கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்க்கையே ஒரு புதிர்

Page 1


Page 2

வாழ்க்கையே
ஒரு புதிர்
ஏ. பி. வி. கோமஸ்

Page 3
VAALKAIYA
(D17 PAIUTATIVA
CShort Stories)
By A. P. V. GOMEZ, B.A.,
(by) Dip-n-Ed. (Retired Principa)
Author of "Angamellam Neranja Machchaan
Copyright reserved
Sixty fifth Publication of :
THAML MANRAM * Galhinna, Kandy, Sri Lanka
Office Address : Thami Manram, No. 10, Fourth Lane, Koswatta Road, Rajagiriya, Sri Lankė
Printed at : Bu səhra Agenesides, Madraş,

இங்கே! ஒரு குறிப்பு
முன்பு பத்திரிகைகளில் பிரசுரமான எனது சிறுகதை களை பத்திரிகைகளிலிருந்து வெட்டி, முறையாகக் கோவைப்படுத்தி வைத்திருந்தேன். பல சமயங்களில் அவற்றை புத்தக உருவில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்ததுண்டு. எனது எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நிலையில்தான், உங்கள் சிறுகதைகளின் தொகுப் பொன்று பிரசுரிக்கலாமா? என்று கேட்டு எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆறு மாதமாகியும் கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி, என்னால் கதைகளை தட்டச்சு செய்து அனுப்ப முடியவில்லை, பின்னர், கதைகளுள்ள கோவையை கொண்டுவந்து தரவும்” எனக் கேட்கப் பட்டேன்.
அப்படியே, ஒருநாள் கோவையைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். சுமார் ஒன்றரை மாதத்தின் பின், என் கைக்கு, வாழ்க்கையே ஒரு புதிர்! என்ற புத்தகம் வந்த தும் ஆச்சரியமடைந்தேன். அத்தனை விரைவில் புத்த கம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை.
மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இதில் உள்ளன. அனைத்தும் தினகரன்; வீரகேசரி, சிந்தாமணி பத்திரிகை களில் முன்பு வெளிவந்தவைதான். ஒன்றிரண்டு, வேறு சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவற்றை புத்தக உருவில் கொண்டுவர அனுமதி தந்த ஆசிரியர்களுக்கு எனது நன்றி.
எனது கோவையிலிருந்து, தானே சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து கவர்ச்சியான புத்தகமாக்கியுள்ள தமிழ் மன்றம் நிறுவனர், தமிழ்மணி, சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு

Page 4
வார்த்தைகளே இல்லை. எனது முதல் நூலான குறுநாவல் அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்-புத்தக வடிவு saltதும் அவரின் முயற்சியால்தான். நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். சாதி, மத, பேதம் பாராமல் தமிழ்த்தொண்டு புரியும் அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் எழுதிய அறுப துக்கு மேற்பட்ட சிறு கதைகளிலிருந்து திரு ஹனிபா தெரிந்துள்ள கதைகள்; எனது வாசக அன்பர்களை மகிழ் விக்குமென நம்புகிறேன்.
.ஏ, பி. வி. கோமஸ் J-86, எம். சி. ரோட் மாத்தளை 18.12.1992
畿
உ . . . ள் . . . ளே . .
1; சோகத்தின் உருவம் s 2. வாழ்க்கையே ஒரு புதிர் - - 2 3. அந்தக் கடிதம் NA 20 ... م 4. தர்ம வழி ... 28 8. லட்சுமி வந்தாள் 88 6. அவள் செய்த முடிவு ... 45 7. uun.T; LuntöLOT ? ar a as 55 8. பாலன் தந்த வாழ்வு a S9 9. அவலம் ... 85 10. மைய வாடியில் ஒரு மலர் ... 71 11. குழந்தை வடிவில். ao y a 77
12. அம்மாவே தெய்வம் 84

அந்தப் பிள்ளைகளுக்குத் தந்தைக்குத் தந்தை யாகப் பணியாற்றி வந்தார், அதிபர், உதவியாசி ரியர்களும் அதிபருடன் ஒத்துழைத்து வந்த னர். பள்ளிக்கூடம் வளர்பிறைபேசல் வளர்ந்து வந்தது
அதிபர், மோகனை ஏறிட்டுப் பார்த்தார், அவன் கண்களில் நீர் மல்கி இருந்தது. விசித்து. விசித்து அழுதுகொண்டிருந்தான் அவன்.ஏன் ?
சோகத்தின் உருவம்
அவ்வளவு பெரிய பள்ளிக் கூடம் என்று அதைச் சொல்லிவிட முடியாது. சுமார் இருநூறு மாணவர்கள்தான் அங்கு படித்துக் கொண்டிருந்தார்கள்.
நகரின் ஒரு கோடியில் அமைந்திருந்த அந்த பள்ளிக்கூடம், அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பள்ளிக் கூடம். எனினும் அருமையாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. இத்தனைக்கும் அங்கு புதிதாகப் பதவியேற்றிருந்த அதி பரின் ஆர்வமே காரணமாகும். பள்ளிக் கூடத்தின் முன் னேற்றத்தில் அவர் அக்கறை கொண்டிருந்ததுடன் மாணவ, மாணவிகள் மீது அன்பும் காட்டி வந்தார்.
ஏதோ சொல்வார்களே, அதுபோல அவர், அந்தப் பிள்ளைகளுக்குத் தந்தைக்குத் தந்தையாய்ப் பணியாற்றி வந்தார். உதவியாசிரியர்களும் அதிபருடன் ஒத்துழைத்து வந்தனர். பள்ளிக்கூடம் வளர்பிறைபோல் வளர்ந்து
புதிய அதிபர் பதவியேற்றால் புத்தம் புதிய சட்ட திட் டங்கள் முளைப்பது இயல்பே. சகல மாணவர்களும்

Page 5
6
புதிய அதிபர் பதவியேற்றால் புத்தம்புதிய சட்ட திட் டங்கள் முளைப்பது இயல்பு சகல மாணவர்களும் வெள்ளை நிற சட்டையும், நீல நிறக் காற் சட்டையும் அணிய வேண்டும். வெள்ளை கன்வஸ் சப்பாத்துப் போட வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்துச் சீவிக் கொண்டு வரவேண்டும். குறித்த நேரத்துக்குப் பள்ளிக் கூடம் வந்து சேர வேண்டும். இத் தியாதி சட்ட திட்டங் கள் எத்தனையோ முளைத் தன.
சட்டம் போட்ட அதிபர் ஒவ்வொரு நாளும் மாணவர் களை அவதானிக்கவும் தொடங்கினார். ஒரு வாரத்துக் குள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நல்ல முறையில் உடை அணியத் தொடங்கி விட்டார்கள்.
வெள்ளையும் நீலமுமாகக் காட்சியளித்தனர் மாண வர்கள். கால்களில் வெண்மையான கன்வஸ்" சப்பாத்து அணிந்து கச்சிதமாக அல்லவா அவர்கள் தோற்றமளித் தனர்.
இப்பொழுது பெருந் தொகையான மாணவர் சீருடை யில் காணட்பட்டார்கள். அப்படி அணியாத மாணவர் கரிடம் வகுட்பு, வாரியாகச் சென்று காரணம் கேட்கத் தொடங்கினார். அநேகமாக எல்லாரும் விரைவில் புதிய உடைகளை வாங்கிவிடுவதாகச் சொன்னார்கள்.
ஒரு மாணவன்; அவன் காலில் ஒரு பெரிய பிளாஸ் டர்?? துண்டு போட்டிருந்தான். குதிக்காலில் புண்ணிருந்த தால் அவனால் எப்படி சப்பாத்து அணிய முடியும். சுமார் ஒன்றரை, இரண்டங்குலத்துக்குப் போடப்பட்டிருந்தது அந்தப் பிளாஸ்டர்". தேய்ந்து நிறம் மாறிப் போன பழைய செருப்புகளைத்தான் அவன் அணிந்திருந்தான், அதிபர் அவனைப் பார்க்கும்போது அவனின் கால் வருத் தம் அவன் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

7
போவம் ! காலில் புண்ணுயிருப்பவன் எப்படிச் சப்பாத்து அணியமுடியும் ??? அதிபர் இப்படித் தனக்குள் ளேயே நினைத்துக் கொண்டார். அதிபர் அவனை ஒன்றுமே கேட்கவில்லை. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனுக்கு விளங்காதா என்ன ? அவர் எண் ணிக்கொண்டார் இப்படி !
நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் கழிந்தன; மாதங் கள் உருண்டோடின. மூன்றாம் மாதமும் மலர்ந்துவிட் டது. அதிபரும் வகுப்புகளுக்குச் சென்று சுத்தத்தைக் கவனிப்பதில் சலிக்கவில்லை. V−
எல்லாருமே வெள்ளை ஷேர்ட்டும், நீலநிற காற்சட் டையும் அணிந்துவரத் தொடங்கிவிட்டனர். வெள்ளைச் சப்பாத்தும் அணிந்திருந்தனர். அதிபருக்குப் பரம திருப்தி அவருடைய உள்ளம் மகிழ்ச்சியாற் பொங் கியது.
அன்றும் அதிபர் வழக்கம்போல் வகுப்புக்களை அவதானித்துக்கொண்டு வரும்போது, ஒன்பதாம் வகுப் புக்கும் சென்றார்; அவ்வகுப்பிலும் எல்லாரும் சப்பாத்து அணிந்திருந்தனர்; அந்த மாணவனைத் தவிர்த்து, ஆமாம், அந்தப் பிளாஸ்டர் - இரண்டங்குலப் பிளாஸ்டர் காலில் ஒட்டியிருந்த அந்த மாணவனைத் தவிர்த்து.
ஏேன் மோகன் இன்னும் உன் காலில் புண் ஆற வில்லையா? பெரிய புண்ணாய் இருக்கும் போல இருக்கே? ? என்றார் அதிபர், 

Page 6
S
எேன்ன பிள்ளாய் இவ்வளவு காலமா உன்னால் புண்ணை ஆற்றிக் கொள்ள முடியவில்லையா? மூன்று மாதமா ஆறவில்லையானால் ஏதோ பிழையிருக்க வேண் டும். கம்பி கீறியது என்று சொன்னாயே; அப்படியானால் டாக்டர் ஊசி போட்டாரா?”
**ஆமாம் சார்.*; அவன் பதில் பதட்டத்தோடு கூடியதாக இருந்தது கண்ணிமைக் கோடியில் கண் ணர்த் துளிகள் மல்குவதுபோல் தோன்றியது.
அதிபர் இதனை அவதானிக்கவில்லை. மோகன்! நம் பள்ளிக் கூடத்திலும் முதற் சிகிச்சைக்கான மருந்தெல் லாம் வாங்கி வைத்திருக்கிறோம்தானே? காரியாலயத்திற் கண்டிருப்பாயே. யாராவது இந்த ஸ்கெளட்ஸிடம். அந்தப் பத்தாம் வகுப்பு ரவியிடமோ, தயானந்தனிடமோ சொன்னால் நல்ல மருந்து போட்டு விடுவார்கள்.
உேம் உங்களைச் சொல்லி என்ன பிரயோஜனம்" உங்கள் அப்பா, அம்மா உங்களைக் கவனிப்பதே இல்லை. அவர்களுக்கென்ன? ஏதோ பிள்ளைகளின் சுகத்தையா பார்க்கிறார்கள்?. என்று ஒரு பெரிய லெக் சர்’ அடிக்கத் தொடங்கி விட்டார் அதிபர்.
மறு கணம் மோகனை ஏறிட்டுப் பார்த்தார். அவன் கண்களில் நீர் மல்கியிருந்தது. விசித்து, விசித்து அழுது கொண்டிருந்தான். ஏன்?
நோன் ஏசியதாக எண்ணி அழுகிறானோ? அதி பரின் மனம் பாகாய் உருகியது. அவன் என்ன செய் வான். தாய், தந்தையர் அல்லவா கவனிக்க வேண்டும். அவர்கள் அல்லவா குற்றவாளிகள்...??
சேரி மோகன் . இப்போது அழவேண்டாம், நான் உன்னை ஏசவில்லை. உன் நன்மைக்காகத் தான்

9.
சொன்னேன். இங்கே வா. நானே பார்த்து மருந்து போட்டு விடுகின்றேன்" என்று சொல்லிக் கொண்டே வகுப்பை விட்டு எழுந்து சென்றார்.
மோகன் தயங்கித் தயங்கி அவர் பின்னால் நடந் தான். அவனுக்கு அவ்வளவு பயமா? ஏன், அவரைக் கண்டு பயந்து அழ வேண்டும்? மருந்து போடும்போது வலிக்குமே என்ற ஏக்கமா? s
காரியாலயத்துக்குச் சென்றவர் தேவையான மருந் துப் புட்டிகளையும், பஞ்சையும் எடுத்து வைத்துக் கொண்டு “எங்கே. காலைத் தூக்கி இந்தக் கதிரை மீது வை பார்ப்போம். மோகன்” என்று ஒரு பழைய கதிரை யைக் காட்டினார். - -
ஆனால், அவன் கண்களில் நீர் மல்க அழுது கொண் டிருந்தான். y . ~ `
அதிபருக்கு அவனைப் பார்க்க இரக்கமாக இருந்தது. “பயப்படாதே நோ மாறிவிடும் என்று கூறிவிட்டு, அவனின் காலைத் தூக்கிக் கதிரையில் மேலே வைத்து அந்தப் பிளாஸ்டரை மெதுவாகக் கழற்றினார்,
“சேர்.” என்று அலறிவிட்ட மோகன்.
என்ன நோகிறதா. ச்சு. ச்சு. கொஞ்சம் தாங் கிக் கொள்...? என்றவர் சடக்கென்று பிளாஸ்டரை
இழுத்து விட்டார். உரிபட்ட தோலிலிருந்து: இரத்தம் பீறிட்டுக் கசியும் என்று எண்ணியவர் புண்ணைப் பார்க் கவே மனம் கூசினார்.
மோகனின் முகத்தைக் கூர்ந்து கவனித்த பின்னர் அவனின் காலைப் பார்த்தார்.
புண். ஒன்றுமில்லையே. ஏன் காயத்தின் தழும்பு கூட இல்லையே..!!
அவரின் முகத்தில்அதிர்ச்சியின் ரேகை படர்ந்தது, ஏமாற்றுவதற்காகப் போடப்பட்ட பிளாஸ்டரா? அதிபருக் குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

Page 7
O
மோகன்." என்று கதறினார். கையில் பிரம்பை எடுத்தார். அடித்தே விட்டார். உள்ளங்ககையைப் பிசைந்துகொண்டு, ஒடுங்கி, அடங்கி, நடுங்கி நின்றான் மோகன்?
(Garif...... மன்னிச்சிடுங்க சேர். வேணுமென்று நானாகச் செய்யவில்லை சேர். எங்க அம்மாதான் செய் யச் சொன்னாங்க சேர்."
“என்ன..! உங்க அம்மாவா? பொய் சொல்லாதே" அதிபர் உரத்த குரலிற் பேசினார்.
இல்லை சேர். உண்மையாகத் தான் சொல்லுறன்,
எங்க அம்மாதான் சொன்னாங்க. சப்பாத்து வாங்க கையில காசு இல்லாததினால் இப்படிச் செய்யச் சொன் னாங்க, யாராவது ஏன் சப்பாத்து போடல்ல என்னு கேட்டா, பிளாஸ்டரைக் காட்டி காலில புண்ணென்று சொல்லச் சொன்னா?? என்று பயபக்தியுடன் கூறினான் மோகன்,
அதிபரின் மனதுக்குள் ஏதோ செய்தது. கோபம். இரக்கம், பச்சாதாபம் எல்லாம் சேர்ந்து கொண்டன.
சேர். நான் எப்படியும் இன்னும் பத்து நாட்களில் சப்பாத்து வாங்கிடுவன் சேர். எங்க அம்மா, எனக்கு இடைவேளை சாப்பாட்டுக்குத் தருகிற காசைச் சேர்த்து, இந்த இரண்டு மாதத்திலும் சுமார் நாலு ரூபா நாற்பது சதம் சேர்த்துட்டேன்.
பிளாஸ்டருக்கு முப்பது சதம் செலவழிச்சுட்டேன். ஆனால் ஒரு சோடி கன்வஸ் சப்பாத்து ஐந்து ரூபா யாம்." சோகத்தின் உருவமாகக் காட்சியளித்தான் மோகன்.

11
அதிபர் ஒன்றுமே பேசவில்லை. அவர் சிலையானார் தனது சட்டைப் பைக்குள் கையைப் போட்டார். ஒரு நாணயம் வெளியே வந்தது. மோகன் கையில் அதனை வைத்தார்.
மோகன். 99 என்றார். வேறொன்றும் பேச ssib506).
அவரின் கண்களின் கோடியிலிருந்து விடுபட்ட இரு கண்ணிர்த் துளிகள் மோகனின் வலக் கையில் வீழ்ந்து தெறித்தன.
-சிந்தாமணி

Page 8
'நமது எட்டியாந்தோட்ட தியேட்டர்ல எம் ஜியார் படமொன்னு வந்திருக்கு போவோம். என்ன சரிதானே..நீ இன்னிக்கு வேலக்கிப் போக வேண்டாம் நான்மட்டுமே போயிட்டு வாரன். நீ சாயந்தரமா ரெடியா இரு என்னடி வெளங்கிச் சுதா?"
அவளுக்கு என்ன பயம் வேண்டிக் á1. d; கிறது. இதுதான் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட் டதே. நாளாந்தம் நடப்பதுதானே. அவனிடத் தில் ஒரே "டொப்பு' வாடை !
வாழ்க்கையே ஒரு புதிர்
மல்லாந்து படுத்திருந்த மங்கையைப் போல காட்சி யளித்தன மலைகள். பச்சை நிறப் புடவையை உடுத்தி யிருந்தாள் அப்பாவை. ஆமாம். எங்கும் தேயிலைச் செடிகளின் பசுமை, பச்சை நிறப்புடவையில் பொன்நிற போடர்? போல வளைந்து நெளி ஓடின தமிழக் கொல்லை? --தோட்டத்தின் வெண்மையான பாதைகள். நாகரிக நங்கையர்கள் தங்கள் ரவுக்கை”யின் உள் செருகும் கைக் குட்டையைப் போல-அந்த மலைகளின் ஊடாக எழுந் தான் செஞ்ஞாயிறு. கதிர்கள் கீழ்த் திசையிலிருந்து வந்தன. அதன் ஒளி
அந்தக் குன்றின் உச்சியிலிருந்த லயத்தில்" விழுந் தது. அதிலே மூன்றாவது வீடு - ஆமாம் குடில், படுக்கை யறை? இருக்கையறை, சாப்பாட்டறை, சாமியறை, சமய

13
லறை, எல்லா, அறைகளும் ஒன்று கலந்த ஒரே யறை, அந்த அறை அதற்குள் செஞ்ஞாயிற்றின் ஒளி புகுவது கொஞ்சம் கடினம் தான். ஏன் நாம் போனாலே தலை தட்டும்!
அந்த அறையில்
முனியாண்டி சுருண்டு கிடந்தான். பக்கத்திலே மூக் காயி மல்லாந்து படுத்துக் கிடந்தாள். அவர்கள் இருவரு டைய தவப்புதல்வன் மருத முத்து தரையில் கிடந்தான். விடிந்து விட்டது என்பதை உணர்ந்து படுக்கையி லிருந்து கொண்டே சோம்பல் முறித்தான் முனியாண்டி
மூக்காயி மூக்காயி’!
sh...... d) lith...66ör 60T' “என்னடி, இன்னும் தூக்கம்.
66ஏங். என்ன வழக்கமா எழுப்புறத விட கொஞ்ச நேரங் கழிஞ்சிட்டு. அது உங்..” என்று இழுத்தாள் மூக்காயி.
66 GFfl. . . . . . சரி. நிறுத்து. வந்து பாரு.நம்ம எட்டி யாத் தோட்ட தியேட்டர்ல.எம்.ஜியார் .படமொன்னு வ்ந்திருக்கு. போவோம்.என்ன. சரிதானே.நீ.சாயந் தரமா ரெடியா இரு.என்னடி. வெளங்சிச்சுத்தா? அவ ளூக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. படுக்கையை விட்டு எழும்பும்போதே இத்தகைய சந்தோஷச் செய்தி கிடைத் தால் மகிழாமல் என்ன செய்வாள் அவள்.
இவர்கள் இருவரின் அரவம் கேட்டு மருத முத்து கூட எழுந்து விட்டான் மூக்காயி அவனை துரிதப்படுத்தி னாள்,
என்னடா இன்னும் என்ன தூங்கிறே. எழும்பி போய் மொகத்த கழுவிட்டு பள்ளிக் கோபத்துக்கு ஒடு.” என்று அதட்டினாள்.

Page 9
14
அம்மா இன்னிக்கு நான் ஸ்கூலுக்கு போக ஏலாது. நான் மாட்டேன். காசில்லாம போனா வாத்தியாரு அடிப் பாரு.ஸ்கூல் பீசு.ஒருரூவா கொண்டாரச் சொன்னாரு”
ான்றான் அவன்.
உடனே முனியாண்டிக்கு கோபம் வந்து விட்டது. பூ. இவரு பெரிய கிளாஸ் படிக்கிறாரு...மூனாம் வகுப் புள இருந்து கிட்டு சல்லியில்ல வேணுமாம்.ஏண்டா. ஓங்க ஸ்கூல்ல சல்லி எடுக்கறாங்களா? அப்ப நம்ம கண் டாக்கையா சொன்னாரு .அந்த ஸ்கூல கவமெண்ட்ல எடுத்துட்டாங்க..இனிமேல காசு எடுக்கமாட் ,ாங் கன்னு. சரி ஒன் வாத்தியாருகிட்டே சொல்லு நாளைக்கி தர்ரன்னு,* முனியாண்டி இன்னும் படுக்கையில் தான் இருந்தான். ஆனால் மகனை எழும்புடா.பள்ளிக் கூடத்துக்கு ஒடுடா” என்று அதட்டிக் கொண்டிருந் தான்.
மருத முத்து எழுந்தான்.
பள்ளிக் கூடம் போக தயாரானான். தயாராவதற்கு என்ன இருக்கிறது. பைப்படிக்குப் போனான், பெய ருக்கு முகத்தில் தண்ணிரை வைத்தான். தன் அம்மா அப்பா இருந்த அறைக்கு வந்தான். கைகளாலேயே தலையை வாரிக் கொண்டான். ஒரு மூலையில் கிடந்த இரண்டொரு புத்தகங்களை எடுத்தான். தன் அம்மா விடம் போய் இருபது சதம் வாங்கினான். கட்டினான் நடையை பள்ளிக்கூடத்தை நோக்கி
சேரி நா பொறட்டுக்கு’ போறன். இன்னிக்கி கவாத்துதான். நான் சொன்ன மாதிரி இருந்துக்க. வெலங்கிச்சா? என்று சொல்லிக் கொண்டே புறப்பட் டான் முனியாண்டி
தள்ளாடி தள்ளாடி லயத்தை அடைந்தான் முனி யாண்டி, 69 அடியே மூக்காயி...இந்தா எங்க. மருத

15
முத்து அடேய் இந்தாடா வட, தின்னு.தின்னுட்டு தண்ணிய குடி..?? என்றான் குடி வெறியில்:
O c O
*எங்கய்யா எனக்கு வேல இன்னக்கி கவாத்துன்னு
சொன்னீங்களே? என்றான் முனியாண்டி அவன் கங்கா னியைப் பார்த்து.
68ஆமடா.நம்மல அஞ்சான் நம்பர் மலையில போட் டிருக்கு. அங்க போங்க.நான் வர்றன்? என்று சொல்லிக் கொண்டே தன் வெற்றிலை சுருளிலிருந்து வெற்றி லையை எடுத்து பாக்கு சுண்ணாம்பு புகையிலை சகிதம் தன் வாய்க்குள் புகுத்தினார் கங்காணியார்.
வேலைக்கு வந்தவர்கள் அவரவர்களுக்கு குறிக்கப் பட்ட இடங்களை நாடினர். முனியாண்டியும் தன் ஆயு தத்தை எடுத்துக்கொண்டு நடந்தான் தன் வேலைத் தளத்தை’ நோக்கி.
Ο Ο Ο
அந்திக் கருக்கல், ஆதவனும் அலுத்துப்போய் படுக்கச் சென்றான், குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழிகளும், சேவல்களும், 68லயத்துக்கு முன்னால் நின்ற அந்த 66அம்பரல்லா? மரத்தில் ஏறின கோழிகளுக்கருகில் உடலுக்கு உடல் ஒட்ட கொக் கொக் கொக்? என்று சேவல்கள் சிலவும் ஏறி அமர்ந்து கொண்டன.
இதுவரை ஆனந்தம் கரை புரண்டோடிய மூக்காயி முகத்தில் இப்பொழுது எள்ளும் கொள்ளும் வெடித்தது. இந்நேரம் பார்த்து மருதமுத்து அவள் அருகில் வந்தான. அம்மா.ஏ. அம்மா.அப்பாவ எங்கம்மா இன்னுங் காணோம்? என்றான் அவன்:
போடா சனிய(நி).ஒன்னபோலதாண்டா ஒன் அப்பனும். ஒன்ன சொல்லுவான் அத செய்யமாட்

Page 10
13
டான.கடப்புளி...?? என்று தன் கணவனை அழகான தமிழில் தோளிதம்” பண்ணிவிட்டு இரண்டு அடி கொடுத் தாள் மருதமுத்தின் முதுகில். எட்டு வயது பாலகன் *அவனுக்கு என்ன தெரியும் வீறிட்டு அழுதான். ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தான்.
ஒரு வேளை அந்த சங்கிலிய திருப்பியாரதுக்கு எட்டியாந்தோட்டக்கி போயிருப்பாரோ? இப்படி எண்ணி யது அவள் மனம், எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தில் ஒரு கணப்பொழுது புன்னகையின் ரேகை இழையோடி யது. தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பாசம் நெஞ்சில் மோத அவளின் பாலகனின் முகத்தைப் பார்த்தாள். ஆமாம் அவளும் ஒரு தாய்தானே !
மணி ஆறாகிவிட்டது.
இதற்குப் பின் எப்படிப் படம் பார்க்கப்போகிறது. எட்டியாந்தோட்டைக்குப் போறதற்கும் ஒரு மணி நேரம் வேண்டும். ஒருவித ஏக்கம், சோகம், ஏமாற்றம்.
அந்நேரம் வெளியில்
6என்ன மச்ச்.சான் போய்ட்டு வர்ர்.ரியா? என்ற குரல் கேட்டது. மூக்காயி வெளியில் வந்து பார்த்தாள். வேறு யாருமல்ல, தன் அன்பு கணவன்தான், அவனின் ஆப்த நண்பன் வேலப்பனிடம் விடைபெற்றுக் கொண்டி ருந்தான்.
தள்ளாடி தள்ளாடி லயத்தை அடைந்தான் முனி
யாண்டி. அடியே மூக்காயி...இந்தா எங்க. மருத முத்து.அடேய் இந்தாடா வட தின்னு .தின்னுட்டு தண்ணிய குடி.." என்றான் குடிவெறியில்!
கணவன் அண்டை சென்றாள் மூக்காயி. அவளுக்கு என்ன பயம் வேண்டிக் கிடக்கிறது. இதுதான் (பழக்கப் பட்ட ஒன்றாகி விட்டதே. நாளாந்தம் நடப்பது தானே! அவன் அருகில் ஒரே 68டொப்பு" வாடை.

*ஏ.இன்னக்கி படத்துக்கு போறன்ன்னியே. இதானா படம் பாக்குற லச்சனம். நீ சரியான துப்பு கெட்டவன்..? என்று தன் கணவனை வைதாள் அந்தத் தமிழ்ப் பாவை !
என்னடி சொன்ன துப்புக் கெட்டவனா? எவன்டி துப்புக் கெட்டவன். இந்தா பாரு...” என்று தன் கையில் ஏதோ தடுக்கப்பட்டதை அறிந்து, அதனை எடுத்து எறிந்தான் அவன், குடி வெறியில் அவன் குறி வைக்க வில்லைதான். ஆனால் அந்தகத்தி மூக்காயின் நெற்றி யில் பட்டது. இரத்தம் வடிந்தது. “அம்மா’ என்ற ஓசை யுடன் விழுந்தாள். பின் அமைதி. ஒரே அமைதி அந்த வீட்டில் விளக்கேற்றப்பட வில்லை. இருட்டு. அமைதி. இருட்டுடன் அமைதி போரிட்டது.
இவ்வளவு இருந்தும் அண்டை அயலார் என்று கூறப் படுவோர் வரவேயில்லை. ஏன்? வீட்டுக்கு வீடு வாசற் படிதானே! இன்று இவள் வீட்டில், நாளை அவள் வீட் டில். அடுத்த நாள் அடுத்தவள் வீட்டில் ஆராய், மூக் காய், சுப்பம்மா எல்லாரும் ஒன்றுதானே! ஐந்து மணி நேரம் ஓடிவிட்டது. முனியாண்டிக்கு மண்டை கணப்பதுபோல் இருந்தது. ஆனால் ஏதோ உணர்ந்தான். உம். கண்ணைத் திறந்து கொண்டே தரையில் கிடந்தான். தெளிந்தது. தெளிந்தது.நன்றாகத் தெளிந்து விட்டது. “જીi** தெளிந்து விட்டது.
சுமார் ஒரு மணியிருக்கும். எங்கோ இரண்டொரு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டன.
முனியாண்டி ஏதோ உணர்ந்தான். பக்கத்தில் கையை வைத்துப் பார்த்தான். துளாவினான். ஏதோ தடுக்கப்பட்டது, ஆமாம்.
என்னா?*டிஎன்றது உருவம்
66 மூக்காயி.*

Page 11
18
உேம்.?-மெளனம்,
*மூக்காயி? மூக்காயிக்கு விளங்கிவிட்டது.
அதற்குப் பின் அவள் ஒன்றும் கூறவில்லை. முனி யாண்டி மூன்றாம் முறையாக 'மூக்காயி’ என்றான்.
தன் கணவன் தன்னுணர்வுடன்தான் பேசுகிறான் என்பதை உணர்ந்தாள். சற்று முன், ஆமாம் சுமார் ஆறு மணி நேரத்துக்கு முன்னால் கொத்திக் கொண்ட இரு பறவைகள். இப்பொழுது...!
மூக்காயி ஒருவித இன்ப உணர்ச்சியை அனுபவித் தாள். தன் கரம் அவளின் நெற்றியில் இருந்தது. அக் கரம்.
இவர்களின் மூத்த மகன் மருதமுத்து மூலையில் படுத்துக் கிடந்தான்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக இருந்தது. சேவல் கூவியது. காகங்கள் கரைந்தன!
பசியுடன் படுத்த மருதமுத்து எழுந்துவிட்டான்.
பசி தணித்தவர்கள் நித்திராதேவியின் அணைப்பில் கிடத்தார்கள்
“selfor..... அம்மா... என்று மூக்காயியின் சேலை யைப் பிடித்து இழுத்தான் மருதமுத்து.
முனியாண்டியும் கண்ணை விழித்துவிட்டான்.
6மூக்காயி.*
6என்னா..??
இன்னக்கி நான் வேலைக்கி போகல்ல நீயுங் போகவேண்டா. நாம இன்னக்கி படத்துக்கு போவோம். இன்னைக்கும் நல்லவன் வாழ்வான்’தான் நடக்கும். எட்டு நாளைக்கி அதே படந்தான்.??

9
மூக்காயி முகத்தில் நாணம் கரை புரண்டோடியது. புன்முறுவல் பூத்தாள் பெண்மை விளையாடியது.
*அப்ப நானு(ம்) பள்ளிக்கூடத்துக்குப் போகமாட் டம்பா.என்னா சரியாம்மா’ என்றான் மருதமுத்து.
சேரிடா சரி? என்றார்கள். இருவரும் சிரித்தார்கள்.
ஆமாம் இவர்களின் வாழ்க்கையே ஒரு புதிராகத்
தான் இருக்கிறது !
-வீரகேசரி

Page 12
அவனுடைய கண்கள் பனித்தன. முகம் வாடிக் கழையிழந்து காட்சியளித்தது. வெள்ளி நிலா வானத்தில் எழுந்து, யன்னலுரடாக எட்டி எட்டிப் பரர்த்தது, பிள்ளைகள் நால்வரும் முன் அறைக்குள்ளே இருந்து விளையாடிக்கொண்டி ருந்தன.
சோகத்தின் நிழல் முகத்தில் அப்பிக் கிடந் தது. அவன் அவளை நோக்கினான். அவள் மெல்லப் புன்னகை செய்தாள்.
அநீதிக் கடிதம
வானம் நிர்மலமாக, நீல நிறமாகக் காட்சியளித்தது.
அங்குமிங்குமாக நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன.
சன்னலூடாக வானத்தைப் பார்த்துக் கொண்டே வழமையாகத் தான் சாய்ந்திருக்கும் சாய்வு நாற்காலி யில் அமர்ந்திருந்தான் இராமச்சந்திரன். அந்தக் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தன்னைப் பார்த்துக் கேலி பேசு பவைபோல அவனுக்குத் தோன்றின. ஏன்? அவன் அப் படி என்ன செய்து விட்டான்.
ஆம்; இன்னும் இரண்டொரு நாட்களில் என்ன நடைபெறப் போகிறதோ? தான் அனுப்பி வைத்த இராஜி னாமாக் கடிதத்துக்குப் பதில் வருமோ? தான் வேலையிலி ருந்து நீக்கப்பட்டிருப்பதாகப் பதில் கடிதம் வருமோ என்ற ஏக்கம்.ஆத்திரத்தில் அன்று செய்த முடிவால். அவன் குடும்பமே நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற் பட்டுவிடுமோ என்ற ஏக்கம் உள்ளத்தில் இழையோடிற்று.

21
என்ன செய்வது? மனத்தில் ஏக்கம் மையிருட்டாகக் கவ்வ, வானத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கேலி செய்ய, தன் கண்ணின் இமைகள் கனத்துச் சரிய.நித் திரா தேவியின் அரவணைப்புப் பிடியில் அமிழ்ந்து கொண் டிருந்தான் இராமச்சந்திரன்.
நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் அவன் நிம்மதியற்ற மன தில் நாடகத் திரை விலக்கி நர்த்தனமாடத் தொடங் கின.
சார் உங்களை மனேஜர் கூப்பிடுகிறார்? என்று அந்த ஸ்தாபனத்தின் ஆபீஸ் பையன் இராமச்சந்திரனிடம் வந்துசொன்னான். மரினோஸ் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற அந்தப் பெரிய ஸ்தாபனத்தின் மனேஜர் லியோவின் காரி யாலயத்துக்குள் நுழைந்தான் இராமச்சந்திரன். என் னவோ ஏதோவென்ற எண்ணம் உள்ளத்தின் ஆழ்த்தில் நிழலாடியது.
மனேஜர் லியோவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன. பெரியதொரு பிரளயமே வந்துவிட்டது போன்ற நிலைமை.
கனைத்துக் கொண்டே, தான் வந்திருப்பதைத் தெரி யப்படுத்தினான் இராமச்சந்திரன். மனேஜர் முன் போய் நின்றான். ஏறிட்டுப் பார்த்த மனேஜர் பத்திரக்காளியா 6OTITif.
என்ன மிஸ்டர் இராமச்சந்திரன். ?? வெட்டி நிறுத்தி, அளந்து வார்த்தைகளை அடுக்கினார் மனேஜர். *திக்’கென்றது இராமச்சந்திரனுக்கு. மனேஜரின் அந் தத் தொனி கேட்டுப் பயந்து போனான் அவன்.
என்ன சேர்.” மிகத் தாழ்மையாகத்தான் கேட் டான் இராமச்சந்திரன்?

Page 13
22
என்னவா? அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவரவர்கள் முறையாகச் செய்யாவிட்டால் இந்த ஸ்தாபனம் எப்படி முன்னேறுவது. அதுதான் கிடக் கட்டும். முதலில் இதனை நடத்திச் செல்வது எப்படி? இங்கே பாரும் இந்தப் பைலை. சாதாரண கூட்டல் தானும் தெரியாதா. -
என்ன சேர்.!" என்று நிதானமாகக் கேட்டுக் கொண்டே மனேஜர் பக்கம் சென்று பைலை எடுத்துப் பார்த்தான்.
ஆம்; கூட்டலில் பிழை இருக்கத்தான் செய்தது. தலையைச் சொறிந்து கொண்டே.
“மன்னித்துக் கொள்ளுங்கள் சேர். ** என்று இழுத்தான்.
“மன்னிக்க வேண்டியதுதான் * மனேஜர் எரிந்து வீழ்ந்தார். நெருப்பாய்த் தொடர்ந்தார் . செய்வதை
யும் செய்துவிட்டு மன்னிப்பு வேறு. வேலை செய்யும் போது வீட்டு நினைவாகவே இருந்தால் எப்படிச் செய் கருமங்களைச் சீராகச் செய்ய முடியும்
(F ..... ஏதோ நடந்துவிட்டது. 99
*என்ன...ஏதோ நடந்துவிட்டது. தவறு செய்து விட்டு ஏதோ நடந்துவிட்டதா...? மறுபடியும் சொல்கின் றேன். வேலை செய்யும் நேரம் பெஞ்சாதி, பிள்ளை குட்டிகளைப் பற்றி நினைத்துக் கொண்டே செய்தால் எப்
Jlą (yplq uth...... ? இப்படி நெருப்பெடுத்தார் மனேஜர்.
தன் மனைவியிடமும், நான்கு பிள்ளைகளிடமும் பாசம் தோய்ந்தவன் இராமச்சந்திரன் என்பதை மனேஜர் நன் கறிந்திருந்தார். ஒரு சாதாரண கிளார்க் அவன் வீட்டுப் பிரச்சினைகளின் சுழலில்சிக்கித் தவித்துத் தத்தளித்தான் என்பது அவர் அறிந்ததே எனவே தான், எதற்கெடுத்

23
தாலும் அவர் ஏசும்போது மனைவி பிள்ளைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்.
இத்தனைக்கும் மனேஜர் கட்டைப் பிரம்மச்சாரி யாகவே இருந்து வந்தார். எனவே, அந்த மனநிலை அவருக்கு இருந்ததில் வியப்பில்லையே!
இராமச்சந்திரனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
சேர். நிதானத்துடன் பேசுவதே நல்லதென்று எண்ணுகிறேன். என்னை ஏசினாற் பரவாயில்லை என் மனைவி மக்களை ஏன் வீணாக இழுக்கிறீர்கள். .
*செய்த தவறைச் சொல்லுங்கள், தான் திருந்திக் கொள்கிறேன். வீணாகக் குடும்பத்தை இழுத்துப் பேச வேண்டிய அவசியமில்லை. ** இராமச்சந்திரன் தீர்க்க மாகச் சொன்னான்.
*ப்பூ. ரோசம் பிறந்துவிட்டதோ. பார்த்தா சாதாரண கிளார்க். அன்றாட வாழ்க்கைக்கே ஆலாப் பறக்கிறவன். ஏதோ சொல்லிவிட்டால் கோபம் பொத் துக் கொண்டு வருகிறதோ. பெரிய மானஸ்தன்.” ஏளனமாகப் பேசினார் மனேஜர்.
6 போதும் சேர் நிறுத்துங்கள்.நான் வருகிறேன்." இராமச்சந்திரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பைத்தி யக்காரன் போல் மாறினான்.
ஆம்; தன் ஆசை மனையாளுடனேயே எத்தனை முறை போரிட்டிருக்கிறான். அது இல்லை. இது இல்லை என்று அவள் சொன்னால். அவன் எரிந்து புகைந்திருக் கின்றான்.
ஆனால் அவளோ எதிர்த்துப் பேசியது கிடையாது. பிள்ளைகளும் அவ்வேளைகளிற் கேப்சிப்” என்றாகிவிடு வார்கள், அல்லது முதுகுத் தோல் உரிந்துவிடுமே.

Page 14
24
அன்று அலுவலகத்தில் எழுந்த ஆத்திரத்தை அடக்க முடியாத நிலையில் அந்திப் பொழுதில் வீடு வந்து சேர்ந் தான் இராமச்சந்திரன். வந்ததும் வராததுமாக இரைந்த வண்ணமாகவே இருந்தான்.
மனைவி ஜானகிக்கு விஷயம் விளங்கிவிட்டது. ஆபீசில் ஏதோ நடந்திருக்கிறது. அவர் கொதித்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது.
*மண்ணாங்கட்டி. மனேஜராம் மனேஜர். அவன் யாராயிருந்தா நமக்கென்ன... ஏதோ நாய் என்று நினைத் தல்லவா ஏசுகிறான். ஏதோ சிறு தவறு நடந்துவிட்டது” அதற்காக இப்படிப் பிய்த்துப் பிடுங்குவதா?’ எனப் பட படத்தான் இராமச்சந்திரன். இத்தனை நேரமாகியும் அவனின் ஆத்திரம் அடங்கிவிடவில்லை.
ஜானகி தகதகப்பான கோப்பியுடன் அவனை அணுகினாள், கோப்பிக் கோப்பையை அவனிடம் நீட்டி னாள். மறுகணம் அது நாற்காலியின் கீழ் சுக்கு நூறா யிற்று.
இந்த வேலையில் இருக்கிறதினால்தானே இந்த ஏச் சும் பேச்சும். பேசாம வேலையைவிட்டே விலகி விட்டா..?? என்று இழுத்தான் இராமச்சந்திரன். கண்கள் கொவ்வைப் பழங்களாய்ச் சிவப்பேறியிருந்தன.
ஜானகி மரமாய் நின்றாள். சிந்தித்தாள். ஏதோ நினைத்தாள்..பின் பேசத் தொடங்கினாள். ஆம்; ஆத்திரங் கொண்டவள் போல் பேசினாள்.
மேனேஜர் உங்களை ஏசினானா ? யாரவன்? நீங்கள் பார்த்துக்கொண்டா இருந்தீர்கள்.” எனக் கனன்றெரிந்து அவனைப்போலவே கோபப்பட்டு அவனோடு ஒத்தூதத் தொடங்கினாள்.

25
சரி.நீங்கள் சொன்னதுபோல இராஜினாமாக் கடிதம் ஒன்று எழுதி அனுப்பிளிட்டாற் போகிறது” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே அறைக்குள் போனாள்.
கையில் பேப்பர், பேனா சகிதம் மீண்டும் வந்தாள், கடிதம் எழுதும்படி கணவனிடம் நீட்டினாள்.
**இந்தாங்க. எழுதுங்கள். நான் இப்போது மார்க் கட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது போகும் வழியில் போஸ்ட் பண்ணிவிடுகிறேன்.” மிகவும் சாவதானமாகப் பேசினாள் அவள்,
அவனும் ஆத்திரம் சற்று அடங்கினவனாகப் பேப்ப ரையும் பேனாவையும் வாங்கிக்கொண்டான். அலுவல கத்துக்குத் தனது இராஜினாமா பற்றி எழுதினான். கையொப்பமிட்டு, கவரில் இட்டுத் தன் மனைவியிடம் கொடுத்தான்.
அவளும் அதை பவ்யமாக வாங்கிக் கொண்டாள். ஒரு நொடியிற் கடிதத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, *நான் போய் வருகிறேன்..கடிதத்தையும் போஸ்ட் பண்ணிவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே வெளி யில் கிளம்பினாள்.
அவள் தன் மனதுக்குள்ளேய்ே சிரித்துக் கொண் ...st6t.
о O. 9. தன் மனைவி வந்து தன்னை, சாப்பிடத் தட்டி எழுப்
பியபோதுதான், தான் இத்தனை நேரமாகத் தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்ததை உணர்ந்தான் இராமச் சத்திரன்,
அவனுடைய கண்கள் பனித்தன, முகம் வாடிக் களையிழந்து காட்சி அளித்தது. வெள்ளி நிலா வானத் தில் எழுந்து, யன்னலினூடாக எட்டிப் பார்த்தது,

Page 15
26
பிள்ளைகள் நால்வரும் முன் அறையில் ஒரு மூலை யில் இருந்து ‘குஞ்சு வீடு" விளையாடிக் கொண்டிருந் தனர்.
சோகத்தின் சாயல் முகத்தில் அப்பிக் கிடந்தது. அவன், அவளை நோக்கினான். அவள் மெல்ல புன்னகை செய்தாள். ஆனால் அவனோ, மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத நிலையில்.
ஜோனகி, என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்த இராஜினாமாக் கடிதத்தை நேற்று எழுதிப் போட்டுவிட்டேன். ஆனால் இன்றைக்கு இந்தப் பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தால் ஐயோ.நாளைக்கு வேலை போய்விட்டால்..நினைத் துப் பார்க்கவே முடியாமலிருக்கிறதே ஜானகி
வேலைக்கு எங்கு போவேன், பணத்துக்கு என்ன செய்வேன்.? அவன் கண்களில் கண்ணிர் தழும்பிக் கொண்டிருந்தது. ஜானகிக்குப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
அவள் மெல்ல இதழ் விரித்துச் சிரித்தாள். சோகச் சிரிப்பா. இல்லை அன்புச் சிரிப்பு. ஆம்; பாசத்தின் சிரிப்பு.
அேத்தான்! பயப்படாதேயுங்கள். நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நிச்சயமாக வேலை பறிபோகாது. எனக்கு நன்றாகத் தெரியும்.”
எேன்ன மனேஜர் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்கிறாயா? அவர் பொல்லாதவர். நான் விரும்பிக் கேட்கும்போது என்னை விலக்காமல இருப் பார்.?? இராமச்சந்திரன் நிலை தடுமாறினான்.
*இல்லையத்தான். உங்கள் குணம் எனக்குத் தெரி யாதா? ஆத்திரம் ஒரு நேரம் உங்கள் கண்களை மறைத்து

27
அறிவைக் கெடுக்கும். ஆனால் அமைதியாக இருந்து யோசித்தால் மாறிடுவீர்கள். பத்து வருட பழக்கத்தில் உங்களைப் பற்றி என்க்குத் தெரியாதா என்ன? இது தெரிந்துதான்.”
சற்று நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அந்தக் கடிதத்தைப் போஸ்ட் பண்ணவே இல்லை. தெரியுமா. இதோ..? என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றவள் கடி தத்தோடு திரும்பினாள்.
பாசம் தோய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அவன், ஜானகியை நெஞ்சோடு அணைத்தான்.
அவன் கண்களில் பாசத்தின் காணிக்கைத் துளிகள் மிளிர்ந்தன. மனம் அவளை வாழ்த்தியது.
கீழே கிடந்த அந்தக்கடிதத்தை எடுத்துத் தோணி” செய்து விளையாடி மகிழ்ந்தது,அவர்களின் கடைக்குட்டி, .சிங்தாமணி

Page 16
:மேரி.நான் வெளியே போய்விட்டு QVg55 கிறேன்." -
"என்ன, அவ்வளவு அவசரமா ? இப்போது தானே ரயிலில் வந்தீங்க, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துப் போங்களேன் !"
கணவனின் உடல் நிலையைப்பற்றி அவ்வளவு அக்கறை மேரிக்கு. ஆனால் அவனின் உள்ளத் தின் உளைச்சலை அவள் எப்படி அறிவாள் .
தர்ம வழி
கோட்டை ரயில் நிலையத்துக்குள் H@島否。"2-Lー ரட்ட மெனிக்கே*எங்களை எல்லாம் சுமந்துவந்த களைப் புத் தீர புஸ்” என்ற நீண்டதொரு பெருமூச்சு விட்டது. பின்னர் ஒரு குலுக்குக் குலுக்கி நின்றது எங்கிருந்தோ நாலைந்து போட்டர்கள் ரயிலை நோக்கி ஓடி வந்தார்கள். ரயில் பெட்டியின் ஜன்னலின் 2விடாகத் தலையை வெளியே நீட்டிய என்னை நோக்கி இரு போட்டர்கள் விரைந்தனர்.
நான் கூப்பிடுவதற்கு முன்னரே ஒருவன் பெட்டிக்குள் ஏறி ராக்கையிலிருந்த இரண்டு பெட்டிகளையும், என்
காலடியிற் கிடந்த சூட்கேசை*யும் எடுத்துக் கொண் LFT6öt.
*வேற ஏதாவது இருக்கா சார்?99

29
68இல்லப்பா அவ்வளவுதான்” என்றேன் நான். மற் றப் போட்டர் அடுத்த பெட்டியை நோக்கி விரைந்தான்.
நான் முன்னால் நடக்க, போட்டர் தலைச் சுமை யுடன் பின் தொடர்ந்தான். என் டிக்கட்டை டிக்கட் கலக்டரிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
“என்ன ஐயா, டாக்சியிலதானே போறிங்க” என்று கேட்டுக் கொண்டே என்னுடைய பெட்டிகளை வெளியில் நின்றிருந்த ஒரு “டாக்சி”யில் வைத்தான்.
டாக்சி சாரதியும் என்னை முக மலர வரவேற்றான். நான் அந்தப் புதிய டாக்சியில் ஏறிக் கொண்டேன்.
என் ஷேர்ட் பாக்கட்டுக்குள் கைபோட்டுத் துழாவி னேன். ஐம்பது சதம் கிடந்தது. அதனை எடுத்து அந் தப் போட்டருக்கு நீட்டினேன்.
“என்ன ஐயா! அம்பது சதமா, சி. இத்தா பெரிய பாரத்தை இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்திருக்கிறன், இவ்வளவுதானா தர்ரது. சி. இப்ப்டீன் இந்தத் தொழிலவிட நான் தோட்டத்திலேயெ பால் வெட்டி பொழச்சி இருக்கலாம் போலிருக்கு”
என் கையிலிருந்த ஐம்பது சதத்தைக் கண்ட போட் டர் இவ்வாறு சீறினான். மனம் நொந்தான்.
அவன் சொன்ன அந்தக் கடைசி வார்த்தை அவன் ஒரு தோட்டத் தொழிலாளியாகத் தான் முன்னாள் இருந் தவன் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியது. என் றாலும் -
சேரி போதும்பா . எடுத்துக்கிட்டுப் போ? என்றேன்.
*உம். உம். முடியாது, ஒண்ணரை ரூவாலாவது தாங்க..?? என்றான்.

Page 17
SO
*அது முடியாது. இஷ்டமாயிருந்தா இத வாங்கிக்கிட் டுப் போ. இல்லைன்னா சும்மா போ” - கோபத்தோடு கனன்றேன் நான்,
“சீ. இது என்ன பிச்சக் காசு. நான் இங்க பிச்சை வாங்க வரவில்லை. பொழச்சி சாப்பிடத்தான் வந்து இருக் கிறோம். தோட்டத்துல ஒழுங்காதான் பொழச்சி வந் தோம். இங்கயும் உழைச்சிதான் சாப்பிட்டு வருகிறோம்.
*முடியுமெனா ஒண்ணரை ரூபா தாங்க .இல்லை யென்னா இந்தப் பணத்தை யாராவது பிச்சைக் காரணுக் குக் கொண்டுபோய் தர்மமா கொடுங்க.." என்று அடித் துப் பேசிவிட்டு, அகம்பாவத்துடன் விரைந்து விட்டான் அந்தப் போட்டர்.
எனக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது.
நான் ஐம்பது சதத்தை விட்டெறியலாம் என்று நினைத்தேன். ஆனால் - வீசினாலும் என்ன நடக்கும்? ஸ்டேஷன் முன்னால் சுற்றித் திரியும் திருட்டுப் பயல்கள் தானே எடுத்துக் கொண்டு போவார்கள். எனவே நான் புறப்படுமாறு டாக்சிக்காரனுக்குச் சைகை காட்டினேன்.
டாக்சி புறப்பட்டது. அதன் ஓட்டம் கரை புரண்டது.
நான் வீடு போய்ச் சேர்ந்தபோது நான், ஏதோ தவறு செய்து விட்டதுபோல் என் இதயம் படபடத்தது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நான் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் மறுவற்ற முகங்கள் என்கண்முன் காட்சியளித்தன. கேண் டாக்கையா, கண்டாக்கையா” என்று என்னை சுற்றி வந்து சூழ்ந்து, பணிந்து, தனிந்து கேள்விக்குறியாய்க் குனியும் தொழிலாளர்களின் முகங்கள் தோன்றி மறைந் தன. அந்தப் போட்டரும் என் மனக்கண் முன் வந்து நின்றான்.

81
தோட்டத் தொழிலாளியென்றால் ஒரு காலத்தில் இப்படித் தான் இருந்திருப்பான். ஆனால், கொழும்புக்கு வந்தவுடன் அவனது முதுகெலும்பு நிமிர்ந்து விடுகின்றது! சூழ்நிலையின் மாற்றம என்ன? சமய சந்தர்ப்பங்களின் காரணமாக மானத்தை விலைபேசும் அவர்கள் எங்கே? அதே இனத்தில் தோன்றிய போட்டர் எங்கே?
மீண்டும் என் மனதில் ஒரு கிலேசம். நான் செய்தது சரியா? வேலைக்கேற்ற கூலி கொடுக்க வேண்டும் என்று விவாதிக்கும் தொழிற்சங்கவாதி நான். சீ.நான் நடந்து கொண்டது சரியா? என் மனத்தில் ஏற்பட்ட சலனத்தை என்னால் மூடி மறைக்க முடியவேயில்லை.
குளித்துவிட்டு வந்தேன். ஆயினும் என் மனத்தில் பதிந்த அந்த எண்ணம் அழியவேயில்லை. நான் செய் தது சரியா? என் மனத்தின் அடித் தளத்திலிருந்து ஒரு எக்காள ஒலி. இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடி யாது. என்ன செய்வது? ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன்.
மேரி. நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரு கிறேன்” என்று கூறிக் கொண்டே உடை மாற்றிக் கொள் ளத் தொடங்கினே.
6என்ன அவ்வளவு அவசரமான வேலை. இப்போது தானே ரயிலில் வந்தீங்க. உடல் அலைச்சல்தானே. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுதான் போங்களேன்?? என் உடல் நிலைமை பற்றி என் மனைவிக்குத்தான் எவ் வளவு அக்கறை!
உண்மைதான். ஆனால் என் உள்ளத்தின் உளைச் சல் அவளுக்கு எப்படித் தெரியும்? -
கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தேன். கூட் டம் அதிகமாகத்தானிருந்தது என் கண்கள் அக் கூட்

Page 18
82
டத்தைக் கட்டறுத்து அப் போட்டரை தேடின. தேடித் தேடியலைந்தன. ஆனால் அவன் தென்படவில்லை.
ஒருவேளை ஸ்டேஷன் உள்ளே இருப்பானோ ஒரு பிேளாட்போம்” டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே போனேன். கறுப்புக் கோட் - அணிந்தவர்களை எல்லாம் இனமறியப் பார்த்தேன். என் உள்ளம் சோர்ந்தது.
ஏன் நான் அலட்டிக் கொள்கிறேன். எனக்கே விளங்கவில்லை. மனம் அப்படிப் பட்டதுதானே. மற்ற வர்களிடம் சொன்னால் நான் ஏளனத்துக்குள்ளாகி பரி கசிப்புக்கு பொருளாவேன்.
ஆனால், என் உள்ளத்துக்கு மாறாக, மனத்தின் அடித் தளத்திலிருந்து எழும் ஒலி, மனச்சாட்சிக்கு விரோ தமாய் நடந்துகொள்ள முடியுமா என்ன?
தேடினேன். பன்முறை மேலும் கீழும் நடந்தேன். காணவில்லை. தோல்வியை என் மனம் ஒப்புக் கொண் டது. மனச் சோர்வுடன் திரும்பி வந்தேன்.
ஐயா? - ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். சிறு வன் ஒருவன் வந்து நின்றான். சுமார் பதினான்கு பதி னைந்து வயதிருக்கும். எண்ணெய் தோயாத பரட்டைத் தலை. அழுக்கேறிய சாரம் ஒன்றைக் கட்டியிருந்தான்.
ஒரு கட்டை ஷேர்ட் உடலை மறைத்தது.
ஐயா” என்று மீண்டும் அழைத்தான் அழைப்புத்
தொனியில் இரக்கம் இழையோடியது.
என்ன. என்ன வேண்டும்’ என்றேன் நான்.
அந்நேரம் போட்டர் சொன்ன சொற்கள் என் ஞா கத்துக்கு வந்தன.
யாருக்காவது பிச்சைக்காரனுக்கு தர்மமாபோடுங்க”

88
ஆம் ஏன் அந்தப் போட்டருக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த பணத்தை இவனுக்குக் கொடுத்து விட் டால் என்ன? கையிற் பணத்தை எடுத்து அவனிடம் நீட்டி னேன். ஆவலுடன் ஏற்றுக் கொண்டு என்னை வாழ்த்து வான் என்று என் மனம் ஏங்கித் தவித்தது. ஆனால்
6ஐயா?? நான் பிச்சை எடுக்க வரவில்லிங்கையா, எனக்குப் பணம் வேண்டாங்க”- ஆனா. சோகம் கலந்த குரலில் கூறிவிட்டு ஏக்கம் கலந்த கண்களால் என்னை இரக்கத்தின் சாயல் கலந்து நோக்கினான்.
ேேசரி, வேற என்னதான் வேண்டும்?? பஸ் நிலையத் துக்கு நடந்து சென்றவாறே கேட்டேன்.
அவனும் என் பக்கமாக நடந்து கொண்டே, 'ஐயா! நான் அட்டனிலுள்ள ஒரு தோட்டத்தில் இருந்தேனுங்கி நாலு நாளைக்கு முன்னாலதான் "கொழும்புக்கு போனா நல்ல வேலை கிடைக்குமெனு” எல்லாரும் சொன்னது னால வந்தன். இங்க வந்து எல்லா எடத்துலயும் கேட்டு பாத்தன். வேல கெடக்கலீங்க. அதனால இங்க வந்து சாமான் தூக்கலாமென்னு வந்தன். ஆனால் - அந் தக் கறுப்புக் கோர்ட் போட்டவங்க என்ன அடிக்கவர் றாங்க. நான் என்ன செய்யட்டுமையா?
அவன் மனத்திலிருந்ததை மறைவின்றிச் சொன் னான் என்பதை என் மனம் ஏற்றுக் கொண்டது.
சேரி, நீ என்னோட வர்ரியா..?? என் மனம் ஏதா வது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று ஏங்கியது. அந்த ஏக்கத்தின் பிரதிபலிப்பாக இப்படிக் கேட்டு விட் டேன். ஒப்புக் கொண்ட அவனும் என்னோடு பஸ்சில் வந்தான்.
“என்ன மேரி. இங்க வந்து பாருங்க, வேலைக்கு இன்னொரு பொடியன் கூட்டிக் கொண்டு வந்திடுக்

Page 19
84
கிறேன்..?? என்று நீட்டி முழக்கிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.
*என்ன இருக்கிற ஒருவன் போதாதா. இவனை வேற பிடித்துக் கொண்டு வந்திருக்கிறீங்களே? என்றாள் எந்தன் சுகிர்தமணி.
*சேரி பரவாயில்லை இருந்துவிட்டு போகட்டும், ரொசிட்டா மன்னிக்கு ஒரு வேலைக்காரப் பொடியன் தேவை என்று சொன்னார்கள்தானே? என்று மழுப்பி னேன். உண்மையை நான் எடுத்துரைக்கவில்லை.
ஆமாம் மறந்தே போயிட்டேன். கொஞ்ச நாளை நம்மிடமே இருக்கட்டும். ஆள் எப்படி என்று 68டெஸ்ட்” பண்ணி பார்த்து அனுப்புவோம்,” என்று ஒப்புக் கொண் டாள் என் மனைவி,
எங்கள் வீட்டில் வேலை செய்கிறான் ஜோசப். அவ னுடன் சேர்ந்து கொண்டான் மூர்த்தி. ஆனால் ஜோசப் போடும் கசாயத் தேநீர்கூட இவனால் தயாரிக்கத் தெரி யாது.
நான் சுமார் ஐந்து வாரங்கள் கழித்து மீண்டும் வீடு வந்தேன்.
எேன்ன? மூர்த்தி எப்படி இருக்கிறான்? என்றேன் என் மனைவியிடம்.
ஒ. அவன் நல்லா வேலை செய்கிறான். தோட் டத்துப் பொடியனா இருந்தாலும் ரொம்ப நல்ல பொடிய னாய் இருக்கிறான், சொன்ன வேலையை எல்லாம் செய் கிறான், நல்லா செய்கிறான்?
ஆம், அதுதான் அவர்களுடன் பிறந்துவிட்ட குண மாயிற்றே. காலம் போகப் போகத்தான் தெரியும்.

S5 மீண்டும் என் மனைவிதான் தொடர்ந்தாள் ஏேதோ ஐந்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான் போலிருக்கு போனவாரம் அவனுடைய அப்பாவுக்கு ஒரு லெட்டர் எழுதுகிறேன் என்று சொல்லி ஏதோ ஒரு கடிதம் எழுதிப் Gust list6t.
ஏண்டா மூர்த்தி உன் அப்பாவுக்கு கடுதாசி எழுதி னாயாமே. அப்படி என்ன எழுதிப்போட்ட. ஆமா, என்ன அவ்வளவு அவசரம். நான் வந்த பின்னால் பணம் சேர்த்து அனுப்பியிருக்கலாமே,” என்றேன்.
சிறுவன் கொஞ்சம் பயந்து போனான். ஆனாலும் ஏதோ, ஓர் உள்ளக் கிடக்கையைப் பவ்வியமாக சொல்ல வருபவன் போல் தோற்றமளித்தான்.
*என்னடா சொல்ல வர்ற, பயப்படாம சொல்” என்று என் மனைவி சொன்னாள். அவளுடன் நன்கு பரிச்சய மாகி இருந்ததால் அம்மா’ என்றே தொடங்கினான்.
நோன் உங்ககிட்ட சொன்னன் தானே. என் அப்பா ஒரு குடிகாரர். அவருக்கு ஒவ்வொரு நாளும் கசிப்பு வேணும். எங்க அம்மா செத்துப் போனாங்க. அதுக்குப் பிந்தியும் எங்கட சின்னம்மாவ வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வச்சிருக்கிறார். சின்னம்மாவுக்கு ரெண்டு புள்ளங்க இருக்கு சின்னம்மாவும் அப்பாவம் சேர்ந்து என்னை அடிப்பாங்க, அதனாலதான் நானும் தோட்
டத்தவிட்டு ஓடி வந்துட்டன்.”
ஐயா? என்று என்னை ஏறிட்டுப் பார்த்தான். பின் னால் தொடர்ந்தான். வேணும்னா நீங்க எங்க அப்பா வுக்கு பணம் அனுப்புங்க. ஆனா அந்தப் பணத்தை குடிக்கிறதுக்குப் பாவிக்காம எங்க சின்னம்மாட புள் ளைங்க வாழ்கிறதுக்கு பாவிக்க சொல்லுங்க. அப்படி செய்யுறதா இருந்தா மாத்திரம் காசு அனுப்புங்க..”
ஏதோ எனக்கே தர்மம் போதிட்பவன் போல போதித் தான், வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் வார்ப்

Page 20
86
படத்தை அங்கு கண்டேன். ஆம், சேற்றில் நின்றுதானே செந்தாமரை மலர்கிறது. என்றாலும் சேற்றின் வாடை மலரில் பதிவதில்லையே.
அந்நேரம் வாசலருகில் ஒரு குரல். “gur”
6யாரது???
நோன் தாங்க மூர்த்தியிட அப்பா. என் மவன் எனக்கு நாலு நாளைக்கு முன்னால ஒரு லெட்டர் போட் டிருந்தான். நீங்க மவராசனா இருக்கனும். எனக்குந் தோட்டத்துல வேலையில்லாம போயிட்டது. எம் பெஞ் சாதியும். ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் தொடர்ந் தான்.?
அதான் மூர்த்தியிட சின்னம்மாவும் என்ன தனியா விட்டுட்டு அதுட அம்மா வீட்டுக்கு போயிட்டு. என்ன செய்யிறது. அதனாலதான் என் மகன்ட கடிதம் கெடச்ச ஒடனே ஒடியாந்தான்? - இவ்வாறு துக்கித்தவன் மீண் டும் தொடர்ந்தான் - -
எேனக்கு கொழும்பு தெரியாதுலிகே, அதனாலதான் என் மச்சினனையும் கூட்டிக்கிட்டு வந்தன். அவன் அங்கதான் கொழும்புல வேலை செய்யறான். நீங்க மகாராசனா இருக்கனும்” என்று மீண்டும் என்னை மனமார வாழ்த்தினான். கையெடுத்துக் கும்பிட்டான்.
அப்போது அவனுடன் வந்த ஆளை நான் பார்த் தேன்.
**ஆம்.அந்தப் போட்டர் !
நான் கொடுத்த பணத்தை தர்மம்' செய்யச் சொன்ன அதே போட்டர்தான்!

S7
எங்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் நான் பேச வில்லை.
உள்ளங்கள் பேசின. அவன் தன் கரங்கள் கூப்பி என்னை கும்பிட்டான். அவனின் இமைக்கொடியில் கண்ணிர்த்துளிகள் கட்டியம்
கூற முற்படுவதைக் கண்டேன். என் கண்களும் கலங்கின.
வாழ்த்தின் அடிப்படையிலே நெக்குருகி வார்த்திடும் கண்ணிர்த் துளிகளா ?
தாழ்த்திப்பேசியதால் மனம் கசிந்து சிந்தத் துடிக் கும் கண்ணீர்த் துளிகளா ?
சிைந்தர்மணி

Page 21
பாலைவனத்தின் நடுவே அவள் ஒரு பசுஞ் சோலை.அன்று இரவு சாப்பாட்டைத் தயார் செய்துவிட்டுக் குரல் கொடுத்தாள். குரல் வந்த இடத்தை நாடிச் சென்றேன். மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த மண்ணெண்ணெய் விளக்கின் மங்களகரமான ஒளியின் அருகே நின்ற அவளின் பருவ எழில் என்னைப்பற்றி இழுத்தது.
லட்சுமி வந்தாள்
உதயசூரியன் வரவால் அந்தத் தேயிலைத் தோட் டத்து மலை முகடுகளில் மட்டுமின்றித் தேயிலைச் செடி களின் மேலில் படிந்து கிடந்த அந்த இருள் மூட்டம் மெல்ல மெல்ல அகன்று கொண்டிருந்தது. ஆனால்.
துன்பமும், துயரமும் மண்டிக்கிடந்த என் இதயத் தடாகத்தின் இருள் நீங்கத்தான் மார்க்கம் காணவில்லை.
மெல்லக் கிளம்பி வந்த கதிரவன் தனது செங்கதிர் களை என்மீதும் படியவைத்தான். அந்தத் தனியறை யிலே சாக்குக் கட்டிலிற் சுருண்டு கிடந்த என் உடலைத் தீண்டிய தீட்சணியத்தை நான் அறிந்தேன்.
ஊசியாய்க் குத்திய அந்த விடிகாலைக் குளிர் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. உடலைத் தீண்டிய அந்த அதிகாலையின் மதர்ப்பான உதயக்கதிர் என் உடலுக்கு ஒருவிதத் தெம்பைத்தந்து சுறுசுறுப்பை ஊட்டியது.
எனினும் நொருங்கிய உள்ளத்தை மனச்சாட்சி என்னும் கூரிய கத்தி பிளந்துகொண்டேயிருந்தது.

விழித்தெழுந்த நான் வீட்டுக் காம்பராவுக்குள் எட்டிப் பார்த்தேன். மங்கலான "சிமினி° லாம்பு மெல்லொளி தந்து கொண்டிருந்தது தரையில் கிடந்த பாயை அந்த மங்கிய ஒளி எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது.
பாயோடு பாயாக, காய்ந்து விட்ட சருகாகக் கிடந் தது. ஒரு ஜடம், ஆம் இன்றைக்கு நான் அப்படித் தான் அழைக்கிறேன். ஆனால்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவள் என் மனைவி என் உள்ளத்திலும் இல்லத்திலும் உரிமை யுடன் குடிகொண்டிருந்தவள். ஒட்டியுறவாடியவள். அப்போது அவள், அடித்துவைத்த சிலையாக; மினுக்கி வைத்த பொற்குடமாக, விளக்கிப் பொட்டிட்ட குத்து விளக்காகக் காட்சியளித்தாள் !
என் சிற்றின்ப லீலைகளால் அந்தச் சிலைக்கு உயிர் கொடுத்தேன். என் அன்பின் பிரதிபலிப்புகளால் அந்தப் பொற் குடத்துக்குப் பொட்டிட்டேன். தொழிலாகிய தோட்டக் கண்டாக்கையா? வேலையால் விளக்கேற்றி வைத்தேன் !
கட்டியணைத்துக் கதகதப்புடன் மகிழ்ந்திருந்த காலங்களை எல்லாம் நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. உள்ளம் துளிர்க்கிறது. ஆனால்.
சீ, ஏன்தான் இந்த ஜடம் இன்னும் உயிரோடிருக் கிறதோ, கசம் பிடிச்சிக் கிடக்கும் இந்த மூதேவி ஏன் இன்னும் தொலையாமல் கிடக்கிறது. ஒரு நாளா இரண்டு நாளா, எண்ணி மூன்று வருஷங்களாகி விட்டதே. பிறந்த அந்தக் குழந்தை இறந்த போதே இந்தத் துர்ப்பாக்கிய மூதேவியும் கண்ணை மூடி இருக்கக் கூடாதா?*
காலம்தான் எல்லாவிதத் துன்பங்களுக்கும் நல்ல வைத்திய னென்றால் அந்தக் கோலமே? ஒன்றன் பின்

Page 22
40
ஒன்றாக என் மனதுக்கு ஏனோ வியாதிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஏன்? என் நினைவு அலையில்.எண்ணங்கள் மோதின.
6 என்ன கண்டாக்கையா. ஒங்க பொஞ்சாதிக்கு 6ஏதோ? சொகமில்லியாமே. நீங்க எப்படித்தான் சொந்தக்காரங்களே இல்லாம சமாளிக்கிறீங்களோ?
ஆமாம் அன்று வேலைத் தளத்தில் ஏதோ பேச்சு வாக்கில், என் கணக்கில் வேலை செய்த லட்சுமி கேட்ட கேள்வி அது. கொழுந்து கிள்ளும் மென் விரல்கள் அவளுக்கு உண்டு; ஆனால், அவள் கேட்ட கேள்வி என் மனதையும் மெல்லக் கிள்ளிவிட்டு, வேடிக்கை பார்த்தது.
என் உள்ளத்தில் ஏனோ ஒரு கிளுகிளுப்பு என்ன நோக்கத்துடன் அவள் கேட்டாளோ எனக்குத் தெரி யாது. ஆனால்.
என் மனத்தில் ஒரு சபலம், பசியோடு இருப்பவனுக்கு அவனைக் கேளாமலே பாற்சோறு வரும்போது.எப்படி இருக்கும்.
என்ன லட்சுமி ரொம்ப அக்கறையோட கேக்கற?- லேசான ஒரு குறும்புச் சிரிப்பை என் இதழ்களுக்கூடாக இழையோட விட்டேன்..!
உேம்.சரி..அப்படீன்னா நீதான் வந்து எனக்கும் அவளுக்கும் சமச்சி போடேன்."
என்ன பதில் கிடைக்குமோ என்ற பதட்டத்துடன்
கூடிய ஏக்கம் என் மனத்தில் நிழலாடியது. உடல் பசிக்கு
உணவு கேட்கும்போது உயர்வு தாழ்வு பற்றி என்ன வேண்டியிருக்கிற க.

4
நீங்க படற பாட்டை பரித்து பாத்துத்தான் நான் அப்படிக் கேட்டேன். சரிங்க ஐயா! நானே வந்து எல்லா வேலையையும் செஞ்சுத் தர்றன். இப்போ வீட்டுக்குத் தானே போரிங்க, சரி வாங்க போவோம்.?
நான் முன்னால் நடந்தேன். அவள் என் பின்னால் வந்தாள். கொலைக்காக கொண்டு போகப்படும் ஆடு தன் நிலையை அறியாதுதான். ஆனால் அதனை இழுத்துச் செல்லும் கசாப்புக் கடைக்காரன் அதனை அறிவான் தானே!
சென்ற ஒரு வாரமாக.
வேலை முடிந்தவுடன் என்னோடு சேர்ந்தே என் வீட்டுக்கு வருவாள். ஆமாம். என் மனைவி ஒரு காலத் தில் செய்த எல்லா வேலைகளையும் அவளே செய்தாள் இஸ்தோப்பில் உட்கார்ந்து அவளின் நடையுடை நடவடிக்கைகளை எல்லாம் கண்காணித்துக் கொண்டே யிருப்பேன்.
அடக்கி வைத்திருக்கும் சக்தி அனைத்தும் விம்மிப் புடைத்து, நரம்புகளில் முறுக்கேற்றும்.எனினும் அந்த உணர்ச்சியின் உத்வேகத்தை அடக்கி, ஒடுக்கிவைக்க எனக்கு அவ்வளவு தைரியம் எப்படி வந்ததோ! இப்படிப் பின்னால் நான் எண்ணிப் பார்த்ததுண்டு!
ஆனால் ஐயோ! நேற்று நடந்த அந்த நிகழ்ச்சி.
துக்கம் இப்பொழுது தொண்டையை அடைக்கிறது. ஆனால் மனிதன் கூடச் சில வேளைகளில் மிருகமாக மாறத்தானே செய்கிறான். உணர்ச்சியின் உத்வேகத்தை என் மனக் குதிரையின் மட்டற்ற வேகத்தை அடக்கிக் கொள்ள முடியாத நிலையிலிருந்தேன்.
பாலைவனத்தின் நடுவில் அவள் பசுஞ்சோலையாகச் சுகம் தந்தபோது.

Page 23
42
அன்று, இரவுச் சாப்பாட்டை தயார் செய்து விட்டுக் குரல் கொடுத்த அவளிருந்த குசினிக்கே சென்றேன். மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த மண்ணெண் ணெய் விளக்கின் மங்களகரமான ஒளியின் அருகே நின்ற அவளின் பருவ எழில் என்னைப்பற்றியிழுத்தது.
என்னையே நான் இழந்தேன். என் கண்களால் அவளை அணைத்தேன். ஆனால்.
o O
மறுநாள் சூரியன் வழக்கம்போல் உதித்துத் தனது ஆட்சியைச் செலுத்தினான்.
ஐயா! ஐயா ஒடனே வந்து பாருங்கையா. நம்ம லட்சுமி செத்துக் கெடக்கிறாளாம். நம்ம வீட்டுக்குப் பின்னால் இருக்கிற அந்தப் பாறையிலயிருந்து கீழே குதிச்சியிருக்காபோல இருக்கு காலையில பெரட்டுக் க்ளத்துக்குப் போனவங்க பொணத்த கண்டிருக்காங்க??
மூச்சு விடாமற் பேசிய சாமிக்கண்ணுவின் குரல் கேட்டு நான் ஒன்றுமே சிந்திக்காமல் அவன் பின்னா லேயே ஒடினேன்.
ஆம் விடிந்ததும் விடியாமலும் நான் படுக்கையிலி ருந்து எழுந்த கோலமாக, ஓடக் காரணம். பணிவிடை செய்தவள் பா8மா? இல்லை குறுகுறுக்கும் நெஞ்சின் உந்தலா?. பின்னர்?
அங்கு சென்று பார்த்தால் -
வேலைக்குப் போய்க் கொண்டிருந்தி அத்தனை பேரும்கூட்டமாய் இருந்தனர். ஒவ்வொருவரும் வித விதி
மாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் -
எல்லார் நாவிலும் என் பெயர் நர்த்தனமாடியது.

48
கூட்டு மொத்தமாகச் சொல்வதானால், அவர்கள் சொன்னவை, அதோ அந்தக் காத்தாயியின் பேச்சில் அடங்கியிருந்தன.
63நேற்றுச் சாயந்தரமும் நம்ம கண்டாக்கையா வீட் டுக்குப் போயிருக்கா இந்தச் சிறுக்கி. அங்க அவகெட்டுப் போயிட்டா. இது அவ சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுமென்னு இப்படி செஞ்சிருக்கா? --
ஐயோ! ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஈட்டியாக மாறி என்னின் உள்ளத்தையே குத்திக் கிளறிச் சித்திர வதை செய்தது.
என் வீட்டுக்கு லட்சுமி வந்தது உண்மைதான்! நான் அவளை அணுகியது முக்காமலும் உண்மைதான்.
ஆனால். அவள் கெட்டுவிட்டாளா! கற்பிழந்தாளா?
இல்லை! இல்லை. ஒருபோதும் இல்லை. என் மனச் சாட்சி என்னைக் கொல்லாமற் கொன்று கொண்டிருந்தது.
என் இருண்ட வாழ்வில் தீபமேற்றி வைத்த அந்த மாசற்ற குத்து விளக்கு நேற்று உதிர்த்த அந்தச் சொற்கள் என் நெஞ்சை அறுத்து இரத்தம் கக்கச் செய்தன.
உள்ளத்தை உப்பிப் பீறிட்ட உத்வேகம் என் தொண் டையைத் தாண்டி வெளிவந்தது. என் வாய் ஓலமிட்டது! மற்றவர்களின் வாய்களை அடைக்கும் வண்ணம் ஒல மிட்டது
*லட்சுமி கெட்டுப் போனாள் என்று சொல்றீங்களே! ஒங்களுக்குத் தெரியுமா? நீங்க கண்டீங்களா! நான் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தமா இன்றைக்கு எல்லார் முன்னாலேயும் ஒப்புக்கொன்றன்.

Page 24
44
ஆனால். அவள் லட்சுமி கெட்டு விடல்ல. என்னை வாழ்விக்க வந்த தெய்வம் அவள் லட்சுமி என்ன சொன் னாள் தெரியுமா?
என்ன தொடாதீங்க. ஐயா! கும்பிட்டுக் கேட்டுக் கிர்றன். நான் உங்களுக்கு உதவி செய்ய வந்தது உண்மைதான். ஆனா. இதற்காக என் உடலையும் உங்களுக்குத் தருவன்னு நெனக்காதீங்க.
16என்ட அக்கா, ஒங்க பெஞ்சாதி இருக்கும் வரை யிலேயும் அவங்களுக்குத் துரோகமே செய்ய மாட்டேன். நான் ஒரு தமிழ்ப் பெண் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கட்டும்?
கூடியிருந்த கூட்டம் கற்சிலையாக நிற்கக் கண் டேன். என் கண்களிலிருந்து விடுபட்ட கண்ணிர்த் துளி கள், பச்சைக் கொழுந்தின் மேல் பெய்து நனைக்கும் பனித் துளிகள் போல், என்முன் கிடத்தி வைக்கப்பட் டிருத்த லட்சுமியாகிய அந்த மலைமகளின்* இரு பாதங்
களையும் நனைத்தன.
கசிந்தாமணி

அவன் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. முற் போக்கு எழுத்தாளன் குமையும் இதயங்களின் எண்ணத்துடிப்பில் தோய்ந் தெழுதப்பட்டன. வண்ணக் கலவை" என்றெல்லாம் அவன் கதை களை விமர்சனம் செய்தனர். புத்துலக முத்துக் களின் புது வடிவங்களாக அவை அமைந்தன வாம். இதைப்பற்றிச் சிந்திக்கும்பொழுது அவ னின் இதயத்துள் ஒரு சிலிர்ப்பு. * ܝ
"தெஞ்சத் தாய்மையுடன்தான் வாழ்ந்தேன். உடற்தாப்மையையும் உண்மையாய் காத்து வந்தேன், என் உள்ளத்துளேயும், உடலிலேயும் ஊறு வராதபடி பார்த்துக் கொண்டேன். ஆனால், '
அவள் செய்த முடிவு
அடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. சீதளக் கர்ற்று சில்லென வீசியது. கழுவிய நீலநிறத் தட்டென வானம் துலங்கியது w
அவன் மன்மும் ஓரளவு நிம்மதியடைந்தது. வாழ்வில் வீசும் சூறாவளி, கொட்டும் கொடும் மழை எல்லாவற்றையும், பாவம் ரவீந்திரனும்ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டியிருந்தது
திறந்திருந்த ஜன்னலுக்கு எதிராக சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்து கொண்டு, வானத்தையே

Page 25
46
வெறித்துப் பார்த்திருந்த ரவியின் மனம் கடந்த காலத்தில் நடந்துபோன நிகழ்ச்சிகளை அசைபோடலாயின.
அவள் பெயர் பார்வதி. பார்ப்பதற்கு அழகிதான். ஏனோ போதாத காலம். கல்யாணமாகி மூன்று மாதங் களிலே தன் மணாளனை இழந்துவிட்டாள். கால வெள்ளத்தில் அவள் கண்டெடுத்த முத்து ஒன்றும் இருக்கவில்லை, பட்ட மரமாய்ப் பரிதவித்தாள்.
ஆம்; அவளுக்கும் ஒரு சாண் வயிறு இருந்தது. என்னதான் அந்தச் சாண் வயிற்றுக்கு மேலிருந்த கையளவு இதயம் துடித்துத் துவண்டாலும் வயிறு வாடி வதங்கத்தானே செய்தது. பார்வதி என்ன செய்வாள்? ரவி வீட்டில் வேலைக்காரியாக வந்து சேர்ந்தாள்.
9. . . . . . ! நான் சொல்ல மறந்து விட்டேனே, ரவியைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் கொஞ்ச மாவது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
அவன் ஒரு சாதாரண, கிளார்க்.9 காலையில் அலுவலகம் போய்விடுவான். தங்க விக்கிரகம் என்பார் களே, அப்படி அழகான ஒரு மனைவியைப் பெற்றவன் அவன்.
தென்றலில் ஒசிந்து கொம்பினை அணையும் பக்குவம் அவர்களுக்கிடையில் இருந்தது. அற்ப சம்பளம் கிடைத் தாலும் அரவணைத்து வாழும் வாழ்க்கை. பழைய மண் பானையில் பஞ்சாமிர்தத்தின் பரிமளிப்பு
அவர்களுக்கு முத்துச் சிப்பி முதிர்ந்து விளையாடாமல், சிப்பிக்குள் முதிர்ந்து வந்து கொண்டிருக்கும் காலம், ரவியின் மனைவி ரதி, மெல்லக் கால் எடுத்து வைத்து நடக்கும் மெதுமையின் பூரிப்புக் காலத்திலிருந்தாள்.

47
அவன் ஒரு சமூக சீர்திருத்தவாதி, முற்போக்கு 6ாழுத்தாளன். குமையும் இதயங்களின் எண்ணத் துடிப்பில் தோய்ந்தெழுதப்பட்ட வண்ணக் கலவை” என்றெல்லாம் அவனின் கதைகளை விமரிசனம் செய் தனர். புத்துலக முத்துக்களின் புதுவடிவங்களாக அவை அமைந்தனவாம். இதைப் பறறிச் சிந்திக்கும்போது
அவனின் இதயத்துள் ஒரு சிலிப்பு.
இப்பொழுது. பார்வதியின் நிலை.
நினைத்தாலே அவன் மனம் துணுக்குறுகிறது பாவம் அவள் அந்த வீட்டுக்கு வந்து இரண்டு வருடங் கள் ஆகின்றன. அவன் என்ன செய்வான்? இதயத் தைப் பிசைந்து குடையும் தாபத்தின் சாயையை அவன், அவளிடம் கண்டான், உணர்ச்சியின் உந்துதலால் ஊட்டப்படும் துடிப்புகள்இருக்கத்தானே செய்யும்.
சிந்தித்தால். இளம் மனைவியின் இன்பப் பரிசத்தில் நனைந்த அவனுக்கு பார்வதியும் குளிர் நிலவுபோல் நிழிலானாள்.
eb60TFT6....,
வரார் பேசிக் கொள்வதைக் கேட்டால். அவனின் காதுகளை அவனே பொத்திக் கொள்ள வேண்டிய நிலை, நெய்பட்ட நெருப்புத் தணலில், கொய்து போடப்பட்ட சிறுகொழுந்துபோல் அவன் உள்ளம் வேகுகின்றதே!
பார்வதியின் பெட்டகத்திலும், ஒரு முத்து கருவாகி, உருவாகி வருகின்றதாமே? ஊர் வாயை எப்படி மூடுவது!
அவன் ஊருக்குச் செய்யும் உபதேசங்களால் என்னி ute 6ör?

Page 26
48
அவனின் மனைவியும் மறைமுகமான நடவடிக்கை களால் காட்டுகிறாளே. விழிக் கோடியிலிருந்து விழும் நீர்த்துளிகள், இரட்டைக் கருத்துப்படும் பேச்சுகள். இவை அவனின் இதயத்தைத் தாக்கின.
பார்வதியிடம் இன்று நேரடியாகக் கேட்டுவிட வேண்டியதுதான் என்று எண்ணினான். தாரமிழந்த ஒரு பெண், இளமைத் துடிப்புகளுடன் எத்தனை நாளுக்குத்தான் தனிமையுடன் வாழ்வது? பார்வதியைப் பொறுத்த மட்டில் பக்குவ வாழ்வின் பிணைப்புக்கு ஏற்ற எல்லா நலன்களையும் கொண்டுதானே இருந்தாள்.
வாழ்க்கையின் வளமான பருவ நிலையில்தானே அவள் இருந்தாள். கதிர் முற்றிக் களம் அடையும் நிலை அடைய வேண்டாமா, என்ன?
வானத்திலே வெள்ளியொன்று முளைத்து அவனைப் பார்த்து ஏளனக் கண்சிமிட்டல் சிமிட்டியது!
துணுக்குற்ற அவள் உள்ளம் ஒரு தீர்க்கமான முடி வுக்கு வந்தது. நாளைக்கு எப்படியாவது ஒரு முடிவு காணவேதான் வேண்டும்.
அமைதித் தேவதை அவனின் நெஞ்ச மஞ்சத்தில் சிறு நெருடல் செய்தான். அவன் கண்ணயர்ந்தான்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல் ரவி தனது கடமைகளைச் செய்ய ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தான். நாளின் ஒளிக் கூட்டல் அவன் நாளத்தில் துடிப்பை அதி கரித்தது. எண்ண அலைகளும் அவன் மனத்தில் வண் ணக் கோலம் வரைந்தன. நேற்றைய தீர்க்க முடிவின் நெருடல் வேறு அவ்வேளை.
*ஐயா. s ஆண் குரலின் முரட்டுச் சத்தம்.

49
எழுதிக் கொண்டிருந்த ரவி, எழுந்து வந்து பார்த் 5TGir.
வாட்டசாட்டமான ஓர் ஆண் அங்கு நின்றான். வாளிப்பான உடற்கட்டு. சுமார் முப்பது வயதிருக்கும்.
இளமையின் துடிப்பை அந்த உருவம் பிரதிபலித்தது.
6என்ன வேண்டும். 299
6ஐயா. பார்வதி வேலைக்கு வந்தாளையா? நான் அவளுக்கு மச்சான். அவளக் கண்டுட்டு போகலாம் எண்ணு வந்தன்.”
இதனைக் கேட்ட ரவியின் மனத்தில் புதிய எண்ணக் கருத்துக்கள் முளைத்தன.
பார்வதிக்கு ஏற்றவனாக காணப்படுகின்றானே இவன்.
அவளைச் சந்தித்து ஆகக்கூடியவைகளைப் பார்த் தால். எண்ணத்தின் சுழற்சியில்.
66அவள் இன்றைக்கு வரவில்லைப் போலிருக்கிறது உன்னுடைய பெயரென்ன?? - பெயரைக் கேட்டதுடன் அறிமுகப்படலம் ஆரம்பமானது. ரவி, தனக்குத் தேவை யான எல்லா விபரங்களையும் அறிந்து கொண்டான். அவனும் விடை பெற்றுச் சென்றுவிட்டான்.
ரவியின் உள்ளம் தளம்பியது. பார்வதியைக் கண்டு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்? அவள் மனதைப் பாதிக்காத விதயத்தில் என்னென்ன கூறலாம். வந்த அந்த வாலிபன் வரதப்பனை அவள் ஏற்றுக் கொள்ளும் படியாகச் செய்ய வேண்டும். பார்வதி யின் குடிசையை நோக்கி நடந்தான் ரவி.
6ஐயா! என்னய்யா இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க, சொல்லி விட்டிருந்தா நானே வந்திருப்பேனே? ஏதோ ஒடம்புக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது. அதான்

Page 27
50
வரமுடியல்ல." பேசிக் கொண்டு போகும்போதே கொஞ் சம் படபடத்தாள். எஜமானாகிய என்னைக் கண்டதும் இந்தப் பதட்டமோ” என்று எண்ணினான் ரவிஆனால்.
1கொஞ்சம் இருங்க வாறனையா? என்று வார்த்தை களை முடிக்காமலே பின் புறமாகச் சென்றாள்.
சற்று நேரம் கழிந்து கண்கள் சிவந்து, நீர்த் துளிகள் விழிக்கோடியில் கொடிகட்ட ரவியின் முன்வந்து நின்றாள்.
போர்வதி நான் உன்னை வேலைக்குக் கூப்பிடுவ தற்காக வரவில்லை. ஒரு முக்கியமான விஷயமாகப் பேச வந்தன்” சொற்கள் தடுமாறின.
போர்வதி.இன்றைக்கு. வரதப்பன் எங்க வீட்டுக்கு வந்தான். உன்னைக் காண வேண்டும் என்றுதான் வந் தான்.” என்ற பீடிகையுடன் தொடங்கினான்.
"ஐயா!” என்றவள் பேயறைந்தவள் போல் நின்றாள்.
ரவி தொடர்ந்தான் --
இப்படித் தனியா நீ எத்தனை நாளைக்கு கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பாய் நான் சொல்லுகிறபடி செய்
தால் என்ன? ரவி தனது எண்ணத்தை நயமாக வெளி யிட்டான்.
ஆனால் அவள் மெளனமே சாதித்தாள்!
என்ன நினைக்கிறாய் பார்வதி. நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேள். ஏதோ தவறு நடந்து விட் டது. என்ன செய்வது! நாம் செய்த தவறுக்கு நா0ே பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்.
*எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. நான் சொல் வது போல். வரதப்பனை." என்று நீட்டி இழுத்தான்.

5.
ரவி நிம்மதியை எதிர்பார்த்து ஒரு நீள் பெருமூச்சு விட்டான்.
இப்பொழுது பார்வதி பேசத் தொடங்கினாள்.
6ஐய! நீங்க சொல்லுகிற விஷயம் ரொம்ப நல்ல விஷ யம். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால். ஒன்று. நடந் ததை கேட்டுவிட்டு நிம்மதியாக யோசித்து சாவதான மாகப் பதில் சொல்லுங்க.??
48கல்யாணமாகி என் புருஷன் இறந்த பிறகு சுமார் இரண்டரை வருஷ காலம் நெஞ்சத் தூய்மையுடன்தான் வாழ்ந்தான். உடற் தூய்மையையும் உண்மையாய் காத்து வந்தேன். என் உள்ளத்துலேயும், உடலிலேயும் ஊறுவராதபடி பார்த்துக் கொண்டேன். ஆனா. ஒரு நாள் . ஒரே ஒரு நாள். எனக்குச் சொந்தம் என் பதற்காக. என்னுடைய வீடு தேடி வந்த அவருக்கு. ஏனோ இடம் கொடுத்தன். அன்றைக்கு இருந்த மார்கழிக் குளிர். ஏதோ ஒரு மேலான எண்ணம் என் மனத்தில குழப்பத்தை ஏற்படுத்திற்று.
இன்றைக்கு அதன் பலன அனுபவிக்கின்றேன். ஐயா நீங்க சொல்லுகிறது போல செய்தா என்ன நடக்கும்.
*நான் படுகிற துன்பத்தோடு இன்னுமொரு ஜீவனை யம் சேர்த்துக் கொண்டு துன்பத்துக்குத் தூபம் போட்டு இன்னும் எத்தனையோ ஜீவன்களை இந்த உலகத்துக் குள்ள கொண்டுவந்து அதுகளையும் துன்பப்பட வச்சு .
*அதனால நான் நினைத்திருப்பது போலத் தனிய வாழ்ந்திட்டா என்னையே நான் எப்படியும் காத்துக் கொள்ளலாம். ஏன்! என் வயிற்றில் வளர்கிற ஜீவன் பிற் காலத்தில் என்னைக் காப்பாற்றுவான்! ஆனால் எனக்கு
இந்த ஜீவனைத் தந்த 'அந்த ஆள்° வழக்கம் போல சந்

Page 28
53
தோஷமாக வாழட்டும்” - ஒரு பெருமூச்சுடன் நிறுத்தி னாள்.
சீர்திருத்தவாதி ரவீந்திரன் சிந்திக்கத் தொடங்கி னான். அந்த ஜீவனைக் கொடுத்த அந்த ஆள் யார்?
போர்வதி அந்த ஆள்...??? என்று விளித்தான் ரவி.
*ogu Isr...... நீங்க நெனைக்கிறது போல அந்த வரதப் பன் மச்சானில்லை. உங்களுக்குத் தெரியுமே நம்ம பேஸ் ஸ்டான்’டிலே பிச்சையெடுப்பாரே ஒரு மூடவர். அவர்தான்.”

தன் மனம் எங்கெல்லறமே போவது கண்டு, கட்டுப்படுத்தினான். மறுகணம் அவனின் அம்மா, அப்பாதான் அவன் முன் தோன்றினர், ஏன்-என் அம்மா அப்பாவுக்கு இந்த அழகு தெய்வத்தைப் பிடிக்கவில்லை ?”
ஆனால்
சாந்தியோ-கணவனின் மனநிலையை நன்
றாக அறிந்து, மாமா மாமியின் மணமறிந்து ஏற்ற விதத்தில நடந்து வந்தான்.
UUD ? Usub ?
நேசம் அப்பொழுது ஐந்தரை ஆகியிருந்தது. அந்த அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் எல்லாரும் வீட்டுக்குப் போய் ஒருமணி நேரமாகியிருந்தது. ஆனால் மோகன்.
இன்னும் தனது அறையிலிருந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். ஆம் அவன் அந்த அலுவல கத்தின் மனேஜர், இப்பொழுது அவன் வேலை செய் கிறானா? இல்லை. * வேலை ஒடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் மனம் குழம்பிப் போய் இருந்தது.
எழுந்து வந்து ஜன்னல் ஊடாக வெளியிலே பார்த் தான். அங்கு தெருவில் அந்நேரம் பலர் போய்க் கொண் டிருந்தார்கள். அந்த அலுவலகத்தின் பக்கத்தில்தான் ஒரு படமாளிகையும் இருந்தது. எனவே
சிட்-4

Page 29
54
சோடி சோடியாகப் பலர் போய்க் கொண்டிருந்தார்கள். அவன் வயதை ஒத்தவர்கள், மணம் முடித்தவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவனின் உள்ளத்தில் ஓர் ஏக்கப் பெருமூச்சு அனலாய் வெளிப்பட்து.
சாந்தி, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக் கிறாயோ? என்னைப் பற்றி நினைக்கின்றாயா? ஊரறிய, உலகறிய திருமணம் செய்தோம். சரி..ஆனால்..நான் ஒரு பாவி சாந்தி, நானொரு பாவி!
எண்ணங்கள் அவன் மனத்தில் கடலலையாய்ப் புரண்டு வர, அவைகளைத் தாங்க முடியாது தத்தளித் தான். அறைக் கதவை மூடிவிட்டு, நேரே வீட்டுக்குப் புறப்பட்டான்.
s O O
அன்றொரு நாள், இப்படியல்ல. நேர காலத்தோடு குறுகிய கால லீவுபோட்டுவிட்டே, வீட்டுக்கு ஓடினான். ஆமாம் சாந்தியிடம், அன்று இருவரும் கோல்பேஸ்” போய்விட்டு, அப்பபடியே படம் பார்க்கப் போவதாகச் சொல்லியிருந்தானல்லவா? வீட்டில் வந்து பார்த்தால்
சாந்தி குசினிக்குள் வேலை செய்துகொண்டிருந்தாள். உணமையில அவன் அம்மாதான் கதவைத் திறந்தாள். சாந்தியைப் போய்ச் சந்தித்தான். ஆனால், ஒன்றும் பேசவில்லை. கண்கலங்கி நின்றாள். அம்மா வருவதைக் கண்டு திரும்பிவிட்டான் தன் அறைக்கு
சாந்தி, தேநீர்க் கோப்பையுடன் அவனின் அறைக்குள் நுழைந்தாள். உண்மையில் தேநீர்க் கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டு, அவனின் மார்பில் சாய்ந்து விட்டாள். குலுக்கினாள்.
மாமியிடம், நாம் இன்றைக்கு சினிமாவுக்கு போக யிருப்பதாகச் சொன்னேன். அதற்கு அவர்கள் என்ன

55
சினிமா வேண்டிக் கிடக்கு போய் வேறலகளைப் பார் என்று சொல்லி, காலை முதலே நிறைய வேலை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.” வாய் மலர்ந்த சாந்தி, மீண்டும் அடுப்படிப் பக்கமே போய்விட்டாள்.
சற்று நேரங்கழித்து, அவன் வராந்தாவில் உட்கார்ந்து பத்திரிகையை வாசித் துக் கொண்டிருக்கும்போது அவளின் தாய் வெளியே போக உத்திக்கொண்டு வந்து, 'மோகன், நான் கோவிலுக்குப் போகிறேன் அப்பாவும் வருவார். இன்றைக்கு கிருபானந்த வாரியார் காலட்சேபமும் இருக்கு’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.
மோகன் பதிலளிக்கவேயில்லை.
அம்மா போனபிறகு மோகன் சாந்தியைத் தேடி அடுப்படிக்கு வந்தான். அவள் கரிசனையாக வேலையில் ஈடுபட்டிருந்தாள். மெல்ல அருகில் வந்து, அவள் தலையைக் கோதினான். அவன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் -மலர்க்கண்கள் மட்டும் கண்ணிர் முத்துக் களைச் சொரிந்தன. மோகனாலும் ஒன்றும் பேச முடிய வில்லை, ஆம்
அவனின் ஆண்மையிலேயே அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனின் மனத்திரைமேல் எண்ணப் படங்கள் வண்ணக்கோலமிட்டன,
சாந்தி அழகானவள், பூரணச் சந்திரன் போன்ற முகம்; நாவற் பழங்கள் போன்ற குறுகுறு கண்கள்; மீன் போன்ற நீண்ட விழிகள்! அமைப்பான மூக்கு, கொவ்வை யிதழ்களினூடாகத் தெரியும் முத்துப் பல்வரிசை, கன்னக் கதுப்புகளில் ஆப்பிள் பழங்கள் விளையாடின. சங்குக் கழுத்துக்குக் கீழ் சாதி மாதுளைக் கனிகள்.
தன் மனம் எங்கெல்லாமோ போவது கண்டு கட்டுப் படுத்தினான்.மறுகணம் அவனின் அம்மா, அப்பாதாம்

Page 30
56
அவன்முன் தோன்றினார். ஏன் என் அம்மா அப்பா வுக்கு இந்த அழகு தெய்வத்தைப் பிடிக்கவில்லை?
அவர்களுக்கு என்ன? தாழ்வு Lm6ort ursörsoLn u JIT? தங்களை அலட்சியப்படுத்துவாள் என்ற எண்ணமா? கொஞ்சம்விட்டுக் கொடுத்தால் கொலுவேறி விடுவாள் என்ற அச்சமா??
அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
அவன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். அவளின் தாய் தந்தையரோ சொத்துச் சுகம் படைத் தவர்கள் தாம். அவனுக்குச் சாந்தியைத் திருமணம் செய்து கொடுப்பதற்குக் காரணம் அவனின் படிப்பும், சம்பாத்தியமும்தான்.
ஆனால் இன்று
தன் எண்ணங்களை அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தன் நிலையைப் பற்றிச் சிந்தித்தாள்.
என் பெற்றோரிடத்தில் எனக்குப் பயமா? இல்லை மரியாதையா? பாசமா, இல்லை ஏதோ ஒரு நேசமா??
தன்னையே தன்னால் எடை போட்டுக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வான்?
ஆனால் சாந்தியோகணவனின் மனநிலையை நன்றாக அறிந்து, மாமா, மாமியின் மணமறிந்து ஏற்ற விதத்தில் நடந்து வந்தாள். தன் கணவனின் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையை நன்குணர்ந்து சமயங்களுக்கேற்றாற் போல சாதுரியமாக நடந்து வேதனைகளை எல்லாம் மனத்துக்குள் புதைத் துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண் டிருந்தாள் -
O O O

57
ஒரு நாள் மோகனின் மாமா தன் மகளைப் பார்ப்பதற் காக வந்தார். சாந்தியின் நிலையைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அவளின் தோற்றமே அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. அவர் எப்படி எப்படியெல் லாமோ குடைந்து கேட்டும் சாந்தி ஒன்றுமே சொல்ல வில்லை.
ஆனால், அவரோ விட்டபாடில்லை. எப்படியோ அவள் மனத்தில் ஏதோ படும்படி கூறி இரண்டொரு வாரம் தங்கள் வீட்டிலேயே வந்திருக்கும்படி கேட்டு, அவளைக் கையோடு கூட்டிக்கொண்டே போய்விட்டார்.
மோகனுக்கு வீட்டில் மனநிம்மதியேயில்லை.
அவனின் அலுவலக முகவரிக்கு அவள் கடிதங்கள் எழுதத்தான் செய்தாள். ஆனால், அவன் என்ன செய் வான்? பதில் எழுத ஏதோ தடுத்தது. ஆம்- அவனுக்கு அவனின் அப்பா அம்மா மேலிருந்த மரியாதையா - பயமா - பாசமா? அவனாலேயே அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை,
அனலிலிடப்பட்ட புழுவாய் அவன் துடித்தான். தரைமேல் மீனாகத்தான் அவன் தவித்தான். என்றாலும், அவன் மனத்தில் ஏதோ ஒரு மரியாதை, ஏதோ ஒரு பாசம்; ஏதோ ஒரு பயம் - என்ன செய்வான்?
O c O
ஒரு நாள் மோகனின் மாமாவே அவனுடைய அலு வலகத்துக்கு வந்தார்-மோகன் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போகவில்லை. பக்கத்திலுள்ள ஹோட்ட லுக்கே அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து அனுப்பினான்.
சாந்தியின் மனநிலையையும், உடல் நிலையையும் நன்றாக அறிந்து கொண்டான். பூஜையறையே அவளின்

Page 31
58
நிரந்தர இருப்பிடமாயிருந்ததாம். கண்ணிரும் கம்பல்ை யுமே அவளின் துணையாய் இருந்தனவாம்.
அவளும் வாரமொரு கடிதம் எழுதினாள்- ஆனால் மோகன் பதிலே எழுதவில்லை. காரணம், பெற்றோர் மேல் அவன் கொண்ட மரியாதையா, பயமா, பாசமா?
ஒரு நாள் அவன் அலுவலகத்திலிருந்து நேரத்தோடு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அவன் பெற்றோர் பேசிக் கெண்டிருந்தது, அவன் காதில் விழுந்தது.
“என்ன் நெஞ்சழுத்தமிருந்தால், அவள், அவளு டைய அம்மா வீட்டிலேயே தங்கிடுவா? புருஷன் பற்றி ஏதாவது அக்கறை இருந்தாதானே?”. அம்மாவின்
வார்த்தைகள்
68ஆமா. பணக்காரிதானே. இவனை அப்படியே மறந்து போயிருப்பா? - அப்பாவின் திருவாய்மொழி.
இவ்வார்த்தைகள் மோகனின் மனத்தை நெருப்பாய்ச் சுட்டன. ஏதோ ஒர் ஆத்திரத்தோடு எழுந்தான் .
நேம்ம மகன், நம்ம மகன்தான். என்றைக்குமே மாற மாட்டான்? - அம்மாவின் இவ்வார்த்தைகள் அவன் காதுகளில் விழுந்தன.
எழுந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
Lnfur6og5uuT? LJTanr? Luu JLnr?
தினகரன்

ஜீவனின் சுருதி தப்பிய ஒளிகள் மனதில் கேட்க, நினைவு தடுக்கிட, நெஞ்சைப் பிழிவது போன்ற ஒரு மிருக வேதனையை அனுபவித்தான் ஜோசப்.
வீண் பழி சுமத்தப்படும்போது வேதனை வீறிட்டெழாதா ?." என்னடா, ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, மனுஷனையே கடிச்ச மாதிரி, இரண்டு ரூபா, ஐந்து ரூபா என்று வந்து, இப் பொழுது ஐம்பது ரூபாய்க்கு வந்து நிற்கிறியா?"
பாலன் தந்த வாழ்வு
என்னடா நான்பாட்டுக்கு கேட்டுக் கொண்டிருக் கிறன். நீ. பரபாஸ். கள்ளன் மாதிரி முழிச்சிக் கொண் டிருக்கிற. காசுக்கு என்னடா நடந்தது..??
அந்த முதலாளியின் கோப உணர்வின் ஆக்ரோஷ அலைகள், இதய விதானத்தில் மோதி இடித்துக் கெக்க லித்து அர்ப்பரிக்கின்றன. அடேய் ஜோசப்". கோப உணர்வின் ஆக்ரோஷ அலை ஆர்ப்பரித்தது!
அவர் முன்னால் நின்ற ஜோசப், திடீரென பெரட்டிற் தெறித்தாற்போல் நேர்ந்த ஒர் உணர்வின் உந்தலினால் ஜீவனின் சுருதி தப்பிய ஒலிகள் மனத்தில் கேட்க நினைவு தடுக்கிட, நெஞ்சைப் பிழிவது போன்ற ஒரு மிருக வேதனையை அனுபவித்தான். வீண்பழி சுமத்தப் படும்போது வேதனை வீறிட்டெழாதா !

Page 32
8O
முதலாளியின் முன், கூனிக் குருகி நின்றான் ஜோசப் எடுபிடி வேலைக்காக, ரீேட்டாஸ் ஸ்டோர்ஸில் வேலை செய்த சிறுவன் ஜோசப். என்ன செய்வான் அவன். முந்தைய நினைவுகளின் சுமைகள் அவன் சிந்தையில் முட்டி மோதின.
முதலாளி தொடர்ந்தார். அடேய் மடையா ! கள்ளப்பயலே, எத்தனை தடவைகளடா கேட்கிறது. சொல்லுடா நீ அந்த ஐம்பது ரூபாயை எடுத் தாயா? இல்லையா? சொல்லுடா ராஸ்கல்’ ஐம்பது ரூபாய் காணா மற் போய்விட்ட காரணத்தால் முதலாளி மரியதாஸ் மனம் உடைந்து, கொக்கரித்தார். ஆம் ஐம்பது ரூபா பணமல்லவா ?
பிஞ்சு மனத்தில் எழும் ஆசாபாசங்களைத் தன் குடும்ப வறுமையின் கோரப்பிடியினால் அடக்கி, மனத் தில் மடித்து வைத்திருந்த ஜோசப்புக்கு ஒன்றும் விளங்க வில்லை. இது முதற்தடவையல்லவே, தொடர்ந்து இப் பொழுது எத்தனை நாட்கள்
கோபமும், ஆத்திரமும் முதலாளியின் கண்களைக் கோவைப் பழங்களாக்கின. என்னடா ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி, மனுஷனையே கடிச்சமாதிரி இரண்டு ரூபா-ஐந்து ரூபா என்னு வந்து, இப்பொழுது ஐம்பது ரூபாய்க்கு வந்துநிற்கிறியா?
ஜோசப்புக்கு எல்லாமே புதிராய் தானிருக்கிறது. தான் செய்யாத குற்றங்களுக்குத் தான் ஒவ்வொரு முறை யும் தாக்கப்படுகிறான். முதலாளியின் மகன் சேவியர் எத்தனையோ முறை கடைக்கு வருகிறான். அவன் இவைகளை செய்திருக்கக் கூடாதா? மேலும் கடைக்கு எத்தனை பேர் வருகிறார்கள். நேற்று மாலையில் கூட முதலாளியின் மச்சினன் மனுவேல் பட்டறையில் உட் கார்ந்திருந்தாரே? ஜோசப்பின் சின்ன மனத்தில் எண் ணங்கள் திரை விரித்தன. விபரிக்க இயலாத ஒருவெறுமை

6.
துயரநிலை அவன் மனத்தை அரித்தது. வேதனையால் புழுங்கிக் குமைந்தான். பிஞ்சு மனத்தில் எழும் ஆசா பாசங்களை மனத்திலேயே மடித்துவிட்டு வாழ்பவன் அவன்.
‘என்னடா பேயறைந்தவன் மாதிரி நிக்கிற. மெளனமா நின்றாப்போல, பணம் வந்து சேர்ந்திடுமா?. எங்கே பணம்? வீட்டுக்குக் கொண்டுபோய் அம்மாகிட்ட கொடுத்துட்டு வந்துட்டியா?. சொல்லுடா!”- ஆத்திரத் தால் மேலிட்ட அவரது இரும்புக்கை, ஜோசப்பின் மென்மையான கன்னங்களைப் பதம் பார்த்தது.
ஐயோ முதலாளி. நெஞ்சைப் பிழிவதுபோல் ஒரு வேதனையின் கூக்குரல் கேட்டது. இதயம் கலகலத்தது. கண்கள் மடை உடைத்துக் கொண்டன.
அம்மாவிடமா??-கேள்வியாக மாற்றி உச்சரித்த அந்த வார்த்தையில் எழுந்த குறிப்பின் தாக்கத்தால் அவர் குலுங்கி நிமிர்ந்தார்.
"ஐயா! என்னை என்னமும் சொல்லுங்க. ஆனா. என் அம்மாவ! மட்டும் ஒன்னும் சொல்லாதீங்க. அவங்க. அவங்க.என் தெய்வம்!” - ஜோசப் தீர்க்கமாகச் Gaffgotsor itsör.
போடா-போ-ஏளனத் தொனியில் இவ்வார்த்தை கள் முதலாளியின் வாயிலிருந்து புறப்பட்டன.
சரி.பணத்துக்கு என்ன நடந்தது .எங்க கொண்டு கொடுத்த.”
ஜோசப்பின் கண்கள் முதலாளியின் தலைக்கு மேலால் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்திலே குத் திட்டது. அது.ஒரு திருடும் படம். இரு பக்கமும் தாயும் தந்தையுமாக சூசையப்பரும் வேதமாதாவும் நி

Page 33
62
பத்து வயது பாலகனாக யேசுநாதர் நின்றுகொண்டிருந் தார். சிரித்த முகத்துடன் - தூய்மையை வெளியிட்ட அந்த முகத்தைக் கண்டு ஜோசப் ஒரு நிமிடம் செயலற்று நின்றான். தன்னுடைய வயதுடைய பாலன் தம் தாய் தந்தைக்கு இடையில் நிற்கிறார்.ஆனால் தானோ..? ஆனால் ஜோசப் மனந்தளரவில்லை. வருந்தி சுமை சுமக்கிறவர் என பின்னாலே வாருங்கள். தட்டுங்கள் திறக்கப்படும்’ என்றெல்லாம் போதித்த பெரியார் இவர் தானே?
ஆம்.உலகத்தின் பாவங்களைப் போக்க, மன்னாதி மன்னர் இன்னும் ஒரு நாளில் பிறந்திடுவார். நாளைக்கு கிறிஸ்துமஸ், உம்.அவரிடமே என் துயரத்தை சொல்லி யழுவேன்.உலகத்தின் பா வங்களைப் போக்கிய யேசுவே என் துன்பத்தைப் போக்கு.? என்று எண்ணிய ஜோசப்பின் கண்களில் கண்ணீர் மல்கியது.
மெளனமாய்க் கண்ணிர் உருக்கும் ஜோசப்பின் குத் திட்ட கண்களைக் கண்ட முதலாளியின் கண்களும் படத்தை நோக்கி படர்ந்தன.
யேசுவின் படம். சிந்தனை ரேகை அவர் முகத்தில் படர்ந்தது. கணநேர மெளனத்தின் பின் சொன்னார் : ஜோசப் அடேய் அடித்தாலும் நீ உண்மையை சொல்லுறாப்போல இல்ல.செய்யுற மாதிரித்தான் செய் யணும். நாளைக்குக் காலைல கணக்க முடிச்சிற வேண்டியதுதான். சரி சரி.அது பிறகு பார்ப்போம். இப்போ போய் அந்த (Crib Set) . தெரியுந்தானே.
அதான்.கிறிஸ்மஸ் குடிலில் வைக்கிற சுருபங்கள எல்லாம் எடுத்துவா.அதோ அந்த அல்மாரி மேல இருக் கிற அட்டப் பெட்டியிலதான் இருக்கு.? என்றார் முதலாளி.

68
சொல்லிவிட்டு ஆண்டுதோறும் குடில் வைக்கிற கடையின் மூலைக்குச் சென்றார் முதலாளி.
ஜோசப்பின் நெகிழ்ந்த நெஞ்சின் அடையாளங்கள் கண்களிலிருந்து உருகி முத்துக்கோர்த்துக் கொட்டின, என்றாலும்.மெளனமாக அந்தப் பெட்டியை எடுப்பதற் காக நகர்ந்தான் ஜோசப்.
யேசுவே எனக்கு உதவி செய்யமாட்டாயா..? என்று மனத்தில் எண்ணிக்கொண்டே அந்த அட்டைப்
பெட்டியை எடுத்தான். முதலாளிக்கு முன் கொண்டு வைத்தான்.
*சீ.வருஷத்துக்குள்ள எவ்வளவு தூசி. என்று முணுமுணுத்துக்கொண்டே பெட்டியைத் திறந்தார்.
சென்ற முறை வைக்கப்பட்ட வைக்கோல் அப்படியே இருந்தது. ஆனால் எலியால் துண்டு துண்டாக்கப் பட்டுக் கிடந்தது.
உற்றுக் கவனித்த முதலாளி சிலையாய் நின்றார்.
ஆம்.அந்த எலிக்கூட்டில். இரண்டு ரூபா. ஐந்து ரூபா நோட்டுகளின் துண்டுகள் காணப்பட்டன. எலியின் பற்களால் பதம் பார்க்கப் பட்டிருந்தன.
முதலாளிக்கு எல்லாம் விளங்கிவிட்டது, ஒடிச்சென்று மேசை லாச்சின் பின்னால் எதையோ ஆராய்ந்தார். அங்கே பெரிய ஒரு ஓட்டை காணப்பட்டது. முன்னால் பூட்டினாலும் பின்னால் எலி போகக்கூடிய துவாரம்.
ஜோசப்பிடம் மெல்ல நடந்த முதலாளி தம்பி” என்று மனம் உருகக் கூறினார்.

Page 34
64
ஜோசப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்த சின்ன பாலனின் சொரூபத்தைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான்.
துண்டாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்த காற்றுல் அலைந்தன.
ஜோசப்பினதும், முதலாளியினதும் கண்கள் சந்தித் தன. முதலாளியின் கண்களில் நீர் மல்கியது. மன்னிப் புக் கேட்கும் சாயல் காணப்பட்டது.
-வீரகேசரி
紫 柴 紫

அவன் பிள்ளையை அணைத்த அம்ைபு!
ஐயோ ! எலும்புகள் முறிந்தாலும் முறிந்துவிடும்.
JJ argë 6025 அன்பை, நேசத்தை, ஆதரவை வெளிக்காட்ட இந்த அரவணைப்புத் தேவையா ? நெஞ்சிலிருந்து பீறிட்டு வரும் அன்பின் வெள்ளம், இந்த அணைப்பின் வாய்க் கால் வழியாகத்தான் ஒடிடவேண்டுமா? என்னே விசித்திரம் ?
"சீ கழுதை.பட்டாசு வேணுமா ? இந்தா ? பிஞ்சுக் கன்னத்தில் பட்டாசு வெடித்தது. இதைத் தடுத்த தாயின் முதுகிலே மத்தளம் ஒலித்தது. ஒரே குழப்பம்.
அவலம்
பொல பொல வென்று விடிந்து கொண்டிருந்தது. பொங்கல் புதுநாள் பூத்துக் கொண்டிருந்தது.
பச்சைப் புடவையால் போத்தப்பட்டிருந்த மார்பகங்கள் விம்மிப் புடைக்க, மல்லாந்து படுத்திருந்த மங்கை நல்லா ளைப் போன்று காட்சியளித்த தேயிலைச் செடிகளால் தெரியாமல் ஆக்கப்பட்டிருந்த பச்சைப் போர்வையில் துயில்கொண்ட மலைச்சரிவுகளை...அப்பிக் கிடந்த இருட் திரையை அகற்றிக் கொண்டிருந்தது ஆதவனின் பொற்கிரணங்கள். அந்தப் பெண்ணின் பிறைநுதல் கண்ட திலகம்போல் காட்சியளித்த அந்தச் செஞ்ஞாயிறு சிந்திய ஒளிக்கற்றைகள். தேயிலை இலைகள் மேல் முத் துக்கள் போல் படித்திருந்த பனித்துளிகளின் மேல் பட்டுப்

Page 35
66
பிரகாசித்துச் சித்து வேலைகள் செவ்வனே செய்து கொண்டிருந்தன.
இந்தச் சூரிய ஒளி தட்டுத்தடுமாறி, தப்பித்தவறி ஒன்னாம் நம்பர் லயத்தின் தொங்க வீட்டுக்குள்ளும் நுழைந்தது. அந்தோ! நுழையத்தான் முடியுமா அந்த மாட்டுக்கொட்டிலுக்குள்.
அடுத்திருந்த மஸ்டர் கிரெளண்டிலிருந்து அடிக்கப் பட்ட விஷேச தப்பின் ஒலி கொஞ்சம் உறைப்பாகவே வந்து விழுந்தது. அந்த ஒற்றைக் காமராவில் சுருண்டு படுத்திருந்த காத்தாயினுடைய காதுகளில். வழக்கமாக துயிலெழும் நேரம்தான். ஆம் ! தான் தன்னைச் சுற்றிக் கொண்டு படுத்த அந்த சேலையை சரிபடுத்திக்கொண்டு விழித்தாள் அவள். ஆனால் எழவில்லை. கொஞ்ச நேரம் தான் துயில் கொண்டிருந்த அந்த சாக்கின் மேலேயே படுத்துக் கிடந்தாள்.
ஆமாம், “அந்தக் காமராவிலிருந்த மூன்று பேருக்கும்.
பழனியாண்டி, அவள் கணவன்; அவளாகிய காத் தாயி, அவர்களின் ஏக குமாரத்தியாகிய முத்தம்மா ஆகிய ஜீவன்களுக்கும் ஆக இருந்தது ஒரே ஒரு புல்லுப் பாய்ந் தான். அதுவும்.அவள் புதுமணக் கோலத்துடன், அந்தக் காம்பராவில் வந்து சேர்ந்த பழனியாண்டியாகிய வாலிபனுடன் வந்து நுழைந்தபோது வாங்கப்பட்டது. சுமார் ஒன்பது ஆண்டுகள் பழனிக்கும் காத்தாயிக்கும் அந்தப் பாய் அதி சேவை செய்துள்ளது. இளமைகளை யெல்லாம் தன்னால் இயன்றமட்டும் அனுபவித்துவிட்ட அந்தப்பாய் இப்பொழுது பல பொத்தல்களைக் கண்டிருந் தது. அந்தப் பாயின்மேல் இப்பொழுது படுப்பது பழனி யும் அவனின் செல்லக்குட்டியாம் முத்தம்மாவுந்தான்.
66 முத்தம்மா.ராசாத்தி* காத்தாயி எழுப்பினாள்.
பழனியாண்டியும் நெளிந்து கொடுத்தான். உடலலுப்பின் வெளிக்காட்டல்.

67
86ஏங்க இன்னிக்கு பொங்கலில்லியா? வாங்க வெள்ளனே போய் குளிச்சிட்டு வருவம். புள்ளயையும் எழுப்புங்க.." காத்தாயியின் கட்டளை இது.
*ம்..ம் ம்’ உதட்டைச் சேர்த்து மூக்கால் மூச் செறித்து உடலை முறித்தான் அவன். கைகளையும் கால்களையும் நீட்டி விறைப்பாய் மூச்சுப் பிடித்து நெட்டி முறித்தான் அவன்.
*அம்மா.ஆ.ஆ.” முணங்கியது வாய். மூச்சில்
ஒரு நெடி ஆம், முந்தின நாள் குடித்துவிட்டு வந்த கசிப் பின் குமட்டும் வாடை.
‘அம்மா’ பிள்ளை விழித்துக் கொண்டுதான் கிடந் தது. அப்பா..இன்னிக்கு பொங்கலென்னு அம்மா சொல்லிச்ச.நேத்துதான் . பட்டாசு வாங்கியாறேன்னு என்ன . ஏமாத்திட்ட . இன்னக்காச்சும் வாங்கிட்டு shui 6turr...?
ஆமாங்க புள்ள ஆசையா கேக்குது இன்னக்காச்சும் வாங்கியாந்து கொடுங்களன்."
சேரி சரி.எழும்புங்க . வாங்க போய் குளிச்சிட்டு வந்திர்வோம்”. செய்த த வற்  ைற மறைக்கவோ எ ன் ன வோ மற்றவர்களையும் துரிதப்படுத்தினான் அவன்.
66ஆமாம்மா...ஒனக்கு என்னதும் சொன்னா காலை யில சரியென்னு தலையாட்டுவ..பின்னால சாயந்திரம் வீட்டுக்கு வர்ரப்போது டொப்பையும், கசிப்பையும் நல்லா குடிச்சிட்டு வந்துயேன் உசிர வாங்குவ..காலையில் சொன்னதெல்லாம் எங்க நெனவிருக்கும்’ சலித்துக் கொண்டாள் காத்தாயி.
6%உம்.உம் வா போவோம்’, என்றவன் தன் பிள்ளையின் பக்கம் திரும்பி ராசாத்தி.இன்னக்கி எப்படி

Page 36
6S
யும் பட்டாசு வாங்கயாறனம்மா’ என்று சொல்லி வைத் தான். இப்படிச் சொன்னவன் தனக்குப் பக்கத்தில் ஒரு தகரக் குவளையில் கிடந்த சில்லறையைக் கையி லெடுத்துத் தன் மகளிடம் நீட்டி6ே.இந்தா பாரு ஏன்கிட்ட காசுயிருக்கு’ என்றான்,
பிள்ளையும் தொட்டுப்பார்த்து சரியப்பா சரி”, மெல்ல எழுந்தாள் முத்தம்மா.
குளிக்கப் போனார்கள் மூவரும், தாயுடன் பக்கத்தி லிருந்த பீலியிலிருந்து கொட்டிய நீரில் குளித்தாள் முத்தம்மா. தண்ணிர் தலையைத் தொட்டதும் உட லெல்லாம் ஒரு சிலிர்ப்பு.
காத்தாயி தன் காம்பராவுக்கு முன்னால் இருந்த சிறு மணற்பரப்பை கூட்டினாள். சாணம் தெளித்தாள் பின்னால் கொஞ்சம் காய்ந்த பின், மாக்கோலமிட்டாள், தமிழ்க்குடியில் வந்த அவள்.
ஆனால் அந்தோ! சுற்றியிருந்த நிலம் சூழ்நிலை.
கொஞ்சம் தள்ளி பெண் நாயொன்று படுந்துக் கிடந் தது ஐந்து குட்டிகள் அதன் மடியை உறுஞ்சிக் கொண் டிருந்தன. ஏழையானாலும் புத்திரப் பாக்கியத்துக்கு குறைச்சலில்லை; அதற்குப் பக்கத்தில் கோழிகள் குட்பையைக் கிளரிக் கொண்டிருந்தன. அடுத்த காம்பரா அழகம்மா 6.சோ.சோ...?? என்று கத்திக் கொண்டிருந் தாள் வாய்கிழிய,
இயாம் புள்ள இன்னக்கி இந்த கோழியிழவுகள தொறந்துவிட்ட.* உச்ச ஸ்தாதியில் ஒலித்தது.
அருகில் இருந்த காணில் இரு பக்க வாட்டிலும் இரு கால்களையும் வைத்துக்கொண்டு சாத்தாயியின் குழந்தை தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டிருந்தது.

●●
"அம்மா’ என்றது குழந்தை : குறிப்பறித்தாள் காத்தாயி. சரி சரி. அப்பாகிட்டபோய் சொல்லு" பிள்ளையும் எழுந்து மெல்லத் தட்டுத் தடுமாறித் தன் தந்தையை நோக்கிச் சென்றது. கோலமிட்ட நிலத்தைச் சுற்றி நடந்த திருவிளையாடல்கள் தான் இவை.
காலைப் பொழுது கரைந்து பகல் பொழுதானது. காத்தாயியும் பொங்கல் எல்லாம் பொங்கிச் சாப்பிட்ட பின் பகல் சாப்பாட்டுக்கான ஆயத்தங்கள் செய்துகொண் டிருந்தாள். அடுத்த வீட்டு வாசலில் பட்டாசு சத்தம் காதைத் துளைத்தது.
அப்பா பட்டாசு.”
சரிசரி.நான் சாயந்திரமா டவுனுக்குப் போவேன் அப்போ வாங்கிட்டு வர்றேன்??.
6சரியப்பா.நல்ல அப்பா? மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை தன் தந்தையின் மார்பில் முத்தமிட்டது. பின், தன் அதரங்களை எடுக்காமல் அவன் முகத்தை நோக்கி ஏடுத்துச் சென்று முத்தங்கள் ஈந்தது. முத்த மாரி பொழிந்தது.
அவனும் பிள்ளையை அணைத்த அணைப்பு! ஐயோ! எலும்புகள் முறிந்தாலும் முறிந்துவிடும் பாசத்தை அன்பை, நேசத்தை, ஆதரவை வெளிக்காட்ட இந்த அரவணைப்புத் தேவையா? நெஞ்சிலிருந்து பீறிட்டுவரும் அன்பின் வெள்ளம், இந்த அணைப்பின் வாய்க்கால் வழி யாகத்தான் ஒடிட வேண்டுமா? என்னே கடவுளின் படைப்பின் விசித்திரம்
பகல் பொழுதும் கழிந்தது!
அடுத்த வீட்டு காம்ராவில் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புத்தாடைகள் அணிந்தும், சிலர் கரங்களில் மிட்டாய் போன்ற தின்பண்டகங்கள் எடுத்த வண்ணமாக விளையாடிக் கொண்டிருந்தனர். முத்தம்மாவின் பிஞ்சு உள்ளத்திலே எண்ண அலைகள் மோதிக்கொண்
ゆ@島あ6oT・
-5

Page 37
சிறிது கண்ணயர்ந்து விழித்த காத்தாயி அவரது வரவை எதிர்ப்பார்த்து பின் இருட்டாகியும் அவர் வராத தால் தாயும் மகளும் நாடக கொட்டகைக்குள் நுழைந் தனர். பலரும் தமக்கு தகுதியான ஆசனங்களில் அமர்ந் திருந்தனர். பின்னால் இருந்த ஜனத்திரள்களுடன் குந்தினாள் காத்தாயி,
அந்த நேரத்தில். நாடகக் கொட்டகைக்கு முன்னால் 6.பாட்டுபாட வா - பார்த்துப். பேசவா..?? என்று உளறிக்கொண்டு ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி ஆடிக்கொண்டிருந்ததை காத்தாயி கவனித்தாள். ஆமாம் தன் கணவன் பழனியாண்டிதான். கூடியிருந்த கும்பல் தாளம்போட்டுக் கொண்டும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டும் இருந்தது.
அப்பாவை அடைந்த முத்தம்மா.
அப்பா பட்டாசு கொண்டாந்தியப்பா..?? 66சி கழுதை.பட்டாசு வேணுமா இத்தா? பிஞ்சுக் கன்னத்திலே பட்டாசு வெடித்தது. இதைத் தடுத்த தாயின் முதுகிலே மத்தளம் ஒலித்தது.ஒரே குழப்பம்!
66அடேய் பழனி! போடா குடிகாரமட்ட** இப்படியும் இடையிடையே ஒலித்தது.
அவன் சண்டியனும், தோட்டக்காவற்காரனுமாகை யினால் யாரும் அவனைப் பிடிக்கவில்லை. காத்தாயியும் மூர்ச்சையாகி விட்டாள். ஒருவரும் கவனிக்கவில்லை.
முத்தம்மாவும் எங்கோ போய்க் கொண்டிருந்தாள். ஏன்.முத்தம்மாதான் குருட்டுப் பெண்ணாயிற்றே! அவள் வாழ்வும் ஒரு வாழ்வா?
(சாந்தி)

காலப்போக்கில், அவள் மனந்தேறிய பின், எனக்குத் தான் பாரமாக இருப்பதாகக் கூறி வேதனைப்பட்டாள். சில நாட்கள் சென்றபின், என்னுடன் தானும் தொழில் செய்ய வரப்போவ தாகக் கூறினாள். நான் உறுதியுடன் மறுத்து விட்டேன். அவளோ பிடிவாதமாக நின்றாள். இறுதியில் அவள் வென்றாள். தொழிலிலும் நல்ல பயிற்சி பெற்றுவிட்டாள் விளைவு. !
மையவாடியில் ஒரு மலர்
சில ஆண்டுகளுக்கு முன் நான் எனது விடுமுறையை நீர் கொழும்பு கரையோரமாகவுள்ள ஒரு சின்னஞ் சிறிய மீன் பிடிக் கிராமத்தில் கழித்தேன். அந்தக் கடற்கரை யில் சுமார் பத்து வள்ளங்கள் காணப்பட்டன. கிராமத் துக்குள் செல்லவும் ஒரே ஒற்றையடிப் பாதைதான். அதில் காலூன்றி வைத்து நடந்து செல்வதே பெரிய பாடுதான்.
ஆனால்-இவை எல்லாவற்றையும் என்னால் மறக் கும்படி செய்தது-அக் கிராமத்தின் மத்தியில் அமைந் திருந்த அந்தப் பிரமாண்டமான போர்த்துக்கேயர் காலத் தில் கட்டப்பட்ட பெரிய கோயில்தான். ஒரு மையவாடி= ஆம். இடுகாடு. அதன் பக்கத்திலேயே இருந்தது. உண்மையில் அந்த இடுகாட்டில் காணப்பட்ட சிலுவை கள், சிறு சிறு மணல் மேடுகள், அவைகளைச் சூழ்ந்து வளர்ந்திருந்த நான் கண்டிராத சில செடி கொடிகள் என் வேலைக்கு-ஆம் என் எழுத்து வேலைக்கு மனத்துக்கு இதமளிப்பவையாய் இருந்தன. நான் கிறிஸ்மஸ் விடு

Page 38
7
முறை முடியும் வரை அங்கேயே தங்கிவிட முடிவு செய்து கொண்டேன்.
ஆமாம்-என்பாலிய தோழன் சேவியரின்-சின்னஞ் சிறு குடிசையிற்றான் நான் என் நாட்களைக் கழித்தேன். நகரப்புறத்தின் நானாவிதக் கெடுபிடிகளிலிருந்து விடு பட்டு அமைதியான சூழ்நிலையில் நிம்மதியாக வாழ்வது மனதுக்கு மெத்தெனத்தானிருந்தது. என்ன இதம்என்ன சுகம்!
எவ்வளவுதான் தெண்டித்தாலும் எந்நேரமும் எழுத முடிகிறதா என்ன ? இல்லையே? மாற்று மருந்தாக கடற் கரையோரமாக, கால்கடுக்க நடப்பது எனக்கு ஒரு பொழுது போக்கானது. வெள்ளை மணற்பரப்பில் மெல் லக் கால் பதிந்து நடப்பது மெத்தென்றிருந்தது. ஆம்என் மனைவியும்-பிள்ளைகளும் என்னோடிருந்தால். எண்ணந்தான்.கலைந்தது.ஒ. மொரினும் மொனிக் காவும் விரும்பிக் கேட்கும், தேடும் கடற்சோகிகளையும் சிப்பிகளையும் பொறுக்கிச் சேர்த்தேன். நீண்டு.பரந்து கிடந்த வெள்ளை மணற் பாயலில் சின்னஞ் சிறு பாறை கள்தான் கரும் புள்ளிகளிட்டிருந்தன!
மனித சஞ்சாரமற்ற மணற்பரப்பில் மனதுக்குகந்த ஏகாந்த நிலையில் மனதில், சஞ்சலமற்ற, சலனமற்ற சமாதானப் பேருவகை கரைபுரண்டது. சின்னஞ்சிறு உள்ளான்கள் கடற்குருவிகள்-என்னைக் கண்டதும் துள்ளிக் குதித்துப் பறந்து சென்று வேறோர் இடத்தில் குந்திக் கொண்டன. நாளும் இவ்வாறு நான் நடந்துலா வத் தொடங்கினேன். தங்கிடம் நோக்கி வரும்போது உள்ளம் இன்பத்தால் நிறைந்திருக்கும் பொக்கட்டுகளில் சிப்பியும் சோகியும் புடைத்திருக்கும்.
ஆனால்-காற்றுப்பலமாக வீசும் நாட்களில் என்னால் திம்மதியாக நடந்து செல்ல முடியாது. அனுபவத்திலறிந்

79
தேன்-எனவே-அவ்வாறான நாட்களில் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மையவாடிக்குள் நுழைவேன். மஞ்சள் நிறப் பூக்கள் என்னைத் தலையசைத்து வரவேற்கும். நானும்-சிலுவைகளிலும்-நடுகைக் க்ற்களிலும் எழுதி வைக்கப்பட்டிருந்த-புதைக்கப்பட்டோரின் பெயர்ப் பட் டியலையும் ஏனைய விளக்கங்களையும் வாசித்துக் கொண்டு வலம் வருவேன். அன்று அவ்வாறான ஒரு வேளையில்தான் புதுமையானதொரு வாசகத்தை வாசித் தேன்.
1968-ம் ஆண்டு மார்கழி மாதம் 20-ம் திகதி கடலில் மரணமான ரீட்டாராணி, வயது 19. சமாதானத்தில் இளைப்பாறக் கடவராக !
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆண்கள்தான் கடலுக்குப் போவார்கள். பெண்களுமா போவார்கள் ! எனவே மீண்டும் வாசித்தேன். கடலில் மரணமான என்றே இருந்தது.என் நண்பனிடம் கேட்டறிய வேண் டும் என்று எண்ணிக் கொண்டேன். அந்நேரம்- என் நண்பன் சேவியரே என்முன் வந்து நின்றான். சில வேளைகளில் நாம் நினைத்ததும் நடப்பதுண்டுதானே?
எேன்ன வின்சன்ட்.என்ன நம்ம ரீட்டாவின் புதைக் குழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? என்றான் என் முன் தோன்றிய சேவியர்.
என்ன நம்முடைய ரீட்டாவா?" என் மனத்தில் ஆச்சரியம் மலரிட்டது. ஆமாம்.யாரிவள். கடலில் மரணமான என்றால். நான் முடிக்கவில்லை. அதுவே அவனின் கதையைத் தொடங்குவதற்குக் கொடி காட்டிய தாய் முடிந்தது. தொடங்கினான்.
*ஆம் வின்சன்ட், நானும் இவளுடைய தந்தை ரொசாரியும்தான் ஒன்றாக; ஒரே வள்ளத்தின் மீன்பிடிக்க கடலுக்குப் போவோம். ஆனால் ஒரு நாள். அவன்

Page 39
74
கண்கள் பனித்தன. வார்த்தைகள் நடுங்கின. பின் தன்னை சுதாரித்துக்கொண்டு, வின்சன்ட் ஒரு நாள் வள்ளம் புயலில் சிக்குண்டபோது கடலிலேயே மூழ்கி இறந்து போனான். நான் எப்படியோ புதுமையாக கரை சேர்ந்திட்டேன். அவனின் உயிரற்ற சடலம்கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும் எங்க ள் பெண்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு தெரியுமா ? ஆம். எந்தவொரு உடலும் புனிதப்படுத்தப்பட்ட இடத் தில்-அதாவது-ஒரு மையவாடியில் புதைக்கப்படா விட்டால் மோட்சபாக்கியத்தை அடையாது.இது ஒரு வேளை மூடநம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் ரீட்டாவும் ஒரு பெண்தானே? அவளும் நம்பினாள் • எனவே, எங்கே தன் தந்தை மோட்சபாக்கியத்தைப் பெறமாட்டாரோ என்று காலாகாலமாக-அழுது புலம் பினாள். பிரார்த்தித்து வேண்டினாள். அப்பாவின் ஆத்துமா மோட்ச பாக்கியம் பெறவேண்டும் என்று பிரலாபித்தாள்.
*காலம் கடந்து.நானே அவளுக்குத் தந்தை போலானேன். அவள் எண்ணமும் மாறியது. செய்த ஜெபமும், மேற்கொண்ட தபழும் வீண்போகாது என்ற எண்ணமுதித்தது. கட்டாயம் தந்தை மோட்சம் போவார் என்ற நம்பிக்கை விளைந்தது.காரணம் ஒரு நாள் அவள் தன் தந்தையை, சம்மனசுகள் தூக்கிக் கொண்டு செல்வதுபோல் கண்ட கனவு. மனத்தை மாற்றியது”
நானும் நண்டும்- சிங்கிறாலும் பிடித்து வந்து அன்றாட சீவனம் நடத்தத் தொடங்கினேன். ரீட்டா வையும் பராமரித்தேன். காலப்போக்கில் அவள் மனந் தேறியபின் எனக்குத்தான் பாரமாக இருப்பதாகக் கூறி வேதனைப்பட்டாள். இன்னும் சில நாட்கள் சென்றபின் என்னுடன் - தானும் தொழில் செய்ய வரப்போவதாகக்

7s
கூறினான். நான் உறுதியுடன் மறுத்துவிட்டேன். அவளோ பிடிவாதமாக நின்றாள். இறுதியில் ரீட்டாவே வென்றாள். தொழிலிலும் நல்ல பயிற்சியும் பெற்று
"Ter,”
ஒரு நாள் - பயங்கரமான நாள். என் வாழ்வில் நான் மறக்க முடியாத நாள். ஐயோ?...? என் நண்பன் ஒருகணம் மெளனமாய்க் கண்பொத்தி நின்றான். உதடுகள் மெல்லியதாய் அசைந்தன. ஜெபம் செய் கிறான் போலும். நானும் ரீட்டாவின் ஆத்துமத்துக்காக வேண்டிக் கொண்டேன்.பின்.தொடர்ந்தான் நண்பன்.
*அன்று எனக்குச் சுகமில்லை. எனவே ரீட்டாமட்டும் தண்டு பிடிக்கச் சென்றாள். மாலை வேளை, திடீரென்று மழையும் காற்றும் தொடங்கியது. தொடர்ந்தது. சோனாவாரியாகப் பெய்தது, போனவள் வரவில்லை . வரவேயில்லை நாங்கள் அதேவேளை, இரவே தேடி னோம். காணக்கிடைக்கவே இல்லை. ஆனால் விடியற் காலையில்.”
"அவளின் பிரேதம்.ஒரு பாறையின் பகுதியில் மறை வான இடத்தில் கிடந்தது.கடற்பாசிகளால் மூடப்பட் டிருந்தது. கிடந்த நிலைதான் ஆச்சரியத்தைத் தந்தது
ஆம் அவளின் சேலையின் ஒருபகுதி இடுப்பில் கட்டப்பட்டு.பின் கால்களைச் சுற்றி வரிந்து கட்டப் பட்டிருந்தது.
ஏன் அப்படி? என்றேன் நான்.
ரேனென்று தெரியாதா? கற்புள்ள பெண் என்பதைக் காட்டுவதற்கு?
எப்படி? என்றேன் நான்.

Page 40
76
மரணத்திலும்கூட தன் மானத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதுமட்டுமா? அவள் தந்தைக்கு கிட்டாத பெரும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்ததே பெரும் பேறுதான். சடலத்தைக் கண் டெடுத்ததால் புனிதமான ஓரிடத்தில்.மந்திரிக்கப்பட்ட புதைகுழியில் அவளுடலைப் புதைத்தார்கள்? பெரிய தோர் பெருமூச்சுடன் நிறுத்தினான் சேவியர்.
என் கண்கள் பனித்தன. விழிக் கோடி வழியாக இரு கண்ணிர்த்துளிகள் வழிந்து ரிட்டாவைப் புதைத்திருந்த குழியின்மேல் மலர்ந்திருந்த மஞ்சள் நிற மலர்களின் இதழ்களில் விழுந்தன. மலரிதழ் காற்றிலசைந்தது. தலை சாய்த்தது மலர்!
攀

வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவளுடன் என்ன வாழ்க்கை நடந்தினாரோ' என்ற எண்ணம் எழுந்தது. பீட்டரின் களங்கமற்ற முகத்தை நோக்கினார்கள், பால் வடியும் முகம். கன்னங் கதுப்புகளில் மெல்லச் சுண்டினால், இரத்தச் சிவப்பேறிவிடும் வளம்-பசுமை.
இரத்த பாசத்தின் பிணைப்பு இதயத்தில் கலந்து, இன்பத்தில் எல்லை காணும் நாளாக அது மாறியது. சிஸ்டரின் கண்களிளிருந்து விடுபட்ட இரு கண்ணிர்த் துளிகள் அவனின் நெற்றியில் விழுந்தன.
குழந்தை வடிவில். . . .
உத்துவங்கந்தையில் ஒரு கத்தோலிக்க கோவிலுள் ளது. சிறிய கிராமப் பகுதி என்றாலும் கொஞ்சம் பெரிய கோவில்தான். அங்கு ஞாயிறு தோறும் பூசை நடை பெறும்; திருவிழாக் காலங்களில் விசேட பூசைகள் நடைபெறும். கிறிஸ்மஸ் காலம் என்றால் அதிலும் கொஞ்சம் விசேடம்தான் சுற்றுப்புறங்களிலுள்ள சிறுவர் கள் பாடு கொண்டாட்டம்தான்; ஏனெனில், சுற்று வட்டாரத்திலுள்ள தோட்டங்களிலிருந்து பிள்ளைகள்அதாவது பள்ளிக்கூடம் செல்வோர் செல்லாதோர் என்ற பேதமின்றி எல்லாரையும்-வருந்தி அழைத்து லொறி களில் ஏற்றிக் கொணர்ந்து சேர்த்து ஏழு நாட்களுக்கு கிறிஸ்மஸ் பாசறை நடத்துவார்கள், அதாவது, சமயம் போதித்தல் பாடங்கள் சொல்லிக் கோடுத்தல், பாட்டுகள்

Page 41
7s
இசைத்தல்; ஒழுக்க மூறைகள் கற்றுக் கொடுத்தல், சாதாரண வாழ்க்கை வழிகளைப் படிப்பித்தல் போன்ற வைகளைச் செய்வார்கள். அதுவும் இவ்வேலைகளுக்கு அங்கு கண்ணிய்ாஸ்திரிமார் இல்லாததால், வெளிப் பகுதிகளிலிருந்து பிள்ளைகள் பாசத்துடன் சிஸ்டர்? மதர்' என்று அழைக்கும் கன்னியாஸ்திரிகளை அழைத்து வருவார் சுவாமியார்.
தூய வெண்ணங்கி அணிந்து, தலையில் முக்காடிட் டுப் போர்த்துக்கொண்டு, ஆனால் முகத்தில் பாசமும் நேசமும், அன்பும் ஆதரவும் கலந்த புன்னகையுடன் பாடல்கள் சொல்லிக் கொடுக்கும்போது, பிள்ளைகள் எத்துணை வாத்சல்யத்துடனும், வாஞ்சையுடனும் அவர் களிடம் பழகுகிறார்கள் தெரியுமா ? சொந்தத் தாயிடம் கூட கொள்ளாத ஒரு பாசமும் பற்றும் எவ்வாறுதான் அவர்களிடம் பிறந்துவிடுகிறதோ-என்ன சக்தியோ
9labGLTso...
அந்த முறை கிறிஸ்மஸ் காலத்தில் இந்த விதமாக நடந்த கிறிஸ்மஸ் பாசறைக்கு வந்திருந்த சிஸ்டர் மத லேனாவின் பாசம் தோய்ந்த முகத்திலும் அன்பும் ஆதர வும் கொஞ்சி விளையாடத்தான் செய்தன. பத்து பன்னி ரண்டு வயது மதிக்கக்கூடிய பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு சிஸ்டரிடம் விடப்பட் டது. என்னே பாசம்; என்னே அன்பு, இன்னிசை கேட்டால் விஷநாகம் கூட மயங்கிவிடும் என்பார்களே, அதேபோல ஒருமுறை சிஸ்டர் மதலேனாவின் பேச்சைக் கேட்டால் ஈரமும் அன்பும் இதயத்தில் சற்றுமில்லாத மனித ஜன்மங்கள், மனமிளகி மனிதர்களாக மாறிவிடு வார்கள். பெரியவர்களே இப்படி என்றால் சிறுபிள்ளை கள்பற்றிச் சொல்லவேண்டுமா ? அதுவும்; அன்பு, ஆதரவு, பற்று, பாசம் என்றால் அதிகம் அனுபவித்திருக் காத பிள்ளைகள் சிஷ்டரைக் கண்டால் விடுவார்களா ? கண்டு பழதிய ஒரு மணி நேரத்துக்குள் ஒய்யாரமாகப்

79
பக்கம்போய், கட்டியணைத்துக் கொண்டு கதைக்கும் அளவுக்கும் பழகிவிட்டார்கள்...!
சிஷ்டரும், சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வர விடுங்கள், தடுக்கவேண்டாம்; ஏனெனில் மோட்ச இராச்சியம் அப்பேர்ப்பட்டவர்களுடையது” என்று இயேசு கிறிஸ்து மொழிந்தவைகளை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். மனத்தில் எழுந்த புளகாங்கிதம் முகத் தில் புன்னகையாக மலர்ந்தது.
சிறுவர் சிறுமியர் சிஸ்டரைச் சூழ்ந்து வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். வண்ண வண்ணச் சட்டைகள் அணிந்திருந்தனர்.
உட்கார்ந்திருந்த சிறுவர்களில் சிலர் கதைத்துக் கொண்டிருந்தனர். சிஸ்டர் பாடங்களைத் தொடங்க நினைத்தார்கள். ஒவ்வொரு பிள்ளையிடமும் பெயர் கேட்டார்கள், வின்சன்ட், மேரி, லியோ, மெரினோ, மொரீஸ், மொனிக்கா, டோனி, ஸ்டெல்லா, மனோ ரஞ்சன்.எல்லாரும் தங்கள் சொந்த வீட்டில் அழைக்கும் பெயர்களையே சொன்னார்கள்.ஆனால் அடுத்துக் கூறி யவன் மட்டும் பீட்டர் பர்னாந்து’ என்றான். பன்னி ரண்டு வயது மதிக்கக் கூடிய ஒரு சிறுவன்.
சிஸ்டர் ஒருகணம் துணுக்குற்றார்கள். ஏன் ? புன்னகை பூத்திருந்த முகம் வாடிய மலராய் மாறியது. பிள்ளையின் முகத்தை உற்று நோக்கினார்கள். அந்தப் பால்வடியும் முகத்தில் ஏதோ ஒன்றை ஆராய்ந் நோக்கும் நுணுக்கம் காணப்பட்டது.
சற்றுத் தாமதித்துச் சாவதானமாகக் கேட்டார்கள்.
தேம்பி, உங்க அப்பா பெயர்ான்னப்பா ???

Page 42
80
ஜோசப் பெசில் பர்னாந்து", பதற்றமின்றிச் சிறுவன் பதிலளித்தான். தந்தையின் பெயரைச் சொல்வதில் அவனுக்கு ஒரு பெருமை ஆனால்.சிஸ்டரின் மனம் சில்லிட்டது !
தேம்பி உங்க அம்மா பெயர் என்னப்பா?
சிசிலியா? சிஸ்டர் தமது கண்களின் கடைக்கோடி லிருந்து வெளியேறக் காத்திருந்த கண்ணிர்த் துளிகளை மிகக் கஷ்டப்பட்டுக் காத்துக் கொண்டார்கள்,
பீட்டரின்மேல் ஏதோ ஒரு விசேடபாசம் ஏற்பட்டது தன் சொந்த அண்ணனின் unassir GTsöто шта црт? 6Tћži விதத்திலும் ஒரு குடும்பப் பெண்” என்று கணிக்கமுடி யாத ஒரு தாயின் மகன் என்ற கழிவிரக்கத்தால் பிறந்த அன்பா ?
சிஸ்டர் மதனேலாவின் மனத்தில் கடந்த காலத்தின் கதையோட்டம் திசை விரித்தது.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தன் தாய் தந்தை இறந்து போனதைத் தொடர்ந்து தனது ஒரே அண்ணன், தீய சக்திகளின் கைப்பிடிக்குள் சிக்கித் தவித்து ஆட்டிப்படைக்கப்பட்டு, குடியும் கும்மாளமுமாக வாழ்க்கை நடத்தி வந்ததை நினைத்துப் பார்த்தார்கள்.
தொடர்ந்து.தனக்கு ஒரே துணையாக இருந்த அண்ணனும் 6யாரோ ஒரு பெண்ணுடன்” -வாழ்க்கை யில் வழுக்கி விழுந்த ஒரு மாதுடன் தொடர்பு கொண் டிருப்பதாக அறிய வந்ததையும் நினைத்துப் பார்த்தார்கள் சிஸ்டர் இதன் காரணமாகத் தன்னையே அவன் வெறுத்துத் தள்ளி அடித்துத் துன்புறுத்தியதையும் பொறுக்க முடியாத நிலை ஏற்பட்ட போது, அண்ணனையே விட்டு விலகிப்போய், ஓர் அநாதையாக

豹篮
திருக் குடும்ப கன்னியாஸ்திரிகள் மடத்தில் ஒரு வேலைக் காரியாகப் போய்ச் சேர்ந்ததையும்.தொடர்ந்து.தனது வாழ்க்கையில் உயர்வையும் நினைத்துக் கொண்டார்கள். அக்கால கட்டத்தில் தன் அண்ணன் வாழ்ந்த வாழ்க்கை.பலவித எண்ணங்கள் அவர்கள் மனத்தில் பவ்யமாக நிழலாடின.
வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவளுடன் என்ன வாழ்க்கை நடத்தினாரோ என்ற எண்ணம் எழுந்தது. பீட்டரின் களங்கமற்ற முகத்தை நோக்கினார்கள். பால் வடியும் முகம்; கன்னக் கதுப்புகளில் மெல்லச் சுண்டினால் இரத்தச் சிவப்பேறிவிடும் வளம்-பசுமை!
சிந்தனையிலிருந்து விடுபட்ட சிஸ்டர், ,ேபீட்டர் உங்க அப்பா அம்மா ...கோவிலுக்கு வரமாட்டாங் களா? என்று மனங்குழையக் கேட்டார்கள்.
*சிஸ்டர் அவங்க அடிக்கடி வரமாட்டாங்க ஏதாவது திருநாள் காட்சி என்றால் மட்டும் வருவாங்க” என்றான் பீட்டர்.
*பரவாயில்லை.நீ அடுத்த ஞாயிற்றுக்கிழமை புது நன்மை வாங்க போறத்தானே; சின்ன யேசுவ நீ முதன் முறையா பெறப் போற அன்றைக்கு, உண்ட அப்பா அம்மாவக் கட்டாயம் கூட்டிக்கொண்டு வரவேண்டும், தெரியுமா??? சிஸ்டர் சிந்தை நெகிழ்ந்து கூறினார்கள்.
*சரி சிஸ்டர், கட்டாயம் எப்படியும் கூட்டிக்கொண்டு வர்றேன்.* பீட்டர் உறுதியாகக் கூறினான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, புது நன்மை வாங்கிய சிறுவர் சிறுமியர் எல்லாரும், தூய வெண்ணாடை உடுத்த, கையில் மெழுகுவர்த்திகள், ஜெபமாலைகள், ஜெபப் புத்தகங்களுடன் சின்ன சின்ன தேவதூதர்கள்போல் . வெண்புறாக்கள்போல் காட்சி அளித்தனர். பூசையும்

Page 43
முடிந்துவிட்டதால் அவர்கள் பெற்றோர்கள் சகிதம் வந்து, சுவாமியாரிடமும், சிஸ்டரிடமும் "சர்வேசுரனுக்குத் தோத்திரம்" என்று கூறிக் கைகூம்பி ஆசி கேட்டனர்.
பீட்டரும் தன் தாய் தந்தையுடன் சிஸ்டரிடம் வந்தான்
சிேஸ்டர் இதுதான் எங்க அப்பா? என்றவன் அப்பா.நான் சொன்னேனே.இவங்கதான் அந்த சிஸ்டர். நல்ல சிஸ்டர்” என்று வாத்சல்யத்துடன் கூறினான்.
வேணக்கம் சிஸ்டர்?? என்றவர் சிஸ்டரைப் பார்த் தார். ஆனால், அவரால் தூய வெண்ணங்கியில், முக்காடிட்டுக் காட்சியளித்த தன் சொந்தத் தங்கையை இனங்கண்டு கொள்ள முடியவில்லை.
சிஸ்டரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் கோடி காட்டியிருந்தன.
*சிஸ்டர், உங்களைப்பற்றி என் மகன் பீட்டர் நிறையச் சொன்னான்.அடேயப்பா.எப்படிப் புகழ்ந் தான் தெரியுமா?’ என்றவர் தன் மனைவியைப் பார்த்து எேன்ன சிசிலி. அப்படித்தானே?? என்றார்.
சிஸ்டரின் கண்களும் திருமதி ஜோசப்பின் கண்களும் சந்தித்தன.
6சிஸ்டர்.உங்களைப்போன்றவர்களால்தான் இந்த உலகமே வாழுகிறது சிஸ்டர் என் மகன் வீட்டுக்கு வந்த பிறகு செய்தவைகள் என்னை என்னவோ செய்து விட்டன, சிஸ்டர். என்னை எப்படி மாற்றிவிட்டன தெரியுமா? எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னால் நாங்கள் குடும்பமாக ஜெபம் செய்தோம். காரணம் பீட்டரேதான். ஆமாம் சிஸ்டர், நாங்கள் குடும்பமாக

9B
ஜெபம் செய்யாவிட்டால், சாப்பிடவே மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டான். நேற்றிரவு என் மனம் பட்ட பாடு.உம் - இன்று நாங்கள் கோவிலுக்கு வரவும் இவனே காரணம்” எனறார் ஜோசப்.
சிஸ்டரின் கண்கள் குளமாயின. தான் இரண்டு நாட்களுக்கு முன் பீட்டருக்குப் படித்துக் கொடுத்த குடும்ப ஜெபம்” என்ற பாடம் ஞாபகத்துக்கு வந்தது. தாய் தந்தையரைக் கூட்டி வரச் சொன்னதை எண்ணிப் பார்த்தார்கள். எல்லாம் ஏசுவுக்கே’’ என்று சொல்லிக் கொண்டார்கள். தன் அண்ணனைப் பார்த்துக் கொண் டிருந்த சிஸ்டர், நம் பாச உணர்ச்சியை மூடிமறைக்க முடியவில்லை,
*அண்ணா” என்று உணர்ச்சி வசத்தால் கத்தி விட்டார்கள்.
அதிர்ச்சியடைந்த ஜோசப் விக்கித்து நின்றார். சிஸ்டரை உற்று நோக்கினார்.68மதலேனா.நீ.?? என்றவர் பிறகு திருத்தி நீங்கள்’ என்று கேட்டார்! அவரின் கண்களிலும் நீர் மல்கியது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிசிலிக்கும் பீட்டருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
எப்படி விளங்கும்? இவர்கள் ஜோசப்பின் வாழ்வில் குறுக்கிடுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், ஒரே இரத்தத்தில் ஊறி உதித்தவர்கள் அல்லவா அவர்கள்.
இரத்த பாசத்தின் பிணைப்பு இதயத்தில் கலந்து இன்பத்தில் எல்லைகாணும் நாளாக அது மாறியது.
சிஸ்டர் பீட்டரை அருகிழுத்து உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டார்கள். சிஸ்டரின் க்ண்களி லிருந்து விடுபட்ட இரு கண்ணிர்த் துளிகள் அவனின் நெற்றியில் விழுந்தன.
ஆனந்தக் கண்ணிரல்லவோ அத்துளிகள்
-தினகரன்

Page 44
'என்னால் அந்தக் கட்டுரையை எழுத முடியல்ல.காரணம் எங்க அம்மா, சேர்
"அம்மாவா".ஆச்சரியத்தோடு பார்த்தேன்.
"ஆமா சேர், அவளைப்பற்றி நினைத்தால்" தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். அழுகை வின் ஊடே.
"எங்க அப்பா இறந்து நாலஞ்சு வருஷமாச்சுது சேர். ஆனா அம்மா இறக்கல்ல. ஆனாலும் அவள்.அவள். என்று இழுத்தான்.
அம்மாவே தெய்வம்
பொதுவாக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் கொடுப்பார்கள் இல்லையா p 6T66 st பள்ளிக்கூடங்களிலும் என்று சொல்லிவிடமுடியாதுதான். என்றாலும் நான் குறிப்பிடும் இந்தப் பள்ளிக்கூடத்தில் கொடுத்தார்கள். கொடுப்பது மட்டுமல்ல; மாணவர்கள் ஒழுங்காகச் செய்துகொண்டு வருகிறார்களா என்றும் அவதானித்தார்கள், சரி, செய்துகொண்டு வராவிட் டால் என்ன தண்டனை தெரியுமா? அடியல்ல - உதை பல்ல. பின் ?
அதாவது வீட்டு வேலை செய்துகொண்டு வராத மாணவர்கள் எல்லாரும் சனிக்கிழமையன்று பள்ளிக் கூடத்திற்கு வரவேண்டும். வந்து-ஓரிரு ஆசிரியர்கள் இருப்பார்கள்; அவர்களின் கண்காணிப்பின்கீழ் செய்ய மறந்த.செய்யாமல் விட்ட பாடங்களைச் செய்ய

8.
வேண்டும். இந்த வழக்கம், இன்று நம் நாட்டில் அருகி விட்டது என்றாலும் நான் குறிப்பிடும் அந்தப் பள்ளிக் கூடத்தில் இருந்தே வந்தது.ஆம்.அவ்வாறான ஒரு சட்டம் இருந்ததினாலேயே நான் செரில்லப்போகும் கதிையே முளிைத்தது!
அதாவது பாருங்கள். அன்று புதன்கிழமை.நானும் வழக்கம் போல எல்லா ஆயத்தங்களுடனும் படங்களை நல்ல முறையில் படிப்பிக்க வேண்டுமென்ற ஆவல் உந்த பள்ளிக்கூடம் சென்றேன். வழமை போல எல்லா விடய யங்களும் நடந்தேறின. பள்ளிக்கூடம் நேரத்துக்குத் தொடங்கி ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. எனக்கு முதற் பாடம்-நான் பொறுப்பேற்றிருந்த ஒன்பதாம் வகுப் பில், இலக்கிய பாடம் இருந்தது. குந்திதேவி தன்னை யாரென்று வெளியிடும் கட்டம் நடைபெற்றது. மாணவர் கள் சுவைத்தார்கள். நானும் நல்லுணர்ச்சியோடு படிப் பித்தேன்.
முதற்பாடம் முடிவடைந்ததற்கு அறிகுறியாக மணி ஒலித்தது. வகுப்பாசிரியன் என்ற முறையில் ஒன்பதாம் வகுப்பில் இடாப்புக் கூப்பிட்டுவிட்டு, மாணவர்களுக்கு “வணக்கம்? சொல்லிவிட்டு வெளியேறினேன்.
அடுத்து, எட்டாம் வகுப்பின் மொழிப்பாடம், வகுப்புக் குள் நுழைந்தேன். என்னைக் கண்டதும் மாணவர்கள் ஒருசேர எழுந்து, வணக்கம்,சார்’ என்று கத்தினார்கள்.
நானும் பதிலுக்கு வணக்கம்” என்று வாயால் கூறி விட்டு கதிரையில் அமர்ந்தேன், ஆம்! மனத்தால் எங்கே நாம் வணக்கம் சொல்கிறோம். வணக்கமும் இன்று சம்பிரதாயமாகத்தானே மாறியுள்ளது.
எேன்ன நான் கட்டுரையொன்று கொடுத்தேனல்லவா? என்றேன் வகுப்பை நோக்கி,

Page 45
--Bðríh Gæf...gðsos sirl Gusér? creðrpreðr gleðr வரிசையிலிருந்த லியோ.
*அட வெள்ளைக்காரன் மகனே! தந்தை பேனும் இல்லை; தாய் பேனும் இல்லை.பேன் இல்லை.பேண்.
தமிழை ஒழுங்காக உச்சரிக்கப் பழக வேண்டும்.இல்லா விட்டால் பேனும் வரும் . ஈரும் வரும்" என்றேன்.
வரும் இல்ல சேர்.இங்கேயே வந்திருக்கு’ என்று சொல்லிக் கொண்டே கேலியாக முன் வரிசையிலமர்ந் திருந்த பெண்களைப் பார்த்தான் மெரினோ!
சேரி சரி...பாடத்துக்கு வருவோம். எங்கே கட்டுரை எழுதாதவர்கள் எழுந்திருங்கள் பார்ப்போம்” என்று கேட் டேன் நான்,
மூன்று பிரகஸ்பதிகள் எழுந்து நின்றார்கள். இவர் களில் ரவியும், மோகனும் வழமையாகவே வீட்டு வேலை களைச் செய்யாமல் வரும் பேர்வழிகள். மூன்றாமவன் இராமையா ஒழுங்காக வேலைகளைச் செய்து வரும் அவன்.இன்று.?
நீங்க இரண்டு பேரும் உட்காருங்க.உங்களுக்குத் தான் சட்டம் தெரியுமே.ஆனால் நீ இராமையா நீயுமா வீட்டுவேலை செய்யல்லே.? ஆச்சரியத்தோடு கேட் GLer.
“. . . . . . *மெளனம் சாதித்தான் அவன்! ஆனால் அவன் கண்களின் இமைக்கோடி சற்றே நனைந்து வருவதை நான் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. இரு கண்ணிர்த் துளிகள் கொட்டுவதற்கு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன.
எேன்னப்பா? ராமையா தாய் தந்தையரைப் பற்றி ஒரு இரண்டுபக்கம் உன்னாலே எழுத முடியாதா? என்று

கேட்டேன் நான். என்க்குக் கோபம் ஏறிக்கொண்டு தானிருந்தது.
சேர்..? என்று தொடங்கியவன் அழத் தொடங்கி all-froit.
‘ஏண்டா அழுகிறாய்! பாடம் செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று தெரியும்தானே? சனிக்கிழமை. என்று நான் வாக்கியத்தை முடிக்கு முன்னமேயே.
சேர் முடியாது சேர்.என்னால் சனிக்கிழமை வரவே முடியாது சேர்.இந்தச் சனிக்கிழமை வரவே முடியாது சேர். விக்கி விக்கி அழுதான்.
*ஏன் வரமுடியாது, கட்டாயம் வந்துதான் ஆகணும். இவர் பெரிய தொர மகன்.இவருக்குத் தவணை கொடுக் கணும்’ என்று கத்தினேன் கோபத்தோடு.
என்னால் வரமுடியாது சேர். மீண்டும் கூறினான் அவன்.
எனக்குக் கோபம் தலைக்கேறியது. என்ன நான் சொல்கிறேன். நீ முடியாது என்கிறாயா?!! என்று கத்திக் கொண்டே அவன் கன்னத்தில் அறைந்து விட்டேன். கன்னத்தில் அறையக் கூடாதுதான். என்றாலும் அடியை வாங்கிக் கொண்டே அவன் -
என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்க சேர். ஆனால் என்னால இந்த சனிக்கிழமை மட்டும் வரமுடியாது சேர். ஏதோ ஒரு திடசங்கற்பத்துடன் அவன் கூறினான். V .
என்னை எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குத் தோன்றியது. என் கோபம் ஆக்ரோஷமாக மாறியது. எதிர்த்தா பேசுகிறாய் என்று எக்காலமிட்டுக்கொண்டே மேசைமேல் கிடந்த பிரம்பால் அடித்தேன்; அடித்தேன்.

Page 46
$榜
சேர் மன்னித்துக் கொள்ளுங்க சேர். நான் எதிர்த் துப் பேசல்லே, சேர்.ஆனால் என்னால் வர முடியாது (3ò”ሱ.”
ஏண்டா மறுபடியும் அதைத்தானே சொல்கிறாய்? பிரம்பை நான் ஓங்கினேன். ஆனால். ふ
அவன் கையெடுத்து, கும்பிட்டான்.
சேர் மன்னிச்சுக்கொள்ளுங்க சேர்.வெளியே வாங்க சேர், நான் சொல்றேன்."
என்ன வெளியே வரணுமா? இங்கேயே சொல் லன்.?
என்னால் முடியவே முடியாது சேர்.”
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி பார்ப் போமே என்று அவனையும் கூட்டிக்கொண்டு வெளியே நடந்தேன். வகுப்பறையைவிட்டு வெளியே வந்தவுடன் எல்லாரும் கண்களுக்கு மறைந்து நாங்ள்ே இரண்டுபேரும் தனிமையில் இருக்கும்போது
சேர். என்று அலறிக்கொண்டே என் காலில் விழுந்தான். நான் அவனைத் தூக்கி நிறுத்தினேன். அவின் தொடர்ந்தான்.
சேர் என்னால் அந்தக் கட்டுரையை எழுத முடியல்ல. காரணம் எங்க அம்மா சேர்.?
அம்மாவா?.ஆச்சரியத்தோடு பார்த்தேன்.
ஆமா சேர். அவளைப்பற்றி நினைத்தால் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். அழுகையின் ஊடே.
6எங்க அப்பா இறந்து நாலஞ்சு வருஷமாகுது சேர். ஆனா அம்மா இறக்கல்ல, ஆனாலும் இல்லே சேர், அவள்.அவள்.என்று இழுத்தான்.
அவளுக்கென்னடா..? என் கேள்வி இது.

89
அவ சிறையில் இருக்கிறா சேர்.
என்ன? திடுக்குற்றேன் நான்.
ஆமா, சேர்.சிறையில்தான் இருக்கிறாள். ஒரு நாள் இரவு அவள் ஏதோ சந்தியில் நின்றதுக்காக போலீஸ் காரர் பிடித்துக்கொண்டு போய் சிறையில் போட்டுவிட் டார்கள். இவ் வார்த்தைகள் என் மனதில் வாளாய் ஊடுருவின.
எனக்குக் காரணம் விளங்கிவிட்டது.
சரி இதற்காகவா எழுதவில்லை.பரவாயில்லை."
அவன் தொடர்ந்தான். சேர், அம்மாவைப்பற்றி நினைக்கிறபோது அழுகை, அழுகையா வருகிறது சேர். அதோட, ஒவ்வொரு முதல் சனிக்கிழமை காலையில் மட்டும்தான் சேர் நான் எங்க அம்மாவைப் பார்க்கலாம். அதனால் இந்த சனிக்கிழமை முதல் சனிக்கிழமை. இந்தச் சனிக்கிழமை பார்க்காவிட்டா ஒரு மாதத்துக்கு எங்க அம்மாவை பார்க்க ஏலாதே சேர்.?
என் மனத்தில் ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு ஏக நேரத்தில் அடித்ததுபோலிருந்தது. குலுங்கி, குலுங்கி அழுதுகொண்டிருந்த இராமையாவைப் பார்த்துக்கொண் டிருந்தேன். ஒன்றுமே செய்ய முடியவில்லை. நின்றேன்!
என் மனத்தில் எழுந்த இரக்கத்தின் ஈரலிப்பு கண் களின் வழிவந்து கன்னத்தின் வழியோடியபோதே உணர்ந்தேன்.
என்னை மன்னித்துவிடு, இராமையா? என்னால் இதைத்தான் சொல்லமுடிந்தது.
என் தாயின் தெய்வீக உரு, என் மனக்கண்முன் நிழலாடியது. -வீரகேசரி
游
美

Page 47
தமிழ் மன்றம் நூல்கள் கிடைக்குமிடங்கள் :
பி. எஸ். சுந்தரம் அன் சன்ஸ் 75, பாபர் வீதி,
கொழும்பு - 13 (தொலைபேசி எண் : 828549)
கலைவாணி புத்தக நிலையம்
130, டி. எஸ். சேனாநாயக்க வீதி, கண்டி,


Page 48
இளைஞர் திரு ஏ. பி. வி. ே ஏற்கனவே மலைநாட்டு எழு அறிமுகப்படுத்தப்பட்டவர் தானே பலமுறை தனது சொந் புனைப்பெயரிலும் நிறைய எ அறிமுகப்படுத்திக் கொண்டவ ஏனைய ஈழத்து தின, வார ஏடு கதை, கட்டுரைகளும் நிறைய பி கொழும்பில் பிறந்து, வளி பின்னர் இலங்கை சர்வகலாச யாக வெளியேறி, இன்று அ எட்டியந்தோட்டை புனித சே யாற்றி வருகிறார். வ்ாழ்க்கை மலையகத்துக்கு மட்டுமின்றி நிறையப் பணிசெய்து, தமிழர் கான எதிர்பார்க்கிறோம்."
வீரகேசரியின் எதிர்பார்ப் பல நூற்றுக்கணக்கான கவி:ை கள் எல்லாம் எழுதி இலங்கையி பல்வேறு சஞ்சிகைகள் வாயின் கரித்துள்ளார். இவரின் அரிய நெறஞ்ச மச்சான்" நூலுருவின் வரவேற்புப் பெற்றது.
மலையக நகரான L கல்லூரி அதிபர் பதவியிலிருந்த தளையிலேயே நிரந்தரமாக வதி மத்திய மாகாணத்தில் மாகான ரங்கச் செயலாளராகப் பணிபுரி
曹 靛
 

கசரி. ஞாயிறு பதிப்பு 1963-ம் மே மாதம் 12-ம் திகதி பிர "வாழ்க்கைய்ே ஒரு புதிர்"
சிறுகதையுடன் "இவரைப் என்ற தலைப்பில் இவ்வாறு
காமஸ் நமக்குப் புதியவரல்லர், ஒத்தாளர் வரிசையில் அவர் என்பதோடு மட்டுமல்லாமல், தப் பெயரிலும் ஜெயம்" என்ற ழுதி, தன்னை வாசகர்களுக்கு ர், வீரகேசரியில் மட்டுமின்றி, களிலும் அவரது கவிதைகளும், பிரசுரமாகியிருக்கின்றன.
ார்ந்து, ஆரம்பக் கல்வி பெற்று, ாலையில் சேர்ந்து பட்டதாரி றிவுப் பணிபுரியும் ஆசிரியராக கபிரியல் கல்லூரியில் கடமை பில் முன்னணியில் திகழ்ந்து, ஈழத்து இலக்கிய உலகுக்கும் ானையை இவர் மகிழ்விப்பார்
பு விண்போகவில்லை. இவர் தகள், சிறு கதைகள், கட்டுரை ல் பிரசுரமாகும் பத்திரிக்கைகள் பாகத் தமிழன்னையை அலங்
படைப்பான அங்கமெல்லாம் பிரசுரிக்கப்பட்டு, அமோக
நாத்தளையில் பல்லாண்டுகள்
பின் இளைப்பாறினார். மாத் தியும் திரு.கோமஸ், தற்பொழுது சாக் கல்வியமைச்சரின், அந்த கிறார்.
இலங்கையில் விலை ரூ. 30-00