கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நச்சுமரமும் நறுமலர்களும்

Page 1


Page 2

நச்சு மரமும்
நறுமலர்களும்

Page 3
திக்குவல்லை கமால் - நூல்கள்
* கோடையும் வரம்புகளை உடைக்கும் - 1984
(சிறுகதைகள்)
* குருட்டு வெளிச்சம் - 1993
(சிறுகதைகள்)
* ஒளி பரவுகிறது - 1995
(நாவல்)
* விடுதலை - 1996
(சிறுகதைகள்)
* விடை பிழைத்த கணக்கு - 1996
(சிறுகதைகள்)
* புதியபாதை - 1997
(சிறுகதைகள்)
* நச்சு மரமும் நறுமலர்களும் - 1998

நச்சு மரமும் நறுமலர்களும்
திக்குவல்லை கமால்

Page 4
நச்சு மரமும் நறுமலர்களும் (நாவல்)
உரிமம்
முதற்பதிப்பு
அட்டைப்படம்
அச்சுப் பதிவு
பக்கங்கள்
திக்குவல்லை கமால்
gublJiř1998 ஜவ்ஸி குயிக்கிரபிக்ஸ் 116 - 8 - 124
NACHCHUMARAMUM NARUMALARKALUM (NOVEL)
COPYRIGHT FIRST EDITION
ISBN NO
COVER DISIGNED BY
PAGES
PRINTED BY
PRICE
DKWELLA KAMAL DECEMBER 998
955.95926-29
JAWSY
ll 6 + 08 - 124
OUICK GRAPHICS PRINT, KOIAHENA, COLOMBO - 13.
77/
 

சமர்ப்பணம்
காலஞ்சென்ற அப்துல் காதர் (அதக்கார்) மோதீனப்பா
அவர்களுக்கு

Page 5

திறவுகோல்
சின்னஞ் சிறுவனாக என் பிறந்த மண் மீது சுற்றித்திரிந்த நினைவுகள் பசுமையானவை. நோன்பு காலம் சிறுவர்களுக்கே உரித்தானது. எவ்வளவு
குதுகலமும் ஆரவாரமும். அன்றாட நடவடிக்கைகள் அத் தனையுமே அடி தலை மாறிய இயக்கம்.
இப்பொழுது நினைத்தாலே நெஞ்சு கசிகிறது. இளமை மீண்டும் வரப்போவதில்லை என்பதற்காக அல்ல; இன் றைய சிறார்களிடமிருந்து இந்த நோன்புகாலக் கிராமியத் தனித்துவமும் குதூகலமும் அந்நியமாகிவிட்டதே என்பதற் காகத்தான். இந்தச் சிறிய நாவல் பொதுவான சமூகப் பிரச்சினைகளைத் தான் பேசுகிறது. ஆனால் நோன்பு காலத்தை சுற்றிச் சுழல் கின்றது. அவ்வளவுதான்.
மேலும், இதனை ஒழுங்குபடுத்தி உதவிய சகோதரன் எம்.எம்.ஹிதாயதுல்லாஹ்வை மறக்கவில்லை. நூல் வெளி யீட்டு உதவித் திட்டத்தின் கீழ் துணைநின்ற தேசிய நூலக சேவைகள் சபைக்கு எனது நன்றி.
191/B அட்டுலுகம, திக்குவல்லை கமால் பன்டாரகம, இலங்கை,

Page 6
நச்சு மரமும்
நறுமலர்களும்

ஒன்று
அன்றைய மாலைப் பொழுதுக்கு என்றுமில்லாத வர வேற்பு. அந்த மாலைப் பொழுதின் மலர்ச்சியால் நூற்றுக் கணக்கான முகமலர்கள் பூத்துச் சிரித்தன. இத்தனை மலர்ச் சிக்கும் காரணமான அந்தப் பிறை நிலா அடிவானத்தில் மெல்ல எழுந்து கொண்டிருந்தது. மாதாமாதம் இளம்பிறை வானவீதியில் குறுநடை பயில்வது வழமையானதுதான். எனினும், அன்று அந்த இளம் பிறைக்கு இத்தனை வர வேற்பும் ஆரவாரமுமென்றால் நிச்சயமாக அது ரம்ழான் முதற்பிறையாகத்தானே இருக்க வேண்டும்! 'பொற கண்டோவ்' சிறுவர் பட்டாளத்தின் களிபேருவகை அந்தப் பகுதியெங் கும் எதிரொலித்தது. 'நாட்டின் பல பகுதிகளிலும் பிறை காணப்பட்டுள்ளதால் நாளை முதல் புனித ரம்ழான் நோன்பு ஆரம்பமாகும்' அனைவரது மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்துமாப் போல் இந்த வானொலிச் செய்தியும் ஒலிபரப்பாகியது. பள்ளிவாசலுக்குள் அன்று ஒரு விளக்குக்குக் கூட ஓய் வில்லை. எல்லாமே ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த ஒளிப்பிரவாகத்துக்குள் உட்சாலை மார்பல் தளம் பளபளத் தது. பாய்களுக்கு மேலாலும்கூட வெளிச்சாலைகளில் தூய வெண்பிடவை விரிப்பதில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர்.
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 7
இத்தனையும் அன்றுமுதல் ஆரம்பமாகவிருக்கும் ரம்ழான் மாத விசேட தராவீஹ் தொழுகைக்காகத்தான்.
ஒதல்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பக்கச் சாலையை ஒழுங்குபடுத்துவதில் மோதீனப்பா கவனமாக இருந்தார். பள்ளிவாசலின் அன்றாடக் காரியங்கள் அனைத்தையும் கவனிக்கும் முழுநேர ஊழியர்தான் அவர். அவருக்கென் றொரு பெயர் இருந்த போதிலும் காலப்போக்கில் அது மறைந்து போய் தொழிற் பெயரே அவரின் நிலையான பெயராகப் பதிவாகிவிட்டது. பாவம்; நோன்பு காலத்தில் அவருக்கு இரவில்கூட ஓய்வில்லை.
வேலையோடு வேலையாக அவர் நேரத்தையும் அவதா னித்துக் கொண்டார்.
எட்டு மணிக்குப் பத்தே நிமிடங்கள் இருக்கும் போது இஷாத் தொழுகைகான அழைப்பு மோதீனப்பாவின் கம்பீர மான குரலில்.
'அல்லாஹ"அக்பர். அல்லாஹ"அக்பர்.
★ ★ ★ ★ ★
G2) திக்குவல்லை கமால்

இரண்டு
இரவு ஒரு மணி. ஊரின் எல்லையை வந்தடைந்து அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள் மோதீனப்பாவும் காஸிம் காக்காவும் அவ ரது மகன் ஃபாஸியும்!
பதினொரு மாதமும் நல்ல நித்திரை கொள்ளும் நேரமான, பன்னிரண்டு மணிமுதல் அதிகாலை ஐந்து மணிவரை யிலான நேரத்திற்குள் எழுந்து. சமையல் செய்து. சாப்பிடுவதென்றால் கொஞ்சம் சிரமமான காரியம் தானே. நித்திரையில் அயர்ந்து விடிந்து போய் விடாமல் அனை வரையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுப்பிவிடும் நடை முறையாகத்தான் பல்லாண்டுகளாக 'பாய்தட்டல் அமுல் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிவாசல் நிர்வாகத்துக்குக் கீழான இந்த ஏற்பாட்டைக் கிரமமாக செயல்படுத்தி வருபவர்கள் மோதீனப்பாவும் காஸிம் காக்காவும் தான். கூடவே காஸிம் காக்காவின் மகன் ஃபாஸியும் சின்ன வயது முதல் பக்கத்துணையாக ஈடுபட்டு வருகிறான். சும் மாவல் ல; அவனுக்கும் இத்துறையில் பத்தாண்டு அனுபவம். அத்தோடு இருபத்தைந்து வயது இளைஞன். காய்ந்த ஒலைச் சருகுகளைக் கொளுத்தி, சுழற்றிச் சுழற்றி ரபானைச் சூடுகாட்டி எடுத்துக் கொண்டார் காஸிம் காக்கா.
மென்சூட்டின் மதமதப்பில் அவரது கைவிரல்கள் தவழும்
நச்சுமரமும் நறுமலர்களும் Gs)

Page 8
போது 'ங்ொய்ங்' என்ற மெல்லொலி எழுப்பியது ரபான்.
இருவரும் ஸாரன். இடுப்புப்பட்டி. கைபெனியன். தொப்பியுமாகக் காட்சியளித்தனர். ஒருவர் கையிலே ரபான். அடுத்தவரிடம் கொளுத்திய ஒலைக் கற்றை. ஃபாஸியிடம் அரிக்கன் லாம்பு. மூவரும் தொங்கல் முனையிலிருந்து புறப்பட்டுவிட்டார் கள். முதல்நாள்தானே, காஸிம் காக்காவின் குரலும் அதற் கேற்றாற் போன்ற ரபான் முழக்கமும் ஆழ்ந்த அமைதிக் கூடாக காற்றிலே கலந்தது.
“ஊராரே ஊரு நாயமாரே - நாங்க உற்ற ஸலவாத்தும் உள்ளவரே! டும்டும்டும்.டும். டும்டும்டும். டும்." ‘பைத்தின் ஓரடி முடிந்து, அடுத்த அடி தொடங்குவதற் கான இடைநேரத்துக்குள் மோதீனப்பா அவ்வப் பகுதி வீட்டுக்காரரின் பெயரைச் சொல்லி ‘'எழும்புங் கோ' என்றொரு சத்தமும் வைத்து விடுவார். நேர்பாதையால் பள்ளியை அடைந்தால் அங்கிருந்து மரைக் கார் வீதிக்குத் திரும்பி, அதிலிருந்து மலை வளவால் மீண் டும் பிரதான வீதிக்கு இறங்கினால், முதலாம் கட்டம் பூர்த்தியாகிவிடும். அரைவாசிப் பகுதியை முடித்து விட் டோமே என்ற பெருமூச்சும் அவர்களுக்குள்ளிலிருந்து விடைபெறும். முதல்நாள் கொஞ்சம் களைப்பும் இருக்கும்தானே? எப் படியோ மலைவளவால் வந்திறங்கியதும் அங்கு சொல்லி வைத்தாற் போல, மோதீனப்பாவின் வீடுதான். சற்றுத்
G.) திக்குவல்லை கமால்

தள்ளி தோட்டத்துக்குள் அவர்களை அழைத்து நின்றது. அங்கே கொஞ்ச நேர ஓய்வு. தொடர்ந்து இயங்க ஒரு கோப்பைத் தேநீர். இது வருடாந்த நடைமுறை. மூவரும் முற்றத்தைப் போயடைவதற்கும் வீட்டுக் கதவு திறப்பதற்கும் சரியாகவிருந்தது. கதவைத் திறந்தது. மெல்லச் சிரித்தபடி ரினோஸாதான்.
மகள். தேத்தண்ணி கொஞ்சம் ஊத்துங்கோ. ” மோதினப்பாவின் பணிப்பு அது. மகளுக்குப் பணிப்பை விடுத்ததோடு, எரிந்து கொண் டிருந்த ஒலைக்கற்றையைத் தட்டி அணைத்துவிட்டு ஒரு பக்கமாகக் குவிக்கப்பட்டிருந்த மணலின் மீது அமர்ந்தார் அவர். காஸிம் காக்காவும் ரபானைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தார்.
இனி என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூட சிந்திக்க மறந்த ஃபாஸி, அந்த மங்கலான இருளுக்குள் பிரகாசித்த ரினோஸாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சின்ன வளாகத்துள்ளித் திரிந்து கொண்டிருந்தவள் வருடாவருடம் காணும் தோறும் புதுப் புது மதாளிப்புடன் காட்சி தரு கிறாளே என்றோ என்னவோ?
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் Gs)

Page 9
மூன்று
நோன் பின் வருகையை எதிர்நோக்கி, பள்ளிவாசலின் பின்பக்கச் சுவரையும் ஆதாரமாகக் கொண்டு, தற்காலிக அமைப்பொன்றை எழுப்பிவிடுவார்கள். அதை அடுத்த இருமாதங்களுக்குள் வந்து சேரும் புறுதாக் கந்தூரி வேலை களுக்கும் உபயோகப்படுத்துவது வழமை. அந்தத் தற்காலிக அமைப்புக்கும் சிறார்களுக்கும் நிறையச் சம்பந்தமுண்டு. அதை அவர்களின் வார்த்தைகளில் ‘கஞ்சி மடுவம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நோன்பு காலத்தில் கஞ்சி காய்ச்சப்படுவதும் வழங்கப் படுவதும் அதில்தான். அப்பொழுது நேரம் நாலுமணியையும் தாண்டியிருந்த தென்றால், தலை நோன்பின் முக்கால் பகுதிக்கும் அதிக மாக கடந்துவிட்டதென்றுதான் கருத்து. பெரிய செம்புச் சட்டியில் கஞ்சி காய்ச்சி நெருப்பை அணைத்துவிட்டு. தணலைத் தூர்ந்து போட்டு இன்னும் அரைமணி நேரம் கூட நகர்ந்துவிடவில்லை. கொஞ்சம் ஒய்வெடுக்குமாப்போல் காஸிம் காக்கா ஒரு பக்கமாகவும் மகன் ஃபாஸி மறுபக்கமாகவும் அமர்ந்தனர். முற்பகல் பதினொரு மணிக்கே தொடங்கிய வேலை அப்படியும் இப்படியுமாக இப்பொழுதான் முடிந்தது. நல்ல களைப்பு
இருவருக்கும். சாதாரண நாட்களென்றால் பரவாயில்லை.
ஆனால் அவர்களின் ஒய்வெடுப்பு அவ்வளவு நேரம்
G6) திக்குவல்லை கமால்

நீடிக்கவில்லை. கூட்டம் கூட்டமாக சிறார்கள் அங்குவந்து நிறையத் தொடங்கிவிட்டார்கள். போதாக்குறைக்குத் தங்களை மறந்த விளையாட்டுக் கூச்சல், தலைநோன்பு இல்லையா? ஆரவாரம் சற்று அதிகம்தான். காஸிம் காக்கா மகனின் முகத்தை ஒருமுறை உற்றுப் பார்த் தார். அந்தப் பார்வை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. ஒய்வெடுத்தது போதும் இனி அடுத்த காரியத்துக்குத் தயாராவோம் என்பதுதான்.
இருவரும் எழுந்தனர். கஞ்சி முட்டி ஆடை படர்ந்து இறு கிப் போயிருந்தது. முதற்பணியாக வந்து சேர்ந்திருக்கும் சிறு முட்டிகளை நிறைத்து வைக்க வேண்டுமல்லவா? லெப்பை. மத்திச்சம். ஆலிம் ஷா என்றால் பெரிய மனிதர்களாயிற்றே! அவர்களுக்கு எங்குதான் முன்னுரிமை இல்லை.
சொல்லி வைத்தாற் போல் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தார் பெரிய மத்திச்சம். முதலாம் கஞ்சி அவருடை யதுதான்.
இப்படியாக போதிய வசதியுடையவர்கள் நாளுக்கொரு வராக முப்பது நோன்புக்கும் தெரிவு செய்யப்பட்டுள் ளார்கள். அவர்கள் வேளைக்கு, அரிசி. தேங்காய். இன்னும் தேவையான சாமான்களை ஒப்படைத்து விட் டால் இனி அவர்களின் பொறுப்பு முடிந்துவிடுகின்றது. பொதுவாக 'இத்தனையாம் நோன்பு" என்றால் 'இன்னா ரின் கஞ்சி' என்று சாதாரணமாக யாருமே சொல்லிவிடக் கூடிய அளவுக்கு எவருக்கும் தெரிந்த விடயம்தான் இருந் தாலும் குறிப்பிட்ட நாளில் அப்பக்கமாக கொஞ்சம்
நச்சுமரமும் நறுமலர்களும் G.)

Page 10
மார்பை முன்னே போட்டுக்கொண்டு ஒரு ராஜ நடை நடப்பதைப் பலரும் பெருமையாகக் கருதிக் கொள்வார் கள். அந்த வரிசையில் ஒருவர்தான் அவரும் என்பதை இதற்குமேல் சொல்லவா வேண்டும்?
பெரிய மத்திச்சத்தைக் கண்டதும் வாப்பாவும் மகனும் மரியாதைச் சிரிப்பு மலர்ந்தனர். அதை ஏற்றுக் கொண்டாற் போல், பதிலுக்கு அவரும் சிரித்து விட்டு மெல்ல அப் பக்கமாக நகர்ந்தார்.
அரைவாசியளவு கஞ்சி முடிந்துவிட்டது. இனிப்பகிர்வது தான் அடுத்த காரியம். இருவரும் சேர்ந்து சட்டியைப் பிடித்திறக்கி, பழைய டயரொன்றின் மேல் சரிவாக வைத் தனர்.
அகப்பையோடு காஸிம் காக்கா வந்ததுதான் தாமதம், முட்டி மோதிக்கொண்டு சிறுவர் சிறுமியர் அடிதடிபட் டனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பத்துப் பேர் சேர்ந்தாலும் போதாது தான். என்றாலும் ஃபாஸி ஒரு வன்தான் அதனைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது.
'தள்ளிக் கொளாம நில்லுங்கொ." - ஃபாஸி பலமுறை கத்தியபோதும். அதை அவர்கள் காதில் போட்டுக் கொண்டால்தானே?
காஸிம் காக்கா, ஒவ்வொருவரதும் பாத்திரங்களில் பரு மனுக்கேற்ப அகப்பையால் இரண்டு மூன்றாக ஊற்றிக் கொண்டிருந்தார்.
நோன்பு திறந்ததும் கஞ்சி குடிப்பது எங்கும் வழக்கமாகப் போய்விட்டதொன்று. பெரும்பாலும் தத்தமது வீடுகளிலே
நீக்குவல்லை கமால்

காய்ச்சிக் கொள்வார்கள். மிகவும் வசதிப் பலவீனமுடைய வர்களுக்குத்தான் பள்ளிக் கஞ்சி கைகொடுக்கிறது.
காஸிம் காக்கா, கால், கைகளை நீட்டி நிம்மதிப் பெரு மூச்சொன்றை வெளிக்கக்கினார். கைப்பட இரண்டு வாளித் தண்ணிர் அள்ளிக் கொண்டு வந்து வெற்றுச் சட்டியில் ஊற்றிவிட்டான் ஃபாஸி. காலம் தாழ்த்தினால், காய்ந்து ஒட்டிப்போய். பிறகு கழுவுவதிலுள்ள சிரமம். அதனை ஏற்கனவே அனுபவித்துள்ள அவனுக்கல்லவா தெரியும்.
'காஸிம் காக்கா. நோம்பு தொறக்கிய டைமாகீட்டே." - மோதீனப்பா பள்ளிக்குள்ளிருந்து சொன்னார்.
g. . . . . . . ge. . . . . . . ' - என்றார் காஸிம் காக்கா.
எப்போது பாங்கு ஒலிக்குமென்று எதிர்பார்த்தபடி அங்கு மிங்குமாக உலாவிக் கொண்டிருந்தான் ஃபாஸி.
★ ★ ★ ★ ★
நச்சுயரமும் நறுமலர்களும் God

Page 11
நான்கு
நோன்புப் புத்தகத்தின் முதல் ஒற்றை புரட்டப்பட்டு விட் டது. ஆரம்பம் என்பதால் சிரமம் தானே. என்றாலும் நோன்பு துறந்ததும் மீண்டும் பழைய உற்சாகம்.
தராவீஹ் தொழுதுவிட்டு வந்த ரினோஸா, உம்மாவோடு சேர்ந்து ஸஹர் சாப்பாட்டுக்கான ஆயத்தங்களைச் செய்து முடிக்கையில் பத்துமணியாகிவிட்டது. வழக்கமாக அந்த நேரத்தில் வெளியே மயான அமைதி. வெளியிறங்குவதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. ஆனால் ரம்ழான் மாதத்திலென்றால்.
வாசல் கதவைத் திறந்துகொண்டு முற்றத்துக்குவந்து பாதை யின் இரண்டு பக்கமாகவும் எட்டிப் பார்த்தாள் ரினோஸா. கண்ணெட்டும் தூரம் வரை சன நடமாட்டம் தெரிந்தது.
வளைவில் அமைந்துள்ள தாஹிர் நானாவின் தேநீர்க் கடையின் பெற்றோல் மெக்ஸ் வெளிச்சப் பரவல் அலாதி யாகத் தெரிந்தது. அங்கு எப்பொழுதுமே ச்னச்செறிவு. கூடி நிற்கும் தமாஷ் பேர்வழிகளின் வெடிச்சிரிப்புக்கள் கூட தெளிவாக அவள் காதில் விழத்தான் செய்தது.
சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது நோன்பு காலம் எவ்வளவு சந்தோஷமானது? அப்போதெல்லாம் ரினோஸா வீட்டில் தங்குவதேயில்லை. பகல் பொழுது கஞ்சி மடுவத்தில் ஒருவாறு கழிந்துவிடும். இரவில் கூட் டாளிகளோடு கூடிக்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் கதை
திக்குவல்லை கமால்

த்து விளையாடியே காலத்தைக் கரைத்து விடுவாள். அந்தக் கதைகளின் ருசி இப்போது அவளை என்ன பாடுபடுத்து கிறது!
இந்த மூன்று வருடங்களாக உம்மாவின் கண்காணிப்புக்கு அப்பால் கொஞ்சம் கூட அவளால் இயங்க முடிவதில்லை. தனது உடற்கூற்றில் இவ்வளவு அவசரமாக ஏனிந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூட அவள் சில வேளை களில் யோசிப்பதுண்டுதான். என்றாலும் என்ன செய்ய? காலங்களும் அதன் பருவ முதிர்ச்சிகளும் எதற்காகவுமே காத்திருப்பதில்லையே. 'கொமருப் புள்ளயள் ஊருப்பேச்சிக் கேக்காம வளரோ ணும்' இது அவளது வாப்பாவின் மூலமந்திரம். இதனையடி யொற்றித்தான் அவளது உம்மாவும்கூட அவள் விடயத்தில் இவ்வளவு அக்கறையோடு நடந்து கொள்கிறார் என்பது ரினோஸாவுக்குப் புரியாததொன்றல்ல. உண்மைதானே? ஊர் வாயை யாரால் தான் மூட முடியும்? அதுவும் பருவப் பெண்களைப் பற்றியதென்றால் புரியாணி மாதிரிதான்.
'மகள். உள்ளுக்கு வாங்கொ. கதவப் பூட்டோம்." வெளியே பார்த்தபடி எதையோவெல்லாம் மனதுக்குள் உருட்டிக் கொண்டிருந்த ரினோஸாவை உம்மாவின் அழை ப்புக் குரல் உள்ளே இழுத்துச் சென்றது.
'இனி பாய்தட்டி வரங்காட்டீம் படுக்கோணும்'
நச்சுமரமும் நறுமலர்களும் GD

Page 12
லாம்பை தணித்து வைத்து விட்டு இருவரும் படுக்கையில் விழுந்தனர். வெளியே பேச்சுக் குரல்கள். சனநடமாட் டங்கள் அனைத்தும் ரினோஸாவின் காதுகளை விட்டு வைக்கவே இல்லை. அவற்றோடு உம்மாவின் குறட்டை ஒலியுந்தான்.
போர்வையை இழுத்துப் போர்த்தி மறுபக்கம் புரண்டு படுத்தாள். சற்று நேரத்தில் அடுத்த பக்கம் திரும்பினாள். மல்லார்ந்து படுத்தாள். குப்புறப் படுத்துப் பார்த்தாள். நித்திரை அவளுக்கு எட்டாக் கனியாக விளையாட்டுக் காட்டியது. அதற்குப் பதிலாக மனதிலே நினைவலைகள் மோதத் தொடங்கின.
அவளுக்குத் தெரிந்த காலம் முதலே அவளது வாப்பா பள்ளிவாசலில்தான் வேலை. நோன்பு காலம் வந்தால் வாப்பாவுக்கு காஸிம் காக்கா இணைபிரியாத் தோழர். அதேபோல அவர்களின் மனைவிமார்கள் கூட நல்ல பழக்கம்தான்.
நோன்பு நாட்களில் காலை பத்து மணிக்கெல்லாம் ரினோஸா கஞ்சி மடுவத்தை அடைந்து விடுவாள். அங்கே அவள் வயதொத்த இன்னும் பலரும் இருக்கவே செய் வார்கள். என்றாலும் அவர்களெல்லாம் ஒரு வட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான்.
தேங்காய் துருவும் படலம்தான் முதன்முதல் ஆரம்பமா கும். ஆளோடு ஆளாக ரினோஸாவும் துருவ முயற்சிப் பாள். அது முடிய அரிசி கழுவும் வேலை தொடங்கும். உம்மாவோடு ஒட்டி நின்று அங்கு சுழன்று கொண்டிருப்ப தில் பொழுது போவதையே அவள் மறந்து விடுவாள்.
G12) திக்குவல்லை கமால்

அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. கட்டைக் களிசான் துண்டுடன். ஃபாஸி அங்கு காட்டித் திரியும் கோமாளிக் கூத்துக்கள். பள்ளிவாசல் பின்புறத் தோட்டத்தில் படர்ந் திருக்கும் வயர் போன்ற ஒருவகைக் கொடியைப் பிடுங்கிக் கொண்டு வந்து, அதனால் சுற்றி வளைத்து அவளை இழுப் பான் ஃபாஸி. சில நேரங்களில் அவள் அவனை விரட்டிக் கொண்டு ஓடுவதுண்டு. ஓரளவு வளர்ந்த பருவத்தில் கஞ்சிச் சட்டிக்கு நெருப்புப் போட, கொள்ளி. காய்ந்த ஒலை போன்றவை சேகரிக்க மலைக்காட்டில் அலைவதுண்டு. சேகரித்தவைகளைக் கட்டி ஃபாஸி அவளது தலையில் தூக்கி வைத்துவிடுவான். பின்பு அவனுமாக அவற்றைச் சுமந்து கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
அப்போதெல்லாம் அவனுக்கு ரினோஸாமீது நல்ல அன்பு. அவளுக்கும் அவனைப் பிரிய மனமில்லை. ஏனென்றால் அவன் அவளுக்கு காட்டுக்குள் புகுந்து, சிமிட்டிக்காய். தைரியமாக மரமேறிக்கூட காட்டாமணக்கு. இப்படி எத்தனை வகைகளைக் கொண்டு வந்து கொடுப்பான். காலம் சும் மாதான் இருக்குமா? இப்பொழுது மூன்று ஆண்டுகளாக. பழைய நினைவுகளை மீட்டிக் கொள்வது தான் ரினோஸாவுக்கு வேலை. சிலவேளை இந்த நினைவு களை ஃபாஸியும் புரட்டிப் பார்ப்பானோ? அவனுக்கும் இவையெல்லாம் ஞாபகமிருக்குமோ? என்றெல்லாம் அவள் யோசிப்பதுண்டு. சில நேரங்களில் நேரில் காணும் போது கேட்போமா என்றுகூட அவள் எண்ணிப் பார்ப்
நச்சுமரமும் நறுமலர்களும் C3O

Page 13
பாள். ஆனால் அது கைகூடக்கூடிய சூழ்நிலையா இருக் கிறது?
'டும்டும். டும். டும்டும். டும்."
வெகு தொலைவிலிருந்து ரபான் ஒலி மெல்ல மிதந்து வந்து அவள் காதுக்குள் நுழைந்து பழைய இரைமீட்டலைத் தடுத்தது. அந்தப் பக்கமாக வருகிறார்களென்றால், எப் படியும் ஒருமணி நெருங்கியிருக்க வேண்டும். மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்து லாம்பைக் கொஞ்சம் தீண்டிவிட்டு. குசுனிக்குப் போய் அடுப்பில் தண்ணீர் வைத்தாள். வரவர ரபான் சத்தம் அருகருகே வருவது தெரிந்தது.
முந்தானைத் தொங்கலால் முகத்தை நன்கு துடைத்துக் கொண்டாள். விரல்கள், தூர்ந்து போயிருந்த கொண் டையை நீவிச் சரிப்படுத்திக் கொண்டன. ஸாயா. சட்டை களை ஒழுங்குபடுத்திக் கொண்டாள்.
"நாட்டாரே நாட்டு நாயமாரே நாங்க
நல்ல பரக்கத்தும் உள்ளவரே.
டும்டும்டும். டும்."
காஸிம் காக்காவின் குரல் அவளுக்குத் தெளிவாகக் கேட் டது. கதவுத் துளையால் வெளிச்சம் கசிந்து வந்தது. இனி யென்ன கேட்கவா வேண்டும்? ஓடோடிப் போய் கதவைத் திறந்தாள். அப்போது மூவரும் வளவுக்குள் புகுந்து கொண் டிருந்தார்கள். ஃபாஸியின் கையில் வழமைபோல் அரிக் கன் லாம்பு தொங்கியது.
★ ★ ★ ★ ★
திக்குவல்லை கமால்

图画á
ஐந்து நோன்புகள் நகர்ந்துவிட்டன. அன்று ருஹர் தொழு கைக்குப் பின்பு பள்ளிவாசலில் ஒருசிலர் அமர்ந்து குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கமாக ஒதுங்கி கொஞ்சம் சாய்ந்து கொண்டால் நல்லது போல் பட்டது மோதீனப்பாவுக்கு. அதற்கிடையில் ஏதாவது ஆகவேண்டிய வேலைகள் ஞாபக மறதியால் விடுபட்டுப் போயிருக்குமாவென்ற சந்தேகமும்கூட.
முற்பகல் பொழுதுக்குள் ஹவுலுக்கு தண்ணீர் நிறைத் தல். தூசுதட்டல். பாய்களை ஒழுங்குபடுத்தல். சிறுநீர்க் கழிவகங்களைத் துப் புரவு செய்தல் முதலிய வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டார். மத்திச் சம் ஹாஜியார் வந்துவிட்டாரென்றால் ஒழுங்காக முடிக்கப் பட்டுள்ள வேலைகளைப் பற்றி எந்தவிதத் திருப்தியும் தெரிவிக்கமாட்டார். அதற்கு அப்பால் ஏதும் செய்திருந் தாலும் 'கப்சிப் தான். எங்கே என்ன குறையுண்டு என்றே அவரது கண்கள் தேடும். ஒரு தனிமனிதனால் ஒரு பெரிய புனிதத்தலத்தையே தூய் மையாக வைத்திருப்பதென்றால், இலேசான காரியமா என்ன? அதனால்தான் புதிது புதிதாக வந்தவர்களெல்லாம், ஒருமாதம் ஒருவாரத்தோடு சொல்லாமல் கொள்ளாமல் நழுவிட்டார்கள். கடைசியில் வயது முதிர்ந்த போதிலும் அவரேதான் அங்கே தொடர்ந்தும் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்.
நச்சுமரமும் நறுமலர்களும் G15)

Page 14
மோதீன் வேலையென்றால் சும்மாவா? அதற்குத் தனித் திறமை தகைமைகள் இருந்தேயாக வேண்டும். பள்ளிவாச லுடன் மாத்திரம் முற்றுப் பெற்றுவிடுகிறதல்லவே அது. அதற்கு அப்பால் முழு ஊருக்கும் வியாபித்ததாயிற்றே. அதனால் அதே ஊர்வாசி ஒருவரால்தான் அதனைச் சிறப் பாகக் கையாளவும் முடியும்.
எதையோ மனதில் கிரகித்தபடி ஒருமுறை பள்ளிவாசலுக் குள் சுற்றி நோட்டமிட்ட மோதினப்பா வெளிப் பக்க இடைச்சாலையில் காற்று தாராளமாகப் புகுந்து விளை யாடக்கூடிய இடமாகப் பார்த்து கைகளிரண்டையும் கோர்த்துத் தலையணையாக்கி மெல்லச் சாய்ந்தார்.
மோதீனப்பா அந்த மண்ணில் பிறந்து. வளர்ந்து. அறுபது ஆண்டுகளை கடத்திவிட்டார். பள்ளிவாசலுக்கும் அவரது பரம்பரைக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு போலும். அவரின் வாப்பாவும் அதே பள்ளிவாசலில் மோதீன் வேலை செய்தவர்தான். வாப்பாவோடு சேர்ந்து சின்னப் பருவம் முதலே எல்லா விஷயங்களிலும் தொடர்பு பட்டது, அவருக்கு இந்த உத்தியோகத்துக்கு முன்அனுபவ மாக அமைந்துவிட்டது.
அவருக்கு இருபத்தைந்து வயதாகும் போதே வாப்பா மெளத்தாகிவிட்டார். அதன்பின்பு அந்தப் பொறுப்பு அவருக்கே வந்து சேர்ந்துவிட்டது. அதனைத் தைரியமாக ஏற்றுக் கொண்டபோதிலும் ஆரம்பகாலங்களில் கொஞ்சம் மனச்சலிப்பும் கூடத்தான். என்ன இருந்தாலும் வாலிபப் பருவம். அதற்குரிய மிடுக்கு ஒடி ஒளித்துவிடுமா என்ன?
ஊரில் எங்காவது மையத்து விழுந்தால் மோதீனப்பாவுக்கு
G16) தீக்குவல்லை கமால்

நிச்சயமாக அங்கு வேலைகளுண்டு. மையத்து குளிப்பாட் டலில் பங்கு பற்ற வேண்டும். இறுதி யாத்திரை உடுப்பான 'கபன்' தயாரிக்க வேண்டும். இவைகள்தான் ஆரம்ப காலத் தில் கொஞ்சம் மனதுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. காலப்போக்கில் எல்லாம் பழக்கப்பாடமாகி விட்டது. சுபஹ" தொழுகை முடிந்துவிட்டால் நாளாந்தம் இன் னொரு பணியுண்டு. இறைச்சிக் கடைக்காரருக்கு மாடு அறுக்க வேண்டும். மோதீனப்பா மிகவும் சிரமப்பட்டுப் பழகிய விஷயம் இது. இவைபோக இன்னும் சின்னச்சின்ன வேலைகள் அநேகம். எப்படியோ இவற்றால் அவ்வப்போது கைக்கு ஏதாவது கிடைப்பது பெரும் ஆறுதல். இப்படிக் கிடைப்பவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் நாளாந்தம் சில்லறைச் செலவு களையும் சமாளித்தாக வேண்டும். தனிக்கட்டையாக இருந்த காலத்தில் அதன் பொறுப்பு அவ்வளவாக அவரு க்கு விளங்கவில்லை. மோதீனப்பா, வேலைக்கமர்ந்து மூன்று ஆண்டுகளில் அவருக்கு கல்யாணமாகியது. முறைப் பெண் ஒருத்தி தான். எளிமையான தொழிலைப் போலவே எளிமையாகவே மணவாழ்வும் நகர்ந்தது. சாப்பாடுகளுக்கென்றால் அவருக்கு எவ்விதக் குறைச் சலுமே இருக்கவில்லை. ஊருக்குள் எப்படியான சாப்பாடு களென்றாலும் அதில் மோதீனப்பாவுக்கும் ஒரு பங்குண்டு. இரண்டு பேர் விருந்தினராக அழைக்கப்படும் ஏற்பாடா யினும் அதில் ஒருவராக அவருமிருப்பார். அது கிராமத்து நடைமுறையாயிற்றே!
நச்சுமரமும் நறுமலர்களும் G2)

Page 15
மோதீனப்பாவும் மனைவியுமாக சுமார் மூன்றாண்டு காலம் வாழ்ந்தனர். அதன் பின்புதான் ரினோஸா பிறந்தாள். ஆக மூன்றே மூன்றுபேர்தான் இதுவரையில். அதனால் சாப் பாடு வீடுகளிலெல்லாம் மோதீனப்பாவின் நிலைமை யைப் புரிந்து கொண்டு மனைவிக்கும் மகளுக்குமாக கொஞ்சம் சோறுகறி அனுப்பி வைத்து விடுவார்கள். அத னால் இரண்டு வேளையையும் எப்படியாவது சமாளித்து விடுவார்கள்.
வெள்ளி, திங்கள் இரவுகளில் நிய்யத்து. ஃபாத்திஹா. ராத்தீபு என்று பள்ளிவாசலுக்கு ரொட்டி. கிச்சடி. வாழைப்பழம் இத்தியாதிகளை அனுப்புவார்கள். இதில் ஒருபகுதி மோதீனப்பாவுக்குத்தான். இப்படியான சில வசதி வாய்ப்புக்கள் அமைந்திருக்கின்ற படியால், மோதீனப்பாவுக்கு நாளாந்த வாழ்க்கையை நகர்த்துவது அவ்வளவு பூதாகாரமாகத் தெரியவில்லை. அவர் ஒரு மோதீனாக மாத்திரம் இல்லாவிட்டால் இப்படி யான சலுகைகள் கிடைக்குமா என்ன? அவரது பணி புனிதமானதாக இருந்தபோதிலும் அவரை ஊரின் எடுபிடியாள் என்று கருதிச் செயல்படுவோரும் இல்லாமலில்லை. இதனை நினைக்கும் போது உண்மை யிலேயே அவரது கல்பு நொந்துபோகும். அந்த வேதனையினூடே அவருக்கொரு மகிழ்ச்சி. தனக் கொரு மகன் பிறந்துவிடவில்லையே என்பதுதான். அப்படிப் பிறந்திருந்தால் அவனையும் அதே வேலைக் குத்தான் சமுதாயம் நிர்ப்பந்திக்கும் அல்லவா?
தீக்குவல்லை கமால்

இத்தனைக்கும் மோதீனப்பாவுக்கு சம்பளம் என்று பெய ரில் ஒன்று இருக்கத்தான் செய்தது. அந்தச் சிறு தொகையை யும் கூட பத்துப்பேரிடம் கைநீட்டிப் பெறவேண்டியது அடுத்த வேடிக்கை. "மோதீனப்பா அஸராகீட்டு எழும்புங்கொ’ வெளிப்புறமிருந்து ஒலித்த குரலைக் கேட்டு எழுந்தமர்ந் தார் மோதீனப்பா. இவ்வளவு நேரமாக நித்திரை செய்து கொண்டா இருந்தார். p
வெளியே காஸிம் காக்கா சோர்ந்து போன முகத்தோடு நின்றுகொண்டிருந்தார். "கஞ்சி காச்சி முடிஞ்சா?" - மோதீனப்பா கேட்டார். 'ஒரு மாதிரி முடிஞ்சி' - காஸிம் காக்கா சொன்னார்.
'பாங்கு சொல்ல டைமாகீட்டு'
உள்ளேயிருந்து எழுந்த குரல், அவர்கள் இருவருக்கும் அதற்குமேல் கதையைத் தொடர இடமளிக்கவில்லை.
★ ★ 大 ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் G19D

Page 16
여목Ill
அஸர் தொழுகைக்குப் பின் எல்லா வீடுகளிலும் நோன்பு துறந்து சாப்பிடுவதற்கான முன்னந்தி உணவு தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த நேரங்களில் வீடுகளில் பெண்களை வெளியே காண்பதென்றால் மிகவும் கஷ்டம். தொழுதுவிட்டுப் பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய மோதீனப்பா, சாப்பாட்டுக்குத் தேவையான கறி. காய் களை வாங்கிக் கொண்டுதான் வீட்டுக்கு வந்து சேர்வார். அரைறாத்தல் இறைச்சி, ஒரு வல்லாரை இலைக்கட்டு, பலாக்காய்த்துண்டொன்றுமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு சமையற் படலம் ஆரம்பமாகியிருந்தது. அவரது மனைவி ஸெளதும்மா அரிசி அரித்துக் கொண்டிருந்தாள். 'எந்தநாளும் இந்தக்கீரதான். நேரத்தோட கொணுவாரே மில்ல. வெளிசாக்கச் செல்லே நேரம்போற. y y கணவனின் கையிலிருந்த சாமான்களைப் பார்த்ததும் அவளுக்கு வந்த எரிச்சலில் இப்படி இரைந்தாள். வாடிச் சோர்ந்திருக்கும் நேரத்தில் எதையும் லேசாகச் செய்யத் தானே எவரும் விரும்புவர். இது அவளுக்கு மாத்திரம் அலாதியானதொரு இயல்பல்லவே. 'கொணமான சாப்பாடுதான்ே இந்த நாளேல தின்னோண் டிய." - அவரும் விளக்கமொன்றை வழங்கினார். வயது போகப் போக உணவுகளை தெரிந்து தெரிந்து. தேடித் தேடி தின்னும் பழக்கம் எவருக்கும் இயல்பான
திக்குவல்லை கமால்

தொன்றில்லையா? ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் பின்னால் ஒவ்வொரு விளக்கப்பட்டியலை வைத்துக் கொண்டிருப்பார்கள். சூடு. பித்தம். வாதம் இப்படி யிப்படி. அப்பொழுதுதான் தொழுத பாயை சுருட்டிவைத்துவிட்டு காம்பராவிலிருந்து வெளியே வந்தாள் ரினோஸா. அங்கே உம்மாவும் வாப்பாவும் எதிரும் புதிருமாக நிற்பது அவளு க்கு விளங்கிவிட்டது. 'மகள் அந்தக் கீரயக் கொஞ்சம் வெளிசாக்கிக் குடுங்கொ' - மகளைக் கண்ட தெம்பில் இந்த வேண்டுகோளை விடுத் தார். குடும்பத்தை நகர்த்த வாப்பா படும்பாடும் இன்னல்களும் அவளுக்குத் தெரியாததல்ல. அதற்காக அனுதாபப்படு வதைத் தவிர அவளால் வேறு என்னதான் செய்துவிட முடியும்? சிலவேளைகளில் ஒரேயொரு பிள்ளையாகப் பிறந்துவிட்ட நான் ஏன் ஒரு ஆண்பிள்ளையாகப் பிறந்திருக் கக்கூடாது என்றுகூட எண்ணுவாள். 'நான் பெய்த்திட்டு வாரனே' - மோதீனப்பா வெளிக் கிட்டார்.
அவருக்கு இதுதான் கதி. பள்ளியும் கையுமாக ஓடியாடுவது தான். அவர் வேறு ஏதாவது தொழிலில் ஈடுபட்டிருந்தால் இதைவிட வசதியாக என்றில்லாவிட்டாலும் கொஞ்சம் நிம்மதியாகவாவது வாழமுடியும் தான். இதைச் சில நேரங் களில் மனைவியும் மகளும் தொட்டுக் காட்டினால், அவர் சொல்லும் ஒரே பதில் 'இது அல்லாட வேல'. அந்தப்
நச்சுமரமும் நறுமலர்களும் G D

Page 17
பதிலில் அவருக்கு மனநிறைவு. அரிசியைக் கழுவி அடுப்பில் வைத்த ஸெளதும்மா, இறைச் சியை வெட்ட ஆரம்பித்தாள். ரினோஸா அவசர அவசர மாக வல்லாரையை துப்புரவு செய்து சம்பலுக்குத் தயார் படுத்தினாள். தேங்காய் துருவுதல். வெங்காயம் அரிதல். மணம் தூளாக்கல் இப்படிப் பல வேலைகள் வரிசையில் காத்திருந்தன,
பெரும்பாலான வேலைகள் முடிந்த ஆறுதலோடு, எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள் ரினோஸா, மங்கி மறைந்து கொண்டிருந்த மஞ்சள் வெய்யிலின் குறிப்புணர்த்தல் நேரம் ஐந்தரையையும் தாண்டிவிட்டதை மெய்ப்பித்தது. படபடென்று முன்வாசல் தூக்கு லாம்பு. குப்பி லாம்பு களுக்கு எண்ணெய் வார்த்துத் தயார்படுத்தி வைத்தாள். கைப்பட மேசையைத் துடைத்து வாப்பாவுக்குச் சாப்பாடு ஒழுங்கு செய்து முடிந்தபோது நிம்மதிப் பெருமூச்சொன்று அவளுக்குள்ளிருந்து விடைபெற்றது.
அன்று எப்படியோ நேரகாலத்தோடு எல்லாம் முடிந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சி. அதனைப் பயன்படுத்த ரினோஸா வுக்கு புதியதொரு யோசனை எழுந்தது. அதை முன்வைத்து சமையலறைத் தலைவியின் அங்கீகாரத்தைப் பெற்றால் தானே செயல்வடிவம் பெறமுடியும்.
'உம்மா இந்தப் பைணம் ஒரு நாளாவது தீனொண்டும் சரிக்கட்டல்லயே..?" - மெதுவாகக் கேட்டாள். 'அப்ப சுருட்டாப்பம் கொஞ்சம் சுடோமா...?"
கொஞ்ச நேரம் மெளனம் சாதித்துவிட்டு, உம்மா இப்படிக்
G2) தீக்குவல்லை கமால்

கேட்டபோது அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அடுத்த கணம்.
மா பிசைந்து. தேங்காய் துருவி. சீனி காய்ச்சி. அலாதியான உற்சாகத்தோடு இயங்கினாள் ரினோஸா.
இன்று பாய்தட்டி வரும்போது அவர்களுக்கும் இதில் ஒரு பங்கு சேருமல்லவா? அதுதான் அவளுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். பன்னிரண்டு நோன்புகள் நகர்ந்துவிட்ட போதிலும் இன்னும் வெறுந் தேநீர்தானே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஃபாஸியை மாத்திரம் மனதில் நினைத்து இன்னுமொரு பங்கு களிப்படைந்து கொண்டாள் அவள்.
<冕......... el. . . . . . கைபத்திரம்' உம்மா இப்படிக் கத்தியபோதுதான் பக்கத்திலிருந்த குப்பி லாம் பைக் கவனிக்காது எடுபிடிப்பட்டது அவளுக்குப் பட்டது. அந்தத் தடுமாற்றத்திற்கு அவள் மனதில் முகிழ்ந்த நிலைவலைகள்தான்.
大 ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் G3)

Page 18
6)(L)
நெருப்பு கொழுந்து விட்டெரிய அதன் வெக்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் உடலெங்குமிருந்து துளிர்ந்த வேர்வை முத்துக்கள் பளபளத்தன. எதையும் கவனிக் காமல் நீண்ட கோப்பையால் கஞ்சிச் சட்டியை துலாவிக் கொண்டிருந்தார் காஸிம் காக்கா. மற்றைய வேலைகளெல்லாம் முடிந்த நிலையில் அப் போதுதான் அங்கு காலடி வைத்தார் மோதீனப்பா. எதுவாக இருந்தாலும் மனம்விட்டு பரஸ்பரம் கதைத்துக் கொள்ளும் ஆத்மார்த்த நண்பர்கள்தானே அவர்கள். 'இன்னேம் முடியல்ல போல. ' என்று கேட்டவாறு கஞ்சி மடுவத்தில் ஒரு பக்கமாகப் போடப் பட்டிருந்த மரக்குற்றியொன்றில் அமர்ந்தார் மோதீனப்பா. 'முடியப் போகுது’ குரல் ஒலியிலிருந்தே யாரென்று இனம் கண்டு கொண்ட காஸிம் காக்கா திரும்பிப் பாரா மலேயே பதில் மொழிந்தார். நெருப்போடு நெருப்பாய். நோன்பும் வைத்தபடி தனியே நின்று படும் கஷ்டத்தைப் பார்த்து, அவர் அனுதாபப் பட்டுக் கொண்டார். ஒருவருக்காக அனுதாபப்பட குறைந்த பட்சம் இன்னொருவராவது இருந்தால் அதுவே பெரிய நிம்மதியல்லவா?
காஸிம் காக்கா சமையல் வேலைகளில் கைதேர்ந்தவர் என்பது எங்கும் பிரசித்தம். இந்த ஊரில் மட்டுமல்ல
திக்குவல்லை கமால்

அயலூர்களில் கந்தூரி, கல்யாணமென்றாலும் கூட கார் போட்டு அவரைத் தேடிவந்து விடுவார்கள். அதுதான் அவருக்கு ஜீவனோபாயம்.
வாரத்தில் ஒரு தடவையாவது அந்தப் பிராந்தியத்தில் சமையல் விஷேடங்கள் ஏதும் நிகழாமலிருப்பதில்லை. வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் சிறு பிள்ளைகளின் மனதை வென்று. பெற்றோர்களை இடுங்கிக் கொண்டு ஓடோடி வரத்தக்க பம்பாய் முட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்களை தயார் செய்து 'கிணிங் கிணிங்' என்ற மணிச்சத்தத்தோடு ஊர்வலம் வந்தாரென்றால் அத்தனை யும் காலிதான். பள்ளிவாசலோடு சம்பந்தப்பட்ட வகையில் வருடத்தில் நாற்பது நாட்களுக்கு அவருக்கு வேலை நிச்சயம். ரம்ழான் மாதம் முழுவதும் கஞ்சி காய்ச்சுதலும் பாய்தட்டலும். கந்தூரி மாதத்தில் பத்து நாட்கள். அப்படியும் இப்படியுமாக வாழ்க்கை ஓட்டத்தில் அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் எதற்கும் துணையாக நிற்கும் ஃபாஸி. மற்றவள் மகள் மஸாயிமா. பதினேழு வயதுக் குமரி. என்னதான் வேலை வேலையென்று அலைந்தாலும் அவரது நெஞ்சிலே எப்பொழுதுமே மகளைப் பற்றிய சிந்தனைதான். சும்மாவா வீட்டுக்குள் ஒரு குமர் அடைபட்டிருந்தால் அது இலேசான காரியமா என்ன? பெண் பிள்ளைகளைப் பெற்று வைத்துள்ளவர்களுக் குத்தான் அந்த வேதனை புரியும்.
நச்சுமரமும் நறுமலர்களும் G5)

Page 19
எப்படியாவது ஒழுங்கான ஒருவனின் கையில் ஒப்படைக் கும் வரையில், கண்ணுக்கு உறக்கமா... நெஞ்சுக்கு நிம்மதியா?
மகன் ஃபாஸிக்கு எங்காவது ஒரு காரியம் கைகூடினால், அங்கிருந்து கிடைக்கும் வசதி வாய்ப்புக்களைப் பயன் படுத்தி மகளின் காரியத்தையும் பிரச்சினையில்லாமல் ஒப்பேற்றி விடலாம் என்ற நம்பிக்கைக் கயிறு தான் வாழ்க் கைப் பயணத்தில் சறுக்கி விடாமல் அவரை தைரியப் படுத்திக் கொண்டிருந்தது. 'எனத்தியன் யோசின.? நோம்பும் அரவாசி முடிஞ் சென்டா?' - இருவருமே மெளனமாக இருந்தால் எப்படி? அதனால்தான்ன மோதீனப்பா இப்படிக் கேட்டு வைத் தாரோ! "நோம்பு வரும் பொகும். எனக்கு எந்த நாளும் உள்ள யோசினதான். நிண்டவாக்கில இன்டக்கோ நாளக்கோ எங்கட ரோஹ" பெய்த்திரும். அதுக்கு முந்தி பாரத்தால லேசாகோணுமேன்.' காஸிம் காக்கா மறைபொருளாக எடுத்துக் கூறியது மோதீனப்பாவுக்கு சட்டென்று விளங்கிவிட்டது.
'எனக்கும் அந்த யோசினதான்' - அவரும் சும்மாவா. "கொமருகாரன் தானே.
O
ஃபாஸிக்கெண்டாஅங்கல இங்கல பேச்சி வார்த்தையள் அடிபடுகிய. நல்ல விஷயமொண்டு ஒழுங்கானா மகளடேம் ஹைராகும்."
தீக்குவல்லை கமால்

'ஒங்களுக்கு அப்படியாவது ஈக்கி. இனி நானெண்டா அடீலிந்து நுனிவரக்கும் எல்லமே தேடோணும். எங்கட நல்ல தனத்துக்கு உள்ளவங்க ஒதவி செய்வாங்கதான். எல்லாத்துக்கும் அல்லா மொகம் பாக்கோணும்' கடைசி யாக ஆண்டவனில் போய்த் தஞ்சமடைந்தார் மோதீனப்பா. சில நேரங்களில் அவரின் மனக் கண்ணில் காஸிம் காக்கா வின் மகன் மருமகனாகத் தெரிதுண்டுதான். மறுகணம் அது வெறும் கனவென்பதையும் நினைத்துப் பார்க்கத் தவறுவதில்லை. ஃபாஸிக்குப் பின்னால் ஒரு தங்கை, அவளை ஏணியாக்கிக் கொண்டு வாழ்க்கை மேடைக்கேறக் காத்து நிற்கிறாள் அல்லவா? அப்படியொரு நிலமை இல் லாமலிருந்தால் மோதீனப் பாவும் காஸிம் காக்காவும் சந்தேகமில்லாமல் சம்பந்தக்காரர்கள்தான். 'புள்ளயஸ் பின்னுக்காகுங்கொ. பின்னுக்காகுங்கொ. கஞ்சி குடுக்க இன்னம் டைமீக்கி." கஞ்சிக்காக வந்து குழுமியிருந்தவர்களை விலக்கியபடி அங்கு ஃபாஸி வந்து சேர்ந்தான். இனிக் கஞ்சூற்றும் படலம்தான். 'வாரன் காஸிம் ' - என்றவாறு மெல்ல நடையைக் காட்டினார் மோதீனப்பா.
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் G2)

Page 20
எட்டு
தொடர்ந்து சில நாட்களாகப் பெய்து கொண்டிருந்த மழை ஓய்ந்திருந்தது. எனினும் மழைச் சாயலுடன் மேகங்கள் திரண்டிருந்தன. தங்களது வலைகள் சகிதம் சிற்சிலர் வெளி யிறங்கிய வண்ணமிருந்தார்கள். ஃபாஸியின் மனதிலும் ஓர் உந்துதல். அதனால் கஞ்சி மடுவத்தில் வாப்பாவுக்குச் செய்யவேண்டிய உதவிகளில் முடிந்தவற்றை நடுப்பகலுக் குள்ளேயே செய்து கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
மூன்று வாரங்களுக்கு முன்பொருதடவை பாவித்துவிட்டு பாதுகாப்பாக வைத்திருந்த வலையை எடுத்து அவதானித் தான். நல்லகாலம் எலிகள் தங்களது வாய்வரிசையை அதில் காட்டியிருக்கவில்லை. கைப்பட கூம்பு வடிவப் பின்னல் கூடைக்குள் வலையைச் சுருட்டிப் போட்டுக் கொண்டு பிஜாமா ஸாரத்தையும் கட்டிக்கொண்டு வெளியிறங்
கினான்.
களப்படியைத் தாண்டியபோது அங்கே என்றுமில்லாதபடி மீன்பிடிக்காரர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். நோன்பு நாளல்லவா. ? பொழுது போக்கவும் இது வழியாக இருக்குமே என்பதால்தான் போலும்.
ஆனால் ஃபாஸி வந்திருப்பதோ அதற்காக அல்ல. எப்படியாவது நாலு பணம் சேர்த்துக் கொள்ளத்தான். அங்கே சும்மா பார்வையாளராக நின்று நேரத்தைக்
திக்குவல்லை கமால்

கடத்தாமல் ஒற்றையடிப் பாதைக்கூடாக முகத்துவாரத்தை நோக்கி நடந்தான். சேட்டைக் கழற்றி தென்னை மர வேரடியில் வைத்துவிட்டு, ஸாரத்தை உயர்த்திக் கட்டிக்கொண்டு கூடையிலிருந்து வலையை வெளியெடுத்தான். நீருக்குள் பலமுறை அமிழ்த் தித் தோய்த்தெடுத்து. வலக்கை முழங்கையை மட க்கி. மடிப்பாகத் தொங்கவிட்டு. மறுகையில் நுனி நூலைச் சுற்றித் தயாராக நின்றான். பலதடவை வலை வீசி இழுத்து. அல்லாஹ்வுக்கு நன்றி கூறிக் கொண்டான்.
செத்தல். காவையன். விறால். இப்படியிப்படி. இனியென்ன கொஞ்சம் பச்சை ஒலை ஈர்க்குகளை இடுங்கி, வகைக்கும் தொகைக்குமேற்ப கோர்த்துக் கொண்டு புறப் பட்டான். இறைச்சி, கடல்மீன் என்றெல்லாம் எவ்வளவு தான் இருந்தபோதிலும் சிலருக்கும் 'ஆத்துமீன்' என்றால் அலாதிப்பிரியம். e பிரதான வீதிக்கூடாக சந்தியை அடையும்போது ஏழெட்டுக் கோவைகள் காலியாகிவிட்டன. சுவையாகப் பணமும் கையிலே சேர்ந்திருந்தது. இன்னும் இரண்டே இரண்டு தான் பாக்கி. 'ஃபாஸி மிச்சமா புடிச்சா எங்க டுட்டுக்கும் ஒரு ஆணத்துக்கு குடு." அவன் வரும் போது மோதீனப்பா சொன்னது அவனது ஞாபகத்தில் பளிச்சிட்டது. நேரே அவனது கால்கள் மோதீ னப்பாவின் வீட்டுக்கே நகர்ந்தன. நாளாந்தம் இரவில்
நச்சுமரமும் நறுமலர்களும் G29)

Page 21
போய்ப் பழக்கப்பட்ட இடம்தானே. பாய்தட்டி வந்தால் அமர்ந்து கொள்ளும் மணற் குவியல் அவன் கண்ணில் பட்டபோதும், சாரன் ஈரமாக இருந்ததால் இருக்க விரும்பவில்லை. அது ஆறுதலெடுக்கும் நேரமா என்ன?
'மோதீனப்பா. மோதீனப்பா..." - அவன் கூப்பிட்டான்.
கதவு திறந்தது. அங்கே மோதீனப்பா நிற்கவில்லை. அவரது மகள் ரினோஸாவே காட்சி தந்தாள். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத கோலத்தில் இருவரும் சில கணங்கள் எதுவும் புரியாமல் சில்லிட்டு நின்றனர். அவளையோ வெட்கம் பிடுங்கித் தின்றது. சும்மா குசினிக்குள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த நேரம். அழுக்குப் படிந்த ஸாயா. சட்டை. 'வாப்பில்ல' - இங்கிதமான குரலில் அவள் சொன்னாள். சின்னப் பருவத்தில் பார்த்துப் பழகியவள். சில நாட்களாக இரவு நேரத்தில் மின்னிமறைபவள். இப்படி இந்த வேளை யில் நேரெதியே நின்றபோது. அவன் ஒரு பெரும் இரசிகனாகவே மாறிப் போனான்.
அவன் சிரித்தான். அவளும் சும்மா இருக்கவில்லை. மெது வாக ஒரு மீன் கோர்வையை தூக்கி அவளிடம் கொடுத்
தான். அவள் கைநீட்டி அதனை எடுக்கையில்.
'ஆ. மீன் கொணந்தா?’ பையொன்றில் ஏதோ சுமந்தபடி வந்த ரினோஸாவின் உம்மாவின் குரல் இது.
'ஓ மோதீனப்பா தரச்சென்ன” - என்றவாறு மீண்டும் ஒரு புன்னகையை வீசினான். விடைபெறும் எண்ணத்தோடு.
★ ★ ★ ★ ★
திக்குவல்லை கமால்

ஒன்பது
எப்பொழுது பார்த்தாலும் பள்ளிவாசல் பள்ளிவாச லென்றே திரிந்து கருமமாற்றும் தனது கணவனை நினைத்து சில நேரங்களில் ஸெளதும்மா கவலைப்படுவாள்.
வீட்டுக்குள் ஒரு வயது வந்த குமர். அவளை எப்படியாவது கரைசேர்க்க வழியைப் பார்க்காமல் இவர் இப்படித் திரி கின்றாரே என்பதுதான் ஸெளதும்மாவின் மனக்குமைச்சல். அறிந்தவர் தெரிந்தவர்களைப் பிடித்து எங்காவது ஒழுங்கு செய்ய வேண்டும். கையில் மடியில் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் நன்மைக்கு உதவுவோரை நாட வேண்டும். இதையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுக்க அவர் அவ்வளவு சின்னப் பிள்ளையா என்ன? வழமைபோல் மஃரிப் தொழுகை முடிந்து சனசந்தடி சற்றுக் குறைந்த போது, சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார் மோதீனப்பா. மனைவியின் அலாதியான வரவேற்பும் உபசாரமும் பின்னால் ஏதோ இருப்பதை அவருக்கு குறி காட்டியது. ரினோஸா வீட்டிலிருக்கவில்லை. இந்த நேரத்தில் வீட்டி லில்லையென்றால் நிச்சயம் குளிக்கத்தான் போயிருக்க வேண்டும். நோன்பு காலமென்றால் எல்லாம் அடிதலை மாற்றந்தானே!
நச்சுமரமும் நறுமலர்களும் G D

Page 22
தாளித்த பலாக்காய்ச்சுண்டல். பருப்பு. கெலவல்லன் மீன் குழம்பு. எளிமையான சாப்பாடு தான். மிகச் சுவை
பட சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மோதீனப்பா.
'எனத்தியன் நீங்க ஒரு யோசினேம் எடுக்காமீக்கிய.? ஆ மகள் புத்தியறிஞ்சீம் நாலு வரிசமாகப் போற* மனைவி யின் இந்தக் கேள்வி, முன்பே 'எனத்தியோ விஷயமீக்கி" என்று நினைத்ததை மெய்ப்பித்தது. 'இனி ஏத்தியன் செய்த. நானும் அங்கல இங்கல செல் லித்தான் வெச்சீக்கி. இனி நஸிபுவரோணும்' -மனைவி யின் எதிர்பார்ப்பை சமாளிப்பதற்காகத்தான் இப்படிச் சொன்னார்.
வெளிப்படுத்த இயலாதபடி ஸெளதும்மாவின் மனதில் ஓர் ஆசை குறுகுறுத்தது. அவளுக்கு காஸிம் காக்காவின் மகன் ஃபாஸியின் மேல் ஒரு கண். ஆனால் அவர்களின் வீட்டு நிலைமையும் அவளுக்குப் புரியாததல்ல. அதனையும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு இங்கே குவிந்தா கிடக்கிறது. ரினோஸா ஃபாஸியின் மேல் ஓர் அலாதியான பிரியம் வைத்துத் துலங்குவதை அவள் நன்கு அவதானித்து வைத் திருந்தாள். இரவில் பாய்தட்டி வரும்போது, தேநீர் தயாரித் துக் கொடுப்பதில் ரினோஸா ஒருநாளும் தவறியது கிடை யாது. அது மட்டுமா, அவ்வப்போது சுருட்டாப்பம். லெவரியா. பாணியாப்ப இப்படியெல்லாம் தின்பண்டங்
களும் கூட செய்து கொடுத்து வருகிறாளே! எல்லாவற்றையும் விட அன்றொருநாள் மீன் கொண்டுவந்த போது. இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர்
G2) தீக்குவல்லை கமால்

பார்த்தபடி சிலையாக நின்றதையும். பின்பு சிரித்துக் கதைத்ததையும். கடைக்குப் போய் வந்தபோது தற்செய லாகக் கண்டு, சொற்ப நேரம் அவதானித்த பின்புதானே அவள் உள்ளே வந்தாள். 'எங்கட காஸிம் காக்காங்கூட பேசிப்பாத்தாநல்லமெண்டு எனக்கு நெனக்கிய" - மனக்கோலத்துக்குச் சொல் வடிவம் கொடுத்தாள்.
'அந்தாளுக்கும் எங்களப் போல ஒரு பாரமீக்கேன்" - நடைபெற முடியாத ஒன்று எனும் பாங்கில் ஒரேயடியாக வெட்டிச் சொன்னார் மோதீனப்பா. 'நீங்க ரெண்டுபேரும் கூட்டாளிமாருதானே. ஒத்தரொத்த ரட கஷ்டம் தெரிஞ்சவங்க. எதுக்கும் பேசிப் பாருங்கொ’ - அவள் மீண்டும் வலியுறுத்தினாள். இதற்குப் பின்னணியில் தங்களுக்குச் சாதகமான காரணி ஒன்றிருக்கின்ற தைரியத்தில்தான், அதை வெளிப்படுத் தாமல் ஸெளதும்மா மீண்டும் மீண்டும் இப்படிச் சொன் னாள். அந்த விடயத்தைப் பற்றி மோதீனப்பாவுக்கு எந்த விதக் கண்ணோட்டமுமே இருக்கவில்லை. சும்மா ஒழுக் கம் பேசும் பிரகிருதிகளில் ஒருவர் என்பதால் சும்மாவாவது சொல்லப் பயந்தாள். 'சரி எதுக்கும் யோசித்துப் பாக்கியனே." - தலையைத் தடவி மீண்டும் தொப்பியைப் போட்டபடி சொன்னார்.
'நல்ல பெரிய ரம்ழானில அல்லாதான் கிருப செய்யோ
ணும்' - முந்தானையால் தலைமூடி நிறைபக்தியோடுதுஆ செய்தாள் அவள்.
நச்சுமரமும் நறுமலர்களும் G3)

Page 23
வெளியே வாளி வைக்கும் சத்தம். ரினோஸா லக்ஸ் மணக்க மணக்க குளித்துவிட்டு வந்திருந்தாள். கண்டிப்பாக கதைக்கு முத்தாய்ப்பு வைக்கவேண்டிய கட்டம்.
மோதீனப்பா பள்ளிவாசலுக்கு புறப்பட்டார்.
★ ★ ★ ★ ★
தீக்குவல்லை கமான்

பத்து
ஹிஸ்பு ஒதலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும் போது பதினொரு மணி ஒலிக்கக் கேட்டது. இன் னும் ஒன்றரை மணி நேரத்திற்குள் பாய்தட்டலுக்கும் புறப் பட வேண்டுமே! அதனால் இடைநேரத்திற்குள் 'அங்கு போய் வந்துவிட வேண்டுமென்ற அவசர கோலத்துடன் பள்ளிவாலிலிருந்து வெளியிறங்கினார் மோதீனப்பா.
பெரிய மத்திச்சத்தின் வீடு பகல் போல் சனநடமாட்டத் துடனும், ஒளிப் பிரவாகத்துடனும் காட்சி தந்தது. வருடா வருடம் அவர் ஸக்காத் கொடுப்பவரல்லவா..? அதற்கான நாள் நெருங்கிவிட்டதால் அதற்கேற்ற ஏற்பாடுகளாக இருக்கவேண்டும். இதற்கிடையில் வந்த நோக்கத்தை நிறைவு செய்து கொள்ள வாய்ப்புக் கிடைக்குமோவென யோசித்தார் மோதீனப்பா.
அவருக்கு இந்த நேரத்தில் அங்கு என்னதான் வேலை? அப்படி விஷேடமாக எதுவும் இல்லை. பிரதிமாதமும் பத்தாம் திகதி அங்கு போய் வருவது இன்று நேற்றல்ல, பல்லாண்டுகாலப் பழக்கம். அவரது சம்பளப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றுக் கொள்ளத்தான். முற்றத்தில் நின்ற மோதீனப்பா ஒருமுறை கண்களைச் சுழற்றி உள்ளே நோட்டம் விட்டார். பெரிய மத்திச்சத்தைச் சூழ்ந்து ஏழெட்டுப் பேர்கதையளந்து கொண்டிருந்தார்கள். பெரியவர்களைச் சூழ்ந்து எப்பொழுதுமே ஒரு கூட்டம் சுழன்று கொண்டிருக்கும் தானே!
நச்சுமரமும் நறுமலர்களும் Gs)

Page 24
இந்த நேரத்தில் போய் அவரைத் தொந்தரவு செய்வதா? சந்தர்ப்பம் தெரியாமல் வந்து புகுந்து விட்டானேயென்று பொங்கி எழ மாட்டாரா? இப்படிப் பலமாகப் போட்டு
மண்டையை உடைத்துக் கொண்டார் மோதீனப்பா.
காஸிம் காக்காவைக் காக்க வைக்காமல் நேரத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடவும் வேண்டும். வெறும் கையோடு திரும்பிப் போனால் நாளாந்தச் செலவுக்கு வழியில்லாமல் தவிக்கவும் நேரிடும். எதற்கும் ஒருமுறை முகத்தைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் ஒன்றும் தெரியாததுபோல் உள்ளே புகுந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப் பினார்.
ஒரேயடியாக எல்லோரும் திரும்பிப் பார்த்தபோது, தற் செயலாக வந்து விட்டது போன்ற பாவனையுடன் மெல்ல திரும்பி நடக்க முனைந்தார்.
மோதீனப்பாவின் நடிப்பு நன்கு எடுபட்டுவிட்டது. செரு மியபடி பெரிய மத்திச்சம் வாசற்படி வரைவந்து என்ன வென்று கேட்குமாப் போல் அலாதியாகப் பார்த்தார்.
'சம்பளச் சல்லி. '' - தலையைச் சொறிந்து கொண்டு சொன்னார்.
'இதுக்கு மட்டும் நாள் தப்பாம வந்து நிற்பாய்." - கோபத்தோடல்லாவிட்டாலும் சற்றே நையாண்டிப் பாணி யில் சொன்னபடியே, கறுத்த இடுப்புப் பட்டியைப் பட் டென்று திறந்துநாலுக்கு மடித்திருந்த பத்து ரூபாத்தாள்கள் இரண்டை எடுத்து நீட்டினார்.
GO தீக்குவல்லை கமால்

நன்றிப் புன்னகையோடு பெற்றுக் கொண்டு கேற்றடிக்கு வருகையில், வேகமாக வந்த காரொன்று பலத்த சத்தத் தோடு நிறுத்திய போது, திடுக்கிட்டுப்பின்வாங்கினார் மோதீனப்பா. பெரிய மத்திச்சம் சாதாரண ஆளா என்ன...? அவரைச் சந்திப்பதற்கு யாராவது வந்திருக்கக் கூடுமென்றுதான் நினைத்தார். எதிர்பார்த்ததற்கு மாறாக நாளைந்து வாட்டசாட்டமான வாலிபர்கள் காரிலிருந்து இறங்கினார்கள். பெரும்பாலும் தெரிந்த முகங்கள்தான். அவர்களின் பிடிப்பில் தள்ளாடிய படி ஒர் இளைஞன். வேறு யார்? மத்திச்சத்தின் இளைய LD556ðrg5 TGör. 'மசான் நான் ஒத்தருக்கும் பயமில்ல' - நாக்குழறியபடி அவன் பிரஸ்தாபித்தான். மோதீனப்பாவுக்கு என்னவோ போலிருந்தது. நோன்பு காலத்தில் கூட இப்படிக் குடித்துவிட்டு கும்மாளமடிக் கிறார்களேயென்ற வேதனை நெஞ்சைக் கசக்கியது. 'மத்திச்சத்தட பேரக் கெடுக்கப் பொறந்தீக்கியவன். குடிமட்டுமல்ல எல்லந்தான்' தெருவில் யாரோ வெளிப்படுத்திய கருத்து மோதீனப்பா வின் காதுகளிலும் விழத்தான் செய்தது.
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் G2)

Page 25
பதினொன்று
இரவு பத்து மணிமுதல் பெரிய மத்திச்சம் ஸகாத் பணம் கொடுக்கப் போகும் செய்தி ஊரெல்லாம் பரவியிருந்தது. இம்முறை இதனை ஆரம்பித்து வைக்கும் பெருமையும் அவரையே சார்கிறது.
'இந்தப் பைணம் முப்பதுருவக் குடுக்கியாம்'
கூடவே இந்தத் தகவலும் சிறகு விரித்திருந்தது. சென்ற தடவையைவிட ஐந்து ரூபா அதிகம். நூற்றுக்கணக்கான வர்களின் துஆ வீண் போகுமா என்ன?
தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து வீதியெல்லாம் ஒரே கலகலப்பு. மத்திச்சத்தின் வீட்டுப் பக்கமாக ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது.
வறுமைப்புண்ணைச்சமுதாயக் கண்களில் குத்திக்காட்டும் காலம்தான் புனித ரம்ழான் என்று, பெருமைப் போர்வை போர்த்திய தனவந்தர்கள் துலாம்பரப்படுத்துவதை, யாரா வது தொட்டுக் காட்டினால். அவர்கள்தான் மார்க்க விரோதிகளென்று முத்திரை குத்தப்பட்டுவிடுகிறார்களே.
மகள் ரினோஸா கரைத்துக் கொடுத்த கசகசாவைக் குடித்து விட்டு, மத்திச்சம் வீட்டுக்குப் போன மனைவி ஸெளது ம்மா வரும்வரையில் பார்த்திருந்த மோதீனப்பாவுக்கு, சற்று தைரியம் வருவது போலிருந்தது. அங்கு போனவர் களில் ஒரு பகுதியினர் திரும்பிக் கொண்டுமிருந்தார்கள்.
தீக்குவல்லை கமால்

மனைவி வந்ததும் அவரும் போகத்தானே வேண்டும்!
'லேசான சண்மா வந்துவந்து நெறயிது’ - சுமந்து கொண்டு வந்த அரிசிப் பையை வைத்ததும் வைக்காததுமாக சொன்
னாள் ஸெளதும்மா. 'சும்மா கெடக்கியத்த தாராலும் வாணான்டியா' - சிரித்த படியே மனைவியைப் பார்த்துக் கேட்டார் மோதீனப்பா. 'சொணங்கிக் கொண்டீக்காம நீங்களும் சீக்கிரம் போங்கொ. ' - மனைவி அவசரப்படுத்தினாள். மோதீனப் பாவின் கால்கள் நேரே காஸிம் காக்காவின் வீட்டை நோக்கின. தனியே போவதைவிட ஒரு சகபாடி யோடு போவது சுகம்தானே? அதுபோக தற்செயலாகச் சுணங்கவேண்டியேற்பட்டால் மீண்டும் இருவரும் சந்தித் துக் கொள்வதில் சிரமம் ஏற்படக்கூடுமென்பதால் தான் அவருக்கு இந்த யோசனை. 1 காஸிம் காக்காவும் மகளும்தான் வீட்டிலிருந்தார்கள். அவரது மனைவி மத்திச்சம் வீட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும்.
'காஸிம் காக்கா. GuTLDIT....... ?' - அழைப்பு விடுத்துக் கொண்டுதான் உள்ளே புகுந்தார். 'ஆவாங்கொ. இன்னேம் போன பொம்பிளவரல்ல. ஃபாஸிம் ஊட்டிலில்ல. அதுதான் யோசிச்ச.” - மகளை மாத்திரம் வீட்டில் விட்டுவிட்டுப் போக முடியாதென்பதை இப்படி வெளிக்காட்டினார் அவர்.
'இப்ப வாரொண்டும் தானே' - என்றவாறு கட்டிலின்
நச்சுமரமும் நறுமலர்களும் Gs)

Page 26
ஒருபக்கமாக அமர்ந்தார் மோதீனப்பா.
'நான் நாளக்கி ஒரு விஷயமா மத்திச்சத்த கொஞ்சம் சந்திக்கோணும் அதுதான் யோசிக்கியன்' - இவ்வாறு சொல்லி நிறுத்தினார்.
மத்திச்சம் தன்னை அழைத்தனுப்பியுள்ளதை மோதீனப் பாவுக்கு இப்போதே வெளிக்காட்டிக்கொள்ள விரும்ப வில்லை போலும் காஸிம் காக்கா.
ஏதோ இப்போதைக்கு இருவரும் ஒன்றாக அங்குபோகும் சாத்தியம் இல்லையென்பதை மாத்திரம் மோதீனப்பா புரிந்து கொண்டார்.
"அப்ப நான் பெய்த்திட்டு வாரன்'
அவர் விடைபெற்றார்.
★ ★ ★ ★ ★
Aligay aaa sara

பன்னிரண்டு
அன்று கொஞ்சம் நேர காலத்தோடு எழுந்த காஸிம் காக்கா நேரே மத்திச்சத்தின் வீட்டுக்குத்தான் சென்றார். வீட்டு முற்றத்தில் அழகான காரொன்று நிறுத்தப்பட்டிருந்தது. காசுக் கட்டோடு மத்திச்சத்தின் மூத்த மகனைச் சுமந்து வந்ததாக இருக்க வேண்டும். இரண்டொருவராக உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த போதிலும் ஒரேயடி யாக உள்ளே செல்ல அவரது கால்கள் தயங்கின. ஒருவித மரியாதைப் பயம்தான் அவரை இப்படி இழுத்துப் பிடித் துக் கொண்டிருந்தது.
ஆ. எங்கட காஸிம் காக்கவா?'
பூச்செடிகளுக்கு எருக் கூட்டிக்கொண்டிருந்த ஸெய்துநானா அப்பொழுதுதான் கண்டார் போலும்! 'மத்திச்சத்தப் பாக்க வந்த'
'உள்ளுக்கு நிக்கிய" முகப் பழக்கத்துக்காக இரண்டொரு வார்த்தைகள் கதைத்து விட்டு ஸெய்து நானா நகர்ந்த போது. அவரைப் பற்றிய சில பதிவுகள் காஸிம் காக்காவின் நினைவிலே விரியத் தொடங்கியது.
அவருக்கென்ன சுவீப் அடித்த மாதிரித்தான். பத்துப் பதி னைந்து வருடங்களாக மத்திச்சம் வீட்டிலேயே ஒட்டிக்
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 27
கொண்டிருப்பவர்கள் ஸெய்து நானா மாத்திரமல்ல; அவரது மனைவி பிள்ளைகளும் கூடத்தான். மத்திச்சம் வீட்டுப் பின் காணியில் அமைந்துள்ள பழைய சிறு வீடும் அவர்களுக்கு வசதியாக வாய்த்திருந்தது. இனியும் காத்திருக்க காஸிம் காக்காவின் மனம் ஒப்ப வில்லை. கஞ்சி வேலையும் இருப்பதால் மெதுவாகத் தயங்கித் தயங்கி முன் வாசலுக்குள் காலடி வைத்தார். 'மத்திச்சம்' - காக்கா மெல்ல அழைத்தார். 'ஆ. காஸிம் காக்காவா. வாவா?' - மூக்குக் கண் ணாடியை உயர்த்திப் பார்த்துவிட்டு வாய் நிறைய வரவேற்றார். குசன் கதிரையில் ஹாய்யாக அவர் அமர. சுவர் ஒரமாகப் போடப்பட்டிருந்த பங்குப் புட்டுவத்தில் அமர்ந்தார் காஸிம் காக்கா.
'மகன் பெய்த்தா மத்திச்சம்...??? - சும்மா பேச்சுக்காக எதையாவது கேட்க வேண்டாமா என்ன? 'இண்டக்கி பகலக்கிப் பொறகுதான் போற' - என்றவாறு எழுந்து உள்ளறைக்குச் சென்றார் மத்திச்சம். 'இந்தா காஸிம்" தந்ததை மரியாதையாக இருகரம் நீட்டிப் பெற்றுக் கொண் டார். கண்களும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆமாம் நூறு ரூபாத்தாளொன்று. அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு கனவு போலவுமிருந்தது. 'எனக்துக்கன் மத்திச்சம் வரச்சொல்லி அனுபீந்த. " -
தீக்குவல்லை கமால்

தாமதிக்க முடியாத காரணத்தால் விடயத்துக்கு வரமுனைந் தார் அவர். 'இதுக்குத்தான் காஸிம். எல்லாரும் வார நேரத்தில
வந்தா இப்பிடித் தரேலுமா..." - மெல்லத் தன் பருத்த உடலைக் குலுக்கிச் சிரித்தார்.
தன்மீது பெரிய மத்திச்சத்துக்கு திடீரென்று இவ்வளவு பற்றுதல் எப்படி ஏற்பட்டதென்று அவருக்குப் புரிய வில்லை.
‘கஞ்சி வேலவெட்டீம் ஈக்கி. அப்ப நான்." "சரிசரி..' என்றவாறு அவரும் எழுந்தார்.
முன்வாசலைத் தாண்டி இறங்குபடியில் கால் வைக்கும் போது.
'காஸிம். நாளக்கி ஒங்கட ஊட்டுப் பொக்கத்துக்கு கொஞ்சம் வாரன்" - என்றார்.
காஸிம் காக்காவின் மூளைக்குள் பளிச்சென்றிருந்தது. காரணமில்லாமல் காரியமில்லையே. ஏதோ விஷயம் இருக்கத்தான் செய்தது.
'வாங்க மத்திச்சம்'
தைரியமாகச் சொன்னார் அவர். அந்த நோஞ்சான் குடி சைக்கு ஊருக்குப் பெரியவர். மத்திச்சம் வருவதென்றால்!
★ 女 ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 28
பதின்மூன்று
காஸிம் காக்காவைவிட அவர் மனைவிக்குத்தான் பெருமை பிடிபடவில்லை. முன்வாசல் கட்டிலை புதிய விரிப் பொன்று அலங்கரித்திருந்தது. உடைந்தும் பின்னால் பிரிந் ததுமான கதிரைகள் பின்புறத்துக்கு இடமாற்றம் செய்யப் பட்டிருந்தன. மேசைக்குப் பேப்பர் விரிப்பு வேறு. நோன்பு காலத்தில்தான் பரக்கத் இறங்குவதென்று சொல் வார்கள். அப்படியானதொரு பரக்கத் இறங்கப் போவதாகக் கூட அவள் எண்ணிப் பார்த்தாள். மேசை லாம் பைத் துடைத்து எண்ணெய் வார்த்து சரிப் படுத்தி வைத்தாள். கோப்பி. பால்நேதீர். கசகசா. இதில் எதைக்கொண்டு மத்திச்சத்தை உபசரிப்பதென்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டாள். இறுதியாக தெம்பிலிக்காய்தான் நல்லதென்ற முடிவுக்கு வந்து ஆவன செய்தனர். நேற்று எதிர்பாராதவிதமாக மத்திச்சம் மூலம் நன்மை அடைந்தவர்களல்லவா? அது போக இன்று வீடுதேடியும் வருகிறாரே! இனிக் கவனிக்கத்தானே வேண்டும். நோன்பு துறந்து சாப்பிடவந்த காஸிம் காக்காவுக்கு பெரும் பிரமிப்பாகவிருந்தது. இப்படியாய் யாராவது இடையி டையே வரவேண்டும். அப்பொழுதுதான் வீடாவது கொஞ் சம் ஒழுங்காக இருக்கும் போலும். புதிதாக ஏதும் ஒழுங்கு படுத்த எந்தப் பாக்கியும் இருக்கவில்லை அவருக்கு.
தீக்குவல்லை கமால்

தராவீஹ் தொழுகைக்கு என்றுமில்லாதபடி அன்று பெரிய மத்திச்சம் வருகை தந்திருந்தார். தொழுகை முடிந்ததும் நேரே தங்கள் வீட்டுக்கு வரக்கூடுமென்று காஸிம் காக்கா வழிபார்த்ததால் அவரது கண்ணில் படத்தக்கதாக கொஞ்சம் நடமாடிக் கொண்டார். அது பொய்த்துப் போகவில்லை. பாதையெங்கும் சனம் நிறைந்த வேளையில். எல்லோ ரும் அவதானிக்கத்தக்கவாறு பெரிய மத்திச்சமும் காஸிக் காக்காவும் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த கெளரவப் பெருமையால் மத்திச்சம் பேசிய எதுவுமே காஸிம் காக்கா வுக்கு விளங்கவில்லை. தலையாட்டியாட்டி வந்ததெல் லாம் சும்மாதான். வீட்டுக்குள் மனைவியினதும் மகளதும் நடமாட்டமும் பரபரப்பும் அவருக்குப் பளிச்சிட்டது. 'இரீங்கொ மத்திச்சம் ' - காஸிம் காக்கா கதிரையை இழுத்துப் போட்டார். ஒருமுறை நான்கு பக்கமும் கண்களைச் சுழற்றிவிட்டு அமர்ந்தார் மத்திச்சம். அத்தகைய கதிரைகளில் அமர்ந்து பழக்கமில்லாவிட்டாலும் வந்த இடத்தில் அதுவும் வயது போன காலத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமா என்ன? உட்பக்கக் கதவோடு சேர்ந்து காஸிம் காக்காவின் மனைவி புன்னகையோடு பூரித்து நின்றாள். மகளும் ஒளிந்து நின்று கவனம் செலுத்தத் தவறவில்லை. ஃபாஸியை அப்பக்கத் தில் காணமுடியவில்லை.
'ஊடு வாசலெல்லம் இன்னேம் அந்த மாதிரியேதான் போல' - அக்கறையோடு விசாரித்தார்.
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 29
'இந்தாங்கொ தெம்பிலித் தண்ணி." மனைவி நீட்டிய கோப்பையை இரண்டு கைகளாலும் பெற்று மத்திச்சத்திற்குக் கொடுத்தார் காஸிம் காக்கா.
மத்திச்சத்திற்குக் குடிக்கவும் மனமில்லை. குடிக்காம லிருக்கவும் முடியவில்லை. வந்திருக்கும் காரியத்தில் சித்திபெறவேண்டுமென்றால் தாழ்மையை ஆயுதமாகக் கைக்கொள்ள வேண்டுமென்பது அவருக்குத் தெரியாத விஷயமல்ல.
'காஸிம் எங்கட வீட்டில வேலக்கு நிக்கிய ஸெய்து நானா வத் தெரீந்தானே. இவளவு காலமா நம்பிக்கயா நிக்கிய. இனி அவங்கட விஷயங்களேம் நான்தானே பாக்கோ ணும்." அவரது முன்னுரை இது.
'ஒ இனி மெய்தானே' - மனைவியின் உயிர்த்துடிப்பற்ற குரல்.
‘ஸெய்தட மகளுக்கு கலியாண விஷயமொண்ட ஒழுங் காக்கியத்துக்குத்தான் நான் வந்த."
சொற்ப நேர அமைதி.
'எனத்தியன் யோசிக்கிய?' - மத்திச்சம் விருப்ப நாடியைத் தொட்டுப் பார்த்தார்.
காஸிம் காக்கா மனைவியின் முகத்தைப் பார்த்தார். எந்த அபிப்பிராயத்தையும் பரிமாறிக் கொள்ள முடியாத கட்டம்.
'மத்திச்சம். ஒங்கட பேச்சத் தட்டேலுமா' - காஸிம் காக்கா மெய்மறந்து சொன்னார்.
திக்குவல்லை கமால்

அவள் மனதுக்குள்ளும் சந்தோஷங்கள்; இடையிடையே சந்தேகங்களும் கூட. 'நான் ஊட்டேம் ரெபியார் பண்ணிக் குடுக்கிய. கட்டு டுப்பு, சல்லி சாமான் ஒன்டிலேம் கொறவில்ல. நான் ஏன்ட புள்ள மாதிரி நெனச்சித்தான் செய்யப் போற. வெளங்கினா' இறுதியுரையையும் நிகழ்த்திவிட்டு வந்த காரியம் கைகூடிய மனநிறைவோடு எழுந்தார் இனி உறவுக்காரர்கள் தானே என்ற மன உந்தலாலோ என்னவோ காஸிம் காக்காவும் மத்திச்சமும் மிக நெருக்க மாக முன்முற்றத்தில் நின்று குசுகுசுத்தனர். 'சரி நோப் பெருநாள் மாஸ்த்தக்கே கலியாணத்த வெச்சிக் கொளோம்" பின் பக்கமாகவும் கேட்கக் கூடியதாக சற்றுச் சத்தமாகவே சொல்லிவிட்டு வெளியிறங்கி நடந்தார் மத்திச்சம். கணவனும் மனைவியும் முற்றத்திலே ஒருவரையொருவர் மலர்ச்சியோடு எதிர்நோக்கினர். விரிவானிலே தாரகைகள் கண் சிமிட்டி முறுவலித்தன.
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 30
பதின்நான்கு
சுமார் மூன்று மணிநேர முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து, கஞ்சி நாடகம் அடுப்பு மேடையில் அரங்கேற்றப்பட்டது. இனியென்ன. சில மணிநேரத்துக்கு நிம்மதிதானே?
ஃபாஸி பெருமூச்சுவிட்டவாறு கஞ்சி மடுவத்தில் ஒரு பக்கமாக, வேய்ந்த கிடுகோலை இரண்டை எடுத்துப் போட்டுச் சாய்ந்து கொண்டான். தணிந்து கொண்டு போகும் வெய்யிலாக இருந்த போதிலும் வெக்கைக்கு எந்தவிதக் குறைச்சலுமிருக்கவில்லை. அதனை ஈடுசெய்யுமாப் போல் காற்றோட்டத்தின் சுகமான தழுவல். நேற்றுமுதல் என்ன காரியம் செய்து கொண்டிருந்தாலும். ஓய்வாக இருந்தாலும் நித்திரைக்குப் போனாலும் உம்மா சொன்ன செய்தியின் நினைவேதான். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கல்யாணம் என்றொரு பரபரப்பான படலம் வரத்தான் செய்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் ஒரே வடிவத்தில் வந்து சேர்ந்துவிடுவ தில்லையே. இன்னும் சிலருக்கு எதிர்பார்க்காமலேயே வெற்றிகரமாக எல்லாம் முற்றுப் பெறுகிறது. இதில் ஃபாஸி.?
கல்யாணம் பற்றி அவன் அவ்வளவாக என்றுமே சிந்தித்ததுமில்லை; எந்த முடிவையும் எடுத்ததுமில்லை. அப்படி உடன் முடிவுக்கு வரத்தக்கதாக எதுவும் நிகழ்ந்
திக்குவல்லை கமால்

ததுவுமில்லை. ஏதோ எல்லோருக்கும் போல ஒருநாளில் நடக்கவேண்டியது நடக்கும் என்ற எண்ணம் மாத்திரந் தான். இளமைக் குதிர்வு அவனது இதய ஓட்டத்தில் பீறிட்டிருந்த போதிலும் அத்தகைய உணர்வோடு அவன் யாருடனுமே பழகியதுமில்லை. தொடர்பு வைத்திருந்ததுமில்லை. அப்படிக் கொஞ்சமேனும் இரக்கம் சுரக்க எதிர்நோக்கியது யாராவது உண்டென்றால், அது ரினோஸா ஒருத்திதான். அதற்குக் குடும்பத் தொழில் ரீதியாக இளமை முதலே அவளோடு ஏற்பட்டிருந்த ஒரு பழக்கம்தான் பக்கபலமாக இருந்தது. ரினோஸாவும் தான் என்னவாம்? அவளுக்கு ஃபாஸியின் மீது வித்தியாசமான எந்த எண்ணமும் அண்மைக் காலம் வரை இருக்கவில்லை. இப்பொழுதெல்லாம் அவனைக் காணும் போது, அந்த இளமைக் குறும்புகள். கூத்துகள் தான் நினைவில் வரும். அந்த ஞாபகத்தில்தான் அவள்மீது ஒருவித. பெண்பிள்ளைகளிடம், ஆளையாள் பகிடி பண்ணிக்கொள் ளும் பழக்கம் இயல்பாக உண்டல்லவா? ரினோஸாவை. ஃபாஸியைச் சொல்லி அவள் தோழிகள் இன்றும் கூட..!
இளம் பருவப் பூரிப்பில் மதாளித்திருக்கும் அவளுக்கு எந்த
அடிப்படையிலாவது ஒரு பழக்கமும் பற்றும் இருப்பது நிச்சயமாக ஃபாஸியில்தான். இதை ஃபாஸி கூட மறுக்க
முடியாதே. சிறு பராயத்தைக் கடந்து பருவ நிலையில் அவர்களுக்
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 31
கிடையில் இப்படியொரு பற்றுத் துளிர்த்து இன்னும் சில காலம் தொடர்ந்திருந்தால், சிலவேளை அது அவர்களின் எதிர்காலத்தோடும் பின்னிப் பிணைந்து விடக்கூடும். அப்படியொரு இயல்பான முதிர்ச்சி ஏற்படுமுன்னே இப்படியொரு இடைவெட்டு விழுந்தால்.
ரினோஸாவைப் பற்றி, அதற்கப்பால் அவன் ஒன்றும் கவலைப்படவில்லை. நிலைமையைத் தனக்குச் சாதக
மாக்கியே அவனால் சிந்திக்க முடிந்தது.
பிடிப்பும் பசையுமற்ற சமாளிப்பு வாழ்க்கைதானே..? வச திப் பலவீனத்தில் வாழும் எவர்தான் ஒரு செழிப்பான பற்றுக்கோடு கிடைக்கும் போது விட்டு நகரத் துணிவார்கள்.
ஒரு சந்தோஷமான எதிர்கால வாழ்வுதான் கண்களுக்குள் காட்சி கொடுத்தது. பெரிய மத்திச்சத்தின் ஒத்தாசையுடன் அரங்கேறப் போகிறதென்றால் இனிக் கேட்கவா வேண்டும்!
சீர்வரிசை. வீடுவாசல். நகைநட்டுக்கள் பற்றிக் கவலைப் படவோ கேட்டுப் பிடிக்கவோ வேண்டியதில்லை. அதைக் குறைபாடில்லாமல் செய்வார்களென்பதில் சந்தேக மில்லை. அவனது தங்கை திருமண முதிர்வை எய்தியதும் அதற்கான தேவைகளையிட்டு அலட்டிக்கொள்ள வேண் டிய அவசியம் இனி இருக்காது. அவனுக்கு வந்து சேரப் போகும் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது
ஃபாஸிக்கு! ஸெய்து நானாவின் மகள் சுலைனாவை
திக்குவல்லை கமால்

அவனுக்கு ஏற்கனவே தெரியும். அபார அழகியென்று சொல்ல இயலாவிட்டாலும், நிச்சயம் கவர்ச்சியானவளாக இருப்பாள். ஊருக்குள் உலவிய காலத்தோற்றத்தோடு, பருவ மலர்ச்சி வழங்கும் நன்கொடையையும் கூட்டிக் கணக்குப் போட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தான். குடு ம்ப வசதிகளைப் பொறுத்தவரையில் இருசாராரும் ஒரே தட்டுத்தான். 'ஃபாஸி எழும்பி இங்க வா மகன்' - இமைகளை மூடிய படி கற்பனாலோகத்தில் சஞ்சரித்த ஃபாஸி வாப்பாவின் குரலைக்கேட்டுத்துள்ளியெழுந்தான். அங்கே... அடுத்த வேலைத்தொடர் அவனை அழைத்து நின்றது.
★ 女 ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் G D

Page 32
பதினைந்து
மோதீனப்பாவின் மனைவி ஸெளதும்மாவுக்கு அச்செய்தி பெரியதொரு அதிர்ச்சியாக இருந்தது. அவளது அடிமன தில் பூத்திருந்த சின்னஞ் சிறு ஆசைக் கொடிக்கு, எருக் கட்டி. நீர்வார்த்து. காலப் போக்கில் மணம் சிந்தும் மலர்களைக் கொய்துவிடலாமென்றுதான் எதிர்பார்த்தாள். ஆனால் இவ்வளவு காலகதியில் வாடிக் கருகிப் போய் விடுமென்று சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. கைகூடாமல் போய்விட்டதைப் பற்றி அவளுக்கு அவ் வளவு கவலையில்லை. மறு பக்கத்தார்க்கு பேரதிர்ஷ்டம் அடித்திருப்பதை நினைக்கும் போதுதான் அவளுக்குப் பெரும் துரதிர்ஷ்டமாகப்பட்டது. பொறாமையுணர்ச்சி யாகவும் அது பொங்கத் தொடங்கியது. மோதீனப்பா குடும்பமும் காஸிம் காக்கா குடும்பமும் சமமான வாழ்க்கைத் தரமுடையன அல்லவா? திடீரென அதில் ஒரு தட்டுத் தாழ்ந்து போனால் எப்படியிருக்கும் அந்த விளையாட்டு? ஆனால் மோதீனப்பா இதையிட்டு அவ்வளவு தூரம் அலட் டிக் கொள்ளவில்லை. கொஞ்சம் அனுபவப் பயிற்சி மிக்கவரல்லவா? சாத்தியமாகக் கூடியதிலேயே எப்பொழு தும் நம்பிக்கை வைக்கப் பழகியவர். இருந்தாலும் மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல், மகள் விடயமாகக் காஸிம் காக்காவோடு கதைப்பதாக
G2) தீக்குவல்லை கமால்

அவளுக்கு வாக்குறுதி கொடுத்த போதிலும், பொருத்த மான காலநேரம் வரட்டுமேயென்றுதான் பின் தள்ளிக் கொண்டிருந்தார். நட்பு என்ற பலத்தை ஆயுதமாகக் கொண்டு, நட்புக்கு உட்பட்டவர்களை தர்மசங்கடத்துக்கு
ஆளாக்க அவரால் முடியவில்லை.
ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாதவர்களா என்ன? ஒவ்வொருவருக்குமுரிய பிரச்சினைகளைப் பரஸ்பரம் அறியாதவர்களா இல்லையே. அதனால் பெருந்தன்மைகள் பலம் சார்ந்த பக்கமிருந்து பழுக்க வேண்டுமென்பதே மோதீனப்பாவின் அனுபவ ஞானம். ஸெளதும்மாவின் மனம் புத்தி பூர்வமாக சிந்திக்க மறுத்தது. ஒரு அர்த்தமற்ற வெறி. கோபம். பொறாமை. அனைத் தும் கலந்த கலவையாய் அவள் தலைக்குள் குதியாட்ட மிட்டது. 'ஃபாஸிக்கும் அந்தக் குட்டிக்கும் கூட்டாளித்தனம் ஈந் தீக்கி, இல்லாட்டி இந்தமட்டு அவசரம் எனத்துக்கன். சரி பெரிய மத்திச்சம் இதுக்குள்ள எனத்துக்கன் தலயப் போடிய. ஆ. ஸெய்துநானாம் பொஞ்சாதீம் அங்க வேலக்கி நிக்கிய சொட்டீமாயீக்கும் இப்படியெல்லாம் அவளது மூளை நரம்புகள் திக்குமுக்காடின. 'இதில எனத்தசரி ஒரு வெளப்பம் ஈக்கும்' - மெளன மாகவே அமர்ந்திருந்த கணவனின் நிஷ்டையைக் கலைக்கு மாப் போல் இப்படிச் சொன்னாள் ஸெளதும்மா.
'அப்படி ஒண்டுமில்ல. எல்லம் அல்லா எழுதின எழுத்து.' - சற்றுக் கோபமாக இரைந்தார். மனைவியின்
நச்சுமரமும் நறுமலர்களும் GS3)

Page 33
நச்சரிப்பு அவருக்கு ஒத்துவரவில்லை போலும்.
காஸிம் காக்கா விட்டு வைப்பாரா? அவர்களுக்கிடையில் என்னதான் ஒளிவு மறைவு? நட்பின் இறுக்கத்தாலும் மகிழ்ச்சிப் பெருக்காலும் அன்று ஞஹருக்குப் பின்பு எல்லாமே கொட்டித் தீர்த்துவிட்டார். மோதீனப்பாவும் தனது மகிழ்ச்சியை மனந்திறந்து தெரிவித்தார்.
ஆனால் ஸெளதும்மாவுக்கு அக்கம் பக்கத்தால் பொசிந்து வந்த தகவல்தான். பெண்களின் வாய்வழியாக வந்து சேர்ந் தால், அதில் வெட்டுக்களும் ஒட்டுக்களும் மன உணர்ச்சி களின் பித்துக்களும் குத்தப்பட்டு இருக்குமே! மனைவியைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு மிக அவசியமாக அவசரமாகப் பட்டது. மகளின் விஷய மாக அவருக்குக் கிடைத்திருந்த நல்ல செய்தியொன்றை நோன்பு காலம் முடிந்ததும் சொல்ல எண்ணியிருந்தார். அதற்கிடையில் இப்படியொரு குழப்பநிலை மனைவிக்கு ஏற்பட்டுவிட்டதால் அதைச் சொல்லிவிடுவது நல்லதாகப் பட்டது.
'எங்கட விஷயமும் அல்லாட காவல்ல சரிதான். அடுத் தூரு. கிட்டத்தான். எனக்குப் பொடியனேம் தெரீம். நோம்பு பிந்தினொடன பேச்சிவாத்தய தொடங்கேலும்?" கணவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குத் தலைகால் புரியவில்லை. இதைச் சொல்லாமல் இவ்வளவு நாளும் மறைத்திருந்த கணவன் மேல் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் எந்த விஷயத்தையும் சந்தர்ப்பம் வரும் போதுதான் சொல் வார். இதனால் அவளுக்கு
தீக்குவல்லை கமால்

சிலவேளை கோபம் வந்துவிடும். இது அவரோடு வாழத் தொடங்கி காலத்திலிருந்தே நடைபெறுவதுதான்.
'நல்ல எடமாமா??? கல்யாணப் பேச்சு என்றால் யாராகவிருந்தாலும் எழுப்பும் முதல் கேள்வி இதுதான். மோதீனப்பா பதில் சொல்லாமல் தலையை ஆட்டிக் கொண்டார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அவளது மனநிலை சட் டென்று மாறிவிட்டது. 'அப்ப சல்லி சாமன் எவளவோணுமன். பெரிய மத்திச் சம் ஒங்களக் கவனிக்கியொண்டும். இன்னமுள்ளவங்களும் நீங்க கேட்டா ஒதவி செய்வாங்க. எதுக்கும் தெஃபீக் தொரேக்கிட்டக்காயிதமெடுத்துக்கொண்டு சீனங்கோட்டக் கிப் போனாலும் நல்லம். பெற்றுப் போட்டுவிட்ட பாவத்துக்கு எப்படியெப்படி யெல்லாம் படியேறி மானத்தை மேடையேற்றலாம் என் பதையும் அவள் ஒரு முறை பட்டியல் போட்டுவிட்டாள். 'அதெல்லாம் அந்த டைமுக்குப் பாக்கோம்" - இறுதிச் சமாளிப்பை மொழிந்துவிட்டு மெல்லப் படியிறங்கினார். ஸெளதும்மாவுக்கு அப்பொழுது இளமை திரும்பிவிட்டது போலிருந்தது.
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் GS)

Page 34
பதினாறு
எப்போதுதான் பாங்கு சொல்லுமென்று பக்கத்து வீட்டு வானொலிக்கு காதுகொடுத்துக் கொண்டிருந்த ரினோஸா, பாங்கு சொன்னதும் நோன்பு துறந்து கஞ்சி குடித்துவிட்டு குளிக்கப் போகத் தயாரானாள். நேரம் நகர நகர கிணற்றடி நிரம்பி வழியும் வசதிக்குறைவுக்காகத்தான் இப்படி நேர காலத்துடன் புறப்பட்டாள். முஃபீதாமாமி வீட்டு கிணற்றை முதன்முதல் அடைந்தவள் ரினோஸாதான். கொங் ரீட் படிக்கட்டில் வசதியாக அமர்ந்து உடுப்புக்களைக் கழுவிக் கொண்டிருக்கையில் வெளியீலாவும் அனிஸாவும் மிகவும் ஆரவாரமாக வந்து சேர்ந்தார்கள். சும்மாவல்ல ஒரு பொட்டணிக் கதையும் கூடந்தான்.
'தெரீமாடி செய்தி. சுலைனாக்கும் ஃபாஸிக்கும் கல் யாணம் தீந்திட்டாம். பெரிய மத்திச்சம்தான் பேசினாம். அவரே செலவழிச்சிக் குடுக்கப் போறாம்." - அனிஸா கொண்டை முடிச்சை அவிழ்த்தவாறே சொன்னான். தலையில் ஊற்றிய வாளித் தண்ணீர் மன வெப்பத்தின் காங்கையால் அந்த நொடியிலேயே ஆவியாகி விட்டது போன்ற பிரமை. அதன் பின்பும் எதையோவெல்லாம் அவர்கள் பேசத்தான் செய்தார்கள். ஆனால் எதுவும் ரினோ ஸாவுக்குள் ஏறாதபடி உடலுக்குள் ஒருவித பலவீனம் படர்வது போல. எப்படியோ குளித்து முடித்து சோர்ந்து
GS) தீக்குவல்லை கமால்

போனவளாக வீட்டையடைந்த ரினோஸாவுக்கு, அவளது உம்மா உற்சாகம் மிகுந்தவளாக கலகலத்துக் கொண்டிருந் தது ஏனென்றே புரியவில்லை.
★ 大 ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் G2)

Page 35
பதினேழு
'டும்டும்டும். டும். டும்டும்’
காஸிம் காக்காவின் விரல்கள் ரபானில் விளையாடிய போது இனிய ராகம் அந்தப் பிராந்தியமெங்கும் அரசோச் சியது. அதற்கேற்றாற் போல அவரது குரலும் கைகொடுத் தது.
இந்த ராகத்தைக் கேட்டு ரசிப்பதற்காகவே விழித்திருப் போர் எத்தனை பேர். தங்கள் வீடுகளை நெருங்கி வரும் போது எழுப்பிவிட வேண்டுமென்று பெற்றோருக்கு அன் புக் கட்டளையிட்டு உறங்கும் சிறுவர்கள் ஒன்றிரண்டா? சிலர் கண்விழித்தால் அந்த ராகம் காதுகளிலிருந்து மறை யும்வரை அப்படியே லயித்திருப்பார்கள்.
ரபானைக் கைக்கிடைத்தாங்களாக்கி காதிடையில் சொரு கியிருந்த பீடித் துண்டை புகைக்கத் தொடங்கினார் காஸிம் காக்கா. மோதீனப்பாவும் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டார். ஒளிந்து மறைந்து நண்பர்களோடு கூடினால் புகைக்கும் ஃபாஸி என்ன செய்ய...? நாக்கைத் தட்டிக் கொண்டான்.
நடு இரவுப் பணிக்குளிர் நாளுக்குநாள் அதிகரிக்கத் தொட ங்கியிருந்தது. வயது முதிர்வை நோக்கிக் கொண்டிருப் போர் அல்லவா? காதுகளைச் சுற்றி ஏற்கனவே மஃப்ளர் கட்டியிருந்தார்கள். குளிருக்குள் பணிபுரிவதென்றால் வெப்ப மதமதப்பு உசாத்துணை தானே?
திக்குவல்லை கமால்

மலைவளவை அடைந்தபோது மூவருக்கும் பெரு மகிழ் வாக இருந்தது. பாதையைக் கடந்ததும் மோதீனப்பாவின் வீடு. அங்கே. தேநீர்.
ஒவ்வொரு நாளும் ஓடோடி வந்து கதவைத் திறக்கும் ரினோஸாவின் நினைவுதான் ஃபாஸிக்கு. இன்று சற்று அலாதியான மனநிலை அவனுக்கு. சும்மாவா கல்யாணப் பொருத்தத்தை ஓரளவுக்கு எய்திவிட்டவனல்லவா? இதை யெல்லாம் ரினோஸாவும் கேள்விப்பட்டு அதன் பிரதி பலிப்பை எப்படிக் காட்டப் போகிறாளோ என்பதை ஒரு கண் பார்க்க அவனுக்கு அவசரமாகவிருந்தது.
நோன்பு தொடங்கி இன்றோடு இரபதாவது நாள். அன்று மீன் கொடுக்க வந்தபோது. ஒரு சில நிமிடங்கள் தனிமை யில் கழிந்ததைத் தவிர இருவரும் மனந்திறந்து கதைத்தது கிடையாது. என்றாலும் அவள் அவனை விருப்பத்தோடு பார்ப்பதையும் அவன் அவளின் பார்வைச் சுகத்தை வழி பார்ப்பதையும் பரஸ்பரம் இருவரும் அறியாமலில்லை. சிலவேளை, கேள்வியுற்ற செய்தியால் மகிழ்ந்து, சந் தோஷத்தை வெளிப்படுத்தக் கூடுமோ? வேதனையுற்று வெறுப்பைக் காட்டலாமோ? என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. ஒருமனித உள்ளத்தைப் புரிந்து கொள்வ தென்பது அவ்வளவு இலேசான காரியமா? மலைவளவால் இறங்கி. ரோட்டைக் கடந்து. மோதீ னப்பா வீட்டு முற்றத்தில் கால்பதிக்கையில் ஃபாஸியின் கண்கள் கதவுத் தட்டையே கூர்ந்து நோக்கின. முன்பென் றால் பாதையைக் கடக்கும் போதே திறக்கும் கதவு.
நச்சுமரமும் நறுமலர்களும் G9)

Page 36
முற்றத்துக்கு வந்துவிட்ட பின்பும் திறக்கவேயில்லை. கண்கள் தம்மை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தான் ஃபாஸி. 'மகேள் தூக்கமா?' - முதல் தடவையாக கதவைத் தட்டி
மோதீனப்பா மகளை அழைத்தார்.
சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஃபாஸி அலாதியான எதிர்பார்ப்போடு. அங்கே ரினோஸாவைக் காணவில்லை. அவளது உம் மாவே நின்றாள். அவனுக்கு மனதில் இலேசாகச் சுளிரிட் டது. இந்தத் தகவலை அவள் விரும்பவில்லை. அவள் மனதிலும் எதிர்பார்ப்பு இருந்திருக்கிறதென்பதை அவ னால் தெரிந்து கொள்ள முடிந்தது. தன்னை இப்படியொரு உள்ளம் வழிபார்த்திருப்பதை நினைக்கும் போது அவனுக் குள் ஒருவித தர்மசங்கடத்தின் தலைகாட்டல். இருந்தாலும் என்னதான் செய்யமுடியும். ? ஓயாத உழைப் பிலும் உயர்ச்சியில்லாதிருக்கும் வாழ்க்கை. அவனைப் படர்ந்து எதிர்காலத்தை யாசிக்கும் இன்னொரு ஜீவன். இதற்கெல்லாம் தீர்வு, கல்யாணம் என்ற பெயரில் அவனை வந்தடைந்திருக்கையில் அதையெல்லாம் உதறித் தள்ளி னால். ஒரு குடும்பத்தை நடுவழியில் விட்டுவிட்ட பாவத்தைச் சுமக்க வேண்டுமே.
ஒரு பெண்ணைத் தெரிவுசெய்வதல்ல இப்பொழுது அவ னுக்குள்ள பிரச்சினை. அதுதான் பிரச்சினையென்றால், முடிவு ரினோஸாவுக்குச் சாதகமாகவே அமைந்துவிடும். தனக்கொரு வளமான எதிர்காலம். தங்கைக்குப் புது வாழ்வு. பெற்றோரின் மனச்சாந்தி இப்படி எத்தனையோ
திக்குவல்லை கமால்

அம்சங்களின் பின்னணியில் தான் அவனது முடிவு பிறந்தது. 'நான் ஒங்கள ஏமாத்தல்ல இப்படி ரினோஸாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும் போலிருந்தது அவனுக்கு. மறுகணம் காரியசாத்தியமில்லாமல் ஏமாற்றமடைந்து கொள்பவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம். 'இந்தாங்கொ தேத்தண்ணி' - இது ஸெளதும்மாதான். ஃபாஸியின் தொண்டைக்குள்ளால் தேநீர் இறங்க மறுத் தது. இஞ்சி தட்டிப்போடாமல், சுள்ளென்று சுவையுணர்வு இல்லாமல் ஏனோதானோவென்றிருந்தது தேநீர். காஸிம் காக்கா ரபானைச் சூடுகாட்டி மீண்டும் தயாராகிக் கொண்டார். மூவரும் முச்சந்திப் பக்கமாக தங்களது கடமையைத் தொடர்ந்தனர்.
'டும்டும்டும். டும். . .
நச்சுமரமும் நறுமலர்களும் G D

Page 37
பதினெட்டு
முகத்துவாரத்துக்கு மீன் பிடிக்க வருமாறு ஃபாஸியை நண்பர்கள் அழைத்தனர். நோன்புநாள் வேலைகள் இருந்த தனால், முடித்துவிட்டு வருவதாக வாக்களித்தவன் பின்பு தான் அதையிட்டு மனம் வருந்தினான்.
பழைய வழக்கப்படிதான் அவன் உடன்பட்டான். ஆனால் தற்பொழுது புதிய மனிதனென்பது பின்பல்லவா மனதில் எழுந்தது. வலையையும் கூடையையும் தூக்கிக் கொண்டு போவது அவனுக்கு வெட்கமாகப் பட்டது.
எது எப்படியான போதிலும் நண்பர்களுக்குச் சொன்னபடி போகத்தான் வேண்டும். நட்புக்குக் கலங்கம் வந்துவிடக் கூடாதல்லவா?
பெரிய மத்திச்சமோ அவர்களைச் சார்ந்தவர்களோ கண் ணில் பட்டுவிடக்கூடாதென்று பிரார்த்தனை சகிதம் கூம்புக் கூடையையும் சுமந்து கொண்டு புறப்பட்டான்.
என்னதான் செய்தபோதிலும், எங்குதான் நடந்த போதிலும் அவனது எண்ணமெல்லாம் இப்பொழுது மங்களகரமான நினைவுகளாலேயேதான் பூரித்துப் போயிருந்தது.
மனோரம்மியமான நினைவலைகள் துள்ளிக் குதிக்கும் இளமைதான் அவனுக்கு. எனினும் அதன் பாதிப்புக்கு ஆட் பட்டுச் சுழன்றுகொண்டிருக்காமல், வெவ்வேறு காரியங் களில் இவ்வளவு நாளாக ஈடுபட்ட போதும் இப்பொழு தெல்லாம் அப்படியிருக்க மனம் இடம் கொடுப்பதில்லை.
G2) திக்குவல்லை கமால்

இதற்கிடையில் மூன்று தடவை பெரிய மத்திச்சம் காஸிம் காக்காவின் வீட்டுக்கு வந்து போயிருந்தார். அவர் மாத்திர மல்ல ஸெய்துநானாவும் கூடவே வந்ததாக அவன் கேள்வி யுற்றான். பேச்சு வார்த்தைகளின் வேகத்தைப் பார்த்தால், இன்றோ நாளையோ காரியம் நடந்துவிடும் போலிருந்தது.
அவன்சுலைனாவை மனக் கண்களுக்குள் இழுத்து நிறுத்தப் பெரிதும் பிரயத்தனப்பட்டான். ஒடித்திரியும் சின்னப் பருவம்தான் அவன் மனதில் பதிந்திருந்தது. அவள் பெரிய பிள்ளையான பிற்பாடு இரண்டொரு தடவை கண்டிருக்கக்கூடும். கண்ணுற்ற வேளைகளில் கூட அவன் ஒழுங்காக அவதானிக்கவும் தவறவிட்டிருந்தான். பெண்களையெல்லாம் நுணுதுணுகிப் பார்த்து ரசிக் கவோ. எடைபோடவோ எப்பொழுதுமே அவன் துணி பவன் அல்லவே.
எப்படியாவது ஒளிந்து மறைந்தாவது சுலைனாவைப் பார் த்துவிட வேண்டுமென அவன் மனம் துடியாய்த் துடித்தது. ஃபாஸியின் மனதில் மகிழ்ச்சி அலைகள் எழுவது போல, கடலலைகளும் இரைந்து புரண்டன. தூரத்தே சில படகுகள் மெல்ல மெல்ல அசைந்தன. அந்தப் படகுகளுக்கு ஆழ் கடலில் எத்தனை பேராபத்துக்களும் அதிர்ச்சிகளும் இரு க்ககூடும்! வாழ்க்கைப் படகும் இப்படித்தான் என அவை
உணர்த்தகின்றனவோ?
நண்பர்கள் அவனை எதிர்பார்த்திருந்த முகக் குறியோடு வரவேற்றனர். கொஞ்ச நேரகாலத்துடனேயே வந்திருந் தால் சற்று இருட்டுப் பரவும் வரையில் வலை வீசலாமே
நச்சுமரமும் நறுமலர்களும் G63)

Page 38
என்று சொல்வது போலிருந்தது அவர்களது நடத்தைகள். அப்பொழுதெல்லாம் ஃபாஸியின் செய்தி, அங்குமிங்கு மாகப் பரவியிருந்ததால், அதனை வைத்துத் தன்னைப் பகிடிபண்ணக்கூடுமென்று அவன் எதிர்பார்த்தான். செல் லக் கோபமும் சொல்ல முடியாத இனிமையும் இரண்டறக் கலக்கும் நிலை. 'மசான். ஃபாஸி ஒன்ட கலியாணம் கிட்டப் போலீக்கி" - யாஸின் மெல்லக்கேட்க அதனை அங்கீகரிக்குமாப்போல் ஜாகீர் சிரித்தான். உண்மைகளை எடுத்துச்சொல்லி, நல்ல வழியில் போக உதவுவது நண்பர்களின் கடமை என்பதைத் தெரிந்து கொண்டுதான், கதையைத் தொடர்ந்தார்களோ என் னவோ?
'ஓ மசான். அதெனா ஒரு மாதிரி கேக்கிய??? - வெகு சாதாரணமாகத்தான் ஃபாஸி கேட்டான். அவன் பார தூரமாக எதையும் எடுத்துவிடவில்லை. இருவரும் சேர்ந்து நட்புரிமையோடு பல விஷயங்களைக் கதைத்தபோது ஃபாஸியின் உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அவர்கள் வார்த்தைகளில் கள்ளம் கபடம் படிந்திருக்கவில்லையென்பது அவனுக்குத் தெரியும். தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த வலையைப் பார்த் தான் ஃபாஸி. அப்பாவி மீன்கள் எவ்வளவு இலேசாக இதில் சிக்கிவிடுகின்றன. இப்படி மனிதர்களுக்குள்ளும் வலைவிரிப்பவர்களும் அதில் சிக்கிக்கொள்பவர்களும்.
தீக்குவல்லை கமால்

'அது அது மீன் துள்ளிய போலீக்கி’ மூவரும் எழுந்து வலைகளைத் தாங்கிக் கொண்டு முகத் துவார நீர்க்கரையோரமாகத் தயாராக நின்றனர். மெல்லிய இருள் மெல்லப் படர்ந்து கொண்டு வந்தது. வெளியே மாத்திரமல்ல ஃபாஸியின் நெஞ்சத்திலும் கூடத்தான்.
★★★★★
நச்சுமரமும் நறுமலர்களும் G5)

Page 39
பத்தொன்பது
நேற்று மீன் பிடிக்கப் போய் வந்ததிலிருந்து ஃபாஸியின் மனநிலை சீராக இல்லை. கடந்த ஒருவார காலமாக நில விய மகிழ்ச்சி இவ்வளவு சீக்கிரமாக இப்படி உடைந்து சிதறிப் போய்விடுமென்று அவன் கனவில்கூடக் கருதியது
கிடையாது.
எது குளிர்தரும் சோலையென்று கருதினானோ. எங்கு சுகந்த இன்பம் சுகிக்கலாமென்று எண்ணினாளோ, அது குளிர்தரும் சோலையுமல்ல. அங்கு சுகந்தரும் இன்ப மல்ல, தகிக்கும் துன்பமே காத்திருக்கிறதென்பதையும் தெரிந்து கொண்டான்.
அவனுடைய நிலைதான் இப்படி. ஆனால் வீட்டிலோ இன்னுமே அந்த உற்சாக அலை ஆரவாரம் செய்த படிதான். எவ்வளவு இலேசாக மனிதனை மனிதன் ஏமாற்றிவிடு கின்றான். அதையும் எவ்வளவு தைரியமாகவும் தந்திர மாகவும் சாதிக்க முயல்கின்றான்? ஃபாஸி ஒளித்து விளையாட விரும்பவில்லை. இன்றே வீட்டில் சொல்லிவிட வேண்டுமென விழைந்தான். தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் மகன் உடன்படுவதும் எதைச் சொன்னாலும் அதை மீறாதிருப்பதும் காஸிம் காக்கா தம்பதிக்கு நன்றாகத் தெரிந்த விடயம். அதனால்தான் பெரிய மத்திச்சம் கல்யாணப் பேச்சைக் கொண்டு வந்தபோது, மகனிடம் கடமைக்காகவேனும்
G6) திக்குவல்லை கமால்

ஒருசொல் கேட்காமல் சம்மதம் தெரிவித்தார்கள். அவனும் மறுபேச்சின்றி அதை ஏற்றுக் கொண்டுவிட்டான். உம்மா வாப்பாவின் நம்பிக்கையும் அவர்களை மதிக்கும் மனப்பக்குவமுமே அவனை அந்த நிலைக்குத் தள்ளிய தென்று சொல்ல வேண்டும். அத்தோடு, பெரும் பண விருட்சமான பெரிய மத்திச்சத்தின் நிழலில் ஒதுங்கக் கிடைக்கிறதே என்ற நப்பாசையுந்தான். அவன் மீண்டும் ரினோஸாவை மனதுக்குள் இழுத்து நிறுத் தினான். அந்த அப்பாவி முகம் அவன் கண்களில் வந்து நிறைந்தது. அவளது இளமைக் குறும்புகள் அவன் நினை
தனது மனச்சாட்சிக்கு சமாதான முலாம்பூசி, அதில் துலங் கிய ரினோஸாவென்ற ஒளியை மறைக்க மேற்கொண்ட முயற்சிக்கு. அவளின் மெளனக் கண்ணிர் சக்தி வாய்ந்த அமிலமாய் பாய்ந்துவந்து அவனிதயத்தை. அதுவும் இவ்வளவு சீக்கிரமாக தீய்க்குமென அவன் நம்பவே யில்லை.
'அல்லா' - என்றவாறு வீட்டுக்கு வந்து கரையேறினார் காஸிம் காக்கா.
அவர் வந்த சந்தடி கேட்டு உள்ளேயிருந்த அவர் மனைவி மரியமும் முன்னே வந்தாள். கயிற்றுக் கட்டிலில் சாய்ந்த படி யோசித்துக் கொண்டிருந்த ஃபாஸி எழுந்தமர்ந்து கன்னத்தில் கையூன்றிக் கொண்டான். 'எனத்தியன் புள்ள யோசிக்கிய??? - காஸிம் காக்கா மகனிடம் கேட்டார்.
நச்சுமரமும் நறுமலர்களும் G67)

Page 40
இந்த சந்தர்ப்பத்தைக் கைவிடக் கூடாதென்று தன் மனக் குமுறலை வெளிக்கக்கினான் ஃபாஸி.
'வாப்பா. கோச்சிக்கொளவாண. நீங்க பேசீக்கிய கலியாணத்துக்கு நான் புரியமில்ல' 'எனத்தியன் சென்ன?"
ஒரேயடியாய் எதிர்பாராத அதிர்ச்சிக்கு ஆட்பட்ட நிலையில் இருவரும் துள்ளிக் குதித்தனர். 'நான் மோதீனப்பாட மகளுக்குத்தான் புரியம்' அவர்களுக்கு அடிக்கு மேல் அடி. இந்தச் சில நாட்களாக கட்டிய மனக்கோட்டைகள் ஒன்றன்மேலொன்றாக சரிந்து நொறுங்கி. இருவரும் மெளனச் சாகரத்துள் ஆழ்ந்தபோனதை ஃபாஸி நன்கு கவனித்தான். அதற்காக அவன் என்னதான் செய்துவிட முடியும்? கிண்ணத்திலுள்ள பானத்தைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்; அதிலே தடவப்பட்டுள்ள நச்சு எங்கே தெரியப் போகிறது. "ஃபாஸி இன்னம் கொஞ்சம் யோசின பண்ணிப்பாரு. அவசரப்படவாண. பின்னுக்கு எங்களுக்கும் வேலவெட் டீக்கி?" - உம்மாவின் கருணை மனு இது. அவன் அர்த்தத்தோடு சிரித்துக் கொண்டான். யதார்த்த நிலைகள் அவர்களுக்கெங்கே தெரியப்போகிறது? பெரிய இடத்து உறவும். உதவி என்ற பெயரில் விரிக்கும் வாய்ப்பந்தலும் கழுத்தில் சவடி ஏறும் வரையில்தான். அதன் பின்பு மத்திச்சத்தின் கண்கள் காஸிம் காக்காவின்
திக்குவல்லை கமால்

வாசற்படியைக் கண்டுகொள்ளவா போகிறது?
பெரிய மத்திச்சம் நினைத்த காரியத்தைச் சித்தியாக்க, இறுதிவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளத் தவறாதவர். அவரது கோபத்துக்கு ஆளானால் அந்தப் பகுதியிலேயே வாழமுடியாமல் போய்விடும். அவரோடு எத்தனையோ விடயங்களில் முட்டிக் கொண்டவர்களுக்கெல்லாம் நடை பெற்ற கவலைக்குரிய சங்கதி காஸிம் காக்கா தம்பதியின் அனுபவத்திற்கு உட்பட்டவை. அதனால்தான் அவர்கள் மிகமிகப் பயந்துபோனார்கள்.
'மகன் ஒன்டு செல்லியன். மத்திசத்தட கோவத்தச் சம்பரிச்சிக்கொள்ளப்படாது. ' - காஸிம் காக்கா இறுதியாக இதைத்தான் சொன்னார். எந்த நியாயமும் ஃபாஸியின் முன் எடுபடவில்லை. இனி எடுபடப் போவதுமில்லை.
புனித ரம்ழானிலே வந்து சேர்ந்த பரக்கத்து அது முடியு முன்பேயே இப்படி லஃனத்தாக மாறிப் போகுமென்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
★ ★ ★ ★ ★
நச்சுமாமும் நறுமலர்களும் Gs)

Page 41
இருபது
ளுஹர் வரையில் வழமையான வேலைகளையும் அவை முற்றுப் பெற்றால் வேறு ஏதேனும் வேலைகளையும் தேடித் தேடிச் செய்வது மோதீனப் பாவின் பழக்கம். அதன்படி வெளிச்சாலை விரிப்புகளைத்தூசுதட்டிப் போட முனைந்தார் அவர்.
"கொஞ்சம் இங்கல வாரா?"
இது காஸிம் காக்காவின் அழைப்புக் குரல். இந்நேரம் கஞ்சிச் சட்டியை அடுப்பேற்றியிருப்பார். அதனால்தான் கதைச் சுகத்துக்காக கூப்பிட்டிருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டார் அவர். மோதீனப்பா கஞ்சி மடுவத்தை அடைகையில் அங்கு காஸிம் காக்காவைத் தவிர வேறு எவருமே இருக்க வில்லை. முதல் கட்ட வேலைகள் முற்றுப் பெற்றிருந் ததால் ஃபாஸியையும் காணவில்லை. மரக் குற்றியில் இருவருமாக அமர்ந்து கொண்டனர். கடந்த ஒருவாரகால நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் தொகு த்து வழங்கினார் காஸிம் காக்கா. அவற்றைக் குறுக்கீடு செய்யாமல் செவிமடுத்தார் மோதீனப்பா. ஓடோடிச் சென்று மனைவியிடம் கொட்டித் தீர்க்கும் துடிப்பு அவருக்கு. அதனால்தான் அனைவரையும் போடும் குட்டித்தூக்கத்தையும் ரத்துச் செய்துவிட்டு வீடு நோக்கி ஒட்டநடைபோட்டார்.
தீக்குவல்லை கமால்

மோதீனப்பாவுக்கும் காஸிம் காக்காவுக்குமிடையிலான தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல; வெறும் தொடர்புமல்ல. இதனால் ஒருவருக்கொருவர் எதையும் மறைத்ததோ மறைக்க முயன்றதோ இல்லை. ஆனால் கடந்த வாரச் சம்பவத் தொடரை மாத்திரம் காஸிம் காக்கா மோதீனப்பாவிடம் சொல்லவில்லை. அதற்காக அவருக்கது தெரியாமல் போய்விடவுமில்லை. தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளவுமில்லை.
பெரிய இடத்து ஏற்பாடல்லவா? அது பகிரங்கமானால் என்னென்ன குறுக்கீடுகள் வந்துவிடுமோவென்று பயந்துதான் அப்படி மறைத்தாரோ என்னவோ?
எப்படியிருந்தாலும் அது குலைந்து" போகக்கூடிய அள வுக்கு ஃபாஸி ஒரேயடியாக மறுத்து நிற்பது ஏனென்று மோதீனப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப் படியொரு வாய்ப்பு தங்களுக்குக் கிட்டவில்லையே என்று ஏங்குவோர் ஏராளம் இருக்க, கிடைத்ததை இப்படி உதை ப்பதென்றால். சில நேரங்களில் அவன் வேறு எங்காவது மனம் வைத்திருக் கலாம். அப்படியென்றால் முதலிலேயே விருப்பமின் மையை தெரிவித்திருக்கலாம்தானே? இதில் ஏதோ உள் ரகசியம் இருக்கலாமென மோதீனப்பாவின் மனம் சொன்
னது. என்றுமில்லாதபடி இந்நேரத்தில் கணவன் வருவதைக் கண்ட ஸெளதும்மாவுக்கு ஏதோ புதினமொன்று இருப்பது புரிந்தது. அதனை அறிந்து கொள்ளும் பாங்கில் அவள்
நச்சுமரமும் நறுமலர்களும் G D

Page 42
முகத்திலே வினாக்குறி.
'தெரீமா செய்தி. காஸிம் காக்காங்கட கலியாணச் செய்திதான். ஃபாஸி ஒரேயடியாக ஏலாண்டு செல்லி யாம்' - வந்ததும் வராததுமாக விஷயத்தைக் கக்கினார்.
'செலநேரம் எங்கட ரினோஸாவ. - தவிர்க்க முடியா மல் இந்த நினைப்பு அவள் மனதில்.
இனிச் சும்மாவா இருப்பாள் ? கேள்விக் கணைகளின் தொடர்ச்சி.
大 ★ ★ ★ ★
G2) திக்குவல்லை கமால்

இருபத்தொன்று
நோன்பின் பிற்பகுதி, நாளுக்குநாள் வெய்யிலின் அகோ ரம். அதனால்தான் மறக்காமல் குடையையும் எடுத்துக் கொண்டார் காஸிம் காக்கா.
பெரிய மத்திச்சம் பொல்லாத குணம் படைத்தவர். எல் லோரும் தன்னை மதிக்க வேண்டுமென எப்பொழுதும் எதிர்பார்ப்பவர். அவர் இன்னொருவரைப் பார்த்து சிரிப் பது கதைப்பதென்றாலே அபூர்வம்தான். அப்படியிருக்க மூன்றுதடவை வீடு தேடி வந்து. போதாக்குறைக்கு அங்கு கொடுக்கும் எளிய பானங்களைக்கூடக் குடிக்கும் அளவுக்கு இறங்கி நின்றவரை, எதிர்பாராதவிதமாக இப் படி உதைத்தால்.
பல வருடங்களாக அவரின் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் வேலை செய்பவன் என்ற முறையில், காஸிம் காக்காவுக்கு அவரைப் பற்றிச் சற்று அதிகமாகவே தெரியும். அதனால் தான் அவர் பயப்பட வேண்டியிருந்தது. பங்களாவின் கேற்றைத் திறந்துகொண்டு வாசலண்டை கால் பதிக்கையில் உள்ளே குர்ஆன் ஓதல் ஒலி மெல்லித மாகக் கேட்டது. சந்தேகமில்லை அது மத்திச்சத்தின் குரலே தான். ஓதி முடியும்வரை ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றார். என்னென்ன எப்படியெப்படிக் கதைக்கவேண்டுமென் பதையெல்லாம் அவர் மனம் ஒத்திகை பார்த்துக் கொண்டது.
நச்சுமரமும் நறுமலர்களும் G3)

Page 43
அங்குமிங்கும் பார்த்து வேறு எவரையும் காணாததால் படிக்கட்டில் அமர்ந்து கையில் தஸ்பைக் கோர்வையை உருட்டத் தொடங்கினார். உள்ளே ஒதல் ஒலி ஓய்ந்தது. அதேவேளை வெளியே காஸிம் காக்காவின் இதய ஒலி அதிகரித்தது. பள்ளிவாசலுக் கும் நேரம் நெருங்குவதால் கொஞ்சம் செருமி சமிக்ஞை காட்டிக் கொண்டார்.
'ஆ. காஸிம் காக்காவா வா உள்ளுக்கு’ - வாய் நிறைய வரவேற்றார் அவர். போதாக்குறைக்கு பக்கத்தில் அமர்ந்து கொள்ளவும் செய்தார். 'அன்ன நான் நகநட்டுக்கெல்லம் ஒடர் குடுத்திட்டன்' மெல்லிய குறுநகையோடு சொன்னார். காஸிம் காக்காவை "சுள் லென்று ஏதோ குத்தியது. அடுத் தடுத்த ஏற்பாடுகளை விபரிக்கு முன்னே விஷயத்தைக் கக்கிவிடுவது புத்திபோலப் பட்டது. 'மத்திச்சம். ' - அதற்குமேல் வார்த்தைகள் வர மறுத்ததோ!
'செல்லு காஸிம்." - இது மத்திச்சம் 'ம். இந்த விஷயத்துக்கு. மகன் இப்ப புரியக் கொறச்சல். ' - நாக்கும் உதடுகளும் முட்டி மோதிக் கொண்டபடி,
அவர் கண்கள் சுழன்று நிலைகுத்தின. இரு கைகளையும் டக்கெனக் கதிரைச் சட்டங்களில் குத்தி, முதுகை நிமிர்த்தி
ஒரு சிங்கப் பார்வை பார்த்தார். அதனைத் தாங்கிக் கொள்ள
திக்குவல்லை கமால்

முடியாமல் காஸிம் காக்கா நிலத்தை நோக்கினார்.
'ஏன்ட மானம் மருவாரிய வெச்சிட்டு ஒன்ட ஊட்டுக்கு ரெணுமூனுதரம் வந்தன். இப்ப இப்படிச் சென்னா...' 'நாங்க ஏன் டமட்டும் சென்ன மத்திச்சம். அவன் கேக்கியல்லேன்' - யார்தலையிலாவது பழியைச் சுமத்தித் தப்பிக் கொள்ளவேண்டாமா?
'அப்ப அவன் வேறெங்கியாலும் கண்வெச்சீக்கோ' - பொறுப்பானதொரு போடுபோட்டார். 'ஒ. மத்திச்சம். அப்பிடித்தான் வெளங்கிய"
'எங்கியன்...???
'எங்கட மோதீனப்பட மகளப் போலீக்கி"
'சரி நான் மோதீனக் கூப்பிட்டுக் கேக்கியன். அன்ன எப்பிடீம் இது நடக்கோணும். இல்லாட்டி. நான் செல்லியல்ல. பொறகு பாத்துக்கோ. ”கர்ச்சித்தபடியே எழுந்தார்.
என்னென்ன நிகழ்ந்துவிடுமோ என்று குழம்பியபடி பள்ளியை நோக்கினார் காஸிம் காக்கா. புதியதொரு பாரம் நெஞ்சை அழுத்தத் தொடங்கியது.
大 ★ ★ ★ ★
நச்சுயரமும் நறுமலர்களும் Gs)

Page 44
இருபத்திரண்டு
அன்று கஞ்சி மடுவத்தில் விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்பட் டிருந்தது. முப்பது நோன்புக்குமென மொத்தமாக எடுத்த விறகு, இலக்குத் தவறி இருபத்துமூன்றாம் நோன்பிலேயே முடிந்து போயிருந்தது. பஸாருக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள நிறுவை விறகு விற்குமிடத்துக்கு பத்தே நிமிடத்தில் சைக்கிளில் பறந்துவந்து சேர்ந்தான் ஃபாஸி, போதுமான அளவுக்கு ஒடர் கொடுத்துவிட்டு, முடிந்த அளவை லகேஜில் கட்டிக் கொண்டு புறப்பட்டான். விறகின் சுமையும் நோன்பின் சோர்வும் அவனுக்கு சைக்கிளை உழக்க சிறிது கஷ்டத்தைக் கொடுத்தது போலும்.
'டேய். ஃபாஸி"
இந்த அதட்டலாலும் பின்னால் எழுந்த குலுக்கலாலும் தட்டுத் தடுமாறி விழப்போய் ஒருவாறு காலைக் குத்தி இறங்கினான்.
அவனைச் சுற்றி மூவர். சேட் கொலரை இறுக்கி, ஒருமுறை அவனை முன்பின்னாக உலுக்கினான் ஒருவன். ஃபாஸியால் எதுவுமே செய்ய முடியவில்லை. கைவிட் டால் விறகும் சைக்கிளும் நடுரோட்டில் விழுந்துவிடக் கூடிய நிலை.
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
G) திக்குவல்லை கமால்

'நீ பெரிய ஆளாடா. ஊருச்சோறு தின்னியவன்." - மூன்றாவதாக நின்றவன் ஆக்ரோஷித்தான். சாராய வாசம் வேறு மூக்கை அரித்தது. இப்படிப்பட்ட வர்களுடன் அவனுக்கென்ன கதை? இதற்கிடையில் பலரும் அங்கே கூடிவிட்டார்கள். அறிந் தவர்கள் மாத்திரமல்ல; அறியாதவர்களும் கூடத்தான். இல்லாவிட்டால் எதுவும் நடக்கக் கூடிய சந்தர்ப்பம். 'கலியாணம் பேசி சல்லி சாமனெல் லாம் எடுத்துப் போட்டு. இப்ப புரியமில்லயாம். டேய் ஒன்னக் கடத்திக் கொணுபெய்த்து காவின் எழுதுவோம்டா. சும்ம வெளாட் டுக் காட்டாதே அன்ன’ சைக்கிளை சரிப்படுத்திக்கொண்டு புறப்படுவதற்கிடை யில் இந்தக் குரல் அவன் காதில் தெள்வாக விழுந்தது. அப்போதுதான் இப்படியெல்லாம் நடந்ததன் பின்னணி என்னவென்று புரிந்தது.
ஒருவகையில் இப்படி நடந்தது நல்லதுதான். அவர்களின் ஏதோ ஒரு திட்டந்தான் போதை மயக்கத்தில் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். மத்திச்சம் குடும்பத்தவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். இதோடு இத்தகைய நடவடிக்கைகள் முற்றுப் பெறுமென அவன் நினைக்கவில்லை. இது ஆரம்பம். இன்னும் யார்யாரையெல்லாம் அதட்டத் தொடங்குவார்களோ தெரியவில்லை. எப்பொழுதுமே கிள்ளுக்கீரையாக இருந்துவிட அவன் விரும்பவில்லை. எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற உறுதி.
நச்சுமரமும் நறுமலர்களும் G7D

Page 45
விறகுச் சுமையோடு சைக்கிளில் ஃபாஸி வந்து சேர்வதற்கிடையில், பஸாரில் நடந்த சம்பவம் அவனுக்கு
முந்தியே அங்கு வந்து சேர்ந்திருந்தது. அதை மேலும் விசாரிக்க ஒரு கூட்டமே வந்து சேர்ந்துவிட்டது.
★ ★ ★ ★ ★
தீக்குவல்லை கமால்

இருபத்திமூன்று
ஹ வுலைச் சுற்றி குந்தியிருந்து வுழு செய்யத்தக்கதான படிக்கட்டை, மாதம் ஒரு தடவையாவது தேய்த்துக் கழுவ மோதீனப்பா மறப்பதில்லை. மெல்லிய பாசி படர்ந்து சிலர் வழுக்கி விழவும் நேர்வதால்தான் அந்த ஏற்பாடு. சாரத்தை உயர்த்திக்கட்டிக் கொண்டு தேங்காய் உரிமட்டை யைக் கையிலெடுத்தாரென்றால் இனி நாலு பக்கத்தையும் தேய்த்து சொரசொரப்பாக்கிய பின்புதான் மறுவேலை. அதனைச் செய்து முடிக்க ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுத்துவிட்டது. அடுத்தபடலமாக. தொழுகைச்சாலை விரிப்புக்களைத் தூசி தட்டி, மார்பல் தரையைப் பெருக்கி மீண்டும் விரித்து முடிக்கையில் ஞஹருக்கு நேரம் சரியாகிவிட்டது.
தொழுது முடிந்த மனநிறைவோடு எழுந்த மோதீனப் பாவுக்கு அங்கே பெரிய மத்திச்சத்தின் அழைப்புக் காத் திருந்தது. பகல் வேளையில் வெய்யிலையும் நடைக் கஷ் டத்தையும் கருத்திக்கொள்ளாது இவர் வருகை தந்திருப் பதின் தாத்பரியம் மோதீனப்பாவுக்குப் புரியவில்லை. மத்திச்சம் அவ்விடத்தில் கதைக்காது பின்பக்கச்சாலைக்கே கூட்டிச் சென்றார். தனிமையான இடத்துக்கு அழைத்துச் செல்வதென்றால். ஏதோவொரு ரகசியம். அதேவேளை அவரது முகத்தில் படர்ந்திருந்த கோபக் குறி மோதீனப் பாவைத் திக்குமுக்காடச் செய்தது.
நச்சுமரமும் நறுமலர்களும் G2)

Page 46
'காஸிம் காக்கட மகன்ட கலியாண விஷயம் ஒனக்குத் தெரீந்தானே?" மத்திச்சத்தின் முதல் கேள்வியே அவருக்கு ஓரளவு உணர்த் தியது. தன்னைப் பயன்படுத்தி காஸிம் காக்காவை வழிப் படுத்த முயற்சிக்கிறார் போலும் என்றுதான் அவர் நினைத் தார்.
'தெரீம் மத்திச்சம். ' - தாழ்மையாகச் சொன்னார் மோதீனப்பா.
'அந்தக் கலியாணத்தப் பேசினது நான்தான். அதும் ஒனக்குத் தெரீம். அப்படித் தெரிஞ்சிகொண்டும் நீ ஒன்ட மகளக் குடுக்கியத்துக்கு அந்தப் பொடியன ஸெட் பண் ணிக்கி. நீ என்னால காலம் பெய்த்துக்கொண்டு எனக்கே வெளாடவாரா?' - இரைந்து கத்தினார் மத்திச்சம். மோதீனப் பாவுக்கு பெரும் அதிர்ச்சியாகவிருந்தது. அவர்தான் எந்தக் கலியாணக் கதையையும் அவர்களோடு வைத்துக்கொள்ளவில்லையே.
காஸிம் காக்காகூட அன்று எல்லா விடயத்தையும் சொன்ன போதும் மத்திச்சம் கூறியது போல் எதையுமே குறிப்பிட வில்லையே. சிலநேரம் தப்பிக்கொள்வதற்காக இப்படி யொரு கதையைப் போட்டாரோ என்னவோ? 'அப்படி ஒன்டுமில்ல மத்திச்சம். நான் அவங்களோட ஒரு ஜாதிக் கலியாணப் பேச்சிம் பேசல்ல."
மோதீனப்பாவின் பதில் மத்திச்சத்துக்கு சற்றே ஆறுதலை நல்கியது போலும்.
திக்குவல்லை கமால்

'அப்ப நீ இப்பவே செல்லிப்போடு. அந்தப் பொடியன் ஒன்ட மகளயாம் எடுக்கப் போற. ஏன் ட விஷயம் மட்டும் நடக்காட்டி எனத்தயாகுமென்டு செல்லேலா" - பயம் காட்டினார் மத்திச்சம். மோதீனப்பாவின் உடலெல்லாம் நடுநடுங்கியது. அவரின் கோபத்துக்கு ஆளாகி ஊரில் வாழவா முடியும்? 'அன்ன மாத்தமா நடந்தா. ஒனக்கு இந்தப் பள்ளில வேலில்ல. வயஸ" போனாலும் பாவ மென்டுதான் ஒன்ன வெச்சிக்கோ நிக்கிய. அதுபோல நிக்கோணு மென்டா புத்தியப் பாவிச்சிக்கோ...' - இறுதி எச்சரிக்கை யோடுதிரும்பி நடந்தார். 'யா அல்லா...' - என்று நெஞ்சைத் தடவிக் கொண்டு அப்படியே அமர்ந்து கொண்டார் மோதீனப்பா.
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 47
இருபத்தினான்கு
ஃபாஸிவாக்குக் கொடுத்துவிட்டு, பின்பு கல்யாணம் கட்ட முடியாதென்று சொன்னது இப்பொழுதெல்லாம் ஊரறிந்த ரகசியம். இனிமேல் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாதென்ற பொதுநல எண்ணத்தில்தான் யாரோ சிலர் அவனை நடுச்சந்தியில் வைத்து தாக்க முயற்சித்ததாக கதை பரப்பியிருந்தார்கள். ஸெளதும் மாவுக்கு இது அவ்வளவு பெரியதொரு குற்ற மாகப் படவில்லை. இதைவிட எவ்வளவோ பெரிய பாத கங்களைச் செய்தவர்கள்கூட எவ்வித எதிர்ப்பேச்சுக்குமே ஆளாகாமல் கெளரவமாக இருக்கிறார்கள். ஏழை இய லாதவர்களென்றால்தான் எல்லோருக்குமே ஒரு. இதையிட்டுப் பலவாறாக யோசித்துக் கொண்டிருக்கை யில்தான் மோதீனப்பா குழம்பிப் போனவராக அங்கு வந்து சேர்ந்தார். பெரிய மத்திச்சம் சொன்ன அத்தனையையும் சொல்லித் தீர்த்தபின்புதான் அவர் பெருமூச்சுவிட்டார். ஃபாஸிக்கு ரினோஸாவிலும், ரினோஸாவுக்கு ஃபாஸி யிலும் இலேசான விருப்பம் இழையோடுவதை ஸெளது ம்மா ஏற்கனவே கொஞ்சம் அவதானித்து வைத்திருந்தாள். அப்படி இருவருக்கும் பிணைப்புப் போட கல்யாணம் பேசுவதையும் விரும்பியவள்தான். எனினும் ஆரம்பத்தில் காஸிம் காக்கா வீட்டார், பெரிய மத்திச்சம் மூலம் வந்த
திக்குவல்லை கமால்

ஏற்பாட்டுக்கு விரும்பி விட்டு, சிலநாட்களின் பின்புதான் நிலைமை மாறியதையும் ரினோஸாவை சொல்லி ஏதோ தப்பிக் கொள்ள முயல்வதாகவுமே அவள் கூட நினைத்தாள்.
கணவனின் வேலை இல்லாமல் போனால் அவர்களின் வாழ்வே அதோடு சரிதான். இனிமேல் புதிதாகத் தொழில் பழகிச் செய்யகூடிய நிலையிலா மோதீனப்பா இருக்கிறார். போகட்டும், அதேவேலையைத் தான் வேறெங்கு போனா லும் செய்ய வேண்டும். அவரது வயதைப் பார்த்துவிட்டு தூக்கிக் கொடுத்து விடவா போகிறார்கள். அப்படியிருக்க வீண் தொல்லைகளை ஏன் மாலையாகத் தன் கழுத்தில் போட்டுக் கொள்ளவேண்டும். ‘'எதுக்கும் நீங்க அடுத்தூரில பேசின விஷயத்த கொஞ்சம் அவசரப்படுத்துங்கொ’ - இறுதி முடிவு போல அவள் கணவனைப் பார்த்து இப்படிச் சொன்னாள். ஸெளதும்மா சொல்வதெல்லாம் சூழ்நிலையின் பதட் டத்தால் தான் என்பது அவருக்குப் புரியவில்லை. பெரிய மத்திச்சத்தின் அதட்டலால் அவர் பயந்து போனது உண்மையே எனினும் அவருக்குப் புதுமையானதொரு வேகம்.
பணத்தையும் ஆள்பலத்தையும் ஆதாரமாகக் கொண்டு எத்தனைநாளுக்குத்தான் ஆட்டமாட முடியும். எல்லோரும் எல்லாக் கூத்துக்களையும் எப்பொழுதுமே பார்த்துக் கொண்டுதானிருப்பார்களா?
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 48
மோதீனப்பாவுக்கு வயது முதிர்வுக்குள்ளும் தைரியம் பிறந்திருந்தது. அந்த வேகத்தோடு வீட்டிலிருந்து வெளி யிறங்கினார். அவரது வீட்டு முன்னால் பெல்லடித்தபடி நாலைந்துபொடியன்கள் சுற்றிக் கொண்டிருந்த பின்னணி யும் சமகாலப் பரபரப்போடு சம்பந்தப்பட்டது என்பது அவரது எண்ணத்தில் விழவில்லை.
★ ★ ★ ★ ★
திக்குவல்லை கமால்

இருபத்தைந்து
இந்த இரண்டொரு நாட்களாக ஸெளதும்மாவுக்கு இருப் புக் கொள்ளவில்லை. நேரத்துக்கொரு செய்தியாக வந்து அவளை நிலைததும்பச் செய்து கொண்டிருந்தது.
கடந்த மூன்று நாட்களாக பாய்தட்டி வரும்போது காஸிம் காக்காவுடன் கதைப்பதற்கு அவள் முயற்சித்தாள். கண வரும் கூடனே இருந்ததாலும் ஃபாஸி காது கொடுக்கக் கூடுமென்பதாலும் கதைக்கவில்லை. அங்கு இனியும்தான் கதைப்பதற்குரிய சூழல் ஏற்படுமென்று எதிர்பார்க்கவும் இயலாது. ஏற்படும் வரை காத்திருக்கவும் கூடாதுதானே.
வேலையுடன் வேலையாக காஸிம் காக்காவின் மனைவி யைப் போய்ச்சந்தித்துவிட்டு வரவேண்டுமென்று புறப்பட் டாள் ஸெளதும்மா.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருவரையொருவர் சந்தித் துக்கொண்டபோது இருவருக்குமே கால்கள் நிலத்தில் படவில்லை.
சம்பந்தக்காரர்களாகப் போகிறோமேஎன்ற சந்தோஷத்தில் தான் மோதீனப்பாவின் மனைவி வந்திருக்கவேண்டு மென்று நினைத்தாள் மரியம்பீபி. அதுபோக இவ்வளவு இலேசாக அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கப் போகி றதேயென்ற செல்லப் பொறாமையுமாகவிருந்தது.
என்ன இருந்தாலும் இருவரும் நீண்டகாலக் கூட்டாளிகள். அவர்கள் இருவருமே பாடசாலைக்குப் போய் இரண் டெழுத்துப் படித்தவர்கள் அல்ல. ஆனால் இருவரும்
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 49
குர்ஆன் ஒதியது சிஃபாய் தாத்தாவின் பள்ளிக்கூடத்தில் தான். அந்நாட்களில் இருவருமே ஒன்றாகத்தான் திரிவார்கள்.
சமகாலத்தில்தான் இருவருக்கும் கல்யாணமும் நடந்தது. கணவன்மாருங்கூட நண்பர்கள்தான்.
'சும்மா அன்னம் அநியாயமா கொழப்பத்தியள எடுத் துப் போட்டுக் கொளாம பேசினமாதிரி கலியாணத்த செய்ங்கொ.”
ஸெளதும்மாவா இப்படிப் பேசுகிறாள்? அவள் எதிர்பார்க் காததொன்று. ஒருமுறை மனதுக்குள்ளால் மகனைத் திட் டிக்கொண்டாள்.
'இதால எத்தின கரச்சலன் பாருங் கொளே." - ஸெளதும்மா மீண்டும் சொன்னாள்.
இந்தக் கூற்றில் இழைந்த நியாயம் ஃபாஸிக்கல்லவா புரிய வேண்டும்.
"நாங்க செல்லியத்தக் கேக்கியல்லேன் அவன்’
மகன் தங்களுக்கு இந்த விஷயத்தில் கட்டுப்படவில்லை என்பதைப் பிரஸ்தாபித்தாள் மரியம்பீபி.
"சும்ம எங்கட ரினோஸாட பேரும் அடிபடுகிய’
மகனுடன் போர் தொடுக்க ஒரு துரும்பு கிடைத்துவிட்ட தெம்பு பிறந்துவிட்டது அவளுக்கு. தனது மனக்கோலத் தைத்தக்க இடத்தில் பதித்த பின்புதான் வீட்டு அலுவல் களும் நோன்பு என்ற நினைவும் எழுந்தது அவளுக்கு.
★ ★ 大 ★ ★
திக்குவல்லை கமால்

இருபத்தாறு
வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட பெரும் கிடங்கில் விழுந்துவிடாது, தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டதை நினைத்து ஃபாஸி பூரிப்படைந்தான். அவனது உம்மா இன்னுந்தான் அவனை விட்டபாடில்லை. எப்படியாவது மீண்டும் அவனை வேதாளக் கதையாக்கத் தான் துடித்தாள். இன்றோ நாளையோ உண்மை சந்தைக்கு வந்துவிடும். அப்பொழுதுதான் எல்லோரும் மூக்கில் விரலை வைப்பார்கள். அதை ஃபாஸி நன்கு அறிந்து வைத் திருந்தான். ரினோஸாவின் உம்மா வந்து போனதையும் அவள் சொன்ன விடயங்களையும், அவனது உம்மா எடுத்துக் கூறியபோது அவனுக்குச் சிரிப்பாகவுமிருந்தது. மறுபக்கம் பெரும் வேதனையாகவுமிருந்தது. பெரிய மத்திச்சம் காட்டும் பூச்சாண்டிகளுக்கு யார் எப்படிப் பயந்தாலும், அவனதை கணுக்காலுக்குமேல் உயர்த்த வில்லை.
ஆனால் ரினோஸாவுக்கு வேரிடத்தில் கல்யாணம் பேசு கிறார்களாம் என்பதைக் கேள்விப்பட்ட போது தான் அவனது நெஞ்சு துடித்தது. இதற்கு அவர்கள் எப்போது துணிந்தார்கள்? இந்தக் குழப்ப நிலைக்கு முன்பா பின்பா? அவள் அதற்குச் சம்மதித் திருப்பாளா? இப்படிப் பல கேள்விகள் அவன் மனதிலே
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 50
ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. அவற்றுக்கெல்லாம் பதில் காண அவன் படித்தது போதாதுதான். ரினோஸாவோடு எப்படியாவது கதைத்து. அவளது மனதைத் தேற்றி. தனது தவறை ஒப்புக்கொண்டு காரியத்தை சித்தியாக்கு மாறு அவனுக்குள்ளிருந்து ஒரு குரல். இரவில் பாய்தட்டிப் போகும்போது ரினோஸா வீட்டுக்குப் போகும் சந்தர்ப்பம் இன்னும் ஒரு வாரத்துக்குமேல் நீடிக் கப் போவதில்லை. ஆனால் அவளை நிறுத்திக் கதைப்பது தான் பெரிய கஷ்டமாயிற்றே. ஆரம்ப நாட்களில் பிரியப் பார்வையோடு துலங்கியவள். பாழாய்ப்போன கலியாணப் பேச்சு வந்து. பணப் போதை அவனது கல்பை மறைத்ததிலிருந்து அவள் எதிர்த்துலங்கள் காட்டத் தொடங்கினாள். இடைக்கிடை சில நாட்கள் தேநீர் விநியோகித்த போதிலும் அதிலொரு பாசத்துடிப்பு இருக்க வில்லை. எப்படி இருக்கமுடியும்? அவன் மனம்மாறி மத்திச்சத்தின் ஏற்பாட்டை உதைத்து விட்டு, ரினோஸாவையே விரும்புவதாகத் தெரிவித்ததால் அவள் முன்பைவிட அன்போடும் ஆதரவோடும் நடந்து கொள்வாளென்று கற்பனை செய்த ஃபர்ஸிக்குக் கிடைத் தது வெறும் ஏமாற்றந்தானா? அதிலிருந்து அவள் தன்னை வெறுப்பதாக அவன் எண்ணவில்லை. அது அவள் காட்டு கின்ற "கர்வம்' என்றுதான் கருதினான்.
ரினோஸாவுக்குக் கல்யாணம் பேசும் கதையில் எவ்வித உண்மையும் இருக்க முடியாது. இது தனது முடிவைப் பலவீனப்படுத்தி பழைய பல்லவியைப் பாடவைப்பதற் கும், பெரிய மத்திச்சத்தின் கீழ்த்தரமான அதட்டல்களுக்குப்
திக்குவல்லை கமால்

பயந்தும் வெளியாக்கப்பட்ட தகவலென்றுதான் கருதி னான்.
தற்செயலாகவாவது ரினோஸாவை அவனால் கல்யாணம் செய்ய முடியாமல் போனால் அதைவிடப் பெரிய அவ மானம் வேறென்னதான் இருக்கமுடியும்? அந்த அவமானத் தைச் சுமந்துகொண்டு தொடர்ந்தும் வாழ்வதா? அவனால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாதிருந்தது.
எல்லாவற்றையும் விட பெரிய மத்திச்சத்துக்கு சவாலா கவே இதனை ஏற்று எப்படியாவது செய்து காட்டுவதுதான் அவனுக்குச் சரியாகப்பட்டது. அதன்பின்பு அவரது கெட் டித்தனங்களை எப்படிக் காட்டப் போகிறார் என்பதைப் பார்க்கப் பல நெஞ்சங்கள் காத்திருக்கின்றனவே. ஃபாஸியை அடித்து நொறுக்கவோ. மோதீனப்பாவை வேலையிலிருந்து நீக்கவோ. விலக்கவோ. அல்லது இதுபோன்ற எதையேனும் செய்யவோ தன்னால் முடியு மென்று மத்திச்சம் கருதியிருந்தால். ஃபாஸிக்கோகாஸிம் காக்காவுக்கோ. மோதீனப்பாவுக்கோ யாரும் துணையாக இல்லையென்ற குருட்டு நம்பிக்கையில்தான். இவர்கள் ஆண்டுதோறும் கந்தூரியோஸக்காத்தோ கொடுப் பவர்கள் அல்ல, பெரிய பெரிய தொடர்புள்ளவர்களு மல்ல. ஆனால் இவர்களது உழைப்பு. சேவை. இவற் றின் பின்னால் நூற்றுக் கணக்கான நெஞ்சங்கள் அணிவகுக் காமலுமில்லை. இதையெல்லாம் தனது உம்மாவுக்கோ வாப்பாவுக்கோ நெருங்கிய நெஞ்சங்களுக்கோ சொல்லிவைக்க வேண்டு
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 51
மென்று ஃபாஸி நினைக்கவில்லை. இது அவர்களின் சிந்திப்புக்கு அப்பாற்பட்டவையாயிற்றே. ஒரு பெரிய மாறுதலுக்கு, தான் காரணகர்த்தாவாகப் போகின்றேனே என்பதை எண்ணும்போது அவனுக்கு இன்னொருவகை யில் பெருமிதமாகவுமிருந்தது. இந்த நிலையில் அவன் ரினோஸாவோடு மனம்விட்டு சில விடயங்களைப் பற்றிக் கதைக்கவே விரும்பினான். அதற் கொரு சந்தர்ப்பத்தை அவள் ஏற்படுத்தித் தருவாளா என் பதை அவனால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எதற்கும் ஒரு முயற்சியை மேற்கொள்வதைத்தவிர வேறு வழி அவனுக்குப்படவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் அவன் தனது தங்கையைப் பற்றிச் சிந்திக்கவில்லை. சீதனம் ஆதனம் எல்லாமுமாக ஒரேயொரு சமூகலாபம் மாத்திரந்தான் கிடைக்கும் போலிருந்தது. நல்ல குறிக்கோள்களுக்கு நல்ல வெற்றிகள் என்றும் உண்டுதானே? என்றுமில்லாத எதிர்பார்ப்புகளோடு இன்று ஃபாஸி கட்டிலில் புரண்டுகொண்டிருந்தான்.
k . . . .
தீக்குவல்லை аштай

இருபத்தேழு
'டும்டும்டும். டும். டும்டும்."
இரவுத் திரையைக் கிழித்துக் கொண்டு இந்த ரபான் ஒலி ரினோஸாவின் காதுகளுக்குள் வந்து மோதியது. இப் பொழுதெல்லாம் அவளுக்கு என்னதான் அக்கறை? அப் படி அக்கறையிருந்தால் துள்ளியெழுந்திருப்பாளே. மறு பக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள். மனம் சஞ்சலித்துப் போயிருப்பதற்காக செவிப்புலனுக்குத் தடைபோடவா முடியும்.
உம்மா எழுந்து குசினிப் பக்கம் போவது அவளுக்குத் தெரிந்தது. கொஞ்ச நாட்களாக ரினோஸா அவர்களை ஏன் உபசரிப்பதில்லையென்று ஸெளதும்மாவுக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறிப் போய்விட்டதே. இருந்தும் அவளிடத்தில் மாற்றம் காணப்படாதது ஸெளதும்மாவின் சிந்திப்பில் சிக்கலை ஏற்படுத்தியது. ஃபாஸி தன்னைப் புரிந்து கொள்ளவில்லையென்று ரினோஸா ஒருநாளும் கருதவில்லை.ஆனால் அவன் கண் களை மயக்கியது எது என்பதும் அவளுக்குத் புரியும். அதற்காக அவள் கவலைக் கடலுக்குள் ஆழ்ந்து மூச்சுத் திணறவில்லை. ஏழைகள் வாழ்வில் எத்தனை ஆசைக் கனவுகள் மின்னிமறைகின்றன? அப்படி ஒன்றாகவே இதனையும் நினைத்து தன்மனதைத் தானாகவே தேற்றிக் கொண்டாள்.
நச்சுமரமும் நறுமலர்களும் Gp D

Page 52
ஒரு சில நாட்களுக்குள்ளேயே, நிலைமை சீரடைந்துவிட்ட போதும், நாலு வார்த்தை கொடுத்துவிட வேண்டுமென்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்து நின்றது. பெண்களென்றால் நினைக்கிற நேரம் நினைக்கிற மாதிரி ஆட்டி வைக்கத்தக்க பொம்மைகளா என்ன? ரபான் ஒலி மிக அண்மையில் ஒலித்தது.
“ சீரோங்கும் நோன்பு மாதமதில் - நாங்கள்
ஊரெங்கும் தீன்குரல் ஒதிடுவோம். டும்டும்டும். டும். டும்டும்." w ரினோஸாதுள்ளியெழுந்தாள் கட்டிலிலிருந்து. அது நிச்சய மாக காஸிம் காக்காவின் குரலல்ல, புதியதொரு குரலே தான். இனிமையும் கம்பீரமும் கலந்ததொரு புதுக்குரல். அது யாரென்று பார்த்துவிடும் ஆவலில் அவள் மனதில் பொங்கிக் குதித்தது. மெல்ல இறங்கிப் போய்க் கதவைத் திறப்பதற்கும். அவர்கள் முற்றத்துக்குள் பிரவேசிப்பதற்கும் சரியாக விருந்தது. ஒலைப் பந்தமும் அரிக்கன் லாம்புமாக அவளது வாப்பா. ரபானும் கையுமாக ஃபாஸி. ஆமாம் நினைவு மீட்டிப் பார்த்தாள். அது ஃபாஸியின் குரலேதான். என்னதான் விருப்பு வெறுப்பிருந்தாலும், அதற்கு அப்பாற் பட்டு அந்த குரலினிமைக்கு அவள் ஆட்பட்டு நெகிழ்ந் தாள். ரினோஸாவைக் கண்டதும் ஃபாஸிக்கு மகிழ்ச்சியோ பொறுக்கமுடியவில்லை. நேற்றுத் தீர்மானித்தபடி எப்படி யாவது கதைக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
G2) திக்குவல்லை கமால்

புதிய மனமாற்றத்தை வரவேற்று மகிழ்ச்சி தெரிவிப் பாளா? பழைய மனநிலையைக் குத்திக்காட்டி கடிந்து கொள்வாளா? என்று அவனுக்கு விளங்கவில்லை. வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்
ஃபாஸி. மோதீனப்பா கதவுத் தட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றபோது ரினோஸா வெளியே வந்து படிக்கட்டுத் தூணுக்கு முதுகைக் கொடுத்துச் சாய்த்துக் கொண்டாள். அன்று காய்ச்சல் காரணமாக காஸிம் காக்கா வரவில்லை. மோதீனப்பா இருவருக்கும் இடம் கொடுத்து மெல்ல நகர்ந்து நின்றாரோ? ஒழுங்காக உழைத்துண்ணும் ஒருவன், தன்மகளை விரும் பிக் கேட்கும் போது, வேண்டாமென்று ஒதுக்கி விட்டு. அதற்கப்பால் படப்போகும் கஷ்டங்களை யோசித்ததால் மட்டுமல்ல, பெரிய மத்திச்சத்தின் ஜம்பங்களுக்கும் அடி பணிய மறுக்கும் வீறும் வீரமும் அவருக்குள் குடி புகுந் திருந்தது. பயப்பிரமையால் பின்வாங்கிய மனைவியையும் படிப்படியாகக் கொஞ்சம் தைரியமூட்டிக் கொண்டார். "கொஞ்ச நாளா. ஒங்கள காணல்ல' - மிகத் தாழ்ந்து போய்விட்ட ஸ்தாயியில் அவன் வினவினான். “கொஞ்ச நாளா ஒங்கட பழய மனசேம் காணல்லேன்" - அவள் பாடம் செய்து வைத்திருந்தது போல் பட்டென்று சொன்னாள்.
அர்த்த புஷ்டியான இந்தப் பதில் அவனது மனதில் நன்கு தைத்தது. இப்படியெல்லாம் பேச அவள் புதிதாக யாரிட
நச்சுமரமும் நறுமலர்களும் Gos)

Page 53
மும் கற்றுக்கொண்டு வரவில்லை. சின்னப் பருவம் முதலே அவளுக்கு இப்படிப் பேச வருமென்று ஃபாஸிக்குத் தெரிந் ததுதான். 'இதுக்குப் பொறகு ஒருநாளும் மாறியல்ல ரினோஸா." - அவன் கெஞ்சுவது போலச் சொன்னாள்.
'அத எப்பிடியன் நம்பிய." - அவள் திருப்பிக் கேட்டாள்.
'சத்தியமா எங்கட கஷ்டமான நிலமதான் என்ன அப்பிடி மாத்தின ரினோஸா. ஆனா எங்கட குடும்பத்துக்கு அவங் களுக்கட்டீந்து வழிபார்த்தது எப்பிடீம் கெடக்கப் போற ல்ல. சும்ம அநியாயமா பெய்த்து சிக்கிக்கொளப்பாத்த. அல்லா காப்பாத்தீட்டான்."
'ஒ. எனக்கும் அந்தச் செய்தியெல்லாம் தெரீம்' - அவன் மறைத்து மறைத்துச் செல்ல முற்பட்டது தனக்கும் தெரிந் ததுதான் என்பதை வெளிக்காட்டினாள். அவள் ஒரேயடியாக இடிந்து போய் விட்டாள். சமாளி ப்பு. எதிர்பார்ப்பு. ஏமாற்றம் சகல வித உணர்வுகளும் சங்கமித்தவனாக நின்றான் ஃபாஸி.
'ரினோஸா. இனி எனக்கு எல்லாம் நீங்கதான். நீங்க இல்லாட்டி. எனக்கு வாழ்க்கயே இல்ல?' - அவன் புலம்பத் தொடங்கினான்.
இதற்கு மேல் அவனைப் போட்டு வதைக்க அவள் விரும்ப வில்லை. செய்த தவறுக்குத்தான் வார்த்தைகளாலேயே தண்டனை கொடுத்தாயிற்றே. ஃபாஸியைப் பார்க்கப் பாவம் போலிருந்தது அவளுக்கு.
'மகேள் தேத்தண்ணி’
நீக்குவல்லை கமால்

உம்மாவின் அழைப்பைக் கேட்டு உள்ளே விரைந்தாள் அவள். அப்போதுதான் அவளது வாப்பா 'ரெண்டுக்கு போய்விட்டுப் பின்பக்கமிருந்து வருவது தெரிந்தது. 'மகேள் ஃபாஸிக்குத் தேத்தண்ணி குடுத்தா..?" இது வாப்பாவின் கேள்வி. பதிலும் சொல்ல மறந்து தேநீர்க் கோப்பையை எடுத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்தாள் அவள்.
'இந்தாங்கோ' - கோப்பையை நீட்டினாள். 'அடுத்த வருஷம் எங்கடுட் டுலதானே நீங்க நோம் பு புடிக்கிய" தேநீரைவிட அவள் கேட்ட கேள்வி இனித்தது அவனுக்கு. அவ்வளவு நேரமும் நெருப்பாகத் தகித்ததவன் எப்படி பணியாகக் குளிர ஆரம்பித்தான். 'ரினோ ஒங்களப் போல ஒத்தி கெடக்கியது நான் செஞ்ச பாக்கியம் இப்படி மனதுக்குள் எண்ணிப் பார்த்து மெய்
மறக்கையில். 'டேய். இங்க பாருங்கடா இந்தக் கூத்த. ஒடிவாங்கொ ஒடிவாங்கொ. ”
ஒரு தடிக்குரல். தொடர்ந்து இரண்டொரு டோச் ஒளிக் கற்றைகள். சொற்ப வேளைக்குள் பேச்சுக் குரலும் கல கலப்புமாக ஒரு கூட்டமே குழுமிவிட்டது. ஏதோ பெரிய ஒழுக்கக் களவொன்றை கண்டுபிடித்துவிட்டதுபோல்.
மோதீனப்பாவும் மனைவியும் பதறினர். அக்கம் பக்கத் தவர்கள் என்னவோ ஏதோவென்று வெளிப்பாய்ந்தனர்.
நச்சுமரமும் நறுமலர்களும் Gs)

Page 54
வந்தவர்கள் விளக்கம் வேறு வழங்கத் தொடங்கினர். 'போங்கடா போக்கிரியள். முப்பது நோம்புக்கும் வார போற தேத்தண்ணி கோப்பித்தண்ணி குடுக்கியதெல்லாம் எங்களுக்குத் தெரீம். நாங்க அசல் மணிசரு. அந்தக் குட்டி யப்பத்தி எங்களுக்குச் செல்லத்தேவில்ல. நீங்களியள் எனத்துகன்டா இவடத்துக்கு வந்த. மிச்சம் பேசவந்தா நாயியளட கால ஒடச்சித்தான் அனுப்பிய." பக்கத்து வீட்டு ஆதம் பாவா வைத்த சத்தத்துக்கு வாயாடி கள் அப்படியே அடங்கி. அடுத்தவர்க்குத் தெரியாமல் அங்கிருந்து நழுவி. அப்பாவி மோதீனப்பாவையும் ஃபாஸியையும் இப்படி யெல்லாம் செய்து பயம் காட்டிவிட முடியாது. நியாயத் தின் பக்கம் குரல்கொடுக்க எவரும் தயங்கப் போவதில்லை யென்பதை இந்நிகழ்ச்சி நிரூபித்துவிட்டது. இக்குழப்பநிலை அரைமணி நேரத்தை அப்படியே விழு ங்கிவிட்டது. நேரம் கழிந்துவிட்டதேயென்ற அவசரம் இருவருக்கும். முதலில் கலங்கிப் போன ரினோஸா நிம்மதிப் பெருமூச் செறிந்தாள். எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவளு க்கு அன்று மகிழ்ச்சிதான் அதிகம். அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்குமாப் போல் ஒலித்தது. ஃபாஸியின் குரலும் ரபான் வாத்தியமும்.
'வஞ்சத்தனம் செய்யும் பாவிகளை - நோன்பின் நெஞ்சத் துணிவாலே நீக்கிடுவோம். டும்டும்டும். டும்.டும்டும்.”
G6) திக்குவல்லை கமால்

இருபத்தெட்டு
காஸிம் காக்காவும் மனைவியும் சோகமே உருவாக ஆளுக் கொரு பக்கமாக அமர்ந்திருந்தார்கள். மூன்றாவது ஆளாக ஃபாஸியும் அங்கு வந்து சேர்ந்தான். முதல் நாள் இரவு மோதீனப்பா வீட்டடியில் நடந்த சம் பவம் ஃபாஸியின் உம்மாவையும் வாப்பாவையும் மேலும் பாதித்திருந்தது. எப்பொழுதும் பிரச்சினைகளுக்கு அப் பால் வாழ விரும்பும் பிறவிகள் தானே அவர்கள். அவர் களை ஒத்தவர்களுடன் மோதுவதென்றால் ஒருவேளை ஒருவித பலம் ஊற்றெடுக்கலாந்தான். ஆனால். பூனைக் குட்டியொன்று எப்படி புலியுடன் மோத முடியும்? பெரிய மத்திச்சம் ஒன்றைச் சொன்னாரென்றால் அதைச் செய்யாமல் விடுபவரல்ல. இரண்டொரு தாள்களை இழு த்து நீட்டினால் திட்டங்களெல்லாம் அச்சொட்டாக நடந்து முடிந்துவிடும். ஃபாஸியுடன் நேரடியாக மோதிய இரண்டாம் சந்தர்ப்பம் இது. அதுபோக மோதீனப்பாவுக்கு நடந்துள்ள அதட் டல். வேலையும் இல்லாமல் போகும் இக்கட்டு. இந்தத் தொடர் தொல்லையை தடுத்து நிறுத்த ஒரேயொரு மருந்து. ஃபாஸிதான். எல்லாவற்றுக்கும் இமயமாக ஃபாஸியைப் பலாத்கார மாகக் கடத்தி தங்கள் காரியத்தைச் சாதிக்கும் ரகசியத் தகவலும் காஸிம் காக்காவின் காதுகளுக்குள் ரீங்காரம் செய்தது.
நச்சுமரமும் நறுமலர்களும் G97D

Page 55
இதையெல்லாம் ஒன்றுதிரட்டி காஸிம் காக்கா மோதீனப் பாவுடன் கலந்துரையாடினார். ஆனால் அவரின் நிலைப் பாடோ வெகுதூரம் மாறிப் போயிருந்தது. அவருக்குள்ளும் ஒரு அசாதாரணத் துணிச்சல்.
'எனத்தியன் மகனிது. எந்த நாளும் கரச்சலுக்குள்ளதான் வாழோணும் போலீக்கி” - அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தார் காஸிம் காக்கா.
'பெரியோரு அநியாயம் வந்து முடிஞ்சீக்கிய’ ஏற்றாற் போல் பல்லவி பாடினாள் மனைவி.
இருவரும் இன்னும் கூட இதைத்தான் சிந்தித்துக் கொண் டிருந்தது ஃபாஸிக்கு வியப்பாக இருந்தது. அவன்தான் பிரச்சினை என்ற கட்டத்தைத் தாண்டி தீர்க்கமான முடி வோடு இருப்பவனாயிற்றே. 'வாப்பா. பெரிய மத்திச்சம் அவங்கட பஸாத மறக் கியத்துக்கு எங்களப் பாவிக்கப் பாத்த. அதுக்கு நான் அம்புடுகியல்ல. எந்த நாளும் எல்லாரேம் ஏமாத்திக் கொண்டீக்கேல...”* மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, இவ்வளவு நாளும் சொல்ல முடியாமல் எதை மனதுக்குள் மறைத்து வைத் திருந்தானோ, இனிமேலும் அதை முக்காடிட்டு வைத்திருப் பதில் அர்த்தம் கிடையாதென்பதால் ஒரேயடியாக வெளிக் கக்கிவிட்டு இறங்கி நடந்த்ான். காஸிம் காக்காவுக்கு இடி விழுந்தது போலிருந்தது. உட லெல்லாம் சூடெடுத்து வியர்வை கொட்டியது. தலைக்கு மேலே ஏதோவெல்லாம் சுற்றிச் சுழல்வது போல.
தீக்குவல்லை கமால்

உள்ளேயிருந்து வந்த மரியம் பீபியின் முகத்தைப் பார்க்க அவருக்கு வெட்கமாக இருந்தது. அவர் முகத்தில் படர்ந்த மாறுதல் அவளுக்குப் புரிந்தது. காரணம்தான் புரிய வில்லை.
★ 女 ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும் Gs)

Page 56
இருபத்தொன்பது
புனித ரம்ழான் மாதத்தில் இருபத்தேழாம் நோன்பு விசேட மான ஒரு நாள். மகத்தான அந்நாளின் மகிமைகளோ கோடி. அந்நாளில் பள்ளிவாசல். வீடுகளெல்லாம் ஒதல். துஆ. தெளபாக்களுக்கு குறைச்சலே இல்லை. இவ்வருடம் நோன்புகால வரலாற்றில் ஒரு புது நிகழ்ச்சி பதிவாகியிருந்தது. காலை மலர்வதோடேயே எங்கும் இதே கதைதான். இதற்கெல்லாம் கதாநாயகன் வேறு யாருமல்ல; பெரிய மத்திச்சந்தான்.
பல வருடங்களாக ஸெய்து நானாவின் குடும்பம் மத்திச்சம் வீட்டோடுதான். எடுபிடிவேலைக்காரர்கள்.
அதுதான் அவர்களுக்கு ஜீவனோபாயம். பெரிய வீட்டின் ஒதுக்குப் புறமாக ஒரு சின்னஞ்சிறு வீடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய நன்னாளில், பெரிய மத்திச்சம் ஸெய்து நானா குடும்பத்தை இனிமேல் இங்கே காலடி வைக்க வேண்டாமென்று வெளித்தள்ளியிருந்தார்.
இதனால் முழு ஊருமே ஸெய்துநானா மீது அனுதாபப்பட் டதோடு அதன் பின்னணியை அறியவும் தலைப்பட்டனர். இத்தனைக்கும் பெரிய மத்திச்சம் வெளியே தலைகாட்டாது கப்சிப்பென்றிருந்தார்.
தீக்குவல்லை கமால்

இவ்வளவு நாளும் அடக்கியடக்கியிருந்த ஸெய்துநானா இனியும் பொறுக்க முடியாத நிலையில் பெரிய மத்திச்சத் துடன் வாய் கொடுத்ததன் விளைவுதான் இது. அவரின் வாக்குறுதியை நம்பி எவ்வளவு காலத்துக்குத்தான் காத் திருக்க முடியும்?
‘வெட்டேல பேசவாண. நானெல்லம் ஒழுங்கு செஞ்சி
தாரன்"
இப்படி அவர் உறுதி கொடுத்து எத்தனை வாரங்கள் நகர்ந்து விட்டன. எத்தனை நாளுக்குத்தான் இப்படியோரு விஷயத்தை மூடிமூடி வைத்திருக்க முடியும்? இப்பொழுதே இதற்கொரு முடிவு காணாவிட்டால் காலப் போக்கில் கைகழுவி விட்டால் யாரிடந்தான் போய்ச் சொல்ல..? அதைவிட ஊர் ஜமாத்தினருக்கு அம்பலப் படுத்தி. பள்ளிவாசலுக்கு முறைப்பாடு கொடுத்து ஒரு தீர்வு காணவேண்டுமென்ற யோசனையில்தான் ஸெய்து நானா வாய்திறந்தார்.
குறுகிய வட்டமொன்றுக்குள் சுழன்றுகொண்டிருந்த விட யம், அன்று பகலாகமுன்பே ஊரெல்லாம் கொடி கட்டிப் பறந்தது.
'சுலைனாக்கு மூனு மாஸமாம்.'
இந்தச் செய்தி பரவலான பின்புதான் பெரிய மத்திச்சத்தின் இளைய மகன் இல்யாஸைக் கடந்த சில வாரமாகக் காணா ததை, இச் சம்பவத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப் பலரும் முனைந்தனர். அவனது முன்னைய சம்பவங்களும் சுபாவங்களும் அதற்கு வழிமொழிந்து நின்றன.
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 57
மகனைத் தந்திரமாக இடம்பெயர்த்துவிட்டு. விஷயத்தை மூடி மறைத்து. இன்னொரு அப்பாவியின் வாழ்வை இருட்டுக்குள் இழுத்துவிடவல்லவா அவர் திட்டமிட் டிருந்தார்.
'நல்ல காலம் ஃபாஸி தப்பின’’ ஃபாஸிக்கு பெரிய மத்திச்சம் கலியாணம் பேசியதெல்லாம் இதற்காகத்தான் என்பது வெட்ட வெளிச்சமாய்ப் போயிற்று.
ஃபாஸிக்கு நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் இல்லாதிருந்தால் அன்று மீன் பிடிக்கப்போனபோது அது பற்றிச் சொல்லாதிருந்திருந்தால். இந்நேரம் அவன்கதி. இந்த விஷயத்தை முதற்தடவையாகக் கேள்வியுற்ற சாதாரண மனிதர்களின் பட்டியலில் தான் காஸிம் காக்கா, மோதினப்பா தம்பதியினரும் அடங்கினர். அதை அறிந்து கொண்ட பின்புதான் பெரிய மத்திச்சத்தின் சுயரூபம் விளங்கியது. தங்களைப் போன்று மடையனாக ஃபாஸியும் இருந்திருந்தால். இந்நேரம் பெரிய மத்திச்சத்தின் பரம் பரை பாதுகாக்கப்பட்டிருப்பதோடு அவனது வாழ்வும் அர்த்தமில்லாமல் போயிருக்குமேயென்று எண்ணிக் கலங் கினர்.
ஸெய்து நானா தகுந்த நேரத்தில் தரமான மருந்தைக் கொடுத்திருந்தார். அவரிலே தங்கி வாழ்பவன் என்பதற் காக, மெளனியாகி அவன் சொல்வதையெல்லாம் விழுங் கிக் கொண்டிருக்காமல் தனக்கு அவமானம் வந்தாலும் பரவாயில்லை, பெரிய மத்திச்சத்தின் குட்டை வெளிச் சத்துக்குக் கொண்டு வந்தது எத்தனை முறையென்றாலும்
சிக்குவல்லை asuntó

பாராட்டத்தக்கதுதான். அதனால்தானே இன்று முழு ஊருமே அவர் பின்னால். சாதாரணர்களெல்லாம் வெகு உசாராக இயங்கத் தொடங் கினர்.
அப்பாவி மோதினாருக்கு இம் மாதத்தோடு வேலை யில்லையென்று தன் இஷ்டப்படி உத்தரவு பிறப்பித்துள்ள பெரிய மத்திச்சத்திடம் நாளைய ஜும்ஆவில் கேள்விக் கணை தொடுக்கக் காத்திருந்தவர்களுக்கு ஸெய்து நானா சமாச்சாரமும் கைகோத்துக்கொண்டு வந்து நின்றது. இதுகாலவரையில் பொது மக்களின் முறைப்பாடுகளை விசாரிக்கும் குழுத்தலைவரான பெரிய மத்திச்சமே, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படப் போகிறாரென்றால். அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் அது பெரிய மாறுதலாயிற்றே. பெரியவர் என்பதற்காக பேசாதிருக்கும் பரம்பரையா இது!
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 58
முப்பது
பாய் தட்டும் வேலைக்கு இரவு பன்னிரண்டு மணிக்கெல் லாம் புறப்பட்டுவிட வேண்டும். அதுவரையில் ஒரு குட்டித்துக்கம் போடுவார் காஸிம் காக்கா. அந்தத் தூக்கம் எட்டாக்கனியாய் நின்று அவருக்கு ஜாலம் காட்டியது. பெற்ற மகனை பெரியதொரு பாழ் கிணற்றில் தள்ளப் போன அபாயத்தை எண்ணித்தன்னை நொந்து கொண்டார் அவர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபாஸி சொன்னதன் சரியான அர்த்தப்பாடு இன்றுதான் அவரது அறிவுக்குப்பட்டது. 'வாப்பா பெரிய மத்திச்சம் அவங்கட பஸாத மறக்கியத்துக்கு எங்களப் பாவிக்கப் பாக்கிய. அதுக்கு நான் அம்புடுகியல்ல. எந்த நாளும் எல்லாரேம் ஏமாத்திக் கொண்டீக்கேல."
மகனின் இந்தக் கூற்றை நினைத்துப் பார்த்த போது இவ்வளவு காலம் ஊருக்குள் உருண்டும், பெரிய மத்திச்சத் தோடு பழகியும் அவரைப் புரிந்து கொள்ளவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார். போதாக்குறைக்கு மகனின் முகத்தை நேர்நின்று பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்தது. எங்கோ மணியொலிப்பது கேட்டது. அதற்கு மேலும் புரண்டு கொண்டிருக்க முடியுமா என்ன? கடமை கைநீட்டி
அழைத்தது. மெல்ல எழுந்து தயாரானார் காஸிம் காக்கா.
தீக்குவல்லை கமால்

சற்றே கண்ணயர்ந்திருந்தவள், கணவன் வெளிக்கிடும் சந்தடியில் மீண்டும் விழித்துக் கொண்டாள். பழையபடி சமகால நினைவு அலைகளே மனதுக்குள் மோதத் தொடங்கின. கண்கள் கசிந்தன. ஆனந்தக் கண்ணிர் தான். மகன் காப்பாற்றப்பட்டுவிட்டான் அல்லவா?
'உம்மா எழும் பல்லயா...??? - சஹராகிவிட்டதென்ற நினைப்பில் மகள் மஸாயிமா பாயிலிருந்தபடியே கேட்டாள்.
'இன்னம் டைமீக்கி மகள்' - என்றவாறு மறுபக்கம்
புரண்டாள்.அவள்.
大 ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 59
முப்பத்தொன்று
இருபத்தேழாம் நோன்பு நகர்ந்து விட்டது. இனிமோதீனப் பாவுக்கும் காஸிம் காக்காவுக்கும் ஓயாத அலைச்சல்தான். ஆனால் அலுப்பில்லை. சேட் பை மட்டுமல்ல கைப்பை யும் நிறைவதால் நெஞ்சுக்கு நிம்மதி. இரண்டொரு மாதம் பிரச்சினையில்லாமல் வாழ்க்கை வண்டி ஒடும். கைகளில் பைகள் சகிதம் காலையிலிருந்தே தொங்கல் முனை மஹ்ஷர் அப்பா வீட்டில் ஆரம்பித்து வீடுவீடாக ஏறியிறங்கும் படலம் தொடங்கியிருந்தது.
ஒருமாதமாக நடுஇரவில் சஹருக்கு எல்லோரையும் எழுப் பித் திரிவதற்கு பிரதியுபகாரமாக இப்படியொரு ஏற்பாடு. இதை மஹல்லாவாசிகள் எவருமே ஒரு சுமையாகக் கருத வில்லை. சந்தோஷமாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொத்து அரிசி. ஒரு முட்டை அல்லது அதற்குப் பெறுமதியான காசு. இது குறைந்தபட்ச அளவு. அதற்குமேல் விரும்பியவர்கள் விரும்பியபடி.
"மோதீனப்பா. நாங்களும் நிக்கிய. நீங்க ஒன்டுக்கும் பயப்புட வாண' - சின்னவளவு சித்தீக்நானா கொடுத்த உற்சாகம் இது.
ஊர்மக்களின் நாடி பிடித்துப் பார்ப்பதற்கு இதுவோர் நல்ல வாய்ப்பாகப் போய்விட்டது அவர்களுக்கு. பெரிய மத்திச்சத்தைச் சுற்றிச் சுழன்று சில காலமாக இடம்பெற்று வந்த சங்கதிகளை வைத்து அனைவருமே
திக்குவல்லை கமால்

அவர்கள் மீது அனுதாபம் கூறி விசாரித்தார்கள். எல்லா வற்றையும் விட மோதீனப்பாவை இம்மாதத்தோடு பள்ளி வாசலிலிருந்து விலக்கி விடுவதாக பெரிய மத்திச்சம் விடுத் திருந்த அறிவிப்பே எல்லோரையும் கொதிக்கச் செய்திருந் SS
'லொஹராகீட்டு போமா?" - மோதீனப்பாகாஸிம் காக்கா விடம் கேட்டார்.
"அப்ப போம்"
இருவரும் அரிசிப் பைகளைப் கழுத்தில் சுமந்து கொண்டு நடந்தனர். இருவருக்கும் நல்ல நிறைவு. நிம்மதி. தமக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்புக்களை ஒழுங்காகச் செய் வதும் அடுத்தவர்களுக்கு உபத்திரவம் இல்லாமல் வாழ் வதையுமே இயல்பாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் அவர்கள் எல்லோர் மனதிலும் இடம்பிடித்திருந்தார்கள். நாளை வெள்ளி இருபத்தொன்பதாம் நோன்பு. பள்ளி வாசலில் என்னென்ன பிரச்சினைகள் வெடிக்குமோ என் பதைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. என்ன தான் நடந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஊரவர்கள் தங்கள் பக்கம்தான். நியாயத்தின் பக்கந்தான் என்பது அவர்களுக்கு மேலும் தெம்பூட்டியது. 'யா அல்லா' - என்றவாறு பள்ளிவாசல் பின்படிக்கட்டின் கழுத்துச் சுமையை இறக்கிவைத்தனர் இருவரும்.
★ ★ ★ ★ ★
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 60
முப்பத்திரண்டு
அன்று வ்ெஸ்ளிக்கிழமை. ஜும்ஆ தொழுகை என்றுமில் லாத எதிர்பார்ப்போடு வந்து சேர்ந்தது. அதற்கு புனித ரம்ழானின் இறுதி ஜும்ஆ என்பது மட்டும் காரணமல்ல.
தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்ததும் ஒரு பகுதியின ரும், துஆ ஒதியதும் பெரும் பகுதியினரும் வெளியேறி விடுவதுதான் வழக்கம். அன்று ஒருவர்கூட அசைய வில்லை. முன் மண்டபத்திலே இருக்கக்கூட இடமின்றிக் குழுமி நின்றனர். குறுவட்டங்களாகக் கூடி தங்களுக் குள்ளே அபிப்பிராயங்களை வேறு பகிர்ந்து கொண்டனர். எல்லோரதும் எதிர்பார்ப்புக்குரிய பெரிய மத்திச்சம் அன்று பள்ளிவாசலையே எட்டிப் பார்க்கவில்லை. தனது கள்ளங் கபடங்களை ஜமாத்தார் தெளிவாக அறிந்து கொண்டார் களே என்பதாலோ என்னவோ?
பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவரான பெரிய மத்திச்சம் வயதிலும் அனுபவத்திலும் கூடியவர் என்பதால் ஒரு மரியாதை, வசதி வாய்ப்புக்கள் கொண்டவர் என்பதால் ஒரு கெளரவப் பயம். இந்த அனைத்தும் ஒன்று திரண்ட ஆளுமை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. பெரிய மத்திச்சம் தவிர்ந்த நான்கு மத்திச்சம் மாரும் தங்களுக்குரிய இடத்திலே வந்தமர்ந்தனர். அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களென்பதே அத்தனை பேரதும் எதிர்பார்ப்பு. அப்துல்லா மத்திச்சம் எழுந்தபோது அமைதி அரசோச்சியது.
திக்குவல்லை கமால்

'அஸ்ஸலாமு அலைக்கும். மோதீனப்பட பிரச்சினய நாங்க மொதலாவதா எடுக்கிய. அவர இந்த மாஸத்தோட வரவாணான்டு பெரிய மத்திச்சம் செல்லீக்கி. இவளவு காலமும் அவரெடுக்கிய முடிவுதான் எங்கடேம் முடிவு. இந்த விஷயத்தில நாங்க நேர் மாத்தம். இந்தப் பள்ளில இவரேதான் மோதீன் வேல செய்யோணும்." அப்துல்லா மத்திச்சம் இப்படிச் சொன்னதும் 'அல்லாஹ-0 அக்பர்’ என்ற மகிழ்ச்சியொலியே எங்கும் கரைபுரண் டோடியது. பெரிய மத்திச்சத்தைத் தவிர தன்னை வேறு யாருமே கைவிட்டுவிடவில்லையென்ற பெருமிதம் மோதீனப்பாவுக்கு.
அதைத் தொடர்ந்து ஸெய்து நானாவின் முறைப்பாடு எடுக்கப்பட்டது. அது சம்பந்தமான விசாரணைக்கு அழைக் கப்பட்டிருந்த பெரிய மத்திச்சமோ, அவரது மகன் இல்யாஸோ வருகை தந்திருக்கவில்லை.
‘ஸெய்து நானா மகள்ட விஷயமா தந்த மொறப்பாட்ட நாங்க விஷாரிச்சிப் பாத்த. இது சம்பந்தமா நாங்க ரெண்டுபேர வரச்செல்லீந்த. அவங்க இண்டக்கும் வரல்ல. அவங்களுக்கு இன்னம் ஒரு கெழம டைம் குடுக்கிய. அதும் வராட்டி குத்தத்த ஒத்துக் கொண்ட மாதிரிதான். ஊர் ஜமாத்திலீந்தும் அவங்கள வெலக்கி வெக்கியத்துக்கு கொமிட்டி முடிவெடுத்தீக்கி."
அப்துல்லா மத்திச்சம் நிதானமாகச் சொல்லி நிறுத்தினார். அதை அங்கீகரித்த முகபாவனை அனைவரிலுமே தெரிந்தது. இடையிடையே பெரிய மத்திச்சத்தின்
நச்சுமரமும் நறுமலர்களும்

Page 61
வாலாட்டிகள் இரண்டொருவர் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களும் கூட தலைகுனிந்தபடிதான் வெளியேற வேண்டியிருந்தது. பள்ளிவாசலிலிருந்து எப்போதுதான் எல்லோரும் வருவார்களென்று வீடுதோறும் பெண்கள் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு வீண்போய்விடவில்லை. வழமையாக மோதீனப்பாவோடு வருபவர் காஸிம் காக்கா தான். இன்று மாத்திரம் அவரைச் சூழ்ந்து ஓர் அலாதியான கூட்டம். ஆமாம் இன்று அவருக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து. 'பள்ளியால வெலக்கி வெக்கோணும் தான். அந்தக் குட்டிக்குப் போற காலமெனத்தியன்டேன் நான் கேக்கிய. எப்பிடிச்சரி புடிச்சிக் காவின் எழுதியதுதான் கெட்டித் தனம்' - பள்ளிவாசலிலிருந்து வந்து கொண்டிருந்த ஒருவரின் கூற்று இது. ‘‘ஸெய்து நான உட்டுக் குடுக்கியல்ல. எப்பிடிச்சரி வழக்குப் போட்டு கோட்டுக்கிழுக்கிய பாத்துக் கோங்கொ.' - இது அடுத்தவரின் கருத்து. இப்படியாக ஊரெங்கும் இதே பேச்சுத்தான் சூடு பிடித்திருந்தது.
★ ★ ★ ★ ★
தீக்குவல்லை கமால்

முப்பத்திமூன்று
'பெரிய மத்திச்சம் பெரிய மத்திச்சம்" என்று வாய் நிறைய அழைத்தபடி தலைசரித்து மரியாதை புரிந்தவர்களெல் லாம். அவர் இனி செல்லாக்காசுதான் என்பதைத் தெரிந்து கொண்டபின் அவரது வண்டவாளங்களையெல்லாம் கட்டவிழ்க்கத் தொடங்கியிருந்தனர்.
மத்திச்சம் என்ற சமூக அந்தஸ்திலிருந்து அவரைத் தள்ளும் கோரிக்கையோடு. அதற்கு ஆதரவாக வீடுவீடாகச் சென்று கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருந்த கோஷ்டிக்கு ஒவ்வோரிடத்திலிருந்தும் வியப்பான தகவல்கள் கிட்டியவண்ணமிருந்தன.
கூட்டு மொத்தமாகப் பார்த்தால் அவரது முன்னேற்றத்தின் அடித்தளமான வியாபாரமே எவரும் வெறுக்கத்தக்க ஹராமான வழிமுறைதான். என்ன இருந்தாலும் எப்படித்தான் சம்பாதித்தாலும் ஒருவன் பணக்காரன் என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டால் சமூகம் கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுமல்லவா? சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கால்களை ஊன்றிக்கொள்ள வழியா இல்லை. நோன்பில் சல்லி பகிர்தல். ரபீஉல் அவ்வலில் ஒரு கந்தூரி. மக்கா போய் ஹஜ் பட்டம். இப்படியிப்படி இன்னும் எத்தனை. அத்தனையையும்
விட்டு வைக்காமல் செய்து வந்தவர்தான் பெரிய மத்திச்சம்.
ஆயுள் காலப் பதவியாக அவர் கருதியிருந்த மத்திச்சம்
நச்சுமரமும் நறுமலர்களும் )1ו D

Page 62
வேலைக்கும் வேட்டு வைக்கும் கைங்கரியத்தில் 'பொடி யன்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வக்ஃபு போட்டுக்கு எழுதியிருந்த பெட்டிசத்தில் முழு ஊருமே ஒன்றாகத் துணிந்து கையெழுத்துப் போட்டிருந்தது.
என்னதான் செய்ய. காலம் பதில் சொல்லிக்
கொண்டிருந்தது.
★ ★ ★ ★ ★
G12) திக்குவல்லை கமால்

முப்பத்தினான்கு
மோதீனப்பா வீட்டில் பெற்றோல் மெக்ஸ் பிரகாசித்தது. முப்பது நோன்பும் முடிந்து நாளை பெருநாள் என்ற மகிழ்ச்சியில் ஒளிர்வதல்ல அது.
காஸிம் காக்கா வீட்டாரெல்லாம் அன்று அங்கு கூடியிருந் தனர். அந்த இரண்டு குடும் பத்தினரும் மாத்திரமல்ல அவர்களுக்கு வேண்டியவர்களும் அங்கு திரண்டிருந்தனர்.
ஃபாஸி மாத்திரம் இன்னும் வந்து சேரவில்லை. அவ னோடு இன்னும் பல நண்பர்கள் ஒன்று கூடியிருந்தனர். நல்ல காரியமொன்றைத் தைரியமாக மேற்கொள்ளப் போகும் அவனை, யார்தான் வாழ்த்தாமலிருக்க முடியும்.
பணம். பொருளென்று எதனையும் எதிர்பாராமல் இந்த நல்ல காரியத்திற்கு அவன் துணிந்திருந்தான்.
'பொறகு பாத்துச் செய்யேலுந்தானே'
இப்படி அபிப்பிராயமொன்று நிலவிய போதும், இன்றே இதைச் செய்ய வேண்டுமென்று அவன் துடித்ததற்கு பின் னணிக் காரணிகளும் இல்லாமலில்லை. பெரிய மத்திச்சம் எல்லாம் தாங்கிக் கொண்டு மெளனமாகவல்லவா இருக் கின்றார். எதிரி மெளனமாக இருப்பது நல்லதுக்கல்ல என்பார்களே!
'ஒரு நலவு செஞ்சா ஒரு நலவு வந்து சேரும்’
நச்சுமரமும் நறுமலர்களும் GB)

Page 63
மகனின் முடிவை பலர் மத்தியில் நியாயப்படுத்திக் கொண்டார் காஸிம் காக்கா. திருமண வயதில் அவருக்கு மொரு மகள் இருக்கிறாள் அல்லவா? இஷாத் தொழுகையைத் தொடர்ந்து லெப்பையும் ஏனைய மத்திச்சம் மார்களும் வந்து சேர்ந்தனர். பெருநாள் ஆரவாரங்களுக்கு மத்தியில் ஃபாஸி தனது நண்பர்கள் சகிதம் ஆடம்பரமோ ஆரவாரமோ இன்றி புது மாப்பிள்ளையாக வந்து சேர்ந்தான். நிக்காஹ்.. காவின் எல்லாம் இனிதே நிறைவு பெற்றன. ஃபாஸியும் ரினோஸாவும் சட்டபூர்வமாக கணவனும் மனைவியுமாகப் பதியப்பட்டனர். இனியென்ன. இரு வருக்கும் மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை. ரினோஸா வின் கண்கள் ஆனந்தக் கண்ணிரின் ஊற்றுக் கண்களாய் மாறின.
ரினோஸாவின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படியோ விஷயத்தை மோப்பம் பிடித்து ரைஹானா, ஸுல்ஃபிகா, சுபைதா இப்படியொரு கோஷ்டியே வந்து சேர்ந்திருந்தது. காஸிம் காக்காவும் மோதீனப்பாவும் ஒரு பக்கமாக ஒதுங்கி பீடி அடித்துக் கொண்டிருந்தனர். நோன்பு விடைபெறுவ தென்றால் அதிகம் கவலைப்படுபவர்கள் அவர்கள் இரு வருந்தான். ஆனால் இந்தமுறை அதிகம் சந்தோஷப்படு பவர்கள் அவர்கள் இருவருந்தான். இந்த ரம்ழான் அவர்கள் இருவரையும் சம்பந்தக்காரர் களாக்கியிருந்தது. மறுபக்கம் இந்த மண்ணில் வேரூன்றி யிருந்த விஷ விருட்சத்தை வீழ்த்தி அதன் அடிவாரத்தி
தீக்குவல்லை கமால்

லேயே நறுமலர்களை மணம்பரப்பச் செய்து விட்டது. 'நாளக்கிப் பெருநாள். நாளக்கிப் பெருநாள்'
மஃரிப் வேளையில் பிறை பார்த்து பெருநாளை உறுதிப்படுத்திக் கொண்ட போதிலும். வானொலிச் செய்தியைக் கேட்டதும் சிறார்களுக்கு ஒரே குதூகலம். வீதியெங்கும் இடைவிடாத ஆரவாரம்.
'நாளக்கிப் பெருநாள். நாளக்கிப்பெருநாள்.'
(முற்றும்)
நச்சுமரமும் நறுமலர்களும் டு)

Page 64
தீக்குவல்லை கமால்


Page 65
சின்னஞ் சிறுவனாக GTGÖT பிறந்த மண் மீது Fரத்திரிந்த நினைவுகள்
துறையானெே. நோன்பு காலம்
றுவர்களுக்கே உரித்தானது. இவ்வளிவி குதூகலமும் ஆரவாரமும் அன்றாட நடவடிக்கைக அத்தனையுமே அடிதை மாறிய இயக்கம், இப்பொழுது நினைத்த
இன்றைய சிறார்களிடமிருந்து இ நோன்புகாலக் கிராமிய தனித்துவமும் குதுரகவி அந்நியமாகிவிட்தே என்பதற்காகத்தான்.
SBN: 955–95926-2