கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூக சிந்தனை விரிபடு எல்லைகள்

Page 1


Page 2


Page 3


Page 4

சமூக சிந்தனை: விரிபடு எல்லைகள்
தொகுப்பு :
தெ.மதுசூதனன் கந்தையா சண்முகலிங்கம்
விழுது
ஆற்றல் மேம்பாட்டு மையம்

Page 5
தொகுப்பு :
பதிப்பு :
வெளியீடு:
அச்சு :
சமூக சிந்தனை:
விரிபடு எல்லைகள்
தெ.மதுசூதனன் கந்தையா சண்முகலிங்கம்
கார்த்திகை 2005
விழுது 3. டொறிங்டன் அவெனியூ
கொழும்பு - 07
டெக்னோ பிரின்ட் 55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06

பதிப்புரை
நாம் சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக, பிரஜைகளாக இருக்க வேண்டுமானால் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், விடயங்கள் மீதான கவனயீர்ப்பு முக்கியம். நமக்கு தொடர்ந்து அறிவியல் பார்வை, விமரிசன நோக்கு விரிவும் அழமுமாய் வளர வேண்டும். அப்பொழுதுதான்நமக்கான சமூகப் பொறுப்பு எத்தகையது என்பது புரிந்து கொள்ள முடியும். செயற்பட முடியும்.
இதற்கு நாம் எமது இதுகாறுமான சிந்தனைகளுடன் தருக்கம் புரிய வேண்டும். புதிய புதிய சிந்தனைகளுடன் ஊடாட வேண்டும். எமது சிந்தனை புத்தாக்கம் பெற வேண்டும். இந்தத் தெளிவு தான் நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சினைப்பாடுகள் மீதான தெளிவைத் தரும். மானிட விடுதலைப் பாங்கான கலாசாரத் தாக்கத்துக்கு உட்பட வேண்டும். நமக்கு வேண்டியது இதுதான்.
மேலும், விடுதலை, சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், போன்ற உயர்ந்த விழுமியங்கள் சார்ந்த சிந்தனைக்கும் செயற்பாட்டுக்குமான உரிய களங்கள் நோக்கிபயணிக்க வேண்டும். இந்த நோக்கை அடையும் பொருட்டுத்தான், நாம் சிந்தனைத் தளத்தில் புரட்சி மாற்றம்' வேண்டிய பல நூல்களை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
இந்த நோக்கத்தின் ஒரு கட்டமாகவே "சமூக சிந்தனை: விரிபடு எல்லைகள்" என்ற தொகுப்பு நூலை வெளியிடுகின்றோம். இந்த நூல் உருவாக்கப்பணியில் ஈடுபட்ட நண்பர்களுக்கு எமது நன்றி.
விழுது
ஆற்றல் மேம்பாட்டு மையம்

Page 6
முன்னுரை
சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் என்னும் இந்நூல் இருபதாம் நூற்றாண்டில் சமூக சிந்தனையினை (Social theory) உருவாக்குவதற்கு உதவியவர்களுள் அறுவரின் சிந்தனை பற்றிய அறிமுகமாக வெளிவருகிறது. தோமஸ் கூன், கார்ல்பொப்பர், நோம் சோம்ஸ்கி, கிராம்ஸ்சி, அல்துரசர், எரிக்பிராம் ஆகியோர் பற்றி தமிழில் அவ்வப்போது எழுதப்பட்டவை (1980-2005 காலத்தில்) இக் கட்டுரைகள். இவற்றைத் தொகுத்து ஒரு சிறு நூலாக வழங்குகிறோம்.
விஞ்ஞான அறிவின் தோற்றம், வளர்ச்சி பற்றியனவாக முதலிரு கட்டுரைகள் அமைகின்றன. இவற்றை சோ. கிருஷ்ணராஜா எழுதியுள்ளார். விஞ்ஞானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய சிந்தனை அறிவின் சமூகவியல் என்றும் அழைக்கப்படக்கூடியது. நவீன காலத்தில் விஞ்ஞான அறிவைப் பெறும் முறை பற்றிய மூன்று முக்கிய கோட்பாடுகள் எழுந்தன. அவை 1. பிரான்சிஸ் பேக்கனின் தொகுத்தறிமுறை
2. தோமஸ் கூனின் கட்டளைப்படிம மாற்றம் (Paradigm Shift)
கோட்பாடு
3. கார்ல் பொய்பரின் பொய்பித்தல் (Falsification) கோட்பாடு
பிரான்சிஸ் பேக்கனின் மரபுவழிமுறை பரவலாக அறியப்பட்டதொன்று. இருபதாம் நூற்றாண்டின் சமூக சிந்தனையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய மற்றைய இருவரதும் கோட்பாடுகள் தமிழ் வாசகர்களுக்கு முதன் முறையாக விளக்கமான முறையில் இக் கட்டுரைகள் மூலம் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 5
விஞ்ஞான அறிவு படிப்படியாகத் திரண்டு பெற்ற வளர்ச்சியால் ஏற்படுவதன்று. விஞ்ஞான ஆய்வில் ஏற்படுகின்ற சடுதியான புரட்சிகரத் திருப்பமே விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம். அத்தகைய மாற்றத்தை கட்டளைப்படிம மாற்றம் என்கிறார் கூன். விஞ்ஞானச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான நம்பிக்கைகள், விழுமியங்கள் உத்திமுறைகள் ஆகியவற்றின் முழுமையான மொத்த வடிவமே கட்டளைப்படிமம். புவிமையக் கொள்கை என்ற தொலமியின் கட்டளைப் படிமத்தில் இருந்து சூரிய மையக் கொள்கை என்ற கொப்பர்நிக்ஸின் கட்டளைப் படிமத்திற்கு வானியல் பெற்ற நகர்ச்சியை விஞ்ஞானப் புரட்சிக்கு சிறந்த g) göITU6OOT DIT Gb (gosmólius 6oTib. The Structure of Scientific Revolutions என்னும் தோமஸ் கூனின் நூலில் அடங்கியுள்ள கருத்துக்கள் கட்டுரையாசிரியரால் அழகாக எடுத்துக் கூறப்படுகின்றன.
"விஞ்ஞான ஆராய்ச்சி எப்பொழுதும் பிரச்சினைகளிலிருந்தே ஆரம்பமாகிறது. பிரச்சினைகளிற்கான தீர்வைக் காணவேண்டு. மெனின் முதலில் அதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். விளக்கம் தீர்விற்கான முன் நிபந்தனையாகும் எனக் கூறுகிற பொப்பர், விஞ்ஞானத்தின் நோக்கம் திருப்திகரமான விளக்கத்தைப் பெறுதலேயென எடுத்துக் காட்டுகிறார். உண்மையான விளக்கம் என்பதற்குப் பதிலாக திருப்திகரமான விளக்கம் என்ற பதத்தைப் பொப்பர் பயன்படுத்துவதேன் என ஒருவர் கேட்கலாம்.
பொப்பருடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான விளக்கங்கள், கொள்கைகள் அனைத்தும் தற்காலிக ஊகங்களே. உண்மையான விளக்கம் என்பதிலும் பார்க்க திருப்திகரமான விளக்கம் என்பதே மிகவும் பொருத்தமானதென இவர் கருதுகிறார்" (பக் 15) என்று பொப்பரின் கருத்தை கட்டுரையாசிரியர் அறிமுகம் செய்கிறார்.
விஞ்ஞான விளக்கங்கள், கொள்கைகள் அனைத்தும் தற்காலிக ஊகங்களே என்று கூறும் பொப்பர் அவதானிக்கப்பட்ட புதிய நேர்வுகளால் அவை தம் நம்பகத் தன்மையை இழக்கின்றன. தவறுகள் களையப்படுகின்றன. அதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகிறது என விளக்கம் தருகிறார்.

Page 7
6 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
"தவறுகளை களைவதன் மூலமே விஞ்ஞானம் முன்னேறுகிறதெனில், இவ்வளர்ச்சியில் விஞ்ஞானியின் பங்கென்னவென்பதற்கு, விஞ்ஞானியானவன் எச்சந்தர்ப்பத்திலும் எவ் விஞ்ஞானக் கொள்கையையும் நிறுவவேண்டுமென முயற்சித்தல் கூடாதெனவும் மாறாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்ப்பிக்கவே முயலுதல் வேண்டுமெனவும் பொப்பர் வாதாடுகிறார். நிறுவலிற்குப் பதிலாக நிராகரித்தலை வற்புறுத்துவதன் மூலம் பிரான்ஸிஸ் பேக்கன் என்பவரால் தொடக்கிவைக்கப்பட்டு பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த விஞ்ஞான முறைக்குப் பதிலாக பொய்பித்தற் கோட்பாடு என்ற முற்றிலும் புதியதொரு விஞ்ஞான முறையை பொப்பர் முன்மொழிகிறார்"
'சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்' என இப்பிரசுரத்தின் தலைப்பு ஒரு வகையில் மிகப் பொருத்தமானதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட துறைக்குள் தம் சிந்தனைகளைக் குறுக்காமல் தாம் இளமையில் எங்கே ஆரம்பித்தார்களோ அந்தத் துறைகளைக் கடந்து பல்துறைகளையும் தழுவிநின்று விகச்சித்த அறிவியல் மேதைகள் பற்றியதே இந்நூல். கார்ல் பொப்பரும் துறைகளின் எல்லைகளைத் தாண்டிய சாதனையாளர். மாற்றிலக்கணக் கோட்பாடு என்னும் மொழியியல் கோட்பாட்டினை முன்வைத்த நோம் சோம்ஸ்கியும் பல்துறை நிபுணர். அவரின் சிந்தனைகளை சோம்ஸ்கியும் உளவியலும்', 'சோம்ஸ்கியும் தத்துவமும்', சோம்ஸ்கியும் அரசியலும்' என்ற உப தலைப்புக்களின் கீழ் தெளிவான நடையில் விளக்குகிறார். கி. அரங்கன். பேராசிரியர் அரங்கன் நோம் சோம்கியின் மாணவராக கற்கும் வாய்ப்பைப் பெற்றவர் என அறிகிறோம். பேராசிரியரின் இந்த அரிய கட்டுரை இந்நூலை அலங்கரிப்பதாய் அமைகிறது.
நூலில் அடுத்ததாக இடம்பெறும் இரு கட்டுரைகள் அன்ரோனியோ, கிராம்சி, அல்துரசர் என்ற இரு மார்க்சிய சிந்தனை. யாளர்கள் பற்றியவை. இக்கட்டுரைகளை கந்தையா சண்முகலிங்கம் எழுதியுள்ளார். கிராம்சியும், அல்துரசரும் மார்க்சிசத்தின் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட இருவேறு போக்குகளை தமது சிந்தனைகளுடாக வெளிப்படுத்தினர். செவ்விய மார்க்சிஸத்தில்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 7
காணப்படாத புதிய எண்ணக் கருக்களை கிராம்சி முன்வைக்கிறார். கிராம்சியின் சிவில் சமூகம், மேலாண்மை, வரலாற்றுக் கூட்டு, உயிர்நிலைப் புத்திஜீவி ஆகிய எண்ணக்கருக்கள் சண்முகலிங்கத்தின் கட்டுரையில் விளக்கப்படுகின்றன. அரசு பற்றிய நவீன மார்க்சீயக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு கிராம்சியின் சிந்தனைகள் அவசியமானவை. நவீன அரசுகள் பலாத்கார ஒடுக்குமுறையோடு கருத்து நிலை மேலாண்மையையும், இணக்கத்தையும் தமது மேலர்திக்கத்தை நிலை நிறுத்துவதற்கு உபயோகிப்பதை கட்டுரை விளக்குகிறது.
"வரலாற்றைப் படைப்பவர்கள் மனிதர்களே, ஆனால் அவர்கள் தமது மனத்தின் விருப்புக்களின் படி (வரலாற்றைப்) படைப்பதில்லை" என்பது மார்க்சின் பிரபலமான கூற்று இக்கூற்றில் இரு கருத்துக் கூறுகள் உள்ளன.
I) வரலாற்றை மனிதர்களே படைக்கிறார்கள்.
- இக்கூறில் மனிதனின் சிந்தான செயல் ஆகியன அழுத்தம் பெறுகின்றன. இதனை செயலி (agency) எனலாம்.
I) மனிதர்களின் சொந்த விருப்பங்கள் எண்ணங்களின்படி
வரலாறு படைக்கப்படுவதில்லை.
- இக்கூறில் சமூக பொருளியல் கட்டமைப்புக்கள் (Structures) அழுத்தம் பெறுகிறன.
அமைப்புக்கள் அல்லது கட்டமைப்புக்களிற்கு அழுத்தம் கொடுக்கும் அல்துரசர் அமைப்பியல் மார்க்சீயத்தின் (Structural Marxism) கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டார். தனிநபர்களின் உள்நோக்கங்கள் விருப்புக்கள் சமூகத் தோற்றப் பாடுகளை விளக்குவதற்கு பயன்படமாட்டா என்ற கருத்தை அல்துாசர் முன்வைக்கிறார். பொருளியல், அரசியல் கருத்துநிலை, விஞ்ஞானம் ஆகியன சார்ந்த சூழ்நிலைக் கட்டமைப்புக்கள் சமூகத்தின் மேல்மட்ட வாழ்நிலை அம்சங்களின் வெளிப்படுகின்றன என்பதை அல்துரசர் விளக்கினார். அல்துரசரின் கருத்துநிலை அரசு யந்திரம் ஒடுக்குமுறை அரசு யந்திரம் ஆகிய எண்ணக்கருக்கள் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

Page 8
8 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
சிக்மண்ட் ஃப்ராய்டு, கார்ல்மார்க்ஸ் ஆகிய இரு சிந்தனை. யாளர்களினதும் கருத்துக்களால் கவரப்பட்டவர் எரிக்ஃபராம். இவர் புதிய ஃப்ராய்டியலாளர்களுள் ஒருவர். அத்தோடு மார்க்சிய சிந்தனையின் ஒரு கிளையாக வளர்ச்சி பெற்ற ஃபிராங் ஃபர்ட் குழுவுடன் உறவு கொண்டவர் இவர் 'எரிக் ஃப்ராமின் மானுட ஆளுமை மாதிரிகள்' என்ற தலைப்பில் அமையும் கட்டுரை பேராசிரியர் க. பூரணசந்திரன் அவர்களால் எழுதப்பட்டது. ஃப்ராம் கூறும் ஏற்பு ஆளுமை, சுரண்டும் ஆளுமை, பதுக்கும் ஆளுமை, விற்கும் ஆளுமை, படைக்கும் ஆளுமை என்ற மாதிரிகளைப் புரிந்து கொள்வதற்கான தகவல்களையும் எண்ணக் கருக்களையும் பேராசிரியரின் கட்டுரையில் காணலாம்.
நூலின் அனைத்துக் கட்டுரைகளையும் ஒருசேர நோக்கும் பொழுது இருபதாம் நூற்றாண்டுச் சமூக சிந்தனையின் புதிய பரிணாமங்கள் எமது கண்முன் விரிகின்றன.
தமிழ்ச்சூழலில் இதுபோன்ற சிந்தனைகளின் ஊடாட்டம் மூலமே தமிழ்ச் சிந்தனைப் புலம் புத்தாக்கம் பெறக் கூடியதாக இருக்கும். மேலும் புதியபொருள் கோடல் சார்ந்த ஆய்வுச் செயற்பாடுகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும். இன்றைய தமிழ்ப் புலமைச் சூழல் வேண்டி நிற்பது இதனையே.
தெமதுசூதனன்
கந்தையா சண்முகலிங்கம்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 9
உள்ளே.
விஞ்ஞான அறிவின் வளர்ச்சி : தோமஸ் கூனின் சிந்தனைகள்
யார் இந்த கார்ல் பொப்பர்?
நோம் சோம்ஸ்கி
மேலாண்மை, சிவில் சமூகம், கருத்துநிலை: அன்ரனியோ கிராம்சியின் சிந்தனைகள்
கருத்து நிலை பற்றி அல்துாசர்
எரிக் ஃப்ராமின் மானுட ஆளுமை மாதிரிகள்

Page 9
10
சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 11
விஞ்ஞான அறிவின் வளர்ச்சி தோமஸ் கூனின் சிந்தனைகள்
- சோ. கிருஷ்ணராஜா
விஞ்ஞானப் Ligdab6f6 9/60)LDLL (The Structure of Scientific Revolutions) என்ற நூல் மூலம் இந்த நூற்றாண்டின் பின்னரைக் கூறில் புகழ்பெற்ற சிந்தனையாளர்களில் ஒருவரென்ற கணிப்பை தோமஸ் கூன் பெறுகிறார். 1962ல் முதன் முதலாக வெளிவந்த இந்நூலானது 1970ல் விரிவாக்கப்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டது. இவ்விரண்டாம் பதிப்பில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களிற்கான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. பல மீஸ் பதிப்புகளையும் இந்நூல் கண்டது.
அறிவின் வளர்ச்சி பற்றிப் பொதுவாகவும், விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பாகவும் ஆராய்ந்த தோமஸ் கூன், தன் ஆய்விற்குரிய பொருளாக இயற்கை விஞ்ஞானத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டு அவ்வாய்விலிருந்து அறிவின் வளர்ச்சி பற்றிய பொதுத் தத்துவமொன்றை உருவாக்கினார். இத்தத்துவம் காலப்போக்கில் இயற்கை விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பற்றிய கோட்பாடாக மட்டுமல்லாது, சமூகவியல், பொருளியல் போன்ற சமூக விஞ்ஞானங்களினதும், பண்பாடு, கலை வரலாறு, அழகியல் போன்ற ஆய்வுத்துறைகளினதும் அறிவுவளர்ச்சி பற்றிய பொதுத்தத்துவமாகவும் விஸ்தரிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் மெய்யியலில் தோமஸ் கூனின் சிந்தனைகள் புலனறிவாதத்திற்கு (Positivism) பிற்பட்ட முறையிய

Page 10
12 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
லாகவும், சமூகவியலில் "அறிவின் சமூகவியல்" பற்றிய ஆய்வாகவும், கலைவரலாற்றினதும் அழகியலினதும் ஆய்விற்குரிய அடிப்படைத் தத்துவமாகவும் (Meta-theory) அவவ்வத்துறை சார் அறிஞர்களினால் சிற்சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, தோமஸ் கூனின் சிந்தனைகள் செல்வாக்குப் பெற்றிருப்பதானது இவரது கருத்துக்களின் முக்கியத்துவத்தை யாவர்க்கும் புலப்படுத்தும் போதிய நியாயமாகுமெனலாம்.
விஞ்ஞானத்தின் வரலாற்றை எத்தகைய முற்சாய்வுகளுமின்றி ஆராய்வோமாயின், விஞ்ஞானம் பற்றிய எமது பொதுமனப்பதிவில் ஓர் அடிப்படையான மாற்றமேற்படுமென்ற அவதானிப்புடன் விஞ்ஞானப் புரட்சிகளின் அமைப்பு என்ற நூல் ஆரம்பமாகிறது. விஞ்ஞானம் என அழைக்கப்படும் அறிவுத் தொகுதியானது விஞ்ஞானிகள் சமூகத்தினால் உருவாக்கப்பட்டதென்றும், விஞ்ஞானிகளின் சமூகம் தமக்கேயுரிய சிறப்பான தொழில் நுட்பத்தையும், தமக்கேயுரிய முறையியலையும் விருத்தி செய்துள்ளதென்றும், விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புமொருவர் இத்தொழில்நுட்பங்களையும் முறையியலையும் பயன்படுத்தி தமது ஆய்வுகளைச் செய்யலாமென்றும், ஒவ்வோர் ஆய்வும் ஒவ்வோர் கண்டுபிடிப்பும் உண்மையைத் தேடும் பாதையின் மைற்கற்களாக விளங்குகின்றனவென்றும் விஞ்ஞானம் பற்றிய பொதுவான கருத்தொன்றுண்டு. இது மிகவும் தவறான மனப்பதிவாகுமென்று கூறுகிற தோமஸ் கூன், இவ்வயிப்பிராயத்தை உருவாக்குவதில் பாடநூல்கள். (Text books) பெரும்பங்கு வகிக்கின்றனவென்று வாதிடுகிறார்.
விஞ்ஞானப் பாடநூல்கள் தாமெழுந்த காலத்துக் கொள்கைகளையும், தொழில்நுட்பங்களையும், முறையியலையுமே விஞ்ஞானத்தின் இயல்பாக எடுத்துக் காட்டுகின்றன. விஞ்ஞானம் பற்றிய இத்தகைய மனப்பதிவானது ஒரு நாட்டின் பண்பாடு பற்றி உல்லாசப் பயணிகளிற்குத் தரப்படும் குறிப்புகளிற் காணப்படுவதை ஒத்த மேலோட்டமான கருத்தோட்டமேயாகுமென கூன் வாதிடுகிறார். பாடநூல்கள் தாமெடுத்துக் கொண்ட விடயத்திற்கான விதிகள், கோட்பாடுகள், அவற்றிற்குரிய பரிசோதனைகள் ஆகியவற்றை அவற்றிற்கேயுரிய சிறப்பான உதாரணங்களுடன் விளக்கிச் செல்லும், இவை பிரதானமாக விஞ்ஞானிகளின் சமூகத்தில் இணையத் தயாராகும் இளைய தலைமுறையினர்க்கான கல்விசார் நோக்கத்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 13
தைக் கொண்டிருந்தாலும், விஞ்ஞானத்தின் வரலாறு புகட்டிய பாடங்கள் எதனையும் இந்நூல்களில் காணமுடியாதிருப்பது முக்கிய குறைபாடாகும். இப்பாட நூலாசிரியர்களின் அபிப்பிராயப்படி விஞ்ஞானத்தின் வரலாறென்பது நிராகரிக்கப்பட்ட கொள்கைகளின் வரலாறேயாகும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றி இந்நூல்கள் குறிப்பிட்டாலும், அக்கண்டுபிடிப்புகளிற்காக விஞ்ஞானிகள் நடாத்திய போராட்டங்கள், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என எதுவும் இந்நூல்களில் தகுந்த முக்கியத்துவம் பெறுவதில்லை. இப்பாட நூல்கள் எவ்வாறு தமதாய்வுத் துறையில் கடந்த காலத்தில் காணப்பட்ட குழப்பநிலைகள் பற்றி எதுவும் பேசுவதில்லையோ, அவ்வாறே அவ்வாய்வுத் துறையில் நிகழ்காலத்திற் காணப்படும் குழப்பநிலைகள் பற்றியும் குறிப்பிடுவதில்லை. இதனால் மாணவர்களும் மற்றவர்களும் விஞ்ஞானம் பற்றி மிகத் தவறான கற்பிதத்தைக் கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானம் படிப்படியாகத் திரண்டு வளருகின்றதென்ற அபிப்பிராயத்தை அவை தருகின்றன. விஞ்ஞான ஆய்விலேற்பட்ட முக்கியதிருப்பங்கள் அது படிப்பயாக திரண்டு பெற்ற வளர்ச்சியினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, விஞ்ஞான ஆய்விலேற்பட்ட புரட்சிகளே அத்தகைய மாற்றங்களிற்கு காலாயமைந்தன. வென்று கூன்வாதிடுகிறார்.
விஞ்ஞானத்தின் வரலாற்றினுடாக அறிவின் வளர்ச்சி பற்றி ஆராய முயன்ற தோமஸ் கூன், அவ்வளர்ச்சியை இருவேறு காலகட்ட ங்களாகப் பிரித்துப் பார்க்கிறார். அவை முறையே, விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்கு முற்பட்ட காலம், விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்குப் பிற்பட்ட காலம் எனப்படும்.
விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இயற்கை பற்றி ஒன்றிற்கொன்றுமுரண்பாடான கொள்கைகள் நிலவின. இக்காலத்தில் விஞ்ஞான நோக்கு பற்றியும், அதற்கான முறைகள் பற்றியும் மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டவர்களாக விஞ்ஞானிகள் காணப்பட்டனர். ஒன்றிற்கொன்று ஒத்திசையாத உலக நோக்கினைக் கொண்டிருந்ததால் அவர்களிடையே உடன்பாடு காண முடியவில்லை. பிரபஞ்சம் எத்தகைய பொருட்களால் ஆனது? அவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தாக்கம் புரிகின்றன? இத்தகைய பொருட்கள் பற்றி எத்தகைய கேள்விகளை வினவலாம்?இவை பற்றிய ஆய்வில் எத்தகைய முறையியலை / தொழிநுட்பங்களை நாம்

Page 11
14. சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
பயன்படுத்தலாம்? என்பன போன்ற வினாக்களிற்கு எல்லோர்க்கும் ஏற்புடைய விடைகளைக் கண்டுபிடித்து ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்தே விஞ்ஞானிகள் சமூகம் உருவாகிறது. இது இரண்டாவது காலகட்டமாகும். வெவ்வேறு ஆய்வுத்துறைகளிலும் இப்பொது உடன்பாடு வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் சமூகம் ஏற்றுக் கொண்ட பொது உடன்பாட்டை 'கட்டளைப்படிமம்' என தோமஸ் கூன் அழைக்கிறார். விஞ்ஞானத்தின் ஆய்வுப் பொருள் குறித்ததொரு 'அடிப்படையான படிமமென கட்டளைப்படிமத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். விஞ்ஞானிகளின் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான நம்பிக்கைகள், விழுமியங்கள் , உத்திமுறைகள் ஆகியவற்றின் முழுமையான மொத்த வடிவமே கட்டளைப்படிமமென அழைக்கப்படுகிறது.
விஞ்ஞானிகளிடையே காணப்படும் பொதுஉடன்பாடு அவர்களை ஒரு சமூகமாக இயங்க வைப்பதுடன், அச்சமூகத்தில் இணைய விரும்பும் இளைய தலைமுறையினர்க்கான பாடநூல்களின் தோற்றத்திற்கும் வழியமைக்கிறது. இவ்வாறு விஞ்ஞானத்தின் வரலாற்றை இருவேறு காலகட்டங்களாக வகுத்ததுடன், விஞ்ஞானிகள் ஒரு சமூகமாக எப்பொழுது இயங்கத் தொடங்குகிறார்களென்பதையும் தோமஸ் கூன் விளக்குகிறார். விஞ்ஞானிகள் சமூகத்தின் உருவாக்கம் விஞ்ஞானத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஞ்ஞானத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை ஆராய்ந்த பொழுது அவ்வளர்ச்சியிலும் சாதாரணகாலம், புரட்சிக்காலம் என இரு கூறுகள் உள்ளடங்கியிருப்பதாக தோமஸ் கூன் எடுத்துக் காட்டுகிறார். சாதாரண காலத்தில் விஞ்ஞானம் கிடைவெட்டாக வளர்ச்சியடைகிறது. இக்காலத்தில் அது தன் ஆளுகைப்பரப்பை விசாலித்துச் செல்கிறது. புரட்சிக் காலத்தில் விஞ்ஞானம் குத்துவெட்டாக வளர்கிறது. இக்காலகட்ட அறிவு வளர்ச்சியை "மேனோக்கிய பாய்ச்சல்" எனலாம். அறிவு வளர்ச்சியின் மேனோக்கிய பாய்ச்சலினால் கட்டளைப்படிமத்தில் மாற்றமேற்படுகிறது. விஞ்ஞானத்தின் வரலாற்றில் கட்டளைப் படிமமாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, பெளதீகம் தொடர்பான இன்றைய பாடநூல்களில் ஒளியானது போட்டோன்கள் (Photons) என விளக்கப்படுகிறது. அதாவது "குவாண்டம் மெக்கானிக்ஸ்" (சக்திச்சொட்டுக்கொள்கை) பொருளாக, அலைப்பண்புடைய துகள்களாக பெளதீகம் ஒளியை விளக்குகிறது.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 15
இந்த விளக்கம் கடந்த அரை நூற்றாண்டுக்குள்ளாகவே முன்மொழியப்பட்டது. இது மக்ஸ் பிளாங், ஜன்ஸ்ரைன் ஆகியோரின் ஆய்வின் பேறாக ஏற்பட்ட கட்டளைப்படிம மாற்றமாகும். ஆனால் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளி பற்றி பிறிதொரு விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. யுங், பிறிங்நெல் ஆகியோரின் ஆய்வுகளினால் பெறப்பட்ட ஒளி பற்றிய அலைக்கொள்கையே அக்காலத்திய விளக்கமாக இருந்தது. ஒளிபற்றிய அலைக்கொள்கை என்ற கட்டளைப் படிமத்தில் இருந்து அலைகளாகச் செல்லும் துகள்கள் என்ற கட்டளைப் படிமத்திற்கு பெளதீக விஞ்ஞானம் குத்துவெட்டான வளர்ச்சியை இருபதாம் நூற்றாண்டிலேயே பெற்றது.
17ம் நூற்றாண்டின் முடிவு வரை ஒளி பற்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொதுக்கொள்கை ஒன்றிருக்கவில்லை. எப்பியக்கூறியன் கொள்கை, அரிஸ் டோட்டலின் கொள்கை, அல்லது பிளேட்டோனியக் கொள்கை என ஒன்றிற்கொன்று முரண்பாடான பல கொள்கைகள் அக்காலத்திற் காணப்பட்டன. ஒவ்வொரு கொள்கையினரும் தம் பக்கத்திற்கு வலுவூட்டக் கூடிய பெளதீகவதீதக் கருத்துக்களை தத்தம் பக்கத்துநியாயங்களாக எடுத்துக்காட்டினர். இக்காலப் பகுதியில் பெளதீக விஞ்ஞானம் ஒளியியல் பற்றி தனக்கென்றொரு கட்டளைப்படிமமொன்றை உருவாக்காத, ஏற்காத காலமாகும். 18ம் நூற்றாண்டிலேயே (நியூட்டன் தனது "ஒளியியல்" (Optics) என்ற நூல் மூலம்) ஒளியானது சடப்பொருள் கூறுகளான துணிக்கைகள் என்ற முதற் கட்டளைப்படிமம் தோன்றியது.
ஒரு கட்டளைப்படிமத்திலிருந்து பிறிதொரு கட்டளைப் படிமத்திற்கு மாறுவதென்பது சடுதியாக நிகழ்வதில்லை. ஒரு நீண்ட செயல்முறைக்கூடாகவே இம்மாற்றம் நிகழுகிறது. இதனைப் பின்வருமாறு விளக்கலாம்.
கட்டளைப்படிமம் -> சாதாரணகாலம் -> அசாதாரண தோற்றப் பாடுகள் -> நெருக்கடி -> புரட்சி-> கட்டளைய்படிமம்
கட்டளைப்படிமம் ஒன்றிலிருந்து பிறிதொன்றிற்கு மாறுவதை புரட்சிக் காலமென்றும், இரண்டு கட்டளைப்படிமங்களிற்கிடைப்பட்ட காலத்தை சாதாரண காலமென்றும் தோமஸ் கூன் அழைக்கிறார்.
எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தரவுகளைத் தெரிவு செய்தல், மதிப்பிடல், விமர்சித்தல் ஆகிய செயற்பாடுகள் மிகவும்

Page 12
16 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
இன்றியமையாதவையாகும். இதற்கு ஆதாரமாக யாதேனுமொரு கோட்பாடும், அதற்கானதொரு முறையியல் அணுகுமுறையும் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் சமூகம் எப்பொழுது ஒரு விஞ்ஞானக் கொள்கையையும், அதற்கான முறையியலொன்றையும் ஏற்றுக்கொள்கிறதோ அக்கணத்திலிருந்து, அக்கொள்கையும் முறையியலும் ஒரு கட்டளைப் படிமமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதெனலாம். இவ்வாறு தோற்றம் பெற்ற கட்டளைப்படிமம் காலப். போக்கில் விஞ்ஞான ஆராய்ச்சியையும், அதன் செல்நெறிகளையுமே கட்டுப்படுத்துமளவிற்குப் பலம் பெற்று விடுகிறது. ஒரு கட்டளைப் படிமம் எத்துறை சாாந்ததோ அத்துறை சார்ந்த எண்ணக்கருக்களிற்கு இறுக்கமானதும், புதியதுமான வரைவிலக்கணங்கள் விஞ்ஞானிகளால் தரப்படுகின்றன. விஞ்ஞானிகள் கழகங்களும், சிறப்புத்துறைசார் சஞ்சிகைகளும் ஆரம்பிக்கப்பட்டு பரஸ்பரம் தம் ஆய்வணுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்புகளும் கிட்டுகிறது. இதனால் ஒரு கட்டளைப் படிமத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானிக்கு எல்லாவற்றையும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லாது போய்விடுகிறது. சகபாடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதும், பயன்படுத்தப்பட்டதுமானவற்றைப் பயன்படுத்தி தன்னாய்வைத் தொடர்ந்து முன்னெடுத்தச் செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இதனைப் பின்வரும் உதாரணத்தால் விளக்கலாம்.
16ம் நூற்றாண்டிலிருந்து மின்னியல் பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருந்தாலும், 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை, இத்துறையில் உழைத்து வந்த விஞ்ஞானிகள் மத்தியில் அனைவருக்கும் உடன்பாடானதொரு கட்டளைப்படிமம் இருக்கவில்லை. 1740க்கும் 1980 க்கும் இடைப்பட்டதொரு காலப்பகுதியிலேயே மின்னியலின் பொதுவான அடிப்படைகள் பற்றிய கருத்துடன்பாடு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இதுவரைக் காலமும் மின்னியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டதுடன், பல புதிய கண்டு பிடிப்புகளும் இடம் பெறலாயின. இத் துறைசார் விஞ்ஞானிகள் தாமறிந்த தகவல்களை சஞ்சிகைகளினூடாக தமது சகபாடிகளிற்கு அறியத்தந்ததுடன், சக பாடிகளின் ஆய்வுகளையும் தாமறிந்து பயன் பெறக் கூடியதாயிருந்தது. அவர்கள் ஏற்றுக் கொண்ட கட்டளைப்படிமம் அவர்களனைவரையும் ஒரு சமூகமாக இயங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 17
ஒரு கட்டளைப்படிமத்தைத் தொடர்ந்து வருகிற காலம் விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் சாதாரணகாலம் என தோமஸ் கூனினால் அழைக்கப்பட்டது. இக்காலத்தில் விஞ்ஞானம் தன் ஆளுகைப் பரப்பை கிடைவெட்டாக விசாலித்துக் கொண்டு செல்கிறது. விஞ்ஞானிகள் புதியபுதிய துறைகளில் தாமேற்றுக் கொண்ட கட்டளைப்படிமத்தைப் பிரயோகித்துப் பார்ப்பதையே பிரதான இலட்சியமாகக் கொண்டு இக்காலப்பகுதியில் செயற்படுகின்றனர். "புதிர்களை விடுவித்தல்" என்ற முறையிலேயே இக்கால விஞ்ஞானிகள் செயற்படுகின்றனர் என்று தோமஸ் கூன் குறிப்பிடுகிறார்.
ஒரு கட்டளைப்படிமத்தை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் சமூகம், சாதாரண காலத்தில் தமதாய்வுத் துறையில் நிலவும் பிரச்சினைகளை அக்கட்டளைப்படிமத்தை ஆதாரமாகக் கொண்டே வரையறுத்துக் கொள்வர். பிரச்சினைகளிற்கான தீர்வையும் அக் கட்டளைப் படிமமே கொண்டிருக்கிறதென அனுமானித்துக் கொண்டு, அவற்றினைக் கண்டுபிடிக்க முயலுவர். இதனையே தோமஸ் கூன் புதிர்களை விடுவிக்கும் செயல்முறை எனக் குறிப்பிடுகிறார். இக்கால விஞ்ஞானிகள் தமது கட்டளைப்படிமத்தின் எல்லைகளிற்கு உட்படாத பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், ஒன்றில் அதனை பெளதீகவதி தப் பிரச்சினை எனப் கூறிநிராகரிக்க முயலுவர். அல்லது, தம்மாய்வுத்துறைகளிற்கு அப்பாற்பட்டவை யெனக் கருதி அவற்றை தட்டிக் கழித்து விடுவர். இதனால் சாதாரண காலத்து விஞ்ஞான ஆராய்ச்சிகளை கட்டளைப்படிமமே வழி நடாத்துகிறதென்று கூன் வாதிடுகிறார்.
சாதாரண காலத்தில் விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கும் முறையிற் செயற்படுவதனால், இக்காலத்தில் பெறப்படும் விஞ்ஞான அறிவு திட்டமும், நுட்பமும் வாய்ந்த வகையிற் காணப்படுகிறது. முற்றிலும் புதிய தகவல்களையும் (நேர்வுகளையும்), கோட்பாடுகளையும் இலக்காகக் கொண்டு விஞ்ஞானிகள் இக்காலத்திற் செயற்படுவதில்லை. அவ்வாறில்லாது அசாதாரணமாக யாதேனும் இருப்பினுங் கூட எவரும் அதனைப் "கண்டு கொள்வதில்லை". ஆனால் கிடைவெட்டான வளர்ச்சி ஒரெல்லைக்கப்பால் தேக்கமடையவே செய்யும். தேக்கமடையத் தொடங்குதல் ஒரு கட்டளைப் படிமம் பலவீனமடைந்து வருகிறதென்பதையே சுட்டும் ஒரு கட்டளைப்படிமம் பலவீனமடைந்த நிலையில் இதுவரை அசாதாரண தோற்றப்பாடு

Page 13
18 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
களாகக் கருதி புறக்கணிக்கப்பட்டவைகள் பால் விஞ்ஞானிகள் நாட்டம் கொள்வர். இதனால் பெறப்படும் புதிய தகவல்களிற்கு ஏற்ப கட்டளைப் படிமத்தைத் திருத்தியமைக்க முற்படுவர். அல்லது பெறப்பட்ட தகவல்களையும், அவதானிக்கப்பட்ட நேர்வுகளையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுக முற்படுவர். இந்நிலைமை ஏலவே ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டளைப்படிமத்தில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும். ஒரு கட்டளைப்படிமத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வழியமைக்கும். பலவிதமான ஊகங்களும், புதிய கொள்கைகளும் விஞ்ஞானிகளால் வெளியிடப்படும். இவ்வாறு ஒரு கட்டளைப் படிமத்தில் படிப்படியாக நிகழுகின்ற அசாதாரண தோற்றப் பாடுகள் தீவிர நெருக்கடி நிலையைத் தோற்றுவித்து ஈற்றில் ஒரு புதிய கட்டளைப் படிமத்தின் எழுச்சிக்கு வழியமைக்கும் ஒட்சிசனின் கண்டுபிடிப்புபுளேயிஸ்தன் கொள்கையில் ஏற்படுத்திய நெருக்கடியை இங்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம். வெப்பவியக்கவியல் (Thermodynamics) என்ற கட்டளைப்படிமம், 19ம் நூற்றாண்டில் பெளதீக விஞ்ஞானத்தில் காணப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் இரண்டு தம்முள் முரண்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்தே உருவாக்கப்பட்டது. கதிர்வீச்சு, ஒளிமின் விளைவு என்பன தொடர்பாக விஞ்ஞானிகள் எதிர்கொண்ட பிரச்சினைகளே சக்திச்சொட்டுக்கொள்கை என்ற புதிய கட்டளைப்படிமத்தின் தோற்றத்திற்கு காலாயிருந்ததென்பதையும் இங்கு மனங்கொள்ளுதல் தகும். இவ்வாறு அசாதாரண தோற்றப்பாடுகள் ஒரு கட்டளைப்படிமத்தில் பாரிய மாற்றங்களை வேண்டி நிற்பதுடன் ஏலவேயுள்ள அறிவுத் தொகுதியை ஐயுற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும். முந்திய நம்பிக்கைகளையும், செயற்பாடுகளையும் நிராகரித்து பிறிதொரு அறிவின் தளத்திற்கு ஆய்வுகள் நகரும். கொப்பநிக்கஸ், நியூட்டன், ஐய்ன்ஸ்ரைன் ஆகியோர் நிகழ்த்திய சாதனைகள் விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஏற்பட்ட புரட்சிகர நகர்வுகளிற்கு சிறந்த உதாரணங்களாகும்.
சாதாரண காலத்து விஞ்ஞான அணுகுமுறை புதிய கொள்கையின் எழுச்சியினால் மாற்றப்பட வேண்டியதாகிறது. புதிர்களை விடுவிக்க முடியாதநிலையில், ஏலவே பின்பற்றப்பட்டு வந்த விஞ்ஞான விதிகளிற்குப்பதிலாக புதிய விதிகளைத் தேடும் நோக்கில் ஆய்வுகள் நிகழும். புவிமையக் கொள்கை என்ற தொலமியின் கட்டளைப் படிமத்திலிருந்து சூரியமையக் கொள்கை என்ற கொப்பநிக்கஸின்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 19.
கட்டளைப்படிமத்திற்கு வானியல் பெற்ற நகர்ச்சியை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக்காட்டலாம். கட்டளைப்படிமத்தின் மாற்ற காலத்தில் தொலமியின் கட்டளைப்படிமம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையை பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐந்தாம் அல்போன்ஸோ, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொப்பநிக்ஸின் சகபாடியான டொமினிக்கோ டீ நொவாரா ஆகியோரின் கூற்றுக்கள் நன்கு புலப்படுத்தும். "பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு முன்பு இறைவன் என்னைக் கலந்தாலோசித்திருப்பாராயின் அவருக்கு நல்ல பல ஆலோசனைக் கிடைத்திருக்கும்" என அல்போன்ஸோ குறிப்பிட்டார். தொலமியின் வானியற் கருத்துக்கள் தவறானவையென டொமினிக்கோ நொவாரா எழுதினார். இவ்வாறு பதினாறாம் நூற்றாண்டு வரை வானியலில் நிலவிய நெருக்கடி நிலைமைகளே புதியதொரு கட்டளைப்படிமத்தைத் தேட வேண்டியநிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனைக் கண்டுபிடிப்பதில் கொப்பநிக்கஸ் வெற்றி பெற்றார்.
கட்டளைப்படிமம் எதுவுமற்றநிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இடமில்லையென்பதால் புதியதொரு கட்டளைப்படிமத்தின் துணையின்றி ஏலவேயுள்ள கட்டளைப் படிமத்தை நிராகரிப்பதென்பது விஞ்ஞான ஆராய்ச்சியையே நிராகரிப்பதை ஒக்கும். புதியதொரு கட்டளைப்படிமத்தின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்தே பழைய கட்டளைப் படிமம் நிராகரிக்கப்படுமென்கிறார். தோமஜ் கூன். இவரது அபிப்பிராயப்படி ஒரு பொழுதும் நிராகரிக்கப்பட முடியாத கட்டளைப்படிமமென ஒன்றிருக்க முடியாது.
ஒரு விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் எழுகிற எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு கட்டளைப்படிமம் தீர்த்துவிடமுடியாது. அவ்வாறில்லாது, ஒரு ஆய்வுத்துறை சார்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு கட்டளைப் படிமம் தீர்க்கிறதெனக்கொண்டால், அத்தகைய கட்டளைப்படிமம் மிக விரைவிலேயே பிற விஞ்ஞான ஆய்வுத்துறைகளிற்கான கருவியாக மாற்றப்பெற்றுவிடுமெனக் குறிப்பிடுகிறார். உதாரணமாக, ஒரு காலத்தில் ஒளியியல் சார்ந்த பிரச்சினைகளிற்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கேத்திரகணித ஒளியியல்(Geometric Optics) இன்று பொறியியற் துறையின் கருவியாகப் பயன்படுவதை எடுத்துக் காட்டலாம்.

Page 14
20 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
ஒரு கட்டளைப்படிமத்தில் எழுகின்ற நெருக்கடிநிலை அக்கட்டளைப்படிமத்தின் சாதாரணகால வளர்ச்சியை தேக்கமடையச் செய்கிறதென்றும், இத்தேக்கநிலை புதிய கட்டளைப்படிமத்தின் எழுச்சியுடன் நீங்குகிறதென்றும் ஏலவே குறிப்பிட்டோம். புதிய கட்டளைப்படிமத்தின் எழுச்சி, பழைய மரபுகளை உடைத்தெறிவதுடன், புதிய விதிகளையும், புதிய மரபுகளையும் முன்மொழிகிறது. இவ்வாறு புதிய கட்டளைப் படிமத்தின் தோற்றமும் புரட்சியுடன் ஆரம்பமாகிறதென்கிறார் தோமஸ் கூன்.
அறிவு வளர்ச்சியில் நிகழும் புரட்சி, தன்னியல்பில் அரசியலில் நிகழும் புரட்சிகரமாற்றங்களை ஒத்ததென்பது இவரின்நிலைப்பாடு. ஒரு அரசியல் நிறுவனம் சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் குந்தகமாக இருக்கும் பட்சத்தில் சமூக அங்கத்தினரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்து காலப்போக்கில் எவ்வாறு சமுதாய மீளமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களிற்கும் இட்டுச் செல்கிறதோ, அவ்வாறேதான் விஞ்ஞான அறிவு வளர்ச்சியிலும் நிகழுகிறதென்கிறார் தோமஸ் கூன். எவ்வாறு அரசியலில் மாற்றத்தை விரும்பாத பழமைவாதிகள் காணப்படுவரோ அவ்வாறே, விஞ்ஞான அறிவு வளர்ச்சியிலும் அடிப்படை மாற்றத்தை விரும்பாத பழமைவாதிகள் காணப்படுவர். அரசியலில் மாற்றத்தை புதிய தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்வது போலவே விஞ்ஞானத்திலும் கட்டளைப்படிம மாற்றத்தை இளைய தலைமுறையினரான விஞ்ஞானிகளே முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கட்டளைப்படிமத்தில் ஏற்படுகிற மாற்றம் விஞ்ஞானிகள் உலக நோக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை காலமும் ஏற்புடையதென அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான அறிவனைத்தும் புதிய உலகநோக்கினடிப்படையில் மீள் பரிசீலனைக்கு உட்பட்டு "புதிய ஒழுங்கு" ஸ்தாபிதமாகிறது. புதிய ஒழுங்கொன்றின் ஸ்தாபிதத்தைத் தொடர்ந்து பழைய பாடநூல்கள் காலாவதியாவிட, அவற்றின் இடத்தைப் புதிய நூல்கள் நிரப்புகின்றன. விஞ்ஞானப் புரட்சியின் அறுவடையாகவே இவை மீண்டும் எழுதப்பட வேண்டியனவாயுள்ளனவென தோமஸ் கூன் வாதிடுகிறார். புதிய கட்டளைப்படிமத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் இப்பாடநூல்கள் தொடர்ந்து வருகிற சாதாரண காலத்து விஞ்ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் புதிய அடிப்படைகளைத் தருகின்றன.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள். 21
இவ்வாறு கட்டளைப்படிமங்களின் மாற்றங்களினூடாக வளர்ச்சி பெற்று வருகிற அறிவின் வளர்ச்சியையே விஞ்ஞான அறிவின் பரிணாம வளர்ச்சியாக தோமஸ் கூன் விளக்குகிறார். அறிவின் இப்பரிணாமம், நோக்குக் கொள்கை (Teleological) யினடிப்படையில் பெறப்படும் வளர்ச்சியல்ல. இது இயற்கையின் தெரிவு என்ற விதியினடிப்படையிலமைந்த டார்வினின் பரிணாமக் கொள்கையை ஒத்தது. டார்வினுக்கு முன்னரேயே லாமார்க், ஸ்பென்ஸர் மற்றும் ஜேர்மனியச் சிந்தனையாளர்கள் பரிணாமம் பற்றிச் சிந்தித்துள்ளனர். எனினும், இவர்களது கொள்கைகளணைத்தும், நோக்க இயற்திட்டம் ஒன்றினடிப்படை யிலேயே விபரிக்கப்பட்டன. மனிதனும் ஏனைய உயிர்களும் ஏதோவொரு நோக்கத்தை நிறைவு செய்யும் வண்ணமே பரிணாமமுறுகின்றனவென்று இவர்கள் கருதினார்கள்.
ஆனால் உயிர்கள், இறைவனோ அல்லது இயற்கையோ கற்பித்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையிற் பரிணாமமுறுவதில்லை. மாறாக, சூழலிற்கேற்ப தன்னை இசைவாக்கும் இயற்கையின் தேர்வினாலேயே பரிணாம முறுவதாக டார்வின் குறிப்பிட்டார். இவ்வாறே அறிவின் வளர்ச்சியும் விஞ்ஞானப் புரட்சிகளினூடாக பரிணாமமுறுகிறது.
டார்வின் கூறியது போல, உயிரியின் பரிணாமம் எத்தகைய நோக்கங்களுமின்றி எவ்வாறு நடைபெறுகிறதோ, அவ்வாறே எத்தகைய இலக்கையும் நோக்கி விஞ்ஞான அறிவு நகர்ந்த செல்வதில்லை. சென்ற காலத்திலும் பார்க்க மனிதனின் அறிவு இன்று உண்மைக்கு அண்மித்துள்ளதென்று மட்டும் கூறலாமென்பது தோமஸ் கூனின் நிலைப்பாடாகும்.

Page 15
22 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
uUa di Mig5 a5adiað GuaŮudi? (KARL POPPER)
- சோ. கிருஷ்ணராஜா
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞான அறிவுக் கொள்கையாளரான கார்ல் பொப்பர் (1902 -1994) தனது 92 வயதிற் காலமானார். இந்த நூற்றாண்டில் பொப்பரினது சிந்தனையின் ஆளுகைக்குட்படாத அறிவுத்துறையென எதுவுமே இல்லையெனலாம். கலை, வரலாறு முதற்கொண்டு மருத்துவம் ஈறாகவுள்ள சமூக, இயற்கை விஞ்ஞானத்துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.
விஞ்ஞானக் கண்டு பிடிப்பின் தருக்கம் (The Logic of Scientific Discovery) திறந்த சமூகமும் அதன் எதிரிகளும் (இரண்டு பாகங்கள்) (The Open Society and its Enemies) 6 Junion bulg56). Tg55g56ör 6g/60)LD (The Poverty of Historicm) 26tablisabelbib Blytablfgsgbgito (Conjetures and Refutations) (FITillipp gunj6 (Objective Knowledge) 66in 1607 GL IITill gnei) எழுதப்பட்ட பிரதான நூல்களாகும். பெருந்தொகையான கட்டுரை. களையும் பொப்பர் எழுதியுள்ளார், இவற்றில் சில இவரது மாணவர்களால் தொகுக்கப்பட்டு மூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இம் மூன்று நூல்களும் பொப்பரின் முதனுரலான விஞ்ஞான கண்டு பிடிப்பின் தருக்கம் என்பதில் முன்மொழியப்பட்ட வாதங்களிற்கு அனுசரணையாகத் தொகுக்கப்பட்டனவாகும். "முடிவிலாத் தேடல்" (Unended Quest) என்ற தலைப்பிலான சுயசரிமையொன்றும் பொப்பரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. இவை தவிர ஜே.சி. ஈசெல்ஸ்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 25
வழிவிடுவதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. இதுவே தவறுகளைக் களைவதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகிறதென பொப்பர் குறிப்பிடுவதன் தாற்பரியமாகும்.
தவறுகளை களைவதன் மூலமே விஞ்ஞானம் முன்னேறுகிறதெனில், இவ்வளர்ச்சியில் விஞ்ஞானியின் பங்கென்னவென்பதற்கு, விஞ்ஞானியானவன் எச்சந்தர்ப்பத்திலும் எவ்விஞ்ஞானக் கொள்கையையும் நிறுவ வேண்டுமென முயற்சித்தல் கூடாதெனவும் மாறாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்ப்பிக்கவே முயலுதல் வேண்டுமெனவும் பொப்பர் வாதாடுகிறார். நிறுவலிற்குப் பதிலாக நிராகரித்தலை வற்புறுத்துவதன் மூலம் பிரான்ஸிஸ் பேக்கன் என்பவரால் தொடக்கி வைக்கபட்டு பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த விஞ்ஞான முறைக்குப்பதிலாக பொய்ப்பித்தற்கோட்பாட்டு என்ற முற்றிலும் புதியதொரு விஞ்ஞானமுறையை பொய்பர் முன்மொழி. கிறார்.
பாரம்பரிய விஞ்ஞான முறையானது ஒன்றையொன்று தொடரும் ஆறுபடி முறைகளைக் கொண்டதாக எடுத்துக் காட்டப்பட்டது. முதலாவது படிநிலையில் நோக்கலும் பரிசோதனையும், இரண்டாவது படிநிலையில் தொகுத்தறிப் பொதுமையாக்கமும், மூன்றாவது படிநிலையில் கருதுகோளை வாய்ப்புப் பார்த்தலும் நடைபெற்று அதனடிப்படையாக விஞ்ஞான அறிவு பெறப்படுமெனக் கூறப்பட்டது. பொப்பர் இதற்குப் பதிலாக விஞ்ஞான முறையானது முதலாவது படிநிலையில் எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறதெனக்கூறி, அப்பிரச்சனை வழக்கமாக ஏலவேயுள்ளதொரு கொள்கையை அல்லது எதிர்பார்க்கையை மறுதலிப்பதாகவே இருக்க வேண்டுமென்கிறார். இரண்டாவது படி நிலையில் மறுதலிக்கப்பட்ட பழைய கொள்கைக்குப் பதிலாகப் புதிதாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம் பெற வேண்டுமென்றும், மூன்றாவது படிநிலையில் புதிதாக முன்மொழியப்பட்ட கொள்கையிலிருந்து பரிசோதிக்கக்கூடிய தரவுகளை உய்த்தறிதல் இடம்பெறவேண்டுமென்றும், மூன்றாவது படிநிலையில் பரிசோதனை - அதாவது மறுதலிக்கப்பட வேண்டிய கொள்கையை, பெறப்பட்ட புதிய தரவுகளினடிப்படையில் நிராகரிக்க முயற்சிப்பது இடம் பெறவேண்டு. மென்றும், ஐந்தாவது படி நிலையில் பழைய விஞ்ஞானக் கொள்கையை அல்லது தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம் பெற

Page 16
26 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
வேண்டுமென்றும் தனது விஞ்ஞான முறை பற்றிப் பொப்பர் விளக்குகிறார்.
விஞ்ஞான முறை பற்றிய பொப்பருடைய விளக்கம் - அதாவது பொய்ப்பித்தற் கோட்பாடு, தொகுத்தறிதலை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான முறை எதிர்நோக்குகிற பிரச்சரனைகளைத் தீர்ப்பதுடன், விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுமெனவும் வாதிடப்படுகிறது.
தொகுத்தறிவு முடிவுகள் நிச்சயமான முடிவுகள் அல்லவென்றும், அவைவெறும் எதிர்பார்ப்புக்களே என்றும் டேவிட் கியூம் என்ற நவீனகால மெய்யியலாளர் எடுத்துக்காட்டினார். இவரது அபிப்பிராயப்படி தருக்க நிச்சயம் தொகுத்தறி முடிவுகளிற்கில்லை. அவை உளவியல்சார்நம்பிக்கையால் விளைந்த எதிர்பார்க்கையே. இவ்வாறு கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட விமரிசனத்தை கருத்திற் கொண்ட தற்கால விஞ்ஞான முறையியலாளர்கள் நிகழ்தகவுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொகுத்தறி முடிவுகளின் நிகழ் திறத்தை அதிகரிக்க முயன்றனரெனினும், இம் முயற்சியினால் தொகுத்தறிதலிற் கெதிராக கியூமினாஸ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அகற்ற முடியவில்லை. சான்றுகளின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க நிகழ்திறம் அதிகரித்துச் செல்லுமேயொழிய நிச்சயத்தன்மையை அது ஒரு பொழுதும் எய்துவதில்லை. ஒரு விஞ்ஞானக் கொள்கையை அது உண்மையேயெனக் காட்ட ஆயிரக்கணக்கான சான்றுகளைச் சேகரித்தாலும் அதனை ஒருபொழுதும் அறுதியாக நிறுவமுடியாதென்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பொப்பர் இப்பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு பொய்யாக்கற் தத்துவம் பயனுடையதென எடுத்துக் காட்டினார்.
ஒரு விஞ்ஞானக் கொள்கை ஏற்புடையதேயென நிறுவுதற்கு எத்தனை சான்றுகள் தேவைப்படுமென எவராலும் தீர்மானிக்க முடியாதென்பது உண்மையே. ஆனால் அக்கொள்கை பொய்யானதென நிராகரிப்பதற்கு அக்கொள்கையை மறுதலிக்கும் ஒரு சான்று உளதென்று எடுத்துக் காட்டுவதே போதுமானதென்பதால், விஞ்ஞானக் கொள்கையை நிறுவுவதற்குப் பதிலாக நிராகரிக்க முயல வேண்டுமென்று கூறுவதன் மூலம் தொகுத்தறிதலிற்கெதிராக கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட பிரச்சனையை பொப்பர் தீர்க்கிறார்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 27
பொப்பரின் அபிப்பிராயப்படி ; விஞ்ஞான அறிவின் முன்னேற்றம் ஏலவேயுள்ள விஞ்ஞானக் கொள்கைகளை மறுதலிப்பதன் மூலம் புதிய கொள்கைகள் உருவாதற்கு வழியமைத்துக் கொடுப்பதாலேயே சாத்தியமாகும். பழைய கொள்கைகள் நிராகரிக்கப்படாதவரை புதிய கொள்கைகளிற்கு இடமில்லையென்பதால் விஞ்ஞானிகள் தமது ஆய்வை பொய்யாக்கற் தத்துவத்தினடிப்படையிலேயே செய்ய வேண்டியதாகிறதெனக் கூறியதன் பின்னர் , பொய்ப்பிக்கப்படுதலே விஞ்ஞானக்கொள்கைகளின் இலட்சணம் என்ற முடிவிற்கு வருகிறார். பொய்பிக்க முடியாதிருக்கும் விஞ்ஞானக் கொள்கையென இதுவரை காலமும் எந்தவொரு கொள்கையும் இருக்கவில்லை. எனவே பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தலே விஞ்ஞானக் கொள்கைகளின் இயல்பென்றும், எந்தவொரு அறிவுத்துறையிலும் பொய்பிக்க முடியாக் கொள்கைகள் உளதென ஒருவர் வாதிடுவாராயின் அவ்வறிவுத்துறை விஞ்ஞானமேயல்ல என்றும் பொப்பர் வாதிடுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி மார்க்சிசம் பொய்ப்பிக்க முடியாக்கொள்கை எனக் கூறப்படுவதால், அது விஞ்ஞானமல்ல (மார்க்சிசத்திற்கெதிரான பொய்பரின் விமரிசனம் ஏற்புடையதல்ல. மார்க்சிசம் என்றால் என்னவென தான் விளங்கிக் கொண்டதொரு கொள்கையையே பொப்பர் விமர்சிக்கிறார். மார்க்சிசம்நியூட்டனதோ அல்லது ஐயன்ஸ்ரைனினதோ கொள்கைகளைப்போன்றதொரு விஞ்ஞானக் கொள்கையல்ல வென்பதையும், அதுவோர் உலக நோக்காகவும், முறையியலாகவுமே இருக்கிறதென்பதையும் பொப்பர் உணரத்தவறிவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது) என்ற முடிவிற்கு வருகிறார். இதுபோலவே வரலாறும் விஞ்ஞானமல்லவென்பது அவரது நிலைப்பாடு.
விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தும் தத்துவமாக பொய்பித்தற் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பொப்பர் இதனடிப்படையில் அறிவுக்கொள்கையொன்றையும் விருத்தி செய்து கொள்கிறார். உண்மை எதுவென எவரும் அறியார். நாம் செய்யக் கூடியதெல்லாம் அறியாமையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதே. முடிவிலியாய்த் தொடரும் இப்பயணத்தை அறிவின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையென அழைப்பர். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய இப்பயணம் பிரச்சனை தீர்க்கும் முறையிலமைகிறதென்பது பொப்பரது வாதம். இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்.

Page 17
28 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
P, ->TS-» EE ->P,
அறிதல் முயற்சி எப்பொழுதும் ஒரு பிரச்சினையுடனேயே ஆரம்பமாகிறது. இதனை P குறிக்கிறது. TS என்பது முன்மொழி. யப்பட்ட தீர்வு முயற்சியையும் EE என்பது முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலையும் P,என்பது தவறுகள் களையப்பட்டதன் பின்னர் உள்ள நிலையையும் குறிக்கிறது. P உம் P, உம் சாராம்சத்தில் பிரச்சனைகளேயெனினும், P. பிரச்சனையின் தொடக்கத்தையும் P, முன்மொழியப்பட்ட தீர்வினடிப்படையில் தவறுகள் களையப்பட்ட நிலையையும் அதேசமயம் புதிய பிரச்சனையொன்றின் தொடக்கத்தையும் சுட்டுகிறர்.
@6J6) IT go P -PTS--> EE ->P,->TS-> EE -əP6T6IOT gomóGTGOTg5 உண்மையை நோக்கி பிரச்சினை தீர்க்கும் முறையினுடாக வளர்ச்சியடைந்து செல்கிறது. பொதுவாக அறிவுலகத்தையும், குறிப்பாக விஞ்ஞான அறிவையும் பொறுத்தவரையில் முடிவிலியாய்த் தொடரும் இத்தேடலில் பழைய கொள்கைகள் (ஊகங்கள்) நிராகரிக்கப்பட்டு புதிய கொள்கைகள் (ஊகங்கள்) வந்தவண்ணமேயிருக்கின்றன. அறிவும் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. எந்தவொரு அறிவுத்துறையில் எக்கணத்தில் இவ்வளர்ச்சி தடைப்படுத்தப்பட்டு இருப்பதுடன் திருப்தியடைய நேரிடுகிறதோ அக்கணத்தில் அவ்வறிவுத்துறை விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை இழந்து விஞ்ஞானமல்லாததாய், சித்தாந்தமாய்ப் போய்விடுகிறது.
ஊகமும் நிராகரிப்புமாக வளர்ந்து செல்வதே விஞ்ஞான பூர்வமான அறிவு என்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டு நிர்ணயமில் வாதம் என்ற கோட்பாட்டைப் பொப்பர் முன்மொழிகிறார். நிர்ணயமில் வாதமென்பது நிர்ணயவாதத்திற்கு எதிரானது. இயற்கை விஞ்ஞானங்களிலும், சமூக விஞ்ஞானங்களிலும் நிர்ணயவாதமென்பது ஒரு அதீதக் கொள்கையாக (Meta theory) அதாவது அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாயிருக்கின்ற தத்துவமாக எண்ணப்பட்டது. காரணத்தைத் தேடுவதன் மூலம் காரியத்தை விளங்கிக் கொள்ளலாம் என்ற காரணக் கோட்பாடும் நிர்ணயவாதத்தையே ஆதாரமாகக் கொண்டது. நிர்ணயவாதத்தையும் காரணக் கொள்கையையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். அரிஸ்ரோட்டலின் காலத்திலிருந்தே 'காரணக்கொள்கை அறிவைப் பெறுவதற்கானதொரு திறவுகோலாய்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 29
ஏற்றுக் கொள்ளப்பட்டுவந்தது. நியூட்டனின் விஞ்ஞானமும், நிறைபோட்டிப் பொருளாதாரமும், திட்டமிடல் தொடர்பான கொள்கைகளும் உள்பொருளியலடிப்படையில் நிர்ணயவாதமாகவும் அறிவாராய்ச்சி அடிப்படையில் காரணக் கொள்கையாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிர்ணயவாதமும் காரணக் கொள்கையும் இயற்கை விஞ்ஞானங்களில் நியதிவாதத்திற்கும் சமூக விஞ்ஞானங்களில் விதிவாதத்தை ஆதரிக்கும் மூடுண்ட சமூக விஞ்ஞானக் கொள்கைகளுக்கம் இட்டுச் செல்லுமென எச்சரித்து, நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறார். இயற்கை விஞ்ஞானங்களில் ஒன்றான பெளதீகத்தில் "குவாண்டும் மெக்கானிக்ஸ்" (சக்திச் சொட்டுக் கொள்கை) நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறதென்றும் நிர்ணயமில்வாதம் சமூக விஞ்ஞானங்களில் குறிப்பாக அரசியலில் திறந்த சமூகத்திற்கு இட்டுச் செல்லுமென்றும் பொப்பர் குறிப்பிடுகிறார். இவரது அபிப்பிராயப் படி திறந்த சமூகமே நீதியான சமூகமாகும். பொப்பரின் வழியில் திறந்த சமூகத்தின் பொருளாதாரம் பற்றிச் சிந்தித்த பொருளியலாளர்களின் கயக் (Hyek) குறிப்பிடத்தக்கவர்.
திறந்த சமூகம் என்பது பொப்பருடைய அபிப்பிராயப்படி விமரிசனத்தை அனுமதிக்கிற, சகிப்புத்தன்மையுடன் தாங்கிக் கொள்கிற சமூகமாகும், சமூகம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. இம்மாற்றம் எவரினதும் தேவை கருதியோ அல்லது யாதேனுமொரு திட்டத்தின் படியோ நிகன்வதில்லை. எனவே சமூக நிறுவனங்களை உருவாக்கும் பொழுதும், சமூகம் தழுவிய தீர்மானங்களை எடுக்கும் பொழுதும் அதனோடு தொடர்புடைவர்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாவர். அனைவர்க்கும் நன்மை பயக்குமெனக் கருதும் அரசியற் கொள்கைகள் அனைத்தையும் பொப்பர் நிராகரிக்கிறார். ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதவை இன்னவை என்ற திட்டத்துடன் அரசியலை அணுகுபவர்கள் சமூகத்தை ஆபத்தான பரிசோதனைக்கு உள்ளாக்குபவர்களாவர். விளைவுகளின் பலாபலன்களை முன்கூட்டியே அறியும் வல்லமை மனிதர்க்கில்லை. எதிர்காலத்தின் தேவைகள் பற்றிய இன்றைய கணிப்பீடு ஒரு பொழுதும் சரியாக இருக்கமுடியாது. மனிதனின் அறிவு வளர்ந்து கொண்டே போகிறது. சமூகத்தின் தேவைகளும் மாறிக்கொண்டே போகின்றன. எனவே எதிர்காலத் தேவைகள் எவையாக இருக்கலாமென்று தெரியாத நிலையில் எதிர்காலத்திற்காக நாம் இன்று எவ்வாறு

Page 18
30 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
திட்டமிடமுடியுமென பொப்பர் வாதிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி சமூகத்தை முழுமையும் ஒரேயடியாக மாற்றமுயலாது சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். விமரிசனத்தை அனுமதிப்பதன் மூலம் சீர்திருத்தங்களின் நன்மை தீமைகளை அறியமுடிகிறது, திருத்திக் கொள்ளவும் முடிகிறது. மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டதொரு சீர்திருத்தம் சமுதாயத்திற்கு திங்கு பயக்குமெனக் கண்டுகொண்டால், குறைந்தளவு இழப்புடன் அதனைச் சீர் செய்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் முழுமையான மாற்றத்தை சமூகம் தழுவி நடைமுறைப்படுத்தும் பொழுது தீமைகளைத் தவிர்ப்பதற்கு சந்தர்ப்பமில்லாது போவதுடன், திருத்திக் கொள்ளவும் இடமில்லாது போய்விடுகிறது. அதிகளவு இழப்புக்களையும் சந்திக்க நேரிடுகிறது.
முழுமையான சமூகம் தழுவிய மாற்றங்களிற்குப் பதிலாக, படிப்படியான சீர்திருத்தக் கொள்கையை முன்மொழிகிற பொப்பர் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்பதற்கு "சந்தர்ப்பத்தின் தருக்கம்" (Logic of situation) என்ற கோட்பாட்டை முன்மொழிகிறார். எத்தகைய முற்கற்பிதங்களும் இல்லாது புத்திபூர்வமாக, தனித்தனியாக பிரச்சனைகளை அணுகுவதன் மூலம் பொருத்தமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே சந்தர்ப்பத்தின் தருக்கம் என்பதன் தாற்பரியமாகும். சமூகம் முழுமைக்குமான சிபார்சுகள் என்றோ அவை எக்காலத்திற்குமுரியவை என்றோ கருதாது ஒவ்வொரு சந்தர்ப்பமும் அதற்கேயுரிய சிறப்பியல்புகளுடன் அணுகப்படல் வேண்டும்.
பிளேட்டோ முதல் மார்க்ஸ் ஈறாக சமூகம் பற்றிச் சிந்தித்தவர்களெல்லாம் தமது திட்டங்களுக்கியைய சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். இவர்களது இவ்விருப்பம் அரசியலில் அதிகாரம் செய்யும் சர்வாதிகாரிகளையே தோற்றுவிக்கும். தாம் விரும்பும் சமூக அமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென பதில் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே. மாற்றத்தை அதிகம் விரும்பாத பழமைவாதிகள், தாராண்மை வாதிகள், சோசலிஸ்டுக்கள் என மாறுபட்ட அரசியலார்வம் கொண்டவர்களை ஒரு சமூகத்திற் காணலாம். இக்குழுக்களின் தன்மை எதுவாயிருப்பினும், அரசியலதிகாரத்தைப் பெறும் பொழுது அவர்கள் தமது அரசியற்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 31
திட்டங்களையே நடைமுறைப்படுத்த விரும்புவர். ஒரு திறந்த சமூகத்தில் எதிர்கருத்துடையவர்களின் விமரிசனம் ஆட்சியாளர். களை விழிப்புடன் செயற்பட உதவும். முழுச் சமூகத்திற்கும் பொதுவான இலட்சியங்கள் என்ற கருத்தாக்கத்திற்கு திறந்த சமூகத்தில் இடமில்லை. கற்பனாவாத இலட்சியங்களை கொண்ட அரசியலோ முழுச்சமூகத்திற்குமான பொதுநோக்கென ஒன்றை அமுல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சர்வதிகாரத்திற்கு வழி வகுக்கிறது.
பாரிய அளவிலான தீவிர புனரமைப்புகள் மிகவும் நீண்ட காலத்தை எடுக்கும். இவ்விடைக்காலத்தில் நோக்கங்களும், இலட்சியங்களும் மாறாமல் தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்குமென எவரும் எதிர்பார்க்கமுடியாது. நோக்கங்களும் இலட்சியங்களும் மாறமாற, அதற்கேற்ப மாற்றங்களும் எல்லையற்று நீண்டு கொண்டே போகும். முடிவில் துன்பமும் விரக்தியுமே மிஞ்சும். இலட்சிய சமூகம் எப்பொழுதும் இலட்சியமாகவே இருப்பதால், அடையமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. மாற்றம்ஒரு பொழுதும் ஒய்ந்து விடுவதுமில்லை. எனவே இலட்சிய சமூகத்திற்கான மாற்றமுறா திட்டமென்பது அர்த்தமற்றதொன்றென பொப்பர் வாதிடுகிறார். சுதந்திரம் என்றால் என்ன? சமத்துவம் என்றால் என்ன?என்பது போன்ற வினாக்களிற்கு ஒரு பொழுதும் முடிவான பதிலைக் கூற முடியாது. இத்தகைய வினாக்களிற்குரிய விடை, அடிப்படையில் சாராம்சவாதத்திற்கும் கற்பனா வாதத்திற்குமே இட்டுச் செல்லும். எனவே சமூகப் பிரச்சனைகளை அணுகும் பொழுது "இத்தகை சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்", "நீர் என்ன கருதுகின்றீர்" என பரஸ்பர விமரிசனத்துடன் கூடிய வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுத்துதல் வேண்டும். விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்படுவது போலவே அரசியலிலும் ஆட்சியாளர்களின் ஊகங்கள் பொய்யாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் விமரிசனத்தை வரவேற்றுச் செயற்படுதல் வேண்டும்.
இறுதியாக வரலாறு பற்றியதொரு குறிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாமெனக் கருதுகிறேன். "திறந்த சமூகம் அதன் எதிரிகளும் " என்ற நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் "வரலாற்றிற்குயாதேனுமொரு பொருளுண்டா" என்றதொரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையில் நாகரீகத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின்

Page 19
32. சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
அல்லது நாட்டின் முழுமையான வரலாறு என வரலாற்று அறிஞர்கள் கூறுவதை சுத்தமான அபத்தம் என பொப்பர் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் வரலாற்றை பண்பாட்டுக் கூறுகள் பலவற்றின் வரலாறாக, அரசியல் வரலாறாக, சாதியின் வரலாறாக, சமயத்தின் வரலாறாக வர்க்கங்களின் வரலாறாக பலவகையில் எழுதலாம். அவையனைத்தும் மெய்யான வரலாற்றின் நிரப்புக் கூறுகளாக இருப்பதுடன், வரலாற்றாசிரியர்களின் ஊகங்களாகவே இருக்கின்றன. கடந்த காலம்" இவ்வாறு தான் இருந்ததென" கூறுபவன் அக்காலம் பற்றிய தனது விளக்கத்தைத் தருகிறானே ஒழிய உண்மையை கூறுபவனாக ஒரு பொழுதும் இருக்க மாட்டான், அவ்வாறு இருக்கவும் முடியாது.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 33
நோம் சோம்ஸ்கி
முனைவர் கி. அரங்கன்
நோம் சோம்ஸ்கி என்ற மொழியியல் அறிஞர் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். தற்காலச் சிந்தனையாளர்களின் வரிசையில் சோம்ஸ்கியையும் உட்படுத்தி . பாண்டானா பதிப்பகத்தார் ஜான் லைன்ஸ் அவர்களைக் கொண்டு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மொழியியலில் சோம்ஸ்கி உருவாக்கிய கோட்பாட்டை மாற்றிலக்கண ஆக்கமுறைக் கோட்பாடு (Transformational Generative Theory) 6T6örgy gnapolitiab6it gais கோட்பாடு மொழியியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மொழியியலில் மாற்றுக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் கூட தங்கள் கோட்பாட்டை சோம்ஸ்கியின் கோட்பாட்டோடு ஒப்பிட்டு அவர்களுடைய இடத்தை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது. மற்ற துறைகளில் மொழியியலின் தாக்கத்தையும் இவருடைய மாற்றிலக்கணக் கோட்பாட்டால் உணர முடிகிறது. உளவியல், தத்துவம், மானிடவியல் ஆகிய துறைகளில் இவருடைய தாக்கத்தை உணரும் நிலை ஏற்பட்டது.
நோம் சோம்ஸ்கி 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வட அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியாவில் உள்ள ஃபிலடெல்ஃபியாவில் பிறந்தார். ஃபிலடெல் ஃபியாவில் உள்ள ஒக்லேன் கண்டிரி டே பள்ளியிலும் சென்ட்ரல் உயர் நிலைப் பள்ளியிலும் தம்முடைய கல்வியைத் தொடங்கினார். பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியல்,கணிதம், தத்துவம் ஆகிய பாடங்களைப்

Page 20
34 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
பயின்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றாலும் தம்முடைய ஆய்வை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். பிறகு 1955 முதல் மொஸ்ஸாஸிஸட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
சிகாகோ பல்கலைக் கழகத்தாலும் லண்டன் பல்கலைக்கழகத்தாலும் தில்லிப் பல்கலைக் கழகத்தாலும் முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். சொற்பொழிவாற்றப் பல்வேறு நாடுகளாலும் அவர் அழைக்கப்பட்டுள்ளார். 1967 - ஆம் ஆண்டு பெர்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெக்மன் சொற்பொழிவும் 1969 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஜான் லாக் சொற்பொழிவும் லண்டன் பல்கலைக்கழகத்தில் வழியர்மன் நினைவுச் சொற்பொழிவும் சோம்ஸ்கி நிகழ்த்தினார். இருமுறை இந்தியாவின் முக்கியநகரங்களான தில்லி, ஹைதராபாத், கல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மொழி. யியல் குறித்தும் அரசியல் குறித்தும் அவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
சோம்ஸ்கியும் மொழியியலும்
1957 - ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட தொடரியல் அமைப்புக்கள் (Syntactic Structures) என்ற நூல் மொழியியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அமைப்பு மொழியியல் (Structural Linguistics) முக்கியத்துவம் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில் இந்நூல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அமைப்பு மொழியியல் கோட்பாடு மொழியை ஒரு சமூகத்தின் கூட்டியக்கத்திற்குரிய சாதனமாகவும் ஓர் ஒழுங்கமைப்புடைய மரபுவழிப்பட்ட வாய்மொழிக் g5sfuj(Bab67TITab6|D (Language is a system of arbitray Vocal symbols by means of which a society cooperates. Bioch and Trager. P.5) பார்த்தது. மொழியின் அமைப்பை விவரிக்கும் இலக்கணம் அம்மொழியின் அடிப்படைத் தனிமங்களை (elements) பட்டியலிடுவதும் அவற்றை வகைப்படுத்துவதும் அவற்றின் வருகை முறையை விவரிப்பது ஆகும். மொழியின் அமைப்பு என்பது பலநிலைகளை (levels) உள்ளடக்கியது. ஒலியியல் அமைப்பும் உருபனியல் அமைப்பும் தொடரியல் அமைப்பும்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 35
மொழியமைப்பின் முக்கிய நிலைகள். மொழிகள் அனைத்தும் அமைப்பின் அடிப்படையில் சமமானவை. வளர்த்த / வளரா மொழிகள் என்ற வகைப்பாடு மொழியமைப்புக்குப் புறம்பான சமூகக் கண்ணோட்டம் ஆகும். மொழி கள் எல்லாம் சிக்கலான அமைப்பைக் கொண்டவை. அவற்றின் அமைப்பை விவரிப்பது தான் இலக்கணம். எழுத்து வடிவை உடைய மொழியானாலும் பேச்சு வழக்கில்மட்டும் உள்ள மொழியானாலும் அமைப்பு என்பது எல்லா மொழிகளிலும் உள்ளது. ஒவ்வொரு மொழியும் அதனுடைய சமூகத் தேவைகளை சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு மொழியை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைத்தது.
மொழியின் இயல்பை மாற்றிலக்கணக் கோட்பாடு விளக்கிய முறைக்கும் அமைப்பு மொழியியல் கோட்பாடு விவரித்த முறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. மனித மொழிக்கும் விலங்குகளின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் அடிப்படையான பண்பு வேறுபாடுகள் (qualitative differences) உள்ளன என்பதை மாற்றிலக் கணக் கோட்பாடு வலியுறுத்துகிறது. மொழியின் அடிப்படைப் பண்பு வேறுபாடு அதன் படைப்பாற்றல் (creativity). மொழி பேசுபவர்கள் புதிய புதிய துழல்களில் புதிய புதியவாக்கியங்களைப் கேட்கும்போது அவற்றைப் புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். இத்தகைய படைப்பாற்றல் விலங்குகளின் கருத்துப் பரிமாற்ற சாதனத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரிக்கக் கூடிய முக்கியமான ஒன்று அவன் பயன்படுத்தும் மொழி இதை மாற்றிலக்கணக் கோட்பாடு வலியுறுத்துகிறது.
மொழியில் எந்த ஒரு வாக்கியத்தையும் இதுதான் நீளமான வாக்கியம் என்று கூற முடியாது. நாம் அதை மேலும் நீட்ட முடியும். இதை இலக்கணத்தின் மீளுமைப் பண்பு (Recursive Property) என்று கூறுவார்கள். சான்றாக,
1) நேற்று வந்த பையன் எங்கள் வீட்டிற்கு வந்தான் என்ற வாக்கி
யத்தை
2) நம் நம்பிக்கையைப் பார்த்துவிட்டு நேற்றுவந்த பையன் எங்கள்
வீட்டிற்கு வந்தான் என்றும்

Page 21
36 - சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
3) நம் நம்பிக்கையைப் பார்த்துவிட்டு நேற்று வந்த பையன் எங்கள்
புதிய வீட்டிற்கு வந்தான் என்றும் விவரிக்கலாம்.
வாக்கியங்களின் சில பகுதிகளை நாம் மேலும் மேலும் விரித்துக் கொண்டே செல்லலாம். மீளுமைப் பண்பு இலக்கணத்தின் முக்கியப் பண்பாக உள்ளளது. மாற்றிலக் கணக் கோட்பாடு மொழியின் இவ்வடிப்படைத் தன்மையை விளக்குகிறது. விலங்குகளின் கருத்துப் பரிமாற்ற சாதனத்தில் இப்பண்பு காணப்படவில்லை . சோம்ஸ்கியின் கோட்பாடு இதனை வலியுறுத்துகிறது.
இன்னொரு முக்கிய மொழிப்பண்பை நாம் விவரிக்க வேண்டும். மொழியியல் கோட்பாடு ஒரு மொழியின் அமைப்பை விவரிக்கக் கூடிய கருத்தியல் கருவிகளை அளித்தால் மட்டும் போதாது: உலக மொழிகளுக்கு இடையிலான பொதுவான மொழிப்பண்புகளை அது வெளிக்கொணரவும் வேண்டும். தொடரியல் (Syntax) நிலையை எடுத்துக் கொண்டு அப்பண்புகளைச் சுட்டிக் காட்டுவோம். தமிழில் வாக்கியத்தில் வரும் சொற்களின் வரிசை முறையை நாம் மாற்றலாம்.
4) அ. இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிகெட் பந்தயத்தில் மோதிக்
கொள்கின்றன.
ஆ. கிரிகெட் பந்தயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்
கொள்கின்றன.
இ. கிரிகெட் பந்தயத்தில் மோதிக் கொள்கின்றன இந்தியாவும்
பாகிஸ்தானும்.
வாக்கியம் (4 அ-இ) இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு இடங்களில் வருகின்றன. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் என்ற தொடரில் வரும் சொற்களைப் பிரித்து இட மாற்றம் செய்ய முடியாது.
5) இந்தியாவும் கிரிக்கெட் பந்தயத்தில் பாகிஸ்தானும் மோதிக்
கொள்கின்றன.
6) கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியாவும் மோதிக் கொள்கின்றன
பாகிஸ்தானும்,
இது தமிழுக்கு மட்டும் பொருந்தும் விதியல்ல; இவ்விதி மற்ற மொழிகளுக்கும் பொருந்தும்.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 37
7) India and Pakistan agree to continue the bilateral talks
8) India agree to continue the bilateral talks Pakistan
India and Pakistan என்ற தொடரில் வருகிற சொற்களைப் பிரித்து இடமாற்றம் செய்ய முடியாது. மாற்றிலக்கணக் காரர்கள் உலகில் உள்ள பல மொழிகளை ஆய்வு செய்து அவைகளுக்கு இடையிலான பொதுப் பண்புகளைச் சுட்டி வருகிறார்கள். இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் மொழிப் பொதுமைகளுக்கு (Language universels) உளவியல் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
சோம்ஸ்கியும் உளவியலும்
சோம்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட மாற்றிலக்கணக் கோட்பாடு மொழியியலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்பதோடு மற்ற துறைகளிலும் அதன் தாக்கத்தை நாம் உணர முடிகிறது. உளவியலில் பெரும் செல்வாக்கோடு விளங்கிய புறநடத்தைக் கோட்பாட்டை (Theory of behaviorism) கேள்விக்குள்ளாக்கியது. புறநடத்தையாளர்கள் எலி, நாய் போன்ற விலங்குகளைக் கொண்டு நடத்திய பரிசோதனை மூலம் கற்றல் கோட்பாட்டை (theory of learning) உருவாக்கினார்கள். இக்கோட்பாட்டை மொழி கற்றலுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதைச் சோம்ஸ்கி மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஸ்கின்னர் (Skinner) என்ற நூலுக்குச் சோம்ஸ்கி எழுதிய திறனாய்வு மிக முக்கியத்துவம் பெற்றது. புறநடத்தையாளர்களின் கோட்பாட்டால் மொழி கற்றலை முழுமையாக விளக்க முடியாது என்பதை அவர் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது மொழிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் முக்கியமான வைகளாகத் தோன்றும். அமைப்பு மொழியியல் கோட்பாடு இவ்வேறுபாடுகளைத் தான் மையப்படுத்தியது. ஆனால் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைப் பண்புகள் ஆழமாக ஆய்வு செய்தால்தான் வெளிப்படும் மாற்றிலக்கணக் கோட்பாடு மொழிகளுக்கு இடையிலான பொதுமைப் பண்புகளை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்துகிறது. இம்மொழிப் பண்புகளை யாரும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

Page 22
38 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
குழந்தை பிறக்கும்போது இம்மொழிப் பொதுப் பண்புகளைக் வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்துகிறது. இம்மொழிப் பண்புகளை யாரும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. குழந்தை பிறக்கும்போது இம்மொழிப் பொதுப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இப்பொது மொழிகளிலிருந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மூலம் அச்சமூகத்தின் மொழியைக் கற்றுக் கொள்கிறது. பொது மொழிகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட மொழியைத் தன் அனுபவத்தின் மூலம் குழந்தை பெறுகிறது.
எல்லாச் சமூகங்களிலும் குழந்தைகள் தங்களுடைய ஐந்தாவது வயதிற்குள் மொழி கற்றலின் பெரும் பகுதியை முடித்துக் கொள்கிறது. உளவியல் இதை விளக்க வேண்டும் என்றால் புறநடத்தைக் கோட்பாட்டைக் கைவிட்டு பகுத்தறிவுவாத (rationalism) அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டி வருகிறது. அனுபவம் ஒரு குறிப்பிட்ட மொழி. யைத் தெரிந்துகொள்ள உதவினாலும் குழந்தை பிறக்கும்போதே மொழி கற்கும் ஆற்றலோடும் சில மொழிப் பொதுமைகளோடும் பிறக்கிறது. ஆகையால் மொழிப் பொதுமைகளுக்கும் மனித மன இயல்புகளுக்கும் உடலியலுக்கும் (குறிப்பாக மனித மூளை அமைப்பிற்கும்) நெருங்கிய தொடர்பு உள்ளதை மாற்றிலக்கணக்கண கோட்பாடு வலியுறுத்துகிறது. மொழிப் பொதுமைகளை விளக்க உளவியல் முன்வர வேண்டியுள்ளது. சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாட்டு வளர்ச்சியால் உளவியலில் பகுத்தறிவுவாதம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. சோம்ஸ்கியின் மொழியியல் கோட்பாடு உளவியலில் மட்டுமின்றி தத்துவத்திலும் சர்ச்சையைக் கிளப்பியது.
சோம்ஸ்கியும் தத்துவமும்
தத்துவத்தில் அனுபவ வாதமும் (empiricism) பகுத்தறிவுவாதமும் முக்கியமான எதிரிடையான கோட்பாடுகள். மனிதனிடம் தோன்றும் அறிவுபற்றிய நிலைப்பாட்டில் இவ்விரு கோட்பாடுகளும் வெவ்வேறு நிலையை எடுக்கின்றன. மனிதனிடம் தோன்றும் அறிவு முழுக்க முழுக்க அனுபவம் சார்ந்தது. குழந்தை பிறக்கும்போது ஒரு வெற்றுப் பெட்டி (Blank box) போன்று இருக்கிறது. புலன்களின் வழிப் பெறுகின்ற தரவுகளும் அனுபவமும் அறிவின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணிகளாக அமைகின்றன. அறிவின் தோற்றத்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 39
திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைபவை புலன்களும் புலன்களின் வழியான அனுபவங்களுமே. அமைப்பு மொழியியல் கோட்பாடு இத்தத்துவார்த்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. மனித மனத்தின் இயல்போ உடலியல் கூறுகளோ எவ்விதப் பங்களிப்பையும் ஆற்றுவதில்லை.
குழந்தை மொழியை முழுக்க முழுக்க தான் பிறக்கும் சமுதாயச் சூழலில் பெறுகிறது. அது தான் பெறும் அனுபவம் மூலம் கற்கிறது. குழந்தையைச் சார்ந்த சமூகம் குழந்தைக்கு வேண்டிய மொழித் தரவுகதை தருகிறது. போலச் செய்தல், திரும்பக் கூறல், மாதிரியாக்கம் (anology) போன்றவற்றின் அடிப்பட்ையில் தான் சார்ந்த சமூகத்தின் மொழியைக் கற்கிறது. மேலும் மொழி கற்றல் என்பது பல்வேறு பழக்கங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பழக்கம் என்பது தூண்டல் எதிர்வினை (stimulus-response) ஆகியவற்றின் தொடர்ச்சி. யால் உருவாக்கப்படுவது. மொழி கற்றல் என்பதும் தூண்டல் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாகப் பார்க்கப்படுகின்றது.
பகுத்தறிவாதத்தை ஏற்கும் மாற்றிலக்கணக் கோட்பாடு இவ்விளக்கத்தை எதிர்க்கிறது. குழந்தைகள் பெறும் மொழித் தரவுகள் வளமானவையல்ல. நாம் பேசும்போது தவறான இலக்கண வழு வாக்கியங்களை உண்டாக்குகிறோம். பல வாக்கியங்கள் நிறைவு பெறாமல் குறை வாக்கியங்களாக உள்ளன. ஆகையால் குழந்தை பெறும் தரவுகள் வளமானவை அல்ல. இருப்பினும் குழந்தை தன் ஐந்தாவது வயதில் மொழியின் பெரும் பகுதியை கற்றுத் தனக்குள் ஒரு இலக்கணத்தை உருவாக்கிக் கொள்கிறது. மேலும் பல்வேறு சமூகங்களில் மொழிகளைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளை ஆராயும்போது அவர்களுடைய மொழி கற்றலில் சில பொதுத் தன்மைகளை நாம் காண முடிகிறது. குழந்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கும் மொழிகளின் இலக்கணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சில பொதுத் தன்மைகள் காணக் கிடக்கின்றன. இவற்றை அனுபவவாத அடிப்படையிலான மொழி கற்றல் கோட்பாடு விளக்க முடியாது.
மொழி கற்றல் என்பது குழந்தையின் சமூகச் சூழலை தாண்டியது. மனித மனத்தின் ஒரு புலம் (Faculty) மொழி கற்கும் ஆற்றலைக் கொண்டது. மனிதனிடம் காணப்படும் மொழி அறிவு முழுக்க முழுக்க

Page 23
40 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
அனுபவத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அனுபவத்தோடு மனித மனத்தின் இயல்பும் (மனித உடலியலின் கூறும்) மொழி அறிவின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றுகிறது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் கூறாத சொற்களைக் கூட குழந்தைகள் உருவாக்குவதை நாம் காணலாம். சான்றாக, அவன் பார்க்குவான் போன்ற வாக்கியங்களையும் கோழி குருவி போன்ற தொகைச் சொற்களையும் குழந்தை உருவாக்குகிறது. இத்தகைய தரவுகள் அவர்களுடைய புறச் சூழலில் கிடைப்பதில்லை. புதிய புதிய சொற்களையும் வாக்கியங்களையும் படைக்கின்ற ஆற்றல் குழந்தை களிடம் உள்ளது. குழந்தைகளின் மொழி கற்றல் என்பதை மொழிப் பொது இலக்கணத்திலிருந்து (Universal Grammar) ஒரு சமூகத்தின் மொழியைப் பெறும் செயல் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சோம்ஸ்கியும் அரசியலும்
சோம்ஸ்கிக்கு இளமை முதலே அரசியலில் நாட்டம் இருந்தது. சோம்ஸ்கிக்கு ஹோரிஸின் அரசியல் கருத்து பிடித்திருந்ததால் ஹேரிஸிடம் மொழியியல் ஆய்வை மேற்கொள்ளச் சென்றார். சோம்ஸ்கியின் தந்தை ஹிப்ரு (Hebrew) மொழியியலில் நிறைந்த புலமை பெற்றிருந்ததால் சோம்ஸ்கி தம்முடைய முதுகலைப் பட்ட ஆய்விற்குத் தற்கால ஹிப்ருவின் உருபொலியனியல் (Morpho phonemics of Modern Hebrew) 6T6ip GUITGb6061T61GBg5gléib GabiToo LTii. மொழியியலோடு அரசியலிலும் சோம்ஸ்சிக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரை அவர் மிகக் கடுமையாக எதிர்த்தார். 1960-70 களில் மாற்றிலக்கணக் கோட்பாட்டில் ஆர்வம் காட்டிய பலர் அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்பைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பல பல்கலைக்கழகங்களில் சோம்ஸ்கி காலையில் மொழியியலில் மாற்றிலக்கணக் கோட்பாட்டை விளக்கியும் மாலையில் அமெரிக்காவின் வியட்நாம் கொள்கையைக் கடுமையாக விமர்சித்தும் சொற்பொழிவாற்றினார். பல்கலைக்கழக வளாகங்களில் சோம்ஸ்கி மொழியியலில் முக்கியமானவர் என்பதோடு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிப்பவர் என்பது மிகவும் புகழ்வாய்ந்தது.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 41
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை - குறிப்பாக வியட்நாம், மத்திய ஆசியா நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளை - விமர்சிப்பதில் அறவழித் தீர்வுகளைக் (Moraljudgements) கொண்டு, வருகிறார். அமெரிக்கர்களில் பலர் அமெரிக்கா வியட்நாம் மீது நடத்திய படையெடுப்பை மிகச் கடுமையாக விமர்சித்தார்கள். அவ்வாறு விமர்சித்ததன் பின்புலம் அமெரிக்க இளைஞர்களையும் அதன் பொருளாதாரத்தையும் இந்தப் போர் பாதிக்கிறது என்பதன் அடிப்படையில்தான். அமெரிக்காவின் நிலைமை பலவீனமானதன் பிறகுதான் பலருக்கு இந்த ஞானோதயம் பிறந்தது. அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்த எல்லா அமெரிக்கர்கள் மீதும் இந்த விமர்சனத்தை நாம் வைக்க முடியாது. பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இது பொருந்தும்.
சோம்ஸ்கி அமெரிக்காவின் இயல்பை மிக இயற்கையாகத் தன்னுடைய பேட்டியில் படம் பிடித்துக் காட்டுகிறார். (Language and Responsibility). அமெரிக்கா புற உலகிற்கு ஜனநாயகப்பண்புநிறைந்த நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அதனுடைய நடவடிக்கைகள் இப்போக்கை உறுதிப்படுத்தவில்லை என்பதற்குச் சோம்ஸ்கி பல சான்றுகள் தருகிறார். அமெரிக்கா கருத்தியல் கட்டுப்LIT, 60 L (Control of ideogy) fab booiró0LDu III abdib ib60)Lilligdibéing. அது முதலாளித்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நாடு, பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் நிறைந்த ஜனநாயகநாடாக நமக்குக் காட்சி கொடுத்தாலும் அந்நாட்டின் அதிகார வர்க்கமும் அறிவு ஜீவிகளும் பத்திரிக்கைகளும் முதலாளித்துவக் கொள்கையைத் தவிர மற்ற கருத்தியல் கொள்கைகள் நாட்டில் நிலை கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார்கள். முதலாளித்துவக் கொள்கைக்குள் எவ்விதச் சர்ச்சையையும் மேற்கொள்ளலாம். ஆனால் முதலாளித்துவக் கொள்கைக்கு எதிரான சோசலிச கம்யூனிசச் சிந்தனையை வேரூன்ற இடமளிக்காமையை சோம்ஸ்கி தம்முடைய கட்டுரைகளில் விளக்குகிறார். சிந்தனைச் சுதந்திரம் முதலாளித்துவ எல்லைக் கோட்டையும் அதிகார எல்லையை மீறாத நிலைப்பாட்டையும் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது.
அமெரிக்கப் பத்திரிக்கைகள் முதலாளித்துவ நிறுவனங்களாகச் செயல்படுவதால் அமெரிக்க அதிகார கருத்தியல் நிலைப்

Page 24
42 சமூக, சிந்தனை - விரிபடு எல்லைகள்
பாட்டை ஆதரிக்கவும் பரப்பவும் செய்கின்றன என்று சோம்ஸ்கி வாதிடுகிறார். அமெரிக்க அதிகார முதலாளித்துவக் கருத்தியலை ஊடகங்களின் வழி பரப்பவும் அதனைப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் மக்கள் தொடர்பு சாதனங்கள் செயல்படுகின்றன. சான்றாக, வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பை கருத்தியல் வழியிலும் அறவழியிலும் தவறானது என்பதைப் பத்திரிகைகள் சுட்டத் தவறிவிட்டன என்று அவர் குறிப்பிடுகிறார். வியட்நாம் நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பது வாதத்தின் மையப் பொருளாக எடுக்கும் நிலைப்பாடு அவர்களுடைய வாதங்களில் எழவில்லை என்பதை New York Times என்ற பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில் சோம்ஸ்கியும் ஹெர்மனும் குறிப்பிட்டுள்ளார்கள்.
சோம்ஸ்கியின் அரசியல் நடவடிக்கை மனிதன் சுதந்திரமானவன் என்பதிலும் வெளிப்புறச் சூழலின் அம்சமான அதிகார வர்க்க அடக்குமுறையால் கட்டுப்படுத்த முடியாதவன் என்பதிலும் வேர்கொண்டது சோம்ஸ்கி அமெரிக்காவை விமர்சிக்கும் அதே நேரத்தில் முன்னாள் ரஷ்ய சோவியத் யூனியனின் அடக்குமுறையையும் கடுமையாக விமர்சித்தார். ஒன்றின் அடக்குமுறை வெளிப்படையாக உள்ளது என்றும் மற்றொன்றின் அடக்குமுறையும் கருத்தியல் கட்டுப்பாடும் நுண்மையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார். சோம்ஸ்கி ஒரு மனித நேயம் மிக்கவர். அவருடைய அரசியல் விமர்சனம் மனிதன் சுதந்திரமானவன் என்ற கருத்தியல் அடிப்படையில் அறநெறிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளையே அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 43
மேலாண்மை, சிவில் சமூகம், கருத்துநிலை: அன்ரனியோ கிராம்சியின் சிந்தனைகள்
கந்தையா சண்முகலிங்கம்
9. ன்ரனியோ கிராம்சி (Antonio Gramsci) இத்தாலி நாட்டவர். 1891ம் ஆண்டில் சார்டினியாவில் பிறந்தார். தமது 22 ஆவது வயதில் இடதுசாரி இயக்கத்தின் தீவிர உறுப்பினராக மாறினார். 1924-26 ஆண்டுகளில் இத்தாலிய பொதுவுடமைக் கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார். பாசிஸ்ட் அரசு 1927ல் இவரைச் சிறையில் அடைத்தது. நோயாளியான இவர் பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். மூளையில் ஏற்பட்ட இரத்தப் பெருக்கால் 1937 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். 2848 பக்கங்களைக் கொண்டதும் 33 பகுதிகளை. யுடையதுமான 'சிறைக்குறிப்புகள் இவரது சிறை வாழ்க்கையின்போது எழுதப்பட்டது. இதன் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட நூல் 1971 இல் ஆங்கிலத்தில் வெளியானது. கடந்த 35ஆண்டு காலத்தில் கிராம்சி பற்றிய விமர்சனங்களும், தத்துவம், வரலாறு அரசியல்துறைகளில் மார்க்சியத்திற்கு அவர் செய்த பங்களிப்பு பற்றிய மதிப்பீடுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன.
பொருளியல் தீர்மானவாதம் (Economic Determinism) கருத்துநிலை (ideology) பற்றி அன்ரனியோ கிராம்சியின் சிந்தனைகள் அவரது எழுத்துக்களில் இருந்து கட்டமைக்கப்பட வேண்டியன அவர் இப்பொருள் பற்றித் தனியாக எழுதவில்லை. கருத்து நிலையை

Page 25
44 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
தத்துவங்கள்' 'உலகு பற்றிய கருத்தாக்கங்கள்', 'சிந்தனை முறைமைகள்' (Systems of thought) ஆகிய தொடர்களால் இவர் குறிப்பிடுகின்றார். கருத்துநிலை என்ற சொல்லை அரிதாகவே உபயோகித்துள்ளார்.
எல்லா மார்க்சிய சிந்தனையாளர்களையும் போன்றே கருத்துநிலை மேற்கட்டுமானத்தின் (Superstructure) பகுதி என்பதே கிராம்சியின் கருத்தும். அடித்தளம் மேற்கட்டுமானத்துடன் கொண்டு உள்ள உறவை யாந்திரிகமான முறையில் சில மார்க்சிஸ்டுகள் விளக்குவார்கள. குறிப்பாக இரண்டாம் அகிலத்தின் தத்துவாதிகள் மேற்கட்டுமானத்தின் பகுதிகளான அரசியல், தத்துவம், கலை இலக்கியம் ஆகியவற்றை அடித்தளமான பொருளியலின் நேரடி விளைவாகக் கருதினர். இதைப் பொருளியல் வாதம் (Economism) என்பர். இக்கருத்துப்படி அரசியல், பொருளியலின் நேரடிப் பிரதிபலிப்பு, அரசியலுக்கு சுயமான தனித்துவம் இல்லை. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, பொருளியல் நெருக்கடிகளையும் அதன் விளைவான அரசியல் மாற்றத்தையும் கொண்டு வரும். இத்தகைய தீர்மானவாதம் பொருளியல் தீர்மானவாதம் (Economic determinism) என்று அழைக்கப்படும்.
லெனின் எழுதிய, "என்ன செய்ய வேண்டும்?' (1902) என்ற நூல் பொருளியல் வாதத்தை எதிர்த்து அரசியலை முதன்மைப்படுத்திய நூல் ஆகும். கூலி உயர்விற்காகவும், தம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொழிலாளர் வர்க்கம் நடத்தும் போராட்டம் தொழிற்சங்க உணர்வுக்கு மேலாக எதையும் அவ்வர்க்கத்திற்கு வழங்க முடியாது. ஜாரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஏனைய வர்க்கங்களையும் ஒன்றிணைத்து நடத்தும் அரசியல் போராட்டத்தின் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் அரசியல் உணர்வைப் பெற முடியும். ஆதலால் பொருளியல் அல்ல அரசியல்தான் முதன்மையானது என்றார் லெனின். கிராம்சியின் ஆய்வுகள் அரசியல் பொருளியல் வளர்ச்சியின் நேரடி விளைவாக அல்லாமல் தனித்துவமான சுயத்துவத்தை உடையது என்பதை வற்புறுத்தின. இவர், மேற்கட்டுமானத்தின் அரசியல் கலாச்சார அம்சங்களை ஆராய்ந்து கருத்துநிலை, பொருளியல் அடித்தளத்தின், நேரான பிரதிபலிப்பு (Simple reflection) என்ற கருத்திற்கு மாறாக பொருண்மைத் தன்மையுடைய சக்தி (Material force) என்பதைக் காட்டினார்.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 45
கிராம்சியின் கருத்தாக்கங்கள்
கிராம்சி பல புதிய கருத்தாக்கங்களை (Concepts) அறிமுகம் செய்துள்ளார். சமூகம் பற்றிய ஆய்வுக்கான கருவிகளே கருத்தாக்கங்கள். அடித்தளம் (Base), மேற்கட்டுமானம், (Superstructure), வர்க்கம் ஆகியவை மார்க்சிய சிந்தனையின் ஆய்வுக் கருவிகளான கருத்தாக்கங்களாகும். ஏற்கனவே பரிச்சயமானவை மற்றும் பல புதிய கருத்தாக்கங்கள் பலவற்றைத் கிராம்சி தந்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை சில.
d66i felpabib (Civil Society) (3uD6uT60öT60)LD (Hegemony) 6)uj6uITi][1]ả5 ởn” (B (Historic Bloc) 9 lujib.60)6uil Lig5g526 (Organic intellectual)
கிராம்சியின் கருத்துநிலை பற்றிய கோட்பாட்டை அறிந்து கொள்வதற்கும் அடிப்படையாக இவை அமைகின்றன. இக் கருத்தாக்கங்கள் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைச் செழுமைப்படுத்தியுள்ளன.
சிவில் சமூகம்
ஹெகல், மார்க்ஸ் ஆகியோர் இத்தொடரை வேறு அர்த்தங்களில் உபயோகித்துள்ளனர். கிராம்சி சிவில் சமூகம் என்பதற்கு குறிப்பான ஒரு பொருளைத் தருகிறார். சமூக உறவுகள் என்னும் மேற்கட்டுமானத்தின் பகுதிதான் சிவில் சமூகம். சமூக உறவுகளை மூவகையாகப் பிரித்து நோக்கலாம்.
1. உற்பத்தியோடு இணைந்த உறவுகள் - இவை முதலாளி,
தொழிலாளி உறவுகளைக் குறிக்கும் 2. ஒடுக்கு முறை உறவுகள் - அரசும் அரசு இயந்திரமும்.
3. தனியார் (Private) வகை உறவுகள்- மேற்குறித்த இரண்டையும் தவிர்த்த மதம், தொழிற்சங்கம், அரசியல் கட்சிகள், கலாசார நிறுவனங்கள் ஆகிய தனியார் உறவுகள்.
இம்மூன்றாம் வகை உறவுகளின் தொகுப்பே சிவில் சமூகம்.

Page 26
46 ܀- • - சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
சிவில் சமூகம் என்ற தனி வகைமையை கிராம்சி குறிப்பிட்டிருப்பதன் முக்கியத்துவம் என்ன? சிவில் சமூகம் தான் வர்க்கங்களின் அரசியல் கருத்து நிலைப்போராட்டத்தின் களம். இது வர்க்கப் போராட்டத்தின் களம் மட்டுமன்றி வெகு ஜன ஜனநாயக (Popular Democratic) போராட்டத்தின் களமும் ஆகும். இனம், சாதி, பால், மொழி, தேசிய இனம் ஆகிய குழுக்களின் அடிப்படையில் எழும் முரண்பாடுகளும் போராட்டங்களும் சிவில் சமூகத்தில் வெளிப்படும்.
அரசு - சிவில் சமூகம் என்ற வேறுபாட்டை கிராம்சி ஏன் கூறுகிறார்?இது வெறும் சொற்சிலம்பந்தானா?இந்த சந்தேகம் தோன்றக்கூடும். சிவில் சமூகம் என்னும் கருத்தாக்கத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
1. வழமையான கோட்பாட்டின்படி அதிகாரம் (Power) அரசிடம் குவிந்திருக்கும். கிராம்சி சிவில் சமூகம் என்னும் வேறுபாட்டை உண்டாக்குவதன் மூலம் அதிகாரம் அரசிடம் மட்டுமல்லாமல் சிவில் சமூகம், அரசு என்ற இருநிலைகளில் பிரிபட்டுள்ளதாகக் குறிக்கின்றார். ஆட்சி அதிகாரத்திற்கு பலம் தரும் கருத்துநிலை (ideology)யின் உறைவிடம் சிவில் சமூகம், இங்கே ஆளும் வர்க்கம் பெறும் மேலாண்மை அதன் ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்தும்.
2. அதிகாரம் சிலநாடுகளில் சிவில் சமூகத்திடம்தான் கூடிய அளவு இருக்கும். அரசுதான் பலமுடையதா அல்லது அரசையும் விட சிவில் சமூகம் தான் பலமுடையதா என்பது நாட்டிற்கு நாடு வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்ப வேறுபடும்.
3. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கம் பாராளுமன்ற அரசியல், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, கலாசார அமைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் கருத்துநிலையில் மேலாண்மை (Hegemony) செலுத்துகிறது. 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் சிவில் சமூகத்தின் அதிகாரம் குறைவு. அங்கு அரசின் பலம் தான் பெரிது. மேற்கு ஐரோப்பாவில் அரசின் பலத்தைவிட சிவில் சமூகத்தின் அதிகாரம் தான் முக்கியமானது. அங்கு முதலாளித்துவ நிலைபேற்றின் ஆதாரம் இதுதான்.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் ཟ་ 47
4. அரசு சிவில் சமூகம் பற்றிய கிராம்சியின் உவமை ஒன்று மிகவும் பொருத்தமானது. அரசுக்குப் பின்னால் உள்ள பிரம்மாண்டமான கோட்டை கொத்தளங்களும் மண் அணைகளும் (Fortresses and Earthworks) தான் சிவில் சமூகம், கோட்டைக்கு முன்னால் உள்ள வெளி அகழி (Outer - ditch) போன்றதுதான் அரசு. அரசு மீது தொடுக்கும் தாக்குதல் ஒரேயடியில் அதிகாரமாற்றத்திற்கு வழிவகுக்காது. அரசு அதிரும் போது சிவில் சமூகம் என்னும் பலமிக்க உருவம் வெளித்தெரியும்
5. சிவில் சமுகத்தின் பாராளுமன்ற அரசியல் மற்றும் கருத்துநிலை வடிவங்கள் மேற்கு ஐரோப்பிய சமூகத்தில் ஆதிக்கம் வகிப்பதால், 1917 இல் ரஷ்யாவில் நிகழ்ந்ததுபோல் ஒரு தனிச் சந்தர்ப்பத்தில் நிகழும் சடுதியான மாற்றமாக அரசியல் அதிகாரம் கை மாறுதல் நிகழ முடியாது. அரசின் மீது நிகழும் தாக்குதலால் சிவில் சமூகம் நிலைகுலைந்துவிடாது. அதன் அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் பிடியில் இருக்கும். சிவில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் மேலாண்மைக்காக (Hegemony) தொழிலாளர் வர்க்கம் நிகழ்த்தும் வர்க்க அரசியல் கருத்து நிலைப்போராட்டங்களும் தயாரிப்புகளும் அவசியமானவை. இந்த அரசியல் தந்திரோபாயங்களை இராணுவத்துறைக் கலைச் சொல்லான நிலையுத்தம் (Positional War) என்பதால் கிராம்சி விளக்குகிறார்.
6. அரசு, உற்பத்தி என்ற இரண்டையும் தவிர்ந்த எல்லா நிறுவனங்களையும் உறவுகளையும் சிவில் சமூகம் தன்னகத்தே கொண்டது. குடும்பம் என்ற நிறுவன அமைப்பிற்குள் நிகழும் பெண் ஒடுக்குமுறை தனக்கே உரிய தனி இயல்பை உடையது. வர்க்க ஒடுக்கு முறைக்கும் பெண் ஒடுக்கு முறைக்கும் இடையிலான உறவை வர்க்கக் குறுக்கல் வாதம் (Class reductionism) விளக்கமாட்டாது. பெண்நிலைவாத கோட்பாடுகளில் கிராம்சியின் சிவில் சமூகம் என்னும் கருத்தாக்கம் பெண் ஒடுக்குமுறையின் தனித்துவத்தை விளக்குவதற்கு பயன்படும்.

Page 27
48 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
கிழக்கும் மேற்கும்
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சமூக அமைப்பு, அங்கே அரசு வகிக்கும் பாத்திரம், பாராளுமன்ற அரசியல் முறை எவ்விதம் வர்க்க உணர்வை மழுங்க வைக்கும் ஆயுதமாகப் பயன்படுகிறது என்பவை பற்றி கிராம்சி தெரிவித்த கருத்துக்கள் இன்றைய அரசு பற்றிய கோட்பாட்டு ஆய்வுகளில் முக்கிய இடம் பெறுகின்றன. கிழக்கு, மேற்கு என்ற வேறுபாட்டைசிவில் சமூகம், அரசு ஆகியவற்றின் தராதர வேற்றுமை கொண்டு அடையாளம் காணலாம்.
கிழக்கு மேற்கு
சிவில் ஆரம்பநிலை / வளர்ச்சி/பலம் சமூகம் U6ULDiplog).
அரசு முதன்மை ஒப்பீட்டுச்சமநிலை
தந்திரம் திடீர் தாக்குதல் நிலையுத்தம் (Strategy) மூலம் அரசு
அதிகாரத்தை
கைப்பற்றுதல்
கதி வேகம் நீடித்த தொடர் (Tempo) போராட்டம்
பெரி அண்டர்சனின் கட்டுரையில் தரப்பட்ட பட்டியலைத் தழுவி மேலே தரப்பட்டுள்ள கிழக்கு, மேற்கு வேற்றுமைகள் கிராம்சியின் ஆவில் சிவில் சமூகமும் அதன் கருத்துநிலை வடிவங்களும் மேற்கில் வகிக்கும் மேலாண்மையை (Hegemony) விளக்கவல்லன . மேற்கு ஐரோப்பாவில் மார்க்ஸ் எதிர்வு கூறியதுபோல் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஏன் உற்பத்தி உறவுகளின் பொருந்தாமையை மாற்றும் புரட்சிக்கு இட்டுச் செல்லவில்லை? இதற்கு பொருளியல் வாதம் (Economic) தகுந்த விளக்கம் தரவில்லை.
ஜார் ஆட்சி வெளிப்படையான ஒடுக்குமுறையைக் கையாண்டது. அரசியல் ஜனநாயக சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்' என்பதுதான் அங்கு நிலவிய

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 49
சூழ்நிலை. மேற்கு நாடுகளில் ஒழுங்கான தேர்தல்களும், ஜனநாயக சுதந்திரங்களும் கொள்கையளவில் பாராளுமன்ற முறை மூலம் சமாதான வழியில் சோஷலிச ஆட்சியை நிறுவுதல் சாத்தியம் என்ற பிரமையை உண்டாக்குகின்றன. ஆனால் ஐம்பது வருடங்களுக்கு மேலாக அந்நாடுகளில் பாராளுமன்ற அரசியல் குறிப்பிடக் கூடிய ஒரு சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏன் இந்த முரண்பாடு? அரசு என்ற கருவியைக் கைப்பற்றுவதால் மட்டும் அரசியல் அதிகாரத்தை பெற்றுவிட முடியாது. சிவில் சமூகம் தான் அதிகாரத்தின் உறைவிடம், ஒடுக்கு முறையை (repression) விட முதலாளி வர்க்கம் ஏனையவர்க் கங்களிடை வளர்க்கும் இணக்கப்பான்மை (Consensus) மேற்கு நாடுகளின் அரசியல் நிலைபேற்றிற்கு ஆதாரமாய் அமைகிறது. அரசு ஒரு ஒடுக்கு முறைக் கருவி. ஒருவர்க்கம் இன்னொருவர்க்கத்தை ஒடுக்குவதே அரசின் அடிப்படை என்னும் கருத்தை இவை மறுக்கின்றனவா?
பெரி அண்டர்சன் ஒரு உவமை மூலம் இதை அழகாக விளக்கியுள்ளார். (டல்கொட் பார்சன்ஸ் என்னும் அமெரிக்க சமூகவியலாள. ரிடம் இதை தாம் இரவல் பெற்று உபயோகிப்பதாக அண்டர்சன் எழுதுகிறார்) ஒரு நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம், காகித நோட்டுகள் வடிவில் இருக்கும். அதேவேளை தங்கம் புழக்கத்தில் உள்ள காகிதப் பணத்திற்குக் காப்பாக இருக்கும். தங்கம் காப்பாக இருக்குமே இன்றி புழக்கத்திலுள்ள சுழலும் பணமாக இருப்பதில்லை. புழக்கத்தில் உள்ள பணம் காப்பில் உள்ள உலோகத்தின் அளவைப் பொறுத்தது. காகிதப் பணம், தங்க இருப்பு என்பனவற்றிற்குச் சமா. னமானவைதான் ஒரு நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகமும், ஒடுக்கு முறை இயந்திரங்களும்.
பாராளுமன்ற ஜனநாயகம் என்ற காகிதப் பணம் ஒடுக்கு முறை என்னும் தங்கக் காப்பிருப்பில் தங்கியுள்ளது. ஒடுக்குமுறைதான் அதன் ஆதாரம். தீர்மான சக்தி. ஆனால் தங்க இருப்பு எப்படிப் புழக்கத்திற்கு வருவதில்லையோ அப்படித்தான் ஒடுக்கு முறை கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும். பணத்திட்ட முறையில் ஏற்படக்கூடிய நெருக்கடி காகிதப் பணத்தை முற்றாகச் செல்லாத தாக்கிவிடும். தங்கம் நேரடியாகப் புழக்கத்திற்கு வரும். இது போன்றே நெருக்கடி நிலையில் ஒடுக்கு முறை புழக்கத்திற்கு வர பாராளுமன்ற அரசியல் செல்லாக்காசாகிவிடும். பாராளுமன்ற அரசியல் வெளித்

Page 28
50 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
தெரியா சக்தியாகிய ஒடுக்குமுறையின் ஆதாரத்தில் இயங்கும்.
ஆனால் சிலர் கூறுவதுபோல் பாராளுமன்ற ஜனநாயகம் ஒரு கானல்
நீரல்ல. அது மாயையும் அல்ல. அது உண்மையான சுதந்திரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. இச் சுதந்திரங்களும் அடிப்படை
உரிமைகளும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களினால்
வென்றெடுக்கப்பட்டவை. பாராளுமன்ற ஜனநாயகமும் பாசிச
சர்வாதிகாரமும் அடிப்படையில் ஒன்றுதான் என்று கூறுவது இச்
சுதந்திரங்கள் எவ்வித பெறுமதியும் அற்றவை என்பதற்குச் சமான
மானது. அரசியல் சிந்தனையில் ஏற்படக்கூடிய இரு வகைத் தவறு
களை நாம் இங்கே தெளிவாகக் காண்கிறோம்.
1. ஜனநாயகக் கருத்து நிலையின் பலத்தை குறைத்து மதிப்பிடுதல், பாராளுமன்ற அரசியலைக் கானல் நீர் எனல்.
2. அரசின் ஒடுக்குமுறை இயல்பை மறுத்தல், பாராளுமன்ற
மாயையில் மூழ்குதல்.
இவ்வித இருமுனைத் தவறுகளையும் கிராம்சியின் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
மேலாண்மை (Hegemony) - கெஜிமொனி - கிரேக்க மொழி மூலம் பெறப்பட்ட சொல். சர்வதேச அரசியலில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் செலுத்தும் அரசியல் ஆதிக்கத்தைக் குறிக்க இச்சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. கிராம்சியின் சமூகவியல் ஆய்வுகளில் ஒருவர்க்கம், பிற கீழ்ப்பட்ட வர்க்கங்களின் மேல் செலுத்தும் மேலாண்மையை குறிப்பதற்கு கெஜிமொனி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம் மேலாண்மை வன்முறை, இணக்கம் என்னும் இரு முறைகளில் வன்முறையல்லாது இணக்கம் மூலம் பெறும் ஆதிக்கத்தைக் குறிக்கும். இதனால் ஆதிக்கம் (dominence) என்ற சொல்லை விடுத்து மேலாண்மை (Hegemony) என்ற கொல்லைக் கிராம்சி தேர்ந்தார்.
சம்மதம், இசைவு, இணக்கம் ஆகிய இயல்புகளே முதலாளித்தவ கருத்து நிலை மேலாண்மையில் முக்கியமானவை. ஒடுக்குமுறைக் கருவிகளால் அன்றி மேலாண்மை மூலம் ஆட்சி ஸ்திரம் பெறுகிறது. ஒருவர்க்கம் தன் சொந்தவர்க்க நலன்களைக் கவனிப்பதால் மட்டும்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 51
தேசிய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை. தன் சொந்த வர்க்க நலன்களை சற்று விட்டுக் கொடுத்துப் பிற வர்க்கங்களை ஆளும் வர்க்கம் அணைத்துக் கொள்ளும். பிற வர்க்க நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும். சமூக சக்திகளின் ஒன்றித்த கூட்டிணைவை (a broad bloc of social force) 9.g. 2 (56).It disgib (SuTg5 5,606 Tu வர்க்கங்கள் மீதான மேலாண்மை சாத்திமாகும்.
இத்தாலியில் பாசிசத்தின் எழுச்சி வரலாற்று ரீதியாக பல பாடங்களைத் தந்துள்ளது. உற்பத்திமுறையின் நேரடி விளைவுகளை அரசியலிலும் மேற்கட்டுமானத்திலும் காண முனையும் ஆய்வாளர் ஏகபோக முதலாளித்துவத்தின் அரசியல் வெளிபாடுதான் பாசிசம் என்பர். ஆனால் பாசிசம் பல வர்க்கங்களின் இயக்கமாக இருந்தது. பிரதானமாக குட்டி பூர்ஷவா மூலத்தினை உடைய இயக்கம் இது. பல்வேறுபட்ட வர்க்க நலன்களுக்கு தலைமையை அளித்துக் தனது மேலாண்மையின் கீழ் ஏகபோக முதலாளித்துவம் பாசிச ஆட்சியை நிறுவியது.
தொழிலாளவர்க்க மேலாண்மையும் தனித்து தொழிலாளவர்க்க நலன்களை முன்னெடுப்பதால் மட்டும் உருவாக முடியாது. குடியியல் உரிமைப் பிரச்சினை, தேசிய இனங்களின் ஒடுக்குமுறை, நிறபேதம், பெண்ணுரிமை இயக்கம் ஆகிய பல்வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெகுஜன ஜனநாயகக் கோரிக்கைகள் யாவற்றையும் தொழிலாள வர்க்கம் பிரதிநிதித்துவப்படுத்துதல் வேண்டும். இவ்வியக்கங்கள் வர்க்கப் போராட்டத்துடன் நேரடிப் பிணைப்பு உடையன அல்ல. இவை வர்க்க அடிப்படையில் குறுக்க முடியாதவை.
abobgsgléodou60)u áyiTibd dGLDibg5ig5 (idealogy as cement) உவமிக்கிறார். கல் மண் கலவையில் சிமெந்து பிணைப்பு சக்தியாக இருப்பது போல் வர்க்கக்கூட்டிலும் மேலாண்மையிலும் கருத்துநிலை சிமெந்து போல் அமையும்.
வரலாற்றுக் கூட்டு (Historic Block) ஒரு வர்க்கத்தின் தலைமையில் பிற வர்க்கங்கள் இணைதல், தலைமை வர்க்கம் மேலாண்மை வகித்தல் ; வரலாற்றின் செல்நெறி அதன் தலைமையில் தீர்மானிக்கப்படல் ஆகியன நிகழும் பொழுது வரலாற்றுக் கூட்டு உருவாகும்.

Page 29
52 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
வர்க்க இணைவின் பிரதான சக்தியாக கருத்து நிலை இருக்கும். கருத்துநிலை மேலாண்மை தலைமை பெறம் வர்க்கத்தின் ஆட்சியதி. காரத்தைப் பலப்படுத்தும். சிவில் சமூகத்தின் மேலாண்மையைப் பெறுவதோடு உற்பத்தியிலும் இவ்வர்க்கம் பிரதான பங்கைப் பெறும்.
புத்திஜீவி (Intellectual) : ஆய்வறிவாளன் என்ற தமிழ்ப்பதம் அறிவுத்துறைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோரைக் குறிக்கும். இவ்வகையில் இது மூளை உழைப்பாளிகளின் ஒரு பிரிவினரையே குறிக்கும். கிராம்சி இன்டலெக்சுவல் என்பதை விரிந்த பொருளில் உபயோகிக்கிறார். இதனால் புத்திஜிவி என்ற சொல் பொருத்தமானது. சிந்தனை, ஆராய்ச்சி என்பனதான் ஒரு புத்திஜீவியின் முக்கிய இயல்புகள் எனக் கூறல் முடியாது. ஒருவனின் செயல்தான் அவனைப் புத்திஜிவி ஆக்குகிறது. உற்பத்தி, அரசியல், கலாச்சாரம் ஆகிய துறைகளின் அமைப்பாளர்கள் யாவரும் புத்திஜீவிகளே. எழுத்தாளர். கள், அரசியல் தலைவர்கள், பொறியியலாளர்கள், தொழிநுட்பவியலாளர், சிவில் உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் புத்திஜீவிகள்தாம்.
இவர்கள் உற்பத்தி, சிவில் சமூகம், அரசு என்ற மூன்றினுடனும் தொடர்பு பட்டவர்களாய் தலைமைத்துவம், அமைப்பு வேலை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களாய் விளங்குவர். எழுச்சி பெறும் புதிய உற்பத்தி முறையுடன் பிணைக்கப்பட்டவர்கள் உயிர் நிலைப்புத்தி ஜீவிகள் (Organic Intelectuals) எனப்படுவர். முதலாளித்துவ சமூகத்தில் அழிவுறும் பழைய உற்பத்தி முறைகளின் பிரதிநிதிகள் மரபுவழிப் புத்திஜீவிகள் ஆவர். கருத்துநிலைக்கு உயிரும் உருவும் கொடுப்போர் புத்திஜீவிகளே.
படிக்க வேண்டிய நூல்கள். கட்டுரைகள்
1. Anderson, Perrty; The Antinomies of Antonio - Gramsci, New
Left Review 100- Nov 1976 - Jan 1977.
2. Simon, Roger; Gramsci’s Political Thought. Lawrence and
WiShart - 1982.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 53
கருத்து நிலை பற்றி அல்துாசர்
10ர்க்சின் பின்னர் கருத்துநிலைபற்றி எழுதியோருள் லெனின், லூகக்ஸ், கிராம்சி, அல்துரசர் ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியோர். மார்க்ஸ் முதல் 1960களில் எழுதிய அல்துாசர் வரையுள்ள நூறு ஆண்டு காலத்தில் கருத்து நிலைபற்றி மாறுபட்ட விளக்கங்கள் வெளிவந்துள்ள போதும் மார்க்சீயத்திற்குப் பொதுவான அடிப்படைக் கருத்துக்கள் இவையூடே இழையோடி வந்துள்ளன.
அல்துரசரின் சிந்தனைகள் ஸ்டக்சுரலிஸ்ட் மார்க்சீயம் எனப்படும். பிரான்ஸ் நாட்டில் ஸ்டக்சுரலிசம் என்னும் சிந்தனை மரபு வளர்ந்தது. ஸர் (Sussure) என்னும் மொழியியலாளர், லெவிஸ்ட்ராஸ் (Levi-Strauss) என்னும் மானிடவியலாளர், லொக்கன் (Lacan) என்னும் உளவியலாளர் ஸ்டக்சுரலிஸ்ட் சிந்தனைக்கு வழிகோலிய சமூக விஞ்ஞானிகளாவர். மனிதன் உணர்வு பூர்வமான நடவடிக்கைகள் அல்லாது அந்த நடவடிக்கைகளின் ஆதாரமாக இருக்கும் அமைப்புக்கள்தான் சமூகம் பற்றிய ஆய்விற்கும் விளக்கத்திற்கும் உதவும் என்பது இச் சிந்தனையின் அடிப்படையான கருத்து. ஸ்டக்சுரலிஸ்ட் சிந்தனையின் ஒரு கிளைதான் அல்துரசரின் ஸ்டக்சுரலிஸ்ட் மார்க்சீயம். பலிபார் (Balibar), நிக்கோஸ் பெளலண்ட்ஸாஸ் (Nicos Poulanizas) ஆகியோரும் அல்துரசரின் கருத்துக்களை வளர்த்துள்ளனர்.
அல்துரசரின் மார்க்சீயம், லூகக்ஸ், சாத்தர், கிராம்சி ஆகியோருடனும் பிராங்பேர்ட் பள்ளியினருடனும் (Frankfurt School) அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டது. இச் சிந்தனையாளர்களின் மனிதாய மார்க்சீயம் (Humanist Marxism) என்னும் கருத்தை அல்துரசர்

Page 30
54 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
நிராகரிக்கின்றார். எனினும் இயக்கவியல் பொருள்முதல் வாதிகள் சிலரின் யாந்திரீகமான விளக்கங்களையும் அவர்களின் பொருளியல் தீர்மான வாதத்தையும் (Economic determinism) கூட அல்துரசர் ஏற்றுக்கொண்டவரல்லர். மேற்கட்டுமானத்திற்கு ஒரு சுய இயக்கம் உண்டென்பதை இவரது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. கருத்து நிலை பற்றிய இவரது விளக்கங்கள் அரசு, கலை இலக்கியம், கல்வியியல் ஆகிய துறைகளில் பல கோட்பாட்டுப்பிரச்சினைகளுக்கு இடம் அளித்துள்ளன.
உற்பத்தியும் மறு உற்பத்தியும்.
'...... மூலத்திற்கும் மூலமாய் வரலாற்றை நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்க்கையின் பொருள் உற்பத்தியும் அதன் மறு உற்பத்தியும் தான் ' என்று எங்கல்ஸ் கூறியுள்ளார். இக்கூற்றில் வரும் 'உற்பத்தி என்பதன் பொருள் தெளிவானது. ஆனால் மறு உற்பத்தி (Reproduction) என்றால் என்ன? "ஒரு சமூக உருவாக்கம் தன் உற்பத்திக்குரிய நிலைமைகளை மறு உற்புத்தி செய்யாவிடின் சொற்பகாலம் கூட நிலைக்க முடியாது" என்பது மார்க்சின் கூற்று. இக்கூற்றை மேற்கோள் காட்டி உற்பத்தி இரு வகைப்படும் என அல்துாசர் விளக்கியுள்ளார். அவையாவன.
1. 9 fibugbg5 (Production)
2. LDp 2 fibugig5 (Reproduction)
பொருள் விளக்கப்படாமல் வெறும் வார்த்தையாகவே உச்சரிக்கப்பட்டு வந்த 'மறுஉற்பத்தி என்னும் சொல்லின் விளக்கத்தில் தான் அல்துரசரின் கருத்து நிலை பற்றிய கோட்பாட்டிற்கான திறவுகோல் உள்ளது.
எதை மறு உற்பத்தி செய்ய வேண்டும்?
ஒவ்வொரு சமூகமும் நிலைத்திருப்பத்திற்கு அவசியமான மறு உற்பத்திகள் எவை? அவை இருவகையின.
9) 2 fibugibg5 afóBg5a56i (Forces of Production)
ஆ) இருந்து வரும் உற்பத்தி உறவுகள் (Relations of production)

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 55
இவ்விரண்டினதும் கூட்டுமொத்த அமைப்பே உற்பத்தி முறை (Mode of Production) எனப்படும் எனவே முதலாளித்துவ உற்பத்தி தொடரும் அதேவேளை முதலாளித்துவ உற்பத்தி தொடர்ந்து நடைபெற அவசியமான உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் மறு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். பொருள் உற்பத்தி மட்டுமல்ல அதற்குத் தேவையான சமூக நிலைமைகளும் படைக்கப்பட வேண்டும்.
உற்பத்தி சக்திகளின் மறு உற்பத்தி
உற்பத்தி சக்திகள் மூன்று அம்சங்களைக் கொண்டவை.
1. உற்பத்திக் கருவிகள் -யந்திரம் முதலியன.
2. மூலப் பொருட்கள் - நிலக்கரி, பருத்தி, ரப்பர் போன்றவை
3. மனித உழைப்புச் சக்தி. sm;
இம் மூன்றையும் மறு உற்பத்தி செய்வது எப்படி நிகழ்கிறது? ஒரு சிமெந்து தொழிற்சாலையை எடுப்போம். அது சீமெந்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதற்கு தேவையான யந்திரங்களும் உதிரிப் பாகங்களும் அத்தொழிற்சாலைக்கு வெளியே உற்பத்தியாகாவிடின் சிமெந்து ஆலை நீண்டகாலம் செயற்பட முடியாது. இதே போன்று அதற்கு வ்ேணடிய மூலப்பொருட்கள் வேறு இடங்களில் இருந்து உற்பத்தியாகி வருகின்றன. களி, கல் ஏனைய இரசாயனங்களின் உற்பத்தியின்றி அது செயற்பட முடியாது. தனித்த ஒரு தொழிற்சாலை உதாரணத்தை விரிவுபடுத்தி முழுச் சமூகத்தையும் நோக்கின் கருவிகளினதும், மூலப் பொருட்களினதும் உற்பத்தி இன்றி உற்பத்தி தொடருதல் முடியாது. உற்பத்தி சக்திகளின் மற்றொரு அம்சமான மனித உழைப்பு சக்தியை யார் எவ்விதம் மறு உற்பத்தி செய்கின்றார்கள்? உண்டு, குடித்து, உறங்கிச் சீவனம் செய்வதால் தான் உழைப்பாளி நாளைய உற்பத்திக்கு தயாராக வருகிறான். இந்த உழைப்பு சக்தியை உருவாக்குவதற்கு அவனும் அவன் குடும்பமும் சீவிக்க வேண்டும். அந்தச் சீவனம் கூலியின்றிச் சாத்தியமாகாது. கூலி (Wage) கொடுக்கப்படுவதால் உழைப்புச் சக்தி மறுஉற்பத்தியாவதை உறுதி செய்கிறது.

Page 31
56 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
கூலி மட்டும் போதுமா?
கூலியை மட்டும் கொடுப்பதால் உழைப்பின் (Labour) மறு உற்பத்தியை நிகழ்த்துதல் முடியாது. உழைப்பாளி உழைக்கும் தகுதி (Competence) உடையவன் ஆதல் வேண்டும். சமூகம் பல்வேறு திறமைகளை (Skils) கற்றுத் தருகிறது. பலவித தொழில்களுக்கும் பதவிகளுக்கும் (Jobs and posts) ஏற்றவர்களாக மக்களைத் தயார் செய்வனவே கல்விக்கூடங்கள். உழைப்பாளி செயல் அறிவை(Knowhow) உடையனவாக மட்டுமல்ல பொருத்தமான ஒழுக்க விதிகளையும் (Rules of good behaviour) கற்றிருக்க வேண்டும். கல்விநிறுவனங்களும், குடும்பமும், மத நிறுவனங்களும் இந்த ஒழுக்க விதிகளை போதிப்பதால் உழைப்பாளியைத் தகுதியுடையவனாய் உருவாக்குகின்றன. இந்த ஒழுக்க விதிகளின் மறுபெயர் தான் ஜடியோலஜி அல்லது கருத்து நிலை. இந்தக் கருத்து நிலை கட்டிக்காக்கப்படாமல், பேணப்படாமல் முதலாளித்துவ சமூகம் நிலை பெறமுடியாது. உழைப்பாளிகளை அடி பணிந்து போகவைக்கும் இந்தக் கருத்து நிலை தான் அறிவாக ஆராய்ச்சியாக, விஞ்ஞானமாக வேஷம் போடுவதும் உண்டு, தமிழவன் பின்வருமாறு எழுதுகிறார்.
"குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் என்ன படிக்கின்றன? எழுத்து, கணிதம் போன்றன கற்றபின்பு, விஞ்ஞானம் போன்றவற்றைத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவிதமாகக் கற்கின்றன. சிலர் கிளார்க்குகளாய் போவதற். கும், சிலர் டெக்னிஷியன்களாய் போவதற்கும், சிலர் நிர்வாகிகளாய் போவதற்கும் கற்கின்றனர். ஆகமொத்தம் அவர்களின் தொழிலை (Know how) கற்கின்றனர்."
இந்த மாதிரியாய் தொழிலைக் கற்கும் போதே அவர்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கீழ்ப்படிந்து நடப்பதற்கும் நல்லொழுக்க' விதிகளையும், அதாவது பின்னால் தொழிற்சாலைகளின் விதிகளுக்குக் கட்டுப்படும் பயிற்சிகள் அத்தனையையும் தருகின்றனர். ஆசிரியருக்கு - அவர் என்ன தப்புச் செய்தாலும் அடிபணிந்து நடத்தல், குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருதல் போன்ற ஆரம்பப் பயிற்சிகள் , பின்னர் தொழிலகத்தின் செக்ஷன் நிர்வாகிக்கு அவர் என்ன தப்புச் செய்தாலும் அடிபணிந்து நடத்தலாகவும் குறித்த நேரத்தில் வந்து

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 57
தொழிற்சாலையின் கொள்ளையடிக்கும் லாபம் குறைவுபடா விகிதத்தில் வேலை செய்வதாகவும் மாறுகின்றன. மேலும் கல்லூரிகளின் நல்ல தமிழ், ஆங்கிலம் ஆகியவை தொழிலகங்களின் படிப்பறிவற்ற கொச்சைத்தமிழ் பேசும் தொழிலாளர்களிலிருந்து தாம் மேம்பட்டவர்களாய்க் காட்ட சொல்லித்தரப்படுகின்றன. மொத்தத்தில் கிராமப் பள்ளிகள் நகரக் கலாச்சாரங்களைப் புகுத்துவனவாகவும், நகரக் கல்லூரிகள் மேற்தட்டு வாசிகளாய் மாணவர்களை அடிமனரீதியில் மாற்றுவனவாகவும் பணியாற்றுகின்றன. பூர்ஷ்வா அமைப்பு அழியாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட பயிற்சி நிலையங்களே - பள்ளிகள், கல்லூரிகள் பிற ஆய்வு நிறுவனங்கள் அத்தனையும் சமீபகாலங்களில் நாட்டில் நடக்கும் தேர்தல்களின் முன்மாதிரிப்பயிற்சி கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொடுக்கப்படுகிறது. பொய்யான வாக்குறுதிகள்,ஜாதி உணர்வு அடிப்படையில் ஒட்டுப் போடுதல், தேர்தல்களால் மாற்றங்கள் நடக்கும் என்றுநம்பாவிட்டாலும் அப்படியொன்று வேண்டும் என்பதான மனநிலை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உருவாக்கப்படுகிறது. (ஸ்டக்சுரலிசம் பக் 197 -198) இவ்விதம் உழைப்பு சக்தியின் மறு உற்பத்தியில் கருத்து நிலையின் பெரும்பங்கு வெளியாகிறது. இது அல்துரசரின் கருத்து நிலைக் கோட்பாட்டின் ஒரு அம்சம் தான். உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தியில் மீண்டும் கருத்துநிலையின் விஷ்வரூபம் வெளிப்படும்.
உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி
உற்பத்தி உறவுகளின் மறுஉற்பத்தி என்றால் என்ன?இக்கேள்வி சமூகத்தின் அமைப்பு பற்றியும் அடித்தளம் (Base) மேற்கட்டுமானம் (Super structure) என்னும் பிரபலமான கருத்துக்கள் பற்றியும் பரிசீலிக்கும் அவசியத்தை உண்டாக்குகின்றது. சமூக அமைப்பு பற்றிய மார்க்சின் கீழ்வரும் கூற்று பிரசித்தி பெற்றது.
"சமூகரீதியான உற்பத்தியில் மனிதர்கள் ஈடுபட்டுவரும் போது சில திட்டவட்டமான உறவுகளிலே அவர்கள் சம்பந்தப்படுகிறார்கள். சமூக உற்பத்தி நடக்க வேண்டுமானால் இந்த உறவுகள் இருந்து தீர வேண்டும். மேலும் இந்த உறவுகள் அவர்களின் சித்தப்படி ஏற்படுபவையல்ல. அந்த உறவுகள் அவர்களின் சித்தத்திற்கு அப்பாற்பட்

Page 32
58 சமூக சிந்தனை .விரிபடு எல்லைகள்
டவையாகும். பெதிக உற்பத்தி சக்திகள் எந்த எந்தக் குறிப்பிட்ட மட்டத்திற்கு வளர்ந்துள்ளனவோ அந்த மட்டத்திற்குப் பொருத்தமாகவே இந்த உறவுகள் அமைகின்றன. இந்த உற்பத்தி உறவுகளின் மொத்தத் தொகை தான் சமூகத்தின் பொருளியல் அமைப்பாகும். இந்த உண்மையான அடித்தளத்தின் மேல்தான் சட்டம், அரசியல் என்ற மேல்தளங்கள் எழுகின்றன; இந்த உண்மையான அடித்தளத்திற்குப் பொருத்தமாகத்தான் சமூக உணர்வின் திட்டவட்டமான வடிவங்கள் (அதாவது தத்துவ வடிவங்கள்) அமைந்துள்ளன'
(அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய விமர்சனம்' என்னும் நூல்)
சமூகத்தின் மேற்கட்டுமானத்தின் இயல்புகளையும், சமூக உருவாக்கத்தில் அதன் பங்கினையும் மறு உற்பத்தி என்னும் நோக்கில் தான் புரிந்து கொள்ளல் முடியும் என்பது அல்துரசரின் கருத்தாகும்.
கட்டிடம் என்னும் உருவகம்
'அடித்தளம்' மேற்கட்டுமானம்' என்பன சமூகம் பற்றிய வருணனையை கட்டிடம் என்னும் உருவகத்தால் தருகின்றன. இந்த உருவகம் முக்கியமானதும் பொருத்தமானதுமான மூன்று அனுமானங்களைத் தருகின்றன என்று சொல்கிறார் அல்துசர் இவை :-
1. இறுதியாகத் தீர்மானிப்பது எது?
2. மேற்கட்டுமானத்தின் சுயத்துவமான இயக்கம்.
3. அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான UJ6iol g660)6Or (Reciprocal action)
மேற்கட்டுமானத்தின் பகுதிகளான அரசு, சட்டம், கருத்துநிலை என்பனபற்றி அடுத்த ஆராயப்புகும் அல்துசர், அரசுபற்றி ஆராய்கிறார் நிலவிவரும் உற்பத்தி உறவுகளை மறு உற்பத்தி செய்யும் பணியில் அரசு பெரும் பங்கை வகிக்கிறது. சுரண்டல் அடிப்படையான உற்பத்தி

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 63
1. தனிமனிதனும் சமூகமும் ஒன்றுபட முடியாதவர்கள், இருவர்க்கு
மிடையே நிரப்ப முடியாத பிளவு உள்ளது.
2. மனித இயற்கை அடிப்படையிலேயே தீயது.
தனிமனிதன் சமூகத்திற்கு எதிரானவன். அவனை அடக்கி நல்வழிப்படுத்துவது, சமூகத்தின் கடமை, சில அடிப்படையான உயிரியல் உந்துதல்கள் மனிதனிடம் வெளிப்பட அனுமதிக்கலாம். ஆனால், பொதுவாக அவை நெறிப்படுத்தப்பட வேண்டியவை. எனவே, மடைமாற்றம் (சப்ளிமேஷன்) ஓர் அடிப்படைத் தேவை.
தனிமனித உந்தல்களின் திருப்தியும், சமூகமேம்பாடும் எதிர்வீதத்தில் எப்போதும் அமைபவை. எங்கே கலாசாரச் சாதனைகள் மிகுதி என்கின்றோமோ, அங்கே தனிதமனித நிறைவுகள் ஒதுக்கப்பட்டு, நரம்பியற் சிக்கல்கள் நிறைந்திருப்பது இயற்கை. ஒருநாகரிக சமூகத்தை நாடிச் செல்லும் பாதையில் ஒத்து நடக்க முடியாமல் வீழ்ந்து விடுபவர்கள்தான் நரம்பியல் நோயாளிகள் என்பது.ப்ராய்டின் கொள்கை.
ஃப்ராய்டின் கொள்கை, ஒரு மாற்றமற்ற நிலைச் சமூகம் என்னும் நோக்கின் அடிப்படையில் எழுந்தது. இது தவறானது என்கிறார்."ய்ராம். "மனிதன் அடிப்படையில் தனிமையானவன் அவன் பொருளாதாரப் பரிமாற்றங்களில் ஈடுபடுவதற்காகவே சகமனிதர்களுடன் உறவில் ஈடுபட நேர்கிறது" என்றார் மார்க்ஸ். இதுபோலவே தான் ஃப்ராய்டும் சொல்கிறார். "மனிதன் தன்னளவில்நிறைவுறக் கூடியவன். அவன், மற்ற பொருள்களுடன் உறவு வைத்துக் கொள்வது, தனது உந்துதல்களை
நிறைவு செய்து கொள்வதற்காகவே"
உளவியல் அடிப்படைப் பிரச்சினை
ஃப்ராய்டின் மேற்குறித்த உட்கிடைகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் எர்க் ப்ராம் , உளவியலின் அடிப்படைப் பிரச்சினை எந்தவொரு தனிமனித உந்துதலின் திருப்திப்பாடோ அல்லது முறிவோ அல்ல. மாறாக, தனிமனிதன், உலகத்தோடு கொள்ளும் உறவின் தன்மை - அவ்வுறவு எப்படிப்பட்டது என்பதுதான் உளவியலின் கேள்வி.

Page 33
64 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
தனிமனிதனுக்கும், உலகிற்குமான உறவுமாறாததல்ல. ஃப்ராய்டு சொன்னதுபோல, அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. தனிமனிதன், பூர்த்திக்காக ஏங்கும் சில உந்துதல்களுடன் மனிதன் பிறந்திருப்பதாகவும், அவற்றைப் பூர்த்தி செய்யும் சக்தி அல்லது முறிக்கும் திறன் சமூகத்திடம் இருப்பதாகவும் ஃப்ராய்டு எண்ணினார். இது சரியன்று, மாறாக, எல்லா மனிதர்களுக்கும் பொதுவான, உடலோடு பிறந்த சில உந்துதல்கள் உள்ளன - பசி,தாகம், பாலுணர்வு . மனிதனின் சில பண்புக் கூறுகள். அன்பு, வெறுப்பு, ஆதிக்கத் தன்மை, சமூகச் செயல் முறைகளினால் உருவாகுபவை. இவை மனிதனுக்கு மனிதன் வேறுபடுபவை. சமூகம் ஒடுக்குமுறை அமைப்புமட்டுமல்ல - அது ஆக்கவும் செய்கிறது. மானிட இயற்கை என்பது கலாசார உருவாக்கமே. எனினும், மனிதனின் உயிரியல் சார்பு இதனை ஒரு சில விதங்களில் கட்டுப்படுத்த இயலுகிறது என்பதே உண்மை.
வரலாறும் மனிதனும்
மனித இயற்கை என்பது கலாசார ஆக்கமே என்றால், இது எப்படி உருவாயிற்று என்பதை நாம் வரலாற்றின் வாயிலாகத் தான் புரிந்து கொள்ள முடியும். சில குறித்த வரலாற்றுக் காலங்களில் மட்டும், மனித இயற்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. சான்றாக, மத்தியகால மனிதனின் உலகப்பார்வையிலிருந்து மறுமலர்ச்சிக்கால மனிதனின் உலகப் பார்வை முற்றிலும் மாறுபட்டு விட்டது- இது எப்படி நிகழ்ந்தது? ஃப்ராய்டு மெலானிக்ளைன் போன்ற உளவியலாளர்கள், இதனை வெறும் தனிமனித நிகழ்வுகளாகச் சுருக்கிப்பார்க்கிறார்கள். மார்க்ஸ்,எமில் டாக்றைம் போன்றோர், இவை முற்றிலும் சமூக நிகழ்வுகளே என்றனர். இரண்டுமே ஒருதலைப்பார்வைகள் என்கிறார் எரிக்
...UJITLD.
ஃப்ராம்மின் கருத்து, வரலாறு மனிதனை உருவாக்குவது மட்டுமல்ல மனிதனால் உருவாகுவதும்தான். தனி மனித ஆசைகள், உந்துதல்கள், முறிவுகள் போன்றவை சமூகச் செயல்முறைகளினால் எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்று காண்பதும், குறித்த வடிவங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட மனிதசக்தி எப்படிச் செயல்முறைகளை வடிவமைக்கும் ஆக்கசக்திகளாக மாறுகின்றன என்று காண்பதும் - இரண்டுமே தமது நோக்கங்கள் என்றார் .ப்ராம்.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 61
5) வர்க்கப் போராட்டம் ஒடுக்கும் அரசுயந்திரத்தின் எல்லைக்குள் அக்கருவிகளைக் கைப்பற்றுவதற்கான போராக அமைகிறது. எனக் கூறுதல் தவறு . ஒடுக்கும் அரசு யந்திரம் மீதுள்ள அதிகாரம் மட்டும் போதாது. கருத்துநிலை யந்திரங்களின் மீதான அதிகாரத்திற்காகவும் வர்க்கப் போராட்டம் நிகழும் சிலவேளைகளில் அதன் உக்கிரமும் தீவரமும் கருத்துநிலை என்னும் தளத்தில்தான் வெளிப்படும்.
6) தலைமைத்துவம் பெற்றுள்ள கருத்துநிலை, RSAக்கும் ISAக்ககும் இடையிலான இணைவுபடுத்தும் Intermediation) பணியையும் செய்கிறது.
மேற்கட்டுமானம் கருத்துநிலைகள் மூலம் உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தியை நிகழ்த்துவதை விளக்கும் அல்துரசர் கருத்து நிலைபற்றிய முழுமையான கோட்பாட்டை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிறார் . அத்தகைய கோட்பாட்டை ஆழ்ந்த ஆய்வுக்கும், தெளிவிக்கும் பின்வரும் கருத்தேற்றங்கள் தனிக்கட்டுரையாக விரித்து எழுதப்பட வேண்டியவை
1) தனிமனிதன் சமூகத்துடன் கொள்ளும் கற்பனைத் தொடர்பின்
பிரதிநிதித்துவமே கருத்துநிலை
2) கருத்துநிலை, பொருண்மைத்தன்மை (Materiality) கொண்டது.
3) கருத்துநிலைதனிமனிதனில் உட்புகுந்துதானாக மாற்றுகின்றது.
அல்துரசரின் பிற ஆய்வுகள் பற்றி அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் கூட அவரின் கருத்துநிலை பற்றிய கோட்பாட்டின் சிறப்பியல்புகளை வரவேற்றுள்ளனர்.

Page 34
62 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
எரிக் ஃப்ராமின் மானுட ஆளுமை மாதிரிகள்
முனைவர் க. பூரணச்சந்திரன்
எரிக் ஃப்ராம்
ஜெர்மனியில் பிறந்தவர் சமூக உளவியலாளராகவும், உளப்பகுப்பிய லாளராகவும் பயிற்சி பெற்றவர். ஷராங்க் ஷபர்ட் சிந்தனையாளர்களுடன் தொடர்பு கொண்டவர். ஷ ப்ராய்டு, மார்க்ஸ் ஆகிய இருவர் கருத்துக்களாலும் ஒருங்கே கவரப்பட்டவர். இரணர்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார். கேரன், ஹாரனி சலிவன் போன்ற உளவியல் அறிஞர்களுடன் தொடர்பு கொண்டவர். மார்க்ஸ், ஷப்ராய்டு ஆகிய இருவர் கொள்கைகளையும் இணைத்து நோக் கிய, புதிய ஷ ப்ராய்டியர்களுள் ஒருவர். சுதந்திரத்தின் பயம் , அழித்தலின் உள்ளமைப்பு. அன்பு செலுத்தல் கலை என்னும் நூல்களில் எரிக்க் ஷப்ராம் மனிதனின் ஆளுமை பற்றிய தமது கொள்கைகளை முன் வைக்கிறார். ஷப்ராய்டினை அடியொற்றியே மனித ஆளுமையை அவர்சித்தரித்தாலும், சில முக்கிய விஷயங்களில் மாறுபடவும் செய்கிறார்.
ஃப்ராய்டின் தப்பெண்ணங்கள்
ஃபராய்டு, இருவித மரபான தப்பெண்ணங்களின் அடிப்படை மீதும் தம் கொள்கைகளை வகுத்தார் என்று குறை கூறுகிறார், ப்ராம். அவை
U6)60:

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 59
நடைபெற அரசின் ஒடுக்குமுறை அமைப்புகள் மட்டும் போதாது. அல்துரசரின் அரசுக் கோட்பாட்டில் கருத்துநிலை அரசுயந்திரம் ISA (Ideological State Apparatus) Lg5/60)LDLLITT607 g?(5 d5(bg5g5/TébébLDIT(35b. கருத்து நிலை அரசுயந்திரத்தை R S A என்னும் ஒடுக்குமுறை அரசுயந்திரத்தில் இருந்து வேறுபடுத்தி நோக்கும் போது தான் அல்துரசரின் கருத்து நிலை பற்றிய கோட்பாடு விளக்கமுறுகிறது.
கருத்து நிலை அரசுயந்திரம் ISA
மார்க்சும், லெனினும் அரசு பற்றிச் சில அடிப்படைக் கருத்துக்களை விளக்கிச் சென்றனர்.
1. அரசு ஒரு ஒடுக்கும் யந்திரம்
2. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வர்க்கம் இந்த ஒடுக்குமுறை
யந்திரத்தைப் பயன்படுத்தும்.
3. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதலே வர்க்கப் போரின்
நோக்கம்.
அரசு யந்திரம், படை, பொலிஸ், நீதிமன்றுகள், சிறைகள் என்பன. வற்றையும் பாராளுமன்றம் போன்ற அரசு உறுப்புக்களையும் கொண்டமைவது எனக் கருதப்பட்டது. இவற்றை அல்துரசர் ஒடுக்குமுறை அரசு யந்திரம் என்னும் பெயரால் அழைக்கிறார். RSA யில் இருந்து வேறுபட்ட கருத்துநிலை அரசுயந்திரம் பல நிறுவன வடிவங்கள் ஊடாகச் செயற்படும். அத்தகைய எட்டு நிறுவனங்களை அல்துசர் குறிக்கின்றார்.
மதக் கருத்தநிலை அரசுயந்திரம் கல்விக் கருத்துநிலை அரசு யந்திரம், குடும்பக் கருத்துநிலை அரசு யந்திரம். சட்டக் கருத்துநிலை அரசு யந்திரம். அரசியல் கருத்துநிலை அரசு யந்திரம். தொழிற்சங்க கருத்துநிலை அரசு யந்திரம். தொடர்புசாதனக் கருத்துநிலை அரசு யந்திரம்.
பண்பாட்டுக் கருத்துநிலை அரசுயந்திரம் (கலை, இலக்கியம், விளையாட்டு)

Page 35
60 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
ஒடுக்கு முறை மட்டுமல்ல ஐடியோலஜியும் ஆட்சிமுறையின் ஒரு கருவி என்U?9 விளக்கும் அல்துரசர் இருக்கும் உறவுமுறைகள் நிலைப்பதற்?? கருத்துநிலைகளை மதம், கல்வி, நிலையங்கள், குடும்பம் சட்டம், அரசியல், தொழிற்சங்கம், தொடர்புசாதனங்கள், பண்பாடு ஆகியன படைத்தளிக்கின்றன எனக்காட்டுகிறார். அல்துசரிற்கு முந்தி! க்ால மார்க்சிஸ்டுக்களின் அரசுக் கோட்பாட்டில் உள்ள good G616s அல்துரசரின் கருத்து நிலைக் கோட்பாடு நீக்கிவிடுகிறது.
வேறுபாடுகள்
கருத்து நிலை அரசு யந்திரம், ஒடுக்கும் அரசுயந்திரத்தில் இருந்து துவிதம் வேறுபடுகிறது என்பதையும் கவனிப்போம்.
1) ஒடுக்கும் அரசு யந்திரம் ஒன்றுதான். அது ஒருமையில் குறிபிடப்படும். கருத்துநிலை அரசுயந்திரங்கள் பல. அவை
மயில் குறிப்பிடப்படும்.
2) ஒடுக்குமுறையந்திரம் பொதுத்துறை என்பதில் அடங்கும். அதாவது படை, பொலிஸ், சிறைக்கூடம், முதலியன பொதுத் துரிை சார்ந்தவை. குடும்பம், மதம், கல்வி போன்றனநிறுவனங்ai (PCP60DLDULUTTđ5 பொதுத்துறை சார்ந்தனவல்ல.
3) @ცbრეJ6თშნ யந்திரங்களிலும் ஒடுக்கும் அம்சமும் கருத்துநிலை அம்ரீமும் உண்டு. பொலிஸ், படை என்பனவற்றில் கருத்துநிலையும் உண்டு. எனினும் அவற்றின் பிரதான அம்சம் ஒடுக்கு முறைதான் இதேபோல் குடும்பம், கல்வி என்னும் கருத்துநிலை யந்திரங்களில் மறைமுகமானதும் சிலவேளை வெளிப்படையானதுஒடுக்குமுறையும் உண்டு. எந்த அம்சம் பிரதானமானது தே கவனிக்கப்பட வேண்டும்.
4) ாக இருக்கும் கருத்தநிலை யந்திரங்களிடையே ஒரு ஒற்றுமையும் இணைவும் உண்டு. தலைமைத்துவம் பெற்றுள்ள ஆளும் கருத்தநிலை (Rulingideology) இந்த ஒருமையைப் பேண உதவுகிறது.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 65
ஃப்ராய்டின் உந்துதல் கொள்கை
ஃப்ராய்டின் உந்துதல் கொள்கை, இருவித மயக்கப் பொருண்மைகளைக் கொண்டுள்ளது. உந்துதல் என்பது,
(1) ஒர் உடலின் நரம்பு மண்டலம் உருவாக்கும் குறித்த செயற்பாணிகளைக் குறிக்கக்கூடும் அல்லது
(2) உயிரியல் தேவைகள் இயல்பூக்கங்களையும் குறிக்கக்கூடும்.
எனவே இச்சொல்லை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எறும்புகளின் சமூக நடத்தை, குளவிகள், தேனீக்கள் முதலியன கூடுகட்டுவது, தேன்சேகரிப்பது, பறவைகள் இயல்பாகக் கூடுகட்டுவது, சால்மன் மீன்கள் இடம் பெயர்வது போன்றவையெல்லாம் உந்துதலின் முதல் அர்த்தம் சார்ந்தவை. மனிதனின் சில அனிச்சைச் செயல்களை மட்டும் இவ்வித நடத்தை முறைகளில் அடக்க முடியும். அவைகளும் மறைந்து கொண்டே வருகின்றன என்பது உயிரியலார் கருத்து. மனிதன் தன் இளமையில் கற்கும் நெகிழ்ச்சியுள்ள நடத்தை முறைகள், அவனது நெகிழ்ச்சியற்ற - இயல்பான அனிச்சையான நடத்தைகளை அழிக்கின்றன என்பது அவர்கள் கருத்து.
இரண்டாம் அர்தத்தத்தில், பாலுணர்வு, பசி, தாகம் போன்றவை உயிர்களின் அடிப்படை உந்துசக்திகளாகின்றன. ஃப்ராய்டு இவற்றையே 'உந்துதல்' என்னும் சொல்லினால் குறித்தார் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்போது, எப்படி உயிர்கள் இவற்றின் நிறைவுச் செயல்களில் ஈடுபடுகின்றன - அவை ஈடுபடுகின்றனவா இல்லையா - என்பன போன்ற அடிப்படை வினாக்களுக்கு அவர் பதில் கூறவில்லை.
சமூகமும் உந்துதல்களும்
மனிதனுக்கும் பிற விலங்குகளுக்கும் இந்த உந்துதல்கள் பொதுவானவை, ஆனால் மனிதனுக்கோ இவற்றின் திருப்தி சமூகம் சார்ந்துள்ளது. கலாசாரம்தான் தனிமனித நிறைவை நிர்ணயிக்கின்றது.

Page 36
66 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
மேலும், மனித இயற்கையை, வெறும் உயிரியல் உந்தல்களை அவன் நிறைவு செய்வதைக் கொண்டு மட்டுமே உணர்ந்து கொள்ள முடியாது. மனிதனோடு பிறந்த ஆதி உந்துதல்களுக்கு இணையான, அல்லது அவற்றை விடச் சக்திமிக்க வேறு பல புதிய தேவைகளைச் சமூகச் செயல்முறை உருவாக்கிவிடுகிறது. தாம் பசியால் துடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதன், தன் கையிலுள்ள ஒரே கவளம் உணவை இன்னொருவனுக்கு அளித்து விடுவதையும், நாட்டுக்காகப் போரில் ஈடுபட்டு உயிரையும் தருவதையும்-இவை போன்ற நடைமுறைகளை வெறும் உயிரியல் நோக்கிலிருந்து விளக்கிவிட முடியாது. இவை சமுக, கலாசார நோக்கினால் மட்டுமே விளக்கப்படக் கூடியவை.
மனிதனும் விலங்குகளும்
மனிதன் பரிணாமத்தில் உருவானவன். பரிணாமம் என்பது ஏற்கனவே உள்ள பண்புகள் மாறியமைந்து முன்னேறுதல் என்பது மட்டுமல்ல - முற்றிலும் புதிய பண்புகள் உருவாதலும்தான். எனவே, மனிதனுக்கும் பிற உயிரிகளுக்குமான பிளவு மிக அதிகரித்துவிட்டது. மனிதன், தான் ஒரு தனித்த உயிரி என்பதை உணர்கிறான் கடந்த காலத்தின் அறிவைக் குறியீட்டு வடிவில் சேமித்து வைக்கிறான். அவனால் எதிர்காலத்தின் சாத்தியப்பாடுகளைக் கற்பனையில் காண முடிகிறது. தன் கற்பனையினால், வெறும் புலன்களால் உணரக்கூடிய எல்லையைத் தாண்டியும் செல்ல முடிகிறது. இவையெல்லாம் மனிதனுக்கும் விலங்குகளுக்குமான அடிப்படை வேறுபாடுகள்.
இவற்றிற்கெல்லாம் மேலாக, ஒரு விலங்கு தனது சூழலைக் குறிக்கும் சில நடத்தைப் பணிகள் மூலமாகவே எதிர்கொள்கிறது. ஆனால் மனிதனுக்கே, எதற்கும் ரெடிமே"டு தீர்வுகள் இல்லை. எப்பொழுதும் தொடர்ந்து தன் அறிவின் வாயிலாக, தன்னுணர்வோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்விதத்தில், மனிதன், இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பிலிருந்து விலகிவிட்ட ஒரு சிதறல், இயற்கையின் ஒரு பகுதியாகவே இருப்பினும், இயற்கை உலகின் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருப்பினும், இயற்கையை மீறியும் சென்றுவிட்டான். பிரபஞ்சத்தின் பகுதியாக இருக்கும்போதே, பகுதியாக இல்லாமலும் போய்விட்டான் வீடற்றவனாகிவிட்டான் - ஆனால், இவ்வுலகோடு பிற உயிர்களோடு பிணைக்கப்பட்டும்

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 67
இருக்கிறான். தனது மரணத்தைத் தானே அவன் எதிர்நோக்குகிறான். தனது இருப்பின் எல்லைகளையும் உணர்ந்திருந்தான். தனது இருப்பின் இருமையிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. மனத்தை விலக்க முயன்றாலும் முடியவில்லை. உடலைநிறுத்தி வைக்க விரும்பினாலும் இயலவில்லை.
இருத்தலியல் முரண்பாடு
மனிதன் தனது சுயதேர்வின்றியே இவ்வுலகில் பிறந்திருக்கிறான் - கட்டாயம் அவன் இறக்க வேண்டியவன் - ஒரு நீண்ட வரலாற்றுச் செயல்பாட்டினுள் ஒரு சிறு கால அவகாசத்திற்கு மட்டுமே அவன் இருக்க நேர்கிறது - அவனது கலாசாரம் விதித்த எல்லைகளைத் தாண்டி அவனது திறன்கள் இயங்க முடிவதில்லை - ஆகிய பிரச்சினைகள் எல்லாம், ஃப்ராமினால் இருத்தலியல் முரண்கள்' எனப்படுகின்றன. இவை 'வரலாற்று முரண்' களுக்கு எதிரானவை. வரலாற்று முரண்களை, மனித விருப்பும் கால அவகாசமும் இருந்தால் தீர்த்துவிடலாம்; அல்லது கடந்து விடலாம். போர், சிலர் மட்டும் உள்ளவராகவும் பலர் இல்லாதவராகவும் இருத்தல், நோய் போன்றவை வரலாற்றுப் பிரச்சினைகள். ஆனால் இவ்வித வரலாற்றுப் பிரச்சினைகளால் பலனடையக் கூடிய வகுப்பினர் அல்லது வர்க்கத்தினர் இவற்றை வரலாற்றுப் பிரச்சினைகளாகக் காட்டாமல், இவை தீர்க்கப்பட இயலாத இருத்தலியலின் பிரச்சினைகள் என்பதாகப் பிரசாரம் செய்கின்றனர். (ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்கின்றனவா? அதுபோலவே மனிதனிலும் ஏற்றத்தாழ்வுகள் இயற்கை என்பதுபோல)
கருத்துருவமும் அறிவுசார் விளக்கமும்
முரண்கள், புதிர்கள், இயல்புமாறல்கள் ஒத்துவராமைகள் இவற்றை மனித மனத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது ஒரு அடிப்படைப் பண்பு. ஆகவே இவற்றைத் தீர்க்க வேண்டும் என மனித மனம் விரும்புகிறது. ஆகவே, சமூகவாழ்வின் அவலங்கள் முரண்பாடுகள், கொடுமைகளைத் தவிர்க்க மனம் முரண்பட்டெழுகிறது. இவ்வாறு புரட்சியில் குதிக்காமல் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முரண்பாடுகளே இல்லை என்று சாதிக்க வேண்டும். அல்லது

Page 37
68 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
முரண்பாடுகள் இயற்கை என்று போதிக்க வேண்டும் இதுதான் கருத்துருவம் அல்லது சித்தாந்தத்தின் பணி. ஆகவே, தனிமனித மனத்திற்கு 'அறிவுசார் விளக்கம்' (ரேஷனலைசேஷன்) போன்றது சமூகத்திற்குக் கருத்துவம் (ஐடியாலஜி).
ஆகவேதான் மத்திய காலத்தில் ஒருநிலையான படிமுறைச் சமுதாயம் (அரசன் அவனது மாளிகையில் - ஆண்டி அவனது வாசலில்) கடவுளால் படைக்கப்பட்டது என்ற கொள்கை பரப்பப்பட்டது. ஆரம்பக் காலத்து முதலாளித்துவ சமுதாயத்தின் அறிவார்ந்த விளக்கம் (சித்தாந்தம்) என்னவென்றால், ஒரு சுதந்திரமாக சந்தைச் சமுதாயத்தில் அவனவனது திறமைக்கேற்ப அவனவனுக்கு லாபம் ' என்பது. இதன் அர்த்தம் என்னவென்றால், மிகச் சிறந்த மனிதன்-அறிவுதிறன் வாய்ந்தவன், உச்சியை எட்டிவிடுவான், திறனற்றவன் கீழேயே இருப்பான் என்பதே. (ஆகவே அடிமட்டற்களில் பணிபுரிபவர்கள், அறிவோ ஆற்றவோ அற்றவர்கள்). எனவே சித்தாந்தங்கள், அறிவியல் கருதுகோள்களோ விளக்கங்களோ அல்ல. ஆயினும் மனிதனது சமூகத்தேவையை அவை நிறைவு செய்கின்றன. தான் வெறும் அறிவுசார் அல்லது பொருளியல் (லோகாயத) சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்படவில்லை, ஒரு அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறோம் என்னும் நிறைவை ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சித்தாத்தம்தான் அளிக்கிறது.
சமயமும் நரம்பியல் நோயும்
இம்மாதிரி முரண்பாடுகளின் இருப்பு, மனிதனை இந்தப் பிரபஞ்சத்தின் அர்த்தம் என்ன, ஏன் - எதற்காக இது படைக்கப்பட்டது, இது ஒழுங்கானதா அன்றிக் குழப்பமானதா, இதில் சமநிலை கொண்டுவரச் செய்ய வேண்டியது என்ன போன்றதான கேள்விகளில் ஈடுபட வைக்கிறது- அதாவது தன்னைச் சுற்றி ஒரு 'அர்த்தப்படுத்தும் வழிபடும்' சட்டகத்தை ஏற்படுத்தி கொள்ள வைக்கிறது. இச்சட்டகம், ஒரு மீயியற்கைசார்ந்த சமயத்தின் வடிவத்தையோ, அல்லது பொதுவுடைமைக் கொள்கை போன்ற எல்லாம் தழுவிய சமயம்சார் வடிவத்தையோ, அல்லது பொதுவுடைமைக் கொள்கை போன்ற எல்லாம் தழுவிய சமயம்சாரா வடிவத்தையோ எடுக்கலாம். எல்லாச் சமயங்களும், எல்லா மெய்யியல் ஒழுங்குகளும், அல்லது யாவையும் -

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 69
உள்ளடக்கிய - சித்தாந்தங்களும் மனிதனின் ஒரே அடிப்படைத் தேவையைத்தான் பூர்த்தி செய்கின்றன. மனிதன் தன்னை பிரபஞ்சத்துடனும், தன்னோடும், தன் சகமனிதர்களோடும் அர்த்த பூர்வமாகத் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் - என்னும் தேவை.
ஆகவே ஃபராய்டு கூறியதுபோல, சமயம் என்பது உலகமுழுதான நரம்பியல் நோய் அல்ல, இதற்கு எதிர்மறை - (தனிமனிதனின்) நரம்பியல்நோய் என்பது ஒரு தனிமனிதனின் சமயம் என்பதுதான் உண்மை. சமயம் என்பது பலருக்கும் பொதுவான ஓர் அர்த்தப்படுத்தும் - சட்டகம் : நரம்பியற் சிக்கலோ, ஒரு தனிமனிதன் தனக்குமட்டுமாக வகுத்துக்கொண்ட, சமூகம் சாராத, தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க வைத்துக் கொண்ட சட்டகம். மனிதனின் அடிப்படைத் தேவை இதுதான்- "இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாக - ஓர் அங்கமாகத் தன்னை உணர்வது".
மனிதனைச் சமூகமயமாக்கல்
மனிதன் பிறப்பதற்கு முன்பே இவ்வுலகம் இருக்கிறது. அவன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உழைத்தாக வேண்டும். உழைப்பின் நிபந்தனைகளும் நிலைமைகளும் அவன் பிறந்துள்ள சமூகத்தைப் பொறுத்திருக்கிறது. தன்னால் மாற்ற முடியாத ஒரு சமூகத்தில் அவன் பிறந்து உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த சமூகத்தின் நிலைமைகள் தான் அவன் எப்படிப்பட்ட ஆளுமையுடையவனாக மாறுவான், அவனது சமூகக் குணங்கள் என்ன என்பனவற்றையெல்லாம் நிர்ணயிக்கின்றன. இவற்றைவிட்டு மனிதன் ஒதுங்க முடியாது. ஏனெனில், அவனது சுயக் காப்புத் தேவைகள் தான்வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்படும் நிலைமைகள் அவன் ஏற்குமாறு செய்து விடுகின்றன.
மனிதனது ஆளுமை, அவன் எவ்வித வாழ்க்கை முறைக்கு ஆளாக்கப்பட்டானோ அதைப் பொறுத்துள்ளது. அவனது வாழ்க்கை முறை, அவனது குடும்பம் என்னும் ஊடகத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. குடும்பம், அது அமைந்துள்ள குறிப்பிட்ட சமூகத்தின் எல்லா முதன்மையான - தனித்த கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. இவ்வாறு குழந்தைமை முதலாகவே மனிதன் குடும்பம் வாயிலாகச் 'சமூகமயமாக்கப்படுகிறான்'

Page 38
70 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
மனிதனின் தனித்தன்மையின் வளர்ச்சி
சில குறித்த கால கட்டங்களில், மனித ஆளுமையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளமை பற்றி எரிக்ட்ய்ராம், சுதந்திரத்தின் பயம்' நூலில் விவரிக்கிறார். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையுடன் ஒன்றான நிலைமையிலிருந்து விலகி எழுதுவதில்தான் மனிதனின் வரலாறு தொடங்குகிறது. (சில மானிடவியலாளர்கள் கூறும் ஆதி - இயற்கை ஆன்மவாதம் என்ற நிலை, மனிதன் பிரபஞ்ச ஒருமை பெற்றிருந்த நிலை இதிலிருந்து விடுபட்டு எழுந்ததுதான் மனித வரலாறு). பிரபஞ்ச ஒருமை நிலையில், மனிதன் தன்னைச் சுற்றியிருக்கின்ற பெளதீக இயற்கையோடு ஒன்றி- தனிமை உணர்வின்றி, , அந்நியமாதலின்றி - இருக்க முடிந்தது. ஆனால், அது அவனை தன்னை நிர்ணயித்துக் கொள்கின்ற சுதந்திரமான, ஆக்கபூர்வமானநிலையை எய்தவிடாமல் தடுத்தது. இம்மாதிரி நிலைமையில் மனிதன், பல இயற்கைச் சங்கடங்களால் அவஸ்தைப்பட்டாலும், முழுத் தன்னந் தனிமை, 'அவநம்பிக்கை' போன்ற மிகக்கொடிய துன்பங்கள் அவனைப் பாதித்ததில்லை. ஒருவேளை சமூக வளர்ச்சி என்பது ஒரு சீரானதானதாக அமைந்திருந்தால், மனிதன் முற்றிலும் அந்நியமாயிருக்க மாட்டான். ஆனால், தனித்தன்மையைக் காட்டிய ஒவ்வொரு சாதனையும் மேலும் மேலும் புதுப்புது முரண்களுக்கும் பாதுகாப்பின்மைக்குமே இட்டுச் சென்றன.
மத்தியகாலங்களில், மனிதன் இயற்கையோடு கொண்டிருந்த ஒருமையைக் கிட்டதட்ட முற்றிலும் இழந்துவிட்டான். ஆனால் சமூகத்துடனான ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை இழக்கவில்லை. அப்போதைய நிலப்பிரபுத்துவ சமூகம் மாற்றமற்றதாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் அவன் பிறந்த நிலைமைக்கேற்ற அந்தஸ்து, தொழில் இவற்றுடன் பிணைக்கப்பட்டிருந்தான். ஒரு புதிய வணிக சமூகத்தின் பிறப்புவரை, சமூகத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மாறுவது என்பது இயலாமலிருந்தது. ஓரிடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்கு நகர்வது, முன்பிருந்த போக்குவரத்து நிலைமைகளில் அதிகமாகச் சாத்தியமில்லை. சமூக அந்தஸ்து, தொழில் போன்றவற்றால் உடை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மதம், தனிமனித, பொருளாதார சமூக வாழ்க்கை முறைகளைக் கட்டுப்படுத்தியது. உதாரணமாக பொருளாதாரத் துறையில்,நியாயமான

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 71
விலை என்பது பொதுவாக அப்போதிருந்த சமய அமைப்புகளும் மனிதர்களும் உணர்ந்த ஒன்றே தவிர, சுதந்திரமான ஒரு சந்தையின் ஏற்ற இறக்கங்களால் உருவானதன்று.
பெரும்பாலான மக்கள் அழுக்கு, வறுமை, நோய்களுக்கிடையே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாலும் சமயத்தினால் (மனிதர்களதுஅர்த்தச்சட்டகம்) வாழ்க்கை சகித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. உதாரணமாக, கத்தோலிக்க திருச்சபை, ஒருவிதக் குற்ற உணர்வை மனிதர்களுக்கு அளித்தாலும், தனது மக்கள் யாவருக்கும் நிபந்தனையற்ற அன்பையும், கடவுளின் மீட்சியையும் உறுதி செய்தது. பிரபஞ்சமும் மனிதனின் அறிவுக் கட்டுக்கு உட்பட்டதாக - புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. மனிதனும் பூமியும் அதன் மையத்தில் இருந்தார்கள்: சுவர்க்கமும் நரகமும் இவற்றுக்கப்பால் இருந்தன; பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாக் காரியங்களும் ஒரு விதிப்படி நடந்தேறின.
மத்தியகாலச் சமூகத்தில் தனி மனிதன் தனது சுதந்திரத்தை இழக்க வில்லை என்று ஃப்ராம் சொல்கிறார். ஏனெனில், தனிமனிதன்' என்ற கருத்தாக்கமே அப்போது எழவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு புதிய வணிக வகுப்பு தோன்றியது. தனி முதலீடு, போட்டி, தனிமனித முயற்சி ஆகியவற்றை வலியுறுத்தியது. இதனால்நிலப்பிரபுத்துவத்தின் மாற்றமற்ற ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகியது; தனிமனிதத்துவம் வளர்ந்தது; மறுமலர்ச்சிக் காலத்தில் இம்மாற்றம் முழுமையடைந்தது. ஆதிக்கட்டிடங்களை எழுப்பிய சிற்பிகள் தங்கள் பெயரை அறிவித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை - மலர்ச்சிக் காலச்சிற்பிகள் மக்களுக்குத்தங்களை அறிவித்துக் கொள்ள விரும்பினார்கள். உடை, அந்தந்த மனிதர்களின் ரசனைக்கேற்றவாறு மாறலாயிற்று: கலை, தத்துவம், இறையியல் எல்லாவற்றிலும் தனிமனிதப் போக்கு பிறந்தது. கிரேக்க ரோமனிய தத்துவாதிகளுக்குப்புதுவாழ்வுகிடைத்தது. முன்பு மாதிரி மாறாத சமூகத் தளங்கள் இப்போது இல்லை: பணவசதிக் கேற்றாற்போல் ஒருவன் சமூகத்தில் உயரவோ தாழவோ முடிந்தது. மனிதன் தன்னை ஒரு ஆன்மீகத் தனிமனிதனாக உணர்ந்தான்: திருச்சபை கூடத்தேவையில்லாது போயிற்று.
இந்தப் புதிய தனிமனிதத்துவம், அரசியல் வட்டத்தில் புதிய தனியாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது. சுதந்திரம், தன்னுணர்வு

Page 39
72 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
ஆகியவற்றை அடைவதில், உணர்ச்சிபூர்வமான சுயபாதுகாப்பு என்பது இல்லாமற் போயிற்று. திருச்சபையினின்றும் விடுபட்ட பொருளாதார வாழ்க்கை ஒழுக்க வரையறைகளினால் கட்டுப்படுத்தப்பட இயலாமல், வெறும் சட்டங்களை மதிப்பதாக ஆகியது. மனிதன் தனது மரபுசார்ந்த அந்தஸ்தினால் பாதுகாப்பு உணர்வைப் பெற முடியவில்லை.
புரோடஸ்டாண்டியமும் புதிய முதலாளித்துவமும்
பொருளாதாரத் துறையில் முதலாளித்துவம் தோன்றியது. வாணிகத்தில் தனிமனித முயற்சி போலவே சமயத்திலும் திருச்சபையின் குறுக்கீடின்றி, தனிமனிதத்துவம் தோன்றியது. மனிதன் இப்போது கடவுளின் முன் தன்னந்தனியனாய், நிர்வாணமாய் நின்றான். மீட்பு என்பது கடவுளின் தனிவிருப்புச் சார்ந்ததாகிவிட்டது. மத்தியகாலத்தில், ஏழைகள் கடவுளின் அன்புக்குச் சிறப்பான பாத்திரங்களாகக் கருதப்பட்டனர்; இப்போதோ, ஏழ்மை என்பது அவமானமாகவும், செல்வம், கடவுளின் அங்கீகாரத்தின் ஒரு வாயிலாகவும் உணரப்பட்டது.
இந்த நிலை இன்னும் தீவிரமாகி, இன்றைய சர்வாதிகாரி - முழு முதலாளித்துவ சமூகத்தில், தனது குடும்பம், முழு, சமயம் எல்லாவற்றையும் இழந்துவிட்ட மனிதனின் ஒரே மாற்றாகச் சர்வாதிபத்தியம் உணரப்படுகிறது. ஒரு சர்வாதிகார அமைப்பில், மனிதன் தனது முதல்நிலை பந்தங்களிலிருந்து (குடும்பம் போன்றவை) விடுபட்டுவிட்டதால், தன்னந்தனிமை அவனைப் பயமுறுத்துகிறது-இதனை ஈடுசெய்ய இரண்டாம் நிலை பந்தங்கள் (தொழிற்சங்க உறவு போன்றவை) செய்ற்கையாக அளிக்கப்படுகின்றன. நவீன தொழில்மயச் சமூகத்தில் எல்லா தனிமனிதனால் பிரபஞ்சத்தின் மீது அறிவார்ந்த ஒழுங்கினையும் சுமத்திப் பார்க்க முடியவில்லை. எனவே சகிக்க முடியாத தன்னந் தனிமை, செயற்ற நிலை இவற்றிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் மனிதன் (சுதந்திரத்தின் பயம்)
உளவியல் ஒழுங்கமைவுகள்
மனிதன் தன்னைச் சமூகத்துடன் இணைத்துப் பொருத்திப் பார்க்கும் முயற்சியில் சில உளவியல் அமைவுகள் எழுகின்றன. இவற்றை அறிவியல் மாசோக்கிஸம், சேடிஸம், அழிப்பு எந்திரகதியான 'ஒத்துப்போதல் எனப் பிரிக்கிறார் ஃப்ராம்.

சமூக சிந்தனை - விரிபடுஎல்லைகள் 73.
1. அறிவியல் மாசோக்கிஸம் - அன்புக்கு அதிகமாக ஏங்கும் நரம்பியல் நோயைக் காட்டுகிறது. இவர்கள் தங்கள் போதாமை தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றையே எப்போதும் உணர்பவர்கள்மற்றவர்கள் மீது செயலற்று அதிகமாகச் சார்ந்திருக்க நினைப்பவர்கள். இதை இவர்கள் வழிபாடு, தாழ்ச்சி, விசுவாசம் போன்ற குணங்களாக வெளிப்படுத்துவார்கள்.
2. சேடிஸம், முன் குணத்திற்கு எதிர்நிலையானது. எனினும் இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல சேர்ந்தே இருப்பவை. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலத்தும் மனப்பாங்கு, தன்னை அளவுக்கு மீறி மற்றவர்கள் மீது சுமத்தல், துன்புறுத்தல் போன்ற குணங்கள் உடைய ஆளுமை.
3. சேடோ. மாசோக்கிஸத்திலிருந்த முற்றிலும் வேறுபட்டதல்ல அழிப்புத்தன்மை. தனது சக்தியின்மையிலிருந்தும், தனிமையிலிருந்தும் விடுபட முடியாத மனிதன், தனக்கு பயமுறுத்தலாக நினைப்பனவற்றை அழிக்க நினைக்கிறான், முரண்படுகிறான். (சுதந்திரத்தின் பயம்) A.
4. எந்திரகதி ஒத்துழைப்பு-தனக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளைத் துடைத்து, ஒற்றுமைகளை மட்டுமே வலியுறுத்தி, அவர்களோடு ஒன்றுபடுத்திக் கொள்ள தன் மூலமாகத் தனது கையற்ற நிலைமையிலிருந்து தப்பிக்க நினைத்தல்.
மனிதனின் தன்னந்தனிமை - அதற்கான தீர்வு
ஆக, இவ்வாறு மனிதன், பிரபஞ்ச ஒருமைப்பாட்டோடு இருந்த நிலையினின்றும் மாறி, இடையில், இயற்கையிலிருந்து பிரிந்தாலும் சமுகத்துடன் ஒற்றுமையோடிருந்து, இன்று இரண்டினின்றுமே அந்நியப்பட்ட நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கிறான். இதிலிருந்து தப்பிக்க மூன்றுவழிகள் இருக்கின்றன: (1) பேசாமல் சமூகநியதிகளோடு ஒத்துப் போய் விடுதலை - மனத்தாலும் செயலாலும். (வழக்கமான தீர்வு). (2) வெளியில் ஒத்துப் போவது போல் நடித்தாலும், உள்ளுக்குள் எதிர்த்தல் (நரம்பியல் தீர்வு). (3) தன்னைத் தனிமனிதனாக - படைப்பாற்றல் உள்ளவனாக உணர்தல் (படைப்பாற்றல் தீர்வ).

Page 40
74 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
சமூகத்தோடு ஒன்றியிருந்த மனிதன் அதனை இழந்தது, பெரமளவு பொருளாதாரக் காரணங்களால்தான். குறிப்பாக, முதலாளித்துவம் ஒரு மனிதனை மற்றவனுக்கு எதிரியாக்கி இவ்வாறாக்கிவிட்டது. மத்தியகாலப் பாதுகாப்புப் போனபின், மனிதன் அந்தஸ்துக்காகவும் அடையாளத்திற்காகவும் போராட ஆரம்பித்து விட்டான். வருவதற்காகவும் போவதற்காகவும், உயர்வதற்கும் தாழ்வதற்கும் ஆன இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்கு மனிதன் பயங்கர விலை கொடுக்க வேண்டிவந்துவிட்டது. கடைசியில், மிகுந்த மன அழுத்தத்தின் போது மனிதன் ஆதிக்க நடத்தைக்கு இடந்தந்தே"சுதந்திரத்தினின்றும் தப்ப முடிகிறது.
உலகத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளுதல்
மனிதன் உலகத்தோடு தன்னை இருவழிகளில் தொடர்புறுத்திக் கொள்கிறான் : (1) பொருள்களை மேலும் மேலும் சம்பாதித்தலும் சேமித்தலும். (2) மற்வர்களோடும் தன்னோடும் தொடர்புபடுத்திப் பார்த்தல். பொருள்களைச் சம்பாதித்தல், சேர்த்து வைத்தல் மட்டும் போதாது - அவற்றைத் தனது தேவைகளோடும் தொடர்புபடுத்தியாக வேண்டும். மனிதன் தன்னை மற்றவர்களோடும் தன்னோடும் தொடர்புபடுத்திப் பார்க்கும் வழிகளாக ஐந்து உள்ளன. - முன்பே குறிப்பிட்ட சேடிஸம், மசோக்கிஸம், அழிப்பு, எந்திரகதி, ஒத்தழைப்பு, இவற்றோடு இயல்பான - நார்மலான அன்பு - என்னும் ஐந்தாவது முறை. இந்த சமூகமயமாதல் முறைகளுக்கேற்பஐந்துவித குணச்சித்திரமாதிரிகள் மனிதர்களிடையே காணப்படுகின்றன. (1) ஏற்கும் மனிதன் (2) சுரண்டும் மனிதன் (3) பதுங்கும் மனிதன் (4) விற்கும் மனிதன் (5) படைக்கும் மனிதன். இவை தூய தனித்த வடிவங்களில் மனிதர்களிடையில் காண. முடியாது. பல வீதங்களில் ஒன்றோடொன்று கலந்துதான் இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு பண்பு ஆட்சி செலுத்துவதாக இருக்கும்.
குணச்சித்திர மாதிரிகள்
"சமூகத்தோடு ஒன்றிணையும்". சமூகமயமாகும் செயல்முறையில் மனிதசக்தி வழிச் செலுத்தப்படும் ஏறக்குறைய நிலையான வடிவம் தான் ஒரு மனிதனின் பண்பமைதி என்று எரிக்.ப்ராம் வரையறுக்கிறார்.

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 75
சமூகத்தின் உளவியல் கர்த்தாவாக இயங்கும் குடும்பம்தான் பண்பை உருவமைக்கிறது. இதனால் புறத்திலிருந்து செலுத்த வேண்டிய அழுத்தவிசை தவிர்க்கப்பட்டு, உள்ளிருந்து ஒரு கட்டாயம் திணிக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும், தனது ஆதிக்க சமூக - கலாச்சார வடிவங்களுக்கேற்ப, ஒரு பொதுவான 'சமூகப்பண்பை' தனது உறுப்பினர்களுக்கு அளிக்கிறது. இதன் மீதுதான், தனிமனித வேற்றுமைகள் பதிவது அல்லது சுமத்தப்படுதல் நிகழ்கிறது.
1) ஏற்பு ஆளுமை : இம்மாதிரிப் பண்புநலன் உடைய மனிதன், தனக்கு வேண்டிய யாவுமே வெளியிலிருந்து வரவேண்டியவை. அவற்றைத்தான் ஏற்கவேண்டும் என்று நினைக்கிறான். யாராவது அவன்மீது அன்பு செலுத்த வேண்டும், கவனித்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறான். ஃப்ராய்டு கூறிய வாய்வழி - ஏற்புப் பண்பு (ஒரல் - ரிசெப்டிவ்) எனக் குறிப்பிடப்படும் ஆளுமை இது.
2) சுரண்டும் ஆளுமை : தானே உண்டாக்கக் கூடிய பொருள்களையும் உண்டாக்காமல் பிறரிடமிருந்து எடுத்துக் கொள்ள நினைக்கும் மனிதன் இவன். வன்முறை மூலமாக இதனைச் சாதிக்கிறான். ஃப்ராய்டு கூறிய வாய்வழி - வன்முறைப் பண்பு (ஒரல் - அக்ரெசிவ்) ஆளுமை இது.
3) பதுக்கும் ஆளுமை : பதுக்குதலே இவ்வகை ஆளுமையுடையவனுக்கு பாதுகாப்புத் தரும் அம்சம். சேமித்தல் பண்பு இது. ஒழுங்குமுறை, ஒழுக்கம், காலத்தைக் கடைப்பிடித்தல், போதித்தல் பண்புகள் கொண்ட ஆளுமை ஃப்ராய்டு கூறிய ஆசனவாய்ப் பண்பு ஆளுமை இது.
4) விற்கும் ஆளுமை : சமூகமயமாதலுக்கு எந்திரகதி ஒத்துழைப்பு சார்ந்த ஆளுமை இது தன்னை விற்பதன் மூலமாகக் காரியம் சாதிக்கும் ஆளுமை. ஃப்ராய்டு கூறிய ஆண் ஆளுமை.
5) படைக்கும் ஆளுமை : மனிதர்களிடம் மெய்யான அன்பு செலுத்தக் கூடிய இயல்பான வளர்ச்சி பெற்ற ஆளுமை. ' தனக்குள் மறையும் உள்ளாற்றங்களை உணர்ந்து தன் சக்தியை ஆக்கவழியில் செலுத்தும் மனித ஆளுமை ஃப்ராய்டு குறிப்பிடும் இரு பாலுறவு சார்ந்த' (ஜெனிடல்) ஆளுமை.

Page 41
76 சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள்
சுய அன்பும், பிறர் மேல் அன்பும்
ஃப்ராய்டு.சுய அன்பு குறையக்குறையத்தான் பிறர் நலத்தின் மீது நாட்டம் உண்டாகும், சுய அன்பும், பிறர் மேலன்பும் எதிர்நிலையில் நிற்பவை என்றார். .ப்ராம், இவை இரண்டும் முரண்பட்டவை அல்ல என்கிறார். 'அன்பு என்பது பிளவுபடாதது, முரண்பாடற்றது". மெய்யான அன்பு படைப்பாற்றல் உள்ளது. ஆதரவு. பொறுப்பு, கெளரவம் அறிவு சார்ந்தது. செலுத்தப்படும் மனிதனின் மகிழ்ச்சி, வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டது அது.
நவீன கலாசாரத்திலிருக்கும் மனிதனின் இரங்கத்தக்கநிலை என்னவென்றால், அவன் தன் மீதுமட்டுமே அன்பு செலுத்துகிறான் என்ப தல்ல; அவன் தன் மீது போதிய அன்பு செலுத்திக் கொள்ளவில்லை - தனது 'உண்மையான சுயத்தின் மீத அவன் ஆர்வமே காட்டவில்லை என்பதுதான். இதேபோல ஈடிபஸ் சிக்கல் பற்றிய கருத்திலும் . ப்ராய்டுடன் முரண்படுகிறார் ஃப்ராம். ஈடிபஸ் சிக்கல் என்பது, ஒரு மகன் தாயுடன் கொள்ளும் தகாத உறவல்ல-அது. தந்தைவழிச் சமூகத்தில் தந்தையின் ஆதிக்கத்தை எதிர்க்கும் மகனின் புரட்சி. ஈடிபஸ், ஜொகஸ்தாவை மணப்பதாக வரும் இரண்டாவது பகுதி, மகன், தந்தையின் ஸ்தானத்தையும் உரிமைகளையும் பெறுகிறான் என்பதைக் குறிக்கும் குறியீடே ஆகும்.
தந்தைவழி ஆதிக்கம் அற்ற சமூகங்களில், மகனுக்கும் தந்தைக்குமான முரண்பாடும் இல்லை. ஈடிபஸ் சிக்கலும் இல்லை. தாய்வழிச் சமூகங்களில், குழந்தைமைப் பாலுணர்வு தாயின் மீது செலுத்தப்படுவதில்லை - மாறாக, சுயத்தின் மீதோ பிறரின் மீதோ பதிவாகிறது. ஃப்ராய்டு கூறியதுபோல, ஈடிபஸ் சிக்கலும் நரம்பியல் நோயும் தொடர்புடையன அல்ல. மாறாக, மனிதன், தந்தைவழி (அல்லது ஆதிக்க) சமூக ஏற்பாடுகளிலிருந்து தப்பித்துச் தந்திரமடைய விரும்புவதைத்தான் இவையிரண்டுமே காட்டுகின்றன.
இன்றைய் சமூக ஆதிக்கமும் விடுதலையும்
இன்றைய சமூக ஆதிக்கம், மனிதனிடம் மனமுறிவுகளை ஏற்படுத்துகிறது, இவை அவனிடமுள்ள அழிவு உந்தலைத் தூண்டு

சமூக சிந்தனை - விரிபடு எல்லைகள் 77
கின்றன. இவற்றை ஒடுக்க இன்னும் அதிக சக்தி தேவைப்படுகிறது. எனவே இன்னும் அதிக முறிவு, வன்முறையுணர்வுகள் தோன்றுகின்றன; இப்படியே இது தெர்ர்கிறது. இதற்காகக் கண்டு பிடிக்கப்படும் தீர்வுகளும் எல்லையற்ற புதிய புதிய முரண்பாடுகளை உண்டாக்குகின்றன.
ஆனால், இந்த நிலைமை ஏரிக்ஃப்ராம்மிடம் அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கவில்லை. "மனிதன் தன்னந்தனியனாதலும், அந்நியனாதலும் எவ்விதத்திலும் தவிர்க்கப்பட முடியாதவை. ஆனால், படைப்பாற்றல் திறன், மெய்யான அன்பு செலுத்தும் உறவுகள் இரண்டும் மட்டுமேதான் மனிதனை எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்கிறார். வெறும் நரம்பியல் தடுப்பு வழிமுறையாக அமையாத, மெய்யான, நோமையான சுய அன்பிற்கும், பிறர் மீதான அன்பிற்கும் வேற்றுமையோ முரண்பாடோ இல்லை. நிச்சயமின்மையும் அவநம்பிக்கையுமே மனிதனை முன்னேற்றத்தில் ஈடுபடுத்தியுள்ளன. மனிதன் பீதியின்றி உண்மையை நோக்க முடியும் என்றால், தன் ஆற்றல்களை வெளிப்படுத்துவதனால் தன் வாழ்க்கைக்கு அளிக்கக்கூடிய அர்த்தத்தினைத் தவிர வேறெவ்வித அர்த்தமும் வாழ்க்கைக்கு இல்லை என்பதை உணரமுடியும்" (மனிதன் - தனக்காக" நூலில் எரிக்..ய்ராம்.)

Page 42
D
ற்
பணிபாடு உங்கள் நூலகம் காலச்சுவடு
96.06)
நிகழ்
சோ.கிருஷ்ணராஜா கி. அரங்கன் க.சண்முகலிங்கம் க.பூரணச் சந்திரன்


Page 43


Page 44