பிட்டு ராணி அம்மா கதைக்க, அதில் அவன்மாத்திரமல்ல. நானுமே சங்க டப்படுகிறேன்.
* ஏன்ாா மறைக்கிரு?ய்?. இஞ்சாலை திரும்பன்ரா எருமை 1. . . வயித்தை எக்கிக்கொண்டு நில்லாமல் வடிவாய் நில்லடா... ?"
அவன் என்பக்கம் தனது வயிறு தெரியக்கூடியதாகத் திரும்பி, ஏதோ குற்றம் செய்துவிட்டவனைப்போலக் கூனிக் குறுகுகிருன். சாதாரணமாகவே அவனுடைய வயிறு சற்றுப் பருமனன தோற்றமுடையதுதான். ராணி அம்மா அடிக்கடி, ** அங்கை பாருங்கோ வண்டியை!. . . மூக்கு முட்ட விழுங்கிப் போட்டு நிக்கிருன். ' என எங்களுக்குச் சொல்லிக்கொள்வது வழக்கம் - தான் அவனுக்கு, குறைவின்றி சாப்பாடு போடுவ தாகக் காட்டிக்கொள்வதற்குப்போலும் ! ஆனல். . . இங்கு அறைகளில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் தாங்களும் சாப் பிட்ட பின்னரே, மிகுதியில் சுந்கரத்துக்குச் சாப்பாடு போடு வதை நான் எத்தனையோமுறை கவனித்திருக்கிறேன். அதையும் அவன், உடனே சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றம் ! அவ னுடைய பாத்திரத்தில் ராணி அம்மா அளந்து விடுவா; அதனை ஒரு புறத்தில் வைத்துவிட்டு, மற்றவர்கள் சாப்பிட்ட பாத்திரங் களையெல்லாம் கழுவி ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டுப் பின்னர்தான் சாப்பிடலாம்.

Page 50
82 , Lj6Yfrj;$rr frtí
நான் வேலைக்குச் சென்றுவிட்டு, மதியச் சாப்பாட்டிற் காகத் திரும்பியபொழுதும் அமர்க்களம் ஒயவில்லை. இப் பொழுது அம்மாவுடன் ஐயாவும் சேர்ந்துகொண்டுவிட்டார்.
* ? ஐயோ ... அடியாதைங்க சாமீ ! ?
*ருஸ்க்கல் 1. கொண்டு போடுவன், வேலையைச் செய்ய டா எழும்பி!...”*
معر
சுந்தரம் விருந்தையிற் கிடந்து உருண்டவாறே அழு கின்றன். நான் வந்ததை ராணி அம்மா கண்டதும் நியாயம் கூறத் தொடங்குகின்ரு.
** இல்லைப் பாருங்கோ. அவன் இண்டை க்கு ) ரு குணம் கொண்டு நிக்கிருன்... ஒரு அலுவலும் செய்யிருனில், ! சொல் லுறதைக் கேக்கிருனில்லை. அவரும்தான் அங்கை எழும்படா எழும்படா எண்டு வாய் கிழியக் கத்திக்கொண்டு நிக்கிருர்.
அவன் அசைஞ்சால்தானே !'
நான் பதில் பேசாமலே நிற்கிறேன்.
என்னைக் கண்டதும், சுந்தரத்தினுடைய குழறல் கூடு
கிறது.
* ஐயா ! கண்ணன் ஐயா !... அடிக்கிருங்க ஐயா!...
என்னைக் கொல்லுருங்க... ஐயா!'
- கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என் முன் கீ. பிலே கண்ணன்; இங்கே சுந்தரத்தினுடைய அவலக்குாலைக் கட்டும் மெளனம் சாதித்துக்கொண்டு நிற்கிறேன், கண்ணன் என்கிற நான் !
* டேய்! வாய் பொத்தடா மாடு !' - இது ஐயா, * ஐயோ! அடிக்காதீங்க சாமீ!?? ஐயாவுக்கு சுந்தரத்தின்பால் சற்று இரக்கம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனல். . . ராணி அம்மாவினுடைய
அன்பைச் சம்பாதித்துக்கொள்வதற்கு, இது அவருக்கு ஒரு சுலபமான வழி !

சுதாராஜ் 83
சுந்தரத்தினுடைய முதுகிலே பல புதிய தழும்புகள். வலதுபக்க தோள்மூட்டிலே ஒரு காயத்திலிருந்து இரத்தம் வழிகிறது. நான் பொறுக்கமுடியாமல் ஐயாவிடமே கேட் கிறேன்.
*' என்ன பாருங்கோ ?. அங்கை அவனுக்கு ரத்தம் வழியுது. . . நல்லாய் அடிச்சுப்போட்டீங்களே?...”*
ஐயா ஒரு சமாளிப்புச் சிரிப்புடன் சொல்கிருர் .
* சீ! உப்பிடி அடிப்பமே ? . . . அது. . . அவ அடுப்புக்கு வைக்க விறகுக்கொள்ளியை எடுத்தா... இவன், தனக்கு அடிக்கப்போருவாக்குமெண்ட பயத்திலை திரும்பினன். அது தான் சாதுவாய்ப் பட்டிட்டுது. *
** சாதுவாய்த் தட்டுப்பட்டு உப்பிடி ஒரு காயம் வந்து இரத்தம் வழியும் எண்டு இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்! "
- எனது பேச்சில் சற்று சூட்டைக் கலந்துவிடுகிறேன்.
அதைத் தாங்கமுடியாமற்போலும் ராணி அம்மா வுடைய கோபம் சுந்தரத்தின்பால் அதிகரிக்கிறது;
* உன்ரை திமிருக்குக்... காலமை பட்டினி போட் டிருக்கு ... வடுவா!.. இண்டுமுழுக்க உனக்குச் சாப்பாடு தாறயில்லை. கிடந்து வத்தினுல்தான் புத்தி வரும். '
** அம்மா !... அடிக்காதீங்கம்மா!... நான் போறேங்க ... என்னைக் கொல்லாதீங்கம்மா!..." என்றவாறே சுந்தரம் எழு கின்றன். வாசலை நோக்கி ஒட முயற்சிக்கிருன், ராணி அம்மா எட்டிப் பிடித்துவிடுகிரு.
** என்னடா ?. போகப் போறியோ ? ??
* ஆமாங்க! நான் போறேங்க. எனக்கு அக்கா தீங்க... உங்களைக் கும்புடுறேம்மா... ??

Page 51
84 பலாத்காரம்
அம்மாவினுடைய தாக்கு: வின் உரம் அதிகரிக்கிற து. அடியின் கோரத்தில், ' நான் போகல்லீங்க...' என சுந்தரம் சொல்லவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவன் நெளிந்து நெளிந்து குழறுகிருன்; V
* நான் போகப்போறேங்க 1. போறேங்க.. போறேங்க... ப்ோகப்போறேங்க . . "
** தோட்டக்காட்டுச் சனியன்! உன் ரை புத்தியைக் காட்டிப் போட்டாய். நாங்கள் இவ்வளவு காலமும் தின்னத் கந்ததுக்கு என்னடா கூலி !... மாதா மாதம் கொண்ணனுக்குக் தடுத்த காசு நூறுரூபாய்க்கு மேலை வரும். அதையெல்லாம் தந்திட்டுப் போடா !” Y
- எனக்கு சுரீரென்கிறது! இவ்வளவு கீழ்த்தரமாக வெல்லாம். இந்தப் பெரிய மனிதர்களால், கதைக்க முடி கிறதே 1.
** அடியாதீங்கம்மா !. நான் போறேங்க... ! ?
‘நான் கேட்டதுக்குப்பதிலைச் சொல்லிபோட்டுப் போய்த் துலையன்ரா. மூதேவி! உடுத்த துணியோடை நிர் தெண்டு ரெண்டு சாறமெல்லே தச்சுத் தந்தனங்கள். அதையெல்லாம் தந்திட்டுப் போடா "
சுந்தரத்தினுடைய அழுகை குறைகிறது. அம்மாவை நோக்கி இரக்கமாகத் திரும்புகிறன். " போ கல்லீங்க " என்று சொல்லப் போகின்ருனே! இப்பொழுது அவனுக்குப் பாய்ந்து உதைக்கவேண்டும் போலிருக்கிறது எனக்கு.
** மெய்யடா மாடா, திண்டதுக்குக்கூலி என்னடா ? ?? -அம்மாவின் ஆவேசம்.
சுந்தரத்தினுடைய அழுகை நின்றது;
* நீங்கதானே கூலி தரணும் ?. நான் எவ்வளவு வேலை செஞ்சிருக்கிறன்."

சுதாராஜ் 85
** என்னடா? திமிர் புடிச்ச மாடு ???
ராணி அம்மா அவனுடைய வயிற்றில் ஓங்கி உதை கின்ரு . " தொப்' பென விழுந்து மீண்டும் எழ முயற்சித்த பொழுது... ஐயா தனது பங்கைச் செலுத்துகிறர். அந்த உதையில் சுந்தரம் வீட்டுக்கு வெளியே விழுகின்றன்.
எனது நெஞ்சு குளிருகின்றது;
கீழே விழுந்தவன், இனி எழும்புவான். எழப்போகின்ற ஆவேசம் அவன் கண்களில் அனலாகப் பறக்கின்றது!
'எருமை மாடு! உன்னை என்ன செய்யிறன்பார்!" என்ற வாறே ராணி அம்மா அவனைநோக்கி ஓடுகின்ரு.
சுந்தரம் எழுந்துவிட்டான்.
'தூ! மிறுகங்கள்!' என்றவாறே அவன் ராணி அம் மாவை நோக்கித் துப்புகிருன். எச்சில் அம்மாவினுடைய முகத் திற் பட்டுத் தெறிக்கிறது. அந்த எதிர்பாராத தாக்குதலில் அவ அதிர்ந்து போய் நிற்க,
அவனுடைய பாதங்கள் ஒரு புதிய தீவிரத்துடன் பூமியை முத்தமிட்டுச் செல்கின்றன!
-நாணயக்கயிறு அறுந்தது!
-இனி மாடு அதன் எண்ணத்துக்கு ஒடும்.
女★★

Page 52
மாற்ருன் தோட்டத்து மலர்
பத்து மணிப் பொழுது -
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்குப் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எட்டுமணிக்கு முதலே அவர் அலுவலகத்திற்குப் டோய் விடுவார். அவர் நின்றல் பொழுது போவதே தெரியாது - காலை ஆறுமணிக்கே கட்டிலுக்குக் கோப்பி கொண்டுபோக வேண்டும்.
 

சுதாராஜ் 87
** இஞ்சருங்கோ. எழும்புங்கோ. நேரம் போட்டுது, கிடக்கிறியள். '
அவர் எழுந்து, படுத்தபடியே கைகளை உயர்த்தி சோம் பல் முறித்துக்கொண்டு, எழும்புவதற்கு விரும்பாதவர் போல மீண்டும் குப்புறப் படுத்துவிடுவார்.
* எழும்புங்கோ!.. இதென்ன குழந்தைப்பிள்ளையன் மாதிரி... ' என்றவாறே அவர் கைகளைப் பிடித்துத் திருப்பித் தூக்கிவிடுவா. அவரும் குழந்தையைப் போலச் சிணுங்கிக் கொண்டே எழுந்திருப்பார். இவஷம் பக்கத்திலே கட்டிலில் அமர்ந்து தேநீரை எடுத்து ஆதரவோடு கொடுப்பா, தூக்கத் தில் கலைந்து நெற்றியில் விழுந்திருக்கும் கேசங்களைப் பரிவோடு ஒதுக்கிவிடுவா - சில இடங்களில் நரை விழத்தொடங்கிவிட்டது! அதைப்பார்க்க இவவுக்குப் பொறுக்க முடியாத கவலைதான் பொங்கிக்கொண்டு வரும். ஒன்றிரண்டு மயிர்கள்தான் நரைத் திருக்கிறது. அவற்றைப் பிடுங்கிவிடலாம் எனத் தோன்றினலும் நரைமயிர் பிடுங்கினுல் இன்னும் கூடப் பரவுமாம்" என்று எங் கேயோ கேள்விப்பட்ட பயத்தில், கவலையுடன் பிடுங்காமலே விட்டுவிடுவா; வயதும் கூடிக்கொண்டுதான் போகுது. *
வயது கூடிக்கொண்டு போனலும், அவர் அவவுக்கு ஒரு குழந்தையைப் போலத்தான். காதலித்துத் திருமணம் முடித்து ஏழுவருடங்களைக் கடந்தும் ஆயிற்று! ஆனல் இன்னும் பிள்ளைச்செல்வம் இல்லாதது. ஒரு பெரிய குறைதான். பார்க்காத டாக்குத்தர்மாரும் இல்லை, கேளாத சாத்திரங்களும் இல்லை, வேண்டாத தெய்வங்களும் இல்லை. டாக்குத்தர்மார் கையை விரிச்சதுபோலவே சாத்திரிமாரும் அடிச்சுச் சொல்லிப்போட்டான் கள் 'உங்கடை சாதகத்துக்குப் பிள்ளைப்பாக்கியம் கிடையாது" என்று!
* 'பாவம். . . அந்தக்கவலைதான் போலை, , ! அவரைப் போட்டு வாட்டுது. ' என நினைத்துக்கொள்வா. முடிந்தவரை அவருக்கு அந்தக்கவலை தெரியாத அளவுக்கு நடந்துகொள்வா.

Page 53
88 பலாத்காரம்
திருவாட்டி தில்லைக்கூத்தனைப் Lirriġ g5rrgii) வயதை மதிப்பிட முடியாது. இன்னும் ஒரு குமரியைப் போலத் தான். ஒருநாளைக்கு "முன்னுரறுதரம் கண்ணுடியின் முன்னுல் நின்றுகொண்டு அலங்கரிப்பு நடக்கும். எல்லாம் அவருக் காகத்தான். மாலையில் அவர் வருகின்ற நோமாக பின்னி விடப்பட்ட கூந்தலை முன்னே கொஞ்ச விட்டு வழிமேல்
விழிவைத்துப் பார்த்திருப்பா, அவவைக் கண்டதும் தில்லைக்கூத்தனுக்கு வேலை செய்த க%ளப்பு எல்லாமே
பறந்துவிடும். கடவுள் பெண்களைப் படைத்ததன் இரகசியம் இது
தான் என நினைத்துக்கொள்வார். 'பலவிதமான வேலைகளினலும் தொல்லைகளினலும் களைப்படைகின்ற ஆணினுடைய உ. 'க்கும் உள்ளத்திற்கும் மருந்தாக அமைபவள் பெண்-அன்பான 11 வி.
- "என்ரை மணிசியைப் பார்த்தால். மஹாலட்ஷிமி மாதிரி' என்று அப்படியே அவளை அணைத்துக்கொண்டு உள்ளே போவார். இப்படி ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பதால் பிள்ளையில்லாத கவலை தோன்றுவதில்லைக் ன்.
ஆனல் அவர் வேலைக்குப் போய்விட்டால். . . திரு. ட்டி தனிமையாயிருக்கும் பொழுது போரடிப்பது என்னவோ ம | மை தான். அவர் எட்டுமணிக்கு வேலைக்குப் போனபின்னர் அந்தக் கையுடனே அமர்ந்து மத்தியானச் சமையலையும் ஆரம்பி நால் பத்துமணிக்கு முதலே முடிந்துவிடும். அதன் பின்னர் புத்தகங் களும் பத்திரிகைகளும்தான் துணை.
வெளியே சைக்கிள் மணி ஒலித்தது.
பத்திரிகைக்காரச் சிறுவன் வந்திருந்தான். பத்திரிகையை வேண்டி, தலையங்கச் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்த வாறே ஈஸிச்செயரில்' சாய்ந்தா.
'அரசினர் பாடசாலைகளில் மாவட்ட சேவைத் திட்டத் தின் கீழ் தராதரப்பத்திரமற்ற உதவி ஆசிரியர் பதவிகள்' என்ற தலையங்கத்தில் கூடிய சீக்கிரம் ஐயாயிரம் ஆசிரியர்கள் சேவைக் கமர்த்தப்பட இருக்கிருர்கள் என்ற் செய்தி வெளியிடப்பட்டிருந்

சுதாராஜ் 89
கது. செய்தியை இரண்டுமூன்று முறை ஆனந்தமாக வாசித்துப் ார்த்தா, அதே பத்திரிகையிலேயே இன்னுெரு பக்கத்தில் மாதிரி விண்ணப்பப்பத்திரமும் வெளியாகியிருந்தது. தேவையான தகமைகளுடன் தனது கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண) சிரேட்ட பாடசாலைப் பெறுபேறுகளை ஒப்பிட்டுப் பார்த்தா. நூல் பிடித்ததுபோலச் சரியாகப் பொருந்தியது.
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. இந்தச் சந்தோஷமான செய்தியை யாரிடமாவது சொல்லவேண் டும் போலிருந்தது. எழுந்து குசினிப்பக்கமாக ஓடின. பின்பக்க வேலியால் பக்கத்து வீட்டு பரமேஸ்வரி அக்காவைக் கூப்பிட்டுக் கதைக்கலாம். குசினிவரை ஓடிவிட்டுப் பின்னர் அதையும் விரும் பாமல் திரும்பி முன்னுக்கு வந்தா, பரமேஸ்வரி அக்காவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் படிப்பை முடித்துவிட்டு உத்தி யோகத்தை எதிர்பார்த்து இருக்கிருர்கள். வாய்கிடவாமல் *மடைச்சி மாதிரி அதுகளுக்கும் சொல்லிவிட்டால் பின்னர் அது களும் "அப்பிளிக்கேசன்’ போட்டுவிடுங்கள். திருவாட்டி தில்லைக் கூத்தனின் மனது இதை ஏற்கவில்லை. ‘எப்படியாவது இந்தப் பதவியை தான் எடுத் தவிட வேண்டும் என நினைத்துக்கொண்டா, பலநாட்கனவு நனவாகிக் கொண்டிருப்பதைப் போல் மகிழ்ச்சி மனதெல்லாம் பாவியது. "இத்தாளையும் காணயில்லை. . . "நேர காலத்துக்கு வந்தாலாவது சொல்லலாம்' என அங்கலாய்த்தா.
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்கு "எப்படியாவது தான் இந்த ஆசிரியர் பதவியை எடுத்து விடவேண்டுமென்ற 'நியாய பூர்வமான ஆசை தோன்றியதற்குப் பல காரணங்கள்;
அந்த வீதியிலே இருக்கின்ற, மிஸஸ் சதாசிவம், அன்ன பூரணி ரீச்சர், அற்புதம் ரீச்சர் ஆகியோர் நினைவில் வந்தார் கள். இனி, அவர்களைப்போலவே தானும் புதிய புதிய சேலைக ளேக் கட்டிக் கொண்டு அலங்காரமாக; குடையும் ஆட்டிக் கொண்டு போய் வரலாம் என்ற எண்ணம் பொங்கியது, பள் ளிக்கூடத்துக்குப் போகும்பொழுதும் வரும்பொழுதும் ‘பஸ் சிற்காகக் காத்து நிற்பதிலுள்ள கஷ்டங்களையும், அதனல் சில
வேளைகளில் வேறு லொறிகளிலோ. கார்களிலோ தொத்திக்

Page 54
90 பலாத்காரம்
கொண்டு வரவேண்டி ஏற்படுகின்ற அசெளகரியங்களையும் அவர் கள் சொல்லும்பொழுது, இவ ஆற்ருமையுடன் கேட்பது வழக் கம். சில வேளைகளில் பிறின்சிப்பல் தனது காரிலேயே தன் னைக் கொண்டுவந்து விடுவார் என அன்னபூாணி பெருமையடித் துக்கொள்வாள். சக ஆசிரியர்களின் விளையாட்டான குறும்பு களைப் பற்றியும் அவள் கதைகதையாகச் சொல்வாள். விடியற் கிாலே நேரத்தோடு எழுந்து, சமைத்துச் சாப்பாடு கட்டிக் கொண்டுபோக வேண்டிய அலுப்பைப் பற்றி சதாசிவம் மிஸஸ்சும் அற்புதம் ரீச்சரும் வாயடித்துக் கொள்வார்கள்.
இப்பொழுது அந்த விஷயங்களிலுள்ள " கிறில் "களை எண்ண மகிழ்ச்சியேற்பட்டது. இனி, அவர் வேஃக்குப் போன பின்னர் தனிமையிலிருந்து போரடிக்கத் தேவையில்லை - எல்லா வற்றிற்கும் மேலாக, ஒரு பிள்ளையாவது இல்லாத குறைதான் தனக்கு இப்படி உத்தியோக மோகம் ஏற்படக் காரணம் என்ற உண்மையும் மனதிற் கவலையைக் கொடுத்து மறைந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்காக, தில்லைக்கூத்தன் வந்த தும் வராததுமாகவே, அவருடைய காதில் விஷயத்தை போட் டாள் திருவாட்டி.
* உனக்கென்ன சொர்ணம் விசரே ?. வீட்டிலே நிம்மதி யாய் இராமல். உந்த வெய்யிலுக்குள்ளாலை அலைஞ்சு திரியப் போறியே ? ? ?
- வெயிலினுாடாக வந்த எரிச்சல் அவரை இப்படிச் சினக்க் வைத்தது. உண்மையிலேயே மனைவியை உத்தியாகம் அது இதென அலையவைக்கவும் அவருக்கு விருப்பமில்லைத் தான். எத்தனையோ ரீச்சர்மார் உத்தியோகத்திற்காக வெயிலி னுாடு ** வேர்க்க விறுவிறுக்க " " போய்வருவதைப் பார்த்து இவர் இரக்கப்பட்டிருக்கிருர் . தன் மனைவியும் அந்த நிலைமைக் குள்ளாவதை விரும்பாமற்தான் அப்படிச் சொன்னர்.
சாப்பிடும்பொழுது சொர்ணத்தின் முகம் ' இரண்டு முழத்துக்கு நீண்டிருப்பதைக் கவனித்தார். 'அவளும்

சுதாராஜ் 91
பாவம் . எத்தனை நாளைக்கெண்டுதான். இஞ்சை தனிய இருந்து கவலைப் படுவாள். இப்படி ஏதாவது கிடைச்சாலா வது பொழுது போகும் ' என நினைத்துக் கொண்டார்.
வேலைக்குப் போகும்பொழுது, 'சொர்ணம். உனக்கு விருப்பமெண்டால் அப்ளிக்கேசனைப் போட்டுப் பாரன். அது
வும் போட்டவுடன. இப்ப தூக்கித் தரப்போருங்களே ??? என ஆதரவாகச் சொல்லி விட்டுப் போனர்.
இந்த அளவிலாவது கணவன் ஒப்புக்கொண்டது பெரிய ஆனந்தமாகப் போய்விட்டது, திருவாட்டிக்கு.
மதியச் சாப்பாடு முடித்துக் கொண்டு கச்சேரிக்குச் சென்ற தில்லைக்கூத்தன் இதைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தார். எவ்விதத்திற் பார்த்தாலும் இது புத்தியான யோசனையாகவே பட்டது. மனைவி ஒர் ஆசிரியையானல் அது தனது கெளர வத்தை இன்னும் உயர்த்தும் என நம்பினர். வெளியே சென்று நாலு பேருடன் அடிபட்டு வந்தால், பிள்ளையில்லாத குறையும் அவளுக்குத் தோன்றது.
அவவும் உழைக்கப்போல்ை அந்தச் சம்பளத்தில் சீவியத்தை ஒட்டிக்கொண்டு தனது சம்பளத்தை அப்படியே
பாங்க் பண்ணலாம் என்ற ஆசையும் மேலோங்கியது.
தில்லைக்கூத்தன் கச்சேரியில் இன்ஃபுளுவன்ஸ் உள்ள மனுசன் என்பது சக ஊழியரின் கருத்து. பெரிய மனுசரைக் கைக்குள் போடுகின்ற மந்திரம் தில்லைக்கூத்தனுக்குக் கைவந்த கலை. இந்த நேரத்தில் அது கை கொடுக்கும் என நம்பினர்; ** அவையளைப் பிடிச்செண்டாலும் அலுவல் பார்க்கவேணும் " என நினைத்துக் கொண்டார்.
மாலையில் ஐந்து மணிபோல அவர் வேலை முடிந்து வந்தபொழுது, தான் அன்னபூரணி ரீச்சருடன் கதைத்த விஷ யத்தைச் சொன்ன திருவாட்டி.

Page 55
92 u virgj5 fruti)
அன்னபூரணி ரீச்சர் மாலை மூன்று மணிக்கே பாடசாலை முடிந்து வந்து விடுவா. அன்னபூரணிதான் திருவாட்டி தில்லைக் கூத்தனுடைய உற்ற சிநேகிதி - அவளிடம் மனம்விட்டு எதை யும் கதைக்கலாம் நல்லவள், வஞ்சகமில்லாமல் கதைப்பாள். * ** அன்னம் !... ரீச்சிங் போஸ்ற்றுக்கெல்லே கோல் பண்ணியிருக்கிருங்கள்: '
* ஒமப்பா! நானும் பேப்பரிலை பாத்தனன்" நீர் அப்ளை பண்ணையில்லையே ? ?
* அப்ளே பண்ணச்சொல்லித்தான் இவரும் சொன்ன வர் . . . ஆனல் உதெங்கை எங்களுக்குக் கிடைக்கப் போகுது ???
*" ஏன் அப்பிடிச் சொல்லுறீர். உம்மடை அவரும் கச்சேரியிலை இன்ஃபுளுவன்ஸ் ஆன ஆள்தானே ?. . . அவையள் மூலம் அலுவல் பார்க்கலாம். . . அல்லது ஜொப் கிடைக்கு மெண்டால் ஐஞ்சைப் பத்தைப் பாராமல் சிலவழிச்சாலும் பறவாயில்லை ! ?
கதை வளர்ந்தது.
அன்ன பூரணி, தனக்கு ஒருவரைத் தெரியு டென்றும் அவரைப் பிடிச்சால் நிச்சயம் வேலை எடுக்கலாம் என்று சொன் ள்ை. கஷ்டப்பிரதேசத்துக்குக் கிடைத்த தனது நியமனத்தை ரெளனுக்குள் மாற்றி எடுப்பதற்கும் அவர்தான் உதவி "ாம். * நல்ல மனுசனப்பா . . . கட்டாயம் அந்தாள் செய்யும். . . வேணுமெண்டால் ஒரு நாளைக்குப் போய்ப் பாப்பம். '
என்று அபிப்பிராயம் தெரிவித்தாள்.
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்கும் அது நல்ல யோசனை யாகவே பட்டது.
கணவனிடம் இதைத் தெரிவித்த பொழுது, * * grif7. சரி. . . முதல்லை அப்ளிகேசனைப் போடுமென். அதுகஃாப் பிறகு பார்க்கலாம். ' எனச் சம்மதம் தெரிவித்தார்.
米 来 米

சுதாரர்ஜ் 93
விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
தில்லைக்கூத்தனும் தனது செல்வாக்கை இயன்றளவு பிரயோகித்தார்.
அன்னபூரணி இந்த விஷயத்தில் அனுபவம் உள்ளவள். மாவட்டக் கல்விக் கந்தோருக்கும், சில அரசியல் புள்ளிகளைச் சந்திப்பதற்கும், திருவாட்டி தில்லைக்கூத்தனை அழைத்துக் கொண்டு போனள். ஆர் குத்தியும் அரிசியா கட்டும் " என்ற எண்ணத்தில் தில்லைக்கூத்தனும் விட்டுவிட்டார்.
வழக்கமான பத்திரிகைச் செய்திகளைப் போலல்லாது மூன்று மாதங்களுக்குள்ளேயே நியமனங்கள் வழங்கப்பட்டன.
திருவாட்டி. தில்லைக்கூத்தன் இப்பொழுது சொர்ணம் ரீச்சர் " ஆக மாறிவிட்டா.
நியமனம் கிடைத்து மூன்ருவது கிழமையாக பாடசாலை சென்று வந்து கொண்டிருந்தா, சொர்ணம் டீச்சர். இப்பொழுது இலேசான அசதியும் சோர்வும் தோன்றத் தொடங்கி விட்டது. அதிகாலையில் எழும்புவகே பெரிய பாடாக இருந்தது. ஆரம் பத்தில் கோழி கூவமுன்னரே உற்சாகத்துடன் எழுந்து அவதி
அவதியாகச் சபை , , அவருக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பாடு கட்டிக் .ெ பண்டு போன சங்கதி புளித்துப் போய் விட்டதோ
இரண்டு நாளாக தில்லைக்கூத்தன் கவனித்தார் - சொர்ணம் எழும்புகின்ற பாடாகக் காணவில்லை. அடுத்த நாள் தானே முதலில் எழுத்து, சொர்ணத்தை எழுப்பிப் பார்த்தார். சொர்ணம் 6 பும் தெற்கு பெரிய பஞ்சிப்படுவது தெரிந்தது. அப்பொழுது ' கம்தான் மேலிட்டது. அதன் பின்னர் எழுத்த தும் முதல் அவலாக, முதல் நாள் இரவு * ஃப்ளாஸ்"க்கி. விட்டுவைத்த சுடுதண்ணீரில் தேநீர் கலந்து கட்டிலுக்குக் கொண்டு போவார். இன்னும் இரண்டு நாள் கழிய, சொர் ணம் விழிக்கும் முன்னரே தேங்காய் துருவுதல், காய்கறி மிள காய் வெண்காயம் நறுக்குதல் போன்ற சமையலுக்குத் தேவை

Page 56
94 பலாத்காரம்
யான தொட்டாட்டு வேலைகளைச் செய்து வைத்துவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பொழுது பலபலத்து விடியத்தான் சொர்னம் fjgf எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வருவா. கணவனைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கும். ஆனலும் என்ன செய்ய ? முடியாமலிருக்கிறது. காலையில் "பஸ் " சிற்காக நெடுநேரம் காத்து நிற்பதிலேயே சினம் பிடித்துவிடும் - எங் காவது இருக்கமுடியாதா என சுற்றிவரப் பார்த்துக் கொள்வா.
அசதியும் சோர்வும் குறைந்த பாடாகத் தெரியவில்லை. ஏதாவது ரொனிக் வேண்டிக் கொடுக்க வேண்டுமென இல்லைக்
கூத்தன் நினைத்துக் கொண்டார்- ' பாவம். பழக்கமில்லாத வள் வெயிலுக்குள்ளாலை திரியிறது. ஒத்துக்கொள்ளுதில்லைப் போலை ? ? சொர்ணத்தின் முகம் முன்பிருந்த அழகும் செந்
தளிப்பும் மாறி வாட்டமடைந்திருந்தது.
மூன்ரும் நாள் பாடசாலையிலிருந்து இடைநடுவிலேயே திரும்பிவர வேண்டியேற்பட்டுவிட்டது. Lurrt... 1 h 45 t. j Sji கொண்டிருந்க பொழுது மயக்கமடைந்ததால் ஒய்வெடுத்து வரு மாறு அதிபர் அனுப்பிவிட்டார்.
- சில நாட்களாக மனதினுள் குமைந்து கொண்டிருந்த சந்தேகம் தீர்ந்து விட்டது.
கணவன் வரும்வரை பயம் கலந்த மகிழ்ச்/ புடன்
காத்திருந்தாள். அவருக்கு இன்று வழக்கத்தைவிட விசேஷ மான வரவேற்பு நடந்தது. மென்மையான நடுக்கத்துடன் அவர் காதில் சங்கதியை உடைத்த பொழுது,
* எந்த மடைச்சாத்திரி எனக்குப் பிள்ஃப் பலன் இல்லையெண்டவன்?" என ஆனந்த நடனம் புரியத் தொடங்கி ஞர் தில்லைக்கூத்தன்.
- கடவுள் கண் திறந்து சிரித்தார்.
★ ★ ★

தொழிற் தி"க்களக் கமிழ்க்கழகத்தினுல் அகில இலங்கை ரீது 'ஸ் நடத்தப்பட்ட 1976-ம் ஆண்டிற் கான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை,
பயணம்
SMSMST SSCSLGGSCSS
கொ பும்பு கோட்டையிலிருந்து, காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் புகையிரதம்; தபால்வண்டி, இன்னும் சில நிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும் என சிங்களத்திற் சொல்லப்பட்டது. -
- அநுராதபுர புகையிரத நிலையம்.
வடபகுதிக்குச் செல்ல இருந்த பிரயாணிகளிற் சிலர் ஓரளவாவது சிங்களம் தெரிந்தவர்களாயிருந்தபடியால் (அர சாங்க அலுவலர் ) இந்த அறிவிப்பில் ஆயத்தமடைகின்றனர்.

Page 57
96 பலாத்காரம்
* தமிழ் தெரிஞ்சவங்கள் ஆரேன் இல்லையோ.. என்னவோ சிங்களத்திலை மாத்திரம்தான் சொல்லுருங்கள். '
-இதை இன்னெருவர் எரிச்சலுடன் ஆமோதிக்கிருர்.
" ஒமெண்டுறன் ! ?
புகையிரதம் அட்டகாசத்துடன் வந்து நிற்கிறது.
** என்ன சனமப்பா!... ஒரு நாளும் இந்த றெயினுக்கு லீவே கிடையாது ?"
** அறுவாங்கள். அங்கைபார்! இந்த ராவிருட்டியி லையும். வாசல்லை குந்திக்கொண்டிருக்கிற மாதிரியை... இக் க்ணம் விழுந்து துலையப் போருங்கள். '
*அண்ணை ! கொஞ்சம் விலத்துங்கோ... ஏறுவம் !"
- ஏறுபடியிற் குசாலாக கைகளைக் கோர்த்துக்கொண்டு
இருந்த இரு தடியன்களும், உள்ளே ஏறுவதற்கு அவசரப் பட்டுக்கொண்டு நின்ற இளைஞனை எரிச்சலுடன் நோக்குகின் றனர்;
** இதுக்குள்ளாலை . எங்கை போகப்போரீர்? . உங்கை வழியிலே சனங்கள் படுத்துக்கிடக்கு. மற்றப்பெட்டிக் குள்ளை ஏறும் و و و w
- அதைக் கேட்டு இது, அமைதியாகத் திரும்புவி ) து - இது போலவே, இரண்டு மூன்று வாசல்களில் ஏறும் முயற்சியில் தோற்றுப் போய்விட்ட சோர்வு. எதையோ திறமையாகச் சாதித்துவிட்ட பெருமிதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர். அச் சந்தோஷத்தில் இடி விழுவது போல;
** மே 1. பொட்டக் அயிங் வெனவா ஐசே !' (ஒய்! கொஞ்சம் அரக்கும் காணும் !) - பலமாகப் பட்ட அடியைப்போல இக்குரல் நெஞ்சில் இறங்குகின்றது.

சுதாராஜ் 97
- - வாட்டசாட்டமான தோற்றம்தான், “ஆளும். சிங்களவனுய்க் கிடக்கு...' - மகுடிக்குக் கட்டுப்படுகின்ற.. , நாகத்தைப் போல, அந்தக் குரலில் இருவரும் ஒதுங்கிக்கொள்ள அவன் நெஞ்சை நிமிர்த்திக்க்ொண்டு ஏறுகிருன். இச் சந்தர்ப் பத்தை நழுவவிடாமல் முதலில் வந்தவனும் தந்திரமாக ஏறி விடுகிருன்.
அந்தத் தடியன்களின்மேல் எரிச்சலாக வருகிறது இவனுக்கு. ‘நாய் மூதேசியள் சிங்களவனென்டவுடன. பயந்து சாகுதுகள்!' என ள்ண்ணியவாறே நுழைகிருன்.
** மனுசார நல்ல சனம்தான்!??
** இதேனப்பா, மாடுமாதிரி விளக்கிக்கொண்டு போறியள்?. இஞ்சை மனுசர் படுத்திருக்கிறது தெரிய யில்லையே? ??
** நீங்கள் ஏன் பாருங்கோ, கால் கையுக்குள்ளை கிடக் கிறியள் ?. ஆக்கள் போய்வாறயில்லையே???
- இந்த ஓர் இரவுக்குள்ளேயே, ஏதோ பறிபோய் விடுவதுபோல, நி , , ) யைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப் பவர்களைக் காண இவனுக்கு வேடிக்கையாயிருக்கிறது.
உள்ளே இருப்பவர்கள் புதிதாக ஏறியவர்களை விசித் திரமாகப் பார்க்கி) றனர்; ' இவையள் இப்ப எங்கை இருக்கப் போகினமெண்டு பாப்பம் !"
முதலில் ஏறியவன், மேலே இருந்த பெட்டிகள் சில தை ஒதுக்கிவிட்டு, தனது " பாக் 'கை அந்த இடைவெளியில் வைக்கிருன், ஒ1 க்கப்பட்ட பெட்டிகளின் சொந்தக்காரர்கள் அதை சற்று ஆத்திரத்துடன் சகித்துக் கொள்கின்றனர்.
தனது பையை வைப்பதற்காக, இவன் ' கொஞ்சம் சங்கடப் படுவதைக் கண்டு, அவன் சிநேக மனப்பான்மையுடன் உதவுகிறன்.

Page 58
98 பலாத்காரம்
பெட்டிகள் வைக்கப்பட்ட பின்னர், இருவரும் ஒரு பக்கமாக நிலை பெறுகின்றனர் - வசதியாக கால்களை நீட்டிக் கொண்டு ( சயனத்தில்) இருந்த ஒருவர், இவர்கள் நின்றதனல் கிால்களை மடக்கவேண்டி ஏற்பட்ட அசெளகரியத்தில் எரிந்து, பார்வையில் நெருப்பைக் கக்குகிருர்; ' ஒரு மனேஸ் தெரியாத சனியன்கள் , * ,
- இவன், அதைத் தாங்கமுடியாமல், மற்றவனைப் பரிதாபத்துடன் நோக்குகிறன். அவன் அந்தச் சூட்டை அலட் சியம் செய்துகொண்டே இவனுடன் கதைக்கிருன்;
* நீங்களும் யாழ்ப்பாணத்துக்கே போறியள் ?" - இவனுக்கு ஒரே ஆச்சரியம் !
** எட இவனும் தமிழன்தான்... கொஞ்சத்துக்கு முந்தி அவனேடை சிங்களத்திலை விளாசினன்!...”*
- இந்த நினைவு, அவன்மேற் சரியான எரிச்சலைக் கொண்டு வருகிறது. அந்த ஆத்திரத்தில் கதைக்கவும் மனதின்றி மறுபக்கமாகத் திரும்ப, அவன் இவனுடைய பதிலுக்காக வற் புறுத்துகிருன்.
* உங்களைத்தான் !. நீங்க்ளும் யாழ்ப்பாணமே ???
* ஓம் !" என ஒரே வார்த்தையில் சம்பாஷணையை வளர விடாமற் துண்டித்துவிட்டு இவன் திரும்புகிருன்.
புகையிரதம் ஒரு குலுக்கலுடன் கிளம்புகிறது.
இந்தக் குலுக்கலோடு குலுக்கலாக பக்கத்திலிருக்கும் பெட்டையுடன் சாதுவாகத் தட்டுப்படுகிருர் ஒருவர்! அதை
அவள்; தெரியாதவள் போல அனுமதிக்கும் நளினம் இவனைக் கவருகிறது.
s "பிரம்மதேவ, பிரம்மதேவ. . சகிக்க முடியல்லே, , , பாரிலுள்ள தமிழ்ப் பெண்களைப் பார்க்க முடியல்லே..."

சுதாராஜ் 99
- இன்னெரு பக்கத்திலிருந்த மாணவக் கும்பலொன் றின் இசைப்புயல் !
* ஏதோ இன்ரவியூவுக்குப் போட்டுப் போருங்கள் போலை கிடக்குது' w
பாடல்களிலுள்ள நெளிவு சுளிவுகளுக்கேற்ப, சத்தத் தைக் கூட்டிக் குறைத்து, தந்திரமாக அந்தக் கலையைக் கையாளு கின்ற பக்குவம் சிரிப்பைத் தருகிறது. அந்தக் கும்ப வில், கதா நாயகனைப் போல நிற்கும் ஒருவன், விதவிதமாகப் பறவைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் சப்தம் செய்கிருன். (நல்ல 'ஏத்தம் !) இடைக்கொருதரம் தனது சடைமுடியை ஆசையோடு கோதிவிட்டுத் திருப்தியடைகிருன், இது; அண்மையிற் தொடை தெரிகின்ற சட்டையோடு இருக்கின்ற இரு குமரிகளையும் கவரு கின்ற முயற்சிபோலும் ! பாடல்களில் வருகின்ற குறும்புகளைக் கேட்டு அதுகள் சிரிக்க இவர்களுக்கு இன்னும் உற்சாகம் ஏற். படுகிறது.
- இவற்றிலெல்லாம் மனம் இலயித்து ** அலுப்புத் தெரியாமல். பைம்பலாய்ப் போயிடலாம் ?? என இவன் நினைக் கிருன்.
எனினும், இன்னுமொரு நினைவு மனதினுள்ளே கிடந்து குமைகிறது:
"அங்கை பார்த்தால். தனிச் சிங்களத்திலை அறி வித்தல் கொடுக்கிருன்... இங்கை ஒருத்தன் கிங்களவனுக்கு வெருண்.டிச்சுக் கொண்டு இடம் குடுக்கிருன்... இன்னுெரு தமிழன் கமியூனுேடையே சிங்களம் கதைச்சுப் பெருமைப் படுகிருன்! " ܕ -
- அவனிடமே இதைக் கேட்டுவிடவேண்டும்போல், இவனுள் ஓர் ஆ வசம் எழுகிறது.
'நீங்கள் சிங்கள ஆளாக்குமெண்டு நினைச்சன் ' என, கொஞ்சம் சுடக்கூடிய விதமாகவே கேட்டுவிடுகிருன்.

Page 59
100 பலாத்காரம்
- இவனுடைய நியாயமான ஆத்திரத்தைப் புரிந்து கொண்டு, அவனுக்கு சிரிப்பு வருகிறது;
** உங்கடை கோபம் எனக்கு விளங்குது. என்னிலை மாத்திரம் ஆத்திரப்பட்டுப் பிரயோசனமில்லை. ". வாசல்லை இருந்த ரெண்டு தடியங்களையும் பாத்தனிங்கள்தானே ?... சிங்களவ னெண்டு தெரிஞ்சவுடனை மறுபேச்சில்லாமல் இடம் குடுக்கிருங் கள். அவங்களுக்கு இடம் குடுக்கவேண்டாமெண்டு நான் சொல்லயில்லை. எட தமிழ். தமிழின ஒற்றுமை எண் டெல்லாம் கத்துறணிங்கள். இந்தச் சின்ன விஷயங்களிலை. . . நீங்களே. தமிழனையும். தமிழையும் புறக்கணிச்சுக் கொண்டு. பிறகேன் மற்றவனுேடை கதைக்கப் போறியள் ?,
- அவன் சொல்வதை இவன் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கிருன்...
* முதல்லை. எங்களைத் திருத்திக்கொண்டுதான், மற்றவனைத் திருத்தப் போகவேணும். எல்லாரும் சந்தர்ப்ப வாதிகள். யாழ்ப்பர்ணத்திலை கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு வாய் கிழியக் கத்துவாங்கள். இங்காலை வந்தால்... பேச்சு மூச்சில்லை. சும்மா கத்தி என்ன பிரயோசனம் ? செயல்லையும் காட்டவேணும்;. அங்கை பாருங்கோவன். அதிலை இருக்கிற ரெண்டு பேருமே தமிழர். பிறகு ஏன் இங்கிலீசிலை கதைக் கினம் ?... காச்சட்டையைப் போட்டுக்கொண்டு தமிழிலை கதைக்க வெக்கம் !"
to .
" ஆனல். நீங்கள் எல்லாரையும் அப்பிடிச் சொல்லக் கூடாது ' என்கிருன் இவன். V−
* சத்தியமாய்ச் சொல்லயில்லை, ஆனல் எங்கடை ஆக் கள் கனபேருக்கு இந்தப் பிறமொழி மோகம் இருக்குகெண் டதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேணும். அதுக்கும் மேலாலே எங்கடை தமிழ் மொழியிலை பற்று வரவேணும். எட தமிழராய்ப் பிறந்துபோட்டு தமிழ் கதைக்க என்ன வெக்கம் ???

சுகாராஜ் 10
- அவனுடைய வாதங்கள் நியாயமாகப்பட, அதில் இவன் திருப்தியடைகிருன். நெஞ்சு நிரம்பிவிட்டதுதான்; உண்மையிலேயே எல்லோருமே வெறும் போலிகளல்ல. கோழை களுமல்ல. தன்னைப்போல, அவனைப்போல, ஒரு தனித்துவ மான கூட்டம் சேர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து பெருமை யடைகிமுன்.
* உண்மைதான் ! நானும் கன இடங்கள்ளை கண்டிருக் இறன். யாழ்ப்பாணத்துக்காறர் கனபேர், உத்தியோகங்களுக் காக வெளியிடங்களுக்குப் போறவையள், இப்ப; பிள்ளையளை சிங்களப் பள்(விக்கூடங்களுக்கெல்லே விடுகினம் 1 வீட்டிலை. இங்கிலீசிலை கதைச்சுப் பழக்குறது. வேலைக்காறப் பெடியனை பிள்ளையோடை விங்களத்திலை கதைக்க வேணுமெண்டு கட்டளை. பிறகு. பிள்ஃ1 க்குக் கமிழ் தெரியாது. இங்கிலீசும் சிங்கள மும் தான் தெரியும். நாங்கள் ஏதேன் தமிழிலை கதைச்சாலும் அவனுக்கு விளங்காது. எனத் தம்பட்டமடிக்கிறதிலை அவை யளுக்கு ஒரு கண்டறியாத பெருமை !'
இருவரும் பாஸ்பரம் பல பிரச்சனைகளை ப்பற்றியும் கருத்துப் பரிமாற்றம் செய்தவாறே செல்கின்றனர்.
யாம் . பயணம். . . எத்தனைநாளாய் எங் கெங்கேயோ பயணம் 1... எவரை எவர் வெல்லுவாரோ !”*
- இசைப்புயல் உச்சஸ்தாயியையடைந்து;
Sybr இளந்தாரிக்கும்பல் நோக்கில்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. புகையிரதம் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்ல, அகமுறல் ஏற்படுகின்ற ஒசை, இவர்கள் பாட்டுக்கு பின்னணி இசைப்பதைப் போலிருக்கிறது.
- மகவாச்சி நிலையத்தில் புகையிரதம் நின்று, மீண்டும் கிளம்பியபொழுது
** கள்ளான் ! கள்ளன். ! ?

Page 60
102 பலாத்காரம்
- சடுதியாக மேலெழுந்த இக் குரலில் சனம் அமளிப்
படுகிறது.
** டேய் ! கள்ளன் ! கள்ளன் ??
* பிடி, பிடி. "
** ஆளை விட்டுடாதையுங்கோ. பிடிச்சுப்போடுங்கோ..??
** கள்ள நாயன்."
எல்லோரும், அவரவர் பெட்டிகளை அவசரமாகப் பார்த்துக்கொள்கின்றனர். பின்னர் இருக்கைகளின் மேல்
எழுந்து நின்று பிடிபட்ட கள்ளனை வேடிக்கை பார்க்கத் தொடங்குகின்றனர். சனக் கும்பலின் மத்தியில், ஒரு சிறுவன் - பதின்மூன்று வயதுக்கு மேல் மதிக்கமுடியாது, மிரள மிரள விழித்துக்கொண்டு நிற்கிருன்.
** எட ! உந்தச் சின்னப் பெடியனே களவெடுத்தவன்???
** என்னத்தையாம் எடுத்தவன் ???
** ஆருக்குத் தெரியும்...? பொறுங்கோவன் விாாரிச்சுப் பாப்பம். **
** மெய்ய? என்ன தம்பி களவெடுத்தவன் ?"
** அடியுங்கோ, அடியுங்கோ. மூதேசியளைச் சும்மாய் விடக்கூடாது. *
**பொறுங்கோ. இப்ப அடியாதையுங்கோ. ஆர் களவு குடுத்தாள்...? அவரை இஞ்சாலை கூப்பிடுங்கோ! "
'உந்தப் பேய்க் கதையளை விட்டிட்டு. . புகல்லை உவன்ரை மூஞ்சையைப் பொத்தி ஒண்டு குடுங்கோ. கள்ானைப் பிடிச்சு வைச்சுக் கொஞ்சிக்கொண்டிருக்கினம். ? ?
** இவர்தான். களவு குடுத்தவர் !??
G 'அண்ணை இஞ்சாலை வாங்கோ. என்ன எடுத்கவன். frCFP

சுதாராஜ் 103
* ஒம்!. பேசோடை. காசும். றெயின் ரிக்கட்டும் இருந்தது. *
** எவ்வளவு ???
** இருபத்தெட்டு ரூபா காசும். ரிக்கட்டும். ??
** நீங்கள் என்ன பிடரிக்கையே கண்ணை வைச்சுக் கொண்டு நிண்ட நீங்கள். அவன் எடுக்கும் வரையும் ???
un ** இல்லைப் பாருங்கோ, ... சாதுவாய் அயர்ந்து போனன். றெயின் வெளிக்கிடயிக்குள்ளை. பொக்கெட்டிலை ஏதோ தட்டுப்பட்ட மாதிரி இருந்தது. . . பார்த்தா... இவன் பூந்துகொண்டு ஒடுருன் !'
** டேய் ! வடுவா, எடுத்ததை மரியாதையாய்க் குடுத் திடு. இல்லாட்டிக் கொண்டுபோடுவம். *
** நே. நே. மம நொவே !' ('' இல்லை நான்
இல்லை ? ?)
* எட இவன் சிங்களவனடா! ??
" உவங்களுக்குத் தானே உந்தப் புத்தி வரும் !"
குடுங்கோ . . . ஆளின்ரை பல்லுப் பறக்கக் குடுங்கோ. . . உவங்களுக்கு ஈவிரக்கம் காட்டக்கூடாது. "
" பொறுங்கோ. . அடியாதையுங்கோ. நான் கேக் கிறன்... ' என்றவாறே ஒருவர் முன்வந்து;
"" அ.ே 1 உம்ப. கறிபள்ளா... ' என ஆரம்பித்து,
தனக்குத் தெரிந்த அரை குறைச் சிங்களத்திற் கலக்கத் தொடங்குகிருர்
பெடியனை விசாரிக்க வேண்டுமென்ற முக்கியத்துவத்தை விட, தனது சிங்களஞானத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்பதிற்தான் அவருக்குக் கரிசனை ! அடிக்கடி

Page 61
104 பலாத்காரம்
பெரும்ை பொங்க மற்றவர்களைப் பார்க்கின்ற பார்வை இதை உணர்த்துகிறது. -
- பெடிபன் மிகவும் பரிதாபமாக அழத்தொடங்கி விடுகிருன்.
**உவனேடை ஞாயம் பேசிறதை விட்டிட்டு . ரெண்டு செகிட்டாவடியிலை குடுங்கோ. தன்ரை பாட்டிலை வெளிவரும்."
* 'இல்லை. நல்லாய்ச் சோதிச்சுப் பாத்திட்டம் ! அவனிட்டை பேசைக் காணயில்லை .. ??
*அதை வைச்சிருக்கிருனே ? . அது இப்ப மாறிப் போயிருக்கும் ! "
"அடியுங்கோ மூதேசிக்கு !'
*சும்மா, பாத்துக் கொண்டிராமல் இழுத்துப்போட் டுக் குடுங்கோவன் - சிங்களப் பண்டி ! "
- அதிகப்படியான வேண்டுகோளின்படி அந்)ச் சிறு வனுக்கு அடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட பாட்டுக்காரக் கும்பலில் கதாநாயகன் போல நின்றவன், கையை உயர்த்திக் கொண்டு அதை நடைமுறைப்படுத்த முன்னே வருகிருபன் - தனது நாயகத்தனத்தை இதிலும் காட்ட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு.
இவ்வளவு நேரமும் பேசாமலே கவனித்துக்செண்டு நின்ற இவன், சிறுவனுக்கு சனம் அடிக்க முற்பட்ட பொழுது மற்றவனைக் கவலையுடன் பார்க்கிறன். அநியாயமாக அந்தப் பெடியன் அடிவேண்டிச் சாகப்போகிருன் என மனது கவிக் கிறது. அவன்தான் உண்மையாகக் களவெடுத் தானே, என் னவோ ?
அவன் கள்ளன் என்பதை விட, ஒரு சிங்களவன் என் பதற்காகவே . எல்லோரும் அடிக்கின்ற விஷயத்தில் சிரத்தை

சுதாராஜ் 105
யாக இருப்பது, சிறுவன் சிங்களவன் என்று தெரிந்த பினனர் தோன்றிய ஆவேசத்திலிருந்து புரிகிறது. இது என்ன கொடுமை ?
ஒரு சிங்களவன் எங்களுடைய எதிரியல்ல.
அவனும் மனிதன் என்பதுதான் உண்மை.
மனிதன் எனும் ரீதியில் எல்லோருமே உறவினர்தான். தமிழை அழித்து, சிங்களத்தைத் திணிக்கின்ற அக்கிரமத்தைத் தான் நாம் எதிர்க்க வேண்டும்.
..இந்த எண்ணங்களிற் தோன்றிய இவனுடைய கவ3ல பான பார்வையை மற்றவன் உணர்ந்துகொள் இருன்
கணப்பொழுதில் இது நடந்தது.
சிறுவனுக்கு அடிப்பதற்காகப் பாய்ந்து வந்தனை அவன் 1ாய்ந்து பிடித்துவிடுகிறன்.
“ “ Gani Gior t - trub. கொடக்கூடாது . விசாரிச்சுப்
பாருங்கோ. அல்லது பொலீசிலை குடுங்கோ ..??
அவனுடைய ஆணித்கரமான வார்த்தைகவல் சனங் களுக்கு ஒரே டிமாற்றமும் ஆத்திரமும்:
**உவருக்குக் குடுங்கோ . உவருக்கேன் தேள்வை யில்லாத வேஃ . ?"
சனங்களுடைய அறியாமையைக் கண்டு இவன் கலங்கு கிருன்...
அவன் எதற்கும் அஞ்சாமல் திடமாக நிற்கிருன்.
**அடிக்கிறவன் துணிவிருந்தால் . முன்னுக்கு வா ... !
பெடியனிலை ஒரு பிள்ஃா தொடக்கூடாது . பொலிசிலை குடுத்து விசாரியுங்கோ ..."

Page 62
O 6 பலாத்காரம்
முன்னர் "இங்கிலீசில்" கதைத்துக் கொண்டிருந்த இருவரில்; ஒருவர், வந்து அவனுடன் (இங்கிலீசிலேயே) நியாயம் பிளக்கத் தொடங்குகிருர். அவன் தமிழிலே நீதியைச் சொல் கிருன், இங்கிலீசில் " மடக்கியென்ருலும் அவனை அனுப்பிவிட முடியாதா, என அவர் படாதபாடு படுகிறர். அவன் தமிழிலே வெல்கிருன் - 3.
இறுதியாக, பெடியனை இங்குள்ள பொலீஸ் நிலையங் களில் ஒப்படைக்கக் கூடாதென்றும், (** இவங்களும் சிங்களவங் கள் தானே. விட்டிடுவாங்கள். *) யாழ்ப்பாண பொலீஸ் நிலை யத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும் முடிவெடுக்கப்படு கிறது.
* ஆளை . விட்டிடாதையுங்கோ. கவனமாய்ப் பிடிச் சிருங்கோ. பாய்ஞ்சு கீஞ்சு போயிடுவன்."
**நல்லாய் விட்டம்! ?
-பாட்டுப் பாடி வந்த இளந்தாரிக் கும்பல் இப்பொழுது சிறுவனைத் தங்களிடையே மிகக் கவனமாக சிறைப்படுத்திக் கொண்டு வருகிறது.
விடியப்புறமான நேரம்.
பளை அண்மிக்கிறது.
- சடுதியான ஓர் அவலக்குரல் எல்லோரையும் விழிப் படையச் செய்கிறது. ጳ. १
கள்ளனென்று பட்டம் சூட்டப்பட்ட சிறுவன்தான்அவனை இந்தச் சனங்களிடமிருந்து காப்பாற்றிவிட்ட, ସ୍ଥି ଓ இஃாஞர்களும்கூட, சற்று கண்ணயர்ந்து போயிருக்கவேண்டும். அதற்குள்ளே எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
- 'சப்பல் அடி!"
- ‘உவனுக்குக் காணுது!"

சுதாராஜ் 107
சிறுவனுடைய கோலத்தைக் கண்ட இவ் இளைஞர்கள் இருவருக்கும் வயிற்றைப் பற்றிக்கொண்டு வருகிறது; ‘என்ன ஒரு மிருகத்தனமான வேலை செய்திருக்கிருங்கள். காட்டு மிராண்டிகள்."
சிறுவனுடைய நெற்றிக்கு மேலாக, உடைந்திருந்த காயத்திலிருந்து இரத்தம் வழிந்து முகத்தைச் சிவப்பாக்கியிருக்கி றது. மூக்கும் சொண்டும் உடைந்து வீங்கியிருக்கிறது. ஒன்ருே, இரண்டு பற்கள் இல்லை. ('பல்லுப் பறக்கக் குடுங்கோ.") முகத்திலே பெருகிக்கொண்டிருந்த இரத்தத்துடன் கண்ணீரும் கலந்து வழிந்துகொண்டிருக்கிறது:
"அம்மே... அம்மே!...”*
- அவனுடைய அவலக்குரலுக்கு செவிசாய்க்க யாரு மில்லை. அழுவதன் மூலம், அவன் யாசிக்கின்ற நியாயத்துை வழங்கவும் யாருமில்ல. தங்களெல்லோருக்கும் பொதுவான ஓர் எதிரியை முன்னே நிறுத்தி, தண்டனையளிப்பதைப்போல மகிழ்ந்துகொண்டிருக்கின்றனர்!
சிங்க காக்கைத் திணிப்பதிலும், தமிழை அழிப்பதிலும் உள்ள கொ(, , ) மயை, ஓர் அப்டாவிச் சிங்களவனைத் தாக்குவதன் மூலம் பழிவாங்கவோ,தீர்க்கவோ முடியாது என்பதை இவர்கள் ஏன் உணfகிருர்களில்லை என இவன் வெதும்புகிருன்
ரன் தாங்கள், இருவரும் கூட, இவ்வளவு நியாயத்தைப் பேசியும் இப்பொழுது மெளனிகளாகிவிட்டோமே? தங்களு Gs) li வாய்கள் ஏன் அடைத்துப்போய்விட்டன, என எண்ணுகிருன்
"என்ன? நீங்களும் பாத்துக்கொண்டு சும்மா நிக்கிறி யள். அந்தப் பொடியன், பாவத்தை அடிச்சுக் கொல்லப்
போருங்கள்."என்கிருன் இவன் மற்றவனிடம். . .
"நாங்கள் ரெண்டு பேரும் இப்ப இதிலை கதைச்சு ஒண்டும்

Page 63
I 08 பலாத்காrம்
செய்யேலாது பாரும், இந்தக் கூட்டத்திலே இருக்கிற பெரும் பான்மை ஆக்களின் ரை எண்ணமும் நோக்க மும் வேறையாயிருக் கையிக்கை, எங்கடை வேண்டுகோள் நியாயங்களாயிருந்தாலும் 6ாடுபடாது. . .'
*அப்பிடியெண்டால் . . . எப்பவுமே பெரும்பான்மையின சின் மத்தியிலை. சிறுபான்மையரின் நியாயங்களுக்கு இடமில்லை யெண்டு சொல்லுறியளோ?. இதென்ன அக்கிரமமான நியதி? ? என்கிருன் இவன் அவனைப் பார்த்து
இருவருமே அந்த வாதத்திலிருக்கின்ற கசப்பை உணர்ந்து சற்று நேரம் மெளனமாயிருக்கின்றனர். பின்னர், இவனே ஏதோ தீவிரமான ஆவேசம் வந்துவிட்டவனைப்போலச் சொல்கிருன்;
* 'இல்லை. அப்படியொரு நியதியுமில்லை. மண்ணுங் கட்டியுமில்லை. நாங்கள் கொஞ்சமும் கண்ணயர்ந்து போகாமல் இருந்திருத்தால். எங்கடை எண்ணத்திலே வெண்டிருக்கலாம் பாத்தீங்களே, நாங்கள் முழிச்சுக்கொண்டிருக்கும் வாைக்கும் அவங்களும் ஒண்டும் செய்ய முடியாமல் பார்த் துக் கொண்டிருந் தாங்கள். கொஞ்சம் கண்ணயர்ந்தவுடனை தங்கடை காரியத் கைச் சாதிச்சுப் போட்டாங்கள்." •
உண்மைதான்!. அவங்கள் நேரம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிழுங்கள். கெ. நேசம் அசட்டையாயிருந்த வுடனை நடத்தி முடிச்சுப் போட்டாங்கள். சிறுபான்மையினரா யிருந்து கொண்டும் கண்ணயர்ந்து போனது பிழை.”*
* பாவம்,பொடியன்.""
யாழ்ப்பானம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
*அண்னை . நீங்கள்தானே களவு குடுத்தனீங்கள். யாழ்ப்பாணத்திலைதானே இறங்கிறியள்?. பெடியனைப் பொலீ சி% கடுத்து ஒரு முறைப்பாடு செய்யவேணும். நாங்களும் வாறம் 17

சுதாராஜ் 09
- சிறுவனத் தாக்குவதில் முன்னணியில் நின்றவர்கள் இப்பொழுது, அடுத்த நடவடிக்கையில் இறங்குகின்றனர்
களவு கொடுத்தவர் ஓர் அப்பாவியாக இருக்கவேண்
டும்;
" நான் இறங்கிறது. கொக்குவில் பாருங்கோ. நீங்
களங்கை பெடி பலுக்கு மூஞ்சை கீஞ்சையெல்லாம் உடைச்சுப்
போட்டியள், நான் வரமாட்டன்- பிறகு என்னையெல்லே
புடிச்சு அ.ைச்சுப் போடுவாங்கள். *
* உங்கற்ரு உதுதான் . . இந்தத் தமிழன்ரை புத்தி ! உவருக்காக நாங்கள் இப்ப அவனுக்கு அடிச்சுப்போட்டு நிக் கிறம் . அவர் இப்ப பின்னுக்கு நிக்கிருர். ? ?
' உவருக்கிப்ப, இதிலை இறங்கி வரேலாமல் என்ன அவசரமாம் ? மனுசியிட்டைப் போகப்போழுரர்மே ... ! ??
" நான் என்ன அவனுக்கு அடியுங்கோ எண்டு சொன் ரை,  ைே ? ??
" ஓமண்ணை ! தமிழனுக்கு உந்தப் புத்தி இருக்கும் வாைக்கும் கடசி வரையும் உருப்படமாட்டான். '
'ஓம் ! அந்தாள் அப்போதைகூடிச் சொன்னதுதானே. அடியாதையுங்கோ அடியாதையுங்கோ எண்டு."
1" நீர் . பேய்க்கதை பேசாமல் இரும் ! "
உவருக்கு இப்ப வடிவாய்க் குடுத்தீங்களெண்டால் சரிவரும்."
8 ! சும்மாயிருங்கோப்பா ! அந்தாள் களவு குடுத்த எக்கத்திலை நிக்குது .'" w
- யாழ்ப்பாளர் நிலையத்தில் புகையிாதம் நிற்கிறது

Page 64
O
பலாத்காரம்
'டேய்! தம்பியவையள்,. ஆர் நீதானே பெடியனுக்கு அடிச்சனி ? . ஒடுங்கோடா. போய் மற்றப் பக்கத்தாலை இறங் கிப் போங்கோ. அவன்ரை பல்லையும் உடைச்சுப் போட் உங்கள். இக்கணம், பொலிசிட்டைக் காட்டிக் குடுத்தானெண் டால். வில்லங்கம் !"
--இந்தக் கரிசனையான அன்புக்கட்டளையில் அந்தச் சண்டியர்கள் ஓடி, ஒழிந்து இறங்குகிறர்கள்.
- சிறுவன் எழுந்து மற்றவர்களைப் பயத்துடன் நோக்கு கிருன். பின்னர் வெளியே பார்க்கிருன் . தெரியாத இடம் - மீண்டும் நடுக்கத்துடனும், விம்மலுடனும் அழுகை தொடங்கி விடுகிறது.
yo
இவன் இரக்கத்துடன் சிறுவன, இறங்கவேண்டிய இடம் எது?" என சிங்களத்தில் கேட்கின்றன்.
- மதவாச்சிய"
அவரவராக மற்றவர்கள் இறங்கியதும், களவு கொடுத் தவர் தப்பினேன், பிழைத்தேன் என தனது பயணத்தை தொடர்கிறர். -
- கொக்குவில்
களவு கொடுத்தவர் இறங்கி தனது பேசைக் கையி லெடுத்து அதிலிருந்த 'ரிக்கற்றை எடுத்துக் கொண்டு நடக் 3)qyri.
புகையிரதம் குலுக்கலுடன் கிளம்புகிறது.
இவனுடைய மனதும் குலுங்குகிறது ; பயணம் தொடர் கிறது.
★女★


Page 65


Page 66
யாழ்ப்பாண்ம் நல்லூரைச் திரு. நா. சிவசாமி அவர்களின் சி. இராஜசிங்கம் (சுதாராஜ்). யாழ் இந்துக் கல்லூரியிலும் பின்னர் இ பல்கலேக்கழகம் கட்டுப்பெத்த வளா கல்வி பயின்ற இவர், தற்சமயம் சீமெந்துத் தொழிற்சா8லயில் தொழ வல்லுனராகக் கீடமையாற்றுகிருர்,
"PALATHKARAM" was printed at K 0. K. K. S. Road, Jaffna "Tha milpanimanai” by Thambiayah S Arasady Road, Jaffna. Author: S.

alanilayam Printing Works, | and published for Selvarajah of 28, 4th Lane
Rajasingham (Sutharaj)