கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்னையின் நிழல்

Page 1

)மணிமேகலைப்பிரசுரம்

Page 2

அன்னையின்
நிழல்
(சிறுகதைகள்)
83. விஜயன்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 147
7 (ப.எ.4), தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை - 600 017
தொபே, 24342926 தொ.ந. 0091-44-24346082 . . Saör 9S5 sfidò. : manimekalai@eth.net
enerorulu gertub: www.manimekalaiprasuram.com

Page 3
நூல் தலைப்பு
4 அன்னையின் நிழல்
ஆசிரியர் 4 கே. விஜயன்
மொழி ( தமிழ் பதிப்பு ஆண்டு ( 2004 பதிப்பு விவரம் 4 முதல் பதிப்பு
2 lffe0)Ld 4 ஆசிரியருக்கு தாளின் தன்மை 4 11.6 கி.கி.
நூலின் அளவு 4 கிரெளன் சைஸ்
(12% x 18%. Gls.f5.) அச்சு எழுத்து அளவு ( 10 புள்ளி
மொத்த பக்கங்கள் 4 192
நூலின் விலை 4 ரூ. 200/= அட்டைப்பட ஓவியம் 4 சாய் லேசர் வடிவமைப்பு 4 கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ்
அச்சிட்டோர்
* ீ நூல் கட்டுமானம் * வெளியிட்டோர்
O.
८. प्रष्ट = 2
O o
சென்னை - 26.
4. ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட்
சென்னை - 94. 4s,
4 தையல் 5.
4 மணிமேகலைப் பிரசுரம்
சென்னை - 17.
Accc
 
 
 
 

བ བྱuciremeiru$leir flpao ---------------------------------------
கடிதம் அப்புவின் கடிதம் ------------------------
கால்கள் m» 4wmw was awa சேவல் என் குழந்தை
சேவல் --- நன்றியின் தீபங்கள் -------------------- ஜானகி
ஆயா பிளைட் -------------------------
சைக்கிள்
அங்கலாய்ப்புகள் ---------------------
தளிர்
தார் கொப்புளங்கள் -------------------- ... spy SuShair glib ----------------------- சுதந்திர சறுக்கம் ------------------------- விடியல் வெளிச்சம் ------------------- மேடம் ரொம்ப பிஸி ------------------- சந்தேகக் கைதிகள் -----------------------
99
108
116
123
131
143
152
159
174
185

Page 4
என்னுரை
சிறுகதை என்றால் என்ன என்பதற்குத் தனியான இலக்கணத்தை நான் வகுத்துக் கொள்ளவில்லை. இதை சமூகத்திற்குச் சொல்லவேண்டும் என ஏற்பட்ட உந்துதலை உள்வாங்கி எழுதலானேன். அனுபவங்கள், சம்பவங்கள், உணர்வுகள், கருத்துகள் என்னிடமிருந்து கதைகளாக வெளிப்பட்டன. ஆனால் பாம்பின் சீற்றமாகவே அவை நிகழ்ந்தன. தேடுங்கள். ஏதோ, ஒரு சமூக நியதியை அது கொத்துவது தீட்சண்யமான கண்களுக்குத் தெரியும்.
கதை எழுதுவதற்காக நான் அமர்வதில்லை. என் நடமாட்டமே கதை சொல்வதுதான். மிக மிகச் சின்ன காலத்திலேயே அப்பழக்கம் என்னை ஒட்டிக் கொண்டிருந்தது. ‘புட்போல்’ அடித்துவிட்டு மைதானத்தை விட்டு செல்வதற்குக் கிடைப்பதில்லை. என்னைச் சூழ்ந்து கதை கேட்கும் கூட்டமே படையெடுக்கும். தொடர்கதை சொல்வேன். இருள் கனத்து அம்மா தேடி வரும்வரை கதை தொடரும்.
ஒருநாள் நான் அம்மாவிடம் சொன்ன கதையை எழுதும்படியாக நச்சரித்தாள். எங்கள் ஊரில் தமிழ் மன்றம் ஒன்றிருந்தது. அதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். அதில் எழுதினேன். அது 60-ம் கால கட்டம். இலங்கை இலக்கியம் பல பரிசோதனைகளையெல்லாம் நடத்திக் கொண்டிருந்த காலம். எனக்கு அந்த

5
சமாச்சாரங்களிலெல்லாம் எதுவித தெளிவும் இருக்கவில்லை. யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் சிறுகதை போட்டியொன்றினை 1960-களில் நடத்தியது. ‘இரு கைகள் என்ற என் கதையை அனுப்பி வைக்க அம்மா ஒரே நச்சரிப்பு. அட, அது பரிசை தட்டிக் கொண்டது. ஆனந்தத்தில் அம்மா குதித்த குதிப்பு இன்றும் கண்களுக்குள். என் முதல் ரசிகை அம் மாதான் என்றபோதும் என் முதல் சிறுகதை தொகுப்பு ‘அன்னையின் நிழல் வெளிவரும் நாளில் என் அம்மாவும் இல்லை. அதில் என் முதல் கதையும் இல்லை. மனத்தில் தாங்கவொண்ணா தவிப்பு.
யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தில் பரிசு பெற்ற கதை குறித்து பேராசிரியர் கைலாசபதி 'வசந்தம்’ சஞ்சிகையில் எழுதிய இரு வரிகள் இன்றும் நெஞ்சில் நிழலிடுகின்றன. இந்த இளம் படைப்பாளியின் கதை ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் அடித்தளம் எப்படி இருக்கப் போகின்றது என்பதற்கு அடித்தளமாக அமைகின்றது’ என்று எழுதியிருந்தார்.
பேராசிரியர் எதைக் குறிப்பிட்டார் தெரியவில்லை. நெசவாலையில் இயந்திரத்திற்கு இரு கைகளையும் பறிகொடுத்த ஒரு தொழிலாளி, அவன் மனைவி, அவர்களிடையேயான ஆத்மார்த்த உணர்வு, இதுதான் கதை. ஓர் உண்மைச் சம்பவத்தின் கதை வடிவம். என் கதைகள் இப் படித்தான் பிரசவமாகின. நான் தத்துவங்களுக்காக கதை எழுதவில்லை. பின்னாளில் ஏற்பட்ட தத்துவார்த்த தெளிவு என்பதைச் சரியானது என உணர்த்துகின்றன. ܫ

Page 5
பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய எழுத்துக்களை நூலாக்கும் முயற்சி என்னிடம் பூஜ்யம்தான் என்றபோதும் நல்ல மனதுடையவர்கள் துணை வந்து விடுகிறார்கள். 35 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ‘மறைதியின் சிறு அலைகள்’ நாவலை பூபாலசிங்கம் புத்தக அதிபர் பூரீதர்சிங் நூலாக்கினார். இப்போது எனது 19 கதைகளை தமிழரினரும், புலம் பெயரா ஈழத்து படைப்பாளிகளுக்கும் உதவும் பொருட்டு பெரும் முனைப்புடன் செயல்படும், சர்வதேச அகதிகள் நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் வி. குலேந்திரன் தனது சொந்த முயற்சியில் ‘அன்னையின் நிழல்’ சிறுகதை தொகுப்பை வெளியிடுகிறார். எத்தகைய பெரும் பணி. மறக்கமுடியாத நன்றி.
நண்பர்களான மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ் வாணன், ஈழத்து படைப்பாளி மானாமக்கீன் ஆகியோரின் அயராத ஒத்துழைப்பும் நூலுக்கு பெரும் துணையாகிவிட்டது.
எப்படி இந்த நல்லுணர்வுகளை மறக்கமுடியும்
அன்புடன் 6රිඝ. 6)]තgUör
K. Vijayan 23/49, Mayura Place, Havelock Road,
Wellawatte
Colombo - 6. Ph : 071 -403 1926 071 -403 1948

இலண்டன்
திரு. குலேந்திரனுக்கு பாராட்டும் நன்றியும்
இலண்டனில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுள் பலர் மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர்களாகவும், தாய்மொழிக்குச் சேவை செய்யவேண்டும் என்ற உயரிய உணர்வோடும் செயல்படுகிறார்கள். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ‘தமிழினி’ பத்திரிகையின் ஸ்தாபகரும், ஆசிரியரும், ஐரோப்பிய நகரில் தமிழில் பத்திரிகை தோன்றக் காரணமானவரும், முதலாவது தமிழ்ப் பத்திரிகையை வெளியிட்ட பெருமைக்குரியவருமான திரு. குலேந்திரன் அவர்கள்.

Page 6
யாழ் குடா தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்களிடமும் மிகுந்த அபிமானம் கொண்டவர்.
என் தந்தை தமிழ்வாணன் அவர்களால் அன்புடன் மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட திரு. எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்றவர். தமிழகத்தில் உள்ள பல பிரபலங்களுக்கு அறிமுகமானவர்.
தன் இளம் வயதில் கல்கண்டு பத்திரிகையின் அதிதீவிர ரசிகராக இருந்தவர். இதன் காரணமாக என்னுடைய இலண்டன் விஜயங்களின் போது இவரை பல முறை சந்திக்கக்கூடிய இனிய வாய்ப்புகள் எனக்குக் கிட்டின. சில வருடங்களுக்கு முன்பு ‘பாரதி என்ற திரைப்படம் வந்ததை வாசகர்கள் அறிவார்கள். இந்த சினிமாவை நண்பர் ஒருவருடன் சேர்ந்து நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்துங்கூட இலண்டனில் வெளியிட்டவர் திரு. குலேந்திரன் அவர்கள். கொள்கைக்காரர், இலட்சங்களைவிட இலட்சியங்களே பெரியவை என்பவர்.
தனது புரட்சிகரமான எழுத்துக்களால் மக்களைக் கவர்ந்ததுடன், இலங்கையில் அரசினால் தடை செய்யப்பட்ட முதலாவது சஞ்சிகையின் ஆசிரியருமாவார்.
புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இந்த நூல்கள் அனைத்தையும் முழுமையாக அவ்வப்போது வாங்கி உள்ளூர்த் தமிழ் உள்ளங்களுக்குக் கொடுக்கும் பழக்கத்தை உடைய இவர், மூன்று வருடங்களுக்கு முன்பு நான் இலண்டன் சென்றிருந்தபோது புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு ஊக்குவித்ததைப் போல இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் புலம் பெயராத எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட வேண்டும் என்று சொல்லியதோடு

மட்டு மில்லாமல், இலங்கையிலிருந்து வெளி வரும் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்து அதற்குரிய அனைத்துச் செலவுகளையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி உடனடியாக ஏற்பாட்டை மேற்கொண்டவர். இது பாராட்டுக்குரிய ஒன்றாகும். இந்த அருமையான திட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள நூல்களுள் இதுவும் ஒன்று. மற்ற நூல்களின் பட்டியல் அடுத்த பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
வெற்றிகரமாக குடி வரவு ஆலோசகராகப் பணிபுரிவதுடன் நீதிமன்றங்களில் தமிழ் அகதிகளுக்காக ஆஜராகி பல ஈழத் தமிழர்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர வதிவிட உரிமை யைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவராகவும், சிறந்த தொழிலதிபராகவும், பேருள்ளம் கொண்டவராகவும் செயல்படும் திரு. குலேந்திரன் அவர்களின் இந்த சீரிய ஒத்துழைப்பிற்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பதில் மணிமேகலைப் பிரசுரம் பெருமை கொள்கிறது.
இந்த ஆண்டு தமிழினி மஞ்சரி விருது 2004 என்று 15க்கும் மேற்பட்டவர்களுக்கு அளித்து 3-10-04 அன்று இலண்டனில் கெளரவிக்கிறார். இவர்களுள் அடியேனும் ஒருவன்.
ஏராளமான பொருட்செலவில் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் விழா நடத்தும் இவருடைய பேருள்ளத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
ரவி தமிழ்வாணன்,
7-9-2004 மணிமேகலைப் பிரசுரம்.

Page 7
புலம் பெயராகு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் திரு. குலேந்திரன் அவர்களின்
நல்லாதரவுடன் இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்!
விலை ரூ.
І. шптоої штоптәрєо - வஹிதா அவ்தாத் 27.OO
2. ஒரு கிராமம் தலைநிமிர்கிறது
- எஸ். குணரத்தினம் 35.00
5. வசந்த காலக் கோலங்கள்
- கவிஞர் புரட்சிபாலன் 30.00
4. காதல் என்னைக் காதலிக்கவில்லை
- எஸ். செல்வகுமார் 60.00
5. காலங்கள் மாறும் - கே. எஸ். ஆனந்தன் 45.00
6. feş. - செ. யோகநாதன் 40.00
7. கொம்புத்தேன் - புரட்சிபாலன் 75.00
8. ஒரு தந்தையின் கதை - அன்புமணி 44.OO
9. ஈழமன்னர் குளக்கோடீடனின் சிறப்புமிகு
சமய சமூகப் பணிகள்- க. தங்கேஸ்வரி 50.00 10. ஊழித்தாண்டவம் - என். சண்முகலிங்கன் 30.00 1. அன்னையின் நிழல் - கே. விஜயன் 45.00 12. மழைக்குறி - சுதந்திரராஜா 40.00
இன்னும் இதுபோன்ற சிறப்பான நூல்கள் இவருடைய ஆதரவுடன் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.
- பதிப்பகத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

11
அன்னையின்
நிழல்
மிருதுவான காலை இருளின் அணைப்பில் உலகம் துயில்கிறது. கிழக்கின் விளிம்பில் வெளிச்சக்கோடுகள் கோலமிடாதபோதிலும், பட்சி ஜாலங்களின் ஆர்ப்பரிப்பு முதிர்ச்சியடைந்த இரவின் அமைதி உதிர்ந்து கொண்டிருக்கின்றது.
வீதியின் ஒரமிருந்து உட்புறம் நோக்கிச் செல்கின்ற ஒரு குறுகலான சேற்றுப் பாதை,
நதிக் கரையோரம். கறுத்த ஜலதாரை
தொங்களில்...!
பலகைச் சுவர்களைக் கொண்டு நெரிசலாக கல்லறைகள் போல் காட்சியளிக்கும் குடிசைகள்.
கதவை வேகமாக மூடிவிட்டு, வெளியில் வந்து வாசலில் அதிர்ச்சியடைந்தவளாக நிற்கிறாள் றெஜினாமாமி
மனக்கடலில் கொந்தளிப்பு.

Page 8
፨ झुंझै
தலையை அணைக்கும் கையோடு சில கணங்கள் நின்றுவிட்டு முக்காட்டை இழுத்து முகத்தின் அரைப்பகுதி வரை மூடிக் கொண்ட மாமி, தனது கிழிசலான சாக்குப் பையுடன் வீதியில் அடியெடுத்து வைத்தாள். தடுமாறும் மனமுடன் கால்கள் நடைபோடுகின்றன.
12 இ) அன்னையின் நீழல் ଛିକ୍କ ॐ
கால்களை நன்றாக ஊன்றி நடக்க முடிவதில்லை. செருப்புகளை அணிந்து கொண்டிருக்கின்றபோதும் அவற்றால் பிரயோசனமில்லை, அவை பழையவை. அடிபாகங்கள் முற்றாகவே சிதைந்துவிட்ட சருகுகள்.
நெருப்பு வெயிலின் காங்கையால் தகித்து உருகும் தார் வீதியில் வேகமாக நடப்பதில் மட்டுமல்லாமல், அந்த செருப்புகளைச் செப்பனிடுவதிலும் றெஜினா மாமி மகா சமர்த்து.
யாரோ ஒரு நல்ல பெண்மணி வழங்கிய நன்கொடை அந்த செருப்புகள்.
காலமானது மாமலைகளையே தகர்க்கும்போது, தோலிலான இந்த செருப்புகள் எம்மாத்திரம்? அடிபாகங்கள் தேய்ந்துவிட்டன. பட்டிகள் அறுந்துவிட்டன. முழுச் செருப்பும் கொஞ்சமேனும் பாவனைக்கு லாயக்கற்றதாக ஆகிவிட்டது. செருப்புகளும் மாமியைப் போல சருகாகிவிட்டன.
மாமி விட்டபாடில்லை. மாமியைப் போலவே செருப்பும் அவளை ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அறுந்த பட்டிகளுக்குப் பதிலாக இரண்டு ரப்பர் துண்டுகளைக் கட்டிக்கொண்டாள். நடக்கின்றபொழுது பெரும் சங்கடமாகவேயிருக்கும். வீடோ, வீதியோ என்று
 

III)- GG5. Gíguu6oT «MIN 13
அவள் எதனையும் எண்ணிப் பார்ப்பதில்லை. அவிழ்ந்த இடத்தில் குந்திக் கொண்டிருந்து செருப்பைச் சீராக்குவாள்.
பாவம் றெஜினா மாமி! அவள் எவ்வளவு செப்பனிட்டும் என்ன புண்ணியம்? அந்த வெயிலுக்கோ, வீதிகளுக்கோ அணுவளவேனும் இரக்கமில்லை.
தார் கொதிக்கும் வீதியில் சதா பயணம் என்பதால் பாதங்களின் அடிபாகங்கள் தீய்ந்து புண்ணாகிவிட்டன. ஊன்றி நடக்க முடிவதில்லை; தத்தித் தத்தியே நடப்பாள்.
இதோ இன்றும் அந்த யாத்திரை.
இருள் முற்றாக கரைந்துவிடாதபோதிலும்,
வீதியில் வாகனப் போக்குவரத்து ஆரம்பித்து விட்டது. மஞ்சள் ஒளியை நேர்க்கோட்டிற் பாய்ச்சியவாறு ஒரிரு வாகனங்கள் பறக்கின்றன. சைக்கிள்கள் விரைகின்றன. அவற்றில் செல்வோர் பலர் சில்லறை மீன் வியாபாரிகள், பால்காரர்கள்.
சைக்கிளில் பறந்து கொண்டிருந்த மீன்காரன் மீராசாஹிபு கையை அசைத்துக் குரல் கொடுத்தான்.
“ரெஜினா மாமி.”
கலகலப்பான குரல்.
மீராசாஹிபுவைக் கண்டதும் பொக்கை வாயை அகலத் திறந்து பெரிய கண்களை உருட்டிச் சிரிக்கும் றெஜினா மாமி இன்று சிரிக்கவில்லை.
அடடா மாமிக்கு என்ன?

Page 9
14 綏) அன்னையின்நிழல்
শু%।
கடந்த முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாகச்
சம்பிரதாயமாகிவிட்டிருந்த ஒரு பழக்கம் இன்று உதிர்ந்த சருகானதே.
கிழவனுக்கு அதிர்ச்சி.
சைக்கிளின் பெடலை சீராக மிதித்தவண்ணம் சறேலெனப் பறந்து கொண்டிருந்த அவன் தன்னை நெருங்கினாற்போல் வரும் நண்பனிடம்:
“மச்சான்! நானும் முப்பது முப்பத்தைந்து வருஷமாய் இதே ரோட்டிலே இதே நேரத்திலே மீன் வாங்கி வர போய்க் கொண்டுதாணிருக்கிறேன். அதுமாதிரி இந்த றெஜினாவும் இதே ரோட்டுலே இதே நேரத்திலே நடந்து போறதை எத்தனை வரிஷமா பாத்து வாரேன். இன்னிக்குத்தான் அவ மொகத்துலே சிரிப்பை பார்க்கல்ல” என்றான்.
அவன் குரல் கவலையில் தோய்ந்து வருகிறது.
துன்பங்களும், துயரங்களும் மனத்தின் சுமைகளாக விருக்கின்ற போதும் மாமி சிரித்த முகத்துடனேயே இருப்பாள். பற்கள் இல்லாத அந்த வயோதிக மாதின் உதடுகளில் புன்னகை மிளிர்ந்த வண்ணமே இருக்கும். வாழ்க்கைச் சுமை இயல்பாகி விட்டது. முகம் எங்கும் சுருக்கங்கள் வரிகளாகக் கோடுகள் கீறியுள்ளபோதும் நடையிலே தளர்ச்சியில்லை. நடந்து நடந்து இயந்திரமாகிவிட்ட கால்கள் அவை!
இன்று.!
சிரிப்பில்லை, புன்னகை இல்லை, கலகலப்பில்லை, மெளனமாகவும் யோசனையுடனும் நடந்து
 

in Gas. 6Sggugit still 15
கொண்டிருந்தாள். வெகுதூரம் வந்த பின்னரும் அவையிரண்டும் அவளை விட்டபாடில்லை.
ஆமாம்! குடிசைக்குள் அப்படி என்னதான்
நடந்துவிட்டது.?
{0 () {)
றெஜினா கருக்கல் பொழுதிலே எழுந்துவிட்டாள். நினைவு தெரிந்த நாள் முதலே இந்த விழிப்பு தொடர்கிறது. பானையிலிருந்து கொஞ்சம் நீரை எடுத்து முகம் அலம்பிய பின்னர், சேலையின் முனையால் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு சாக்குப் பையை கையிலெடுத்துக் கொண்டு செருப்புகளிரண்டையும் மாட்டிக் கொண்டாள்.
குப்பிலாம்பு கரும்புகைச் சுருளை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. அடுப்பின் அருகே சென்ற அவள் லாம்பைக் கையிலெடுத்துத் தூக்கிய வண்ணம்,
“மவேள்!” என மெதுவாக அழைத்தாள். பலர் உறங்குவது நிழலாகத் தெரிகிறது. வெறுந்தரை, கிழிசலான சாக்குகள் அதன்மீது பிணம் போல் உறக்கம்.
அவர்கள் றெஜினா மாமியின் மகளும் மகள் பெற்றெடுத்த பிள்ளைகளுமே. அவள் எவ்வளவு துரதிர்ஷ்டக்காரி எல்லாப் பிள்ளைகளும் பெண்களே.
“மவேள்! சுல்பிகா” மாமி கனிவாக அழைத்தாள்.
லாம்பை மகளின் முகத்துக்கு நேராகப் பிடித்து, நெற்றியில் கை வைத்து வருடி, “யா மொகிதீன் காய்ச்சல்

Page 10


Page 11
18 அன்னையின்நிழல்
ॐ
திருமணம் செய்து கொடுப்பதற்காக குருவி சிறு தானியம் சேர்ப்பது போல் சில்லறைகளைச் சேர்க்கிறாள். அடடா! அவள்தான் எவ்வளவு காலமாக இவ்வாறு சேர்க்கின்றாள். இன்னும் ஒரு குமராவது கரை சேரவில்லையே!
அன்று. அவளுடைய நெஞ்சம் அதிர்ந்த சம்பவம் நிகழ்ந்தது.
0 0 0
JெTகன வீதியிலிருந்து இறங்கி ஒரு மணற்பாதையின் மீது ‘விறுக் விறுக்கென நடந்து கொண்டிருக்கிறாள் றெஜினாமாமி அவள் மனம் காலையில் நடந்த சம்ப்வத்தை அசை போட்டுக் கொண்டிருக்கின்றது.
பங்களாவுக்குச் செல்ல முடியவில்லை. அந்திப் பொழுதில் பை நிறைய உணவுகளைக் கொண்டுவர முடியவில்லை. சில்லறைகளும் சொற்பமாகவே கிடைத்தன.
அவள் செல்கின்ற செல்வர்களின் வீட்டுப் பெண்கள் மிகவும் வயோதிக நிலையை அடைந்துவிட்ட றெஜினா மாமியிடம் அதிகமாக வேலை வாங்க விரும்பவில்லை. நீண்ட காலமாகத் தெரிந்த பெண் என்பதால் இரக்கம் கொண்டு ஏதேனும் கொடுத்தார்கள். “மகள் சுல்பிகா வரவில்லையா? சுல்பிகாவிற்கு பெண் பிள்ளைகளில்லையா? அவர்களை அனுப்பி வைக்காமல் நீங்கள் ஏன் வருகிறீர்கள்?’ என விசனமுடன் கேட்டார்கள்.
மாமி திக்குமுக்காடிப் போனாள். “குமர்ப் பெண்களை வேலைக்கு அனுப்புவதா? நெஞ்சு நடுங்கியது.

I> G35. விஜயன் (uill 19 காலையில் சுல்பிகாவிடம் வேலைக்குப் போவதாகச் சொன்ன பின்னர் புறப்பட்ட மாமி கதவைச் சாத்திய பொழுது சுல்பிகாவின் மூத்த மகள் ஜசீமா அழைக்கும் குரல் கேட்டது.
99 海 ت
g>_LibLDLDLDIT!
கதவைச் சாத்திக் கொண்டிருந்த றெஜினா மாமி சரேலெனக் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்து, “என்ன மவேள்?’ எனக் கேட்டாள்.
குப்பிலாம்பின் மங்கலான வெளிச்சத்தில் ஜசீமா நின்று கொண்டிருப்பது தெரிகின்றது. அவள் கைகளைப் பிசைந்துகொண்டு நிழல்போல் நிற்கிறாள்.
“என்ன மவேள்?”
“உம்மம்மா! நானும் ஒங்கலோட வரட்டா?’ அவள் திக்கித் திணறி தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“ஏன் என்னத்துக்கு?” “உம்மாவிற்கு சொகமில்லதானே!” இடிவிழுந்தாற் போன்று அதிர்ந்துவிட்டாள் றெஜினா. இருதய இலையில் மரண வேதனை. நெஞ்சிற்குள்
தீப்பந்தம் ஒன்று ‘திகுதிகுவெண் பற்றியெரிகிறது.
“வாணாம் மவேள் கொமருகள் வெளியில் போறது
ஹராம்’ என மெலிதான குரலில் பதற்றமுடன்
சொன்னாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
{) 0 0

Page 12
20 ജ്ഞിമ്ന
இரவு பெய்த மழையால் ணேற் U IT68)g சகதியாகிவிட்டிருந்தது. பாதைக்கு முன்பாகவுள்ள மேட்டிலிருந்து இறங்கிவிட்டால் சலீம் நூராணி பாயின் வீடு வந்துவிடும். அவருடைய வீட்டை நோக்கியே றெஜினா மாமி நடந்து கொண்டிருக்கிறாள். அவள் எண்ணமெல்லாம் பேத்தி ஜசீமாவின் 'உம்மம்மா நானும் வரட்டா’ என்ற குரல் மீதே லயித்துக் கிடந்தது. பலத்த யோசனை. உடலில் நடுக்கம்.
மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்ய ஒப்பாத அவளுடைய மனம் எப்படிக் கன்னிப் பெண்ணை
வெளியில் தொழில் புரிய அனுப்ப விரும்பும்?
உள்ளம் ஏங்கியேங்கி பெருமூச்சுடன் அழுகிறது.
யோசனை கழன்றபாடில்லை. சுமையுடன் மேட்டின் மீதிருந்து இறங்கியபோது மாமியின் கால்களிலொன்று பிசகி வழுக்கியது. தடாலென வீதியில் சரிந்தாள்.
“யா அல்லாஹ்” என்ற அலறல். மாமியின் இடுப்பெலும்பு இடம்பெயர்ந்து விட்டது.
() {) 0
LDTமியின் உடல் சாக்கிற்கு அடைக்கலமாகி விட்டது. அதில் சுருண்டு கிடந்தவாறே குடிசைக்குள் எரியும் குப்பிலாம் பின் வெளிச்சத்தில் விடியப்பொழுதில் நடைபெறும் காட்சிகளைப் பார்த்து அணு அணுவாகச் சாகிறாள்.

I) கே. விஜயன் (I 21
உட்குழிந்த கண்களில் நீர் மணிகள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
‘யா அல்லாஹ் என்னை மன்னித்துவிடு' என மனம் இறைவனிடம் இறைஞ்சுவதுடனே காலம் கரைசலாகிறது.
இப்பொழுதெல்லாம் சுல்பிகாவும் ஜசீமாவும் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள். பானையிலிருந்து கொஞ்சம் நீரை எடுத்து கை, கால், முகம் கழுவிய பின்னர், சுள்ளிகள் எரியும் அடுப்பில் கேத்தலை வைத்து பிளேன்டி செய்து உம்மம்மாவிற்குக் கொடுத்து அவர்களும் மடக் மடக்கென குடிப்பார்கள்.
சுல்பிகா தாயின் சாக்குப் பையை தூக்கிக் கொள்வாள். கதவைச் சாத்திவிட்டு தாயும் மகளும் வீதியில் இறங்கிவிடுவார்கள்.
பாதைகள் நீண்டிருந்தபோதும் யாத்திரை செய்பவனைவிட்டு நிழல்கள் நீங்குவதில்லை. வயிற்றுப் போராட்டத்திற்கான இந்த நீண்ட போராட்டத்தில் அன்னையின் நிழலாக மகள் தொடர, அவளின் நிழலாக பேத்தி தொடர்கிறாள்.
இது ஒரு தொடர்கதை.
CO3

Page 13
கடிதம்
சிந்தா! சுந்தா!
குளியலறையிலிருந்து சரஸ்வதியம்மாள் கத்துகிறாள். எவ்வளவு நேரமாகத்தான் கத்துவது. தொண்டையும் வலிக்கிறது.
‘இந்த சின்ன பிசாசு எங்கே பொய்ட்டுது? மனுஷன்ட உசுறு போவுது' மனதிற்குள் வெறுப்பும் கசப்புமாகச் சொல்லிக்கொண்ட சரஸ்வதியம்மாள் ‘அடியே! நாசமா போறவளே! என்னடி செய்யுராய்? அந்த புது டவுல எடுத்துக் கொண்டு வா.”
சர்ப்பத்தின் சீற்றமாக குரல் பறக்கிறது.
சுந்தாவின் சந்தடி இல்லை.
அந்த விசாலமான பங்களாவின் மூலை முடுக்கெல்லாம் புயலென சென்ற சரஸ்வதியம்மாளின்
 

1 கே. விஜயன் மே 23 அலறல், எதிரொலியாகத் திரும்பியதே தவிர சுந்தாவின் பதில் குரலைக் கேட்க முடியவில்லை. முணுமுணுப்பிற்கே ‘ம்மாவென அலறியடித்துக் கொண்டு வருபவளாயிற்றே.
பன்னெண்டு வயசாகப் போவுது எவ்வளவு ஏசினாலும் அடிச்சாலும் கழுதைக்கு மானரோஷமில்லை. இதுக இப்படித்தான். மனத்திற்குள் வெஞ்சினத்துடன் புறுபுறுத்துக் கொண்டு மறுபடியும் டவுலைக் கேட்டு கத்துகிறாள்.
தொண்டையைக் கிழித்து குரலை உயர்த்தி கத்தி என்ன புண்ணியம்? அந்த வேலைக்காரச் சிறுமி சுந்தா.
இனியும் பொறுக்கேலாது என்ற நிலையில் ஈர மேனியோடு வெளியில் வந்த சரஸ்வதியம்மாள் மளமளவென நீர்த் துளிகள் சொரியும் உடலும், சினம் பொங்கும் நெஞ்சும், அக்கினி பறக்கும் கண்களுமாக தட தடவென பர்வதமென தரை அதிர நடந்து சமையலறை நோக்கி விரைந்தாள். போகும் வழியில் கிடைத்தவொரு தடியை கையிலெடுத்துக் கொண்டாள்.
‘நாய்! குசினிக்குள் எதையாவது நக்கிக் கொண்டிருக்கும். மனம் கடுகடுப்புடன் கொதிக்கிறது.
சமையலறையில் சிறுமி இல்லை. வீடு முழுவதிலும் அலசியாகிவிட்டது. எந்த மூலையிலும் சுந்தா இல்லை.
சரஸ்வதியம்மாள் வாசலுக்கு வந்து வீதியைப் பார்த்தாள். உடலைத் துடைத்து தலையைத் துவட்டி சாறியை அணிந்து கொண்டிருக்கின்ற பொழுதும்,

Page 14
24 : 916عهم n (a
ദു ജ്ഞിമ്ന மனதிற்குள் லேசான அச்சம் கவ்விக் கொண்டிருக்கவே, முத்து முத்தாக வியர்வை மணிகள் உடலெங்கும் முகிழ்த்து வழிந்தன.
வீதி முன்னால் நீண்டு கிடக்கிறது, சன நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும். நெரிசலடங்கிக் கிடக்கும் மரணித்த நிலை, பங்களாவின் முன்னால், வீதியின் ஒரமாகவுள்ள முனிசிப்பல் குழாயடியில் நிர்வாணச் சிறுமிகள் கூச்சலும் கும்மாளமுமாகக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரஸ்வதியம்மாளின் கண்கள் அங்கே மொய்த்தன. சுந்தாவும் அங்கேதானே குளிப்பாள்.
அங்கேயும் இல்லை.
ஈரக்கேசத்தை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டே இமைகளில் சலனமில்லாமல் சில கணங்கள் யோசனையில் லயித்து நின்றாள் சரஸ்வதியம்மாள்.
அவள் குளிக்கப் போவதற்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வாசலில் நின்று வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தா.
அவளை உற்றுப் பார்த்த சரஸ்வதியம்மாள் துணுக்குற்றாள்.
“என்னது குளிக்கமாட்டாளா? தலை முடியெல்லாம் சிக்குப் புடிச்சாப் போல பழுப்பு நிறமா இருக்கே. கழுத்துப் பட்டையிலும் காது இடுக்கிலும் ஊத்தையா கெடக்கு. பிச்சைக்காரியள் மாதிரி நாத்தம் வேற. சீச்சீ. என்ட கெளரவம் என்னவாகிறது. ஆராவது வீட்டுக்கு வாரவர் d565TLIT...I

III)- G835. விஜயன் 

Page 15
26 c69ј6ӧтервотuóleóт ജ്ജു சன்னமான குரலில் கேட்டாள். அவளுடைய கைவிரல் குளியலறையைச் சுட்டிக்காட்டுகின்றது.
சரஸ்வதியம்மாளின் கண்கள் ஒரு சுழல் சுழன்று வெறித்தன. “என்னடி நாய்! கொஞ்சமாவது மானமிருக்கா ஒனக்கு. இந்த பைப்புலே குளிச்ச எண்டு அன்னைக்கு எவ்வளவு அடிச்சேன். ஏன் ரோட்டு பைப்பு சும்மாதானே கெடக்கு. போய் குளியன். சவர் பாத் என்ன வேண்டிக் கிடக்கு. சவர்பாத். நான் குளிச்சிட்டு வாரேன். அதற்குப் பிறகு நீ போய் குளி. இல்லையெண்டா ஒரு நிமிஷமாவது நீ இந்த வீட்டிலே இருக்கக் கூடாது.”
நெருப்பென பொரிந்து தள்ளிவிட்டு குளியலறைக்குள் நுழைந்த சரஸ்வதியம்மாள் இடையில் டவுலைக் கேட்டுக் கத்திய பொழுதுதான் சுந்தாவைக் காணவில்லை.
‘எங்கே போய்ட்டாள்? குளிக்காட்டி வீட்டிலே இருக்கக்கூடாது என ஏசுனதுக்கா பொப்ட்டாளா? அவ்வளவு மான ரோஷமெங்கே, எவ்வளவு அடிச்சும் போவதாதது, ஏசுணதற்காக பொய்டுமா? சரி எங்கதான் போறது. நாலு வயசிலே கொண்டுவந்து விட்ட அப்பன், ரெண்டு வருஷந்தான் வந்தான், அப்புறம் ஆளையே காணோம். அவனைத் தேடி இவளெங்க போறது.
சிந்தனை நீர் வட்டமாக மனதில் சுழல நின்று கொண்டிருந்த சரஸ்வதியம்மாள் வெயிலில் பளிரென வெளிச்சத்துடன் வாசல்படியேறிய பொழுது திடுக்கிட்டாள். முச்ச நேரமாச்சே என மன சஞ்சலத்துடன் வீட்டிற்குள் சென்று தொலைபேசியை எடுத்து எண்களைச் சுழற்றினாள்.
மறுபக்கம்.

I G85. 62gu6öT II 27
“ஹலோ! எக்கெளண்டன் தம்பித்துரை ஸ்பீக்கிங்’
“நான்தான் சரஸ்வதி சுந்தாவக் காணல்ல அதான்.”
“என்ன காணல்லியா? சரி நான் வாரன்.
“ரிசீவர் வைக்கப்பட்டுவிட்டது.
() () ()
ரொண்டாவில் ஈசிசேரில் சாய்ந்தவண்ணம் வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் சரஸ்வதியம்மாள். சுந்தாவின் குள்ளமான கறுப்பு உருவமும், வட்டமான முகத்திலுள்ள வெளேரென்ற பெரிய கண்களும், அசட்டுப் பாவமும் அவள் கண்களின் முன் நிழலாடுகின்றன.
இந்த எட்டு வருடங்களில் இந்தச் சிறுமி அடிவாங்காத நாட்களே இல்லை. எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒருநாள் பகல் வேளை அவள் வாங்கிய அடி, அம்மா சரஸ்வதியம்மாளுக்கே உடல் புல்லரித்தது. சரஸ்வதியம்மாள் ஒர் அரக்கியாகத்தான் நடந்துகொண்டாள்.
அவர்களுடைய பங்களாவிற்கு ஒழுங்காக நீர் கிடைப்பதில்லை. அதிலும் இந்த வேனிற் காலத்தில் ஒரு சொட்டு நீரெடுப்பது பெருங்கவுடம். எக்கெளண்டன் துரை கிணறுவெட்டி பம்ப் பொருத்தியிருக்கிறார். அவர் அலுவலகம் முடிந்து வருவதற்கு முன்னர் சரஸ்வதியம்மாள் டாங்கியில் நீர் நிறைத்து வைத்து விடுவாள். பகல் சாப்பாட்டின் பின்னர் இந்தக் காரியங்களையெல்லாம் ஒழுங்காகச் செய்துவிட்டு நல்லதொரு தூக்கம் போட்டு எழும்புவதைப் போன்ற சுகம் சரஸ்வதியம்மாளுக்கு வேறு

Page 16
၄၃Q2 எதுவுமில்லை. இரண்டு பெண்களும் ஒரு பையனும்தான் அவளுடைய பிள்ளைகள். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மூவரும் தங்கிப் படிப்பதால் வீட்டில் பகல்
பொழுதில் சுந்தாவும் அவளும்தான்.
ஆழ்ந்த உறக்கம்.
சொப்பனம்போல காதுகளில் சலசலவென நீரோடும் ஒரு மென்மையான ஓசை
28 像 ടിഞ്ഞധിങ്ങ് 19ഴ്സൺ ($
தூக்கம் கலைந்தது. எழுந்து உட்கார்ந்து கண்களை நாலு பக்கமும் சுழற்றியபொழுது குளியலறையில் நீர்ச் சலசலப்பு கேட்கிறது. எழுந்து ஒடி சாத்திக்கிடக்கும் கதவைப்
படபடவெனத் தட்டினாள்.
சுவர்க் கடிகாரம் நான்கு மணியைக் காட்டுகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கணவர் வந்துவிடுவார். அதற்கிடையில் யார் சவர்பாத்தைத் திறந்து நீரையெல்லாம் வெளியேற்றுவது? மனதில் பதட்டம், ஆபீசால் வீடு திரும்பிய பின்னர் ஒரு ‘மேல் கழுவல் பண்ணவில்லையென்றால் தம்பித்துரைக்கு கோபம் எப்படி பற்றிக்கொண்டு வரும், ‘சள்புள்ளென ஆங்கிலத்தில் அலறுவார். பங்களா அமளிதுமளிப்படும்.
படபடவென கதவை இடித்து தகர்ப்பதைப் போன்று தட்டுகின்றாள் சரஸ்வதியம்மாள்.
கதவு திறபடுகின்றது.
சுந்தாவின் குள்ளமான உருவம் தெரிகிறது. மேனியெங்கும் நீர் சரமென வழிய, கறுத்த வட்டமான முகத்தில் வெளேரென்ற பெரிய விழிகள் சுழல,

IIIimii G35. GSggu u gisT “HellH 29
G
‘என்னம்மா?’ அசட்டுத்தனமான கேள்வி அவளுடைய சின்ன வாயிலிருந்து புறப்பட்டு வருகின்றது. உடம்பு முழுவதும் ‘திகுதிகுவெண் கொதிக்க நின்று கொண்டிருந்த சரஸ்வதியம்மாளுக்கு சுந்தா ஒரு சிறுமியாகவே தென்படவில்லை. முழங்காலிலிருந்து கழுத்துவரை உடல் மூடி கட்டப்பட்ட துணியும், ஈரமாக உடலோடு இறுகிக் கிடக்கும் துணியைத் தள்ளிக்கொண்டு நெஞ்சில் நிமிர்ந்து நிற்கும் முகைகளான மார்பகங்களும்.
பளாரென ஒர் அறை விழுந்தது. தலையிலிருந்து கன்னங்கள் வழியாக வழிகின்ற நீர் தெறித்துச் சிதறுகின்றன.
“எத்தின முறை பைப்புத் தண்ணியை நாசமாக்காதே எண்டு அடிச்சிருக்கன். மான ரோசமில்லாத மக்குக் கழுத. இப்ப உனக்கு குளிக்க சவர் பாத்தா வேணும். ரோட்டுப் பைப்புக்குப் போக ஏலாதோ..!’ அடித்து நொறுக்கி, உதைத்து தலைக்கேசத்தை இழுத்து நாசியில் குத்தி, உதட்டைக் கிழித்து கன்னச் சதைகளைப் பிடுங்கி. ஆத்திரத்தை எப்படியெல்லாம் கொட்ட முடியுமோ அப்படியெல்லாம் கொட்டித் தீர்த்தாள்.
ஒரு பிரளயமே நடந்து முடிந்தது. என்றாலும் என்ன சொரணையில்லாத கழுத, மானரோஷமில்லாத எருமை. அடிவலி பொறுக்க முடியாமல் கொஞ்சம் ஒப்பாரி வைத்து ‘ஓ’ வென்று அழ. அதுதான் இல்லை. வழக்கம்போல ஒரு லேசான சிணுக்கம். அப்புறம் அந்த அசட்டுத்தனமான சிரிப்பு.
‘என்ன பெண்ணிவள்? பெண்ணென்றால்
அபேயாகிவிடும் இந்த உலகில் இவ எப்படி வாழப் போகிறா? பருவம் எய்த இன்றோ நாளையோ என்றிருக்கிறாள்.

Page 17
30 亂 அன்னையின்நிழல் குள்ளமாக இருந்தாலும் உடல் கோயில் காள மாதிரி மதமத’வென்றிருக்கிறது. அவளிைப் பூப்பெய்யாத பெண்ணென்று எவரும் சொல்ல மாட்டார்கள். உடல் வளருகிறது. ஆனால் அந்த மனம் வளரவில்லையோ என்னவோ?
ஆனால் இந்த முறை ஒன்று நடந்தது. பங்களாவிலுள்ள குழாய் நீரை அவள் நாசப்படுத்துவதில்லை. குளிப்பதும் இல்லை. அடியின் வலுவோ அல்லது வீட்டில் சவர்பாத் இருக்க நான் ஏன் ரோட்டோரத்துக் குழாய்க்கு குளிக்கப் போக வேண்டும் என்ற இறுமாப்போ? குளிக்காமலே பிச்சைக்காரிகள் மாதிரி நாறிப் போகிறாளே!
ஆள் சின்னது என்றாலும் நெஞ்சழுத்தக்காரிதான். இல்லையென்றால் பங்களாவிலே குளிக்காதே என்றதற்கு கோபித்துக்கொண்டு போய்விட்டாளே. ஒருவேளை, எட்டு வருடங்கள் இந்த வீட்டில் வாழ்ந்தாயிற்று. எனக்கும் இங்கு உரிமைகள் உண்டு என்ற சுதந்திரப் போராட்டமா? சிறுமியின் நெஞ்சில் என்ன இருக்கிறது? ஏன் போனாள்? எங்கே போனாள்?
சரஸ்வதியம்மாள் இன்னும் ஈசிசேரில் சாய்ந்து கொண்டு எண்ணக்கடலில் மூழ்கிக் கிடக்கிறாள்.
() 0.
குரியன் பங்களாவின் மீதாக நடுவானைக் கடந்து கொண்டிருந்தான்.
தம்பித்துரையின் கார் பங்களாவிற்குள் நுழைகிறது.
ཉཉ எங்கே வந்துட்டாளா?

III) (835. விஜயன் «(III 31
“இல்லை’
“உம். சரி ஒருக்கா பொடி வாஸ் பண்ணிப்போட்டு பிறகு போய் பொலிஸ் ரிப்போர்ட் கொடுக்கிறேன்.” பாத அணிகள் ‘டக் டக்கென ஒலியெழுப்பதம்பித்துரை உள்ளே
போகிறார்.
() () ()
G G சிரசு! சரசு! இஞ்ச ஒடிவா!’ என அக்கெளண்டன் துரையின் அலறல் குளியலறையிலிருந்து பாய்ந்து வருகிறது. சமையலறையில் எலக்ரிக் குக்கரை பொருத்திவிட்டு யோசனையோடு நின்று கொண்டிருந்த சரஸ்வதியம்மாள் கணவனின் அலறலால் ஏதோ, என்னவோ என வெலவெலத்துப் போய் கலவரமுடன் குளியலறை நோக்கிப் பாய்ந்தோடினாள்.
மளமளவென நீர் கொட்டும் உடலோடு தம்பித்துரை நின்று கொண்டிருக்கிறார். நடுங்கும் அவர் கையில் ஒரு சிறு கடிதம் படபடக்கின்றது.
எடுத்து விரித்துப் படித்த சரஸ்வதியம்மாள், விழிகளைப் பிதுங்கிக்கொண்டு நிற்கிறாள். கடிதத்தில் சிறுமியின் கோணல்மாணலான எழுத்துக்கள்.
gbot
ரோட்டுப் பைப்புலே குளிக்கச் சொல்றீங்களே, எப்படி குளிக்கிறது. போறவன் வாரவன் எல்லாம் என் ஒடம்ப உத்து உத்துப் பார்க்கிற நேரத்துலே எனக்கு கொடல் பொரன்டு வாய்க்கு வருது. எதுக்கு இந்த மானங்கெட்ட சீவியம், கடல்ல உழுந்தாவது சாவலாம் இல்லியா? அதுதான் ஊட விட்டு போறன்.
CO3

Page 18
32
அப்புவின் வாழ்க்கை ஒரு புதுக் கவிதையாகும்.
கிழக்கில் வெள்ளியின் துளிர்கள்.
அவன் எழுவான்.
命 鄂 廊 例 *伍 | 8 @S剧 哪 新 施
 

Iம் கே. விஜயன் I 33 குடுகுடுவென ஓட்டம். பொய்லர்களின் அக்கினி முகம். சவளும் கையுமான போர் ஜீவப் போர்.
வியர்வைத் துளிகள் இரத்த மலர்களின் உதிர்வு ஒ. மாலைப் பூஜை. அவன் வாழ்க்கை இப்படித்தான் கரைகின்றது.
கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருடங்கள்.
கடந்த காலத்தின் மரண குறிப்புகள்.
இன்று காலையில் வேலைக்குப் போனான். சந்தோஷமாகத்தான் போனான். அவனுடைய அத்தியந்த நண்பர்கள், சகோதரர்கள், குழந்தைகள் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற பூனைக்குட்டிகள் அவனைச் சுற்றி உராய்ந்து கால்களை நக்கி வழி அனுப்பி வைத்தன.
ஆனால் -
அப்பு நெசவாலையில் இருந்து திரும்பியதும் நல்லெண்ணெயை உடலெல்லாம் கொட்டி வழுக் வழுக்கென தேய்த்து உமிக் கரியைக் கை நிறைய அள்ளி சரசரவெனப் பற்களைத் தேய்த்து நாக்கைப் பிடுங்கிக் குதறி எடுக்குமாப் போல் ‘ஹாக் ஹக்கென அலறி வாயைக் கழுவி குழாயடியில் குளிப்பதற்காகக் குந்தவில்லை.
வாசலில் -
திண்ணைத் தூணில் -
சாய்ந்துகொண்டு நின்றான்.

Page 19
瞬 9്യങ്ങuിTjBgൺ 器 4:ز ॐ அவன் கண்கள் நெசவாலை புகைக் குழாயில் குத்திட்டு நிற்கின்றன. அகலமான, வட்டமான அதன் கரிய படிந்த திறந்த வாயிலிருந்து கரும்புகையின் பவனி,
ஒரு சிட்டுக் குருவிக் கூட்டம் சளாரெனப் பறந்து மறைகின்றது.
முகச் செடியில் விசனப்பூக்கள். கண் மலரில் துயர முட்கள்.
சலன நீரில் நடுங்கி நழுவும் உருவமாக மெலிதான வெடவெடபடடன் தூணோடு சாய்ந்து நிற்கிறான்.
பூனைகளும் அவன் காலடி யில் சுருண்டு கிடக்கின்றன.
அவனைக் கண்டதும் அவையெல்0ே11ம் எவ்வளவு உற்சாகத்துடன் பாய்ந்துவரும்?
அந்த ஆனந்த நடனங்கள் எங்கே?
வாசலில் பையன்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அலறல், கூக்குரல், ஒரே அமளி, துமளி.
குதிரைப் படையெடுப்பாக தூசு படலம்.
கிருஷ்ணனுக்கு ஒரு கால கொஞ்சம் ஊனடமதான். ஆனால் விளையாட்டில் அவன் தான் மகா சூரன்.
மாலை சரிந்ததும உலகின் மீது இருள் திறை வியாபகமானதும் அப்புவின் வீட்டிற்குள் கிருஷ்ணன் துழைவான். காளி பூஜை செய்யும் அப்டவிற்குத் துணை0:க நின்று கிணுகினுவென பயணியடிபடபன். நிறுை கணுகனு t9.

III» (335. Gguu6oT «MINI 35 வாசலில் சிறுவர் படை கூடிவிடும். ஒரே அல்லோலகல்லோலம்தான். பூஜை முடிந்ததும் கடலையும், நறுக்கிய தேங்காய்த் துண்டுகளும் கிடைக்குமல்லவா?
அதனால்தான் வாசலில் அவ்வளவு எக்காளம்? எக்காளம் அனைத்தும் புஸ்வாணமாகிவிடும் நொண்டிக் கிருஷ்ணனைக் கண்டதும். ‘சளார் பளார் என முதுகுத் தோலை உரித்தெடுத்துவிடுவான்.
அப்புக்குட்டன் எல்லோருக்குமே ஒரு கேலிப் பொருள்தான்.
பூஜை வேளையில் மட்டும் அவன் கொடுப்பதை மரியாதையாக எடுத்துக் கொள்வார்கள்.
சில நிமிடங்களின் பின்னர் கிறுக்கப்பு என்ற கிண்டல் சப்தம் கேட்கும்.
கடலையைப் பெற்றுக்கொண்ட பையன் ஒருவன் எங்காவது ஒரு மூலையில் இருந்து கத்துவான்.
அப்பொழுதெல்லாம் அப்புவின் மூஞ்சூறு முகத்தில் தோன்றுமே ஒரு புன்னகை, அதுதான் தெய்வீகப் புன்னகை மனுஷ ஜென்மம், மகா நன்றி கெட்ட ஜென்மம். என மலையாள மொழியின் வாசனையுடன் நெஞ்சிற்குள் சொல்லிக் கொள்வான்.
விளையாடிக் கொண்டிருக்கின்ற பொழுதும் கிருஷ்ணன் அடிக்கடி அப்புவைப் பார்த்தான்.

Page 20
36 அன்னையின்நிழல்
அப்புவிற்கு சுகமில்லையோ? அடடா. இன்னைக்குப் பூசை இல்லாமல் போய் விடுமே.
கிருஷ்ணனின் மனம் படபடத்துக் கொண்டது. பாவம் கிருஷ்ணன், பூஜையில் மிஞ்சுவதுதானே அவனுக்கு இரவுச் சாப்பாடு.
இருள் திரை விழுந்துவிட்டது.
அப்பு வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான்.
இன்று பூஜை இல்லை.
அப்பு சாக்குக் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டான்.
சிமினி விளக்கு மங்கலாக எரிகிறது.
அந்த வெளிச்சத்தில் -
அறைப் பொருட்களெல்லாம் மங்கலாகத் தெரிகின்றன.
ஒரு டிரங்க் பெட்டி, இரண்டு மூன்று உடைந்த நாற்காலிகள், ஒரு சிறிய எங்கர் சுவரெல்லாம் கரிக்கோட்டு ஒவியங்கள். தலைப்பாகையுடன் கம்பீரமாகத் தோன்றும் விவேகானந்தரின் படம். காந்திஜி, நேருஜி இவர்களின் படங்கள் இவை தவிர பெறுமதியான பொருட்கள் ஒன்றையும் காணவில்லை.
இன்று:
அப்பு காலையில் வேலைக்குப் போனான்.
நெசவாலை பொய்லர்களுக்கு கரித் துகள்களை அள்ளிப்போடுவது அவன் வேலை.

III (35. விஜயன் 4ttl| 37
கணகனவென நெருப்பெரியும் பொய்லரின் அக்கினி முகம் முன்னால் குனிந்தால் நிமிரமாட்டான்.
‘சளார். சளார்.’
சவளும் அவனும் இயந்திரம்தான்.
வியர்வை முகிழ்ந்து இரத்தத் துளிகளெனக் கொட்டும்.
‘அப்பு.”
அப்புவிற்கு அதிசயமாகவிருந்தது. யார் அவ்வளவு மென்மையாக அழைக்கிறார்கள்?
பொய்லர் அறைக்கு வந்தால் மாதவனோடு எப்பொழுதும் சண்டைதான். மாதவனுக்குத் தன்னுடைய கங்காணி கெளரவத்தைக் காட்ட கிடைத்த ஒரே ஆசாமி அப்பு அல்லவா?
“எடா அப்பு. பட்டி பற பட்டி.’ என வசை மொழிகளுடன் கூப்பிடும் மாதவனா இன்று ‘அப்பு.’ என அன்பொழுகக் கூப்பிடுகிறான்.
அப்புக்குட்டனுக்கு மருந்துக்கும் நண்பர்கள் இல்லை. அவன் எவரோடும் பேசுவதில்லை.
மெலிந்தும், குள்ளமும், கன்ன எலும்புகள் துருத்தியும் கண்கள் உட்குழிந்தும் கதா எரிச்சலுடன் அலறல் குரல் எழுப்பும் அவனுடன் எவர்தான் நட்பு கொள்வார்கள்.
எல்லோரும் கிறுக்கப்பு என்பார்கள்.
மாதவன் ஏசுவான் - எரிந்து விழுவான்.

Page 21
38 亂 அன்னையின்நிழல்
ஆனால் - ry
கிறுக்கப்பு என்று சொல்ல மாட்டான். அடடா. இன்று அன்பொழுகக் கூப்பிட்டான். அப்புவின் தலை நிமிர்ந்தது.
சுருட்டுப் புகைத்தவண்ணம் மாதவன் நின்று கொண்டிருந்தான்.
“கத்துக்கிட்டியாடோ - கடிதம் கிடைத்ததா?” அவன் மலையாளத்தில் கேட்டான். “என்ன கடிதம்?”
“ஒபிஸ் பியோன் தேடி வந்தான். அவனிடம் கடிதங்கள் இருந்தன. ஒருவேளை உன்னுடைய ரிட்டையர் கடிதமாக இருக்கலாம்.”
அப்புவின் நெஞ்சில் தீப்பாம்புகள் ஊர்ந்தன. சிமினி விளக்கு எரிகிறது. சுவரில் அப்புவின் நிழல் பெரிதாக விழுந்து கிடக்கிறது.
அறையில் மெளனம்: ' "அப்பேட்டா. அப்பேட்டா.”
வாசலில் - . . . . . . நொண்டிக் கிருஷ்ணனின் அழைப்போகை
அவன் உள்ளே வந்துவிட்டான்.

(CIU) G835. விஜயன் {II: 30
அவன் நிழல் வாசலில் நிற்கிறது.
“அப்பேட்டா சுகமில்லையா?”
* யாரு கிருஷ்ணனா! வா குட்டி.”
அப்புவின் குரல் சுரத்தில்லாமல் ஒலிக்கிறது.
“ என்னே அப்பேட்டா. இன்னைக்கு பூசை இல்லியா..?”
“இனிமே ஒருநாளும் இல்லே குட்டி.”
“ஏன்.?”
“எனக்கு பென்ஷனா?”
总 அதுக்கு என்னா அப்பேட்டா.
அப்பாடா மெலிதான ஒரு சிரிப்பு. அடடா அப்புவிற்கும் சிரிக்கத் தெரிகிறதே.
“பென்சன் கிட்டிங்கிள் வீட்டே விடனும், ராஜ்யம் போகனும், என்ற பூச குட்டிகளே பிரியனும்.”
அவன் அழுகிறான். கண் செடிகள் நீர்ப் பூக்களை உதிர்க்கின்றன. ஏதோ விலை மதிப்பான பொருளை அவன் இழக்கப் போகிறானா?
ஏன் இந்தக் கண்ணிர்? பூனைகள் கட்டிலைச் சுற்றி படுத்துக் கிடக்கின்றன. திடுதிப்பெண் எழும்பிய அவன் ஒவ்வொரு பூனையாகத் தூக்கிக் கொஞ்சத் தொடங்கினான்.”

Page 22
40
அன்னையின்நிழல்
“ஊருக்குப் போவணும்!”
“இந்தியாவா..?”
g 9
“அங்கே யாரு இருக்கா.”
“எண்ட பார்யா, ரெண்டு குட்டியள்.”
அவன் சுவரருகில் சென்று அதைக் காட்டினான்.
அங்கே கரிக்கோடுகள் ஒவியங்களாகிவிட்டிருந்தன. ஒரு பெண்ணும் இரண்டு ஆண் பிள்ளைகளும் படங்களாக இருக்கிறார்கள்.
அப்பு மலையாளத்தில் என்னென்னவோ உளறினான். கிருஷ்ணனுக்கு அனைத்தும் விளங்கவில்லை. ஏதோ சில விளங்கின.
கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அப்பு இலங்கைக்கு வந்தான். அவன் வந்தபொழுது தேவகியைக் கல்யாணம் முடித்து இரண்டு வருடங்களே கடந்துவிட்டிருந்தன. அதன் பின்னர் அடிக்கடி கேரளம் போய் வந்தான். அப்படியே கொஞ்ச காலத்தில் போவது நின்றுவிட்டது.
வெறும் கடிதங்கள் மட்டும் கடல் கடந்து வரும்.
ஒவ்வொரு கடிதமும் தேவகியின் கண்ணிரால் நனைந்திருக்கும்.
அவள் இளம் குருத்து.
அவன் -
அப்பப்பா அவர்களுக்கிடையே இந்த விசாலமான சமுத்திரம்.
 

IIII.)> G335. விஜயன் 

Page 23
42 露 அன்னையின்நிழல் இ
அப்பப்பா அந்த வாடகைக் காரில் அவனும் மாதவனும் ஏறுவதற்கு முன்னர் பூனைப் படையை
அப்படியே அணைத்து முகர்ந்து அவன் கதறிய கதறவில் பெண்களெல்லாம் கண்கலங்கி விக்கித்தார்கள்.
மாதவனின் கண்களில் நீர் துளிர்விட்டது. கிருஷ்ணன் அழுது கொண்டிருந்தான்.
“அப்பு. கத்து (கடிதம்) அய்க்காம் மறக்கண்டா.” மாதவனின் குரல் செவியில் விழுந்ததும் அப்புவின் தலை -ԶԱգ-ԱՑl,
கிTலம் கரைகிறது.
பாலை மணல் வெளியில் மழைத் துளிகள் என மாதங்கள் மறைகின்றன. தபால்காரன் வருவான் போவான். அப்புவின் கடிதம் வருவதில்லை. மாதவனுக்கு தவிப்போ தவிப்பு. அப்புவின் பூனைகள் ஒன்றையும் காணவில்லை. பொல்லாத பையன்கள் அவற்றில் சிலவற்றை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.
வெள்ளை மீசையைக் கொண்ட கரும் பூனை ஒன்று இருந்தது. அப்பு இல்லாத நேரங்களில் பையன்கள் யாராவது அவன் வீட்டிற்குள் நுழைந்தால் சீறிச் சினந்து பாய்ந்து பிராண்டித் தள்ளிவிடும்.
அப்பாடா ஒரு நாள் கடிதம் வந்தது
மாதவன் பரபரப்போடு விரித்தான்.
மாதவனுக்கு -

A Ges. விஜயன் «CIII 43
‘நான் சுகம். நீ சுகமா. ஐயோ என் பூனைக் குட்டிகள் அவை சுகமா?
இந்தியா வந்தேன். தேவகி இறந்து போய் ரொம்ப காலமாகி விட்டதாம். என் பையன்கள் இருவரும் பெரிய தடியர்கள். என்னிடம் சொற்பப் பணம் இருந்ததல்லவா? அது கரையும் வரை வைத்துக் கொண்டார்கள். இப்பொழுது நான் அவர்கள் அச்சன் இல்லியாம் என்று சொல்லி வெளியே தள்ளி விட்டார்கள். ஒருவன் அடியில் என் இடுப்பு இன்னும் வலிக்கிறது. என்றாலும் குனிந்து நின்றே மணிக்கணக்கில் கரித் துகள் அள்ளிப் போட்ட உடம்பல்லவா? என்றாலும் என்னால் நிமிர முடியவில்லை. கூன் விழுந்தாற் போல் குனிந்தே நடக்கிறேன்.
இங்கே ஒரு பிச்சைக்கார மடத்தில்தான் இருக்கிறேன். ஏதோ சில நாட்கள் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உண்டு. அவ்வளவுதான். ஐயோ! என் பூனைக் குட்டிகள், நொண்டி நொண்டி என்னிடம் பூஜை கேட்க வருவானே கிருஷ்ணன். அவன் என்ன செய்கிறான்.”
மாதவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்குகின்றன. மலையாள எழுத்துக்கள் நெளிந்து வளைந்து மங்குகின்றன.
C93

Page 24
கிருஷ்ணன் மறுபடியும் தரையில் படுத்துக் கொண்டான்.
அவன் கால்களை நீட்டியபோது இடது கால் பெருவிரலை கெளவுவது போல் பற்றிக் கொள்ளும் பார்வதி, இழுத்து அதனைத் தன் தொடைமீது வைத்துக் கொண்டாள்.
கிருஷ்ணனின் முகம் வேதனையில் பொங்கி வாடிக்கிடக்கிறது. பற்கள் நெரிபட கண்கள் மூடுண்டு, இமைகள் அழுந்திக் கிடக்க, சகிப்புடன் "மறுசூடு எப்பொழுது விழும் என மனம் துடிக்கிறது.
ஆணி குத்திய இடத்தின் அடிபாகத்தில் முதல் சூட்டை வைத்த நேரத்தில் சுளிரெனச் சதையைப் பிய்த்துக் கொண்ட அக்கினியின் ஊடுருவலைப் பொறுக்க முடியாமல் துடித்து காலை உதறி விருட்டென இழுத்தபொழுது பார்வதிக்கும் புருஷனின் வேதனை தாக்குகின்றது.
சூடு என்றால் லேசான மிதி சூடா அது, ‘சுள்ளென உச்சம் தலைவரை வெட்டிக் கிழித்துக்கொண்டு ஊடுருவிச் சதையைத் தீய்க்கிறதே.
 

lflI> G85. விஜயன் Kull 45 கிருஷ்ணன் கட்டுமஸ்தான உடல்வாகு படைத்த ஆண்பிள்ளைதான். கல் சுமக்கும், உடைக்கும் கூலியாளின் சரீரம் திடகாத்திரமாகத்தான் இருக்கும். என்றாலும் பச்சைச் சதையை நெருப்பால் பொசுக்குவது விளையாட்டா என்ன?
பார்வதிக்கு வைத்தியம் தெரியுமோ என்னவோ, இரவு வெகுநேரம் சென்று திரும்பிய புருஷன் வேலை செய்யும்பொழுது காலில் ஆணி குத்திவிட்டதாகச் சொன்ன பிறகு அவளுக்கு அம்மா தெய்வானையின் நினைவு வந்தது.
சிறுமியாக இருந்த காலத்தில் ஒரு நாள் இப்படித்தான் பார்வதி காலில் ஆணியைக் குத்திக்கொண்டு வந்தபோது, அம்மா அவளைப் படுக்க வைத்தாள். காலை நீட்டிப் பிடித்து சதை கிழிந்த இடத்தில் ஒர் உப்புக் கல்லை அழுந்தப் பிடித்து தேங்காயெண்ணெய்த் திரியால் சூடு வைத்தாள்.
ஒன்று, இரண்டு சூடா. அடேங்கப்பா! சிறுமி பார்வதியின் மரண ஒலத்தால் பெரும் அல்லோல கல்லோலமாகி விட்டது.
அந்த அனுபவம் இன்று கைகொடுக்கிறது.
() {) ()
கிருஷ்ணன் பார்வதிதம்பதிகள் இல்லற வாழ்வின் புதிய குருத்துக்கள். திருமணம் முடித்து மூன்றே மூன்று மாதங்கள்தானாகின்றன. வேலைக்குப் போனால் உடம்பில் ஏதாவது ரணகாயங்களுடன்தான் கிருஷ்ணன் வீடு திரும்புவான். ஆனாலும் அவன் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. இரவில் குப்பிலாம்பின் மஞ்சள்

Page 25
46 亂 அன்னையின் நிழல்இ வெளிச்சத்தில் அந்த ரணகாயங்களைப் பார்க்கின்றபோது பார்வதி வெலவெலத்துப் போவாள்.
“என்னங்க, முட்டுக்கையிலே இப்படி தோல் உரிஞ்சி கெடக்கு.’ இப்படி எதையாவது கேட்டு ஏங்குவாள்.
முகத்திற்கு நேராகத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் குப்பிலாம்பின் வெளிச்சத்தில் கிருஷ்ணனின் முகமெங்கும் முத்து முத்தாக வியர்வை மணிகள் முகிழ்த்துக் கிடப்பதும், முகம் நடுங்குவதும் தெரியும்.
கிருஷ்ணன் கடகட வெனச் சிரிப்பான். முழங்கையை மடித்து தூக்கிக் காயத்தைப் பார்த்துவிட்டு “சே. இதென்ன காயம். ஒருநாள் பியதாச ஒசரமான பில்டிங் மேலே சிமிந்தி தூக்கிக்கிட்டுப் போர நேரத்துலே கால் வழுக்கி மேலே இருந்து பந்து மாதிரி பறந்து வந்து ரோட்டிலே உழுந்து மண்டை வெடிச்சி செத்துப் போனானே.”
‘ஐய்யய்யோ’வெனப் பார்வதியின் அலறலால் குடிசை நடுங்கும். அவனால் அந்தக் கதையை முடிக்க (Uplgll Islgil.
“சே. சே. என்ன பொறவி நீ. இதுக்கெல்லாம் போய் இடி விழுந்த மாதிரி கத்துரே. தொழில்னா அதுலே ஆபத்து இருக்கும். நாமதான் கவனமாச் செய்யணும்.’ அவன் மிருதுவான குரலில் சொல்வான்.
“என்னங்க, இந்த கட்டுமான தொழில விட்டா வேற தொழிலே இல்லியா..?”

|111* 335. oguusor *||||| 47 ”.இருக்கு ܛ ܬ݁ܬ݂ܳ
‘அப்ப செய்யுங்களேன்.” அப்பொழுதும் அவன் அந்த புலித்தேவன் சிரிப்பைச் சிந்துவான்.
“என்ன சிரிப்பு இது? வில்லன் வீரப்பா மாதிரி’ நாடியில் லேசான இடி விழும். r
அவளின் கண்டிப்பு கலந்த ஒரு செல்லமான சிணுங்களுடன் விரல்கள் கிருஷ்ணனின் முகவிதானத்தில் வருடலுடன் அபிநயிக்கும்.
“சிரிக்காம முடியுமா? எங்கப்பன் செய்தது கட்டுமான வேலை, நான் செய்யுரதும் அதுதான். எங்கப்பன் இதத் தவிர வேற எத படிச்சுக் கொடுத்தான். பேரு எழுத நாலு எழுத்தாவது, உம் கும் சம்பளம் வாங்குறதே கையடையாளம் போட்டுத்தானே! இந்த லட்சணத்துலே வேற வேலை எப்படிக் கெடைக்கும்.’ கிருஷ்ணனின் குரலில் வெறுப்புத் தொனிக்கும். கண்களில் நீரின் வெளிச்சம் மினுமினுப்புக் காட்டும். பீடியைப் பற்ற வைத்து உறிஞ்சியவாறே யோசனையில் ஆழ்ந்து போவான்.
தலக்கு நாலு எழுத்துக்களைக் கற்றுத் தராத தந்தை மீது அவன் மனம் வசை பாடும்.
யோசனைகள் அலைகளென உருளும். டார்வதிக்கு சங்கடம். என்ஸ்டா அவருமனசு தெரியாம என்னமோ 3ெ1ல்லி துக்கம் 2 மண்ட க்கிட்டேலாட் என நினைத்து பதறி கண்களில் நீர் துளிரப்பாள்.

Page 26
48 அன்னையின்நிழல்
அவன் யோசனையிலிருந்து விடுபட்டு, அவள் நாடியைப் பிடித்து கண்களை ஆழமாக ஊடுருவி, கன்னங்களை வருடி “பார்வதி இந்த ஒலகத்திலே என்ன நேர்மையான தொழிலையும் செய்யலாம். அது அசிங்கம் அள்ளுறதா இருந்தாலும், இல்லே கல்லொடைக்கிறதா இருந்தாலும் பரவாயில்லை. அநீதியானதாக விருக்கக் கூடாது. மத்தவங்கப் பொருள் அபகரிக்கிறதாக விருக்கக்கூடாது. எதப் படிச்சிக் கொடுக்காட்டியும் என் தகப்பன் இதப் படிச்சிக் கொடுத்திருக்கான்.” அவன் சொல்வான்.
வார்த்தைகளில் பெருமை துளிர்க்கும்.
“நான் அத சொல்லலிங்க.”
“இங்கே பாரு. எங்க மொதலாளி கிட்ட நான் சின்ன காலத்துலேயிருந்து வேலை செய்யுரேன். சிமிந்தி போடுரதுலேயோ கல்லு ஒடைக்கிறதிலேயோ என் கூட எவரும் நிற்க முடியாதுன்னு மொதலாளி சொல்வாரு. அதுலே நான் ஒரு சிங்கம். என் கை கால் பலத்துலே அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.”
பெருமையின் ஒளிர்வில் அவன் முகத்தில் பிரகாசிப்பு தக தகக்கும்.
“இந்த ரப்பர் கம்பெனி ஒபிஸ் ராஜமாளிகை மாதிரிப் பெரிய கட்டிடம். அது நெருப்புப் புடிச்சு மூளியாக நிண்ட நேரம் அதை ஒடச்சி கட்டிக் கொடுக்கணும்னு எட்வடைஸ்மன் வந்துட்டுதா எத்தனையோ கண்ராக்காரங் களெல்லாம் வந்துட்டு பார்த்துட்டு ‘அடேயப்பா என்னா பில்டிங் இது, இத

Illu)- Ç5. விஜயன் «(III 49 எப்படி ஒரு வருஷத்துக்குள்ளே மறுபடியும் கட்டிக் குடுக்கறதுன்னு!’ வாய்ப்பொளந்துட்டு போய்ட்டாங்க. ஆனா எங்க மொதலாளி.’
அவன் முழுக்கதையையும் சொல்லி முடிக்காமல் புலித்தேவன் புன்னகையை உதடுகளில் மிளிரச் செய்தான். கன்னத்தில் கை வைத்து அவன் கதை சொல்லும் அழகை ரசித்துக் கொண்டிருந்த பார்வதி 'உம். அப்புறம் என கதைக்கு ஊறுகாய் வைக்கிறாள்.
“அட கிருஷ்ணா. சிங்கம் மாதிரி நீயும், இரும்பு மாதிரி உன் கை காலும் இருக்கிற நேரத்துலே ஒரு வருஷம் என்னப்பா ஆறு மர்சத்திலே கடகடன்னு கட்டிடம் எழும்பிடுமே என்று முதுகைத் தட்டினாரு.”
கிருஷ்ணனின் ‘முதலாளி மகாத்மியம்’ தொடர்கதையாக நீண்டு செல்லும்.
0 0 K)
மு ன்று மாதங்கள் பனிக்கட்டிகளென கரைசலாகின. கட்டிடத்தின் முக்கால் பாகமும் சடசடவென சரிந்துவிட இரும்புத் தூண்களும் அஸ்திவார இரும்பு உருளைகளும் பிடுங்கியெறியப்பட்டன. வாகன வீதியை ஒட்டினாற்போலுள்ள கட்டிடம் டங் டங் என உளிகளின் ஒசை
இருபது முப்பது தொழிலாளர்கள் கிருஷ்ணனைச் சுற்றும் உப கிரகங்களாகத் தொழிற்பட்டார்கள். இரவும் பகலும் கடுமையான வேலை. எரிந்த கட்டிடம் ‘மள மளவென சரிந்து கொண்டிருந்ததுடன் அதன் பெறுமதி

Page 27
50 அன்னையின்நிழல்
மிக்க செங்கற்கள் சேதமின்றி பெயர்த்தெடுக்கப்பட்டன. முதலாளிக்கு ரெட்டை இலாபம்.
வெயிலென்ன, மழையென்ன, பனியென்ன உற்சாகமான வேலை.
இந்தக் கட்டிட வேலை முடிந்த பின்னர் முதலாளி லட்சாதிபதியாகி விடுவார். அடேயப்பா அவருக்கு எவ்வளவு பண நோட்டுக்கள் சுளை சுளையாகக் கிடைக்கப் போகின்றன. அப்படி நினைப்பதுவும் கிருஷ்ணனுக்குப் பெருமையாகவே இருக்கிறது.
0 0 0
கோடை வெயிலின் சுள்ளென்ற தகிப்பு. வாகனங்களின் காதைப் பிளக்கும் இரைச்சலின் மத்தியில் படரும் தூசி.
‘ச் சோ, அப்பப்பா’ என்ன வெயில்,
அங்கலாய்ப்புடன் நடமாடும் பாதசாரிகள்.
பகல் பொழுது.
வெம்மை தார் வீதியையும் உருகச் செய்து கொண்டிருக்கிறது.
கிருஷ்ணன் தூண் ஒன்றைச் சரித்துவிட்டு ‘சட்டெனத் தாவிப் பாய்கின்றபோது நறுக்கென ஆணியொன்று காலினுள் ஊடுருவுகின்றது.
'ஆ அம்மா”
துருப்பிடித்த ஆணி இரண்டங்குலம் புதைந்து விட்டது. இடது கால் துடித்தது.

III.)> G335. விஜயன் Kull 51 நிலத்தில் உட்கார்ந்து வெடுக்கென பிடுங்கியெறிந்து விட்டான். லேசான இரத்தக் கசிவு, ‘விண் விண்னென மெதுவான வலி கொஞ்ச நேரமிருந்தது. அவனும் நொண்டி நடந்து அதனை வேலை மும்முரத்தில் முற்றாகவே மறந்துபோனான். வீடுவந்த பின்னர் வலி அதிகரிக்கவே பார்வதியின் உப்புக்கல் ஒத்தடம் தொடங்கியது.
{) {0 ()
இரவு லேசாகக் காய்ச்சல், காலின் மீது பாறாங்கல் வைக்கப்பட்டது போல் கனம். சதைக் கோளங்கள் மரத்துப் போகின்றன. நித்திரையில் வேதனை முனகல் பார்வதியைப் பயம் கெளவிக் கொள்ள அவள் அவன் பக்கத்திலேயே ‘கொட்டுகொட்டென விழித்துக் கொண்டிருந்தாள். நடுச்சாமம் கடந்த பின்னரே கண்கள் அயர்ந்தன.
விழிப்பு வந்தபோது வெயில் ‘சுள்ளென எரித்துக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் முதலாளியின் கார் வேறு குடிசை வாசலில் நின்று கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் முதலாளியின் பழைய வாகனம் ‘கடகட’வென நடுங்கிக் கொண்டிருக்கிறது.
“என்னப்பா இப்படித் தூங்குறே. ஒன்ன தட்டி எழுப்ப நான் வரணும் போல.”
“பள பள’வென பொலிசாகிவிட்டிருந்த முதலாளி தங்கப்பல் டாலடிக்க கிண்டலும் நக்கலுமாகக் கேட்டார். கிருஷ்ணன் கண் பீளையைத் துடைத்து நொண்டி நொண்டி அவரை நோக்கி நடந்தான்.
“என்ன நொண்டுரே.?”

Page 28
52
“அட அதுக்கு இப்படி தூங்கிட்டிருக்கலாமா? மருந்து கட்டிட்டா போச்சி. அது கெடக்கு. சீக்கிரம் வா. நெறைய வேல இருக்கு. இந்த மாசத்துக்குள்ளே கட்டிடத்தை தரமட்டமாக்கிடணும்.’ ரொம்பவும் கரிசனையுடன் சொன்னார்.
கிருஷ்ணன் காரில் ஏறிக்கொண்டான். அது பறந்தது.
நிலைக்கதவை பிடித்தவாறு நின்றிருந்த பார்வதி கன்னத்தில் கை வைத்தவண்ணம் குடிசை வாசலில் அமர்ந்தாள். கண்களில் நீர் முகிழ்த்து வழிய, அதைத்துடைத்த வண்ணம், திடீரென வெயில் மறைவதையும், அடிவானில் சூல் கொண்ட மழை மேகம் உருண்டு திரள்வதையும் வெறித்தாள்.
‘ஆண்டவனே! மழை வேற வரப்போவுதே! மனம் அழுத்து.
அன்று முழுவதும் கடுமையாக மழை பொழிந்தது. எனினும் அந்தக் கட்டிடத்தில் ‘டங் டங் டங்’ கென்ற அலவாங்குகளின் சப்தம் ஒய்வு கொள்ளவில்லை.
{) () ()
கிருஷ்ணன் காய்ச்சலால் படுத்துவிட்டான். ஏழெட்டு நாட்களாகப் படுத்த படுக்கை, காய்ச்சல் இறங்கவில்லை. ஆணி குத்திய கால் கடூரவலி கொடுத்து சர்வாங்கத்தையும் விண்ணென உதறலெடுக்கச் செய்தது.
முதலாளியின் கார் எந்நாளும் குடிசை வாசலுக்கு வந்தது.
 

ா கே. விஜயன் II 53
மருந்து குடித்து வீட்டில் சும்மா கிடப்பது பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்குச் சென்று கணவனை வார்ட்டில் சேர்ப்பது என பார்வதி முடிவு கொண்டாள்.
முதலாளியின் காரில்தான் அவன் கொண்டு செல்லப்பட்டான்.
டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.
“மிகவும் தாமதித்துவிட்டாய் அம்மா.” அவர் துன்பமுடன் முணுமுணுத்தார்.
“என்ன..?”
திகிலில் மருண்ட மனத்தவளாக பார்வதி கைகளைப் பிணைகிறாள், பிசைகிறாள்.
“ஆணி குத்துனகால் மொழங்காலுக்கு மேலே வெஷம் ஏறி பழுத்துட்டு. எல்லாமே சீழோடி கெடக்கு. முட்டுக் காலுக்குக் கீழே கழற்றுனாதான் உயிருக்கு ஆபத்தில்ல.”
‘ஓ’வென அலறுகிறாள் பார்வதி.
அதற்குப் பிறகு முதலாளியின் கார் கிருஷ்ணனைத் தேடிவருவது நின்றுவிட்டது.
CO3

Page 29
N ৰ বােব *** リ|リ/ - கனவான் அவதாரம் R
ܢܠ ܐܠ- .ܚ.
صحن س.....................................-۔
சர்வர்க்கடிகாரம் நான்கு முறை ஒலித்து ஓய்ந்தது.
கந்தசாமி பதறியடித்துக் கொண்டு எழும்புகிறார்.
‘கடவுளே கடவுளே மணி நாலாயிற்றே" என்று குழறிக் கொண்டு ‘பட் பட்டென நெற்றியில் நாலு குட்டுகளுடன் குளியலறைக்குத் தாவுகிறார்.
குழாயைத் திறந்தார்.
சளசளவென பீச்சியடித்த தண்ணிரில் காக்காய் குளியல்
மனிதவுரிமை சங்கத்தின் கூட்டம் நாலரை மணிக்கு. சமூக சேவா மினிஷ்டர் திருமதி. வருவதாகத் தகவல். கூட்டத்தில் பேசுவதற்காக அருமையான சொற்பொழி வொன்றினை தயார் செய்து ஒத்திகை செய்து கொண்டிருந்த போதுதான் மத்தியானச் சாப்பாட்டின் களைப்பு காரணமாக கோழித் தூக்கம் குபிரென தாவி அணைத்துக் கொள்ள கும்பகர்ணனாகிவிட்டார். அசுரத் தூக்கத்தில் அயர்ந்துவிட்டார். நித்திரை மோகினியின் பாசமான அணைப்பில் நேரம் மின்னல் வேகத்தில் பறந்தது.
 

HADD G8es. விஜயன் {tl| 55
‘சா எழுதிய சொற்பொழிவு முழுவதையும் நினைவில் பதித்து வைக்க முடியவில்லையே.
மனத்திற்குள் அலட்டல், கவலை புழுவாய் நெளிந்தது.
மனுஷி வீட்டில் இருந்திருந்தால் எப்படி யென்றாலும் எழுப்பிவிட்டிருப்பாள். அவளும் வேலைக்கார பெட்டையைக் கூட்டிக்கொண்டு வுொப்பிங் போட்டாளோ. கண்டறியாத ஷொப்பிங் மனத்திற்குள் கடுகடுப்பு. சுடு எண்ணெயில் கடுகாய் படபடக்கிறது.
குழாய் பீச்சியடிக்கும் நீரில் நனைந்தவாறே கண்ணாடி முன் நின்று முகத்தை அஷ்ட கோணலாக நெளித்து, உதடுகளைப் பிதுக்கி, கண்களை உருட்டிப் பிரட்டி சொற்பொழிவு நிகழ்த்துவது போல் நாலு வார்த்தைகளை உதிர்த்தார்.
நெஞ்சிற்குள் சத்தம் கேட்கும் மெளன உச்சரிப்பு. ஊமைப் பிரசங்கம்தான். ஆனாலும் சில வார்த்தைகள் முண்டியடித்துக் கொண்டு ‘நான் மினிஷ்டர் என வெளியில் எம்பிக் குதித்தன - குஞ்சுத் தவளைகள் சேற்றிலிருந்து எம்பியெம்பிப் பாயுமே அதுபோல.
'யாரேனும் கேட்டு விட்டார்களோ!'
மனதில் அச்சம் சிறு நீர்க்குமிழியென கிளர்ந்து விரிந்து சலனமிடுகிறது.
‘சே ஒருத்தரும் இல்லே.

Page 30
அென்னையின் நிழல்
நெஞ்சைத் தட்டி சாந்தப்படுத்திக்கொண்டு தன்னையே கிண்டலடிப்பது போல மென்மையாகப் புன்னகைக்கிறார்.
குழந்தையின் புன்சிரிப்பு. என்றாலும் ஒர் அச்சம் புழுவென நெளிந்து ஊர்ந்திட பாத்ரூம் கதவை சட்டெனத் திறந்து எட்டிப் பார்க்கிறார்.
யாரையும் காணவில்லை.
‘அட மனுஷியும், வேலைக்காரப் பெட்டையும் ஷொப்பிங் பொய்ட்டினம் தானே!’
நினைவு மீண்டவராகப் புறுபுறுத்துவிட்டு LDLITGouaor கதவை மூடுகிறார்.
ஒனர் மினிஷ்டர் இந்த நாட்டின் சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவை அனைத்தையும் இல்லாதொழிக்க சட்ட திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.’
பாத்ரூமிற்குள் மறுபடியும் சொற்பொழிவு ஒத்திகையின் அரங்கேற்றம்.
சிந்தசாமி தபால் அதிபராகவிருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் மூவரும் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் ஆகிவிட்டதன் பின்னர், கந்தசாமி சமதர்மினி அகிலாண்டேஸ்வரி சமேதராய் கொழும்பு வாசியாகிவிட்டார்.
மாதத்தின் ஒழுங்கான வருமானம் பென்ஷன் மட்டும்தான். வீட்டு வாடகை அதனை அப்படியே வாரியெடுத்துக் கொள்கிறது.

Illus GS5. 6Sigu u6ir “mill 57 எப்படியோ அவ்வப்போது பிள்ளைகளிடமிருந்து பறந்துவரும் அமெரிக்க டாலர்கள் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்து ஆசனத்திலிருந்து நழுவிவிழாமல் காப்பாற்றி விடுகின்றன.
என்றாலும் என்ன? ஆண்டியின் தரித்திரம் ஐயனே அறிவான்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
என்ன செய்யலாம்?
யோசனை! யோசனை! யோசனை!
சாய்வு நாற்காலியில் கைகளை தலைக்கு மூட்டாக்கி கண்களை மூடிக்கொண்டு தபசுநிலை. இப்படியே ரிட்டையர்ட் தபால் அதிபரின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு நாள். முன்னேறுவதற்கு என்ன வழி என்று ஆலோசனை கேட்டு சமதர்மினியின் காதுகளில் குசுகுசுத்தார்.
“என்னப்பா முன்னேற்றம், கண்டறியாத முன்னேற்றம். வயது 65 ஆகுது. சிவனே என்று போய்ச் சேருகிற வழியைப் பாருங்கோ’ இது அகிலாண்டேசுவரியின் தாழிப்பு.
அகிலாண்டேசுவரி ஒன்றும் மோசமான பெண்மணி அல்ல. என்றாலும் எதை எப்பொழுது பேசுவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமோ!
காலையிலிருந்தே அம்மாவுக்கு ஜலதோஷமும் வயிற்றுக் குத்துமாகவிருந்தது. இவற்றின் அவஸ்தையில் நெளிந்துகொண்டு சமையல் வேலையில் ஈடுபட்டுக்

Page 31
58 @ அன்னையின்நிழல் ଝି கொண்டிருந்தபோதுதான் ஆலோசனைக்காக உள்ளே நுழைந்தார்.
“என்னப்பா, முருங்கைக்காய சொதி கமகமக்குது’ என்ற கிண்டலோடுதான் உள்ளே நுழைந்தார். வாங்கிக் கட்டிக் கொண்டார்.
என்றாலும் தன் முயற்சியை கந்தசாமி கைவிடவில்லை. மனிதவுரிமைக் குழுவொன்றுடன் ஒட்டிக் கொண்டார்.
மாதம் இருமுறை என்றாலும் பொதுக் கூட்டம், கலந்துரையாடல், காரசாரமான விவாதம், பல்வேறு விவகாரங்கள் குறித்து அலசல், பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுதல், கலைஞர் முதல் அரசியல்வாதிவரை எவராவது மண்டையைப் போட்டுவிட்டால் உடனே அநுதாப அறிக்கை விடுதல் என மனிதவுரிமைக் குழுவின் செயல்கள் சுறுசுறுப்படைந்தன. சில பத்திரிகை ஆசிரியர்களையும் பிடித்துக் கொண்டார். ஓர் அறிக்கையை அனுப்பியதன் பின்னர் தொடர்ச்சியாக நாலு கோல்களையும் அடித்துவிட்டு "அவசரம்' என அவரையும் உசுப்பிவிட்டு எப்படியோ அறிக்கையை பிரசுரித்து விடுவார். பத்திரிகைகளில் அடிக்கடி பெயர் பிரசுரமாக சுற்றுவட்டாரத்தில் ஐயாவைக் கண்டதும் கும்பிடுதல்கள் அதிகரித்தன.
女女女
பொ.துக்கூட்டம் நடைபெறும் மண்டபம் பொது மக்களால் நிறைந்து பேரிரைச்சலுடன் காணப்படும் என்ற மனவுணர்டன் சென்றவருக்குப் பேரிடி

III) G35. விஜயன் «III 59
நாலைந்து பேர் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் கழக உறுப்பினர்கள்.
“என்னடாப்பா என்ன விசயம்?”
கந்தசாமி போட்ட சத்தத்தில் ‘கொட்டாவிகள் பதைத்து சிதறின.
“கூட்டம் நடத்த முடியாது ஐயா!” செயலாளர் பையன் தலையைச் சொறிந்துகொண்டு முனகினான்.
“ஏன்? என்ன விசயம்?” “மினிஷ்டர் வரமாட்டாராம்.” “யாரடா, சொன்னது.” “நடேசன்தான்.”
“நடேசனோ, அவன்தானே கூட்டிக்கொண்டு வாறனெண்டு சொன்னவன். இப்ப என்னவாம். கூப்பிடு ஆளை’
“அவன் வர இல்லை சார். மெசேஜ் ஒன்று
அனுப்பியிருக்கிறான்.”
கந்தசாமி இடிந்து போனார்.
女女女
சிTய்வு நாற்காலி.
கைகளைப் பின்னால் மூட்டுக் கொடுத்து, கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்து கிடக்கிறார் மனிதவுரிமைக் குழுத் தலைவர் கந்தசாமி.

Page 32
60 сЭівӧтвораотuбlaӧтд8цpєb
ཚུ་རྒྱུ་ཡ───────────────────────- ཆུ་ மனத்தில் விசனம். சமூக சேவை அமைச்சரின் அபிமானத்தைப் பெற முடியவில்லையே என்ற துயரம் உலக சிறுவர்கள் படுகின்ற துயரத்தை எத்தகையதொரு அற்புதமான சொற்பொழிவாக அவர் எழுதியிருந்தார். ‘சா, பொன்னான வாய்ப்பு நழுவி விட்டதே.’
வாசலில் சந்தடி,
ஷொப்பிங் முடித்துவிட்டு அகிலாண்டேசுவரியும் வேலைக்காரச் சிறுமியும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சிறுமி பாரம் தாங்க முடியாமல் பார்சல் ஒன்றை கை தவற விட்டுவிட்டால் போலும் அகிலாண்டேசுவரி திட்டுகிறாள்.
“ஏண்டி, கழுத. இதைத் தூக்க முடியவில்லையோ உனக்கு.”
மனிதவுரிமைக்குழுத் தலைவரின் கண்கள் திறந்தன.
விழித்துப் பார்க்கிறார். ‘என்னது பார்சலைக் கீழே போட்டுட்டாளா?” நெஞ்சில் சினம் தீயாக எழுகிறது. பல்லை நெரித்துக்கொண்டு ஒடி சிறுமியின் தலைக் கூந்தலை பிடித்து மடால் மடாலென காலால் உதைக்கிறார். சிறுமி வேதனையில் அலறுகிறாள். “ஐயோ விடுங்கோப்பா’ என தாவிய அகிலாண்டேசுவரியின் செவிகளில் “இந்த சனியண்ட தரித்திரம்தான் மினிஷ்டரை பார்க்க முடியாது போய்ட்டு’ என்ற கந்தசாமியின் அரட்டலில் வீடு ஒர் ஆட்டம் போடுகிறது.
SC)

61
A qIIỉ M'-...-...- .幻
O ܀ ܘܵܐ குழநதை
(ح :
ଗ நசவாலையில் வேலை கிடைத்தது. ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைக்குள் ஒருநாள் விடியற்காலையில் நானும் போய் நுழைந்தேன். அம்மைத் தழும்புகளை முகமெங்கும் புள்ளிகளாகக் கொண்டிருந்த ஒரு வயோதிகக் காவல்காரன் என்னைக் கூட்டிக்கொண்டு போய் தூசியும் புகை மண்டலமுமாகப் படர்ந்துகிடந்த ஒரு பகுதிக்குள் தள்ளினான். திணறிப்போனேன். ஏதோ மேக வெளிக்குள் வந்து விழுந்தாற் போல திக்குமுக்காடினேன்.
சில நாழிகைக்குள் எல்லாம் பழகிவிட்டது. முன்னால் படர்ந்துவிட்டிருந்த புகையை ஊடுருவிய பொழுது ஒரு பெண் நீண்ட தடியினால் பெரிய வாளியொன்றில் எதனையோ கலக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘என்ன இது; இயந்திரம் மாதிரி சுழல்கிறாளே!
என் முணுமுணுப்பு கேட்டிருக்க வேண்டும். அவள் தலைதூக்கிப் பார்த்தாள்.

Page 33
மறுபடியும் குனிந்த தலையுடன்தடியை வேகமாகச் சுழற்றத் தொடங்கினாள்.
இரண்டு மூன்று நாட்கள் பறந்து விட்டன.
மிகவும் சங்கோஜப் பேர்வழியான நான் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி விட்டேன். என்னுடைய இயல்பான லஜ்ஜை குணத்தைத் தள்ளி வைத்துவிட்டு அவளைப் பேச்சுக்கிழுத்தேன்.
G6 , மிச்சம் கஷ்டமான வேல இல்லியா?”
ଈ;
அவள் தலை தூக்கிப் பார்த்தாள். இயந்திரத்தில் முழுகி நனைந்து பறந்து விரிந்து ஒடிக் கொண்டிருந்த வர்ண துணிகளுக்கிடையாக அவளுடைய முகம் தெரிந்தது. முத்து முத்தாக முகத்தில் அரும்பிக் கிடக்கும் வியர்வைத் துளிகளை ‘சளுக்கென வழித்தெறிந்துவிட்டு என்னை நோக்கிப்
புன்னகைத்தாள்.
“பழகிவிட்டது. அதுதான் கஷ்டம் தெரியல’ அவளுடைய மெதுவானதொரு முணுமுணுப்பு.
“இங்கே காத்தே இல்ல”
அவள் கலகலவென நகைத்தாள்.
அவள் சாயத்தைக் கலக்கிக் கொண்டிருந்த இடத்திலுள்ள காங்கைக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததால் அதன் வழியாக ‘குபுகுபுவென வெண்புகை வெளிப்பட்டு எங்கும் வியாபகமாகி விட்டிருந்தது. அந்தப் புகைவெளியில் அவள் மறுபடியும் இயந்திரமாக இயங்கத் தொடங்கிவிட்டாள்.

III)- G35. Gguu6oT 11III 63
“இது அசிங்கமான இடம். சுத்தமில்லாத தண்ணி நோய்க்கிருமிகளை உண்டாக்கும்.”
நான் சொல்லி முடிக்கும் முன்னரே அவளுடைய ‘களுக்’ சிரிப்போசை என் பேச்சை முறித்தது.
‘நோய்க்கிருமி, தூசி, பஞ்சுத்தூள். ஸ்டீம் சூடு, அவ்வளவும் இருக்கா அதுக்கென்ன?’ வேலை செய்வதை நிறுத்திவிட்டு அவள் என்னை நோக்கி அனுதாபத்துடன் கேட்டாள்.
சாயம் கலக்கும் தடிநுனியை கைவிரல்கள் பொத்திக் கொண்டிருக்க முகத்தின் நாடி அதன்மீது அமர்ந்திருக்கிறது.
வியர்வையில் நனைந்தும், வேலைக் களைப்பினால் வாடி தளர்ந்து இருண்டும் இருந்த பொழுதும் அவள் முகம் என்னை வசீகரித்தது. விழி இமைகளில் சலனத்தை உண்டு பண்ணாமல் வெகுநேரம் அவளை உற்று நோக்கினேன். லஜ்ஜையினால் அவள் முகத்தில் செவ்வரிகள் படர்ந்தன.
“பொல்லாக நசல்கள் வரும்.”
த ந
மறுபடியும் அவளுடைய கலகலப்பான நகைப்பொலி கேட்டது.
“பசியைவிட பெரிய நோயா?” என்னைத் திருப்பிக் கேட்டுவிட்டு சுவரை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே பிரேம் போட்டதொரு சட்டம் தொங்கிக் கொண்டிருந்தது.
‘விசுவாசமுள்ள தொழிலாளியே! ஆண்டவனை நேசிப்பதுபோல உன் முதலாளியை நேசி. அவர் இல்லையென்றால் ஒரு பிடி சோறாவது உனக்குக் கிடைக்காது என்பதை மறவாதே!

Page 34
64. அன்னையின்நிழல் ଷ୍ଟି རྩ་རྒྱུ་ཡ──────────────────────- ཚུ அதில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த வாசகங்களைப் படித்துவிட்டு அவளைப் பார்த்தபொழுது அவள் நன்றிப் பெருக்குடன் அந்த வாசகங்களை இன்னும் படித்துக் கொண்டிருந்தாள்.
‘மிகவும் நன்றி குணமுள்ள பெண்’ மனதிற்குள்ளாகச் சொல்லிக்கொண்ட நான் அன்போடு அவளை நோக்கினேன்.
“உன் பெயர்?’
“ஜெபமாலை”
“அழகான பேர்’ அவள் முகத்தில் மறுபடியும் அந்த செவ்வரிகள் தோன்றின.
“எவ்வளவு காலமா இங்கே வேல?”
“பதினொரு வருஷம்!”
“இந்த வேலயா?”
ஆமா'
என் உடம்பு லேசாக நடுங்கியது. எலும்புகள் சிலிர்த்துக் கொள்ளுமாற் போன்ற ஒர் உணர்வு பரவியது.
பதினோரு ஆண்டுகள் என்பது லேசானவையா என்ன? அதிலும் அழுக்கும் அசிங்கமுமான இடம். காங்கைச் சூடு, சாயங்கள், அவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்து வகைகள், பிளிச்சிங் பவுடர் போன்றவற்றின்தூசி எல்லாமே மனிதனை நரகத்தை நோக்கித் தள்ளிவிடும் விஷப் பொருள்கள். காற்றும் வெளிச்சமும் இல்லாத இந்த இடத்திற்கு பதினெட்டு வயதில் வந்து நுழைந்து பதினோரு

|IL G35. விஜயன் «LIII 65 ஆண்டுகளை கடுமையான உழைப்பிலே கழித்துவிட்டா ளென்றால் அதுவென்ன லேசான காரியமா என்ன? குடும்பத்தின் முழுச் சுமையையும் தலையில் சுமந்து உழைப்பிலே கண்ணும் கருத்துமாகி வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள்.
女★女
எங்களுக்குள் வளர்ந்த காதல் எங்களை இணைத்தது. தொழிலாளர் குடியிருப்பில் நாங்கள் வசித்து வந்தோம். அந்திப் பொழுதுகளில் வாசல் படிக்கட்டில் அமர்ந்து மணலில் குழந்தைகள் தூசி பறக்க கூச்சலிட்டு கும்மாளமடித்து விளையாடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்போம். சிலவேளைகளில் அவளுடைய கண்கள் கலங்கி நீர் துளிர்த்து பிரகாசிக்கும். அழுக்கும், வடிக்கின்ற மூக்குச் சளியுமாக விளையாடுகின்ற அரை நிர்வாணக் குழந்தைகளைத் துன்ப நீர் சுரக்கும் கண்ஞடன் பார்ப்பாள்.
இருள் நிறமான தொழிலாளர் குடியிருப்பின் மீதாக தவழ்ந்து செல்கின்ற மாலைச் சூரியன் பொன்னிறக் கதிர்களை வெறிக்கப் பார்த்தவாறு என்னவோ முணுமுணுப்பாள்.
“என்ன ஜெபா?”
தனது நிர்ச்சலனமான பார்வையிலிருந்து விடுபடும் அவள் என்ன என்பதுபோல் என்னைப் பார்ப்பாள். பிறகு அவளாகவே சொல்வாள்; இல்லை என்னைக் கேட்பாள்.
“இந்தக் குழந்தைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கு?”
“எப்படி م««

Page 35
66 இy"அன்னையின்நிழல் ξ ------------
יין
“அசிங்கமா, கறுப்பா
நான் கலகலவென நகைப்பேன். அதில் கிண்டல் பறக்கும்.
“என்னத்துக்கு நகலுக்காக ஏன் பயப்படனும், பசி முடிஞ்சாப் போதாதா?”
அவள் திகிலுடன் என்னைப் பார்ப்பாள்; கண்கள்
மருட்சியில் உருளும்.
“நமக்குப் பொறக்குற குழந்தைகள் இப்புடியா இருக்கும்?”
“இதைவிட மோசமாவும் பொறக்கலாம்!”
“அது ஏன்?”
“மனுஷன் தின்றது, மனுஷன் குடிக்கிறது. ஏன் வாழ்றது. சுவாசிக்கிறது எண்டு அடுக்கிக்கிட்டே போனா எல்லாமே சுத்தமா இருக்கணும். இல்லாட்டி அது வெசம்தானே!”
அவள் மெளனமாகவிருந்தாள். ஒர் ஊமையைப்
போல வானத்தையே வெகு நேரம் வெறித்து நோக்கினாள்.
'பரம மண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! எனக்குப் பொறக்கும் குழந்தை ஒரு தேவ பாலகனைப் போன்று அழகாக இருக்க வேண்டும் அவள் ஒசையெழுப்பாமல் மனதிற்குள்ளாகவே பிரார்த்தனை செய்வது என் இதயத்திற்கு தெளிவாகக் கேட்டது. என் இருதயமும் மானசீகமாக அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டது.
0. () ()

I கே. விஜயன் Kelli 67 பிரசவத்தின்போது ஜெபா துடியாகத் துடித்தாள்; உறுப்பு உறுப்பாக வெட்டியெறிவதுபோல அலறினாள். மெலிந்த கறுப்பு நிறமான ஒரு சதைத் துண்டைப் பிரசவித்துவிட்டு தன் மூச்சை அடைக்கிக் கொண்டாள்.
மில்லுக்குப் பக்கத்திலுள்ள அந்த மயானத்தில் ஜெபாவின் சடலத்தைப் புதைத்துவிட்டு திரும்பியபொழுது இந்த உலகை சூன்யம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகவும் அங்கே ஜன்னிக் காய்ச்சலால் நான் மட்டும் தன்னந்தனியனாக நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் பயப்பிராந்தி என்னை ஆட்கொண்டது.
() () 0.
1ென் கனவு, என் நினைவு அனைத்துமாக என் மகன் ஜோர்ஜ் வளர்ந்தான். அவனை பூப்போல பராமரித்து வளர்ப்பதிலே காலத்தைச் செலவழித்தேன். எனினும் என் ஜெபாவின் நினைவு அடிக்கடி தோன்றி என்னை அலைக்கழித்ததால் நான் குடிக்கத் தொடங்கினேன். தொழிலாளர்களில் அநேகம் பேர் குடிக்கிறார்கள். நான் குடித்தாலென்ன?
மூன்று வருடங்களை காலம் அள்ளிக்கொண்டு சென்று விட்டது. சம்பளம் பெற்ற ஒருநாள் இரவு நன்றாகக் குடித்துவிட்டு வீடு சென்று கதவைத் தட்டினேன்.
ஒ. அது திறந்தல்லவா கிடக்கிறது. குப்பி விளக்கின் மினுமினுப்பில் என் மகன் வெறும் தரையில் சுருண்டு படுத்திக் கிடப்பது தெரிந்தது. அவனை நான் தூக்கிய பொழுது என் குடியுணர்வு மின்னலென மறைந்துவிட்டது.

Page 36
68 像 அன்னையின் ജ്ജു
‘இதென்ன நெருப்புத் துண்டையா தொட்டேன்’ மனம் படபடவென வேகமாக அடித்துக்கொள்ள ஒடோடிச் சென்று குப்பிவிளக்கை தூக்கிக்கொண்டு வந்து அவன் உடலருகே நீட்டி குனிந்து பார்த்தபொழுது என் சர்வாங்கமும் ஒடுங்கிவிட்டது.
ஜோர்ஜ்ஜின் காதுகள் விரிந்து புடைத்து சிலிர்த்தவாறிருக்க, மூக்கு விம்மி வீங்கிக் கிடக்க, கண்களில் பாசி படர்ந்தாற் போன்றதொரு பச்சை வர்ணம் நிழலாடுகின்றது.
சில நாட்களிலே அவனுடைய சிறிய மேனி பெருத்து விட ஒட்டி உலர்ந்த வயிறு ஒரு பானையாக உருமாறத் தொடங்கி கால்களும் கைகளும் பெரியதொரு கொழுத்த மனிதனுடையதைப் போன்று மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாயின.
ஒருநாள் வெள்ளிக்கிழமை காலையில் நான் வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில். என் மகனின் கால் விரல்களில் வெடிப்புத் தோன்றி அதிலிருந்து சலம் சொட்டுச் சொட்டாகக் கொட்டத் தொடங்கியது.
நான் பிசாசைக் கண்டவனைப் போன்று ஒடத் தொடங்கினேன். நெசவாலைக்குள் சென்று நுழைந்த நான் ஒரு மதயானையைப் போல நாலா திசைகளிலும் தாவி சுவர்களிலெல்லாம் மோதி, கையில் கிடைத்த ஓர் இரும்புக் கம்பியினால் அந்தப் பிரேம் போட்ட சட்டம் எங்கெல்லாம் தொங்குகிறதோ அங்கெல்லாம் சென்று அவற்றை அடித்து நொறுக்கி துகளாக்கினேன்.

III Gs. விஜயன் «(II 69 அந்த அம்மைத் தழும்புக் காவற்காரன் பறந்து வந்தான். என் பிடறியில் தாக்கிய அவன், இழு இழுவென இழுத்துக் கொண்டுபோய் வாசற்கதவிற்கு அப்பால் தள்ளிவிட்டான்.
மணலில் விழுந்தேன். என் நாடியில் கல்லொன்று குத்தி கிழித்துவிட்டது. சிவப்பு வெள்ளம் மளமளவெனக் கொட்டுகின்றது.
நான் எழுந்து தலைநிமிர்ந்தபொழுது அடடா அதுவென்ன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு நடுவிலே அந்த அம்மைத் தழும்புக்காரன் ஒரு பந்தாகப் பறந்து கொண்டிருக்கிறானே!

Page 37
70
வான்வெளியின் பரந்த மார்பினடியில் வெண் துகிலென மழைத்துறலின் வருவிப்பு.
நிலம் பார்த்து, குடையாக விரிந்து மணலைத் தொடுவதற்கு நெம்பும், வாழை இலையின் பசுமையான மேனியில் “சரவரவென மெலிதான சந்தடியுடன் மோதல் கொடுத்து நீர்க் கோடுகள் என மழைத்துளிகள் வழிகின்றன.
கறுவல் மேனி, நதி மீது தெப்பமாக ஈரத்துடன் பளபளக்கச் சூரிய வெளிச்சத்தில் கண்மணி கூசி, இமைகள் சுருங்கி, தவக்கோலச் சாமி போல் கல்லாகிவிட்டிருக்கிறான் பழனி
வாழை மரம் அருகாக சண்முகம், தட தடவென ஓடினான். காமாட்சிப் பாட்டியின் பேரன். தோட்டத்திலே பொல்லாத வாண்டுப் பயல் அவன்.
நரிக்கும் மழைக்கும் கல்யாணம்
நரிக்கும் மழைக்கும் கல்யாணம்.”
ஆட்டமும் பாட்டமுமாய் கும்மாளித்து ஆடி ‘பட
படவென பேரிரைச்சலுடன் நிலம் அதிர ஒடுகிறான். ஆனாலும் பழனியின் தவக்கோலம் கலையவில்லை.
 

I) கே. விஜயன் (I 71
சூரிய சக்கரப் பிழம்பு நடுப்பகலைத் தாண்டி கண் மூடித்தனமாக ஒடிக் கொண்டிருக்கிறது - அசுர வேகம்.
கல்லும் முள்ளும் பற்றையுமான மணற்தரையில் அமர்ந்து, முதுகை வாழைத் தருவில் சாய்த்து, நிமிர்ந்த முகத்தில் சூரிய கதிரும், மழை வருவிப்பும் போட்டியிட கடும் யோசனைக் கடலில் ஆழ்ந்து போயுள்ளான் பழனி.
அவன் காலடிக்குள் ஒடுங்கிக் கிடக்கும் கோழி, கக் கக் கக், கென கொக்கரிக்கிறது.
இந்த அணைப்பிற்காகவே இவ்வளவு காலம் காத்திருந்தேன் என உளக் கிளர்ச்சியிலிருந்து பீறிடும் பாகத்தின் செல்ல முனகலாக கோழியின் கொக்கரிப்பு சப்த அலைகள். :
முட்டையிட்டு, பலமுறை அடைகாத்து குஞ்சு பொரித்து, பழனியின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் சொந்தமாகிப் போன கோழி அவன் வாழ்வினோடு உறைந்து போனதோர் இரண்டறக் கலப்பான ஜீவன்.
இந்தக் காட்சியை -
நெஞ்சு படபடக்க உடல் முழுவதும் பதற கதவின் இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் தெய்வானை - பழனியின் அம்மா.
“மவன - பொலிஸ் பயலுவ நல்லாகவே மொந்திட்டாங்க போல. வலிதாங்க முடியலியாக்கும்.” அவள் மனதிற்குள் வேதனையின் நெருடல்.
‘ஊட்லேயிருந்து தரதரவென்று இழுத்துக்கிட்டு போவக்குள்ளேயே ஒடம்புச் சதையை கன்னா பின்னான்னு

Page 38
72 亂 ക്ഷത്രങ്ങല്ക്ക செதைச்சுட்டாங்கள்லே நெஞ்சு வேதனையுடன் கதறுகிறது.
வழக்கமாக இரவுதான் வீடு வந்தான். அகோர பசியோடிருந்தான். தெய்வானை கொடுத்த இரண்டு ரொட்டிகளுக்கும் பசி அடங்கவில்லை.
பிளேன் டீயை நமுக் நமுக் கென தொண்டைக் குழாய்க்குள் இறக்கிவிட்டு சாய்ந்தவன்தான். ஒரு நொடிக்குள்.
‘யப்பா, என்ன தூக்கம் தூங்குகிறான்’ என்று தெய்வானை அசந்து நின்ற வேளையில் பொலிஸ் ஜீப் உறுமலுடன் வந்து வாசலில் நிற்கிறது.
குப்பி லாம்புடன் தெய்வானையின் கழுத்து வெளியில் எட்டிப் பார்க்கிறது.
நான்கு கிங்கரர்கள் ஜீப்பிலிருந்து தாவிக்குதித்து இறங்குகிறார்கள்.
“ஹோ யக்கோவ் அர பல்லா!”
“எங்கே பிசாசே அந்த நாய்!
தடித்த பருப்பமான சப்பை முகத்தையுடைய கன்னங்கறேலான பொலிஸ்காரன் கடித்துக் குதறுவதுபோல கர்ஜித்தான்.
‘மகன் மறுபடியும் ஏதாச்சும் பொல்லாப்பு பண்ணிப்பிட்டு வந்துட்டானோ?
மனத்தில் பதற்றம் கப்பென ஒட்டிக் கொள்கிறது.

III.)> G335. விஜயன் «(NIII 73
A.
M
به گمشده
Α 9ረጃ
கரும்புகை கக்கிக் கொண்டிருக்கும் குப்பிலாம்பு நடுங்குகிறது.
லயக்காம்பராவின் சுவர்களில் அவன் துவம்சம் செய்யப்படுவதன் நிழலாட்டம் போடுகிறது.
குடலே அறுந்து விழுந்தாற் போல் அலறுகிறாள்.

Page 39
74 сЭієӧтврвотuбlвóтД8цpєb 翁
லயக் காம்பராக் கதவுகள் அறுபடும் சேவல்களாக முழு லயனே துடித்தெழுந்து பீதியுடன் பார்க்கத் திறபடுகின்றன. பழனியைக் குண்டுக் கட்டாகத் தூக்கி ஜீப்பினுள் எறிவது தரிசனமாகிறது. தனியொருவனை பந்தாடுவதில் இந்த பொலிசார்தான் எவ்வளவு மூர்க்கமாகப் பாய்ந்து குதிக்கிறார்கள்.
ஒரே மகன். வளர்ந்து ஆளாகும் வயதில் தகப்பன் முருகண்ணன் கசிப்புக்கு உடலைத் தாரை வார்த்துவிட்ட தியாகசீலனாக குடல் நாறி, வயிறு வீங்கி தேயிலைச் செடிகளுக்குப் பசளையாகிப் போனான்.
அப்பனுக்குத் தப்பாமல் பிறந்தவன் பழனி. வீட்டிற்கும், ஊருக்கும் அடங்காப் பிடாறி சண்டை, குத்துவெட்டு, பெண்பித்து, போதைப் பொருள் இப்படியே சேற்றெருமையாகக் காலத்தை உழக்கி கரைசலாக்குபவன்.
() () ()
தேயிலை பிடுங்கல் மட்டுமல்ல மந்திரி ஐயா வீட்டிலும் தெய்வானை எடுபிடி வேலைகள் செய்வாள். அவர் உதவியால் ஸ்டேசன் போய் மகனைப் பிணையில் விடுவித்து வந்தாள். -
மணல் வீதியில் நடந்து வந்தபோது அவமானம் பிடுங்கித் தின்கிறது. வாரம் ஒன்று ஓடிவிட்ட போதும் வீதியில் எதிர்கொண்ட கண்கள், ‘அடப்பாவி என்ன காரியம் பண்ணிப்பிட்டடா" 6 iT6ზT அங்கலாய்ப்புடன் அசிங்கப்படுத்தின.
‘கே என்ன கேடு கெட்ட காரியம் செஞ்சுட்டான்.
அம்மாவின் மனம் ஓவென அழுகை ஒப்பாரி வைக்கிறது.

III) G85. விஜயன் «(III) 75
ராஜநடை பழனிக்குச் சொந்தமானது. இன்று மெல்ல மெல்ல நொண்டி, நொண்டி அவன் நடக்கிறான்.
செமத்தடியின் வேதனை முறிவுகள் இன்னும் தீரலையோ?
லயக்காம்பராக்களிலிருந்து எட்டிப் பார்த்தப் பெண்களின் கண்கள் பிரலாபிக்கின்றன.
வாழை மரத்தின் நிழலிலுள்ள கோழிக் கூட்டின் மீது பழனியின் கண்கள் பதிகின்றன.
அடைக்கோழி அவனைக் கண்டு விடுகிறது. உயிரே போனாற்போல படபடவென சிறகை அடித்துக்கொண்டு பாய்ந்தும் பறந்தும் பழனியின் கைகளுக்குள் வந்து அடக்கமாகிறது.
பழனிக்கும் பாசம் உண்டா என்ன? அடடா எதுவித பாச உணர்வுகளும் இல்லாத அவன் கண்களில் பிரிவின் துயர நீர்த்துளிகள் பிரவாகமெடுக்கின்றனவே!
ஒரு குழந்தையை அணைத்துக் கொள்வதுபோல கோழியைத் தழுவிக் கொள்கிறான்.
ஆ என்ன இது. ஒடம்பெல்லாம் பூச்சு ஒடுறமாதிரி இருக்கே? மனம் பதறியபோதும் கோழியை உதறி யெறியாமல் நெஞ்சிலிருந்து தூக்கிப் பார்க்கிறான். மணலென கோழிப்பேன்கள் குவியலாக அப்பிக் கிடக்கின்றன. பொல பொலவென நெருப்பின் மீது விழுந்து கருகச் செய்தான்.
கோழிக்கு சுகமாகவிருக்கிறது.
ஆனந்தமாகச் சிறகடிக்கும் அது செல்லமாகக் கொக்கரிக்கிறது.

Page 40
Bry இருண்டு கிடக்கும் கோழிக் கூட்டின் மூலை முடுக்கெல்லாம் தீப்பிடித்துத் துப்புரவப்படுத்திப் புதுமணல் கொட்டி அடை முட்டைகளை ஆடாமல் அசையாமல்.
76 像 9ങrഞ്ഞങ്ങuിങ്figൺ ($
கடினமாக வேலை செய்வதில் பழனி அசகாய சூரன்.
இவ்வளவு வேலைகளை மனம் ஒண்டி முடித்து மணற் தரையில் குந்தி வாழைக்கருகில் முதுகைச் சாய்த்தவன்தான். ஏதேதோ நினைவுகளில் சமாதிநிலை அடைகிறான்.
இவனையா ஊரும் உலகமும் கெட்டவன் என்கிறது? தெய்வானையால் ஜீரணிக்க முடியவில்லை.
() O
அன்னையின் நினைப்புபோல் அவன் மனத்தில் பொலிஸ் அடிப்பின் வேதனைகள் இல்லை.
மலைக் காற்றின் ஈரலிப்பு உடலைத் தழுவி விதிர் விதிர்க்கச் செய்ய, கஞ்சாப் புகையின் ஸ்பரிசக் கிறக்கத்தில் அவன் உடல் வேட்கை தணித்த வேகத்தில் சுமணா என்ற பிச்சைக்காரி துடிதுடித்தாளே அந்த இன்ப நினைப்பின் மயக்கத்தில் பழனி நிஷ்டையாகி விட்டிருந்தான்.
பொல்லாத ரசனை மனம் அவனுக்கு. மீண்டும் மீண்டும் அந்த இரவுச் சம்பவத்தை அசை போடுவதில்தான் எத்தனை இன்பம். இடியும், மின்னலும் கைகலப்பில் கலந்துவிட்டிருந்த அந்த இரவு காலம்.
மனத்திரையில் மீண்டும் நினைவுக் கோலங்கள் கருக்கட்டத் தொடங்கியபோது.

III.)> G3s. விஜயன் «(HII 77 “ஏலே! பழனி மழ நின்னிருச்சி உள்ளே வந்து ரொட்டி சுட்டிருக்கேன் சாப்பிடு.” தெய்வானையின் குரல் அழைக்கிறது. நினைவு மேகம் சிதறிட, கண்ணிமைகள் மயில் சிறகென சட்டென விரிகின்றன.
அப்பொழுது...!
முட்டைகளின் மீது சயனித்துக் கொண்டிருந்த அடைக்கோழி மெல்ல எழுந்து, சிறகுகளை சடசடத்து மெதுவாக அவனைச் சுற்றி வந்தது.
சிறகுகள் புடைத்து விரிந்து, முகம் பாரித்து, உடலெங்கும் வேதனை பூரிப்பில் பச்சை உடம்புக்காரியாக அதன் கொள்ளை அழகு அவனை கிறங்கச் செய்துவிட, பழனி பூரிப்பில் ஆழ்ந்து விழி பிதுங்கி அதற்கு செல்லமாக முத்தமிடுகிறான்.
பழனியின் உதடுகளில் புன்னகையொன்று மலர்ந்து விரிகிறது. தெய்வானையின் மனத்தில் நிம்மதிப் பெருமூச்சு வெளியாகிறது. தெய்வீகமான சிரிப்பு. இவனையா? கெட்டவன் என்கிறார்கள்! அவளால் நம்ப முடியவில்லை.
சட்டென ஒரு சம்பவம் நடக்கிறது.
“கொக்கரக்கோ’
சேவலொன்றின் ராஜகம்பீரக் கூவல். கழுகுபோல் சிறகுகளை அடித்து விரித்துக் கொய்யா மரத்திலிருந்து தாவிக் குதித்து ‘குடுகுடுவென வேகமாக ஓடி வந்து,
கோழியின் மீது தாவி அமர்ந்து, அதன் தலையை சளுக்கெனக் கெளவி, ஒர் அசுரப்போர் தொடுக்கிறது.

Page 41
78
Bry வெட வெடக்கும் கோழி ஹெக் கென விக்கித்தாற்போல கொக்கரித்தது. சடக் கென தாவி பழனியின் காலடியில் விழுந்து துடித்தது. அவ்வளவுதான் அதன் பின்னர் கோழி எழும்பவில்லை. கண்கள், கால்கள், உடல் விறைத்து சடலமாகிவிட்டது.
“அம்மா” பழனி அலறினான். கோழியின் சடலத்தை நடுக்கமுடன் பார்க்கும் அவனுடைய கண்மணிகளினுாடே துடிதுடிக்கும் அவன் இதயம் தெரிகிறது.
பழனியின் ‘அம்மா’வென்ற அழைப்போசை தெய்வானையின் கண்களிலிருந்து ஆனந்த பிரவாகத்தை அணையுடைக்கிறது. அப்படி அவன் கூப்பிட்டு எவ்வளவு காலமாகிறது.
"LD5Gatti'
தாயுள்ளத்தின் பாச ஒலம், நெஞ்சின் துடிதுடிப்பாகிறது.
{) () 0
عه ک
“எலெ பிச்சு ஒனக்கு வெவரம் தெரியுமா? இந்த பய பழனி புள்ள பெத்து ஒருநாள் கூட ஆவாத பிச்சக்காரி சுமணாவ வெறித்தனமா கெடுத்துப்புட்டான். பாவம் பச்ச ஒடம்புக்காரி மரக்கட்டையாயிட்டா.”
“அடப்பாவி”
தேயிலைக் கூடைகளுடன் இரு பெண்கள் இவ்வாறு பேசிக்கொண்டு மலை இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
 

VIII.)> GS5. விஜயன் {ull 79 மலை முகடுகளில் பதுங்க முனையும் சிவப்புச் சூரியனை நோக்கிப் பெண்களின் கருத்த நிழல்கள் விரைந்து கொண்டிருக்கின்றன.
‘ஐயய்யோ! படுபாவி என்ன காரியம் பண்ணிப்புட்டான்.”
மலையடிவாரத்திலிருந்து ஒரு கதறல் அசுர கானமாக மேலெழும்பி வருகிறது.
செல்லாயி கிழவிதான் அழுது புலம்பிக்கொண்டு ஓடி வருகிறாள்.
“என்னாத்தா, ஏன் இப்படி கத்திக்கிட்டு ஓடி
GlгTUT....
“என்னா சொல்வேன். எப்படி சொல்வேன்.” “என் சேவல அடிச்சி கொன்னுட்டானே!”
“யாரு?”
“அந்தப் படுபாவி பழனி’ “அவன எழவு புடிக்க இப்ப சேவல் அடிச்சித்தின்ன
வாரம்பிச்சிட்டானா?”
“இல்ல அவனுடைய அடைக் கோழியே என் சேவல் மிதிச்சிட்டாம்.”
“அட கொல்லயிலே போவ’ பெண் நிழல்கள் நாடியில் கை வைக்கின்றன.
C3

Page 42
80
டிங் டிங் டிங்.
வெளியல் மணிச்சப்தம்
சுள்ளிகளை அடுப்பில் திணித்துக் கொண்டிருந்த ரம்ஜியா சட்டென எழுந்து வாசல் திரைச்சீலையை கொஞ்சம் விலக்கி லேசாக முகம் வெளியில் தெரிய எட்டிப்பார்க்கிறாள்.
தபால்காரன் புஞ்சி பண்டா கடிதக் கவர் ஒன்றை நீட்டிக் கொண்டிருந்தான்.
“துவட்ட லியூமக்”
“மகளுக்கு ஒரு கடிதம்! ஒரு தபால் அட்டை” பண்டா சொன்னான்.
கையில எடுத்ததை வாசித்துக்கொண்டே திரும்புகிறாள்.
“என்ன காயிதம் மவேள்?”
“ஏஜன்சியால அனுப்பி இருக்கி வாப்பா!”
 

III)- கே. விஜய 6.III 81 அனிபாவின் முகம் மலர்கிறது.
“என்னவாம்! என்னவாம்!” என ஆனந்தம் வழிந்தோடும் பரபரப்புடன் கேட்கிறார்.
“காயிதத்தையும் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு வரட்டாம்!”
“GILu?”
“அடுத்த செவ்வாய்க்கிழமை.”
ரம்ஜியா மெதுவாகச் சொன்னாள். தந்தையிடம் காணப்பட்ட ஆனந்தம் அவள் குரலில் கொஞ்சம்தானும் இல்லை. போஸ்ட் கார்டை வாப்பாவின் கையில் கொடுத்து விட்டு அடுப்படியில் குந்திக் கொண்ட்ாள்.
விரல்கள் சுள்ளிகளை அடுப்பினுள் தள்ளுகின்றன. காய்ந்து நரநரவென்றிருக்கும். சுள்ளிகள் சடசடவென எரிகின்றன. கண்கள் நிலைக்குத்தி குத்தூசிகளாகின்றன.
நெருப்பின் வெளிச்சத்தில் பிரகாசிக்கும் மகளின் முகத்தையே பார்த்த வண்ணம் இருக்கிறார் அனிபா.
நெற்றியில் யோசனைக்கோடுகள், வரண்டு ஈரப்பசையற்று கிடக்கும் உதடுகள் பீடியொன்றினை உறிஞ்சி புகையைக் கக்குகின்றன.
“என்ன வாப்பா?”
யோசனையிலிருந்து மீண்ட அனிபா பெருமூச்சு விட்டார்.
“ஒன்னுமில்லை மவேள்”

Page 43
82 亂 அன்னையின்நிழல்
“ஒன்னுமில்லையா. அப்ப என்னத்த யோசிக்கிய.?”
“ஏஜன்சி கொழும்பில் இரிக்கி கொழும்புக்கு பெய்த்திட்டு வார என்டால் லேசா நோனா அதுதான் யோசிக்கியன்.”
“கொழும்புக்கு பொய்ட்டு வர இவ்வளவு யோசிக்கிய, நீங்க துணியா தொங்கல்ல இருக்கிய அரபு நாட்டிற்கு என்னை அனுப்பிவைக்க எவ்வளவு தூரம் யோசிக்கோனும்.”
அடுப்படியிலிருந்து எழுந்து வந்து தந்தையின்முன் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவள் குறும்பாகத்தான் கேட்டாள். ஆனால் அந்தக் கேள்வி கூர்மையான ஒரு விஷமுள்ளாக அனிபாவின் நெஞ்சை ஊடுருவிப் பாய்கிறது. மரண வலியில் ஒரு கணம் கண்களை மூடிக் கொள்கிறார். கையில் உள்ள பீடித்துண்டை வீசியெறிந்துவிட்டு எழுந்து நிற்கும் அவர் திகைப்புடன் வெளியுலகில் பார்வையைச் செலுத்துகின்றார்.
நெடுக ரப்பர் மரங்கள். அதற்கும் அப்பால் பள்ளத்தில் நதி ஓடுகிறது. அக்கரையில் மாணிக்கக்கல் தேடி வட்டிகளில் மணல் அரிப்பு நடக்கிறது. கடூர வெயில் - மேனி வியர்வை முத்துக்களால் பளபளக்க பகீரதப் பிரயத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மனித ஜீவன்கள்.
‘யா அல்லாஹ்! எத்தனை காலம் கஷ்டப்பட்டேன். ஒரு சிறு கல்லைத்தானும் நீ எனக்குத் தரவில்லையே..!’
அனிபாவின் இதயம் அதிர்வுடன் அழுகின்றது.
மனவிம்மல் விழியோரங்களில் நீர்மணிகளாக திரட்சியுற்று
முத்தென ஒளிர்கின்றன.

III.)> G335. விஜயன் KlII 83
தந்தையின் மனநதியில் சலனமிடும் நீரலைகளை ரம்ஜியா அறிவாள். இதயம் நல்வாழ்வை "துவா’வாக்கிக் கொள்ள பரிசுத்த தளிர்களாகத் துளிரும் கண்களால் தந்தையைப் பாசத்துடன் நோக்குகிறாள்.
“கொழும்பு மிச்சம் தூரமா வாப்பா?”
“இல்லை கிட்டத்தான்.”
“அப்ப ஏன் சும்மா கவலைப்படுற.”
“பஸ்ஸுக்குப் பணம் வோணும். அது எப்படி போனாலும் ஒங்களுக்கு உடுத்துக் கொண்டு போவ நல்ல பொடவ ஒன்னு வோணும்.’ அனிபா சாதாரணமாகவே சொன்னார். எனினும் அவர் நெஞ்சில் பிரவாகமெடுத்துப்பாயும் துயரம் குரலை கம்மச்செய்து சன்னமாக ஒலிக்கின்றது. தந்தையின் வேதனையான குரல் ரம்ஜியாவை விசனமுறச் செய்கின்றது. அவள் மெளனமாக கண்களில் யோசனையை நிறைத்துக் கொள்கிறாள்.
{0 () 0
பாங்கின் ஒசை செவிகளில் விழுவதற்கு முன்னரே ரம்ஜியா எழுந்துவிடுவாள். சுபஹ் பொழுது அள்ளி வழங்கும் சுகந்தமான குளிர்காற்றை நெஞ்சார சுவாசிப்பதில் அவளுக்கு எல்லையில்லா ஆனந்தம். கிழக்கின் வைகறை கரைசலில் அடர்ந்த காடுகளைப் போல ரப்பர் மரங்கள் நிழல்களாகத் தோன்றும். அந்த மெலிதான இருளுக்குள் விடிவுகாலப் பட்சிகளின் குக்கூ, கிக் கீச் சங்கீதம் ஒலிப்பதை அவள் செவியாற ரசிப்பாள். கிணற்றின் விளிம்புவரை நடனமிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த நீரை சளார், சளார்

Page 44
84 ജ്ഞഡിക്ടെ என கைகளினால் அள்ளியள்ளி முகத்திலடித்து 'ஒழு’ வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பாங்கின் ஒசை ஒலிக்க வாப்பாவின் குரலும் கேட்கிறது.
“மவேள் தொழுகை முடிச்சி அப்படியே ஹாஜியார் வீட்டுப்பக்கமும் பெய்த்திட்டு வாறன்.”
குரலில் பெருமையும் பதற்றமும் காணப்படுகிறது. ஏஜென்சியிலிருந்து கடிதம் வந்த நேரத்திலிருந்து அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். இன்று கொழும்புக்குப் போக வேண்டுமல்லவா?
வாப்பா ஊனக் காலை இழுத்து இழுத்து நடப்பதை ரம்ஜியாவின் கண்கள் பரிவுடன் பார்க்கின்றன. நெஞ்சில் துயரம் முகிலென சூழ கண்களில் நீர் நிறைகின்றது.
அவர் பிறவி ஊனரல்லர். ஒரு விபத்து அவரை அப்படியாக்கிவிட்டது. ரம்ஜியா குடும்பத்தில் மூத்தவள். அவள் தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் குமராகி மூலையில் முடங்கிய சில நாட்களில்தான் அந்தக் கொடூர விபத்து நிகழ்ந்து அவர் இந்நிலைக்கு ஆளாகினார்.
மலையேறி பாறைகளுக்கு வெடி வைத்து பெயர்ப்பது வாப்பாவின் தொழில், ஒரு நாள் பெரும் பாறையொன்று கடகடவென உருண்டுவந்து பூமியோடு சேர்த்து கால்களை நைத்து விட்டது. குடும்பம் இடிவிழுந்த தென்னையாகிப் போனது. சயமுடன் போராடிக் கொண்டிருந்த உம்மா மெளத்தாகிப் போனாள்.
காலத்தின் வோட்டத்தில் ஏழெட்டு வருடங்களின் கரைசல். வாழ்க்கை எப்படியோ ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

III» G3s. 6śguu6ör *" 85 மரம் நட்டவன் நீர் ஊற்றாமலா இருப்பான்.
தொழுகை மனிதனை பாவத்திலிருந்து காப்பாற்றுகிறது எனும் புனித குர்ஆனின் அருள் வாக்கினை நெஞ்சில் விதைத்துக் கொண்டவள் ரம்ஜியா. பிறவியிலேயே மத சம்பிரதாயங்களில் ஊறிப்போன அவள் ஐவேளை தொழுகையினையும் தவறாது நிறைவேற்றி வருவதனால் பசுமையாகிவிட்டிருந்தாள். சின்னஞ்சிறு வயதில் ரப்பர் தோட்டத்திலும், ஆற்றங்கரை மணல் வெளியிலும் ஒடியாடி விளையாடிய ஜமால், ஜெய்நூர் எல்லோரும் இப்பொழுது வளர்ந்த வாலிபர்கள். இதே தோட்டத்தில்தான் வாழ்கிறார்கள். எனினும் அவர்கள் முகம் கூட அவளுக்கு மறந்துவிட்டது.
பிற ஆடவர்களைப் பார்ப்பதும் அவர்கள் நினைவில் வாழ்வதும் கூட பாவம்' எனும் ஹதீஸ் விதைகள் அவள் நெஞ்ச மணலில் விழுந்து வேரோடி விருட்சமாகி இன்று கனிகொடுக்கும் காலம். வெளிநாடு சென்று அன்னியர் ஆடவர் முன்பாகத் தொழில் செய்யலாமா என்றதொரு சலனம் நெஞ்சக்குழியில் விழுந்து அவளைக் கலக்கமுறச் செய்கிறது.
வெளிச்சம் பொல பொலவென விழுந்து விட்டது. ரப்பர் மரங்களின் நெடிய நிழல்களினூடே வாப்பா கால்களை இழுத்து நடந்து வருகிறார். அவர் கையில் ஒரு பார்சல் இருக்கிறது.
‘ஹாஜியாருக்கு நல்ல மனசு, வாப்பா மகளின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றிச் சொன்னதும், ஒரு சாறியும் கொஞ்சப் பணமும் கொடுத்தனுப்பியிருக்கிறார்.

Page 45
86 அன்னையின்நிழல்
அப்படியானால் வெளிநாடு போவதும் அங்கே தொழில் செய்வதும் ஹராம் அல்ல. இது தவறானால் ஹாஜியார் வாப்பாவை ஏசியிருப்பாரே. ரம்ஜியா ஒரு குமர்ப் பெண்ணல்லவா. அவளை வெளிநாடு அனுப்பலாமாவென கண்டித்திருப்பாரே. ஒருபோதும் உதவமாட்டார். அதிலுள்ள தீமைகளைப் பற்றிச் சொல்வார் அல்லவா! இதுவரையில் அவளை ஆட்டிப்படைத்த சஞ்சலங்கள் நெஞ்சக்கடலிலிருந்து கரை ஒதுங்கின.
அரபு நாட்டின் அழகிய தோற்றம் அவள் கண்களின் முன்னே திரைவிரிக்கின்றது.
() () ()
கொழும்பைக் கண்டதும் ரம்ஜியா மிரண்டுவிட்டாள். பரபரப்பான அதன் நடைபாதைகள் வெலவெலக்கச் செய்கின்றன. அமைதியே வடிவான ஒரு கிராமத்தில் வாழ்பவள் அவள். இந்தக் கொழும்பு நகரமோ. திருவிழாக்கோலமாகத் திரண்டு நடைபயிலும் சனநெரிசல் இடிகளும், தள்ளுகளும், அயிங்வென்ட், அயிங் வென்ட் என்ற அலறல்களும் அவளை கலக்கியடிக்கின்றன. பிரதான வீதியில் நடக்கவே முடியவில்லை. எப்படியெல்லாமோ நடந்து வந்தாயிற்று. இனி சந்து பொந்து வழியாக ஏஜென்சியைத் தேடி அலைய வேண்டும். அனிபா நானா மிகவும் பரபரப்புடன் இயங்கினார். போகிறவர் வருகிறவர் என ஒருவரையும் விடாமல் கடிதக்கவரைக் காண்பித்து விசாரிக்கிறார்.
“இந்த ஏஜென்சியைக் காட்டேலுமா!”
அப்பாடா ஒருவனுக்குத் தெரிந்துவிட்டது.

" Ges. 6âgu6. «" 87
அவன் ஒரு நடுத்தர ஆசாமி. மெலிந்த தோற்றமுடையவன். சிகரட்டை ஊதித்தள்ளிக் கொண்டிருந்த அவன்தன் பூச்சியரித்த பற்களை வெளியில் காண்பித்துக் கொண்டு -
“தெரியும், தெரியும். நான் அங்கே சப் ஏஜன்டாக இருக்கேன்’ எனச் சொன்னான். அவனுடைய பெரிய சிவந்த கண்கள் ரம்ஜியாவை விழுங்கின.
'ஆ எவ்வளவு அழகான பெண்’ என மனதிற்குள் எச்சில் ஊறிக் கொண்டான்.
ரம்ஜியாவுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனுடைய அசிங்கமான பார்வை அவளுக்கு குமட்டலை ஏற்படுத்தியது. அவன் ஏஜன்சிக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவள் மீது இடித்தும் உரசியும் நடக்க முயன்றான். லேசான திகில் ரம்ஜியாவின் உடலில் ஊறத் தொடங்கியது.
அவர்கள் வெகு சீக்கிரமே ஏஜன்சியை அடைந்து விட்டார்கள்.
O 0 0
முகவர் நிலையம். பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே அமளி துமளி, பரபரப்பு. அடக்கவொடுக்கமாகவும் இரண்டு பெண்கள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாடு போவதற்காக வந்திருக்கிறார்கள் போலும், ரம்ஜியா அவர்களுடன் போய் அமர்ந்து கொள்கிறாள்.

Page 46
88 ജ്ഞിമ്ന
ജ് - கண்ணாடி அறைக்குள் இன்டர்வியூ நடைபெறுகிறது. வாட்டசாட்டமான ஓர் ஆள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
"உன் பெயர் என்ன?”
''
“ஜமீலா “வாப்பா பெயர்’
“ரகுமத்துல்லா.” “கலீமா சொல்லு பார்ப்போம்.” “லாயிலாஹ இல்லல்லா முகமது ரசூலில்லா"
“சரி, போ, பொஸ் முஸ்லீம்தான். மூன்று முறை சவுதி போனவ.!” கேள்வி கேட்டவன் நையாண்டியாகச் சொல்கிறான்.
இன்டர்வியூ முடிந்து அப்பெண் வெளியில் வருகிறாள். கலீமாசொன்ன அவள் மீது ரம்ஜியாவின் கண்கள் படர்கின்றன.
“யா அல்லாஹ்” என அவள் தன்னையறியாமலே சொல்லிக்கொள்கிறாள். அந்தளவுக்கு அவள் ஆடைகள் இருந்தன. " . . . . . ;
ஜன்னல் வழியாக வாகன வீதி தெரிகிறது. ஒரு மையத்து போகிறது. சந்துக்கை தூக்கிக்கொண்டு நான்கு பேர் வேகமாக நடக்க அவர்கள் பின்னால் தலையில் லேஞ்சியும் தொப்பியுமாக ஒரு சிறு கூட்டம் வேகமாக நடக்கிறது.
ரம்ஜியாவின் கண்கள் அதில் லயித்துவிட்டன.

"III" G3s. 6águiu 6 *LIII 89 கண்ணாடி அறைக்குள்ளிருந்து அவள் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது.
ரம்ஜியா தயக்கமுடன் உள்ளே சென்றாள்.
அவளிடமும் அந்த மூன்று கேள்விகளைக் கேட்கிறார்கள்.
கேள்விகள் விழுந்த முறை, தலையிலிருந்து கால்வரை
அந்த அறைக்குள்ளிருந்த இருவரின் கண்களும் மேய்ந்த விதம்.
அவளால் பொறுக்க முடியவில்லை. என்னை ஒர் இஸ்லாமியப் பெண்ணா என்று கேட்கிறார்களே இதென்ன கொடுமை.
ஒதி ஒதியே புனிதமானவள் அவள், தொழுது தொழுதே பசுமையானவள் அவள், நோன்பு நோற்றே பொன்னிறமானவள் அவள்.
கலங்கிய கண்களுடன் வெளியில் வருகிறாள்.
அனிபாவின் கண்கள் நெருப்பை கக்கிக் கொண்டிருக்கின்றன. மகளைக் கண்டதும் கண்கள் பனித்து விடுகின்றன. பெருமூச்சுடன் மகளின் மிருதுவான கைகளைப் பற்றினார்.
“உம்மா! வாங்க வீட்டிற்குப் போவோம்” ஏதோ திடசங்கல்பத்துடன் சொன்னார்.
“வாப்பா”
“ஆமா நோநா எங்களுக்கு வெளியூர் வாணாம்!”

Page 47
90 露 அன்னையின்நிழல் ଛୁ, ଞ
வாப்பாவின் குரலில் உறுதியின் தொனிப்பு.
இன்டர்வியூநடைபெற்ற அறைக்குள் இடம் பெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அவர் கண்கள் அவதானித்தவாறுதானிருந்தன. கேள்விகள் உதிர்ந்த முறை, கேட்டவனின் கண்கள் ரம்ஜியாவின் தலையிலிருந்து கால்கள் வரை சேற்றெருமையாக உழன்ற விதம்!
நெஞ்சு வேகிறது. கண்கள் அக்கினிச் சேறாகின்றன.
கண்ணாடி அறையின் கதவைத் திறந்துகொண்டு மகள் வெளியில் வந்தவுடன் வேகமாக அவள் அருகில் சென்று நிற்கிறார். கொதிப்பான கண்ணிர்த் துளிகள் சட் சட்டென அவள் வெண்கரங்களில் விழுந்து கொதிநீரெனச் சுடுகின்றன.
"மன்னித்துவிடு மகளே!’ என கண்கள் கதறின.
அதைத் தொடர்ந்துதான் ‘வெளியூர் எங்களுக்கு வாணாம் நோநா’ என்ற வார்த்தைகள் பிறந்தன.
கண்களில் முத்தென முகிழ்ந்த நீர் மணிகளுடன் ரம்ஜியாவின் உதடுகளில் புன்னகை அரை பிறையெனத் தோன்றுகிறது. கண்கள் நன்றியின் தீபங்களாக ஒளிர்கின்றன.
சந்தூக்கை தூக்கிச் செல்பவர்களின் ஒதல் ஒலி வெகு தொலைவில் முனகளாக ஒலிக்கிறது. அச் சந்தூக்கினுள் இஸ்லாத்தின் புனிதமெல்லாம் சடலமாகக் கிடப்பதாக அவளுக்கொரு பிரமை, நடுக்கம்.
C93

91
பகல் பொழுது.
பாடசாலை விட்டதும் ஓடோடி வந்து தெருவோரமாக நின்றாள் ஜானகி
“ஏய் சின்ன பிசாசே தள்ளிப்போ” இஞ்சின் சாரதியின் அலறல்,
பேய்க் கூச்சலில் அரண்டுபோன ஜானகி ஒடோடிச் சென்று பாடசாலைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘ரோட்டைத் தாண்டித்தான் வீட்டுக்குப் போகணும். அங்கேதான்தார் போடுறாங்களே.
ஜானகி யோசனையோடு வீதியைப் பார்க்கிறாள்.
“கொஞ்சதூரம் நடந்துபோனால் பெரிய ஸ்கூல் வரும். அங்கே கிராசிங் லைன் இருக்கு லேசா ரோட்டைத் தாண்டி ஊட்டுக்குப் போவலாம்’ என எண்ணிய போதும் கால்கள் தயங்குகின்றன.
நேரம் ஒடுகிறது.

Page 48
92 அன்னையின்நிழல் 霹
வீதியின் ஒரமாக மெதுவாகப் பாய்ந்து பயந்து நடக்கிறாள். அந்த ராட்சத இஞ்சின், அதை செலுத்துகின்ற பிசாசு டிரைவர், நினைக்கவே பயமாக இருக்கிறது.
சன நெரிசலும் வாகன போக்குவரத்துமாக ஜே ஜேவென வீதியெங்கும் பேரிரைச்சல், ஒரு பக்கம் தார் போடும் வேலையில் தொழிலாளர்கள் மும்முரம். இரு பெரும் இரும்பு உருளைகளை உருட்டிக்கொண்டு ‘கடகட’வென வீதி பெருத்த சப்தமுடன் எஞ்சின் மேலும் கீழும் ஒடிக் கொண்டிருக்கின்றது.
அனற் பிழம்பென தகிக்கும் கோடை வெயில்,
வெறும் கால்களை பூமியில் வைக்க முடியவில்லை. சதையைப் பொசுக்குவது போல தகிப்பு ஒடியும் பாய்ந்தும் குதித்தும் நடக்கிறாள்.
'ஆ என்ன சூடு என்ன சூடு!’
பெரிய பள்ளிக்கூடம் தெரிகிறது. வெள்ளைப் புறாக்களென சிறுமிகள் குதித்துக் கும்மாளமடித்துக் கொண்டு குதூகலமாக ஓடி வருகிறார்கள்.
பஸ் நிலையத்திலும், வீதியோரமெங்கும் வெள்ளைப் புறாக்களின் கூட்டம். வெள்ளை வெளேரென்ற சீருடை, பச்சை வர்ண கழுத்துப் பட்டி, சப்பாத்து, அடடா! எவ்வளவு அழகு.
தன்னைப் பார்த்துக் கொண்டாள். அழுக்கான உடை. வெள்ளை உடைதான் என்ற பொழுதும் பலமுறை
துவைத்துத் துவைத்து உருவழிந்து, நிறமிழந்து சாம்பல் பூத்த நிறம். கால்களில் சப்பத்து இல்லை.

III) C35. விஜயன் {tl| 93 '. அவள் படிக்கும் பாடசாலையில் அதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. என்றாலுமென்ன வெறும் கால்களை வீதியில் வைக்க முடியவில்லையே. அப்படியல்லவா தகிக்கிறது.
பெரிய பாடசாலைச் சிறுமியரிடையே சலசலப்பு.
“ஏண்டி ரமணா, ஆப்ரிக்கா கொரங்கு பார்த்திருக்கியா நீ?”
“இல்லையே?’
“அதோ பார் ரோட்டோரத்துலே!’
பார்வைகள் ஜானகி மேல் ஈக்களென மொய்த்திட
“அட! செருப்பு இல்லாம என்ன அழகா மார்ச் பண்றா!”
கொல்லென்ற சிரிப்பொலி
தலை சுற்றுகிறது. அவமானத்தால் உடல் கூனிக் குறுகிய பொழுதும் உதடுகளை அழுத்தமாகக் கடித்து பொறுத்துக் கொள்கிறாள்.
அனைத்துமே பாதையைக் கடக்கும்வரைதான். அப்புறம் அந்தக் குறுகலான பாதை வழியாக 'குடுகுடுவென ஓடிவிட்டால் நதிக்கரை வரும். அங்கேதான் அவள் குடிசை
பாதையைக் கடக்க கடும் முயற்சி ‘ஆஆ. தார் உருகிக் கிடக்கும் ஓரிடத்தில் கால் வைத்து விட்டாள். அட்டையென ஒட்டிக்கொண்டது. கொதிக்கும் தார் ‘சுர்ர்ர்ர்ரென சதையை தீய்த்துக்கொண்டு ஊடுருவுகின்றது.

Page 49
94 亂 அன்னையின்நிழல்
நெளிகின்ற புழுவான ஜானகி, சட்டென தாவிச் சென்று வீதியின் ஒரமாகக் குவிக்கப்பட்டுள்ள கடல் மணலில் குந்த சூடேறிக் கிடக்கும் அது பிருஷ்ட பாகத்தை எரிக்கின்றது.
ஓ. எத்தகைய தமாஷான நாடகம். 'கொல்லென்ற பெரும் ஓசையுடன் கான்வென்ட் சிறுமியர் கைகொட்டி நகைக்கின்றார்கள்.
() O
நதிக்கரை, கடின இருள். மின்மினிகளின் ஒளித் துகள்களும், நுளம்புகளின் ரீங்கரிப்பும் கனகத்திற்கு வழித்துணைகள்.
ஜானகியின் அம்மா வேகமாக நடந்து கொண்டிருக்கிறாள்.
தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே கவனித்தாள். குடிசையில் குப்பிலாம்பின் மினுமினுப்பைக் காணவில்லை. ‘காத்துக்கு அணைஞ்சிருக்குமா? இல்லே மவளுக்கு என்னமாச்சும்.?
பதட்ட அலைகள் நெஞ்சில் சுருட்டியடிக்க வேகமாக நடக்கிறாள்.
குடிசையை நெருங்க நெருங்க உயிர்த்துடிப்பு 'திக் திக்கென படபடப்புடன் அதிகரிக்கிறது.
குடிசை வாசலிலிருக்கும் சட்டி விளக்கின் சுடரலை காற்றில் படபடக்கும். அதன் மினுமினுப்பு கூட தெரியவில்லை. என்ன நடந்துவிட்டது?

ilin). G85. விஜயன் (El 95 திகிலடைந்த பட்சியின் கண்களாக கனகத்திடம் மிரட்சியின் நெளிவுகள்.
குடிசைக்குள்ளும் முகத்திலிடிக்கும் கனத்த இருள்.
》
ஜானு
நடுங்கும் குரலில் அழைக்கிறாள்.
அம்மா’ என்ற பதில் இல்லை.
இருளிலிருந்து வேதனையின் முனகல்,
"மகளே!’
வியர்வை முத்துக்கள் உடலெங்கும் முகிழ்த்து மளமளவென உதிர, நடுங்கும் கைகளும், கால்களுமாக அங்குமிங்கும் ஒடி நெருப்பெட்டியைத் தேடி குப்பி லாம்பை பற்ற வைத்துப் பார்க்கின்றபொழுது குழந்தை சுருண்டு படுத்துக் கிடப்பது தெரிகிறது.
ஜானகி சமர்த்துப் பெண். படிப்பில் ஆர்வமும் வீட்டு வேலைகளில் கவனமும் உள்ளவள். சோறு கூடச் சமைப்பாள். அதனைப் பாட்டிக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடம் போய்விடுவாள்.
மத்தியானப் பொழுதில் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய பின்னரும் வீட்டு வேலைகளைச் செய்வாள்.
இருட்டிய பின் குப்பிலாம்பையும் பற்ற வைத்து, தன் பாடப் புத்தகங்களில் மனம் லயிப்பாள்.
இன்று ஒரு வேலையும் செய்யாமல் அறுந்த வாழையாக அசந்து கிடக்கிறாளே!

Page 50
96 அன்னையின்நிழல்
வெயிலின் கொடூர வெம்மை வீதித் தாரை கொதிக்கச் செய்ய, தார் துணிக்கை பிஞ்சுப் பாதங்களில் ஒட்டிக்கொள்ள நீர்க் கொப்புளங்கள் பாம்புப் புற்றென எழுந்து நிற்கின்றன.
சுருண்டு கிடக்கும் மகளை கணகம் அணைத்துக் கொண்டபோது ஸ்கூலுக்குப் போவ மாட்டாளாம். சப்பாத்து வாங்க வேண்டுமாம். வெள்ள உடுப்பு வேண்டுமாம். என்னென்னவோ உளறல்களின் அணிவகுப்பு தொடர்கிறது. அவள் விழித்துக் கொண்டதும் ஓவென அலறி காலைத் தூக்கி அம்மாவுக்குக் காட்டுகிறாள். பிஞ்சுப் பாதங்களில் நீர்க்கொப்புளங்கள்.
கனகத்தின் கண்களில் நீர்மணிகள் திரள்கின்றன. பிள்ளைக்கு இனிமேல் ஸ்கூல் வேண்டாமென மனம் கலக்கத்துடன் தீர்மானிக்கின்றது. ‘கொதிக்கிற தார் கொழந்தை கால்களை எப்படி வேக வெச்சிருச்சி.
அம்மா குழந்தையை அணைத்துக்கொண்டு ‘இனிமே ஸ்கூல் வேணாம்' என்று சொன்னபொழுது ஜானகியின் மனத்தில் ஆனந்த வெள்ளம் பீறிடுகிறது.
() () ()
குளிரடிக்கும் கருக்கல் பொழுது. கனகம்
எழுந்துவிட்டாள். நதிக்கரையோரமாக நடந்து சுள்ளிகளைப் பொறுக்கினாள்.
ஜானகியும் எழுந்துவந்து குந்திக் கொண்டாள். “ஏன்மா, இவ்வளவு சுருக்கா எழும்பிட்டே?”

In Gs. விஜயன் KHII 97 “என்னம்மா செய்ய?நீ ஸ்கூலுக்குப் போகமாட்டே என்டதுக்காக நான் சும்மா ஊட்டுலே குந்திக் கொள்ள ஏலுமா? கட்டுடத்தை சுருக்கா கட்டி முடிக்கணுமாம். அதனாலே இனிமே காலம்பரையே வேலைக்குப் போய் ராவு வரைக்கும் வேலை செய்யணும்.”
ஜானகி அசையாமல் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சடசடவென எரியும் நெருப்பொளியில் அம்மாவின் முகம் தகதகக்கிறது. அந்த முகம் நடுங்குகின்றது.
“ஜானு, அந்தி நேரத்துலே சோத்தை கொஞ்சம் சுத்தி வேலை செய்யுற இடத்திக்கு கொண்டாந்திரம்மா.”
ஜானகி உற்சாகமாகத் தலையாட்டினாள். நண்பகல், வெயில் கொளுத்துகின்றது. சோற்றுப் பார்சலை சுற்றிக்கொண்டு அம்மாவுக்கு எடுத்துப் போனாள். அடேங்கப்பா, என்னா பெரிய கட்டிடம் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியுள்ள மூங்கில்களில் வெளவால்களைப் போன்று தொங்கியவண்ணம் தொழிலாளர்கள் வேலை செய்வதை பிரமிப்புடன் பார்த்தாள்.
ஜானகி தலை நிமிர்ந்து கண்கள் உயரப் பார்க்கின்றன. சூரிய பிரகாசத்தில் அவை கூசுகின்றன.
சிமெந்து தாச்சியொன்றை சுமந்து செல்லும் அம்மாவை கண்கள் காண்கின்றன.
செருப்பில்லாத கால்களில் பழம் துணிகளைச் சுற்றி, கந்தலான புடவை அணிந்து, சுமக்க முடியாமல் நடந்து

Page 51
98 அன்னையின்நிழல் 鹦
ജു - கொண்டிருக்கும் கனகம் மகளைக் கண்டாள். தாச்சிச்சட்டியை கீழிறக்கி மடமடவென ஓடி வருகிறாள்.
ஆ.! அலறியவண்ணம் நிலத்தில் குந்துகிறாள். மணலில் நீட்டிக் கொண்டிருந்த ஆணியொன்று நறுக்கென காலினுள் புதைந்துவிட்டது.
ஜானகி அழுதுகொண்டே ஓடிவந்து அம்மா அருகில் குந்திக் கொண்டாள். கனகம் காலைச் சுற்றியுள்ள பழம் துணியை விருவிருவென கழற்றிவிட காலின் அடிபாகத்தைக் கண்டு குழந்தை விக்கித்துப் போனாள். சுண்ணாம்பையும் சிமிந்தியையும் மிதித்து மிதித்து பாளம் பாளமாக வெடித்துப் புண்ணாகிக் கிடக்கும் கால் சதை, கிழிந்து ஊடுருவித் தொங்கிக் கெண்டிருக்கும் ஆணி.
குழந்தை விக்கித்துப் போனாள். ‘ஒரு பிடி சோற்றை எனக்குக் கொடுப்பதற்காக இந்த அம்மா எத்தகைய துன்பங்களை அநுபவிக்கிறாள். ஜானுவின் கண்கள் வண்ணத்திப் பூச்சிகளென படபடக்க, கண்மணிகள் நீர்ப் புஷ்பங்களைச் சொரிகின்றன.
() () K)
இ ப்பொழுதெல்லாம் ஜானகி வெள்ளை
உடுப்புகளுக்காகவோ, சப்பாத்துகளுக்காகவோ கண்கள் கலங்குவதில்லை. பாடசாலை போகிறாள்.
வெயில் சூடோ, கொதிக்கும் தாரோ அவளை ஒன்றும் செய்வதில்லை.
CO3

99
கென வீதி, இடப் பக்கமாக கிளை விரித்து உள்நோக்கி நீள்கின்ற குறுகலான மணற் பாதை. அங்கே பெருத்தும் சிறுத்தும் படர்ந்தும் விரிந்தும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றதுர்ந்த பலகைகளினதும், ஒலைகளினதும் சிருஷ்டிகளான குடிசைகள். . .
வாசலில் நின்றால் தூரத்தே வாகன வீதி தெரியும். சட்சட்டென ஒடி மறையும் பஸ், கார் போன்ற வாகனங்களின் விரைவான வோட்டம் காட்சியாகும். ஜானுவின் கண்களில் அந்தக் காட்சி நடனங்கள்.
s
ஒ. அவள் கண்கள் ஆனந்தப் பூக்களாகின. மகிழ்ச்சிப் புனல் பிரவகிக்கும் நெஞ்சினளாக சட்டென மணலுக்கு இறங்கி வாகனப் பாதையில் இருந்து பிரிந்து,

Page 52
ॐ
சந்துக்குள் நுழைந்து மணற் பாதையில் சுழலும் சக்கரங்கள் தூசிப் படலத்தை உசுப்பிவிட சைக்கிளில் வேகமாக வரும் தபால்காரனை நோக்கி விரைந்தாள்.
அட, தபாத்சேவகனின் கிழட்டு முகத்தில் பொக்கைச் சிரிப்பு. பெடல் மிதிப்பில் வாலிப மிடுக்கு.
“துவட்ட லிவுமக் தியனவா.” “மகளுக்குக் கடிதமொன்று இருக்கு.” சரேலென வந்து நின்ற வண்டியில் இருந்து சடாரெனத் தாவிக் குதித்து உற்சாகமாகக் கத்தினான் அவன்.
ஜானகியின் பன்னிரண்டு வயது மகள் புஷ்பாவும், மகன் ரமணனும் ஓடிவந்து அருகில் நின்று கொண்டார்கள். முக்கலும் முனகலுமாக சாக்குக் கட்டிலில் படுத்துக் கிடக்கும் அப்பா, வாயில் பீடியோடு எழும்ப முயற்சி செய்தார்.
ஜானகி கடுமையாக முயற்சி செய்து சுயமாகவே கொஞ்சம் படித்தவள். தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் கடிதத்தைப் படித்தாள்.
அவளுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், அபிலாஷைகள், எதிர்கால வெளிச்சமயமான திட்டங்கள் அத்துணையையும் சுமந்துகொண்டு அந்தக் கடிதம் வந்திருந்தது.
“உங்களுடைய தேவையான விஷயங்கள் எல்லாம் முடிவாகிவிட்டன. டிக்கெட்டும் வந்து விட்டது. இன்னும் மூன்று நாட்களில் மிடுல் ஈஸ்ட் போகத் தயாராகவும்.’

படி கே. விஜயன் (all 1O.
அவள் மெதுவாக வாசிக்கிறாள். தபால்காரனின் பொக்கை வாய் இன்னும் கொஞ்சம் கிழிபடுகிறது.
ஜானகி வானவெளியில் பறக்கலானாள். எங்கெங்கும் சங்கீத அலைகள், பட்சி ஜாலங்களின் இன்னிசை கீதங்கள். வெண்மேகமென துகிலணிந்து, பொன்னொளிரும் விண்ணுலகில் மிதப்பதாக பிரமை.
“அம்மாவுக்கு டிக்கெட் வந்துட்டு, அம்மாவுக்கு டிக்கெட் வந்துட்டு. அம்மாவுக்கு டிக்கெட் வந்துட்டு.”
குழந்தைகள் இருவரும் அவளைச் சுற்றிச் சுற்றி கை கொட்டிக் கும்மாளித்து கெக்கலிட்டுச் சிரித்து ஆனந்த மலர்களைச் சொரிந்தார்கள்.
பொன் வண்டுகளின் ரீங்கரிப்பு.
0 () ()
அப்பா, இரண்டு பிள்ளைகளைத் தவிர ஜானகிக்குள்ள ஒரே ஒரு உறவு அவள் தம்பி காளியண்ணன்தான். ஊதாரியாகவும், சோம்பேறியாகவும் திரிகின்ற அவனுக்கு அக்கா துபாய் போகிறாள் என்றதும் உற்சாக வெள்ளம் கரையுடைத்துப் பாய்ந்தது. கையிலுள்ள அத்துணை பொறுப்புகளையும் (விசேஷமாக சீட்டு விளையாடுவதைத் தவிர அப்படி ஒரு பொறுப்பு அவனுக்கில்லை.) அதனை தள்ளிப் போட்டுவிட்டு பரபரப்பாகக் காரியங்களில் ஈடுபடலானான்.
கட்டுநாயகா விமான நிலையம் போக ஒரு வான் வேண்டும். கிட்டத்தட்ட இருபத்தைந்து பேரையாவது அதில் ஏற்றிக்கொண்டு பாட்டும் கச்சேரியுமாகத்தான் போக

Page 53
1Ο2 அன்னையின்நிழல்
வேண்டும். அந்த சின்ன சாம்ராஜ்யத்திற்குள்ளே பெரும் பரபரப்பும் குழப்பமும் தோன்றியிருந்ததால் அது அமளி துமளி படுகின்றது.
வாகனத்தில் இடம்பிடிக்க வேண்டும். எயர் போர்ட் போக வேண்டும். அடடா ‘சுவிஸ் எயார்’ வானக் கடலில் அதன் நீச்சலைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆவல் நெருப்பு அந்த ஏழைச் சனங்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் சடசடவென கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தமையால் எல்லோரும் அள்ளுப்பட்டார்கள். ...
அங்கலாய்ப்புடன் மூன்றாம் திகதி எப்பொழுது பிறக்கும் என பரபரத்தார்கள். பலருக்கு நெஞ்சு பொறாமையால் எரிகின்றபொழுதும் வண்டியில் பாட்டுப் பாடிக்கொண்டு செல்லத் தயாராகிவிட்டார்கள்.
ஆனால் வண்டி?
காளியண்ணன் இரவும் பகலுமாகப் பிரயாசைப் பட்டான். கடன்பட்டாவது காரிய சாதனையில் ஈடுபடுவது அக்காதான். சுளைசுளையாகப் பணம் அனுப்பப்
போறாளே!
வண்டி ரெடி.
பெளடர், பேஸ்ட், பிரஸ், (ஜானகிக்கு அடுப்புக் கரியையும் பற்பொடியையும் தவிர வேறு அனுபவங்கள் இல்லை.) டிஸ்பிரின், சீப்பு, கண்ணாடி இன்னும் என்னென்னவோ இத்யாதிப் பொருட்கள் எல்லாமே தயார் ஜானகிக்குச் சந்தோஷம். தம்பி இப்பொழுதாவது பொறுப்போடு நடக்கிறானே என பெருமிதப்பட்டாள்.

BLIH) G835. விஜயன் «III 10B கணவனை என்றோ இழந்துவிட்ட அவளுக்கு வாழ்க்கையில் என்னென்னவோ கஷ்டங்கள். எப்படியோ அந்தக் கடின பாதைகளை எல்லாம் கடந்து இன்று ஒரு முழு நிவாரணத்திற்கான வழியைத் தேடி அவள் செல்கின்ற வேளையில் எல்லாமே வசந்தங்களாகின்றன.
காளியண்ணன் அவள் வருகின்றவரையில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை நட்சத்திரம் நெஞ்சில் ஒளிர்கின்றது.
அவனுடைய கட்டளைகளுக்கு எல்லாம் பணிந்தாள்.
மூன்றாம் திகதி காலை ஏழு மணிக்கு விமானம். பொதுவாகவே அந்தப் பிரதேசத்தின் எல்லாக் குஞ்சுகளுக்கும் அவளுடைய பயணம் தெரியும். கட்டுநாயகாவில் இருந்து புறப்படுகின்ற விமானம் கராச்சியில் தங்கி பின் டமாம் எயர் போட் நோக்கிப் புறப்படும் போன்ற விவரங்களிலிருந்து கராச்சியில் வெற்றிலைக்கு நல்ல கிராக்கி போன்ற விஷயங்கள் வரை மழலை குழந்தைகளுக்கும் தண்ணிர் பட்டபாடு.
எப்பொழுதும் அந்தக் குடிசைக்குள் பெண்டும் பிள்ளைகளுமாக வந்து குசலம் விசாரித்துப் போனார்கள். என்றாலுமென்ன அன்று இரவு சாப்பாட்டிற்குப் பின்னர் காளியண்ணனும் புஷ்பாவும் ரமணனும் ஜானகியுமாக ஒவ்வொரு குடிசைகளுக்கும் சென்று பிரியாவிடை சொல்லி பெரியவர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்டார்கள். ஜானகிக்கும் ஒரு மவுசு வந்திருந்தது. அவள் நாகரிகமாகவும் பக்குவமாகவும் அமைதியாகவும் பேசினாள். தான் கொழுத்தும், கன்னச் சதைகள் உப்பிப் பெருத்து பூரித்தும் போயிருப்பதாக அவள் பிரமையுற்றிருந்தாள். அட.ா.

Page 54
5) Sշ
104 அன்னையின்நிழல்
୫ போகு முன்னரே இப்படி என்றால் போய்வந்த பின்னர் எப்படி இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் நெஞ்சிற்குள் ஊடுருவிச் சென்றதும் அவள் உடல் புல்லரிப்படைந்து கலகலத்தாள்.
悠
கணவனின் நினைவு வந்தது. குடியும் சூதுமாக வாழ்ந்து பின்னொரு சச்சரவில் உயிர் பறிகொடுத்து மண்ணுக்குள் மறைந்து சிதிலமாகிவிட்ட அவன் முழு உருவமாகத் தெரிந்தான்.
எத்தனை கோபத்திலும் என்னென்னவோ துன்பங்களிலும் அவன் ஒரு பொழுதும் அவளை அடித்ததில்லை. கடுமையாக நெஞ்சு புண்படும்படியான வார்த்தைகளைச் சொன்னதில்லை. அவன் கத்தியால் குத்துப்பட்டு குற்றுயிராக வைத்தியசாலையில் கிடந்த பொழுது விக்கி விக்கி அழுதுகொண்டிருந்த அவளை அருகே அழைத்து இறுக அணைத்து தலையை வருடி நா தழுதழுக்க கண்கள் நீர் பொழிய என்னென்னவோ உளறினான்.
“ஜானு. நீ இன்னொரு கலியாணம் செய்துக்கோ. இந்த சின்ன வயசிலே உட்டுட்டு போறேனே’ என அழுதான்.
கணவன் இறந்த பின்னர் இரண்டு மூன்று வருடங்களை எந்தவொரு வெளி ஆணின் துணையில்லாமலே அவள் கழித்துவிட்டாள். பெண்மைக்குத் தீமையில்லாமலே வாழப்போகின்ற வாழ்க்கை கிடைத்துவிட்டதாகப் பேருவகையுற்றாள்.
() () ()
 
 

Illi> G8es. விஜயன் «BII 105
முன்றாம் திகதி காலை புஷ்பித்தது.
கிழக்கு வானில் வெள்ளிக் கரைசல் விரிவதற்கு முன்னரே அந்தக் குடிசைப் பிரதேச சனங்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். குப்பிலாம்பின் வெளிச்சத்தில் நடமாடினார்கள். அவரவர்களுக்கென உள்ள புதியவைகளையும் சுத்தமானவைகளையும் அணிந்து கொண்டு ஆரவாரமாகத் திரிந்தார்கள். வண்டி வந்ததுதான் தாமதம். திமுதிமுவெண் ஒடி அதற்குள் ஏறிக்கொள்ள ஒரு ტFóსწoifმბ)L — .
அரச மரத்தடி பிள்ளையாருக்கு ஜானகி சூடம் பற்ற வைத்தாள். நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாள். கண்களில் நீர்க் கோடுகள் பிரகாசிக்கின்றன.
"ஆண்டவனே நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டிட்டே நான் போய் சந்தோஷமா திரும்புவேன். அதுவரைக்கும் என் பிள்ளைகளை கஷ்டப்படுத்தாம நோய் நொடி இல்லாம காப்பாத்தரது உன் கையிலேதான் இருக்கு.
அவள் மனமுருகி வேண்டினாள். நெஞ்சு மானசீகமான பிரார்த்தனையில் ஈடுபட்டது.
எல்லோராலும் வண்டியில் ஏற முடியுமா? கொஞ்சப் பேர்தான் அனுமதிக்கப்பட்டார்கள். அந்தக் கொஞ்சப் பேரும் அரிசி மூட்டைகளாக அடைக்கப்பட்டும் திணிக்கப்பட்டும் கிடக்க வண்டி பாய்ந்துகொண்டு புறப்பட்டு வாகன வீதிக்குத் தாவியது.

Page 55
106 露 gearaogousafir biggio ଛୁ
ஒஹோ என்ற சப்தத்தால் குடிசைகளில் எல்லாம் அதிர்வு. பிரதேசக் குழந்தைகள்தான் எக்காளமிட்டுக் கத்தினார்கள்.
பொழுது புலர்ந்துவிட்டது.
மப்பும் மந்தாரமுமாகவிருக்கும் வானில் வெய்யிலொளி இல்லை. மழைவரும் போலவொரு இருள்.
விமானத் தளம் தெரியத் தொடங்கியதும் பாட்டும்
கூத்தும் கும்மாளமுமாகவிருந்த வண்டிக்குள் நிசப்தம் குடி கொள்கிறது.
“ஆ. அதோ ஒரு சுவிஸ் எயார்’ யாரோ ஆச்சரியக் குரலில் கத்த எல்லோர் கண்களும் ஆகாய வெளியில் பிரமிப்போடு லயிக்கின்றன.
அடடா எவ்வளவு அழகான விமானம். அது சுற்றிச் சுற்றி இறங்குகின்றது.
“ஏன் ஜானு, இதுலதான் போறியா?’ யாரோ கேட்டார்கள்.
“இல்ல. இது மிடுல் ஈஸ்ட்லே இருந்து வருது.” அவள் எல்லாம் தெரிந்தவளாகச் சொன்னாள்.
டிரைவர் சிரித்தான்.
“ஏன் டிரைவர் சிரிக்கிறே.?’ மறுபடியும் அந்தக் கிழவி கேட்டாள்.
“அம்மா, இந்த அழகான ஏரோப்பிளானுக்கு என்ன பேர்னு தெரியுமா ஒங்களுக்கு.?”
“என்ன பேர்.?”
 

III) (35. விஜயன் «HIDI 107
“ஆயா பிளைட்”
“என்னது. ஆயா பிளைட்டா..?” வண்டி கட்டிட எல்லைக்குள் நுழைய எல்லோரும் பரபரப்புடன் இறங்குகிறார்கள்.
O () O
ரு வெள்ளி மீன் சயனிப்பதைப் போன்று அந்த
விமானம் பச்சைப் புல்லின்மீது தெரிகிறது. அவள் அதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
கதவுகள் திறபடுகின்றன.
இரண்டு பையன்கள் வந்து ஒரு வெள்ளைப் பொதியை ட்ரொலியில் வைத்து வேகமாகத் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.
“ஆ. ஐயோ, எண்ட மகளே, பிஞ்சிப் பூவாபோய் இப்புடி பொணமா வாரியே..!”
ஒரு தாயின் அலறல் முழு விமான தளத்தையும் கிடுகிடுக்க வைத்தது.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வீட்டுப் பணிப் பெண்ணாக அந்நிய நாட்டிற்குச் சென்று, கடினமாக தொழில் செய்தும், பெண்மையை இழந்த கன்னிப் பெண்ணொருத்தி பிணமகித் திரும்புகிறாள். அவளை பெற்றவனே கதறுகிறாள்.
ஜானகி தனக்குக் கீழ் பூமி பெயர்ந்து தூளாவதாக
உணர்ந்தாள்.
CO3

Page 56
108
*" சைக்கிள் "
J
கென வீதி,
நடுப்பகல், கடும் வெம்மை. தார் உருகி பளபளக்கிறது. வாகனங்களின் நெரிசலான ஒட்டம். புத்தம் புது கார்களின் இசை மயமான ஹார்ன் சப்தங்களும், சைக்கிள் வண்டிகளின் 'கிணிங் கிணிங் ஜலதரங்க ஒசையும் அமளி துமளியாக அல்லோலப்படுகின்ற வீதி,
'சடக் சடக் சடக்கென ஒரு விநோத ஒசையுடன் தம்புவின் சைக்கிள் ஓட்டமாய் ஒடுகிறது.
நொண்டி நாயொன்றின் வேகமான ஒட்டம்.
வியர்வை ‘சளசளவென பெருகிக் கொட்ட, கரும்மேனியில் கழுத்து, கால், கைகளில் அடர்ந்துள்ள நரம்புகள் சர்ப்ப நெளிவுகளாகப் புடைத்து வீங்க, தம்பு பெடலை உந்துகிறான்.
சக்கரங்கள் பாதையை விழுங்குகின்றன. வீதி பின்நோக்கி நகர, சைக்கிள் முன்னோக்கி விரைகிறது.
 

III.)> G335. விஜயன் K|||| 109
சடக்! சடக்! சடக் சடக்!
வண்டியின் பின் பாகத்தில் சோற்றுப் பார்சல்கள் அடுக்கப்பட்ட பெட்டி,
வெயிலென்ன, வீதி நெரிசலென்னதம்புவை ஒன்றும் செய்துவிட முடியாது.
சடக்! சடக் சடக்! சடக்!
பழைய, ஒடிசலான சைக்கிள்தான். என்றாலுமென்ன அநாயசமாகத்தான் பறக்கும்.
சடக்! சடக் சடக்! சடக்!
தம்பு சோற்றுப் பார்சல்களை விநியோகிப்பதற்காக பறந்து கொண்டிருக்கிறான்.
“அடோ பிஸ்ஸா பலாஹென பலயன்.”
(“ஏய் பைத்தியக்காரனே பார்த்துப் போ!”)
லொரி டிரைவர் ஒருவன் கொதிப்புடன் கத்துகிறான். கத்தல் ரப்பர் பந்தாக வீதியில் மோதி எகிறிச் செல்கிறது.
பெரிய லொரி ஒன்று ‘விசுக்கென தம்புவின் 'சடக்! சடக்கை கடந்து பறக்கிறது.
தம்புவின் காதில் சத்தம் விழவில்லை.
சிந்தனை எங்கோ உணர்வுகள் எங்கோ!
சுழலும் சக்கரங்கள் பாதையை விழுங்குகின்றன.

Page 57
110 அன்னையின் நிழல்இ
சடக் சடக் சடக் சடக்! வண்டியின் தாவலான ஒட்டம்
வீதியின் பின்னோக்கிய நகர்வு.
இருபத்தைந்து ஆண்டுகள், முதுமையை நோக்கிய உடம்பின் நகர்வு போலவே, சைக்கிளின் உருவமும்
தகர்ந்துவிட்டது.
என்றாலும் பேய்த்தனமான ஒட்டம். வயோதிகத்தை வேகமாக நெருங்கி சாவை சைக்கிள் அண்மிக் கொண்டிருக்கின்றது.
அது தம்புவின் மூத்த பிள்ளை.
ஆமாம், அது அவனுடைய மூத்த குழந்தைதான். அவ்வாறுதான் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறான்.
கைகளின் இறுகிய பிடிக்குள் சைக்கிள் எண்டல்.’
லேசான நடுக்கம் ஆனாலும்.
‘உடும்புப் பிடி’, முன் சக்கரத்தில் இமைகளில் அசைவின்றி லயித்துவிட்ட கண்கள், மேலும் கீழும் ஏறி இறங்கி பெடலை உந்தும் பழகிப்போன கால்கள்.
கண்களில் முத்து முத்தாகத் திரண்டு பெருகி வழியும் கண்ணிர்த் துளிகள்.
‘கடவுளே! தம்புவிற்கு என்ன நடந்துவிட்டது?
O ()

HII” (Bs. 6iguur tom" 111 திம்புவிற்கு உழைப்புத் தான் அச்சாணி. அவனுடைய கடுமையான உழைப்பு காரணமாக பசளையாக குடும்பச் செடியில் பூத்துள்ள ஐந்து பூக்களும் ஒரு வேளையாவது பசியாறுகின்றன.
ராசு - மூத்தவன், எஸ்.எஸ்.சி. வரை படித்துவிட்டான். பெல்பொட்டம் வேறு அணிந்து துரை மாதிரி திரிகிறான்.
தம்புவிற்குப் பெருமையோ பெருமை. படிப்பெல்லாம் தம்புவிற்குப் பிடிபடாத விசயங்கள். பிள்ளைகளை கொஞ்சமாவது படிப்பிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வுகூட அவனுக்கு இல்லை.
ஒரு நாள். ராசு பள்ளிக்கூடம் போக சப்பாத்துக் கேட்டான்! “அட, என்னடா சப்பாத்து. ஐயாவிற்கு படிப்பு என்ன வேண்டி கிடக்கு படிப்பு. ஏதோ ரெண்டு எழுத்தைப் படி அது போதும். எனக்கு வயசாயிற்று. சைக்கிள் இருக்கு, சோத்துப் பார்சல்களை வீடு வீடாய் எடுத்துநாலு ஆபீசிற்கு கொண்டுபோய் கொடுத்தா ஒரு பொழப்பாய் போச்சி.”
அவன் எடுத்தெறிந்து பேசினான். வாய் நிறைய வெற்றிலை, ஆட்டைப்போல் சொத சொதவென சப்பிக்கொண்டே அரை குறையா விட்டு விட்டுச் சொன்னான்.
பார்வதியின் காதில் விசயம் நாராசமாகப் பாய்ந்தது.
சுரீர் என மனசில் நெருப்புப் பற்றிக் கொண்டவளாகப் பதறினாள்.

Page 58
112 அன்னையின்நிழல் 鹦
རྩ་──────────────────
“என்ன மனுஷன் ஐயா நீ ஒவ்வொரு நாளும் எத்தின ஆபீஸ் ஏறி எறங்குற. எத்தின தொரமாரைப் பாக்குறே. நம் புள்ளையும் அந்த மாதுரி ஆகணும் எண்ட ஆசை ஒனக்கு இருக்கா.
ஆபீஸ் வழியா சோத்துப் பார்சல் கொண்டுபோய் கொடுக்கணுமா இல்ல, சோத்துப் பார்சல் ஒன் புத்தி ஒன்ன விட்டு போகுமா. செருப்பால அடிச்சாத்தான் உருப்படுவ. சொரணை இல்லாத பொறவி.”
சமத்தான சொல்லடி. கண்கள் அக்கினிக் குழம்பாக எரிந்து விழுந்து ஹாக்கென காறித் துப்பினாள் பார்வதி.
தம்புச் சாமி வெலவெலத்துப் போனான். ‘பாரு, ஒரு நாளும் எடுத் தெரிஞ்சு பேச LDT "LATGGT!”
மனதிற்குள் உதறலெடுக்கின்றது. வெற்றிலையை சப்ப முடியாமல் குழுக்கென விழுங்கிக்கொண்டு தலைக்குள் பூச்சிகள் பறக்க சுரீர் என விறைத்துப் போய் நிற்கிறான்.
‘பார்வதி சொல்லுறது நெசம், பெத்த தகப்பன் நான் என் புள்ளைக நல்ல தொழில் பாக்கணும் எண்டு என்னிக்காவது நெனச்சிப் பாத்திருக்கேனா.
நெஞ்சைத் தொட்டு கேட்டுக்கொண்டான். திகைப்பு அலைகள் முட்டி மோதுகின்றன.
பார்வதி கொடுத்த அடி நல்ல அடிதான். அது ஈரமணலில் விழுந்த விதையாக தம்புவின் நெஞ்சை

Ind> G385. விஜயன் {III 113
ஊடறுத்து வேரோடி உறுதி என்ற நல்ல மரமாக வளர்ந்து விட்டது.
படிப்பு என்பது இலவசமாகத்தான் வழங்கப் படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் தம்பு கசங்கித்தான் போனான். ர்ாசுவை எஸ். எஸ். சி வரைக்கும் படிப்பிக்க அவன் பட்ட பாடு.
இப்படி வளர்க்கப்பட்டவன் அருமை மகன் ராசு.
இன்று காலையில் :
அவன் சைக்கிள் அருகில் வந்தபோது தம்பு சோற்றுப் பார்சல்களை வண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான்.
6 டெடி!”
ஓ! தம்புவின் உடல் புல்லரிப்பால் சிலிர்த்தது.
‘அப்பாவென ராசு அழைத்தாலே உடல் விதிர் விதிர்த்து ஆத்மா மெய் மறந்து போகும். அவன் ‘டெடி’ என்ற அழைப்பில் கிறங்கிப் போனான்.
*6TGöTGot TIT5 ?"
கேள்வியில் ஆனந்தம் பீறிடுகிறது. “எனக்கு சைக்கிள் வேணும்.”
சைக்கிள் எண்டலை நக விரலால் சுரண்டிய ராசு மென்மையாகக் கேட்டான்.
எதுவும் தேவை என்றால் அப்பாவை மடக்குவது எப்படி என்ற மனோதத்துவக் கலை அவனுக்கு கைவந்தது.

Page 59
114
முதலில் புன்னகை, பிறகு ‘டெடி’ என அன்பொழுக 960tput.
“எதுக்கு ராசு?” “பிரன்சுகளோடு ஈவினிங் ரவுண் போக”
“அதுக்கென்ன மகன்! அந்தியிலே சைக்கிள் சும்மாதானே கெடக்கு. எடுத்துக்கிட்டுப் போவன். நான் வேணாம்னா சொல்றேன்.”
“இதையா?”
“ஆமா, வேற எதை?”
“சீச்சி! இத கழுதத்தான் ஒட்டும். நான் கேட்டது இது இல்ல லேட்டஸ்ட் சிங்கப்பூர் சூப்பர் சைக்கிள்.”
ராசு வெறுப்புடன் சொன்னான். வண்டியின் பின்புறம் மடாரென ஒர் உதையும் விழுந்தது.
தம்பு அதிர்ந்து போனான்.
அந்தக் கால் உதை அவன் நெஞ்சில் பாறாங்கல்லாய் மோதியது.
{) () 0. “ஓய்! பத் பார்சல் கெதர கியலத ஆவே.” “டேய் ! சோத்துப் பார்சல், வீட்டுலே சொல்லிட்டா வந்தே.”
பஸ் சாரதி ஒருவன் ஆத்திரமாகக் கத்துகிறான்.

ா கே. விஜயன் வ 115
பஸ் டிரைவர்கள் எல்லோருமா கத்துவார்கள். வண்டியொன்று முன்னால் மடேலென இடித்துவிட்டது.
ஆகாயத்தில் பறந்துசென்ற தம்பு பொத்தென தரையில் விழுந்தான்.
முக்கல் முனகலுடன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு எழும்பி நின்று பார்த்தபொழுது.
வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் சோற்றுப் பருக்கைகளுக்கு நடுவே அவனுடைய வண்டி துண்டு துண்டாக நொறுங்கிக் கிடக்க முன் சக்கரம் விர்ர்ரென சுழன்று கொண்டிருக்கிறது.
CO3

Page 60
116
- அங்கலாய்ப்புகள்
வெளிச்சச் சருகின் உதிர்வு; இரவுத் தளிரின் முகிழ்ப்பு: பகல் பொழுதின் மரணகாலம், வீதி விளக்குகள் கண்முழுகிக் கிடக்கின்றன.
ங்கா! ங்கா! ங்கா!
குழந்தையின் வீறல்; ஓங்கரிப்பு ஒயவில்லை. கால்களை உதைத்து பிஞ்சுக் கைகளை முறுகி, பிசைந்து அலறுகின்றது.
வயிற்று வலி! ராஜம் குழந்தையை அணைத்துக்கொண்டு வீதிக்கு ஓடிவந்தபோது ‘சள சளவென மழை.
விளக்கடியில் ஒதுங்கினாள். விளக்கு எரிய தொடங்கியிருந்தது.
வானத்தை நோக்கினாள்; மஞ்சளான விளக்கொளி முறைப்பதாகப் பிரமை.
 

III» G85. விஜயன் 

Page 61
118 像 ജ്ഞിമ്ന பாலகனும் வேதனை சுகானுபாவம் கொடுத்துக் கொண்டிருக்க.
மின்சார வயரில் கைவைத்தான்.
பிரதான சுவிற்ச்சில் கோளாறு. எந்தவித முன் பாதுகாப்புமின்றிக் கைவைத்துவிட்டான்.
கடவுளே!
‘படாரென பிடறியில் ஒர் அறை. மின்னலின் வேகம். ‘சறே’லென சுழன்று, வயர்களுடன் இறுகிப்போனான். பிரிக்க முடியாத தழுவல்,
மின்சாரத்தின் மரணத்தழுவல்,
மரணதேவனின் வருகை மின்னலையும் மிஞ்சும் வேகமாக அல்லவா அமைந்துவிட்டது. "ஜீவப் பறவை சிறகடித்து மாயமாகிவிட்டது.
ராஜமும் குழந்தையும் தனிமரமானார்கள்
பெற்றவள் மார்பை உறிஞ்சி உறிஞ்சியே குழந்தை ஆறு மாதங்களைக் கடத்திவிட்டது. தாயின் பால் போதவில்லையோ, என்னவோ. தவழ்கின்ற மழலை கையில் என்னென்ன கிடைத்ததோ அனைத்தையும் வாயில் போட்டு சுவைத்து விழுங்கியது.
இன்று எதனையோ சப்பிவிட்டது.
பொறுக்கவொண்ணா வயிற்றுளைவில் தொண்டையைக் கிழிக்கிறது.
அவள் என்ன செய்வாள். கண்கலங்கி கைபிசைந்து உடல் தளர்ந்து வியர்வை பெருகி நிற்கிறாள்.

III (35. விஜயன் Kriti 119
“ஏன் புள்ளே, கொழந்தைக்கு என்ன?”
பங்கஜம் கிழவி கேட்கிறாள். பக்கத்து வீட்டு வாசலில் பாக்கை இடித்துக்கொண்டிருக்கும் அவளிடமிருந்து கேள்வி புறப்படுகிறது.
மகா தொணதொணப்புக்காரியாயிட்ட ஒரு கேள்வியோட முடிந்து விடுமா என்ன?
“புள்ளய பொறமட்டுந்தான் இந்தக் காலத்து புள்ளைங்களுக்குத் தெரியும். ஒரு பச்சப் புள்ளைக்கு எப்படி பால் குடுக்கிறது, என்னென்ன கைமருந்துகள் கொடுக்கிறது ஒன்னும் தெரியாதே. தாயும் தகப்பனும் வாணாம்னு ஒரு புருஷ ன தேடுவிங்க. பட்டுன்னு ஒரு புள்ளய பெத்துக்குவிங்க. அத வளர்க்க. ’ கிழவி சூள்கொட்டுகிறாள். பெரிய தோரணையில் அங்கலாய்த்துக் கொள்கிறாள்.
சுடு சொற்கள்.
உடை நழுவிக் கீழே விழ நிர்வாணமாகி நிற்பதாக பிரமை. ராஜத்தை அவமானம் பிடுங்கித் தின்கிறது.
"ஐயோ! அம்மா! அம்மா!'
கிழவி அவள் வாழ்க்கையை அல்லவா சுட்டிக்காட்டி பொசுக்குகிறாள்.
நெஞ்சு வேகுகிறது.
கண்களில் நீர் மலர்கள் புஷ்பித்து சொரிகின்றன. ஒரு கவளம் சோறு தின்று ஐந்து நாட்களாகின்றனவே. மார்பகங்களென்ன வற்றாத சுனைகளா. கதா பால் சுரக்க.

Page 62
120 9ഞ്ഞuിഭ19ഴ്സ്റ്റൂ
அவள் வறுமை அவளுக்கு. பல தலைகள் வாசலில் தோன்றுகின்றன. உருட்டலான கண்களும், அங்கலாயிப்பான முணு முணுப்புகளும்.
என்ன பெண்கள் இவர்கள்.?
அடடா, எல்லாருமே சொல்கிறார்கள்: "அவளுக்கு குழந்தை வளர்க்கத் தெரியாது. பாசமில்லாத மலடி என்று. குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒவ்வொருவரும் வாயால் புத்தகம் எழுதித் தள்ளினார்கள். கண்களில் முள் தைத்த உணர்வில் துடி துடிக்கிறாள். கைமருந்து கைவசமில்லை. தனிப்பட்ட வைத்தியர் வீதிக்கு அப்பாலிருந்தாலும் கையில் பணமில்லை. தர்மாஸ்பத்திரிக்குப் போகலாம். ஐந்து மைல் போகவேண்டுமே.
வாசலில் அங்கலாய்ப்புகள். அவளைக் கரிச்சிக் கொட்டும் வார்த்தைகள், மனதில் பொங்கிப் பிரவகித்த சங்கடங்களுடன் 'சறெ'லென குழந்தையைத் தூக்கி அணைத்துக்கொண்டு வெளிக்கிளம்பினாள்.
‘சளசள’வென மழை. இருள் செறிய, விதி விளக்கின் மங்கலான வெளிச்சம்.
நிமிடங்கள் மரணிக்க, மழை மூச்சடங்கு வதாயில்லை.
விளக்கடியில் நின்று தெப்பமாகிவிடவே,
‘கிடுகிடுவென நடுங்கும் உடலோடு ஒடோடிச் சென்று, பஸ் ஸ்டாண்டில் ஒடுங்கிக் கொண்டாள்.

III) G3s5. விஜயன் KINDI 121
குடியிருப்பிலிருந்து அவள் வந்த குறுகலான பாதை தெரிகிறது.
சங்கடங்கள் நர்த்தனமாடிய அவள் கண்கள் சில கணங்கள் அங்கே தரித்தன.
தடதடவென ஓடி வருகிறார்கள். கையில் ஒரு குழந்தை. அது நனையாதவாறு இன்னொருவர் குடை பிடிப்பு. அங்கு ஏதோவென ஒப்பாரி வைத்துக்கொண்டு ஒரு பெண்கள் கூட்டம். அடடா, கிழவி பங்கஜம்கூட மாரடித்துக் கொண்டு.
“டாக்ஷி, டாக்ஷி' என பல குரல்கள் ஒரே ஸ்தாயியில்,
ராஜம் பிரமித்தாள். அவள் குழந்தைகூட அதிர்ச்சியுடன் அழுகையை நிறுத்திக்கொண்டது.
“என்ன பாட்டி! என்ன நடந்தது?’ ராஜம் பரபரப்புடன் கிழவியைக் கேட்டாள். பெண்கள் ஒஹோவென வாயிலடித்துக்கொண்டு கூட்டம் போட்டார்கள்.
அடடா ராஜம் கேட்கக்கூடாத எதையோ கேட்டுவிட்டாள் போலும்.
“என்னடியம்மா ஒன்னும் தெரியாம கேக்குறே? சிதம்பரத்துட புள்ள போத்தல் பால் குடிக்கற நேரத்துலே பொற ஏறிச்சி. குழந்த துடிக்காதா என்ன?”
கிழவி பெரும் அங்கலாய்ப்புடன் சொல்கிறாள். அவளுக்குப் பின்பாட்டுப் பாடுவதாக பல குரல்களின் ராக பிரலாபம்.

Page 63
122 像 ജ്ഞിമ്ന
ராஜம் சிலையாகிப்போனாள். வயிற்றுளைவால் அலறித் துடித்த அவள் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது.
‘என்னம்மா கல்லாகிப் போனாய்? சிதம்பரம் யாரென்று நினைத்தாய். வட்டார மந்திரிட கையாள் இல்லியா? அவர் புள்ளைக்கு நாசிக்குள்ளே பால் ஏறலாமா?
குழந்தையின் கண்பார்வை அம்மாவை நோக்கிக் கேட்டது.

123
Lத்திரிகை முழுவதையும் எழுத்து எழுத்தாக, வரி வரியாக, பத்தி பத்தியாக கண்களால் விழுங்கித் தள்ளிய பின்னர்தான் ஏனைய அலுவல்கள் ஆரம்பமாகும். இன்று அந்தக் கடமை முடிந்துவிட்ட ஆத்ம சுகத்தில் விரல்களுக்கிடையில் பத்திரிகை ஊசலாடிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியில் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார் கனகரத்தினம் மாஸ்டர்.
முகவிதானத்தில் யோசனைகளின் நெளிவுகள்.
“தேத்தண்ணியும் குடிக்காமெ உதென்ன அப்படி முழுசிக் கொண்டிருக்கிறியள்?”
பகீரதியின் குரல் செவிக்கருகில் மேளமடிக்கிறது.
“இஞ்ச வந்து வெளியில பாருமேன்.”
“ஏன் என்னவாம்?”
ஆவி பறக்கும் தேநீருடன் பகீரதி அருகில் வந்து, நின்றாள். பார்வை ஜன்னலுக்கு வெளியில் விழுகிறது.
“இந்த வெற்று இடத்திலே ஒரே கல்லும் முள்ளுமா கிடக்கல்லே.”

Page 64
124 அன்னையின்நிழல்
ॐ
t “அதுக்கென்ன?’ சட்டென கேட்ட பகீரதி கேள்வியுணர்வுடன் தலையைத் திருப்புகிறாள்.
g §
“என்னவோ? உமக்குத் தலையில் ஒரு மண்ணும் கிடையாது’ என முறைத்த அவர், “என்ன அநியாயம் சும்மா கிடக்கிற இந்த நிலத்தில கொஞ்சம் பாகல், புடலை என்று ஏதேனும் நட்டால். சா, எவ்வளவு பிரியோசனம்” வாயில் ஊறலெடுக்கும் சுவையுடன் கனகரத்தினம் கூறுகிறார்.
பகீரதியின் கண்கள் மிரட்சியடைகின்றன.
“இஞ்ச, இந்த எண்ணங்களை விடுங்கோ. இது கொழும்பு. எங்கட சாதி சனம் வாழ்ற இடமில்லை’ லேசான கோபத்துடன் கடுகடுத்தாள்.
ஜன்னலுக்கு அப்பால் லயித்துக் கிடந்த கனகரத்தினம் மாஸ்டரின் முகம் சட்டென திரும்பி மிஸஸின் முகத்தில் நிலை குத்தியது. கண்மணிகள் கூர் ஈட்டிகளாக ஊடுருவின. ‘என்ன இவள்?’ என்பதுபோல பார்வையில் தீச்சுடரின் தீட்சண்யம்.
‘முகத்தில் முதுமையும் தலையில் நரையும் இழையோடத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் ஜீவிதம் கரைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் இந்தக் கொழும்பு மண் இவளுக்கு அந்நியமாகவா படுகிறது!’ என்ற எண்ணங்கள் ஆழ்கடல் நீரோட்டமாக மனதில் ஒசையில்லாமல் நகர்ந்திட, மாஸ்டரின் பரந்த நெற்றியில் சிந்தனைக்கோடுகள் பள்ளமிடுகின்றன. மறுபடியும் கனகரத்தினத்தாரின் பார்வை ஜன்னலுக்கப்பால் சென்று லயித்து விடுகிறது.
 

III.)> GS5. விஜயன் 

Page 65
126 இ அன்னையின்நிழல்
स्त्र
பகீரதி மூச்சடைத்தாற்போல் நிற்கிறாள். மாஸ்டரின் உறுமல் ஓயவில்லை.
“கைகட்டிச் சேவகம் புரிந்த எளிய நாயஸ் இப்ப கொடிகட்டிப் பறக்கினம்.”
அவர் குமுறலுடன் காறித் துப்பினார்.
இதென்னடா தொல்லை என அலுத்துக்கொண்ட பகீரதி, ‘சரி சரி விடுங்கோப்பா. இதைக் குடியுங்கோ’ என தேநீரை நீட்டுகிறாள்.
மாஸ்டரின் முகத்திலிருந்து சினரேகைகள் மாறவில்லை.
மிஸஸ் கனகரத்தினத்திற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கொஞ்சம் நின்று அவர் முகத்தைப் பார்த்து லேசாக முறுவலித்தார்.
“இஞ்ச சும்மா பொரியாதேங்கோப்போ. முகத்தைப் பாக்கச் சகிக்கல்ல” என வெடுக்கெனக் கூறினார்.
மாஸ்டரின் முகத்தில் அசடு வழிகிறது.
சினம் சினந்தாரையே கொல்லும்’ எனத் தனக்குள்ளாகவே புறுபுறுத்துக் கொண்டார்.
சதா மனதை ஆன்மீக விசாரத்திற்குள் ஈடுபடுத்தி அறு அறுவென அறுத்துக் கொண்டிருப்பவராயிற்றே இந்தப் பென்சன்காரர். இன்றைய உலகப் பிரச்சினைக்கெல்லாம் அடிப்படைக் காரணம் கோபம்தான். சினத்தை அடக்கினால் உலகத்தை வெல்லலாம் என்ற தாரக மந்திரத்தை அடிக்கடி அனைவருக்கும் போதிக்கும்

III) G835. விஜயன் KIII 127 மனிதராயிற்றே. இவர் தனக்குக் கோபம் வந்துவிட்டதென்று எவரும் சுட்டிக்காட்டுவதை எப்படிப் பொறுப்பார்?
கனகரத்தினம் மாஸ்டர் அரச உத்தியோகத்திலிருந்து ரிட்டையர் ஆன காலம் முதலாகப் பத்திரிகை வாசிப்பதை விடவில்லை. விடியலிலே எழுந்து பத்திரிகை வாங்கிவந்து வாசிக்காவிட்டால் அவருக்கு மண்டை வெடித்துவிடும்.
காலை கருக்கலில் எழுந்து இருளோடு இருளாக வீதியைக் கடந்து பத்திரிகை வாங்கி வந்து நாற்காலியில் அமர்ந்தாரென்றால் ‘ஆரடா இந்தப் பேயன்’ எனப் பத்திரிகையின் பக்கங்களே ஒப்பாரி வைக்கும் அளவிற்கு அவற்றை உருட்டியும் புரட்டியும் ஒரு எழுத்து விடாமல் வாசிப்பார். அப்புறம் பொடியங்கள் குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஒரு பிரசங்கம் செய்வார். ஒவ்வொரு நாளும் அவர் பொழுது இவ்வாறுதான் பணிக்கட்டியாகக் கரைகிறது.
{) () {)
இன்றும் விடியலில் துயில் எழுந்தாயிற்று. பத்திரிகை வாங்குவதற்கு வீதிக்கு நடவாமல், ஜன்னல் கதவைத் திறந்துவிட்டு வெளியுலகைப் பார்த்தார்.
அடடா எத்தனை சுகம் ஜன்னல் வழியாக உள்ளே ஓடிவந்த காலையின் இளங்காற்று சிலுசிலுவென உடலைத் தழுவிக்கொண்டபொழுது மெய்மறந்து போனார்.
“எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா.’ என்ற பாரதி பாடலை தன்னை மறந்து முணுமுணுத்தார்.

Page 66
128 இ அன்னையின்நிழல் இ
உற்சாகம் உடலை ஒர் உசுப்பு உசுப்பிவிட மண் வெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்று ஜன்னலுக்கு அப்பாலுள்ள வெற்று நிலத்தை கொத்தத் தொடங்கினார். . . . .
உடலில் வியர்வை மழைத்துளிகளாக வழிந்தோட மணலைப் புரட்டி பாத்தியும் கட்டி வேலியும் எழுப்பி நிமிர்ந்தபோது ஜன்னலில் பகீரதியின் முகம் தெரிகிறது. இளமைக்கால பிரமையுடன் மிஸஸ் கனகரத்தினம் அவரை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தார். w
“தேத்தண்ணியும் குடிக்காம, பேப்பரும் பார்க்காம உதென்ன அதுக்குள்ள குந்திக்கொண்டு.”
*தோட்ட வேலை செய்யுறன்.” மாஸ்டர் குழந்தையைப்போல் குழைந்துகொண்டு பதில் சொன்னார்.
பகல் முழுவதும் கடூரமான வெயில் எரித்து வெம்மை வறுத்தெடுத்தபோதும் பிற்பகலில் இடி முழக்கத்துடன் லேசான தூறல் விழுந்து மாலையில் அதிகரித்து நடுராத்திரியில் கொட்டோ கொட்டென பொழிந்து தள்ளுகிறது. இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக மழையின் கொட்டம் நிற்கவில்லை.
மழையோடு மழையாக சுவிஸ், கனடா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் பிள்ளைகள் இருவரினதும் கடிதங்கள் வந்திருந்தன. அவற்றைத் திரும்ப திரும்ப வாசிப்பதிலும் பதில் எழுதுவதிலும் பொழுதைக் கழித்தார். கொழும்பு வாழ்க்கை நார்மலாக இருக்கிறது. கெடுபிடிகள் எல்லாம் உண்டுதான் என்றபோதிலும் ஊரில் போய் குண்டுகளுக்கும் ஷெல்லடிகளுக்கும் மத்தியில்

Iம் கே. விஜயன் I 129 அல்லாடுவதுபோல் அவதிப்படத் தேவையில்லை என பதில் எழுதினார். நாட்டு நிலையைச் சரியாகக் கணிப்பீடு செய்துள்ளோமென்ற திருப்தி அவருக்கு,
மழை ஒய்ந்துவிட்டது. நான்கு நாட்கள் மழை, வெள்ளத்துடனே ஓடி மறைந்தன.
வழக்கம்போல் காலையில் எழுந்து வெளுப்புக் கரைசலில் ஜன்னலால் எட்டிப் பார்த்தபொழுது அவருடல் புல்லரித்துப்போனது.
மனதினுள் ஒர் ஆனந்த அலை அடித்தது. நிலத்தைக் கொத்திப் பதப்படுத்தினார் அல்லவா! அன்று பாகல் விதையொன்றினைப் புதைத்துவிட்டார். அந்த விதை துளிர்விட்டு மணலைப் பிளந்து வெளியில் தலை நீட்டிக்கொண்டிருக்கிறது.
அடுப்படி வேலையில் கிடந்த பகீரதியைக் கட்டி முகர்ந்து ஜன்னலடிக்கு இழுத்து வந்தார். என்னவோ எனப் பதறிப்போன மிஸஸ் கனகரத்தினமும் துளிர் விட்டுத் தலையை ஆட்டிக்கொண்டிருக்கும் பாகல் கொடியின் தளிரைக் கண்டதும் மெய்மறந்து போனார்.
‘எண்ட ராசா' என்ற செல்ல முணுமுணுப்புடன் கனகத்தாரின் நாடியில் லேசான இடி விழுந்தது.
{) () {)
கனகரத்தினம் மாஸ்டர் தோட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க பகீரதி ஜன்னலால் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Page 67
130 அன்னையின்நிழல்ஓ
Listgsb தளிரைச் சுற்றிக் கொஞ்சம் மணலை மேடாக்கி பாத்திபோல் கட்டிவிட்டு அவர் பெருமிதத்துடன் எழுந்தபோது சேவலொன்று கூவியது.
சரேலென எங்கிருந்தோ பறந்துவந்த அந்த அழகான சேவல் வேலியின்மேல் நின்று மறுபடியும் கம்பீரமாகக் கூவியதுடன் வேலியிலிருந்து சட்டென நிலத்திற்குக் குதித்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகற் தளிரை ஒரே கொத்தாகக் கொத்தி விழுங்கி விட்டது.
"ஆ" கனகர் அலறினார். ஒரு பிசாசுப் பிடித்து உலுக்குவதுபோல் அவருடல் நடுங்கியது. மண்வெட்டியை இறுகப் பிடித்திருந்த கைகள் அதனை ஒரு விசுறு விகறின. அந்த வீச்சில் சேவலின் அழகிய கொண்டையுடன் கூடிய கழுத்து அறுபட்டுத் தனியாக விழுந்து துடிதுடித்தது. சடார் சடாரென சேவலின் உடல் நான்கு முனைக்கும் துடிதுடித்துப் பாய்கிறது.
அடுத்தவீட்டு திலகரத்தினவின் மகன் அரவிந்தவின் செல்லப்பிராணி அது. இங்கே நடந்த கொடூரத்தை ஜன்னலால் கண்டு அவன் அலறினான்.
“புது அம்மே! மஹே குக்குலாவ அல்லப்பு ஹெதர கொட்டியா மெருவா.”
“ஐயோ அம்மா! என்னுடைய சேவலை பக்கத்து வீட்டுப் புலி கொன்னுட்டான்.”
C93
 

2தார் கொப்புளங்கள்|S
لی۔
SHSASAiG SSLSA S A ee eeASASSe eeSAiSASASASASAS AAAAASSASASAi S iSSAS eeeSAA AiSqSAeAeAiSiSeSeSeSiiAASAAA
ஜே ஜே’ என வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் வீதி
அங்கிருந்து கிளை வகுத்து உட்புறமாகச் செல்லும் ஒரு பாதை - அதன் ஒரமாக ஒரு கல்லடுப்பு.
மும்முனை வடிவிலான அதன்மீது ராஜ கம்பீரத்துடன் ஒரு பீப்பா அமர்ந்திருக்க கதகத’வென கொப்புளங்கள் மினுமினுக்க தார் கொதித்துக் கொண்டிருக்கிறது.
கரும்புகை குபுகுபுவென வெளியில் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
அடுப்பின் முன்னால் ஜோசப் குந்தியிருக்கிறான்.
நெருப்பு கனன்று கொண்டிருக்கும் அடுப்பினுள் நீண்ட பெரிய கட்டைகளைத் திணித்துக் கொண்டிருக்கின்றான். வியர்வை மழையென வழிகிறது.
நீண்ட அடர்த்தியான சாய்பாபா கேசம். மயிற்றோகை என முன் சரிந்து முகத்தைப் புதைத்துவிட, சட்டென பின்னால் உதறி முனை கறுத்த கட்டைகளை தீப்பொறிகள் சிதற உள்ளே திணிப்பதில் கவனம் முழுவதும் ஒன்றிக் கிடக்கிறது.

Page 68
132 அன்னையின்நிழல் ଦୃଷ୍ଟି
* -- η தொழிலில் ஒரு தவக்கோலம். “ஜோசப்” செவிகளுக்குள் சத்தம் ஊடுருவியதாகத் தெரியவில்லை.
“ஜோசப்’ உச்சரிப்பு ரப்பராக நீண்டு ஒலிக்கிறது. ஒவசியர் சுப்ரமணியத்தார்தான் எரிச்சலுடன் கத்துகிறார்.
ஜோசப்பின் தலை நிமிர்கிறது. வியர்வை ஒழுகும் முக நிலத்தில் முளைவிட்டிருக்கும் மயிர்க்கற்றைகளின் நமைச்சல் பொறுக்க முடியாமல் பரபரவென சொறிந்து கொண்டு கறுத்து சுருங்கிவிட்டிருக்கும் கண்ணிமைகளுக்குள் புதைந்து கிடக்கும் சிவப்புக் கண்களால் முழுசிப் பார்க்கிறான்.
“இஞ்ச வா! இஞ்ச வா!” ஒவசியர் கைகளை அசைத்து அவசரமாக பதட்டமுடன் கூப்பிட்டார்.
ஜோசப் எழுந்து வேகமாக நடந்துசென்று அவர் முன் நின்றான்.
“ஜோசப்! இஞ்ச பார்! சும்மா அடுப்போட மாரடிக்காதே. தார் தன்பாட்டில் கொதிக்கும்.”
ஒவசியரின் கண்டனம் கலந்த உபதேசம். ஜோசப் தலைக்கேசத்திற்குள் விரல்களை நுழைத்து பரபரவெனச் சொறிகிறான். எதுவும் புரியவில்லை என்றால் அவன் அப்படித்தான். சுப்ரமணியத்தாருக்கும் அது தெரியும்.

III Cs. விஜயன் (II 133
. என்னடாப்பா புரியல்லியோ! அடுப்போட மாரடிக்காதே. அது தன்போக்கிலே எரியும். அங்க பார்! ரோட்டுல பள்ளம். அத கொஞ்சம் கொத்திச் சமப்படுத்து. ஒடு! ஒடு!”
கொஞ்சம் பணிவாகிவிட்டால் ஒவசியர் இப்படித்தான் கட்டளை பிரம்மா ஆகிவிடுவார்.
ஜோசப்பின் நிமிர்ந்த முகம் என்ன என்பதுபோல் சுப்ரமணியத்தாரின் கண்களை ஊடுருவுகின்றது.
‘என்ன! நேரத்தை வீணடிக்கிறேனா? ஒவ்வொரு நிமிஷமும் மெஷினாகத்தானே சுத்திச் சுத்தி வேலை செய்றேன்.'
கண்களுக்குள் பொதிந்து கிடக்கும் வினாவும் பதிலும் அதுதான்.
ஒர் அம்பாகி “சுரீர்” எனப் பறக்கும் அந்தக் கேள்வி சுப்ரமணியத்தார் நெஞ்சக் கூட்டைத் தாக்கி ஊடுருவுகிறது. அவன் கண்களின் மொழி அவருக்குப் புரியும்.
அனலென எரிக்கும் வெயிலில் பொசுங்கி, கறுத்தும் சிவந்தும் விளங்கும் ஜோசப்பின் முகத்தில் ஆறெனப் பெருகி உதிர்ந்து கொண்டிருக்கும் வியர்வைத் துளிகளை சுப்ரமணியத்தார் பார்த்தார்.
சில கணங்கள் :
மனதில் ஒரு துன்ப உறுத்தல். மனச்சாட்சியின் எதிர்வு.
சட்டெனப் பார்வையை விலக்கிக் கொள்கிறார்.

Page 69
134 de'iedrecogoru5leż15p6ö
“சரி சரி, வேலையைச் செய்” லேசாக உறுமினார். “ஊமைப் பயல் முறைக்கிறான்’ மனம் பயத்துடன் பொருமுகிறது.
() () 0.
வீதியில் தூவப்பட்டுக் கிடக்கும் சரளைக் கற்களை ராட்சத டிரக்டர் மிதித்து அரைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது.
கஞ்சாச் சுருட்டு வாயில் கனன்று கொண்டிருக்க, “குபுக்குபுக்கென் புகையை வெளியே தள்ளும் உரிஞ்சலுடன் டிரைவர் லிண்டன் அலட்சியமாக டிரக்டரை முன்னும் பின்னும் செலுத்திக் கொண்டிருக்கிறான்.
“சூப்பர்!’ விரல்களை மடித்து அழுத்திச் சொன்ன சுப்ரமணியத்தார் லிண்டனைப் பார்த்து பல்லெல்லாம் வெளியில் கொட்டப் புன்னகைத்தார்.
“லிண்டன் ஹொந்தாய், லஸ்ஸனாய்.ஹரியட்ட கொரனவா” “லிண்டன் சரியாய்ச் செய்கிறாய்!”
இது ஒவசியரின் பாராட்டுப் பத்திரம். லிண்டன் சண்டியன். அதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவன். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். இது சாணக்கியம். 'குட் பப்ளிக் ரிலேசன் நோலேஜ்!’ ஒவசியர் தன் பொதுசன தொடர்பு அறிவின் ஆழத்தை நினைத்து பிரமிக்கிறார். ‘வெல்டன்’ என தன்னையே தட்டிவிட்டுக் கொள்கிறார்.

IAIN) G85. விஜயன் KONIN 135 பாராட்டுப் பத்திரம் லிண்டனை வசியப்படுத்தவில்லை.
அவன் கண்களில் அலட்சியம்.
“பலயன் தெமலா யண்ட (சரிதான் போடா தமிழா’)
அவனுடைய கண்கள் அந்த வார்த்தைகளை உமிழ்ந்தன.
கஞ்சாச் சுருட்டைக் கையிலிருந்து ஒர் உறிஞ்சலுக்காக மறுபடியும் வாயில் வைத்து லேசாகச் சிரித்து, சிவந்து சிறுத்துவிட்டிருக்கும் கண்களால் ஓர் அலட்சியப் பார்வையை ஏவியதன் பின்னரே, அந்த வார்த்தைகளின் உமிழ்வு.
ஜோசப் அசையவில்லை.
அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
சுப்ரமணியத்தார் கண்கள் அவனுடைய தபஸ் நிலையைக் கண்டுவிட்டன.
லேசான நடுக்கம் அவரை ஆட்கொள்கிறது.
'உந்த சண்டிப் பயல்களை வைத்து வேலை வாங்க
முடியாது எண்டுதான் ஒரு கொழும்பு ஊமைத் தமிழனை வைத்து வேலை வாங்கலாமெண்டு பார்த்தால் உவன் வேற மொறைக்கிறான். காலம் கெட்டுத்தான் போச்சுது!’
மனம் குமைகின்றது.
உடலின் நடுக்கம் அதிகரித்து அதிர்வாகின்றது.

Page 70
136 @ அன்னையின்நிழல் 8.
‘வேல்ை ஒழுங்காக அமையாவிட்டால் புரமோஷனுக்கு அதோகதிதான்.’ என்ற எண்ணம் நீரோட்டமாக மனத்தில் காய்ச்சலின் அழுத்தமாகிறது.
‘எண்டாலும் என்ன உவன் தமிழன்தானே! பச்சாபத்தனமாகப் பேசி ஆசாமியின்ற மனச தொட்டுடலாம். ' : ; ,
எண்ண அலைகள் நெஞ்சில் குதித்து கும்மாளித்துப் பாய்ந்து, விரிந்து படர, நாடியை விரல் நக நுனியினால் நறுக்கியவாறே யோசனையில் ஆழ்ந்து நிற்கிறார்.
“ஜோசப்! தம்பி ஜோசப்! நேரம் போகுது ராசா, இதுகளுக்குள்ள நீதான் கெட்டிக்காரன். இந்த சீனாப் பயலுகள் உருப்படியில்லாதவனுங்க ஒன்றையும் ஒழுங்காகச் செய்யாத கூட்டம். எங்கே சட்டு புட்டென உன் கெட்டித்தனத்தைக் காட்டு பார்ப்போம். இதோ இஞ்ச இஞ்ச இங்கேதான் பள்ளமா இருக்கு. மண்வெட்டியால் கொத்தி, சமப்படுத்தி.”
இப்படியே மளமளவென வார்த்தைகளைக் கொட்டி விட்டு ஏதோ தமாசைச் சொன்னதுபோல் கபகபவென தலையைச் சுற்றி கையை ஆட்டிக்கொண்டு சிரிக்கிறார்.
‘இதென்னடா என்பதுபோல ஜோசப் இன்னமும் அவரைப் பார்த்துக்கொண்டுதான் நிற்கிறான்.
சுப்ரமணியத்தாரின் சர்வாங்கத்தையும் அவனுடைய கண்கள் அளந்து கொண்டிருக்கின்றன.
நரையும் பழுப்புமான தலைக் கேசம், முன்தள்ளிய நெற்றி, குறுகலான கண்கள், சுருக்கம் விழுந்த முகம்.
a 9 Lis TGILD!

III.)> G335. விஜயன் (Hill 137 ஜோசப்பின் மனம் நினைக்கிறது, ஐயோ’ எனப் பரிதாபப்பால் நெஞ்சில் சுரக்கிறது.
“எதற்காக இந்த மனிதன் அந்தரப்பட்டுத் தடுமாறிச் சாகிறான்.
மனத்தில் எண்ணங்கள் நீரோட்டமென விரைந்தோட காடென மண்டிக்கிடக்கும் தலைக்கேசத்திற்குள் விரல்களை நுழைத்து ‘பரபரவெனச் சொறிகிறான்.
தெய்வ தரிசனம் பெற்றவர்போல் சுப்ரமணியத்தார் முகம் மலர்ந்தார்.
'தலை சொறிதல் ஜோசப் வேலைக்குத் தயாராகிவிட்டான் என்பதன் குறியீடு அல்லவா.
ஜோசப்பின் கைகளில் கடப்பாரை ஏறிக்கொள்கிறது.
L LUDITTj LLL DITj LLDITLj!
நிலமாதாவின் வயிறு பிளக்கிறது.
அவனுக்கு மெதுவாக வேலை செய்யத் தெரியாது. எதிலும் ஓர் அசுர வேகம்.
சுப்ரமணியத்தார் மரநிழலில் நின்று யோசனையில் ஆழ்ந்துவிட்டிருந்தார்.
‘நாளைக்குத் திறப்பு விழா. பிரதமரும் ஜனாதிபதியும் வருகை தருவார்கள். வீதி சுத்தமாக இருக்க வேண்டும் இது நகரசபை மேயரின் ஆணித்தரமான கட்டளை.

Page 71
Σ 5) ( শুঃ
கதிர்காமக் கந்தனுக்குத் தூக்குகின்ற காவடியாக கட்டளையை சிரமேற்கொண்டு கரகமாடுவதில் தவிப்புடன் ஈடுபட்டுள்ளார் ஒவசியர் சுப்ரமணியத்தார்.
138
மூன்று நாள்கள் தொடர்ச்சியாக வீதி செப்பனிடும் வேலை அமர்க்களப்படுகிறது.
{0 () {0
முதல் நாள் :
மத்தியான வேளையில்தான் சுப்ரமணியத்தார் வேலை நடைபெறுமிடத்திற்கு வந்தார்.
‘அட, என்ன இது லேபர்ஸ் எல்லாம் மரத்தடியில் சீட்டுக் கச்சேரியல்லவா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.”
சர்வாங்கமும் படபடக்கிறது.
என்ன செய்வது? பெருந் தடுமாற்றம்.
அப்பொழுதுதான் அந்தப் புதிய ஆசாமியை கண்கள் கண்டன.
“ஜோசப்
பேச முடியாதவன். பிறவி ஊமை. முனிசுபாலிட்டித் தொழிலாளியாகப் புதிதாகச் சேர்ந்துள்ளான்.
வேலை வேலை வேலையென்று வாங்கித் தள்ளுவதற்கு உடும்புப் பிடியாக அவனைக் கெளவிக் கொண்டார்.
 

Iம் கே. விஜயன் I 139 செப்பனிடப்படும் இந்தப் பாதை பல வருடங்களாகவே சீர்கெட்டுக் கிடக்கின்றது. பல இடங்களில் பள்ளங்கள். பள்ளிக்கூட சிறுவர், சிறுமியரை விபத்துக் கழுகுகள் கொத்திக் குதறிவிட்டன.
பல பெட்டிசன்கள்.
பயன் எதுவும் இல்லை. மழைக்காலத்தில் குளமும் குட்டையுமாக பலி பீடம் உருவாகிவிடும்.
வருடா வருடம் நகரசபை வீதி செப்பனிடும் செலவிற்கான பகுதியில் அந்த வீதியின் பெயரும் பதிவாகிக் கொண்டே வருகிறது.
இந்த வீதியின் கரையில் வீடமைப்புத் திட்டமொன்று உருவாகி நிமிர்ந்துவிட்டது. தேர்தல் நெருங்குவதால் உடனடியாகத் திறப்பு விழா நடைபெற வேண்டும். திறப்பு விழாவிற்குப் பிரதமரும், ஜனாதிபதியும் வருகை தருகிறார்கள் என்றதும் மேயரும் நகரசபை அதிகாரிகளும் வெலவெலத்துப் போனார்கள்.
வீதி இருக்கும் நிலைமையை அறிந்ததும் மேயர் வள்ளென சுப்ரமணியத்தார் மீது பாய்ந்தார்.
மூன்று நாட்களுக்குள் வீதி பளிச்சென மாற வேண்டும் என்ற கட்டளை சீறலுடன் பிறந்தது.
மூன்று நாட்கள்.
‘அடேங்கப்பா’ என சுப்ரமணியத்தார் தலையில் கை வைத்துக் கொண்டார்.
முனிசுபாலிட்டி தொழிலாளர்களை வைத்துக் கபட நாடகம் ஆடி மாதந்தோறும் பெருந்தொகையைச்

Page 72
140
சன்மானமாகக் கொண்டிருக்கும் அவருக்கு அவர்களை
வைத்து எப்படி வேலை வாங்குவது என்பது பிரச்சினையாகிவிட்டது.
எவருமே ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை. ஆனால் பெயர் பதிவாகிவிடும். அதற்காக மாதச் சம்பளத்தில் ஒரு பகுதி சுளையாக அவருக்குக் கிடைக்கும் இந்த இலட்சணத்தில் அவர்களை வைத்து மூன்று நாட்களில் வேலையை முடித்துவிட முடியுமா என்ன?
ஜோசப் அவருடைய நம்பிக்கை நட்சத்திரமாகப் பிரகாசிக்கின்றான்.
தமிழன்! அதிலும் ஊமை.
ஆஹா!
{0 ()
கிடூரமான வெயில்,
ஜோசப்பின் மேலும் கீழும் கடப்பாரையுடன் உயரும் கைகள் நிலமாதாவின் உடலைத் துவம்சம் செய்கின்றன.
கடற்பாரை கற்களைக் கிளறி எடுக்க டிராக்டரின் இரும்பு உருளைகள் கடகடவென உருண்டு அவற்றை மிதித்து, நசுக்கி சமப்படுத்த தார் கொட்டி மணலைத் தூவி விட்டால் விடியலில் வீதி பளபளவென பிரகாசமிடும்.
மரத்தடியில் நிற்கும் சுப்ரமணியத்தார் ‘சூ சூ சூ. என்ன வெயில்' என சூள் கொட்டுகிறார்.
 

ILII» G85. விஜயன் (III) 141 தொழிலாளர்கள் ஆளுக்கொரு மூலையில் குந்தி பீடி புகைப்பும், கஞ்சா இழுப்புமாக கண் சிவந்து கிடக்க, ஜோசப் வெயிலில் எரிந்து கருகி வீதிக்குத் தார் வார்த்துக் கொண்டிருக்கிறான்.
வியர்வை மழையில் அவன் தெப்பமாகி விட்டிருக்கிறான்.
தூரத்தில் பச்சைநிற டட்சன் காரொன்று வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
மரநிழலில் நாடி செறிந்து சந்நியாசியாகிவிட்டிருந்த சுப்ரமணியத்தாரின் கண்கள் அதனைக் கண்டுவிட்டன.
ஒரு பாய்ச்சல், சுப்ரமணியத்தார் பாய்ந்தார். மின்னலின் வேகம். ஜோசப்பின் கையிலிருந்த தார்வார்ப்பு பறித்தெடுக்கப்பட்டு அவர் கைக்குள் இறுகியது.
டட்சன் ‘சறே'லென நிற்கிறது.
'ஆ ஐயோ, அம்மா.
ஜோசப்பின் ஆத்மா அலறுகிறது. ஒர் ஊமைப் படத்தின் காட்சி போல அவன் துடிதுடித்து அங்குமிங்கும் குதித்துக் குதித்து ஓடுகிறான்.
தன்னை மறந்து தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்போல் பம்மாத்துக்காட்டிக் கொண்டிருந்த சுப்ரமணியத்தார் ஜோசப்பின் கால்களில் மறமறவென கொதிக்கும் தாரை மளமளவென வார்த்துவிடுகிறார்.

Page 73
142
தொழிலாளர்கள் எல்லாம் கலவரமடைந்து எழுந்தார்கள்.
O {0 ()
திறப்பு விழா சிறப்பாக நடந்தது.
நகர சபை மேலதிகாரிக்குப் புகழ்மாலை. உளம் மகிழ்ந்த அவர் இரு கடிதங்களை டைப் செய்து சுப்ரமணியத்தாருக்கு அனுப்பி வைத்தார்.
gRCD கடிதம் சிறப்பான வேலைக்காக ஒவசியர் சுப்ரமணியத்தாருக்கு சம்பள உயர்வு.
இரண்டாவது கடிதம் :
வைத்தியசாலையில் தார் கொப்புளங்களோடு நெஞ்சிற்குள் துன்பக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் ஜோசப்பிற்கு கவனக்குறைவு, வேலை செய்யும்போது
அதிகாரியை முறைத்துப் பார்த்தல் போன்ற குற்றங்களுக்காக ஒரு மாத வேலை நீக்கம்.
C93
 

‘முடி நரைச்சி கூன் உழுந்தாலும் கெழவன்
இரும்பு மாதிரித்தான் ரங்கனைப் பற்றி சக தொழிலாளர்கள் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்.
கடின உழைப்பாளிகளின் உடம்பு இறுகிக் கிடப்பதில் என்ன அதிசயமிருக்கிறது.
ரங்கன் தேயிலைப் பெட்டிகளைச் சுற்றி சுழற்றித்
தூக்கித் தோளில் சுமந்து வண்டிலுக்குள் வீசியெறிவது ஒரு தனி லாவகம். w
கறுப்பி அவனுடைய சொத்து - சுமை நிறைந்த வண்டிலை இழுத்துச் செல்லும் அவனுடைய காளை.
ரங்கன் கறுப்பியின் வாயினுள் நுழைத்துவிடும் புல் கட்டை சவ்வு சவ்வுன்னு சப்பி கடைவாயிரண்டிலும் எச்சில் வழிந்தோட அது தலை குனிந்து வாலால் கொசு விரட்டிக்கொண்டு பொறுமையுடன் நிற்கும்.
இன்னும் எத்தனை பெட்டிகளோ?
ஒவ்வொரு பெட்டியும் மடார்மடாரென வண்டிலுக்குள் விழுகின்றபோது வண்டில் ஆட்டம்போடும். பூமியுடன் ஒட்டி நிற்கும் கறுப்பியின் கால்கள் விறைப்படைந்து இறுகும். கழுத்து சுளுக்கிக் கொண்டாற்

Page 74
144 亂 அன்னையின்நிழல் 鹦 போல் கடூரமாக வலிக்கும். கடைவாயில் எச்சில் நுரைக்க பீளை கூடு கட்டி கிடக்கும். கண்ணோரத்தில் ஈக்கள் சுற்றிச் சுழன்று பறக்கும். கறுப்பி பொறுமையின் சின்னம்.
ரங்கனுக்கு இதொன்றும் பெருங்கவலையல்ல. பெட்டிகளை அடுக்குவதும் வண்டிலுக்குள் எறிவதுமாக அவன் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பான்.
காளையின் துன்பத்தை உணர்கின்றபோதும் அதற்காகக் கவலைப்பட்டால் வீட்டில் பல உயிர்கள் பட்டினித் துயரத்தில் விழுமே!
புல் கட்டை வாயில் திணிக்கும் வேளையிலும், . புண்ணாக்கைக் கரைத்துக் கொடுக்கும்போதும் பாசம்
நெஞ்சில் வழிந்தோட பக்குவமாகச் செய்வான்.
நல்ல வெயில் எரித்துக் கொண்டிருக்கிறது. ரங்கன் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறான். மடார் மடார்! மடாரென பெட்டிகள் வண்டிக்குள் விழுகின்றன. முப்பது பெட்டிகள் ஏற்ற வேண்டும். நான்காவது பெட்டியைத் தூக்கியபோது இடுப்பு எலும்பை எவரோ சரூக்கென உருவி எடுத்தாற் போல் இருக்கிறது.
அப்பப்பா! என்ன வலி முகத்தில் ஆயிரம்
சுழிவுகளுடன் முனகினான். ரங்கனுக்கு இடுப்பெலும்பிலும் பிடிப்பு.
நான்காவது பெட்டியைத் தூக்கக் குனிந்த ரங்கன், சில நிமிடங்கள் குனிந்தபடியே நின்றுவிட்டான். நிமிர முடியவில்லை. இடுப்பெலும்பு முறிந்துவிட்டதா என்ன? ‘ஊவ்’ கடூரமான வலி.

III.)> G335. விஜயன் «III 145 கறுப்பியின் வால் ஆடுகிறது.
நிமிராமல் குனிந்தபடியே நின்று பின் தரையில் குப்புற விழுந்துவிட்ட தன் எஜமானனை நோக்கி ம்மே என தீனக்குரல் எழுப்புகின்றது.
() K) KO
நதிக்கரையோரம்
சின்னச்சின்ன குடிசைகள் நிறைந்த சேரி சாம்ராஜ்ஜியம்.
ரங்கனின் குடிசை.
கிழிந்த அழுக்கானதொரு பாயில் படுத்துக்கிடக்கின்றான். பீடித் துண்டு உதட்டோரத்தில் புகைந்து கருகுகிறது. வெறித்து நிலைகுத்திய கண்கள், மனத்தில் கவலையில் தோய்ந்துவிட்ட நினைவுகள்.
வாழ்வின் முக்கால் பகுதியை விழுங்கிவிட்ட தொழிற்சாலையை நினைத்தான். தேயிலைப் பெட்டிகளைச் சுமந்து சுமந்தே வாழ்வு கரைசலானது. எனினும் பெட்டிகளைச் சுமந்து தோள்பட்டையில் நைந்த சதைப்பாகங்களின் ஊனத்தின் வடிசல் இன்னும் வற்றவில்லை.
ஐம்பத்தைந்து வயது வந்தவுடன் தொழிற்சாலையில் அவனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள். சேம இலாப ஊதியப் பணம் ஏதோ கொஞ்சம் கிடைத்தது.
அட ஆண்டவனே! அதை எடுக்க அவன் பட்ட பாடு, மலையைக் கிளறி எலியைப் பிடித்த கதைதான்.

Page 75
146 像 ജ്ഞങ്ങല്ക്ക ॐ மூன்று பெண் பிள்ளைகள். எப்படியோ கரை சேர்ந்தார்கள்.
இளையவள் கடைசிப் பெண் வாழ்க்கைப்பட்ட இடம் மிகவும் கஷ்டமானது. மருமகன் மகாக் குடிகாரன்.
பெண் என்ன செய்வாள்?
தந்தையிடம் யாசகம் கேட்டு நாலு பிள்ளைகளுக்கும் உண்ணவும் அணியவும் கொடுக்கிறாள். அப்பாவிற்குப் பணம் கிடைத்துவிட்டது என்ற செய்தி காதில் விழுந்ததோ, இல்லையோ தனது பட்டாளத்துடன் பறந்தோடி வந்து குடிசையை ஆக்கிரமித்துக் கொண்டாள்.
மூத்தப் பெண்களிரண்டும் தங்களுக்கு விருப்பமான காதலர்களுடன் சென்றவர்கள். இளையவள் மட்டுமே தாய், தந்தை சொற்படி திருமணம் செய்தவள். ‘மகள் எங்களோட இருக்கட்டுமே என பாக்கியம் சொல்ல, ரங்கனும் தலை அசைத்தான்.
ஒரு குடிசைக்குள் இப்பொழுது எட்டு உயிர்கள்.
பணம் கிடைத்ததும் அதை கன்னாபின்னாவென செலவு செய்யாமல் ஒரு மாட்டையும் வண்டியையும் வாங்கி ஒட்டினால் ஒரு நாளைக்கு ஐம்பது, அறுபது என்று சம்பாதிக்கலாம் என்ற நீண்டகாலத் திட்டம் ாங்கனிடமிருந்தது.
மருமகனுடன் அடிக்கடி உள்நாட்டு போர் மூளும். சதா சோம்பித் திரிகின்ற அவனைக் கண்டாலே ரங்கனுக்கு அருவருப்பு.

III.)> G335. விஜயன் «(LIII 147 எருமையின் மீது விழுகின்ற அடிகளைப் போல இவ்வளவு காலமும் பொறுமையுடனிருந்த மருமகனுக்கும் ஒருநாள் ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. புகைத்துக் கொண்டிருந்த பீடித் துண்டை எடுத்தெறிந்து சாரத்தை முழங்காலுக்கு மேலாகத் தூக்கிக்கட்டி தூவென காறி உமிழ்ந்து காரசாரமான சில வார்த்தைகளைக் கொட்டி ஆண் சிங்கமாக விசுக் விசுக்கென வெளியேறி விட்டான்.
அன்று போனவன் போனவன்தான்!
பத்தோ, பன்னிரண்டோ ஆண்டுகள் கால மணல் வெளியில் காணாமல் போயின.
ολIITθτί
ரங்கனின் மூத்த பேரப்பிள்ளை.
அவன் அப்பனைப் போலில்லாமல் படு சமர்த்து. கல்வியில் மிக ஆர்வம் அவனுக்கு. அவனைப் படிப்பித்து நல்ல உத்தியோகக்காரனாக்க வேண்டுமென்பது ரங்கனின் இலட்சியக் கனவானது.
அடடா அந்தக் கனவுதான் எவ்வளவு உயிர்ப்பு மிக்கது.
வாசுவிற்கு இப்பொழுது பதினேழு வயது. சின்னவொரு தென்னந்தருவாக நிற்கிறான். புதுப் பாளை வெடித்து சிறு குரும்பட்டியாக அவன் தோன்றியிருக்கும் இந்நாட்களில்தானா ரங்கன் படுக்கையில் விழ வேண்டும். எத்தகைய துர் அதிர்ஷ்டம்!
வாசுவின் படிப்பு; ரங்கனின் கனவு; இவையெல்லாம் நீர்க்குமிழ்களாகி விடுமா?

Page 76
148
பாயில் சடலம்போல் கிடக்கிறான் ரங்கன். கண்களில் நீர்த்துளிகள்.
*ம்மே”
கறுப்பியின் அழைப்போசை, 'ஆத்துப்பக்கம் கரையோரமா வளர்ந்திருக்கிற நீர்ப்புல்லைத்தின்கிறதுன்னா கறுப்பிக்கு கொள்ளை ஆசை. அங்கெல்லாம் அத கூட்டிப் போக, இல்லேன்னா கொஞ்சம் புல்லை அறுத்துக்கிட்டு வர என்னாலே முடியலியே!”
ரங்கன் விசனத்துடன் நினைத்துப் பொருமுகிறான். நெஞ்சம் விம்மி வெதும்பிதகிக்கிறது.
இருள் விழுந்துவிட்டது.
நுளம்புகளின் ரீங்காரம் செவிகளில் சலனத்தை உண்டு பண்ணிட பாயில் குப்புறப்படுத்து கவலைக் கடலில் மூழ்கிக் கிடக்கும் ரங்கன் கொட்டிலடியிலிருந்து ‘ம்மே!’ என குரலெழுப்பும் கறுப்பியின் வேதனைக் குரலை நெஞ்சிற்குள் தகிப்புடன் ஈர்க்கிறான்.
‘பேரப்பிள்ளை வாசு கல்வியில் சமர்த்து. மனம் பதட்டமுடன் முனகிக் கொள்கிறது.
சிறியதொரு தேயிலைப் பெட்டி, அதன் மீது கறும் புகைச்சுருளை உமிழ்ந்தவண்ணம் குப்பி விளக்கு எரிகிறது. விளக்கின் பக்கத்தில் புத்தகத்தை விரித்துவைத்து வாசு படித்துக் கொண்டிருக்கிறான். தபஸ் நிலையாக நிழலின் தோற்றம்.
G. G. Gumar!”
 

Illu)- G3s. விஜயன் «III 149 சட்டென நிழலில் ஒரு சலனம்.
“என்ன தாத்தா?” “நாளையிலிருந்து ஸ்கூலுக்குப் போறதை நிப்பாட்டிரு.
நிழல் நடுங்குகின்றது. நெஞ்சிற்குள் பகீரென அதிர்வலைகள் மின்சாரம் பாய்ச்சிட “தாத்தா” என்கிறான்.
சாவை நோக்கி நகரும் ஒர் ஆத்மாவின் முணுமுணுப்பாக வாசுவின் ஏக்கமான குரல் கம்மி ஒலிக்கிறது. “என்ன செய்ய அப்பா! நான் பாயிலே உழுந்துட்டேன். குடும்பபாரத்த இனிமே நீ தானே சொமக்கணும்.”
“கரத்த ஓட்ட சொல்றீங்களா தாத்தா?” “ஆமாடா கண்ணு!” ரங்கனுக்கு நாக்கு மரத்து விட்டது; நெஞ்சு சுளுக்கிக் கொண்டது; குழி விழுந்த கண்களிலிருந்து மளமளவென நீர்த்துளிகள் கொட்டுகின்றன.
“நா உழுந்துட்டா என்ன? மாடு இருக்கு. வண்டி இருக்கு. ஏண்ட எடத்துலே நீ வரணும். அப்பத்தானே ஒரு நேரமாவது கஞ்சு குடிக்கலாம்.” ரங்கன் என்னென்னவோ பிதற்றிக் கொண்டிருக்கிறான்.
வாசு மெளனமாகவிருந்தான்; புத்தகத்தின் பக்கங்களை அவனுடைய விரல்கள் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

Page 77
150 像 அன்னையின்நிழல் 鹦
*լbGLD/*
கறுப்பியின் தீனமான குரல்.
அது யாரை அழைக்கிறது? ரங்கனையா? வாசுவையா? ரங்கனால்தான் முடியாதே.
வாசு சமர்த்துப்பிள்ளை. அவன் எழுந்துவிட்டான்.
() () {0
UெTசுவிற்கு தொழிலின் ஆரம்பம் கடினமாகவிருக்கிறது. பாரமான தேயிலைப் பெட்டிகளைத் தூக்கும்பொழுது மூச்சுத் திணறுகிறது. கை, கால்கள் நடுங்குகின்றன. சர்வாங்கமும் நடனமாடுகின்றன. தோள், கை, மூட்டு அனைத்திலும் இரத்தக் கசிவுகள். பெட்டியைச் சுற்றி அடித்துள்ள தகர வளையங்கள் சதைகளைக் கிழித்து இரத்தச் சுவை காண்கின்றன. அனைத்தும் சில நாட்கள் தான். பழகிவிட்டது.
தேயிலைப் பெட்டிகளை அனாயாசமாகத் தூக்கிப் போடுவான். வண்டி நகர்ந்து விழுவதுபோல் குலுங்கும். கறுப்பி ‘ம்மே” என துன்பக்குரல் எழுப்பும். எத்துணை பாரமாகவிருக்கட்டும் ஐய்! ஐய்! என முதுகில் பிரம்பு விழும்போது அது வேகமாக நடக்கும்.
இன்று இதென்ன நாடகம்? கறுப்பி மறியல் போராட்டம் நடத்துகிறது.
பாரம் ஏற்றியாகிவிட்டது! சளார் சளாரென பிரம்பு
முதுகுத் தோலை உரிக்கிறது. ஐய் ! ஐய்! என தொண்டையைக் கிழிக்கிறான்.

HIDI) G3s5. விஜயன் 

Page 78
152
、マー・一工
சிர்ப்பமென நீண்டு செல்லும் நெடிய பாதை.
இ.போ.சா.வின் மின்னலான ஒட்டம் :
சுதந்திர வர்த்தக வளையம் நோக்கி மனச்செடி சொரியும் கனவுப் பூக்களோடு பயணம்.
சூரியன் நடுவானைத் தொட்டு வெம்மையை வெளியிடுகிறான். பஸ் வண்டியின் முன் ஆசனத்தில் அமர்ந்து, முன்னும் பின்னும் வேடிக்கை பார்க்கும் உணர்வுகளோடும் மனத்தில் என்னென்னவோ கனவுகளோடும் இருப்புக் கொள்ளாத தவிப்பு.
வண்டி நின்றது.
என் தோளைத் தட்டிய் கண்டக்டர் “இங்கே இறங்கி யாரிடமாவது விசாரித்துக்கொண்டு நடவுங்கள்’ என சிங்களத்தில் மெதுவாகச் சொன்னான். வெற்றிலைக் காவி படிந்த அவனுடைய பற்களையும் உதடுகளையும் சில வினாடிகள் வெறித்த நிலையில் நின்ற நான், சட்டென பரபரப்படைந்து கீழே இறங்கினேன்.
‘ஊவ்! நெருப்பு மழை!’
 

III) G85. விஜயன் «(III) 153 இறங்கிய இடத்தில் கொஞ்ச நேரம் நின்று தலையில் கை வைத்து முன் நீண்டு செல்லும் பாதையில் கண்பதித்த பொழுது இ.போ.சா. கடகடவென பறந்து கொண்டிருந்தது.
நடக்க வேண்டுமே? எத் திசையில்? கேள்விப் பாம்பு சிந்தையில் நெளிய மெதுவாகப் பயணம். நடக்க, நடக்க சனச் செறிவு குறைந்து வாகன நெரிசலும் இரைச்சலும் நலிந்து, வீதி சந்தடி மறைந்து வெறிச்சநிலைக்கு நழுவுகிறது.
கட்டிடத் தொழில் புரியும் இரண்டு பெண்களும் ஒரு வாலிபனும் சுவாரஸ்யமாக பேசியவாறு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கைதட்டி அவர்களை அழைத்து, கையிலுள்ள கடிதக் கவரைக் காட்டி, அதிலுள்ள விலாசத்தை வாசித்து விசாரித்தேன்.
அவர்கள் முக மலர்களில் கேள்வி முட்கள், உதடுகளில் பிதுக்கம். ‘என்ன இது, பெரிய கம்பெனி என்று சொன்னார் யாருக்கும் தெரியவில்லையே.
முணுமுணுப்போடு மறுபடியும் பயணம். ‘என்ன சூடு என்ன சூடு’ என சூள் கொட்டிக் கொண்டு நடக்கிறபொழுது தந்தை சொன்ன வாசகங்கள் நெஞ்சில் முட்டி முட்டி மனத்தை ஆனந்தப் புனலில் நீராட்டுகின்றன.
‘வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துலே ஊருலே என்ன சொகுசு ரெண்டு ரூபா இருந்தா ஒரு குடும்பத்துக்கு ஒரு நாள் முழுதும் போதும்.’
நான் வாய்பிளந்தவாறு கேட்பேன்.

Page 79
154 像 அன்னையின்நிழல்
மனம் பிரமிப்புக் கடலில் விழுந்து தத்தளிக்கும்.
‘அந்த வெள்ளைக்காரன் இல்லேன்னா, இந்த நாட்டுலே ஒரு நல்ல ரோடுகூட இருக்குமா? எல்லாம் அவன் போட்டதுதானே'
‘வரலாறும் புவியியல் பாடங்களும் மனத்திரையில் வெளிச்சநிழல்களாகச் சலனமிட ஒ.! அந்த வெள்ளைக்கார ஆட்சி எவ்வளவு உன்னதமானது' என் மனக் கோகிலம் சங்கீதமிசைக்கும்.
‘எங்கட சனங்க மடையங்க, அதனாலதானே சொதந்திரம் அடைஞ்சிட்டோம் என்று சொல்றாங்க, நெசமா சொன்னா அத எழந்திட்டோம், நாப்பத்தெட்டோட சொதந்திரம் போய்ட்டு’
அப்பா பள்ளிக்கூடம் போனதில்லை என்றாலும் அவருக்கு எவ்வளவு அறிவு. ஆமாம், இதையெல்லாம் எப்படித் தெரிஞ்சுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் துரைதான் காரணம். அப்பா அவருக்கு சமையல்காரனாக இருந்தாலும், துரை அவரிடம் மனம் திறந்து பேசுவார். அவரிடம் பெறுகின்ற பாடங்களைத்தான் அப்பா என்னிடம் ஒப்புவிப்பார்.
சுதந்திர வர்த்தக வளையம், இந்த நாட்டில் பெரிய பொருளாதார விடுதலையையும், நம் மக்களுக்கு இழந்த சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்குமென துரை சொன்னதாக அப்பா வீட்டில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
‘அப்பா! அங்கே எனக்கொரு வேலை எடுத்துத் தரும்படியாக துரைக்குச் சொல்லுங்களேன்!
4) 哈 (M

IIII.)> G335. விஜயன் «HINI 155
ஒரு பலகைக் கடை
ஒரு சின்ன மேசை அதில் நாலைந்து போத்தல்கள். அதில் நிறைந்தும் நிறையாமலும், அரை குறையாக இனிப்புகள். அந்த மேசைக்குப் பின்னால் உட்கார்ந்து சுருட்டுப் புகைத்தவண்ணம் ஒரு கிழவர், உள்ளே ஒரு வாங்கில் உட்கார்ந்து ரொட்டித்துண்டுகளைப் பிய்த்துப் பிய்த்து சொதியில் நனைத்து நனைத்து விழுங்கியவண்ணம் இரண்டு பையன்கள்.
டயமென் பெரடைட்ஸ் கம்பனி கொயத தீன்னே?
டயமென் பெரடைட்ஸ் கம்பனி எங்கே இருக்கிறது?
என் குரல் செவிகளில் விழுந்ததும், கிழவன் தலைநிமிர, சுருங்கிய நெற்றியில் சிந்தனைக் கோடுகள் கால்வாய்களாகப் பள்ளம் கிழிக்க சில கணங்களில் அனைத்தும் மறைந்து கறுப்பு உதடுகளில் புன்னகையின் ஜனிப்பு.
கிழவன் சுட்டிய திசையில் பார்வை.
ஒரு தென்னந் தோப்பு. அதனை நடுவாகப் பிளந்து விரையும் செம்மண் பாதை. அதில் ஆங்காங்கே சேறும் சகதியுமான நீர்ப்படிவின் தேக்கம்.
நடக்கிறேன்.
வெயிலின் காங்கை மடிகிறது. தென்னந் தோப்பினுாடாகப் பயணம். அடர்த்தியான தருக்களின் வருகையால் பசுமை நிழலின் சுகம்.

Page 80
156  G8es. விஜயன் 

Page 81
158 像 அன்னையின்நிழல்
মৃত্যু மாலை மயங்கி இருள் சூழத் தெர்ட்ங்கியபொழுது வேலை விட்டது. முதல் நாள் வேலை முடிந்து வெளியில் ஒட ஆவல் ததும்பி நின்றேன். வாசற் கதவருகில் நீண்ட வரிசை எதனையோ விழுங்கிய மலைப்பாம்பு மெதுவாக ஊர்வது போலவே வரிசை நகர்ந்தது.
நன்றாகவே இருள் சூழ்ந்து, மேற்கு வானிலும் கரும் திரை. மெர்கூரி விளக்குகள் கம்பெனிக்குள் நாலா பக்கமும் ஒளி வீச்சை தொடங்கியிருந்தன.
அப்பாடா, என் முறை வந்தது.
சும்மா தட்டிச் சோதிப்பார்கள் என்று நினைத்த மனத்தில் மண் விழுந்தது. என் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிகுரிட்டிக்காரன் என்னை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு அறைக்கு சென்றான். நான் திகிலடைந்து நின்று கொண்டிருந்தபொழுதே என்னை (Մ) (Լք நிர்வாணமாக்கினான்.
ஒரு பெண்ணைப் போன்ற லஜ்ஜை குணம் படைத்த நான் கூனிக் குறுகிப் போனேன். அவன் செய்த சோதனைகளில் என் ஆத்மா மரணித்தது.
என் சர்வாங்கத்திலும் அவன் மாணிக்கக்கல் தேடுகிறான். என் மலவாசலையும் ரப்பர் கையுறை அணிந்த அவனுடைய கைவிரல் விட்டு வைக்கவில்லை.
‘பொருளாதார விடுதலையும் இந்த நாட்டு மக்களுக்குச் சுதந்திரமும். தந்தையின் பிரசங்கம் செவிக்குள் ஒலிக்கின்றன.
CO3

159
2 விடியல் வெளிச்சம்|*
N
Jー
G. C.
சிகன்யா அழகாக வளர்ந்து வருகிறாள். ப்பா! ப்பா ப்பான்னு மகள் கூப்புடுவதுலே எனக்கு எல்லாமே மறந்து போவுது.”
கணவனின் கடித வரிகள். மனக்குருத்தில் அதிர்வுகள். கெளசல்யாவின் உடல் லேசாக நடுங்குகின்றது. அபுதாபியிலிருந்து நாடு திரும்புவதற்காக கெளசல்யா தயாராகிக் கொண்டிருந்த வேளையில் கடிதக் கட்டு கண்களில் பட்டுவிட்டது.
அது அவளுடைய பொக்கிஷம்.
ஒவ்வொரு கடிதத்தையும் ஒராயிரம் முறை கண்கள் விழுங்கிவிட்டிருக்க ஒவ்வொரு சொற்களும் வரிகளும் மனபூமியில் ஆழமாக வேரோடியுள்ளன.
கணங்களின் அசைவாட்டம் அவை.
சீட்டுக்கட்டாக சரசரவென இழுத்துவிட்டுக் கொண்டபோது கடிதம் ஒவ்வொன்றினுள்ளும் முத்து முத்தாக அந்த வரிகள்.

Page 82
160 

Page 83
162 9ങrങ്ങാഞ്ഞuിൽrgൺ ($
Vර්U.
3. ry ஜெகன் அசையாது நிற்கிறான். ஏதோ சோகமான ஒவியமாக, உட்குழிந்த கண்கள், சவரம் செய்யாத முகம், புன்சிரிப்பை இழந்த உதடுகள். வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டதான துயரம். கண்ணொளியின் கீற்று அஸ்தமன உலகில் புதைந்து விட்டிருக்கிறது.
கணவனை இறுக அணைத்து முத்தமிட நெஞ்சத்தில் துடிதுடிப்பு - அப்படி நடந்து எவ்வளவு காலம்.
ஆண்டவனே! அவள் இதயத் தளிர்நடுங்க மனத்தில் ஆவலின் துளிர் “கெளசல் டெக்ஷியில் ஏறு!” ஜெகனின் குரல் காதில் விழுகிறது’ விம்மி விம்மி அழும் சுகனைத் தூக்கி, தலைக்கேசத்தை வருடிவிட்டவாறே ஆறுதல் கூறி எதுவித சுரத்தும் இல்லாத குரலில் அவன் கூறினான்.
மெதுவாக ஒலித்த அந்தக் குரலில் மூன்று வருடங்களுக்குப் பின்னர் கெளசல்யாவைச் சந்திக்கும் ஆனந்தமோ, பூரிப்போததும்பவில்லை.
O () () வெம்மையும் பிரகாசமுமான வெயில், டாக்ஷி வேகமாக ஓடுகிறது. மின்னலெனப் பின் விரைந்து மறையும் மரங்கள், கட்டிங்கள். அவற்றை வெறித்த நிலையில் கெளசல்யா.
பின் சீட்டில் அவள் சாய்ந்திருக்கிறாள். கண்கள் வெளி உலகில் பதிந்து கிடக்கின்றன.

III» Gas. விஜயன் {I} 163 'அபுதாபியில் கழிந்துபோன வாழ்க்கைக் கதையை கணவனிடம் கொட்டித் தீர்க்க வேண்டும்.
இருதய இலை துடிக்கிறது, தூண்டில் புழுவாக, ‘அப்பப்பா! எவ்வளவு பெரிய வீடு அது. ராஜமாளிகைதான் போங்க. எங்க பாபாவுக்கு (வீட்டின் சொந்தக்காரர்) எத்தனையோ அமெரிக்க கம்பனிகளில் பங்காம். பாபா பொல்லாத கில்லாடி. மூன்று பெண்டாட்டிங்க, அம்மாடி! எல்லோருமே ரதிகள்தான். எனக்கு அவ்வளவு வேலை ஒன்னும் இல்லீங்க. ரெண்டு கெழடுங்க, அடேயப்பா கெழடுகளா அதுக. வெஷமம் புடிச்சதுக, அதுகளப் பார்த்துக்கிறதுதான் அம்மா ஜோலி.” திடீரென ஏற்பட்டவொரு மனஉந்துதலில் கௌசல்யா மடமடவென கொட்டினாள்.
“ஆமா! இதையெல்லாம்தான் கசெட், கசெட்டாகப் பேசி அனுப்பினியே!”
பேச்சை இடைமறித்து ஜெகன் பேசியதும் கெளசல்யாவிற்கு மகிழ்ச்சியாகவிருக்கிறது. கணவன் தனது பேச்சுக்கு செவிமடுத்துக் கொண்டிருக்கிறான் என்பதனால் ஆனந்தம் ஊற்றெடுக்கின்றது.
ஜெகன் பேசியபோதும் ‘சரசரவென வண்டியை விழுங்கிக் கொண்டிருக்கும் வீதியை அவன் கண்கள் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இமைகளில் நிர்ச்சலனம். “சிறீலங்கா போறேன் என்று சொன்னதும் கெழடுகள் ரெண்டும் அழத் தொடங்கிற்று. போறது சரி, ஒரு மாசத்திலே அபுதாபி திரும்பிடனும் என்று சொல்லி
ரிட்டேன் டிக்கட்டை வாங்கிக் கொடுத்துட்டாங்க.”

Page 84
164 அன்னையின்நிழல் 8.
நீரலைகள் உருள்வது போன்ற ஓசையுடன்
கலகலவென நகைக்கிறாள் கெளசல்யா.
சட்டென வண்டி குலுங்கியது. − சக்கரம் பள்ளத்தில் இறங்கி ஏறியதால் அந்தக்
குலுங்கல். அனைவரும் எம்பி, எழுந்து விழுகிறார்கள்.
குலுங்கிய வண்டி மறுபடியும் நேராகி விரைகிறது. ஜெகன் திரும்பிப் பார்த்தான். அப்பொழுதுதான் அவனுடைய கண்கள்
மனைவியை முழுமையாகத் தரிசித்தன. ஏனோ அதில் துயரம் கலந்த விஷமத்தனமான வெறுப்பு.
“ரிட்டேன் டிக்கட்டோடையா வந்திருக்க?” “ஆமாங்க.’ என்று மகிழ்ச்சியுடன் கூறியவள் வேகமாக முன்னால் நகர்ந்து ஜெகனின் தலைக் கேசத்தை மிருதுவாகத் தடவி விடுகிறாள்.
மடியில் அமர்ந்திருந்த சுகன்யா அப்பாவின் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டாள். சின்னஞ்சிறு விழிகள் மிரட்சியடைந்த பறவையென அம்மாவை எடை பே ତତ୍ତ fiki f G
‘ஏன் இப்படிப் பார்க்கிறாள்? என நினைவுச்சூழலில் சிக்குண்ட கெளசல்யாவின் கண்களில் நீர் பணிக்கிறது.
நா லேசாகத் தளதளக்க, “அம்மா கிட்ட வாம்மா” என கைகளை நீட்டுகிறாள்.
குழந்தையின் முகம் வெடுக்கென மறுபக்கம் திரும்பிவிடுகிறது. ‘அம்மாடி! என்ன குழந்த இவ.

III» GIs. விஜயன் K(IIII 165 இதயம் நொறுங்குகிறது. ஆவென்ற அதிர்வில் நடு நடுங்குகிறது.
டாக்ஷியின் மின்னலோட்டம். மரங்கள், வீடுகள், வாகனங்கள் விரைவாகப் பின்நோக்கி மறைகின்றன. கெளசல்யாவின் கண்கள் அவற்றில் நிலைகுத்தி நிற்கின்றன.
{) g) (h
வீட்டில் அமர்க்களம்.
அக்கம் பக்கத்துச் சனமும் கெளசல்யாவின் நண்பிகளுமாக நிறைந்துவிட்டார்கள். ஒரே கேள்வி மழை.
கெளசல்யா சலிக்கவே இல்லை. மாரி மழையாக சளசளவென அனுபவங்களைக் கொட்டிக்கொண்டே
இருக்கிறாள்.
மூன்று வருடங்களாக மூட்டை மூட்டையாக நெஞ்சிற்குள் கட்டி வைத்திருப்பவைகளைக் கொட்டிவிட ஆவல். அவசர அவசரமாக வார்த்தைகள் சிதறலாகின்றன.
ஜெகன் வந்திருப்பவர்களுக்கு குளிர் பானம் கொடுப்பதில் கவனமாகவிருந்தான். அனைவரையும் உபசரிக்க வேண்டும் என்ற தடுமாற்றம் அவனுக்கு.
மகள் சுகன்யா..!
சிறுமி ஜெகனை விட்டபாடில்லை. விரல்கள்
இரண்டினை வாயினுள் நுழைத்துக்கொண்டு உதடுகள் உப்ப சூப்பியவண்ணம், இன்னொரு கையினால் தந்தையின்

Page 85
166 像 அன்னையின்நிழல்
களிசான் முனையை இறுக்கமாக்ப் பிடித்தவாறே அவன் ஒடும் திசையெல்லாம் இழுபட்டுக் கொண்டிருக்கிறாள்.
இத்தனை அமர்க்களத்திலும் கதீஷைக் காணவில்லை.
எங்கே போய்விட்டான்.
தூசி பறக்க மைதானத்தில் மும்முரமாக புட்போல் விளையாடிக் கொண்டிருந்தான்.
அம்மா மூன்று வருடங்களுக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து திரும்பவும் வந்து சேர்ந்தது அவனுக்கு ஒரு பெரிய விஷயமாக இல்லையோ?
அபுதாபி புராணத்தின் கதா காலட்சேபம் முடிந்தபாடாய் இல்லை.
கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கவனமெல்லாம் அவள் என்ன கொண்டுவந்தாள் என்பதிலேயே இருந்தது. விசேஷமாக தமக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றதும், காக்கைக் கூட்டமாக ஒவ்வொருவராக மெல்ல மெல்ல கலையலானார்கள்.
அந்திசாய்ந்து வருகிறது.
உடை கூட மாற்றாமல் புராணம் பாடிக் கொண்டிருந்த கெளசல்யா களைத்துப் போனாள். கட்டிலில் லேசாகத் தலைசாய்ந்தவள் பிணம்போல் ஆழ்ந்த துயிலில் அடங்கிவிட்டாள். பல நாட்களின்தூக்கம் இதோ கிடைத்துவிட்டது என்பது போல ஒரு அசுரத் தூக்கம்.
0 {) ()

III) G35. விஜயன் <(III) 167
இரவு சிறகுகளின் விரிசல், வானம் கன்றிச் சிவக்கிறது. அடிவானில் கடும் சிவப்பு இரத்தம்.
வீட்டு வாசலில் சிறுவர்களின் ஆலோலம். மைதானத்தில் சதீஷrம் செய்யதும் சண்டை பிடிக்கிறார்களாம்.
வாசலில் சிறுவர்களின் கத்தல். ஜெகன் வெலவெலத்துப் போனான். மைதானத்தை நோக்கிப் பாய்ந்தோடினான். மைதானத்தில் தூசி மண்டலம் குண்டுவெடிப்பு புகை போல் எழுந்து கொண்டிருக்கிறது. அதன் நடுவில் சதீசும், செய்யதும் ஆக்ரோசமாகக் கட்டிப் புரண்டு கொண்டிருக்கிறார்கள்.
அடடா, சண்டை பிடிப்பதில் இருவருமே அசகாயச் சூரர்கள்தான். கட்டிப் பிடிப்பதும் எட்டி உதைப்பதும், பற்களை நரநரவென கடித்தவாறு தாக்குவதும் ஆஹா! மூர்க்கமான சண்டை.
சதீஷைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கோபத்தில் எகிறிக் குதிக்கும் அவனுக்கு சட்சட்டென இரண்டு தட்டுக்களைத் தட்டி இழுத்துக்கொண்டு போவதே ஜெகனுக்குப் பெரும்பாடாகி விட்டது.
குழாயடிக்கு இழுத்துச் சென்று நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு தேனீரையும் ஊற்றிக் கொடுத்தபோது கெளசல்யாவின் நினைவு வருகிறது.
படுக்கை அறையினுள் எட்டிப் பார்த்தான்.

Page 86
168 像 அன்னையின்நிழல்
கட்டிலில் கைகால்களை விரித்துப் படுத்துக் கிடக்கும் கெளசல்யாவின் கோலம் நெஞ்சை துணுக்குறச் செய்கிறது. இதென்ன இப்படி ஆபாசமாகப் படுத்துக் கிடக்கிறாள்.
நெஞ்சக் குருத்தில் திமுக்கென ஓர் அடி விழுகிறது. ஊமை அடி. விண்ணென வேதனை.
‘வேறொரு நாட்டில் அந்நிய ஆடவர் வசிக்கும் வீட்டில் மூன்று வருடங்களாக கெளசல்யா இப்படி அலங்கோலமாகவாதூங்கினாள்?
நெஞ்சில் வெறுப்பான நீர்க்குமிழிகள். அருவருப்பான நீர்வட்டங்களின் சலனம்.
‘சே! சே! இவள் இப்படி..!’
சுவாமி விவேகானந்தர் மீது ஆழ்ந்த பற்றுடையவன் ஜெகன், அவர் படத்திற்கு விளக்கேற்றி விட்டு வெகுநேரம் வணங்கினான். கண்களில் நீர் ததும்பி பனிக்கிறது. அவனையே ஒட்டிக்கொண்டு நின்று விரல்களைச் சூப்பிக் கொண்டிருக்கும் சுகன்யா தலையைத் தூக்கி அப்பாவின் முகத்தைப் பார்க்கிறாள். விசும்பலின் ரேகைகள் அந்த முகத்தில் நெளிந்தோடுகின்றன.
அப்பாவின் மனத்தடாகத்தில் ஏற்பட்டுள்ள சலனங்களை அவள் பிஞ்சு மனம் உணர்கின்றதா என்ன? இரவுச் சாப்பாட்டின்போது கெளசல்யாவைக் கூப்பிடுவதற்காக ஜெகன் படுக்கையறைக்குள் மறுபடியும் எட்டிப் பார்த்தபொழுது அவள் அதே அலங்கோல நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கிறாள்.
அமைதியான அந்த அலங்கோல உறக்கம் அவனைப் பெருமூச்சு விடச் செய்கிறது. வெளிநாடு போவதற்கு

III)- G3s5. விஜயன் «(MEI) 169
முன்னர் அவள் ஒருபொழுதும் இவ்வாறு உறங்கியதை அவன் காணவில்லை.
அந்த நாட்களில்...! வீட்டுக் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு அவள் படுக்கை அறை வருகின்றபோது ஜெகன் நித்திரை உலகில் வெகுதூரம் பிரயாணம் செய்திருப்பான்.
விடியலில்,
அவள் தட்டியெழுப்புகின்றபோது அவன் விழிகள் விரியும். ஆவி பறக்கும் தேனீர்க் கோப்பையுடன் அவள் நிற்பதைப் புன்னகையுடன் பார்ப்பான்.
சில நாட்களில் நடுச்சாமங்களில் அவனுக்கு விழிப்பு வரும். அப்பொழுது அவன் காணும் காட்சி நெஞ்சை அறுக்கும்.
நிமிர்ந்து நீண்டு படுத்துக்கிடப்பாள் கெளசல்யா. சதீஷின் தலை அவள் நெஞ்சில் சாய்வாகச் சயனித்துக் கிடக்க, அவள் கால்களின் இடுக்கில் விரல்களைச் சூப்பியவாறே சுகன் குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். கெளசல்யாவின் ஒரு கை கதீஷை இறுக அணைத்துக் கிடக்க மறு கை சுகனின் கால்களைப் பிடித்தவாறிருக்கும்.
‘எப்படி கௌசல்யாவால் இப்படித் தூங்க முடிகிறது?’ என ஜெகனின் மனம் தவிக்கும். குழந்தைகளை எடுக்க முனைகின்றபோது கெளசல்யா திடுக்கென விழித்து
‘என்னங்க!’ என்பாள்.
சதீஷ”ம், சுகனும் அம்மா குஞ்சுகள். அப்பா என்றால் இருவருக்கும் அலர்ஜிதான்.

Page 87
170 亂 அன்னையின்நிழல் ଝି
அந்த வரலாறு மூன்று வருடங்களில் தலைகீழாகி விட்டதே!
பெற்றோர், உறவினர் ஆகியோரின் உறவுகளை இழந்து வாழ்வில் இணைந்தவர்கள் கெளசல்யாவும் ஜெகனும் தனிக்குடித்தன வாழ்வில் சதீஷ் கிடைத்தபோது தொழில் பறிபோய்விட்டது. அதன் பின்னர் என்னென்னவோ செய்தும் வாழ்க்கைக் கடலில் கரையேற முடியவில்லை.
அப்பொழுதுதான் வெளிநாடு செல்லும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தோறும் ஏறி இறங்கினான். சுளை சுளையாக அவர்கள் கேட்ட தொகைகளை செவிமடுத்ததும் திக்குமுக்காடிப் போனான். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது? அந்த எண்ணம் பறந்தோடி விடுகிறது.
“ஏன் ஜெகன், கெளசல்யாவை ஹவுஸ்மேய்ட்டாக அனுப்பி வையேன். இரண்டு வருஷம்தானே!’ என அவனுடைய நண்பன் ரகு சொன்னதும் ஜெகனுக்கு உடல் முழுவதும் திகுதிகுவென எரிதழல் பரவும் உணர்வு ஏற்படுகிறது.
“இதுல என்ன பிழை ஜெகன். ஊரு உலகம் கேவலமாகப் பேசும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நாங்க பட்டினி கெடந்து சாக வேண்டியதுதான்!”
யோசனைகள் பல இரவுகளும் பகல்களுமாக ஜெகனை அலைக்கழித்தன. ஒரு நாள் நடு இரவொன்றில் கெளசல்யாவைத் தட்டி எழுப்பிய ஜெகன், “கெளசல், வெளிநாடு போரீயா?” என நா தழு தழுக்கக் கேட்டான். நீரில் ததும்பிக் கிடக்கும் ஜெகனின் கலங்கிய கண்களை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த கெளசல்யா

III.)> G335. விஜயன் «III 171
அவன் நெஞ்சில் முகம் புதைத்து “போறேன்’ என
மெதுவாக முணுமுணுத்தாள். ஜெகனின் நெஞ்சில் அவள் கண்ணின் ஈரப்படிவுகள் ஊர்ந்தன. () {0 ()
LDTர்கழிப் பணி. நனைந்த உலகம் அமைதி சயனத்தில்,
டாங் டாங்! டாங்! டாங்!
சுவர்க்கடிகாரம் நான்கு முறை அறைந்துவிட்டு ஒய்கிறது.
கெளசல்யா விழித்துக் கொள்கிறாள்.
‘எங்கே இருக்கிறேன்? விழிகள் கேள்வியுடன் சுழல்கின்றன.
அடேயப்பா, எப்படி ஒரு தூக்கம். இப்படி தூங்கி எவ்வளவு காலமாச்சி. முனகிக் கொண்டு நெட்டி முறிக்கிறாள். சில கணங்கள் கண்களை மூடி அபுதாபி நினைவுகளில் ஆழ்ந்துவிடுகிறாள். பனிமூட்டம் நீங்குவது போல் உணர்வுகளின் லயிப்பு.
அபுதாபியில்,
அந்தப் பெரிய மாளிகையில் சொகுசான கட்டிலில் கை கால்களையெல்லாம் ஒர் அட்டை போல் சுருட்டி, சின்னச்சின்ன சத்தங்களுக்கெல்லாம் திடும்திடும்மென விழித்து, தூக்கம் இழந்து அவஸ்தையுடன் கழிந்துபோன இரவுகள். தூக்கமில்லாமலே மூன்று வருடம். இங்கே இந்த மூட்டைப் பூச்சிகள் நிறைந்த கட்டிலில் எப்படியொரு தூக்கம். கெளசல்யாவிற்கு அதிசயமாகவிருக்கிறது. அந்த அதிசய சுகானுபவத்தில் தன்னை மறந்து லயித்து கட்டிலில்

Page 88
172 СЭНөāтарвлufflectт8g26b
கொஞ்சநேரம் அப்படியே கைகால்களை நீட்டி ஆசுவாசப்படுத்துகிறாள்.
மகள் சுகன்யாவின் முனகல் சப்தம் மெலிதாகச் செவிகளில் விழுகிறது.
‘கொழந்தை ஏதும் கனா கண்டுட்டாளோ!’ என்ற அச்சம் மனத்தை வெருட்ட சட்டென கட்டிலிலிருந்து எம்பிக் குதித்தாள்.
அடுத்த அறையில் கணவனும் குழந்தைகள் இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். சுகனின் கைகள் ஜெகனின் கழுத்தைச் சுற்றிக் கிடக்கின்றன. அப்பா எழும்பி போய்விடக் கூடாது என்ற பயம் அதில் இருந்தது. உதடுகளில் லேசான நடுக்கம். ஏதோ முணுமுணுப்பு.
கெளசல்யா மென்மையாகப் புன்னகைக்கிறாள். ‘குழந்தைகளை அன்போடும் அக்கறையாகவும் பார்த்துக் கொள்கிறார்.
அவள் மனம் பூரிப்புடன் அசைபோடுகிறது. கண்களில் நீர் மணிகள் திரள்கின்றன.
குழந்தையின் கரங்களை மெதுவாகத் தளர்த்தி கன்னத்தில் முத்தமிடுகிறாள்.
'ஆ சுகன்யா சிரிக்கிறாளே” கௌசல்யா பொங்கிப் பூரித்தாள். அடுத்த முத்தத்தை கன்னச் சதையைப் பிய்த்து பிடுங்குமாற்போல் பதிக்கிறாள்.
‘வீலென்ற அலறல். வீட்டையே அதிரவைக்கும் வீறல் மின்னல் வேகத்தில் வெடித்துக் கிளம்புகிறது.

ா கே. விஜயன் n 173 ஜெகனும் சதீஷம் அலறியடித்துக் கொண்டு எழுந்து விடுகிறார்கள்.
மிரட்சியடைந்த ஜெகன் சட்டெனக் குழந்தையைப் பிடுங்கியெடுக்கின்றான். கௌசல்யாவின் கன்னத்தில் “பளாரென பேய் அறை விழுகிறது.
“தேவடியாளே! கொழந்தையை என்னடி செய்கிறாய்?’ என அவன் அலறிய அலறலில் கெளசல்யா வெலவெலத்துப் போனாள்.
“என்ன சொன்னிங்க, தேவடியாளா?’ அவள் நெஞ்சம் கதறக் கேட்டாள்.
{) 0 {}
முன்று வருடப் பிரிவு, காதலில் இணைந்து தம்பதிகளான இருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய அந்நியத்தை ஏற்படுத்திவிட்டது.
கெளசல்யாவால் உறங்க முடியவில்லை. முத்துச்சரம் போல் அவள் கண்களில் நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது.
மார்கழி பணியில் ஊர்க்கோடியிலுள்ள கோயில் மணியோசை ஒலித்தபோது கெளசல்யாவின் அறையில் நெருப்பின் வெளிச்சம் தெரிகிறது. அவள் மறுபடியும் அபுதாபி செல்வதற்கென கொண்டுவந்த ரிட்டேன் டிக்கெட் அக்கினிக்கு இரையாகிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கெளசல்யாவின் முகத்தின்மீது செந்தழலாக ஒளிபரப்புகிறது.
CO3

Page 89
174
பழனிக்கு மாதம் தவறாமல் கடிதங்கள் வந்துவிடும்.
அப்பொழுது வீட்டு வாசலில் ஒரே சனக்கூட்டம்தான். ஆமாம். அயல் குடியிருப்பாளர்கள் கூடி விடுவார்கள். நரை கண்டதுகள் முதல் இளம் மீசை மயிர் துளிர்க்காததுகள் வரை குழுமி நிற்கும்.
எல்லாம் கேலியும் கிண்டலும் செய்வதற்காகத்தான். எல்லோருக்கும் அப்படியொரு கேலிப் பொருள் ஆனவன்தான் பழனி
கனகம் நாலு எழுத்துக்கள் படித்திருந்தாள். பிழைகள் மலிந்து கிடந்தாலும் நிறைய எழுதுவாள். என்னென்னவோ எழுதுவாள். ஒவ்வொரு கடிதமும் கிட்டத்தட்ட பத்து பக்கங்களைத் தாண்டிவிடும்.
அவள் தன் கணவனான பழனிக்கு எழுதும் கடிதங்களில் குவைட் நாட்டைப் பற்றியும், அவள் வேலை செய்யும் வீட்டைப் பற்றியும் மற்றும் அன்றாட வேலைகள், வீட்டிலுள்ளவர்கள், சிறியோர், பெரியோர் விவரங்களையும் அவர்களுடன் போனது வந்தது, பேசியது, சிரித்தது, சண்டை பிடித்தது. இப்படி ஒவ்வொரு சம்பவங்களையும் ஒன்று
 

III.)> G3&s. விஜயன் (H) 175
விடாமல் செறிவுடன் வரிசையாக எழுதுவாள். கடிதம் ஒரு கதைக் கொத்தாகத்தான் திகழும்.
பழனி ஒர் அசடு தான் ஒருமுறையாவது மனதிற்குள் படித்துவிட்டு அப்புறமாகப் பிறருக்குப் படித்துக் காண்பிப்போமே என்று சிந்திக்கும் அளவிற்கும் மன வளர்ச்சி இல்லாதவன்.
எல்லாரும் ஆவல் கொப்பளிக்கப் பர்ர்த்துக் கொண்டிருக்கும்பொழுதே படபடப்புடன் கடிதக் கவரைக் கிழித்து மழை கொட்டுவதுபோல சளசளவென்று வாசிக்கத் தொடங்கிவிடுவான்.
அது அருவருப்பான செயல் என அவன் நினைத்தால் தானே!
இதற்காகப் பெருமைப்படும் மனம் அவனுடையது.
அவன் கடிதம் வாசிப்பதை எவராவது தற்செயலாகக் கேட்காமல் விட்டுவிட்டார்கள் என அறிய வந்தால் பழனி துடிதுடித்துப் போய்விடுவான். தூக்கமில்லாமல் தவிப்பான். அவர்களை மெதுவாக அழைத்துவந்து, வளர்ந்தவர்கள் என்றால் ஒரு சிகரெட்டை வாங்கிக் கொடுத்தும் சிறுவர்கள் என்றால் ஒரு டொபியை வாங்கிக் கொடுத்தும் வீட்டில் உட்கார வைத்து முதலிலிருந்து கடைசி வரை இராமாயணம் போல் வாசித்துக் காட்டுவான். அப்பாடா! அதற்குப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு என்பனவெல்லாம்.
அயல்வாசிகளும் லேசுபட்டவர்கள் அல்ல. கனகத்தின் கடிதத்தை பழனி ஒரு முறையாவது வாசித்துக் காட்டாவிட்டால் நித்திரை இழந்து தவிப்பார்கள். ஒடு மீன் ஒட உறுமின் வரும் அளவு காத்திருக்கும் கொக்கைப்

Page 90
176 w 亂 ജ്ഞിമ്ന
போல கடிதத்தில் ஏதேனும் ருசிகரமான தகவல் வருமா? கனகம் எழுதியிருப்பாளா? என நிஷ்டையில் காத்திருப்பார்கள்.
தான் வேலை செய்யும் வீட்டிற்கு யாரேனும் விருந்தாளிகள் வந்தார்கள் என்றோ அல்லது வீட்டிலுள்ள அரபிக் கிழவன் செல்லமாக தூஷணத்தில் ஏசி முதுகில் கிள்ளினான் என்றோ அவள் எழுதியிருந்தாள் போதும், பல்லெல்லாம் வெளியில் தெரிய, அப்படி பற்கள் ஏதும் இல்லை என்றால் பொக்கை வாய் இரண்டாகக் கிழிய ரொம்பவும் விரசமாகச் சிரிப்பார்கள். கண்களில் மதம் கொப்பளிக்கும். இப்படி நமைச்சலும் குமைச்சலுமாக வாழும் விநோதமான பிரகிருதிகள்.
இந்த வசதிக் குறைவான குடியிருப்புகளில் நல்ல புஷ்டியான வாலிபக் குருத்துக்களும் இருக்கின்றன. இந்த இளம் வட்டங்களுக்கெல்லாம் கனகம் மீது ஒரு கண்தான். அக்கா பழனிச்சாமியுடன் இங்கே குடிவந்த நாட்களில் சாடைமாடையாக ஜொள்ளுவிட்டுப் பார்த்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது இந்த அண்ணனுக்குக் கிடைத்த அசட்டு அக்கா ஒரு கொள்ளிக் கட்டை என்று. நெருங்கவே முடியவில்லை. நெருப்பாகவிருக்கிறாள்.
படைத்தவனுக்குத்தான் எவ்வளவு பாரபட்சம். குளுகுளுவென அழகு தேவதை ஒன்றை இந்த அரைக் கிறுக்கனுக்கு ஜோடியாக்கிட்டானே என அங்கலாய்த்துக் கொண்டார்கள். வீடுகளுக்குள் பொறாமை வெடிகள் சப்தித்தன.
() {) ()

"li> G3as. 6Sgguu6öI *lmIII 177 கனகம் குவைட் சென்று மூன்று வருடங்கள் வெகு வேகமாகக் கரைந்துவிட்டன.
கடிதங்கள் வருவதும், வாசலில் சனங்கள் கூடுவதும், பழனி கடிதங்கள் வாசிப்பதும் இன்னும் அமர்க்களமாக நடந்து கொண்டுதாணிருக்கின்றன.
இன்றும் அவன் வந்துவிட்டான். தபால்காரன் அல்ல; தந்திக்காரன். தந்தியைப் பெற்றுக்கொண்ட பழனி பரபரவென தலையைச் சொறிந்து கொண்டான்.
தந்திக்காரன் இழவுச் செய்தியை அல்லவா கொண்டு வருவான். குய்யோ முய்யோவெனப் பெரும் ரகளை. பழனி கையில் தந்தியை எடுப்பதற்குள் கலவரம் உண்டு பண்ணிவிட்டார்கள். பழனி கடிதம் வாசிப்பதைக் கேட்க அந்த ஆத்மாக்களுக்குத்தான் எத்தகைய இதயத்துடிப்பு. சமருடன் சாகிறார்களே!
பாடசாலை விடுமுறைக் காலம் ஆனதால் பையன்கள் வாசலில் குழுமிவிட்டார்கள்.
பழனி அரண்டுவிடவில்லை. இதிலெல்லாம் அவனுக்குப் பெருமைதானே! என்றாலும் அவன் மனத்தில் கோடு கிழித்துக்கொண்டிருந்த வெளிச்சம் ஒன்றே ஒன்றுதான்.
தந்தி என்றால் இழவுச் செய்திதானே வரும்’ என்ற எண்ணம்தான் அது.
அவன் தந்தியைக் கையில் எடுத்துக் கொண்டாலும் வழக்கம்போல் கிழித்து என்ன விவரம் இருக்கிறது என

Page 91
178 அன்னையின்நிழல் * S LSLSLSCLLLLSLSSSSLLSLSSGSLkLGGMSS
வாசிக்காமல் வீட்டிற்குள் சென்றான். வாசலில் ஆவலுடன் காத்திருக்கும் அனைவரும் கிழவிகளிலிருந்து குமரிகள் வரை, கிழவர்களிலிருந்து இளம் பையன்கள் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
என்ன என்பதுபோல கண்களைச் சிமிட்டி கேள்வி கேட்டுக் கொண்டார்கள்.
ஒரு நாளுமில்லாமல் பழனி வினோதமாக நடந்து கொள்கிறானே என சங்கடமும் கவலையுமாக மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டார்கள்.
அவன் வீட்டிற்குள் நடந்தான். முழுக்கூட்டமும் திகைப்புடன் அவனைத் தொடர்ந்தது. ஊர்வலம் போவது போலே உள்ளே வந்ததும் தந்தியைக் கிழித்தான். மருண்ட விழிகளுடன் ஒவ்வொரு சொற்களாகப் படித்தான். அப்பப்பா பாசம் பொங்கித் ததும்பும் அந்தப் பசுமையான கண்களில்தான் எத்தனை தகிப்பு, தவிப்பு.
விழிகள் எழுத்துக்களில் மேய்ச்சலிட்டன. பின்னர் பாம்பு கொத்தினாற் போல ஆவெனக் குதித்தான் பழனி. என்னவோ நடந்துவிட்டது என்பதைப் போல அவன் பின்னால் வந்தவர்களும் சட்டெனக் குதித்தார்கள்.
குதித்தவன் வாசுற்பக்கமாகத் திரும்பி ஓடி வரவே பின்னால் வந்தவர்களும் ஓடத் தொடங்கினார்கள். களைக்கக் களைக்க முன்னால் பாய்ந்து கொண்டிருந்த கடலை விற்கும் பூங்காவனம் பாட்டி, “ஏலே பழனி! என்னடா சமாச்சாரம்?’ என அலறினாள்.
“கனகம் வாரா, கனகம் வாரா?”

ாம் கே. விஜயன் 179 பாலைவனத்தில் மழையைக் கண்டவன் ஆனந்தக் கூத்தாடுவதுபோல பழனி கும்மாளமிட்டான்.
அசைய மறந்ததுபோல் அனைவரும் சட்டென நின்றார்கள். ‘அட பாவிப்பய மவனே!’ என பாட்டி கன்னத்தில் கைவைத்து பொக்கை வாய் குழிய கரிச்சிக் கொட்டினாள்.
கொல்லென சிரிப்பலைகள் கும்மாளமுடன் வெடித்துக் கிளம்பின. அதற்குப் பிறகு பையன்கள் பழனியை நகரவிடவில்லை.
கனகம் குவைட்டிலிருந்து வருகின்றபொழுது வெறுங்கையை ஆட்டிக் கொண்டா வருவாள். ஆப்பிள், டொபி, சொக்கலேட், டீ சேர்ட் இப்படி என்னென்னவோ அள்ளிக் கொண்டல்லவா வருவாள்.
கொஞ்சம் வளர்ந்த பையன்களுக்கு அதிலும் அந்நாட்களில் ‘ஜொள்ளுவிட்ட முத்தின கரும்புகளுக்கு வேறு மாதிரி எண்ணங்கள்.
‘கணகம் அக்கா இப்ப எப்படி இருப்பாள்?’ என்ற நப்பாகைதான் அது.
கனகம் அக்காவும் இந்தப் பழனி கிறுக்கனைப் போலவே அசல் நாட்டுக்கட்டைதான். எப்படிப் பேசணும், எதற்குச் சிரிக்கணும், எப்பொழுது சிரிக்கணும் என்று தெரியாது. அடச்சீ, கொஞ்சம் நாசுக்காகப் புடவையாவது கட்டத் தெரியாது. ஆனால் அழகோ அழகு. வெள்ளை வெளேறென சொக்கவைக்கும் அழகு. சலசலவென வெற்றிலை சாப்பிட்டு புளிச் புளிச்சென சாற்றைக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் அருவருப்பு தரும்வண்ணம்

Page 92
18O 露 அன்னையின்நிழல்
துப்பித் துப்பித் O திரிந்தாலும் ஜம்பு பழம் போல் கனிந்து சிவந்து கிடக்கும் அந்த உதடுகளை ஒரு கடிகடிக்கலாமென அவர்கள் மனம் அலைபாயும். ஒசையில்லாமல் வெண்பற்கள் அனைத்தும் பிரகாசிக்க சிரித்தால் பூரண சந்திரனோ என பிரமை அலைக்கழிக்கும்.
கனகம் பழனியின் அத்தை மகள். சின்ன வயது முதலே ஒன்றாகப் பழகி வந்தவர்கள். ஒரே மகளை முறை மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்ததும் அத்தை கண்களை மூடிவிட்டாள். பிழைப்பிற்கு ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற எண்ணமுடனே கொழும்பு வந்து இந்தக் குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார்கள்.
இருவரும் சுறுசுறுப்பானவர்கள்; என்ன பாடுபட்டாவது நாலு பணம் தேடிக்கொண்டு வந்துவிடுவான் பழனி, கனகமும் சும்மா இருக்கமாட்டாள். அரிசி இடிப்பாள். உலக்கையை கைமாறி மாறி வியர்வை ஒழுக ஒழுக அவள் இடிப்பதே தனி அழகுதான்.
கனகம் நல்ல சிக்கணக்காரி. பழனி கொண்டுவரும் பணத்தைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பாள். எது எப்படிப்போனாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சினிமா என்றும் கடற்கரை என்றும் இருவருமே ஊர் சுற்றப் போய்விடுவார்கள். இந்தச் சின்ன வீடுகளில் வாழும் வறிய மக்கள் விடியற் கரைசல் தோன்றுவதற்கு முன்னரே தொழில்களுக்கு ஒடிவிடுபவர்கள்.
இரவில் பத்து மணி அளவிலே குடியிருப்புகள் மயானமாகிவிடும்.
பழனி தம்பதியரின் வீட்டில் விளக்கு எரியும். இருவரும் சளசளவென கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

Illu)- Gass. விஜயன் K(SII) 181 கும்மாளமும் கெக்கலிப்பும் இரவின் அமைதியை சிதறடித்துக் கொண்டிருக்கும். அன்று பார்த்துவந்த சினிமாவையும் அதிலுள்ள நகைச்சுவை, காதல், சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றையும் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். அந்தச் சிரிப்பலைகளில் காதல், பாசம், விரசம், அன்னியோன்யம், பரஸ்பரம் இழைந்தோடும்.
அன்பின் பிணைப்பாகத் தவழ்ந்தோடும் அந்தச்
சத்தங்கள் ஒவ்வொரு வீடாக நுழைந்து நுழைந்து வருகின்றபொழுது எத்துணையோ கட்டைகளை ஏக்கப் பெருமூச்சுவிடச் செய்யும்.
ஒரு நாள் திடுதிப்பென பழனியின் நெஞ்சில் ஒர் ஆசை நெருப்பு கொழுந்துவிட்டது. அவன் கேட்டான்:
“ஏன் கனகு! வெளியூர் போறியா என்ன?” “ம் எனக்கு ஏலாது.”
“அட போம்மா, இரண்டு வருஷம் பொய்ட்டு வந்தா சோக்கா வாழலாம்.”
“என்ன சொல்ற நீ?”
“புள்ள அங்க நல்ல சம்பளம். ரெண்டு வருஷம் வேலைசெஞ்சா போதும். வாழ்க்கை பூரா சந்தோசமா வாழலாம். அது மட்டுமா? நீ மகாராணி மாதிரி ஆயிடுவே.”
அவன் கண்களில் பளிச்சிடும் வெளிச்சத்தைப் பொங்கிப் பிரவாகிக்கும் ஆவலுடன் பார்த்தவண்ணம் அவள் 'உம்' கொட்டினாள்.

Page 93
182
அவளுக்கு அவனைப் பிரிந்திட மனமில்லை. ஆயினும் அவன் அடிக்கடி அப்படிச் சொல்லவே அவள் மனத்திலும் அந்த எண்ணம் முளைத்துவிட்டது.
காரியங்கள் கிடுகிடுவென நடக்கலாயின. மிக மிக எளிதிலே அவளுக்கு விசா கிடைத்துவிட்டது. முழுக் குடியிருப்பே கட்டுநாயக்கா விமான தளத்திற்கு படையெடுத்தது.
கனகம் விமானம் ஏறியபொழுது பழனியின் உடல் லேசாக நடுங்கியது. விமானம் நகர்ந்து ஆகாயத்தில் மிதந்து, மேக வெளியை ஊடறுத்து மறைந்தபொழுது அவன் கண்களில் நீர் நிறைந்தது. W
வெகுநேரம் விக்கித்துப் போய் நின்றான்.
நேத்து மாதிரி இருக்கிறது.
மூன்று வருடங்கள் மிகமிக வேகமாகத்தான் ஓடிவிட்டன.
{0 ()
கினகம் குவைட்டிலிருந்து வந்து விட்டாள்.
அடேங்கப்பா அவள் அழகை என்னவென்றுதான் சொல்வது. அழுக்குச் சாறியை தாறுமாறாக அணிந்திருக்கும் பொழுதே எல்லோர் கண்களையும் கொத்தி எடுத்தவள் கமகமவென நாசியைப் பிடுங்கும் ஜெஸ்மின் வாசனையுடன் குங்குமக்கலர் சாறி அணிந்து அதிலும் இந்த பம்பாய் அழகிகள் அணிவது போல வெள்ளை வெளேரென்ற பட்டர் கலர் இடுப்பும், அக்குள் தெரியும் கையில்லாத
 

III) (835. விஜயன் 4ull 183
சட்டையுடன் கைப்பையை சுழற்றிக்கொண்டு வந்தபொழுது குடியிருப்பே கும்மாளித்துப் போனது.
பழனிச்சாமி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்த்தான். அவனுக்கும் பயLாகவிருதது இது என்னுடைய கனகம்தானா? ஆனால் அளன் : :பெல்லாம் ஒரு நொடியில் மறைந்துவிட்டது. ஒரு பெரிய பணக்கார குடும்பத்து எசமாணியைப் போல தோன்றும் கணகம் இந்தப் பழனியை மறந்துவிடுவாளா என்ற பயம் வாழ்க்கையில் முதன் முறையாக ஒரே ஒரு நொடி அவன் நெஞ்சுக்குள் நுழைந்து அருட்டுகின்றது.
ஆனால் அவள்.!
இவ்வளவு சனம் வரிசையாக நின்று பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே வியர்வை ஒழுக, அழுக்குத் துணியுடன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் கணவனைக் கொஞ்சமும் கூசாமல் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
() 0 ()
கிணகம் வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. வாழ்வே மாறிவிட்டது. வீடு கவர்ச்சிகரமானதாகிவிட்டது. அவள் குவைட்டிலிருந்து நிறைய பொருள்களைக் கொண்டுவந்திருந்தாள். டி.வி. டெக், வீட்டுத் தளவாடங்கள் என ஒரே அமர்க்களம். அவளைத் தேடிக்கொண்டு நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்கள் மேடம்' என மரியாதையுடன் அழைத்தார்கள். அவர்களிடம் கடவுச்சீட்டுக்களைப் பெற்று அவற்றை வெளியூருக்கு ‘பெக்ஸ் செய்து விசா வரும்வரை காத்திருந்து

Page 94
184 锻 அன்னையின்நிழல் 鹦
அவர்களையும் குவைட் அனுப்பி வைக்கும் வேலைகளை அவள் செய்தாள்.
இப்பொழுதெல்லாம் பழனி மிகவும் பிசியான மனிதனாகிவிட்டான். சினிமா என்றும் கடற்கரை என்றும் கனகத்துடன் சுற்றும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. அவளை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகவேண்டும் போல ஆசையாக இருக்கும். ஊரே உறங்கிவிடும் வேளையில் கலகலவென பேசிச்சிரிக்க வேண்டும்போல ஆவலாகவிருக்கும்.
ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. இரவு நேரங்களில் கனகம் தொலைபேசியை எடுத்தால் மணித்தியாலக் கணக்காக பேசிக் கொண்டிருப்பாள். சிரித்துச் சிரித்துப் பேசிக் கெண்டிருப்பாள்.
அந்தப் பேச்சு, அந்தச் சிரிப்பு அவனை ஏக்கமுறச் செய்து விக்கித்துப் போகச் செய்யும்.
வார இறுதி நாட்களில் பழனிக்கு எங்கும் அசைய முடியாது. ஆபீசின் முழுப் பொறுப்பும் அவனிடம் ஒப்படைக்கப்படும்.
மேடம் வெளிநாட்டு அரபி ஸ்பொன்ஸருடன் வெளியே சென்றார்கள் என்றால் இரண்டு மூன்று நாள்களின் பிறகுதான் வருவார். வரும்பொழுது மிகவும் களைத்துப் போய் மயக்கமான கண்களுடன்தான் வருவார். பாவம், மேடம் இரண்டு மூன்று நாள்களும் ரொம்பவும் பிஸி. வீக்கெண்டுகளெல்லாம் இனிமேல் இப்படித்தான்.
C23
 

185
கிளுத்துறைச் சிறைச்சாலை.
தூக்கமற்ற இரவு. இமைகள் திறந்தபடி, அதன் அமர்ந்து சுவரில் சாய்ந்தபடி,
“ஒக்கம லேஸ்த்தி வென்ட அத நடுவட்ட யன்ட GourrGasts”
சிறைக் காவலனின் குரல்,
தூங்க மறந்ததால் கனத்துப்போன இமைகளுக்குள் ஈட்டியாகிவிட்ட கண்கள் சிறைச் சுவரில் குத்திட்டு நிற்க கண்மணிகளில் ஒர் ஆனந்தச் சலனம்.
சட்டென இடுப்பை நிமிர்த்தி எழுந்து முழங்காலை மடித்து உட்கார்ந்து கொண்டான்.
‘அம்மா, மகன், மனைவி ரஞ்சனி அனைவரையும் இன்று பார்க்கலாம்
மன நதியில் இன்னும் அந்த நீரோட்டம்தான். சிறை அறைக்குள் பரபரப்பு. எல்லோரும் எழுந்துவிட்டார்கள். சில நிமிடங்களில் நீதிமன்றத்தில் நிற்கவேண்டும்.

Page 95
186 ceasrabaoru 56 figeio 露
ଞ
‘அப்பப்பா இன்றாவது விசாரணை நடைபெறட்டும். வழக்கு விசாரணையில் தன்னை குற்றவாளி அல்ல என நிரூபிப்பதற்கு ரஞ்சனி ஆதாரங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருப்பாள். வக்கீல்துரைசாமி ஐயாவும் இலேசாகச் சமாளிக்க முடியாதவர். எப்படியோ பெரும் தொகை பணத்தை ரஞ்சனி புரட்டி அவரிடம் கொடுத்து விட்டாள். நிச்சயம் எனக்குச் சார்பாகத் தீர்ப்பு கிடைத்துவிடும்.’
சுதனின் நினைவுகள் முறிபடாத நாணலாக நெளிந்தும் வளைந்தும் சுற்றிச் சுற்றி ஒரேவிதமாகச் சுழன்று சுழன்று நிமிர்ந்தன.
“என்ன சுதன் ஆனந்தம் கொப்பளிக்குது?”
“இல்ல நிருபன் ரெண்டு நாளைக்கு முந்தி வைப்பின்ட லெட்டர் வந்துதல்லோ அவ இருந்த நகை நட்டையெல்லாம் வித்துப்போட்டு துரைசாமி ஐயாவைப் பிடிச்சி வழக்கை இந்த முறை ஒரு கை பார்க்கிறேன் என்று எழுதியிருக்கிறாள். இந்த சந்தோஸம்தான் மச்சான்.”
நிருபனின் கண்களில் நீர்மணிகள் துளிர்த்தன. ஏதோ யோசனையில் லயித்துவிட்ட அவனிடமிருந்து பெருமூச்சொன்றும் புறப்பட்டது.
“என்ன நிருபன்?
சுதன் கேட்டான்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
சிறைச்சாலைச் சுவரின் உயரத்தில் இருக்கும் ஜன்னலில் கண்கள் பதிந்து வெளியுலகில் லயித்தன.

III.)> G85. விஜயன் «HIDI 187 நிருபன் இப்படித்தான் இரண்டொரு வார்த்தைகள்தான் பேசுவான். அதன்பிறகு அமைதியாகிவிடுவான். அந்த ஜன்னலுக்கு வெளியில் அவனுடைய யோசனை மிகுந்த அகலமான கண்கள் வெறித்த நிலையில் லயித்துவிடும்.
“நிருபன், என்ன முகத்திலே சந்தோசத்தைக் காணல்ல பயப்பிடாத, இன்றைக்கு எப்படியும் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே கிடக்கு. எல்லோரும் அப்படித்தான் சொல்லினம்.”
நிருபனின் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது. அதில் சோகத்தின் நிழல் படர்ந்திருக்கிறது.
“சுதன்! நீ சிறைக்குள்ளே வந்து ஒரு வருஸம்தான ஆகுது. நான் இதுக்குள்ளே வந்து ஐந்து வருஸமாகுது.” “நீ வந்தது யுத்தகாலம். இப்ப சமாதானம். எங்கேயும் குண்டுவெடிப்பு. அது இது அசம்பாவிதம் இல்லேதானே! சீக்கிரம் வழக்க முடிச்சுப் போடுவாங்க. அதைத்தான் சொல்றனான்.”
“எனக்கு நம்பிக்கை இல்லே.’ என்பதுபோல் தலையை ஆட்டினான்.
சுதன் புன்னகை செய்தான். 'எனக்கு இருக்கு என்பது அந்தப் புன்னகையின் பொருள்.
í, ó ஏன்?” “போராளிகளையே விடுதலை செய்யிறாங்க. நாங்கள் வெறுமனே சந்தேகக்காரர்தானே!”
நிருபனின் உதடுகளில் மறுபடியும் புன்னகை தோன்றியது.

Page 96
188 @ அன்னையின்நிழல்
ॐ ॐ
“உண்மைதான்.” அவன் முணுமுணுத்துக் கொண்டான். “அரி அரி கதாவ எதி லேஸ்தி வெண்ட’ ‘போதும் போதும்! தயாராகுங்கள்’ சிறைக்காவலனின் குரல் அதட்டலாகப் பறந்து வருகிறது.
க்விக், க்விக், க்விக், க்விக்.
ஜன்னலில் ஒரு சிட்டுக் குருவி. அதன் கீச்சுக் குரல். அதன் பின்புறமாகவிருந்து வெளிச்சம் படர்ந்ததால் குருவி சின்னதொரு கறு நிற திடலாகத் தெரிகிறது.
க்விக் க்விக் க்விக் க்விக். அதென்ன சுதந்திர உலகைத் துறந்து இந்தச் சிறைக்குள் அடைக்கலம் தேடிக்கொண்டிருக்கிறது.
சுவரில் சின்னதொரு மண்சட்டி அதில் ஒரு துவாரம்.
அதுதான் அதன் உலகம். − இந்த மாபெரும் உலகம் ஏன் இப்படி தனித்தனியாக குறுக்கப்பட்டிருக்கிறது.
யுத்த நிறுத்தம். புரிந்துணர்வு உடன்படிக்கை. சமாதான பேச்சுவார்த்தைகள். எங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துவிடும்.
சிறைச்சாலைக்குள் மங்கலான வெளிச்சம்.
ஒரு மேடை. அதன்மீது நின்றுகொண்டு ஒர் அரசியல்வாதி ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறான்.

III* G3s. 6águu6io 1m|||| 189 அந்தக் கனவை சிறைக்காவலனின் கடுரமான குரல் கலைத்துவிடுகிறது.
காலிமுக நெடுஞ்சாலை. பொலிஸ் வாகனம் விரைகிறது.
திருடர்கள், போதைப் பொருள் பாவனையாளர்கள், சண்டியர்கள், பிட்பொக்கட்காரர்கள், கொலைகாரர்கள், சந்தேக நபர்கள் ஏழுபேர்.
வாகனத்துள் மூச்சுவிட சிரமம். அவ்வளவு நெருக்கடி, சந்தேக நபர்கள் ஜன்னலருகில் இருந்தார்கள். அவர்கள் கரங்களில் கை விலங்கு.
சுதனும் நிருபனும் ஒன்றாகவே உட்கார்ந்து இருந்தார்கள். நிருபனின் கழுத்து மடிந்து நாடியுடன் ஒட்டியிருந்தது. கண்ணிமைகள் இறுகிக் கிடக்கின்றன.
அது நித்திரை அல்ல; அவநம்பிக்கையின்போது அவன் கண்கள் இப்படித்தான் மூடுண்டு நாடி கீழிறங்கும். நம்பிக்கையற்ற யோசனைகளில் ஆழ்ந்துவிட்டிருப்பான்.
சன நெருக்கடியான இந்த வாகன போக்குவரத்து மிகுந்த நெரிசலான பாதையில் எத்தனை முறை அவனை ஏற்றிக்கொண்டு இந்த பொலிஸ் வாகனம் ஒடியிருக்கும்.
அது நம்பிக்கை நிறைந்த கால ஓட்டம். பொலிஸ் வாகனத்தின் சின்ன ஜன்னலினூடே அவன் கண்கள் வீதியில் மொய்த்துக் கிடக்கும். தெரிந்த முகங்கள் பல வீதியில் நடமாடிக்கொண்டிருக்கும்.
அடடா, எவ்வளவு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆவல் கொப்பளிக்கப் பார்ப்பான். நெஞ்சு தகிக்கும்;

Page 97
190 அன்னையின்நிழல் ଛୁ, ॐ தவிக்கும். வண்டியிலிருந்து குதித்து அந்த மக்களோடு மக்களாக நடந்துசெல்ல மனம் பதறித் துடிக்கும்.
சுதந்திரம் எவ்வளவு பெறுமதியானது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர். அம்மா கொடுத்த பணத்தை மிகவும் பத்திரமாக எடுத்துக்கொண்டு கொழும்பு வந்தான். ஜெர்மன் போவதே இலட்சியம். வெள்ளவத்தையில் ஏஜன்சிக்காரரைக் கண்டு பணத்தைக் கொடுக்க வேண்டும்.
அவன் வெள்ளவத்தைக்கு வந்தபோது லேசாக வானம் கறுத்துக்கொண்டு வருகிறது.
மழைத்தூறல் வருவிக்கின்றது. பாதை நனைந்து லேசாக ஆவி வெளிக்கிளம்பி மண் மணம் கமழ்கிறது.
“இந்த ஏஜன்சிக்காரர் ஆபீஸ் எங்கே இருக்கு?” அவன் கண்கள் அங்குமிங்கும் தேடின. சனக் கூட்டத்தில் தட்டுத்தடுமாறியே நடந்து கொண்டிருந்தான். பஸ் நிலையத்தைத் தாண்டியபோது.
“அலோ.’
யார்?தலை உயர்ந்தது. கண்கள் முன்னால் பொலிஸ் ஜீப். அதற்குள் நாலைந்து பேர் உட்கார்ந்து இருப்பது நிழல்களின் தரிசனமாக கதவு திறபட ஒருவன் கீழிறங்கினான்.
“மே எனவா”(“ இங்கே வா’) வண்டிக்குள் அவனை ஏற்றிவிட்டார்கள். அவன் கையிலிருந்த பொலித்தீன் பை சோதனைக்குள்ளாகிறது. கட்டுக் கட்டாக பணம் அந்த பைக்குள்தான் பத்திரமாக

III» Gs. விஜயன் 

Page 98
192 亂 அன்னையின்நிழல் &
நீதிமன்றத்தினுள். பயங்கரவாத சந்தேக கைதிகள் அனைவரும் தனியாக ஒரு பகுதியில் இருத்தப்பட்டார்கள்.
நிரஞ்சனி எங்கே..? பார்வையாளர் பகுதியில் அவள் தலைக்கறுப்பையும் காணவில்லை. ஆமாம்; சந்தேக நபர்களைத் தவிர மற்றைய கைதிகள் எங்கே? உறவினர்களுடன் உறவாடப் போய்விட்டார்கள்.
அதிர்ஷ்டசாலிகள் அவர்களுக்கு மட்டும் உறவினர்களுடன் உறவாட அனுமதி
நீதிமன்ற கடிகாரம் அதன் சிறிய முள் பல இலக்கங்களைக் கடந்து மறைந்து விட்டது.
அனைவரினதும் பெயர்கள் அழைக்கப்பட்டன. சந்தேக நபர்களின் பெயர்கள் அழைக்கப்படவில்லை. பொலிஸ் வாகனம் கைதிகளைத் தன் வயிற்றுக்குள் நிறைத்துக்கொண்டு மறுபடியும் காலிமுக வீதியில் விரைந்தது.
சுதனின் கழுத்து மடிந்துவிட்டது. நிருபனைப் போலவே அவன் கண்களும் வெளிறிப் போயின.
ஆமாம் வழக்கு விசாரணை மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு விட்டது.
CO3


Page 99
பெற்றது) ஆ எழுதியுள்ளார். 300க்கு மேல் நூல் விமர்ச
வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஞானம், சிரித்திரன், தீபம், கணையாழி, :ெ இவரது படைப்புகள் வெளிவந்துள்ளது,
இவரது புனைப்பெயர்கள் அ
மேகவர்னன், இளவேனில், மின்மிளி.
எழுத்து, கலை இலக்கிய கருத்த உரைகள் இவற்றில் ஈடுபாடு உடையவர்.
நூற்றுக்கு அதிகமான கட்டுரைகள் நகை அளவில் காத்திரமான விமரிசன கட்டுை பாராட்டினைப் பெற்றுவரும் இந்த ப சிந்தனையாளர்களின் தாக்குதல்களுக்கு
"மனித நிழல்கள்” வீரகேசரி பத் ரீதியில் நடத்திய நாவல் போட்டியில் முதல் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக் இரையானது துரதிஷ்டமாகும். அதன் : நாவல் இழந்தது.
வீரகேசரி பத்திரிகை ஸ்தாபனத் பணியாற்றி வரும் விஜயன் ஆ! பொறுப்பாசிரியராகவும் கலாசாரம் மற்று தொகுத்து வழங்கி வருபவராகவும் பணி
 
 

துறவில் இ,ை விஜன் இளம் எழுத்தாளர் சங்கம் 1950களில் பங்கை ரீதியில் நடத்திய சிறுகதை பரிசு பெற்றத மூலம் எழுத் நிர் த்தார்,
படைப்புகள்
க்கும் மேற்பட்ட சிறுகதைகள் Iां,
ல்கள் விடிவு கால நட்சத்திரம். சிறு அலைகள், மனித நிழல்கள் பரிசு ஆகிய நாவல்கள். 9 தொடர்கதைகள் னங்கள் எழுதியுள்ளார். ஈழநாடு, சுடரொளி வசந்தம், மல்லிகை, சம்மல், மேகம் ஆகிய பத்திரிகைகளில்
புக்கினிக் குஞ்சு, சீமான் சஞ்சாரி,
ரங்குகள், அரசியல் மற்றும் இலக்கிய
சு ஆகிய புனைப் பெயர்களில் எழுதிய ச்சுவை பாணியில் எழுதப்பட்ட விசய ரகளாகும், ஏராளமான ரசிகர்களின் த்தி எழுத்துகள் போலித்தனமான iளாகி வருகின்றது.
திரிகை ஸ்தாபனம் அகில இலங்கை ாம் பரிசை பெற்றுக்கொண்ட போதும் கலவரத்தில் அதன் பிரதி நெருப்புக்கு காரணமாக அச்சாகும் பாக்கியத்தை
தில் தற்சமயம் விவரண ஆசிரியராக சிரிய தலையங்கப் பகுதியின் ம் அரசியல் ஆகிய பகுதிகளையும் பாற்றி வருகிறார்.
- பதிப்பகத்தார்