கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்ப்பு (தமிழாலயம்) 2001.11

Page 1

II I
۔"+EE;" |
ता
| |
. 11 I
|
|

Page 2
LL LLLL LL LLL LLLL L L L L L LLLLL LL LLLLL L L L L L L L L LL L L LL ML LLL L LL LL LLL LL LLLS L M S L MSSSLL LSLL LL
பிறர் பாடப்பல செயல்கள் செய்து நரை கூடிக்கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ??
“வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்”
體를
| * "|
s
s
"
 

காலாண்டு இதழ்
உள்ளே.
அட்டைக்கோர்
அடையாளம்
நாதச்சாரல்
நித்தம் நினைவலைகளுடன் காத்திருத்தல்
ԼD6Փլք
தம்பியை
எதிர்பார்த்து நினைவுகள்
சில விவாதங்கள் சில விமர்சனங்கள்
எனக்குமில்லை உரிமை
இருவிழிகள் இரு
திசைகள்
எனக்காய் இல்லை
உனக்காய்
தொடர்புகளுக்கு. “ջ մñÙԿ” 3), காசல் ஒழுங்கை 65sclguby Oq.
ஒரு நிமிஷம்.
தமிழாலயம் வெளியிடுகினர்ற முதற் சஞ்சிகை “உயிர்ப்பு” உங்கள் கரங்களில் தவழ்வதையிட்டு மனது நிறைந்த மகிழ்வடைகின்றோம்.
அனுபவம் வாய்ந்தோரின் மனதார்ந்த ஆசியும் அவ்வப்போது அவசியமான அறிவுறுத்தல்களும் இருந்தால் போதும். இளைஞர்களால் இயலாதது எதுவுமில்லை எனர்பதை உணர்மையாக்கி எழுகின்றது இந்த “உயிர்ப்பு”. இந்த வேளை உயிர்ப்பரினர் எழுச்சிக்கு ஆலோசனைகளையும் ஆதரவினையும் உரமாக்கிய அத்தனை நண்பர்களையும் அன்புடன் நினைவுகூருகின்றோம்.
இளையவர் மனிதில் எழுகின்ற அற்புதம் மிக்க ஆக்கபூர்வமான இலக்கிய மற்றும் அறிவியல் சிந்தனைகளை அரங்கேற்றியே தீருவேன் என முதல் இதழிலேயே “உயிர்ப்பு” உறுதியெடுத்துக் கொள்கிறது.இளையவர்களின் எழுதுகோல் வேகம் உங்கள் இலக்கிய தாகம் தீர்க்கும் என எதிர்பார்க்கினர் றோம். கூடவே உங்கள் கருத்துக்களையும். ஆக்கங்களையும்.
‘இனி எம்மை புதிய உயிராக்கி மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்.”
நம்பிக்கையோடு.
சோ. சேயோன் க. சயேந்திரன்
க. நிறஞ்சன்
இதழாசிரியர்கள்
இணையிதழாசிரியர்
- I -

Page 3
அட்டைக்கோர் அடையாளம்
உணர்வலைகளின் உயிர்நிலை ஊனம் கொண்டு உருமாறியதா..! உயிர்புனல் சிந்தி உயிர் சிதை
உள்ளங்கள் திசை மாறியதோ..!
பாலையாகி பட்டமிழந்த பண்பாடுகள் பரிணமிக்க! எண்ணமெல்லாம் எழுத்தாக்கும் - எம்
எழுதமிழ் எழுச்சி காண
பாலைகளையும் சோலைகளாக்க காலைச் சூரிய செங்கதிர் ஒளியாக உயிர்த்தமிழே சிந்தும் மூச்சாக உதிரம் காய்ச்சி உதிர்த்த நீரோடை
உலக தமிழர்க்காய் - இங்கே
உயிர் துடிக்கிறது - ‘உயிர்ப்பாக
முகப்பினுள்ளே மலர்ந்திருக்கும் பாரதியாரும் பாரியாரும் இணைந்திருக்கும் புகைப்படம் எட்டையபுரத்திலுள்ள பாரதி மணிமண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இரு நிஜமான நிழல் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாதச்சாரல்
உணர்வுகளை மீட்டெடுத்து மெட்டுப்போட்ட உன்னதமான ஏகாந்த வீணையின் ஏழு ஸ்வரங்களையும் ஸ்பரிசிக்கும் - ஓர் உயிரியின் உள் மனத்திலிருந்து துளிர்க்கும் மொட்டுக்கள் சில அலர்கின்றன - பூவாக.
மீட்காத வீணையொன்று - என் மடியில் துயில்கிறது - உள்ளத்து உணர்வலைகள் எனைச்சீண்ட - நாத தந்திகளை என்விரல் தீண்ட . எழுந்தன கானங்கள் - பூபாள இராகத்தில்!
இதயத்தின் ரணமான கசிவிற்குள் - மூழ்கிய மிருதுவான ஸப்தஸ்வரங்கள் - எனை
சிருங்காரம் செய்தன - மனவேதனைகள் மறந்தன
லயஞானம் எனை மீட்க, என் மனம் அதில் நனைய,
வாசித்தேன். யாசித்தேன் -
நாதத்தையே சுவாசித்தேன்.
எழுந்த
ஸ்ருதி
நித்தம் நினைவலைகளுடன
நீண்டிருந்த இதய வீதியின் நினைவுப் பள்ளங்களில் வண்ணவண்ணக் கலவைகளாய் சின்னச் சின்ன எண்ண வெள்ளங்கள் ஒய்வான போதெல்லாம் ஒடும் ஒய்யாரச் சிந்தனை வண்டிகள் கடந்தகால ஏஎல் ஐ கண்முன்னே காட்டும் மின்மினிப் பூச்சிகள் தினம் தினம் வேண்டும் அந்த இனம்புரியாத இன்பத்தாலாட்டு செத்துப் போகும் வரை என் வீதிகள் செப்பனிடப்பட வேண்டாம் ஏனெனில், என் நினைவுப் பள்ளங்களில் நித்தம் அவள் வருகிறாள்.
- ரஜீவ் நிர்மலசிங்கம் -

Page 4
காத்திருத்தல்
அவள் நடந்து கொண்டிருந்தாள். கண்களில் நிரந்தரமாக நிலைத்துவிட்ட சோகம். எண்ணெய் கண்டு ஏழெட்டு நாட்களாகிவிட்டது போன்ற பரட்டைபற்றிவிட்டிருந்த, சீராக வெட்டப்பட்டிராது அங்கும் இங்குமாய்க் கலைந்த நீளமான கூந்தல். பாதங்களில் தூசி பூசியிருந்தது. பூமியில் தரித்துப் பத்து பன்னிரண்டு வருடங்கள் இருக்கலாம். வயதுக்கேற்ற துள்ளலோ, வார்த்தைகளிற்கேற்ற ஒலி நயமோ இருக்கவில்லை.
ஆமாம் அவள் வாழ்க்கையின் வரலாறு சில பக்கங்களுக்கு மட்டுமாக வரையறுக்கப்பட்டது. அவள் தேவையற்ற சில அவசியத் தேவைகளுக்காகத் தருவிக்கப்பட்டவள்.
ஏன் எதற்கெனத் தெரியாத பிறப்பு அவளுடையது. பஞ்சு மெத்தைக்குப் பதில் சத்திரத்தில் புரண்டதும் உண்டு. கொஞ்சம் சோறே கிடைத்தால் சொற்ப நாட்களுக்கு சொர்க்கம்.
பெரும்பாலான பொழுதுகளில் மெளனமாக விழி சோர்ந்து புருவம் நெரிந்த நிலையில் சிந்திப்பது அவளது வழக்கமான வேலை. தன் சிந்தனை சிதறாது இருந்த வேளைகளில் அர்த்தமற்ற சில சிரிப்புக்களையும் உதிர்த்ததுண்டு.
சுமைகளை ஒரளவேனும் இறக்கிவைக்கும் சுகத்தைத் தரும், அந்த வழமையான பூங்காவிலே செதுக் கப்பட்டிருந்த கல் லிலே அமர்ந்திருந்தாள். அதற்குக்கூட அருகதையற்றவள் என்பது போன்ற சிலரது ஏளனப் பார்வை அவள்மீது படியும் போது தவித்துப் போய் கூனிக்குறுகிவிடுவாள்.
நேரமோ யாருக்காகவும் காலம் தாழ்த்தாது வெகு நேர்மையாகச் சீரான கதியிற் பறந்து சென்று கொண்டிருந்தது.
அவளுக்குச் சற்றுத் தொலைவில் அமர்நீ திருந்த வனிதையொருத்தியிடம் பார்வை சென்று நிலைத்தது. ஏதோ ஒரு சுகராகத்தை இசைத்தபடியே ரோஜாமலர் ஒன்றின் இதழ்களை ஒவ்வொன்றாக உதிர்த்தெடுத்து எறிந்த வண்ணம் இருந்தாள். அதுகூட
-- #ه -

இனிமையாக இருந்தது போலும். இறுதி இதழ் உதிர்ந்து முடிந்த போது தனது வேண்டாத வேலைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரமும் முடிந்துவிட்டது போன்று எதையோ தேடி அலைந்த கண்களை "படபட" வெனக் கொட்டியபடி நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். அச்செயல் அவளுள் பற்றியெரிந்து பரவிக் கொண்டிருந்த கோபத்தை உணர்த்தினாலும் அவளது காத்திருப்பு பற்றி இச் சிறுமிக்குப் புரிந்ததாகவே இருந்தது.
ஒவ்வோர் மனிதருக்கும் ஒவ்வொரு விதமான காத்திருப்புக்கள்! இவை என்று தான் மாறுமோ? என்று எண்ணியவளாக. திடீரென அவள் விழிகளில் ஒருவித ஒளிக்கீற்று. பின் ஏமாந்துவிட்ட உணர்ச்சியின் ஜாடை. தாங்கமுடியாத வேதனையால் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்து வரத்துடித்தது விழி விளிம்புகளில் இருந்து விழுந்துவிடாத நீர்முத்துக்கள்.
இன்று ஏன் அந்த அம்மா இன்னமும் வரவில்லை. நேரம் சென்றுவிட்ட விடயத்தை வயிற்றிலிருந்து எழுந்த சத்தம் உணர்த்திக் கொண்டேயிருந்தது. பசிக்கொடுமை உலகிலேயே மிகப்பெரிய கொடுமையாயிற்றே. வறுமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று கூறப்பட்டால் கூட பொருத்தமானதாகத்தான் இருக்கும். அத்தகைய பசி அச்சிறுமியையும் நீதி விலகாத விசுவாசமாக விட்டு வைக்கவில்லை.
வழமையான அவளது காத்திருப்புக்குக் காரணமான - அந்த மரியாதைக்குரிய, மனதைக் கவர்ந்திருந்த பெண்மணி. அவர் இன்னமும் ஏன் வரவில்லை. ஏன் வரவில்லை. என்று ஏக்கத்துடன் ஒரே இடத்தில் உட்காரமுடியாது. செய்வதறியாது திகைப்பும் சூழ்ந்து கொள்ளவே மருண்டபடி காத்திருக்கும் அச்சிறுமியை ஆமாம் அந்த எழினியை புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று யாருமே அருகிலிருக்கவில்லை.
முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவரும் தன் ஒரேயொரு மகளோடு மருமகனையும் ஒருமாத வயது நிரம்பிய குழந்தையோடு சேர்த்து குண்டு வீச்சுச் சம்பவத்தில் காலனிடம் தாரைவார்த்துக் கொடுத்தவருமான அந்தப் பெண்மணி இளைப்பாற அடிக்கடி வருகைதரும் பூங்காவில் தான் எழினியைச் சந்தித்தார். அவர் ஓரிருநாட்களில் எழினியை அவதானித்து அவளைப்பற்றிய, அவள் வாழ்க்கை முறையைப் பற்றிய எண்ணக்கரு ஒன்று தானாகவே மனத்தில்
- 5 -

Page 5
தோன்றி ஆட்டிப்படைத்து அலைக்கழித்துக் கொண்டிருந்ததை தாங்க முடியாது அவளை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தபோது தான் அந்த மறக்கமுடியாத சம்பவம் சில நாட்களாக உறங்கியிருந்த சம்பவம் மீண்டும் மனத்தில் தொடர் கதையாகியது.
ஆமாம் தன் மகளது குடும்பத்தைப் பலி எடுத்த அதே குண்டுவீச்சுச் சம்பவத்திலே தான் எழினியும் தன் தாய்தந்தையரை பிரிந்திருக்கிறாள் என்றும் அதன் பின்னர் தரித்திரமாகிவிட்டிருந்த சோக சரித்திரம் என்ன என்பதனையும் அறிய நேர்ந்தது.
தன் நிலையும் தான் இருக்கும் சூழ்நிலையும் எழினியினை முழுமையா பொறுப்பேற்க முடியாது என்ற உண்மையை உணர்ந்ததால் அவர் தெல்லிப்பளையில் இருக்கும் அனாதைச் சிறுவர்களின் அன்பான தாயைச் சந்தித்து அவரிடம் எழினியைப் பற்றி கூறி அவள் வாழ்க்கையில் ஒளியேற்றிவைக்கவென முடிவெடுத்து அதற்கான முதல் படியில் கால்வைத்த வேளையிலே. பாதையில் சம்பவித்த விபத்தில். அவர் எண்ணம் நிறைவேற முன்னதாகவே விபரீதமாக வையகத்தை விட்டகன்றிருந்தார்.
எழினியோ அந்த அம்மாவைக் காணவில்லையே. இன்று வரவில்லையே. என்னுடன் அன்பாகப் பேசி ஆறுதல் கூறி ஒரு வேளைப் பசியை சில நாட்களாகப் போக்க வழி சமைத்த அந்த. அம்மா. ஏன் வரவில்லை. ஒரேயொரு அன்பு உள்ளத்தின் சொற்ப அன்பு கூடக் கிடைக்கக்கூட முடியாத கொடிய பாவியா. என்றெல்லாம் நினைத்துக் குழம்பி ஏங்கியபடி அவள் காத்திருப்பு ஒவ்வோர் நாளும் அதே மாதிரியே. தொடர்கின்றது.
அவளது காத்திருப்பு கூட அருளியவனுக்கு கசப்பாக இருந்து மனதை கரைக்கவில்லையெனின் காவியம் படைக்கவிருக்கும் எழினியின் சோகத்தின் காரணத்திற்கு கரையைக் காட்டமுடியுமா? உங்களில் ஒருவராலேனும் முடியுமா? எபபோது?
- சாந்தி சேகரம் -
米 水 来 来 米 米 米

ങ്ങg
தலையின் மத்தியப் பிரதேசம் ஒரு குட்டி சகாராவாய்த் தகித்து உடலின் ஒரு லட்சம் நாடிகளின் ஒவ்வொரு துணிக்கையிலும் உச்சபட்ச வெப்பம் - அணு உலையாய் ஓடி உப்பு நீர் அது சமநிலை பேண உடம்பு பூராக-வியர்வையூற்றாக வெளியேறும் வேளை!
மனத்தின் ஒவ்வொரு மூலையிலும் வியாபித்திருந்த விரக்திகளின் வெம்மையோடு வெயிலின் உறைப்பும்
சேர்ந்து கொள்ள மூளையின் ஒவ்வொரு செல்லும் வெறிபூண்டு தாண்டவமாடும் நேரம்!
நாளாந்தம் வீடுதோறும் -
வீதிதோறும் காணும் விதவிதமான வேதனையான
காட்சிகள் கண்ணில் "பிளாஷ்பக்காய்
பிரிவீயூ போக - அனலடிக்கும் வெயிலும் - புழுதியும் - தூசியும் அதனுடன் சேர்ந்து விழித்திரையில் நடனமாடும் வெயில் சூழ்ந்த பிற்பகல்!
எதிர்பாராமல் இலங்கையிலே சம்ாதானம் சாத்தியமானது போல பாரதத்தில் பிஜேபி - காங்கிரஸ் பிணக்குகள் விட்டொழிந்து
பிணந்து கொண்டது போல ஊழலின்றி ஓர் அரசியல் வாதி உதயமானது போல - எம் நாட்டு வானிலை அறிவிப்பைப்
பொய்யாக்கி - ஒரு சில கருமுகில்கள் தலையின் மேலே!
அனல் காற்றை அடித்துத் துரத்தி
அதனிடத்தை மெல்லிய குளிர்வாடை கைப்பற்றிக் கொண்டது! காதினோரத்தில் - மெல்லிய தென்றல் மெலிதாய்க் கிசுகிசுத்தது!
தோலின் ஒவ்வொரு மயிர்க்காலும் குளிரின் தொடக்கத்தை உணர்ந்து ஆனந்தக் கூத்தாடின! மூளையின்மையைப் - மழைவரும் ஒட்டு மொத்தமாக என முன்னறிவித்தது!
என்னைப் போலவே . ஒவ்வொரு மனிதரின் கண்ணுமே வானையே மொய்ப்பது வடிவாகப் புரிந்தது!
வேலை நிறுத்திய தபால்கள் ஒவ்வொன்றாய் வீடு சேர்வது போல அடுக்கடுக்காய்த் துளிகள் -

Page 6
கீழே ஆடியசைந்து வர ஆரம்பித்தன!
தலையில் ஒரு சில துளிகள்! கைகளில் சில! உடலில் ஒன்றிரண்டு! தரையில் பலப்பல சிந்தி - அடங்காது எழுந்த புழுதியை - அவசரகாலச் சட்டமிட்டு அடக்கின! நாசித்துவாரம் மண்ணின் மனோரம்மிய வாசனையை மனதாரச் செங்கம்பளமிட்டு
வரவேற்றது! என் மண்ணின் தனிவாசனை - என் கரந்தழுவி - அணைந்த என் மண்வாசனை மனதில் பரவியது!
&L FL-5g) - LILLIL-5g) விரைவு பெற்று - எழுச்சி பெற்ற மக்கள் படை போல் - ஓராயிரம் . பல்லாயிரம் துளிகள் மண்ணுடன் கலக்கப் பாய்ந்து வந்தன!
இவ்வளவு காலம் - வெயிலில் த்கித்த என்னுடல் மழையை விரும்பி ஏற்றது! தலையை நனைத்து கேசங்களைத் தழுவி . நெற்றிப்பரப்பை ஊடுருவி - மூக்கு விளிம்பில் நடந்து - நாசி முனையைக் கடந்து உதடுகளை முத்தமிட்டு உடலின் பரப்புகளை ஆரத்
தழுவும் போது - அப்பப்பா - அனுபவித்துப்
பாருங்கள்! மழையை உடலெங்கும் ஆளவிட்டுப் பாருங்கள்! அப்போது தான் புரியும்!
உச்சி முதல் பாதம் வரை நனைத்து உதறல் எடுக்கும் வரை நனைந்தேன்!
வீதியின் கரைகளில் வெள்ளம் பொதுக்கூட்டம் நடாத்தியது! வாகனங்கள் வீசியெறிந்த சேற்றுநீர் . சுவர்களில் போஸ்டர் ஒட்டிப் பிரசாரம் செய்தது! - வடக்கில் இடையறாது கேட்கும்
சத்தங்கள் இங்கே இடையிடையே இடி முழக்கமாய்!
பாதணிகள் மழைகண்ட
மகிழ்வில் -
சளக் - சளக் ஒசையிட
மெதுவாக தடைபோட்டேன்!
கால்கள் முன்னோக்கி அடிகள் வைக்கநினைவுகள் பின்னோக்கி ஆண்டுகள் தாவின!
அன்று -
என் மண்ணில் என் மழையில் நனைந்தவன்! இன்று - ஏதோ ஒரு மண்ணில் அகதியாய் நனைகின்றேன்! செம்பாட்டு மண்ணில்

சேற்று வெள்ளம் திரண்டு நிற்க ஒரத்தில் நின்று - காகிதக் கப்பல் இட்டுக் களித்தவன் நான்!
குடையின்றிக் குதித்தோடி குளங்குளமாய்க் குவிந்திருந்த வெள்ளத்தில் குது கலமாய்க் கும்மியடித்தவன் நான்! என் முற்ற மாமரத்தில் மாவிலையில் உறங்கும் மழைத்துளியை - கரத்தில் எடுத்து உள்ளங்கையில் வைத்து அழகு பார்த்தவன் நான்!
அன்று -
மகிழ்ச்சிக்காக மழையை அழைத்தவன் - இன்று -
உடல்வேட்கை தணியஉயிர் அமைதி பெற அழைக்கிறேன்!
அன்று - பருவமழையை எதிர்பார்த்தவன்! இன்று - od 600&bt. IL LD60dp60ou - இடி - புயல் மழையைக்கூட இரந்து அழைக்கின்றேன்! வானம் பார்க்கும் எம்மவரின் வாழ்க்கை வரண்டுவிட்டது! வயல்களாவது வாழ . அந்த வான்மழையை அமைக்கின்றேன்! உடல் தகிப்பை இம்மழை போக்கினும் . உள்ளக் குமுறல் போக என் மண்ணிலும் மழை வேண்டும்!
- ஆ.இ.வாமலோசனன் -
கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதுக்காரனின் மன
உறுதியும் இளைஞர்களுக்குரிய உற்சாகமும், குழந்தையின்
இதயமும் எனக்கு எப்போதும் நிலைத்திருக்கு
செய்வீர்.
உலகம் மிகப் பரந்தது. அதில் அவர் முயற்சியைப்
பொறுத்தும், திறமையைப் ெ
முன்னேறுகிறார்கள்.
பாறுத்துமே எல்லோரும்
அல்பேட் ஐன்ஸ்டீன் -

Page 7
ழு வகுப்புக்கள்
"{":"نبرد . ベ ..
தொலைபேசி - 594387
- 10 -
 
 
 
 

இவள் மிக அழகி
நல்லது. அதனால் என்ன?
அவள் நல்லவள் சரி! பார்த்துச் சொல்வதெப்படி? அவளோடு பேசவேண்டும் என்று ஒரு ஆசை, பேசி. என்ன பேசி.?
ஏதாவது பேசி.
எதற்கு? அழகியோடு நான் பேசினால் அதாவது அந்த அழகி என்னோடு பேசினால், அது பெருமையில்லையா? நாலு பேர் பார்க்க கர்வமில்லையா?. அடிசக்கை. உன் கர்வம், உன் பெருமை கருதி யோசிப்பா? போடா என்று சொல்லி விட்டால்,
குரங்கு
ஹலோ என்றால்
நல்லவள். வெரி நைஸ் லேடி ஆக அவள் உன்னோடு பேசினால் நல்லவள் இல்லையெனில் குரங்கு. உன்னை மையமாக்கியே அவள் நல்லவளா, கெட்டவளா என்கிற தீர்மானம். உண்மை எது?. என் ஆசை மட்டுமே உண்மை இதில் லாபமென்ன?
ஒரு கர்வம், பெருமை, இந்தப் பெருமை என்ன தரும் பிறர் பொறாமையை. இதற்கு, இதைப் பெறுவதற்கு ஒரு காரியம் அவசியமா?
- பாலகுமாரன் -
- 11 -

Page 8
தம்பிய எதிர்பார்த்தது.!
பார்வதியக் கான் ர பெடியன் சின்னணில விளையாடின பாவைப்பிள்ளை என்னைப் பார்த்துச் சிரிக்குது; ம். அந்தப் பாவைப்பிள்ளை என்னை ஒரு பகிடியாச் சிரிக்குது; போன ஆவணியில எடுத்துக் கதைச்ச செல்வி இண்டைக்கு வரையில ஒரு கதையுமில்லை; கடுதாசியுமில்லை. ஏன் செல்வி எடுக்கேல்ல.? ம். பாவம் வெளிநாட்டுச் சீவியம் எண்டால் சும்மாவே? சிலவுந்தானே? அவரும், உவள் செல்வியும் மாறிமாறி வேலை போல கிடக்குது, உந்த 2 குட்டியங்கள். அவங்கட பெயரை பல்லை வாய்க்குள்ள மாட்டாம சொல்லுறது கஷ்டம் ம். குட்டியங்கள் உந்த அம்மம்மாவை நினைக்கிறாங்களோ? என்னவோ? இன்னும் அந்த சன்னலடியில பாவைப்பிள்ளை.
உண்மையில பாருங்கோ. எனக்கு நல்ல ஞாபகம், ஆவணியில செல்வி எடுத்துக் கதைச்சவள், பிறகு புரட்டாசியில ஏதோ கட்டிடத்துக்கு வெடி வைச்சுப் போட்டாங்களாம். என்ர கடவுளே இஞ்ச பொம்பரில குண்டைக் கொட்டிறான் எண்டு தானே. செல்விய அங்க அனுப்பினன். அங்கயும் இப்படியே எண்டு இரவிரவா அழுது அம்பாளாச்சியக் கும்பிடத்தான் பார்வதியக்கா சொன்னா கட்டிடங்கள் இடிஞ்சு தரைமட்டமானது அமெரிக்காவில. உன்ர பிள்ளையிருக்கிறது அங்கயில்லை லண்டனில எண்டு.” ஏதோ அம்மாளாச்சி ஆத்தை என்ர பிள்ளையக் காப்பாத்திற்றுது!
ஏ.ஆர். திருச்செந்தூரன்
அ. பார்வதியக்கா. ஒரு திறமான பொம்பிள! உந்த வயசில குடுகுடு எண்டு கோயிலுக்கும், கடையஞக்கும் திரியிறதும்; உந்தத் தமிழ்ப் பேப்பர்கள ஒண்டு விடாம வாசிக்கிறதும் அவ ஆள் கெட்டிக்காரி தான்! நான் பாருங்கோ அண்டைக்குச் சொன்னன் ‘இருக்கிற வரையில பார்வதிய்க்கா ஏதோ நன்மையளப் பெற வேணும் எண்டா அங்கயிங்க ஒட்டிக்கிட்டி இருக்கத்தானே வேணும்! அதுதானே கெட்டித்தனம்.” சத்தியமா இப்படித்தான் சொன்னன்! என்ர மனசில பட்டதச் சொன்னன்!
உடன பார்வதியக்கா பத்திர காளியாயிட்டா! கோபத்தில., எங்கள விலை பேச வெளிக்கிடாதங்கோ நன்மையள விட உரிமையளப் பாருங்கோ. நாளைக்கு எங்கட பேரன் பேத்தியளப் பற்றி யோசியுங்கோ! அந்த விதத்தில எங்கள விக்கிற 1, 2 பேப்பர்கள விட
- 12 -

மற்ற எல்லாப் பேப்பரும். ஏதோ எங்கட ஒற்றுமையையும், எழுச்சியையும் சரியான இடத்தில சொல்லத்தான் வந்திருக்குது!’ எண்டு ஏதோ எல்லாம் அலட்டி உந்தநலன், அவைக்குக் கீழ இணைஞ்சு நிப்பம் எண்டு சொன்னவங்கள அப்பிடி. நாறடிச்சு கிழிகிழியெண்டு கிழிச்சுப் போட்டா..! அண்டைக்கு யோசிக்கன். உவ பார்வதியக்காண்ட மனசுக்குள்ள நிறையக் கிடக்குது, நிரம்ப வருசத்துக்கான ஆசையள கிழவி மனசுக்கு வைச்சிருக்கு எண்டு. உந்த உலொச்சில இப்ப ! வருசமா நானும் பார்வதியக் காவும் தான் உந்த அறையில தங்கியிருக்கிறம் என்று மேள் செல்வி வெளியில.., ஸ்பொஞ்சர் பண்ணிக் கூப்பிடப் போறாள், அதப்போல பார்வதியக்காக்கு. ஒரு பெடி, 2 பெட்டை, அதுகளும் வெளியில தான்! பார்வதியக்காவை ஸ்பொஞ்சர் பண்ணிக் கூப்பிட 2 பெட்டையஞம் தான் ‘அம்மா, அம்மா’ எண்டு பறக்குதுகள்! அவன் மூத்த பெடி இதுவரையில ஒரு கதையுமில்லை; உப்பிடிப் பார்க்கேக்க ஒரு மூண்டு மாசம் கோல் எடுக்காத என்ர செல்வி பரவால்ல! என்று அம்மளாச்சி எண்டன் இண்டைக்குக் கோல் வந்திது எண்டா..! உவள் செல்வியோடயும் கதைச்சு உந்தக் குட்டியன்களோடயும் கதைக்கலாம்! அவங்கள். ‘அம்மம்மா. தஸ், புஸ்’ எண்டு இங்கிலீஸில கதைக்கிறதக் கேட்கிறது. சா; என்ன ab(35T8-Lib!
எட அங்க பார்வதியக்கா வாறா..! உந்த வெய்யிலயும் பாராமல். பம்பலப்பிட்டியில கோயிலுக்குப் பொயிற்று மனிசி வருகுது..! ‘என்ன கனகம் கிழவிக்குத் தேவையில்லாத வேலையெண்டு பார்க்கிறியோ?”
‘இல்லையக்கா. கொளுத்துது என்ன வெய்யில்?’
é 6
ம். என்ன செய்யிறது பிள்ளை? பேப்பரும், முத்திரையும் வாங்கிக் கொண்டு வந்தநான் 2 பெட்டையஞக்கும் கடிதம் எழுதிப் போடுவம்.” ‘பெடிச்சிகளுக்குத் தானே எப்பவும் கடிதம் எழுதிறியள்.? உவன் பெடியன் தம்பிக்கு ஒரு கடிதத்தை எழுதிப் போடுங்களன். என்ன செய்யிறான் எண்டு பாப்பம்” மனம் ஆத்தாமத்தான் கேட்டநான்; பின்ன மூத்த பெடி எண்டு இருக்கிறவன். தாயோட ஒரு வார்த்தை தன்னும் கதைக்க வேண்டாமே?
நான் சொன்னதுக்கு பார்வதியக்கா ஒண்டுஞ் சொல்லேல்ல. ஒரு
பெரு மூச்சோட அந்தச் சன்னலடியப் பார்த்தா! அங்க அவவின்ர
பெடியன்ர பாவைப்பிள்ளை எங்கள் ரண்டு பேரையும் பார்த்துக் - 13 -

Page 9
கொண்டிருந்தது.
உந்தப் பாவைப்பிள்ளை பார்வதியக்கா கவனமா வைச்சுப் பாதுகாக்கிற ஒண்டு பாவைப்பிள்ளைக்கு இளந்தாரி ஒருத்தன்ர வயசு இருக்கும்! பார்வதியக்கான்ர பெடியன் உதைச் சின்னனில விரும்பமா வைச்சு விளையாடுறவனாம். தான், தான் வாங்கிக்குடுத்தது எண்டுவா! 'அஞ்சு வயசிலயிருந்து எட்டு, ஒம்பது வயசு வரைக்கும். உவன் தம்பிக்கு உந்தப் பாவைப்பிள்ளை எண்டாக் காணும். எண்டு அடிக்கடி அந்தப் பாவைப்பிள்ளையப் பார்த்துக் கொண்டு சொல்லுவா!
அடுத்த நாள் இரவு வழமையைப் போல ரண்டு பேரும் ஒம்பதுக்கே படுத்திட்டம்.! எனக்கு கனநேரமா நித்திர வரேல்ல.! உவள் செல்வியின்ரயும், பிள்ளையளின்ரயும் நினைப்புத்தான். பார்வதியக்கா படுத்த உடனேயே நித்திரையாயிற்றா., திருப்பியும் எனக்குச் செல்வியின்ர நினைப்புத் தான்! அ. ஆரோ என்ர காதில ‘தம்பி. தம்பி’ எண்டு சொல்லுற மாதிரிக்கிடந்திது; திரும்பினன். பக்கத்தில கிடந்த பார்வதியக்கா தான் வேகமா மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு ‘தம்பி. தம்பி” எண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறா. ஐயோ இதெனி ன கரைச்சலடா! பாவம் பார்வதியக் கா! நான் அவதிப்பட்டுக்கொண்டு கீழ ஒடி. உவன் சின்ராசனைக் கூட்டியந்தன். டாக்குத்தரயும் வரப்பண்ணியாச்சு, டாக்குத்தர் வரும் மட்டும் பாவம் மனிசி ‘'தம்பி. தம்பி.’ எண்டும் இன்னும் எதைஎல்லோமோ. சொல்லியும் அலட்டிக் கொண்டிருந்திது; டாக்குத்தர் நிரம்ப குளிசையஞம், மருந்தும் தந்திட்டுப் போனார்; பார்வதியக்கா. இப்ப அமைதியா நித்திரையாயிற்றா!
இவ்வளவு பதற்றமாக் கவலையோட போன அந்த இரவில, எனக்கு ஒரு பக்கம் சந்தோசந்தான்! ஒம் பாருங்கோ, மூண்டு மாசத்திற்குப் பிறகு செல்வி எடுத்தாள்! அதைவிடப் பெரிசு என்னண்டா. செல்வியின்ர மூத்தமகன் இஞ்ச இஞ்ச உந்தக் கிழவியைப் பார்க்கவாறானாம்! ஆரோ தமிழர்கள் வருகினமாம். அவையளோட அனுப்பீனமாம்! ரண்டு கிழமையால திருப்பி அந்தச் சனத்தோட பிளேனேத்தி விடட்டாம்! எனக்கெண்டாக் கையும் ஒடேல்லக் காலும் ஒடேல்ல! என்ர பேரன் வாறதெண்டாச் சும்மாவே? பிறந்ததில இருந்து அவனை நான் பார்க்கவே இல்லை எல்லே? மனம் நிறைஞ்சு சந்தோசமா இருந்து. ஆனாஉவ பார்வதியக்கான்ர நிலமைய நினைக்கேக்க தான்.
அடுத்தடுத்த நாள்களில பார்வதியக்கான்ர நிலமை பரவால்ல.
- 14 -

வழமை போல கதைக்க தொடங்கீற்றா, ஆனா நான் என்ர பேரன் வாற விஷயத்தைப் பற்றிச் சொல்லேல்ல. பிறகு அதுவே அவவின்ர மனசில தன்ர பெடியனைப் பற்றி ஒரு ஏக்கத்தைக் கொண்டு வந்திடும். எண்டுதான்.
குட்டியன் வந்திறங்க மூண்டு நாளைக்கு முன்னம் விஷயத்தைச் சொன்னன்! நிரம்பச் சந்தோசப்பட்டா வெளிநாட்டில வளர்ந்த பெடி இங்க உந்தக் கிழவியளோட எப்படி ரண்டு கிழமை இருக்கப் போறானோ எண்டு கவலையும் பட்டா!
அந்தச் சந்தோசமான நாள் வந்திது! குட்டியன் வந்தான். என்னை அம்மம்மா எண்டிறதப்போல. பார்வதியக்காவைப் பாட்டி, பாட்டி எண்டு கூப்பிட்டான்! அவவுக்கு நல்ல சந்தோசம் ஆனா குட்டியன் இங்கிலீஸில கதைக்கிறது அவவுக்குப் பிடிக்கேல்ல. அந்த ரண்டு கிழமையும் கூப்பிட்டு வைச்சு தமிழ் சொல்லிக்குடுத்தா! கிழவியள் எண்டு வெறுத்திடுவானோ எண்டு நினைச்சன். ஆனா அம்மம்மா, பாட்டி எண்டு பெடியன் அன்பா, பாசமா பழகிச்சுது. எனக்குப் பேன் பார்க்கப் போறன் எண்டு சீப்பை எடுத்துக் கொண்டு வரும்! அந்த நாக்களில எங்களில அப்பிடி உயிரா இருந்தான். எவ்வளவு தூரத்தில இருந்தாலும். ரத்தத்தில ஊறின அந்த அன்பு, பாசம் இல்லாமப் போகுமே?
அண்டைக்கொரு நாள் உவன் குட்டியன் அவ்வளவு நாளா இத்தின வருசமா பார்வதியக்கா பாதுகாப்பா வைச் சிருந்த, அந்தப் பாவைப்பிள்ளையை எடுத்திட்டான்..! எனக்கு ஏதோ பிரச்சினை வரப்போகுது எண்டு விளங்கீற்றுது. ‘என்ர அப்பனெல்லே உதை விடடா செல்லம். உத வை” எண்டு குட்டியன்ர கெஞ்சினன். குட்டியனுக்கு அந்தப் பாவைப்பிள்ளை அப்படிப் பிடிச்சிட்டுது. தரமாட்டன் எண்டிட்டான். நெஞ்சோட அப்படியே இறுக்கிப் பிடிச்சுக் கொண்டான். எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பார்வதியக்கா ‘விடு கனகம் அவனுக்கு என்ர பெடியின்ர அந்தப் பாவைப்பிள்ளை பிடிச்சிட்டுதாக்கும். வைச்சிருக்கட்டுமன்” எண்டா! அதுக்குப் பிறகு நானும் ஒண்டுஞ் சொல்லேல்ல!
அவ்வளவு நாள் சந்தோசத்திற்கும் கடைசி நாள் வந்திட்டுது. குட்டியன் திருப்பி வெளியில போற நாள்! எனக்கு மனசு சரியான பாரமா இருந்திது. குட்டியன்ர பாக் எல்லாம் அடுக்கி வைச்சன்; குட்டியன் வெளிக்கிட்டும் விட்டான்; எங்களில அவனுக்குச் சரியான பாச்சம்!
-۔ 15 ۔.

Page 10
போக மனமில்லாம முகத்தை உம்மெண்டு வைச்சுக் கொண்டிருந்தான்.
‘அம்மம்மா, பாட்டி நான் போட்டு வாறன்’ மழலைக் குரலில் சொன்னான். வந்த புதிசில தஸ் புஸ் எண்டவன் பார்வதியக்கான்ர புண்ணியத்தில தமிழில கதைச்சான்;
‘என்ர அப்பு! எங்கட பிள்ளையஸ் கெட்டிக்காரப் பிள்ளையஸ், வெளிநாட்டில நல்லாப் படிச்சிட்டு வந்து எங்கட நாட்டுக்குச் சேவை செய்ய வேணும்”
பார்வதியக்கா உணர்ச்சியோட சொன்னா; குட்டியனுக்கு என்ன விளங்கிச்சுதோ தெரியேல்ல, தலைய ஆட்டினான்.
அப்ப தான் அந்தப் பயங்கரம் நடந்தது. ‘என்ர தம்பியைப் பார்க்க வேணும். எண்டு சொல்லிக் கொண்டு பார்வதியக்கா கீழ விழுந்திட்டா., ஐயோ கடவுளே எண்டு கத்திக் கொண்டு நான் சின்ராசனையும், டாக்குத்தரையும் கூப்பிட, குட்டியன் அழ. கீழ விழுந்த பார்வதியக்கா தம்பி. தம்பி எண்டு முனங்கிக் கொண்டிருந்தா!
é í.
அக்கா, அக்கா என்னக்கா செய்யுது?”
“எனக்கொண்டுமில்லை கனகம் உவன் தம்பிய ஒருக்கால். பார்க்க வேணும்”
'அக்கா குட்டியன் வெளிநாட்டில போய் உங்கட மேனைப் பார்ப்பான்.”
'நிப்பாட்டு கனகம் தம்பி வெளிநாட்டில எண்டு ஆர் சொன்னது?”
6 é
எ. என்னக்கா. அப்ப. உங்கட மேன். எ.எங்க?”
இருக்கிறான். அவனை நான் கட்டாயம் சந்திப்பன்.
பார்வதியக்கா இப்படிச் சொல்லிற்று. உடம்பு ஏலாம எங்கயோ வெறிச்சுப் பார்த்தா. பார்வையில நிறைய எதிர்பார்ப்பு இருந்திது! டாக்குத்தர் இன்னும் வரேல்ல!!
ஒரு கையில துவக்கோட, தொப்பி போட்டிருந்த குட்டியன்ர கையில இருந்த அந்தப் பாவப்பிள்ளை எங்களைப் பார்த்துக்கொண்டிருந்திது!
முற்றும்
- 16

ர்த்தியேக வகுப்புகள்
(தமிழ் / ஆங்கில மொழிமூலம்)
* இலண்டன் உயர்தரம்
(தூய கணிதம், இயக்கவியல் சகல பகுதிகளும்)
* இலண்டன் சாதாரணதர கணிதம்
ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும்
* மாதாந்த பயிற்சிப் பரீட்சைகளில் நேரடியாகவோ
தபால் மூலமாகவோ தோற்றலாம்.
தொடர்பு : எஸ். வசந்தகுமார் 20 சுபோதராமய விதி
೧gಿಳಿಯಿ061 6)3(160606Ug : 73028
-----ح\
- 17

Page 11
நினைவுகள்
அந்தக்காலம் என் - நினைவுக்கு வருகிறது வயல் வரம்பில் நடந்து வண்டில் கட்டி வாவியோரம் வந்து - நின்று பெளர்ணமி நிலவில் படகில் போய் மீன்மகள் பாட்டுக் கேட்டது நினைவுக்கு வருகிறது.
பரந்த முத்த வெளியில் பால் வெண்ணிராய் பெளர்ணமி - நிலவிருக்க நானும் என்னவளும் நாட்டுக் கூத்து பார்த்தது ஞாபகமிருக்கிறது. எனக்கும். என்னவளுக்கும் கலியாணம் கூட இரவில்தான். தேனிலவுக்காய் தேனகத்திலிருந்து தெற்கு சென்று பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்தது நினைவுக்கு வருகிறது.
மூத்தவன்
பிறந்ததற்கு முல்லைத்தீவு மாமா செய்த
முசுப்பாத்தியும் யாழ்ப்பாணத்திலிருந்து கார் பிடித்து - குடும்பமாய்வந்த
56596)
அண்ணனும்
கொழும்பு
கண்டி
திருமலை - என்று எல்லாபாகமிருந்தும் ஓடிவந்த சொந்தங்களையும் நினைத்து - இப்பொழுதும் சொக்கிப் போகிறேன்.
தெருநாய் குலைக்கும் சத்தம் தெருக் கோடியில் கேட்கிறது. எட்டிப் பார்த்தேன் என்
வீட்டில்
மட்டும் விளக்கெரிகிறது. எந்ரேமும் யாரும்.? வந்துவிடக்கூடும்.
விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தேன் விடியலுக்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது!
சோமிதரன் -

எண்ணத்தில் தோன்றும் சிந்தனைகளை சிறு கவியாக்கி உயிர்ப்புக்கு அனுப்புங்கள்.
கவிதைகள் எட்டு வரிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வரவேற்கப்படுகின்றது.
முடிவுத் திகதி 13-12-2001.
அனுப்பவேண்டிய முகவரி:
*உயிர்ப்பு இல. 31, காசல் ஒழுங்கை,
GebTC9lbL 04.

Page 12
விடியலை நோக்கி.f மாறாதே7.
இளவேனில் காலை நித்தம் நித்தம் கீழிறங்கி இருள் கலையும் வேளை நீயிருக்கும் இடம் வந்து இயற்கையின் சோலை நினைவலையில் நீ மூழ்க இலங்கை தீவு நோக்கிய - இரு நிற்காமல் தினம் ஓடி இதயங்களின் பயணம். - ஆனால் உரு மறைத்து உடனெழுந்து மலை விழும் நீரின் நாதத்தில் உச்சத்தின் இறுதியில் மாயமாய் மரண ஒலங்கள் '' உன்னிடமே சரணடைந்து. மண்ணோடு கொஞ்சும் நீருக்குள் போதும் இந்த ஓட்டம் இனி
ரிச கியின் கெஞ்சல்கள் மனத குருதlயன (65 நீ வந்து வழி மறைக்க
எழிலின் பின்னணி வழிகாட்டும் திசை மாறNL எட்டி நின்றால் புரியுமா? முழுமதியும் முகம் மறைத்து கிட்ட முனைந்த இதயங்களை அதிசயமாய் இமை உயர்த்த. தட்டி உறுத்தும் கை விரல்கள்! பாராயோ என் பயணம் எதிர்த்திசையில் உரிமையில்லா எழிலின் உவமையில் மாறாதோ ஓர் நாளில் உண்மைகள் உருமாறியதால் எல்லாமே தலைகீழாய். ஊனுக்குள் ஜம்புலன் உறக்கி - உலகிற்கு - i Dg உவர்ந்த கைகள் கண்ணிகளில்லா புள்ளிகள் தேட (கனேடிய தமிழ் ஒ உயிர் காத்து உரிமை தேடிய புதிய பயணம் கூட்டுத்த
விடுதலை நோக்கியல்ல விடியலை நோக்கி.
தேடலில். - நிழல் - இளவேனிற்கால இதமான வேளையில் இயற்கைபாடும் சுகமான இராகத்தில் நீரோடையின் ஜதிபோடும் ஒசையினை தள்ளி நின்று யாசிக்கும் உள்ளங்களுக்காய்...! ஊரோடு இல்லாமல் ஏனிந்த ஒதுக்கம்? ஜனனித்த உறவுகள் மரணிக்கக்கூடாது - உங்கள் கனவுகளின் ஒப்பந்தங்கள் கலையக்கூடாது . நடந்த பாதைகளில் நொறுங்கிய சிதைவுகளால் - இன்று காலத்தின் கோலத்தில் திசை மாறிய பயணமிது.! கால்கடந்த தெருவெங்கும் சமூகத்தின் தெறிப்புக்கள் வேண்டாமினியும் தவிப்புக்கள் என்று துணிந்த கரங்களின் தொடரும் போராட்டமிது.! இதில் மலர்ந்த மையல் மடியாது மணம் வீச மெட்டுப்போடும் விரல்களின் மிருதுவான தடங்களை தொடருங்கள் தயக்கமின்றி! - உங்கள் தொலைந்த நிம்மதியை நோக்கிய தேடலில்.
- ஸ்ருதி -
- 20
 
 
 
 
 
 

மிதா - லிபரப்பு TL1600TLD)
தொலைதூரம் நோக்கிடினும் நுழையாது சிலையாகி அலைபாயும் இரு உள்ளம் வரைந்திட்ட புது உருவம் ! இடதுகரம் இடப்பாதம் வலமிழந்து தனித்த நிலை வளமிழந்து மனித குலம் அழிவதனை குறிக்கிறதோ ? சிரமிருக்கும் இடத்தினை மிதிக்கின்ற போர்ப்பாதம் கரம் கொண்டு தவழுமெம் ஈனமோ - அவமானமோ ?
மிதிவெடியில் பலியான பாதமும்
புதைகுழியை தோண்டும் விரல்களு
உன் கதியிதுவே கவனமென உறைக்கிறதோ, துடிக்கிறதோ ?
ஓ ஜீவனே.
காலம் சிதறிய கோலம்
பாத விளிம்பிலொரு போர் பருந்து சாதலும், இப்பாதை வழிப் போதலும் ஒன்றெனவே ஒறுக்கிறதோ - தன் விருந்தை கண்முன்பே சுவைக்கிறதோ?
கற்பனைச் சிறகுடன் பாதம் பதியாது கவிஞன் பறக்கிறான் கைவிரல் எழுதுதோ ?
வெட்டியும் வீழாத தமிழ் மரங்கள் இரு மருங்கில் கொட்டும் தமிழருவி வற்றவில்லை தொலைவினில், வெற்றிப் பூக்கள் தெருவோரம் வாடாது பூத்திருக்க பற்றிய கரம் பற்றி துணிந்து நீ தொடர்ந்து செல் !
பாதை வழியே பாதச்சுவடுகள் பதிக்கமுடியாததால் தான் பாதை மாறிய பயணமா..???..? பாதி ஜீவனே.பாதி வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு பாதையின் மீதி வழியையும் ஏன் தொடர்கிறாய்? ஏன் தொடர்கிறாய்? போரில் மூழ்கி முடிந்தகதையாகிவிட்டபோதிலும்
' பெயர்ப்பட்டியலோடு பெயர் தெரியா ஆயதங்களோடு
‘தொன்மையை தோண்டி எடுக்கத் துணிந்து தொலைவிலிருந்து தேடியோடி வந்தவர்க்கு எச்சரிக்கை ஏன் விடுக்கின்றாய் ? ஏன் விடுக்கின்றாய் ? சென்று தான் பார்க்கட்டுமே...! ஒரு தடவையேனும். சென்றதால் புதைந்து போனவர்கள் புதைக்கப்பட்ட குழியை. உள்ளே சென்றால் உன்நிலைதான் வரும் என்று உள்ளமது இருப்பதால் உணர்வார்களா இவர்கள். உன்நிலை கண்டு அஞ்சி அரண்டு. பின்செல்லத்துடிக்காத உறுதியான பாதங்கள். ‘பிரபஞ்சத்தில் பிதற்றுவான் ஏன்?” வேறு கதை என்று முரண்டு பிடித்த பேனா கிறுக்கிய கதையாக முடிந்தது. முடிவே இல்லாததற்கும் முடிவாக வைத்துவிட்ட முற்றுப்புள்ளியாகவே தான்
பார்த்ததும் புரிந்தது !
- பிரியசகி -
- 21 -

Page 13
மத்திய பிரளயம் மெய்யொடு புலனொன்றப் பொறி ஐந்தாக நெறியொடு ஞானமொன்ற வேதம் நான்காக விண்ணொடு பிருதிவி அதாள உலகு மூன்றாக ஆணொடு பெண் உயிர்ப்பன்மை ஈராக உலகுவப்ப உயிருரை உண்மை ஒன்றாக, உரைப்பதிக் கவியாக
புற்கலத்தொடு உயிர் புணர்தல் ஜனன விதியாக புணர் தீயொடு சீர் சிதைதல் மரண திதியாக இவற்றிடை வாழ்ந்துழல்தல் வாழ்வின் கதியாக
உதிரத்தொடு கருக்கொண்ட இலக்குகள் பலவாக உலகினொடு முடிவு கண்ட சுகப் பிரபைகள் நலிவாக இவற்றினை உணர்ந்தறிதல் வாழ்வின் முறையாக
பதித்தெடு சுவடாக பொறித்தெடு கைநாட்டுகையாக இவையிரண்டு புரைவது அங்குலியின் அச்சொப்பாக - இவற்றிரு முக்கியத்துவம் முறையே முயங்காதனவாக அதுபோல் வாழ்வொடு பாதை ஒன்றாக, வியாபகத்தொடு பயணம் நிறைவாக புத்திபூருவத்தொடு பாதைகளை விகற்பித்தல் பிரவிருத்தி பிறழ்தல் பிரபஞ்சத்தின் புத்திதத்துவப் பொதுவியல்பாக இவற்றினை உணர்த்துவதிம் மானதக் காட்சியாக!
- சஞ்சுதா சிவசுப்பிரமணியம் - கால் ‘பேசுகிறேன்’ சுட்டிக்காட்டும் பாதையிலே நான் செல்ல விட்டுவிடு எனை என்று சிட்டுப்பறக்க பட்டதெல்லாம் போதுமென்று நீ எண்ணி எனை நட்டநடுக்காட்டினிலே விட்டுவிடாதே நீ இட்டுப்போகும் பாதையினைத் தொடர்வதற்கு நான் ஒட்டுப்போட்டுக் கொண்டேனோ! என்று இங்கு எட்ட நின்று பார்ப்பவர்கள் எண்ணிக்கொள்ள நீ இடம் கொடுத்துப் போகாதே நீ தொட்டதெல்லாம் துலங்குமென்று உன்னுடன் ஒட்டிநின்று உறவாட கிட்ட இருப்பார்கள் எனை எட்ட நின்று தொடுவதற்கே அஞ்சி இவர்கள் எட்டி நிற்கிறார்கள். நண்பா! எனைத் தட்டிக் கொடுப்பதற்கு நீயாவது கிட்டவருவாயா? - ப.நந்த7 -
 
 

சில விவாதங்கள்! சில விமர்சனங்கள்!!
பாரதி ஒரு அவதார புருஷன். இந்நூற்றாண்டினுடைய சமூக, பொருளியல், தத்துவ, ஞான, கலை, இலக்கியங்களின் வளர்ச்சியோடு அவனுடைய வளர்ச்சியும் இணைந்திருப்பது பாரதியின் தீர்க்க தரிசனத்தைப் புலப்படுத்துகின்றது. இன்றைய நூற்றாண்டின், புதுமை படைக்கும் ஆவேசத்தில் பழமைகளைக் குறைகூறிக் களைந்தெறியும் நம்மவர்கள் தங்கத் தமிழனையே குற்றவாளிக் கூட்டில் நிறுத்துகின்றார்கள். கூறுகின்ற குற்றமும் நியாயமாய் இல்லை.
“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை. மெல்லத் தமிழினிச் சாகும்.”
என்ற பாரதியின் வரிகளை நுனிப்புல் மேய்ந்து விட்டு பாரதி மெல்லத் தமிழினிச் சாகும் எனக் கூறினான் என்றுகுற்றஞ்சாட்டும் எம்மவர்கள் கவிதையை முழுமையாகப் படிப்பதில்லை. தமழர் தம் அவலங்கள் பலவற்றிற்கு அடிப்படைக் காரணம் இதுதான். கவிதை தொடர்கிறது. ‘மெல்லத்தமிழினிச்சாகுமென்றந்தப் பேதை உரைத்தானே” என்று ஆங்கிலேயனொருவனைச் சாடுவதாகவே கவிதை அமைந்திருக்கின்றது. ஆக, முடிபு இதுதான். மெல்லத்தமிழினிச்சாகும் என்று பாரதி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை! மேலைத்தேயம் என்று சொன்னால் ஆங்கிலேயர்கள் எங்களை விட மேலானவர்கள் எனும் பொருட்பிழை தோன்றிவிடும் என்பதற்காக, இலக்கணப்பிழையைப் பொருட்படுத்தாமல் மேற்கு + தேயம் என்பதை மேற்கைத்தேயம் எனப் புணர்த்தியவன் முண்டாசுக் கவிஞன்.
புதுமை பல படைக்கிறோம் எனும் பெயரில் இணையத்தில் தமிழைப் புகுத்தி, நம்மவர்கள் தமிழை கொலை செய்து விட்டார்கள் என்பதை விட அண்மையில் கிரியைகளும் முடிந்து விட்டன என்பதே சாலப் பொருந்தும். தமிழன்னைக்கு கைகளிலே வளையாபதியும் செவிகளிலே குண்டலகேசியும் பாதங்களிலே சிலப்பதிகாரமும் இடையிலே மணிமேகலையும் மற்றும் சீவகசிந்தாமணியும் போதாது என்று கூறி தமிழ் வளர்க்கின்றோம் நாம் என்று பறையறைபவர்கள் ஒரு விடயம் - 23 -

Page 14
பற்றி சிந்திக்க வேண்டும். தமிழ்த்தாய்க்கு தலையிலே கொம்பியூட்டர் கிரீடம் சூட்டியவர்கள், பஞ்ச காப்பியங்களையும் களைந்தெறிந்து விட்டார்கள் என்பதே வருந்தத்தக்க விடயம். ஆக, தமிழ் வெறியர்களே! நீங்கள் தமிழை வளர்க்க வேண்டாம்! வாழ விடுங்கள் அதுபோதும்!
இன்னும், தமக்கு மேலே இறைவன் என்னும் மேலான சக்தியொன்று உளதென்று சான்றோரே, முன்மொழிந்திருப்பினும் இன்று எம்மவரில் பலர் நாத்திகம் பேசிக் கொண்டிருப்பதும் வன்மையாக விமர்சிக்கப்பட வேண்டிய விடயம். இக்கட்டுரையைப் படித்ததும் நாத்திகர்கள் அனைவரும் ஆத்திகர்களாக மாற வேண்டுமென்பதல்ல எனது குறிக்கோள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதும் பிரச்சினையல்ல! இக் கட்டுரையைப் படித்ததும் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதும் பிரச்சினை இல்லை! நம் அன்றாட வாழ்க்கையில் சில முரண்பாடுகள் உள்ளன. சில விடயங்களை பகுத்தறிவு சொல்லும் இரண்டும் இரண்டும் நான்காக வேண்டிய கட்டாய நியதிகளின் படியும் கோட்பாடுகளின் படியும் அலச முடிவதில்லை. இந்நிகழ்வுகள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவை இவ்விடயத்தினை நம்மவர் உணர்வதே போதுமானது! அதுவே இக்கட்டுரையின் வெற்றி!
ஒரு நாட்டின் அறிவான இளைஞர்கள் பயிலும் இடமாக பல்கலைக் கழகங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். ஆனால், அங்கே நடக்கும் பகிடிவதைகள் குரூர எண்ணம் கொண்ட வக்கிர புத்தி கொண்ட இதயங்களின் வெளிப்பாடாகவே அமைகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி உளவியல் ரீதியான உடலியல் ரீதியான பகிடிவதைகள் விவாதிக்கப்பட வேண்டியன. விமர்சித்து தண்டிக்கப்பட வேண்டியன.
இனி, வெளிநாட்டு மோகத்தால் தாய் மொழி மறந்து வாழும் நம்மவரிடம் வருகின்றேன். ஆங்கில மொழி மோகத்தால் அலுவலக மொழியையெல்லாம் வீட்டிற்கு காவி வந்து வீட்டிலும் ஆங்கிலத்தில் மொழிகிறார்கள்! குற்றம் தான்! பரவாயில்லை! விட்டு விடலாம்!!
ஆனால், நாய்க்கு வைக்கும் பெயரையெல்லாம் நாகரீகமாகக் கருதி தம் பிள்ளைகட்கு வைப்பதையே தாங்க முடியுதில்லை!
'உன் அழகுக்குத் தாய் பொறுப்பு” என்னும் வரியினை விட ‘உன் அறிவிற்குத் தமிழ் பொறுப்பு” எனும் வரியினை உச்சரிக்கும் - 24

போதே மெய் சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைகின்றோம். எமக்கு அறிவை வழங்கியது தாய்மொழி! நாம் சிந்திப்பதும் தாய் மொழியிலேயே! ஆக, மீண்டும் கூறுகின்றேன். தமிழ் மொழியை வளர்க்க வேண்டாம் நீங்கள்! வாழ விடுங்கள் அதுபோதும்!
இனி சென்றவாரம் வாசித்த நாளிதழின் சிறப்புச் சிறுகதைக்கு நகர்கின்றேன். கதையில் துக்ககரமான சம்பவம் ஒன்று நிகழ்கிறது. நாயகனின் தாய் இறந்ததாக அவனுக்கு தந்தி கிடைக்கிறது. அவ்விடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கிறோம் எனும் நினைப்பில் கதாசிரியர் “அவன் மேல் ஆயிரம் இடிகள் விழுந்தன. செவிப்பறைகளில் சண்டமாருதங்கள் தோதின. கண்கள் மழையெனப் பொழிந்தன’ என்கிறார். தேவையா? உங்களில் பலர் நெருங்கிய அன்பர்களையோ, உறவினர்களையோ, ஏன் தாய், தந்தையரையோ இழந்திருப்பீர்கள். அந்த சோகத்தின் ஆழம் உங்களுக்கு நன்றாகவே புரியும். ஆக முடிவு என்னவெனில், தேவையற்றவிடங்களில் தேவையற்ற அளவுக்கு மீறிய வர்ணனைகள் வாசகர்களை எப்போதும் சலிப்படையவே செய்கின்றன.
சமூக சேவை எனும் பெயரில், பற்பல மன்றங்களை அமைத்து சேவையாற்றி வரும் புகழ் விரும்பிகளாய் உள்ள நம்மவர்கள் வீட்டிலே தாய்க்கு, தந்தைக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு நல்லவர்களாய் இருப்பதில்லை! முடிபு என்னவெனில் முதலில் வீட்டிற்கு நல்லவர்களாயிருப்போம்! நாடு நலம் பெறும்! இது சத்தியம்!
இனி, பெற்றோர்களிடம் வருகின்றேன், உங்கள் பிள்ளை பொய் பேசுபவனாக, ஏமாற்றிப் பிழைப்பவனாக இருக்கிறான் என வருந்துபவர்களே, இந்நிலைக்குக் காரணம் நீங்களே என்று ஆயிரம் சபைகளில் அடித்துக் கூறுவேன். பிரபல அறிஞரொருவரின் கருத்துப் படி பெற்றோர் சிறுவயதில் பிள்ளைகளுக்குக் கூறும் கற்பனைக் கதைகளே அவர்களை மோசடிக்காரனாக உருவாக்கிறது. எம்மவர்கள் சிறு பிள்ளைகளுக்கு கூறும் கதைகளை நோக்கின், கண்முன் வருவது பாட்டி வடை சுட்ட கதை. கதையின் சாரம் என்னவெனில், காகம் பாட்டியை ஏமாற்றுகிறது! காகத்தை நரி ஏமாற்றுகின்றது! ஆக எப்படி, யாரை, எங்கனம் ஏமாற்றுவது என்பதையே சிறுவயதில் பிள்ளைகட்கு போதித்து விட்டு பின்னாளில் கவலை கொள்வதிலோர் மகிமையில்லை!
MMW
2
5

Page 15
இதை வாசித்துவிட்டு இன்றைய பெற்றோரைத் திருத்த வேண்டுமென்பதல்ல எனது நோக்கம். இதைப் படித்து விட்டு, இன்றைய இளையோராவது நாளைய நமது பிள்ளைகட்கு சிறுவயதில் கற்பனைக் கதைகளைக் கூறாமல் தமிழை, தமிழின் சிறப்பை, எக்காலத்திற்கும் பொதுவான உலகப்பொது மறையைப் போதித்தல் வேண்டுமென்பதே இவ்வாக்கத்தின் எதிர்பார்ப்பு.
நாம், மற்றவர்களுடைய நாகரீகத்தில் மூழ்கிவிடாமல் மற்றவர்கள், எமைப்பார்த்து இது நாகரீகம்! எனும் கூறும் நிலை விரைவில் உருவாக ஒவ்வொரு தமிழனும் ஆவன செய்தல் வேண்டும்.
ஆக்கம்:- சு. உமாசுதன்.
/ー = இளைய தமிழனே எண் ஆசிகள்
தமிழ்த் தாயின் இளைய புதல்வர்களே தமிழாலயம் எனும் கோவில் அமைத்து தமிழ்த் தாயை பிரதிஸ்டை செய்து தமிழன் வாழும் இடமெங்கும் தமிழ் மணம் வீசச் செய்யும் . தங்கள் தன்னிகரில்லாத் தமிழ்த்தொண்டு கண்டு மகிழ்கிறேன் தவிப் புதல்வர்களே! நீங்கள் வருவீர்கள் என்ற தீர்க்கதரிசனத்தால் தான் தமிழ்ப்பித்தன் பாரதி அன்று சீறி எழுந்தான் மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்றொரு பேதை உரைத்தானே! என்று.
அன்புடன க. கலாகரன் (பொருளியில் ஆசிரியர்)
ク ܓ)

எனக்கும் இல்லை உரிமை!
ஈழம் என்பார் இனம் என்பார் எரிகின்ற தேசம் நோக்கார் இருமணி மின்வெட்டு இடைஞ்சல் என்பார்
இருளில் மூழ்கிய
தேசம் பார்க்கார்
கவி என்பார்
கலை என்பார் கருகும் இளைய - உயிர்கள் காணார் கலை வளர்ப்போம் தலை நகரில் என்பார்
தலை அழுகி என்பாகும் நிலை பேசார் வெள்ளை வேஷடி
தங்கச் செயின் வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கூடி
வெட்டிக் கதை,
விடமாட்டார் பெடியள் வென்று காட்டுவர்
என்று சொல்லார் விடுதலைக்காய் வேராகும் விருப்புமில்லை அந்த வேருக்கு உரமாகும் உணர்வுமில்லை வீட்டோடு பெயர்ந்திருப்பார் உயிர் பயந்து பின்னர் வெகு கதியில் ஊர் போவோம் வென்ற பின் என்பார் இங்கிருந்து இது பேச எனக்கும் இல்லை உரிமை அங்கிருந்து இது பேச ஆயிரம் உண்டு உயிர்கள்
- க. நிறஞ்சன் -
- 27

Page 16
இரு விழிகள் இரு திசைகள்.
நந்துவும், விஜயும் பூமியில் பிறக்கும் முன்பே ஒரே அறையில் வசித்தவர்கள். ஆம், அவர்கள் இரட்டைக் குழந்தைகள். ஆனாலும் நந்து சிறுவயது முதலே இயந்திர மனிதன், விண்வெளிப்பயணம் பற்றிய கற்பனைகளுடனேயே வளர்ந்தான். விஜய் புத்தகப் படிப்புடன் கலாசாரம், பண்பாடு என்பவற்றுக்குள்ளேயே வளர்ந்தவன்.
நந்து பல்கலைக்கழக படிப்பு முடித்து இளம் விஞ்ஞானியாக பரிணமித்த போது அவனது தந்தை மகிழவே செய்தார். ஆனால் தாயோ, விஞ்ஞானம் அழிவுக்கு வழிவகுப்பதோடு மனிதனுக்கு பிரச்சினையையும் ஏற்படுத்தி, அதை நிவர்த்தி செய்வதாக இருக்கிறது. விஞ்ஞான வசதியற்ற காலத்தில் எம்மவர் வாழவில்லையா? அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவில்லையா? அபரிமித விஞ்ஞான வளர்ச்சி மனித குல அழிவுக்கே வழி சமைக்கும் என்று இயந்திரவாழ்வு பற்றிய தனது சலிப்பை வெளிப்படுத்தினாள். அது நந்துவின் ஆவலை ஆவேசமாக்கி விட்டது.
சோ. சேயோன்
‘அம்மா, அபரிமித வளர்ச்சி ஒரு போதும் ஆபத்தானதல்ல. பொறுப்பு அற்ற விஞ்ஞான வளர்ச்சி தான் அழிவைத் தரும். அணுசக்தியை பாவித்து அணுகுண்டுகள், வயக்ரா மாத்திரை, இப்படிச் சில பொறுப்பற்ற செய்கைகளைக் கொண்டு ஒட்டுமொத்த விஞ்ஞான வளர்ச்சியையும் குறை கூறுவது, எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. அதற்காக இயந்திர மனிதர்கள், செயற்கை மூளை, இணையப் பாவனை போன்ற மனித குலத்தின் உச்ச அறிவுப் பயன்பாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? நான் என்னால் முடிந்ததை உலக நன்மைக்காகவும், விஞ்ஞான வளர்ச்சிக்காகவும் செய்வேன்.” என்று கூறி இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
தாயும் ‘இவன் தான் பெரிய விஞ்ஞானி ஆகப் போகிறானாம்,
விஜயைப் பார் அவன் ஒழுங்கா டாக்குத்தரா வேலை செய்யிறான்.
இது தேசம் விட்டு தேசம் போய் அதுவும் காணாதெண்டு அங்கால
விண்வெளிக்கும் போகப்போகுதாம்” என முணுமுணுக்க, தகப்பனோ
‘’ ஒண்டாப் பிறந்தாலும் , ஒரே உருவத்தில் இருந்தாலும் , - 28

கொள்கையளைப் பாத்தியோ?, ஒண்டு உன்ரை சந்தோசத்திற்கு, மற்றது என்ர சந்தோசத்துக்கு அதுகள் இப்ப வளந்திட்டுதுகள். அதுகளுக்கு தெரியும் தங்கட வாழ்க்கையைப் பற்றி” என்று கூறி விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
நந்து சிறுவனாக இருந்த போதே அல்பேட் ஐன்ஸ்டீன் அவரது சார்புத்தத்துவம் என்பன பற்றியெல்லாம் படித்திருக்கிறான். எண்ணி வியந்திருக்கிறான். இன்னும் அவனுக்கு ஐன்ஸ்டீன் சார்பு நிலை பற்றி எல்லோருக்கும் புரியுமாறு கூறியிருந்த ‘அழகான பெண்ணுடன் இரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அது உனக்கு ஒரு நிமிடம் போல் தோற்றும், ஆனால் சூடான அடுப்புக்கு அருகில் ஒரு நிமிடம் இருந்தால் போதும் அது இரு மணி நேரம் போல் தோன்றும். இது தான் சார்பு நிலை" எனும் வாக்கியமே பிறருக்கு சார்பு நிலை என்றால் என்ன? என்று விளக்க உதவும்.
நந்துவும் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் சார்புத்தத்துவத்தில் கூறப்பட்ட விளைவுகளை ஆராயும் விஞ்ஞானியாக இணைகிறான். இங்கிருந்து சென்று ஆறு மாதங்களில் அவனது திறமையை உணர்ந்த அந் நிறுவனம், நந்துவிடம் ஒளியின் வேகத்தினை விட சற்றுக் குறைவான வேகத்தில் செல்லும் 'ஒளிவேக ஊர்தி” ஒள்றை அமைக்கும் செயற்திட்டத்தை அவனது பொறுப்பில் ஒப்படைத்தது.
அவனும் வெற்றிகரமாக அப்பணியை நிறைவேற்றி, முதல் பயணியாக அவனும் அவன் நண்பன் எட்வினும் புறப்படுவதென ஏற்பாடுகள் வெகு கதியில் நடந்தேறின. திகதி அறிவிக்கப்பட்டது. நடக்கவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு கருத்தை அவர்கள் பொய்யாக்கப் போகிறார்கள் என்றதும், உலகமே நேரடி ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கும் நந்து, எட்வினின் பயணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்தது.
ஒளிவேக ஊர்தி பூமியை விட்டுப் புறப்பட்டு சிறிது நேரத்தில் இருவரினதும் உருவங்களில் மாற்றம் ஏற்படுவது போல் தெரிகின்ற வேளையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் அறுகின்றன. உலக மக்களுக்கு பேரதிர்ச்சி!
ஊர்தியில் இருவரும் தமது உருவங்கள் தாம் செல்லும் திசைக்கு
- 29

Page 17
எதிர்த்திசையில் சுருங்குவதைக் கண்டு திகைப்பும் பயமும் அடைந்தனர். அது மட்டுமல்லாது தமது நிறயைப் பரிசோதித்த இருவருக்கும் பலத்த அதிர்ச்சி. நிறை ஏறத்தாள இரு மடங்காயிருந்தது. எனினும் நந்து ஐன்ஸ்டீனின் சார்பு தத்துவப்படி இவையெல்லாம் நடைபெற சாத்தியம் உள்ளது எனக் கூறி, திட்டப்படி பால் வீதியில் இரண்டு ஆண்டுகள் வலம் வந்து, திரும்ப பூமியை அடைய வேண்டிய தினத்தில் அடைவோம் என்று இருவரும் சமாதானமடைந்தனர். தமது ஏனைய பரிசோதனைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
பூமியில் இரண்டு வருடத்தின் பின் அனைவருக்கும் அதிர்ச்சி, திட்டப்படி ஒளிவேக ஊர்தி திரும்பும் என்று கூறியிருந்த நிறுவனத்தினருக்கு ஏமாற்றம். ஆம், ஒளிவேக ஊர்தி திரும்பவில்லை. நந்துவின் அம்மாவோ ‘நான் அப்பவே சொன்னன் இந்தப் பாழாப் போன உத்தியோகம் வேண்டாம் எண்டு, நீங்கள் கேட்டியளே? பெருமை உலகுக்கு சேவை எண்டெல்லாம் சொல்லி என்ர வாயையும் கட்டிப்போட்டியள். இப்ப என்ர பிள்ளையக் காணல்ல” என்று புலம்பத் தொடங்கி விட்டாள். மகன் இறந்து விட்டான் என்றே முடிவு எடுத்து, ஏனைய கடமைகளை முடித்தனர்.
உலகம் ஒளிவேக ஊர்தி பற்றி மறந்திருந்த வேளையில், ஏறத்தாள இரண்டு வருடம் தாமதமாக ஊர்தி புவியை அடைகின்றது. அதிலிருந்து எட்வினும், நந்துவும் வெற்றிக்களிப்புடன் வெளியே வந்தனர். மகிழ்ச்சி ஒருபுறமும், குறித்த நேரத்தில் திரும்பாத கோபமுமாய் நின்றவர்களைப் பார்த்து நந்துவும், எட்வினும் ‘இரண்டுவருடம் விண்வெளியில் வித்தியாசமான அனுபவம்” என்றனர். ‘இரண்டு வருடமா, நான்கு வருடம் நீங்கள் விண்வெளியில் இருந்நதிருக்கிறீர்கள்.” நந்துவுக்கு இப்போது புரிந்தது ஒளியின் வேகத்தில் செல்லும் ஊர்தியில் ஒளிப்பொட்டுக் கடிகாரம் மூலம் தாம் கணித்த இரண்டு வருடம், பூமியிலுள்ள அதே கடிகாரத்தில் ஏறத்தாள நான்கு வருடமாகக் காட்டும் என்பது, ஐன்ஸ்டீனின் கோட்பாட்டைக் கொண்டு விளக்கப்படலாம் என்று.
வானொலி, தொலைக்காட்சி அலைகளிலும், இணையத் தளங்களிலும் இதுவே செய்தியானது.
‘சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதனாகக் கணிக்கப்பட்ட அல்பேட் ஐன்ஸ்டீன் ஒளியின் வேகத்திற்கு சமனான வேகத்தில் செல்லக்கூடிய
- 30 -

அணுக்கருவுக்குள் இருக்கும் புரோத்திரன், நியூத்திரன், இலத்திரன் போன்ற துணிக்கைகளில் பைமெஸான் என்ற துகளை அதிவேகத்துக்கு உள்ளாக்கி பரிசோதனை செய்த போது அதன் எடை கூடியது, மற்றும் வாழ்நாள் அதிகமானது. அதனைக் கண்டு அன்று விஞ்ஞான உலகு ஸ்தம்பித்தது! இன்று நடக்கவே முடியாது என்று விஞ்ஞான உலகு நினைத்ததை விஞ்ஞானிகள் நந்துவும், எட்வினும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.”
நந்து வெற்றிப் பெருமிதத்தோடு ஊருக்குச் செல்கின்றான். அவனுக்கு அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம். விஜய் தனக்கு அண்ணனாகி விட்டானா? தனக்கு இரண்டு வருடமாக இருந்தது, விஜய்க்கு நான்கு வருடமாக இருந்துள்ளது. அப்படியானால் நான் இரண்டு வயது குறைந்தவனாகி விட்டேன். இரட்டைக் குழந்தைகள் கூட விஞ்ஞானத்தால் வயது வேறுபாடு அடைகின்றன. இதற்குத் தான் அம்மா வேண்டாத இயற்கைக்கு விரோதமான விபரீதமான விளைவுகள் ஏற்பட விஞ்ஞானமே காரணம் என்று கூறினாவோ? என எண்ணியவாறு வீட்டை அடைகின்றான்.
அங்கு நின்ற விஜயை அண்ணா என்றா அழைப்பது? என்று திகைக்கின்றான் நந்து.
‘ஐயம் விவேகத்தின் தொடக்கம்; முடிவு அல்ல”
முற்றும்
米 米 米 米 米 米 米
விவாதம் சிம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இளைய விவாதிகளுக்கான வழிகாட்டல்களுடன்.
W.
தமிழாலயம் வழங்கும் புதிய தொடர்
- 3 I -

Page 18
எனக்காய் இல்லை உனக்காய்...!
‘இது பச்சை இனத்துரோகம்.” நிரஞ்சன் இப்படித்தான் கத்தினான். ‘இருந்துவிட்டு போகட்டும். நீ ஒரு இனவெறியன்.” பதிலுக்கு சூர்யாவிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்த விதமும் வேகமும் நிரஞ்சனின் குரலை மேலும் உச்சஸ்தாயிக்கு கொண்டு சென்றது.
‘காதலிக்க உனக்கு வேறு ஆட்களே கிடைக்கேலையா?. ‘இவளைத்தான் அல்லது அவளைத்தான் காதலிக்க வேண்டுமென்று "பிளான்' பண்ணி காதலிச்சா அது காதலில்லை. வேறை ஏதாவது பெயர்தான் வைக்க வேணும். காதல் சாதி, மதம், இனம் எல்லாம் பார்த்து வராது.” ஏற்கனவே கேட்டும், பார்த்தும் புளித்துப்போன வசனங்களாயிருந்தாலும் தானும் அதையே தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்பது சூர்யாவிற்கு சற்று சங்கடத்தைக் கொடுத்தது.
- கதிர் சயந்தன் -
‘ஆக. உன்ர காதல் மூலம் சாதி மத இன பேதங்களை உடைத்து புதிய சமுதாயம் படைக்கப் போகின்றாய். அப்பிடித்தானே.” நிரஞ்சனின் கேள்வியில் ஏளனம் லேசாய்த் தொனிப்பதை உணர்ந்தவன் ‘ஒம். அப்படித்தான்.” என்றான் உறைப்பாக.
'எனக்கொரு உண்மையைச் சொல்லு.?”
‘என்ன?”
‘சமுதாய சீர்கேடுகளை உடைத்தெறிந்து புரட்சிகர மாற்றம் ஒன்றை ஏற்படுத்தத்தான் காதலிக்க ஆரம்பித்தாயா?.” பதில் பேசாதிருக்க நிரஞ்சன் தொடர்ந்தான்.
‘இல்லை என்பது தான் பதிலாயிருக்க முடியும். ஏனென்றால் உனக்கு மட்டுமல்ல. காதலிப்பவர்கள் எல்லோருக்கும் ஆரம்பத்தில் இப்படியான சமுதாய மறுமலர்ச்சிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் துளியும் கிடையாது. ஏதோ ஒரு வேகத்தில் காதலித்து விடுகிறார்கள். பின்னர் இவை போன்ற தடைகள் குறுக்கே வரும் போதுதான் இவைகளுக்கெதிராய்ப் போராடுவதாய் சொல்லுகிறார்கள்.
- 32

எழுதுகிறார்கள். ஒருவேளை இவ்வாறான தடைகள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் இவ்வாறான புரட்சிகர மாற்றங்கள் பற்றி நினைப்பது கூட கிடையாது. நான் என்ன சொல்ல வர்றன் என்றால் யாருமே சாதியை, மதத்தை, இனத்தை இல் லா தொழிப்பதற் காயப் காதலிப்பதில்லை. அதுதான் உண்மை. என்ன கசக்குதா?.”
அந்த உண்மையின் தார்ப்பரியம் சூர்யாவை உறுத்தியபோதும், அதையும் தாண்டி நிரஞ்சன் மேல் வெறுப்பும் எரிச்சலும் நிரம்பி வழிந்தன. “ரொம்ப நன்றி உன்ர அட்வைசுக்கு, இண்டைக்கு இவ்வளவும் போதும்.” அலட்சியமாய்ச் சொன்னான்.
‘'நீ எப்படியெண்டாலும் இருந்து விட்டுப் போ.” நிரஞ்சன் எழுந்து சென்ற பின் னரும் , நெடுநேரமாயும் சூர்யா அங்கேயே உட்கார்ந்திருந்தான்.
米 米 米 米 米 米 米 米
திறந்திருந்த விழிகளை இருட்டுக்குள் தொலைத்து விட்டு படுத்திருந்தவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் தூக்கம் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டான். நெஞ்சுக் கூட்டுக்குள் 'ஹோ' என்ற இரைச்சலுடன் நெருப்பெரிந்து கொண்டிருந்தது.
‘‘ காதலிக் க உனக்கு வேறு ஆட்களே கிடைக்கேல்லையா?."திரும்பத் திரும்ப நிரஞ்சனின் குரல் அவனுக்குள் ஒலித்தது.
‘சே. என்ன நடந்தது எனக்கு?.” நெஞ்சினை அழுத்திச் சலித்துக் கொண்டான். 'எப்போதிருந்து இந்த வலி?”
அவளைப் பார்த்த பொழுதுகளிலிருந்தா?. நிச்சயமாய் இல்லை. அல்லது அவள் என்னோடு பேசிய நிகழ்வுகளிலிருந்தா?. அப்பொழுதும் இருந்திருக்க முடியாது. அப்படியாயின் எப்போது?. அழகான பெண்ணோடு பேசுதலும் பழகுதலும் கெளரவம் என்கின்ற அசட்டுத்தனம் மறைந்து எப்போது காதல் உருவாயிற்று?.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களிற்கு முன்பிருக்கும். கல்லூரியில்
சற்றுத் தாமதமாய் அவசர அவசரமாக வந்தவன் எதேச்சையாய் அவள்
பக்கத்தில் உட்கார்ந்து கண்களை மூடி ஒருதரம் பெரிதாய் சுவாசம்
உள்ளிழுத்து விட்ட ப்ோது வினோதமாய் ஒருமுறை பார்த்தவள் மீண்டும் - 33

Page 19
கணணிக்குள் மூழ்கினாள்.
‘‘அடிக்கடி என்னைப் பார்க்கிறாளோ?.” சூர்யாவிற்குள் இனம் புரியாத மகிழ்வு கலந்த எண்ண அலைகள் ஊழிக்கூத்தாடத் தொடங்கின.
‘ஏதாவது பேசலாமா?. என்ன பேசலாம். இந்தக் கேள்விக்கு அவள் கொடுக்கும் வழிமுறைகளை விட இலகுவான விதத்தில் தீர்வு காணலாம் என்று சொல்லலாமா?. எனக்குத் தெரியும் என்று சொல்லி விட்டால்.’ மெளனம் காத்தான்.
சற்றே இலகுவான கேள்விக்கு சீக்கிரமாய் பதிலளித்து விட்டு காத்திருந்த போதுதான் இயல்பான குரலில் ஆனால் புரியாத மொழியில் அவள் கேட்டாள்.
‘உதவ முடியுமா?”
‘‘மன்னிக்கவும் உங்கள் மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது.” அழகாய்க் கையசைத்து ஆங்கிலத்தில் அவன் சொல்லவும் அவளும் மொழிமாற்றிக் கேட்டாள். சூர்யாவின் மனதிற்கு இமயமலை சிறு புள்ளியாய்த் தெரிந்தது.
“நிச்சயமாய். வெறும் ஐந்தே வரிகளில் வரையறைக்கேற்றவாறு இப்படி எழுதினால் போதும்.” அவனே எழுதிக்காட்டி இலகுவாய் விளக்கம் கொடுத்தான். முதற்தடவையிலேயே அது சரியாய்ச் செயற்பட சின்னதாய் ஒரு பெருமை முகத்தில் ஒட்டிக் கொண்டதை தவிர்க்க முடியவில்லை.
“ரொம்ப நன்றி” என்றவள் இயல்பாய்க் கை நீட்டித் தன் பெயர் சொன்னாள்.
“றொசானி” பதிலுக்கு கைநீட்டி பெயர் சொல்ல வேண்டிய பண்பாடு மறந்து மனது கவிதைத் தனமாய்ச் சிந்தித்தது.
‘ரோஜா. நீ.
அதன் பின் பேசுதலும் பழகுதலும் சிரித்தலும் ஒன்றாய்
உணவருந்துதலும் சகஜமாகி விட்டிருந்தது. ஆனால் காதல் எப்போது உருவாகிற்று..?
- 4 3 ۔۔۔

வியர்த்தது. ‘கரண்ட் வர இன்னும் ஒருமணி நேரமாவது இருக்கிறது. ‘என்ன செய்யலாம்?. வெகு சீக்கிரத்தில் சொல்லிவிட வேண்டும், நாளை சொல்லலாமா?. சொன்னால் என்ன பதில் கிடைக்கும்?. ஐயையோ, இதெல்லாம் பேசவே பயமாயிருக்கின்றதென்பாளோ?. வெட்கப் படுவாளோ?. யோசிக்க வேண்டும் என்பாளோ?. இல்லை. நிச்சயமாய் இவையெவையும் இல்லை. அவள் அப்படிப்பட்டவள் அல்ல. அனாவசிய வெட்கங்கள் அற்ற, வெகு இயல்பாய் ஆனால் உறுதியாய், தெளிவாய் பேசுவாள். ஆக. அவள் என்ன சொல்வாள். கேள்விகள் அலைகளாய் உள்ளே பொங்கின.
அவசியமான, ஆனால் பேசுவதற்கு சற்றே சங்கடமான விடயங்களைக் கூட அவள் இயல்பாய் எடுத்துக்கொண்டு கருத்துச் சொல்லும் போதெல்லாம் சூர்யாவிற்கு ஆச்சரியமாயிருக்கும். அவளில் மட்டும் ஈர்ப்பு ஏற்படுவதற்கு இவை கூட சில சமயங்களில் காரணமாய் இருந்திருக்கலாம்.
நேரம் பதினொரு மணியைத் தாண்டியிருக்கும். படுத்திருந்தவாறே அருகிலிருந்த வானொலியைத் திருகினான்.
‘சரி. உங்கட காதல் ஏன் முறிஞ்சு போனது.?” யாரோ ஆணும் பெண்ணுமாய் நீ முந்தி நான் முந்தியென கேள்வி கேட்டார்கள்.
‘நான் ரொம்ப சின்வழியராகத்தான் லவ் பண்ணிட்டிருந்தனான். இடையில சின்ன ஒர் பிரச்சினை. அதனால.”
‘என்ன பிரச்சினை.?” அடுத்தவன் பிரச்சினையை அறிவதிலேயே ஆவலாயிருந்த அவர்கள் அவனை இடைமறித்துக் கேட்டார்கள்.
‘அவவுக்கு எண்ணில சந்தேகம் வந்திட்டுது. நான் வேறையாரோவையும் லவ் பண்ணுறதா அவ நினைச்சிட்டா. நான் சொல்லியும் கேட்கல்லை. மறந்திட்ச் சொல்லிட்டா.”
9.
'உண்மையிலேயே அப்படி ஏதாவது நடந்ததா?.
‘இல்லை. அப்ப இல்லை. ஆனா இப்ப நான் வேறை ஒராளை லவ் பண்ணுறன். அவ மறந்திடச் சொன்னாப்பிறகும் அவவையே நினைச்சிட்டிருக்க முடியாது தானே..!’ தொலைபேசியில் அந்த இளைஞன் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தான்.
‘அப்போ இது உங்கட இரண்டாவது காதல். அப்படித்தானே?”
- 35 -

Page 20
s
g
‘உங்கட முதற்காதல் முறிஞ்சு எத்தனை வருஷமிருக்கும்?” அங்கிருந்தவர்களில் ஆண் மட்டும் விடாமல் கேட்டான். சூர்யாவிற்கு ‘விடுப்புக் கேட்டல்” என்ற சொற்றொடர் காரணமின்றி ஞாபகத்தில் வந்து போனது.
‘வருஷம் இல்லை. இப்ப ஒரு மூண்டு கிழமைக்கு முந்தித்தான்.”
‘நன்றி. உங்கட முதற்காதல் தோல்வியடைஞ்சாலும் அடுத்த காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.”
வானொலியை அடித்து நிறுத்தினான் சூர்யா. ‘நாய்.” வரக் கூடாத பல வார்த்தைகள் அவன் வாய்வரை வந்து போயின. இப்போது
கரண்ட்’ வந்துவிட்டிருந்தது.
‘நாளை எப்படியும் கேட்டு விட வேண்டும்”
米 米 k ※ 泳
நேரெதிரே றொசானி உட்கார்ந்திருந்தாள்.
‘ம். டிரிங்கை குடி.” சூர்யா ஸ்ரோவை வாயில் பொருத்தினான். என்ன. நான் காதலிக்காவிட்டால். என்னை உன் வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள மாட்டாயா?. பதில் பேசு சூர்யா.” றொசானி மீண்டுமொரு முறை கேட்ட போதும் சூர்யா அமைதியாயிருக்க அவளே தொடர்ந்தாள்.
&
‘என்னை காதலிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏன் வந்தது. இப்பொழுதே உன்னோடு நான் சகஜமாய் பேசுறன், பழகிறன். நீயும் தான். ஆனால் காதலிக்க வேணும் என்று ஏன் தோன்றிற்று.? மீண்டும் சூர்யா மெளனம் காக்க அவளே தொடர்ந்தாள். ‘ஒரு வேளை யாராவது ஒரு பெண்ணை சினிமா பீச் என்று. அழைத்துச் செல்ல வேண்டுமென்றெண்ணுகிறாயா?. உன் நண்பர்கள் பார்க்கும் படியாக அவள் கைகோத்து நடக்க விரும்புகிறாயா..? அல்லது.” அவள் முடிக்கும் முன்பாகவே அவன் முந்தினான்.
‘இல்லை. இல்லை. அப்படி யெல்லாம் இல்லை.” ஆழ்மனதில் எப்போதாவது இருந்து விட்டு எழுகின்ற சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள். ‘ஒருவேளை
-36 -

அவர்களும் அப்படித்தானோ?”
‘ஏன்? றொசானி. உன்னை என் வாழ்வின் துணையாய் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதா?.” நெடுநேரத்தின் பின் பேசினான்.
'முடியும் , சந்தோஷம் . அதற்காகவேண் காதலிக்க வேண்டுமென்கிறாய்..?”
‘உன்னைப் புரிஞ்சு கொள்ளவே முடியல்ல. றொசானி.” அலுத்துக் கொண்டான்.
“புரிந்து கொள்ள முடியாதளவிற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. மொத்தத்தில் புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்று யாருமே இல்லை. ஆனால் சிலர் தாங்கள் புரிந்து கொள்ளப்பட முடியாதவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். காட்டிக் கொள்கிறார்கள். சரி அதை விடு. சூர்யா இதில இன்னொரு பிரச்சினையை உனக்குச் சொல்ல வேண்டும்.” என்றவளை ‘என்ன என்பது போல் நிமிந்து நோக்கினான்.
“சாதாரணமாய் காதலுக்காக பெற்றோரை, சமூகத்தைத்தான் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். இங்கை அப்படியில்லை. ஒரு இனத்திற்கெதிராக் கூட போராட வேண்டி ஏற்படலாம்.” சில வினாடி மெளனத்தின் பின் சொன்னாள். ‘ஏற்கனவே இரண்டு இனமும் போராடிட்டுத்தான் இருக்கு.”
‘' இல்லை. அதுபொய். எப்பொழுதுமே இனங்கள் தங்களுக்கிடையே இங்கே சண்டை பிடித்ததில்லை.” இடையில் மறித்து, அழுத்தி மறுத்துச் சொன்னான்.
* சரி. எப்பிடியென்றாலும் உன்பக்கமிருந்தோ. அல்லது என்பக்கமிருந்தோ பிரச்சினைகள் கிளம்பலாம்.”
நிரஞ்சன் ஒருமுறை சூர்யாவின் நினைவில் வந்துவிட்டு ஓடினான். ‘'நீ உன் வழியைக் கவனி. நானும் அவ்வாறே என் வழியை கவனிக்கிறன். நான் என்ன செய்கிறேன்? வேறெந்த ஆணுடன் பேசுகின்றேன் என்றெல்லாம் அறிய ஆவல்படாதே. காதலித்தால் நிச்சயம் இவையெல்லாம். வரும். நான் வேறெந்த ஆணுடனாவது பேசினால் உன் நெஞ்சுக்குள் நீர் வற்றிப் போகும். நான் என்ன பேசினேன் என்பதை அறிய ஆவல் துடிக்கும். அதெல்லாம் வேண்டாம். ஏதாவது உதவி தேவையென்றால் மட்டும் கண்டிப்பாய்
- 37

Page 21
கேட்பேன். நீ கேட்கமாட்டாய் என்று நினைக்கின்றேன். உனக்குள்ள இருக்கிற 'ஈகோ’ எனக்கும் தெரியும்.”
y
“ஒருவேளை வாழ்வில் நாம் இணைய முடியாது போய்விட்டால். தயக்கத்துடன் இழுத்தான் சூர்யா.
‘‘முயற்சிப்போம். முடிந்தவரை, சக்திக்குட்பட்ட வரை முயற்சிப்போம். பிறர் தயவின்றி நிற்கும் நிலை வரும் போது முடிவெடுப்போம். அதற்காய் பாடுபடுவோம். பொருளாதாரம் ரொம்ப முக்கியம் சூர்யா. உரிய நேரம் வரும் போது. சாதாரண ஒரு வாழ்க்கை நடத்த நீயும் நானும் பொருளாதார நிலையில் தயாரா இல்லாட்டி நாம் வாழ்வில் இணையும் எண்ணத்தை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்ற முறை 'சிஸ்ரம் அனலைசிஸ் சில நான் பெயிலான போது ஏற்பட்ட வருத்தத்தை விட சற்று அதிகமான வருத்தத்தோடு பிரியாத்தான் வேண்டும்.” றொசானியின் தெளிவான தீர்க்கமான பேச்சு அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
‘காதலித்து விட்டு அப்படிப் பிரிய முடியாது. பிரியலாம். மிகச்சரியான காரணங்கள் வேண்டும். அப்பா வேண்டாமென்றுகிறார், மாமா அடிப்பேன் என்கிறார் என்றில்லாத மிகச் சரியான காரணம் இருந்தால் பிரியலாம். தப்பில்லை. ஆனால் அதுக்கு காதலை எதிர்ப்பது போலவே, புனிதம் அது, இது என்று பேசுகின்ற இன்னொரு கூட்டமும் இருக்கு. அந்தக் கூட்டம் விடாது. துரோகம் என்று சொல்லும். ஏமாற்றுதல் என்று சொல்லும். அதெல்லாம். நமக்குத் தேவையா?.”
‘றொசானி. உன் பேச்சைப் பார்த்தால். நம்முடைய அன்பையும் வாழ்க்கையில் இணைய வேண்டுமென்ற எண்ணத்தையும் 'சிஸ்ரம் அனலைசிஸ் சோடு ஒப்பிடுகின்ற அளவுக்கு வெகு சாதாரணமாக்கி விட்டாயே..” வழக்காடு மன்றத்தில் மடக்கிக் கேள்வி கேட்பது போன்ற தொனியில் கேட்டான் சூர்யா. சிரித்துக் கொண்டே சொன்னாள்.
‘ஆக நீ படிக்கின்ற ‘சிஸ்ரம் அனலைசிஸ்'சை ஒன்றுமில்லாத வெகுசாதாரணமென்கின்றாய். அப்படித்தானே..?” அவன் முகத்தில் அசடு வழிந்தது.
காலை வெகு சீக்கிரமாகவே கல்லூரிக்கு வந்துவிட்டிருந்தான்
சூர்யா. செய்து முடிக்க வேண்டிய பயிற்சி ஒன்று மீதமிருந்தது.
கணனித்திரைக்குள் கண்களை ஒடவிட்டுவிட்டிருந்தவனுக்கு அடிக்கடி
திரும்பி அவள் வந்து விட்டாளா இல்லையா என்று பார்க்கத் - 38

தோன்றாதது குறித்து வினோதமாயிருந்தது.
'குட் மோர்னிங் சூர்யா. அவள் குரல் தான். இயல்பாய்த்திரும்பி பதிலுக்கு சொன்னான்.
‘அந்தக் கடைசிக் கேள்விக்கு நான் செய்தது எப்படியெண்டு பார்.” கையிலிருந்த ஃப்ளொப்பியை அவனிடம் நீட்டியவாறே கூறினாள். ‘நேற்று இரவு ஒரு ஒன்பது மணிபோல் உனக்கு போன் பண்ணினேன். நீ தூங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.” ஃப்ளொப்பியை வாங்கி உட்செலுத்தில் திரையில் தோன்றிய அவள் விடைகளில் கண்களை மேயவிட்டான்.
“இரவு முழுவதும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தேன் தெரியுமா?. முடிய ஒரு மணியாயிற்று.” அருகில் நின்று அவன் தோள்களில் கையூன்றியவாறே தானும் சேர்ந்து ஆராயத் தொடங்கினாள்.
சூர்யாவின் நெஞ்சுக்கூட்டுக்குள் “ஹோ” என்ற இரைச்சலுடன் நெருப்பெதுவும் இப்பொழுது எரியவில்லை.
(சிந்தனையும் கற்பனையும்)
ரங்கத்தில் காணும் கருத்துக்கள் அனைத்தும் முன்னேறத் துடிக்கும் உள்ளங்களுக்கு ஊன்று கோலாகப்
ஷேக்ஸ்பியர்
தும் போதுதான் உடலும், உள்ளமும் உயிரும்
வளர்கின்றன” XA- ; : :
ஜேம்ஸ் ஆலன்.
தருபவை”
சிந்தனை இல்லாத படிப்பு, படிப்பில்லாத சிந்தனை தீமை
கிளேடர்.
- 39

Page 22
6) Giocoso. 61 f f is
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உலகாள உமது தாய்மிக உயிர்வாதை யடைகியாள்; உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
கலையே வளர்! தொழில் மேவிடு! கவிதை புனை தமிழா! கடலே நிகர் படை சேர், கடு விட நேர் கரு விகள் சேர்! நிலமே உழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்; நிதி நூல்விளை உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!
அலைமா கடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்! கொலைவாளினை எடடாமிகு கொடியோர் செயல் அறவே குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம் எனவே முரசறைவாய்! இலையே உணவிலையே கதி இலையே எனும் எளிமை இனி மேலிலை எனவே முர சறைவாய் முரசறைவாய்!
- LITU25.5/Taf6of -
தமிழாலயம்
காப்பாளர்
க. க. உதயகுமார்
உறுப்பினர்கள் ஆ. அருண்பிரசாத் இ. டிலக்ஷன் சு. கோபிநாத் க. நிரஞ்சன் இ. மதிசுகன் செ. பிரவின்சங்கர் கு. றஜிவ் நிர்மலசிங்கம் க. சயேந்திரன் பெ. செ. செந்தூரன் சோ. சேயோன்
செந்தூரன் சோமிதரன் சுதர்ஷன் சுரேந்திரன் தவச்செல்வன் ஆ. இ. திருச்செந்தூரன் சு. உமாசுதன ஞா. வாகீசன் தே. யோகேந்திரன்
- 40
 

46
தரணியெங்கும் தமிழ் செழிக்க தமிழாலயம் உயிர்க்கும்
՝ ջ_uniնւլ` வீறுகொண்டு என்றும் வாழ
வாழ்த்துகின்றேன் ...!
திரு எம்.ஆர்.பவுமுடீன்
(இரசாயனவியல் ஆசிரியர்)
சங்கம் பிறில்லியன்ற் வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை செக்
கண்டி
溺画
鹏
蛋
"
| N

Page 23
SLSLS S S S S SLSLS SLS LSLS LSLSSLSLSSLSLSSLSLSSLSLS
சுவடுகள்
97 இன் இறுதிகளில் ஆரம்பிக்கப்ப முதலாவது கலை இலக்கிய நிகழ்வு சிறப்புற அரங்கேற்றப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தினி பல பாடச விவாதப் பயிலரங்கம் எனும் சிறப்பு தமிழாலயத்தின் ஏற்பாட்டில் நடை
1998-04-14 அன்று சித்திரைப்புத்தான் கலைஞர்கள் கலந்து கொண்ட ஆவிய
1998 இல் தமிழாலயம் வழங்கிய மற் கருத்தரங்கு நிகழ்வில் தமிழகத்தைச் கலந்து கொண்டு தலைமைதாங்கிச் ஆக்கது.
2001தைப்பொங்கள் தினத்தையைாட் பொங்கள் விழா 2001-01-14 அன்று
தமிழாலயம் மையத்தின் முதலாலு: "உயிர்ப்பு' சஞ்சிகையின் வெளியீட் 2001-11-13 அன்று இடம்பெற்றது.
'வீழ்வது நாமாயிரைம் வாழ்
SSS SSS SSS SS SS SS S S S S S S S S SS SS SS
- ܚܛ5 -

- - -
ட்ட தமிழாலயம் அமையத்தினர் 1998 பொங்கள் தினத்தன்று
லைகள் கலந்து கொண்ட ப் பட்டறை நிகழ்வு பற்றது.
ர்டை முன்னிட்டு தமிழாலயம் பரங்கம் இடம்பெற்றது.
றுமொரு கவியரங்க மற்றும்
சேர்ந்த கவிஞர் மு.மேத்தா சிறப்பித்தமை குறிப்பிடத்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்து நடைபெற்றது.
து காலாண்டு இதழான்
வைபவமும் கலைநிகழ்வும்
வத தமிழாகட்டும்'
LL LS S LSLS S S S S S S S