கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயர்திரு R. R. பூபாலசிங்கம்

Page 1


Page 2
அடிநீமேணம்
முன்னைய தவத்தின் பேருய்
முசிழத்ததோர் அன்பு வித்தே! அன்னை யின் நயினை பெற்ற
ஆழ்கடல் ஈன்ற முத்தே! பின்னை யெம் வாழ்வுப் பூங்கா
பிழிற்றிய பூவின் கொத்தே! தன்னையே தந்து தொண்டில்
தனித்துவம் பெற்ற சத்தே! உன்னேயே எண்ணும் தோழர்(க்)
உவந்திடும் உணர்வின் பித்தே! என்னேயுன் ஆற்றல்! என்று
எவருமே ஏற்றும் சித்தே! மண்ணிலே புகழிற் தோன்றி
மாண்புற வாழ்ந்த பற்றே! எண்ணினர் எண்ண மெல்லாம் இதழ்கமழ் மலராய் ஆக்கி கண்ணிலே ஒற்றிப் போற்றிக்
கழல்களில் வைத்தோம் ஐயா பண்ணிய பூசை உந்தன்
பாதழ சைக்கே - யாக.
பாலசிங்கம் குடுமபத்தில

பெற்றதாயன்னை பெறுமுயிரனைத்தும்
பேணலாலன்னை பெற்றிடுவோர் உற்றதாலன்னை விரும்பிய வனத்தும் முதவலாலன்னை யெக்கலையும் சொற்றதாலன்னை யுலகொடுவானுந்
தொழுதலாலன்னை யென்றென்றும் பற்றதாங் கருணை பொழிதலாலன்ன பராபரை நாகபூடணியால்.
வரகவி நயினை க. நாகமணிப்புலவர்

Page 3

“நாகப்படைசூழும் நாகம்மாள் - 56th நாகம் பூச்சூடிவரும் நல்லம்மாள்'

Page 4

ம்லர்வு:
உதிர்வு: 3-6-1922 21-7-1982

Page 5
* 毛甚自太后日, ±乌述gy河

தோற்றமும் வாழ்க்கை ஏற்றமும்
மூன்னைப் பழமையும் பின்னைப் புதுமையும் பெற்று விளங்குவது நயினுதீவு. அன்னை நாகபூஷணியின் அருளார் அமுதம், ஆர்த்த பிறவித் துயர்கெட அடியார் ஆடும் தீர்த்தமாகத் திருவருள் கூட்டுவதை எவரும் அறிவர். அன்னையின் திருவருள் நீழலிலே தினமும் திழைக்கும் நயினை மக்கள், தூய அன்னையின் துணையிஞல் கலையாத கல்வியும் கன்ருத வளமையும் பெற்று வாழ்கின்றனர். இந்தப் புனிதபூமி புறந்தந்த பெருந்தகையாளருள் ஒருவரி தான் திரு. R. R. பூபாலசிங்கம் அவர் கள். நயிஞதிவுச் சாமியார் திருப்பெருகு முத்துக்குமாரசாமி அவர்கள், ஈழத்து இல்லற ஞானி உயர்திரு. க. இராமச்சந்திரா அவர்கள், சிவா கம ஞானபானு சிவபூரீ ஐ. கைலாசநாதக் குருக்கள், பாரதி அடியான் ப. கு. சரவணபவன், பெரியவாத்தியார் என்று அழைக்கப்பெறும் திரு. ச. நா. கந்தையா அவர்கள், ஆகியோரின் ஆசிகளினலும், அன்புகெழுமிய தட்பினுலும் வளர்க்கப்பெற்றவர்தான் திரு. R. R. பூபாலசிங்கம் அவர்கள்.
இளமையிலேயே துடிப்பும் மிடுக்குமுள்ள இளைஞகை இருந்த இவர், சிறுபிராயத்திலே தமது தந்தையாரை இழந்தார். இது அவருக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது. தந்தையை இழந்த இவருக்கு பாசிய குடும் பப் பொறுப்புகள் இருந்தன. புரட்சி எண்ணங்கள் ஒருபுறம், வறட்சி பான ஏழ்மை வாழ்க்கை மறுபுறம், இவருடைய மனமாகிய கொடி பூமியிலே விழுந்து சின்னபின்னமாக ஒடிந்து கணிதரவகையற்றுக் கிடந்தது. இனியேதும் தமக்கு வாழ்வு வருமோ எனக்கருதி ஏங்கிஞர் ‘அரும்பு மலராகிய பின்னர்தான் வண்டுகள் தேன் உண்ணுவதற்கு 'ங்காரம் செய்து வருகின்றன. அவ்வாறே எண்ணங்களும் செயலாகும் பாது தான் புகழ் ஒாகவ&னத் தேடி வருகின்றது" என்ருர் ஒர் அறி நர். எண்ணி, எண்ணியாங் கெய்தும் மனத்திண்மை பூபாலசிங்கம் வர்களை ஒரு கரும வீரனுகப் பிற்காலத்திலே ஆக்கியதில் வியப்பில்லே
இளமையில் கற்கமுடியாத மனவேதனையுடன், குடும்:பாரத்தைத் ாங்குவதில் பல உடல் உளவேதனைகளையும் தாங்க வேண்டியவராய் 931-ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து, உற்ருேரும், மற்முேரும் சிறு தவிகள் செய்ய திரு. T. தம்பித்துரை அவர்களுக்கு பத்திரிகை
'வான மளந்த தனத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே" - பாரதி

Page 6
2
விற்பனையாளனுகப் பணியாற்றினர். தினசரி 21 சதம் உழைத்து வந் தார். அக்காலத்தில் அறிவறிந்த பெரியோர்கள் வீட்டிற்குப் பத்திரிகை கொண்டு செல்வதால், அக்கால அரச அதிபர் டைசன், கலாநிலையம் உருத்திர கோடீஸ்வரக் குருக்கள், யோகர் சுவாமிகள், திருப்புகழ்ச் சாமி, வடிவேலுச்சாமி, அளுக்கடைச் சுவாமியார், ஆகியோரின் நயன தீட்சைகளும், இவருக்குக் கிடைத்தன. "கூடுமெய்த்தொண்டர் குழாத் 'துடன் கூடியிருந்த இந்த அனுபவத்தின் மகத்துவத்தை இறக்கும் வரை தெஞ்சில் நிறுத்தி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமடைந்து வந்தார்.
பத்திரிகை விற்பனைப்பணியாளராக இருந்தமையால் உலக அறிவை, அவர் வளர்த்துக்கொண்டார். 1917-ல் நடத்த சோவியத் ஒக்டோபர் :புரட்சி, பற்றி அவர் பெற்ற அறிவு, இந்திய விடுதலை இயக்க எழுச்சி, பஞ்சாப்படுகொலை, உப்புச்சத்தியாக்கிரகம், சமுக ஒடுக்குமுறைகளுக் கெதிரான சுயமரியாதை இயக்கக் கருத்துக்கள் ஆகியன இவரை வெகுவாகக் கவர்ந்தன.
1938-ம் ஆண்டு இவர் இலங்கை சமசமாசக் கட்சியில் சேர்ந்தார். அதனல் தோழர் டாக்டர் விக்கிரமசிங்கா, கொல்வின் R. D. சில்வா திரு. N. M. பெரேரா ஆகியோரின் நட்பு இவருக்கு கிடைத்தது. இதன் பின் கண்டிப் பேரின்பநாயகம் தலைமையிலான இலங்கை வாலிபர் சங் கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இரண்டாம் உலக யுத்த காலத்தில் காலனித்துவம், நாசிசம், பாசிசம், பிரபுத்துவம், முதலா ரித்துவம், என்பவற்றை எதிர்க்கும் சக்திகளோடு சேர்ந்தார். 4 வது #ர்வ தேசியம் என்னும் நொஸ்கீத வாதம் தலையெடுத்த போது (கொம்யூனிஸ்டுகள் சமசமாசக் கட்சியிலிருந்து வெளியேறினர். 1943 யூலை 3-ம் திகதி 91 ம் இலக்கம் கொம்டா முேட், கொழும்பு என்ற இடத்தில் பொதுவுடமைக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட சமயம் இவரும் கூட்டத்தில் பங்கு கொண்டார். அன்றிலிருந்து பரட்டாளி-வர்க்கத்தின் கூட்டாளி யாகத் தொண்டாற்றித் தொடங்கினூர், திரு துரைசிங்கம், திரு. S. N. கந்தசாமி, இராமனுதன்'நாயர், சங்கர் பிரேம்லால், குமாரபூரீ. அரி அபயகுணவர்த்தன, M.D. மென்டிஸ் ஆகியோர். இவருக்கு வழிகாட் டிகளாயினர்.அேதனைத்தொடர்ந்து பீற்றர் கெனமன், கார்த்திகேசு பாஸ்டர், A, வைத்திலிங்கம், 1. R. அரியரெத்தினம், கந்தையா ஆகி யோரின் நட்புறவு வளர்ந்தது. திரு. பூபாலசிங்கம் அவர்கள்: யாழ்ப் பாணத்திலிருந்த காலத்தில் தோழர் அட்வகேட்.சிற்றம்பலம், தர்மகுல இங்கம், நடேசன், சிவசிதம்பரம் துரைராசசிங்கம், M.C. சுப்பிரமணி பம் ஆகியோரின்” நட்பும், தொழிலாளர் சங்கங்களில் ஈடுபாடும்,
'தன்னலம் பேணி இழிெ தாழில் புரியேர்ம்
தாய்த்திரு நாட்ெனில் இனிக்கைய்ை விரியோம்." - பாரதி

3
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கழகப் பங்களிப்பும் இருந்தது. குறெசற் தம்பையா, நேசையா மாஸ்டர் ஆகியோரின் இல்லங்களில் நடை பெறும் வேதாந்த வகுப்புகளுக்கும் சென்று வந்தார்.
இக்காலத்தில் மட நம்பிக்கைகள், சமூகக் குறைபாடுகள் ஆலயங் களில் பலியிடுதல் போன்றவற்றைத் தீவிரமாக எதிர்த்துப் போராடி னர். முதன் முதலில் அவருடைய போராட்டம் பிறந்த ஊராகிய நயினுதீவிலே தொடங்கியது. நயினுதீவு தெற்குத் தில்லைவெளியிலுள்ள பிடாரி கோவிவிலே வருடமொருமுறை வேள்விநடாத்தப் பெறுவது வழக்கம். இந்த வேள்வியின் போது ஆட்டுக் கடாக்கள், கோழிகள் போன்றவற்றைப் பலியிடுவது வழக்கமாக இருந்து வந்தது. 1947ம் ஆண்டளவில் நயிஞதிவில் ஆலயப் பிரவேசத்தைத் துரிதப்படுத்துவதற் காகவும், பலியிடுதலை நிறுத்துவதற்காகவும் பூபால் அவர்கள் போராட் டங்களை நடாத்தினர். அப்போதைய கிராம விதானையார் திரு. கா. க. சிவசிதம்பரம் அவர்கள் திரு. க. சோமசுந்தரம் ஆசிரியர். திரு ஆ. சி. நடராசா அவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பிடாரி கோவி லில் நடத்தப்பெற்றுவந்த பலியிடுதல் வழக்கத்தை முற்றக ஒழிப்பதில் திரு.பூபால் அவர்கள் அவ்வாண்டில் வெற்றி கண்டார்கள். அடுத்த ஆண்டில் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் கரிஜன ஆலயப்
பிரவேசமும் வெற்றிகரமாக நடந்தேறியது.
நயினை நாகபூஷணி அம்மன் திருவிழாக் காலங்களில் வரும் அடி யார்களுக்கு குடிநீர் வசதி, உண்வு வசதி, போக்குவரத்து வசதி ஆகிய வற்றை வழங்குவதிலும், தீவுப்பகுதி அபிவிருத்தியிலும், ஏனைய ஸ்தா பனங்களோடு, தனித்தும் ஒருமித்தும் நின்று தீவிரமாக ஆக்கபூர்வ மான, பணிகளைச் செய்தார். *
ஆரம்பத்தில் ‘மணிபல்லவதேவி பொதுநிலைக் கழகம்” என்ற ஒரு கழகத்தை நயினுதீவில் ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவராவர். இக் கழகம் நயினுதீவுச் சாமியாரினதும் திரு. க. இராமச்சந்திரா அவர்களின் தும் ஆசியையும் பெற்று தன்னலான பணிகளை அடியார்களுக்குச் செய்தது. சப்பரத் திருவிழா, தேர்த் திருவிழா, ஆகிய தினங்களில் கவளங் கவளமாக அடியார்களுக்கு அன்னதானம் வழங்கினர்கள். திரு வாளர்கள், நா. பொன்னுத்துரை, வே. சுந்தரம்பிள்ளை, ' நா. கணப திப்பிள்ளை, க. கனகசபாபதி, S. R. சின்னத்துரை, வே. சங்கரப்பிள்ளை த நாகேசு, அ. சி. நல்லையா, அ. சுந்தையா, குட்பாலசுப்பிரமணியம், வே க கு நல்லையாபிள்ளை, க. வே. பாமலிங்கம், ப சரவணபவன்
* ஒயுதல் செய்யோம்தலை சாயுதல் சேய்யோம்'
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். - பாரதி

Page 7
வே, கந்தையா, ச. நா. கந்தையா, திரு. நா. விசுவலிங்கம் ஆகியோர் இக் கழகத்தை வளர்த்தனர் எனலாம். இதுவே பிற்காலத்தில் அமுத சுரபி அன்னதான சபைக்கு அத்திவாரமாகியது என்பதை மறுக்கமுடி காது. இக்கழகம் நயினை நாகமணிப் புலவருக்கு முதன் முதலில் விழா வெடுத்த்தோடு பேசும் படக்காட்சியையும் கிராம மக்களுக்கு அறிமு படுத்தியது. இது நடந்தது 1948-ம் ஆண்டு. அவ்வாண்டில் மகாத்மா கர்த்தி கட்டுக் கொல்லப்பட்டார். அதற்காக ஒரு அஞ்சலிக் கூட்டம் நயிஞதிவில் பிரம்மபூரீ சுவாமிநாதக் குருச்கள் தலமையில் நடைபெற் றது. பிறந்த மண்ணில் முதன்முதலாக பூபாலசிங்கம் அவர்கள் தமது கன்னிப்பேச்சை இம் மேடையில் நிகழ்த்தினர். அதன் பின்னர் நயி குதீன் தெற்கில் ரீ கணேசா சனசமூக நிலையம் நிறுவுவதில் ஆர்வங் கொண்டு அதற்காகப் பாடுபட்டு, பல பெரும் விழாக்களையும் கொண் ாடாடி, தமிழ் நாட்டிலிருந்தும் ஈழத்திலிருந்தும் பேச்சாளர்களே தரு வித்து எழுச்சியை உண்டாக்கிஞர்.
யாழ்ப்பாணத்தில் புதினப் பத்திரிகை விநியோகித்த காலத்தில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடந்தது. புரட்சிக் கருத்துக்களைப் பேரப்பும் செய்தித் தாழ்களுக்குத் தடை விதிக்கிருந்த காலம் அது. ஒளித்தும் மறைத்தும் அவற்றை விற்பதில் இவர் வல்லவராக இருந் தார். ஒரு நாள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அப்பத்திரிகை களை விற்றபோது பொலிஸ் அதிகாரியின் சவுக்கடிக்கு இலக்காகினர். இறக்கும்வரை அந்த அடியின் தழும்புகள் அவருடைய முதுகில் இருந் ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கையில் உள்ள தமிழர்களுடைய பிரச்சினைகளே தீர்ப்பதற்கு மாசில சுயாட்சி ஒன்றே ஏற்றது என்பதில் ஆணித்தரமாக இருந்து வந்தார். சைவ ஆலயங்களில் பூசை செய்வதற்கு ஒழுக்கமும் சீலமு முடைய எவரும் தகமை பெறலாம் என்றும், அதற்கென ஒரு குலமும் ேோத்திரமும் இருக்கவேண்டியதில்&ல என்பது இவருடைய காAத்து. சைவ அறநிலையங்களுக்கென ஒரு பாதுகாப்புச் சபை இலங்கையிலே கூகுவாக்கப்படவேண்டுமெனப் பாடுபட்டார். நாவலருக்கு மணிமண்ட பம் எழுப்பப்படவேண்டுமென்ற செயற்பாடு ஆரம்பித்த காலத்தில் பலர் எதிரிங் பிரசாரத்தில் ஈடுபட்டபோது-நாவலருக்கு மணிமண்டபம் கட்டாயம் என்பதில் உற்சாகமாக நின்று வாதிட்டவர் திரு பூபால சிங்கம் அவர்கள். இராமேஸ்வா ஆலயத்திற்கு இலங்கையில் உள்ள சொத்துக்களுக்கு அறங்காவலராகவும் இவர் நியமிக்கப்பெற்ருர்,
"சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்" - பாரதி

5
காணியற்ற மக்களின் பிரச்சனை, மாணவ சமுதாய வளர்ச்சி, குடி நீர் வசதி ஆகியவற்றை தீர்ப்பதில் - யாழ்ப்பாணப் பகுதியிலும் இவர் பாடுபட்டு வந்தார். இவருடைய சமூக சேவை மனப்பான்மையை அறிந்த அரசு இவருக்கு J. P. பட்டம் வழங்கிக் கெளரவித்தது. பொதுவுடமைச் சித்தாந்தங்களை மக்கள் நலவுடமைக்காகப் பயன்ப டுத்துவதில் தமது செயல் வீரத்தை எல்லா மட்டத்திலும் பசுமரத் தாணிபோல் பதியவைத்தார். உலகில் தாழ்த்தப்பட்ட மக்கள் நசுக் கப்பட்டபோதெல்லாம் அதற்குக் குரல் கொடுக்க இவர் தயங்கிய தில்லை. அரசின் தடையையும் மீறி வியட்னும் மக்களின் உரிமைகளுக் காக யாழ்ப்பாணத்தில் இவரின் தலைமையில் நடந்த மாபெரும் ஊர் வலத்தை மறக்கமுடியாது. பாட்டாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுத் ததற்காக இவர் சிலகாலம் சிறைவாசமும் அனுபவித்தார்.
முன்பொரு சமயம் அவர் நோய்வாய்பட்டிருந்த காலத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைத் தவருக ஒரு பிரபல சிங்களப் பத்திரிகை வெளியிட்டது. அதனல் அவரைச் செத்துப் பிழைத்த பூபாலர் என்றும் அழைப்பர். "கோழைகள் வாழ்நாள் முழுவதும் செத் துப் பிழைக்கிருர்கள் ஆனல் வீரன் மாணத்தை வாழ்வில் ஒருமுறை தான் தழுவி வீர மரணம் அடைகிருன்" என்ருர் செகசிற்பியர். அவ் வாறே பூபாலர் வீரமரணம் அடைந்துவிட்டார்.
ஆனல் அவர் விட்டுச் சென்ற புத்தகக் கழஞ்சியமும், அவருடைய செயற்பாடுகளும், செல்வ மக்களின் 'இவர் தந்தை என்நோற்ருன் G) astrób** என்ற சிறந்த பண்பாடும் "எழுமையும் ஏமாப்புடையதாய்" நின்று நிலைக்கும். திரு பூபால் அவர்கள் ஒரு நடமாடும் நூல்நிலையம். எல்லாத் துறைகளிலும் பாண்டித்தியமுடையவர்.பொல்லாத பகைவ ரையும் நெஞ்சத்து அகமுருகவைற்கும் பண்பாளர். பின்னே திரிந்து எல்லோரையும் தோழர்களாக ஆக்குவதில் நண்பனப், நல்லாசிரியனப் அன்பனப், இன்பமாய் இளநகைபூத்து எப்போதும் இனியனப் எல்லோர்க்கும் நல்லவராய் இருந்தார்.
அவருடைய நிறுவனங்களும் அவருடைய இல்லமும் அடையா வாயில்களை உடையன. அவையெல்லாம் புத்தக ஆலயங்கள், சமதர் மக் கோயில்கள். ஊருணி நீர்நிறைந்தது போல அந்தப் பேரறிவா ளன் திருவாகிய புத்தகச் செல்வம் எல்லோர்க்கும் எல்லாக் காலத்தி லும் பயன் மாம் பழுத்காற்போலப் பயன் பெற்றது. பாலர் முதல் பல்கலைக் கழகப் போாசிரியர் வரை - அங்காடி வியாபாரி முதல்அலுத்துப்போன தொழிலாளிவரை கேள்வி அறிவாலும், அவருடை ய
"எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்' - பாரதி

Page 8
6
இலவச வாசிப்பு வசதியாலும் உலக, உள்ளூர் செய்திகளையும் அரசியல் விடயங்களையும் அசை போடுவார்கள். சில் வேளைகளில் அவருடைய புத்தகசாலைகளின் தாவாரங்கள் அரசியல் மேடைகளாகவும், இலக்கிய மன்றங்களாகவும், பட்டி மன்றங்களாகவும், கவியரங்கங்களாகவும் மாறும். இதிலே வருவோர் போவோர் எல்லோருமே பங்குபற்றுவர். பல விடயங்களில் தெளிவும் விரிவும் பெற்றுச் செல்வர். அமைதியாக இருந்து தமது அலுவல்களைக் கவனித்துக் கொண்டும் அட்டாவ்தான மாக அங்கு நடக்கும் கலந்துரையாடலுக்குக் காது கொடுத்துக் கொண்டும் கணணியின் வேகத்தில் கருமமாற்றுவார் பூபால். இறுதி யில் இரத்தினச் சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில் எல்லோ ருடைய அரங்குகளையும் முடித்து வைப்பார். அவற்றைத் தேவ வாக் காகக் கருதித் திருப்தியோடு திரும்புவார்கள். அவருடைய தோழர்கள் வாடிவ தங்கம் வெய்லிலே, அவசர நரக வேதனையிலே ஒடி ஆடித் திரிவோருக்க வெய்யிற்கேற்ற நிழலாகவும் வீசும் அறிவுத் கென்றற் காற்ருகவும் இவருடைய பெரியகடைப் புத்தக ஆலயம் மின்ரிர்கிறது. அது ஒரு அரிவு விருட்சம். * வீதிகள் தோறும் இரண்டொரு பள்ளி' என்ற பாாசியின் கனவை நினைவாக்கிய கால்கோள் நிலையம்-யாழ் நூல் நிலையத்தை ஒருமுறை கான் எரித்தார்கள். இந்த அறிவு நிலை யத்தை மூன்றுமுறை எரித்தார்கள் - கடை எரிந்துகொண்டிருந்தது. அனுதாபம் தெரிவிக்க வீட்டிற்கு வந்தோர்க்கு அன்னதானம் நடந் தது. அர்த்தராத்திரியில் அவர் வீட்டில் ஒரு பெரிய கூட்டம், அத் தனை பேரையும் வெளியில் விட்டால் அவர்கள் உயிருக்கு ஆபத்தெ னக் கருதி அங்கேயே தங்கவைத்து அவர்தம் அருமருந்தனைய மனையா ளும், பிள்ளைகளும் ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்தனர். ""முன்னை யிட்டதீ முப்புரத்திலே அன்னேயிட்ட தீ அடிவயிற்றிலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்’ ‘'இப்போ இட்ட தீ வட இலங்கையில்' என்ற வரிகளை முணுமுணுத்தபடி "கொடுத்தவனே எடுத்துக்கொண் டான் மீண்டும் கொடுப்பான்’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டி ருந்தார். பூபால் அவர்களுக்கு மாக்சிச சித்தாந்தங்களில் எவ்வளவு பற்றுப்பிடிப்பும் இருந்ததோ அதேயளவு பற்றும் பிடிப்பும் பாரதியின் பாடல்களிலும், சைவ சித்தாந்தக் கருத்துக்களிலும் இருந்தது. ஆஞல்: "கலையுரைத்த கற்பனைகளே நில்ேயெ: னக் கொண்டாடும் கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும். என்று அவர் போராடினர். ' 'கிராயுகம் எழுகமாதோ’ என்ற பார தியின் அடிகளை அடிக்கடி உச்சரிப்பார். மனத்திலே மாசில்லாமல் வாழ்
தல் ஒன்றே அறமென வாழ்ந்தவர் - சக்தி உபாசகர்-சக்திக் கூத்தாடி,
шатfѓ.
'ஏழையென்றும் அடிமையென்றும்
எவருமில்லை ஜாதியில்’ — un 09

'7
தமிழ் தாட்டிலே உள்ள எழுத்தாளர்கள் அரசியல் வாதிகள், பிர ஈராலயங்கள் மத்தியில் பெரும் மதிப்புப் பெற்றவர். அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது சிலம்புச்செல்வர், முதல்வர் M. G. R. கலைஞர் ஆகியோரை கண்டுவந்தார். இரண்டுமுறை சோவியத் நாட்டிற் குச் சென்று திரும்பினர். பிறநாட்டில் இருந்துவந்த பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தோர்கள் அவர் தம் இல்லத்தில் சென்று அகமும் புறமும் மலர்ந்து செல்வர். தாம் பொன்னடை போர்த்துக் கெளர வித்த தோழர் விக்கிரமசிங்காவுடன் 1981-ல் சோவியத் நாட்டிற்குச் சென்ருர், எதிர்பாராத விதமாக விக்கிரமசிங்கா அவர்கள் சோவியத் நாட்டில் காலமானது இவருக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. சோகமே உருவாக அவருடைய பூதவுடலைத் தாங்கிவரும் நிலையில் தாய்ப் பசுவை இழந்த கன்றுபோல் வேதனையடைந்தார். சென்ற இடங்களி லெல்லாம் அவருடைய இலட்சிய முத்திரையைப் பொறிக்க அவர் தவ றியது கிடையாது - அவர் உயிர் பிரிந்து செல்வதற்குச் சற்று முன்பு கூட அவர் பேசிய சிந்தனைகள் ஞானிகளுடைய போதனைகளைப்போல இருந்ததைத் தோழர்களும் நண்பர்களும் அறிவர் - 'எடே விரைவில் என்னைச் சிவப்புக் கொடியால் மூடிக்கொண்டு போகப்போகிறீர்கள்’ என்ருர், ஆம் சிவப்பு, அதுதான் கருணையின்’ மறு நிறம்.
"உதிக்கின்ற செங்கதிர்-உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும் சோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே’ என்று சக்தியின் செவ்வண்ணச் சோதியை அபிரார்மிப் பட்டர் வியந்து போற்றுகின்ருர். சக்திக் கூத்தாடிய பூபால் அவர்கள் அன்னை யின் கருணை வடிவமான செவ்வண்ணக் கொடியில் சங்கமானது பொருத்தமானதே. *பொது உடமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை’ - பாரதி “மாகாளி பராசக்தி உருகிய நாட்டிற் கடைக்கண் வைத்தாள்
-அங்கே ஆகாவென் றெழுந்துபார் யுகப்புரட்சி கொடுங்கோலன் அலறி
வீழ்ந்தான்' e- பாரதி மரணம் நிச்சயமானதுதான் - என்ருலும் பூபாலரின் மரணம் எம் மையெல்லாம். ஆழாத்துயரில் அமிழ்த்திவிட்டது. அவர் ஒரு அதிசய மனிதர் - அபாரமான அழுமையுடையவர் - என்செய்வது ‘எல்லாம் எப்பவோ முடிந்தாயிற்று" "ஒரு துன்பமுமில்லை’ அவருட்ைய ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
நா. க. சண்முகநாதபிள்ளை அதிபர் நயினுதீவு மகா வித்தியாலயம்.

Page 9
8 முதல்வரின் இரங்கற் செய்தி
மார்க்சிய லெனினிச சித்தாந்த ஆதாரத்தில் தொழிலாளர், விவ
சாயிகளின் ஆட்சியைப் புரட்சி வழியில் நிறுவவேண்டுமென்பதையே
தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இலங்கியவர் தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.
தோழர் பூபாலசிங்கம் அவர்களின் திடீர் மரணம் வடபகுதியைச் சேர்ந்த முற்போக்கு அணியினருக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தோழர் பூபாலசிங்கம் அவர்கள் வடபகுதி மக்களின் அறிவுப் பசிக்கு ஊட்டம் அளிக்க வேண்டுமென்ற பெருவிருப்புக் காரணமா கவே புத்தக விற்பனையைத் தமது தொழிலாக எடுத்துக் கொண்டார். அன்னரது புத்தக விற்பனை நிலையங்கள் யாழ் நகரின் மையமான மூவேறு இடங்களில் அமைந்திருப்பது யாவரும் அறிந்ததே.
தமிழ் மக்களின் கல்வி விருத்திக்குக் கேடு சூழவேண்டுமென்று திட்டமிட்டவர்கள் 1981 ஜூன் முதல் நாளில் தமிழ் மக்களின் பாரம் பரிய பண்பாட்டின் பெட்ட்கமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது சன நூல் நிலையத்தைத் தீயில்ை பொசுக்கிய போது, தோழர் பூபா லசிங்கம் அவர்களுடையநிறுவனங்களையும் விட்டு வைக்காமைக்குக் காரணம் அவற்றின் முக்கியத்துவம் கருதியே.
கோழர் பூபாலசிங்கம் அவர்கள் மேற்படி அழிவுகளினல் தமக்கு ஏற்பட்ட சொந்த இழப்பின் மத்தியிலும் யாழ்ப்பாணம் பொதுசன நூல்நிலையத்தை மீள்வித்துப் புதுப்பிப்பதில் பெரும் ஆர்வத்தோே உழைத்து வந்தார். சம்பவித்த நிகழ்வுகளை அடுத்து தோழர் கெனமன் அவர்களது வடபகுகி வருகையைத் தொடர்ந்து அவை குறித்து தென் பகுதி மக்களும் உண்மைகளை உள்ளது உள்ளபடி அறியவரும்வகையில் தாம் சார்க்க இயக்க ஏடுகளில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய் திகள் வெளிவரப் பார்த்துக் கொண்டார். தமிழக இயக்கத் தோழர் கலியாணசுந்தரம் அவர்களுடாக நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் தமிழக அரசும் தமிழக மக்களும் அறியும்படி செய்தார். அங்குள்ள ஒரு வற் தக தாபனத்தின் மூலம் புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவித்து, கொழும்பிலிருந்து நூலகத்துக்கு அவற்றை எடுத்துவரும் செலவுடன் பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொள்ள முன்வந்தார். தமது சோவியத் விஜயத்தின் போதும் யாழ். நூலக மீள்விப்புக்கு உதவும் பணிகளை அவர் மறந்துவிடவில்லை.
தோழர் பூபாலசிங்கம் அவர்கள் பொது மக்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பொதுப் பிரச்சினையிலும் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தத் தயங்காத துணிவுடையவராக விளங்கி வந்த ஒரு பெரியாராவார்.
தோழர் பூபாலசிங்கம் அவர்களது மறைவால் வாடும் அன்னர: துணைவியாருக்கம், அவர் குடும்பக்கினருக்கும் எமது ஆழ்ந்த அனுத பங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
இராஜா விசுவநாதன்
மாநகர முதல்வர் யாழ்ப்பாணம்.

“புத்தகத்துறையும் புத்துணர்வதன
வித்தகர் அமிருடன் விளக்கும் மாட்சி"

Page 10
நி3
வழு
பே
இ இ
6.
:
GBL
D

ழ்-பாராளுமன்ற உறுப்பினின் னுதாபச் செய்தி
புத்தக நிலையமென்றவுடன் பூபாலசிங்கம், அவர்களின் னவே எமக்கு உடன் எழுகின்றது. தமிழ் ஈழத்தில் புத் வியாபாரத் துறையில் நெடுங்காலக் கீர்த்தியும் அணுப மும் மிக்க அன்னரின் மறைவு ஈடு செய்ய முடியாத ரிழப்பாகும். அன்னர் அன்பு, பண்பு, ஆற்றல், இரக்கம் குந்த் பொதுநலப் பணியாளர் என்பதை நாடு நன்கறியும். ளமையிலேயே இடதுசாரித் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு றுதிவரை அச்சுவட்டிலே இம்மியும் பிசகாது பணிபுரிந்த
ண்பாளர் அவர்.
தமிழ் ஈழத்திலே ஆட்சியாளரின் ஆயுதம் தாங்கிய டையினர் நடாத்திய அனர்த்தங்களில் மும்முறை அவரது தாபனம் தீக்கிரையான போதும் துவண்டுவிடாத துணிவு க்கவர். ஈழத்துப் படைப்புக்களின் வளர்ச்சியில் அதிக க்கறை கொண்டவர். எமது மக்களின் புத்தக ரசனையை ண்கறிந்த அவரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகின் ாதாத காலத்தை நமக்கு நினைவுறுத்துகிறது. அன்னரின் றைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினர்க்கு எனது. ழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெ. யோகேஸ்வரன் (யாழ். பா. உறுப்பினர்)
"தானம் வேள்வி தவங் கல்வியாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்" - பாரதி

Page 11
8b
எண்ணிய கருமந்தன்னை விரைவில் எழிலுற முடிக்கும் கர்மவீரர்
திரு. இ. இ பூபாலசிங்கம் அவர்களின் மறைவிஞலே புத்தக உல்கமும் தழிழினமும் அடைந்த இழப்பு பேரிழப்பாகும். தனிப்பட்ட வாழ்விலும், வர்த்தகத்துற்ையிலும் அவருக்குரிய தீர்க்கமான போக்கும் அவர் ஆற்றிய பணிகளும் நெஞ்சிற் பசுமையாய் நிறைந்தே கிடக் கின்றன.
பூபால்சிங்கமவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம்பல கண்ட சீமான். 1945-ம் ஆண்டிலே அவர் நிறுவிய பூபாலசிங்கம் புத்தகசாலை மூன்று தடவை தீக்கிரையானது. ஐந்து கடைகள் எரிந்து சாம்பாலாகின. ஆனல் அவர் மனம் தளரவில்லை; கடையை மூன்று முறை புதுக்கி அமைத்தார். எண்ணிய கருமந்தன்னை விரைவில் எழிலுற முடிக்கும் வீரன் என்பதனைச் செயலிற் காட்டிஞர்; வர்த்தகத் துறை யினர்க்கு ஒரு வழிகாட்டியாக, அற்புதப்பணிபுரிந்து,அனைவரும் மதிக் கும் செம்மலாகத் திகழ்ந்தார். அவரின் திண்ணிய நெஞ்சும் எதையும் தீர்க்கமாய்ச் செய்யும் வன்மையும் பிறர்க்கு எடுத்துக்காட்டாக அமைந் தன. பூபாலசிங்கம் புத்தகசாலை தமிழறிஞர் சந்திக்கும் ஓர் அறிவுக் கூடமாகக் காட்சியளிக்கின்றது.
அறப்பணி, தமிழ்ப்பணி, சமூகப்பணி, சமயப்பணி, பொதுப்பணி எனப் பல்வேறு பணிகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு கடமை ய்ாற்றிய நல்ல பண்பாளர். வடபகுதியிற் பொதுவுடைமைக் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து ஆரம்ப உறுப்பினராக உழைத்துவந்தார். தீவுப்பகுதி மோட்டார்வள்ள சபையைத் தொடக்கிவைத்த பெருமை யும் அவருக்குண்டு.
ஆலயமெங்கிலும் அறப்பணி செய்ய ஆர்வமாய் உழைத்தவர் பூபாலசிங்கம் அவர்கள். நயினுதீவுக் கோயிலின் வளர்ச்சியிற் கண்ணுங் கருத்துமாயிருந்த இச்சீலர் நயினுதீவு அன்னதானச் சபைமூலம் செய்த தொண்டுகள் பல.
எந்நேரமும் எவர்க்கு உதவியானலும் ஏற்றிடும் எழிமையாளராகக் காட்சியளிக்கும் செம்மலின் கொடையினல் முன்னேற்றமடைந்த சங் கங்கள் பல, நனிநபர்கள் பலர், தம்மை அண்டினோர்க்கு அபயமளிக்கும் அண்ணலை இழந்து இன்று தவிக்கின்ருேம். அவர் விட்டுச்சென்ற இடை வெளியை அவரின் பிள்ளைகள் நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக் குண்டு. நன்மைக்கு அழிவில்லை.
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,

8c
மனம் நெகிழும் அனுதாபங்கள்
நண்பர், பூபாலசிங்கம் மறைந்துவிட்ட செய்தி கிட் டிற்று. நம்பவே முடியவில்லை. வாழ்க்கையின் சில ஓட்டங் கள் இத்தகைய நம்பிக்கையீனங்களிலே தான் தங்கியிருக்கி றது போலும்.
நண்பர் பூபாலசிங்கம் எங்கள் இலக்கிய வாழ்வின் ஒர் அங்கம். யாழ்ப்பாணத்து இலக்கிய வாழ்க்கையில் அவருக்கு முக்கிய இடமுண்டு.
தோழமை நிறைந்த வாழ்க்கை யொன்று முடிந்துவிட் டது. அந்தரங்க சுத்தியுடன் பழகிக் கொண்டவர்களுக்கு அவர் அன்பின் ஆழம் தெரியும். அந்த நட்புரிமையை அனு பவித்தவன் என்கிற வகையில் நான் அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாதவனக இருக்கிறேன்.
இங்கு இருக்கும் பொழுது தெரியாது, நான் யாழ்ப் பாணத்துக்கு வந்து, 751 பஸ்ஸால் இறங்கி, 764 க்குப் போவதற்கு முன், புத்தகக்கடைக்குள் எட்டிப்பார்க்கும் பொழுதுதான் அந்த வெற்றிடம் எனக்குப் புலப்படப் போகிறது.
குடும்பத்தவர்களுக்கு என் மனம் நெகிழும் அனுதா பங்கள்.
தமிழ்ப் பல்கலைக் கழகம், கர்த்திகேசு சிவத்தம்பி தஞ்சாவூர்,
"வானம மூன்று மழை தரச் செய்வேன
மாறிலாத வளங்கள் கொடுப்பேன்" - பாரதி

Page 12
8d
மனிதகுலமாணிக்கம் ஆகின்ே:
மணிபல்லவத்திந் பிறந்தவரும் மக்களின் நலனுக்கா .م...
காகவே தமது வாழ்வை அர்பணித்துக்கொண்டவரும் சமா
தான நீதிபதியுமாகிய திரு ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்
களோடு பல்லாண்டுகள் பழகும் பேறுபெற்றேன். எவரோ டும் அன்பாகப் பழகும் பண்பும், இனிமையாகப் பேசும் சுபாவமும், சிந்தித்துச் செயலாற்றும் திறமையும்" அன்பரை இடையிலேயே பறிகொடுத்தமையால் தமிழின்மே தத்தளித்த நிலையை நேரில் காணக்கூடியதாக இருந்தது
மக்கள் பணி மகேசன் பணியெனக் கொண்டு வாழ்ந்த பெரியார், பிறந்தகமான நயினை நாகபூஷணி அம்பாள்
ஆலய அன்னதானப் பணியிலும், சோசலிசமே"மீக்களுக்கு மலர்ச்சியையும், வாழ்வையும் அளிக்கவல்லது என்பதை உணர்ந்து பலதடவைகள் குஷ்சியாவுக்குச் சென்று"ஏன்ழ் மக்களின் வாழ்வு வளம்பெறப் பணியாற்றி மும்முறை தம் உடைமையான புத்தகசாலை, எரிக்கப்பட்ட போதும், மனந்த ளர்ாது, தமது ఇమేజ్ఞశ్రీ ய்ே நூலகமாக மாற்றியதோடு தம் குழந்தைகளையும் வழியைப் பின்பற்ற்வைத்த பெருந்தகையைப் பிரிந்து விருந்தும் குடும்பத்தினருக்கும்; சமுகத்தினருக்கும் தேறுதலளித்து அவர் சென்ற வழியைத் தொடரவைக்க வேண்டுமென்று எல்லாம்வல்ல ஃபர்ம்பொரு ளேப் பிரார்த்திக்கிறேன்.
வாழ்க அமரர் பூபாலசிங்கம் நாமம் வளர்க அவர்தம் ஆன்புக்குழந்தைகள்!!
༥-1,
சைவமளி, சித்தாந்தச் செம்மல் வித்துவான் மு. சபாரெத்தினம் அவர்கள்
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்" - பாரதி ,
II I l li 。
"மானம் வீரியம் ஆண்மை நன்னேரிமை 千里丘 ""

■鸭辑 豎 தன்னுயர் "விக்ரமர்'தமக்கு அரங்கில் பொன்னுடை போர்ப்பும் புன்சிரிப்புதிர்ப்பும்.
"நாடுதிரும்பிய நன்மகன் விழாவின் ஊடுதாயின் உவப்பும் களிப்பும்"

Page 13

இலட்சியவாதி
மரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் தனது சிறுவயதிலிருந்தே தனது கையை ஒரு இலட்சியத்திற்காக அர்ப்பணித்தவர். னது சொந்த வாழ்வில் ஏற்பட்ட கஸ்டங்களையும், நஸ்டங்களை பாருட்படுத்தாது தனது இலட்சியத்தில் உறுதியாக நின்றவர். னே மனிதன் சுரண்டுவது இனத்தை இனம் அடக்குவதும் ஒழிக் ட ஓர் சமத்துவமான சுதந்திர சோசலிஸத்தை நோக்கி முன் ம் - இதுவே அவரது இலட்சியமாகும்.
வரது கனவு இன்று சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய க ஆசிய தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று சுடர் வளர்ந்து வருகின்றது. இது சகிக்க முடியாத ஏகாதிபத்திய * உலக மக்களையும் கலாசாரத்தையும் அழிக்கக்கூடிய மட்டுப் ப்பட்ட அணு ஆயுதப்போரைக் கட்டவிழ்த்துவிட கங்கணங் கொண்டிருக்கிருர்கள். இந்த அணு ஆயுதப் போரைத் தடுப்பதே ாக்கு மக்களின் தலையாய கடமையாகும்.
தனை உணர்ந்த அமரர் பூபாலசிங்கம். இலங்கை சமாதான ன் யாழ். கிளையின் உறுப்பினராக சேர்ந்து கமாதானத்திற்கான பங்களிப்பை நல்கி வந்தார். உலகளாவிய சமாதான சபை ஆயுதப்போரை எதிர்த்து உலக மக்களின் பேரணியைத் திரட்டி றது. இச்சபை மூன்ரும் உலக நாடுகளின் சுதந்திரத்திற்காகவும் ாற்றத்திற்காகவும் குறிப்பாக பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய க்கும் அரசுரிமைக்கும் போராடி வருகின்றது.
ற்போக்கு இயக்கங்கள் போராட்டத்தை ஆரம்பித்தாலும முன்னுதவியும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர் அமரர் சிங்கம் அவர்கள்.
வரது இலட்சியத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தி எல்லா க்களும் சமத்துவ அடிப்படையில் இஸ்டபூர்வமான ஒற்றுமை சாசலிஸத்தை நோக்கி முன்னேறும் இலங்கையை அமைப்பதே ருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.
அ. வைத்திலிங்கம்
தலைவர் வட பிராந்திய கம்யூனிஸ்ட்கட்சி
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்’ - பாரதி

Page 14
1 O
எங்கள் தோழர் p
இவ்வுலகில் தாம் கொண்ட கொள்கைக்காக, இலட்சியத்திற்கா கத் தம் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் மக்கள் தொகை : அருகிவருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. சுயநலத்திற்காக உன்னத குறிக்கோள்களையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அற்ப சொற்ப ஆதாயத்திற்காக அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி மனிதர் களையும் எம்மால் இனங்கண்டுகொள்ள முடிகின்றது. ஆயினும் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக; மனிதகுலத்தின் விடுகலை சகல நிலைகளிலும்; நம் நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி; அனைத்துலக மக் களுக்கும்; மாக்சிய நெறியிலேயே மலரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தன்னை 1940-ம் ஆண்டுகளில் இருந்து இறக்கும்வரை இடதுசாரி இயக்கத்துடன் இணைத்கக் கொண்டவர் அண்மையில் அமரராகிய எங்கள் தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள்.
தோழர் பூபாலசிங்கம் அவர்கள் தமது இளமைப் பருவத்திலிருந்தே சமூக சீர் கிருத்தம், சமரசநோக்கு என்பவற்ருடில் கவரப்பட்ட முற் போக்குச் சிந் க%னயுடையவராகக் காணப்பட்டகேைலயே ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியிலும் அதன்வின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராகச் சேர்ந்து பல உரிமைப் போராட்டங்களில் பங்குபற்றினர். இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பம், பின்பும், ஏகாதிபத்கிய எதிர்ப்புப் போராட்டங்களிலும், தொழிலாளர்களின் உரிமைப் போாாட்டங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களிலும் எம்மோடு தோழோடு தோழ்நின் தமது பங்களிப்பினைத் தந்த செயல்வீரன் ஆவார். M
தோழர் அவர்கள் பத்திரிகைகளின் விற்பனைத் துறையில் ஈடுபட்டு இலங்கைத்தீவு எங்கும் புகழ்பெறக் காரணமான ஆரம்ப பயிற்சியை சமதர்மம், மாணவர் செய்தி, தேசாபிமானி போன்ற கட்சிப் பத்திரிகை களை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விற்பனை செய்ததன்மூலம் பெற்றுக்கொண்டார் என்ருல் அது மிகையாகாது.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்டக் குழுவில் உறுப்பினராகவும், அதன் தனதிகாரியாகவும் இருந்து சேவையாற்றினர். தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, சோஸ்லிச நாடுகளுச்கு நல்லெண்ண விஜயம் செய்துவந்தார். தோழர் அவர்கள் கம்யூனிஸ் கட்சியின் வளர்ச்சிக்குப்பாடுபட்டதுடன் தான் பிறந்த தனது ஊரான
"வீணருக் குழைத்துடலம்
ஒயமாட்டோம்”* - பாரதி

1
யினதிவின் முன்னேற்றத்திலும் கூடிய கவனம் செலுத்தித் தனது 1ங்களிப்பினை வளங்கினர்.
தோழர் அவர்கள் சொந்த வாழ்வில் எல்லோருக்கும் இனியவராக பும், உபகாரியாகவும் வாழ்ந்துள்ளார். சொந்த வாழ்வில் பல கஷ்ட நஷ்டங்களும், பொருளாதார இழப்புக்களும், ஏற்பட்டபோதும், மனம் சளைக்காமல், இலட்சியத்தைக் கைவிடாமல், திட நெஞ்சுரத்துடன் எல்லாவற்றையும் சகித்து வாழ்வில் முன்னேறியவர்.
1937-ம் ஆண்டில் இருந்து தோழர் பூபாலசிங்கத்துடன் நான் தோழமை பூண்டிருந்தேன். கட்சித் தோழர்கள் யாராவது தவறுகள் செய்ய நேரிடும்போது அவர்களது தவறுகளை விமர்சனம் செய்து சரி வழியில் தோழர்களை நெறிப்படுத்தியும் உள்ளார்.
தோழரின் மறைவு அவரின் குடும்பத்தினருக்கும், சுற்றத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்படுத்திய இழப்பைவிட, இந்நாட்டு முற்போக்கு இயக்கங்களுக்கும், பிரதானமாகக் கம்யூனிஸ்கட்சிக்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரின் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், சுற்றத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத் ைசத் தெரிவிப்ப துடன் அன்னருக்குச் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கின்ருேம்.
அன்னுரின் ஆத்மா சாந்தியடைக! வாழ்க தோழர் நாமம்!!
எம். வR. சுப்பிரமணியம் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, யாழ் மாவட்ட அமைப்பாளர்
"பூமியில் எவர்க்குமினி
அடிமை செய்யோம்' - பாரதி

Page 15
12
இலங்கிை கம்யூன்ரிஸ்ட் கப்சி (C LSA, FIOD-AR, ர்ே யாழ்-மாவட்ட ”、 உதவிச்செயலாளரின் அனுதாபச் செய்தி
TE " 霹。
*、 ன்ன்வும் பூபால் எனவும் தோழர்கள்ாலும் நண்பர்
களாலும், அன்பர்க் அழைக்கப்படும் தோழர் ஆர்.ஆர். பூபால்சிங்கம் இயற்கை எய்தியதை நம்பவே முடியவில்லே. இன்றும் கூடி எமது மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பவராகவே தென்படுகின்றது.இதற்கு முக்கிய காரணம் அன்ஞரின் வாழ்க்கை கொள்கைப்பிடிப்புள்ள லட்
சிய வாழ்வாக அமைந்ததாகும்;
நான்கு சகாப்தங்களுக்கு முன்பாகவே மாக்சீச லெனினிச கொள் கைகனில் நம்பிக்கை வைத்து சோசலிச சமூக அமைப்பை உருவாக்க பாடுபட்டார். 1982-ம் ஆண்டில் கூட. எமது செயல்பாடுகளுக்கு பல முட்டுக் கட்டைகள் எதிர்நோக்குகின்றன. அப்படியிருக்க தோழர் பூபாலசிங்கம் அக்காலகட்டத்தில் எப்படி செயல்ப்பட்டார் என்பதை கற்பனே செய்து கூட பார்க்க முடியவில்லை.
யாழ்பிரதேசத்தில் எமது கட்சியின் கிளேயை ஆரம்பித்த முக்கி யஸ்த்தர்களில் ஒருவர். அவரின் வாழ்க்கை இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் சரித்திரத்துடன் பின்னிப் பிணேந்துள்ளது. அத்துடன் உலக சோசலிச இயக்கங்களின் ந்ண்பஞகவே "கடைசிவரை வாழ்ந்தவர்.
அயலாரின் எதிர்ப்பு ஒரு புறமும் அரசாங்க எதிர்ப்பு மறுபுறமும் இருக்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்திய தோழருக்கு நாம் செய்யும் பிரதி உபகாரம் அவர்கண்ட லட்சிய சமு தாயத்தை அமைக்க எமது பங்களிப்பை செய்வதாகும்.
எஸ். விஜயானந்தன்
" வினில் உண்டுகளித்திருப்போரை
நிந்தஐன் செய்வோம்" 'ப்' - பாரதி

ജ O Fဓမ္မေဇူး‡ BOJTOTIPAJA
Y en rata a Berrorpa Asa rohet RJIM KTH Luc Th Kohiy H CTM Me ແຜA HapTMH Pເny(M !pl
JHK TT. Tanama MH TAM M. dobri Liu Ilo {{oT peTeT Be HF H Ĥ Fehp2;epL 143er stopnap "| O11 n、粤n Há 臀Top臀QkH黑 帽g· c1 a x Trp0a. a, , C0B(Tp LDH H 34KCky pr t'i la Manë alte. Ky prah, QwIxKcKy, KQ T39C HM. XX I I tTbe3a na KTHCC. TocT" cxdorpe B4, Aoку ментальные кинофнльмы о CT a III ir palčKOÅ đHT pe H BO3рожденни города-героя.
Делясь впечатленнямн, тов. Pep Gia Ho CK at: 1. Kloe:3 PUK a B CCCP IMeer in I Niac Go Ibuoc
y HHKTO HE 3ASET
Посланцы Шри Ланка
"Harqete. Mbi Hyttent on UT 血型骨T配嗣k帽*帽 Kohl aya McTH4gcKoh Tap Tai na Les CTpali lu, B TUM "KLTe Hapt 1lill x opraklit IaIL MI A B n 1 rprbala 30To TIoydo Mk LT H. M L II por Tor LEr horo, PN Fig T4°:
Boļepin a KTH I M Lr LJ - Kuba My H-IIстическоћ партнн Республикн Шри Ланка былі: гостями журналистов «Волгоградской прапII-a, OIB ocotic.IIHo HITeperonaPerch, opra H H3 A.III Ħielha pa6oT LN TalJett, CG 13 MK ec C Li Mpok HM 温属T博画0翼。
H.W. CHME: Toc T. H. pH Tlah Ha Phi pe JLA ILLIMH BOJI TCJ Tjä
ED 1 """: о л яицкого
"ரஷ்ய நாட்டில் உலாவரும் போது
பசிய நினவுகள் பகிர்ந்திடும் காட்சி"

Page 16

3
வதனை தந்த மறைவு
தோழர் பூபாலசிங்கம் காலமானர் என்ற துக்சச் செய்தியை லங்கை மண்ணில் இறங்கியவுடன் சேட்க நேரிட்டது எனது துர ஷ்டமாகும். தோழர் பூபாள சிங்கத்தை ஒரு முறை சென்னையில் சந் த்துள்ளேன். கட்சியின் பத்திரிகை, புத்தகங்களில் அதிக அக்சறை ட்டி வந்தார்
யாழ்ப்பாணத்தில் அவருடைய புத்ககக் கடை எரியூட்டப்பட்ட Fய்தியைப் பத்திரிகைகளில் படித்து நாங்களும் கொசிப்படைந்தோம் • னி கடையை அவர் நடத்துவரா? என்ற ஐயமும் எழுந்தது.
தோழர் கல்யாணசுந்தரம் எம் பி. அவர்கள் ஈழத்திற்குச் சென்று ரும்பிய போது செய்கிகளையும். சில புகைப்படங்களையும் கொண்டு ந்தார். எரியுண்ட சடையினைப் படத்தில் பார்த்தோம். ஆனல் இன் னரு படத்தில் புன்முறுவலுடன் கல்யாணசுந்தரத்துடன் உரையாடிக் காண்டிருந்த காட்சியையும் பார்த்தோம். கடையை எரித்தவர்களால் வரது நெஞ்சுறுதியைப் பொசுக்க முடியவில்லை என்பது கண்டு மகிழ்ந் தாம். ஆளுனுல், நான் வந்து பார்க்கும் முன் !
அவரது இல்லத்திற்குச் சென்று மாலையிடப்பட்ட அவரது படத் தயே காண நேரிட்டது. சோகமே வடிவெடுத்து அமர்ந்துள்ள அவரது ணைவியாரையும், குழந்தைகளையும் பார்ப்போருக்கு நெஞ்சு பதறு றது. தேறுதல் சொல்ல சொற்கள் கிட்டவில்லை.
முற்போக்கு நூல்களையும், செய்தித்தாள்களையும் விற்பனை செய் தன் மூலம் நற்பணி புரிந்து வந்தவரை இழந்தது, இலங்கைக் கம் னிஸ்டுக் கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் பரும் பேரிழப்பாகும். அவருடன் பழகிய தோழர்கட்கு அவரது இழப் ம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருமே அவரது துவளாத ம்பிக்கையையும், நெஞ்சுறுதியையும் பாராட்டிப் பேசக் கேட்டேன்.
தந்தை வழியில் மகன் நிற்பதைக் கண்டு சற்றே நிம்மதியும் பற்றேன்.
தோழர் பூபாலசிங்கத்தின் அன்புக்குரியோராய் வாழ்ந்த குடும்பத் ார்க்கும், உடன் பழகிய தோழர்கட்கும், இந்தியக் கம்யூனிஸ்டுக் ட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன். பூபால ங்கம் அவர்களின் நாமம் வாழ்க!
தா. பாண்டியன் சென்னை

Page 17
14
பூங்ாலுக்கு புரட்சிகர அஞ்சலி
தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம் நம்மை விட்டு மறைந்துவிட்டார். அந்த சோகம் எம் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. அன்னரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினரைப் போன்றே நாமும் தோழர் பூபாலசிங்கத்தின் மறைவால் வேதனைப்படுகிருேம் - விம்மி அழுகிருேம்.
ஏன் இவ்வாருற்ருேம் என்பதையறிய அவரின் கடந்தகால வாழ்க்
கையை சற்றுப் பின்னேக்கிப் பார்ப்பது நன்று. நான் குறிப்பிடுவது எமது கட்சியுடனும், எம்முடனும் பொதுவில் இந்நாட்டு இடதுசாரி இயக்கத்துடனும் அவர் கொண்டிருந்த, இறுதிவரை விடுபடமுடியாத பிணைப்பையேயாகும்.
தமது 15 வயதிலேயே அரசியலில் ஈடுபாடுகொண்ட அவர் இடது சாரிகளினதும் மூக்கியமாக சமசமாஜக் கட்சியினதும் இலக்கியங்களை மக்களிடையில் கொண்டுசென்று விநியோகித்தார். அந்த இளமைப் பிராயத்திலேயே மக்கள் இடதுசாரி இலக்கியங்களைக் கற்றறிந்தால்தான் உண்மை விளங்கும். அப்பொழுதுதான் அவர்கள் எதிர்காலத்தில் இடதுசாரிகளைத் தழும்பலின்றி ஆதரித்து நிற்பர் என்ற சத்தியத்தை உணர்ந்திருந்தார். அத்துடன் உழைக்கும் மக்கள் படும் அல்லல்களைத் துடைத்திடவும், அவர்களை ஸ்தாபனங்களில் ஒன்று திரட்டிப் போராட் டங்களில் ஈடுபடுத்தவும் அப்பொழுதுதான் சாத்தியம் ஏற்படுமென விசுவாசித்து மனங்கொண்டு மாசற்ற பணியாற்றினர்.
அவரின் அரசியல் வளர்ச்சியுடன் காலப்போக்கில், சிறுபான்மை இனங்களின், முக்கியமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமை யான தீர்வு சோஷலிஸ் அமைப்பின் வாயிலாகத்தான் காணமுடியுமென உணர்ந்ததினுல், அதன் பொருட்டு இந்நாட்டில் தேசிய ரீதியாக இயங்கும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். அதன் கிளையை யாழ் பிரதேசத்தில் நிறுவத் தமது முழு ஆதரவையும் நல்க முன் வந்தார். அவ்வமயம் தோழர்கள் எம். வி. சுப்பிரமணியம், எஸ். இராமசாமி ஐயர், எம். கார்த்திகேசன், எஸ். கே.கந்தையா ஆகியோர் வட பிரதேசத்தில் தமிழ் மக்களிடையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளேயொன்றை நிறுவிட முழுமூச்சாக உழைத்து வந்தனர். அவர்களுடன் தோழர் பூபாலசிங்கமும் இணைந்து இக்கிஃயை நிறுவிய ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரானுர். '
"தனி யொருவனுக்கு உணவில்லையெனில்
ஐஈத்தினை அழித்திடுவோம்' - பாரதி

15
தமது இளமைப் பிராயத்தில் கட்சியின் நடவடிக்கைகளில் துணி -னும், இயக்க உணர்வுடனும் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கு லதொரு எடுத்துக்காட்டு ஒரு துண்டுப்பிரசுர விநியோகத்தின்மீது பர் குற்றங் காணப்பட்டு அன்றைய ஆட்சியாளரால் சிறைவாசத் கு உட்படுத்தப்பட்டதாகும்.
பின்னர், யாழ் பிரதேசத்தில் கட்சியின் மாவட்டக்குழு அமைக்கப் -டு இயங்குங்காலை அதில் செயல்க்குழு அங்கத்தவராகவும், பொரு "ளராகவும் கடமையாற்றினர். இக்காலத்தில் இப்பிரதேச தொழிற் |க இயக்கத்திலும், கட்சி அணிகளிலும் தாம் இயங்குகையில் கடுமை ‘ன தமது உழைப்புடன் பொருளுதவியையும் நல்க அவர் பின் ற்கவில்லை.
தமிழ் மக்களிடையில் மார்க்ஸிஸ் இலக்கியத்தைப் பரப்பும் அரும் ணரியில் தாமே இவ்விலக்கியங்களைச் சுமந்து சென்று வட இலங்கை ல் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமெல்லாம் விநியோகித்தார். வ்விடாமுயற்சியின் பிரதிபலனுக இத்துறையில் ஒரு புத்தகக் கடை பயே நிறுவினர். மூக்கியமாக அக்கால சூழ்நிலையில் மக்கள் ாங்கவோ-விற்கவோ பின்னடையும் மார்க்ஸிய நூல்களை இவர் ணிந்து தமது கடிையில் வைத்து விநியோகித்தார். இதன் பொருட்டு
எதிர்ப்புகளைத்தானும் மனந்தளராது சமாளித்துள்ளார்.
யாழ் பிரதேசத்தில் அண்மையில் நடத்தப்பட்ட அரச பயங்கர "தத்தின் பிரதிபலனுக தோழர் பூபாலசிங்கத்தின் புத்தகக்கடை iாடுங்கோலர்களால் தீயிடப்பட்டுக் கொழுத்தப்பட்டது. பல இலட்ச பாய் நஷ்டம் ஏற்பட்டது. இதுகூடத் தமிழ் மக்களிடையில் ர்க்ஸிஸ் இலக்கியத்தை நீண்ட காலமாகப் பரப்பி வருவதைப் 1ாறுக்காத அதன் எதிர்ச்சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட அதியாயங் சின் தொடர் நிகழ்ச்சியாகவே தென்படுகின்றது. எனினும் ஒரு மூழு மிவைச் சந்திக்க நேரிடினும்-தமது ஆவி பொருள் அனைத்தையும் முக்க நேரிடினும் மார்க்ஸிஸ் இலக்கியங்களைப் பிரச்சாரப்படுத்தும் னியை நாம் நிறுத்தப் போவதில்லையென சூளுரைத்து அப்பணியை ன்னெடுத்துச் சென்ழுவி.
சோஷலிஸ் நாடுகளுடனுன நேச உறவை ஏற்படுத்தவும், அதை ார்த்திடவும்-அதே வேளையில் உலக சமாதானத்தின் இன்றைய வசியத்தை உணர்த்தவராகவும் அதன் பொருட்டுத் தமது பிரதேச
"குடிமக்கள் சொன்னபடி குழிவுாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி எழ வேண்டும்” - பாரதி

Page 18
16
nக்களே ஆனிரெட்டலும் முன்னுேடியர்ப்ே பணியாற்றிஞர்'சாலி"
ಸಾಗಿuಸr ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு-செக்கொiல "ெ பகியூப" ஆகிய நாட்டு மக்களுடனுன நட்புறவுச்சங்கங்களே '- பிரதேசத்தில் நிறுவிடவும், அவைகளேப் பேசவுதித்துவோர்க்கம் புள் ட பங்கு வகித்துள்ளார் அதேபோன்று சமாதான் சபையின் ஃோ ஆாப வாழும் பிரதேசத்சில் நிறுவுவதிலும் புது பற்றியுள்ளார். ஆகவே, தேசிய பிச்சின்ேஞக்குத் தீர்வுகாண பிழ்ைந்த அதே போக்கிலேயே சர்வதேசிய பிரச்சிஃriளிலும்"தாம் கம்பூரிஸ்ட்வாதி r u பங்குப்பணியாற்றியுள்ளார்.' שאלו KONGE
அவரது வாழ்க்கைக் காலத்தில்தான் ஒரு சர்வதேசியவாதி என்ற உணர்விலும், தேசிய ரீதியில் பிற்போக்குச் சக்கிகளே எதிர்க் கட் போராடியதுடன் அவ்வப்போது நமது இயக்கத்தில் முளேவிட்ட சந்தர்ப் வாதப் போக்குகளேயும் நேருக்குநேர் முக்ங்கொடுத்து முறியடிக்கவும் அவர் போராடியுள்ளார்' " -
* எனவே இத்தகைய ஒரு தோழரை இழந்துள்ள நாம், யாழ் பிரதேசத்கிற்கு மாத்திரமல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முழு இடதுசாரி இயக்கத்திற்கும் ஏறபட்ட ஒரு இழப்பாகவே இதை நாம் கருதுகிருேம்
r *。 தோழர் பூபாலசிங்கத்தின் மறைவையிட்டு நாம் எமது நெஞ்சாழ்ந் 点 துக்கத்தை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக்கொள்கிருேம். அத்துடன் அவரை இழந்து ஆருத் துயருற்றுள்ள மண்வி-பிள்ளைகள், உற்ருர்உறவினர்கள், தோழர்கள்-நண்பர்கள் அண்டருக்கும் எமது அது தாபங்களைத் தெரிவித்துக்கொள்கிருேம். --
இறுதியாகத் தோழர் பூபாலசிங்கம் விசுவாசித்துப் பின்பற்றிய கொள்கையின் துவஜத்தை"உயர்த்திப் பிடித்து அவரின் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோமென சங்கற்பம் ஏற்பதுடன், அன்னுருக்குச் செங்கொடி தாழ்த்தி எமது புரட்சிகர அஞ்சவிகளே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், எனது சொந்த முறை
க்
லும் தெரிவித்துக்கொள்கிருேம், ॥ A . ॥ *、 ■ ) 1"
வணக்கம்
॥ இங்ஙனம் ' 94, கொட்டா ருேட், கே.பி. சில்வா
கொழும்பு-8. பொதுச் செயலாளர்
--952. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
"அடிமைக்குத் த*ளயில்லே யாருமிப்போது,
அடிமையிலே 'என்று அறிக" - பாரதி
 
 

--سس
“g lsia
நளாவிய தோழர்கள் மத்தியில் ।
瞄
நிலகொள் பூப்ால் நின்றிடும் காட்சி
*** ჭჭჯჭor:#EE| 器 : 8.

Page 19
சரி அழு
t_FT
கப்
சந்
ひ い さ

17
த்திரக்கதைச் செம்மல், மூத்தமிழ் வித்தகர் முதசுரபி ஆசிரியர் ாக்டர் விக்கிரமன் அளிக்கும்
ஞ்சலி
இலங்கைக்குச் செல்லப் போகிறேன் என்று நான் அறிவித்தபோது ழ்ப்பாணத்திற்குச் செல்ல மறந்துவிடாதீர்கள் என்று நண்பர்கள் றிஞர்கள்.
ஆம், யாழ்ப்பாணம் செல்லப்போகிறேன். அதுவும் முதலில் யாழ்ப் ணம் சென்றபிறகே இலங்கையின் மற்ற பகுதிகளைச் சுற்றிப் பார்க்
போகிறேன் என்று சொன்னேன்.
யாழ்ப்பாணத்திற்குச் சென்ருல் நீங்கள் பூபாலசிங்கம் அவர்களைச் திக்காமல் திரும்பக் கூடாது என்றும் கூறினர்கள்.
பூபாலசிங்கம் - வரலாற்றில் வரும் கதாநாயகர்கள் பெயர்போல் ருக்கிறதே என்று யோசித்தேன்.
திரு பூபாலசிங்கம் அவர்களைப்பற்றிய பெருமையான செய்திகளை ன் நண்பர் கூறினர். அவர் ஒரு புத்தக வியாபாரி. தமிழகத்தில் வளியிடப்படும் நல்ல நூல்களை திரு.பூபாலசிங்கம் யாழ்ப்பாணத்தில்விற் னே செய்து வருவதாக அறிந்தேன். தமிழ் நாட்டிலிருந்து வெளிவ ம் பத்திரிகைகளுக்கு நல்லதொரு விற்பனையைத் தேடித்தரும் பத்தி கை விற்பனையாளராகவும் அவர் திகழ்கிறர் என்பதையும் கேட்டி ந்தேன். ܫ
1945 ஆம் ஆண்டிலிருந்து நூல் விற்பனை, பத்திரிகை விற்பனைப் எனியில் படிப்படியாக முன்னேறிய திரு பூங்ாலசிங்கம் உழைப்பால் பர்ந்தவர்.
யாழ்ப்பாணம் சென்ருல் திரு பூபாலசிங்கம் அவர்களைச் சந்திக்க பண்டும் என்ற கட்டாயமும் எனக்கிருந்தது. சிலமாதங்களாக அமுதசுரபி'க்கு யாழ்ப்பாணத்தில் விற்பனையாளர்கள் இல்லை. தமி ன் இதயமாகத் திகழும் யாழ்ப்பாணத்தில் "அமுதசுரபிக்குத் தக்க ற்பனையாளரைத் தேடுவது எனது முக்கியப் பணி. என் பயணத் ட்ட க்கில் சந்திக்க வேண்டியவர்கள் பட்டியலில். அவரது பெயரை த லிலேயே சேர்த்துக் கொண்டேன்.
**கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினல்
கைகொட்டிச் சிரியாரோ - பாரதி

Page 20
18
இலங்கைப் பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் செய்தி ஒன்று கிடைத்தது. எதிர்பாராத செய்தி. திடுக்கிடும் செய்தி. மனவேதனைட் படும் செய்தி.
திரு பூபாலசிங்கம் திடீரென காலமாகிவிட்டார். செய்தியை முத வில் நம்பமுடியவில்லை. பிறகு தக்கவர்களைக் கேட்டறிந்தபோது. செய்தி உண்மையானது என அறிந்தேன். திரு பூபாலசிங்கம் அமரரா Sal L-5tti.
நண்பர்களை ஏராளமாகப் பெற்றிருந்த பூபாலசிங்கம் அவர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். அவர் சார்ந்த கட் சின் பணிகளில் உடன் உழைத்தவர்களைத் தவிப்படையச் செய்து சென்று விட்டார்.
யாழ்ப்பாணம் வந்தடைந்த அன்றே திரு பூபாலசிங்கம் அவர்க ளுடைய புத்தகவிற்பனைக் கடைக்குச் சென்றேன். பஸ் நிலையத்தில் மிகப் பார்வையான இடத்தில் அவரது விற்பனை நிலையம். நிலையம் அமைந்திருந்தது. கலவரச் சமயம் அவரது கடைகளும் தாக்குதலுக்கும் எரியூட்டலுக்கும் இலக்காயின. மனம் தளரா பூபாலசிங்கம் மீண்டும் அங்கேயே நிமிர்ந்து நின்று பணியாற்றத் தொடங்கினர்.
விற்பனை நிலையத்தில் அவரது குமாரர்களைச் சந்தித்தேன். தந்தை விக்டுச்சென்ற பணிகள் அனைத்தையும் தொடர்ந்து செய்ய அவர்கள் உறுதிபூண்டிருப்பது அவர்களது தோற்றத்தில், சுறுசுறுப்பில், செய்கை யில், பேச்சில் தெரிந்தது.
பலவித நூல்களும் கிடைக்கும் அந்த விற்பனை நிலையத்தில், யாழ்ப் பாண மக்களுக்குத் தமிழகப் பத்திரிகைகளை அளிக்கும் பூபாலசிங்கம் நிலையத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அமரர் பூபாலசிங்கம் வளர்த்துச் சென்றிருந்த பெரும்பணி புலப்பட்டது.
அமராகி விட்ட திரு பூபாலசிங்கம் இன்றும் நம்மிடையே வாழ் கிமூர் என்ற உணர்வை அங்குள்ள நூல்களும், பத்திரிகைகளும் நமக்கு தெளிவுப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
வாழ்க அமரர் பூபாலசிங்கம் புகழ்!
விக்கிரமன், சென்னை,
"இடிபர்ட சுவர்போலே கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மRதோ! M - பாரதி

19
இணையற்ற சேவையாளர்
வள்ளுவன் வாக்குக்கு அமைவாக தோனறிய பூபாலா. பொதுப் பணியில் அயராது உழைக்கும் சிங்கமே. கல்லாக் கல்விப் பேரறிஞ. கொள்கை இல்லா மனிதன் நீர் ஃம்ே சருகு ஒப்பான் என்பதை இளமையிலேயே உணர்ந்தாய். மக்களை எல்லாம் சமமாக மதித்துப் பணியாற்றும் சமதர்மக் கொள்கைப் பணிபூண்டாய். அக் கொள்கையாளர் நாட்டுக்கே (ரகூFயா) இரு தடவை நேரில் சென்று தரிசித்தும் வந்தாய். தீவுப்பகுதி மோட்டார் வள்ளச் சேவைப் பணி பூண்டாய். நயினுதீவு பூரீ கணேசா சனசமூக நிலையம், கிழக்கில் காடு வீடு அமைக்கும் திட்டம் இவற்றின் பணியாள. அம்பாளின் அருள் வேண்டி வரும் அடியார்களின் பசிப்பிணி தீர்க்கும் அமுதசுரபி அன்னதான சபையின் செயலாள. யாழ்நகர் சென்ருய், அங்கே அறி ஞர்கள், சேவையாளர்கள் அறிவுச்சுடர் கொளுத்தும் பணிக்கு உகந்த போற்ற வாழ்ந்தாய். தொழிலாக தேர்ந்து புத்தகசாலையை நிறுவினய், பகைவர் பொருமைக்கு இலக்காகி அது பலதடவை தீக்கு இரையாக் கப்பட்ட போதும் அஞ்சாது, அயராது, தின்ருய் அழிந்தவற்றுக்கான நட்டஈடு ஆக ஒரு தொகை உதவப்படும் என்ற செய்தியும் அறிந்தாய், ஆஞரல் அதையும் பெறுமுன்னே அமைந்தது போலும் நின் நெஞ்சம். அன்ருெருநாள் (21-7-1982) அயர்ந்தனை, மறந்தன. விண்ணுலகு ஏகினை என்பது கேட்டு மக்கள் நெஞ்சம் துண்ணென்று இடித்தது. இணையற்ற சேவையாளரின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தை விட்டு அவர் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போமாக.
நின்பணி சிறக்க, நின்புகழ் வளர்க.
அன்புச் சோதரர் வே. கந்தையா J. P.
நயினுதீவு, 3 ஒய்வு பெற்ற ஆசிரியர் 9-8-32 முன்னுள் கிராமசபைத் தலைவர்
"முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம் உலகத்திற் கொரூபுதுமை" - பாரதி

Page 21
20 தொண்டனை இழந்து துடிக்கின்றேம்
திரு. பூபாலசிங்கம் அவர்களை R. R. P.’ என்று எல்லோரும் அன் பாக அழைப்பார்கள். நயினதிவிலே பிறந்த இவர் இளமை முதல்
ஏதோ ஒரு சக்தியினல் உந்தப்பட்டவர் போல எல்லோரையும் தமது
ஆகர்ணசக்தியால் தம்வசப்படுத்திவிடுவார். புரட்சிகரமான எண்ணங் கொண்டவர். புரட்சி, புரட்சி என்று பேசுகின்ற இக்கால இளைஞர் களைப்போல எதற்கெடுத்தாலும் சண்டப் பிரசண்டமாக நடப்பவர் அல்லர். தக்கது இன்னது தகாதது இன்னது என்பதை அறிந்து, பெரியோரைக் கனம்பண்ணி, ஊரோடு ஒத்துப்போகக் கூடிய வகையில் சமூகச் சூழலுக்கேற்பக் கீழ் மட்டத்தவரோடும் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு செயற்பட்டு நல்லனவற்றைச் செய்வதில் முனைந்த நிற்பார். கொள்கையில் உறுதியாக நின்றுகொண்டு சந்தர்ப்ப சூழல் களைத் தக்கவாறு கையாண்டு லாவகமாகப் பணிகளைச் செய்து வெற்றி காண்பார். இளைஞராக இருக்கையிலே என்னேடும் ஏனைய முற்போக கான நண்பர்களுடனும் சேர்ந்து கிராம அபிவிருத்திப் பல துறைகளி லும் முனைந்து உழைத்து வந்தார். ‘மணிபல்லவதேவி பொதுநிலைக் கழகம், நயினுதீவு அபிவிருத்திச் சபை, தீவுப்பகுதி மோட்டார் சேவை, அமுதசுரபி அன்னதான சபை, ஆலயப் பிரவேசம், பலி நிறுத்தம்’ போன்ற பல்வேறு துறைகளிலும் அவர் எம்மோடு தோழ்கொடுத்துச் சேவையாற்றினர்.
இதனல், முன்னுள் யாழ் அரச அதிபர் மா. பூரீகாந்தா, சிரு வாளர்கள் D. R. O. சிவஞானம், D. R. O. செல்லத் தம்பு, D. R. 0 கந்தையா, இன்னும் பல பொதுநலத் தொடர்பு அதிகாரிகளின் பெரு மதிப்பையும் பெற்ருர், ஊர்ப்பற்றும், இனப்பற்றும், தேசியப்பற்றும், ஒருங்கிணைந்து அவரிடம் காணப்பட்டன. அவரை மனமார நேசிக்காத ஊரவரே இல்லையெனலாம். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண் டிருந்தாலும்-ஊரிலே அவர் பங்குபற்ருத கலைநிகழ்ச்சிகளோ, விழாக் களோ இல்லையெனலாம். அன்றியும் தன்னலான பொருளுதவியும் நல்கி நல்ல காரியங்களுக்கு எப்போதும் கைகொடுத்து எல்லோரினதும் நம் விக்கைக்கும், நற்மதிப்பிற்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்.
அவரது இறுதி யாத்திரையின்போது பங்குபற்றிய மக்கள் வெள் ளமே சான்று பகரும். அவருடைய வாழ்க்கை வரலாறு வளர்ந்துவரும் எமது இளைஞர் சமுதாயத்திற்கும், நயினுதீவை விட்டுக் குடிபெயர்ந்து வெளியிடங்களில் வாழும் ஊரவர்க்கும் ஒரு வழி காட்டியாக அமைய வேண்டும் என நான் விரும்புகின்றேன். அவருடைய ஆன்மசாந்திக்காக எல்லாம் வல்ல எம்பிராட்டி நயினை நாகபூஷணி அம்மனைப் பிரார்த்திக் கின்றேன்.
இங்ங்ணம் கா. க. சிவசிதம்பரம் முன்னுள் கிராமாதிகாரி
நயினதிவு.

21
வாருங்கள் முதலில் அதைச் செய்வோம்
நயினதிவில் சமதர்மத்துக்கு வித்திட்ட பெருமகன். மூடக் கொள்கை *ள உடைத்தெறிய, போதனைகளும் சாதனைகளும் நிகழ்த்திய புரட்சி ாளன். சாதிப்பேயை ஒடஒட வெருட்டிய பூசாரி. பொதுநல சேவையே *னது வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட தொண்டன். சமூகத்தின் 'டித்தளத்திலுள்ளவர்களுடனும் மேல்மட்ட மனிதர்களுடனும் ஒரே ராகப் பழகிய பண்பாளன். காலம்சென்ற ஆர். ஆர். பூபாலசிங்கம் வர்களை நினைக்கும்போது எனது உள்ளத்தில் கீறிடும் எண்ணக் ருக்கள் இவைகளே.
ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைக்காத எத்த வாரு ஸ்தாபனமும் நயினுதீவில் இல்லை. அவர் பங்குபற்ருத எந்த வபவமும் இல்லை. அவர் ஆதரவு அளிக்காத எந்த தல்ல இயக்கமும் இல்லை. பிற்போக்காளருக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். உறவு, ந்தம், பாசம் இவற்றையெல்லாம் தள்ளிவைத்து நீதிக்காகப் போராடிங் பர் அவர். இளைஞர்களுக்கு ஒரு துருவ நட்சத்திரமாக அவர்கள் நேரிய பழியிற் செல்ல வழிகாட்டியவர். இளைஞர்களுக்கு மாத்திரமல்ல பெரிய சர்களுக்கும் தான். ஒருவரது கொள்கைகளைக் கண்டிக்கும்போது, அக் }காள்கை கொண்டவர் மேல் ஆற்றும் பாசமும் வைத்திருக்கம் உயரிய 1ண்பாளர் அவர். எதிரி ஒருவர் நல்ல காரியம் ஒன்றைச் செய்யும் பாது அதைப் போற்றிப் பாராட்டும் உளப் பண்னபக் கண்டு நான் பூரிப்படைந்த சந்தர்ப்பங்கள் பல சொந்சக் கோபதாபங்களைப் பொது ஸ்தாபனங்களுக்குள் காவிச் செல்லும் ஈனத்தனம் அவரிடம் எப் பொழுதுமே கிடையாது.
தொன்னூற்முென்பது ரூபாயை நூறு ரூபாயாக்கிப் பெட்டியில் பூட்டிவைக்கும் சமதர்மவாதிகளைக் கண்டிருக்கின்றேன். ஆர். ஆர். பூவாலசிங்கம் அவர்கள் அத்தகையர் அல்லர். தரும வழியில் பொருள் தடி இவைகள் எல்லாம் ஏழைகளுக்கே உரியது என்று எண்ணி ாழ்ந்தவர். சாதி ஒழிக என்று கூட்டங்களில் சிங்கம்போல் கர்ச்சித்து பிட்டுச் சொந்தவீட்டில் சாதிப் பேய்க்குக் கொலுவிட்டு ஊஞ்சல் பூட்டும் அசிங்கமான அரசியல்வாதிகள் பலரை நான் கண்டிருக்கின் றன். ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் அத்தகைய வெளிவேஷக்காரர் 1ல்லர். நல்லதைச் சொல்வார் சொல்வகைச் செய்வார். நேற்று ஒரு ட்சி. இன்று இன்ஞெரு கட்சி. நாளைக்கு எந்தக் கட்சியில் சேரலாம்
**முத்தியென்ருெரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாப்' - பாரதி

Page 22
22
என்று யோசித்து யோசித்து மண்டையை உடைக்கும் அரசியல்வாதி வி அல்லர். திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் ஒரு கொள்கைப் பிடிப்பாளர்.
நல்ல நினைவு. நல்ல பேச்சு. நல்ல செயல். இதுவே அவர் பண்பு. தீர்க்காயுசாக வாழவேண்டும் என்று நாம் நினைப்பவர்கள் இடைநடு வில் போய்விடுகிருர்களே - இது ஏன் என்று தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடைக என்று எல்லோரையும்போல நான் பிரார்த்திக்கப் போவதில்லை. உலகின் எப்பொழுது 'சாந்தியும் சமதர்மமும்' நிலை" பெறுகிறதோ அப்பொழுதுதான் அவரது ஆத்மா சாந்தியடையும். அந்நிலையை உலகம் அடைய நாம் பாடுபடுவோம்!! வாருங்கள் அதை முதலிற் செய்வோம்!! அதுவே அன்னர்க்குநாம் செய்யும் நன்றிக் கடன்.
வி. ஆர். கே. இரத்தினசபாபதி தலைவர் நயினுதீவு தெற்கு, கிராமோதயசபை
*வல்லமை தாராயோ இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே" கூட பாரதி

23
புன்புத் தோழரே, போய்வாருங்கள்!
வாழ்வுக்கு வழியற்று, வறுமைக்கு விடிவற்று வாடுபவர் வாழ்வின் இருளகற்ற உழைத்தவரே, நயினைமண்ணின் பல்துறை வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு பெரும்பணி புரிந்தவரே, அரசியல் அலைகள் மனிதரை இணைப்பதுமுண்டு; அவையே பின்னர் பிரிப்பதுமுண்டு! எவரையும் என்றும் பிரிக்காதிணைக்கும் அன்பின் அலைகள் உருவாகிய பெருங்கடலே, செங்கொடியின் அரவணைப்பிலே துயிலுங்கள்! பிற்பகலிலேயே திடீரென மேற்குவாணக் கடலுக்குள் வீழ்ந்துவிட்ட ஆதவனே, நாளை மீண்டும் கிழக்கு வானத்திலே உதிக்கின்ற செங்கதிராக மீண்டு வாருங்கள்! போய் வாருங்கள்!!
தங்கள் தோழமையுள்ள
ஆனந்த பவனம்’’ நா. சிவராசசிங்கம் (அக்கினிக் குஞ்சு)
நயினதிவு. பிரதேச சபைத் தலைவர், வேலணை. 6 - 8 - 82. €hairman, Pradeshiya Mandalaya,
• (Islands South), Velanai
'திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும். - பாரதி

Page 23
இறை பணிக்கே எம்மை இட்டுச் சென்றர். அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் ஜே. பி. அவர்கள்.
"ளின் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற நாவுக்கரசரின் இரு வாக்கிற்கு இலக்கணம் படைத்துக்காட்டி அந்த-இலக்கணத்திற்குத் தமது வாழ்க்கையையே இலக்கியமாக அமைத்துக் கொண்டனர்; எமது த* வர் மேரர் திரு ஆர். ஆர். பூபால்சிங்கம் ஜே. பி. அதிர்கன். சிந்திரி சுத் தெரிந்த நாள் தொட்டு; அவரது ஆத்மா இறையருளுடன் ஒன்றும் நான்வரை அன்ஞரது எண்ணம், சொன், செயல் காவும் மக்களுக்காக தான் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியதாகவே இருந்தது எனவேதான் அவரது தலேமையில் பல பொதுப்பணி நிறுவனங்கள் உதயமாகின் பல பொதுப்பணித் தொண்டர்களே அவரால் உருவாக்கி விட் முடிந்தது. All
நயினைத் தாயின் புனித மண்ணிலே அவதரித்து, காம்பிறந்த மண் னிற்கும், ஈழத்திருநாட்டிற்கும் பெரும்ை தேடித்தந்ததோடு மட்டு: ன்கி உலக அரங்கிலும் சைவத்தின் தனிச்சிறப்பையும், தமிழரின் மாண் பிளேயும் எடுத்துக் காட்டிய பெருமை நயினே மாதாவின்தவப் புதல் வர்கள் பலரை சார்ந்ததாகும். அத்தகைய பெரியார்கள் வரிசையிலே அமரர்களான திரு. க. இராமச்சந்திரா அவர்கள் பிரதிகழ்டாபூஷணம் சிவபூஜரீ ஐ. கைலாசநாதக் குருக்கள் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக எமது தலேவர் திரு ஆர். ஆர். பூபால சிங்கம் அவர்களே வைத்தெண்ணப்பட வேண்டியவர்களாவரர்கள்.
அமரர் திரு ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் இளமைப் பருவம் சீெட்டுப் பொதுப் 'பணிகளில் மிகவும் தாட்டம் கொண்டிவிராக விளங்கிஞர். பள்ளிப் பராய்த்தில் தாம் சுற்ற இச்சிதாபனக் சுதையும். அதன் பின்னர் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைக் கொன் ள்ைகளும் தம்மை வெகுவாகக் கவர்ந்தன என்றும்; அவிைகளே தமக் குப் பெதுப்பணி செய்ய செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை வாட்டின என்றும் அவர் அடிக்கடி கூறுவர்ர்.
அமரர் இளேஞராய் தயினேயில் வாழ்ந்த காலத்தில் பல சனசமூக நிலேயங்கள் அவரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டின. இன்று பல துறைகளிலும் மக்களுக்கு பணியாற்றிவரும் பூஜி' கணேச சனசமூக நிலேயம் அமரர் அவர்களின் பெரு முயற்ச்சியினுல் ஆரம்பிக்கப்பட் டதாகும்.
"தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி'
சஞ்சலம் நீக்கும் தவவே சக்தி' - பாரதி

"மங்கள கும்பம் மனங்கமிழ் இசையில் இங்கிதம் காணும் எங்களின் பூபால்"
சந்தியை நாட்டும் நீடுயர் பதவியில் ( P)
கூடியபோது குதூகலம் காண்க"

Page 24
~LI Ưti– ss U » — «IT
W

‘25
அக்காலத்தில் தீவுப்பகுதி மக்களின் போக்குவரத்துச் சேவையை டாத் வந்த தீவுப்பகுதி மோட்டார் வள்ள ஐக்கிய சங்கத்தில் முகாமை 1ாளராகப் பணியாற்றி தீவக மக்களின் பிரயாண வசதிகளுக்காகப் பெரும்பணியாற்றினர். இவரது சேவைக்காலத்தில் சங்கத்திற்கு பல புதிய மோட்டார் படகுகள் கொள்வனவு செய்யப்பட்டன. சங்கத் தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டதோடு; பிரயாணிகளின் நலன் ருதி "நயினுதீவு பிரயாணிகள் சங்கம்’ என்ற இயக்கத்தை நிறுவி *தன்மூலம் அரசாங்க அதிகாரிகளுடனும், அரச நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு நயினை மக்களுக்கு பெரும்பணியாற்றினர். நயின விேல் "பஸ்" சேவை ஆற்றப்பட வேண்டும் என விரும்பி அதில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
அமரர் திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் ஒரு பொதுவுடமை வாதி. எல்லோரும் இன்புற்றிருப்பதையே அவர் எப்பொழுதும் விரும் பினர். இளமை தொட்டு அவர் 'கம்யூனிஷ்ட்' கொள்கையை பின் பற்றி வந்தார். அதே நேரத்தில் அவருள்ளத்தில் ஆழ்ந்த இறை நம் விக்கையும் குடிகொண்டிருந்தது. இவர் இளைஞராக இருந்த காலத்தில் ஆலயங்களில் பலியிடும் கொடிய வழக்கம் இருந்தது. நயினையில் இவர் வழிபடும் ஓர் சக்தியின் ஆலயத்தில் ஆட்டுக்கடா பலியிடுவதை நிறுத் துேம்படி உண்ணுவிரதமும், சத்தியாக்கிரகமும் நடாத்தி வெற்றிகண்ட நிகழ்ச்சி இவரது காந்தீயக் கொள்கைக்கும் இறை நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாகும்.
அன்னை நாகபூஷணியின்பால் ஆராத பக்திகொண்டிருந்த அமரர் அவர்கள்; அம்பிகையின் அருளைப்பெறவரும் அடியவர்களின் பிரயா ணக்கஸ்ரங்கள், மற்றும் வசதியீனங்கள் ஆகியனவற்றை தீர்ப்பதற்சாக அல்லும் பகலும் அயராது உழைத்தார். அம்பிகையின் புகழ் திக்கெட் டும் பரவவேண்டும் என்பதற்காக நயினையின் "தலவரலாற்றினையும் தோத்திரப் பாடல்சளையும்" அச்சிட்டு குறைந்த விலையில் விற்பனை செய்தார். அத்தோடு அம்பிகையின் திருவுருவப் படங்களையும், குறைந்த விலையில் விற்பனை செய்ததன் மூலம் ஈழத்தின் சைவ இல் லங்கள் தோறும் நாகபூஷணி அம்பாளின் திருவருள் பாலிக்கச் செய் தார்.
1960-ம் ஆண்டில் நயினுதீவு பூரீ நாகபூஷணி அமுதசுரபி அன்ன
தான சபை ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப கர்த்தாக்களில் மிக முக்கியமானவர் அமரர் திரு ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள். அடிய
'புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக் கேழுத்தறிவித்தல்" - பாரதி

Page 25
26
ஆகட்கு அமுது செய்வித்தலாகிய அரும்பணி சிறப்புற நடக்கவேண்டு அெனத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எவ்வித பிரதி பஃனேயும் எதிர்பாராமல் அர்ப்பணித்த உத்தமர் அவர். எம்போன்ற இஃாஞர்களேயும் அப்பணியில் ஈடுபடுத்திய பெருமையும் அவருக்கே உரி யது. அடியவர் பசிப்பிணி அகற்றி அதில் வெற்றி கட்ட அமரர் அவர் கள் அடியவர்களுக்கு தாகசாந்திப்பணி செய்யவேண்டுமென ஆசை கொண்டார்.
முன்னர் அவர் தலைமையில் இயங்கிவந்த நயினதிவு பிரயாணிகள் சங்கத்தை 1973-ம் ஆண்டில் நயினுதீவு அபிவிருத்திச் சபை என மாற்றி அதற்கெனப் புதிய காரிய நிர்வாகக் குழுவை அமைத்து அதன் தலைமைப் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டு பெரும்பணி யாற்றினர். நயினதிவு அபிவிருத்திச்சபை அம்பிகையின் உற்சவகா லத்தில் வருகைதரும் அடியவர்களுக்கு தாகசாந்தி செய்தற்பொருட்டு ஆலய முன்றவில் மண்டபம் அமைத்து பகல் இரவாக கோப்பி, தேனீர், குளிர்பானங்கள், குடிநீர் முதலானவற்றை இலவசமாக 1973-ம்ஆண்டு முதல் வருடந்தோறும் மிகவும் சிறப்பானமுறையில் வழங்கி வருகி றது. இவ் அருட்பணியை ஆரம்பித்து வைத்து செவ்வனே நடாத்த ஊக்கமும், ஆக்கமும் தந்த பெருமை அமரர் திரு. ஆர். ஆர். பூபால சிங்கம் அவர்களையே சாரும். அவர் விட்டுச்சென்ற சேவைகளை தொடர்ந் தும் ஆற்றி, அவர் கண்ட இலட்சியக் கனவுகளை நனவாக்கும் வல்ல மையை அவர் வழிநடத்திய தொண்டர்களாகிய எமக்கு அன்னை 'நாகபூஷணி" அருளவேண்டும்.
இத்தகைய சமூகப் பணிகளேயும், தெய்வீகப் பணிகளையும் ஆற்றிய அமரர் திரு ஆர். ஆர். பூபாலசிங்கம் ஒர் கொடைவள்ளல். கல்வி கற் கும் சிறர்களுக்காக அவர் அள்ளி வழங்கிய நூல்கள் அநேகம். பாட சால்களுக்கும், நூல்நிலையங்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் தமது ஸ்தாபனத்திலிருந்து பெறுமதிமிக்க நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்,
பரிசளிப்பு விழாக்களில் கலந்து கொண்டு சிருர்களே ஊக்குவித்து நூல்களைப் பரிசாக அளிப்பது அவரது கல்விப்பணிக்கோர் எடுத்துக் காங்டாகும்.
'தக்கார் தகவிலார் என்பவர் தம்
எச்சத்தாற் காணப்படும்’ என்ருர் வள்ளுவர்
SqSMSSqqSLLSSSqqMMLSLSLSL SSqSAqqq S qqqqSqSq SLMSMSCSS
"சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும்" - பாரதி

27
அமரர் திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களது தகைமை; அவர் விட்டுச்சென்ற பொதுப்பணிகளின் வளர்ச்சியினலும்; அன்னரது அன்
புக்குழந்தைகளின் சீரிய வாழ்க்கை உயர்ச்சியினுலும் சிறப்புற வேண்டு
மென அன்னை "நாகபூஷணியை’ இறைஞ்சி நிற்போமாக.
அன்னரது பேரிழப்பால் ஆற்ருெளுத் துயரில் மூழ்கி நிற்கும் அவரது அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் அம்மையாருக்கும், அன்புத் தாயாருக்கும், அவர்தம் ம்க்கள் - மருகர்; அன்புச் சகோதரர் சகோதரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நயினுதீவு அபிவிருத்திச் சபையின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அமரர் திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம், ஜே. பி. அவர்களின் திவ்விய திருவடி களில் எமது கண்ணீர் அஞ்சலியையும் சமர்ப்பிக்கிருேம்.
வி. சபாதாதன் செயலாளர் நயினுதீவு அபிவிருத்திச் சபை
**சக்தி சக்தியென்று சொல்லி - அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு' - பாரதி

Page 26
28
புத்தக வர்த்தகர் பூபாலசிங்கம்
'சிறுகக் கட்டிப் பெருக வாழ்க" எனத் தமிழ் பெரியார்கள் வாழ்த்திய வண்ணத்துக்கமையவும், "திரைகடலோடித் திரவியந்தேடு' என்று நல்லவர்கள் ஊக்குவித்த வண்ணத்துக்கமையவும், எங்கள்மத் தில் உதாரண புருடராய் வாழ்ந்த இளைஞன் பூபாலசிங்கம்.
திரைகடல் சூழ்ந்த நயினதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர், த: பன்னிரண்டாண்டுப் பருவத்திலேயே கடல் கடந்து முயற்சியில் V துணிக ஈமாகப் புகுந்தவர். நயினை நாகம்மாளின் கருணையும், நல்லூர்க் கந்: சீன் திருவருட் கடாட்சமும் பூபாலசிங்கத்துக்கு ஆக்க பூர்வமாக இருந்தன. r
பிராரத்துவ வினையை அவர் அநுபவித்த விதமும், ஆகாமி ! யத்தை அவர் ஈட்டிய வகையும், விளக்கமுடியாதவை. பண்ணங்கட்டி ஒன்று மேலிடத்திலிருந்து விழுந்தால் தூளாக உடைந்து பண்ணுேடு beண் ஒனப் நிலத்தை வறுகிப்பிடித்துக் கிடக்கும். ஒரு பந்து மேலிருந்து விழுத்தால் மறுகலித்து உடனடியாக மேலே எழும்பும், மறுமலர்ச்சி அடையும். எரியுண்டவர், வெட்டுண்டவர், வீரராயிருந்தால், "ஐயோ இதைக் பார், அதைப்பார்" என்று தானும் அழுது பிறரையும் அழப் அண்ணுவதற்கு ஒப்பாரி சொல்லமாட்டார். பூபாலசிங்கம் தந்தையார் வழியால் கலைசிறந்த சைவ சித்தாந்தி. அவர் ஊழின் வலிகையை உணர்ந்து புன்முறுவல் பூத்தவர். வாழ்வும் தாழ்வும் பகலும் இரவும் எனக் கண்டவர், வாழ்ந்தவர். "யாவர்க்குமாம்' எனத் தொடங்கும் திருமூலர் திருமந்திரம் வெறும் சைவசித்தாந்தத் திறன் மாத்திரமல்ல. அது தலைசிறந்த சர்வோதயம். சர்வோதயத்தில் புஸ்பித்த பொதுஷ் டைமை கண்டவர் பூபாலசிங்கம்.
பூபாலசிங்கம் ஒருமுறையல்ல இருமுறையல்ல, ஒரு இடத்திலல்ல இரு இடங்களிலல்ல, பலமுறை பலவிடங்களில் படாதன பட்டுத் தனித்தவர். தலைதூக்கியவர், தலைவர். பூபாலசிங்கம் தன் னைப் பின்னின்று ஊக்கமளித்து வாழவைத்த அன்னை நாகேஸ்வரியின் திருப்பணிகளில் வெகுவாக ஈடுபட்டு, அவள் மகிமை கூறும் பெரு நூல் ஒன்றைத்தக்க புலவரைக்கொண்டு உருவாக்கி வெளியிட்டவர்.
அண்மையில் இதுவரை ஆரும் பெரூத ஊக்கம் ஒன்று உண்டா கப்பெற்றுத் திருமுறைத்திரட்டு ஒன்றைத் திரட்டி உருவாக்கி அழகிய படங்களுடன் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு முழுவேலையும் செய்து முடித்து நூல் வெளியிடும் நாள் ஒன்றை நிர்ணயிக்க முயன்ற வேளை யில் அவரின் பிராத்த நாள் முடிந்தது.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்த பூபாலசிங்கம் அவர்களுக்கப் த் திர சந்தானமும் புத்தக சந்தானமும் புகழ்பாடும் எச்சங்களாய் உள் ளன. எல்லார்க்கும் இனிய பூபால் இறைவனடி நிழலில் இன்பம் துய்ப்பாராக.
கந்தர்மடம். க. சி. குலரத்தினம்

29
THE REX TRADING CO.
MADRAS
Xear Sirs,
We are shocked and grieved to hear suddenly the tery sad news of Mr. Poopalasingham's death.
This news really rocked us much, as he was in our midst a few weeks back, and we had an opportunity to have discussion with Mr. Poopalasingham on business matters to our mutual benefit.
The fate has been so cruel to separate him from us permanently, and we can hardly get out of this Grief since our two firms closely connected in matters of business, and most cordial relationship prevailed between our two houses.
we firmly believe that cordiality and business relationship will be strengthened further, and the departed soul will guide us both to achieve this goal.
Our sister concerns and our staff join with us to express their condolences to you at this time of your bereavement.
May the departed soul rest in peace.
" Yours faithfully, THE REX TRADING COMPANY

Page 27
SAGHAI Exporter 6
MADRA' ■ *
Dear Sirs, d
Thank you for your letter dated 27th July 8. We assure you that the usual cordial relationship wi be maintained by us that was prevailing during th time of Mr. Poopalasingam.
Thanking you, we remain,
Yours faithfully, FOR SAG-A EXPORTERS
A. R. PINHEIRO
Manager.
Manimekalai Prasuram
MADRAS.
Dear Sirs,
We are shocked to hear the sudden demise of Sri R. R. Poobalasingham who was a good friend of
lS.
Kindly accept and convey our heart felt con dolences to the members of his family.
We assure you our Co-operation always.
Yours sincerely R. M. RAVI Partner

3.
ாங்கள் அஞ்சலி
1960-ம் ஆண்டளவில் யாழ்-இளம் எழுத்தாளர் சங்கத்தின் தலே பராக யான் இருந்தபொழுது . "கலைமதி” வெளியீடான "மேற்கோளா பிரம்" தொகுப்பு நூல் வெளிவந்த போதுதான் எனக்குப் புத்தகக்கடை பூபாலசிங்கத்தை அறிய முடிந்தது. அவருடைய தோழமைப் பழக்கம், அன்பு, நட்புரிமை அவருடன் நெருங்கி உறவாட வைத்தது. அந்த நெருக் கம் எங்கள் ஊரான மாங்குளத்தில் ஆறுமாத காலம் எங்கள் வீட்டில் தங்கி கூட்டுறவுப் பண்ணையை அவர் நிர்வகித்தபொழுது இன்னும் நெருங்கியது. அந்த நாள் நினைவை என்றும் மறக்கமுடியாது.
வெள்ளை வேஷ்டி, அதற்கேற்ற பால் வெள்ளை நாஷனல் "சேட் நாரியில் இறுக்கிக் கட்டிய சிகப்புநிற 'மவ்ளர்" நெற்றியில் ஒரு சந் தனப் பொட்டு, கறுப்புநிற உடம்பில் வெண்ணிறப் பற்கள் தெரியச் சிரிக்கும் அழகு, நிமிர்ந்த நடை, யாருடனும் அன்பாகப், பண் பாக, நகைச்சுவை ததும்ப பழகும் பாங்கு நினைவை விட்டு நீங்காத உருவம், இனி யாம் நேரில் கானவா போகின்ளுேம். கம்யூனிட் கட்சி இருக்கும்வரை அவர் நாமம் இருந்துகொண்டே இருக்கும்.
பொருட்செல்வம், அருட்செல்வம், மழலைச் செல்வம் ஆகிய எல் லாச் செல்வங்களையும் சிறப்புற அனுபவித்துப் பெருவாழ்வு கண்ட அமரர் நாம் யாருமே எதிர்பாராத அளவு விரைவாகப் போய்விட் டதை எண்ணும் பொழுதுதான் நெஞ்சம் ஏங்குகின்றது; எங்கள் அஞ் சலி அவருக்கு என்றும் உண்டு
டாக்டர் ஏ. எஸ். மகாலிங்கம் அரவிந்தன் கிளினிக் மாங்குளம்.
* அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" - siir; S

Page 28
32
அனுதாபச் செய்தி
அமரர் பூபாலசிங்கத்தின் திடீர் மறைவு இலகுவில் ஈடுசெய்ய முடியாததொன்ருகும். முற்போக்காளராய் இருந்த அவர் தனது தொழில் மூலமாகவும் பல்வேறு பொதுப்பணிகள் வாயிலாகவும் நமது சமுதாயத்துக்கு அருந்தொண்டாற்றியவர். இக்காலத்திலே அறிவுப் பசிக்கு உணவு அளிப்பதும் அவசியமான சமூக சேவையாகும், அசன் மூக்கியத்துவத்தை முற்றும் உணர்ந்து செயற்பட்டவர் பூபால சிங்கம். நூல் விற்பன்யை வியாபாரமாக மாத்திரம் கரு காது, பய லுள்ள நூல்களேயும் சஞ்சிகைகளேயும் இண்ப தக்லமுறையினருக்கு எளிதாகக் கிடைக்கும்படி செய்தல் வேண்டும் என்ற இலட்சிய நோக் குடன் செயற்பட்டார்.
தன்னளவில் ஒரு அரசியல் இயக்கத்துக்கு விசுவாசியாக இருந்த அதேவேளையில், அறிவு விருத்தியிலும், மனித உறவுகளிலும் குறுகிய வரம்புகளேக் கடந்து அண்வருடன் இங்கிதமாகப் பழகும் இனிய சுபா வம் படைத்தவராயிருந்தார். வாழும் இலக்கியம் போல் மனிதநேயம் தழுவிய மாட்சி அவரிடம் இருந்தது.
இலக்கிய ஆசிரியன் என்ற வகையில் பூபாலசிங்கம் அவர்களுடன் பலகாலமாய்ப் பழகியிருக்கிறேன். இலங்கையிலும் அச்சுத்தொழிலேயும் வெளியீட்டு வசதிகளேயும் பரவலாக்கி நல்ல - முற்போக்கான - நூல்கள வேனியிடுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ள வேண்டும் என்று திட் டமிட்டுக் கொண்டிருந்தார். அதற்கான ஆரம்பப் பணிகளேயும் செய் திருந்தார். அதற்குள் எதிர்பாராத வகையில் மறைந்துவிட்டார். அவ ரது அபிலாஷைகளே முன்னெடுத்துச் செல்வதே நாம் ஆற்றக்கூடிய நன்றிக் கடனுகும்.
கக்க்ரீடம், பேராசிரியர் க. கைலாசபதி வாழ் திருநெல்வேலி வளாகம்
யாழ்ப்பாணம்,
6--82
"பணதில் உறுதிவேன்டும் வாகினிலே இனிமை வேண்டும்"- பாரதி


Page 29

$3
பூணிமகள் கம்பனி சென்னை,
ன்புடையீர், வணக்கம்.
தங்களது அன்புத் தந்தையார் திடீரென மறைந்த செய்தி கேட்டு கவும் கவலை கொள்ளுகிருேம். தாங்களும் தங்கள் தந்தையாரும் மீபத்தில் எங்கள் கம்பெனிக்கு வந்திருந்தது இன்னும் எங்கள் கண் }ன்னே நிற்கிறது. அப்படி இருக்க பெரியவர் மறைந்துவிட்டா ரன்று அறிந்து மிகவும் வருத்தமடைகிருேம். தங்களது துயரத்தில் ாங்களும் பங்குகொள்ளுகிருேம். தங்களுக்கும் தங்கள் குடும்ப்த்தாருக் தம் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிருேம்.
மனக்கவலைகளை மறந்து தங்களது தந்தையார் விட்டுச்சென்ற வியாபாரத்தை நல்ல முறையில் நடத்த எல்லா மன உறுதியையும் தரவேண்டுமென்று இறைவனை வேண்டுகிருேம்.
இப்படிக்கு பூனிமகள் கம்பனி உரிமையாளர்
அவர் செய்த தொழிலே தொண்டின் தரத்தது
தொண்டர்கள் பலவிதமானவர்கள், தொண்டுகளும் பல விதமானவை. தொண்டர்களின் பெருமை சொல்ல முடியாது. பசிப்பிணி போக்க அன்ன சத்திரம், நீர் விடாய் தீர்க்கத் தண்ணிர்ப் பந்தல், அறிவுப் பசி தீர்க்கப் புத்தக சாலை, அமரர் பூபாலசிங்கம் அவர்கள் பல்வேறிடங்களில் புத்தகசாலைகளும், பத்திரிகையாலயங்களும் நடத்தித் தமது தொழில்மூலம் தொண்டு செய்தவர். அவரை அறிஞர் உலகம் என்றென்றும் நினைவிற் கொண்டிருப்பர். அவர் புகழ் வாழ்க. அவர் ஆன்மா சாந்தியடைக.
இங்ங்ணம்
க. கனகராசா ஜே. பி. மில்க்வைற் தொழிலதிபர்

Page 30
34 அனுதாபச் செய்தி
அமரர் R. R. பூபாலசிங்கம் அவர்களை அறியாதவர் மிகச் சிலர் அத்துணைப் பிரசித்திபெற்று யாழ்ப்பாணத்தில் விளங்கினர். புத்தகங்கள் சஞ்சிகைகள் முதலியவற்றை வெளிநாட்டிலிருந்து தருவித்துப் பொது மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கச் செய்யும் நோக்குடன் இவர் நடத்ெ வத்த புத்தக வியாபாரப் பணி அறிஞர்கள் பலர் இவரை நாடிவரும் குழ்நிலையை உருவாக்கியது,
کیے۔
இவர் சமயத்துறையில் கொண்டுள்ள ஈடுபாடு அசாதாரணமானது. நபினுதீவைத் தம் பிறப்பிடமாகக் கொண்ட பூபாலசிங்கம் அவர்கள் சமீபத்தில் நயினுதீவில் கோவில்கொண்டெழுந்தருளியிருக்கும் நாகபூஷணி அம்பிகையின் திருத்தவ வரலாற்று நூல் ஒன்றைத் தகுந்த ஆராய்ச்சியாளரைக் கொண்டு எழுதுவித்துத் தாமே வெளியிட்டார்.
சமயாபிமானிகளும் நூல்களையே சதா நாடிநிற்கும் அறிஞர்களும் இவரது மறைவை நன்குணர்ந்து கவலையுற்று நிற்கின்றனர். நோய் வாய்ப்பட்டு அதன் விளைவாக நெடுங்காலம் படுக்கையிலழுந்தாது, திடீரென, கடமையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே மறைந்தமை எல்லோரையும் பெரிதும் கவலைகொள்ள வைத்தது. இறுதிவரை கடமை யில் கண்ணுங் கருத்துமாக இருந்து எல்லோருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். இவர் மறைவு பெரும் வேதனையைத் தருகின்றது.
இவர் ஆன்மா சாந்தியடைவதாக,
இந்துநாகரிகத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, கா. கைலாசநாத குருக்கள் வாழ்ப்பாணம்.
Ꮧ6-8-1982.
"பகை நடுவினில் அன்புருவான நம்பரமன் வாழ்கின்ருன்" - பாரதி

35
புமரர் பூபாலசிங்கஞர் நினைவாஞ்சலி ண்டிதர் ஆசிநாதர்
ஆசிரியப்பா
கவலை பெரிதே! கவலை பெரிதே! கலக்கம் பெரிதே கலக்கம் பெரிதே! பூபால சிங்கம் பெருமக ஞரின் பிரிவு பெரிதே பேரிழப் பாமே! நாமனை வோரும் நாளுமே அறிந்த நூலக விற்பனை நிலையகத் ததிபன் நற்குல நற்குண நாயகச் சீமான் நயினைப் பதியின் நற்றவக் கோமான் வல்லபன் நல்லவன் வண்மையின் பண்பினன் வளமுள வாழ்வினன் வள்ளலா யிருந்து வான்புக முற்று நூல்பல தேர்ந்து விற்பனை யுலகின் வேந்தனய் மிளிர்ந்து விளங்கிய பூபால சிங்கமா மிவரின் இறப்பினல் இசைந்த இழப்புபே பெரிதே! கல்வி மாணவர் கற்பிப் போர்கள் நற்கலை வாணர் நாடறி வர்த்தகர் அத்தனை பேருயர்க்கும் அறிமு மாகிப் புத்தகச் சஞ்சிகை வெளியீ டனைத்தும் தத்துவ நியதியில் தருவித் துதவினன் விற்பனைச் சிறப்பினல் நற்புகழ் பெற்றேன் நற்பணி யாவும் நயந்தே புரிந்து நாட்டுயர் வுக்காய் ஆற்றிய தொண்டின் நற்பே முக நல்லர சாங்கமே சமாதான நீதி வானெனும் பதவிப் பட்டமே கொடுத்துப் பாராட் டினரே! சமதர்மக் கொள்கையின் மகத்துவ முணர்ந்து
'ஆதிப்பரம் பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்' - பாரதி

Page 31
எவர்க்குமே உரியனுய் அன்பணுய் இலக்கினன் பழகுதற் குகந்த பண்புகள் உள்ளவன் ஏற்றத் தாழ்வு வேற்றுமை தவிர்த்து எல்லோ ருக்கும் எல்லா மாக இலங்கித் துலங்கி ஏற்றமே யுற்றேன் பூபால சிங்கர் பெருமனை தானே நூலக மாக இலங்கிய தன்ருே! மதிப்பும் கதிப்பும் துதிப்பும் சிறப்பும் மாண்புறப் பெற்று மிளிர்ந்திடுங் காலை காலன் கையிற் காலமே மாயினன்! இன்னன் பெருமையைச் சொல்லவும் போமோ? அன்னர் துணைவியும் மாண்புகள் பெரிதே இல்லத் தரசி இலக்கணத் தலைவி நல்லுப சார நற்குண நாயகி சுற்றங் காக்குங் சோபித தாயகி பெற்றேர் போன்றே பேறுகள் பெற்ற மக்கள்தம் பெருமையும் பேசுதற் கரியதே! மறைவினுல் வதங்கும் மனமக் களுக்கு மறைவில்ாத் துயரத் தேறுதல் கூறுதும் பொன்னர் மேனிப் பூபால சிங்கமாம் அன்னர் ஆன்மா அடைக சாந்தி! அன்னர் பணிகள் தொடர்ந்து நிலைக்குக! அன்னர் கொள்கைகள் அகிலமும் பரவுக! அன்னர் பெருமைகள் நிலைத்து வளருக! அன்னர் நிறுவனம் ஆலெனச் சிறக்கவே
"நெடுநல் உளனெருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு’’
'ஆசி இல்லம்" காங்கேசன்துறை. யோ. ஆசிநாதா
2-8-82
"சக்தி என்னும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை" - பாரதி

37.
“உருவாக்கிய சேவைகளினுல்
அமர வாழ்வு பெற்று ஆத்மாசாந்தி அடைவதாக!”
புறரீ நாகபூஷணி அம்பிகையின் அருளாட்சிமிக்க நயினைத் தீவகத்துப் பிறந்த கிருவாளர் இ. இ. பூபாலசிங்கம் ஜே. பி. அவர்கள் 'பெற்ற காபும் பிறந்த பொன்டுைம் நற்றவவானிலும் நனி சிறந்தனவே' என்ற இவ்வாக்குக்கமைய பிறந்த ஊருக்கும், சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகள் அளவிடற் கரியன.
இறப்பின் பின் பிறப்பொன்று இருக்கின்றது என்ற நம்பிக்கை மிக்க சைவ சமயத்தின் தத்துவத்தின்படி முற்பிறப்பில் அவர் செய்த; செய்ய விரும்பிய பணிகளை முற்றுப்பெற வைப்பதற்காகவே இப்பூவுல கில் கோன்றி அந்தப்பணிகளைச் சிறப்புடன் செய்து முடித்து இறைபதம் அடைந்துள்ளார்.
அவருடைய கொள்கைகள் யாவும் சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் மானிடப்பிறவியெடுத்த அனைவரும், ஆண் பெண் என்றே, ஏழை பணக்காரன் என்ருே, உயர்குலத்தோர் தாழ்ந்த குலத் தோர் என்றே, முதலாளி தொழிலாளி என்ருே இன்னும் பல வர்க்க வேறுபாடுகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தி வாழக் கூடாது என்பதாகும்.
பெரும் டெரும் இலாபமீட்டக்கூடிய செய்தொழில்கள் பல இருந் தும் மக்கள் அனைவரும் பயன்பெற்று அதனல் இம்மை மறுமை இரண் டிற்கும் உறுதுணையாக அமையக்கூடிய கல்விப் பணிக்கே உரியதான உத்தம தொழிலைத் தேர்ந்தெடுத்துத் தொழில் என்ற முறையில் மட்டுமன்றி உயர்ந்த சேவையாகவுமே செய்து மகிழ்ந்தார்.
திருவாளர் இ. இ பூபாலசிங்கம் அவர்கள் உருவாக்கிச் சேவைபுரிந்த பொது நிலையங்கள் பல இருப்பினும் அவற்றில் மிகவும் சிறப்புற்று விளங்குவது ‘நயினை பூரீ நாகபூஷணி அமுத சுரபி அன்னதான சபை' என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நயினையம்பதியிலே அன்னை பூரீ நாகபூஷணி அம்பிகையின் திருவருட் கடாட்சம் பெற வரும் பல்லாயிரக்கணக்கான அம்பிகையடியார்களுக்கும், யாத்திரீகப் பெருமக்களுக்கும் என்றும் குறைவின்றி அமுதைச் சுரந்து அளிக்கும் 'அமுத சுரபி' என்னும் மணிமண்டபத்திலே ஆற்றப்படும் (மகேஸ்வர பூஷை) அன்னதானப் பணியின் பலனல் அன்னரின் (திருவாளர் இ. இ. பூபாலசிங்கம் அவர்களின்) ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவி பூரீ நாகபூஷணி அம்பாளைப் பிரார்த்திக்கின்றேன்.
க. வே. பரமலிங்கம் (ஜே. பி.)
695 GMT røy grrrfuu görf?F நயினுதீவு பூரீ நாகபூஷணி அமுதசுரபி அன்னதான சபை

Page 32
38 கொழும்புத் தமிழ்ச் சங்கம்
83 in
பெரியார் திரு. பூபாலசிங்கம் அவர்கள் மிக்க தமிழ்ப்பற்று உள்ள வர். சிந்தனையாளர், உழைப்பினுல் உயர்ந்தவர், இலட்சிய நோக்கி னர், நேர்மையாளர், இலங்கையில் தமிழ்ப் புத்தக விற்பனைத் துறை யில் வரலாறு படைத்தவர். அறநெறி உணர்வினர். தம்மை அடைந்த தனியார்க்கும் பொது நிலையங்களுக்கும் தாராளமாக உதவியவர் கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடுகளின் விற்பனைக்கு உதவியவர். அவர் இறந்ததற்கு இரண்டொரு வாரங்களின் முன் கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன் சங்க இலக்கியச் செயலா ளரை கண்டபோது சங்க நூல்களின் விற்பனைக்கு ஆதரவு தருவதா கக் கூறியிருந்தார். சிலநாட்களுக்கு இடையில் அவரின் மறைவுபற்றிப் பத்திரிகையில் பார்த்தபோது அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தன. அவரது மறைவு இலங்கைத் தமிழுலகிற்கு நிரப்ப இயலாதது. அவர் மறைவினல் வேதனையுறும் அவரது மனைவி மக்களுக்கும் உறவினர்க ளுக்கும், அவரது தாபனத்திற் கடமையாற்றுநர்களுக்கும் தமிழ்ச் சங் கம் மிக்க ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது. அவரது ஆன்ம நலத்திற்காகத் தமிழ்ச்சங்கம் அஞ்சலி செய்கிறது.
v 'நெருநல் உளஞெருவன் இன்றில்லையென்றும் பெருமை உடைத் திவ் வுலகு என்பது வள்ளுவனர் வாக்கு. பெரியார் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
அன்புள்ள க. இ. க. கந்தசுவாமி
பொதுச் செயலாளர்
"கல்வியிலே மதியினைநீ தொடுக்கவேண்டும்
கருணையினுல் ஐயங்கள் கெடுக்கவேண்டும்." - பாரதி

39
தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் பிரிவாற்ருமை குறித்து சங்கானை சமூகத் தொண்டர் க. ச. கந்தசாமி அவர்களின்
கனிவுணர்வுகள்
ஆர்? ஆர்? பூபாலசிங்கமோ? ஆம்; ஆம். பூபாலசிங்கம்தான்; எந்தப் பூபாலசிங்கம் என்ற விஞ மீண்டும் எழுந்து வரவில்லை.
தோழர் பூபாலசிங்கம் இறையடி இணைந்த செய்தியை நம்பாமல் என்னிடம் கேட்டார் நண்பர் ஒருவர் ஆர். ஆர். எந்தப் பூபாலசிங்கம் என்று.
புத்தகக்கடைப் பூபாலசிங்கம் என்ருல் இலங்கைத் தாயகத்திலும் இந்தியத் தமிழகத்திலும் எத்தனை பிரபலம் பெற்றவராக அவர் வாழ்ந்துயர்ந்தார் என்பதை எழுத்துக்களில் அடக்கிவிட முடியுமா? என்ன?
கட்சிகள் சிலவற்றின் பணிகள் தனி மனித சேவையின் கவர்ச்சி களிலும் பங்கு பெற்றிருப்பதில் தோழர் பூபாலசிங்கத்தின் கவர்ச்சிப் பணியும் இலங்கைக் கம்யூனிஸ்ட்கட்சிக்கு இருந்து வளர்ந்ததில் வியப் பெதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு இறையுணர்வில்லை என்று சில சருகுகள் சலசலக்கின்ற காலகட்டங்களில் . . தோழர் பூபாலசிங்கம் நயினை நாகபூஷணி அம்பாள் அன்னதான சபை செயலாளராயிருந்து ஆற்றிய பணிகளை அகில இலங்கையிலுள்ள இறை நினைவாளர்கள் நினைவு கூர்ந்து பார்ப்பார்கள் தானே.
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே
உண்டி கொடுத்து உயிர் புரந்த தோழர் பூபாலசிங்கத்தின் நற்
பணித்துறையில் அன்னரின் இரத்த உறவுகளின் நித்தியநற் பணிகள்
இன்றுபோல் என்றும் சிறந்தோங்க இறையுணர்வோடு இறைஞ்சுகின் ருேம் .
வணக்கம்!
காந்த கோட்டம். சங்கானை.

Page 33
4. நயினைத்தாயின் அருந்தவப் புதல்வன்
பூபாலசிங்கம்
வட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரும், பிரபல வர்த்த ரும், சமாதான நீதவானும், சமூக சேவையாளருமான திரு. ஆர். ஆர் பூபாலசிங்கம் அவர்கள் 21-07-82 அன்று காலமானது மட்டுமல்ல, தமிழ் உலகிற்கே ஈடினேயற்ற பெரும் இழப்பாகும். சி' தசுரபியின் ஆரம்பகர்த்காவாக, கணேசா சனசமூக நிக்ஸிய ஆரம் கர்த்தாவாக, அபிவிருத்திச் சபையின் தக்லவராக, கிராமோதய சபை யின் உறுப்பினராக, ஏழைகளின் தொண்டனுக, சமயத் தொண்டனுக இருந்து, நயினேயம்பதிக்கு அவர் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்கா, இவர் தனது புத்தகசால் மூலமாக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பல நூல்களைத் தருவித்து வாசகர்களுக்கு நல்ல அறிவின் ஊட்டிய செயல் வீரன், vn
தனது வாழ்நாளில் பெரும்பகுதியைப் பொதுத்தொண்டிலேயே செலவிட்ட நயினத்தாயின் அருந்தவப் புதல்வன் திரு. ஆர். ஆர்" பூபாலசிங்கம் அவர்கள், எமது விளேயாட்டுக் கழகத்திற்கும் நல்லாத ரவு தந்து, வருடந்தோறும் விளேயாட்டு விழாக்களேச் சிறப்பித்து "ஃ துள்ளார். 1980-ம் ஆண்டு விளேயாட்டு விழாவில், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசில்களே வழங்கிச் சிறப்பித்தார். எல்லா வகையி லும் எமது விளேயாட்டுக் கழகத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து எம்மை ஊக்குவித்த பெருமகனுசின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தயின் பூரீநாகபூஷணி அம்மாளேப் பிரார்த்தித்து, ஆருத்துயரில் கலங்கி நிற்கும் அன்னுரது குடும்பத்தினருக்கு எமது விளையாட்டு கழ கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின் ருேம்.
சாந்தி!
நயினுதீவு விளையாட்டுக் கழகம், நா. குமாரசூரியர்
(LL CAP Terrrf (கிராமோதய சபை உறுப்பினர்
நயினுதீவு வடக்கு)
"மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்" - Lumsy

----- TIT
...r.
usines 'அக்கினிச் சுவாலேயில் அழிந்து நிமிர்ந்த
புத்தக சாலையின் பொலிவுறு தோற்றம்"

Page 34

mpử R. R. guT6No
6їфшн @ቻ6ùr[ኳ፤ வந் நயினைப் பொதுமக்க
്ട് . ' அவர்கள் தமையைப் uyr
ir oqsiġ525
வரவேற்புபசாரப் பத்திரம்
இரு இராமர் செய்ததவப்
இரு நாதர் L415)
பெருமாது நாகர் பூண்டபெரு
திரு நா
தேவியுமை
வருமாறு
கடல் நடுவே
கண்ட பெரும் திடல் நடுவே நாக
திருவருளும்பி m
நிகர் ഉ?tബ്രf t
air&sfu(56 சுரந்திட்டன புகழ் ஏடு தாங்
புறந் தந்த
அடல் ஏறு
மண்சுரக்கும் கி
மர இலையும் மற்றுமுள
விண் சுரக்கும்
டு நயினையிற்
அழைத்ததுவோ நாடு வந்தித்தீ நண்
னிநாகர் கலி
பேற்றின் GsmršES th
፵፭gér e"ቋጫዞ* பொன்னி ல்லாள் திண்மைப் ചrങിഖു இந்தத் றந்த பேறும் 颚TsaoLé年° நோக்கும்
சோவியத்து பா வாழி.
கொண் குடாச்சி(க்)
Loés6r ഥങ്ങ്
நாகம்
வளம் சுரச்
றநலமும்
திற்றுப் பூபால் நின்னைப் பெருமையகிே பெருமை வாழி
க்கல்லும் சங்கும் வேப்பு
rg'-ക്ക് eyrt6a4 tb'
பொருளாக ܘ
ri síg)ffSS csiltbl fl
வேண்டுதலும் பணிதலும்
8 நனைத்துப் போற்றி(க்)
பாரில்
ண்ணிரால்
Gwerraħ
4.
Lமை எவர்க்கு மெல்
tlg-(D)
uério 3
தனியுடமை தகர்த்தெது"
தே. கண்டாப் 6.
தமிழர் GLCD

Page 35
42
சோவியத்து நாட்டினிலே மக்கள். வாழ்வு
சுவர்கமெனப் புகழ் பாடிச் சொன்னுய் தோழா ! மேவியொத்து மக்களினம் மிளிரும் போது
மேன்மையுறும் புவி வாழ்வு மேலும் மேலும் பாவிகளா(ப்) பிறர் நலியப் பார்த்து வாழும் பான்மையது மண்மீது இல்லை யென்றல் தாவி வரும் மோட்சமது புவிமீ தென்ருே
தமிழ் நெஞ்சம் கண்டதடா தமிழா வாழி. 5
பகுத்துண்டு பல்லுயிர்கள் ஒம்பும் வாழ்வும்
பகைமையிலா அமைதிநிறை பரந்த பண்பும் மிகுந்திங்கு தமிழொடுநம் சைவமோங்க
மிளிந்தது காண் அழிந்தது நம் மடமையாலே தொகுத்திங்கு தமிழர் அடை கதவு தட்டி(த்)
தோழர் படை வைளிப்பட்டுத் தொண்டு செய்து புகுத்துங்கால் புத்துணர்வு பொங்கிப் பாயும்
புகழ்ப்பணியைப் பூபால் நீ செய்து வாழி. 6
பல்லினமும் பலநாடும் பாரில் ஒன்றிப்
பான்மையொடு பண் பட்டுப் பகைமை நீங்கி நல்லினமாய் நட்புரிமை நாளும் காத்து
நாம் பெறுவ தத்தனையும் நாடித் தேடி எல்லவர்க்கும் தேவைக்காய் இனிது தந்து
இரந்துண்ணல் இல்லையென மார்பு தட்டி வல்லவராய் மனிதகுலம் மண்ணில் வாழ
வகையுண்டு நெறியுண்டு வளர்ப்போம் வாழி 7
ஆக்கம் - ஷண் இங்ங்னம் 24一及2-72 நயினைப் பொதுமக்கள்
"ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்
நான் விரும்பிய காளி தருவாள்' - பாரதி

43
சிவமயம்
நயினுதீவு இந்து கலாச்சார மன்றத்தின் இரங்கல் உரை
எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்ருலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்ஞய் நீங்கியொரு வார்த்தையேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணிராறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
நயினதிவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், சமூக சேவையாள ரும், சமாதான நீதிபதியுமாகிய அன்பர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர் களின் திடீர் மறைவு பொதுவாக ஈழத் தமிழருக்கும், சிறப்பாக நயினை வாழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்,
மக்கட் சேவையே மகேசன் சேவை - ஜீவ சேவையே சிவபூசை.கல் விப் பணியே கடவுட்பணி ஆகிய உயரிய இலட்சியங்களோடு சமதர்ம மனப்பான்மையுடன் அருட்பணி ஆற்றி அமரரான திரு ஆர். ஆர். பூபா லசிங்கம் அவர்களின் திடீர் மரணம் எம்மை ஆருத்துயரில் ஆழ்த்தி விட்டது.
"மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்ற இலட்சிய புருஷராக; 'ஏகம் சத் விப்ரா பஹ"தா வதந்தி’ என்ற வேத விழுமியத்தில் நம்பிக்கை கொண்டவராக; எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் வேத வேதாந்தியாக, சோசலிச வாதியாக விளங்கிய திரு பூபாலசிங் கம் அமரரான செய்தி தாங்கொணு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
*யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பொதுவுடமைப் பண்பா ளராக விளங்கி - முழுநிறைவான மனிதராய் வாழ்ந்து - அமரபதம் எய்திவிட்ட ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் ஆத்மா அமைதிபெற் றுச் சாந்தி அடைய வேண்டுமென நயினை நாகபூஷணியம்மையை வேண்டுகின்ருேம்.
சாந்தியே பெறுக ஆத்மா சாந்தியே பெறுக நெஞ்சம் சாந்தியே பெறுக லோகம் சாந்தியே தருக நாகபூஷணியம்மை.
இந்து கலாச்சார மன்றம் நயினதிவு.

Page 36
44.
மறைந்த தினத்தன்று வெளியிடப்பட்ட பிரசுரம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையை ஆரம்பித்த முக்கியஸ்தர் அமரர் தோழர் ஆர், ஆர். பூபாலசிங்கம் அவர்களுக்கு
கண்ணிர் அஞ்சலி
அமரர் தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் தமது இளமைப் பருவத்திலிருந்தே அதாவது 1937-ம் ஆண்டு தொடக்கம் இடதுகாரி இயக்கத்தில் சேர்ந்து தனது பங்களிப்பைச் செய்து வந்திருக்கிறர்.
இலங்ஈையின் முதலாவது இடதுசாரி இயக்கமான லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து அதன் பத்திரிகையான "சமதர்மம்" என்ற பத்திரி கையை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த உதவிஞர்.
பின் 1948-ம் ஆண்டளவில் இலங்கை கம்யூனிஸ் கட்சியின் யாழ் மாவட்டிக் கிளையைச் ஆரம்பித்த தோழர்களில் இவர் ஒரு முன்னேடி யாவார். இவர் யாழ் மாவட்டத் தனதிகாரியாகவும் தெரிவு செய்யப் பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு ஊக்கமுடன் செயல்பட்டார். அத்துடன் யாழ் மாவட்டக் கமிட்டியிலும் நீண்டகாலம் அங்கம் வகித்து பல போராட்டங்களில் ஈடுபட்டார்.
சோவியத்யூனியன் போன்ற சோஸலிஸ் நாடுகளுக்கும் சென்று பல திட்டங்களை அறிந்து வந்திருந்தார்.
இவர் இளம் பராயத்தில் சட்டத்தை மீறி கவரொட்டிகள் ஒட்டி ஏனைய கட்சித் தோழர்களுடன் ஒருவாரம் தடுப்புக்காவலிலும் வைக்கப் பட்டார்.
தனது வாழ்நாள் முழுவதும் ஒரே இலட்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டு ஒரு சோசலிஸ் சமூக அமைப்பிற்காகத் தம்மை அர்ப்பணித்த எம் அருமைத் தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களுக்கு எம். செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்ருேம்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யாழ் மாவட்டக் குழு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வாலிபர் சம்மேளனம், இலங்கை கேசிய மாதர் முன்னணி, லங்கா தொழிற்சங்க சம்மேளனம்.
**எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி" - TE S
:

மறைந்த தினத்தன்று வெளியிடப்பட்ட பிஈஈரம்
தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம் , P. அவர்களின் மறைவு குறித்த இரங்கலுரை
சமய, சமூகத் தொண்டரூகிய திரு. ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர் கள் 21-07-82 அன்று காலமானது தமிழ் உலகிற்கு ஈடிணையற்ற இழப் பாகும். தயினை மணிபல்லவ கலா மன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலந் தொட்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு தன்னலியன்ற சேவைகள் புரிந்த இவர் பல சமய நிறுவனங்கள் தொண்டர் ஸ்தாபனங்களின் மூக்கிய உறுப்பினருமாவார்.
யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளரும், நயிஞ தீவு அமுதசுரபி அன்னதானசஆைரம்பகர்த்தாக்களுள் ஒருவரும்,நயின தீவு அபிவிருத்திச் சபைத் தலைவரும், வடமாநில கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பகால உறுப்பினரும், ஏழைகளின் தோழனுமாகிய அன்னர் ஆற் றிய சேவைகள் அளவிடற்சரியன, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் படி கேட்கும் போதெல்லாம் மனங்கோனது பங்குகொள்ளும் அன்பன், பொருளுதவி புரிவதிலும் பின் நிற்பதில்லை.
வாழ்நாளில் பெரும் பகுதியைச் சமூக சேவையிலேயே செலவிட்ட இவர் தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தார். இந்தியாவில் இருந்து ஏராளமான நூல்களை இறக்குமதி செய்து வாசகர்கள் மத்தி யில் தனக்கென ஒரு இடத்தையும் பெற்றுவிட்டார்.
16-4-82 அன்று நடைபெற்ற எமது கலாமன்ற 20-வது ஆண்டு நிறைவு விழாவிலும் கூட பங்குகொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்த பெரியவர். என்றும் எமக்குத் தோன்முத் துணையாக உதவி வந்தார்.
பாரதி நாற்ாண்டு கெண்டாடப்படும் இக்காலகட்டத்தில் நெஞ் சில் உரமும் நேர்மைத்திறனும் கொண்ட இலட்சிய வீரனை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
22-7-82 நயினை மணிபல்லவ கலா மன்றம்
"சக்தி என்று நேரமெல்லாம் தமிழ்க்கவிதை பாடு’ - பாரதி

Page 37
46
மறைந்த தினத்தன்று வெளியிடப்பட்ட பிரசுரம்
பொதுச் சேவையையே உள்ளம் நிறைந்த உத்தமத் தொண்டன் திரு. இ. இ. பூபாலசிங்கம் ஜே. பி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றேம்.
ஈழம் வாழ் மக்களினதும் குறிப்பாக நயினை மக்களினதும் முன் னேற்றத்திற்காகவும், நயினை பூரீ நாகபூஷணி அம்பாளிடம் அருள் பெறச் செல்லும் பக்தர்கள் அடியார்களின் பலவித கஷ்டங்களைப் போக்கவும் அல்லும் பகலும் அயராதுழைத்து, உலகின் கண்ணே புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் நயினுதீவு பூரீ நாகபூஷணி அமுதசுரபி அன்ன தான சபையை நிறுவிய ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும், இணைக்காரியதரிசிகளில் ஒருவராகவும் இருந்து அரும் பெரும் சேவை செய்த தொண்டன் திரு. இ. இ. பூபாலசிங்கம் ஜே. பி. அவர் கிள் நம் மத்தியிலிருந்து பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னரின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி அம்பாளை பிரார்த்திக்கின்ருேம்.
இங்ங்ணம் , நயினுதீவு. நயினுதீவு நாகபூஷணி 22-697-82 அமுதசுரபி அன்னதான சபை
"மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று' - Luiggs

47
அடியருள் அருள் பெற تهd5LJلهff இடருற
படகுச் ക്കേഖഞ്ഞ8 தொடக்கிட- ssjቆቓffo
இாருளுறு நூல்" பொதுலரிய நிலையம் பொருளுறு ஓங்கிய முதலாளி ஆக்கினை முதலாளி ஆயினுந் தொழிலாளி لrrg,)36له
ഉടtp நின்றினி ஒவன்ருயினுமு' செருயினும் ഖി ருதோதுவம்' ーumリ露

Page 38
48
இலங்கை யரசும் போற்றியே யவன்பணி இலங்குறு சமஞ்செய் நீதவா னக்கியே துலங்கிடச் செய்தனை துரயையே நீயே இராமன் பணிந்த ராமேஸ் வரத்தலம் பராபரிப் பாளருள் ஒருவன யாக்கினை இத்தகைச் சீருஞ் சிறப்டிங் கொடுத்ததின் உத்தமப் புதல்வன் வித்தகச் செல்வன் நத்தினேர் நலமுற வாழ்வளி செம்மல் உத்தமர் போற்றும் உயர்குண சீலன் அன்பே யுருவா யான எம் பெருமகன் தன்னே ரில்லாத் தனிப்பெருந் தலைவனை மனைவியும் மக்களும் அலம்பிப் புலம்பிட இணையில் சுற்றம் சூழ்ந்து கதறிட துணைவர் கண்ணீர் ஆருய் வடித்திட தோழரா யுற்ற தொழிலாள ரெல்லாம் ஆழவே ஆருத் துயரது கொண்டு எங்கே எங்கே எம்முறு கற்பகம் எங்கே எங்கே எம்முறு துணையென் அங்கும் இங்கும் அரண்டு புரண்டிட மறைத்தனை மறைத்தனை அலனை இறைத்துண்ை இதுவோ இறைவி! இறைவீ.
திரு. த. கந்தசாமி (இளைப்பாறிய அதிபர்)
"ஒயுதல் செய்யோ ம்தலை சாபுதல் செய்யோம்
உண்மைகள் சொல்'வாம்பல வண்மைகள் செய்வோம்" - பாரதி

A9 துயரம் போமோ
தொழிலாள வர்க்கத் தாரின்
தோழனே தூய்மை யோடு
எழிலார்ந்த பொதுவு டைமை
இயக்கத்தை வளர்த்த நண்பா
தெளிவுள்ள சிந்தை யோடு
செயற்பட்ட இனிய தோழா
இளமையில் எம்மை விட்டு
ஏகினை பொறுக்க லாமோ?
அன்பினல் பலரை வென்ருய்
அறிவினுல் நிலைத்து நின்ருய் பண்பினல் மனித ஞய்ை
பணிவில்ை டோற்றப் பட்டாய் நண்பரால் நாடப் பெற்ருய்
நல்லவர் மதிக்கப் பெற்ருய் அன்பனே பூபால சிங்க
அமரனே! எங்குற்றப் நீ
ஆற்றலால் வளர்ந்து மேலோர்
அனுதினம் புகழும் வண்ணம் போற்றிடும் நூல்கள் தாங்கும்
புத்தக நிலையம் வைத்தே சாற்றிடும் அணிகள் செய்த தன்னல மற்ற நண்பா ஈற்றினில் நாங்கள் வாட
எங்குற்ருய் துயரம் போமோ.
கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை
**காவியம் செய்வோம் நல்ல காடுவளர்ப் போம்
கலைவளர்ப்போம் கொல்லர் உலைவளர்ப்போம் - பாரதி

Page 39
5υ
இரங்கல்
மணித்தீவின் மண்முளைத்த தவத்தின் வித்தாய்
மலர்ந் தெழுந்து நாகம்மை அருளாமூற்றில் தனித்துவாய் இருஇராமர் தகமை ஓங்க(த்)
தாய்பொன்னி புறந்தந்து தமிழால் வாழ்த்த பனித்தசடைக் குருநாதர் முத்துச்சாமி
பாங்குடனே ஆசிபல கூறியேத்த இனித்தமுடைப் பூபால சிங்கமாக
ஏற்றமுற்ருய் ஏந்தலே நீ எங்கே சென்ருய்.
திருவதனப் பெரும் பொலிவில் தேசுதோன்றும்
திகழ் அழகுக் கருவிழியில் கருண தோன்று அருள்நயினை அம்பிகையிற் பற்றுத் தோன்றும்
அகம் கமழும் அறநெஞ்சில் கா பெருவைரத் தோள்களிலே ஆற்றல் தோன்றும்
பீடுநடைப் பாவனையிற் சால்பு தோன்றும் உருவநிலை ஆளுமையில் உயர்ந்து தோன்றும்
உத்தமனே உன்பிரிவால் உலர்ந்தோம் ஐயா
ஊழியராய் உன்பணியில் உழைத்தோர் தம்மை
உன்அன்புத் தோழர்களாய் நடத்தி மேலும் வாழியநீர் என்றவரை நாளும் வாழ்த்தி
வகைசெய்து உரைசெய்து வளர்த்தாய் அன்பா ஆழியது வற்றிடினும் உன் அன்பு நீரோ
அதுவற்ரு தென்றிருந்த அவர்க்கு இன்று நாழியொரு கணமேனும் விடை சொல்லாது
நடந்தாயே கடந்தாயே விரைவாய் வாராய்
கால்மாக்ஸின் தத்துவத்தில் காலையூன்றிக்
கண்ணியமாய்(க்) கொள்கைவழி தடவிவாழ்ந்து
மேல்நோக்கில் மக்களின பேதமின்றி
மெச்சஉயர் சோவியத்து நாடு சென்ருய்
'இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழையராசி இனி மண்ணினில் துஞ்சோம்’ - uF p3

51
பார்நோக்கும் பாரதமும் சென்று மீண்டு
பரனடிக்கே உனையாக்கிக் கொண்டாய் அன்பரி
யார்நோக்கும் உன்னையொரு தொண்டனுக
யாத்ததுவே இனியாரைக் காண்போம் நண்பா?
நீர்தொட்ட நற்பணிகள் நிலத்தில் நின்று
நின்பணியை நிலைநாட்டல் உறுதியாச்சு சீர்பெற்று உன்மக்கள் தொடரத் தொண்டு
சிறப்பிக்க அவர்உறுதி பூண்டார் இன்று "யார் உற்ருர், யார் அயலார்’ என்ற வாக்கு
யாப்பாக(ப்) பொதுப்பணியில் நின்ருய் நன்று ஊர்(ப்)பற்று உடையேனே நயினை அன்னே
உள்ளொளியில் உன் ஆன்மா சாந்தியாக,
இங்ங்னம்
நயினுதீவு முன்னேற்றக் கழகம்
'தீஞ் சொற்கவிதையஞ் சோலை - தனில்
தெய்வீக நன்மணம் வீசும் - பாரதி

Page 40
52
கண்ணிர் அஞ்சலி
அன்பு குழைத்து ஆர்வமுடன் எங்களுக்குத் தென்பு ஊட்டித் தித்திக்கும் சொல்அமுதப் பண்பு திரட்டிப் பக்குவமாய் நின் குடும்ப இன்ப துன்பத்தில் எமை ஈர்த்து நின்றனயே! சிங்க நிகர்த்த திகழ்மேனி யானலும் எங்கள் குழந்தைகளை இதமாக அரவணைத்து பொங்கும் உவகையுடன் பூரிப்பில் அவர் மகிழ மங்களமாய் பேத்திகள் போல் மார்போடு அணைத்தாயே! தங்க மனது தளதளக்கச் சிரிப்பூட்டி இங்கிதங்கள் காட்டி இல்லத்தில் நின்மக்கள் பெருமையுடன் எம்மோடு பெரும் பற்ருய் வாழ்ந்திருக்க அருமருந்தாய், குலவிளக்காய், அகல்விளக்காய் அமைந்தாயே! உரிமையுடன் நின்மனையாள் உபசரிக்க விருந்தோம்பி கரிசனையாய் எல்லோர்க்கும் கருணைமழை பொழிந்தாயே! சதிபதியாய் வாழ்ந்து சந்தோஷ வாழ்க்கையிலே விதிசதியாய் வந்த வேதனையை என் சொல்வோம் அதிபதியாய் எல்லோர்க்கும் அன்பாய்நீ பணிசெய்ய கதிஇதுவாய் வந்த பெரும் காலத்தின்கோல மென்ன? நெருநல் உளனுெருவன் இன்றில்லை என்னும் பெருமை இருந்தாலும் - நின்பிரிவை நின்குடும்பம் ஒருபோதும் தாங்காதே உத்தமனே! உன்ஆன்மா தருமதேவதையின் தாள் சேர்ந்து வாழியவே.
திரு. திருமதி சண்முகராசா தம்பதிகள்
1கஞ்சிகுடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார் - பாரதி

53
மறைந்த தினத்தன்று வெளியிடப்பட்ட பிரசுரம்
மணித்தீவின் ஒளித்தீயம் அணைந்தது! திரு. இ. இ. பூபாலசிங்கம் அவர்களுக்கு எமது கண்ணிர் அஞ்சலி
மாட்சி நயப்புப் பாடல்கள்:
ஏழைத் தொழிலாளிக் கென்றும் துணைநின்று வாழும் சுமிழின் வளம் பெருக்கி - ஊழியங்கள் செய்யப் பிறந்க திரு. பூபாலசிங்கப் பேர் ஐயாவே எங்குற்ருய் செப்பு.
செந்தமிழின் செல்வன் சிறந்து வளர்ந்துவரு சிந்கைமகிழ் பன்னுரல்கள் தந் சளித்து - முந்துபுகழ் பூண்ட திரு. பூபாலப் போேறேநீ பிரிந்தால் ஈண்டெமக்கு யாரோ துணை.
எவ்வேடு தேடி என்றாட்டில் எப்பதியில் எவ்வீடு நோக்கி யீன்றேகினையோ - அவ்வான் அமிர்தமென அள்ளி எமக்கு தமிழ் தந்த சான்ருேனே சாற்று. கண்ணுஞ் சடையாமல் கையும் தளராமல் உண்ணப் பசி எழுவதோராமல் - எண்ணிஎண்ணி செந் தமிழ் தாய்க்கு நீ செய்த திருத்தொண்டுக்(கு) இந்த நிலத்துண்டோ இணை. சித்திரத்தில் பார்ப்போம் சிலைசெய்து கும்பிடுவோம் புத்தகத்தில் போற்றிப் புகழ்ந்திடுவோம் - இத்தரைக்கு நயினைத் தாய் அளித்த நல்லினிய சேயே உனையிழந்தோம் உணர் விழந்தோமே. சாதிமத பேதம் சற்றேனும் இன்றி நடு நீதி வழுவா நெறி நின்று - பூதலத்தில் சத்தியம் காத்த தரும தயாளன நித்தியம் நெஞ்சே நினை.
நயிஞதிவு ழனி கணேச சனசமூக நிலைய நிர்வாகத்தினர்.

Page 41
54
மறைந்த தினத்தன்று வெளியிடப்பட்ட பிரசுரம்
தேவை அறிந்து சேவை புரிந்து
மதிப்புக்குரிய திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் அண்ணலே எம் நிலையம் போஷகராய் ஏற்றுக்கொண்ட இளவலே நூம் பாத மலருக்கு
எம் இதய அஞ்சலி
Lurrri pé)838T55mitrio gunt யாம் இன்று கலங்கு வோமென்று வதைபடும் எம் முள்ளம் வடிக்கின்றது கண்ணிரை பொன்னன உள்ளத்துடன் பொருத்தமான பெயர் பெற்று பூபாலசிங்க மென மிளிர்ந்த நிவிர் பூவுலகை விட்டு போனிரோ ஐயா, நல்லதொரு உள்ளம் கிடைத்த தென போஷகராய் நாமிருந்த வேளை காலனவன் கயிற்றுக்கு கட்டுண்டு போய்விட்டாய் ஏனய்யா" நெஞ்சினில் வலியென்முய் - எம் நெஞ்சிற்கெல்லாம் வலியை கந்துவிட்டு, நெடும் பயணம் போய்விட்டாய் சமூக சேவையிலே நாணல்போல் நின் ருயே. நானிலத்தில் செய்வதற்குப் பல பணியுண்டு என சொல்லிவிட்டு இன்று நடுவிலே சென்று விட்டாய் ஐயா, தோழருக்கு தோழராய் தோளோடு தோள் நின்றீர் - இன்று தோழர்கள் கலங்கி நிற்க தொட்டுத் தழுவிய மனையாளும் செய்வதறியாது திகைத்து நிற்க - நிவிர் கொஞ்சிக் குலாவி வளர்த்திட்ட - நும் செல்வங்கள் குளறியள எங்கய்யா போனிர் பொறுக்க வில்லை எம் நெஞ்சம் குமுறுகிருேம், கதறுகிருேம் எம் கண்கள் சிந்தும் கண்ணிரை மாலையாக்கி நும்பாதமலர்க்கு காணிக்கை யாக்குகின்ருேம்.
முத்தமிழ் சனசமூக நிலையம், இங்ங்னம் முத்தமிழ் வீதி, முத்தமிழ் சனசமூக நிலையு கொட்டடி, யாழ்ப்பாணம். உறுப்பினர்கன்

55 சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள் நயினுதீவுக்கு அம்பாளைத் தரிசிக்க வந்தபோது அம்பாள் சந்நிதானத்திலிருந்து பாடியவை.
மங்கல மணம்பரவு மலர்தலைக் காலைபோல்
06ðØT DIT விருள்போக்குவாய்
மாசிலாத் தென்றல்போல் வந்தெனது சோர்வினை
lonrfið stup6oT வீறுதருவாய்
பொங்குதிரை ஆழிபோல் என்னுள்ளம் பூரிக்கப்
போதுவேத முரசொலிப்பாய்
புண்பட்ட நெஞ்சிலே வெண்பட்டு நிலவெனப்
போந்துசாந் தம்மளிப்பாய்
செங்கதிர் ஞாயிறென வேயெனது சித்தமிசை
திவ்வியஞா னம்பொழிகுவாய்
சிங்கமென வீரமும் திருமூலர் யோகமும்
திருக்குறளின் வாழ்வும் அருள்வாய்
துங்கமிகு நயினையில் தங்கியே புவனந்
தனேக் காத்து அருள்அன்னேயே
சீதாசிவ மனேன்மணி சிதாகாச ஓம்சுத்த
சக்தியே போற்றி போற்றி.
உலக நாயகி உத்தமி நாயகி இலகு சக்தி இறைவி மனேன்மணி
இசிவு,தீர்ந்துநலந்தரும் அம்மையே பொலிவுறச் ெ புதுயுக வாழ்க்கையே.
ஏக சக்தி இன்ப வரந்தரும்
யோக சக்தி உயிர்த் குயிராகிய
போக சக்தி புனித பராசக்தி
7*8ஷ்ணி தாரணி அம்மையே. 3.
தேகச் சட்டை அணிந்திடும் வேனின் சேர்க நாடகத் தீர்த்து சுகோதய
யோக சித்தி யுடன்பெறச் செய்தருள் நாக பூஷணி நல்ல பரா சக்தி, 4.
வீழ்க தீய வினேக்குலம் யாவையும் குழ்க தூய சமரசச் சோதியே
வாழ்க மன்னுயிர் வானருள் பாலிப்பாய் *விழ் கடத்தொளிர் ஓம்சுத்த சுத்தியே. あ,

Page 42
56
நயினத் திருநாட்டில் பிறந்தவரும், யாழ் நகர வாசியும், பிரபல புத்தகசாலை உரிமையாளரும், சிறந்த பொதுவுடமை வாதியும், சமூகத் தொண்டருமான மரீமான் R. R. பூபாலசிங்கம் அவர்களின் அமரத்துவம் குறித்துப் பாடிய ஞாபகார்த்தப் பாமாலை தோற்றம்: மறைவு: 1922-O6= OCB 1`ዎ982-627-2 1
திதி நிருணயம்
பூர்வப் பிரதமையில் புன்மைசேர் துந்துபியில் சோாடி யைந்துபுதன் சென்றடைந்தான் - பார்மீது போற்றும் பொதுவுடமைப் பூபால சிங்கமறை சாற்றுமிறை தாளினையே தான்.
நாட்டு வளம்
வரகவியாம் நாகமணிப் புலவர் பின்னை
வாய்த்தமுத்துச் சாமிசித்கர் வயங்குஞ் சால்பாற் சுரர் வணங்கு சமரசவான் ராம சந்தரர்
கொண்டுபுரி வைத்தியரெஞ் சினியர் நெஞ்சு உரமுடைய கலைவாணர் அரச சேவை
உயர்பதவி யா6ாருடன் வணிகர் மற்றும் திரமுடையார் தந்ததிரு நாடு பூபால்
சிங்கமவர் தருநயினைத் தெய்வ நாடே.
6j Ja)T (I)
செகம்புகழுஞ் சேதுபதி மாப்பாண முதலி
சீர்மிகுந்த மரபுவழி திகழுதனுஷ் கோடி பகங்களிக்க வருராம லிங்கமெனு மறிஞன்
அன்பினிலே வருராமப் பிள்ளையருங் கனவான் சுகங்காண நாகநா தப்பெரியோ னில்லாள்
சுகுணவதி நாகர்மணி சுடரு தரத் தளித்க இகம்போற்று மெழிலரசி பொன்னம்மா வென்னு
மின்னமுதை மனங்கொண்டு இலங்சியஇல் வாழ்வில்

57
நாவாணர் தமைவெல்லும் நாயகனய் மண்ணில்
நல்லதொரு பொதுவுடமை நாட்டுமறி வுடனே பாவாணர் புகழ்பாடும் பண்போடு கொள்கைப்
பற்றுவிடா வுத்தமஞய்ப் பாரிலுளார் ஏத்தப் பூபால சிங்கமெனுந் தலைமகனே யளித்துப்
புண்ணியத்தின் பயன்றுய்த்த கண்ணியவான் ராமர் நாவார அழைத்துமகிழ் நவைதீர்ந்த மைந்தன்
நாட்டிவர சேட்டினிலே நடந்ததனிச் சிங்கம்.
வேறு
இளமையிலே கல்விநல மினிது வேய்ந்து
எவ்வெவருந் தலைவணங்க ஏறுபோல உளமதிலே உறுதியுடன் உணர்ச்சி கொண்டு
உயர்வாழ்வே நோக்காக வுயிர்த்த பூபால் வளமுடைய யாழ்நகரில் அறிவுப் பூங்கா
வளர்புத் தகசாலை வகையாய் நாட்டித் தளர்வற்று வாழ்வினிலே தன்னே ரற்றுச்
'சாற்றுமெழில் மதனெனவே தழைக்குங் காலை.
கதிரேசு கணபதிப் பிள்ளை நாமக்
கனதனவான் வாழ்வினுக்குக் காதலூட்ட விதிசேர்த்த ஆறுமுகம் நாக முத்து
விளங்கிழையா ஞவந்தளித்த வீர நங்கை மதிபோலு முகத்தழகி மலரின் செல்வி
மாற்றுயர்ந்த பாக்கியமா மங்கை தன்னை மதிவாய்ந்த பூபால சிங்க மான
மணமகற்குத் திருமணத்தால் வழங்கி ஞாால்.
புத்திரர் சிறப்பு விண்ணடைந்த புவிராச சிங்க மேலோன்
வீடமைப்புத் திணைக்களத்து விளங்குஞ் சீர்த்திக் கண்ணனைய பூரீ தரசிங் கனிந்த வுள்ளக் கட்டழகி பெட்புடைய விமலாதேவி தண்ணளிசேர் ராசன்பூ பால சிங்கம்
சாற்றுமுயர் பகவான்பின் தன்பேர் கொண்டோன் விண்ைெளிபோல் விளங்கவரு மைந் கர்ப் பெற்ற
மேதையவன் பூபால சிங்க மின்னும்
'காதிதூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ' - பாரதி

Page 43
சமதர்மக் கொள்கைதனத் தரணிக் கீந்த A
தந்தையவன் கார்ல்மாக்சின் தனிப்பேர், பூண்டோன் தமர்பிறரென் றெண்ணுது உதவுஞ் செய்கைத்
தளிர்க்கரத்தாள் கல்யாணி தனியா அன்பு அமருளத்து மல்லிகைபின் 'முல்லை யென்னு
மருமருந்தா மகளோடு நால்வர் பெண்கள் சிமமனைய மைந்தர்களு ளொருவர் நீங்கச் .
சேர்ந் தெண்மர் மக்களுடன், திகழ்ந்த செல்வன்
மருகர் சிறப்பு
விளங்குமொரு விமலாவை, வதுவை செய்து
விரும்புமொரு இல்லறத்தை விளக்க வந்த உளஞ்சிறந்த சேகரன முயர்ந்த நாமன்
ஊக்கமுளான் ஆங்கிலசெந் தமிழும் வல்லோன் வளஞ்சிறந்த பரந்தனிலே மின்மு காரி
வாகாருங் கெமிக்கல் தொழிற்சாலை யுள்ளந் துளங்காது மாமனுக்குத் துணையாய் நின்ற
தோன்றலிவன் மருகனெனக் சுடருந் துரயோன்.
சகோதரர் சகோதரியர் சிறப்பு
அன்புநிறை பொன்னுத் துரையென்னு மண்ணனை
அரியதொரு தங்க ரெத்ன அக்காளை யவர்பினர். ஆருயிர் துணையான
ஆண்டகை விஜய ரெத் சினம் இன்பமான மொழிபேசு பூமணித் தங்கையை
ஏந்தலுயர் அப்பாத் துரை இன்றமிழ் ஆங்கிலம் கைவந்த ஆசிரிய
இன்னுயி ருடன்பி றப்பை
நந்தாது நீருதவு கொழும்புத் திணைக்களம்
நவிலத்தி யட்சகர் பதவியில் நவையறக் கடனுற்று மும்மொழிக், கணேசனெடு
நாடறுவர் சோதர ரெனச் சிந்தாரு லத்தீர வாய்த்தவொரு பாக்கியன்:
செகம்புகழு மரிய தலைவன். சீர்கொண்ட பூபால சிங்க: மிங்கிதன்
திகழ் நயினை தந்த மகனே.
ASLSSASSASSASSASSASSASSAASSSSSSSSS S SSSSS S SS SS SS SSqqSLSASSqqqSq -
"""Tسم سے۔
ഉങി படைத்த கண்ணிஞய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினுய், வா வா வா - பாரதி A

57
நாவாணர் தமைவெல்லும் நாயகனப் மண்ணில்
நல்லதொரு பொதுவுடமை நாட்டுமறி வுடனே irraints. Tri புகழ்பாடும் பண்போடு கொள்கைப்
பற்றுவிடா வுத்தமஞய்ப் பாரிலுளார் ஏத்தப் பூபால சிங்கமெனுந் தலைமகனை யளித்துப்
புண்ணியத்தின் பயன்றுய்த்த கண்ணியவான் ராமர் நாவார அழைத்துமகிழ் நவைதீர்ந்த மைந்தன்
நாட்டிவர சேட்டினிலே நடந்ததனிச் சிங்கம்.
வேறு
இளமையிலே கல்விநல மினிது வேய்ந்து
எவ்வெவருந் தலைவணங்க ஏறுபோல உளமதிலே உறுதியுடன் உணர்ச்சி கொண்டு
உயர்வாழ்வே நோக்காக வுயிர்த்த பூபால் வளமுடைய யாழ்நகரில் அறிவுப் பூங்கா
வளர்புத் தகசாலை வகையாய் நாட்டித் தளர்வற்று வாழ்வினிலே தன்னே ரற்றுச்
சாற்றுமெழில் மதனெனவே தழைக்குங் காலை.
கதிரேசு கணபதிப் பிள்ளை நாமக்
கனதனவான் வாழ்வினுக்குக் காதலூட்ட விதிசேர்த்த ஆறுமுகம் நாக முத்து
விளங்கிழையா ளுவந்தளித்த வீர நங்கை மதிபோலு முகத்தழகி மலரின் செல்வி
மாற்றுயர்ந்த பாக்கியமா மங்கை தன்னை மதிவாய்ந்த பூபால சிங்க மான
மணமகற்குத் திருமணத்தால் வழங்கி ஞரால்.
புத்திரர் சிறப்பு விண்ணடைந்த புவிராச சிங்க மேலோன்
வீடமைப்புத் திணைக்களத்து விளங்குஞ் சீர்த்திக் கண்ணனைய பூரீ தரசிங் கனிந்த வுள்ளக் கட்டழகி பெட்புடைய விமலாதேவி தண்ணளிசேர் ராசன்பூ பால சிங்கம்
சாற்றுமுயர் பகவான்பின் தன்பேர் கொண்டோன் விண்ணுெளிபோல் விளங்கவரு மைந் கர்ப் பெற்ற
மேதையவன் பூபால சிங்க மின்னும்
'காதிருாறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ' - பாரதி

Page 44
சமதர்மக் கொள்கைதனைத் தரணிக் கீந்த
தந்தையவன். கார்ல்மாக்சின் தனிப்பேர் பூண்டோன் தமர்பிறரென் றெண்ணுது உதவுஞ் செய்கைத்
தளிர்க்கரத்தாள் கல்யாணி தனியா அன்பு அமருளத்து மல்லிகையின் முல்லை யென்னு
மருமருந்தா மகளோடு நால்வர் பெண்கள் சிமமனய மைந்தர்களு ளொருவர் நீங்கச்
சேர்ந் தெண்மர் மக்களுடன் திகழ்ந்த செல்வன்
மருகர் சிறப்பு
விளங்குமொரு விமலாவை வதுவை செய்து
விரும்புமொரு இல்லறத்தை விளக்க வந்த உளஞ்சிறந்த சேகரன முயர்ந்த நாமன்
ஊக்கமுளான் ஆங்கிலசெந் தமிழும் வல்லோன் வளஞ்சிறந்த பரந்தனிலே மின்மு காரி
வாகாருங் கெமிக்கல் தொழிற்சாலை யுள்ளந் துளங்காது மாமனுக்குத் துணையாய் நின்ற
தோன்றலிவன் மருகனெனக் சுடருந் தூயோன்.
சகோதரர் சகோதரியர் சிறப்பு
அன்புநிறை பொன்னுத் துரையென்னு மண்ணனை
அரியதொரு தங்க ரெத்ன அக்காளை யவர் பினர். ஆருயிர் துணையான
ஆண்டகை விஜய ரெத்தினம் இன்பமான மொழிபேசு பூமணித் தங்கையை
ஏந்தலுயர் அப்பாத் துரை இன்றமிழ் ஆங்கிலம் கைவந்த ஆசிரிய
இன்னுயி ருடன்பி றப்பை
நந்தாது நீருதவு கொழும்புத் திணைக்களம்
நவிலத்தி யட்சகர் பதவியில் நவையறக் கடனுற்று மும்மொழிக் கணேசனெடு
நாடறுவர் சோதர ரெனச் சிந்தாரு லந்தீர வாய்த்தவொரு பாக்கியன்
செகம்புகழு மரிய தலைவன் சீர்கொண்ட பூபால சிங்கயா மிங்கிதன்
திகழ் நயினை தந்த மகனே.
'ஒளி படைத்த கண்ணினுய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சிஞய் வா வா வா - பாரதி

59
மைத்துன மைத்துணியர் சிறப்பு
இனியணிளஞ் சிரிப்பாலே எவ்வெவரையும் லெல்லு ராம லிங்கக் கனிமொழியன் பக்கலிருந் தெப்பொழுதும் மைத்துனர்க்காங் கடமை செய்வோன் நனிசிறந்த மாணிக்க நலமிகுந்தோன் தங்கம்மா நங்கை நல்லாள் புனிதனடி புகுந்திட்ட கந்தையா பொன்னம்மாப் புனிதை யின்னும் பிறர்க்கென்றுந் தீங்கெண்ணு வீரவாகு பேசுபூ மணித்துணைவன்
பிரியனன்பு மறப்பரிய கமலாட்சி மானினல்லாள் மதிமுகத்து ராசம்மா 407ೇಲ್ತೆ கல்விச்
சிறப்புடைய ஆசிரியை தேனின் சொல்லாள் செப்புமுயர் வடிவாப் பி
-- கையா நேச
முற்ப்பழகு மைத்துனர்மைத் துனியராலே உளமகிழ்ந்து இல்வாழ்வி
னுயர்ச்சி கண்டோன்
பொது
தந்துபெருஞ் சுற்றமெலாம் புகழ்ந்து வாழ்த்த
நட்டடனே வாழ்க்கைநலம் நாளும் மாந்தி சந்தியிலே புத்தகத்தின் சாலை வைத்துத்
தமிழ் மணக்க ஈழமெலாம் நூல்கள் தந்து இந்தியத்தாய் பொதுவுடமை ரஷ்சி யாவா
மெழில்நாடு கண்டரச ஏற்ற முற்றுச் சந்ததமும் சமதர்மம் வளர்த்துக் காத்த
தனித்தலைவன் பூபால சிங்க மின்னும்
தான்பிறந்த தாய்நாடாம் நயினைத் தீவில் சனசமுக நிலையமதைத் தாபித் தன்று
மீன்பிறங்கு கடல் மோட்டார்ப் படகுச் சேவை
வேளைதொறும் தவழுது நடத்தி யம்பாள்
வான்சிறந்த விழாநாளில் அன்ன மீந்து
வளரமுத சுரபிவழி நடத்தித் தொண்டு
தான் புரிந்து சமூகத்திற் தலைமை தாங்கித்
தழைத்தவொரு பெருமகனைத் தணந்தோ மின்றே.
அன்ன சத்திர மாயிரம் வைத்தலின்
அறிவுத் தாகத்திற் கானநூற் சாலைகள்
தன்னலங் கருதா தீண்டு தந்துபின்
தாயன் நாக பூஷணி சந்நிதி
"ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெல7ம் தேவி இங்குனதே" பாரதி

Page 45
60
۔۔۔۔۔۔۔۔۔۔
முன்னர் தாக் சாந்தி முறைவைத்து
மோட்ச வீடதை முன்னதாய்த் தேடிய
நன்னியன் பூபால் சிங்க நாமனை
நாடுதான் மறவா தேறு மேட்டிலே.
தோழர் பிரலாபம்
மல்லாடுந் தோழரெலா முனது பேச்சில்
மயங்கிடுவார் மகுடிமுனர்ப் பாம்பு போல சொல்லா. இனியவெங்கள் தோழா! வுன்றன்
சுவைகொண்ட நாவெங்கே தூய்மை யெங்கே வில்லாடு வதனமொடு வீரஞ் சொட்ட
விரித்துரைக்கும் டிொதுவுடமை விளக்க மெங்கே அல்லாடும் பெருமான்ரு ணழைத்து உன்னை அருகிருத்திச் சமதர்ம மறிகின் ருனே?
மனைவி மக்கள் பிரலாபம்
வெண்டுகிலோ டுத்தரியம் விளங்கு மார்பு
விரிந்தமுக மலரிடத்து மேவும் ஆடி தண்டரள முறுவல் தலை வகிர்ந்த கோலம்
தாங்கண்டு நாம்பெருமை கொண்டோ மையா! மண்டுபெருந் துயர்க் கடலில் வீழ்த் கி இன்று
மறைந்தாலே யெமைமறந்து மன்ன! அன்பு கொண்டுனது வடிவமனத் திரையின் மீது
குறித்திட்டோம் மறவோ முன் குறிக்கோளையா
மைத்துன மைத்துணியர் சோதர சோதரியர் மருகர் முதலியோர் பிரலாபம்
மச்சான்மச் சாளென்ருல் மதுரஞ் சொட்டும்
மற்றுமுறைப் பெயர்சொல்லுங்கால் மனதைக் கிள்ளுப இச்சாவேன் வந்ததுனக் கந்தோ வெங்கள்
இன்னுயிரே! சோதரனே! இடையிற் போளுய் கச்சானில் முறிந்தமரக் கொம்பர் போலக்
கதியிழர் து வாடுகிருேம் கருணை மாமா! பிச்சான இறைவனவன் செய்கை எம்மைப்
பிரித்துவிட்ட தெப்பிறப்பில் பெயர்த்துங் காண்போம்.
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே - ஒரு
தேன்வந்து பாபுது காதினிலே’’ - பாரதி

61
தேற்றம்
எத்தனைதான் செய்தாலும் இந்தவுடல் நில்லாது உத்தமர்பல் பேரிங் குயிர் துறந்தார் - வித்தகஞ்சேரி பேரறிஞன் பூபால சிங்கம் பிரிவியற்கை நீரறிவீ ரித்துயர்வீ ணென்று.
சாந்தி
அறுபதிலே ஒன்றுகுறை ஆண்டுபுவி வாழ்ந்து மறுவுலகுக் காளாய் மறைந்தான் - உறுதவத்து ஏந்தல்பூ பாலசிங்கம் இன்னுயிர்பூஞ் சேவடிக்கீழ்ச் சாந்திபெற நாம்வனங்கு வோம்.
ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
க. காமாட்சிசுந்தரம்
நயினுதீவு.
*சென்றுடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" - Li Trg

Page 46
நன்றியும்
வணக்கமும்
பிறந்தவர் எல்லாம் இறப்பவர் எனினும் சிறந்துயர் வுற்ருேச் சிந்தையில் இருப்பர் மறைந்தும் மறையா மகிமையில் அன்னர் நிறைந்து நிற்பர் நிலவளக் கிதுலாம் எங்கள் தந்தையும் எம்முயர் தலைவனும் இங்கிதற் காளாய் இன்னுயிர் நீத்தார். அன்னுர் ஆத்மா சாந்தி அடைய இன்ஞர் இனியார் என்பது இன்றி அஞ்சலி செலுத்தி, ஆற்றிய உரைசளும் செஞ்சொற் கவிகளும் சிந்தையாற் சொல்லி நெஞ்சம் நிறைத்து நிம்மதி தந்தீர் உந்திய உணர்வில் உதிர்த்தவை இம்மலர் தந்து கமழ்ந்து தமிழ்மணம் பரப்பும், வெந்த உள்ள வேதனை தணிய இந்தைக் காறுதல் செப்பிய G)_iflu frr l எந்தை இறைவி நயினை அன்னையின் மந்தகாச மதிமுக ங்கருணை யில் பந்த பாசப் பற்றினை நீக்கி வந்தனை கூறி வணக்கமும் தந்து சிந்தனை அவள் பால் செலுத்துகின்ருேமே?
பூபாலசிங்கம் குடும் பத்தின
 

நற்சிந்தனை
அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் 1922-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி சட்டமறுப்புச் செய்யப்போவதாக முன்னறி விப்புக் கொடுத்தார். அதன்படி சட்டமறுப்பைத் தொடங்கினர். "செளரி செளரா’ என்ற நகரத்தில் ஒர் ஊர்வலம் சென்றுகொண் டிருந்தது கூட்டத்தைக் கலைக்கப் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். சிறிது நேரத்தில் பொலிசாரிடமிருந்த குண்டுகள் யாவும் முடிந்துவிட்டன. செய்வது அறியாத பொலிசார் தாணுவுக்குள் சென்று பதுங்கினர்கள். சீற்றமடைந்த மக்கள் தாணுவுக்கே தீ மூட்டினர்கள். தீ, பற்றி எரிந்தது. உயிரைக் காப்பாற்றவேண்டி வெளியே ஒடிவந்த பொலிசார் மக்கள் கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர். மகாத்மா இதனே அறிந்து சட்டமறுப்பு இயக்கத்தையே உடனடியாக நிறுத்தி ஞர். எல்லோரும் "எதற்காக" என்று காரணம் கேட்டனர். அவர் சொன்னவிடை இதுதான்! 'தீயவழியிலே சென்று பெறுவது பெரிய பயன்தரக் கூடியதாக இருக்கலாம். ஆனல் அது விரும்பத்தகாதது.
‘வெடிகுண்டு, படுகொலை, தடியடி, துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான்தீவு என்ற இன்னேரன்ன எத்தனையோ ஆபத்துக்கள் உரிமைப்போரிலே அடுத்தடுத்துவரும். இவ்வளவையும் நான் பொருட் டுத்தப் போவதில்லை. மரணபயமின்றி இக்காரியத்திலே ஈடுபடத் கீர்மானித்துவிட்டேன். ஆயுத பலத்தை நம்பி அல்ல, மன உறுதியை ", Lil S.’’ -
"பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றேர்
கழி நல் குரவே தலை - குறள்
'ஈன்றள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க
சான்ருேர் பழிக்கும் வினை." - குறள்
"பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளவர்' - புறநானூறு

Page 47
அபிராமி அச்சகம், 17 டி.

ம்மா மொஸ்க் லேன் 画
L யாழ்ப்பானகரம்