கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 7

Page 1
DGOTOGO
 

புன்னியாமீன்

Page 2

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு
தொகுதி - 07
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரம் Cሀጢéd0 – 06
-கலாபூஷணம் புன்னியாமீன்
Glsusrufluf"G: வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம்" வெளியீட்டாளர்கள்
(தனியார்) கம்பனி இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி 0094-81-2493746 தொலைநகல் 0094-81-2497246
وتقييمرماه يوم 24 تموينبع نسمه وموموينية حيوية

Page 3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
தொகுதி - 07
ஆசிரியர் : பீ.எம். புன்னியாமீன்
பதிப்பு : 1ம் பதிப்பு - பெப்ரவரி 2007 வெளியீடு : சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. அச்சுப்பதிப்பு : சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, பூரீலங்கா. கணனிப் பதிப்பு: எஸ்.எம். ரமீஸ்தீன் முகப்பட்டை திலீப் குமார் (கண்டி) ISBN: 955-8913-65-0 பக்கங்கள்: 112
விலை : 210/- E 5.00
Illangai Eluththalarkal, Oodahaviyalalarkal, KalainjarkalViparaththirattu.
VO - 07
Subject : Brief History of Eighteen Srilankan Muslim Writers, Journalists and Artists.
Author : Printers & Publishers:
Edition: Language : Type Setting : Cover Designing: ISBN :
Pages :
Price:
P.M. Puniyameen. Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. 1 Edition February 2007
Tamil
S.M. RameeZdeen Dileep Kumar (Kandy) 955-8913-65-0
112
210/- E 5.00
C. P.M. Puniyameen, 2007
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

என்னுரையும்,
பதிப்புரையும்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07 இனை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் 06 ஆக உங்களுக்குச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்நுால் சிந்தனை வட்டத்தின் 24 வது வெளியீடாகும்.
இலங்கை முஸ்லிம்களின் சமூக, அறிவியல், கலாசார, எழுச்சிகளை ஆராய்வதற்கு பத்தொன்பதாம் நுாற்றாண்டினி பின்னரைப் பகுதி சாதகமானதோர் அடிப்படையை வழங்குகின் றது. குறிப்பாக அறிஞர் சித்திலெப்பையின் சிந்தனைகள் இலங்கை முஸ்லிம்களினி எழுச்சிக்கு வித்திட்டதனைக் குறிப்பிடலாம்.
உலகவரலாற்றை நோக்கும் போது ஒவ்வொரு நாகரிக எழுச்சிக்கும், சமூக எழுச்சிக்கும் சிந்தனையாளர்களினி, எழுத்தாளர்களின், கலைஞர்களின் பங்களிப்பும் மூலகாரணிகளுள் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. எனவே புராதன கால வரலாற்று அனுபவங்களுடன் ஒப்பு நோக்கும்போது நவீன காலத்திலும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பினை எக்காரணத்தையிட்டும் குறைவா
மதிப்பீடு செய்துவிட முடியாது.
19ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து இலங்கை
3

Page 4
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட முனைப்பான செயற்பாடுகள் சிந்தனை எழுச்சிகள படிப்படியாக முஸ்லிம்களின் கல்வி, அரசியல், சமூக, பொருளாதார, எழுச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தின.
இக்காலகட்டங்களில் சமூக எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு, அனிறேல் அதையொத்த ஏனைய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயுமிடத்து சுமார் 2800க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களையும், ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஆற்றியுள்ள சுமார் 1250க்கும் மேற்பட்ட முளப்லிம் ஊடகவியலாளர்களையும், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களையும் இனங்காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் துரதிஷ்டமான விடயம் யாதெனில் இவர்கள் பற்றிய விபரங்கள் முறையாகத் திரட்டிப் பாதுகாக்கப் படாமையரினால் இவர்களது பரிமாணங்களை அளவிடமுடியாதுள்ளது. மறுபுறமாக இத்தகையோரினி பங்களிப்புக்கள் பற்றிய குறிப்புகள் நாளைய சந்ததியினருக்குத் தெரியாமலே போய் விடவும் இடமுணிடு.
இலங்கை முஸ்லிம்கள் கலை, இலக்கியத்துறையில் மாத்திரமல்ல, சகலதுறைகளிலும் தேசிய ரீதியாக தமது பங்களிப்பினை வழங்கிய போதிலும் கூட இவர்கள் பற்றிய விபரங்கள் எந்தவிதமான பதிவுகளுக்கும் உட்படாதுள்ளதினால் முஸ்லிம்களின் பொதுப்படையான சேவைகளை மதிப்பீடு செய்ய முடியாதுள்ளது.
அனைவரையும் அணைத்துச்செல்லும் ஆக்க இதழான நவமணி’யினி அனுசரணையுடனி, நாளைய சந்ததியினி இனிறைய சக்தி- சிந்தனைவட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளினி விளைவாக இதுவரை 200 இலங்கை
4

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரங்களை எனினால் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஆவணப்படுத்த முடிந்தது.
-இதனை ஒரு பேறாகவே கருதுகின்றேன்.
இதுவரை இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், விபரத்திரட்டுத் தொடரில் ஏழு தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். இந்த ஏழு தொகுதிகளிலும் மொத்தமாக 200 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைப் பதிவாக்கியுள்ளேனர், நான்காம் தொகுதியில் 25 புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்தைப் பதிவாக்கினேன். மீதமான 175 பதிவுகளும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பதிவாகும்.
இந்த 200 பதிவுகளில் 165 பதிவுகள் (140 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பதிவு + 25 புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பதிவு) நவமணியில் 2003 ஒக்டோபர் முதல் 2007 பெப்ரவரி வரை பிரசுரமானவைகளாகும். 35 பதிவுகள் நவமணியில் பிரசுரமாகவில்லை. காரணம் 5ம், 6ம், 7ம் தொகுதிகளை அவசரமாக வெளியிட நடவடிக்கை எடுத்தமையினால் பத்திரிகையில் பிரசுரமாகி முடியும் வரை காத்திருக்காமல் அவற்றை நுாலுருவாக்கினேன்.
2007 ஏப்ரல் மாதம் தொடக்கம் எட்டாம் தொகுதியில் நவமணியில் பதிவு இலக்கம் 201 முதல் ஆரம்பமாகும். இதுவரை பதிவுக்குட்படாத இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களும் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களும் தமது விபரங்களை எனக்கு அனுப்பிவைத்தால் தொடர்ந்து வரும்
தொகுதிகளில் சேர்த்துக் கொள்ள முடியும்.
5

Page 5
சிந்தனை வட்டத்தினி ஏனைய வெளியீடுகளுக்கு ஆதரவினை நல்கி வரும் நீங்கள் இத்தொகுதியில் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகினிறேனர்.
மிக்கநன்றி.
அன்புடன் உங்கள்
~கலாபூஷணம் புண்ணியாமீண்பணிப்பாளர்
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14-உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
2007.02.04
 

Rodoorn109009/9 (o 1,9334119 urnúcoo@Ioossnoe) (g. 1193?suo umorneo) (z Į933 snútssæ (I
1909mı99cc9f9 (†
[9(9 qIırıņocoh (g1909rmı9909/9 (ç floccorn19909/9 (ç
q1109 offơIŲ9 (#7qigo-IIIqĪ (†
1,93341191Irnĝinoso) (zgெயிiஒ體(£ọ91911qİ (Ç
1,9osmýgstā” (Iqī£đĩ) o (zoặco9Ļ9o (z
fuoco,9m109c09(9 (#7Q9rngrís@ (I$croosīgo (I
qi-Iriņúdos (g.9 ஐeழஒடி ஒருமுதிதா
qq-iliqi (z Qormų,9ńssos@-நதிாகிகுfíos 9) Tış gırnişo șos UT II-ioon
*「__| ņ9o (1@oscoso-------仁99gun9mg哈09@
90711$$úrīsso soos@g9.goo osoɛ ŋusuosinț9æIssos‘ų998 (111911$$đù19
(Úcrođī)ćırı sıfısın?
07

Page 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஏற்கெனவே பதிவானோர்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : பாகம் 1
பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதினர் பதிவு 04 ஐ.ஏ.றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மானி பதிவு 06 எச்.ஸ்லாஹதீெனர் பதிவு 07 எம்.எச்.எம்.அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம்.புஹாரி பதிவு 09 அப்துல் கலுற்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரானர் பதிவு 11 எச்.ஏ.ஸ்கூர் ué5Poy 12 ஏ.எஸ்.இப்றாஹீம் பதிவு 13. எம்.ஐ.எம்.தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம்.கமால் பதிவு 15 ஏ.எச்.எம்.யூசுப் பதிவு 16 நூருல் அயினி பதிவு 17 எம்.ஸி.எம்.இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் ("... a 19 எம்.இஸ்ட் அவற்மத் முனவிவர் பதிவு 20 சித்தி ஸர்தாபி பதிவு 21 ஏ.எம்.எம்.அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீனி பதிவு 23 எனி.எஸ்.ஏ.கையூம் பதிவு 24 எஸ்.எம்.ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம்.நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப்
08- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வானர் பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 எனி.எம். அமீன் பதிவு 35 மளிதா புனினியாமீன் பதிவு 36 கே.எம்.எம்.இக்பால் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : பாகம் 2
பதிவு 37 எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத் பதிவு 41 ஏ.ஏறஹற்மானி பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹைெவலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ.பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரஸ்பீனா புஹார் பதிவு 49 ஐ.எம். மாரூகப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத் பதிவு 51 ஏ.எஸ்.எம்.ரம்ஜான் பதிவு 52 அப்துல் லத்தீப பதிவு 53 எம்.எம்.ஜமால்தீனி பதிவு 54 ஏ. ஐபார் பதிவு 55 முஹம்மது பெளஸ் பதிவு 56 சிபார்தீனி மரிக்கார் பதிவு 57 மஷரொ கஹறுெத்தீனி பதிவு 58 யூ ஸெயின் பதிவு 59 ஏ.எல்.எம். அஸ்வர்
தொகுதி 07
- கலாபூஷணம் புனினியாமீனி 09

Page 7
முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
60 6
62 63 64 65 66 67 68 69 70 7
72 73 74. 75 76 77
எம்.எம்.எஸ். முஹம்மத் முஹம்மட் கலீல் எஸ்.எல்.எம். அபூபக்கர் எம்.யூ. முஹம்மத் பவுரீர் முஹம்மத் இஸ்மாஈல் முஹம்மட் பைரூஸ் எம்.ஐ.எம். முஸ்தபா றபீக் பிர்தெளஸ் புர்கான் பீ இப்திகார் எம்.எஸ்.எஸ்.ஹமீத் அப்துல் மலிக் அப்துல் ஸ்லாம் எம்.எச்.எம். கரீம் எம்.எஸ்.றம்ளினி அப்துல் அசனர் ஏ.எஸ்.எம். நவாஸ் முஹம்மத் ஹஸனி எஸ்.எஸ். பரீட்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
78 79 80 8.
82 83 84 85 86 87 88
: Insp 3 கல்முனை முபாறக் ஏ.எம். நளிம்(டீன் மாத்தளைக் கமால் நூறுல் ஹக் ஜமால்தீன் முஹம்மட் றபீக் முஹம்மத் சுகைப் முஹம்மது மூளர விஜிலி உதுமா லெவ்விை ஆதம்பாவா ஏ.எம்.எம். ஸியாது எம். நவாளப் செளயி
10- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு 89 முகுசீனர் றயீசுத்தீனர்
பதிவு 90 எம்.ஐ.எம். அனிசார்
பதிவு 91 மஸ்ஹதுெ லெவ்வை
பதிவு 92 எம். அனளப்
பதிவு 93 எம்.கே.எம்.முனாஸ்
பதிவு 94 பாத்திமா பீபி
பதிவு 95 ஸர்மிளா ஸெய்யித்
பதிவு 96 பாத்திமா சுபியானி
பதிவு 97 மொஹம்மட் சியாஜ்
பதிவு 98 நிஸாரா பாரூக்
பதிவு 99 பெளசுல் றஹீம் பதிவு 100 ஏ.எல்.எம். புஹாரி பதிவு 101 ஏ.எப்.எம். றியாட் பதிவு 102 யு.எல்.எம். அஸ்மினி பதிவு 103 அப்துஸ்ஸலாம் அஸ்லம் பதிவு 104 எம்.ஏ. அமீனுல்லா பதிவு 105 நயிமுத்தீன் பதிவு 106 எச்.எல். முஹம்மத் பதிவு 107 ஹைெஸனி பதிவு 108 ஹயப்ருன்னிஸ்ா புஹாரி பதிவு 109 எஸ்.எல், லரீப் பதிவு 10 மர்ஹம்ெ அலி உதுமாலெவ்வை பதிவு 1 மர்ஹம்ெ எம்.ஐ.எம். மஷஹர்ெ பதிவு 12 கிண்ணியா நளப்புல்லாஹற் பதிவு 13 திருமதி பரீதா சாகுல் ஹமீட் பதிவு 14 அரபா உம்மா
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : unrabb 1
பதிவு 15. எனி. செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 16. நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 17. த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 18. பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி)
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி -

Page 8
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு
பதிவு
竹9.
120.
12鸠
122, 23.
24.
加25, 26.
127.
28. 129. 30.
3.
132. 33. 134. 35.
136. 37.
38.
39.
வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)
நகுலா சிவநாதன் (ஜெர்மனி) நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்)
வை. சிவராஜா (ஜெர்மனி) சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) சு. சண்முகம் (சணி) (டென்மார்க்) கீத்தா பரமானந்தனி (ஜெர்மனி) அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது)
(ஐக்கிய இராச்சியம்) இராசகருணா (ஈழமுருகதாசனி) (ஜெர்மனி) கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) கொண்ஸ்டண்ரைன் (ஐக்கிய இராச்சியம்) அம்பலவணி புவனேந்திரன் (ஜெர்மனி) பொ. சிறிஜிவகனி (ஜெர்மனி) கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னணிணா)
(டென்மார்க்) பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) ஜெயாநடேசன் (ஜெர்மனி) இ.மகேந்திரன் (முல்லைஅமுதனி) (ஐக்கிய இராச்சியம்) றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
40.
4.
42. 43. 44.
: பாகம் 4 அஷ்ரப் - ஏ - ஸ்மத் எம்.எம்.எம். மஹற்றுரப் கரீம்
அன்பு ஜவஹர்ஷா ஏ.எம். இளப்ஸ்டீனர் எஸ்.எம். அறுரளப்
12 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு 145. பதிவு 146. பதிவு 147. பதிவு 148. பதிவு 149. பதிவு 150. பதிவு 151.
பதிவு 152. பதிவு 153. பதிவு 154. பதிவு 155. பதிவு 156. பதிவு 157.
இலங்கை
எம்.ஆர்.கே. மவ்பியா எம்.யூ.எம். ஜிப்ரி (போர்வை பாயிஸ் ஏ.எல்.எம். ஸ்ம்ெரி (திக்குவல்லை ஸ்ம்ெரி) எம்.எச்.எம். ஹாரித்
அபூதாலிப்
த. மீரால்ெவை (அனலக்தர்) எம்.எம்.எம். கலீல் (கலைவாதிக் கலீல்) முஹம்மது பாறுரக்
யூ.எல். முஸம்மில்
பாயிஸா கைளப் எஸ். மொஹிதீன் அடுமை. (தலவின்னை பூதொர) எம்.பீ. ஹைெசனி பாருக் ஏ.எம்.எம். அத்தாளப்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 6 b
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LT85b 5
பதிவு 158. மர்ஹம்ெ எம்.எம். சாலிஹற்
(புரட்சிக்கமால்) பதிவு 159. மர்ஹம்ெ எனி.எம். ஹனிபா (மாமா) பதிவு 160. மர்ஹம்ெ ஏ.எம். றசீது பதிவு 161. மர்ஹம்ெ ஏ.எல்.எம். பளில்
(நற்பிட்டிமுனை பளில்) பதிவு 162. மர்ஹம்ெ சுலைமாணி புலவர் பதிவு 163. மர்ஹம்ெ ஏ.எம். கனி பதிவு 164. மர்ஹம்ெ ஆமூ. ஷரிபுத்தீனி பதிவு 165. மர்ஹம்ெ எம்.ஏ. முஹம்மது பதிவு 166. மர்ஹம்ெ எம்.ஸி.எம். ஸ்ைெபர் பதிவு 167. மர்ஹம்ெ எம்.எச்.எம். ஷம்ஸ் பதிவு 168. மர்ஹம்ெ பீ.எம்.ஏ. சலாஹதீெனி பதிவு 169. மர்ஹம்ெ வை. அஹற்மத் பதிவு 170. மர்ஹம்ெ ஏ.ஸி. பீர்மொஹம்மட்
: தொகுதி 07 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 13

Page 9
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இத்தொகுதியில் பதிவாவோர்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 7 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : LITES b 6
பதிவு 171 நயீமா சித்தீக் பதிவு 72 ஏ. சித்தி ஜஹானறா பதிவு 173 ஸாஹிரா நாஸிர் பதிவு 174 முகம்மது முர்சித் பதிவு 175 எம். எப். ரிம்ஸா பதிவு 176 எம். எல். லாபீர் பதிவு 177 ஹிபிஷி தெளபீக் பதிவு 178 எனி. எல். ரஷினர் பதிவு 179 தமீம் அணிசார் பதிவு 180 ரஷீத் எம். றாஸிக்
பதிவு 181 ஏ.சி. றாஹறில் (நிந்ததாசனி) பதிவு 182 செய்னர் தம்பி ஸியாம் பதிவு 183. எஸ்.எம். சப்ரி பதிவு 184 எம். ஏ. அமீர் ரிழ்வானி பதிவு 185 ஏ.ஆர்.ஏ. அஸிஸ் பதிவு 186 வை.எல்.எம். றிஸ்வி பதிவு 187 எம்.எச். முஹம்மட் (முஸம்மில்) பதிவு 188 மொஹம்மட் அக்ரம் பதிவு 189 மு.மீ. அமீர்அலி பதிவு 190 எஸ். நஜிமுதீன் பதிவு 191 எண்.பி. ஜூனைத் பதிவு 192 மல்ஹர்தீன் பதிவு 193 றஹற்மான் ஏ. ஜெமீல் பதிவு 194 எம்.எல். இஸ்ஹாக் பதிவு 195 எஸ்.எம்.எம். நஸிறுதீன் பதிவு 196 றிஸ்வியூ முஹம்மத் நபீல் பதிவு 197 எம்.எஸ்.எம். ஸல்ஸ்பீல் பதிவு 198 முகமட் இமாம் ஹன்பல் பதிவு 199 அ.கா.மு.நிஸ்வினர் பதிவு 200 எம் எம். கலீல் (கல்முனைக் கலீல்)
14– இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி
விபரத்திரட்டு- தொகுதி 7
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியாலளர்கள், கலைவூர்கள் விபரம் Uib 06
கலாபூஷணம் புன்னியாமீன்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 5

Page 10
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆக்க இதழ்
రి
யின் அனுசரணையுடன்
நாளைய சந்ததியின் இண்நைய சக்தி சிந்தனை வட்டம்
மேற்கொண்ட ஆய்வீண் விளைவே உங்கள் கரங்களில் தவழும்
இலங்கை 69ppsay (Sasas, ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
7t பாகம்
16- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
நயீமா சித்தீக் எழுத்துத்துறை
ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில், ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நயீமா சித்தீக் அவர்கள் இலங்கையில் முன்னணி முஸ்லிம் பெண் சிறுகதை எழுத்தாளராவார்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டில் பஷிர் மரைக்கார், தாஜ்பீவி தம்பதியினரின் ஏகபுதல்வியாக இம்மண்ணில் ஜனனித்த இவர, பண்டாரவளை சாஹிராக்கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்தியகல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். மேலும் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
1974ம் ஆண்டு கண்டி கெலிஒயாவைச் சேர்ந்த முஹம்மத் சித்தீக் அவர்களைத் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட இவருக்கு பாத்திமா சியாமா, பாத்திமா சஜிமா, பாத்திமா ஸஹற்ரானா ஆகிய மூன்று அன்புச் செல்வங்கள் உளர். 1970 ஆண்டில் ஆசிரியர் நியமனம் பெற்று நாட்டின் பல பாகங்களிலும் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ளார்.
இவரின் குடும்பத்தில், இவரின் தாயார், உம்மம்மா வாசிப்புத்
: தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி 7

Page 11
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 திறன் மிக்கவர்கள். இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் மற்றும் நூல்களைத் தேடிப்படித்தும் சேகரித்தும் வருபவர்கள். இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இவருக்கு இலக்கிய ஆர்வமும், எழுத்தார்வமும் இயல்பாகவே உருவாக்கம் பெற்றது. 1960 களில் தான் 7" வகுப்பிற் கற்கும்போது ‘கல்வி எனும் தலைப்பில் எழுதிய முதல் ஆக்கத்தை 'தினகரன் பிரசுரித்தது. இதையடுத்து இத்துறையில் இவரின் ஆர்வம் அதிகரிக்கலாயிற்று. தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற ஆசைமேலிட்டினால் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார். இன்றுவரை அதே முனைப்புடன் எழுதி வருகிறார்.
இவர் நான்கு நாவல்களையும், 750 க்கும் மேற்பட்ட சிறுகதை கள், கட்டுரைகள், கவிதைகளையும் எழுதி இலங்கையிலேயே முதல் தர முஸ்லிம் பெண் எழுத்தாளராக திகழ்கின்றார் என்றால் மிகையா காது. இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு ‘நயீமா ஏ. பஷிர் என்ற பெயரில் எழுதிவந்து இல்லற வாழ்க்கையில் இணைந்த பின்பு ‘நயீமா சித்தீக் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படியா யினும் ‘நயீமா’ எனும் நாமம் ஈழத்து இலக்கிய வானில் அனைவ ருக்கும் தெரிந்ததே.
திருமணத்தின் பின்பு தனது எழுத்தார்வத்திற்கு தனது கணவர் பூரண ஒத்துழைப்பினையும், ஒத்தாசைகளையும் வழங்கி வருவதனா லேயே தன்னால் இன்றுவரை தொடர்ச்சியாக எழுத முடிகிறது என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்ளும் இவர் இதுவரை எழுதிவெளியீட்டுள்ள நூல்களின் விபரம் வருமாறு:
1. வாழ்க்கைப் பயணம் (1975): ஒரு முழு நீள சமூக
நாவலான இது வீரகேசரி பிரசுர வெளியீடாகும். இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரி னால் எழுதி வெளியிடப்பட்ட முதலாவது நாவலும்
இதுவே. • 梵3– இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
2. வாழ்க்கைச் சுவடுகள (1989); சிறுகதைத் தொகுதி
யான இது தமிழ் மன்ற வெளியீடாகும்.
3. வாழ்க்கை வண்ணங்கள (2005): சிறுகதைத் தொகு
தியான இது சிந்தனை வட்டத்தின் வெளியீடாகும்.
இலக்கியத்திற்குப் புறம்பாக கல்வித்துறை சார்ந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
1. ஆயிரம் வினாக்களும், விடைகளும்
இது (க.பொ.த உயர்தரம்) மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வழிகாட்டியாகும்.
2. சீறாப்புராணம் நபி அவதாரப் படலம்
(க.பொ.த உயர்தரம்) மாணவர்களுக்கானது.
தனது பதினேழாவது வயதிலிருந்தே மேடைப் பேச்சுகளிலும் மிளிரத் தொடங்கிய இவர் இன்று புகழ்பெற்று விளங்கும் தலைசிறந்த பெண் பேச்சாளர்களில் ஒருவராவார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மீலாத் விழாக்கள், கலைவிழாக்கள், இலக் கிய விழாக்கள் என்பவற்றில் உரையாற்றி அனேகரின் பாராட்டுக் களைப் பெற்றுள்ளார்.
1960 களில் இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அதே நேரம் பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி யுள்ளார். அத்துடன் எண்ணற்ற கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார். தனது இளம் பராயத்தில் ஏ.அஸிஸ் அவர்களின் அகில இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவில் தலைவியாக தொழிற்பட்டதுடன், இலங்கையின் தோட்டப் பிரதேசத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் சேமநலன்களில் அக்கறை மிக்கவரா கவும் காணப்பட்டார்.அத்துடன் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராகவும் கடமை புரிந்துள்ளார்.
தொகுதி 07 - கலாபூஷணம் புன்னியாமீனி - 9

Page 12
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இவரின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டிருந்ததை அவதானிக்கலாம். அண்மைக் காலமாக தனது சமூகத்தில் ஊறிப்போயுள்ள மூடநம்பிக்கைகளையும், போலிச்சடங்கு களையும் சாடும் வகையில் சமூக எழுச்சிமிகு எழுத்தாளராக பரிணமிக்கின்றார். தனது எழுத்துலக ஈடுபாட்டிற்கு ஆரம்ப வித்துக் களை இட்ட தனது அன்புப் பெற்றோர், உம்மம்மா, இவர்களுடன் ஆசிரியப் பெருந்தகை சாரங்கபாணி மற்றும் தனது அன்புக் கணவர் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் எழுத்துப் பணியை கெளரவித்து பூரீலங்கா அரசு 2005 ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கியது. அத்துடன் 1991 ஆண்டு முஸ்லிம் சமயக் கலாசாரத்திணைக்களம் நஜ்முல் அதீப் (இலக்கியத்தாரகை) பட்டம் வழங்கியதுடன், அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு, அரசுசார்பற்ற அமைப்புக்கள் பொன்னாடை, பொற்கிழி விருது வழங்கி கெளரவித்துள்ளது. நயீமா சித்தீக் அவர்களின் இப்பணிகளை மெச்சி சிந்தனை வட்டம் 2004 இல் 'சிறுகதை செம்மணி’ எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது.
20- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஏ.சித்தி ஜஹானறா
எழுத்துத்துறை
வடமத்திய மாகாணம், அநுராதபுர மாவட்டம், கெக்கிராவை தேர்தல் தொகுதியில் *கெக்கிராவை' கிராம சேவகர் பிரிவில் வசித்து வரும் அபூரஹஉமான் சித்தி ஜஹானறா அவர்கள் ‘கெக்கிறாவ ஸஹானா’ எனும் பெயரில் பிரபல்யம் பெற்றுள்ள ஈழத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீ.ஏ.ஆர். அபூரஹ"மான், எம்.ஏ.ஸி. கைருன் னிசா தம்பதியினரின் புதல்வியாகப் பிறந்த இவர் அ / கெகிறாவ முஸ்லிம் மகாவித்தியாலயம், க / கம்பளை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர் தற்போது அ / கெகிறாவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின் றார். இவரின் அன்புக் கணவர் ஜே. சுஹைபுதீன் மரதண்கடவலையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். சுஹைபுதீன், ஜஹானறா தம்பதியினருக்கு முஹமட் துல்கர்னைன் எனும் பெயரில் மகனும், லகீனத், ஷப்னம் எனும் பெயரில் (இரட்டையர்) இரண்டு மகள்களும் உள்ளனர். w
1982 ஆண்டில் தனது பள்ளிப் பருவத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபட ஆரம்பித்த இவரின் கன்னி ஆக்கம்
தொகுதி 07 - கலாபூஷணம் புன்னியாமீனி 2

Page 13
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
‘ஊரடங்கு’ எனும் தலைப்பில் கவிதையாக "மல்லிகையில் பிரசுரமானது.அதிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் மல்லிகை, தினகரன், தினக்குரல், வீரகேசரி, அல்ஹஸனாத், எழுச்சிக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்சேவை 1, தமிழ்சேவை II ஆகியவற்றில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
கெகிறாவை ஸஹானா இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. ஒரு தேவதைக் கனவு:
சிறுகதைத் தொகுதி, இது மல்லிகைபந்தல் வெளியீடு முதற்பதிப்பு : பெப்ரவரி 1997, விலை ரூபா 50/- (இந்தியா)
2. இன்றைய வண்ணத்துப்பூச்சிகள்:
சிறுகதைத் தொகுதி, சென்னை மாங்குயில் பதிப்பக வெளியீடு முதற்பதிப்பு : டிசம்பர் 2004, விலை ரூபா 50/- (இந்தியா)
இவரின் முகவரி:
Mrs. A.S. Jahanara 32/21, Sekkupitiya South Sekkupitiya Kekirawa
22- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஸாஹிரா நாஸிர் எழுத்துத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், செங்கடகலை தேர்தல் தொகுதியில் கண்டிசுதுஹம்பொல கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி ஸாஹிரா நாஸிர் அவர்கள் சுமார் நான்கு தசாப்த காலங்களாக தொடர்ச்சி யாக எழுதிவரும் முஸ்லிம் பெண் சிரேஷ்ட/** எழுத்தாளர்களுள் ஒருவராவார். ്
1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் * திகதி கண்டியைச் சேர்ந்த ஹஸன்பரீட், ரஹற்மதும்மா தம்பதியினரின் புதல்வியாகப் பிறந்த இவர், கண்டி /உஸ்மானியா மகாவித்தியால யத்தின் (தற்போது சித்திலெப்பை மகாவித்தியாலயம்) பழைய மாணவியாவார்.
1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 07ம் திகதி இலங்கை வானொலி யில் ஒலிபரப்பான ‘புத்தாண்டே வருக!' எனும் புதுவருட வாழ்த்துக் கவிதையுடன் இவரின் இலக்கியப் பயணம் ஆரம்பமாகியது. 1968ம் ஆண்டில் ஒலிபரப்பான அக்கன்னிக் கவிதையின் சில வரிகள் 6)(5ιΟΠΟΙ:
'..... நாட்டு மக்கள் இதயங்களில் அன்பு உருவாகட்டும்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 23

Page 14
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
சாதி நிறபேதம் ஒழிந்து.
சமரசம் வளரட்டும்
சமர் நீங்கி
சாந்தி ஓங்கட்டும்.
. நாட்டுத் தலைவர்கள்
இதயங்களில் பகைமை ஒழிந்து
நல்லெண்ணம் உதயமாகட்டும்.”
இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகளையும்,
கட்டுரைகளையும், கதைகளையும் இவர் ஆர்ப்பாட்டமில்லாது எழுதி
வருகின்றார்.
திருமணத்துக்கு முன்பு சித்தி ஸாஹிரா, சித்தி ஸாஹிரா ஹஸன் பரீட் ஆகிய பெயர்களில் எழுதிவந்த இவர் திருமணத்தின் பின்பு (1975) ஸாஹிரா நாஸிர்’ எனும் பெயரில் புகழ்பெற்றுள்ளார்.
ஸாஹிரா நாஸிர் அவர்களுடைய ஆக்கங்கள் புதுமைக்குரல், தினகரன், தினகரன் வாரமஞ்சரி, மித்திரன், நவமணி, பெண், சித்திரா ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளளன. இவரின் அதிக ஆக்கங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ‘பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, முஸ்லிம் நிகழ்ச்சி, மாதர் மஜ்லிஸ், கவிதைக் கலசம், வாலிபர் வட்டம், மலையக சேவை ஆகியவற்றில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியான ஒடும் நதியைப் பாடும் மலர்கள்’ எனும் கவிதைத் தொகுதியில் இவரால் எழுதப்பட்ட *வெண் புறாவாகிய தலைவர்’ எனும் கவிதை இடம் பெற்றுள்ளது. தலைவர் அவர்கள் இக்கவிதையை பாராட்டிப் பரிசு வழங்கி அக்கவிதையில் தனது கையொப்பத்தையும் இட்டுத் தந்ததை தன்வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகக் கருதுகின்றார்.
24- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
தனது இலக்கியப் பயணம் பற்றி ஸாஹிரா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ". சிறு பராயத்தில் நூர் மஸாலா, முகிய்யதீன் மாலை, றஸ?ல் மாலை, ஞானப்பாடல் போன்றவற்றை எனது தந்தை பாடிக்காட்டுவார். இவைகளை வைத்து இஸ்லாமிய கீதங்கள் பாடுங்கள் என்பார். புரியாத வயது தந்தை காலமாகிவிட்டார். இருப்பினும் அவரால் விதைக்கப்பட்ட கலை, இலக்கிய உணர்வு என் மனதில் விருட்சமானது. பின்னர் அப்துற் றஹீம், மு.வரதராசன், லியோடாஸ்டாய் ஆகிய எழுத்தாளர்களின் புத்தகங்களை விரும்பிப் படிக்கலானேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் ஏற்பட்டது. இருப்பினும் பயம். தாயாரின் ஊக்கமும், ஆசிரியர்களின் ஊக்கமும் அதிகமாக இருந்தது. எழுதத் தொடங்கினேன். ஆனால், தொடர்ச்சியாக இல்லை. இடைக்கிடையே எழுதி வருகின்றேன்.” என்று கூறும் இவர் அண்மைக்காலமாகத் தனது எழுத்துலக ஆர்வத்துக்குக் காரணகர்த்தாக்களாக இருந்து வரும் நவமணி பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களையும், கலாபூஷணம் எஸ்.எம்.ஏ ஹஸன் அவர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
இவரின் இலக்கிய சேவையை கெளரவித்து 2005 ஆண்டில் 'இரத்தினதிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் வாழ்க்கைத் துணை முஹம்மது நாஸிர் அவர்கள் ஒரு வர்த்தகர். இத்தம்பதியின ருக்கு முஹம்மது அலி ஸன்பர், முஹம்மது ஸபீக், உஸ்மான் அருஸா, பாத்திமா பெரோஸா ஆகிய நான்கு அன்புச் செல்வங்க ளுளர.
இவரின் முகவரி:
Mrs. Zahira Naazir N.H.S U/15 Vihara Rd. Suduhumpola
Kandy
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 25

Page 15
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
முகம்மது முர்சித் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதியில் | 206D, வாழைச்சேனை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த செய்யது மகுமூது முகம்மது | முர்சித் அவர்கள் வாழைச்சேனை முர்சித்,| முபஸ்ஸிரா, எம். முர்சித், மிஸ்ருநா, வாழை ; அப்ரா ஆகிய பெயர்களில் சிறுகதைகள்,| கட்டுரைகள், கவிதைகள் ஆகிய வற்றை எழுதி| வரும் ஒரு வளர்ந்துவரும் எழுத்தாளராவார்.
1974 ஆண்டு செப்டம்பர் மாதம் 01 திகதி செய்யது மகுமூது
தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முர்சித் மட் /ஓட்டமாவடி மத்திய
கல்லூரி, மட் /வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முர்சித் பகுதிநேரமாக இலக்கிய, ஊடகத்துறைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
இவரின் கன்னி ஆக்கம் 1994 ஆகஸ்ட் 21 திகதி மித்திரனில் இடம்பெற்றது. ‘காதலும் கலக்கமும்’ எனும் இக்கன்னியாக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், பேட்டி நிகழ்ச்சிகள், செய்திக் கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் மித்திரன், வீரகேசரி, தினகரன்,
26- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
நவமணி, ஜனனி, ஓடை, பசுமை, தொனி, சூழல்சுடர், இடி ஆகிய சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
1997ம் ஆண்டு முதல் ‘நவமணி தேசிய பத்திரிகையின் ஓட்டமாவடி செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார். ஊடகத்துறை யில் "டிப்ளோமா' பட்டம் பெற்றுள்ள இவர் சமூக, பிரதேச, அரசியல் ரீதியான செய்திகளை ‘நவமணி யில் அடிக்கடி எழுதி வருகின்றார். 2005-03-01 திகதி முதல் புனர்வாழ்வளிப்பு, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சரினதும், தற்போதைய அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினதும் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றி வரும் இவர் சுடர்ஒளி, தினமணி, வாரஉரைகல், வைரம் போன்ற பத்திரிகைகளிலும் வாழைச்சேனை நிருபராகவும் பணியாற்றுகின்றார்.
நூல் விமர்சனங்கள், சிரேஷ்ட எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றை எழுதிவரும் முர்சித் தனது இலக்கிய, ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாகவும், வழிகாட்டிகள்ாகவும் இருந்த ஏ.ஜி.எம். சதக்கா, வாழைமயில், வாழைச்சேனை வஹாப், ஜிவகவி, சூரியகுமாரி, மித்திரன் ஆசிரியர் குழு - மற்றும் நண்பர்களை அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
பசுமை கலை இலக்கிய வட்டத்தின் தலைவராக பணியாற்றி வரும் இவரின் முகவரி :
S.M.M. Murshid 285 B, Dharull Ana. Hairath Road Valichchenai.- 5
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி 27

Page 16
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.எப். ரிம்ஸா எழுத்துத்துறை
தென் மாகாணம், மாத்தறை மாவட்டம்,:தில் ே வெலிகம தேர்தல் தொகுதியில் 385A, புதியதெரு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ‘எம். பாத்திமா ரிம்ஸா’ அவர்கள் வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளராவார். :
1978ம் ஆண்டு ஒப்ரல் மாதம் 20ம் திகதி பிறந்த ‘ரிம்ஸா’ வரகாப்பொளை பாபுல் ஹஸன் மத்திய மகாவித்தியாலயம், வெலிகம அறபா -
தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியாவார். *கணக் கீடு தொடர்பாக இவர் MIAB (U.K) Mart (S.L) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது தனியார் கம்பனியொன்றில் உதவிக் கணக்கா ளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
1998 ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ள ‘ரிம்ஸா’வின் கன்னி ஆக்கம் ‘சமாதானமே வா’ எனும் தலைப்பில் சூரியன் FM இல் இடம்பெற்றது. அன்றிலிருந்து (2006 நவம்பர் வரை) 120 கவிதைகளையும், 16 கட்டுரைகளையும், 20 துணுக்குக ளையும் எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, ரோஜா, தினமுரசு, மித்திரன், ஜனனி, தூது, அல்-ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் சக்தி FM, சூரியன் FM, இலங்கை வானொலி ஆகியவற்றி
28- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 லும் ஒலிபரப்பாகியுள்ளன. 2004-2005 இல் சுமார் ஒன்றரை வருட காலம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ‘மாதர் மஜ்லிஸ்’ நிகழ்ச்சியில் குரல் கொடுத்தும் வந்துள்ளார். வெலிகம ரிம்ஸா, வெலிகம எம்.எப். ரிம்ஸா, வெலிகம பாத்திமா ஆர். முஹம்மத் ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர் மிலேனியம் கல்வி ஸ்தாபனத் தில் மகளிர் ‘தொடர்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
க.பொ.த சாதாரண தர புதிய பாடத்திட்ட வணிகக் கல்வியும் கணக்கீடும் மாணவர்களுக்கான ‘கணக்கிணக்கக் கூற்று' என்ற தலைப்பில் கணக்கீட்டு மாணவர்களுக்குப் பயன்படும் நூலொன்றை 2004இல் வெளியிட்டார். ‘சுஹா' பப்ளிகேஷனின் 7வது வெளியீடாக வெளிவந்த இந்நூலின் ISBN இலக்கம்; 955-8409-09-X
வெகுவிரைவில் ஒரு கவிதைத் தொகுதியினையும் கணக்கீடு தொடர்பான மற்றுமொரு நூலினையும் வெளியிட நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ரிம்ஸா எழுத்துலகில் இளையவராகக் காணப்பட்ட போதிலும் கூட இவரின் எழுத்துக்கள் ஆழமானவை. ஆய்வு அடிப் படையில் இவரால் எழுதப்பட்ட “சிறந்த நூல்களை வாசித்தால் முன்னேற வழி கிடைக்கும்” எனும் தலைப்பில் 2004.09.29ம் திகதி நவமணியில் பிரசுரமான கட்டுரையின் சில பந்திகளை எடுத்துக் காட்டுவது இவரின் எழுத்தின் கனதியை அழவிட வாய்ப்பாக அமை யும் எனக் கருதுகின்றேன்.
“...இன்று எமது சமுதாயத்தவர்களிடம் மிகவும் அருகி வருகின்ற ஒரு பழக்கம் வாசிப்புப் பழக்கமே. அவர்கள் நல்ல நூல்களை வாசிக்கிறார்கள் இல்லை. வாசிப்பதனால் கூட ஒரு மனிதன் பூரணமடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. சிறந்த நூல்கள், சிந்தனை நிரம்பிய பீரங்கிகள். எனவே எமது சமுதாயத்தவர்கள் சிறந்த நூல்களை நிறைய வாசிக்கக் கூடியவர்களாக மாற வேண்டியது கட்டாயமாகின்றது.
“.புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை Michael H. Hart g60T66) 6Tupg,0U cl The Hundred - 100 Gui 6T60i) நூலில் எம பெருமானார் (ஸல்) முஹம்மத் அவர்களுக்கே தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 29

Page 17
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞ்ர்கள் விபரம் - பாகம் 6
முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் நோக்கம் என்ன? வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப் பெரும் விளைவை ஏற்படுத் திய 100 பேர் யார் அவரவர்கள் எத்தகைய முக்கியத்துவத்தின் அடிப்ப டையில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும் மற்ற மனிதர்களின் அன்றாட வாழ்விலும் ஏற்படுத்திய பாதிப்பினர் மொத்த அளவினைக் கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கின்றது.
*.இவ்வாறான சிறந்த நூல்களை நமது அறிவை மேலும் மேலும் விருத்தி செய்து கொள்ள ஏன் நாம் வாசிக்கக் கூடாது? நல்ல கருத்துக்களை எந்த சமுதாயத்தவர்களது நூல்கள் சொன்னா லும் நாம் அக்கருத்துக்களை உள்வாங்குவதில் தப்பில்லை. இனினும் சில நூல்களை உதாரணத்துக்காக முன்வைக்கின்றேன். அறிஞர் அப்துர் ரஹீமின் எண்ணமே வாழ்வு, வெற்றி நிச்சயம், வாழ்வியலும், விஞ்ஞா னமும், சுவாமி விவேகானந்தரின் தாயகமே கேள், கவியரசு கணிணதா சனின் அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற நூல்களில் உள்ள நல்ல கருத்துக்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
*.இப்போது சியோனிசத்தின் சூழ்ச்சிகளால் உலகளாவிய ரீதியில் இஸ்லாத்துக்கெதிரான பல நூல்கள் உருவாகிக் கொண்டிருக் 460io)60T. p 600607 cosé, Not Without my daughter, The unseen face of islam, Ismavel my Brother, Allahu Akbar (@6uoj606(961) Gjudoto GJ0)6 ளையும் குறிப்பிடலாம். இப்படிப் பல நூல்கள் என்ன சொல்கிறது? இஸ்லாம் பெண்ணுரிமையைப் பற்றி சொல்லும் போது, இஸ்லாம் பெணிகளை நசுக்குகின்றது எனிறு குறிப்பிடுகின்றது. மேலும் அல்லாஹ9 அக்பரில் ஹபொல் என்ற தெய்வத்தை இஸ்லாமியர்கள் கபளிகரம் செய்து மக்காவை அவர்கள் அபகரித்துக் கொண்டனர். அத்துடன் கஃபாவினுள் புத்தரின் பாதச் சுவடு பொறிக்கப்பட்டுள்ளது. அதனையே சிரம் வணங்குகின்றார்கள் என்றும் அதில் எழுதப்பட் டுள்ளது.
“.இன்று இப்படி பல நூல்கள் உருவாகி ஒரு பிரசார சிலு வையை நடாத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்படியான
30- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
நூல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் நமது சமுதாயம் என்ன செய்து கொண்டிருக்கின்றது? தூங்கிக் கொண்டிருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை. தூங்கிக் கொண்டிருந்தால் கூட பரவா யில்லை. தட்டியெழுப்பி விழிக்கச் செய்துவிடலாம். ஆனால் நமது சமுதாயம் என்ன செய்து கொண்டிருக்கின்றது? அற்ப விடயங்க ளுக்காக பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் எனின என்று சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இனியேனும் காலதாமத மில்லை. எனது சமூகம் நன்கு சிந்தித்து, செயல்பட்டு, ஒன்றிணைந் தால் வெற்றி கொடியை எட்டிப் பிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை கருத்திற் கொள்வோம்.”
தன்னுடைய இலக்கியத் துறை, பத்திரிகைத் துறை, கலைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனது தாயார் மர்ஹஉமா எம்.ரீ. பாத்திமா லரீபா, மாமனார் மர்ஹஉம் திக்குவல்லை ஹம்ஸா ஆகியோரையும தற்போது ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், உதவி ஒத்தா சைகளையும் புரிந்துவரும் திக்குவல்லை ஸப்வான், எஸ்.எச்.
மெளலானா, புரவலர் ஹாஷிம் உமர், ஓட்டமாவடி அறபாத், கலாபூஷணம் புன்னியாமீன், நவமணி பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். அஸ்ஹர், தினகரன் ரசீத் எம். ரியாழ் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார். ‘சரித்தி ரத்தில் வளர வேண்டும் என்று ஆசைப் படவில்லை. ஆனால் சரித்திரத்தின் விளிம்பிலாவது வளர வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன். அந்த எண்ணத் தின் பிரதிபலிப்பே இந்த எழுத்துலக பிரவேசம்..” என்று அடக்கமாகக் கூறும் இவரின் முகவரி:
Miss. Rimza Mohamed 283, New Street
Welligama.
%بہ
--་་ གླ་སྐ..”
ਖੁ | “}}”සභුෂුද්‍රිඝ
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி $1

Page 18
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.எல். லாபீர் எழுத்துத்துறை, கலைத்துறை
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் அமைந்தி ருந்த ‘சோனகர்’ தெருவினைப் பிறப்பிடமாகக் கொண்ட மீராலெவ்வை லாபீர் அவர்கள் சுமார் முப்பத்தைந்து வருட காலங்களாக எழுத்துத் துறையிலும், கலைத்துறையிலும் பங்களிப்பு வழங்கிவரும் ஒருவராவார்.
1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ம் திகதி \ it யாழ்ப்பாணம், சோனகர் தெருவில் ஹாஜி மீராலெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் புதல்வராக லாபீர் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் உளர். (மீராலெவ்வை தொழில் ரீதியாக பிரபல்யம் பெற்ற ஒரு வியாபாரி. யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருந்த ‘பிளவ்ஸ் ஹோட்டலின் உரிமை யாளர் அவர்.)
லாபீர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் “மஸ்ர உத்தீன் வித்தியாலயத்தில் கற்றார். பின்பு யாழ்ப்பாணம் இராமகி ருஷ்ணமிஷன் வைத்தீஸ்வராக் கல்லூரியில் க.பொ.த. உயர் தரக் கல்வி வரையிலும் ‘சுண்டிக்குளி பொலிடெக்னிக்கில் தட்டச்சு, சுருக்கெழுத்துக் கல்வியையும், யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி யில் உயர் வணிகக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்.
32- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 (இச்சந்தர்ப்பத்தில் தனக்குக் கல்வியூட்டிய கல்லூரி அதிபர் அமரர் திரு அம்பிகைபாகன் அவர்களையும், தமிழ்மொழி கற்றுத் தந்த வித்துவான் கணகசபை, வைத்தியலிங்கம் ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்கின்றார்.)
V கல்வியை முடித்துக் கொண்ட பின்பு (1990 ஆண்டில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை) தனது தந்தையாரின் ஹோட்டல், ஐஸ்கிறீம் உற்பத்திசாலை, மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்தல் போன்ற தொழில்களைப் பராமரித்து வந்தார். 1990 இல் தனது அனைத்துச் சொத்துக்களையும் இழந்த நிலையில் ‘அகதி’ என்ற முத்திரையுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இவர் பல்வேறுபட்ட சிரமங்களுக்கும், துயரங்க ளுக்கும் மத்தியில் தற்போது ‘மாவனெல்லையில் தனது குடும்பத்தி னருடன் வசித்து வருகின்றார். இவரது அன்பு மனைவியின் பெயர் சம்சுன்னிசா, பிள்ளைகள் ரவ்சானா, சன்ஹர், ராசிதா.
லாபீரின் இலக்கிய ஈடுபாடுகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கால கட்டங்களில் மிகவும் முனைப்புடன் காணப்பட்டன. 1972ம் ஆண்டில் தனது நண்பன் எஸ். பஞ்சலிங்கம் என்பவருடன் இணைந்து 'ஒளி' எனும் மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். இச்சஞ்சிகையில் மீலாத் மலர், ரம்ஸான் மலர், தீபாவளி மலர், கிறிஸ்மஸ் மலர் ஆகிய பல்வேறு மலர்கள் வெளியிடப்பட்டன. பிரதேச ரீதியாக வெளியிடப்பட்ட 'நல்லூர் சிறப்பு மலர்' அனைவரினதும் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றுள்ளது. 1972 இல் 'ஒளி' சஞ்சிகையில் ‘ஈழத்து சினிமா செய்திகள்’ எனும் ஆக்கமே இவரின் கன்னி ஆக்கமாகும். இதைத் தொடர்ந்து எம்.எல்.லாபிர், வாசன், மீரான், மீலார் ஆகிய பல பெயர்களில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் ஒளி (சஞ்சிகை), தினகரன், ஈழநாடு, பாமிஸ், நவமணி ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 33

Page 19
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
1990 இலிருந்து இன்றுவரை இவரின் எழுத்துக்களில் யாழ்ப் பாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் ஏக்கங்களையும், பரிதாபங்களையும், தவிப்புக்களையும் காண முடிகின்றது. உதாரணத் துக்காக நவமணியில் இடம்பெற்ற லாபீரின் கவிதையொன்றினை அவதானிக்கலாம்.
அரண்மனை 'தவறு நடந்து விட்டது! ஐயோ! மன்னித்து விடுங்கள்! மறந்து விடுங்கள்
கூண்டுக்கிளியாய் வாழ்வோம் வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம்
‘ஐயா மன்னிக்கிறோம் - ஆனால் மறக்க முடியவில்லையே!
இராமருக்கு வனவாசம் ஆண்டுகள் பதின்நான்கு கழிய அரண்மனை வாழ்வு - சுக வாசம்!
எமக்கோ ஆண்டுகள் பதினாறு முடிந்ததும் மிஞ்சியது நரக வாழ்வு எமது இல்லம் எல்லாம் கயவரின் கைபட்டு இடிந்ததும் உடைந்தும் நொறுங்கியும் கோரமான காட்சிதான் யுத்தமும் இல்லாமல் சத்தமும் இல்லாமல் , நடந்து முடிந்த காட்சிதான்! எப்போது எமது மனை, அரண்மனையாவது? யார் முன் வருவார்? தொண்னுறுக்கு முன் இருந்ததைப் போன்றி சுபீட்சத்தைக் காட்ட!
நவமணி 29102006
34- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
கலைத்துறையில் இவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. லாபிர் பல நாடகங்கள், கலைநிகழ்ச்சிகளின் அமைப்பாளராக செயற் பட்டுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் (அமரர்) டீன்குமார் பிரதான பாத்திரமேற்று நடித்த ‘ஒரு மனிதன் இரு உலகம்' என்னும் நாடகத்தின் பிரதான அமைப்பாளர் இவரே. அதேபோல பிரபல சிங்களப் பாடகி சுஜாதா அந்தநாயக்கா, கலாவதி சின்னச்சாமி ஆகியோர் முதன் முதலாக யாழ்ப்பாணம் வந்தபோது ஈழத்து பாலசுப்பரமணியம் என அழைக்கப்பட்ட எம்.ஏ.எம்.பளில் அவர்களுடன் யாழ். திறந்த வெளி அரங்கில் பாடிய கலை நிகழ்ச் சியைத் தயாரித்து வழங்கியதுடன் கே.எஸ். பாலசந்திரனின் "அண்ணே ரைட் என்ற தனிநபர் நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கி யுள்ளார்.
மேலும் கலைச் செல்வன், டீன்குமார், கே.ஏ. ஜவாஹர் அந்தனிஜிவா, பேராதனை ஏ. ஜூனைதீன், ஏ. ரகுநாதன், செல்லையா, சிவா, அருமைநாயகம், பிரான்ஸிஸ் போன்ற கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததுடன், இவர்களின் பல்வேறு பட்ட கலைநிகழ்ச்சிகளின் போது உதவியாகவும் கடமையாற்றியுள் ளார.
கலை, இலக்கிய ஈடுபாட்டினைப் போலவே பொதுச் சேவைக ளிலும் அதிக ஈடுபாடுமிக்கவராக லாபீர் காணப்பட்டார். யாழ். முஸ்லிம் கலாசார மஜ்லிஸ் எனும் அமைப்பினுடான பல்வேறுபட்ட உதவிகளை வசதி குறைந்த மக்களுக்கு செய்துள்ள இவர் யாழ். முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவிய குறையைத் தீர்க்கு முகமாக "பாமிஸ் இயக்கத்தின் உதவியுடன் ஜனாஸா நலன்புரி நிலையமொன்றினைத் திறந்து வைப்பதிலும் கணிசமான பங்களிப் பினை வழங்கியுள்ளார். அதேபோல யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி முஹிதீன் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபையிலும், பரிபாலன சபைத் தலைவராகவும் நீண்ட காலங்கள் கடமையாற்றியுள்ளார்.
‘பாமிஸ் இயக்க வெளியீடான "பாமிஸ் பத்திரிகைக்கு யாழ். பிரதேசத்திலிருந்து செய்திகளையும், விளம்பரங்களையும் பெற்றுக் கொடுத்து வந்ததுடன், யாழ். பிரதேசத்தில் பத்திரிகை விநியோகத் தையும் முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். இதனால் இவர் பல சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 35

Page 20
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
↑ 7- Ꭰé • 1 Ꮥ8Ꮥ
MHURASOLE - REGISTERED AS A NEWSPAPER
சளிக்கிழமை !
தேசிய தமிழ்த்திலா
ஈ. என் டி. எஸ். எவ
குண்டுவெடிப்பு
சம்பவத்திற்கு
உரிமை கோரியுள்ளது
ஐந்து சந்தியிலுள்ள பிள வுஸ் கடை மீ தா ன குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட ஈ. :ேன். டி. எல். எவ். பொறுப் பா ளர் உரிமை கோரி அ , க்கை ஒன்றை விடுத்துள்ள.. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுன்னதாவது-முஸ்லிம்இயக் கம் ஒன்றின் 'பத்திரிகையில் வெளியான செய்தியில், சம் மாந்துறையில் தட்ந்த இன மோதலுக்கும் எ ம க் கும் தொடர்புடைய தாகவும், அதே நேரத்தில் எம்மால் செய் யப்படாததை எழுதி தமிழ் பேசும் மக்களிடையே வதந்தி பரப்பியதற்காகவும் மேற்படி, பத்திரிகைக்கும் ஐந்து சந்தியில் உள்ள பிளவுஸ் கடை உரிமை யாளருக்கும் தொடர்புடைய காரணத்திஞல் அதைப்பற்றி தீர விசாரனே செய்ய கடை உரிமையாளருக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். வராத பட்சத்தில் எம்மால் கடுமை யான அறிவித்தலும் கொடுத் தோம். அதையும் பொருட் படுத்தாததால் மேற் படி கடைக்கு 14.6.89 அன்று பிற் பகல் 7.00 மணிக்கு எம்மால் கிறினேட் வீசப்பட்டது.
இப்படிப்பட்ட சமூக விரோத செயல்களில் ஈடு பட்டு இனப்பிரச்சனையை உண்டுபண்ணும் எந்த 'சமூகத்' 'தினராகஇருந்தாலும்அவர்கள்
மேல் ஈ. என். டி. எல் எவ், கடும் நடவடிக்கை எடுக்க ஒரு போதும் தயங்காது என்பதை தெரிவிக்கின்முேம்.
இச்செ ய லின் காரணம்: தாம் மக்கல் மேல் கொண்ட அன்பினலும், மக்க ன் எம் மேல் கொண்ட அன்பினுலும். வளர்ந்துவரும் இவ்வேக்ாயில் இதை சகித்துக்கொள்ள முடி யாத சில எதிர்ப்பு சக்திகளின் அபாண்டப்பலியே இப்பத்தி fl6l0& CAF iugumreh, Tub uais க்கு ஒன்றை மட்டும் திரும்ப ్యుత్ 畿 §ණ්: நாம் எந்த சமூகத்தினருக்கும் எதிரானவர்கள் அல்லர்.அதே நேரத்தில் எம் தமிழ்பேசும் மக்களே அடக்கும் சதிகாரர் களை அடக்கி ஜனநாயக வழிக்கு திருப்புவதே எமது பாராட்டமாகும். ஆகவே மக்களே பீதி அடையாதீர்கள். பின்னர் மேற்குறிப்பிட்ட கடை உரிமையாளர் எம்மால் கைது செய்யப்பட்டார். விசா ரனையின் பின் 30 ஆயிரம் மான நஷ்டஈடாக பெற்றுக் கொண்டு விடுதலை செய்யப் til Gestantsr Grcitusaaaji குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின ருக்கு தெரிவித்துக்கொள்கின் ருேம். இவ்வாறு வதந்திகள் பரப்புபவரீதக்ா இனங்கண்டு அறிவிக்குர்று கேடிகின் Gayib. , , ; ; ;
36- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்மால் கிரனேட் வீசப்பட்
::
யாழ்ப்பாணம், ஜுன் 17 ய4ழ்ப்பாணம் ஐந்து சந்தி யில் உள்ள கடை ஒன்றின்மீது கடந்த புதனன்று மாலை 7.00 மணிக்கு கிரனேட் வீசப்பட்ட சம்பவம் குறித்து ஈ.என்.டி. எல்.எப் இயக்கத்தின் யாழ் மாவட்ட முகாம் ! 1 T gy Lʻi பாளர் அறிக்கை ஒன்  ைற விடுத்துள்ளார். அந்த அறிக்
கையில் தெரிவிக்கப்பட்டிருப்
பதாவது
முஸ்லீம் இயக்கம் ஒன்றின் பத்திரிகையில் வெளி யான செய்தியில்: சம்மாந்துறையில் நடந்த இன மோதலுக்கும் எமக்கு தொடர்புடையதாக Grybtn"ri) GF i ut 'i' u - nr 5 ' ஒன்றை எழுதி தமிழ் பேசும் மக்களிடையே வதந்தி பரப் பப்பட்டுள்ளது.
மேற்படி பத்திரிகைக்கும் ஐந்து சந்தியில் உள்ள பிரஸ் தாய உரிமை யாள ரு க்கும் தொடர்புடைய காரணத்தி
ஞல் அதைப்பற்றி தீர விசா சனை செய்ய கடை உரிமை யாளருக்கு அழைப்பு விடுத் திருந்தோம், வராத பட் த் தில் எம்மால் கடுமையான அறி
வித்தலும் கொடுத்தோம் . அவர் அதையும்பொருட்படுத் தாததால் இந்தக் கடைக்கு
* --سl
பண்ணும் எந்த சமூகத்தின
ராக இருந்தாலும் அவர்கள்
sang Eavaramus .17.06.19897சனிக்கிழமை
ஈ.என்.டி.எல்.எவ், விளக்கம்
சதிகாரர்களை
g) 'u Li q... u li u li l- சமூக விரோத செயல்களில்ஈடுபட்டு ' இனப்பிரச்சினையை உண்டு
மேல் ஈ.என்.டி.எல், எவ் கடும் நடவடிக்கை எடுக் க. ஒரு போதும் தயங்காது என்பதை தெரிவிக்கிருேம் ”
பின்னர் மேற்குறிப்பிட்ட கடை உரிமையாளர் எம்மால் கைது செய்யப்பட்டார், விசா ரனேயின் பின் ரூபா 30ஆயிரம் மான நஷ்ட ஈடாகப் பெற்றுக் கொண்டு அவர் விடுதலை செய் யப்பட்டுள்ளார் " எ ன் பாதை குறிப்பாக முஸ்ஃபீம் சமூகத்தி னருக்கு தெரிவித்துக் கெரள் கின்ருேம். : ' '...
இவ்வாறு வதந்திகள் பரஃபு. பவர்களே இனங்கண்டு அறி. விக்குமாறு” கேட்கிருேம்,
நாம் மக்கள் மேல் கொண்ட அன்பினுலும், மக்கள் எம்' மேல் கொண்ட அன்பினுலும் நாம்வளர்ந்துவரும் இவ்வ்ேள்ை: யில் இதை சகித்துக்கொள்ள முடியாத சில எதிர்ப்பு சக்தி களின் அடாண்டப் பழியே இப்பத்திரிகைச் செய்தியாகும் நாம் எந்த சமூகத்தினருக் கும் எதிரானவர்கள் அல்லர்.
’அதேநேரத்தில் எம் தமிழ்
பேசும் மக்கள் அடக் கும். அடக்கி ஜன: நாயக" வழிக்கு திருப்புவதே стир gy போராட்டமாகும். ஆகவே மக்களே பீதி அடை யாதீர்கள். எனத் தெரிவிக்கப் :
பட்டுள்ளது. (D) காலமார்ை முன்னுள் பிரதம நீதியரசல் எம் சி. சன்சோனி நேற்றுக் காலமாஞர். ہجو
தொகுதி 07
- கலாபூஷணம் புன்னியாமீனி -
37

Page 21
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இது குறித்து 'முரசொலி எனும் பத்திரிகையும், சஞ்சீவி எனும் பத்திரிகையும் 1989.06.17 திகதி வெளியிட்ட செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வரும் அயோத்தி நூலக சேவைகள் ஸ்தாப கரும், மூத்த நூலகவியலாளருமான திரு. என். செல்வராஜா அவர்க ளினால் தொகுத்து நூலுருவாக்கப்படும் ஈழத்துத் தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணப்பதிவான நூல்தேட்டம் நூல் தொடருக்கு நூல்க ளை சேகரித்து வழங்குவதிலும் பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.
வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழாவிற்கான சஞ்சிகை வெளியீட்டுக் குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு மீள் குடியேற்றத்திற் கான அமைச்சு வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழாவில் (2006 ஜூன் 06 இல் நடைபெற்ற போது) பொன்னாடை போர்த்தப்பட்டு, சமூகத்திற்கு ஆற்றிய உயர் சேவைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, ஒத்துழைப்பு வழங்கிய இளங்கீரன் சுபைர், பதியுஸ் சமான் ஆகியோரையும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்கு ஒத்துழைப்பு வழங் கிய எம்.எப். பைரூஸ் அவர்களையும், கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்த அருமைநாயகம் (அண்ணேரைட்) அவர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் தற்போதைய முகவரி:
M.L. Lafir, 6/16 Kiringadeniya
Mawanella. தகவல் : 2006 டிசம்பர்
38- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஹிபிஷி தெளபீக் எழுத்துத்துறை
தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகமை தேர்தல் தொகுதியில் ‘புதிய தெரு' கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த முஹம்மத் தெளபீக் முஹம்மத் ஹிபிஷி அவர்கள் ஹிபிஷி தெளபீக், முஹம்மத் ஹிபிஷி, எம்.ரீ.எம்.I ஹிபிஷி மற்றும் பறக்கும் தேனி, ஒடும் மேகம்| ஆகிய பெயர்களில் சுமார் இரண்டு தசாப்த்த காலமாக எழுதிவரும் எழுத்தாளராவார்.
1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முஹம்மத் தெளபீக் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் மாத்தறை அந்நூர் முஸ்லிம் மகாவித்தியாலயம், மாத்தறை அறபா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது சுயமான வியாபார நடவடிக்கை களில் ஈடுபட்டுவரும் இவர் பாத்திமா ஹஸ்னியாவின் அன்புக் கணவராவார். ஹிபிஷி - ஹஸ்னியா தம்பதியினருக்கு அவிழ்கர் முஹம்மத், முஹம்மத் அனஸ், முஹம்மத் அம்ஸல், ஹைருள் அஷ்பா ஆகிய அன்புச் செல்வங்களுளர்.
1975 களிலிருந்து எழுதத் தொடங்கிய ஹிபிஷியின் கன்னி ஆக்கம் ‘றமழான் விருந்து' எனும் தலைப்பில் 1977 ஆகஸ்ட் 22,23 திகதிகளில் தினகரனில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், தொகுதி 07 - கலாபூஷணம் புன்னியாமீனி - 39

Page 22
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், அல்இஸ்லாம், தினபதி, சிந்தாமணி, எழுச்சிக்குரல், அஷ்-ஷரா, வீரகேசரி, அல்ஹஸனாத், பாமீஸ், முஸ்லிம் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன. ‘மனித நேயர் பாக்கீர்மாக்கார்’ எனும் தலைப்பில் (1998.09.22) இவரால் எழுதப்பட்ட கட்டுரை அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்று ‘தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
இவரால் 'அல்குர்ஆன் கூறும் ஆகார வகைகள்' எனும் தலைப்பில் புத்தகமொன்றும் வெளியிடப்பட்டது. தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாவாக இருந்த தனது அன்புத் தாயார் அப்துல் கபூர் மரிக்கார் ஸித்தி ஹஉஸைனாவை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
HIBISHI THOWFEEK, 254, New Street, Welligama.
40- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
என்.எல். ரஷின் இலக்கியக்காவலர்
LDலையகத்தின் தலைநகர் கண்டி மாநகரிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்புமிகு ரம்மியமான கிராமமான உடத்தலவின்னை மடிகேயைப் பிறப்பிடமாகக் கொண்ட என்.எல். ரஷின் அவர்கள் நூஹலெப்பே அமீன் உம்மா தம்பதியி னரின் புல்வராவார்.
1938 ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இம்மண்ணில் ஜனனித்த இவர் உடத்தலவின்னை மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். அனினா உம்மாவின் அன்புக் கணவரான இவருக்கு அப்துல் கரீம், பாத்திமா நஸ்ரின், பாத்திமா ரிஹானா, முஹம்மட் ஜிப்ரி ஆகிய நான்கு செல்வங்கள் உள்ளனர்.
கற்கும் வயதிலேயே வறுமை இவரின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. "தையலராகப் பயிற்சியைப் பெற்றாலும் அத்துறையிலும் அவரால் தேற முடியவில்லை. கூலிவேலைகள் செய்து குடும்பப் பொறுப்புக்களை சுமந்து வந்த இவர் 60களில் கொழும்பு சென்றுள் ளார். கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் சிப்பந்தியாக வேலை பார்த்து வந்த சந்தர்ப்பத்திலே இவரின் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாகின.
இக்கால கட்டங்களில் பலதரப்பட்ட இடதுசாரிக் கூட்டங்களில் தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 4.

Page 23
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 கலந்துகொண்டு தமது சிந்தனைகளை இடதுசாரிப் போக்குமிக்கதாக மாற்றிக் கொண்டார். முன்னாள் அமைச்சரும், இடதுசாரித் தலைவரு மான பீட்டர் கெனமனுடன் நெருக்கமான உறவு வைத்திருந்ததுடன், பலவிதமான தொழிற்சங்கப் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்ற துடன் முழுநேர இடதுசாரி ஊழியரானார்.
1967ம் ஆண்டு மத்திய கொழும்பில் மீலாத்விழாவினை வெகுவிமரிசையாக நடத்துவதற்கு இவரின் செயற்பாடுகள் அடிப்படை யாக அமைந்தன. அத்துடன் மாக்ஸிய எதிர்ப்பு முன்னணியைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.எச். முஹம்மத், இஸ்லாமிய சோசலிச முன்னணியைச் சேர்ந்த கலாநிதி பதியுத்தீன் மஹற்மூத் ஆகியோரை ஒரே மேடையில் இம்மீலாத் விழாவில் கலந்துகொள்ள வைக்க இவர் அரும்பாடுபட்டுள்ளார். -
இக்கால கட்டங்களில் இலங்கையின் முற்போக்குச் சிந்தனை மிக்க எழுத்தாளரும், பத்திரிகையாளருமான எச்.எம்.பீ. மொஹிடீன், இளங்கீரன் சுபைர், அ.நா. கந்தசாமி ஆகியோருடன் மிகநெருக்கமாக இருந்து பணியாற்றியுள்ளார்.
1960களில் இறுதியில் கம்யூனிஸக்கட்சி மாவோவாதக் கொள்கையுடன் சார்ந்த சார்புக் கொள்கைகளைக் கடைபிடித்து பிரிவடைந்த நேரத்தில் புரட்சிகர கம்யூனிஸக் கட்சித் தலைவர் சண்முகதாஸ் அவர்களுக்கு விசுவாசத்துடன் தொண்டாற்றினார். எச்.எம்.பீ. மொஹிடீன் அவர்களால் நடத்தப்பட்ட நாளைநமதே, அல்-அகீதா, அபியுக்தன், நேசன் ஆகிய பத்திரிகைகளை பல்வேறுபட்ட பிரச்சினைகளில் மத்தியில் வீடுவீடாகச் சென்று மக்கள் மத்தியில் விநியோகிப்பதில் வெற்றி கண்டார். ரஷின் ஒரு எழுத்தாள ரல்ல, இலக்கியவாதியல்ல, ஊடகவியலாளரல்ல. ஆனால், படைப் பிலக்கியவாதிகளுக்கு உந்துசக்தியாக இருந்து முற்போக்கு சிந்தனைமிக்க எழுத்தாளர்களின் படைப்புக்களை பல்வேறுபட்ட பிரச்சி னைகளுக்கும், சிக்கல்களுக்கும் மத்தியில் மக்களிடையே எடுத்துச் சென்றமையினால் அவர் பிரச்சினைமிக்க ஒரு காலகட்டத்தில் இலக்கியக்காவலனாக இருந்து இலக்கியத்தைப் பாதுகாத்துள்ளார்.
42- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 அவரின் துணிவும், ஆர்வமும், விடாமுயற்சியும், அடக்குமுறைக ளுக்கு அஞ்சா மனோ பலமும் 1960களின் இறுதிக் காலப்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களினால், முற்போக்குச் சிந்தனைகளை பாமர மக்களின் இதயங்களில் விதைக்க முடிந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே ரஷினின் குறிப்புக்கள் இங்கு பதிவுக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஒரு படைப்பிலக்கியவாதியினால் தனது சிந்தனைகளை இலக்கியமாக்குவது ஒரு பக்கம். இப்படிப் படைக்கப்பட்ட இலக்கி யங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் அந்த இலக்கியவாதி யாரை விழித்து இலக்கியம் படைக்கின்றாரோ அக்கருத்துக்கள் உரியவர்களிடம் போய்ச்சேர வேண்டும். 1960 களிலும், 1970 களிலும் முற்போக்கு இலக்கியவாதிகளிடத்தே இத்தகைய கருத்துக்கள் ஊடுருவியிருந்தன. எனவே, இனங் கண்டு உரியவர்களிடம் உரிய கருத்துக்களை பரப்ப பல வருட காலமாக ஏன் இன்றும் கூட ‘ரஷின் இலக்கியத்தொண்டனாக இருந்து வருகின்றார். இவரின் இப்பணியினால் பல தடவைகள் பொலிஸாரி டமும், அடாவடிக் கும்மல்களிடமும் தாக்குதல்களுக்குட்பட்ட பல அனுபவங்களை இவர் கொண்டுள்ளார். ரஷின் அவர்களின் இத்தகைய பணிபற்றி எச்.எம்.பீ. மொஹிடீன் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் ரஷின் போன்றவர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் தான் போன்ற எழுத்தாளர்களினால் எழுதுவதில் பயனில்லை என வெளிப்படை யாகவே குறிப்பிட்டிருந்தார்.
1972 ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்த இவர் உடத் தலவின்னையிலேயே வசிக்கலானார். மகாவலி அதிகாரசபையில் வேலைவாய்ப்பினைப் பெற்று அங்கேயும் தொழிலாளர் உரிமைக்காக பலவிதமான தொழிற்சங்க போராட்டங்களை நடத்தியதும் குறிப்பிடத் தக்கது. 1976 ஆண்டு அல்லாமா இக்பால் ஞாபகார்த்த விழாவினை உடத்தலவின்னையில் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு விசாலமான பங்களிப்பினை நல்கினார்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 43

Page 24
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இவரின் வாழ்வில் தனக்காக, தனது குடும்பத்திற்காக என்று எதையும் தேடவில்லை. அதனால்தான் இன்றும் அவர் வறுமைக் கோட்டினுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆனால், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும், பாட்டாளி வர்க்கத்திற்காகவும், தனது சமூகத்திற் காகவும், தனது கிராமத்திற்காகவும் மெழுகுவர்த்தியாக நின்று அன்றும், இன்றும் உழைத்து வருவதுடன், தனது கிராமத்தில் வாலிபர் மத்தியில் சிந்தனை உணர்வுகளை ஏற்படுத்துவதற்கு வழிகோலியும் உள்ளார். கிராமத்தில் இன்றும் எந்தவொரு சிரமதான முயற்சியென் றாலும் இவரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அன்றுமுதல் இன்று வரை இவரின் தியாகங்களுக்கு முன்மாதிரிகளும், இலக்கிய வளர்ச் சிக்கான பங்களிப்பும் இன்றைய தலைமுறையினருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகும். எனவே, சிந்தனை வட்டம் 2004ம் ஆண்டு என்.எல். ரஷின் அவர்களின் பணியை மெச்சி “சமூக சேவைச் செம்மல்” எனும் பட்டமளித்து கெளரவித்தது.
தகவல்: 2006 டிசம்பர்
44- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு
79
தமீம் அன்சார் எழுத்துத்துறை மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ! *
பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் 611 உடத்தலவின்னை மடிகே கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பீர்முஹம்மது தமீம் அன்சார்
அவர்கள் கவிதை, கட்டுரை, கதை, விமர்சனம், நாடகம் என இலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த எழுத்தாளர் ஆ களுள் ஒருவராவார்.
உடத்தலவின்னை மடிகேயில் ஏ.ஸி. க். பீர்முஹம்மது, உம்மு நபிஷா தம்பதியினரின் மூன்றாவது பிள்ளை யாக 1936ம் ஆண்டு நவம்பர் மாதம் 07ம் திகதி பிறந்த தமீம் அன்சார் அவர்கள் உடத்தலவின்னை மடிகே க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.
ஆயிரத்துத் தொழாயிரத்து ஐம்பது, அறுபதுகளில் கண்டி முஸ்லிம் ஹோட்டல் புத்தகநிலையம் கண்டிப் பிரதேசத்தில் எத்தனையோ வாசகர்களை உருவாக்கியது. பல எழுத்தாளர்களை உருவாக்கியது. வாசிப்புக்கும், அறிவியல் தேடலுக்கும் வாய்ப்புக்கள மிகமிக அரிதாகக் காணப்பட்ட அக்கால கட்டத்தில் முஸ்லிம் ஹோட்டல் புத்தக நிலையத்தின் பங்களிப்பு மிகமிக விசாலமானது. தமிழைத் தமிழாகப் பேச வைத்தது. ஆம், தமிழ்நாட்டின் கலை, இலக்கிய, அரசியல் பத்திரிகை, சஞ்சிகை, நூல்கள் வாசகர்களை
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 45

Page 25
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஈர்த்தது. முஸ்லிம் ஹோட்டல் சரித்திரம் படைத்த ஒரு நூல்நிலை யமாகும். வாசிப்புக்கு வழிகாட்டியதைப் போலவே அப்புத்தகநிலையம் தமிழ், இலக்கிய, சமய நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டது. முஸ்லிம் ஹோட்டல் புத்தக நிலையத்தின் வாசிப்புப்பட்டறையில் தன்னைச் செப்பனிட்டுக் கொண்டவர்களுள் தமீம் அன்சாரும் ஒருவராவார்.
தனது வாலிப காலத்தில் சிறந்த வாசகனாக இருந்த இவர் தனக்குள் ஒரு நூலகத்தையும்'அமைத்துக் கொண்டிருந்தார். வாசிப்புத் திறனின் ஏற்பட்ட உத்வேகமே இவரையும் எழுதத் தூண்டியது. 1967 களில் இவரின் கன்னி ஆக்கத்தினை தினகரன் பிரசுரித்தது. “சமூக எழுச்சிக்கு.’ எனும் அந்த ஆக்கத்தினைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதினார். இத்தகைய ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி, மித்திரன் உட்பட பல்வேறுபட்ட பிரதேச சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
சமூகத்தில் காணப்படக் கூடிய ஏற்ற, இறக்கங்கள், சமூக மூடநம்பிக்கைகள், சமூகத்தின் அரசியல், பொருளாதார, கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இவரின் எழுத்துக்கள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். தமீம் அன்சாரின் பல நாடகங்கள், உரைச்சித்திரங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பா கியுள்ளன. அதேபோல சில மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார்.
தனது எழுத்துலக ஈடுபாட்டுக்கு ஊக்கமளித்த தனது தந்தையார் மர்ஹம் ஏ.ஸி.பீர்முஹம்மது அவர்களையும், தனது ஆக்கங்களைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும், வானொ லியில் ஒலிபரப்பிய நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தமீம் அன்சார் எம்.ஆர்.றஹற்மானி உம்மாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு மூன்று அன்புச் செல்வங் களுளர். இவரின் முகவரி:
PM. Thameem Ansar, 22/B, Udatalawinna, Madige
Udatalawinna - 20802 தகவல்: 2006 டிசம்பர்
45- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ரஷீத் - எம் -றாஸிக் எழுத்துத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி, பாத்தஹேவா|ஜ் ஹெட்ட பிரதேச செயலாளர் பிரிவில் உடு தெனிய கிராம சேவகர் எல்லைக்குள் வசித்து வரும் ரஷித் முஹம்மது றாஸிக் அவர்கள்; ரஷித - எம் - றாஸிக், ஆர்.எம். றாஸிக், றாஸிக்| பஹற்ஜி, உடுதெனிய ரிகாஸ், திருமதி றாஸிக், உராயாஸ் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளரும், மதபோதகருமாவார்.
1965ம் ஆண்டில் ஜனவரி மாதம் 26ம் திகதி உடுதெனிய எம்.எம். ரஷித் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த றாஸிக் க / உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயம், காலி பஹம்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபிக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் (வெளிவாரி) ஆகியவற்றின் பழைய மாணவராவார். மெளலவி, அல்-ஆலிம், பஹற்ஜி ஆகிய பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள இவர் சீனன்கோட்டை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயிலின் பிரதம இமாமாகக் கடமையாற்றி வருகின்றார்.
இவரின் கன்னி ஆக்கம் 1980 ஆண்டு பெப்ரவரி மாதம் 02" திகதி “சமூகத்தின் உயிர்நாடி ஒற்றுமையே.” எனும் தலைப்பில் தினபதியில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை இருநூற் றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துண்டுப்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 47

Page 26
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பிரசுரங்களை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்களின் பெரும்பாலா னவை "இஸ்லாமிய சமயம் சம்பந்தப்பட்டவை, சமூக உணர்வு மிக்கவை. இவரின் இத்தகைய ஆக்கங்கள் நவமணி, அல்-ஹஸனாத், வெற்றி, நிதாஉல் இஸ்லாம், தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, தினக்குரல், உதயம், அல்-ஜிஹாத், ஜும்ஆ, எழுச்சிக்குரல், ப்ரிய நிலா, த சண்டே டைம்ஸ் ,லங்காதீப, தோழன், வெற்றி, கேகாலை டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் இடம்பெற்றுள்ளன.
1985ம் ஆண்டிலிருந்து வானொலி முஸ்லிம் சேவையில் ஒலி பரப்பாகிய இவரது இஸ்லாமிய நிகழ்ச்சிகளை சுமார் 37 ஒலிநாடாக் களில் ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளார். “உங்களுக்குத் தெரிந்த ஐந்து” எனும் பெயர் புத்தகமொன்றினை வெளியிடும் பூர்வாங்க ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
தன்னுடைய இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனது சிறிய தந்தை எம்.எம். பாயிஸ், சோதரி நூருல்ஜன் நஜ்முல் ஹஉசைன், மைத்துனர் நஜ்முல் ஹசைன், சகோதரர் ரஷித் எம். இம்தியாஸ், மாமி மெளலவியா மலிஹா சுபைர், சகோதரர் ரஷித் எம். ஹாயிஸ் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர் மெளலவியா பவுஸஉல் ஹஸிமாவின் அன்புக் கணவராவார். றாஸிக் - ஹஸிமா தம்பதியினருக்கு பாத்திமா ரஸ்கா, பாத்திமா ரஸ்னா, பாத்திமா ரஸ்வா ஆகிய அன்புச் செல்வங்களுளர். இவரின் முகவரி:
Rasheed - M - Razik 56 - A 'Rasheed Mahal' Ududeniya Madige Marassana - 20210
T/P081-2223830 தகவல்: 2004 டிசம்பர்
48- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஏ.சி. றாஹில் (நிந்ததாசன்) எழுத்துத்துறை
رہk:::.:.:::::4:ہنزہ. "
கிழக்கு மாகாணம், திகாமடுல்ல! மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதி, நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்: துள்ள கிராம சேவகர் பிரிவு 05 இல் பிறந்த அப்துல் கரீம் றாஹில் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசி ரியர், பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பாளர், நடிகர்! போன்ற பல்துறை ஆற்றல்மிக்கவர். 氢实
1962.04.20 ல் அப்துல் கரீம் - ஆவழியத்தும்மா தம்பதியினரின் மூத்த புதல்வராகப் பிறந்த றாஹில்: நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்று நிந்தவூர் அல்மினா வித்தியாலயம், எகெலியகொட அல்அக்ஸா மகாவித்தியாலயம், மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலை, கொழும்பு ஹமீட் அல்ஹஉசைனி தேசிய பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
1975ல் இருந்து இதுவரை எழுத்துப்பணி புரியும் ஏ.சி. றாஹிலின் முதலாவது கவிதை தினகரனில் பிரசுரமானது. “அவள் தேடிய வாழ்க்கை சிந்தாமணியில் பிரசுரமான முதலாவது சிறுகதை யாகும். 1983ல் "தூய்மை தெய்வீகமாகிறது’ எனும் நாவலும், 1985ல் நித்தியா வித்தியாசமா’? எனும் நாவலும் தினகரனில் தொடர் தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 49

Page 27
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
கதைககளாக வெளிவந்தன. இதைத் தொடர்ந்து ‘கலாசா லைக்கிளிகள், ஒரு காலை புலர்கிறது. காதல் கல்வெட்டு, வான மெல்லாம் நிலா, தேன்கூடு என நாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் ‘தேன்கூடு' எனும் நாவல் நூலாக வெளிவர இருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தினகரன் வாரமஞ்சரியின் இணைப்பிதழான ‘செந்தூரம்' சஞ்சிகையில் "கற்பனைத் தீயின் கற்கண்டுத் தகிப்பில், இயத்தில் வடியும் தேன்’ போன்ற வித்தியாசமான நடையில் வித்தியாசமான தொடர்களையும் எழுதியுள்ளார். இதே சஞ்சிகையில் பெண் விடுதலை பற்றிய தொடர் கவிதையினையும் எழுதியுள்ளார். தினமுரசு வாரமலரில் ‘புதிய நடையில் புதிய தத்துவம், மின்சாரக் கதைகள்’ போன்ற தொடர்களையும் எழுதி வருகிறார். நூற்றி ஐம்பது குறுங்கதைக ளையும் எழுதியுள்ளார். இவை மித்திரன் வாரமலரில் பிரசுரமா கின்றன.
மூன்று திரைப்படங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். திரைப்படங்களுக்கான நாற்பது மூலக்கதைகளையும் எழுதி வைத்திருக்கின்றார். 2000 ஆண்டு ‘இன்னுமொரு சுவாசம்' சிறுகதைத் தொகுதி தமிழ் நாடு மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்து அதே ஆண்டு இலங்கை அரச கரும மொழிகள் திணைக்கள விருதினையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1979ல் முதலாவது நாடகம் ஒலிபரப்பானது.
அதைத் தொடர்ந்து தேசியசேவை, வர்த்தக சேவை போன்ற வற்றிலும் றாஹில் எழுதிய நாடகங்கள் ஒலிபரப்பாகின. கவிஞர் என்ற வகையில் தமிழ் நாட்டின் சிறந்த விமர்சகரான வல்லிக் கண்ணனின் அணிந்துரையுடன் 2000ம் ஆண்டு தமிழ்நாடு மணி மேகலைப் பிரசுரமாக ‘உன்னிடம் விரல்கள் கேட்கிறேன்’ கவிதைத் தொகுதி வெளிவந்தது. 2001 ஆண்டு தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுரமாக 'உன் உயிரும் என் முகவரியும் தொடர் கவிதை நூல்
50- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
வெளிவந்தது. மு. மேத்தாவின் அணிந்துரையுடன் 2002 ஆண்டு தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுரமாக ‘கண்ணால் உன்னைத் தொடுகிறேன் கவிதைத் தொகுதி வெளிவந்தது. 1500 நவீன குறள்கள் ஒரு அதிகாரத்திற்கு 15 குரள்கள் வீதம் 100 தலைப்புக்களில் எழுதியுள்ளார். 5000 மேற்பட்ட மரபு, புதுக்கவிதைகள் எழுதியுள்ளார். இவற்றில் தொடர்கவிதைகளும் அடங்கும். ‘மின்னல்வயசும், புயல்மனசும் தொடர்கவிதை நவமணியில் பிரசுரமானது. அல்லாமா இக்பாலின் வழிக்வா வெளியீட்டிலும் கவிதை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவை வானொலிகளிலும், தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒலிபரப் பாகி, ஒளிபரப்பாகி வருகின்றன.
பத்திரிகை ஆசிரியர் என்ற வகையில் தோழன் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். 'அல்-இன்ஷிராஹ' (பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடு) பிரதம ஆசிரியராக இருந்து அந்த சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். "இடி வாமலரின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
அறிவிப்பாளர் என்ற வகையில் 1994ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவையில் அறிவிப்பாளராகவும், “காவியமேடை’ நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றி யுள்ளார். 1999ல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் (வர்த்தக சேவை) சேவையில் அறிவிப்பாளராகக் கடமை யாற்றி வருகின்றார். 'வாலிப வட்டம்' நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமை புரிந்துள்ளார். இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன 'ஐ' அலை வரிசையிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
கொழும்பு டவர் மண்டபத்தில் 1979ல் மேடை ஏற்றப்பட்ட கிழக்கு வெழுக்கிறது நாடகத்தில் இருந்து இதுவரை நடித்து வருகிறார்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 57

Page 28
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
1996ல் தமிழ்நாடு சந்தப்பாவேந்தர் விருது, 1997ல் ஆசிரியர்தின விருது, 1997ல் 'ரத்னதீப பல்துறைக்கான விருது, 1998ல் சாமறி கவிவாணன் விருது, 2000ல் ‘பிரசாதினி பிரணாமய விருது என்பவற்றைப் பெற்றுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக, சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பலர் இவரின் இலக்கிய முயற்சிகளை ஆய்வு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழில் நிமித்தம் தற்போது மாலைத்தீவில் வாழும் இவர் “Breath ofEarth எனும் தலைப்பில் தான் எழுதிய ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு எண்ணியுள்ளார். தான் கல்வி கற்பித்த காலங்களில் மாவனல்லை தேசிய பாடசாலைத் தமிழ்த்துறைப் பொறுப்பாளராகவும், மாவனல்லை வலயத் தமிழ்த்தினத் தலைவரா கவும், கொழும்பு ஹமீட் அல்-ஹஉசைனி தேசிய பாடசாலையின் தமிழ்த்துறைத் தலைவராகவும் செயற்பட்டு பல மாணவர்களைப் பயிற்றுவித்து தேசிய ரீதியான தமிழ்த்தினப் போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார்.
மாவனல்லை ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியையான (இப்பொழுது மாலைத்தீவில் ஆங்கில ஆசிரியை) நூருல் கரீமா றாஹிலின் வாழ்க்கைத் துணைவியாவார். இவர்களுக்கு பாத்திமா ஹனிக்கா எனும் ஒரே ஒரு அன்பு மகள் உள்ளார். பாத்திமா ஹனிக்கா மாலைத்தீவில் நடந்த பாடல் போட்டி யில் முதலாம் இடம் பெற்றுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழக மனித உரிமைகள் மன்றம் ஐ.நா. சபையுடன் இணைந்து நடாத்திய தேசிய சிறுகதைப் போட்டியில் முதலாம் பிரிவு ஆங்கில மொழிமூலம் 3" இடத்தைப் பெற்றுள்ளார். இவரின் முகவரி:
A.C. Rahil, 318, BB, New Town, தகவல் : 2006 டிசம்பர் Nintavur - 05 .IE. P
52- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
செயின் தம்பி ஸியாம்
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு : கல்முனை கிராம சேவகர் எல்லையில் || வசித்துவரும் செயின் தம்பி ஸியாம் வளர்ந்து | வரும் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார்.
கல்முனைப் பிரதேசத்தில் பழைய སྙ 4 ། தபாலக வீதியில் வசித்துவரும் செயின் தம்பி, ' *
சுபைதா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராக ,益.鐵 1980 ஆண்டு ஏப்ரல் மாதம் 08 திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை அல்-ஸஉஹைறா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார். புதிய கல்விச் சீர்த்திருத்தத்தின் கீழ் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்துள்ள இவர் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் தமிழ்நெறிப் பிரிவில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்று தற்போது கண்டி - அக்குரணை அஸ்ஹர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
பள்ளிப் பராயத்திலிருந்து கவிதைத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த இவர் 1997 ஆண்டிலிருந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தார். பாடசாலையிலும், கல்வி விழாக்களிலும், மாணவ மன்றங்களிலும் தான் எழுதிய கவிதைகளைப் பாடி வந்த இவரை
தொகுதி 07 - கலாபூஷணம் புன்னியாமீனி 53

Page 29
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும் கவிதை எழுதுமாறு தூண்டிய தனது தமிழ் ஆசான்களான அன்பு முகையதீன், எஸ்.எம். பர்வீஸ், எம்.ஐ.எம். முஸ்தபா ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் கன்னிக் கவிதை 2003.06.28 திகதி 'எனக்கும்’ எனும் தலைப்பில் தினகரனில் பிரசுரமாகியது.
அன்றிலிருந்து இன்றுவரை 400க்கு மேற்பட்ட கவிதைகளையும், 09 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவற்றுள் 250க்கு மேற்பட்ட கவிதைகளும், 05 சிறுகதைகளும், 12 கட்டுரைகளும் தினகரன், நவமணி, வீரகேசரி, எங்கள் தேசம், சுடர்ஒளி, மித்திரன், தினச்சுடர், ஈழநாதம், தினமுரசு, எழுவான், புதுவரவு ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும்; சக்தி எப்.எம், ஊவா சமூக வானொலி ஆகிய வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் தமிழ்நெறிப் பிரிவினால் வெளியிடப்பட்ட ‘தளிர்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு நூலின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். அத்தொகுப்பில் இவருடைய மனு, புரிந்தது, சந்திர கிரகணம், வறுமைச்சமர், பரீட்சை ஆகிய ஐந்து கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
முஸ்லிம் தேச எழுத்தாளர் அமையத்தின் கல்முனைப் பிரதேச தொடர்பாளராகவும், தமிழ் இலக்கிய மன்றத் தலைவராகவும், பத்திரிகைச் செய்தியாளராகவும் செயலாற்றிவரும் இவர் கவியரங்குகளை நடத்துவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். செயின் தம்பி ஸியாம், கல்முனை ஸியாம், முனையூர் ஸியாம் ஆகிய பெயர்களில் எழுதிவரும் இந்த இளங்கவிஞரின் முகவரி:
Zain Thampy Ziyam 353/B. O.P.O. Road. Kalmunai தகவல் : 2006 நவம்பர்
54- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எஸ்.எம். சப்ரி
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், மாத்தளை மாவட் டம், தம்புள்ளை தேர்தல் தொகுதியில், கலே வெல பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ‘ரங்வெடியாவை’ எனும் கிராமத்தைப் பிறப்பிட மாகக் கொண்ட சால்தீன் முஹம்மது சப்ரி வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுள் ஒருவ ராவார்.
ஏ.எச்.சால்தீன், எஸ். சுலைஹா பீபி தம்பதியினரின் புதல்வராக 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 திகதி பிறந்த ‘சப்ரி மா/க/ கெப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், மா/க/ மாதிப்பொளை அறபா முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது பேராதனைப் பல்கலைக்கழக கலாபீடத்தில் புவியியல் விசேட துறையில் 3 வருடக் கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறை ஆர்வமும், ஈடுபாடும் இவருக்கிருந்தது. இவ்வார்வம் இவரை பத்திரி கைத் துறையில் உள்வாங்கியமையினால் ஒரு செய்தியாளராகவும், விவரண எழுத்தாளராகவும் பணிபுரிந்து வருவதில் மனநிறைவு கொள்கின்றார். இத்துறையில் கால்பதிக்கும் வேட்கையில் கொழும்பு
: தொகுதி 07 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 55

Page 30
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பத்திரிகைத்துறை டிப்ளோமா பயிற்சிநெறியினை 2005இல் பூர்த்தி செய்துள்ளார்.
இவரது கன்னி ஆக்கம் 2004.01.16ம் திகதி தினகரனில் ‘மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாம்' எனும் தலைப்பில் பிரசுரமா னது. ஆனாலும் 2002 ஆண்டில் ‘ரங்வெடியாவ கிராமத்தின் வரலாறு எனும் பெயரில் புத்தகமொன்றினை எழுதியுள்ளார். இப்புத்தகத்தினை ரங்வெடியாவ இஸ்லாமிய நலன்புரிச் சங்கம் 2002 ஜூன் மாதம் வெளியிட்டது. இப்புத்தகத்தில் ‘சப்ரி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
6 6
O. ஒரு சமூகத்தின் பாரம்பரிய விழுமி யங்களை வெளிக்கொணர்வதிலும், பாதுகாப்பதிலும், வருங் காலத்திற்காகப் பத்திரப்படுத்தி வைப்பதிலும், வரலாறு முக்கிய பங்கொன்றினை வகிக்கிறது. பண்டைய மரபினை எடுத்துக்காட்டி இன்றைய மரபினை வளம்படுத்தி வருங்கால மரபுகளை நெறிப் படுத்தும் வல்லமை வரலாற்றுக்குண்டு. இதனால் தான் மாபெரும் சிந்தனையாளரும், தத்துவஞானி யுமான மகாகவி அல்லாமா இக்பால் ஒருமுறை “வரலாற்றின் முதுகிலே மனிதன் முன்னேறுகின் றான்’ என்று பிரஸ்தாபித்துள்ளார். இதற்கொப்ப இன்றைய நிலையில் ஊர் வரலாறுகள் ஏராளம் எழுத்துருப் பெற்றுவிட்டன. ஆனால் இதுவரைக் காலமும் ரங்வெடியாவ கிராமத்தின் வரலாறு வாய் மொழி மூலமே வெளிவந்து கொண்டிருந்தது. எனவே இந்நிலையை மாற்றி வரலாற்றை எழுத்துருவில் கொண்டுவரும் அரும்பணியில் களமிறங்கினேன்.
இதனை திறம்பட சரியான தரவுகளுடன் வெளியிட வேண்டும் என்ற நோக்கில் ஊரில் உள்ள முக்கிய பெரியார்களை அணுகி தரவுகளைப் பெற்றுக் கொண்டேன்.”
56- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ரங்வெடியாவை கிராமத்தின் வரலாறு
முடிந்த்ஷ மூலுப்பது சங்?
a ser:M2
சப்ரி பல்வேறுபட்ட கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றார். 2003 ஆண்டு ‘இலங்கை புத்தாக்குநர்களின் ஆணைக்குழு அகில இலங்கை ரீதியில் ‘புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று 15,000/- பணப்பரிசும் பெற்றார். மேலும் பேராதனைப்பல்கலைக்கழக கலைப்பீடம் - 2005ம் ஆண்டில் நடத்திய உயர்கல்வி மட்ட கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடத்தையும், புத்தளம் ஒபெட் அமைப்பு நடத்திய அஷ்ரப் நினைவு தின அகில இலங்கை கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட பத்திரிகைத் துறைக்கான டிப்ளோமா பயிற்சிநெறியின் (2005) நிமித்தம் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பு “எண்பதுகளின் பின் இலங்கைத் தமிழ் தேசிய நாளிதழ்களின், தேசிய ஒருமைப்பாட்டுப் பின்னணியின் வெளிப்பாடு” என்பதாகும். அதேநேரம் மனித உரிமை கள் கற்கை நிலையத்தில் தொடர்ந்த மனித உரிமைகள் டிப்ளோமா (2006) பாடநெறியின் போது இவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை **கண்டி மாநகரின் வீதியோரச் சிறுவர்களின் உரிமைகளும், பாதுகாப்பும்.” என்பதாகும். இவ்விரு ஆய்வறிக்கைகளையும் புத்த கமாக வெளியிடும் எண்ணம் இவருக்குண்டு.
இளம் வயதுதான் என்றாலும் எதிர்காலத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையிலும், ஊடகத்துறையிலும் இவர் மிகவும்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 57

Page 31
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பிரகாசிப்பார் என்று எதிர்வு கூறக்கூடிய வகையில் இவரின் இப்போதைய ஆர்வம் காணப்படுகின்றது. இந்த ஆர்வம் இடையில் குறைந்து விடாது தொடர வேண்டும்.
சால்தீன் முஹம்மது சப்ரி, சப்ரி, கலையன்பன், முல்லை யன்பன், கலேவலை சப்ரி, ஸப்னாஸ் ஆகிய பெயர்களில் எழுதி வரும் இவரின், ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனக்கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள், கவிதைகள் என்பன நூற்றுக்கும் மேல் பிரசுரமாகியுள்ளன. இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், pb6|LD60s, 560TégiLj, diLj96s, Civil Voluntur, The Scholor, The Student, Follow me, அல் இன்ஷிராஹி (பேராதனைப்பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடு) ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சி கைகளிலும் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் ஊடகத்துறையிலும் இவரின் பங்களிப்பினை அவதானிக்கலாம். 2003 டிசம்பர் 07ம் திகதி முதல் ‘நவமணி’ செய்தியாளராகவும், 2004 ஜனவரி முதல் தினச்சுடர் செய்தியா ளராகவும் பணிபுரிந்து வந்த இவர் 2004 மே 28 திகதியிலிருந்து “சுடர்ஒளி' கலேவெல செய்தியாளராகவும் பணியாற்றி வருகின் றார். (நிருபர் இல க - 172) பல்கலைக்கழக கல்வியை மேற் கொண்டபடி பத்திரிகைத்துறையில் பகுதிநேரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை நூற்றுக்கணக்கான செய்திகளை எழுதியுள்ளார். இவரின் முகவரி:
S.M. Sabry, 604/A, Keppetiya, Galewela,
தகவல் : 2006 நவம்பர்
58- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.ஏ. அமீர் றிழ்வான் எழுத்துத்துறை
சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டம், தெதிகமை தேர்தல் தொகுதியில் | வரகாப்பொளை பிரதேச செயலாளர் பிரிவி | னைச் சேர்ந்த வரக்காப்பொளை கிராமசேவகர் | எல்லைக்குள் வசித்துவரும் முஹம்மது அவுப் அமீர் றிழ்வான் வளர்ந்துவரும் எழுத்தாளர் களில் ஒருவராவார்.
அப்துல் ஹமீத் முஹம்மது அவுப், மஹர் மூத் லெப் பே பல கலீஸ் உம் மா தம்பதியினரின் புதல்வராக 1964 ஆண்டு செப் டெம்பர் மாதம் 26 திகதி பிறந்த றிழ்வான் வரக்காப்பொளை பாபுல்ஹசன் மத்திய கல்லூரியில் ஆரம்பக்கல்வியைப் பெற்றார். பின்பு பேருவளை ஜாமிஆ நளிமிய்யா கலாபீடத்தில் கற்றுத்தேறி *நளிமி’ பட்டத்தையும், பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ள இவர் தற்போது கேகாலை வலயக் கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் 'மஹஜபீன் ஆவார். மஹஜபீன் கேகாலை தேசிய வைத்திய சாலையில் MIT வைத்திய இரசாயன கூட தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றுகின்றார். இத்தம்பதியினருக்கு ருசைத் (ஆண்), ஜமீலா (பெண்), ஸஈம் (ஆண்) ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 59

Page 32
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இலக்கியத்துறையில் இவரின் ஆரம்ப ஈடுபாடு 1980 களில் இடம்பெற்றது. 1980 ஆண்டில் சிந்தாமணிப் பத்திரிகையில் இடம் பெற்ற 'காலம் கடந்த ஞானம்' எனும் சிறுகதையே இவரின் கன்னி ஆக்கமாகும். அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை முஹம்மது அவுப் அமீர் றிழ்வான், எம்.ஏ.அமீர் றிழ்வான், அபூஸஈம், ஆவிகுல் பன் ஆகிய பெயர்களில் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிந்தாமணி, தினபதி, தினகரன், வீரகேசரி, எழுச்சிக் குரல், தினக்குரல், அல்ஹஸனாத், நவமணி, Daili News, சத்திய தீபம், கலாமதி, வளம், சமாதானம், கலைமலர், சிந்தனைச்சுடர் போன்ற தேசியப்பத்திரிகைக ளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம சேவை, கல்விச் சேவை என்பவற் றிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
கோட்ட, வலய, மாகாண மட்டத்தில் மாணவர்களை மைய மாகக் கொண்டு சுமார் 7 நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தியுள்ள இவர் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள ளார். தற்போது மாணவர் சமூகத்துக்கு மேற்படி துறைகளில் வழிகாட்டியாக செயற்பட்டு வருகின்றார்.
இவர் இதுவரை புத்தகமொன்றினை வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் தலைப்பு "ரன் தரு அறிவுமலர். இப்புத்தகத்தை ‘செலிங்கோ ரன்தரு லைப்' வெளியிட்டது. 109 பக்கங்க ளைக் கொண்ட இப்புத்தகத்தில் கல்வி, விஞ்ஞானம், சமகால நிகழ்வுகள், இலக்கியம், சுகாதாரம், வரலாறு, மொழி இலக்கணம், மொழி இலக்கியம், அரசியல், கலை/சினிமா, நடத்தை சார்பானவை, சமயம், விளையாட்டு, :ங் வியாபாரக் கற்கை ஆகிய தலைப்புக்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகத்தின் சர்வதேச தராதர புத்தக இலக்க எண் ISBN 1955-95961-3-6 ஆகும்.
இப்புத்தகத்தின் முன்னுரையில் துல்ஹிரிய கே/வர/நாங்கல்ல முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் ஏ.எம்.என்.மீரா அவர்கள் பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தார்: 60- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
'அறிஞர்கள் சமுகத்தில் எந்தவொரு இடத்திலாவது மதிக் கப்படுவர்.” இன்று உலகில் அறிவைப் பெற்றுக்கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. மேற்கு நாடுகளில் அனைவரும் அதிநவீன முறையில் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றனர். எதிர்கால உலகின் முன்னேற்றத்திற்காக இவர்கள் உழைக் கின்றனர். ஆனால் எமது நாட்டில் மாணவர்களும், இளைஞர் களும், ஏன் வயோதிபர்களும்கூட அர்த்தமற்ற சித்திரக் கதைக ளிலும், நாவல்களிலும் தமது காலத்தையும், நேரத்தையும் முழ்கடிக்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் இவர்களின் சிந்தனைகளில் புரட்சிகர மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் இலங்கைத் தீவின் உன்னத காப்புறுதி ஸ்தாபனமான "செலிங்கோ ஆயுள்' வெளியிட்டுள்ள செலிங்கோ ரன்தரு புத்தி ப்ரபோத தமிழ் வெளியீடு வரவேற்கத்தக்க முயற்சியாகும். இந்த அளப்பரிய காரியத்திற்காக ஆசிரிய ஆலோசகரும், கலைத்துறையில் அதிக ஈடுபாடும் கொண்ட MA.A. றிழ்வான் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளமை அவரது எழுத்தாற்றலுக்கு கிடைத்த வெற்றியாகும்.”
அத்துடன் இவர் மொழி பெயர்ப்புத்துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். ‘ஒன்ன ஒஹமை வுனே’ (அதோ அப்படித்தான் நிகழ்ந்தது) எனும் சிங்கள நாவலொன்றை மொழிபெயர்த்து அதனை வெளியிட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தன்னுடைய கலை இலக்கியத்துறைக்கு வழிகாட்டியாக இருந்த ஆசான் எம்.எஸ்.எம். ஹரீஸ் அவர்களையும், கவிதைத் துறையில் ஈடுபட காரணகர்த்தாக்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்த ஏ.இக்பால், கலைவாதி கலீல் ஆகியோரையும், சிறுகதைத் துறையில் வழிகாட்டியாக இருந்த அல்-அஸஉமத் அவர்களையும், கட்டுரைத் துறையில் வழிகாட்டியாக இருந்த ஜவாத் மரைக்கார் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர்; கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவராவார். இவரின் முகவரி:
M.A. Ameer Rilwan. 387, Jameelas, தகவல் : 2006 ஜனவரி Nangalla - Thulhiriya.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீன் - 67

Page 33
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஏ.ஆர்.ஏ. அஸிஸ்
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த “குறிஞ்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் மெளலவி ஏ.ஆர்.ஏ. அஸிஸ் அவர்கள் ஒரு எழுத்தாளரும், கலைஞ ருமாவார்.
கிண்ணியாவைச் சேர்ந்த அப்துல் றசீது தம்பதியினரின் புதல்வராக 1948 ஆண்டு, டிசம்பர் மாதம் 20" திகதி பிறந்த அஸிஸ் அவர்கள் தி/குட்டிக்கராச் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, தி/கிண்ணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய வற்றின் பழைய மாணவராவார். இவர் கிண்ணியா புஹாரி அரபிக்கல் லூரியில் மெளலவிப் பட்டம் பெற்றார். அத்துடன் அல்-ஆலிம் பட்டமும் பெற்றுள்ள இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசா லையில் பயிற்சிபெற்ற பயிற்றப்பட்ட (இஸ்லாம்) ஆசிரியராவார். தற்போது கிண்ணியா உபவலயக் கல்வி அலுவலகத்தில் அரபுஇஸ்லாம் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் வீ.உம்மு ஸல்மா ஆவார். இத்தம்பதியினருக்கு முஹம்மது ஜவ்ஹரி, முஹம்மது அஸ்ஹரி, முஹம்மது அன்ஹரி, பர்ஹானா, பாஹிமா பேகம் ஆகிய ஐந்து அன்புச் செல்வங்களுளர்.
62- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இவர் இஸ்லாமிய அடிப்படையினைக் கொண்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் முதல் ஆக்கம் 1984 ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 திகதி தினபதி 'இஸ்லாமிய பூங்காவில் , சமூக ஒற்றுமைக்குப் பாக்கியவான்களின் பணி’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து இவரின் ஆக்கங்கள் தினகரன், நேயம், தினபதி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகையிலும் பிரசுரமாகியுள்ளன. ‘மர்ஹம் அப்துல் மஜீத் நினைவு மலரின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
பாடசாலையில் கற்கும் காலத்தில் வேலையில்லாத் திண்டாட் டம், விதானையார் வீடு, ஆசிரியர் வரும்வரை, பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகிய நாடகங்களில் நடித்துள்ள இவர் பல ஓரங்க நாடகங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் இஸ்லாமிய கீதம் பாடுவதிலும் இவருக்கு ஆர்வமுண்டு. மேலும் இஸ்லாமிய சமூக, அரசியல் நாடகங்கள் எழுதுவதிலும், பேச்சுப் போட்டிக்கான கட்டுரைகளை எழுதுவதிலும், காலத்துக்கேற்ப குத்பாக்களைத் தயாரித்துக் கொடுப்பதிலும், சமய சமூக முன்னேற்ற விடயங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவருமான இவர் தனது இலக்கிய, கலைத்துவ ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களான எஸ்.எச்.எம். இஸ்மாயில் அவர்களையும், மர்ஹம் எம்.டீ.எம். ஜப்பார் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார். இவரின் முகவரி:
A.R.M. Azeez Kurinchalcerny - 03 Kinniya.
தகவல் : 2006 ஜனவரி
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி 63

Page 34
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பதிவு
gg486 ལྷོ་
வை.எல்.எம். றிஸ்வி எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு " ... . மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதி, கோற ளைப்பற்று மத்தி; வாழைச்சேனை முஸ்லிம் f ...) பிரதேசத்தில் 206C கிராம சேவகர் பிரிவை r வசிப்பிடமாகக் கொண்ட வை.எல்.எம். றிஸ்வி شیبانی با | அவர்கள் படைப்பிலக்கியத்துறை, ஊடகத் ۷فیاییخ துறை என்பவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் | செயற்பட்டு வரும் ஒருவராவார்.
1980.08.21 இல் எம்.சி. யூசுப் லெப்பை - எம்.எஸ். றெஸினா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராகப் பிறந்த இவர் 1986 ல் வாழைச்சேனை அந்நூர் தேசியக் கல்லூரியில் தேசியக் கல்வியையும், வாழைச்சேனை இம்தாதுல் உலூம் அரபுக் ஹிப்ளு குர்ஆன் கலாசா லையில் சமயக் கல்வியைப் பெற்று, சமய உயர் கல்விக்காக 1992 இல் மீராவோடை மன்பஊடல் ஹதா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் இணைந்தார். இங்கு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம், அல்-ஆலிம் பரீட்சைகளில் தேறியதுடன், 1997 இல் சமய உயர் கல்வியைப் பூர்த்திசெய்து, மிக இளம் வயதில் 'மெளலவி மன்பஈ” பட்டம் பெற்றார்.
இக்காலப் பகுதியிலேயே இவர் இலக்கியத்துறையில் ஈடு பாடு காட்டத் தொடங்கினார். சிறுகதை, நாவல், கவிதைகள் என
64- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அதிகமான நூல்களை வாசித்ததன் மூலம் இலக்கியத்துறையில் தனக்கிருந்த தாகத்தைத் தீர்த்துக் கொண்டதுடன், தன்னையும் இலக்கியத்துறையில் மேம்படுத்திக் கொண்டார். இவர் தனது இலக்கியப் பிரவேசம் பற்றிக் கூறும்போது ‘நான் பாடசாலையில் படிக்கும்போது ஏனைய எல்லாப் பாடங்களை விடவும் இஸ்லாம், தமிழ் ஆகிய இரு பாடங்களில் தான் கூடிய புள்ளிகளைப் பெறுவதுண்டு. தற்போது ஒரு படைப்பாளி யாகவும், சமய அறிஞராகவும் திகழும் எனக்கு இயல்பிலேயே இவ்விரு துறைகளிலும் இறைவன் ஆளுமைகளை வைத்திருக்கின்றான். அதனால்தான் என்னால் இவ்விரு பாடங்களிலும் கூடிய மதிப்பெண்களை அப்போது பெற முடிந்திருக்கிறது” என்று குறிப்பிடுகின்றார். இலக்கியத்துறையில் தனது குருவாக எவரையும் தன்னால் பெறமுடியாமல் போனாலும், சேர் வை. அஹற்மட் அவர்களின் நூல்களும், ஏ.ஆர்.எம். றிஸ்வான் (பீ.ஏ) அவர்களின் தூண்டுதலுமே தான் எழுத்துத் துறைக்கு வருவதற்கான காரணமாக அமைந்தது என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார். அத்தோடு இலக்கிய உலகிற்கு தன்னை ஒரு படைப்பா ளியாக இனங்காட்டி வளர்த்துவிட்ட பெருமை நவமணிக்கும் அதன் ஆசிரியர் மதிப்பிற்குரிய எம்.பீ.எம். அஸ்ஹர் ஹாஜியாரையுே
சேரும் என நன்றியுடன் குறிப்பிடுகின்றார்.
“நவமணி” பத்திரிகையில் இவரது முதல் செய்தி ‘ஈரானியத் தூதுவர் அன்பளிப்பு’ எனும் தலைப்பில் 1998.02.22ம் திகதியும், முதல் கட்டுரை ‘குழந்தை வளர்ப்பு’ எனும் தலைப்பில் 1999.06.20ம் திகதியும், முதல் கவிதை ‘புது உலகம் படைப்போம்” எனும் தலைப்பில் 2000.03.12 திகதியும் வெளிவந்துள்ளன. மொத்தமாக 23 கவிதைகள், 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் உளவியல் சமய சமூகக் கட்டுரைகள், ஏராளமான பொதுஅறிவு ஆக்கங்கள் நவமணி, தினகரன், கலைமுத்து, புதிய தொனி, அல்ஹுதா, நூருல் ஹதா, செந்தூரம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந் துள்ளன. அத்துடன் 2003ல் ‘பொன்மொழிப் பேழை” (40 நபி மொழித் தொகுப்பு) ISBN 955-8409-05-7, 2004ல் “உலகம் போற்றும் உத்தமர்” (வரலாறு) ISBN 955-8409-06-5, 2005ல் 'அல்குர்ஆனை அணுகும் முறை” (வழிகாட்டி நூல்) ISBN 955-8911-06-2 என
தொகுதி 07 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 65

Page 35
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
மூன்று இஸ்லாமிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சில நூல்கள் வெளிவந் துள்ளன. 2001ல் வாழைச்சேனை ஷல்மானுல் ஹாரிஸின் ‘எழுது கோலும் என் வெள்ளைத்தாளும்” கவிதை நூலும், மர்ஹ?ம் எம்.எச்.எம். அஷரப் அவர்களின் ஓராண்டு நினைவு மலரான “கண்ணிர்ப் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு நூலும், 2002ல் புலமைப் பரிசில் சித்தியடைந்தவர்களுக்கான சிறப்பு மலரான ‘நந்தவனப் பூக்கள்” நூலும், ஸபீர் ஹாபிஸின் ‘பாலைவனத்துப் பயணங்கள்” கவிதை நூலும், ஓட்டமாவடி எம்.பீ.நளிமின் ‘சமாதிச் சத்தங் கள்’கவிதைத் தொகுதியும், 2003ல் ஓட்டமாவடி எம்.பீ.நளிமின் மற்று மொரு வெளியீடான “காலச்சிறகுகளின் அக்கினிச் சிறகு” கவிதைத் தொகுதியும், பதிப்பாளரின் 3 நூல்களும், “புதிய தொனி’ 3 இதழ்கள், “கோஷம்” 5 இதழ்கள் என மொத்தமாக 17 நூல்கள் இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளன.
2001.09.16" திகதி “கண்ணிர்ப் பூக்கள்” நூல் வெளியீட்டு விழா, 2001.11.04" திகதி ஓட்டமாவடி அரபாத்தின் ‘ஆண்மரம்” சிறுகதைத் தொகுதி அறிமுக விழா, 2002.09.10" திகதி அஷ்ஷெய்க் அப்துல் ஹலீமின் “பாலியலும் பருவ வயதும்” நூலின் அறிமுக விழா, 2004.04.07ம் திகதி யூ.எல்.எம். நஜீபின் “ஜன்னத்” கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா என்பவற்றை இவர் முன்னின்று நடத்திக் கொடுத்ததன் மூலம் பிரதேச படைப்பாளர்களுக்கும் கைகொடுத்து வருகின்றார்.
இவர் ‘புதிய தொனி’ கலை இலக்கிய இதழின் பிரதம ஆசிரியராகவும் (3 இதழ்கள் வெளிவந்துள்ளன), “கோஷம்” கவிதை இதழின் பிரதம ஆசிரியராகவும் (5 இதழ்கள் வெளிவந்துள்ளன), “நஜா” செய்திப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் (3 இதழ்கள் வெளிவந்துள்ளன), “அல்ஹதா” இஸ்லாமிய சஞ்சிகையின் நிருவாக ஆசிரியராகவும் (3 இதழ்கள் வெளிவந்துள்ளன) இருந்து செயற்பட்டி ருக்கின்றார். இதன் மூலம் கல்குடா முஸ்லிம் இதழியல் வளர்ச்சிக்கும் 66- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
புதிய பல படைப்பாளர்களின் உருவாக்கத்திற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தற்போது மீராவோடை மன்பஉல் ஹதா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் 6 வருடங்களாக அலுவகப் பொறுப்பாளராகவும், வாழைச்சேனை அல்மத்ரஸ்துஸ் ஸலாமிய்யா தஜ்வீத் குர்ஆன் கலாசாலையில் 6 வருடங்களுக்கும் மேலாக பகுதிநேர விரிவுரையா ளராகவும் கடமைபுரிந்து வருகின்றார்.
ஓட்டமாவடி அல்மத்ரஸதுல் ஸலாஹிய்யா குர்ஆன் கலாசா லையில் ஞாயிறு தினங்களில் அஹதிய்யா வகுப்புக்களையும், வாழைச்சேனையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் குர்ஆன் விளக்க வகுப்புக்களையும் தொடராக நடாத்தி வருகின்றார். அத்தோடு ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய உயர்கல்விக்காக அரபுக் கல்லூரி களுக்குச் செல்லவிருக்கும் கல்குடாத் தொகுதி மாணவர்களை ஒன்றிணைத்து, 15 நாட்கள் கொண்ட “இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டல்” பயிற்சிக் கருத்தரங்குகளை சுமார் 4 வருடங்களாக ஏற்பாடு செய்து நடாத்தி வருவதன் மூலம் பிரதேச மக்களினதும் இளைய தலைமுறையினரதும் நன்மதிப்புக்கு உரியவராகவும் இவர் திகழ்கின்றார்.
வாழைச்சேனை இஸ்லாமிய கலை இலக்கிய கலாசாரப் பேரவையின் பணிப்பாளராகவும், பைவ் ஸ்டார் சமூக சேவை நிறுவ னத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் உப செயலாளராகவும், வாழைச்சேனை ஜம்இய்ய துல் நஸ்ரில் இஸ்லாம் சமய வழிகாட்டல் அமைப்பின் உறுப்பினரா கவும், கல்குடா முஸ்லிம் படைப்பாளர் பேரவையின் செயலாளரா கவும், கல்குடா முஸ்லிம் ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினரா கவும், கல்குடா இஸ்லாமிய கல்வி கலாசார நிலையத்தின் உறுப்பின ராகவும், கல்குடா இஸ்லாமிய எழுச்சி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்து சமய, சமூக இலக்கியப் பணியாற்றி வருகின்றார்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 67

Page 36
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
நிறைந்த வாசிப்பும், தேடலும் கொண்ட இவர் மூன்று நாடகங் களை எழுதித் தயாரித்து வழங்கியதன் மூலம் கலைத்துறையிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். 2002ல் “அபீசீனியா ஹிஜ்ரத்”, 2003ல் “இஸ்லாத்தில் மனித நேயம்”, 2005ல் “அநாதைச் சிறுவன்’ ஆகிய நாடகங்களைத் தயாரித்து வழங்கி பலரது பாராட்டையும் பெற்றவர்.
மிகுந்த சுறுசுறுப்பும், சிறந்த பல்துறை ஆளுமையும் கொண்ட இவர் தனது (2005.03.01ல்) 24 வயதிற்குள் இவ்வளவு சாதித்திருப்பது இவரின் மிகச் சிறந்த எதிர்காலத்தை சமிக்ஞை செய்கின்றது. இவரின் முகவரி:
Y.L.M. Rizvi ʻRifanaManzilʼ V.C Rd. Valaichenai - 05
தகவல் : 2005 மார்ச்
68- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.எச். மொஹம்மட் (முஸம்மில்) கலைத்துறை
தென்மாகாணம், காலிமாவட்டம், அக்மீ மன தேர்தல் தொகுதியைச் சேர்ந்த, காலி பிரதேச செயலகப் பிரிவில் "நுகதுவை கிராம சேவகர் எல்லைக்குள் வசித்துவரும் மொஹம்மட் ஹம்ஸா மொஹம்மட் அவர்கள், தனித்துவமான ஓர் இஸ்லாமியக் கலையான ‘கஸ்தா' கலையை இலங்கையில் குழு ரீதியில் அறிமுகப் படுத்தப் பிரயத்தனப்படும் ஒரு கலைஞராவார். எம்.எச். மொஹம்மட் அவர்கள் ‘முஸம்மில்
எனும் பெயரில் பிரதேச மக்களால் அறியப்படுபவர்.
1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி காலி - கட்டு கொடையைச் சேர்ந்த மொஹமட் ஹம்ஸா, ஜெஸிமா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர், கா/கட்டுகொடை ஆண்கள் வித்தியால யத்தின் (தற்போது தாஸிம் வித்தியாலயம்) பழைய மாணவராவார்.
தற்போது ரீலங்கா துறைமுக அதிகார சபையில் (காலி துறைமுகம்) கடமையாற்றி வரும் இவர் எம்.எல். சைனுல் மர்லி யாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு பாத்திமா நப்ஹா, முஹம்மட் நவ்ஷாட், முஹம்மட் நஜாத், பாத்திமா நஸ்ரா ஆகிய அன்புச் செல்வங்களுளர்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 69

Page 37
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அரேபியரின் சமுதாயத்தில் இசைக்கலை மிக முக்கிய இடத்தை வகித்தது. இசைக்கருவிகளை (வாத்தியக்கருவிகள்) பயன் படுத்துவதை இஸ்லாம் தடை செய்த போதிலும் பாடலும், புல்லாங் குழல் வாசித்தலும் அரேபியரின் மிகுந்த விருப்பத்திற்குரிய பொழுது போக்குகளாக இருந்தன. மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஒரு சூழலை உருவாக்கும் பொருட்டு 'ஈத் தினங்கள், திருமணம், பிறப்பு, பிரயாணி வீடு திரும்புதல் முதலான கொண்டாட்டங்களுக்குரிய சந்தர்ப்பங்களில் பாடல்கள் இசைப்பதை இஸ்லாம் அனுமதித்தி ருந்தது. எனவே, அரேபியர் தங்கள் பகல் வேளை முடிந்த பின்னர் இரவின் ஒரு பகுதியை பாடல்கள் இசைப்பதிலும், புல்லாங்குழல், ‘கித்தார்’ ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதிலும் கழித்தார்கள். 'ஜோஸப் ஹெல்" என்பார் கூறுவது போல, ஹிஜ்ரி முதலாம் நூற் றாண்டின் மத்திய பகுதியிலேயே மக்காவும், மதீனாவும் அரபு இசையினதும், பாடலினதும் அரங்கமாக விளங்கின. மக்காவில் செல்வந்தர்கள் நம்பமுடியாத அளவுக்குப் பெரும் விலை கொடுத்து aấGJäsa5, LuTJáfabiu um Laálas6oo6T 6THIẾl6OTj. (Joseph Hell: The Arab Civilization Pg-49-50) வட அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் சிறந்த பாடகிகளாக விளங்கினர். ஒழுக்கத்தில் மிகக் கண்டிப்பான கொள்கை யைக் கடைப்பிடித்த கலீபா உமர் கூடச் சில சமயங்களில், நகரத் தைச் சுற்றி வரும்போது, சற்று நின்று அவர்களது பாடல்களைக் கேட்டு வந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். (Ameer Ali: a Short History of the Saracens Pg. 67) (3,556. Quibo கலீபாக்களின் காலத்தில் வாழ்ந்த சிறந்த பாடகர்களுள் ஸாஇப் காதிர், அஹற்மத் அல் நஸிபி, ஹ?னைன் அல் ஹிரி ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். (ஏ.எம். அபூபக்கர். இஸ்லாமிய வரலாறு பாகம் 1 - பகுதி - I - பக்: 135)
எனவே வரலாற்று ரீதியில் நோக்கும் போது வரையறுக்கப்பட்ட இசைக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு என்பது உறுதிப்படுத்தப்படு கின்றது. எமது இலங்கையில் 19 நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அரபுமொழி பாடல்கள்
70- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ராத்திபு மஜ்லிஸ்களிலும், ஏனைய வைபவங்களிலும் பைத்துக்களாக ஒலித்துள்ளன. பல்வேறுபட்ட காரணிகளின் நிமித்தமாக இவை அருகி விட்டன. நவீன தொழில்நுட்ப வசதிகள் அபிவிருத்தி கண்டு வரும் இக்கால கட்டத்தில் இஸ்லாமிய உலகிலும், இஸ்லாமியர்கள் மத்தியி லும் ‘கஸிதாக்கள் புதுவடிவத்தில் பிரபல்யம் பெற்று வருகின்றன. அரபுலகத்தை விடுத்து ஆசிய நாடுகளை எடுத்துக் கொள்வோமா னால் இன்று மலேஷியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ‘கஸிதா ஒரு தனிக்கலையாக பரிணமித்துவிட்டது.
இலங்கையிலும் இந்தக் களிதாக்கள் பாரியளவில் பிரபல்யம டையாவிடினும் கூட கஸிதாக்களை இஸ்லாமியர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இத்தகைய ஒரு பணியினையே எம்.எச். மொஹம்மட் மேற்கொண்டு வருகின்றார். இவர் இரண்டு ‘கஸிதாக்குழுக்களை’ அமைத்து அக்குழுக்களை திறம்பட பயிற்றுவித்து இஸ்லாமிய பொது வைபவங்களில் மேடையேற்றி வருகின்றார். சாதாரணமாக ஒரு இசைநிகழ்ச்சி மேடையேற்றப்படும் போது மக்கள் திரள்வதுபோல இவரின் ‘கஸிதா நிகழ்ச்சி மேடையேற்றப்படும் போது காலிப் பிரதேசத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடுவது விசேட அம்ச LDIG51D.
இத்தகைய ஒரு புதிய முயற்சியில் நீங்கள் எந்த அடிப்படை யில் ஈடுபட்டீர்கள் என்று எம்.எச். மொஹமட்டிடம் வினவிய போது “பண்டைக்காலம் தொட்டு இருந்துவரும் கஸிதாக்கள் இன்றைய சமூகத்தினரிடம் இல்லாதது போகாமல் - முடிந்த அளவு அரபு, உருது போன்ற மொழிகளில் வெளியாகும் கஸிதாக்களை சேகரித்து மாணவர்களுக்கு பயிற்றுவித்து மேடையேற்றுவதன் மூலம் எமது இஸ்லாமிய கலாசாரத்தை உயிர்ப்பிப்பதே எனது நோக்கம்.” என்றார். இவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த போது ‘இன்றைய இஸ்லாமிய சமூக இளம் சிறார்கள் பாடல்களையே முணுமுணுத்து வருகின்றார்கள். இத்தகைய சிறார்கள் சினிமாப் பாடல்களுக்குப் பதிலாக ‘கஸிதாக்களை தமது வாயில் நுழைத்துக் கொள்வார்களா யின் அதுவே எனக்குப் பெரிய வெற்றியாகும்” என்றும் கூறினார்.
தொகுதி 07 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 7

Page 38
முள்விம் எழுத்தாங்ார்கள், ஆடகப்பாளர்கள், கடிடிஆர்கள் விபரம் - பாகம் ே
2004' ஆண்டிலிருந்து இவர் இந்த விசேடமான கலைப்பணி பயினை ஆற்றி வருகின்றார். இவரிடம் இரண்டு களமீதாக்குழுக்கள் தற்போது உள்ளன. முதலாம் குழுவில் நிஎல்லா இக்ரம், பஹற்மிதா பாரூக், அஸ்மா ஹரிஸ், ருஸ்தா பரீஸ், நஸ்ரின் நியாஸ்தீன், நளயீரா நிஸாம், இர்பானா பைஸர், நஸ்ரா முஹம்மட், ஹைரியா கமீல், இனாஸா இக்ரம், சபீனா அ.லம், நஸ்லா நியாஸ்தீன், பஸ் மினா பரீஸ் ஆகியோரும் இரண்டாவது குழுவில் எம்.எஸ்.எம். பெளசான், எம்.ஆர்.எம். ரினோஸ், எம்.என்.எம். பெனாஷ், எம்.எப்.எம். நப்லி, எம்.என்.எம். மபாஸ், எம்.எஸ்.எம். ஸ்கிர், எம்.ஏ.எம். அக்ரம், எம்.ஏ.எம். மபாஸ், எம்.எம். நெளஷாட், எம்.எப்.எம். இன்பாஸ், எப்.எம். பஹாட் நஜாட் முஹம்மட், முஹம்மட் ரிம்ஹான் ஆகிய சிறார்கள் இணைந்துள்ளனர். இந்த களதோ குழுவின் தொழில்நுட்ப உதவியாளர்களாக எம்.ஆர்.எம். ரமீளல், எஸ்.எச்.எம். அப்லால் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றார்கள். களிதாக்குழு அமைப்பாளரா கவும், நெறிப்படுத்துபவராகவும் எம்.எச். முஹம்மட் கடமையாற்றி வருகின்றார். இந்த களிதா குழு "நுகதுவ களதோ குழு என அழைக்கப்படுகின்றது.
"நுகதுவ களிதா குழு பின்னணி இசையாக "ஹழரா எனும் திக்ரையே (திக்ர்-இறைதுதி) பயன்படுத்துகின்றது. பின்னணியில் ஒலிக்கும் இந்த திக்ர்கள் இசைக்கருவிகளினால் எழுப்பப்படும் ஒலிக்கு ஒத்ததாக இருக்கும். அத்துடன் ‘ரபான் இசையும் பயன்படுத்தப்படு கின்றது. அரபு, உருது பாடல்களோடு மாத்திரம் களிதாக்களை அமைக்காமல் தமிழ் மொழியிலும் களமீதாவை மொழிபெயர்த்து ஹழரா இசையுடன் இசைத்தால் மேலும் பிரபல்யமடையலாம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் கருத்துக்கள் மக்கள் மத்தியில் செல்வதற்கு தாய்மொழி இலகுவாக வழிவகுக்கலாம்.
காலி மாவட்டத்தில் பண்டைய இஸ்லாமிய கலாசாரத்தைத் தழுவிய நடைமுறைகள் இன்றும் குறிப்பிடத்தக்களவுக்கு அமுலில் இருக்கின்றன. கந்தூரி வைபவம் இதில் விசேடமானது. காலிமாநகரின் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கக் கூடிய பெரிய பள்ளிவாசல்களில் ஒவ்வொரு சமயப் பெரிபார்களின் பெயரில் மெளலிது எனப்படும் கீர்த்தனம் ஓதப்பட்டு கந்தூரி எனும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கந்தூரிக்கு முதல்நாள் இரவுகளில் விசேடமான வைபவங்
? இபங்கை எழுத்தாளர்கள்,நாடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

T. 1) 1 ' | | | | Iा ।1ा । | ..|| || || . I..." i 1,"ন্ম l,
- - - - -
நாது தாக் குழு
S S
.7 ** ** Łt, 1 *; **vită a jari KrF, IF if* 7 + דוי "1 ח+T, ל', נ"ז -

Page 39
முஸ்லிம் எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கனடிஞர்கள் விபரம் - பாகம் 6
கள் ஒழுங்குபடுத்தப்படுவதுண்டு.
முன்னைய காலங்களிலென்றால் இலங்கையில் பிரபலமாக இருக்கும் இசைக்குழுக்களைக் கொணர்ந்து இசைக்கச்சேரி (Musiபal Show) நடத்தப்படும். அதில் பிரபலமான பாடகர்கள் கலந்து கொண்டு, பிரபலம் பெற்ற சினிமா, பொப்பிசை மெல்லிசைப் பாடல் களை மும்மொழியிலும் இசைத்து - பணம் பெற்றுச் செல்வார்கள். பாடினால் ஆடத்தோன்றும். இவ்வகையான இசைக் கச்சேரிகளின் போது - அனாச்சாரங்கள் மலிந்தமையினால் முற்போக்குச் சிந்தனையு டையோரால் இந்நிகழ்ச்சி இப்போது முற்றாகத் தவிர்க்கப்பட்டு, சுய திறமையுள்ள மாணவர்களதும், கலைஞர்களதும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமன்றி, காலி நகரில் இயங்கிவரும் பல்வேறு இயக்கங் கள் சமூக, கலாசார விழுமியங்களைப் பேணும் வண்ணம் இளம் சந்ததியினரிடையேயுள்ள இயல்பான திறமைகளை வளர்ப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்ற ஆவல் கொண்டுள்ளன. அந்த வகையில் நுகதுவ களிதாக் குழுவினருக்கு அந்த இயக்கங்களிடையே பெரும் வரவேற்புள்ளது. களிதாக்களை மேடையேற்றுவதற்காக இவர் எந்தவொரு வெகுமதியையும் எதிர்பார்ப்பதில்லை என்பது விசேட அம்சமாக இருக்கும் அதேவேளை, பங்குபற்றும் சிறுவர், சிறுமியருக் கான நலன்களை அந்தந்த இயக்கங்களே பொறுப்பேற்றுக் கவனிக்க வேண்டும் என்பதில் கரிசனையாகவும் இருக்கின்றார்.
இலங்கையிலே ‘களிதாக் குழுக்களாக நிகழ்ச்சியை நடத்தி வருவது இதுவே முதல்தடவை. நுகதுவை களிதாக்குழு தற்போது காலி மாவட்டத்துக்குள் மட்டும் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தாலும், காலகெதியில் தேசிய மட்டத்தில் இதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எம்.எச். மொஹம்மட்டின் இலட்சியமாகும். இவரின் முகவரி:
M.H. Mohamed 516. A. Akuressa Road Nugaduwa Galle. தகவல் : 2007 ஜனவரி
74. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முலப்னிம் எழுத்தாளர்கள், முளடகவியடிாளர்கள், கலைஞர்கள் விடாய் பாகம் (
பதிவு
88
மொஹம்மட் அக்ரம்
மத்திய மாகாணம், மாத்தளை மாவட்|: டம், ரத்தொட்டை தேர்தல் தொகுதியில்,|இ உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவைச்|: சேர்ந்த "மானாம்பொடை கிராமத்தில் வசித்து வரும் சாஹல் ஹமீட் மொஹம்மட் அக்ரம் அவர்கள் முற்போக்கு சிந்தனைமிக்க ஒரு எழுத்| தாளராவார்.
1973" ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் ... L. - திகதி சாஹுல் ஹமீது தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அக்ரம் உக்குவளை அஜ்மீர் தேசிய கல்லூரியின் பழைய மாணவராவார். தற்போது சுயவியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர் பாத்திமா சியானாவின் அன்புக் கணவராவார்.
1993 முதல் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் கன்னிச் சிறுகதை 1993 நவம்பர் மாதம் 28 திகதி "சுவடுகள் எனும் தலைப்பில் தினமுரசு வாரமலரில் பிரசுரமானது. இதிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய கதைகள் தினமுரசு வாரமஞ்சரி, ஜனனி வாரமஞ்சரி, தினகரன், தாய்மொழி, ரோஜா, கலைமுரசு, மித்திரன் வாரமலர், அமுது, நவமணி, ப்ரவாகம், தாமரை (இந்தியா), ஆதவன், ஞானம், முஸ்லிம்குரல், இடி, மீள்பார்வை, அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைக
தொகுதி ம கலாபூஷணம் LಟFéfouTufi -

Page 40
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 6
ளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
தேசிய ரீதியில் பல போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.
1. கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1992 அரச இலக்கிய தினத்திற்காக ஒழுங்கு செய்த பிரதேச இலக்கிய விழா தொடர்பின் கீழ் நடைபெற்ற அகில இலங்கை சிறு கதைப் போட்டியில் இவரது சிறுகதை முதலாமிடத்தைப் பெற்றது.
2. 1999' அரச இலக்கிய தினத்திற்காக ஒழுங்கு செய்த பிரதேச இலக்கிய விழா தொடர்பின் கீழ் நடைபெற்ற அகில இலங் கை கவிதைப் போட்டியில் இவரது கவிதை மூன்றாமிடத்தைப் பெற்றது.
3. 1999" ஆண்டு சுதந்திர இலக்கிய விழா “ விபவி கலாசார
மையம் நடத்திய "இளம் எழுத்தாளர்களுக்கான படைப்பி லக்கியப் போட்டியில் இவரின் சிறுகதை விசேட விருது பெற்றது.
4. 2002 ஆண்டு சுதந்திர இலக்கிய விழா “ விபவி கலாசார மையம் நடத்திய "இளம் எழுத்தாளர்களுக்கான படைப்பி லக்கியப் போட்டியில் இவரின் சிறுகதை மூன்றாமிடம் பெற்றது.
5. 2002 ஆண்டு சர்வோதய அமைப்பு அகில இலங்கை
ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை மூன்றாமிடம் பெற்றது.
75- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முகிப்லிம் எழுத்தாளர்கள், நாடகவியடிாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் :
f. இளைஞர் விவகார அமைச்சு தேசிய இளைஞர், சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் பரிசளிப்பு 2000 போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் இவரது சிறுகதை முதலாமிடத்தைப் பெற்றது.
7. இளைஞர் விவகார அமைச்சு தேசிய இளைஞர், சேவைகள்
மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் பரிசளிப்பு 2001 போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் இவரது சிறுகதை சிறப்பு விருது பெற்றது.
இதுவரை இவரது சிறுகதைத் தொகுதியொன்று “அம்ரிதாவின் கதைகள் எனும் தலைப்பில் நூலுருப்பெற்றுள்ளது. மேலும், 2003 மாத்தளை மாவட்ட - உக்குவளை மீலாத் விழா சிறப்பு மலரில் 'உக்குவளைக் கிராமமும் அதன் வரலாறும் எனும் கட்டுரை பிரசுர மானது.
இவரால் ப்ரவாகம், கவிப்பிரவாகம் ஆகிய இரண்டு சஞ்சிகை கள் வெளியிடப்பட்டுள்ளன. 'ஊரின் பெயரை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமே என்னை இலக்கியத்துறையில் ஈடுப வைத்தது” என அடக்கமாகக் கூறும் இவர் உக்குவளை அக்ரம், உக்குவளையூர் அம்ரிதா ஆகிய பெயர்களில் எழுதி வருகின்றார்.
இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகை - சஞ்சிகை களுடனான தீவிர வாசிப்பும் நண்பன் ஆவழிப் ஏ- புஹாரியின் உளக்கமும் தான் எழுத்தினை நெறிப்படுத்திக் கொள்ள உதவின என்று தெரிவிக்கும் இவரின் முகவரி:
S. I I.M. Akramn 23, Kandy Rd. MladaWala BazyaT. தகவல் : 2003 நவம்பர்
தொகுதி 17 கலாபூஷணம் புனிணியாமீர் 77

Page 41
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
மு.மீ. அமீர் அலி
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட் டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ‘காத்1 தான்குடி பிரதேச சேவகர் பிரிவில் அமைந்| துள்ள காத்தான்குடி 165B மூன்றாம் குறிச்சி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் முகம்மது மீராசாகிபு அமீர் அலி அவர்கள் ஒரு எழுத்தாளராவார்.
காத்தான்குடியில் மீராசாகிபு தம்பதியி
னரின் புதல்வராக 1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி பிறந்த அமீர் அலி, மட்/ஹிழ்றியா வித்தியாலயம், மட்/காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் பழைய மாணவராவார். பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக மட்/அல்-ஹிறா வித்தியாலயத்தில் (காத்தான்குடி) கடமையாற்றும் இவர் அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ‘கணித பாடத்தில் விசேட பயிற்சி பெற்றவர். அத்துடன் கிழக்குப் பல்லைக்கழகத்தில் (வெளிவாரி) கலைமாணி பட்டமும் பெற்றுள்ளவர்.
1975ம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறையில் இவர் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மணிக்கதைகள், உருவகக் கதைகள் என நூற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின கன்னிக் கவிதை தினபதி கவிதா மண்டலத்தில் ‘அன்னைக்கு’ எனும்
78- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
தலைப்பில் 1978.05.25 திகதி பிரசுரமானது. அதைத் தொடர்ந்து அமீர் அலி, இளங்கோ அமீர் எனும் பெயர்களில் தினபதி, தினகரன், சிந்தாமணி, கலைத்தீபம், சுடர், இனிமைக்குரல், சித்ரா, கலைஅமுதம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இவரின் சில கவிதைகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
சமூக அவலங்கள், சமூக மூடநம்பிக்கைகள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள், எழுதிவரும் இவர் பத்துக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார். காத்தான்குடி - நவ இலக்கிய மன்றம், மட்டக்களப்பு - தமிழ் எழுத்தாளர் பேரவை ஆகிய இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகித்துவரும் இவர் தனது எழுத்துலக ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கவிஞர் எம்.பீ.சிராஜ்டீன், கவிஞர் எருவில் மூர்த்தி, கவிஞர் சாந்தி முஹியித்தீன் ஆகியோரை நினைவு கூர்ந்து வருகின்றார்.
அமீர் அலி, அனிஷாவின் அன்புக் கணவராவார்.
இத்தம்பதியினருக்கு முகம்மது ஜுமானி, முகம்மது ஜூஸாரி ஆகிய இரண்டு புதல்வர்கள் உள்ளனர். இவரின் முகவரி:
M.M.Ameer Ali “Dharul Jumaani” Central Road, Kattankudy - 03
தகவல் - 2004 டிசம்பர்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி 79

Page 42
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எஸ். நஜிமுதீன் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்த மருது பிரதேச செயலாளர் பிரிவில் அமைந் துள்ள, சாய்ந்தமருது - 7 கிராம சேவகர் எல்1 லையில் வசித்துவரும் டாக்டர் சிஹாப்தீன் நஜி முதீன் அவர்கள் ஒரு பிரபல்யமான எழுத்தாள ராவார்.
1958ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 30 --- திகதி சாய்ந்தமருதுவில் சஹாப்தீன் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த நஜிமுதீன் தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றார். பின்பு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் M.B.B.S. பட்டம் பெற்று டாக்டராக வெளியேறினார். தொடர்ந்து மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவனத் 56) (GasT(publ u6b5606)disabgabb) Diploma - in - Family Medicine பட்டம் பெற்றார். தற்போது பிரதிமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தாய்-சேய் நல வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார். இவரது அன்பு மனைவி Y1. லதீபா அவர் களும் ஒரு டாக்டராவார். இவர் சாய்ந்தமருது, மாவட்ட வைத்தியசா லையில் பதிவு வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார். இத்தம்பதியினருக்கு அஹமட் நஜாஷ், அஹமட் நிகாஷ், பாத்திமா 80- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
தஹானி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
1977 இலிருந்து இலக்கியத்துறையில் ஆர்வம் செலுத்திவரும் இவரின் கன்னிச் சிறுகதை ‘ஈழநாடு’ பத்திரிகையில் 'இழப்பதற்கு எதுவுமில்லை’ எனும் தலைப்பில் பிரசுரமானது. அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைக ளையும் எழுதியுள்ள இவர் “முள்ளில் படுக்கையிட்டு.” எனும் நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.
சாய்ந்தமருது “டீன்ஸ் பதிப்பக வெளியீடாக 2000ம் ஆண்டு வெளிவந்த ‘நாட்டார் பாடல்கள் பற்றிய இந்நூல் பற்றி ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தர ணியுமான (மர்ஹஉம்) எம்.எச்.எம். அஷரப் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
6 G
0. முள்ளில் படுக்கையிட்டு” என்ற நூலினி வரைவை பார்வையிட்ட போது சில புதிய சிந்தனைகள் எனக்குள் எழுந்தன. நாட்டுப் பாடல்கள் என்பவை வெறுமை யான ஒரு கலை வெளிப்பாடாக எனக்குத் தோன்றவில்லை. கலையழகுக்கு அப்பால் நிறையப்பணிபுகளை மட்டும் இப்பாடல்கள் காட்டுகின்றன. படியாத மக்களுக்கு மத்தியிலிருந்த கற்பனைவளம் அதிசயிக்கத்தக்கது. காதலன் தனி காதலி யை எப்படியெல்லாம் வர்ணிக்கிறானி எனிபதைப் பாருங்கள். ‘மாலை வெள்ளி', 'வாழைப்பழம்’, ‘வடிவால் உயர்ந்த முத்து', 'ஈரத்துளிர்’, ‘இளங்குருத்து", "கானமயில்’, ‘ஈச்சங்கனி".
பாலுணர்வு மனித சமுதாயத்தின் அடிப்படை உந்து சக்தியாகும். காதல் அந்த உணர்வுக்கான அழகிய ஆடை யாகும். மதங்கள் இந்த உணர்வுகளையும் காதலர் உறவுக ளையும் அழகாக ஒழுங்குபடுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கிலங்கையின் சமூகக் கட்டுப்பாடுகள் இவ்வுணர்வுகளின் சீர்மையை மேற்பார்வை செய்கின்றது. இந்தச் சிக்கல்களுக்கு மத்தியிலும் தமது உணர்வுகளை எமது முன்னோர் வெளியிட்டுள்ள பாங்கு படித்துச் சுவைப்பதற்கு மட்டுமல்லாமல் எம்மை ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கின்றது. இயற்கை
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 81

Page 43
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 உணர்வுகளுக்கும் சமூக மதக் கட்டுப்பாடுகளுக்கும் முற்றாக சரணடை யாத சமநிலைச் சூழ்நிலையில் நமது கிராமத்து இலக்கியக் கதாநாயகர் களும், கதாநாயகிகளும் நடந்திருக்க வேண்டும். இஸ்லாமிய மத உணர்வுகள் நமது கிராமத்துக் காதலில் ஏற்படுத்திய தாக்கத்தை இக்கவிதைகளில் காணலாம். காதலன் காதலியை ஒரிடத்தில் ‘கலிமா உவந்த முத்து' என்று வர்ணிப்பதைப் பார்க்கலாம்.
டாக்டர் நஜிமுதீன் நல்லதொரு பங்களிப்பைச் செய்திருக் கின்றார். அடக்கமும், பணிவும், நல்ல குணங்க ளும் இவரது சிறப்பம் சங்கள். இவரது தந்தை "சஹாப்தீன் காக்கா’ எனது நெருங்கிய நண்பர். இவரது சகோதரர் சட்டத்தரணி எஸ். நிஜாமுதீன் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் எனது பாசறையில் வளர்ந்த திறமை சாலி. இவரது இன்னும் ஒரு சகோதரர், எஸ். நளிறுதீன் நல்லதொரு சிறுகதை எழுத்தாளர். சஹாப்தீனி காக்காவும் நஜிமுதீனின் உம்மாவும் பெருமைக்குரிய பெற்றோர்கள். டாக்டர் நஜிமுதீனின் இலக்கியப் பணி தொடர்ந்து, வளர்ந்து பிரகாசிக்க இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.”
இது தவிர சாய்ந்தமருது கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக
எஸ். நஸிறுதீனுடைய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை இவர் வெளியிட்டுள்ளார். அவை
1. நல்லதோர் வீணை செய்தே
2. பெண்ணே போற்றி
2002 ஆண்டில் இவரின் இலக்கியப் பணியைக் கருத்திற் கொண்டு தடாகம் சஞ்சிகையும், சிந்தனைவட்டமும் இணைந்து கொழும்பு, பம்பலப்பிட்டிய சவோய் ஹோட்டலில் நடத்திய விழாவில் கெளரவிக்கப்பட்டார். எஸ். நஜிமுதீன் தன் எழுத்துக்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“...இலக்கியத்துறைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு கணிறுக்குட்டி, தனது யெளவனப் பருவத்தில் இயல்பாகவே
82- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அமைந்திருந்த புலமையின் வெளிப்பாடாய். வாசிப்புப் பழக்கத்தினால் ஏற்பட்ட மொழியறிவினி துணையுடன் சொற்களைச் சரமாய்க் கோர்க்கப் பழகியது. பரம்பரை பரம்பரையாய்ச் “சரசுவதி குடி கொணிட நாவுடையோர்’ என்று வசவுக்கோ. வாழ்த்துக்கோ வழங்கப்பட்ட குடும்பத்தினி ஒரு வாரிசு வரையத் தொடங்கிய வார்த்தை வரிகள் பல்லாண்டு காலம் தங்களுக்கென ஒரு சிறையறை யைச் சொந்தமாக்கிச் சிலந்திவலை பின்ன சன்னலால் சஞ்சரித்துக் கொணிடிருந்தன.
“. பல்கலைக்கழகம் எனும் மீட்போன் உதவியு டன் அவை சிறை மீட்கப்பட்டன. சிறிதுகாலம் வெளியுலகச் சஞ்சாரம். அந்தக் குறுகிய காலத்துள் பல கவிதைகள், சில சிறுகதைகள் அச்சேறின. பல கவிதைகள் பல கலைக் கழக சஞ்சிகைகளிலும், சில பத்திரிகைகளிலும் வெளிவர ஒரு கதை அனிறைய ஈழநாடு பத்திரிகையில் மார்கழி 1989ல் இடம்பிடித்ததுளூ மட்டுமல்லாமல் கொழும்பில் இயங்கிய தமிழ் கலைஞர் வட்டம் எனப்படும் “தகவத்” தினால் அந்த 1989 வருடத்தின் கடைசிக் காலாண்டு பருவத்தில் இலங்கையின் சகல பத்திரிகைகளிலும் வெளியான சிறுகதைகளுள் சிறந்தது எனும் பாராட்டும், சான்றிதழும் பெற்றது.”
1983 ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் முழுநேரம் பணி புரிந்து வந்த போதிலும் கூட இவரையும் மீறி எழும் இலக்கியத்தின் ஆர்வம் காரணமாக தொடர்ந்தும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதும், இலக்கிய மேடைகளில் தோன்றிவருவதும் குறிப்பிடத் தக்கது. இவரின் முகவரி:
Dr. S. Najimudeen.
03, Hospital Rd, Sainthamaruthu - 7
தகவல்: 2004 டிசம்பர்
தொகுதி 07 - கலாபூஷணம் புன்னியாமீனி - 83

Page 44
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
என்.பி. ஜூனைத் எழுத்துத்துறை
வடமாகாணம், வவுனியா மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில், வவுனியா தெற்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 217 - C சாளம்பைக்குளம் கிராம சேவகர் எல்லைக்குள் வசித்துவரும் நாகூர்| பிச்சை ஜூனைத் அவர்கள் ஒரு எழுத்தாள ராவார்.
சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த நாகூர்
பிச்சை, றாவியத்தும்மா தம்பதியினரின் புதல்வராக 1972 ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை (8ம் வகுப்பு வரை) சாளம்பைக்குளம் வ/அல்-அக்ஷா மகாவித்தியால யத்திலும் பின்பு அரபுக்கல்வியை புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல் லூரி (1986-1994)யிலும் பயின்றார். இஸ்லாமிய சட்டத்துறைக் கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்காக சவூதி மன்னரின் விசேட புலமைப்பரிசில் பெற்று சவூதிஅரேபியா மதீனா இஸ்லாமிய பல்க லைக்கழகத்தில் (1995-2000) இணைந்து கற்றுத் தேறினார். மெளலவி, அல்-ஆலிம், அஷ்ஷெய்க் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள பட்டதாரி யான இவர் இன்று பறகஹதெனிய தாருத் தெளஹித் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் அரபுக்கல்வி விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.
84- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
1993 முதல் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவரும் இவரின் முதலாவது ஆக்கம், 1995 ஆகஸ்ட் 1-15 எழுச்சிக்குரலில் பிரசுரமானது. *காலத்தின் தேவையுணர்ந்து அரபுக்கல்லூரிகள் செயற்படுவது எப்போது?’ எனும் தலைப்பில் பிரசுரமான கட்டுரையைத் தொடர்ந்து மெளலவி என்.பி. ஜூனைத் (காஸிமி), அஷ்ஷெய்க் என்.பி. ஜூனைத் B.A. (மதீனா), சாளம்பைக்குளம் என்.பி. ஜூனைத், குறைஸா ஜூனைத் ஆகிய பெயர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் எழுச்சிக்குரல், தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, நவமணி, நேசன், சத்தியக்குரல், உண்மை உதயம், அல்ஹஸனாத், ஒற்றுமை (இந்தியா) ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற் றுள்ளன.
இதுவரை இவரது ஆக்கங்கள் நூலுருவில் வெளிவரவில்லை யாயினும்; வெகுவிரைவில் பின்வரும் மூன்று நூல்களை வெளியிடுவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
1. நபிவழியில் நம்வாழ்வு.
2. இஸ்லாத்தின் பார்வையில் இலஞ்சம்.
3. இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர்கள்.
“.எழுத்துத்துறை தவிர பேச்சாற்றலும் அல்லாஹற் எனக்கு வழங்கியிருக்கும் பேரருட்கொடையாகவே இருக்கின்றது. அகில இலங்கை ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸஉன்னதில் முஹம்மதிய்யாவின் பிரசாரகராகவும் நான் இருந்து கொண்டு நாட்டின் பல்வேறு இடங்க ளில் அவ்வமைப்பால் நடாத்தப்படும் இஸ்லாமிய மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றேன். ஏனைய இஸ்லாமிய இயக்கங்களால் நடாத்தப்படும் மாநாடுகளிலும் அவ்வப்போது அழைக்கப்பட்டு உரையாற்றி வருகின்றேன்.” என்று கூறும் ஜூனைத் சக்தி FM வானொலி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை ரமழான் காலங்களில் ரமழான் சிந்தனை', 'சஹர் சிந்தனை’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். அத்துடன்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 85

Page 45
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியிலும் இவரது தொடர் சொற்பொழிவுகள் இடம்பெற்றுள்ளன.
தன்னுடைய இத்தகைய ஈடுபாடுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கிவரும் அன்புப் பெற்றோரையும், ஆசான்களான மெளலவி எஸ்.எம். அப்துல் மஜீத், ஒன்றுவிட்ட சகோதரர் எம்.ஐ. முத்து முஹம்மட், கெளரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரையும், தனது குடும்பத்தினர் உட்பட சில நண்பர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
என்.பி. ஜூனைத்தின் அன்பு மனைவி குறைஸா உம்மா. இத்தம்பதியினருக்கு மொஹமட் ஹனீப், ஹனான் அஹமத் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.
“. ஊடகவியலாளர்களும் எழுத வேண்டும். சத்தியத்தை எழுதுவதன் மூலம் சமூகத்தின் எழுச்சிக்கு அவர்கள் வித்திட வேண்டு மேயன்றி தமது எழுத்துக்கள் மூலம் இஸ்லாத்தையும் அதன் கோட் பாடுகளையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏளனம் செய்வதன் மூலம் இறைகோபத்திற்கு அவர்கள் ஆளாகிவிடக் கூடாது. அத்தோடு ஒழுக்கக்கேடு, கலாசார சீரழிவு போன்றவற்றை எழுதிவருவதன் மூலம் பாவிகளாகவும் அவர்கள் ஆகிவிடாது சமூகத்தை உயர்வுக்குக் கொண்டு வரும்படியான ஆரோக்கியமான கருத்துக்களையே எழுத வேண்டும். இதுவே இத்துறையில் அமானிதத்தைப் பேணியதாக இருக்கும். கட்டாயம் இதை எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.” என்ற கொள்கையினடிப்படையில் எழுதி வரும் இந்த எழுத்தாளரின் முகவரி:
N.P. Junaith, Rathmalgahawewa Rd, Salambapura, Rambewa
தகவல்: 2005 - டிசம்பர் Anuradhapura.
86. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
மல்ஹர்தீன் எழுத்துத்துறை
சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், மாவனெல்லை தேர்தல் தொகுதியில், மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 'மஹவத்தை' எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது தாஹா மல்ஹர்தீன் ஒரு சிறுகதை எழுத்தாளராவார்.
1948ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி ஜீரி மாவனெல்லை முஹம்மது தாஹா தம்பதியிடல் ... Aši னரின் புதல்வராகப் பிறந்த இவர் மாவனெல்லை ஸாஹிரா தேசியக் கல்லூரி, கம்பளை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியையும் மேற்கொண்டார். கலைத்துறை சிறப்புப் பட்டதாரியான இவர் பொதுசனத் தொடர்புக்கலையில் டிப்ளோமா பாடநெறியினையும் பூர்த்தி செய்துள்ளார்.
தற்போது மாவனெல்லை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிவரும் இவரின் அன்புப் பாரியார் எம்.ஆர்.எம். ஸரீனா. இவரும் ஆசிரியையாவார். இத்தம்பதியினருக்கு ரிகாஸ், ஷர்மிலா, ராஷித், ரஸா முஹம்மத் ஆகிய நான்கு அன்புச் செல்வங்கள் உளர்.
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 87

Page 46
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
1973ம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சஞ்சிகையிலே இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது. அதிக எண்ணிக்கையில் எழுதுவது என்ற நிலையிலில்லாமல் தரமான முறையில் எழுத வேண்டும் என்பதில் அதிக கரிசனை செலுத்திவரும் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், விவரணங்கள் ஐம்பதுக்கும் மேல் பிரசுரமாகியுள்ளன.
1974ம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்’ ஆண்டு மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
1997ம் ஆண்டிற்கான சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ‘ஒரு சோலை பாலையா கின்றது என்னும் தலைப்பிலான ஆக்கம் திறமைச் சான்றிதழையும் பெற்றுள்ளதுடன், "அகுரு' பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. (உறுதிப்படுத்தும் கடித எண்: கல்வி/தொ./அபி/நலன்/14 - கல்வி உயர்கல்வி அமைச்சு - 1997.10.20). இதற்காக 1998ம் ஆண்டில் பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் கல்வியமைச் சினால் விருதும், பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
1998 ஆண்டில் யாழ்ப்பாண கத்தோலிக்க இலக்கிய வட்டத் தினால் நடத்தப்பட்ட அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.
நாளாந்த சர்வதேச விவகாரங்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைக ளையும், ஆய்வுக் கட்டுரைகளையும், நூல் விமர்சனங்களையும் எழுதிவரும் இவரின் முகவரி:
M.T. Malhardeen 79, Thakiya Rd,
தகவல் : 2002 நவம்பர் Mawanella.
88- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
றஹற்மான் - ஏ - ஜெமீல் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், கல்முனை தேர்தல் தொகுதியில்; கல்முனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பெரிய நீலாவணை (முஸ்லிம் பிரிவு 01) கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் அப்துல் றஹீமான் அப்துல் ஜெமீல் முற்போக்கு சிந்தனைமிக்க | கவிஞர்களுள் ஒருவராவார்.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் திகதி } ..مسلسة سع அப்துல் றஹமான் தம்பதியினரின் புதல்வராக கிழக்கு மண்ணில் பிறந்த ஜெமீல் தனது பாடசாலைக்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் பெற்றார். தற்போது சுய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவர் ‘நெளசிலாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினரின் ஆசைச் செல்வத்தின் பெயர் றபா 99).DDL.
ஜெமீலின் கன்னிக் கவிதை ‘நாயகன்’ எனும் தலைப்பில் 1989 ஆண்டு தினகரனில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை றஹற்மான் - ஏ - ஜெமீல், மருதமுனை ஜெமீல் ஆகிய பெயர்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் இக்கவிதைகள் தினகரன், வீரகேசரி, நவமணி, தினக்குரல், தினமுரசு, மெட்ரோ நியுஸ், தமிழ் அலை, தினச்சுடர், தினக்கதிர், ஈஸ்டன்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 89

Page 47
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
டைம்ஸ், முஸ்லிம் குரல், மித்திரன் வாரமலர், முனைப்பு, அல்மருதமுனை, சமாதானம், பூந்தளிர் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சி கைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், வானொலியிலும் ஒலித் துள்ளன.
அவ்வப்போது தன்னுள் எழும் உள்ளக் கருத்துக்களை, உணர்ச்சிகளை, சமூக அநீதிகளை, சமகால நிகழ்வுகளை அப்பட் டமாக மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தெளிவாகவும், காத்திரமாகவும் கவிதைகளை எழுதிவருவதில் வெற்றி கண்டுள்ளார்.
இவர் பல இலக்கியப் போட்டிகளில் கலந்து பரிசில்கள் வென்றுள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 1993 இளைஞர் பரிசளிப்பு போட்டிகளில் சிறுவர் இலக் கியப் பிரிவில் மூன்றாமிடத்தினைப் பெற்றுள்ளார். அத்துடன், 2004 ஆண்டில் தினச்சுடர் சிறந்த கவிஞர் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இவர் இதுவரை ஒரு புத்தகத்தினை வெளியிட்டுள்ளார். ‘பாலர் பவனம்’ எனும் இப்புத்தகம் பற்றிய அறிமுகக் குறிப்பு 1993 மே 16" திகதி தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. இந்த அறிமுகத் தை ‘கலாபூஷணம் மருதூர் வாணன் எழுதியிருந்தார். அந்த அறிமுகத்திலிருந்து சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
“...சிறுவர் இலக்கியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்து வருகிற இந்தக் காலகட்டத்தில் சிறுவர் இலக்கியப் படைப் பாக வெளிவந்துள்ள ஜெமீலின் “பாலர் பவனம்” கவிதைத் தொகுப்பு எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
வானொலி, பத்திரிகைகள் போன்றவற்றில் வெளிவந்த மொத்தம் பத்துக் கவிதைகளை உருவக வண்ணப் படங்களுடன் வடிவமைத்துள்ள இத்தொகுப்பானது இருபது பக்கங்களைக் கொண்ட ஒருசிறிய தொகுதி என்பதைவிட சிறப்பான மிகப் பெறுமதியான தொகுதியென்றே சொல்லலாம்.
90:'ഝേ எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஜெமீலின் இந்தக் கவிதைகளில் இருண்மை வகை கிடையாது. கடுமையான மரபுச் சொற்களும் கிடையாது. சிறுவர்களுக்கு உகந் தாற்போல் அழகிய தமிழில் எளிய நடையில் நிறைவான உவமைக ளுடன் எழுதியுள்ளார்.”
விலங்கு மனிதன்' எனும் தலைப்பில் கவிதைத் தொகுதி யொன்றினை வெகுவிரைவில் வெளியிடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அத்துடன், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ரோஜா சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் இவரே.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் சகோதரர் றஹமான் - ஏ - ஜபார் மற்றும் திருவாளர்களான அறநிலா, மருதூர்பாரி, எம்.எச்.ஏ. கரீம், பி.எம்.எம்.ஏ. காதர், எம்.ஐ.எம். றஊப், மருதூர்வாணர் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் பல இலக்கிய அமைப்புக்க ளுடன் இணைந்து செயலாற்றி வருகின்றார். இவரின் முகவரி:
Rahman - A- Jameel, 104A, Mawady Rd, Periyaneelawanai - M.D.01 Maruthamunai.
தகவல்: 2004 ஜூனி
தொகுதி 07 - கலாபூஷணம் புன்னியாமீன் - 9.

Page 48
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.எல். இஸ்ஹாக் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்: டம், கல்முனை தேர்தல் தொகுதியில்; கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நற்பிட்டிமுனை - 05 கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை இஸ்ஹாக் வளர்ந்துவரும் ஓர்| எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
1972ம் ஆண்டு மார்ச் மாதம் 03ம் திகதி 箱 I மீராலெப்பை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த 狮 t இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசேட கலைத்துறைப் பட்டம் பெற்ற பட்டதாரியாவார்.
1996 இலிருந்து எழுத்துத்துறையில் ஈடுபாடு செலுத்திவரும் இவர் மாணவர்களின் நன்மை கருதி இரண்டு நூல்களை
எழுதியுள்ளார்.
1. க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொருளியல்
(மாதிரி வினா - விடைகள்)
இப்புத்தகத்தில் ஆக்கக்காரணி, கேள்வி-நிரம்பல், பணமும் - வங்கியும், விலைச்சுட்டெண், பொதுநிதி, வரி, பொதுப்படு கடன், சென்மதிநிலுவை, கிராமியப் பொருளாதாரம், இலங்
92- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
கைப் பொருளாதாரம், சனத்தொகை, வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய பாட அலகுகளை மையமாகக் கொண்டு மாதிரி வினா - விடைகளும், சுருக்கக் குறிப்புக்களும் சேர்க்கப்பட் டுள்ளன.
2. க.பொ.த உயர்தரம், ஜி.ஏ.கியு மாணவர்களுக்கான
அரசறிவியல் வினா - விடைகள
இவற்றுக்குப் புறம்பாக “நற்பிட்டிமுனை ஜும்ஆப்பள்ளிவாசல் வரலாறு’ எனும் புத்தக்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் 1997 ஆண்டு முதல் "ஈஸ் டன் டைம்ஸ்’ பத்திரிகையின் செய்தியாளரா கவும் கடமையாற்றிவரும் இவர் தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, தினக்குரல் போன்ற பத்திரி கைகளிலும் எழுதிவருகின்றார்.
ரீலங்கா முஸ்லிம் மாணவ சம்மேளன நற்பிட்டிமுனைக் கிளையின் முன்னாள் தலை ش، دستدندده.شs..ف: "" வராகவும், யூரீலங்கா முஸ்லிம் இளைஞர் مد، . சம்மேளன நற்பிட்டிமுனைக் கிளையின் தலைவராகவும், நற்பிட்டிமுனை முஸ்லிம் மாணவர் சம்மேளனத் தலைவராகவும், முஸ்லிம் கல்வி ஆய்வுகள் நிறுவனத்தின் நற்பிட்டிமுனைக் கிளை உப செயலாளரா கவும் பணியாற்றிவரும் இவரின் முகவரி:
M.L. Ishak, 189/2, Jummah Mosque Rd, “Ishak B.A. Lane” Natpiddimunai - 05 Kalmunai - 32300
தகவல்: 2002 பெப்ரவரி
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி 93

Page 49
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எஸ்.எம்.எம். நஸிறுதீன் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், திகாமடுல்லை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில், ஒலுவில் - 02 கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம். நஸிறுதீன் அவர்கள் ஒரு எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
1956ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி சீனிமுகம்மது தம்பதியினரின் புதல்வராகக்
கிழக்கு மண்ணில் பிறந்த முகம்மது நஸிறுதீன் அவர்கள் ஒலுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தற்போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபாடு செலுத்திவரும் இவர் ஏ.எல். பெளசியாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு பாத்திமா ரவழியா, முஹம்மட் கல்பி, பாத்திமா நுஹைறா, ஸறாபத் அல்-அக்கீல் ஆகிய நான்கு அன்புச் செல்வங்களுளர்.
1984ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடுமிக்கவராக இருந்த போதிலும் கூட இவரது கன்னிக் கவிதை 2000.09.16" திகதி 'தினகரன்’ பத்திரிகையில் ‘ஒரு மூங்கில் குழலான போது’ எனும தலைப்பில் பிரசுரமானது. இதிலிருந்து எஸ்.எம்.எம். நஸிறுதீன், சொல்லன்பன் நஸிறுதீன், ஒலுவில் சொல்லன்பன், அபூஸறாபத் ஆகிய பெயர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கவிதைகளையும்
94- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங் கள் தினகரன், நவமணி, தினமுரசு, இடி, கீறல், மீள்பார்வை, இளவரசி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இவரது புத்தகமொன்றும் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும் சிறியதும், பெரியதுமான 42 சிறுகதைகளைத் தொகுத்து கிண்ணஞ்சொட்டு' எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுதியொன்றினை விரைவில் வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 200 பக்கங்களையும் தாண்டி வெளிவரக் கூடிய இச்சிறுகதைத்தொகுதி தற்போது கணனிப் பதிப்பாகிக் கொண்டிருக்கின்றது.
* கீறல்' எனும் பெயரில் காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் 2002 இலிருந்து ‘நவமணியில் செய்திகளையும் எழுதி வருகின்றார். தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கிவரும் எஸ்.எம். அய்யூப் அவர்கனை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
S.M.M. Naseerudeen Jumma Mosque Rd, Oluvil - 02
தகவல்: 2002 டிசம்பர்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - 95

Page 50
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
றிஸ்வியூ முஹம்மத் நபீல் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்| டம், கல்முனை தேர்தல் தொகுதியில், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கல்முனைக்குடி - 11 கிராம சேவகர் எல்லையில்: வசித்துவரும் றிஸ்வியூ முஹம்மத் நபீல்: அவர்கள் ஒரு எழுத்தாளராவார். i
1967ம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ம் திகதி| கிழக்கிலங்கையில் உமர் கத்தாப் தம்பதியினl"
t
نتین، i , , , ti E ;1 -
ரின் புதல்வராகப் பிறந்த இவரின் பதிவுப் பெயர் யு.எம். நபீல் என்பதாகும். இவரை வீட்டில் “றிஸ்வி’ என அழைப்பர். இரண்டு பெயர்களையும் இணைத்து ‘றிஸ்வியூ முஹம்மத் நபீல்' என தனது பெயரைப் பிரயோகித்து வருகின்றார்.
கமு/ஸாஹிறா தேசிய கல்லூரியில் க.பொ.த உயர்தரம் வரைக் கற்ற இவர் 2002ம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத் தில் ஊடகத்துறை டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்தார். இலங்கை துறைமுக அதிகார சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றிவரும் இவர் சித்தி ஜனுாபாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு முஹம்மத் ஸஹற்னுான், முஹம்மத் ஸஹரஃப் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.
96- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
1985ம் ஆண்டு ‘சிந்தாமணி’ பத்திரிகையில் பிரசுரமான 'மதியால் வாழ்வு மலரட்டும் என்ற மரபுக்கவிதையே இவரின் கன்னிக் கவிதையாகும். அதிலிருந்து இன்றுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, நவமணி, ஓசை (கனடா) மெளனம், யாத்ரா, மூன்றாவது மனிதன், பூவிழி, சுவடுகள், இருப்பு ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுமாகியுள்ளன. அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிமஞ்சரி, வாலிபவட்டம், பாவளம், இசையும் கதையும் போன்றவற்றில் ஒலிபரப் பாகியுமுள்ளன.
கிழக்கிலிருந்து வெளிவரும் ‘பூவிழி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றி வருகின்றார். விரைவில் கவிதைத் தொகுதியொன்றினை வெளியிடும் எண்ணம் இவருக்குண்டு.
“.கவிதைகளில் தானி அதிக நாட்டம் கொண்டுள்ளேனர். கவிதை மிகவும் தூரத்துக்குப் போயுள்ளது. மரபு - புதிது என்றெல்லாம் பேசி விவாதங்கள் நடாத்தி வீணே காலத்தை நகர்த்துவதை விட்டும் இப்போது கவிதைகள் எழுதுகின்றேன். மனிதனின் உணர்ச்சி நரம்புகள் போலத் தான் கவிதைகளும் அது செங்கட்டிகளாகவும், சீமெந்துகளா கவும் ஒரு போதும் இருக்க முடியாது. அவரவர் கவிதைகள் அவரவர் இரத்தங்களாலும், உணர்வுகளாலும் நெய்யப்பட்டவையாகும். கறுப்பு வெள்ளைப் படங்களைக் கூட ஒரு கவிதை உள்ளத்தால் வர்ணம் தீட்டிப் பார்க்க முடியும். ஒரு முண்டுக் கல்லுக்கு உயிர் ஊட்டி அதனை உருட்டிப் பார்க்கின்ற வல்லமை கவிதைகளுக்குத்தான் முடியும். ஒரு நொட்டிப் பெணிணையும் நர்த்தகியாக்கிப் பார்க்கும் திறனர் கவிதைகளுக்கே உள்ளது.”என்று கூறும் நபீல், கல்முனை 'அநுசரி இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். இவரின் முகவரி:
Risvi Mohamed Nafeel 264, Cassim Rd,
Kalmunai - 06 தகவல்: 2004 நவம்பர்
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி 97

Page 51
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.எஸ்.எம். ஸல்ஸ்பீல்
எழுத்துத்துறை
ஊவா மாகாணம், மொனராகலை மாவட்ட, பிபிலைத் தேர்தல் தொகுதியைச் IV சேர்ந்த பகினிகஹவெலக் கிராமத்தில் வாழும்|* முஹம்மது சித்தீக் முஹம்மது ஸல்ஸபீல் , அவர்கள் தமிழ், அரபு, சிங்களம் ஆகியkஜ் மொழிகளில் தேர்ச்சியுள்ள ஒரு எழுத்தாளரா வார.
1960ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி பகினிகஹவெலையைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாஈல் முஹம்மது சித்தீக், அப்துல் ஹமீது ஹவ்வா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் மொ/பகினிகஹவெலை முஸ்லிம் மத்திய கல்லூரி (1965-1975) யில் ஆரம்பக் கல்வியையும், காத்தான்குடி ஜாமிஅதுல் ஃபலாஹற் அரபுக் கல்லூரி (1976-1977), அட்டாளைச்சேனை கிழக் கிலங்கை அரபுக்கல்லூரி (1978-1983) ஆகியவற்றில் அரபுக் கல்வியை யும் பெற்றுக் கொண்ட இவர் 1984.08.19' திகதி முதல் மெளலவி உதவியாசிரியராக நியமனம் பெற்றார். 1987-88 கல்வியாண்டில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்று 1989.01.01 முதல் பயிற்றப்பட்ட மெளலவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்பு 1999.05.10 முதல் 2004.05.09ம் திகதிவரை சவூதி அரேபியா, அல்சுல்பி வெளிநாட்டவர் வழிகாட்டல் நிலையத்தில் அறபு - சிங்கள மொழிபெயர்ப்பாளராகக் கடமை புரிந்து மீண்டும
98- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
ஆசிரியத தொழிலில் இணைந்துள்ளார். 1983ல் க.பொ.த உயர்தரப் பரீட்சையிலும், மெளலவி தராதரப் பத்திர இறுதிப் பரீட்சையிலும், அல்ஆலிம் தராதரப்பத்திர (அரசாங்கம்) பரீட்சையிலும் சித்தியடைந் துள்ள இவர் 1986 முதல் பூரிலங்கா நிதி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற அரபு, சிங்கள, தமிழ் மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றார்.
இக்காலப் பகுதியில் தினபதி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் சமய, சமூக சம்பந்தமான கட்டுரைகள், நூல் விமர்சனங்களை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மெளலவி எம்.எஸ்.எம். ஸல்ஸ்பீல், ஸல்ஸபீல் அல்பகினி, இப்னு சித்தீக் போன்ற பெயர்களில் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 1987 முதல் 1989 வரை 'தினகரன் மொனராகலை சுழற்சி நிருபராக வும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பன முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய நற்சிந்தனை, ஸஹர் சிந்தனை ஆகிய நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.
1993ம் ஆண்டில் க.பொ.த (சாதாரண தர) மாணவர்களுக்கென 'இஸ்லாம்' எனும் தலைப்பில் சிறுநூலொன்றை வெளியிட்டார். 1999ம் ஆண்டில் சவூதிஅரேபியாவில் அல் - சுல்பி (Al-Zulfi) வெளிநாட்டவர் வழி காட்டல் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது அரபு மொழியிலிருந்து 20 நூல்களை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். இந்த 20 நூல்களும் அல்-சுல்பி வெளிநாட்டவர் வழிகாட்டல் நிலையத் தினால் வெளியிடப்பட்டன.
மூலிக்க பிரத்திபத்திய (அடிப்படைக் கொள்கைகள்) பிரிசிதுகம ஹா நெமதும (சுத்தமும், கிரியைகளும்) உபவாச வtலய (நோன்பு வழிமுறைகள்) ஹஜ் ஹா உம்ரா கர்த்தவ்ய (ஹஜ்ஜூம், உம்ராவும் கடமைகள்) முஸ்லிம் ஸ்திரினிட்ட கிரந்தயக் (முஸ்லிம் பெண்களுக்கு வழிகாட்டி) இஸ்லாம் நீதிரீதின் ஹா சாரதர்ம (இஸ்லாமிய சட்டதிட்டங்களும், விழுமியங்களும்) அவசானதினய (இறுதிநாள்) நபிதுமாகே ஜீவிதய (நாயகம் அவர்களின் வாழ்க்கை)
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீன் - 99

Page 52
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
9. தைனிக்க விஷயயனி (நாள்தோறும் செய்ய வேண்டியவை)
0. ஸ்தீர பெவெத்ம சந்தஹா மகபெனிவீம (நிலையான வாழ்வுக்கான
வழிகாட்டி)
饥 இஸ்லாம்ஹறி யஹபத் குணவர்தன (இஸ்லாத்தின் நற்குணம்)
龙 முஸ்லிம்வருனி சந்தஹா மார்கோபதேசயக் (முஸ்லிம்களுக்கான மார்க்க
உபதேசங்கள்)
3 இஸ்லாம் ஒப அமதய் (இஸ்லாம் உங்களை அழைக்கின்றது)
4. பாபொச்ஷாரனய (மீட்டுப் பார்த்தல்)
5. விஷய மாலாவ (பாடப்பரப்பு)
6. மினிஸ்சுனர் சாமானிய லெச சலகன, வெலகி சிடிய யுது தஹனம்
கருணு (மனிதர்கள் சாதாரணமாகக் கருதும், தவிர்ந்து கொள்ள வேண் டிய விடயங்கள்)
17. தஹம்வல விஸ்மய ஹா யதார்டய (மதங்களின் உண்மைகளும், அவற்றி
லுள்ள யதார்த்த நிலைகளும்)
8. இஸ்லாமிய நீதி வியூஹய (இஸ்லாமிய சட்டவழிகாட்டி)
9. விஸ்வாஷ பத்டதிய (நேர்வழி)
20. ஜூஸ்உ - அம்ம - சிங்கள பரிவர்தன (அம்ம ஜூஸ்உ - சிங்கள
மொழிபெயர்ப்பு)
இவை தவிர மொனராகலை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு எனும் நூலினையும், பாடசாலை, குர்ஆன் மத்ரசா மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் சில முக்கிய தலைப்புக்களில் நாற்பது நபி மொழிகளை அரபுடன், தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து மும்மொழி நூலொன்றினையும் வெளியிட ஏற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றார். பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புக்களிலும், சமூக, சமய அமைப்புக்களிலும் ஈடுபட்டுவரும் இவர் சித்தி ஆரி’. பாவின் அன்புக் கணவராவார். ஸல்ஸபீல், ஆரிட்யா தம்பதியினருக்கு அஸிமா பர்வின், முஹம்மது ஆதில் ஆகிய இரண்டு செல்வங்கள் உளர். இவரின் முகவரி:
M.S.M. Salsabeel “Azeema Mahal’ Bakinigahawela, Bibile தகவல்: 2004 பெப்ரவரி
100- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
முகமட் இமாம் ஹன்பல் எழுத்துத்துறை
வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விடத்தல் தீவு கிராமத்தில் வசித்துவரும் முகமட் இமாம் ஹன்பல் அவர்கள் வளர்ந்துவரும் ஒரு இளம் ཞི་མ་ཁ་དམར་གསོ་ f எழுத்தாளராவார். ニ/
ஹன்பல் மன்/அலிகார் மகாவித்தியா லயம், புத்/ஸாஹிரா தேசிய பாடசாலை, புழுதி ,
வயல் ம.வி, கல்/உளுக்காய்பள்ளம் மு.ம.வி. ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பாலாவி, ஹஉஸைனியா புரம் ‘முகாம் அதிகாரி யாகப் பணியாற்றி வருகின்றார்.
தனது பள்ளிப்பருவம் முதலே இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் இவர் ஒரு சிறந்த வாசகர். தமது வீட்டு வாசிகசாலையில ஐநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளார். இவரின் கன்னி ஆக்கம் 1998.05.23ம் திகதி தினகரன், பத்திரிகையில் பிரசுரமா னது. கன்னிக் கவிதையின் தலைப்பு ‘சிகரட் என்பதாகும். இதிலிருந்து எம்.ஐ. ஹன்பல், இமாம் ஹன்பல், வி.பாவலன், இபுனு இமாம், ஹஸைனியா வாணன், கலைசுதன், புலவர் பேரன் ஆகிய பெயர்களில இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், துணுக்குச் செய்திகளையும் இவர் எழுதியுள்ளார்.
தொகுதி 07 - கலாபூஷணம் புண்னியாமீனி - O

Page 53
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், நவமணி, வீரகேசரி, தினமுரசு, முஸ்லிம்குரல், கரும்பு, பெளர்ணமி, முத்துக்கள், தினப்புயல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ‘தென்றல் அலை வரிசையில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
2000.01.01 முதல் நவமணி பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார். அத்துடன் முஸ்லிம்குரல் பத்திரிகைக்கும் செய்திகள் எழுதி வருகின்றார்.
தனது பள்ளிப்பருவம் முதல் நாடகத்துறையிலும், வில்லுப் பாடல் நிகழ்ச்சியிலும், கோலாட்டம் நிகழ்ச்சியிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் 1999 புத்தளத்தில் நடைபெற்ற தேசிய மீலாத்விழாவில் “வந்தாரை வாழவைக்கும் புத்தளம் பூமி’ எனும் வில்லிசை நிகழ்ச்சி யிலும், மலர்மகிமை கலாசார விழாவில் ‘அகதியின் அவலம் வில்லிசை நிகழ்ச்சியிலும் புத்தளத்தில் நடைபெற்ற தேசிய ஹஜ் விழாவில் ‘தியாக தீபங்கள்’ நாடகத்திலும் இவர் பங்கேற்றுள்ளார். அறிவிப்புத்துறையிலும், கவியரங்கு நடத்துதலிலும் ஈடுபாடுமிக்க இவர் தனது இத்தகைய துறை ஈடுபாட்டுக்கு ஊக்கமும், ஆக்கமும் வழங்கி வரும் தனது அன்புத் தந்தை முஹமட் இமாம், தாய் நூர்ஜஹான், மற்றும் கவிஞர் எம்.ஐ. இன்ஹாம், திருமதி இரிபா ஜம்சித், சன்சி சஜாத், சிறிய தந்தை கலையமுதன் டாக்டர் எம்.சீ.எம். இக்பால், பாட்டன் புலவர் முகம்மது காஸிம் ஆலிம் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
M.I. Hanfall 84/5, Husainiyapuram, Palavi.
தகவல் : 2005 மார்ச்
102- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அ.கா.மு. றிஸ்வின் எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில், மூதூர்| பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மூதூர் கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் அ.கா.மு. றிஸ்வின் அவர்கள் வளர்ந்துவரும் எழுத்தாளர் களுள் ஒருவராவார்.
1981 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 திகதி அப்துல் காதர், பரீதா உம்மா தம்பதியினரின்
புதல்வராகப் பிறந்த இவர் தி/அல்-ஹிலால் மகாவித்தியாலயத்தில் க.பொ.த (உத) வரை கற்றுத் தேறினார். தற்போது கணனிக் கல்வியைக் கற்று வருகின்றார்.
2003.03.23 திகதி நவமணி'யில் இவரது கன்னிக்கவிதை ‘என்னை நீ.”எனும் தலைப்பில் இடம்பெற்றது. அதிலிருந்து மிக வேகமாக கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்று பல்வேறு துறைகளிலும் அகலக்கால் விரித்திருப்பது வரவேற்கத்தக்கது. 2003.03.23 திகதி முதல் இத்தரவுகள் பெறப்பட்ட 2004.06.01ம் திகதி வரை சுமார் 15 மாதங்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை களையும், 05 சிறுகதைகளையும், 4 கட்டுரைகளையும், 7 விமர்சனங்க ளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் நவமணி, முஸ்லிம்குரல், மெட்ரோநியூஸ், செந்தூரம், சமாதானம், நேயம்,
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீனி - O3

Page 54
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அல்-ஹஸனாத், எங்கள்தேசம், தினமுரசு ஆகியவற்றில் பிரசுரமாகி யுள்ளன. (உறுதிப்படுத்து முகமாக அனைத்து ஆக்கங்களினதும் புகைப்படப் பிரதிகளையும், சிறிய வயதில் இவரின் இலக்கிய ஆர்வத்தை நிரூபிக்கக் கூடிய சகல ஆவணங்களின் புகைப்படப் பிரதிகளை யும் கோவைப்படுத்தி அனுப்பி வைத்திருந்தார்.)
இவரின் இத்தகைய வேகமான இலக்கிய ஈடுபாட்டினை அவதா னிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வார் என எதிர்பார்க்க முடியும். இவரின் தன்னம்பிக்கை, மனஉறுதி, சமூகம் பற்றிய தூரநோக்குப் பார்வை, சர்வதேச அரசியலில் இவருக் குக் காணப்படும் ஆர்வம், தேசிய - சர்வதேச ரீதியில் நிகழ்கால விடயங்களில் இவர் கொண்டுள்ள ஈடுபாடு போன்றன என்னை வெகு வாகக் கவர்ந்தது. ‘வளரும் பயிரை முளையிலே தெரியும்' என்பார் கள். என்னுடைய எழுத்தாளர் விபரத்திரட்டில் வயதில் மிகவும் குறைந்தவரான இவரின் விபரங்களையும் பதிவுக்குட்படுத்துகின்றேன் என்றால் - இவரைப் பற்றிய எதிர்கால நம்பிக்கையை வைத்துத்தான் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
ஏனைய அறிமுக எழுத்தாளர்களைப் போல காதலை மட்டும் இவர் மூலக்கருவாகக் கொள்ளாமை விசேட அம்சமாகும். இவரின் கவிதைகளில் என் மனதைக் கவர்ந்த ஒரு கவிதையினை கீழே தருகின்றேன்.
நானி தானி எம்.பி
சென்றமுறை நான் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானேன்.
இம்முறை அதிகுறைந்த வாக்குகளைத் தானே பெற்றேன். என்றாலும் -
தேசியப் பட்டியலில்
நானும் எம்.பி. தானி
104- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
மருதமுனை ஈழபாரதி மருதூர் வாணரின் சமாதான சஞ்சிகை
அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் “நாளைய
சந்ததிக்கு’ எனும் இவரின் கவிதை இரண்டாமிடத்தைப் பெற்றது.
தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி வரும் மூதூர் கலைமேகம், மூதூர் எம்.அனஸ், ஏ.எஸ். அப்துல்லாஹற் ஜிஹாத் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
A.K.M. Risvin “Neithal Nagar' Muthur - 01
தகவல் : 2004 ஜூலை
தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீன் - 05

Page 55
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
எம்.எம். கலீல் (கல்முனைக் கலீல்) எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், திகாமடுல்லை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியினைச் சேர்ந்த கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது மக்பூல் கலில் அவர்கள் கல்முனைக் கலீல்' எனும் பெயரிலும், கே. கலீல், மெளலவி எம்.எம். கலீல் (நூரி), எம்.எம். கலீல், கலீலா, எம். மக்பூல், ஆரிபா எம் - இஸ்மாயில், மலர்நேசன், கல்முனை நிஷா, ... : சுலைஹா மைந்தன், சுபையிதா, எம். கலில், எஸ்.எம். கலீல் போன்ற பெயர்களிலும் எழுதி
வரும் எழுத்தாளர் ஆவார்.
கல்முனைக் குடியைச் சேர்ந்த பக்கீர் தம்பி முஹம்மது மக்பூல், சுலைஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த இவர் ஆரம்பக்கல்வியை கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியால யத்திலும், கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றார். பின்பு குருநாகல் மாவட்டத்தில் பாணகமுவ அரபுக் கல்லூரியிலும், மாவத்தகம - பறஹாதெனிய அரபுக்கல்லூரியிலும் கற்று அரபுத் துறையில் தேர்ச்சிபெற்ற இவர் இந்தியாவில் தென் ஆற்காடு மாவட்டம், உமராபாத்தில் உள்ள அல்-ஜாமியா தாருஸ் ஸலாம், தஞ்சை மாவட்டத்தில் பொதக்குடி அல்-ஜாமியா அந்நூர் அரபிக் கலாசாலை ஆகியவற்றில் கற்று 1984ல் 'நூரி பட்டம் பெற்று வெளியானார். தனது அன்புப் பாரியாருடன் கடந்த 18 ஆண்டுகளாக சவூதியில் வாழ்ந்துவரும் இவருக்கு ‘நாஸர் ஹினான்’ எனும்
106- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
பெயரில் அன்புச் செல்வம் ஒன்றுண்டு.
1970 களிலிருந்து எழுதிவரும் இவர்; கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் கல்லூரியின் இலக்கிய சஞ்சிகை யான ‘அம்பு'வில் தனது கன்னி ஆக்கத்தினை எழுதினார். இதே காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து வெளிவரும் நர்கிஸ், பிறை ஆகிய சஞ்சிகைகளில் முறையே “பெண்ணே முக்காடிடு' என்ற மரபுக் கவிதையும் (1973.09.22), ‘ஐந்தாம் கடமையும் அதனது பலன்களும்” என்ற கட்டுரையும் (1974.06.17) பிரசுரமாகின.
கல்முனைக் கலில் இந்தியாவில் கற்கும் போது இவர் அதிகமாக எழுதலானார். இந்தியாவிலிருந்து வெளிவரும் கற் கண்டு, தேவி, குமுதம், ஆனந்தவிகடன், அஸ்-ஸபாஹற் போன்ற இதழ்களில் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. 1983ல் *குமுதம்' சஞ்சிகை 'கவிஞர் கண்ணதாசனின் வாரிசு யாரோ என்ற கவிதைப் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் 'ஒரு கிராமத்தின் விடியற்காலை' என்ற தலைப்பில் இவரால் எழுதப்பட்ட கவிதை இரண்டாம் பரிசு பெற்றது. இதனை அறிந்த கல்லூரிப் பேராசிரியர் அல்ஹாஜ் மெளலவி பாஸில் ஜியாவுத்தீன் ஹழரத் (மன்பயி) முப்தி அவர்கள் கலீல் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்று பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து வேலூர் பாக்கியத் துஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் மாதாந்த வெளியீடான 'அல்இல்மு சஞ்சிகையில் தொடர்ந்தும் எழுதிவந்தார். அத்துடன் ஜாமியா அந்நூர் அரபுக்கல்லூரியின் 75°து ஆண்டு நினைவு மலரின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
1984ல் தாயகம் திரும்பிய பின்பு இலங்கையில் தினபதி, தினகரன், மித்திரன், வீரகேசரி, சிந்தாமணி, மித்திரன் (வாரமலர்) போன்ற தேசிய பத்திரிகைகளிலும், வான்சுடர், உண்மை உதயம், அல்-ஹஸனாத், அல்-ஜஸிரா, தூது, தடாகம், நிஹமத், பூ, ஞெகிழி, மதுகரம், தூரிகை, கவிமலர் போன்ற சஞ்சிகைகளிலும் இஸ்லாமிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்ப வற்றை நூற்றுக்கும் மேல் எழுதியுள்ளார். (எழுதியும் வருகின்றார்) அத்துடன் இவரின் கவிதைகளும், ஆக்கங்களும் வானொலி ஒலி தொகுதி 07 - கலாபூஷணம் புனினியாமீன் - 107

Page 56
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6 மஞ்சரி, வாலிபவட்டம், அனுபவம் புதுமை, மாதர்மஜ்லிஸ், பிஞ்சு மனம், இன்றைய நேயர், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சி களிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டத்தின் உபதலைவ ராகவும், இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் முன்னணியின் உப செயலாளராகவும், பொதுக்குடி கரீமிய்யா சொற்பயிற்சி மன்றத்தின் தலைவராகவும், கல்முனை ஜம்இய்யதே அன்ஸாரிஸ் ஸஉன்னத்தில் முஹம்மதிய்யா வாலிப இயக்கத்தின் தலைவராகவும், சவூதி ரியாத் யூரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தலைவராகவும், யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளைகுடா வாலிப இயக்கத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
தற்போது சவூதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் தகவல் சேகரிப்பு பாதுகாப்புப் பணியகத்தில் கடமையாற்றிவரும் இவர் சவூதியிலிருந்து வெளிவரும் ‘ரியாத் டெய்லி’ பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். தனது இலக்கியப் பயணத்தின் குருவாக மறைந்த தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷரப் அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் தனது எழுத்துத்துறை பிரகாசிப்பதற்கு ஊக்கம் தந்த திருவாளர்களான எம்.எச்.எம். ஷம்ஸ், கல்லூட்டுக் கவிராயர் எச்.எம். ஹலீம்தீன், அன்பு முகையதின், பாவலர் பஸில் காரியப்பர், பீ.எச். அப்துல் ஹமீட், மேமன்கவி, இப்னு அஸஉமத், என்.ஏ. தீரன், எஸ்.எம்.எம். றபீக், கல்முனை ஆதம், அன்பிதயன் ஸிறாக் ஆகியோரையும் கெளரவத்துடன் ஞாபகமூட்டுகின்றார்.
‘நவமணி’க் குடும்பத்தில் தானும் ஒருவன் என்று கூறும் இவரின் முகவரி:
கல்முனைக் கலில் ‘ஹறினான் வில்லா தோம்புதோர் றோட்
தகவல் : 2004 டிசம்பர் 3FITugbg5LD(bgs - 17
108- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 6
அடுத்துவரும் தொகுதிகளில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் ஆகிய தங்களது விபரங்களும் இடம்பெற விரும்பினால் தயவு செய்து பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
P.M. Puniyameen 14, Udatalawinna Madige, Udatalawinna - 20802 SriLanka T/P: 0094.812493746 0094 812 493892 Fax: 0094 812 497246
தொகுதி 07 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 209

Page 57
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரங்கள் திரட்டப்பட்டு தொடராக ஆவணப்படுத்தப்பட்டு வருவது
இலங்கை இலக்கிய
வரலாற்றில் முதற் தடவையாகும்.
அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆக்க இதழான நவமணியினர் மினுசரணையுடனர் நாளைய சந்ததியினர் இன்றைய சந்தி சிந்தனை வட்டம் இதுவரை இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு விழுமிதாகுதிகளை வெளியிட் fy ள்ள b.
=== எ பார்
|-
I
|
| aligija Č
Al
தொகுதி ! தொகுதி 2 தொகுதி 3
}}- 200- ? Ս[]- SIN : 3-8)|-|-|-- SIN : 1-84)||-||- ISIAN, tյ55-8)|3-2I) 1)
()
 
 
 

i.
தொகுதி ! தொகுதி 5 Հնt) = : [][]]-
'N : 5. S-55- 'N 5-8)-3-
தொகுதி 6 if () - SIN: J5-)-- |S!}N : {)55.8፥) 13 (í5-[}
ஆவணக்காப்பகங்கள், நூல்நிலையங்கள் ஆகியவற்றிற்கு விசேட விலை கழிவு 30' வழங்கப்படும், கடிதத் தலைப்பில் உரிய விலைக்கான காசோலை அல்லது காசுக்கட்டளை அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும்.
P.M. Puniyameen l-ldll: Winna Mllige, Uld:Lilly yinihil - 208 02 Sri II; lk.

Page 58
விஷேட நன்றிகள்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை திரட்ட அனுசரணை வழங் கிய நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அளப்ஹர் அவர்களுக்கு,
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை இலங்கையிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த அயராது உழைத்த உடப்பூர் வீரசொக்கனி அவர்களுக்கு,
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தியதுடன், சர்வதேச ரீதியாக ஆவணப்படுத் தலுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கிவரும் என்.செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) அவர்களுக்கு,
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை "ஸ்கேணி செய்து உதவிய இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் திருமதி எம்.எம்.எனி. முனல்வரா உவைனப் அவர்களுக்கு,
நன்றி. நன்றி. நன்றி.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள்,
கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரங்கள்
அனைத்தும் நேரடியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, ஆதாரபூர்வமாக பெறப்பட்டவையாகும்.
7" பாகம் நிறைஅசிபந்தது.


Page 59
மத்திய மாகாணம், கண் மடிகே எனும் கிராமத்தைப் பிறப் புன்னியாமீன் அவர்கள் 100 நூல் வெளியிட்டுள்ள ஒரே எழுத்தாளராவ வரலாற்றில் ஈழத்து எழுத்த கலைஞர்களின் விபரங்களைத் தெ ரீதியிலும் அவற்றை ஆவணப்படுத் வருவது பாராட்டக் கூடிய விடயம். புன்னியாமீன் அவர்களுடைய ெ பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
அல்ஹாஜ் மெளளவி ஜே.மீராமொஹிதீ பிரதிப் பணிப்பாளர் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் தினை
SBN 955-8
 

மாவட்டத்தில் உடத்தலவின்னை பிடமாகக் கொண்ட கலாபூஷணம் களுக்கு மேல் இலங்கையில் எழுதி ர், அதே நேரம் இலங்கை இலக்கிய FIF. ஊடகவியலாளர்கள் குத்து தேசிய ரீதியிலும், சர்வதேச
தும் உயர்நோக்குடன் செயற்பட்டு
இந்த அடிப்படையிலும் கலாபூஷணம்
பர் வரலாற்றில் ஒரு சுவடாகப்