கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 2

Page 1

Įgiju su ugos@

Page 2


Page 3

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு

Page 4
இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்ரு
-இரண்டாம் பாகம்
கலாபூஷணம்
புன்னியாமீன்
B.A. (Cey) Dip in Journ (Ind) SLTS ii-i
வெளியீடு;
வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் தனியார்) கம்பனி lly e -u-H6LSSởøkøpør uDećổað,
உடத்தலவிண்ணைஉO802 பனூரிலங்கா,
தொலைபேசி :ー 081-2493746 / 081-2493892 சிதாலை நகல்:- 081-2497246
BalikébőF6is -- puniyame (@sltnet.lk

இலங்கை முஸ்லீம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்ரு
Θφαίτυ (τώ υ(ταδώ
முதலாம் பதிப்பு 10-09-2004
பதிப்புரிமை ஆசிரியருக்கே
வெளியீடு சிந்தனை வட்டம்
கனணிப்பதிப்பு Zeenafh Nawaz
அச்சுப் பதிப்பு
விலை
9յ5&lաn"
பிரானர்ஸ் ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா குவைட் சவூதி அரேபியா கட்டார்
ஒமானர் பஹர் ரேனர் ஜேர்மனி யப்பானர்
TP 081 -2493746 / 2493892
Creotive Printers a Deslgners
No,037A, Bahirawakanda Rd, Kandy.
T.P081 - 4472048
: இந்தியன் ரூபாய் 120.00
பிரான்க் 45 ஸ்ரேலிங் பவுண் 2 டொலர் 2
: தினார் 1
: ரியால் 10
ரியால் 10 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் :
திர்ஹம் 10
ரியால் 1 தினார் 1 : DMT ja 200 யென் 300
ISBN 955-8913-1 6-2

Page 5
O என்னுரையும், பதிப்புரையும்.
ஊடகவியலாளர்கள், கலைஞர்களினர்
ஒரு நீண்டகால
ஆய்வுத்திட்டத்தின்
இரண்டாம் படி
ஓர் அறிமுகம்:
இலங்கை முஸ்லீம்
აწutჯრჭრ ர்கள்
விபரத்திரட்ரு
- issi II L-1-7-7-il ii
(G9,
H ι(στ στι (τύοί- ン
| மாகம்
tr I, i ri" .
கலாபூஷண்ம எர்விாாரிக்
 

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இலங்கைவாழ் முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரே தேசிய இதழும், அதே நேரம் அனைவரையும் அனைத்துச் செல்லும் ஆக்க இதழுமாகிய நவமணியின் அனுசரணையுடன் நாளைய சந்ததியின் இன்றைய சக்தி " சிந்தனை வட்டத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை கடந்த 2003- 17 - 27ம் திகதி முதல் நவமணி வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவருவதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கட்டுரைத் தொடரில் 2004 08 - 22ம் திகதி வரை சுமார் ஒராண்டு காலமாக இடம் பெற்ற 6 எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளேன். இதன் முதலாவது பாகம் கடந்த 2004 -08-19ம் திகதி வெளிவந்தது. முதலாம் பாகத்தில் 36 பேரின் விபரங்களும் தற்போது உங்கள் கைகளில் தவழும் இரண்டாம் பாகத்தில் 10 பேரின் விபரங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் மேலதிகமாக நவமணி பிரதம ஆசிரியரின் விபரத்தையும் சேர்த்துள்ளேன்.
முஸ்லிம்களின் வரலாறுகள் பதியப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் எழுத்துத்துறை, ஊடகத்துறை, கலைத்துறை ஈடுபாட்டுப் பதிவே இந்நூல். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுச் சாதனைகளின் இது ஒரு சிறு துளி.
நான் சார்ந்த துறைகள் என்பதினால் எழுத்துத்துறை, ஊடகத்துரை. கலைத்துறை சார்ந்த துறைகளில் மட்டுமே இத்தகைய ஆய்வினை என்னால் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் இலங்கை மண்ணில் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள சேவைகள் விசாலமானவை. அரசியல், விளையாட்டு, பாதுகாப்பு, பொருளாதாரம், வைத்தியம், கட்டிடக்கலை.என்று ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களின் சாதனைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டம் அவைபற்றிய பதிவுகள் பேணப்படவில்லை.
இதனால் இம்மண்ணுக்காக முஸ்லிம்கள் செய்த பணிகள் ஏதிர்காலத் தலைமுறையினருக்கு மாத்திரமல்ல இக்காலத் தலை இலங்கை முர்ரீம் விழுந்தார்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

Page 6
முறையினருக்கே தெரியாமல் போய்விட இடமுண்டு. அவ்வாறு தான் நடைபெற்று வருகின்றன்.
எனவே இத்தகைய ஒரு காலகட்டத்திலாவது முஸ்லிம்களின் சாதனைகளை பதிவாக்க அவ்வத்துறை சார்ந்த விற்பன்னர்கள் முன்வரவேண்டும். அறிஞர்கள், புத்திஜீவிகள் முன்வரவேண்டும், பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முன்வர வேண்டும்.
இல்லாவிட்டால் ‘வரலாறுகள் அற்ற ஒரு சமூகத்தினர்’ என்ற நிலை எதிர்கால சந்ததியினருக்கு உருவாகி விடலாம். அத்தகைய பழிச்சொல்லுக்கு இடம்வைக்காமலிருக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். *
இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டினை திரட்டுவதென்பது இலகுவான காரியமல்ல.
19-ம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை என, காலத்தினை வரையறை செய்து இப்பணியினை செவ்வனே செய்வதென்றால் 4500க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்ட வேண்டியிருக்கும். இது தனி ஒரு மனித முயற்சியினால் சாத்தியப்படக் கூடியதொன்றல்ல.
இருப்பினும் முன்வைத்த காலை பின் வைக்க நான் விரும்பவில்லை. என் சக்திக்கு எட்டியவரை இந்த ஆய்வினைத் தொடர்வேன். இன்ஷா அல்லாஹ. 4500 பேர்களையும் திரட்ட முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் 1000 பேர்களையாவது திரட்டிப் புத்தகமாக்கி ஆவணப்படுத்த முடியுமென்றால் அதை நான் பாக்கியமாகக் கருதுவேன். பொருளாதார நோக்கில் பார்க்கும் போது இது இலாபகரமான முயற்ச்சியல்ல என்பதை நான் உணராமலில்லை. நிச்சயமாக பாரிய நஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அதைப்பற்றி நான் கவலையடையவில்லை. இதை ஒரு கடமையாக எண்ணி இப்பணியினை நான் மேற்கொண்டு வருகின்றேன். இதன் பெறுமதி சமகாலத்தில் உணரப்படாவிட்டாலும் கூட என்றோ ஒரு காலம் உணரப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. | ur@းစံ O2- கலாபூஷணம் புணர்னியாமீன் (05)

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுத் தொடர் ‘நவமணியில் வெளிவரத் தொடங்கியதையடுத்து பிறமத எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு ‘முஸ்லிம் என்று வரையறையை விதிக்காமல் இதனைப் பொதுவாக மேற்கொள்ளலாமே என்று கருத்துத் தெரிவித்தனர். முஸ்லிம் சமூகத்தினரின் வரலாறுகள் பதியப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே இவ்வாய்வினை நான் மேற்கொண்டு வருவதினால் இந்த வரையறையை தற்போதைக்கு என்னால் மீறமுடியாதுள்ளதெனவும், எதிர்காலத்தில் அல்லாஹி நாடினால் பொதுவான ஆய்வாக இதனை மேற்கொள்ளும் எண்ணமுண்டு என்றும் அவர்களுக்கு நான் கூறினேன்.
இதை இவ்விடத்தில் ஏன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது என்றால் பிறமத எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் காட்டும் ஆர்வத்தைப்போல எமது முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள் , கலைஞர்கள் ஆர்வம் காட் ட முன்வருகின்றார்கள் இல்லை.தனிப்பட்ட முறையில் ஐநூறுக்கும். மேற்பட்ட சிரேஷ்ட முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுடன் நான் நேரடியாகத் தொடர்பு கொண்டு விபரத்திரட்டுப் படிவங்களை அனுப்பிவைத்த போதும் கூட அதில் தொண்ணுாறு சதவீதமானோர் உதாசீனமாக நடந்துகொண்டது மனதுக்குக் கவலையைத் தருகின்றது. நான் அனுப்பிய விபரத்திரட்டுப் படிவத்தினை மீள அனுப்பிவைத்த பத்து வீதமானோரின் சிலர் ஏனோ, தானோ என்ற போக்கில் விபரங்களை சரிவரத் தரவில்லை. சிலர் சில நிபந்தனைகளை விதித்து அனுப்பியிருந்தனர். சிலர் புகைப்படங்களை அனுப்பியிருக்கவில்லை.
ஒன்றைமட்டும் நான் ஆணித்தரமாக இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் மேற்கொள்வது ஒரு பொதுப்பணி. இதற்கு அரசாங்க உதவிகளோ, வெளிநாட்டு உதவிகளோ, அன்றேல் இயக்கங்களில் உதவிகளோ கிடைப்பதில்லை. அதைநான் எதிர்பார்க்கவும் இல்லை. இப்பணிக்காக செலவிடப்படுவது என்னுடைய சொந்தப்பணம், எனவே எத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படும் அவசியம் எனக்கில்லை என்பதை நிபந்தனை விதித்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உணர்ந்து கொள்ளட்டும். இப்போது உங்கள் துறைகளில் நீங்கள்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 7
"ஜம்பவான்கள்’ என்ற திமிர் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற ஒரு வரலாற்றுப் பதிவில் இடம்பெறாதவிடத்து நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் நாமமே தெரியாது போய்விடும் என்பதை அடக்கத்துடன் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எப்படியோஇன்ஷா அல்லாஹ - இதுவிடயத்தில் என் முயற்சிகள் தொடரும் என் தேடல்கள் தொடரும்.
என் முயற்சிகளினதும், தேடல்களினதும் வெளிப்பாடாக இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் மூன்றாம் பாகம் - 2005 பெப்ரவரி மாதம் வெளிவரும் என்று கூறி விடைபெறுகின்றேன்.
மீண்டும் சந்திப்போம் அன்புடன் உங்கள்.
-கலாபூஷணம் புன்னியாமீன்பணிப்பாளர்
வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியிட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14 - உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
10 م۔ 09 - 2004
பாகம் O2 سے கலாபூஷணம் புண்ணியாமீன்
 

TU9C09Tm1090909 (#7 Į9? [119 urnú09@Too $1 noso) (g. Ļ9? (191IrnsắInoso) (z 1,933 srnsýsostā" (I
TU9C09rn199009f9 († q1"Trīņoơ9h (g Ļ998 QL91|In($ssnog) (z
1,99£ (îrnýựstā” (I TU9c09nmı99cc9f9 (†9*田eg@a田qu函函n qī`īriņú09@ (o Qormų,9úĝąžos@-ாதிரிகிமூ qio-IIIGi (z| qırnŲ9ồ (I||| ự998 (1@09 (soo1198 (1119 1109rnų 9%?-ı Issos
R9c09nm 109C09f9 (çTU9C09Tnı99cc9f9 (ç qī109.6 sqTQ9 (†qigo-Ilgi († @fg|Ús@ œQ9-a (g)ọ9f091]Ō (g. qiođĩ) o (zoẾqoŲ9o (z Qormig úrē” (Ioğ09€IŪig (I JIC96)너1田 49田(城unernls EsceS
9) ÇıúĝoğírıĻ9 Ļ9Ð (ÁÐ0909? '|1998 QL91109InŲ,9œIE,
(Ī09đĩ)ćin sistorn?
‘ų9? (1911@ğđù19 qiļņ9ạ19đĩ)
08)[6Aశఐ5 முஸ்லீம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 8
அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆக்க இதழ்
யின் அனுசரணையுடன்
நாளைய சந்ததியின் இண்நைய சக்தி éé,563)ør ØJJŮulub
மேற்கொண்ட ஆய்வின் விளைவே
உங்கள் கரங்களில் தவழும்
இலங்கை முஸ்லிம் விழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்ரு
Θ(Ταοτι (τώ υ/ταδώ
u Arabib O2 - கலாபூஷணம் புணர்னியாமீண்
 

/ முதலாம் பாகத்தில் பதிவானோர்.
ஏ யூ. எம். ஏ. கரீம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அன்பு முகையதின் ஐ. ஏ. றஸாக் முபீதா உஸ்மான் எச். ஸலாஹ"தீன் எம்.எச்.எம். அவழ்ரப் எம். எச்.எம். புஹாரி அப்துல் கஹற்ஹார் . எஸ். முத்து மீரான் . எச். ஏ. ஸகூர்
ஏ. எஸ் இப்றாஹிம் எம்.ஐ. எம். தாஹிர் எம் ஜே. எம் கமால் ஏ.எச்.எம். யூஸ"ப் நூருல் அயின் . எம்.ஸி.எம். இக்பால் . ஆ. அலாவுதீன்
ン ......ސ
Co)6assoo முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 9
N
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
எம். இஸட் அஹற்மத் முனஷ்வர் சித்தி ஸர்தாபீ ஏ.எம். எம். அலி எம்.எச்.எம் ஹலீம்தீன் என்.எஸ்.ஏ. கையூம் எஸ்.எம். ஜவுபர். ஏ.எல். எம். சத்தார். ஜே. எம் ஹாபீஸ் ஏ.எச்.எம். ஜாபிர் ஏ. எம். நஜிமுதீன் எஸ்.எல்.ஏ. லத்தீப் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் மொஹம்மட் வைஸ் எம். எம். ஸப்வான். ஹிதாயா ரிஸ்வி என். எம். அமீன் மஸிதா புன்னியாமீன் கே. எம். எம். இக்பால்.
பாகம் O2 -
கலாபூஷணம் புண்ணியாமீன் (n)

(O இரண்டாம் பாகத்தில்
uബ/@ഖtി.
37. எம். பீ.எம். அஸ்ஹர் 38. ஜிப்ரி யூனூஸ் 39. எம்.எஸ்.எம். அக்றம். 40. ஏ.எச்.எம்.மஜீத் 41. ஏ.ஏ. றஹற்மான் 42. எஸ். கலீல் 43. எம்.எம். ராஸிக் 44. கே. சுலைமா லெவ்வை 45. யூ.எல்.எம். ஹ"வைலித் 46. ஏ.ஆர்.ஏ. பரீல் 47. சுலைமா சமி 48. ரஸினா புஹார் 49. ஐ.எம். மாருfப் 50. ஸெய்யித் முஹம்மத் 51. ஏ.எஸ்.எம். ரம்ஜான். 52. அப்துல் லத்தீப் 53. எம்.எம். ஜமால்தீன் 54. ஏ. ஜபார் 55. முஹம்மது பெளஸ் 56. சிபார்தீன் மரிக்கார்
ノ
012D6Aశఐ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 10
ཡོད༽
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
மஷ"ரா சுஹ”றுத்தீன் யூ. ஸெயின் ஏ.எல்.எம் அஸ்வர் எம்.எம்.எஸ் முஹம்மத். முஹம்மட் கலில் எஸ்.எல்.எம். அபூபக்கர் எம். யூ முஹம்மது பவரீர் முஹம்மட் இஸ்மாஈல் முஹம்மட் பைரூஸ் எம். ஐ. எம். முஸ்தபா றபீக் பிர்தெளஸ் புர்க்கான்-பீ-இப்திகார். எம்.எஸ்.எஸ். ஹமீத் அப்துல் மலிக் அப்துல் ஸலாம் எம்.எச்.எம். கரீம் எம்.எஸ் றம்ஸின் அப்துல் அசன் ஏ.எஸ்.எம். நவாஸ் முஹம்மது ஹஸனி எஸ்.எஸ் பரீட்
urtoi O2 -
கலாபூஷணம் புண்ணியாமீன் Gs)

இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு ,
క్ష
θψσίΒ/τώ υ/ταδύύ -
برےسےمح2ےPص
Søkøer 6966LSar23
2005
N 6luủgoviĝ UDHub N வெளிவரும்
விபரங்களுக்கு:
செயலாளர் 2/ê)yutpröõửư - đề656)or corẻ ti) வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி டி உடத்தலவிண்னை மடிகே,
உடத்தலவிண்ணை.2O802 gலங்கா. சிதாலைபேசி :- 081-2493746 / 081-2493892 தொலை நகல்:- 08-2497246 மின்அஞ்சல் :- puniyame (a) sltnet.lk
CD6asoo முஸ்லிம் லீழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்ரு

Page 11
இலங்கையில் முஸ்லீம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு .
- இரண்டாம் பாகம் -
Tri ti? -- 1.ாபுடினம் புர்னியாமீர்
 

O - பதிவு 37 -
ஊடகத் துறை
- எம்.பீ.எம். அஸ்23ர் - rーし" الم
Daar ங்கை ராப்ம்ே எழுந்நாார்கள்,ஊடகவியார்கள், கலைஞர்களிள்விபரந்திரட்டு)

Page 12
மேல் மாகாணம், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த முகைதீன் பிச்சை முஹம்மது அஸ்ஹர் அவர்கள்; எம்.பீ.எம். அஸ்ஹர் எனும் பெயரில் பிரபலமான சிரேஷ்ட முஸ்லிம் ஊடகவியலாளராவார். இவர் அஜான், அஸ்கல்ப், ஆபூஅப்ஸர், அபூஸியானா, ஸஹிதா மணாளன், அபூமிப்ராஹற், சத்யன், குலாப், சுழியோடி, கூர்ச்செவியன் ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதிவருகின்றார்.
1947-07-06 lb திகதி முகைதீன் பிச்சை, நுார்சபாயா தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த "அஸ்ஹர்’ அவர்கள் மாளிகாவத்தை டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை, கொட்டாஞ்சேனை மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். 20ம் நுாற்றாண்டின் இறுதிக்கால கட்டங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட மறைமுக சக்தியாக இருந்து வந்தவர்களுள் ஒருவரான இவர் தற்போது இலங்கை முஸ்லிம்களின் ஒரே தேசிய பத்திரிகையான ‘நவமணி யின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு ஊடகத்துறையின் பங்களிப்பு மிக மிக அத்தியவசியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தையான அறிஞர் சித்திலெப்பை அவர்களின் ‘முஸ்லிம் நேசன்' ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களின் சமூக, கல்வி, சமய அபிவிருத்திக்கான அடிப்படையை வழங்கியது. ஆனால் துரதிஷ்டவசமாக 'முஸ்லிம் நேசன் தோன்றி ஒரு நுாற்றாண்டு கடந்து விட்ட நிலையில் கூட இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென ஒரு தனியான தேசிய பத்திரிகையோ அன்றேல் தேசிய ரீதியான இலக்றோனிக் மீடியாக்களோ தோன்றவில்லை. யார் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும். ஏனைய சமூகங்களுடன் ஒப்பு நோக்கும் போது எமது சமூகம் இன்னும் பின்னடைவாக இருப்பதற்கு இதுவே மூலகாரணம் என்பேன்.ஆங்காங்கே இடைக்கிடையே சிறு சிறு பத் திரிகைகள் , ச ஞ சிகைகள் தோனி றினாலும் கூட அவற்றால் தேசிய பரிமாணத்தை அடைய முடியவில்லை.
| ur@tı O2 - கலாபூஷணம் புண்ணியாமீண்

பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதிக்காலகட்டங்களில் காணப்பட்ட நிலைக்கும் இருபதாம் நுாற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் காணப்பட்ட நிலைக்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இங்கு ஏனைய சமூகங்களின் தீவிர எழுச்சிக்கு பத்திரிகைகள் மாத்திரமல்ல இலக்றோனிக் மீடியாக்கள் கணிசமான அளவிற்குப் பங்களிப்பு வழங்கிவரும்
நிலையில இலங்கை வாழ் முஸ் லிமி களுக் கென இலக்றோனிக் மீடியாக்களை விட்டுவிட்டாலும் ஒரு பத்திரிகை கூட இல்லை. எம்மத்தியில் புத்திஜீவிகள் இல்லாமலில்லை.
தனவந்தர்கள் இல்லாமலில்லை. ஆனால் துாரதிருஷ்டி நோக்கில் சமூக எழுச்சியை நோக்காதவர்கள் இருந்ததினாலேயே தான் இத்தகைய நிலை உருவானது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு 1996.10.19 இல் ‘நவமணி’ எனும் பெயரில் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேண ஒரு தேசிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ‘நவமணி' யைப் போல எந்தவொரு முஸ்லிம் பத்திரிகையும் தேசிய பரிமாணத்தை அடையவில்லை. ஜனரஞ்சகத் தன்மையை அடையவில்லை. விற்பனையைப் பொருத்தமட்டில் கூட * நவமணி அச் சாகும் எண் ணிக் கையை எட்டவில் லை.
இப்பத்திரிகை வெளிவரத் தொடங்கியதையடுத்து ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அம்பலத்துக்கு வந்தன. முன்னெப்போதுமில்லாத அளவில் முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகள் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படத் தொடங்கின. விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம்கள் மத்தியில் தம் சமூகத்தின் நிலைபற்றிய உணர்வுகள் ஊடுருவத் தொடங்கியுள்ளன. எனவே அன்று சித்திலெப்பை மூலம் பத்திரிகைத் துறையினுாடாக முன்வைக்கப்பட்ட சமூக எழுச்சிச் சிந்தனைகளை இன்று எம்.பீ.எம்.அஸ்ஹர் அவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றார் என்றால் இதை மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக நான் கருதமாட்டேன்.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 13
இந்த உண்மைநிலை இன்னும் சில தசாப்தங்கள் சென்ற பின்பு சமூகத்தவர்களால் உணரப்படும்.
இக் கருத்துக் குப் புறம் பான ஒரு கருத்தினையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்து நோக்கும் போது ‘பர்பரி மஸ்ஜித் அழிப்புடன் அங்கும் முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் தீவிரமான விழிப்புணர்வுகள் ஏற்படத்தொடங்கியுள்ளன. ஆய்வாளர்களின் கருத்துக்களின் படி பத்திரிகைத்துறையிலும், இலக்றோனிக் மீடியாக்களிலும் ஏற்பட்டுவரும் வேகமான அபிவிருத்தி இத்தகைய தாக்கங்களுக்குக் காலாக அமைந்துள்ளதாக சுட்டிக்கா ட்டப்படுகின்றன. உதாரணமாகத் தமிழ் மூலமாக எடுத்துக் கொள்வோமாயின் “விண் டீவி’, ‘தமிழன் தொலைக்காட்சி’ போன்றவற்றில் இரவு நேரங்களில் ஒலி/ ஒளிபரப்பப்படும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் அக்கபூர்வமானவையாகவும், சமகாலத்தை மையமாகக் கொண்ட சிந்தனா பூர்வமானவைகளாகவும் விளங்குகின்றன. முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமல்ல பிறமத சமூகத்தவர்கள் மத்தியிலும் இவை பிரபல்யமடைந்துள்ளன. இங்கு முக்கிய அம்சம் என்னவென்றால் இத்தகைய இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு முழுமையான விளம்பர அனுசரணைகளை வழங்குவது முஸ்லிம் வியாபார நிறுவனங்களே.
ஆனால் எமது இலங்கையைப் பொருத்தமட்டில் இது நேர்மாற்றமாக உள்ளது. முஸ்லிம் தனவந்தர்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏன் ஹஜ் முகவர்கள் கூட பிற சமூகத்தினரின் ஊடகங்களுக்குத் தமது விளம்பரங்களை வாரிவழங்குகின்றார்களே தவிர எமது சமூக எழுச்சிக்கான ஊடகங்களை கவனிக்கத் தவறிவிடுகின்றார்கள். இது மிக வேதனையான ஒரு சம்பவமே.
எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பள்ளிப் ப்ருவத்தில் தனது இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாவான
u/Tabub o2 -- கலாபூஷணம் புணர்னியாமீனர் (1)

தனது ஆசான் முக்தார்-ஏ-முஹம்மது அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் 1963ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைக்கும், வானொலிக்கும் சிறு சிறு ஆக்கங்களை எழுதிவந்தார். 1965-ம் ஆண்டில் மஜ்லிஸே இஸ்லாமி” வெளியிட்ட ‘புதுமைக்குரல் முஸ் லிம் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பத்திரிகையாளரானார். பின்பு ‘புதுமைக்குரல்’ ஆசிரியரானார். இப்பத்திரிகை ஐந்து வருடங்களுக்கும் மேல் வெளியானது. முதலில் மாத இதழாகவும், பின்னர் இருவார இதழாகவும் வெளியான புதுமைக்குரலில் முதலாவது இதழிலிருந்து கடைசி இதழ்வரை பணியாற்றினார்.
1968ம் ஆண்டில் சுயாதீன பத்திரிகை சமாஜம் வெளியிட்ட தினபதி தினசரியில் இணைந்து முழுநேர உழைக்கும் பத்திரிகையாளராக மாறினார். பாராளுமன்ற செய்தியாளராக பணிபுரியும் பொறுப்பு 1969-ம் ஆண்டிலே கிடைத்தது. 1974ம் ஆண்டில் தினபதி நிறுவனத்துக்கு அப்போதைய அரசு சீல் வைத்தது. உடனே ‘வீரகேசரி தினசரியில் இணைந்து தொடர்ந்தும் பாராளுமன்ற செய்தியாளராகப் பணிபுரிந்தார். தினபதியில் உள்ளும் புறமும் என்ற தலைப்பில் பாராளுமன்ற 'லொபி எழுதிவந்த அஸ்ஹர் வீரகேசரியில் “பாராளுமன்ற பலகணி’ என்ற தலைப்பில் லொபி எழுதிவந்தார். 1969 முதல் 1994 வரை தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பாராளுமன்றச் செய்தியாளராகப் பணிபுரிந்த ஒரே பத்திரிகையாளர் இவரே.
1985 முதல் 1998வரை எழுச்சிக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியராகவும், முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட அல் இல்ம், வழிக்வா, உதயம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் அவ்வப்போது கடமையாற்றியுள்ளார்.
ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இவரின் இரண்டு புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவை
. மாண்புறு ரமழானில் மனதுக்கினிய சிந்தனைகள். 2. உறுமும் கடலும், உலவும் நதியும்.
020|ఏAiవార్ முஸ்கிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 14
‘உறுமும் கடலும், உலவும் நதியும்’ எனும் நூல் இவரின் 25 வருடகால பாராளுமன்ற செய்தியாளர் அனுபவத்தைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. அத்துடன் பாராளுமன்ற மரபுகள் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு கையேடு என்றாலும் மிகையாகாது.
இவரின் மெல்லக் கசிந்த கதைகள்’ எனும் நூல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. வானொலி, ரூபவாஹினி ஆகியவற்றுக்கும் பங்களிப்புச் செய்துள்ள இவர் பத்திரிகையாளராக இந்தியா, ஈரான், துபாய், நெதர்லாந்து, இத்தாலி, லிபியா, எகிப்து, பாக்கிஸ்தான், சவூதி ஆரேபியா ஆகிய நாடுகளுக்கும் சென்று செய்திகள் சேகரித்துள்ளார். ஈரான், ஈராக் யுத்தத்தின் போது ஈரானுக்குச் சென்று யுத்தப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகர் மர்ஹ"ம் இமாம் கொமெய்னி, மற்றும் அலி காமெய்னி, ரப்ஸன்ஜானி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பினையும் இவர் பெற்றுள்ளார். எலிஸபெத் மகாராணியார் உட்பட பல உலகத் தலைவர்களின் இலங்கை விஜயத்தின்போது செய்தி சேகரிப்புப் பொறுப்பை ஏற்றுச் செயல் பட்ட இவர் இலங்கையில் இடம்பெற்ற பல சர்வதேச மகாநாடுகளிலும் பத்திரிகையாளராகப் பங்கு பற்றியுள்ளார்.
தேசிய வாரப்பத்திரிகையொன்றின் முதலாவது முஸ்லிம்
பணிப்பாளரும், முதலாவது முஸ்லிம் பிரதம ஆசிரியருமான
இவரின் சேவைகளை மதித்து பின்வரும் அமைப்புக்கள் இவரை
கெளரவித்துள்ளன.
1, 25 வருட பத்திரிகையாளர் பணிக்காக 1992 இல் முஸ்லிம் சமய கலாசார விவகார ராஜாங்க அமைச்சு ‘செளத்துல் ஹக்” (சத்தியத்தின் குரல்) என்ற பட்டமளித்து கெளரவித்தது
2, 25 வருடகால பாராளுமன்ற செய்தியாளர் பணிக்காக
முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சு 1994இல் விருது வழங்கி கெளரவித்தது.
3, அகில இன நல்லுறவு ஒன்றியம் 29-08-1999இல் இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடந்த சாமழரீ பாராட்டு விழாவில் ‘சாமழரீ
பாகம் O2 - கலாபூஷணம் புணர்னியாமீன்

சத்தியஜோதி என்ற என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
4. மலையக கலை கலாசார ஒன்றியம் 23-12-2000. ஆண்டு
*ரத்னதீப விருது வழங்கி கெளரவித்தது. 5. அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணியின் அம்பாரை
மாவட்ட சம்மேளனம் அதன் 23வது வருட பூர்த்தியின் போது அதாவது 19 - 01 -2003இல் 'ஊடக ஜோதி விருது வழங்கி
கெளரவித்தது.
6. இஸ்லாமிய ஆராய்ச்சி நிலைய தென்கிழக்கு ஆராய்ச்சி
போரம் 2003இல் விருது வழங்கி கெளரவித்தது.
7. ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகம் இரு வைபவங்களில்
விருது வழங்கி கெளரவித்துள்ளது.
8. வித்துவான் எம். ஏ. ரஹ்மான் ‘எழுத்துலக வேந்தர்” என
பட்டம் ஆட்டி கெளரவித்துள்ளார்.
9. 2004 இல் கற்பிட்டிய வாலிபர் சங்கம் இவரை கெளரவித்தது.
எம்.பீ.எம் அஸ்ஹர் அவர்கள் ஒன்பது மாதக் குழந்தையாக இருந்த போதே இவரின் தந்தையார் வபாத்தாகிவிட்டார்கள். தன்னை வளர்த்து, கல்வியூட்டி, சமூக உணர்வு மிக்க ஒரு பிரஜையாக உருவாக்கிய தனது அன்புத் தாயார் நூர் சபாயா அவர்களை எச் சந்தர்ப்பத்திலும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் எத்தகைய பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டாலும் துணிவுடன் முகம் கொடுத்து சமூகத்துக்காக உரிமைக்குரல் கொடுக்கும் வல்லமை மிக்கவர்.
1976-01-17-ம் திகதி ஸஹிதா உம்மாவைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். இத்தம்பதியினருக்கு முஹம்மது அப்ஸல், ஐனுல் சியானா, ஐனுல் மிப்ரா, பாத்திமா மிபாதா, பாத்திமா ஸஹற்ரா ஆகிய ஐந்து அன்புச் செல்வங்களும், இரண்டு பேரக் குழந்தைகளும் உளர்.
இவரின் முகவரி: 115/1 கிட்டம்பஹ"வ, வெல்லம்பிட்டிய
(2D6Aశఐ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 15
s
கலைத்துறை
/
O - பதிவு 38 -
காபூஷணம் புர்னிார்ே
ஜிப்ரி யூனூஸ்
-----
 

மேல் II கI ம்ை, கொழும்பு II வட்டம், மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் "மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட 'ஜிப்ரி பூனூஸ் அவர்கள் இலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்ற அரசியல் கேலிச் சித்திரக் (கார்ட்டூன் கலைஞரகத் திகழந்தவர்.
உலகள11விய ரீதியில் இன்று கேலிச் சித்திரங்கள் சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரத்தவர்களையும் ஈர்க்கும் ஒரு கலையாக வியாபகமடைந்துள்ளது. இருந்த போதிலும் கூட இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இக்கலை அவ்வளவு தூரத்திற்குப் பிரபல்யம் பெறவில் லை என்பது பறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.
கேலிச்சித்திரங்கள், நுண்பாக விடயங்கள் முதல் பாரி1 அழுத்தமான விடயங்கள் வரை ஒரு சித்திரத்தின் மூலமாக மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டவில்லது. எத்த, ராவய ஆகிய பத்திரிகைகளில் அரசியல் கேலிச் சித்திரங்களை வரைந்ததன் ஊடாக சிங்கள வாசகர்கள் மத்தியில் ஜிப்ரி யூனுஸின் நாமம் நிலைத்து விட்டது. 1932 ஆகஸ்ட் 1ம் திகதி பிறந்த 'ஜிப்ரி பூணுாஸ் கொழும்பு பிரஸ் பிடிரியன் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும். வெஸ்லி கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். ைெளப்ளி கல்லூரியில் கற்கும் போது " சன்டே ஒப்சேர்வர் பத்திரிகையில் "Windy l' எனும் மானவர் பக்கத்தில் கேலிச் சித்திரங்களை வரைந்ததனூடாக பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.
1953ம் ஆண்டு ஏப்ரல் 01ம் திகதி தனது 21வது வயதில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் கேலிச் சித்திரக் கலைஞராக சேவையில் இனைந்தார். இக்கட்டத்தில் லேக்ஹவுளப் நிறுவனத்தின் ஆங்கிலப் பத்திரிகையான ஒப்சேர்வரில் அரசியல் கேலிச்சித்திரங்கள் வரைவதில் பிரபல்யம் பெற்றிருந்த ஒப்ரி கொஸ்ட் அவர்களின் சிஷ்யனாக நின்று கேலிச் சித்திரத்துறையில் பல்வேறுபட்ட நுணுக்கங்களைக் கற்றுத்தேறினார். சுமார் 16 ஆண்டுகாலம் தினகரனில் பணி புரிந்த யூனுஸ் 1969ம் ஆண்டில் லேக்ஹவுஸில் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து எத்த சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் பீட ஆலோசகராகப் பணியாற்றிய எச்.ஜி. எச் ரத்னவீர என்பவருடனும்,
(i. |இலங்கை முஸ்ரீம் எழுந்தாளர்கள்,ஊடகவியாTர்கள், கலைஞர்களின் விபரந்திரட்டு

Page 16
பிரதம ஆசிரியர் பீ.ஏ. சிரிவர்தன அவர்களுடனும் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக “கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “எத்த பத்திரிகையில் அரசியல் கேலிச்சித்திரக் கலைஞராக 1971இல் சேவையில் இணைந்தார். இக் கட்டத்தில் யூனுTஸினால் நிர்மாணிக்கப்பட்ட ‘அப்புஹாமி’ எனும் கேலிச் சித்திரத்தொடர் மூலமாக யூனுஸ் சிங்கள வாசகர் மத்தியில் மிகவும் சமீபமானார். 1994 இல் எத்த தினசரிப் பத்திரிகை நிறுத்தப்படும்வரை அப்பத்திரிகையிலே அரசியல் கேலிச் சித்திரக் கலைஞராக செயலாற்றினார். எத்த பத்திரிகையினால் யூனுஸ் பிரபல்யமானார். யூனுஸினால் ' எத்த’ பத்திரிகை பிரபல்யமானது என்று கூறக்கூடியளவிற்கு 'யூனுஸ் எத்தவுடன் ஐக்கியமாகி நின்றார். அதே நேரம் உதயம்’ ‘டொன்' ஆகிய பத்திரிகைகளுக்கும் இவர் கேலிச் சித்திரங்களை வரைந்தார்.
இது மட்டுமல்ல சர்வதேச ரீதியாக இலண்டன் டேலி டெலிகிராப்' பத்திரிகையிலும், பலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் ‘புளட்டீன் பத்திரிகையிலும், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையிலும் இவரின் கேலிச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பரிபாலனக் காலத்தில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த சமயம் மக்கள் விடுதலை முன்னணியினரை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யூனூஸினால் வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் பெரும் பரபரப்பை எற்படுத்தின. விசேடமாக இக்கால கட்டத்தில் இவரால் வரையப்பட்ட கேலிச் சித்திரமொன்றில், கையில் செபமாலையை வைத்தபடி தோளில் ஒழுக்க சீலர்கள் அணியும் சால்வையுடன் ஜனாதிபதி பிரேமதாசவை ஒர் ஒழுக்கசீலர் போல சித்தரித்து வரைந்த கேலிச் சித்திரமும், இன்னுமொரு கேலிச்சித்திரத்தில் ஜனாதிபதி ஒரு கையில் மலர்வளையத்தையும், மறுகையில் "டயரையும் வைத்திருப்பதாக சித்தரித்த கேலிச் சித்திரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கேலிச் சித்திரமொன்று மக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றதென்பதை இது உணர்த்தியது. இலங்கையில் அரசியல் கேலிச்சித்திர வரலாற்றில் *அழியாத கேலிச் சித்திரங்கள்’ என்று இன்றும் ஆய்வாளர்களால் கருதப் படும் இந்த இரண் டு கேலிச் சித்திரங்களையும் வரைந்தமைக்காக யூனூஸ் மரண அச்சுறுத்தலை எதிர்நோக்கினார். கடுமையாகத் தாக்கப்பட்டார்.
υιταδίύ ορ - கலாபூஷணம் புன்னியாமீன்

இத்தாக்குதல்கள் உலக ஊடகவியலாளர்களின் உரிமை தொடர்பான வெளியீடான Index of Censorship புளட்டீனிலும் இடம் பெற்றுள்ளது. அத்துடன் இலங்கையில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பற்றிய அமைப்புகள் செயற்படவும் காரணமாயிற்று. 1992 ஆகஸ்ட் - 18ம் திகதி நண்பகலில் கொழும்பில் சகல பத்திரிகை அலுவலகங்களிலும் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன் "லிப்டன் ரவுண்டில் கூடிய ஊடகவியலாளர்கள் ஊடகத்துறையின் சுதந்திரம், உரிமை தொடர்பாக கோஷமெழுப்பினர்.
அதே நேரத்தில் முன்னைய வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்கள் தம்மைப்பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த கேலிச் சித்திரங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். அப்புத்தகத்தில் யூனூஸ"டைய கேலிச்சித்திரங்களே அதிகமாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெளிவிவகார அமைச்சர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதை கேலிச்சித்திரமாக வரைந்த யூனூஸ் விமானத்தில் இருந்து இறங்கும் அமைச்சர் ஹரிஸ்பத்துவைக்குச் செல்ல வழி கேட்பதைப் போல சித்தரித்திருந்தார். அந்த சித்திரத்தை ஏ.ஸி.எஸ். ஹமீட் அவர்கள் விசாலமாக்கிப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
எத்த பத்திரிகையில் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் கேலிச் சித்திரக் கலைஞனாகப் பணியாற்றிய அவரின் சேவையை கெளரவித்து 20 ஆண்டுகாலப் பகுதியில் இவரால் வரையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கேலிச் சித்திரங்களைத் தொகுத்து ‘எத்த பத்திரிகை நிறுவனம் புத்தகமொன்றினையும் வெளியிட்டது.
1998-ம் ஆண்டில் சிங்கள மொழி மூலம் வெளிவரும் முக்கியமான அரசியல் பத்திரிகையான ‘ராவயவில் இணைந்து 2001-ம் ஆண்டில் தான் நோய்வாய்ப்படும் வரை பணியாற்றினார்.
தொடர் ச் சியாக நாற் பது ஆணி டுகாலமாக கேலிச்சித்திரக்கலைஞனாகப் பணியாற்றிய இவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர். 5000 இற்கும் மேற்பட்ட கேலிச்சித்திரங்களை வரைந்த இவரின் சேவையை மதித்து 2002 பரீலங்கா பத்திரிகை ஆசிரியர்கள் சமாஜம் இவருக்கு அதிவிசேட விருது வழங்கி கெளரவித்தது.
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 17
2003 ஆகஸ்ட் 28ம் திகதி யூனுஸ் அவர்கள் தனது 71வது வயதில் இறைபடி சேர்ந்தாலும் கூட அன்னாரின் கேலிச்சித்திரங்கள் இன்னும் பல காலங்களுக்குப் பேசப்படும் என்பதில் ஐயமில்லை. அதேநேரம் யூனுஸ் போன்ற ஒரு கேலிச்சித்திரக் கலைஞரைப் பெற்றுக்கொள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் இன்னும் நீண்டகாலங்கள் காத்திருக்க வேண்டும்.
மறைந்த யூனூஸ், ஸைனம்பின் அன்புக் கணவரும் ஸ்ரீன், மறைந்த மேஜர் இப்திகார், புஹான் ஸானிக் ஆகியோரின் தந்தையுமானார்.
J.T. iii :::-- ॥1॥1॥ itயாமீர் 보
 

39 -
() பதிவு
ஊடகத் துறை
ノ 6ாம். எஸ். எம். அத்நம்
ン
மூனம்ம்ே விழுந்தாார்கள்,வடகவியtாார்கள், கனtrர்களினர்வீரத்திரட்டு ده (همان نام قه(28)

Page 18
மேல் மாகாணம், களுத்துறை மாவட்டம்,பாணந்துறை தேர்தல் தொகுதியில் தொட்டவத்தை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் முஹம்மது சம்சுதீன் முஹம்மது அக்றம் அவர்கள்; அக்றம் சம்சுதீன், ‘துறையூரான்’ எனும் பெயர்களில் எழுதிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவராவார்.
1948 - 11 - 17ம் திகதி பிறந்த அக்றம் அல்-பஹற்ரியா முஸ்லிம் மத்திய கல்லுாரி (பாணந்துறை) அறபா தேசிய பாடசாலை (வெலிகம) ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை, செய்திகள் எழுதுவதில் தனது 20 வயது முதல் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவர் 1972.10.29ம் திகதியன்று தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி ஆகிய பத்திரிகைகளுக்கு பாணந்துறை நிருபராக நியமனம் பெற்றார்.
ஊடகத்துறையில் இவரது முதலாவது செய்தி * கடை எரிப்பு சம்பவத்தை அடுத்து பாணந்துறையில் தீவிர பாதுகாப்பு’ எனும் தலைப்பில் 29.10.1972 தினபதியில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான செய்திகளை இவர் எழுதிவருகின்றார். மிகவும் ஆணித்தரமான செய்திகளை ஆக்கபூர்வமாக, நடுநிலைப் போக்குடன் எழுதவேண்டும் என்பதே இவரின் குறிக்கோள்.
தினபதி பத்திரிகை நிறுவனம் மூடப்பட்டதையடுத்து வீரகேசரி’யின் செய்தியாளராகவும், படப்பிடிப்பாளராகவும் நியமனம் பெற்று வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தற்போது தொடர்ச்சியாக எழுதி வரும் இவர் தனது புனைப்பெயரில் ‘சூடாமணி பத்திரிகையிலும், பின்பு 'தினக்குரல் பத்திரிகையிலும் எழுதி வந்தார்.
1972 முதல் 1976 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன தமிழ் நிகழ்ச்சியான 'வாலிப வட்டம் மற்றும் முஸ்லிம் சேவையில் ‘செவ்வாய் மலர்’ ‘நூருல் இஸ்லாம்’ ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
அத்துடன் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளான கழிகம்பு,
கோலாட்டம், சிலம்படி போன்ற துறைகளிலும் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
| பாகம் C992 م கலாபூஷணம் புணர்னியாமீன்

கதை, கட்டுரை, சிறுகதை போன்ற துறை ஈடுபாட்டுக்குக் காரணமான "இளம்பிறை' எம். ஏ. றஹற்மான் அவர்களையும், இலக்கியத்துறை பற்றி அறிவினைப்பெற அறிவுபுகட்டிய கலாநிதி எம்.ஏ. உவைஸ் அவர்களையும், ஊடகத்துறையில் ஊக்கம் தந்த மாஸ்டர் சிவலிங்கம் ஆகியோரையும் நினைவு கூர்ந்து வரும் இவர் மனைவியின் பெயர் ஏ.எஸ் சித்தி புலைலா. இவர் ரமீஸா, றம்ஸியா, நஸ்ரீன், நஸ்ரா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி:- 20, இப்றாஹிம் வீதி, தொட் டவத்தை, பாணந்துறை.
G06Aiవిడ్ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 19
O - பதிவு 40 -
எழுத்துத் துறை
3.எச்.எம். மஜீத்
ノ ノ
Errrii E. - கலாபூஷண்ம் புண்ணியாமீர்
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனைத் தேர்தல் தொகுதியில். மருதமுனை (2 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் ஹமீது முகம்மது மஜீத் அவர்கள்: ஏ.எச்.எம். மஜீத். மருதமுனை மஜீத் ஆகிய பெயர்களில் தேசிய தினசரிகள், வாரமலர்கள். சஞ்சிகைகளில் எழுதி வருகிறார்.
கமு மருத முனை அலி மனார் மத்தியகல லுரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை. யாழ் பலாலி ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் ஆவார்.
1935-04-26ம் திகதி பிறந்த இவரின் முதலாவது உருவகக்கதை வீரகேசரி பத்திரிகையில் 1965இல் இடம்பெற்றது. அதிலிருந்து இன்றுவரை நுாற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள், உருவகக்கதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இருப்பினும் இவரது புத்தகமொன்று இன்னும் வெளிவரவில்லை.
1965 ம் ஆண்டில் எழுத்துத் துறைப் பிரவேசத்தை மேற்கொண்டாலும் கூட தனது தொழில் நிமித்தமாக 1970ம் ஆண்டின் பின்னர் இவர் அதிகமாக எழுதவில்லை. தற்போது தொழிலிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு முழுநேரமாக எழுத்துத் துறையிலீடுபடக் கூடிய வாபப்ப்புக் கிட்டியுள்ளதையிட்டு மனநிறைவடையும் இவர் : அண்மைக்காலமாக அரசியல், ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
பிரதேசரீதியாகவும், அகில இலங்கை ரீதியாகவும் அதிக பரிசில களை வெனர் றுள் ள இவரினி இலக் கசியத் துறை ஈடுபாட்டுக்குக்காரணமான கவிஞர் நீலாவணன் அவர்களை மனதில் நிறுத்தினைத்திருக்கும் மஜீத் அவர்களி; செப்த்த என்பவரின் அன்புக்கணவராவார். இத்தம்பதியினருக்கு ஐனுான் ஜாரியா, அம்றுத், Iளiருபா, முஜிபா. பாசிலா, சிராஜ், ஜம்சித் எனும் ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
இவரின் முகவரி: 89, எஸ்.எம். வீதி மருதமுனை - 02
இலங்கை மூளப்ரீம் விழுந்தாளர்கள்,ாடகவியாளர்கள், கனAருர்களினர் விபரத்திரட்டு

Page 20
Ο பதிவு 41
எழுத்துத் துறை
3.பி. ந2ஞ்மாண்
ノ
பாழ் ஒ2 . கலாபூஷணம் புர்னிபாபினர்
 

மத்திய மாகாணம். கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் உடத்தலவின்னை மடிகே. கலதெனிய கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த அபுசாலிவற் அப்துல் றஹ"மான் அவர்கள். தலவின்னஎறலும் மான் வைகறையான், கோட்டகொடை - றனுற்மான், அருட்கொடையூரான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் கவிஞரும்,
எழுத்தநருமாவார்.
1948, 18 01ம் திகதி உடத்தலவின்னை மடிகே எனும்
கிராமத்தில் அபுசாளிலும் தம்பதிகளின் சிரேஷட புதல்வராகப் பிறந்த இவர் க. ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, மாதிப்பொளை அறபா முஸ்லிம் வித்தியாலயம், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, இலங்கைப் பல்கலைக்கழகம் (வெளிவாரி) என்பவற்றின் பழை11 மாணவராவார். இவர் தற்போது வக, நுக தெணிய முனல் லிம் வித்தியாலயத்தில் க மையபுற்றிக் கொண்டிருக்கின்றார்,
இவரின் முதலாவது சிறுகதை சந்தனக்கூடு எனும் தலைப்பில் '8ம் ஆண்டு இன்னான் பத்திரிகையில் இடம் பெற்றது. கண்டி மிரா மக்கம் 11ள்ளிவாயிலில் நீண்ட காலங்களாக இடம்பெற்று வாத சந்தனக் கூட்டினை மையமாக வைத்து எழுதப்பட்ட இச் சிறுகதையைத் தொடர்ந்து சுமார் 80 சிறுகதைகளையும். நுாற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் வெளிவரும் தேசியநாளிதழ்களிலும், வாரமலர்களிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ்ச் சேவை என்பவற்றில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் . ஐப் பதுக் கு மேற் பட்ட களிதைகளும் ஒலிபரப்பாகியுள்ளன.
1985/86 அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை ஆண்டு பாலரான 'கலை அமுதம் சஞ்சிகையின் உதவியாசிரியராகவும், "ஃ687 " கலை அமுதம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் 4 மையாற்றியுள்ளார்.
இவரின் கதைகள் இளப்லாமிய வரம்புக்குட்பட்டு எழுதப்படும் சமூகச் சித்திரங்களாகும். தெளிந்த நீரோட்டம் போன்ற நடையினை இவரது சிறுகதைகளில் காணமுடியும். இதுவரை இவரின் ந்ெதப்புத்தகம் ஒன்றும் வெளிவரவில்லை. விரைவில் தனது
(Daar iliano. ரப்ரீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களிர்வீபரந்திரட்டு

Page 21
சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளி, டாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரவ. ஆசிரியப் பெருந்தகைகளான நஜிமுன்நிஸா ரிக்கார் எri | | ழான் ஆகியோரையும். மற்றும் எஸ். அகஸ்தியர், ஏ.வி.பி 'பா, செ, குணரத்தினம், விமல் சொக்கநாதன், வி.ஏ. கபூர், எ | ஹாரிஸ், அஹமட் முனஸ்வர் ஆகியோரை அன்புடன் நினைவு புது வரும் இவர் ஒரு சிறந்த நாடக நடிகரும் கூட. ' சார்டில் உடத்தலவின்னை மடிகேபில் இயங்கிய முர், ,ா க மன்றத்தின் ஊடாக பல நாடகங்களில் நடித்துள்ளார்
ஏ.ஆர். சித்தி நஎபீமாவின் அன்புக்கணவரான " | rறா பேகம், எனிர், பிர்தெள்ளியா, மாஸா, ஸ்கீரா, ரில்வான் புல் மபாளர், ஷேகீர் பபாஸ், ஷப்ரி ஆகியோரின் அன்புத் தர், புவர்.
இவரின் முகவரி:
27, ши (3њ, உடத்தலவின்னை. 20802
frtirai o - கலாபூஷணம் புணர்னியாமீனர் is )
 

- பதிவு 42
எழுத்துத் துறை
ᏍᏙᏍts. கலீல்
ノ
இலங்கை ரஸ்ம்ே எழுந்தாார்கள்,ஊடகவியரிார்கள், கண்டிருர்களிர்விபரந்நீரட்டி

Page 22
மேல் மாகாணம், கம்பஹா மாவட் i, பியா, தேர்தல் தொகுதியில் மள்ளானை கிராமசேவகர் பிரிவின் வசித்துவரும் சேகுக்கண்டு கலீல் அவர்கள் மூதுரைப் பிறப்பி I 1.1. கொண்டவர். முதுர் கலீல் கண்டு. கலில் கண்டு ஆகிய பெயர்களில சிறுகதைகள் கவிதைகள். கட்டுரைகள் போன்றவற்றை புதிய, இவர் ஒரு எழுத்தாளரும், பத்திரிகையாளருபாவார்.
1956 - 11 - 18ம் திகதி பிறந்த இவர் மூதுர் தேசிய பாடசாலை, கம்பளை ஸாஹிர தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது வத்தளை, புனித அந்தோனியர் தேசிய பாடசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர் மகரகம தொலைக்கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானமும், தொழிநுட்பவியலும் கற்கை நெறியினையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் liplm in Jபrnalism (பத்திரிகைத் துறை டிப்ளோமா) பாடநெறியினைபபும் நிறைவு செய்தவர்.
1994 முதல் தினகரன் நிருபராகப் பகுதிநேரம் பணியாற்றி வருகின்ற போதிலும் கூட ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இதுவரை 11 சிறுகதைகளையும் , 15 கவிதைகளையும் , அதிகளவிலான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல் தினபதி, சிந்தாமணி, நவமணி, காலத்தின் குரல்கள், ஜும்ஆ, தேனி. சுரபி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கவிபரங்குகளில் கலந்து கவிமழை பொழிந்துள்ளார்.
இவரது கன்னிக்கவிதை 1972ம் ஆண்டில் "ஜும்ஆ, பத்திரிகையில் இட்ம்பெற்றது. இதுவரை இவர் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன:
|. கவரிமான் (சிறுகதைத்தொகுதி) 1974
2. விட்டில்களா..? (கவிதைத்தொகுதி) 1975
இவர் சுபைதா கலீல் அவர்களின் அன்புக் கணவரும், முகம்மது நுணப்ரத், முகம்மது நுஜ்ஹத் நுவைஸா பேகம் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி; 643, ஏ. வள்கம, மள்வானை.
பாகம் 0 - கலாபூஷணம் புணர்னியாமினர்

ஊடகத் துறை
எம்.எம். ராலீக்
ஈங்கை முளப்ரீம் விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞ்ர்களின் விபரந்திரட்டு

Page 23
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் செனரத்கம தெற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது முஹம்மது ராளபீக் அவர்கள்; எம்.எம். ராஸிக், ஸ்டார் ராஸிக், மலையக தாரகை, நட்சத்திரம் போன்ற பெயர்களில் எழுதி வந்தாலும் "ஸ்டார் ராஸிக் எனும் பெயரே பிரபல்யமானது.
1946 - 05 - 12ம் திகதி பிறந்த இவர் உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். தற்போது மத்திய மாகாணமின்சக்தி, எரிபொருள் துறை அபிவிருத்தி, வீடமைப்பு, வர்த்தக வாணிபம், சுற்றுலா, சுற்றாடல்துறை அமைச்சின் ஊடக அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார்.
1960-ம் ஆண்டில் தனது பள்ளிப்பருவத்திலே தினகரன் பத்திரிகையில் மாணவர் பக்கம், திங்கள்விருந்து, புதன்மலர் போன்ற பகுதிகளில் இவர் எழுத ஆரம்பித்தார். அத்துடன் தினபதி, ராதா, தினகரன், ரோஜா, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து கவிதைத் தொகுதியொன்றினை வெளியிடும் எண்ணம் இவருக்குண்டு. அத்துடன் 1966-ம் ஆண்டிலிருந்து இவரது பல்வேறு கட்டுரைகள் பத்திரிகைகளில் இடம்பெறலாயிற்று. அரசியல், சமூக, கலாசார, கல்வி, கலை தொடர்பான பல கட்டுரைகளையும், பெரியார்கள் பற்றிய நினைவுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
1978ம் ஆண்டில் 'தினகரன்' பத்திரிகையின் ஹாரிஸ்பத்துவ குறுாப் நிருபராக நியமனம் பெற்றார். ஆரம்பத்தில் பகுதி நேரச் செய்தியாளராகக் கடமையாற்றிய போதிலும் கூட தற்போது முழு நேரமாக ஊடகத்துறையாளராகவே செயலாற்றி வருகின்றார். தினகரனுக்கு மேலதிகமாக இலங்கை வானொலியின் செய்தியாளராகவும் கடமையாற்றுகின்றார்.
"ஊடகத்துறையில் - குறிப்பாக பத்திரிகைத்துறையில் சமுதாய நலனுக்கு, பிரதேச நலனுக்கு, நாட்டு நலனுக்கு என்னாலியன்ற பணிகளை எனது சக்திக்கு உட்பட்ட வகையில் பத்திரிகை தர்மத்துக்கு இசைவாக பிரதிபலன் எதிர்பாராது இனிதே
TiTi di — பலாபூஷணம் புணர்னியாமினர் Gs)

நிறை வேற்றுவதே என் இலட்சியமாகும்.” எனக் கூறும் ராஸிக் சில செய்திகளை எழுதியமை காரணமாக தாக்குதல்களுக்குள்ளான சந்தர்ப்பங்களும் உண்டு என்கிறார். அத்துடன் பள்ளிவாசல் நிர்வாகசபைத் தெரிவு தொடர்பான தில்லு முல்லுகளை எடுத்துக்காட்டியதால் வக்புசபை முன் சாட்சியமளிக்கவும் இவருக்கு நேர்ந்துள்ளது.
நான்கு தசாப்தங்களாக எழுத்துலக சேவையில் ஈடுபட்டுவரும் இவரது சேவையை கெளரவித்து மலையக கலை, கலாசார, ஒன்றியம் 2003ம் ஆண்டில் இவருக்கு 'இரத்னதிபம்’ விருதுவழங்கி கெளரவித்தது.
இவரது இலக்கியத்துறை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக ஆரம்பத்தில் விளங்கிய பாடசாலை ஆசிரியர்களையும் , காலப்போக்கில் பிரபல இலக்கியகர்த்தாவும், உறவினருமான மர்ஹும் எச்.எம்.பி. மொஹிடீன், கவிஞர் ஏ. இக்பால் ஆகியோரையும், பத்திரிகையாளராக பிரபல்யம்பெற ஊக்குவித்த சிரேஷ்ட அரசியல் வாதியும், அமைச்சருமான மர்ஹ"ம் ஏ.ஸி.எஸ். ஹமீட் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் கமீரா மத்திய கல்லூரியின் ஆசிரியை லத்திபா உம்மா ராளபீக்கின் அன்புக் கணவராவார். இத்தம்பதிகளுக்கு றம்ஸிறியாஸ், றஸிம், பாத்திமா ருஸ்தா ஆகிய நான்கு அன்புச் செல்வங்கள் உளர்.
இவரின் முகவரி 594 3 பொல்களப்தெனிய, கட்டுகளில் தோட்ட,
GOEafia முனர்மீம் rழுத்தாளர்கள்,ஊடகவியtாார்கர், கணிஸ்நர்களிர்வீரந்நீரட்டு

Page 24
- பதிவு 44
ஊடகத் துறை
கே. சுலைமாசிலsள்வை
ノ
ritmii a. –
L-EAIT LAGIT if:
புர்ரீராழிகள்
(a)
 

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், திருகோணமலை தேர்தல் தொகுதியின் "நாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த காசீம் முகம்மது சுலைமான் லெவ்வை அவர்கள்: கே. சுலைமான், கே. எஸ் லெவ்வை, தளப்னிமா ஆகிய பெயர்களில் எழுதி வரும் ஊடகவியலாளராவார்.
1947 - 07 - 31 ஆம் திகதி பிறந்த கே. சுலைமான் சீனக் குடா தி வெள்ளைமணல் அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 1979 - 10 - 01ம் திகதி முதல் தினபதி, சிந்தாமணி பத்திரிகை நிறுவனம் மூடப்படும் வரையில் சீனக்குடா பிரதேச நிருபராக பணியாற்றிய இவர் பிரதேச செய்திகளை மாத்திரமல்லாது திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும், முஸ்லிம் கிராமங்களைச் சார்ந்த பல்வேறு செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
1968ஆம் ஆண்டு சீனக்குடாவில் அமைந்திருந்த இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் சாதாரண ஊழியராக சேர்ந்து, பதவி உயர்வுகளைப் பெற்றபின் 1979 ஆம் ஆண்டு புல் மோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து. சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்ற இவர், தற்போது, முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றார். அத்துடன் இலங்கையின் தென்பகுதியான பலப்பிட்டியில் இருந்து வெளிவரும் "ஜும்ஆ' மாதாந்த இதழின் திருகோணமலை மாவட்ட ஆலோசகராகவும், நிருபராகவும் 1996 ஆம் ஆண்டு முதல் சில வருடங்கள் பணியாற்றியுள்ளார். இடையில் 1993ஆம் ஆண்டு தினமுரசு பத்திரிகை நிருபராகவும், 1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெளியான சூடாமணி, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகளின் நிருபராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
1987ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களின் போது திருகோணமலை மாவட்டத்தில் நிருபர்கள் யாரும் செயல் பட முடியாமல் இருந்த காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களுக்கும் சென்று பல சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியில் செய்திகளை சேகரித்து, தினபதி, சிந்தாமணி பத்திரிகை களுக்கு அனுப்பியதன் மூலம் ஆசிரியபீடத்தில் பாராட்டுதல்களைப்
|இலங்கை முஸ்லீம் விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களிர்விபரந்திரட்டு

Page 25
பெற்றார்.
1997ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட ரீலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட இவர் தொடர்ந்தும் ஒன்றியத்தின் அங்கத்தவராக இருந்து வருகின்றார்.
பத்திரிகைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கும் இவர். தற்போது திருகோணமலை மாவட்டத்தின் சீனக்குடா குடாக்கரைப் பிரிவின் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் கடமையாற்றிவருகின்றார்.
கடுகண்ணாவை குறுக்குத்தலையைச் சேர்ந்த சம்சுல் ஹிதாயா என்பவரை பாரியாராகக் கொண்ட இவருக்கு தஸ்னிம் பானு,ரிஹானா பேகம், முகம்மது ஆஸிக், ஹஸ்ஸானா, முகம்மது ஆஸாத், முகம்மது அகீல் ஆகிய ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்.
பத்திரிகைத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் என்ற வகையில் இவரது மைத்துனர் மர்ஹும் மெளலவி பீ. அப்துல் பரீட் (கலைப்பிரியன் பரீட்) அவர்களையும், தினபதி சிந்தாமணி பிரதம ஆசிரியர் எஸ், டி. சிவநாயகம், திருவாளர்கள் ம.வ. கானமயில்நாதன், கே. கே. இரத்தினசிங்கம், இரா. செல்ராஜா, மற்றும் இவரது சகோதரி பளிலா ஏ. பரீட் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் தற்போது, நவமணி, சுடர்ஒளி, சக்தி வானொலி ஆகியவற்றின் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரது முகவரி. 06, நஸார் வீதி, வேப்பங்குடா. சீனக்குடா
Er yr a'i ce). -- கலாபூஷணம் புணர்னியாமீர்

Ο - பதிவு 45 -
எழுத்துத் துறை
யூ.எல்.எம். ஹ"வைலித்
ノ ノ
(1)GA Ísla முஸ்லீம் எழுத்தாளர்கள்.ண்டகசரியாார்கள், கலைஞர்களினிலிபரத்திரட்டு)

Page 26
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில், அலவதுகொட கிராமசேவகர் பிரிவில் வசித்து வந்த உதுமான்லெப்பை முஹம்மது ஹ"வைலித் அவர்கள்: கவிஞர் யூ.எல்.எம். ஹ"வைலித், மறையும் நிழல், பறக்கும் உயிர் ஆகிய பெயர்களில் எழுதி வந்த மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகிலும் சரியே, தனது சொந்த வாழ்க்கையிலும் சரியே, ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியான முறையில் வாழ்ந்து வந்த ஹ"வைலித் அவர்கள் 2002 - 12 - 28ம் நாள் இறையடி சேர்ந்து விட்டாலும் கூட அவரது இலக்கியங்கள் சாகாவரம் பெற்றவை.
1941 - 11 - 22ம் திகதி மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை மாருக்கோண எனும் சிற்றுாரில் பிறந்த இவர் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை, மாத்தளை ஸா ஹரிராக் கல லுரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
தொழில் ரீதியாக ஆசிரியராக, அதிபராக 32 வருடங்கள் கல்விப்பணி புரிந்த இவர் தனது சேவைக்காலத்தில் ஆசிரியர் சேவையில் திலகமாய் விளங்கியதுடன் தனது ஒய்வு நேரத்தை இலக்கியத்துக்காகவும் ஒதுக்கினார்.
1959 ஆண்டு தினகரன் பத்திரிகையில் இவரது முதலாவது கவிதை இடம்பெற்றது. இதிலிருந்து ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், ஆய்வுகள் படைத்துள்ளார்.
இவர் ஏழு நூல்களை எழுதியுள்ளார்; அவை.
1) தத்துவச்சாறு (கவிதைநூல்) 1968 2) தேவஹ"வ (வரலாற்று ஆய்வு) 1972 3) ஒளிப்பாதையில் ஸாஹிரா (கல்வி) 1973 4) ஜீவியப்பயணம் (சமூக உளநூல்) 1987 5) புகைத்தலும், பரிகாரமும் 1989 6) என் இல்லாள் (கவிதைத்தொகுப்பு) 1970
7) கவிஅரங்கில் ‘மறையும் நிழல்' 1983
பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன் Gas)

6
இவற்றுடன் இவரின் ஆய்வுகளான ‘மாற்றத்தின் தோற்றம்”, அக்குறணைப் பிரதேசம் என்பன கோடிட்டுக் காட்டக்கூடிய ஆக்கங்க ளாகும்.
1970களில் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக இக்கவிஞர் விளங்கியதுடன் அவ்வியக்கத்தின் முதலாவது செயலாளராகவும் இயங்கியுள்ளார். தொடர்ந்து 1986ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ‘செரண்தீப் இஸ்லாமிய எழுத்தாளர் முன்னணி’யின் முதல் தலைவராகவும் தொழிற்பட்டுள்ளார்.
“எழுத்துகளெல்லாம் எழுத்துகளல்ல, மனிதப் பண்புகளை வளர்க்கும் அல்லது உருவாக்கும் எழுத்துக்களே உண்மை எழுத்துக் களாகும்” என்ற அடிப்படைக் கருத்தினைக் கொண்டு எழுதிவந்தஇவர் தனது அந்திம காலத்தை இஸ்லாமிய த.வா பணியில் முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.
இவரின் இலக்கியச் சேவையை கெளரவித்து 1999ம் ஆண்டில் மத்தியமாகாண கமத்தொழில், கமநலசேவைகள், உணவு, கூட்டுறவு மீன்பிடி (நன்னீர்), இளைஞர் விவகாரம், முஸ்லிம்கல்வி, முஸ்லிம் கலாசார விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட மத்திய மாகாண முஸ்லிம் கலைஞர் கெளரவிப்பு விழாவில் ‘கலைச்சுடர்’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
ரபீகுன்னிஸாவின் அன்புக்கணவரான இவர் பாத்திமா பிர்தெள சியா, பாத்திமா சுஆதா, பாத்திமா ரிஷாதா, முஹம்மது ரஷாத், முஸம்மது இர்ஷாத் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
Ga) sa ino முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு)

Page 27
ஊடகத் துறை
Η ται σε - கலாபூஷணம் புணர்ணியாமினர் ■了
 

மத்தியமாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில், கலதெனிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் றஹீம் அப்துல் பரீல் அவர்கள் உடத்தலவின்னை பரீல், ஏ.ஆர்.ஏ. பரீல் ஆகிய பெயர்களில் எழுதி வரும் எழுத்தாளரும், ஊடகவியலா ளருமாவார். இவருடைய ஆக்கங்கள் தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, வானொலி மஞ்சரி, கதம்பம், காங்கிரஸ், அமுது, நவமணி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன.
1950- 1 - 28ம் திகதி உடத்தலவின்னை மடிகே எனும் கிராமத்தில் அப்துல் றஹீம் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த இவர் க ஜாமியுல் அஸ்ஹர் பத்திய கல்லூரி, Inglish Acadamy-Kandy, மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகம் -கொழும்பு வளாகம் ஆகியவற்றின் பழைய மானவராவார். தற்போது 13:11. LLaLLLLLLLa TTT LHLLLLLLL LLLL LSL LSLS SLLLLLS LL S TT 0TT TT வருடம் இவர் தனது தொழில் நிமித்தமாக அடிக் கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருபவராவார்.
1970 - 10 - 19ம் திகதி இவரின் முதல் சிறுகதை 'இதுதான் உலகம் எனும் தலைப்பில் "மித்திரன் பத்திரிகையில் இடம்பெற்றது. அதி விருந்து இன ற வரை ஐம் பதுக் கும் அதிகமான சிறுகதைகளையும் , நுாற்றுக் கணக் கான கட்டுரைகள் . ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். "மண்வாசனை வீசக்கூடிய இவரது சிறுகதைகள் சில பிரளயங்களையும் ஏற்படுத்தியுள்ளன. வெகுவிரைவில் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஊடகத்துறையிலும் சுமார் மூன்று தசாப்த காலாக ஈடுபட்டு வருகின்றார். 1971 - 07 - 25ம் திகதி பீரகேசரி பத்திரிகையின் செய்தி நிருபராக கடமையாற்றிய இவர், பின்பு தினபதி, சிந்தாமணி பத்திரிகையின் கண்டி நிருபராகப் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் சன்சோனி விசாரணைக் கமிஷன் செய்திகளை உடனுக்குடன் திரட்டிவழங்கியதன் மூலமாக மிகவும் பிரபல்யம் பெற்றார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பப்பகுதியில் தொழில் வாய்ப்புப் பெற்று பலுப்ரெய்ன்' நாட்டுக்குச் சென்ற இவர்
இலங்கை ரம்ஜீழ் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கர், கடிைதர்களிர்வீபரந்தீரட்டு

Page 28
அங்கு சந்தைப்படுத்தல் முகாமையாளராக சுமார் ஒன்றரைத் தசாப் தங்கள் பணியாற்றியுள்ளார். இக்காலகட்டத்திலும் இலங்கைப் பத்திரி கைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவந்தார்.
மீண்டும் தாயகம் திரும்பியுள்ள இவர் தற்போது 'தினகரன்' பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
தனது எழுத்துத் துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்ற வகையில் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், முன்னாள் வீரகேசரி ஆசிரியர் திரு. சிவப்பிரகாசம், திக்குவல்லைக் கமால் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் மர்லியா பரீலின் அன்புக் கணவராவார். பாத்திமா ஹ"மைரா, பாத்திமா பஸ்ரியா, பாத்திமா மஸ்லியா, பாத்திமா மபாஸா - இவர்களின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி gs). 37,
மடிகே, உடத்தலவின்னை 20802
E MATTHIii Do?. — கலாபூஷணம் புள்ளியாமீர் |Go0
 

Ο - பதிவு 47 -
எழுத்துத் துறை
GrøstsuD/r B-tb
ク لر
(50)|6వ వారి முஸ்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், க1ைஆர்களின் விபரந்திரட்யூ

Page 29
சபரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், மாவனெல்லை தேர்தல் தொகுதியில் ‘கிருங்கதெனிய கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் திருமதி சுலைமா சமி இக்பால் அவர்கள் பேருவளை, தர்காநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுலைமா சமி, தர்காநகர் சுலைமா சமி, சுலைமா சமி இக்பால் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிவரும் இவர் சமூக சிந்தனையுள்ள ஒரு சிறந்த எழுத்தாளராவார்.
1960-04-15ம் திகதி பிறந்த சுலைமாசமி களு/ அளுத்கம வீதி முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையின் (தர்கா நகர்) பழைய மாணவியாவார். 1977ம் ஆண்டில் 'தினகரன்’ பத்திரிகையில் வெளிவந்த ‘கண்டதுண்டா கேட்டதுண்டா?’ எனும் பகுதியில் ஒரு துணுக்கினை எழுதியதனூடாக பத்திரிகை உலகில் பாதம் பதித்து இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், அதிகளவிலான கவிதைகளையும் , நூற்றுக் கணக்கிலான கட்டுரைகளையும் எழுதி இலக்கியத்துறையில் தனக்கெனத் தனியிடத்தினை வகுத்துக் கொண்டுள்ளார். அத்துடன் 1984 முதல் 1995வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ‘மாதர் மஜ்லிஸில் நூற்றுக்கணக்கான பிரதியாக்கங்களைச் செய்துள்ளார்.
தினகரன், சிந்தாமணி, நவமணி போன்ற தேசிய இதழ்களிலும் பாமிஸ், ஜும்ஆ, முஸ்லிம், உதயம், ப்ரியநிலா போன்ற சஞ்சிகை களிலும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, முஸ்லிம் சேவை என்பவற்றிலும் எழுதிவரும் இவரின் மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன அவை.
1. வைகறைப் பூக்கள் - தமிழ் மன்றம் - 1987 2. மனச்சுமைகள் - தமிழ் மன்றம் - 1988 3. திசைமாறிய தீர்மானங்கள் - சிந்தனை வட்டம்- 2003
அண்மையில் மாவனெல்லையில் நடைபெற்ற திசைமாறிய தீர்மானங்கள் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் இந்தியா வைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான டாக்டர் ஹிமானா செய்யித் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சுலைமா சமியின் சிறுகதைகளில் சமூக அவலங்களைக் காணமுடியும். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கைகளைக் களைவதிலும், சமூக எழுச்சிக்கான முற்போக்கு
பாகம் Q2 -س கலாபூஷணம் புணர்னியாமீனர்

சிந்தனைகளை முன் வைப் பதிலும் இவரது சிறுகதைகள்
முனைக்கின்றன. காலத்தின் தேவையுணர்ந்து தனது எழுத்துக்கு களமமைப்பது இவரின் சிறப்பம்சமாகும்.
தனது இலக்கியப் பயணத்துக்கு ஆரம்பம் முதல் ஒத்தாசையாக இருந்து வந்துள்ள அன்புப் பெற்றோர், உடன்பிறப்புகளையும், அண்மைக்காலமாக பூரண ஒத்துழைப்பு வழங்கி வரும் தனது அன்புக் கணவரையும், பிள்ளைகளையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் பிரதேச, தேசிய ரீதியில் நடைபெற்ற பல கட்டுரை, கவிதை, சிறுகதைப் போட்டிகளில் கலந்து பல பரிசில்களை வென்றுள்ளார். 1997ம் ஆண்டு மாத்தளை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் மர்ஹ"ம் எம்.எச்.எம். அஷ ரப் அவர் களினால் தங்கப் பதக்கம் வழங் கி கெளரவிக்கப்பட்டமையை தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகக் கொண்டுள்ளார்.
இவரது இலக்கியச் சேவையை கெளரவித்து 2002ம் ஆண்டில் மத்திய மாகாணக் கல்வி அமைச்சர் திரு. வீ. ராதா கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளார்.
கம்பளை இல்லவத்துறை ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மெளலவி ஏ.சீ.எம். இக்பால் அவர்களின் அன்புப் பாரியாரான இவர் பாத்திமா இன்ஷிராஹ, பாத்திமா இன்ஷிபா, அஷ்பாக் அஹமத் ஆகிய மூன்று செல்வங்களின் அன்புத் தாயாருமாவார்.
இவரின் முகவரி 19, கமன்தெனிய வீதி
கிருங்கதெனிய, மாவனல்லை. جج کر
ーニs
//
(52)|ఏAశఐర్ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 30
Ο -பதிவு 48
எழுத்துத் துறை
( ரஸினா புருTர்
பாகம் 24 - கலாபூஷணம் புள்ளியாமீர்
 

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், பஸ்ஸரை தேர்தல் தொகுதியில், லுணுகலை கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி உம்மு நஎபீனா புஹார் அவர்கள்; றளபீனா புஹார் எனும் பெயரில் எழுதிவரும் மூத்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1949 - 12 - 25ம் திகதி மத்திய மலைநாட்டில் லுணுகலை பிரதேசத்தில் பிறந்த இவர் பது லுணுகலை தமிழ் மகா வித்தியா லயம், களு அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவியாவார். ஆசிரியையாகவும், அதிபராகவும் பணியாற்றித் தற்போது ஓய்வு பெற்றுள்ள இவர் கவிதைத் துறையிலே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
1966-ம் ஆண்டில் இவரது முதல் கவிதை "பெண்கள் உலகம் எனும் பெயரில் 'தினகரன்' பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அதிலிருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரது அநேகமான ஆக்கங்கள் " தினகரனர் பத்திரிகையிலே பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலியில் இவரது பல கவிதைகள், சிறுகதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் அணி மைக் காலமாக மித் திரண் , நவமணி, இடி போன்ற பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் இடம் பெற்று வருகின்றன.
"மண்ணிழந்த வேர்கள் எனும் தலைப்பில் இவரது முதலாவது கவிதைத் தொகுதி 2003ம் ஆண்டில் வெளிவந்தது. இவரது முதல் கவிதை நூல் இவருக்குப் பல கசப்பான அனுபவங்களைத் தோற்றுவித்துள்ளது. சுமார் 37 ஆண்டு காலமாக தமிழ் இலக்கியத்தில் - குறிப்பாக மலையக இலக்கியத்தில் பெருந்தோட்டத்துறைசார்ந்த சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் மூத்தபெண் கவிஞராக இருந்த போதிலும் கூட வெளியீட்டுத்துறையில் முன்அனுபவமில்லாத காரணத்தினால் மலையக முத்திரையில் நூல்களை வெளியிட்டு வரும் ஒரு வெளிபபீட்டாளரின் உதவியை நாடியிருக்கின்றார் . இந்த வெளியீட்டாளராகக் கூறிக்கொள்பவர் ரஸினாவிடமிருந்து பத்தாயிரம் ரூபாய்களை முற்பணமாகப் பெற்றுக் கொண்டு ‘மண்ணிழந்த வேர்கள் கவிதைத் தொகுதியின் ஒரு பிரதியை மாத்திரம் இவருக்கு வழங்கியுள்ளார். அதே நேரம் இலங்கை இலக்கிய வரலாற்றிலே
(*)இலங்கை முஸ்லீம் எழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், கன*நர்களிர்வீமரத்திரட் b

Page 31
ஒரு சாதனையாக அந்த வெளியீட்டாளர் நூலாசிரியை இல்லாமலே கண்டியிலும், கொழும்பிலும் வெளியீட்டு விழாவையும், அறிமுக விழாவையும் நடத்திப் பணம்புரட்டியுள்ளார். இச்சம்பவத்தையிட்டு மிகவும் மனவேதனைப்படும் ரஸ்பீனா இதனை ஒரு சவாலாக ஏற்று இன்னும் ஒரு சில நூல்களை வெளியிட முன்வந்திருப்பது பாராட்டக் கூடிய ஒரு விடயமாகும்.
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக எழுதிவரும் மலையக முஸ்லிம் பெண் எழுத்தாளரான இவர்பற்றி தினகரன் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த திரு அருள் சத்தியநாதன் கூறிய கருத்துகள் அவதானிக்கத் தக்கவையாகும்; `. மலையக மண்வாசனை மாறாது. இவரது கவிதைகளும் சீதனப்பிரச்சினை, காதல், மாரியம்மன் திருவிழா, மலையக அரசியல்வாதிகள், பெண்ணடிமை, மதுவரக்கன், வெளிநாடு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, வீட்டு வேலைக்காரர் விவகாரம் என மலையகத்தோடு பிணைந்துள்ள பிரச்சினைகளைத் தமது கவிதை வரிகளில் எடுத்தாண்டுவரும் இலாவகமும், முற்றிலும் வேறான சமூக, கலாசார, மத அனுஷ்டானங்களைக் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணியால் சாத்தியமாகக் கூடிய ஒரு காரியம் தானா என்ற சந்தேகத்தின் விளைவாகவே. தினகரனில் இவரது கவிதைகள் வெளிவரும்போது பலர் என்னிடம் வந்து யார் இந்த றஸினா? உண்மையிலேயே இவர் முஸ்லிம் தானா? எந்த ஊர்? என விசாரிக்கத் தொடங்கினர்.
"..எந்தவொரு மலையகத் தமிழ் கவிஞனையும் விட மலையகப் பெருந்தோட்டப் பிரச்சினைகளை வெகு யதார்த்தமாக அணுகுகின்றார். சாதாரண மனிதனுக்குப் புரியும் வகையில் அதை எடுத்துச் சொல்லுகிறார். முற்றிலும் வித்தியாசமான பின்புலத்தைக் கொண்ட இக் கவிஞர் 'இது எனது மண் இல்லை' என ஆகாயத்தில் வேர் புதைக்காமல் தான் பிறந்து வளர்ந்த மண்ணிலேயே ஆழமாகத் தன் வேர்களை ஊன்றியதன் விளைவாகவே அவரிடமிருந்து சமூக பிரக்ஞை கொண்ட கவிதைகள் ஊற்றெடுத்து வர முடிகின்றது.”
மலையக இலக்கியம்' என்று வரையறையிட்டு ஆராயும் பெருந்தகைகளுக்கு றஸினாவின் பெயரை இன்னும் ஏன் உச்சரிக்கக் கூச்சமாக இருக்கின்றதோ? புரியாத புதிர். சில நேரங்களில் இவர் ஒரு முஸ்லிமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
u Titi : - கலாபூஷணம் புர்ரீாமீர் Gs)

தனது இலக்கியப் பயணத்துக்கு உந்து சக்தியாக விளங்கும், தனது அன்புக் கணவர், மகள் மற்றும் அண்மைக்காலமாக தனது படைப்புகளுக்கு கணிசமான இடம் வழங்கி வரும் தினகரன் இணை ஆசிரியர் திரு அருள் சத்தியநாதன் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் ஜனாப் டீ. இசட் புஹாரின் அன்பு மனைவியார். ஆசைக்கு ஒரு மகள் சிபாயா புஹார், ஆஸ்திக்கு ஒரு மகன் சிராஸ்புஹார் ஆகியோரின் அன்புத் தாயாரான இவரின் முகவரி:
109, பிரதான வீதி,
g]55) 6)
(5)æ மூனம்ம்ே எழுந்தாளர்கள்,ஊடகவியாார்கள், கலைஞர்களிர்வீரந்திரட்டு

Page 32
எழுத்துத் துறை
ưTott Co- கலாபூஷணம் புர்ரியாமீர் O sin)
 
 
 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், மஹநுவர தேர்தல் தொகுதியில், கட்டுகலை - மேற்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இப்ராஹிம் முஹம்மட் மாருfப் அவர்கள், ஐ.எம். மாருfப் எனும் பெயரில் தமிழ், சிங்கள மொழிகளில் கவிதைகள், இஸ்லாமிய பாடல்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வந்தாலும் கூட சிங்கள மொழியிலே அதிகமாக எழுதிவரும் எழுத்தாளராவார்.
1946 - 08 - 01 திகதி இப்ராஹீம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக உடத்தலவின்னை மடிகே எனும் கிராமத்தில் பிறந்த இவர்; உடத்தலவின்னை மடிகே ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி சித்திலெப்பை மகாவித்தியாலயம், கண்டி வித்தியாதர்ஷன பிரிவென, கண் டி சரசவி கலாலயம் , அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.
1968ம் ஆண்டில் இவரின் கன்னிக்கவிதை "தினமின சிங்களப் பத்திரிகையில் 'சந்த' எனும் தலைப்பில் பிரசுரமாகியுள்ளது. இதிலிருநது ஐம் பதுக் கும் மேற் பட்ட சிங் களக் கவிதைகளையும்,சிங்கள மொழியில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்களையும் இயற்றியுள்ளார். எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைச் சரிதம், கலிபாக்கள், சஹாபாக்கள், இமாம்கள் போன்றோரின் வாழ்க்கைச் சரிதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இவரால் புனையப்பட்ட சிங்கள மொழியிலான இஸ்லாமிய கீதங்களும், கவிதைகளும் மிகவும் ஜனரஞ்சகமாகின. சிங்கள மொழியில் மாத்திரமல்லாமல் தமிழ் மொழி மூலமாகவும் பல இஸ்லாமிய கீதங்களை இவர் எழுதியுள்ளார்.
அத்துடன் இளப்லாமிய சமய அடிப்படைகளை மையமாகக் கொனர் டு பல்வேறுபட்ட கட்டுரைகளை சிங் கள தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.
இவர் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை மாணவராக இருந்த காலத்தில் சிங்கள-தமிழ் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய தொகுதியொன்றினை “மீலாத் துடுபடுரகி" (மீலாத் அன்பளிப்பு) எனும் பெயரில் வெளியிட்டுள்ளார். இப்புத்தகம் 1969-05-29ம் திகதி
058)EAశవాది முஸ்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவீHATTர்கள், கலைஞர்களின் லிபரத்திரட்டு)

Page 33
வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘கவிசங்கிராய' எனும் சிறு நூலினையும் (1970இல்) வெளியிட்டுள்ளார்.
இவரால் இயற்றப்பட்ட இஸ்லாமிய கீதங்களனைத்தையும் தொகுத்து சிங்கள மொழியில் பாரியஅளவிலான புத்தகமொன்றினை வெளியிடும் எண்ணம் இவருக்குண்டு. கவி வடிவில் - பாடல்களாக இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களையும், இஸ்லாமிய கோட்பாடு களையும் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும் என்பது மாருப்பின் நீண்டநாளைய ஆசையாகும்.
இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ‘சித்திஜய சிங்கள முஸ்லிம் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார். சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புத்துறையில் பாண்டித்தியம் பெற்ற இவர் முன்னாள் நீதி, அரசியலமைப்பு விவகார, இனவிவகார, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் சிங்கள - தமிழ் பரிவர்த்தனையாளராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாகத் திகழ்ந்த கண்டி சரசவி கலாலயம், உடத்தலவின்னை இஸ்லாமிய எழுத்தாளர் சங்கம், கண்டி இஸ்லாமிய கீதக் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து 1999ம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் முஸ்லிம் சமய விவகார அமைச்சு கலைச்சுடர்’ பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
இவரது மனையாள் எம்.எச். ஹைருநிஸா ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியையாவார். பாத்திமா சஹற்மரா, பாத்திமா சஹற்லா ஆகிய இரு பெண் செல்வங்கள் இவருக்குள்ளனர்.
இவரின் முகவரி:
430 பேராதனை வீதி, கண்டி.
ராகம் (2 - கலாபூஷணம் புள்ளியாயினர் |[5)
 

Ο - பதிவு 50
எழுத்துத் துறை
கலாபூஷணம்
சிஸsய்யித் மூவரும்மத்
GoDaason. ழஸ்ரீம் ஆர்
- ATT LITET
yTTTTTTTTT,Carl-Thai) rrrl'Itali Mfðbeis, கனAஆர்களிர்வீரரந்திரட்டு

Page 34
கிழக்கு மாகாண்ம், மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி 3ம் குறிச்சி, கிழக்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஸ்தபா ஆலீம் ஸெய்யித் முஹம்மத் அவர்கள்; எம்.ஏ. ஸெய்யத் முஹம்மத் எனும் பெயரில் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவரும் சிரேஷ்ட எழுத்தாளர்களில் ஒருவராவார்.
மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தி, அதனை மேம்பாடடைய பேருதவி புரிவது இலக்கிய எழுத்துத் துறையாகும். அந்த வரிசையில் ‘ஸலவாத்”, அரபு மொழியிலுள்ள உயர்ந்த இலக்கியமாகும். அந்த அரபு இலக்கியத்தை, தமிழுலக முஸ்லிம் மக்கள் நலன் கருதி நற்றமிழ் இலக்கியத்தில், ஸலவாத் பாடலின் தொகுப்பினை குறட்பா, வெண்பா வடிவில் மாலையாக, மலராக, சுடராக வெளியிட்டவர்களின் வரிசையில் ஸெய்யித் முஹம்மத் அவர்களுக்குத் தனியிடமுண்டு.
காத்தான்குடியில் முஹம்மது முஸ்தபா ஆலீம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1931-03-25ம் திகதி பிறந்த ஸெய்யித் முஹம்மத் அவர்கள் மட்/ காத்தான்குடி மத்திய கல்லூரி, அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஆசிரியராகத் தொழில் துறையில் இணைந்து நீண்டகாலங்களாக அதிபராகச் சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் தற்போது பல்வேறுபட்ட பொதுசேவைகளில் ஈடுபாடு காட்டிவருகின்றார்.
தான் கற்கும் காலத்திலே கலைத்துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த இவரின் முதலாவது ஆக்கம் - ஸலவாத் மாலை 1957-12-29ம் திகதியன்று வானொலி முஸ்லிம் சேவையில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சுமார் 40 ஆண்டு காலம் ஸலவாத் மாலை நிகழ்ச்சித் தொடரை வானொலியில் நடத்தி வருகின்றார். இதன்மூலம் ஒலிபரப்பப்பட்ட சுமார் பத்தாயிரம் ஸலவாத் பாக்களில் இருந்து இரண்டாயிரம் பாக்களைத் தொகுத்து ஸலவாத் மாலை, ஸலவாத் மலர், ஸலவாத்துன் நபி, ஸலவாத்துச் சுடர், ஸலவாத் ஒதுவோம் ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். 1969-ம் ஆண்டில் இச்ஸலவாத்து மாலையின் முழுத் தொகுப்பினையும் முழுமையாகப் பார்வையிட்ட மூதறிஞர் மர்ஹ"ம் ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்கள் பாராட்டியுள்ளதை நினைவு கூர்வதில் இவர் பெருமிதமடைகின்றார்.
பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன் |G610

1957 முதல் 1992 வரை வானொலி முஸ்லிம் சேவையில் இவர் நிகழ்த்திய இஸ்லாமிய நற்சிந்தனைகளைத் தொகுத்து 'இஸ்லாமிய சிந்தனைச் சுடர் என்றொரு நூலினையும், முஸ்லிம் சேவையில் நிகழ்த்திய விசேட உரைகள், நினைவு தின பேச்சுக்கள், ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து ‘கல்வியும் முஸ்லிம் பெண்களும்’ எனும் நூலினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் 2002-ம் ஆண்டில் ‘அஹதிய்யாவின் பாதையின் மூன்று முத்துக்கள்’ எனும் நூலினையும் இவர் எழுதியுள்ளார். சுமார் 45 ஆண்டு காலமாக எழுதிவரும் ஸெய்யித் முஹம்மத் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமிய கட்டுரைகளை தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார்.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு 1993ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தனது ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விருது வழங்கும் விழாவில் “காதிமுல் அஹதிய்யா” எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. அத்துடன் அரசினால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான ‘கலாபூஷணம்விருது 2001-ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனது எழுத்துத் துறை ஈடுபாட்டுக்குக் காரணமான ஈழமேகம் பக்கீர்தம்பி, வித்துவான் எல். எக்ஸ் நடராசா ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் எம்.ஐ.எம். மர்சூனா பீபீயின் அன்புக்கண வராவார். இவருக்கு ஜெஸிமா, முஸ்தபா, நயிமா, மக்கியா ஆகிய நான்கு அன்புச் செல்வங்கள் உளர்.
இவரின் முகவரி: இஸ்மாயில் ஹாஜியார் ரோட்
காத்தான்குடி - 3
Gosso. முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 35
- பதிவு 51
எழுத்துத் துறை
3.எஸ்.எம்.ரம்ஜாண்.
) لم _
பாகம் 만 - கலாபூஷணம் புர்ரீபாய்னர்
 

கேகாலை மாவட்டம், மாவனல்லை தேர்தல் தொகுதி, உயன்வத்தை கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் சமத் முஹம்மது ரம்ஜான் அவர்கள் உயன்வத்தை ரம்ஜான், ஏ.எஸ். எம். ரம்ஜான் ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்துவரும் எழுத்தாளராவார்.
1939.06.20ம் திகதி அப்துல் சமத் தம்பதியின் புதல்வராகப் பிறந்த ரம்ஜான் அவர்கள் உயன்வத்தை நுாரானியா முஸ்லிம் மகா வித்தியாலயம், மாத்தளை சாஹிராக் கல்லூரி, அழுத்கம சாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1965ம் ஆண்டு "ஓய்வுநேரம்’ எனும் கட்டுரையினூடாக இவர் இலக்கிய உலகினில் பிரவேசித்தார். இக்கட்டுரை தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 53 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், சிந்தாமணி, நவமணி, தினபதி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் இலங்கையிலிருந்து வெளிவரும் பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1985ம் ஆண்டில் வாசமில்லா மலரிதுஎனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இத்தொகு தியை எம்.வை.எம். மீஆத், ஜவாஹிர் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இவரது தனிச் சிறுகதைத் தொகுதிகளான நிறைவேறாத ஆசை - 1990 ஆம் ஆண்டிலும் ஓர் இதயம் அழுகிறது - 1995ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இவ்விரண்டு சிறுகதைத் தொகுதிகளை மொழி பெயர்த்து சிங்களமொழியில் சிறுகதைத் தொகுதியொன்றினை வெளியிடும் ஆரம்ப ஏற்பாடுகளைத் தற்போது மேற்கொண்டு வருகின்றார்.
இவரது இலக்கியச் சேவையில் ஒரு முக்கிய கட்டமாக இவரால் வெளியிடப்பட்டு வரும் ' பிரியநிலா இலக்கியச் சஞ்சிகையைக் குறிப்பிடலாம். இதுவரை 20 இதழ்கள் வெளிவந்துள்ளன. பல இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளார். இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதையும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை முக்கியத்துவம் கொடுத்து
6 Dairiado முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 36
பிரசுரிப்பதையும் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ள இவர் ’பிரியநிலா மூலம் மூத்த எழுத்தாளர்களை கெளரவப்படுத்தவும் தவறுவதில்லை. இது வரை 'ப்ரியநிலாமுகப்பட்டையில் திருவாளர்களான ஓவியர் சாள்ஸ் சில்வா, அந்தனி ஜீவா, ஏ.வி.பி. கோமஸ், எம்.எபீ.எம். சுபைர், இஸட், எஸ்.எம். மொஹம்மட், தெளிவத்தை ஜோஸப், எம்.வை.எம். மீஆத், ஏ.எச்.எம். அஸ்வர். பண்ணாமத்துக் கவிராயர், க.ப. சிவம் போன்றோரின் புகைப் படங்களைப் பிரசுரித்து கெளரவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு கேகாலையில் நடைபெற்ற நடமாடும் ஜனாதிபதி சேவையின் போது, இவரது இலக்கியப் பணியை கெளரவித்து ஜனாதிபதி மாணி புமிகு ஆர். பிரேமதாளப் அவர்களினால் சன்மானம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டில் இஸ்லாமிய கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம்' கலைஞர் கெளரவிப்பு விழாவில் "செளத்துல் உம்மா (சமூகத்தின் குரல்) பட்டமும், 1997ஆம் ஆண்டில் கலா ஜோதி, சாமரீ பட்டங்களும் 2003 ஆம் ஆண்டில் இரத்தினதிபம் பட்டமும் இவருக்குக் கிடைத்துள்ளன.
அண்மையில் கேகாலைப் பிரதேசத்தில் கேகாலை மாவட்ட சுதந்திர பத் திரிகையாளர் சங்கம் நடத்திய சிறந்த செய்தியாளர்களுக்கான முதல் பரிசை (தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மூன்று தடவை) பெற்றுக் கொண்டார். அத்துடன் பல்வேறுபட்ட இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சமூகசேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள இவர் சித்திஜெமீலாவின் அன்புக் கணவராவார். ரிஸ்வரன், சித்தி ரினோஸ், ரிபாட், சித்திரிஸ்னா ஆகிய அன்புச் செல்வங்களின் தந்தையான இவருக்கு மூன்று பேரக் குழந்தைகளும் உண்டு.
இவரின் முகவரி: 193, உயன்வத்தை, தெவனகல.
பாகம் 52 - கலாபூஷணம் புள்ளிாய்னர்
 

எழுத்துத் துறை
கலாபூஷணம்
அப்துல் லத்தீப்
இAங்கை ரம்லீம் எழுந்தாளர்கள்,ஊடகவியார்கள், கனஞர்களின் விபரத்திரட்டு

Page 37
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதியில் புத்தளம் 617ஸி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹீம் முஹம்மது அப்துல் லத்தீப் அவர்கள்; எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் எனும் பெயரில் எழுதி வரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
1941 - 01 - 28ம் திகதி முஹம்மது இபுறாஹீம் தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர்; புத்தளம் ஸாஹிராக் கல்லூரி, அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். தான் கற்கும் காலத்திலும்; ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக தொழில்புரியும் காலத்திலும், ஒரு சிறந்த வாசகனாகத் திகழ்ந்த இவர் தான் ஒய்வு பெற்றதன் பின்பே எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஈடுபட ஆரம்பித்தார்.
இவரின் முதலாவது ஆக்கம் ‘சனசக்தியும், ஸக்காத்தும் எனும் தலைப்பில் 1991 - 02 - 07ம் திகதி தினகரன்’ பத்திரிகையில் இடம்பெற்றது. அன்றிலிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பல்வேறு துறைகளிலும் தனது பங்களிப்பினை நல்கிவரும் இவரின் ஆக்கங்கள் தினகரன், நவமணி, சுடர்ஒளி ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், இலங்கை வானொலியிலும் இடம்பெற்றுள்ளன.
இவரால் எழுதப்பட்டுள்ள நுாற்றுக் கும் மேற்பட்ட கட்டுரைகளுளர்; ‘வனத்துக்குள் மூழ்க்கிக் கிடக்கும் வடமேற்கின் வரலாற்றுத் தடயங்கள்’, ‘புத்தளம் மக்களின் நுவரனலிய, மீஒயா, காலாலி, 'ஆலிம்கள் ஒன்றுபடல் வேண்டும், அல்லது ஒன்று படுத்தப்படல் வேண்டும், ‘சிலாபத்துறைக்கான பயணமும், அங்கு சில மணி நேரங்களும்; புத்தளம் மாவட்ட சிறுபான்மை இனப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியா? ஆகிய கட்டுரைகள் வாசகர்களின் பாராட்டினைப் பெற்றவைகளாகும்.
இவரால் இதுவரை 03 புத்தகங்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
1. ‘புத்தளம் கண்ட மாபெரும் தப்லி. இஜ்திமா” (1999 இல்
வெளியிடப்பட்ட இந்நூல் 280 பக்கங்களைக் கொண்டது)
2. ‘புனித இஸ்லாம் கூறும் தொப்பி, தலைப்பாகையின் கண்ணியம்’
பாகம் O2- கலாபூஷணம் ‘புண்ணியாமீன்

(2001 இல் வெளியிடப்பட்ட இந்நூல் 60 பக்கங்களைக் கொண்டது)
.3 ‘புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
(2003 இல் வெளியிடப்பட்ட இந்நூல் 91 பக்கங்களைக் கொண்டது.
‘இலங்கை வரலாற்றுச் சுருக்கத் தொகுப்பு’ எனும் நூலினை மூன்று பாகங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்களை வெகுவிரைவில் வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். விஜயனின் வருகை முதல் இன்றுவரையான வரலாற்றுக்குறிப்புகளை 33 உசாத் துணை நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை ஆராய்ந்து எழுதியுள்ளார், இந்த ஆய்வுக்கு சுமார் 11 ஆண்டுகள் சென்றதாக இவர் குறிப்பிடுகின்றார் இம்மூன்று பாகங்களும் பின்வரும் அடிப்படையில் வெளிவரவுள்ளன.
முதலாம் பாகம் - ‘விஜயன் வருகை முதல்
கி.பி. 1505 வரை”
இரண்டாம் பாகம் - “கி.பி. 1505 முதல்
கி.பி. 1948 வரை”
மூன்றாம் பாகம் - ‘‘1948 முதல் இன்று வரை
இவர் கலை, கல்வி, சமூக மேம்பாடு போன்ற துறைகளில் 1958 முதல் இன்றுவரை ஆற்றிவரும் சேவைகளைக் கருத்திற் கொண்டு 2001 - 04 - 07ம் திகதி “புத்தளம் நவமணி வாசகர் வட்டம் ‘சமூகச் சுடர்' எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. அத்துடன் 2001 - 07 - 14ம் திகதி ‘ழரீலங்கா முஸ்லிம் வெகுசன தொடர்பு அமைப்பு தனது ஐந்தாவது வருடாந்த மகாநாட்டில் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கெளரவித்தது.
அத்துடன் பல்வேறு அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தப்பட்டும், விருது வழங்கப்பட்டும் கெளரவிக்கப்பட்ட இவர் 1991 முதல் ‘கற்பிட்டி தினகரன் நிருபராகவும், 1993 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன புத்தளம் நிருபராகவும், 1996 முதல்
செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
|ø at #%၈% முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 38
ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர்சங்கம், "சிந்தியாகலை இலக்கியவட்டம் போன்ற பத்திரிகையாளர், இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவராகச் செயலாற்றும் அப்துல் லத்தீப் அவர்கள் தனது இலக்கியத்துறை ஈடுபாட்டிற்கும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டிற்கும் காரணமான முன்னாள் பாரளுமன்ற விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
ரீலங்கா அரசு 2004-02 - 04ம் திகதி இவருக்கு கலாபூஷணம் விருது வழங்கி கெளரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஏ.ஜி பாத்திமா பீபீயின் அன்புக் கணவராவார். இவருக்கு ரியாஸ் முஹம்மது, பாத்திமா ரிஸ்வானா, பாத்திமா ரிஹானா, பாத்திமா சுமையா ஆகிய நான்கு செல்வங்கள் உளர்.
இவரின் முகவரி 19, மெளலவி புவாத் பிளேஸ் 14-ம் ஒழுங்கை, மரைக்கார் வீதி,
புத்தளம்.
பாகம் 72 = f.fix 1|~~li, புள்ளியார்
 

எழுத்துத் துறை
) எம்.எம். ஜமால்தீன்
[70][ant time முஸ்லீம் விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களின்லிரத்திரட்டு

Page 39
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஏறாவூர் கிராம சேவகர் பிரிவில் வாழும் மீராமொஹிதீன் ஜமால்தீன் அவர்கள்; எம்.எம். ஜமால்தீன், மருதூர் ஜமால்தின் ஆகிய பெயர்களில் எழுதிவரும் கவிஞர்களுள் ஒருவராவார்.
1950, 04 - 16ம் திகதி மீராமொஹிதீன் தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். தற்போது ஏறாவூர் அஞ்சல் அலுவலகத்தில் "பதிவாளராகத் தொழில் புரிந்துவரும் எம்.எம். ஜமால்தீன் இலக்கிய அமைப்பு என்ற வகையில் சாய்ந்தமருது * இஸ்லாமிய இலக்கிய வட்டத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
1983ம் ஆண்டில் 'அல் ஹ"தா’ எனும் சஞ்சிகையில் 'இஸ்லாத்தின் வழி வாழ்வோம்’ எனும் கவிதை மூலம் எழுத்துத் துறையில் பாதம் பதித்த இவர் சிறுகதை, கட்டுரை, "கவிதை என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டிவருகின்றார். இருப்பினும் கவிதைத்துறையிலே ஈடுபாடு அதிகம், இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள இவரின் கவிதைகள் நவமணி, சிந்தாமணி, இடி, தினகரன், தினபதி, மித்திரன், வீரகேசரி, போன்ற பத்திரிகைகளிலும், அல்ஹிக்மா, அறிவொளி, கலைமுத்து, தாமரை, முக்கனி, விழி, உதயம், மின்னல், புதுக்குரல், உண்மை உதயம், பானுமதி, சோலை, எழுச்சிக்குரல், பார்வை, இனிமை, தூது, ஊர்க்குருவி, ப்ரியநிலா, ஜீவநதி, டாமிஸ், அல் ஜனரோ, விடிவு, ராகம், நவசக்தி, நதிய்யா, புயல், நங்கூரம், பூ ஆகிய சஞ்சிகைகளி லும் இடம்பெற்றுள்ளன.
புதுக் கவிதைகளைப் போலவே மரபுக் கவிதைகளை எழுதுவதிலும் கரிசனை கொண்டுள்ள மருதூர் ஜமால்தீனின் கவிதைகள் சமூக உணர்வும், சமய எழுச்சியும் மிக்கவை. கிழக்கு மாகாணத்தில் வாழும் 24 கவிஞர்களின் தொகுதி வெளியீடாக வந்த "எழுவான் கதிர்கள்’ எனும் தொகுதியிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
இவரை இணையாசிரியராகக் கொண்டு " அல்ஹுதா’ எனும் சஞ்சிகையின் 8 இதழ்களும், இவரை ஆசிரியராகக் கொண்டு மருதம், அஷ்ஷிபா ஆகிய சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன.
frtini . . கலாபூஷணம் அர்ரியாவினர் | G70

தனது எழுத்துலக ஈடுபாட்டுக்குக் காரணமாகவும் , வழிகாட்டிகளாகவும், இருந்த ஜனாப்களான எம்.எம்.எம். நூறுல்ஹக் (பிரபல எழுத்தாளர்), பாவலர் பளபீல் காரியப்பர், பன்னூலாசிரியர் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் சித்தி வளtலாவின் அன்புக் கணவராவார். பாத்திமா நஸிபா, பாத்திமா நதிரா இவரின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி: 116, காட்டுப்பள்ளி, புதியவிதி,
ஏறாவூர் - 02
இலங்கை முசம்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கன*ஆர்கரீர்வீமரத்திரட்டு

Page 40
() பதிவு 54
எழுத்துத் துறை
6S. agustis
1riTուt Շ: - கலாபூஷணம் புர்னியாமீர் Gs)
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் பெரியநிலாவணை - 01. மருதமுனை கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த அப்துல் றகுமான் அப்துல் ஜபார் அவர்கள்: ற்குமான் -ஏ- ஐபார், கிழக்குக்குயில், மருதூரான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1961 - 0 - 01ம் திகதி அப்துல் றகுமான், றகுமத்தும்மா தம்பதிகளின் நான்காவது புதல்வனாகப் பிறந்த ஏ. ஐபார் அவர்கள் மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி, பேராதனைப்
பல்லைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது அல்மனார் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரின் முதலாது கவிதை 1979 -ம் ஆண்டில் "ஏன் படைத்தான்? எனும் தலைப்பில் தினகரனில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 30 சிறுகதைகளையும், 26 கட்டுரைகளையும், 100க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி, மித்திரன் வாரமலர், நவமணி, தினக்கதிர், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும், சங்கமம், சரம், சுடர், மல்லிகை, முனைப்பு. கலங்கரை, நிலா, இது, புலமை, சமாதானம் ஆகிய சஞ்சிகைகளிலும், இலங்கை வானொலியிலும், ரூபாவாஹினி, சக்தி TV ஆகிய தொலைக்காட்சிகளிலும் இடம் பெற்றுள்ளன.
1983 -ம் ஆண்டில் 'தினகரன்' பத்திரிகையில் இவரால் எழுதப்பட்ட 'ஈழத்து நாவலில் முஸ்லிம்கள்” எனும் கட்டுரையும், மருதமுனை அல்மனார் மகாவித்தியாலயத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட கலங்கரையில் இடம்பெற்ற மருத முனையில் இருந்து வெளிவந்த நூல்கள் எனும் ஆய்வுக்கட்டுரையும் வாசகர்களின் வரவேற்பினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
றகுமான் -ஏ- ஐபார் இதுவரை 3 நூல்களை எழுதி வெளியிட்டு ចាំថាIT. l, பகலில் சில பனித்துளிகள் (நாவல்) 1980 2, தொட்டுவிடும் தூரத்தில் (சிறுகதைத் தொகுதி) 1992 3, வண்ண வண்ணப் பூக்கள் (சிறுவர் பாடல்கள்) 2001
'ரசிகனின் ராஜ்யம்' எனும் தலைப்பில் மற்றுமொரு நூலினை வெளியிடும் நடவடிக்கைகளை இவர் மேற் கொண்டுள்ளார்.
(1)இலங்கை மூன்ட்ரீம் விழுந்தாளர்கள்,ஊடகவியtாார்கர், கலைஞர்களிர்வீரத்திரட்டு

Page 41
இலக்கியத்துறையைப் போலவே கலைத்துறையிலும் குறிப்பாக நடிப்புத்துறையிலும் ஈடுகொண்டவர்.
இவர் நடித்த நாடகங்களில் சில வருமாறு:
அவர்களும் அவர்களின் வேலைகளும், த பைல் நம்பர் 555 டியுசன் மாஸ்டர் MT. ஜோன் வறுமையின் நிறம் சிகப்பு தலைப்புச் செய்தி
கல்லுக்குள் ஈரம்
The Ignove
The Chinlliese'
அரக்கத்தன பிரபு
அத்துடன் அறிவிப்புத் துறையிலும் இவரது பங்களிப்பு கோடிட்டுக் காட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சஞ்சிகை வெளியீட்டுத்துறையை எடுத்து நோக்கும்போது முனைப்பு எனும் பெயரில் கிழக்கிழங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைக்கு இவர் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
ஆக - சகல துறைகளிலும் இவர் கால்பதித்துள்ளார். தனது கலை இலக்கியத்துறையின் ஈடுபாட்டுக்கும் வளர்ச்சிக்குக் காணமாக இருந்தவர்கள் என்ற வகையில் ஜனாப்களான மருதுர்வாணர், மருதூர்பாரி, மர்ஹம் வை. அஹற்மத், ஏ.எச்.எம். மஜீத், ஏ.எம்.எம். பாறுக், எம்.எச். காதர் இப்றாஹிம், ஏ.எஸ். மீரா முகைதீன், எஸ்.எல்.ஏ. றஹீம், ஏ.ஆர்.ஏ. நஆல், ஏ.எச். சித்திக் காரியப்பர், ஸெய்யித் ஸர்மிளா, ஏ.ஆர்.எம். ஜிப்ரி, ஏ.எச்.எம். பூமுத்தீன், ஏ.ஆர். நிஹற்மதுள்ளாஹற், மற்றும் திருவாளர்களாக சிவகுருநாதன், எஸ். டி. சிவநாயகம், செ. குனரெத்தினம், எஸ், சிவா, மைக்கல் கொலின் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் ஏ.பீ.எஸ். சரீனாவின் அன்புக் கணவராவார்.
இவரின் முகவரி:
203 ஏ1 ஹிஜ்ரா வீதி மருதமுனை - 03 (32314)
rtsf QL - கலாபூஷணம் புர்னியாமீர் Gs)

O - பதிவு 55
எழுத்துத் துறை
முகம்மது சியளஸ்
இலங்கை ராக்சிம் எழுந்தாார்கள்,கடகவிIAாார்கள், கலைஞர்களிர்விபரந்திரட்டு

Page 42
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் காத்தான்குடி 162பீ கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த உதுமா லெப்பை முகம்மத் பெளஸ் அவர்கள், ‘காத்தான்குடி பெளஸ்’ எனும் பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்லேறு துறைகளிலும் பங்களிப்பினை வழங்கி வருகிறார். 'பாவலன்' எனும் புனைப் பெயரும் இவருக்கு உண்டு.
1959-04-27ம் திகதி உதுமா லெப்பை, ஹஸினா உம்மா தம் பதிகளின் புதல் வராகப் பிறந்த இவர் மட் / அல்ஹிராவித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி ஜாமியதுல்பலாஹ், அட்டாளைச்சேனை ஸர்கியா அரபுக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது பாணந்துறை அல்-முபாறக் ஜும்ஆ மஸ்ஜிதில் பேஸ் இமாமாகக் கடமையற்றி வரும் மெளலவி பெளஸ் அவர்கள் "ஐனுல் றபாயாவின் அன்புக் கணவராவார். ‘முகம்மத் ஸைனி’ இவரின் அன்பு மகனாவார்.
காத்தான்குடி மத்ரஸ்துல் பலாஹற் அரபிக்கல்லூரியில் இவர் கற்கும் காலத்தில் இவரது முதலாவது ஆக்கம் 1974-07-09ம் திகதி வெளியிடப்பட்ட கல்லூரியின் வருடாந்த மலரில் இடம்பெற்றது. அதிலிருந்து இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் 10 சிறுகதைகளையும் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, மித்திரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் ஜ"ம்ஆ, கலைத்தீபம், பாசமலர் போன்ற சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் 'பிறை சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
எழுத்துத்துறைக்குப் புறம்பாக மிமிக்ரி என்றழைக்கப்படும் பல குரல்களில் பேசும் கலையிலும் இவர் அதிக ஈடுபாடு கொண்டவர். 35க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களின் குரலில் உரையாற்றி முன்னாள் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சர் பரீட் மீராலெப்பை, மற்றும் முன்னாள் தபால்தொடர்பு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹற் ஆகியோரின் பாராட்டினைப்பெற்றதைத் தனது கலைத்துறைப் பங்களிப்பின் பசுமையான நினைவுகளாகக் கொண்டுள்ளார். அத்துடன் உரைச்சித்திரங்கள், வில்லுப்பாட்டு,
பாகம் od - கலாபூஷணம் புண்ணியாமீன்

பல கவியரங்குகளில் பங்கேற்று கவிமழை பொழிந்துள்ள இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் கர்நாடக இசையில இருபதுக் கும் மேற் பட்ட பாடல் களை எழுதியுள்ளார். அத்துடன் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் மணிமொழி, ரமழான் சிந்தனை, நினைவுதினப் பேச்சு, பொன்மொழிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை எழுதிப் பங்கேற்று நிகழ்த்தியுள்ளார்.
ரூபவாஹினியில் சுபஉதாசன, மஸ்ஜிதுல் இஸ்லாம், வளர்பிறை, உதயம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஐ.ரீ.என். தொலைக்காட்சியில் இப்தார் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் ரீ.என்.எல். தொலைக்காட்சி, சிரச டீவி போன்றவற்றிலும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார்.
இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தால் 1999-08-29ல் யூரீ சாமறி கலாஜோதி பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
'பாவலர்’ எனும் பெயரில் கவிதைப் பத்திரிகையொன்றை வெளியிட்ட மெளலவி காத்தான்குடி பெளஸ் அவர்கள் தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கும், வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்கள் என்ற வகையில் மெளலவி எம்.எச்.எம். புஹாரி அவர்களையும், கவிஞர் சாந்தி முகைதீன் அவர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
இவரின் முகவரி 16, திக்கல ரோட் ஹேனமுல்லை, பாணந்துறை.
(78)|ఏAశబరి முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 43
- பதிவு 56
எழுத்துத் துறை
சிபார்தீன் மரிக்கார்
Ιττήίί αξ -
கலாபூஸ்டினம்
புர்ரீராமீர்
Go)
 
 
 
 

மத்தியமாகாணம், கண்டிமாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் உடத்தலவின்னை மடிகே கலதெனிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த உதுமான் லெப்பை சிபார்தீன் மரிக்கார்; சிபார்தீன் மரிக்கார், தலவின்னை சிபார் ஆகிய பெயர்களில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிறுகதை, கவிதை, கட்டுரை, வானொலி நாடகம், மேடை நாடகம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பினை வழங்கி வரும் எழுத்தாளராவார்.
1963- 09 - 09 -ம் திகதி உதுமான் லெப்பே. சுலைஹா பீபி தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர்; உடத்தலவின்னை மடிகே கஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, போராதனைப் பல் கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது வத்தேகம க பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் இவர் பாத்ததும்பறை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியாகவும் கடமையாற்றி வருகின்றார்.
கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவரின் முதலாவது கவிதை 1979-08-18ம் திகதி "மலையக மங்கை' எனும் தலைப்பில் 'தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது. அதிலிருந்து இன்று வரை இருபத்தைந்து சிறு கதைகளையும், நான்கு வானொலி நாடகங்களையும், ஐந்து மேடைநாடகங்களையும் 50க்கும் மேற்பட்ட கதைகளையும், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட மேடைநாடகங்களில் பாதை மாறிய பயணங்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், தூரத்தே ஒரு. அபூர்வ டைரக்டரும், அற்புத நடிகரும் எனும் நாடகங்கள் பெரிதும் வரவேற்பினைப் பெற்றன. இவரின் படைப்பிலக்கியங்கள் தினகரன், மித்திரன், தினமுரசு, பூந்தென்றல், மலைக் கொழுந்து, வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இவரின் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் சமூக உணர்வின் வெளிப்பாடுகளைக் காண முடியும், தான் வாழும் சூழலை மையக் கருவாகக் கொண்டு இலக்கியம் படைப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது.
(soario. ழப்ரீழ் எழுத்தாளர்கள்,ஊடகவியரங்ாார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

Page 44
உடத்தலவின்னை - மடிகே சிந்தனை வட்டத்தின் வெளியீடான "புதிய மொட்டுக்கள்’ கவிதைத் தொகுதியில் இவரின் தரமான கவிதைகள் இடம்பெற்றன. இவரால் எழுதப்பட்ட வானொலி நாடகங்களையும், சிறுகதைகளையும் தொகுத்து நூலொன்றினை வெளியிட பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
2000ம் ஆண்டில் இலங்கை வானொலி " பவளவிழாவினை முன்னிட்டு நடத்திய நாடகப் போட்டியில் வெற்றியீட்டிய சிபார்தீன் மரிக்கார் தற்போது சமூக சேவை அமைச்சின் கீழ் தேசிய சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப் பணிக்கான டிப்ளோமா பாடநெறியினைத் தொடர்ந்து வருகின்றார்.
தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கும் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாவாக விளங்கிவரும் மூத்த சகோதரன் ஜனாப், யூ.எல். எம். பளியீர் (ஆசிரிய ஆலோசகர்) அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் பாத்திமா பர்ஸானாவின் அன்புக் கணவராவார். அப்ரோஸ் ஆயிஷா, ஷெரீன் ஸ்பான், அஸ்கர் அஹமட் ஆகியோர் இவரின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி: 6, பள்ளி வீதி, மடிகே உடத்தலவின்னை.
பாகம் (2 - கலாபூஷணம் புணர்னியாயினர் (sil)
 

- பதிவு 57 -
எழுத்துத் துறை
மஷ”றா சுஹ”றுத்தீன்
(8)
一 இAங்கை மூஎஃம்ே எழுந்தாார்கள்,'டகளிபராார்கள், கலைஞர்களினர்விபத்திரட்டு

Page 45
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சம்மாந்துறை - 2 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சித்தி மஷ?றா அவர்கள்; மஷ"றா-ஏ-மஜிட், சித்ரா, பாரதிப்பிரியா, சம்மாந்துறை மஷ?றா, ஆஷ, ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவரும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1964ம் ஆண்டு வைகாசித் திங்கள் 05ம் திகதி பிறந்த மஷ?றா சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியாவார். தற்போது சது / தாறுஸ் ஸலாம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.
இலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றினை அவதானிக்கும் போது முஸ்லிம் பெண் கலைஞர்கள், கவிஞர்களின் எழுத்துலகப் பிரவேசம் அதிகளவில் இடம்பெறும் காலகட்டமாக 20ம் நுாற்றாண்டின் எழுபதுகளின் இறுதியும், எண்பதுகளையும் இனங்காட்டலாம் ஒப்பீட்டு ரீதியாக அவதானிக்கும் போது இக்காலகட்டங்களில் எழுத்துலகப் பிரவேசம் செய்த முஸ்லிம் பெண் இலக்கியவாதிகளில் பலர் தமது இலக்கியப் பங்களிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதை விசேடமாக சுட்டிக் காட்ட முடியும். இந்த அடிப்படையில் நோக்கும் போது மஷ?றாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதே.
மஷஉறாவின் கன்னி ஆக்கம் - ‘கவிதையாக அறுவடை எனும் தலைப்பில் 1979.04.13ம் திகதி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அரங்கேறியது. அன்றிலிருந்து இன்றுவரை இவர் 13 சிறுகதைகளையும்,122 கவிதைகளையும், 08 கட்டுரைகளையும், 07 மேடை நாடகங்களையும், 02 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
இவை தினகரன், சிந்தாமணி, தினமுரசு, பாமிஸ், நவமணி, சிகரம்,வீரகேசரி, மித்திரன், தூது, புதுக்குரல், இனிமை, முக்கனி, சுவர், மதுகரம், பூமதுரம், ராகம், மஞ்சரி, கோகிலம், புன்னகை, கண்ணாடி, தடாகம், அழகு,சப்தம், கலைக் கதிர், யதார்த்தழ், மிம்ரஹா,ஒளி, மருதம் பவளம், கவிமஞ்சரி, வசந்தம், அல்-ஜெஸிரர், நங்கூரம் ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் முஸ்லிம் சேவை, இலக்கிய
υιταδύ ορ- கலாபூஷணம் புணர்னியாமீண் Gs)

மஞ்சரி, இளஞ்சுடர், ஒலிமஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் ஒலி பரப்பாகியுள்ளன.
1986 ல் இஸ்லாமிய நுால் வெளியீட்டுப் பணியகம் 24 இளம் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ‘எழுவான் கதிர்கள் எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் மஷ?றாவின் ஐந்து கவிதைகள் இடம்பெற்றன. பத்து ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டு யாழ்.ஆய்வு வட்ட வெளியீடாக 1998ல் வெளிவந்து பின்பு இந்தியாவில் மீள் பிரசுரம் செய்யப்பட்டது. இலங்கையின் முதலாவது பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதியான ‘சொல்லாத சேதிகள்’ தொகுதியிலும் இவரின் இரு கவிதைகள் பிரசுரமாகின.
அதேபோல் 1998 இல் கவிஞர் திலகம் மர் ஹஉம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எஸ். எச். எம். நி.மத்தினால் தொகுக்கப்பட்ட ஒடும் நதியைப் பார் கவிதைத் தொகுப்பில் இவரின் ஒரு கவிதையும், 1999 இல் சித்ரலேகா மெளனகுருவால் தொகுக்கப்பட்ட ‘உயிர்வெளி கவிதைத் தொகுதியில் இருகவிதைகளும் இடம்பெற்றன.
இவரின் வழிகாட்டலில் பின்வரும் சிற்றேடுகள் வெளிவந்துள்ளன.
1. நிறைமதி - பத்திரிகையாசிரியர் கையெழுத்து சஞ்சிகையாக
ஆரம்பித்து, பின்பு றோனியோவில் வெளிவந்தது. (வெளிவந்த இதழ்கள் 22 )
2. அக்கினி - இதழாசிரியர் றோனியோ கவியேடாக
வெளியானது. 3. புன்னகை - மலராசிரியர். (1986ல் சம்மாந்துறை
தே.இ.சே. மன்ற நடமாடும் பெண்கள் பயிற்சி நிலைய நிறைவில் வெளியான ஞாபகார்த்த மலர்.) குதுாகலம் - பொறுப்பாசிரியர் (1988 இல் வெளியானது.) அலவாக்கரை - பொறுப்பாசிரியர். புதையல் - பொறுப்பாசிரியர் என் இனிய வாழை மரமே - பொறுப்பாசிரியர் ஆசிரியர் - பொறுப்பாசிரியர் சிகரம் - தயாரிப்பாளர், நிருபர்.
GOsage முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 46
பல்வேறுபட்ட இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில் களை வென்றெடுத்துள்ள மஷறோ பல்வேறுபட்ட கவியரங்குகளிலும் பங்கேற்றுள்ளார். தனது சொந்த கவிதைத் தொகுதியொன்றை விரைவில் வெளியிட வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ள இவர் தென்கிழக்கு ஆய்வுமையமும், இஸ்லாமிய ஆய்வுமையமும் இணைந்து 2002இல் நடத்திய விருது வழங்கும் வைபவத்திலும்,2004.06.06.இல் தினச்சுடர் விருது வைபவத்திலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
தனது எழுத்துலக ஆர்வத்துக்குக் காரணமான விமர்சகர் திருவாளர் வி. ஆனந்தன் அவர்களையும், எழுத்தாளர் ஜனாப் ஆர். எம்.நெளசாத் அவர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர், மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். சுஹறுத்தீன் அவர்களின் அன்புப் பாரியாராவார்.
இவரின் முகவரி: *மவடிறோ மன்ஸில்" மெயின் வீதி, சம்மாந்துறை.
Irroi or . கலாபூஷணம் கர்ரியாமினர்
 

பதிவு இல - 58 -
எழுத்துத் துறை
யூ. ஸெயின்
ン
இtங்கை முசுப்ரீம் எழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களிர்வீரத்திரட்டு — - -

Page 47
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியில் ‘புளக்ஜே கிழக்கு-3 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த உதுமா லெவ்வை ஸெயின் அவர்கள்; கலைவேள் மாறன்,- மாறன்-யூ-ஸெயின், புரட்சி மாறன், சம்மாந்துறைவன் ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்து வரும் எழுத்தாளராவார்.
சம் மா நீ துறையைச் சேர் நீ த இஸ் மானி கணி டு உதுமாலெவ்வை, இஸ்மாலெவ்வை பாத்திமா தம்பதியினரின் புதல்வராக 1940.06.18ம் திகதி பிறந்த ஸெயின் அவர்கள் மட்/ அ.மு.க. பாடசாலை (சம்மாந்துறை), மட்/அரசினர் சிரேஷ்ட பாடசாலை (சம்மாந்துறை), மட/ விபுலானந்த மகாவித்தியாலயம் (காரைதீவு), அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை (அட்டாளைச்சேனை) ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1961.01 11ம் திகதி உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற ஸெயின் அவர்கள் தான் 1998.04.28ம் திகதி ஒய்வுபெறும் போது அதிபர் சேவை தரம் 1இல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் பகுதிநேர தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றிவரும் இவர் சித்த ஆயுர்வேத வைத்தியரும் கூட.
இலக்கிய ரீதியாக இவரின் பங்களிப்பினை எடுத்து நோக்கு மிடத்து இவரின் முதலாவது ஆக்கம் - கிராமியச் சித்திரமாக “கன்னத்தில் முத்தம்.’ எனும் தலைப்பில் ‘சுதந்திரன்’ பத்திரிகை யில் 1958ம் ஆண்டில் இடம்பெற்றது.
அணி றிலிருந்து இனி றுவரை நுாற்றுக் கணக் கான எண்ணிக்கையில் கவிதை, சிறுகதை, உருவகக்கதை, கட்டுரை, விமர்சனம், நாடகம், வில்லுப்பாட்டு போன்ற இலக்கிய படைப்புகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் சுதந்திரன், தாரகை, செய்தி, தமிழ்நேசன், கலைமுரசு, தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, புதுப்பாதை, தினக்கதிர், நவமணி, தினக்குரல், போன்ற பத்திரிகைகளிலும் மணிக்குரல், கலைச்செல்வி, மலர், கலை அமுதம், தேன்மலர், வெண்முத்து, அறுவடை போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இலக்கியக் கருத்தரங்குகள், விமர்சன அரங்குகள், கவி
பாகம் 02- கலாபூஷணம் புன்னியாமீன்

அரங்குகளில் அவ்வப்போது பங்கேற்றுவரும் இவர் சம்மாந்துறை சிரேஷ்ட பாடசாலை வெளியீடான ‘கலாபாசம்’ (1957), அறிவாலய வெளியீடான 'நிலா (1960), “முல்லை (1962) கலா அபிவிருத்திக் கலக வெளியீடான 'கலைக்குரல் தேசிய கலைக்குன்ற வெளியீடான ‘கொள்கை ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், கலையக வெளியீடான 'கலைமுரசு' சஞ்சிகையின் ஆலோசகராகவும் செயலாற்றியுள்ளார்.
அத்துடன் அறவழிக்கீதம், கவிதைச்செல்வம், முற்றத்து மல்லிகை ஆகிய தொகுப்பு நூல்களிலும் இவரின் ஆக்கங்கள் அரங்கேறியுள்ளன.
பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களை வென்றுள்ள இவரின் இரண்டு தொகுதிகள் அச்சுவாகனமேறி வாசகர் கரங்களை அடைந்துள்ளன.
இனிக்கும் தமிழ் இலக்கியம் (தொகுதி - 1) 1995 2 இனிக்கும் தமிழ் இலக்கியம் (தொகுதி - 2) 1996
இத்தொகுதிகள் இரண்டும் சம்மாந்துறை தேசிய கலை இலக்கிய தேனகத்தின் வெளியீடுகளாகும்.
நாடகத்துறையிலும் இவரின் பங்களிப்பு விசாலமானது. 1954 முதல் இன்றுவரை 113 நாடகங்களை எழுதியும், நெறிப்படுத்தியும், பங்கேற்றும் உள்ள இவர் இருதுருவங்கள், குடியின் கொடுமை, யார் குற்றவாளி, உயிர்காக்கும் உறவுகள், சேரன் செங்குட்டவன், மிருக ஜாதிகள், சொர்க்கத்தின் நிழல், நீதியே நீ கேள், உழைக்கும் கரங்கள், மெழுகுவர்த்தி, வினை விதைத்தவன், கல்யாண மாப்பிள்ளை, சண்டியன் தம்பி, வீரமரணம்.போன்ற நாடகங்களின் பங்களிப்பினை நினைவு கூர்வதில் இன்றும் பெருமிதமடைகின்றார். இதேபோல் கல்லூரி மட்டங்களிலும், பகிரங்க மேடைகளிலும் வில்லிசைப் பாட்டுச் சித்திரங்களை எழுதி, இயக்கி அரங்கேற்றம் செய்து பல பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ள ‘ஸெயின் இன்னும் ஐந்து நூல்களை வெளியிட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
18806Aశబరి முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 48
கலைவேள் - மாறன் -யூ -ளெUயின் கவிதைகள்
.
2. கலைவேள் - மாறன் -பூ -ளெயின் சிறுகதைகள்
3. கலைவேள் - மாறன் -யூ -ஸெயின் நாடகங்கள்
, கலைவேள் - மாறன் -யூ -ஸெயின் வில்லிசைப்
பாட்டுகள்
5. சிலப்பதிகாரத்தில் பத்தினி கண்ணகியும், பாண்டிய
மன்னனும்.
எனும் நூல்களே அவை.
இவரின் கலை, இலக்கியப் பணியினை கெளரவித்து பூரீலங்கா முஸ்லிம் காங் கிரளயின் ஸ்தாபகத் தலைவரும் கெளரவ அமைச்சருமான மர்ஹ"ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கலை வேள்' பட்டமளித்து, பொன்னாடை போர்த்தியுள்ளார். இந்நிகழ்வைத் தன் வாழ்நாளில் ஒரு பொன்னான நிகழ்வாக இன்றும் நினைவுகூறும் இவர் தனது இலக்கியத் துறை ஈடுபாட்டுக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் திருவாளர் எஸ் டி. சிவநாயகம் அவர்களை நெஞ்சில் நிறுத்தி வைத்துள்ளார். அத்துடன் தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக சீர்திருத்த புரட்சிக் கருத்துகளும் சங்க காலப் புலவர்கள் சான்றோர்களின் தமிழ் இலக்கிய நூல்களும் தனது எழுத்தினைச் செப்பனிட்டன என்று கூறும் ஸெயின் அவர்கள் முகம்மது ஜெஷாயில் சித்தி நபீஸாவின் அன்புக் கணவராவார். இவருக்கு முல்கா றுஷானா, முஹம்மர் றிஸ்வி, முஹம்மர் றியாஸ், முல்கா றுமைஷா ஆகிய நான்கு செல்வங்கள் உளர்.
இவரின் முகவரி: ‘'தேனகம்’ 48 ஹிஜிரா 4ம் வீதி புளக்ஜே கிழக்கு - 03 சம்மாந்துறை.
tưTrriji ro - கலாபூஷணம் புணர்னியாமீர்
 

எழுத்துத் துறை
ஏ.எல்.எம். அஸ்வ
(oo) இ*ங்கை முஸ்லீம் எழுந்தாார்கள்,ஊடகவியtாTர்கள், கன4ஆர்களிர்விபரந்திரட்டு

Page 49
மேல் மாகாணம், களுத்துறை மாவட்டம், பாணந்துறை தேர்தல் தொகுதியில் சரிக்கமுல்லை பீ. கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் லதீப் மொஹமட் அஸ்வர்; ஏ.எல்.எம். அஸ்வர், முல்லையூர் அஸ்வர், சமூக ஊழியன் ஆகிய பெயர்களில் எழுதி வரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
பாணந்துறை ‘ஹேனமுல்லையைச் சேர்ந்த அப்துல் லதீப், சித்தி பாத்திமா தம்பதியினரின் நான்காவது புதல்வராக 1953-0101ம் திகதி பிறந்த அஸ்வர் ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லூரியில் க.பொ.த. (சா/த) வரை கற்றுத் தேர்ச்சியடைந்து உயர்தரக் கல்வியை தொட்டவத்தை அல் ப.ரியா மத்திய கல்லூரியில் பெற்றார். அக்காலகட்டத்தில் மேற்கொண்டு உயர்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல்கள் கிடைக்காத நிலையில் உயர்தரக் கல்வியுடன் தனது படிப்பை முடித்துக் கொண்ட அவர் தற்போது இரத்மலானை ‘மக்கள் வங்கிக் கிளையில் உதவி முகாமையாளராகப் பணியாற்றி வருகின்றார்.
தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் முதலாவது ஆக்கம் 1965ம் ஆண்டில் 'தினகரன்’ பத்திரிகையில் ‘கேள்வி-பதில்’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி வரும் இவர் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும், 30 சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான செய்திக்கட்டுரைகள், விமர்சனங்கள், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், உரைநடைச் சித்திரங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையிலிருந்து வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ‘புதுக் கவிதை' எனும் வடிவம் தமிழ் இலக்கியத்திலும் மெல்ல, மெல்ல நுழைந்து கொண்டிருந்தது. ‘போஸ்ட் காட் கவிதைகள் (அஞ்சலட்டைக் கவிதைகள்) என ஆரம்பத்தில் கேலியாக அழைக்கப்பட்ட இக்கவிதைத் துறைக்கு மரபுக் கவிஞர்கள் கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்து வந்தனர். இக்காலகட்டத்தில் நூறு புதுக்கவிதைகளைத் தொகுத்து ‘காலத்தின் குரல்கள்’ எனும் தலைப்பில் புத்தகமொன்றினை வெளியிட்டு பெரிதும் பரபரப்பினை ஏற்படுத்தினார். அன்று அத்தொகுதியில் எழுதிய பல
υιταδώ ο2 - கலாபூஷணம் புண்ணியாமீன்

கவிஞர்கள் இன்று இலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில் இலங்கை வானொலியில் இடம்பெற்றுவந்த “அஸ்வர் நானாவின் கதைகள்’ எனும் பகுதி சிறார்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பினைப் பெற்றி ருந்தது. ‘ஆமினா பேகம் பாரூக் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘பிஞ்சு மனம் பகுதியில் இடம்பெற்ற “அஸ்வர் நானாவின் கதைகள் பகுதியில் சிறுவர்களுக்கான கதைகளைக் கூறி வந்தவர் அஸ்வர் அவர்களே. இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இடம்பெற்றன. இது தவிர இலங்கை வானொலியில் இலக்கிய மஞ்சரி, மகரந்தம், இளைஞர் இதயம் போன்ற பகுதிகளில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றுள்ளது.
எழுத்துத் துறையைப் போலவே பத்திரிகைத் துறையிலும் இவர் ஈடுபாடு மிக்கவர். 1975ம் ஆண்டிலிருந்து 'ஐ'ம் ஆ’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் ‘நவமணி தேசிய பத்திரிகையின் செய்தியாளராகவும், அஹதியா பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார். ஏற்கனவே தினபதி, தினகரன், அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராகச் செயற்பட்ட அனுபவமும் இவருக்குண்டு.
இன்று இலங்கை முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் 320க்கும் மேற்பட்ட அஹதியாப் பாடசாலைகளின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றிவரும் இவர் வானொலியில் அஹதியா நிகழ்ச்சியை நீண்டகாலங்களாகத் தொகுத்து வழங்கி வருகின் றமை குறிப் பிடத்தக் கது. மேற் படி நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் கிரிக்கட் மற்றும் உதைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் நேரடி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ள இவர் சிறந்த மேடைப் பேச்சாளர். பட்டிமன்றங்களில் இவரின் பங்களிப்பு தனித்துவமிக்கவை.
அதேநேரம் இவர் ஒரு சிறந்த நாடக நடிகர், நாடக வசனகர்த்தா, நாடக இயக்குனர், இவர் பிரதான பாத்திரமேற்று அரங்கேறிய திருந்திய உள்ளம், மனமாற்றம் ஆகிய நாடகங்களை இன்றும் நினைவுகூர்வதில் பெருமிதமடைகின்றார்.
92 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
த

Page 50
பல்துறைகளில் பங்களிப்பு செலுத்தி வரும் சகலகலா வல்லவ ராகிய அஸ்வர் அவர்களின் சேவைகளை கெளரவத்து, சாமறி,சமூகஜோதி, சமாதான நீதவான், சேவைச் செம்மல் ஆகிய பட்டங்கள் இவரை வந்தடைந்துள்ளன. பாலர் பாடசாலை இயக்குன ரான அஹமட் இஸ்மாயில் ஐனுல் பரீளப்ாவின் அன்புக் கணவரான இவருக்கு அளப்துல்லா பஸ்லத் (மகன்), பாத்திமா பர்ஹா (மகள்) இரண்டு செல்வங்களுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த ஆசிரியை யூ.எல். அரபா உம்மாவின் “பாடு பாப்பா, கதை கேளு பாப்பா..” எனும் பாலர் கதை நூலை வெளியிட்டுள்ள இவருக்கு மேலும் பல பாலர் கதை நூல்கள், கவி நூல்களை வெளியிடும் எண்ணமுண்டு.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்கு ஊக்கமும், ஆக்கமும் வழங்கி வரும் தனது சகோதரர் ஏ.எல்.எம். சத்தாரையும் பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாவாக இருந்த ஜனாப் டப்ஸ்யூ. எம்.எம். உவைமின் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி :
34 அஸ்வர் ஹாஜியார் கட்டிடம், தொட்டுபொல வீதி பள்ளிமுல்லை,
பாணந்துறை.
ựTriii. Co. - கலாபூஷணம் புர்ரீயாய்னர்
 

- பதிவு 60 -
பத்திரிகைத் துறை
எம்.எம்.எஸ் முஹம்மத்
இங்கை முஸ்லீம் விழுந்தாளர்கள்,ஊடகவிய*ாளர்கள், கனAநர்களிர்விபரத்திரட்b

Page 51
மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், கொலன்னாவை தேர்தல் தொகுதியில் ஒறுகொடவத்த கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மீராலெவ்வை மரைக்காயர் செய்யது முஹம்மது அவர்கள்; எம்.எம்.எஸ் முஹம்மத் எனும் பெயரில் பத்திரிகைத் துறையில் ஈடுபாடு செலுத்திவரும் ஊடகவியலாளராவார்.
காத்தான்குடி மீரா மொஹிடீன் பாவா மீராலெவ்வை மரைக்காயர், மீரா சாஹிபு ஜெய்னம்பு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1941.05.11ம் திகதி பிறந்த முஹம்மத் அவர்கள், காத்தான்குடி அல்நஸார் வித்தியாலயம், மட்/ சிவாநந்தா வித்தியாலயம், காலி ப.ஜதுல் இப்ராஹிமா அரபுக் கல்லூரி, வெலிகம பாரி அரபுக் கல்லூரி, கபூரியா அரபுக் கல்லூரி மற்றும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
நீண்ட காலங்களாக ஆசிரியர் சேவையிலிருந்து ஒய்வுபெற்ற மெளலவி எம்.எம்.எஸ். முஹம்மத் அவர்கள் ஒய்வுபெற்றதன் பின்பு 1988இல் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்த முஹம்மத் அவர்கள் தான் பத்திரிகைத்துறையில் ஈடுபட தற்செயலான ஒரு நிகழ்வே காரணம் என்கின்றார். 1988ம் ஆண்டில் வட-கிழக்கு மாகாண சபையின் அதிகாரம். ஈ.பி. ஆர்.எல். எப். இடம் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்துடன் கூடிய செய்தியொன்றினை லேக் ஹவுஸ் நிறுவனப் பத்திரிகைகள் பிரசுரித்தமை காரணமாக லேக்ஹவுஸ் நிருவனப் பத்திரிகையை மட்டக்களப்பு பிரதேசத்தில் விற்பனை செய்ய முடியாதிருந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக திரு. ரஞ்சன் விஜயரத்ன (முன்னாள் அமைச்சர்) கடமை புரிந்துள்ளார். ரஞ்சன் விஜயரத்ன அவர்களுக்கும் முஹம்மத் அவர்களுக்கும் இருந்த தனிப்பட்ட தொடர்பின் காரணமாக இவரை அலுவலக பத்திரிகையாளராக நியமித்ததுடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் லேக்ஹவுஸ் பத்திரிகை விற்பனைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அலுவலக பத்திரி கையாளராகப் பதவியேற்காத முஹம்மத் அவர்கள் மட்டக்களப்பு
பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன் Gos)

லேக்ஹவுஸ் குரூப் பத்திரிகையாளராக கடமையேற்றுள்ளார். எனவே தனது பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்கு மூல காரணம் காலஞ்சென்ற ஜெனரல் ரஞ்சன் விஜயரத்ன என்று பெருமையுடன் நினைவுகூர்ந்து வரும் இவர் 1988 முதல் 2000வரை லேக்ஹவுஸ் நிறுவன பத்திரிகைகளான டெயிலி நியூஸ், சன்டே ஒப்சேர்வர், தினகரன் ஆகியவற்றின் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.
இக்காலகட்டத்தில் இந்திய அமைதி காக்கும் படைச் செய்திகள், பேட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் எழுதிப் பிரபல்யம் பெற்றார். அத்துடன் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள், இனக்கலவரங்கள் போன்ற செய்திகளுக்கு இவர் முக்கிய துவம் கொடுத்து வந்த அதேநேரம் இலங்கை வானொலி, ரூபவாஹினி மற்றும் பீ.பீசி. ரொய்ட்டர் போன்ற செய்தி நிறுவனங்களுக்கும் செய்திகளை வழங்கி வந்துள்ளார்.
நளிபா, முபீனா, லாபீர், நஜ்மா, ஸினா ஆகிய ஐந்து செல்வங்களின் அன்புத் தந்தையான இவர் திருமதி கதீஜாவின் அன்புக் கணவருமாவார்.
இவரின் முகவரி * செய்யித் மன்ஸில்’ 42E அவிசாவளை வீதி ஒறுகொடவத்தை வெல்லம்பிட்டிய
(96)|6Aia முஸ்லிம் லீழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 52
முஹம்மட் கலீல்
ノ
u Tri o - கலாபூஷணம் புள்ளியாமீர்
 

மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டம், இரத்தோட்ை தேர்தல் தொகுதியில் மனாம்பொடை கிராம சேவகர் பிரிவைச்சேந்த ஜவாஹிர் முஹம்மட் கலீல் அவர்கள், மடவளை கலீல் எனும் பெயரில் கவிதைகள், சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளராவார்.
மடவளை பஸாரைச்சேர்ந்த மர்ஹ"ம் ஜவாஹிர், உம்மு ளப்லீமா தம்பதியினரின்(இவரின் தாயாரான உம்மு ஸப்லிமா என்பவர் மடவளை மதீனா தேசிய கல்லூரியின் முதல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது) புதல்வராக 1958.08:08இல் பிறந்த கலீல், மடவளை மதீனா தேசிய கல்லூரியின் பழைய மாணவராவார். தற்போது மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைப் பிரிவில் கடமையாற்றிவரும் இவர் ஆயிரத்து தொளாயிரத்துத் தொன்னூறுகளில் இலக்கியத்துறையில் ஈடுபட ஆரம்பித்தார்,
இவரது முதலாவது கவிதை "மயக்க வரும் மாலை” எனும் தலைப்பில் 1991ம் ஆண்டில் தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், 22 சிறுகதைகளையும் எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி,மித்திரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் "ராணி சஞ்சிகையிலும் சிங்கள தேசிய பத்திரிகையான" தினமினவிலும் இலங்கை வானொலியிலும் இடம்பெற்றுள்ளன.
மடவளை கலீல் இதுவரை 4 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
துயரக் கொழுந்துகள் (கவிதை) I992 2. கைதிப் புறாக்கள் (கவிதை) 3. இதயக் கதவுகள் (சிறுகதைகள்) 995
அத்துடன் 'அவி பிம தபடு’ (ஆயுதங்களைக் கீழே வைப்போம்) எனும் தலைப்பில் 1998ம் ஆண்டில் சிங்களக் கவிதை நூலொன்றினையும் எழுதியுள்ளார். இவரின் ஐந்தாவது நூலான பட்டினி மலர்கள்' எனும் கதைத் தொகுதியினை விரைவில் வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
aཤt fana) முஸ்ரீம் விழுந்தாவிர்கர்,ரீடருளியாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 53
இலங்கையைப் பொருத்தமட்டில் புத்தகங்கள் வெளியிடுவது மிகவும் கடினமான ஒரு விடயம். ஏனெனில் வெளியிடப்படக்கூடிய புத்தகங்களை விலைகொடுத்து வாங்கக்கூடிய வாசகர்கள் குறைவாக இருப்பதே இதற்கு மூல காரணமாகும். இன்றைய காலகட்டத்தில் நவீன இலக்றோனிக் மீடியாக்கள் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் வாசிப்புத் திறன் மிக மிகக் குறைந்து விட்டது. இலக்றோனிக் மீடியாக்களின் இத்தகைய குறுகிய கால ஜனரஞ்சக தன்மையை ஒப்புநோக்கும்போது எதிர்காலத்தில் புத்தகங்களின் நிலை என்னவாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இருப்பினும் தான் அச்சிடும் புத்தகங்களை சந்தைப்படுத்திக் கொள்ள வேண்டும்; அன்றேல் அச்சிட்டச் செலவுகளையாவது ஈடு செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல எழுத்தாளர்கள் பல உத்திகளைக் கையாள்கின்றனர். வெளியீட்டு விழாக்கள் இத்தகைய உத்திகளில் ஒன்றாக விளங்குகின்றது.
• மடவளை கலில் இவ்விடயத்தில் சற்று மாறுபட்ட ஒரு உத்தியைக் கடைப் பிடித்து வருகிறார். புத்தகங்களில் விளம்பரங்களைச் சேர்ப்பது புத்தகத்தின் கனதியைக் குறைத்துவிடும். இதனால் தான் அச்சிடும் புத்தகங்களை வெளியீட்டு விழாக்கள் வைத்து வெளியிடும் அதேநேரத்தில்; வெளயிட்டு விழாவன்று ஒரு மலரை வெளியிடுவதையும் இவர் வழக்கமாகக் கொண்டு வருகின்றார். இந்த நினைவு மலர் வெளியிடுவதன் முக்கிய நோக்கம் நினைவு மலருக்கு விளம்பரங்களைச் சேகரித்து புத்தக அச்சீட்டின் 69 (5 பகுதியையாவது ஈடுசெய்ய முடியும் என ற நம்பிக்கையினாலாகும். இவர் பொலிஸ் திணைக்களத்தில் கடமை புரிவதனால் விளம்பரங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் நோக் காம லிருக்கலாம். எப்படியாயினும் இவரினி இத்தகையநடவடிக்கையை நூல் வெளியிடுபவர்கள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
2001ம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்ற மத்திய மாகண சாஹித்திய விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இவருக்கு மாத்தளை “லகி கலாமான்றம்’ ‘கவிச்சுடர்’ எனும் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன்

பல்வேறு பட்ட இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றுவரும் இவர். பரீனா ஆசிரியையின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினரின் அன்புச் செல்வம் பர்ஹானா -
இவரின் முகவரி: * பரீனா மன்சில்’ 191 மனாம் பொடை, உக்குவளை.
010)[6Aశం முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 54
எஸ்.எல்.எம். அபூபக்கர்
ン
பாகம் : -
ate{tl|Silia:Tlf
புணர்னியாமீர்
10)
 
 
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில் அக்கரைப்பற்று - நகர்ப்பிரிவு 2 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த தம்பிராசா சின்ன லெவ்வை மரைக்கார் அபூபக்கர் அவர்கள், எஸ்.எல்.எம்.அபூபக்கர், சீனா-லேனா- அபு. நாமுனை - அபூ , சாந்தியூரானி ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஊடகவியலாளர்களுள் ஒருவராவார்.
1948 - 10 - 19ம் திகதி பிறந்த இவர் நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகாவித்தியாலயம், கல்முனை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது அக்கரைப்பற்று இலங்கை போக்குவரத்து சபையில் இலிகிதராகக் கடமையாற்றி வருகின்றார்.
மர்ஹ"ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் 1976ம் ஆண்டு ( கல முனை எழுத்தாளர் சங்கம் T ) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் முஸ்லிம் ஐக்கிய முன்னணியாக இவ்வமைப்பு பெயர் மாற்றப்பட்டு சமத்துவம் எனும் பத்திரிகையை ஆரம்பித்தது. "சமத்துவம் பத்திரிகையில் இவர் கல்முனை நிருபராக நியமனம் பெற்று பத்திரிகைத் துறையில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து "உதயம்' பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்க்கப்பட்ட இவரின் முதலாவது ஆய்வுச் செய்தி 1981-12-17ம் திகதி "உதயம் பத்திரிகையில் "காணிகளைப் பறிகொடுப்பதில் கிழக்கு முதலிடம் பெறுகின்றது ' என்ற தலைப்பில் இடம் பெற்றது.
தற்போது லேக்ஹவுஸ் நிறுவனப் பத்திரிகைகளான தினகரன், தினமின ஆகியவற்றின் அக்கரைப்பற்று கிழக்கு நிருபராகப் பகுதி நேரம் பணியாற்றி வருகின்றார்.
சமூகக் குறைபாடுகள், பொதுமக்களின் கோரிக்கைகள், முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், அபிவிருத்தி தொடர்பான செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் 1982ம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் (அம்பாறை மாவட்டம் ) ஈராண்டு மலரில் "முஸ்லிம்களுக்கென தனிஅரசியல் கட்சி எனும் தலைப்பில் முதல் கட்டுரையை எழுதியுள்ளார்.
பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகளிலும், சமூக சேவை
இலங்கை ஆரம்ம்ே எழுந்தார்கள்,டேசrார்கள், கனிந்ராளிர்வீரந்நீரட்ரு

Page 55
(சஹீதா)வின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு நிப்ருல் முஸர்.ரிபா, முகம்மட் அஸாப் ஆகிய இரண்டு செல்வங்கள் உள.
இவரின் முகவரி:
820/2 (240) டீன்ஸ் ரோட் 'மபாஸா மன்ஸில்" டவுன் டிவிஷன் - 02 அக்கரைப்பற்று - 01
ritoni ot. - கலாபூஷணம் புணர்னியாமீனர்
 

எழுத்துத் துறை
எம். யூ. முஹம்மது பஷிர்
இAங்கை முளம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், சுண்பூஞர்களிர்விபரத்திரட்டு

Page 56
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில், ஏறாவூர் - 01,ஏ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது உசனார் முஹம்மது பவர் அவர்கள், உசனார் எம். பஷீர், எம். யூ. எம் பவரீர், எம், ஸாபிஹற் ஹஸன், பவிர் இப்னு உசனார் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1972ம் ஆண்டில் பிறந்த பவரீர் அவர்கள் ஏறாவூர் அறபா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, பேராதனை பல்கலைக்கழகம் (வெளிவாரிப்பிரிவு) ஆகியவற்றின் பழைய மானவராவார் . தற்போது தனியார் நிறுவனமொனர் நரிஸ் கணக்காளராகக் கடமையாற்றிவரும் இவர் 1987ம் ஆண்டு முதல் இலக்கியத் துறையில் ஈடுபாடு செலுத்தி வருகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் (சிறுவர் கதை 1987-07-05ம் திகதி " சிந்தாமணி பத்திரிகையில் விசித்திர மனிதன்' எனும் தலைப்பில் இடம் பெற்றது. 'விதைக்குள் முடப்பட்டிருந்த எனது எழுத்தார்வம் ‘விசித்திர மனிதன் சிறுவர் கதை பிரசுரமானதும் ஆல விருட்சமாக விரிய வழிவகுத்தது” என்று பெருமையுடன் கூறும் பவரீர் சிறுவர் கதைகளை எழுதுவதில் இன்றும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பன சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மித் திரண் , நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலப் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் வானொலியிலும் இவரின் கதைகள், கட்டுரைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இதுவரை வெளியாகிய சிறுகதைகளைத் தொகுத்து சிறுகதைத் தொகுதியொன்றினை வெளியிடும் எண்ணம் இவருக்குண்டு. இது தொடர்பான பூர்வீக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
பாத்திமா ஹ”ஸ்னா இவரின் அன்பு மகளாவார்.
இவரின் முகவரி:
09 பெரிய பாலத்தடி ரோட், ஏறாவூர் 01.
r : Triti tag: - கலாபூஷணம் புள்ளியான்ே Co.)
 

எழுத்துத் துறை
) முஹம்மட் இஸ்மாஈல்
- ܨ இtங்கை மும் சிம் எழுத்தாளர்கள்,ஊடகவியtார்கள், கனயூதர்களிர்வீசந்திரட்டி

Page 57
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் உடத்தலவின்னை மடிகே - கலதெனிய கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஷாஹ"ல் ஹமீட் முஹம்மட் இஸ்மாஈல் அவர்கள்; முஹம்மட் இஸ்மாஈல், ஸலபி, அபூஅனான், முவஹற்ஹித், முபஸ்ஸிர், முபல்லிஸ், இப்னு ஸாஹ"ல் ஹமீத், முஹிப்புத் தீதாத், அபுஹிர்ரா ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளரும், நூலாசிரியரும், பத்திரிகை ஆசிரியருமாவார்.
1970. 06. 16ம் திகதி ஷாஹ"ல் ஹமீட் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த இஸ்மாஈல் அவர்கள், உடத்தலவின்னை மடிகே க/ ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, திருகோணமலை மெதடிஸ் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை, பரகஹதெனிய ம."ஹத் தாருத் தெளஹரீத் அரபுக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இஸ்லாமிய நாகரிகத் துறையில் பீ.ஏ. சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ள இவர் சமயத் துறையில் மெளலவி அல்ஆலிம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரின் ஆக்கங்கள் உண்மை உதயம், வான்சுடர், அல் முபீன் (இந்தியா) பாமிஸ், எழுச்சிக்குரல், தினகரன் போன்ற இதழ்களில் இடம்பெற்றுள்ளன. தற்போது பரகஹதெனிய மட்ஹத் தாருத் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் கடமையாற்றி வரும் இவர், நாடறிந்த சிறந்த மதபோதகர்களுள் ஒருவராவார். இவரின் மார்க்க உபதேசங்களும், விரிவுரைகளும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரும்
96) TU.
1985ஆம் ஆண்டில் தான் மத்ரஸாவில் கற்கும் காலத்தில் மத்ரஸாவின் மாதாந்த சஞ்சிகையான "உண்மை உதயத்தில் இவரது முதலாவது கட்டுரை ‘ஊதிக் குடிக்காதே.’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை முன்னுாற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள இவர் இதுவரை 17 நூல்களை வெளியிட்டுள்ளார் இந்நூல்களில் சில இந்தியாவிலும் பதிப்பிக்கப்
u /Taöib o2 — கலாபூஷணம் புன்னியாமீன்

பட்டுள்ளன. விபரம் வருமாறு:
1. இறைநம்பிக்கைக்கு எதிரான சவால்கள்.
தற்பெருமை வேண்டாம். (இந்தியா) திருத்தப்பட வேண்டிய தீர்வுகள் குற்றவாளிக் கூண்டில் தஸ்லிமா நஸ்ரின் (இந்தியா) தாயத்து ஈமானுக்கு ஆபத்து பெண்களும் மூடநம்பிக்கைகளும் சகுணம். அல்லாஹற் எங்கும் உள்ளானா? (இந்தியா) முஸ்லிம் சிறார்களுக்கு நபி (ஸல்) நவின்ற நற்கதைகள் (இந்தியா)
9. பொறாமை வேண்டாம். (இந்தியா) 10. புறம் இஸ்லாத்தின் ஹராம். (இந்தியா) 11 முதல் நிலை முஸ்லிம் பெண்கள் (இந்தியா) 12 பெண் இனத்தின் முன் மாதிரிகள் (இந்தியா) 13. நற்செய்தி பெற்ற நபித்தோழர்கள் (இந்தியா) 14. அழைப்புப் பணியின் அவசியமும் அணுகு முறையும். 15. வழியாக்களின் சீர்கேடுகள் 16. அழைப்பாளனின் அணிகலன்கள் (மொழி பெயர்ப்பு) 17. அகீதா - ஒரு விளக்கம் (மொழி பெயர்ப்பு)
இவரின் ‘முஸ்லிம் சிறார்களுக்கு நபி (ஸல்) நவின்ற நற்கதைகள்’ எனும் புத்தகம் சிங்களத்தில் ‘முஸ்லிம் லமுன் சந்தஹா நபி நாயக (ஸல்) துமா பவசபு கதந்தர” எனும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இந்நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை ஏ.ஸி.எம். நஜீப்தீன் எழுதியுள்ளார்.
வெகு விரைவில் பின்வரும் மூன்று புத்தகங்களை வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
. ஸஹாபிப் பெண் மணிகள் (100 பெண் மணிகளின் வரலாறு) 2. குர்ஆனியப் பெண்கள். 3. நபித் தோழர் வாழ்வினிலே.
(109இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 58
இவரின் ஆய்வுப் பணியில் ‘குர்ஆன் விளக்கம்’ எனும் தமிழ்மொழி நூலினை வெளியிடுவதை ஓர் இலட்சியமாகக் கொண்டுள்ளார்.விசேடமாக குர்ஆன் மொழிபெயர்ப்பில் சொல் வாரியான தமிழ் விளக்கத்தை வழங்க எத்தனிப்பது இவ்வாய்வின் பிரதான அடிப்படையாக உள்ளது.
இவரின் பத்திரிகைத்துறைப் பணியில் முக்கிய கட்டமாக; பரகஹாதெனிய மட்ஹத் தாருத் தவ்ஹீத் அரபுக் கல்லூரி தொடர்ச்சியாக மாதந்தோறும் வெளியிட்டு வரும் ‘உண்மை உதயம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றி வருவதைக் குறிப்பிடலாம். 'உண்மை உதயம் 1955ம் ஆண்டில் மாதமிரு முறைப் பத்திரிகையாகவே வெளிவந்தது. சுமார் 4ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்த இப்பத்திரிகையின் ஆசிரியராக அல்லாமா அப்துல் ஹமீட் கடமையாற்றினார். ‘இனிய தமிழ், இஸ்லாமிய இலக்கிய இதழ்’ எனும் மகுடத்தில் வெளிவந்த இப்பத்திரிகை 1959ல் இடைநிறுத்தம் பெற்றது. அதையடுத்து 1983ம் ஆண்டு முதல் மீண்டும் ‘உண்மை உதயம் வெளிவரத் தொடங்கியது. ஆரம்பத்தில் பத்திரிகையாக வெளிவந்தாலும் 1983ல் அது சஞ்சிகையின் தோற்றம் பெற்றது. மும்மாசிகைச் சஞ்சிகையான உண்மை உதயம் முஸ்தபா மெளலானாவை ஆசிரியராக் கொண்டு 23 இதழ்கள் வெளிவந்தன.
அதையடுத்து முஹம்மட் இஸ்மாஈல் 1994ம் ஆண்டில் உண்மை உதயம்' சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளார். இவரின் காலப்பகுதியிலே மும்மாசிகையாக வெளிவந்த இச்சஞ்சிகை மாதாந்த சஞ்சிகையாக வெளிவரலாயிற்று. இவரை ஆசிரியராகக் கொண்டு 87 ‘உண்மை உதயம்’ இதழ்கள் வெளிவந்துள்ளன.
கால மாற்றங்களுக்கு இணங்க நவீனத்துவமான முறையில் தமது கருத்துக்களை மக்கள் முன்வைக்க வேண்டும் எனும் சிந்தனை இவருக்குண்டு. எனவே நவீன முறையில் தனது கருத்துக்களை ஒலிப்பதிவு நாடாக்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுத் தட்டுகள்
u Arabib O2 - கலாபூஷணம்

மூலமாகவும் மக்கள் முன் வைப்பதில் வெற்றி கண்டு வருகின்றார். இவரது சொற்பொழிவுகள் அடங்கிய 5 ஒலிப்பதிவுத் தட்டுகளும், 20 ஒலிப்பதிவு நாடாக்களும் வெளிவந்துள்ளன. இந்தியாவைப்போல இலங்கையில் நவீனத்துவமான முறையில் கருத்துக்களை எடுத்துச் செல்வதிலுள்ள வசதியீனங்களைப் பற்றி கவலையடையும் இவர் 'உண்மை உதயம்' சஞ்சிகையை இணையத் தளத்தில் இணைத்து உலகளாவிய ரீதியில் உலவ விட்டிருப்பது பாராட்டத்தக்கதே
இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து 1999ம் ஆண்டில் மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு முஸ்லிம் கலைஞர்கள் கெளரவிப்பு விழாவில் ஆளுனர் விருதும், ‘கலைச்சுடர் பட்டமும் வழங்கி கெளரவித்தது. அத்துடன் உடத்தலவின்னை மடிகேகலதெனிய ரெபாஹற் சமுர்த்தி செயலனி 2000ம் ஆண்டில் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
எம்.எல். கைருன்னிஸாவின் அன்புக் கணவரான இவர், ஹர்ரதுன்னிஸா, அனான், அவரீமத் ஆகிய அன்புச் செல்வங்களின் தந்தையுமாவார்.
இவரின் முகவரி: 59/டீ கலதெனிய உடத்தலவின்னை, மடிகே உடத்தலவின்னை 20802
01DEAశం முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 59
முஹம்மட் பைரூஸ்
பாகம் :ெ . கலாபூஷணம் புண்ணியாமீன் 11
 

தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகாமம் தேர்தல் தொகுதியில் வெலிப்பிட்டிய 3910 மதுராப்புர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயில் முஹம்மட் பைரூஸ் அவர்கள்; கலைமகன் பைரூஸ், இப்னு இஸ்மாயில், மண்ணுரார் மாணிக்கம், வெலிகம இளங்கவி, கலைமகன், தமிழ்ப்பித்தன், பஹற்மியாமணாளன், கவிராஜன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார்.
மஜீத் முஹம்மது இஸ்மாயில், பீபீ ஜெஸிமா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1974, 01 , 26ம் திகதி பிறந்த பைரூஸ், மாறை அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலயம் (மதுராப்புர - தெனிப்பிட்டி) மாறை அறபா தேசிய பாடசாலை (வெலிகம), பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகிவற்றின் பழைய மாணவராவார். கலைமாணிப் பட்டதாரியான இவர், தற்போது மிலேனியம் பிரின்டர்ஸ் என்ட் பப்ளிஷர்ஸ் எனும் அச்சூடகத்தோடு இணைந்திருக்கின்றார்.
கவிதை (மரபுக்கவிதை, புதுக்கவிதை), கட்டுரை, மேடை நாடகம், புகைப்படக்கலை, பத்திரிகைத்துறை என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்துவரும் இவரின் கன்னிப் படைப்பு "ஒரு நாணயம்” எனும் தலைப்பில் 1985-09-11ம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்றது.
இதுவரை 02 சிறுகதைகளையும், 102 கவிதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூல்விமர்சனங்களையும், பேட்டிகளையும் எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் தினகரன். வீரகேசரி தினக்குரல், இடி, ஜனனி, நவமணி, முஸ்லிம் குரல், ஆகிய பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன. இவரின் ஆற்றல்களைக் கண்ணுற்ற இலங்கை வானொலி தேசிய சேவைத் தயாரிப்பாளர் திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் "யுவ யுகம்', உழைப்போம் உயர்வோம்’ நிகழ்ச்சிகளிலும், வானொலி அறிவிப்பாளர் ஜனாப் செய்யித் இர்பான் மெளலானா அவர்கள் "அதிதிகள் அறிமுகம் நிகழ்ச்சியிலும் இவரைப் பேட்டி கண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்
0112][ཞོཤ་ཚ་ཤག་ மும் ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கண்wநர்களிர்வீரந்நீரட்டு

Page 60
தக்கது இவர் இதுவரை 2 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1 தமிழ் இலக்கியம் (சந்தர்ப்பம் கூறல்) 2. தமிழ் இலக்கணம் - வினா விடை
அத்துடன் 4 சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். பனிமலர் (மாணவர் சஞ்சிகை) மதுரம் - அஸ்ஸபா வெள்ளி விழா மலர் (பிரதம ஆசிரியர்) கலை ஊற்று (ஆசிரியர் குழு உறுப்பினர்) அஷஷம்ஸ்
அத்துடனி ' புத் தொலி’ எனும் பெயரில் மாசிகையொன்றையும் இவர் வெளியிட்டு வருகின்றார். இதன் பிரதம ஆசிரியராக,பக்க வடிவமைப்பாளராக, செய்தியாளராக, புகைப்படக் கலைஞராக, வெளியீட்டாளராக இவர் செயற்படுகின்றமை அவதானிக்கத்தக்க விடயமாகும். 1996ம் ஆண்டில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் ‘நவமணி பத்திரிகையின் மூலமாக ஊடகவியலாளராக அறிமுகமான இவர், தென்னிந்திய திரையச்சுக் கலை நிபுணர் திரு.ஆர். பரதராஜனிடம் (பரதன்) திரையச்சுக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளமையும் விசேட அம்சமாகும்.
இவர் அரச,மாகாண, மாவட்ட இலக்கியப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பரிசில்கள் பலபெற்றுள்ளார். கம்உதாவ பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசிலை மறைந்த முன்னால் ஜனாதிபதி அதிமேதகு ஆர். பிரேமதாஸாவிடமிருந்தும், மாகாண சிங்கள சாகித்திய விழாவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் கவிதைப் போட்டியில் வெற்றியீட்டி முன்னாள் தென்மாகாண ஆளுநர் "நெவில் கனகரத்னவிடமிருந்தும் பரிசில்களைப் பெற்றுக் கொண்டுள்ளமையை கெளரவமாகக் கருதி வருகின்றார்.
மாணாக்கரின் தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளைப் புரிந்துவரும் பைரூஸ், மிலேனியம்
ufræõib o2 -- கலாபூஷணம் புணர்னியாமீன் O)

செய்திப் பத்திரிகை நிறுவனத்தில் ஊடகவியலாளராகவும், ஜனனி பப்ளிகேஷன் நிறுவனத்தில் பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரின் எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாயிருந்த மெளலவி ஸெய்யித் முஹம்மட் அவர்களையும், வித்துவான் எம்.ஏ. ரஹற்மான், திரு. பூரீகரன் ஆகியோரையும் பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாயிருந்த திருமதி ஆனந்தி, கவிஞன் மர்ஹ"ம் எம்.எச்.எம். ஷம்ஸ், திக்குவல்லை ஸவ்பான், கவிஞர் நஸிரா ஹாமீம், திருமதி அலவியா ஹனிபா ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர், வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம், அகில இலங்கை இஸ்லாமியக் கலை, இலக்கியச் சம்மேளனம் ஆகியவற்றின் தொடர் பூடகவியலாளராகவும், மாத்தறையில் இயங்கும் தென்னிலங்கை கலாகேந்திர நிலையம், வண்டமிழ்க் கலாமன்றம் ஆகிய இலக்கிய அமைப்புக்களின் செயற்குழு உறுப்பினராகவும் விளங்கி வருகின்றார்.
இவரின் அன்புச் பாரியார் எம்.என். எஸ் பஹற்மியா இவருக்கு நூருல்ஹக்' எனும் அன்புப் செல்வம் ஒன்றுண்டு.
இவரின் முகவரி: ‘தமிழ் அறிவகம்’ மிலேனியம் கிரபிக்ஸ் மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகாமம்.
(196Aశఐర్ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 61
ஊடகத் துறை
கலாபூஷணம் புர்னியாமீன் 15
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில், கல்முனைக்குடி -3 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது முஸ்தபா அவர்கள்; எம். ஐ.எம். முஸ்தபா, முளரி, முபா ஆகிய பெயர்களில் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டிவரும் ஊடகவியலாளர்களுள் ஒருவராவார்.
1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ம் திகதி முகம்மது இஸ்மாயில் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர், கல்முனை உவெஸ்லி கல்லுாரி, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவரது கன்னிக் கவிதை 1962ம் ஆண்டில் "கலைமலர்' எனும் சஞ்சிகையில் முக்குணம்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. பல கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். இவைகள் வீரகேசரி, தினகரன், தினக்கதிர்,விவேகி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
எம்.ஐ.எம். முஸ்தபா அவர்களின் எழுத்துலகப் பங்களிப்பில் விளையாட்டுத்துறை சார்ந்த கட்டுரைகள், முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இலங்கை வானொலியில் விளையாட்டரங்கு நிகழ்ச்சியில் சுமார் 5 வருட காலத்துக்கும் மேலாக விளையாட்டுலக கட்டுரைகளை எழுதியுள்ளார். குறிப்பாக ஒலிம்பிக், சாப் விளையாட்டுக்கள், கிரிகட், உதைபந்தாட்டம் போன்றவற்றின் வரலாறுகள், வீரர்கள், முக்கிய சாதனைகள் போன்ற விவரணங்கள் நேயர் களின் அமோக வரவேற் பினைப் பெற்ற  ைம குறிப்பிடத்தக்கதாகும்.
உதைப்பந்தாட்டப் பணிக்காக 2002 இல் தேசிய விருதும், சாரணியப் பணிக்காக முன்று தடவைகள் ஜனாதிபதி விருதும்
G19ãa iliana மு:ம்சம்ே Tழுத்தாளர்கள்,ஊடகவிய*ாளர்கள், கலைஞர்களின்விபரந்திரட்டு

Page 62
பெற்றஇவர் 1968.08.14ம் திகதி முதல் வீரகேசரியில் தென்கிழக்கு நிருபராகநியமனம் பெற்று சுமார் 10 ஆண்டு காலமாக பகுதி நேரப் பத்திரிகையாளராகக் கடமையாற்றியுள்ளார்.வீரகேசரியில் 'குற்றத்தடுப்பு இயக்கம் சம்பந்தமான மலர்களையும், சந்தாங்கேணி மைதான கவிதைப் போர் நிகழ்ச்சியையும் வெளியிடக் காரணமாக இருந்தார்.அத்துடன் கேசரி வார வெளியீட்டில் இடம்பெற்ற சந்தாங்கேணி கவிதை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீரகேசரி பத்திரிகையைத் தொடர்ந்து 'தினக் கதிர் பத்திரிகையிலும் சில காலம் நிருபராகப் பணியாற்றியுள்ளார். கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபசெயலாளராகவும், கரையோர செய்தியாளர் சங்கத்தின் உபதலைவராகவும், ரீலங்கா மீடியா போரத்தின் அங்கத்தவராகவும் உள்ள இவர், தனது எழுத்துலக மற்றும் ஊடகத்துறை ஈடுபாட்டுக்கு ஆதரவு வழங்கிய மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், வீரகேசரி முன்னாள் ஆசிரியர் திரு.கே. சிவப்பிரகாசம் மற்றும் வானொலித் துறையின் திருவாளர்களான எஸ்.எழில்வேந்தன், ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
எம்.ஐ.ரசினாவின் அன்புக் கணவரான இவர் எம்.சபீலா, எம்.எம். இம்ரான் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவரின் முகவரி: 208, f. f. sig,
கல்முனை - 05. <>ܛz
1a
SA 3.
“Wes”
பாகம் 2. கலாபூஷணம் புணர்விரியாமினர்

- பதிவு 67 -
எழுத்துத் துறை
நபீக் பீர்சிதாஸ் ノ த ン
11]|జెనీతో ராட்சிம் விழுந்தாளர்கள்,ஊடகவியfார்கர், கனAநர்களிர்வீரந்திரட்டு

Page 63
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில் நிந்தவுர் 4 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அகமது லெவ்வை அப்துல் றபீக் அவர்கள், ஏ.எல். றபீக் பிர்தெளஸ், பானு ஹாசன், கலைமகன், செளத்துல் உம்மத், நிந்தகாந், செங்குழவி ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், மெல்லிசைப்பாடல்கள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
அகமது லெவ்வை தம்பதியினரின் புதல்வராக 1966.02.04ம் திகதி பிறந்து நிந்தவூர் கமு/ இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம், நிந்தவூர் கமு/அல் அஷ்ரக் தேசிய கல்லூரி, இந்தியா, சென்னை அகில இந்திய முகாமைத்துவ கல்வி மையம், தென்-கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராவார். கல்வித் துறையில் Dip.in Educational Management 26TILibg.g60pu56) Dip.in Mass Communication, Dip in Journalism getful LJTL (obi) B6061Ti jji Qiyu goi6T இவர் தற்போது கிழக்கு உட்கட்ட அபிவிருத்தி அமைச்சின் ஊடகத்துறை இணைப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
“எம் மக்கள் செழிப்புக்கே - என்றும் என்னெழுது கோல் தாள்மீது தவளும் - என்னிதயமும் அதற்கொப்ப நின்று இயங்கியே இம்மண்ணில் வாழும்.”
என்ற அடிப்படையுடன் 1984ம் ஆண்டில் இலக்கிய உலகில் காலடி எடுத்துவைத்த இவரின் கன்னிச் சிறுகதை 1984-12-01ம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்சியில் ‘அண்டை வீட்டார் பசித்திருக்க. எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 19 சிறுகதைகளையும், 108 கவிதைகளையும்,22 கட்டுரை களையும், 06 மெல்லிசைப்பாடல்களையும், 04 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார், இவரின் ஆக்கங்கள் தினகரன், தினக்கதிர், சிந்தாமணி, தினமணி, வீரகேசரி, பானுமதி, நம்நாடு, பாசம், வெண்ணிலா, தடாகம், புன்னகை, தினபதி, அன்னை, அல்-அஸ்றக்,
பாகம் Q2 -س- கலாபூஷணம் புணர்னியாமீன்

அன்பு, கண்ணாடி, சர்வோதய மலர், தியாகி, தேன்மழை, நந்தவனம், மித்திரன், புதுக்குரல், நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் இடம்பெற்றுள்ளன.
அநேகமாக இவரது படைப்புக்கள் அவ்வப்போது சமூகத்தில் காணப்படும் சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்துப் பின்னப் பட்டதாகவும், காதலும், சோகமும் கலந்ததாகவே காணப்படுவது வழக்கம். இவர் எழுதி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான ‘அவனொரு சரித்திரம்”, பணம் பாதாளம் வரையா?” ஆகிய நாடகங்கள் வாசகர்களிடையே அமோக வரவேற்பினைப் பெற்றுள்ளன.
றபீக் பிர்தெளஸ் இதுவரை சுயமாக ஒரு புத்தகத்தை வெளியிடாவிடினும் கூட வெகுவிரைவில் ‘சிந்தனைத்துணுக்குகள்’, ‘‘அம்பாறை மாவட்ட நெல் உற்பத்தியும் எதிர்கொள்ளும் சவால்களும்’ எனும் இரண்டு நூல்களை வெளியிடும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு கலை, இலக்கியவாதியாக மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த இவர் காலப்போக்கில் தன்னை ஒரு ஊடகவியலாளராகவும் மாற்றிக் கொண்டார். 1995.09.05ம் திகதி முதல் 'தினகரன்’ பத்திரிகையில் பிரதேச செய்தியாளராக நியமனம் பெற்ற இவர், நவமணி, தினக்கதிர்,தினமணி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சூரியன் எப்.எம்.ஈஸ்டன் டைம்ஸ் ஆகியவற்றின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் கணிப்பின்படி தினகரனில் 1107 செய்திகளையும், நவமணியில் 101 செய்திகளையும் தினக்கதிரில் 56 செய்திகளையும், தினமணியில் 69 செய்திகளையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு 98 செய்திகளையும், சூரியன் எப்.எம்.க்கு 52 செய்திகளையும், ஈஸ்டன் டைம்ஸ் க்கு 29 செய்திகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நவமணியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட பல ஊடகவியலாளர்கள் ஆண்டுக்கணக்காக ஆயிரக்கணக்கான
(2)இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 64
செய்திகளை, கட்டுரை விமர்சனைங்களை எழுதியிருக்கலாம். ஓர் ஆய்வுக்கு சமர்ப்பிக்கும் போது சகல விடயங்களையும் அட்டவணைப்படுத்தி முறைப்படியாக அனுப்பி வைத்திருந்தமையால் பிர்தெளஸின் தரவுகளை சரியான முறையில் தரமுடிந்தது)
இலக்கியத் துறையினூடாக அநீதிகளை எதிர்த்துப் பழகிய இவர், உளடகங்களினூடாகவும் அநீதிகளையும், சமூக சீர்கேடுகளையும் எதிர்க்கலானார். இதனால் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதுடன் உயர் நீதிமன்றம் வரை சென்று மனித உரிமை மீறல் வழக்கிலும் வெற்றி கண்டுள்ளார்.
நிந்தவூர் இளைஞர் கழக சம்மேளனத்தினரால் செளத்துல் உம்மத்" பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ள இவர் பல்வேறுப்பட்ட இலக்கிய அமைப்புகளிலும் சமூக சேவை இயக்கங்கிளிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார்.
இவரின் இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாகவிருந்த கவிஞர் எம். ஐ. உஸனார் ஸலிமை அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவர் உம்மு ஹபீபாவின் அன்புக் கணவராவார். இவரின் அன்புச் செல்வத்தின் பெயர் றிப்கா,
இவரின் முகவரி 135, ஏ மாஸ்டர் லேன்,
நிந்தவுர் 11.
பாகம் ? . கலாபூஷணம் புணர்னியாமினர்
 

Ο - பதிவு 68 -
ஊடகத் துறை
புர்காண். பீ. இப்திகார்
ン
ཉོཤ་ ங்கை முஸ்ம்ே விழுந்தாார்கள்,ஊடகவிபAாளர்கள், கருைர்களிர்வீபரந்திரட்ரு

Page 65
மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், மத்திய கொழும்பு
எல்லைக்குள் வசித்துவரும் திருமதி புர்கான் -பீ- இப்திகார் அவர்கள் சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வானொலியிலும், பத்திரிகைகளிலும் தனது முழுநேரப் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த வானொலிக் கலைஞர்களுள் ஒருவராவார்.
1949 - 10 - 20ம் திகதி பிறந்த புர்கான் பீ இப்திகார் அவர்கள் கொ/ டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை, கொ/ கைரியா பெண்கள் பாடசாலை, பேராதனைப் பல்கலைக் கழகம், நாவல திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார். 1959/60ம் ஆண்டுகளில் தான் கல்லூரி மாணவியாக இருக்கும் போதே இவர் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 1960-ம் ஆண்டில் ‘நான் கண்ட கனவு’ எனும் தலைப்பில் இவரால் எழுதப்பட்ட முதலாவது கதை (சிறுவர்கதை) அரங்கேறியது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக் கணக்கான வானொலி ஆக்கங்களையும், ஆறு தொடர்நாடகங்களையும், பல்வேறு விசேடதின உரைச்சித்திரங்களையும் நூற்றுக்கணக்கான மாதர் மஜ்லிஸ் (வானொலி நிகழ்ச்சி) பிரதியாக்கங்களையும் எழுதிப் பங்கேற்றுள்ளார்.
எமது இலங்கையில் முஸ்லிம் பெண்கள் எழுத்துத்துறை, கலைத்துறையில் ஈடுபடுவது மிக மிகக் குறைவு. அவ்வாறு ஈடுபட்டாலும் கூட நீண்ட காலங்கள் அத்துறைகளில் தாக்குப்பிடித்து நிற்பது என்பது அபூர்வமான விடயம் தான். இந்த அடிப்படையில் நோக்கும் போது திருமதி புர்கான் பீ. இப்திகார் அவர்கள் இடைவிடாது சுமார் 45 ஆண்டுகாலம் வானொலிக் கலைஞராக விளங்கி வருவது ஒரு சாதனையே. இவரின் இப்பயணத்தில் பல்வேறுபட்ட தடைக்கற்கள் எதிர்நோக்கப்பட்டன. பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைகள் ஏற்பட்டன. இருப்பினும் துணிவுடனும், சாதுரியத்துடனும் அவற்றை எதிர்கொண்டமையினாலேயே சோதரி புர்கான் பீ யினால் இத்தகைய தூரத்திற்குத் தனது பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
பாகம் O2 - கலாபூஷணம் புணர்னியாமீன் Gia)

வளர்ந்துவரும் இளம் பெண் கலைஞர்களுக்கு இவர் ஓர் ஆதர்ஷனம்.
வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ‘மாதர் மஜ்லிஸ்’ நிகழ்ச்சி இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களுக்கான ஒரு பிரத்தியேக நிகழ்ச்சியாகும். முஸ்லிம் பெண்களுக்கு சமூக, சமய உணர்வூட்டும் வகையில் பல அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுவருவதை அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியில் பிரதித் தயாரிப்பு, கெளரவ தயாரிப்பு, தொகுப்பு, பங்கேற்பு போன்ற பல கருமங்களில் இவர் ஈடுபாடு கொண்டுள்ளார். அத்துடன் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியான ஆரோக்கிய சந்திப்பும் இவரின் திறமைக்குச் சான்று பகர்ந்துள்ளது.
பிரதேச ரீதியாக நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம் மாதர்களை நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் செய்வதுடன், பெண்களின் திறமைகளை வெளிக் கொணர்வதில் மேற்படி நிகழ்ச்சி களை இவர் முழுமையாகப் பயன்படுத்திவருகின்றார். குறிப்பாக *மாதர் மஜ்லிஸ்’ நிகழ்ச்சி மூலமாக பல நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்களை உருவாக்கிக் களமமைத்துக் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
வானொலி பங்களிப்பினைப் போலவே தொலைக்காட்சியிலும் இவரின் பங்களிப்பு இடம் பெற்றுவருகின்றது. ரூபவாஹினி, ஐ.ரீ.என். தொலைக்காட்சிகளில் பத்துக்கு மேற்பட்ட நாடகங்களில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார். அத்துடன் சிறுகதை இலக்கியத்துறையிலும் இவரின் பங்களிப்பு குறிப்பிட்டுக் கூறக் கூடியவகையில் இடம் பெற்றுள்ளன. தினகரன், வீரகேசரி, தினக்குரல், சிந்தாமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இலங்கையில் அவ்வப் போது வெளிவரும் சஞ்சிகைகளிலும் இவரின் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை 33 சிறுகதைகளை எழுதியுள்ள இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதி தமிழ்மன்ற வெளியீடாக 1999 அக்டோபரில் வெளிவந்தது. இத்தொகுதியின் பெயர் 'பிறந்த மண்' என்பதாகும்.
012)GAశa முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு

Page 66
இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் 1993ம் ஆண்டில் தனது "வாழ்வோரை வாழ்த்துவோம் விருதுவழங்கும் வைபவத்தில் நஜ்முல் உம்மா பட்டம் வழங்கி கெளரவித்தது. அத்துடன் இரத்தினபுரி இனநல்லுறவுக்கான கலை, கலாசார ஒன்றியம் 1999இல் சாமரீ கலையரசி பட்டம் வழங்கி கெளரவித்தது.
ஜனாப் முஹம்மது இப்திகாரின் அன்பு மனைவியான இவருக்கு மூன்று அன்பு செல்வங்கள் உளர். முஹம்மது இப்றாஹீம், முஹம்மது அர்சாத், பாத்திமா பானு ஆகியோரே அச்செல்வங்களாவர்.
இவரின் முகவரி, 101, நவரத்ன ஜயவீர ரோட் கிட்டம்பஹாவ வெல்லம்பிட்டிய.
utoli £'ኛl ...... கலாபூஷணம் புணர்னியாமீர் 25
 

() பதிவு 69
எழுத்துத் துறை
கலாபூஷணம் /) எம்.எஸ்.எஸ். ருமித்,
ン الرح\
12 ե இலங்கை முஸ்லீம் விழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், கண்தேர்களிர்வீபரந்திரட்டு

Page 67
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் காத்தான்குடி - 02 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது சரிபு சாகுல் ஹமீது அவர்கள்; மருதமைந்தன் அபுவிரின் ஆகியபெயர்களில் கவி படைத்துவரும் மூத்த கவிஞர்களுள் ஒருவராவார்.
1936.02.21ம் திகதி முகம்மது சரிபு தம்பதியினரின் புதல்வராகக் காத்தான்குடியில் பிறந்த ஹமீது அவர்கள் நிந்தவுர் அல் -அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.பயிற்றப்பட்ட முதலாந்தர ஆசிரியராகக் கடமைபார்த்து தற்போது ஒய்வு பெற்றுள்ள இவரின் முதலாவது ஆக்கம் 1955ம் ஆண்டில் ‘பால்யவிவாகம்’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றது.
இதுவரை ஒரு சிறுகதையையும், ஐந்து கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் நுாற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் ஐந்து நுால்கள் வெளிவந்துள்ளன.
விபரம் வருமாறு
1. சங்கமம் (காவியம்) -1996
காத்தான்குடி நவ இலக்கியமன்ற வெளியீடு
2 பாவணி (சிறுவர் பாடல்கள்) - 2002
பாவலர் மன்ற வெளியீடு
3. நறுக்குகள் (கவிதை) -2002
மபாஸ் ஹஜ் டிரவல்ஸ் வெளியீடு
4. அமுதுக் கலசம் (கவிதை) - 2002
5. அமுது (கவிதை) - 1967
நவ இலக்கிய மன்ற வெளியீடு
பல தடவைகள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ள இவரை ரீலங்கா அரசு 2002 ஆண்டில் ‘கலாபூஷணம்’ விருது வழங்கிகெளரவித்துள்ளது.தனது இலக்கிய ஈடுபாட்டுக்கு மூலகர்த்தா
| urob ○2ー கலாபூஷணம் புண்ணியாமீன்

வாக திருவாளர் கே. பொன்னையா (ஆசிரியர்) அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் ஹமீது அவர்கள் சித்தி ஹாஜறா பீபியின் அன்புக் கணவராவார். சித்தி மர்சூனா, பிர்தெளஸ், வழிரின் ஸப்ஹானா ஆகியோர் இவரின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி 134 / 3 பிரதான வீதி,
காத்தான்குடி.
(129@#ಖಹ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 68
(ノ - பதிவு 70 -
எழுத்துத் துறை
பாகம் ஐ ட 里 கலாபூஷ்ணம் புர்ரியாமீர்
அப்துல் மலிக்
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில் பொத்துவில் -6 றஹற்மத் நகர் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது சரிபு முகம்மது அப்துல் மலிக் அவர்கள்; இறைநேசன், மலிஹாநி, பொத்துவில் அப்துல் மலிக், அபூ அப்துல்லா, இளம்பிறை அலி அல் றிழா ஆகிய பெயர்களில் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர்களில் ஒருவராவார்.
ஜனாதிபதி விருதுபெற்ற சிறந்த விவசாயியான கே.பீ.எம். சரிப், எஸ். ஸபூறா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1965-09-13ம் திகதி பொத்துவில்லில் பிறந்த இவர், பொத்துவில்-அல் இர்பான் வித்தியாலயம், கம்பளை ஸாஹிராக் கல்லூரி, களுத்துறை தேசிய விஞ்ஞான சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
இவரது முதலாவது ஆக்கம் "பயனுள்ள இளைஞர் நாம்.” எனும் தலைப்பில் 1981ம் ஆண்டில் "மித்திரன்' பத்திரிகையில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும், 15 சிறுகதைகளையும், 25 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினபதி, தினகரன், வீரகேசரி, மித்திரன், பாமிஸ், நேசன், எழுச்சிக்குரல், இஸ்லாமிய சிந்தனை, முஸ்லிம் நோக்கு, அல்-ஜஸிறா, நிதாஉல் இஸ்லாம், அல்-ஹஸனாத், உண்மை உதயம், வான்சுடர், குவியல், கலைச்சுடர், பிறைற், அல்-இஸ்லாம் ஆகிய பத்திரிகைளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்தியாவிலிருந்து வெளிவரும் வான்சுடர், அந்நஜாத், அல்ஜன்னத், அல்முபீன் ஆகியவற்றிலும் இவரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் ரீதியாக பொதுச் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றிவரும் இவர் பல்வேறுபட்ட சுகாதார வழிகாட்டிக் குறிப்பே டுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அத்துடன் 2001ம் ஆண்டு தேசிய ரீதியில் நடத்தப்பட்ட சுகாதார வார போட்டியின் போது பொத்துவில்லில் சிறந்த சுகாதாரப் பரிசோதகராகவும் சிறந்த உணவு நிலையப் பரிசோதனை சுகாதாரப் பரிசோதகராகவும், கல்முனை
(3)இலங்கை முஸ்லீம் விழுந்தாார்கள்,ஊடகவியாபார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

Page 69
மாவட்டத்தில் சிறந்த சுகாதாரப் பரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 2001ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமை புரியும் சுகாதாரப் பரிசோதகர்களிடடையே சிறந்த சுகாதாரப் பரிசோதகர் ஒருவரைத் தெரிவு செய்யும் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற இவர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதாரப் பரிசோதகராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளார்.
பல்வேறுபட்ட விளையாட்டுக் கழகங்களிலும், சமூக சேவை அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்றுள்ள இவர் அக்கரைப்பற்றுகல்முனை மாவட்ட திரிசாரணர் இயக்கத்தின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார். அத்துடன் 6வது தேசிய சாரணர் ஜம்போறியில் வெளியிடப்பட்ட வெளியீடுகளின் ஆசிரியர் குழுவிலும் பங்காற்றியுள்ளார்.
ஏனைய கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து இதுவரை இவர் நான்கு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.
இரத்தச் சுவடுகள் (1993) எண்ணக் கொதிக்குது நெஞ்சம் (1994) புஷ்ஷை நினைக்கையில் இரத்தம் கொதிக்கிறது (2003) காலத்தின் கோலங்கள் (2004)
அத்துடன் “ இணையும் சாரணிய நெஞ்சங்கள்’ எனும் கவிதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். வைத்தியத் துறையோடு மிகுந்த தொடர்புடைய இவர் ‘ஹோமியோபதி மருத்துவம், அலோபதி மருத்துவம் ஆகிய துறைகளிலும், மும் மொழிகளோடு அரபு மொழியிலும் "டிப்ளோமா’பட்டம் பெற்றுள்ளார். ‘எந்தத் துறையில் தொழில் புரிந்தாலும், எனது சொந்தத்துறை எழுத்துத் துறையே!” எனக் கூறும் இவர் ஊடகத்
| பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன்

துறையிலும் ஒரு செய்தியாளராக தினகரன், அஹதிய்யா, நவமணி, ஜ"ம் ஆ ஆகிய பத்திரிகைகளில் செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தனது எழுத்துத் துறை, ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாக அமைந்த திருவாளர்களான ஈழக்குயில் இத்ரீஸ், கவிவாணன், யுவன், மானாமக்கீன், என்.எம் அமீன், எம்.பீ.எம் அஸ்ஹர் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்துவரும் மலிக்கின் இலக்கிய சேவையை கெளரவித்து தேசிய நல்லிணக்க ஒன்றியம் ‘சாமழரீ பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
எஸ்.எம். ஜாவிதா ஹபீபாவின் அன்புக் கணவரான மலிக்; அப்துல்லா, அப்துல் றஹற்மான் ஆகிய இரண்டு செல்வங்களின் தந்தையுமாவார்.
இவரின் முகவரி:
'ஜாயிஷா மன்ஸில்
கே.பீ.எம். வீதி பொத்துவில்.
01396Aశబరి முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

Page 70
எழுத்துத் துறை
έύΦιού αιυέβιζιτώ
பாகம் 32 - கலாபூஷணம் புர்னியாமீர் ( ls)
 
 

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில், சின்னக் கிண்ணிபா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் அலி அப்துல் ஸலாம்; கிண்ணியா ஏ.ஏ. அப்துல் ஸலாம், ஸஹினா ஸலாம், அபூரஸான், ஏ.ஏ.ஏ. ஸ்லாம், கிண்ணியா மாஸ்டர் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மெல்லிசைப்பாடல்கள், சிறுவர் இலக்கியங்கள் என இலக்கியத்தின் பல்வேறுபட்ட துறைகளிலும் தனது பங்களிப்பினை வழங்கிவரும் எழுத்தாளராவார்.
1962-05-15ம் திகதி பிறந்த அப்துல் ஸலாம் அப்துல் அலி தம்பதியினரின் புதல்வராவார். பெரிய கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, திகிண்ணியா மத்திய மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக மேகம் அல்பத்திரியா ம.வி.தில் (கஹட்டோவிட்ட) கடமையாற்றி வருகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் 1985ம் ஆண்டில் 'சிந்தாமணி பத்திரிகையில் "உபதேசம்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 15 சிறுகதைகளையும், 50க்கு மேற்பட்ட கவிதைகளையும் , நுாற்றுக் கு மேற் பட்ட கட்டுரைகள் மணிக்கவிதைகள், நூல் ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுவர் கவிதைகள் என்பவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் சிந்தாமணி, தினகரன், ஜனனி, நவமணி, இடி, சுடர், ஒளி, தினக்குரல், சோனகன் ஆகிய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் இவரால் எழுதப்பட்ட இரண்டு மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அத்துடன் அரசினர் ஆசிரியர் கலாசாலை வெளியீடான "கலைஅமுதம்' சஞ்சிகையில் (1990, 1991) இவரின் பரிசுபெற்ற ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இவரின் கவிதைகளில் இன ஒற்றுமை, சமூக விழிப்புணர்வு
முஸ்தீழ் விழுந்தாளர்கள்,ஊடகவிய#ாார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

Page 71
போன்றன பெருமளவில் பொதிந்திருப்பதைக் காண முடிகின்றது.
தனி னுடைய இலக் கரியத் துறை ஈடுபாட்டுக் குக் காரணகர்த்தாக்களாக அமைந்த ஜனாப்களான ஏ.எம். எம். முஸ்தபா, எஸ்.ஏ. முத்தலீபு, எம்.ஐ.எம். தாஹிர், எம்.ஐ.எம். மஸ்ஹர், மர்ஹ"ம் அ.ஸ. அப்துஸ்ஸமது ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர், சித்தி ஸஹீனாவின் அன்புக் கணவராவார். பாத்திமா ரஸானா, முகம்மது ரஸான், பாத்திமா ரஸ்னா இத்தம்பதியினரின் அன்புச் செல்வங்களாவர்.
இவரின் முகவரி: 109 ரஸ்னா - மண்எயில் ஓகொடபொல கஹட்டோவிட்ட - 11144
பாகம் (2 - கலாபூஷணம் புணர்னியாமினர் s

(O - பதிவு 72 -
எழுத்துத் துறை
எம்.எச்.ஏ. கரீம்.
ン
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், க*ைஆர்களிர்வீரத்திரட்டு

Page 72
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் மருதமுனை 01 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா அப்துல் கரீம் அவர்கள் மருதமுனை எம்.எச். ஏ.கரீம், மருததாசன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளராவார்.
1942.08.03ம் திகதி முஹம்மது ஹனிபா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த கரீம் கமு/ அல்-மனார் மத்திய கல்லூரி (மருதமுனை)யின் பழைய மாணவராவார். தற்போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவர் மருதமுனை புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் கலை, இலக்கிய மன்றத் தலைவராகவுள்ளார்.
இவரது முதலாவது ஆக்கம் ‘காதல் அடி’ எனும் தலைப்பில் 1978ம் ஆண்டு தினகரன் பத்திரகையில் இடம் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 03 சிறுகதைகளையும், 800க்கு மேற்பட்ட கவிதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது மெல்லிசைப்பாடல்கள், இஸ்லாமிய கீதங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சூடாமணி, மித்திரன், நவமணி, ஜனனி, தினக்குரல், தினக்கதிர், இடி, சங்கமம், முஸ்லிம் குரல் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இவரின் பல கவிதைகள் இலங்கை வானொலி வர்த்தக சேவை, தேசிய சேவை, முஸ்லிம் சேவை ஆகியவற்றில் ஒலிபரப்பாகியுள்ளன.
“காலத்தின் காலடியில்’ எனும் கவிதை நூலை இவர் வெளியிட்டுள்ளார். இது மருதமுனைப் புலவர் மணி ஆ.மு. ஷரிபுத்தீன் கலை இலக்கிய மன்ற வெளியீடாகும். மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் மர்ஹ"ம் நயிம் ஷரிபுத்தீன் அவர்கள் ‘தன்னைப் போல் பிறரையும் வளர்த்ததில், வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்’ என்று பெருமையுடன் நினைவு கூறும் இவர், மீரா சாய்பு நபிஸா உம்மாவின் அன்புக் கணவராவார்.
பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன்

இத்தம்பதியினருக்கு முஹம்மது ஸர்ஜ"ன், ஷதிலாபானு, ஸஜிதா ஆகிய மூன்று செல்வங்களுள.
இவரின் முகவரி: 154 மஸ்ஜிதுல் அக்பர் வீதி, மருதமுனை - 01 (32314)
(138]ഭaiതമ முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 73
7) பதிவு 73 )
எழுத்துத் துறை
எம்.எஸ். நம்லீன் ノ
rrrrritt tյ:: - கgாபூஷணம் புர்னியாமீர்
 

வடமாகாணம், வவுனியா மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில் 214 B பட்டாணிச்சிப் புளியங்குளம் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது சரிப் - றம்ஸின் அவர்கள எம்.எஸ்.றம்ளபீன், நல்லாசான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
பிரபல வைத்திய கலாநிதி முகம்மது சரிபு (RAMP) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1966-05-08ம் திகதி பிறந்த றம்ஸின் வ அறபா வித்தியாலயம் (வவுனியா), வ முஸ்லிம் தேசிய பாடசாலை (வவுனியா), வ தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (வவுனியா), பேராதனை பல்கலைக்கழகம் , கொழும் பு பல்கலைக்கழகம், சியோஸ் நெசனல் புனிவஸிட்டி (தென்கொரியா குடியரசின் தேசிய கல்வி நிறுவனம்), சர்வதே சகல்வி நிறுவனம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். முதுகலை மாணி (2ம் வருடம்) கல்வி டிப்ளோமா முகாமைத்துவப் பின் படிப்பு மாணவரான இவர் தற்போது வ மதினா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.
சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், என இலக்கியத் தின் பல்வேறுபட்ட துறைகளிலும் ஈடுபாடுகாட்டி வரும் இவரின் நுாற்றுக்கு மேற்பட்ட ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவரின் முதலாவது ஆக்கம் மதுமயக்கம் எனும் தலைப்பில் 1978ல் வீரகேசரியில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
'கவிதை உயிர்துடிப்பானது, மனதுக்கு இனிமையானது. படிப்போர், கேட்போர் மனதை ஈர்ந்து அவர்களிடையே மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தும் சக்தி கவிதைகளுக்குண்டு. சொல்லழகும் எதுகை மோனை வாக்கிய வடிவமும் பெற்றுப்பொருளழகும் பொதிந்துள்ள கவிதைகள் எம்மொழிகளில் வடிவம் பெற்றிருப்பினும் மனித உள்ளங்களைக் கவரத்தக்கவையே”என்று கூறும் ரம்ளdன் கவிதைத்துறையில் புதுமைகளைப் புரியவேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளார்.
(1)[1] ழம்சம்ே எழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களிள் லிபரத்திரட்டு

Page 74
அதேபோல இஸ்லாமியர்களின் கலைகளை ஆராய்வதிலும் அவற்றைக் கட்டுரைகளாக்கித் தருவதிலும் ஈடுபாடுள்ளவர். 'இஸ்லாமியக்கலைகள்” எனும் நுாலினையும் வெளியிட்டுள்ளார்.
1997ல் "சர்வதேச ஆசிரியர் தினம் கவிதைப் போட்டியில் Iம் இடத்தைப் பெற்று பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பையும், சான்றிதழையும் பெற்ற றம்ஸின் சமுர்த்தி இளைஞர், விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு மூலம் 1999 ம் ஆண்டு ஜனாதிபதி இளைஞர் விருதினையும் பெற்றுள்ளார். 1989 முதல் 2001 வரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தொடர் பரிசில் பெற்றவர்களில் இவரும் ஒருவராவார். அகில இலங்கை ரீதியில் 20க்கும் மேற்பட்ட பரிசில்களை இவர் வென்றுள்ளார்.
தனது எழுத்துலக ஈடுபாட்டுக்கும், தனது சாதனைகளுக்கும் காரணகர்த்தாக்களாக அமைந்த அன்புத்தாய் அகமது மதார் உம்மா, அன்புத் தந்தை முகம்மது சரிப், அன்பு மனைவி றலீனா றம்ஸின் ஆகியோரையும் தனது ஆசான்களான அல்ஹாஜ் றகுமத்துல்லா, அப்துல் சமட் மெளலவி, கவிஞர் கண்ணையா ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
பிரதேசரீதியாக பல்வேறுபட்ட இலக்கிய சமூக சேவை அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றுள்ள இவர் றம்ஸின் முகம்மது ஆணி.ப், றம்ஸின் பாத்திமா ஆகிய செல்வங்களின் அன்புத் தந்தையுமாவார்.
பிரபல கணித ஆசிரியரான றம் எமீண் 2002 இல்
தென்கொரியாவுக்கு இடைநிலைக்கல்வி (கணிதம்) தொடர்பான கற்கை நெறிக்கு தேசிய மட்டத்தில் அதிவிஷேட பிரிவில் தெரிவு செய்யப்பட்டு அங்குள்ள ஆசிய, ஸியோல் பல்கலைக்கழகத்தில் தொழில்வாண்மை விருத்தி டிப்ளோமாவில் சித்தியடைந்துள்ளார். இவரின் முகவரி:
20, பள்ளிவாசல் வீதி,
பட்டாணிச்சிப் புளியங்குளம்,
வவுனியா.
Tari t. — கலாபூஷணம் புன்னியாமீன் ] 04)

el gssis அசண்.
(1)|ഭfഞ്ഞ முப்ரீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், க:ைஆர்களிர்வீபரந்திரட்டு

Page 75
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், மூதுார் தேர்தல் தொகுதியில் சின்னக் கிண்ணியா -கட்டயாறு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஐதுரூஸ் அப்துல் அசன் அவர்கள்: ஐதுரூஸ் ஏ. ஹசன், கிண்ணியா ஹசன்ஜி, எழில்வாணன், கலாவண்ணன், சன்ஜி, நவரசகவி, மதியன்பன், இளங்கவி ஹாசன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதிவரும் எழுத்தாளரும், கவிஞருமாவார்.
1958.06.25ம் திகதி ஜதுரூஸ் தம்பதியரின் புதல்வராக கிண்ணியா மண்ணில் ஜனனித்த அசன் அவர்கள் கிண்ணியா அல் -அக்ஷா கல்லுாரி,கிண்ணியா மத்திய கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது கிண்ணியாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவர் இலக்கியத்துறையில் அதிக ஆர்வம் கொண்டவராகத் திகழ்கின்றார். தான் கற்கும் காலத்திலிருந்தே கவிதை, கட்டுரை, கதை, நாடகம் எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்த இவரின் முதலாவது ஆக்கம் இரவு' எனும் தலைப்பில் 1972 இல் ‘தினபதி கவிதா மண்டலப் பகுதியில் பிரசுரமாகியது. அன்றிலிருந்து இன்றுவரை 38 சிறுகதைகளையும் , 173 கவிதைகளையும் பல கட்டுரைகள் ,நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய படைப்புகள் தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி,மித்திரன்,சுந்தரி, சங்கமம், தினமுரசு, குறுநகை, கண்ணி, அபியுக்தன், நேயம், தோணி (இந்தியா) ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவரால் எழுதப்பட்ட நெஞ்சில் பூத்த மலர், பெரிய மனசு, பரீட்சைக்கட்டணம், அழியாத உண்மைகள், மனச்சுமைகள், தத்துப்பிள்ளை, மனத்துயரம். போன்றகதைகள் வாசகர்களின் வரவேற்புக்குப் பாத்திரமானவை. இவர் இதுவரை இரண்டு நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. நெஞ்சில் மலர்ந்த கவிதைகள் (1989) இது இவரால்
எழுதப்பட்ட புதுக்கவிதைகளின் தொகுப்பு.
பாகம் O2 - கலாபூஷணம் புணர்னியாமீன்

2. வைகறைப்பூக்கள் (1992) இது இவரால் எழுதப்பட்ட மரபுக்
கவிதைகளின் தொகுப்பு பத்திரிகைத் துறையைப் போன்றே வானொலியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வாலிப வட்டத்தில் 'பாவளம் பகுதியிலும், இளைஞர் இதயத்தில் ஒலி மஞ்சரி பகுதியிலும் இவரது பல கவிதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அதேநேரம் ‘கவிதாலயம் கவிதைத் தொகுப்பு நூலிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன.
நாடகங்கள் எழுதி நெறிப்படுத்துவதில் கிண்ணியா பிரதேசத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இவர், பல இளம் புதுமுகங்களையும் மேடையில் அறிமுகப்படுத்தியுள்ளார். சிறந்த நடிகரான அசன் கிண்ணியா வில் மீலாத் விழாக்களில் தனது நாடகங்களை அரங்கேற்றுவதுண்டு.
‘எல்லாம் நமக்காக’, ‘சீதனம் வேண்டுமா’, ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’, ‘நீதியின் இரு பக்கங்கள்’, ‘இம்மையும் மறுமையும்’ போன்றநாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அத்துடன் கிண்ணியா சமூக நல கலைகலா மன்றத்துக்காக 'இருபயணங்கள்’ எனும் பெயரில் சின்னத்திரை(ப்)படம் ஒன்றையும் இவர் கதை,வசனம், எழுதி நெறியாள்கை செய்துள்ளார். இக்குறும்படம் 1992இல் வெளியானது.
பல்வேறுபட்ட இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில களை வென்றெடுத்துள்ள இவர் சமூக சேவையிலும் ஆர்வமுள்ளவர்.
கிண்ணியா மண்ணுக்கு புகழ்மணம் சேர்ப்பதே தமது இலக்கியப் பணி, பொதுப்பணியின் நோக்கம் எனக் கூறும் இவர், “கீதப் பரிவர்த்தனை கள்’ எனும் கவிதைத் தொகுப்பொன்றையும், ‘சங்கமம்’ எனும் சிறுகதைத் தொகுதியொன்றினையும் விரைவில் வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
‘நவரசம்” கையெழுத்துப் பிரதியின் ஆசிரியராக பணியாற்றிய இவர் நான்கு செல்வங்களின் தந்தையாராவார். இவரின் அன்புப் பாரியார் பெயர் சுலைஹா ஹசன் ஆகும். இவரின் முகவரி:
21, அல்- அக்ஷா, 01ம் ஒழுங்கை, சின்னக் கிண்ணியா, கிண்ணியா 02. (149ཉེམཎa༡༠ཚ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 76
எழுத்துத் துறை
- 3.விஸ்.எம்.நவாஸ் -
(பாகம் 0** –- கலாபூஷணம் புர்ரீபாமினர் I-5
 
 
 
 

மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், கம்பஹா தேர்தல் தொகுதியில் வத்தளை-மாபோளை கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் அப்துல் சத்தார் மொஹமட் நவாஸ் அவர்கள்: ஏ.எஸ்.எம். நவாஸ், நவகவி, திரைநிலவன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவராவார்.
வட மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1965.12.03ம் திகதி அப்துல் சத்தார் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த நவாஸ் யாழ்ப் பானம் சென் ஜேம்ஸ் வித்தியாலயம் ,யாழ்ப்பாணம் ஒளப்மானியா கல்லுாரி, வத்தளை சென். அந்தனிஸ் கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது சுயவியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இவரின் முதல் ஆக்கம் "பணம்’ எனும் தலைப்பில் (மணி க்கவிதை) சிந்தாமணி பத்திரிகையில் 1986.09.14ம் திகதி இடம் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 38 சிறுகதைகளையும், 130 கவிதைகளையும், 91 கட்டுரைகளையும் நூற்றுக்கும் அதிகமான விமர்சனங்களையும், 75 நேர்காணல்களையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் சிந்தாமணி, தினகரன்,மித்திரன்,வீரகேசரி, பார்வை, முஸ்லிம் காங்கிரஸ், ப்ரிய நிலா,ஜனனி,ப்ரியா,யாத்ரா, மல்லிகை ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற் றுள்ளன. அத்துடன் வானொலியிலும் வாலிப வட்டம், குன்றின் குரல், ஒலிமஞ்சரி, வலம்வரும் வானொலி, இதயரஞ்சனி,மாணவர் மன்றம், ஊடுருவல் போன்ற நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் இவர் நேரடியாகவும் பங்கேற்றுள்ளார்.
இவரது தந்தையார் அப்துல் சத்தார் அவர்கள் மேமன் சத்தார், எனும் பெயரில் எழுதிவரும் பிரபலமான கவிஞர்களுள் ஒருவராவார். தனது தந்தையின் மரபுக் கவிதைகளைத் தொகுத்து "ஓலமிடும் உலகம்” எனும் தலைப்பில் 1986ம் ஆண்டில் ஒரு
(படுஇலங்கை முஸ்லிம் விழுந்தாளர்கள்,ஈடகவியலாளர்கள், கலைஞர்களிர்வீபரத்திரட்டு

Page 77
நுாலாக வெளியிட்டதை தனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாக எண்ணிவரும் இவர்: 1987ம் ஆண்டில் 58 இளம் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ‘புதிய பூக்கள்’ எனும் தலைப்பில் கவிதை நுாலொன் றை வெளியிட்டுள்ளார். அத்துடன் 1988இல் ‘நந்தவனப் புஷ்பங்கள் 1990இல் ‘யாகங்கள்’ ஆகிய நுால்களை தனது ‘சபீகலா’ பதிப்பகத்தின் மூலமாக ஏனைய கவிஞர்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
"சினிலேன்ட் பிரசுரமாக இவரின் சொந்த நுால்கள் நான்கு இதுவரை வெளிவந்துள்ளன.
சுகமான சிந்தனைகள் - 1992 (கட்டுரைத் தொகுப்பு) சிங்கள சினிமா வளர்ச்சி - 1992 களத்துார் முதல் தெனாலி வரை - 2002 புதைந்த உண்மைகள் - 2001 (கவிதை)
இவர் ‘தேவை ஒரு மாப்பிள்ளை’ எனும் பெயரில் நகைச் சுவை மேடை நாடகமொன்றினை எழுதியுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.அத்துடன் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இவர் எழுதிய பிரதியொன்று ‘Eye தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
‘சினிமாவும் ஓர் அறிவு சார்ந்த கலைத்துறை என்பதால் நல்ல சினிமாவை இரசிப்பதும், அதை விமர்சிப்பதும் என் பொழுது போக்காக அமைந்திருந்தது” என்று கூறும் நவாஸ் சினிமா பற்றி நுாற்றுக் கணக் கான விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்துடன் பழைய கலைஞர்கள் பற்றியும், ஆரம்பகால சினிமா வளர்ச்சிகள் பற்றியும், இவர் எழுதியுள்ள சினிமா தொடர்பான கட்டுரைகள் சிங்களத்தில் வெளிவரும்
சரசவிய' சஞ்சிகையிலும் இடம்பெற்றுள்ளன.
"ஜனனி வார இதழில் திரை நிலவன் பதில்கள்’ எனும் பகுதியை தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்.
பாகம் O2 - கலாபூஷணம் புணர்னியாமீன் 147

தான் எழுத்துத்துறையில் நுழைவதற்கும் எழுதுவதற்கும் காரணகர்த்தாவாக இருந்த மறைந்த பத்திரிகையாளர் ஏ.சொலமன் ராஜ் மற்றும் தனது அன்புத் தந்தை மேமன் சத்தார் அமரர் கிங்ஸ்லி செல்லையா, முன்னாள் மித்திரன் வாரமலர் பிரதம ஆசிரியர் நித்தியானந்தன், நமவணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர் ஹபீலாவின் அன்புக் கணவராவார். இவருக்கு பாத்திமா நாஜிதா, மொஹம்மட் நாஸிக் ஆகிய இணி டு செல் வங்களுள.
1999.08.29ம் திகதி இரத்தினபுரியில் அகில இன நல்லுறவு இயக்கம் ஏற்பாடு செய்த விழாவில் இவர் ‘சாமழரீகலைச்சுடர்’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் முகவரி;
41/10
துவ வத்தை மாபோளை வத்தளை
سمصبے محصہ سے
01196 Aశతా முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு)

Page 78
Ο - பதிவு 76 -
எழுத்துத் துறை -
] - முரூம்மது ரூஸனி - )
பாகம் ü ቋኻ -- கலாபூஸ்டினம் புர்ரீபாமினர் O)
 

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் கல்முனைக்குடி - 13 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது முக்தார் முஹம்மது ஹஸனி அவர்கள்: முஹம்மது ஹஸனி, சோலைக்குயில் ஹஸனி, ஆமினா ஹஸனி ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதிவரும் எழுத்தாளராவார்.
1951.07.07. இல் முஹம்மது முக்தார் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர், தனது ஐந்து வயது முதல் கொழும்பில் வசித்து வந்ததால் ஆரம்பக் கல்வியை மாளிகாகந்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றார். அதனைத் தொடர்ந்து அல்ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. (சாத) பரீட்சைக்குத் தோற்றினார்.
கொழும்பிலுள்ள பிரபல கம்பனியொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்துவிட்டு, சுமார் 13 ஆண்டுகள் சவூதி, கட்டார் போன்ற நாடுகளில் தொழில்புரிந்த இவர், தற்போது கல்முனை மாநகர சபையில் நடுக்கட்டு உத்தியோகத்தராக (சோலைப் வரி அறவீட்டாளர்) பணியாற்றி வருகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் “உழைப்பே உயர்வு தரும்” எனும் தலைப்பில் 1968ம் ஆண்டு தினபதி யில் இடம்பெற்றது. அன்றிலிருந்து நுாற்றுக்குமேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட் டுரைகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதேநேரம் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட துணுக்குகள், சுயவிகடத் துணுக்குகள். கருத்துச் சித்திரங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவை தினபதி, சிந்தாமணி, ராதா, தினகரன், வீரகேசரி, மித்திரன், தினமுரசு, நவமணி, சுடர்ஒளி, சுந்தரி, அபியுக்தன், கலாவல்லி, கீதா, ரசிகன், சுடர், இடி, ஈழமணி, மாணிக்கம், மல்லிகை, சிரித்திரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் வானொலி நிகழ்ச்சிகளிலும் இவர் எழுதிவருகி
Gs)|aAశవాది ராசீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாசிர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 79
ன்றார். குறிப்பாக ‘தென்றல் வானொலியில் தேன் கிண்ணம், மனோரஞ்சிதம், போன்றவற்றிலும் முஸ்லிம் சேவையில் இளைஞர் இதயம் , மானவர் மண் றம் , மாதர் மஜ்லினப் போன்ற பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. வானொலி மாதர் பகுதிகளில் இவரின் மனைவி பெயரில் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இதுவரை பத்திரிகைகளில் வெளியான இவரது கதை, கட்டுரை, கவிதைகளைத் தொகுத்து ஒரு தனிப்புத்தகமாக வெளி பயிடும் எண்ணம் இவருக்குண்டு.
முஹம்மது ஹஸனி அவர்கள் “சோலைக்குயில்' எனும் புனைப்பெயரிலே அதிகமாக எழுதிவருகின்றார். இப்புனைப்பெயர் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்." கல்முனைக்குடியிலு ள்ள இக்பால் கழகத்தில் "சோலை' எனும் பெயரில் கையெழுத் துப் பிரதி ஒன்றை வெளியிட்டோம், அதில் நான் "சோலைக்குயில் என்ற புனைப்பெயரிலும், எனது நண்பர் அதீக் (கவிஞர்) "சோலைக்கிளி' என்ற புனைப்பெயரிலும் எழுதி வந்தோம். அவை எமக்கு புனைப்பெயர்களாக அமைந்து விட்டன. எதிர்பாராத விதமாக நான் தற்போது “சோலைவரி” அறவிடுவதால் என் தொழிலிலும்
"சோலை புகுந்து கொண்டது
ஆமினா உம்மா’ என்பவரின் அன்புக் கணவரான இவருக்கு றவரீல், றவழிகா ஆகிய இரண்டு செல்வங்களுளர்.
இவரின் முகவரி: 199 / C, புதிய வீதி கல்முனை -07.
பாகம் : - கலாபூஷணம் புர்னியாமீர் |0)
 

O - பதிவு 77 -
எழுத்துத் துறை
ン - எஸ்.எஸ். பரீட் - ノ
(9இலங்கை ழப்ரீழ் விழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், கலைஞர்களிர்லிமரத்திரட்டு

Page 80
வடமாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில் முசலி அகத்திமுறிப்பு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த செயனுதீன் செய்கு பரீத் அவர்கள்: எஸ்.எஸ். பரீட், அகத்தி முறிப்பான் ஆனாமூனா ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளராவார்.
1954 செப்டெம்பர் மாதம் 14ம் திகதி பிறந்த பரீட் அகத்திமுறிப்பு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, எருக்கல ம்பிட்டி -மத்திய மகா வித்தியாலயம், காலி பஹற்ஜதுல் இப்றா ஹீமிய்யா அரபுக் கல்லுாரி ஆகியவற்றின் பழையமாணவராவார். 1998ம் ஆண்டு முதல் பறகஹதெனியவில் அமைந்துள்ள இஸ்லாமிய சமூக சேவை நிறுவனமொன்றில் அநாதைகள் பராமரிப்புப் பிரிவில் உதவிப் பொறுப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் பேருவளை மருதானையில் அமைந்துள்ள 2003ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மஸ்ஜிதுல் அப்றார் ஜூம்ஆப் பள்ளி வாசலில் 1988 முதல் 1993 வரை காலப்பகுதியில் பிரதம கதீபாகக் கடமையாற்றியுள்ளார்.
1990ம் ஆணி டில் இவர் எழுத்துலகில் பிரவேசித்துள்ளார். மீள்பார்வை' பத்திரிகையில் 'அல்-அக்ஸா அழைக்கிறது’ எனும்தலைப்பில் இடம்பெற்ற ஆக்கமே இவரது முதலாவது ஆக்கமாகும். அதிலிருந்து நுாற்றுக் கணக்கான ஆக்கங்களை தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவர் இதுவரை ஐந்து நுால் களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. அல்குர்ஆன் ஒளியில் புகையும், புகைத்தலும் (1996) - அல்
கலம் வெளியீட்டகம் கொழும்பு. 2. சீதனம் (1998) அல்புர்கான் வெளியீட்டுப்பணியகம் -மடுள்போவ 3. ‘பித்அத் ஓர் ஆய்வு (1998) ஜம்இய்யது அன்சாரிஸ்சுன்னத்தில் முஹம் மதியா வெளியfடு, பறகஹதெனிய, 4. இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் (2000) முனிறா பதிப்பகம்
^ சென்னை, தமிழ்நாடு.
பாகம் O2 - கலாபூஷணம் புண்ணியாமீன்

5. நற்செயல்களும் பிரதிபலன்களும் ஜம்இய்யது அன்சாரிஸ்
சுன்னதில் முஹம்மதியா வெளியீடு, பறகஹதெனிய. வெகு விரைவில் இவரது மேலும் ஐந்து நுால்கள் வெளிவரவுள்ளன. குற்றவாளிக் கூண்டில் நபித்தோழர் த.லபா (ரழி) அதிசய நீரூற்று ஸம்ஸம். இறைவன் இருக்கிறான். (சடவாத ஆதாரங்கள்) நபிகளாரின் மனைவியர்கள் வரலாறு (சிறுவர் இலக்கியம்) நபிமார்கள் வரலாறு (சிறுவர் இலக்கியம்)
இவர் இஸ்லாமிய ஆய்வுக்கட்டுரைகள், வரலாற்றுக் கட்டு ரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள் போன்றன எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இவரின் இத்தகை ய ஆக்கங்கள் எழுச்சிக்குரல், தினக்குரல், தினகரன், நவமணி, உண்மை உதயம், அல்ஹசனாத், வான்சுடர், மீள்பார்வை,அகதி, யாத்ரா,நயனம், நிதாஉல் இஸ்லாம், வெளிச்சம், சத்தியக்குரல் போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இந்தியாவிலிருந்து வெளிவரும் அல்-ஜன்னத், உணர்வு போன்ற சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் இந்திய சஞ்சிகையான விடியல் வெள்ளி மறுபிரசுரம் செய்துள்ள மையும் குறிப்பிடத்தக்கது.
“அகத்தி முறிப்பான்’ என்றே எழுத்துலகில் தன்னை இனங் காட்டிக் கொண்டிருக்கும் செய்னுதீன் எஸ். பரீட் அவர்கள் வடபுல அகதி மக்கள் சம்பந்தமாக நிகழ்த்திய பல ‘குத்பா’ பிரசங்கங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் நிகழ்ச்சி மூல மாக ஒலிபரப்பட்டுள்ளன. மிகவும் அடக்கமான முறையில் காத்திரமான மார்க்கச்சேவைகளையும் எழுத்துலக சேவைகளையும் புரிந்து வரும் இவரி ன் அன்புப் பாரியார் 'மஹற்சூக்கா ஆவார். முஹம்மது பாயிக்,பஹறிமா, பாயிஸ், பைஸல், சுமைய்யா,பர்தான், பர்ஹானா ஆகியஏழு செல்வங்கள் இவருக்குளர். இவரின் முகவரி:
140, ரஸ9ல் நகர் நஹவில், பாலாவி, புத்தளம்.
Gission முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

Page 81
CVPUBLISHERS (PVDLID.
(Orinter, & (Dubliuluer. 14, Udatalawinna Madige, Udatalawinna. 20802
Tel: 081-2493746, 081-2493892, Fax: 081-2497246 e-mail: puniyameenGhotmail.com, puniyameGsltnet.lk


Page 82


Page 83
ISBN 955