கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 1

Page 1

| }|-|||-,|||||||||||||||||||||||||||||||1,1)一||||||||||||||||||||,『』『』
W
||-

Page 2


Page 3

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு

Page 4

இலங்கை முஸ்லிம்
விழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
-ψδουιτώ υ/τόώ
கலாபூஷணம்
புன்னியாமீன்
வெளியீடு
2Japtugó85üuúl áég5apar oullub வெளியீட்டாளர்கள் தனியார்) கம்பனி டி உடத்தலவிண்னை மடிகே,
உடத்தலவிண்ணை2O802 ஜீலங்கா
சிதாலைபேசி :- 081-2493746 / 081-2493892 சிதாலை நகல்:- 08-2497246
மின்அஞ்சல் :- puniyame (a) sltnet.lk

Page 5
இலங்கை முஸ்லீம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்ரு
முதலாம் பதிப்பு
பதிப்புரிமை
வெளியீடு
கனணிப்பதிப்பு
அச்சுப் பதிப்பு
விலை
62pB5A957u umr
பிரான்ஸ் ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா குவைட் சவூதி அரேபியா கட்டார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் :
ரியால் 1 தினார் 1 : மார்க் 200
யென் 300
ஒமானர் பஹர் ரேனர் ஜேர்மனி
ամսո 60i
υψσ5ου/τώ υ/τούν
19 - 08 - 2004
ஆசிரியருக்கே
சிந்தனை வட்டம்
ZeenafhNawaz T.P 081-2493746 / 2493892
Creotive Printers a Designers No, 03/A, Bahirawakanda Rd, Kandy.
TP Ο81 - 4472O48
: இந்தியன் ரூபாய் 120.00
பிரான்க் 45 ; ஸ்ரேலிங் பவுண் 2 : டொலர் 2
: தினார் 1
: ரியால் 10
: ரியால் 10
திர்ஹம் 10
ISBN 955-8913-14-6
200/-

Ο காணிக்கை
(GP,
இந்நூல்.
லீனது அருமைத் தந்தை uDiBrub 6.6můčůĩij மூவரும்மட் அவர்களுக்கும் 6avgs ebabD Dupati
(atary uDadarai மஸீதா புண்ணியாமீனின்
அண்புத்தந்தை) upiastid 65.466.6D. as D6Ss அவர்களுக்கும்
அன்புக் காணிக்கை
ノ

Page 6
அனைவரையும் அனைத்துச் செல்லும் ஆக்க இதழ்
யினர் அனுசரனையுடனர்
நாளைய சந்ததியினர் இன்றைய சக்தி
சிந்தனை வட்டம்
மேற்கொண்ட ஆய்வினர் விளைவே
உங்கள் கரங்களில் தவழும்
இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
முதலாம் பாகம்
(0)இலங்கை முண்ட்ரீம் (ஆந்தாளர்கள்,சீன.கனியாளர்கள், கனthர்களிர்வீரத்திரட்டு
 

O என்னுரையும், பதிப்புரையும்.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கAைஞர்களின் விமரத்திரட்டு
ஒரு நீண்டகால
ஆய்வுத்திட்டத்தின் முதற்படி
ஓர் அறிமுகம்:
கலாபூஷனைப்
) - புண்ணியாமீண்- )
r r II i Tri E -- காபூஷனாய் புள்ளிார்ே

Page 7
இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்ப, இக்காலகட்டத்தில் இலங்கைவாழ் முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரே தேசிய இதழும், அதே நேரம், அனைவரையும் அணைத்துச்செல்லும் ஆக்க இதழுமாகிய ‘நவமணி’யின் அனுசரணையுடன், நாளைய சந்ததியின் இன்றைய சக்தி - ‘சிந்தனை வட்டத்தினால்” ஆய்வுக்குட் படுத்தப் பட்டு வரும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் , ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினைக் கடந்த 200307 - 27ம் திகதி முதல் ‘நவமணி வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவருவதை நீங்கள் அறிவீர்கள்.
அத்தொடர் கட்டுரையில் 2003.08.10 முதல் 2004.02.15 வரை இடம் பெற்ற முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் ஒரு தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து; முதலாம் தொகுதியாக உங்கள் கரங்களில் தவழவிடச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
- அல்ஹம்துலில்லாஹற்.
- புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
2002ம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்குறித்த விடயம் தொடர்பாக
நவமணி'யில் அறிவித்தல் வெளிவந்ததையடுத்து எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனை வட்டப் பணிப்பாளர் என்ற வகையில் என்னோடும், நவமணியின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ. எம். அஸ்ஹர் அவர்களுடனும் தொடர்பு கொண்டனர். இவ்வாறு தொடர்பு கொண்டோர் தம்மைப் பற்றியும், தமக்குத் தெரிந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றியும் நியாயமான தகவல்களைத் தந்து ஒத்துழைத்தனர். இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள் கினி றேன் . இவர் களால் தரப் பட்ட ஆதரவுகளுக்கமையவே இதனை ஓர் ஆதாரபூர்வமான ஆய்வாக என்னால் மேற்கொள்ள முடிந்தது.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை ஏன் திரட்ட வேண்டும் என்பது பற்றியும், திரட்டப்பட்ட விபரங்கள் எந்த அடிப்படையில் ஆவணப்படுத்தப்படவுள்ளன என்பது பற்றியும், தங்களுக்குச் சுருக்கமாக அறியத்தர வேண்டியது எனது கடமையாகும்.
Gos) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் லிபரத்திரட்டு

உலக மறுமலர்ச்சிக்காக எழுத்தாளர்கள், கலைஞர்களினர்
பங்களிப்பு.
உலகவரலாற்றினை ஆராயும் மேற்கத்தைய வரலாற்று அறிஞர்கள் கி.பி. 5ம் நூற்றாண்டிற்கும், கி.பி. 15ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தினை இருண்டகாலம்' என வர்ணிப்பர். இக்கால கட்டத்தில் மதரீதியான சிந்தனைகள் வியாபகமடைந்து, அவற்றை மீற முடியாதவாறு மனித சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டன. கி.பி. 13-14ம் நுாற்றாண்டுகளில் படிப்படியாக இக்காலமக்கள் மத்தியில் ஏற்பட்ட கலை உணர்வுகளும் இதனால் ஏற்பட்ட சிந்தனை விருத்தியும் இருண்டகால யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன.
இதேபோல 1891ம் ஆண்டு பிரான்ஸியப் புரட்சியையும், 1917 ஆண்டு ரஷ்யப் புரட்சியையும் எடுத்து நோக்கும் போது அங்கும் சிந்தனை வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின் பங்களிப்பே முக்கியம் பெறுவதை அவதானிக்கலாம்.
தற்போது கிடைக்கும் சான்றுகளின் படி சுமார் 1100 ஆண்டு வரலாற்றினைக் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தினரின் சமூக, அறிவியல், கலாசார எழுச்சிகளை ஆராயும் போது பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியிலே அவை ஆரம்பமாகின்றன. அறிஞர் சித்திலெப்பையின் சிந்தனைகள் இலங்கை முஸ்லிம்களின் எழுச்சிக்கு வித்திட்டன. அறிஞர் சித்திலெப்பை ஒரு சிறந்த சமூக சிந்தனையாளர், பத்திரிகையாளர், இலங்கையில் தமிழ்மொழிமூல முதல் நாவலாசிரியர், எழுத்தாளர். இதனால் தான் அவர், இலங்கை முஸ்லிம்களின் 'மறுமலர்ச்சித் தந்தையாக வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டுள்ளார்.
எனவே சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பினை எக்காரணத்தையிட்டும் குறைவாக மதிப்பீடு செய்து விடமுடியாது.
இத்தகைய ஆய்வீண் நோக்கம்,
இந்த அடிப்படையில் எமது இலங்கை மண்ணில் எழுத்துத்
துறையில் ஈடுபாடு கொண்டிருக்கும் முஸ்லிம் எழுத்தாளர்களையும்,
பத்திரிகை மற்றும் இலக்றோனிக் மீடியாக்களில் சமூக எழுச்சிக்காகப்
பாகம் O - கலாபூஷணம் புணர்னியாமினர்

Page 8
பங்களிப்புச் செய்து வரும் முஸ்லிம் ஊடகவியலாளர்களையும், பல்வேறு கலைத்துறைகளில் ஈடுபாடு கொண்டு வரும் முஸ்லிம் கலைஞர்களையும் இனங்கண்டு அவர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதேயாகும். இலங்கை முஸ்லிம்களினர் எழுத்துத்துருை / ஊடகத்துறை / கலைத்துநைப் பங்களிப்பு
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, கலாசார எழுச்சிகளின் ஆரம்பப்படிகள் காணப்பட்டதெனினும் அவை தேசிய பரிமாணம் கொண்டவையாக விளங்கவில்லை, இத்தகு எழுச்சிகள் பெரும்பாலும் கிராமிய ரீதியாக, அன்றேல் பிரதேசரீதியாக இடம்பெற்றிருக்கலாம். சமய உண்மைகள், சமயப் பெரியார்களின் சரிதைகள், சமய சார்புக் கதைகள் என்பன மரபுரீதியான ‘தொடர்பினைக் கொண்டு இடம்பெற்றிருந்தன. இவைகள் சரியான முறையில் இனங்கண்டு கொள்ளப்படாததினால் தற்கால ஆய்வுகளின் அடித்தளத்திலிருந்து நழுவிவிட்டன. கஸிதாக்கள், பைத்துக்கள், முனாஜாத்துக்கள் என்ற அடிப்படையில் அரபுப்பாடல் வடிவங்களாக விளங்கி வந்த இவைகள் பற்றிய ஆய்வுகளும் அவசியப் படுகின்றன. இத்தகைய துறைகளில் ஈடுபாடு கொண்டோர் பற்றிய விபரங்கள் பிற்கால சந்ததியினருக்குக் கிடைக்காமலிருப்பது துரதிர்ஷ்டமே.
19ம் நூற்றாண்டின் பிண்னரைப் பகுதியில் முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு.
முஸ்லிம்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமை வாய்ந்த கல்வி, கலாசார இலக்கிய மரபுகளின் போக்குகள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் படிப்படியாக மாற்றமுறத் தொடங்கின. குறிப்பாக அக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை நான்கு கட்டங்களாக வகுத்து ஆராயலாம்.
அரபுத்தமிழ் - இலக்கிய வடிவங்கள். இஸ்லாமிய தமிழ்மொழி இலக்கிய வடிவங்கள். இஸ்லாமிய சிங்கள மொழி இலக்கிய வடிவங்கள். அரபு இலக்கிய வடிவங்கள்.
08)இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

அரபுத்தமிழ் இலக்கிய வடிவங்கள்
தமிழ் வார்த்தைப் பதங்களை அரபு எழுத்துகளால் எழுதிய இலக்கிய வடிவங்களை அரபுத் தமிழ் இலக்கிய வடிவங்கள் என்று அழைக்க முடியும். இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பத்தொன்பதாம் நுாற்றாண்டில், பெருவாரியாக அரபுமொழியினையே பயின்று வந்துள்ளனர். மத்ரஸாக்கள் எனும் மார்க்கக் கல்வி நிலையங்கள் மூலம் இத்தகைய கல்வி போதிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே தான் இக்காலகட்டங்களில் அரபுத்தமிழ் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்திருந்தது. அதிகமான அரபுத் தமிழ் இலக்கியங்கள் செய்யுள் வடிவினைக் கொண்டவை. இவை ‘பைத்துக்கள்’ எனும் பெயரினால் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. எமக்குக் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் 1868ம் ஆண்டில் பேருவளையைச் சேர்ந்த செய்ஹ" முஸ்தபா வலியுல்லாஹற் என்பவரினால் எழுதப்பட்ட "மீஸான் மாலை அரபுத் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நுாலாக இனங்காட்டப்படக் கூடியதாக உள்ளது. அதேநேரம் இவரால் எழுதப்பட்ட ‘பதஹிர்றஹற்மான் பீ தர்ஜ"மாஹற் தப்ஸிறுள் குர்ஆன்’ (அல் - குர்ஆன் விளக்கவுரை) மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தது.
இதே காலகட்டங்களில் கண்டி மாவட்டம் அக்குரணை கசாவத்தையைச் சேர்ந்த செய்கு முஹம்மது லெப்பை ஆலிம் (கசாவத்தை ஆலிம் அப்பா) அவர்களும் அரபுத் தமிழ் இலக்கியத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். விசேடமாக 1878ம் ஆண்டில் இவரால் பதிப்பிக்கப்பட்ட ‘தீன்மாலை குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றே.
இஸ்லாமிய தமிழ்மொழி இலக்கிய வடிவங்கள்
குறிப்பாக அறிஞர் சித்திலெப்பையின் சிந்தனை எழுச்சியுடன் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள் நுாலுருப் பெறலாயின. குறிப்பாக சா. சேகுத் தம்பி என்பவரால் 1878ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'சிறா நாடக மன்ற காரண மாலை, அ.லெ. ஆமீது என்பவரால் 1883 இல் வெளியிடப்பட்ட ‘இபுலீசு படைப்போர்’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூக சிந்தனையாளரும், கல்விமானும், சீர்திருத்தவாதியுமான அறிஞர் சித்திலெப்பை அதிகளவில் நுால்களை
பாகம் 9l ܘܝ கலாபூஷணம் புண்ணியாமீண் Gos)

Page 9
எழுதிவெளியிட்டுள்ளார். அத்துடன் பிற எழுத்தாளர்களின் நுால்களையும் தமது ‘முஸ்லிம் நேசன்’ பதிப்பகத்தில் பதிப்பித்துள்ளார். 1885 ஆம் ஆண்டில் இவரால் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட ‘அசன்பேயின் கதை இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதலாவது நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சிங்களமொழி இலக்கிய வடிவங்கள்
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் சிங்கள மொழிமூலமாகவும் நுால்களை எழுதி வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. 1893ம் ஆண்டில் காலியைச் சேர்ந்த ஹசன் அப்துல் காதர் வாழ மஸ்தான் என்பவர் கருணாகுரு போர்வைக்கவி’ எனும் நுாலினை வெளியிட்டுள்ளார்.
அரபு இலக்கிய வடிவங்கள்
அரபுத்தமிழில் எழுதிவந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் ஆயிரத்து எண்ணுாற்றுத் தொண்ணுாறுகளில் அரபுமொழியிலும் நுால்களை எழுதியுள்ளமை விசேட அம்சமாக விளங்குகிறது. குறிப்பாக 1891 ஏப்ரல் 03ம் திகதி பேருவளையைச் சேர்ந்த எம். ஹாஜியார் அவர்கள் ‘பத்றியா வாஹிதியா’ எனும் நுாலினையும், 1893 ஆகஸ்ட் 27ம் திகதி அஹமத் பின் முஹமத் ஹசன் என்பவர் 64 பக்கங்களைக் கொண்ட ‘துற்றத்துல் மபாஹிர் ஹிதாயத்துல் ஹைர்’ எனும் நுாலினையும், 1899 நவம்பர் 27ம் திகதி ஓ.சல்டீன் என்பவர் 56 பக்கங்களைக் கொண்ட "ராத்திபுல் நக்ஷபந்தியா’ எனும் நுாலினையும் வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாறாக நோக்கும்போது பத்தொன்பதாம் நுாற்றாண்டில் முஸ்லிம் எழுத்தாளர்கள் அரபு, தமிழ்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நுால்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(10)இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

20ம் நுாற்றாண்டில் முஸ்லிம் எழுத்தாளர்கள்
19 ம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதியில் முஸ்லிம் எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு 20ம் நுாற்றாண்டிலும் தொடர்கிறது. இருப்பினும் 20-ம் நுாற்றாண்டின் முன்னரைப்பகுதியில் அது வேகமான வளர்ச்சியினைக் காட்டவில்லை, இக்காலகட்டங்களில் செய்யுள் அமைப்பில் காணப்பட்ட இலக்கிய வடிவங்கள் உரைநடை இலக் கியங்களாகப் பரிணாமம் அடைந்ததுடன் , சமய சித்தாந்தங்களினுாடாக சமூக உணர்வுத்துாண்டல்கள் இடம்பெற்றன. இக்கால கட்டங்களில் மதவியல், சமூகவியல், அறிவியல், வரலாற்றியல் சார்ந்த பல நுால்களை முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். தமிழ், அரபுத்தமிழ், அரபு, ஆங்கிலம், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளில் முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் 20-ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பானது வேகமாக அதிகரித்துள்ளது. கல்வி ரீதியான நுால்கள், இஸ்லாமிய மத நூல்கள், இஸ்லாமிய ஆய்வு நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், தர்க்கவியல், நாவல்கள், சிறுகதைகள், உருவகக்கதைகள், புதுக்கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், உரைநடைகள், உரைச்சித்திரங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள். இவ்வாறாக வளர்ச்சியடைந்து கொண்டு சென்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்கானது தேசிய பரிமாணத்தை அடைந்ததுடன் பத்திரிகைகளில் மாத்திரமல்லாமல் நவீன இலக்றோனிக் மீடியாக்களிலும் இத்தகைய பங்களிப்புகள் தொடர்ந்தன. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
19 ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இருந்து இன்றுவரை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பினை ஆராயுமிடத்து; எமது பருமட்டான ஆய்வுகளின்படி சமூக எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு, அன்றேல் அதையொத்த ஏனைய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுமார் 2800 க்கு மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களை இலங்கை மண்ணில் இனங்காணக் கூடியதாக உள்ளது.
பாகம் O - கலாபூஷணம் புணர்னியாமினர்

Page 10
ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஒரு சமூகத்தின் உணர்வூட்டல்களுக்கு; அவ்உணர்வூட்டல் களினுாடாக சமூகத்தின் சிந்தனைகளைத் துாண்டுவதற்கு; அச்சிந்தனைத் துாண்டல்களினுாடாக சமூக எழுச்சிக்கு அத்திவாரமிடுவதற்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரத்திற்கு முக்கியம் பெறுகின்றனவோ - அதேபோல அக்கருத்துக்கள் தேசிய பரிமாணத்தை அடையவும், மக்கள் மத்தியில் சென்றடையவும் ஊடகத் துறைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
* ஊடகத்துறை' என்ற எண்ணக்கரு - நவீன காலத்தில் விசாலமான கருத்தினைப் புலப்படுத்தி நிற்கின்றது. ‘உலகச் சிந்தனை’களை உள்ளங்கைக்குள் சுருக்கி விட்ட நவீன தொடர்பாடல் துறையின் அபிவிருத்தியானது இன்று பத்திரிகைத்துறையுடன் மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்டு விடாமல் வானொலி, தொலைக் காட்சி, இணையத்தளம். என்று வியாபகமடைந்து செல்கின்றது.
இலங்கை முஸ்லிகளின் ஊடகத்துறை வரலாற்றினை ஆராயும் போது ஏனைய நாடுகள், ஏனைய சமூகங்களைப் போலவே பத்திரிகைத்துறையின் ஆரம்பத்துடனே தோன்றுகின்றது. 1882 டிசம்பர் 21ம் திகதி ‘முஸ்லிம் நேசன்’ எனும் பத்திரிகையை அறிஞர் சித்திலெப்பை வெளியிட்டார். இதுவே இலங்கை முஸ்லிம்களின் முதற்பத்திரிகையாகும். 1898 பெப்ரவரி 05ம் திகதி அறிஞர் சித்தி லெப்பே வபாத்தானதையடுத்து அறிஞர் ஐ.எல். எம். அப்துல் அஸிஸ் 1899 இல் முஸ்லிம் நேசன் பத்திரிகையின் ஆசிரியரானார். இருப்பினும் முஸ்லிம் நேசன் புதிய நிர்வாகத்துக்கும் அஸிஸ் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் நேசனில் இருந்து விலகி 1900ம் ஆண்டில் "அஸ்ஸபாப்' எனும் அரபுத் தமிழ் பத்திரிகையை ஆரம்பித்ததுடன் 1901 ஆம் ஆண்டில் ‘முஸ்லிம் பாதுகாவலன்' பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிகையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கும், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் தெரிந்துகொள்வதற்காக வேண்டி ‘முஸ்லிம் கார்டியன்’ என்ற ஆங்கிலப் பகுதியையும் முஸ்லிம் பாதுகாவலனில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக முஸ்லிம்களின் பத்திரிகைத் துறையின் பயணம் தொடர்கின்றது.
C12) saroo முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்ட பின்பு பல்வேறுபட்ட துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு இடம் பெறலாயிற்று. அதே போல தொலைக்காட்சியையும் குறிப்பிடலாம்.
இவ்வாறாக ஊடகத்துறையில் பத்திரிகை ஆசிரியர்களாக, பத்திரிகையாளர்களாக, செய்தியாளர்களாக, அறிவிப்பாளர்களாக. என்று முஸ்லிம்களின் பங்களிப்பினை இனங்காட்ட முடியும். எமது பருமட்டான ஆய்வுகளின் படி சுமார் 1250 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து இன்று வரை பல்வேறுபட்ட ஊடகங்களிலும் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றியுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
கலைத்துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு
‘முத்தமிழை இயல், இசை, நாடகம் எனத் தமிழறிஞர்கள் வரையறை செய்வர். ‘இயல் -இலக்கியத்துறை சார்ந்தது. இசை, நாடகம் கலைத்துறை சார்ந்தது. கலைத்துறையில் இசை, நடனம், நாடகம், சிற்பம், ஒவியம், திரைப்படம், தொலைக்காட்சி. போன்றன அடங்கும். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டோரை பொதுவாகக் கலைஞர்கள் என அழைப்பர்.
இலக்கிய - எழுத்துத்துறைகளில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு கணிசமான அளவில் காணப்பட்ட போதிலும் கூட கலைத்துறையில் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படு கின்றன. இதற்கு இஸ்லாமிய மத வரையறைகளும் ஒரு காரணமாகும்.
இருப்பினும் 19-ம் நுாற்றாண்டிலிருந்தே ஆங்காங்கே முஸ்லிம் கலைஞர்களின் கலைத்துவ வெளிப்பாடுகள் காணப்பட்ட போதிலும் கூட பெருமளவில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள், அவை வரையறை செய்யப்பட்டிருந்தமையினால் தேசிய பரிமாணத்தை அடையவில்லை. 20-ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இந்நிலையில் படிப்படியான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பருமட்டான ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் கலைஞர்கள் சுமார் முந்நுாற்றுக்கு மேற்பட்டோரின் பங்களிப்புக்கள் தேசிய பரிமாணத்தை அடைந்துள்ளன.
பாகம் Ol - கலாபூஷணம் புண்ணியாமினர்

Page 11
நீண்டகாலத் திட்டம்
என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில் 19-ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இருந்து 21ம் நுாற்றாண்டின் தற்போதைய காலப் பகுதிவரை சுமார் 2800 க்கு மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், 1250 க்கு மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும், 300க்கு மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களுமாக மொத்தமாக 4350க்கு மேற்பட்ட பெயர்களை இனங்காணக் கூடியதாக உள்ளன.
எனவே இத்தகைய ஆய்வினை ஒரிரு மாதங்களுக்குள்ளாகவோ; அன்றேல் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவோ முடித்துவிட முடியாது. இந்த ஆய்வு நிறைவுபெற நீண்டகாலம் தேவைப்படும். அல்லாஹற் நாடினால் (இன்ஷா அல்லாஹற்) இத்திட்டத்தினை பூர்த்திசெய்ய நாடியுள்ளேன். அப்படி முடியாது போகும் சந்தர்ப்பம் ஏற்படின் என்னால் திரட்டப்பட்ட பதிவுகள் . சான் றுகள் , ஆதாரங்களை இவ் வாய் வினைத் தொடரவிரும்புபவர்களுக்கு விட்டுச்செல்வேன்.
இத்தகைய ஆய்வினைத் துணிவுடன் மேற்கொள்ள ஆக்கமும் ஊக்கமும் அளித்த நவமணியின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம். பீ.எம். அஸ்ஹர் அவர்களுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். ‘எழுதுவது இலகு, ஆனால் விபரங்களைத் தேடுவது கடினம்" கடினமான பணிக்கு கைதந்தவர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களே. 'நவமணி'யில் அதற்கான விளம்பரங்களையும், களத்தினையும் தந்திராவிட்டால் இப்பணியினை மேற்கொள்ள முடியாது போயிருக்கலாம். எனவே ஈழத்து இஸ்லாமிய இலக்கிய உலகமே இவருக்கு நன்றி கூmக் கடமைப்பட்டுள்ளது.
எப்படியோ.
நவமணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரத்திரட்டில் ஆரம்பத்தில் இடம் பெற்ற ஒரு தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து முதற்பாகமாக உங்களுக்குத் தந்துள்ளேன். “இன்ஷா அல்லாஹ இதன் இரண்டாம் பாகம் எதிர்வரும் 2004 - செப்டெம்பர் மாதம் வெளிவரும்.
நவமணியில் இடம் பெற்று வரும் எழுத்தாளர் கள, துளடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுகள் எதுவிதத்திலும்
GOsao முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

தரப்படுத்தப்பட்டதாக இருக்கமாட்டாது. ஏதோ ஒரு வகையில் தரப்படுத்தி வெளியிட வேண்டும் என முனைந்தால் தரவுகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமதம் எமது திட்டத்தையே மழுங்கடித்து விடும், எனவே தரப்படுத்தலை விட விபரங்களைத் திரட்டிப் பாதுகாப்பதே எனது குறிக்கோள். எனவே 'நவமணியியில் இடம்பெற்ற எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரம் என்ற அடிப்படையைத் தவிர இந்நூலில் நான் யாரையும் தரப்படுத்த வில்லை என்பதை கருத்திற்கொள்ளவும்.
இந்நூல் பற்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன். இத்திட்டம் வெற்றிபெற உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். உங்கள் குடும்பத்தில், அன்றேல் உங்கள் பிரதேசத்தில் வாழும், அல்லது வாழ்ந்து இறையடி சேர்ந்து விட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் இருப்பின் அவர்கள் பற்றிய விபரங்களையும், ஆதாரபூர்வமாக தந்துதவுங்கள்.
“இன்ஷா அல்லாஹற்’ எதிர்கால ஆய்வில் விசேடமாக சேர்த்துக் கொள்கின்றேன்.
மிக்க நன்றி. அன்புடன் உங்கள்
-கலாபூஷ்ணம் புன்னியாமீன்பணிப்பாளர்
வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியிட்டாளர்கள் (தனியார்) கம்பனி
14 - உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
2004 - 08 - 19
u Arabib ou - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 12
TŌITILTÆNos { + |ļos slo Irris, 99), isosoïrriso) (s. 后田4后与TT由B)(z |ose||ms||fosfē {!
Ilgsso TTL, so [f
Ito (sofīlsoț¢ £ © ®floorfils (Egŕo \ g qi-Iriri:Pwoh (g-
용T||ĤIT1田그는표 (1, 5ポFニTgョFQ (*鮭| oorslae{ s. |oss||IT|s||fosfē (1-역T明tfT&中 (科sælger| R.: IstrojfT||sssssss: {},off pílo{|取启用目g( qITTITIŴos (g.역**T현 5os955Bs』シコ
『』」』( engEge@그동制rn中&.[Íos:95) I'R역Trn동南明ng들T1TTTCa그
역극T효e& (1|||||
-|- Mus田 || Ros &田-...--ugggEngコgge園
000ZY0LL 00K 0YST LK SLK L000 LLSTKLK SLK L0L 0TYTL LLLLS
ūits ofīsırı rıhtşrnos
C160aarna முட்ரீம் எழுத்தாார்கள்,ஊடகவிரtாார்கள், சனாதரர்களிள்பீரந்திரட்டு

O எண்ணக்கருத்துக்கள்)
இலங்கை முஸ்லீம்கள் வரலாறு
PUppUDAMITIÓ øl.07 Jøîửulửuu as a Jaip sys காலத்தினர் மூக்கியத் தேவைகளுள் ஒன்றாகும்.
அல்ஆநாஜ் எம்.பீ.எம். அஸ்ருர் . .P
இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், எழுத்தாளரும். நன்மணி தேசிய வார இதழின் பிரதம ஆசிரியரும்
பாகம் : டி புரபை புர்காமினர் C)

Page 13
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இலங்கையர் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. காரணம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக எழுதப்படாதது தான்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டியது அவசரம், அவசியம் என்பதைப் பலரும் உணர்கின்றனர். எனினும் முழுமையான வரலாறு இன்னமும் யாராலும் எழுதப்படவில்லை.
இலங்கை முஸ்லிம்களது வரலாறு அங்குமிங்கும் கட்டுரை வடிவிலும் சிறு சிறு பிரசுரங்கள் வடிவிலும் பலரால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இவை திருப்திகரமாக, விளக்கமானதாக முழுமையானதாக இல்லை.
முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் இருந்தபோது வருடாவருடம் நாட்டின் பல மாவட்டங்களிலும் தேசிய மீலாத் விழாவை நடத்தினார். அப்போது விழா நடைபெற்ற மாவட்டங்களின் வரலாறு சில . அறிஞர்களால் எழுதப்பட்டு நூலுருப் பெற்றது.
ஆனால் சகல மாவட்டங்களிலுமுள்ள முஸ்லிம்களின் வரலாற்றை எழுதி வைக்க அமைச்சரால் முடியவில்லை. ஆட்சி மாற்றம் அவரின் முயற்சியைத் தடுத்துவிட்டது.
மாத்தளை நீதிமன்ற முதலியார் நஜிமுத்தீன், பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எஸ்.எம். அனஸ் போன்ற சிலர் முஸ்லிம்களின் வரலாற்றை எழுதுவதில் தற்போது ஆர்வம் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களின் வரலாறு பூரணமாகாததால் இந்நாட்டில் ஏனைய சமூக மக்கள் முஸ்லிம்களின் வரலாற்றுத் தகவல்களை மறைத்துவிட்டு வரலாற்று உண்மைகளுக்குக் குழிதோண்டுகின்றனர்.
- இலங்கையில் ஒரு முஸ்லிம் மன்னர் ஆட்சி புரிந்திருககிறார்.
- இலங்கை மீதான அன்னிய ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடி
உயிர்த்தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். O 18 Dâassade முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு

- இலங்கை சுதந்திரம் பெற முக்கிய பங்கினை வகித்தவர்கள் முஸ்லிம்கள்.
- இலங்கையின் பொருளாதாரத்தை வளர்க்க உதவியவர்கள் முஸ்லிம்கள்.
இலங்கையின் தேசிய அரசியல் கட்சிகள் உருவாகவும்
வளர்ச்சி பெறவும் முக்கிய பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்.
- இலங்கைக்கு முதலாவது உலக சம்பியன் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொடுத்து இலங்கையின் புகழை உலகில் வளர்த்தவர் முஸ்லிம்கள்
இப்படி பலவற்றை அடுக்கலாம்.
விரிவான ஆராய்ச்சி, ஆதாரபூர்வமான விளக்கம் ஆகியவற்றின் மூலம் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய பல உண்மைகளை நாம் வெளிக் கொணரலாம்.
தனி ஒருவரால் இதனைச் சாதிக்க முடியாது. திட்டமிடப்பட்ட அடிப்படையிலான விரிவான கூட்டுமுயற்சி இதற்கு அவசியம்.
முஸ்லிம் அரசியல் வாதிகள், கல்விமான்கள், அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் இச்சீர் பணியில் ஒன்றிணைய வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களின் கலை இலக்கியத்துறை சார்ந்த வரலாற்றைத் தொகுக்கும் பெரும் பணியில் ஒரு சிறு துளியை நவமணி தேசிய வாரப் பத்திரிகை தொடங்கியுள்ளது. எழுத்தாளரும், சமூகசேவையாளருமான கலாபூஷணம் புன்னியாமீன் “இப்பணியில் நவமணிக்கு” உதவி வருகிறார்.
ஒரு நீண்டகால ஆய்வுத்திட்டத்தின் முதல் படியாக இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் விபரங்களைத் திரட்டி நவமணியில் வெளியிடுவதுடன் அவற்றை நூலுருவிலும் வெளிக்கொணர புன்னியாமீன் திட்டம் வகுத்துச் செயல்படுகின்றார்.
அவரது இம்முயற்சி வெற்றி பெற முஸ்லிம் எழுத்தாளர்கள்,
υταδύν οι - கலாபூஷணம் புண்ணியாமீனர் Gs)

Page 14
ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இலங்கையில் ஒரு முறையான தமிழ் தினசரியை முதன் முதலில் வெளியிட்ட பெருமை முஸ்லிம்களையே சாரும். 1930இல் வெளியான 'தினத்தபால்’ பத்திரிகையே முதலாவது முறையான தமிழ் தினசரி. கொழும்பிலிருந்து வெளியான இத்தினசரி காலையும், மாலையும் வாசகர்களை சென்றடைந்தது. கொழும்பில் இதன் விலை இரண்டு சதம். வெளியூரில் மூன்று சதம். க.அ. மீராமுகையதினே இதன் ஆசிரியர்.
இத்தினசரியின் முதலாம் பக்கத்தில் ‘தமிழ் பாஷை பேசுகின்ற ஜனங்களையெல்லாம் அணைத்து ஆதரித்து, இணைத்து ஈடேற்ற உற்சாகத்துடன் ஊக்கமாக எழுந்து நிற்கும் தினப்பதிப்பு பத்திரிகை இது ஒன்றே’ என்று தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் குறிப்பிடப்பட்டது.
எட்டுப் பக்கங்கள் கொண்டதாக இத்தினசரி வெளிவந்தது. தமிழ் பேசும் மக்கள் இத்தினசரியை விரும்பி வாங்கி வாசித்தார்கள்.
இத்தினசரிக்குப் பின்னரே ‘வீரகேசரி’ தினசரி வெளிவந்தது. ‘வீரகேசரி’ ஆசிரியராக திரு. மெ. பெரி. சுப்பிரமணியச் செட்டியார் இருந்தார். இவர் தினத்தபால் ஆசிரியருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வீரகேசரியின் வளர்ச்சிக்காக தினத்தபால் நிறுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது.
இலங்கையில் சிங்களப் பத்திரிகை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ்ப்பத்திரிகை ஆரம்பமாகிவிட்டது. ஏகாதிபத்தியவாதிகளான கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தங்களது சமயத்தைப் பிரசாரம் செய்வதற்காக தமிழில் முதலில் பத்திரிகை வெளியிட்டார்கள்.
பத்திரிகை உருவில் வெளிவந்த முதலாவது தமிழ்ப்பிரசுரம் இலங்கை அரச வர்த்தமானி (அரசாங்க வர்த்தமானி பத்திரிகை) 1802ம் வருடத்தில் இது வெளியானது. 39 வருடங்களின் பின் (1841 இல்) 'உதய தாரகை” வெளியானது. யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்க மிஷனரிமாரின் அச்சகத்திலிருந்து ‘உதயதாரகை” வெளியானது.
(2006Aశుది முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

1859 இல் பத்திரிகைக் கட்டளைச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மிஷனரிமார் அல்லாதோரும் பத்திரிகைத்துறையில் கால்வைத்தனர். 1860க்குப் பிறகு பல பத்திரிகைகள் வெளிவந்தன.
“இலங்கை அபிமானி’ (1863), ‘இலங்கை காவலன்’ (1864), '' இலங்கை பாதுகாவலன்’ (1869), ‘‘புதினாதிபதி’ (1870), ‘புதினாலங்காரி’ (1873), ‘இலங்கை நேசன்’ (1877), ‘‘சைவ உதயபானு' (1880), “சைவ சம்போதினி” (1881), ‘விஞ்ஞானவர்த்தனி” (1882), “முஸ்லிம் நேசன்’ (1882), “சைவ அபிமானி’ (1884), ‘சன்மார்க்க போதினி’ (1885), ‘இலங்கை தின வர்த்தமானி’ (1886), ‘சர்வஜன நேசன்’ (1886), ‘இந்து சாதனம்’ (1889), ‘‘ஸைபுல் இஸ்லாம்’ (1890), 'இஸ்லாம் மித்திரன்’ (1893), “மாணவன்’ (1896)
இலங்கையில் முஸ்லிம் பத்திரிகைகளுக்கு முன்னோடி ‘முஸ்லிம் நேசனே’ என்பது பலரது நம்பிக்கை. இஸ்லாமிய விடயங்கள் ‘முஸ்லிம் நேசனில்” முக்கியத்துவம் பெற்றன.
‘புதினாலங்காரி (1873) கொழும்பு சோனகத்தெருவில் இருந்த நெய்னா மரிக்கார், வாப்பு மரிக்கார் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
‘முஸ்லிம் நேசனை’ சித்திலெவ்வை ஆரம்பித்து நடத்தினார். முஸ்லிம் சமூக எழுச்சிக்கு வித்திட்ட பத்திரிகை இது. சர்வஜன நேசன் பத்திரிகையை ஏ.எஸ்.ஸி. மொஹிடீன் நடத்தினார். 'ஸைபுல் இஸ்லாம் பத்திரிகையை அப்துல் ரஹற்மானும் “இஸ்லாம் மித்திரன்’ (1893) பத்திரிகையை எம்.எம். உதுமானும் நடத்தினர். 1890 இல் ‘முஸ்லிம் பாதுகாவலன்” பத்திரிகையை ஐ. டபிள்யூ.எம். அப்துல் அஸிஸ் நடத்தினார்.
இலங்கையின் முதலாவது தமிழ் நாவலான “அஸன்பே சரித்திரம்” 1885 இல் வெளியானது. சித்திலெப்பையின் படைப்பு இது.
1841 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் தமிழ் பேசும் தமிழர், முஸ்லிம்கள் மத்தியில் தமிழ்ப் பத்திரிகைக் கலை அதிக வளர்ச்சி கண்டது.
1869இல் ‘ஆலமதி லங்காபுரி” (இலங்கைசெய்தி) என்ற பத்திரிகை மலாய் முஸ்லிம்களால் அரபு மொழி கலந்ததாக
υιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீண் G2)

Page 15
வெளியிடப்பட்டது. இந்தரீதியில் வெளியான முதல் பத்திரிகை இது. 1878 வரை இப்பத்திரிகை வெளிவந்தது.
1895இல் ‘வாஜாஹற் ஸ்க்லொங்” (இலங்கையின் ஒளி) பத்திரிகை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அரபுமொழி தொடர்புடன் வெளிவந்தது. பாபா யூனுஸ் ஸல்தீன் இப்பத்திரிகையை வெளியிட்டார். இவர் 1904 இல் தமது 76வது வயதில் மரணமானார். மலே முஸ்லிம்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் பெற்றுத் திகழ்ந்தவர் இவர்.
உலகம் வேகமாக சுருங்கி வருகிறது. உலக நாடுகளின் உறவுகள் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் வளர்ந்து வருகின்றன. உலகின் ஒரு மூலையில் நடக்கும் சம்பவங்கள் மறு மூலைக்கு உடனுக்குடன் தெரிய வருகின்றன. ஒரு சில நிமிடங்களில் உலகின் எந்த ஒரு நாட்டுடனும் தொடர்புகொள்ள முடியுமாகவும் உள்ளது. இவ்வளவுக்கும் காரணம் நவீன விஞ்ஞானமே.
நவீன விஞ்ஞானத் தின வளர்ச்சியானது உலகினி முன்னேற்றத்தை பன்மடங்கு விரைவாக்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் இந்த வேகத்துக்கு ஈடுகொடுத்தேயாக வேண்டியது கட்டாயம். இல்லையேல் முன்னேற்றம் இல்லை. அபிவிருத்தி இல்லை.
இந்த நவீன உலகின் தொடர்பு சாதனங்களின் பங்கு மிக முக்கியமானது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தொடர்புசாதனங்களின் செயல்பாடுகளை அதி துரிதமாக்கியுள்ளது. உலக நாடுகளின் நெருக்கத் துக்கும் இறுக்கத்துக்கும் தொடர்பு சாதனங்களின் இன்றைய செயல்பாடுகளே காரணம்.
பழைய காலத்தில் வாய்ப்பேச்சின் மூலம் செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டன. அரச யானையின் மீதமர்ந்து முரசுறைந்தும் மேளம் தட்டியும் அரச கட்டளைகளையும் செய்திகளையும் பரப்பினர். ஊர்ச் சந்திகளிலும் நாற்சந்திகளிலும் தொண்டை கிழியப் பாடி தகவல்களை அறிவித்தனர்.
மரப்பட்டைகள், காய்ந்த இலைச் சருகுகள், பொன் தகடு,செப்பேடு ஆகியவற்றில் தகவல்களைப் பொறித்தனர். சிலவகை மரங்களின் பதனிடப்பட்ட ஒலைகளில் எழுத்தணி கொண்டு மடல்கள் வரைந்தனர்.
(22)ཞཞིན་གསན་ཏབ་ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலsாார்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

கிளி, புறா, நாகணவாய் அன்னப்பறவை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு தகவல்கள் பரிமாறப்பட்டன.
அம்பு முனையில் செய்தியைக் கட்டி, வில்லை வளைத்து நாணேற்றி எய்தும் செய்திகளைப் பரப்பினர். புகைபோக்கியில் புகை விடுவதன் மூலமும் ஆலய மணி ஓசை எழுப்புவதன் மூலமும் கூட செய்திகள் பரப்பப்பட்டன.
பழக்கப்பட்ட புறாக்கள் தமது காலில் கட்டப்பட்ட செய்திச் சுருள்களை 200,300 மைல்கள் ஆகாய மார்க்கமாக எடுத்துச் சென்றன. அதே போல் குதிரை வீரர்கள் தரை வழியே செய்திகளை எடுத்துச் சென்றனர். கடலோடிகள் கடல் மார்க்கமாக செய்திகளை கொண்டு சென்று பரப்பினர். இவற்றைத் தொடர்ந்து தபால் விநியோகம் ஆரம்பமானது. தந்தி முறையும் தொலைபேசிகளும் செய்திகளை துரிதமாக அனுப்ப உதவின. காகித உற்பத்திக்கலையும், அச்சுப் பதிக்கும் கலையும் கண்டறியப்பட்டதும் பத்திரிகைகள் தோன்றின.
வானொலி, தொலைக்காட்சி என வளர்ந்த விஞ்ஞானம் இன்று பெக்ஸ். கம்ப்யூட்டர், இன்டர்நெட் என அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது.
கணனித் துணையின்றி எதையுமே செய்ய முடியாத நிலையும் உருவாகி வருகின்றது. மலர்ந்துள்ள 21ம் நூற்றாண்டு தகவல் தொடர்பு துறையில் இது அதி உச்சத்தில் திகழ்கிறது.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, கணனி ஆகியன தற்காலத்தில் முக்கிய தொடர்புச் சாதனங்களாகத் திகழ்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வில் இவை இரண்டறக் கலந்து விட்டன. சகல சமூகங்களினதும், அபிவிருத்திக்கும், உயர்வுக்கும் இவற்றின் பங்களிப்பு மிக மிக அவசியமாகின்றது. தேசிய, சர்வதேச நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அறிந்து செயல்பட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி செய்திகள் பெரிதும் உதவுகின்றன. இந்த தொடர்பு சாதனங்கள் மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் அதே நேரத்தில் அவர்கள் வாழ்விலும் செல்வாக்கைப் பிரயோகிக்கின்றன.
இப்படியெல்லாம் இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் அன்றும்
υιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீன் G2)

Page 16
இன்றும் தொடர்புத் துறையில் பின்தங்கியே உள்ளனர். இத்துறையில் அவர்களது அறிவு, ஆர்வம் ஆகியன குறைந்தே காணப்படுகின்றன. தொடர்புத் துறையின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் தெளிவாக உணராமையே இதற்குக் காரணம். இதனால் தான் முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சி வேகமும் குன்றியுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி ஆகியன தொடர்புத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தாலும், பத்திரிகையின் மவுசு குறைந்ததாக இல்லை. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்திகள், தகவல்கள் இடம் பெற்றாலும் இவ்விரணி டையும் பொழுதுபோக்கு சாதனமாகவே அநேகர் கருதுகின்றனர். செய்திகளையும் தகவல்களையும் விரிவாக அறிய பத்திரிகைகளைத் தான் நாட வேண்டும் என்பதும் பொதுவான கருத்து.
எனவே, மனித வாழ்வுடன் பத்திரிகையும் இரண்டறக் கலந்து விட்டது. காலையில் எழுந்ததும் பத்திரிகைகளைப் புரட்டா விட்டால் பலருக்கு என்னவோ போலிருக்கும். ‘முதல் நாள் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் ஏதாவது தகவல்கள் வாசிக்கப்பட்டால், இன்று பத்திரிகையைப் பார்த்தால் முழுமையாக விபரம் அறியலாம் எனப் பேசிக் கொள்வார்கள்.
அரசியல் வாதிகளாகட்டும் , அறிஞர்களாகட்டும் , சமூகப் பெரியார்களாகட்டும், எவராயினும் பொது வைபவங்களில், மாநாடுகளில், கூட்டங்களில், விழாக்களில் பேசினால் பேசியவர்கள் மட்டும் அல்ல அப்பேச்சை நேரில் செவிமடுத்தவர்களும் மறுநாள் பத்திரிகையை பார்த்து அந்த உரை எவ்வாறு அமைந்துள்ளது. அதற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. என்பதை அறிந்து கொள்வார்கள்.
இந்தப் பத்திரிகைத் துறை நவீன அச்சுக்கலையின் வளர்ச்சியால் நன்கு அபிவிருத்தியடைந்துள்ளது. பத்திரிகைகள் செய்திகள் தகவல்களை வழங்குவதுடன் மக்களைச் சிந்திக்க வைத்து இவர்கள் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியிலுள்ள குறை நிறைகளைக் கண்டறியும் பத்திரிகைகள் ஊழல், மோசடிகள் பற்றிய இரகசியங்களையும் வெளியிடுகின்றன.
(24)[6aiఐర్ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

பத்திரிகைக்காரர்கள் என்றால் மக்கள் மத்தியில் தனிமதிப்பு நேர்மையான பத்திரிகையாளர்களைக் கண்டால் ஊழல் மோசடி பேர்வழிகளுக்கு ஒரே நடுக்கம். சமுதாயத்தை, நாட்டை சுத்தப்படுத்தி சிறந்த வழியில் நடத்துவதில் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது.
தகவல் தொடர்புத் துறையில் தற்போது பத்திரிகைத்துறை சுவாரஸ்யமானதாகவும் உள்ளது. சமூக, அரசியல், பொருளாதார சீர்கேடுகளை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்கள் மக்களுக்கு அறிவுட்டுகிறார்கள். மக்கள் கருத்துக்களை திரட்டுகிறார்கள். எனவே கற்றறிந்த பலர் இத்துறையை விருப்பத்துடன் நாடுகிறார்கள்.
ஜனநாயகத்தைப் பொறுத்தமட்டில் பத்திரிகைத்துறை மிகவும் முக்கியமானது. ஆட்சியாளர்களின் அநீதி, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து, சாதாரண மக்களை பத்திரிகைத்துறை பாதுகாக்கின் றது. மக்களின் சுதந்திரம், உரிமை ஆகியவற்றை அது உறுதிப்படுத்து கிறது.
அமெரிக்காவில் இடம் பெற்ற வாட்டர் கேட் ஊழலை வெளிப்படுத்திய ‘ வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் இளம் செய்தியாளர்களான பொப்பூட்வார்ட், கர்ன் பேர்ன்ஸ்டின் ஆகியோர் வரலாறு படைத்து விட்டனர்.
எனவே பத்திரிகைத்துறை என்றென்றும் உலகில் தனியிடம் பெற்று முக்கியத்துவத்துடன் திகழத்தான் போகிறது. ஒருசமுதாயத்தினதும் இனத்தினதும் நாட்டினதும் வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றுக்கு பத்திரிகைகள் அவசியமாகின்றன. இந்த உண்மையை முஸ்லிம்கள் உணராதது வியப்புக்குரியது.
பத்திரிகைத்துறையில் முஸ்லிம் வாலிபர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாகவே உள்ளனர். முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் ஆகியன பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு அவர்களது பத்திரிகைத்துறை ஈடுபாட்டின்மையையும் ஒரு காரணம்.
உலகில் வேகமாக இடம்பெறும் மாற்றங்களை, விஞ்ஞானப் புதுமைகளை உணரமுடியாத கிணற்றுத் தவளைகளாக முஸ்லிம்கள்
Lurroue 2{ ح கலாபூஷணம் புணர்னியாமினர்

Page 17
இருக்கும்போது, கல்வி, பொருளாதாரம் மற்றும் துறைகளின் மாற்றங்களை அவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அவர்களது தொழில் துறைகளை எப்படி மேம்படுத்த முடியும்?
பத்திரிகைத் துறையில் முஸ்லிம் வாலிபர்கள் கவனம் ஈர்க்கப்பட்டால் முஸ்லிம் சமுதாயத்தில் விழிப்பையும் மாற்றத்தையும் நிச்சயம் ஏற்படுத்த முடியும். அவர்களது தனித்துவம் உரிமை ஆகியவற்றை காக்க முடியும். சகல துறை அறிவையும் வளர்க்க முடியும்.
உயர்கல்வியை முடித்து வெளியேறும் முஸ்லிம் வாலிபர்கள் பத்திரிகைத் துறையில் பிரவேசிக்கவும் தூண்டப்பட வேண்டும். பத்திரிகைத்துறை ஈடுபாடு வருமானத்தை மட்டுமல்ல திறமை, கல்வி, அறிவு, ஆகியவற்றையும் அதிகரிக்கும். பத்திரிகையாளர்கள் தினம் தினம் புதுப்புது விடயங்களைக் கற்கலாம். உலக விவகாரங்களைத் தெளிவாக அறியலாம். அவர்களது அறிவு வளர்ச்சியடையும் போது அவர்கள் சார்ந்த சமூகமும் வளர்ச்சி காணும்.
எனவே, இருபத்தோராம் நூற்றாண்டில் - விஞ்ஞான புதுமைகள் நிறைந்த யுகத்தில் பிரவேசிக்கப் போகும் முஸ்லிம்களும் பத்திரிகைத் துறையில் பெருமளவு ஈடுபாடு காட்டுவதன் மூலம் தங்கள் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் விவேகம் மிக்க, திறமை படைத்த மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தத் தூண்ட வேண்டும்.
கடந்த நூறு வருடங்களில் பத்திரிகைத்துறையை முழுநேர தொழிலாக வருமானம் சம்பாதிக்கும் தொழிலாகப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முஸ்லிம்கள் மத்தியில் பாரிய பத்திரிகை நிறுவனங்கள் இருக்கவில்லை. முஸ்லிம்களின் நிர்வாகத்தின்கீழ் நிலையான முறையான அமைப்பில் பத்திரிகைகள் வெளிவரவும் இல்லை. அவ்வப்போது ஒரு சிலரின் முயற்சியால் பத்திரிகைகள் தோன்றின. அதே வேகத்தில் மறைந்தன. அவற்றிலும் பெரும்பாலானவை மாதாந்த, வாராந்த பத்திரிகைகளாகவே இருந்தன.
தினசரிப் பத்திரிகைகளை வெளியிட மிகச்சிலர் முற்பட்டனர். ஆனால் பொருளாதாரப் பிரச்சினை அவர்களை வாட்டி எடுத்து விட்டது.
(26)|ఏAశపోడా முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

எப்படியிருப்பினும் மற்றவர்களுக்குக் கூட முன்மாதிரிகாட்டக் கூடிய தினசரிப் பத்திரிகையை ஒரு முஸ்லிம் நடத்திக்காட்டியிருக்கின்றார். என்பது மகிழ்சிக்குரிய செய்தியே.
கடந்த நூறு வருடகாலத்தில் எம்மத்தியில் தோன்றி மறைந்த பத்திரிகைகள் பற்றி சற்று கண்ணோட்டம் செலுத்திப் பார்ப்போம்.
இலங்கை முஸ்லிம் பத்திரிகைகளுக்கு முன்னோடி ‘முஸ்லிம் நேசனே’ என்பது நம்பிக்கை. ஆனால் 'முஸ்லிம் நேசனுக்கு” முன்னதாகவும் கொழும்பில் ஒரு முஸ்லிம் பத்திரிகை வெளியிடப்பட்டதாம். ‘லங்காபுரி” என்ற இப்பத்திரிகை மலாய் முஸ்லிம்களினால், அரபு மலாய் மொழிகளின் இணைப்பில் பிறந்த குண்டுல் மொழியில் வெளியிடப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
19ம் நூற்றாண்டின் இறுதியில் ‘முஸ்லிம் நேசன்', 'இஸ்லாம் மித்திரன்’ ஆகிய இரு முஸ்லிம் பத்திரிகைகள் வெளியாகின. இஸ்லாம் மித்திரன் 1897ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மர்ஹ"ம் எல்.எம். உதுமான் இதன் ஆசிரியர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில முஸ்லிம் பத்திரிகைகள் பிரசுரமாகின. அவற்றுள் மர்ஹ"ம் ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ் அவர்களின் ஆங்கில தமிழ் வெளியீடான 'முஸ்லிம் கார்டியன்’ (இலங்கை முஸ்லிம் பாதுகாவலன்) இலங்கை முஸ்லிம்களிடையில் அரசியல் உணர்ச்சியைப் புகுத்தியது. "தப்லீகுல் இஸ்லாம்’ என்ற மாத சஞ்சிகை விஷமிகளுக்கும் தகுந்த பதிலடி கொடுத்தது. தப்லீகுல் இஸ்லாம் சமாஜத் தலைவர் மர்ஹ"ம் அப்துல் கப்பார்கான் அவர்களால் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதே பெரியோரால் வெளியிடப்பட்ட ஆங்கில மாத சஞ்சிகை “முஸ்லிம் ஸ்டேன்டர்ட்” ஆங்கிலம் கற்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைப் போதித்தது. மேற்படி பத்திரிகைகள் பொருளாதார நெருக்கடியினால் நிறுத்தப்பட்டன.
இவற்றுக்குப் பின்னர் ‘ஸ்டார் ஒப் இஸ்லாம் (ஆங்கிலம்)
மொஹமடியன் (ஆங்கிலம்) சோனகர், ‘நவயுகம்”, “இஸ்லாமிய தாரகை” போன்ற பல பத்திரிகைகள் தோன்றி மறைந்தன.
பாகம் Coll ~- கலாபூஷணம் புண்ணியாமினர்

Page 18
1929ம் ஆண்டில் 'தினத்தபால்” என்ற தினசரிப்பத்திரிகையை கொழும்பு வாழைத்தோட்டத்திலிருந்து மீரா மொகிதீன் என்பவர் வெளியிட்டார். ஒரு தினசரிப் பத்திரிகைக்கு முன்மாதிரி காட்டிய பத்திரிகை இது. கொழும்பில் இரண்டு சதமாகவும் கொழும்புக்கு வெளியே மூன்று சதமாகவும் விற்கப்பட்ட இப்பத்திரிகை இரண்டு வருடங்கள் தொடர்ந்து வெளிவந்தது. இப்பத்திரிகையையும் பொருளாதாரப் பிரச்சினை பாதித்தது. கடன்பளு இப்பத்திரிகையை நெருக்கியது. 1935ம் ஆண்டுவரை தட்டுத்தடுமாறி வெளிவந்த இத்தினத்தபால் பின்னர் ஒரேயடியாக நின்றுவிட்டது.
1930ல் ஆரம்பிக்கப்பட்ட ‘வீரகேசரி’ என்னும் தமிழ்ப் பத்திரிகையின் வளர்ச்சிக்காக பீ.ஆர். சுப்பிரமணியம் செட்டியார் (இவரே வீரகேசரியை அரம்பித்தவர்) மீரா மொஹிதீனுடன் பேச்சுவார்தை நடத்தினார் என்றும் அதைத் தொடர்ந்தே ஓரிரு வருடங்களின் பின் 'தினத்தபால்’ நிறுத்தப்பட்டது என்றும் தகவல் ஒன்று உள்ளது.
1945ல் மெளலவி அப்துர் ரஸ்ஸாக் (ஜமாலி) 'அல் இல்ம்' என்ற பத்திரிகையை வெளியிட்டார். இது மார்க்க அடிப்படையிலான விடயங்களைக் கொண்டிருந்தது.
1946 இஸ்லாமிய தாரகை என்ற பத்திரிகை கொழும்பு வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த கே.எம்.எம். ஸாலிஹற் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. வர்த்தக அடிப்படையில் ஒரு முஸ்லிம் பத்திரிகையை வெளியிட முடியும் என்ற கருத்தை நிறுவியவர் கே.எம்.எம் ஸாலிஹற். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அமோக வரவேற்டை இஸ்லாமிய தாரகை பெற்றது. ஹரிஸ் காஸிம் கம்பல் என்பவரின் அடானா அச்சகத்திலிருந்து இப்பத்திரிகை வெளியானது.
“ஸ்டார் ஒப் இஸ்லாம்” என்னும் ஆங்கில ஏடு மர்ஹம் ரீ.பி ஜாயாவின் மருமகனான இ.ஸி. ஆலிப் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியானது.
‘முஸ்லிம் லங்கா’ இதழ் எம்.எம். அப்துல் காதர் என்பவரால் கொழும்பு வாழைத் தோட்டத்திலிருந்து வெளியானது. இதன் பின்னர் மர்ஹ"ம் எஸ்.எம்.எம். முகிதினை ஆசிரியராகக் கொண்ட ‘தோழன்’
இலங்கை முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

என்ற ஏடு வெளியானது. 1949ல் கல்ஹின்னை தமிழ் மன்ற ஸ்தாபகர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனீபா ‘சமுதாயம் இதழை வெளியிட்டார். 1954ல் வாழைத் தோட்டத்திலிருந்து எச்.எஸ். பக்ருதீனை ஆசிரியராக் கொண்டு ‘முன்னேற்ற முழக்கம்” என்ற இதழ் வெளியானது.
1960ஆம் ஆண்டுக்குப்பின் பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. எம்.எச்.எம். ஹம்ஸா ஆங்கில தமிழ் மொழிகளில் ‘அல் * இஸ் லாம்’ இதழை வெளியிட்டார். இப்பத்திரிகை தற்போதும்
வெளிவருகின்றது.
மாத்தளை லத்தீப் (ஏ.ஏ.லத்தீப்) ‘இன்ஸான்’ என்ற வார இதழை வெளியிட்டார். இது முற்போக்கு இதழாக வர்ணிக்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசை விமர்சிப்பதாகவும். இது காணப்பட்டது. ஏ.ஏ. லத்தீப் அப்போது கொழும்பிலிருந்த ரஷ்ய தூதரகத்தில் கடமை யாற்றிக் கொண்டிருந்தார்.
மர்ஹ"ம் எச்.எம்.பி. முஹிதீன் ‘தாரகை” என்ற பத்திரிகையை சிறிது காலம் வெளியிட்டார். பின்னர் இஸ்லாமிய சோஷலிஸ் முன்னணியின் 'உம்மத்’ பத்திரிகைக்கு ஆசிரியரானார். 1957 *அபியுக்தன்” பத்திரிகைக்கு ஆசிரியரானார்.
கொழும்பு மாளிகாவத்தையில் இயங்கிய மஜ்லிஸே இஸ்லாமி 1965ல் ‘புதுமைக்குரல்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டது. பின்னர் இப்பத்திரிகை மாதமிரண்டாக வெளியானது. முஸ்லிம் செய்திகளுக்கே அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இயக்கப் பிளவின் காரணமாக இது கண்ணை மூடியது.
1968 சாதுலியப்யா தரீக்காவின் கொள்கை இதழ் ஒன்று வெளியானதாக அறிய முடிகின்றது. தெளஹித் ஜமாஅத் டாக்டர் அப்துர் ரஹற்மானை ஆசிரியராகக் கொண்டு ‘வான்சுடர்’ என்ற ஏட்டை வெளியிட்டது. பஸ்யாலையிலிருந்து ரிழ்வான் மாஸ்டர் என்பவர் 1975ல் ‘நல்வழி” என்ற தரீக்கா ஏட்டை வெளியிட்டார். எம்.எச்.எம். நாளிர் என்பவர். “அஷ்ஷபாப்” என்ற பத்திரிகையை வெளியிட்டார். இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ‘அல்ஹஸனாத்” என்ற கொள்கை விளக்க சஞ்சிகையை 30 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறது. கிழக்கு
usrostb ol - கலாபூஷணம் புன்னியாமீன்

Page 19
மாகாணத்திலிருந்து அப்துர் ரவூப் என்பவர் “ஞானச்சுரங்கம்” என்ற பிரசார இதழை வெளியிட்டார். ‘மிஸ்பாஹற்’ என்ற பெயரிலும் இதே விதமான ஒரு சஞ்சிகை வெளியானது.
பேருவளை ஜாமிய்யா நளிமிய்யா சர்வகலாசாலை 'இஸ்லாமிய சிந்தனை’, ‘முஸ்லிம் ஒப்ஸேர்வர்” ஆகியவற்றை வெளியிட்டது. மஹரகமை கபூரிய்யா அரபுக் கலாசாலை 'அல் இஸ்லாஹற்” என்ற சஞ்சிகையை வெளியிட்டது.
எம்.எச்.எம்.ஸம்ஸ் திக்குவல்லையிலிருந்து “அஷ்ஷரா” என்ற ஏட்டை வெளியிட்டார். பின்னர் அது செய்தி மடலாக வெளியானது.
‘அல்ஹக்” என்ற சஞ்சிகை கொழும்பு 9லிருந்து 1990 ஆம் ஆண்டின் பின் வெளியானது. 1980ல் ‘செரந்தீப் இஸ்லாமிக் ரிவீவ் என்ற ஆங்கில காலாண்டு இதழ் வெளியானது. ஜனாப் ஏ.ஸி.ஏ. கபூர் “எகொனமிக்ஸ் டைம்ஸ்’ என்ற பொருளாதார ஏட்டை ஆங்கிலத்தில் நீண்டகாலமாக வெளியிட்டு வந்தார். உடத்தலவின்னை மடிகே வை.எம்.எம்.ஏ. இயக்கம் ‘விடிவு' எனும் மும்மாசிகையை 1979இல் வெளியிட்டது. ‘இலங்கை முஸ்லிம்களுக்கு ‘தனி அரசியல் கட்சியொன்று அவசியம்’ என்பதை வலியுறுத்தி நின்ற இச்சஞ்சிகை 'புன்னியாமீனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது இச்சஞ்சிகை சில இதழ்களுடன் நின்று விட்டதையடுத்து ‘புன்னியாமீன்' 1980 - 1982 காலப்பகுதியில் அல்ஹிலால்' எனும் முஸ்லிம் அரசியல் மாதமிரு பத்திரிகையொன்றை நடத்தினார்.
நாவலப்பிட்டியிலிருந்து மெளலவி புர்ஹானுத்தின் 'நிதாவுல் இஸ்லாம்’ சஞ்சிகையை வெளியிடுகின்றார். பாணந்துறை ஹேனமுல்லையிலிருந்து எஸ்.எம். ஹஸன் என்பவர் “முஸ்லிம்” என்ற குடும்ப சஞ்சிகையை வெளியிட்டார். மன்னாரிலிருந்து கலைவாதி கலிலும், காதரும் மக்கள் மாத இதழை 1968ல் வெளியிட்டனர். 1970 எஸ்.ஏ. கையூம் என்பவர் ‘கடமை” என்ற வார ஏட்டை வெளியிட்டார்.
தோப்பூரைச்சேர்ந்த மெளலானா என்பவர் சுபைர் இளங்கிரனை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட ‘அபேதவாதி” ஒரு இதழோடு நின்று விட்டது. 0306Aశఐది முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

1990 இல சித்தீக் காரியப்பர் ‘பார்வை’ என்ற பத்திரிகையை வெளியிட்டார்.
1967ல் எம்.பீ.எம். மாஹிரை ஆசிரியராகக் கொண்டு 'அல்மதீனா’ சஞ்சிகை சில காலம் வெளியிடப்பட்டது. எம்.ஸி.எம். சுபைர் மணிக்குரல், மரகதம் ஆகிய இலக்கிய இதழ்களை வெளிக் கொணர்ந்தார்.
எம்.ஏ. ரஹமான் ‘இளம்பிறை”என்ற இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார். வழிக்வா என்ற மாத இதழை ஏ.எச்.ஜி. அமீன் சில மாதங்கள் வெளியிட்டார்.
‘சவ்துல் ஹக்” என்ற பிரசார இதழுக்கு மெளலவி ரூஹ"ல் ஹக் ஆசிரியர். முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ‘சுஹ"னுல் இஸ்லாம்” என்ற சஞ்சிகையை வெளியிட்ட போது அபூ உபைதாவும், எம்.எம். ஸபரும் ஆசிரியர்களாக செயல்பட்டனர்.
‘பாமிஸ்’ என்ற பெயரிலும் சில வருடங்களாக ஒரு மாதாந்த பத்திரிகை வெளியானது. இப்பத்திரிகை முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்ப்பதில் முன்னணி வகித்தது. பாமிஸ் என்ற அமைப்பே இதனை வெளியிட்டது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் 'உதயம்' என்ற மாதப் பத்திரிகையை தமிழிலும் “டோன் என்ற பத்திரிகையை ஆங்கிலத்திலும் வெளியிட்டது. அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கிர் மாக்காரின் முயற்சியால் இவை வெளியாகின.
*எழுச்சிக்குரல்’ என்ற பத்திரிகை 1985இல் மாதாந்தம் வெளியாகத் தொடங்கி மாதமிரண்டாக வெளியாகிய பின்னர் வாரம் ஒன்றாகியது. பொருளாதார நெருக்கடியால் மீண்டும் மாதம் இரண்டாக வெளிவந்தது. அண்மையில் கண்ணை மூடியது.
‘நேசன்’ என்ற பெயரிலும் ஒரு தமிழ்ப் பத்திரிகை வெளியானது. கல்வி அறிவை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு மாளிகாவத் தையில் இயங்கும் வாலிபர் குழு ஒன்று இஸ்லாமிய பேர்ஸ்பெக்டிவ்
பாகம் O - கலாபூஷணம் புன்னியாமீன்

Page 20
என்ற காலாண்டு சஞ்சிகையை ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகின்றது. இலங்கையின் முதலாவது காலாண்டு சஞ்சிகை இது எனக் கூறப்படுகின்றது. இதன் விலை பத்து ரூபா. முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்திலிருந்து தினமதி என்ற பத்திரிகை 1994 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. மெளலவி முபாரக் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.
‘சத்தியம்’ என்ற பெயரில் காத்தான்குடியிலிருந்து ஒரு மாத இதழ் 1992இல் வெளியானது. மீள்பார்வை, விருட்சம் என்ற பெயரிலும் பல பத்திரிகைகள் வெளியாகின்றன. கலைமகள் ஹிதாயாவை ஆசிரியராகக் கொண்டு தடாகம்’ எனும் கலை இலக்கிய மாசிகை சாய்ந்தமருதிலிருந்து வெளியிடப்பட்டது.
மேற்படி காலகட்டங்களில் மேலும் பல பத்திரிகைகள் வெளிவந்திருக்கலாம். கிடைத்த தகவல்களை அடிப்படையாக் கொண்டே இங்கு விபரங்கள் தரப்பட்டன. எவையேனும் பத்திரிகைகளின் பெயர்கள் இங்கே குறிப்பிடப்படாவிட்டால் சம்பந்தப்பட்டோர் மன்னிக்க வேண்டும். அவை வேண்டுமென்று தவிர்க்கப்படவில்லை. விபரம் தெரிந்தோர் அவற்றை அறிவிக்கலாம். ‘முஸ்லிம் குரல்’ என்ற பெயரிலும் ஒரு வாரப்பத்திரிகை 20.02.2003 முதல் வெளிவருகின்றது. எங்கள் தேசம் என்பது மற்றுமொரு முஸ்லிம் வார இதழாகும்.
முஸ்லிம்களுக்குரிமையான ஒரு தனியார் நிறுவனம் இப்போது நவமணி என்ற தேசிய வாரப்பத்திரிகையை வெளியிட்டு வருகின்றது. 1996ஆம் ஆண்டு அக்டோபர் 19ம் திகதி நவமணியின் முதலாவது இதழ் வெளியானது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைப்பும் சேர்ந்த படித்த சில வாலிபர்கள் பத்திரிகையாளர்களாகப் பணிபுரியத் தொடங்கியுள்ளனர். இவர்களை ஓரணியில் திரட்டவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. முஸ்லிம் பத்திரிகையாளர்களாக இளைஞர்களை ' உருவாக்கவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனினும் தொடர்புச்சாதனத்துறையின் முக்கியத் துவத்தை முஸ்லிம்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் குறை நீக்கப்பட்டேயாக வேண்டும்.
032D6Aశవా முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

உள்ளே.
ஏ யூ. எம். ஏ. கரீம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அன்பு முகையதின் ஐ. ஏ. றஸாக் முபீதா உஸ்மான் எச். ஸலாஹ"தீன் எம்.எச்.எம். அஷரப் எம். எச்.எம். புஹாரி அப்துல் கஹற்ஹார் . எஸ். முத்து மீரான்
எச். ஏ. ஸ்கூர் ஏ. எஸ் இப்றாஹிம் . எம்.ஐ. எம். தாஹிர்
எம் ஜே. எம் கமால் . ஏ.எச்.எம். யூஸ"ப்
நூருல் அயின் . எம்.ஸி.எம். இக்பால் . ஆ. அலாவுதீன்
ノ
பாகம் O - கலாபூஷணம் புணர்னியாமீன்

Page 21
N
19. எம். இஸட் அஹற்மத் முனஷ்வர் 20. சித்தி ஸர்தாபீ 21. ஏ.எம். எம். அலி 22. எம்.எச்.எம் ஹலீம்தீன் 23. என்.எஸ்.ஏ. கையூம் 24. எஸ்.எம். ஜவுபர். 25. ஏ.எல். எம். சத்தார். 26. ஜே. எம் ஹாபீஸ் 27. ஏ.எச்.எம். ஜாபிர் 28. ஏ. எம். நஜிமுதீன் 29. எஸ்.எல்.ஏ. லத்தீப் 30. எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் 31. மொஹம்மட் வைஸ் 32. எம். எம். ஸப்வான். 33. ஹிதாயா ரிஸ்வி 34. என். எம். அமீன் 35. மஸ்தா புன்னியாமீன் 36. கே. எம். எம். இக்பால்.
ܢܠ -ܠ
GOsaka முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு .
- முதலாம் பாகம் -
பாகம் O - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 22
எழுத்துத் துறை
கலாபூஷணம்
ノ -ஏ. யூஎம். ஏ. கரீம். ン
இலங்கை ரப்ரிம் எழுந்தாார்கள்,ஊடகவிய#ாளர்கள், கலைஞர்களின்லிமரத்திரட்டு)
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது -10 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அலி உதுமா லெவ்வை ஆலிம் முஹம்மது அப்துல் கரீம் அவர்கள்: ஏ.யூ.எம்.ஏ. கரீம், சங்கைதாசன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என தேசிய தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளில் எழுதி வந்தார்.
கல்முனை சாஹிரா (தேசிய) கல்லுாரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் முதலாம் தர பாடசாலை அதிபராகவும், ஓய்வுபெற்ற பின்பு கல்முனை பிரதேச செயலக மத தியளிப்தர் சபை' த விசாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
இவரது ‘ஓநாயும் இறைச்சித் துண்டும்' எனும் முதல் சிறுகதை 1950-ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. இவர் 2003, 02, 11ம் திகதி தனது 65வது வயதில் இறையடியெய்தும் வரை 10 சிறுகதைகளையும், 500க்கு மேற்பட்ட கட்டுரைகளையும், 700க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள் வருமாறு:
. நபிகள் பெருமானார் (ஸல்) கவிதை நூல் (1978) 2. காரியப்பர் மான்மியம் (1989) 3. இனிமேல் தான் துயில்வேன் (1990) 4. வாழ்வளித்த வள்ளல் (1990)
கவிஞர் ஏ.யூ.எம்.ஏ. கரீம் அவர்களின் கவிதைகளுள் பெரும்பாலானவை சமய அடிப்படையை வைத்து எழுதப்பட்டவையாகும். அத்துடன் சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள், சமூகப் பிரச்சினைகள், சமூக, சமயப் பெரியார்களின் சரிதைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பல கவிகளைப் புனைந்துள்ளார்.
இவரது எழுத்துலக குருக்களாக புலவர்மணி ஆ.மு. சரிபுத்தின், எம். ஐ.எம். மீராலெப்பை, எம். எஸ் பாலு ஆகியோரை என்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்த இவருக்கு 1997 ஆம் ஆண்டில் இலங்கை அரசு
τιτσίί οι - கலாபூஷணம் புள்ளியாமினர் GO

Page 23
'கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்தது. கலைமகள் ஹிதாயாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "தடாகம்' எனும் இலக்கிய சஞ்சிகை 1987 நவம்பர் இதழில் இவரது புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கெளரவித்தது. 1985ம் ஆண்டு சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட எழுத்தாளர் விபரத்திரட்டிலும் இவர்பற்றிய விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
திருமதி ஜெமிலா கரீம் அவர்களின் அன்புக் கணவரான இவர் சித்தி ஜெரீனா, சித்தி ஜெஸினா, சித்தி ஜெளப்மின், முஹம்மது நவ்சாத் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்.
aའི་སྐianག་ முஸ்ம்ே எழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கனAநர்களிர்விபரத்திரட்டு
 

- பதிவு 02 -
எழுத்துத் துறை
கலாபூஷணம்
ノ எஸ்.எம்.ஏ. ஹஸன். ノ
பாகம் டை - கலாபூஷணம் புர்னியாமீர்

Page 24
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், செங்கடகல தேர்தல் தொகுதியில் "ஹரீரளிப்ஸகல" கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சேதமுஹம்மது அப்துல் ஹஸன் அவர்கள்; அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன், ஹனா ஆகிய பெயர்களில் கட்டுரைகள், இலக்கியக்கட்டு ரைகள், ஆய்வுக்கட்டுரைகள், வரலாற்றுக்கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள் போன்றவற்றை இலங்கையில் வெளிவரும் தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளிலும், இந்தியாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார்.
1927 - 05 - 27ம் திகதி பிறந்த எஸ்.எம்.ஏ ஹஸன் அவர்கள்; ஆசிரியராகத் தனது தொழிலை ஆரம்பித்து ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும், கல்வி அதிகாரியாகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றித் தற்போது ஒராபிபாஷா கலாசார நிலையத்தின் பணிப்பாளராக சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்.
‘பேராதனைப் பூந்தோட்டம்” எனும் தலைப்பில் இவரது முதலாவது கட்டுரை 1944ம் ஆண்டில் தினகரனில் பிரசுரமானது. 1958 - 1964 காலப்பகுதியில் கண்டி மாவட்ட வீரகேசரி பத்திரிகை நிருபராகப் பணியாற்றியதுடன், 1960 - 61ம் ஆண்டுகளில் வீரகேசரிப் பத்திரிகையில் வாரம்தோறும் வெளிவந்த "இஸ்லாமிய உலகம்' எனும் பகுதிக்குப் பொறுப்பாளராகவும் செயலாற்றியுள்ளார்.
மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களினால் இதுவரை எழுதி வெளியிடப்பட்ட நூல்கள் வருமாறு:
l, பதியுத்தீன் மஹம்மூத் - வாழ்க்கைச் சுருக்கம் - (1969) . அருள்வாக்கி அப்துல் காதர் (1973) 3. நான் கண்ட பண்டாரநாயக்கா
(மொழிபெயர்ப்பு) (1975) 4. கலாநிதி பதியுத்தின் மஹற்மூத் (1975) 5. நெஞ்சத் தாமரையின் இன்ப நினைவுகள் (1975) . கம்பன் கவியமுதம் - கவிதை விளக்கம் (1976) 7. அமெரிக்க கருப்பு இன முஸ்லிம்கள்
(மொழிபெயர்ப்பு) (1976) 8. யசஹாமி (சிறுவர்களுக்கான குறுநாவல்) (1979) 9. வைத்தியர் திலகம் அப்துல் அளtளப் (1997)
(10)EAకు ஆட்சிம் சிழுந்தாளர்கள்,ஊடகவிய4ாார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

O. அல்லாமா இக்பால் - ஓர் அறிமுகம் (1998) I. அல்லாமா இக்பால் - இதயப்புதையல் (1999) R. யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001)
முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, முஸ்லிம் முரசு ஆசிரியர் வ.மி. ஷம்சுதீன், தினகரன் ஆசிரியர் ஏ.எல்.எம். கியாஸ், வீரகேசரி ஆசிரியர். வி.எஸ் வாஸ் ஆகியோரைத் தனது எழுத்துலக குருக்க ளாக என்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் கலை இலக்கிய சேவையை கெளரவித்து இலங்கை அரசு 1999 இல் இவருக்கு அதி உயர் விருதான ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்தது.
அத்துடன் 1975ம் ஆண்டு காலியில் நடைபெற்ற சாகித்திய விழாவில் இவரால் எழுதப்பட்ட கலாநிதி பதியுத்தீன் மஹற்மூத் நூலுக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. மேலும் 1976ம் ஆண்டு கலாநிதி சு. வித்தியானந்தன் தலைமையில் கண்டியில் நடைபெற்ற விழாவில் "கலைமணி பட்டமும், 1993ம் ஆண்டில் முஸ்லிம் கலாசார விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில், 'கன்ஸால் உலூம்' எனும் பட்டமும், 1994ம் ஆண்டில் மத்திய மாகாண இந்துகலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட கலைஞர் பாராட்டு வைபவத்தில் பொற்கிழியும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
திருமதி சித்தி எபர்தாபி ஹஸன் அவர்களின் அன்புக் கணவரான இவர் ஜெமீனுல் இம்ராணி, முஹம்மது ரூமி, முஹம்மது ரிளம்மி ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.
இவரின் முகவரி:
197 எல்லகல எளப்டேட் ஹிரளப்ஸகல கன்டி,
EITTii oL – கலாபூஷணம் புர்ரீராமீர் Ga:D

Page 25
Ο - பதிவு 03 -
எழுத்துத் துறை
கலாபூஷணம்
மு. இ. அன்பு முகையதின் ノ
(2)இலங்கை முண்ட்ரீம் சிழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் கல்முனைக்குடி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது இபுறாஹீம் அன்பு முகையதின் அவர்கள்; அன்பு முகையதின், "அன்பகத்தான்" ஆகிய பெயர்களில் கவிதைகள் ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை இலங்கையில் வெளிவரும் தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும்; இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்தார்.
20 - 03- 1940 இல் பிறந்த அன்பு முகையதின் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியினை கல்முனை சாஹிராக்கல்லூரியில் பெற்றார். ஒய்வு பெற்ற ஆசிரியரான இவர், நாடறிந்த கவிஞனாகத் திகழ்ந்தவர் ‘கடமையின் கண்' எனும் தலைப்பில் இவரது முதலாவது ஆக்கம் 1950-ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமாகியது. அதிலிருந்து இன்றுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகளையும், சுமார் 190 கட்டுரைகளையும், இரண்டு சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
சமய, சமுகத்தாக்கமுள்ள கவிதைகளை எழுதி வந்த இவர் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை கவிதையாக்கியுள்ளமை தமிழுக்குச் செய்துள்ள உயரிய பங்களிப்பாகும். பேச்சிலும், எழுத்திலும் செந்தமிழ் கமழும் இவரால் ஒன்பது கவிதை நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
HEJ GJILI TE JET: . நபிகள் வாழ்வில் நடந்த கதைகள் - (1976) 2. அண்ணல் நபி பிறந்தார் - (1979) 3. மாதருக்கு வாழ்வளித்த மகான் - (1980) 4. மாதுளம் முத்துக்கள் - (1984)
புதுப்புனல் - (1988) 6. எழுவான் கதிர்கள் - (1988) 7. அரசியல் வானில் அழகிய முழுநிலா - (1997) 8. உத்தம நபி வாழ்வில் . (2OOO) 9.
வட்டமுகம் வடிவான கருவிழிகள் - (2001)
தேசிய ரீதியில் நடைபெற்ற பல கவிதைப்போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் பரிசில்களை வென்றெடுத்துள்ள இவர் 1960களில் இருந்து
பாகம் 21 . கலாபூஷணம் புணர்னியாமீனர் Gs)

Page 26
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உரை, கவிதைப்பொழிவு, கவியரங்குகள் செய்துள்ளார். நாட்டார் கவிநயம், கவிநயம், மகரந்தம் என்ற மகுடங்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இளைய தலைமுறையினரை அறிமுகப் படுத்தியிருக்கிறார். ரூபவாஹினியிலும் "உதயம்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவரின் இலக்கியச் சேவையை கெளரவித்து இலங்கை அரசு 2002 ஆம் ஆண்டில் கலைஞர்களுக்குரிய அதி உயர் விருதான 'கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் 1987ம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சினால் “ கவிச்சுடர்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு முஸ்லிம் கலாசார அமைச்சினால் "நஜ்முஷஸ"ஹாறா' விருது வழங்கப்பட்டது. 2000ம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு "ஆளுனர் விருது' வழங்கி கெளரவித்துள்ளது.
இவருடைய “மாதுளம் முத்துக்கள்” கவிதை நுால் 1984ம் ஆண்டு வரை இலங்கையில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களில் ஒன்றாக இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது. இதே கவிதை நூலை முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில் சிறந்த கவிதை நுாலாகத் தேர்ந்தெடுத்து பொற்கிழி வழங்கியது. "நபிகள் வாழ்வில் நடந்த கதைகள்” என்ற நூலில் உள்ள ஒரு கவிதை "மகிழ்ந்தான் பையன்” என்ற தலைப்பில் தரம் - 5 தமிழ்ப்பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
இவருடைய இலக்கியச் சேவையைப் பாராட்டி பல அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடைய மணிவிழா 30- 06- 2000 அன்று கல்முனையில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பிரதம அதிதியாக, மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கலந்து கவிச்சுடருக்கு தங்கப் பதக்கம் சூட்டி கெளரவித்தார். இம்மணி விழாவில் ஒரு காத்திரமான மணிவிழா மலரும் வெளியிடப்பட்டது.
ஒய்வு பெற்ற அதிபர் கதிஜா அவர்களின் அன்புக் கணவரும் யாஸ்மின், இஸ்ஸத், றோசன் அக்தர், அப்றாஜ் றிழா ஆகியோரின் அன்புத் தந்தையுமான அன்னார் 2003-09-16ம் திகதி இறையடி எய்தினார்.
G. Daarnane மும்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகவிய*ாார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

ஊடகத் துறை
ஐ. ஏ. றஸாக்
பாகம் D1 -
கலாபூஷணம்
புள்ளியாமீர்

Page 27
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் உகுரஸ்ஸபிட்டிய கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இஸ்மாயில் அப்துல் றஸாக் அவர்கள்; ஐ.ஏ. றஸாக், அப்துல்றஸாக், கண்டியூர்க் காவலன் ஆகிய பெயர்களில் எழுதி வருகின்றார்.
1936-04-19ம் திகதி பிறந்த இவர் உகுரஸ்ஸபிட்டிய க/மீரா மத்திய கல லுாரியின் பழைய மாணவராவார் . 1966 இல் தினபதி ஆரம்பிக்கப்பட்டது முதல் தினபதி - சிந்தாமணி கண்டி நிருபராகப் பணியாற்றிய இவர் பிரதேசச் செய்திகளை மாத்திரமல்லாமல் கண்டி மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் சார்ந்த பல்வேறு செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
இவர் ஒர் ஆசிரியர், முதலாம் தர அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது முழுநேர பத்திரிகையாளராகக் கடமையாற்றி வருபவர். அறிஞர் சித்திலெப்பையின் ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகையை மீண்டும் வெளியிடும் முயற்சியில் கடினமாக உழைத்தவர். இதன் விளைவாக இவரை ஆசிரியராகக் கொண்டு 1997இல் மீண்டும் ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகை வெளிவந்தது. கண்டி முஸ்லிம் எழுத்தாளர் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து இலக்கியம் மற்றும் எழுத்துப் பணிகளுக்கு ஒத்தாசை புரிந்துள்ளார். அத்துடன் கண்டி சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.
1976-ம் ஆண்டில் இலங்கையில் அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு நடந்த காலகட்டத்தில் அணிசேரா அமைப்பின் செய்திகளையும், விவரணங்களையும், கட்டுரைகளையும், தொகுத்து வழங்குவதில் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
அத்துடன் இவர் ஒரு சிறந்த வானொலிப் பாடகர். 1970ம் ஆண்டிலிருந்து சுமார் 7 ஆண்டு காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முஸ்லிம் சேவையில் "B"தர இஸ்லாமிய பாடல் கலைஞராகத் திகழ்ந்துள்ளார்.
முஹம்மட் ஸாலி, ஸ்டென்லி பீரிஸ், சவாஹிர் மாஸ்டர் போன்றோரின் இசையமைப்பில் இவரே பாடல்களை இயற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்களைப் பாடியுள்ளார். அதே நேரம் ஒரு
04606Aశవాది முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு)

சிறந்த வயலின் கலைஞரும் கூட.
இவ்வாறாக பத்திரிகைத்துறையிலும், கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டு விளங்கும் ஐ.ஏ. றஸாக் ஒரு சமாதான நீதவானுமாவார். அன்புப் பாரியார் உம்முனுடன் ஆசைக்கொரு ஆணும் (அஜாஜ்) இரு பெண் புத்திரிகளும் (சபீனா, றிஸானா) இவருக்குண்டு.
பத்திரிகைத்துறையில் தன்னை ஊக்குவித்தவர் என்றவகையில் தினபதி, சிந்தாமணி பிரதம ஆசிரியர் திரு. எஸ்.டீ. சிவநாயகம் அவர்களையும். திருவாளர்களான கே.கே. இரத்தினசிங்கம், எஸ். அற்புதராஜா, எச்.எம்.பி. மொஹிடீன், க.ப.சிவம் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்கின்றார்.
1992இல் தினபதி ‘காரியாலயம் மூடப்பட்ட பின் இப்போது கண்டி தினகரன் நிருபராகப் பணியாற்றி வரும் இவரின் தொடர்ச்சியான 36 வருட பத்திரிகைத்துறை சேவையைக் கெளரவித்து 2001ஆம் ஆண்டில் மத்திய மாகாண இந்துக்கலாசார அமைச்சு பொற்கிழியும், விருதும் வழங்கி கெளரவித்துள்ளது. மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு 1999 இல் ‘கலைச்சுடர்' பட்டமளித்து கெளரவித்துள்ளது. அத்துடன் 1997ம் ஆண்டு மலையக கலை கலாசார சங்கம் ரத்னதீப விருது வழங்கி கெளரவித்தமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இவரின் முகவரி: .
ஐ. ஏ. றஸாக் இல 15 ஏ. உகுரஸ்ஸபிட்டிய கட்டுகளில்தோட்டை
பாகம் O - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 28
- பதிவு 05 -
261 Labgs துறை
ノ முபீதா உஸ்மான் ン
Gas Daar kana முசம்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது - 01 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் திருமதி முபீதா உஸ்மான் அவர்கள் இலங்கையில் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளராவார்.
1947-01-23 ம் திகதி கொழும்பில் பிறந்த முபீதா அவர்கள் கொழும்பு "பிரளப் பிரிடியன் மகளிர் பாடசாலை, மட்டக்குளிய முஸ்லிம் வித்தியாலயம், அல்ஹிதாயா மகாவித்தியாலம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பாடசாலைகளில் கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்திறனும், எழுத்தார்வமும் கொண்டிருந்த இவரின் முதல் ஆக்கம் 1967ம் ஆண்டு தினபதி பத்திரிகையில் "சீதனம்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து தினபதி, சிந்தாமணி, இலங்கை வானொலி போன்றவற்றில் முஸ்லிம் பெண்களின் சமய, சமூக விழிப் புனர் வ தொடர்பான L El) கட்டுரைகளையும் , ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் பல வானொலி நிகழ்ச்சிகளில் நேரடியாகவும் பங்கேற்றுள்ளார்.
1969 - 1974 காலகட்டத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உதவி ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். இலங்கையில் வெளிவந்த தேசிய பத்திரிகையொன்றில் உதவி ஆசிரியையாக முதன்முதலில் கடமையாற்றியவர் இவரேயாகும். பின்பு 1974ம் ஆண்டில் இராஜாங்க அமைச்சில் தகவல் திணைக்கள பிரசார உதவியாளராகச் சேர்ந்து: பின் பத்திரிகைத் தொடர்பு உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றார். இக்கட்டத்தில் திணைக் களத்தின் சஞ்சிகைகள், மற்றும் பல வெளியீடுகளை மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டதுடன், அவற்றை நெறிப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
சனத்தொகை, செய்தித்தொடர்பு தொடர்பான பல கருத்தரங்குகளைப் பொறுப்பேற்று நடத்தியுள்ளதுடன் இதுவிடயமாக பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், இந்தியா, சவூதிஅரேபியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெனிவா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் பல்வேறுபட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். 1986- ம் ஆண்டின் பின்னர் "ரெட் பானா’ அமைப்பில் திட்ட இணைப்பாளராகவும் சில காலம் கடமைபுரிந்துள்ளார்.
பாகம் C1 - கலாபூஷணம் புணர்னியாமீர் Gs)

Page 29
எழுத்துத்துறையிலும், பொதுத்துறைகளிலும் ஈடுபட ஊக்கமும், ஒத்தாசையும் வழங்கிய தனது அன்புத் தந்தை, மற்றும் தனது அன்புக் கணவரை என்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வரும் இவர்; தினபதி, சிந்தாமணி பிரதம ஆசியர் எஸ்.ரீ சிவநாயகம் அவர்களையும், சிந்தாமணி பொறுப்பாசிரியர் ஆரியரத்தினம் அவர்களையும், செய்தி ஆசிரியர் ரத்னசிங்கம் அவர்களையும் நினைவுகளில் நிறுத்தி வைத்துள்ளார்.
முபீதா உஸ்மான் அவர்கள் வாழ்வில் இடம்பெற்ற ஒரு முக்கிய சம்பவத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இவர் தினபதி ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது பல முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இருப்பினும் இவருக்குப் பத்திரிகை உதவி ஆசிரியையாக இருப்பதை விட பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை மிகைப்பட்டுள்ளது.
இதனால் 1972இல் தனது கணவர் உஸ்மான் அவர்களுடன் அப்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தின் மஹமூத் அவர்களிடம் தனது ஆசையை விண்ணப்பித்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்போது கலாநிதி பதியுதீன் மஹற்மூத் அவர்கள் பின்வருமாறு கூறினாராம். ‘.முபீதா. உங்கள் தகமைகளைப் பொறுத்து ஆசிரியர் தொழிலை எனக்குத் தருவது இலகு. ஆனாலும் எங்கள் சமூகத்துக்கு இன்று பெண் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகின்றது. முஸ்லிம் பெண்கள் எழுத்துத் துறையிலும், பத்திரிகைத்துறையிலும் ஈடுபாடு கொள்ளும் போது பெண்கள் சார்ந்த எத்தனையோ பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காணமுடியும். எனவே உங்கள் பத்திரிகை ஆசிரியர் தொழிலையே தொடருங்கள்’ என்று கூறியதுடன் மாத்திரமல் லாமல் தினபதி பிரதம ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'பத்திரிகைத்துறையில் பெண்களின் அவசியம்’ பற்றி முபீதாவிற்கு உணர்த்தும்படியும் கேட்டுக் கொண்டாராம். கலாநிதி பதியுதீன் மஹமூத் அன்று தெரிவித்த கருத்து இன்றையகால கட்டத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

மும்மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக்கும் முபீதா கல்முனை மஹற்மூத் மகளிர் கல்லூரியில் விடுதி மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது அன்புக்கணவர் உஸ்மான் அவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். இவர் 2000.06.01 இல் இறையடி சேர்ந்துவிட்டார். இவரின் பிள்ளைகள் ரொஷானா, ஷியானா, பர்ஷானா, ரிஷானா நால்வரும் திருமணபந்தத்தில் இணைந்தவர்கள்.
இவரின் முகவரி;- 218. ஒராபி பாஷா வீதி, சாய்ந்தமருது- 01
t س
কা
af ”ha
7. . K
υιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீன் ]GsD

Page 30
(ノ - பதிவு 06 -
எழுத்துத் துறை
எச். ஸ்லாஹுத்தீன்
(52)
இலங்கை மூனம்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், க8ைஆர்களிர்விபரத்திரட்டு
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம் , கண்டி தேர்தல் தொகுதியில் செங்கடகலை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் கம்ஹலாகெதர ஹாமித் லெவ்வை முஹம்மது ஸலாஹ”த்தீன் அவர்கள் கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மெளலவி எச். ஸ்லாஹுத்தின் (பாரி), அபூசிபா ஆகிய பெயர்களில் எழுதி வரும் இவரை மலேசியாவில் சிறுநூால் வேதாந்தி எனவும், இந்தியர்கள் கண்டி மெளலானா' எனவும், சிங்கப்பூரில் ‘பூலோகம் சுற்றும் இஸ்லாமிய Grigs. Tsilis (Rowing AIT bassider of Islam) 516015. Dju IITsog(3u IITG அழைப்பர்.
25.02.1939 இல் கல்ஹின்னை மர்ஹ"ம் ஹமீட் லெப்பை தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்ஹின்னை அல்மனார் தேசியபாடசாலையில் கற்றார். கல்ஹின்னை ஜாமியத்துல் பத்தாஹற் அரபிக்கல்லூரியில் ஆரம்ப மார்க்க அறிவினைப் பெற்றுக்கொண்ட இவர் வெலிகாமம் ஜாமியத்துல் பாரி அரபிக் கல்லூரியில் மெளலவிப் பட்டம் பெற்றுக் கொண்டார். இந்தியா காயல் பட்டினம் ஜாவியா மஹற்லறாவிலும் இவர் மார்க்கக்கல்வி கற்றுள்ளார்.
ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின் கண்டி ஹனபி மனப்ஜிதின் தலைமை இமாமாகவும், கண்டி இனப்லாமிய மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும், இலங்கை வக்பு சபை நிர்வாக உறுப்பினராகவும், கண்டி ஜின்னா மண்டப ஆளுனர் சபைத் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் 1957-ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் “குர்ஆன்' எனும் தலைப்பில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து இலங்கையில் வெளிவரும் தேசிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி போன்றவற்றிலும், தாரகை உட்பட பல்வேறு இளப் லாமிய சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் குர்ஆனின்குரல், நர்கிஸ், முஸ்லிம்முரசு, மணிச்சுடர், பிறை, மனிவிளக்கு ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார்.
அத்துடன் இலங்கை வானொலி, ரூபவாஹினி, ITN தொலைக்காட்சி, மற்றும் வெளிநாடுகளில் கனடா வானொலி, கனடியன் TW, சிங்கப்பூர் ரேடியோ, மலேசியா MRT தொலைக்காட்சி சேவை, மலேசியா ரேடியோ 6-ம் அலைவரிசை போன்ற பல்வேறு இலக்றோனிக்
பாகம் அ - கலாபூஷணம் புர்னியாமினர் Gs)

Page 31
ஊடகங்களிலும் இவரது நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பாகி வருகின்றன.
1962ம் ஆண்டில் கல்ஹின்னையில் ‘சிபாப் பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தை நிறுவித் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக சுமார் 175 சிறுநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இவரது சிறு நூல்கள் வெளிவந்துள்ளன. சன்மார்க்க விளக்கங்களைக் கொண்ட இச்சிறுநூல்கள் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரியான ‘ஸ்ட்றீட் டைம்ஸ் இவரது சிறுநூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரால வெளியிடப்பட்ட 160 சிறுநுால களையும் தொகுத்து' சிறுநூல் தொகுப்பு’ எனும் தலைப்பில் நான்கு பாகங்களாக வெளியிட்டார்.
2002 செப்டெம்பரில் சிறுநூல் தொகுப்புக்களின் நான்கு பாகங்களையும் இணைத்து தொகுப்புகளின் தொகுப்பு’ எனும் தலைப்பில் மெகா’ புத்தக மொன்றினை வெளியிட்டார். சென்னை 'ஆசியா கிரபிக்ஸ்’ பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்ட இப்புத்தகம் சரியாக 1600 பக்கங்களைக் கொண்டது.
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர் ஒருவரினால் அதிக பக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட நுால் இதுவாகும். அதே நேரம் உலகளாவிய ரீதியில் தனியொரு முஸ்லிம் எழுத்தாளரால் தமிழில் எழுதப்பட்ட அதிகபக்கங்களைக் கொண்ட நுாலும் இதுவாகும்.
தனது பேனாவின் வல்லமையினால் பல நுால்களையும், கட்டுரைகளையும் எழுதிவரும் இவர் தனது நாவன்மையால் 23 நாடுகளுக்குச் சென்று சன்மார்க்க போதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன் சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இவரது மார்க்கச் சொற்பொழிவுகள் வீடியோக்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அத்துடன் மிகப் பரந்த அளவில் சர்வதேச நாடுகளில் இவரது சொற்பொழிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு
(54DEAశుడ్ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

வெளியிடப்பட்டு வருகின்றன. 1988ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கயானா ஜோர்ஜ் டவுனில் நடைபெற்ற ‘உலக இஸ்லாமிய ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கையிலிருந்து ஒரே பிரதிநிதியாக பங்குபற்றி சிறப்புக்கட்டுரையும் சமர்ப்பித்துள்ளார்.
2000.12.22ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம் மலேசியாவில் வைத்து "நடமாடும் பல்கலைக்கழகம்"(Mobile University) எனும் பட்டமும், 5000 டாலர்கள் பெறுமதியான பொற்கிழியும் வழங்கியதை தனது வாழ்வில் பெற்ற உயர் விருதாகக் கருதும் இவர், ஞானத்தேனி’ ‘அஸ்துல் மில் லத், போன்ற பட்டங்களையும் வெளிநாடுகளில் பெற்றுள்ளார்.
தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குப் பிரதானமாக உற்சாக மூட்டி ஆதரவு வழங்கிய மர்ஹ"ம்களான ஸெய்யித் யூஸ"ப் ஹாசிம் (சிங்கப்பூர்), எம்.எச்.எம். அஷரப் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர்; உம்மு றாஹிலாவின் அன்புக் கணவராவார். சிபா, முஸ்லிம், மூமின், ஸ"மையா, இமாம் முஹம்மது ஆகியோர் இவரின் அன்புக் குழந்தைகளாவர்.
இவரின் முகவரி;
320, டீ.எஸ் சேனாநாயக்க வீதி, கண்டி.
u Arabib ou -- கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 32
எழுத்துத் துறை
எம்.எச்.எம். அஷ்ரப்
ン
இAப்கை ழம்சிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கனடிதர்களிர்விபரத்திரட்டு
 
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம்,கல்முனைத் தேர்தல் தொகுதியில், சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது ஹ"ளைப்ன் முஹம்மது அஷ்ரப் அவர்கள் எம்.எச்.எம். அஷ்ரப், மிஸ்றியா, நபீஸா, கல்முனை பாத்திமா ஆகிய பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவந்த எழுச்சிமிகு முளல்லிம் கவிஞர்களுள் ஒருவராவார்.
இவரின் ஆக்கங்கள் தேசிய முரசு, செய்தி, விவேகி, இலங்கை சாரனன், சங்கம், ராதா, தாய்நாடு, முஸ்லிம் செய்தி, தினபதி, புதுப்பாதை, வீரகேசரி, ஜோதி, அல்-இளப்லாம், சுதந்திரன், தமிழ்முரசு, தினகரன், மித்திரன், சிந்தாமணி, மானவன், அல்-அரப், அல் ஹளப்னாத், புதுமைக் குரல், எழுச்சிக் குரல், புயல். ஆகிய சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன.
முஹம்மது ஹுஸைன், மதீனா உம்மா தம்பதிகளின் ஏகபுதல்வனாக 1948 அக்டோபர் மாதம் 23ம் திகதி பிறந்த அஷ்ரப் அவர்கள் கல்முனை உவெஸ்லி கல்லூரி, கொழும்பு சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
உவெஸ்லி கல்லூரியில் கற்கும் போது தனது 14வது வயதில் இவரது முதலாவது கவிதை "தாய்' எனும் மகுடத்தின் கீழ் "தேசியமுரசு’ பத்திரிகையில் இடம்பெற்றது. இம்முதற் கவிதை 1962 செப்டெம்பர் 16ம் திகதி பிரசுரமானது.
அதே நேரம் அஷ்ரப் அவர்கள் அகால மரணத்தைத் தழுவிய தினமும் செப்டெம்பர் 16 ஆகும். 2002ம் ஆண்டு அவர் எம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரியும் போது அவருக்கு வயது 51.
அஷ்ரப் அவர்கள் சட்டக்கல்லூரியில் பயிலும் காலகட்டத்தில் அரசியல் யாப்புச்சட்டம் தொடர்பாக கூடிய கரிசனை காட்டிவந்தார். 1972 குடியரசு யாப்பை மையமாகக் கொண்டு அரசியல் யாப்புச்சட்டம் எனும் நூலை முதன்முதலாக தமிழ்மொழியில் எழுதி தனது ஆளுமையை வெளிப்படுத்தினார். 1974 - 02 - 05 ம் திகதி இந்நாட்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்ததிலிருந்து அரசியலில் தான் சார்ந்த சமூகத்துக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் வரை நாட்டின் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
பாகம் C1 - கலாபூஷணம் புர்ரீயாமீர் (s)

Page 33
தனது பள்ளிப்பருவத்திலிருந்தே சிறந்த பேச்சாற்றலைக் கொண்டிருந்த இவர் இளமைப்பருவத்திலே அரசியலில் அக்கறை காட்டினார். எப்போதும் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார். இதனால் தான் 1986 நவம்பர் மாதம் 19ம் திகதி ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒரு தேசிய அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தினார். இது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மைற்கல்லாகும்.
1994-ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் அமைத்த அரசாங்கத்தில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷரப் அவர்களினதும், யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அதில் அஷரப் அவர்கள் துறைமுகங்கள், கப்பல்துறை, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் அமைச்சராக இருக்கும் போது சட்டத்துறையில் முதுமாணிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன், ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் நியமிக்கப்பட்டார்.
சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் தலைவர் என்ற கோட்பாட்டிலிருந்து அஷரப் அவர்கள் விடுபட்டு தேசியத்தை இணைக்கும் முயற்சியில் தேசிய ஐக்கிய முன்னணியை (NUA) ஆரம்பித்தார். இதன் மூலம் இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரையும் ஒன்றிணைத்து நாம் எல்லோரும் இலங்கையின் பிரஜைகளே என்ற உணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டார்.
தனது நீண்டநாள் கனவாகிய தேசிய ஐக்கிய முன்னணியினதும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் தலைமையகமான தாருஸ்ஸலாமை கட்டியெழுப்பினார். அதற்கு 'சாந்தி இல்லம்’ House of Peace எனப் பெயரிட்டு அதை இந்நாட்டு மக்கள் அனைவரினதும் சமாதானத்திற்கு அர்ப்பணித்தார்.
1962 முதல், தான் மரணிக்கும் வரை சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதினாலும் கூட கவிதைத் துறையிலே இவரின் ஆர்வம் மிகைத்திருந்தது, இவரது கவிதைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. சிறுவர் கவிதைகள். 2. இஸ்லாமிய சமூகக் கவிதைகள். 3. பொதுக் கவிதைகள்.
(586Aశవాది முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

4. நவீன கவிதைகள். 5. சமூக எழுச்சிக் கவிதைகள்.
இவரால் எழுதப்பட்ட அனேகமான கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘நான் எனும் நீ" எனும் தலைப்பில் 600 பக்கங்களைக் கொண்ட கவிதை நூலொன்று 1999 அக்டோபர் மாதம் வெளிவந்தது. இலங்கையில் தமிழ்மொழி மூலமாக வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட கவிதை நூல் இதுவாகும்.
இக்கவிதை நூலில் இவரின் 179 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இந்நூலுக்கு முன்னைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி வாழ்த்துரையும், கவிக்கோ அப்துல் ரகுமான் அணிந்துரையும் வழங்கியிருந்தனர்.
சமூக எழுச்சியும், சமூக உணர்வுமிக்க கவிதைகளை உள்ளடக்கிய ‘நான் எனும் நீ கவிதை நூல் பற்றி கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிடுகையில் “அரசியல் சிக்கல்களுக்கெல்லாம் அப்பால் நின்று அன் னைத் தமிழில அற்புதக் கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றார் கவிஞர் அஷரப் அவர்கள். உள்ளபடியே தமிழால் இவர் தகுதி பெற்றிருக்கின்றார், இந்நூல் இவரால் தகுதி பெற்றிருக்கிறது” என்றார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிரு ந்தார் ‘.கவிதை பூவுலகம், அரசியல் முள்ளுலகம். இரண்டும் எதிரெதிரா னவை. அரசியல்வாதி கவிஞனாக இருப்பது அல்லது கவிஞன் அரசியல்வாதியாக இருப்பது வினோதமான நிகழ்வு. நாடாளுபவனே ஏடாளுபவனாகவும் இருப்பது வரலாற்றில் அபூர்வமாகவே நிகழ்கிறது. சங்க காலத்தில் காவலர் சிலர் பாவலராகவும் இருந்திருக்கின்றனர். பின்னர் அமைச்சர் சேக்கிழார், அதிவீரராம பாண்டியன் என்று சிலர். உலக அளவில் மாவோவும், ஹோசிமினும், செனகல் நாட்டு அதிபராக இருந்த செங்கோரும் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுபவர்களாக இருந்தனர். நம் காலத்துச் சான்றுகள் தமிழகத்தில் கலைஞர்; இலங்கையில் அஷரப்.
அஷ்ரப் அடிப்படையில் ஒரு கவிஞர். எரிமலையாகக் கொந்தளிக் கும் இலங்கையின் கழல ஒரு கவிஞனை அரசியல்வாதியாக்கி விட்டது. கவிஞனின் தொடக்ககாலக்
பாகம் Ql ܡܢ கலாபூஷணம் புண்ணியாமினர்

Page 34
கவிதைகளிலிருந்து அண்மைக்காலக் கவிதைகள் வரை ஒன்றாகத் திரட்டித் தரும் இந்தத் தெகுதி அவருடைய பரிணாமத்தையும், பரிமானத்தையும் பார்க்க உதவுகிறது.”
தமிழ் மொழியில் அதிக கவிதைகளை அவர்ரப் அவர்கள் எழுதியுள்ள போதிலும் கூட ஆங்கிலத்தில் ஒரே ஒரு கவிதையை மாத்திரமே எழுதியுள்ளார். 1968 - 05 - 21ம் திகதி Scholar எனும் LCTTTT S TTTTTTT TTTTTTTS S LLL LLL LL GL LLLLLSLLLLLL எனும் தலைப்பில் இடம்பெற்றது. இது பற்றி அஷ்ரப் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் ". ஆங்கிலத்தில் சிறுவயதில் ஒழுங்காகக் கற்கும் வாய்ப்பு இல்லாமலிருந்த போதும் கூட ஒர் ஆங்கிலக் கவிதையைக் கூட எழுதியிருக்கின்றேன். அது தான் நான் எழுதிய ஒரேயொரு ஆங்கிலக் கவிதையாகும். இப்போது ஆங்கிலத்தில் ஓரளவு பரிச்சயம் இருப்பதால் - ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதலாம் போன்றும் தோன்றுகின்றது. ஆனால் மனித சமூகத்துடன் எனது தாய் மொழியான தமிழில் தொடர்பு கொள்வது எனக்குப் பெரும் நிம்மதியைத் தருகின்றது.” இந்த வரிகள் அஷ்ரப் அவர்கள் தனது தாய் மொழியான தமிழ் மேல் கொண்ட பற்றை எடுத்துக்காட்டப் போதுமானவையாகும்.
தனது இலக்கியப் பயணத்திற்கு ஒத்துழைப்பாக இருந்த கலாஆரி ஆர். சிவகுருநாதன் (தினகரன் பிரதம ஆசிரியர்) திரு.க. சிவபிரகாசம் (வீரகேசரி பிரதம ஆசிரியர்) திரு. எஸ்.ரி சிவநாயகம் (தினபதி பிரதம ஆசிரியர்) திரு. இராஜஅரியரத்தினம் (சிந்தாமணி பொறுப்பாசிரியர்) ஜனாப் எம். ஐ. எம். முஸ்தபா (வெஸ்லி கல்லூரியில் வெளியான 'முரசு’ கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர்), சட்டத்தரணி ஏ.எஸ்.எம். அப்துர் றஸாக், எம்.ரீ.எம். அளுஹர்தீன் (வீரகேசரியில் 'முஸ்லிம் சுடர் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தவர்) இவர்களையும், கவிதைகளை யாத்திட தாளாக அமைந்த அன்பு அன்னையாரையும் "கோலாக அமைந்திருந்த அன்புத் தந்தையாரையும் அன்புடன் நினைவு கூர்ந்து வந்த இவர் திருமதி பேரியல் அஷ்ரப் அவர்களின் அன்புக் கணவரும், "அமான் அவர்களின் அன்புத் தந்தையுமாவார்.
(s)ଛିaଜ୍ଞାନ ரஸ்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகவியர்ாார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

洲 邱
围 历L 因 心 可
亦。
கலாபூண்டினம எம். எச்.எம். புஹா
事
uatafunfai ]Ge10
கலாபூஷணம் புர்னியா
SS
m
-
FITTħti o1 -
r

Page 35
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் காத்தான்குடி 4ம் குறிச்சி கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது ஹனிபா முகம்மது புஹாரி அவர்கள்; மெளலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) ‘அபுல் கஸிதா” ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றை தேசிய தினசரிகளிலும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலும் எழுதிவருகின்றார்.
மட்/ அல்ஹிறா வித்தியாலயம், மட் / மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹற் அறபுக் கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வுபெற்றுத் தற்போது ஜாமிஅதுல் பலாஹ அறபுக்கல்லுாரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவரது ‘வளநகர் சென்றோரே வருக!வருக!’ எனும் முதல் கவிதை 1966-ம் ஆண்டு வீரகேசரியில் பிரசுரமானது.1947-08-05ம் திகதி பிறந்த இவர் 70 க்கு மேற்பட்ட கவிதைகளையும், நுாற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதுவரை 10 நுால்கள் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.
புனித றமழான் புகழ் பாடல்கள்.
புகழாரம் (கவிதை)
முத்தாரம் (கவிதை)
முழுமதி (கவிதை)
நபிமொழி நாற்பது
வரலாற்றில் ஓர் ஏடு (பாகம் -1) வரலாற்றில் ஓர் ஏடு (பாகம் -2) வல்ல அல்லாஹவை வணங்கி வாழ்க! . தமிழ்ப்பேசும் அறபுக்கவிஞரின் தனிப்பெருந்தொண்டு (ஆய்வு) 10. சாந்தி மார்க்கத் தீர்ப்புக்கள்.
மெளலவி எம்.எச்.எம் புஹாரி அவர்களின் பெரும்பாலான ஆக்கங்கள் சமயம் சார்ந்தவை. சமூக எழுச்சியூட்டும் கவிதைகள் பல ^இவரால் எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்து 1982ம் ஆண்டு தொடக்கம் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ‘வரலாற்றில் ஒர் ஏடு” எனும் நிகழ்ச்சியை வழங்கி வருகின்றார்.
(2)இலங்கை முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

தொலைக்காட்சி, வானொலிக் கவியரங்குகள் பலவற்றில் இவர் பங்கேற்றுள்ளார். ‘அரபுக்கல்லுாரிகளின் புணரமைப்பு' எனும் தலைப்பில் விரிவான ஆய்வு நூலொன்றை விரைவில் வெளியிடவுள்ளார். அத்துடன் இவர் 1966-1970ஆண்டு காலப்பகுதியில் தினபதி, சிந்தாமணி நிருபராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரது எழுத்துலக குருக்களாக மர்ஹ"ம்களான ஹாபிஸ் எம்.கே. செய்யித் அஹற்மத் (காயல்பட்டிணம் - இந்தியா) எஸ்.எம். ஸஹாப்தீன் காக்கா (குலசேகரப்பட்டிணம் - இந்தியா) அல்ஹாஜ் ஏ. அஹமது லெப்பை ஆகியோரை என்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் இலக்கிய சேவையை கெளரவிக்குமுகமாக இலங்கை அரசு 1996ம் ஆண்டில் ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் 1995ம் ஆண்டில் ஆரத்தி நிறுவனம் இலக்கிய விருது வழங்கி கெளரவித்துள்ளது.
திருமதி எம்.ஏ. ஆயிஷா உம்மா அவர்களின் அன்புக் கணவரான இவர் பிர்தவ்ஸி, பாஹிம், பைறுாஸ், பாத்திமா அஸ்ஹறா ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்
இவரது முகவரி
பைத்துல் பரகத்,
பழைய வீதி, காத்தான்குடி 04.
| urob dl - கலாபூஷணம் புண்ணியாமீண்

Page 36
எழுத்துத் துறை
) அ.மு. அப்துல் கஹ்ஹார்.
(6)
இ#ங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியரீாார்கள், கAை,ஆர்களின் விபரத்திரட்டு
 
 

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், மூதுார் தேர்தல் தொகுதியில் கிண்ணியா மாஞ்சோலைச் சேனை 225 D கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் முத்தலிபு மரைக்காயர் அப்துல் கஹற்ஹார் அவர்கள்: அ.மு. அப்துல் கஹற்ஹார், "வள்ளல்" "அண்ணல்தாசன்”, ஆனாக்கானா, கிண்ணியூரான்" "மாஞ்சோலைக் கவிராயர்” ஆகிய பெயர்களில் கவிதைகள் கட்டுரைகள் போன்றவற்றை தேசிய தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார்.
தி சின்னக் கிண்ணியா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, தி / பெரிய கிண்னியா அரசினர் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை மாவட்டக் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் ஓய்வு பெற்ற எழுது வினைஞர் ஆவார்.
இவரது ‘வள்ளல் நபி' எனும் முதல் கவிதை 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் "சரந்தீப்” மாதப் பத்திரிகையில் பிரசுரமானது. இதிலிருந்து 200க்கு மேற்பட்ட கவிதைகளையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஐந்து கவிதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன.
I. நற்பண்பும் நபிமொழியும் (வெண்பா)
டிசம்பர் 1992
2. அண்ணல் மாநபி பிறந்தனரே! (ஆசிரிய விருத்தம்)
மார்ச் 1993
3. அப்துல் கஹற்ஹார் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு)
நவம்பர் 1996
4. அதிசயம் (ஆசிரிய விருத்தம்)
ஆகஸ்ட் 2001
5. நபிகள் நாயகரின் நான்மணிக் கடிகை
ஒக்டோபர் 2002
1934 - 07- 19ம் திகதி பிறந்த கவிஞர் அ.மு. அப்துல் கஹற்ஹார் அவர்களின் கவிதைகளுள் பெரும்பாலானவை சமய அடிப்படையை வைத்து எழுதப்பட்டவையாகும். அத்துடன் சமூக அவலங்கள்,
(பாகம் - கலாபூஷணம் புர்னியாமினர்

Page 37
சமுகப்பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பல கவிதைகளைப் புனைந்துள்ளார்.
திரு சாமித்தம்பி, புலவர் உமறு நெய்னா ஆகியோரை தனது எழுத்துலக குருக்களாக என்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வரும் இவருக்குப் பல கெளரவங்கள் கிடைத்துள்ளன. பலதடவை பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக 2001-12-28ம் திகதி தஞ்சாவூர் இதய கீதம் இலக்கிய பொதுநல இயக்கத்தினால் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்க்கவிஞர்கள் மாநாட்டில் இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி இயக்கச் செயலாளர் திரு. எம். கனேஷன் அவர்கள் மாலை சூட்டியும், இயக்க மாநிலத்தலைவர் கவிஞர் ஆர். எழிலரசு அவர்கள் பொன்னாடை போர்த்தியும், தமிழக அமைச்சர் கெளரவ இரா. ஜீவானந்தம் அவர்கள் 'தமிழருவி விருது கேடயம்-சான்றிதழ் வழங்கியும் கெளரவித்துள்ளனர்.
அத்துடன் 1997 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் 'கலாஜோதி" பட்டம் வழங்கி கெளரவித்தது. 2001, 10.01ம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
திருமதி உமுக்கூனும்மா அவர்களின் அன்புக் கணவரான இவர் அம்றத்விவி, சித்தி பரீதா, சித்தி ஜெளபீமா, முஹம்மது நவாஸ், சித்தி பௌசியா, முஹம்மது நெளசாட் சித்தி நிஹாரா, சித்தி நளிபா, சித்தி பிரோஸா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி
T.B. gTUIT 6iguT5l3u sig சின்னக்கிண்ணியா கிண்னியா 03
இலங்கை முஸ்கீம் விழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், கனடநர்களிர்விபரத்திரட்டு

T6).
கலாபூஷணம்
முத்து மீரான் ノ
Li feli C -
கலாபூடினம்
புர்னியாமீர்
(a)

Page 38
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், நிந்தவுர்-12 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான சின்னத்தம்பி முத்துமீரான் அவர்கள்; முத்துமீரான் ,லத்தீபா முத்துமீரான், நிந்தவுரான்; நிந்தன், முத்து ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், உருவக்கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை இலங்கையில் வெளிவரும் பிரபல தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் கலைமகள், ஆனந்தவிகடன், பிறை, மணி விளக்கு, தாமரை போன்ற சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார்.
நிந்தவுர் அஷறக் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை, கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு சட்டக் கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தொடர்பாடல் துறையில் டிப்ளோமா பட்டமும் பெற்றவராவார். தற்போது சட்டத்தரணியாகவும், பிரசித்த நொத்தாரிசு ஆகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கும் முத்துமீரான் 1961 முதல் 1995 வரை தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் பகுதிநேர நிருபராகவும் செயலாற்றியுள்ளார்.
03 - 05 - 1941 இல் பிறந்த முத்துமீரான் இதுவரை 72 சிறுகதைகளையும் , சுமார் 300 கவிதைகளையும் , 150 உருவகக்கதைகளையும், 207 வானொலி நாடகங்களையும், 20 ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இஸ்லாமியர்கள் மத்தியில் பாரம்பரியமாகக் காணப்பட்ட நாட்டாரியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். நாட்டாரியல் பற்றிய இவரின் நுால்கள் தென்இந்திய பல்கலைக்கழகங்களில் உசாத்துணை நூல்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இவரின் ஒன்பது நுால்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
1..., உருவகக்கதைகள் - (1982)
2, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் (1991) 3, முத்துமீரான் சிறுகதைகள் - (1991)
4, முத்துமீரான் கவிதைகள் - (1993)
5, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் -(1997) 6, இயற்கை (உருவகக்கதைத் தொகுதி) (1999)
7, மானிடம் சாகவில்லை(நாடகத்தொகுதி) - 2001
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

8, கருவாட்டுக் கஸ்ஸா (கவிதைத்தொகுதி) - (2002)
9, இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்
- ஓர் ஆய்வு (அச்சில் உள்ளது) 1957ம் ஆண்டில் இலங்கை வானொலி தமிழ் சேவையில் இவரது
முதல் நாடகமான ‘காதலும் கருணையும் அரங்கேறியது. முத்துமீரானின்
நாடகங்களும் , கதைகளும் யதார்த்தமானவை. சமூகத் துப்
பிரச்சினைகளையும், முஸ்லிம்கள் சார்ந்த அரசியல், பொருளாதார
நிலைகளையும் ஆராய்பவை.
இவரது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த பண்டிதர் வித்துவான் வீ.சி. கந்தையா, கலாநிதி ஆர் சிவகுருநாதன், திரு. எம். ஆர். சுப்பிரமணியம், மர்ஹம் எம்.எச். குத்துாஸ் மரைக்காயர் ஆகியோரை நினைவு கூர்ந்து வரும் இவரின் எழுத்துத்துறையை கெளரவிக்குமுகமாக இலங்கை அரசு 1998ம் ஆண்டில் கலாபூஷணம் விருது வழங்கியது. அத்துடன் 1994-ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் *தாஜால் அதிப்’ எனும் விருதையும்,2002ம் ஆண்டில் தென் கிழக்கு கலாசாரப் பேரவை ‘இலக்கியத்திலகம்’ எனும் பட்டத்தையும், 2003இல் ‘சமாதானம்' சஞ்சிகை 'கலைக்குரிசில் பட்டத்தையும் வழங்கி கெளரவித்தன. அத்துடன் 1998 டிசம்பரில் தென் இந்திய கோட்டக் குப்பத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழாவில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் கெளரவ மு. தமிழ்குடிமகன் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கி கெளரவித்தார்.
‘இவரின் கிழக்கிழங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்’ எனும் நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. அத்துடன் ‘இயற்கை’ எனும் நூலுக்கு மொழித்திணைக்கள விருது கிடைத்துள்ளது.
திருமதி ஆசியா முத்துமீரான் அவர்களின் அன்புக் கணவரான இவருக்கு ஹ”ஸ்னா, ஷியா. உல் - ஹஸன், ஸாகிர் ஹ"சைன், வழியான் ஹாதிக், ஸமீல் ஹாபிழ் ஆகிய ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
இவரின் முகவரி: ‘பேர்ள்” (Pearl), நிந்தவுர் - 12
υιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீன் Go)

Page 39
ஊடகத் துறை
 
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் குன்னேப்பான மடிகே கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஹனிபா அப்துஷ் ஷகூர் அவர்கள் ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளராவார்.
| 9 58 լր ஆணி டி விருந்து எழுத்துத் துறையிலும் , பத்திரிகைத்துறையிலும் ஈடுபாடு கொண்டுள்ள இவர் "ஈழமணி" தினசரிப்பத்திரிகையில் முதலில் நிருபராகச்சேவையாற்ற ஆரம்பித்தார்.
தற்போது முழுநேரப் பத்திரிகையாளராக பாத்ததும் பறை லேக்ஹவுளப் குரூப் விசேட நிருபராக டெயிலி நியுஸ், தினகரன், தினமின TTTTTTTTTTT TLL TTLLLL TT TTTT TTS LLLLLLLLL LaLLLL LLLL CLL Lanka, எழுச்சிக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல் போன்றவற்றிலும் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.
தனது பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த ஜனாப்களான ஐ.ஏ. றஸாக், எஸ், ஏ, ஆர், எம் பாருக் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் செய்தி விமர்சனங்கள் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை மும் மொழிகளிலும் எழுதிவருகின்றார்.
விசேடமாக முளப்லிம்கள் சார்ந்த பிரச்சினைகளை சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதில் விசாலமான பங்களிப்பினை ஆற்றிவருகின்றார். "தகவல், தகவல் தொழில் நுட்பத்தில் எமது சமூகம் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். இன்று நம் நாட்டிலும் வெளிஉலகிலும் உள்ள ஊடகங்கள் இஸ்லாமிய விரோத சக்திகள், தகவல் சாதனங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என உணர்வு பூர்வமாக குரல் கொடுத்து வரும் இவர் இதுதொடர்பாக விசேட ஆய்வொன்றினை மேற்கொண்டு. ஆதாரபூர்வமாக பல தரவுகளைத் தொகுத்து வைத் திருப்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இவரது பத்திரிகை சேவையை கெளரவித்து 1999இல் மத்திய மாகாண விவசாய, கமநல, முஸ்லிம் கலாசார அமைச்சு நடத்திய சாகித் திய விழாவில் " கலைச் சுடர்' பட்டம் வழங்கப் பட்டு கெளரவிக்கப்பட்டார்.
பாகம் 1 - கலாபூஷணம் புணர்னியாமீன் 구 1

Page 40
25.04.1941இல் பிறந்த இவர் மடவளை மதீனா தேசிய கல்லுாரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லுாரி ஆகியவற்றின் பழையமானவராவார். ஆசிரிய நூலகராகக் கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
பிந்தி றஹீமாவின் அன்புக்கணவரான ஷகூர் அவர்களுக்கு ஷ"க்ரி, ருஸ்தி, நஸ்ரி, றம்ஸியா என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவரது முகவரி;
145, குன்னேப்பான மடிகே, மடவளை பஸார்.
G.) இலங்கை முTம்ம்ே Tழுந்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலை;நர்களிர்வீபரந்திரட்டு
 

) ஏ.எஸ் இப்றாஹீம்
மாகம் 2 - கலாபூஷணம் புணர்னியாமினர் 구

Page 41
கிழக்கு மாகாணம்,திருகோணமலை மாவட்டம், முதுார் தேர்தல் தொகுதியில் நடுத்தீவு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அபூபக்கர் செய்யது இப்றாஹீம் அவர்கள்; ஏ.எஸ். இப்றாஹீம், முதுார் கலைமேகம் ஆகிய பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தேசிய தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளிலும், வானொலி போன்றவற்றிலும் எழுதி வருகின்றார். மூதுார் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் ஒரு விவசாயி. 09.07.1943இல் பிறந்த இவரது முதலாவது அறிமுகக் கவிதை "பைங்கிளியே' எனும் தலைப்பில் 1967 இல் தினபதி நாளிதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து இன்றுவரை ஐநூறுக்கு மேற்பட்ட கவிதைகளையும் பல சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் தேசிய, மாவட்ட, பிரதேச ரீதியில் நடைபெற்ற பல்வேறுபட்ட கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 2000ம் ஆண்டு முற்பகுதியில் லேக்ஹவுஸ் சிலுமின பத்திரிகை தேசியமட்டத்தில் நடத்திய சாகித்திய கவிதைப் போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பொருளாதார நிலை காரணமாக இவரது புத்தகமொன்றும் வெளிவரவில்லை. இருப்பினும் புத்தகமொன்று வெளிவர வேண்டும் என்ற ஆசையில் 21 கவிதைகளைத் தொகுத்து 'தங்கப்பாளம்’ எனும் தலைப்பில் கணனிப்பிரதி எடுத்து பத்துப் பிரதிகளை மாத்திரம் 2001 - 12 - 01 அன்று வெளியிட்டுள்ளார். இதுபோன்று பல எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். "பொருளாதார வசதியில்லை” என்று கூறி எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருந்து விடுவதால் எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகள் நூலுருப்பெறாமல் மூலையிலே முடங்கி விடுகின்றன, "மூதுார் கலைமேகம்' தனது நுாலொன்றின் ஒரு பிரதியாவது அச்சில் வெளிவரவேண்டும் என்ற ஆசையில்; அவர் செயற்பட்ட முறை பாராட்டத்தக்கது. ஏனைய எழுத்தாளர்களுக்கும் ஒரு முன்மாதிரி நடவடிக்கை. எனவே அவரின் ஆசையுடன் கூடிய முயற்சியை கெளரவித்த ‘சிந்தனை வட்டம் தங்கப்பாளம் எனும் அந்நூலினை எவ்வித பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல் 2003 ஆகஸ்டில் மீள வெளியிட்டது. சிந்தனை வட்டத்தின் 178வது வெளியீடான "தங்கப்பாளத்தின் ISB இலக்கம் ISBN 955 - 8913 - 07 - 3 ஆகும்.
G. Daasiano முஸ்லிம் எழுத்தார்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

கலை மேகதி திணி கவிதைகள் சமூக உணர் வமரிக் க ைவ, கலைத்துவமிக்கவை, சமாதானத்தின் குரல்களாக ஒலிப்பவை.
இவரை எழுத்துத்துறையில் ஈடுபடத்துாண்டி ஊக்கப்படுத்தி யோர்களான மர்ஹ"ம்களான ஈழமேகம் பக்கீர்தம்பி, அண்ணல் சாலி, வ.அ. இராசரேத்தினம் ஆகியோரை என்றும் நினைவு கூர்ந்து வருகின்றார்.
உம்மு பரிதா - தங்கம் என்பவரை தனது அன்பு மனைவியாக ஏற்றிருக்கும் இவருக்கு ஜபானா பேகம், நிபாஸ், முகம்மது சப்றாஜ், சீரின் ஸிதாரா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவரின் முகவரி: நடுத்தீவு. மூதூர் - 07
y Tafiti D1 — கலாபூஷணம் புணர்னியாமீனர் (is)

Page 42
எம். ஐ. எம். தாஹிர்
ノ
இWங்கை ரஸ்சிங் விழுந்தாவிர்கள்,ஊடகவியலாளர்கள், கனAநர்களிர்விபரத்திரட்டு
 

கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டம், முதுார் தேர்தல் தொகுதியில் "எகுத்தார் நகர் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர் முகம்மது இளம்மாயில் முகம்மது தாஹிர் அவர்கள்; எம்.ஐ.எம்.தாஹிர், "சீலதரன்' ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், குறுநாவல்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார்.
1942. 08.15ம் திகதி பிறந்த தாஹிர் அவர்கள் தி கிண்ணியா மத்திய மகாவித்தியாலயம், யாழ் ' பலாலி ஆசிரியர் கலாசாலை, வித்யோதய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். 1962ம் ஆண்டு மே மாதம் "வேதனை' எனும் பெயரிலான இவரின் முதல் ஆக்கம் "விவேகி சஞ்சிகையில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை விவேகி, கலைமுரசு, சுதந்திரன், மாணவர் முரசு, செந்தாமரை, பிறை (இந்தியா), தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, தினக்குரல், பிறைப்பூக்கள், இளம்பிறை, தியாகி, மலர், கலைமுரசு, வின்ைனொலி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார்.
இதுவரை இவர் எழுதியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை 90, அத்துடன் 02 நாவல்களையும் , 05 குறுநாவல் களையும் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதுவரை இவரது நூல் ஒன்றும் வெளிவரவில்லை. இருப்பினும் 23 கதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதியொன்றினை வெகுவிரைவில் வெளியிடுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். தாஹிரின் பெரும்பாலான கதைகள் வறுமை, திறமை, முன்னேற்றம் போன்ற படிகளை உணர்ச்சிபூர்வமாக சித்தரிப்பவையாகக் காணப் படுகின்றன. கற்பனைக் கதைகளில் கூட சமூகத்து மூடநம்பிக்கைகளையும் , அவலங்களையும் கோடிட்டுக் காட்டுவதில் இவர் வெற்றி கண்டுள்ளார்.
தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கும், வளர்ச்சிக்கும் காரணமான எம்.எஸ்.எம். ஸாலிஹற் (அண்ணல்), எம்.ஏ. றஹற்மான் (இளம்பிறை), எஸ்.பொ. வ.அ. அன்புமணி, ஏ.எல்.ஏ. மஜீது ஆகியோரை நினைவு கூர்ந்து வரும் இவர் உம்முகாரியாவின் அன்புக் கணவராவார். இவரின் பிள்ளைகள் பெயர்கள், தாரிக், தரீப், ஆரீப், பஜிலா, சுரையா, சுமையா, முஸாஹிர், ஆஷிப்.
இவரின் முகவரி: 41/10 பெருந்தெரு, கிண்ணியா - 06 (31100)
tựTmli, Cl - கலாபூஷணம் புன்னியாமீன்

Page 43
() பதிவு 4
எழுத்துத் துறை
கலாபூஷணம்
எம். ஜே. எம். கமால் ノ
(78DEAశ5 முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கனA:ஆர்களிர் விபரத்திரட்டு
 

மேல் மாகாணம், களுத்துறை மாவட்டம்,பண்டாரகம தேர்தல் தொகுதியில் 'அட்டுலுகம' கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் முகம்மது ஜலால்தீன் முஜிதபா கமால் அவர்கள்: "திக்குவல்லை கமால்' எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என எழுதி வருகின்றார்.
இலங்கையில் முற்போக்கு முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான 'திக்குவல்லை கமால் மாறை மின்ஹாத் மகா வித்தியாலயம் (திக்குவல்லை), களு ஸாஹிரா கல்லுாரி (தர்காநகர்), யாழ்' பலாலி ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது வவுனியா தெற்கு - வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
04. 03. 1950 ல் பிறந்த "திக்குவல்லை கமால்' அவர்களின் முதலாவது ஆக்கம் (கவிதை) 08, 05. 1968ம் திகதி 'மித்திரன்' பத்திரிகையில் இ.போ.ச. மகிமைகோடி’ எனும் தலைப்பில் வெளிவந்தது. அதிலிருந்து இதுவரை 232 சிறுகதைகளையும், 170 கவிதைகளையும், 35 கட்டுரைகளையும், 6 தொடர்நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி, தினக்குரல், நவமணி, சிந்தாமணி, ஆதவன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் மல்லிகை, சிரித்திரன் போன்ற இலங்கைச் சஞ்சிகைகளிலும், கணையாழி, வானம்பாடி போன்ற இந்திய சஞ்சிகைகளிலும், இலங்கை வானொலி, ரூபவாஹினி போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
இவரது முதலாவது புதுக்கவிதைப் புத்தகம் 1973ம் ஆண்டில் எலிக்கூடு' எனும் தலைப்பில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டது.இதையடுத்து இந்தியாவிலுள்ள பிரபல்யமான வெளியீட்டு நிறுவனங்களிலும், இலங்கையிலுள்ள வெளியீட்டு அமைப்புக்களிலும் இவரது பத்துப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
l, கோடையும் வரம்புகளை உடைக்கும்
(சிறுகதைத் தொகுதி) 1984
2, குருட்டு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி) 1993 3, விடுதலை (சிறுகதைத் தொகுதி) 1996 4. விடை பிழைத்த கணக்கு (சிறுகதைத் தொகுதி) 1996
பாகம் C1 - கலாபூஷணம் புணர்னியாமீர் Go)

Page 44
5, புதிய பாதை (சிறுகதைத் தொகுதி) 1997 6, வரண்டு போன மேகங்கள் (சிறுகதைத் தொகுதி) 1999 7, ஒளி பரவுகிறது (நாவல்) 1995 8, நச்சு மரமும், நறுமலர்களும் (நாவல்) 998 9, பாதை தெரியாத பயணம் (நாவல்) 2000 O), புகையில் கருகிய பூ (நாடகம்) 2O))
இவரது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த ஏ. இக்பால், இர. சந்திரசேகரன், எம்.எச்.எம். சம்ஸ், யோனகபுர ஹம்ஸா, டொமினிக் ஜீவா ஆகியோரை நினைவு கூர்ந்து வரும் இவரின் எழுத்துத்துறையை கெளரவித்து முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் "இலக்கிய வேந்தன் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. அத்துடன் சாகித்திய மண்டல விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. ரீலங்கா அரசின் கலாபூஷணம் விருது 2004ம் ஆண்டில் இவருக்குக் கிடைத்தது.
திருமதி எம்.வீ 'பரீதா ஸல்பிகா அவர்களின் அன்புக்கணவரான இவருக்கு ஸ"ல்.பி, யெளிர், ரஹ்மத், இஸ்ரத் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவரின் முகவரி; 104, கஸ்ஸாலி மாவத்த, அட்டுலுகம,
LJSDi LTJALD.
参婴茎
(so) also மூனம்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகளிய*ாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்"

- பதிவு 15 -
எழுத்துத் துறை
ஏ.எச்.எம். யூஸுப்
Gs)
புர்னியாமீர்
கலாபூஷணம்
m
பாகம் D1 -

Page 45
தென்மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியில், அலுத்வீதிய (புதியதெரு) கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் ஹாதி முஹம்மத் யூஸப் அவர்கள்; ஏ.எச்.எம். யூஸ"ப் எனும் பெயரில் தேசிய தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார்.
காலி அல் மீரான் முஸ்லிம் வித்தியாலயம் (கந்தேவத்தை), காலி வை.எம்.பீ.ஏ. ஆங்கில இரவுப் பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் ஒய்வுபெற்ற ஆசிரியராவார்.
1936-12-09ம் திகதி பிறந்த இவரின் முதலாவது ஆக்கம் ‘பூஞ்சோலை' எனும் தலைப்பில் 'தினகரன்’ பத்திரிகையில் இடம்பெற்றது. அதிலிருந்து இன்றுவரை நுாற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக்கதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1958ம் ஆண்டு மதுரையில் இருந்து வெளிவந்த “குர்ஆனின் குரல்' சஞ்சிகையின் வெள்ளி விழா சிறப்பு மலரில் ‘பிரிவுகளை ஒழிக்கும் பெருமார்க்கம்” எனும் தலைப்பிலான இவரின் கட்டுரை இடம்பெற்றது. அக்கட்டுரை அகில உலக ரீதியாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.
யூஸ"ப் அவர்கள் நகைச்சுவைக் கதைகளை எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளவர். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுள் நகைச் சுவைக் கதைகள் எழுதக் கூடிய எழுத்தாளர்கள் விரல் விட்டெண்ணக்கூடிய ஒரு சிலரே உள்ளனர். அந்த வரிசையில் இவர் முதன்மை ஸ்தானத்தைப் பெறக் கூடியவர் என்றால் மிகையாகாது. * ஸரியஸான விடயங்களைக் கூட நகைச்சுவை ததும்ப - இலகுவாக வாசகர்களின் மனதில் பதியவைக்கும் இவர் பாங்கு விசேடத்துவமானது.
1966-ம் ஆண்டில் “நகைமலர்’ எனும் தலைப்பில் 96 பக்கங்களைக் கொண்ட முழு நகைச்சுவை நுாலொன்றினை எழுதி வெளியிட்டார். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட முதலாவது நகைச்சுவை கதைப்புத்தகம் இதுவாகும்.
தனது எழுத்துலக ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த ஆசான்களான ஸி.எல்.எம்.எம்.ஏ. காதர், பதுருதீன், ஏ.ஸி.எம்.எம். ஒஸ்மான் ஆகியோரை மனதில் நிறைத்திருக்கும் இவர் 1960களில் தனக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய தினகரன் ‘புதன்மலர்' ஆசிரியர் ஜெய்னுல்
08206Aశత5 முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் லிபரத்திரட்டு

ஹ"சைன் அவர்களையும், 1980களில் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய
தினகரன் ‘ஆலமுல் இஸ்லாம்' ஆசிரியர் என்.எம். அமீன் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்கின்றார்.
இவரின் மனைவி பெயர் பவ்ஸ"ல் ஹனா, இவருக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் முன்ஸிர், அன்ஸார், அஷகர், சம்துள் மின்னா, ரஈஸா, சுக்றா, ருஷிகா, ஸஹற்றா, இஷகா.
இவரின் முகவரி
22/1 D கொஹ"ணுகமுவ விதி, புதியதெரு,
வெலிகம.
_三丁
ーニ
事를
三
sa-sauna
-gs
υιταδώ οι -
கலாபூஷணம் புண்ணியாமீள்

Page 46
) நூருல் அயின்
இAங்கை முஸ்லீம் எழுந்தாளர்கள்,வடகவியrtர்கள், கனA:ஆர்களினர்விபரத்திரட்டு
-
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில், தலாத்து ஒயா கிராமசேவகர் பிரிவில் பிறந்து கொழும்பில் வசித்து வரும் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹ"சைன் அவர்கள்; கால் நூற்றாண்டு காலமாக பத்திரிகைத்துறையில் நிலைத்துச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஒரே முஸ்லிம் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமாவார்.
இவர் ரஷித் நூருல் அயின், நூருல் அயின் நஜ்முல் ஹ"சைன், உடுதெனியச் செல்வி, பின்த் ரஷித், பின்த் ஸல்மா, உம்மு ஷப்னா ஆகிய பெயரில் பிரபல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தமிழ், சிங்கள மொழிகளில் எழுதி வருகிறார்.
1955.05.22 இல் "உடுதெனிய' எனும் கிராமத்தில் அல்ஹாஜ் எம்.எம்.ரவரீத், உம்மு ஸல்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்த இவர் உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தேசிய தொலைக் கல்வி நிறுவனத்தின் பொதுசனத் துறை "டிப்ளோமா' பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 'பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித்துறையிலும் பல உயர் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் கொழும்பு LDPT6JLL 5 EEG) 16ü 394gleh TifluUTJ. (District Press Officer) (BL60)LD புரிந்துவரும் இவர் நஜ்முல் ஹ"சைனின் அன்பு மனைவியும், நூருல் ஷப்னாவின் அன்புத் தாயாருமாவார்.
நூருல் அயினின் முதலாவது ஆக்கம் 1974ம் ஆண்டில் "சிந்தாமணி' பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார். அத்துடன் அரசியல், தலைவர்கள், கலைஞர்கள், இந்தியக் கலைஞர்களின் பேட்டி நிகழ்ச்சிகளை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளில் தொகுத்து வழங்கியுள்ளார்.
1981 டிசம்பர் -10ம் திகதி முதல்; தினபதி அலுவலகம் 1990 இல் முடப்படும் வரை தினபதி, சிந்தாமணி ஆசிரிய பீடத்தின் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் "ஜனனி என்ற ஜனரஞ்சக பத்திரிகையிலும், அரசாங்க தகவல்
ristorii di — கலாபூஷணம் புர்ரீராமினர்

Page 47
திணைக் களத்தின் திங்கள்’ என்ற மாதாந்த சஞ்சிகையிலும் இணையாசிரியையாகத் தனது உயர் பங்களிப்புகளைச் செய்துள்ளார். தற்போது தகவல் திணைக்களத்தின் ‘புத்தொளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியையாகவும், ‘தெசத்திய சிங்கள சஞ்சிகையின் சிறப்புக்கட்டுரை எழுத்தாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.
தமிழ்மொழியைப் போலவே சிங்கள மொழியிலும் சிறந்த தேர்ச்சியுள்ள இவரின் ஆக்கங்கள் சிங்கள மொழிப்பத்திரிகைகளான தவஸ, ரிவிரச, லங்காதீப, லக் பிம ஆகியவற்றிலும், சிங்கள மொழிச் சஞ்சிகைகளான தொரதுரு, தெசதிய ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
‘தெசதிய' சஞ்சிகையில் ‘தேசபாலன கரலிய (அரசியல் பிரளயம்) எனும் தலைப்பில் இவர் எழுதிவந்த அரசியல் பேட்டித்தொடர் சிங்கள வாசகர்களினதும், விமர்சகர்களினதும் வரவேற்புக்குப் பாத்திரமாகின.
தினபதி பத்திரிகையில் 'இஸ்லாமிய பூங்கா’ பகுதியில் இவரால் எழுதப்பட்ட 'ஸஹாபாப் பெண்மணிகளின் சரித்திரப்பின்னணி, ஏட்டிலி ருந்து ஏற்றதோர் படிப்பினை ஆகிய தொடர் ஆக்கங்களும், ‘சிந்தாமணிப் பத்திரிகையில் இவரால் நடத்திவரப்பட்ட ' விவாதத்துக்குரிய தலைப்புக்களிலான பேட்டிகளும் வாசகநெஞ்சங்களின் அமோக வரவேற்பினைப் பெற்றன. இவைதவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியின் பிரதித் தயாரிப்பாளராக பல ஆண்டு காலமாக எழுதி வந்த இவர், வானொலி சிறப்புக் கவியரங்குகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வருகின்றார்.
இவரது முதலாவது நூல் ‘பண்பாடும் பெண்கள்’ எனும் தலைப்பில் 1997.03.16ம் திகதி வெளியிடப்பட்டது. இவரால் எழுதி ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்ததும், வானொலிகளில் ஒலிபரப்பாகியவையுமாகிய 30 கட்டுரைகள், பண்பாடும் பெண்கள்’ நூலில் தொகுக்கப்பட்டிருந்தன. இந்நூல் பூரிலங்கா முஸ்லிம்கள் முன்னணியின் வெளியீடாகும். இவர் பெண்களும் மானபங்கமும், ஏயிட்ஸ்நோயும் பெண்களும், ஸஹாபாப் பெண்மணிகளின் சரித்திரப் பின்னணி, ஏட்டிலிருந்து ஏற்றதோர் படிப்பினை ஆகிய நூல்களை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளதுடன் சிங்கள மொழியிலும் ஒரு நூலை (8606Aశతాడ్ முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

வெளியிடுவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளார். இவரின் பத்திரிகை, இலக்கியத்துறை சேவையை கெளரவித்து அகில இன நல்லுறவு ஐக்கிய ஒன்றியம், ‘இலக்கிய தாரகை” எனும் பட்டம் வழங்கி (2000இல்) கெளரவித்தது. பத்திரிகைத்துறையில் இவரது நீண்டகால சேவையைப் பாராட்டி கொழும்பு கலைச்சங்கம் 1998ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில் பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவித்தது. இவரது ‘பண்பாடும் பெண்’ நூலுக்காக மத்திய மாகாண கல்வி அமைச்சு (1997இல்) பொற்கிழியும், சிறந்த எழுத்தாளர் விருதும் வழங்கியது. மொழி மூலம் ஐக்கியத்தையும், சமாதானத்தையும் கட்டி எழுப்புவோம். எனும் தொனிப்பொருளில் இன நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சின் அனுசரணையுடன் அரச கருமமொழித் திணைக்களம் இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு விருது வழங்கி கெளரவித்துள்ளது. அத்துடன் மலையக கலை, கலாசாரப் பேரவையின் ‘இரத்தினதீபம்’ விருதும் (2001இல்) இவருக்குக் கிடைத்துள்ளது.
தனது இலக்கிய, பத்திரிகைத் துறை ஈடுபாட்டிற்கும், வளர்ச்சிக்கும் காரணமான தனது அன்புப் பெற்றோர், தனது உடன்பிறப்பு சட்டத்தரணி ரஷீத் -எம்-இம்டியாஸ், அன்புக் கணவர் என். நஜ்முல் ஹ"சைன், மற்றும் திருவாளர்களான எஸ்.டி சிவநாயகம் (தினபதி - பிரதம ஆசிரியர்), ஆர் இரத்தினசிங்கம் (சுடரொளி பிரதம ஆசிரியர்) தர்மப்பிரிய (ஜனனி - பிரசுரகர்த்தா), சுனந்த மத்தும பண்டார, ஆரியரூபசிங்க, பேர்ட்டி ஜயசேகர, வசந்த பிரிய கமநாயக்க, இராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சிவராஜா, புவனலோஜினி நடராஜசிவம், புர்கான் - பி - இப்திகார், ஆயிஷா ஜ"னைதீன் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
இவரின் முகவரி:
"தாருஸ் ஷப்னா 3, ரிச்சர்ட் டி சொய்ஸா தொடர்பியலாளர் வீடமைப்புத் திட்டம் பத்தரமுல்லை.
| ur@စံ Ĉoll - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 48
() பதிவு 7
எழுத்துத் துறை
ܐܫܼܫܧܸܝܼ ܊
எம். ஸி. எம். இக்பால்
ン
08DEAవాడా முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கரைந்தர்களினர்:விரத்திரட்டு

வட மாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில் அடம்பன் கிராமசேவகர் பிரிவில் பிறந்து தற்போது குருநாகல் மாவட்டம், மல்லவப்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் வசித்து வரும் முஹம்மது காளபீம் முஹம்மது இக்பால் அவர்கள் எம். ஸி. எம். இக்பால், கலை அமுதன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள்,கவிதைகள் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார்.
இவரின் ஆக்கங்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும, இந்தியாவிலிருந்து வெளிவரும் ராணி, தீபம் போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
1951-11-15ம் திகதி புலவர் 'தமிழ்முழக்கம்’ எம்.பி.எம். முஹம்மது காஸிம் ஆலீம் தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். தற்போது மருத்துவராகத் தொழில் புரிந்துவரும் இவரின் முதலாவது சிறுகதை 1968ம் ஆண்டில் 'பரீட்சையின் முடிவு' எனும் தலைப்பில் "தினபதி பத்திரிகையில் இடம்பெற்றது.
அதிலிருந்து சிறுகதைகள், உருவகக்கதைகள், மினிக்கதைகள் என இருநூற்றுக்கு மேற்பட்ட கதைகளையும், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஆய்வு, பொதுஅறிவு, மருத்துவம், தத்துவம், ஆத்மீகம், இலக்கியம், வரலாறு, நகைச்சுவை, உண்மைச்சம்பவங்கள் என ஐநூற்றுக் கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இதுவரை இவர் 5 நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். மறை நிழலில் மனிதன் (திருமறை சிறப்புநூல்) 1971 ஏழை எழுத்தாளன் (சிறுகதைத்தொகுதி) - 1973 ஒரு கருவண்டு பறக்கிறது (சிறுகதைத் தொகுதி) 1976 கண்ணில் நிறைந்த க.பா (மக்கா யாத்திரைப் பயனக் கட்டுரை) மருத்துவக் கைநூல் (மருத்துவ நூல்) 1981 மருத்துவக் கைநூல் எனும் புத்தகம் இந்தியாவில் 'கல்கண்டு பிரசுரமாக வெளிவந்தது.
1969 -ம் ஆண்டில் "பொய்கை' எனும் பெயரில் வெளிவந்த இலக்கிய மாத இதழுக்கு எம்.ஸி.எம். இக்பால் அவர்கள் பத்திராதிபராகக் கடமையாற்றியுள்ளார். அடம்பன் இளைஞன் கழக வெளியீடான
EI Taglio D1 – கலாபூஷணம் புர்னியாமீர் Gs)

Page 49
"பொய்கை 20 இதழ்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்மொழியைப் போலவே ஆங்கில மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற இவர் ஆங்கிலமொழியில் பத்திரிகைத்துறைமாணி பட்டத்தையும்
S LCLLLLLLL LLL LGGLLLLLL S TTTTT TTTS TT T TT STTTTO LHHL படைப்புக்கள் Sunday Observer பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளன.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த தனது தந்தையாரையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தினர், மற்றும் பேராசிரியர்களான திருவாளர்கள் சு. வித்தியானந்தன், கைலாசபதி, எம்.ஏ. நுஃமான், கலாநிதி கே. எம்.எச். காலிதீன், கலாநிதி நந்தி ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் "கவுலா உம்மாவின் அன்புக் கணவரும், பாத்திமா றம்ஸானி, முஹம்மது முஷர்ரிப் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி:
593 ஹிஜ்ரா மாவத்தை, மல்லவபிட்டிய,
குருநாகலை.
NZ
2S Z
(90)இலங்கை மூனம்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், க:ைஆர்களிர்விபரந்திரட்டு

(ノ - பதிவு 18 -
எழுத்துத் துறை
) ஆ. அலாவுதீன்
-- - -m -
Lurroue 1 - கலாபூஷணம் புன்னியாமீர்

Page 50
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், அக்கரைப்பற்று கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த ஆதம் லெவ்வை அலாவுதீன் அவர்கள் ஒலுவில் அமுதன்’ எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவராவார். இலங்கையில் வெளிவரும் பிரபலமான தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
1956 - 02 - 27ம் திகதியன்று ஆதம்லெவ்வை தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். பாடசாலையில் கற்கும் காலத்திலி ருந்தே எழுதத் தொடங்கிய இவரின் முதலாவது கவிதை 1976 பெப்ரவரியில் நடிப்பு’ எனும் தலைப்பில் 'தினகரனில் பிரசுரமாகியது. முதற்கவிதையென்றாலும் அர்த்தபுஷ்டியுள்ள கவிதை அது என்பதால் அக்கவிதையை இங்கே இணைந்துள்ளேன்.
பள்ளி சிசன்று
சிதாழுதபீன்
பாதணிகளைப் பார்த்தேன்.
அங்கே அது
இருக்கவில்லை.
மிதாழவந்தவண் தான்
திருடியிருக்க வேண்ரும்,
இல்லை. இல்லை.
திருடவந்தவண் தான்
சிதாழுதிருக்க வேண்டும்.
அன்றிலிருந்து இன்றுவரை 80 சிறுகதைகளையும், 120 கவிதைக ளையும், 40 கட்டுரைகளையும், 4 நாவல்களையும் எழுதியுள்ள இவர் 1977 - 79 காலப்பகுதியில் வானொலியில் 6 மெல்லிசைப் பாடல்களையும், பின்பு 4 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
அலாவுதீன் அவர்கள் இதுவரை ஏழு நூல்களை எழுதி வெளியிட் டுள்ளார். விபரங்கள் வருமாறு:
(92)6Aశమ5 முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

மனக்கோலம் (கவிதைத் தொகுதி) 1988 மரணம் வரும் வரைக்கும் (கவிதைத் தொகுதி) 1999 கலையாத மேகங்கள் (சிறுகதைத் தொகுதி) 1999 நாம் ஒன்று நினைக்க. (நாவல்) 2000 மனங்களிலே நிறங்கள் (சிறுகதைத் தொகுதி) - 2001 கரையைத் தொடாத அலைகள் (நாவல்) - 2002 கூடில்லாத குருவிகள் (சிறுவர் இலக்கியம்) - 2002
இவரது எட்டாவது நூல் ‘நூலருந்த பட்டம்’ எனும் தலைப்பிலான சிறுகதைத்தொகுதி தற்போது அச்சுவாகனமேறியுள்ளது. தொழில் ரீதியாக ‘இலங்கை வங்கியில் எழுதுவினைஞராகச் சேர்ந்த இவர் தற்போது நிறைவேற்று அதிகாரியாகக் கடமைபுரிந்து வருகின்றார். இலங்கை வங்கியில் 25 வருட காலம் அர்ப்பணிப்புடன் வேலை மேற்கொண்டுவரும் இவரின் சேவையைப் பாராட்டி அண்மையில் இலங்கைவங்கியின் தலைவி திருமதி முனசிங்க விருது வழங்கி கெளரவித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியாக 1983 இல் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் .அத்துடன் ‘சமாதானம்' சஞ்சிகை 'இலக்கியச் சுடர்மணி பட்டமளித்து கெளரவித்துள்ளது.
ஜனாபா அனுறா அலாவுதீனின் அன்புக் கணவரான இவருக்கு ரக்ஸானா, அனிஸ் அக்தார், அக்மல் இக்பால் ஆகிய மூன்று பிள்ளைகளுண்டு.
இவரின் முகவரி: 67, புதுப்பள்ளி வீதி அக்கறைப்பற்று -05
பாகம் O) - கலாபூஷணம் புணர்னியாமீன்

Page 51
O - பதிவு 19 -
ஊடகத் துறை
எம். இஸட் அஹ்மத் முனவ்வ
ン 5)
GoDaason. முஸ்லீம் விழுந்தாார்கள்,ஊடகவியtாார்கள், கணிஸ்நர்களிர்வீரந்நீரட்டு
 

மேற்கு மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு - கிழக்கு தேர்தல் தொகுதியில் நாரஹேன்பிட்ட - கொழும்பு 8 கிராமசேவகர் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மது ஸ்கரியா அஹ்மத் முனல்வர் அவர்கள்; எம். இஸட். அஹற்மத் முனல்வர், ஆலம்கீர், இப்னு ஸகரியா, அபூ ஹளபீர் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார்.
ஒரு எழுதி தாள னி என ற கணி னோட் டத் தில் நோக்கும்போது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் இலங்கையில் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி ஈழநாடு, உதயம் போன்ற பிரபல தேசிய பத்திரிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் முத்துச்சுடர், முஸ்லிம் முரசு ஆகிய சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
1955 - மார்ச் மாதம் - 02 திகதி முஹம்மது ஸ்கரியா தம்பதிகளின் புதல்வராக கஹட்டோவிட்டவில் பிறந்த இவர் கஹட்டோவிட்ட அல்பத்ரியா முஸ்லிம் மகாவித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ரஷ்யாவில் மீடியா இன்ஸ்டிடியூட் ஒப் மொஸ்கோவிலும், கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் "பத்திரிகை இயல்' டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளராகவும், முஸ்லிம் சேவைப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
1972 இல் திரு. மதியழகன் நடத்திய "சங்கநாதம்' நிகழ்ச்சி மூலம் இலங்கை வானொலியில் அறிமுகமான முனல்வர், வாலிபவட்டம், நூருல் இஸ்லாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தன்னைச் செப்பனிட்டுக் கொண்டார். 1977 முதல் 1980 வரையிலான காலப்பகுதியில் "பிஞ்சுமனம் எனும் முஸ்லிம் சிறுவர் நிகழ்ச்சியை வானொலியில் நடத்திப் புகழ் பெற்றதுடன் 1980 ஏப்ரல் மாதம் முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தர உத்தியோகம் பெற்றார். இதைத்தொடர்ந்து தனது அயராத உழைப்பினாலும், முயற்சியினாலும், திறமையினாலும் 1987ல் முளப் லிம் சேவையில் தயாரிப்பாளராகவும், 1995 இல் அமைப்பாளராகவும், 2000 இல் சிரேஷ்ட அமைப்பாளராகவும் 2002இல் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் பதவி உயர்வு பெற்று தற்போதைய நிலையை அடைந்துள்ளார்.
| utati 1 - கலாபூஷணம் புர்னியாமீர்

Page 52
முஸ்லிம் சேவையில் நேரடி ஒலிபரப்புக்களை வழங்குவதில் இவரின் பங்களிப்பு முக்கியமாகத் திகழ்ந்தது. 2001இல் இலங்கை வானொலி வரலாற்றில் முதற்தடவையாக புனித மக்கா நகரில் இருந்து ஹஜ் நிகழ்சிகளை நேரடியாகத் தொகுத்து வழங்கி முஸ்லிம் நேயர்களின் அமோக வரவேற்பிற்குப் பாத்திரமானார்.
பத்திரிகைத் துறையில் இவரது முதலாவது ஆக்கம் ‘சீதனம் எனும் தலைப்பில் 'தினகரன்’ பத்திரிகையில் 1974-ம் ஆண்டு இடம்பெற்றது இவர் தனது பள்ளிப் பருவத்தில் பத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகளை எழுதியுள்ளார். 1977 முதல் 1980 வரை தினபதி அலுவலக நிருபராகப் பணியாற்றியதுடன் 1978 முதல் 1988 வரை 'தினகரன்', 'உதயம்’ பத்திரிகைகளில் எண்ணில்லா ஆக்கங்களை எழுதியுள்ளாார். தினகரன் - ஆலமுல் இஸ்லாம் பகுதியில் 'அல் - மனார்’ எனும் தலைப்பில் ‘ஆலம்கீர்’ எனும் புனைப்பெயரில் சமுதாயப் பிரச்சினைகளைத் தொடராக எழுதி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தினார்.
அஹற்மத் முனவ்வர் அவர்களினால் இதுவரை 5 நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. விபரங்கள் வருமாறு;
1. பிஞ்சுமணம் (சிறுவர் நூல்) 1983
2. யூசுப் இஸ்லாம் சில நினைவுகள் (பொதுநூல்) 1987
3. பர்பரீன் தந்த பாகிர் ( முன்னாள் சபாநாயகர் மர்ஹாம்
தேசமான்யபாக்கீர் மாக்கார் அவர்களின் சரிதை நூல்) - 1991
4. ‘வெளிச்சம்' (சமூக எழுச்சிக் கட்டுரைகள்) - 1996
5. 2001 ஹஜ் ஒலிப்பதிவு நினைவலைகள் - 2002
இவரின் ஆறாவது நூலான "பசுமை நினைவுகள்’ (சோவியத் பயணக் கட்டுரைகள்) தற்போது அச்சுவாகனமேறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற பொப் இசைப்பாடகரான ‘கெட்ஸ்ரீபன்’ என்ற ‘யூசுப் இஸ்லாம்” இஸ் லாத் தைத் தழுவிய பின் இலங்கை வந்து நிகழ்த்திய உரைகளையும், அவருடன் பழகிய அனுபவங்களையும், அவர் நடத்திய பத்திரிகை மாநாடுகளையும் தொகுத்து வழங்குவதாக இவரின் இரண்டாவது நுால் அமைந்தது, அதேவேளை இந்நூலின் இரண்டாம் பதிப்பு தமிழகத்தில் வெளியிடப்பட்டது.
(9606Aiబర్ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

ழரீலங்கா முஸ்லிம் கலைஞர்கள் கவுன்ஸிலின் ஸ்தாபகரும் , தலைவருமான இவர் இலங்கையிலுள்ள முன்னணி சமூக சேவை அமைப்புகளிலும், ஊடகவியலாளர், இலக்கிய அமைப்புகளிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார்.
1976ம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், வீரகேசரி பத்திரிகையும், இந்து இளைஞர் மன்றமும் இணைந்து அகில இலங்கைரீதியில் நடத்திய பேச்சுப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்ற இவருக்கு ‘ சொல் லின் செல் வர்’ எனும் பட்டம் வழங் கி கெளரவிக்கப்பட்டது. ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டைக் கொண்டாடுமுகமாக தேசிய ஹிஜ்ரா கவுன்ஸில் 1980ம் ஆண்டு நடத்திய அகிலஇலங்கைப் பேச்சுப் போட்டியிலும் இவர் முதலாம் பரிசிலைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
1994இல் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்' கலாசார விருது விழாவில் அப்போதைய முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் இவருக்கு 'நூருல் பன்னான்’ (கலை ஒளி) பட்டமும், விருதும் வழங்கி கெளரவித்தார்.
பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியையான பெளசுல் ஹ"ஜாஸியை மணந்து ஹஸிர் அஹற்மத், பாதிமா முர்ஷிதா, பாதிமா முஜாஹிதா ஆகிய மூன்று வாரிசுகளுக்குத் தந்தையான இவரின் முகவரி.
“தாருஸ்ஸலாம்” A 10/2/1, மெனிங்டவுன் தேசிய வீடமைப்புத் திட்டம். கொழும்பு - 8
பாகம் Ol - கலாபூஷணம் புண்ணியாமீண்

Page 53
எழுத்துத் துறை
காபூஷணம்
சித்தி ஸர்தாபீ
இலங்கை முஸ்ரீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாார்கள், கலைஞர்களின்லிமரத்திரட்டு
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், செங்கடகல தேர்தல் தொகுதியில் ஹீரஸ்ஸகல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் திருமதி முகையிதீன் பாவா சித்தி ஸர்தாபி அவர்கள்; பேராதனை ஷர்புன்னிஸா, பேசாமடைந்தை ஆகிய பெயர்களில் அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இலக்கியம் படைத்துவரும் முதுபெரும் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1933 - 04 - 13ம் திகதி இம்மண்ணில் ஜனனித்த எபர்தாபி அவர்களில் முதலாவது ஆக்கம் 1948ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது. அதிலிருந்து இன்று வரை சுமார் 55 ஆண்டு காலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதிக்குவித்துள்ள இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்காமுரசு, மலைமுரசு, மலைநாடு, இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல், ஷாஜஹான், மணிச்சுடர் உட்பட பல்வேறு இலங்கை, இந்திய பத் திரிகைகளிலும் , சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
ஸர்தாபி அவர்களின் இலக்கியப் பயணத்தில் "கிராமிய இலக்கியம்' முக்கிய பங்கு பெறுகின்றது. "நாட்டுப் புறவியல்' அல்லது "நாட்டாரியல்' (F0LKL0RE) எனும் கிராமிய இலக்கியம்; பாடல்கள், கதைகள், நொடிகள், பழமொழிகள் முதலியவைகளை உள்ளடக்கியது. நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலிய எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஓர் ஆய்வுத்துறையாகும்.
கிராமியப் பாடல்கள் காலத்தால் வழக்கொழிந்து வந்தபோதும், இலக்கியத்துள் இறுகி நிற்கின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியப் பாடல்களில் அனேகமானவை இதனை இரசிப்பவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களின் வாழ்க்கையோடு பின்னிய இலக்கியமாக அவை பரிமாணம் பெற்றுள்ளன. இவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுசெய்யும் பணி, உலகெலாம் வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கதே! அத்தோடு அவற்றைக் கதையிடைப் பின்னியும், கட்டுரையில் நயந்தும் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இதை இரசித்து வாசிப்போரும் அதிகம்.
(பாகம் all - கலாபூஷணம் புர்ரியாமீனர் |Goo0

Page 54
வாய்மொழியாக இருந்து வந்த இப்பாடல்கள் இலக்கிய அந்தஸ்துடன் சேகரிக்கப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் மிக முக்கியம். இப்பாடல்கள், அவை எழுந்த சமுதாயத்தினரின் தனித்துவமிக்க வாழ்க்கை மரபுகளை எடுத்துக்காட்டும் தன்மையுடையவை.
எழுதப்படிக்கத் தெரியாத காலத்தில் வாய்மொழி வாயிலாக எழுந்த இப்பாடல்களில் காணப்படும் இயற்கைச் சூழல், அதனோடு ஒட்டிய மண்வாசனை, இன்பதுன்ப உணர்வுகள், உறவுகள், உவமை உருவக அணிகள் என்பன கல்வி உலகையே கலக்கி நிற்கின்றன. இதனால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டதின் விளைவாகவே இவரின் ஆய்வுகளும், ஆக்கங்களும் கிராமிய இலக்கியத்தின் பால் அதிக ஈடுபாட்டினைக் காட்டி நிற்கின்றன.
மறுபுறமாக ஸர்தாபி அவர்கள் மலையகத்தின் ஹட்டனில் பிறந்தாலும் தந்தை மொஹிதீன் பாவா கிழக்கு மாகாணத்தைச் (திருகோணமலையை)ச் சேர்ந்தவர். இவரின் தாயார் சுலைஹா உம்மா அநுராதபுரத்தைச் சேர்நதவர். எனவே தந்தை வழியாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர் கிழக்கிலங்கை கிராமியப் பாடல்களில் கவரப்பட்டமை ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல.
இவரால் எழுதப்பட்ட நூல் ‘கிராமிய மணம்’ எனும் பெயரில் 1996 - 11 - 10ம் திகதி வெளிவந்தது. ஐம்பது, அறுபதுகளில் வீரகேசரி தினகரன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும், தமிழ் நாட்டின் மணி விளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய பத்திரிகைகளிலும் எழுதிவந்த கிராமியக் கவிதைகளுள் ஒரு பகுதியை அடக்கியதே கிராமிய மணம் எனும் நூலாகும்.
தனது ‘கிராமிய மணம்’ எனும் நூலில் இவர் பனவருமாறு குறிப்பிட்டிருந்தார். ‘. நினைத்தவுடன் கவிபாடும் நம் கிழக்கிழங்கைப் பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்திருப்பார்களேயானால், அவர்களது படைப்புகள் எவ்வாறுயர்ந்திருக்கும் என்று நான் எழுத்துலகில் பிரவேசிக்கு முன் சிந்தித்ததுண்டு. ஆனால், இன்றையக் கல்விச் சூழலில் இப்பாடல்கள் பிறந்த இடத்துப் பெண்கள் கல்வி கேள்விகளில் முன்னேறியுள்ளனர், அதனால் இக்கவிதை வளர்ச்சி குன்றியே விட்டன. இது என் எண்ணத்தின் எதிர்மறையாகும்.
0 100][@ *g#jpক முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

கிராமப்புறத்து முஸ்லிம் பெண்கள் மார்க்கக் கல்வியைத் தவிர்த்து உயர்கல்வி பயில்வதைத் தடுத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் ‘முஸ்லிம் பெண்கல்வி’, ‘முஸ்லிம் பெண்களும் சமூக சேவையும், ‘முஸ்லிம் பெண்களும் அரசியலும்’ என்ற தலைப்புகளில் தொடர்கட்டுரைகளை வீரகேசரி வனிதா மண்டலத்தில் எழுதி வந்த போது, சமுதாயத்தைச் சீர்குலைக்கும் சதிநாச வேலையெனப் பலர் என்னைச் சாடி நின்றனர்.” இவரின் இக்கூற்றுக்கள் சிந்திக்கப்பட வேண்டியவையே.
எனவே இலங்கையைப் பொருத்தமட்டில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக அமைந்த பெண் எழுத்தாளர் ஸர்தாபீ என்றால் மிகையாகாது. இலக்கியத்துக்குப் புறம்பாக இவர் தினபதி - சிந்தாமணி பத்திரிகையில் ‘உடுநுவரை செய்தியாளராகவும் பணியாற்றி யுள்ளார்.
இவரின் இலக்கிய சேவையை கெளரவித்து 1999 இல் இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் அதி உயர் விருதான கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் இந்து கலாசார அமைச்சினால் ‘தமிழ்ஒளி விருதும், மலையக கலை, கலாசாரப் பேரவையினால் ரத்ன தீப விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.
தனது இலக்கியப் பயண ஈடுபாட்டுக்கும், வளர்ச்சிக்கும் காரண மாக இருந்த திருவாளர்களான எம்.எம். இப்றாஹீம், அ.கா.அ. அப்துஸ்ஸமது, இந்தியா திருச்சி றசூல், ஏ.எல்.எம். கியாஸ், எஸ்.வி. கதிரேசன், எஸ். ராஜதுரை, புரட்சிக்கமால், அ.ஸ. அப்துஸ்ஸமது, இளங்கீரன், எஸ்.டி. சிவநாயகம் , எஸ். எம். ஹனிபா, கவிஞர் எம்.ஸி.எம். ஸ"பைர் ஒ.கே. மொஹிதீன், எச்.எம்.பி. மொஹிடீன் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
இவரின் அன்புக் கணவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களும் ஏற்கனவே ‘கலாபூஷணம்’ விருது பெற்றவர். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுள் கணவன் - மனைவி இருவருக்குமே 'கலாபூஷணம்’ விருது கிடைத்திருப்பது இத்தம்பதியினருக்கு மாத்திரம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாகம் Ĉoll - கலாபூஷணம் புண்ணியாமீன் Go)

Page 55
பேராதனை ஷர்புன்னிஸாவிற்கு மூன்று குழந்தைகள், அவர்கள் ஜெமிலுன் இம்ராணி, முஹம்மது றுாமிஹஸன், முகம்மது றிஸ்மி ஹஸன்,
இவரது முகவரி, 1971 எல்லகல எஸ்டேட் ஹீரஸ்ஸகல, கண்டி,
(C1020ཞི་མ་ཐོད་ཤམ་ முஃம்ே எழுத்தாளர்கள்,ஊடகவிய*ாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு
 

O - பதிவு 21 - D
எழுத்துத் துறை
ஏ.எம்.எம். அலி C ン ン
(பாகம் - கலாபூஷணம் புர்னியாமீனர் Co)

Page 56
கிழக்கு மாகாணம், திருகோண மலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில் கிண்ணியா கிராமசேவகர் பிரிவைச்சேர்ந்த அப்துல் மஜீது முகம்மது அலி அவர்கள்; ஏ.எம்.எம். அலி, கிண்ணியா ஏ.எம்.எம். அலி, கிண்ணியா அலி, துமு. துரைமகன் ஆகிய பெயர்களில் எழுதி வரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.
இவரின் ஆக்கங்கள் தினகரன் அபியுக்தன், தேனிதழ் , நாளைநமதே, தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், வானொலி ஒலிமஞ்சரி, அல்-ஹஸனாத், உண்மை உதயம், ஊற்று நேசன், சிரித்திரன், அம்சம், ஆடாமணி, நவமணி ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
1948 - 10 - 13ம் திகதி அப்துல் மஜித் தம்பதிகளின் புதல்வராக இம்மண்ணில் ஜனனித்த அலி அவர்கள் கிண்ணியா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி, கிண்ணியா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவருமாவார். இவர் தற்போது திருகோணமலை ‘இலங்கை துறைமுக அதிகாரசபையில் நானாவித வேலை உதவியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவரது முதலாவது ஆக்கம் 1974ம் ஆண்டு தினகரன் ‘தொழிலாளர் உலகு எனும் பகுதியில் ‘விவசாயியின் குரல்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. கால் நூற்றாண்டுக்கு மேலாக இலக்கிய உலகில் பாதம் பதித்து நிற்கும் இவர் கவிதை புனைவதிலே அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது 204 மரபுக்கவிதைகள் இதுவரை பிரசுரமாகியுள்ளன. இவற்றுள் 99 கவிதைகள் ‘சிந்தாமணி’ பத்திரிகையில் பிரசுரமானவை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் 40 புதுக்கவிதைகளை எழுதியுள்ளார்.
புதுக்கவிதைகளுள் பெரும்பாலான கவிதைகள் தினகரனில் பிரசுரமாகியுள்ளன. வானொலி ஒலிமஞ்சரியில் 07 கவிதைகளும், வானொலி பாவளத்தில் 05 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
இவர் இதுவரை 15 சிறுகதைகளை எழுதியுள்ளார். அதிக எண்ணிக்கையான சிறுகதைகளை எழுதாவிடினும் கூட எழுதிய சிறுகதைகள் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு கதைவடிவம் கொடுக்கப்பட்டவை. இவற்றுக்குப் புறம்பாக 10 கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். 01096Aశఖరి முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

1980 மே 25ம் திகதி கிண்ணியா வட்டாரத்தில் ஹிஜ்ரிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப்போட்டியிலும், 1982, ஜூலை 21-ம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர் வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப்போட்டியிலும், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மீலாதுன் நபிவிழாவை முன்னிட்டு 1984- நவம்பர் - 16ம் திகதி அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்னும் பல கவிதை, சிறுகதைப் போட்டிகளிலும் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.
இவரது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக நின்ற தினபதி ஆசிரியர் திரு. எஸ்.டீ. சிவநாயகம், சிந்தாமணி ஆசிரியர் இராஜ அரியரத்தினம், மற்றும் ஈழவாணன் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் ஹாஜரா உம்மாவின் அன்புக் கணவரும், நஜீமா பாறுான், ஜெஸிமா பாறுான், புதைனா, முகம்மது ரிஸ்வான் ஹஸன் நிஸாமி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி: அடப்பனார் வயல், கிண்ணியா - 06
பாகம் O - கலாபூஷணம் புண்ணியாமீண்

Page 57
கலாபூஷணம்
எம்.எச்.எம். ஹலீம்தீன் /
இAங்கை ரம்ஜீழ் விழுந்தாளர்கள்,ஊடகவியரிாளர்கள், கனtஞர்களின் விபரத்திரட்டு
 
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹரிஸ்பத்துவைத் தேர்தல் தொகுதியில்; 'கல்ஹின்னை' எனும் கிராமத்தில் பிறந்த கம்மஹலாகெதர மொஹம்மட் ஹமீத் லெப்பே மொஹம்மட் ஹலீம்தீன் அவர்கள்; அருட்கவி எம்.எச்.எம். ஹலீம்தீன், கல்வீட்டுக் கவிராயர், மீலாஹற், அபூபஹற்மி, கல்ஹின்னை ஹலீம் தீன், அதிரடியான், கல்ஹின்னை அல்ஹஜர், அபூஉம்மு ஹனா ஆகிய புனைப்பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்பவற்றை இலங்கையிலுள்ள பிரபல தேசிய பத்திரிகைளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இவரது கவிதைகள் இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன.
1937 - 10 - 24ம் திகதி பிறந்த இவர், கல்ஹின்னை அல்மனார் தேசிய கல்லூரி, அழுத்கம அல்-ஹம்ரா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரது முதலாவது ஆக்கம் 1954 ஆம் ஆண்டில் ‘மாலைக்காட்சி என்ற தலைப்பில் 'தினகரன்' பத்திரிகையில் இடம்பெற்றது. "இணையில்லா இல்லத்தரசி கதிஜா நாயகி என்ற இவரது முதலாவது வானொலிப்பேச்சு 1958-ம் ஆண்டில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியது.
1960ம் ஆண்டில் கண்டி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையால் வெளியிடப்பட்ட ‘மலைமதி என்ற ஆண்டு மலரின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய இவர் இன்று நாடறிந்த இருமொழிக்கவிஞராவார். "எனக்கெவ்வித ஆற்றலுமில்லை. அல்லாஹற்வின் பேரருளும், பெருமான் நபி(ஸல்) அவர்கள் மீது அரும் ஸலவாத்தும் ஒதிய பின்னர்தான் எந்தக் கவிதையையும் புனைய ஆரம்பிப்பேன் .' என்று அடிக் கடி பிரஸ்தாபித்துவரும் இவர் ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "ACT08ர் Poems" என்ற எழுத்துக்களை மேலிருந்து கீழ்நோக்கி வாசிப்பதற்கு ஒவ்வொரு எழுத்துக்குமேற்ற விதத்தில் கவிதை புனைவதில் திறமை மிக்கவர்.
இவரின் "What is Woman?” என்ற ஆங்கிலக் கவிதை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "Hiltonian" என்ற பிரபல சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
தமிழ் ஆங்கில மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகளை சுமார் அரைநூற்றாண்டுகளாக எழுதியுள்ள கவிஞர்
பாகம் 1 = கலாபூஷணம் புர்னியாமீர்

Page 58
ஹலீம்தீன் இதுவரை 7 நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். இவற்றுள் ஐந்து நூல்கள் தமிழ்மொழியிலும், இரண்டு நூல்கள் ஆங்கில மொழியிலும் வெளிவந்துள்ளன. விபரம் வருமாறு:
1. தியாகச் சுடர் (கவிதை) 1969 2. காலத்தின் கோலங்கள் (கவிதை) 1984 3. இதயமலர் (சிறுவர் பாடல்கள்) 1985 4. மகாகவி இக்பால் (வரலாறு) 1987 5. மலையகத்தின் தொழிலதிபர்(வரலாறு) 1992 6. Blossoms (Collection of Poems) 1984 7. Roses (Poems for School Children) 985
* காலத்தின் கோலங்கள்’ நூல் 1984இல் இலங்கையில் வெளியான சிறந்த கவிதை நூல்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டு யாழ்ப்பாண இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது. ‘இதய மலரில் வெளியான “யூரீலங்கா’ என்ற பாடல் 5ம் தரத்திற்கான ஆசிரியர் வழிகாட்டி நூலில் இடம்பெற்றுள்ளது.
சந்தனத் தோப்பாக இருக்க வேண்டிய சமுதாயத்தைச் சாக்கடையாக்கும் அசிங்கங்கள், அதர்மங்கள் , அலங்கோலங்களைச் சாடுவதுடன், சமூக எழுச்சிக்காக குரல் கொடுக்கும் இக்கவிஞரின் கவிதைகளில் மனிதாபிமானப் பணி புகளை அர்த்தபுஷ் டியுடன் காணமுடியும்.
இவரின் இலக்கியச் சேவையைப் பாராட்டி கிழக்கிழங்கையில் இருந்து கலைமகள் ஹிதாயா ரிஸ்வியை ஆசிரியையாகக் கொண்டு வெளிவரும் தடாகம் இலக்கிய சஞ்சிகை தனது மலையக சிறப்பு மலரில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கெளரவித்தது. இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கிவரும் அதிஉயர் அரசவிருதான ‘கலாபூஷணம்’ விருது 2001ம் ஆண்டில் இவருக்குக் கிடைத்தது.
(108|ഒക്കെ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

அத்துடன் 1984 இல் மலையக இலக்கியப் பேரவை ‘கவியரசு’ என்ற பட்டத்தினையும், 1985 இல் மாத்தளை இலக்கிய வட்டம் ‘கலை மணி’ என்ற பட்டத்தையும் , 1993 இல் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விருது வழங்கும் விழாவில் "நஜ்முஸ்ஸ"ஹற்ரா' (கவிச்சுடர்) பட்டத்தையும், 1993இல் இந்தியா (தமிழ்நாடு) திருக்குர்ஆன் மாநாட்டில் “அருட்கவி என்ற பட்டத்தையும், 1994 இல் இந்து சமய கலாசார அமைச்சு சாகித்தியவிழாவில் ‘தமிழ் ஒளி' என்ற பட்டத்தையும், 1996 இல் மலையககலை கலாசார ஒன்றியம் ரத்னதீபம்’ என்ற பட்டத்தினையும், 1997 மாத்தளை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி மன்றம் ‘திவித்தி பாஷா கவி’ (இருமொழிக்கவிஞன்) என்ற பட்டத்தையும் வழங்கி கெளரவித்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 1993 இல் சென்னை எழும்பூர் கலை இலக்கிய இசை மன்றம் மூலமாகவும், 1993இல் இந்து சமய கலாசார அமைச்சின் பிராந்தியத் தமிழ் விழாவிலும், 1996 இல் மலையக இலக்கியப் பேரவையின் 15வது ஆண்டு நிறைவு விழாவிலும், 2000 இல் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவிலும் விசேட, கெளரவ விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
மலையகம் தந்த முன்னோடிக் கவிஞர் அருள்வாக்கி அப்துல் காதர் அவர்களின் இரத்த உறவினரும், தெல்தொட்டையில் ஓய்வு பெற்ற கிராமத் தலைவருமான மர்ஹ"ம் எம்.எம். அப்துல் காதர் அவர்களின் மூத்த புதல் வி ஜெமீலா கவிஞர் ஹலீம் தீனின் இல்லத்துணைவியாகவும் இலக்கியச் சுனையாகவும் இருந்து வருகின்றார் இவர்களின் இல்லறச் சோலையில் நான்கு மலர்கள் பூத்து மணம் பரப்புகின்றன. மூத்தமகன் பஹற்மி, இளையவன் ஹில்மி, இடைப்பட்டவர்கள் பாத்திமா பஸிலா பாயிஸ், பாத்திமா பரீலா பாரூக்.
இவரின் முகவரி: தாருல் ஹஜர் கண்டி ரோட், கல்ஹின்னை.
urasib dl - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 59
- பதிவு 23 -
SS
எழுத்துத் துறை
கலாபூஷணம்
என்.எஸ்.ஏ. கையூம்
இAங்கை முனர்சிம் விழுந்தாார்கள்,ஊடகவியரிாளர்கள், கனிசிஆர்களிர்வீரத்திரட்டு
(110)
 
 
 
 
 
 
 

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், பதுளை தேர்தல் தொகுதியில், பதுளை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த எழுத்தாளரான நூர் ஸாலிம் அப்துல் கையூம் அவர்கள்; என்.எஸ்.ஏ. கையூம் சாரனாகையூம், நெடுங்கீரன், புஷ்பதாசன், அப்- அல் - கையூம், எஸ்கே ஆகிய பெயர்களில் சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியங்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். பல்வேறு பெயர்களில் இவர் எழுதி வருகின்ற போதிலும் கூட "சாரனாகையூம்' எனும் பெயரே வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானது.
இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, தினபதி, இன்ஷான், எழுச்சிக்குரல், நவமணி, உம்மத், தாரகை, தேசாபிமானி, தொழிலாளி, அபியுக் தன் ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, நிதா - உல் - இஸ்லாம், இஹற்சானியா ஆகிய சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் தீபம், தமிழ், நல்வழி, கோகுலம் , முளப் லிம் முரசு, மணிவிளக்கு முதலிய சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன.
பதுளையில் நூர் ஸாலிம், மர்லியா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1938 - 05 - 23ம் திகதி பிறந்த இவர் ப அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ப' சரஸ்வதி கலவன் பாடசாலை கண்டி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். அக்கால கட்டத்தில் எஸ். எஸ். ஸி. பரீட்சையில் சித்தியெய்திய கையூம் 1943ம் ஆண்டுமுதல் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களிடம் ஆரம்ப கல்வியையும், மெளலவி கே. எம்.ஏ. ஜமால்தின் (பாகவி) அப்ழலுள் உலமா அவர்களிடம் மார்க்கக் கல்வியையும் பெற்றதைப் பாக்கியமாகக் கருதுகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் "மகாகவி பாரதி' எனும் தலைப்பில் 1960 - 12 - 11ம் திகதி "வீரகேசரி ஞாயிறு இதழில் இடம்பெற்றது. இக்கால கட்டத்தில் ‘வீரகேசரியில் 'இஸ்லாமிய உலகம்' பகுதியை நடத்திவந்த அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்கள் இவரது ஆரம்பகால ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்குவித்தமையை என்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றார்.
கையூம் அவர்கள் பீ.எம்.எம்.ஏ. காதருடன் இணைந்து 1964 |மாகம் Gl - கலாபூஷணம் புர்ரியாமீர் Gril)

Page 60
ஆம் ஆண்டில் ‘அல்லாமா இக்பால்’ ஞாபகர்த்த மலரொன்றை வெளியிட்டார். பெறுமதி மிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இது போன்ற ‘இக்பால் மலர்’ ஒன்றை எவரும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1974 ஆம் ஆண்டு, சிறுவர்களுக்கென ஒரு பத்திரிகையை, சிறுவர் பாரதி' என்னும் பெயரில் நடத்தி வந்தார். ஊவா மாகாணத்தி லிருந்து வெளிவந்த முதலாவது சிறுவர் பத்திரிகை இதுவாகும். அத்துடன் சிந்தாமணியில் சிறுவர்களுக்காக எழுதிய 'செட்டியார் காத்த புதையல் “சீப்பு வியாபாரி’ ஆகிய கதைகள் சிறுவர்களைக் கவர்ந்த படைப்புகளாகும்.
இதுவரை நூற்றுக் கணக்கான சிறுவர் பாடல்களையும், மரபுக் கவிதை, புதுக் கவிதை என்று ஐந் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும் முப்பத்தைந்து சிறு கதைகளையும் நூற்றுக்கு அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
கலாநிதி பட்டத்திற்காக சிறுவர் நூல்களை ஆய்வு செய்த திரு. வே. தா. கோபால கிருஷ்ணன் எம். ஏ. (பூவண்ணன்) அவர்கள் கையூம் அவர்களின் குழந்தை இலக்கிய நூலையும் ஆய்வுக்குட்படுத்தியிருப்பது கோடிட்டுக்காட்டக் கூடிய ஒரு விடயமாகும்.
சாரனா கையும் 1962 முதல் இன்று வரை
குழந்தை இலக்கியம் 1962 குர்ஆன் - ஹதீஸ் 1962 நபிகள் நாயகம் 962 கவிதை நெஞ்சம் 1971 சிறுவர் பாட்டு 1983 நன்னபி மாலை 1987
என் நினைவில் ஒரு கவிஞர் 1997 ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஊவா மாகாணக் கல்வித் திணைக்களத்திற்காக
சிறுவர் கவிதைகள் 1992 சிறுவர் பாடல் 1992 விஞ்ஞான மேதைகள் 1993
01196Aశఅది முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் லிபரத்திரட்டு

இவைகள் பேசினால் 1993 ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
ஆசிரியராகவும், தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றி ஒய்வுபெற்ற இவர் கடந்த நான்கு தசாப்தங்களாகத் தொடர்ந்தும் தமிழ்ப்பணி புரிந்துப் வருகின்றார். இவரது இலக்கியச் சேவையை கெளரவித்து இலங்கை அரசு 1998ம் ஆண்டில் கலைஞர்களுக்கு வழங்கும் அதி உயர் விருதான ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் மலேசியாவில் டாக்டர் பட்டர்வர் ஜெய்னுத்தீன் தலைமையில் செயற்பட்டுவரும் ‘கவிதை மாலை இயக்கம் 1994ம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் கவிஞர்களை ‘இலக்கிய மாமணி’ பட்டம் வழங்கி கெளரவித்தது.
அம்மூவருள் கையூம் அவர்களும் ஒருவராவார். (அடுத்த இருவரும் மர்ஹ"ம்களான எம். ஸி.எம். ஸ"பைர், அ. ஸ. அப்துஸ்ஸமது ஆகியோராவர்)
இவற்றுடன் பின்வரும் பட்டங்களும், விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.
A ‘குழந்தை கவிஞர (1974இல் கீழக்கரை இஸ்லாமிய இலக்கியக்
கழகம் வழங்கியது)
A ‘இலக்கியச் சுடர (1989இல் இந்து கலாசார அமைச்சு வழங்கியது)
Z\ ' aociuDar' (1991 இல் ஊவா மாகாண இந்துக்கலாசார
அமைச்சு வழங்கியது)
A ‘நஜ்முஸ்ஸs"ஆருரா - ‘தலித்தாரகை” (1992இல் முஸ்லிம் சமய,
கலாசார விவகார அமைச்சு வழங்கியது)
A 'நூருள் தலிதா' (2001இல் அஹதியா பாடசாலை வழங்கியது)
பரபரப்பற்ற ஓர் எழுத்தாளரான கையூம் இஸ்லாமிய நெறிமுறை
நின்று இலக்கியங்கள் படைத்து வருகின்றார். இலங்கையில் விரல் விட்டெண்ணக் கூடிய குழந்தைக் கவிஞர்களுள் இவர் முதன்மையானவர்
பாகம் on - கலாபூஷணம் புண்ணியாமீண்

Page 61
என்றால் அது மிகையாகாது. இவர் என், ஜருனாவின் அன்புக் கணவரும், எம். அப்துல் காதர், சித்தி ரிஸானா, றைஹானா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரது முகவரி: ‘ஐயூப் இல்லம்'
2ே 3 லோவர் வீதி
[CT19]ཞོམ་ཎanག་ முகிப்சீம் Tழுந்தTTர்கள்,ஊடகவியtாார்கள், கணிதர்களிர்விபரந்திரட்டு

() பதிவு 24
எழுத்துத் துறை
எஸ்.எம். ஜவுடர் ノ
பாகம் - கலாபூஷணம் புர்னியாமிசர்

Page 62
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், கண்டி தேர்தல் தொகுதியில் கங்கவட்டகோரளை கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த சரிப்தீன் முஹம்மத் ஜவுபர் அவர்கள், எஸ். எம். ஜவுபர் எனும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதிவரும் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
கண்டி மாநகர் தமிழுக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை, அறிஞர் களைத் தந்துள்ளது. அந்த வரிசையில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கியத்துறையில் தனது நாமத்தைப் பதித்துவரும் எஸ்.எம். ஜவுபர் அவர்கள் 1933-08-11ம் திகதி இம்மண்ணில் ஜனனித்தவர். கண்டி சீ.சீ. பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் 1952ம் ஆண்டில் தினகரன் பத்திரிகை மூலமாக இலக்கிய உலகில் பாதம் பதித்தார்.
1954 களில் கண்டியில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், பகுத்தறிவு இயக்கம், முத்தமிழ் மன்றம் போன்ற அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு சேவையாற்றியவர். அதே ஆண்டு ஏ.எம். முஸ்தபாவுடன் இணைந்து ‘முஸ்லிம் சமுதாயத்தின் கர்ஜனை'என்ற மாதமிரு முறை பத்திரிகையை ஆரம்பித்தார். இப்பத்திரிகையின் இணையாசிரியராகவும் இருந்து வெளியிட்டு வந்தார்.
அன்று செங்கடகலை இஸ்லாமிய சோசலிஷ முன்னணியின் இணைச்செயலாளராகப் பொறுப்பேற்று முற்போக்கான கருத்துகளை முஸ்லிம்கள் மத்தியில் தனது எழுத்தின் மூலமாக வேரூன்றச் செய்தார். கண்டி முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளார். தினகரன், மலைமுரசு, செய்தி, இளம்பிறை ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த 'ஷாஜகான் இலக்கிய இதழ் சர்வதேச ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
கண்டி முஸ்லிம் ஹோட்டல் புத்தகநிலையம் அன்று எத்தனையோ வாசகர்களை உருவாக்கியது. சிந்திக்க வைத்தது. தமிழைத் தமிழாகப் பேச வைத்தது. ஆம், தமிழ்நாட்டின் கலை, இலக்கிய, அரசியல் பத்திரிகை, சஞ்சிகை, நூல்கள் வாசகர்களை ஈர்த்தது. முஸ்லிம்
(1)இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

ஹோட்டல் சரித்திரம் படைத்த ஒரு நூல் நிலையமாகும். அப்புத்தக நிலையம் தமிழ் இலக்கிய, சமய நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டது. புரட்சிக்கமாலின் கவிதைகளைத் தொகுத்து ‘புரட்சிக்கமால் கவிதைகள் என்ற நூல் வெளிவருவதற்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவர் ஜவுபர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களைத் தொகுத்து 1965ம் ஆண்டு ஜூலை மாதம் ஜவுபர் அவர்கள் ‘உரைநடை” நூலொன்றை வெளியிட்டார்.இந்நூல் இந்தியாவில் ரஹற்மத் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.
இந்நூல் பற்றி 1965 - 07 - 25ம் திகதி தினகரன்’ பத்திரிகை பின் வருமாறு குறிப்பிட்டிருந்தது ‘’. பாடசாலைகளிலுள்ள வாசிகசாலைகளில் இத்தகைய வெளியீடுகளை வைப்பது கொண்டும் இதனை ஓர் உப பாடப் புத்தகமாக முஸ்லிம் சிறார்களுக்குப் படிப்பிப்பது கொண்டும் இளைஞர்களிடையே நபி பெருமானாரின் வாழ்க்கை முன்மாதிரியைப் பதிய வைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.” இந்நூல் பற்றி 'நிலா’ பத்திரிகை 1965 - 08 - 15ம் திகதி இதழில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. ‘.’அருட்கொடை என்ற நபிகள் நாயகத்தினது வரலாறு, வாழ்க்கை, சுவை சம்பவங்கள் அத்தனையையும் 'கலைக் களஞ்சியம்’ போல் திரட்டித் தரும் ஓர் அரிய நூல். அச்சுப் பதிவு தமிழகத் தரத்தையும், அடங்கியுள்ள விஷயங்கள் பல நூற்றுக்கணக்கான நூல்களையும் அடியொட்டியதாக இருப்பதால் முஸ்லிம் கல்விக் கூடங்களுக்கு பலமாக சிபாரிசு செய்கிறோம்.”
இந் நூலை இளம் பிறை சஞ்சிகை (தமிழகம்) 1965 மீலாத்விஷேட மலரில் நூலின் சில பகுதிகளை மறுபிரசுரம் செய்தமை குறிப்பிடத் தக்க விடயமாகும் . புதிய தலைமுறையினரும் இந்நூலைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நூலின் சில பகுதிகளை வித்துவான் எம். ஏ. றஹற்மான் அவர்கள் ‘பா நடை”யில் எழுதி நவமணி பபத்திரிகையில் அண்மையில் மறு பிரசுரம் செய்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
usab on - கலாபூஷணம் புண்ணியாமீனர்

Page 63
"ரஹற்மத்துன்லில் ஆலமீன்' நபிபெருமானார் (ஸல்)
அவர்களின் தூய வாழ்க்கை வரலாறு, 'இஸ்லாமிய வரலாற்றில் பொன்னேடுகள்", "இஸ்லாமிய பெரியார்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு”, "மரணத்தின் மடியில் மகான்கள்' "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் சஹாபாப் பெருமக்கள் வரை', "இஸ்லாமிய பெரியோர்களின் மரணத்தின் போது நடந்த சம்பவங்கள்", "இலங்கை முஸ்லிம்களின் நெஞ்சில் நிறைந்தவர்கள்", 'அன்று முதல் இன்றுவரை இலங்கை முளப்லிம்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள முஸ்லிம் தலைவர்கள், எழுத்தாளர்களின் தொகுப்பு'
ஆகிய நூல்களை கையெழுத்துப் பிரதிகளாகத் தயாரித்து வைத்துள்ளார். இவற்றை வெளியிடுவதே எனது இலட்சியம்' என்று கூறிவரும் ஜவுபரின் இலட்சியம் வெற்றி பெறப் பிரார்த்திப்போம்.
இவரின் இலக்கியச் சேவையை கெளரவித்து 1999 -12 - 05 இல் மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கெளரவிப்பு விழா நடைபெற்றபோது மத்திய மாகாண ஆளுனர் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்டென்லி திலக்கரத்தினாவினால் இலக்கியம், சமயம், தத்துவம் ஆகியவற்றிற்காக 'கலைச் சுடர்' பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 2001 - 10 - 28ம்திகதி மலைய கலை, கலாசார சங்கம் "ரத்தினதீபம்’ விருது வழங்கி கெளரவித்தது.
சித்தி அனிஸாவின் அன்புக் கணவரான இவர் ஆசைக்கு ஒரு மகள் பாத்திமா ரியாசாவினதும் ஆஸ்திக்கு ஒரு மகன் அனஸினதும் அன்புத்தந்தையாவார்.
இவரின் முகவரி
289 விஹாரலேன், முல்கம்பளை, கண்டி,
(19இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், க*ைநர்களிர்விமரத்திரட்டு

ஏ.எல். எம். சத்தார்.
Lu Talib ollı — கலாபூஷணம் புர்னியாமினர்

Page 64
மேல் மாகாணம், களுத்துறை மாவட்டம், பாணந்துறை தேர்தல் தொகுதியில் ‘சரிக்கமுல்லை’ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் லத்தீப் முகம்மது சத்தார் அவர்கள்; ஏ.எல்.எம். சத்தார், பாணந்துறை சத்தார், அல் அஸ்லம், பாணந்துறைஞானி, முல்லைப்பாணன், பரியாரி, ஈழமித்திரன் போன்ற பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் உருவகக்கதைகள், நகைச்சுவைக்கதைகள் வரலாற்றுக்கதைகள், சிறுவர் தொடர் கதைகள் போன்றவற்றை எழுதிவரும எழுத்தாளரும் , ஊடகவியலாளரும் ஆவார்.
1951- பெப்ரவரி மாதம் 14ம் திகதி அப்துல் லத்தீப் தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த சத்தார் பாணந்துறை களு/ ஜீலான் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். கல்லூரியில் கற்கும் காலத்திலே இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இவரின் முதலாவது கவிதை 1969ம் ஆண்டு ‘தினபதி பத்திரிகையில் ‘தினபதியாம்' எனும் தலைப்பில் இடம் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 50க்கு மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கடடுரைகளையும், பல சிறுகதைகளையும், உருவகக்கதைகளையும், இவர் எழுதியுள்ளார். “முல்லை நாட்டு இளவரசன்’ எனும் தலைப்பில் சுமார் 26 வாரங்கள் ‘நவமணி'யில் தொடராக இடம் பெற்ற சிறுவர் தொடர் நவீனம் அமோக வரவேற்பினைப் பெற்றது. தற்போது ‘நான் கண்ட பேய்கள்’ எனும் தலைப்பில் இவரது கட்டுரைத் தொடரொன்று ‘நவமணியில் இடம் பெற்று வருகின்றது.
ஒரு படைப்பிலக்கியவாதி என்ற அடிப்படையில் சத்தாரின் படைப்புகள் தினபதி, சிந்தாமணி, தினகரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், அல்ஹஸனாத், உதயம், எழுச்சிக்குரல், அல்-அஸ்லம், விழிப்பு ஆகிய சிற்றேடுகளிலும் இடம்பெற்றுள்ளன.
இவர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 'அல்-அஸ்லம்’ எனும் கையெழுத்துப் பதிப்பு சஞ்சிகையொன்றினை சுமார் இரண்டரையாண்டுகளாக வெளியிட்டுள்ளார். இதன் 30 இதழ்கள் இவரை ஆசிரியராகக் கொண்டே வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பெரும்பாலான கட்டுரைகள் சமூக சீர்திருத்தத்தை (1206ato முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

மையமாகக் கொண்டதாகவே அமைந்திருக்கும். சமூகப்பிரச்சினைகளை இனங்கண்டு சமூக எழுச்சிக்காக தனது எழுத்தினைப் பயன்படுத்துகின்ற பாங்கு வரவேற்கத்தக்கது.
இலக்கியத்துறையைப் போலவே ஊடகத்துறையிலும் இவரது பங்களிப்பு மிகைத்துக் காணப்படுகின்றது. 1977ம் ஆண்டில் ‘அல் ஹஸனாத் சஞ்சிகையில் செய்தியாளராக அறிமுகமான இவர் தற்போது நவமணி பத்திரிகையில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். நவமணி தேசிய பத்திரிகையில் கருத்துக் களம், கவிதாமணி, சிறுகதைப் பகுதி, வைத்திய பகுதி போன்றவற்றின் தயாரிப்பாளராகவும் இவர் செயலாற்றியுள்ளார். அத்துடன் 1985 - 86 காலப்பகுதியில் 'உதயம் பத்திரிகையில் வளரும் பயிர்’ என்ற சிறுவர் பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். முழு நேரத் தொழிலாக பத்திரிகைத்துறையைத் தேர்நதெடுத்துள்ள இவர் நானுாற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புகைப்படக்கலையிலும் இவருக்கு அதிக ஈடுபாடுண்டு. இவரால் பிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கிலான புகைப்படங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அரசியல் இலக்கியம், இயற்கை என்ற பல்வேறுபட்ட துறைசார்ந்த புகைப்படங்களை இவர் பிடித்துள்ளார். இயற்கையோடு சம்பந்தப்பட்ட வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு அதிகமுண்டு.
“ஒரு கலைஞன் இயற்கையை நேசிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்கும் போதுதான் அவனது கற்பனைத் திறன் பல கோணங்களிலும் வியாபகமடையும்' என்ற கோட்பாட்டுக்கமைய சத்தார் இலக்கியத்துறைக்கு மேலதிகமாக சிற்பக்கலையிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் கலைஞராவார். கழிவுப் பொருட்களையும், மரக்குற்றிகள், மரவேர்கள், தென்னஞ்சிரட்டைகள். இது போன்ற பொருட்களைக் கொண்டு பல்வேறுவகைப்பட்ட சிற்பங்களைத் தயாரிப்பதிலும் இவர் ஈடுபாடு காட்டிவருகின்றார்.
இவருடைய இலக்கிய, ஊடகத்துறை சேவையை கெளரவித்து பாணந்துறை சமுதாய மறுமலர்ச்சி இயக்கம் சொல்லின் செல்வன்'
பாகம் O - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 65
எனும் பட்டத்தையும், மலையக கலை, கலாசார ஒன்றியம் "ரத்னதிப' விருதையும் வழங்கி கெளரவித்துள்ளது. அத்துடன் "தமிழ் அணி நடையாளர்' எனும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.
தனது எழுத்துலக மற்றும் ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்ற ரீதியில் மாஸ்டர் சிவலிங்கம், மர்ஹ"ம் ஏ.எச். அபூஉபைதா (முன்னாள் "அல் ஹஸனாத்” ஆசிரியர்) ஜனாப்களான மானாமக்கின், வித்துவான் ரஹற்மான், நவமணி தேசிய இதழின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அளப்ஹர் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் அஸ்லம், சம்சுல் சபீனா, சப்ராளப், பாத்திமா பஸ்லா, சப்ரான், சப்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்.
இவரின் முகவரி:
91, காலி வீதி ஹேனமுல்லை, பாணந்துறை.
|இலங்கை ஓம்சீம் எழுந்தாளர்கள்,டேகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு
 

(O - பதிவு 26 -
ஊடகத் துறை
ஜே.எம். ஹாபீஸ் O ン
பாகம் B - கலாபூஷணம் புர்ரீயாமீர்

Page 66
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் “லிமாகஹதெனிய’ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மது ஹாபீஸ் அவர்கள்; ஜே. எம். ஹாபீஸ் , மடவளை ஹாபீஸ், மடவளையார் ஹாபீஸ் ஆகிய பெயர்களில் கவிதை, கட்டுரை போன்ற துறைகளில் ஆர்வம் காட் டிவரும் எழுத்தாளரும் , ஊடகவியலாளருமாவார்.
1951 - 06 - 26ம் திகதி பிறந்த ஹாபீஸ் மடவளை மதீனா தேசிய பாடசாலை, கண்டி புனித சில் வெஸ் டர்ஸ் கல்லூரி, அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், மகரகம தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக் கல் விக்கு ஆரம்பகாலம் முதல் போதனாசிரியராக இருந்து வந்த இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் தொடர் கல்விப் பாடநெறி,கற்றல் வழிகாட்டிச் செய்திட்டம் , மேலதிக மொழி விருத்திப் பாடநெறி என்பவற்றிலும் போதனாசிரியராக இருந்து 1999ம் ஆண்டுமுதல் தொலைக் கல்வி ஆசிரியர் பயிற்சி பாடநெறிக்கான சிரேஷ்ட போதனாசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரது, முதலாவது ஆக்கம் ‘பணிசெய்வோம்’ எனும் தலைப்பில், ‘விஞ்ஞானச்சுடர்' எனும் சஞ்சிகையில் 1975ம் ஆண்டில் இடம்பெற்றது. அதிலிருந்து தினகரன், வீரகேசரி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், கமலம், விஞ்ஞானச்சுடர், தேன் துளி ஆகிய சஞ்சிகைகளிலும் சுமார் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட கவிதைகளையும், ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
2002 ஆகஸ்ட் மாதம் இவரது முதலாவது நூல் ‘கல்வியியற் செயற்பாடுகள்’ (அனுபவத்தொகுப்பு) எனும் பெயரில் வெளிவந்தது. siggloit Gufu Lifggs.T66suT6607 World Wide Fund (WWF UK) நிறுவனத்தின் ODA செயற்றிட்டத்தின் கீழ் வெளியிடப்படும் ‘தேன்துளி சஞ்சிகையின் மொழி பெயர்ப்பு ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார். அத்துடன் சுற்றாடல் பற்றி சன சமூகத்திற்கு அறிவுறுத்துவோம்,
G12) sa na முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

சுற்றாடலைப் பாதுகாக்க ஆக்கக்கலை, பாடசாலைகளினுடாக சற்றாடலைப் பாதுகாக்க ஆசிரியர் துணையேடு” போன்ற நூலாக்கக் குழுக்களிலும் அங்கத்தவராக இருந்துள்ளார்.
எழுத்துத்துறைக்குப் புறம்பாக இவர் பத்திரிகைத் துறையிலும் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றார். 1989 பெப்ரவரி 01ம் திகதி முதல் தினபதி, சிந்தாமணி பிரதேச நிருபராகக் கடமையேற்ற இவர் பின்பு 1990 அக்டோபர் முதல் லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் அக்குறணை குறுாப் நிருபராக நியமனம் பெற்றார். அத்துடன் புகைப்படக்கலைஞராகவும் இவர் செயலாற்றி வருகின்றார்.
தனது கவிதைத்துறை ஈடுபாட்டுக்கு காரணமாக இருந்த கவிஞர் ஏ.ஆர்.ஏ. ஹஸிர் அவர்களையும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த ஜனாப் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர்; இஸட். ஏ. எஸ். சரினாவின் அன்புக் கணவராவார். இவர் ஆஸ்திக்கு ஒரு மகன் ஆஸாத் அஹற்மத்தினதும், ஆசைக்கு ஒரு மகள் பாத்திமா சகியாவினதும் தந்தையுமாவார்.
இவரின் முகவரி 25/2 தெல்தெனிய ரோட், மடவளை பஸார்
பாகம் O . கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 67
கலைத் துறை
) ஏ.எச்.எம். ஜாபீர்.
029இலங்கை முசிம்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கAைதர்களிர்விபரத்திரட்டு
 
 
 

வடமத்திய மாகாணம், அநுராதபுர மாவட்டம், அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதியில் நொச்சியாகம கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் ஹமீட் முஹமட் ஜாபீர் ஜாபீர் குமார் எனும் பெயரில் கலைத்துறையில் ஈடுபட்டு வந்த அதே நேரத்தில் இலங்கைத் தமிழ் திரையுலக முன்னோடிகளுள் ஒருவராகவும் திகழ்கின்றார்.
இலங்கையில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு 1955 ம் ஆண்டின் பின்பே ஆரம்பமாகியது. இக்காலகட்டங்களில் வெளிவந்த சமுதாயம், தோட்டக்காரி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்த ஒரு நடிகர்தான் "ஜாபீர் அவர்கள்.
1942 04 02ம் திகதி கண்டியில் பிறந்த ஜாபீர் அவர்கள் கண்டி சித்திலெப்பை வித்தியாலயம், அனுராதபுர விவேகானந்தா கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்தே நாடகங்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இவர் றகுமா உம்மாவை திருமணம் முடித்தபின்பு அனுராதபுரம் 'நொச்சியாகமை'யைத் தனது வதிவிடமாக்கிக் கொண்டார். இவர் மும்தாஜ் பேகம், ஜெய்னுல் ஆப்தீன், சரீனாபேகம், முகம்மது ஜூனைதீன், முஹம்மட் ரிஷாட் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்.
இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம் இயக்குனர் ஹென்ரி சந்திரவன்ஸ அவர்களின் தயாரிப்பாகும். 16 மி. மீட்டர் தமிழ் திரைப்படமான இது சிங்கள மொழியில் "சமாஜய' எனும் பெயரில் தயாரிக்கப்பட்டது. தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்புக்கிட்டியது.
பி.எஸ். கிருஷ்ணகுமார் இயக்கிய "தோட்டக்காரி' எனும் திரைப்படமே இலங்கையில் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் 35 மி. மீட்டர் திரைப்படமாகும். இத்திரைப்படத்திலும் இவர் நடித்தார். அத்துடன் இலங்கையில் தமிழில் தயாரிக்கப்பட்ட மீனவப்பெண், சுமதி எங்கே ஆகிய திரைப்படங்கிலும் இவர் நடித்துள்ளார்.
ஆரம்பம் முதல் "வில்லன் பாத்திரங்களிலே நடித்து வந்த ஜாபீருக்கு 1979ம் ஆண்டில் ஹென்றி சந்திரவன்ஸ் தயாரித்த கீதாஞ்சலி எனும் தமிழ்த் திரைப்பட்த்தில் பிரதான பாத்திரம் வழங்கப்பட்டது.
)l - கலாபூஷணம் புர்னியாமீர் ]G12ם liםuT

Page 68
இருப்பினும் இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய ஹென்றி சந்திரவனி ஸ அவர்கள் படம் முடிவடைவதற்கு முனி பாக காலமாகிவிட்டமையினால் இவரின் கைக்கெட்டிய சந்தர்ப்பம் நழுவிவிட்டது.
வில்லன் பாத்திரங்களில் நடித்தாலும் இவரின் நடிப்புத்திறன் சிங்களத் திரையுலகிலும் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் சமாஜய, அனுலா, வனகத்தகெல்ல, சுமேதா ஆகிய சிங்களத் திரைப்படங்கிலும் இவருக்கு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
தனது கலையுலக வாழக்கைக்கு என்றும் ஒத்தாசையாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்த ஹென்றி சந்திரவன் ஸ, பி.என் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரையும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் 1989ம் ஆண்டில் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற சந்தர்ப்பம் இவரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து குவைட் கட்டார், ஆகிய நாடுகளில் தொழில் புரிந்து தற்போது 15 பேரக் குழந்தைகளுடன் இஸ்லாமிய அடிப்படையிலான வாழ்க்கையில் திளைத்து இருப்பது அல்லாஹற்வின் அருளாகும்.
இவரது முகவரி: “மும்தாஜ் இல்லம்' கடுவெல நொச்சியாகம 50202
(1296Aira முஸ்லீம் எழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கiைநர்களிர்வீபரந்திரட்டு

Ο - பதிவு 28 -
எழுத்துத் துறை
O ஏஎன் நஜிமுத்தின் )
ராகம் 91 - கலாபூஷணம் புர்ரீராமீர் G2)

Page 69
மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டம், மாத்தளை தேர்தல் தொகுதியில், "ஒயபஹல’ கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அஹமது முஹம்மது நஜிமுதீன் அவர்கள்; ஏ.எம். நஜிமுதீன் எனும் பெயரில் எழுதிவரும் எழுத்தாளராவார். ஆரம்ப காலங்களில் “நஞ்சு' எனும் புனைப்பெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், மல்லிகை, வெற்றி போன்ற சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் “பொம்மை சஞ்சிகையிலும் இடம்பெற்றுள்ளன. இதுவரை நான்கு வரலாற்று ஆய்வு நூல்களை இவர் எழுதிவெளியிட்டுள்ளார்.
1953 - 11 - 23ம் நாள் பிறந்த நஜிமுதீன் மாத்தளை அரசினர் ஆண்கள் பாடசாலை, மாத்தளை சாஹிராக் கல்லூரி, மாத்தளை சென்தோமஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் தற்போது மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிமன்ற முதலியாராகக் கடமையாற்றி வருகின்றார்.
1972ம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகையில் இவரது முதலாவது சிறுகதை இடம்பெற்றது. அதிலிருந்து பல சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். எஸ்.பி. பாலசுப்பரமணியத்தின் பாடல்கள் பற்றி இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இந்தியாவிலிருந்து வெளிவரும் “பொம்மை சினிமா மாத இதழில் தொடராக இடம்பெற்றுள்ளளன. அத்துடன் ஆரம்பகாலத்தில் விஞ்ஞானக்கதைகள் புனைவதிலும், விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் இவர் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இவ்வாறாக படைப்பிலக்கியவாதியாக இலக்கியத்துறையில் பாதம் பதித்த நஜிமுதீன் ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பதுகளின் இறுதிப் பகுதியிலிருந்து முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக, குறிப்பாக மத்திய இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக ஆராயத்தலைப்பட்டார்.
இன்றைய காலகட்டத்தின் தேவையும் அதுதான்.
சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த போதிலும் கூட இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் பூரணமான முறையில் இன்னும் மேற்கொள்ளப்படாமலிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
013DEAశతుది முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட அடிப்படையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் பூர்வீகம் பற்றிய ஆய்வுகள் இன்றைய காலசூழ்நிலையில் மிகமிக அவசியமானதும், அவசரமானதுமான தேவையாகும். இருப்பினும் எமது அறிஞர்கள், புத்திஜீவிகள் கூட இதுவிடயத்தில் இன்னும் திட்டமிட்ட அடிப்படையிலான ஆய்வுப்பணிகளை மேற் கொள்ளாமலிருப்பது; எதிர்காலத்தில் இன்னும் பாராதுாரமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியதாக அமையலாம்.
பூர்வீகங்கள் மாத்திரமல்ல, சமீபத்தைய முஸ்லிம்களின் நிலைமைகள் கூட ஆராயப்படாமலிருக்கின்றன. முஸ்லிம்கள் இலங்கையில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களுடனும் ஐக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். அரசியல், சமூகம், பொருளாதாரம், கட்டிடக்கலை, கலை, இலக்கியம் என்ற அடிப்படையில் பல்வேறுபட்ட துறைகளில் சாதனைகளைப் புரிந்துள்ளனர். மறுபுறமாக துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் உட்பட்டுள்ளனர். இவைகள் கூட இன்னும் சரியான முறையில் எதிர்கால சந்ததியினருக்கு இனங்கண்டு கொள்ளக் கூடியவகையில் ஆவணப்படுத்தப்படாமலே இருக்கின்றன.
எனவே முஸ்லிம் புத்திஜீவிகள் நாளைய சந்ததியினருக்குப் பொறுப்புச் சொல்லக் கூடியவர்களே என்பதை இலகுவாக மறுத்து விட முடியாது. கண்டி ராஜதானியுடன் முஸ்லிம்களின் வரலாற்று இணைப்புக்கள் பற்றி பல்வேறுபட்ட ஆதாரங்களைத் தேடுவதிலும், ஆராய்வதிலும் நஜிமுதீன் அவர்கள் கடந்த இரண்டு தசாப்த காலத்தைச் செலவளித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். கிட்டத் தட்ட கடந்த மூன்று நூற்றாண்டு காலகட்டத்தில் இத்தகைய தொடர்புகளையும், உறவுகளையும் நிரூபிக்கத்தக்க வகையில் "சன்னஸ’ என்றழைக்கப்படும் ஒலைப்பத்திரங்களையும், காணி உறுதிப்பத்திரங்கள், நீதிமன்ற வழக்குத்தீர்புகள் போன்ற பல்வேறுபட்ட சான்றுப்பிரதிகள் இவர் வசமுண்டு. இத்தகைய ஆதாரங்களை மையமாகக் கொண்டு இவர் பின்வரும் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப்
பெயர்கள் - 1998 2. முஸ்லிம்களும் கலவரச் ஆழலும் - 2002
υιταδώ οι - கலாபூஷணம் புணர்னியாமீன்

Page 70
அத்துடன் 2002 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மீலாத் விழா வின் போது மு எம் விமம் சமய பணி பாட்டலுவலம் களி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட "பாத்ததும்பறை முஸ்லிம்கள்’ எனும் 278 பக்கங்களைக் கொண்ட வரலாற்று நூலில் மடவளை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி 200 பக்கங்களைக் கொண்ட ஆய்வினை எழுதியிருந்தார். இவ்வாய்வினை பின்வரும் தலைப்புகளில் அவர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1. மடவளை முஸ்லிம்களும், குடிப்பரம்பலும்,
2. மடவளையும், கண்டி இராச்சியமும்,
3. மடவளை முஸ்லிம்களின் முதாதையர்கள்.
4. தொல்பொருள் பெருமை மிக்க மடவளைக் கற்பாறைகள்,
'கண்டி இராச்சிய காலத்தில் மலைநாட்டில் முளப்லிம்கள் பரவலாக வாழ்ந்துவந்துள்ளனர். இருப்பினும் முஸ்லிம்களின் குடி யேற்றங்கள் பல காலத்தால் அழிந்து போயுள்ளன. இத்தகைய விரிவான ஆய்வு நூல் ஒன்று "மலைநாட்டு முளப்லிம்களின் அழிந்து போன குடியேற்றங்கள் எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. அத்துடன் கசாவத்தை ஆலிம் புலவர் பற்றிய ஆய்வு நூலொன்றினையும் 2000 நவம்பர் மாதம் வெளியிட்டுள்ளார்.
"பேராசிரியர்களான தென்னகோன் விமலாநந்த, H.A.F. அபேவர்தன போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் வரலாற்று ஆய்வுகள் என்னைக் கவர்ந்தன. இவர்களின் ஆய்வுகளே முஸ்லிம்களது வரலாறு பற்றிய ஆய்வுகள், முஸ்லிம்களின் பார்வையில் ஆய்வு செய்யப்படல் வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது” என்று கூறும் நஜிமுத்தின் தனது பணிகளுக்கு ஒத்தாசையாக இருந்து வரும் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், சட்டத்தரணி எஸ்.எம். ஹனிபா ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
*ரத்னதீபம்' சாமறி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கெளர விக்கப்பட்டுள்ள இவர் மிஸ்ரியா நஜிமுதீனின் அன்புக் கணவராவார். நளப்மினா, நாஸிக் அஹமட், பாத்திமா ஹப்ஸா ஆயிஷா ஹானி ஆகிய நால்வரும் இத்தம்பதியினரின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி 1 இல 77, டோலை வீதி,
மாத்தளை.
(8) இலங்கை முளசிம் விழுந்தாளர்கள்,டேகவியtாளர்கள், கவிஞர்களிர்விபரத்திரட்டு

Ο - பதிவு 29 -
எழுத்துத் துறை
கலாபூஸ்டினம்
எஸ்.எல்.ஏ. லத்தீப் ノ ノ
பாகம் D1 - கலாபூஷணம் புணர்னியாமீர் O)

Page 71
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் மருதமுனை - 5ம் வட்டாரம் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சாலிகு லெப்பை அப்துல் லத்தீப் அவர்கள்; குட்டிப்புலவன், எஸ்.எல்.ஏ. லத்தீப், இசைவாணர், ஈழபாரதி, மருதூர்வாணர் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளராவார். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
1939 -08 - 24ம் திகதி சாலிகு லெப்பே, சரிபா உம்மா தம்பதிகளின் 3வது புதல்வராகப் பிறந்த இவர் மருதமுனை அல் மனார் தேசிய கல்லூரியின் பழைய மாணவராவார். நெசவு, கைத்தறி போன்ற தொழில் துறையில் ஈடுபட்டு தற்போது ஒய்வாக இருக்கும் லத்தீப் அவர்கள் 1951ம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகை (பாலர்பகுதி) மூலமாக எழுத்துலகில் பாதம் பதித்தார். இவரது முதல் கவிதையின் தலைப்பு ‘என்தம்பி ஆகும். அன்றிலிருந்து இதுவரை சுமார் 150 சிறுகதைகளையும், 250 கவிதைகளையும், 500க்கு மேற்பட்ட கட்டு ரைகளையும், பல குறுநாவல்களையும் எழுதியுள்ள இவர் தேன்மதி, சமாதானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார்.
அரைநுாற் றாணி டுகாலமாக தொடர்ந்தும் இலக் கியம் படைத்துவரும் எஸ். எல். ஏ. லத்தீப் அவர்களினால் பின்வரும் நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
நபி ஜனனப்பா (கவிதை) 1953 முஸ்லிம் முரசொலி இசை (பாடல்கள்) 1959 இசைவிருந்து (பாடல்கள்) 1961 முதலிரவு (சிறுகதைத்தொகுதி) 1971 பெருநாள் பரிசு (குறுநாவல்) 1970 ஆறாவளி (குறுநாவல்) 1979 மத்திய கிழக்கிலே. (சிறுகதைத்தொகுதி) 1997
இவரது பெருநாள் பரிசு எனும் குறுநாவல் அமெரிக்காவில் லைப்ரறி ஒப் வொஷிங்டன் நூலகத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சான்றி தழும், பரிசும் வழங்கப்பட்டதைத் தன் வாழ்வில் உயர்வாகக் கருதுகி ன்றார்.
0130ཉེན་ཐ༡༧ முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

1988ம் ஆண்டு முதல் ‘சமாதானம்’ எனும் சஞ்சிகையைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றார். ‘‘ எல்லா இனங்களும் இணைந்தன்பு கொள்வோம்” என்ற அடிப்படையைக் கொண்டு ‘சமாதானம் வெளிவருவது இனங்களுக்கிடையே புரிந்துணர்வுப் பாலமாக அமைகின்றது எனக் குறிப்பிடலாம்.
1954-ம் ஆண்டிலிருந்து பல இலக்கியப் போட்டிகளில் கலந்து எண்ணற்ற பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண் டுள்ள இவர் தனது சஞ்சிகைகள் மூலமாக பல போட்டிகளை நடத்தி வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பல பரிசில்களை வழங்கியுள்ளார்.
இலக்கியத்துக்குப் புறம்பாக இவரை ஒரு சிறந்த கலைஞராகவும் நோக்கலாம். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே இவர் நாடகங்களில் நடிக்கலானார். 1944இல் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களால் எழுதப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட "அல்பாதுஷா நாடகத்தில் குழந்தையாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து ‘அக்பர் சக்ரவர்த்தி, மதுரைவிரன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார். 'அறுபது லட்சம் கொலைகள் நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அன்றைய உள்ளுராட்சி அமைச்சர் மு. திருச்செல்வம் இவரை கெளரவித்துள்ளார்.
“பல மேடைகளில் நாட்டுக்கும்மி, பாட்டுக் கச்சேரிகள் செய்து எனது கலையுலக வாழ்வில் உலாவந்தேன். அந்தக் காலத்தை நினைக்கும் போது இன்றும் இதயத்துக்குள் இதமான குளிர் காற்று வீசுவதை உணர்கின்றேன்.” என்று கூறும் மருதூர்வாணர் லத்தீப் அவர்கள் டோல், பஜனை, ஊஞ்சல் பாட்டு, பொல்லடி விருத்தம், நாட்டுக்குத்து போன்ற துறைகளிலும் அதிக ஈடுபாடு காட்டி சேவை யாற்றியுள்ளார்.
உமர் ஷாப்பாகவதர், ஞானரத்தினம் போன்றவர்கள் வயலின், தப்லா, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற வர்கள். இவர்களின் சீடனாக இருந்து பல கச்சேரிகளைச் செய்துள்ளார். அத்துடன் 'யூரீ எதிர்ப்புப் போராட்டத்தின் போது மேடைகள் தோறும் பாட்டுக் கச்சேரி மூலம் தமிழ் முழக்கம் செய்துள்ளார். திருகோணமலை முற்ற வெளியில் பரமேஸ், கோணேஸ் ,முத்துலிங்கம் ஆகியோருடனும், உப்புவெளியில் லத்தீப்பாய் கோஷ்டியுடனும், மாவனெல்லையில் எச்.
υιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 72
ஆர் ஜோதிபாலாவுடனும் பாடிப் பாராட்டும் பெற்றுள்ளார். அத்துடன் கதிர்காமத்தில் மொஹிதீன் பேக் தாவுத்ஷா, நிஷாம்ஹீம், பதுறுத்தின் பாவா ஆகியோருடனும் பாட்டுக்கச்சேரிகள் செய்துள்ளார்.
அத்துடன் வானொலியிலும் கணிசமான பங்களிப்பினை வழங்கி யுள்ளார்.
இவரின் கலைச் சேவையைக் கெளரவித்து 1960-ல புலவர்மணி.ஆ.மு. சரிபுத்தீன் அவர்கள் ‘இசைவாணர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளார். அத்துடன் "ஈழபராதி' எனும் பட்டம் பெற்ற இவரை ரீலங்கா அரசு 2001-ம் ஆண்டில் கலைஞர்களுக்கு வழங்கும் அதி உயர்விருதான ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
சிறுகதை, கவிதை, குறுநாவல், கட்டுரை, சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருவதைப் போலவே, நாடகம், இசை போன்ற கலைத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கும் எஸ்.எல்.ஏ. லத்திப் அவர்கள் றகுமத்துநாச்சி அவர்களின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு ஐயூப்கான், ஸாஹிர்ஹ"சைன், முஜிபுர்ரஹற் மான், மும்தாஜ், கடாபியா, விளப் வானா, வாரிதா, கொமெய்னியா, அஷ்ராபானு ஆகிய ஒன்பது செல்வங்கள் உளர்.
இவரின் முகவரி : 20 ஏ அல்ஹம்றா வீதி, மருதமுனை - 05.
இலங்கை முஸ்லீழ் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கண்டிதர்களிர்விபரத்திரட்டு
 

Ο - பதிவு 30 -
கலைத் துறை
t
காபூரணம்
எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார்
ノ
trffmü; C1 -
கலாபூஷணம் புர்ரீயாமினர்

Page 73
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதியில் கற்பிட்டி மண்டலக்குடா கிராமசேவகர் பிரிவில் வாழ்ந்த சேகு இஸ்மாயில் மரைக்கார் அப்துல் ஜப்பார் அவர்கள்; எஸ் ஐ.எம்.ஏ. ஜப்பார், வெற்றிவேந்தன், வல்லவன் ஆகிய பெயர்களில் எழுதியும், நடித்தும் வந்த ஒரு பிரபல எழுத்தாளரும், நாடக நடிகரும் , வசனகர்த்தாவும், பாடலாசிரியரும், கவிஞருமாவார்.
1934 - 03 - 22ம் திகதி "கற்பிட்டிய' எனும் கிராமத்தில் சேகு இனப்மாயில் மரைக்கார் தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த அப்துல் ஜப்பார் புத்தளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, சிலாபம் சென் மேரிஸ் கல்லூரி, கற்பிட்டிய அல்-அக்ஸா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரது ஆரம்பகால ஈடுபாடுகளும், சாதனைகளும் கலைத்துறையுடன் தொடர்புடையவை. இவர் ஒரு தலைசிறந்த முன்னோடி நாடகக் கலைஞராகத் திகழ்ந்தார். 1947ம் ஆண்டில் இவர் கற்கும் காலத்தில் பாடசாலை நிதிக்காக ஆசிரியர்களால் நெறிப்படுத்தப்பட்ட நாடகமொன்றில் முதலில் நடித்தார் ‘நாம் இருவர் எனும் இந்நாடகத்தில் 60வயது நிரம்பிய கிழவன் பாத்திரத்தில் நடித்த போது இவருக்கு வயது 13. இதையடுத்து ஒரு தசாப்தத்தின் பின்னர் கொழும்பில் நாடகத்துறையில் பல்வேறு சாதனைகளை இவர் புரிந்துள்ளார். இவர் கதை, வசனம் எழுதிய முதல் நாடகம் ‘கடமை என்பதாகும். இந்நாடகம் 1958 - 0 - 01 இல் கொழும்பு “லயனல்வெண்ட் அரங்கில் மேடையேற்றப்பட்டது. ‘வெற்றிவேந்தன்' எனும் புனைப்பெயரில் அறிவொளி கலை அரங்கத்துக்காக மரணப் பரிசு, விந்தியத்தின் விளிம்பிலே போன்ற நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி நடித்துள்ளார். திருப்பாலை நாடக மன்றம் தயாரித்தளித்த "சிங்கமுழக்கம்' எனும் நாடகத்துக்கு கதை வசனம் எழுதியதுடன், பாடல்களையும் இயற்றி முக்கிய பாத்திரத்தில் நடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் கற்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் கொழும்பில் மேடை நாடகத்துறையில் 1958ம் ஆண்டுமுதல் சுமார் இரண்டு தசாப்த்தகாலங்களாக கொடிகட்டிப் பறந்தவர். இவரது நாடகங்கள் கொழும்பு லயனல் வெண்ட் அரங்கம், லோறன்ஸ் கல்லூரி மண்டபம், பொரள்ளை YM.B.A மண்டபம், இராமகிருஷ்ண மிஷன் மண்டபம், பம்பலப்பிட்டிய சரஸ்வதி மண்டபம், கொட்டாஞ்சேனை சென் பெனடிக்ட்
a ཤང་རྐianག་ ஆப்ரீம் எழுந்தாAர்கள்,ஊடகவிழ்ாTர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

கல்லூரி மணி டபம் உட்பட பல்வேறு நாடக அரங்குகளில் அரங்கேறியுள்ளன.இவர் சொந்தமாக எழுதித் தயாரித்து, நடித்த சில மேடை நாடகங்களாவன:
மரணப் பரிசு விந்தியத்தின் விளிம்பிலே கறை படிந்த. நீதி தேவன் தீர்ப்பு. மானம் பெரிதென்பன் தமிழன். எழுச்சி வீரன்.
பிற நாடக மன்றங்களுக்காக இவர் கதை வசனமெழுதி நடித்த சில மேடை நாடகங்களாவன:
1. சிங்க முழக்கம - திருப்பாவை மன்றம். 2. தங்கத்தாய் - திருப்பாவை மன்றம். 3. வெற்றி யாருக்கு ஜெமில் மன்றம்.
4, விந்திய வீரன் - வள்ளுவர் மன்றம்.
5. மாண்டவள் மீண்டும் - மலர்விழி மன்றம்.
இப்படியான 47 மேடை நாடகங்களிலும், திரைப்படம் ஒன்றிலும். தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றிலும் இவரது பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.
ஹாஸ்யம் கலந்த அடுக்குத் தொடரோடு கூடிய அக்கால ஆழ்நிலைக்கேற்ப, மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பக் கூடிய வகையில் இவரது நாடகக் கதைவசனங்கள் அமைந்திருந்தன. அத்துடன் அரசியல் வாடை வீசியதையும் அவதானிக்க முடியும்.
மேடை நாடகங்களுக்குப் புறம்பாக வானொலியிலும் இவரது பங்களிப்பு கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். இவர் எழுதி, குரல் கொடுத்து நடித்த, வானொலியில் ஒலிபரப்பான முதல் நாடகம் 'இலட்சியவாதி ஆகும், இந்நாடகம் 1960 -03-03இல் ஒலிபரப்பானது. இதிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவரின் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.
(பாகம் Öl – கலு:ாபூஷணம் புர்னியாமினர் Gs)

Page 74
இவர் மொத்தமாக 241 வானொலி நாடகங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக் கதாகும் . அத்துடன் இசைச்சித்திரங்களையும், 26 ஊடுருவல் நிகழ்ச்சிகளையும் பிரதியாக்கம் செய்துள்ளார். மேலும் வானொலியில் இவரின் நூற்றுக்கு மேற்பட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
மேடை நாடகங்கள். வானொலி போன்றவற்றுக்குப் புறம்பாக பத்திரிகைகளிலும் இவரது விசாலமான பங்களிப்பினைக்காணமுடியும், 1948ம் ஆண்டில் 'ஜிஹாத்' எனும் சஞ்சிகையில் 'தாய்க்குழத்தை இகழாதே எனும் இவரது முதல் கட்டுரை பிரசுரமானது. அதிலிருந்து ஐநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரை, கவிதைகளை தினபதி , சிந்தாமணி, தினகரன், நம்நாடு, நவமணி போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார். அத்துடன் சில மெல்லிசைப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.
கலைத் துறையிலும் , இலக்கியத் துறையிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள ஜப்பார் அவர்கள் தனது இறுதிக்காலங்களில் நவமணி தேசிய பத்திரிகையில் மாத்திரமே எழுதி வந்தார். நவமணியில் 23 வாரங்களாக (அங்கங்களாக) இடம்பெற்ற 'மனிதன்' தத்துவக் கட்டுரைத் தொடர்வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுது. அதேநேரம் இலங்கையில் தமிழ் மொழி மூலமாக எந்தவொரு எழுத்தாளரும் தொடர்ச்சியாக 231 அங்கங்களைக் கொண்ட ஒரு தொடரை எழுதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இது ஒரு சாதனையாகும்.
இவரால் வரகவி செய்கு அலாவுதீன் வாழ்க்கைச் சரிதையை ஆதாரமாகக் கொண்ட முஸ்லிம் இலக்கிய நாடக நூலொன்று கல்பொளி கொண்ட கவி' எனும் தலைப்பில் 1997 நவம்பரில் வெளியிடப்பட்டது. இந்நூல் புத்தளம் இளம் முஸ்லிம் படடதாரிகள் சங்க வெளியீடாகும்.
ஆசிரியராக, காவல்துறை அதிகாரியாக, தோட்ட சுப்றிண்டனாக பல்வேறு தொழில்களைப் புரிந்துள்ள ஜப்பார் அரசியலிலும் ஈடுபாடு கொணடிருந்தார். இவர் சிறிதுகாலம் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபையின் உறுப்பினராகவும் (ஐ.தே.க.) பணியாற்றியுள்ளார்.
Grao) இலங்கை ஆம்ம்ே எழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து புத்தளம் பட்டதாரிகள் சங்கம் கலைஞர் திலகம்' எனும் பட்டமளித்து கெளரவித்துள்ளது. 1992ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் நடத்திய 2-வது வாழ்வோரை வாழ்த்துவோம்' கலைஞர் கெளரவிப்பு விழாவில் அமைச்சர் கெளரவ ஏ.எச்.எம். அளப் வர் அவர்களினால் "லியாஉல் பன்னான்’ (கலைச்சுடர்) பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். அத்துடன் இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் அதி உயர் விருதான ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
அரை நுாற் றாணி டுக் கும் மேற் பட்ட காலம் கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த ஜப்பார் அவர்கள் தனது இத்தகைய கலை இலக்கியத் துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்களையும், தமிழ் ஆசிரியர் எஸ். கணபதி அவர்களையும், வானொலியில் முஸ்லிம் சேவைப்பணிப்பாளர் எம்.எச். குத்துாளம் அவர்களையும் நினைவு கூர்ந்து வந்த அதே நேரம் ஆயிரத்துத் தொழாயிரத்து ஐம்பதுகளில் திராவிட முன்னேற்றக் கழக நூல்களும், சஞ்சிகைகளும் அறிஞர் அண்ணாவின் சிந்தனைகளும் தன் சிந்தையைத் தட்டி எழுப்பின எனப் பெருமைப்பட்டு வந்தார்.
ஒய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை சித்திசெய்னப்பின் அன்புக் கணவரும் டீன் ஜஹான்கீர், டீன் ஜங்கிளப்கான், ரிப்கா ரொஷான் ஆரா, அஹற்மட் அவ்ரங்கசீப், ஜஹான் ஆரா, ஆலன் ஆரா ஆகியோரின் அன்புத்தந்தையுமான அன்னார் 2004 - 06 - 20ம் திகதி இறையடி எய்தினார்.
பாகம் D1 - கலாபூஷணம் புர்ரீயாமீர் O)

Page 75
(O - பதிவு 31 -
ஊடகத் துறை
மொவாம்மட் வைஸ் ノ இT) ン
இசிங்கை முஸ்லீம் விழுந்தார்கள்,ஊடகவிய#ாார்கள், கதை ஆர்களிர்விபரந்திரட்
即 լ:Bն: i -
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில், உடத்தலவின்னை - கலதெனிய கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அபூபக்கர் மொஹம்மட் வைளப் அவர்கள்; ஏ.எம்.வைஸ், மொஹம்மட் வைஸ் ஆகிய பெயர்களில் எழுதி வரும் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார்.
1955-08-29-ம் திகதி எஸ்.எம். அபூபக்கர்,மீரா உம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த இவர் உடத்தலவின்னை க' ஜாமிஉல் அளப்ஹர் மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். சட்டத்தரணியான மொஹம்மட் வைஸ் தற்போது கண்டி, தேசிய சேமிப்பு வங்கியில் சட்ட அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார்.
'தினகரன்' பத்திரிகையில் இவரது முதலாவது கவிதை 1969-ம் ஆண்டில் "எழுச்சி' எனும் தலைப்பில் இடம்பெற்றது. அதிலிருந்து எழுபத்தைந்துக்கு மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், பல உரைச்சித்திரங்களையும் இவர் எழுதியுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் இவரின் ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி எழுச்சிக்குரல், அபியுக்தன், பாமிளம், உதயம், நவமணி, தினக் குரல் ஆகிய பத்திரிகைகளிலும் பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட சம்பவமொன்றினை நகைச்சுவை உணர்வு ததும்ப நயமான முறையில் கவிதைகள் வடிப்பதில் இவர் திறமைவாய்ந்தவர். ஆரம்ப காலங்களில் கவிதைத்துறையில் ஆர்வம் காட்டி வந்த போதிலும் கூட அண்மைக்காலமாக சமுக உணர்வு மிக்க கட்டுரைகளை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழ்மொழியைப் போலவே சிங்கள மொழியிலும் தேர்ச்சி மிக்க இவர் சிங்கள மொழியில் கணிசமான ஆக்கங்களை எழுதியுள்ளார். முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட வைஸ்ஸின் ஆக்கங்கள் தினமின, ராவய, லங்காதிப, திவயின ஆகிய சிங்கள தேசிய பத்திரிகைகளில் அவ்வப்போது இடம் பெற்றுள்ளன.
μ ταδtt οι - கலாபூஷணம் Gig

Page 76
1971-ம் ஆண்டில் இருந்து பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளுக்கு இவர் ஆக்கங்கள் எழுதியுள்ளதுடன் பல உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
ஒர் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் தற்போது ‘செங்கடகல” விசேட நிருபராக லேக்ஹவுஸ் மும் மொழி பத்திரிகைகளுக்கும் எழுதிவரும் அதேநேரத்தில் ‘நவமணி தேசிய பத்திரிகையின் பிரதேசசெய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார். அத்துடன் பாமிஸ், எழுச்சிக்குரல் பத்திரிகைகளின் செய்தியாளராகவும், 'உதயம்' பத்திரிகை ஆசிரியர் குழுவிலும் இவர் கடமையாற்றியுள்ளார். யூரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரான இவர் கண்டி மாவட்ட ஐக்கிய பிரதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளருமாவார்.
இவரால் எழுதப்பட்ட சில செய்திகள் காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்ட அதேநேரத்தில் பாராளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளமை குறிப்பிட்டுக் காட்டக்கூடிய விடயமாகும். அத்துடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை, அரச தகவல் திணைக் களத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவரும் ஊடகவியலாளர் தொடர்பான கருத்தரங்குகளில் விரிவுரையாளராகவும் விரிவுரைகள் நிகழ்த்தி வருகின்றார்.
தனது இலக் கிய, ஊடகத் துறை ஈடுபாடுகளுக்கு ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் வழங்கி வந்த மர்ஹ"ம் கியாஸ், மற்றும் தினகரன் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் என்.எம். அமீன், நவமணி தேசிய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர், தினக்குரல் உதவி ஆசிரியர் நிலாம் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து மலையக கலை, கலாசாரப் பேரவை 2000ம் ஆண்டில் ‘ரத்னதீப' விருது வழங்கி கெளரவித்தது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன மத்திய மாகாணப் பணிப்பாளராகவும், சமாதானத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் ஆளுனர் சபை உறுப்பினராகவும், மத்திய இலங்கை தகவல் பேரவைத் தலைவராகவும், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதித் தலைவராகவும், கண்டி மாவட்ட
0149BAశం முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

ஐக்கிய மக்கள் பிரதிநிதிகள் அமைப்பின் இணைப்பாளராகவும் சேவையாற்றிவரும் மொஹம்மட் வைஸ் டாக்டர் எம்.எச்.எஸ். சரீனாவின் அன்புக்கணவராவார். சபானா, சஹானா ஆகியோர் இவரின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி இல 2/3 துங்கந்துறை உடத்தலவின்னை - 20802
υιταδύν οι - w கலாபூஷணம் புண்ணியாமீள் Gs)

Page 77
- பதிவு 32 -
எழுத்துத் துறை
எம்.எம். ஸப்வான். ン
G46)|ãa sade முசிட்ரீம் விழுந்தாார்கள்,ஊடகவிய4ாார்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு)
 

தென்மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியில் வெலிபிடிய - கபுவத்தை கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது முகம்மது ஸப்வான் அவர்கள்; 'திக்குவல்லை ஸப்வான்' எனும் பெயரில் எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
ஏ.ஆர். முஹம்மது, எம்.எச். பலீலத்தும்மா தம்பதிகளின் புதல்வராக 1954 - 05 - 19ம் திகதி பிறந்த "ஸப்வான்' இனிகலை முஸ்லிம் வித்தியாலயம், அம்பாந்தோட்டை சாஹிராக்கல்லூரி, திக்குவல்லை மின்ஹாத் முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது வெலிகம - பிரதேச அலுவலகத்தில் கல்பொக்க (மேற்கு) கிராமசேவகர் பிரிவில் கிராமசேவையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இலங்கையில் முளப்லிம் கிராமசேவகர்களுள் இலக்கியத் துறை ஈடுபாடு கொண்ட ஒருவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுங்கதை, வானொலி நாடகம், மேடை நாடகம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பாதம் பதித்துள்ள இவரின் முதல் கவிதை 1970ம் ஆண்டில் 'தினபதி கவிதாமண்டலத்தில் "வெண்பிறை' எனும் தலைப்பிலும், முதல் சிறுகதை 'வகுப்பில் ஒரு போராட்டம் நடக்கிறது' எனும் தலைப்பில் 1976இல் "மல்லிகை சஞ்சிகையிலும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் இருந்து வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும் இலக்கியச் சஞ்சிகைகளிலும் தொடர்ச்சியாக மூன்று தசாப்தங்களுக்கும் மேல் எழுதிவரும் இவர் இதுவரை 78 சிறுகதைகளையும், 69 கவிதைகளையும், 82 கட்டுரைகளையும், 88 குறுங்கதைகளையும் எழுதியுள்ளார். இவரின் அதிகமான குறுங்கதைகள் ரோனியோ கல்லச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளன. இதுபற்றி கலைவாதி கலீல் "ரோணியோக்கள் வாழுமா? எனும் ஆய்வில் "ரோனியோவில் அதிக குறுங்கதைகளை எழுதி வெளியிட்டுள்ள எழுத்தாளர் ஸப்வான் ஆவார்" என்று குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கதாகும். அத்துடன் பாடசாலை மானவர் களின் நலன் கருதி நுாற் றுக் கும் மேற் பட்ட இலக்கியக்கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.
பத்திரிகைத்துறையைப் போலவே, வானொலியிலும் ஸப்வானின் பங்களிப்பு கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளன. 1978-ம் ஆண்டில் ப்தம் - கலாபூஷணம் புர்னியாமீர்

Page 78
சிறுகதை ஒன்றெழுதி வானொலியில் இலக்கியப் பிரவேசம் செய்த ஸப்வான் 127 ஊடுருவல் சமூகச்சித்திரங்களையும், 32 வானொலி நாடகங்களையும், 24 வானொலிச் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வானொலி முஸ்லிம் சேவையின் நாடகக் கலைஞராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து தொடர்ச்சியாக ஒருவருடகாலம் ஊடுருவல் நிகழ்ச்சியை வழங்கி வானொலி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றார். அத்துடன் தொலைக்காட்சியில் இரண்டு ஊடுருவல் நிகழ்ச்சிகளிலும், 12 வானொலிக் கவியரங்குகளிலும், வானொலி முஸ்லிம் சேவை நடத்திய பல நேரடி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
ஸப்வான் அவர்களினால் இதுவரை 4 நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று சிறுகதைத் தொகுதி, அடுத்த மூன்று நூல்களும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் நலன்கருதி எழுதப்பட்ட பாட உசாத்துணை நூல்களாகும். அவையாவன;
l, 'உம்மாவுக்கு ஒரு சேலை -சிறுகதைத் தொகுதி (1998) 2, *நளவெண்பா நாலடியார்”. மாணவர்களுக்கான நூல் (1989) 3, கம்பராமாயணம்(விளக்கம்) - மாணவர்களுக்கான
நூல் (1989) 4, சீறாப்புராணம் (விளக்கம்)மாணவர்களுக்கானநூல் (1990)
சீறாப்புராணம் என்ற நூலை யாழ்ப்பாணம் - காரைநகர்
கல்விச்சங்கம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் பல இலக்கியப் போட்டிகளில் கலந்து பலதரப்பட்ட பரிசில்களை வென்றெடுத்துள்ளார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு மீலாத்விழாவை முன்னிட்டு தேசிய மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில் தொடர்ந்தும் மூன்றாண்டுகள் முதற்பரிசினை வெற்றிகொண்டுள்ளமை விசேட அம்சமாகும். அத்துடன் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையுடன் இணைந்து நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். பிரதேச இலக்கிய விழாக்களின் போது நான்கு முறை சிறுகதைப் போட்டிகளில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அந்நூர் மகளிர் மகாவித்தி
(18DEAశపోడా முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

யாலயத்தின் 125வது வருட நிறைவு விழாவை முன்னிட்டு தென்னிலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவரின் ‘பச்சோந்திகள்’ எனும் நாடகம் முதலாமிடத்தைப் பெற்றதுடன் இந்நாடகம் 18 தடவைகள் பல இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளது.
சிங்கள மொழியில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை இவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களினால் தினகரனில் நடத்தப்பட்ட 'சாளரப் பகுதியில் மாத்திரம் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 18 சிங்களக் கதைகள் பிரசுரமாகியுள்ளன.
அத்துடன் மேடை நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றி பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளமையும், ‘இனிமை’, ‘கவிமஞ்சரி’ ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளை ஆசிரியராக நின்று வெளியிட்டுள்ளமையும், கலைச்சுடர் இலக்கிய சஞ்சிகையில் ‘இலக்கியச்சுடர்' என்ற பகுதியையும், ‘அஹதியா’ பத்திரிகையில் ‘மணிக்கோவை’ என்ற பகுதியையும், 'ஜும்ஆ' பத்திரிகையில் ‘முத்துவடம்’ என்ற பகுதியையும் நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலக்கிய அமைப்புகள் என்ற அடிப்படையில் ‘இனிமை கலாமான்ற'த்தின் செயலாளராகவும், இளம்பிறை காலாமன்றத்தின் உபதலைவராகவும், அகில இலங்கை இஸ்லாமிய கலை இலக்கியச் சம்மேளனத்தின் செயலாளராகவும், முஸ்லிம் கல்வி ஸ்தாபனத்தின் இணைச் செயலாளராகவும், நுஸ்ரதுல் இஸ்லாம் இயக்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் ‘சாமறி நிர்மாணசூரி' எனும் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. அத்துடன் கலாசாரத் திணைக்களம் அண்மையில் நடாத்திய ‘சாகித்திய கலா பிரஸாதனி நிகழ்வில் விருதுவழங்கி கெளரவிக்கப்பட்டார்.
சிறுவயது முதலே வாசிப்புத்திறனை ஊக்குவித்து, இலக்கிய ஆர்வத்தைத் தூண்டி, ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த அன்புத் தந்தை அதிபர் மர்ஹ"ம் ஏ.ஆர். முஹம்மட் அவர்களை என்றும் கெளரவத்துடன்
பாகம் Oh م۔ கலாபூஷணம் புண்ணியாமினர் O9)

Page 79
நினைவு கூர்ந்து வரும் ஸப்வானின் இலக்கியச் சேவையை மதித்து 1990இல் திக்குவல்லை மின்ஹாத் மகாவித்தியாலய மாணவர் சங்கம் "கலைச்சுடர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
இவரின் அன்புப் பாரியார் எச்.என். ஹ"னைஸா ஆங்கில உதவி ஆசிரியையாவார். சஹாமா, ஸப்வா, ஹிலால் ஆகிய மூவரும் இத்தம்பதியினரின், அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி:
163 "சஹாமா' கபுவத்த தெனிபிடிய, வெலிகம,
(156இலங்கை ரப்ரீம் எழுத்தாளர்கள்,கடகவியWாார்கள், கலைஞர்களின் விமரத்திரட்டு)
 

எழுத்துத் துறை
ஹிதாயாரிஸ்வி.
ノ
Η ταδιί οι -
கலாபூஷணம்
புர்னியாமீர்
(1)

Page 80
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த ஹிதாயா ரிஸ்வி அவர்கள்; கலைமகள் ஹிதாயா, ஹிதாயா மஜித், மருதூர்நிஸா ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்து வரும் எழுத்தாளரும், கவிஞருமாவார்.
80 களுக்குப் பின் எழுந்த மரபுக் கவிதையாளர்களின் பட்டியல் விசாலமானது. எனினும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிலரே (பெண் கவிஞர்களில்) இத்துறையில் நம்பிக்கை ஏற்படுத்திச் செயற் படுகின்றனர். அந்த வரிசையில் ஒருவர் தான் இந்த ஹிதாயா ரிஸ்வி.
1966-04-01ம் திகதியன்று யூ.எல்.ஏ. மஜீத், ஸெய்னம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாக சாய்ந்தமருதுவில் பிறந்த இவர் கல்முனை மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி கல்எளிய அரபிக்கலாபீடம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார்.
தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் கன்னிக் கவிதை (புதுக்கவிதை) 1982-04-01ம் திகதி “மீண்டும்’ எனும் தலைப்பிலும், அதேதினம் ‘சிந்தாமணி’ பத்திரிகையில் “அன்னை’ எனும் தலைப்பில் மரபுக் கவிதையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு தசாப்தகாலமாக மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை என தவறாமல் எழுதிவரும் இவர் 560க்கு மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதிக்குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 22 சிறுகதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, வீரகேசரி, தினக்குரல், மித்திரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் சமரசம், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தூண்டில்’ மற்றும் மல்லிகை, ஞானம், பாசமலர், தூது அல்-ஹசனாத், கலைச்சுடர், இனிமை, கொழுந்து, சிரித்திரன், புதிய உலகம், சுவர், பூ, தூரிகை, யாத்ரா, விடிவு, நயனம், காற்று, கலை ஒளி, நவரசம், புதுயுகம், தினமுரசு, பார்வை, அழகு, இளநிலா, கண்ணாடி, மருதாணி, உண்மைஉதயம், நிதாஉல் இஸ்லாம் ஆகிய சஞ்சிகைகளிலும்
(1)இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

இடம்பெற்றுள்ளன.
பல்வேறு சமூகசேவை, இலக்கிய மன்றங்களில் அங்கத்துவம் வகிப்பதோடு மலேசியாவிலுள்ள உலகத் தமிழ் கவிஞர் பேரவையிலும் முக்கிய இடத்தினையும் வகிக்கின்றார். இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுத்துள்ள இவர் ரூபவாஹினிக்க வியரங்குகளிலும் முதன்முதலில் பங்கு கொண்ட முஸ்லிம் பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர், அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
இவரின் முதலாவது கவிதை நூல் ‘நாளையும் வரும்’ எனும் தலைப்பில் 1984-ம் ஆண்டு ‘ஞெகிழி வெளியீடாக வெளிவந்தது. அதையடுத்து இரண்டாவது கவிதைத் தொகுதி 2000 ஆண்டு சித்திரை மாதம் ‘தேன்மலர்கள்’ எனும் மகுடத்தில் வெளிவந்தது. சிந்தனை வட்டத்தின் 99வது வெளியீடான ‘தேன்மலர்கள் இலங்கையில் முஸ்லிம் பெண் கவிஞர் ஒருவரால் எழுதி வெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதைத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கவிதைத் தொகுதிக்கு வாழ்த்துக்கவி வழங்கியிருந்த மறைந்த கவிஞர் கவிச்சுடர் குறிஞ்சித்தென்னவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
கற்பனை வளமும் கருத்து வளமும்
சொற்களில் எளிமை தோயும் அழகும் பற்பல நூல்கள் பயின்ற புலமையும்
பொற்புறத் திகழ்ந்து பொலிவுறும் மலர்கள் மார்க்கப் பார்வையும் தெளிந்த சிந்தனையும்
வாய்க்கப் பெற்றவர் வளர்கலை மகளிவர் பதுமை வாழ்க்கையா ? பாவையர் வாழ்வென
இதயம் களன்று எழுந்திடும் கவிதைகள் நதியின் வேகமாம், நவயுகக் கவிஞனின்
புதுமைப் பெண்குரல் பொங்கும் தேன்மலர்
கலைமகள் ஹிதாயாவின் மூன்றாவது கவிதைத் தொகுதி இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை' எனும் தலைப்பில் சிந்தனை
υιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீன் 05)

Page 81
வட்டத்தின் நூறாவது வெளியீடாக வெளிவந்தது. கவிதைத் தொகுதியின் தலைப்புக்கேற்ப இத்தொகுதியினை மஸிதா புன்னியாமீனுடன் சேர்த்து எழுதியமை குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் சிந்தனைவட்டத்தின் கவிதைத் தொகுதிகளான ‘புதிய மொட்டுகள்’, ‘அரும்புகளிலும், காத்தான்குடி கலை இலக்கிய வட்ட வெளியீடான ‘மணிமலர்கள் மரபுக்கவிதைத் தொகுதியிலும், சாய்ந்தமருது நூல்வெளியிட்டுப் பணியகத்தின் வெளியீடான "எழுவான் கதிர்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவரது இலக்கியப் பணியின் முக்கிய கட்டமாக தடாகம்’ இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டமையைக் குறிப்பிடலாம். ஒரு பெண்ணாக இருந்த போதிலும் கூட 12 இதழ்களை இவர் வெளிக் கொண்டு வந்தார். இவ்விதழ்களில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஸி.எல். பிரேமினி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், ஏ.யூ.எம். ஏ. கரீம், கல்ஹின்னை ஹலீம் தீன், புன்னியாமீன் ஆகியோரின் புகைப்படங்களை முகப்பட்டையில் பிரசுரித்து கெளரவித்துள்ளார். அத்துடன் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கெளரவித்துள்ளார். சில நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும் அண்மையில் கொழும்பு - வெள்ளவத்தை ஹோட்டல் சபயாரில் நாகபூஷணி கருப்பையா எழுதிய ‘நெற்றிக்கண் கவி நூலை வெளியிட்டு சாதனை படைத்தார். ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற வகையில் இவரின் பணி பாராட்டத்தக்கது.
ஹிதாயாவின் இலக்கியச் சேவையை கெளரவித்து 2000 ஆண்டில் மலையக கலை, இலக்கிய ஒன்றியம் 'ரத்தினதீபம்’ விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் 1985ம் ஆண்டில் சாய்ந்தமருது இஸ்லாமிய கலை இலக்கிய ஒன்றியம் ‘கலைமகள் பட்டம் வழங்கியது. மேலும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பரிசில்களை பெற்றுள்ளார்.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் திருவாளர்களான எஸ். சிவநாயகம், (சிந்தாமணியின் பிரதம ஆசிரியர்) மற்றும் எஸ்.எச்.எம். ஜெமில், சித்தீக்காரியப்பர், திருமதி Cissa se முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

ராஜேஸ்வரி சண்முகம், கலாநிதி காலிதின் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் பொல்காவலையைச் சேர்ந்த எம்.ஆர்.எம். ரிஸ்வி அவர்களின் அன்பு மனைவியாவார். ரிஸ்னா, ரிஸ்லா, ரிஸ்கா, ரிஸ்லான் ஆகியோர் இத்தம்பதிகளின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி 677, அஹமட் வீதி சாய்ந்தமருது - 14 கல்முனை - (கி.மா)
υ/ταδώ οι - ബ്യഖങ്ങb புன்னியாமீன்

Page 82
ஊடகத் துறை
என்.எம். அமீன்.
ノ
(s) இலங்கை முங்சீம் விழுந்தாளர்கள்,வடகவியாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு)
 

சபரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், மாவனல்லைத் தேர்தல் தொகுதியில் அரநாயக்க தல்களிப்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த நிசாமுத்தின் உடயார் முஹம்மத் அமீன் பத்திரிகைத்துறையில் கால் நுாற் றாடினைப் புரனப் படுத் தியுள்ள முன் னணிப் பத்திரிகையாளர்களுள் ஒருவராவார். என்.எம். அமீன், நஸ்மின், அபூ அளிம் ஆகிய பெயர்களில் எழுதி வரும் இவர் தற்போது "லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் பிரசுரங்களின் முகாமைத்துவ ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
ஆயுர்வேத வைத்தியர் மர்ஹாம் எஸ்.ஏ.ஆர். நிசாமுதீன் உடயார், ஹாஜியாணி மரியம் பீபீ தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1952-0808ம் திகதி பிறந்த அமீன், தல்களிப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், அல்-அஸ்ஹர் மகாவித்தியாலயம், மாவனல்ல சாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்ட இவரது முதலாவது ஆக்கம் 1971இல் "இன்ஸான் பத்திரிகையில் இடம்பெற்றது. 1977ம் ஆண்டில் 'தினகரன்' பத்திரிகையை வெளியிடும் "லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பயிற்சிப் பத்திரிகையாளராக இணைந்த இவர் செய்தியாளராக, பிரதம செய்தியாளராக, தற்போது முகாமைத்துவ ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் "தினமின சிங்கள நாளிதழின் செய்தியாளராக சுமார் ஐந்து வருடங்களாகப் பணி புரிந்துள்ளதுடன், "அமுது' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.
1974-ல் களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்சங்கம், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்காற்றிய இவர் அவற்றின் செயலாளராகவும் பணிபுரிந்தார். சர்வவளாக முளப்லிம் மஜ்லிஸின் உதவிச் செயலாளர், தலைவர் போன்ற பதவிகளை வகித்த இவர் களனிப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் சங்க உதவிச் செயலாளராகவும், மாணவர் சங்க பத்திரிகை ஆசிரியராகவும் தொடர்ச்சியாக இரு வருடங்கள் அமோக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார்.
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பின் பண்டாரநாயக்க
பாகம் 01- கலாபூஷணம் புர்ரியாமிர் i

Page 83
சர்வதேச கற்கை நிலையத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான பட்டப் படிப்பினை மேற்கொண்ட அமீன் களனிப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் எம்.ஏ. பரீட்சைக்குத் தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து நிற்கின்றார். பத்திரிகைத்துறையில் லண்டன் தொம்ஸன் பவுன்டேசன் நடத்திய பாடநெறியைப் பயின்றுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பகுதி நேர விரிவுரையாளராகப் பணிபுரியும் இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறை டிப்ளோமா பாடநெறியினை தமிழில் ஆரம்பிப்பதற்கு முக்கிய பங்களிப்புச் செய்தவராவார். தகவல் திணைக்களம் மற்றும் இலங்கையில் பத்திரிகைப் பேரவை ஆகியவற்றினால் நடத்தப்பட்ட பத்திரிகைத்துறை பாடநெறியின் இணைப்பாளராகப் பணிபுரிந்துள்ளதோடு பத்திரிகைத்துறை தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகளில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகின்றார்.
பத்திரிகைத்துறையில் வெள்ளிவிழாக்காணும் இவர் தினகரன் பத்திரிகையின் பாராளுமன்ற செய்தியாளராக தொடர்ச்சியாக 24 வருடங்கள் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக பல வருடங்கள் பணி புரிந்துள்ள இவர் தற்போதும் அப்பதவியை வகிக்கின்றார். பாராளுமன்ற பத்திரிகையாளர் சங்க செயலாளராகவும் இவர் பணி புரிந்துள்ளார்.
தனது தாயாரின் ஊரான தும்புலுவாவ கிராமத்தில் படிக்கும போது பாதிவிய்யா சனசமூக நிலையத்தின் மூலம் சமுக சேவையில் ஈடுபடத்தொடங்கிய இவர் முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கீர்மாகாருடன் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தை சக்தி மிகு அமைப்பாக கட்டி எழுப்புவதற்கு முக்கிய பணியாற்றினார். அதன் நிர்வாகச் செயலாளர். பொதுச்செயலாளர், உபதலைவர் ஆகிய பதவிகளை வகித்ததுடன் யாப்பு விதிகளின் பிரகாரம் செயலாளர் பதவியை வகிப்பதற்கு இரு சந்தர்ப்பங்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற விதியை மாற்றி தொடர்ச்சியாக மூன்று சந்தர்ப்பங்களில் செயலாளர் பதவியை வகித்தார். தற்பொழுது அதன் தலைவராகப் பணி புரிந்து வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் (158]డAశ5 முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

லீக்கின் செயற்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ள இவர், முஸ்லிம் இயக்கங்களின் சம்மேளனமான பாமிஸின் உப தலைவராகவும் பணிபுரிந்துள்ளதுடன் அதன் அகதிகள் நிவாரணக் கமிட்டியின் தலைவராகவும் பணிபுரிந்தார். யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்ட போது அகதிகள் நிவாரண அமைப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிப்புச் செய்த அமீன் அதன் செயலாளராகவும் பணிபுரிந்தார். கேகாலை மாவட்டக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரகவும் பணிபுரிந்தார். முஸ்லிம் ஊடகவியலாளர் ளுக்கான கூட்டமைப்பினை 'முஸ்லிம் மீடியா அலயன்ஸ்’ என்ற பெயரில் 1987-ல் ஆரம்பித்த எற்பாட்டாளர்களுள் ஒருவரான இவர் அதன் செயலாளராகப் பணி புரிந்தார். நாட்டின் அன்றைய சூழலில் அது இயங்கத் தவறியதையடுத்து பின்பு 1995ல் முஸ்லிம் மீடியா போரத்தை உருவாக்கி அதன் செயலாளராகத் தொடர்ச்சியாக 4 வருடங்கள் பணி புரிந்து தற்போது அதன் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
போக்குவரத்து ராஜாங்க அமைச் சினி இணைப்புச் செயலாளராகவும் பணிபுரிந்த அமீன் தற்போது இலங்கை யுனெஸ்கோ கவுன்ஸிலின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும், இலங்கை சாகித்திய குழு அங்கத்தவராகவும் பணிபுரிகிறார்.
1978-ம் ஆண்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சார்பில் ஈராக்கிற்கு விஜயம் செய்த இவர் பத்திரிகையாளராக ஈரான் இஸ்லாமியக்குடியரசுக்கு மூன்று முறை விஜயம் செய்தார். ஈரான், ஈராக் யுத்தத்தின் போது யுத்தமுனைக்குச் சென்று செய்திகளைத் திரட்டிய இவர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாள், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற முக்கிய மகாநாடுகளில் கலந்து கொண்டார். 2000ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது அவரது ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றார்.
அத்துடன் 2003 அக்டோபர் மாதம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற விஜயத்தின் போதும் அவரது ஊடகக் குழுவிலும் இடம்பெற்றார். ஜப்பானில் நடைபெற்ற அரச, எல்.ரீ.ரீ.ஈ. சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளைத் திரட்டுவதற்கு இவர் ஜப்பான்’ சென்றுள்ளார். அத்துடன் செய்தியாளராக
ιιιταδώ οι - கலாபூஷணம் புண்ணியாமீனி

Page 84
பனூற்ரான், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இலங்கை வானொலிபினூடாக பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிய இவரின் வளரும் மத்ரஸாக்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர், முஸ்லிம் உலகம் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. சிறந்த அரசியல் விமர்சகரான இவரின் கலந்துரையாடல்கள் அடிக்கடி வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இடம்பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ள இவர் 'சுற்றாடல் பற்றிய நூலொன்றை எழுதியுள்ளார். இந்நூல் விரைவில் வெளிவரவுள்ளது. அத்துடன் சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து பற்றி இருசிறு நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
தனது எழுத்துலகப் பணியின் வெற்றிக்கு உந்துசக்தியாக அமைந்திருந்த கலாசூரி ஆர் சிவகுருநாதன், மர்ஹ"ம் எம்.ஏ. பாக்கீர் மாக்கார், அமைச்சர் ஏ.எச்.எம். அளப்வர், முன்னாள் பிரதி அமைச்சர் பரீட் மீராலெப்பை ஆகியோரையும், தனது உம்மம்மா மர்ஹ"ம் உம்மு குல்தும் முஹம்மத் சாலி அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் அமீன் தற்போது தெற்காசிய நாடுகளின் ஊடாக அமைப்பான சப்னா (Safna) வின் செயற்குழு அங்கத்தவராகவும், அதன் இலங்கைக் கிளையின் அமைப்பாளர்களுள் ஒருவராகவும் பணியாற்றி வருகின்றார்.
1992-ம் ஆண்டு அப்போதைய முஸ்லிம் சமய, கலாசார விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அளப்வர் அவர்களின் "வாழ்வோரை வாழ்த்துவோம்’ திட்டத்தின் கீழ் சவ்துல் ஹக் (உண்மையான எழுத்தாளன்) பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட அமீன் அவர்களை கொழும்பு தமிழ்ச் சங்கம், இரத்தினபுரி சமூக அமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகம் உட்பட பல அமைப்புகள் கெளரவித்துள்ளன.
கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஆசிரியரான நஸ்லியா அமீனின் அன்புக் கணவரான இவர் அளப்ாம், அளப்ரா, அளபிம் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி A 312 மனிங்டவுன், அல்விட்டிகல மாவத்தை, கொழும்பு - 8
| iլի |ãavršena ழஸ்ரீம் எழுந்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு)

- பதிவு 35
எழுத்துத் துறை
மஸிதா புன்னியாமீன்
Η ταιi Οι -
luglJTT4,5ʼrif:#EJILi
புள்ளியாழிகர்
(a)

Page 85
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் உடத்தலவின்னை- கலதெனிய கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் எம்.எச்.எஸ். மஸிதா அவர்கள்; கட்டுகொடை மஸிதா ஹம்ஸா, எஸ்.எம்.எம். ஹம்ஸா ஆகிய பெயர்களில் இலக்கிய உலகில் பிரவேசித்து தற்போது “மஸிதா புன்னியாமீன்' எனும் பெயரில் எழுதிவரும் எழுத்தாளராவார்.
இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளின் பின்னர் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை யில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு எற்பட்ட போதிலும் கூட இவர்களின் திருமணத்தின் பின்னர் காணாமல் போவோரின் எண்ணிக்கை மாத்திரம் குறையவில்லை. இருப்பினும் ஒரு சிலரே நம்பிக்கையுடன் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். அத்தகைய பெண் எழுத்தாளர்களுள் ஒருவர்தான் இந்த மஸிதா புன்னியாமீன.
காலி, கட்டுகொடையைச் சேர்ந்த மர்ஹம் மொஹம்மட் ஹம்ஸா, ஜெஸிமா தம்பதிகளின் புதல்வியாக 1961 - 10 - 07ம் திகதி பிறந்த இவர். காலி உஸ்வதுன் ஹஸனா மகளிர் மகாவித்தியாலயம், காலி மல்ஹருஸ்ஸ"ல் ஹியா மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார்.
கற்கும் காலத்திலிருந்தே இவரிடம் காணப்பட்ட இலக்கிய ஆர்வத்தை இனங்கண்ட காலி, மல்ஹருஸ் ஸ"ல் ஹியா மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், பிரபல எழுத்தாளருமான மர்ஹ"ம் எம்.எஸ்.ஏ. மஜீத் அவர்கள் 1979ம் ஆண்டு ‘தென்றல்' எனும் முத்திங்கள் இதழுக்கு இவரைப் பத்திராதிபராக்கி, வெளியீட்டு விழாவையும் விமரிசையாக நடத்தி ஊக்குவித்தார். இதையடுத்து 1980-ம் ஆண்டில் இவரின் கன்னிக்கவிதை ‘பெருமூச்சு’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது. அதேயாண்டில் இவரது முதலாவது சிறுகதையும் ‘புனர்வாழ்வு’ எனும் தலைப்பில் முஸ்லிம் எனும் சஞ்சிகையில் வெளிவந்தது.
. அன்று தொடக்கம் இன்றுவரை முன்னுாற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள், மரபுக்கவிதைகளையும், இருபத்தைந்துக்கு மேற்பட்ட
6)இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

சிறுகதைகளையும், நூற்றுக்குமேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, வீரகேசரி, தினபதி, நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், இனிமை, முஸ்லிம், தடாகம், அஷஷ"ரா, அல்ஹிலால், விடிவு, நான். போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் தடாகம் இலக்கிய சஞ்சிகையின் இணையாசிரியராகவும் அங்கம் வகித்துள்ளார்.
இலக்கியம் சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்வதில் மிக்க ஆர்வம் காட்டிவரும் இவர் 1980ஆம் ஆண்டில் அகில இலங்கை ரீதியில் தேசிய ஹிஜ்ரா கவுன்சில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் பெற்று ரூபா 10.000/- பணப்பரிசினையும், பெறுமதிமிக்க சான்றிதழையும் அப்போதைய ஜனாதிபதி மேதகு ஜே.ஆர் ஜயவர்தனா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் அகில இலங்கை ரீதியில் நடத்திய பல போட்டிகளில் கலந்து கொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். இலங்கை வானொலியில் இவரது படைப்புகள் பல அரங்கேறியுள்ள அதே நேரத்தில் இலங்கை ரூபவாஹரினிக் கூட்டுத் தாபன நேரடி ஒளிபரப் பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
1990ம் ஆண்டில் சிந்தனை வட்டம் தொகுத்து வெளியிட்ட ‘புதிய மொட்டுகள்’ கவிதைத் தொகுப்பில் இவரது தரமான கவிதைகள் சில இடம்பெற்றுள்ளன. சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடான “இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை” எனும் கவிதை நூல் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியும், மஸிதா புன்னியாமீனும் இணைந்து எழுதிய வித்தியாசமான கவிதைத் தொகுப்பாகும்.
1984-ம் ஆண்டில் கண்டி உடத்தலவின்னை மடிகேயைச் சேர்ந்த பீ.எம். புன்னியாமீன் அவர்களைத் தனது வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்ட இவருக்கு சஜிர் அஹமட், பாத்திமா ஸம்ஹா ஆகிய இரு செல்வங்கள் உள்ளனர்.
மஸிதா புன்னியாமீன் வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம்
பாகம் on - கலாபூஷணம் புணர்னியாமீள் Gio)

Page 86
(தனியார்) கம்பனியின் பணிப்பாளர்களுள் ஒருவராவார். இலக்கியத் துறையில ஆர்வம் காட்டி வருவதைப் போலவே கல்வித்துறையிலும் அதிக ஆர்வம் காட்டி இவர் தனது கணவருடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசாலமான சேவையினை ஆற்றிவருகின்றார்.
சிந்தனை வட்டத்தின் மூலம் இவர்களால் நடத்தப்பட்டு வரும் தபால் மூல பாடநெறியில் 1997ம் அண்டில் 4216 மாணவர்களும்,
1998LD 1999LD 2000b
2001 D 2002b 2003b
2004 b அகில
ஆண்டில் 6943 மாணவர்களும், ஆண்டில் 7873 மாணவர்களும், ஆண்டில் 13443 மாணவர்களும், ஆண்டில் 15218 மாணவர்களும, ஆண்டில் 18429 மாணவர்களும, ஆண்டில் 20,673 மாணவர்களும, ஆண்டில் 23,382 மாணவர்களும்
இலங்கை ரீதியில் இணைந்து பயன் பெற்றமை
குறிப்பிடத்தக்கதாகும். அதே போல தனது கணவருடன் இணைந்து இதுவரை 32 தரம் -5 புலமைப்பரிசில் நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார்.
1.
9.
10.
1.
12.
13.
4.
15.
16.
17.
அறிமுகத் தமிழ்
அறிமுகக் கணிதம். அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும் சுற்றாடலும், பொதுஅறிவும் அறிமுக விஞ்ஞானம் (தொகுதி- 1) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி- 2) நாமும் சற்றாடலும் (தொகுதி- 1) நாமும் சுற்றாடலும் (தொகுதி- 2) புலமை பரிசில் மாதிரி-வினா விடை (தொகுதி. 1) புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி புலமை பரிசில் மாதிரி-வினா விடை (தொகுதி. 2) புலமை பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி- 1) புலமை பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி- 2) புலமை பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி. 3) புலமை பரிசில் அறிவு ஒளி (தொகுதி- 1) புலமை பரிசில் ஆரம்ப வழிகாட்டி புலமை பரிசில் அறிவு ஒளி (தொகுதி- 2)
(1)இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

18. புலமை பரிசில் அறிவு ஒளி (தொகுதி. 3)
19. புலமை பரிசில் அறிவு ஒளி (தொகுதி- 4)
20. புலமை பரிசில் வெற்றி ஒளி
21. புலமை பரிசில் சுடர் ஒளி
22. 2002 புலமை பரிசில் புலமை ஒளி
23. 2002 புலமை பரிசில் வெற்றி வழிகாட்டி
24. 2002 விவேகக் களஞ்சியம்
25. தரம் - 5 மாதிரிக் கட்டுரைகள்
26. 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம்
27. புலமைச் சுடர்
28. 2004 விவேகக் களஞ்சியம். S B N 955-893-05-7 29. 2004 LDIT600T61j 6 glas|Ti9 (1). ISBN 955-8913-09-X 30. 2004 மாணவர் வழிகாட்டி (2). 1SBN 955-8913-10-3 3. 2004 மாணவர் வழிகாட்டி (3). ISBN 955-8913-11-1 32. 2004 LDIT600T6 is 6 past 19 (4). ISBN 955-8913-12-x
இப்புத்தகங்களுள் பல புத்தகங்கள் பல பதிப்புக்களைப் பெற்றுள்ள அதே நேரத்தில் சில புத்தகங்கள் 20,000த்துக்கு மேற்பட்ட பிரதிகள் அச்சாகியுள்ளன.
தான் கற்கும் காலத்திலே தன்னை நெறிப்படுத்தி வழிநடத்
திய அதிபர் மர்ஹம் எம்.எஸ்.ஏ. மஜீத், தமிழின் மீது அதீத பற்றுவரக் காரணமாக இருந்து போதித்த ஆசிரியைகளான செல்வி பீ.பீ. மொஹம்மட், செல்வி எஸ் பாய்க்கா ஆகியோரையும், தனது படைப்புகளுக்குப் புடமிட்ட ‘இனிமை, சஞ்சிகை ஆசிரியர், ஜனாப் திக்குவல்லை ஸப்வான், தினகரன் சகோதரர் சித்திக் காரியப்பர் ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் தற்போது கணித - விஞ்ஞான ஆசிரியராக க/ ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கடமையாற்றி வருகின்றார்.
இவரின் இலக்கிய சேவையை கெளரவித்து 2002-ம் ஆண்டில் மலையக கலை இலக்கிய ஒன்றியம் தேசிய ரீதியில் வழங்கிவரும் ரத்தினதீபம்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இவரின் முகவரி 14 உடத்தலவின்னை, மடிகே, உடத்தலவின்னை.
பாகம் O - கலாபூஷணம் புணர்னியாமீன் *

Page 87
எழுத்துத் துறை
BAవారి ழாம்ரீம் விழுந்தாளர்கள்,ஊடகவியWாார்கள், கனAபுநர்களிர்விபரத்திரட்டு
கே.எம்.எம். இக்பால்.
 
 
 
 

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில் கட்டையாறு - மாலின்துறை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கச்சு முகம்மது முகம்மது இக்பால் அவர்கள்; கே.எம்.எம். இக்பால் எனும் பெயரில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எழுதி வரும் எழுத்தாளராவார்.
1951 - 12 - 10ம் திகதி பிறந்த கே.எம். எம். இக்பால் அவர்கள் முதூர் அல்ஹிதாயா மகாவித்தியாலயம், மூதூர் மத்தியகல்லூரி, மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது கிண்ணியா - உபவலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவரின் முதலாவது கவிதை 1982 - 09 - 07ம் திகதி தினகரன் பத்திரிகையில் "ஒழிந்திடுவாய்' எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து தொன்னூற்றைந்து கவிதைகளையும், பதினாறு கட்டுரைகளையும், பதினொரு சிறுவர் கதைகளையும், மாணவர்களின் நலன் கருதி நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி, நேயம், கதிரவன், ஆய்வரங்குக் கோவை புதுஉளற்று ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன.
இவரது கவிதைகள் சமூக உணர்வு மிக்கவை. சமகாலப் பிரச்சினைகளை கவிதைகளாக வடிப்பதில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. அதேபோல முக்கியமான அரசியல் தலைவர்கள் , இலக்கியவாதிகள், அறிஞர்களின் வாழ்க்கைச் சுருக்கங்களை கட்டுரைகளாக எழுதி வாசகர்களின் பாராட்டுக்குப் பாத்திரமானார். உதாரணமாக வரலாற்று நாயகன் அமரர் பண்டாரநாயக்க, கவிஞர் கண்ணதாசனின் சமுகநோக்கு, புதுமை புரிந்த கவிஞர் பாரதி, சுவாமி ஞானப்பிரகாசம், நாவலியூர் சோமசுந்திரப்புலவர், பேராசிரியர் க. கைலாசபதி, தலைசிறந்த ஜனநாயகவாதி ஜவகர்லால் நேரு போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.
இதுவரை மாணவர்களின் நலன்கருதி முன்று நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
Lrtfili Col – கலாபூஷனம் புர்ரீயார்ே

Page 88
1. முகைதீன் புராணம் - உரைநூல் வினா-விடை
2. 10ம் தரத்திற்கான சமூகக்கல்வி வினா-விடை
3. 11ம் தரத்திற்கான சமூகக்கல்வி வினா -விடை
பின்வரும் இரண்டு சிறுவர் இலக்கிய நூல்களையும் விரைவில் வெளியிடவுள்ளார்.
1. பத்து பாட்டி சொன்ன நீதிக்கதைகள்
2. காட்டுராஜா. (நவமணி தேசிய வாரமலரில் இடம்பெற்ற சிறுவர் தொடர்கதை)
திருமதி ஜஹிரா இக்பாலின் அன்புக் கணவரான இவர் நிசாத், ஸினத்பானு, அகீலாபானு ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.
இவரின் முகவரி: கடற்கரை வீதி, கட்டை ஆறு, கிண்ணியா - 04
O) sain முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
 


Page 89
OVPUBLISHERS (PVpLTD. i ZOrinter & ZDublishera
14, Udatalawinna Madige, Udatalawinna. 20802
Tel: 081-2493746, 081-2493892, Fax: 081-2497246 e-mail: puniyameenGhotmail.com, puniyamegisltnet.lk


Page 90


Page 91

|| | | | | | | | | | |-