கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக இலக்கிய கர்த்தாக்கள் 1

Page 1


Page 2

D606) இலக்கிய கர்த்தாக்கள் தொகுதி01
- என்செல்வராஜா
இணை வெளியீட்டாளர்கள்: > இலண்டன்
வெளியீட்டுக் கழகம் 15, Rutland Road, London E78PQ,United Kingdom
சிந்தனை வட்டம் இல 14, உடத்தலவின்னை 20802, ரீலங்கா 276 / 2007

Page 3
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - தொகுதி-01
நூலாக்கம் : பதிப்பு ! இனை வெளியீடு :
அச்சுப்பதிப்பு !
அட்டை வடிவமைப்பு : SN-5 -
விலை :
என்.செல்வராஜா
1" பதிப்பு நவம்பர் 2007 இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் ஐக்கிய இராச்சியம்,
சிந்தனை வட்டம் 1. உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா.
சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா.
எ1ஜிர் அஹம்மட் (ஆங்கை)
Ù W8-ኗ] 55-8ኗ] 13-8[}-?
240, £5. OO
Malaiyaka Ilık kiya Kartlıt hakkal-Wol ()|
Lul Ts C - Publisers :
Pillcri :
Elitin : Lillig Llage : Cover Design : ISBN-3 :
Price :
N.Selva rajah
Ch Lideruli Publication Society, 15, Rutland Road, London E78 PQ United Kingdom,
战
Cintha Inzai Willi til III l4, kilalalawin na Madige. I dalalawin na 2(1812. Sril.anka, Cithalai Wattal CW Publishers (Pwt IId, 14. Udatalawinna Madige, llcla lalawi III1 a 2008 (02. Sri La Ilıka, | " EE || II i Ill Ny::III3r ll)?
Ilil
Sajecr Ahmed (Sri Luki|
ና}78 - 955 - 8ሄ}13 - 8[] -3
24.0/-. E5.00
(E) Clı II det bli ’l ullication Sc}ciety, 2007 LL LLaL LLLLLaLLLLLLLS LLL LLLL L LL LLLLLLLLLLLLL LLatS LtH LLaGtttLatLLL LLL LLLLtLLS SaLLaTaL LL LLL LLLLtLL LLLLLLLLS LL LLLLL LL LLL LLLLL LL LLLL La HLaaHLS LLLLLLaaS LLLLaLS aLaaaalaS LaaaaLLaLa aL LLLLLLLCS LLLLL LLL mLLLL LLLLLL
permission of the author,

மலையக தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சியும், எழுச்சியும்.
மலைகளாகவும், காடுகளாகவும் பயனற்ற மண்ணாகவும் இருந்த இலங்கையின் மலைப் பிரதேசத்தை பொன்கொழிக்கும் பூமியாக்கிய பெருமை மலையகத் தமிழர்களுக்கே உரியது. இது வரலாற்று உண்மை. ஆங்கிலேயர் இலங்கையை ஆளத்தொடங்கிய பின்னர் பொருளாதாரத்தைப் பெருக்குவதற்கும் தங்களுக்குத் தேவை யான தேயிலை, இறப்பர் போன்றவற்றை வளர்ப்பதற்கும் உகந்த பிரதேசமாகத் தெரிவுசெய்தனர்.
அம்மண்ணை பயிர்ச்செய்கைக்கு வளமுள்ள மண்ணாக்குவ தற்குப் பெருந்தொகையான வேலையாட்கள் தேவைப்பட்டனர். அன்று உள்நாட்டிலுள்ள சிங்களத் தொழிலாளர்கள் பனியிலும், குளிரிலும் வேலைசெய்வதற்கு முன்வராத சோம்பேறிகளாக இருந்தனர். அதே வேளை மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கு கூலியாட் கள் தேவைப்பட்டனர். கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி மூலம் இந்தி யாவை நீண்டகாலம் ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் குறைந்த சம்பளத்தில் கடுமையாக உழைக்கக்கூடிய தொழிலாளர்கள் இருப்பதைக் கண்டுகொண்டனர்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா O

Page 4
இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உழைப்பாளிகளே மலையகத் தமிழ் மக்கள் ஆவர். அவர்களே காடாகவும், மலைப்பிரதேசமாகவுமிருந்த மண்ணை செழிப் புள்ள வளமுள்ள மண்ணாக்கிய பெருமைக்குரியவர்கள். இலங்கை யின் தேசிய வருமானத்தில் மூன்றிலொருபகுதி வருமானத்தை ஈட்டிக் கொடுத்தவர்களும் அவர்களே. ஆனால் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வளம்பெறவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அவர்களது நிலை மோசமடைந்தது. பெரும்பான்மையைக் கொண்ட சிங்கள அரசு இவர்களது வாக்குரிமை, குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக்கியது. அவர்கள் தமிழர்கள் என்பதாலோ என்னவோ இந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
இந்த அவல நிலையை மாற்ற மலையக தொழிற்சங்கவாதி கள், மலையக எழுத்தாளர்கள் பெரும்பங்காற்றி வந்தனர். அத்தகைய ஆழ்நிலைகளில் வளர்ந்த மலையக கல்விமான்கள், அரசியல்வாதி கள்,தொழிற்சங்கவாதிகள், எழுத்தாளர்கள் உலக அரங்கில் பெரு மைக் குரியவர்களாக விளங்குகின்றார்கள்.
“மலையக மக்களுக்குத் தகுந்த கல்வியூட்டப்பட்டால் பெருங் கல்விமான்களாக வருவார்கள்’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர்களில் பெருந்தலைவராக விளங்கிய கோப்பாய் கோமகன் திரு.கு.வன்னியசிங்கம் அவர்கள் 1953ல் கூறியிருந்தார். அதைச் செயற்படுத்துவதற்காக ஒரு திட்டத்தையும் தயாரித்திருந்தார். மலைய கத்திலிருந்து ஐந்து மாணவர்களை ஆண்டுதோறும் தெரிவு செய்து யாழ்ப்பாணக் கல்லூரிகளில் படிக்கவைக்கும் திட்டமே திரு. வன்னிய சிங்கம் வகுத்த திட்டமாகும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வகுக் கப்பட்ட இத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால் பல கல்விமான்கள் தோற்றம் பெற்றிருப்பர். அப்பெருந்தலைவர் 1959ல் இருதய நோய் காரணமாக திடீரென மறைந்ததால் அத்திட்டம் செயற்படுத்தப் படவில்லை. எனினும் மிக வசதியீனங்கள் இருந்த நிலையிலும் மலையகத்தில் கல்விமான்களும், எழுத்தாளர்களும் தோற்றம் பெற்று அம்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 04

ஒரு எழுத்தாளன் சமுதாய வளச்சிக்கு முதுகெலும்பு போன்ற வன். இந்த வகையில் மலையக எழுத்தாளர் ஆற்றிய பங்குகள் காத்திரமானவை. அவர்களது வரலாறு பதியப்படவேண்டும்.
இதைக் கருத்தில்கொண்டு மலையத்தில் புகழ்பெற்ற எழுத்தா ளர்களாக விளங்கிய எழுத்தாளர்கள் பற்றிய வரலாறுகளை இலண்டன் சுடரொளியில் வெளியிட்டு வந்தோம். அவர்கள் பற்றிய கட்டுரைகளை மிகச் சிறந்த முறையில் தயாரித்து வழங்கியவர் நூலகவியலாளர் திரு.என் செல்வராசா அவர்கள். இவ்வாறு இலண்டன் சுடரொளியில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளை ஒரு தொகுப்பாக வெளியிடு வதில் பெருமையடைகின்றோம்
இவ்வெழுத்தாளர்கள் பற்றி தமிழ் உலகம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மிக நெருக்கடியான சூழ்நிலையில் எவ் வாறு எழுத்தாளர்களாக வளர்ந்தார்கள் என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டியதே.
ஐதிசம்பந்தன் (பிரதம ஆசிரியர் - லண்டன் சுடரொளி
ஸ்தாபகர். சுடரொளி வெளியீட்டுக் கழகம்)
Chuderoli Publication Society, 15, Rutland Road, London E78PQ United Kingdom Tel: 0044208552 6992 Mob : 00447957 666598 Email: itsampanthan (a hotmail.com
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 05

Page 5
சுட்ரொளி
४ : : 8
siềasanae falui & A.
. (கலை,இலக்கிய அரசியல் சமூக இதழ் CDERO
01)
02)
03)
04)
05)
06)
07)
08)
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழக வெளியீடுகள்.
தமிழ் தந்த தாத்தாக்கள் பல்கலைப் புலவர் க.சி. குலரத்தினபு
செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் பல்கலைப் புலவர் க.சி. குலரத்தினம்
குமுதினி கொலைகள்.
போராடுவோம் திரு.அ.அமர்தலிங்கம் அவர்களின் புதிய அரசியல் சட்ட
р-60J
அகதிகளின் சோக வரலாறு (யூலை 83) ஐ.தி. சம்பந்தன்
ஒப்பற்ற தலைவர் தந்தை - செல்வா. ஐ.தி. சம்பந்தன், வே.செ.குணரத்தினம்
ஐரோப்பாவும், ஈழத்தமிழர்களும் பொன் பாலசுந்தரம்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - நூலகவியலாளர் என். செல்வராஜா
 

9ത്തിg്വത്
இலங்கை நாட்டின் பொருளாதாரச் சிறப்புக்கும், உயர்வுக்கும் பெரும்பங்களிக்கும் அதேவேளை, தங்களுடைய வாழ்வை நிறையாக் கிக் கொள்ளக்கூடிய வளங்கள் மறுக்கப்பட்டு, உரிமைகளின்றி ஒடுக்கப் பட்டு, பன்னெடுங்காலமாக மலையக மக்கள் பெருந் துன்பத்தில் ஆழ்ந்து வந்திருக்கின்றார்கள். இவர்கள் சார்பில், இன்னல்களை எடுத்துரைக்க எவருமற்ற நிலை 1820களில் இருந்து தொடர்ந்து வந்திருக்கிறது. 1910ம் ஆண்டின் அரசியலமைப்புப் புத்தாக்கத்தின் போது மலையக மக்களின் தொகை 500,000த்தைத் தாண்டியிருந் தாலும் வாக்குரிமை மறுக்கப்பட்டது. 1920ம் ஆண்டின் அரசியல மைப்புப் புத்தாக்கத்தின் போதுகூட, மலையக மக்களின் பிரச்சினைக ளைப் புரிந்து கொண்டு செயலாற்றக்கூடிய சட்டநிர்ணய சபைப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. மலையக மக்கள், ‘கிரமச் சமூகத் தின் உள் அங்கமாக இருக்கவில்லை”என்றும், “கிராம நிகழ்வுகளி னால் இவர்களுக்குப் பயன் எதுவும் இல்லை” என்றும் போலிக் காரணங்கள் காட்டப்பட்டு உள்ளூராட்சி நடவடிக்கைகளிற் பங்கு பெறவும், கிராமியக் குழுக்களில் அங்கம் வகிக்கவும் தடை விதிக்கப்
L-L-gl.
இத்தகைய பிரதிநிதித்துவமின்மை மலையக மக்களின் வாழ்க்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 07

Page 6
கைப் பிரச்சினைகளைப் பிறர் அறியாவண்ணம் மூடி மறைப்பதை இலகுவாக்கியது. 1871க்கும், 1911க்கும் இடைப்பட்ட நாற்பது வருட காலத்தில் 608,000க்கும் அதிகமான மலையக மக்கள் தகவல்கள் எதுவுமின்றி மறைந்து போனது. அதிர்ச்சியும் ஆதங்கமும் தரும் ஒரு நிகழ்வாகும். மலையக மக்களின் உடல்நலன் தொடர்பாக அச்சமயம் அமுலிலிருந்த சில சட்டங்களைக்கூட தோட்ட நிர்வாகங் கள் பின்பற்றத் தவறியதன் காரணமாக நோய்களினாலும், உடற் பிணியினாலும் இத்தனை பேரும் உயிரிழந்தார்கள் எனவும், இச்சாவு களை ஆவணப்படுத்தாது தோட்ட நிர்வாகத்தினரும், உள்ளூராட்சி அலுவலரும் மறைத்து விட்டார்கள் எனவும் ஆய்வறிஞர்கள் கூறுகி றார்கள். இக்காலகட்டத்தில் மலையக மக்களைப் பீடித்த நோய்க ளுக்கும், உடற்பிணிகளுக்கும் அவர்களே காரணம் என ஆதார மின்றிப் பலி சுமத்தப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பின்னர் மலையக மக்கள் மீதான ஒடுக்கு முறையும், வன்முறையும் மேலும் மேலும் வலுப்பெற்றன. மக்களாட்சி யின் அடித்தளமாக விளங்கும் வாக்குரிமை, குடியுரிமை ஆகியவை சட்டங்களின் மூலம், நியாயமற்ற முறையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும் பறித்தெடுக்கப்பட்டன. அத்துடன், சட்ட ஆட்சியை நிலைகுலைத்த வண்ணம் தொடர்ந்து பதவியிலிருந்த இலங்கை அரசுகள், நிர்வாகச் செயலாற்றல் மூலமாகவும், மலையக மக்களுக் கிருந்த கொஞ்சநஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க முனைந்து வெற்றியும் கண்டன. மலையக மக்கள் இலங்கையின் மற்றைய பகுதியினருடன் சமத்துவம் பெற்றவர்கள் அல்ல என்ற ஆட்சியோரின் உள்ளுணர்வின் காரணமாக, வாழத் தேவையான அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்த கொடு ரத்தை 1970களில் நாம் பார்த்தோம். 1973-1974 காலத்தில், இலங்கையின் இறப்பு வீதம் 12.3% இலிருந்து 19.6% ஆக உயர்ந்தது. இது மட்டுமன்றி அதிகாரத்திலிருப்போர் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மலையக மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்செயல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 08

மலையக மக்களின் அவலநிலை இன்றும் தொடர்ந்து கொண் டிருக்கிறது. 2003ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை தொடர்பான சட்டம், நாடின்மைப் பிரச்சினையைத் தீரத்து விட்டதாகக் கூறப்பட்டா லும், அச்சட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதும், இப்பிரச்சி னையை அறவே ஒழித்துவிடும் சந்தர்ப்பத்தை மலையகத்தின் இன் றைய தலைமைத்துவங்கள் தவற விட்டுவிட்டன என்பதும், அரசியல மைப்பில் குடியுரிமை தொடர்பான பாகுபாட்டுச் சரத்துகள் இன்னும் தொடர்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும். மேலும் மலையக மக்களுக்குப் பாதகமளிக்கும் பல பாகுபாட்டுச் சட்டங்க ளும் அமுலில் இருந்து வருகின்றன. இதனால் மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்ந்து தலைவி ரித்தாடக்கூடிய நிலைமையே இருந்து வருகிறது.
மலையக மக்களின் இடைவிடாத இந்த இருண்ட யுகத்தில் ஒரு ஒளிக்கீற்று அணையாது மேலும் பரந்தகன்று வருவது அனைவ ருக்கும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகின்றது. பல நாடுகளின் வரலாறுகளில் இலக்கியம் வெறும் மன இன்பத்தைத் தரும் கருவியாக மட்டுமல்லாது, தளர்ந்த மனத்தைத் தட்டி எழுப்பவும், சோர்ந்த இனத்தைத் திடமாக்கி திரட்டவும் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு அவர்கள் உரிமை பெற வழிவகுக்கும் உன்னதப் பணியில் இலக்கியம் ஈடுபட்டு வந்திருக்கினறது. புத்துயிர் தரவும், புதுமை பெறவும், புரட்சி வரவும் இலக்கியம் காரணமாக இருந்திருக்கின்றது.
இவ்வழியில் மலையக மக்கள் தங்களது உரிமைகளை உணர்வதிலும், போராட்டங்கள் தொடர்வதிலும், துணைகள் திரள்வதி லும் இலக்கிய கர்த்தாக்கள் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். பொருளா தாரச் சுமை, சமூகத் தடை, அரசியல் தலையீடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாது, தங்களது இலக்கியப் பணியை ஆற்றி வந்துள்ள இவர்களது உணர்வையும், உயரிய நோக்கையும் பெரிதும் நாம் பாராட்டிக் கெளரவிக்க வேண்டும். கதை, கட்டுரை, கவிதை மூலமாக வும், பத்திரிகை, சஞ்சிகை, நாடகம், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஊடாகவும் இவர்கள் உணர்வுக்கு இதமளித்து, உரிமைக்குரல் கொடுத்து, பெரும் சேவையாற்றி உள்ளார்கள்.
மலையக இலக்கியக் கர்த்தாக்கள் - என். செல்வராஜா 09

Page 7
இலக்கியப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை கணக் கிலடங்கா. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கோ.நடேசய்யர், எஸ்.எம். ஹனிபா, எனது வழிகாட்டி இர.சிவலிங்கம், சி.வி.வேலுப்பிள்ளை, நண்பர் அந்தனி ஜீவா, பி.எம். புன்னியாமீன், மாத்தளை சோமு, சாரல்நாடன், தெளிவத்தை ஜோசப், துரை விஸ்வநாதன், கே. கனேஸ் ஆகியோர்கள் இவ்வரிசையில் உன்னத இடத்தைப் பெறுவார் கள். பல்வழி இலக்கியப் பணியில் மலையக மக்களின் உயர்வுக்காக ஆற்றிய சேவைகளுக்காக இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இன்று நம்மிடையே இருப்போரின் இலக்கியப் பணிகள் இன்னும் தொடர வேண்டும். இளைய தலைமுறையிலிருந்து மென்மேலும் இலக்கியக் கர்த்தாக்கள் தோன்றி, மலையக மக்கள் வாழ்வு மலர வழிகாட்டிகளா கத் திகழ வேண்டும் என்பதே எனது அவா. மலையகத்தின் மற்றைய இலக்கியக் கர்த்தாக்கள் பற்றியும் நூல்கள் வெளியிடுவதை நோக்கில் கொள்ளுமாறு, புலம்பெயர்ந்த மக்களிடையே அளப்பரிய இலக்கியப் பணி செய்துவரும் இந்நூலாசிரியர் என். செல்வராஜா அவர்களையும், ஐ.தி. சம்பந்தன் அவர்களையும், சுடரொளி வெளியீட்டகத்தையும், சிந்தனைவட்டத்தையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மலையக மக்களுக்கு விடிவுகாலம் வந்திட வேண்டும்; துன்பச் சுமை நீங்கிட வேண்டும். அக்காலம் வரும் என்கிறார் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை.
அவர்தம் வாக்கிலா இருளி னின்றும் இவர்தம் நாடிலா அழிவி னின்றும் உலரும் உரிமைக் கழிவி னின்றும் மலரும் ஆங்கே மற்றொரு உதயம் இணையும் இந்த வேளை அணையும் உயிர் அவ் விடத்தில் தொடக்கம் ஆங்கே துடி நெருப்பு விடுக்கும் மனித மூச்சி னிலே,
-மழவரையன் விஜயபாலன்
மலையக இலக்கியக் கர்த்தாக்கள் - என். செல்வராஜா O

முன்னுரை
1815ம் ஆண்டு கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர் கைப் பற்றிக் கொண்டதையடுத்து இலங்கையில் மத்திய மலைப் பிரதேசத்தில் வர்த்தகப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக தமது வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டனர்.
இக்காலகட்டத்தில் மத்திய மலைநாட்டுப் பகுதி பெருமள விற்கு காடடர்ந்த, மனித சஞ்சாரம் குறைந்த நிலமாகவே காணப் பட்டது. இக்காடுகளை அழித்து பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலமாக மாற்றியமைக்கவும், மலைகளையும், கற்பாறைகளையும் குடைந்து போக்குவரத்துப் பாதைகளை அமைக்கவும் பெருந்தொகையான "மனிதவலு தேவைப்பட்டது. இந்த "மனிதவலு வினை இலங்கையி லிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தனியார் நிறுவனங் கள் மூலமாக இந்தியாவிலிருந்து ஊழியர்களைப் பெற்றுக்கொள்ள முற்பட்டனர்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியின் விளைவாக பத் தொன்பதாம் நூற்றாண்டின் முதற் காற்பகுதிகளில் இலங்கையில் "தோட்டத்தொழிலாளர்கள் எனும் சமூகத்தினர் தோற்றம் பெற்றனர்.
மலையக இலக்கியக் கர்த்தாக்கள் என். செல்வராஜா 1.

Page 8
ஆரம்பத்திலிருந்தே இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத் தினராகவே மதிக்கப்பட்டனர். இலங்கையின் மரபு ரீதியான சட்டங்க ளும், வழக்காறுகளும் கூட இவர்களுக்கு மறுக்கப்பட்டன. காலகெதி யில் இலங்கையின் பொருளாதார வருவாய் மூலமாக பெருந்தோட்டத் துறை மாற்றம் கண்டபோதிலும் கூட ‘தோட்டத்தொழிலாளர்கள் எதுவித கவனிப்பும், அக்கறையும் இல்லாத ஒதுக்கப்பட்ட சமூகமா கவே திகழ்ந்தனர்.
1820ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர் சரித்திரத்தில் 1920க்குப் பிறகே கோ. நடேசய்யர், அப்துல் காதிருப் புலவர் போன்ற ஓரிருவர் எழுத்துத் துறையில் ஈடுபட்டனர். 1930க்குப் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ் போன்றோர் எழுத ஆரம்பித்தனர். அறுபதுகளுக்குப் பின்வந்தவர்களே அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்தினர்.
இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தொகுக்கப்பட வேண்டும். அவை ஆவணப்படுத்தப்படல் வேண்டும் என்ற நோக்கில் ‘மலையக இலக்கிய கர்த்தாக்கள்’ எனும் இந்த நூலின் முதலாவது தொகுதியினை வெளியிட முன்வந்த இலண்டன் - சுடரொளி வெளி யீட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும், லண்டன் - சுடரொளி பிரதம ஆசி ரியருமான திரு. ஐ.திசம்பந்தர் அவர்களுக்கு என் விசேட நன்றி களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தொகுதியில் மொத்தம் பதினொரு மலையகப் படைப்பாளி களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டுரைகள் அனைத்தும் ‘இலண்டன் - சுடரொளி இருமாத இதழில் (ஜனவரி - பெப்ரவரி) 2005 முதல் மே - ஜூன் 2007 வரை) பிரசுரமானவையாகும்.
முதலாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதினொரு மலையக இலக்கிய கர்த்தாக்களும் ஆண்களே. இத்தொகுதியில் எந்தவொரு பெண் படைப்பாளியின் குறிப்பும் இடம்பெறவில்லை. இது எனக்கு ஒரு மனக்குறையாகும். இத்தொடர் 'சுடரொளியில் தொடர்ந்தும்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 2

வெளிவந்து கொண்டே இருக்கின்றது. எனவே எதிர் காலத்தில் இரண்டாம் தொகுதி வெளிவரும் போது இன்னும் பல மலையக இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய விபரங்களையும், மலையகப் பெண் இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய விபரங்களையும் பதிவாக்கவுள்ளேன்.
தாயகத்திலிருந்தாலென்ன, புலம்பெயர்ந்து வாழ்ந்தாலென்ன. ஈழத்துப் படைப்பாளிகள் அவர்களது நிதி வருவாய் நோக்கற்ற இலக்கியப் பணிகளுக்காகப் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது பணியை உலக அரங்கில் எடுத்துச் சொல்ல வேண்டிய முக்கிய கடமை புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்க்கு உள்ளது.
இதன் வழியாக அவர்களது வாழ்வையும், இருப்பையும் என்றும் மறவாது பதிவுசெய்து வைக்க முடியும். எதிர்காலத்தில் அடுத்த தலைமுறையினர் எமது படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்ள இத்தகைய நூலாக்கங்கள் நிச்சயம் உதவும் என்பது எனது எதிர்பார்க்கை.
என் செல்வராஜா தொகுப்பாசிரியர்
48, Hallwicks Rd, LUTON, Beds, LU 2 9 BH UNITED KINGDOM
T.P. 0044 - 1582 703786 Fax. 0.044 - 1582 703786 Mobile. 007817402704 E. mail : selvan (a) ntl World.com
மலையக இலக்கியக் கர்த்தாக்கள் - என். செல்வராஜா 13

Page 9
உள்ளே.
0
பத்திரிகையாளர் கோ.நடேசையர்: மலையக மக்களின் விடிவெள்ளி
கல்ஹின்னவில் தமிழ் மன்றம் வளர்த்த எஸ்.எம். ஹனிபா
மலையக மக்களின் புரட்சிக்குரல்: அமரர் இர.சிவலிங்கம்
மலையகத்தின் மக்கள் கவிமணி: சி.வி.வேலுப்பிள்ளை
மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவாவும் அவரது கலை இலக்கியப் பயணமும்
மலையகப் பதிப்புலகத்தில் ஒரு சிந்தனை வட்டம்: கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்
புலம்பெயர்ந்தும் மலையக இலக்கியத்தை மறவாத மாத்தளை சோமு
சாரல் நாடன்: மலையக விழிப்புணர்வின் ஒரு அறுவடை
மலையக மனிதர்கள்: தெளிவத்தை ஜோசப்
மலையக மனிதர்கள்: துரைவி பதிப்பகமும் அமரர் துரை விஸ்வநாதனும்
மலைவிளக்காகத் திகழ்ந்த இலக்கியச் சுரங்கம் கே.கணேஷ்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா
17
25
31
36
41
54
61
67
75
78
83
14

D606) இலக்கிய கர்த்தாக்கள்
தொகுதி-01
- என். செல்வராஜா -

Page 10
| 6

பத்திரிகையாளர் கோ.நடேசையர்: மலையக மக்களின் விடிவெள்ளி
மலையகத் தமிழர்கள், பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு, வாழ வழிதேடி ஆயிரம் எதிர்பார்ப்புகளை மனதில் தேங்க அழைத்துவரப்பட்டவர்கள். இலங்கையின் மலை நாடுகளில், நவீன அடிமைகளாக்கி, பட்டமரமாக்கப்பட்டவர்கள். இறுதி யில் மலையகத்தின் மனித இயந்திரங்களாகவே மாற்றப்பட்டுவிட்ட இந்தத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைத் திசைதிருப்பி அவர்களையும் வெளிஉலகம் மனிதர்களாகக் கருதும் மனப்பாங்கினை ஏற்படுத்தப் பாடுபட்ட முற்போக்குச் சிந்தனையாளர்களில் - சமூக முன்னோடிகளில் ஆற்றல் மிகு இலக்கியவாதிகளில், கோதண்டராம நடேசையர் (1892-1947) முக்கியமானவர்.
இலங்கையில் குடியியல் உரிமை அற்றிருந்த இந்திய வம்சா வளித் தமிழர்களுக்கு இலங்கையின் மரபுரீதியான சட்டங்கள் எதுவும் பாதுகாப்புத் தரவில்லை. இந்தச் சட்டப் பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்தித்தர, அடிப்படை வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தித் தர இந்த மக்கள் பிறந்து வளர்ந்த தாயகமான இந்தியாவின் அரசு, எவ்வித முன்னெடுப்புகளையோ, இராஜதந்திர அழுத்தங்களையோ
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 17

Page 11
கோ. நடேசையர்
மேற்கொள்ள முன்வரவில்லை. இந்தியாவுக்கே அக்கறையில்லாத போது, அவர்களது புகுந்த வீடான இலங்கையின் அரசுகளும் அக்கறை கொள்ளவில்லை. இந்தப் பகைப்புலத்திலேயே இம்மக்களின் விடிவுக்காகப் புயலாகக் கிளம்பிய நடேசையரின் பிரசன்னம், மலையக மக்களின் வாழ்வியலுடன் பிரிக்கப்பட முடியாதவாறு பிணைய ஆரம் பித்தது. மலையகத்தின் தொழிற்சங்க வரலாற்றிலும், அரசியல் நடவ டிக்கைகளிலும், பத்திரிகை வெளியீட்டுத் துறையிலும், எழுத்து முயற் சிகளிலும் தன் வாழ்வின் இறுதி இருபது ஆண்டுகளும் தொடர்ச் சியாக உழைத்தவர் இவர். சட்ட நிரூபண சபையில் 1925-1931 காலப்பகுதியிலும், அரசாங்க சபையில் 1936-1947 காலப்பகுதியிலும் மொத்தம் 17 ஆண்டுகள் மலையக மக்களின் பிரதிநிதியாகப் பணியாற் றியவர்.
இலங்கை அரசியலில் டொனமூர் ஆணைக்குழு, இலங்கை மக்களுடன், தோட்டத் தொழிலாளர்களையும் இணைத்து சர்வஜன வாக்குரிமை வழங்கும் திட்டத்தை முன்வைத்தது. இந்தியத் தமிழர்கள் மலையகத்தில் வந்து குடியேற்றப்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே 1927இல் இம்மக்கள் மத்தியில் இது ஒர் அரசியல் சலசலப் பினை ஏற்படுத்தி வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் இயக்கங்கள் அவர்களுக்கிடையே முளைவிட ஆரம்பித்தன. அரசியல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களாக இவர்களிடையே பரப்பப்பட்டன. இக்காலகட்டத்திலேயே 1931இல் நடேசையர் அவர்களினால் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் ஹட்டனில் ஸ்தாபிக் கப்பட்டது. இவரது இயக்க ரீதியான தீவிர நடவடிக்கைகள் நூறாண்டு கள் தூங்கிக்கிடந்த இந்தியத் தோட்டத்தொழிலாளர்களை விழித்தெழ வைத்தது. அவர்களைத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வைத்தது.
இவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தினை உணர்வுபூர்மவமாக உள்வாங்கி வெளி உலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் கோ. நடேசையராவார். வெளியுலகத் தொடர்பு மறுக்கப்பட்டு மலைக ளுக்கு இடையே தனித்ததோர் உலகத்தில் வாழவைக்கப்பட்டு,
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 18

கோ. நடேசையர்
அரசுகளாலும் அவற்றின் பொது நிர்வாக இயந்திரங்களாலும் முற்றா கக் கைவிடப்பட்ட நிலையில், தோட்டத்து வெள்ளைத் துரைமார்களின் இராணுவ ரீதியிலமைந்த அடக்குமுறைகளுக்கும், அவர்களது எடுபிடி களான கங்காணிகளுக்கும் கறுப்புத் துரைமாருக்கும் அடிபணிந்து நவீன அடிமைகளாக வாழ்ந்து வந்த அம்மக்களின் மீட்பிற்கான விடிவெள்ளியாக மாறிய பத்திரிகையாளர் நடேசையர் விரைவிலேயே அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவாலாக, சிம்மசொப்பனமாக மாறி விட்டார்.
நடேசையர் தோட்டத் தொழிலாளியாக இலங்கை மண்ணில் கால்பதித்தவர் அல்லர். வளமான வாழ்வுடன் இந்தியாவில் இருந்தவர். தமிழகத்தில் தனது பிறந்தகமான தஞ்சாவூரில் "இந்திய வியாபாரிகள் சங்கம்" ஒன்றினை உருவாக்கி வெற்றிகரமாக இயக்கி வந்தவர். இந்தியர்கள் கொழும்பின் வர்த்தகத்தை ஆக்கிரமித்திருந்த அந்நாட்க ளில் அதன் கிளையொன்றினை பின்னாளில் கொழும்பில் அமைத்து வெற்றிகரமாக தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் இயக்கிவந்தார். கொழும்புக்கிளையின் ஆண்டு விழாவொன்றில் பங்கேற்கும் நோக் கிலேயே இவரது முதலாவது இலங்கை விஜயம் அமைந்திருந்தது.
அந்நாளில் அவர் தஞ்சாவூரில் "வர்த்தக மித்திரன்" என்ற பத்திரிகை ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப்பத்திரிகைக்கு இலங்கையில் சந்தாதாரர்களை சேர்த்துக்கொள்வது அவரது வருகை யின் மற்றொரு நோக்கமாக இருந்தது. இலங்கைக்குச் செல்லும் நடேசையரை, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் அணுகி மலையக இந்தியத் தொழிலாளரின் பொருளாதார நிலைமைகளைப் பார்வையிட்டு வரும்படியும் அவரைப் பணித்திருந்தனர். அது அவரது மூன்றாவது நோக்கமாகவிருந்தது.
அவர் தமது முதல் இலங்கை விஜயத்தின் போது, மலையகத் தோட்டங்கள் யாவும் துரைமாரின் பலத்த அதிகாரக்கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடயத்தையும், தோட்டத்துக்குள்ளிருப்பவர் தோட்ட எல்லை யைத் தாண்டி வெளியே போவதும் வெளியார் தோட்டங்களுக்குள் வருவதும் சேவை ஒப்பந்தக் கட்டளைச்சட்டம், அத்துமீறல் தடைச்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 19

Page 12
கோ. நடேசையர் சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாக இருந்த மையையும் அதிர்ச்சியுடன் அறிந்து கொண்டார். மலையக மக்கள் வாழும் திறந்தவெளிச் சிறைவாழ்க்கை பற்றிய மனப்பாரத்துடனேயே அவர் ஆண்டுவிழாவை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.
1920ம் ஆண்டில் மீண்டும் நடேசையர் இலங்கைக்கு வந்தார். முன்னையபோது போலல்லாது, இம்முறை அவரது வருகை, இலங் கையில் நீண்டகாலம் தங்கியிருப்பதாக அமைந்தது. அவர் தனக்குக் கைவந்த கலையான பத்திரிகைத் தொழிலில் இலங்கையில் இருந்த இந்தியர்களுடன் இணைந்து ஈடுபடலானார். அந்நாட்களில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் 1918இல் லாரி முத்துக்கிருஷ்ணா என்பவரால் வெளியிடப்பட்ட "ஜனமித்திரன்" என்ற பத்திரிகை மாத்திரம் கொழும்பிலிருந்து வெளிவந்துகொண்டி (Ub[bჭ585].
நடேசையர் இந்தியாவில் கல்வி கற்ற காலத்திலேயே இந்திய தேசிய உணர்வினால் ஆகர்ஷிக்கப்பட்டவர். அவர் இலங்கைக்கு வரும்போது தனது தேசிய உணர்வினையும் பட்டைதீட்டிக் கொண்டே வந்து சேர்ந்தார். அதன் பரிசோதனைக்களமாக இயங்கும் வகையில் கொழும்பில் 1922இல் "தேசநேசன்" என்ற தினசரியும், பின்னர் 1924இல் "தேசபக்தன்" என்ற தினசரியும் அவரால் தொடங்கப்பட்டன. நடேசையர் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைபெற்றிருந்ததால் அவரது "தேசபக்தன்" ஆசிரியத் தலையங்கங்கள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலுமே வெளியாகின. பின்னாளில் "சுதந்திரப் போர்" (ஹட்டன், 1940), “வீரன்’ (ஹட்டன் 1942) ஆகிய சஞ்சிகைக ளும் இவரால் நடத்தப்பட்டன. தனி ஆங்கிலப் பத்திரிகைகளான Indian Opinion, Indian Estate Labourer citizen, Forward gau ep6ip பத்திரிகைகளையும் நடத்தியுள்ளார்.
1947 ஜூன் 1ம் திகதி சுதந்திரன் பத்திரிகை அரசியல தினசரியாக வெளிவந்தபோது அதன் ஆசிரியராக கோ. நடேசையர் பணியாற்றினார். பத்திரிகையின் நோக்கம் பற்றிய செய்தியினை மிகத் தெளிவாக அதன் முதலாவது இதழிலேயே கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 20

கோ. நடேசையர்
"தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்கிறார்கள். பின் வந்தவர்களை இந்தியத் தமிழர்கள் என்கிறார் கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்து விட்டனர். இந்தியத் தமிழர்களில் சிலர் தங்களை இந்தியன் என்று கூறிக்கொள்வதில் தங்களுக்கு ஏதோ பிரத்தியேக நன்மை இருப்பதாகக் கனவு காண்கிறார்கள். இந்தப் பிரிவினைகள் யாரால் ஏற்படுத்தப்பட்ட தென்பதை அறிவாரா? இவ்விரு தமிழர்களையும் பிரித்து வைப்பதில் தங்களுக்குப் பயன் ஏற்படுமென்று சிங்களச் சோதரர் கள் செய்துவந்துள்ள சூழ்ச்சி. இந்தச் சூழ்ச்சியிலிடுபட்டுள்ள சில சுயநலத் தமிழர்களும் இருக்கின்றனர். ஆகவே இந்தச் சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து தமிழ் பொதுமக்கள் தப்பவேண்டும். இந்த ஒரே நோக்கம் கொண்டுதான் சுதந்திரன் ஆரம்பிக்கப்பெற்றி ருக்கிறது. சாதாரண மக்களிடம் அரசியல் ஞானத்தைப் பரப்ப வேண்டியது முதல் கடமையாகும்."
1947 ஜூன் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன், 1951 இலிருந்து வார இதழாயிற்று. 35 வருடங்களுக்கு மேல் வெளிவந்த இது 1983 இறுதியில் தன் பயணத்தை முடித்துக் கொண்டது. சுதந்தி ரன் ஆரம்பிக்கப்பட்ட 1947இல் நடேசையர், கிருஷ்ணமூர்த்தி ஐயருடன் இணைந்து "தோட்டத்தொழிலாளி" என்ற மற்றொரு சஞ்சிகையினையும் கொழும்பிலிருந்து வெளியிட்டார். இவர் மறைவுக்கு முன்னதாக இவர தொடக்கிய கடைசிப் பத்திரிகை இதுவாக அமைந்து விட்டது. சுதந்திரனில் நடேசையரின் பணிக்காலம் மிகக்குறுகியதாக இருப்பி னும், அந்தப் பத்திரிகையின் வரலாற்றில் அழியாத இடத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
பிரபல்யமான சிங்களத் தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்கா அவர்களின் தொடர்பு இவருக்கு பத்திரிகையாளர் என்ற வகையில் கொழும்பில் கிடைத்திருந்தது. காலப்போக்கில் ஏ.ஈ.குணசிங்காவின் இந்திய விரோதப் பேச்சுக்களால் அவருடன் கருத்து முரண்பாடு கொண்டு அவரிடமிருந்து விலகலானார். பின்னாளில் 1931 இல்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 21

Page 13
கோ. நடேசையர்
நடேசையர் அவர்களினால் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் ஹட்டனில் ஸ்தாபிக்கப்பட்டதற்கு குணசிங்காவின் தொடர்பும் அதனால் ஏற்பட்ட பாதிப்பும் காரணமாக இருந்துள்ளது.
பத்திரிகைகள், சஞ்சிகைகளுடன் மட்டும் நின்றுவிடாது நடேசையர், ஹட்டனில் தனது துணைவியார் மீனாட்சியம்மையாரின் பொறுப்பில் இயங்கிய சகோதரி பிரஸ், கணேஷ் பிரஸ் என்ற தனது இரு அச்சகங்களின் வாயிலாக தோட்ட மக்களுக்கு உணர்வூட்டும் பல புரட்சிகரத் துண்டுப்பிரசுரங்களையும் சிறுநூல்களையும் வெளியிட்டு வநதார.
நடேசையரின் மனைவி மீனாட்சியம்மையும் ஓர் இலக்கியப் படைப்பாளியாவார். 1931இல் அவரது படைப்புக்கள், "இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து" என்ற தலைப்பில் இரு பாகங்களில் டி. சண்முகம் என்பவரால் வெளியிடப்பட்டிருந்தது. 1940இல் "இந்தியர் களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை" என்ற தலைப்பில் மற்றொரு சிறு கவிதை நூல் 1940 இல் கோ.ந.மீனாட்சியம்மாள் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த வீரக்கவிதைகள் இலங்கையி லுள்ள இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு விரட்டவேண்டும் என்று அந்நாளில் கோஷம் எழுப்பிய இலங்கை அரசாங்க மந்திரிக ளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இயற்றி வெளியிடப்பட்டது. 660TT6soi) gibbT6) Colombo 4: Women's Education and Research Centre, 37A Kinross Avenue, 616 p. 960) Dilbastas 2 Lugiumab 1991இல் கொழும்பு 12: குமரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்
ill-gil.
கோ. நடேசையர் இலங்கையில் குடியேறியது முதல் மறையும் வரை ஒன்பது தமிழ் நூல்களையும் இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார். "தோட்ட முதலாளிகள் இராச்சியம்" என்ற இவரது ஆங்கில நூல் பிரபல்யமானது.
இவரது நூல்களில் "அழகிய இலங்கை" என்ற நூல் தமிழகத் தில் அச்சிடப்பட்டது. 1933இல் வெளியான "நரேந்திரபதியின் நரக
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 22

கோ. நடேசையர்
வாழ்க்கை" என்ற நூல் 226 பக்கங்கள் கொண்டது. இவரது "தொழிலா ளர் கடமைகளும் உரிமைகளும்" என்ற பிரபல்யமான சிறுநூல், 50000 பிரதிகள் அச்சிடப்பட்டதாக அறியமுடிகின்றது. அக்காலகட்டத் தில் இத்துணைப் பிரதிகள் அச்சிட்டு விநியோகிப்பதென்பது இலேசான காரியமாக இருந்திருக்காது.
"Qg5 Tgoost 615 &L 6b55ub" (Rights and responsibilities of Indian Labourers) கோ. நடேசையர் எழுதி கொழும்பு: செட்டியார் தெருவில் இருந்த இந்தியன் பிரஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பட்ட மற்றொரு நூலாகும். 62 பக்கங்கள் கொண்ட இந்நூல், இலங்கை வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களை, உரிமைகளை விளக்கும் கைநூலாகும்.
இலங்கைக்குத் தொழில்நிமித்தம் வந்த இந்தியத் தொழிலா ளர்கள் இருவகைப்பட்டனர். தாமாகத் தம் சொந்தச் செலவில் வந்தவர்கள் ஒருவகை. பெரும்பாலும் இவர்கள் நகரப்பகுதிகளில் வேலை தேடிக்கொண்டவர்கள். முதலாளிகளின் ஏஜென்டுகளால் தூண்டப்பெற்று அவர்களது பொருளுதவியுடன் வந்தவர்கள் மற்றொரு வகை. இவர்கள் தேயிலை, ரப்பர், கொக்கோ தென்னைத் தோட்டங்க ளுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பின்சொல்லப்பட்டவர்களுக்காக இலங்கையிலும், இந்தியாவி லும் வழங்கப்பட்டுவரும் சட்டங்களை எளியமுறையில் கூறும் நூலே "தொழிலாளர் சட்ட புஸ்தகம்" என்பதாகும். தமக்கு எவ்விதமான சுதந்திரம் உள்ளது, அவை எவ்வாறு சட்டமூலம் உறுதிப்படுத்தப்பட் டுள்ளன என்பதை அறிந்து தாம் அடிமைகளாவதைத் தவிர்த்து அறிவு புகட்டும் வகையில் வெளியிடப்பட்ட இந்நூல் பாமர மக்களின் கையில் சேர முடியாதபடி அக்காலப் பகுதியில் மறைமுகமாகத் தடுக்கப்பட்டும் வந்துள்ளது.
உறங்கிக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தட்டியெழுப்பும் போக்கிலேயே இவரது பிரசுர முயற்சிகள் பெரும்பாலும் அமைந்திருந்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 23

Page 14
கோ, நடேசையர்
ததை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் "நீ மயங்குவதேன்" என்றதொரு கட்டுரை நூலை 1931இல் எழுதி அவரது சகோதரி பிரஸ் வாயிலாக அச்சிட்டு வெளியிட்டார். இதிலுள்ள 11 கட்டுரை களும், மக்களைக் கிளர்ந்தெழ வைக்கும் சாகசம் மிக்கதாக இருந் தன. இதில் இறுதிக்கட்டுரை "ராமசாமி வேர்வையின் சரிதம்" என்பதாகும். இது கட்டுரையாகவல்லாது மலையகத்தின் சிறுகதை வரலாற்றில் முதன் முதலில் வெளிவந்த சிறுகதையாகக் கருதப்படு வதே பொருத்தமாகும் என்று இலக்கிய விமர்சகர்கள் வாதிடுகின் றார்கள்.
"நீ மயங்குவதேன்" என்ற நூலையடுத்து அதன் இரண்டாம் பாகமெனக் கருதப்படக்கூடிய மற்றொரு நூலாக மார்ச் 1947இல் "வெற்றியுனதே" என்ற நூலை வெளியிட்டார். அதே ஆண்டில் நவம்பர் ஆறாம் திகதி (06.11.1947) நடேசையர் கொழும்பில் அமரரானார். அவர் அமரத்துவமடைந்து சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில் மலையகத் தமிழரின் அரசியல் வாழ்வினை அழித்தொழிக்க வகை செய்த குடியுரிமைச் சட்டம் 15.11.1948இல் இலங்கை நாடாளு மன்றத்தில் அரங்கேறியது.
நன்றி; ஐ.பி.சி. காலைக்கலசம், 23.01.2005,
சுடரொளி, ஜனவரி-பெப்ரவரி 2005.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 24

கல்ஹிண்ணவில் தமிழ் மன்றம் வளர்த்த எஸ்.எம். ஹனிபா
மத்திய மலைநாட்டின் கண்டி மாநகரிலிருந்து பன்னிரு மைல் தொலைவில் அமைந்துள்ளது கல்ஹின்னை என்ற சிறு கிராமம். இக்கிராமத்தின் பெயரை ஈழத்து இலக்கிய வரலாற்றிலும், தமிழ்ப் பதிப்புலக வரலாற்றிலும் இடம்பெறச் செய்த பெருமை கல்ஹின்னை தமிழ் மன்றத்திற்குரியது. இந்தத் தமிழ் மன்றத்தை அந்த மண்ணில் வித்தூன்றி முளைகண்டு கிளைவிட்டு மரமாகக் கண்ட பெருமை சட்டத்தரணியும், பிரபல தமிழறிஞருமான எஸ்.எம்.ஹனிபா அவர்க ளுக்குரியது. தமிழ்ப் பணியும் சமூகப்பணியும் தன் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் அமைதியாக கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் வாயிலாக நூறுக்கும் அதிகமான நூல்களை வெளியிட்டு வைத்துள்ள எஸ்.எம். ஹனிபா பற்றிய சில குறிப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நூல்வெளியீட்டுத் துறையிலே ஐம்பது வருடங்களாக ஈடுபட்டு 105 நூல்களுக்கு மேல் தாயகத்தில் வெளியிட்டுச் சிறப்பிடம் பெற்றுத் திகழும் ஒருவர் எஸ்.எம்.ஹனிபா அவர்கள். சுமார் ஐந்து தசாப்த காலமாக இப்பணியில் அயராது ஈடுபட்டுப் பல எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தி கைதுக்கிவிட்ட கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் தாபகர்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என், செல்வராஜா 25

Page 15
எஸ்.எம். ஹனிபா என்ற பெருமை இவருக்குரியது. இன்று கல்ஹின்னை என்றால் ஹனிபாவும், தமிழ்மன்றமும் கூடவே நினைவுக்கு வந்துவிடுகின்றது. தன் பதிப்பகத்தின் வாயிலாக அவர் பிறரது எழுத்து முயற்சிகளை ஊக்குவித்ததுடன் நில்லாது தானே சுயமாக எழுதியும் தமிழ் இலக்கி யத்துக்குப் பெரும்பங்காற்றி வந்திருக்கின்றார்.
கல்ஹின்னைக் கிராமத்தின் செல்வாக்கு மிக்க குடும்பமாக விருந்த செய்யத் ஹாஜியார், ஸபியா உம்மா தம்பதியினரின் மகனாக 24.06.1927இல் ஹனிபா பிறந்தார். அந்நாளில் பிரபல்யம் பெற்றிருந்த நாகூர்பிச்சை லெப்பை என்ற அறிஞரிடம் ஆரம்ப மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொண்டார். தன் ஆறாம் வயதிலேயே மார்க்க அறிவைப் பெற்று கமாலியா முஸ்லிம் பாடசாலையில் (இன்று அல்மனார் மகாவித்தியாலயம்) சேர்க்கப்பட்டு, பின்னர் ஆங்கிலக் கல்வியைப் பெறும் பொருட்டு மாத்தளை விஜய கல்லூரியில் இணைந்து கொண்டார். பின்னாளில் கொழும்பு சாஹிரா கல்லூரியில் சேர்ந்து கொழும்பிலிருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு 1951 இல் தேர்வு பெற்றார்.
பல்கலைக்கழக வாழ்வில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் முதல் மாணாக்கர்களுள் ஒருவராக எஸ்.எம்.ஹனிபா அவர்கள் விளங்கியுள்ளார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் லண்டனிலிருந்து தன் பட்டப்பின்படிப்பை முடித்துக்கொண்டு 1950ம் ஆண்டு கொழும்பு திரும்பி, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (அன்று இலங்கையில் ஒரேயொரு பல்கலைக்கழகமே இருந்தது). தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். 1951 ஜூலை மாதத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கத் தேர்ந்தெடுத்த மாணவர்களுள் எஸ்.எம். ஹனிபாவும் அடங்கி யிருந்தார். கல்ஹின்னையிலிருந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் மாணவனும் இவரேயாவார். பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளை சு.வித்தியானந்தன் முன்னெடுத்தபோது உடனிருந்து உதவியவர் ஹனிபா என்று பேராசிரியர் தனது பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். வித்தியின் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் இதழின் ஆசிரியராகவும் 1952இல் ஹனிபா இருந்துள்ளார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 26

எஸ்.எம். ஹனிபா
பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்திலேயே எஸ்.எம். ஹனிபா அவர்கள் தனது கிராமத்தில் கல்ஹின்னை தமிழ் மன்றத்தை நிறுவி, நூல்வெளியீட்டு முயற்சிகளில் துணிவுடன் ஈடுபடத் தொடங்கி விட்டார். கலாநிதி எம்.எம்.உவைஸ் அவர்களின் தமிழ் இலக்கியத் gig (p6t)65ub356i gibbu Qg5T60iiG (Muslim contribution to Tamil Literature) என்ற ஆங்கில மொழியிலான நூல்வெளியீட்டோடு திரு. ஹனிபாவின் வெளியீட்டுப்பணி 1953இல் ஆரம்பமாகியது. இந்நூல் கலாநிதி உவைஸ் அவர்களின் எம்.ஏ.பட்டத்திற்கான ஆய்வாகும். தன் மாணவப்பருவத்திலேயே துணிச்சலுடன் வெளியீட்டுத்துறையுள் புகுந்துவிட்டவர் இவர்.
எஸ்.எம்.ஹனிபா அவர்கள் 1956ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தனது இலக்கிய வேட்கை காரணமாக இரண்டு ஆண்டுகளிலேயே ஆசிரியத் தொழி லைத் துறந்துவிட்டு லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து தினகரன் உதவி ஆசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றியுள்ளார். Qg5 TL.jpbg. Ceylon Observer, Daily News seasu 6 flis3560J Lujifif கைகளிலும் மூன்று வருடங்கள் பணியாற்றியுள்ளார். பின்னர் 1971ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட உதவிச் செய்திப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இக்காலகட்டங்களில் தன் விருப்பத்துக்குரிய சட்டக்கல்வியையும் பயின்று 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சட்டத்தரணியாகிய போதிலும், எஸ்.எம். ஹனிபாவின் பெயர் தமிழ் இலக்கிய, வெளியீட்டுத்துறைகளிலேயே விதந்து பேசப் படுகின்றது.
எஸ்.எம்.ஹனிபா அவர்கள் 1982இல் மலையகக் கலை இலக் கிய பேரவையின் உபதலைவராகவும், 1984ம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், அதன் இலக்கியக் குழுச் செயலாளராகவும். 1986ம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை தேசியக் கவுன்சில் வை.எம்.எம்.ஏ கெளரவ சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 27

Page 16
எஸ்.எம். ஹனிபா
இளம் வயது முதலே பாடசாலை மலர்களிலும், தேசியப் பத்திரிகைகளிலும் தன் படைப்புக்களை எழுதி வந்த எஸ்.எம்.ஹனிபா அவர்கள் மார்ச் 1948இல் ‘சமுதாயம்' என்ற காலாண்டுச் சஞ்சிகையி னைத் தன் சொந்தச் செலவில் சில காலம் நடத்திவந்துள்ளார். இதன் காரணமாகப் பின்னாளில் சமுதாயம் ஹனிபா என்று செல்லமா கவும் நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
இவர் எழுதிய நூல்களுள் உலகம் புகழும் உத்தமத் தூதர், துஆவின் சிறப்பு ஆகிய இரண்டு நூல்களும் சமயம் சார்ந்தவை யாகும். The Great Son, மகாகவி பாரதி, உத்தமர் உவைஸ் ஆகியவை வாழ்க்கைச் சரிதங்களாகும். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி, இலக்கிய மறுமலர்ச்சி ஆகிய இரு நூல்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூல்களாகும். எங்கள் ஊர் கல்ஹின் னை, Money Power, பணப்பசி (குறுநாவல்) ஆகிய நூல்களும் இவரது பெயர்சொல்லும் நூல்களாகும். தான் எழுதிய நூல்களைவிட பிற அறிஞர்களினதும், படைப்பாளிகளினதும் நூல்களை வெளியிடு வதிலேயே எஸ்.எம். ஹனிபா அவர்கள் அதீத அக்கறை காட்டிவந்துள் ளார்கள்.
எஸ்.எம். ஹனிபா அவர்கள் கனிவான சுபாவமும் முத்தமிழ்ப் பற்றும் விரிந்த உள்ளமும் விசாலமான சிந்தனைகளும் உடையவர். பல்கலைக்கழகத்தில் தனக்கு ஆசான்களாக விளங்கிய பேராசிரியர் கள் க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன் ஆகியோர் மீது பெருமதிப் பும் பெருவிருப்பும் கொண்டவர். அவரது தமிழ்ப்பற்றினையும், இலக் கியப் பணிகளையும் தமிழ் அறிஞர்கள் மீது வைத்திருக்கும் பெரு மதிப்பையும் வியக்கத்தக்க அவரது நூல் வெளியீட்டுப் பணிக ளையும் ஆய்வு முயற்சிகளையும் பலர் பலவாறெல்லாம் பாராட்டிக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். அனைவரும் இவரது இன, மத பேதம் கடந்த தமிழ் இலக்கியப்பணிகளை விதந்து கூறியிருக்கிறார்கள். ஒருபுறம் அகன்று விரிந்த தமிழ் இலக்கிய உலகிற்கும், மறுபுறம் அவ்வுலகின் மிக முக்கிய கூறாக விள்ங்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகிற்கும் அவர் ஆற்றியுள்ள பணிகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியன.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 28

எஸ்.எம். ஹனிபா
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவியாக விருந்த சியாமா யூசுப் என்பவரால் இலக்கியச்சுவடுகள் என்ற அரிய நூல் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டமாணித் தேர்வுக்காக சியாமா யூசுப் சமர்ப்பித்த ஆய்வேட்டின் நூல்வடிவமாகும். அந்த ஆய்வு முற்றாக அறிஞர் எஸ்.எம்.ஹனிபாவின் தமிழ்ப்பணிகள் பற்றியதாகும். 1953 ஆகஸ்ட் மாதம் தமிழ் மன்றத்தின் ஆரம்பம் முதல் 1998ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய வரலாற்றையும் அதனுாடாக அறிஞர் ஹனிபா அவர்களின் தமிழ்ப் பணியையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழ்மன்றம் 100 நூல்களுக்கு மேலாக வெளியிட்டு வைத்துள்ள நிலையில் 1998ம் ஆண்டு வரை தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் சியாமா யூசுப் அவர்கள் இலக்கியச் சுவடுகள் என்ற இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார்.
இதற்கு முன்னரும் சிலர் ஹனிபா அவர்களது பணி பற்றி பல்வேறு கட்டுரைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ளனர். அந்த வகையில் உடத்தலவின்னை சிந்தனைவட்ட தாபகர் பீ.எம். புன்னியாமீன், ஹனிபா அவர்களது வாழ்க்கை வரலாறு, மற்றும் அவர்களது நூல்கள் பற்றி ‘இலக்கிய உலா' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். புன்னியாமீனின் மற்றொரு நூல் ‘இலக்கிய விருந்து' என்பதாகும். இதில் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் முதல் முப்பது வெளியீடுகள் பற்றிய கருத்துக்களை அவர் உள்ளடக் கியிருந்தார். நூலின் பின்னிணைப்பாக கல்ஹின்னை தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளான 35 நூல்கள் பற்றிய விபரமும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒன்றிரண்டு சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும், ஆங்கில நூல்கள் தவிர்ந்த அனைத்து நூல்களும் ஈழத்துத் தமிழ், முஸ்லிம் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களாகும்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ம் திகதி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மன்றத்தின் 100வது நூல் வெளியீடு இடம்பெற்றுள்ளது. மலை ஒளி என்ற அந்த நூலின் வெளியீட்டு விழாவன்று அறிஞர் ஹனிபாவுக்கு தமிழ்க்காவலர் என்னும் பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 29

Page 17
எனப்.எம். ஹனிபா அறிஞர் ஹனிபா அவர்களுக்கு இப்போது 78 வயதாகின்றது. ஈழத்து இலக்கியப்பரப்பில் நின்று நூல் வெளியீட்டில் தன் வாழ்வின் பெரும் பங்கைக் கழித்த முதுபெரும் அறிஞர் எஸ்.எம்.ஹனிபா மிக அண்மைக் காலத்தில் "சோனியா சுயசரிதை' என்ற நூலை கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 105வது வெளியீடாக டிசம்பர் 2005இல் வெளியிட்டுள்ளார். அயராத தமிழ்ப்பணியில் ஈடுபடும் அவர் மேலும் பல படைப்புக்களைத் தரும் வகையில் மேலும் பலகாலம் வாழ வாழ்த்துவோம்.
நன்றி; ஐ.பி.சி. காலைக்கலசம், 22.06.2003,
சுடரொளி, வைகாசி-ஆனி,2005.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 30

3
மலையக மக்களின் புரட்சிக்குரல்: அமரர் இர.சிவலிங்கம்
மலையக மண்ணில் முகிழ்ந்து, வளர்ந்து மணம்பரப்பிய சிந்தனையாளர்களில் இர. சிவலிங்கம் அவர்கள் முக்கியமானவர். சமூகப்பற்றுள்ள போராளியான அமரர் இர. சிவலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளரும், கட்டுரையாளருமாவார்.
ஹட்டன் பிரதேசத்தில் பிறந்த இவர் இளம் வயதில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1960ம் ஆண்டுக்காலப் பகுதியில் அதே கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இறுதியில் அக்கல்லூரியின் அதிபராகவும் பதவி வகித்தவர். இவரது ஆசிரியப் பணியின்போது, மலையக இளைஞர்களிடையே மலையகம் என்ற இன அடையாளத்தையும், மலையக மக்கள் தனியான வரலாற் றுப் பாரம்பரியத்தையும், கலை கலாச்சார விழுமியங்களையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்ற உணர்வினையும் ஏற்படுத்த அயராது பாடுபட்டவர். இவருடன் இணைந்து ஆசிரியராக இருந்த எஸ்.திருச்செந்தூரனும் இலக்கியப் படைப்புக்களின் வாயிலாகத் தன் கருத்துக்களை இளைஞர்களிடையே முன்வைத்து வந்தார்.
மலையக இலக்கியக் கர்த்தாக்கள் - என். செல்வராஜா 3.

Page 18
அமரர் இர. சிவலிங்கம்
மலையக மக்களின் வரலாற்றில் முதல் தடவையாக மலைய கப் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் 1964ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு அடிப்படையில் உந்துகோலாக இருந்தவர் அமரர் இர.சிவலிங்கம். கல்வியே மலையக மக்களிடையே விடிவைக் கொண்டுவரும் என்று தீவிரமாக நம்பியவர்.
"மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்" என்ற பெயரில் ஒரு இளைஞர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் இருந்து இளைஞர்களை வழிநடத்தியவர். கட்டுரை, பேச்சுப் போட்டி களின் மூலம் இளைஞர்களின் அறிவை வளம்படுத்தும் நடவடிக்கை களையும், நடனம், நாடகம் என்று கலையார்வத்தை வளர்க்கும் பணிகளிலும் இலங்கையில் இச்சங்கம் இர.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் செயலாற்றி வந்ததை பலரும் அறிந்திருப்பர்.
1983 ஆடிக் கலவரத்தின் பின்னர் சிவலிங்கம் அவர்கள் தமிழகம் சென்று நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த போதும், அவர் வாழ்ந்திருந்த அந்த நீலகிரி மாவட்டத்தில், தாயகம் திரும்பிய மலையக மக்களின் உயர்விற்காகவே தொடர்ந்தும் உழைத்தவர். அவர்களின் உரிமைக்காகப் போராடியதால் இந்தியாவிலே செங்கல் பட்டு சிறப்புமுகாம் என்ற வெஞ்சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக அரசினால் மறைக்கப்பட்டு வந்த செங்கல்பட்டு சிறப்பு முகாம், ஈழத்தமிழர்களை கேள்வி நியாயமின்றி அடைத்துச் சித்திரவதைப் படுத்தும் கொடுமையான சிறைச்சாலையாகும். அந்தச் சிறப்புமுகாம் பற்றி பத்திரிகைகளில் எழுதி உலகின் கவனத்தை ஈர்த்தவர் இர. சிவலிங்கம் அவர்கள்.
போராட்டம் என்பது இவருடன் ஒட்டிப்பிறந்தது போலும். இந்தியத் தலைவர் அம்பேத்காரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் கோத்தகிரியில் இவரது தலைமையில் ஏற்பாடு செய்யப் பட்ட பேரணி ஊர்வலம் இவரது ஆளுமையின் வெளிப்பாடாயமைந்தி ருந்தது. கோத்தகிரி காந்தி மைதானத்தில் அந்தப்பிரதேசம் முன்னெப்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 32

அமரர் இர. சிவலிங்கம் போதும் கண்டிராத அளவில், 15000க்கும் அதிகமான தமிழ் மக்கள் அவரின் பின்னால் அணிதிரண்டனர். தமிழக அரசியல் செல்வாக்கு, தமிழகப் பொலிசாரின் மக்கள் விரோதப் போக்கு, அரச ஊழியரின் அதிகாரத் திமிர் இவை எல்லாவற்றையும் துச்சமென மதித்து அந்த மக்கள் சிவலிங்கத்தின் தலைமையில் அணிதிரண்டு கோத்தகிரி வீதிகளில் ஆர்ப்பரித்துச் சென்றமை, அதிகார வர்க்கத்தை மிரளவைத் ததுடன் சிவலிங்கத்தின் செல்வாக்கையும் அவர்களுக்கு வெளிச்ச மிட்டுக் காட்டியது. w
போராட்டம் என்பது இவரது வாழ்வுடன் பின்னிப்பிணைந்த தாகவே இருந்திருக்கின்றது. இந்தியாவில் இவர் தங்கியிருந்த வேளையில், தாயகம் திரும்பிய அரசியலேயறியாத அப்பாவி மலையகத் தமிழர் நீலகிரியில் உள்ளக அரசியல் காரணங்களுக்காக மனித வேட்டையாடப்பட்ட சம்பவம் இவரை மிகவும் பாதித்தது. அரசியல் அச்சுறுத்தலுக்கு இவர் உட்பட்டிருந்த வேளையிலும்கூட இவரால் எதிர்த்து நின்று போராடாதிருக்க இயலவில்லை. இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருந்த இதய நோயாளியான இவர் தான் அந்நியர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம் என்ற ஆபத்தான நிலை நிலவிய வேளையிலும் ஒரு இந்திய கலெக்டர் அலுவலகத்தையே கேரோ செய்யும் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்திருந்தார் என்பதிலிருந்து இவரது அஞ்சாத நெஞ்சுரம் தெரிகின்றது.
சிறப்பு முகாமிலிருந்து பல்வேறு கொடுமைகளின் பின்னர் விடுதலையாகி 1999இல் மீண்டும் இலங்கை வந்து மலையக மக்களுக் காகத் தொடர்ந்தும் உத்வேகத்துடன் பணியாற்றியவர். இந்திய புலப்பெயர்வின் போது தான் பெற்ற பரந்த அனுபவங்களின் துணை யுடன் மலையகத்தில் மீண்டும் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் 2000ம் ஆண்டு ஆனி மாதம் 9ம் திகதி திடீரென்று இர. சிவலிங்கம் அவர்கள் அமரரானார். இவரது நினைவாக கோத்தகிரி யில் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தால் அன்னாருக்கு நினைவுச்சமாதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 33

Page 19
அமரர் இர. சிவலிங்கம்
இர. சிவலிங்கம் நாற்பதாண்டு காலமாக எழுதிவந்தவர். இவரது படைப்புக்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியான சஞ்சிகைகளில் காலத்துக்குக் காலம் வெளிவந்திருந்தன. The Bettayal of Indian Tamils in Sri Lanka 6T66rp b|r(86) 3615 gardiologists) 6T(p5 வெளியிட்ட ஒரேயொரு நூலாகும். மலையகத் தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த துரோகத்தை சர்வதேச சமூகத்தின் பார்வைக்குச் சமர்ப்பிக்கும் முயற்சியாக இது அமைந்தது. ஆங்கிலம் இவரது போதனாமொழியாக இருந்தபோதிலும், சமூகப் பற்றுக் காரணமாக ஏராளமான ஆக்கங்களைத் தமிழிலும் எழுதியுள்ளார். இவரது பன் மொழி ஆளுமையும் பல்துறைப் புலமையும் இவரது படைப்புக்களில் பிரகாசிக்கின்றன. சிதறிக் கிடந்த அவரது படைப்புக்களைத் தேடித்தொ குத்து வெளியிடும் பணியில் ஈடுபட்ட எச்.எச். விக்ரமசிங்க, தை.தனராஜ் ஆகியோர் 2001இல் மலையகச் சிந்தனைகள் என்ற நூலை பதிப்பித்திருந்தனர். இதில் அவரது 15 கட்டுரைகள் இடம்பெற் றுள்ளன.
இவரால் உருவாகிய மலையகத்தின் புத்திஜீவிகள் இவரது மறைவின் நினைவாக 2000இல் இர. சிவலிங்கம் அவர்களின் பெயரில் ஞாபகார்த்தக் குழுவொன்றினைத் தாபித்து, சிவலிங்கத்தின் படைப்புக் களை பிரசுரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் ஆண்டுதோறும் நினைவுப்பேருரை களையும் நிகழ்த்தி வருகின்றனர்.
2003இல் "மலையக மக்களின் சமகாலப் பிரச்சினைகளும் அவற்றிற்கான சாத்தியமான தீர்வுகளும்" என்ற தொனிப்பொருளில் ஆய்வுக் கருத்தரங்கொன்றை இவர்கள் நடத்திமுடித்திருந்தனர். இதன் போது வாசிக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பான ஆய்வுகள் நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. "மலையக மக்களின் சமகால பிரச்சினைகள் ஒரு பல்நோக்குப் பார்வை" என்ற தலைப்பில் மலையக சிந்தனையாளர் அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவின் சார்பாக எம். வாமதேவன், சி. நவரட்ணம் ஆகியோரால் தொகுக்கப் பட்டது. இந்நூலில் ஹட்டன் நகரில் மேற்படி குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வில் 19.07.2003 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அடங்குகின்றன.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா - 34

அமரர் இர. சிவலிங்கம்
சமூக விடுதலைப் போராளியான இவர் தனது அனுபவங்களை முழுமையாக எழுத்தில் பதிவுசெய்யத் தவறிவிட்டார் என்றே குறிப்பிடத் தோன்றுகின்றது. அவரது சமூகவாழ்வின் பெரும்பகுதியை அல்லலுற்ற மலையக மக்களின் விடிவுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதி லும், அவற்றுக்காக அப்பாவி மக்களை அணிதிரட்டுவதிலும் பெரும் பான்மையான பொழுதைக் கழித்திருந்தார். இவரது எழுத்துப்பணி இதனால் இடைக்கிடையே தடங்கலுக்குள்ளான போதிலும் ஆங் காங்கே இவரது படைப்புக்கள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே இருந்துள்ளன.
மலையகம் கண்ட ஒரு உன்னத போராளியின் வாழ்வு முழு மையாக இந்த மண்ணின் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்பை அர்த்தமுள்ளதாக்க வேண்டிய பணி இவர் வளர்த்து விட்டுச் சென்ற இளம்போராளிகளுக்கும் மலையகத்தின் அறிவுஜீவிகளுக்கும் உரியது. இவர் வாழ்ந்த இடமெங்கும் சிதறவிடப் பட்டுள்ள இவரது கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நேர்த்தி யாகப் பதிவுக்குள்ளாக்கப்படல் வேண்டும். இதை இவர்கள் தாமத மின்றி முன்னெடுத்துச் செல்லவேண்டும். அவ்வகையில் அமரர் இர. சிவலிங்கம் என்ற மனிதனின் வாழ்வும் பணியும் இறவாமல் அடுத்த தலைமுறையினரின் வழிகாட்டியாக நின்று நிலைக்க வழிசெய்யலாம்.
நன்றி: சுடரொளி, மே-ஜன், 2005
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 35

Page 20
மலையகத்தின் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை.
இலங்கையில் மலையக மக்களின் அவல வாழ்வியல் பற்றி தமிழுக்கு அப்பால் ஆங்கில மொழி ஊடக உலகில் அறியப்படுவ தற்கு காரணமானவர்களாக அழகு சுப்பிரமணியம், டி.இராமநாதன், ராஜா புரக்ரர், சி.வி.வேலுப்பிள்ளை ஆகியோர் ஈழத்து இலக்கிய உலகில் இன்று இனம்காணப்படுகின்றனர். இவர்களுள் கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கவாதி, நாடாளுமன்ற உறுப்பினர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவராக சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் திகழ்ந்துள்ளார்.
வட்டகொடவில் பிறந்த சி.வி. அவர்களின் பாட்டனார் மலையகத் தோட்டமொன்றில் பெரிய கங்காணியாக இருந்தவர். சி.வி.தன் ஆரம்பக் கல்வியை அட்டன் மிஷனரி பாடசாலையிலும் பின்னர் உயர்கல்வியை கொழும்பு நாலந்தாக் கல்லூரியிலும் மேற் கொண்டார். நுவர எலியவில் காமினி வித்தியாலயத்தில் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பதவி வகித்தார். மலையகத்தின் பணவசதியுள்ள குடும் பத்தில் பிறந்தவராக இருந்ததால், சிறுவயதிலிருந்தே ஆங்கிலக் கல்விபெறவும், இந்தியாவிலிருந்து வருகைதரும் பிரபல இலக்கியப் பிரமுகர்கள் தமது பெற்றோரின் வீட்டில் தங்கிச் செல்வதால் அவர் களுடன் சரளமாக உரையாடி இலக்கிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 36
 

சி.வி. வேலுப்பிள்ளை
இதன் காரணமாக அக்காலகட்டத்தில் மலையக அரசியலிலும் இவர் ஈர்க்கப்பட்டு அதில் ஆர்வம் காட்டினார். இலங்கை இந்தியன் காங்கிரஸின் செயலாளராகவும் பதவி வகித்தார். இதுவே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசாக உருமாற்றம் பெற்றது. அரசிய லில் ஈடுபட ஆரம்பித்த சி.வி. தன் ஆசிரியர் தொழிலுக்கு விடை கொடுத்துவிட்டு முழுநேரத் தொழிற்சங்கவாதியாகவும், இலக்கியவா தியாகவும் ஈடுபடலானார். காங்கிரஸ் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய வேளையில் Congress News என்ற தொழிற்சங்கப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார். அக்காலகட்டத்தில் தான் 1946இல் "முதற்படி" என்ற சிறுநூலையும் எழுதியிருந்தார். இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் பற்றிய கட்டுரை நூல் இதுவாகும். இந்நூல் வெளிவந்த காலத்தில் 1947இல் தலவாக்கலை தொகுதியில் போட்டியிட்ட சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் 4710 அதிகப்படியான வாக்குகளால் அத்தொகுதியில் வெற்றியீட்டினார். 19298 வாக்காளர் களில் 12850 வாக்காளர்கள் அப்பிரதேசத்தில் வாக்களித்திருந்தனர்.
மலையகத்தில் வாய்மொழியாக வழங்கி வந்த நாட்டுப்பாடல் களைத் தேடித்திரிந்து பெற்றுத் தமிழகத்தின் 'மஞ்சரி சஞ்சிகையில் 1959இல் "தேயிலைத் தோட்டப் பாடல்கள்" என்ற தொடராக எழுதி வந்தார். இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவந்த ஆங்கிலச் சஞ்சிகைகளிலும் இவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். பின்னர் தான் சிறுவயது முதலே தொகுத்து வைத்திருந்த இப்பாடல் களை "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்ற தலைப்பில் நூலாகவும் எழுதியிருந்தார். இந்நூல் இவரது மறைவுக்கு முன்னதாக, சென்னை கலைஞன் பதிப்பகத்தின் வாயிலாக 1983இல் வெளியிடப்பட்டது. மலையக மக்களின் வாழ்வியலின் குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தைத் தரும் தாலாட்டு, ஒப்பாரி, காதல் பாட்டுக்கள் என்று அவர்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட ஏராளமான கிராமியப் பாடல்க ளை சி.வி.அவர்கள் இந்நூலில் தொகுத்திருந்தார். 1983 இலங்கையில் பேரினவாதத் தி கொழுந்து விட்டெரிந்த காலகட்டம், அவ்வேளையில் வெளியாகிய இந்நூல் பரவலாக ஈழத்து வாசகரைச் சென்றடைய வாய்ப்பில்லாது போய்விட்டமை ஒரு குறையாகும்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 37

Page 21
சி.வி. வேலுப்பிள்ளை
இவரது கிராமிய இலக்கியத்தின்பாற்பட்ட ஆர்வத்தின் காரண மாக மலையக இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பில் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர்.சிவகுருநாதன் தலைமையில் சி.வி. அவர்களை பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பாராட்டி "மக்கள் கவிமணி" என்ற பட்டத்தைச் சூட்டி கெளரவித்தார்.
நாட்டாரியலில் மட்டுமன்றி மலையக படைப்பிலக்கியத்திலும் சி.வி.அவர்கள் அக்கறை காட்டிவந்துள்ளார். ஆரம்பத்தில் ஆங்கிலத் திலும், பிறகு தமிழிலும் தன் படைப்புக்களை மேற்கொண்டுள்ளார். 1931இல் “Pathmaini’ (பத்மாஜினி) என்ற கவிதாநாடகமும், 1947இல் Wayfarer (வழிப்போக்கன்) என்ற வசனகவிதைத் தொகுப்பும் ஆங்கிலத்தில் ஆரம்பத்தில் வெளிவந்திருந்தன.
660Tj 195496) In the Ceylon Tea Garden 6T6ip E66055 தொகுப்பை இவர் எழுதியிருந்தார். இந்நூல் மலையக மக்களில் அவலவாழ்வை மட்டுமல்லாது சி.வியையும், தமிழ் அறியாத சர்வ தேச சமூகத்திற்கு இனம் காட்டியது. 1963ம் ஆண்டில் ஆசிய ஆபி ரிக்க கவிதைகளின் முதலாவது தொகுப்பு வெளிவந்திருந்தது. 70 உலகக் கவிஞர்களின் கவிதைகளை தேர்ந்து இத்தொகுப்பை ஆக்கியிருந்தார்கள். இத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ்க் கவிஞன் சி.வி. அவர்களாவார். In the Ceylon Tea Garden என்ற இக்க விதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் சக்தி அ. பாலையா அவர்கள் தமிழாக்கம் செய்து "தேயிலைத் தோட்டத்திலே" என்ற தலைப்பில் 1969இல் கண்டி, செய்தி பதிப்பகத்தின் வாயிலாக ராமு நாகலிங்கம் அவர்களின் மூலம் வெளியிட்டிருந்தார். இந்நூல், வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டியாக அமைந்தி ருந்தது. ஆங்கில மூலத்திலிருந்து இந்நூல் ரஷ்யமொழியிலும் பின்னர் மொழிபெயர்க்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 38

சி.வி. வேலுப்பிள்ளை
"Born to Labour' ( 60psists' lipbg56 jeb6f) 6T65rp b|T6) இவர் 1970இல் எழுதிய விவரணக் கட்டுரைத் தொகுப்பு நூலாகும். 1981இல் மு.நித்தியானந்தன் அவர்களின் வைகறை வெளியீடாக பதுளையிலிருந்து "வீடற்றவன்" என்ற இவரது நாவல் வெளியானது. சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற இந்நூல் பின்னர் 1984இல் தமிழகத் தில் NCBHவெளியீட்டாளர்களால் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சுயமாகத் தமிழில் எழுதியதும் தனது சுயசரிதை கலந்தது மான நாவல் "இனிப்படமாட்டேன்" என்பதாகும். வீரகேசரியில் தொட ராக வெளிவந்தபின்னர் இது தமிழகத்தில் தனிநூலாகவும் வெளியிடப் பட்டது. இதுவே சி.வியின் இறுதி நாவலாகும். இது பின்னாளில் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் அதிகம் எழுதிவந்த சி.வி. அவர்கள் பின்னாளில் தனது எழுத்துக்கள் தான் சார்ந்த மக்களையும் சென்றடையவேண்டும் என்று விரும்பினார். தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையின் வெவ்வேறு படிமங்களை தினகரன் பத்திரிகையில் "தேயிலைத் தோட்டத்திலே" என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். இக்கட்டுரைத் தொடரில் தான் அதுவரை வழக்கிலிருந்து வந்த "தோட்டக்காடு", "தோட்டக்காட் டார்" என்ற பதங்களுக்குப் பிரதியீடாக, ஒரு மண்ணின் கெளரவத் துடன், "மலைநாடு", "மலைநாட்டார்" என்ற பதப் பிரயோகங்கள் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதங்களை மலையக இலக்கி யங்களில் நிலைநிறுத்தி வைத்த பெருமை இவரது நல்லபிமானி களான பேச்சாளர்கள் இர.சிவலிங்கம், ஏ.இளஞ்செழியன் ஆகியோ ரைச் சாரும்.
1984 நவம்பர் 16ம் திகதி மறைந்த மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதி மூச்சுள்ள வரை தனது எழுத்துக்களைப்போலவே வாழ்ந்து காட்டிய ஒரு தொழிற்சங்க இலக்கி யவாதி என்று போற்றப்படுகின்றார். பாரதியின் இறுதி ஊர்வலத்தில 10பேர்கூடக் கலந்துகொள்ளவில்லை என்று வரலாற்றில் அறிந்துவைத் துள்ளோம். மக்கள் கவிஞர் அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி ஊர்வலமும் அவ்வாறே நிகழ்ந்தது. 1984 நவம்பர் நடுப்பகுதி
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 39

Page 22
சி.வி. வேலுப்பிள்ளை
யில் மீள முளைவிட்ட தென்னிலங்கைத் தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலையடுத்து அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் பட்டிருந்த வேளையில் அமரர் சி.வி.வேலுப்பிள்ளையின் மரண ஊர் வலமும் தடைசெய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்ப உறவினர்க ஞடனேயே அமரரின் இறுதிக்கிரியைகள் ஆரவாரமின்றி நடந்தேறின.
நன்றி. ஐ.பி.சி. காலைக்கலசம், 13.03.2005,
சுடரொளி, மார்ச்-ஏப்ரல், 2005
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 4()

மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவாவும் அவரது கலை இலக்கியப் பயணமும்
நூற்றாண்டுப் பழமை மிக்க மலையகத்தின் கலை இலக்கி யத்துக்கு உயிர்கொடுத்த கலை, இலக்கியவாதிகளுள் அந்தணி ஜீவா அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். கண்டியூர் கண்ணன், மாத்தளை கெளதமன், கவிதா ஆகிய புனைபெயர்களில் ஆரம்பத்தில் எழுதி வந்தபோதிலும் இவரது படைப்புக்களின் வாயிலாக இறுதியில் அந்தனி ஜீவா என்ற பெயரே கலை இலக்கிய அரங்கியல் துறையில் நின்று நிலைத்துவிட்டது. 45 ஆண்டு காலமாக இவரது கலை இலக்கியப் பணி ஆங்காங்கே பதிவாகி வந்துகொண்டிருக்கின்றது.
1944ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி கொழும்பில் பிறந்த இவர் பாடசாலை நாட்களிலேயே பத்திரிகைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். பாடசாலை நண்பர்களுடன் இணைந்து அந்நாளில் வெளியிட்ட "கரும்பு' என்ற சிறுவர் சஞ்சிகை யின் சில இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராகவும் அந்தனி ஜீவா இருந்துள்ளார். அக்காலகட்டத்தில், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாணவ முரசு போன்ற பல சிறுவர் இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 41

Page 23
அந்தனி ஜீவா
தமிழருவி, மாணவன், கலைமலர் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் இவர் பரிசுபெற்றுள்ளார். வீரகேசரியிலும் இவரது இளமைக்காலப் படைப்புகள் வெளிவந்த சுவடுகள் காணப்ப டுகின்றன. 1964ம் ஆண்டு ஏப்ரல் 21 வீரகேசரி இதழில் இவ்வார மாணவர என்ற தலைப்பில் அந்தனி ஜீவா பற்றிய இலக்கியக் குறிப்பொன்று காணப்படுகின்றது. இளம் பேச்சாளராக இவர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுப் பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற செய்திக்குறிப்பொன்றும் 1964ம் ஆண்டு வீரகேசரிச் செய்தியில் காணப் படுகின்றது.
இளவயதில் பத்திரிகைத்துறையில் இவர் கொண்ட ஈடுபாடு பின்னாளில், இலங்கை சமசமாஜக் கட்சி வெளியிட்ட ஜனசக்தியிலும், அதைத் தொடர்ந்து மலையகத்தின் சிறு சஞ்சிகைகளாக மலர்ந்த தேசபகதன், குன்றின் குரல், கொழுந்து ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. கலையையும் இலக்கியத் தையும் வெறும் பொழுதுபோக்குக்காகவன்றி, சமூக விழிப்புணர் வுக்கான ஊடகமாகக் கருதித் தன் பணியை ஆற்றும் இவர் அடிக்கடி கூறும் வாசகம், ‘கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல. உயிர்’ என்பதாகும்.
பத்திரிகை ஆசிரியராகத் தன் மலையக இலக்கிய வாழ்வினுள் பிரவேசித்த போதிலும், அந்தனி ஜீவா அவர்கள், கட்டுரை ஆசிரிய ராக, சிறுகதை எழுத்தாளராக, நாடகாசிரியராக, நாடக இயக்கு நராக, தேசியப் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளராக, நூல் வெளியீட் டாளராக என்றெல்லாம் பன்முகப்பட்ட பங்களிப்பினை இன்றுவரை வழங்கி வருகின்றார்.
அரங்கியல் துறையில் இவரது பணிகள் விதந்து கூறத்தக் கவை. இத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றி வந்துள்ளார். 1980களில் மலையகத்தில் வீதி நாடகங்களை முதன்முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமையை யும் இவரே பெற்றிருக்கிறார். இந்த வீதி நாடகங்களை நடத்துவதற்கு
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 42

அந்தனி ஜீவா
இவர் தமிழ்நாட்டில் வீதி நாடக முன்னோடியான ‘பாதல் சர்க்காரின் பயிற்சிப் பட்டறையில் 1980இல் பெற்ற தொழில்நுட்ப அறிவு மிகவும் துணைபுரிந்திருந்தது. இவரது வெளிச்சம், சாத்தான் வேதம் ஒதுகின்றது போன்ற வீதி நாடகங்கள் முக்கியமானவை. மக்களுடன் நேரடியானதும் நெருக்கமானதுமான தொடர்பினை எற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெரு நாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயிர் பெற்றதெனலாம். புகழ்பூத்த சிங்கள நாடகக் கலைஞர்களான தயானந்த குணவர்த்தன, ஹென்றி ஜயசேன போன்றோரினதும், தமிழ் நாடகக் கலைஞர்களான வீரமணி, சுஹைர் ஹமீட் ஆகியோரினதும் அரங்கியல் தொடர்பு இவரது அரங்கியல் பணிகளுக்கு மெருகூட்டியிருந்தன. 1970இல் “முள்ளில் ரோஜா' என்ற பெயரில் இவர் எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றிய முதலாவது நாடகம் அந்தனி ஜீவாவை ஈழத்து தமிழ் அரங்கியல் உலகில் இனம் காட்டியிருந்தது. அன்று தொடக்கம் இன்று வரை சுமார் 14 நாடகங்கள் வரை இவர் மேடையேற்றியுள்ளார். நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட பறவைகள', மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே கொண்ட ‘கவிதா' போன்றவை இவரது பரிசோதனை முயற்சிகளாகும்.
இவரது எழுத்தில் மலர்ந்தது தான் ‘அக்கினிப் பூக்கள’ என்ற மேடை நாடகமாகும். தொழிலாளர் போராட்டங்களையும வேலை நிறுத்தங்களையும் கருவாகக் கொண்ட இந்நாடகம் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் முதலில் மேடையேற்றப்பட்டது. சுமார் 16 தடவைகள் பல்வேறு இடங்களிலும் இது மேடையேற்றப்பட்டது. பதுளையில் நடந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகாநாட்டின் போது அரங்கேற்றப்பட்ட ‘அக்கினிப் பூக்கள்’ நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மலைநாட்டுத் தொழிலாளர்கள் உணர்ச்சி மேலீட்டால் முழக்கமிட்டு ஆர்ப்பரித்த சம்பவத்திலிருந்து இவரது நாடகங்கள் எவ்வளவு தூரம் மக்களுடன் ஒன்றிணைகின்றன என்று அறியமுடி கின்றது.
'அக்கினிப் பூக்கள்', பின்னர் அதன் பிரபல்யம் கருதி நூலுருவிலும் வெளிவந்திருந்தது. இந்நூல் 1999ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்குரிய அரச சாகித்திய விருதினையும் பெற்றிருந்தமை
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 43

Page 24
அந்தனி ஜீவா
குறிப்பிடத்தகுந்தது. அக்கினிப் பூக்கள், கண்டி, ஞானம் பதிப்பகத் தினால் டிசம்பர் 1999 இல் 112 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் பற்றிய இந்த நாடகம் இலங்கையில்- குறிப்பாக மலையகத்திலும் தென்னிலங்கையிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டது. 11 காட்சிகளிலான இந்த நாடகத்துடன், பின்னிணைப்பாக, அந்தனி ஜீவா நெறிப்படுத்திய பிற நாடகங்களின் பட்டியலும், தினகரனில் 05.12.1986 அவர் எழுதிய நானும் என் நாடகங்களும் என்ற கட்டுரையும் அந்தனி ஜீவா பற்றிப் பிறர் வெளியிட்ட நல்ல கருத்துக்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
1974இல் இவரது சர்ச்சைக்குரிய நாடகமான வீணை அழு கின்றது' என்ற சமூக நாடகம், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் தலையீட்டினால், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. மீனவர் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்ட அலைகள்’ என்ற நாடகம் இலங்கை கலாசாரப் பேரவையின் 1978ஆம் ஆண்டுக்குரிய தேசிய நாடகவிழாவில் இரண்டாவது பரிசினைப் பெற்றுக்கொண்டது.
அந்தனி ஜீவா முற்போக்குச் சிந்தனை கொண்ட கலை இலக்கியவாதியாகத் திகழ்வதற்கு இலங்கையின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தொடர்பும், முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டமையுமே காரணம் என்று நா.சோமகாந்தன் அவர்கள், அந்தனி ஜீவாவை அட்டைப்பட நாயகனாகக் கொண்டு வெளிவந்திருந்த மல்லிகை இதழொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் பிரவேசம் செய்திருந்த போதிலும் அந்தனி ஜீவா அவர்கள் குறிப்பிடத்தகுந்த சில சிறுகதைகளையே எழுதியிருக்கின்றார் என்று அறியமுடிகின்றது. அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதுவும் நூலுருவில் வெளிவர வில்லை. மலடு (ஈழநாடு), விதி (சிந்தாமணி), புருட் சலட் (சிரித்தி ரன்), தவறுகள் (அமுதம்), நினைவுகள் (தேசபக்தன்), ஆகிய சிறுக தைகளை இவரது சிறந்த சிறுகதைகளாக ராஜ ரீகாந்தன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 44

அந்தனி ஜீவா
ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற நூலை எழுதிய செங்கை
ஆழியான் அவர்களும், அந்தனி ஜீவாவின் புருட்சலட் என்ற சிரித்திரன்
சிறுகதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தி எழுத்துக்களைப் பொறுத்தவரையில், தினகரனில் இவர் எழுதிய நினைத்துப் பார்க்கிறேன், படித்ததும் - பார்த்ததும் - கேட்டதும் ஆகிய இரு பத்தி எழுத்துக்களும் பிரபல்யமானவை.
மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிக்காகவும், மலையக எழுத்தாளர்களின் நலன்பேணவும் என உருவான ‘மலையக கலை இலக்கியப் பேரவையின் செயலாளராக இருந்து இவர் ஆற்றிய பணிகளை இரா.அ. இராமன் அவர்கள் 2002ம் ஆண்டுக்குரிய மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலரில் விதந்து கூறியிருக்கிறார். கண்டியிலிருந்து இவர் இயக்கும் மலையக வெளியீட்டகம் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தின் மூலமும் பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
அந்தனி ஜீவா எழுதியும் தொகுத்தும் நூலுருவில் வெளியிட்ட படைப்புக்கள் பலவாகும். இவற்றில் பல மலையக வெளியீட்டகத்தினா லும், பிற மற்றைய வெளியீட்டகங்களாலும் தமிழகத்திலும், இலங்கை யிலும் வெளியிடப்பட்டுள்ளன.
1978ம் ஆண்டில் தமிழ்நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற கலைஇலக்கிய பெருமன்ற மகாநாட்டில் கலந்துகொண்டு இவர் நிகழ்த்திய ஆய்வுரை ஈழத்தில் தமிழ் நாடகம் என்ற பெயரில் தமிழ்நாட்டி லிருந்து சிவகங்கை, அகரம் வெளியீடாக 1981இல் நூலுருவில் வெளிவந்திருந்தது. உலக நாடகப் பின்னணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சி இவ்வாய்வில் ஆராயப்பெற்றிருந்தது. நாடகவளர்ச் சியிலும், கூத்து ஆராய்ச்சிகளிலும் பங்குபற்றிய சில பிரபல்யமான ஈழத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களது பணியையும் அந்தனி ஜீவா இவ்வாய்வில் சுருக்கமாக விளக்கியிருந்தார்.
அன்னை இந்திரா என்ற இவரது அடுத்த நூல், கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் மூலம், அதன் 25வது வெளியீடாக, கண்டியிலிருந்து
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 45

Page 25
அந்தனி ஜீவா
எஸ்.எம் ஹனீபா அவர்களால் 1985 மே மாதத்தில் வெளியிடப்பட்டது. இது பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1984 ஒக்டோபர் 31ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக அந்தனி ஜீவா எழுதி தினகரன் வாரமஞ்சரியில் பல வாரங்கள் தொடராக வெளி வந்த கட்டுரையின் நூலுருவாகும். அந்தனி ஜீவாவின் 25ஆண்டுக் கால எழுத்துப் பணியை கெளரவிக்கும் வகையில் இந்நூல் வெளி யிடப்பட்டிருந்தது.
காந்தி நடேசையர் என்ற மற்றொரு நூல் அந்தனி ஜீவாவின் பெயர் சொல்லும் குறிப்பிடத்தகுந்த நூலாகும். கண்டி, மலையக வெளியீட்டகம், நவம்பர் 1990இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. 19ம்-20ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மலையக மக்கள் பட்ட அவலங்களிலிருந்து அவர்களை விடுவிக்கப் போர்க்குரல் எழுப்பிய முதல் வழிகாட்டியான கோதண்டராம நடேசையர் அவர்களின் வாழ்வும், பணியும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இலங்கை தொழிற்சங்க வரலாற்றிலும், மலையக மக்களின் வரலாற்றிலும் மிக முக்கிய இடம் பெற்ற நடேசையரின் வாழ்வும், பணியும் இலங்கை யின் மலையக இலக்கியத்துடன் இரண்டறக் கலந்ததொன்றாகும். இவரது வாழ்வையும் மலையகத் தமிழரின் விடிவுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் அந்தனி ஜீவா இந்நூலில் பதிவுசெய்திருந்தார்.
மலையகமும் இலக்கியமும் என்ற நூல் அந்தனி ஜீவா அவர்களால் தனது மலையக வெளியீட்டகத்தின் வாயிலாக நவம்பர் 1995 இல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகப் புலம்பெயர்ந்து இலங்கை வந்த பொழுது தங்களுடன் பாரம்பரியக் கலை வடிவங்களையும் வாய்மொழி இலக்கியங்களையும் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். காலமாற்றத்தில் அந்த இலக்கிய வடிவங்களும் மாறி மலையக இலக்கியமாகத் தனித்துவமாகப் பரிணமித்துள்ளது. மலையக இலக்கி யத்தின் வரலாற்றை அந்தனி ஜீவா இந்நூலில் விரிவாக ஆராய்ந் துள்ளார். மலையகமும் இலக்கியமும் என்ற இந்த நூல் 1996ல் அரசகம மொழித் திணைக்களத்தினர் நடத்திய தமிழ்த் தின விழாவில் அரச இலக்கிய விருது கிடைத்தது. காந்தி நடேசையர் நூலை யொட்டி, மலையக மக்களின் அவல வாழ்வினை உலகிற்கு எடுத்துக்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 46

அந்தனி ஜீவா
காட்டி அவர்களது பார்வையை விரியச் செய்த இலக்கியவாதியான சி.வி. வேலுப்பிள்ளை பற்றியும் அந்தனி ஜீவா நூலொன்றை எழுதியி ருந்தார். சி.வி. சில நினைவுகள் என்ற அந்த நூலில் அந்தனி ஜீவா அவர்கள் சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் பற்றித் தன் குறிப்புகளைப் பதிவுசெய்துள்ளார். இதுவும் மலையக வெளியீட் டகத்தின் வெளியீடாக 2002 இல் கண்டியில் வெளிவந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் என்ற தனித்துவம் மிக்க இலக்கிய முயற்சிகள் பேசப்படுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பற்றி நவமணி வார இதழில் மலைச்சாரல் என்ற பகுதியில் மலையக மக்கள் கவிமணி சி.வி சில நினைவுகள என்ற தலைப்பில் அந்தனி ஜீவா அவர்கள் எழுதிய கட்டுரைத் தொடரே இந்நூலாகும்.
மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தா ளர்களின் பங்களிப்பு என்ற பெயரில் அந்தனி ஜீவா எழுதிய மற்றொரு நூல் மலையக வெளியீட்டகத்தினால் ஒக்டோபர் 2002இல் வெளியிடப்பட்டது. இலங்கையின் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 22, 23, 24, ஒக்டோபர் 2002இல் நடைபெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை இதுவாகும். இந்நூலில் அறிஞர் ஏ.எம்.ஏ. அசீஸ், அறிஞர் சித்திலெப்பை, அருள்வாக்கி அப்துல் காதிர், கோட்டாறு செய்குபாபா, கி.மு.நல்ல தம்பிப் பாவலர், பண்ணாமத்துக் கவிராயர், அப்துல் லத்தீப், கவிஞர் அல் அசுமத் போன்றோர் உள்ளிட்ட பல முஸ்லிம் பிரமுகர்கள் மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை இச்சிறு ஆய்வில் மேலோட்டமாக அந்தனி ஜீவா அவர்கள் கோடிட்டுக் காட்டியிருந்தார். உண்மையில் இது ஒரு விரிந்த பெரும் ஆய்வுக்குரிய தளமாகும் என்பதை எவரும் அறிவர்.
மலையகம் வளர்த்த தமிழ் என்ற பெயரில் மலையகத்தின் மற்றொரு இலக்கியவாதியாகவும், அந்தனி ஜீவாவின் இலக்கிய
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 47

Page 26
ந்தனி ஜீவா
இரட்டையராகவும் கருதப்பட்ட சாரல்நாடன் அவர்கள் சென்னையில் முன்னர் இயங்கிய, மலையக பதிப்பாளர் துரை விஸ்வநாதனின் துரைவி பதிப்பகத்தின் வாயிலாக நவம்பர் 1997இல் நூலொன்றை வெளியிட்டிருந்தார். 1990-1995காலகட்டத்தில் சாரல் நாடனால் எழுதப் பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். மலையகம் தொடர் பான கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, நூலகம், நூலியலும் வெளியீட்டுத் துறையும், நாட்டார் வழக்கியல், சிறுசஞ்சிகைகள் எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் எழுதப்பட்டி ருந்தன.
மேற்குறிப்பிட்ட நூலின் அடியொற்றி, மலையகம் வளர்த்த கவிதை என்ற தலைப்பிட்டு அந்தனி ஜீவா அவர்கள் கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் வாயிலாக டிசம்பர் 2002 இல் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். இலங்கையில் மலையக இலக்கியத்துக்கு முன்னோடியாகத் திகழ்வது கவிதை என்பதே இலக்கியத் திறனாய்வாளர்களின் முடிவாகும். அதற்கு முதற் காரணியாக அமைந்தது மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் களே என்பது பொதுவான கருத்தாகும். இவ்வாய்மொழி இலக்கி யங்கள் இன்றும் மலையகத்தில் விருப்புடன் பாடப்பட்டு வருகின்றன. இத்தகைய பின்னணியில் எழுந்த மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அந்தனி ஜீவா அவர்கள் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மலையகம் வளர்த்த கவிதை என்ற பெயரில் நூலாக்கியிருக்கின்றார்.
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் என்ற நூல் அந்தனி ஜீவா அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு கண்டி, மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவெளியீடாக 2002இல் 250 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. கண்டி மாவட்டத் தமிழரின் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம், கலை, பண்பாடு, முதலான பல்துறை அம்சங்களை வரலாற்று ரீதியில் இந்நூல் ஆராய்ந்துள்ளது. கண்டி மாவட்டத் தமிழர்கள். சில வரலாற்றுப் பதிவுகள், கண்டிராசன் கதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் வழிபாடும், கண்டித் தமிழர்களின் சமூக அசைவியக்கமும் பொருளாதாரப் பின்புலமும், கல்வி வாய்ப்புக்களும் கண்டி மாவட்டத்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 48

அந்தனி ஜீவா தமிழரும், கண்டி மாவட்டத்தில் இந்துமதம் - வரலாறும் வளர்ச்சியும், கண்டி மாவட்டத் தமிழர்களின் அரசியல், நாட்டாரியலில் கண்டி, இந்திய வம்சாவளித் தமிழரின் வர்க்க அடுக்கமைவு மாற்றம், கண்டியில் தமிழ் இலக்கியங்கள் ஆகிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துவரும் பெண் படைப்பாளிகளின் பங்களிப்புக்கள் சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதில்லை என்ற ஆதங்கத்தில் அந்தனி ஜீவா அவர்கள் 2000ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தில் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து குறிஞ்சி மலர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். இவரது மலையக வெளியீட்டகத்தின் மூலம் இது வெளியிடப்பட்டிருந்தது. இதே வெளியீட்டகம் பின்னர் 2001இல் சர்வதேச பெண்கள் தினத்தில் மலையக எழுத்தாளர் திருமதி சாந்தாராஜ் அவர்களின் சிறுகதைக ளைத் தொகுத்து சாந்தாராஜின் கதைகள் என்று தலைப்பிட்டு ஒரு தொகுப்பினை வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக குறிஞ்சிக்குயில்கள் என்ற நூலினை அந்தனி ஜீவா அவர்கள் 2002ம் ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு மார்ச் 2002 இல் இவ்வெளியீட்டகத்தின் வழியாக வெளியிட்டிருந்தார். இச்சிறு நூலில் மலையகத்தின் தேர்ந்த பெண் கவிஞர்களான 21 கவிதாமணி களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இக்கவிதைகளில் யதார்த்தபூர் வமான மனவெளிப்பாடுகள் பதிவாகியிருந்தன. மலையக வெளியீட்ட கத்தின் 21வது வெளியீடாக இது வெளிவந்திருந்தது.அம்மா என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அந்தனி ஜீவாவினால் தொகுக்கப்பெற்று, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திசைகள் அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகத்தினரால் 2004 இல் வெளியிடப்பட்டிருந்தது. 208 பக்கம் கொண்ட இந்நூலில் இலங்கையின் மூத்த படைப்பாளிகள் முதல் இன்றைய இளையதலைமுறை எழுத்தாளர்கள் வரை 25 பெண் எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. குந்தவை, யோகா பாலச்சந்திரன், கோகிலா மகேந்திரன், அன்னலட்சுமி இராசதுரை, சந்திரா தனபாலசிங்கம், தாட்சாயணி, எம்.ஏ.ரஹிமா, நயீமா சித்தீக், லரீனா ஏ. ஹக், தாமரைச்செல்வி, பூரணி, பேராதனை ஷர்புன்னிஷா, புசல்லாவை ஸ்மாலிகா, அட்டன் சாந்தாராஜ், சாந்தி மோகன், அக்னஸ் சவரிமுத்து, பாலரஞ்சினி சர்மா, ரோஹிணி
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 49

Page 27
அந்தனி ஜீவா
முத்தையா, சுகந்தி வெள்ளையகவுண்டர், கெக்கிராவை ஸஹானா, பத்மா சோமகாந்தன். குறமகள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ராணிசீதரன், மண்டுர் அசோகா ஆகிய எழுத்தாளர்களின் படைப் புக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அந்தனி ஜீவாவின் அன்னையாரின் நினைவாக அவரது மறைவின் 3ம் ஆண்டு நிறைவு தினத்தில் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களுக்காக உரத்த சிந்தனையை விதைத்தோரும் காலந்தோறும் அந்தனி ஜீவாவினால் பல்வேறு ஊடகங்கள், மற்றும் நூல்கள் வழியாக மீள் அறிமுகம் செய்யப்பட்டு வந்துள்ளார்கள்.அந்த வகையில், மலையக மாணிக்கங்கள் அந்தனிஜீவாவின் குறிப்பிடத்த குந்ததொரு நூலாகும். கொழும்பிலிருந்து துரைவி வெளியீடாக செப்டெம்பர் 1998 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளில் பன்னிருவரைப் பற்றிய தகவல்களைத் தரும் நூல் இதுவாகும். திருமதி மீனாட்சி அம்மையார், பத்திரிகையாளர் கோ.நடேசையர், பெரி சுந்தரம், இராமானுஜம், ஐ.எஸ். பெரேரா, ஜோர்ஜ் ஆர். மோத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை, ஏ.அஸிஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி.ராஜன் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருந்தன.
புதிய வார்ப்புக்கள் என்ற வரிசையில் இளைய தலைமுறை எழுத்தாளர்களையும் பெண் பிரம்மாக்கள் என்ற தலைப்பில் பெண் படைப்பாளர்களையும் பத்திரிகைகளில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா அவர்கள். பின்னாளில் 1997இல் முகமும் முகவரியும் என்ற தொகுப்பு நூலின் மூலம் மலையக எழுத்தாளர்களின் விபரத்திரட்டினையும் இவர் வெளியிட்டிருந்தார். இதில் நாவல் நகர் கே.பொன்னுத்துரையின் உதவியுடன் 1991முதல் சேகரித்த விபரங் களுடன் மத்திய மாகாண இந்து கலாசார கல்வி அமைச்சு சேகரித்த விபரங்களையும சேர்த்து மொத்தம் 68 எழுத்தாளர்களின் விபரங்களை முகமும் முகவரியும் நூலின் முதலாவது தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 50

அந்தனி ஜீவா
எழுத்தாளரின் பெயர், புனைபெயர்கள், தொழில், பிறந்த திகதி, பிறந்த மாவட்டம், எழுதி வெளிவந்த நூல்கள், எழுதிய முக்கிய படைப்பு, சிறு குறிப்பு, முகவரி என்பன ஒவ்வொரு பதிவிலும் இடம் பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து வெளியிடும் பணியை அரச மட்டத்திலும், கொழும்புத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல்கலைக் கழக மட்டத்திலும் மேற்கொள்ளவெனத் திட்டம் தீட்டப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்துள்ள போதிலும், எவையேனும் நூலுருவில் வெளிவந்ததாகத் தகவல் இல்லை. இந்நிலையில், அந்தனி ஜீவாவின் முகமும் முகவரி யும் முயற்சி ஒரு மைல்கல்லாகக் கருதப்படவேண்டும்.
இதே வேளையில், மலையகத்தில் உடத்தலவின்னையில் சிந்தனை வட்டம் பீ.எம். புன்னியாமீன் அவர்கள் சுய முயற்சியில், 2004-2005 காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு ஒன்றினை மூன்று பாகங்களில் வெளியிட்டுள்ளார். நான்காவது பாகம் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் தாங்கியதாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமான தாகும.
அந்தனிஜீவாவின் 60°து அகவையை 2003ம் ஆண்டு நவம்பர் 26இல் கொண்டாடும் நோக்கில் பேராசிரியர் எம்.சின்னத்தம்பி, கலாநிதி துரை. மனோகரன் போன்றோரின் தலைமைத்துவ வழிகாட்ட லில் மணிவிழாக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தனி ஜீவா சிறு வயதில் எழுதி தினகரனில் வெளியான திருந்திய அசோகன் என்ற சிறுவர் நாவல், மணிவிழாவையொட்டி அன்றைய தினம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.
தனது எழுத்துப் பணிகளுக்கு அப்பால், அந்தனிஜிவா செய்து வரும் ஆக்கப் பணிகளில் ஒன்று, உலக அரங்கில் பரந்துவாழும ஈழத்தமிழர்களுக்கு இடையே இலக்கியப் பாலமொன்றினை பயன் கருதாது அமைத்துக்கொடுப்பதாகும். மலையகத்தின் வெளியீடுகளை
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 51

Page 28
அந்தனி ஜீவா
பொருட்செலவைப் பொருட்படுத்தாது தனது சொந்தச் செலவில் இலங்கையிலிருந்து ஐரோப்பா, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் என்று தமிழ் எழுத்தாளர்கள் வாழும் இடங்களுக்கெல்லாம் அனுப்பி வருகின்றார். ஒவ்வொரு நாட்டிலும் தான் அறிந்த அந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுடன் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் தொடர்பினை வலிந்து ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றார்.
கடந்த 2003ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அந்தனிஜீவா அவர்கள் இலக்கியப் பயணம் ஒன்றை லண்டன், பாரிஸ் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் மேற்கொண்டிருந்தார். இவரது பயணக்கட் டுரை தினகரனில் பின்னர் தொடராகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் என்ற பெயரில் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் 140 பக்கங்களில் கறுப்பு, வெள்ளை புகைப்படங்களுடன் நூலுருவிலும் வெளியிடப்பட்டிருந்தது. லண்டனி லும் பாரிசிலும் தான் சந்தித்த கலை இலக்கியவாதிகள், கண்டு கழித்த இடங்கள் ஆகியன பற்றிய சுவையான தகவல்களை இந் நூலில் அந்தனி ஜீவா, வாசகர்களுடன் தனது பயணக்கட்டுரையின் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
லண்டனில் அவர் தங்கியிருந்த வேளையில், புதினம் ஆசிரியர் ஈ.கே.இராஜகோபால் அவர்களின் முயற்சியில், கலை இலக்கியப் பிரமுகர்களின் சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. மாத்தளை சி.செல்வராஜா அவர்களின் தலைமையில், பொன் பாலசுந்தரம், க.இராஜமனோகரன், பாரிஸ்டர் எஸ்.ஜே.ஜோசப், மு.நித்தியானந்தன், தெளிவத்தை ஜோசப், ஜதிசம்பந்தன், எஸ்.பி.ஜோகரட்ணம், போன் றோர் அங்கு பிரசன்னமாகி உரையாற்றியிருந்தனர். மலையகத்தில் மட்டுமன்றி, புகலிடத்திலும் அந்தனி ஜீவாவுக்கு உள்ள செல்வாக்கை இந்நிகழ்வு நன்கு புலப்படுத்தியது.
மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களின் மலையகத தொழிற்சங்க வரலாறு என்ற சிறு நூல் அவரது மிக அண்மைக்கால வெளியீடாகும். நவம்பர் 2005இல் வெளியாகியுள்ள இந்நூலில மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் இரண்டாண்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 52

அந்தனி ஜீவா டுக்கு முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் இவர் எழுதிய கட்டுரையொன்று சற்று விரிவுபடுத்தி, சிறுநூலாக 24 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மலையகத் தொழிற்சங்க வரலாறு 25 பக்கங்களுள் அடக்கக் கூடியதாகத் தோன்றவில்லை. இது மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து எழுதப்பட வேண்டியதொரு துறையாகும். அந்தனி ஜீவா அந்நூலில் இந்தப் பரந்த வரலாற்றின் சிறு முனைகளை மட்டுமே தொட்டுக் காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இது மீளாய்வு செய்யப்பட்டு விரிவாக எழுதப்பட வேண்டும். மலையக மக்களின் வரலாறும், வாழ்வியலும் இத் தொழிற்சங்கங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளதால் இத்துறைக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டு இந்நூல் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு புலம்பெயர்நாடுகளில் வாழும் மலையகத் தமிழர்கள் முன்வந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவர்களின் நிதிபலத்துடன் இத்தகைய ஆய்வு முயற்சிகள் மலையகத்தில் எளிதாகச் செய்யப்படலாம். மலையகத் தமிழரின் வரலாறு நேர்மையாக எழுதப்படலாம்.
நன்றி. ஐ.பீ.சீ. காலைக்கலசம், 04.12.2005,
சுடரொளி, தை-மாசி, 2006, பங்குனி-சித்திரை, 2006
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 53

Page 29
மலையகப் பதிப்புலகத்தில் ஒரு சிந்தனை வட்டம்: கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்
இலங்கையில் மத்திய மலையகத்தின் தலைநகராக விளங்கும் கண்டி மாநகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்புமிகு கிராமம் தான் உடத்தலவின்னை மடிகே. இந்தக் கிராமத்தின் பெயரை படைப்பிலக்கிய உலகில் அடையாளப்ப டுத்திய பெருமை அங்கு 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட 'சிந்தனை வட்டம் என்ற வெளியீட்டகத்துக்கே உரியது.
"சிந்தனை வட்டம்' என்றதும் உடத்தலவின்ன மடிகே என்ற ஊர்ப்பெயரை அடுத்து, நம் மனக்கண் முன் வந்து நிற்கும் மற்றொரு பெயர் "புன்னியாமீன்' என்பதாகும். சிந்தனை வட்டத்தின் தாபகரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் இன்று 200க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டு மலையகத்தில் முன்னணிப் பதிப்பாளராகத் திகழ்கின்றார். தன்னுடன் தன் மனைவி மஸிதா, மகன் சஜீர் அஹற்மட் ஆகியோருடன் இணைந்து சிந்தனை வட்டம் என்ற தன் சாம்ராச்சியத்தில் வெற்றிகரமாக பவனி வருகிறார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என், செல்வராஜா 54
 

பி.எம், புன்னியாமீன்
11.11.1960இல் பிறந்தவரான புன்னியாமீன் பாடசாலைக் காலங்களிலேயே தன்னுடைய எழுத்துத் திறனை நல்லாசிரியர்களின் துணையுடன் புடம்போட்டுக் கொண்டவர். 1973ம் ஆண்டிலிருந்து இலக்கிய உலகில் தவழத் தொடங்கியவர் புன்னியாமீன். தனது முதல் படைப்பான "அரியணை ஏறிய அரசமரம்" என்ற உருவகக் கதையே இவரது முதலாவது படைப்பிலக்கியமாகும். தினகரன் வாரமலரில் இது 1976இல் பிரசுரமாயிருந்தது. தனது பத்தொன் பதாவது வயதிலேயே தான் எழுதிய பதினான்கு கதைகளைத் தொகுத்து கட்டுகளிஸ்தொட்டை இஸ்லாமிய சேமநலச் சங்கத்தினூடாக "தேவைகள்" என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுதியாக்கி வெளியிட்டுள்ளார்.
இவர் 1988இல் தாபித்த "சிந்தனை வட்டம்' என்ற வெளியீட்ட கத்தின் வாயிலாக "பிரித்தானியாவின் அரசியல் முறை" எனும் தனது நூலினை இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடாக 1988 ஜனவரி யில் வெளியிட்டார். 2005 மே மாத இறுதியில் மாரிமுத்து சிவகுமார் எழுதிய மலைக்கொழுந்து என்னும் கவிதை நூலினைத் தனது நிறுவனத்தின் 204வது வெளியீடாக வெளியிட்டுள்ளார். (பிற்சேர்க்கை: 2007 நவம்பர் 11ம் திகதி "இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா எார்கள், கலைஞர்கள் விபரத்திரட்டின் ஒண்பதாவது தொகுதியினை தனது நிறுவனத்தின் 275°க வெளியீடாக வெளியிட்டுள்ளார்) கல்வி சார் நூல்கள், அறிவுசார் நூல்கள், வரலாற்று நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கவிதைத் தொகுதிகள், பொது அறிவு நூல்கள், ஆய்வு நூல்கள் என இதுவரை 204 வெளியீடுகளிலும் மொத்தமாக 395,650 பிரதிகளை இந்நிறுவனத்தின் வாயிலாக புன்னியாமீன் அவர்கள் பதிப்பித்துள்ளார். தொடர்ச்சியாக 17 ஆண்டு களாக சிந்தனை வட்டம் வெற்றிகரமாக மலையகத்தில் இயங்கி வருகின்றது.
புன்னியாமீன் உடத்தலவின்னை மடிகே வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் காலாண்டு வெளியீடான "விடிவு" சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர். அந்நாட்களில் இலங்கை இஸ்லாமியருக்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 55

Page 30
பீ.எம். புன்னியாமீன்
கென்றொரு தனியான அரசியல் கட்சி வேண்டும் என்ற கருத்தை 1979ம் ஆண்டிலேயே "விடிவு" சஞ்சிகையின் வாயிலாக இவர் வலியுறுத்தி வந்துள்ளார். அக்கருத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் 1983இல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினையை கருப்பொருளாகக் கொண்டு "அடிவானத்து ஒளிர்வுகள்" என்னும் ஒரு நாவலையும் இவர் எழுதியுள்ளார். இந்த நாவல் பின்னாளில் உருவான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றப்பாட்டுக்கு வித்தாக அமைந்திருந்தது. கட்டுகளில்தோட்டையை மையமாகக் கொண்டியங் கிய "அல்ஹிலால்" இருவார இதழின் பிரதம ஆசிரியராகவிருந்தும் இவர் காத்திரமான அரசியல் கருத்தியல் பங்களிப்பை முஸ்லிம் சமூகத்திற்கு நல்கியிருந்தார். "அல்ஹிலால்" ரீலங்கா இஸ்லாமிய காங்கிரஸின் அதிகாரபூர்வ ஏடாகக் கருதப்பட்டது.
இவரது சிந்தனை வட்டத்தின் வளர்ச்சிப்போக்கு எழுந்தமா னமாக ஏற்பட்டதொன்றல்ல. 1988ம் ஆண்டில் தனது முதலாவது வெளியீட்டில் 400 பிரதிகளை மாத்திரம் பதிப்பித்த சிந்தனை வட்டம், 204 நூல்களை வெளியிட்டபின் மொத்தமாக 395,650 பிரதிகளைப் பதிப்பித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். சிந்தனை வட்டத்தின 1 முதல் 50 வரையிலான வெளியீட்டின்போது 55,650 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 1113 பிரதிகள்), 51 முதல் 100 வரையிலான வெளியீட்டின்போது 88,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 1760 பிரதிகள்), 101 முதல் 150 வரையிலான வெளியீட்டின்போது 138,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டின்போது 2760 பிரதிகள்), 151 முதல் 200 வரையிலான வெளியீட்டின்போது 102,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டின்போது 2040 பிரதிகள்), 201 முதல் 204 வரையிலான வெளியீட்டின்போது 12,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டின் போது 3000 பிரதிகள்) வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் மற்றைய தமிழ் நூல் வெளியீட்டகங்களுடன் ஒப்புநோக் கும்போது இது விதந்து குறிப்பிடக்கூடியதொரு விடயமாகும்.
தனது நூல்களைப் பதிப்பிக்கவேண்டும் என்ற நோக்குடன் சிந்தனை வட்டத்தை ஆரம்பத்தில் உருவாக்கிய திரு. புன்னியாமீன்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 56

பீ.எம். புண்ணியாமீன்
தன்னுடைய சொந்த நூல்களையும், தனது மனைவி மஸிதா புன்னியா மீனுடன் இணைந்து எழுதிய சில நூல்களையும் சேர்த்து மொத்தம் 69 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். இலங்கையில் 89 நூல்க ளை எழுதி நூலுருப்படுத்திச் சாதனை படைத்துள்ள புன்னியாமீனின் 69 நூல்கள் சிந்தனை வட்ட வெளியீடுகளாக வெளிவந்தபோதிலும்கூட மீதமான 20 நூல்களும் பிற வெளியீட்டகங்களால் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (பிற் சேர்க்கை: 2007.11.11 வரை புன்னியாமீன் 125க்கும் மேற்பட்ட நூல் களை எழுதி நூலுருப்படுத்தியுள்ளார்)
தனது நூல்களை மாத்திரமன்றி பிற எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற நோக்குடன் சிந்தனை வட்டம், உஸ்மான் மரிக்கார், நஜாமுதீன், தலவின்ன சிபார், மஸிதா புன்னியாமீன், அக்குறணை ரிழ்வான், ரிஷானா ரஷிட், கலைமகள் ஹிதாயா, கலதெனிய நளிம், தமீம் அன்சார், மரீனா இல்யாஸ், சுமைரா அன்வர், கலைநிலா சாதிகீன், கெக்கிறாவை ஸ்ஹானா, தலவின்னை பூதொர, இஸ்லாமிய செல்வி, பஹிமா ஜஹான், சுலைமா-சமி-இக்பால், நயீமா சித்தீக், மெளலவி ஜே.மீராமொஹிடீன், மூதூர் கலைமேகம், சுஹைதா ஏ கரீம், குலாம் மொஹிதீன், ஜே.எம். யாசீன், அமீனா சராப்தீன், எஸ்.எல்.எம்.மஹற்ரூப், ஏ.ஆர்.எம்.ரிஸ்வி, எம்.ஐ.எம்.மும்தாஜ், என்.நவரட்ணம், இரா.திருச்செல்வம், நாகபூஷணி கருப்பையா, நீலன் அணை ஜயந்தன், சீவி.நித்தியானந்தன், த. திரேஷ்குமார், மாரிமுத்து சிவகுமார், திருமதி கி.பொன்னம்பலம் என நீண்ட பட்டியலில் அடங்கக் கூடிய எழுத்தாளர்களின் ஆக்கங்க ளுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
வளர்ந்த எழுத்தாளர்களைவிட வளர்ந்துவரும் எழுத்தாளர்க ளுக்கே அதிகளவில் சிந்தனை வட்டம் களம் அமைத்துக் கொடுத்துள் ளதை விசேடமாக அவதானிக்கலாம். உதாரணமாக, கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் "தேன்மலர்கள்", த.திரேஷ்குமாரின் "நிஜங்களின் நிகழ்வுகள்", சுமைரா அன்வரின் "எண்ணச் சிதறல்கள்", நாகபூஷணி கருப்பையாவின் "நெற்றிக் கண்", மாரிமுத்து சிவகுமாரின் "மலைச்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 57

Page 31
பி.எம். புன்னியாமீன்
சுவடுகள்" போன்ற கவிதைத் தொகுதிகளைக் குறிப்பிடலாம். இந்நூ லாசிரியர்களின் முதல் கவிநூல்களாகவே இவை அமைந்துள்ளன.
அதே நேரம், மூத்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியி டவும் சிந்தனை வட்டம் பின்நிற்கவில்லை. உதாரணமாக நயீமா சித்தீக்கின் "வாழ்க்கை வண்ணங்கள்", சுலைமா சமி இக்பாலின் "திசை மாறிய தீர்மானங்கள்", மெளலவி ஜே. மீரா மொஹிடீனின் "இஸ்லாமிய கதைகள்" போன்ற கதைத் தொகுதிகளைக் குறிப்பிடலாம். சிந்தனை வட்டத்தின் பல வெளியீடுகள் பல பதிப்புகளைப் பெற்றுள்ளன.
இலங்கையில் தமிழ்மொழியை வளர்ப்பதில் முஸ்லிம் எழுத்தா ளர்களும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் விசாலமான பங்க ளிப்பினை வழங்கியுள்ளனர். ஆனால் இத்தகைய பங்களிப்புகளானது போதிய பதிவுகள் இன்மை காரணமாக ஆய்வாளர்களுக்கும், பிற் காலச் சந்ததியினருக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
இந்த நிலையைக் கருத்திற்கொண்டு "சிந்தனை வட்டம்" பாரிய பொருட்செலவில் "நவமணி" தேசிய பத்திரிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. திரு பீ.எம். புன்னியாமீன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய் விலிருந்து 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இருந்து 21ம் நூற்றாண்டின் தற்போதைய காலப்பகுதி வரை 2800க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், 1250க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவிய லாளர்களும், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களுமாக மொத்தம் 4350க்கும் மேற்பட்டோர் இலங்கையில் தமிழ் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இத்தகை யோரின் விபரங்களைத் தொகுத்து "இலங்கை முஸ்லிம் எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு" எனும் நூலை மூன்று தொகுதிகளில் "சிந்தனை வட்டம்" வெளியிட்டுள்ளது. கலாபூஷணம் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட இந்த மூன்று நூல்க ளும் சிந்தனை வட்டத்தின் 189வது, 193வது, 200வது வெளியீடுகளாக
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 58

பீ.எம். புன்னியாமீன்
வெளிவந்துள்ளன. மேற்படி ஆய்வு தொடர்பாக மேலும் ஏழு நூல்க ளை "சிந்தனை வட்டம்" வெளியிடவுள்ளது.
"சிந்தனை வட்டம்" தனது ஆரம்ப காலகட்டங்களில் தான் வெளியிட்ட நூல்களில் வெளியீட்டுத் தரத்தினை சரியான முறையில் பேணவில்லை. ஆனால் 2000 ஆண்டிலிருந்துதான் வெளியிடும் சகல நூல்களையும் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேச தரத்தில் வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
நூல்களை வெளியிடுவதில் மாத்திரம் தனது பணியினைச் சுருக்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ் வளர்க்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் நிறுவன ரீதியில் பாராட்டி கெளரவித்து வருவது புன்னியாமீன் அவர்களின் விசேடமான ஓர் குணாம்சமாகும்.
சிந்தனைவட்டம் ஆய்வு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாடானது ஏனைய வெளியீட்டு அமைப்புக்களில் இருந்து மாறுபட்ட போக்கினை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ்பேசும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவிய லாளர்கள் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்களிப்பினை நல்கியுள் ளனர். இவர்களைப் பற்றிய பூரணத்துவமான ஆய்வுகள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படாமலிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இத்தகைய பணியினை "சிந்தனை வட்டம்" ஆரம்பித்து செயற்படுத்தி வருவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
கடந்த 32 வருடகால இலக்கியப்பணியுடன் 17 வருடகால பிரசுரப்பணியும் ஆற்றிவரும் பீ.எம். புன்னியாமீன் அவர்கள், 1995இல மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் கெளரவ வி.புத்திரசி காமணி அவர்களினால் ஹட்டனில் நடத்தப்பட்ட மத்திய மாகாண சாகித்திய விழாவில் விருதும், பொற்கிழியும் வழங்கி கெளரவிக்கப் பட்டார். 1999இல் மலையக கலை கலாசார சங்கம் நடத்திய "ரத்னதீப" விருது வழங்கும் வைபவத்தில் இலக்கியப்பணிக்காக அப்போதைய முதலமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்காவினால்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 59

Page 32
பி.எம். புன்னியாமீன்
"ரத்னதீப" சிறப்புவிருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். அண்மையில் 2003இல் இவரது தொடர்ந்த கலை இலக்கியப் பணிக்கான 'கலாபூஷண விருது வழங்கி அரசினால் கெளரவிக்கப்பட்டார்.
மலையகத்தின் வெளியீட்டுத்துறையில் ஒரு துருவ நட்சத்தி ரமாக மின்னும் பீ.எம். புன்னியாமீன் புலம்பெயர்ந்து சென்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய சுயவரலாற்றுக் கட்டுரைத் தொடரொன்றை இலங்கையில் வெளியா கும் 'நவமணி வார இதழில் வாரம் தோறும் வெளியிட்டு வருகின்றார். இத்தொடரில் இடம்பெறும் முதல் 25 கட்டுரைகளை நூலுருவிலும் வெளியிட நடவடிக்கைகள் எடுத்துள்ளார். (பிற்சேர்க்கை: 2007.11.11 வரை இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் விபரத்திரட்டின் 9ெ தொகுதிகளும், அவற்றுள் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் விபரத்திரட்டின் இரண்டு பாகங்களும் நூலுருவில் வெளிவந்துள்ளன. இம்முயற்சி தற்போதும் தினக்குரல்" வார மலரில் "இவர்கள் எம்மவர்கள்" எனும் தலைப்பில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.)
தங்கள் சுயவரலாற்றுப் பதிவினை ஈழத்தில் பதிவுசெய்து கொள்ள விரும்பும் புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் கலை இலக்கிய வாதிகளும், ஊடகவியலாளர்களும் தமது விபரங்களைப் பதிவுசெய் வதற்கான சுயவிபரப்பதிவுப் படிவங்களை இக்கட்டுரையாசிரியரிட மிருந்தோ, திரு பீ.எம்.புன்னியாமீன் அவர்களிடமிருந்து நேரடியா கவோ பெற்றுக்கொள்ளலாம்.
பீ.எம்.புன்னியாமீன், இல,14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா தொலைபேசி,தொலைநகல்: OO9, 82 4924
நன்றி; ஐ.பி.சி. காலைக்கலசம், 24.07.2005,
சுடரொளி, ஜூலை ஓகஸ்ட், 2005
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா B[]

7
புலம்பெயர்ந்தும் மலையக இலக்கியத்தை மறவாத "மாத்தளை சோமு’
இலக்கிய உலகில் பிறந்த ஊர்களின் பெயரைச் சுமந்து அந்த ஊர்களுக்குப் பெயர் சேர்க்கும் பலரை நாம் இலக்கிய உலகில் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் புலம்பெயர்ந்து தற் போது தமிழகத்திலும், மலேசியாவிலும் அவுஸ்திரேலியாவிலுமாக வாழும் மாத்தளை சோமு பற்றியும் அவரது இலக்கிய முயற்சிகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய்கின்றது. இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் அச்சாணியாகக் கருதப்படும் மாத்தளை நகரைத் தன் பெயரின் முன்னால் பெருமையுடன் சேர்த்துக் கொண்டு உலகம் சுற்றும் இலக்கிய ஞானி என்ற பெயருடன் வாழ்பவர் மாத்தளை சோமு.
கண்டி இராச்சியத்திற்கும் யாழ்ப்பாண அரசுக்கும் இடையில் நெருங்கிய நேசஉறவு பொலிந்தது என்கின்றது வரலாறு. இந்த உறவின் தலைவாயிலாக அன்று மாத்தளை நகர் விளங்கியுள்ளது. இந்நாளில் மலையகத் தமிழ் முயற்சிகளுக்கும் ஈழத்தமிழ் முயற்சிக ளுக்கும் கலந்துறவுக் களம் அமைப்பதும் மாத்தளையே. இந்தப்பண் பினை மாத்தளை சோமுவின் இலக்கியப்பணியும் எண்பிக்கின்றது என்று மூத்த எழுத்தாளர் திரு எஸ். பொன்னுத்துரை அவர்கள், மாத்தளை சோமுவின் 'அவன் ஒருவனல்ல" என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சனமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா

Page 33
மாத்தளை சோமு
மிக இளவயதில் எழுத ஆரம்பித்தவர் மாத்தளை சோமு இதுவரை 13 நூல்கள் வரையில் இவர் படைத்திருக்கின்றார். இவற்றில் நான்கு சிறுகதைத் தொகுதிகளும், நான்கு நாவல்களும், ஒரு குறு நாவல் தொகுதியும் மூன்று பயணக்கதைகளும் ஒரு சிறுவர் இலக்கிய நூலும் அடங்கும்.
இவரது ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள என்ற நாவல் 1991இல் இலங்கை சாகித்திய விருதினைப் பெற்றது. 1994இல் இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு வழங்கிய சிறந்த நாவலுக் கான விபவி விருதினை இவரது எல்லை தாண்டாத அகதிகள என்ற நூல் பெற்றுக்கொண்டது. தமிழ்நாடு வில்லி தேவசிகாமணி இலக்கிய விருது 1995ம் ஆண்டில் இவரது அவர்களின் தேசம் என்ற சிறுகதைத் தொகுதிக்குக் கிடைத்தது. 1998இல் இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு வழங்கிய சிறந்த நாவலுக்கான விபவி விருதினை இரண்டாவது தடவையாகவும் இவர் பெற்றுக்கொண்டார். இவரது ‘மூலஸ்தானம் நாவலுக்காக இது இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் மலேசியாவின் ஈப்போ நகரிலுள்ள மலேசிய பாவாணர் மன்றத்தின் ‘புதினத் தென்றல்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
மாத்தளை சோமு அவர்களால் எழுதப்பட்ட லண்டன் முதல் கனடா வரை 2000ம் ஆண்டிலும் சிட்னி முதல் நோர்வே வரை என்ற நூல் 2002இலும் பயண நூல்கள் வரிசையில் வெளியாகி புகலிடமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இவரது முதலாவது படைப்பான நமக்கென்றொரு பூமி என்ற சிறுகதைத்தொகுதி ஜெயகாந்தனின் முன்னுரையுடன் 1984இல் வெளிவந்தது. இந்நூல் பற்றிய விமர்சனத்தை மேற்கொண்ட தீபம் மாத இதழ், மாத்தளை சோமு பற்றிக் குறிப்பிடுகையில், எத்தனையோ எழுத்தாளர்கள் ஈழத்தின் இயற்கை எழிலையும் கடல் வண்ணத்தையும் வியாபார வளர்ச்சியையும் சுற்றுலா இடங்களையும் வர்ணித்து வியாபார நோக்கில் பொருள் சம்பாதிக்கும் இவ்வேளையில் இந்த
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 62

மாத்தளை சோமு
எழுத்தாளர் வழக்கத்திற்கு மாறாக தன் பேனா முனையில் குருதியை யும் கண்ணிரையும் கலந்து, உணர்ச்சி கலந்த வர்க்கப் போராட்டத்தை யும் தன் நாடு என்ற வைராக்கியம் தோய்ந்த நம்பிக்கையூட்டும் வீரமுழக்கத்தையும் அழியாத எழுத்துக்களாக எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வரிகள் ஈழத்து எழுத்தாளர்களைப்பற்றி தமிழ கத்து இலக்கியவாதிகள் ஒரு வித்தியாசமான பார்வையில் நோக்கு வதற்கு வழியமைத்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. கடந்த வருடம் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வெளியீட் டின் தொகுப்பாசிரியராக இவர் இயங்கியிருக்கின்றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக புலம்பெயர்ந்த தமிழர் என்னும் நூலின் வெளியீட்டாளராகவும் இவர் பணியாற்றியிருக்கின்றார். தேசம் கடந்த இவரது இலக்கியச் சேவை இதன் வாயிலாக நன்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பழந்தமிழரின் அறிவியல், ஆஸ்திரேலிய ஆதிவாசி கறுப்பின மக்கள் வரலாறு, இலங்கை மலையக மக்கள் குடியேற்றம், புலம் பெயர் மக்கள் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மொழியாக்கம் சம்பந்தமான விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன் வாயி லாக மாத்தளை சோமுவின் பன்முகப்பட்ட அறிவியல் பார்வைக்கான அங்கீகாரம் புலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியீட்டுத்துறையிலும் மாத்த ளை சோமு அவர்கள் ஈடுபாடு காட்டிவருகின்றார். நவரசம் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும், சென்னை மக்கள் மலரின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சிட்னி தமிழ்க் குரலின் தலைவராகவும், மலேசியாவிலுள்ள உலக சிலம்ப மாமன் றத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் திருச்சி தமிழ்க்குரல் பதிப்பக ஆலோசகராகவும் கெளரவ சேவைகளை வழங்கி வருகின் றார். இவரது பல நூல்கள் தமிழ்க்குரல் பதிப்பகத்தின் வெளியீடுக ளாகவே வெளிவந்திருந்தன.
இவர் எழுதிய ஒரே ஒரு சிறுவர் இலக்கிய வெளியீடு அண்மை யில் எனக்கு மாத்தளை சோமுவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் அவாந்தி சீனக் கோமாளியின் சித்திரக்கதைகள் என்பதாகும். சென்னை இராயப்பேட்டை சாரதா பதிப்பகத்தினால்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 63

Page 34
மாத்தளை சோமு
கெளராவின் சிறுவர் இலக்கிய வரிசையில் வெளிவந்துள்ள இச்சிறு நூல் 2003 நவம்பரில் வெளியிடப்பட்டுள்ளது. வாய்மொழிக் கதைக ளாகத் தமிழகத்தின் தெனாலிராமன், இலங்கையின் அந்தரே. துருக்கி நாட்டின் ஹோஜா, ரஷ்யாவில் புருட்கோவ், பாரசீகத்தின் அபுரவாஸ் மற்றும் முல்லா நஸ?ரூதீன் போன்ற கோமாளிப் பாத்திரங்களைப் போன்றே சீன நாட்டில் வாழ்ந்தவன் தான் அவாந்தி. இவன் சீனநாட்டின் முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவன். இவனும் உலகக் கோமாளிகளோடு வைத்துப் பார்க்கப்படுபவன். இவனது கோமாளித்தனங்களின் வாயிலாக நகைச்சுவை மாத்திரமன்றி கருத்துச் செறிவும் சிலவேளை களில் மறைமுகமான வழியில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான நையாண்டிகளும் காணப்படுகின்றன. மாத்தளை சோமுவின் அவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக்கதைகள் பெரிய எழுத்து நூல் வகையைச் சேர்ந்ததாகவுள்ளது. இந்நூலிலுள்ள 21 குட்டிக்கதைகளுக்கும் இடையே கதைகளுக்குப் பொருத்தமான சிறுவர் விரும்பும் சித்திரங்கள் சேர்ந்தனவாகவும் காணப்படுகின்றன. அவாந்தியின் கதைகளுக்கு இடையே இந்நூலில் இரண்டு சிங்களத்து அந்தரேயின் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அது தொகுப்புத்தவறாக இருக்கும் என்ற கருது கின்றேன். முன்னுரையில் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த மாதம் அதாவது, 28ம் திகதி பெப்ரவரியில் மாத்தளை சோமுவின் ‘சிட்னியிலிருந்து நோர்வே வரை” என்ற பிரயாண நூல் அறிமுகவிழா லண்டன் ஈலிங் பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. திரு எஸ்.ழரீரங்கன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் புலவர்மணி இளவாலை அமுது, கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன், திரு எஸ். கருணைலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்த, திரு. விமல் சொக்கநாதன் அவர்கள் சோமுவின் சிட்னியிலிருந்து நோர்வே வரை என்ற பிரயாண நூல் அறிமுகத் தை மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்க்குரல் பதிப்பகம் இந்நூலை 240 பக்கங்களுடனும் பல புகைப்ப டத்தகடுகளுடனும் கவர்ச்சியான அட்டைப்படத்துடனும் வெளியிட் டுள்ளது.
பிரயாண இலக்கியங்கள் இன்று தமிழரிடையே, குறிப்பாக ஈழத்துத் தமிழரிடையே மேலோங்கி வளரும் ஒரு அம்சமாகக் காணப்ப
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 64

மாத்தளை சோமு
டுகின்றது. இலங்கையின் பூர்வீக வரலாறுகூட பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த ஐரோப்பிய ஆசிய வெளிநாட்டுப் பிரயாணிகளின் இலங்கை இந்தியா பற்றிய பிரயாண நாட்குறிப்புகளின் வாயிலாகப் பதிவு செய்திருப்பதை வரலாற்று நூலாதாரங்களின் வழியே நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. நவீன பிரயாண இலக்கிய வளர்ச்சியின் தளங்களை நாம் பார்க்கும் போது இன்றும் நினைவில் நிற்பவை சிலவாகும். யான் கண்ட இலங்கை என்ற தலைப்பில் தமிழகத்தின் தமிழறிஞர் அமரர் மு. வரதராசன் அவர்கள் 1950ம்ஆண்டு ஒரு நூலை எழுதியிருந்தார். கடித உருவில் அமைந்துள்ள இலங்கைப் பயணக்குறிப்புக்கள் கொண்ட இந்த நூல். தமிழறிஞர் டாக்டர் மு.வ. அவர்கள் 1950ம் ஆண்டு இலங்கை வந்திருந்தபோது எழுதப்பட்டவை. மொத்தம் 5 கடிதங்களின் வாயிலாக இலங்கைப் பிரயாண அனுபவங் களை சுவையாக இனிய தமிழில் எழுதியிருக்கின்றார். சென்னை பாரி நிலையம், இந்நூலின் 7வது பதிப்பை, 1993 இல் மேற்கொண்டி ருப்பதிலிருந்து நூலின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இந்த வகையில் பின்னாளில் நிகழ்ந்த ஈழத்தமிழரின் புலப் பெயர்வும், உலகெங்கும் அவர்கள் பரந்துவாழும் நிலையும் மேலும் பல பிரயாண நூல்கள் பல்வேறு கோணங்களில், பார்வைகளில்வெளிவரச சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன. அண்மைக் காலங்களில் புகலிட நாடுகளுக்குத் தாயகத்திலிருந்து வரவழைக் கப்படும் பல இலக்கியகர்த்தாக்கள் தாம் கண்ட கேட்ட தகவல்களைத் தாயகத்தில் எமது உறவுகளுடன் இனிய நினைவுகளாகப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இத்தகைய பிரயாண இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்கள். அண்மையில், அக்கரைச் சீமையின் அநுப வங்கள் என்ற ஒரு பயண அனுபவ நூலினை எழுத்தாளரும் தமிழறிஞருமான சொக்கன் என்றழைக்கப்படும் திரு க.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியிருந்தார்கள். கடந்த 2002 ஜூன் மாதம் முதல் தாம் மேற்கொண்ட மூன்று மாதகால இலண்டன் பயணத்தைச் சுவை யான சுற்றுலா இலக்கியமாக்கி அவர் தந்திருந்தார்.
இவ்வகையில் தற்பொழுது மாத்தளை சோமுவின் சிட்னி முதல் நோர்வே வரை என்ற பிரயாண நூலும் அண்மைக்கால அறுவடையாக வெளிவந்துள்ளது. மலேசிய நாட்டில் இயங்கும்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 65

Page 35
மாத்தனை சோமு
அனைத்துலக சிலம்ப மாமன்றம் மேற்கொண்ட ஐரோப்பிய சுற்றுலா வை வழிநடத்திச் செல்லும் பணியில் உலக சிலம்ப மாமன்றத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் மாத்தளை சோமு ஈடுபட்டிருந்தார். உலகத்தமிழரிடம் சிலம்பக்கலையைக் கொண்டு சேர்க்கும் ஒரு நோக்குடன் சிலம்ப மன்றம் மேற்கொண்ட இந்த நிகழ்ச்சிகளின் போது, கூடவே இருந்து அவர்கள் சென்ற இடமெல்லாம் அவர்களுக்கு ஒத்தாசையாகத் தானும் சென்று அவ்வவ் நாடுகளில் சேகரித்த வரலாற்றுச் செய்திகள், புலம்பெயர் தமிழரின் வாழ்வனுப வங்கள் மற்றும் தான் உடன்சென்ற சிலம்பக்கலைஞர்களின் நிகழ்ச் சிகள், அக்கலைஞர் குழுவினர் பெற்ற இனிய அனுபவங்கள் என்று தனது பிரயாண அனுபவங்களினூடாக இவை எல்லாவற்றையும் இணைத்துச் சுவையாகத் தன் நூலைக் கொண்டுசென்றிருக்கிறார். இங்கெல்லாம் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களையும் அவர்களின் முயற்சிகள், ஏக்கங்கள், போராட்டங்கள் யாவற்றையும் கூட இந்நூலில் உணர்வுபூர்வமாக இவர் ஆங்காங்கே சித்திரித்திருக்கிறார். ஜேர்மனி, சுவிஸ், இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் மாத்தளை சோமு அவர்கள் மேற்கொண்ட பயண அனுப வங்கள் இதில் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.
இலங்கை - வீரகேசரி ஞாயிறு இதழில் 50 வாரங்கள் தொட ராக அது முதலில் வெளிவந்தது. இப்பொழுது பரந்த வாசகர்களை அடையும் வகையில் தனிநூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் பெப்ரவரி 14ம் திகதியன்று மாத்தளை சோமு அவர்க ளுக்கு கனடாவில் இருந்து வெளிவரும் தமிழர் தகவலின் 2004ம் வருடத்துக்கான இலக்கிய விருது கிடைத்திருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். டொரன்டோவில் இயங்கும் எஸ்.திருச்செல்வம் அவர்களின் அகிலன் அசோஷியேற்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் இத்தகைய விருதுகளை வழங்கி வாழும்போது கெளரவிக்கும் நற்பணி யினை கனேடிய மண்ணில் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வமைப் பினால் மாத்தளை சோமுவுக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கமும் விருதும் கொழும்பு தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகவும், கொழும் புத் தமிழ்ச்சங்கத் தலைவராகவும் இருந்த அமரர் இ.சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக இலண்டன் வழக்கறிஞரும் மூத்த ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.
நன்றி. ஐ.பீ.சி. காலைக்கலசம், 04.04.2004
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா ÉÉ

8
சாரல் நாடன்: மலையக விழிப்புணர்வின் ஒரு அறுவடை
இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் 1990 ஏப்ரல் மாதம் ம்ே 8ம் திகதிகளில் கண்டியில் உள்ள புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள தோட்டப்பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் ஆதரவில் அயோத்தி நூலக சேவையினால் மலையகப் பிரதேச நூலக அபிவிருத்திக் கருத்தரங்கொன்றை நடத்தித் தருமாறு கேட்கப் பட்டிருந்தேன். 1990இல் மலையகத்தில் இடம்பெற்ற இந்தக்கருத் தரங்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஓடியாடித்திரிந்தவர்கள் இருவர். ஒருவர் மலையக வெளியீட்டகத்தின் இயக்குநர் திரு. அந் தனி ஜீவா. இவர் இன்று நாடறிந்த எழுத்தாளர், நாடகாசிரியர், பதிப்பாசிரியர் என்று மணிவிழாக் கண்டவர். இந்த நூலகர் கருத்த ரங்கை சீராக நடத்தி முடிப்பதில் பெரும்பங்கை வகித்த மற்றொருவர் மலையகத் தோட்டமொன்றின் தொழிற்சாலை அதிகாரியாகக் கடமை யாற்றிவந்த திரு க. நல்லையா என்பவராவார். நல்லையா என்பதை விட சாரல்நாடன் என்று குறிப்பிட்டால் தான் இலக்கிய உலகில் இவரை இன்று பலரும் இனங்கண்டு கொள்வார்கள்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என், செல்வராஜா

Page 36
சாரல் நாடன்
சாரல் நாடன் அறுபதுகளில் மலையகத்தில் ஏற்பட்ட அறிவியல் விழிப்புணர்வின் காரணமாக எழுச்சிபெற்ற இலக்கியகர்த் தாக்களில் குறிப்பிடத்தகுந்தவர். நல்லதொரு படைப்பிலக்கிய வாதியாகவும் ஆய்வாளராகவும் தன்னை இனங்காட்டிக்கொண்டவர் சாரல்நாடன். மலையகம் தொடர்பான ஆய்வுகளே இவரது பொதுவாழ்வின் முக்கிய பக்கங்களாக அமைந்துவிட்டன.
சி.வி.சில சிந்தனைகள் என்ற இவரது முதலாவது நூல் 1986இல் கொழும்பு 6: மலையக வெளியீட்டகத்தினால், கண்டி: யூனியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஈழத்தின்குறிப்பாக மலையகத்தின் இலக்கியப் படைப்பாளியான அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்வும் சிந்தனையும் பற்றிய நூல் இதுவாகும். அமரர் சி.வி.பற்றிய பல புதிய தகவல்களை மறக்கப்பட்ட அவரது வாழ்வின் பக்கங்களை மீட்டெடுத்து எமக்கு இந்நூலில் சாரல்நாடன் அவர்கள் வழங்கியிருந்தார்.
தேசபக்தன் கோ நடேசையர் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருந்தார். கண்டி மலையக வெளியீட்டகத்தின் வெளியீ டாக கண்டி ரோயல் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இது 210 பக்கங்க ளுடன் 1988இல் வெளிவந்திருந்தது. இலங்கை வாழ் பெருந்தோட்டத் தமிழரின் கடந்த 170 வருடகால வரலாற்றிலே யுகப்புயல் ஒன்றை ஏற்படுத்திய மாமனிதர் கோதண்டராம நடேசையரின் வாழ்க்கை வரலாறு இதுவாகும். மலையக மக்களின் இலக்கிய வரலாற்றின் தோற்றத்துக்கும், அரசியல் விழிப்புணர்வுக்கும் நடேசையர் ஆற்றிய பங்களிப்பு இந்நூலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. 1988இல் எழுதிய இந்த முன்னோடி நூலின் விரிவாக்கமாக, பத்திரி கையாளர் நடேசய்யர் என்ற மற்றொரு ஆய்வு நூலும் டிசம்பர் 1998இல் சாரல்நாடனால் எழுதப்பட்டு கண்டி; மலையக வெளியீட்ட கத்தின் வாயிலாக 208 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. மலைய கத் தொழிற்சங்கவாதியான தேசபக்தர் கோ. நடேசையரின் பத்திரி கைத்துறைப் பங்களிப்பை இந்நூலில் சாரல்நாடன் அவர்கள் விரிவாக ஆய்வு செய்திருந்தார். மலையக வளர்ச்சிப் போராட்டத்தில் தன்னை
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 68

சாரல் நாடன் இணைத்துக்கொண்டு தம்மையும் வளர்த்துக்கொண்டு தமிழ் இதழ்க ளையும் வளர்த்த கோ.நடேசையர் 14.01.1887இல் தஞ்சாவூரில் பிறந்து 07.11.1947இல் கொழும்பில் அமரரானவர். இவரது வாழ்வின் பல பக்கங்களை இவ்வாய்வு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது சாரல்நாடனின் நடேசைய ரின் ஆய்வு நூலுக்காக வழங்கப்பட்டிருந்தது.
1990இல் மலையகத் தமிழர் என்றொரு நூலின் வாயிலாக, மலையக மக்களின் சோக வரலாற்றை உள்வீட்டுப் பிள்ளையின் பார்வையில் எழுதி வெளியிட்டிருந்தார். இந்த மலையக மக்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டதும், அவர்களது வரலாற்றைப் பொதித்து வைத்திருப்பதுமான அவர்களிடையே வழங்கிவந்த நாட்டார் பாடல்களை ஆய்வுசெய்து மலையக வாய்மொழி இலக்கியம என்ற மற்றொரு விரிவான ஆய்வினை பின்னர் மேற்கொண்டிருந்தார். இந்நூலை சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் ஏப்ரல் 1993இல் 88 பக்கம் கொண்ட தாக வெளியிட்டிருந்தது.
எழுத்தறிவற்ற பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத் தும் நாட்டார் பாடல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இன மக்களிடை யேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழி இலக்கியமாக இருந்து வருகின்றது. தென்னிந்தியத் தமிழ்மக்களின் வம்சாவளியினர் என்பதால் தென்னிந்திய- தமிழக நாட்டார் பாடல்களையொத்த பல பாடல்கள் இவர் தம்வாய்மொழி வழக்கில் இருந்து வந்துள்ளன. தம் வாழ்க்கைச் சூழல் இயல்புகளுக் கேற்ப அவை திரிபடைந்து மலையக மக்களுக்கேயுரிய தனித்துவ மான அந்த மண்ணின் பாடல்களாக இன்று மிளிர்வதைக் காணலாம். இந்நூலில் இடம்பெற்றுள்ள சாரல்நாடனின் 12 ஆய்வுக் கட்டுரைகளும், மலையக மக்களின் வாய்மொழி இலக்கியங்களை ஆய்வுரீதியாக வெளிக்கொணர்கின்றன. மலையக வாய்மொழி இலக்கியம என்ற இந்நூல் மத்திய மாகாணச் சாகித்தியப் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்திருந்தது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 69

Page 37
சாரல் நாடன்
சாமிமலை சிங்காரவத்தைத் தோட்டத்தில் மதுரை வேலூரைச் சேர்ந்த கருப்பையா கணக்குப்பிள்ளை - சிவகங்கையைச் சேர்ந்த வீரம்மா தம்பதியினரின் மகனாக 1944இல் பிறந்த நல்லையாவுக்கு உடன் பிறந்த சகோதரிகள் ஐவர். நல்லையா என்ற தனது பெயரைப் பின்னாளில் சங்க இலக்கியங்களினால் இவரிடம் ஏற்பட்ட பாதிப்பினால் சாரல்நாடன் என்று மாற்றிக்கொண்டார். ஆரம்பக் கல்வியை அப்கொட் மின்னா தோட்டப் பாடசாலையிலும், உயர்கல்வியை ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். ஹைலண்ட் கல்லூரி மாணவர்களிடையே இலக்கியச் சஞ்சிகையொன்று சுவர்ப்பத் திரிகையாக அந்நாளில் அறிமுகமாகியிருந்தது. “தமிழ்த் தென்றல்” என்ற அச்சுவர்ப்பத்திரிகையே சாரல்நாடனின் இலக்கிய ஆர்வத்திற் கும் தளம் அமைத்துக்கொடுத்தது. கல்லூரி ஆசிரியர்கள் நவாலியூர் நா.செல்லத்துரை, இர.சிவலிங்கம், நயினை வே. குலசேகரம் ஆகி யோர் இவருக்கு நல்லாசான்களாக இருந்து வழிகாட்டியதாக இவர் பின்னாளில் தன் கட்டுரைகளில் நினைவுகூர்ந்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் “மலைநாட்டு நல்வாலிபர் சங்கம்” என்ற அமைப்பில் இவர் ஈடுபாடு கொண்டிருந்து மலையக இளைஞர்களின் கல்வி வளர்ச்சிப் பணிகளிலும் அக்கறை காட்டிவந்தார். சாரல்நாடன், படைப்பிலக்கியத்துறையில் தனது முதலாவது சிறுகதையான காலஓட் டத்தை 1962இல் வீரகேசரியில் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அக்காலகட்ட தேசியப் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், சிந்தாமணி ஆகியவற்றிலும் கண்டியிலிருந்து வெளிவந்த மலைமுரசு பத்திரிகையிலும் தொடர்ந்து இவரது சிறுகதைகள் வெளிவரலாயிற்று.
1965ம் ஆண்டு முதல் தேயிலைத் தொழிற்சாலை உத்தியோ கத்தராகப் பணியாற்றிய சாரல்நாடன், அத்துறையில் இருந்து 2000ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அவரது பதவிக்காலத்தில் தொழில்ரீதியாக பல உச்சங்களை இவர் எய்தியுமுள்ளார். தேயிலை ஆராய்ச்சி நிலையமும் தேசிய தேயிலை முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்வில் அகில இலங்கை ரீதியில் முதன்மையாகத் தேறிய பெருமையும் இவருக்குண்டு. அக்காலகட்டத்தில் தோட்ட சேவையாளர் காங்கிரஸ் அமைப்பில் பொதுச்செயலாளராகவும் இவர் பணியாற்றி யுள்ளார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 70

சாரல் நாடன் வெற்றிகரமான இவரது தொழிற்றுறையுடன் தொடர்பற்ற இலக்கிய, ஆய்வியல் பணிகளும் தங்குதடையின்றி இக்காலத்தில் சமாந்தரமாக இடம்பெற்று வந்துள்ளமை சாரல்நாடனின் மற்றொரு சிறப்பியல்பாகக் கணிக்கலாம்.
1994இல் மலைக்கொழுந்து என்ற தலைப்பில் பாரிய சிறு கதைத் தொகுப்பு ஒன்றினை சாரல் நாடன் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். நாவல்களிலோ, சிறுகதை, கவிதைத் தொகுப்புக்க ளிலோ ஈடுபாடு காட்டாது கற்பனை கலவாத ஆய்வு நூல்களையே அதுவரையில் தந்துவந்த சாரல் நாடானின் படைப்பிலக்கியப் பணியில் வெளியான முதலாவது நூல் இதுவாகக் கருதலாம் என நம்புகின் றேன். ஈழத்து எழுத்தாளர் என்.சோமகாந்தன் அவர்களின் ஒத்துழைப் புடன் சென்னை 600026: குமரன் பதிப்பகத்தின் வாயிலாக டிசம்பர் 1994இல் இவர் இதை தொகுத்து வெளியிட்டிருந்தார். இத் தொகுதி யில் இடம்பெற்ற கதைகள் யாவுமே மலையகத் தேயிலைத் தோட்டங் களில் உழைக்கும் தொழிலாளர்களது யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாகும். கற்பனை குறைந்து சிறப்புப் பெறும் இக்கதைகள் வளர்ச்சியடையும் சமுதாயத்தின் சமகால வரலாற்று நிகழ்வாகவும் இருப்பதை அவதானிக்க முடிந்தது. இந்த மலையகச் சிறுகதைத் தொகுப்பு அவ்வாண்டுக்கான மத்திய மாகாண சாகித்திய மண்டலப் பரிசினையும் இவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
மலையகம் வளர்த்த தமிழ என்ற மற்றொரு கட்டுரைத் தொகுப்பு 1997இல் சென்னை 17: துரைவி பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்தது. மலையக படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு மற்றொரு தளத்தில் நின்று அரும்பங்காற்றிய அமரர் துரை விஸ்வநாதன் அவர்க ளால் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. 156 பக்கம் கொண்ட இந்நூல் 1990-1995 காலகட்டத்தில் சாரல்நாடன் அவர்களால் எழுதப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பாகும். மலையகத்தைப் பின்புலமாகக் கொண்ட அது தொடர்பான கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, நூலகம், நூலியலும் வெளியீட்டுத்துறையும், நாட்டார் வழக்கியல், சிறுசஞ்சிகைகள் எனப் பல்வேறு அம்சங்கள் பற்றி இவரால் எழுதப்பட்ட
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 71

Page 38
சாரல் நாடன் பத்திரிகைக் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாக இந்நூல் அமைந் துள்ளது. சாரல்நாடனின் இலக்கியத் தோழனாகவும், 80களின் ஆரம்பத் திலிருந்து இவரது ஆய்வு முயற்சிகளின் உந்துசக்தியாகவும் இயங்கி வரும் அந்தனி ஜீவா அவர்கள் மலையகம் வளர்த்த தமிழ என்ற இந்நூலின் இணைநூலான மலையகம் வளர்த்த கவிதை என்ற நூலை 2002இல் வெளியிட்டிருப்பதையும் இவ்வேளையில் குறிப் பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மத்திய மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் எழுதப்பட்டு 2003இல் வெளியாகிய மலையகத் தமிழர் வரலாறு என்ற சாரல்நாடனின் மற்றொரு ஆய்வு நூல் சாகித்திய மண்டலப் பரிசை மீண்டும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. தொழிற்றுறையில் ஓய்வுபெற்றதன் பின்னர் 2000இல் இவரது இலக்கியப்பணிகள் வீறுடன் செயற்படுவதை இப்பொழுது காணமுடி கின்றது. சாரல் வெளியீட்டகம் என்ற நூல் வெளியீட்டகம் ஒன்றை உருவாக்கி அதன்வழியாகத் தரமான ஆய்வுகளை நூலுருவில் கொண்டு வரும் பணியில் சாரல் நாடன் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார். அதன் ஒரு கட்டமாக மலையக இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை கொட்டகல: சாரல் வெளியீட்டகம் ஜூலை 2000இல் வெளியிட்டுள்ளது. மலையக இலக்கியம் உருவான வரலாறு, அதன் ஆரம்ப நிலைப் பாடுகள் ஆகியவற்றை விளக்கும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது.
பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற மற்றொரு நூலையும் கொட்டகலை: சாரல் வெளியீட்டகம், நவம்பர் 2001ல் வெளியிட்டுள் ளது. இது சாரல் நாடனின் குறுநாவல் தொகுப்பொன்றாகும். ஜே.வி.பி. ஆயுதம் ஏந்திய காலகட்டத்தில் இலங்கையில் நிலவிய பயங்கரவாதப் பின்னணியில் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நேர்ந்த இன்னல்கள் பற்றிய சித்திரிப்பாகவும், கறுப்பு ஜுலைக்கு இலங்கை உட்படுத்தப்பட்ட வேளையில் மலையகத்தில் ஓர் இந்தியப் பத்திரிகையாளனுக்கு நடந்ததைச் சித்திரிப்பதாகவும் அமையும் பிணந்தின்னும் சாத்திரங்கள், நம்பியவருக்காக, சமரசம், பலி ஆகிய நான்கு குறுநாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 72

சாரல் நாடன்
சாரல்நாடன் தான் எழுதிய சிறுகதைகளை மாத்திரம் கொண்ட சிறுகதைத் தொகுப்புகளை இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில் லையாயினும் இவரது கதைகள் பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. கதைக்கனிகள் (1991), இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் (1994), மலையகச் சிறுகதைகள் (1997), சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்(1998) ஆகியன அவற்றுள் சிலவாகும்.
இவரது கட்டுரைகளும் சில தொகுப்பு நூல்களில் இடம்பெற் றுள்ளன. இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 1995இல் வெளியிட்ட தமிழ் நாட்டார் வழக்காற்றியல் என்ற ஆய்வுத் தொகுப்பில் சாரல்நாடனின் "மலையக நாட்டார் பாடல்கள்" என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. மத்திய மாகாண அரசின் சாகித்திய மலர்கள் பலவற்றில் இவரது ஆக்கங்கள் இடம்பெறத் தவறுவதில்லை.
கடந்த 2003 மார்ச் 22-23ம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 61வது ஸ்தாபக விழாவின்போது இறுதிநாளான 23ம் திகதி சாரல் நாடன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவொன்றை மேற் கொண்டார். அவரது நீண்ட சொற்பொழிவின் எழுத்துரு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஓலை 27இல் வெளியாகி யுள்ளது. அதில் அவர் கூறியுள்ள கருத்துக்களை மீள இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
"மலையக இலக்கிய கர்த்தாக்கள் என்றறியப்பட்ட பலரின் எழுத்துக்கள் மலையக இலக்கியச்சோலையை வளம்படுத்துவதாக அந்தந்தக் காலங்களில் தோன்றி மறைந்த பத்திரிகைகளிலும் சிற்றேடு களிலும் எழுதப்பட்டன. இன்றும் இச்சிற்றேடுகளில் தான் இவை உயிர்வாழ்கின்றன. படைத்த அவர்கள் தம் படைப்பின் துடிப்பை மாத்திரமே பிரதானமாக எண்ணினர். அவற்றை மீட்டிப் பார்க்கவோ, மீளப்படைக்கவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. நினைப்பும் இருக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லாதது போலத்தான் நமது பெரும்பாலான எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. உடல்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 73

Page 39
சாரஸ் நாடன்
உழைப்பாளர்களாக அறியப்பட்ட கல்வி அறிவு பெறாதிருந்த அவர்களது காலத்தில் அது சரியாக இருந்திருக்கலாம். இன்று நிலைமை வேறு. தமது காலத்தைய ஆதாரங்களாக எதையுமே விட்டுவைக்காத அவர்களின் வாழ்க்கை முறைமை நமக்குக் கற்றுத் தந்ததெல்லாம் நம்மை ஆவணப்படுத்தலுக்காக உந்தச் செய்கின்றன."
சாரல்நாடன் அவர்களின் மேற்கூறப்பட்ட சிறப்புரைப் பகுதியின் தாக்கத்தின் வெளிப்பாடாக நாமும் அவரிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கவேண்டியவர்களாகின்றோம். கொட்டகலை இலக்கிய வட்டம், மலையகக் கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றின் தலைவரா கவும், சாரல் வெளியீட்டகத்தின் இயக்குநராகவும் இருந்து முழுமை யாக இலக்கியப்பணியில் தன்னை இன்று ஈடுபடுத்தி உழைத்துவரும் சாரல்நாடன் அவர்கள் சிதறிக்கிடக்கும் தனது படைப்புக்கள் அனைத்தையும் தேடித்தொகுத்து ஒழுங்குபடுத்தித் தொகுப்பு நூல்களாக்கி வழங்கவேண்டும். இன்று அவர் முன்னுள்ள பாரிய இலக்கியப் பணி அதுவாகவே இருக்கும். இதற்கான ஒழுக்கச் செயற் பாட்டுத் திறன் இவரிடமுண்டு. வசதியும் வாய்ப்பும் உண்டு. தனக்கென ஒரு பதிப்பகமும் உண்டு. இதை இவரது எதிர்கால இலக்கியப் பணிகளில் முக்கியமானதாகக் கொள்வார் என்றே நம்புகின்றேன். இவரது பணிக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் நிச்சயம் கைகொடுப்பார்கள்.
மல்லிகை இதழின் ஆகஸ்ட் 1991 இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்று சிறப்புச் செய்யப்பட்ட இவர் மீண்டும் ஞானம் சஞ்சிகையின ஜனவரி 2005 க்குரிய இதழின் அட்டையிலும் இடம்பெற்றுள்ளார். அண்மையில் இலங்கை அரசின் இலக்கிய வித்தகர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவ்வாண்டு மணிவிழாக் காணும் சாரல்நாடன் அவர்க ளின் மலையகத் தமிழரின் வரலாற்றுத் தடத்திற்கானதும் தமிழ் இலக்கியத்திற்கானதுமான தேடல் மற்றும் இலக்கிய ஆய்வியல் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துவோம்.
நன்றி. ஐ.பீ.சீ. காலைக்கலசம், 18.09.2005,
சுடரொளி செப்டெம்பர், 2005, நவம்பர்-டிசம்பர், 2005
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 7

மலையக மனிதர்கள்: தெளிவத்தை ஜோசப்
மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியமாக்கி தமிழ் உலகில் மலையக இலக்கியம் என்றொரு ஈழத்து இலக்கியப் பரப் பினை உருவாக்கிய மண்ணின் மைந்தர்களுள் தெளிவத்தை ஜோசப் முக்கியமானவர். அறுபதுகளில் தொடங்கி, கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரைகள் என்று எழுதிவரு பவர். இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பாராட்டுக் களையும் வென்றவர். இலங்கையில் மாத்திரமன்றி தமிழகத்திலும் தனது எழுத்துக்களால் பெயர்பெற்றவர்.
திருச்சி மாவட்டத்திலிருந்து இலங்கையின் தேயிலைத்தோட் டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு ஆசிரியராகப் பணிபுரியவென மலையகத்துக்கு வந்துசேர்ந்து பதுளையில் கட்டவளை என்ற ஊரில் ஊவாக்கட்டவளைத் தோட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சந்தனசாமிப்பிள்ளை. இவருக்கும் இவரது துணைவியார் பரிபூரணத் திற்கும் 16.02.1943 இல் மகனாகப் பிறந்த ஜோசப் பின்னாளில் மலையகத்தின் தெளிவத்தையில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தன் பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக்கொண்டார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 75

Page 40
தெளிவத்தை ஜோசப்
சென்னையிலிருந்து வெளிவந்த சிற்றிலக்கிய ஏடான 'உமா’ என்ற சஞ்சிகை அறிமுகப்படுத்திய அட்டைப்படக்கதைப் போட்டியில் வாழைப்பழத்தோல என்ற தனது முதலாவது கதையை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பாதம் பதித்தவர் இவர். பின்னர் வீரகேசரி யின் ‘தோட்டமஞ்சரி’ என்ற பக்கத்தில் இவரது படைப்பிலக்கியங்கள் வெளிவர ஆரம்பித்தன.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து மு.நித்தியானந்தன் அவர்கள் தனது வைகறை வெளியீட்டகத்தினால் "நாமிருக்கும் நாடே என்ற தலைப்பில் ஒருநூலை வெளியிட்டார். இந்நூல் 1979ம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப்பெற்றுக் கொண்டது. இவ்விருதினைப் பெற்ற முதலாவது மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களாவார்.
1964 ஜூன் மாதத்தில் தெளிவத்தை ஜோசப் மலையகத்தி லிருந்து கொழும்புக்கு வந்து வாழ்ந்த காலங்களில் மலையக எழுத்தாளர்களான சாரல்நாடன், என்.எஸ்.எம்.ராமையா, செந்தூரன், சிவலிங்கம் போன்றோருடன் நெருங்கிய இலக்கியத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின்னர், இலைமறைகாயாக இருந்த இவரது இலக்கியவளம் வெளியுலகின் கவனிப்புக்கு உள்ளாகியது. 1968இல் திருமணம் முடித்த தெளிவத்தை ஜோசப், பின்னர் கொழும்பின் புறநகரான வத்தளையில் வாழ்ந்துவருகின்ற போதிலும் இவரது இலக்கியத்தொடர்பு இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா, ஐரோப்பா வரை நீண்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் லண்டன் விஜயமொன்றி னை மேற்கொண்டிருந்த தெளிவத்தை ஜோசப் அவர்கள் ஒக்டோபர் 18ம் திகதி, மலையகம்: நூற்றாண்டுத் துயரம் என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருந்தார். தமிழியல் மற்றும் லண்டன் கலை இலக்கிய நண்பர்கள் அமைப்பினர் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.
தினகரன் வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்த மலையகச் சிறுகதை வரலாறு என்ற இவரது ஆய்வு இலக்கியவாதிகளிடையே
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 76

தெளிவத்தை ஜோசப்
விதந்து பேசப்பட்டது. இத்தொடர் அமரர் துரை விஸ்வநாதன் அவர் களது துரைவி பதிப்பகத்தினால் பெப்ரவரி 2000ஆம் ஆண்டில் நூலுருவாக்கப்பட்டு அவ்வாண்டுக்கான அரச சாகித்திய விருதையும், யாழ்ப்பாணத்திலிருந்து சம்பந்தன் விருதையும் பெற்றுக்கொண்டது.
சென்னையிலிருந்து சுபமங்களாவும், இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் என்ற குறுநாவல் வெற்றி பெற்றது.
மலையக இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர், தமிழ்த் திரைப்படத்துறையையும் விட்டுவைக்கவில்லை. ‘புதிய காற்று' என்ற இலங்கைத் திரைப்படத்தின் கதைவசனகர்த்தாவாகவும் இவர் பங்களித்துள்ளார். ரூபவாஹினியில் ஒளிபரப்பாகிய காணிக்கை என்ற தொலைக்காட்சி நாடகத்தையும் வெற்றிகரமாக உருவாக்கி யிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து தமிழிலக்கியத்துறையில் ஓர் இன்றியமையாத மனித ராகத் திகழும் தெளிவத்தை ஜோசப் அவர்கள், எதிர்காலத்தில் மலையக இலக்கியம் பற்றிய ஆய்வுத்தேடலில் ஈடுபடவுள்ள ஆய்வாளர்களால் தவிர்க்கப்பட முடியாதவராக என்றென்றும் இருப்பார்.
சுடரொளி, புரட்டாசி-ஐப்பசி, 2006
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 77

Page 41
O
மலையக மனிதர்கள்: துரைவி பதிப்பகமும் அமரர் துரை விஸ்வநாதனும்.
மலையகத்தின் பதிப்பகத்துறையில் காத்திரமான பங்களிப் பினை குறுகிய காலத்தினுள் நல்கி மலையக இலக்கிய வரலாற்றுடன் தன்னை இரண்டறப் பிணைத்துக்கொண்டது துரைவி பதிப்பகமாகும். இதன் நிறுவகர் துரைசாமி ரெட்டியார் விஸ்வநாதன் (1931 - 1998) இன்று மலையக இலக்கியவாதிகளால் அன்புடன் நேசிக்கப்படும் ஒரு பதிப்பாளராகக் குறுகிய காலத்தில், குறிப்பாகத் தன் இறுதிக்கா லத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் சிக்கத்தம்பூர், துறையூரில் 28.02.1931இல் பிறந்த துரை விஸ்வநாதன், தனது பதினான்காவது வயதில் 1945இல் தொழில்வாய்ப்பினைத்தேடி இலங்கைக்கு வந்தார். மலையகத்தில் கந்தப்பளை கண்ணன் அன் கம்பெனி, கொழும்பு அஷோக் அன் கம்பெனி, போன்றவற்றில் ஆரம்பத்தில் தொழில் பார்த்த இவர் பின்னர் 1961 முதல் 1966வரை மடுல்கல்லை ஜே.எல்.எஸ். கம்பெனி யில் முகாமையாளராகப் பணியாற்றினார். 4.2.1963இல் தோட்டக்கணக் குப்பிள்ளையின் மகளான ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து மாத்தளையில் குடும்பவாழ்வில் ஈடுபட்டார். இவர்களுக்கு மலர்ச் செல்வி, ஆனந்தசெல்வி என்று இரு பெண்களும், ராஜ்பிரசாத்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 7
 

விளம்வநாதன்
என்ற மகனும் பிறந்தார்கள். அங்கு 1966இல் மடுல்கல்லை ஜே.எல். எஸ். கம்பெனியின் முகாமையாளர் பதவியைத் துறந்து ராணி கிரைண்டிங் மில்ஸ் என்ற தொழிலகத்தினை தாபித்து பின்னாளில் வர்த்தகத் துறையில் அவர் ஆழக்கால் பதித்தார். வெற்றிகரமான வர்த்தகத்தின் விளைவாகப் பின்னர் 1967இல் மாத்தளை விஜயாஸ் நிறுவனத்தையும் ஆரம்பித்தார். இதன் நீட்சியாக 1976இல் கொழும்பில் விஜயா ஜெனரல் ஸ்டோர்ஸ் உருவாகியது.
மலையகத்தில் நுவரெலியா, கண்டி மாத்தளை என்று வர்த்தகம் செய்தபின்னர் மாத்தளையும் கொழும்பும் என்று தன் வர்த்தகப் பணிகளை மட்டுப்படுத்திக்கொண்டார். மலையகத்திலும் கொழும்பிலும் இவரது வர்த்தக முதலீடுகள் வெற்றிகரமானவையாக அமைந்த வேளையில் கொழும்பு வர்த்தக நிறுவனத்தின் வருமானத் தை முழுமையாக சமூக சேவைகளுக்கே செலவிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, அமரர் விஸ்வநாதன் சமூக சேவையாளரான ஒரு வர்த்தகப் பிரமுகராகவே ஆரம்பத்தில் இனம் காணப்பட்டார். இவரது சமூகப்பணிகளை விதந்து 1996 ஒக்டோபரில் இலங்கை அரசு இவரை ஒரு சமாதான நீதவானாகவும் நியமித்திருந்தது.
பாடசாலைக் கல்வியை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது போன இவர் இளமையிலேயே வாசிப்புப் பழக்கத்துக்கு அடிமையானவர். வாசிப்பின் மூலமே தன் உலக அறிவை வளர்த்துக் கொண்டவர். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பதற்கு வாழும் உதாரணமாகி நின்றவர். தீவிர வாசிப்புடன், நூல்களை வாங்கி வாசித்துப் பேணி வைக்கும் இயல்பும் இவரை ஈழத்து இலக்கியவாதிகளுடன், குறிப்பாக மலையக இலக்கியகர்த்தாக் களுடன் நெருங்கிய உறவைப்பேண வைத்தது. இவர் தனது இறுதித் தொகுப்பான "பரிசுபெற்ற சிறுகதைகள்" என்ற நூலின் முன்னுரையில் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இலங்கையிலும், தனது தாயகமான இந்தியாவிலும் வர்த்தக நலன்களைக் கொண்டிருந்ததால், அடிக்கடி தாயகம் சென்று திரும்பவேண்டிய தேவை இவருக்கு இருந்தது. ஒவ்வொரு தடவையும் தாயகம் சென்று திரும்பும் வேளை யில் அங்கிருந்து ஏராளமான புதிய நூல்களைக் கொண்டு வந்து
மலையக இலக்கிய கர்த்தாக்கள் என். செல்வராஜா 7.

Page 42
விஸ்வநாதன்
தனது இலக்கிய நண்பர்களுடன் பரிமாறிவந்ததாக மேமன் கவி அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துக்கொள்ள நூல்கள் எந்த அளவுக்கு உதவமுடியும் என்பதற்கு நானே உதாரணமாகி விட்டதினால் நல்ல நூல்கள்பால் ஒரு மதிப்பும் அவை ஆக்கித்தரும் எழுத்தாளர்கள்மேல் ஒரு மரியாதையும் என்னுள் வளர்ந்தன. இந்த மதிப்பும் மரியாதையுமே பிறகு நட்பாகி ஈழத்து எழுத்தாளர்களுடனான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது." துரை விஸ்வநாதனுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தவர்களுள் தெளிவத்தை ஜோசப், மல்லிகை டொமினிக் ஜீவா ஆகியோர் குறிப்பிடத்தகுந்த வர்கள். வர்த்தகப் பிரமுகரான ஒருவரை மலையகத்தின் முக்கியமான பதிப்பாளராக்கி மலையக இலக்கிய வரலாற்றில் அவரது பெயரைப் பதியவைத்த பெருமை இவ்விருவரையும் சாரும்.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை தொடர்ந்து வெளிவந்த காலத் தில், போர்க்கால நெருக்கடி காரணமாக உள்ளகப் புலப்பெயர்வை மேற்கொண்டு நிரந்தரமாக டொமினிக் ஜீவா அவர்கள் கொழும்பை வந்தடைந்ததன் பின்னர், மல்லிகை இதழ் கொழும்பிலிருந்து தொடர்ந்து வெளிவரப் பக்கபலமாக துரை. விஸ்வநாதன் அவர்கள் இருந்துள்ளார். மலையகத்தில் ஒரு பதிப்பகம் தேவை என்ற கருவை துரை விஸ்வநாதனின் மனதில் பதியம்வைத்ததுடன் துரைவி பதிப் பகம் என்று அதற்குப் பெயருமிட்டுத் தந்தவர் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்கள். துரைவி பதிப்பகம் 1996 டிசம்பரில் உருவாகியது.
1983 இனக்கலவரத்தின்போது, திட்டமிட்ட முறையில் சிங்கள அரசினால் நடத்தப்பட்ட தமிழ்வர்த்தகர்களின் அழிப்பு முயற்சியின் போது, மாத்தளையிலிருந்த ராணி, விஜயா வர்த்தக நிலையங்கள் காடையர்களால் எரித்தழிக்கப்பட்டன. இவரது இல்லமும் அதில சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க வாழ்நாள் சேகரிப்பான நூல்களும், ஆவணங்களும் அழித்தொழிக்கப்பட்டன. இந்த அழிவுக ளின் பின்னர் மனைவி பிள்ளைகளை தமிழகத்துக்கு அனுப்பி வைத்து வைத்துவிட்டு இவர் தமிழகமும் மலையகமுமாகத் தன் பணியைத் தொடர்ந்து வந்தார்.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 80

விஸ்வநாதன்
முத்துச் சிதறல்களாகச் சிதறிக்கிடப்பதால் காலஓட்டத்தில் மறைந்துவிடக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்த மலையகப் படைப்பிலக்கியத்துக்கு ஒரு நிரந்தரப் பதிவினைத் தரவேண்டும் என்றும் அதைத் துரைவி பதிப்பகத்தின் வாயிலாக நிறுவன ரீதியில் இயங்கி முறையாகத் தொகுத்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு, குறிப்பாக மலையக இலக்கியத்துறைக்குச் சமர்ப்பிக்கவேண்டும் என் றும் அவர் புயலாகச் செயற்படலானார். இவரது வேகத்துடன் இணைந்து தெளிவத்தை ஜோசப் அவர்களும் அவரது மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இலக்கிய நண்பர்களும் இணைந்து 1997 பெப்ரவரியில் 33 மலையகச் சிறுகதைகளைத் தொகுத்து, மலையகச் சிறுகதைகள் என்ற நூலையும் 1997 ஜூலையில் மேலும் 55 மலை யகச் சிறுகதைகளைத் தொகுத்து உழைக்கப் பிறந்தவர்கள் என்ற நூலையும் மலையகச் சிறுகதைகளின் தொகுப்பாகக் கொண்டு வந்தார்கள். 88 எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைப் படைப்புக்களை இவ்விரு தொகுப்புகளும் கொண்டிருந்தன. முதலிரு நூல்களுடன், தெளிவத்தை ஜோசப் அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுப் பான பாலாயி (ஜூலை 1997), சாரல் நாடனின் கட்டுரைத் தொகுப் பான மலையகம் வளர்த்த தமிழ் (நவம்பர் 1997), சக்தி பாலையா கவிதைகள் (பெப்ரவரி 1998), ரூபராணி ஜோசப் எழுதிய ஒரு வித்தியாசமான விளம்பரம் (ஜூன் 1998), அந்தனி ஜீவா எழுதிய மலையக மாணிக்கங்கள் (செப்டெம்பர் 1998), கே.கோவிந்தராஜின் நடைச்சித்திரமான தோட்டத்துக் கதாநாயகர்கள் (நவம்பர் 1998), துரைவி- தினகரன் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற சிறுகதைகள் (டிசம்பர் 1998) என்று முழு மூச்சுடன் ஒன்பது நூல்களை இரண்டு வருடங்களுக்குள் வெளியிட்டுவிட்டு சடுதியாக டிசம்பர் 1998இல் உலகை விட்டே மறைந்துவிட்டார் துரை விஸ்வநாதன் அவர்கள். 1997-1998 ஆகிய இரண்டு ஆண்டுகளும் துரைவியின் பெயர் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லை என்னும் அளவிற்கு வெளியீட்டு விழாக்களும், பாராட்டு விழாக்களுமாக நகர்ந்தது. இக்காலகட்டம். உலகத்தமிழர்களை, குறிப்பாக இலக்கியவாதிகளை மலையக இலக்கியத்தின்பால் தமது தீவிர பார்வையையைத் திருப்பவைத்தது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 8.

Page 43
விஸ்வநாதன் - SS இலங்கையில் மத்திய மாகாண சாகித்திய விழாவின் போது கலாச்சார அமைச்சு விருதினை டிசம்பர் 1997இல் சுவீகரித்துக்கொண்ட இவருக்கு, அதே ஆண்டில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இலக்கிய காவலர் என்ற பட்டமளித்தும் கெளரவித்தது.
துரை விஸ்வநாதன் அவர்கள் செப்டெம்பர் 1998இல் தினக ரனுடன் இணைந்து துரைவி தினகரன் சிறுகதைப்போட்டி ஒன்றினை இகில இலங்கை ரீதியில் அறிவித்தார். துரைசாமி ரெட்டியார் - சிவ காமி அம்மாள் ஆகிய தனது பெற்றோரின் நினைவாக, பரிசுப்பணமாக 101,000 ரூபாவும் அதற்காக ஒதுக்கியிருந்தார். தினகரன் ஆசிரியராக ராஜரீகாந்தன் அவர்கள் இயங்கிய காலத்தில் இது நடந்தது. இதன்போது பரிசுக்குரியவையாகத் தேர்ந்த சிறுகதைளைத் தொகுத்து டிசம்பர் 1998இல் வெளியிட்ட பரிசுபெற்ற சிறுகதைகள் என்ற ஒன்பதாவது துரைவி வெளியீடே துரை விஸ்வநாதனின் இறுதி இலக்கியப்பதிவாக அமைந்துவிட்டது.
1998 ஒக்டோபரில் மல்லிகை சஞ்சிகை துரை.விஸ்வநாதன் அவர்களின் படத்தை அட்டைப்படமாகப் பிரசுரித்து அவர் பற்றிய ஒரு கட்டுரையையும் எழுதியிருந்தது. அது வெளிவந்த இரு மாதங்க ளிலேயே 21.12.1998 இல் துனரவி அவர்களின் மரணம் சடுதியாக அவரை அனைத்துக்கொனன்டது.
மனித வாழ்வில் மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தின் பின்னதான மனிதனின் வாழ்வு, மரணத்தின் முன்னர் அவன் வாழ்ந்த வாழ்விலேயே, நிகழ்த்திய சாதனைகளிலேயே மிகவும் தங்கியுள்ளது. அமரர் துரை.விஸ்வநாதன் அத்தகையதொரு சாதனையாளர். வர்த்தகப் பிரமுகர் துரை விஸ்வநாதனாக அல்லாது, மலையகப் பதிப்பகத்துறையில் இதயசுத்தியுடன் ஈடுபட்ட அவரது இரண்டு வருட கால இலக்கியப்பணியே அவரை இன்றும் கடல்கடந்தும் நினைவு கூரவைத்துள்ளது.
நன்றி. சுடரொளி, கார்த்திகை-மார்கழி,2006
மலையக இலக்கிய கர்த்தாக்கள் [ମାକ୍ସ୍]. செல்வராஜா 8.

மலையக மனிதர்கள்: மலைவிளக்காகத் திகழ்ந்த இலக்கியச் சுரங்கம் கே.கணேஷ்.
மலையகத்திலிருந்து கிளம்பிப் பரந்துபட்ட தமிழக, ஈழத்துத் தமிழ் இலக்கியகர்த்தாக்களிடையே தனக்கென்றொரு இடத்தை நிரந் தரமாக்கிய பின்னர் எம்மை விட்டுப் பிரிந்துள்ள படைப்பாளிகளுள் மலையகத்தின் மலை விளக்கு கே.கணேஷ் குறிப்பிடத்தக்கவர். கண்டிக்கு அருகிலுள்ள அம்பிட்டிய என்னும் பிரதேசத்தில் தலாத்து ஒயவில் வாழ்ந்து 05.06.2004ல் மறைந்த கனேஷ் 02.03.1920ல் பிறந்தவர்.
சித்திவிநாயகம் என்ற இயற்பெயரைக்கொண்ட கே.கணேஷின் முன்னோர் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தத்தமங்கலம் என்ற சிற்றுாரிலிருந்து தாது வருஷப்பஞ்சத்தின்போது இலங்கைக்குக் கப்பலேறி மன்னார் மாத்தளை வழியாக மலையகத்தில் வந்து குடியேறியவர்களாவர். தந்தைவழிமூதாதையர் வைணவர்களாக ரீரங்கம் அரங்கநாதனையும் திருப்பதி வெங்கடாசலபதியையும் குல தெய்வமாகப் போற்றியவர்கள். தாய்வழித்தாத்தா மலைநாட்டில் கங்கானியாக இருந்தவர். பின்னாளில் பேருவளையில் ரைட்டராகப் (P. W.D.Overseer) LJGodfluIITppij)|1161j.
இளவயதில் தன் ஆரம்பக்கல்வியை தோட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள Baptist Mission பெண்கள் கல்லூரியில் சிங்களமொழி
மனப்பாக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 83

Page 44
கே. கணேஷ்
மூலமும் பின்னர் கண்டி சென்ட்அன்டனி (St. Anthony's) கல்லூரியில் ஆங்கில மொழிமூலமும் கற்றார். தமிழ்மொழியைத் தனது தாயார் மூலம் வீட்டிலேயே கற்றுத் தெளிந்துள்ளார். அத்தாயின் மொழியே பின்னாளில் அவரது குருதியுடன் கலந்துநின்றுள்ளது. தமிழகத்திலி ருந்து தாயார் தபாலில் பெற்றுத்தரும் தமிழ்கதை நூல்களை ஆர் வத்துடன் படித்துள்ளார். 1934ம் ஆண்டு முதல் இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமீந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் ஆதரவுடன் தொடங்கப்பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தி லும் சிலகாலம் கல்வி பயின்றுள்ளார். 1934-1935களில் இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. இவரது இடதுசாரிக் கொள்கைகளாலும் தொடர்புகளினாலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலி ருந்து சில மாதங்களிலேயே விலகவேண்டி ஏற்பட்டது. பின்னர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் நுழைவுத் தேர்வில் சான்றிதழ் பெற்று திருவையாறு அரச கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
தனது பன்னிரண்டாவது வயதில் (1932இல்) ஆனந்தபோதினி என்ற பிரபல்யமான ஏட்டில் தனது எழுத்துப்பணியை ஆரம்பித்தவர் கே.கணேஷ். பின்னாளில் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன் சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற சிற்றிலக்கிய ஏடுகளி னுாடாகத் தன் எழுத்துலக வாழ்வில் பயணித்துவந்தார். மணிக்கொடி சஞ்சிகையில் இரண்டு கதைகளை எழுதியவர் இவர். புதுமைப்பித்தன், பிச்ச மூர்த்தி, வல்லிக்கண்ணன் போன்றோரின் காலத்தில் அவர்களு டன் நெருங்கிப் பழகியவர். இலக்கியக் கருத்துப்பரிமாற்றங்களில் வீறுடன் இறங்கியவர். சஞ்சிகை ஆசிரியர்களான பி.எஸ்.ராமையா, ப.ராமஸ்வாமி, கு.ப.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன், தி.ஜர போன்றோ ருடன் இலக்கியத் தொடர்பினை ஆரோக்கியமாகப் பேணி வந்தார்.
இ.மாயாண்டி பாரதி, கே.ராமநாதன் சக்திதாசன் சுப்பிரமணி யம் போன்றோர் அமைத்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஆதரவு டன் லோகசக்தி என்னும் முற்போக்குச் சிந்தனைகொண்ட பத்திரிகை யை சித்தாரிப்பேட்டையில் இருந்த ம.கி.திருவேங்கடம் என்பவர் நடத்தி வந்தார். மாயாண்டி பாரதி - இந்திய அரசின் தியாகச் சின்னம் தாமிர விருது பெற்றவர். முன்னர் திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர். இவரது இல்லத்திலிருந்தே கணேஷ் முன்னாளில் மதுரைத்தமிழ்ச்சங்கத்துக்
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 84

கே. கணேஷ்
குச் சென்று கற்று வந்தார். பொதுவுடைமைக் கருத்துக்களில் நாட்டம்கொண்ட இவருக்கு, லோக சக்தி பத்திரிகையின் வாயிலாக கம்யூனிச சித்தாந்திகளின் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக தமிழகத்தின் கம்யுனிஸ்ட் கட்சித் தோழர் ப.ஜீவானந்தனின் நட்பு இவருக்குக் கிட்டியது. பின்னர் 1938இல் இலங்கை திரும்பியதும் தமிழக கம்யு னிஸ்ட் தலைவர்களுடனும், சுதந்திரப் போராட்ட வீரர்களுடனும் தொடர்பினைப் பேணிவந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் இலங்கை யின் இடதுசாரி இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராகத் திகழ்ந் துள்ளார். எஸ்.நடேசன் தலைமையில் இயங்கிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கலாசார பிரிவின் பொறுப்பாளராக இவர் இருந்துள்ளார். மலையகப் படைப்புலகில் பிரபல்யமான பலர் தொழிற் சங்கவாதிகளாகவும் தொழிலாளர் நலனுக்காகக் குரல்கொடுப்போரா கவும் இருப்பது நூற்றாண்டுப் பழமைமிக்க மலையகத் தமிழர் வரலாற்றில் காலம் காலமாகப் பதியப்பட்டு வந்துள்ளது. கே.கணேஷ் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.
நாடு திரும்பியதும் 1946இல் பாரதி என்ற தலைப்பில் முற் போக்கு சஞ்சிகையொன்றினை, இலக்கியவாதி கே.இராமநாதனுடன் இணைந்து தொடங்கினார். பீற்றர் கெனமனின் வீட்டையே செயலக மாகக்கொண்டு இச்சஞ்சிகை வெளிவந்தது. பாரதியின் வெளியீட்டுக் குத் தேவையான மூலதனத்தைப் பெற அவரது தந்தையார் இவர் பேரில் எழுதிவைத்த தலாத்து ஓயா காணியை (தற்போது தலாத்து ஒயா மத்திய மகாவித்தியாலயம் அமைந்திருக்கும் இடம்) விற்றுச் செலவிட்டுள்ளார். இச்சஞ்சிகையில் அ.ந.கந்தசாமி உட்பட பிரபல படைப்பாளிகள் பலர் எழுதியிருந்தனர். 1948வரை பாரதி ஆறு இதழ்களே வெளிவந்திருந்தாலும், அது மலையக இலக்கியத்தில் ஏற்படுத்திய இலக்கியத் தாக்கம் வரலாற்றில் அழிக்க முடியாததா யிற்று. பாரதி இதழ்கள் பற்றிய விரிவான கட்டுரை முதலில் தினகரனி லும், பின்னர் மீள்பதிப்பாக நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் (மல்லிகைப்பந்தல் வெளியீடு, 2002) என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும் கே.கணேசின் பங்கு குறிப்பிடத்தக்கது. கிழக்கின் சுவாமி விபுலானந் தரை தலைவராகவும் (பண்டிதர் சா.மயில்வாகனம்) சிங்கள இலக்கிய
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 85

Page 45
கே. கணேஷ்
முன்னோடி மார்ட்டின் விக்கிரமசிங்கவை உபதலைவராகவும் கொண்டு இச்சங்கம் உருவாகியிருந்தது. அச்சங்கத்தில் கணேஷ் கலாநிதி சரத் சந்திரவுடன் இணைந்து இணைச்செயலாளராகப் பணியாற்றினார். தமிழ் சிங்கள எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்த ஒரு குடை அமைப்பாக அந்நாட்களில் அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் திகழ்ந்தது. செயலாளரான சரத் சந்திரா மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் இச்சங்கம் பின்னாளில் செயல்திறன் குன்றியது. அவ்வேளையில் கே.கணேஷ், பாரதி பத்திரிகை, தேசாபிமானி, நவசக்தி ஆகியவற்றில் எழுதிய எழுத்தாளர்களைத் திரட்டி முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தினை ஆரம்பித்தார். செ.கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி ஆகியோர் ஆரம்பகால அங்கத்தவராகி இவருக்குப் பக்கபலமாயிருந்துள்ளார்கள். இவ்வேளை யில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பிரதிநிதியாகப் பலதடவைகள் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று வெளிநாட்டுப் பயணங்களை இவர் மேற்கொண்டுள்ளார். சீனா, ரஷ்யா, பல்கேரியா போன்ற நாடுகள் அவற்றுட் சில.
இலங்கையின் சுதந்திரத்தின் பின் வீரகேசரி பத்திரிகையின் வாரப்பதிப்பில் திரு லோகநாதனின் கீழ் துணையாசிரியராகப் பணி புரிந்துள்ளார். கே.பி.ஹரன், கே.வீ.எஸ்.வாஸ் போன்றவர்களுடன் பணியாற்றிய கே. கணேஷ், வீரகேசரி சுதந்திர தினச் சிறப்பு மலரின் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்று ஒப்பேற்றியிருந்தார். இவரது தீவிர கொம்யுனிசவாதிகளின் தொடர்பு காரணமாக மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்றே, சிலகாலங்களில் வீரகேசரியிலிருந்தும் விலக்கப்பட்டார். 1947 ஜூன் 1ம் திகதி சுதந்திரன் பத்திரிகை அரசியல் தினசரியாக வெளிவந்தபோது அதன் ஆரம்பகால ஆசிரியராக கோ. நடேசையர் பணியாற்றினார். பின்னாளில் எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்த வேளையில் 1956இல் கே.கணேஷ் அங்கு செய்தியாசிரியராகப் பணியாற்றியுமுள்ளார். ஒரு மொழிபெயர்ப்பாளராக, கே.கணேஷின் பணி விதந்து கூறத்தக்கது. மணிக்கொடியில் அதிர்ஷ்டசாலி என்ற பெயரில் ஹங்கேரியச் சிறுகதையொன்றை மொழிபெயர்த்து எழுதி னார். இதுவே இவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சியாகும். தத்தமங் கலம் க.கணேசன் என்ற பெயரில் அது வெளிவந்திருந்தது. அவர் மொழிபெயர்த்த முதல் நூல் முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய தீண்டத்தகா தவன் என்ற நாவலாகும். 1947இல் இது மொழிபெயர்க்கப்பட்டது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 86

கே. கணேஷ் பம்பாய்க்காரரான கே.ஏ.அப்பாசின் நண்பராகவிருந்த கே.கணேஷ் அவரது சில சிறுகதைகளையும் மொழிபெயர்த்து கல்கி வார இதழில் தொடர்ச்சியாக இடம்பெறச்செய்தார். ஒவியர் மணியனின் ஒவியங்க ளுடன் இக்கதைகள் வெளிவந்து கே.கணேஷின் மொழிபெயர்ப்புத் திறனை தமிழக வாசகர்களிடம் எடுத்துச் சொல்லின. இச்சிறுகதைகள் பின்னர் 1955இல் குங்குமப்பூ என்ற தலைப்பில் தமிழகத்தில் இன்ப நிலைய வெளியீடாக வெளிவந்தன. கணேஷின் மொழிபெயர்ப்புப் பணி லூசுன், ஹோசிமின், அல்தாய் முகம்மத்தோவ், பார்பரா, குப்ரியானோவ், பல்கேரியக் கவிஞர்கள் என்று பின்னாளில் உலகளா விப் பரந்து விரிந்துசென்றது. நாவல், குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் என்று 22 நூல்கள் வரை கணேஷின் மொழிபெயர்ப்பில் இதுவரை உருவாகியிருந்தன. கே.கணேஷ் சித்தார்த்தன், கலாநேசன், மலைமகன் போன்ற புனைபெயர்களிலும் எழுதியிருந்தார்.
கணேஷின் பணிகளை விதந்து பாராட்டி அரசும் தனியார் அமைப்புக்களும் பல விருதுகளை வழங்கியிருந்தன. இலங்கை அரசின் கலாபூஷண விருதினை இவர் 1995இல் பெற்றிருந்தார். கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் 2002இல் அவ்வாண்டுக்கான இயல் விருதினை இவருக்கு வழங்கிக் கெளரவித்திருந்தது. மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இயல்விருது வழங்கும் வைபவத்திற்கு கனடாவிலிருந்து பேராசிரியர் செல்வா கனக நாயகம் வருகைதந்து அவ்விருதினை கே. கணேஷ"க்கு நேரடியாக வழங்கிக் கெளரவித்தார். கனடாவில் காலம்' சஞ்சிகை தனது 17வது இதழை ஜனவரி 2003இல் கே.கணேஷ் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. கண்டியிலிருந்து தி.ஞானசேகரன் அவர்களின் ஞானம் சஞ்சிகையும் கணேஷ் அவர்களை கெளரவித்து சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட்டி ருந்தது. டொமினிக் ஜீவாவின் மல்லிகை சஞ்சிகை ஏப்ரல் 1971இலும், அந்தனி ஜீவாவின் கொழுந்து சஞ்சிகை மே 1989இலும் கே. கணேஷை அட்டைப்பட அதிதியாக்கி கெளரவித்திருந்தன.
2003 ஜனவரி “காலம் சஞ்சிகையின், கே.கணேஷ் சிறப்பிதழில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கணேஷின் பதில் இங்கு பதிவாக்கப்பட வேண்டியதாகும். மலையக எழுத்தாளராக இருந்தபோதிலும் அவர் மலையகத் தொழிலாளர்கள் பற்றி இலக்கியம் படைக்கவில்லை என்றவொரு குற்றச்சாட்டுக்கு அவரது பதில் பின்வருமாறிருந்தது.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 87

Page 46
கே. கணேஷ்
"நான் இருக்கும் இடம், சுற்றுச் சார்புகள் சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில் தேயிலைத் தோட்டம் தொலைநோக்கிச் செல்ல நேர்ந்ததால், தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அரிதாயிருந்தது. தவிர்த்து அங்கு வசித்த தொழிலாளிகளைப் பற்றி யோ, தேயிலைப் பயிர்ச்செய்கைச் சூழ்நிலைகள் குறித்தோ அறிய எனக்குப் பெரிதும் வாய்க்கவில்லை. இலங்கை, தமிழகத்துப் பள்ளிப் படிப்பை முடித்து நான் முப்பதை எட்டும் காலத்திலேயே மலைநாட்டுப் பகுதியில் நண்பர், உறவினர்களுடன் தங்கி தேயிலைத் தோட்ட வாழ்க்கை முறைகளையும் சூழல்களையும் ஓரளவு அறிய வாய்த்தது. மற்றும் ஏடுகள், நூல்கள் வாயிலாகவே இதுபற்றி அறிய முடிந்தது. எனவே நான் வாழ்ந்த கண்டியச் சூழ்நிலையில் மலையகத்து மக்க ளின் வாழ்வு குறித்து ஆக்கங்களைப் படைக்கத் தகுதியற்றவனாக இருந்த நிலையில் கற்பனையில் கதைகளோ கவிதைகளோ புனைய விரும்பவில்லை. ஒரு ஒட்டம் பார்த்து வந்து அவர்களது உள்ளாத்மா வையே உணர்ந்துவிட்டதாகப் பம்மாத்துப் புரிய மனம் வரவில்லை"
பின்னாளில் தனது இறுதிக்காலத்தில் சுயவரலாற்றையும், சமகால மலையகத் தமிழ் மக்களின் வரலாற்றையும் எழுதி வந்த கே.கணேஷ் அதை நிறைவு செய்தாரா என்று தெரியவில்லை. பேராசிரியர் கா.சிவத்தம்பி இரங்கலுரையொன்றில் குறிப்பிடும்போது "கணேஷ் ஒரு மலை விளக்கு. அதன் ஒளி பல இடங்களுக்கும் தெரியும். பல பாதைகளைச் சுட்டும். அவர் வாழ்ந்த இலக்கிய வாழ்க்கை யை மேலும் ஆக்கபூர்வமானதாக்கும் வகையில் அவரது எல்லா ஆக்கங்களையும் தொகுத்து ஒரு முழு நூலாக வெளியிட வேண்டி யது அவசியம்" என்று தெரிவித்துள்ள கருத்து கே.கணேசுடன் நெருங் கிய தொடர்புகொண்டவர்களின் கவனத்துக்குரியது.
கணேஷ் பற்றிய தனது தினகரன் கட்டுரையொன்றில் மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் "கணேஷ் கட்டிக்காத்த பயனுள்ள பல ஆயிரம் நூல்களைக்கொண்ட அவரது நூலகத்தை அவர் விரும் பியதுபோல கண்டியில் ஒரு பொது நிறுவனம் முன்நின்று பாதுகாக்க வேண்டும். அதுவே கே.கணேஷ் கண்ட கனவாகும்" என்று குறிப்பிட் டுள்ளார். இதுவும் மலையக அறிவு ஜீவிகளின் கவனத்துக்குரியது.
நன்றி: சுடரொளி, மே-ஜூன்,2007
- முதலாம் தொகுதி நிறைவுபெற்றது. -
மலையக இலக்கிய கர்த்தாக்கள் - என். செல்வராஜா 88


Page 47
"நூ
E". (E .הזהה լ: 荃*。 i glb55 TH,000II). டித்துள்ள் TTJ அடு - " T ¶T  ܲ1 - ܘ
国
El
 
 
 
 
 

- EIT
驚
= ی = | TEËELLILLEGE
I, III - 6வது தொகுதி ெ
'ipbTTg
. ¬