கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்

Page 1
ஒரு ஜனனத்தி நீர்கொழும்பூர்
 

ன அஸ்தமனம முத்துலிங்கம்
—

Page 2


Page 3

ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
நீர்கொழும்பூர் முத்துலிங்கம்
சவுத் ஏசியன் புக்ஸ்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 4
Oru Jananathin Asthamanam
Neerkolomboor Muthulingan
First Published : March 1994
Printed at : Surya A hagam, Madras.
Published in Association Will
Nation: Art & Literary Association
by South . . . .an Books 61, Thayar Sahib II Lane Moras - 600 002.
R: 3039
ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் நீர் கொழும்பூர் முத்துலிங்கம் முதற் பதிப்பு . மார்ச் 1994
அச்சு : சூர்யா,அச்சகம், சென்னை Gasflu7G தேசிய கலை இலக்கியப் பேரவையு ள்
இணைந்து “ `
சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை-600 002.

உள்ளே.
நாவல்
ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
சிறுகதைகள்
உருவெளி மனிதர்கள் சில நிஜங்கள் அக்கினி ஒரு மகன் தன் தாயைத் தேடுகிறான் விசாரம்
17
lO3
l14
125
139
153

Page 5

முன்னுரை
நீர்கொழும்பூர் முத்துலிங்கம் சிறந்த எழுத்தாளர் களில் ஒருவர். அவரதுeஎழுத்தோவியங்கள் கவிதைகளாக, சிறு கதைகளாக, நாவல்களாக வெளிவருபவை. இவரது ஆக்கங்கள் ஆரவாரமில்லாதவை. ஆனால் அப்படைப்பு கள் மெளனமாகவே, வாழ்க்கையையும் மனிதரையும் கூர்மையாக நோக்குகின்றன. நிகழ்வுகளுக்கேற்ப உண்டாகும் உணர்ச்சிகளை, உணர்ச்சி பேதங்களை கலை நயத்துடன் சித்தரிக்கின்றன. இவரது படைப்புகளில் சில ஒரு நாவலும், ஐந்து சிறு கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
கியானங்களும் கூறப்பட்டுள்ளன. சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொல்வதானால் நாவல் மனித வாழ்க் கையின் கதை, அல்லது விளக்கம் என்று கூறிவிடலாம்.
நாவல் பல அனுபவங்களைத் தருகின்றன. இதனால் நாவல் தன்னை விஸ்தாரமாக்கிக் கொள்கிறது. நாவலின் அடிப்படை அம்சங்களில் ஒன்று விஸ்தாரம்தான். இங்கே விஸ்தாரம் என்று குறிப்பிடுவது பக்கங்களையல்ல. ஒரு நாவலுக்கு இத்தனை அளவு இருக்கவேண்டும் என்பது இலக்கிய நியதியல்ல. அது பெரியதாகவோ சிறிய தாகவோ இருக்கலாம். உலகப் பிரசித்தி பெற்ற ஏர்லஸ் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும்’ (The Old man and the Sea) அளவில் சிறிய நாவலில் தான். நல்ல ஒரு சிறிய நாவவில்கூட விஸ்தாரம் அடங்கி விடுகிறது. இதன்ை படைப்பாற்றல் உள்ள சிருஷ்டிகர்த்தா ஒருவரால் தான் சாதிக்க முடியும். இதனை இந்நூலில் இடம் பெற்றுள்ள

Page 6
8
ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்’ என்னும் நாவலிலும் காண முடிகிறது. இந்நாவல் அளவில் சிறியதாக இருப்பினும் இது தன்னை ஒரு நாவலாக பிரகடனப்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையாக உள்ள சாதாரண மக்களின் உண்மையும், அன்றாட வாழ்க்கையில் காணுவதும் ஆகிய பொருள்கள்தான் மக்கள் இலக்கியத்தின் அடிப்படை யாகும். இதற்கமைய இலங்கையின் மேல் மாகாணத்துக்கு கடற்கரைப் பிரதேசத்தில் குறிப்பாக, நீர்கொழுமபின் குடாப்பாட்டிலும் பிரசித்திபெற்ற முன்னேஸ்வரன் (சிலாபம்) கோயில் கிராமத்திலும் வாழும் மாந்தரையும் வாழ்க்கையையும் சித்திரமாக்கியுள்ளது.
நாவலில் காணப்படுவதுபோல் கடற்கரையை அண்டி ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் குடிசைகளும் ஆக்கங் களும் சுபிட்சமான கதைகளும், அந்தச் சமுத்திரத்தையே நப் பி கட்டுமரங்களில் மனித சக்தியை முதலாக வைத்து போராடிய காலம் அதில் மாற்றமும். ஏற்படுகிறது. நாட் கள் போகப்போக எல்லாமே ஒவ்வொரு கோணங்களிலும் புதிய புதிய மாறுதல்களோடு செழிப்புற்றன; அல்லது பாழ்பட்டன.
கடற்கரையை அரிக்க ஆரம்பித்த கடல் அலைகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் முகமாக ஏதோ ஒரு பெரிய விதேசக் கம்பெனி அந்தக் கரையில் தங்கள் பிரமாண்ட் மான யந்திர உபகரணங்களோடு வந்து இறங்கியது. எங் "கிருந்தோ பெரிய பெரிய கருங்கற்கள் வண்டிவண்டியாகக் கொண்டுவரப்பட்டு கடற்கரை ஓரம் நெடுகிலும் போடப் பட்டன,
இப்போதெல்லாம் கட்டுமரங்களைக் காணமுடிய வில்லை. பிளாஸ்டிக் படகுகள் போட்டி போட்டுக் கொண்டு ஒடத்தொடங்கிவிட்டன. எந்நேரமும் கடற் காை மின்சார ஒளியில் மூழ்கித் திளைத்தது.

9
இவ்வாறு மாறுதல்களைச் சித்தரிக்கும் நாவல் இச்சூழலில் வாடும் கடற்கரை மாந்தர்களின் வாழ்க்கை யையும் காட்சியாக வரைந்து காட்டுகிறது. இவர்களில் பிரதானமானவர்கள் கணபதியும் சரஸ்வதியும்.
பெற்றோரை இழந்து தனது பாட்டியினால் தரித் திரத்தோடு பராமரிக்கப்பதுட்டு வந்த கணபதி படிப்புக்கு இடையில் முழுக்குப் போட்டுவிட்டு மீன் வியாபாரியான ஒரு முதலாளியிடம் வேலைக்கமர்கிறான். இதன் மத்தி யில் பாடசாலைப் பருவத்திலேயே சரசுவினால் கவரப் பட்டு காலப்போக்கில் கணபதியிடம் ஒருதலைக் காத லாக மலர்கிறது. அக்காதல் அவனுடைய இதயத்துக் குள்ளேயே ஏக்கத்துடன் அடங்கிவிடுகிறது.
சரசு லொறிச்சாரதியான கந்தசாமியைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி றாள். கணவன் குடிகாரனாகிவிட்டதால் சரசுவின் வாழ்க்கை சிதைகிறது. வறுமையும், துன்ப துயரங்களும் கணவனின் இம்சையும் அவளை முட்டிமோதி உடலையும் உள்ளத்தையும் நொறுக்கிவிடுகின்றன.
தன் காதல் கனவாகவே போய்விட்டபோதிலும் சரசுவின் நிலைகண்டு வருந்துகிறான் கணபதி. அவள்மீது அனுதாபமும் பறிவும் கொள்கிறான். ஆனால் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. எனினும் அவளைப் பற்றிய நினைவுகள் கணபதியின் நினைவில் நிழலாடாமல் இருப்பதில்லை.
கண்வன் கந்தசாமியால் அனுபவிக்கும் துன்பத்தின் கொடூரத்தை தாங்கமுடியாமல் ஒருநாளிரவு தற்கொலை செய்யக் கடலில் பாய்ந்தபோது கணபதி அவளைக் காப்பாற்றுகிறான். அவ்வேளை குடிபோதையில் அங்கு வங்த சரசுவின் கணவன் கந்தசாமி அவளுக்கும் கணபதிக் கும் தொடர்பு, அவளது வயிற்றில் உள்ள பிள்ளைக்கும் அப்பன் கணபதிதான் என்று சப்தம்போட்டு அபவா தத்தைப் பட்டம் கட்டி அந்தக் கடற்கரையில் பறக்கவிடு

Page 7
10
கிறான். சரசும் ஆக்ரோ சம் தாங்கமுடியாமல் சினத்தின் உச்சியில் நின்று வயிற்றில் உள்ள பிள்ளைக்கு அப்பன் கணபதிதான் என்று பதிலடியாக கத்துகிறாள். கூடி நிற்கும் சனக்கும்பல் அதனை நம்புகிறது. ஒரு நல்ல தொழிலாளியாக - ஒரு நல்ல பிள்ளையாக - ஒரு தல்ல மனிதன. க அந்தப் பகுதியிலே பிரக்தியாதி பெற்றிருந்த கணபதியை வேறு கண்கொண்டுபார்க்கிறது. இழிவாகப் பேசுகிறது.
கணபதிக்கு ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. தன் மீது வீசப்பட்ட மாசை அந்தச் சேற்றை அந்த இடத்தில் நின்று துடைக்கவும் விரும்பவில்லை. அவமானத்தால் உள்ளம் குறுகி, முகமும் இறுகிப்போன அவன் மெளன மாக அந்த இடத்தை விட்டு நகர்கிறான். அதன் பிறகு அந்தக் கடற் பிராந்தியத்திற்குத் திரும்பவேயில்லை.
குடாப்பாட்டிலிருந்து வெளியேறி முன்னேஸ்வரத்தில் ஒரு சின்னத் தேநீர் கொட்டிலில் எந்தவிதச் சொந்தமும் பந்தமும் இல்லாமல் வலு அமைதியாக காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த கணபதிப் பிள்ளையிடம் , ஒரு நாள் வந்து நிற்கிறாள் சரசுவின் மகள் கெளரி. கணவனின் துரோகத்தினால் கைவிடப்பட்டு வயிற்றுச்சுமையோடு வந்துநிற்கும் அவளை இனம் காணமுடியாத கணபதிப் பிள்ளை எடுத்த எடுப்பிலேயே விசாரிக்காமல் அவளுக்கு, இடமளித்து ஆதரிக்கின்றார். பின்னர் தான் கெளரியையும் அவளுடைய வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரசவத்தில் குழந்தைய்ைப் பெற்றதோடு கெளரி காலமாகிறாள். சரசு, கெளரி, அவளுடைய குழந்தை - மூன்று தலைமுறைகள் கணபதிப்பிள்ளையின் வாழ்க்கையில் சந்திக்கின்றன.
நாவலில் வரும் இக்கதையை விரிவஞ்சி மிகமிகச் சுருக்கமாகவே இங்கே கூறியுள்ளேன். ஆனால் இக் கதையை உருவாக்கும் நிகழ்வுகளோடு, இதில் வரும்

l
பாத்திரங்களோடு, உணர்ச்சி வெளிப்பாடுகளோடு கதையை சுவாரஷ்யமாக நடத்திச் செல்வதால் ஒருநல்ல நாவலின் பரிமாணத்தைப் பெற்றுள்ளது, இதில் ஆசிரியரின் கை வண்ணம் பளிச்சிடுகிறது.
இந்நாவலில் வரும் கணபதி, சரசு, கெளரி, கந்தசாமி, அந்தோணி, ஜெரோம், கிழவி பொன்னாச்சியம்மா, வரதாப் பாட்டி, நொண்டிப் பண்டாரம், மற்றும் பாத்திரங்கள் சோடை போகாத வார்ப்புகள் இவர்கள் தமக்கே உரிய பண்புகளோடு சுயமாகவே இயக்குகின் றனர் ஒரேயொரு தடவை வந்து போகும் மாதாகோவில் பாதிரியார் கூட மனதில் பதியக்கூடிய ஒரு பாத்திரம்.
பொன்னாச்சிக்கிழவி தன் பேரன் கணபதியுடன் கிறிஸ்துவக் குடும்பத்துடன் இணைவது, உயர்சாதியான சரஸ்வதி சாதி குறைந்த கந்தசாமியைக் காதலித்துக் கைப்பிடிப்பது போன்ற சாதி, மதப் பிரச்சினைகளை மிகைப்படுத்தாமல் சில வரிகளில் தொட்டுச் செல்வதையும் காணலாம். இவைபற்றி கருத்துக் கூறாமல் வாழ்க்கையில் நடக்கும் இந்நிகழ்வுகளும் சகஜந்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுவதையும் கவனிக்கலாம்
கெளரி முன்னேஸ்வரக் கிராமத்திற்கு வந்து கணபதிப் பிள்ளையிடம் வருவதிலிருந்துதான் நாவல் தொடங்கு கிறது. அதிலிருந்து நாவலை விறுவிறுப்பாக நடத்திச் செல்லும் பாங்கு ரசிக்கத்தக்கதாய் உள்ளது ஆசிரியரின் நடை கலைநயமிக்கது. அலம்பல் சிலம்பல் இல்லாமல் கனகச்சிதமாக அழகியல் பண்புடன் இந்நாவலைப் படைத்துள்ளமை அவரது கை வண்ணத்தையும் இலக்கிய சிருஷ்டியில் அவருக்குள்ள முதிர்ச்சியையும் காட்டுகிறது.
‘ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்’ என்னும் நாவலுடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள ஐந்து சிறுகதைகளையும் பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. ஒரே வார்த்தை யில் அருமையான கதைகள். வகை மாதிரியான பாத்திரங்?

Page 8
12
சிளையும் நிகழ்வுகளையும் சுவைதரக்கூடிய முறையில் இலக்கியமாக்கியுள்ளார். ‘ஒரு மகன் தன் தாயைத் தேடுகின்றான்' என்னும் சிறுகதை மனதை உருக்கக் ՑռԼգ-եւ-135].
ஆசிரியர் பலதுறைகளிலும் சுழன்றவர் என்பதால் அவருக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. அதனால் மனிதர்களையும் வாழ்க்கையையும் கூரிய நோக்கில் பார்ப் பதையும், அவரது மனித நேயத்தையும் இந்நூலில் உள்ள அவரது படைப்புகளில் புலப்படுகின்றது.
இந்நூல் படைப்பிலக்கியத்திற்கு வரவேற்கத்தக்க -6ᏂᏧ(hᏂᏣᏈ)Ꮿ5 .
36, சேர்ராசிக் பரீத் மாவத்தை சுபைர் இளங்கீரன் நீர் கொழும்பூர்
இலங்கை.

என்னுரை
வெகுகாலமாக என் சிறு கதைகளைத் தொகுத்து ஒரு புத்தீகமாக வெளியிடவேண்டுமென்ற எண்ணம் என மனதில் நீறுபூத்த நெருப்பாகவே கனன்று கொண். டிருந்தது. அந்த ஆவல் நிறைவேறும் நேரத்தில் என் கவனக்குறைவின் காரணமாக சான் 3.63தகளின் மூலப் பிரிவுகளோ-பத்திரிகைப் பிரதிகளோ என்னிடம் இருக்க வில்லை. 1965ஆம் ஆண்டளவில் எழுத ஆரம்பித்த Abst est, திடீரென்று ஒரு பத்து வருடகாலமாக ஒன்றுமே எழுந்ா4 ல், எழுத்துக்கும் எனக் ஒரு வித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி வேறு வேறு துறைகளில், முக்கிய மாகசினிமா-நாடகம் என்று கானலில் நீர் தேடி ஓடிக் கொண்டிருந்தேன், இலங்கையின் ஒரு பிரபல எழுத் தாளர் என்னைப் பற்றி அப்போது குறிப்பிடும்போது நன்றாக எழு தக்கூடிய ஒருவனை சினிமாவும், நிTடகமும் Hாழ்டுத்திக்கொண்டிருக்கின்றது என்று மிகுந்த வ, த்திட்ன் குறிப்பிட்டார். என் பழைய கதைகளை தேடித் டிக்கவேண்டி, சுவடிகள் திணைக்களத்துக்கு (BLffrej று என்மீது மிகவும் பற்றுக்கொண்ட ஒரு பிரபல கவிஞர் பலமுறை கூறிக்கொண்டிருக்கிறார்
இந்தத் தொகுதியில் 'அக்கினி என்ற ஒரு கதையைத். தவிர மற்றவை எல்லாம் சமீபத்தில் வெளிவந்தவையே ஆகும். அக்கினி ஜீவாவின் மல்லிகையில் பிரசுரமானது. 'ஒரு "ஜனனத்தின் அஸ்தமனம்’ நாவல் தொடர்ந்து விரகேசரி வார வெளியீட்டில் வெளி வந்தது.
ஒடு காலத்தில் பரபுக் கவிதைகள் எழுதிக்கொண்டும் அடுக்குமொழியல் அர்த்தமில்லாமல் வர்ணனைகள்ை த் -. 够 ~. திணித்தும் எழுதிக்கொண்டிருந்த எனக்கு என் எழுத
துலக நண்பர் மு. பஷீர், த ஜெயகாந்தனின் நூல்களை பிமுகப்படுத்த த. ஜெயகாந்தனின் எழுத்துக்களே என் ;லக்கியப் பயணத்துக்கு வழியமைத்துத் தந்தது.

Page 9
14
இந்தக் கதைகளில் இயல்பாக நான் கவனிக்கும் வாழ்க்கையை அடுத்தவரின் அனுபவங்களை ஒரு சிறு போகிற போக்கில் பார்த்து மனதைப் பாதிக்கும் விசயங் 'களையே காணலாம். சாப்பாட்டை பரிமாறிவிட்டு இதை இப்படித்தான் சமைத்தேன் என்று பிரசங்கம் பண்ணுவதை எவர்தான் ரசிப்பர்? ஆனால் சில நேரங் களில் சிலருடைய எழுத்துக்கள் பிறந்த விசயங்களை அவர்களின் எழுத்துக்கள் மூலம் படிக்கும்போது வெகு சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இருந்திருக்கின்றது
இந்தத் தொகுதி வெளிவர உற்சாகமும், ஊக்கமும் அளித்தவர் என் நண்பர் நாவலாசிரியர் திரு. இளங்கீர்ன் அவர்களாகும் இந்தத் தொகுதிக்கு முன்னுரையும் எழுதித் தந்திருக்கின்றார். அவருக்கு என் நன்றி.
எழுதத் தொடங்கிய காலம் முதல் என் இலக்கியப் பயணத்துக்கு வழி அமைத்துத் தந்த வீரகேசரி வார வெளியீட்டு ஆசிரியர் திரு. பொ. இராஜகோபாலன் அவர்களுக்கும் என் எழுத்தை அடிக்கடி விமர்சித்து செழுமை ஏற்படச் செய்த நண்பர் மு. பஷீர் அவர் கட்கும், படைப்புகளைப் பிரசுரித்த வீரகேசரி பத்திரிகைக்கும், மல்லிகை சஞ்சிகைக்கும் இதனை நூல் வடிவில் தரும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் சவுதி ஏசியன் புக்ஸ் நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம்
No. R. 22. Qgug 658766),
நீர் கொழும்பு, இலங்கை.

நாவல்

Page 10

ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
1.
அந்தக் கிராமத்துக்கு ஊடாக தொலைவில் இருக்கும் நகரத்துக்கு செல்லும் பிரதான சாலைவழியாக செல்லும் கடைசி பஸ் வண்டி அந்தக் கிராமத்தின் முச்சத்தியில் நின்று ஒரே ஒரு ஒற்றைப் பிரயாணியை அவ்விடத்தில் விட்டுவிட்டு புறப்பட்டபோது அந்தக் கிராமமே இரவின் சயனத்திற்கு ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.
வழக்கமாக அந்தக் கிராமத்தின் ஊடாக அழுது கொண்டு செல்லும் அந்தக் கடைசி வண்டி ஏதோ ஒரு காரணத்தினால் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகிச் சென்றதன் நிமித்தம், இதுவரை அதையே எதிர்பார்த்து காத்து நின்றது போலும், அது வந்து சென்றதை யாருக்கோ அறிவிப்பதைப் போலும் ஒரு ஒற்றை ஆட்காட்டிக் குருவி "கீச் கீச்" சென்று கூவிக்கொண்டு, பாதையின் பக்கவாட்டில் இருந்த கடை வரிசைகளுக்கு மேலாகப் பறந்து தூரத்தே, வயல்வெளிகளையும், வற்றிப் போன தாமரைக் குளங்களையும் கடந்து மறைந்தது.
அந்த நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் காரை பெயர்ந்திருந்த பழங்காலக் கடைவரிசைகளும், மடங் களும், தென்னோலையால் உருவாக்கப்பட்டிருந்த கடை களும், முச்சந்தியையொட்டியிருந்த பொதுக் கிணறும் எல்லாமே அந்த இரவின் மோனத்தில் ஞானத் தவம்
ஒரு-2

Page 11
18
புரிந்து கொண்டிருந்தன. ஒரே ஒரு தட்டிக் கடையைத் தவிர, அந்தக் கடை மட்டும் விழித்துக் கொண்டிருப் பதற்கு சாட்சியாக அக்கடையின் ஒடுங்கிய வாயிலுக் கூடாக எண்ணெய் விளக்கின் ஒளி மெல்லியதாக தன்னை இனங் காட்டிக்கொண்டிருந்தது.
தட்டிக்கடையின் ஒரே நிர்வாகியான கணபதிப் பிள்ளை என்ற கிழவர் கடையின் பின்புறம் காலையில் இருந்து காட்டு விறகில் தேநீருக்கான நீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்த பெரிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்து நன்றாகக் கழுவி, அடுத்த நாள் காலையில் மீண்டும் அதை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும் என்ற கரிசனையுடன் பத்திரப்படுத்தி - தன் இரவு உணவை முடிக்குமுன் கடையின் முன் புறக் கதவான தென்னோலைத் தட்டியை எடுத்து வாசலை மூடப் போகும்போது தான், அந்த கடைசி பஸ் வண்டி மிகத் தாமதமாக வந்து ஒரு ஒற்றைப் பிரயாணியை இறக்கி விட்டுச் சென்றது .
அந்த நேரத்தில் அந்த இடத்தில் வந்து இறங்கி நிற்கும் பிரயாணி யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கணபதிப் பிள்ளை தன் கடையின் தட்டி வாசலை மூடப்போய், அதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தன் கடையின் முன்னே, பாதையில் வந்திறங்கியது யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் பாதையைஇருளிை உற்றுப் பார்த்தார்.
வந்தது ஒரு பெண். இருளில் ஒரு பெண் என்று
மட்டுமே புரிந்தது அல்லாமல் யார் என்று இனங்காண
முடியவில்லை. அதுவுமல்லாமல் ஒரு சிறிய பெட்டியும் அவள் பக்கத்தில் தரையில் இறங்கி இருந்தது.
அருகில் இருக்கும் குக்கிராமங்களுக்கு போகும் பிரயாணிகளும் அந்த இடத்தில்தான் இறங்குவது

19
வ்ழக்கம். ஏதோ ஒரு குக்கிராமத்துக்குப் போகும் யாரோ ஒரு பெண்தான் பஸ் வண்டியின் தாமதம் காரணமாக இந்த நேரத்தில் இங்கு வந்து இறங்கி இருக்கின்றார். அதுசரி யார் எந்த நேரத்தில் எங்கு போனால் எனக்கு என்ன என்ற எண்ணத்திலும், சீக்கிரம் சாராயத் தண்ணி யருந்தி சாப்பிட்டு விட்டு படுத்து எழுந்து, அதிகாலையில் கடையைத் திறக்க, தேநீர் தயாரிக்க, அடுப்பை மூட்ட வேண்டும் என்ற கர்மசிரத்தையில் கணபதிப்பிள்ளை தட்டியை மூடிக்கட்டிவிட்டு கடையின் உள்ளே வந்து பலகை பெஞ்சில் அமர்ந்து, பலகாரம் வைக்கும் சன்லைட் பெட்டியின் கீழ் வழக்கமாக வரதாப்பாட்டி கொண்டி வந்து வைத்துவிட்டுப் போகும் அரை போத்தல் சாரா யத்தை எடுத்து ஆர்வத்துடன் ஒரு கிளாஸையும் அடித்து தொண்டைக் காரத்தில் சற்றுக் கமறி இன்னைக்கு சாமான் ‘நல்லம்' என்று குடித்த மதுவை வாய்விட்டு சிலாகித்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார்.
வெகு தொலைவில் ஆட்காட்டிக் குருவி இன்னும் கத்திக் கொண்டிருந்தது. காட்டுக்குள் யாராவது மனிதர்கள் நடமாடுவதை இந்தப் பறவைகள் கண்டால் இப்படிக் காட்டின் நாலாபக்கமும் பறந்து அறிவிக்குமாம் அப்போது வேட்டையாடப்பட வேண்டிய மிருகங்கள் உஷாராகிவிடுமாம். இப்படி கணபதி பிள்ளையின் தேநீர்க் கடை வாடிக்கையாளன் குறவன் ராமன் சொல்லி யிருக்கின்றான்.
ஆளைக்காட்டுவது, அதாவது குறிப்பிடுவது அத னால்தான் ஆள்காட்டிக் குருவி என்று பெயர். கணபதிப் பிள்ளைக்கு அந்தப் பெயரின் பொருளை அறிந்ததில், அல்லது கண்டு பிடித்ததில் பரம சந்தோஷம். நாளை குறவன் ராமன் வந்தவுடன் இந்த பெயர்க்காரணத்தைக் கூறி மட்டந்தட்ட வேணும். இப்படி எண்ணிக் கொண்
1 - Π ή".

Page 12
20
அதே நேரம், அன்று பிற்பகல் ராமனும் அவனுடைய சகாக்களான பொன்னுசாமியும், முத்துவும் வந்து வெகு நேரம் அந்தச் சிறிய தேநீர்க்கடையினுள் அன்றிரவு முயல் வேட்டைக்கு போவதைப்பற்றி மிக விஸ்தாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்படியானால், குளத்தங்கரைக் காட்டில் ராமன் கோஷ்டி தான் முயல் வேட்டையாடுகிறதோ! அதுதான் அந்த ஆள்காட்டி குருவி இப்படி அலறுகிறது. பறவையோ, பிராணியோ விழுந்தால் அந்தக் கோஷ்டிக்கு கணபதிப்பிள்ளையின் கடைதான் தங்குமடம். கணபதி சாமியார்தான் லாய்க்கு ருசியாக சமைப்பார். கணபதி சாமியாரா? ஆமாம் அந்தக் கிராமத்தில் கணபதிப் பிள்ளையை அப்படியும் அழைப்பார்கள்.
சாமி சில நேரம் வைத்தியம் பார்க்கும் - சில நேரம் மந்திரம் ஓதி நூல் போடும், வரதாப்பாட்டியிடம் கொண்டு வரச்சொல்லி தினம் தவறாமல் இரவில் வடிசாராயம் குடிக்கும். ராமன் கோஷ்டியினர் வேட்டை யாடிக் கொண்டு வரும் உடும்பு-முயல்-வெளவால்-காட்டுக் கோழி இவைகளை நன்றாக சமைத்து பரிமாறி தானும் சாப்பிட்டு விடிய விடிய வானத்தை பார்த்து நட்சத்திரங் களை எண்ணிக் கொண்டிருக்கும். இரண்டாவது கிளாசை ஊற்றிக் குடித்து விட்டு, வாயில் ஏதாவது காரமாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து பகல் வரதாப் பாட்டியின் பேரன் குளத்தில் பிடித்துக் கொண்டு வந்த விரால் மீனின் ஞாபகம் ஏற்பட்டதும், சட்டியில் உள்ள வறுத்த மீன் துண்டங்கள் இப்போது மிகப் பொருத்தமே என்று எண்ணி குதூகலத்துடன் கணபதிப் பிள்ளை அல்லது சாமி தள்ளாடியபடி எழுந்தபோது, மிக அண்மையில் கடையின் வெளிப்புறம். வாசல் தட்டியின் அருகாமையில் ஒரு பெண்ணின் அடக்க முயற்சிக்கும் இருமல் ஒலி சோகச் சிதறல்கள் போலக்கேட்டது.

21
சில நேரங்களில் அந்த வீதியில் அலைந்து கொண்டி ருக்ரும் ஊர் பேர் தெரியாத ஒரு பைத்தியக்காரி அங்கு வந்து வாசலில் படுப்பதுண்டு. ஆனால் இப்போது ஒலிக்கும் இருமல் ஒலி அவளது அல்ல! இப்போது கேட்ட இருமல் சப்தம் முற்றிலும் மாறுபட்ட நோய் அவஸ்தைக்கு உட்படாத சாதாரண சப்தமே.
முதலில் சட்டியில் உள்ள வறுத்த விரால் மீன் துண்டை. எடுப்பதா? அல்லது வெளியே ஒலியெழுப்பிய உருவத்தை யார் என்று பார்ப்பதா? என்று ஒரு கணம் தடுமாறிய கணபதிப்பிள்ளை விளக்கை எடுத்துக்கொண்டு முன்னே சென்று வாசல் தட்டியை திறந்து பார்க்கையில், கடையின் வாசல் ஒரத்தில், இருளில் ஒரு பெண், ஒரு பெட்டி சகிதம் கீழே அமர்ந்திருந்தாள்.
கணபதிப்பிள்ளையின் கையில் இருந்த கை விளக்கின் மெல்லிய ஒளியில் அவளது பூப்போட்ட சிகப்புச் சேலை யும், பக்கத்தில் இருந்த பெட்டியும் ஸ்பட்டமாக புலனாகின.
‘எங்க போறவங்க..?" கேட்டு விட்டு அப்போது அங்கிருந்து சென்ற கடைசி பஸ் வண்டி ஞாபகம் வர 'இப்ப வந்த பஸ்ல வந்தீங்களா?’ என்று கேட்டார்.
ஆமா! மிக இனிமையான குரலில் ஒரு ஒற்றைச் சொல் வெளிப்பட்டது.
'எங்க சோகமத்துக்கா? பிள்ளைகேட்டார். திசோகாமம் அந்தக் கிராமத்துக்கு அருகாமையில் இருக்கும் குக்கிராமம்.
"இல்ல இஞ்சதான்"
"இஞ்சன்னா?*
"இஞ்ச ஒருத்தரப் பார்க்கணும்'
‘விலாசம் இருக்கா?"
**இல்ல!’

Page 13
22
'விலாசமில்லாம எப்படி?" கணபதி யோசித்தார். பின் அதே சிரத்தையுடன் "யாரப் பார்க்க? யாராவது சொந்தக்காரங்களைப் பார்க்கவா?
"ஆமா?" 'சரி என்ன பேரு? என்ன வேலை?"
"பேரு.ம் . கணபதிப்பிள்ளை . வேல . தேத்
தண்ணிக் கடையாவாரம்'
கணபதிப் பிள்ளைக்கு வியப்பேற்பட்டது. யாருமே அற்ற அனாதையான தன்னைத் தானா இந்தப் பெண் தேடி வந்திருக்கின்றாள். அப்படி தன்னைத் தேடிவர யார் இருக்கின்றார்கள்? கடந்த இத்தனை வருடங்களாக தன்னைத் தேடிக்கொண்டு அந்தக் கடைக்கு யார் வந்திருக் கின்றார்கள்?
தூரத்தே எங்கோ ஒரு வெடிச் சப்தம் கேட்டது. ஆமாம் ராமன் கோஷ்டி ஒரு முயலை அல்லது ஒரு காட்டுக் கோழியை சுட்டு விட்டார்கள்.
காற்றின் தாக்கத்தினால் கிழவரின் கையில் இருந்த விளக்கின் சுடர் படபடத்தது. "உள்ளுக்கு வாங்க’
அந்தப் பெண் சற்றுத் தயங்கினாள்.
"பரவாயில்ல இஞ்சயாரும்இல்ல. நா மட்டும்தான் ஒங்க அப்பன் மாதிரி'
வாசலில் நின்று கொண்டிருக்கும் கணபதிப்பிள்ளை யின் உருவமும் அந்த இருட்டிலும் தெரியும் தரைத்த நீண்ட தாடியும் தோளில் போட்டிருந்த துண்டும், முழங் கால் வரை ஏரியிருந்த அழுக்கு படிந்த நாலு முழ வேஷ் டியும், எல்லாவற்றையும் மீறிய அன்பொழுகும் குரலும் அந்தப் பெண்ணை இந்த மனிதன் நம்பத் தகுந்தவனே என்று காட்டியது. அப்படி இல்லாவிடினும் கூட அந்த மெளனமான இருளின் தீவிரமும், பாதையில் மணலை

23
வாரிச் சென்ற ஊதல் காற்றின் இரைச்சலும், எங்கோ அலறும் பெயர் தெரியாத பறவையொன்றின் குரலும் அவளை உள்ளே போகத் தூண்டியது.
அவள் குனிந்து உள்ளே வந்ததும், அவளைத் தொடர்ந்து வெளியில் இருந்து ஊதல் காற்றும் ‘ஸ். சென்று உள்ளே புகுந்தது. பலகை பெஞ்சின் மீது விளக்கின் சுடர் படபடத்தது.
"இருங்க!' பிள்ளை உள்ளேயிருந்த நீண்ட பலகை பெஞ்சைக் காட்டினார். அவள் அமர்ந்தாள்.
அமரும் போதுதான் அங்கு நிலவிய மெல்லிய ஒளியில் அவர் அவளைக் கவனித்தார். அவள் ஒரு நிறை மாத கர்ப்பிணி, சிவந்த, மிக அழகான முகம், முகம் மட்டுமல்ல, உடல்கட்டு எல்லாமே நீண்ட கலைந்திருந்த ஒற்றைப் பின்னல் தோள்வழியாக முன்புறத்து மார் பில் புரண்டு நிறைவயிற்றைத் தாண்டி மடியில் புரண்டிருந்தது. காதிலோ, கழுத்திலோ எதுவுமில்லை. எனினும் இந்த நகைச் சுடர் அவசியமில்லை என்பன போன்று அவள் முகமும் கண்களும் அக்கினித் துண்டுகள் போல் திகுதிகு வென சுவாலையிட்டுக் கொண்டிருந்தன. அவளுக்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து வயது தா னிருக்கும்.
ஒருகையை அமர்ந்திருந்த .ெஞ்சில் ஊன்றி மறுகை யால் சற்று சிரம பரிகாரத்துடன் இடுப்பையும், வயிற் றையும் தடவிக் கொண்டு வயிற்றில் இறுகியிருந்த சேலையை அல்லது உட்பாவாடையை சற்று கீழே இழுத்துவிட எத்தனித்து, தன் முன்னே வயதாலும், தோற்றத்தாலும் நிற்பவர் ஒரு கிழவனே. ஆயினும், ஒரு ஆடவன் நிற்கின்றான் எனும் பெண்ணுக்கே உரிய லஜ்ஜை யுடன் தன் கரங்களுக்கு அவள் தடை விதிக்க கணபதிப் பிள்ளை ‘அம்மா" நல்லா இருந்து இளைப்பாறு" என்று கூறியபடி இவளுக்கு ஏதாவது குடிக்க கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளே போனார்.

Page 14
24
அவர் போனதும், எழுந்து நின்ற அவள் இடுப்புச் சேலையை கீழ் இழுத்து உட்பாவாடையின் முடிச்சைத் தளர்த்தி சற்று ஆசுவாசமாக தன் இடுப்பை அந்த விளக்கு வெளிச்சத்தில் பார்க்க எவ்வளவோ நேரமாக இடுப்பில் அந்த முடிச்சு ஏற்படுத்தியிருந்த செம்மை அடையாளம் புலனாக அதை இரண்டு விரல்களால் தடவ ஒருவித எரிவும் கூடவே ஒரு சந்துஷ்டியும் ஏற்பட்டன.
ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்தப் பெண் கணபதிப்பிள்ளை வரும்வரை அந்த விளக் கையும் மேஜையில் பாதிகாலியாகி இருந்த சாராய போத் தலையும், ஒரு எளிமையான கிராமத்து தேநீர் கடைக்கே யுரிய தளபாடங்களையும் ஆர்வத்துடன் பெரிய கண்கள் விரிய பார்த்துக்கொண்டேயிருந்தாளாகிலும் கண்களில் விபரம் கூறமுடியாத பயத்தின் சாயலும் பரவி நின்றன.
எப்படியோ ஒரு வகையாக ஒரு தேநீர்க் குவளையை தயாரித்துக்கொண்டு அவள் முன்னே வைத்து கணபதிப் பிள்ளை, அவள் அதை முழுதுமாகக் குடித்து முடிக்கின்ற வ்ரையில் பக்கத்தில் நின்று அவள் குடித்து முடித்ததும் காலி குவளையை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு சற்று நேரம் மோட்டு வளையை பார்த்துக்கொண் டிருந்தார். *
'கணபதிப்பிள்ளையின் தேத்தண்ணி கடை தெரி யுமா?’ அவள் அவரிடம் இரண்டாவது த்டவையாக அவரின் பெயரை உச்சரித்தாள்.
‘எந்தக் கணபதிப்பிள்ளை?’ நிச்சயப்படுத்திக் கொள்ள பிள்ளை கேட்டார்.
அவள் ஒரு ஊரின் பெயரைக் கூறினாள். கணபதிப் பிள்ளையின் மூளைக்குள் ஆயிரம் வேட்டுக்கள் வெடித்தன ஆம் ! நிச்சயமாக இந்தப் பெண் தேடி வந்திருக்கும்

25
கணபதிப்பிள்ளை நானேதான்! நானேதான்!! பிள்ளை பல முறை தன் மனதுக்குள் அழுத்தமாகக் கூறிக்கொண்
TIT. -
அவளில் இருந்து சற்று விலகி நின்று அவளையே அவர் கூர்ந்து நோக்கினார். ஹ"ம்.ஹ"ம்.யாரென்று எதுவுமே பிடிபடவில்லை.இவள் யார்? எதற்காக இந்த தேநீர் கடை பரதேசியை தேடி வந்திருக்கின்றாள். w
தானே மறந்து போன - மறந்துவிட்ட - ஒரு கனவே போலுமாகிவிட்ட எப்போதாவது ஒரு தடவை நினைத் துக்கொள்ளும் தன் பூர்வீக ஊரில் இருந்து இவள் எதற் காக வந்திருக்கின்றாள்? இவள் யாராக - யாரின் யாராக இருக்கக்கூடும். இதில் தன் சம்பந்தம் எதுவரை சம்பந் தமா? சம்பந்தமே அற்றவன் நான் இதில் என் நிலைப்பாடு தான் என்ன? அப்போது,
கடையின் பின் கதவு தட்டப்பட்டது. பிள்ளை எழுந்து சென்று திறக்கையில், ஒரு கையில் துவக்கும்; மறு கையில் வெடிபட்டு இறந்துவிட்ட ஒரு பெரிய முயலுமாக உள்ளே நுழைந்தான் குறவன் ராமன். அவன் பின்னே வேட்டையாடிவிட்ட குதூகலத்துடன் பொன்னுச்சாமியும் முத்துவும் நுழைந்தனர்.
‘சாமி! பெரிய மொசல்" - ராமன் உற்சாகமாக
"நாந்தான் பார்த்தேன்’ முத்து இன்னும் உற்சாக மாக அலறினான்.
‘சாமி! மொசலு புள்ளதாச்சி!” பொன்னுசாமி உருக்கமாயினும், உற்சாகம் குறையாமல் கூறினான்,
தலை கீழாக ராமனின் கையில் தொங்கிக் கொண் டிருந்த இறந்து போன முயலின் வயிறு குட்டிகளுடன் உப்பியிருந்தது. மிகப்பரிதாபமான அந்தக் காட்சியை அவள் கண்கள் வெறித்தன. அந்தக் குட்டித்தாச்சி

Page 15
26
முயலின் நடுவயிற்றில் இருந்து இரத்தம் வழிந்து கொண்
டிருந்தது.
தன் அடிவயிற்றில் இருந்து விபரம் புரியாத ஒரு உணர்வு மேலெழுந்து உடம்பு முழுவதும் வியாபிப்பதைப் போலிருந்து அவளுக்கு அதே நேரம் தன் அடிவயிற்றின் ஒரு மூலை ஒரு சிசு மறுபக்கம் புரள்வதைப் போலவும் உணர்ந்தாள்.
கணபதிப்பிள்ளை யோசித்தார். இவள் யாராக இருக்கும்? இவள் தேடிக்கொண்டு வந்திருப்பது தன்னைத் தான். தனக்குத்தான் யாருமில்லையே அதுசரி இந்த ஊரில் என்னைத் தவிர கணபதிப்பிள்ளை என்று யாராவது இருப்பார்களா? இல்லையே! அதுவும் தேநீர்க்கடை வைத்துக்கொண்டு கடந்த இத்தனை வருடகாலமாக, தேநீர்க்கடை வைத்து நடத்தும் கணபதிப்பிள்ளை நான் ஒருவன் மட்டும் தானே!
அப்போது தான் ராமன் அந்த மங்கிய வெளிச்சத்தில் ஒரு தேவதையே போலும் பெஞ்சில் அமர்ந்திருந்த அவளைக் கண்டான். பிள்ளையையும், அவளையும் மாறி மாறிப் பார்த்து யாரிவள்? என்ற கேள்வி கண்களில் படிய பிள்ளையைப் பார்க்கையில் ‘நம்ம ஊரில இருந்து.' என்று கூறியபடி 'இன்னிக்கி வேணாம்' என்று தொங்கும் முயலைக் காட்டிய கணபதிப்பிள்ளையை சிறிது நேரம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த ராமன் கோஷ்டி யினர் எப்படி வ்ந்தார்களோ அப்படியே திரும்பி நடந்து அந்தக் குடிசையின் பின், இருளில் ரகஸ்யம் போலும் சிரிப்புகளுடன் மறைந்தனர்.
வெகுநேரம் அந்த சிறிய தேநீர்க்கடையினுள் யாருமே பேசவில்லை தூரத்தில் செல்லும் ராமன் கோஷ்டியினரை வரவேற்கும், அல்லது வழியனுப்பும் தெரு நாய்களின் அவல ஓசை அந்தப் பிராந்தியத்தையே உலுக்கி எடுத்தது.

27
கண்பதிப்பிள்ளை எழுந்து சற்று நேரம், மெளனமாசு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அவளை நோக்கி ‘ஓங்க பேரு?" என்று கேட்டார். “கெளரி" - என்று தன் பெய ரைக் கூறியபடி எழுந்த கெளரியாகிய அவள் ‘முடியும்னா இப்பவே என்ன கூட்டிக்கிட்டு போய் கணபதிப்பிள்ளை தேத்தண்ணி கடையக் காட்ட முடியுமா!"என இறைஞ்சும் பாவனையில் கேட்டபோது, வளர்ந்த தன் தா டியினூடே ஒற்றைவிரலைவிட்டு மோவாயை சொறிந்தபடி கணபதிப் பிள்ளையை நீங்க பார்த்திருக்கீங்களா' என்று கேட்டார்
'இல்லை" அவள் பதிலிறுத்தாள்.
ஒன்ன...அவருக்கு தெரியுமா!" ஏனோ இப்போது கேள்வி ஏக வசனத்தில் பிறந்தது அதைப் பற்றி அவள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை பதில் வந்தது.
‘தெரியாது!’
‘அப்பிடின்னா நீ யாருன்னு அவருகிட்ட சொல்லப் போறே?"
'அத அவருகிட்ட தான் சொல்லனும், அது அவருக்கு மட்டும்தான் தெரியும்” கணபதிப்பிள்ளைக்கு சிரிப்பு சிரிப் பாக வந்தது. இது என்ன தமாஷ்! இவள் யார்? என்னிடம் வந்து என்னையே காட்டுமாறு என்னிடமே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
பரம் பொருளைக் காட்டுமாறு பரம்பொருளிடமே தனஞ்சயன் கேட்கிறானே! அதுபோலவா? ஒரு மகத்தான தத்துவத்தை தன் விசயத்திற்கு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட கணபதிபிள்ளைக்கு தான் அப்படி ஒரு மகத் தான தத்துவத்தை ஏன் இப்போது எண்ணவேண்டும் என்று யோசிக்கையில் இது நிச்சயமாக வரதாப்பாட்டி வைத்துவிட்டுப் போன, தான் அருந்திய சாராயத்தின் மகிமையே அன்றி வேறொன்றுமில்லையென்று தன்னுள் வெட்கப்பட்டு

Page 16
28
"கெளரி! நீ யாரப் பார்க்கணும்னு வந்திரிக்கியோ? யார்ட தேத்தண்ணி கடைய காட்டங்கன்னு கேக்கி றியோ.அந்த தேத்தண்ணிக் கடை. இதுதான் நீ பார்க்க வந்த கணபதிபிள்ளையும் நான்தான் என்று கூறிவிட்டு தன் பதில் மூலம் இப்போது இவள் எப்படித்தன் அடுத்த விசயத்தை பேச ஆரம்பிப்பாள் என்று அவள் முகத்தை ஆவலுடன் கூர்ந்து அவதானிக்கையில்
அவள் முகம் தான் என்னமாய் மாறியது!
முகமெல்லாம் செம்மை பரவ இதுவரை அங்கு வந்து இருந்த தோரணைகளெல்லாம் அகன்று விழ கணபதிப் பிள்ளையைப் பார்த்து விழிகள் இரண்டும் வியக்க, உதடு கள் துடித்து, பொங்கி வரும் , அழுகையை அடக்கமாட் டாமல் விம்மி தன் குரலை கட்டுப்படுத்த முடியாமல் 'மாமா” என் விளித்து கண்ணிர் சோர அழ ஆரம்பித்த பொழுதில் கணபதிபிள்ளையாகிய கணபதிசாமி தர்ம சங்கடத்திற்கு ஆட்பட்டு தன்னை மாமா என்று உரிமை யுடனழைத்து தன் முன் எதுவித விகல்பமும் இன்றி, அவள் துயரத்துக்கு தன்னையே ஒரு வடிகாலாய்க் கருதி மூன்று வயது சிறுமியைப் போல உரத்த குரலெடுத்து அழும் இவளைப் பார்க்கையில் இவள் யார் என்ற கேள்விகள் எல்லாம் மறந்து ஒரு நிர்க்கதியான சிசுவை சமாதானப் படுத்துவது போன்று அவளை அணுகி அவள் உச்சந் தலையில் கைவைத்து தடவி ‘ஆழாம சொல்லம்மா!' என்று ஒரு சகோதரனுக்கு அல்லது ஒரு தாய்க்கு உண்டாகும் கருணை உணர்வில் நாக்குழறக் கேட்டு தான் என்ன கேட்டோம் என்பதே மறந்துபோய் மீண்டும் "நீயாரு? ஒங்க அப்பா அம்மா யாரு?" என்று கேட்ட போது
"அம்மா.அம்.மா. அம்மா என்று ஏதோ சொல்ல முனைந்து மீறிவரும் அழுகையின் நிமித்தம் வார்த்தைகள் தட்டுப்பட, சற்று நிதானித்து ‘நான் சரசுவின் மகள்' என்றாள்

29
மீண்டும் தூரத்தில் ஒரு வெடிச் சப்தம் கேட்டது. போகிற போக்கில் ராமன் கோஷ்டியினரின் வேட்டைக்கு ஏதோ ஒரு பிராணி பலியாகிவிட்டது
வெடிச் சப்தத்தைத் தொடர்ந்து தூரத்தில் சடசடத் துப் பறக்கும் பறவைகளின் தீனமான ஒலிசளும், இதர பிற ஓசைகளும் அந்த ராத்திரியில் அந்த ஊரையே எழுப்புவது மாதிரி ஒலித்தன.
தூரத்தில் ஏதோ ஒரு வீட்டில் ஒரு குழந்தை எழுந்து வீரிட்டு அழும் ஒலமும், அதனை தட்டி சமாதானப் படுத்தும் ஒரு தாயின் தாலாட்டும் மிக மெல்லிய ஸ்தாயியில் விட்டுவிட்டு ஒலித்தது.
"யாரு? மாந்தோட்ட வீட்டு சரசுவின் மகளா?" என்று மீண்டும் நம்பமுடியாதவர்போல் கேட்டார். பிள்ளை.
ஒரு சிறு குழந்தை போல் மெல்லத் தேம்பியவாறு தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டி, தன் வயிற்றி னுள்ளேயே ஒரு குழந்தையை வைத்திருக்கும் அந்தப் பெரிய குழந்தை அதை ஒப்புக்கொண்டது.
அழுகை முற்றுப் பெறவில்லை. தொடர்ந்தது. கணபதிபிள்ளை இவள் அழுது முடியட்டும் என்று தீர்மானம் செய்து முன்புறம் வாசல் தட்டியை ஒதுக்கி வெளியே வந்து பாதையில் நின்று கிழக்கே அாரததில் தெரியும் பெரிய கோயில் கோபுரத்தையும் நிலவொளியில் தகதகக்கும் கோபுரக் கலசங்களையும் பார்த்தவாறு நின்றார்.
இவள் ஏன் இங்கு வந்தாள்? தன்னைப் போய்: பார்க்குமாறு யார் கூறியது சரசுவா?
ஓ! எத்தனை வருடங்கள்!

Page 17
30
இப்போது சரசுவைப் பற்றி எண்ணிக் கொண்டார். எப்போதோ முடிந்து போய்விட்ட-மறந்துவிட்ட அத்தி யாயங்கள் எத்தனை வருடங்கள் அதைக் கூட நினைவு படுத்த இயலாமல் மறந்துவிட்ட விசயங்கள்.
மீண்டும் கணபதிபிள்ளை பாதையை விட்டு கடை வாசலை அடுத்து உள்ளே பார்க்கையில், கெளரி அதே போல அதே இடத்தில் ஆடாயல் அசையாமல் ஒரு சிலையைப்போல அமர்ந்து சுடர் பரப்பும் கைவிளக்கை வெறித்துக் கொண்டிருந்தாள். '
'கெளரி எழும்பம்மா - பின்னால பெரியட்ரம்ல தண்ணி இருக்கு, மொகத்தக் கழுவிட்டு உடுப்ப மாத்திக்கோ. மாத்து உடுப்பு இருக்கா?’ ஒரு தந்தை தன் மகளுக்கு கூறுவதைப் போல கணபதிபிள்ளையின் குரல் ஒரு வேண்டுதல் போலவும், அதேசமயம் ஒரு உத்தரவு போலவும் ஒலித்தது. சொல்லிவிட்டு மீண்டும் பாதையில் ஏறி வெறுமையாக தன் கண்களை கோபுரத்தின் மீதும் கலசங்கள் மீதும் லயிக்கவிட்டார்.
தூரத்தே! நெடுந்தூரத்தே மீண்டும் மீண்டும் அந்த ஒற்றை ஆள்காட்டியின் அவலக் குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. s
கடையின் எதிர்ப்புறம் இருந்த ஒரு மடத்தின் படிக்கட்டுகளில் "டொக் டொக் கென்று தன் கைத்தடியை தட்டியபடி வெளியே வந்த நொண்டிப் பண்டாரம் பாதையோரத்தில் நின்றுகொண்டே ஒன்னுக்கிருந்தான். முன்புறம் தேநீர் கடைத் தட்டி திறந்து கண்பதிப்பிள்ளை பாதையில் இருப்பதை அவதானித்து.
‘என்னா! கணபதிசாமி தூக்கம் வரல்லியா?" என்று கேட்டவாறே திரும்பி படிக்கட்டில் ஏறி மடத்தினுள் போய் மறைகையில் 'மாமா! வெளில பணி பெய்து உள்ளுக்கு வாங்க!" என்ற கெளரியின் குரல் கேட்டுத்

3.
திரும்பிய கணபதிப்பிள்ளைக்கு கடை வாசலில் உடை மாற்றி நின்றிருந்த நின்றமாதக் கர்ப்பிணியான கெளரி யின் தோற்றம் தனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் இப் படித்தான் இருப்பாளோ? இப்படித்தான் அழைப் பாளோ! என்று எண்ணத்தை எழுப்பியது.
இவள் எங்கோ போகின்றவள் தன்னைப் பார்த்து விட்டு போக வந்தவளா? இல்லை போக்கிடமின்றி தன்னையே சரணம் என்று கூற வந்திருப்பவளா?
எதுவுமே இல்லாமல் இவ்வளவு காலமும் குடும்பம்பெண்-பிள்ளை என்று எதுவுமே இல்லாமல் இருந்தஇருந்து வருகின்ற தனக்கு இப்படி ஒரு பந்தமா? அல்லது சொந்தமா? அப்படி ஏற்படப் போகின்றதா? தலை சுற்றியது. வரதாப் பாட்டியின் மிச்சங்கள் அந்த போத் தலில் இன்னும் இருக்கின்றது. இப்போதைக்கு அது மிகவும் தேவை. அது நடு மேசையில் இருக்கின்றது. கெளரி என்ன நினைப்பாள்? அது சரி, கெளரி என்ன நினைத்தால் எனக்கு என்ன? கணபதிப்பிள்ளை உள்ளே வந்தார். 参
கெளரி வெகு உரிமையுடன் எல்லாச் சேர்ற்றையும் இருதட்டில் போட்டு மேஜையில் வைத்து கையில் தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு முன் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவளா இவள்? கணபதிப்பிள்ளைக்கு ஆச்சரிய மாக இருந்தது.
முதன்முதலாக தன் பாட்டி'ஒரு அஸ்தமனத்தில் அஸ்தமனமாகிய பின் ஒரு பெண் உணவு பறிமாற மேசை யில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அந்த போத்தலில் எஞ்சி இருந்த சாராயத்தையும் ஒரு கிளாஸில் ஊற்றி அவர் முன் வைத்தபோது, அவர் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கையில், அவள் தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித் தாள். தலைநிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்

Page 18
32
அவளைப்பார்க்கையில் அவளுடைய வயிற்றுப் பசியின் தீவிரம்-அக்கினி அவருக்குப் புரிந்தது.
அந்தப் புதிய இடத்தில் தனியாக அந்தக் கடையினுள் பாய்விரித்து கெளரி படுத்து இருட்டில் தன்னை எண்ணிதன் விதியை எண்ணி பெருமூச்செறிந்தபோது தன் தாய் சரசு தன் அந்திம காலத்தில் திணறித் திணறி கூறியது இன்னும் மனதினுள் நிழலாடின.
* அம்மா! கெளரி, நம்ம குடும்பம் இப்படியே நாசமாப் போச்சி! ஒன் புருஷன இனி நம்பாதே ஒங்க அக்காளுக மாதிரி, நீயும் ஒடம்ப விக்கப் பார்க்காதே! முன்னேஸ்வரத்துல கணபதிப்பிள்ளைன்னு ஒருத்தரு தேத்தண்ணி கட வச்சிகிட்டு இருக்கிறாரு. அவருகிட்ட போய் நான் சரசுவோட புள்ள கெளரின்னு சொல்லு மனுசன் புள்ள மாதிரி காப்பாத்துவாரு, அப்பிடி அந்த மனுஷன் அங்க இல்லன்னா வந்து சமுத்திரத்துல குதிச்சிடம்மா! சமுத்திரத்துல குதிச்சிடு!"
தன் தாயை நினைக்கையில் - அவள் இறுதிகாலத்தை நினைக்கையில் துயரம் நெஞ்சில் ரணமேற்படுத்தியது. அந்த இருளில் மெளனமாக அழுதாள். இவரும் இல்லா விட்டால், சமுத்திரத்தில் தான் பாய வேண்டும். நல்ல வேளை சமுத்திரத்தில் பாயாமல் இந்த மனுஷர் காப்பாற் றினாரே!
கணபதிப்பிள்ளை வாசலில் - ஒரத்தில் தன் சாக்குக் கட்டிலைப் போட்டு, பனிக்கு பாதுகாப்பாக கீழிறங்கி யிருந்த முன்புற படலைத் தட்டியை உயர்த்தி வைத்து. கட்டிலில் அமர்ந்தபடி பீடி ஒன்றைப் புகைத்தபடி தூரத்து இருளை வெறுமையோடு ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார். சரசு இருக்கிறாளா? அல்லது..? மேற்கொண்டு நினைக்கவே, கஷ்டமாக இருந்தது.

33
காலையில் ஆசுவாசமா கெளரியிடம் பேச வேண்டும் என்று தீர்மானம் செய்து, லேபில் வரை எரிந்து மோட மொடத்த பீடித் துண்டை வீசிவிட்டு, கோயில் கோபு ரத்தை நோக்கி ஒரு கும்பிடு போட்டு கட்டிலில் நன்றாக குளிருக்கு பாந்தமாக ஒரு முரட்டுத் துணியை போர்த்திக் கொண்டு படுத்தார். -
தூக்கம் வரவில்லை. தேர்முட்டி வளைவில் இருந்து தெருநாய்கள் ஒன்றையொன்று விரட்டி விளையாடிக் கொண்டு கடைவாசலைக் கடந்து ஓடின கணபதி தன் வயதை எண்ணிக் கொண்டார். அம்பது, பிந்தி இருக்கும்.
ஆனால் தோற்றம் மட்டும் ஏன்? எழுபது மாதிரி. ஏன்? நூறுவயது-மாதிரி மாறினாலும் யாருக்கு...என்ன? தானே வலிந்து வரித்துக் கொண்ட முதுமையின் விலாசம், தாடி 'வளர்த்ததினால் பெயரின் அந்தத்தில் ஒட்டிக் கொண்ட சாமியார் GT65 p அங்கீகாரம், இத்யாதி நிகழ் கால எண்ண அலைகள் மெல்ல மெல்ல அருக கணபதிப் பிள்ளையின் மனம் எத்தனையோ வருடத்துக்கு பிற்பட்ட விசயங்களை அலச ஆரம்பித்தது. தூக்கம் வரும் வரை அலசிக் கொண்டேயிருந்தார்.
2
அந்த நகரத்தின் இதயப் பகுதியில் இருந்து விலகி கடற்கரையை ஒட்டிய நீண்ட நெய்தல் நிலம், மோட்டார் என்ஜினின் கரங்கள் நீண்டு பிளாஸ்டிக் படகுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆழியில் சமர் புரியத் தொடங்காத காலம். சமுத்திரத்தின் கரையை அண்டி ஆயிரக்கணக் கான மீனவ மக்களின் குடிசைகளும், ஏக்கங்களும், எதிர்
3 ----ز6p(U

Page 19
34
காலத்தில் சுபீட்சமான கனவுகளும் அந்த சமுத்தி ரத்தையே நம்பி, கட்டுமரங்களில் துலாக்காய் பாதிகளில் மனித சக்தியையே முதலீடாக வைத்து போராடிய காலம்.
அந்தப் பிராந்தியம் ஒரு குடாவைப் போல் அமைந்த தினால் ‘குடாப்பாடு' என்ற நாமகரணத்துடன் அழைக் கப்படலாயிற்று. கிறிஸ்துவ தேவாலயங்களும், பள்ளிக் கூடங்களும் அருகருகே அமைந்து சமய உணர்வையும், கல்வியறிவையும் அந்த நிலம் வாழ் மீனவ சிறுவர் சிறுமி யருச்கு ஊட்டி வந்தன.
எனினும் அவர்களில் கூடுதலானோர் ஏட்டுப்படிப்பில் கவனம் செலுத்துவதை விட சமுத்திரத்தில் திசைதேடும்இரவில் நட்சத்திரங்களை வைத்து நேரம் அறியும் கடலின் திரவியமாம் கடல் படு பொருட்களை ஆழியோடு போராடிப் பெறுகின்ற தொழில் வல்லமையுடைய அறிவையே விரும்பினர்.
அந்த நெய்தல் நிலத்தில், இரு புறமும் தென்னை மரங்கள் விசாலித்து வளர்ந்திருந்த கடற்கரைப் பாதை யின், ஒரு ஜனவரி மாதத்து விடியற்காலையில் பதினேழு வயது நிரம்பிய கணபதி தன் பள்ளிக் கூடத்து, அந்த ஒருடத்து ஆரம்ப தினமான அன்று வெகு உற்சாகமாக அங்கிருந்து சுமார் ஒருமைல் தூரத்தில் இருந்த, சைவ மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைந்திருந்த ஒரு தமிழ் வித்தியாலயத்தை நோக்கி நடந்து சென்று கொண்டி ருந்தான்.
அவன் மனதில் அன்று அவன் அமரப்போகும் புதிய வகுப்புப் , புதிய பாடங்களும், புதிய புத்தகங்களும் ஒரு வர்ண வர்ணமான கனவுகள் போல் புரண்டன.
ஒரு அழகிய விநாயகர் கோயிலின் முன்னால் அந்த வித்தியாலயம் வழக்கத்துக்கு மாறாக மிகப் பொலிவோடு காணப்பட்டது. புதிய-புதிய மாணவ மாணவிகளை

35
அழைத்துக் கொண்டு வந்திருந்த பெற்றோர்களும்எங்கெங்கிருந்தோ அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்த ஒரிரு புதிய ஆசிரியர்களும், எல்லா விசயங்களுமே கணபதிக்கு மிக உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிப் பதாக இருந்தது.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் பள்ளிப் பருவம் போல சுவைமிக்க பருவம் கிடையாது. வயது முதிர்ந்த காலங்களிலும், கடந்த கால எண்ணங்களை இரை மீட்டுகையில் முதலிடம் வகிப்பது பள்ளிப் பருவ காலமே!
அந்தப் புதிய வகுப்பறையே அவனுக்கு மிக அற்புத மானதொரு அழகை வெளிப்படுத்தியது. கடந்த பத்து வருடங்களாக அவன் அந்தப் பள்ளிக் கூடத்திலேயே படித்து வந்தாலும், ஒவ்வொரு வருட ஆரம்ப நாளிலும் ஒரு புதிய இடத்தில் இருப்பதைப் போன்ற சுகானு பவத்தை அனுபவிப்பான்.
அந்தக் காலை நேரத்தில் வகுப்பறை ஜன்னல் ஊடாக, வீசிவரும் அரச மரத்தடிக் காற்றும், ஒற்றைக் குயிலின் கூவல் ஒசையும், பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் ஒடிய நீண்ட கால்வாயில் செல்லும் பெரிய கூரைப் படகு களை இழுத்துச் செல்லும் இழுவைகாரர்களின் ஏலேலோ பாடலின் மெல்லிய ஸ்தாயியும், ஏன், பாதையில் செல்லும் சைக்கிள் வண்டிக்காரனின் கிணிங் - கினிங் என்ற மணி யோசையும், எல்லாமுமே பேரின்பமானதாக இருந்தது அவனுக்கு. w
கரும்பலகை புதிய கருமையில் பளிச்சென்றிருந்தது, வெள்ளை மட்டும் தானா பளிச்சென்றிருக்கும்? கரும் பலகைக்கும் மேல் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்தில், தலைப்பாகையுடன் கைகளை மார் பின் மீது குறுக்காகக் கட்டிக் கொண்டு, இந்த உலோகாயுதத்தில் ஊடுருவி நிற்கும் மாயைகளை சுட்டெரிக்கும் ஞானக் கண்ணோடு

Page 20
36
பார்த்துக் கொண்டு இருக்கும் சுவாமி விவேகானந்தரின் அற்புதமான தோற்றப் பொலிவு.
அந்த வகுப்பில் பழைய, புதிய மாணவ மாணவி களின் இரைச்சல் ஒரு ஸப்த ஸ்வர ராகங்கள் போல் மகிழ்ச்சியெனும் உணர்வு மிக்கதாய் ஆத்மாக்களின் இன்ப கீதங்களாய் எழுந்து விரிந்தன.
அப்போதுதான் அவன் அந்த புதிய அவளைக் கண்டான். அந்த வகுப்பின் புதிதாக வந்து சேர்ந்த மாணவி அவள். அவளைக் கண்டு வியந்தான். .
அவன்-அவளது உருண்டு, அடிக்கடி மிரண்டு ஏதோ தேட முயற்சிக்கும் கண்களின் அழகைக் கண்டு வியந்தான். ஏதோ விசயமாக எழுந்து நின்ற அவளின் நீண்ட பின்னலைக் கண்டு வியந்தான். அடிக்கடி ஏதோ ரகஸ்யம் பேச முயற்சித்து, வார்த்தைகளை மறந்து விட்டதைப் போன்ற பாவனையில் ஒட்டிப் பிரிந்த மெல்லிய உதடு களைப் பார்த்து வியந்தான். அடிக்கடி அங்குமிங்கும் சரேலனத் திரும்புகையில் மனதை அலைக்கழித்த காதில் தொங்கிய பளபளக்கும் தொங்கட்டானைக் கண்டு வியந் தான். பேசும் போது கூர்ந்து அவதானிப்பதை வெளிப் படுத்த தலையைச் சற்று சரித்து கண்களை அகல விரித்து இதற்கு வியக்க வேண்டும் என்று அவள் வியந்தபோது, அவளைக் கண்டு இவன் வியந்தான் பொங்கிப் பெருகும் சிரிப்பை அடக்கமாட்டாமல், ஒற்றைக் கையால் இதழ் மூடி கீழ் ஸ்தாயியில் அவள் சிரித்தபோது இவன் வியந் தான்.
அந்த இரண்டுங்கெட்டான் பருவத்தில், மனதில் ஏதா ஒர் உணர்வு அவன் நடுமுள்ளந்தண்டு வழியாக மேல் எழுந்து, சிரசில் வியாபித்து, உள்ளத்து வீணையின் கம்பிகளை ஸ்ருதி சேர்த்து இழுத்து பெயரறியா ராகங்க சளை மீட்ட முற்பட்டு அதற்கு முன்னுரை போலும்,

37
அவளைப் பார்த்து அவன் வியந்து கொண்டிருந்த நேரத் தில், அவன் அந்த கணபதியின் பாட்டி பொன்னாச்சி யம்மா சமுத்திரக் கரையில் நின்று ஒரு கிழிந்த பையுடன் தூரத்தே புள்ளிகளாய்த் தெரியும் - கரைநோக்கி மீன் களுடன் அல்லது வெறுமனே வரும் கட்டுமரங்களைப் பார்த்து; இந்தப் பெரிய சமுத்திரத்தில் இத்தனை சிறிய புள்ளிகளா? என்று வியந்து கொண்டிருந்தாள்.
வலையில் பிடிபட்ட மீன்களைப் பொறுக்குவது அவளுடைய அன்றாடத்தொழில். அந்தக் கிழவி பொன்னாச்சியம்மாவின் கனவெல்லாமே சிறுவன் கணபதி தான்.
தன் ஒரே மகள் வயிற்றுப் பேரனை இடுப்பில் சுமந்து கொண்டு நெஞ்செல்லாம் கடந்த கால காப்புகளையும், இழப்புகளையும் நிகழ்கால தரித்திரத்தின் நிதர்சனங் களையும், எதிர்கால கற்பனைகளையும், மனசில் சுமந்து கொண்டு ஒரு காலைப் பொழுதில் தன் ஐம்பதாவது வயதில் இந்தச் சமுத்திரக் கரையில் வந்து நின்று மிகவும் நிர்க்கதியான நிலையில் ஒரு வேளை சோற்றுப் பருக் கையே மகத்தான பிரச்சினையாய் யோசித்துக் கொண் டிருக்கையில், அந்த கடலோரத்தை ஒட்டிய மாதா கோயிலின் சுவாமியார் கடலோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். கருணைக்கு உறைவிடமான கர்த் தரின் உருவம் பொறிந்த பெரிய சிலுவையை மார்பில் சுமந்து கொண்டு வந்த அந்த தாடி நரைத்த வயோதிகச் சுவாமியார் இந்தப் பொன்னாச்சியம்மாவையும், இடுப்பில் இருந்து விழித்துக் கொண்டிருந்த குழந்தை யையும் பார்த்து இவர்கள் இந்த இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று யூகித்து, 'தாயே! ஏன் ஒரு சிறு குழந்தை யோடு இந்த சமுத்திரக் கரையில் நிற்கின்றாய்?’ என பச்சாதாபமுடனும், ப்ரிவுடனும் கேட்க இவள் ‘சாமி!' என்று ஏதோ சொல்லப்புகுந்து மேற்கொண்டு சொல்வது தெரியாமல் விழிக்க அறிவும் - ஞானமும் கொண்ட

Page 21
38
சுவாமியார் புரிந்து கொண்டேன் என்பது போல் புன் முறுவல் சிந்தி தூரத்தே கட்டுமரத்தில் வலை தெரித்துக் கொண்டிருந்த ஒரு கறுத்த நடுத்தர மனிதனை நோக்கி "அந்தோனி!' என விளித்தார். தன்னன. சுவாமியார் அழைப்பதை உணர்ந்த அந்தோனி எனும் மீனவன் தன் பக்கத்தில் அமர்ந்து மீன்களை கூடையில் அடுக்கிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் ஏதோ கூறிவிட்டு ஓடி வந்து சுவாமியாரைப் பார்த்து முழங்காலிட்டு நெற்றியில் சிலுவைக் குறிப்பிட்டு ஸ்தோத்திரம் சொன்னான்.
“அந்தோனி இந்த அம்மாவையும் இந்தக் குழந்தை யையும் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை என்று கூறியவாறு அவ்விடம் விட்டு நகன்றார் சுவாமியார்.
தேவனே வானத்தில் இருந்து இறங்கி வந்து தன்னைப் பாதுகாத்த தாய் - தனக்கொரு நல்ல மனிதர்களை இனங் காட்டித் தந்ததாய் எண்ணி, அவர் அந்த சுவாமியார் போகும் திசையை நோக்கி இரு கரமும் கூப்பி ‘முருகா" என்று உருக்கமுடன் வணங்கினாள் அவள்.
இவையெல்லாம் நடந்து முடிந்து போன பழைய விசயங்கள். ஒ! பழைய விசயங்கள் தான் எனினும் அதில் தான் எவ்வளவு தூரம் மனிதத்தன்மை இரக்கம்-மனித மேம்பாடு? இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் வேறுபடினும் பரஸ்பரம் மானுடம் என்ற கூரையின் கீழ் ஒன்றுபடும் போது..?
பேரன் கணபதி இன்று அதிகாலையிலேயே எழுந்த எவ்வளவு உற்சாகமாக பள்ளிக்கூடம் போனான். கிழவிக்கு ஆனந்தமும், பெருமையும் பீறிட்டது. அதிகாலையில் எழுந்து குளித்து விபூதி பூசி புதிய புத்தகங் களை அடுக்கிக் கொண்டு "ஆச்சி! நான் போயிட்டு வர்றேன்!” பேரன் துள்ளிக் குதித்து ஒடிய காட்சி.
“யேசுவே!" பொன்னாச்சியம்மா கர்த்தரை அழைத் தாள் இப்போது முருகனுடன் கூடவே யேசுவையும்

39
துணைக்கு அழைப்பாள். அவள் அப்படி செய்வது அந்தோணி குடும்பத்துக்கு செய்யும் பிரதியுபகாரம் என்று தன் வரை யோசித்தாள், எனினும் அந்தோணி குடும்பம் கணபதியை கிறிஸ்தவனாக்கி ஞானஸ்நானம் செய்வீக்க முயன்றபோது அவள் அதை எதிர்க்க அந்தோணி குடும் பத்தாரும் மிகப் பெருந்தன்மையுடன் அந்தக் கருத்தை கைவிட்டனர்.
அந்தச் சுவாமியாரின் பெயர் பிரான்ஸிஸ் சுவாமியார் அவருடைய அந்திமகாலம் கிட்டியபோது அந்தப் பகுதியே துக்கத்தில் மூழ்கியது. அவருடைய இறுதிப் பயணத்தின் போது கிழவி பொன்னாச்சியம்மா அழுது புரண்டது வேடிக்கையாக பலருக்குத் தெரிந்த போதும், அந்தோணி குடும்பத்திற்கு மட்டும் அவள் துயரத்தின் தாற்பர்யம் புரிந்தது.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் கிழவி 'முருகா! முருகா! என்னக் காப்பாத்துன சுவாமியை கடவுளைக் கொண்டு போயிட்டியேடா’ என்று புலம் பியதேயாகும்.
அதுசரி, எவருக்கு எவருக்கு எது எது புரியும் என்று எவருக்குப் புரியும்? அதன் பின் ஒய்வு கிடைக்கும்போ தெல்லாம் அருகாமையில் இருக்கும் அந்தச் சுவாமியாரின் கல்லறைக்கு சென்று அதைச் சுற்றி வளரும் காட்டுச் செடி களை புல் பூண்டுகளைப் பிடுங்கி, மலர் சாத்தி அதை ஒரு தூய இடமாக வைப்பாள். சிலருக்கு இவைகள் எல்லாம் வேடிக்கை அல்லது பைத்தியக்காரத்தனம் போலிருந்து போகட்டும் மானுடம் எங்கே வாழ்கிறது என்று அவர் களுக்கு புரியவில்ல்ையோ! அதுசரி, யாருக்குத்தான் புரியும்? h−
அன்றைய பகல் கணபதி மிகவும் உற்சாகமாக வீட்டுக்கு வந்தான். இன்னும் பொன்னாச்சிக் கிழவி சமைத்து முடிக்கவில்லை. சாலை மீன் குஞ்சுகள்

Page 22
40
வெங்காயம், பச்சைமிளகாய் இன்ன பிற நண்பர்கள் சகிதம் அடுப்பேற ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.
அந்தோணியின் முத்த மகள் ஸ்டெல்லா பெரிய சீத்தைத் துணியைப் போர்த்திக் கொண்டு முன் தினம் இரவு தியேட்டரில் "பார்த்த் ஒரு திரைப்படத்தின் கதையை கிழவியிடம் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண் டிருந்தாள். கிழவி நேரம் போய்விட்டதே என்ற விசா ரத்தில் அவளுடைய கதைக்கு உம் கொட்டியவாறு தன் வேலையில் முனைந்திருந்தாள்.
வழக்கமாக பள்ளிக்கூடம் முடிந்து வரும்போதே "ஆச்சி! பசிக்குது!’ என்று குரல் கொடுத்துவரும் கணபதி அன்று அப்படி ஆச்சிக்கு தொல்லை தராமல் உடைமாற்றி வெகு உற்சாகத்தோடு பின்புறப் சமுத்திரக் கரைக்கு ஓடி னான் தூரத்தே சமுத்திரத்தின் பகல் நேர சாலை பிடிக்கப் போகும் போய்த்திரும்பும் கட்டுமரங்களும் அவைகளின் உப்பிய பாய்களும் வெகு வினோதமாகத் தோன்றின.
பஞ்சுப் பொதிகள் அற்ற துல்லியமான நீல நிறம் தொடுவானம் வரை விவரித்திருந்தது. அந்தக் கொதிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் இரண்டொரு கடற் பறவைகள் வானத்தில் இலக்கின்றிப் பறந்து விர்ரென்று இறங்கி சமுத்திர நீரில் மிதந்தன.
இரண்டொரு சிறுவர்கள் முழு அம்மணமாக கட்ல் நீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வயதான கிழவர்கள் ஒரு தென்னை மர நிழலில் அமர்ந்து வலை பொத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத் தில் ஒரு சிரட்டையும் சிறிய முட்டியொன்றில் கள்ளும் இருந்தன.
கணபதி இவைகளை மிகவும் ரசித்தான். காலையில் புதிய வகுப்பறையில் தன்னை வியப்புக்குள்ளாக்கிய அந்த புதிய மாணவியின் பெயர் சரஸ்வதியாம். அவன் கடலைப்

41
பார்த்து இரண்டு தடவை சரசு! சரசு’ என்று அழைத்துத் திருப்திப்பட்டுக் கொண்டான்.
பொன்னாச்சியம்மாவுக்கு இந்த சமுத்திரத்தைப் பார்க்கையில் சில நேரம் கோபம்ாயும், சில நேரம் துக்க மாயும் வரும். ஆக்ரோஷமாக வந்து கரையை அடித்து நொறுக்குவதைப்போல ஒரு சமயம் தன் கோபத்தைக் காண்பித்து, மீனவர்களின் கட்டுமரங்களை கவிழ்த்து கோரத்தாண்டவம் ஆடி, மனைவிமார்கள்ன், தாய்மார் களின், பிள்ளைகளின் சாபங்களை ஏற்று, அதன் பின் தானே அமைதியாக மாறி சின்னஞ்சிறிய அலைக்கரங் களால் கரையைத் தடவி அரவணைத்து சமாதானப் படுத்தி.! ஏன் இந்த ஆக்ரோஷம்? ஏன் இந்த அமைதி: யாருக்காக கோபிக்கின்றாய்? யாருக்காக மெளனம் சாதிக் கின்றாய்? மெளனமாக இருக்கையில் அடியில், ஆழத்தில் அழுகின்றாயோ? நீயும் இந்த சாதாரண மனுஷர்களைப் போலவா? இந்த அந்தோணியின் மனைவி ஜொசபினை போலவா? மனிதர்கள் அஞ்ஞானிகள் உனக்கென்ன வந்தது? ஏ! விவஸ்தை கெட்ட சமுத்திரமே.
கணபதிக்கு ஒரு பெருமை. அதன் பெயர் இந்து
சமுத்திரமாம், தானும் ஒர் இந்து, இந்த சமுத்திரமும் ஓர் இந்து. பள்ளிக்கூடத்தில் இந்து சமய பாட் ஆசிரியர்கள் இந்துக்களைப் பற்றி, அவர்கள் மேன்மைகளைப் பற்றி எப்படியெல்லாம் நாட்கணக்கில் படிப்பித்திருப்பார்கள்.
ஓ! நீங்கள் உங்கள் கடவுளை உங்கள் அர்ச்சய சிஸ்டர் களை வேண்டிக்கொண்டு என்னுடைய இந்து சமுத் திரத்தின் மீதல்லவா உங்கள் கட்டுமரங்களை செலுத்து கின்றீர்கள். கணபதி சில நேரங்களில் இப்படி தப்புத் கப்பாக யோசிப்பான். அது அவன் கடைப்பிடித்த மதத்தின் பால் ஏற்பட்ட அதீதமான பிடிப்பினாலேயே ஒழிய வேறொன்றுமில்லை.

Page 23
42
இப்போது நாள் தவறாமல் கணபதி பள்ளிக்கூடம் போகின்றான். உடைகளை நேர்த்தியாக அணிந்து கொள்கிறான். மணிக்கணக்கில் கண்ணாடியின் முன் நின்று தலைவாரிக்கொள்கிறான். பெரிய மனுஷதோர ணையில் பேசுகின்றான். முன்போல் வெடித்துச் சிதறும் சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கி புன்முறுவல் பூக்கின் றான். முக்கியமாக தன் வகுப்பு மாணவர்களிடம் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறான்.
ஏன்? ஏன்?
ஆம்! கணப்தி அந்த வகுப்பில் தன்னோடு கல்வி பயிலும் சரஸ்வதி என்கின்ற சரசுவைக் காதலிக்கின்றா னாம்!
கணபதியின் கற்பனைக் குதிரையை அடக்க, தறி கெட்டு ஒடும் விவஸ்தையற்ற எண்ணங்களுக்கு தடை போடும் தடைக்கல்லாக அந்த வருட இறுதியில் அந்த வித்தியாலயத்தில் வழக்கமாக வரும் பெற்றோர் தினவிழா வந்தது. அவ்விழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் களை கட்ட ஆரம்பித்தன. எல்லா வகுப்புகளும் ஒவ்வோர் கலை நிகழ்ச்சியை அந்தந்த வகுப்பாசிரியர்களைக் கொண்டு அரங்கேற்ற வேண்டும்.
பத்தாம் வகுப்பிற்கு தரப்பட்ட நிகழ்ச்கி ராதா கிருஷ்ணன் நாட்டிய நாடகம் கணபதியின் வகுப்பாசிரியர் சர்மா நாட்டியம் - இசை இவற்றில் நல்ல தேர்ச்சி உடை யவர் வகுப்பில் பாடம் நடக்கும் போதெல்லாம் தன் பூணுரலை சட்டைக்கு வெளியே தெரியும்படி இழுத்து விட்டு தன் கோத்திரத்தின் மகிமையை, பெருபையை வெளிப்படுத்துவார். அவருக்கு என்னமோ வகுப்பில் சரஸ்வதி என்றால் கொள்ளைப் பிரியம். கூப்பிட்டு

43
அழைத்து மிக வாத்ஸல்யத்தோடு பேசுவார். பேசும் போது கைமட்டும் சும்மா இருக்காது. “சரசு! சரசு!" என்று மிகப் பாசமுடன், அன்புடன் அபிநயங்கள் சொல்லித் தருவார். ராகங்களைப் பற்றிக் கூறுவார். ஒரு பெண்மை மிளிரும் லாவகத்தில் கால்களை மாற்றி, மாற்றி வைத்து நடனம் பழக்குவார் சில நேரங்களில் சரசுவை அணைத்து உச்சி முகர்ந்து 'இவள் என் பெயரைக் காக்கும் சிஷ்யை’ என்று கூறுவார். இவை யெல்லாம் பார்க்கும்போது கணபதிக்கு மகா எரிச்சல் ஏற்படும். சரசுவிற்கும் சர்மா மாஸ்டர் என்றால் மிகவும் சந்தோஷம். தினமும் சர்மா மாஸ்டர் வீட்டுக்கு சரசு நாட்டியம் பயிலச் செல்வாள். சர்மாவின் மனைவியும் ஒரு ஆசிரியையே V
சரசு நாட்டியம் பயில்வதில் கணபதிக்கு மிகவும் கோபம். தனியாக அந்த சமுத்திரக் கரையில் அமர்ந்து அலையில்லாமல் மந்தகாசமாகத் தவழும் கடலை வெறித் துக் கொண்டிருப்பான்.
இறுதியாக யார் கண்ணன் வேடம் என்ற கேள்வி எழுந்த போது கணபதி மிக அவசரமாக எழுந்து நின்று "மாஸ்டர் நான் கண்ணன் நாட்டியம் ஆடவா?’ என்று பரபரப்புடன் கேட்டான்.
வகுப்பே 'ஹோ' வென்ற இரைச்சலுடன் சிரித்து அதிர்ந்தது. விபரம் புரியாமல் எழுந்து நின்ற கணபதி வெகுண்டான். எல்லாவற்றிற்கும் மேலாக முன் வரிசை யில் அமர்ந்திருந்த சரஸ்வதி தன் பொங்கி வரும் சிரிப்டை அடக்க முடியாமல் ஒற்றைக் கையால் வாய்மூடி கண் கலங்க பக்கத்தில் அமர்ந்திருந்த சக மாணவியின் தோளில் சாய்ந்து, இந்த நகைச்சுவையை தன்னால் எப்படித்தாங்க முடியும் என்ற பாவனையில் குலுங்கினாள்.
ஆசை இருக்கு ராஜாவாக, அதிரஷ்டம் இருக்கு கோழிபேய்க்க மாஸ்டர் மிக விஸ்தாரமாக வர்ணித்துக்

Page 24
44
கொண்டு கணபதியின் அருகில் வந்து நின்று ஏதோ இப்போது தான் அவனை முதன் முதலாகப் பார்ப்பது போல் பாவனை காட்டி அவனுடைய கறுத்த மெலிந்த உருவத்தை விமர்சிப்பதுபோல் அபிநயம் காட்ட முழு வகுப்புமே சிரிப்பில் மூழ்கி நிர்த்தாட்சண்யமாக அவனை ஒதுக்க, மகத்தான சோகத்துடனும், மகத்தான சுய வெட் கத்துடனும் அவன் தன் இருக்கையில் அமர்ந்து சரசுவின் ப்க்கம் பார்க்கையில் அவள் இன்னும் அதே போன்று குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள்
எவ்வளவுதான் புத்திசாதுரியம் இருப்பினும், விவேகம் இருப்பினும், கல்வியில் ஆழமான பிடிப்பும்- அதன் பயனும் சிந்திப்பினும் அவசரமான முடிவுகளினாலும், அர்த்தமற்ற ஆவேசத்தினாலும் பலருடைய வாழ்வு பாதாளத்தை தேடி ஒடும். இதை ஒரு வகையில் அந்தந்த மனிதனின் விதி அல்லது கர்மா என்று கூறலாம். இந்த விதியோ கர்மாவோ அல்லது எந்த எதுவோ அந்த நிமிடம் கணபதி வாழ்க்கையில் மிகக் குரூரமாகத் தாயக் கட்டையை உருட்டி விட்டது.
அந்த நிமிடமே, அந்தக் கணமே, இனி இந்த வகுப்பினுள் நுழைவது இல்லை என்று தீர்மானித்து தன் புத்தகங்களை எடுத்து எழுந்து செல்லப் புறப்பட்ட கணபதியை நோக்கி இப்படி எழுந்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய ஹாஸ்யம் என்பதைப் போல எல்லோரும் சிரிக்க, எல்லோரையும் நன்றாக ஒருமுறை பார்த்த கணபதி எடுத்த புத்தகங்கள் எல்லாவற்றையும் மீண்டும் மேஜையிலேயே வைத்துவிட்டு தனியாக எழுந்து அவசர மில்லாமல், கண்கலங்க அந்த வகுப்பை-தன் சக மாணவ மாணவிகளை தன் பள்ளிக்கூட உற்ற நண்பனான சிரித்துக் கொண்டிருக்கும் வேலாயுதத்தையும் பார்த்து கைகூப்பி மெளனமாக ஒரு துயரமான கவிதையொன்று எழுந்து போவதைப் போல வெளியே போனான்.

45
பக்கத்து அறைக்குப் போய்த் திரும்பிய சர்மா மாஸ்டர் விசயத்தை கேள்விப்பட்டு திடுக்கிட்டார். ஏனெனில் இப்படி நடக்கும் என எவரும் எதிர்பார்க்க வில்லை. இப்போது அந்த வகுப்பறையில் ஒருவித குற்ற உணர்வுடன் கலந்த மெளனம் நிலவியது. வெகு நேரம் சர்மா மாஸ்டர் பென்சிலைக் கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தார். தானே போய் அவனை அழைத்து வருவதாகத் தீர்மானித்தார். s
எனினும் அதன் பிறகு-அவன் அந்த கணபதி அந்த வகுப்பறைக்குள் நுழையவே இல்லை! 2 ܕܚ
கணபதி பள்ளிப்படிப்பை முறித்துக் கொண்டான். எவ்வளவு தூரம் பொன்னாச்சிக்கிழவி துருவித் துருவி கேட்டபோதும் அவன் எதுவிதமான காரணங்களையும் கூறாது சமுத்திரக்கரையில் அலைந்து கொண்டிருந்தான். வானத்தை வெறித்தான். அந்த வான வர்ண ஜாலங் களை ரசித்தான். சிலநேரம் மீனவச் சிறுவர்களுடன் நொண் டியடித்து விளையாடினான். நேரம் போவது தெரியாமல் சமுத்திரத்தில் குளித்தான் எங்கேயோ பொறுக்கியெடுத்த முனை உடைந்த சிலுவையை நூலில் . கோர்த்து கழுத்தில் மாட்டிக் கொண்டான்.
ஒரிரு தடவை சர்மா மாஸ்டர் அவனை சந்தித்து அழைத்தும் தனக்கு படிப்பதில் ஈடுபாடு இல்லையென ஒதுங்கிக் கொண்டான்
கிழவிக்கு தன் இலட்சியமெல்லாம் உதிர்ந்து போவதையிட்டு மிகவும் துயரம் அதைவிட இனி1ே ல் கணபதியின் எதிர்கால வாழ்க்கை எப்படி ஆகப் போகின் றதோவென்ற நிரந்தரமான சோகம் கலந்த பயம்.
இழவியின் அந்தச் சிறிய குடிசை கடற்கரை ஒர மாகவே இருந்தது. பெரிய பாதையில் இருந்து ஒரு சிறு ஒழுங்கை வழி கடற்கரையை நோக்கிச் சென்றது. அந்த ஒழுங்கையின் அந்தத்தில் நீண்டு பரந்த கடற்கரை மணல்

Page 25
46
வெளி அந்த ஒழுங்கையின் அந்தத்தில் பக்கவாட்டில் பாதைக்கு முகம் காட்டிக் கொண்டிருந்தது. கிழவியின் குடிசை, நேராக வரும் ஒழுங்கை வழி பள்ளத்தில் விழுவதுபோல் ஜாலம் காட்டி அதன் பின் பாதையே இல்லாமலும் ம்ணல் வெளியும் அதைத் தாண்டி கடலுமே தென்பட்டன.
குடிசைக்கு எதிர்ப்புறம், பாதையின் மறுபக்கத்தில் ஒரு பெரிய தோட்டம் நல்ல விஸ்தீரணமான காணி தோட்டம் முழுவதும் அடர்ந்த விசாலமான மாமரங்கள், தானியின் நடுவில் ஒரு கல்வீடு அந்தத் தோட்டத்திற்கு மாந்தோட்டம் எனவும் வீட்டுக்கு மாந்தோட்ட வீடு எனவும் வெகுகாலமாக பெயர் நிலவி வருகிறது.
இறு வயதில் கணபதியும், அவன் வயதொத்த மீனவச் சிறுவர்களும் அந்த மாந்தோட்டத்தில் அத்துமீறிப் டிரவேசித்து மாங்காய் பிடுங்கித் தின்றிருக்கிறார்கள். கணபதி சிறுவயதில் பலமுறை இதற்காக கிழவியிடம் அ1. வாங்கியிருக்கிறான்.
அந்த மாந்தோப்பு வீட்டின் உரிமையாளர் தலை நகரில் எங்கோ இருக்கின்றாராம். அனேகமாக கூலிக்கு 3 டியிருப்பவர்களே அதிகம் அந்த மாந்தோப்பு வீட்டில் எத்தனையோ குடும்பங்கள் நிரந்தரமில்லாமல் ஏதோ ஒரு க! லத்தில் இருந்து - விலகி போயிருக்கின்றன. அந்த வீட்டின் ராசியோ என்னவோ எந்தக் குடும்பமும் நிலைத்து நின்றதில்லை.
கண்பதியும், அவன் நண்பர்களும் காலத்திற்கு காலம் அம்மாந்தோப்பில் திருட்டுத்தனமாக மாங்காய் பிடுங்கி அப்பப்போதைய குடியிருப்பாளர்களிடம் வசவையும் திட்டுக்களையும் வாங்கியிருக்கின்றார்கள்.
ஷ்ரு நாள் கணபதிக்கு அந்த வீட்டை - அதன் தோட் டத்தை பார்க்கும்போது வியப்பும், மகிழ்ச்சியும் இரட்டிப் பாகியது. காரணம் ஒன்றுமில்லை. கணபதியின் பள்ளிப்

47
படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க காரணமாகவிருந்த சரஸ்வதியும், அவள் குடும்பமும் ஒரு சுபயோக சுபதினத் தில் அந்த வீட்டிற்கு குடிவந்தார்கள். அவர்கள் வந்த அன்றே கணபதியின் பாட்டி அவர்களின் வருகையை வெகு அலங்காரமாகவும், விஸ்தாரமாகவும் கணபதி யிடமே வர்ணித்தாள்.
'டேய் கணபதி எங்கட மாந்தோட்ட வீட்டுக்கு புதுசா நம்ம சனம் குடி வந்திருக்கு. நல்ல சனங்க வீட்டில பொங்க வச்சி எங்களுக்கும் பொங்கச் சோறு குடுத்து இருக்காங்க!”
கணபதி எழுந்து அடுப்புக்கரியை மென்று பல்லைத் துலக்கிய வண்ணம் வாசல் பக்கமாக வந்து முனிசிபல் பைப்படியில் நின்று அந்த மாந்தோப்பு வீட்டை நோக்கும்போது, தான் மானசீகமாக நேசித்த அந்த சரஸ்வதி, தன் சகோதரியுடன் தாங்கள் இருக்கப்போகும் புதிய வீட்டை மிக மகிழ்ச்சியுடன் சுற்றிச் சுற்றிப்பார்த்து குது கலித்துக்கொண்டிருந்தாள்.
பாதையோரத்து குழாயில் ஒரு முறை வாயைக் கழுவி நிமிர்ந்த கணபதியைக் கண்ட சரஸ்வதி சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கணபதியையும், அவன் அங்கு அருகாமையில் தான் இருக்கிறான் என்பதையும் பரிந்து கொண்டு ‘கணபதி! நாங்களும் இஞ்சதான் வந்து ட்டோம்' என உற்சாகமாகக் கூறினாள்.
அந்த உற்சாகமான குரலினால் இழுபட்ட கணபதி தன் முகத்தை அந்தக் குழாய் நீரினால் கழுவிக்கொண்டு அந்த வீட்டின் முன்புறம் போகையில், ஜெரோம் கிழவன் தன் வலையில் எதுவித மீனும் பிடிபடாத சோகத்தில் மாதாகோயில் கோபுர சிலுவையை நோக்கியபடி மிகவும் உருக்கமான குரலில் ஒரு சோக மயமான டயலோக் பாட் டொன்றைப் பாட ஆரம்பித்தான். அந்தப் பாடல் வரிகள்

Page 26
48
ஒரு மீனவன் தன் வறுமையைக் குறித்து பிரலாபிப்பதாக அமைந்திருந்தது.
“இது கணபதி என்னோட ஒன்னாப் படிச்சது’* கணபதியை தன் மூத்த சகோதரிக்கு அறிமுகப் படுத்தி னாள் சரஸ்வதி. தாவணி போட்டிருந்த அவள் தம்க்கை ஒரு சிறு புன்முறுவலுடன் கணபதியைப் பார்த்து நட்புடன் சிரித்தாள்.
இப்போது அடிக்கடி அந்த மாந்தோப்புத் தோட்டத் தின் பக்கமாகவே கணபதி அடிக்கடி தென்படுகிறான். வர்ண குலசூரிய விக்டோரியா முதலாளியின் லொறிகளில் மீன்பெட்டிகள் ஏற்றும்போது எடை நிறுத்து இனம் குறித்துபட்டியல் போடுவது கணபதியின் வேலை
ஆம்! கணபதி இப்போது விக்டோரியா முதலாளியின்
மீன் வாடியில் ஒரு கணக்கப்புள்ளை, பள்ளிப்படிப்பை முறித்து கொண்டு இரண்டு வருடம் போய்விட்டதே!
“கணபதியா! ரொம்ப நல்ல பிள்ளை நம்பத்தகுந் தவன், ஒரு சதத்துக்குக்கூட ஒழுங்கா கண்க்கு காட்டு வான்' - இது விக்டோரியா முதலாளியின் அத்தாட்சிப் பத்திரம்.
'நம்பட கணபதியா! அசல் பொடியன் டாலன்ஸ்ல மீன் நிறுத்தா நாம்ப பார்க்க தேவல்ல கணபதி என்னா நம்பளப் போல கசிப்பா குடிச்சிய" - இது மீனவர்களின் புகழுரை.
எப்படியோ ஒரு நல்ல தொழிலாளியாக - ஒரு நல்ல மனிதனாக ஒரு நல்ல பிள்ளையாக கணபதி அந்தப் பகுதி யிலேயே பிரக்யாதி பெற்றான்.

49
சரஸ்வதி குடும்பத்துடனும் சகஜமாகப் பழகினான். தினமும் சரஸ்வதிக்கு சிறுகதைப் புத்ததங்கள் கொடுத் தான். சில நாவல்கள் கொடுத்தான். தான் தப்பும் தவறு மாக எழுதிய கவிதைகளை படித்துக் காட்டினான். இலக்கிய பாடத்தில் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தான்.
ஒரு நாள் தன் மனதுள் புகைந்து கொண்டிருந்த எல்லா உணர்வுகளுக்கும் எழுத்துவடிவம் கொடுத்து தன் ஆசைகளை விளக்கி - தன் பவுத்திரமான அன்பை வரி களாக்கி ஒரு கடிதத்தையும் கொடுத்தான்
‘தம்பி கணபதி இஞ்சவாங்க!" - சரஸ்வதியின் தசப் பனார் எங்கோ மலைநாட்டு நகரில் டெக்ஸ்டைல் வைத் திருந்தவர். ஏதோ பிரச்சினையால் இந்த நகரத்துக்கு வந்து நிரந்தரமாகி டவுனில் கடை வைத்திருப்பவர் மிகவும் அமைதியாக - பாந்தமாக கணபதியை அழைத் 35 TT.
ஐஸ்போட்ட மீன் பெட்டிகளை சுமந்த வண்ணம் விக்டோரியா முதலாளி பின் லொறிகள் இரண்டாம்மூன்றாம் கியர்களில் அந்த ஒடுங்கிய ஒழுங்கை வழியாக மெயின் றோட்டுக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தன
கணபதி அந்த மாந்தோப்பு வீட்டு வாசலில் மிக கெளரவமாக அமைதியாக அழைக்கும் சரஸ்வதின் தகப்பனாரின் அழைப்பை ஏற்று முன் சென்று மார் பின் மீது இரு கைகளையும் கட்டியவாறு ஒரு மாணாக்கன் தன் ஆசிரியரின் முன்னே நிற்பதைப் போல வெகு பவ்யமாய் நின்றான்.
'தம்பி கணபதி! நான் நெனச்சன் நீங்க ஒரு நல்ல புள்ளன்னு. நீரும் ஒரு போக்கிரின்னு காட்டிட்டீங்க. என் மக சரசுக்கு நீங்க காதல் கடிதம் எழுதிக் கொடுத்
ஒரு-4

Page 27
50
திருக்கீங்க. என்ன செய்ய, இது என் ஊரா இருந்தா நடக்கிறது வேற”
கணபதி பேசாமல் நின்றிருந்தான். அந்த மாந் தோப்பு வீட்டின் ஜன்னல் ஊடாக சரஸ்வதியின் - அவள் சகோதரியின் கேலி பொங்கும் சிரிப்பு விகCக்கும் முகங்கள் தெரிந்தன.
'சரி போனது போகட்டும். இதுக்குப் பொறகாவது இனி ஒழுங்கா நடக்கப்பாரும்! ம். இதுக்குப் பிறகு இஞ்ச வரவேணாம்'
கணபதி அளவு கடந்த அவமானத்தோடும் மன உளைச்சலோடும் சமுத்திரக் கரையை நோக்கி நடந்தான். சமுத்திரத்தில் எண்ணற்ற கட்டுமரங்கள் எதுவித் கவலை யும் இன்றி, மயக்கத்துக்கு வலை உலுக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தன.
விக்டோரியா முதலாளிக்கு நல்ல அதிர்ஷ்டமான காலம். அவரிடம் குத்தகைக்கு கடலோடும் எல்லா
மீனவர்களுக்கும் சமுத்திரமாதா அள்ளியள்ளிக் கொடுத் தாள் தினமும் ஏழெட்டு லொறிகள் ஐஸ்போட்ட மீன் பெட்டிகள் தலை நகர் மீன் கடையை நோக்கிப் பயண மா பின. கணபதிக்கு லீவே கிடையாது. பெரிய தராசில் மீன்களை நிறுப்பதும், பெட்டியடிக்கும் சிவலிங்கத்தோடு ஒனே கபூர்வமாக வேலை வாங்குவதும், குடிவெறியல் வரும் ஜெரோம் கிழவனின் டயலோக் பாடல்களை கேட்டு அனுபவிப்பதும் எல்லாமே ஒரு மகிழ்ச்சியூட்டும் அற்புத அனுபவங்களாகின.
. சமுத்திரம் சில காலங்களில் சீறிற்று. தன் பயங்சர மான அலைக்கரங்களினால் கரையைத் தீண்டி இப் பூமியையே இல்லாமல் ஆக்குவேன் என்று சண்டித்தனம் செய்தது. சில காலங்களில் இதெல்லாம் பொய்-நானா

5.
இப்படிச் செய்தது. பைத்தியமா! என்பது மாதிரி மெல்லிய அலைகளுடன் மெளனவிரதம் காத்தது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புத் துறைமுகம் நோக்கிப் பயணமாகும் பெரிய சம்பான்கள் (சம்பான்-பல பாய்களையுடைய பெரிய பாய்மரக்கப்பல்) காற்று இல்லையே என்று தங்கள் பாய் மரங்களை இறக்கிவிட்டுக் கொண்டன.
பிறகு அதன் பிறகு - சீறிப்பாயும் காற்றின் உக்கிரத் தினால் எல்லாப்பாய்மரங்களும் நிறைமாத கர்ப்பிணி களாக, சம்பான்கள் புறப்பட்டன.
காலம் மாறிமாறிக் கடந்தது. தவழ்ந்தன நடந்தன. ஓடின~பறந்தன.
கணபதி இந்தக் கால ஓட்டத்தில் சிக்குண்டு அந்தக் கடற்கரையை ஒட்டிய பெரிய தென்னந்தோட்டத்தில் விக்டோரியா முதலாளியின் வாடியில் பணி புரித்தான்.
எப்போதாவது சரஸ்வதியை சந்திக்க நேரும்போது வெறுமையாக இது என் இயல்பே என்னுமாற்போல் புன்னகைப்பான்.
இப்போது சரஸ்வதி தாவணி போட்டுவிட்டாள். சரஸ்வதியின் தமக்கை திருமணம் முடித்து எங்கோ போய் விட்டாள். ,
சரஸ்லதியின் தகப்பனாருக்கு வியாபாரத்தில் ஏதோ கஷ்டமாம். அப்படி ஒரு கேள்வி அதை நிரூபிக்கும் வகையில் அந்த வருடம் தீபாவளி உற்சவம் கூட மிகவும் சிக்கனமாகத்தான் நடந்ததாம். தீபாவளிக்கு சரஸ்வதியின் தமக்கையும் அவள் புருஷனும் வரவில்லை. இவையெல் லாம் கடற்கரையில் வலையில் மீன் தெறிக்கும் சிறுமிகள்பெண்கள் மூலமாக கணபதி அறிந்து கொண்ட செய்திகள். ,

Page 28
52
இப்போதெல்லாம் அடிக்கடி மாந்தோப்பு வீட்டில் சண்டைகளும் சச்சரவுகளும் ஆரம்பித்தன. சரஸ்வதி தினமும் நன்றாக உடையணிந்து டவுனுக்கு போய் வரலா னாள்.
ஒரு நாள் அது மிகவும் மறக்க முடியாத நாள் கணபதிக்கு. மாந்தோப்பு வீடு இரண்டு பட்டது. சரஸ்வதியின் தகப்பனார் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இரண்டு முறை கடலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்தார். பலர் பாய்ந்து அவரைக் காப்பாற்றினர். தன்னை யாரும் காப்பாற்று வார்கள் என்ற நம்பிக்கையில் அவர் மீண்டும் மீண்டும் கடலில் பாய முயற்சித்தார்.
விசயம் வேறொன்றுமில்லை. அவர் மகள் சரஸ்வதி டவுனில் கடை ஒன்றில் டிரைவராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவனை காதலித்து, பல எதிர்ப்புகளி னிடையில் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண் டாளாம். இதில் முக்கிய அம்சம் என்னவெனில் கந்தசாமி வெள்ளாளன் இல்லையாம்.
விட்டின் நடு ஹாலில் மிக விஸ்தாரமாக கை நீட்டி தான் மேஜர் என்பதைப் பிரகடனப்படுத்தி, இந்த ஜாதி யையே பழிவாங்குவது போல சரஸ்வதி கேள்வி மேல் கேள்வி கேட்க, அதை ஜிரணிக்க முடியாத அவளின் தந்தை தன் மகளை கை நீட்டி அடிக்கப்பாய -
மாமனாரே! நேற்று வரை சரசு உங்களுடைய மகள் இன்று என்ட மனுஷி கதைக்கிறத கதையுங்கள் கை நீட்டுற விசயம் வேணாம்' சரஸ்வதியின் கணவ னாகிவிட்ட கந்தசாமி ஒரு கையில் சிகரெட்டும், ஒரு கையில் நுனி வேஷ்டியுமாக ஸ்டைலாக நின்று சினிமாப் பாணியில் கூறிய பாவனையை ஜெரோம் கிழவனின் மனைவி அதே போன்று அபிநயித்து பலமுறை கடற் கரையில் நடித்துக் காட்டினாள்.

53.
“பட்ட காலிலே படும் கெட்டகுடியே கெடும் இந்தப் பழமொழிக்கு ஒப்ப மாந்தோப்பு விட்டு சோபனங்களும் பெருமைகளும் ஒவ்வொரு நாளும் குறைய ஆரம்பித்தன.
வழக்கம் போலவே கணபதி எதுவித விசாரமும் இல்லாமல் விக்டோரியா முதலாளியின் வாடிக்கு செல்
ou i Gö7 . w
அலைகடலில் மிதந்துவரும் படகுகளின் உரிமை ய:ளர்களின் தேடல்களை புத்தகத்தில் ஒழுங்காக எழுது வான், தலைநகர் செல்லும் வண்டிகளுக்கு ஒழுங்காக சாமான்களை ஏற்றுவான். வார இறுதியில் விற்பனை யாளர்களிடம் இருந்து கணக்கு வழக்கு முடிப்பான். மறக் காமல் பகல் - இரவு பாட்டிக் கிழவியின் உணவை அருந்து வான். சில நேரம் வீட்டில் படுப்பான். வாடியில் மீன்கள் ஐஸ்போட்டு பெட்டிகள் எஞ்சினால் வாடியில் படுப்பான்.
மிகச் சாதாரணமாகவே நாட்கள் கழிந்தன. அப்படிப் பட்ட ஒரு நாளில் சரஸ்வதியின் தகப்பனாரும் மிகச் சாதாரணமாக இரத்தக் கொதிப்பினால் போய்ச் சேர்ந் தார். எல்லோரையும் போலவே கணபதியும் அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டான் சரஸ்வதியின் தமக்கை தன் தந்தையாரின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள வரவில்லை. காரணம் யாருக்கும் தெரியாது. எல்லாமே அமைதியாக நடந்தது. ஒன்றைத் தவிர.
மயானத்தில் நாவிதன் கிரியைகள் செய்யும்போது சரஸ்வதியின் புருஷன் கந்தசாமி ‘இதென்ன அப்பிடி இதென்ன இப்படி" - என்று சாஸ்திரங்களில், சம்பிர தாயங்களில் குறை கண்டுபிடித்து ஆடினானாம். அப்போது கந்தசாமி நிறைவெறியில் இருந்ததாகக் கேள்வி.
ஜெரோம் கிழவனுக்கு நல்ல வளமான குரல். செபஸ் தியார் கோயில் டயலோக்கில் வரும் ஒவ்வோர் பாடல்

Page 29
54
*ளையும் பாடும்போது அவன் அந்தந்தப் பாத்திரங்" களாகவே மாறிவிடுவான். சில நேரம் துயரமிகுதியால் அவன் குரல் கம்மும். அப்போது பாடும் பாடலை இடை நிறுத்தி ஆழ்ந்து யோசிப்பான். 'கணபதி பாட்டு இசவா?" - என்று அடிக்கடி கேட்பான். கணபதியும் மிகவும் ரசித்து 'ஆஹா' என்று சிலாகிப்பான். சில நேரம் ஜெரோம் கிழவன் ஒரு தீர்க்கதரிசியைப் போல 'புள்ள யோவ்! நம்பட ஆக்கள நம்பாதே! ஒரு நாளைக்கு உனக்கும் அடி இரிக்கி' - என்பான்.
கணபதியின் பாட்டிக் கிழவிக்கு தன் பேரன் தன் பள்ளிப் படிப்பை பாதியில் முறித்துக் கொண்டது பற்றி ஆரம்பத்தில் மிகவும் மனோவியாகூலம் ஏற்பட்டதே யாயினும், பின்னர் கணபதி விக்டோரியா முதலாளியிடம் சேவகம் செய்ய முற்பட்டு, அதன் மூலம் வருவாயும். மதிப்பும் பெருகியதன் காரணமாக, இப்பிடி நிகழ்ந்ததே நன்று என தனக்குள் மகிழ்ந்து, தன்னைச் சுற்றியுள்ள வர்கள் எல்லோரும் தன் பேரனை என்னமாய் மதிக்கின் றார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியும் - பூரிப்பும் அடைந் தாள். இப்படிப்பட்ட மகனையும் - அவன் மதிப்பையும் பார்க்க இவன் தாய் கொடுத்து வைக்கவில்லையே என காலரா நோயினால் மாண்டுபோன தன் மகளை எண்ணி வருந்தினாள்.
எல்லாவற்றிக்கும் கைகொடுத்த ஒரு தெய்வமே போலும் ஒரு நாள் இந்தக் கடற்கரையில் தன்னை - தன் இடையில் இருந்த "மழலையைப் பார்த்து பாசத்துடன் சிரித்த பிரான்ஸிஸ் சுவாமியாரை நினைத்துக் கொள் 65AFT (6T.
பாட்டிக் கிழவிக்கு இப்போது முன்போல ஒடியாடி வேலை செய்ய முடிவதில்லை. எனினும் எப்படியாவது பகல் நேரம் கணபதிக்கு சமையல் செய்து வைப்பதில் ஒரு பிரீதி. கணபதிக்கும் ஒரு கல்யாணம் செய்து வைத்து

55
விட்டால்..? கிழவிக்கு என்னமோ - அந்தோணியின் கடைசி மகள் ஜெஸ்மின் மீது ஒரு வாரப்பாடு முருக னாவது யேசுவாவது எல்லாம் ஒன்றுதான். தனக்கு வசதி யாக எல்லாவற்றையும் தீர்மானிப்பதில் - யோசிப்பதில் கிழவிக்கு நிகர் கிழவிதான்.
ஒரு நாள் இரவு கிழவி மேலோட்டமாக கணபதியிடம் அவன் திருமண விசயமாக ஆரம்பித்து மிகவும் விஸ்தார மான பீடிகையுடன் சுற்றுச் சுற்றி வந்து காரியார்த்தமாக அந்தோணியின் கடைசிமகள் ஜெஸ்மினைப்பற்றி புகழ்ந்த போது, கணபதி தன் இயல்பான அமைதியையும் மீறி “எதெத எப்படி எப்படி யோசிக்கறதுன்னு ஒரு இது இல்லியா!' - என்று பாய்ந்தான்.
கிழவி வெகுண்டு போய் குடிசையினுள் பதுங்கிக்
கொண்டாள்.
கணபதி மிகவும் கஷ்டப்பட்டு கிழவிய்ை மீண்டு சகஜ் நிலைமைக்கு கொண்டு வந்தான்.
5
நாட்கள் போகப் போக எல்லாமே ஒவ்வொரு கோணங்களிலும் புதிய புதிய மாறுதல்களோடு செழிப் புற்றன. அல்லது பாழ்பட்டன.
கடற்கரையை அரிக்க ஆரம்பித்த கடல் அலைகளின் ஆக்ரமிப்பைத் தடுக்கும் முகமாக ஏதோ ஒரு பெரிய விதேசியக் கம்பெனி அந்தக் கரையில் த்ங்கள் பிரமாண்ட மான யந்திர உபகரணங்களோடு வந்து இறங்கியது. எங்கிருந்தோ பெரிய பெரிய கருங்கற்கள் வண்டி வண்டி யாக கொண்டு வரப்பட்டு கடற்கரை ஓரம் நெடுகிலும் போடப்பட்டன. •

Page 30
56,
இப்போதெல்லாம் கட்டுமரங்களைக் காணமுடிய வில்லை. பிளாஸ்டிக் படகுகள் போட்டி போட்டுக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டன. எந்த நேரமும் கடற்கரை மின்சார ஒளியில் மூழ்கித் திளைத்தது. விக்டோரியா முதலாளியின் வாடியிலும் ஒளி வெள்ளம் முழு இரவும் பரவியது. சரஸ்வதியின் கணவன் கந்தசாமி அங்குள்ள அதிகாரிகளையும் தரகர்களையும் பிடித்து அங்கு கருங்கற்கள் ஏற்றி இறக்கும் வண்டி ஒன்றுக்கு சாரதியானான்.
வெளிநாட்டுக் கம்பெனி ஆனபடியினால் சம்பளமும் எச் கச்சக்கமாகக் கிடைக்கவாரம்பிக்க எல்லோருக்கும் அவரவர்களின் தேவைகளும் பெருக ஆரம்பித்தன. எல்லோருடைய கையிலும் பணம் தாராளமாகப் புழங்க ஆரம்பிக்க அந்தப்பிராந்தியத்தில் சின்னஞ்சிறு கடைகள் சட்டவிரோதமாகச் செயல்படும் சாராயக் குடிசைகள் எல்லாமே புதிது புதிதாக முளைக்கவாரம்பித்தது.
சரஸ்வதியின் தாயாரும் காலமாகிய பின் அந்த மாந்தோப்பு வீடு தனக்கு அதிகபட்சம் என்று கருதியோ என்னவோ அந்த வீட்டைவிட்டு கந்தசாமி சரஸ்வதி தம்பதியர் தங்கள் மூன்று பெண் குழந்தைகளுடனும் கடற்கரையை ஒட்டிய ஒரு ஒலை வீட்டில் தங்கள் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர். எனினும் மாந்தோப்பு சரசு என்ற பெயர் மட்டும் சரஸ்வதியை சிக்கெனப் பற்றிக் கொண்டது.
பகல் முழுவதும் கஷ்டப்பட்டு வண்டியோட்டும் கந்தசாமி இரவில் தன் உடம்பு அலுப்பிற்காக கொஞ்சம் சாராயம் குடித்தால் என்னவாம்? பாவம் அது தான் எவ்வளவு கஷ்டப்படுது என சரசு பரிதாபப்பட்டாள். கந்தசாமியும் தினந் தினம் தன் உழைப்புக்கு தகுந்த விதமாக சாராயத்தை ஊத்தி ஊத்தி இப்போது பகல் இரவு இருபோதும் குறைந்தது இரண்டு போத்தல்களாவது வேணடும் என்ற நிலைக்கு வந்துவிட்ட்ான்.

57
தொழிலாளர்கள் கூடிவிட்ட காரணத்தினால் இப் போது கந்தசாமிக்கு அதிகமாக ஒவர் டைம் வேலை கிடையாது. அனேகமாக எட்டு மணித்தியால ஊதியம் தான். அந்தக் கவலையின் பிரதிபலனாக சிலநேரங்களில் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்தது. சர்சுவிற்கு குடிபோதையில் கந்தசாமி மூலம் அபிசேக ஆராதனைகளும் நடக்கவாரம்பித்தன.
இப்போது சரஸ்வதியின் உடையிலும் மிகுந்த மாறுதல் ஏற்பட்டுவிட்டது. அவளும் அந்தப்பகுதி பெண்களைப் போலவே இடுப்பில் சீத்தைத் துண்டும் ரவிக்கையும் போட ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய (12த்த மகள் . எட்டு வயது ஆகியும் இன்னும் மூக்கில் இருந்து வழியும் எச்சிலை நாக்கினால் நக்கியவாறு கடற்கரை வழியே விளையாடித் திரிகிறாள். இரண் டாவது மகளுக்கு ஆறுவயது. அவளும் தன் அக்காவுக்கு துணையே போலும் அதேபோலத் திரிகின்றாள்.
மூன்றாவதும் பெண் குழந்தைதான் பிறக்கும்போதே கால் ஊனமுற்றுப் பிறந்தவள். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் ஒன்றும் பலிக்கவில்லை. இருந்த இடத்தில் இருந்தே கையூன்றிப் பாய்ந்து பாய்ந்து நகருபவள், நான்காவதாக சரசுவின் வயிற்றில் ஆறு மாதங்கள் இன்னும் சில மாதங்களில் இந்தக் கடற்கரைக்காற்றை மீன் நெடியை - அனுபவிக்க பிரமாண்டமான யந்திரங் களின் ஒலியைக் கேட்டு வியக்க - பயப்பட - வெளியே உதிரம் புரள வரும் பிள்ளை ஆணா? பெண்ணா? குருடாசப்பாணியா? வீட்டில் தலை வாயிலில் அமர்ந்து தூரத்தே சமுத்திரத்தைப் பார்த்தபடியே யோசிப்பாள் சரஸ்வதி.
சில நேரங்களில் கடற்கரையில் கணபதி தென்படு வதுண்டு இப்போதெல்லாம் அவனை அவள் பார்க்கும் பார்வையில் ஒரு மதிப்பும் மரியாதையும் கலந்திருந்தது.

Page 31
58
கணபதி சில நேரங்களில் வியப்பான் . இவளிடம் இருந்த துடிப்பும் - லாவகமும், சில்மிஷங்களும், மறக்க முடியா - விளக்க முடியா பாவனைகளும், தோற்றச் சிதறல்களும் எங்குற்றன? வியப்பினுாடே பரிதாப முறுவான். ஏனெனில் தற்போதைய சரசுவின் வாழ்வும், தாம்பத்ய உறவின் விபரங்களும் அவனுக்கு அவன் விரும் பியோ, விரும்பாமலோ எட்டி வருகின்றன!
இரவு வெகு நேரம் வரை விழித்து வேலை செய்யும் காரணத்தினால் கணபதி சிகரெட் புகைக்கப் பழகிக் கொண்டான். அதற்கு இரவு வேலை மாத்திரம் காரணம் அல்ல. அந்தப் பகுதியில் கடலரிப்பை தடுக்கும் முகமாக வந்து பாடியிறங்கியிருக்கும் விதேசியக் கம்பெனியின் அரவணைப்பும் காரணம்தான்.
ஒரு நாள் முனிசிபல் குழாயடியில் கால் கழுவிவிட்டு கணபதி நிமிர்ந்தபோது சரசு தன் சப்பாணிப்பிள்ளையை இடையில் இருத்தி ஒரு குடத்துடன் நீர் கொண்டு செல்ல வந்திருந்தாள். கணபதி மரியாதை கருதி ஒதுங்கி நின்று குடத்தில் நீர் பிடிக்கக் கொடுக்கையில், அவள் நீர் பிடித்த வாறே ‘என்னா கணபதி!' என்று விளித்து அதே ஏக தோரணையில் 'கணபதி! நீ சிகரட்டப்புடி ஆனா சாராயத்தை மட்டும் பழகிறாதே!' என்று கட்டளை யிடும் பாவனையில் கூறிவிட்டு அகன்றாள்.
அந்த நேரம் கணபதிக்கு அவளைப் பின்னின்று தலை முடியை இழுத்து கீழே வீழ்த்தி அவள் முகத்தில், மார் பில் தன் கால்களினால் ஓங்கி மிதித்து அவளை துவம் சம் செய்துவிட வேண்டுமென்ற ஆத்திரம் எழுந்தது, எனக்கு சிகரெட் குடி சாராயம் மட்டும் குடிக்காதே! என்று கூறு வதற்கு - புத்தி சொல்வதற்கு இவள் யார்? இவள் யார்?
அந்த ஒழுங்கையால் தண்ணீர்க் குடம் சுமந்து செல்லும் அவளின் பின்புறத் தோற்றமும், இடுப்பில்

59
இருந்தபடியே இவனை நோக்கும் சப்பாணிப் பிள்ளையின் ஒடுங்கிய பார்வையும், எண்ணெய் கண்டு பல நாட்க ளாகிய சரசுவின் பரட்டைத் தலையும்.? கணபதி தன் ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டு விக்டோரியா முதலாளியின் மீன் வாடியை நோக்கினான். தூரத்தே சிவலிங்கம் பலகைப் பெட்டிகளில் ஐஸ் நிரப்பிக் கொண்டி ருந்தான்.
தூரத்தே வெகு தொலைவில் கடலும், வானமும் முத்தமிடும் நேர்க்கோட்டில் சமுத்திர மங்கை வெண் பனிப் புஷ்பக் கோடுகளாக மேலே எழுந்து கொண்டி ருந்தாள்.
கடலரிப்பைத் தடுப்பதற்காக வந்த அந்த வெளி நாட்டு நிறுவனம் தங்கள் பணியை அந்த மாகாணத்தில் முடித்துக் கொண்டு தென்னிலங்கை மாகாணத்தில் தங்கள் பணியைத் தொடரச் சென்றுவிட்டனர். கந்தசாமிக்கு காலி, மாத்தறை பக்கம் போக விருப்பம் இல்லை. இலேசான பயமும் கூட. அவன் போகவில்லை. சரசு சென்று விக்டோரியா முதலாளியிடம் மிகவும் இரக்கமாக வேண்டிக் கொண்டதின் பேரில் மீன் வாடி லொறி ஒன்றுக்கு சாரதியானான். அதுவும் வேலை நேரம் சாராயம் குடிக்கக் கூடாதென்ற ஒப்பந்தத்தின் பேரில்.
கொழும்புக்கு லொறியில் ஐஸ்பெட்டிகளில் மீன் ஏற்றி எடுத்துச் செல்லும் வேலை. மீன்பெட்டி நிறுவை யிடுவது, ஏற்றுவது, கணக்கெடுப்பது எல்லாம் கணபதி தான் நாளடைவில் கந்தசாமியும், கணபதியும் தொழில் முறையில் சினேகிதர்களாகினர். w
ஒருநாள் இரவு நிறைவெறியில் தள்ளாடிய வண்ணம் வாடிப்பக்கம் வந்த கந்தசாமி கணபதியைப் பார்த்து “ஹலோ! கணபதி ஹெள ஆர் யூ?" என்றான். கணபதி

Page 32
60
புன்முறுவலுடன * 6røö aðirr கந்தசாமியண்ணே தண்ணியா?" என்றான். "ஆமா! நல்ல தண்ணி, வேணு மின்னா நீரும் குடிச்சிப் பாரும்' - என்று கடகட வென்று சிரித்துப் பின் முகத்தை தீவிரமாக வைத்து 'தம்ப ! கணபதி நீரும் ஒரு நாள் என் மனுசி சரசு வை ட்றை பண்ணிப் பார்த்தீர் தானே!" என்று கேட்டான்.
அந்த நேரம் வாடியில் யாருமே இல்லை. கணபதி ஒன்றும் பேசவில்லை. அந்தக் கடற்கரை இருளில் வாடி யில் குடிவெறியில் தன்முன்னே பேசும் கந்தசாமியை வெறித்து நோக்கினான். இதை யார் சொன்னது? வேறு யார்-சாஸ்வதியாகத் தான் இருக்கும். புதிய திருமண கிளுகிளுப்பில் ‘அந்தா! அந்த ஆள் கணபதிப் பயல்கூட எனக்கு காதல் கடிதம் எழுதித் தந்தான்' சரசு தன் மதிப்பை தகைமையை மெருகேற்றி எடுத்துக்காட்ட அவனிடம் கூறியிருக்கக்கூடும்.
'ஐசே! லவ் பண்றது ரொம்ப சீப் சப்ஜெக்ட் இப்ப நீர் என்ட மனுஷிய ஒரு காலத்துல லவ் பண்ணிப் பார்த்தீர்' ஆனா அவ உம்ம ஒதுக்கிட்டா இது சிம்பிள். அது சரி நீர் ஏன் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறீர்?"
கணபதிக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. கந்த சாமியின் அத்துமீறிய பேச்சுக்களும் தன்னை - எடை போட அவனாகவே எடுத்துக் கொண்ட சுதந்திரமும் “கிந்தசாமியண்ணே! நான் இந்த எடத்துல வேல செய் றவன். நீங்க எங்கட லொறி ட்ரைவர். இது மட்டும் தான் இங்கு அவசியம், உம்மோட அதிகம் எதப் பத்தியும் பேச எனக்கு விருப்பம் இல்ல”
கந்தசாமி எழுந்து பீடி பற்றவைத்துக்கொண்டு அகன்றான். போகும்போது இருளில் ‘என்ன இருந் தாலும் இன்னம் இவனுக்கு என் மனுஷில ஒரு கண் தான்' என்று கூறிக்கொண்டே போனது கணபதிக்கு கேட்டது.
O

61
எல்லா அஸ்தமனங்கலையும் போலவே அன்றைய அஸ்தமனமும் வந்தது. ஆனால் ஒரு விசேஷத்துடன், கணபதியின் பாட்டிக் கிழ்வி அன்றைய அஸ்தமனத்தில் அவளும் அஸ்தமனமானாள்.
ஜெரோம் கிழவன் முழு வெறியில், கிழவியின் கடந்த காலத்தை பாடல் வரிகளால் ஒப்புவித்தான். விக்டோரியா முதலாளி முன்னின்று எல்லாவற்றையும் கவனித்தார். கணபதி மார்பில் நூலுடன் அம்பட்டன் சொல்லியபடி கொள்ளிக் குடத்தை இடது தோளில் ஏந்தி மூன்று முறை சவம் கொண்டு செல்லும் மோட்டார் வண்டியைச் சுற்றி வந்தான்.
சுடலையில், சிதையை மூன்று முறை சுற்றி வந்தான். சிதையைத் திரும்பிப் பார்க்காமல் ஒரு கரித்துண்டை அந்த விறகு அடுக்கினுள் திணித்துவிட்டு ஈரத்துடன் மயான வாசலில் வந்து எல்லோரையும் நமஸ்கரித்தான்.
அடுத்த நாள் காலையில் காடாத்து என்று சொல்லி அம்பட்டன், நண்பர்கள் சகிதப் கடற்கரை சென்று அம்பட்டனின் சங்குக்கு காசு போட்டு ஈரவேட்டியை கலைந்து, உலக்கையை தாண்டி குடிசையினுள் பிரவேசித் தான். தனிமையில் உத்திரத்தைப் பார்த்து வெறித்தான்.
இவை எல்லாவற்றிலும் இச்சடங்குகள் எல்லாம் எமக்கே தெரியும் என்ற ஹோதாவில் சரசுவும் - சந்த சாமியும் முன்னின்று ஆடினார்கள். எட்டாம் நாள் எட்டு வீடு என்று கோழிக்கறியும், ஆட்டுக்கறியுமாக சாராய போத்தல் சகிதம் காலஞ்சென்ற பாட்டிக் கிழவியின் வீடு திமிலோகப்பட்டது. ஜெரோம் கிழவன் நிறைவெறியில் "காயமே இது பொய்யடா’’ என்ற சித்தர் பாடலை அண்ணா வியார் பாடும் பாட்டு மெட்டில் பாடித் தொலைத்தான். சரசுவின் மூன்று பிள்ளைகளும் மூக்குச்சளி வடிவது கூடத் தெரியாமல்

Page 33
62
மிளகாய் உறைப்புடன் இறைச்சிக் கறியையும் சோற் றையும் ஒரு பிடி பிடித்தனர்.
தன்னைவிட்டால் கணபதிக்கு யாரும் இல்லை என்ற ரீதியில் கந்தசாமி எல்லாக் சாரியங்களையும் தானே தன் தலைமேல் இழுத்துப் போட்டுக்கொண்டு நல்ல வெறி யுடன் திரிந்தான். சரசுவும் நாங்கள் இந்துக்கள் என்ற மேன்மையுடன் தெரிந்தும், தெரியாமலும் எட்டுவீட்டு விருந்தை ஒரு மாதிரியாக ஒப்பேற்றிவிட்டு, இவ்வளவு விசயங்களுக்கும் தானும் தன் கணவன் கந்தசாமியுமே முக்கிய கர்த்தாக்கள் என்ற தோரணையில் சாயங்காலம் கடற்கரை ஓரத்தில் வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிய வண்ணம் சக பெண்களுடன் நீட்டி முழக்கி பேச ஆம்பித்தாள் கடற்கரையில் நிறைவெறியில் கந்தசாமி புரண்டுவிட்டான். அந்தோணி குடும்பம் மட்டும் அவனது குடிசையை சுவீகாரம் எடுத்து எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். விக்டோரியா முதலாளி ஒரு கவரில் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களை தனி த்மையில் கணபதியின் கைகளில் பொத்தி வைத்துவிட்டுப் போனார்.
வயிற்றில் பசியுமில்லாமல் சாப்பிடவும் முடியாமல் ஒரு சிகரெட்டை மட்டும் பற்றவைத்துக் கொண்டு குடிசையின் பின்புறம் வந்து நின்ற கணபதிக்கு, கடலரிப் புக்கு தடையாகப் போடப்பட்டிருந்த கற்குவியலின் பக்க வாட்டில் பல பெண்கள் புடைசூழ அடிக்கொருதரம் தன் தலையை சாய்த்து வெற்றிலை எச்சிலை துப்பிக் கொண் டிருந்த சரஸ்வதி தென்பட்டாள்.
என்றோ ஒரு காலத்தில் இவளை முதன் முதலாகக் கண்டு வியந்தது அவன் நினைவிற்கு வந்தது. அந்த நினைவு இப்போது ஏன் வந்தது என அவனுக்குப் புரிய வில்லை என்னும் அதே நினைவு மீண்டும் வந்தது. ஒரு வேளை அடிமனத்தாக்கமோ!

63
அன்று அவள் அடிக்கடி மிரண்டு ஏதோ தேட முயற் சிப்பதைப் போல விழித்த பார்வையைக் கண்டு வியந்தது. எழுந்து நின்றபோது, மார் பின் மீது விழுந்து இடைவரை சரிந்த பின்னலைக் கண்டு வியந்தது. ஏதோ ரகஸ்பம் பேச முயற்சித்து வார்த்தைகளை மறந்து விட்டதைப் போல ஒட்டிப் பிரிந்த உதடுகளைப் பார்த்து வியந்தது. பேசும்போது கூர்ந்து நோக்குவதை வெளிப்படுத்த தலையை சற்று சரித்து கண்களை அகல விரித்து, அவள் வியந்தபோது இவன் வியந்தது. எல்லாமே அவன் நினைவில் ஒரு பழைய கவிதையே போலும் எழுந்து மறைந்தது.
எப்படியாயினும் அந்த சரஸ்வதி எங்கே! இவள் எங்கே! "
மன்னாரில் தொழில் செய்து வந்த சரஸ்வதியின் வீட்டுச் சொந்தக்காரர்கள் மீண்டும் இங்கேயே தொழில் செய்ய தீர்மானித்து பிளாஸ்டிக் படகுகளையும், வலை களையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர். அவர் களுக்கு அவர்களுடைய வீடு அவசரமாகத் தேவைப்பட கந்தசாமி-சரஸ்வதி குடும்பம் விக்டோரியா முதலாளியின் லாடிக்குப் பக்கத்தில் இருக்கும் குடிசை ஒன்றுக்கு குடி பெயர்ந்தனர்.
இப்போது சரஸ்வதி மீன்வாடிக்குப் பக்கத்தில் சிறு பெட்டிகளை அடுக்கி பலகாரக் கடைவைத்து விட்டாள். அந்தப் பிராந்தியத்து ஈக்களெல்லாம் சரசுவின் பலகாரத்தை ருசி பார்த்து அதை எல்லா வட்டாரங் களுக்கும் பிரபல்யப்படுத்த ஆரம்பித்துவிட்டன.
சரசு விற்கு ஒரு ஆதங்கம் எல்லோரும் தன்னிடம் இடியப்பமும், மஞ்சள் சோறும், மரவள்ளிக்கிழங்கும் சாப் பிடும்போது, கணபதி மட்டும் சந்திக் கடைக்குப் போய் முட்டை ரொட்டியும் கிழங்கு வறுவலும் சாப்பிட்டுவிட்டு வருவது.

Page 34
64
அது சரி மீன் வாடி கணக்குப் பிள்ளையின் அந்தஸ்து இந்தப் பெட்டிக்கடை சரசுவின் பலகாரக் கடைக்கு ஒத்து வருமோ! - சரசு எண்ணி சமாதான முறுவாள்.
ஏதோ ஒரு முறையில் கந்தசாமி கணபதியிடம் தன் ஆளுமையை நிலைநாட்ட முயற்சித்தான் என்ன மாதிரி? மற்ற வண்டிச் சாாதிகள் சணபதிக்கு பணிந்த போதுப் கந்தசாமி மாத்திரம் குடிவெறியில் கணபதியை மிகவும் கிண்டல் பண்ணி தான் அவனுக்கு சமதையானவன் என்று நிரூபிக்க முயற்சித்தான்.
கணபதியின் மீன் வாடிக்குப் பக்கத்திலேயே கந்த சாமியின் குடிசையும் இருப்பதால் தினமும் இரவில் அங்கே நிகழும் யுத்தங்கள் சம்பவாதங்கள் வாடியில் படுத் திருக்கும் இவன் காதிலும் விழும்.
ஆம்! பாட்டிக்கிழவியின் எட்டு வீடு முடிந்த பின்னர் கணபதி விக்டோரியா "முதலாளியின் மீன் வாடியிலேயே படுக்க ஆரம்பித்துவிட்டான். இப்போது அவன் மனம் மட்டும் கச்சான் காலத்து கடல் அலைகள் போல் அரைத் தென்னை உயரத்துக்கு உருண்டு புரள ஆரம்பித்தது.
காரணம் வேறொன்றுமில்லை. தினமும் இரவில் முழுக்குடிவெறியில் கந்தசாமி ஆடும் ஆட்ட மும், பேசும் பேச்சுக்களும்தான் நிறைமாத கர்ப்பிணியான சரசு பல நேரங்களில், இரவுகளில் அவனின் அடி உதை தாளாது கூச்சலிட்டாள். தன் பிறவியை எண்ணிப் புலம்பினாள். தன் சப்பாணி மகளுக்காக பிலாக்கணம் வைத்தாள்.
ஒருநாள் ‘அடியே.ச! எனக்குத் தெரியும்படி இப்ப ஒன்ட வயித்துல இருக்கிறது என்ட புள்ள இல்லன்னு.' கந்தசாமியின் கூக்குரல் அந்த மெளனமான நிசியைக் குலைத்தது.
'நாசமாய்ப் போனவனே!” சரசு தாங்க மாட்டாமல் அலறினாள்.

65
*ஒ! எனக்கு தெரியும் ஒன்ட வயித்துல இருக்கிற புள்ளைக்கி அப்பன் அந்தக் கணபதிதான்'
வாடியில் படுத்திருந்த கணபதிக்கு இதயத்தில் சுரீரென்று வலித்தது. எழுந்து சென்று அந்த சந்தசாமி பயலை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு உதைக்கலாமா என்று யோசித்தான். அதைத் தொடர்ந்து கேட்ட சரசு வின் குரல் அவன் ஹிருதயத்தை ஊனமாக்கியது.
"ஓ! அப்படித்தான் என்ட வயித்துல இருக்கிறது கணபதியோட புள்ள தான் இப்ப அதுக்கு என்ன?'
இதற்கு மேல் என்ன ஆவது என்ற ஆத்திரத்தில் எழுந்த ஆவேசமான அவளது பெய்யுரைகள்.
அதைத் தொடர்ந்து பானை சட்டிகள் நொறுக்கும் சப்தம் அடிவயிற்றில் உதைபட்டு அலறும் சரசுவின் ஒலமும், நடு இரவில் விழித்துக் கொண்டு புலப்பும் சப்பாணிப் பிள்ளையின் அழுகுரலும்.
இருப்பினும், இவையெல்லாம் சகஜமே என்பன போன்று அந்தக் கடற்கரை நள்ளிரவின் மோனத்தில் விழித்துக் கொள்ளவில்லை.
வெகு நேரம் கணபதி மீன்வாடியின் உத்திரத்தைப் பார்த்தவாறே விழித்துக் கொண்டிருந்தான். எங்கும் அமைதி. பக்கத்துக் குடிசையில் ஏதோ தற்காலிக அமைதி. ஒரு மோசமான புயல் உருவாகப் பேஈகின்றது என்ற எச்சரிக்கை போல, சப்பாணிக் குழந்தை மட்டும் விட்டு விட்டு தேம்பிக் கொண்டிருந்தாள்.
சரசுவின் குடிசை வாயிலில் மல்லாக்காக வந்து விழுந்த கந்தசாமி அடிக்கடி காறித் துப்பிக் கொண்டிருந் தான். யார் யாரையோ மிகவும் மோசமாகத்திட்டினான்.
அந்த இடத்திற்கு இது ஒன்றும் புதிய விசயம் இல்லை என்னுமாற் போல இரண்டு மீன்வக் கிழவர்கள் கங்கள்
ஒரு-5

Page 35
66
படகை கடலில் இறக்க 'ஏலோ" கூறினர். தூரத்தே எங்கோ அவலக் குரல் எழுப்பும் கடற்பறவைகளின் மெல்லிய சப்தத்துடன் ஒரு மோட்டார் படகின் சப்தமும் கலந்தது.
கணபதி எழுந்தான். வெளியே வந்தான். தூரத்தே இருளில் கடலின் இரைச்சலுடன் வெண்நுரைகள் கரையை நோக்கி ஓடிவருவது தெரிந்தது. சமுத்திரத்தின் கரை யோரமாக இடதுபக்கம் தூரத்தே தெரிந்த நகரத்துப் பகுதியில் மின் விளக்குகள் புள்ளிகளாய்த் தெரிந்தன.
மனம் மிகவும் கிலேசமடைந்திருந்தது. கந்தசாமியின் பொய்யான குற்றச்சாட்டுகளும், சரசுவின் பொய்யான, தனக்கு மாசு கற்பிக்கும் வாக்கு மூலமும், எல்லாமுமே கணபதிக்கு மிகுந்த அசூசையையும், அருவருப்பையும் ஊட்டின.
மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். கடற்காற்றின் வீச்சினால் சிகரட் நுனியின் நெருப்புக்கங்கு விசுவிசுவென பிரகாசித்து எரிந்தது.
6
பெளர்ணமி கழிந்து நான்காம் நாளான படியால் கடற்கரை முழுவதும் பின்னிலவின் ஒளிப்பிரவாகம் சொரிய ஆரம்பித்திருந்தது. கடற்கரையில் யாருமில்லை. இருந்த ஒரே ஒரு படகும் தடதடத்துப் போய்விட்டது. ஏழ்மைப்பட்ட ஒற்றைக் கட்டு மரம் ஒன்று மட்டும் ஒரு ஒற்றை மனிதனுடன் அலையை மீறிப் பயணமாக எத்தனித்துக் கொண்டிருந்தது.
கணபதி சிறிது தூரம் கடற்கரையில் நடந்தான். அலைகளை மிதித்தான். ஜெரோம் கிழவன் அதிகாலையில்

67
கடலில் இறங்க தன் கட்டுமரத்துக்கு பக்கத்தில் வலை யேற்றிவிட்டு படுத்திருந்தான். அவனுடன் தொழிலுக்குப் போகும் ஜோசேப்புக் கிழவன் வந்து எழுப்பும் வரை அவன் அப்படித்தான் படுத்துக்கிடப்பான்.
இந்த வாழ்வே ஒரு நிம்மதி போலும் என்று அந்த இரவில் அந்தக் கட்டுமரத்தினருகில் நின்று ஒரு கணம் யோசித்தான் கணபதி. .
அப்போதுதான் கணபதி அந்த நிகழ்ச்சியைக் கண்டான். அவன் கண்முன்னே கடற்கரை மேட்டில் இருந்து கடல் நீரை நோக்கி ஆர்ப்பரிக்கும் அலைக் கரங்களை நோக்கி அந்த உருவம் ஓடிக்கொண்டிருந்தது. பின்னிலவின் ஒளியில் ஒடுவது யார் என்று கணபதிக்குப் புரிந்துவிட்டது. வேறு யாருமில்ல சரஸ்வதிதான். அந்த நிறைமாத கர்ப்பிணிதான் தன் வாழ்வின் துயரங்களுக்கு முடிவைத் தேடும் உடாயமாக சமுத்திர மாதாவை நோக்கி ஒடிக்கொண்டிருந்தாள்.
கணபதி ஒரு கணமும் தாமதிக்கவில்லை. தன் நாலு முழ வேஷ்டியை மடித்துக் கட்டிய வண்ணம் ஒடி அவளை கரந்தொட்டுப் பிடித்து இழுத்து கரைமேடு வரை இழுத்து வந்து அவளின் முகத்தைப் பார்க்கையில், அடிபட்டும், அழுதும், வீங்கியிருந்த மேலுதடும், முகத்தின் விகாரமும் அவன் ஹிருதியத்தின் எங்கோ ஒரு மூலையில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தின. முதன் முதலாக அவள் கையைத் தான் பற்றிப் பிடித்திருந்ததை உணர்ந்தான் அவன்.
தன்னை விட்டுவிடும்படி முரண்டு பிடித்த சரஸ்வதியின் ஆவேசத்தை ஒரு பரிதாபமான புன்முறுவ லுடன் எதிர்கொண்ட கணபதி "கடல்ல. பாஞ்சிட்டா எல்லாம் முடிஞ்சிடுமா" என்று கூறிக்கொண்டு அவன் கரத்தை இன்னும் பலமாகப் பற்றி இழுத்தான்.

Page 36
68
“என்னை விட்டுடு கணபதி! நான் சாகப்போறேன்; ஒனக்குத் தெரியாது நான் படுற கஷ்டம்’ என்று அழுகை யும், புலம்பலுமாகக் கூறி தன்னைக் காப்பாற்றாமல் விட்டு விடுவதே தனக்கு செய்யும் உதவி என்பதைப்போல் இறைஞ்சினாள்.
திடீரென்று அந்த பளபளக்கும் நிலவொளியில் அவளை இழுத்து அவள் முகத்தை தன் கண் எதிரே நிறுத்தி, ஆக்ரோஷம் பொங்கும். கண்களோடும், பட படக்கும் உணர்வுகளோடும் 'சரக ! நீ கடல்ல விழுந்து சாகவேணாம். வேணுமின்னா நானே ஒன், கழுத்த நெரிச்சி கொன்று போடுறேன்’ என்று முதன் முதலாக, அவளை ஒருமையில் அழைத்த அவன் ஆத்திரத்துடன் தன் பற்களை நறநறவெனக் கடித்துப் பேசியவுடன் அவள் அவன் முகத்தை பார்க்கவே அஞ்சியவளாய் மிகவும் பரிதாபமுடன் “கணபதி” என்று நாத்தழுதழுக்க அழைத் தாள்.
உன் உயிரையே என் அன்பின் பொருட்டு என் காலடியில் வை! என்று கேட்பினும், அதைக் கூட அவள் பொருட்டு தர சித்தமான மனதுடன் ஒரு காலத்தில் அவளை எண்ணி கற்பனா வெள்ளத்தில் மிதந்த ஒரு ஆத்மா இப்போது இந்த நேரத்தில் இவளின் நிலை கண்டு இரங்கி இந்தக் கணம் கூட மாறாத, போலித்தனமாக மறைத்துக் கொண்டு இருந்த அன்பின் பெரும் பொறி தன்னில் சிக்கித் தவிக்கும் நிலையை உணர அவனின் கண் களில் கண்ணீர் மல்கியது.
என்னதான் இந்த சரசுவின் கோலங்கள் மாறிப் போயினும் தன்னைப் பொறுத்த மட்டில் இவள் ஒரு ஜீவிதம் வாய்ந்த உயிரே என்னுமாற்போல் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு கீழ் ஸ்தாயியில், அங்கு வீசும் மெல்லிய கடல் காற்றிற்கும், அவளுக்கும் மட்டுமே கேட்குமாப்போல் ‘சரசு' என்று அழைத்தான்.

69 எதை எதை நினைப்பது தவறோ அது அதுவெல் லாம் ஒரு நியாயமான கனவே போல அவள் மனதுள் நிழலாட, நிழலாட தான் இழந்துவிட்டதே தன் விதி என்று தன்னிரக்கமுற்று, அவளே அவளாகி, பொய்மை களின் கபாடங்கள் அகல விரிய அவள் அவன் முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்து வியந்தாள்.
ஒரு சாதாரண மனுசனாகிய கணபதியும் அந்த இரவில் அவ்வளவு அருகில் அவளைப் பார்த்து விளக்க முடியா உணர்வுகளின் இறுக்கத்தில், சங்கடத்தில் தவிக்கும்போது, கரைமேட்டில் இருந்து "அடேய் கள்ள ராஸ்கல்! அடியேய்...!" என்ற குரல் அந்தப் பிராந்தி யத்தையே உலுக்குமாறு எழுந்தது.
கடற்கரைமேட்டில் பலருடன் சாரத்தை மடித்துக் கட்டி ஆவேசமுடன் நின்றிருந்த கந்தசாமி தான் ஏதோ ஒரு மாபெரும் களவை கையும் மெய்யுமாகப் பிடித்து விட்ட தோரணையில் கீழே நின்றிருந்த கணபதியையும் சரசுவையும் பார்த்து அவர்களை இணைத்து மிக அற்ப மான சொற் பிரயோகங்களினால் அந்த இடத்தையே நாறடித்தான். இந்தக் க்ளேபரத்தில் மீன் வாடியில் இருந்து விழித்து எழுந்து ஓடி வந்த கூலிக்காரங்கள் கூட கணபதியைப் பார்த்து அவன் முகத்தில் காறி உமிழுமாற் போல் தங்கள் விமர்சனங்களை அவன் காதுபடவே கூறினர். --
'பகல்ல எல்லாம் சம்மனசுகள் - ராத்திரில தான் எல்லாம் சைத்தான்கள்! ஜெரோம் கிழவன் கூட சணபதியின் முகத்தின் முன் கைநீட்டிப் பேசினான்.
பிரச்சினை கூடக் கூட அயலவர்களும் அந்த இடத்தை
அண்டினர் - வேடிக்கை பார்த்தனர் - விமர்சித்தனர் ஏதேதோ மிக மட்டமான கற்பனையில் திளைத்தனர்.
சிலர் ஒரு படி மேலே போய் இதற்கு முன்பும் இவர்

Page 37
70
களை இப்படி மட்டும் அல்ல எப்படிஎப்படியெல்லாமோ கண்டதாகக் கூறினர்.
“கந்தசாமி ஏன் குடிக்க மாட்டான்? அவன் குடிப்பது சண்டை போடுவது எல்லாம் நியாயமே' என்றனர். எல்லோரும் கந்தசாமிக்காக பரிதாபப்பட்டனர். இந்தப் பரிதாபமான காட்சியின் உச்சக்கட்டம் போல "என் ஆண்டவனே!’ என்று கூக்குரலிட்டவாறு மாதா கோயி ல் கோபுரத்தை நோக்கி முழங்காலிட்டு அழத்தொடங்கிய கந்தசாமி திடீரென சமுத்திரத்தை நோக்கி எழுந்து ஒட ஆரம்பித்தான். பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கந்தசாமி கடலில் விழாமல் காப்பாற்றப்
ill-stair.
பரிதாபப்பட்ட சாராயம் விற்கும் மேரியக்கா அடுத்த நாள் நிச்சயமாகத் தந்துவிடு என்று கடனுக்கு பாவப் பட்ட ஜென்மமான கந்தசாமிக்கு சாராயம் ஒரு போத் தலை கொடுத்தாள். இந்த நேரத்தில் நிர்க்கதியான அவனுக்கு தன்னால் செய்யக்கூடிய அதிகபட்ச உதவி இதே என்பது போல.
எனினும், கணபதி மட்டும் தன் மீன் வாடியை நோக்கி மெளனமாக நடந்தான். அவன் யாருடனும் எதுவும் பேசவில்லை. தன் கட்சிக்காக வாதாடவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் வெகு அர்த்தத்தோடு சரஸ் வதியை நன்றாகப் பார்த்தான். ஒரு இறுகிய மெளனமே அவனது கவச குண்டலம்போல அந்த நிஷ்டூரமானவர்கள் மத்தியில் அவனைக் காத்தது.
வெகு நேரம் வரை கந்தசாமியின் பிரலாபமும், கீழ்த்தரமான சொற்பிரயோகங்களும் அந்த இடத்தையே வரித்துக் கொண்ட்ன. சரசுவின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு தான் அல்ல, உண்மையான உரிமையாளன் க்ணபதியே என்று பலரும் அறிய பிரகடனப்படுத்தினான்

71
அழுது கொண்டிருந்த சப்பாணிக் குழந்தையை எடுத்து பணலில் வீசினான். ஒடிப் போய் பிள்ளையைத் தூக்கிய சரசுவின் முகத்தில் காறித் துப்பினான். திரும்பத் திரும்பப் போய் விடியமட்டும் சாராயத்தைக் குடித்தான். பொழுது புலரும் தறுவாயில் தன் அறிவிழந்து, இடையில் இருக்கும் உடை கூட நழுவியது தெரியாமல் தன் குடிசை யின் வாயிலில் விழுந்தான்-புரண்டான் மயங்கினான்.
ஆனால், பொழுது புலரும்வரை கணபதி தூங்க வில்லை. மீன் வாடியை ஒட்டிய கன்றுத் தென்னையின் கீழ் அமர்ந்து, சமுத்திரத்தையும், நீண்ட மணல் வெளியை யும் இருட்டில் பிசாசுகள்போல் நின்றிருந்த பென்ஸ் லொறிகளையும், கற்குவியல்களையும், மாதாகோயில் கோபுரத்து ஒற்றை மின் விளக்கையும் அர்த்தமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெகுநேரம் வரை சரசுவின் சப்பாணி மகளின் தேம்பும் ஒலியும், சரசு அவளைத் தூங்கவைக்க விம்ம லுடன் பாடிக் கொண்டிருந்த தாலாட்டுப் பாடலும் கேட்டுக் கொண்டிருந்தன.
பொழுது புலரும் தறுவாயில் கன்றுத் தென்னையின் கீழ் அமர்ந்திருந்த கணபதி ஏதோ தீர்மானத்துடன் எழுந்து மீன் வாடியை நோக்கி நடந்தான். வெறி முறிந்து, அதுவரை நிகழ்ந்தது எதுவுமே புரியாமல் அப்போது தான் , விழித்த சிவலிங்கம் கணபதியைப் பார்த்து 'தம்பி"
என்றான்.
பதிலுக்கு ‘சிவலிங்கம் அண்ணே! -என்று கூறியவாறு அங்கிருந்து மணலில் இறங்கி டவுனுக்குப் போகும் பெரிய பாதையில் இறங்கிய கணபதியை-சரசுவின் வயிற்றில் வளரும் குமந்தைக்கு இவனே தந்தை என்று கந்தசாமி யினால் குற்றஞ் சட்டப்பட்ட கணபதியை - வர்ணகுல சூரிய விக்டோரியா முதலாளியின் மிக நம்பிக்கைக்கு பாத்திரமான உண்மை ஊழியனான கணபதியை-ஒரு

Page 38
72
காலத்தில், ஒரு ஐம்பது வயது மனுஷியின் இடுப்பில் தன் பெருவிரலைச் சூப்பியவாறு இந்த சமுத்திரத்தை பெரு வியப்புடன் இமைகோட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கணபதியை-அந்த இடத்திலேயே வளர்ந்து, சமுத்திரத்தில் குளித்து விளையாடி, படித்து தொழில் புரியத் தொடங்கிய கணபதியை அதன் பின்னால் எவருமே அங்கு காண வில்லை.
அந்த இடத்தைப் பொறுத்த மட்டில் அன்றைய அழகிய வைகறைப் பொழுதில், சூரியனின் ஜனனத்தில் அவன் அஸ்தமனமானான்.
தாமரை மலர்களும்-கொடிகளும் இன்னபிற செடி ஆளும் நிறைந்த அந்த குளத்தில்-அந்த விடியற்காலையில் முங்கி முங்கி குளிப்பது ஒரு அபூர்வமான அனுபவமாகப் பட்டது கெளரிக்கு.
ஏற்கனவே குளித்து தோளில் கசக்கிப் பிழிந்து உதறிய நாலு முழ வேஷ் டியும், இடையில் ஈரத்துண்டுடனும் குளக்கட்டு மேட்டில் நின்றிருந்த கணபதிப் பிள்ளை தூரத்தே இருளில் மங்கலாகத் தெரிந்த வயல் நிலங்களை யும்- அதையும் தாண்டி தூரத்தே அடர்ந்திருந்த தென்னந் தோப்பின் கரிய நிழற்பகுதியையும் வெகு உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் குளத்து மேட்டில் இருந்து பார்க்கும்போது, கிாழத்தையும் பக்கத்து டவுனையும் இணைக்கும் நீண்ட ச1லையையும், அதன் இருபக்கமும் விசாலித்து இருந்த வtiல் வெளிகளையும், இடையில் இருக்கும் சிறிய நீர் நிலைகளையும் காணலாம்,

7.3
திடீரென, நிறைமாதக் கர்ப்பிணியான கெளரியை அழைத்துக் கொண்டு, பொழுது விடிந்து வர ஏனோ சங்கோ ஜப்பட்ட கணபதிப்பிள்ளை மிகவும் அதிகாலை யிலேயே கெளரியை எழுப்பி தான் வழக்கமாக குளிக்கும் அந்தப் படித்துறைக்கு அழைத்து வந்திருந்தார். வரும் போது வழி நெடுகிலும் தான் சப்பந்தப்படாத ஒரு பெரிய உணர்ச்சிகரமான காவியமொன்றை வர்ணிப்பது போல, சடந்தகால நிகழ்ச்சிகளையும், தான் அந்த மீன் வாடியை விட்டு எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் புறப்பட்டு இறுதியில் ஒரு சாயங்காலம் இந்தக் கிராமத்துக்கு வந்தது குறித்தும், பின்னர் இந்தக் கிராமமே தனது சொந்த ஊராக மாறியது குறித்தும் விஸ்தாரமாக சொல்லிக் கொண்டு வந்தார்.
ஒரு காலத்தில் தன் தாயினால் எள்ளி நகையாடப் பட்ட கணபதி என்ற இந்த மனிதர் தான் எவ்வளவு தூரம் மனிதத் தன்மைgபினால் உயர்ந்தவர் என்று தன்னுள் வியப்பெய்திய கெளரி தன் த்ாய் தன் அந்திம காலத்தில், தான் போய்ச் சேருமிடம் இதுவென்றே அறிவுறுத்தியது இப்போது எவ்வளவு நன்மை பயக்கத் தக்கதாய் மாறிற்று அல்லது நிகழ்வுற்றது என்று தன் மனதுள் நினைத்தாள்.
அந்தக் குளக்கட்டுப் பாதையின் ஒரு பக்கத்தில் எல்லையே இல்லாதது போல் நீண்டு விரிந்து. சிலுசிலுத்துக் கொண்டிருந்த குளத்து நீர்ப்பரப்பும், மறுபக்கம் கண்ணுக் கெட்டிய தூரம் வரை தெரிந்த வயலும், வரப்பும், வாய்க் கால் நீரோடைகளும், எல்லாமே மங்கிய ஒளியில் செளந்தர்யம் மிக்கதாய் அந்த விடியற்காலைப் பொழுதில் கெளரிக்கு தோன்றியது.
வழக்கமாக, அதிகாலையில் ஆழிக்குப் புறப்படும்திரும்பி வரும் மோட்டார் படகுகளின் என்ஜின் ஓசையும், :மீன் வாடியில் இருந்து மேட்டுப்பாதைக்கு விரையும்

Page 39
7 è
லொறிகளின் அலறும் ஒசையும், டீசலின், வலைகளின், மீன்களின் நெடியுமாக துயில் எழுந்து பழகிய கெளரிக்கு இந்தக் கிராமத்து சூழ்நிலையும்-அதிகாலையில் பாட ஆரம்பித்த பெயர் அறியா புள்ளினங்களின் ராக ஆலாபனைகளும் வெகு சுவாரஸ்யமாக இருந்தன.
அந்தக் கிராமத்தின் ஹிருதயமே அங்கு ஓங்கி நின்றி ருக்கும் கோயில் கோபுரம்தான். அந்தப் பெரிய கோயிலி னாலேயேதான் அந்தக் கிராமத்துக்கும் பெயர். அங்கு ஒவ்வொரு வருடமும் முப்பது நாட்களுடன் பெரிய திருவிழா கோலாகலமாக நடக்கும், தேரோட்டம் உண்டு. சுவாமி வேட்டைக்குப் போகும் வேட்டைத்திருவிழா உண்டு. அங்கிருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் உள்ள நதியில் தீர்த்தத் திருவிழாவும் உண்டு. சாதாரண நாட்களில் தூங்கிவழியும் பிரதான பாதை திருவிழாக் காலத்தில் ஒரே மின் விளக்குப் பிரகாசத்துடனும், ஏராள. மான கடைகளுடனும், காவடி ஆட்டங்களுடனும், பாண்டு வாத்தியங்களுடனும், திமிலோகப்படும். அநேக மாக எல்லா ஊர்களில் இருந்தும் பக்தகோடிகள் வந்து நிரம்பி வழிவார்கள். கிராமத்தைச் சுற்றி தேரோடும் வீதி, ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் சிறிய கோயில்கள் • மரங்கள் இத்யா தி.
தூரத்தே பெரிய கோயிலின் பூஜைக்கான ஆயத்த மணி ஒலிக்கின்றது. கணபதிபிள்ளை கோபுரம் இருக்கும் திசையை நோக்கி கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
குளக்கட்டுப் பாதை வந்து பிரதான சாலையில் ஒட்டிக் கொண்டது. பக்கத்து டவுனுக்கு போகும் முதல் பஸ் விண்டி தூக்கக் கலக்கத்தில் லொடலொடத்து ஓடியது.
குளித்து முடித்து இருவரும் கடையை அடையும் போது, வழக்கம்போல் கணபதிப்பிள்ளையின் தேநீர் சுவைக்காக வாசலில் பலகையில் உட்கார்ந்திருந்த முன்புற

75
40-த்து நொண்டிப் பண்டாரம் கணபதிப்பிள்ளைக்கு. பின்புறம் தோளில் ஈரத்துணியுமாய் வரும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்து வியப்புற்று 'ஓய்' கணபதி இது யாரோய்?'-என்று அவருடைய இயல்பான அவசரத்தில் எதுவித விகல்பமும் இன்றி கேட்டார்.
‘மகளாக்கும்" - கணபதி மிக அலட்சியமாக அந்த ஒற்றைச் சொல்லைக் கூறிவிட்டு, கெளரியை நோக்கித் திரும்ப.
'அடி சவ்வாசு! இத்தினி நாளும் இல்லாம இன்னிக்கி எப்பிடியாம்?' நொண்டிப்பண்டாரம் உற்சாகமுடன் கைதட்டி நகைத்து கெளரியை நோக்கித் திரும்பி 'உண்மையாலுமா?’-என்று கேட்டார்.
நொண்டிப் பண்டாரத்தின் பேச்சுத் தமிழ் கெளரிக், குப் புரியாத போதிலும், புரிந்துகொண்ட ஊகத்துடன் "ஆமா! எங்கப்பா இவருதான்'-என்று மிகத் தெளிவாகக் கூறுகையில் கணபதிப்பிள்ளை பின் கதவைத் திறக்கப் போனவர், நின்று நிதானித்து திரும்பி, கெளரியைப் பார்க்கையில் கெளரி மீண்டும் மிக உறுதியான குரலில் "அவரு மகதான் நான்' என்று கூறினாள்.
அது சரி இவள் அவர் விந்துக்கு உரியவள் அல்ல, எனினும் தன் மனதோடு உடன்பட்டு இவள் அவரே என் தந்தை என வரிக்கும்போதும், இவளே தன் மகள் என்று பிரதியுத்தாரமாக இவர் பிரகடனப்படுத்தும்போதும் ஏன் இவர்களே தந்தையும் மகளுமாய் மாறமாட்டார் களோ !
“இத்தனை நாளு சாமியார், கணக்கா வேசம் போட்டு ஆடுனிரு. இன் னைக்கு மக வந்துட்டா, சம்சாரி குடும்பக்காரன்னு குட்டு ஒடஞ்சி போச்சி! தேத்தண் ணியப் போடும்'

Page 40
76
நொண்டிப்பண்டாரம் எதையோ எப்படியோ புரிந்து கொண்டு, தானே ஒரு கதையை யூகித்து அதையே நம்பி, அதையே மற்றவர்களுக்கும் நிரூபிக்குமாறு கைக்கட்டைகளைத் தூக்கிக்கொண்டு பாய்ந்து பாய்ந்து மடத்துப் பக்கம் ஓடியது. அத்தனை அவசரம்.
‘இனி நாம யாருக்கும் ஒன்னும் சொல்ல வேண்டாம்! அதே எல்லாம் சொல்லி கதையே இப்பிடித்தான்னு முடிக்கும்' - என்று முன்புற மடத்தை நோக்கி ஓடும் நொண்டிப் பண்டாரத்தை சுட்டிக் காட்டிக்கூறிய கணபதி யுடன் சேர்ந்து கலகலவென சிரித்தாள் கெளரி. கெளரியா சிரிக்கின்றாள்? ஆமாம். நிச்சயமாக கெளரியே தான் எவ்வளவு காலம் இவள் தன் சிரிப்பையே அறியாதிருந் தாள். அல்லது தொலைத்து விட்டிருந்தாள்.
கடைக்கு இடியப்பம் கொண்டு வரும் சிறுமி வழக்கம் போல இடியப்பத் தட்டுடன் கடைக்கு வந்து கெளரியைக் கண்டு யோசித்து பிறகு இவள் சிரிக்க அவளும் சிரிக்க வெற்றுத்தட்டுடன் அவள் பாஷையில் கணபதி சீயாவின் கடைக்கு ஒரு செவத்த அக்கா, புள்ளத்தாச்சி வந்திருக்கு என்று செய்தியையும் எடுத்துப் போனாள்.
**கணபதி வெள்ளாள ன் இல்ல. அது தான் அந்த வைராக்யம். இவ்வளவுக்காலம் பெஞ்சாதி, புள்ளய மூஞ்சில் முழிக்காம இருந்திட்டான். படியெறங்கும் போது இனி மூஞ்சில முழிக்க மாட்டேன்ட்டானாம். அப்படியே துண்ட ஒதறி தோள்ளபோட்டவன்தானாம்" காசி ராமேஸ்வரம் எல்லாம் போயி கடசியாத்தான் இஞ்ச வந்தானாம்' அன்றைய பகல் சாப்பாட்டுக்குப் பின் மடத்தின் பின்புறம் கணபதியின் கதையை தன்னிஷ்டப் படி புளுகிக் கொண்டிருந்தது நொண்டிப் ப்ண்டாரம்.
'ஏம்பா சீரங்கா மனுசி செத்துப்ப்ோச்சா?" மடத் துக்கு தண்ணிர் இழுத்து சேவுகம் பார்க்கும் வரதாப்

7 / .
பர்ட்டி கேட்டாள். சீரங்கன் நொண்டிப் பண்டாரத்தின் இயற்பெயர். பூரீரங்கன் சீரங்கனாகிவிட்டது.
பண்டாரம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தது. அப்போது மடத்துக்கு பின்புறமாக ராமன் கோஷ்டியினர் ஒழுங்கை வழியால் பிரதான சாலைக்கு ஏற வந்து கொண் டிருந்தனர்.
வரதாப் பாட்டியைப் பார்த்து ' என்ன கேட்டே?” நொண்டிப் பண்டாரம் சற்றுமுன் கேட்ட கேள்வியை மறந்து போன வரதாப்பாட்டி " என்னமோ கேட்டேன்’ என்றபடி என்ன கேட்டேன் என்று யோசிக்க ஆரம்பித்தது. ܕ ; *
'சரி நீ யோசி!’ ராமனை நோக்கி பண்டாரம் நாலு காலில் பாய்ந்தது.
‘விசயம் தெரியுமோ! கணபதிப்புள்ளயோ ட ԼՈ Ժ: , வந்திருக்கு" தெரியும் என்கிற பாவனையில் ராமன் தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான்.
பண்டாரம் மீண்டும் வந்து மடத்தில் ஏறிக்கொண் டது. அடுத்தவர்களின் சொந்த விவகாரங்களில் அடிக் கடி மூக்கை நுழைத்து, வேவுபார்க்கும் - அபிப்பிராயம் கூறும் நகரத்து மக்களின் இந்த ஆர்வம் அங்கே கிராமத்தில் குறைவு. அங்கே, உழைப்பே ஒரு உன்னத மான தேவையாக இருந்ததினால் உபயோகமற்ற விசயங்கள் உபயோகமற்றுப் போயின.
சில நேரங்களில் வரதாப்பாட்டி மாத்திர்ம் ‘ஓங்கம்மா இருக்காங்களா?” என்றும், புருஷன் எங்க என்றும் விசாரிப்பாள். கணபதிப்பிள்ளையின் நேதீர்க் கடையில் மீன் குழம்பும் இடியாப்பத்துக்கு இறால் சொதியும் கெளரியின் கை வண்ணத்தில் மிகச் சுவை மிகுந் தனவாக மாறிற்று. சண்பதிக்கு மிகவும் ஒத்தாசை யானாள். "அப்பா' என்றே அழைத்தாள்.

Page 41
78
நாட்கள் ஒரு சில நகர்ந்தன. சரசு இருக்கின்றாளா - இல்லையா? கெளரியிடம் கணபதி ஏதும் கேட்கவில்லை. இவர் கேட்பார் என்று அவள் எதிர்பார்த்தாளோ அல்லது இவள் கூறுவாள் என்று அவர் எதிர்பார்த்தாரோ தெரிய வில்லை. எனினும் அவள் பற்றிய எதுவும் இவர் கேட்க வில்லை. இந்த விபரங்கள் பரிமாறப்படாமையினால் ஒரு விக இனங் கூறமுடியாத நிஷ்டூரம் அங்கே கூரையாக இருந்தது. எனினும் கெளரி மிகவும் சந்தோசமுடன் இருந்தாள். வைகறையில் தாமரை நிறைந்த குளத்தில் நீந்தி விளையாடுகிறாள். அவளுக்கு அந்தக் கிராமமே மிகவும் பிடித்து விட்டது. எனினும் அங்கே புரிந்து கொள்ள முடியாத மனோ வேதனையும் இழையோடிக் கொண்டிருந்தது.
கணபதியின் தேநீர்க்கடையில் எல்லா வேலை களையும் தானே செய்ய வேண்டுமென பிடிவாதம் பிடித் தாள். மாலை நேரங்களில் தனியாக கணபதி பிள்ளை குளத்து மேட்டுக்கு உலாவச் சென்றார். ஒரே ஒரு தடவை ஒரு இளைஞனுக்கு உரிய உற்சாகத்தோடு ராமன் கோஷ்டியினருடன் இரவு முயல் வேட்டைக்குச்சென்றார். நல்லகாலம் வேட்டைக்கு ஒன்றுமே அகப்படவில்லை. எதுவுமே அகப்படக் கூடாதென்று கெளரி மானசீகமாக வேண்டிக்கொண்டாள்.
சரசுவிற்கு என்ன ஆயிற்று? கணபதிப்பிள்ளை அதை அறியும் ஆவலை எவ்வளவு தான் அடக்கிப் பூட்டி வைத் திருந்தாலும் கெளரியே கூறட்டும் என்று காத்திருந் தாலும் ஒருநாள் வைராக்கியம் சிதறி ஓடிற்று.
நான்காம் நாள் இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் தன் படுக்கையை விரித்து கெளரி படுக்கப்போகும் நேரம், தன் போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு சாக்குக் கட்டிலை எடுத்தபடியே வெளியே போக முன் தட்டிக்

79
கதவைத் திறந்த கணபதிப்பிள்ளை 'அம்மா கெளரி! இப்ப சரசு.?’’
பாயில் அமர்ந்து தன் இடைச்சீலையை லேசாக்கிய படியே சிம்ளி விளக்கின் மங்கிய ஒளியில் வெளியே போக சாக்குக் கட்டிலை சுமந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்து அவள் கூறினாள்.
"அப்பா! அம்மா செத்துப்போச்சு. ரெண்டு மாச 16ாகுது'
கணபதி சற்று நேர அந்தக் கட்டிலை வாசற்படி யருகே தன் இடுப்போடு சாத்திய வண்ணம் பேசாமலிருந் தார். அந்த இடத்தில் நிலவிய மெளனம் பேசும் பேச்சை விட கனமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. வெகு நேரம் கணபதி ஏதோ துக்கம் அனுஷ்டிப்பவரைப் போல ஆடாமல் அசையாமல் நின்றிருந்தார்.
வெளியே மடத்தில் நொண்டிப்பண்டாரம் பாதையில் ஊளையிடும் கட்டாக்காலி நாய்களைத் திட்டும் ஒலியும், எங்கோ ஒரு மாட்டு வண்டியின் தடக் தடக்கென்ற ஒசை யும் கேட்டன.
"ஒன் புருஷன்' - இக்கேள்வி கணபதி கேட்க வேண்டும். கேட்க வேண்டும் என்றிருந்த கேள்வி. இது வரை கணபதி கேட்கவில்லை. என்னமோ கணபதியின் இயல்பு அப்பிடி அதையும் கேட்டாகி விட்டது.
கெளரி இதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. பாயில் அப்படியே மெளனமாக அமர்ந்திருந்தாள்.
வெகுநேரம் கழித்து “அவனும் செத்த மாதிரி தான்!" கெளரியின் குரலில் துயரமா? கோபமா? எரிச்சலா? ஒன்றும் புரியவில்லை. கணபதிக்கு ஒன்றும் புரியவில்லை கட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போனார்.

Page 42
80
கெளரி பாபில் மல்லாந்து படுத்தாள். கண்முன்னே - மேலே தென்னோலைக் கீற்றுக்களின் வரிசை மண்ணெண் ணெய் புகைபடிந்திருந்தது. அர்த்தமில்லாமல் வரிசை களை எண்ணினாள். ஒன்று.இரண்டு.மூன்று.
கடைக்குப் பின்னால் இரண்டு மூன்று தவளைகள் விட்டு விட்டுஅபஸ்வரம் எழுப்பின. கடைசி பஸ் வந்து நின்று போகும் சப்தம். கணபதிப்பிள்ளை தலையைத் தூக்கிப் பார்த்தார். யார் யாரோ இறங்கினார்கள். யார் யாரோ ஏறினார்கள்
முன் புறத்து மடத்து வாசலில் படுத்திருந்த வரதாப் பாட்டி எப்போதோ செத்துப்போன் மூணாம் புருஷனை எண்ணி ராகத்துடன் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கி நொண்டிப்பண்டாரம் “சே!” இந்த நேரத்தில் இந்தக் கெழட்டு.தி அழுவிறியே!” - தூக்கம் முறிந்த கோபத்தில் கிழவியையும் திட்டி, பின்னர் யார் யாயையோ திட்டி விட்டு திடீரென ஒரு தேவாரத்தை தட்பும் தவறுமாகப் பாட ஆரம்பித்தது. எத்துணை தூஷணை வார்த்தைகள் பேசினாலும், ஒரு தேவாரம் பாடுவது தனக்கும் அந்த மடத்துக்கும் உள்ள அந்தரங்கப் பிணைப்பு என்பது போல் நொண்டிப்பண்டாரத்துக்கு ஒரு மயக்கம் அல்லது நம்பிக்கை.
ஒன் புருஷன்? - சற்று முன் கணபதிப்பிள்ளையின் கேள்வியும் அவனும் செத்தமாதிரி தான்! - தன் பதிலும் கெளரிக்கு நினைவிற்கு வந்தது.
தன் நிறை வயிற்றுனுள் அந்த அவனே உள்ளே புகுந்து புரள்வதைப் போல ஒரு உணர்வு, ஒரு பிரமை
கடற்கரையோரக் குடிசையில் தன் எதிர்காலம் எல்லாம் இவனே என்று தானே வலித்து அவளை அணைத்து அவன் பேச்சுக்களை எல்லாம் மனதார ரசித்து அவனே இவளாகி, இவளே அவனாகி படைப்பின் ரகல் யத்தைப் புரிந்துகொண்டு. தாங்களே படைக்கின்ற

8Ꮧ
சிருஷ்டியாளர்களாக மாறி, அதுவே ஒரு யுத்தகளம்போல வெற்றியா? தோல்வியா? என்று ஆவேசமுற்று, தோல் வியே வெற்றியாகவும், வெற்றியே தோல்வியாகவும் மேனி முழுவதும் வியர்வை நதிகள் உற்பத்தியாகி ஊற் றெடுத்து, ஊடித்திளைத்து, ஆடிக்களைத்து விருட்டென விலகி மென்மையான சுவாசத்துடன் கனைத்து இருட்டில் ஒருவர் உடலை ஒருவர் தேடிக்களைத்து...!
கெளரி இன்னும் மல்லாக்கப் படுத்திருந்தாள். முனங் கலுடன் ஒரு எலியை இன்னுமோர் எலி , கூரையில் விரட்டும் ஓசையும் - இதர-சப்தங்களும்.
அவன். அவன் பெயர் அற்புதம். அவன் பெயரை முதலில் கேட்ட போதே அவளுக்கு சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது.பெயரே அற்புதம் சரி.சரி அற்புதமான பெயர் தான். முழுப்பெயர் அற்புதம் பெர்ணான்டோ. அவனுடைய சொந்த ஊர் தூத்துக்குடி
அவனை அவள் முதன் முதல் கண்டது நினைவிற்கு வந்தது. எங்கே? எப்போது? - அதோ!' மீன் வாடிக்கு ப் பக்கத்தில் சரசுவின் பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் நீண் ட உறுமலோடு வந்து நின்ற பெரிய லொறியின் முன் சீட்டில் இருந்து ஒரு பாய்ச்சலோடு இறங்கி வந்து சரசுவிடம் பிறிஸ்டல் சிகரெட் ஒரு பாக்கெட் என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டியபோது தாயின் பின்புறம் நின்று 4 ன் தாயின் கிழிந்த சேலையின் ஒரு பகுதியே தாவணி போலும் உடுத்தியிருந்த அவள் அவனை முதல் முதலல் பார்த்தாள்.
கணபதியின் கடையினுள் படுத்திருந்த கெளரி துங்க வில்லை. சற்றுமுன் அடித்த காற்றில் சிம்னி ல ளக்கு அணைந்து போய் திரியின் நாற்றம் கடையனுள் வியா பத் திருந்தது. வெளியே சர்க்குக் கட்டிலில் படுத்திருக்கும் கணபதிப்பிள்ளையின் குறட்டையொலியும் கேட்டது.
ஒரு-6

Page 43
82
மில்லாக்கப் படுத்திருந்த கெளரியின் தன்முன்னே எல்லாமே மிக மிசப் புதியதாகத் தெரிந்தன. கடலோரப் பறவைகளின் "கீச் கீச்" ஒலிகள் கேட்டன. மீன் ஏற்றும் லொறிகளின் கர்ணகடூர சப்தங்கள் கேட்டன. தூரத்தே சந்தியாகு முதலாளியின் சரவலை இழுப்போர்களின் அம்பாப் பாடல் கேட்டன். இரண்டு கால்களும் அழுகி பிச்சை எடுக்குமாற்போல் எல்லோரிடமும் கையேந்தி இரங்கும் தகப்பன் கந்தசாமியின் இயங்கல் குரல் கேட்டது. நடுஇரவில் எல்லோரும் தூங்கியபின் தன் விதியை எண் ணி விக்கி விக்கி அழும் தாயார் சரசுவின் அழுகையொலி
கேட்டது.
vn D D
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த பதின் மூன்று வயது சிறுமி கெள்ரியை மிகவும் பதைபதைப்புடன் தேடிக்கொண்டு வந்த சரசு அவளை இழுத்து அவள் உடுத்தி பிருந்த கவுனைப் பார்த்து "அய்யோ! இந்தப் புள்ளக்கி ஒன்னும் தெரியல்லியே!’ என்று கனிவுடன் ஏசி தன் தோளில் கிடந்த சீத்தைத் துணியால் போர்த்தி மிகவும் பக்குவமாக வீட்டுக்கு கூட்டிவந்து உள்ளே மூலையில் அமர வைத்தாள்.
கெளரி பெரிய புள்ள யாகிட்டாளாம் விசயம் அசுவாரஸ்ய்மாகப் பரவியது.
இரவில் பலகாரக் கடையைப் பூட்டிவிட்டு குடிசைக்கு லந்து சேர எப்படியும் சரசுவிற்கு இரவு ஒன்பது மணிக்க Cமலாகிவிடும். மூத்தவள், இரண்டாமவள், கெளரி எல்லோரும் தூங்கிவிடுவார்கள். சப்பாணிக் குட்டி மாத்திரம் விழித்திருப்பாள். தாய் தூங்கும் வரை அவள் தூங்ச் மாட்டாள். சரசு எப்போதாவது துயரம் தாங்கா மல் அழும்போது இந்த சப்பாணிக் குட்டி மட்டும் மெல்ல மெல்ல நக்கரித்து வந்து ஏம்மா! அழுறே!' என்பாள். சரசு அவளையும் அணைத்துக் கொண்டே அழுவாள் விபரம் புரியாமல் சப்பாணிக்குட்டியும் அழுவாள்.

83
'அம்மா! அப்பா வெளில மழையில் படுத்திருக்கு, பாவம்மா!" சப்பாணி நடு இரவில் தாயை எழுப்புவாள். குடிசை வாசலில் கந்தசாமி கால் புண் வலி தாங்காமல் புலம்பிக் கொண்டிருப்பான். அந்த நேரத்திலும், அந்த மழையின் சீற்றத்திலும் சப்பாணிக்குட்டியும், சரசுவும் கந்தசாமியை இழுத்து குடிசையினுள் படுக்க வைப் யார்கள். பாசத்துடன் சப்பாணிக்குட்டி தன் தந்தையைத் தழுவி ‘எங்கட அப்பா’ என்று முத்தமிடுவாள். கந்தசாமி சிலநேரம் என்ட, சப்பாணிக்குட்டி! என்று தன் மகளைக் கொஞ்சிய வண்ண்ம் அணைத்துக் கொண்டு படுப்பான். சில நேரம் 'ஒடு மூதேவி' என்று உதைத்து விரட்டுவான். -
சில இரவுகளில் வெறியின் உச்சத்தில், புலன்களின் ஆக்கிரமிப்பில் “சரசு இஞ்சவா!" என்று அலறுவான். சரசு போகாவிட்டால் மீண்டும் மீண்டும் அலறுவான். மிக மெளனமாக சரசு எழுந்து குளிப்பே மறந்துவிட்ட, சீழும் புண்ணுமாக, சேறும் சகதியுமாக புரண்டு கொண்டி ருக்கும் அவன் பக்கத்தில் போய் சாய்வாள். கண்களை மூடிக்கொள்வாள். இருட்டில் இவை. எல்லாவற்றிற்கும் கானே சாட்சி என்பதைப் போல் சப்பாணிக்குட்டி விழித்துக் கொண்டிருப்பாள்.
கெளரியை முன்போல் கடற்கரையில் ஓடி விளையாட சரசு அனுமதிக்கவில்லை மீன்வாடிக்கு கூட போக வேண்டாம் என்று தடுத்துவிட்டாள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சரசுவின் மூத்த மகளும், இரண் டாவது மகளும் சரசுவின் நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டனர். எப்படி தன் பெண் மக்கள் வரக்கூடாது என்று பயந்தாளோ அப்படியே அவளது முதல், இரண்டா வது பெண்மக்கள் வந்துவிட்டனர்.

Page 44
84
ஒரு நாள் மூத்தவளை சரசு கண்டிக்கும்போது அவள் மிகவும் ஏளனமாகவும், நிர்த்தாட்சண்யமாகவும் தன் தாயைப் பார்த்து 'நீ மாத்திரம் நல்ல மனுஷியா? அப்படவ ஏமாத்தி யாரோ கணபதிங்கிற மீன் வாடி கணக்கப்புள்ளயோட இருந்தவ தானே!" என்றாள்.
சரசு வீட்டு நடு மரத்தில் முட்டிக்கொண்டாள். அழுதாள். வேறென்ன செய்வது.
ஒரு பொய் நிஷ்டூரமாக உண்மையாக்கப்பட்டது.
முதல் - இரண்டு பெண்பறவைகளும் சிறகடித்துப் பறந்தன. தொலைவில், மிகத் தொலைவில், பறந்து மறைந்து விட்டன. ஒருத்தி கற்பிட்டி கடற்கரைப் பக்க மாம் மற்றவள் கோட்டை மன்னார் பக்கமாம். அவர் களை சரசு தலை முழுகிவிட்டாள். இவளென்ன அவர் களை தலை முழுகுவது! அவர்கள் தாங்களாகவே முழுகிக் கொண்டார்கள்.
தாவணி போட்ட கெளரி மிகவும் பாந்தமுடன் குடிசையினுள் தனித்திருந்நாள். சப்பாணிக்குட்டியுடன் பல்லாங்குழி விளையாடினாள் குடிசை ஜன்னல் ஊடே சமுத்திரத்தை - கரையை மனிதர்களைப் பார்த்தாள்.
யாராவது கொண்டு வந்து தரும் புத்தகங்களைப் படித்தாள். நெஞ்சு நிறைய வர்ண வர்ண கனவுகளை நிறைத்துக் கொண்ட (ாள். மாதாகோயில் பெருநாளில் சுருவம் சுற்றும்போது தானும் மிக மெதுவாக, மனதினுள் யாரோ ஒருவனின் கையைப் பிடித்துக் கொண்டு தலையில் வெண்ணிற வலைபோட்டு "ஆமென்” சொல்லி நடந்தாள் அவளோடு கூட விளையாடிய ஸ்டெலா , பிலோமினா சிசிலி எல்லோரும் ஒன்று இரண்டு பெற்று மீன் மார்க்கட் டுக்கு கூடை தூக்கி வியாபாரம் செய்யவும் தொடங்கி விட்டனர். V−

85
இன்னும் இருபது வயதாகியும் கெளரி மாத்திரம் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டேயிருந்தாள். சரசு அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்தாள்.
விக்டோரியா முதலாளியின் மருமகன் மூன்று பிளாஸ் டிக் படகுகளுக்கும், இரண்டு பெரிய பலகைப் படகு களுக்கும் சொந்தக்காரன். - அந்தப் படகுகளில் சில சுரு வலையேற்றினாலும் மீன் பிடிக்கப் போவதில்லை தூத்துக்குடி - காயல்பட்டினம் போன்ற தமிழகத்து கரை யோரங்களில் இருந்து நிறைய எண்பதுக்கெண்பது சாரங் களை பீடி இலை மூட்டைகளை, அபீன் பார்சல்களை கொண்டு வந்து சேர்க்கும் விக்டோரியா முதலாளியின் மகன் டொயோட்டா கார் வாங்கி விட்டான். அவனது வலதுகை போன்றவன்தான் அற்புதம் பெர்ணான்டோ எப்போதும் அவ்ன் நைலான் சட்டைப் பையில் நூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டும் தான் இருக்குமாம்.
அவனுக்கு மிகவும் சீக்கிரம் அந்த இடத்திலேயே நிரந் தரமாக தங்கிவிடவிருப்பமாம். தூத்துக்குடி வெறுத்து விட்டதாம். எல்லாவற்றையும்விட முக்கியமான விசயம் அற்புதம் பெர்ணான்டோ எப்படியோ கெளரியை சுண்டி இழுத்துவிட்டான். பெட்டிக்கடை வைத்திருக்கும் சரசுவின் மகள் கெளரியை அற்புதம் பெர்ணான்டோ கல்யாணம் செய்து கொள்ளப் போகின்றான். சரசுவிற்கு இவையெல்லாம் ஏதோ ஒரு கனவில் நிகழும் நிகழ்ச்சிகள் போலத் தெரிந்தன. ,
ஒரு சுபயோக சுபதினத்தில் விக்டோரியா முதலாளி யின் மருமகன் வீட்டில் அற்புதம் பெர்ணான்டோ - கெளரி திருமணம் மிக அமைதியாக நடந்தது.
அடுத்த மாதமே மாதா கோயில் திருவிழா வந்தது. கெளரி மிகவும் மகிழ்ச்சியுடன் அற்புதத்தின் கையைப் பற்றிய வண்ணம் மாதாவின் ஊர்வலத்தில் "ஆமென்’ சொல்லி நடந்தாள்.

Page 45
86
அந்தக் கடற்கரைப் பிரதேசத்திற்கு அது மிகவும் விமரிசையான திருநாள். அந்தத் தடவை ஏதோ ஒரு நாட்டில் இருந்து சில சுவாமிமார்களும், கன்னியாஸ்திரி களும் வந்திருந்தனர்.
இதில் விசேஷம் என்னவெனில். ஒரு தடவை மாதா கோயிலில் ஒரு கன்னியாஸ்திரியின் பார்வையில் சரசுவின் சப்பாணி மகள் அகப்பட்டுக் கொண்டாள். சப்பாணிக்கு கர்த்தரின் கருணை கிடைத்துவிட்டது. சரசு தன் பெருகி வரும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு, சப்பாணிக் குட்டிக்கு விடைகொடுத்தாள். சப்பாணிக்குட்டி தன் தகப்பன் கந்தசாமியை அணைத்து முத்தமிட்டு விடை பெற்றாள். பாவம் தனக்குப் பின் அந்தப் பிள்ளை சப்பாணியை யார் தான் பார்ப்பது? தேவனே இதற்கு ஒரு தீர்வு வழங்கினாற்போல் அந்தக் கன்னியாஸ்திரிகள் அவளை அழைத்துக்கொண்டு போய்விட்டனர்.
"பெற்ற வயிறு என்று பார்த்தாள் முடியுமா? சரசு தனக்குள் கேள்வி கேட்டாள். அத்தனை கேள்விகட்கும். அவளே சாதகமாக பதிலளித்துக் கொண்டாள்
சரசு இப்போது தன் பெட்டிக் கடையை தன் இருப் பிடமாக்கிக் கொண்டாள். குடிசையின் வாயிலில் புதிய திரைச்சீலை போடப்பட்டுவிட்டது. கெளரி தான் தைத்துப்போட்டாள்.
"ஒரு புதிய வீடு வாடகைக்கு வாங்க வேண்டும். இந்தக் குடிசை வாழ்க்கை யாருக்குப் பிடிக்கும்?கெளரியின் அம்மா சரசுவின் பலகாரக் கடையை மூடிவிடவேண்டும் தனக்கு இது பெரிய அவமானம், இரவில் தனிமையில் இந்த அற்புதங்களை அற்புதம் கெளரியிடம் அற்புதமாகக் கூறுவான். கெளரியும் அற்புதத்தின் அற்புதங்கள் நியாயமே என்று சிலாகிப்பாள்.

87
கெளரி மாதா கோயிலில் திருமணம் முடிக்கும்போது பெயர் மாற்றம் ஞானஸ்நானம் பெற்றிருந்தாள். எனி னும் அவளை எல்லோரும் கெளரி என்றே அழைத்தனர்
சப்பாணிக்குட்டி வெளிநாட்டுக்குப் போனது மிகவும் உத்தமமானதே என கெளரியும் அபிப்பிராயப்பட்டாள்.
இந்தியன் சீத்தையும், ஒரு வொயில் புடவையும் அன்பளிப்பாக அற்புதம் தன் மாமி சரசுவிற்கு கொடுத் தான். நாணத்துடனும், "பெருமையுடனும் அவற்றைப் பெற்றுக் கொண்டாள் சரசு.
மாமனார் கந்தசாமியின் நடவடிக்கை குறித்து அற்புதம் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. தூத்துக்குடியில் அவன் பெரியப்பாவும் இப்படித்தானாம் கந்தசாமி. முன்போல் கிடற்கரை வழியே அலைவ தில்லை. முக்கியமான விசயம் அலையமுடியாது என்பதே! பலகைக் கடை மூலையில் சுருண்டு படுத்து விடுவான். சரசு சாப்பாடும் சாராயமும் கொடுப்பாள். சில நேரங்களில் கால் புண் வலி அதிகமாகும்போது ஊளையிடுவான். வலிதாங்காமல் அழுவான். அப்போ தெல்லாம் சரசுவை வற்புறுத்தி சாராயம் ஸ்ாங்கிக் குடிப்பான். சாராயம் வாங்கிக் குடிப்பதற்காகவே வலி யெடுத்தது போல் அலறுவான், ஊளையிடுவான்.
ஒரு நாள் மிக விமரிசைய்ாக அற்புதத்தின் குடிசையில் விருந்து நடந்தது. அடுத்த நாள் இரவு அற்புதம் தன் தொழிலுக்குப் போகின்றானாம். கெளரி புது ட்ரஸிங் கவுன் உடுத்தி பம்பரம் போல் கழன்று வேலை பார்த் தாள்.
அன்றிரவுதான் கெளரி அந்த ரகசியத்தை தன் கண்வனிடம் கூறினாள். தாள் தள்ளிப் போய் பத்து நாட்களாகிவிட்டதாம். "ஆம், கெளரி கருவுற்றாள் விசயத்தைக் கூறியதும் அற்புதம் அவளை அணைத்துக் கொண்டான். அந்த இரவு மிக அற்புதமாக நீண்டது.

Page 46
88
அடுத்த நாள் இரவு மிக ரகசியமாக படகு புறப் பட்டது. கராம்பு - ஜாதிப் பூ மூட்டைகள் ஏற்றப்பட்டன. அற்புதம் பெர்னாண்டோவின் நெஞ்சை கெளரியின் கண்ணிர் ஈரமாக்கியது.
‘தொழில் என்றால் சும்மாவா? ஆண்பிள்ளை, வீட்டில் பொஞ்சாதியின் முந்தானைக்குப் பின் எப் போதும் இருக்க முடியுமா? விக்டோரியா முதலாளியின் மருமகன் யதார்த்தம் பேசினார்.
இப்படியாக அன்றைய இரவு புறப்பட்ட அற்புதம் திரும்பி வரவேயில்லை, அவனுக்கு ஏற்கனவே திருமண மாகி இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றார்களாம். அற்புதத்தை இந்தியக் கஸ்டம்ஸ் பிடித்துவிட்டதாம். இனி இலங்கைக்கு வருவது துர்லாபமே! விசயங்கள் காலங் கடந்து மெல்ல மெல்ல வெளிப்பட்டன. இதற்கு விக்டோரியா முதலாளியின் மருமகன் என்ன செய்ய முடியும்? அவளுடைய சாமான்களும், படகும் போய் விட்டனவே! இப்படி நடக்கும் என்று அவர் என்ன சாஸ்திரமா பார்த்தார்?
சரசு இடிந்து போனாள். தினமும் கெளரி தன் குடிசையில் தனியாகப் படுத்து அழுதாள். துணைக்கு சரசுவும் அழுதாள். தினமும் கனவில் அவன் கையைப் பிடித்தபடி தலையில் வலையை அணிந்தபடி மெல்ல, மெல்ல மிக மெல்ல நடந்தாள். உதடுகள் மட்டும் "ஆமென்" கூறின.
மகள் தனக்காக அழுதாள். மகளுக்காக தாய் அழுதாள். சிலநேரம் கந்தசாமி தனக்காக அழுதான்.
கெளரியின் அடிவயிற்றில் அற்புதத்தின் அற்புதம் தினமும் ஒவ்வொரு புதுக் கதைகளை அறிமுகப்படுத்தின. சிலவாரங்களில் அற்புதத்தை - கெளரிக்கு ஏற்பட்ட மகத் தான இழப்பை, துயரத்தை அந்தப் பிராந்தியமே மறந்து விட்டது.

89
கெளரியின் முடிவுதான் என்ன? மூத்தவள் - இரண் டாமவள் வெகு தூரத்துக்குப் பறந்து விட்டார்கள். பறந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படியானாள் இவள்? இந்த வயிற்றுச் சுமையை இறக்கி வைத்தபின் இவளும் பறக்க வேண்டியவள் தானா?
ஒற்றைக் கையூன்றி சூன்யத்தையே வெறித்து நோக்கி அமர்ந்திருக்கும் கெளரியைப் பார்த்து துயரமேலிட்டால் தடுமாறினாள் சரசு. வெளியே சமுத்திரம் தன் அல்ை களுடன் தரையை நோக்கி கொந்தளித்துக் கொண்டி ருத்தது.
| | S
கந்தசாமி இப்போது முன்போல் அழுவதில்லை சில நேரம் ஏதோ பேயைக் கண்டதுபோல் அலறுவான். ஒரு நாள் கெளரியை அருகே அழைத்தான். கெளரி பயந்தபடி அருகே சென்றாள். “ம.க.கெளரி! நீ என்ட மக.ஒங்க அம்மா.நல்ல பொம்புள.' மேற்கொண்டு எதையும் கூறமுடியாமல் விசித்து விசித்து அழுதான்,
“கணபதின்ன ஆளுக்கும் ஓங்க அம்மாவுக்கும் அது இதுன்னு நான் சொன்னது முழுக்கப் பொய்!"-கந்தசாமி இதை கூறிமுடிக்க மிகவும் கஷ்டப்பட்டான். மிகவும் துயரமுடன் இரங்கலுடன், கெஞ்சும் பாவனையில் பக்கத் தில் நின்றிருந்த சரசுவை நோக்கினான்.
சரசு எதுவுமே கூறாமல் இது என் விதியே என்பது போல் கைகளைக் கட்டிய வண்ணம் வெறுமனே நின்றிருந்தாள்.
'யார் இந்தக் கணபதி?-கெளரியின் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஏதோ சில நேரங்சளில் தன் தகப்பனார் மிக மோசமான வெறியில் தாயாரை ஏசி,

Page 47
90
முடிவில், அந்தத்தில் கணபதி என்ற பெயரையும் இணைப்பார்.
எனினும் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தன் வாழ்க்கையே புரியாமல் நிற்கும்போது வேறு. எதைப் பற்றி புரிந்து கொள்வதாம்?
ஏழு மாதம் முடிந்து விட்டது. சமுத்திரத்தில் தினமும் தூரத்தே புள்ளிகளாய்த் தெரியும். எல்லாக் கட்டுமரங் களும், படகுகளும் கரைக்கு வந்தன. எனினும் அற்புதம் வரவில்லை. -
ஒருநாள் குடிசையின் கதவு படிரெனத் திறந்தது. முனகிக் கொண்டே உள்ளே நுழைந்த சரசு ஒரு மூலையில் சென்று அமர்ந்து கிடுகிடுவென நடுங்கினாள். அருகில் வந்த கெளரியை மிகவும் பாசமுடன் அணைத்துக் கொண் டாள். சரசுவின் உடல் நெருப்பைப் போல் கொதிப்பதை மகள் உணர்ந்தாள். சரசுவின் வாயிலிருந்து சொற்கள் மிகவும் பிரயாசையுடன் வெளிப்பட்டன. கெளரி! நம்ம குடும்பம் இப்படியே நாசமாப் போச்சி ஒன் புருசன இனி நீ நம்பாதே! ஓங்க அக்காளுக மாதிரி ஒன் ஒடம்ப விக்கப்பார்க்காதே! ய முன்னேஸ்வரத்துல கணபதிப் பிள்ளைன்னு ஒருத்தரு தேத்தண்ணிக் கடவச்சிருக்கா ரு, அவருகிட்டப் போயி நான் சரசுவோட , புள்ளன்னு சொல்லு. மனுசன் புள்ள மாதிரி காப்பாத்துவாரு அப்பிடி அங்க அந்த மனுசன் இல்லன்னா, வந்து சமுத்தி ரத்துல குதிச்சிடம்மா! சமுத்திரத்துல குதிச்சிடு!
.
வாழ்க்கைதான் எவ்வளவு விநோதமானது. எவருக்கு, எவருக்கு எது எது தேவையோ அது அது கிடைப்ப தில்லை. அப்படியே கிடைத்து விட்டால் வாழ்க்கையில் எங்கே மேடு பள்ளம் இருக்கப் போகின்றது? மேடு இருந். தால்தான் பள்ளத்தின் தன்மை புரியும். பள்ளம இருந் த்ால்தான் மேட்டைப் பார்த்து மலைக்க முடியும்.

91
அஞ்ஞானம் இருப்பின் தானே ஞானம் அவசியமாகும். ஞானத்தின் தன்மையை எடைபோட மறுபக்கம் எதைப் போட வேண்டும்? அஞ்ஞானத்தைத்தான் போட வேண்டும் சரசு தனக்கு கிடைத்திருந்தால்...? கணபதிப் பிள்ளை தன் கடைக்குப் பின்னால் இலைகளே இல்லாமல் இருந்த தூங்கு மூஞ்சி மரத்தினடியில் துண்டை விரித்து சாய்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.
இப்போது அப்படி யோசிப்பது தனக்கு ஒவ்வாத காரியம் என்று மனதினுள் விசனித்து தலையைத் தூக்கிப் பார்க்கையில் கணபதியின் பின்புறம் காட்டு விறகுகளை எடுத்து மழை வந்தால் நனையா வண்ணம் ஒரு ஒரமாக அடுக்கிக் கொண்டிருந்த கெளரி தென்பட்டாள். கெளரி யின் வாய்மூலமாகவே அவளின் கடந்த காலங்களையும், சரசுவின் இறுதி நாட்களையும் கேள்விப்பட்ட கணபதிப் பிள்ளைக்கு தனிமையில் இருக்கும்போது சோகம் நெஞ்சைக் கவ்வியது.
விதி என்பதுதான் என்ன! இதுவா விதி? எதை எவரை முறித்து, இவர்களே வேண்டாம் என்று வந்தா யிற்றோ, அவர்களே இப்போது தன் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்ட விளையாட்டுத்தான் என்ன? கணபதிக்கு புதிது புதிதாக சந்தேகங்கள் தோன்றி மறைந்தன. −
தூரத்தே நொண்டிப்பண்டாரம் குளத்து மேட்டில் நொண்டி நொண்டி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இந்த அனாதை நொண்டிப் பண்டாரத்தின் வாழ்க்கையில் எல்வளவு வெற்றிகள் எவ்வளவு தோல்விகள் இருக்கும் யார் கண்டது? அந்த மனுஷனும் தனிமையில் அழக்கூடும். யாராவது காரியார்த்தமாக அழைத்து கிண்டிக்கிளறி னிால் ஆயிரம் கதைகள் வெளிவரக் கூடும். நொண்டிப் பண்டாரம் ஏன் அடிக்கடி அர்த்தமற்று சிரிக்க வேண்டும்? அழ முடியாதபடியால் சிரிக்கின்றதா?

Page 48
92
கெளரிக்கு உதவியாக வரதாப்பாட்டி ஏதோ கூறிக் கொண்டே விறகுகளை எடுத்துக் கொடுத்துக் கொண் டிருந்தாள். வரதாப்பாட்டிக்கு வயது எழுபதுக்கு மேலிருக்கும். இப்போது தனிமையிலிருச்கின்றாள் எனினும் பேரன் பேத்திகளை கண்டிருக்கக்கூடும். அந்த மடம் தான் அவளது இறுதி வீடு. என்றாவது ஒரு நாளைக்கு அந்த மடத்தில் இருந்து தான் வரதாப்பாட்டி சுடலைக்குப் போவாள். வரதாப்பாட்டி மட்டும் என்ன?” இந்த நொண் டிப்பண்டாரமும் தான். அப்படியானால் நான்?.கணபதி நெற்றியில் கையை வைத்து அழுத்திக் கொண்டார். ஒரு விநோதமான காட்சி அவர் மனக் கண்ணில் வந்தது. தன் உயிரற்ற உடலின் மீது கெளரி விழுந்து புரண்டு அழுவதைப் போல.
சரசுவை தான் விரும்பியதற்காக சரசு போகும்போது தந்துவிட்டுப் போன சன்மானமா இது ? என்றோ ஒரு நாள் நான் இப்படி இதையாவது யாசிப்பேன் என்று அவளாகவே தீர்மானித்த தீர்மானமா?
சாயங்கால சூரிய ஒளி மருதமரத்து கிளைகளின் ஊடாக கணபதியின் புலனைத் தாக்கிற்று. கணபதி கண்ணை மூடி ஏதோ தியானத்தில் ஆழ்த்திருப்பவரைப் போல் காணப்பட்டார்.
**டொக், டொக்" - ஊன்று கோலின் ஒலி யார்? நொண்டிப்பண்டாரமாகத் தான் இருக்கும். ஒலி நின்றது. நொண்டிப்பண்டாரம் குனிந்து தன்னை நோக்குவதை கண்களை மூடியபடியே கணபதியால் உணர முடிந்தது.
‘தூக்கமா?' பண்டாரம் கேட்டது. -
'ம்' கண்களைத் திறக்காமலேயே கணபதிப்பிள்ளை உம் கொட்டினார். 'பாவம் இந்த மனுஷன் தான் நம்மள விட்டு எங்க போகும் மனதுக்குள் முணுமுணுத்தவாறு ‘எங்க குளக்கட்டுக்கா?’’ "ஆமா' - சாவகாசமாக பண்டாரம் அமர்ந்து வானத்தைப் பார்த்து சிறிது நேரம்

93
ஆராய்ந்து, பின்னர் 'கணபதிசாமி! இன்னிக்கி மழ வரும்’ என்றது.
கணபதிப்பிள்ளை கண்களைத் திறந்து பார்த்தார். நொண்டிப்பண்டாரம் சொன்னது சரிதான். வானத்தில் மேற்கு மூலையில் இருந்து பெரிய கரும் மேகத்திட்டுகள் ஏத்ோ பெரிய போருக்கு யுத்த சன்னத்தமாவதைப் போல கிழக்கு நோக்கி வியூகம் அமைத்துக் கொண்டிருந்தது.
இப்போது, சூரியன் மேற்குப் பக்கம், தென்னந் தோப்பில் இறங்கி, வயலுக்கு அப்பால் மறைய முயற் சித்துக் கொண்டிருந்தான். வானின் ஒரு கோவுயில் ஏராளமான பறவைக் கூட்டங்கள் வெகு உயரத்தில் குளக் கட்டுக்கு அப்பால் பறந்து, திடீரென எதையோ மறந்து விட்டதைப் போல அரை வட்டமாகத் திரும்பி வேறு பக்கம் பறக்க வாரம்பித்தன.
பெரிய கோயிலில் சாயங்கால பூஜைக்கு அடிக்கும் பெரிய மணியோசை சமீபத்தில் ஒலிப்பதைப் போலக் கேட்டது.
விறகுகளை அடுக்கி முடித்த கெளரி கடையின் பின் புறம் அமர்ந்து பாத்திரங்களைக் கழுவிக் கொண் டிருந்தாள். வரதாப்பாட்டி நின்றபடியே வானத்தைப் பார்த்து கைகளை அபிநயித்து ஏதோ கூறிக்கொண் டிருந்தாள். அவரும் மழை வரும் என்று கூறியிருக்சக் கூடும்.
ராமனும் அவன் நண்பர்களும் முன் காட்டு சேனை யில் வரப்பு கட்டிவிட்டு மண்வெட்டி சகிதம் தூரத்தே வெற்று வயல் வெளியில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மெல்ல மெல்ல பெரிய துளிகளாய் விட்டுவிட்டு மழைத் துள் விழ ஆரம்பித்தது. மழைக்கு அகப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் நொண்டிப்பண்டாரம் கட்டையின் உதவியுடன் மடத்துப்பக்கம் விரைய ஆரம் பித்தது.

Page 49
94. கணபதியும் எழுந்து துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கடைப்பக்கம் நடக்க வாரம்பித்தார். குளத்தங்கரைப் பக்கம் இரண்டொரு தவளைகளின் கூப்பாடு கேட்கத் தொடங்கியது.
அன்றிரவு மழை பெய்தது. மழை யென்றால் சாதாரண மழையில்லை வானமே கிழிந்துவிட்டாற் போல, தொடர்ந்து 'சோ' வென்று வர்ழித்தது மழை வேண்டும் என தவங்கிடந்த தவளைகள் குதியாட்டம் போட ஆரம்பித்தன. குரலில் தான்.
வரதாப்பாட்டி அன்றிரவு கணபதிப்பிள்ளையின் கடையிலேயே படுத்துவிட்டாள். கெளரிக்குத் துணையாக சணபதிக்கு என்ன தெரியும்? வரதாப்பாட்டி பத்தும் கண்டவள். محمر மெல்லிய தூற்றலோடு இரவு ஆரம்பித்த மழையோடு அடையை மூடிய கணபதிப்பிள்ளை வெளியே மழையில் படுப்பது முடியாத காரியம் என்று முன் பக்கத்து மடத்தில் நொண்டிப்பண்டாரத்தின் பக்கத்தில் போய் படுத்துக்கொண்டார்.
கணபதிப்பிள்ளை பக்கத்தில் வந்து பாயை விரித்துப் படுக்கும்போது தன் நொண் டிக்காலை சொறிந்து கொண் டிருந்த நொண்டிப்பண்டாரம் ‘என்னா! கணபதிசாமி. நாஞ்சொன்னேனில்ல மழை வருமின்னு பாத்தியா?” தன் தீர்க்கதரிசனம் உண்மையானதையிட்டு தொண்டிப் பண்டாரத்துக்கு ஏக சந்தோசம்.
மழை நன்றாகப் பெய்தது. காற்றும் மிக மோசமாக வீசியது. மடத்து முன்புறம், பாதையோரத்தில் மழை நீர் ஒடும ஒச்ை சலசலவெனக் கேட்டது. سی--
கணபதிப்பிள்ளை ஒரு பீடி பற்றவைத்துக் கொண் டார். லொக்கு லொக்கு என்று இருமியவாறு, மழையில் நனைந்து மடத்து வாசலில் ஒண்டிக்கொள்ள இடந்தேடிய ஒரு நாயை நொண்டிப்பண்டாரம் தன் ஊன்று கோலால்

95
அடிக்க அது முனகியவாறு வெளியே பாய்ந்தது. “எவ்வளவோ எடம் இருக்கு தாயளி நாய் மூதிக்கு இது தான் எடம்' மழையின் ஓசையையும் மீறி நொண்டிப் பண்டாரம் இரைந்தார்.
வெளியே காற்றின் உக்கிரம் அதிகரித்தது. மழ்ைச் சாரல் மடத்து முன் தாழ்வாரத்தை நனைத்தது.
“ஒய்! நாய அடிக்காதியும் மழையில்ல பெய்யுது வ1யில்லா சீவன் பாவம்' - கணபதிப்பிள்ளை கூறியபடி புரண்டு படுத்தார்.
மீண்டும் அடிப்பட்ட நாய் குளிர் தாங்காமல் மடத்து முன்புறத்தில் பயந்து பயந்து வாலைச் சுருட்டிப்படுத்துக் கொண்டது. பண்டாரம் விரட்டவில்லை. வெளியே எட்டிப்பார்த்தார். கோயில் கோபுரத்தின் மின்விளக்கு அந்த மழையில் கூட பிரகாசமாக எரிந்து கொண் டிருந்தது.
"ஒய்! கணபதிசாமி எழும்பும்!' - பண்டாரம் அவசர அவசரமாக கணபதியை உலுக்கி எழுப்பிற்று.
கணபதிப்பிள்ளை விருட்டென்று எழுந்து துரக்கக் கலக்கம் முறியாமல் பாதையோரத்து மின் விளக்கினொளி யில் தன்னை எழுப்பிய பண்டாரத்தைப் பார்த்து ஏதும் புரியாமல் அலங்க மலங்க விழித்து ‘என்னப்யா?" என்று அழைத்துக்கொண்டார்.
"கணபதி கணபதி!' - தூரத்தில் கடையத் திறந்து வரதாப்பாட்டி அழைக்கும் குரல் மழையையும் மீறிக் கேட்டது.
கணபதிப்பிள்ளை வாரிச் சுருட்டி எழுந்து நின்றார். மழை மிகவும் சீற்றத்தோடு சீறியடித்தது. பண்டாரம் ஏது செய்வது என்று புரியாமல் தன் ஊன்றுகோல்களை கையிடுக்களில் பொருத்தியப்படி டொக்கு டொக்கென முன் பக்கம் விரைய வால் மிதிப்ட்ட நாய் ஈனஸ்வரத்தில் அழுதவண்ணம் மழையில் இறங்கியது. *

Page 50
96
"கணபதி கெளரிக்கு மிச்சம் வருத்தம்' - வரதாப் பாட்டியின் குரல் மழை இரைச்சலையும் மீறி கணபதியிள் செவிப்புலனைத் தாக்கி அதே மழை யோசையில் கரைந்தது.
இப்போது கணபதிப்பிள்ளைக்கு முற்றாக தூக்கம் கலைந்துவிட்டது. மழையில் இறங்கி எதிரே இருளில் இருக்கும் தன் தட்டிக் கடையை நோக்கி ஓடினார். கடை வாசலில் ஒரளவு நனைந்து விட்டிருந்த வரதாப்பாட்டி 'கணபதி கெளரிக்கு வருத்தம் கூடிரிச்சி மருத்துவிச்சி அம்மா கூட இன்னிக்கி காலேலதான் கொழும்புக்கு போனாங்க, போ! போ!! போய் ராமனப் புடிச்சி பக்கிக் கரத்தயக் கட்டிகிட்டு வா4 ஆஸ்பத்திரிக்குப் போகணும்" அந்த அசுர மழையில் கணபதிப்பிள்ளை ராமனின் வீட்டை நோக்கி ஓடினார். காளிகோயில் பக்கவாட்டில் இருளடர்ந்த செம்மண் சாலையின் கோடியில் குளத்தங் கரைப் பக்கம் ஒரு ஒரத்தில், ராமனின் குடிசை சிம்னி விளக்கின் உபயத்தில் இன்னும் விழித்துக்கொண்டிருந்தது
ராமன் பக்கத்து வீட்டு முதியான்சே முதலியின் பக்கிக் கரத்தை வண்டியை வாங்கி மாடு பூட்டி கணபதிப் பிள்ளை, கெளரி - பண்டாரம் - வரதாப்பாட்டி சகிதம் பக்கத்து நகரத்து ஆஸ்பத்திரிக்கு வந்து கெளரியை பிரசவ வார்ட்டில் சேர்க்க இரவு இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. பண்டாரம் வரவேண்டிய அவசியம் இல்லை. எனினும் அவரும் வந்தார்.
9
கெளரியை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, துணைக்கு வரதாப்பாட்டியை அங்கேயே விட்டுவிட்டு கணபதியும் - பண்டாரமும், ராமனும் கிராமத்துக்கு வந்து சேரும் போது மழை பூரணமாக நின்று விட்டிருந்தது பாதை

97
யோரத்துப் பள்ளங்களில் நீர் சுழித்து ஓடிக்கொண் டிருந்தது.
மின் விளக்கின் ஒளியில் மழையில் குளித்து விட் டிருந்த பெரிய கோயில் கோபுரம் பளபளப்புடன் புதிய மெருகு பெற்றிருந்தது. மணி அதிகாலை நான்கு இருக்கும். குத்து மதிப்பாக கணபதிப்பிள்ளை நேரம் குறித்தார் நொண்டிப்பண்டாரம் அதை எதுவித எதிர்ப்புமில்லாமல் ஆமோதித்தார்.
கணபதிப்பிள்ளையோ - பண்டாரமோ மடத்துக்குப் போகவில்லை. தட்டிக் கடையைத் திறந்து கணபதிப் பிள்ளை அலுமினியப் பானையை அடுப்பில் வைத்து நீரைக் கொதிக்கவைத்து தேநீர் போட்டார். தேநீர் குடித்த பின் ராமன் வண்டியை ஒட்டிக்கொண்டு காளி கோயில் ஒழுங்கையில் மறைந்தான்.
‘என்ன இருந்தாலும் வரதாப்பாட்டி வரதாப்பாட்டி தான் "பண்டாரம் வரதாப்பாட்டியின் கீர்த்தி பாட ஆரம்பிக்கையில் பெரிய கோயில் முதல் பூஜைக்கான
49 is
ஆயத்த மணி "டாண் டாண்” என ஒலிக்க ஆரம்பித்தது. கணபதிப்பிள்ளை ஒலி வந்த திக்கை நோக்கி கன்னத்தல் போட்டுக்கொண்டார்.
பண்டாரம் தன் போக்கை இது என்னுமாற்போல் கட்டைகளை ஊன்றிய வண்ணம் "கணபதி! நான் குளக் கட்டுக்குப் போறேன்!” - என்று கூறிக்கொண்டு மழை யற்ற வீதியில் இறங்கி நடந்தது.
கணபதிப்பிள்ளை குளிப்பதற்காக துணிமணிகளை எடுத்துக்கொண்டு குளக்கட்டைக்கு போக பாதையில் இறங்குகையில் இப்போதுதான் நான் வருகிறேன் என்ற படி பின்னிலவு வானத்துக் கோடியில் எழுந்தது.
ஒரு-7

Page 51
98
குளத்தில் இறங்கி கழுத்து நீரில் நின்று குளிக்கையில் கணபதிப்பிள்ளைக்கு மிசவும் சந்துஷ்டி யாக இருந்தது, நன்றாக முங்கி முங்கிக் குளித்தார்.
குளத்து மேட் டி ல் வயலுக்கு வரப்பு சட்டப் போகும் பெண்களின் ஆண்களின் உருவங்கள் நிழல்போலும் தெரிந்தன.
கணபதிப்பிள்ளை குளித்து முடிக்கையில் ஊமை வெளிச்சம் பரவியது. கிராமத்து மத்தியில் இருந்த ஆல மரத்தில் இதுவரைக் ஒண்டிக் கொண்டிருந்த காக்சைகள் கா! கா! வெனும் ஒலியுடன் மரங்களுக்கு மேலாகப் பறக்கவாரம்பித்தன.
குளக்கட்டு மேட்டில் ஓடி வந்த ஒரு சிறுவன் மெல்லிய இருளில் குளத்தில் கணபதிப் பிள்ளையைத் தேடி "தாத்தா! தாத்தா!' என்று குரல் கொடுத்தான். சிறுவனின் அழைப்புக் குரலை கேட்டபடியே குளத்தில் இருந்து மேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கணபதிப் பிள்ளை தன்னை அழைப்பது ராமனின் மூத்த மகன் என்பதை உணர்ந்து என்னடா பேராண்டி?" என உற்சாகத்தோடு அழைத்தார்.
*கெளரி அக்காவுக்கு புள்ள பொறந்திடிச்சாம் சிறு வன் குதூகலத்துடன் ஆடியபடி கூறினான்.
'ஆருடா சொன்னது" - வெகு உற்சாகத்துடன் கேட்டார் பிள்ளை. 'மீனுக்கு ஐஸ் வாங்க போன பொன்னுசாமி மாமா கிட்ட பாட்டி சொல்லிச்சாம்' கூறியபடியே திரும்பிய பேராண்டி குளக்கட்டுப் பாதையில் கோயில் பக்கமாக ஓடினான்.
கணபதிப்பிள்ளை மீண்டும் குளத்தில் இறங்கினார். முங்கினார். சந்தோசம் பிடிபடவில்லை. மீண்டும் மீண்டும் முங்கினார். நீந்தினார். இப்போது அந்தக் குளமும், அதைச் சுற்றிப் படர்ந்திருந்த நீல மலர்ச் செடி

99
களும் குளக்கரையில் ஒங்கி வளர்ந்திருந்த மருத மரமும்" தூரத்து வயல் வெளியும், வரப்புகளும், இடையில் ஒடும் வாய்க்கால்களும் எல்லாமே வனப்பு மிக்கதாய், செளந்தர் யம் மிக்கதாகத் தெரிந்தது கணபதிக்கு.
கணபதிப்பிள்ளை குளித்து கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப்போகும் போது மணி ஏழரையைத் தாண்டிவிடடது. பிரசவ வார்ட்டில் கெளரியின் கட்டிலுக்குப் பக்கத்தில் புஷ்பத் தொட்டியில் ஒரு மனித புஷ்பம் விழி மூடி கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டிருந்தது.
கெளரி விழி மூடிப் படுத்திருந்தாள். இந்த உலகுக்கு ஒரு புதிய ஜீவனைத் தந்து விட்ட்ோம் என்ற நிம்மதி போலும் - அவள் முகம் சிவந்து நிஜ்களங்கமாக இருந்தது. மழையின் தாக்கமும், அவளின் இயற்கையான பலவீனமும் அவள் உடலைத் தாக்கியிருந்தன.
'ஒன்றும் பிரச்சினை இல்லை!” - இன்னும் ஒருமணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்-ஒரு வார்டு நர்ஸ் கலவர முற்ற சணபதிக்கு சமாதானம் கூறினாள்.
பெரிய டொக்டர் வந்து பார்த்துவிட்டு ஒரு ஊசி போட்டார். ஊசி ஏற்றும்போது ஒரு நூலிழை போலும் வருத்தத்தின் சாயல் கொரியின் முகத்தில் ஓடி மறைந்தது.
'வரதம்மா! - கெளரிக்கு எல்லாம் சரிவரும் நான் போய் பகல் பூசைக்கு கெளரி பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன். அந்திக்கி டிக்கட் வெட்டுனா வூட்டுக்கு கூட்டிக்கிட்டு போவம், ராமன்ட் கரத்த வேணாம் கிட்டத்தானே ஒரு கார் புடிப்போம்'- கணபதிப்பிள்ளை கூறியபடி செலவுக்கு வரதாப்பாட்டி யின் கையில் ஐந்து ரூபாவைக் கொடுத்து பஸ் பிடித்து கிராமம் வந்து சேர்ந்தார் மணியும் பத்தாகியது. பெரிய கோயிலில் கெளரியின் பெயருக்கும், புதிதாகப பிறந்தி ருக்கும் சரசுவின் பெயருக்கும், ஆம்! அந்தப் புதிய புஷ்பத்

Page 52
100
துக்கு பிள்ளை சரஸ்வதி என்றே பெயர் சூடடிவிட்டார். அருச்சனை பண்ணி விபூதி பிரசாதமெல்லாம் எடுத்துக் இரண்டு பதினொரு மணியளவில் பஸ் பிடித்து நகரத்துக் குப் புறப்படுகையில் நானும் வருகிறேன் என்று ராமனும் வந்து ஒட்டிக் கொண்டான்.
urf u 65 ஏமாற்றுவது? எல்லோரையும் எல்லோ ராலும் ஏமாற்றலாம். ஏமாற்றுகிறார்கள். ஏமாறிக் கொண்டிருக்கின்றார்கள். எல்லோராலும் ஏமாற்ற முடியுமென்றால். ஏன் கெளரியால் ஏமாற்ற முடியாதா?
கெளரி எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள் 6. Täl-6?? ஏமீாற்றிவிட்டாள். புதிதாகப் பிறந்து புஷ்பத்தொட்டியில் ஒரு புஷ்பமே போலும் இருக்கும் அந்த சிசுவை ஏமாற்றிவிட்டாள். சணபதிப்பிள்ளையை ஏமாற்றிவிட்டாள் வரதாப்பாட்டியை, ஏமாற்றிவிட் Lாள். ஆனால் அவள் தாய் சரசுவை மட்டும் ஏமாற்ற வில்லை. சமுத்திரத்தில் குதிக்கவில்லை. தன் அக்காமார் ளப் போல் உடம்பை விற்கும் தொழிலுக்கு தன்னை ஆயத்தமாக்க்வில்லை தன் தாயார் கூறியது போலவே 9防画并 கணபதிப்பிள்ளை எனும் மனிதனைத் தேடி வந்து சேர்ந்து, அந்த மனிதனுக்கு இந்த வாழ்வின் கடமைகளை னர்த்திவிட்டு ஒரு பொறுப்பையும் கொடுத்துவிட்டு ஜன்னி என்ற C35rru5?aöT பெருமையோடு போய்விட்டாள்.
கணபதிப்பிள்ளை தன் தோளில் இருந்த மேல் துண்டை- வாயில் மூடி குமுறிவரும் அழுகையை கட்டுப் படுத்துகின்றார். grt LDgöı önl- பெருகிவரும் கண்ணீரை மறைக்க முடியாமல் துடைத்துக் கொள்கிறான். வரதாப் பாட்டி பிரமை பிடித்தாற்போல் அந்தப் பிரசவ வார்டு மதிலுக்கு அப்பால் பார்வை குத்திட்ட வண்ணம் கெளரி போனது தெரியாமல், தெரிந்தும் ஏற்றுக் கொள்ள முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்.
தன் ஜனனத்தைப் பிரகடனப்படுத்துவது போலும், தன் தாயின் அஸ்தமனத்தை அறிவிப்பது போலும்

101 அந்தப் புஷ்பத் தொட்டியில் இருந்து புறப்பட்ட புதிய அழுகை ஒலி கணபதிப்பிள்ளையை இந்த உலகத்துக்கு அழைத்து வந்தது.
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன் பாட்டிலேயே போகும், அந்தக் கிராமத்தின் சுகங் களும், துயரங்களும் சோபனங்களும் எந்தவித சட்ட நியதிக்கும் உட்படாமல், நிற்கமுடியாமல் கால வெள் ளத்தில் இழுபட்டு ஓடிக்கொண்டிருந்தன.
வழமை போலவே ஒவ்வோர் வருடமும் அந்தக் கிராமத்து பெரிய கோயிலில் முப்பது நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். முடியும் தேரோட்டம் நடைபெறும். தீர்த்தமாட சப்பரம்சுவாமியுடன் மாயவன் ஆற்றை நோக்கிப் போகும். காளி கோயில் வேள்வி யுடன் முடியும், அடுத்த வருடம் தொடங்கும்.
அதோ! பல வருடங்களுக்குப் பிறகு அதாவது கெளரியின் மகள் சரஸ்வதியின் ஜனனத்திற்குப் பிறகு ஒரு நாள் அந்தக் கிராமமே திருவிழாவில் அமர்க்களப் படுகிறது அன்று வேட்டைத் திருவிழா சுவாமி குதிரை மீது ஆரோகணித்து கையில் வில்லும் அம்புமாக வேட் டைக்கு புறப்பட்டுவிட்டார். ܗܝ
காவடியாட்டம் தேரோடும் வீதியை இரண்டாக் கிறது. கொழும்பு நகைக்கடை முதலாளி, ஆயிரத்தொரு தேங்காய்கள் உடைக்கிறார். பாண்டுவாத்தியக் கோஷ்டி பினர் மிகப் பிரபலமான ஜனரஞ்சகமான ஒரு சினிமாப் பாடலை நீட்டி முழக்குகின்றனர். பாதையின் இரு பக்கங் களிலும் மின் விளக்கு அபிஷேகத்தில் வளையல் கடைகள் ஜாஜ்வல்யமாக பிரகாசிக்கின்றன.
அவ்வளவு ஏன்? சாதாரண நாட்களில் அழுதுவடியும் கணபதிப்பிள்ளையின் தேநீர்க்கடை கூட இன்று திருவிழா கூட்டத்தினால் அமளிப்படுகின்றது. கணபதிப்

Page 53
102
பிள்ளைக்கு இப்போது சற்று வயது கூடினாற்போல் தெரிகிறது, தாடி முழுவது நரை மயிர் நிறைந்து விட்டது. இருப்பினும் தன் தேநீர்க்கடையில் ஒடியாடி வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்தக் கடைக்கு தானே முதலாளி என்பது போல் ஒரு மூலையில் சாய்ந்து கொண்டு 'கணபதி! அங்க ஒரு பிளேன்டீ! இஞ்ச ஒரு டீ" என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தொண்டிப் பண்டாரம், மிகுந்த சிரமத்துடன் நீர்க்குடத்துடன் வருகிறாள் வரதாப்பாட்டி.
அது சரி ஒடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் கணபதிப்பிள்ளையின் பின்னால், அவர் வேட்டியைப் பிடித்தபடியே விரலை சூப்பியபடி ஒரு ஐந்து வயதுப் பெண் பிள்ளை பொட்டு வைத்து, சடை பின்னி, பூவைத்து நன்றாக உடுத்தி காலில் கொலுசு சப்தம் கிணு கினுக்க, தாத்தா! தாத்தா' என்று மழலை பேசி பின்னாலேயே சுற்றுகிறதே! அது யார்?
கணபதிப்பிள்ளை தன் வேலையைக்கூட இடையில் விட்டுவிட்டு ‘சரசு! இஞ்ச வாம்மா’ என்று அந்த சிறுமியைத் தூக்கி கடை வாசலில் நடக்கும் காவடியாட்ட கோலாகலங்களை உற்சாகமாகக் காட்டுகிறாரே! அந்தச் சிறுமி யார்?
அந்த ஐந்து வயது சிறுமி வேறு யாரும் இல்லை" சாட்சாத் கணபதிப்பிள்ளையின் மகள் வயிற்றுப் பேத்தி தான். ஒ! ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளில் காலமான கெளரியின் மகளா? ஆம் அவளே தான்!
அதோ! அந்தத் தாத்தாவும் பேத்தியும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்தக் கடை வாசலில் இருந்து வேட் டைக்குப் போகும் சுவாமியைத் தரிசிக்கின்றார்கள்.

உருவெளி மனிதர்கள்
'அய்யா!'
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு இளைஞன் நின்றிருந்தான். நன்றாக உற்றுப் பார்த்தால் இளைஞன் என்றும் சொல்ல முடியாது. நடுத்தர மனிதன் என்றும் சொல்ல முடியாது. காதோரம் வழிந்த செம்பட்டை சிகை கழுத்துவரை பரவியிருந்தது. மீசையே முளைக்காத முகம். ஏனோ வரட்டுத்தனம் மிகையாகவிருந்தது. இவன் யார்? ஏன் என்னை அழைத்தான்? இவலை எங்கோ கண்டமாதிரி ஞாபகம். மீண்டும் மீண்டும் நினைவுத் தேடல்.
'அய்யா!'
'நன்றாக உற்றுப்பார்த்தேன். என்னுள் பழைய ஆவணங்கள் சிறைப்பட்டன. மூளை ஒரு ஆவணத்தை சடக்கென்று துக்கிப் போட்டது. அவன்தான். அவனே தான். ஒ! எத்தனை வருடங்கள். இத்தனை வருடங்கள் கழித்து இவனை சந்திப்போமென்று நினைத்ததுண்டா? அது சரி! இவனைப் பற்றி நினைத்தால்தானே சந்திப்பை பற்றி நினைப்பது. அவன்தானா? ஒரு சம்சயம்.
அவனே தான் - அவன்தான்

Page 54
04
அன்றைய அவனுக்கும் இன்றைய இவனுக்கும் என்ன வித்தியாசம். அல்லது என்ன ஒற்றுமை?
'செட் ரெடியா?"
'ஆர்டிஸ்ட் ஒகே!"
“சேர்! எல்லாம் ரெடி, செட் வேர்க் முடியல்ல'
'' 6657?'
ஆர்ட் டைரக்டர் அருகில் வந்தார். "எல்லாம் சரி அந்த சைட் சீன் பெயிண்டிங் மட்டும்தான்." இழுத்தார்
gait?'
"நேத்து முழுக்க எனக்கு காய்ச்சல்"
، ،gh நீங்க இத சீக்கிரம் முடியுங்க. அடுத்த ஷாட் இந்தப் பக்கம்தான்'
'ஒகே சேர்! அத முடியுங்க! இது இப்ப முடியும். ஒகே!' -
"என்னப்பா! கெமரா? சரியா!'
ஒகே! லைட்ஸ் ஒன்!"
'அங்க பைவ் கேவி'
'இந்தாப்பா, அம்மாவுக்கு ஒரு பேபி கொடு!" கோடாவில் இருந்தவன் அம்மாவுக்கு பேபி லைட் கொடுக்க ஓடினான்.
"ஒய்! அவன் கல்யாணம் முடிச்சி மூணு வருஷம் பொண்சாதிக்கு ஒடு பேபி கொடுக்க முடியல்ல, இப்ப இஞ்ச ஒடனே ஒரு பேபியா? எல்லோரும் சிரித்தார்கள். எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் நான் சிரிக்கக் கூடாது. தான் சிரித்தால் என் ஈகோ என்னாவது?
"லைட்ஸ் ஆன்"
"ஒய் அந்த டூ கேவிக்கி நெட்போடு!”

105
"பைனல் ரிகர்ஷல் என்ட் டேக்' பஸ்ஸர் ஒலித்தது. ஒரே நிசப்தம். யாரும் மூச்சு விடக் கூடாது.
'பேன் ஒப்!” சுழன்ற காற்றாடி நிறுத்தப்பட்டது.
"ஸ்டார்ட் காமரா!'
‘ஆக்ஷன் s 'ஏங்க! நீங்க இப்பிடி செய்யலாமா? நான் ஒங்சளையே நெனச்சிகிட்டு உயிர் வாழறேன்'
"கட் கட்!"
“GLj, G’’
"கேமரா ஸ்டார்ட்"
"ஆக்ஷன்!" -
"ஏங்க நீங்க இப்பிடி செய்யலாமா? நான் ஓங்களையே நெனச்சிகிட்டு உயிர் வாழறேன்'
"கட் ஷொட் ஒகே!'
"லைட்ஸ் ஒப் பேன் ஒன்!"
நான் வெளியே வந்தேன். மூணாவது புளோரின் சிறிய தகட்டுக் கதவு திறப்பட்டது. சில்லென்ற குளிர் காற்று முகத்தைத் தழுவி வியர்வையைத் துடைத்தது முன்புறம் தியேட்டரில் சிகப்பு மின் விளக்கு பட்டென்று எரிந்தது. ரீ ரெக்கார்டிங் அல்லது டப்பிங் நடக்கின்றது போலும்
'அய்யா! வந்து பாருங்க!"
ஒரு இளைஞன் கையில் தூரிகையுடன், முத்தரும்பும் முகத்துடன் வந்து பக்கவாட்டில் பவ்வியமாக நின்றான்? இவன் எதைப் பற்றி பேசுகிறான். நிஜத்திற்கு வர சில நிமிடங்கள் பிடித்தன. ஒ! இவன்தான் அந்த கடைசித் தூணில் சித்திரம் வரைந்து கொண்டிருந்த ஒவியன் ச அவிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டர் உள்ளே சென்றேன்.

Page 55
06
செட் நன்றாக இருந்தது. கடைசி வேலை இவனின் வர்ணங்களினால் முழுமை பெற்றிருந்தது.
"எங்க ஆர்ட் டைரக்டர்?"
"போயிட்டாரு, அவருக்கு சொகமில்ல'
'அப்ப இத யாரு செஞ்சது?’
"நாந்தான்" மிகவும் சந்தோசத்துடன் ஒப்புக் கொண்டு. தான் ஒப்புக்கொண்டது தவறோ என்ற பாணியில் 'அவர்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்"
இது ஏன்? குரு விசுவாசமா? இருக்கும், இருக்கும் குரு பிரம்மா.குரு விஷ்ணு.
'தம்பி ஒன் பேரு?" அவன் தன் பெயரைச் சொன் னான். சொல்லும் போதே ஒரு பெண்ணைப் போல கூச்சத்துடன் அபிநயித்தான் ஹார்மோன் சரியாக சிந்திக்கவில்லை. அது அவன் குற்றமில்லை. "தப் பி அடுத்த படத்திற்கு நீதான் ஆர்ட் டைரக்டர்' அவன்.கண் கள் ஆச்சரியத்தால் விரிந்தன. நான் அவன் கண்களைப் பார்த்து வியந்தேன். ஒ! எப்படிப்பட்ட அழகிய விசால மான நயனங்கள். சரி! இவன் மீனாகழியின் அம்சமா? இல்லை காமாசுழியின் அம்சமா? அதை மறந்து விட்டேன்.
‘ஸ்டார்ட் காமிரா!'
‘ஆக்ஷன்'
'கட்! கட்!"
ʻʻ3L l5; (8ʼʼ
'டேக் த்ரீ"
'ஒகே!”
"லைட்ஸ் ஒப்"
"பெக் ஒப்!"
'அய்யா! என்ன ஞாபகமிருக்கா?”

107 “ஒ! நீ அந்த படத்துல அளிஸ்டென்ட் ஆர்ட் டைரக்
டரா இருந்தேல்ல! அது சரி அதுக்குப் பொறகு ஒன்ன காணல்லியே! எங்க போயிட்டே?
"நான் பிரான்சுக்கு போனேன்' அவன் சற்று எதையோ எண்ணி மெய் மறந்தான். சில நேரம் பிரான் சுக்கு போயிருக்கக்கூடும். அவன் திரும்பி வரும் வரை காத்து நின்றேன்.
"இப்பவும் படம் செய்றிங்களா?' 'இல்ல இப்ப சும்மா தான் இருக்கிறேன். எழுதுறேன். நெறைய எழுதுறேன் ’’
அவன் அர்த்தமில்லாமல் சிறிது நேரம் தன் கைவிரல் நகத்தை மாற்றி மாற்றி கடித்தப்டி நின்றிருந்தான். வாயினுள் ஏதோ முனகிக் கொண்டான். 'ஆர் யூ ஒல் ரைட்?"
அது சரி எனக்கு என்னவாயிற்று? இவன் ஏன் ஆர் யூ ஒல் ரைட் என்று கேள்வி கேட்கணும். திருப்பி ஏதாவது கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டேன். அமைதியாக பதில் கூறினேன். "ஐ ஆம் ஒல் ரைட்"
"பிளிஸ் கம் வித் மீ!' சொல்லியபடியே அவன் நின்றிருந்த பாதையின் பக்கத்தால் ஒரு குறுகலான சத்தில் நுழைந்தான். நடந்தான். தான் வருகிறேனா இல்லையா என்று திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவ்வளவு தூரம் என்னில் நம்பிக்கை அல்லது அலட்சியம் நான் பின் தொடர்ந்தேன்.
அந்தக் குறுகலான பாதை போய் ஒரு படிக்கட்டில் நின்று விட்டது. அண்ணாந்து பார்த்தேன். எல்லாமே மரத்தினால், மரச்சட்டங்களினால் ஆன கட்டடங்கள், படிக்கட்டுக்கள்.
மூத்திர நெடி நாசியை துளைத்தது.

Page 56
108
மரப்படிக்கட்டின் கீழ் ஆங்காங்கே அசிங்கங்கள் வாத்துகளின், புறாக்களின் சல்லாபங்கள் - சப்தங்கள்.
படிக்கட்டின் கீழ் பல பெட்டி வீடுகள், ஒரு பக்கத்தில் குழாய் நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் பொதுக் கழிவறை, ஒரு நடுத்தர வயது கறுத்த பெண் யாரையோ மிக மோசமாக திட்டியபடி குளித்துக் கொண் டிருந்தாள்.
அவன் பலகைப்படிகளில் ஒரு நோயாளிபோல் ஏறி னான். நான் பின் தொடர்ந்தேன். இப்போது திரும்பிப் பார்த்தான். சிரித்தான். அவனுடைய அழகிய முகம் மிகவும் வரண்டு கிடந்தது. முகம் முழுவதும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் வந்தும் வராமலும் இருந்தன. அடிக்கடி வழியும் சிகையைக் கோதிக் கொண்டான். இரண்டாவது மாடி கைப்பிடி முழுவதும் கழுவிய துணி களை உலரவைத்திருந்தார்கள். ஏறும் படிக்கட்டு முழு வதும் ஈரப்பசை, மேலே பாத்ரூம் வாசலில் இருந்து அழுக்கு நீர் படிக்கட்டு வழியாக கீழே போய்க் கொண் டிருந்தது. மேல் மாடியின் ஆரம்பத்திலேயே ஒரு சிறு பிள்ளை அம்மணமாக பேப்பரை விரித்து மலஜலம் கழித்துக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் ஒரு இளம் பெண் சட்டை ஊசியைக் சழற்றி பல்லைக் குத்திக்கொண் டிருந்தாள். மாடித்தளம் முழுவதும் ஈரமயம் மூத்திரமா? கழிவு நீரா? எது என்று பிரித்துணர முடியாத வகையில் எனினும் பொதுவாக ஒரு துர்நாற்றம், நான் எல்லோ ருக்கும் பொது என்ற பாவனையில் அங்கே வியாபித் திருந்தது. இரண்டாவது மாடியில் அந்தத்தில் அவன் சென்று, நின்று திரும்பி என்னைப் பார்த்தான். நானும் ஒரு மாதிரியாக அந்த அசிங்கங்களை மிதிக்காமல் வந்து சேர்ந்தேன். w . .
“திஸ் ஈஸ் மை ரூம்!” - அவன் ஏதோ தன் புதிய மாளிகையை காட்டுவதைப் போல் காட்டினான்.

109
மூலையில், ஒரு இருண்ட அறை நான் உள்ளே புகுந் தேன். அங்கே.ஒரு சாம்ராஜ்யமே நடந்து கொண் கொண்டிருந்தது. சிறிய அறை பலர் அமர்ந்திருந்தார்கள். பெரிய பிளேயரில் பீத்தோவனின் ஏழாவது ஸிம்பனி மிக அமைதியாக, ஒழுங்காக தன்னை வெளிப்படுத்திக்கொண் டிருந்தது. அந்த அறை இருளடித்துப் போயிருந்தது. எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு கூட அந்த அறைக்கு தன்னால் சேவை செய்ய முடியாது என்று அலறுவதைப் போல இருந்தது.
ஒரு மூலையில் மூவர் இருந்து ஒருவரை ஒருவர் மிகவும் கரிசனையுடன் பார்த்துக்கொண்டு கண்களினால் சம்வாதமிட்டுக் கொண்டிருந்தனர். மெளனமே ஒரு பாஷையாக அங்கு உருவாகியிருந்தது.
அவன் என்னை திரும்பிப் பார்த்தான். நான் ஏதும் புரியாமல் அவனைப் பார்த்தேன். அவன் சிரித்துக் கொண்டே ஒரு நாற்காலியை சுட்டிக் காட்ட நான் அதில் யந்திரம் ப்ோல் அமர்ந்தேன்.
அறை முழுவதும் அழகான ஒவியங்கள் வரையப்பட்டு தொங்கவிடப்பட்டு இருந்தன. எல்லாவற்றையும் வரைந்தது . இவனாகத் தானிருக்கக்கூடும் இருளில் எல்லாமே மங்கலாகத் தெரிந்தன
அங்கு தொங்கிய காலண்டரில் இருந்த அந்தோ ணியார் படத்திற்கு யாரோ முறுக்கு மீசை வரைந்து தொப்பி ஒன்றும் வரைந்திருந்தார்கள்.
நான் ஏன் இங்கு வந்தேன் என்றாகிவிட்டது. வராமல் அப்படியே அவனை கண்டவுடனேயே “ளி யூ ஐ ஆம் கோயிங்" என்று போயிருக்கலாம். ஏன் வந்தேன்? மனதினுள் இலெசாக பய உணர்ச்சி எழுந்தது. அவன் சிரித்தான். அர்த்தமில்லாமல் சிரித்தான். அந்த சிரிப்பில் ஒரு பழைய நட்பின் நெருடல் இருந்தது. ஒரு வளர்ப்பு

Page 57
1 1 0.
நாயின் கண்களில் இருந்து கனியும் உணர்ச்சி விசுவாசம் இருந்தது.
இவன் கூப்பிடும்போது நினைத்தேன். ஏதாவது பாரில் போய் அரை பைன்ட் கல் சாராயம் குடிக்கத்தான் என்று, w
‘டு யூ லைக் டு ஹேவ் சம் ஹொட் ட்ரிங்ஸ்?" இது
அவன. -
“யெஸ்!' - இது நான், நான் வந்ததே அதை எதிர் பார்த்துத் தானே!
அறையினுள் இருந்த மற்றுமோர் சிறிய அறைக்குள் நுழைந்து ஒரு கால் போத்தல் ட்ரை ஜின்னுடன் வந்தான். சுத்தமாக கழுவிய கிளாஸை கொண்டு வந்து வைத்தான். அவன் குடிக்கவில்லை. நான் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். அவன் பழைய விசுவாசத்துடன் மிகவும் பணிவாக நடந்து கொண்டான். திரைப்படத்துறையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. நானும் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. மாறாக பிக்காஸோ பற்றியும் டார்வின்ஸ் பற்றியும் கண்களில் நீர் தழும்ப உருகினான், புலம்பினான்.
எனக்கு ஏதோ பரிதாபமாக இருந்தது. இவர்கள் ιι 1 π ή 2 (η 5η, 6τσοτώθι டம். ன்? ஏன்? அவன் என்னை
ா? இது تھی۔ பரிதாபமாகப் பார்த்தான்.
பின், வெகுநேரம் தீவிரமாக யோசித்தான். பிறகு ஏதோ தீர்மானத்திற்கு வந்தவனைப் போல என்ன்ை நோக்கி வந்து ஒரு சிகரெட்டை இரண்டு கைகளினாலும் ஏந்தி ஒரு கணம் கண்களை மூடி ஏதோ பிரார்த்தனை செய்பவன் போல பாவனை காட்டி நீட்டினான். நான் சிரித்தபடியே அதைப் பெற்று பற்றவைத்து இரண்டு முறை புகையிழுத்தேன். கால் போத்தல் ஜின் என்னுள் இலேசான மயக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. நான்

111
ஒவ்வொரு முறையும் சிகரெட் புகையை உள்ளுக்கு இழுக்கும் போதெல்லாம் அர்த்த புஷ் டியுடன் என்னைப் பார்த்து சிரித்தான். வழக்கத்துக்கு மாறாக அவன் கொடுத்த சிகரெட்டில் புதிய நெடி வீசுவதை உணர்ந் தேன். ஜின் குடித்த படியினாலேயா? தான் பிரான்சுக்கு போனதைப் பற்றி, அனுபவங்களைப் பற்றி கதைகதை யாக கூறவாரம்பித்தான். சிலநேரம் அழுதுகொண்டே கூறினான். எனக்கும் அழுகை வந்தது. 'யா ஸ்னாயா பால்யானா" கிராமத்தை நினைத்துக் கொண்டேன். அங்கே கூட்ஸ் வண்டியினுள் லியோ டால்ஸ் டாயின் உருவம் என்னைப் பார்த்து மகனே! என்று அழைப்பது போல் இருந்தது. இன்னும் நிறைய அழ வேண்டும் போலிருந்தது. இன்றோடு எல்லோருக்குமாகச் சேர்த்து ஒட்டு மொத்தமாக, அழுது தீர்த்து விட வேண்டுமென்ற ஆதங்கம் மனதில் எழுந்தது.
மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். நான் அமர்ந்திருந்த மேஜைக்கு அந்தப் பக்கம் ஒரு தட்டி மறைவில் நிழலில் சிருஷ்டித் தொழில் நடந்து கொண்டி ருப்பதைப் போன்ற ஒரு தோற்றம். பிரமையல்ல உண்மை தான் திரும்பிப் பார்த்தேன். யாரும் எதையும் கவனிக்க வில்லை கவனிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்கள் அதைவிட முக்கியமான மெளன சம்வாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் நேத்தி ரங்களே உதடுகளாகவும் மெளனமே பாஷையாகவும். அங்கே ஒரு வேள்வியே நடந்து கொண்டிருந்தது.
ஒருவன் வந்து அந்த தட்டி மறைப்புக்கு அப்பால் வரமுடியுமா என்றான். நான் முடியாதென்றேன். இரண்டாவது சிகரெட்டைக் குடித்தவுடன் எனக்கு எல்லாருமே கனவுகளாகத் தொடங்கின. சாதாரணக் கனவுகள் அல்ல. வர்ண வர்ணக் கனவுகள். கனவு களுக்குள் கனவுகள்.

Page 58
112
அந்த அறையினுள் ஒருவருமே இல்லை. யாருமே இருக்கவில்லையோ என்று தோன்றியது. என்னை அழைத்து வந்த ஓவியன் என் மனதின் உருவெளித் தோற்றமா? ந்ேத்திர சம் வாதம் புரிந்தவர்கள் உருவெளி மனிதர்களா?
கனவில் கனவு கண்டிருக்கின்றேன். கனவில் பயப் பட்டு கனவு கலைய மறுகணம் மறுகனவில் ஆறுதலடைந்து மகிழ்ந்து, பின் நிஜத்தில் விழித்து, கனவின் கனவையும் உணர்ந்து மகிழ்ந்திருக்கின்றேன். அல்லது துயரமடை ந் திருக்கின்றேன். −
அப்படியாயின் இவைகள் கனவாக இருக்கட்டும். இன்னும் சிறிது நேரத்தில் விழித்துக் கொள்வேன். அப்போது இவைகள் கனவுகள் என்ற உண்மையில் மனந் தெளிவு பெறுவேன். இவர்கள் உருவெளி மனிதர்களாக இருக்கட்டும். இந்த ஒவியன் சனவு-படிக்கட்டுகள் கனவுகுளித்துக் கொண்டிருந்த பெண்கனவு - ஊசியினால் பல்லைக் குத்திக் கொண்டிருந்த இளம் டெண் கனவு-தட்டி மறைப்புக்கு அப்பால் நடந்த சிருஷ்டிக்கலை கனவு. எல்லாமே கனவாக இருக்கட்டும்.
இப்போதோ! அல்லது எப்போதோ கனவு கலைந்து விடும். சிலநேரங்களில் கனவு கலைவது ஒரு தாங்க முடியாத துயரம். சில நேரங்களில் கனவு கலைவது தாங்கமுடியாத ஒரு சந்தோஷம் எது எப்படி ஆயினும் இவைகள் கனவாக இருக்கட்டும். VM
நர்ன் எழுந்தேன். ஒவியன் என்னை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போல ஒரு தோற்றம் நான் போகிறேன் என்று அந்த உருவெளி மனிதனிடம் கூறினேன். அவனும் அப்படியே மெளனத்தால் பதில் அளித்தான்.
பலகைப் படிக்கட்டில் இறங்கும்போது கீழே தண்ணிர்க் குழாயடியில் யாரும் குளித்துக் கொண்டிருக்க

113
வில்லை. பித்தளைக் குழாய் காய்ந்து போய் வெயிலில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது.
ஒழுங்கை வழியால் பாதைக்கு வந்தேன். எல்லாமே மறந்து விட்டது இப்போது கனவு கலையவேண்டும். இவைகள் உருவெளித் தோற்றங்களா? அல்லது கனவு களா? நான் விழித்து விட்டால் கனவு கலைந்துவிடும். ஆனால் நான் அன்று விழிக்கவில்லை.
நான் விழித்த பின், பல நாட்கள் கழிந்த பின் பத்திரிகையில் ஒவிய நண்பனின் படத்துடன் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
செய்தி இதுதான்:
சிறந்த கலைஞனான அவன் போதைப் பொருள் பாவனையாலும் தன்னினச் சேர்க்கையின் விளைவாக ஏற்பட்ட நோயினாலும் விரக்தியுற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டானாம்.
8 نسل هو

Page 59
சில நிஜங்கள்
அந்த மகத்தான கலைஞன் மறைந்து விட்டான். அன்றைய தினசரி ஏட்டில் ஒரு மூலையில் அவன் பெயர்ைக் குறித்து, ஒரு குறிப்பிட்ட வைத்தியமனையில் முன் தினம் இரவு எட்டு மணிக்கு காலமானதாகக் குறிப் பிட்டிருந்தது. அதைத் தவிர வேறு இறுதிச் சடங்கு பற்றியோ, வேறு எந்த விபரங்களோ குறிப்பிடப்பட்டி ருக்கவில்லை.
மேற்கொண்டு பத்திரிகையைப் படிக்க மனம் வரவில்லை. ஏதோ மனதில் இனம் புரியாத சோகம் பிறிட்டு வந்தது. ஒரு வெறுமை - ஒரு சூன்யம். ஹஅம்..ம்..இல்லை இல்லை. வார்த்தைகளில் விபரிக்க முடியாத ஒரு உணர்வு. அதை விளக்க என்னால் முடியவில்லை.
கிணற்றில் இருந்து வாளியில் நீரை இழுத்து-இழுத்து குளிக்கும்போதும், தினம் உணரும், நீராடும் இன்ப உணர்வு ஏற்படவில்லை.
நான் ஒரு புகையிலை வியாபாரி. என் வீட்டில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் என் புகையிலைக் கடை. இன்று கடைக்கு போவதா, வேண்டாமா என்ற பொருளாதார யோசனை.
'ஏன்னா! கடைக்கு போகப் போறதில்லையா?"- மனைவி கடுகடுப்புடன் கேட்டாள்.

115
'தலைவலி-அதோட பனிகுலைய வலிக்குது' -இது நான்.
‘ஆமா ! இன்னும் இளந்தாரின்கிற நெனப்பு. காலையில் கெணத்துல குளிக்கிறது. பொறகு அங்கன வலிக்குது, இங்கன வலிக்குதுன்னு கடைக்கு போகாம இருக்கிறது. பொறகு பகலக்கி எல்லாம் சரின்னு சாராயத்த குடிக்கிறது'
மூத்தவன் பல்துலக்கிக் கொண்டே வந்தவன் முன் புறம் இருந்த பத்திரிகையை எடுத்து இலங்கை எத்தனை தங்கப் பதக்கம் எடுத்திருக்கிறது, என்று ஆராய ஆரம்பித் தான். அரை மணித்தியாலம் பேப்பரை முதல் பக்கமிருந்து கடைசிப் பக்கம்வரை மேய்ந்தான். சிலவற்றை என் னோடும் பகிர்ந்து கொண்டான் கொர்பச்சேவின் பெரஸ்ரோய்க்கா தோல்வி உட்பட.
அந்த மகத்தான கலைஞனின் மறைவு ஒரு சாதாரண செய்தியாகக் கூட படவில்லை அவனுக்கு. அது சரி எல்லோருக்கும் ஒவ்வொரு உலகம். நான் யாருடைய உலகத்திற்குள்ளும் அத்து மீறிப் பிரவேசிப்பதில்லை. நமக்கேன் வம்பு! ஆனால் இந்த இடத்தில் இதையும் குறிப்பிடத்தான் வேண்டும். சிலர், சிலநேரம்; எந்த விதமான சொந்தமும் விவஸ்தையும் இல்லாமல் என் உலகத்தில் அத்து மீறிப் பிரவேசிப்பார்கள். அப்போது, மகா, மகா எரிச்சலும்-ஆத்திரமும் வரும். எனினும் ஒரு நியாயமான மனிதனுக்கே உரிய மரியாதை கருதி மெளன் மாக எனக்குள் பயனம் வருந்துவேன் அழுவேன். இங்கே நான் என்று சொல்வது என் ஆன்மாவை.
'தம்பி! அப்பாவுக்கு இன்னைக்கி சொகமில்லியாம். 'கடையில போய் பகல் வரைக்கும் இருங்க!”
என் மனைவி மகனிடம் வேண்ட, அவன் முழு மனதுடி னேயோ - அரைமனதுடனேயோ, அல்லது எரிச்சலுட னேயோ ஒப்புக்கொண்டு காலை உணவை முடித்து

Page 60
116
கடைச் சாவியை எடுத்துக்கொண்டு சைக்கிளில் ஏறி விரைந்தான். போகும்போது, தொடர்ச்சியாக சைக்கிள் மணியை அடித்துக்கொண்டே போனான். என்ன விஷயம் என்று படலைக்குள் இருந்து பாதையை எட்டிப் பார்த்தேன். சில தாவணிகள் பாதையில் கிளுகிளுப் புடன் போய்க்கொண்டிருந்தார்கள். எனக்குள் சிரிப்பு வந்தது. அந்தக் காலத்தில் நானும் இப்படித்தான்.
உடனே அந்த மகத்தான கலைஞனின் மறைவின் தாக்கம் - துயரம் என் நெஞ்சை அடைத்தது. சே! ஒரு சில நிமிடங்களில் இந்த மகத்தான இழப்பை, துயரத்தை என் மனம் மறந்து விட்டதே! மீண்டும் வாசலுக்கு வந்தேன். ஒரு கறுப்பு சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.
மார்சழி மாத விடியற் குளிருக்கு நாட்டுப் புகையிலை சுருட்டு இதமாக இருந்தது. திருவெம்பாவை பூஜைக்குப் போய்த் தரும்பி வீடுகளுக்கு போகும் பெண்களின் பையன் அளின் பேச்சரவ ஒலக் கற்றைகள் இளமை மிக்கதாகவும் உற்சாக மக்கதாகவும் இருந்தன.
அவன் போய்விட்டான். நம்ப முடியவில்லை. இருந்தும்; பத்திரிகைச் செய்தி என்னை நம்பச் செய்தது. எங்கோ ஏழு மணி அடித்து ஓய்ந்தது.
கடை திறப்பது எட்டு மணிக்கு மகன் ஆறரை பணிக்கே போய்விட்டான். ஆறுதலாகப் போகலாம். என் மனைவிக்கு எல்லாவற்றிலுமே அவசரம். மறுபடியும் பத்திரிசையைப் புரட்டுகிறேன். அந்தச் செய்தியை மறு படியும் படிக்கின்றேன். அவனே நேரடியாக வந்து நண்பரே! நான் நேற்று இரவு இறந்து போய் விட்டேன்!” - என்று சொல்வதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் அவனை சந்தித்தது; அதாவது; இறுதி முறையாக அவனைக் கண்டது.? என் மனம் இரை மீட்டுகின்றது.

17
அவனை நான் முற்றாக மறந்திருக்கவில்லை. எனினும் எப்போதும் அவனைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கவும் இல்லை. அவனைப் பார்க்க வேண்டு மென்ற ஆவல் வெகுகாலமாக என் மனதுள் அரிப்பெடுத் துக் கொண்டிருந்தது. அதற்கு வசதியாக என் சொந்த வியாபாரமான புகையிலை பிஸ்னஸ் தொடர்பாக, அந்த நகரில் புகையிலை வியாபாரம் நடக்கும் அந்தத் தெரு வழியே நடந்து கொண்டிருந்தேன். நேரம் பகல் சுமார் பன்னிரண்டு மணியிருக்கும். அப்போதுதான் நான் அவனை சந்தித்தேன். இல்லையில்லை. தரிசித்தேன். சந்திப்பது வேறு - தரிசிப்பது வேறு வாய் நிறைய செம்மை கலந்த வெற்றிலைச்சாறு - கன்னம் முழுவதும் வெள்ளை மயிர் முட்கள். காலப்போக்கில் முடி உதிர்ந்த முன் வழுக்கை, முதல் சந்திப்பில் கண்டது போலவே, இருதயத்தை ஊடுருவும் தீட்சண்யம் மிக்க கண்கள், "மாஸ்டர் சுகமா? குரல் சற்று உடைந்திருந்தது. சற்று பிசிறடித்தது. அந்தப் பிசிறு கூட சற்று அற்புதமாகத் தானிருந்தது. "மாஸ்டர் என்ன யோசிக்கிறீங்க, நான் தான்." அந்த உலகத்து பிரஜைகள் என்னை மாஸ்டர் என்று அழைப்பதுதான் வழக்கம். என்னுள் இனம் தெரியாத உணர்வுகள் ஊற்றெடுக்க ஆரம்பித்தன, அவனைக் கண்டதும். மனித நடமாட்மே இல்லாத ஓரிடத்தில் ஒரு மனிதனைக் கண்டால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட ஓர் ஆவல் - இன்பம் - இன்னனும் எப்படியோ ‘கற்றாரை கற்றாரே காமுறுவர்' - இது ஏதோ உலகத்திற்கு ஒவ்வாத வார்த்தை ஜாலம் அல்ல! ஒரு இனத்தின் பிரதிநிதியை அவ்வினத்தின் பிரதிநிதி இப்படித்தான் காண்பான்-காமுறுவான்
மடை திறந்தது - பிரளயம் வழிந்தது ஆம்! என் நண்பனின் கலை இலக்கிய உலகின் நிகழ்வுகளும்! விச்ராந்திகளும், விரக்திகளும் நிகழ்கால நிருபணங்களும் என்மனதை அகழ்ந்து நிறைத்தன.

Page 61
118
அந்தச் சிறிய"பலகைத் தடுப்புகள் நிறைந்த, குறுகிய வசதிகள் அற்ற குடியிருப்பினுாடே அவனோடு நான் சென்றேன். அவன் வீட்டை அடைந்தேன். - -
அதற்குப் பெயர் 'வீடு' அப்படியென்றால் வீட்டுக்கு என்ன பெயர் வைப்பது? ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி முன் வாசலில் மரவள்ளிக் கிழங்குத் துண்டங்களைப் டெபாரித்துக் கொண்டிருந்தாள் அருகே ஒடிய சாக்கடையில் கடந்தகால, நிகழ்காலக் கழிவுகள் வர் ஜா வர் ஜமின்றி தங்கள் அற்புத நறுமணத்தை நாற்புறமும் பரப்பி ஓடிக் கொண்டிருந்தது.
கலைஞர் என்னை அழைத்து ஒரு கந்தல் பாயை விரித்து "உட்காருங்கள்!' - என்று வரவேற்றார். நான் பாயில் அமர்ந்தேன். உள்ளே, அந்தச் சிறிய சாயம் போன சீலைப் படுதாவை விலக்கியது ஒரு கை. ஒரு இளம் முகம் தோன்றி மறைந்தது. அந்த மறைவைத் தொடர்ந்து 'அம்மா! இஞ்ச வா!' :
வாசலில் ஈரவிறகுடன் போராடிக் கொண்டிருந்த அந் தப் பெண்மணி யாரையோ சலித்த வண்ணம், அல்லது தன் விதியை நொந்தபடி, அமர்ந்திருந்த என்னை நிர்விசாரமாக பார்த்தபடி உள்ளே போனாள்.
உள்ளே பல கிசுகிசுக்கள், அந்தக் கிசுகிசுக்க்ளின் அந்தத்தில் ஒரு சிறு பையன் நெளிந்த் அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் செல்லும் பாவனையில் வெளியே ஓடினான்.
நான் மெளனமாக கலைஞரையே பார்த்துக் கொண்டி ருந்தேன். அவரோ முன் வீட்டு கூரைக்கு மேல் வட்ட மிட்டு பறக்கும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந் தார். ஒருவித அர்த்தமற்ற மெளனம் அங்கே ஒரு சப்வாத மாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவள்-அந்த நடுத்தர வயதுப் பெண்மணி - ஆம். எர்ன் அன்புக் கலைஞரின் மனைவி மீண்டும் முன்புறம்

9
சென்று மரவள்ளிக் கிழங்குடனும், அந்த மதிய வெயில் உக்கிரத்துடனும், அடுப்புத் தீயின் அழிச்சாட்டியத்
துடனும் போராட ஆரம் பித்தாள்.
கலைஞர் மெளனமாகவே இருந்தார். நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு ஒன்றை அவருக்கு நீட்டினேன். ‘சிகரெட் குடிக்கிறத்த விட்டுடனும்னு ஒரு யோசனை’-நண்பர் கூறிக்கொண்டே சிகரெட்டை எடுத்துக்கொண்டு வாசல் அடுப்பில் பற்றவைத்துக் கொண்டார். "இப்ப ஏன் எழுதறது இல்ல!"-கேட்டார்
நான் பதில் கூறவில்லை சற்றுக் கழித்து “அது சரி நீங்க கூட இப்ப எழுதுறது இல்லியே ஏன்?’ கேட்டேன்.
'நானா, நெற்ய எழுதுறேன்!"-சிகரெட் புகையின் இருமலுக்கூடே சிரித்தபடி கூறினார்.
"பத்திரிகைக்கள்ள தான் படிக்கல்லியே!’ நான் கூறியபடி அவரை நோக்குகிறேன்.
"நெறைய எழுதுறேன். ஆனா.பேப்பரில இல்ல, 2S5 g“–
தன் மார்பைத் தொட்டுக் காட்டிவிட்டு இப்படிப் பேசியதே அதிகம் என்பது மாதிரி மறுபடியும் முன் வீட்டுக் கூரைக்கு மேல்தன் பார்வையைப் பதிக்கிறார். வாசலில், மோட்டார் சைக்கிள் வந்து நின்றது! ஆம்மோட்டார் சைக்கிளில் வந்த பாவனையில் கலைஞரின் சின்ன மகன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி-இறங்கிஅலுமினியக் கோப்பையில் டீயுடன் வந்தான்.
உள்ளே சென்ற பையன் இரண்டு தம்ளர்களில் தேநீரை கொண்டு வந்து தந்தான்.
கலைஞரின் மனைவி உள்ளே வந்து ஒரு மனைப் பலகையில் அமர்ந்து, கையில் இருந்த பழைய கலண்டர் அட்டையினால் விசிறிக் கொண்டே உள்ளே பார்த்து *சின்னவன்! எங்க டீ வாங்குனே?"

Page 62
20 - "அங்கு சந்திக் கடையில’-சின்னவன் உள்ளேயிருந்து எதையோ மென்றபடி பதில் கூறினான்.
'தம்பி பக்கத்துல இருக்கிற சைவக்கடையில டீ போட்டான்னா ஒன்னு சீனி இருக்காது. இல்ல சாயம் இருக்காது. ம்.அது சரி.நீங்க எங்க இருக்கீங்க..? என்னா யாவாரம்?
நண்பர் இன்னும் முன் வீட்டு கூரைக்கு மேல் பறக்கும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அல்லது பார்ப்பது போல் பாவனை காட்டினார். நானும் மேலே பார்த்தேன். இப்போது வானத்தில் பறவைகளே இல்லை
"அக்கா! நான் புகையிலை சுருட்டு வியாபாரம் ஏதோ ஒரு மாதிரி காலம் போகுது!"
"ஆமா! நாம - ஏதோ கஷ்டப்பட்டு நாலு காசு ஒழச்சாத்தானே நம்ம புள்ளைச் சாப்பிடலாம். இந்த நாடகம்-எலக்கியம்-கல இதுக எல்லாம் சும்மா சோம் பேறித்தனம், கடைசியா காதுல கழுத்துல இருந்த தம் பாக்கு நகையக்கூட இவரு விடல்ல. எல்லாம் போயிருச்சி. நாடகக்காரப் பயக-எழுதற பயக யாரு வந்தாலும் இஞ்ச தும்புக் கட்டயால நாலு சாத்து சாத்துவேன்"- துயரத்துடன் ஆரம்பித்த பேச்சு கோபத்தில் மிதந்து கலந்தது. மீண்டும் தன்னிரக்கத்துடன் வார்த்தைகள் உதிர ஆரம்பித்தன.
'பாருங்க தம்பி! இந்த மனுசன், நாலு லொறியில சாமான் ஏத்தி, எறக்குனா ஏதோ மூணு வேளையும் சாப் பிடலாம். இஞ்ச பாருங்க, வீட்டுக்குள்ள ஒரு கொமரு வேற இருக்கு" r
கலைஞரின் மனைவியின் குரல் கரகரத்தது. 'அம்மா இஞ்ச வா!'-உள்ளிருந்து கலைஞரின் மகளின் குரல் சற்று விசனத்துடன்.
பையன் வந்து குடித்து முடித்த தேநீர்த் தம்ளர்களை கொண்டு போனான். நான் சற்று தர்ம சங்கடத்துடன்

கலைஞரை நோக்கினேன் தம்மை எதுவும் பாதிக்க வில்லை என்ற ரீதியில் மெளனமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி தொடர்ந்தாள்
**இல்ல தம்பி, நாம் என்னா ராசாவூட்டு புள்ளை களாவாப் பொறந்தோம்? இல்லியே!’ எங்கோ தூரத்தில் தன் பார்வையை லயிக்கவிட்டு சில நிமிடங்கள் இடை வெளி விட்டுத் தொடர்ந்தாள். 'அந்தோணியார் கோயில் டயலோக்கில அந்தக் காலத்துல இவரு ராசாவா சீன் கட்டி வருவாரு பாட்டோட தான் வருவாரு. அது நல்ல ஒரு பாட்டு என்ன பாட்டுன்னா.மனைவியார் மறந்துவிட்ட பாட்டை யோசித்தாள். . .
சிறிது நேரம் யோசித்துவிட்டு பாட்டின் வரிகள் நினைவுக்கு வராமையால் கலைஞரை நோக்கி “என்ன பாட்டப்பா அது?’ என்று மிகக் கரிசனையோடு கேட்டாள்.
"மிக மிக மின்னிய மணிமுடி தரித்த ராஜா நானே!" கலைஞர் நினைவு படுத்தினார்.
'ம்.அதுதான் அந்தப் பாட்டுதான். அந்தப் பாட்டோட தான் இவரு சீன் கட்டி வருவாரு’’
"சீன் கட்டி இல்லம்மா - வேசங்கட்டி'-கலைஞர் திருத்தினார். -
‘ம்.ஏதோ.கட்டி வருவாரு. நான் எங்க அம்மா எல்லாம் விடிய விடிய ஒக்காந்து டயலோக் பார்ப்போம். டயலோக்குல இவரு.என் புருஷன்.ராசா மாதிரியே தான். மாதிரி என்னா ராசாவேதான்!”
மனைவியின் முகத்தில் ஒரு பெருமித ஒளிக்கோடு ஒடி மறைகிறது. நான் கலைஞரைப் பார்க்கிறேன். கலைஞர் ஒரு மந்தகாசமான புன்முறுவலுடன் என்னைப் பார்க் கிறார். தன் மனைவி தன் எதிரிலேயே இன்னும் ஒருவ அணிடம் தன் அழகைப் புகழ்வதென்றால்...? மனைவி தொடர்கிறாள்.

Page 63
122
‘அப்ப ஆசப்பட்டு அந்தோணியார் கோயிலுக்கு போற நேரம் இவரும் என்னைப் பார்க்க வருவாரு’
'அம்மா! இஞ்சவா!'-உள்ளிருந்து மகளின் குரல். ‘இருடி சொல்லி முடிச்சிட்டு வாரேன்"- V மனைவி தொடர முற்புட கலைஞர் 'சரி சரி!!" போதும் நான் இவர விட்டுட்டு வர்றேன்.
முன்புற அடுப்பில் கிழங்கு கருகும் நெடி பரவுகிறது. 'அடடா! பேச்சில கெழங்கு பொரிக்கிறத மறந் துட்டேன்' s
அவள் எழுந்து அடுப்படிக்குபோக நாங்கள் இருவரும் போகப் புறப்படுகிறோம் .
'அக்கா நான் போயிட்டு வாரேன்"-இது நான் 'சரி போயிட்டு வாங்க' மனைவி கூறியபடி தன் பணியில் மூழ்குகிறாள்.
கலைஞரை நான் பின் தொடர்ந்தேன். 'சாராயத்த தீராயத்த குடிக்காம வாங்க!" மனைவியின் குரலை கேட்டுக் கொண்டே முன்னால் நடந்தார் கலைஞர்.
போகும்போது கேட்டேன் ‘அண்ணே! இப்ப என்னா செய்யப் போநீங்க?'
一熊
மாஸ்டர்! பிரஞ்சு எழுத்தாளர் மாப்பஸானின் "இராப்பாடியும் ஒரு சிகப்பு ரோஜாவும்' என்ற சிறு கதைய ஒரு கவிதை நாடகமாக எழுதி மேடையேற்றப் போகிறேன்"
நான் ஒன்றும் கூறவில்லை. மிக நிதான்மாக பின்னால் நடந்தேன், சிமெண்டுத் தளத்தில் பிடித்திருந்த ஈரமும், பாசியும் என் பாதங்களை அடிக்கடி வழுக்க வைத்தது.

123
‘சுந்தர ராமசாமியின் "ஜே ஜே குறிப்பு' படித் தீங்களா?' அவர் நின்று நிதானமாகக் கேட்டார்.
'இல்லை'-நான் வெறுமனே பதில் சொன்னேன். 'தமிழில் ஒரு புதிய முயற்சி'-சொல்லிக் கொண்டே நடந்தார். −
பஸ் நிலையம் வரை கூடவே வந்தார். இதற்கிடையில் வரும் வழியில் பாருக்குப் போய் ஆளுக்கு “நூறுநூறு” சாராயம் ஊற்றிக் கொண்டோம்.
நான் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். கலைஞர் வெளியே ஜன்னல் வழியாக என்னைப் பார்த்தபடி.
நான் சீக்கிரம் சாகனும்னு ஆசப்படுறேன் மாஸ்டர்!"
"என்ன அண்ணே! இப்படி அபசகுனமா..? என்னை இடைமறித்த அவர்.
'தம்பி! நாம எப்ப பொறக்குறமோ அப்பவே மரணமும் நிச்சயம். ஜீவிதங் அநியதங் மரணய நியதங் ஏனோ அதை சிங்களத்திலும் கூறிப் புரியவைக்க முன்றார். நான் எப்படிப்பட்ட கலைஞன் என்கிறத் இப்ப உள்ள யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க! என்ன இப்ப யாருக்கும் தெரியாது. கலாதேவியே சோரம் போயிட்டா. நான் செத்தா. அப்ப ஒரு கூட்டம் ஓடி வரும், அஞ்சலிக் "கூட்டம் நடத்தும். இவன் சாகமாட்டானா என்று ஒரு கும்பல் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி சில நேரம் எனக்கு தோணுது. எனக்காக நிதி சேர்ப்பாங்க என் பொஞ்சாதி புள்ளைங்க எல்லாம். ஏதோ ஆயிரக் கணக்குல அப்பா சாவுல கெடக்கிற மாதிரி. தெனைப்பாங்க. ஆனா கடைசியில ஒன்னுமே நடக்காது ஆனா அவங்க தங்க. தங்க பப்ளிசிட்டிக்காக எல்லாம் செய்வாங்க என் பொஞ் சாதிய மேடையில் கூப்பிட்டி வச்சி, காலஞ்சென்ற திருமதி.ண்னு என் பேரச் சொல்லி அவங்க பேர பெரிசாக்கி ம். இதெல்லாம் நடக்கனும்னா நான்
சாகனும்' கலைஞர் கூறியபடி கண் கலங்கினார்.

Page 64
124
நான் அமர்ந்திருந்த பஸ் உயிர் பெற்று இயங்க -ஆரம்பித்தது
'தம்பி! மறுபடி கொழும்பு வாரப்போ கட்டாயம் வாங்க!
பஸ் மெல்ல புறப்பட ஆரம்பித்தது. மெல்ல மெல்ல ஒடியது. கலைஞர் பஸ்ஸின் பக்கவாட்டிலேயே ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டே. .
"மாஸ்டர் ஸ்கிரிப்ட் எழுதுன கையோட ஓங்ககிட்
வருவேன்; நீங்க அதக் கொஞ்சம் பார்க்கனும்!
பஸ் வேகமடைந்தது! ym 'மாப்பாஸானின் இராப்பாடியும் சிகப்பு ரோஜாவும் அதுல அந்த பறவைக்கு ஒரு குறியீடாக." கலைஞரின் குரலை நகரத்த வாகன சப்தங்கள் விழுங்கிவிட்டன. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். தூரத்தில் நின்றபடி கையை அசைத்துக் கொண்டிருந்தார்.
என் கையில இருந்த நாட்டுப் புகையிலை சுருட்டு எப்போதோ அணைந்து விட்டிருந்தது என் கண் விழி யோரத்தில் தேங்கிய கண்ணீர் முத்துக்கள் அந்த மகத்தான கலைஞனுக்காக மெல்ல மெல்ல என் கன்ன மேடுகளில் தங்கள் பயணத்தை ஆரம்பித்தன. s
D

அக்கிணி
நான் - ஒரு அற்புதமான, ஆழமான வெறும் சொற்களினால் மட்டும் விளக்கி விட முடியாத ஒரு-? இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஆழமாகநுணுக்கமாக - விசாலித்து இருக்கின்றேன் சூலையின் பாரம் தாங்காமல் 'சடக் கென்று கழுத்தை முறித்துக் கொள்ளும் வாழைமரத்தில் அந்தக் கணத்தில் நான் இறந்து விட்டேன் ஆயினும், அந்த ஒடிந்து போன முழுமைத் தோற்றத்தின் காரணத்தில் இன்றும் நான் நிற்கின்றேன், சில சமயங்சளில் நான் முற்றாகவே இல்லாது போனாலும் நான் வந்துபோன தடயம் மட்டும் அழியாமல் அழிக்கப்பட முடியாமல் இருக்கும். சகல ஜீவராசிகளிலும் நான் நிற்கின்றேன் நான் ஒருவித அக்கினி. உயிர் ஜீவிதத்திற்கே ஒளிகொடுக்கும் அக்கினிப் பிழம்பு. கோடானு கோடி சூரியன்களின் கொதிப்பும் கோடா னு கோடி சந்திரன்களின் குளுமையும் என்னகத்தே கொண்டு புதுமையாக ஜுவாலிக்கின்ற
அக்கினி நான்.
என் ஒளிபட்டுப் பிரகாசிக்கப் போகும்
ஒரு உயிர்த்துடிப்பை அதோ அங்கு நிர்ணயித்து விட்ட கால எல்லைக்குப் பின், தரிசிக்கப் போகின்றேன் நான் - ?"

Page 65
126
அந்த இரவின் மோனத் தவத்தில் அந்த உப்பு நீர் ஏரி Aபும் அர்த்தமில்லாமல் மெளன விரதம் பூண்டிருந்தது. அந்த ஏரியின் மீதிருந்த பாலத்தில் ஏற்றப்பட்டிருந்த மின்சார விளக்குகளின் ஒளிப் பிரதிமை நிச்சலனக் காட்சியை சலனக் காட்சியாக்கும் முயற்சியில் நீரில் ஆடிக்கொண்டிருந்தது.
தூரத்தில் கரப்பு குத்தி மீன் பிடிக்கும் மீனவர்களின் சையில் இருக்கும் . தீப்பந்தங்கள் இருட்டில் எதையோ பிசாசுகள் தேடித்திரிவதைப் போன்றதொரு பிரமையை உண்டாக்கின. ஏரியை அடுத்திருந்த மாமரத்தின் அடியில் - பள்ளத்தில் - மறைவிடத்தில். அவள் அவன் மீது வெகு நெருக்கமாக சாய்ந்திருந்தாள்.
கனத்த இருளில் அவளுடைய முகம் தெரியாத போதி லும் அவன் அவளுடைய அப்போதைய தோற்றத்தைப் பற்றி புலம்பிக்கொண்டிருந்தான். ஒரு சமநிலைக்கு அப்பால் போய்விட்ட மயக்க உணர்வு அவனுடைய குரலை அடிக்கடி நடுங்கவைத்தது
அவனுடைய பேச்சுக்களையெல்லாம் மெளனமாக அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். தூரத்தில் பாலத்தின் மேல் கடகடத்து ஓடிய பழைய காலத்து லொறியின் - அல்லது பஸ்ஸின் அபஸ்வரம் அவன் பேச்சை சற்று நிறுத்தியது.
மார்கழி மாதத்து பனிமூட்டம் அளவுக்கு அதிக மாகவே காணப்பட்டது.
‘மணி எத்தனை இருக்கும்? - அவள் காரணமாகவே கேட்டாள். அவன் சிறிது நேரம் தன் கைக்கடிகாரத்தை வெகு நுணுக்கமாகப் பார்த்தபின்னர் பதினொன்று' என்றான். தொடர்ந்து 'நீ ஏன் படம் பார்க்க வரல்லென்று வீட்டுல கேக்கல்லியா? - என்று வினவி னான்.

127
'இல்ல, நான் தலய வலிக்குதுன்னுசொன்னேன். எல்லாம் போயிட்டாங்க!”
அவன் சற்று நேரம் வானத்தை வெறித்தான். வைரங்களை வாரி இறைத்ததுபோல் - அல்லது ஆகாயத் தில் கோடிக்கணக்கான நேத்திரங்கள் உண்டாகி இருப் பதைப்போல-அல்லது. போல் வானத்துப் புள்ளிகள் ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன.
அன்று ‘மீபுரா" தியேட்டரில் புதிய படம். அவளின் வீட்டில் எல்லோரும் படம் பார்க்கப் போய்விட்டார்கள். அவர்கள் வந்துசேர மணி பண்ணிரண்டுக்கு மேல் ஆகும். இந்தத் தைரியத்தில் அவள் சற்று தன்னை அமைதியாக்கிக் கொண்டாள்.
அவனுக்கும் அது புரிந்தது. அவனுக்கு அந்த அறுபது நிமிடங்கள் மிக அற்புதமாக கண் முன்னே நீண்டு விரிந்தது.
ஆற்றோரமாக, முன்னக்கரை பாலத்தடிக்கு அவ ளோடு இருட்டில் வரும்போது அவன் பிரயோகித்த நெஞ்சை ஊடுருவும் சங்கதிகள் அவளை எதிலோ ஆழ்த் தியது. w
அவர்கள் வழக்கமாக சந்திப்பது அந்த மாமரத்தி னடியில்தான். பெரும்பாலும் அவர்களுடைய சந்திப்பு இரவில்தான் நிகழும்.
அவன் ஆரம்பத்தில் இருந்தே அவனைப் பார்த்துஅவன் பேசுவதைக் கேட்டு - அவனுடைய சில்லறை விளையாட்டுக்களை அனுமதித்துப் பழகியிருந்தாள். அது அந்த நேரத்திலும் அவளுக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தவில்லை.
எல்லா உணர்வுகளையும் ஒரே கோணத்தில் நிறுத்தி, சொற்கள் - செயல்கள் குழறுபடியாகும்போது. ஒ! அது கூட எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

Page 66
128
எங்கேயோ மணி தாமதமாக பதினோரு முறை அடித்தது. தூரத்தில், வலையேற்றி மீன் பிடிக்கச் செல்லும் ஜோன்சன் மோட்டார்ப் படகின் ஒசை லயம்
மாறி விட்டுவிட்டு ஒலித்தது.
அவன் அவளை ஒருபுறமாக அணைத்து ஒரு கையை புற்தரையில் ஊன்றியிருந்தான். ஏதோ ஒரு சிறு வண்டின் குறு குறுப்பு உள்ளங்கையில் ஏற்பட்டது. அதை ஒட்டி அவன் உடலில் ஏற்பட்ட குறுகுறுப்பு அவளின் வெப்பச் சுகத்தில் அமிழ்ந்தது. v−
அது அவளுக்கும் புதியதுதான். அவனுக்கு-? அவளுடைய பிரமிப்பும், அனுபவமற்ற முறையில் ஒதுங்கும் சுபாவமும் ஒரு புதிய கவிதையைப் படிப்பது போலிருந்தது அவனுக்கு.
அவள் அடிக்கடி கேட்கும் வழக்கமான அவநம்பிக்கை யான கேள்விகளை அப்போதும் கேட்டாள், அவனும் வழக்கம் போல உளறினான்.
நீண்டு விரிந்த அறுபது நிமிடங்களில் சில அர்த்த மற்று விரயமாவதைப் போலத் தோன்றியது அவனுக்கு. வழக்கமான சில்லறையில் இருந்து வேறு திசையை நோக்கி திரும்பினான் அவன். * :
அங்கே - வானத்தில் விழித்துக்கொண்டிருந்த ஒளிப் புள்ளிகள் அத்தனையும் அந்தத் தசைக் கோளங்களிலும் ஒடி ஒளிந்து, கண்ணாமூச்சி விளையாடி, ஒன்றை ஒன்று. தேடி அலைந்து தொடர்பு அறுபட்டு.மார்கழி மாதத்து. பணித் தழுவலில் பூமி சில்லிட்டது.
"நான் அக்கினியின் வேகத்தோடு ஒன்றில் லயித்து உயிர்ப்புடன் துடித்தேன். மனிதத் தளத்தில் இருந்து வெடித்துக் கிளம்பிய யோகத் தவத்தின் விரிவில்

江盛9
கலந்து - விரவி நான் எதனுடனேயோ ஐக்கியமாகிவிட முயன்றேன். நான் அப்படி முற்பட்டதே எனக்குத் திருப்தியாகி விட்டது. இனி நான் அழிந்து போனாலும் என் தடம் மட்டும் அழியாமல் அழிக்கப்பட முடியாமல் நிற்கும்.
நான்-?"
அந்த வீட்டை சுற்றியிருந்த ஒலை வேலிகள் பழமை யாகிவிட்டன. அத்துமீறிப் பிரவேசம் செய்யும் அந்தக் கோடி வீட்டின் பெரிய பன்றிதான் பிதுக்கிவிட்ட வாரிசு களுடன் அந்த வேலிகளை ஊடுருவி வர முற்பட்டதை அவள் வீட்டின் முன் அமர்ந்து அவதானித்துக் கொண் டிருந்தாள்.
பலங்கைத் துறையில் கோயில் பெருநாள் வெஸ் பருக்குப்போய் கரும்பு, ரமுடான் பொருள்களோடு சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த அவளுடைய அண்ணன் அவளைப் பாராமலேயே சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.
சைக்கிள் முன் ஹாண்டிலில் மாட்டியிருந்த ஒலைப் பையினுள் இருந்து வெளியே எட்டிப்பார்த்துக் கொண் டிருந்த ரமுடான் பழத்தின் புளிப்பை கற்பனையிலேயே சுவைத்துக்கொண்டிருந்த அவளுக்கு அந்தச் சுவையுணர்வு தனக்காக மட்டுமல்ல எனப் புரிந்தது. s
ஒரு மூலையில் அவளுடைய வயோதிகத் தந்தை தகர வேலையில் காய்த்துப்போன நடுங்கும் கைகளால் வெற் றிலையை இடித்துக்கொண்டிருந்தார்.
அவளுடைய கண்முன்னே அவனுடைய நெடிய உருவம் தோன்றி, மறைந்தது.
ஒரு-9

Page 67
30
ஒவ்வொரு இரவிலும் அவனிடம் அவள் எப்படியோ கேட்ட அவநம்பிக்கையான கேள்விகள் இப்படி உண்மை யாகி..!! அவனுடைய நம்பிக்கையான உளறல்கள் இப்படி பொய்மைக்கு உட்பட்டு.!
வாழ்க்கையில் யாரோ நிர்ணயித்துவிட்ட வேலி களைத் தாண்டி அவள் தைரியமாக, அல்லது தெரியாமல் வந்துவிட்ட நேரத்தில்-இப்படிப்பட்ட சூன்யமான நிலை ஏற்பட்டுவிட்டதில்...! அவள் மெளனமாக அழுகின்றாள்
நேற்றிரவு குசினியில் அவளது அண்ணனும், அம்மா பவும் ரகஸ்யமாகப் பேசிக்கொண்டது அவளுக்குத் தெரியும். அதில் அவள் துார நின்று மட்டுமே அபிப்பிராயப்பட முடியும். அவளுடைய அபிப்பிராயத்தை அவளால் கூறமுடியாது. - :
அந்த இடத்தில் தனிமனித விருப்புகள் - தனிம்னித நிர்ணயங்கள் செல்லுபடியாகாது. * -
ஒடிச்சென்று தெரியாமல் படீரென்று கீழே விழுந்து காயம் பட்டுக்கொண்டு வரும் சிறுவனுக்கு அந்த நேரத்தில் “ஏன் ஓடினாய்?" என்று அடிகள் திட்டுக்கள் கிடைத்தாலும், பின்னர் ஒரு அரவணைப்பு ஆதரவு ‘ஏண்டா வலிக்குதா?’ என்ற அன்பு வார்த்தைகள் காலந் தாழ்த்தியும் கிடைக்கும். ஆனால் அவளுக்கு அவைகள் இல்லையாம். ,
அண்ணனுக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவர் உண்டாகியிருப்பதை மருந்தினால் கலைத்து விடுவா ராம். அம்மாவுக்கும் அதுதான் சரியெனப்படுகிறது, அவளும் அதை சரியென்று ஏற்றுக்கொள்ள முயற்சிக் கின்றான். , ' ' ' ';
மண்வெட்டி "சரக்கென்று மண்ணில் பாயும்போது இரு துண்டாகிப்போன மண்புழுவைப் பார்க்கும்போது

131
ஒரு சமயம் அவள் அழுதிருக்கிறாள். அது பைத்தியக் சுாரத்தனமாகவும் இருந்திருக்கலாம்.
நான் என் விஸ்வரூபத்துடன் மேலெழுந்து அந்தப் பூரணத்துவமான மூலை முடுக்குகளில் ஓடி, அடிவயிற்றைத் தழுவி - அங்கே இழுத்துக் கட்டப்பட்டிருக்கின்ற சகல நரம்புகளையும் தீண்டுகிறேன். நான் தீண்டியதால் உண்டான நாதம் இந்தப் பிரபஞ்ச ஒசைகளில் இருந்து மாறுபட்டு அலை அலையாக பிரவகிக்கின்றது. செவிப் புலனுக்கு எட்டாத அந்த ரீங்காரம் புவிக் கர்ப்பத்தின் ஜீவித கீதத்தைப் போல அவளில் விரிந்து - எங்கும் வியாபித்து பரவுகையில் •
நான் - ?
அவள் அதற்கு ஒப்புக் கொண்டாள். இல்லாவிட்டால் முடியாது என்ற விசயம் இருக்கட்டும். எதிர்காலத்தில் அவளது வஸந்த காலக் கனவுகள்? இனி அவளது கனவு களை நிர்ணயிக்க அவளால் முடியாது. அவளின் ம்ெளன மான ஒப்புதலின் மூலம் நடந்த அழிவின் முயற்சியில், முற்றிலும் எதிர்பாராத முறையில் அந்த அழிப்பதில் பிரக்யாதி பெற்ற சங்கார வைத்தியன் மிக அப்பட்டமான முறையில் தோற்றுப் போனான். w
இரவில் ரகஸ்யமாக விசயங்களைப் பேசி முடித்து செயல்பட்ட அவளின் அண்ணன் வெகுவாகப் பாதிக்கப் பட்ட நிலையில் தோற்றுப் போன உண்மையில் மெளன மாக ஒரு மூலையில் சாய்ந்து கொண்டான்.
அப்பவே சொல்லியிருந்தாலாவது சனியன, கலச்சி இருக்கலாம். மூதேசீ கள்ளத்தனமாக. t

Page 68
132
அவளுடைய அம்மா வழக்கத்துக்கு மாறாக பெரிய ஸ்தாயியில் கூப்பாடு போடாமல் அடுத்த வீட்டுக்கும் கேட்காமல் திட்டினாள். வழக்கம்போல உச்சஸ்தாயியில் சஞ்சரிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் அவளுடைய தாழ்ந்த தொனியிலும் அப்பட்டமாகப்பீறிட்டது.
அவளுக்கு தோல்வியாகவும் - அதே சமயத்தில் வெற்றி பாகவும் தோன்றியது.
தோல்விக்குக்காரணம் எதிர்காலத்தின் வஸந்தம் நிறைந்த கனவுகள், வெற்றிக்குக் காரணம் -
நான் நேர்க் கோட்டில் வந்து திடீரென வளைந்து - அந்த வளைவினால் ஏற்பட்ட தாகத்தில் மூழ்கி நடைபெற்ற பந்தயத்தில் சுழன்று ஆர்ப்பரித்து நான் எடுத்த கோடானுகோடி உருவங்களைப் பாய்ச்சி எழுகையில் எக்காளமிட்டு சிரிக்கின்றேன் நான் -
அது ஒரு புதிய சூழ்நிலை நீர்கொழும்பு கடற்கரைச் சூழல் மாறி, அடர்ந்த தென்னந்தோப்புகளை ஒட்டிய ஒழுங்கையில் ஒரு வீட்டில் அவள் இருக்கின்றாள். அவள் அங்கு வந்ததும் அவள் அண்ணனின் ஏற்பாடுதான்.
சனியன் அழிந்து போகவில்லையே - என்ன செய்வது வரட்டும். அப்படி வருவது சுற்றுப்புறங்களுக்கு தெரியக் கூடாதாம். அவள் அவளுடைய மாமா வீட்டிற்கு போய் விட்டாள் என்கின்ற பொய் முன்னக்கரையில், அவளுடைய டின் பக்கத்தில் உண்மையாக்கப்பட்டு விட்டது,
அவள் அண்ணனின் சிபார்சினால், ஒரு தூரத்து உறவினர் ஒருலரின் வீட்டில் சிறைப்பட்டுக் கிடக்கிறாள்.

33
அதாவது, அவளுடைய அண்ணனின் பாஷையில் ‘அந்தச் சனியன் வெளியே வந்து தொலையும் வரை!”
அவள் வீட்டின் உட்புறம் சென்று குளிப்பதற்காக ஆடைகளை மாற்றுகையில், வீட்டின் மூலையில் இருந்த கண்ணாடியில் அவள் அவளை வெகு பிரமிப்புடன் பார்த் தாள். அந்தப் பழைய அலமாரியில் ரசம் தேய்ந்து மங்கிப் போன கண்ணாடியில் ஆடைகளால் மூடப்படாத தன்னை வெறித்தாள். −
ஒரு புதிய மேட்டில் அரைவாசி மலரத் தொடங்கிய ஒரு மல்லிகை மலரின் நிலையில் மொட்டு முன்புறம் தள்ளி யிருந்தது.
யாரும் உணர - புரிய முடியாத நிலையில் அவள் அந்த அசைவை - தனக்குள் மண்வெட்டியால் 'சரக்' கென்று இரு துண்டுகளாக வெட்டப்பட்டுவிடாத அந்த மண் புழு ஊர்ந்து போவதை நினைக்கையில்.
"நான் அங்கு பிரவேசிக்கின்றேன். புதிய புதிய தடுப்பு வலைகள் பெரிய பெரிய கதவுகள். என்னைத் தடுத்து பின்புறம் இழுத்தாலும் நான் என்னை ஒரு துரிதத்தில் நிறுத்தி விரைந்து அந்த அடிவயிற்றுள் நுழைந்து நாபிக் கமலத்தின் வழியாக மூலாதாரத்துடன் இணைந்து என் தனித்துவத்தை நிலைநாட்டி, இணைகின்றேன் ஆனால், அதன் பின் நான் நினைத்தே பார்க்காத வழக்கமாகி விட்ட
வீழ்ச்சி!

Page 69
卫34
அவள் தன் கண நேரப் பார்வையை ஒதுக்கி அதை வெறுத்து - அண்ணனின் பாஷையில் சனியன் எனத் திட்டி - அவள் அண்ணனின், அம்மாவின் பார்வைக்கு உட்பட்டு, உட்பட்டு உள் பாவாடையை தூக்கி குறுக்குக் கட்டுக் கட்டி பழைய துணிகளை எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கி நடக்கையில் அந்த வீட்டுக்காரக் கிழவி யாரையோ சபித்தபடி கையில் மண்ணெண்ணெய் போத்தலுடன் வந்து கொண்டிருந்தான்.
இவள் இன்னும் அந்தச் சனியனை திட்டிக் கொண்டே யிருந்தாள். அவளுடைய கைகள் பழைய துணிகளை வாளி நீரில் அமிழ்த்திக் கொண்டிருந்தன.
சில தடவை அந்தச் சனியன் துடித்தது. மனத்தில் கிளர்ந்தெழுந்த வெறுப்பின் ஜனிப்பில் குமட்டிக் கொண்டு வந்தது. வாயில் ஊறிய மண் புழுவின் அருவருப்டை மாறித் துப்பினாள். :
அதுவே என் வீழ்ச்சியாக
மாறிவிட்ட போதிலும்
என்னுடைய ஆக்ரமிப்பை
நிறைவேற்றும் பாவனையில்
நான் ஒரு மூலையில்
ஒழிகின்றேன். நான் அற்றுப்
போய்விடவில்லை. அப்படி
ஆகவும் முடியாது.
இது ஒரு தற்காலிகமான
வீழ்ச்சி.
நான் - ?
அவள் தன்னை - தன் உணர்வை மாற்றிக் கொண்
டாள். சுமார் எட்டு மாதங்களுக்கு முன் அந்த இரவில் தன்னை அணைத்து, நாணம் உரித்த அந்த நெடிய உருவத்தின் மீதிருந்த அர்த்தம் பொதிந்த அன்பு ஒரு

135
மாறுதலோடு வெறுப்பாக மாறியது. அந்தப் பிரிவை தன்னை அழித்துவிட்ட சுயநலமிக்க கொடுமையின் உட் சுழியாக மாற்றிவிட்டாள்.
அந்த ஜீவனின் துடிப்பையே அவள் வெறுத்தாள். பூமிக்குள் இருக்கும் மண்புழு மனதைப் பொறுத்த அளவில் துண்டாகிப் போனதையிட்டு அவளுக்கு வெகு சந்தோசம். ஆனால் அவள் வெறுப்புக்கு அடித்தளமாக அவளது புவிக் கர்ப்பத்தில் நெளியும் புழுவை மண்வெட்டி தீண்டவில்லை! ஒருநாள் - பூமி வெடித்து அந்தப் புழு தரையில் நெளியும். அப்போது ஓ! அந்த வெறுக்கத்தக்க் விசயங்கள்?
பல நாட்களுக்கு ஒருமுறை சம்பிரதாயத்துக்கு வருவதுபோல அவளுடைய அண்ணன் வருவான் வழக்கம் போல் சபிப்பான். அப்படி அவன் சபிக்கும்போது வழக்கம்போல அவள் தூரத்தில் தெரியாத காட்சிகளை மனதில் உருவகப்படுத்தி அவைகளுடன் ஒருவித கைப்புணர்ச்சியுடன் ஐக்கியமாகி விடுவாள். அவன் வழக்கம்போல் போய் விடுவான்.
அவள் அதிகமாக அந்தச் சனியனை வெறுத்தாள். வெறுக்கவேண்டும் என்பதற்காக வெறுத்தாள்.
நான் நிரந்தரமாக வீழ்ச்சியுற்றேன். எனினும்; என் துவஜத்தைப் பறக்கவிட கம்பங்கள் தயாராகி விட்டன. நான் ஓடி ஒளிந்து சில சமயங்களில் வெளிப்பட்டவை எல்லாம் மாற்ற முடியாத சத்தியம் அந்த நிரந்தரமான வீழ்ச்சி பின் அடியில் இருந்து தான் என் வெற்றி எழுப்பப்படப் போகிறது நான் முற்றாக அற்றுப்போய்

Page 70
36
விட்டேனென்று நினைக்கும் அந்தப் பொய் மறைந்து உண்மை பிறக்கும் போது சிரிப்பேன்
நான் - ?
அவள் படுத்திருக்கின்றாள். கண்கள் அரைவட்டம் மூடியிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கையில் அந்தக் கண்கள் யாரையோ ஏமாற்றுவதற்காக போலித் தனமாக மூடிக்கோண்டு அதே சமயம் கள்ளத்தனமாக பார்ப்பதைப் போல இருந்தது.
"டெட்டால், "ஸ்பிரிட்’ போன்ற மருந்துகளின் நெடி குப்பென்று பரவி ஊடுருவுகின்றது.
அவள் படுத்திருந்த கட்டிலின் பக்கத்தில் சற்றுத் தள்ளி இருந்த சிறிய மேஜையில் ஆஸ்பத்திரி உபகரணங் கள். தங்கள் கடமையை முடித்துவிட்ட நிம்மதியில் ஒய்ந்து கிடக்கின்றன.
வெள்ளை உடைதரித்த நர்ஸ் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கின்றாள்.
டொக்டர் வெளியே வந்தவுடனேயே வெளியில் நின்று கொண்டிருந்த அவளின் அண்ணனுக்கு விசயம் தெரி கின்றது. அதாவது அந்தச் சனியன் முழுமையாக - எந்த விதமான குறைபாடுகளும் இன்றி ஜனித்துவிட்ட புதுமை.
அவனுக்கு அடுத்த பிரச்னை அதை யார் தலையில் கட்டுவது?
அந்தப் புவிக் கர்ப்பத்தில் நெளிந்து கொண்டிருந்த மண் புழு இரண்டு துண்டாகிப்போய் விடக்கூடாதா? என்று வெறுத்து ஒதுக்கிய எண்ணங்கள் விடாப்பிடியாக வதைத்துக் கொண்டிருந்த காலத்தின் இறுதிக்கும் - தற்போதைய நினைவுத் திருப்பத்திற்கும் இடையில் ஒரு

137
. நினைவற்ற, மீண்டும் நினைத்து இரை மீட்சி செய்ய முடியாத ஒரு இடைவெளியில்.
செம்மை நிறைந்த கங்கைப் பிரவாகத்தில் இழுத்துக் கொண்டு வரப்பட்டு இந்தப் பிரபஞ்சத்துக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய புஷ்பம் ஒன்று எத்தனையோ மலர்கள் கிடந்த ஒரு தொட்டியில் இருந்து கொண்டு தன் புதிய குரலை தான் கேட்பதற்காக-அல்லது மற்றவர்களுக்காக பிரகடனப் படுத்திக் கொண்டிருந்தது.
அந்த ஒரு நிமிட மெனும் யுகத்தில் தன் சகல வெறுப் பெல்லாம் கழன்றுவிழ - தானே ஒரு உண்மையாய் மாறி விட்ட அவள் அந்தக் குரலின் வேகத்தில் எழ முற்பட்டாள். −
பலரின் நிர்ணயப்படி அவளது " எதிர்கால வசந்த காலத்தை அழித்துக்கொள்ள, அவள் அண்ணனின் தீர்மானத்தை பொய்யாக்கிவிட அவளை நர்ஸ் ஓடிவந்து எழாதிருக்கும்படி பிடித்துக் கொண்டாள்.
ஆனால் அந்த நிமிடத்தில் அவளில் - அவனுடைய சத்தியமான ஹிருதயத்தில்-இதுவரை ஏற்றுக் கொண்டி ருந்த வெறுப்பின் வீழ்ச்சியில் - பலபேருடைய எதிர்கால நிர்ணயங்களை அறுத்துவிட்ட எக்களிப்பில் சத்தி
‘நான் மிக கம்பீரமாக h எனக்கே உரிய புனிதத் தன்மையுடன் என் துவஜத்தை உயரமாக பறக்கவிட்ட சமத்காரத்தில் அவனில் பிரதிபலிக்கின்றேன். என் வீழ்ச்சி என்ற
பொய்மை அகல நான் சகல ஜீவராசிகளிடமும் நிறைந்து நிற்கின்றேன்

Page 71
138
என்ற நிறைவில் அவளின் பெண்மையின் ஆதாரத்தில் மிக அருமையாக வெளிப்படுகிறேன். கோடானுகோடி சூரியன்களின் கொதிப்பு கோடானுகோடி சந்திரன்களின் குழுமையும் என்னகத்தே கொண்டு புதுமையாக ஜ"வாலிக்கின்ற
அக்கினி நான்
நான் ஒரு அற்புதமான, ஆழமான வெறும் சொற்களினால் மட்டும் விளக்கிவிடமுடியாத ஒரு உணர்வு நான் உரக்கச் சிரிக்கின்றேன் நான் 'தாய்மை"

ஒரு மகன் தன் தாயைத் தேடுகின்றான்
'எங்கட அம்மாவக் கண்டீங்களா?" சுமார்
இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அந்த ஒழுங்" கையின் ஒரத்தில் இருந்து மேற்படி கேள்வியைக் கேட்
டான். இது பாரைப் பார்த்து கேட்ட கேள்வி? சுற்றும்
முற்றும் பார்த்தேன். அருகில் யாருமில்லை நிச்சயமாக இது என்னைப் பார்த்துக் கேட்ட கேள்விதான். அந்த
இளைஞன் யாரென்று எனக்குத் தெரியாது. எங்கேயும் பார்த்த ஞாபகம் கூட வரவில்லை.
"எங்கட அம்மாவக் கண்டீங்களா?" மீண்டும் மிக அவசரமாகக் கேட்டான். இதற்கு என்ன பதில் கூறுவது? இவனையும் எனக்குத் தெரியாது. இவன் தாயாரையும் எனக்குத் தெரியாதே!
"எங்கட அம்மாவக் கண்டீங்களா?’ சிறிது யோசித் தேன். “ஒங்கட அம்மா யாரு?'-அவன் முகத்தைப் பார்த்து கேட்டேன். சிறிது நேரம் என்னையே வெறித் துப் பார்த்தான். பின் சூள் கொட்டிச் சலித்துக் கொண் டான். பிறகு விருட்டென நான் வந்த ஒழுங்கையால் வேகமாக நடக்கவாரம்பித்தான்.
நான் சைக்கிளை விட்டிறங்கர்மல் அவன் போகும் திசையையே திரும்பிப் பார்த்தேன். நான் வந்த வழியால்

Page 72
40
அவன் திரும்பிப் போய்க் கொண்டிருந்தான். பின்னால் அத்த ஒழுங்கையின் இடதுபுறம் ஒரு பெரிய புளியமரம், அதன் பக்கத்திலேயே ஒரு ஒற்றையடிப் பாதை. அதன் அந்தத்தில் ஏராளமான குடிசைகள். அவன் அந்த ஒற்றை யடிப் பாதையில் திரும்பி மறைந்தான்.
நான் நின்று கொண்டிருக்கும் சிறிய "ஒழுங்கை சில அடிகள் தள்ளி பிரதான பாதையில் வந்து ஒட்டிக்கொள் கிறது. அந்தப் பாதையில் சதா எந்நேரமும் லொறிகளும் பஸ் வண்டிகளும், மினி வேன்களும் சாரி சாரியாகப் போய்க் கொண்டிருக்கும். சைக்கிளில் வரும் வேகத்தி லேயே பிரதான பாதைக்கு திரும்ப முடியாது. சில அடிகள் தள்ளி நின்று; இருபக்கமும் பார்த்தே திரும்ப வேண்டும் அல்லது பாதையைக் கடக்க வேண்டும்.
டவுனில் இருந்து சுமார் ஒரு மைல் தள்ளி இருந்த பர பரப்பான நாற் சந்தியில் இருந்து வடக்குப் புறமாக சுமார் அரை கிலோ தூரம் மட்டும் இரண்டு பக்கமும். புகையிலைக் கடைகள், ள்ல்லாம் நாவக்காடு தீன் போயிலைக் கடைகள் சிங்களப் போயிலை என்றும் கூறுவார்கள்.
எல்லா ஊர்களில் இருந்தும் மொத்தமாக தீன் புகை யிலை வாங்க அங்குதான் வியாபாரிகள் வருவார்கள். எப்போதும் தரகர்கள் - முதலாளிகள் - வியாபாரிகள் என்று காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகும் வியாபாரச் சூடு மதியம் வரை தொய்வின்றிப் போகும். சாயாங்காலம் எல்லாக் கடை வரிசைகளும் அமைதியாகிவிடும் கடையின் தாழ்வாரங்களில் சிலர் தென்னோ லைப் பாய் விரித்து படுத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் முன்னுாற்றிநாலு விளையாடுவார்கள். சில நேரங்களில் பெரிய லொறிகளில் புகையிலை சிப்பங்கள் வந்துவிட்டால் சாயுங்காலங் களிலும், கூலிகளின் முதலாளிமார்களின் சப்தங்கள் வாகன இரைச்சலையும் மீறிக் கேட்கும்.

4.
தினமும் இப்படிப்பட்ட ஒரு புகையிலைக் கடையின் முன்புறத்தில் அதாவது இஸ்தோப்பில் இஸ்மயில் நானாவின் தலைமையில் எங்கள் அரட்டைக் கச்சேரி "ஆரம்பமாகும். இஸ்மயில் நானாவுக்கு சொந்தமான அந்தக் கட்டிடத்தில் மூன்று கடைகள். ஒன்று பழைய இரும்பு சாமான்கள் விற்கும் சந்தோஷம் அண்ணாச்சியின் கடை. இரண்டாவது தீன் நானாவின் தீன் போயிலைக் கடை. மூன்றாவது தாஸ் முதலாளியின் சுருட்டுக் கடை.
ஒரு காலத்தில் இஸ்மயில் நானா நன்றாகத் தண்ணி போட்டு அந்தப் பக்கத்தையே சுவிகரித்துக் கொண்ட்வர். அதற்கு இன்னும் சாட்சிபோல வலது தோளில் ஒருவாள். வெட்டுத் தழும்பு இருக்கின்றது.
ஆனால் காலம் இப்போது அவரை மிகவும் மாற்றி விட்டது. ஐந்து நேரம் தொழுகைக்குப் போகிறார். எல்லோருடனும் அமைதியாகப் பேசுகிறார். பள்ளி ட்ரஸ்ட்போர்டில் ஒரு முக்கிய அங்கத்தினராக இருக்கின் றார். இரண்டு ஆண் பிள்ளைகள் சவூதியில் வேலை செய் கின்றார்கள்.
அவருடைய வாப்பாவின் இறுதி வேண்டுகோள் அவருடைய காணியில் ஒரு பள்ளி வாசலாக எழுந்து கொண்டிருக்கிறது. பகல் பொழுதில் புதிதாக கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியைப் பார்த்தபடி பள்ளித் தோட்டத்திலேயே துண்டை விரித்து படுத்துவிடுவார். சாயங்காலம் தவறாமல் புகையிலைக் கடை இஸ்தோப்பில் அரைக்கை பனியன் போட்டு, கட்டம் போட்ட சாரம் உடுத்த நண்பர்களுடன் அமர்ந்திருப்பார்.
நானும் அநேகமாக பின்னேரங்களில் அந்தச் சபையில் அமர்ந்து அரசியல் சமயம் என்று பல்வேறு விசயங் களையும் அலசி ஆராய்வோம்.

Page 73
142
யாழ்ப்பாணத்தில் பிள்ளை குட்டிகள் இருக்க இங்கு தனியாளாய் சுருட்டு வியாபாரம் செய்யும் சற்குணம் என்பவர் இன்னொரு அங்கத்தினர்.
அநேகமாக இரவு எட்டு மணிக்கு சபை கலையும். நானும் தாஸ் முதலாளியும் சந்தியில் இருக்கும் பாருக்கு போய் அதி விஷேசம் அரையும் ஒரு கூல்ஸ்பிரைட்டுடனும் அன்றைய நிகழ்ச்சிக்கு முடிவுரை கூறுவோம்.
இப்படி அநேகமான நாட்கள் நடக்கும் அந்த இடத் திற்கு, அதாவது புகையிலைக் கடை இஸ்தோப்பிற்கு போக நான் வீட்டில் இருந்து அந்த ஒழுங்கையால் வந்து மெயின் பாதையை கடக்க சற்று நிதானிக்கையில்தான் எனக்குத் தெரியாத அந்த இளைஞன் என்னிடம் "எங்கட அம்மாவக் கண்டீங்களா' என்று கேட்டுவிட்டு சலிப் புடன் என்னைத் தாண்டி புளியமரத்து ஒற்றையடிப் பாதையில் இறங்கிப் போகிறான். --
நான் வந்ததும். அந்த இளைஞன் என்னிடம் ஏதோ கேட்டதும், நான் விழிதததும், எல்லாமே பாதைக்கு மறு புறம் புகையிலைக் கடை இஸ்தோப்பில் அமர்ந்திருந்த இஸ்மயில் நானாவுக்கும், தாஸ் முதலாளிக்கும் தெரிந்தது. அன்று செவ்வாய்கிழமை. அங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும் அந்தோணியார் கோயிலுக்கு மெழுகு வர்த்தி ஏற்ற-காணிக்கை போட பல, பல, வர்ண ,வர்ண உடைகளில் பெண்கள்-சிறுவர்கள்-சிறுமிகள் போய்க் கொண்டிருந்தார்கள்.
லைட் தூண் ஒன்றில் சாய்ந்து, வெகு அமர்க்களமாக உடையணிந்து சற்குணம் வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தார். அவரும் என்னை கவனித்துவிட்டிருக்க வேண்டும். மெல்ல நழுவி தாஸ் முதலாளியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். மூவரும் என்னை நோக்கி ஏதோ பேசி சிரிப்பது புரிந்தது.

l43
அநேகமாக சாயங்கால நேரங்களில், அந்தப் பெரிய சாலையை கடந்து போவதெனில் வெகு நேரம் பொறுமை பாக காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு வாகன நெரிசல்.
ஒரு மாதிரியாக சைக்கிளை உருட்டிய வண்ணம் புகை யிலைக் கடைக்குப் போய் கட்டடத்தின் பக்கவாட்டில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு, ‘என்னா இஸ்மயில் நானா! ஏதோ விசயம் இருக்கு சிரிக்கிறீங்க’ என்று கேட்டபடி பாயில் அமர்ந்தேன்.
"மாஸ்டர் ! அந்தப் பொடியன் அவங்க அம்மாவக் கண்டீங்களான்னு கேட்டானா?" - இஸ்மயில் நானா சிரித்தபடி கேட்டர்ர்.
நானும் வியப்புடன் "ஆமா நானா'-என்றேன். தாஸ் முதலாளி பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டார். e
"அது மாஸ்டர் அந்தப் பொடியன் யாரக் கண்டா லும் அம்மாவக் கண்டீங்களான்னுதான் கேட்பான்'- சற்குணம் கூறிவிட்டு கொஞ்சம் இடைவெளிவிட்டு ஏதோ கூற ஆரம்பிக்கையில் இடைமறித்த தாஸ் முதலாளி.
*அவங்க அம்மா காலையில போனா ராத்திரிக்குத் தான் வரும். எங்கேயோ தோட்டத்துல, இல்லாட்டி பங்களாவுல வேல போல இருக்கும். மனுஷி காலையில போனா அந்தி ஆறு ஏழு மணிக்குதான் ஊட்டுக்கு வரும். இந்தப் பொடியன் வூட்டுக்கும் றோட்டுக்குமா நூறு தரம் அலைவான் யாரக் கண்டாலும் எங்கட அம்மாவக் கண்டிடீங்களா? அம்மாவக் கண்டீங்களான்னு கேப் பான்' - என்றார்.
'ஏன் பைத்தியமா? இஞ்ச இந்த ஊரு ஆட்களா

Page 74
丑44
"இவங்க கலவர டைம்ல வந்துசேர்ந்தாங்க. உம்மா வும், மகனும்தான் பாவம், உம்மாவுக்கு நல்லா நடக்க வும் முடியாது. நம்மட ஹாஜியார்தான் பள்ளிக்கு பொறகால உள்ள அவரோட காணில குடிச போட்டு குடுத்திருக்காரு கெழவி எங்கயோ வேல செய்யுது" இவங்கெல்லாம் நல்லா வாழ்ந்த குடும்பம் மாதிரி இரிக்குது. நான் ஒரு நாள் மனுஷிகிட்ட கேட்டேன். இது பொறப்புலயே இருந்து இப்பிடியா இல்ல, எடையில இருந்தான்னு; இல்லயாம் இப்ப கொஞ்ச நாளாத் தானாம், ஆனா மனுஷிகிட்ட நெறய கேட்க ம்னம் வரல்ல! என்னா, மனுஷிகிட்ட ஏதாவது கேட்க தொவங்குற நேரமே அழுவ கண்ணுல முட்டுது" - இஸ்மயில் நானா அமைதியாக, விளக்கமாகக் கூறிவிட்டு *எல்லாம் அவன்ட கைலதான்' - என்று முடித்தார்.
அந்த இளைஞனின் எடுப்பான தோற்றமும், தீட்சண் யம் பொருந்திய கண்களும், தேஜஸ் நிறைந்த முக விலாசமும் மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. l
பாதையோரத்து மின் கம்பங்களில் மொர்க்குரிப் பூக்கள் இதழ்விரிக்க ஆரம்பித்தன. கடையின் பின்பக்கம் தாண்டி ரயில்வே லைன், ஒரு பாசஞ்சர் வண்டி கிடு கிடுத்து ஓடியது. s
தாஸ் முதலாளியின் பாட்னர் சுந்தரம்பிள்ளை வெகு அவசரமாக கள்ளுக் கொட்டிலை நோக்கி ஓடிக் கொண்டி ருந்தார். அவருடைய ஆரம்பம் கள்ளுக் கொட்டிலில் தொடங்கி வடிசாராயக் குடிசையில் முற்றுப் பெறும், பகல் முழுவதும் யார் எது பேசினாலும் கலந்து கொள்ளாமல் மிக மெளனமாக தன் வேலையைக் கலனிக்கும் சுந்தரம் பிள்ளை இரவு எட்டு மணிக்கு விஸ்வரூப தரிசனம் காட்டு வார். வெறி ஏறியபின் அவர்,அடிக்கடி "ஒய்! எலார்ட ரெக்கோர்ட்டும் எனக்குத் தெரியும்’-என்பார். . சுந்தரம்

145
பிள்ளை மிகவும் நல்ல மனுஷன். பசி என்று யாராவது கேட்டால், தான் சாப்பிடும் உணவைக் கூட கொடுத்து விடுவார். வயது எழுபது நெருங்கிக் கொண்டித்தது. இன்னும் அவரே உழைத்து சாப்பிடுகிறார். பிள்ளை களுக்கும் உதவி செய்வார்.
திடீரென சற்குணம் கையை நீட்டி "மாஸ்டர்! மாஸ்டர் ! அந்தா, அதுதான் அந்தப் பொடியன்ட அம்மா' - என்றார் நான் சற்குணம் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினேன்.
ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இடுப்பில் ஒரு சிறு மூட்டையுடன் பாதையின் மறுபக்க ஒரமாக் வந்து கொண்டிருந்தாள். ஒரு கால் சற்று ஊனம் போலும், ஒரு காலை இழுத்து இழுத்து நடக்கையில் அந்தப் பெண்மணி மிகவும் துன்பப்படுகிறாள் என்பதை அவளின் முகபாவம் எடுத்துக் காட்டுவதை இங்கிருந்த படியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.
響
"மாஸ்டர்! பாரும் பாரும் என்று ஏதோ ஒரு புதுமை யைக் காட்டுவதைப் போல சற்குணம் தூரத்தே ஒழுங்கை வந்து பிரதான சாலையில் சேரும் இடத்தைக் காண்பிக்க அங்கே மீண்டும் ஒழுங்கையால் வந்து கொண்டிருந்த அந்த இளைஞன் தூரத்தே தன் ஊனமுற்ற காலை இழுத்து, இழுத்து மெல்ல. மெல்ல வரும் தன் தாயைக் கண்ணுற்ற் ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்க ஒரு சிறு குழந்தையை போலும் நகை முகங்காட்டி, கைகளைத் தட்டிக்கொண்டு 'அம்மா வாராங்க' என்று குளறிய் வண்ணம் ஒடி வந்து அம் மூதாட்டியை அணைக்க இந்தச் செயல் அந்த ஆரவாரத்தை ஈர்க்கும் என்ற லஜ்ஜையுடன் ‘மகன் வாங்க!-வாங்க ஊட்டுக்கு போவோம்' என்று அந்தத் தாய் தன் மகனை அணைத்து கைப்பிடியுடன்
ஒரு-10

Page 75
46
அழைக்க, அவன்-அந்தப் பெரிய மகன்-அந்த இளைஞன் **டொபி டொபி’ என்று அடம் பிடித்தான்,
'சன் வீட்டுக்கு வாங்க! வீட்டுக்கு வாங்க!' என இரு முறை அன்புடனும், சற்று கண்டிப்புடனும் கூறிய தாயைப் பார்த்து “நோ! ஐ வோன்ட் இட் நெள’ என்றான் அவன்.
அந்த தாய் மெதுவாக ரகஸ்யமே போலும் "தீஸ் ஒல் போர் யூ' - என மிகவும் அந்தரங்கமாகக் கூறுவதை என்னால் மிகவும் தெளிவாக உணர முடிந்தது.
இஸ்மயில் நானா கூறியது உண்மையே! இவர்கள் நன்றாக வாழ்ந்தவர்கள் ஏதோ ஒரு மகத்தான இழப்புக்கு பின் இந்தத் தாயும் மகனும் இப்படி வாழ நேரிட்டுள்ளது. அபப்டியாயின், அந்த மகத்தான இழப்புத்தான் என்ன? எல்லாக் கேள்விகட்கும் அந்த வயோதிகத் தாயின் சண்ணிர்தான் பதில் எனின் அந்த சோகத்தை- இழப்பைஇன்னும் அவர்களால் ஏற்றுக்கொள்ள - அல்லது ஜீரணிக்க முடியவில்லை போலும்.
மனிதப் பண்புதான் எவ்வளவு தூரம் அருகிப் போய் விட்டது. கலவரங்கள் - மனிதனை மனிதனே வெட்டிக் கொள்வது - புதிய புஷ்பங்களை பறித்து கசக்கி எறிவது போல் இளம் மனித மொட்டுக்களை தூக்கி எறிந்து பேயாட்டமாடுவது - இவைகள் எப்படி நாகரிக யுகத்தின் முத்திரைகளாகும்?
எல்லா வருடங்களுக்கும் பன்னிரெண்டு மாதங்கள் இருப்பது போல, ஒவ்வொரு வருடங்களும் ஒவ்வொரு கலவரம். மனிதனை மனிதன் வேட்டையாடும் களியாட் டம். மனம் விடை தேடிப்பறந்தது.
அன்றிரவு பாரில் மது அருந்தும்போது கூட அந்தத் தாயின் - மகனின் உருவங்களே கண் முன் நின்றன.

147
வீட்டுக்கு வந்ததும், இரவுச் சாப்பாட்டை அருந்திய படியே ஒரு துயரமான கதையை கூறுவது போல என் மனைவிக்கு இந்தத் தாய் மகன் விசயத்தைக் கூறினேன். சொல்லாமல் விட்டிருக்கலாம். மனைவியும் இருளில் வெகு நேரம் வரை மெளனமாக தான் காணாத அவர்களை மனதில் உருவகப்படுத்தி யோசித்துக் கொண் டிருந்தாள்.
。口 。口
இப்போதெல்லாம் அந்த இளைஞனை அடிக்கடி நான் காண்பது வழக்கம். காணும் போதெல்லாம் ‘எங்கட அம்மாவக் கண்டீங்களா?' - என்று கேட்பான். நானும் *ஒ! கண்டேன்! ஆறு மணிக்கு வர்றேன்னு ஒங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க"- எனப் ப்ொய்யாகக் கூறுவேன். அப்போதெல்லாம் அவன் கண்கள் பிரகாசமடையும், முகமே நிகுநிகு வென எரிவதைப் போல சிவக்கும். அவனோடு நான் பலமுறை சிநேகயூர்வமாக சிரிப் பதையும், வலிந்து பேச முயற்சிப்பதையும் அந்தத் தாய் அநேக சமயங்களில் கண்டாள். மற்றவர்களைப்போல் நான் அந்த இளைஞனை கேலி செய்யாமல் மதித்து-அவன் உணர்வுகளை மதிக்கின்றதைப் போல் அவனே நம்பும் வண்ணம் பழகுவதை அவதானித்த அந்தத் தாய் சில நேரங்களில், என்னைக் காண நேரிடுகையில் நன்றியுடன் "வர் றேன் தம்பி" - என்று தலை சாய்த்து கூறியபடி செல்வாள்.
அநேக நாட்கள் டவுன் பக்கம் இருந்து ரயில்வே இருப்புப் பாதை வழியாக அந்தத் தாய் வருவதை என்னால் காண முடிந்தது. ஒரு நாள் ‘என்னம்மா! ரயில் பாதையில் வராமல் பஸ்ஸில் வரலாமே! கஷ்ட மில்லையா?" என்று கேட்டதற்கு.

Page 76
148
'இதென்ன கஷ்டம் தம்பி! நாங்க படாத கஷ்டமா?" - தூரத்தில் விழி குத்தி யோசித்து தன்னையே ஆகுதி பண்ணுமாற்போல் பெருமூச்செறிந்தாள்
சில நாட்களில் இருட்டில் அந்த ஊனமுற்ற ஒற்றைக் காலில் அணிந்திருக்கும் ரப்பர் செருப்பை இழுத்த வண்ணம் கையில் மண்ணெண்ணெய் போத்தலுடன் அந்தத் தாய் தன் இடுங்கிய விழிகளால் வழி தேடி சந்திக் கடைக்கு மெல்ல மெல்ல போவதை பார்க்கும்போது மனதுக்கு என்னவோ போலிருக்கும்.
சில விசயங்களைத் தேடாமல், தெரித்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு மேல்ான காரியம். ஏனெனில் அவை களை தெரிந்து கொண்ட பின் அந்தத் துயரங்களை பிரத்தியட்சமாக அறிய நேர்கையில் மனம்தான் எவ்வளவு அல்லற்படுகிறது. இதே அனுபவம்தான். இந்தத் தாய்"மகன் சந்திப்பில் எனக்கும் ஏற்பட்டது. .
எனக்கு மட்டுமல்ல, ள்ன் மனைவியையும் சேர்த்துத் தான் தினமும் ஒரு தடவையாவது என் மனைவி இவர் களைப் பற்றி கேட்காமல் இருந்ததில்லை. தினசரி ஒரு துயரமான நாவலைப் படிப்பது போல அவளும் என்னிடம் கேட்க நானும் ஒவ்வொரு அத்தியாயங்கள் போல விபரிப் பேன்.
தீபாவளி வந்தது. என் மனைவியின் வேண்டு கோளுக்கிணங்கி ஒரு பலகாரப் பார்சலுடன் அந்தப் புளிய மரத்து ஒற்றையடிப் பாதையால் அந்தத் தாயின் மகனின் வீட்டை குடிசையைத் தேடிப் போனேன். அந்த இளைஞனுக்கு நல்ல உடை அணிவித்து ஒரு சிறு குழந் தையை எப்படி ஒரு தாய் அழகு பார்ப்பாளோ அதே போன்று இந்தத் தாய் அந்த இளைஞனை அழகு 1 Ιπή 3 . துக்கொண்டிருந்தாள். அது சரி ஒரு தாய்க்கு தன் மகன் குழந்தைதானே!

149
ஒருமுறை, நான் திருமணமும் முடித்த பின்னர் வீட்டு வாசலில் சைக்கிளில் ஏற முற்படுகையில் பெடல் வழுக்கி விழப்போகையில் என் அம்மா முற்றத்தில் இருந்தவள். "என் புள்ள!' என்று பதைத்து ஒரு சிறு பிள்ளை விழுந் தால் எப்படி பதட்டமடைந்து ஓடிவருவாளோ அப்படி ஒடி வந்து என்னைப் பிடித்துக்கொண்டாள். அது இப்போது இந்த நேரத்தில் நினைவிற்கு வந்தது. -
இந்த குடிசைக்கு தீபாவளியன்று நான் போய் வந்ததை அறிந்த தாஸ் முதலாளி "இஸ்மயில் நானா! எங்கட மாஸ்டருக்கு புளியமரத்த தோட்டத்துலயும் சொந்தக்காரங்க இருக்கிறாங்க!' என்று கேலி பண்ணி @可f了f了,
சில நேரங்களில் அந்த இளைஞன் காணாமல் போய் விடுவான். அப்படியென்றால், எங்காவது போய் எதை யாவது வேடிக்கை பார்த்துக்கொண்டு, அங்கும் ‘எங்கட அம்மாவக் கண்டீங்களா' என்று கேட்டு அலைவான். யாராவது கொண்டுவந்து விடுவார்கள். சில நேரங்களில் அந்தத் தாயே தன் ஊனமுற்ற காலை இழுத்து இழுத்து மகனைத் தேடி அலைவாள்.
ஒரு முறை ரயில்வே லைன் இருப்புப் பாதையில் வரும்போது ஒரு நூலிழையில் இந்தத் தாய் சாவின் பிடியில் இருந்து மீண்டதாக இஸ்மயில் நானா கூறினார். ரயில் வருவது கூடத் தெரியாத அளவிற்கு அப்படி ஒரு யோசனையா?
அந்த ரயில் பாதை வளைவில் பல பேர் பல் காலங் களில் பல விதங்களில் அந்த ரயிலுக்கு பலியாகி இருக், கின்றார்கள். நானும் ஒரு முறை அந்த வயோதிகத் தாய்க்கு ‘அம்மா! இனி அந்த ரயில் பாதையால் நடந்து வரவேண்டாம்” என்றேன்.
'சரி மகன்' என்று ஒரு சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். எனினும் பின் பல தடவை அம் மூதாட்டி

Page 77
150. அதே பாதையில்தான் தன் போக்குவரத்தைத் தொடர்ந்
Yr
芬T@T。
岛
அடிக்கடி என் மனதுள் ஏதோ ஒரு விபரீதம் இந்த மனுஷிக்கு ஏற்படப் போகின்றதென அசரீரி கூறிற்று ரயில் பாதையில் ஓடிவரும் ரயிலை நோக்கி ஆவலுடன் ஒடும் கிழவியை அடிக்கடி கனவில் கண்டேன். நீண்ட இரவுகள் மோட்டு வளையைப் பார்த்தபடி யோசித்தேன். முன் உணர்வு எதையோ அடிக்கடி கூறிற்று.
அன்றைய தினம் அந்த விபரீதமும் நடந்துவிட்டது. டவுனில் இருந்து நான் ரயில்வே இருப்புப் பாதையால் வரும்போது அந்த வளைவில் இரவு ஏழு மணிக்கு வடக்கே போகும் ரயில் வண்டி மகா சோகத்துடன் நின்றிருந்தது. மாலை மங்கி விட்டது இருள் அந்த ரயில்வே பாதையின் வளைவை ஆக்ரமித்துக்கொண்டது. நான் சிலிப்பர் கட்டைகளில் அவசரமாக கால் பதித்து நடந்தேன். ஆண்டவனே! இது அந்தத் தாயாக இருக்கக் கூடாது. அதுவே அந்தத் தாயாக இருக்கு மாயின். மேற்கொண்டு யோசிக்கவே மனம் இடந்தர வில்லை.
ரயில் பாதையில் ஒடும்போது எல்லாத் தெய்வங் களையும் வேண்டிக் கொண்டேன். அப்படி அவசரமாக ஓடினாலும் ரயில் சக்கரத்தில் அகப்பட்டுக் கிடக்கும் மனித உடலைப் பார்க்கும் திராணி என்னிடம் இல்லை.
நான் வந்த ரயில்வே லைனைத் திரும்பிப் பார்க்கின் றேன். ஒருவேளை என் பின்னால் அந்தத் தாய் தன் காலை இழுத்து இழுத்து வரக்கூடுமல்லவா! இல்லை; வரவில்லை. -
மொய்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை நெருங்கி விட்டேன். கூட்டத்தை விலக்கிக்கொண்டு சந்திக் கடை பெருமாள் 'பாவம்' என்று ஒற்றைச் சொல்லோடு வரு கிறார்.

I5 I
“பெருமாளண்னே! அந்தக் கால் இழுத்து நடக்குற கெழவியா செத்துப்போச்சி!’
'இல்ல தம்பி’. ஆண்டவனே! உனக்கு மிக நன்றி. அந்த அம்மா இல்லயாம். ஓடிவந்து களைப்புத்தீர ஒரு நிமிடம் நின்று நன்றாக முச்சை உள்ளே இழுக்கின்றேன்.
'அய்யோ! கோச்சி வர்றதக் காணல்ல. இப்பிடி மார்ற நேரம் தடக்குன்னு ஒரு சத்தம்தான்' - யாரோ நடந்ததை அப்படியே வர்ணிக்கின்றார்.
'போக வேண்டியதெல்லாம் இருக்குது. இருக்க வேண்டியதெல்லாம் போகுது’ - யாரோ சலித்துக் கொண்டார். -
இவ்வளவு தூரம் வந்தபின் பார்க்காமல் போக லாமா? கூட்டத்தினுள் நானும் தலையை நீட்டினேன்.
அங்கே. ரயிலில் அடிபட்டு சவமாகக் கிடந்தான் அவன். எங்கட அம்மாவக் கண்டீங்களா? இங்கு கேட்டு கேட்டு அலுத்துவிட்டது போலும். எங்கோ கேட்பதற் காக இந்த உடலை மட்டும் அந்த ரயில்வே இருப்புப் பாதையின் ஒரத்தில் விட்டு விட்டு போய்விட்டான்.
மரணம் என்பதே இல்லை என்னுமாற் போல் அமைதி யான முகம். அதே தேஜஸ். எதையும் யாசிக்க மாட்டேன் என்பதுபோல் அதே பார்வை.
வெகு நேரத்திற்குப் பிறகு நான் மிகுந்த துயரத்துடன் பெரிய சாலையில் நடந்து ஒழுங்கை வழியால் திரும்பி னேன். இஸ்மயில் நானாவைக் காணவில்லை, இஷாத் தொழுகைக்குப் போயிருப்பார். இன்னும் தகவல் வர வில்லை. இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடும். அந்த ஒழுங்கை தன் வழக்கமான அமைதியில் இருந்தது.
நேரங்கெட்ட நேரத்தில் ஒரு ஒற்றைக் குயில் புளிய மரத்தில் இருந்து ஏதோ ஒரு சேதியைக் கூறியது. அது யாருக்குப் புரியும்?

Page 78
152
புளிய மரத்தடி நெருங்குகையில் இருளில் ஒற்றையடிப் பாதையில் "சரக் சரக்’கென ரப்பர் செருப்பின் இழுத்து இழுத்து வரும் காலடி ஓசை.
அந்த இருளில் ஒரு கைவிளக்கின் சன்னமான ஒளி யுடன் அந்தத் தாய் என்னைத் தாண்டிச் செல்ல முற்பட்டு, என்னை அடையாளம் கண்டு நின்று 'தம்பி’ என்றாள்.
'அம்மா!" அவ்வளவுதான் என்னால் பேச முடிந்தது. வியர்வையில் முற்றாகக் குளித்துவிட்டேன்.
'தம்பி’ எங்கட மகனக் கண்டீங்களா?" தாயே! இன்னும் சில நிமிடங்களில் பூகம்பம் வெடித்து விடும்? உன்னால் தாங்க முடியுமா? 卷
என்னால் யோசிக்கவும் முடியவில்லை நடக்க முடியா ததைப் பேரல் கால்கள் செயல் இழக்கின்றன. மேற் கொண்டு யோசிக்க முடியவில்லை.
'தம்பி! எங்கட மகனக் கண்டீங்களா?” மீண்டும் அதே கேள்வி. 'இல்லை அம்மா இல்ல. நான் புளிய மரத்தின் அடிவர் ரத்து இருளை நோக்கி விரைகிறேன். ஏனெனில், எனக்கு அழுகை பீறிட்டு வருகிறது. அழப்போகின்றேன். நான் அழுவதை யாரும் பார்க்கக் கூடாது தன் ஊனமுற்ற காலை இழுத்து இழுத்து செல்லும் சரக் சரக்கென்று இறப்பர் செருப்புக்களின் ஒலி. தன் மகனைத் தேடிப் போகும் ஒரு தாயின் காலடி ஓசை. தூரத்தே மெல்ல மெலல கேட்கிறது. y \x
ロ ロ

ai a TJů
அவன் அந்த காரை பெயர்ந்த-கூரை உடைந்த பழைய கால கல்வீட்டுத் தாழ்வாரத்துக்கு குடி வந்து இரண்டு நாட்களாகி விட்டன. இரண்டு நாட்களுக்கு முன், ஒரு சாயங்கால மழையிருட்டில் தட்டுத் தடுமாறி இருட்டில் நிலத்தைத் தடவி அங்கே நிறைந்திருந்த குப்பைகளுடனும், தூசுகளுடனும் அவனும் ஒரு குப்பையாக முடங்கிப் போனான் அடுத்த நாள் காலை சூரிய வெளிச்சம் வரும் வரை நன்றாக உறங்கிப் போனான். சூரியவெளிச்சம் பகல் வரையுமே இருந்தது. பகல் ஆரம்பித்த பெரு மழையில் நடுங்கியபடி சுவரோடு ஒட்டி முடங்கிக் கிடந்த அவன் மூன்றாம் நாள் காலை வெகு நேரம் கழித்தே கண்விழித் தான்.
கண்விழித்த அவன் தன்னை தான் படுத்திருக்கும் இடத்தை தான் படுத்திருக்கும் பழைய கால சத்திரம் போன்ற சிதிலமடைந்த வீட்டின் முன்னால் செல்லும் குறுகலான பழைய சாலையை - சாலைக்கு மறுபுறம் மக்கள் வசிக்கும் வீடுகளை - நீண்டு உயர்ந்து கிளைபரப்பி வளர்ந்திருக்கும் பெயர் தெரியா மரங்களை - இன்னும் எல்லாவற்றையும் பார்த்தான்.
அடிவயிற்றில் இருந்து எழுந்த பசிக்கனல், அவனையே சம்ஹாரம் செய்யுமாற் போல் தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்குகையில் அவன் தன்னையே, தன் பிறவியையே, அந்த விட்டை, மரங்களை, சாலையை எல்லாவற்றையுமே சபித்து அழுதான். அந்தச் சாலையில் ஒலியெழுப்பிச் செல்லும் வாகனங்களை, கரத்தைகளை, சைக்கிள்களை காணும் போதெல்லாம் தான் மட்டும் ஒரு வேளை சோற்றுக்கும் வழியற்று இந்தக் குப்பைக் குவியலில் தானும் ஒரு குப்பையாய் இருப்பதை எண்ணி, இந்தப் படைப்பே, படைக்கின்றவனே தனக்குத் துரோகம்

Page 79
丑54
இழைத்து விட்டாற்போல் எண்ணிக் கலங்கினான். தனிமையில் புலம்பினான்.
மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். தன் இனத்தின் பிரதிநிதி ஒருவன் பசியுடன் துடித்து அணு அனுவாக செத்துக் கொண்டிருக்கையில் இவர்களால் எப்படி சுவை யாகவும், சூடாகவும் சாப்பிட முடிகிறது.
சாலையின் மறுபுறம் முன் வீட்டின் பின்புறம் இருந்து ஏதோ சமையல் தாளிதம் செய்யும் நறுமணம் காற்றில் கலந்து அவன் நாசியைத் தாக்கிற்று. இப்படி அவர்கள் மிகுந்த சுவை மணத்தை எழுப்பும் வண்ணம் உணவைச் சமைப்பதே இவனை நிஷ்டூரமாகப் பழிவாங்கத்தான் என்பது போல எண்ணி கண் முன் இல்லாத யாரையோ தூஷித்து காறித் துப்பினான்.
எச்சிலைத் துப்பக்கூட வ்லுவில்லாமல் பலஹரீன மிடைந்திருந்த அவன் துப்பிய எச்சில் தாழ்வாரத்து படிக்கட்டுகளை தாண்டிப் போய் விழாமல் அவன் பக்கத் திலேயே விழுந்து இன்னும் எரிச்சலையும், கோபத்தையும் அதிகமாக்கியது. -
அச்சாலையின் வழியே சென்று கொண்டிருந்த ஒரு மீன்காரியை முன் வீட்டில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. அந்த வீட்டைத் தாண்டிப்போய்க் கொண்டி ருந்த அவள் தன்னை அழைக்கும் குரல் கேட்டு, முன்புற வீட்டு கேட்டைத் திறந்து அவ்வீட்டு பின்கட்டுக்குப் போக பக்கவாட்டில் திருமபி பின்புறம் சென்று மறைந் தாள். முன் வீட்டில் இருப்பவர்கள் அன்றைய சமயலுக்கு மீன் வாங்கப் போகிறார்கள் போலும்.
அடே யப்பா! மீன் கறி சாப்பிட்டு எத்தனை நாட்க ளாகிவிட்டன. அப்படியானால் சற்று முன் எழுந்த தாளித மணம்? ஓ! அவர்கள் இரண்டு மூன்று கறிவகைகள் சமைப்பார்களோ! ஒரு சோறும் ஒரு கறியும் போதாதா? ஏன்! கறிகூடத் தேவையில்லை. சோற்றில் வெறும் நீரை

155
ஊற்றி இரண்டு மூன்று வெங்காயத்தை நறுக்கிப்போட்டு சாப்பிட முடியாதோ!
அவன் வாயில் எச்சில் ஊறவில்லை. பசியின்
வெப்பத்தில் எச்சில்கூட வறண்டு விட்டிருந்தது. ஒரு ஐஸ்பழம் விற்பவன் 'ஐஸ் ஐஸ்!!' என்று சைக்கிள்
மணியை அடித்த வண்ணம் பாதையில் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தான்.
மனுசனுக்கு இஞ்ச ஒருவேளை சோறே கெடக்கல்ல. இந்த ஐஸ்பழம் இல்லன்னுதான் கொறச்சல் ஏதோ அவனுக்காகவே ஐஸ்வண்டிக்காரன் மணியடித்துப் போவது போல் பட்டது அவனுக்கு.
வாழ்க்கையிலேயே காணாத அந்த ஐஸ்வண்டிக் காரனின் அம்மாவை மனதிற்குள் இழுத்து திட்டித் தீர்த்தான்.
சற்றுக் கழித்து எங்கோ தூரத்தில் ஐஸ்பழம் கேட்டு அழும் ஒரு சிறுபிள்ளையின் அழுகுரலும், யாரோ திட்டும் ஓசையும் ஒரு ரகஸ்யம் போலும் காதில் வந்து விழுந்தது.
முன் வீட்டில் இருந்து வெகு நேரத்திற்குப் பின் உள்ளே சென்ற மீன் காரி வெளி வாசல் வழியாக சாலையில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
தான் கடைசியாக சாப்பிட்ட சாப்பாட்டை நினைத் துக் கொண்டான். குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த உலர்ந்த பாண் துண்டும் குழாய் நீரும், குழாய் நீர் ஞாபகம் வர ஒரு மூலையில் இருந்த தகர டின்னை எடுத்து அதில் இருந்த கொஞ்ச நீரையும் வாயில் ஊற்றி தொண்டையை நனைத்துக் கொண்டான்.
. இப்படியே உயிர் போய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். செத்துவிட்டால் ஒன்றுமே இல்லை. மரணம் கூட எவ்வளவு நிம்மதியானது.

Page 80
56
முதல் நாள் இரவு எழும்ப முடியாமல் அவ்விடத்தி லேயே கழித்த நெடியும், ஈரமும் அவனுக்கே அரு -வருப்பைத் தந்தது.
ஆண்டவனே! நான் சீக்கிரம் சாகவேண்டும். நான் மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். என் சாவை சீக்கிரம் எனக்குத் தந்துவிடு! பலமுறை மூச்சடக் கிப் பார்த்தான். முடியவில்லை. அழுதான். வெகுநேரம் அழுது கொண்டிருந்தான். சாவு மட்டும் வரவில்லை.
தன்னைப் பெற்றவர்களை ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தான் அவ்ர்கள் சந்தோசத்திற்கும் சல்லாபத்துக்கும் நானா வந்து பிறக்கக் கிடைத்தேன். பிறந்தபோதே கழுத்தை நெரித்துப் போட்டிருக்கலாமே!
பாதையில் எவ்வளவோ பேர் போய்க் கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள். ஒருவரும் இவனைக் கவனிக்கவில்லை. படுத்தபடியே சற்று சுவரோரமாகச் சாய்ந்து தலையை மட்டும் தூக்கி பாதையை, எதிர் வீட்டை நன்றாக பார்க்கும் வண்ணம் சாய்ந்து கொண் டான். பாதையில் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தன் தகரக் குவளையை, அதாவது அந்தத் தகர டின்னை இரண்டு மூன்று முறை தரையில் தட்டி ஒலி யெழுப்பினான். யாரும் பார்க்கவில்லை எங்கிருந்தோ ஓடிவந்த சொறி பிடித்த நாயொன்று அவன் முன்னின்று இரண்டு மூன்று முறை குரைத்தது. பயந்துபோன அவன் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்து உறுப்திவிட்டு, தாழ்வாத் துப் படிக்கட்டில் ஒற்றைக் காலைத்தூக்கி சிறுநீர் கழித்து விட்டு பாதையில் செல்லும் யாரையோ பார்த்து வாலைக் குழைத்து முனகியபடி ஓடியது. அதன் பின் தகர டின்னை அவன் தரையில் தட்டவில்லை. Y
நேரம் போய்க் கொணடிருந்தது. மதியம் நெருங்கி விட்டது. முன் வீட்டு கேட்டருகில், உள்ளிருந்து வந்த ஒரு பெண் சற்று நேரம் கேட்டைப் பிடித்தபடி தலையை வெளியே நீட்டி சாலையின் இடது பக்கத்தை வெகு

57
கரிசனையோடு பார்த்துவிட்டு மீண்டும்" உள்ளே” போனாள்.
அந்தப் பெண் தான் முன் வீட்டு சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது மீன் துண்டுகள் சட்டியில் கொதித்துக் கொண்டிருக்கும். முதல் தாளிதம் பருப்பு சாம்பாராக இருக்க வேண்டும்.
சற்று நேரத்தில் தேங்காய எண்ணையின தீயும் மணம் அடேயப்பா. மீன் பொறியல், இல்லையில்லை அப்பளமாகவும் இருக்கலாம்.
ஒரு நடுத்தர மனிதன் சைக்கிளில் வத்து இறங்கி, வெளி கேட்டைத் திறந்து உள்ளே போனான். வந்தது அந்தப் பெண்ணின் கணவனாக இருக்கக் கூடும். பகல், சாப்பாட்டுக்காக வந்திருக்கின்றான். சிறிது நேரம் கழித்து வீட்டின் புறத்தில் கிணற்றில் தண்ணீர் அள்ளும் ஓசை, சுப்பியின் கீச்சிடும் ஒலி.
சரி கால் கை கழுவி விட்டு சாப்பிட ஆயத்தமாகின் றான். இவையெல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க அவனுக்கு பொறுக்க முடியவில்லை.
அந்த மத்தியானமும், இரவும் மிக நீண்டதாக உண்ர்ந்தான். அவன் தூக்கமும் விழிப்புமற்ற @@・ மெளன் நிலை. சில நேரங்களில் எப்போதோ அந்த எதிர் வீட்டு கேட்டில் நின்று யாரோ அவனைப் பார்ப்பதைப் போன்ற பிரமை, அதுவும் ஒரு கனவு போலும், ,
இரவு மழை பெய்தது. அவன் செத்துப் போனான் அப்படித்தான் அவன் உணர்ந்தான். பசிக் களையுடன் தூக்கத்தில் சரிந்தான் அல்லது மயங்கினான்.
'ஏய்!’ யார் யாரையோ அழைக்கும் குரல் எந்த உலகத்திலிருந்து? புலன்கள் மெல்ல ல்ெ, இயங்க ஆரம்பித்தன. 'ஏய்!” மீண்டும் யாரோ அழைக்கும் குரல், மிகவும் சிாமப்பட்டு கண் களைத் திறக்க முயற்சித்தான்.

Page 81
158 தான் சாகவில்லை என்ற உணர்வு தெளிவடைய ஆரம்பிக் கையில் மனம் குதூகலித்தது. கண்களைத் திறத்து பார்க்கையில் கண்முன்னே ஒரு உருவம் நிழலாடியது.
'சொகமில்லியா?" முன்னே நின்ற உருவம் கேட்டது. அவனுடைய புலன்கள் விழித்துக்கொண்டன. முன்னே நின்று கேட்பது முன்வீட்டு மனிதன் என்பதை மிகவும் சிரமத்துக்கிடையில் புரிந்து கொண்டான்.
'பசியா? மீண்டும் கேள்வி. இவன் வெகு சிரமமே ஆயினும் வெகு அவசரமாகத் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
அந்த மனிதன் படியிறங்கிப் போய் பாதையில் நிறுத்தி யிருந்த சைக்கிளை எடுத்து உருட்டிக் கொண்டு முன் வீட்டு கேட் பக்கம் போய் நிற்க வீட்டு முன் பக்கம் அந்தப் பெண் வருவது தெரிந்தது.
'இஞ்ச! மிச்சம் இருக்கிற சாப்பாட்ட இந்த மனுச னுக்குப் போடு! நான் கடைக்குப் போறேன்!" சொல்லிக் கொண்டே சைக்கிளில் சென்றான்.
நான் ஏதோ கனவே காண்பது மாதிரி உணர்ந்தான் அவன். எனினும் எல்லாமே நிஜம் என்பதுபோல் அந்த விடியற்காலைப் பொழுதின் சோபனங்கள் உணர்த்திற்று. சிறிது நேரத்தில் ஒரு தட்டில் நிறையச் சோற்றுடனும் மேலே நிறையக் கறிகளுடனும், ஒரு பித்தளைச் செம்பில் நீருடனும், வந்த அந்த முன் வீட்டுப் பெண் எல்லாவற் றையும் அலன் தட்டில் கொட்டிவிட்டு, தகரக் குவளையில் தண்ணிரை ஊற்றிவிட்டு திரும்பி முன்புற வீட்டினுள் சென்று மறைந்தாள், !
தட்டில் துண்டங்களாகப் பெரிய சமைத்த மீன், இரண்டாம் முறை அடுப்பில் வைத்து சூடாக்கி வற்ற வைத்த சோற்றுக் குழம்பு மாதிரி இருந்த பருப்புச் சாம்பார். அதில் எட்டிப் பார்க்கும் முருங்கைத் துண்டு களின் கண்ணாமூச்சி. தட்டில் கொட்டும்போது சோற்றி

59
னுள் மறைந்து சாபபிடும்போது அபூர்வமாக கையில தட்டுப்பட்ட கருவாட்டுப் பொரியல்.
அடிக்கடி தொண்டை அடைத்தது. மிகவும் சிரமப் பட்டான். பல தடவை தண்ணிரைக் குடித்தான். இப்படி யாக அவ்வளவு சோறும் தண்ணிரும் உள்ளே இறங்க இந்த வாழ்வே ஒரு மகத்தான சந்தோசமுடையதாகத் தெரிந்து. எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தபின், இரண். டு முறை ஏப்பம் விட்டுக்கொண்டான். பெயர் தெரியாத மரங்களினூடாக விசிய காலைக் க்ாற்று அவனைப் பரிவுடன் ஆலிங்கனம் செய்தது.
முன் வீட்டு தரையைப் பார்த்தான். மரங்களைப் பார்த்தான். ஒ! வாழ்க்கைதான் எவ்வளவு அற்புதமானது.
ஒரு கணத்தில் ஒரு யானை பலம் வந்துவிட்டதைப் போல் உணர்ந்தான். கையில் தற்சமயம் பீடித்துண்டு ஒன்றும் இல்லை. இருந்தால் இந்தக் காரமான மீன் கறி சாப்பிட்ட வாய்க்கு பிடிப் புகை , எவ்வளவு பாந்தமாக இருக்கும். ஒரு முறை மானசீகமாக பீடிப்புகையை இழுப்பதுபோல் வெறும் காற்றை உள்ளிழுத்து புகையை வெளியே விடுவது மாதிரி ஊதினான்.
'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்யசுவாமி உனை மறந்தேன்" - வாய் மிக அந்தரங்கமாக (Upg991 முணுத்தது. ராகத்துடன் தான்.
முன் வீட்டுப்பெண் வாசல் பெருக்கிக் கொண் டிருந்தாள். நல்ல நிறம், பழுத்த எலுமிச்சம் பழம் மாதிரி. வயசு ஒரு முப்பது இருக்குமா? இருக்கும். நல்ல தாட்டி யான உடம்புதான். கெரஞ்சம் கூடுதலாக சதை போட் டிருக்கிறது. இல்லாவிட்டால் அந்த இடுப்பில் மடிப்புகள் வராது. பரவாயில்லை. அது கூட என்ன மோ U DIT Gorf; தான் இருக்கிறது. வீட்டுக்காரனை யோசித்தான். பரவா யில்லை. கொஞ்சம் கறுப்புத்தான். இருந்தாலும் இவளுக்கு அவன் பொருத்தம்.

Page 82
60 விளக்குமாற்றை ஒருபுறம் வைத்துவிட்டு குப்பைகளை ஒரு கூடையில் அள்ளியபடி பின்புறம் போகையில் அவ் ளுடைய பின்புற அசைவுகளையும், ஏற்ற இறக்கங்களை யும் வெகு உற்சாகமாகப் பார்த்து நிலத்தில் சாய்ந்தான். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு ஏன் இவனுக்கு மட்டும் இல்லையா? இரையெடுத்த சாரைப் பாப்பு போல் அந்தப் புழுதியில் சற்று நேரம் (ண்டு கொண்டிருந்தான். கைகள் இரண்டையும் படுத்த டியே பின்புறம் நீட்டி விறைத்தபடி கொஞ்ச நேரம் இருந்து சுகமாக இருந்தது. வெகுநேரம கழித்து சம்மணம்பேர்ட்டு அமர்ந்தான். -
என்றோ ஒரு இரவு நடு நிசியில் பொதுக் கழுவறைக் குப் பின்புறம் இருந்த கொன் கிரீட் சிமென்ட் தளத்தில் தன்னை அனைத்து உறவாடிய அவளை - அந்தப் பைத்தி யக்கார பிச்சைக்காரியை அ, அபூர்வமான நிகழ்ச்சியை இப்போது அவன் ஆழமாக - னவுகூர்ந்தான்.
எங்கிருந்தோ ஓடி வந்த சொற நாய் இவனைப்பார்த்து சற்று யோசித்தது. குரைப்போமா வேண்டாமா என்று
இவன் அருகில் இருந்த செங்கல் பாதியை எடுத்து நாயை நோக்கி எறியப்போவதைப் போல பாவனை காட்ட அது தூர ஓடிப்போய் நின்று குரைத்துவிட்டு தன் வழியே ஒடியது. -
முன் வீட்டு வளவில் வீட்டுக்கு இடது பக்கம் இருந்த கிணற்றில் யாரோ குளிக்கும் ஒசை,
எழுந்த அவன் அந்த வீட்டு தாழ்வாரத்துப் படிக் கட்டின் ஒரத்துக்குப் போய் உடைந்த படியில் அமர இப்போது கிணற்றில் மாராப்புச் சீலையுடன் குளிக்கும் அந்த முன்புற வீட்டுப் பெண்மணியின் ஈரத்துடனான உருவம் நன்றாகத் தெரிய இவன் மிகுந்த கரிசனையுடன் அவளின் ஏற்ற இறக்கங்களில் லயிக்க ஆரம்பித்தான்.
அன்ன விசாரம் முடிய. வரவேண்டியது ஆத்ம விசாரம். இங்கே இவனுக்கு வந்தது என்ன விசாரம்?


Page 83
+ 1 1
அறுபதுகளின் இறுதிவி முத்துவிங்கம். இவருக்கு நாடளாவிய ரீதியில் இ ஆளுமைவாதி. இவரது முத இலக்கிய பரப்பில் அடை பதிவாக்கிக்கொள்கிறார் நீர்கொழும்பின் மறக்கவியல் நீர்கொழும்பூர் முத்துலிங்க அறிவார்ந்த அனைத்து ஆன்மா அளைந்து அணு வித்தகனாய் பரிணமிக்கின் தை,சஞ்சிகை ஓவியம். யாள்கை, நடிப்பு சிலம்பு வ சமர்த்தான வித்தகன் இவ 'அண்ணி" என்ற இ9 பெரும் பங்கு வகித்தவர் செறிவுள்ள சிறுகதைகளை கல்கியில்தான் அரங்கேறி புத்துறையில் ஒதுங்கியிரு
பல ஆண்டுகளுக்குமுன் பாராட்டி கடிதம் எழுதி நா.பார்த்தசாரதி. தமிழ் "அரவிந்த்" என்ற பெயர் திரை பதித்ததுண்டு. இக் நாடகங்கள் மக்களால் விரு சிலம்பு வீச்சில் நுட்பமான பலராலும் பேசப்பட்டவர் மும்மொழி களிலும் முழு கலைகளிலும் பளிச்சிட்டாது என்று கூறிக்கொள்வதில்
இவரது கதையாக்கத் யையும் நேர்த்தியான மொ ஸ்திரத்தன்மையும் சேர் ஆழ்த்தும். இந்நூல் இனி அத்தாட்சி "
 

ரிம்பில் முகிழ்ந்தவர் நீர்கொழும்பூர் அறிமுகம் அவசியமற்றது. இவர் எங்கானப்பட்ட கலை இலக்கிய ங் கதைத்தொகுதியில் இதை கலை டயாளமிட்டு தனது தடங்களைப் நீர் நிறைந்த கொழும்பாம்: ாத மனிதநேய கலை இலக்கியவாதி
துறைகளையும் இவரது மனிதநேய பவித்து ஆராதிக்கிறது. பல்கலை நார். அவை நாவல், சிறுகதை, கவி விமர்சனம் இசை,சினிமா நெறி ாள்சண்டைபோன்ற பலதுறைகளில்
நக்கிய திங்கள் இதழின் பொலிவில்
மல்லிகை,பீரகேசரி இதழ்களில்"
த்தந்தவர். இவரது முதல் கவிதையே யது, சில காலமாக தமிழ் படைப் ந்ததுர். திரும்பவும் வந்திருக்கிறார். இவரது நாவலைப்படித்து பெரிதும் |யவர் மறைந்த தீபம் ஆசிரியர் சிங்கள திரைப்படங்கள் பலவற்றில் 1ல் சண்டைப் பயிற்சியாளராக முத் வரது சமூகப்பிரக்ஞையுள்ள மேடை ம்பிவரவேற்கப்பட்டன.முத்துலிங்கம் 'ತಣಾಭupíäå கையாள்பவர் எாள்று "சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் ஆசிய மையான தேர்ச்சியுண்டு, பல்வேறு தும்தன்னை ஒரு படைப்பிலக்கியவாதி அகமகிழகிறார்.
தில் உருவ உள்ளடக்கச் செழுமை ாழிநடையும் பாத்திர வார்ப்புகளின் ந்து படிப்பவர்களைப் பரவசத்தில் பாது படைப்புத்திறனுக்கு மேலான
கவிஞர் மு. Hi