கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுகா 2006.02-03

Page 1
ங்குனி, 2008
- பங்கு
шгиптdг
திடுகை ரூபா
|× -, .! |- ) ---- s ( s )| |- |- |-| .|×| ()sae.
புதியത്രസൃഷ്ണ
 
 


Page 2
UZ
கனவில் கண்ட சிங்கம் எல்லா வடிவங்களுமாய் விரிகின்றன.
சடசடவென வீழ்ந்துபோகும்கட்டடங்கள் பெரும் வெளியை உருவாக்கி நிற்க, சிங்கம் வீசிப்போகிறது நீற்றுவெக்கையை
முயல் ஆத்திரம் கொள்ளவில்லை “பாழ் கிணற்றில்தானே விழப்போகிறாய் பொறு பொறுவெனத்” தலையாட்டியது மீண்டும் கூட்டிக்கழித்துப் பார்த்தது. பாழ் கிணறுதான் ஜென்மச்சனி என்றது.
வியாபாரப்பதிப்பகங்களின் வெளிவருகை ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு பணம் பண்ணும் வியாபாரப்பதிப்பகங்கள் ஆளுக்காள் அடிபட்டு முண்டியடிக்கத் தொடங்கிவிட்டன. மறுபடியும்
மணிமேகலைப்பதிப்பகம் ஈழத்து, 60 புத்தகங்களை வெளிக்கொணர்ந்து ஒரே
நேரத்தில் 30 புத்தகங்களுக்கான வெளியீட்டுவிழாவையும் செய்திருக்கிறது. நல்லவிடயம். ஆனால் இந்தவெளியீட்டின்மூலம் பலாபலன் என்ன? எத்தனை
பக்ககங்கள் கனகியானக. g புதத தியானது.?
மணிமேகலையைப் பொறுத்தவரையில் வியாபாரத்தையே முக்கியமாகக்கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் சமையல் குறிப்புமுதல் லட்டாபுட்டாக்கெல்லாம் புத்தகங்கள்
போடுபவர்கள். இம்மனநிலையில் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களைப் பார்க்கும்போது
கனதியான வெளியீடுகளை வெளிக்கொணரவில்லையென்பது தெரியவருகிறது.
இவ்வாறான பணம் பண்ணும் பதிப்பகங்களிலிருந்து வெளிவரும் வெளியீடுகளை வாசித்துவிட்டு தமிழ் நாட்டு வாசகர்கள் இதுதானா, ஈழத்து எழுத்து என்ற முடிவுக்குவரக்கூடாது ஏலவே காலச்சுவடும் கூட ஈழத்து எழுத்து என்ற சிறப்பு மலரை வெளிக்கொணர்ந்து ஈழத்து எழுத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறது. இவை எல்லாம் ஏன்? கதவைத்திறங்கள் காற்றுவரும் یقہ ۔a-iT
ஆசிரியர்: த. மலர்ச்செல்வன் 2 5. அட்டைப்படம்: கிக்கோ
3 தொடர்பு முகவரி மறுகா, ஆரையம்பதி - 03, மாசி - பங்குனி, 2006 மட்டக்களப்பு, இலங்கை
 
 
 
 
 
 
 

ஒரு முக்கியமான அவதானிப்பு
இன்றைய ஆய்வுச் சூழலில் எழுத்து
இலக்கியத்தைவிட வாய்மொழி (அல்லது
நாடடார்) இலக்கியம் முக்கியம் பெற்று வருகின்றமை ஆர்வலரறிந்தவிடயமே. வரலாறு என்பது மன்னரின் வரலாறு என்ற கண்ணோட்டம் மாறி வரலாறு என்பது மக்களின் வரலாறு என்ற சிந்தனை முகிழ்ப் பும் விளிம்பு நிலை மக்கள் பற்றிய ஈர்ப்பும் காரணமாக அம் முக்கியத்துவம் மேன் மேலும அதிகரித்து வருகின்றது. இத்தகைய சூழலில் இன்றுள்ள ஆதி வாசிகளின் வாய்மொழிப்
பாடல்கள் இவ் வாய்மொழிப் பாடல்களின் முக்கியத்துவத்தில் இன்னொரு பரிணா மத்தை - பரிமாணத்தை - வெளிப்படுத்தக் கூடியனவாயிருப்பது இன்றைய இந்திய ஆதிவாசிகளின் பாடல்களைப் படிக்கும் போது புலப்படுகின்றது. இதுபற்றி சுருக்க மாக எடுத்துரைப்பதே இக்கட்டுரையின்
நோக்கமாகின்றது. 'கடவுளுக்கு முன் பிறந்த வர்கள் - ஆதிவாசி கவிதைகள் என்ற தலைப்பில் இந்திரன் தொகுத்தளித்த மொழி பெயர்ப்பு நூல் இதற்கு ஆதாரமாக அமை கின்றது.
மேற்குறிப்பிட்ட ஆதிவாசிகளின் பாடல்கள் இன்றைய ஆதிவாசிகளின் (பாரம்பரிய) நம்பிக்கைகள், அவர்களின் இருப்பு கேள் விக்குள்ளாதல், அவர்களுக்கெதிரான இந்திய அரசின் செயற்பாடுகள் அவற்றிற் கெதிரான, ஆதிவாசிகளின் எதிர்ப்புக் குரல்கள் எனப் பல விடயங்களை வெளிப் படுத்துகின்றன. இங்கு அவைபற்றிக் கூறு வதைத் தவிர்த்து இன்னொரு விடயம் பற்றிக் குறிப்பிட விரும் புகின்றேன். அது, அவர்களது. வாய் மொழிப்
பாடல்களுடாக வெளிப் படுகின்ற ஏனைய
மக்களது வாய்மொழிப் பாடல்களுடாக வெளிப்படாத சூழலியல் சார்ந்த விடயமாகும்.
இந்திய ஆதிவாசிகளுள் கணிசமானோர் காடுகள் சார்ந்த பிரதேசங்களில் இருப்ப வர்கள். எனவே இவர்களது பாடல்களில் காடுகள் - மரங்கள் - முதன்மை பெற்றுள்ளன. iஅவற்றோடு மட்டுமன்றி அங்கே வாழும் மிருகங்களுடனும் அவர்களுக்கு நெருங்கிய
,岑溪德德 it ܝ ܠ உறவுள்ளது. இயற்கையோடு ஒன்றித்த வாழ்வாக அது உள்ளது. “நிலா நடனம்” என்ற கலைப்பிலான பின்வரும் பாடலைக் கவனியுங்கள்.
“மரங்கள் அசைகின்றன. மகிழ்ச்சி யாக உள்ளன.
நடனமாடும் எங்கள் குழந்தைகளின் மீது மரங்கள் தங்கள் நிழலைச் சாய்கின்றன.
உயரமாகவும் அகலமாகவும்
வலிமையாகவும் வளர்ந்து
மலர்களாலும் கனிகளாலும் விதை
களாலும்
கனத்து நிற்கின்றன.
நாங்களும் வலிமையாகவும் ஆரோக்கிய
மாகவும்
நிற்கிறோம்
எங்களது ஆடுகள் கானங்களில் மேயப்போய்
மான்களோடு கலக்கின்றன.

Page 3
04
புலிகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு போய்விட
இதற்காக நாங்கள் புலிகளை வேட்டையாடுவதில்லை. ஏனெனில் அவற்றிற்கென்றும் உரிமைகள் உள்ளன.”
இந்த ஆதிவாசிகளுக்கும் நிலத்திற்கு மிடையிலான உறவு எத்தகையது? இப்படி ஆரம் பிக்கின்றது ஒருபாடல்
“நமது நிலம் நமது ஆசிரியர்”
மற்றொரு பாடல், “எங்களின் ஒவ்வொரு கனவிலும் எங்களின் நிலத்தைக் கனவு காண்கி றோம். எங்கள் நிலத்தில் வாழவில்லையெனில் நாங்கள் மரணத்தை தழுவுகிறோம். எங்கள் நிலத்திலிருந்து கிடைக்காத ஆரோக்கியம் என்ற ஒன்று
எங்களிடம் இல்லை’
காடுகள் சிலவற்றை ஆதிவாசிகளின் முன்
னோர் அழிக்க முற்பட்டபோது அந்தக்
காட்டுப்பகுதி ஆவி அந்த முன்னோர் களிடம்
கூறியதாம்:
“இது எனது வீடு எனவே இந்த காடுகள் இருக் கட்டும் நான் உங்களுடன் இருந்து எங்களைப் பாதுகாப்பேன்
s
இவ்வாறான உயிர்க் காடுகள் அரசு அதிகாரி
களால் அழிக்கப்படுகின்றபோது இந்த ஆதிவாசிகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்புகின்றன. பற்றியும் இவர்களது பாடல் கள் எதிரொலிக்கின்றன. பின்வரும் பாடல் பகுதி , அணைக்கட்டுத்திட்டம் ஒன்றினை எதிர்த்த வேளையில் பாடப்பட்டது.
“அணைகட்டுவதற்காக மரங்கள் வெட்டப் பட்ட நிலையில் அது பற்றிய விடயம்
முக்கியம் பெறுகிறது.
சால் மரங்கள் அடர்ந்த பகுதியை அவர்கள் நெருங்கியபோது தெனாலி என்றழைக்கப்படும்
அந்தப்பகுதியின் ஆவி சால் மரங்களை வெட்டவேண்டாமென்று
கேட்டுக்கொண்டது
அது அவர்களிடம் சொன்னது: இது எனது வீடு எனவே இந்தக் காடுகள் இருக்கட்டும் நான் உங்களுடன் இருந்து உங்களைப் பாதுகாப்பேன் அறுவடையைக் கொண்டாடும் மகே பாப் நாளில் சால் மரங்கள்
பூத்துக் குலுங்கத் தொடங்கும்.”
மாறாக, இவ் ஆதிவாசிகள் மண்ணையும் மரங்களையும் காடுகளையும் இயற்கையை நேசிப்பதென்பது இன்னொருவிதத்தில் எமது கவனத்தை ஈர்க்கின்றது. அதாவது, எழுத்து இலக்கியத்தினூடாக அறியப்படும் சங்ககால தமிழ் மக்களது வாழ்க்கையை - அவர்களது வாழ்க்கையில் மரங்களும் காடுகளும் விலங் குகளும் இயற்கை பெற்ற முக்கியத்துவத்தை - இது மேலும் உறுதிப்படுத்துகின்றது. சங்க கால மக்களதுவாழ்க்கை ஒழுக்கங்கள் தாவ ரங்களின் பெயர்களாக உள்ளமையும் நிலம், மரங்கள், விலங்குகள் என்பன முதற் பொருள். கருப்பொருளாகவுள்ளமையும் அவை உள் ளுன்ற உவமையாக வெளிபபடுகின்றமை யும் நாமறிந்திருப்போம். நிலத்தைக் கனவில் காண்கின்றார்கள் ஆதிவாசிகள். மரத்துடன் உரையாடுகின்றாள். சங்க இலக்கியப் பாட
லொன்றிலே தோழி!
இவ்வழிகளில்லாம் நான் குறிப்பிடவிரும்பு வது யாதெனில், இவ் ஆதிவாசிகளின் பாடல்கள் பண்டைய இந்திய சமூகத்தின், தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் பண்புகள் சிலவற்றை வெளிப்படுத்த உதவுகின்றன: எழுத்து இலக்கியங்களுடாக அறிந்து கொண்டவற்றை உறுதிப்படுத்த உதவுகின்றன என்பதே.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட் டங்களில் எல்லையோரங்களில் ஒருசில பிரதேசங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்ற
ஆதிக்குடிகளான வேடர்கள் முதலானோர்
மத்தியில் வழங்கிவரும் பாடல்களும் தேடப்படவேண்டியது அவசியமென்பது மேற்கூறிய விடயங்களிலிருந்து புலப்படு கின்றது என்பதில் தவறில்லை. அதே வேளை யில் இப்பிரதேசங்களில் ஒரு காலத்தில்
6

பெருமளவு பாடப்பட்ட கவிகளும் அதை யொத்த பிற பாடல்களும் கூட இன்றைய ஆய்வாளர்களது தேடல் முயற்சியை எதிர் பார்த்துள்ளன எனலாம்.
அது மட்டுமன்று, எழுத்து நிலைபெற்ற வாய்மொழிப்பாடல் (Semi Oral) மரபொன் றும் எம்மிடையே உண்டு. பின்வருவது அம் மரபில் வந்த மொட்டை வேலாப் போடியார் (1804-1880) என்பவர் பாடிய பாடலாகும்; மருதமரமொன்றினை ஊரிலுள்ள செல்வந்தர் ஒருவர் வெட்டிவித்தபோது பாடியது இப்பாட லாகும்.
முத்தர் பாண்டியர் மூவர் இருக்கின்ற மத்தியான மருத நிழல்தனைக் கத்தி கொண்டவன் கந்தறவெட்டினான் சக்தி வேலவன் தலையற வெட்டுவாய்”
ஆகவே, இத்தகை மரபுவழிப்பாடல்களும் எமது கவனத்திற்கும் தேடலுக்கும் உரியனவாம்.
ပ္ရန္ဟန္မ္ပံ (ယ်ခ်ဂ်ဇာလz]ဇာပ-4 (ဗဂ်မှ(အီးnို’
ဂJ/မ်ခံ.ခ့ဲၾ ஆண்டப்படுகிஷான் : (مثل2l c نومبAnaG س?arدن تکاملہ ۱۱م۱۲7 است (oceی کoوری
Sarma & Co.
(Chartered Accountants)
G.S Swaminathan Sharma MBA (UK), ACA, ACMA (UK) CMA (UK), FSCMA (SL) Partner
Bandaranayake Mawatha |
Colombo -12 Sri Lanka
து அழகாக, அழகாக சொட்டுகிறது. அதனைக் கொல்வதுதாணி அதனை அணைப்பது
தனி வாழ்வை நாம் கெடுத்தல் கூடாது தனை எரிய விடுங்கள் புதனைச் சாக விடாதீர்கள்
3-11-05
இசை
U60afe56 சை போன்றவர்கள் பூணர்கள்
1(g- தைக்கின்றார்கள்
7-06-05
குடை கண்ட மழையே நீயெனர் வாசல் திறந்து விட்டுவா
திறந்து விட்ட மழையே - எனி வீட்டினுள்ளே வா
உன்னைப் பார்த்து ரசிக்க ஏங்கும் எந்தனர் கணிகள்
மின்னல் துரத்திய
உண்குளிரை என் உடம்பு மட்டும் உணரும்
செல்வி. பாதிமா தஹானி நஜிமுதின், தரம் - 4 (ஆங்கிலம்)
மஹற்மூத் மகளிர் கல்லுரி, கல்முனை

Page 4
06
ལྷོ་
XX-X 畿 ՀԻ
தமிழின் மிக அண்மைய, அல்லது புதுமைப்பித்தனுக்கும் பின்னரான மிகப் பெரும் பாய்ச்சல் கோணங்கியே. அதில் சந்தேகமோ தயக்கமோ கொள்ள வேண்டிய தில்லை. கோணங்கியைப் புரிந்துகொள்வதில் இன்னமும் எங்க ளுக்குத் தாழ்வுச் சிக்கல்கள் உள்ளன. ஏதோ ஒரு வெளிப்படையற்ற உட்கார ணத்தினால் கோணங்கி விமர்சன உலகத்தால் புறக்கணிக்கப்படுகிறார் என்பதும், எஸ். வி. ராசதுரை போன்ற வர்கள் கூறுகின்ற கருத்துக் களும், கோணங்கியின் படைப்புலகத்தினுள் புகுந்துகொள்ள வாசக உலகம் முன் னெடுக்கும் ஆர்வத்தைக் கொச்சைப் படுத்துவனவாக உள்ளன என்பதும், கவலைப்பட வேண்டியவைகளே.
அண்மையில் (சுனாமிக்கு முன்னர்) நண்பர் உமாவரதராஜனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பின் போதும், கோணங்கி பற்றிய பேச்சில் ‘அம்மணராசாவின் ஆடைக்கதையையே மீண்டும் எஸ். வி. ஆர் கூறினார். இருப் பியல் வாதம், அந்நியமாதல், பிராஸ் போர்ட் மார்க்கியர்கள் பற்றி எல்லாம் தமிழில் எடுத்துரையாடிய பெருமை கொண்ட எஸ். வி. ஆரின் கருத்து உவப்பானதாக இருக்கவில்லை.
3. கோணங்கியைப் புரிந்து கொள் வதில்
பல சிரமங்கள் எங்களுக்கு உள்ளன தான். அவர் தனது படைப்புக்கள் குறித்த கருத்துக்களுக்கு எதிர்வினை
செய்யாமல் இருப்பது அவரின் புனைவுலகில் புகுந்து கொள வதற்கு தடையாக உள்ளன என்பதும் உண்மைதான். இவை களுக்காக கோணங்கியை நிரா கரித்து விடமுடியாது. பேரக ராதிகள், கலைக்களஞ்சியங்கள். வாகடங்கள், நிகண்டுகள் போன்ற எழுத்துவகைகளுள் புகுந்து கொள்வது போன்ற பேரனுபவம் எமக்கு ஏற்படுகின்றது என்பதே மிக முக்கியமான விடயம்.
4. கோணங்கியினது படைப்பாற்றல் வெறுமனே ஒரு பதிவு மட்டு மன்று. அவர் ஒரு இலக்கிய இயக்கமானவர், மதினிமார் கதைகள், கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், உப்புக்கத் தியில் மறையும் சிறுத்தை, பாழி பித்திரா என்று தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறார். கல்குதிரை” இதழ்கள் ஒவ் வொன்றும் தட்டிக்கழிக்க முடி யாதவைகள் இவருடைய படைப புக்களை ஊன்றிப் படிப்பவர்கள்
கோணங்கியின் எழுத்தினால்
தமிழ் மொழியின் வாசிப்புப்
பொறியமைப்பு தகர்ந்துள்ள தைக் கண்டு கொள்ள முடியும்.
குறிப்பாக நூலிடை உறவினை கோணங்கியின் படைப்புக்களில் தரிசிக்கலாம். கம்மங்கரை”யை யும், நத்தைக் கூடென்னும் கேலக்கியையும் உறவுபடுத்தி வாசிக்கலாம். புதுமைப்பித்தனின் கபாடபுரத்தையும், இவரது கடல் கொண்ட மணல் நகரம் தனுஷ் கோடி’யையும் இணைத்துப் படிக்கலாம். இவரது கிணற்றடி ஸ்திரீகளில் மெளனியின் அழியாச்சுடர் யாழியைத் தரிசிக் கலாம். இத்தகைய பண்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக பாழியைச் சொல்லலாம். பாழி யின் பக்கங்களில் விரியும் பந்திகளின் ஊடாகவும், இவரது எழுத்துலகில் புகுந்து கொள்ள லாம். பாழியின் இடை குறைந்த, கிரகநிலை எழுத்துக்களில் நாமும்
욕
 
 
 

இணையலாம் தொன்மை, எழுத்தோதுகை, இனக்குழுக்களியம் என்று, இவைவரைவுத் தன்மை கொண்ட எடுத்துரைப்பினைக் காண லாம். இத்தகைய தமிழின் புனைபுலமை மீது இன்னும் விமர்சன ஒளி உட்புகவில்லை என்பது சந்தோசமான செய்தியல்ல.
இவர் நிறையவே எதிர் வினை செய்கிறார். இதனூடாக தனது புலமையை வெளிக்காட்டு கின்றார். இதுவரை, தமிழிலக்கியத்தின் குறிப்பாக புனைகதை இலக்கியத்தின் போதாமை பற்றி நிறையப் பேசியும், எழுதியும் இருக்கின் றார். உலகத்தரத்துக்கு கையளிக்கப்பட இருக் கும் தமிழ் நாவல் பற்றி கட்டியம் கூறியவர் ஜெயமோகனே இவரது புலமைத்துவக் கதை யாடல் இவரை சுயமேதாவித்தனம் கொண்ட வர் என்ற விமர்சனத்தைக் கூறினாலும், இவரது புலமைத்துவத்தினால் தமிழக்கியம் வளர்ச்சி கண்டதென்பதே உண்மை,
7. கோணங்கியின் படைப்புக்களில் உள்நுழைதல் சராசரி வாசகருக்கு சாத்தியக் குறைவாக இருக்கும்போது, ஜெயமோகனின் படைப்புக் கள் எளிதில் வாசகனை ஈர்த்து விடக்கூடியன. கி. ராஜநாராய னின் கன்னிமை`க்கும் பிரதி உறவாக இவரது “கன்னியாகுமரியைப் படிக்கலாம். இவரது மூன்று சரித்திரக்கதை களில் மலைசாதிப் பெண்ணை பன்னிரண்டு தடவைகள் இருட்டில் புணர்ந்த, அந்த வெள் ளைக்காரப் பிரபுவைப் படிக்கையில், கோணங் கியினது குருட்டு ஏட்டினையும், தொடுகையில் ஸ்பரிசத்தில் விரியும் உலகையும் காணலாம். நீர் பொசிந்து, கசிந்து, திரண்டு, ஓர் துளியாகி, கனிந்து விழுந்து முடியும் கணப்பொழுது களில், பல ஒளியாண்டுகளைக் கடந்த
உணர்வினை கோணங்கியில் காணும் போது,
ஜெயமோகனின் தேரில் சிறியதையும், பெரிய தையும், அற்பத்தையும் அண்டத்தையும் έδπ6δυτουπιδι
8.
ஜெயமோகனின் “விஷ்ணுபுரத்தைப் படித் தவர்கள் அவரின் படைப்பாற்றலினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மனத்தைக் கூறும் இனவரைவு என்றும் விஷ்ணுபுரத்தைச் சொல்லலாம். மூன்று யுகங் கள் கொண்ட காலப்புனைவு. மணிமுடி, திருப்பாதம் என விஷ்ணுவின் விஷ்வரூபத்தை உள்ளிடாகவும், உறை பொருளாகவும் கொண்ட பெரும்புனைவு அது
9. கோணங்கியின் பின்னய காலப்படைப்புக்
10.
களில் அபத்தமனிதர்கள் வந்துபோக, ஜெயமோகனின் படைப்புக்களில் இரத்த மும் சதையும் கொண்ட மனிதர்களைச் சந்திக்கலாம். விஷ்ணுபுரத்தின் ஒரு யுகத்தில் தீண்டத்தகாத திருவடி தெருவில் கண்ட கணிகை மீது காமங்கொண்ட திருவடி அவ னையே நினைத்தவனாய் சதாதினமும் கைமதுனம் செய்து கொண்டவனுகிய திரு வடியை எந்த வாசகனும் எளிதில் மறக்க முடியாது திருவடி அடுத்த யுகத்தில் ஆள் வாராக்கப்படுகிற்ான். “கன்னியாகுமரியில் அந்தப் பெண்ணின் காலில் இருக்கும் பழைய காயத்தின் தழும்பை ஜெயமோகன் எடுத்து ரைக்கும்போது அதில் மெய்மறக் காதிருக்க முடியாது விஷ்ணுபுரத்தின் பல இடங்களுக்கு எங்களை அவர் அழைத்துச் செல்கிறார். சோனாநதி தீரத்துக்கு கூட்டிச் செல்வதி னுாடாக, கோயில மாடத்தில் கின்னரர்கள் இசைக்கும் நாதத்தைக் கேட்கச் செய்வதினூ டாக இந்திய வாது சாஸ்திரத்தின் நுட்பத்தை எடுத்துரைக்கின்றார். காட்டை குறியீடாகவும், காமத்தை உள்ளிடாகவும் கொண்ட காட்டை வாசிக்கையில் அவரது முன்னைய புனைவு களின் தொடர்ச்சிகளைத் தரிசிக்கலாம்.
புதுமைப்பித்தனுக்குப் பின்னரான தமிழில் பாய்ச்சல் கோணங்கியென்றால், ஜெயமோகன
வேறொரு எழுத்துப்பள்ளியின் தொடர்ச்சியா
கின்றார். இவர் சுந்தரராமசாமி வகைப்பட்ட இலக்கியமாதிரிகளில் ஒருவர். ஜெயமோகனின பின்தொடரும்நிழலின்குரலில், விஷ்ணு புரத்தைப் பற்றிக்கூறும்போது சுரா. அதனை நிஜஉலகில் மையம் கொள்ளாத படைப்பு என்கிறார். மெளனியின் எழுத்தின் அகர்சன கிரகநிலையில் கண்ட சு. ரா. விஷ்ணுபுரத் தில் மட்டும் நடப்பியலைத்தேடியது முரணாகத தோன்றவில்லையா? இதுவெல்லாம் ஜெய மோகனின் புலமைமீது கொள்கின்ற ஏக்கப் பொறாமை, என்பதைவிட வேறு எப்படிக் கூறமுடியும்? சு. ரா. விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி சுந்தரராமசாமி
பள்ளியின் அசல் தொடர்ச்சி ஜெயமோகனே ே
O

Page 5
08
மகரஜா சொன்னகதை
தமலர்ச்செல்வன்
4.1 சூரியன் 5 * செவ்வாய் 8
புதன்
4 ருது 9 சம்பந்தமான ரோகம் 3 உடையவர் வியாழன்
சனி
2 6) சந்திரன்
ராகு 11
*சொல்லுங்க மகாராஜா”
சொல்லுங்க மகாராஜா”
கதையாம் கதையாம் காரணமாம் காரணச் சட்டியாம் முட்டிப்புக்கையாம் சுட்டகருவாடாம்" வட்டியிலெடுத்தால் கலகம் வருமென்று, சுரயிலையில் திண்டவளே சும்மா படுடீ! படுடீ! நான் எங்க திண்டன் மகாராஜா நான் எங்க திண்டன் நாலு நாளாய் - நக்கினாலும் நாக்கில ஒட்டாத பழங்கஞ்சை பல்லிக்குக் கொடுத்தேன் மகராஜா பல்லிக்குக் கொடுத்தேன்.
என்றான் மகராஜா
“என்ன மகாராஜா.”
சொல்லையா, சொல்” என்றான்
மகராஜா காலைச்சுருட்டி, கவட்டுக்குள் கையை வைத்து படுத்துக்கிடந்தார். பசிவேறு வாட்டி யது. கிடந்த பழைய கஞ்சைக்கூட திண்டு ஏப்பமிட்டு கதைகேட்கும் ராஜாத்தியைப் பார்த் துச் சினத்தார். அவள் விடுவதாகயில்லை. கதை. கதை. என்றாள் ராத்திரிகள் தனிமைப்படுத்தப்படுவேன் என்பதை நினைத்து மகாராஜா பயம் கொண்டார். பின் பொன்வாய் மலரத் தொடங்கினார்.
O O O
ஊழிக்காற்று வீசமுன் பெரிய புள்ளபற்றியே ஊரெல்லாம் கதை உலாவத் தொடங்கியது. அவள் இன்னும் சமையவில்ல என்றே பல்லு விழுந்த கிழவன்கூட சந்தியில் பேசத்தொடங்கி னான். ஊர் கலாம்புலாமென்று பெரியபுள்ளை மயமாகிற்று இருவது வயது முடிந்து இருபத் தொரு வயது தொடங்கித்து அவளோடு ஒத்த
பொடிச்செல்லாம் கையில ஒண்டு, வகுத்துல
ஒண்டு எனத்திரியுதுகள் இவளுக்குத்தான் ஒண்டுமேயில்ல என்ன இழவோ தெரியல்ல. ஆள் மட்டும் பூதமாகிக்கொண்டே வந்தாள். ஆனால் அவளுக்கு இதுபற்றி எந்தக் கவலை யுமில்ல. ஒடுவாள், ஆடுவாள். பத்துப்பேரைக் கூடத்தூக்கிக் குத்துவாள். அவளின் அப்பன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெண்டிக்குத்தான் எல்லாக் கக்கிசமும் தன்
விட்டுத்திரிந்தான். செய்யாத பூசை புணக்கார மில்ல. வைத்தியமில்ல. ஆய்ந்து அரைக்காத இலை குழையில்ல. வெட்டாத பட்டையில்ல. சாறாக்காத மரமில்லை. எல்லாம் செய் தாயிற்று அவள் மட்டும் இன்னும் வெடிக்கல. தெண்டிக்குச்சலித்துப் போயிற்று. கால் எட்டும் தூரம் வரை நடந்தான். சாமூலையைப் பார்த்து தவமிருக்கும் ஒரு நித்திய சந்நியாசியைக் கண்டு காலில் விழுந்து கதறினான். சந்நியாசி கண்விழித்து அவன் தலையைத் தடாவி, “மகனே! நீயொரு பெண் ஜீவனின் கவலை யாள் அள்ளுண்டு திரிகிறாய். எல்லாம் சரி வரும். ஆனால். களத்திரத்தானாதிபதி ரோகத்தானத்திலேனும் ஆயுட்டானத்திலேனும் (6ம், 8ம் இடங்களில்) இருக்க, களத்திருத் தானத்தில் ரோகத்தானதிபனும் சூரியனும் கூடியுள்ளது. களத்திரத்தானாதிபனும் சூரியனும ரோகத்தானத்தில் இருந்தாலும், நவாம்சத்தில் இவ்வகையிருந்தாலும் இதில் பிறந்த பெண் கள் “ரஜஸ்’ குறைதல் ஏற்படும்”.
“என்னசுவாமி என்மகள் இருழியா’? தலையில் அடித்து அலறினான். “பொறும் மகனே! எல்லாவற்றிற்கும் பரிகார முண்டு ஆனால்.”சொல்லுங்கள் சுவாமி”
சந்நியாசி டேசவில்லை. “ஏழுபகலும் மூன்று
இரவும் இதைக்கட்டிவிடு” என ஒரு தகட்டை மந்திரித்துக் கொடுத்தார். தெண்டிக்குபுகளாங் கிதம் பூத்துவிரிந்தது. தன்மகள் ருதுவாகப் போகிறாள் என ஊரெல்லாம் நோட்டிஸ் ஒட்டி னான். ஆலயம் தோறும் அறிவிப்புச் செய் தான். சந்தியில் நின்று பிரச்சாரம் செய்தான்.
ஏழுபகலைபும், மூன்று இரவையும் ஊர் பாத்துக்கிடந்தது. பெரியபுள்ள ஒடித்திரிந்தாள், மரத்தில் பாப்ந்துகொப்புக்கிளைந்து திரிந்தாள். ஏழுபகல் முடிந்து மூன்றாவது இரவு நடந்து கொண்டிருந்த சஷனகன நேரத்தில் பிண்டரிகம் வெடித்து உதிரம் கொட்டத்தொடங்கினாள். ரெத்தம் ஆற்று வெள்ளமாய் பெருக்கெடுத்து தெற்கத்திமூலையையழித்தது. ஊழிக்காலம்
வீசத்தொடங்கியது. குன்றுகளும், குழிகளும் .
அமிழத் தொடங்கனெ. பெரியபுள்ள திமிர்0 கொண்டெழத்தொடங்கினாள்.
“நான் சமைந்தித்தன், நான் சமைத்தித்தன்” எனக் கூவினாள் ஊரில்யாருமில்ல. திண்டிகூட அவள் தோல் பட்டையில் அமர்ந்திருந்தான்.
ஊழிவெள்ளம் அடங்கியபின் பெரியபுள்ள ஊரைவிட்டு இக்கரைக்கு வந்து சேர்ந்தாள். காடும் கரம்பையுமாக இருந்தது. ஊர் மனை யைக்கூடக் காணவில்லை. காடுமுழுவதும் சுத்திச்சுத்தி மயக்கமுற்று பேர் தெரியாத ஒரு மரத்தின் கீழ் அயர்ந்து தூங்கினாள். காடு அவளை வைத்துச் சுத்தியது. யானையும், புலியும், சிங்கமும் மற்றக்காடுகளைத்தேடி ஓடின. கண்விழித்துப் பார்த்தாள். எதிர்த்திசை யில் ஒரு நாடோடி நடந்து போனான். அவள் ஒடிப்போனாள். அவன் மறைந்து போனான். மீண்டும் காட்டைச் சுத்தினாள் அந்த நாடோடி அவள் எதிர்கொண்டான். அவன் அவளைக் கடந்து போனான். அவள் அவனை பின் தொடர்ந்து மறித்து “நானும் உன்டோடு வரட்டா” எனக் கேட்டாள்” “கம்பில் விழுந்த வன்’ ஆம்” என அழைத்துப் போனான்.
இரவு முழுவதும் அவனுடன் கூடினாள் விடிந் ததும் ஊர் மனையொன்றால் அழைத்துப் போனான். இருபகலும், மூன்றிரவும் கூடிக் கூடியிருந்தான். பின் பயந்து நடுங்கி வீதிச் சுவரில் தொங்கிப்போனான்.
அவள் தனித்து அழைந்து திரிந்தாள். ஊர் “மலடி” என அழைக்கத் தொடங்கியது. ஆத்திரம் கொண்டாள் பல்லைக்கடித்து குட்டித்தாச்சி ஆடுகளை புசித்தாள்.
“மண்ணரைக்கிற குமரு” என வசைபாடினர். அவள் நிலத்தை உதைத்து நீரை உண்டாக் கினாள். “உதிரத்தாள் அக்கரையை அழித் தவள். ஜலத்தால் இக்கரையை அழிப்பேன். தப்பி ஓடிவிடுங்கள். " ஊர் மக்கள் பயந்து
H. “தாயே மன்னித்து விடுங்கள் ஊர் மக்கள் அழுதனர். “ம். போங்கள். உங்கள் உங்கள் பாட்டுக்கு யாரும் வாழ லாம். ஆனால் “. “என்ன தாயே

Page 6
சொல்லுங்கள் “யாரும் புருஷனுக்குப் பக்கத்
தில பெண்சாதியோ, பெண்சாதிக்குப்பக் கத்தில புருஷனோ படுக்கக்கூடாது, இருக்கக் கூடாது. கதைக்கக்கூடாது. என்ன?” “சரிதாயே” ஊர்மக்கள் முகத்தைத் தொங்கப்போட்டு நடந்தனர். மீண்டும் கையைத் தட்டினாள். இது நீண்ட நாளைக் கல்ல. கொஞ்ச நாளைக்கு. மற்றது கன்னிப் பெண்கள் யாருக்குமினி புது உறவுஇணைவோ, முதல் ராத்திரியோ இருக் காது.
“காக்காச்சிமுக்காச்சி,
கறுத்தப்பொண்டாட்டி சரியோ” வென தன் தலைக்கு மேலால பறந்துபோன அண்டம் காகத்திடம் கேட்டாள், “கா. கா. “ என்றது
ஊழிக்காலம் மீண்டும் அடித்தது. பெரியபுள்ள “தையத்தோம் தோம்தோம், தையத்தோம் தோம்தோம்” என ஆடினாள். கடல்வாலைச்சுருட்டி பேரலையாய் எழுந்தது. வெள்ளம் ஊருக்குள் புகுந்து பிஞ்சு, காய், பழமென அள்ளுண்டுபோய் தாகம் தீர்த்தது. இரைச்சல் ஓய்ந்தது. காற்று அடங்கிப் போன மூன்றாம் நாள் நிலம் வெடித்து பெரியபுள்ள மறைந்துபோனாள் ஊரே தேடியது. அல்லல் பட்டது. பெரியபுள்ளத்தாயேயென ஓங்காரம் ஒலிக்கத்தொடங்கியது. அவள் மாண்டுபோய் முன்னூறு வருடம் சொச்சம் கடந்தும் இன்னும் ஓங்காரம் ஒலித்துக்கொண்டேயிருக்குதாம்.
கதையும் முடிந்தது கத்தரிக்காயும் பூத்தது கத்தரிப்பூத்தது எதனால் கறுத்தப்பசு வந்ததால கறுத்தப்பசு வந்தது எதனால மேய்ப்பவன் விரட்டி விட்டதால ஆரைவிட்டு விரட்டுகிறான். நாயைவிட்டு விரட்டுகிறான். எந்த நாயை அனுப்புகிறான். கறுப்பு நாயை அனுப்புகிறான் கறுத்தப்பசுவைப் புடிச்சிக்கட்டு கத்திரிக்காயை பறிச்சி குழம்பு வையி தின்பமோ வேனாமோ? தின்னு உன்வாயில மண்ணு.
19 பக்கத் தொடர்ச்சி. புதுமை வடிவமானது அது தமிழ் கலையின், இலக்கியத்தின் சமூகத்தின், அரசியலின் போலி மைகளை இனம்கண்டு, அசலைத் தேடுபவன் ஜேஜே. “சிவகாமி இன்னமும் இருக்கிறாளா, இறந்து விட்டாளா” என்ற வாக்கியமே, உபநிடத மகாவாக்கியமாகி, ஜே.ஜேயின் ஆற்றலை என் றென்றும் நிலை நிறுத்தி வைத்துள்ளது என்பது தவறில்லை என்றே கருதுகிறேன்.
கருத்துக்கும், மனிதருக்குமான உறவு, “ஜேஜே சில குறிப்புகள்” எனில், மனிதனுக்கும் குடும் பத்திங்குமான உறவானது, “குடும்பம் - பெண் கள் - ஆண்கள்” லக்ஸ்மி முதலானோர் வழியில் குடும்பத்தைக் கண்ட வாசகர் உலகம், இப்போது, அதற்கு மாறான குடும்பத்தை - உறவு முரண் களும், சிக்கல்களும், துன்பங்களும், மிகுந்த குடும் பத்தை - இப்போது காண்கின்றது. மனித வாழ் வின் ஒட்டுமொத்தமான சாராம்சத்தை விபரிக்கும், அதன் விரிவும் ஆழம் தேடும் முதல் நாவல் இதுதான். ஏன் பெண் மன உலகையும், நுணுக்க மாக வெளிப்படுத்தும் முதல் நாவலும் கூட
சுராவின் கலை இலக்கி விமர்சனங்கள் கநா.சு அமைத்த தடமே, அதாவது ரசனை அடிப்படையே, எனினும், க.நா.சு போல் அத்திவாரமற்ற தன்று. பலமான, அழகான, அத்திவார்ங்கள்மேல் கட்டி யெழுப்பப்பட்டது. நடுநிலைமைத் தன்மை கொண் டது. தான் மதிக்கும் க.நா.சு, போன்றோரின் சிறப்புக்களை மட்டுமன்றி, குறைகளையும் காண் பது வரட்டுத்தனமற்றது.
சுராவின் கட்டுரைகள், கலையிலக்கியம் சார்ந்தவை மட்டுமல்ல, சமூகம், சினிமா, அரசியல், கல்வி, சூழலிலியல், தொடர்பூடங்கள் எனப் பல்துறை சார்ந்தவை. இன்னொருவர் வார்த்ததைகளில் கூறினால் “தமிழ் சூழல் தந்த விசேசமான மூச்சித் திணறலுக்கு ஒரு படைப்பாளி தர நேர்ந்த ஒழுங் கற்ற எதிர்வினைகள்” தமிழ் எழுத்தாளர்களுள் கட்டுரை இலக்கியத்தை சமூகப பொறுப்புணர் வுடன், கூர்மைடயன ஆயுதமாக பயன்படுத் தியவர் பாரதிக்கு அடுத்ததாக கராவே என்பதில் தவறில்லை சுராவின் இத்தகு நிலைப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு, ஏனையவர்களுக்கும் களம் அமைக் கின்ற முயற்சியின் முனைப்பே சுரா, இதழாசிரியர் களாகி காலச்சுவடு இதழை ஆரம் பித்தமை, ஏன் சுராவின் மொழி பெயர்ப்பு முயறசி கூட தமிழ் உலகின் தேவை நோக்கியமைந்த வையே ஆகும்.
சுருங்கக் கூறின், சுரா ஒருவிதத்தில் இவ் 20ம் நூற்றாண்டில், பாரதிக்கு அடுத்த ஆளுமை. இன் னொரு விதத்தில் புதுமைப் பித்தனுக்கு அடுத்த ஆளுமை. அந்நாரிடமிருந்தே ஈழத்து எழுத்தாளர், களும், விமர்சகர்களும் கற்க வேண்டிய்வை அனந்தம். ஆம். சுந்தரராமசாமி காற்றில் கலந்த பேரோசை, கலந்தாலும் கரையாத பேரோசை
 

நமக்கான ፰መvoጥ
“இந்த சமூக அமைப்பு செரித்து உட்கிரகிக்க முடியாதவையும், அதன் தேவைகளுக்கு அந்நிய மானவையுமான திரைப் படங்களைத் தயாரித் தல், அல்லது இந்த அமைப்பை நேரடி யாகவும், வெளிப்படை யாகவும் எதிர்த்துச் சண்டைபோட்டும் திரைப படங்களைத் தயாரித் தல் இந்த இரண்டில் ஒரு தேவையைக் கட்டா யம் நிறைவேற்றினால் மட்டுமே இந்த சமூக அமைப்பால் வழங்கப்படுகின்றவைகளிலிருந்து வேறுபடுகிற மெய்யான மாற்றுத் திரைப்படங் கள் சாத்தியமாகும். ”
பெர்னாண்டோ சொலானஸ்,
சினமாவை குறித்து பேசுவதில் நாம் அனை வரும் சந்தோசடைவது சினமா என்ற வசீகரிக் கும் அதி அற்புதமான சாதனம் நேரிடையாக மக்களின் மனத்தை உணர்வுகளை பாதிப் பதினால்தான். சினமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை. அவர்களின் நினைவு களில், மனோபாவங்களில், நடை, உடை, பாவனைகளில், கலாசாரத்தில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் நமக்கு முன் திணிக்கப்படும் தமிழ் சினமாவின் வியாபார சூத்திரத்திலான திரைப்பட சக்கை களினால் நாம் நம் திரைப்படம் குறித்த ரசனையை, பார்வையை முற்றும் முழுவது மாக இழந்து விட்டோம் என்றுதான் கூற வேண்டியிருக்கின்றது. தென்னிந்தியாவி லிருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் திரைப்பட பிரதிகளினால் நம் ஈழத்தமிழ் பார்வையாளர்களின் திரைப்பட கலாசாரம் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக் கின்றது. இதனால்தான் நாம் நம் சூழலில் தயாரிக்கும் நம்மவர்களின் திரைப்படங்களில்
மாரிமகேந்திரனி.
தென்னிந்திய தமிழ் சினமாவின் தாக்கம் வெளிப்படுகின்றது. நம்முடைய நனவிலி மனதில் தென்னிந்திய கழிசடை சினமாவின் பிரதி பிம்பங்களின் குவிக்கப்பட்டிருக்கும் திரைப்பட அறிவி னால் நாம் நம் முடைய சுயமான சின O மாவையும், நமது கலாசார, வாழ்வாதாரங்கள் பற்றிய புரிதல் களை பெறமுடியாதவர்களாக இழுத்து செல் லப்படுகின்றோம். இது ஒரு வகையான திரைப்பட படைப்பாளிகள் சார்ந்த நெருக்கடி யான போராட்டம்தான். நம் மனது "தமிழ்நாடு’ என்றவுடன் மிகவும் இலகுவாக இழுத்துச் செல்லப்படுவதன் மூலமாகவும், நமக்கு வேறு வகையான சினமாக்கள் இல்லாது போனதி
னாலும் நாம் நம்முடைய திரைக்கதைகளை தென்னிந்திய திரைப்பட வடிவத்துடன் ஐக்கி யப்பட்டு தயாரிப்பதினால் அது எவ்விதமான சாரமற்று அன்னியப்பட்டு போகின்றது. இந்த நிலமையிலிருந்து நாமும், நம் திரைப்பட கலாசாரமும் மீட்டெழுந்து வெளியேற வேண் டும். உலகில் மிக சிறந்த திரைப்படங்களை
படைப்பாக்கம் செய்யும் ஈரானிய திரைப்பட
வரலாற்றுக்கு பின் இருக்கும் கடினமான மிகவும் நெருக்கடியான தணிக்கை விதிகளும், சமூகக்கட்டுப்பாடுகளும்தான் அவர்களின் திரைப்படங்களில் எளிமையும் அழகும், மிகவும் நேர்த்திய திரைப்பட மொழியும் கண்டறியப்பட்டிருக்கின்றது. அது போல ஆப்பிரிக்க திரைப்படங்களுக்கு பின் உள்ள
வெள்ளை நிற எதிர்ப்பும், நிறவெறி அடக்கு தலும்தான் அங்குள்ள ஆப்பிரிக்க கருப்பு சினமாவை தனித்துவம் நிரம்பிய தாக மாற்றியிருக்கின்றது.

Page 7
1 A அதனால்தான் திரைப்பட போராளியான
உஸ்மான் செம்பேன் “கருப்பர்கள் சினமா எடுப்பதென்பதே புரட்சிகரமானது தானே” என்கிறார்.
அதனால் நம் சூழலில் நம் கலாச்சார விழு மியங்களை சிதைக்கும் தமிழ் சினமாவின் மாய பிம்பங்களினால் நமக்கும், நம் சுதேசிய சினமாவுக்குமான படைப்பு உருவாக்கங்கள் மிக நீண்ட காலமாக தேக்கமடைந்து போய் விட்டதோடு, நம் படைப்புணர்வையும் இச் சினமா சிதைத்து விட்டிருக்கின்றது. அதனால் நாம் நம் தமிழ் சினமாவை தனித்துவத்துடன் உருவாக்க வேண்டும் என்றால் தென்னிந்திய ஆபாச குப்பைகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் . தணிக்கை விதிகளை பலமான தாக மாற்ற வேண்டும். ஆடல், சண்டை, ஆபா சங்கள் நிறைந்த வியாபார சினமாவின் பூர்ஸ்வா சூத்திரங்களை மிகவும் கடுமையான வழி முறைகளுடன் கட்டுப்படுத்த வேண்டும். தென்னிந்திய மற்றும் இந்திய திரைப்படங் களின் நிலவும் மோசமான வடிவங்களை அரசு தணிக்கைப்படுத்த வேண்டும். இப்படி யான சூழலில்தான் நாம் நமக்கான திரைப் படங்களை உருவாக்க முடியும். ஆபா சமான காட்சிகள், வசனங்கள், பெண்களை இழிவு செய்து மிக மோசமாக நெளிந்து ஆடப்படும் சிருங்கார நடனங்கள், வன்முறையை விதம் விதமாக (நந்தா, கஜனி தொட்டிஜெயா) காட்டி, சமூகத் தின் மேல் வன்முறையை பற்றிய கருத்துக்களுக்கு தூண்டிவிடும் காட்சிகளை கட்டுப்படுத்தும்போது - தமிழ் சினமா இயல் பிலேயே தன் வழித்தடங்களை மாற்றிக் கொள்வதற்கான நிர்ப்பந்தத்திற்கு
உட்படும். இங்கே படைப்பாளி சுதந்திரம்
எல்லாம் பேசுவதற்கான நியாயங்கள் நிலவு
வதில்லை, தமிழ் சினமா ஏற்படுத்தியிருக்கும்
ஆபாசமும், வன்முறையும், சமூக சீரழிவும் போதும், இனி மேலும் நாம் இவைகளை தொடர்ந்து அனுமதிப்போமாயின் அது நாம் நம் சமூகத் திற்கு இழைக்கும் மிகவும் மோச மான அநீதியாகும்.
சினமா என்பது இருபதாம் நூற்றாண்டுக் கான புதியதொரு கலைவடிவம்: சுயவெளிப்பாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினமாவடிவமானது சக்திவாய்ந்த இ கருவியாக இயங்கவல்லது
திரைப்படக்கலைக்கு இலக்கணம் வகுத்த செர்கய் ஐஸன்ஸ்டின் மேற்கண்ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவுக் கான களங்களை தேடி கண்டடைவோம். நாம் நமது வாழ்வின் மேலும் கலாசாரத்தின் மீதும் மனித குல ஒன்றிணைவில் நாட்டமும், காதலும் கொண்டு படைப்புருவாக்கங்களில்
ஈடுபடுவோம். நமக்கேயான நமது பட்ைப்பாக் களுக்கான சுயங்களை மீட்டெடுக்க நாம் வேறெங்கும் செல்ல தேவையில்லை. உலகத் தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் பிரபஞ்ச திரைப்பட மொழியின் மூலமாக, அதன் படைப் பாக்கம் காதல் கொண்டிருக்கும் மனிதவாழ்வும அதன் அக்கறையும் பார்வையாளனின் அகத்தை எளிதாக தாக்க கூடியது. உலக சினமா தரும அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர் வுகள் செலுமைப்படுவதோடு உலகம் பற்றி யும், வாழ்வின் ஆன்மீக தடங்கள் பற்றி யும் மனிதனின் தேடலை சாத்தியப்படுத்துவ தோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ் விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும், சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங் களையும், குழப்பம் நிறைந்த மனித உளவிய லையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தையும், தெளிவற்ற குழப்பங்கள் சூழ்ந்த மனிதனின் நினைவுகளை மீட்டெடுத்து புதிய முகம்கொண்ட தீர்க்கம் நிறைந்த மனிதனாக பார்வையாளர்களை உலக சினமாவின் சிறந்த திரைப்பட படைப் புகள் அகலப்பரப்புகின்றது,
நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில் நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங் களில் நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக் கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள் மனதை ஒளிர்விக்கும் ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும் நமக்கு தைரியம் அளிப்
 
 

பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு
நல்ல சினமாவுக்கும் பார்வையாளனுக்குமான அந்தரங்க ஆன்மீக உறவை குறித்து ழான் கோலே கூறுவதிலிருந்து, சிறந்த சினமாவின் சக்தியை நாம் புரிந்துகொள்ள முடியும், நல்ல சினமா வாழ்வை புரிந்துகொள்வதற்கும், தெளிவடைவதற்கும், உலக சினமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அனுக்கமானதொரு அந்தரங்க உரை யாடலை, பிணைப்பை ஏற்படுத்துவதோடு பார்வை யாளனை நல்ல படைப்பு படைப்பாளியாகவும் மாற்றும் வலு கொண்டது.
திரைப்படம் உயர் எண்ணங்களை நமக்கு ஊட்டிய சீரிய வாழ்க்கையையும், சிறந்த பண்புகளையும் கடைப்பிடிக்க நம்மை தூண்ட வேண்டும்.’ என்கிறார் திரைப்பட விமர்சகர் கே. எஸ் சிவகுமாரன்.
தமிழில் வெளிவருகின்ற தென்னிந்திய திரைப் படங்கள் நம் மூளையை, மனத்தையும் வசீ கரிப்பதன் நோக்கம் நம்மிடமிருந்து பணத் தைச் சுரண்டுவதே. பணத்தை மட்டுமல்ல நம் மனோபாவத்தையும், யதார்த்தத்தைவிட்டு நகர்த்தி வேறொன்றின் மேல் அக்கறை கொள்ள செய்வதென்பது, சுய வாழ்வின் இருப்பை, சுய அடையாளத்தை இழந்து விடுகின்றோம். ஆப்பிரிக்க திரைக்கலைஞன் ஹெய்லே கெரீமா இதுபோன்ற நிலை கண்டுதான் இப்படி எச்சரிக்கை செய்கிறார்.
நமது கலாசார வேர்களை ஆதிக்கக் கலா சாரங்களுக்காக இழந்து விடுவது முற்றிலும் தன்னை இழப்பதுபோலாகும்.”
சினமா கலாசாரத்தினால் நாம் நம் சுயங்களை இழந்து, தமிழினத்தின் வேர்களை மறந்து, பார்ப்பண கருத்தியல்களின் முன் அடிமைப் பட்டு, குல தெய்வங்களை மறந்து ரவிவர்மன் வரைந்த புராண, இதிகாச பெரும் கற்பனை கடவுள்களின் பிரேம் இடப்பட்ட ஒவியங்களை தெய்வங்களாக நம் வீட்டு பூஜை அறைகளில் வழிபடுகின்றோம். இந்த பூஜை அறைகளில் இருளிலிருந்து தொடங்குகின்றது நமது கலாசார அரசியல் இந்த கலாசார கடவுள்
அரசியலின் பின்னணியில் தமிழ் திரைப்படத் தையும், தொலைக்காட்சி தொடர்களின் பார்ப்பணமய கருத்தியல்களையும் நாம் புரிந்து கொள்கிறோமா? இல்லை சினமாவின் வசீகர மாயையில் பொழுது போக்கு, களியாட்டம் என்று திரை வெளிகளில் முன் நமக்கு நம்மை அறியாமல் திணிக்கப்படும் ஆதிக்க சாதி கருத்தியல்களை அறியாமல் நகர்ந்து போகின் றோமா என்பதை குறித்து சிந்தித்து
பாருங்கள் ?
ஆக! நம்மை நாம் அறியாத வகையில் சிதைக்கும்
தென்னிந்திய சினமா குப்பைகளை விடுத்து
நல்ல சினமா நோக்கி நம் பார்வையை திருப்புவோம். கறைபடிந்த நம் சினமா பற்றிய பார்வையை மாற்றிக்கொள்வதோடு நல்ல சினமாவைப் பார்ப்பதனால் நல்ல மனோபாவத்தையும் வாழ்க்கை குறித்தபார் வையையும் மாற்றிக்கொள்ள முடியும், என்பதை இனியா வது உணர்வோம்.
தமிழ் சினமா என்பது தமிழர்களின் வாழ்வை சிதைக்கும் நாசகார ஆதிக்க சாதனம். தமிழ சமூகத்தின் யதார்த்த வாழ்வை சொல்லாத தமழகத்தின் சினமா மொழி ஆதிக்க
வர்க்கங் களின் மொழியினால் இருக்கின்ற

Page 8
l
4 ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைக ளையும் நியாயப்படுத்தி எடுக்கப்படுகின்ற வியாபார சூத்திரம், இவ்வியாபார சூத்தி ரத்தை நாம் ஏன் நம்மினத்தின், நம் தேசத்தின் சினமாவாக முன் நிறுத்த வேண்டும்.
இந்த சினமா நமக்கு அப்படி என்ன தந்து விட்டது. நம் வாழ்வையும், நம் சுய இருப்பின் கலை வெளிப்பாடுகளையும், நம் ஈழத்தமிழ் சினமாவின் பிறப்பையும் அழித்துவிட்டது. நாம் நம் தேசத்தின் சுயமான சினமாவை உருவாக்குவோம். நம் படைப்புணர்வின் சுய நினைவிலிருந்து நம்முடைய வாழ்வின் பேரின வாத கொடூரத்தையும், இன வன்முறையின் வலியையும், பாதுகாப்பற்ற தன்மையின் நிர்க்கதியையும், சமாதானமற்ற இருப்பின் நடுக்கத்தையும் நம் ஈழத்தமிழ் சினமா மொழியின் வழி கண்டறிவோம். புதிய சினமா மொழி ஒன்றை நம் வாழ்வின் புரிதலிலிருந்து
&ళ్ల
கண்டறிவோம். அம்மொழியினால் உலகத்தின் தமிழர்களின் கலையுலகின் முன் புதிய அத்தியாயத்தையும் எழுதிச் செல்வோம். சர்வதேச சினமாவின் படைப்புணர்வின் மூலங்களின் இருந்து நாம் நமக்கான சினமா மொழி ஒன் ை) கண்டறிவோம். அம்மொழி யின் வழிய க நம் சினமா கலையை உலகத்தின் த ரைகளில் எல்லாம் கொண்டு
செல்வோம். தமிழனின் உறுதி எதையும் சாதிக்க வல்லது. உலகெல்லாம் பரந்
f திருக்கும் ஈழத்தமிழர்களின் கூட்டுறுதி யின் ༄ பலத்துடன் ஈழத்தமிழ் சினமா மொழி ஒன்றை
ண்டறிவோம்.
റുത്തുനy aരകൃതുര് ൧ മ തീരഥ ഗ്രാമ வேண்டாம் f 擎憑小 கொடும் இரவுகளில்
60607 (UCUC U- i. பிணக்கதைகளிலிருந்து :
ஒரு பூ பூக்குமெனிறோ அதனி நடனமிடும் விழிகளில் சூரியனி உதிக்குமெனிறோ யாருமே நம்பவேண்டாம்.
&:8:
வாழ்வுகுறித்த மெல்லிய கவிதையில் புனைவுக்கால கதையாடல்கள் வளர்ந்த போதுதான் நான் புரிந்தேன் எந்த முகத்தின் வசீகரத்திலும் உணிமை முகம் இல்லை என்பதை.
புனைவுக்காலச் சொற்கள் முழுவதிலும் எனது கணிணிரும் குருதியும்
சாவின் இழைகளைப் பின்னியபடி எண் மீதான நிறங்களை உரித்தெடுத்த நீங்களேஓரிரவில் என் நிர்வாணத்திற்காக கணிணிர் பெருக்கினிர்கள்.
சூரியனின் ஒளியாய் குருதி வழிந்தபோதும் கனவுகளில் தேள்கள் குற்றி வலியெடுத்த போதும் பூக்காத உங்கள் புணர்னகையை மலக் குழியினுள்ளோ நானும் கழிவோடையினுள்ளோ கொட்டித் தீருங்கள்.
நான் நிர்வாணமாக மட்டுமே
இருக்கிறேன் உங்களின் புனைவுக் காலத்தில்.
என் நிர்வாணம் உங்களது நிர்வாணத்தின்
அடியிலிருந்தே துளிர்த்தது. நான் நிர்வாணமாக மட்டுமே
இருக்கிறேனர்.
சித்தாந்தன்
 
 
 
 
 
 

15 பார்வதிபுரம், நாகர் கோவில், 92-06-2001
)ே
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மலர்ச்செல்வன் அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. இத்தனை ‘தொலைவில் இருந்து நீங்கள் என்படைப்புகள் பற்றி எழுதியது மிகுந்த மகிழ்ச்சி அட்ைகிறது. அருகிலாயினும் மானசீகமான ஆரசியல் ரீதியான தொலைவில் உள்ள இலங்கை துே எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு எனக்கு உண்டு மிகவும் நன்றி
உங்கள் கடிதம் உற்சாகமூட்டுவதாக இருந்தது. விரிவான அளவில் என் படைப்புகள் வாசிக்கப்படுவது எழுதுவதற்கு இலக்கு களிப்பதாக உள்ளது.
உங்கள் சில கேள்விகளுக்கான என் தரப்புகள்
1. இலங்கை படைப்புகள் குறித்து நான் அந்தரங்கமான கருத்துக்களை மட்டிலுமே முன்வைத்துள்ளேன். அதிகார பூர்வமாகக் கூறுமளவு நான் இலங்கைப் படைப்புகளை முழுமையாகப் படித்ததில்லை. தமிழிலக்கியம் சார்ந்த என் படிப்பு எனக்கு திருப்தி தருவது முக்கியமான நூல்கள் மட்டுமல்ல. ஏதாவது ஒரு முறையில் பேசப்பட்ட எல்லா நூல்களையும் படித்திருப்பேன். தமிழின் பல்வேறு இலக்கிய காலகட்டங்களை சார்ந்த குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் எவருமே என் பார்வைக்குத் தவறியிருக்க மாட்டார்கள் என் விமரிசனத்திற்கு அடிப்படை இதுவே. இலங்கைப் படைப்புகளை பெருமளவு படித்துள்ளேன். எனினும் தமிழக நூலகம் எதுவும் இலங்கை படைப்புகள் விஷயமாக பூரணமானது அல்ல. 1980களுக்கு பிறகே முறையான இலக்கியப் பரிமாற்றம் ஆரம்பமாயிற்று. எனவே இலங்கைப் படைப்புகளைப் பற்றி முடிவான கருத்துக்களை கூறுவதை தவிர்த்து வருகிறேன். நான் கூறும் கருத்துக்கள் ஒப்புநோக்குத்தன்மை உடையவை அல்லவா? தனிப்பட்ட படைப்பாளிகள் குறித்து அவ்வப்போது கவனத்துக்குவரும் கருத்துக்களை மட்டிலும் கூறி வருகிறேன்.
2. தமிழில் நாவலே வரவில்லை என்று நான் கூறவில்லை. இதுகுறித்து விளக்கமாக “நாவல்” என்ற பெயரில் ஒரு நூல் நான் எழுதியதுண்டு. நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் நோக்கம் என்ன சாத்தியங்கள் என்ன இதெல்லாம்தான் என் விருப்புகள் ஒரு கதையைக் கூறுவதோ ஒரு காலகட்டத்து சித்திரத்தை தருவதோ அதன் நோக்கம் அல்ல. “வாழ்வின் முழுமையை’ பற்றிய ஒரு தேடலை மேற்கொள்ள வேண்டிய வடிவம் அது. ஆகவே ஒட்டுமொத்தமான விரிவான வாழ்க்கைப்பார்வை ஒன்று நாவலில் இருக்க வேண்டும். விரிந்த வாழ்க்கைப்புலத்தில் வைத்து அப்பார்வை பேசப்பட வேண்டும். அதன் சாதக பாதக அம்சங்கள் எல்லாம் விரிவாக முட்டிமோதி வெளிப்பட வேண்டும் என்றேன். அதாவது நாவல் கலை ரீதியான ஒரு பெரு விவாதம் நாவலை சுருக்கிப்பேச முயலக் கூடாது. அப்படி பேச முடிவது நல்ல நாவல் அல்ல. இப்படி என் தரப்பை சொல்லாம். தமிழில் மோகமுள், ஜே.ஜே. சில குறிப்புகள், பொய்தேவு, புளியமரத்தின் கதை, கடலுக்கு அப்பால், தலைமுறைகள் போல பல நல்ல படைப்புகள் நாவலாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் நாவல் என்ற வடிவம் கோரும் சாத்தியங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. புளியமரத்தின்கதை, தலை முறைகள் ஆகியவைதாம் ஓரளவு அதற்கு முயன்றவை. ரப்பரும் அதற்கான முயற்சியே. இதுதான் நான் கூறியது விரிவான ஒரு விவாதத்துக்கு உரிய தரப்பு இது மிகவிரிவான நூல் ஆக இதை, ஒவ் வொரு படைப்பையும் எடுத்துப்பேசி, விளக்கியிருந்தேன். குறுகியபடி வந்து ஒற்றைப்புள்ளியில் முடிவது அல்ல நாவல். கயிறு முறுக்குவது போல பல சரடுகளை பின்னி உருவாக்குவது அல்ல அது விரிந்து விரிந்து பரவி வாழ்வு முழுக்க நீள்வது அது கயிறு பிரிவதுபோல அகன்று விரிவது.
3. விஷ்ணுபுரம் எல்லாவகையிலும் ஒரு நாவல். அதன் வடிவம் அதற்கு முற்றிலும் பொருத்தமான
ஒன்று நாம் மரபான கதை'களை படிக்கும் கோணத்தில் அதைப்படிக்க முடியாது. ஒருங்கிணை வுள்ள கதை அதில் இல்லை. கதைகள் ஏராளமாக உள்ளன. அவை ஒன்றோடொன்று பின்னி விரிவடைகின்றன. அந்த ஒரு நாவலில் இருந்து எழுதப்படாத பல நாவல்களை வாசகன் ஊகித்து விட முடியும். இதனால்தான் அது முக்கியமான நாவல் என்று நான் கருதுகிறேன்.

Page 9
154 கல்கியின் படைப்புகளுடன் விஷ்ணுபுரம் ஒப்பிடப்படுவதை நான் ஏற்கவில்லை. அ) கல்கி நாவல்களில் கதையோட்டம் மட்டுமே முக்கியம், விஷ்ணுபுரம் எப்போதுமே கதாபாத்திரங்களின் அக ஒட்டம், அதன் தத்துவார்த்த முக்கியத்துவம், வரலாற்று சந்தர்ப்பம் ஆகியவற்றைப் பற்றிய நுட்பமான சித்தரிப்புகளை கொண்டுள்ளது. ஆ) கல்கி கதையை ஒற்றைப்படையாக நடத்திச் செல்கிறார். விஷ்ணுபுரத்தில் ஒன்றையொன்று ஊடுருவக்கூடிய எண்ணற்ற கதைகளாக வரலாறு அமைந்துள்ளது கூறப்படுகிறது.
கல்கி மோலோட்டமான கதையோட்டமாக வரலாற்றை உருவகிக்கிறார். விஷ்ணுபுரம் முட்டிமோதும் பல்வேறு கருத்தியல்கள், மற்றும் அதிகார இச்சைகளின் மோதல்களுமாக மிக சிக்கலான ஒரு இயக்கமாக வரலாற்றை உருவகிக்கிறது. கல்கியின் படைப்புகளுடன் விஷ்ணுபுரத்தை ஒப்பிடுவது கவனமில்லாத வாசிப்பின் விளைவுதான்.
5. விஷ்ணுபுரத்தை ஒரு தடவை வாசிக்கும்போது ஒரு வகையான ஆர்வமும், சற்று பிரமிப்பும் மட்டும் ஏற்படக்கூடும். ஆனால் அதைப்பற்றி சிறிது விவாதித்து பலரிடம் பேசி யோசிக்கையில் பல விஷயங்கள் தெளிவாகும். அது குறித்து பலவாறாக எழுதப்பட்டுள்ளவை உதவக்கூடும். அதை நீளமான ஒற்றைச் சரடான கதையோட்டமாக வாசிப்பது பயன்தராது என்று மட்டும் வாசகனாகக் கூற விரும்புகிறேன். அது பல கட்டுகள் கொண்ட வீடு கோயில்போல, முதற் பகுதி 10ம் நூற்றாண்டு பக்தி காலகட்டம் எழுந்தது. இப்போதுதான் தமிழ் மன்னர்களின் அதிகாரம் உச்சத்தில் இருந்த காலகட்டம். இரண்டாம் பகுதி 5ம் நூற்றாண்டு. பெளத்த மதம் தமிழகத்தில் பரவலாக வேரூன்றிய காலகட்டம் மணிமேகலை போன்ற காப்பியங்கள் எழுதப்பட்ட காலம் தத்துவ விவாதம் நடந்த காலம் மூன்றாம் பகுதி 13ம் நூற்றாண்டு. மாலிக்காபூர் படையெடுப்புக்குப்பிறகு தமிழகத்தின் பொருளாதார கட்டமைப்பு சரிந்து பேரரசுகள் அழிந்து படிப்படியாக அழிவு தொடங்கும் காலகட்டம் ஆக இது 5ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டுவரை தமிழக வரலாற்றின் ஒரு சித்திரமும் கூட. இது ஒரு சித்திரம்
ரிக்வேதத்தில், சிருஷ்டி கீதத்தில் உள்ள கேள்விகள்தான் இந்திய தத்துவசிந்தனையில் உள்ள மிகப்பழைய வினாக்கள். இங்கிருந்து தொடங்கி தாந்த்ரீக மரபு வரை நீலும் ஒரு நீண்ட தத்துவார்த்த தேடலின் சித்திரம் இந்நூலில் உள்ளது. இது இன்னொரு சரடு. தனிப்பட்ட நபர்களின் ஞானத்தேடல் எப்படி தத்துவங்கள் ஆகி, பிறகு மதங்கள் ஆகி, பிறகு அதிகார அமைப்பாக ஆகிறது என்பதற்கான சித்திரங்கள் உள்ளன. இது இன்னொரு சரடு. அரசியல் சதுரங்க ஆட்டங்கள் தொடர்ந்து வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதன் சித்திரத்தை நாவலில் காணலாம். ஞானம், கலை இலக்கியம்,மதம் எல்லாமே அதற்கு பயன்படுத்தப்படும் விதமும். இது இன்னொரு சரடு. முதற் பகுதியில் நிஜமனிதர்கள் வருகிறார்கள். மூன்றாம் பகுதியில் அவர்கள் ஜதிகங்களாகி விடுகிறார்கள். முதற்பகுதியில் வரும் ஜதீகங்களை இரண்டாம் பகுதியில் நிஜமனிதர்களாக பார்க்கிறோம். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கதை / ஐதீகங்களாக மாற்றியபடி வரலாறு முன்னகரும் இயல்பை இந்நாவல் காட்டுகிறது, இது இன்னொரு சரடு.
இவ்வரலாற்று வெள்ளம் எப்படி தனிதனிதர்களை, ஆசாபாசங்கள்ை அடித்துச் செல்கிறது என்று தொடர்ந்து இந்நாவல் காட்டுகிறது. இது ஒரு சரடு.
இந்தச் சரடுகள் பின்னிப்பிணைந்து தான் நாவலின் வடிவம் உருவாகியுள்ளது. இவற்றில் பல விஷயங்கள் வாசக ஊகத்துக்கு விடப்பட்டிருக்கும். சில விஷயங்கள் சில இடங்களில் வெளிப்பட்டு மறையலாம். அதாவது இது ஒரு காலகட்டத்தின் அல்லது ஒரு இடத்தின் வரலாறோ வாழ்வோ அல்ல. ஒட்டு மொத்த வரலாறும் வாழ்வும் எப்படி செயல்படுகிறது அதன் இயல்பு என்ன என்பது குறித்த ஓர் ஆய்வுதான். அதை படிப்படியாகவே நம் மனதில் விரிவு படுத்திக் கொள்ள முடியும். விஷ்ணுபுரத்தை திறந்து எந்தப்பகுதியை எடுத்துப்படித்தாலும் இதன் ஒரு துளி சித்திரம் கிடைக்கும் என்பதே அதன் முக்கியத்துவம் என நம்புகிறேன்.
|ே தொடர்ந்து எழுதவும் ஜெயமோகன்
 
 

சு. ரா:நினைவுகள், உரை - 1
(06-11-2005 அன்று மறுகா புதிய தலைமுறைக் கான உடைப்பின் ஏற்பாட்டில் மட்/வாசிகசாலை
கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில்
ஆற்றியஉரை).
த. மலர்ச்செல்வன்
சுந்தரராமசாமி இறந்துபோன செய்தி கவிஞர் றஸ்மி தொலைபேசியில் அழைத்து சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது. உடனே பேராசிரியர் மெளனகுருவுக்கு தெரியப் படுத்த தொலைபேசியில் அழைத்தேன். அவர் வீட்டில் இருக்கவில்லை பேராசிரியை சித்திர லேகா மெளனகுருதான் தொடர்பில் இணைந் தார். சுந்தரராமசாமி இறந்து விட்டார் என்றவு டன் விக்கித்துப் போனார். பதில் சிலநேரம் இல்லை பின் யார் சொன்னது என்று கேட்டார். விடயத்தைக் கூறினேன். பின் சில இலக்கிய ஆளுமைகளுடன் துயரைப் பகிர்ந்து கொண் டேன். என் நண்பர்களிடம் சில தினங்கள் வரை என் சுந்தரராமசாமி பற்றி பேசினேன். ஆனால் பல பேர் யார் அந்த ஓடாவி (Carpenter) என்றுதான் கேட்டார்கள். இப்படித்தான் எங்க ளுடைய வாசிப்பு உலகமும், படைப்பு முகங் கள் பற்றி புரிதலும் உள்ளது. எங்கள் வாசிப்பாளர்களுக்கு ரமணிச்சந்திரனையும், வைரமுத்துவையும், ராஜேஸ்குமாரையும், பட்டுக் கோட்டைப்பிரபாகரனையும், சுபா, சுஜாதா, அனுராதாரமணன் என்ற முகங் களைத்தான் தெரிகின்றது. இதற்கப்பாலும் உலகம் உள்ளது. வேறு வேறு தளங்கள் உள்ளது பற்றி தெரியாமல் இருப்பது பெரும் துக்கம், நாங்கள் போலி எழுத்துக்குள்ளே வாழ்ந்து வருகின்றோம். இல்லாவிட்டால் கவியரசு என்று சொல்லப்படுகின்ற வைர முத்துவுக்கு சாகித்திய அக்கடமி பரிசு கிடைக் கின்றது. எழுத்துச் சக்கரவர்த்தி சுந்தரராம சாமிக்கு கிடைக்காமல் இருப்பது எவ்வளவு
அபத்தம். இது தமிழின் கொடிய காலப்
பயணம் அசல் பற்றி தெரியாத காலம் எனலாம் அப்படி ஒரு காலத்தில்தான் சுந்தரராமசாமி வாழ்ந்து வந்தார். இன்று நம்மிடமில்லை
சிறுகதை, நாவல் கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல் (காலச்சுவடு) எனப் பல்துறை சார்ந்த இயங் கிய ஆளுமை. 1951 இல் புதுமைப் பித்தன் நினைவு மலருக்கு முதலும் முடிவும்’ சிறு கதையின் ஊடாக 'இலக்கிய பயணத்தை ஆரம்பித்து சுரா இறக்கும்வரை அவருடைய
7
எழுத்து வாழ்வு இயங்கியுள்ளது. அக் கரைச்சீமையிலே, பல்லக்குத்தூக்கி. என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளி வந்தன. எனினும் “காகங்கள்’ தொகுப்பி னுாடாக அவருடைய முழுச்சிறுகதை

Page 10
8
களும் வெளிவந்துள்ளன. இவருடைய சிறு கதைகள் எள்ளலும், நையாண்டியும், பூடக மும் நிறைந்த மனித வாழ்வின் போலித்தனங் களுக்கு வேட்டு வைக்கும் சிறுகதைகளாகும்.
நாவல்கள் புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் வெளிவந்துள்ளன. புளிய மரத்தின் கதை மனிதரின் சுயநல வெறிச் செயலாலும், அகங்காரத்தாலும் ஒரு புளியமரம் ஒரு கிளையை இழந்து முச் சந்தியில் நின்று முடிவில் பட்டமரமாகிப் போனகதைதான். இதனுாடாக நகரமய மாக்கலையும், போலி முகங்களையும் அவ ருடைய எள்ளல் நடையுடன் சொல்லுகின்ற அற்புதமான நாவல். அதுபோல் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு எழுத்தாளனுடைய வாழ்வின் ஓட்டங்கள் புதிய உத்தியினூ டாகவும் பரிசோதனை முயற்சி யினுடா கவும் எழுதப்பட்ட நாவல் இதில் ஜே.ஜே. சுந்தரராமசாமியை நினைவு படுத்து கின்றதாக புனைவு செல்கின்றது. இந்நாவல் தமிழில் விவாதத்தையும், எதிர்வினையை யும் தந்த நாவல் இன்றும் போற்றப்படுகின்ற சிறந்த நாவல். குழந்தைகள் பெண்கள்
w ஆண்கள் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
அற்புதமாக எழுதப்பட்டுள்ள நாவல் சுரா ஆணாக இருந் தும் பெண்ணிலையைப் புரிந்து ஆணதிகாரா மின்றி எழுதப்பட் டுள்ளது. அதுபோல் குழந் தைகளின் உலகத்தை சிறப்பாக சித்தரித் துள்ளது.
ஆண்களின் போலி முகங்கள் தோலுரிக்கப்
பட்டுள்ளது. இவ்வாறு அவருடைய நாவல்
கள் அற்புதமானதாக காணப்படுகின்றது.
இவருடைய கட்டுரைத் தொகுப்புக்களா வன காற்றில் கலந்த பேரோசை, விரிவும்
ஆழமும் தேடியும் மிகச் சிறப்பாக எழுதப்
பட்டுள்ள தொகுப்பாகும் அதுபோல் நினை
ངོ་
垩
କୁଁଅଁ
w
然
வோடை தொகுப்புக்களும் பல ஆளு மைகள் பற்றி பேசி இருக்கின்றது. மொழி பெயர்ப்புக்களும் சிறப்பாக செய்யப்பட் டுள்ளது.தோட்டியின் மகன் மிகச்சிறப்பாக
மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட தொகுப் பாகும். ஆனால அவருடைய கவிதைகள் அவருடைய ஏனைய படைப்புகளுடன் ஒப்பிடும்போது எனக்கு பெரும் பிரமிப் பைத் தரவில்லை. ஈழத்துக் கவிதையின் மேல்நிலை ஒட்டத்தில் பார்ப் பதனால் என்னவோ அதன் கவிதைகள் எனக்கு உச்சநிலையை தரவில்லை ஆனால் பசுவைய்யாவின் 107 கவிதைகள் பலரை
அதிரப் பண்ணியிருக்கின்றது.
இவ்வாறு இயங்கிய சுந்தரராம சாமி தனது அந்திம காலத்தில் மிகவும் விமர்சிக் கப்பட்டார். நாச்சியார்மடம் கதை மூலமும், அவர் எழுதிய “பிள்ளை கெடுத் தாள் விளை” என்ற சிறுகதையின் எதிரொலி மூலமும் மிகவும் கேவலப் படுத்தப்பட்டார். நாச்சியார் மடம் கதை சுந்தரராமசாமியை மிகவும கேவலப்படுத் தும் ஒரு குறியீட்டு நிலை நகர்வினால் மனித நாகரிகத்திற்கு அப்பாலுள்ள இயக்க நிலை ஆனால் பிள்ளைகெடுத்தாள் விளை சமூகச்சித்தரிப்பில் யதார்த்த நிலையை முன்வைக்கும் நிலை பிள்ளை கெடுத்தாள் விளை பெரும் கதையல்ல மாடக்குழி கிராமத்தையும், அச்சமூகத்தின் தலித் பெண்ணுக்கு ஏற்படும் துயரத்தைச் சொல்லும் கதை. கதையின் இடையில் மணிகண்டன் தாயம்மாவால் பாலியல் சேட்டை செய்யப்படுவதாக கதை நகர்த்தப் பட்டதே. தலித் சமூகத் துரோகமாக பார்க்கப்பட்டது. கதை புரிதலில் ஏற்பட்ட தவறு காரணமாக சுந்தர ராமசாமி மீது அம்புகள் வீசப்பட்டன. இவ்வாறு எழுத்து லகில் முகம் கொடுத்து எழுத்துக்குள் வாழ்ந்த சுரா காலம் ஆகிவிட்டார். காற்றில் கலந்த பேரோசையாய் போய்விட்டார். அம்புகளையும், மலத்தையும் வீசியவர்கள் இனி என்ன செய்யப் போகி றார்கள் காற்றில் கலந்த பேரோசையை யாராலும் அழித்துவிட முடியாது சுந்தரராமசாமி பெரும் இமையம்,
Co

*சுரா நினைவுகள், உரை -2
懸
{06-11-2005 அன்று மறுகா புதிய தலைமுறைக் கான உடைப்பின் ஏற்பாட்டில் மட்/வாசிகசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் ஆற்றியஉரை).
காற்றில் ESGOUUUIIS
i
செ. யோகராசா Na
கிாற்றில் கலந்த பேரோசையான சுந்தரராம சாமி, கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் ஈடுபட்டவர். இவ்வழிகளில் அன்னார் ஏற்படுத்திய அழியாத் தடங்கள், அதிர்வுகள் பற்றிச் சுருக்கமாக நினைவு கூர, அறிமுகம் செய்ய இவ்வேளை விரும்பு கிறேன். புதுக்கவிதை, 1960 களில் “எழுத்து ஊடாக வேரூன்றிய வேளையில், எழுத்து 03ம் இதழில் வெளியான பசுவைய்யாவான - சுராவின் முதல் கவிதை - கைவிரல் நகம் பற்றியது - பலரது கண்டனத்திற்கும் உள்ளா யிற்று அற்பமான, அழுக்கான பொருள் கவிதைப் பொருளானமை பற்றி அவ்வாறு ஆரம்பித்து தொடாநுது சுராவின் கவிதைப் பயணம், அவர் ஈடுபட்ட ஏனைய துறைகள் போல் மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. வாழ்க்கை பற்றிய தேடலாக அமைந்த அப் பயணம், புதுமையின் உண்மையின் நாதத் துடனும், உத்வேகத்துடனும் திகழ்ந்தது.
சிறுகதை உலகில் 50கள் அளவில் நுழைந்த சுரா, ஆரம்பத்தில் புதுமைப்பித்தனின் ஆக்கத்தினாலும் “முற்போக்கு அலை ஈர்ப்ப னாலும் சிறுகதைகளை படைத்தாலும் கலா பூர்வமான முறையில் அவற்றைத் தந்தார். ஏழு ஆண்டு வனவாசத்தின்பின் அவரது சிறுகதைகளின் பாதை மாறியது தன்னைத் தேடுவதாக வாழ்க்கையைத் தேடுவதாக -இழந்தவற்றை தேடுவதாக அது அமைந்தது.
முதல் நாவலான புளியமரத்தில் கதையும் முதற் கவிதை போல் வெளிவந்த காலத்தி லும் - இன்றும் பலரையும் ஈர்த்துக் கொண் டது. ஈாத்துக் கொள்வது. புளிய மரம் கதா நாயகனானமை, தமிழ் நாவல் உலகில் முதற் புதுமையையும், முற்றிலும் புதுமையுமாயிற்று.
அப்புதுமை வலிமையுடையது, ஏனெனில்,
புளிய மரத்தினூடே சுதந்திர இந்தியாவில்
சமூக மாற்றங்களே பேசப்பட்டன.
ஜே.ஜே என்ற மலையாளக் கலைஞன் எழுத் தாளன் ஒருவனின் கதையே ஜே ஜே சில
குறிப்புகள் என்ற சுராவின் இரண்டாவது நாவல், சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, உண்மைக்கதை. கட்டுரை, நாவல் சுராவின் வாழக்கை என பலபடப் பேசவைக்கும்

Page 11
உன்னத்துப் பூசிசி தேட
-
படக்கு படக்கு fی படக்கு படக்கென இறகுவெட்டி
காற்றைத் தறித்தது வண்ணத்துப் பூச்சி
என்ன கோபம் இதற்கு இதன் சோற்றுப்பானைக்கு விறகு
தறித்த காற்றுக் கொள்ளிகளை கட்டிச் சுமக்க ஒரு நாராய் பிடுங்க வந்ததா என் தலைமயிரை என் தலைக்கு மேலாலும் பறக்கிறது
வண்ணத்துப் பூச்சிக்கும் கோடரி உண்
கொத்த தறிக்க தன் தேவைக்குத் தக்கதாய்
மலர் நினைக்கவே கூடாது ஒர் அப்பாவி ஜீவராசி திக்குத் தெரியாமல் அலைவது என்று
வெட்டி வெட்டி உடல் சிவக்க சிவந்த உடல் எங்கும் புள்ளி புள்ளித் தோற்றங்களாய் தடித்தெழும்பி
இருந்தாலும்
அவை அழகு
இப்போது அலைகிறது கட்ட ஒரு நாருக்கு
அது கிடைக்கும் வண்ணத்துப் பூச்சி வீட்டில் இன்று சோறு பொங்கும்.
 

உன்போல நானுமொரு சிலசஸ்க்கும் ஆறு
எனச் சொல்கிறதா ஆறு எங்கே போகிறது
பளிங்கு நீரான ரயில் வண்டி இதன் பிரயாணி என் மனமா நிற்காது கூவிப்போய்
எங்கே இறக்கும் உலகத்தை
எத்தனையோ அலை அறுத்துப் போட்டதைப்போல் துடிக்கின்ற முயற்குட்டி
என் கண்ணின் சோர்வுகளை நிமிர்த்தும் இன்னும் இன்னும் என் கனரக்கு வா என்று ரயில் ஒபுக் கொக்கரிக்கும்
நான் நிற்கும் கரையும்
கரை மரமும் என்போல வாய் பிளந்து திமிர்த்த பிறவிகளா உசுப்பிப் பார்த்த காற்றுக்கும் ஆடாத மரம் பெட்டி தொலைத்த வெளியூர் பொம்பளையா
இது ஏறினால் ரயிலுக்கு புக்கட் வாங்க வெயில் துடிக்கிறது ஆசையுடன்