கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவ சமய சிந்தாமணி

Page 1


Page 2

G. : : திருச்சிற்றம்பலம்
படிக்கு நூல்கள் சிவாக மம்பசு
பாச மோடு பதித்திறம் எடுத்தி யம்புவ தீசன் வார்கழல் ஏத்தி டுந்தொழி லென்றுமே விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும்பொரு ஸ்ரீண்டருள் முடித்து மும்மலம் விட்டு நின்மல
னேடு கின்றிடல் முத்தியே.
ட சித்தியார்

Page 3
சமர்ப் பணம்
நம் ஊரவரும், உறவு முறையினரும், நண் பரும், வீரத்தியாகியுமாய் இருந்தவரும், கலிபரக அகத்தியன், முத்தமிழ் வித்தகன், யாழ்நூல் தந்தோன் எனப் பல பேரறிஞர்களாற் போற் றப் பட்டவரும், மட்டக்களப்பு மக்களுக்கு மதிப்பான மாண்பு அளித்தவருமாகிய, மகா முனி, உயர் திரு. விபுலாநந்த அடிகளாருக்கு, அம்மை, அப்பர், வடிவில் முன்னறி தெய்வங் களாய் வந்து, பெற்று வளர்த்த, எனது தந்தை, தாயாராகிய, வ. காசிநாத சாஸ்திரியார், சின்னப்பிள்ளே இருவருக்கும் மகனுகிய நான், எனது ஞாபகார்த்தமாக, இச் சைவ சமய சிந்தாமணியை அவர்கள் திரு வ டி யில்
சமர்ப் பிக்கின் ரு ம் ,

சுவாமி விபுலாநந்தர்

Page 4

RAMA KRISHNA MISSION
Ceylon Branch Ramakrishna Road COLOMBO-6.
நூன்முகம்
மனிதன் தனது வாழ்க்கையில் தோன்றி மறையும் இன்ப துன்பங்களைப் போக்கி, நிலைத்த இன்பத்தை இடை யருது அனுபவிக்க வழிவகுப்பதே சமயம், மனிதப் பிறவி யின் நோக்கமும் இதுவேயாகும்.
உண்மைச் சமயமாம் சைவ சமயத்தில் காணும் சிறந்த நெறிமுறைகளைத் தொகுத்தும், வகுத்தும், முறைப்படுத்தி யும், நம்மனேர்கள் எளிதில் கடைப்பிடித்து ஒழுகவேண்டி புத்தக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியரான மட்டுநகர், சைவப் புலவர், தேசிகமணி கா. அருணுசலம் அவர்கள்.
தத்துவங்களும், கிரியைகளும் சைவ சமயத்தின் இரு கண்களாகும். ஆசிரியர், இந்நூலில் இக்காலத்து வழக்கு வீழ்ந்த கிரியை (செயல்) முறைகளை உயிர்ப்பித்து விளக்கித் தந்துள்ளது இக்காலச் சைவ மக்கள் செய்த புண்ணியத்தின் பயனேயாகும். இம்முறையில் சைவ உலகம் அன்னர்க்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
கொழும்பு சுவாமி பிரேமாத்மாாந்தா 58-3-1960, allu-52s) auf.

Page 5
( ii ) மதிப்புரை
'சைவக் களஞ்சியம்’ என்னும் ஆறு புத்தகங்களிலும் அடங்கிய விஷயங்களத்தனையும், சைவ மக்களாகிய எல்லோ ரும் அறியவேண்டிய விஷயங்களேயாகும்.
இந் நூல்கள் பல அரிய சமய நூல்களின் சாராம்சமாகத் திகழ்கின்ேறன. ஆகையால் பண்டிதரும், பாமரரும் இந் நூலைப்படித்துப் பயன்படுவார்கள் என்பது திண்ணம்.
"சைவ சமய சிங்தாமணி” என்னும் இந்நூல், சைவ சமயத்தைச் சுருக்கி ஒரு நூலில் சிறப்பாகக் கூறுகின் றது. இது போல் ஒன்று இதுவரை வெளிவரவில்லை.
சுவாமி நடராஜாங்தா . 6 5 9 I --3 س-30
இலங்கை R. K. M. பாடசாலைகளின் பொது முகாமைக்காரர் கல்லடியுப்போடை
மட்டக்களப்பு.

( ii A )
மதிப்புரை
இந்து மதத்துக்குரிய ஆறு சமயங்களுள் சைவ சமயம் தலையாயது என்பது சொல்லாமலே விளங்கும்.
சைவ சமயத்துக்குரிய தத்துவங்களை எல்லாம் தொகுத்து ஒரு நூலில் காண விரும்புபவர்கள், மட்டுநகர் சைவப் புலவர் தேசிகமணி கா. அருணுசலம் அவர்கள் இயற்றியுள்ள, சைவ சமய சிந்தாமணியில், அவை யாவையுங் காணலாம்.
அவர் எடுத்துள்ள முயற்சியைப் பெரிதும் பாராட்டு கிறேன். பண்டிதர், பாமரர், ஆகிய அனைவர்க்கும், இந் நூல் நன்கு பயன் படும்.
பூரீ ராமக்கிஷ்ருண தபோவனம்,
திருப்பராய்த்துறை, சித்பவாநந்தா
இந்தியா. 2-5-1960

Page 6

( iii )
6) குருவருள் ஒம் கயிலாயத்து உச்சியுள்ளான்
காளத்தியான் அவன் என் கண்ணுளானே.
குன்றக்குடி அடிகளார் நீலநீ, தெய்வசிகாமணி அருணுசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணுமலை ஆதீனம், குன்றக்குடி, இராமநாதபுர மாவட்டம்.
சித்தாந்தச் சிவ நெறி முடிந்த முடிபுகளைக் கொண்டு விளங்குந் தனி நெறி. உயிர்களுக்கு உய்தியைத் தரவல்ல முழு நெறியாகவும் விளங்குவது.
சித்தாந்தச் சிவநெறியின் கொள்கைகளை இனிது விளக் கும் முறையில் சைவக்களஞ்சியத்தின், சைவ சமய சிந்தாமணிப் பகுதியை, மட்டக்களப்புச் சைவப் புலவர், திரு. கா. அருணுசல தேசிகமணி எழுதியுள்ளார்கள். சிறந்த முயற்சி; சைவத் தமிழ் மக்களுக்குப் பயன் தரக் கூடிய முயற்சி.
சமய இயல்பு, திருவுருவ வழிபாடு, முதலிய பல துறை களையும் விளக்க, ஆசிரியர் கடுமையாக முயற்சி எடுத்துள் ளதைப் பாராட்டாமலிருக்க முடியாது. இந்த நூலை எல் லாச் சைவத் தமிழ் அன்பர்களும் படித்துப் பயனையும், எய்துவார்களாக.
இப் புத்தகத்தை எழுதி, சைவ உலகுக்குதவிய அருணு சல தேசிகமணி சைவத் தமிழ் மணியாக எல்லா நலன்களும்
பெற்று இனிதே வாழ்க.
28-9-1959 தெய்வசிகாமணி.

Page 7
(1ν) அணிந்துரைகள்
I
வேத சிவாகமங்களிற் கூறிய பல விஷயங்களை, இவ் வளவு தெளிவாயும், பூரண ஆதார பலத்துடனும், ஒவ் வொன்றிற்கும் வேண்டிய விடத்து, தத்துவார்த்தங்களும், மேற் கோள்களும், காட்டியுள்ள இவ்வரிய பெரிய, சைவ சமய சிந்தாமணி என்னும் நூல் போல ஒன்று, தமிழில் எவர்களும் எளிதில் அறிந்து, பயன் நுகருமாறு தெளிவுடை யதாய், இது வரையும் வெளியிட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அன்றியும் இதை எழுதுதற்கு உரியனவாய, பல சாத் திரங்களையும், ஆராய்ந்து, அவற்றை எல்லாம் ஒன்று கூட்டி, தெள்ளிய தமிழிலே, எவ்வகையானுேரும், அறிந்து பய னடையுமாறு, வேத சிவாகமமாகிய பெரிய சாத்திரங்களில் உள்ளவற்றை அந்நூல்களுக்கு மாறின்றி, இவ்வளவு சுருங் கிய முறையில் தொகுக்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.
இவ்வரிய பெரிய தெண்டைச் செய்தவர், பலகாலமாக, பல உண்மைச் சாத்திரங்களை, நன்ருகப் படித்து, கேட் டறிந்து தெளிந்த பேரறிஞர், வளம் மிகுந்த மட்டக்களப்பு சைவப் புலவர், காசிநாத-அருளுறசல தேசிகமணியாவார்.
சைவ சமயத்தை முற்றுஞ் சுருக்கி, ஒன்ருகத் திரட்டிக் காட்டும், அரிய நூலும், எவர்களும் இலகுவாய் விளங்க, தெள்ளிய தமிழ் நடையில் ஆக்கப்பட்ட நூலும், இச் சைவ சமய சிந்தாமணியே என்பதை அறிஞர் எவரும் ஏற்றுக் கொள்ளப் பின்னில்லார் என்பது எனது கருத்து.
எந்தச் சமயத்தவரும், சைவ சமயத்தைச் சுருக்கமாய் அறிய விரும்பினுல், இந் நூலை மாத்திரம் கற்ருல் அமையும். எனவே, இவ்வரிய நூல் சைவ மக்கள் ஒவ்வொருவரிடமும், கட்டாயம் இருக்க வேண்டும் என்பது எனது திடமான அபிப்பிராயம்.
பிருளாய், சுழிபுரம், இங்ங்ணம்,
யாழ்ப்பாணம். சு. வேதாரணியேஸ்வரக் குருக்கள்.
15- 6 - 1954

( v )
III
சைவ சமய சிந்தாமணியாகிய இந் நூலை, இவ்
வாசிரியர், என் முன்னிலையில் வாசித்துக் காட்டியும்,
பின் நானே தனித்து முழுவதையும் ஆராய்ந்து பார்க்கும் படிதந்தும், ஆராய்ந்திருக்கிருர்கள்.
இதிலுள்ள விஷயங்கள் முழுவதையும் பொதுவாயும், கிரியை இயல், மகோற்சவ இயல் முதலிய பிரதான பகுதிகள், ஆகம விதிகளுக்கு மாறின்றியுள்ளனவோ என்பதை விசேட மாயும், நன்கு ஆராய்ந்துள்ளேன். அவை யாவும் திருப் தியாய் உள்ளன.
இது மிக மிக அவசியமான தருணத்தில் எழுதப்பெற்றுள் ளது. இதற்கு முன், பலர் பல நூல்கள் வெளிப்படுத்தி யிருந்தும், அவை ஒவ்வொன்றும், இதில் கூறிய சில சில பகுதிகளையே எடுத்துக் காட்டியுள்ளன.
ஆனல் இதில் சைவ சமயத்தைச் சுருக்கமாய் அறிதற் குரிய, எல்லா விஷயங்களும், சுருக்கமாயும் தெளிவாயும், விளக்கமாயும் எளிய தமிழில் எழுதப்பட்டு அமைந்திருப் பது போற்றற்குரியது.
விரிந்த நூல்களை வாசிக்கும் மனப்பான்மை, இக் காலம் யாவரிடமும் இல்லாமையால், மிகச் சுருங்கிய முறையில் இது எழுதப்பட்டிருப்பது சாலச் சிறந்ததொன்ருகும்.
இந் நூல் ஒவ்வொரு சைவ சமயிகளிடமும் இருக்க வேண்டியது அத்தியாவசியமாகும். பர உபகாரங்கருதி, இவ் அருமையாகிய நூலை வெளியிட்டதற்கு, சைவ உலகம் செய்யும் கடப்பாடு, சைவ சமயிகள் யாவரும் வாங்கி இதனை ஆதரித்துப் பரவச் செய்வதேயாகும்.

Page 8
(vi)
இந் நூலால், ஆசிரியருடைய சமய அறிவும், சைவப் பற்றும், சொல்லாமலே அறியக் கிடக்கின்றன என்பதை எவரும் நன்கு அறிவர்.
எனவே, நாம் இதை ஆதரித்து, ஆசிரியரை ஊக்கப் படுத்தி, மேலும் சமயத்துக்குரிய புதிய நூல்களை, புது முறையில் ஆக்கி உதவ வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, ஆசி கூறுவோமாக.
ஆனைப்பந்தி, இங்ங்ணம் மட்டக்களப்பு. வி. வரதராஜக் குருக்கள்.
7-7-1954.

(vii)
III
உதவி மாகாண அதிபர் (A.G.A.) இல்லம், கண்டி. 1 2-8- 1954
அன்பும் அறிவும் நிறைந்த தேசிகமணி அவர்களுக்கு, வணக்கம்,
பேரன்புடையீர் !
சைவ சமய சிந்தாமணி என்னும் நூலின் கை யெழுத்துப் பிரதியை நான் பார்க்கும் பேறு கிடைத்தது. சைவ சமய உலகிற் தோன்றிய நூல்களாகிய பாலை, தமது அறிவாகிய மத்தாற் கடைந்தெடுத்த, நவநீதமே இந் நூல் எனல் மிகையாகாது.
கடவுளையும், ஆன்மாவையும், அதனை மறைக்கின்ற பாசத்தையும் பற்றி எவ்வாறு விளங்கக் கூற வேண்டுமோ, அவ்வாறெல்லாம் மிகவுந் தெளிவாக இந் நூல் கூறுகின்றது.
மேலும், ஆன்மாக்கள், பல் வேறு உடம்புகளை எடுக்கின் றன; உடம்பு தோறும், அறிவும் வேறுபடுகின்றது; அறிவுக் கேற்ப, கடவுள் வழிபாடும் அமைகின்றது; அதனுல் கடவுளை வழிபடும் நெறிகளும், பலவாகின்றன.
ஆகவே, பல் வேறு சமயங்கள் நிலவுகின்றன. ஆயினும் இவ்வாறு தோன்றிய பல சமயங்களுள், சைவ சமயமே தலை சிறந்த தொன்றென்பதை, பல நியாயங்களால், ஆசிரியர் உறுதிப்படுத்துகின்ருர் .
பசுவின் தேகம் முழுவதும், பால் ஊறி நிற்பினும், அதன் முலைக் காம்பின் வழியின் மூலமே, பால் கறக்க முடி வது போல, கடவுள் எங்கும் நிறைந்தவராயினும், ஆன்மாக் கள் அவரை இலகுவில் வணங்க, கோயில்களிலே உள்ள விக் கிரகங்கள் மூலம் வெளிப்பட்டருள் செய்வர் என்னும் உண் மையையும், அக் கோயில்களின் அமைப்பையும் அவற்றின் உட்கருத்துக்களையும், மிகவுஞ் சிறப்பாகக் கூறுகின்ருர் .

Page 9
( νiii)
இனித் தொண்ணுரற்ருறு தத்துவங்களின்பெயர்களையும், சுத்த மாயை, அசுத்த மாயையின் பாற் பட்டன இவையிவை யெனவும், ஒர் ஆன்மா அசுத்த மாயையின் நின்றும் மேற் போந்து சிவநெறியான சுத்த மாயையுங் கடந்து, இறைவன் திருவருள் பதியப் பெற்று, மலத் தொடர்பு நீங்கி, ஞானம் பெற்று, என்றும் அழியாப் பெரு வாழ்வை எய்தி இன்புறும் எனவும், இந் நூல் விளக்கிச் சொல்கின்றது.
கடவுளை நேரே கண்டு, அவரின் இலக்கணங்களையும், அவரின் திருவருட் செயல்களையும், புகழ்ந்து சொல்லும் மெய் யடியார்கள் பெயர்களையும், அவர்கள் பாடிய அமிழ்தினும் இனிய பாடல்களே, தேவார, திருவாசகங்கள் முதலியன வென்றும், அவைகளே தமிழ் வேதங்கள் என்றும், அவற் றைச் சைவ சமயிகள் நாடோறும் ஓதி உணர வேண்டும் என்றும், ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியிருக் கின்ருர்.
இவ்வாசிரியரிடம் காணப் பெறும், வேத, சிவாகம உணர்ச்சியும், சமயப் பற்றும், அருட்பணித் திறனும், இந் நூலை வாசிக்கும் அன்பர்களுக்கு எளிதில் வெளிப்படை யாகும்.
சிறு பிள்ளைகளும் கற்றுப் பயன் அடையுமாறு, இந் நூல் மிகவும் எளிய நடையில் எழுதப் பெற்றிருக்கின்றது; இந் நூல் ஒவ்வொரு சைவ சமயியின் கையிலும் இருக்க வேண்டிய பொக்கிஷமே !
இவ்வாசிரியர் இதனை ஒத்த வேறு பல நூல்களையும் இயற்றிச் சைவத் திருத்தொண்டாற்றப் பரம கருணு நிதி யாகிய கடவுள், அறிவையும், சுகபோக திடகாத்திர தேகத் தையும் இவர்க்கு உதவுமாறு இறைவன் பொன்னடிகளைப் போற்றுகின்றேன்.
இங்ங்ணம்
ஆ. தட்சணுமூர்த்தி.

(1Χ )
IV
திருவாளர் அ. வி. மயில்வாகனம் B. A. B. Sc; B, O, L. பகுதி வித்தியாதிகாரி (E.O.) அவர்கள் மட்டக்களப்பு.
சைவப் புலவர், கா. அருணுசல தேசிகமணி,
சைவ சிந்தாந்தப் பேரருங் குரிசிலோய்!
தங்கள் சைவக் களஞ்சியம் என்னும் ஆறு நூல்களை யும், வாசித்து வாசித்துப் பெருமிதம் எய்தினேன். சிக்க லான வலைபோன்ற சித்தாந்த சாத்திரங்களின் உட் பொருளை, சிறு கதை மூலமும், எளிய வசன நடையில் பாடங்கள் மூலமும் விளக்கிய தன்மை, நாவலர் அவர்களின் விளக்க முறையை நன்கு தழுவியுள்ளது.
தங்களுடைய இப் பேரருந் தொண்டு, பண்பாடு படைத்த சைவத் தமிழுலகில், கடைத்தேற வழிகாட்டும் படகுபோல அமைந்துள்ளது.
தங்கள் 'சைவக் களஞ்சியம் ஆரும் பாகமாகிய இந்தச் சைவ சமய சிங்தாமணியில் பல்கலைக் கழகத் தத்துவ ஆராய்ச்சி மாணவர் பயின்று பக்குவம் பெற நல்ல வாய்ப்பு அளித்துள்ளீர்.
தங்கள் நூலின் சித்தாந்த ஒசை சென்று சென்று. நித் திய நடம் புரியும், நடராசன் பொற்பாதச் சிலம்பைத் தாக்கத் தாக்க, ஓங்கார நாதம் ஒத்திசைப்பதாக.
மட்டக்களப்பு அ. வி. மயில்வாகனம். 25- 0- 1954.

Page 10
( x )
சிறப்புப்பாயிரம்
குருக்கள் மடம்,
மட்டக்களப்பு. 10-8-1956,
மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன்றத் தலைவரும், டிெ ஊர், அரசினர் உயர்தர ஆங்கில கலாசாலைத் தமிழ்த் தலை மைப் பேராசிரியரும், பண்டிதமணியும், புலவர்மணியுமாகிய திருவாளர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களுடையது.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
1. சைவநெறிக் கொள்கையெலாந் தலைமயங்கி நம்மவர்கள் தவறி வீழ்ந்து தெய்வநெறி யிகழ்ந்துலகத் திறம்பெரிதா மதித்தலைதல் தெரிந்தே யன்னர்
பொய்வளரு மனத்தினில்மெய்ப் பொருள்வளர
வொருபுதுமை புரிந்தான் மட்டூர்ச்
சைவமணி தமிழருணு சலமணிதே சிகமணியாந்
தகைமை யோனே
2. பரந்தமைந்த சைவநுாற் பரப்பமைந்த பொருள்கள்
முறைப்படியா ராய்ந்து நிரந்தினிதா மிக்கால நிலைக்கேற்ப நெறிமுறையே
நிறுவி நன்று தரந்தரமா யியைந்து பயன் தரூம்வண்ணம் சைவமணி தகைசா லன்பு சுரந்தினிதா யுதவுசைவ சமயசிந்தா மணியமைதி
சொல்லக் கேண்மின்.

( xi )
போலியுரை யெனுமிருளிற் புகுந்துபொறி புலனிருண்டு புனித சைவக் கேலியுரை பகர்வார்க்கோர் சுடர்விளக்காய்க்
கேடில் சைவ மெனும் பயிர்க்கோர் வேலியுமாய்ச் சைவர்கட்கோர் விழுநிதியாய்
விதிமுறையாய் விளங்குந் தூய நூலிதனைத் தமிழ்க்கலைமன் றரங்கேற்றி
நுண்ணறிவோர் நுவன்ரு ராசி.
நல்லொழுக்க முடையார்க்கு மிதுநன்று நாத்திகர்க்கும் நன்று தூய இல்லொழுக்க முடையார்க்கும் துறவோர்க்கும்
மிதுநன்ரும் இனிய நூல்கள் கல்லொழுக்க முடையார்க்குங் கற்றுவல்ல கலைஞருக்குங் கவிவா ணர்க்கும்
பல்லொழுக்க முடையார்க்கு மிதுநன்று நல்லறிவுப்
பயன்பா லிக்கும்
முப்பொருளி னியல்பறியார் முன்னவன லயவமைப்பு மறியார் முன்னேர் செப்புமனு பவமறியார் சிவகதையின் குறிப்பறியார் சிவசின் னத்தின் ஒப்பரிய வுயர்வறியா ருறுதீட்சை யுபதேச
மறியா ரேனும்
தப்புதலி லாதுசைவ சமயசிந்தா மணிகற்ருற்
சைவங் காண்பார்.

Page 11
( xii)
II
மட்டக்களப்பு, சிற்றண்டி, இராமக்கிருஷ்ண சங்க, சைவப் பாடசாலைத் தலைமைத் தமிழாசிரியர், பண்டிதர் வ. வி. சி. கனகசூரியம் அவர் உதவியவை.
மன்னுடபுகழ் மட்டுநகர் மீதில் வந்தோன்
வளர் சைவ நெறிவழுவா தொழுகுஞ் சீலன் உன்னுமத வெறிபிடித்தோர் உய்ந்தோமென்றே ஒட்டெடுப்பப் பிரசங்கமாரி பெய்வோன் சொன்னதொரு அத்துவித துவிதமாய
சுடராளுஞ் சிவநெறியே செழிப்பச் சொல்ல மன்னுசிவ மணியனையான் வயங்கு கீர்த்தி வளரகுணு சலமெனவே வந்தசீரோன்.
வேதமொடு வேதாங்கம் புராணமாதி
விளங்கு சிவாகமறுாற்குச் சார்புகூறும் நாதமொடு சிவம்சத்தி நயங்கொள்முத்தி
நன்மை பெறச் சித்தாந்த வழியுங்காட்டி போதமுறத் தத்துவங்கள் புகன்று தூய
புறநிலைகள் வழிபாடு பொருவில் தீக்கை நேயமொடு நஞ்சிருர் நிதமுங் கற்க
நிலவுபுகழ்ச் சைவ சிந்தா மணியொன்ருக்கி சார்புணர்ந்து சார்புகெட வொழுகவல்லார் சைவநன் மக்களெனச் சாற்றும் நான்கு பாதநெறி கடவுள்நெறி பரவுங்கோயில்
பரவுநெறி பகர்ந்துமகோற் சவம்விளக்கி வேதநலம் மூர்த்திதலம் தீர்த்தம்பேணி
விபுதமிகு மட்சரமும் அக்கும்போற்றிப் பாரதனில் பரமனருள் ஆடல்கூறிப்
பரமசிவ மடையுநெறி பகர்ந்திட்டானே. மட்டக்களப்பு. 15-10-1954.

( xiii)
மதிப்புரை
அரசினர் ஆசிரிய கலாசாலை
மட்டுநகர். 20-7-1954.
சைவப் புலவர், திரு. கா. அருணுசல தேசிகமணி அவர்
கள் மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன்ற, நான்காவது தமிழ் விழாவன்று, சைவக்களஞ்சியம் ஆரும் பகுதியாகிய, சைவ சமய சிந்தாமணி என்ற, இந் நூல் அரங்கேற்றத்தின் போது மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலைத் தமிழ் விரிவுரை யாளர், பண்டிதர், செ. பூபாலபிள்ளையவர்கள் கூறியவை.
சந்த விருத்தம்
ஆசிரி யர்எவ ரும்மரு ஞசல வாசிரி யர்க்கிணை
யாவாரோ
பேசிடு நூலெவை யுஞ்சிவ மதசிந் தாமணி யாமிதற் கீடாமோ
தேசிகர் நற்புகழ் பரவிட நாமே வீறுட னேவழி
செய்வோமே
வாசிக நண்புறு வோஞ்சிவ மதநூல் வாங்கிடச்
செய்வோமே.
வேறு
சைவப் புலவன் தமிழ்ப் புலவன் தகுதே சிகமா
மணிப்புலவன் தெய்வ அருளா லனுப வத்தாற் தீராக் கருணை
தூண்டுதலால் உய்வ தற்காய்ச் சிவசமய உண்மை தொகுத்தோர்
நூலுரைத்தான்
செய்வ தறியேம் தேசிகஞர் தந்த சிந்தா மணிக்கீடே.

Page 12
(χίν )
வேறு
சமயவியல் தனைப்படித்தாற் சைவ மீசன்
தந்ததனு லழிவுரு தெனவே காட்டி அமலனென வருள்நெறிசேர் ஆக மாதி
அறிவுநூற் பொருளெல்லா மடைவே தந்து குமரனெனக் குலவுவது சைவ மார்க்கக்
கொள்கையெனக் குறித்துணர்த்த வல்லராகிச் சமநிலையிற் சிவசமய உண்மை சாற்றச்
சற்குரவர்ப் பெறும்வாய்ப்புக் கண்டோம் யாமே.
வேறு
ஆலயத்தி னமைப்பினிலே அதன்பொருளு
மண்டபிண்டத் தமைப்புங் காட்டி சாலவுறு மறுமண்ட பம்விமானம்
சார்ந்ததுவ சத்தம்பம் தனையுங்காட்டி சீலமுறு நந்திபலி பீடமொடு
கோபுரமும் சேர்த்துக் கூட்டிக் கோலமுறு வீதிசபை சிற்சபையுங்
கோமுதியுங் குறித்தல் கண்டோம்.
இத்தகைய சித்தாந்தத் தியல்பலவும் விளக்கி
யொன்பான் இரட்டியாகப்
புத்தமுத மெனவளித்தான் புகழுறுமிந் நூலெவர்க்கும் புணையேயாக
அத்தனடி புகுத்துதலால் அழியவுலோ காயதமிவ்
வவனிமீது முத்தமிழ்நற் கலைமன்றம் முயன்றுசிந்தா மணியேற்றல் முறையதாமே.

( xv )
ஆதார நூல்கள்
1ம் சைவ விஞவிடை 2ம் சைவ விஞவிடை 1ம் கழகச் சைவ விஞவிடை 2ம் கழகச் சைவ விஞவிடை சித்தாந்த சைவ வினவிடை இந்து மத பால பாடம் சைவக் கிரியை விளக்கம் சைவ சமய நெறி சிவாலய தரிசன விதி பஞ்சாட்சர இரகசியம் சைவ நூற் சார சங்கிரகம் இந்து சமயங்களின் வரலாறு சிவச் சுேஷத்திர ஆலய மகோற்சவ உண்மை விளக்கம் ஆலய உட்பொருள் விளக்கம் சிவபூசை விளக்கம் சிவலிங்க மகத்துவம் சைவ பூஷணம் சதாசிவ ரூபம் சிதம்பர இரகசியம்
சிவன்
மகோற்சவ சந்திரிகை ஆசௌச தீபிகை
சிவன் கணபதி திருப்பராய்த்துறை
குமரன் வெளியீடுகள் அரங்கநாதன்

Page 13
27
28
29
30
31
32
33
34
J5
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50 51
52
53
54
55
56
57
5 &
(Xνι)
சித்தாந்த சாராவளி சித்தாந்தப் பிரகாசிகை சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம் சித்தாந்த சைவ போதம் சித்தாந்த வசன பூஷணம் முப்பொருள் ஆராய்ச்சி உண்மை விளக்கம்
கொடிக் கவி
சிவப்பிரகாசம் சிவஞான சித்தியார் கட்டளைப் பிரபந்தம்
உள்ளொளி திருமுருகாற்றுப்படை திருமந்திரம் தாயுமான சுவாமிகள் பாடல் ஒளவையார் பாடல் அகோர சிவாச்சாரியார் பத்ததி, சுபக்கிரியை அகோர சிவாச்சாரியார் பத்ததி, அபரக்கிரியை அர்ச்சனதீபிகை பெளஷ்கராகமம் மேற்கோள்கள் திருக்குறள் பெரிய புராணம்
கந்த புராணம்
தேவாரம்
திருவாசகம்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
திருப்புகழ்
திருவாதவூரடிகள் புராணம்
நடராஜ வடிவம்
சைவ போதம் 2ம் பாகம்
சிவ ஞானபோதம்

( xvii)
விஷய அட்டவணை
பக்கம்
சமய இயல்
சைவ சமயம் (விளக்கம்) சைவ சமய நூல்கள் 4 சைவ சமயத் துறைகள் சைவ சமயத் தத்துவங்கள் 3 சைவ சமய குரவர்கள் 17 சைவ சமய சந்தானுசாரியர்கள் 8
ஆலய அமைப்பு இயல் (விளக்கம்) 20 அண்ட, பிண்ட, சமம் 2 II மண்டபங்கள் 22 விமானம் (தூபி) 23 துவசத்தம்பம் (கொடிமரம்) s is கோபுரம், நந்தி 24 அதிகார நந்தி, பலி பீடம், திரைச் சீலை 25 கதவுகள், கோமுகை, வீதிகள் 26 பஞ்ச சபைகள் 27
கடவுள் இயல் (விளக்கம்) 29 சொரூப நிலை 30 தடத்த நிலை 3. சிவலிங்க விளக்கம் 35 சிவலிங்க வகைகள் 37 பரார்த்த லிங்கம் 39
ஆன்மார்த்த லிங்கம்
s
அருள் பாலிக்கும் முறை 4●

Page 14
( xviii)
விஷய அட்டவணை Lu šestio
பஞ்ச கிருத்தியம் 4. சத்தி மூர்த்தி, மந்திர மூர்த்தி 42 அத்துவா மூர்த்தி 43 நடராஜ மூர்த்தி 44 விநாயக மூர்த்தி 47 முருக மூர்த்தி 50 திருமால் மூர்த்தி 53 மாகேஸ்வர மூர்த்தி வடிவங்கள் 25ன் விபரங்கள் 54 கும்ப மூர்த்தி 57
திரு அங்க அமைப்பு இயல் (விளக்கம்) 58
அங்கம்
பிரத்தியாங்கம் p. சாங்கம் 9
உபாங்கம் பொருள்கள்-(கருத்துக்கள்)
திரு நடன இயல் (விளக்கம்) 66 தியாகஸ்தல நடனங்கள் 68 முருகப் பெருமான் ஆடின நடனங்கள் y தேவர்கள் ஆடிய நடனங்கள் 69
தல, தீர்த்த இயல் 70 தலங்கள் (விளக்கம்) 9 சப்த (ஏழு) புண்ணிய நகரங்கள் 71 ஆறு ஆதாரத் தலங்கள் . . . பஞ்சபூத லிங்கத் தலங்கள் 72
முத்தி நகரங்கள் மூன்று y s9
கைலாயம்

( xix)
விஷய அட்டவணை Lu &};35 h
தீர்த்தம் (விளக்கம்) 73 புண்ணிய தீர்த்தங்கள், தீர்த்தம் ஆடும் முறை 75 அர்த்தோதைய தீர்த்த காலம் 76 மகோதைய தீர்த்த காலம் LDéj5rt u/D 55íb 77
ரிெயை இயல் (விளக்கம்) 78 பரார்த்த பூசை 79 ஆன்மார்த்த பூசை 80 அந்தர்யாக பூசை s பூசைக் கிரியைகள் s பஞ்சோபசாரம் (ஐந்து வகை) 8. தசோபசாரம் (பத்து வகை) 82 சோடசோபசாரம் (பதினறு வகை) 9 9 ஆசாரியர் கிரியைகள் (விளக்கம்) 85 கும்ப பூசைக் கிரியைகள் (விளக்கம்) 86 அக்கினி காரியக் கிரியைகள் (விளக்கம்) 87 எஜமானன் கிரியை (விளக்கம்) 89 விவாகக் கிரியைகள் (விளக்கம்) புதுமனை குடிபுகும் கிரியைகள் (விளக்கம்) 92 அபரக் கிரியைகள் (விளக்கம்) S3
மகோற்சவ இயல் (விளக்கம்) S8 கால விசேடம் 99
கிரியைகள் 00
யாகம் 1 04 அஸ்திர தேவர், அட்டபாலகர் பூசை 105
உற்சவங்களின் பொருள்கள் I 06

Page 15
(ΧΧ)
விஷய அட்டவணை பக்கம் (அ) பஞ்சகிருத்திய முறை, (ஆ) வேறுமுறை 106 சூர்ணுேற்சவம், கொடியிறக்கல், பிராயச்சித்தம் 110 திருக்கலியாணம் 1 11 ஊஞ்சல், மெளன உற்சவம், சண்டேசுர உற்சவம் 113 ஆசாரிய உற்சவம் 14 மகோற்சவ ஆரம்பத்தில் செய்ய வேண்டியவை s )
வாகனங்களும் பொருள்களும் (விளக்கம்) 3 y
ரிஷபம், மூஷிகம் 115 மயில், குதிரை 16 இரதம் 1 1 7 ஜம்முக நாகம், யானை I 19 சிங்கம், பூதம், சேவற்கொடி 120
சிவத்திரவிய இயல் (விளக்கம்) 122
பாத்தியப் பொருள்கள் ஆசிமணியப் பொருள்கள் Ο )
அருக்கியப் பொருள்கள் y p
திருமஞ்சனம் 123 அபிஷேகப்பொருள்களும் பயன்களும் y 9 நைவேத்தியம் 125 தீபவகைகள் 26 புஷ்பவகைகள் 127 யாகத்துக்குரிய பொருட்கள் I 29
ஆன்ம இயல் (விளக்கம்) I 31
ஆன்மாவின் இலக்கணம்
ஆன்மாக்களின் வகைகள் மூன்று 132

(ΧΧi)
விஷய அட்டவணை பக்கம்
பிறப்பிற்குக் காரணம் 33 பிறப்பு வகை 134 உடம்பின் வகைகள், அவத்தை 136
ஆன்மாக்கள் வினை செய்யும் இடமும்,
அனுபவிக்கும் இடமும் 138 போக்கு, வரவு-(இறப்பு-பிறப்பு) செய்யும் முறை , ,
மனிதப் பிறவியின் அருமை 139 முத்தி சித்திக்கும் வகை 140
பாச இயல் (விளக்கம்) 143
ஆணவம், கன்மம் y yo (அ) இன்ப, துன்பங்கள் வரும் வாயில்கள் 144 (ஆ) கன்மம் பலன் கொடுக்கும் காலம் 】45 (இ) பாவ நிவிர்த்தி 9 9
DГ (60) ULI 146
மாயேயம் 47 திரோதாயி
சைவ சமயிகள் இலட்சண இயல் I 49
நித்திய கருமம் (விளக்கம்) J p நித்திரைவிட்டெழுதல் மல சலம் கழித்தல் 50 பல் விளக்கல், ஸ்நானம் செய்தல் 9 p. வஸ்திரம் தரித்தல், சந்தியா வந்தனம் 52 ஆலயஞ் செல்லல், போசனம் பண்ணல் மாலைக்கடன் 53 சயனித்தல், சிவ சின்னங்கள் (விளக்கம்) 154
விபூதி 55

Page 16
( xxiii )
விஷய அட்டவணை பக்கம்
உருத்திராக்கம்
சந்தனம், குங்குமம், காவி வஸ்திரம் தீகூைடி (விளக்கம்) தீட்சையின் வகைகள் தீட்சையின் பெயர்கள் அனுட்டானம் செய்தல்
பஞ்சாட்சரம் (விளக்கம்)
அன்பு இயல் (விளக்கம்)
அன்பைப் பெருக்கும் வழிகள் அன்பின் அறிகுறிகள், அந்திய கால நிலை
ஆலய தரிசன இயல் (விளக்கம்)
ஆரம்பம் கொண்டு போக வேண்டியவை உட்பிரவேசிக்கும் முறை, வணங்குதல் பிரதட்சணம் வணங்கும் கணக்கு, தரிசனம், அருச்சனை, பிரசாதம் செபம் கோயிலில் செய்யத் தகாத குற்றங்கள் கோயிலில் செய்யத் தக்கவகைள் உட்பொருள்கள்
கடவுளை அடையும் வழி இயல்
புண்ணியங்கள் (விளக்கம்) தமிழ் மறை கூறும் பொது அறங்கள் அம்மை வளர்த்த அறங்கள் 32 சைவப் புண்ணியங்கள், பதி புண்ணியங்கள்
158
160
6.
63
65
66
170
172
173
174
76
》多
177
178
II 79
180
184
85
p
188

(ΧΧiii )
விஷய அட்டவணை பக்கம்
ஞானத்தின் வகையும் பதவியும் 191 சிவ தொண்டுகள் 193 பிற தொண்டுகள் 194 கோயிற் பராமரிப்பு, காவடி எடுப்பதின் பொருள் 195 அரசு சுற்றுவதின் கருத்து 197 பாவங்கள் (விளக்கம்) 98 மகா பாதகங்கள் 199
சிவ சொத்துத் திருடல் 9 p. கோயில்களிற் செய்யத் தகாத குற்றங்கள்
பலி கொடுத்தல் 200 தாசியர் நடனம் 201 ஒதுக்கல் 202 ஆசௌசம் 203 வியாபாரம் 204 வீண் செலவு, சாத்துப்படி 205 பாவங்களும் ரோகங்களும் 206
குரு சங்கம இயல் (விளக்கம்) 207
(5(5 J சங்கமர் 208 மாகேசுர பூசை (விளக்கம்) 21
விரத இயல் (விளக்கம்) 3.14
விரதமாவது பிரயோசனம் 215
விரத வகைகள், விரதம் அனுட்டிக்கும் முறை சிவ விரதங்கள் 21 6 தேவி விரதங்கள், விநாயக விரதங்கள் 9 8

Page 17
( xxiv )
விஷய அட்டவணை பக்கம் சுப்பிரமணிய விரதங்கள், வயிரவ விரதங்கள் 29 வீரபத்திர விரதங்கள், விஷ்ணு விரதங்கள் 220 பிதிர் விரதங்கள், உத்தியாபனம் 221
திருமுறை பிரார்த்தனை இயல் 223
தேவாரம் திருவாசகம் 227 திருவிசைப்பா 228 திருப் பல்லாண்டு 229 திருப் புராணம் 230 திருப் புகழ் 233 பிரார்த்தனை 235 நல்வாழ்வுக்கு வழிகள் 238
ஆக்கியோன் எழுதிய நூல்கள் 240
Z

( XXν )
முன்னுரை
உலகம், உயிருள்ள பொருள், உயிர் இல்லாத பொருள் என இரு வகைப் பொருள்களை உடையது. உயி
ருள்ள பொருள்களிலும், ஓர் அறிவு முதல், ஆறு அறிவு வரை உயிர்கள் பல வகைப்பட்டுள்ளன.
இந்த உயிர்களுக்குள்ளே, மக்களைத்தான், ஆறு அறி வுடைய உயர்ந்த உயிராகக் கருதுகின்றனர். மற்றைய உயிர் களிலும் பார்க்க, மக்களுக்கு மன உணர்வாகிய பகுத்தறிவு என்னும் ஓர் அறிவு, மேலாக இருப்பதால், அவர்களை ஆறு அறிவுடையவர்கள் என்று உயர்த்திக் கூறுவர் மேலோர் .
மக்கள் என்ற நிலையில் வைத்து, அவர்களுக்கு மதிப்பை அளிப்பது, பகுத்தறிவு ஒன்றுதான். இவ் அறிவு, நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளச் செய்வதும், தக்கன, தகாதன வாகிய செயல்களை விளங்கச் செய்வதுமாயுள்ளது.
பகுத்தறிவாகிய தன்மை குன்றிய நிலையில், அவர் களை மக்கட் பிறப்பாயிருந்தாலும், மாக்களின் தன்மையில் வைத்து எண்ணுவர் பெரியோர். இக்கருத்துப் பற்றியே 'மாவும் மாக்களும் ஐயறிவினவே; மக்கள்தாமே ஆறறி வுயிரே" என்றனர் தொல்காப்பியனரும். மேலும், 'தக்க இன்ன தகாதன இன்ன என்று, ஒக்க உன்னலராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே’’ என்றனர் கம்பர் பெருமானும்.
மக்கள் உடம்பல்லாத மற்றைய உயிர் வர்க்கங்களின் உடம்புகளை உடையனவாய் ஒரு உயிர் இருப்பினும், மனு வின் நெறி, அதாவது நன்மை இது, தீமை இது, தக்கது

Page 18
( xxvi)
இது, தகாதது இது, என்று அறியும் பான்மை இருந்தால், அவ்வுடம்புடைய உயிர்கள் தேவரில் வைத்து மதிக்கப்படும் என்றும், நம் ஆன்ருேர் எடுத்து உரைத்தனர்.
இந்த இரண்டு தன்மைகளையும் உணர்த்த, சைவ சமயத் தில் போதிய சான்றுகள் இருக்கின்றன. தாவரம் முதல் தேவர் ஈருக உள்ள, இப் பாகுபாடுகளுக்குப் பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. இனி, இந்தப் பகுத்தறிவுக்கு மேலாக பேரறிவு, நுண்ணறிவு, மாணறிவு எனப் பல படி களாயுள்ள அறிவுகளை மக்கள் கடந்து சென்று, மெய் அறி வாகிய உண்மை ஞான அறிவைப் பெறவேவேண்டும் என் பதே மக்கட் பிறவியின் நோக்கமாகும்.
சைவ சமயம் அநாதியான பழம் பெருஞ் சமயமாயிருப் பதுடன், விரிந்த பல கொள்கைகளையும், நியாய வரம்பு கடவாத உண்மைத் தன்மைகளையும் தன்னகத்துடையது. அதனல், அது எளிதில் அறிந்துகொள்ள முடியாத அருமை யையும் உடையதாய் இருக்கின்றது.
அதை முற்ருய் அறிய, சைவ ஆகம நூற்பயிற்சி மிகவும் வேண்டும். அன்றியும் அவை வட மொழியில் அமைந் துள்ளன. இதனுல் அம்மொழிப் பயிற்சி இல்லாதார்க்கு அவ்வாகமங்களை விளங்கிக்கொள்ள முடியவில்லை. தற்காலத் தில் அவைகளில் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தா லும், வட மொழிப் பயிற்சியும், ஆகமங்களில் அறிவும் உடையவர்களின் துணையும் இருந்தால்தான், அத் தமிழ் மொழி பெயர்ப்புக்களையும் விளங்கமுடியும்.
இவ்வாறு சைவாகமங்கள் இருந்தாலும், காலத்துக்குக் காலம் சமய அறிஞர்கள் சிலர், சிறிதும் பெரிதுமான பல புத்தகங்களில், சைவ சமய அமைப்பு, கிரியை முறைகள், சிலவற்றின் கருத்துக்கள், வழிபாட்டு முறைகள் ஆகிய இன் னுேரன்ன விஷயங்களை, சுருக்கித் தமிழில் வெளியிட்டிருந் தார்கள்; வெளியிடுகின்றர்கள். அவ்வாறு வெளிவந்த பல

( xxvili )
புத்தகங்களையாவது, ஒருவாறு படித்திருந்தால் சைவ சம யத்தை விளங்கிக்கொள்ள முடியும்.
புத்தகங்களை அறிந்துகொள்ளாமையாலும், வாங்கவும், படிக்கவும் வசதிகள் இல்லாமையாலும், பலர் நம் சமயத்தை அறியாதிருக்கின்றனர். இதையறிந்த சில நாஸ் திகர்கள் சைவ சமயத் துவேஷிகளாய், இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கீழான பொருள் படும்படி, வீண் பிரசாரங்கள் செய்து, மக்கள் மனதைப் பழுதுபடும்படி செய்வதால், சமய பக்தி இக்காலம் குறைவென்று சொல்ல ஏதுவாயிற்று.
வயது எழுபத்திரண்டாயிருந்தாலும் பல ஆண்டுகளாகச் சைவப் பணி செய்துகொண்டிருப்பதினுலும், நாற்பத்தொரு வருடங்களுக்கு மேலாகச் சைவப் பள்ளிகளில் ஆசிரியணுய் இருந்தபடியாலும், நம் சமயத்தில் சிறப்பாய் அறியவேண் டிய பல பகுதிகளையும், பல நூல்களில் இருந்து திரட்டி, சுருக்கமாய் யாவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய எளிய தமிழில் ஒரு தொகுப்பு நூல் வெளியிட்டால் நலமாய் இருக்கும் என்று, பல ஆண்டுகளாக எண்ணி ஆசைப்பட்டு வந்துள்ளேன்.
அன்றியும், எனக்குத் தெரிந்தவைகளையாவது, மறந்து போகாமுன் இந்நாட்டுக்கு ஏற்றவாறு திரட்டி ஒரு நூல் எழுதி வெளியிடுமாறு, சைவசமயத்தை அறிய ஆசைப்படும், நம் சமயிகள் பலரும், பிற சமய நண்பர்கள் சிலரும் பல முறை கேட்டும் வந்துள்ளனர்.
இத்தகைய ஒரு நூல் வெளியிட ஆசையிருந்தும், அறி வாற்றல் இல்லாமையினலே, மிக மிகக் கவலையோடு இருந்து வந்தேன். திருவருட் துணையில்லாமலும் அவ்வாறு செய்ய முடியாதன்ருே ! காலம் போய்க் கொண்டிருப்பதையும், எனது அறிவுக் குறைவையும், எண்ணிக் கவலையுற்று இருந் தாலும், தற்காலம் நமது சமயிகளின் சமய பக்தி பெரும் பாலானுேர்க்கு அருகி வரும் நிலையை எண்ணி வருந்தியிருக்

Page 19
( xxvilii)
கும்பொழுது 'அவ்வாறு ஒரு நூல் ஆக்கப்படுதல் வேண் டும்' என்று என்னை ஆளுடைய ஐயன், 'உன் ஆசையை நிறைவேற்று' என்று தூண்டினன்.
ஆகையினல், இந்நூல் அறிவைக் கொண்டல்ல, ஆசை யைக் கொண்டு எழுதப்படலாயிற்று.
இந்த நூலைச் சைவக் களஞ்சியம் VIம் பாகமாய் எழுதி, சைவ சமய சிந்தாமணி என்னும் நாமம் இட்டுள் ளேன். இந்நூலை எழுதுவதற்கு, உபகாரமாய் இருந்த, ஆதார நூல்களைப் பின்னே காட்டியுள்ளேன். இதில் அடங்கி யுள்ள விஷயங்களை, பதினெட்டு இயல்களாகப் பிரித்து, ஒவ் வொரு இயலின் கீழும், அவ்வியலில் அடங்கியுள்ள விஷயங் களின் பெயர்களையும் காட்டி, விஷய அட்டவணை ஒன்றும் தந்துள்ளேன்.
ஒரே விஷயம், பல நூல்களில் பலவாறு சொல்லப்பட்டி ருந்தாலும், அவற்றின் பொருள்களை, அந்நூல்களுக்கு மாறின்றி அமையுமாறு, எளிய நடையில் எழுதியுள்ளேன். அதனுல் பொருட் பங்கம் ஏற்படாது.
தற்காலம் பொருந்தாதவைகள், சிலவற்றை, பாவங்கள் என்பதின்கீழும், விலக்கவேண்டியவைகள் என்னும் பகுதிக ளின் கீழும் காட்டியுள்ளேன். அவை அல்லாத , மற்றைச் சமய அமைப்பையும், கிரியை முறைகளையும் குறை கூறு வதாயிருந்தால், நடுநிலை யின்மையும், சமய அமைப்பின் நோக்கத்தையும், ஆன்மாக்களின் இயற்கைத் தன்மைகளை யும் உணர்ந்துகொள்ள முடியாமையும், முறையாய்ச் சைவ ஆசாரியரிடம், சமயத்தைக் கற்றும், கேட்டும் அறியாமை யும், பூர்வ புண் ணியம் இன்மையுமே, காரணங்கள் ஆகும் என்று என் சிற்றறிவு கூறுகின்றது.
இறைவன் படைத்த இம் மண்ணுலகத்தில், வேண்டாத பொருள் யாதும் இல்லாததுபோல், அவரால் ஆக்கப்பட்ட

( xxix )
சைவ சமயத்திலும், வேண்டாக் கிரியைகள் யாதும் இல்லை என்பது ஆன்ருேர் துணிபு.
இதில் சில கிரியைகள் காட்டப்பட்டிருக்கின்றன. அவை அவ்வக் காரியங்களில், பிரதானமாய்க் கொள்ளப்படுகின் றன, என்பதே குறிப்பாகும். அக்கிரியைகளில் சில மாறி யும், முன் பின்னயும், கூடியும் குறைந்தும் வரக்கூடும்; அவ் வாறு வருதல் ஆகம வேறுபாட்டால் என்பர் அறிந்தோர்
மந்திரங்களும், செய்கை முறைகளும், பாவனைகளும் காட்டப்படவில்லை. அவைகள் முற்றும் தெரியாவிட்டா லும், தெரிந்தவைகளையாவது எழுதினுல், இந் நூல் விரிந்து போவதுடன், பலர் க்கும் உபயோகப்படாமலும் போய், அவற்ருல் ஆம் பயனும் இல்லை என்பது எனது கொள்கை. அன்றியும், மந்திரங்கள் குரு மூலமாய்ப் பெறவேண்டும் என் பதே சமய மரபு. அப்பொழுதுதான் அவை வன்மை உடை யனவாயிருக்கும்.
பரார்த்த பூசையோ, ஆன்மார்த்த பூசையோ செய்ய விரும்பியவர்கள், சைவ ஆசாரியர் மூலமாய், மந்திரங்களை யும், கிரியைகள், செய்பாவனைகள், முதலியவைகளையும், கேட்டறிந்துகொள்க. இந்நூலை அறிந்துகொண்டு, பூசை முதலிய காரியங்கள் செய்யமுடியாது.
இதில் சில விஷயங்களுக்கு வெளிப் பொருள்களும், உட் பொருள்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில விளங்காவிட் டாலும், யாதோ ஒரு காரணம் இருக்குந்தான் என்று, பிறர் அறிந்துகொள்வதற்காகப் பொருள்கள் எழுதப்பட்டிருக்கின் றன. சில விஷயங்கள் விளங்க முடியாமையாலும், விரிவஞ் சியும் பொருள்கள் எழுதாமலும், சில விஷயங்கள் முற்றும் காட்டப்படாமலும் விடப்பட்டன.
அன்றியும் ஒவ்வோரியலிலும் முன்னே, பின்னே, அன் றேல் விஷயத்தின் முன்னே, பின்னே, சுருக்கமான விளக்கங்

Page 20
( xxx)
கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கு அவைகளை அறிந்து விளங்கிக்கொள்க.
இது சைவ சமய அறிவுடையார்க்கு எழுதப்படவில்லை என்பதை அறிஞர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளுகின்றேன். சமஸ்கிருத அறிவு இல்லாமை யினுலே, நூல்களில் உள்ள பகுதிகள் அவ்வறிவுடைய குருக்கள் மாரிடம் கேட்டறியப்பட்டன.
இந்நூல், பேரறிவாளரும் சைவ சமய சாஸ்திர அறி வும், அனுபவ ஞானமும் கைவரப்பெற்ற, ஆசாரியர்களுமா கிய, பிரம்மபூரீ சு. வேதாரணியேச்வரக் குருக்கள், வி. வரத ராஜக் குருக்கள் அவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரியதாகுக.
இதனை எழுதுதற்கு உதவியாயும், ஆதாரமாயும் உள்ள நூல்களை இயற்றிய ஆசிரியன் மார்களுக்கு, சைவ உலக மும், சிறியேனும் செய்யக்கூடிய கைம்மாறுதான் உளதோ! வாழ்க! அவர் நூல்கள்.
மட்டக்களப்பு தமிழ்க் கலை மன்றம் 1954ம் ஆண்டு ஜூலை 9, 10, 11ம் நாட்களில் நடத்திய மன்றத்தின் 13ம் ஆண்டுக்குரிய, நான்காம் தமிழ் விழாவில், அறிவிற் குறைந்த அடியேன் எழுதிய, இந்நூலை ஆராய்ந்து, அரங்கேற்றம் செய்து, பெரு மதிப்பு அளித்த உபகாரத்திற்காக, அம் மன்றத்தாருக்கு, எனது தாழ்மையான நன்றி மறவாத, வணக்கத்தைச் செலுத்துகின்றேன்.
கையெழுத்துப் பிரதிகளைப் பார்வையிட்டு, பெருமகிழ் வெய்தி, நன்கு மதித்து, மகிழ்வுடன் அணிந்துரைகளும், மதிப்புரைகளும், மனம் உவந்து அளித்த பேரறிஞர் யாவர்க் கும், எனது மனமார்ந்த நன்றியறிதல் உரித்தாகுக.

(ΧΧΧi )
மேலும் எவ்வகை நலமும் குன்றி இடருறும் என்னை இத்தகைய பெரும்பணியில் ஈடுபட ஊக்குவித்த இறைவ னது திருவருளுக்கும், உயிரினுமினிய நண்பர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரியதாகுக. அன்றியும் இந்நூலை ஓர் நன்னூலாக மதித்து மதிப்புரையும், அணிந்துரையும் அன் புடன் உதவிய அன்பர்கள் அனைவர்க்கும் மறுமுறையும் எனது நன்றி.
இந்நூலை இவ்வடிவில் அச்சு வாகனமேற்றி, அழகிய கட்டுமானத்துடன் காட்சியளிக்கச் செய்த ஏ. வி. ஆர். ஏ. அச்சகத்தார்க்கும் எனது ஆழ்ந்த நன்றி.
மட்டக்களப்பு, இங்ங்ணம் 31-3-1960. கா. அருளுணசலம்.

Page 21

oசிவமயம்
திருச்சிற்றம்பலம் காப்பு குறள் வெண்பா
' கற்குஞ் சரக்கன்று கண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்”
* வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்"
JIDU I 9u I å
1. சைவ சமயம்.
விளக்கம் : சமயமாவது மனிதர்கள் அறிவு விளக்கம் பெற்று உறுதி எய்தி, இன்பவாழ்வு அடைதற்குச் சாதக மாயுள்ள ஞான ஆலயமாம்.
சமயம், மார்க்கம், மதம், என்னும் பதங்கள் ஒரே பொருள் உடையன. உலகம் தோன்றிய காலம் இருந்து, எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்து போயின.
உலகம் உண்டுபட்ட காலம் இருந்து இன்றுவரையும் இருப்பது சைவசமயம் ஒன்றே. எல்லாச் சமயங்களும் பொதுவாய் இறைவனை அடையவே போதிக்கின்றன.

Page 22
2 சைவ சமய சிந்தாமணி
ஆனல், போதனை முறைகளும், சாதனை முறைகளும், பூரணத்துவம் உடையனவாய் இல்லாமையிஞலே, அச் சமயங்கள் மறைந்து போயும், மறைந்து கொண்டு மிருக் கின்றன.
சைவ சமயம் எல்லா மக்களுக்கும், அவரவர் பக்குவத் துக் கேற்க, படி முறையாய், போதனைகளையும், சாதனை களையும் வகுத்துள்ளது. அன்றியும், நியாயவரம்புக்கும், அனு பவத்துக்கும், பொருந்துமாறும் அஃது அமைந்துள்ளது. இதற்குக் காரணம் அது முற்றறிவுடைய இறைவணுலேயே ஆக்கப்பட்ட வேத சிவாகமங்களை உடைமையே,
பூரணனுகிய சிவபெருமானல் உண்டாக்கப்பட்டபடி யால் சைவ சமயம் என்றும் பூரணத்துவமான கொள்கை களை உடையதாய் இருக்கின்றது.
மேலும், மிருக சுபாவத்தைத் தடுத்து, மனித சுபா வத்தை அடக்கி, தெய்வத் தன்மை அடைதற்கு, வழிநடத்து கின்றது. இச்சமயங் கூறிய அடிப்படையான கொள்கை களையே வெவ்வேறு வகையாக, பல்வேறு சமயங்களும், போதிக்கின்றன.
ஆணுல் அவைகளின் போதனைகள் யாவும் எல்லா மக்க ளுக்கும் பொருந்துமாறு அமையப் பெறவில்லை; ஏனெனில், மனித அவதாரம் எடுத்த மகான்களாலேயே, அம்மதங்கள் வழங்கப்படுவதும் அம் மகான்கள் கூறிய நற்போதனைகளை யும், அவ் அவ் மார்க்க அபிமானிகள் தம் தம் மதத்தைப் பரப்பும் நோக்கத்தினலே மதவிரோதம் உண்டாகப் போதித் தும் வருகின்ற காரணங்களால் எனலாம்.
இவ்வாறு மறுசமயங்கள் போதிப்பதால் மக்களுள் ஒற் றுமை, சகோதரத்துவம், அன்பு முதலிய சமூக நற் பண்புகள் சிதைந்து உலகம் தீராத அல்லலுக்கு உட்படுவதாயிற்று.

-சமய இயல் 3
சைவசமயம், எல்லாச்சமயங்களும், இறைவனை அடை தற்கு படிமுறைகளாய் அமைந்துள்ளன, என்கின்றது. அன்றியும் ' தெய்வம் இகழேல் ' என்றும் கூறுகின்றது. மற்றை எந்தச்சமயத்தவரும், இவ்வாறு துணிந்து கூறுகின் ருர்களில்லையே! இதனுல் சைவத்தைத் தூவித்து இகழ்பவர் களை வன்மையாகக் கண்டித்து நிலை நிறுத்த, தருக்க வரம்பு கடவாத நியாய முறைகளையும், அது வகுத்துள்ளது.
சைவ சமயத்துக்கு, பிற மதங்களால் எவ்வளவோ துரோகங்கள், சதிகள், தூஷணங்கள், செய்யப்பட்டும் ஒன் றுக்கும் அசையாது தலை நிமிர்ந்து இன்று வரையும், நிலைத்து நிற்கின்றது.
பிற சமயங்களுக்கு இவ்வளவு கேடுகள் நேர்ந்திருந்தால் எப்பொழுதோ அழிந்து ஒழிந்திருக்கும்.
மிக மிக உயர்ந்த ப்க்குவம் உடையவர்களால் மாத்திரம் கைக்கொள்ளக்கூடிய சாதனங்களாகிய யோக சாதனத்தை யும், ஞான சாதனத்தையும் கைவரப் பெற்ற யோகிகளும், ஞானிகளுமாயுள்ள எண்ணிறந்தோர் இன்றும் இச்சமயத் தில் இருப்பதுபோல், வேறு எச்சமயங்களிலும், காண முடி யாது. "எல்லாச் சமயங்களும் சரிதான்’’ என்று சைவம் சொல்வது போல், மற்றச் சமயத்தவர்களும் சொல்லுங் காலமே உலகில் சமாதானம் நிலவும் காலமாகும். இது பற்றியே யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே மாதொரு பாகஞர்தான் வருவர் ‘’ என்று சமய சமரச சமாதானத்தைச் சைவம் போதிக்கின்றது. இவ் வாறு வேறு சமயத்தவர்களும் சொல்லுவார்களோ ? சொல்
லார்கள்.
ஏனென்ருல், சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது " . எல்லாருக்கும் அவ்வாறு கிடையாது. எனவே,
y s
** சைவ சமயமே சமயம் என்றும், மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் ‘’ என்றும் போற்று

Page 23
4. சைவ சமய சிந்தாமணி--
வோ மாக. சைவசமயிகாள் : சைவத்தைக் கடைப்பிடிப் போமாக ! சைவம் வாழ்க ! சைவர் வாழ்க !
சைவத்தின் மேற் சமயமில்லை, அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேற் தெய்வமில்லை.
சைவ சமயமே சமயஞ் சமயாதீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும் இந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந்துழலுஞ் சமய நெறி புகுதவேண்டா முத்தி தரும்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் சகத்தீரே
2. சைவ சமய நூல்கள்.
சிவபெருமான் சைவ சமயத்தை ஆன்மாக்கள் அறிந்து உய்யும் பொருட்டாக, அநாதியான வேத சிவாகமங்களை அவர்களுக்கு அருளிச் செய்தார்.
வேத, சிவாகமங்களாகிய, இரண்டிலும் இருந்து வழி நூல்களாகப் பலநூல்கள், அவர் அருள்பெற்ற ஆன்ருேர் களால் ஆக்கப்பட்டிருக்கின்றன.
வேதம்
அறிவுக்குப் பாத்திரமானது. சதாசிவ மூர்த்தியி னுடைய தற்புருடம் முதலாகிய நான்கு முகத்தினிடமாக உண்டாயது. இது சுருதி, மறை, என்றும் கூறப்படும். இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும், விரி வாயும், வீட்டை(மோட்சத்தை)ச் சுருக்கமாயுங் கூறுவது. அதனுல் இது பொது நூலாகும்.

-சமய இயல் 5
வேதம். (1) இருக்கு, (2) யசுர், (3) éFrrupt b, (4) அதர்வணம் என நான்காகும். இதைக் கரும காண் டம், ஞான காண்டம் என இரண்டாகப் பிரிப்பர்.
(அ) கரும காண்டம் : காமிகார்த்தமாகச் சொர்க்கம் முதலிய மேல் உலகங்களில் நிலையில்லாத இன்பத் தை அனுபவிக்க விரும்புவோருக்கு, யாகம், வேள்வி முதலியவற்றைக் கூறுவது. இது பின்பு பிரம்ம ஞானமடைவதற்கு ஏதுவாயுள்ளது என்பர்.
(ஆ) ஞான காண்டம் : பொதுவாய் மோட்சம் அடை வதற்குரிய விதிகளைக் கூறும். இதைப் பிரமகாண் டம் பிரபல சுருதி, உபநிடதம், வேதாந்தம் என்றும் கூறுவர்.
வேதாங்கங்கள் (ஆறு)
அவை பின்வருகின்றன; வேதங்களுக்கு இவை அங்க மாய் உள்ளன.
1. சிக்கை வேதங்களை உச்சரிக்கும் முறையைக் கூறுவது. 2. கற்பம் : வேத கருமங்களை அனுட்டிக்கும் முறையைக்
கூறுவது. 3. வியாகரணம் : வேதங்களின் எழுத்து, சொற்களின்
இலக்கணங்களைக் கூறுவது. 4. நிருத்தம் : வேதங்களின் சொற்களுடைய பொருளை
அறிவிப்பது. 5. சந்தோவிசிதி : வேதமந்திரங்களின் காயத்திரி முதலிய வைகளின் சந்தங்களையும், எழுத்துக்களின் அளவுகளை யும், கூறுவது. 8. சோதிடம் : வேத கருமங்களைச் செய்தற்குரிய கால
விசேடங்களை அறிவிப்பது.

Page 24
6
சைவ சமய சிந்தாமணி
வேதத்தின் உபாகமங்கள் (நான்கு)
l.
புராணம் : சிவபெருமான் உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் முதலியவற்றை விரித்துக் கூறு வது. அவைகள் உலகத்தின் தோற்றம், ஒடுக்கம், பாரம்பரியம், மன்வந்தரங்கள், பாரம்பரியக் கதை கள், ஆகிய ஐந்தையும் கூறுகின்றன, அறிவில் குறை வுடைய மக்களுக்கு, அறிவை மிகவும் விளங்க வைப் பது இப்புராணங்கள் பதினெட்டும். (அ) சிவபுராணம் : சைவம் முதல் பிரமாண்டம் ஈருக
வுள்ள பத்துமாம்.
(ஆ) விஷ்ணுபுராணம் : நாரதீயம் முதல் வைணவம்
ஈருரன நான்குமாம். (இ) பிரமபுராணம் : பிரமம், பதுமம், என்னும் இரண்
டுமாம். (ஈ) சூரியபுராணம் : பிரம்ம கைவர்த்தம் என்னும்
ஒன்றுமாம். (உ) அக்கினி புராணம் : ஆக்கினேயம் என்னும் ஒன்று மாம். வேறும் உபபுராணங்களும் இருக்கின்றன.
2. நியாயம் : வேதப் பொருளை நிட்சயித்தற்கு உதவியாய்
உள்ள பிரமாணங்கள் ஆகும். அவை இரண்டு. கெளதம. களுத சூத்திரங்கள்.
மீமாஞ்சை வேதப் பொருள்களின் தாற்பரியத்தை
அறிதற்கு உபகாரமாகிய நியாயங்களை ஆராய்ச்சி செய்து, அறிவிப்பது. அது பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை என இரண்டு.
. மிருதி வருணம், ஆச்சிரமங்களுக்குரிய தர்மங்களைக்
கூறுவது. அது மனுஸ் மிருதி முதலாகப் பதினெட்டு என்பர். இவை வருணங்களாகிய சாதிக் கட்டுப் பாடு களைக் கூறுகின்றன என்று தற்காலத்தவர் கண்டிக் கின்றனர்.

-சமய இயல் ך
உப வேதங்கள் (நான்கு)
1. ஆயுள் வேதம் : சரீரம் நோயின்றி இருத்தற்கு வேண்
டிய மருந்து முதலிய வழி வகைகளைக் கூறுவது. 2. தனுர் வேதம் பகைவர்கள் நலியாதிருக்கும் பொருட் டும், உலகத்தைக் காத்தற் பொருட்டும், வேண்டப் படும் படைக்கலப் பயிற்சியை அறிவிப்பது. 3. காந்தருவ வேதம் : கடவுளுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்
சியைக் கொடுக்கும் இசையை அறிவிப்பது. 4. அருத்த வேதம் : இம்மைக்கும், மறுமைக்கும் தேவை யாயுள்ள பொருள் சம்பாதிக்கும் உபாயத்தை, பொரு ளாதார சாஸ்திரத்தைப் போதிப்பது.
சிவ ஆகமங்கள் (இருபத்தெட்டு)
சதாசிவ மூர்த்தியினுடைய, உச்சிமுகமாகிய, ஈசான முகத்தில் இருந்து, இவை உற்பத்தியாயின. அவை பதி, பசு, பாசம், என்பவைகளின் இலக்கணங்களையும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு சிவஞான சாத னங்களையும், சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியம் என்னும் சதுர்வித முத்திகளையும், இன்னும் அநேக கிரியைகளையும், விடயங்களையும், தெளிவாக விளக்குகின்றன.
இவை சிறப்பு நூல்கள் எனப்படும். இவ்வாகமங்களே சைவசமயத்தைத் தெளிவாய்க் கூறுகின்றன. அவையாவன:-
1. காமிகம் 10. சுப்பிர பேதம் 19. சந்திரஞானம் 2. Cétti H 58gtíb 11. s Luth 20. முகவிம்பம் 3. சிந்தியம் 12. j& Qash 21. புரோற் கீதம் 4. காரணம் 13. சுவாயம்புவம் 22. லளிதம் 5. அசிதம் 14. ஆக்கினேயம் 23. சித்தம் 8. தீப்தம் 24. சந்தானம் 7. சூக்குமம் 16. ரௌரவம் 25. சர்வோக்தம் 8. சகச்சிரம் 17. மகுடம் 26. uly GLDššJth 9. அஞ்சுமான் 18. விம்பம் 27. கிரணம்
என்பனவாம். 28. வாதுளம்

Page 25
8 சைவ சமய சிந்தாமணி
சிவாகமங்களின் வழிநூல்கள்
அவை 207. நாரசிங்கம், வக்திராரம், வைரவோத் திரம் தொடங்கி விசுவம் விசுவாத்மகம் ஈருயுள்ளன.
சிவாகமங்களுக்குச் சார்பு நூல்கள் (எட்டு)
1. தத்துவப்பிரகாசிகை 5. மோட்சகாரிகை 2. தத்துவசங்கிரகம், 8. நாதகாரிகை 3. தத்துவத்திரயம் 7. பரமோட்ச நீராசகாரிகை 4. போககாரிகை 8. இரத்தினத்திரயம்
என்பன.
இதிகாசங்கள் (மூன்று)
1. சிவரகசியம், 2. இராமாயணம், 3. பாரதம்
என்பன.
மேற்காட்டிய நூல்கள் பல வடமொழியில் உள்ளன; சில தமிழில் உள்ளன; சில தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன
வடமொழிப் பயிற்சியில்லாதவர், தமிழ் மொழிப்பயிற் சியை மாத்திரங் கொண்டு, அம்மொழி பெயர்ப்புகளையும், விளங்குவார்களோ என்பது சந்தேகத்திற் கிடமாய் இருக் கின்றது.
தற்காலம் சிலர் மேற்காட்டிய, நூல்கள், வடமொழி யில் இருப்பதாலும், அவைகளில் தேவையற்றவைகள் பல இருப்பதாலும், ஆரியருடையவை என்றும், தமிழருடைய மறை முதலியவைகள், தமிழில் இருந்து அழிந்துபோயின என்றும், கூறுகின்றனர். இதனை அறிவுடையோர், ஆராய் GJIT TE GITIT"g: , ܀

-சமய இயல் 9
வேதத்தின் ஞானகாண்டப் பொருள்ே, ஆகமங்களுக்கு மாறின்றி உரைப்பனவாய், தமிழில் பன்னிரு திருமுறை களும், பதின்ைகு சைவசித்தாந்த சாத்திரங்களும், அவை களைச் சுருக்கியும், விளக்கியும் உள்ள பிற பல நூல்களும், இருத்கின்றன. அவற்றுள் சிலவற்றை இதனடியிற் காண்க.
பன்னிரு திருமுறைகளாவன:-
1. தேவாரங்கள் 1ம், 2ம், 3ம், 4ம்,5ம், ம்ே, 7ம் திருமுறைகள்.
2. திருவாசகம், திருக்கோவையார் 8ம் திருமுறை.
3. விசைப்பா
' 9ம் திருமுறை.
4. திருப்பல்லாண்டு
5. திருமந்திரம் 10ம் திருமுறை.
.ே பொன் வண்ணத்தந்தாதி Ili திருமுறை.
முதலிய நாற்பது பிரபந்தங்கள்
7. பெரிய புராணம் 12ம் திருமுறை.
8. திருப்புகழ்
பதினன்கு சைவ சித்தாந்த சாத்திரங்களாவன:-
1. திரு உந்தியார் 8. திருவருட்பயன் 2. திருக்களிற்றுப்படியார் 9. வினு வெண்பா 3. சிவஞானபோதம் 10. போற்றிப் பஃருெடை 4. சிவஞான சித்தியார் 11. கொடிக்கவி 5. இருபா இருபஃது 12. நெஞ்சு விடுதூது 8. உண்மை விளக்கம் 13. உண்மை நெறி விளக்கம் 7. சிவப்பிரகாசம் 14. சங்கற்ப நிராகரணம்
அறியவேண்டிய வேறு சிலவற்றையுங் காண்க
திருக்குற்ள் வேறு புராணங்கள் ಶಿಠ್ಠಟಿಜಲಟ್ಟ புராணம் சிவதருமோத்திர காண்டம் கந்த புராணம் காசிகண்டம்

Page 26
O சை வசமய சிந்தாமணி
சைவக்கிரியை விளக்கம் 1ம், 2ம் சைவ போதங்கள் இந்து மத பாலபாடம் சித்தாந்த சைவ வினவிடை சைவசமய சார சங்கிரகம் பட்டினத்தடிகள் பாடல் 6) 46) SLE iLI Gölü தாயுமான சுவாமி பாடல்
1ம், 2ம் சைவ வினு விடைகள் இராமலிங்க கவாமி பாடல்
இவை போன்ற சைவ சமயத்தை விளக்கும் வேறு நூல் களுமாம்.
வடமொழி அறிவில்லாதவர்கள் மேற்காட்டியவைகளில் தமிழில் உள்ள நூல்களையும், சைவ சமயத்துக்கு மாறின்றிய வேறு ஏதும் நூல்களாயிருந்தாலும் படித்தறியலாம்.
சைவ சமயிகள் நமது சமயத்தில் உள்ள பிரதான நூல் களின் பெயர்களையாவது ஒருவாறு வாசித்து, அறிந்து கொள்ளவே அவைகளை மேலே குறிப்பிட்டோம்.
படிப்பதை விட்டு, ஆரியர் கொள்கை திராவிடர் கொள்கை என்று வாதாடிக் கொண்டிராமல் பக்தியையும், நல்லொழுக்கத்தையும் பேரறிவையும், சைவக்கொள்கை களுக்கு, மாறின்றி ஆர் எம் மொழியில் எழுதி இருந்தாலும், படித்து அறிந்துகொள்ளுதல் நலம் பயக்கும். அன்றியும், தமிழன், சைவனுடைய பரம்பரைப் பண்பாடும் அதுவே.
வாரம் பற்றி நடுநிலை தவறி, சைவசமயத்தை எவ்வறி வுடையவர் எழுதினும் நாம் ஒன்றும் தெரியாமல் அவர் கூறியதை நம்பி உழறுவதால் வீண்காலமே கழியும். ஆம் பயன் ஒன்றுமாகாது.
" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு " " எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு."
தமிழன் கொள்கை.

-சமய இயல் 11
3. சமயத் துறைகள். வேத சிவாகமங்களுக்கு மாறுபட்டு அவைகள் கூறிய சிலவற்றை ஒத்தும், சிலவற்றை ஒவ்வாமலும் உண்மைகளைத் திரித்தும் கூறும் சமயத் துறைகளைத் திரட்டி, இருபத்து நான்கு சமயங்களாக வகுத்து, சைவ சித்தாந்தக் கொள்கை களை நிறுவி, அச்சமயத் துறைகளை மேற் கொள்ளுகின்றது சைவம்.
அச்சமயத் துறைகளைக் கீழ்க்காண்க.
புறப்புறச் சமயங்கள் (ஆறு)
(1) உலகாயதம் (2) மாத்திய மிகம் (3) GuIII FIJh y (4) செளத்தீராந்திகம் (5) வைபாடிகம் (8) ஆருகதம் (சமணம்)
இச் சமயத் துறைகள் வேதம் சிவாகமங்களை நிந்திக்கும்
கொள்கைகளை உடையன.
புறச் சமயங்கள் (ஆறு)
(1) தார்க்கீகம்
(2) மீமாஞ்சகம் இச் சமயத்துறைகள் வேதத் (3) ஏகான்மவாதம் தைப் பொதுவாகக் கொண்டு, (4) சாங்கியம் சிவாகமங்களை நிந்திக்கும் (5) CuLu H a, A 3 g gib கொள்கைகளை உடையன.
(8) பாஞ்சராத்திரிகம் அகப்புறச் சமயங்கள் (ஆறு)
இச் சமயத்துறைகள் வேத, சிவா İ? கமக் கொள்கைகளை, பொதுவாய்
ஏற்றுக்கொண்டு, அ வை களு க்கு
(3) காபாலம் வேருய்ப் பாசுபதம் முதலிய தங்கள்
(4) வாமம் கொள்கைகளைக் கூறும் மத நூல்
(5) வைரவம் களைச் சிறப்பு வகையாய்க் கொள்
6) GJGlts
கின்றன.

Page 27
2 சைவ சமய சிந்தாமணி
(8) ஐக்கிய வாத −
சைவம் இது வேத சிவாகமங்களைச் சிறப்பு வகையாற் கொள்ளும். ஆனல், ஆணவமலக் கொள்கையை ஒத்துக் கொள்ளாது.
அகச் சமயங்கள் (ஆறு)
(1) பாடான வாத சைவம்
(2) பேத வாத இச் சமயத் துறைகள், பதி, (3) AQI OLD Q) : 5 ,, பசு, ஆணவம், கன்மம், சுத்த (4) சிவ சங்கிராந்தவாத , மாயை, அசுத்தமாயை ஆறை (5) ஈசுவர அவிகாரவாத, ( யும் ஒத்துக்கொண்டு, அவை (8) சிவாத்துவித களின் பொது இயல்புகளை (நிமித்த காரண மாத்திரம் கொள்கின்றன.
பசினுமவாத சைவம்)
அப்படியானுல் நாம் என்ன சமயக் கொள்கைகளை உடை யவர்கள் என்ற கேள்வி எழும். மேற்காட்டிய சமயத் துறை கள், இருபத்து நாலுக்கும் மேற்பட்ட '' சுத்த அத்வைத சைவ சித்தாந்த ' சமயக் கொள்கைகளை உடையவர்களா வோம் என்பது விடையாகும்.
அச்சமயத் துறைகள் பல தற்காலம் இல்லாவிட்டாலும் பேசும் போது சிலரிடம் அவற்றின் கொள்கைகள் சில தொனிப்பதைக் காணமுடியும். அச்சமயத் துறைகளின் கொள்கைகளை அறிந்தவர்களே அவ்வாறு அறியமுடியும்.
அவைகளின் கொள்கைகளை ஒருவாறு அறிந்திருப்பதற் காகவே இங்கு காட்டினுேம், விரிவாய் நூல்களிலும், அறிந் தார் மாட்டும் கேட்டறிக. அச்சமயங்களிற் சில இக்காலமும் இருக்கின்றன.
அச்சமயத் துறைகளைவிட, தற்காலம் வேறு பெய ருடைய கிறிஸ்துவம், மகமதியம், முதலிய சமயங்களுமுள.

-சமய இயல் 13
இவைகளின் கொள்கைகளைத் தற்காலம் யாவரும் நன்கு அறிவர்.
இந்துக்களிற் சிலர் வைணவம், காணுபத்தியம், கெள மாரம் முதலிய மதப் பிரிவுகளை உடையவர்களாயும், இருக் கின்றனர். இச்சமயத் துறைகளின் கொள்கைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்தால் நம் சமய அடிப்படைக் கொள்கைகள் எதிலும், ஒன்றில் அடங்காது போகா.
நம் சைவக் கொள்கைகள் மாத்திரம் எக்காலத்துக்கும் மாருத சற்காரிய வாதக் கொள்கைகளை உடையன.
சுத்தாத்துவித சைவ சித்தாந்தமாகிய நமது சைவம் பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை ஆகிய ஆறு பொருட்களின் பொது இயல்பு, சிறப்பு இயல் புகளைத் தெளிவாயும், விளக்கமாயும், நியாய வரம்புக்கு மாறின்றி எடுத்துக் கூறுகின்றது. இதனை நம் சைவ சமயி கள் அறியாதிருப்பது வருந்தத்தக்கது.
4. சைவ சமய தத்துவங்கள்.
தத்துவம் - உண்மை-சுபாவம். பிற சமயங்கள் சமயத் தத்துவங்களைப் பல வகையாகக் கூறுகின்றன. சில சமயங் களுக்குத் தத்துவம் என்பதே இல்லை என்றுங் கூறுகின்றனர்.
மற்றைச் சமயத் தத்துவங்களுக்கு அதிகமாக சைவ சமயத்தில் தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன. நியாயம், அதன் விரிந்த கொள்கையே. அண்டம் (உலகம்), பிண்டம் (உடம்பு) இரண்டையும் தத்துவங்கள் மூலமாகவே இறை வன் நின்று நடத்துகின்றன். தத்துவங்கள் முப்பத்தாருக வும், தொண்ணுாற்று ஆருகவும், நம் சைவ சமயத்தில் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவை உள் நிலைத் தத்துவங்கள், புற நிலைத் தத்துவங்கள் என இரண்டாக வகுக்கப்படும்.

Page 28
14
சைவ சமய சிந்தாமணி
(அ) உள் நிலைத் தத்துவங்கள் (கருவிகள்) 36
சிவ தத்துவம் (ஐந்து)
) இவை சுத்த மாயையில் தோன்று
வன. சுத்த தத்துவம் என வும்
படும். இதில் இருந்து சூக்குமை (1) நாதம் (சிவம்) முதலிய நான்கு வாக்குக்களும், (2) விந்து (சக்தி) ஐம்பத்தொரு அட்சரங்களும், எண் (3) சாதாக்கியம் 1. பத்தொரு பதங்களும், சத்தகோடி (4) மகேச்சுரம் மகா மந்திரங்களும், வேதாகம (5) சுத்த வித்தை சாத்திரங்களும், விஞ்ஞான, பிரள யாகலரின் தனு, கரண, புவன, போகங்களும், பத முத்திகளும், | பஞ்ச கலைகளும் தோன்றுகின்றன.
வித்தியா தத்துவங்கள் (ஏழு)
இவை அசுத்த மாயையில் தோன்றுவன, அறிவை
எழுப்புவன. அவையாவன:-
l.
காலம் : முக்கால, எல்லை, பலம், புதுமைகளைப் பொருந்துவிப்பது.
, நியதி அனுபவிக்க வேண்டிய போகத்தையும், தீமை செய்தால் தண்டனையையும், நன்மை செய்தால் நன்மையையும், பயக்கும் என்றும் நிச்சயம் பண்ணு வது. இது ஊழ்-பழவினைப்பயன் எனவும் படும்.
. கலை : ஆன்மாவின் கிரியையை எழுப்பி ஆணவத்தைச்
சிறிது சிறிதாகச் சுகதுக்க பயன்களை அனுபவித்து நீங்கச் செய்வது.
4. வித்தை ன் ஆமாவின் அறிவை விளங்கச் செய்வது.

-சமய இயல் 15
5.
7.
அராகம் : கன்மத்துக் கேற்றவாறு, பெற்றதைச் சிறி
தாகவும், பெருததைப் பெரிதாகவும், மதிக்கும்படி, ஆன்மாவுக்கு இச்சையைக் கொடுப்பது.
புருடன் முற்கூறிய ஐந்து தத்துவங்களோடும் கூடிய
நிலையில் உள்ள ஆன்மாவின் தன்மை.
மாயை முன் சொன்ன அசுத்த மாயையாம்.
ஆன்ம தத்துவங்கள் (இருபத்து நான்கு)
இவை பிரகிருதி என்னும் மாயையில் தோன்றுவன.
. பூதங்கள்-5 : 1. பிருதிவி (மண்) 2. அப்பு (நீர்)
3. தேயு (தீ) 4. வாயு (காற்று) 5. ஆகாயம் (வெளி)
. புலன்கள்-5 : 1. சத்தம் (ஓசை) 2. பரிசம் (ஊறு)
3. உருவம் (ஒளி) 4. இரசம் (சுவை) 5. கந்தம் (நாற்றம்)
. ஞானேந்திரியங்கள் ( அறிகருவிகள் )-5 : 1. மெய்
2. நா 3. கண் 4. மூக்கு 5. செவி.
. கன்மேந்திரியங்கள் (தொழிற்கருவிகள்)-5: 1. வாய்
2. கால் 3. கை 4. எருவாய் 5. கருவாய்.
. அந்தக் கரணங்கள்-4 : 1. மனம் 2. புத்தி 3. சித்தம்
4. அகங்காரம். இவை ஆன்மாக்கள், போக்கியங்களைப் பெறுதற்குக் கருவியாய் உள்ளன.
(ஆ) புற நிலைக் கருவிகள் (தத்துவங்கள்) 60
பிருதிவி (மண்) யின் கூறு: மயிர், எலும்பு, தோல்,
நரம்பு, தசை ஆக-5.
. அப்பு (நீர்) வின் கூறு : ஒடு நீர், உதிரம், சுக்கிலம்,
மூளை, மச்சை ஆக-5.

Page 29
0.
.
சைவ சமய சிந்தாமணி
தேயு (நெருப்பு) வின் கூறு உணவு, நித்திரை, பயம்,
மைதுனம், சோம்பல் ஆக-5.
வாயு (காற்று) வின் கூறு : ஒடல், நடத்தல், இருத்
தல், நிற்றல், கிடத்தல் ஆக-5.
ஆகாயத் (வெளி) தின் கூறுகள் : காமம், குரோதம்,
உலோபம், மோகம், மதம் ஆக-5.
தச (பத்து) வாயுக்கள் பிராணன், அபானன், உதார்
னன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ் செயன் ஆக-10.
தச (பத்து) நாடிகள் : இடைகலை, பிங்கலை, சுழுமுனை,
காந்தாரி, அத்திரி, சுகுவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி ஆக-10,
வசனுதிகள் (தொழிற்கருவிகளின் செயல்) : கதைத்
தல், நடத்தல், கொடுத்தல்-ஏற்றல், மல சலங் கழித் தல், மகிழ்தல் (ஆனந்தம்) ஆக-5.
வாக்குக்களாவன : சூக்குமை, பைசந்தி, மத்திமை,
வைகரி ஆக-4.
குணங்களாவன : சாத்துவிகம், இராசதம், தாமதம்,
ஆக-3.
அகங்காரங்களாவன : சாத்துவிக அகங்காரம், இரா சத அகங்காரம், தாமத அகங்காரம் ஆக-3.
எனவே உள் நிலைக் கருவிகள் மூன்று வகையிலும், முப்பத் தாறும், புற நிலைக் கருவிகள் பதினுெரு வகையிலும், அறு பதும், ஆகத் தொண்ணுாற்று ஆறு, தத்துவங்களாகும்

-சமய இயல் 17
5. சைவ சமய குரவர்கள் நால்வர்.
தற்போதம் இழந்து சிவபோதந் தோன்றி, சிவமாந் தன்மை எய்தி, திருவருட் செயலாலே, பல அற்புதங்களைச் செய்து, சைவ சமயமே மெய்ச் சமயமென்று, தாபித்தவர் கள். இவர்களைச் சைவ சமயிகள் என்றும் மறக்காது, வணங்கிப் பூசை செய்ய வேண்டும்.
வேதாகமங்களில் உள்ள ஞானப் பொருள்களை, தேவார திருவாசகங்களாய்த் தோத்திர வடிவத்தில், திருவாய் மலர்ந்து பாமாலையாக இறைவனுக்குச் சூட்டி, மகிழ்ந்தவர் கள், இச்சைவ சமய ஆசாரியர்கள். இவர்கள் :
1. திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனர் : இவர் தேவா ரத்தில் 1ம், 2ம், 3ம் திருமுறைகளைத் தந்தருளியவர்.
2. திருநாவுக்கரசு நாயனுர் : இவர் தேவாரத்தில் 4ம்,
5ம், 6ம் திருமுறைகளைத் தந்தருளியவர்.
3. திரு சுந்தர மூர்த்தி நாயனூர் : இவர் தேவாரத்தில்
7ம் திருமுறையைத் தந்தருளியவர்.
4. திரு மாணிக்கவாசக சுவாமிகள் : இவர் திருவாசகம், திருக்கோவையார் என்கின்ற 8ம் திருமுறையைத் தந்தருளியவர்.
இவர்களின் சரிதங்களை விவரமாய் அறிய விரும்புவோர் முதல் மூவரைப் பெரிய புராணத்திலும், திரு மாணிக்க வாசகரைத் திருவாதவூரடிகள் புராணத்திலும், அல்லது நாம் எழுதிய சைவக்களஞ்சியம் 1ம், 5ம் பாகங்களிலும் அறியலாம்.

Page 30
18 சைவ சமய சிந்தாமணி
6. சைவ சமய சந்தானுசாரியர்கள்.
இவர்கள் சந்தான குரவர் எனவும் அழைக்கப்படுவர். திருக்கைலாயத்தில் எழுந்தருளியிருக்கும், பூரீகண்ட பரமே சுவரரிடம், ஞான உபதேசம் பெற்றவர்கள். இவர்கள் : 1. திருநந்தி தேவர், 2. சனற்குமார முனிவர், 3. சத்திய ஞான தரிசனிகள், 4. பரஞ்சோதி மகாமுனிவர் என்பவர் களாவர். இந்நால்வரும், அகச் சந்தானுசாரியர்கள் எனப் படுவர்.
பரஞ் சோதி மகாமுனிவரிடம் உபதேசம் பெற்ற மெய் கண்டதேவ நாயனரும், அவர்வழி வந்த மாணுக்கராய்ப் பின்வரும் மூவரும் புறச் சந்தானுசாரியர்கள் என அழைக்கப் படுவர்.
அவர்களும், அவர்களியற்றிய நூல்களும் :-
1. மெய்கண்ட தேவ நாயனர் : இவர் இயற்றிய நூலே
சிவஞான போதம் ஆகும்.
2. அருள் நந்தி சிவாச்சாரியார் : இவர் இயற்றியவை களே சிவஞான சித்தியாரும், இருபாவிருபஃதும், ஆகும்.
3. மறை ஞான சம்பந்த சிவாச்சாரியார் : இவர் நூல்
இயற்றியதாகச் சொல்லப்படவில்லை.
4. உமாபதி சிவாச்சாரியார் : இவர் இயற்றியவைகளே சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினவெண்பா, போற்றிப் பஃருெடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் என் பனவாகும்.
இவர்கள் சிவாகமங்களிலுள்ள ஞான பாதத்தைத் தமிழில் சைவசித்தாந்தங்களாக, சாத்திர ரூபமாய்த் தந் திருக்கிருஜர்கள். அன்றியும் சிவஞான சாதனம் கைவரப்

-சமய இயல் 19
பெற்ற, சீவன் முத்தர்களுமாவர். இவர்களுடைய நூல்களில் இருந்து சைவ சமய உண்மைகளை நன்ருய் அறியமுடியும்.
இவர்களுக்கும் குரு பூசைகள் செய்து வணங்கி வழிபட வேண்டியது சைவர்கள் கடமையாகும். இவர்கள் சரிதங் களை, இவர்கள் எழுதிய நூல்களில் இருந்து விரிவாய் அறிய லாம். இப்புறச் சந்தான வழியில் இருந்து தோன்றிய மர பினரே தற்காலம் திருவாவடுதுறை, தருமபுரம், குன்றக்குடி வேறும் பல மடங்களில் இருந்து, சைவ சமயத் தொண்டு கள் செய்து வருபவர்கள்.
வாழ்க ! நம் , சமய, சந்தான குரவர்கள்.

Page 31
2O சைவ சமய சிந்தாமணி
ஆலய அமைப்பு இயல்
விளக்கம் : ஆலயம் - ஆ + லயம்; ஆ = ஆன்மா, லயம் =சேர்தல்-ஒடுங்குதல். எனவே கடவுளுடைய திரு வடியில், ஆன்மா ஒடுங்குதற்குரிய இடம்.
ஆ - ஆணவமலம், லயம் = அடங்குதல், ஆகையால், ஆணவமலம் அடங்குதற்குரிய இடம்.
கோவில் -கோ+ இல்; கோ - கடவுள்-அரசன் இல் = தங் குமிடம்; ஆகையால் அண்ட, பிண்ட சராசரங்கள் எல்லா வற்றையும், ஆண்டு நடத்தும், அரசராகிய கடவுள், ஆன் மாக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டுத் தங்கும் இடம் என்றும் பலபொருள்களை உடையது.
சைவ சமயக் கோவில்கள் ஆகம விதிகளின் படியே அமைக்கப்படுகின்றன. பிற சமயக் கோவில்கள் போல் சைவக் கோயில்கள் கருத்தின்றி ஆக்கப்படவில்லை.
சைவ ஆலயங்களில், சிற்பம், ஒவியம், தத்துவம், ஞானம் முதலிய பேருண்மைகளை உணர்த்தும் கலைகளையும், நுண் பொருள்களையும் காணலாம்.
அந்த அமைப்புகள், ஆன்மாக்களுக்கு, பேரறிவுகளையும், உலகத் தோற்ற ஒடுக்க விசித்திரங்களையும், பக்தி, வைராக் கியம், ஞானம், முதலியவைகளையும், உதிக்கச் செய்கின்றன.
ஆலயங்களில், ஆகமவிதிப்படி அமைந்த விமானம்தூபி-சிகரம், கோபுரம், கொடி ஸ்தம்பம் முதலிய பல அங்கங் கள் அமையப் பெற்றவையாய், சித்திர, ஒவியச் சிறப்புக் களுடன் விளங்குபவைகளையே முறைப்படி அமைந்த கோவில் கள் எனவும், அவ்வாறு தூபி அமைக்கப்படாமல், விதிப்

-ஆலய அமைப்பு இயல் 2
படியோ அல்லாதோ அமைக்கப்பட்டு, வழிபாடு செய்யப் படும் கோவில்களையே, மட ஆலயங்கள் எனப் பெரியோர் வகுப்பர். v
இவ்வாருகிய அமைப்புகளைவிட இருதய கமல ஆலயத் தை விரித்து, ஞானப் பொருள் அமைய விதிப்படி விளக்கும் இருதயப் பிரஸ்தார ஆலயத்தின் அமைப்புகள் இவைகளி லும் விநோதமாய் அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அமைந்ததே சிதம்பர ஆலயமாகும்.
இங்கு மடாலயம், இருதயப் பிரஸ்தாரம் அல்லாத விமானம்-தூபி அமைந்த சரீரப் பிரஸ்தார ஆலயங்களின் அமைப்புக்களில் சிலவற்றைக் காட்டி, அவற்றின் கருத்துக் களையும் சுருக்கித் தருவாம் : சில அமைப்புகளுக்கு, பலவாறு பொருள்படக் கூறவும், இடங்கள் ஏற்படும். அப்படியான இடங்களில் பொருத்தமானவைகளை, ஏற்றுக்கொள்ளலாம்.
அண்ட பிண்ட சமம்
காணப்படுகின்ற உலகம் அண்டம், காணப்படுகின்ற சரீரம் பிண்டம். அண்டத்தில் அமைந்திருப்பவை பிண் டத்திலும், பிண்டத்தில் அமைந்திருப்பவை அண்டத்திலும் அமைந்துள்ளன என்பதே நமது சமய நூற் கொள்கைகள்,
இவ்வுண்மைகளைச் சாதாரண மக்களாகிய நாம் ஒப்பா விட்டாலும், யோகிகளும், ஞானிகளும், நன்கு அறிவர். அதனுலேயே, கோயில் வழிபாட்டை அவர்கள் வெறுப்ப
அண்டத்தில் இறைவன் அமைந்துள்ள கருத்தை, பிண் டத்தைக் கோயிலாய் அமைத்து, விளங்க வைத்திருக்கின் றனர்.
“ எண்டரும் பூதமைந்தும் எய்திய நாடி மூன்றும்
மண்டல மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினுலே
பிண்டமும் அண்டமாகும் பிரமனுேடைவராகக்
கண்டவர் நின்றவாறும் இரண்டிலும் காணலாமே '

Page 32
22 சைவ சமய சிந்தாமணி
என்று ஞானசாரியார் கூறினர். புறத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒரு மனிதன் (விராட் புருடன்) நிமிர்ந்து மேல் நோக்கிப் படுத்து இருக்கும் பாவனையில் அமைந்திருக் கின்றது.
மண்டபங்கள்
பூரணமாய் அமைந்துள்ள பெரிய ஆலயங்களை நாம் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரண கோயில் அமைப்பையே கூறுவாம்: ஆறு மண்டபங்கள் அமைந் திருக்க வேண்டு மென்று நூல்கள் கூறுகின்றன. ஆனல் ஆறுக்குக் குறைவாகவும் சில கோயில்களில் உண்டு. பெயர் களையும் பொருள்களையும் கீழே காண்க :-
மண்டபங்களின் பஞ்ச கலைகள்| ஆறு. அங்கங்கள்
பெயர்கள் | ஆதாரங்கள −− • • கர்ப்பக் கிருகம்
(மூலஸ்தானம்) மூலப் பிரகிருதி I ஆக்ஞை அர்த்த மண்டபம் சாந்தியா தீதை விசுத்தி புருவநடு மகா மண்டபம் சாந்தி அநாகதம் கண்டம் ஸ்நபன மண்டபம் வித்தியாகலே மணிபூரகம் ud til அலங்கார மண்டபம் பிரதீட்டை சுவாதிட்டானம் வயிறு SLJI LGJ LLuth நிவிருத்தி மூலாதாரம் ஆசனம்
மண்டபங்களின் பெயர்களை, இடத்துக்கு இடம் வேறு பெயர்களாலும் அழைப்பர். ஆனல் பொருள் மாருது.
கோபுரவாயிலுக்கு வெளியே சில இடங்களில் மண்டபம் இருப்பதும் உண்டு. அதைச் சோபான மண்டபம் என்ருே பிரசாரமண்டபம் என்றே சொல்லுவார்கள்.
இவைகளை விட, வசந்த மண்டபம், யாக மண்டபம், வாகன மண்டபம் முதலிய வேறு மண்டபங்கள் இருக்கின் றன. பெரிய கோயில்களில், அநேக மண்டபங்கள் பல

-ஆலய அமைப்பு இயல் 23
பெயர்களுடன் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் இருக்கும் கோயில்களும் உள்ளன. அது மேற்காட்டிய ஆறு ஆதா ரங்களுக்கு மேலாய் உச்சியில் உள்ள ஆயிரம் இதழ்களை உடைய சகஸ்சிராரம் என்னும் மேலாதாரத்தைக் குறிப்பது என்பர்.
விமானம்-துபி-சிகரம்
இது கோயிலில் மூலஸ்தானத்தில் இருந்து மேல் நோக்கி, தாமைரைப் பூ வடிவமாய் அமைந்து, முடியில் ஒரு கலசம் உடையதாய் உள்ளது. பல சிற்ப வேலைப்பாடமைந்த உரு வங்களை உடையது.
ஆழ்ந்த நுண்ணிய சமயத் தத்துவங்களைப் புலப்படுத்து வது. நமது இதய கமல (தாமரை) வடிவமாய் இருக்கின்ற தென்றும், அதில் சிவபெருமான் மேலாய் விளங்குகின்ருர் என்றும், யோகிகளும், ஞானிகளும், அகத்தில் அவரையே பூசிக்கின்றனர் என்றும், அக்கமலம், முப்பத்தாறு தத்து வங்களையும், அடக்கி உள்ளது என்று சிலரும்;
அது ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாலுள்ள துவாத சாந்தத்தைக் கருதுவது என்று சிலரும்; சிவபெருமானுடைய திரு முடியைக் கருதுவது என்று சிலரும், காட்டுவர். எவ் வாறு கூறினலும், இவைகள் எல்லாவற்றையும் கடந்த முடிவிலே தான் அந்த ஆண்டவனைக்காணலாம். இதை
அசலலிங்கமாய், அல்லது தூலலிங்கமாய்க் கொண்டு, சிவபெருமான் நின்று காட்சி கொடுத்து, அருள் புரிகின்றர் என்று சிவலிங்க மகத்துவம் கூறுகின்றது,
துவசத்தம்பம்-கொடிமரம்
கொடிஏற்ருமல் இருக்கும் போது, சிருஷ்டியாதி பஞ்ச
கிருத்தியங்களாகிய புறச்சார்பை நோக்காது, சர்வ சங்கார காலத்தின் முடிவில், சிவபெருமான் தமது சத் தி யை

Page 33
24 சைவ சமய சிந்தாமணி
அடக்கிக் கொண்டு நிற்கும், சொரூப நிலையைக் குறிப்பதா யுள்ளது.
இதனலே இதனைச் சூக்குமலிங்கம் என்பதுமாம். யோக பாவனையில் யோகியின் முதுகுத் தண்டத்தையும், நாடி பாவனையில் பிராணவாயு செல்லும், சுழுமுனு நாடியையும் குறிக்கும் என்பாரும் உளர். இதன் விரிவை மகோற்சவ இயல் கொடியேற்றம் என்பதில் காண்க.
கோபுரம்
திருவடி அதாவது பாதத்தைக் குறிப்பது. கோவிலின் வாயிலில் கட்டப்பட்டிருப்பது. இதுவும் பல சித்திரக் கலை
களும், நுண்ணிய கருத்துக்களும் உடையது. 6ft கோபுர வாசல் ’’ என்ருர் திருமூல நாயனார். அசல அல்லது தூலலிங்கம் எனவும், ஆலயத்துட் சென்று வழிபட இயலாத வர்களும், தூரத்தில் காண்பவர்களும், சிவபெருமானைக் காண்பதாகக் கருதி, வணங்கும் பொருட்டாகவும், அமைந்த தாகவும் உள்ளது. கோபுர வணக்கம் பெருமான் திருவடி
தரிசனம் ஆகும்.
நந்தி
கோயில்சளில் பலிபீடத்துக்குச் சமீபமாய் மூல மூர்த்தி யைப் பார்த்தபடி அமைந்திருப்பது, மூல மூர்த்தி எதுவோ அதன் ஊர்தியே-வாகனமே, நந்தி என்பதாக வைக்கப்பட் டிருக்கும். நந்தி= எருது-மாடு,
9 Ο
இது முத்தி பெற்ற ஆன்மாவைக் குறிப்ப தென்றும், ஞான நூற்படி பசு (ஆன்மா ) வைக் குறிப்பதென்றும், கொள்ளப்படும். மூல மூர்த்தியைப் பார்த்தபடி இருப்ப தால், ஆன்மாக்களாகிய நாம் அதையே நாடவேண்டும் என் பது குறிப்பாகும். மல நீக்கம் பெற்ருல் சிவத்தன்மை எய்தி பூசையும் பெறலாம்.

-ஆலய அமைப்பு இயல் 25
அதிகார நந்தி
எல்லா ஆலயங்களிலும், இது இருக்காது. திருக்கை லாயத்தில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டிருக்கும் போது, கைலாச வாசல் காப்பாளராய் நந்தியெம் பெரு மான் இருக்கின்ருர் என்றும், அவரது அனுமதி பெற்றுத் தான் உள்ளே செல்ல வேண்டும் என்றும், அப்போதுதான் சிவபெருமானைக் காணமுடியும் என்பது கருத்தாகும். ஆகவே ஆலய வழிபாட்டுக்குச் செல்வோர் நந்தியெம் பெரு மானை வேண்டி, உத்தரவு பெற்றதாகப் பாவனை பண்ணி, உள்ளே சென்று வழிபடவேண்டும், என்பது முறையாயுள் ளது.
மேலும் அதன் நான்கு கால்களும், நான்கு வேதங்களை யும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு சிவபுண்ணியங்களையும், குறிக்கின்றன என்றும் சொல்வர்.
இந்த அதிகார நந்தி இல்லா விட்டாலும், கோயிலுட் பிரவேசிக்குமுன் மேற்காட்டிய நந்தி போன்றவைகளை யா வது இவர் போல் இருப்பதாகக் கருதி வேண்டிக்கொண்டு உள்ளே செல்க.
பலி பீடம்
இது சிவ சக்தி என்றும், பத்திர லிங்கம் என்றும், பாசம் என்றும் பொருள்படும். சிவசக்தியின் திருவருள் முன்னி லையால் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய தீய குணங்களே ஆன்மாக்தளாகிய நாம் நீக்க வேண்டும் என்பதையும், அப் போதுதான் ஆணங்ம் நீங்கும் என்றும், ஆகவே ஆன்ம போதம் முதலிய தீயகுணங்களைப் பலியிடும். படியும் குறிப் பாய் உணர்த்துவது.
திரைச் சீலை
ஆலயங்களில் மூல மூர்த்தியை மறைத்துத் திரைச் சீலை ஒன்று தொங்குகின்றது. இதைத் திரோதான சத்தி என்பர்.
4.

Page 34
26 சைவ சமய சிந்தாமணி
இச் சத்தியைப்பற்றி பாச இயல் என்னும் பகுதியில் விபர மாய்க் காண்க. ஆன்மாக்கள் சிவத்தை அடையும் பக்குவம் வர இது நீங்கிவிடும்; அப்போது சிவப்பேறு கூடுமென்பது. இதை மாயைத் திரை என்பாருமுண்டு.
கதவுகள்
கோவில்களில் பல கதவுகள், மண்டபங்கள் தோறும் இருக்கின்றன. ஆன்மாக்களும், திருவருளால் பல படிகள், அதாவது கதவுகளைத் திறந்து, உள்ளே சிவபெருமானைக் காணப் போக வேண்டும்.
羲 முன்புறத்தில் உயர்ந்த, கனத்த, வலிய, உறுதியான முதற் கதவு ஒன்று இருக்கின்றது. அது கோபம்-வெகுளி, என்ற எல்லாத் தீமைகளுக்கும், முதலாகவுள்ள தீய குணத் தைக் கருதுவது. அக்குணம் நீங்க, அவா, ஆசை, மயக்க மாகிய, மற்றைய கதவுகளாகிய தீய குணங்களும் நீங்கும் என்பதைக் காட்டுவன.
கோமுகை
மூலத்தானத்தோடு சம்பந்தப்பட்டு வெளிப்புறமாய் வடதிசை நோக்கிப், பசுவின் முகம் போல நீண்டிருப்பது. அதன் இடமாகவே உள்ளே இருந்து அபிஷேக நீர் பால் முதலியவை வருகின்றன . அது சிவபெருமானுடைய திருவருளைச் சிவசத்தி வாயிலாகவே நாம் பெற வேண்டும் என்ற பாவனையில் அமைந்துள்ளது. சிவசத்தி உயிர்க ளுக்கு, கிருபை சுரக்கின்றது, என்பது கருதியே அதன் மூல மாய் வரும் தீர்த்தத்தை நாம் ஏந்தித் தலையிற் தெளித்தும் கண்ணில் நனைத்தும், உள்ளே பருகியும் புனிதம் அடை கின்ருேம்.
வீதிகள்
பிரகாரங்கள் என்றும் சொல்லப்படும். கோவில்களில் இடவசதிக்கேற்ப வீதிகள் இருக்கின்றன.

-ஆலய அமைப்பு இயல் 27
ஒரு வீதி : இது பல வீதிகளுக்குரிய பொருள்களையும் அடக்கும்.
மூன்று வீதிகள் : தூலம் (பரு), சூக்குமம் (நுண்), காரணம் (மிகநுண்) என்னும் மூன்று உடம்புகளைக் கருதும்.
ஐந்து வீதிகள் : அன்ன, பிராண, மனுே, விஞ் ஞான, ஆனந்த என்னும் பஞ்ச (ஐந்து) கோசங்களைக் கருதும்.
(கோசம்- உறை-போர்வை-சட்டை)
ஏழு வீதிகள் : சரீரத்தில் உள்ள இரசம், இரத்தம், தசை, மேதை, எலும்பு, மச்சை, சுக்கிலம் என்னும் ஏழு, (சப்த) தாதுக்களைக் குறிப்பன. (இரசம் அல்லது தோல்).
நமஸ்காரங்கள், பிரதட்சணங்கள், மூன்று முதலிய ஒற்றைப்படச் செய்ய வேண்டும் என்பது மேற்காட்டிய பிர கார விதிகளினல், அவைகளுக்கு அப்பாலே சிவபெருமான் இருக்கின்ருர், என்பதை ஆன்மாக்கள் நினைவு கூறுதற்காம். இவ்வாறில்லாமல் அமைந்துள்ள வீதிகளுக்கும், இவைபோல் பொருளுண்டென்று அறிக.
பஞ்ச சபைகள்
சிதம்பரம் முதலிய பெரிய ஆலயங்களில் இச்சபைகள் இருக்கின்றன என்பர். ஆனல் சிதம்பரத்திலேதான் காண Փւգսյւb.
1. இராச சபை இது அன்னமய கோசம். அதாவது கண்ணுக்குத் தெரியும். தூல (பரு ) உடம்பைக் குறிப்பது. 2. தேவ சபை இது பிராண வாயுவும், கர்மேந்திரி
யங்களும், கூடி நிற்பதைக் குறிப்பது.

Page 35
28 சைவ சமய சிந்தாமணி
3. நிருத்த சபை இது மனுேமய கோசம்; அதாவது மனமும் கன்மேந்திரியங்களும், கூடி நிற்பதைக் குறிப் ligil.
4. கனகசபை இது-விஞ்ஞான மயகோசம், அதாவது புத்தியும் ஞானேந்திரியங்களும், கூடி நிற்பதைக் குறிப்பது.
5. சிற்சபை இது ஆனந்த மயகோசம். அதாவது பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பதைக் குறிப் பது. இவ்வாறு இவைகளின் பொருள்களைக் கூறு கின்றனர்.
"புல்லினுல் ஒன்றுகோடி புதுமண்ணுற் பத்துக்கோடி
செல்லுமாங் காலந்தன்னில் செங்கல்லால் நூறுகோடி அல்லினுங் குழலாய் கேளாய் ஆலயமடங்கள் தன்னக்
கல்லினுற் சமைத்தபேர்கள் கைலவிட்டகலாச்தாமே "
مجھے
ཁ་,

-கடவுள் இயல் 29
கடவுள் இயல்
விளக்கம் : பதி இயல் அல்லது மூர்த்தி இயல் என்ரு லும், பொருந்தும். கடவுள், சிவம், பதி, இறைவன், தேவன், ஆண்டவன் என்ற இன்னுேரன்ன பல பெயர்க ளால் பரம் பொருளைப் பல சமயத்தவரும் அழைக்கின்றனர்.
1. கடவுள் : எல்லாப் பொருள்களையும் கடந்து, உள்
இருந்து இயக்குகிறவர்.
2. சிவம் மங்களமான ஞான சொரூபியாயும், சுயம்
பிரகாசமாயும் இருக்கிறவர்.
3. பதி ஆன்மாக்களுக் கெல்லாம் தலைவராய், இருக்
கிறவர்.
4. இறைவன் : எல்லாப் பொருள்களிலும், தங்கி இருக்
கிறவர்.
5. தேவன் ஆன்மாக்களுக்குப் பிரகாசத்தைக் கொடுக்
கிறவர்.
6. ஆண்டவன் எல்லா உலகங்களைபும் ஆண்டு நடத்து கிறவர். இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன. ** பேராயிரம்பரவி ’’ என்றும், "" ஆயிரந் திருநாமஞ் சொல்லி ‘' என்றும் சமயாசாரியர்கள் கூறி இருக் கின்றனர்.
' கடவுளுக்கு உருவம் இல்லை; உருவம் உண்டு; அது ஆண்வடிவம்; பெண்வடிவு இல்லை; ஆணும் பெண்ணும் இல்லாதது.'' என்று பிற சமய வாதிகள் கூறுகின்றனர். சைவ சமயம் இவர்கள் கூறும் கூற்றுக்கள் எல்லாவற்றை யும் ஏற்றுக் கொண்டு, அவைகளுக்கு அப்பாலும், கூறுகின் நறது. ‘'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனுதே "' என்றும் , 50
6 S

Page 36
O சைவ சமய சிங்காமணி3OT_ சைவ சமய சாதாமண
நாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க்கு ' என்றும் , ** மறையினுல் அயனுல் மாலால் மனத்தினுல் வாக்கால் மற்றும், குறை விலா அளவினுலும், கூருெ ணுதாகி நின்ற "" என்றும், , , " சிவனரு வுருவு மல்லன் சித்தினுேடசித்து மல்லன், பவ முதல் தொழில்கள் ஒன்றும், பண்ணிடுவானு மல்லன் "' நன்றும் எடுத்துக் காட்டுகள் கூறுகின்றன.
சைவம் கடவுளின் வடிவத்தை, சொரூப நிலை என்றும், நடத்த நிலை என்றும், இரண்டாகக் கூறுகின்றது. கடவுள் 西 அக்கினியும் சூடும் போலப் பிரிக்க முடியாத சத்தியை உடை
வர் என்கின்றது.
சாரூப நிலை
மனத்தால் நினைக்கவும், வாக்கால் சொல்லவும், முடி அநாதி முத்த சித்து உருவாய நிலை; படைப்பாதித் گ"ur தாழில்களை நோக்காது, ஒன்றிலும் தோய்வின்றி, சுயம் ரகாசமாய், சத்தியை அடக்கிக் கொண்டு நிற்கும் நிலை.
சொரூப நிலையில் சத்தி ஞான ரூபியாயிருக்கும். அப் போது அது பராசக்தி எனப்படும். இந்நிலை, சகல அண்ட்ராசரங்களும், ஒடுங்கியபின் உள்ள தனித்த நிலை. பரம ஒவமாய நிலை-அதீதநிலை. அன்றியும் உருவமற்றதாய், குணம், றி இல்லாததாய், நிர்மலமாய், ஏகமாய், நித்தமாய், கண்டிதமாய், அசலமாய், உயிர்களின் அறிவுக்கறிவாய், னந்த சொரூபியாயும் இருப்பது. இதைத்தான் ‘* அந்த டிவாகில் உன்னை ஆர் அறிய வல்லார்?' என்ருர் மணி
சகா.
சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய ஆன்மாக்கள் அச் Tebu நிலையை எப்படி வணங்க முடியும் ? நம்முடைய ሠse”Ub சூனியத்தில் (ஒன்றுமில்லாமையில்) நிலைத்து நிற்கக் 5、“ ஆற்றல் உடைய தல்ல.

-கடவுள் இயல் 31
ஒருபொருளைக் குறியாகக் கொண்டுதான் மனம் நிலைத்து நிற்க, அடங்கி நிற்க, முடியும். ஆன்ம இயல்பை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சர்வ வல்லமையுள்ள இறை வனே அதன் இயல்பை நன்கு அறிவர்.
ஆன்மாக்கள் அநாதியே ஆணவமலத்தால் (அஞ்ஞானத் தால்) மறைப்புண்டு, அறிவு செயல்களை இழந்து நிற்பதை, கருணைவள்ளலாகிய கடவுள் அறிந்து, அவர்களுக்குள்ள மறைப்பை, படைத்தலாதிய கிருத்தியங்களால் இறைவணு கிய தன்னையும், ஆன்மாக்களாகிய நம்மையும், உலகத்தை யும், அறியச் செய்தார். அவ்வாறு செய்ய நின்ற நிலையே தடத்த நிலையாகும்.
தடத்த நிலை
சொரூப நிலையில் உள்ள பரமசிவம், பராசக்தியோடு கூடி, புறப் பொருட் சார்பு நோக்கி, பஞ்ச கிருத்தியங்களைச் செய்யத் திருமேனி கொண்ட நிலையாம். அந்நிலையிலேயே
பதி எனப்படுவர்.
பதி நிலையில் சிருஷ்டியாதி காரியங்கள் சத்தியின் காரிய வேறுபாட்டினலே ஆவன.
சொரூப நிலையில் அடங்கி நின்ற பராசக்தியின் ஒரு கூறு
ஆதி சத்தியாயும், பின் இச்சா சத்தி, ஞான சத்தி, கிரியா சத்தியாயும் பெயர் பெறும்.
சத்தி எவ்வெவ் வடிவங்களைக் கொள்ளுமோ, பதியும் அவ்வவ் வடிவங்களைக் கொள்ளும். ' சத்திதன் வடிவே எனவும், "' எத்திறம் அவ ளும் நின்ருள், அத்திறம் அவனும் நின்முன் '' எனவும் ஞான சாத்திரங்கள் கூறுகின்றன.
9
தென்னில் தடையிலா ஞானம்
யோகியாய் இருந்தும், போகியாய் இருந்தும், வேகி யாய் இருந்தும் முறையே அருளாலும், அன்பாலும், ஆக்

Page 37
32 சைவ சமய சிந்தாமணி
கினையாலும் - தண்டனையாலும், அருள் பாலிக்கின்றர். *" போகியாய் இருந்துயிர்க்குப் போகத்தைப் புரிதலோரார், யோகியாய் யோக முத்தி, உதவுதலதுவுமோரார், வேகியா ஞற் போற் செய்த வினையினை வீட்டலோரார் ‘’ என்னும் ஞான நூற் கொள்கைகளையையும் அறிக.
ஆகவே முன்சொன்னபடி, ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாக, இறைவன் அருவம், அருவுருவம், உருவம், என்னும் மூன்று திருமேனிகளை உடையவராய் இருக்கின்ருர் .
1. அருவம் : சிவம், ஞானகிரியா சக்திகளோடு கூடும் நிலை; அந்நிலையில் முறையே சிவம், சத்தி, நாதம், விந்து எனப் பெயர் பெறுவர். அப்பொழுது உருவம் தெரியாத நிலை.
2. அருவுருவம் : சிவம் ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாய்ப் பொருந்த நிற்கும் நிலை; இது சதாசிவம் எனப்படும்; உருவம் உள்ளது போலும், இல்லாதது போலும் உடைய வடிவம், இதுவே சிவலிங்கவடிவம்.
3. உருவம் : சிவம், கிரியாசத்தி மிக்கும், ஞான சத்தி குறைந்தும், நிற்கப் பொருந்தி நிற்கும் நிலை; இது மகேஸ்வரர் எனப்படும்; எல்லா அங்கங்களும் வெளிப் படத் தோன்றும், வடிவங்களாகிய, பின் கூறப்படும் சந்திர சேகரர் முதலிய வடிவங்களாம்.
* கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற் புதக் கோலம் நீடி ' என்றபடி ஆன்மாக்களை ஆட்கொள் ளும் படியே, தம் பயன் கருதாது, இவ்வடிவங்களைக் கொண் டிருக்கின்றர். சைவ சமயிகள் இந்த மூன்று திருமேனிகளை யும், ஆலயங்களில் வழிபடுகின்றனர்.
அருவுருவத் திருமேனியாய், சிவம், சத்தி, நாதம், விந்து, என்னும் திருமேனிகளை, சிதம்பர இரகசியம்,-சிற்

-கடவுள் இயல் 33
சபை-பரவெளி என்பவைகளாகப் பாவனைபண்ணி வழிபட்டு வருகின்றனர்.
அருவுருவத் திருமேனியாய்ச் சதாசிவமூர்த்தியினுடைய திருமுகங்களில் தோன்றிய சிவலிங்கங்களை வழிபட்டு வரு கின்றனர்.
உருவத் திருமேனியாய், சிவசத்தியின் காரியமாயுள்ள விநாயகர் முதலிய முகூர்த்தங்களையும், சந்திர சேகரர் முத லிய மகேஸ்வர முகூர்த்தங்களையும், வழிபட்டுவருகின்றனர்.
சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு, சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்திலும், சிவனடியார் இடத்திலும், நிற்கின்ருர் என்றும், மூர்த்தி, தலம், தீர்த்தமாய், அமைந்திருக்கின்ருர் என்றும் கும்பம், தம்பம், விம்பங்களினிடமாய் இருக்கின்ருர் என்றும், ஆக மங்கள் கூறுகின்றன என்பர் சைவ ஆசாரியர்கள்.
சைவ சமயிகள் கடவுளை, படமாடக் கோயிலிலும், நடமாடுங் கோயிலிலும் வழிபடுகின்றனர்.
படமாடக் கோயில்தான், நாம் முன் கூறிய ஆலய அமைப்பில் கடவுளின் வடிவங்களை வைத்து வழிபாடு செய் யும் இடமாகும்; மூர்த்தி என்பதும், விம்பம் என்பதும், அத னுள் இருக்கும் சுவாமியையே, தம்பம் என்பதும், கும்பம் என்பதும் இதில் அடங்கும்.
தலம் தீர்த்தம் என்பவைகளை, தல, தீர்த்த இயலிற் காண்க. நடமாடுங் கோயில்தான் சைவ ஆசாரியர், சிவனடி யார், சீவன் முத்தர் முதலிய மகான்கள். இவர்களுடைய இருதயத்தை இடமாய்க் கொண்டு இறைவன் அருள் செய் கின்ருர். இதைக் குரு, சங்கம இயலிற் காண்க.
எங்கு எங்கு எவ்வடிவங்களை ஆண்டவணுகப் பாவித்து வழிபட்டாலும், அங்கு அங்கு அவ்வடிவமாய் நின்று அருள் செய்யும் ஆண்டவன் ஒருவனே.
5

Page 38
34 சைவ சமய சிந்தாமணி
ஆகையால், சைவர்கள் ஒரேகடவுளையே, விரும்பிய பல வடிவங்களில் காண்கின்றனர்; பல கடவுள் வணக்கம் சைவ
சமயிகளிடம் இல்லை.
"" யாதொரு தெய்வங் கொண்டிர் அத் தெய்வமாகி யாங்கே, மாதொரு பாகனூர்தாம் வருவ்ர் ' ; ' எங்கெங்கு பார்த்தாலும் எவ்வுயிரும் அவ்வுயிராய் அங்கங்கிருப்பது நீ’’ என்னும் ஆப்த வாக்குகளை அறிந்தோர்க !
ஆலயங்களில் ஆகம விதிப்படி அமைத்து வழிபடும் வடி வங்களை விக்கிரகம் என்றும் கூறுவது வழக்கம்.
விக்கிரகம்= வி+கிரகம். வி=மேலான; கிரகம்-இடம்வீடு-இல்லம். எனவே, வழிபடுபவர்களுக்கு அருள்புரியும் பொருட்டு மேலாகக் கொண்டு, கடவுள் எழுந்தருளியிருக் கும்இடம் என்பது பொருளாகும்.
சூரியனுக்கும் பஞ்சுக்கும் இடையில் சூரிய காந்தக் கண் ஞடியைப் பிடித்தால் அக்கண்ணுடி மூலம் பஞ்சில் நெருப்புப் பிடிக்கும். அது போலவும், பாலில் உள்ள நெய் தயிரில் விளங்கித் தோன்றுவது போலவும், விக்கிரகங்களின் மூல மாக கடவுள் அருள் புரிகின்ருர்,
மேலும், பனிக்கட்டி, தண்ணிர் இருபொருளும், ஒன்ருக வேண்டுமானுல், தண்ணிர் பணிக்கட்டியாக மாறவேண்டும்; அல்லது பனிக்கட்டி தண்ணிராக மாறவேண்டும். அப்போது தான் இரண்டும் ஒன்று கூடும். அதுபோல் இறைவனை நாம் அடைய, அவருக்கு உருவம் இல்லை என்ருல், பனிக் கட்டி போன்றுள்ள நாம் தண்ணிர் போன்று உருவம் இல்லாத கடவுளை அடையத் தண்ணிராக வேண்டும்; அப்படி உருவம் இல்லாத நிலையை அடைய ஆன்மாக்களாகிய நமக்கு, வல்லமை இல்லை; இது தெரிந்தே இறைவன் உருவம்

-கடவுள் இயல் 35
இல்லா விட்டாலும், பனிக்கட்டிபோல உருவங்கொண்டு விக்கிரகங்களின் இடமாக நின்று அருள் பாலிக்கின்ருர்,
*" கடவுள் சர்வ வல்லமை உள்ளவர்; எங்கும் நிறைந் தவர் ** என்கின்றனர், எல்லாச் சமயத்தவர்களும்; அப்படி யானுல் அருவமான கடவுள் உருவமாகவும் முடியுந்தானே ? ‘* உருவமாக ஆகமாட்டார், வழிபடக் கூடாது’’ என்ருல், அவருடைய சர்வ வல்லமைக்கு இழுக்கு ஏற்படக் கூடும். *" கூடும் " என்ருல் விக்கிரக ஆராதனை தேவை என்பது
முடிவாகும்.
எந்தச் சமயத்தவர்களும், மறைமுகமாகவோ, வெளிப் படையாகவோ ஏதோ ஒரு வடிவை விக்கிரக ஆராதனை போலச் செய்கின்ருர்கள் என்பதை எவராலும் மறுக்க (ւpւգ-Ամո Ֆl.
சைவ சமயம் எல்லாச் சமய வழிபாட்டுக் கொள்கை களையும், அடக்கியுள்ளது என்பதை, மேற்காட்டிய முத்திரு மேனி அமைப்புக்களிலும் காணலாம்.
ஒரு லாந்தரின் (விளக்கின்) நாலுபக்கக் கண்ணுடிகளி லும் நான்குவகையான வேறுபட்ட பல நிறங்களைத் தீட்டி ஒட்டிவிட்டு, உள்ளிருக்கும் திரியைக் கொளுத்தி விட்டுப் பார்த்தால், அந்நிறங்கள் நான்கையும், வெவ்வேறு நிற மாய் உள் நின்று விளங்கச் செய்வது, திரியில் நின்று எரியும் ஒளி ஒன்றே, என்பது யாருக்குத்தான் நன்கு தெரியாது !.
ஆன்மாக்களின் அறிவுப் பக்குவ வேறுபாடே, கடவுள்
பல வடிவமாய் நின்று அருள் புரிய வேண்டி வந்தமைக்குக் காரணம்,
சிவலிங்க விளக்கம்
அருவுருவத் திருமேனியாகிய சதாசிவ மூர்த்தியைக் குறிப்பது சிவலிங்கம்.

Page 39
36 சைவ சமய சிந்தாமணி
邹 Ei. *ూ 疆
சிவலிங்கம் பார்வைக்கு உருவமும் அங்கங்கள் பூரண மாய் அமையப் பெருமையால் உருவம் இல்லாமையுமாகிய இரு தன்மைகளையும் உடையது. சிவத்தின் பெயர்=சிவ லிங்கம். சிவம் - கடவுள்; லிங்கம்- அடையாளம்; சிவலிங் கம் = கடவுளைக் காட்டும் அடையாளம்.
சி=நாத வடிவமான சிவம்; அது சிவலிங்கத்தின் மேலி ருக்கும், தண்டுபோல நீண்டிருப்பதைக் குறிப்பது.
வ=விந்து வடிவமான சத்தி; அது கீழ் அமைந்த பீடம்; அதை ஆவுடை என்பர்; அது சத்தி வடிவமானது. ஆவுடை யின் மேற்புறத்தில் கோமுகை போல் ஒரு பகுதி நீண்டிருக் கும். லி - லயம்-ஒடுக்கம்; கம்=போதல்-தோன்றுதல். எனவே, லிங்கம்= சகல அண்ட சராசரங்களும் தோன்றி, நின்று, ஒடுங்குவதற்கு நிலைக்களமாய் உள்ளது.
உலகத்தில் உயிருள்ள பொருள்கள், தோன்றி ஒடுங்கு தலைக் காண்கின்ருேம். அதனுல் மறைவாகவோ, வெளிப் படையாகவோ, அதன் அம்சங்கள் உயிர்களில் அமைந்திருக் கின்றன.
மின்சாரத்தில் ‘* பொசிட்டிவ் ** நெக்கட்டிவ் " என்ற இரண்டு சத்திகள் இருக்கின்றன.
அணுவில், பச்சை நிறமான வட்ட வடிவுடைய ஒன்றின் மேல், அதன் நடுவில் செந்நிறம் பொருந்திய ஒரு சோதி தோன்றுகின்றது என்றும், அதை இன்னது என்று சொல்ல முடியவில்லை என்றும் தற்கால விஞ்ஞானிகள், சொல்லுவ தாக, நூல்கள் கூறுகின்றன.
 
 

--கடவுள் இயல் 37
பொருள் குணி; அதன் சத்தி குணம்; எல்லாப் பொருள்
களிலும், சிவம் சத்தியாகிய இரண்டும் கலந்திருப்பதை
அறிந்து கொள்ளவே இவ்வடிவமாய் இறைவன் காட்சி கொடுத்து நின்று அருளுகின்ருர் .
இதனுலேயே, அவர் அம்மை அப்பராய் இருக்கிருர் என்று மெய்க் காட்சியுற்றேர் மொழிந்தனர். வேறு சம யத்தவர்கள் இவ்வுண்மையை அறிந்து கொள்ளாது, பிதற் றல் அறியாமையே; பாவம் !
ஆன்மாக்களுக்குப் போகியாயும், வேகியாயும், யோகி யாயும் இருந்து, இன்பம், துன்பம், வீடு, ஆகியவற்றைக் கூட்டிவைக்கிருர் . ' தோடுடைய செவியன் ‘’ ‘* மங்கை GBuuri u rg,6żir ' ' ‘‘ அவளுந்தானும் உடனேகாணக ’’ என்று சிவானு பூதிமான்கள், கண்டு அனுபவித்துக் கூறிப் போயினர்.
மேலும் பழம்பொருள் ஆராய்ச்சியாளர், மொகன் சதரோ, ஹரப்பா, முதலிய இடங்களில் சிந்து வெளி ஆராய்ச்சி நடத்தியபோது பல பொருட்களுடன் சிவலிங்கங் கள் பல கண்டு எடுத்ததையும்; சிவலிங்கவழிபாடு, மிக மிகப் பழமையான வழிபாடு என்பதையும், வெளிப்படுத்தி இருப் பதை உலகம் நன்கு அறியும்.
சிவலிங்க வகைகள்
சதாசிவ மூர்த்தமே சிவலிங்க வடிவம் என்று முன் அறிந் தோம். அவர் சாதாக்கிய தத்துவகர்த்தா.
சாதாக்கியம்= சதா+ ஆக்கியம்; அதாவது நாம, ரூபங் கள் இல்லாத சுத்த சிவம்; நாமம் ரூபம் உடையவராய் அன் பர்களாற் புகழப் படுபவர் என்பது பொருள்.
சதாசிவ மூர்த்தியினுடைய ஐந்து திரு முகங்களிலு மிருந்து, சிவ சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி

Page 40
38
சைவ சமய சிந்தாமணி
சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம், என்னும் ஐவகை லிங்கங்கள் தோன்றின.
கள்
முதல் நான்கையும் விளங்குவது கடினம். இந்த லிங்கங் வியக்தா வியக்தலிங்கம் எனவும், அவ்வியக்தலிங்கம்
எனவும், வியக்த லிங்கம் எனவும் பிரியும்.
1.
வியக்தா வியக்தனிங்கம் :- முகம், தோள், நேத்திரங் கள் விளங்குவது. அவ்வியக்தலிங்கம் :- லிங்கமும் பீடமுமாயிருப்பது.
. வியக்த லிங்கம் - எல்லா அங்கங்களும் வெளிப்படத்
தோன்றியுள்ள திருவுருவங்கள்.
மேலும் அவ்வியக்தலிங்கம் என்ற கன்ம சாதாக்கிய
மாகிய பீடமும், லிங்கமுமாயுள்ள வடிவமும் ஸ்தாபித்து, வழிபட்டோரால் பல பெயர்கள் இடப்பட்டுள்ளது.
அவையாவன:-
.
2.
3.
சுயம்பு லிங்கம் : தானே தோன்றியுள்ளது. தேவி லிங்கம் : அம்பாளினல் பூசிக்கப்பட்டது.
காண லிங்கம் விநாயகர், சுப்பிரமணியர் முதலி யோராற் பூசிக்கப்பட்டது.
தைவிக லிங்கம் : பிரமா, விஷ்ணு, உருத்திரன்,
இந்திரன் முதலியோரால் பூசிக்கப்பட்டது.
ஆரிட லிங்கம் : அகத்தியர் முதலிய இருடிகளால் பூசிக்கப்பட்டது.
. இராட்சத லிங்கம் : இராட்சதர்களால் பூசிக் கப்
பட்டது.
அசுர லிங்கம் : பாணன் முதலிய அசுரர்களால் பூசிக்கப்பட்டது.
. மானுட லிங்கம் : மனிதர்களால் பூசிக்கப்பட்டது.

-கடவுள் இயல் 39
இவை சைலம் (கல்), உலோகம், படிகம், இரத்தினம், என்பவைகளால் இயற்கையாகவேனும், செயற்கையாக வேனும், அமைந்துள்ளன.
இவைகளைவிட பூசித்து முடிந்தவுடன் ஆற்றிலேனும், குளத்திலேனும், விடப்படும் லிங்கமும் இருக்கின்றது. அதற் குச் கூடிணிகலிங்கம் என்று பெயர்.
கூடிணிக லிங்கம்
மணல், அரிசி, அன்னம், ஆற்று மண், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், பஸ்மம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சர்க்கரை, என்பவைகளில், விரும்பிய ஒன்ருல், சிவலிங்க வடிவமாய் அமைத்துப் பூசிப்பது.
ஆலயங்களில் சுயம்புலிங்கமோ, அல்லது மற்றைய கன்ம சாதாக்கிய லிங்கமோ அல்லது முழு அங்கங்களும் வெளிப்பட அமைந்துள்ள திரு உருவங்களோ அல்லது வேலா யுதம், சூலாயுதம், முதலியவையோ மூலஸ்தானத்தில் மூர்த் தியாய் இருக்கும். அப்பொழுது அதைப் பரார்த்தலிங்கம் எனவும், சூக்கும லிங்கம் எனவும் அழைப்பர்.
பரார்த்த லிங்கம்
விரும்பிய எல்லா மக்களும், வழிபடும் பொருட்டாகபிறருக்காக, கோயில்களில் நிலையாக ஸ்தாபிக்கப்பட்டிருக் கும் சுவாமியாம். தூபி, கொடித்தம்பம், கோபுரம், பலி பீடம், இவைகளும் லிங்கம் எனப்படுவதை ஆலய அமைப் பில் காண்க.
ஆன்மார்த்த லிங்கம்
ஒருவர் விசேட தீட்சை பெற்று, குருவினல் எழுந்தரு ளப் பண்ணிக் கொடுக்கப் பெற்றுக் கொண்ட சிவலிங்கம் ஒன்றை, அவரது உயிர் பிரியும் வரையும், விதிப்படி பூசை பண்ணி, வழிபடும் லிங்கமாம். இஷ்ட லிங்க வழிபாடு என்பதும் இதுவே.

Page 41
சைவ சமய சிந்தாமணி
அருள் பாலிக்கும் முறை
l.
சரியையாளர் : இவர்கள் சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளைப் பகுத்தறியாது, சிவமாகவே கருதி வழி படவேண்டும். அவ்வாறு கருதி வேண்டுவோருக்கு இறைவன் அவைகளில் வெளிப்படாது நின்று அருள் செய்வார்.
. கிரியையாளர் : இவர்கள் அத்திருமேனிகளை மந்திர
மூர்த்தியாய்ப் பாவித்து, மந்திரங்களினுல் வழிபடுவர். அவர்களுக்குக் காட்டத்தைக் கடைந்த விடத்துத் தோன்றும் அக்கினிபோல், அம்மந்திரங்களின் இட மாய் வேண்டுவோர் விரும்பிய வடிவமாய் அத்திரு மேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள்
செய்வார்.
. யோகிகள் : இவர்கள் தங்கள் இருதய கமலத்தில் வீற்
றிருக்கும் பெருமானே இம் மூர்த்தியின் இடம் இருந்து பூசை கொண்டருளுகின்ருர் என்று வழிபடுவர். அவர் களுக்குக் கறந்த பொழுது தோன்றும் பால்போல், அவர்கள் விரும்பிய வடிவாய்த் தோன்றி, அருள் செய்வார்.
ஞானிகள் : இவர்கள் மற்றவர்களைப் போல் எண்ணி
வழிபடாமல், அன்புமாத்திரமாய் ஓரிடம் குறியாது வழிபடுவர். இவர்களுக்குக் கன்றை நினைத்த தலை யீற்றுப் பசுவுக்கு, முலையிற் பால் சுரந்து ஒழுகுவது போலக் கருணை மிகுதியால் அன்பேதாணுகி, எப்பொழு தும் வெளிப்பட்டு, அத்திரு மேனிகளில் நின்று அருள் செய்வார்.
சரியை ஆதியவைகளின் விபரத்தைப் புண்ணிய பாவ
இயல் சிவஞான சாதனத்தில் காண்க.

-கடவுள் இயல் 41
பஞ்ச கிருத்தியம்
சிவபெருமான் சத்தியின் பேதத்தால் தடத்த வடிவு
கொண்டு, பதி என்னும் நிலையில் பஞ்ச கிருத்தியம் செய்கின்
ருர், அப்பஞ்ச கிருத்தியத்தை ஆன்ம இயலில் காண்க.
சிவபெருமான் உருவத் திருமேனி கொள்கின்ருர் என் முல், பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட தோல், சதை, எலும்பு, நரம்பு, முதலியவைகளையுடைய நம்முடைய வடி வம் போன்றது தானே, என்பதாக விளங்கிக் கொள்ளுதல் கூடாது.
ஆன்மாக்கள் செய்யும் பூசை தியானம், என்பவைகளின் பொருட்டு, திருவருட் சத்தியின் குணங்களுள் இன்னது இன்னது இன்ன இன்ன அவையவம், என்னும், பொருள்பட அமைந்த திருவருட் சத்தியின் வடிவங்களாகும். சிவபெரு மான் மகேசுர மூர்த்தியாய் உருவத்திருமேனி உடையராய் அமையும்போது, ஏகதேகம், திரி நேத்திரம், காள கண்டம், நாற்புயம், இரண்டுதிருவடி, மான், மழு, சடாமுடி, மற்றும் பல அமையச் சத்தி பாகராய் இடபாரூடராய் இருப்பர்.
இவ்வாறன்றி, சத்தி மூர்த்தம், மந்திர மூர்த்தம், அத்துவா மூர்த்தம், அட்ட மூர்த்தம், முதலிய மூர்த்தங்க ளாகவும், அவ்வப்போது அடியார்களுக்கு அருள்புரியும் பொருட்டு அறக்கருணை, மறக்கருணை, வடிவங் கொண்ட வேறு பல மூர்த்தங்களாகவும், வடிவங்கள் கொண்டுள் ளனர்.
கடவுள் தான் எல்லாமாக அமைந்திருக்கும் போது அவ ருடைய வடிவங்களின் தன்மைகளை யாரால் எடுத்துரைத்து வருணிக்க முடியும். அவர் கொண்ட சில முகூர்த்தங்களை இதன் கீழ்த் தருகின்ருேம்:
அவருடைய திரு அங்க அமைப்புக்கள் மிக ஆழ்ந்த, தர்க்கரீதியான, நுண்ணிய, கருத்துக்களை உடையன.
6

Page 42
42 சை வசமய சிந்தாமணி
அந்த நுட்பப் பொருள்களில் சிலவற்றைத் திரு அங்க அமைப்பு இயல் என்னும் பகுதியிற் காண்க,
சத்தி மூர்த்தி
அக்கினியில் சூடுபிரிக்க முடியாமல் நிற்பது போல, சிவ பெருமான் கருணைவடிவான சத்தியுடன் நிற்கின்ருர் . அச் சத்தி முன் சொன்னது போல பரை, ஆதி, இச்சை, கிரியை, ஞானம், என்னும் சத்திகளாகவும், பரவாகீசுவரி, அபரவாகீசுவரி, மனேன்மணி, மகேஸ்வரி, உமை, திரு, வாணி எனவும், ஆரிணி, செனணி, ரோதயித்திரி, எனவும் இன்னும் பலவாகவும், காரிய வேறுபாட்டினல் பல பெயர் களையும் வடிவங்களையும் கொள்ளும்.
இதுவும் இறைவனைப்போல ஒரேசத்தியாகும். துட்ட நிக்கிரகமும், சிட்ட பரிபாலனமும் செய்து, ஆன்மாக்களை ஆட்கொள்ளும். சத்தியை மூலமூர்த்தியாய்க் கொண்டு, வழிபடும் ஆலயங்கள் சத்தி-அம்பாள் ஆலயங்களாகும்.
அவ்வாறே மீனட்சி, காமாட்சி, இராசராசேஸ்வரி, புவனேஸ்வரி, மனேன்மணி, மகேஸ்வரி, உமை, துர்க்கை, காளி, மாரி, இலக்குமி, சரஸ்வதி, முதலிய அம்பாள்களின் பெயர்களோடும், வேறுபல பெயர்களோடும், அம்மையின் ஆலயங்கள் இருக்கின்றன. இம் மூர்த்திகளின் வடிவமாக இருந்து அருளுபவரும் உமாயீஸ்வரரேயாகிய சிவபெரு மானே. ** உடையாள் நடுவுள் நீயிருத்தி ' என்பதை ஆராய விளங்கும்.
மந்திர மூர்த்தி
மந்திரங்களின் மூல மாய் வழிபடுகின்றவர்களுக்கு, அருள் செய்யும் பொருட்டு, சிவ சத்தியால் அதிட்டிக்கப் படும் அநாதியான பஞ்சப் பிரம்ம மந்திர மூர்த்தியாய் இருந்து பஞ்ச கிருத்தியம் செய்து அருள்புரிகின்ருர்,

-கடவுள் இயல் 43
விபரம்
மந்திரங்கள் திரு அங்கங்கள் ஐந்து தொழில்கள்
1. ஈசானம் திரு சிரம் அனுக்கிரகம் 2. தற்புருடம் , முகம் மறைத்தல்-திரோதம் 3. அகோரம் , இருதயம் அழித்தல்-சங்காரம் 4. வாம தேவம் , rsit. காத்தல்-திதி 5. சத்தியோசாதம் , முழந்தாள் படைத்தல்-சிருட்டி
அத்துவா மூர்த்தி
அத்துவா என்பது வழி. ஆன்மாக்கள் செய்யும் கன்மங் கள் வந்து ஏறும் வழிகள். உலகம் சத்தப் பிரபஞ்சம்-சொல் வடிவான உலகம்; அர்த்தப் பிரபஞ்சம்-பொருள் வடிவான உலகம், என இரண்டு வகைப்படும். இவ்விரண்டு உலகமும் ஆறு அத்துவாக்களையும் உடையது. இவை தம்மிடம் அடக் கம் என்பதைக் காட்டும் நிலை.
விபரம் :
ஆறு அத்துவாக்கள் திரு அங்கங்கள்
1. கலை 5 (1) சாந்தியா தீத கலை திரு முடி
(2) சாந்தி கலை , முகம் (3) வித்தியா கலை , மார்பு (4) பிரதிட்டா கலை , குய்யம் (5) ங்விர்த்தி கலை ,, الوقت2. தத்துவம் 36 , தாது (முளை) 3. புவனம்-இடம்-உலகம் 224 , உரோமங்கள் 4. வன்னம்-எழுத்துக்கள் 51 , தோல் 5. பதம்-சொற்கள் 81 , 5ரம்பு (தசை) 6. மந்திரம் 11 , இரத்தம்

Page 43
44 சைவ சமய சிந்தாமணி
* அவயவங் கலைகளாகு மாகிய புவன ரோமம்
சுவையுறு துவக்கு வன்னஞ் சோரி மந்திரமதாகும் தவமுறு பத நரம்பு தத்துவந் தாதுவாகுஞ்
சிவமுயர் சதாசிவற்குச் சிறந்தவாறுறுப்புத்தானே"
- அபியுத்தர் திருவாக்கு.
நடராஜ மூர்த்தி
சிவபெருமானே நடராஜர், நித்தியம் ஆடிக்கொண்டே இருக்கிருர், அதை ஆகந்தத் தாண்டவம் என்பர். இதை முன்சொன்ன மூவடிவங்களையும் கடந்த அதீத நிலை வடிவம் என்பர். பஞ்சாட்சர வடிவமும் இதுதான். அவ்வடிவத் தில் ஆழ்ந்த, ஞானப் பொருள்கள், அடங்கியிருப்பதை மெய்ஞ்ஞானிகளே அறிவர்.
ஒரு மனிதன் கூத்தாடும் பாவனையில் அமைந்துள்ளது. உலகத்தில் மேல் நாடு, கீழ் நாடுகளில் உள்ள சித்திர, ஒவி யக்கலை வல்லுநர்கள், 'இது அமைத்தற் கரிய வடிவம்' என்று வியக்கின்றனர். இதற்கு மேல் சிறந்த வடிவம் ஒன்று உலகத்தில் இல்லை என்கின்றனர்.
தற்கால விஞ்ஞானிகள் அணுவைக்கண்டு அது ஏக தானத்தில் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கின்றது என்றும்,
 

-கடவுள் இயல் 45
அதில் இருவடிவங்கள் தோன்றுகின்றன என்றும் கண்டு, அதைப்பற்றி யாதும் சொல்ல முடியவில்லை என்றும் வியக் கின்றனராம். அணு கண்ணுக்குத் தெரியாத மிக மிக நுண்ணியது.
இவர்கள் கண்ட அணு சட (உயிரில்லாத) அணு. இத னுள் அணுவாய் விந்து சத்தி வியாபித்திருக்கின்றது. அத னேடு கூடி இறைவன் ஆடிக் கொண்டிருக்கின்ருன். அவர் ஆட அணு ஆடும்; அணு ஆட அண்டங்கள் ஆடும்; ' அணு வினுக் கணுவாய் ' ' சென்று சென்று தேய்ந்து அணு வாய் " " " அணுவை யார்க்குந் தெரியாத ’’ என்று நம் மெய்ஞ்ஞானிகள், அவன் அருளாலே, அது ஆடிக் கொண் டிருப்பதை எப்பொழுதோ கண்டு சொல்லிவிட்டனர். அவர் கள் கண்டதைச் சிலையில் வடித்தும் காண்பித்தனர்.
தூக்கிய திருப்பாதம் என்று ஊன்றப் படு மோ , அன்று ஆட்டம் இல்லை; ஆட்டம் இல்லையாயின் ஒன்றும் அசையமுடியாது. அதுவே சர்வசங்காரகாலம். மே ல் நாட்டு வான சாஸ்திரிகள் கூட, நடராஜருடைய வடிவ மாகத்தான் திருவாதிரையும், அதைச் சேர்ந்த நட்சத்திரங் களுமுடைய மண்டலமும் வானத்தில் தோற்றம் அளிக்கின் றன என்றும், அம்மண்டலத்தை " ஒறியோன் ' (Orion) என்று அழைக்க நேர்ந்ததும், அத்தோற்றம் இருப்பதினலே தான் என்றும் கூறியதாக நூல் ஒன்று கூறுகின்றது.
ள்ள்பொழுதும் உயிர்களின் இருதயம் துடித்துக் கொண் டிருப்பதும், இவருடைய ஆட்டந்தான் என்கின்றனர். ** ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே " என்றும், ** ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு ’’ என்றும் , ** நன் ஞரிற் பூட்டிய சூத்திரப் பாவை " " " நள்ளிரவில் நட்டம் பயின்ருடும் நாதன் ‘’ என்றும் சிவஞானிகள் கூறிப் போந் தனர். இந் நடனம் ஞான நடனம், ஊன நடனம், என இரு வகைப்படும்.

Page 44
46 W சைவ சமய சிந்தாமணி
இவருடைய நடன வகைகளே, நடன இயல் என்பதில் காண்க. நடனம் ஆடும் இடத்தை சித் ஆகாசம், சித் அம்ப பரம், சிற் சபை என்பர். அதன் பொருள் அறிவு வெளி; கனக சபை=ஞான வெளி; சபா பதி= சபையை அதாவது உலகங்களாகிய சபைக்குத் தலைவனுய் இருந்து ஒழுங்காய்
நடத்துபவர்.
இவருடைய திரு அங்க அமைப்புக்களும், நடனத்தின் பொருள்களும், தூல சூக்கும பஞ்சாட்சரங்களையும் பஞ்ச கிருத்தியங்களையும், வெளிப்படுத்துவதைப் பின்காட்டப் பட்டிருப்பவைகளிற் காண்க .
பஞ்சாக்கர வடிவம்
కొబ్బ-F శిడి சூக்கும பஞ்சாட்சர வடிவம் సిడ్
ਗju திருவடி 15 வலத்திருக்கரம் உடுக்கை G திரு உந்தி s வீசிய இடத்திருக் கரம் GJ , தோள் சி வலப்புற அபய கரம் U முகம் மற்ற இடக்கரம் அக்கினி s (pl. LU ஊன்றிய திருவடி LO
பஞ்ச கிருத்திய வடிவம்
திரு அங்க அமைப்பு பஞ்ச கிருத்தியம்
உடுக்கை (டமருகம்-துடி) படைத்தல்-சிருட்டி அபய திருக்கரம் காத்தல்-திதி ஏந்தியிருக்கும் அக்கினி அழித்தல்-சங்காரம் ஊன்றிய திருவடி மறைத்தல்-திரோபவம்
தூக்கிய திருவடி-குஞ்சிதயாதம் அருளல்-அணுக்கிரகம்


Page 45

-கடவுள் இயல் 47
" ஆடும் படி கேணல் அம்பலத்தா ஃயைனே " " சேர்க்குந் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்" * தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில் "
என்னும் முதல்களேயுடைய உண்மை விளக்கம் பார்க்க
இந்த ஆநந்தத் தாண்டவத்தைச் சிதம்பரம் சென்று கண்டு களித்து ஆனந்த முறுக,
விநாயக மூர்த்தி
வி - மேலான, விலட்சணமான நாயகர் = நாயகமாய் உள்ளவர். அதாவது, தனக்கு மேலான ஒருவர் இல்லாத வர். கணபதி= க +ன+ பதி; க-ஞானம்; ஒன-மோட்சம்; பதி=தஃலவர்; எனவே, அடைந்தோருக்கு, ஞானத்தினுல் மோட்சத்தைக் கொடுக்கும் தலைவராயுள்ள பரப்பிரம சொரூபி, பிள்ளையார்=என்றும் பிள்ளேயாகவே உள்ளவர் ஆகையால், ஞானமே விநாயக வடிவம்.
இவர் தோற்றம், யானேமுகம், பருத்த தொந்தி, மூன்று திருக்கண், ஐந்து திருக்கரம், இரண்டு திருவடி, இருந்த பாவ&ன, ஒடிந்த கொம்பு, பாசம், அங்குசம், மோதகம், செபமாலே, மூஷிகம்-எலி, என்பவைகள் அமையப்
பெற்றது.
விநாயகர், மகாகணபதி, விக்னேசுரர், பிள்ஃாயார், ஐங் கரன் முதலிய பல நாமங்களே உடையவர்.
பருத்த தொந்தி, ஓங்காரத்துள் எல்லா அண்டங்களும், அடக்கம் என்னும் கருத்தையுடையது.
பின்ஃள யார் சுழியாகிய " உ ' என்பதில் வட்டம், விந்து-சத்தியையும் கீறு டகோடு, நாதம்-சிவத்தையும், அதாவது சத்தி சிவம் ஆகிய இரண்டும் அடங்கியுள்ளது.

Page 46
48 சைவ சமய சிந்தாமணி
நெற்றிக்கண், பரஞானத்தால் காணவேண்டும் என்பது: விரிந்த காது அன்பர்கள் கூறுவதைக் கேட்கும் ஆவல் உடை யவர் என்பதைக் கருதுவது.
சிவமும் விநாயகரும் வேறல்லர் என்பதைப் பின்வரும் அட்டவணையில் விபரமாய்க் காண்க.
அட்டவணை விபரம்
Saub விநாயகர்
சிவலிங்கம். "ஓம்" வடிவம் யானை முகம். 'ஓம்' வடிவம் ஓம்-ஒலி பிரணவ 5ாதம் யானையின் பிளிறல் ஓம் 15ாதம்
ஐந்து திருமுகம் பஞ்சகிருத்தியம்|ஐந்துதிருக்கரம் பஞ்சகிருத்தியம்
அவன், அவள், அது, ஒரு கொம்பு அவன்; மூன்று மமைந்தது. கொம்பு இல்லாமை அவள்; மூன்று திரு கேத்திரம் பொது-அது.மூன்றுதிருகேத்திரம் இச்சை, கிரியை, ஞானம் இச்சை, கிரியை, ஞானம்
மூன்று சத்தி மூன்று மதங்கள்.
இவை போல இன்னும் பல நியாயங்கள் இருக்கின்றன. பாலர் அறிவு போன்ற நம் சமய அறிவுடையவர்களுக்குச் சுருக்கமாய் ஒரு கதையும் தருவாம்.
கயமுக (யானை முக) அசுரன் ஒருவன் இருந்தான். சிவ பெருமானை வேண்டிப் பல வரங்களையும் பெற்றிருந்தான். அதனல், செருக்கடைந்து, தேவர்களை வருத்தினன். அவன் தேவர்கள் தன்னைக் காணும் போதெல்லாம், ** இரு கரங் களையும் முட்டியாகப் பிடித்து, நெற்றியில் மூன்று முறை குட்டி, கைகளை மாறிச் செவிகளைப் பிடித்துக் கொண்டு மும் முறை தோப்புக் கரணம் போடவேண்டும் ' என்று கற்பித் தான். தேவர்கள் இவ்வாறு பல காலம் செய்து வருந்தினர்.

-கடவுள் இயல் 49
ஆற்ருமையால் சிவபெருமானிடம் முறையிட்டனர். 'இடர் தீர்த்து அருள்வோம் ‘’ என்ருர்,
ஒரு நாள் கைலாயத்தில், அப்பனும், அம்மையும், பூங் காவைப் பார்த்துக் கொண்டு, அங்குள்ள சித்திர மண்டபத் தைப் பார்த்தனர். அதன் ஒரு புறத்தில் " " ஓம் ‘’ என்னும் பிரணவம், ஆண், பெண், வடிவான இரு யானை வடிவுடைய ஒவியங்களாய் அமைந்திருந்தது. அம்மையார் அதன் அழ கைத் திரு நோக்கம் செய்ய, அவை உயிர் பெற்றுக் கூடின. அந் நேரம் விநாயக மூர்த்தி தோன்றினர்.
சுவாமியும், அம்மையாரும், மகிழ்ந்து, முதல் தோன் றின படியால் 'மூத்த பிள்ளையார்' என்னும் திரு நாமத் தையும் நல்கி, ‘எக் காரியங்கள் செய்ய ஆரம்பிப்பவர்களும் முதல் உன்னையே நினைக்க வேண்டும் ' எனவும், விக்கினங் களை நீக்கும், ** விக்கினேஸ்வரனுக விளங்குவாயாக "' என்றும் கூறி, ' கயமுக அசுரனை ஆட்கொண்டு, தேவர் களைக் காப்பாயாக ** என்றும் ஆசீர்வதித்துச் சென்றனர்.
அவ்வாறே விநாயகப் பெருமான், ஒற்றைக்கொம்பை ஒடித்து எறிந்து, கயமுக அசுரனைக் கொல்ல, அவன் மூஷிக மாய் வந்து பொருதான்; வந்த அவனை வாகனமாய்க் கொண்டு, அவனை ஆட்கொண்டு, தேவர்கள் இடரை நீக்கி ஞர். தேவர்கள் அந்த அசுரனுக்குச் செய்த வணக்கத்தைப் பிள்ளையாருக்குச் செய்தனர். அதையே நாமும் அவருக்குச் செய்து வருகின்ருேம். கதையில் சில வேறுபாடுகளும் அமை யலாம். குட்டித் தோப்புக் கரணம் போட வேறு கதை களும் உண்டு.
அன்றியும் தேவர்களை வருத்திய நஞ்சை அடக்கி, அவர் கள் இடரை நீக்கிய, மாகேஸ்வர மூர்த்தியின் திருவருளால் அவர் கண்டத்தில் நின்றும், அடியார்களின் இடரை நீக்க விநாயகப் பெருமான் தோன்றினர், என்று வாதுளாகமம் கூறும் என்று சொல்வாரும் உளர். கதைகள் எவ்வாறிருப் பினும் அவை குறிக்கும் பொருள் ஒன்றே.
7

Page 47
EO) சைவ சமய சிந்தாமணி
முருக மூர்த்தி
முருகன் என்பது, இளமை, அழகு, கடவுட் தன்மை, ஆகிய பல பொருள்களே உடையது என் றும் அழியாத இளமையினேயும், அழகினேயும் உடையவன்; வழிபடுவோர்க்கு, அத் தன்மையான மன வலிமையையும், ஆானத்தையும் அளிப்பவன் என்றும் கருத்து உரைக் கின்றனர்.
மனம், தேன்.
சுப்பிரமணியம்=சு + பிரமணியம் சு=தலம் -இனிமை; பிரமணியம்-பிரம்ம ஞானத்தில் விருப்பத்தை வளர்ப்பது ; ஆகையால், வழிபடுபவர்களுக்கு இனிமையான பேரின் பத் தில் மேலான ஞான விருப்பத்தை , மேலும், மேலும், வளரச் செய்பவன், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒன்றே என்பதைக் கீழ்க் காணும் அட்டவஃனையில் காண்க.
சிவபெருமான் Lyss பெருமான்
1, 5 திருமுகம், 15 திருகேத் திரங்கள். 10 திருக்கரங்கள், 2 திருவடிகள் என்னும் 32 இலக்கணங்களும் உ ைட Lof
2. ஆறு குனங்களாகிய, சர் வஞ்ஞத்துவம், ங் த் தி ய திருப்தி, அநாதி போதம், அலுப்த சத்தி, அநாதி சத்தி, சுவதந்திரம் என்பவைகளை உடையவர்.
6 திருமுகம், 12 திருக்கரங்கள், 12 திரு நேத்திரங்கள், 2 திரு வடிகள் என்னும் 33 இலக் கனங்களு முடையவர்.
அவருடைய ஆறு குணங்களே
யும். இவர் ஆறு முகங்களாக உடையவர்.


Page 48

-கடவுள் இயல்
சிவபெருமான்
3. சூலப் படை, இச்சை, கிரி யை, ஞானம், என்னும்
மூன்று சத்திகளையும், முத் தொழில்களையும், மும் மூர்த் திகளையும் கருதுவது.
4. சதாசிவ மூர்த்தியினுடைய, ஐந்து திரு முகங்களோடு, சத்தி திரு முகமும் சேர்ந்து, ஆறுமுக முடையவர்.
5. அறுவகைச் சமயத் தோர்க் கும் அவ்வவர் பொருளாய் உள்ளார்.
இன்னும் பலவாறும் ஒப்பிட்டும் கூறுவர்.
முருகப் பெருமான்
வள்ளியம்மையார், தெய்வ யானையம்மையார், வேலாயுதம் என்னும் மூன்றும், இச்சை, கிரி யை, ஞானம், என்னும் மூன்று சத்திகளையும், முத் தொழில் களையும், மும் மூர்த்திகளையும், தாமே உடையவர் என்பதைக் கருதுவது.
இவரும் அந்த ஆறு திரு முகங் களையே, ஆறுமுகமாக உடை யவர்.
இவரும் அறுவகைச் சமயத்த வர் வணங்கும் தெய்வமாய் இருக்கிருர்,
முன் கூறி
யது போல் இவருடைய கதையையும் கீழ்க் காண்க:-
காசிப மகா முனிவருக்கு, மாயையின் வயிற்றிலி
ருந்து, பத்மாசுரன்,
னும் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள்.
சிங்கன், தாரகன், அசமுகி,
என் சுக்கிராச்சாரியர்
உபதேசித்த படி, முதல் மூவரும், யாகஞ் செய்து, சிவபெரு மானிடம் வேண்டிய வரங்களைப் பெற்ருர்கள்.
அவர்கள் அத் தவச் செல்வச் செருக்கினல் மூழ்கி, தேவர்களைத் துன்புறுத்தியதோடு, இந்திர குமாரணுகிய சயந்தன் முதலிய தேவர்களையும் சிறையில் வைத்தனர். சூரபத்மனதியோர் பல யுகங்களாகச் செய்த கொடுமை

Page 49
52 சைவ சமய சிந்தாமணி
க2ளத் தாங்க முடியாத தேவர்கள், கருணு நிதியாகிய சிவ பெருமானிடம், முறையிட்டனர்.
தேவர்களைக் காக்கும் பொருட்டும், சூரபத்மனை மறக் கருணையினல் ஆட்கொள்ளும் பொருட்டும், மற்றைய அசுரர் களைச் சங்கரிக்கும் பொருட்டும், ஆறு நெற்றித் திரு நேத் திரங்களில் இருந்தும், ஆறு அக்கினிப் பொறிகளை உதிப் பித்து முருகப் பெருமானகிய குழந்தையை உதவினர்.
அம்மையாரின் திருவடிச் சிலம்பில் நின்றும், தெறித்த நவமணிகளில் இருந்தும், அவரது வெயர்வையில் இருந்தும், வீரவாகு முதலிய நவ வீரரும், இலட்சம் வீரவான்களும் தோன்றினர். சிவபெருமான் முருகப் பெருமானை, சூரன் முதலிய அவுணர்களோடு பொருது, தேவர்களைக் காக்கு மாறு, கட்டளையிட்டு ஆசிசுநி அனுப்பினர்.
கந்தப் பெருமான், வீரவாகு தேவரைச் சூரனிடம் தூதாக அனுப்பி, தேவர்களைச் சிறைவிடுமாறு கேட்பித்தனர். சூரன் அதை ஏற்றுக் கொள்ளாமையால், போர் நடந்தது. அவுணர் யாவரும் மாண்டனர். சூரன் தவ வலிமையினல் பலவாழுகிய மாயங்களைக் கொண்டு போர் செய்தான்; பின் ஆற்ருமையால் வேலாயுதத்தினுல் பிளக்கப் பட்டான்.
பிளவுபட்ட சூரனுடைய ஒரு கூறு மயிலாகவும், மற் றைக் கூறு, சேவலாகவும் உருக்கொள்ள, சுப்பிரமணியப் பெருமான், மயிலை வாகனமாகக் கொண்டும், சேவலைக் கொடியாகக் கொண்டும், அவனை ஆட்கொண்டார்; பின் தேவர்கள் யாவரும் சிறை மீட்கப் பட்டு, முன்போல் அவ ரவர்களுடைய நிலைமைகளை எய்தினர். இதைக் கந்த புரா ணத்திலும், அறிந்தோரிடத்திலும் விபரமாய்க் கேட்டறிக
'பரமனே குழவியாகி' 'மூவருமாகி நின்ற மூர்த் தியே’’ ‘ஆட்டுஞ் சமயமாறினுக்கும் ஆதாரங்கள் ஆறி னுக்கும் அத்துவா ஓராறிஅனுக்கும் அமையுந்தானே முத

-கடவுள் இயல் 53
லென்றும்" "ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண் டும்' எனவரும் ஆப்த வாக்கியங்களாலும், இவரது பெருமையை அறியலாம். நாம் யார்? எடுத்துக் கூற!
அப்படியே சிவபெருமானுடைய எல்லா முகூர்த்தங் களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும். சிவ பெருமான் வேறு, அவர் கொள்ளும் முகூர்த்தங்கள் வேறல்ல. ஞானப்பொருளில் "போர்’ என்றது வாழ்க்கை யில் உண்டாகும், ஆசை, அகங்காரங்களைத் தொலைத்த லாம். சூரனதியோர்; அகங்காரம், காமம், குரோதம், என்னும் தீமையான எண்ணங்கள்; அசுரப் படைகள் அந் தக்கரண சேட்டைகளாகிய திரைகளை அகற்றுதல், என்பன போன்ற பொருள்களைத் தருவன.
திருமால் மூர்த்தி
இவரைத் திருமால், விஷ்ணு, நாராயணன், கோவிந் தன் முதலிய பல பெயர்களால் வழிபடுவர். மும் மூர்த்தி களில் காத்தல் தொழிலுக் குரிய மூர்த்தி. சிவபெருமானும், விஷ்ணு மூர்த்தியும், பல சந்தர்ப்பங்களில் சிவமும், சத்தியு மாகத் தோன்றி, திருவிளையாடல்கள் புரிந்திருக்கின்றனர்.
இவர், நின்ற, இருந்த, சயணித்த திருக்கோலங்களாய், ஆலயங்களில் அமைந்திருப்பர். சங்கு, சக்கரம், கதை தாங் கிய திருக் கரங்களுடன், அபய கரத்தையுமுடையவர். மார் பில் கெளஸ்துப மணியையும், நெற்றியில் பூரீவற்சம் என் னும் மறுவினையும் உடையவர். இவருடைய சத்தி, மகா லட் சுமியாகும். வாகனம் கருடன்; சயனிக்கும் இடம் திருப் பாற்கடல்; பாய் ஆதிசேடன். ' அரியலாற் தேவியில்லை ஐயன ஆறனுர்க்கே ' என்பது சைவமறை.
அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறக் கயிலைக்குச் செல் லும் வழியில், கண்ணனைச் சிவ முகூர்த்தமாகக் கொண்டு, சிவபூசை செய்ததைப் பாரதத்தில் சைவர்கள் நன்கு அறி வார்கள்.

Page 50
54
சைவ சமய சிந்தாமணி
மாகேச்வரமூர்த்தி வடிவங்கள் 25ன் விபரங்கள்
உருவத் திருமேனி, வியக்த லிங்கம்-சகளத்திருமேனி எனவும், இவ் வடிவங்கள் பெயர் பெறும்.
சிவபெருமான் அநுக்கிரகம் செய்யும் பொருட்டும், நிக்கிரகம் செய்யும் பொருட்டும், ஒவ்வோர் காலத்தில், ஒவ் வோர் காரணம் பற்றி, இம் மூர்த்தங்களைக் கொண்டார்.
l.
சந்திரசேகரர் : தக்கன் சாபத்தால் கலைகள் தேய்ந்து வருந்தி வேண்டிய சந்திரனுக்கு, அருள் செய்து, அதன் ஒரு கலையைத் தமது திருச் சடையில் சூடியது.
. உமாமகேசர் : சிருட்டியாதி கிருத்தியங்களைச் செய்து
ஆன்மாக்களுக்கு, போகத்தை ஊட்ட, தமது அரு ளைச் சத்தியாக்கி இடப் பாகத்தில் இருத்தியது.
. இடபாரூடர் தருமமும், ஞானமும், விஷ்ணுவும்,
ஒவ்வோர் காலத்தில் வேண்டுதல் செய்து, வாகன மாய்ச் சுமக்க விரும்பிய போது ஏற்றுக்கொண்டது.
. சபாபதி : ஆன்மாக்களின் மும் மலங்களையும் நீக்கற்
பொருட்டு, பஞ்சாக்கரத் திரு மேனி கொண்டு, சிவகாமி அம்மையாருடன் பஞ்ச கிருத்திய நடன
மாடியது.
கல்யாண சுந்தரர் : இமயமலை அரசன் மகளாகிய பார்வதியை, உலகத்தில் இல் வாழ்க்கை நிகழ்தற் பொருட்டாக, திரு மணஞ் செய்து கொண்டது.
. பிக்ஷாடனர் : தாருகா வனத்து முனிவர்களையும்,
அவர்கள் பத்தினிமார்களையும், நன் நெறி நிறுத்தற் பொருட்டு, விஷ்ணுவாகிய மோகினியுடன், பிச்சைப் பாத்திரம் ஏந்திச் சென்று, அவர்கள் கர்வத்தை அடக்கி, மீமாஞ்சை மார்க்க நெறியில் நின்றும் நீக்கி, சன்மார்க்கர்களாகும்படி புத்தி புகட்டியது.
. காமாரி : காமனை நெற்றிக் கண்ணினுல் எரித்தது.

-கடவுள் இயல் 55
8.
10.
ll.
12.
13.
14.
15.
6.
17.
காலாரி : மார்க்கண்டனைக் காப்பதற்காய் அவன் உயிரைக் கவர வந்த இயமனை அடக்கியது.
. திரிபுராரி : தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்
மாலி, என்னும் மூன்று அசுரர்களையும் சங்கரித்தது. சலந்தராரி : சலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித் திது. மாதங்காரி : யானை வடிவமாய் வந்த கயாசுரனைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தது.
வீரபத்திரர் : தக்கன் செய்த யாகத்தை, பத்திர காளியுடன் சென்று அழித்தது. அரியர்த்தர் : விஷ்ணு, சிவபெருமான் திருமேனியில் அமைந்திருக்க வேண்டினபடியால், இடப்பாகம் விஷ்ணுவாகவும், வலப் பாகம் சிவமாகவும் அமைந் திதி. அர்த்த நாரீஸ்வரர் : அவன், அவள், அது என்னும், மூவகை உலகிற்கு, அம்மையும் அப்பருமாயுள்ள வர் தாமே என்பதை, நம்மனேர் விளங்கும் பொரு ட்டு, இடப் பாகம் அம்மையாகவும் வலப் பாகம் அப்பணுகவும் அமைந்திருப்பர். கிராதர் : வேடனய்ச் சென்று, மூகாசுரனைக் கொன்று, அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்து அரு ளியது.
கங்காளர் : 'வாமன உருவங் கொண்டு கர்வித்த விஷ்ணுவை, வயிரவ முகூர்த்தமாய்ச் சென்று, கர் வத்தை அடக்கி, தோலை உரித்துப் போர்த்தும், முதுகு எலும்பைத் தண்டாகவும் கொண்டது.
சண்டேசானுக்கிரகர் சிவபூசைக்காகத் தந்தை யாகிய எச்சதத்தனைக் கொன்ற, அவன் மகளுகிய
விசார சருமருக்கு சண்டேசுர பதவி கொடுத்தது.

Page 51
8.
9.
22.
23.
25.
. கஜமுகானுக்கிரகர் : பிரணவ மந்திரமாகிய
சைவ சமய சிந்தாமணி
நீலகண்டர் : தேவர்களை வருத்திய, பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சை உண்டு, உலகத்தைக் காத் |ტ ჭნ].
சக்கரதானர் : விஷ்ணு மூர்த்தியின் வேண்டுகோளுக்கு இரங்கி, சுதரிசனம் என்னும் சக்கரம் ஈந்தது.
ஓம்' என்னும் மந்திர வடிவமாய், விநாயகரைத் தோற்று வித்து, முதன்மை நல்கியது.
சோமாஸ்கந்தர் : கந்தர், சிவம், சத்தி மூன்றும்
ஒருங்கமைந்த வடிவமாய் விஷ்ணு வழிபட அருள் புரிந்தது.
ஏ கபாதர் : சர்வ சங்கார காலத்தில் யாவும் சத்தி யில் ஒடுங்க, சத்தி சிவத்தில் ஒடுங்க, தாம் ஒருவராயே நின்றது.
சு காசீனர் : அம்மையாகிய தேவியாருக்கு, வேத, ஆகமங்களைச் சுகாசனமாய் இருந்து, உபதேசம் செய்
தது .
தட்சிணு மூர்த்தி : சனகர், சஞதர், சனந்தரர், சனற்
குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கு, கல்லால
விருட்சத்தின்கீழ் ஞானகுருவாய் எழுந்தருளியிருந்து,
சிவஞான போதம் உபதேசம் செய்தது.
லிங்கோற்பவர் : பிரம்மா, விஷ்ணுக்களினுடைய அகந்தை கெட, திருவண்ணுமலையில், சோதி லிங்க மாய்த் தோன்றியது.
சில இடங்களில் கண்ணகியம்மன், துரோபதியம்மன் களை, வீர பத்திணிகளாய் வழிபடுகின்றனர். இங்கு சொல்லப் படாத வேறு பெயர்களை உடைய வடிவங்களையும் தெய்வ மாக வழிபாடு செய்வாரும் உண்டு. அவரவர் புண்ணிய பக்குவங்களுக்கு ஏற்பவே தெய்வமும் வாய்க்கும்.

-கடவுள் இயல் 57
கும்ப மூர்த்தி
முன் குறிப்பிட்டபடி இறைவன் நின்று அருள்பாலிக்கும் இடங்களில் கும்பமும் ஒன்ருகும். பிரதிட்டை, மகோற் சவம், உருத்திரம், ஸ்நபனம், மற்ற சுப காரியங்களிலும், கும்பத்தில் சிவபெருமானை, மந்திரம், கிரியை, பாவனைகளி னல், எழுந்தருளச் செய்து வழிபடலும் ஒரு வகை.
முதல் கலசம் ஒன்றைப் பிண்டம் (உடம்பு) ஆகக் கொண்டு, பின் காட்டப்படுவது போற் செய்து, பூசித்து வழிபடுவர். அதன் விபரங்களைப் பின்வருமாறு காண்க.
கும்ப வஸ்திரம் - தோல். சிவந்த நிறம் ஏறப் பூசிய மண் - இரத்தம். கும்பம் ஆக்கப்பட்ட பொருள் (மண்) - மாமிசம். கும்பத்தில் நிறைக்கப்பட்ட சலம் - மேதை (நிணம்). கூர்ச்சம் (தருப்பை) - குடுமி (எலும்பு). சுற்றப்பட்ட நூல் - எழுபத்தீராயிரம் நரம்பு.
உள்ளே இடப்பட்ட இரத்தினம், }- பொன், புட்பம், ஆதியன செபிக்கப்பட்ட மந்திரம் - உயிர் (பிராணன்).
ஆசனம் நெல், அரிசி, எள்ளு, பயறு, உளுந்து,
துவரை, கோதுமை.
தேங்காய் - தலை.
மாவிலை - மயிர் (சடை).
எனவும் பொருள்படும்.
இவைகளில் சிலவற்றை மாற்றியும் கூறுவர்.
--------ബരം.--m

Page 52
58 சைவ சமய சிந்தாமணி
திரு அங்க அமைப்பு இயல்
விளக்கம் : சிவபெருமான் கொண்டுள்ள திருமேனியைப் பற்றி கடவுளியல், பஞ்சகிருத்தியத்தின் கீழ், விளக்கியுள் ளோம். ஈண்டுதிருமேனியைப் பிரித்து, சில வற்றிற்குப் பொருள்-கருத்தும் தருகின்ருேம். அறிவுடையோர் அப் பொருள்களைப் பலவாறு வேறு விதங்களாகக் கூறவும் அமையும்.
அங்கம்
திருமுடிசிரசு; திருச் சிகை, திரு முகம்; திரு இருதயம். பிரத்தியங்கம்
காதுகள், கண்கள், நாசி, வாய், கழுத்து, புயம், மார்பு, கீழ் உள்ள மற்றையவும். சாங்கம்
சூலம், மான், மழு, வான், அக்கினி, அங்குசம், பாசம், பிறவும்.
உபாங்கம்
உப வீதம், வஸ்திரம், மாலை, ஆபரணங்கள், கந்தம், பிறவும். இவைகளின் பொருள்களாவன:- (கருத்துகள்)
1. திருச் சிகை : தாம் ஞான ரூபி என்பதாம். சுதந்தர
மாயுள்ள சிவகரணமே சிகை. 2. திரு முடி : திருவருளை அனுபவிக்கும் போது, தன் செயல் தோன்ருது, சிவானந்தத்தில் பரவசப்படுவது.
"உரையிறந்த சுகமதுவே முடியாகும் "
- உண்மை நெறி விளக்கம் 4.

-திரு அங்க அமைப்பு இயல் 59
3.
திரு முகம் : சீவன் முத்தி நிலையில், அவன், அவள், அதுவாய், தன்னைத் தாக்குவனவான, விடய போகங் கள் தோன்றும் போது, அவர் அநுக்கிரகத்தினுல் எங்கும் சிவமாய்க் காணல்.
* பார்ப்பிட மெங்குஞ் சிவமாய்த் தோன்றுவது முகமாம் "
- உண்மை நெறி விளக்கம் 4.
* பார்க்குமிட மெங்கு மொரு நீக்கமற நிறைகின்ற ’ * பார்க்குமிட மெங்கும் பர வெளியாய்த் தோன்ற "
- என்று பிற ஆப்தர்களும் கூறுவர்.
திரு இருதயம் : முத்தான்மாக்களுக்கு மெய்ஞ்ஞான
த்தை உணர்த்தும், திருவருட் சத்தியே இருதயம்.
* நல்லோருண வரு ஞானமது இருதயம் "
- சதாசிவ ரூபம்.
. திருவடி : நான், எனது, என்னும் அகங்கார மமகார
மாகிய பொய்யறிவு கெட்டு, திருவருட் துணையால், சிவஞானம் பிரகாசிக்கப் பெற்று நிற்றலாம்.
'பரை உயிரில் யானென தென்றற நின்ற தடியாம் "
- உண்மை நெறி விளக்கம் 4.
* அவனருளாலே அவன்தாள் வணங்கி "
- மணிவாசகர்.
திரு நேத்திரம் : சூரியன், சந்திரன், அக்கினி, என் னும் மூன்று சுடர்களையும், இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று சத்திகளையும், உடையவர் தாமே என்பதையும் கருதுவது.
* மூன்று கண்ணினன், தீத்தொழில் மூன்றினன்"
- அப்பர்
. வரத கரம் : ஆன்மாக்கள் செய்த, கன்மங்களுக்கு
ஈடாக, போக, மோட்சங்களைக் கொடுப்பவர் தாம் என்பது.

Page 53
60
சைவ சமய சிங்தாமணி
0.
.
l2.
3.
4.
15.
அபய கரம் தம்மை வழிபட்டால் எவ்வகைப்பட்ட துன்பங்களில் இருந்தும், காப்பாற்றப் படுவர் என் பதைத் தெரிவிக்க வருவது.
தூக்கிய திருவடி ( குஞ்சிதபாதம் ) . இது நடராஜ
மூர்த்திக்குடையது. இறப்பு, பிறப்பில்லாத, பேரின்ட வீடாகிய அநுக்கிரகத்தைக் குறிப்பது.
ஊன்றிய திருவடி ! இதுவும் நடராஜ மூர்த்திக் குடையது. உயிர்கள் செய்த இரு வினைகள், ஒப் பாகும் வரையும் மறைத்துக் கொண்டிருக்கும், திரோ தான சத்தியைக் குறிப்பது,
உப வீதம் (பூணுரல்) ; வேதாந்தம் உணர்த்தும் முடி வான பொருள் தாமே என்பதைக் குறிப்பது.
சூலம் பிடித்தது : இது மூன்று தலைகளும், நீண்ட தாளும் உடையது; சாத்துவிகம், இராசதம், தாம தம் என்னும் முக்குணங்களுடன், சென்னி, ரோத யித்திரி, ஆரிணி என்னும் மூன்று சத்திகளுடன் கூடி, சிருட்டி, திதி, சங்காரங்களை இயற்றும் பிரம்ம, விஷ்ணு, உருத்திரன், மூவரும் தாமே என்பது. மேலும், இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்றும் தாமே உடையவர் என்பதுமாம்.
மழு (கோடாலி): இதுபராசத்தி உருவமானது. முடி வில் எல்லாம் வந்து தன்னிடத்தில் ஒடுங்கும் என்றும் லயம்-ஒடுக்கத் தானத்தைக் குறிப்பது.
வாள் ஏந்தியது சளன-பிறப்பு, வேரின் கொடியை அறுப்பவரும், எல்லாவற்றையும் அடக்கி ஆளும் புகழை உடையவரும் தாமே என்பதை அறியும் பொருட்டாக ஞானமயமான வாளை ஏந்தியது.
குலிசம் (வச்சிராயுதம்) : ஒருவராலும் கெடுக்கப் படாதவர் தாமே என்பது.

6.
17.
8.
9.
2 I.
அங்க அமைப்பு இயல் 6
பாசம் தரித்தது : இந்திரியங்கள் பத்தையும், தூல , சூக்கும, பூதங்கள் பத்தையும் தன் மாத்திரைகள் ஐந்துமாகிய இருபத்தைந்தையும் கட்டி நடத்தும் மாயா வடிவங்களை உடையவர் என்பதையும், இரு வினைகளில் கட்டி, பிறப்பு, இறப்புகளில் விட்டு ஆட்டுபவர் தாமே என்பதையும் குறிப்பது.
உடுகு (டமருகம்) ; இது நடராஜ மூர்த்தியின் திருக் கரத்தில் இருப்பது, உடுகில் இருந்து வரும் ஒலி, நாத தத்துவத்தைக் குறிக்கின்றது. அண்ட, பிண்ட, சராசரங்கள் எல்லாம், அந்த நாத தத்துவத்தில் இருந்து உற்பத்தியாகின்றன என்பதையும், சிருட்டி யையும், மந்திரங்களின் உற்பத்தியையும் குறிப்பது
D).
அக்கினி ஏந்தியது . இதுவும் நடராஜ மூர்த்தியின் திருக்கரத்தில் அமைந்துள்ளது. ஆன்மாக்களைப் பிடித் திருக்கும். நல்லதும் கெட்டதுமாகிய ஆசாபாசங் களையும், இறுதியில் சராசரங்கள் எல்லாவற்றையும், எரித்து நீருக்கி, நீறு பூத்த சிவமாயுள்ளவரும், தாமே என்பது.
அங்குசம் கொண்டது : இது விநாயக மூர்த்தியினு டைய திருக்கரத்தில் உள்ளது. ஆன்மாக்களிடம் உள்ள, ஆணவமாகிய யானையை அடக்கி, அவர்களை நல்வழியில் ஆள்பவர் தாமே என்பதையும், திரோபவ கிருத்தியத்தைச் செய்பவர் தாமே என்பதையும், அறியத்தருவது.
. அத்திரம் தாங்கியது : ஆன்மாக்களின் மூல மலத்
தைச் சங்கரிப்பவர் தாமே என்பது.
தந்தம் ஏந்தியது . இது விநாயகப் பெருமான் திருக் கரத்தில் உள்ளது; கயமுகா சுரனைக் கொன்றது; மும் மலங்களையும் அழிப்பவர் தாமே என்பதையும், அதை

Page 54
62
சைவ சமய சிந்தாமணி
32.
23.
24。
25.
படி, உமா தேவியாரிடமிருந்து தோன்றிவந்த,
முரித்து எழுதியபடியால் கல்வி, ஞானம், ஆகிய எண் ணும், எழுத்தையும், அறியச் செய்பவர் தாமே என் பதையும் குறிப்பது.
மோதகம் : விநாயக மூர்த்தியின் திருக் கரத்தில் உள்ளது; அடியார்கள் ஆன்மபோதத்தைக் கவன மாய்ச் சமர்ப்பிக்க, அவற்றைத் திருவயிற்றில் அடக்கி, ஞானத்தைக் கொடுப்பவர் என்பதையும், மோதகம் போல உருண்டை வடிவமான எண்ணி றந்த உலகங்கள் எல்லாவற்றையும் அடக்கி, மேலாய் விளங்குபவர் தாமே என்பதையும் கருதுவது.
வேல் ஏந்தியது : இது, முருகப் பெருமானுடைய திருக் கரத்தில் அமைந்துள்ளது; அறியாமையாகிய ஆணவமலத்தைப் போக்கி, திருவருள் ஞானம் பிரகா சிக்கச் செய்யும், ஞான சக்தியை உடையவர் தாமே என்பது.
மான் பிடித்திருப்பது : நான்கு கால்கள் போல, நான்கு வேதங்கள் இருக்கின்றன. அவ் வேதங்களுக் கும் மேலானவர் தாமே என்பது.
மான் துள்ளித்திரிவது போல மனம் ஒடித்திரிவது; அதைப் பிடித்து அடக்கி, சிவத்தைத் தரிசிக்க வேண்டும்; அப்போதுதான், அவர் பிடித்திருக்கும் மான் அவர் திருவடியைக் குனிந்து நோக்குவது போல, நமது மனமும், சிவத்தை நோக்கி நிற்கும் என்பதுமாம்.
கங்கையைத் தரித்தது - பகீரதன் வேண்டு கோட்
கங்கா தேவியின் வேகத்தை அடக்கிச் சடையிற் சூடி யது. இது, ஞான அமிர்தம், தூய்மை, இனிமை, என்பவைகளையும் கொடுக்கும் பான்மையைக் கருதும் என்று சொல்வாரும் உளர்.

-திரு அங்க அமைப்பு இயல் 63
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
சர்ப்பந் தரித்தது : குண்டலினி என்கின்ற சக்தி பாம்பு வடிவமானது; அதன் விரிவும், ஒடுக்கமும் போல, உலகத் தோற்றமும் ஒடுக்கமும்; அச்சக்தியை இயக்குபவர் தாமே என்பது.
கண்டாமணி தாங்கியது : மணியில் ஒசை பிறப்பது போல, நாத தத்துவத்தில் இருந்து, ஓசை ஒலிகள் எல்லாம் பிறக்கின்றன; அந்த நாத தத்துவ முதல்வர் தாமே என்பது.
" ஓசை ஒலி யெலாம் ஆணுய் நீயே" - தேவாரம்.
சந்திரனேச் சூடியது : (கடவுள் இயல், மாகேசுர வடி வம் ஒன்றில் காண்க ) மேலும் தூய்மையான சர்வஞ் ஞத்துவத்தையும், ஞானச் சுடரையும், இன்பம், சாந் தம், என்பவைகளையும் தரும் என்பதுமாம்.
கொன்றை மாலை தரித்தது : ஒங் கார வடிவமாய் உள்ளவர் தாமே என்பது.
இடபம் கொண்டது : (கடவுள் இயல், மாகேசுர வடிவம் மூன்றில் காண்க) பொறுமையையும் கருது மென்பர். முயலகனை ஊன்றியது : இது, நடராஜ மூர்த்தியின் ஊன்றிய திருவடியின் கீழ் உள்ளது. கோபமாகிய அஞ்ஞானத்தைக் கொடுக்கின்ற, ஆணவ மலத்தை திரோதான சத்தியால் அடக்குபவர் தாமே என்பதும் முக்குணமாகிய மாயையைத் தள்ள வேண்டும் என் பதும், பொருளாக உடையது. சங்கு ஏந்தியது : இது விஷ்ணு மூர்த்தியின் திருக் கரத்தில் உள்ளது;அதில் இருந்து வரும் ஒலி, ஓங்காரப் பிரணவம்; அதில் இருந்து எல்லாவற்றையும் படைத் துக் காப்பவர் தாமே என்பது. சக்கரந் தாங்கியது . இதுவும் விஷ்ணு மூர்த்தியி
னுடையது; உலகங்களை எல்லாம் சங்கரிப்பவர் தாமே

Page 55
64
34.
35.
36.
37.
சைவ சமய சிந்தாமணி
என்பதைக் குறிப்பது; மேலும், உலகங்கள் வட்ட மிடுவதையும், தரும சக்கரத்தையும், நன்மையைக் காத்துத் தீமையை அழிப்பதையும் கருதுவது. கதாயுதம் தாங்கியது . இதுவும் விஷ்ணு மூர்த்தியி னுடையது; சஞ்சலம் நிறைந்த உலக வாழ்வில், ஆன் மாக்களைத் தாக்கும் சுக துக்கங்களாகிய, அம்புகளைத் தாங்கும் புத்தியைக் கொடுப்பவரும் அசுரத் தன்மை யுடைய பாவங்களை அழித்து, ஆன்மாக்களைப் பக்கு வப்படுத்துபவர் தாமே என்பதுமாம்.
ஆதிசேடனில் சயனம் செய்வது இது விஷ்ணு மூர்த்தியினுடைய படுக்கையாகும்; தாமத குணமா கிய கோபத்தைக் குறிப்பது; இதை அடக்கி ஆள்பவர் தாமே என்பதும்; மேலும் சேடம்-மிஞ்சியிருப்பது; அதாவது உலகங்கள் ஒடுக்கிய பின் மிகுதியாய் உள்ள வரும், தாமே என்பதுமாம். நிற்க,
இது நாத தத்துவத்தைக் குறிப்பது; ஒலி அதில் இருந்து பிறப்பது; அவ்வொலி உள்ளிருந்து எழும் போது வளைந்து வளைந்து வருவது; ஆகையால், அந்த நாத தத்துவத்திற்கும் மேலாய் இருப்பவர் அவரே என்றும், பொருள் படும் என்றும் கூறுவாரும் உளர்.
பாற் கடல் : இது விஷ்ணு மூர்த்தி பள்ளி கொள்ளும் இடம்; பால் - பரிசுத்தம்-வெண்மை என்பவைகளைக் குறிப்பது; இறைவனும் அப்படியான பரிசுத்த மனத் தையே இடமாய்க் கொண்டு நின்று அருள் செய்வார் என்றும், விந்து அல்லது சத்தி தத்துவத்துக்கு அதீதர் அவரேஎன்பதையும் கருதும்என்று கூறுவாரும் உளர். புலித் தோல் : சிவ பெருமான் புலித்தோலை உடுத்தி ருப்பது, புலிபோல் மூர்க்கமுள்ள அகங்காரத்தை நீக்கி (உரித்து) ஆளுதல் வேண்டும் என்பது. புலித் தோலை ஆசனமாகக் கொண்டிருப்பது, அகங்கா ரத்தை மீற விடாமல், எப்பொழுதும் அடக்கிக் கீழ்ப் படுத்தல் வேண்டும் என்பதையும் குறிக்கும்.

--திரு அங்க அமைப்பு இயல் 65
38. செபமாலை : சிவபெருமான் செபமாலை வைத்திருப் பது, புலன்களை ஒரு வழிப்படுத்தி, மனதை இறைவ னிடம் நிறுத்தி, சிந்தன சத்தியை வளர்க்கவேண்டும் என்பது கருத்தாம்.
39. திருவாசி சொல்லும், பொருளுமாகிய உலகங்கள், தோன்றி, ஒடுங்குவது, பிரணவ மாகிய ஓங்காரத்தில்; பிரம்மன் முதலிய தேவர்கள் தோன்றுவதும், அதிலே தான்; ஆகையால், பிரணவத்துள் விளங்குபவர் தாமே என்பது. திருவாசியில் உள்ள சுடர்கள் அட் சரங்களைக் கருதுவது.
'ஓம் எனும் எழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற வாமனே'
- நமச்சிவாயப் பதிகம்.
40. குடை பிடித்தல் : சுவாமி சிவரூபம் அதற்கும் அதீத
மாய் அவர் இருக்கிருர் என்பதைத் தருவது.
சிவபெருமானுடைய திருமேனியில் சொல்லப் படாதன வாய் இன்னும் பல இருக்கின்றன. அவைகளிற் சிலவற்றைக் கீழ்க் காண்க :-
ஆமையோடு தரித்தது; என்பு மாலை அணிந்தது; பன்றிக் கொம்பு தரித்தது; கபாலம் ஏந்தியது: மீன் கண் தரித்தது; வீணு தண்டம் தாங்கியது; விஷம் அகுந்தியது; யானைத் தோல் போர்த்தது:
கொக்கிறகு சூடியது;
இவ்ற்றை விட இன்னும் பல உள்ளன. இவற்றுக்கும் விரிவஞ்சிப் பொருள் எழுதாமல் விடப் பட்டிருக்கின்றன. சைவ சித்தாந்த வின விடை முதலிய நூல்களில் விரிவாய்க் காண்க.
அத்துவாவுக் குட்பட்ட மூர்த்தி யன்ருே
---------ബം ----

Page 56
66 சைவ சமய சிந்தாமணி
திரு நடன இயல்
விளக்கம் நடனம் என்பது கூத்தாடுதல், மக்கள் கூத்தாடுகிறர்கள்; அதனல் மகிழ்ச்சி அடைகின்றர்கள். உலகங்கள் பல கூடியது ஓர் அண்டம். அண்டங்கள் பல இருக் கின்றன. அண்டங்கள் ஆட, உலகங்களும் உலகப் பொருள் களும் ஆடுகின்றன. அவை ஆடும்போது நாம் ஆடுவதாகத் தெரியவில்லை.
தற்கால விஞ்ஞான சாஸ்திரிகளும், வான சாஸ்திரிக ளும், இந்த உண்மையை வெளியிட்டிருக்கின்றனர். வான வெளியில் எண்ணிலாத உலகங்கள் சுழன்று கொண்டிருக் கின்றன என்கின்றனர். இவைகளைப் பற்றிச் சுருக்கமாய் நடராச மூர்த்தியின் கீழ்க் காட்டினுேம். ஆண்டு காண்க.
நமது சைவ சமயம் எப்போதுமே இந்த உண்மையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. நமது மெய்ஞ்ஞானிக ளும், இதைக் கண்டு சொல்லியிருக்கின்றனர். ஆனல் பல ருக்கு அதில் நம்பிக்கை இல்லை.
தற்கால விஞ்ஞானிகள் சிதம்பரத்தில் நடராசப் பெரு மான் ஆடிக் கொண்டிருக்கும் நியாயத்தை அறிந்தனர். உண்மை தெரிந்தனர்; ஆண்டவன் ஆடினுற்தான் யாவும் ஆடும் என்று அறிந்தனர்.
" ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே'
- தேவாரம். நடராஜப் பெருமானின் திரு நடனங்கள் சிலவற்றை யும், தியாகராஜப் பெருமான் நடனங்களையும் வேறு தேவர் கள் ஆடிய நடனங்களையும், அறியும் பொருட்டுக் காண்க :-
1. அனவரத தாண்டவம் : ஆன்மாக்களுக்குப் போக, முத்திகளைக் கொடுக்கும் பொருட்டு, பஞ்சாட்சரத்

-திரு நடன இயல் , 67
2
5
திருமேனி கொண்டு, பஞ்ச கிருத்தியம் விளங்க இடை விடாது ஆடிக்கொண்டிருப்பது.
ஆநந்தத் தாண்டவம் பதஞ்சலி, வியாக்கிரபாத
முனிவர்கள் கண்டு களிக்கும் பொருட்டு, பிரமதேவன் தாளம் போட, திருமால் மத்தளம் கொட்ட, தமது திருமேனியை அசைத்து, சிவகாமி அம்மையார் கண்டு களிக்க, கனகசபையிலே ஆடினது.
கால்மாறி ஆடினது : விக்கிரம பாண்டிய குமாரனன
இராசசேகர பாண்டியனுடைய, வருத்தமும் மல வலி யும் கெடும் பொருட்டு, மதுரா புரியிலே வெள்ளியம் பலத்தில் இடத் திருப் பாதத்தை ஊன்றி, வலத் திருப் பாதத்தைத் தூக்கிக் கால் மாறி ஆடினது.
. கெளரி தாண்டவம் தாருகா வனத்தில், விஷ்ணு
மூர்த்தியாகிய மோகினியோடு ஆடியதை, அம்மை காணும்படி, திருக் கயிலையில் ஆடிக் காட்டியது.
வீரட்டாகாச நடனம் முருகன் பிரம்மனுக்கு, பிரண வப் பொருள் தெரியாத படியால், குட்டிச் சிறையிட் டார். தேவர்கள் பிரம்மனை விடுவிக்கும்படி சிவபிரானை வேண்டினர். குமரனிடம் போய்ச் சிறையை விடு வித்து, பிரணவத்தின் பொருளைக் கேட்டார். குமரன் திருத் தணிகையில், சிவகுருவாய் இருந்து, திருவாய் மலர்ந்தருளினர். அது காரணமாக எழுந்த வீர மேலீட் டினல் சிவபெருமான் அட்டகாசம் செய்து ஆடியது,
. சண்ட தாண்டவம் : சிவபெருமான் திருவாலங் காட்
டிலே, வயிரவ முகூர்த்தங் கொண்டு, காளியோடு ஆடி, அம்மையினது அகந்தையை அடக்கியது.
சந்தியா நிருத்தம் : தேவ மாதர்கள் மாங்கிலியத்தைக்
காக்கும் பொருட்டு, பாற்கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு, ஒன்றும் பேசாது சயணித்து, மற்றை நாட்

Page 57
0.
68
சைவ சமய சிந்தாமணி
பிரதோஷ காலம் வர, அம்மையாரை நிறுத்தி அவர் முன் ஆடியது.
கொடு கொட்டி நிருத்தம் : திரிபுர தகனத்தை முடித்து
அம்மையார் தாளம் போட, தமது திருக் கரங்களைக் கொட்டி ஆடியது.
பாண்டரங்க நடனம்: தேர்ச் சாரதியாகப் பிரம்மனைக்
கொண்டு, திரிபுர தகனம் செய்யச் சிவபெருமான் போன போது, பிரம்மன் பிரிவாற்ருது, சரஸ்வதி வருந்த, அவளை மகிழ்விக்கும் பொருட்டு, நீறு அணிந்து ஆடியது.
பிரதம மகா சங்கார கிருத்திய நடனம் : பிருதிவி (மண்) முதல், சதாசிவ தத்துவம் முடிய உள்ள, முன் படைத்த எல்லாவற்றையும், பராசத்தியில் ஒடுக்கி, பராசத்தியையும் தம்மில் ஒடுக்கி, தாம் மாத்திரம் தனித்து நின்று செய்யும் நடனம்.
தியாகஸ்தல நடனங்கள்
1.
திரு வாரூர்-வீதி விடங்கப் பெருமான், அசபா நடனம்; திரு நள்ளாறு-நகர விடங்கப் பெருமான், உன்மத்த நடனம்; திரு நாகை-சுந்தர விடங்கப் பெருமான், அலை நடனம்; திரு வாய்மூர்-நீல விடங்கப் பெருமான், கமல நடனம்; திரு மறைக்காடு-புவனி விடங்கப் பெருமான், அமிர்த நடனம்; திருக் கோளிலி-அவனி விடங்கப் பெருமான், பிரமர நடனம்; திரு வெற்றியூர்-மாணிக்க விடங்கப் பெருமான், வகுள நடனம்,
முருகப் பெருமான் ஆடிய கடனம்
.
குடைநடனம் அவுணர்களுடைய போர் முனையில், அவர்கள் புறங்காட்டி ஒட, தமது திருக் குடையைச் சாய்த்து ஆடியது.

-திரு கடன இயல் 69
2.
துடி நடனம் சூரபத்மன் வேற்று வடிவமாய்ச் சமுத் திரத்தில் நின்ற போது, முருகப் பெருமான் அவன் மாயம் ஒழிய ஆடியது.
தேவர்கள் ஆடிய கடனம்
1.
அல்லிக் கூத்து கண்ணன் கம்சன் அனுப்பிய யானை யின் கொம்பை முரித்து ஆடியது.
. குடக் கூத்து : கண்ணன், காமனை வாணுசுரன் சிறை
யிட்டபோது, அவனை மீட்கக் குடத்தின் மேல் நின்று ஆடியது.
மல் கூத்து : கண்ணன் வாணுசுரனை மற் போர்
செய்து, நெரித்துக் கொன்று ஆடியது.
பேடுக் கூத்து : மன்மதன் மகன் அநிருத்தனை, வாணு
சுரன் சிறையிட்ட போது, அவனை விடுவிக்கப் பெண் வடிவமாய் நின்று ஆடியது.
. கடையக் கூத்து : வாணன் நகரின் வட திசையில்
நின்று இந்திராணி ஆடியது.
. பாவைக் கூத்து அசுரர்கள் யுத்த கோலம் ஒழிந்து,
தன் மேல் மோகங் கொள்ளும்படி, இலக்குமி ஆடியது.
மரக்கால் கூத்து அசுரர்கள் போர் செய்ய ஆற்ருது
வஞ்சனையால், துர்க்கா தேவி மீது, பாம்பு, தேள், முதலிய விஷ செந்துக்களை அனுப்ப, அவைகள் அழியும் பொருட்டு, அம்மையார், மரக் கால் கொண்டு ஆடியது.

Page 58
ΤΟ சைவ சமய சிந்தாமணி
தல, தீர்த்த இயல்
தலங்கள்
விளக்கம் : உலகம் கடவுள் வடிவாய் இருப்பதை அருட் கண் பெற்ருர் காண்கிருர்கள். அந்நிலை இல்லாத நாம், அவ்வாறு அதைக் காண முடியாமல் விகற்பமாய்க் காண்கின்
ருேம்.
விகற்ப நிலை நீங்கி, அருள் புரியவே, பரம்பொருள், மூர்த்தியாய், தலமாய், தீர்த்தமாய், வடிவு கொண்டிருக் கின்றர். தலம் என்பது இடத்தையும், அதில் அமைந்த ஆலயம் தீர்த்தங்களையும் கருதும். பாமரர் தொடக்கம் பரம மெய்ஞ்ஞானி முடிய இவைகளை வணங்குவார்கள்.
பசுவின் உடம்பெல்லாம் செறிந்த பாலை, அதன் மடியின் மூலமாய்ப் பெறுவது போலவும், நிலத்தின் கீழ், எங்கும் பரந்து நிறைந்திருக்கும் நீரை, கிணறு தோண்டி, அதன் மூலம் பெறுவது போலவும், தலங்களையும், ஆலயங்களையும், சென்று வழிபடுவதன் கருத்து.
புறத்தே உள்ள கோயில்களில், பாலில் நெய் கலந்து மறைந்திருப்பது போலவும், தயிரில் வெண்ணெய் இருப்பது போலவும், பக்குவத்திற் கேற்ப, நம் போலியரை ஆட் கொள்ள, இறைவன் எழுந்தருளி இருக்கின்ருர் , ** திருக்
கோயில் இல்லாத திருவிலூரும். . . . . . . . .ஊரல்ல அடவி காடே ** என்றும், ** கோயில் இல்லாத ஊரிற் குடியிருக்க வேண்டாம் ', ' நான் மறை பயிலா நாட்டில் விரவுதல்
ஒழிந்து தோன்றல் மிக்க புண்ணியந்தானுகும் ‘’ என்றும் ஆன்ருேர் கூறினர்.

-தல, தீர்த்த இயல் 71
உலகத்தில் எண்ணில்லாத கூேடித்திர ஆலயங்கள் இருக் கின்றன. அவைகளை ஒவ்வோர் காலத்தில் விசேஷமாய் ஒவ்வோர் அன்பர் வணங்கி அருள் பெற்று, பின்னல் வேண்டு பவர்களுக்கும், அவ்விடம் நின்று, அருள் புரிய வேண்டும் என்றும், இறைவனை வேண்டிப் போயினர். நம் சமயாசாரி யர்கள் வழிபட்ட தலங்களைப் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்பர்.
சிவபெருமான், உமாதேவியார், விநாயகர், சுப்பிர மணியர், உருத்திரர், தேவர்கள், அகத்தியர் முதலிய முனி வர்கள், பதினெண்கணத் தலைவர்கள், இன்னும் பிறரும் வணங்கிய தலங்களும் பல உள்ளன.
அன்றியும், யானை தொடக்கம், சிலந்தி ஈருயுள்ள, கீழ்ப் பிறவிகளில் உள்ள, பல உயிர்கள் வழிபட்ட தலங்களும் இருக்கின்றன. அவைகளை எடுத்துக் கூற மிக விரியும். அப்புண்ணிய தலங்களைச் சுருக்கி, 1008, 108, 68, 16, என்ற விதமாய்க் கூறுவர். நாம் சிலவற்றை இங்கு அறிந்து கொள்ளும்படி தருவாம்.
சப்த புண்ணிய நகரங்கள் (ஏழு)
அயோத்தி, மதுரை, மாயை, அவந்தி, காசி, காஞ்சி, துவாரகை, என்று கூறுவர்.
ஆருதாரத் தலங்கள் (ஆறு)
(1) மூலாதாரம்-திருவாருர் (4) அநாகதம்-சிதம்பரம் (2) சுவாதிட்டானம்-திருவானைக்கா (5) விசுத்தி-திருக்காளத்தி
(3) மணிபூரகம்-திருவண்ணுமலை (6) ஆக்ஞை-காசி
என்பர்.
மதுரை, ஆறுக்கும் மேலான துவாத சாந்த, தலமாகும்.

Page 59
T2 சைவ சமய சிந்தாமணி
பஞ்ச பூத லிங்கத் தலங்கள் (ஐந்து)
(1) பிருதிவி (மண்)-திருக்காஞ்சி (4) வாயு (காற்று)-திருக்காளத்தி
(2) அப்பு (நீர்)-திருவானைக்கா (5) ஆகாயம் (வெளி)-சிதம்பரம் (3) தேயு (நெருப்பு)-திருவண்ணுமலே
முத்தி நகரங்கள் (மூன்று)
(1) திருவாரூர் - பிறக்க முத்தி தருவது. (2) சிதம்பரம் - தெரிசிக்க முத்தி தருவது. (3) காசி - இறக்க முத்தி தருவது.
இவைகளின் ஞானப்பொருள்,
1. பிறக்க முத்தி தருவது என்பது : பிரபஞ்சம் (உலகம்) நாமல்ல; நாம் அறிவுடைய பொருளாகிய ஆன்மா; திருவருளாலே எல்லாம் நடக்கின்றன; என்ற உணர்வு பிறத்தலாம்.
2. தெரிசிக்க முத்தி தருவது என்பது மேல் கூறிய படி, திருவருளால் அறிந்து, சிவத்தை முன்னகத் தியா னித்து, ஞானக் கண்ணுல், துரியங் கடந்த பரம சிவத் தின், ஆநந்த அத்துவித, திருநடனம் காண்டலாம். 3. இறக்க முத்தி தருவது என்பது : தத்துவ, தாத்து விகங்களை , திருவருளாலே தனக்கு அன்னிய மெனக் கண்டு நீங்கிய அதீத நிலையாகும்.
கைலாயம்
இதை இருதயகமலத்திலும், சூரியனுடைய ஒளி மத்தி யிலும், தரிசிக்கலாம்.
புண்ணிய கூேடித்திர ஆலயங்களில் குறிக்கப்பட்ட எல் லைக்குள், இயமன் சஞ்சாரஞ் செய்யக் கூடாது, என்று பெரு

-தல, தீர்த்த இயல் 73
மான் நியதியும் உண்டென்று உண்மை நூல்களும், அனுப வங்களும், தெரிவிக்கின்றன.
கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் ஈருக, சிவாலயங் களும், சிவலிங்கங்களும் இருப்பதைச் சைவ சமயம் கூறு கின்றது.
ஈழ நாட்டிலே திருக்கேதீச்சரம், திருக்கோணமலை, திருக் கதிர்காமம் முதலிய பாடல் பெற்ற, புண்ணிய தலங் கள் இருப்பதையும் நம்மவர்கள் மறந்துவிடக் கூடாது. இவை மேற் கூறியவைகள் போல மதிக்கப்படத் தக்கன.
தீர்த்தம்
விளக்கம் : நீரின் உபயோகம் எல்லார்க்கும் தெரியும். ** நீரின்றமையா துல கெனின் "", என்று வள்ளுவப் பெரு மான் திருக்குறள் பாயிரத்தில், கடவுள் வாழ்த்து என்பதின் பின், வான் சிறப்பு என்பதில் வைத்து, அதன் இன்றியமை யாமையை நன்கு விளக்கினர்.
நம் தேகத்தை நீரினுல் சுத்தம் செய்யலாம். அது, தூய் மையையும், மனச் சந்தோஷத்தையும், சுகத்தையும் தருகின் றது. நீருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. தீர்த்தம் நீரேயாயினும், "* தீர்த்தம் ** என்று சொல்லும் போது, அது பா வங்களை நீக்கி, புண்ணியத் தன்மையைக் கொடுக்கும், ஆற்றலுடைய தெய்வீகத் தன்மையுடைமை யை வெளிப்படுத்துகின்றது. இதனுலன்ருே, '"தீர்த்தன்' என்று சிவபெருமானுக்கு ஓர் பெயர் வழங்குகின்றது.
அன்றியும், எண்வகை மூர்த்தங்களுள், பவன் என்னும்
திரு நாமத்தையுடைய, சிவபெருமானது வல்லமையாகிய
சியேட்டை என்னும் சத்தியானது, சல ரூபமாய் அமைந்து,
O

Page 60
74 சைவ சமய சிங்தாமணி
தன்னை அடைந்து, தரிசித்து, ஆசமித்து, ஸ்நானம் செய்யும், அடியார்களது பிறவியாகிய வெப்பத்தை நீக்கி, தன்னிடத் தில் அமிழ்ந்தச் செய்து, தத்துவாதீதராய் விளங்கும் சிவத் துடன் கூட்டும் என்று அறிவுடையோர் காட்டுகின்றனர்.
மனம், கடினத் தன்மை, கசிவுத் தன்மை என்னும் இரு தன்மைகளையும் அடையுந் தன்மையுடையது. கசிவுத் தன்மை இருந்தால், இரக்கம், ஈரம், அன்பு, அருள், என் னும் பண்புகளை அது உடையது; கடின மனத்துக்கு அப் பண் புகள் இல்லை. அன்பு, நீர் போல நெகிழ்வுடையது. அதை அன்புடையார் துன்பமடையும் போது, கண்கள் நீர் சொரிவதைக் கொண்டு அளவிடலாம். ** அன்புக்கு முண் டோ அடைக்குந்தாள் ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும் ‘’ என்பதால் நன்கு அறியலா மன்ருே !
கடவுள் அன்பே வடிவானவர் என்பது சைவ மறை, *" கருணையங்கடலே போற்றி '', "" அருள் வெள்ள மீதிலே ‘’, ‘ ஆநந்த வெள்ளத் தழுந்து வது ’’, ‘* அன்பே சிவமாவதாருமறிகிலர் ', ' பரமானந் தப் பழங்கடலதுவே '’ என்ற இவைகள், அருட் பெரியார் கள் மூழ்கி, அனுபவித்த அருள் வாக்கியங்கள். இவைகளின் பொருள்கள் என்ன ?
家 象 y
சச்சிதானந்தக் கடல்
* ஆன்மாக்களை ஆட்கொள்ளும் பொருட் டாகக் கொண்ட பல வடிவங்களில், கருணை வடிவான தீர்த்தமும் நானே எனது கருணை வெள்ளத்தில் நீங்கள் மூழ்கி, இன் புற்று இருப்பதே உங்கள் கடைசி நிலை ' என்று தீர்த்த மாடுதல் விளக்குகின்றதல்லவா?
தீர்த்தமாடுதல், பஞ்சகிருத்தியத்தில் அனுக்கிரகத்தைக் குறிக்கின்றது. இதைக் கருதுவதற்கன்ருே, ஆலயங்களில், மகோற்சவ முடிவிலும், வேறு விசேட காலங்களிலும், தீர்த் தோற்சவம் நடைபெறுகின்றது.

-தல, தீர்த்த இயல் T5
திருவாதிரை, விநாயக விரதக் காப்புக் கூட்டு முடிவு, மாசிமகம், ஆடி அமாவாசை, அர்த்தோதயம், மகோதயம், முதலியன விசேட தீர்த்த உற்சவங்களாக, இருக்கின்றன
புண்ணிய தீர்த்தங்கள்
கங்கை, யமுனை, சரஸ்வதி, நருமதை, காவேரி, கோதா வரி, வையை என்னும் சப்த நதிகளும், சிந்து, தாமிர வருணி, கிருஷ்ணை, துங்கபத்திரை, மகாவலி கங்கை, மாணிக்க கங்கை முதலியவைகளும், குமரி, சேது முதலிய கடல் ஸ்தலங்களும், சிவ ஸ்தலங்களில் உள்ள, திருக் குளம், கேணிகளும், கீரிமலை, கன்னியாய் முதலிய நீரூற்றுக்களும் வேறு பல பெயர்களை உடைய நீர் நிலைகளும், இருக் கின்றன.
இப் புண்ணிய தீர்த்தங்களைத் தூய்மையாக வைத் திருத்தல் வேண்டும்.
தீர்த்தம் ஆடும் முறை
தீர்த்தம் ஆடும் சமய அவசிய கருமங்களை முடித்துக் கொண்டு, விரதமாய் இருந்து, சங்கற்பஞ் செய்து கொண்டு, மனத் தூய்மை உடையராய் ‘* சிவபெருமானுடைய பரமா னந்த வெள்ளத்தில் மூழ்குகின்றேன்; இன்ருேடு நான் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து, புனிதன் ஆகின் றேன்" என்று வேண்டிக் கொண்டு, மூழ்கக்கூடிய அளவான சலத்தில் நின்று கொண்டு, பெருவிரல்களால் காதுகளையும், சுட்டு விர ல் க ளா ல் கண்களையும், நடு விரல்களால் மூக்கையும், மற்றைய விரல்களால் வாயையும் மூடிக் கொண்டு, மூன்று தரம் தாழ்ந்து எழுதல் வேண்டும். அள வாய் ஸ்நானம் செய்த பின், கரையில் ஏறி, ஈரந்துவட்டிய பின், காய்ந்த வஸ்திரம் தரித்துக்கொண்டு, விபூதி அணிந்து, அனுட்டானம் முடித்துக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்து கொண்டு, பிதிர் கடன்களை முடிக்க வேண்டியவர்கள்

Page 61
76 சைவ சமய சிந்தாமணி
முடித்துக்கொண்டு, இயன்ற அளவு ஏழைகளுக்கு, அன் னம், வஸ்திரம், தட்சணைகள் முதலியன ஈதல் வேண்டும்.
தீர்த்தங்களில் எச்சில் உமிழ்தல், சீலை தோய்த்தல், மூக்கு நீர் சிந்துதல், அடிக்கழுவல், முதலிய அசுத்தங்கள் எதுவும் செய்தல் பாவமாகும்.
ஞானிகள் புறத்தீர்த்தம் ஆடுதலோடு, அகத்தேயுள்ள தீர்த்தங்களிலும் மூழ்குகின்றனர். அத் தீர்த்தங்கள் அவர் களின் மணிக்கட்டு, விரல் அடிகளின் நுனிகளில், இறை நடுவுகளில், இருக்கின்றன என்றும், நூல்கள் கூறுகின்றன.
மேலும், உண்மை பேசுதல், தானஞ் செய்தல், இன் சொற் கூறல், அந்தக் கரணங்கள் அடக்கல், புறக்கரண மொடுக்கல், பொறுமை, உயிர்களுக்கு இரங்கல், கடவுட் தியானம் ஆகிய உள்ளிருக்கும் தீர்த்தங்களில் மூழ்கி, கருப் பையிற் செலுத்தும் மும்மல அழுக்கையும் கழுவ வேண்டும் என்றும், அந்த ஞான நூல்கள் கூறுகின்றன.
எல்லாச் சமயத்தவரும், தீர்த்தத்தாலேயே தம்மைச் சுத்திகரித்துக் கொள்ளுகின்றனர். ஆனல், அச்சமயிகள் செய்யும் முறைகளும், நம் சமய முறைகளும் வேருய் இருக் கின்றன. அவ்வளவுதான் வேறுபாடு.
அர்த்தோதய தீர்த்த காலம்
தை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசையும், திருவோணமும், வியதீபாத யோகமும், சூரியோதயத்தில் வியாபித்துக் கூடிவரும் புண்ணிய காலம் ஆகும்.
மகோதய தீர்த்த காலம்
தை மாதத்தில், திங்கட்கிழமையும், அமாவாசையும், திருவோணமும், வியதீபாதமும், சூரியோதயத்தில் வியா பித்துக் கூடிவரும் புண்ணிய காலம் ஆகும்.

-தல, தீர்த்த இயல் TT
மகாமகம்
மாசி மாதம் வியாழன் சிங்கராசியில் நிற்க, மகம் நட்சத் திரமும் பூரணையும் பொருந்தி வருவது. இது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் வரும் என்பர்.
மேற் காட்டிய, க்ஷேத்திர ஆலய தீர்த்தங்களை, அனுப விக்க வசதிகள் வாய்க்கப் பெருதவர்கள், அவற்றை மனதில் நினைத்துக் கொண்டு, வசதியான இடங்களில், தரிசனம், தீர்த்தமாடுதலும் செய்து கொண்டால் அப்பலன்கள் வந்து அடையும் என்பது நம் சமயக் கொள்கையாகும்.
ஆகையால், நமக்குச் சமீபமாய் உள்ள, ஆலயங்களில் தரிசனம் செய்தும், தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தும், அப் பலன்களைப் பெறுவோமாக.
* மூர்த்தி தவத் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே "
- தாயுமானவர்.

Page 62
78 சைவ சமய சிந்தாமணி
கிரியை இயல்
விளக்கம் : பல சமயங்களிலும் முறைகள் இருக்கின் றன. நம் சமயத்தில் உள்ளவை போல், பல காரியங்களுக் கும் அச் சமயங்களிலும், முறைகள் இருக்கின்றன. கருத்து வேற்றுமைகளும், சுருக்கமும் அவைகளில்இருக்கலாம். நம் சமயக் கிரியைகளின் நோக்கம், நம்மை இறைவனிடம் படிப்படியாய்க் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதே.
உலக வாழ்க்கையை நடத்த, எந்த ஒரு கிரியையாவது செய்யாமல் முடியாதென்பது, நாம் கண்ட உண்மை. நம் சமயத்தில் ஒவவொரு விஷயங்களுக்கும் பல முறைகள் இருக் கின்றன என்றும், அதனல் வீண் செலவும், காலக் கழிவும் உண்டாகின்றன என்றும், கூறுவாரும் உண்டு.
கிரியைகள் அப்படியிருப்பதால், மனம் முதலிய உட்கரு விகளும், கண் முதலிய புறக் கருவிகளும், நம் வசம் அடங்கி, ஆண்டவனுக்குத் தொண்டு செய்ய அவை பயிற்சி அளிக்கின் றன. பக்குவம் ஓங்க, ஒங்க, புறக் கிரியைகள் சுருங்கி, அகத்தில் இக் கிரியைகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்படுகின் றது. அந்த உண்மையைப் பெறுவதற்கு வழி நடத்துவதே புறக் கிரியைகளாகும்.
இக் கிரியைகளைச் செய்விக்கும் போதும், அல்லது நாம் செய்யும் போதும், ஆண்டவன் நம் முன்னல் இருப்பதாகப் பாவித்து, கண்களால் கண்டும், கரணங்களால் தீண்டியும், வணங்கியும், மனத்தால் கசிந்து அன்பு பாராட்டியும், வாயால் வாழ்த்தியும் வணங்க இடம் உண்டாகின்றது.
இதனல், உலக வாழ்க்கையிற் சிக்கிய நமக்கு எவ் வளவோ மனச் சாந்தியும், மகிழ்ச்சியும், கவலைகள் நீங்கலும் உண்டாகின்றன. சைவ சமயக் கிரியைகளைப் பற்றி, தற்

-கிரியை இயல் Τ9
காலம் பல கேள்விகள் பிறக்கின்றன. அன்றியும் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்றபடி வசதியாய் இல்லை என்றும் கூறு கின்றனர்.
நம்முடைய மன விருப்பங்களுக்கு ஏற்க, வசதிகள் அமைந்திருப்பது, உண்மைக்கு வழி நடத்தும் சமயமா யிராது. நம் எண்ணங்களை ஆண்டவனிடம் செல்ல, அடக்கி ஆள்வதே சமயமாகும்.
பொருள் உடையவர், அப் பொருளால் ஆம் பயன், அப் பொருளை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதே. அஃதில்லார் தம் புண்ணியக் குறைவை எண்ணி, இறைவனை வேண்டி பக்தி கொள்ள வேண்டியதே.
அதை விட்டு, பொருள் இல்லாதவர்களுக்கு, இந்தச் சமயத்தில் இடம் இல்லை என்பதோ, இவைகள் பிழைப் புக்காக, ஆரியர் ஆக்கியவை என்பதோ போலி நியாயம். பயனற்ற கிரியைகள் சைவ சமயத்தில் இல்லை. எனவே, கோயில்களில் நடக்கும் பூசைகள், உற்சவங்கள், மற்றும் சில காரியங்களில் நடக்கும், சில கிரியைகளையும் அவைகளில், தெரிந்தவைகளுக்கு, கருத்துக்களும் பின்வருகின்றன. பூசை களும், கிரியைகளும், மனதைப் பண்படுத்தி, ஞானத்தை உண்டாக்கும் உண்மைச் சாதனங்களாகும்.
பூசைகள் : பஞ்ச சுத்தி பூசை, பரார்த்த பூசைகள், ஆன்மார்த்த பூசைகள், அந்தர்யாக பூசைகள், என வகுக்கப்படும்.
பரார்த்த பூசை
சைவ மக்கள் யாவரும் வந்து கூடி, வழிபாடு செய்யும் பொருட்டாய், கோயில்களில், சிவலிங்கம் முதலாகிய மூர்த்திகளை, விதிப்படி பிரதிட்டை செய்து, பூசைகள் உற்

Page 63
80 சைவ சமய சிந்தாமணி
சவங்கள் நடத்தி வருவது, பரார்த்த பூசையாம். (பரார்த் தம்-பிறருக்காகச் செய்வது. )
ஆன்மார்த்த பூசை
விசேட தீட்சை பெற்ற பின் விரும்பினல் ஒருவர், குரு வின் உபதேசப்படி, தனது ஆன்மார்த்த நன்மை கருதி, அவரால் எழுந்தருளப் பண்ணிக் கொடுக்கப்பட்ட, சிவலிங் கம் முதலிய மூர்த்திகளில் ஒன்றை, விதிப்படி பூசை செய்து வழிபட்டு வரும் பூசையாம். (ஆன்மார்த்தம்-தனக்காக,- தான் தனித்து செய்யும் பூசை.)
அதாவது, தான் சுவாமியைத் தீண்டி, வழிபாடு செய்து மனச் சாந்தி பெற வேண்டும் என்னும் விருப்பினல் செய்யும் பூசையாம். தனது ஆன்மார்த்த நன்மை கருதி என்றமை யினல், தன்னுடைய ஆன்மா மாத்திரம் கதியடைய வேண் டும், தன்னுடன் இருக்கும், மனைவி, மக்கள், பிறருடைய ஆன்மாக்கள் நற்கதி அடையப்படா என்னும் கருத்துடைய தல்ல.
அந்தர்யாக பூசை
புறத்தில் கிரியைகள் செய்து, பூசைகள் நடத்துவது போல, அகத்தில்-மனத்தில், யாவற்றையும் கற்பித்துக் கொண்டு வழிபாடு செய்யும் பூசையாம். (அந்தர்யாகம்அதாவது, உள்ளே-மனதுள் செய்யும் பூசை.)
பூசைக் கிரியைகள்
கோயில்களில் சுவாமிக்குச் செய்யும் கிரியைகளை உபசா ரங்கள் என்றும் கூறுவர். இவைகள் ஆகம விதிப்படியே

-கிரியை இயல் 8
செய்யப்படுகின்றன. அப் பூசைக் கிரியைகளையே இங்கு தருகின்ருேம்.
ஆனல், கதிர்காமம், மண்டூர் போன்ற, சில கோயில் களில், திரை திறக்காமலும், திருவுருவங்களை வெளிக் காட் டாமலும், வாய் கட்டி மெளனமாய்ப் பூசைகள் நடக்கின் றன. அப்படிச் செய்வதை ஞான பூசை என்கின்றனர். அப் பூசை செய்பவர்களை, கற்பகஞர் என்கின்றனர். அப் பூசைகளையும், பரம்பரை வழக்கமான கிரியைகளாற் செய் கின்றனர். அவைகளின் விதிகளையும், நியாயங்களையும் அவர்களே அறிவர். பிறர் கேட்டாலும் சொல்லார்கள். இது வேறு.
முற் கூறிய உபசாரங்கள், பஞ்சோப சாரம், தசோப சாரம், சோடசோப சாரம் என மூன்று வகைப்படும்.
பஞ்சோபசாரம்-ஐந்து வகை
1. பார்த்தியோபசாரம் : பிருதிவியாகிய மண் சம்பந்த
மானது. நைவேத்தியத்திற்குரிய பொருட்கள்.
2. ஜலியோபசாரம் : ஆப்பியோபசாரம் எனவும் கூறு வர். சல-நீர் சம்பந்தமான, பால் தயிர், தேன், திருமஞ்சனம், சர்க்கரை, நீர், பாணியம், ஆதியன.
3. தைசசோபசாரம் : நெருப்புச் சம்பந்தமான தீபங்
கள், ஆபரணங்கள், கண்ணுடி ஆதியன.
4. வாய்வியோபசாரம் : காற்றுச் சம்பந்தமான, தூபம்,
சாமரம், விசிறி ஆதியன.
5. வைகாயசோபசாரம் : ஆகாயம் சம்பந்தமான LD60sh
யோசை, வாத்தியங்கள், தோத்திரங்களாதியன.
இவுைகளின் விரிவை, சிவத்திரவிய இயலில் காண்க.

Page 64
82 சைவ சமய சிந்தாமணி
தசோபசாரங்கள்-பத்து வகை
(1) ஆவாகனம் (2) தாபனம் (3) சந்நிதானம் (4) சந்நிரோதனம் (5) அவகுண்டனம் (6) தேனுமுத்திரை (7) பாத்தியம் (8) ஆசமணியம் (9) அருக்கியம் (10) புட்பதானம் என்பர்.
இவற்றின் விரிவை, கீழ்ச் சோடசோபசாரத்தில்
காண்க.
சோடசோபசாரம்-பதினறு வகை
1. ஆவாகனம் : கடவுளின் மூல மந்திரத்தை உச்சரித்து பூசையின் பொருட்டு, எழுந்தருளும்படி அழைத்தல்.
2. தாபனம் : தயா நிதியே! அருள் செய்யும் நிமித்தம், இந்த மூர்த்தியில் எழுந்தருளி இருக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுதல் செய்தல்.
3. சந்நிதானம் : பூசிக்கப்படுபவராகிய மூர்த்தி அனுக் கிரகிக்குந் தன்மையையும், பூசிக்கின்றவணுகிய தனக் கும், பூசிப்பவர்களுக்கும், அனுக்கிரகிக்கப் படுந் தன் மையை உண்டு பண்ணும்படியான பாவனைகள்.
4. சந்நிரோதனம் : “ பகவானே! எப்பொழுதும், அடி யேனிடத்திலும், உம்மை வணங்குபவர்களிடத்தி லும், திருவருள் புரிய வேண்டும்' என்று பிரார்த்திக் கும் மனுேபாவனை.
5. அவகுண்டனம் : மூர்த்தியைச் சுற்றி, மந்திரத்தால் மூன்று முறை அகழ் உண்டாக்கினதாகச் செய்யும் பாவனை.
6. தேனுமுத்திரை : மூர்த்திக்கு முன்பாக, பசுவின் மடி
போன்ற முத்திரையைக் காட்டுதல்.

-கிரியை இயல் 83
7.
10.
11.
12.
3.
பாத்தியம் : மூல மந்திரத்தை உச்சரித்து, மூர்த்தி யின் திருவடிகளில் தீர்த்தம் சமர்ப்பித்தல். இது சிவபெருமானுடைய திருவடியில் பொருந்தும் குறி
IF TLD .
ஆசமனியம் : மூல மந்திரத்தை ஐந்து முறை உச்
சரித்து, மூர்த்தியின் திரு முகத்தில் மூன்று முறை தீர்த்தம் சமர்ப்பித்தல். இது, அருட்திரு முகத்திலே பொருந்துவதற்கு அறிகுறி.
அருக்கியம் : மூல மந்திரத்தினல், மூர்த்தியின் திரு
முடியில் தீர்த்தம் தெளித்தல். இது, பெருமான் திரு முடியில் பரை அதீதமாகப் பொருந்துவது.
புஷ்பதானம் : மூல மந்திரத்தை உச்சரித்து, மூர்த் திக்குப் புட்பங்கள் சமர்ப்பித்தல். இது, மோட்ச வின்பத்தை அடைதற்கு அறிகுறியாகும்.
தூபம் : பல விதமான நறும் புகைகளைச் சமர்ப் பிப்பது. இது, ஆணவத்தைக் கிரியா சத்தி ரூபமான தூபத்தைக் கொண்டு அஞ்ஞான வாசனையை நீக்குதல்.
தீபம் : பல விதமான நெய்த்தீபங்களும், கற்பூர தீபங்களும் காட்டுதல். இது, தீபம் சிற்சத்தி ரூபம் என்பது. இது, ஆன்மாவின் மலத்தைப் போக்கி, ஞானத்தை விளக்கி, மெய்ஞ் ஞானத்தைப் பிரகா சிக்கச் செய்வது.
நைவேத்தியம் : சித்திரான்னங்களையும், பலகாரங் கள், பழவகை முதலியவைகளையும், சமர்ப்பித்தல். இது, ஆன்மாவின் தீய குணங்களாகிய, அகங்காரம், சங்கற்பம், குரோதம், மோகம் முதலியவற்றையும், ஆன்ம போதமாகிய, தற்போதத்தையும் நீக்கி, அன்புண்டாக்குமாறு, வேண்டுதலைக் குறிப்பது,

Page 65
84 சைவ சமய சிந்தாமணி
14. பாணியம் : வாசனை பொருந்திய தீர்த்தத்தை,
திருப்திக்காக, மூர்த்திக்குச் சமர்ப்பிப்பது.
15. செபசமர்ப்பணம் : மூல மந்திரத்தை 10, 108, உருக்
களைச் செபித்து மூர்த்திக்கு ஒப்பித்தல்.
16. ஆராத்திரிகை : கற்பூரம் வைத்த ஐந்து சுட ருடைய பஞ்சராத்திரி என்பதைச் சமர்ப்பித்தல். இது, சதாசிவ மூர்த்தியைக் குறிப்பது.
கற்பூரம் ஆன்மா என்றும், நெருப்பு சிவம் என்றும், எரிந்த முடிவில் இரண்டும் மறைதலை, ஆன்மா சிவத்துடன் கலத்தலையும், கருதுவது. மேற்காட்டிய பதினறில் சில வற்றை விட்டு, வேறு சிலவற்றைக் கொள்ளும் நூல்களு முள.
Gort Gorruargib, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, என்பவைகளின் விரிவை, சிவத்திரவிய இயலில் காண்க.
ஆசீர்வாதம்
பூசைகள் முடிந்த பின் குருக்கள் சுவாமிக்கு ஆசீர் வாதம் கூறுவர்.
தமிழ்வேதம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப் பல் லாண்டு, திருப் புராணம், திருப்புகழ், என்பனவற்றை மனங்கசிந்து அன்போடு பண் முறையாக ஒதல்
அருச்சனைகள்
பூசைகள் முடிந்த பின் விரும்பியோர் அருச்சனைகள் செய்வித்தல் வேண்டும். அதில் பல வகை இருக்கின்றன. சில அருச்சனைகளைத் தனிமையாய்ச் செய்விப்பதற்கு விசேட வசதிகள் செய்வித்தல் வேண்டும். சாதாரண அருச்சனை பலருக்கும் பூசையின் முடிவில் செய்யப்படும்.

-கிரியை இயல் 85
(1) சோடச அருச்சனை-18 (4) அஷ்டோத்தர சகச்சிரம்-1008. (2) அஷ்டோத்தர சதம்-108. (5) இலட்சருச்சனை-100008. (3) திரி சதி-300.
ஆசாரியர் கிரியைகள்
விளக்கம் : இவர் குருக்கள், அர்ச்சகர், ஐயர் எனப் பல பெயர்கள் பெறுவர். இவர்கள் வடமொழி தென் மொழிகளை நன்கு கற்று, இரண்டிலுமுள்ள சைவ சமய நூல் களை நன்கு கற்றவராய், ஆசார அனுட்டான சீலராய், தெய்வ பக்தி உடையவராய், சமய, விசேட, நிர்வாண, ஆசாரியாபிடேகம் பெற்றவராய், கோவிற் பூசைக் கிரியை களை வழுவின்றிச் செய்யவும், ஆற்றல் உள்ளவராய், குருவுக் குச் சொல்லப்பட்ட, உடற் குற்றம், மனக் குற்றம், நீங்கிய நல் இலட்சணங்கள் அமையப் பெற்றவராய் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அமைந்தவர்களே, பிரதிட்டை, மகோற்சவம் முதலிய காரியங்களைச் செய்தற்கு யோக்கியதை உடை யோராவர். இவ்வாறு இல்லாதவர்கள் கும்பம், தம்பம், யாகக் கிரியைகள் செய்தற்கு அருகராகார்.
கிரியைகள் யாதும் ஆரம்பிக்கு முன், ஆசாரியர் தமக் குத் தானே செய்ய வேண்டிய சிலவற்றைக் காண்க.
1. ஆசனம் : தேகசுத்தி அனுட்டானம் முடிந்த பின் கிரியை ஆரம்பிக்க இருக்கும் போது, கூர்மாசனம், மான்தோல் முதலிய ஆசனமொன்றில் இருக்க வேண்டும்.
2. வணக்கம் : விக்கினங்கள் இன்றித் தொடங்கும் கரு மத்தைக் காக்குமாறு விநாயகப் பெருமானை வேண் டுதல்.

Page 66
86
6
சைவ சமய சிந்தாமணி
. ஆசமனம் : மூன்று வகைத் தத்துவங்களையும் சொல்லி
நீரை ஆசமித்தல். இது, தத்துவ சுத்தியாம்.
. பிராணுயாமம் : மந்திரங்களினுல் மூச்சை இழுத்து,
அடக்கி விடுதல். இதனுல் பொறிகளும், மனமும், சுத்தப்பட்டு, அருள் வழி நிற்கும்.
சகளி கரணம் : சகளம்= தேகம்; கரணம் = சுத்தி
செய்தல்.
(அ) கரசுத்தி-கைகளை உள்ளும் புறமும், சக்தி மந்திரத்
தால் தடவி, குவித்து, அருளை வேண்டல்.
(ஆ) கரநியாசம்-கைகளில் சிவாசன மூர்த்தி, ஈசான
மூர்த்தி, மந்திரங்களினல், மந்திரங்களைப் பதித்து, சிவ கரங்களாக்கல்.
(இ) அங்க நியாசம்-சிவகரத்தால், அங்கம் முழுவதை
யும், மந்திரங்களால் தொட்டு சிவரூபமாக்கல்.
. சிவோகம் பாவன : சிவ = சிவம்; அகம் = நான்,
ஆன்மா: பாவனை = பாவித்தல், குருக்கள் தன்னை மூர்த் தியாகப் பாவித்தல். சுருக்கமாய்க் குருக்கள், மேற் காட்டிய கிரியைகளைச் செய்து கொண்ட பின்பே, கோயிற் கிரியைகளைச் செய்வார்
கும்ப பூசைக் கிரியைகள்
விளக்கம் : கும்ப மூர்த்தி என்னும் விஷயத்தைக் கட
வுள் இயலிற் காண்க. கும்பங்களினிடம் சுவாமியை வழி பாடு செய்யும்போது, முன் சொன்னபடி (கும்ப மூர்த்தியில்) அமைத்தல்வேண்டும். அதன் பின்,
ஆசனம் : கும்ப மூர்த்திக்கு ஆசனமாய், ஆதார
சக்தி, அநந்தர் முதலியோரை மந்திரத்தால் அமரச் செய்தல்.

-கிரியை இயல் 87
2.
ஆவாகனம் : மூர்த்தியை அதில் எழுந்தருளப் பண் ணல். சோடசோபசாரத்தில் சொல்லப் பட்டவைகள் இவ்விடத்து வேண்டப்படும். vn
. ஐவகைச் சுத்தி : (1) தானம்-இடம் (2) பூதம்-பஞ்ச
பூதம் (3) திரவியம்-பூசைப் பொருள்கள் (4) மந்திரம் (5) லிங்கம் ஆகிய இவ்வைந்தையும் மந்திரங்களினுல் சுத்திகரித்தல்.
. சிவ நியாசம் : கும்பத்தில் தலை தொடங்கி, கால்
வரையும் உள்ள, மந்திரங்களைப் பதித்து, சிவ சத்தி வடிவாக்கி, தான் (குரு) முன் இருதயத்தில் பதித்த, சிவபெருமானை, கும்பத்தில் எழுந் தருளும் படி
வேண்டல்.
. அந்தர்யாகம் : வெளியில் பூசை செய்தது போல், மனதில் பூசை செய்து, அந்தப் பூசைப் பலனை அவ
ருக்கு ஒப்புக் கொடுத்தல்.
ஆவரண பூசை : மூர்த்திக்கும், சூழ்ந்திருக்கும்,
மற்றைய தேவர்களுக்கும் பூசை செய்தல். மூல ஸ்தா னக் கதவு திறந்து பூசையாகு முன்னும், மேற்காட்டிய கிரியைகள் உள்ளே செய்யப்படும் என்பர்.
மகோற்சவ காலத்தில் செய்யப்படும் கிரியைகளை
மகோற்சவ இயல் என்னும் பகுதியிற் காண்க.
அக்கினி காரியக் கிரியைகள்
விளக்கம் : ஒமகுண்டத்தைச் சுத்தி செய்து, நெருப்பை
உண்டாக்கி, அதைச் சிவ சொரூபமாக்கல். குண்டத்தில் நெருப்பை வைத்து, சிவத்தையும், சத்தியையும் பூசித்து, அவர்கள் திருவருளை, அந் நெருப்புக்கு உயிராக்கி, அதைச் சோதி லிங்க வடிவமாகப் பாவித்துப் பூசித்தல்.

Page 67
88 சைவ சமய சிந்தாமணி
இதை வளர்ப்பதால், அதன் தன்மைகளில் இருந்து, நன்மைகளையும் தீமைகளையும் குறிப்பாய் அறியலாம். அக் கினி காரியத்துக்கு வேண்டிய பொருள்களைச் சிவத் திரவிய இயலில் காண்க.
இந்த யாகம் தூலம், சூக்குமம் என இருவகை. தூல யாகம் வெளியாய்த் தெரியும்படி புறத்தே செய்வது. குக் கும யாகம், எல்லாக் காரியங்களையும், பொருள்களையும், அகத்தின் இடமாய்க் கற்பித்துக் கொண்டு, உந்தியைக் குண் டமாய்க் கொண்டு, மானதமாய்ச் செய்வது.
1. சிருக்கு : நெய் சொரியும் பாத்திரம்; இதில் சிவ சத்தி யைப் பூசை செய்து, அதைச் சத்தியாய்ப் பாவித்தல்.
2. சிருவம் : சிருக்கை மூடும் பாத்திரம். இது சிவமாகப்
பாவிக்கப்படும்.
3. ஆகுதி : அக்கினிக்கு நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கப்
படும், நெய், பொரி, சாதம், சமித்து ஆதியன.
4. நாடி சந்தானம் : யாகத்தில் இருக்கும் சிவத்தைக் கும்பத்தில் இருக்கும் மூர்த்தியோடாயினும், வேறு இடத்தில் இருக்கும் மூர்த்தியோடாயினும், நூலால், அல்லது தருப்பையால், இணைத்துப் பூசை செய்வது.
5. பூரணுகுதி : நெய்யைச் சிருக்கில் விட்டு, சிருவத்தால் மூடி, நுனியில் பூவை வைத்து, எழுந்து நின்று, குண் டத்தில் தாரையாய் விடுதல். இது, கிரியையின் நிறை வைக் குறிப்பது.
6. யாகரட்சை : குண்டத்தை வளைத்து வைத்த தருப் பையை, ஒமாக்கினியிற் சுட்டு, நெய்யிற் கலந்து, சுவா மிக்குப் பொட்டு இடுவது.
7. யாகத்தின் தன்மை நைவேத்தியத்தை யாகம் நேரே
ஏற்பது; புகை, தேக ஆரோக்கியத்தையும், ஆயுள் விருத்தியையும் கொடுப்பது என்பர்.

-கிரியை இயல் 89
8. பலன் அறிதல் : எரியும் போது, நிறம், மணம், நடுங் கல், துடித்தல், காந்தியின்மை, கருகல், புகைதல் முதலிய வற்ருல், குற்றம் இருக்கிறதாக அறியலாம். அன்றியும், செய்விப்போனையும் விளங்கலாம். குற்றங் கள் இருந்தால் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.
எஜமானன் கிரியை
விளக்கம் : கிரியைகள் யாதும் செய்விக்க விரும்பி யோர் ஸ்நானம் செய்து, விபூதியிட்டு, சமய தீட்சை பெற்ற வராய் இருந்தால், அனுட்டானம் முடித்துக் கொண்டு, ஸ்நடனம் முதலியன செய்விக்கும் போது, குருக்களின் சமீ பத்தில் இருக்க வேண்டும்.
1. வணக்கம் : கிரியை முட்டின்றி முடியுமாறு, விநாய கப் பெருமானை வேண்டிக் குட்டி, வணங்கிக் கொள் ளல் வேண்டும். 2. ஆசமணம் : குருக்கள் தீர்த்தத்தைத் தர, மூன்று தரம் மந்திரம் தெரிந்தால், சொல்லிக் கொண்டு உட் கொள்க.
3. பிராணுயாமம் : மூக்கைப் பிடித்துக்கொண்டு மந்திரங்
களைச் சொல்லுக. 4. பவித்திரம் : குருக்கள் தரும் தருப்பை மோதிரத்தை,
அணிக.
5. சங்கற்பம் : குருக்கள் சங்கற்ப மந்திரங்களைச் சொல் லும் போது, சிந்தையைச் சிவத்தில் வைக்கவும். கிரி யைகள் முடிந்த பின், பவித்திரத்துடன், தெட்சணை யும் வைத்துக் கொடுத்து, குருக்களின் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்க.
விவாகக் கிரியைகள்
' விளக்கம் : அறம், பொருள், இன்பம், வீடு, அடைவ தற்காக, வாழ்க்கைத் துணையாய் ஒரு பெண்ணை மணக்கப்
12

Page 68
90 சைவ சமய சிந்தாமணி
பெறுதலே விவாகமாம். ஒரு ஆணும், பெண்ணும், சம்மத முடையவர்களாய், பெற்றேர் அனுமதியுடன் செய்து கொள் வதே சைவ முறையாகும். நம் சமய முறைப்படி நடக்கும் சில கிரியைகளைப் பின்வருமாறு காண்க.
கிரியைகள் செய்விக்க விரும்பியோர், மண்டபம் அமைத் தல் வேண்டும்.
1. அரசாணி : அரசு -சிவம், ஆல்=விஷ்ணு, வேம்பு= சத்தி, அரசையும், முருக்கையும் சிவ, சத்தியாய் நடுவர். இது, வழக்கத்தில் இல்லை; வழக்கம் என் பாரும் உளர்.
2. சங்கற்பம் : மணமகன் குருக்களிடம் சங்கற்பம்
பண்ணு வித்தல்.
3. பிள்ளையார் பூசை குருக்கள் பிள்ளையார் பூசை
செய்தல்.
4. புண்ணியாகம் : புண்ணியாகம் செய்தல். 5. பஞ்சகவ்வியம் : பஞ்சகவ்வியத்தால் சுத்திகரித்தல்.
6. அங்குரார்ப்பணம் : பாலிகைச் சட்டிகளில், தானி
யங்களை முளைக்கும்படி இடுதல்.
7. இரட்சாபந்தனம் : மணமகனுக்கும், மணமகளுக்கும்
காப்புக் கட்டுதல்.
8. கும்பங்களுக்குப் பூசை : கும்பத்தில் சிவன் அம்
மனைப் பூசித்தல்.
9. ஓமம் வளர்த்தல் : குண்டத்தில் அக்கினி காரியம்
செய்தல்.
10. பிதுரர் ஆசீர்வாதம் : பிரிந்து போன முன்னுேரை
வேண்டுதல்.

-கிரியை இயல் 9.
11.
3.
l3,
14.
5.
6.
7.
18.
9.
மணமகனுக்கு உபசாரம் : மணமகளுடைய தந்தை யாவது, தமையனுவது, தாய் மாமனுவது, கால் கழுவி வஸ்திரம் கொடுத்தல்.
கன்னிகா தானம் மேற் காட்டிய யாராவது ஒருவர், சங்கற்பம் செய்து, கிழக்கு முகமாய் நின்று, மண மகன் கையில், சுத்தி செய்யப் பெற்ற மணமகள் கையை வைத்து, நீர் வார்த்து ஒப்படைத்தல்.
கூறை கொடுத்தல் : ஒரு தாம்பளத்தில், கூறை, தாலி, மற்றும் பொருட்களை வைத்து, சுத்தி செய்து, பூசித்த பின், அவை பெரியோர்களால் ஆசீர்வதிக்கப் பட்ட பிறகு மணமகன், மணமகளுக்குக் கூறையைக்
கொடுத்தல்.
தாலி கட்டல் : தாலியில், சிவம், விநாயகர், இலக் குமி, ஏதும் ஒரு சின்னம் இருக்க வேண்டும். அதை முகூர்த்தத்துள், மணமகள் கழுத்தில், இறைவனை வேண்டி, உமாமகேஸ்வரர் நாமஞ் சொல்லிப் பூட்டித் திருநீறு இடல் வேண்டும்.
அக்கினி பூசை : மணமகன் ஒமத்தால் சிவமாய்ப் பூசித்தல்.
பால் பழம் கொடுத்தல் : (கலத்திற் போடல்) தயிர், தேன், சருக்கரை, பழம் சேர்த்துச் செய்யப்பட்டதை யாவது, வேறு உணவையாவது, இருவரும் உண்ணச் செய்தல்.
கோதரிசனம்: சகுனத்துக்காகப் பசுவைத் தரிசித்தல்.
பாணிக்கிரகணம் : மணமகன், மணமகள் இருவரும் கைப் பிடித்தல்.
அம்மி மிதித்தல் : கல் ஒன்றை (அம்மியை)ப் பூசை செய்தபின், மணமகள் வலக்காலை, மணமகன் தூக்கி,

Page 69
92 சைவ சமய சிந்தாமணி
மூன்று தரம் அதில் அழுந்தும்படி செய்தல். இது, அவள் தன் நிலையிலும், கற்பிலும், இளகாமல் கண வனில் நீங்காத பற்று வைத்திருக்க வேண்டியது என் பது. இஃது மணமகனுக்கும் ஒக்கும்.
20. அருந்ததி காட்டல் : குருக்கள் தம்பதிகளுக்கு, வசிட்டரதும், அருந்ததியதும், ஒழுக்கம், அன்புடை மைகளை விளக்கி, நீவிர் இருவரும் கற்பு நெறிதவரு திருக்க வேண்டும் என்று வற்புறுத்தி, ஆசீர்வதித்தல்.
இவற்றைச் சுருக்கமாய்க் காட்டினம். மாலை சூடுதல், கண்ணேறு கழித்தல், ஊஞ்சல் ஆடுதல், முதலிய பிறவும் இருக்கின்றன.
இவை பணக்காரர்தான் செய்ய முடியும் என்பர் சிலர். குறைந்த அளவிலும் செய்விக்கலாம். இயலாதவர் கள், கோயிலிலாவது, வீட்டில் பிள்ளையார் பிடித்து வைத் தாவது, பலர் முன்னிலையில் அன்பாய் மணஞ் செய்து கொள்ளலாம்.
புதுமனை குடிபுகும் கிரியைகள்
விளக்கம் : புது வீட்டில் குடி புகுமுன், வாசலில் பசு மாடு கட்டி, பின் வரும் பொருட்களை இடித்துத் தூபம் இடு தல் வேண்டும். இது வீட்டில் அசுத்த வாயுவையும், விஷ செந்துக்கள் பூச்சிகள் முதலியவற்றையும் அகற்றும் தன்மை go-66-tt gil.
கிரியைகள் : (1) சங்கற்பம் (2) புண்ணியாகம், விக் னேச்வர பூசை (3) வாஸ்துவுக்குப் பூசை (4) யாகம் (5) நவக்கிரக பூசை (6) இலக்குமி பூசை (7) கிரகத்துள் பிரவேசம் செய்தல் (8) பால் காய்ச்சுதல் (9) பொங்கல் செய்தல், முதலியவைகளைச் செய்து கொள்க.
தூபப் பொருள்கள் கொம்பரக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், வசம்பு, பெருங்காயம், குக்கில், பேய்ப்புடலை,

-கிரியை இயல் 93
சாம்பிராணி, குங்குலியம், அகில், சந்தனம், தேவதாரு, இவற்றை விரும்பிய அளவு எடுத்து இடித்துத் தூபம் இடுக.
அபரக் கிரியைகள்
விளக்கம் : இறந்துபோன நம் முன்னேர்க்குச் செய்ய வேண்டியவை. துறவிகளுக்கு இது இல்லை. " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ‘’, ‘* எழுபிறப்புந் தீயவை தீண்டா பழி பிறங்கா, பண்புடை மக்கட் பெறின் ', ‘நன்றி மறப்பது நன்றன்று ’’ என்னும் மூதுரைகளின் பொருள்களை விளங்கினுல் இதனை ஆட்சேபிக்கமாட்டார்கள்.
பிள்ளைகளால் இக்கிரியை செய்து வரும் பயனை அடையப் புண்ணியஞ் செய்த பெற்ருர், இவை செய்யும் புண்ணியப் புதல்வரை, மக்களாய்ப் பெற்றிருப்பர். மக்கள் விட்டுப் பிரிந்த-இறந்து போன, தந்தை தாயர்க்கு, இவை செய்வ தால், தாமும் தம் மனைவி மக்களும் புண்ணியர்களாக முடியும்.
அன்பும் சிரத்தையுமுடைய, பிறர் செய்தாலும் இறை வன், இக் கிரியை குறித்துச் செய்யும் ஆன்மா எப்பிறவி எடுத்திருந்தாலும் அடையச் செய்வார் என்பது சைவ நூற் கொள்கை. எல்லாச் சமயத்தவர்களும் இறந்தோரை நினைந்து, ஏதோ கிரியைகள் செய்கின்றனர்.
தீட்சைகள் பெற்று, மாமி சம் உண்ணுதவர்கள் சுத்த சைவர் எனப்படுவர். அவர்களுக்குப் பிணத்தைச் சுடலையில் வைத்தே அந்தியேட்டி செய்து சுடுவார்கள். அவர்கள் அல்லாதவர்களை அசுத்த சைவர் என்பர். இவர் களைச் சுடவிரும்பினுல், ஆசாரியரைக் கொண்டு வந்து, செய்விக்கலாம். இவர்களுக்கு ஆகுச (குற்ற) முடிவிலே தான், அக்தியேட்டி செய்வார்கள், சுத்த சைவர் அல்லாத வர்களுக்காய்ச், சுட விரும்புபவர்களுக்காக, சில முறைகளை இங்கு காட்டுவாம்.

Page 70
94
சைவ சமய சிந்தாமணி
l.
மரணக்கிரியை தகனம் செய்ய விரும்புவோர், ஆசா ரியரை அழைத்துத் தகனம் செய்யலாம். ஆசாரியரை அழைக்க இயல்பில்லாவிட்டால், அறிந்த பெரியவர் களைக் கொண்டு, சவத்தை அபிஷேகம் செய்து, குடம் கொள்ளி கொண்டு போய், தகனஞ் செய்யலாம். மூன்று வயதின் மேற்பட்டவர்களைச் சுடலாம்.
. சுடலைக் கிரியை : சுடலையில் கொள்ளியின் மேல்
சவத்தை வைத்து மூடிய பின், குடத்தையும், நெருப் புக் கொள்ளியையும், சுடுபவர் எடுத்துக்கொண்டு, சவத்தை இடமாய் மூன்றுதரம் சுற்றிய பின், தலை மாட்டில் தென் முகமாய் மண்டியிட்டு இருந்து, முன் ஞல் குடத்தைப் போட்டு உடைத்து விட்டு, பின்னல் பாராமல் தலைமாட்டில் நெருப்புக் கொள்ளியைச் சொருகி விட்டு, திரும்பிப் பாராமல் போய்விட வேண்டும். கொண்டு போகும் குடத்தை வர்த்தனி கும்பம் என்பர். நிற்பவர்கள் மற்ற அலுவல்களைச் செய்யலாம்.
. அத்தி சஞ்சயனம் : எலும்பு, சாம்பல் எடுத்தல் ;
முதல் ஐந்து நாட்களுள், அல்லது ஏழு, ஒன்பதாம் நாட்களுள் எடுக்கலாம். மேற்பட்டால், நாள் பார்த் துச் செய்தல் வேண்டும். சுடலையில் வயிரவருக்குப் படைப்புப் பூசைகள் செய்தபின், அத்திகளுக்கும் அபி ஷேகம் செய்து, புது முட்டியில், எலும்புகளையும், பெட்டியில் சாம்பரையும் எடுத்து வந்து, புண்ணிய தீர்த்தங்களில் (நீரில்) விடவேண்டும். கால், தொப் பூழ், நெஞ்சு, முகம், தலை, என்பவைகளில் முறை யாய் எலும்புகளை எடுக்க வேண்டும்.
வரும் வழியில், ஐயர் ஒருவருக்கு நக்ன தானம் என்று ஒன்று கொடுப்பார்கள். விளக்கு, செம்பு, இறந்தவர் பாவித்த வேறு பொருட்கள், வஸ்திரம், அரிசி, காய்கறி, தட்சணை, ஆகிய இவைகளைக்
கொடுப்பார்கள்.

-கிரியை இயல் 95
4. அந்தியேட்டி : அந்திய + இட்டி - கடைசியான பாகம். இறந்த வீட்டுக்காரரின், ஆசூச எல்லையில் குருக்களைக் கொண்டே இக் கிரியைகள் செய்விக்கப் படல் வேண் டும். இதில் சுடுதல் இருந்து எல்லாக் கிரியைகளும்
செய்யப்படும்.
(அ) பாஷாண பூசை கல்லில் ஆள் உருவம் சமைத்து அதற்குப் பூசை, அபிஷேகம், நைவேத்தியம் முதலிய சமர்ப்பித்து, கல்லையும் சேர்ந்த பொருள்களையும் நீரில் விடுவார்கள். அன்றைக்கு வீட்டில் ஐயர், குற்றங் கழித்தலும், சபிண்டி, தர்ப்பணம் முதலிய சில கிரியைகளும் செய்வார்.
(ஆ) சபிண்டீகரணம் : ஆசௌச முடிவிலும், வருட முடிவி லும் செய்வார்கள் என்று கூறுகின்றனர். பிண்டம் போட்டு சபிண்டி செய்தாலே இறந்தவருடைய ஆத் துமா பிரேத நிலையில் நீங்கி பிதிர்த் தன்மையை
அடையும் என்பர்.
(இ) மாசியம் செய்தல் வருட முடிவுக்கு முன் ஒவ்வொரு மாசமும் இறந்த, பட்ச, திதியில் அவருக்காகச் செய் யும் வழிபாடாம். சிலர் வருட முடிவிலும் செய்வார்.
5. வருட சிரார்த்தம் : முதலாம் வருட முடிவில் செய் வதை ஆட்டைத் திவசம், என்றும், பின் வருடந் தோ றும் செய்வதைத் திதி அல்லது திவசம் என்றும், சொல் வர். அன்றியும் மகாளயம், அமாவாசை, பெளர் ணிமை காலங்களிலும், புண்ணிய தீர்த்தம் ஆடிய பொழுதும், முன்னேரை நினைந்து, சிரார்த்தம், தர்ப் பணம், தானம், தருமம் முதலிய செய்வது நன்மை யைப் பயக்கும்.
இவற்றை இயல்புக்கு ஏற்கச் செய்யலாம். ஒன்றும் இல்லாதவர், இறைவனை நோக்கி, ‘* ஆத்துமா நற்கதி அடைய வேண்டும்” என்று இறந்தவருக்காக,

Page 71
96
சைவ சமய சிந்தாமணி
வேண்டுதலாவது செய்யலாம். இங்கு கூறிய அபரக் கிரியைகள் பெரும்பாலும், தேச வழக்கத்தை ஒட் டியவை. வேறு ஊர்களில் இவை வேறு பாடாயும் இருக்கலாம். தென் புலத்தாருக்குச் செய்யும் கடமை யை, முதலாவதாக, பொய்யா மொழியார் வைத்தார்.
. துர் மரணம் : பாம்பு, கயிறு, நீர், மலை, காற்று,
நெருப்பு, ஆயுதம், மரம், விஷங்கலந்த நீர், யானை, புலி, ஆதியவைகளால், துர் மரணம் அடைந்தவர் களுக்கு, ஆறுமாசமோ, ஒரு வருடமோ கழிந்த பின் னர், அவர்கள் மரணம் அடைந்த மாசம், பட்சம், திதி, வந்த அன்றைக்கு, உருத்திர பலியுடன், அந்தி யேட்டி செய்விக்க, நூல்கள் கூறுகின்றன. மேலும், தேகம் துண்டுபட்டவன் கூடியரோகி, குஷ்டரோகி, அம்மைரோகி, இவர்கள் இறந்தால் தருப்பையால் உருவம் செய்து கிரியைகள் செய்விக்க விதிகள் உண்டு.
. தனிஷ்டா பஞ்சகம் அவிட்டத்துக்கு ஆறுமாசமும்,
சதயத்துக்கு மூன்று மாசமும், பூரட்டாதிக்கு ஒன்றரை மாசமும், உத்திரட்டாதிக்கு ஒரு மாசமும், இரேவ திக்கு அரை மாசமும், இறந்தால் தனிஷ்ட பஞ்சமி என்பர். இத்தோஷம் நீங்க, சாந்தி, செய்விக்க வேண்டும்.
8. மரண நட்சத்திர தோஷம் அல்லது திரி புஷ்கரயோகம்.
(அ) நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்,
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
ஆ) திதிகள் துவிதியை, சப்தமி, துவாத்சி.
(இ) வாரங்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி,
இவை பொருந்தி வருதலாம்.
அப்படிப் பொருந்திய காலங்களில், மரித்தல், தகித் தல், நிகழ்ந்தால் சாந்தி செய்விக்க வேண்டும்.

-ரிெயை இயல் 97
9.
0
தோஷ காலங்கள் ; ரோகணிக்கு நாலு மாசமும், மிருக சீரிடம், சித்திரைக்கு இரண்டு மாசமும் தோஷ காலம் என்பர். மேற் கூறியவை நிகழ்ந்தால், சாந்தி செய்ய வேண்டும்.
. நவதானியங்களும் கிரகங்களும் :
1. கோதுமை-சூரியன் 6. மொச்சை-வெள்ளி 2. நெல்-சந்திரன் 7. எள்ளு-சனி 8. துவரை-செவ்வாய் 8. உளுந்து-இராகு 4. பயறு-புதன் 9. கொள்ளு-கேது 5. கடலே-வியாழன்
கும்பாபிஷேகக் கிரியைகள் அதிகமாய் இருக்கிறபடி யால், இவற்றை விரிவஞ்சி, எழுதாமல் விடப்பட்டன.
13
--------ഃസ്രം.--ml

Page 72
98 சைவ சமய சிந்தாமணி
மகோற்சவ இயல்
விளக்கம் : மகோற்சவம் - மகா + உத் + சவம் மகா - பெரிய உத்-உயர்வான்; சவம்=சிருட்டி முதலிய காரியங்கள்.
எனவே, உயர்ந்த மேலான ஐந்தொழில்களைக் கருதுவது என்றும், மகா - மேலான, உத்=ஞானம், சவம்=போகம், மோட்சம், எனவே மேலான ஞானத்தையும், போக மோட் சங்களையும், கொடுக்க வல்லது என்பது என்றும், உத்தம யாகம் என்றும் பொருள் கொடுப்பது.
கோயில்களில், நித்தியம், நித்தியாங்கம் நைமித்திகம், நைமித்திகாங்கம்; காமிகம், காமிகாங்கம்; என்னும் ஆறு வகையான அங்கமுடைய பூசைகள், உற்சவங்கள் நடைபெறு கின்றன. மேற்காட்டிய ஆறு அங்கமுடைய பூசை உற்சவங் களின் பொதுக் கருத்தைச் சுருக்கித் தருவாம். விபரமாய் நூல்களிற் காணலாம்.
நித்தியம் நித்தியாங்கம், சாதாரணமாய் கோயில்களில் தினம் நடக்கும் பலகாலப் பூசைகளும், சாதாரண உற்சவங் களுமாம்.
நைமித்திகம் நைமித்திகாங்கம், வருடாந்த மகோற் சவமாய், கொடியேற்றி, அல்லது விசேடமாய்ச் செய்யப் படும், பூசைகளும், திரு விழாக்களுமாம்.
காமிகம் காமிகாங்கம், இஷ்டப்படி விரதங்களை அனுட் டித்தலும், விரத உத்தியாபனங்கள், செய்தலுமாம், ஆகிய பூசைகளும் விசேடங்களும் என்று கூறுவர்.
இங்கு காட்டப்படுவது, கொடியேற்றிச் செய்யும் மகோற்சவத்தையே, விமானம் - துரபி, இல்லாத கோயில்

-மகோற்சவ இயல் 99
களில் கொடியேற்று விழாச் செய்யக் கூடாதென்பர். இம் மகோற்சவம் நடக்க வேண்டியதற்குப் பல காரணங்கள் உள்ளன.
9/60) ahil 11 T6) 16öT
1. நித்திய நித்தியாங்கங்களில், அறிந்தும் அறியாமலும் மந்திரம், கிரியை, பாவனைகளாலும், வழிபடுவோரா லும், நிகழ்ந்த குற்றங்களைப் போக்குவதற்கு என்றும்,
2. மகோற்சவ காலங்களில் விசேடமாகக் கூடுதலான மந்திரங்கள், கிரியைகள், பிரயோகிக்கப் படுவதனல், மூர்த்திகரம் அதிகரிக்கும் என்றும்,
3, மகோற்சவ காலங்களில், சுவாமி வீதியில் எழுந்தருளி வருவது, ஆலய தரிசனம் பண்ணுதவர்களுக்கும் அருள் பாலித்தற் பொருட்டு என்றும்,
இவைகளை விட இன்னும் பல காரணங்களும் கூறுவர். அன்றியும், வீதியில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வந்து காட்சி கொடுப்பதைச் சாம்பவதீட்சை என்றும் நூல் கள் கூறுகின்றன.
கால விசேடம்
மகோற்சவங்கள் யாதாயினும் ஒரு கால விசேடத்தை
அடிப்படையாகக் கொண்டே, அதன் முதலாவது முடிவா
வது, இரண்டுமாவது இருக்கும்.
அண்ட, பிண்ட, சமம் முன் கூறப்பட்டது. கண்ணுக் குத் தெரிவது, தூலம் என்றும், தெரியாதது சூக்குமம் என் றும் யாவரும் அறிவர். மனிதருடைய ஒரு வருடம் தேவர் களுக்கு ஒரு நாள்.
1. உத்தராயணம் : தை முதல் ஆனி முடிய ஆறு மாத காலம். தேவர்களுக்கு இது பகல்; பிண்டத்தில்

Page 73
100
சைவ சமய சிந்தாமணி
பிராண வாயு, வல நாடியில் இருந்து, இட நாடியில் மாறும் காலம் என்றும்;
. தெட்சணுயனம் : ஆடி முதல் மார்கழி முடிய உள்ள
ஆறு மாத காலம்; தேவர்களுக்கு இது இரவு; பிண்டத் தில் பிராண வாயு இட நாடியில் இருந்து வல நாடியில் மாறும் காலம் என்றும்;
. அமாவாசை : பிண்டத்தில்-சரீரத்தில், பிராண வாயு,
நடு நாடியாகிய சுழுமுணு நாடியில் சேருங்காலம் என்றும்
பூரணை : ஞானப் பிரகாசத் தெளிவு நினைவாகார
மாய்ப் படுங் காலம் என்றும்;
சூரியகிரகணம் : பிராண வாயு சூரிய நாடியாகிய
வல நாடியில் நின்றும், குண்டலினியுடன் உந்தியின் கீழ், இரண்டு அங்குலம், சர்ப்ப வடிவாகிய குண்டலினி சத்தியில் பொருந்தும் காலம் என்றும்;
. சந்திரகிரகணம் : பிராண வாயு, இட நாடியில் நின்
றும் உந்திக்கு இரண்டங்குலம் கீழ், முன் சொன்ன சத் தியில் பொருந்தும் காலம் என்றும், நூல்கள் கூறும்.
மற்றைய விசேட காலங்களுக்கும் இவ்வாறே உட்
பொருள்கள் இருக்கின்றன. இம் மகோற்சவத்தில் வரும் கிரியைகளில் சிலவற்றைக் காண்க. பலவாறு ஆகமங்க ளுக்கு ஏற்றபடி கூறுவர்.
கிரியைகள்
1.
அனுஞ்ஞை : குருக்கள் மகோற்சவத்தை ஆரம்பித்து
நடத்த, அனுமதி தந்து காத்து அருள் பாலிக்குமாறு
பெருமானை வேண்டுதல்.
கிராமசாந்தி வீதியின் மேற்குப் புறத்தில் மண்ட
பம் இட்டு, வயிரவ மூர்த்தியையும், அவரது பரிவாரங்

-மகோற்சவ இயல் 101
களையும், பூசை, பலி, முதலியவைகளால், திருப்தி செய்து, கிராமத்தைக் காக்குமாறு வேண்டுதல்.
3. வாஸ்துசாந்தி கிரியையும், மந்திரமும், வீதியும், சுத்தி ஆவதற்காக, வாஸ்து புருடனுக்குக் கிரியை களால், சாந்தி செய்த பின், பலாசு, அத்தி, அரசு, இவைகளின் இலைகள், தருப்பை, வைக்கோல் முதலிய வைகளால், புருட வடிவமாகக் கட்டி, அதைச் சிவாக் கினியில் கொளுத்தி, வீதிகள், யாகமண்டபம் முதலிய
வற்றில் இழுத்தல்.
4. மிருத்சங்கிரணம் (மண் எடுத்தல்) புண்ணிய தீர்த் தக்கரை, நந்தவனம், வில்வ விருட்சத்தடி, போன்ற இடங்களில் சுத்திகரிப்பு முதலிய கிரியைகள் பூசைகள் செய்தபின் முளை இடுவதற்காக அவ்விடம் முறைப்படி மண்ணை எடுத்தல்.
5. அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) எடுத்த மண்ணைப் பாலிகை (மண்சட்டி) களில் இட்டு, தானியங்களைத் தூவி, முளைக்கச் செய்தல்; பயிரின் செழிப்பால் நன்மை தீமைகளை அறிந்து, தீமை தெரிந்தால் நிவிர்த்தி செய்வர்.
6. இரட்சாபந்தனம் ( காப்புக்கட்டுதல் ) ர = எல்லா; கூடி = பாவ நாசம், பந்தனம்= கட்டுதல்; எனவே, எல் லாப் பாவங்களையும் நீக்கக் கட்டுவது எனப் பொருள் படும். முறைப்படி, மூர்த்தியில் ஆவாகித்து ஆசாரி யர் தொடங்கிய கிரியையும் கருமமும் சித்தியாதற் பொருட்டு பந்தனம் செய்வர்.
அதனல் அவரை ஆசூசங்கள் பந்தியா மூர்த்திகளுக் கும் கட்டுவர். பிள்ளைகளின் நோயைப் போக்க, அன்னை மார் மருந்து உண்பது போல, ஆன்மாக்களின் மலப்பிணியை நீக்குவதற்காக மூர்த்திக்குக் கட்டுதல்.

Page 74
O2
சைவ சமய சிந்தாமணி
0.
பேரிதாடனம் (மேளமடித்தல்) : மேளத்துக்குப் பூசை
செய்து, எல்லா உலகங்களுக்கும், பிராணிகளுக்கும், நன்மைகள் உண்டாக வேண்டும் என்றும், தீமைகள் ஒழிய வேண்டும் என்றும், குருக்கள் மேளம் அடித்து ஓசை எழுப்புவர்.
. கொடிச்சீலை வரைதல் : ரிஷபம், கும்பம், சங்கு, தீபம் ,
அஸ்திரம், பேரி, சூரியன், சந்திரன், மணி, திருவாசி, குடை, கண்ணுடி, இரட்டைச் சாமரை, பூgவற்சம், சுவஸ்திகா என்பவைகளைச் சீலையின் தலைப் பகுதியில் வரைந்து பூசை செய்தல்.
. கும்ப மூர்த்தி பூசை : கும்ப மூர்த்திகளுக்கும், கொடி
மரம், கொடிச் சீலை, அஸ்திர தேவர், பலி பீடம், இவைகளுக்கும் பூசைகள் முடித்தபின், சுவாமியை எழுந்தருளச் செய்து, தம்பத்திற்குத் தென்புறமாய், வடக்கு நோக்கி நிறுத்தி, கொடியேற்றம் செய்யப் படும்.
கொடியேற்றலும், கருத்தும் : செய்ய வேண்டிய கிரியைகள் முடிந்த பின், கொடியேற்றுவார்கள். இதைப் பற்றிப் பல விதமாய்ப் பொருள்கள் கூறுவர்.
(அ) சரியை முறையில், சாதாரண கருத்தில், மண்ணுல
கத்தை ஆளுகின்ற, செங்கோல் அரசனின் ஆணைக்கு அவனுடைய முடி, கொடி, செங்கோல், வீரம், வெற்றி, நீதி, ஆதியன அரச பண்பாடுகளைக் குறிக் கும் சின்னங்களாகும். இவ்வரசன் கீழ்க் கொடுங் கோன் மன்னர் வலியழிந்து நிற்பர்.
அது போல, மும் மல பந்தக் கொடுமைகளால் வருந்தும் ஆன்மாக்கள் சிவ தீட்சை பெற்றுப் பஞ் சாட்சரத்தை ஓதி வர சர்வலோக நாயகராகிய சிவ பெருமானின் திருவருளாகியது, அவ்வான்மாக் களைப் பற்றிச் சிவப்பேறு அடைய உயர்த்திப் பேரின் பம் நல்கும்.

-மகோற்சவ இயல் 103
(學)
(g)
( . )
மண்ணுலக அரசனுக்கு வருடத்தில் ஒரு முறை, அவன் பிறந்த, முடிசூடின, நாள் போன்ற கொண் டாட்டங்களை மிக விமரிசையாய், பிரசைகள் கொண் டாடுவது போல, சகல அண்ட சராசரங்களையும் ஆளுகின்ற இராசேச்வரனகிய கடவுளுக்கும் வரு டத்தில் ஒரு முறை மகோற்சவம் செய்வதன் பொருளும் இது, என்று கொளல் பொருந்தும்.
கிரியை முறையில், சிவமும் சத்தியும் இணைந்த சூக்கும லிங்கமாகக் கொண்டு, மூர்த்திகளுக்குச் செய்யும் சகல பூசை, அபிஷேக முறைகளும் இதற் குச் செய்யப்படுகின்றன.
யோக முறையில், கொடிமரம் அன்ன உடம்பாலாய முள்ளந்தண்டினையும், பிராண உடம்பாலாகிய சுழு முனு நாடியையும், கொடிச் சீலை பாம்பு வடிவான குண்டலினி சத்தியையும், கயிறுகள், வல, இட, சுவாச நாடிகளையும், குறிக்கும்; எனவே மூலாதாரம் இருந்து பிரம்மரந்திரம் வரைக்கும், மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சத்தியை, பிராண வாயு மூல மாய், சுழுமுன நாடி வழியாகச் செலுத்தி, ஆறு ஆதாரங்களையும் கடக்க, மேலாதாரமாகிய பிரம்ம ரந்திரத்தில் உள்ள அமிர்தம் உருகித் தேக மெல் லாஞ் செறியும்; அப்பொழுது இறைவனை உள்ளே கண்டு, தியானித்து இருக்கலாம். இந் நிலை கைவந் தால், கூடு விட்டுக் கூடு பாய்தல், அந்தர மார்க்க
மாய்ச் செல்லல் முதலிய அட்டமா சித்திகளும் கிட்
டும் என்றும் யோகப் பெரியார்கள் கூறுகின்றனர்.
ஞான முறையில், கொடிமரம் வெறுமையாய் இருக் கும் போது, சிவம் ஒடுக்க முறையில் தானே தனித்து நிற்கும் நிலையையும், கொடியேற்றிய பின் சீலை ஆன் மாவையும், வெண் கயிறு சத்தியையும், தருப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கும்.

Page 75
104. சைவ சமய சிந்தாமணி
எனவே, ஆன்மா பாசத்தில் நின்றும் நீங்கி, சிவபெரு மானை அடையும் இடத்து, திருவருட் சத்தி வாயிலாகவே அடைதல் வேண்டும்; இவ்விதமே கொடியேற்றத்திலும், பசுவைக் குறிக்கும் கொடிச் சீலை, திருவருளைக் குறிக்கும் வெண் கயிறு வழியாகச் சென்று, தம்பத்தில் ஆழுதாரத்தை ஆசனமாகக் கொண்டு, அதன் மீது இருக்கும் பரமசிவத்தை அடையும்.
தம்பத்தில் சீலை சுற்றப் பட்டு ஒன்ருகி விடுதலால், ஆன்மா சிவத்தில் இரண்டற்று நிற்கும் அத்துவித நிலையைக் குறிக்கும்.
பஞ்சாட்சர முறையில், துவசத் தம்பம் பதி எழுத்தை யும், கொடியேற்றும் நூற்கயிறு பரை எழுத்தையும், கொடிச் சீலையில் எழுதப் பட்ட ரிஷபம்-எருது, உயிரெழுத் தையும், கொடிச் சீலை திரோதன எழுத்தையும், தருப்பைக் கயிறு மல எழுத்தையும் குறிக்கும்.
கொடியேற்றி உற்சவம் செய்தல் பொதுவாய், ஆன் மாக்களுக்குப் பஞ்சகிருத்திய மூலமாய் அருள் செய்து, உயர்த்திப் பேரின்பத்தை நல்குவதையே குறிக்கும்.
" அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலப் பெருவெழுத்து-நெஞ்சழுத்திப் பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினயும் கூசாமற் காட்டக் கொடி"
- கொடிக்கவி ஞானநூல்.
uLTas5tb
மகோற்சவம் முடியும் வரையும் யாக சாலையில், அக்கினி வளர்த்து ஓமம் செய்வர்; யாக சாலை எங்கும்-சாந்தியாதீத கலா சொரூபம்; யாகக் கால்கள்-பதாத்துவா மண்டபத் தின் மையம்-வர்ணுத்துவா மண்டபம் இருக்கும் இடம்புவனத்துவா: ஓமத் திரவியங்கள்-தத்துவாத்துவா கும்

-மகோற்சவ இயல் − 105
பங்கள்-மந்திராத்துவா; நான்கு வாயில்கள்-நிவிர்த்தி முத லிய கலாத்துவா; முன் எடுத்த மண்ணைப் பன்னிரு சூரியர் களைக் குறிக்கப் பன்னிரு பாலிகைகளில் இட்டு, நாற்புறமும்
வைப்பர்
அட்ட திக்குப் பாலகர், மூர்த்தி, சந்திரன். இவர் களுக்குக் கும்பங்கள் நிறுத்துவர்; யாகேஸ்வரர், யாகேஸ்வரி, அத்திரதேவர் யாவருக்கும் பூசை நடத்துவர். ஆலயத்தில் உள்ள மூல மூர்த்தி எதுவோ, அதன் ஆயுதமே அஸ்திர தேவர் என்று கொள்ளப்படும்.
யாகசாலை அக்கினியில் ஆகுதி செய்தல், ஆன்மாக்கள் செய்த கன்மங்களை, அனுபவத்துக்கு வர ஒட்டாது சுத்த மாக்கும் பாவனையாகும்; உமி நீங்கிய சுத்தமான நெற்பொரி (நென்மலர்) மலம் நீங்கிய ஆன்மாக்களைச் சிவத்தோடு சேர்க் கும் பாவனைக்கே ஆசாரியரால் சுவாமிக்குச் சமர்ப்பிக்கப் படுவது.
முளைகளின் வளர்ச்சி, தேய்வுகளால், குற்றம் குறை களை அறியலாம் என்பர். இவ் யாகச் செய்கையாலும் மூர்த்தி கரம் அதிகரிக்கும்.
அஸ்திரதேவர்
அரசனுடைய செங்கோலைக் கருதுவது போல், ஆண்ட வனின் ஆணையாகிய செங்கோலைக் கருதுவது இது.
அட்ட பாலகர் பூசை
பலி பீடத்தைப் பிரதிட்டை செய்து, அதையும் அஸ்திர தேவரையும் கொண்டு அட்டதிக்குப் பாலகர்களுக் குப் பூசை செய்தல். இது திரோதன சத்தியால் கர்மங் களைப் பரிபாகப் படுத்தல் என்பர்.
14

Page 76
106 சைவ சமய சிந்தாமணி
உற்சவங்களின் பொருள்கள்
கொடியேற்று மகோற்சவங்கள் குறைந்தது பத்து நாட் களுக்காவது இருக்கவேண்டும் என்பர். மேற்பட பதி னென்று, பதின் மூன்று, பதினைந்து, பதினேழு, இருபத் தொரு நாட்களும், அதற்கு மேலும் செய்வர். அதற்கெல் லாம் காரணங்கள் இருக்கலாம். இங்கு பத்து நாள் விழாக் களுக்கே, காண்க.
(அ) பஞ்ச கிருத்திய முறை.
(1) படைத்தல் - ஆரம்பம் இருந்து கொடியேற்றம்
(pill.
(2) காத்தல் - வீதியில் சுவாமி வாகனங்களில் எழுந்
தருளல்.
(3) அழித்தல்-தேரில் எழுந்தருளி வருதல்.
(4) மறைத்தல்-மெளன உற்சவம்.
(5) அருளல்-தீர்த்த உற்சவம்.
(ஆ) வேறு முறை. ஒவ்வொரு நாள் உற்சவத்தின் கருத்
துக்களையும் விபரமாய் விளங்காவிட்டாலும் அறிந்து கொள்க.
1ம் நாள். தூல சரீரத்தை நீக்குதல். இது உள் நிலைக் கருவி முப்பத்தாறும், புற நிலைக் கருவி அறுபதும், ஆகிய தொண்ணுாற்ருறு தத்துவங்களால் ஆகியது. இது நான் அல்ல; நான் ஆன்மா என்பதை அறியச் செய்வது.
சமய இயல், சைவ சமய தத்துவங்கள் என்னும் தலைப்பிற் காண்க.
ஆன்ம இயல், தூல உடம்பு என்னும் தலைப்பிற் காண்க.

-மகோற்சவ இயல் 107
2ம் நாள். துரல, சூக்கும, தேகங்களை நீக்க வேண்டும்; நல்வினை, தீவினைகளைப் பயன் படுத்தல் என்பாரு முண்டு. சூக்கும உடம்பு, சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டினலும் ஆனது. இது, தூல உடம்பு எடுப்பதற்குக் காரணமாய் உள்ளது.
ஆன்ம இயல், சூக்கும உடம்பு என்னும் தலைப்பிற்
of Goo.
3ம் நாள். மூவினை, முப்புத்தி, முக்குணம், முக்குற்றம், முப்பிறப்பு, முப்பற்று, மும்மணம் என்னும் இவற்றை நீக்க லென்பது. முக்குணங்களை எழுப்புதல் என்பாரும் உளர்.
மூவினை-பாச இயல், கன்மம் என்னும் தலைப்பிற் காண்க.
முப்புத்தி-ஐயம், விபரீதம், மயக்கம். முக்குணம்-சமய இயல், புறநிலைக் கருவி 10ல் காண்க. முக்குற்றம்-காமம், வெகுளி, மயக்கம். முப்பிறப்பு-உம்மை - சென்ற பிறப்பு: இம்மை - இப் பிறப்பு; அம்மை-வரு பிறப்பு. முப்பற்று-நான் - அகப்பற்று எனது - புறப் பற்று; நான் எனது - அகப் புறப் பற்று; உலக வீடணை, தன வீடணை, தார வீடணையுமாம். மும்மனம்-சித்தம் - சிந்தித்தல்; புத்தி - நிட்சயித்தல்; அகங்காரம்-கொண்டெழுப்புதல்.
4ம் நாள். நால். வகைத் தோற்றம், நாற் கரணங்களை
நீக்குதல்.
நால் வகைத் தோற்றம்-ஆன்ம இயல், பிறப்பு என் னும் தலைப்பிற் காண்க. நாற் கரணங்கள்- சமய இயல், ஆன்மதத்துவம் என் னும் தலைப்பிற் காண்க.

Page 77
O8 சைவ சமய சிந்தாமணி
5ம் நாள். ஐம்பொறிகள், ஐம் மலங்கள், ஐந்து அவத் தைகள், ஆகிய இவைகளை நீக்குதல்.
ஐம்பொறிகள்-சமய இயல், ஆன்மதத்துவம் என்னும் தலைப்பிற் காண்க.
ஐம் மலங்கள்-(1) ஆணவம் (2) கன்மம் (3) மாயை (4) மாயேயம்(5) திரோதாயி.
பாச இயலில் காண்க.
ஐந்து அவத்தைகள்-ஆன்மா சரீரத்தில் போக்கு வரவு தினமும் செய்து தங்கும் இடங்கள். அது, கீழால வத்தை, மத்தியாலவத்தை. யோகா அவத்தை, என மூவகைப்படும் ,
ஞான நூல் ஆன்ம இயலிற் காண்க.
ம்ே நாள். உட்பகை ஆறையும், ஆறு அத்துவாக்களை யும், ஆறு கன்ம மலங்களையும், ஆறு பத முத்திகளையும் நீக்குதல்,
உட்பகை ஆறு-காமம், குரோதம், உலோபம், மோகம்,
மதம் (செருக்கு), மாற்சரியம் (பொருமை).
அத்துவாக்கள் ஆறு - கடவுள் இயலில் காண்க. அத்துவா மூர்த்தி, அட்டவணை கலை முதலிய ஆறு.
கன்ம மலங்கள் ஆறு-இருத்தல், கிடத்தல், இருவினை இயற்றல், விடுத்தல், பரநிந்தை, மேவல்.
பத முத்திகள் ஆறு-பிரம்ம சாலோகம், பிரம்ம சாமீ பம், பிரம்ம சாரூபம், விஷ்ணு சாலோகம், விஷ்ணு சாமீபம், விஷ்ணு சாரூபம்.
7ம் நாள். ஏழுவகைப் பிறப்பு, ஏழு வித்தியா தத்து வங்கள், ஏழுவகை மாயேய குணங்கள் இவைகளைநீக்குதல். ஏழுவகை அந்தங்களை உடைய மந்திரங்களைப் பதித்தல் என்றும் கூறப்படும்.

-மகோற்சவ இயல் 109
கச்
ஏழுவகைப் பிறப்பு-ஆன்ம இயல், பிறப்பு பிரிவில்
காண்க.
ཆ་
ஏழு வித்தியாதத்துவங்கள்-சமய இயல், சைவ சமய தத்துவங்கள் பிரிவில் காண்க.
ஏழு மாயேயகுணங்கள்-அஞ்ஞானம், பொய், அயர்வு, மோகம், பைசந்நியம் (புறங்கூறல்), மாற்சரியம்(எரிச்சல்), பயம்.
8ம் நாள். இறைவனுடைய எண் குணங்களையும், விளங் செய்து, ஆன்மாவின் பாச ஞான, பசு ஞானங்களை
நீக்குதல். மிருக யாத்திரை என்னும் வேட்டைத் திரு விழாவாகவும், சில இடங்களில் இந்நாளிலே செய்வர்.
மூன்
எண்குணங்கள்-சர்வஞ்ஞத்துவம் (முற்றும் உணர்தல்), அநாதி போதம் (இயல்பாகவே பாசங்களில் நீங்குதல்)" சுவதந்திரத்துவம் (தன் வயத்தணுதல்), அலுப்த சத்தி (பேரருளுடைமை), அநந்த சத்தி (முடிவி லாற்றலுடைமை ), நிராமயான்மா (இயற்கை உணர் வுடைமை), விசுத்த தேகம் (தூய உடம்புடையணுதல் ), திருப்தி ( வரம்பில் இன்பமுடைமை).
மிருக யாத்திரை-(வேட்டை) இது சங்கார யாத்திரை யுமாம். ஆணவ மலம் பன்றி போன்றது; கன்ம மலம் மான் போன்றது; மாயா மலம் பட்சி போன்றது; இவை ஆன்மாவைச் சார்ந்து நின்று, வருத்தும் துன் பங்கள். இவைகளை அடக்கிச் சாயுட்சியத்தைக் கொடுத்தலாம்.
"ஜம்புல வேடரின் அயர்த்தனை வளர்ந்தென "
சிவஞானபோதம், 8ம் சூத்திர விளக்கத்தில் காண்க.
9ம் நாள். மும்மலம், மூன்று வடிவம், முக்கிருத்தியம், று இடம் இவைகளை நீக்குதல்.

Page 78
O சைவ சமய சிந்தாமணி
மும்மலம்-ஆணவம், கன்மம், மாயை.
மூன்று வடிவம்-உருவம், அருவுருவம், அருவம். அதா வது, அதிகாரம், போகம், லயம், முத்திகளை விரும்
TG)).
முக்கிருத்தியம்-சிருட்டி, திதி, சங்காரம், அதாவது, தனு, கரண, புவன, போகங்களைப் பொருந்துதல், நிலைத்து நிற்றல், மாறுதல் அடைதல்களை விடுதல். மூன்றிடம்-சுவர்க்கம், மத்தியம், பாதலம். அதாவது, தேவ சரீரம், பூத சரீரம், யாதன சரீரங்களைண்டுத்து, இன்பம், இன்பதுன்பம், துன்பங்களை அனுபவித்தலை நீக்கல்.
10ம் நாள். தீர்த்தம். சிவானந்தம் பெறுதல். LJ Dr னந்தக் கடலில் அழுந்துதல். அந்தமில் இன்பத்து அழிவில் வீடு அடைதல். ( தல, தீர்த்த இயல், தீர்த்தத்தில் காண்க).
சூர்னுேற்சவம்
தீர்த்தம் ஆட, சுவாமி எழுந்தருளு முன், மஞ்சள் முத லிய பொருட்களை, உரலில் இட்டு இடித்து, எடுத்துச் சாத்து வது. இது, நான், எனது, என்னும் செருக்குகளை , திருவருட் சத்தியால் இடித்து, சூரணமாக்கி, சிவபெருமானிடம் சமர்ப் பிக்க வேண்டும் என்னும் கருத்துடையது.
கொடியிறக்கல்
சர்வ சங்கார காலத்தில் யாவும் ஒடுங்கி விடுதல்; அதா வது, தூல பஞ்ச கிருத்தியம் இன்றி நிற்றல்; ஐந்தொழில் முடிவில், ஆன்மாக்கள் பேரானந்த முற்றுப் பிறவா நிலை அடைதல். பிராயச்சித்தம்
மகோற்சவ காலத்தில், அறிந்தும், அறியாமலும் நிகழ்ந்த, ஆசாரம், மந்திரம், கிரியை, திரவியம், பக்தி

-மகோற்சவ இயல் 11
யீனம், இவற்ருல் ஏற்பட்ட, பிழைகளுக்கு நிவிர்த்தியாகச் சாந்தி செய்தல். ܖ
திருக் கலியாணம்
உயிர்களின் இயல்பை, வேறு சமயங்கள் தெளிவாய் அறிந்து கொள்ள வில்லை. சைவ சமயம் தெளிவாய் அறி விக்கின்றது; உயிர்கள் சிறு அறிவும், சிறு தொழிலுமே உடையன. காட்டினல் காண்பதும், சொன்னல் கேட்பதும், செய்தால் செய்வதும், ஆகிய தன்மைகளையே இயல்பாக உடையன. அவை தாமாகவே எதையும் இயல்பாகவே, சுயமாய் அறிந்து செய்யும் தன்மை உடையனவல்ல என் பதை, நாளாந்த உலக வாழ்க்கையில் அறியலாம்.
ஆகவே, எல்லாக் காரியங்களையும், அடிப்படையில் இறைவன் ஒருவனே உயிர்களுக்கு அநாதியாகவே மறைந் திருந்து யாவற்றையும் அறியச் செய்து வருகின்ருன் என்பது உண்மை. உயிர்கள் இன்பம், துன்பம், வீடு, (மோட்சம்) யாவற்றையும் அனுபவிக்கும் முறையை, அவரே தெரியச் செய்கின்ருர் . " " போகியாய் இருந்து உயிர்க்குப் போகத் தைப் புரிதலோரார், யோகியாய் யோகமுத்தி உதவுதல் அது வும் ஓரார் ‘’, ‘* அம்மையப்பரே உலகுக்கு அம்மை அப்பர் ‘’ என்ற, ஞான சாஸ்திரப்படி பெண்ணுெரு பாக ஞய்-அர்த்த நாரீச்வர, உமாமகேச்வர வடிவினணுய் இருந்து மக்கள் இல்லறம் நடத்தும் முறையை வெளிப் படுத்துகின்ருர் .
ஆணுல், நம்மில் சிலர், கலியாணம் செய்வதன் நோக்கம் என்ன, என்பதை அறிந்து கொள்ள முடியாமல், விபரீத மாய் விளங்கிக் கலியாணம் செய்து இடர்ப்படுகின்ருேமே? அவ்வித காம இச்சை கொண்டுதான், கடவுளும் கலியாணம் செய்து காட்டுகின்ருர் என்பதை மறந்து விடுதல் நலமாகும்.
கடவுளுக்கு நம்மைப் போல் காம இச்சை உண்டென் முல், அது நமக்கு எப்படி அருள் செய்ய முடியும் ? நம்மில்

Page 79
12 சைவ சமய சிந்தாமணி
ஒருவராய் விடுவரன்ருே அவரும் ? பின்னை அவரது கலியா ணத்தின் கருத்து, நாம் போக போக்கியங்களை, ஒருவனும், ஒருத்தியுமாகக் கூடி அன்பு பூண்டு அனுபவிக்கும் வகையைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.
* சிவம் சத்தி தன்ன பீன்ர்ம் சத்திதான் சிவத்தை யீன்றும் உவந்திருவரும் புணர்ந்தீங்கு உலகுயிர் தன்னை யின்றும் பவன் பிரமசாசியாகும் பான் மொழி கன்னியாகும் தவந்தரு ஞானத்தோர்க்கு இத்தன்மைதான் தெரியுமன்றே "
என்றது சிவஞான சித்தியார்.
* மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்நகைப் பண்னமர் மென்மொழியீர் என்னுடையாரமுது எங்களப்பன் எம் பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமைய னெம்மையன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண் முலை மங்கைநல்லீர் பொற்திருச் சுண்ண மிடித்து நாமே ?
என்ற இந்த மணிவாசகரின் ஒரு வாசகத்தால், அம்மை க்கு அப்பர் என்ன என்ன முறையாய் அமைந்துள்ளார் என்பதை, அறிய முடியுமானுல், நமக்குள்ள, திருக் கலியா ணத்தைப் பற்றிய விபரீத கருத்துக்கள் தோன்ற முடியாது மறைந்து போகும்.
* பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாவி யோகெய்தி வீடுவர் ‘’ என்னும் திருச் சாழலாலும் உயிர்கள் இன்ப, துன்பத்தை, அனுபவித்து, கர்ம வினைகளை ஒழிக்கும் வகையை, அறிவுறுத்தலே ஆலயங்களில் திருக் கலியாணம் நிகழ்கின்றதென்பதை நாம் அறிவோமாக. இல் லறம் நல்லறமாகும் வழிகள் பலவற்றையும், அத்திருக்

-மகோற்சவ இயல் 13
கலியாண உற்சவத்தில் இருந்து நாம் படித்துக் கொள்ள முடி யும். இவ்வித உண்மைக் கருத்துக்களை அறிந்து கொள்ள முடியாமல், புறச் சமயிகளும், நம் சமயத் துவேஷிகளும், இதனை இழித்து நகையாடுவர். அவர்கள் சைவ சமயத்தின் பெருமைகளையும், கருத்துக்களையும் அறியாதவர்களே. அவர்களுக்காக நாம் இரங்குவோமாக ! வாழ்க திருக் கலியாணம் ! இது கொடி இறக்கிய பின்னும், வேறு உற் சவங்களிலும் ஆலயங்களில் நடைபெறுகின்றது.
sarcé556)
திருவருட் சத்தி வடிவான, ஊஞ்சலின் மீதிருந்து ஆடு தல்; ஆன்மாக்களின் குற்றங்களை அலைத்து, பிறவிக்குக் காரணமாகிய பாவங்களைச் சேதித்து, திருவருளால் அடிமை யாக்கித் தம்முடன் கூட்டுதல்.
மெளன உற்சவம்
வாக்கு மோனம், கரன மோனம், காய மோனங்களைக் கடந்த, சுழுத்திமோனமாகிய சும்மா இருத்தலாம்; இதுவே ஞான நிட்டை எனப்படும். "" மோன மென்பது ஞான வரம்பு ' என்று ஒளவையார் கூறியது இதையே, இந்த ஞான நிட்டையை ஆன்மா அடைய வேண்டும்.
திருக் கலியாணம் ஆன பின், கைலாச வாகனத்தில் எழுந்தருளி வரும்போது, மெளனமாய்ப் பத்தாம் நாள் இவ்வுற்சவம் நடக்கின்றது என்று, சித்தாந்தப் பத்திரிகை சித்திரை இதழில் கூறியிருக்கின்றது.
சண்டேசுர உற்சவம்
,சண்டேசுரப் பெருமானை அபிஷேகம் செய்து, வஸ்திரம் با ۰ ؟ ஆபரணம், கந்தம், மாலை முதலிய சிவ நிர்மாலியங்களால் அலங்கரித்து, வீதியில் எழுந்தருளப் பண்ணி வந்து, அவரது தானத்தில் இருத்தியபின், உற்சவ பலனைத் தரும்படி
பிரார்த்திக்க வேண்டும்.
15

Page 80
14 சைவ சமய சிந்தாமணி
ஆசாரிய உற்சவம்
உற்சவம் செய்த ஆசாரியரை கோயில் எசமானர்களும், வழிபட்டோரும் வணங்கி ஓர் ஆசனத்தில் அவரை யிருத்திப் பூசித்தபின், இயன்ற தட்சணை கொடுத்து, விபூதிப் பிரசா தம் பெற்று, அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட பின், யாவரும் பல விருதுகளுடன் அவரை அழைத்துக் கொண்டு போய் அவர் மாளிகையில் விட வேண்டும்.
மகோற்சவ ஆரம்பத்தில் செய்ய வேண்டியவை
வாகனம், மண்டபம், கோபுரம், மதில் முதலியவை களைப் புதுப்பிக்க வேண்டும். வெள்ளை கட்டி, மாவிலைத் தோரணம், புட்பமாலை, வாழை, இளநீர், கரும்பு, சிவ பத்தியை வளர்க்கத்தக்க சித்திரப் படங்கள், கண்ணுடி, பல நிறக்கொடிகளால் அலங்கரித்தல் வேண்டும்.
வீதிகளில் முள், செடி, குப்பை, கல் முதலியவை இல்லாமல் சுத்தம் செய்தல் வேண்டும். கிராமத்தையும், கிராம மக்களையும் புனிதமாய் இருக்கச் செய்தல் வேண்டும். கொடியேற்றி இறக்கி உற்சவம் முடியும் வரையும், அக்கிரா மத்தில் விவாகம், பிரயாணம் முதலிய செய்யக் கூடாது.
வாகனங்களும் பொருள்களும்
விளக்கம் : உற்சவ காலங்களில், கடவுள் வாகனங் களில் எழுந்தருளி வருவர். அவை பொதுவாய், மாசு நீங் கிய ஆன்மாக்களைக் குறிக்கும். அன்றியும் ஆன்மாக்களை என்றும் அடிமையாக உடையவர் என்பதையும் கருதும்.
சில வாகனங்கள் வேறு பொருள்களையும் காட்டுகின்றன. ஒவ்வொரு மூர்த்திக்கும் சிறப்பாக ஒவ்வொரு வாகனங்

-மகோற்சவ இயல் 115
கள் உண்டு. ஒரு மூர்த்தியே பல வாகனங்களில் வருவதும் வழக்கம். பல மூர்த்திகளும் ஒரு மூர்த்தி தானே! சில
வாகனங்களின் பொருள்களைக் கீழ்க் காண்க.
ரிஷபம்-எருது
1. நான்கு கால்கள் நான்கு அந்தக்கரணங்கள்; இவை சத்தியில் ஒடுங்க, சத்தி ஞானம் தோன்றும்; இஞ் ஞானம் பசு ரூபமாகிய பசு போதம்; இப்பசு ஞானத் துக்கு மேலான பதி ஞானத்திலே விளங்குபவர் சிவ பெருமான்.
2. சமம், விசாரம், சந்தோஷம், சாது சங்கம், ஆகிய நான்கு குணங்களும், தரும தேவதையின் நான்கு குணங்கள்; அவை கால்களாகும்; அத் தரும தேவதை தூய வெண்மையானது; அத் தேவதையையே வாகன மாகக் கொண்டு, அருள் செய்வர்.
3. ஒரு காலத்தில், ஞானமும், விஷ்ணுவும் வேண்டிக் கொண்ட படியால், அவைகளையே வாகனமாகக் கொண்டார் என்றும் கூறுவர்.
புண்ணிய வடிவான இடபத்தின் மீதே சிவபெரு மான் காட்சி கொடுக்கின்ருர் என்பது பிரத்தியட்சம். பொறுமையே எருது என்றுஞ் சொல்வர்.
மூஷிகம்
பெருச்சாளி, மூஞ்சுறு: எலி, எனவும் படும்.
1. இது, சிறப்பாக விநாயகருக்குரியது; கயமுக அசுரன் மூஷிகமாய் வர, அருள் செய்து, அவனை அடிமை
கொண்டு, வாகன மாக்கியது.
2. விநாயகர் ஓங்கார வடிவம்; அதனுள் பேரண்டங்கள் அடங்கும்;அவைகளை அடக்கியிருக்கும் பெரிய வடிவினை

Page 81
6 சைவ சமய சிந்தாமணி
உடையவர், சிறிய மூஞ்சுறுவும் தாங்கக் கூடிய, அவ்வளவு சிறிய வடிவினராயும் அமைய வல்லவர்.
3. ஆன்மா அளப்பரிய பெருமையுடையது; அவ்வாறே நுண்மையுமுடையது; உடல் சிறியதாய் இருந்தாலும், உள்ளிருக்கும் ஆன்மா சிறியதல்ல; யானை உருவான பெரிய வடிவத்தையும் அது தாங்கமுடியும்; இன் னும் பலவாறும் கூறுவர்.
மயில்
இது, முருகப் பெருமானுக்குச் சிறப்பாக உரியது.
1. சூரபத்மனை வேலால் பிளந்து, ஞானமீந்து, மயிலாக்கி
அடிமை கொண்டது.
2. முருகன் அழகுடையவன்; அதை விளக்க அழகுள்ள மயிலை வாகனமாக்கினர்; மயிலின் காலின்கீழ்ப் பாம்பு இருக்கிறது; அது சத்தியைக் குறிப்பது; சத்தியை அடக்கி ஆளும், சத்தி வடிவேலன் தான் என்பது.
3. திரோதான சத்தியாய், ஆன்மாக்களின் ஆணவ மலத்தை முதிர்வித்துப் போக்கி, அருட் சத்தியாய்
நின்று, ஆட்கொள்பவர் தாமே என்பது.
4. பிரணவத்தைப் பீடமாய்க் கொண்டு, மேலாய் விளங்
குபவர் தாமே என்பது.
5. விந்து தத்துவமாகிய சத்தியே உலகத்தை விரித்துக் காட்டுவது; அச் சத்தியின் விரிவை விளக்கவே மயில் தோகையை விரித்து, வாகனமாய் இருப்பது என்று, இன்னுேரன்ன பல கருத்துக்களைக் கூறுவர்.
குதிரை
அசுவம், வாசி, முதலிய பல பெயர் பெறும் .

-மகோற்சவ இயல்
1. வேதமே குதிரையாக உடையவர்.
கால்கள் நான்கு-அறம், பொருள், இன்பம், வீடு. காதுகள் இரண்டு-கர்மகாண்டம், ஞான காண்டம், கண்கள் இரண்டு-பரஞானம், அபரஞானம். முகம்-விதி, ஊழ், முன் வினை, சஞ்சிதம். வால்-விலக்க வேண்டிய செய்கைகள், முதுகு-அண்டகோடிகளின் திரட்சி. குளம்புகளின் மேற்புடைப்புகள்-சூரியர், சந்திரர். சேணம்-பிரபல சுருதி (வேதாந்தம்). புறத்துள்ள சுழிகள்-சிவாகமங்கள். சதங்கை, சிலம்பு கிண் கினி - மாஃலகள்
கடிவாளம்-பிரணவம்.
ஆகமங்கள் கூறும் மந்திரங்கள்.
இவ் வேதமாகிய குதிரையில் ஆரோகணித்து, புறச் சமயங்களாகிய படைகளை அழித்து, வெற்றி கொள்பவர் தாமே ஆதலால் வேதரூபர், வேதாந்தர் என்பது.
2. வாசி = சுவாசம்-மூச்சு பிராணவாயுவை, நடுநாடி யிற் செலுத்தி, ஆறு ஆதாரங்களையும் கடந்து, மேலா தாரத்தில் உள்ள, ஆயிரம் இதழ்க் கமலத்தில் சவாரி செய்து, அமிர்த பானம் பண்ணி நிற்கும் சிவயோகி களுக்கு, சிவபெருமான் சுகோதைய வாசிக்கு (குதிரை க்கு) மேலாய் விளங்கி நிற்பவர் என்பது முதலியன பொருள்கள்.
இரதம்-தேர்
இதுஅண்டம் பிண்டம் இரண்டையும்விளங்கச்செய்வது.
1. அச்சு - மந்திர கலை.
சக்கரம் - சூரிய சந்திரர்.

Page 82
18 சைவ சமய சிந்தாமணி
தட்டுகள் - பதினன்கு உலகம். ஆசனம் - ஆகாயம். கொடிஞ்சி - உதைய, அஸ்தமன மலைகள். கொடிகள் - புண்ணிய நதிகள், குளங்கள் ஆதியன. விதானம் - நட்சத்திரங்கள். மேல்விரி - மோட்சலோகம்.
சட்டங்கள் ட யாகங்கள். திரைச்சீலை - ஏழு சமுத்திரங்கள். கலன்கள் - கர்மேந்திரிய, ஞானேந்திரியங்கள். முளைகள் - அறுபத்துநாலு கலைகள். மணிகள் - வேத, உபாகம, தர்ம நூல்கள். படிகள் - வாயுக்கள். வில் - மகாமேரு. வில் நாண் - வாசுகி. வில்லிற் கட்டிய மணி - சரஸ்வதி. அம்பு - விஷ்ணு. அம்பு இறகு - வாயு தேவன். அம்பின் கூர் - அக்கினி தேவன்.
இத் தேரில் கங்கை முதலிய தேவ மாதர்கள் பாட, ஊர்வசி முதலிய நடன மாதர்கள் நடிக்க, சிவபெருமான் எழுந்தருளி, தேவர்கள் வேண்டு கோட்படி, திரிபுரத்து அசுரர்களையும், அவர்கள் நகரங்களையும், புன்சிரிப்பால் அழித்து, அம் மூன்று அசுரர்களையும் ஆட்கொண்டு தேவர் களைக் காத்தது.
(அ) தரகாக்கன்-விஞ்ஞானகலர்- ஆணவம் திரிபுரத்து (ஆ) கமலாக்கன்-பிரளேயாகலர்-கன்மம் அசுரர்களின் (இ) வித்தியுன்மாலி-சகலர்-மாயை பொருள்.
2. சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் வழியாய், மேல் ஆதாரங் களுக்கு, ஆன்மாவைச் செலுத்தி, நிரதிசய ஆநந்த

-மகோற்சவ இயல் 19
ரூபியாய் அசையாமல் தேர்போல் நில் என்பதையும் கருதும்.
3. திரோதான சத்தியின் விரிவைக் குறிப்பது என்பாரு
முண்டு.
ஜம்முக காகம்
1. பாம்பு, நஞ்சு, மாணிக்கம், படம், மூன்றையும் மறைத்து, வேண்டும் போது வெளிப்படுத்தும் வல் லமை உடையது; தானும் புற்றில் மறைந்து வெளி வரும் தொழில் உடையது; அதுபோல, திரோதான சத்தி, பக்குவம் வரும் வரையும் மறைந்திருந்து வேண் டும் போது வெளிப்பட்டு, ஆன்மாக்களுக்கு அருள் புரியுந் தன்மையுடையது.
2. குண்டலினி சத்தி,பாம்பு வடிவமானது; அதன் விரிவு, ஒடுக்கமே பிரபஞ்சத் தோற்றம்; ஒடுக்கம் அச் சத்திக்கு, நிமித்த காரணமாய் உள்ளவர் தாமே என்பது.
3. குண்டலினி சத்தியை, ஆருதாரங்களின் வழியாய்ச் செலுத்தும் போது, மூலாதாரத்துக்கு மேலாயுள்ள மற்றை ஐந்து ஆதாரங்களிலும், அது அடையும் மாற்றத்தையே ஜம்முக நாகம் என்று உருவகப் படுத் திக் கூறுவர் யோகியர் என்பர்.
um?sor
1. விஷ்ணுவும், பரஞானமும், பிரணவமும், முருகப்பெரு மானை வேண்டி, யானை வாகன வடிவங் கொண்டு, தாங்கிச்சென்ற படியால், விஷ்ணுவுக்கு மேலானவரும், பிரணவத்துக்கு மேலாய் அப்பொருளாய் இருப்பவ ரும், பரஞானத்தைக் கொடுப்பவரும் அவரே என்பது
2. யானையின் பருமையான உடம்பையும், கால்களையும், ஒரே பிண்டமாக ஒருங்கே நோக்குவது போல, விரிந்த

Page 83
12O சைவ சமய சிந்தாமணி
பிரபஞ்சங்கள் யாவற்றையும், ஒரே பிண்டமாக அடக்கி நடத்துபவர் தாமே என்பது.
3. தும்பிக்கை போன்ற சுழுமுனு நாடிவழியாய்த் தன்னைத்
தரிசிக்க வேண்டும் என்பதுமாம்.
சிங்கம்
பொதுவாய் இது அம்மையினுடைய வாகனம்; துர்க்கை, காளி, முதலிய மூர்த்திகளுக்கு இது வாகனம். பராக் கிரமத்தை இது குறிப்பது. மிருகங்களை அடக்கி ஆள்வது போல், தேவியும் வேண்டுவாருடைய மூர்க்க குணங்களை ஒட்டி, அடக்கி, ஆண்டு அருள் புரிவாள் என்பது.
பூதவாகனம்
பஞ்ச பூதங்களிலும் நின்று விளங்குவோன் தானே என் பதையும், ஆன்மாக்களுக்குக் கன்மானுகூலமான மரணுவஸ் தையை விதிக்கின்றவரும் தாமே என்பதையும் தருவது.
சேவற்கொடி
1. திருவருளாகிய பரஞானத்தைக் கொடுத்து, ஆன்மாக் களை உயர்பதம் அடையச் செய்பவர் தாமே என் பதையும்;
2. விந்துவைக் குறிப்பதாகிய முன் சொன்ன மயில் வாக னத்துக்கு மேலாய் விளங்குகிறபடியால் நாததத்துவத் தைக் குறிப்பது; அந்த நாத தத்துவத்தையும் கடந் தால் தான் முருகனைக் காணமுடியும்;
3. அது கூவும் பொருள்; கொக்கரக்கோ. கொக்கரக் கோ = கொக்கு + அர + கோ. கொக்கு = மாமரம், சூரபத்மன் அர = அறுத்த, கோ=அரசன்;

-மகோற்சவ இயல் ዝzá 1
எனவே, மாமரமாய் நின்ற, சூரனை அறுத்து, தேவர் கள் துன்பத்தைப் போக்கிய அரசர்க்கரசனுகிய முருகா! என்பது.
மேலும், பல்லக்கு, புஷ்பவிமானம், கருடன், சரபம், கிளி, காராம் பசு, நந்திகேசுரர், யமன், யாளி, புலி, மேஷம்-(ஆடு), மான், முதலை, பத்மம், இன்னும் வேறு வாகனங்களும், வேறு வேறு கோயில்களில் இருக்கின்றன.
பஞ்ச கிருத்தியத்தை, சிருட்டிக்கிரமம், ஒடுக்கக் கிரமம் என இரு வகையாகப் பிரித்து, இன்ன, இன்ன நாளில் இன்ன இன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வருதல் இன்ன இன்ன கிருத்தியத்தைக் குறிக்கும் என்று விதிகள் இருக்கின்றன. காலை, மாலை, இரு நேரமும், உற்சவங்கள் நடக்கும் ஆலயங்களும் இருக்கின்றன.
கோயில்களில், பூசைகள் உற்சவங்கள் காலந்தோறும், தவருமல்செய்யப்பட்டு வருதல் வேண்டும். உற்சவாதிகள் காலங்களிற் செய்யப்படாது, விடப்பட்டால் கிராமத்துக் கும் உயிர்வர்க்கங்களுக்கும் அக்கிராம மக்களுக்கும் பல வித மான கேடுகள் உண்டாகும் என்று நம் சமயம் கூறுகின்றது. இது, அனுபவத்திலும், பிரத்தியட்சமாகக் கண்ட உண்மை.
" ஆற்றரும் நோய்மிகும் அவனி மழைகுன்றிப் போற்றரும் மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பிடிற் ருனே "
-என்றது திருமூலர் திருமந்திரம்.
16

Page 84
122 -- SSLSSq SqqSLLSLLLLS GSF6 சமய சிந்தாமணிசிவத்திரவிய இயல்
விள்க்கம் :
" யாவர்க்கு மாமிறை வர்க்கொரு பச்சில் யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே ?
என்றபடி நம்மால் இயன்ற ஏதாவது பொருள்களை இறைவனுக்குச் சமர்ப்பித்து, அன்பையும் பக்தியையும் பெருக்கி, நல்வாழ்வுபெற்று இன்புறுவோமாக.
அகப் பூசை செய்யும் பக்தர்கள், கருவி, கரணங்கள் ஆன்ம போதங்கள், கொல்லாமை முதலிய குணங்களாகிய, உள்ளிருப்பவைகளையே சமர்ப்பித்துப் பூசை செய்கின்றனர். இப்பருவத்தை அடையவே அஃதில்லாத நாங்கள் புறத்தில் யாதானும் பொருள்களால், பூசை அபிஷேகாதிகளைச் செய் வித்து, அன்பினுல் மகிழ்கின்ருேம். அத்திரவியங்கள் சில வற்றை இந்த இயலில் காண்க.
பாத்தியப் பொருட்கள்
வெண்கடுகு, இலாமிச்சை வேர், சந்தனம், அறுகு
என்பன.
ஆசமனியப் பொருள்கள்
சாதிக்காய், கிராம்பு, ஏலம், பூலாக் கிழங்கு, சண்பக மொட்டு, பச்சைக் கருப்பூரம் என்பன.
அருக்கியப் பொருள்கள்
பால், தருப்பை நுனி, அட்சதை, எள், யவம், வாற் கோதுமை, சம்பா நெல், வெண் கடுகு என்பன.

-சிவத்திரவிய இயல்
திருமஞ்சனம்
பாதிரிப் பூ, தாமரைப் பூ, செங்கழு நீர்ப் பூ,
*1:23:
ஏலம்,
இலாமிச்சை வேர், வெட்டி வேர், இலவங்கப்பட்டை, சந் தனம், கருப்பூரம் என்பன.
அபிஷேகப் பொருள்களும் பலனும்
பொருள் பயன் பொருள் шш6іт
வடித்த நீர் மல நிவாரணம் காரத்தம் பழச்சாறு சற்புத்திரப் பேறு எண்ணெய்' எலுமிச்சம்பழச்சாறு மிருத்து நிவா
o лөхятth سمہ ۔۔۔ "---- ہند upirs situ மல நாசம நெல்லிக் காப்பு தமரத்தம் பழச்சாறு பூமிலாபம் Kůň a mě மஞ்சட் காப்பு இராச வசியம் வாழைப பழம l ar ருத்தி
வெர் பஞ்ச கவ்வியம் ஆன்ம சுத்தி LDTLD upud சகல வெற்றி பலாப் பழம் போகவசியம் الممر இரசபஞ்சா
மிர்தம் வெற்றி தேங்காய்த் துருவல் அரசுரிமை பலபஞ்சாமிர்தம் செல்வம் g) TT fểř சற்புத்திரப் பேறு நெய் மோட்சம் செவ்விள நீர் அவமிருத்து
s ஆயுள் விருத்தி f
ன்னம் soặTê5 f{Güộtí0 தயிர் பிரசா விருத்தி |*
と சந்தனம் 岳田1b தேன் சங்கீதம்
குங்குமம் இலட்சுமீகரம் 字市ss@顶 சததுரு நாசம் G
C O கருப்பஞ்சாறு நித்திய சுகம் பாலோதகம் மந்திர சித்தி th Lueos iäsub چs~ Gesir Gymras=?sor தீர்க்காயுள் DIT garb Luptb கை நீக்க
சகஸ்ர தாரை ஞானம் பசசைக கருப
yb Luureb ஸ்ாகபன கும்ப
9 GB is Gefesto evtudiot sub கஸ்தூரி வெற்றி st Galaslid t
artiklasir G னந்தபயன் பணி நீர் au *** அனநத
wm சாருப்பியம் சந்தனக் குழம்பு சாயுச்சியம்

Page 85
24
சைவ சமய சிந்தாமணி
சிலவற்றிற்குப் பொருள் எழுதாவிட்டாலும், நன்
மையே
தரும். சிலவற்றிற்குப் பாவங்கள் நீக்குவதும் சொல்
லப்பட்டிருக்கின்றன. அவைகளை இங்கு காட்டவில்லை.
(s)
)
($
பஞ்ச கெளவியம் : ப-பாவ நிவாரணம்; ச=ஆன்ம சுத்தி; க= பிறவி நீக்கம், வியம்-மோட்சம்; எனவே, மலத்தை நீக்கி, ஆன்மாவைச் சுத்தணுக்கி, பிறவியை ஒழித்து, மோட்சத்தைக் கொடுக்கும் பெருமையை உடையது என்பது கருத்து. விதிப்படி சேர்க்கப் பட்ட பசுவின் பால், தயிர், நெய், கோசலம், கோம யம், என்பன.
பஞ்சாமிர்தம் ஐந்து அமிர்தம் போன்றவை பால், தயிர், நெய், தேன், சர்க்கரை என்பன.
(இ) பல பஞ்சாமிர்தம் : வாழைப் பழம், மாம்பழம்,
(R)
பலாப்பழம், தேங்காய்த் துருவல், மாதுளம் பழச் சாறு, சேர்ந்த கூட்டு எனவும், இரச பஞ்சாமிர்தத் தோடு இவைகளும் சேர்ந்த கூட்டு என்பாரும் உளர்.
இரச பஞ்சாமிர்தம்: பால், தயிர், நெய், தேன், சர்க்கரை என்பன. பஞ்சாமிர்தம் என்பதுவும்
இதுவே.
(உ) சந்தனக் குழம்பு குங்குமப்பூ, கோரோசனை, பச்
(sic)
சைக் கருப்பூரம், புனுகு, சவ்வாது, கஸ்தூரி,
பன்னீர், சந்தனத்துடன் சேர்க்கப்படுவது.
கும்பம் அபிஷேகம் :
(1) ஸ்நபனம்: சிவபெருமானுக்கும், அட்டவித்தி யேச்வரருக்கும், கும்பங்கள் வைத்து, மந்திர பூர்வமாய், விதிப்படி குருக்கள் பூசைசெய்து, அபிஷேகம் செய்வது.
(2) உருத்திரம் : சிவபெருமான் மூர்த்திக்கும், பதி னுெரு உருத்திரர்கட்கும், கும்பங்கள் வைத்து,

-சிவத்திரவிய இயல் 125
மந்திர பூர்வமாய்ப் பூசைசெய்து, அபிஷேகம் செய்வது.
ஒரு கும்பத்திலேயே ஆவாகனம் செய்து அபிஷேகம் செய்தலும் உண்டு. இவைகள் செய்யும்போது, ஒமாக்கினி வளர்க்கப்படும்.
தாமிரப் பாத்திரத்தில் பாலும், வெண்கலப் பர்த்தி ரத்தில் இளநீரும் விட்டால், அவை கள்ளுக்குச் சமானமா கும். இளநீரைத் தனித்தனி முகிழ் திறந்து அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது விதி. அதிகமானுல் நெய் முழுக் கானபின் இள வெந்நீர் முழுக்காட்டவேண்டும்.
கைவேத்தியம்
கடவுளுக்குச் சமர்ப்பிக்கும் உணவுகள். இவை முன் சொன்ன பார்த்தியோபசாரத்துக்கு உரியவைகள்.
அவையாவன:-
கிழங்கு வகைகள், மா, பலா, வாழை இவைகளின் கணி கள், பஞ்சான்னம், நெய், காய்ச்சிய பால், தயிர், தேங் காய்க் கீறு, சர்க்கரை, கறியமுதுகள், அபூப வகை (பணி யாரங்கள்), பானகம், பாணியம், பாயசம், தாம்பூலம், முக வாசம், சந்தனம், புஷ்பம் ஆதியன.
1. பஞ்ச அன்னம் : எள்ளு, கடுகு, புளி, பயறு, உழுந்து, இவை தனித்தனி சேர்த்துச் செய்யப்பட்டவை. அல் லது சுத்த அன்னம், தயிர் அன்னம், சர்க்கரை அன் னம், நெய் அன்னம், பரமான்னமுமாம்.
2. அபூபவகை : மோதகம், வடை, பிட்டு, அப்பம், தேன்குழல், அதிரசம், தோசை, இட்டலி, வெள் ளுறட்டி, கடலை, கற்கண்டு ஆதியன.
3. பானியம் : ஏலம், சந்தனம், பச்சைக் கருப்பூரம், பாதிரிப்பூ, செங்கழுநீர்ப்பூ, இடப்பெற்ற சுத்தநீர்.

Page 86
126 சைவ சமய சிந்தாமணி
4. முகவாசம் : ஏலம், இலவங்கம், பச்சைக் கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம் இவைகளின் பொடியை பன்னி ரோடு சேர்த்துச் செய்யப்பட்ட குளிகையாம்.
தீப வகைகளும் கருத்தும் (முன் சொன்ன தசோபசாரம்)
தீபங்களும் பெயர்களும்
ஏழு அடுக்குத் தீபம் இடப தீபம் ஐந்து , 9 |066} , மூன்று , J. நட்சத்திர தீபம் முத்தித் தீபம் கும்ப தீபம் ஒற்றைத் திரித் தீபம் கருப்பூர தீபம் நாக தீபம்
மாவிளக்கும் வேறு தீபங்களும் உள்ளன.
ஏழு அடுக்குத் தீபம் : தொண்ணுாற்ருறு தத்துவங்களையும்; ஐந்து அடுக்குத் தீபம் : ஐம்பத்தொரு அட்சரங்களையும்; மூன்று அடுக்குத் தீபம் : முப்பத்தாறு தத்துவங்களையும்; கும்ப தீபம் : சதாசிவ மூர்த்தியின் ஊர்த்துவ முகத்தை யும், சுற்றியுள்ள ஐந்து தட்டைகள், அவருடைய பஞ்ச முகங்களை அல்லது பஞ்சப் பிரம்ம மந்திரங்களையும் கருதுவன என்பர்.
கருப்பூர தீபம்
1. ஒற்றைக் கருப்பூர தீபம், திரோதான சத்தியைக்
குறிக்கும்.
2. ஐந்து கிளை பஞ்சாலாத்தி, சதாசிவமூர்த்தியைக்
கருதும் என்பர்.
கருப்பூர தீபங்களைவிட மற்றைத் தீபங்கள், நெய், எண் ணெய் வகைகளில் சுத்தமான சீலைத்திரி, தாமரை நூல் திரி ஆகியவற்ருல் எரிக்கப்படவேண்டும்.

--சிவத்திரவிய இயல் 27
மாவிளக்கு
செந்நெல் (தினை) அரிசி மாவை, தேனுடன் சேர்த்து, நெய்விட்டு, தாமரை நூல், பருத்தி நூல், திரி இட்டு எரிப் பது; இது செய்வோர் பகல் உண்ணுது விரதமாய் இருத்தல் வேண்டும்.
தூப வகைகள் (முன் சொன்ன வாய்வியோபசாரம்)
சாம்பிராணி, குங்குலியம், சந்தனத்தூள், ஊது வர்த்தி, சாம்பிராணிக் குச்சி, அகில் குச்சைத் தவிர மற்றவைகளைத் தனித்தாயினும், சேர்த்தாயினும் இடித்துத் தூபம் இடலாம்.
தசாங்கம் என்பது, சர்க்கரை, நெய், தேன், அகில், தேவதாரு, சந்தனம், சாம்பிராணி, குங்கலியம், மகிழம்பூ, பால், பத்தையும் சேர்த்து, கலந்து தூபத்துக்கு உபயோ கிப்பது.
பூ வகைகள்
1. கோட்டுப்பூ : மரப்பூ. கோங்கு, கொன்றை, பொன் ஞவரை, மந்தாரை, சண்பகம், குரா, மகிழ், வெட்சி, கடம்பு, ஆத்தி, பவள மல்லிகை, குறிஞ்சி ஆகிய வற்றின் பூக்கள்.
2. செடிப்பூ : நிலப்பூ அல்லி, நந்தியாவர்த்தை, குட மல்லிகை, வெள்ளெருக்கு, செம்பரத்தை, கொக் கிறகு, மந்தாரை, செவ்வந்தி, வெட்டிவேர், இலா மிச்சை வேர், மருக்கொழுந்து என்பன.
3. கொடிப்பூ : மல்லிகை, முல்லை, இருவாட்சி, பிச்சி,
(சிறு செண்பகப்பூ) கருமுகை என்பன.
4. நீர்ப்பூ : செந்தாமரை, வெண்தாமரை, செங்கழு நீர், நீலோற்பலம், செவ்வாம்பல், வெள்ளாம்பல் என்பன.

Page 87
128
சைவ சமய சிந்தாமணி
10.
. பஞ்சவில்வம் : வில்வம், நெல்லி, விளா, நொச்சி,
கிளுவை என்பன. ஆருய்க் கொள்ளின் கடம்புமாம்.
. பத்திர வகைகள் : இலை வகைகள். வில்வம், பன்
னிர், பலாசு, துளசி, நுணு, விளா, நாயுருவி, விஷ்ணு கிராந்தி, மாசிப் பச்சை, திருநீற்றுப் பச்சை, அறுகு என்பன.
. உதவாத பத்திரங்கள் : காய்ந்தவை, நிலத்தில் விழுந்
தவை, புழு அரித்தவை, முற்ருத அரும்பு, இரவில் எடுத்தவை, எடுத்துவைத்து உலர்ந்தவை, பறவை எச்சம், சிலந்தி நூல், மயிர் சேர்ந்தவை, முகர்ந்த பூ, காகம், கோழி, நாய், பூனை, குரங்கு, தீண்டிய இவை
உதவாதனவாம்.
. வில்வம் எடுக்கலாகாத நாட்கள் : திங்கட்கிழமை,
சதுர்த்தி, அட்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமா வாசை, பெளர்ணமி, மாசப்பிறப்பு.
. துளசி எடுக்கலாகாத நாட்கள் : ஞாயிறு, திங்கள்,
செவ்வாய், வெள்ளி, திருவோணம், சத்தமி, அட்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், மாசப்பிறப்பு, பிராதக்காலம், சாயங்காலம், இராக் காலம் என்பன. இரண்டிலை கீழுள்ள துளசி எப்போதும் எடுக்கலாம்.
மூர்த்திகளுக்குச் சாத்தலாகாத பத்திர புட்பங்கள் : விநாயகருக்கு-துளசி, சிவபெருமானுக்கு-தாழம்பூ, உமாதேவியாருக்கு-அறுகு, நெல்லி, வயிரவருக்கு-நந்தியாவர்த்தை, சூரியனுக்கு-வில்வம், திருமாலுக்கு-அறுகு, அத்தி, பிரம்மாவுக்கு-தும்பை.

-சிவத்திரவிய இயல் 129
11.
2.
13.
வைத்திருந்து சாத்தக்கூடியவை :
வில்வம்-ஆறு மாசம். வெண்துளசி-ஒரு வருடம். தாமரை-ஏழு நாள். அலரி- மூன்று நாள்.
பூ, பத்திரம் எடுக்கும் முறை : ஸ்நானம் செய்து, சுத் தமான வஸ்திரம் தரித்துக்கொண்டு, விபூதி தரித்துக் கொண்டு, சிவதீட்சை பெற்றவர்களாய், மது, மாமிச பட்சணம் இல்லாதவர்களாய், பூ எடுக்கும் பாத்திரங் களை, அரையின்கீழ்ச் செல்லாதபடி தூக்கிப் பிடித்துக் கொண்டு, சிவசிந்தனையுள்ளவர்களே, வீண் வார்த்தை, சிரிப்பு இல்லாதவர்களாய், கோயில்களுக்குப் பூ பத் திரம் எடுக்கவேண்டும். இத்தன்மைகள் இல்லாத வர்கள் எடுத்துக் கொடுத்தல் ஆகாது. தூய பாத் திரங்கள், கூடைகள், வாழையிலை, தாமரையிலை முதலியவற்றில் எடுக்கலாம்.
அட்டஞான புட்பங்கள் : மனத்தில் பூசை செய்ப வர்கள்-அதாவது அந்தர்யாகபூசை செய்பவர்கள், கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, அன்பு, வாய்மை, தவம், அறிவு, அருள் என்பன வற்றைப் பூக்களாய்ச் சாத்துவர்.
யாகத்துக்குரிய பொருட்கள்
17
. பொருட்கள் . நெய், பால், தயிர், தேன், சர்க்கரை,
குங்குமப்பூ, பொரி என்பன.
தானிய வகை : நெல், எள்ளு, உழுந்து, கொள்ளு,
பயறு, துவரை, கடலை, மொச்சை, கோதுமை.

Page 88
130 சைவ சமய சிந்தாமணி
3. சமித்து வகை வெள்ளெருக்கு, கருங்காலி, சந் தனம், அரசு, மா, அத்தி, பலா, வன்னி, நாயுருவி,
<学sgl@・
4. நைவேத்திய வகை : அன்னம், பணியாரவகை, பழ வகை, இவைகளில் சிலவற்றை நீக்கியும், வேறு கூட்டி யும், குறைத்தும் கூறுதலுமுண்டு.
"பச்சில் பழம் போதேனும், பறித்திட்டுப் பத்தி செய்வோர்க்
கெச்சமில் இருமைப்பேறு மவித்திடு மிறைவா போற்றி"

-ஆன்ம இயல் 131
ஆன்ம இயல்
விளக்கம் : ஆன்மா, பசு, உயிர், சீவன் என்பன, ஒரே பொருள் உடையன.
1. ஆன்மா : மும்மலங்களும் நீங்கி, சிவத்துவம் விளங்கி, சிவத்துட்ன் இரண்டற்று, வியாபக முற்றுச் சிவானந் தம் அனுபவித்துக் கொண்டிருக்கும் முத்திநிலை பெற்றது.
2. பசு பச்+உ=அநாதியே ஆணவ மலத்தால் பந்திக்
கப்பட்டிருப்பதால் வந்த பெயர்.
3. உயிர் : உய்+இர்=உய்யும் வழியை அறிந்து, கடைத்
தேறுங்கள்; தப்பித்துக்கொள்ளுங்கள் என்பது.
4. சீவன் : உலக ஆசைகளைப் பற்றி நின்று, இறந்து,
பிறந்து, சீவித்து வருவதால் எய்தும் பெயர்.
உயிரும் உடம்பும் கூடி இயங்கும் நிலையில் உயிர் வேறு, உடம்பு வேறு என்பதை அறியாமல் மக்கள் பலர் மயங்கு கின்றனர்; ஆனல் இறந்தபின் உடம்பு கிடப்பதை அறிந்து, *உயிர் பிரிந்துவிட்டது" என்பர். அப்பொழுதுதான் உயிர் வேறு, உடம்பு வேறு என்பதை நன்கு அறிகின்றனர்.
ஆன்மாவின் இலக்கணம்
நித்தியமானது; வியாபகமானது; அறிவித்தால் அறி வது; பாசத்தை உடையது; சார்ந்ததன் வண்ணமாய் உள் ளது; சரீரங்கள் தோறும் வெவ்வேரு ய் உள்ளது; வினைகளைச் செய்து, வினைப் பயன்களை அனுபவிப்பது; சிற்றறிவும், சிறு தொழிலும் உடையது. தனக்குமேல் ஒரு தலைவனை உடையது.

Page 89
32 சைவ சமய சிந்தாமணி
ஆன்மாக்களின் வகைகள் மூன்று
1. விஞ்ஞானகலர் : விஞ்ஞானத்தால், கலைகளால் உண் டாகிய பந்தம் நீங்கி, ஆணவ மலம் ஒன்றையே உடை யவர் இவர்கள். அநாதியே ஆணவ மலம் அற்றவரும், பிரளையாகலரில் இருந்து, மாயை, கன்மங்கள் நீங்கி, இடையிலே வந்தவரும் என இருவகையர்.
இவர்கள் அசுத்த மாயைக்கு மேல் சுத்த மாயைக்குக் கீழுள்ள புவனங்களில் இருப்பவர்; இவர்களுக்கு, தனு, கரண, புவன, போகங்கள் உண்டு; ஆஞல் நம்மைப்போல் சுக, துக்க, மோகங்களால் மயக்கப்படமாட்டார்கள். ஒரு பிறவியிலேயே முத்தியடைவர்; சிவபெருமான் இவர்க ளுடைய அறிவுக்கறிவாய் நின்று, ஞானத்தை உணர்த்தி, ஆணவத்தைப் போக்கி, முத்தியின்பம் அளிப்பர்.
இவர்களில் மலபரிபாகம் வந்தும் முத்தியடையாது, கிஞ்சித்துவம் (அற்ப மலத்தால்) அதிகார முத்தராய் உள் ளவர்கள். அணு சதாசிவராய் சதாசிவதத்துவத்திலும், அட்ட வித்தியேச்வரராய் ஈச்வர தத்துவத்திலும், சத்த கோடி மகா மந்திரர்களாய் சுத்த வித்தையிலும் இருந்து அதிகாரஞ் செய்வர். பின் அம்மலமும் நீங்கப்பெற்று, பர முத்தியைப் பெறுவர்.
2. பிரளையாகலர் பிரளையத்திலே கலாதி பந்தங்கள் நீங் கியவர்கள்; ஆணவம் கன்மம் என்னும் இரு மலங்களை யும் உடையவர்; இவர்கள் அநாதியே பிரளையாகலராய் உள்ளவர்களும், சகலரில் இருந்து, இடையில் பரி பக் குவத்தால் பிரளையாகலராய் வந்தவர்களும் என இரு வகையராவர்; அசுத்த மாயைக்கும் புருடதத்துவத் திற்கும் இடையான, புவனங்களில் வசிப்பவர்.
இவர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்கள் உண்டு! ஆணுல், மாயாமலம் இல்லாதபடியால், முக்குணங்களால் மயங்காமையால், சுக , துக்க, மோக, மயக்கமுமில்லை;

-ஆன்ம இயல் - 133
ஆகாமிய கன்மம் ஏறுகிறபடியால், சில பிறவிகளில் முத்தி யடைவர்; பரமசிவம், மான், மழு, சதுர்ப்புசம், காலகண் டம், திரிநேத்திரம் உடையவராய் வெளிப்பட்டு நின்று அருளுவர்.
3. சகலர் : கலையாதிகளால் பந்தப்பட்டுள்ள நாம்,ஆன வம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களோடும், கலையாதி தத்துவங்களோடும் கூடியுள்ளோம். பிருதிவி (மண்) முதல், மூலப் பிரகிருதி ஈருயுள்ள புவனங்களில் இவர்கள் வசிப்பார்கள். ஒரறிவுடைய தாவரம் முதல், ஆறு அறிவுடைய பிரம்மா, விஷ்ணு ஈருக உள்ளவர் கள். மூலப் பிரகிருதி மாயையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்கள் பெற்றுடையவர்; எண் ணில்லாத காலம் அநந்த சென்மங்களை எடுப்பர்; மேலும், மேலும் வினைகளைச் செய்து, வினைப் பயன்களை அனுபவித்து பிறந்து, இறந்து உழல்வர்.
மல பரிபாகமும், இரு வினை ஒப்பும், சத்தினி பாதமும் எய்தும் பக்குவம் வர, சிவபெருமான் தானே, அல்லது ஒரு ஞானுசாரியரை அதிட்டித்து நின்றே, குருவாய் வந்து, ஞான தீட்சை செய்து மும்மலங்களையும் நீக்குவர். இந்த ஞானுசாரியரால் ஆட்கொள்ளப் பட்டவர்கள், உடம்பு நீங் கும் வரையும், பிராரத்தத்தால் வரும் நல் வினைகளைப் பற் றின்றி அனுபவித்துக் கொண்டு சீவன் முத்தராய் இருப்பர்.
இவ்வாறு இருந்து கொண்டு, ஆலயந் தொழுதல், அடி யாரோடு கூடுதல், முதலிய சிவ தொண்டுகளை, சிவார்ப்பன மாய்ச் செய்து கொண்டும் , தம்மையடைந்த பக்குவர் களுக்கு ஞானுேபதேசம் செய்துகொண்டும் இருந்து, தேகாந் தத்தில் பரமுத்தியை அடைவர்.
பிறப்பிற்குக் காரணம்
ஆன்மாக்களை அநாதியாகவே ஆணவ மலம்பற்றி, அதன் அறிவு, செயல்களை மறைத்துள்ளது; அம்மறைப்பை,

Page 90
134 சைவ சமய சிந்தாமணி
படைத்தல் ஆகிய ஐந்தொழில் (பஞ்ச கிருத்தியம்)களால், நமக்கு விளங்கச் செய்ய இறைவன் கருணை கொண்டான். அவ்வாறு அவர் செய்யும் பஞ்ச கிருத்தியமும், அதி சூக்கு மம், சூக்குமம், தூலம் என மூன்று வகைப்படும். இங்கு தூல பஞ்ச கிருத்தியத்தையே தருகின்ருேம்.
1. படைத்தல் : (சிருட்டி). சிவபெருமான் துணைக்காரண மாகிய சிவ சத்தியுடன் கூடி, முதற் காரணமாகிய மாயையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்க ளைக் கொடுத்தல், தனு - உடம்பு கரணம்=மனம், பொறி முதலிய கருவிகள்; புவனம் = வசித்தற்குரிய இடம்; போகம் =இன்பம், துன்பங்களை அனுபவித்தற் குரிய பொருட்கள்;
2. காத்தல் : (திதி). தோற்றுவிக்கப்பட்ட தனு, கரண, புவன, போகங்களை, நிறுத்துதல். அவைகளைப் பெற்ற தால் இன்ப, துன்பங்கள் மூலமாய் அறிவு, செயல் கள், ஆன்மாக்களுக்கு விளங்குகின்றன.
3. அழித்தல் : (சங்காரம்). பிறந்து, இறந்து, இன்ப துன்பங்களை அனுபவித்ததால், உயிர்களின் இளைப்பு நீங்கும் பொருட்டு, சிலகாலம் தோற்றுவிக்கப்பட்ட வைகளை மாயையில் ஒடுக்கி இளைப்பாறச்செய்தல்.
4. மறைத்தல் : (திரோபவம்). ஆன்மாக்கள் செய்த வினைப் பயன்களை, அழுந்தி அனுபவிப்பதற்காக, முந் திய அனுபவங்களை மறைத்து, மேலும், மேலும் அவா வினை எழுப்பி நுகரச்செய்து, மலவலியைத் தேய்ப்பது.
5. அருளல் : (அநுக்கிரகம்). ஆன் மா க் களு க்கு ப் பாசத்தை நீக்கி, சிவத்துவத்தை விளக்கி, முத்தியை
பிறப்பு வகை
நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு என இரண்டு வகை.

-ஆன்ம இயல் 35
1. நால்வகைத் தோற்றம் ஆன்மாக்கள் பிற வி யை
எடுக்கும்போது தோன்றும் விதங்கள்.
(அ) அண்டசம் : (முட்டையிற் பிறப்பன) பற வைகள், ஊர்வன, நீர்வாழ்வன ; இவை உட் செவி உடையன. ஆனல் வெளவால் இதிற் சேராது.
(ஆ) சுவேதசம் : (வெயர்வையிற் பிறப்பன) கிரு மிகள், கீடங்கள், பேன், உண்ணி, விட்டில், சில ஊர்வன.
(இ) உற்பிச்சம் : (வித்து, வேர், கிழங்குகளிற் பிறப்பன) புல், பூண்டு, செடி, கொடி, மரம் முதலியன. −
() சராயுசம் : (கருப்பையிற் பிறப்பன) தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள், வெளவால் ஆகியவை.
2. எழுவகைப்பிறப்பு :
(அ) தேவர்-பதினெரு லட்சம் (ஆ) மனிதர்-ஒன்பது லட்சம் (இ) விலங்கு-பத்து லட்சம் (ஈ) பறவை-பத்து லட்சம் (உ) ஊர்வன-பதினைந்து லட்சம் (ஊ) நீர்வாழ்வன-பத்து லட்சம்
(எ) தாவரம்- பத்தொன்பது லட்சம்
ஊர்வன 11; தேவர் 14; தாவரம் 20 லட்சங்கள் என் பாரும் உளர். யோனி = பிறப்பு, காரணம், வடிவம்.

Page 91
136 60F6A FLD ULI சிந்தாமணி
உடம்பின் வகைகள்
தனு, தூலம், சூக்குமம், காரணம், கஞ்சுகம் எனப் பல வகைப்படும்.
1. தூல உடம்பு : (பரு உடம்பு) காணப்படுகின்ற சரீரம், குலம், பிறப்பு, உயர்வு, தாழ்வு முதலியவைகளால் அபிமானம் செய்தற்கு இடனுய், மண், நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய பஞ்ச பூதங்களின் பரிணம மாய் ஆக்கப்பட்டுள்ளது; பரிணுமம்=உருத்திரிதல்; பூதபரினமம், பூதன சரீரம் எனவும் சொல்லப்படும்.
2. சூக்கும உடம்பு : (நுண் உடம்பு) இது கண்ணுல் காணமுடியாதது; தூல உடம்பின் உள்ளே இருப்பது; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் சூக்கும பூதங்கள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என் னும் அந்தக் கரணம் மூன்றும் ஆகிய எட்டினுலும், ஆக்கப்பட்டதாய், ஆன்மாக்கள் இன்ப, துன்பங்களை அனுபவித்தற்குக் கருவியாய் உள்ளது. ஆயுள் முடி வில் தூல தேகத்தை விட்டு மற்ருெரு தேகம் எடுப்பதற் குக் கருவியாயும் உள்ளது. இதை அரு உடம்பு, நுண் உடம்பு, புரியட்டகம் யாதன சரீரமும் என்பர். மற் றைய உடம்புகளைப் பெரியோரிடம் கேட்டறிக. அவத்தை (நில்)
விளக்கம் : ஒரு உயிர் உடம்பை எடுத்து தத்துவங் களோடு கூடி, கன்மங்களைப் புசிக்கும் போது, உடம்பில் போக்கு வரவு செய்யும். அப்படிப் போயும் மீண்டும், இடங் களுக்கு இடம் தங்கி நிற்பதையே அவத்தை என்பர். இந்த அவத்தையைக் காரியாவத்தை என்பர். மற்றது கார ணுவத்தை
காரியாவத்தை மூன்று வகைப்படும். அவையாவன :-
1. கீழால் அவத்தை : உயிர் புருவ மத்தியில் இருந்து கீழ் நோக்கிச் சென்று, மீண்டும் சென்ற வழியே

-ஆன்ம இயல் 137
திரும்பி, மேல் நோக்கி வந்து புருவ மத்தியில் தங்குதல்.
2. மத்தியாலவத்தை புருவ மத்தியில் நிற்கும்
போதே ஐவகை நிலைமையையும் அடைதல்.
3. நிர்மலா அவத்தை உயிர் இறைவனை அடையும் ஞானப் பக்குவம் வர, புருவ மத்தியில் இருந்து மேல் நோக்கிச் செல்லுதல். இந்த அவத்தைகளை வேறு பெயர்களாலும் அழைப்பர்.
அவத்தை அடையும் இடங்கள் : கீழால் அவத்தை அடைந்து மீளும் போது, (1) புருவம் (2) கண்டம் (3) இருதயம் (4) உந்தி (5) மூலாதாரம் என்பவை களாம். மற்றைய அவத்தைகளுக்கு இவ்வாருன பெயருடைய இடங்கள் இல்லை.
காரியாவத்தை
. கீழாலவத்தை புருவ மத்தியில் நிற்கும் போது,
விழிப்பு நிலை; அந்நிலையில் சாக்கிர அவத்தை; அதில் இருந்து, முன் சொன்ன இடங்களில் தங்கித் தங்கி நின்று, கீழே சென்று, மீண்டும், அவ்விடங்களை மேல் நோக்கி அடைந்து வரும் போது, முறையாய் மற்றைய இடங்களை அடையும்.
அவத்தைகளின் பெயரும், பொருளும், தத்துவங்களும் :
அவத்தை பின்
8
பெயர்கள் பொருள்கள் தத்துவங்கள்
di gb விழித்திருக்கும் நில 35 தத்துவங்கள் Gy ALGOTf கனவு காணும் உறக்க நிலை I 25 , , சுழுத்தி ஆழ்ந்த நீத்திரை நிலை 8 . . துரியம் சுழுத்தியிலும் ஆழ்ந்த நிலை 2 , , துரியாதீதம் அதிலும் ஆழ்ந்த நிலை

Page 92
138 சைவ சமய சிந்தாமணி
2. மத்தியாலவத்தை;
3. சுத்தாவத்தை.
காரணுவத்தை மூன்றுள
இவ் அவத்தைகளின் விரிவுகளை ஞான நூல்களிற் காண்க. தெரிந்து கொள்வதற்காய்ச் சுருக்கமாய் இங்கு கீழாலவத்தையைக் காட்டினுேம்.
ஆன்மாக்கள் (வினைசெய்யும் இடமும், அனுபவிக்கும் இடமும்)
ஆன்மாக்கள் செய்யும் வினைகள், கன்மம், செயல், வேலை எனவும் பெயர் பெறும்; வினைகள், நல்வினை தீவினை, என இரண்டு.
1. நல்வினை, தீவினை, இரண்டையும், செய்தற்குரிய இடம் பூமி, நல்வினையின் பயனகிய இன்பத்தையும், தீவினை யின் பயணுகிய துன்பத்தையும், அனுபவிக்கும் இடம் பூமி:
2. நல்வினைகளை அதிகமாகச் செய்தால் மேல் உலகங்க ளாகிய சுவர்க்க-ஒளி உலகங்களில், நல்வினையின் பய ணுகிய இன்பத்தை மாத்திரம், பூத சாரமான தேவ சரீரம் எடுத்து அனுபவிப்பர்.
3. தீவினையையே அதிகமாகச் செய்தால் கீழ் உலகங்க ளாகிய நரகங்கள்-இருள் உலகங்களில் அதன் பயணுகிய
துன்பத்தை, பூத சரீரம் எடுத்து அனுபவிப்பர். நர கங்கள் 28 கோடி என்பர்.
போக்கு வரவு (இறப்பு-பிறப்பு, செய்யும் முறை.)
1. நல்வினை அதிகமாகச் செய்த ஆன்மாக்க்ள், பூமியில் இன்ப, துன்பங்களை, அனுபவித்து முடிந்த பின், தூல

-ஆன்ம இயல் 139
உடம்பை விட்டு, சூக்கும உடம்புடன், பூதசாரமாகிய தேவ சரீரத்தை எடுத்துக் கொண்டு, மேல் உலகங் களில் இருந்து இன்பத்தை அனுபவிக்கும்; முடிந்த பின் எஞ்சிய வினைகளின் பயன்களை அனுபவிக்க, சூக்கும உடம்புடன் பூமியில் தூல தேகத்தை எடுத்து மனித ராய்ப் பிறக்கும்.
2. தீவினைகளை அதிகமாகச் செய்தவர்கள், பூமியில் அனுப வம் முடிந்தபின் சூக்கும உடம்புடன் நரக உலகங்களில் போய், பூத சரீரமாகிய யாதன சரீரத்தை எடுத்து, துன்பம் அனுபவித்து, முடிவில் சூக்கும தேகத்துடன், பூமியில் தோன்றி தூல தேகத்தை எடுத்து தாவரத்தி லிருந்து பிறவிகளை எடுத்து எடுத்து உயர்ந்து, மனிதப் பிறவியை எடுத்து, வினைகளைச் செய்து வினைப் பயன் களை அனுபவிக்கும்.
3. மேற்காட்டியபடி அன்றி, பூமியில் இருந்து தூல உடம் பை விட்டவுடன், சூக்கும தேகத்துடன் வேருெரு யோனிவாய்ப் பட்டு, பூமியிலேயே பிறத்தலுமுண்டு; அல்லது சூக்கும தேகத்துடன், பிறவியை எடாமல் பூமியில் சில காலம் இருப்பதும் உண்டு; அல்லது சந் திர உலகத்தில் சில காலம் இருக்கும்; அல்லது, பைசாச வடிவமாய்ச் சில காலக்கிரியும் என்றும், நூல் கள் கூறுகின்றன.
மனிதப் பிறவியின் அருமை
‘' அரிது அரிது மானுடராதல் அரிது', 'மானுடத் துதித்தல் கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங் காண் ', '' வானிடத்தவரும் மண் மேல் வந்தரன்தனே அர்ச் சிப்பர் ‘’, ‘* மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மானி லத்தே ’’ என மானுட தேகம் எடுத்துச் சிவபெருமானைக் கண்டு, அனுபவித்த சிவானுபூதிமான்கள் பலர் கூறியிருக் கின்றனர்.

Page 93
40 சைவ சமய சிந்தாமணி
ஏனென்ருல், சிவபெருமான் ஆட்கொள்ளுவதும், அவர் அருள் செய்து முத்தி கொடுப்பதும், ஆகியவைகளுக்கு வாய்ப்பான பிறவி மானுடப் பிறவி என்பதுதான்.
முத்தி சித்திக்கும் வகை
சமய இயல் சமயத்துறை என்னும் பகுதியிற் கூறிய, சமயத் துறைகளிலும், கிறிஸ்துவம், மகமதியம், முதலிய சமயக் கொள்கைகளிலும் நிற்பவர்கள், அச் சமயக் கொள் கைகளில் பற்றுக் கொண்டு, கடவுளை வழிபட்டு, அப் புண் ணிய மேலீட்டினலே, நான் மறை நெறியாகிய சிவ நெறியை அடைந்து, அம் மறைகளிற் கூறப்பட்ட புண்ணியங்களைச்
செய்வார்கள்.
அப் புண்ணிய உயர்ச்சியால், '' வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி, தாழ்வெனும் தன்மை
யோடு சைவமாம் சமயம் சார்ந்து நிற்பர்.
இந்த இயலில் சகலர் என்ற பகுதியில் சொல்லிய இரு வினை ஒப்பும், மல பரிபாகமும், சத்தினி பாதமும், எய்திய பின் முத்தியடைவர்.
(அ) இருவினை ஒப்பு : ஆணவ முனைப்பினல் ஆன்மாக் கள் தீவினைகளைச் செய்ய, ஆதி சத்தியானது, ஆன் மாவின் வித்தையை எழுப்பும்; அப்போது தீவினை யில் வெறுப்பும், நல்வினையில் விருப்பும் உண்டா கும்; அதை அதிகமாய்ச் செய்ய இன்பம் அனுப விக்கும்; இவ் இன்பமும் நிலையில்லாமல் அழிகிற படியால், அதுவும் துன்பம் போற் தோன்றும்; அப்போது உயிருக்கு, தீமை, நன்மை, இரண்டும் சமமாய்த் தோன்றும்; வெறுப்பு உண்டாகும்; இதுவே பசு இரு வினை ஒப்பாகும்.

-ஆன்ம இயல் 41
இந் நிலையில் இருந்து நீங்க, சில நல்வினைகளையும் அதற் குரிய தீட்சைகளையும் பெற்று, அனுட்டித்து வரும். (புண் னியங்களையும், சிவபுண்ணியங்களையும், பின்வரும் கடவுளை அடையும் வழி இயலிற் காண்க) யோக முடிவில் தீவிர பக்கு வம் வரும்; இந் நிலை சிவபுண்ணிய ஒப்பாகும். இதன் முடி வில் ஞானகுரு தரிசனம் கொடுத்து, ஞான உபதேசத்தினல், மலத்தை நீக்கி விடுவர். அதன் பின் ஆன்மா சிவ சாயுச்சி யத்தைப் பெறும்.
(ஆ) மலபரிபாகம் : ஆதி சத்தியானது, ஆன்மாவின், மலத்தை நீக்க முன் சொன்னபடி நல்லறிவை எழுப்ப எழுப்ப, சூரியன் உதையமாக இருள் படிப் படியாய் அகலுவது போல், அதன் வல்லமை தேய் ந்து தேய்ந்து வலி குன்றி நிற்கும். இதுவே மல பரிபாகம் எனப்படும்.
(இ) சத்தினி பாதம்-சத்தியின் வீழ்ச்சி : ஆதி சத்தி ஆன்மாவின் அறிவை எழுப்ப, எழுப்ப, மல இருள், அகல, அகல, ஆன்மாவுக்கு மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் ஆகிய ஞான அருள் நிலைகள் வந்தெய்தும்; அவ்வருட் துணையாலே, ஞான ஆசா ரியர் தோன்றி, ஆட்கொள்வர். அறிந்து கொள் ளும் பொருட்டாக, இவற்றைச் சுருக்கி உரைத் தோம். அறிவுப்பக்குவத்திற் கேற்க, முன் சொன்ன எச்சமயங்களில் நின்ருலும், அவைகளின் மூலமாய் நின்று அருள் செய்து, அவர்கள் பக்குவத்தை உயர் த்தி, சைவ சமயத்தில் புகச் செய்து, முத்தி-மோட் சம் கொடுப்பவர் சிவபெருமானே. ** யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே

Page 94
42 சைவ சமய சிந்தாமணி
மாதொரு பாகனூர்தாம் வருவர் ' என்றது ஞான நூல். ஆனல் வேறு சமயங்கள் இவ்வுண்மையை அறியாது, பிதற்றுகின்றன. " சைவமாஞ் சமயஞ்
9 y
சாரும் ஊழ் பெறலரிது என்றபடி, சைவ சமயத் திற் பிறக்கவே, நாம் எவ்வளவோ புண்ணியங்களைச் செய்துள்ளோம். ஆகையால், நாம் வேறு சமயங்
களை விரும்ப வேண்டியதில்லை.
வாழ்க 1 சைவம் ! !

-பாச இயல் 143
JTJ 9uli)
விளக்கம் : பாசம், தளை, கட்டு, மலம், பிணிப்பு என் பன, ஒரு பொருள் உடையன. பாசம்=பச்+உ; ஆன் மாக்களை அநாதியே பந்தித்து, ஆன்ம அறிவை மறைத்து, மயக்கி நிற்பது. இது ஆணவம், கன்மம், மாயை, ம்ாயே யம், திரோதாயி என ஐந்து வகைப்படும்.
ஆணவம்
அஞ்ஞானம், அறியாமை, மூடத்தை உண்டாக்குவது; ஆன்மாவை அநாதியே செம்பிற் களிம்பு போலவும், நெல் லில் உமி போலவும் பற்றி, அதை அணுத்தன்மைப் படு மாறு செய்து, அதனுடைய அறிவு, தொழில்களை மறைத் து நிற்பது, இதன் குணங்களாம்.
சடமாய், ஒன்ருய், தத்தம் பரிபாக காலத்தில் நீங்கும் எண்ணிறந்த சத்திகளை உடையதாய், அழிவில்லாததாய், எல்லா அநர்த்தங்களுக்கும் மூலமாய், இருண்ட பேரிரு ளாய் மேற்கூறிய மற்றை இலக்கணங்களையும் உடையது. இந்த ஒன்றை ஆன்மாக்களிடம் இருந்து நீக்கவே, சிவபெரு மான் பஞ்ச கிருத்தியம் செய்யவேண்டியதாய் இருக்கிறது.
கன்மம்
ஆன்மாக்கள் பிறவி எடுப்பதற்கு, ஆணவ முனைப்பாற் செய்துகொண்ட கன்மங் காரணமானது. இதை மூல கன்மம் என்பர். நாம் இதுவரையில் எத்தனையோ பிறவிகளை எடுத் திருப்போம்; அவைகளின் தொடக்கம் முடிவுகளை அறிய முடியாது; இது, மனம், வாக்கு, காயங்களால், நல்வினை, தீவினைகளாய்ச் செய்யப்பட்டு, புத்தி தத்துவம் பற்றுக் கோடாய் மாயையில் இருக்கும்.

Page 95
144 சைவ சமய சிந்தாமணி
சங்கார காலத்தில் மாயையில் ஒடுங்கியிருக்கும்; இடை யருது ஒடும் நீரோட்டம்போல, பிரவாக அநாதியாய், ஆன் மாக்களைப் பற்றி வருவது; பலன் கொடுக்கும் வகையில், ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் எனப்படும்.
1. ஆகாமியம் : (புதுவினை) எடுத்த பிறவியிலே செய்த நல்வினை, தீவினை இரண்டுமாம்; இவைவிருப்பு, வெறுப்
புக்களால் வருவன.
2. சஞ்சிதம் : (பழயவினை) பிறவி தோறும் அனுபவித்து
முடியாமல் மிஞ்சியுள்ள வினையாகும்.
3. பிராரத்தம் ஊழ்வினை-விதி; புண்ணிய, பாவ,
வடிவமாகிய சஞ்சித வினையில் இருந்து, எடுக்கும்
உடம்பையும், அது கொண்டு அனுபவிக்கும் இன்ப, துன்பங்களுமாய்ப் பலன் அனுபவிக்கச் செய்வது.
வயலில் விதைத்ததுபோல் ஆகாமியம்; பட்டடையில் கட்டி வைத்திருப்பதுபோல் சஞ்சிதம்; கட்டிய நெல்லில் இருந்து எடுத்துச் சாப்பிடுவதுபோல பிராரத்தம் என அறிக. செய்யும்போது நன்மை, தீமை; பின் அவை புண் ணிய பாவ வடிவம்; பின் அவைகளின் கூலியாய் இன்பம், துன்பம்; ஒரே வினை இம்மூன்று பக்குவ நிலைகளை அடையும்.
(அ) இன்ப, துன்பங்கள் வரும் வாயில்களாவன
1. ஆதி தெய்வீகம் : தெய்வம் காரணமாய் வருவன. கருப்பாசயத்தில் இருக்கும்போது, உண்டான துன் பம்; மரணம்; இயம தண்டனை நரக வேதனை ஆதியன.
2. ஆதி பெளதீகம் : பஞ்ச பூதங்கள் காரணமாய் வரு வன; குளிர், வெப்பம், மழை, காற்று, மின்னல், இடி, சுவர், கல், மரம், விழுதல் ஆதியன.
3. ஆதி ஆத்மீகம் : உயிர்கள் காரணமாய் வருவன.
உடம்பில் உண்டாகும் நோய்கள்; மிருகங்கள், !

-பாச இயல் 45
அரசர், கள்வர், பேய்கள், மனிதர்களால் சரீரத் துக்கு உண்டாகும் துன்பங்கள் பிறருடைய கல்வி, செல்வம், அழகு, அதிகாரம் முதலியவைகளைக் கண்டு, பொருமை, எரிச்சல் முதலியவற்ருல் கொள்ளும் துன்பங்களும் ஆதியன.
(ஆ) கன்மம் பலன் கொடுக்கும் காலம்
1. திருஷ்ட சென்மோப போக்கிய கன்மம் : இந்தச் சென்மத் திலேயே அனுபவிக்கும் கன்மங்கள். அவை முன் செய்த வினைகளுக்குப் பயன்களாகிய, இன்ப, துன்பங்களும் இப் பிறப்பிலேயே செய்த கொலை, களவு முதலிய குற்றங்களுக்கு அரசரால் தண்டிக் கப்படுதலுமாகிய இருவகையுமாம்.
2. அதிருஷ்ட சென்மோப போக்கிய கன்மம் : காணமுடியா தபடி, அடுத்த சென்மத்தில் அல்லது இம்மையிற் செய்த வினை மறுமையிற் பயன் கொடுப்பது.
3. அநியத காலோப போக்கிய கன்மம் : இப் பிறப்பிலு மின்றி, மறு பிறப்பிலுமின்றி, எப்போதோ ஒரு பிறவியில், ஒரு காலத்தில் அனுபவத்துக்கு வரும் வினை.
(இ) பாவ நிவர்த்தி-பிராயச் சித்தம்-பாவ மன்னிப்பு
9
அறிந்தோ அறியாமலோ தீவினைகளைச் செய்துவிட் டால், மனம் வருந்தி நம்பிக்கையோடு, ஆகம விதிப் படி, அதற்குரிய குற்ற நிவிர்த்திக் கிரியை, ஆசாரியர் மூலம் செய்விக்கவும்; உடல் நிலை செய்விக்க இடம் தராவிட்டால், நம்பிக்கையும் இருந்தால், ஆசாரம் பக்தி உடைய பிறரைக்கொண்டு, பொருள் கொ டுத்து, நிவர்த்தி செய்வித்து, அவரிடம் இருந்து அதன் பயனைப் பெற்றுக் கொள்ளவும்.

Page 96
146 சைவ சமய சிந்தாமணி
அல்லது ஞான சாதனைகளாகிய சரியை, கிரியை, யோகங் களுக்குரிய தொண்டுகளைச் செய்க; இவை ஞான நூற்கொள் கைகள்; ஒன்றுஞ் செய்துகொள்ளத் தகுதி இல்லையாயின், செய்த தீமைக்காக மனம் வருந்தி, இரங்கி, பாவத்தை மன் னிக்குமாறு இறைவனை வேண்டலாம்.
ஆனல் யாராவது அறிந்தும் திரும்பச் செய்யும் பாவத் தை நிவிர்த்திசெய்ய முடியாது. புண்ணியங்களையும், பாவங்களையும் புண்ணிய, பாவ இயலில் காண்க.
மா+யா - அழிவில்லாதது; உலகங்கள் ஒடுங்கியிருந்து, தோன்றுதற்குரிய இடம். இது சடம் =அறிவில்லாதது:இறை வனுடைய பரிக்கிரக சத்தி; இது சுத்தமாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்று வகைப்படும்.
1. சுத்த மாயை நீராவி போன்றுள்ளது; என்றும் உள்ளது; எங்கும் நிறைந்தது; அருவமுடையது. குக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் வாக்குகளில் இருந்து, சொல் வடிவான உலகமும், சுத்தமாகிய பொருள் வடிவான உலகமும் தோன்று வதற்குக் காரணமாய் உள்ளது. வன்னங்கள் (எழுத் துக்கள்), பதங்கள், மந்திரங்கள் வைகரியில் இருந்து தோன்றுகின்றன. அவைகளால், வேதம், சிவாக மங்கள் உண்டாகின்றன.
இம்மாயையில், அதிகார முத்தர், அபர முத்தர் இருப் பர். இவர்களுக்குத் தனு கரண புவன போகங்கள், இம் ont 60 i u un 6) உண்டாகின்றன. சுத்தமாயையாதலால் மலம் இல்லை; அதனல் மயக்கமும் இல்லை; சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தையும் சிவபெருமானே செய்வர்.
2. அசுத்த மாயை நீர் போன்றது; சுத்தா சுத்தமாயை எனவுங் கூறப்படும்; என்றும் உள்ளதாய், எங்கும்

-பாச இயல் 147
நிறைந்ததாய், சடமாய், பிரளைய காலத்தில் ஆன் மாக்களுடைய கன்மங்களுக்கு உறைவிடமாய், சுத்தா சுத்தமும், அசுத்தமுமாகிய, தனு கரண புவன போகங்கள், தோன்றுவதற்குக் காரணமாய், மல சம்பந்தம் இருப்பதால் மயக்கம் செய்வதாயும் உள் ளது. இந்த மாயையின் கிருத்தியத்தை, சிவபெரு மான் அநந்தேசுவரரை அதிட்டித்து நின்று செய்வர்.
3. பிரகிருதி மாயை : பனிக்கட்டி போன்றது. இதை அசுத்த மாயையின் காரியம் என்பர். ஆன்மாக்களுக் குத் தனு கரண புவன போகங்கள் தோன்றுவ தோடு, போக்கியப் பொருள்கள் தோன்றுவதற்கும் இடமாய் உள்ளது. இந்த மாயையின் கிருத்தியத்தை அநந்தேசுவரர் வாயிலாக, பூறிகண்டருத்திரரை அதிட் டிக்க, இவர் பிரம்மாவை அதிட்டித்து நின்று படைத் தலையும், விஷ்ணுவை அதிட்டித்து நின்று காத்தலை யும், கால உருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலை யும் செய்வர். அதிட்டித்தல்-நிலைக்களமாய்க்கொண்டு நிற்றல்-செலுத்துதல்.
மாயேயம்
முன் சொன்ன மாயையில் இருந்து, உண்டாகும் தத் துவங்களும், அவைகளால் ஆகிய தனு கரண புவன போகங்களுமாம்.
திரோதாயி
இது பராசத்தியின் ஒரு கூறு சிவ சக்தி, சடமல்ல; ஆணவத்தின் சத்தியை வலி கெடச் செய்து, கலையாதி தத் துவங்களாலும், வேதாகமங்களாலும், ஆன்மாக்களுக்கு அறிவை எழுப்பி, கன்மங்களை அனுபவிக்கச்செய்து, பரி பாகம் ஆன்மாக்களுக்கு வரச்செய்து, மறைத்து நின்று செய்து வருகிறபடியால் திரோதான சத்தி எனப்படுகிறது. ஆதி சத்தியும் என்பர். பரிபாகம் வந்தவுடன் அருட் சத்தி

Page 97
48 சைவ சமய சிந்தாமணி
யாய் மாறி நின்று சிவபெருமான் திருவடியிற் சேர்க்கும். மலத்தைச் செலுத்துவதால், உபசாரமாகப் பாசத்தோடு வைக்கப்பட்டது.
1. தனுவாதி தந்த நியாயம் : ஆன்மாக்களைப் பிணித் துள்ள ஆணவம், கன்மம், மாயைகளை, சிவபெருமா ஞகிய தன்னை வேண்டி நீக்கி, சிவாநந்தம் பெறும் பொருட்டாகத் தந்தார். உயிர்களை இறைவன் படைப் பதில்லை. இந்த உண்மையைத் தெரியாமல் பலர் கடவுளை மறந்து விடுகின்றனர். (இதை ஆன்ம இயலில்
காண்க.)
மாயை ஒளியும், இருளும் பொருந்தியது. அதை அறியா மல் மயங்கினுல் இருளாயும், அறிந்து கொண்டால் ஒளியா யும் இருக்கும். தனுவாதி மாயேயப் பொருள்கள் விளக்குப் போல உதவுகின்றன.
2. மலங்களை மலத்தால் நீக்குதல் : வண்ணுன் அழுக் கடைந்த ஆடையை, உவர்மண், சாணி, " சோடா " முதலிய அழுக்குகளுடன் சேர்த்து அழுக்காக்கி, நீராவி யில் வைத்து அவித்து, அடித்துக் கழுவி, எல்லா அழுக் கையும் ஒரு சேர நீக்கி ஆடையைத் தூய்மை ஆக்கு கிருன். அது போல, சிவபெருமானும் ஆணவம் கன் மம், ஆகிய மலங்களைப் போக்க, மாயா மலமாகிய உடம்பு முதலியவைகளை, உயிர்களுடன் சேர்த்து, வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்து, இறுதியில் எல்லா மலங்களையும் ஒரு சேரப் போக்கி நம்மைத் தூய் மையுறச் செய்கின்ருர்,
............................ --------------سسستح�.........سس---------- ,... ۔ .

-சைவ சமயிகள் இலட்சண இயல் 49
சைவ சமயிகள் இலட்சண இயல்
விளக்கம் : ஒரு சைவ சமயினுடைய இலட்சணம், நித் திய கருமங்களை ஒழுங்காய் முடித்தல், விபூதி தரித்தல், உருத்திராக்கம் தரித்தல், தீட்சை பெறுதல், அனுட்டானம் செய்தல், பஞ்சாட்சரம் செபித்தல், முதலியவைகளைக் குறைந்த அளவிலாவது கைக்கொள்ளுதலாம். இவைகள் ஒவ்வொன்றையும் தனித்தனி அறிவாம்.
நித்திய கருமம்
நித்திய கருமம் யாவருக்கும் பொதுவாய் உள்ளதா யினும், சைவ சமயிகள் ஒழுங்காகக் கைக்கொள்ளல் வேண்டும் தேக சுகம், புனிதம், தீர்க்காயுள், சந்தோஷம், சுறுசுறுப்பு, உற்சாகம், நோயின்மை, உழைப்பில் வெற்றி, முதலிய நன்மைகளைத்தருவது.
கித்திரைவிட்டெழுதல்
1. சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் (4 மணிக்கு)
உத்தமம்.
2. சூரியன் உதிக்க மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்
(4 மணிக்கு) மத்திமம்,
3. உதயத்தில் எழுதல் (6 மணிக்கு) அதமம்.
அதற்கு மேல் எழும்புகிறவர்கள் நோயாளிகள், உடன் செய்ய வேண்டியவை, அவசிய கருமத்தை முடித்துக் கொண்டு, கால் முகங்கழுவி, விபூதி தரித்து, கடவுளைப் பிரார்த்தித்து, பாடுதல், படித்தல் முதலிய செய்தல்.

Page 98
50 சைவ சமய சிந்தாமணி
மலசலங் கழித்தல்
1. காலை, மாலை இருதரம் மலங்கழித்தல் சுகத்திற்குரியது.
2. மலக் கூடத்திலாயினும், அல்லது கோயிலுக்குத் தூர மாய் உள்ள, ஈரமில்லாத, உபயோகமற்ற தனி இடத் திலாவது கழித்தல் வேண்டும்.
3. அடிக்கழுவல் (சுத்திகரித்தல்) புண்ணிய தீர்த்தமல் லாத சலத்தில் இறங்கியிருந்து, பல முறை தேய்த்துச் சுத்திகரிக்க.
4. சமீபத்தில் நீர் இல்லாவிட்டால், நீர் கொண்டுபோக.
5. காகிதம், ஒலை, இலை, வைக்கோல், ஆகியவைகள்
புறத்தூய்மையை உண்டாக்கும் பொருள்களல்ல.
பல்விளக்கல்
ஆல், வேல், நாயுருவி, வேம்பு, இவைகளின் குச்சியின லேனும், நல்ல பற்பொடிகளினலேனும், மிளகு, உப்புக் கலந்த உமிக்கரியினலேனும், அல்லது கெடுதியில்லாத பற் பசை, பற்துலக்கும் கருவி (பிறவு) யினலேனும், உள்ளும் புறமும் சுத்தி செய்து, நாக்கை வழித்து, வாய் கொப்ப ளித்து, முகம், கை, கால்களைச் சுத்தமாய்க் கழுவ வேண் டும். கைவிரல், வைக்கோல், செங்கல், கரி, சாம்பல், மணல் இவைகளால் பற்துலக்கினல் நோய் உண்டாகும்.
ஸ்நானம் செய்தல் (முழுகல்-குளித்தல்)
1. தினமும் காலையிலும், ஆலயத்துக்குப் போகு முன்னும், ^ செத்த வீட்டுக்குப் போய் வந்த பின்னும், கிரகணம் கழிந்த பின்னும், அசுத்த வேலைகள் செய்த பின்னும், போகங் கழித்த இரவு விடிந்தவுடனும், விலக்கான பெண் தீண்டியபோதும், அவசியம் ஸ்நானம் செய்தல் வேண்டும்.

-சைவ சமயிகள் இலட்சண இயல் 151
2.
கோவணமும் ஆடையுமின்றி நீராடல் ஆகாது; உடுத்த ஆடையைத் தோய்த்தல் வேண்டும்; உடம்பிலுள்ள வியர்வை அழுக்குகள் நீங்கும்படி, ப்யறு, அரப்பு, அல்லது நல்ல ‘சவர்க்காரம் (சோப்பு) இவைகளால் தேய்த்துக் கழுவுதல் வேண்டும்.
. ஸ்நானம் செய்தபின் உலர்ந்த வஸ்திரத்தினல், ஈரத்
தைத் துடைத்து, காய்ந்த வஸ்திரந் தரித்துக் கொண்டு, ஈரத்துணிகளைக் காயப்போடுதல் வேண்டும்.
புண்ணிய தீர்த்தங்களாயின், சமீபத்தில் மல சலம் கழித்தலும், எச்சில், கக்கல், சளி ஆகிய அசுத்தங்களைச் செய்யக்கூடாது; மாடு, ஆடுகளைக் குளிப்பாட்டல் நீந்தி விளையாடல், வஸ்திரந் தோய்த்தல், செய்யக் கூடாது; குளிக்கும் நீரைக் கங்கை, யமுனை முதலிய புண்ணிய தீர்த்தங்களாக மனதில் கருதிக் கொள்ளல் வேண்டும்.
. சுகவாளிகள் யாவரும், குளிர்ந்த நீரிலே, ஸ்நானஞ்
செய்தல் வேண்டும்.
எண்ணெய் ஸ்நானம் செய்வோர், சீயக்காய், அரப்பு, பயறு முதலியவைகளால், எண்ணெயைப் போக் கிய பின் நீராடுதல் வேண்டும். இவற்றிற்கு வெந்நீர்
நல்லது. இப்படி வாரத்தில் ஒரு முறை இரண்டு முறை ஸ்நானம் செய்வது சுகத்துக்குரியது.
. புண்ணிய தீர்த்த காலங்களிலும், அமாவாசை, பெளர்
ணமை காலங்களிலும், கடல் நீராடுதல் நல்லது; இந் நீர் உள்ளும் புறமும் நோய்களை நீக்கும்.
. நோயாளிகள் வெந்நீரில், அல்லது தண்ணிரிலாயினும்
ஸ்நானம் செய்ய முடியாவிட்டால், அரையின் கீழோ, கழுத்தின் கீழோ, எந் நீரிலாயினும் சுத்தி செய்து எஞ்சிய பாகத்தை ஈரம் படும்படி, ஈரவஸ்திரத்தினுல்

Page 99
152 சைவ சமய சிந்தாமணி
துடைத்தல் வேண்டும். காலை ஸ்நானம் நோயை நீக்கும், பசியைக் கொடுக்கும்.
வஸ்திரம் தரித்தல்
தோய்த்து உலர்ந்த வஸ்திரம் நல்லது. இரவில் கட்டிய துணியைத் தோய்த்துக் கட்டிக் கொள்ள வேண்டும்; பட்டு களாயின் அடிக்கடி கழுவாமற் கட்டலாம்; பருத்தியே நோய்க் கிருமிகளைத் தாங்கக் கூடியவை.
சந்தியாவந்தனம்
அனுட்டானங்களைக் கடைப்பிடித்தல், தீட்சை பெற் றவர்களுக்குத்தெரியும். இதனுல் மன அடக்கம், புலனடக் கம், பாவ நிவிர்த்தி உண்டாகும். தீட்சையின் கீழறிக.
ஆலயஞ் செல்லல்
சந்தர்ப்பம் வாய்த்தபொழுதெல்லாம் கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுக் கொள்ளுதல் நல்லது தரிசனம் செய் யும் முறையை ஆலய தரிசன இயலில் காண்க
போசனம் பண்ணல் (சாப்பிடுதல்-உண்ணுதல்)
1. உண்ணுமுன் ஸ்நானம் செய்தோ, முகம், கை, கால்
களைக் கழுவியோ கொள்ளல் வேண்டும்.
2. போசனம் பண்ணும் இடம், காற்று, வெளிச்சம், நன்
ருய் வரக் கூடிய இடமாய் இருத்தல் வேண்டும்.
3. கழுவிய வாழை, தாமரை, இலைகளில் உண்ணல் நல் லது. வாழையிலையை, அடிவலம் பொருந்த இடுதல் வேண்டும். இலைகள் இல்லாவிட்டால், சுத்தமான உண்கலங்கள் பாவிக்கலாம்.

-சைவ சமயிகள் இலட்சண இயல் 153
4. சாதம், காய் கறி, பாதார்த்தங்களைப் படைத்த பின், கடவுளுக்கு அர்ப்பணம் செய்து, பிசைய வேண் டியபகுதியை, வேருகப் பிரித்து, பிசைந்து புசிக்க வேண்டும். சிந்தாமலும் வீண் வார்த்தைகள் பேசா மலும், சாப்பிட்ட பின், வெந்நீரோ, தண்ணீரோ உட்கொண்டு, வாய் கைகளைச் சுத்தம் செய்து கொள் ளல்வேண்டும்.
5. மயிர், ஈ, கொசுகு, ஆகிய அசுத்தங்கள் இருந்தால், அவைகளுடன் சிறிது அன்னத்தை எடுத்து, எறிந்து விட்டுக் கைகழுவிய பின் உண்ணலாம்.
6. இரவில் உண்ணும் போது விளக்கு அணைந்தால், கை யால் உணவைப் பொத்திக் கொண்டு, மெளனமாய்ச் சிவமூல மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்து, விளக்கேற்றிய பின், கலத்தில் உள்ளதையே புசித்து விட்டு எழுந்து விடுதல் வேண்டும்.
7. சைவர்கள், மச்சம், மாமிசம், முட்டை முதலிய புலால் உணவுகளை உண்ணக்கூடாது; அவை சுகத்திற் கும், சாத்வீக குணத்திற்கும், மன அமைதிக்கும் ஏற்றதல்ல.
சுத்த போசனமே உண்ண வேண்டும்; மிருக குணம் அடங்கும்; காய், கிழங்கு, இலை, பழம், தானியம், முதலிய வைகளுக்கு, நல்ல பலம் உண்டென்று, விஞ்ஞானிகளும் சொல்கின்றனர்; மேலும் பாவமில்லாத உணவு.
மாலைக் கடன்
சந்தியா வந்தனம் செய்பவர்கள் செய்தல் வேண்டும்; மற்றவர்கள் முகம், கை, கால்களைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும்; விபூதி தரித்த பின் கோயிலுக்குப் போவது நல் லது; மாணவர்கள் விளக்கில் படித்தல் வேண்டும். மற்றவர் கள் ஞான நூல்களைப் படித்தாவது, கேட்டாவது அறிந்து
20

Page 100
154 சைவ சமய சிந்தாமணி
கொள்ளல் வேண்டும். பின் உண்ணவேண்டிய நேரத்தில் உண்டு சிறிது நேரம் உலாவிய பின் சயனிக்க வேண்டும்.
சயனித்தல்
சுத்தமான படுக்கையில், வடக்கு ஒழிந்த திசைகளில் தலைவைத்து, கடவுளை வேண்டிக்கொண்டு, இடக்கைகீழாகச் சயனித்தல் வேண்டும். சுத்தமான காற்ருேட்டமுள்ள இடத்தில் நித்திரை கொள்ளல் வேண்டும். சைவ சமயம், ஒவ்வொருவரும் தேக சுகம் உள்ளவர்களாக இருக்க வேண் டும் என்றே போதிக்கின்றது. ஏனென்ருல், இவ்வுலக வீட்டுலக வாழ்க்கைச் சுகத்தைக் கொடுக்கும் இறைவன், உடம்பினுள்ளும் உறைகின்ருர்,
* உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெஞ்ஞானம் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
- திருமூல நாயனுர், திருமந்திரம்.
சிவ சின்னங்கள்
விளக்கம் :
" பரமசிவனமலன் பத்தர்க்குச் சின்ன முருவுடலில் கண்டிகையும் நீறும் "
-சைவ சமய நெறி.
ஒவ்வொரு சமயத்தவர்கட்கும் சமயக் குறிகள் இருக் கின்றன. அக் குறிகள், காணப்படாத கடவுளை அறிவுறுத் துவன. அரசனுடைய சின்னங்களையே, அரசனுகப்பாவித்து,
இராச விசுவாசத்தைக் காட்டுகிருேம்.

-சைவ சமயிகள் இலட்சண இயல் 155
அது போல, சிவ சின்னங்களைக் கூசாமல் அணிபவர் களே, சிவபெருமானிடம் அன்புடையவர்கள்; அவர்களே உண்மைச் சைவ சமயாபிமானிகள். அவற்றை அணியாது நியாயம் பேசுவோர் போலிச் சைவர்கள். இராசத் துரோகி கள் போலச் சிவத் துரோகிகளாவர். அன்றியும், லெளகீக முறைப்படி ஆராய்ந்து பார்த்தாலும், சரீரத்தின் வெளி யிலும், உள்ளிலுமுள்ள நோய்களை நீக்கி, பலத்தையும் சுகத்தையும் கொடுப்பதில் நமது சமயச் சின்னங்களுக்கு நிக ராக, வேருென்றும் இல்லையென்று மேல் நாட்டினரும் ஒத் துக்கொண்டுள்ளனர்.
விபூதி
விபூதியின் மகத்துவம் சொல்லொணுதது; மந்திர மாய், தந்திரமாய், சுந்தரமாய், ஞானந்தருவதாய், பூச இனியதாய், நோய்களைத் தீர்ப்பதாய் உள்ளது. "" நீறில்லா
நெற்றி பாழ் ’’ என்று மூதாட்டி ஞானம் கண்டு கூறினர்.
விபூதி - அழியாத ஞானத்தை ( செல்வத்தை ) க் கொடுப்பது. திருநீறு - தீவினை அனைத்தையும் நீறு படுத்துவது. இரட்சை - தீமைகளிலிருந்து இரட்சிப்பது. சாரம் - ஆன்மாக்களின் மல மாசைப் போக்குவது. பசிதம் - அறியாமையை அகற்றிச் சோதி நல்குவது.
இவ்வித பெருமைகள் பொருந்திய பெயர்களை உடைய விபூதி, கற்பம்; அநுகற்பம்; உபகற்பம்; அகற்பம் என நால்வகைப்படும்.
1. கற்பம் நல் இலக்கணங்கள் அமைந்த, பசுவின் சாணத்தை, விதிக்கப்பட்ட நாட்களில் எடுத்து, குற்றங் களை நீக்கி, பதருடன் சேர்த்து, உலர்த்தி, அக்கினியிற் சுட்டு, வெண்ணிறமானதை எடுத்து, புதுப் பாண்டத் தில் வாசனை மலர்களை இட்டு கொஞ்சம் கொஞ்சமாய்

Page 101
156
சைவ சமய சிந்தாமணி
எடுத்து அணிவது. ஒவ்வொரு செய்கைக்கும், மந்தி
ரங்கள் இருக்கின்றன. பின் வருபவைகளுக்கும் மந்தி ரங்களுள.
. அநுகற்பம் : சித்திரை மாதத்தில் காட்டிலே உலர்ந்து
கிடக்கின்ற சாணத்தைக் கொண்டு வந்து இடித்து, மந் திர பூர்வமாய், முன் சொன்னபடி செய்து சுட்டு, புதுப் பாண்டத்தில் முன் போற் செய்து வைத்து எடுத் துத் தரிப்பது.
உபகற்பம் : கோமயம் கிடையாத இடத்து, இணைந்த
இரு மரங்கள் உரோஞ்சுதலால் அவை எரிந்து, தானே உண்டான சாம்பரையாவது, செங்கற் சூளை, முதலிய வற்றில் உண்டான சாம்பரையாவது, கொண்டு வந்து பஞ்சகெளவியத்தில் கலந்து, நெற்பதருடன் சேர்த்து, சிவாக்கினியில் இட்டுத் தகித்து முன்போல் எடுத்து
வைத்துப் பாவிப்பது.
அகற்பம் : யாதாயினும் ஒரு காரணத்தால், மலை
களிலும், நிலங்களிலும், இயற்கையாய் விளைந்த திரு நீற்றைச் சுத்தி செய்தும் தரிக்கலாம். கதிர்காமத்தில் இவ்வாறு உண்டு. சில ஊர்களில் திருமண் கேணிகள் இருக்கின்றன. அம்மண்ணை எடுத்து, கழுவி வடித்து அரித்து எடுத்தும் பாவிக்கின்றனர். சமித்துக்களை ஒமாக்கினியில் சுட்டும் எடுக்கலாம் என்பர்.
(அ) விபூதியின் பலன்கள்
கரு நிற விபூதி-வியாதியை உண்டாக்கும். செந் நிற விபூதி டகீர்த்தியைக் கெடுக்கும். புகை நிற விபூதி-ஆயுளைக் குறைக்கும். பொன் நிற விபூதி-செல்வத்தைக் கெடுக்கும்.
ஆகையால் இந் நிற விபூதிகளை விட்டு, வெண்ணிற விபூ
தியையே தரித்தல் வேண்டும். இது போகம், மோட்சம் இரண்டையும் கொடுக்கும்.

-சைவ சமயிகள் இலட்சன இயல் 157
(ஆ) தரிக்கும் முறை : வடக்கேயாயினும், கிழக்கே
(g)
யாயினும் இருந்து கொண்டு, அண்ணுந்து வலக் கையின் நடுவிரல் மூன்றினலும், “ சிவ சிவ என்று சொல்லி நெற்றியில், நிலத்தில் சிந்தாமல் அணிய வேண்டும். சுவாமி, அக்கினி, குரு, சிவனடியார்கள் முன், முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண் டும். நிலத்தில் சிந்தினுல் அதை எடுத்து நிலத்தைச் சுத்தி செய்தல் வேண்டும். உடம்பில் பரவப் பூசல் உத்தூளனம் எனப்படும். நீரில் குழைத்து மூன்று குறியாய்த் தரித்தல், திரி புண்டரம் எனப்படும். தீட்சைபெற்றவர்கள் திரிபுண்டரமாய் அணிவர். முக்குறிகள், ஆணவம், கன்மம், மாயைகள் நீங்கி,
ஞானம் பெற்றமைக்கு அறிகுறியாகும்.
விபூதி வைக்கும் இடங்கள் : சுத்தமான மட்பாத் திரம், உலோகப் பாத்திரங்களின் வாயை வஸ்திரத் தால் மூடி வைக்கலாம். தரிக்கும் போது, பட்டுப் பை, சம்புடம், வில்வக் குடுகு, சிமிழ் இவற்றில் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து வைத்துக் கொண்டு தரிக்கலாம்.
தரிக்கவேண்டிய அவசிய காலங்கள் : காலை, மாலை முகங்கழுவிய உடனும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும், ஆலயஞ் செல்லும் போதும், உண்ணுவதற்கு முன்னும் பின்னும், நித்திரைக்குப் போகும் பொழுதும், நித்திரை விட்டெழுந்தவுட னும் சூரிய உதய, அஸ்தமன நேரமும், அவசியம் தரித்தல் வேண்டும்.
பசுவின் மலம் நோய்க் கிருமிகளைக் கொல்ல வல்லது, என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உளுந்து, துவரை, முத லிய தானியங்கள் பூச்சி, புழுக்களால், அரிபடாமல், சாதா ரண சாம்பலைப் பூசுவர். அவரை முதலிய கொடிகளில், புழு, நசுக்குண்ணிகள் பிடியாமல் சாம்பல் தூவுவர்.

Page 102
158 சைவ சமய சிந்தாமணி
விபூதியாகிய நீருண்து, உத்தூளனமாய் உடம்பில் பர வப் பூசினல், விஷப் பூச்சிகள், கிருமிகளையும், கெட்ட அணுக்களையும், தொற்று நோய்க் கிருமிகளையும், வியாதி களையும், நீர்த்தோஷம், தலையிடிகளையும் போக்கும்.
உட்கொண்டாலும் நோய்களைக் கொல்லும்; பேய், பிசா சுகளை ஒட்டவும், கண்ணுறு முதலியவைகளைப் போக்கவும், உபயோகிப்பதை யாவரும் அறிவர்.
நீரில் குழைத்துத் தரிக்கும் இடங்களில் பூசினல், மின் சார சக்தியை அதிகப்படுத்தி, அழகைக் கொடுத்து, நோய் களை நீக்கும் வல்லமை உடையது என்கின்றனர். இவ் வளவு மகத்துவம் தங்கியதை அலட்சியமாய் எண்ணலாமா ? அலட்சியமாய் மதிக்கலாமா ?
உருத்திராக்கம்
விளக்கம் : உருத்திர+அக்கம் - உருத்திர மூர்த்தியா கிய சிவபெருமானுடைய திரு நேத்திரங்களில் தோன்றிய கண்மணிகள் என்பது பொருள். திரிபுரத்து அசுரர் கொடு மைகளைத் தேவர்கள் சிவபெருமானிடம் கூறிய போது, அவ ரது திரு நேத்திரங்களில் இருந்து ஒழுகிய நீர்த்துளிகள்.
இதில் மின்சார சத்தி இருப்பதைப் பெளதிக சாஸ்திரி கள் கண்டிருக்கின்றனர்; நல்ல உருத்திராக்கம் பசும் பொன் னின் மாத்தை ஒத்திருப்பதை அறியலாம். தேகத்தில் உள்ள சில நோய்களை நீக்குந் தன்மை இதற்குண்டு; அந் நோய்களை நீக்குதற்குரிய சக்தியுள்ள பொருள்கள் இவற் றில் உண்டாமென்பர்.
இதனை உரைத்து வைத்தியர்கள் மருந்தாகக் கொடுக் கிருர்கள்; சன்னி தோஷத்தால் நாவறண்டு போனவர்க ளுக்கு இதை உரைத்து நாவில் தடவ, நீரூறி வறட்சியைத் தடுக்கும். எவ்வளவு அதிகமாய் அணிய முடியுமோ அவ் வளவு அதிகமான மின்சார சக்தியைக் கொடுத்து, இரத்த

-சைவ சமயிகள் இலட்சன இயல்
159
சத்தியை விருத்தியாக்கி, நாடிகளைப் பலப்படுத்தி, மூளைக் குத் தெளிவைக் கொடுத்து, தொற்று நோய்களைத் தடுத்து, உற்சாகத்தையும் ஊட்டும் என்பர். ܗܝ
எனவே, இவை, பலம், சுகம், மனேசத்தி, பக்தி, ஞானம் முதலிய பல நன்மைகளைக் கொடுக்க வல்லது, என் பதை உண்ர்க. சிவ சின்னங்களுக்கு மேற்காட்டிய மேன் மைக் குணங்கள் இருப்பதை அறியாமல், சிவனடியார்கள் அணிய அவ்வளவு பேயர்களா என்பதை அறிவுடன் ஆராய்க.
1. வகைகள் : ஒரு முக மணி தொடக்கம், பதினறு முகம் ஈருரன வகைகளையுடைய மணிகள் இருக்கின்றன.
2. மாலேகள் : மார்பில் தரிக்கவேண்டிய மணி பெரியதாய் முப்பத்திரண்டு இருக்க வேண்டும்; செபமாலையாயின், சிறு மணிகளாய், நூற்றெட்டு, ஐம்பத்து நான்கு, இரு பத்தேழு மணிகளாய் இருக்க வேண்டும். துறவிக ளுக்கு இருபத்தைந்து என்பர்.
3. கோர்க்கும் முறை : மாலைகள் எதுவும் ஒரே முக முடைய சாதிகளாய் இருத்தல் வேண்டும்; பல முக மணிகள் ஒரே மாலையில் கோர்த்தல் முறையாகாது. முகத்தோடு முகமாய் அமைய இடையில், பொன், வெள்ளி, பவளம், பளிங்கு, வில்வ ஒடு, முதலிய ஏதே னும் இடப்பட்டிருக்க வேண்டும்; மாலையின் தொங்கல் இரண்டையும் சேர்த்து முடியும் இடத்தில், அதே முக முடைய பெரிய மணி ஒன்று செபமாலையில் இட்டு முடிவது வழக்கம்; அது நாயக மணி எனப்படும்.
4. தரிக்கவேண்டிய அவசிய காலங்கள் : கோயிலுக்குப் போகும் பொழுதும், விரதம், சிரார்த்தம், அனுட் டான காலங்களிலும், புண்ணிய தல, யாத்திரை செய் யும் பொழுதும், தீர்த்தம் ஆடும் பொழுதும், வேறு சுப காலங்களிலும் தரித்தால் பலன் அதிகம் உண்டாகும்.

Page 103
160 சைவ சமய சிந்தாமணி
5. தரிக்கும் இடங்கள் : குடுமியில் ஒன்றும், தலையில் இரு பத்திரண்டும், காதுகளில் ஒவ்வொன்று, அல்லது அவ் வாறும், கழுத்தில் முப்பத்திரண்டும், மார்பில் நூற் றெட்டும், புயங்களில் தனித்தனி பதினறும், கைகளில் தனித்தனி பன்னிரண்டு மணிகளும் தரிக்கலாம்.
6. தரிக்கலாகாதவர் : மதுபானமும், மாமிச போசன மும் உள்ளவராய், ஆசாரம் இல்லாதவராய், உள்ள வர்கள் தரிக்கலாகாது. அவை இல்லாத புண்ணிய காலங்களில் இடை இடையே தரிக்கலாம்.
சந்தனம்
சந்தனம் முதலிய பொருட்கள் இடுவதால், சிவபெரு மானை நினைக்கச் செய்கிறது; மேலும், புருவ மத்தியத்தில், பல நரம்புகள் சந்திப்பதால் அந்த இடத்தை, அது வெப்ப மின்றிக் காக்கின்றது; அன்றியும் நறு மணமும், குளிர்ச்சி யையும், தேகத்திற்குச் சுகமும், மனதிற்கு மகிழ்ச்சியும் ஊட்டுகின்றது; சாக்கிர நிலையில் ஆன்மா அவ்விடம் சஞ் சாரஞ் செய்கின்றது; ஆகிய இவற்றையும் கூறுவர். நெற்றிக் கண்ணையும் குறிக்கும்.
குங்குமம்
தேவி பூசை, அருச்சனைகளுக்கு உரியது. இலட்சு மீகரத்தைக் கொடுக்கின்றது. மேல் நியாயங்கள் சில இதற் கும் பொருந்தும்.
காவி வஸ்திரம்
உண்மைத் துறவி (சந்நியாசி) களாய் உள்ளவர்கள் காவி வஸ்திரத்தை, குரு மூலமாய்ப் பெற்று அணிவர்; இல் லறத்தாருக்கு உரியதல்ல; போலிகள் சிலரும் காவி வஸ்திரம் தரிக்கின்றனர்; அவர்கள் கடவுளால் தண்டிக்கப்படு வார்கள்.

-சைவ சமயிகள் இலட்சன இயல் 161
கதிர்காமம் முதலிய, புண்ணிய கூேடித்திர, தீர்த்த யாத் திரை செய்யும் இல்லறத்தார், சிலர் காவி வஸ்திரம் தரித் துச் செல்வது வழக்கமாய் இருக்கின்றது; அது தூய்மைக்கும் பற்று இன்மைக்கும், அறிகுறியாகும்.
தீகூைடி
விளக்கம் : தீகூைடி - தீ + கூைடி: தீ = கொடுத்தல்; கூைy=கெடுத்தல்; அதாவது, ஆன்மாக்களுக்கு மலத்தைக் கெடுத்து, ஞானத்தைக் கொடுப்பது என்பதாம். இதைப் பெற்றவர்களே உண்மையான சைவ சமயிகள். சைவ சம யத்தவர்களுக்குத் தீட்சை பெறுதல்தான் சமயப் பிரவேசம்.
எந்தச் சமயத்திலும் இத்தீட்சை போன்ற சமயப் பிர வேசச் சடங்குகள் உண்டு; கிறிஸ்தவர்களின் ஞான ஸ்நானம் என்பது இதுபோன்றதே. இது பெருதவர் அச்சமயிகள் அல்லர். அருட்பாக்களை ஒதுதற்கும், புராணங்களைப் படிப் பதற்கும், ஞான சாஸ்திரங்களைக் கேட்டல், படித்தலுக்கும், பிரதிட்டை, விவாகம், அந்தியேட்டி, சிரார்த்தம் போன்ற நம் சமயக் கிரியைகளைச் செய்வதற்கும், செய்விப்பதற்கும் தகுதி யுடையவர்கள் தீட்சை பெற்றவர்களே. ஏனென்ருல் அக்காரியக் கிரியைகளில் மந்திரங்கள் வருகின்றன; அவை களில் நம்பிக்கை இல்லாமல், கிரியைகள் செய்விப்பதால் பல னில்லை: அம்மந்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளிலும் நம்பிக்கை அற்றவரே யாவர்.
மேலும் நமது முயற்சி, உடம்பின் உள்ளும் புறமும் உள்ள அழுக்குகளை நீக்குதலும், ஆகாரம் ஊட்டிச் சுத்த மாய் வளர்த்தலுமாம். நீரினல் வெளி உடம்பைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு;
2l

Page 104
162 சைவ சமய சிந்தாமணி
அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினலேயே போக்கமுடியும்.
இந்த உண்மைகளை அறிந்தே, நம் சமயத்தில் ஏழு வய தில் தீட்சைப் பெறவேண்டும் என்ற விதி ஏற்பட்டுள்ளது; ஏனெனில், கால், கைகளை அடக்கி ஆளும் பக்குவமும், மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக்கூடிய காலமும், அப் பருவகாலத்திலிருந்துதான் உதிக்கின்றன என்பது கருதியே.
அவ்வயதில் தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாத னங்களினல், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப் படுத்தவும், தீச் செயல்கள் தோன்ருமலும் செய்யமுடியும். படிப்படியாய்ச் சொல்லப்பட்ட தீட்சைகளைப்பெற்று அந்த அந்தத் தீட்சைகளுக்குரிய கிரியைகளையும் சாதனங்களையும், அப்பியாசப்படுத்திவர, இறைவன் திருவடியடைதல் இலகு வாகும். தீமைகளை நீக்கி, நல்வாழ்க்கை வாழ்ந்து கடவுள் அருள்பெற விரும்புவோர்க்கே இங்கு நாம் கூறியவை ஏற்கும்.
நம்மவர்களில் அநேகர் "தீட்சை கேட்டால் பாவம்' என்கிருர்கள். அப்படியானல் கேளாதிருப்பது புண் ணியம் என்பது கருத்தோ? என்னே! இவர் மதியின் சிறுமை! தம் இச்சைப்படி நடக்க வசதி கருதி இப்படிச் சொல்லுகின்ருர் கள். இச்சைப்படி நடந்ததால் வந்தேறியபாவங்களைப் போக் குவது, தீட்சை என்பதை அறிகிருர்களில்லை; பாவங்களை மந்திரங்களாலேயே போக்கவேண்டும் என்பது விதி.
அந்தணர் முதல் தீண்டாதவர், ஈருகத் தீட்சைபெற இடம் உண்டு; மனிதர்களுக்கு மாத்திரமல்ல, புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன; உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தார் என் பதை நாம் நன்கு அறிவோம். ஆசாரியனுடைய ஞான

-சைவ சமயிகள் இலட்சன இயல் 163
பக்குவம் எவ்வளவோ, அவ்வளவு ஆற்றலால், அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்க்கு, மல, மாசு, நீங்கித் தூய்மை உண்டாகும்.
தீட்சையின் வகைகள் (ஏழு)
1.
நயன தீட்சை கண்ணுல் பார்த்தல். குரு அருட் பார்வையால், மாணுக்கனைப் பார்த்து, ஆணவ மலத்தை நீக்கல். இது, கருட தியானி தன் பார்வை யால் விஷம் ஏறப்பெற்றவனுக்கு நீக்கல் போல.
. பரிச தீட்சை கைகளால் தொடுதல். குரு வலது
கரத்தைச் சிவகரமாகப் பாவித்து, சீடன் சிரசில் வைத்து, மந்திரத்தால் உடம்பு முழுதும் தடவி, அவன் மாயா வலியை அடக்கல். இது பறவை முட்டையைத் தீண்டிக் குஞ்சாக்குவது போல.
வாசக தீட்சை உபதேசம் செய்தல். குரு மந்திரங்
களைச் சீடனுக்கு உபதேசித்து, அவனை ஆசீர்வதித்தல்.
பாவனை தீட்சை (மானச தீட்சை) குரு சீடனைத்
தனது அருள் உருவாய்ப் பாவித்து, யோக மார்க்கத் தால் அவன் மனதில் பிரவேசித்து, ஆன்ம போதத்தை நீக்கல்; இது, ஆமை கரையில் இருந்த முட்டையை மனுேபாவனையால் குஞ்சாக்குவது போல.
யோக தீட்சை : குரு சீடனுடைய இருதயத்தில் பிர
வேசித்து, ஆன்மாவைச் சிவத்தோடு சேர்த்தல்; சிவ யோகத்தை அப்பியாசிக்கும்படி உபதேசித்தல்.
சாள்திர தீட்சை : சைவ சமய உண்மைகளையும்,
ஆசார அனுட்டானங்களையும் சுருக்கி அறியச் செய்தல்.
ஒளத்திரி தீட்சை : ஒமம் சம்பந்தமானது. குண்டம்,
மண்டலம், அமைத்து, அக்கினி வளர்த்துச் செய்யப்

Page 105
164 * சைவ சமய சிந்தாமணி
படுவது. இது, கிரியாவதி என்றும், ஞானுவதி என்றும் இரண்டு வகைப்படும்; ஒளத்திரிக்கு அருகரல்லா தார்க்கு, நயனம் முதலிய தீட்சைகள் செய்யப்படும்.
(அ) கிரியாவதி : குண்டம், மண்டலம், வேண்டிய பொருட்கள் யாவையும் வெளியிற்கொண்டு ஒமக் கிரியை செய்வது.
(ஆ) ஞானவதி : குண்டம், மண் டல ம், மற்றும் பொருட்கள் யாவையும் உள்ளத்தில் (மனத்தால்) கற்பித்துக்கொண்டு கிரியைகளை ஞான மயமாய்ச் செய்வது.
ஒளத்திரி தீட்சை கொடுக்கும்போது, அதற்கு அங்க மாக, முன் சொன்ன ஆறு தீட்சைகளும் கைக்கொள்ளப் படும். ஒன்று கிரியா குரு; அதாவது சாதாரண கிரியைக ளைச் செய்யும் ஆசாரியர்கள். மற்றது, ஞான அருள்பெற்ற ஞானசாரியர்கள்; இவர்களே தீட்சைகள் கொடுக்க யோக் கியராவர். மேலும் இந்தக் கிரியாவதி, ஞானவதி இரண்டும் தனித்தனி நிர்ப்பீசம், சபீசம் என இரு வகைப்படும்.
நிர்ப்பீசம் : பாவர், அறிவீனர், முதியோர், மாதர், பலபோகமுடையோர், மிக்க நோயுடையவர்களுக்குச் செய்வது. இவர்கள் நித்தியத்துக்கு மாத்திரம் அருகராவர்.
சபீசம் : ஒதி உணர்ந்த நல்ல ஒழுக்கமுடைய உத்த மர்களுக்குச் செய்யப்படுவது. இவர்கள், நைமித்திகம், காமி யங்களுக்கும் அதிகாரிகளும், அருகருமாவர். இவ்வகைகளுள், சமயம், விசேடம், நிர்வாணம், ஆசாரியாபிஷேகம் என்னும் தீட்சைகள் அடங்கும்.
தீட்சையின் விரிவுகளை எல்லாம், ஆகமங்கள், சோம சம்பு பத்ததி, வருண பத்ததி முதலியவற்றில் விரிவாய்க்
காணலாம்.

-சைவ சமயிகள் இலட்சன இயல் 165
தீட்சையின் பெயர்கர்
ஒருவர் பெறவேண்டிய தீட்சைகள் சமயம், விசேடம்,
நிர்வாணம் என மூன்று வகைப்படும்.
.
ཀ་
சமய தீட்சை ஆசாரிய அபிஷேகம் பெற்ற கிரியா குரு ஒருவரிடம் முதலில் பெறும் தீட்சையாகும்; இது சமயப் பிரவேசமாகும்; அனுட்டானம், பஞ்சாட்சர செபம், மற்றும் சமயத் தொண்டுகள், கிரியைகள், யாவற்றையும் செய்யவும், செய்விக்கவும், தகுதி நல் குவது; இவனே சைவ சமயி.
. விசேட தீட்சை சமய தீட்சை பெற்றுச் சாதனம்
செய்து, பக்குவம் முதிர்ந்தபின், ஆசாரியரிடத்தில் இரண்டாவதாகப் பெறும் தீட்சையாகும். இது பெற் றவர்கள், கடவுளியலிற் கூறியபடி, ஆன்மார்த்த பூசைசெய்து, புறமும், உள்ளும், அவருடைய அருவுரு வத் திருமேனியை வணங்குதலாம்; இவர்களே சிவ பூசைக்காரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
நிர்வாண தீட்சை : முதல் இரண்டு தீட்சைகளும்
பெற்றுப் பக்குவம் முதிர்ந்தவர்கள், ஆசாரியரிடம் இத்தீட்சையைப் பெறுவர்; தீட்சை உலோகதர்மிணி, சிவதர்மிணி என இருவகைப்படும்.
சிவதர்மிணி : மிக முதிர்ந்த ஞானவான்களுக்கு, ஞானு
சாரியராற் செய்யப்படுவது; நிர்வாண தீட்சை அசத்தியோ நிர்வாணம், சத்தியோ நிர்வாணம் என இரு வகை; அசத் தியோ நிர்வாணம் தேகாந்தத்தில் முத்தியைக் கொடுப்பது. சத்தியோ நிர்வாணம் கேட்டவுடனேயே முத்தியைக்கொடுப் பது; இது பெற்றவர்கள் அருவத் திருமேனியாய்ச் சிவத்தை அகத்தில் வழிபாடுசெய்வார்கள்.
4. ஆசாரியாபிஷேகம் : முன் சொன்ன மூன்று தீட்சைகள்
பெற்றவர்களுக்குச் செய்யப்படுவது; இது பெற்றவர்

Page 106
166 சைவ சமய சிந்தாமணி
கள் குருக்கள் எனப்படுவர்; இவர் தன்மைகளைப் பற்றி கிரியை இயல், ஆசாரியர் கிரியை என்பதில் குறிப்பிட் டோம் அத்துடன் யாகம், தீட்சை, முதலிய வைகள் செய்ய அதிகாரம் உடையவராவர். \,;
சமய தீட்சை சரியை ஆகியவைகளுக்கும்; விசேட தீட்சை, கிரியை யோகங்களுக்கும்; நிர்வாண தீட்சை ஞானத்திற்கும் உரியன. இவை முறையே, மந்ததரம், மந் தம், தீவிரதரம், என்னும் ஞான பக்குவங்களைக் கொடுக்க வல்லன. ஞானசாரியரைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வில்லை.
அனுட்டானம் செய்தல்
சமய தீட்சை பெற்றவர்கள், குரு மூலமாய் இதை அறிந்து செய்வார்கள். இதில் சுருக்கமாய்ச் செய்ய வேண் டியவைகளை நான்கு பிரிவுகளாய்த் தருவோம். ஸ்நானம் செய்தபின், கெளட்பீனம் தரித்துக் கொண்டு, சுத்த வஸ்தி ரம், அல்லது பட்டு வஸ்திரமாயினும் உடுத்திக் கொள்க. முன்னும் வஸ்திரம் தரித்தல், சந்தியா வந்தனம் என்பதில் இவை குறிப்பிட்டிருக்கின்றன.
ஆரம்பம்
சுத்தமான பாத்திரம் எடுத்தல்; அதில் சுத்தமான நீர் எடுத்தல்; நீரில் பூ, பத்திரம் இட்டுக்கொள்ளல்; சுத்தமான இடத்தில் மந்திரத்தால் நீர் தெளித்து சுத்தி செய்தல்; பூ, பத்திரம் ஆசனமாய் வைத்து, நீர்ப் பாத்திரத்தை அதன் மேல் வைத்தல்; வடக்காய் கிழக்காய், ஏதும் ஒரு ஆசனத் தில் இருத்தல்.
விபூதி ஸ்நானம்
1. நிரீட்சணம் : நீரை முத்திரையினல் கண்ணுல்
பார்த்தல்.

-சைவ சமயிகள் இலட்சன இயல் 167
2. திக்கு பந்தனம் : மந்திரத்தால் நீரைச் சுற்றி மூன்று
தரம் நொடித்தல்.
༈ ༥ ༥ ( 3. அவகுண்டனம் : மந்திரம் சொல்லி சுட்டு விரலால்
சுற்றல்.
4. அபிமந்திரித்தல் : நீரை வலக்கையால் மூடிக் கொண்டு
மந்திரங்களைச் சொல்லல்,
5. புரோட்சித்தல் : மந்திரம் சொல்லி நீரைத் தலையில்
தெளித்தல்.
6. ஆசமனம் வலக் கையில் நீரை விட்டு, மந்திரம்
சொல்லி மூன்று முறை உறிஞ்சுதல்-குடித்தல்.
7. தொடுமிடம் : வலக்கையால் குரு காட்டிய இடங்
களைத் தொடுதல்.
8. விபூதி சுத்தி : வலக்கையால் விபூதியை எடுத்து, இடக்கையில் வைத்தல்; அதில் சிறிதைக் கிள்ளி மந் திரம் சொல்லி, வட மேற்கு மூலையில் தெறித்தல்; மேல் காட்டிய 1, 2, 3ன்படி செய்தல் 4 வது போல் விபூதியை மூடிக் கொண்டு, வல முழங்கால் மேல் வைத்து மந்திரித்தல்; பின் சிறிது விபூதியை எடுத்து, தலையில் இருந்து உடம்பில் பூசல்; பின் விபூதியில் மந் திரங்கள் சொல்லி, சலம் விட்டுக் குழைத்து, வலக் கை விரல் மூன்றினலும், முக் குறியாய், சிரம், நெற்றி, மார்பு, தொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து, என்னும் இடங்களில் அவ் அவ் மந்திரங்களைச் சொல் லித் தரித்தல்; பின் கைகளில் சலம் கொண்டு, பதி னெரு மந்திரம் சொல்லிய பின், தலையில் தெளித்துக் கை கழுவிக் கொள்ளல்.

Page 107
168 சைவ சமய சிந்தாமணி
மந்திர ஸ்நானம்
ஆசமனம்.
2. தொடும் இடம் : முன்போல் செய்யவும்.
3. பிராணுயாமம் : குரு காட்டியபடி மூக்கைப் பிடித்துக்
கொண்டு, மந்திரங்களைச் சொல்லவும்.
* சிவதீர்த்த கரணம் : சுட்டு விரலால் புருவ மத்தியில்
உள்ள அமிர்தத்தைத் தொட்டு நீரில் வைக்கவும்.
* திக்கு பந்தனம் : முன் போல் செய்யவும்.
8. அவ குண்டனம் : ,, 9 s
7. அபிமந்திரித்தல் : , , y 9 9
8. புரோட்சணம் : இடக்கையில் சலம் விட்டு, சங்கிதை
யால் மந்திரித்து தலையில் தெளிக்கவும்.
9 அகமர்ஷணம்: அதிகமான நீரை வலக் கையில் எடுத்து
சங்கிதை மந்திரம் சொன்னபின், ஒழுக விடாமல் இடக் கையில் விட்டு, சங்கிதை மந்திரம் சொல்லி இடக் கைவிரல் இடுக்குகளில் இருந்து சிறிது சிறிதாக ஒழுக விட்டு, மந்திரங்களைச் சொல்லி, தலைமேல் ஏற் றித் தெளிக்கவும்; முழுவதையும் ஒழுக விடக்கூடாது; பின் எஞ்சிய நீரை, வலக் கையில் விட்டு, ஒழுகிப் போகாமல், மூக்கைப் பிடித்துக் கொண்டு, குரு சொல் லிய வாக்கியத்தைச் சொல்லி, வலக் கால் பெருவிரல் மேல் மந்திரத்தால் விடவும். அகம் = பாவம்; மர்ஷணம் =கெடுத்தல்.
கடவுள் வழிபாடு
ஆசமனம்.
2 தொடுமிடம் : முன் போல் செய்யவும்.

-சைவ சமயிகள் இலட்சண இயல் 169
3.
0.
தர்ப்பணம் : (திருப்தி) இரண்டு கை நிறைந்த சலம் கொண்டு;
(அ) சிவ பெருமானுக்கு, சிவமூல மந்திரத்தால் மூன்று முறை; பின் அம் மந்திரத்தைப் பத்துத் தரம் சொல்லி ஒரு முறை; பின் சங்கிதை சொல்லி ஒரு முறை; நீர் விடவும்.
(ஆ) உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியருக்கும் தனித்தனி சங்கிதை மந்திரம் சொல்லி, ஒவ்வொரு தரமும் அவரவர் மூல மந்திரம் சொல்லி நீர் விட
வும். பின் ஆசமனம், தொடுமிடம்செய்யவும்.
தீர்த்தோப சங்கரணம் : முன் சலத்தில் வைத்த அமிர்
தத்தை எடுத்து, மந்திரம் சொல்லிப் புருவ மத்தி யில் வைக்கவும். சூரிய நமஸ்காரம் : இரண்டு கை நிறையச் சலம் கொண்டு, சூரிய மூர்த்தியை அவருடைய மந்திரத்தால் வழிபடவும்.
. பஞ்சாட்சர செபம் செய்க : ( பின் பஞ்சாட்சரத்தில்
| unrri d;&5 ).
திரு முறை ஓதுக - (தேவாரம் முதலியன)
எழுந்து திக்குபாலகர்களை வணங்குக.
இடசுத்தி : எழுந்து ஆசனம் இட்ட, பத்திர, புட்பங் களை எடுத்து, பாத்திரத்தில் போட்ட பின் அந்த இடத்தை மெழுகிச் சுத்தம் செய்யவும்.
நீரைக் கொண்டு போய், கால்படா இடத்தில் சூரிய
மூர்த்தியின் மந்திரத்தை மூன்று முறை சொல்லி ஊற்றவும்.
முத்திரை காட்டல் : பாத்திரத்தை வைத்து விட்டு,
சூரிய பகவானுக்கு, குரு காட்டித் தந்தபடி முத்திரை காட்டி வணங்கவும்.

Page 108
70 சைவ சமய சிந்தாமணி
இந்த அனுட்டான விதிகளை வாசித்துப் பார்க்க, அதி கம் போலவும், செய்து ஞாபகப்படுத்த முடியாதவை போல வும் தோன்றும். இரண்டு, மூன்று முறை செய்து பழகி விட் டால் ஞாபகமாயும், முறையாய்ச் செய்யவும் அற்ப நேரத் தில் முடிக்கவும் வந்து விடும். குருக்கள் மந்திரம், கிரியை, முறைகளைச் சொல்லித் தருவார். இவைகளில் சில சில மாற்றங்கள் நேர்ந்தாலும் கொள்ளவும்.
பஞ்சாட்சரம்
விளக்கம் : பஞ்ச = ஐந்து; அட்சரம் = எழுத்துக்கள்; குருவிடம் தீட்சை பெறும் போது, இம் மந்திரம் உபதேசிக் கப்படும்; புத்தகங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், குரு வினிடம் முறையாய்ப் பெற்ருலே மந்திரத்தின் சக்தி பிரகா சிக்கும்; ' சிவாய நம வென்று சிந்தித்திருப்போர்க்கு அபா யம் ஒரு நாளுமில்லை "’, ‘* நற்றுணையாவது நமச்சிவா யவே '’, ‘* சொல்லு நா நமச்சிவாயவே ** என்னும் அருள் வாக்குக்களால் அதன் பெருமையை அறியலாம்.
கேட்பவர்களுடைய பக்குவம் நோக்கி, தூல பஞ்சாட் சரம் எனவும், சூக்கும பஞ்சாட்சரம் எனவும், அதன் மேலும் அது பல வகைப்படும். பஞ்சாட்சர வகைகளைக் குருவின் மூலம் அறிந்து கொள்க.
(அ) செபித்தல் : மேற் சொன்ன அனுட்டான முடிவில்
இது செய்தல் வேண்டும்.
உருத்திராக்க மாலையில், அல்லது வலது கைவிரல் இறை களில் கணித்துச் செபிக்கலாம் 108, 54, 27, மணிகள் கோர்த்த மாலையில், அத்தொகைகள் அளவு செபிக்க லாம்; குறைந்தது பத்துருவாயினும் செபித்தல் அவசியம்; கணக்காய்ச் செபிக்க வேண்டும்; ' உருவேறத் திரு வேறும் ' என்பது ஆப்தர்மொழி. ஆலய தரிசனம், புண் ணிய தீர்த்த ஸ்நானம், மற்றும் தேவையான புண்ணிய காலங்களில் எல்லாம் செய்தால் எத்தனையோ பாவங்களைப்

--சைவ சமயிகள் இலட்சன இயல் 171
போக்கும். ** இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீக் குவ ரென்பரால், நல்லார் நாம நமச்சிவாயவே '’ என்றது திருமுறை. தகாதவர்கள் காணுதபடி மறைவாய்ச் செபித்தல் வேண்டும்.
உத்தமம் டமானதமாய்-மெளனமாய்ச் செபித்தல்.
மத்திமம் தன் செவிக்குக் கேட்கச்செபித்தல் (உபாஞ்சு) அதமம் டபிறர் கேட்கச் செபித்தல் (வாசகம்)
முத்தியை - மோட்சத்தை விரும்பியவர்கள் செபமணி களை மேல் நோக்கித் தள்ளிச் செபிக்க விதி கூறுகிறது. ஆனல், நாயகமணியைக் கடவாமல், மறித்து வாங்கிச் செபிக்க வேண்டும். போக காமிகள், மணிகளைக் கீழ்நோக் கித் தள்ள வேண்டும். மச்ச, மாமிச, பட்சணிகளுக்கு அவர்கள் பக்குவத்துக் குரிய பஞ்சாட்சரம் உபதேசிக்கப்
_1 Bh .
(ஆ) தோத்திரம் பஞ்சாட்சர செபம் முடிந்த பின் தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களை ஒதி இறைவனை வேண்டிக் கொள்ளவும்.
(இ) தியானம் நிமிர்ந்திருந்து கண்களை மூடிக்கொண்டு, மனதில் வழிபடும் ஒரு மூர்த்தியை நினைத்துக் கொண்டு தியானித்தல் நல்லது; அல்லது பிரார்த் தனை செய்யலாம். பிரார்த்தனை மாதிரிக்கு இரண்டு தோத்திர இயலில் எழுதப்பட்டிருக்கிறது; பாட மாக்கிச் சொல்லலாம்.
---------ബ്----

Page 109
172 சைவ சமய சிந்தாமணி
அன்பியல்
விளக்கம் : அன்பு, பக்தி, காதல், பாசம், என்பன ஒரே பொருள் உடையன; அன்பு பிடித்துக் காட்டும் பொரு ளல்ல; அன்புடையாரைக் கண்டவிடத்து, அன்பு அவருக்கு உண்டு என்று, அனுமித்து அறியக் கூடிய ஒரு பண்பு. தாய், தந்தை, மனைவி, மக்கள், சுற்றம், நண்பர் மற்றும் தொடர்புடையாரிடம், இயல்பாகவே நிகழும், உள்ள நெகிழ்ச்சிதான் அன்பு என்று பெரியோர் கூறுவர். அவர் களுடைய துன்பத்தைக் கண்டவிடத்து, அன்புடையார் கண் கள் நீர் சொரியும்.
* அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கண்ணிர் பூசல் தரும் "
-என்ருர் தமிழ் மறையார்.
அதுவே அன்பிற்கு அறிகுறியாகும். ** அன்பின் வழி யது உயிர் நிலை ** என்றபடி, அன்புதான் உயிர் என்பதும் விளங்குகின்றது; அது இல்லாவிடில் ஒருவன் "" என்பு தோல் போர்த்த உடம்பு " . அவன் நடைபிணம் என்பது குறிப்பாகும்.
f மேலே கூறியவர்களின் தொடர்பு, நாம் சென்மம் எடுத்த பின் உண்டானது; ஆனல், இறைவனே, நம்மை விட்டு என்றும் பிரியாது உடன் நின்று அருள் புரிந்து வருகின் முன்; அவர், தேகாதிகளையும், பிரபஞ்சத்தையும், தந்த பின்பே, அவர்களின் தொடர்பும், அவர்களில் அன்பும் பிறந்தன.
தேகம் கிடைக்குமுன், அறிவும், செயலும் இன்றி, கேவல (அஞ்ஞான) நிலையில், ஆன்மாக்களாகிய நாம் இருந்தோம்; அந்த அஞ்ஞான நிலையை நீக்கி, அறிவுச்

-அன்பியல் 73
செயல்களை விளங்கச் செய்தவர் கடவுளே. அவர் செய்த பெருங் கருணையை நினைத்தால், நாம் அவரிடம் எவ்வளவு அளவு கடந்த அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும்; இவ்வாறு அவரிடம் கொள்ளும் அன்பே பக்தி என்றும், காதல் என்றும் சொல்லப்படும்.
அவருடைய பெருங்கருணையை உணர்ந்த பேரன்பர்கள் தம் உடல், பொருள், ஆவி, மூன்றையும் அவருக்கு அர்ப் பணித்து அடிமையாகின்றனர். அவர்களைப் போலப் பேரன்பு, இப்பொழுது நமக்கில்லையாயினும் அவரை மற வாது, அவர் செய்த நன்றியை நினைந்து, அவரிடம் மேலான அன்புடையவர்களாய் இருக்க வேண்டியது நமது கடமை யாயிற்று.
'உற்ருர் ஆருளரோ உயிர் கொண்டு போம் பொழுது’’ என்பதை நினைக்க நெஞ்சம் பதைக்கவில்லையா? அந்நிலையி லும்அப்பெருங் கருணையாளரே, நம்மை விட்டுப் பிரியாமல் இருக்கின்ருர்; அவரை நாம் மறந்தாலும், அவர் நம்மை மறந்துவிடவில்லை; இதுபற்றியே, ‘அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவில்லாதவர்' என்றும், ** அன்புதான் சிவம்' என்றும் அவர் அருள் நிலையைக் கண்டு, அனுபவித் தோர் தந்தருளினர்.
**இறவாத இன்ப அன்பு வேண்டும்’ என அம்மையும் கேட்டுப் பெற்ருர், “என்னினும் இனியான் ஒருவன் உளன்’’ என்ருர் அப்பர் பெருமானும் . ஆகையால் நாம் அவரில் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கினுல், துன்ப நீக்க மும், இன்பப் பேறும் பெறுவோம். இங்ங்ணம் செய்தாலே இவ்வுலக வாழ்வும், மறு உலக வாழ்வும், இன்பகரமாய் இருக்கும்.
அன்பைப் பெருக்கும் வழிகள்
சிலவற்றை இங்கு காண்க. சமயாசாரங்களை இயன்ற அளவு கைக்கொள்ளுதல்; ஆலய தரிசனம் செய்தல்; விலக்

Page 110
174. சைவ சமய சிந்தாமணி
கப்பட்ட பாவங்களைச் செய்யாதொழித்தல்; சிவ தொண் டுகள் செய்தல்; அனுட்டானம், பஞ்சாட்சர செபம், இவை களைக் கைக் கொள்ளுதல்; சிவ சின்னங்களை அணிதல்; சிவ னடியார்களைச் சிவமாய் மதித்தல்; சன்மார்க்கர்களுடன் சகவாசம் செய்தல்; ஞான நூல்களைப் படித்தல், கேட்டல்: இவை போன்ற பிறவுமாம். ** நள்ளேன் நினது அடியா ரோடல்லால்' என்று மணிவாசகஞரும், 'நல்லாரைக் காண் பதுவும் நன்றே. . . . . . . . . . இணங்கியிருப்பதுவும் நன்று ’’ என்று ஒளவைப் பிராட்டியாரும் கூறிப் போந்தனர்.
அன்பின் அறிகுறிகள்
கடவுளை நினைக்குந் தோறும், அவர் புகழைக் கேட்குந் தோறும், அவரது குறி, அடையாளங்களைக் காணுந் தோறும், தன் வசம் அழிதல், மயிர்க் கூச் செறிதல், வியர்வை அரும்பல், புளகாங்கிதம் கொள்ளல், ஆநந்த அருவி நீர் சொரிதல், விம்மல், நாத் தழு தழுத்தல், உரை தடுமாறுதல், ஆநந்தக் கூத்தாடல் என்பனவாம். ** பக வான் நாமத்தைக் கேட்கும் போது, எவன் கண்ணிர் விடுகின் ருனே, அதுவே அவனுடைய கடைசிப் பிறப்பிற்கு அறிகுறி யாகும் ‘’ என்ருர் அவதார புருடராகிய பூரீராம கிருஷ்ண பரம ஹம்சர்.
அந்தியகாலத்தில்
உயிர் உடம்பை விட்டுப் பிரியும் நேரம், என்ன நினைவு உதிக்கின்றதோ , அதற்கு ஏற்கவே, அடுத்த பிறவி என்பர். இது பற்றியே முற்றத் துறந்த பட்டினத்தடிகளும், " ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து, மெய்யும் பொய் யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யுந் திரு வொற்றி ஊருடையாய் திரு நீறு யிட்டுக், கையுந் தொழப் பண்ணி ஐந்தெழுத் தோதவும் கற்பியுமே ’’ என்று அஞ்சி அன்பாய்க் கேட்டார்.

-அன்பியல் 175
உயிர் கொண்டு போம் பொழுது உற்ருர் ஆருளர் ? அம்மகான் அப்படிக் கேட்டால் நம்பாடென்ன ? ஆகையால் அந்திய நேரம் திரு நீறு இட்டு, சிவபெருமான நினைந்து கொண்டிருக்க வேண்டும். சிவ நாமங்களைப் பாடிக் கொண் டிருக்கச் செய்தல் வேண்டும்.
ஒருவருடைய உயிர் பிரியும் போது, மற்றவர் மனங் கலங்காது, திரு நீறு இட்டு, காதுகளில் பஞ்சாட்சரத்தை ஊதி விடுதல் வேண்டும்.
இதுவாயினும் இச் சென்மத்தில் கிடைக்கப் பெற்று உயிர் நீப்பின், அதுவே பெரும் புண்ணியமாகும்.
" பற்றித் தொடரும் இருவினப் புண்ணிய பாவங்களே”
خ^zzے zeJz

Page 111
176 சைவ சமய சிந்தாமணி
ஆலய தரிசன இயல்
விளக்கம் : ஆலயம், கோயில், என்பவைகளின் பொருள் களை ஆலய அமைப்பு இயலிற் காண்க. ஆலயத்தில் ஏன் போய் வழிபட வேண்டும் என்பதற்கு நியாயம் தல, தீர்த்த இயலில், தலம் என்னும் தலைப்பிற் காண்க. '" ஆலயந் தொழுவது சாலவும் நன்று' என்று மூதாட்டியார்மொழிந்த படி, இயலும் போதெல்லாம் கோயில் வணக்கம் செய்வதை மறவாதிருக்க.
பாமரர் தொடங்கிப் பரம ஞானிகள் ஈருய், sg 6)Lu வணக்கம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆலய வணக்கம் தேவையில்லை என்பவர்கள் ஞானிகள் அல்ல; சில முறைகளை இதன் கீழ்க் காண்க.
ஆரம்பம்
கோயிலுக்குப் போக விரும்புவோர், ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரம் தரித்து, சிவ சின்னங்களைத் தரித்து, கடவுளில் மனதை வைத்துச் செல்ல வேண்டும்.
கொண்டு போக வேண்டியவை
சாதாரண மக்கள் பெரியவர்களைக் காணப் போகும் பொழுதுகூட வெறுங் கையுடன் செல்லார் என்பது நன்கு தெரியும். பரம் பொருளைக் காணப் போகும் பொழுது, ஏதும் கையில் கொண்டு செல்ல வேண்டியது மரபாகும். வெறுங்கையுடன் செல்வது மதியாமையும், அன்பின் மையுமாகும். சிவத்திரவிய இயலில் சொன்னபடி செய்ய
லாம்; ஒரு பச்சிலையாவது, கற்பூரக் கட்டியாவது, தேங் காயாவது, ஒரு பூ ஆவது யாவருக்கும் இயலும்.

-ஆலய தரிசன இயல் ךךך
எனவே, இயன்றவர்கள் ஒரு தட்டில்-தாம்பாளத்தில் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, "கருப்பூரம் மற்றும் கொடுக்கக் கூடிய பொருட்களுடன் போதல் வேண்டும். வீதியில் பிரவேசித்தவுடன் கால் கழுவிக் கொண்டு, தூல இலிங்கமாகிய திருக் கோபுரத்தைச் சிவபெருமானக வணங்க வேண்டும்.
உட்பிரவேசிக்கும் முறை
வாசலில் நின்று நந்தியெம் பெருமானை " " பெருமானே ! உள்ளே சென்று சிவபெருமானைத் தரிசிக்க அனுமதி தாரும் " என்று வேண்டிக் கொண்டு, உள்ளே போகவும்.
வணங்குதல்-நமஸ்காரம்
கொடிஸ்தம்பம், நந்தி, பலி பீடங்களைச் சிவரூபமாகப் பாவித்தல் வேண்டும். பலிபீடத்துக்கு இப்பால் நின்று, நமஸ்காரம் பண்ணுக.
நமஸ்காரம்
1. ஏகாங்கம் : மார்பில் கைகளைக் குவித்து வணங்குதல்.
2. திரியாங்கம் : சிரசில் இரண்டு கைகளையும் குவித்துக்
கும்பிடுவது. (திரி = மூன்று அங்கம் = உறுப்பு).
3. பஞ்சாங்கம் : பஞ்ச= ஐந்து அங்கம் = உறுப்புக்கள். இது, பெண்களுக்கு மாத்திரம்; தலை, கைகள் இரண்டு முழந்தாள்கள் இரண்டு ஆகிய ஐந்து உறுப்புக்களும், நிலத்தில் பட வணங்குதல்.
4. அட்டாங்கம் : ஆண்களுக்கு உரியது; தலை, கைகள் இரண்டு, செவிகள் இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு ஆகிய எட்டு உறுப்புக்களும் பட வணங் குதல். வணங்கும்போது, (அட்டாங்க-பஞ்சாங்க) .வடக்கிலும், கிழக்கிலும் தலை வைக்க வேண்டும். அத் திக்குகளில் கால்கள் நீட்டக் கூடாது. கால்களை நீட்

Page 112
178 சைவ சமய சிந்தாமணி
டும் போது, அவ் வீதியில் வேறு மூர்த்திகள் இருந்தால் கால் நீட்டி வணங்காது, மூர்த்திகள் இல்லாத வீதிகளி லேயே வணங்குதல் வேண்டும்.
பிரதட்சணம் (கோயிலைச் சுற்றி வருதல்)
1. சாதாரண பிரதட்சணம் : கைகளை மார்பிலேனும், சிரசிலேனும் குவித்துக் கொண்டு, சிவநாமங்களையோ, தோத்திரங்களையோ, திருப்பஞ்சாட்சரத்தையோ
முறையோடு பாடிக் கொண்டும், நினைத்துக் கொண் டும், அடிக்குமேல் அடிவைத்து நிலத்தில் ஊரும் பிரா ணிகளுக்கு ஊறு இன்றி, சிவ சிந்தனையோடு வலம் வரு தல் வேண்டும்; வரும் போது, வீதிகளில் உள்ள மூர்த் திகளையும் வலம் வருதல் வேண்டும்.
2. அங்கப் பிரதட்சணம் : இது செய்பவர் அன்றைக்கு விரதம் இருக்கவேண்டும்; ஸ்நானம் செய்து, சிவ சின் னங்களை அணிந்துகொண்டு, கையில் தேங்காயைப் பிடித்துக்கொண்டு, சிவ சிந்தனையுடன் சன்னிதியில் உருண்டு வருதல்.
3. அடி அழித்துப் பிரதட்சணம் வருதல் : பெண்களே இது செய்கின்றனர்; முழந்தாள் படியிட்டு, தலையில் கைவைத்துக் கூப்பி வணங்கி, அழித்துவிட்டு, மூன்று அடி தாண்டி, இப்படியே செய்து வலம் வருதல்.
4. சோம சூத்திரப் பிரதட்சணம் : இது பிரதோஷ காலத்
தில் செய்யும் வணக்கம் என்பர்.
(அ) கோயிலின் உள்ளே போய் நந்தியை வணங்கி, இடமாய்ச் சென்று, சண்டேசுரரை வணங்கி, சென்ற வழியே மீண்டு வந்து நந்தியை வணங்கல்.
(ஆ) பின் வலப்புறமாய்க் கோமுகை வரையும் சென்று சென்ற வழியே மீண்டு வந்து, நந்தியை வணங்கல்.

-ஆலய தரிசன இயல் 179
(இ) பின் இடமாகச் சென்று, சண்டேசுரரை வணங்கிச் சென்ற வழியே மீண்டு வந்து, நந்தியை வணங் காது, வடதிசை சார்ந்து, விமானத்தை (தூபி யை)த் தரிசித்து, திரும்பிச் சென்ற வழியே மீண்டு வந்து, நந்தியை வணங்காது, இடமாய்ச் சென்று, சண்டேசுரரை வணங்கி, சென்ற வழியே மீண்டும் வந்து நந்தியை வணங்கி அவருடைய கொம்புகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு, அர அர என்று சொல்லிக்கொண்டு, சிவலிங்கப் பெருமானைத் தரிசித்தல்.
வணங்கும் கணக்கு
நமஸ்காரம், சாதாரண பிரதட்சணங்கள், மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்பட்ட முறைகளிலேயே செய்தல் வேண்டும். ஒருதரம் இருதரம் செய்தல் ஆகாது; அம்பாள் ஆலயங்களில் இரட்டைப்படச் செய்யவேண்டும் என்பாரும் உண்டு.
தரிசனம்
மூல மூர்த்திக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் பூசைகள்
நடக்கும்போது தரிசித்துக்கொள்க.
அருச்சனை
விரும்பியவர்கள் தட்சணை கொடுத்து, அருச்சனை செய் வித்துக்கொள்ளலாம்; தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை முதலியன முன்னே கொடுத்தவர்களுக்கு அருச்சனை செய்
யப்படும்.
பிரசாதம்
பூசைகள் முடிந்தபின், விபூதி, தீர்த்தம், சந்தனம், பூ பத்திரம் பெற்றுக்கொள்க.

Page 113
18O சைவ சமய சிந்தாமணி
செபம்
யாவும் முடிந்தபின், தீட்சை பெற்றவர்கள் தனிமை யாய் ஓர் இடத்தில் இருந்து இயன்றளவு, திருப்பஞ்சாட் சர செபம் செய்து போதல் நல்லது ஆலயங்களில், புண்ணிய தீர்த்தக் கரைகளில் செபித்தல் கூடிய பலனைத் தரும்.
கோயிலில் செய்யத் தகாத குற்றங்கள்
கடவுளை அடையும் வழி இயலில், பாவங்கள் என்னும் தலைப்பிற் காண்க.
கோயிலில் செய்யத் தக்கவைகள்
கடவுளை அடையும் வழி இயலில், புண்ணியத்தின் கீழ், சிவ தொண்டுகள் என்னும் தலைப்பிற் காண்க.
குறிப்பு : நமஸ்காரம், பிரதட்சணம், தோப்புக்கர ணம், காலை, மாலைகளில் ஆலயங்களில் செய்துவந்தால், சரீர பலம், நோய் நீக்கம், உற்சாகம், மனச் சந்தோஷம், ஆத்ம சக்தி என்பனவற்றைப் பெறலாம்; சரீர பலத்திற்கு வேறு அப்பியாசங்கள் வேண்டியதில்லை.
பெண்கள் அடி அழித்து வணங்குவதால், அவர்களின் கருப்பைக் கோளாறுகளை நீக்கும் என்றும், பிரதட்சணம், பருத்த உடம்பு, தொந்தி என்பவைகளைக் குறைத்து, சுகத் தையும் கொடுக்கும் என்றும் சொல்வர்.
உட்பொருள்
பிரதட்சணத்தின் பொருள் : சிவபெருமான் எங்கும் வியாபகமாய் இருக்கின்ருர்; நம் ஆன்மாவுக்கும் ஆன்மா வாக இருக்கின்ருர் என்பது . 3, 5, 7, என்ற முறையில்,

-ஆலய தரிசன இயல் 181
நமஸ்காரம், பிரதட்சணம் செய்யும் பொருளை, ஆலய அமைப்பு இயலில், வீதி என்னும் தலைப்பிற் காண்க.
தேங்காய் : மட்டை, தும்பு, சிரட்டை, பருப்பு, இளநீர், மூன்று கண்கள் ஆகியவற்றை உடையது; அதன் வெண்ணிற பருப்பை உபயோகத்துக்கு எடுக்க இவை சிறிது சிரமங் கொடுக்கின்றன; அதைச் சூழ்ந்திருக்கும் எல்லாப் பகுதிகளையும் நீக்கவேண்டும்.
ஆன்மா, தேங்காயின் பருப்புப் போன்றது; ஆன்மா வைச் சுற்றி, உலக ஆசா பாசங்களாகிய, மட்டை, தும்பு போன்றன சூழ்ந்திருக்கின்றன. சிரட்டை மிக்க கடினமாய்த் தேங்காயைப் பற்றிக்கொண்டிருக்கிறது; ஆன்மாவை அறி யாமையாகிய ஆணவம், கடினமாய்ப் பிடித்திருப்பது போல; இளநீர், இறைவன் அருள் வெள்ளம் போன்றது; கத்தி கொண்டே பிரயாசப்பட்டு, தேங்காயை எடுத்துப் பயன்படுத்த முடியும்.
கத்தி: இறைவனுடைய அருள்; ஆகையால், ஆண்ட வனுடைய அருளைப் பெற்றுத்தான், நம்மைப் பிடித்திருக் கும், ஆணவம், கன்மம், மாயைகளைப் போக்கி, அவர் அரு ளாகிய, நீரில் மூழ்கி இன்பம் அடைய முடியும்; தேங்காயின் மூன்று கண்களும், மூன்று மலங்களையும் குறிக்கும்; சிலர் மூன்று நேத்திரங்களையும் குறிக்கும் என்பர்.
தேங்காயைச் சிதற உடைத்தல் : நாம் செய்த பாவங் கள் எல்லாம் திரண்டு தேங்காய் போல் உருண்டு இருக்கின்ற தாகவும், அப்பாவங்கள் கடவுள் முன்னிலையில் சிதறிப் போகின்றன என்ற கருத்து அமையவுமே அதைக் கோயில் களில் சிதற அடிக்கின்ருேம்; ஆகையால், அவர் அருளாலே தான் நம் பாவங்கள் சிதறுவதன்றி வேறு வழிகளால் ஆகாது என்பது பொருளாகும்.

Page 114
182 சைவ சமய சிந்தாமணி
தட்டில் - தாம்பாளத்தில் தேங்காய், பழம் கொண்டு போகும் கருத்து : இப்படிக் கொண்டு போகும்போது நேரே அருச்சகர் வாங்குகிருர்; கத்தியால் தேங்காயை உடைக்கிருர்; உடைத்ததையும், பழம் முதலியவைகளையும் சுவாமிக்கு நைவேத்தியம் செய்கிருர், கருப்பூரத்தை ஏற்றிச் சுவாமிக்கு முன் பிடித்து, நம்மைத் தரிசிக்கும் படிச் செய்கிருர்,
அருச்சகர்=ஞான குரு; கத்தி - திருவருட் சத்தி; கருப் பூரம்-ஞானம்; மூர்த்தி-சிவம்; தேங்காய்=ஆணவம்; பழம் முதலிய மற்றவைகள் = கன்ம, மாயா மலங்கள்; எனவே ஞானுசாரியருடைய ஞானுேபதேசத்தினலே, திரு வருட் சத்தி தோன்றி, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழித்து, அவைகளை அர்ப்பணம் செய்ய, சிவ ஞானம் தோன்றும்; அந்த ஞானப் பிரகாசத்தினலேயே சிவத்தைத் தரிசிக்கவேண்டும்; இவ்வாறு இவற்றின் பொருள்களைக் கூறுகின்றனர். வேறு விதமாகக் கூறுவோ ரும் உளர்.
பழங்கள் : தட்டில் கொண்டுபோன பழங்கள் நறுஞ் சுவைகள் உடையன; அவை பக்தனுடைய நல் வினைப்பயன் களைக் குறிப்பன; அவ்வினைகளையும் இறைவனிடம் சமர்ப் பிக்கவேண்டும் என்பதாம்.
வெற்றிலை, பாக்கு, முகவாசம் : இவை ஆன்மாவைப் பொருந்திய, இராசதம், தாமதம், சாத்விகம் என்னும் முக் குணங்களைக் குறிப்பன; இக்குணங்களையும் விடவேண்டும்.
கருப்பூரம் : இது வெண்ணிறமுடையது; பளிங்கு போன்ற நிறமுடைய ஆன்மாவைக் கருதுவது; அக்கினி சிவத்தைக் கருதுவது; எனவே சிவம் நம்மைப் பற்றினல், நம்முடைய நிறம், குணம் முதலிய தன்மைகள் எல்லாம்

-ஆலய தரிசன இயல் 183
சிவமயமாகிச் சிவத்தோடு சேர்ந்து, இரண்டும் ஒன்ருந் தன்மை எய்தி, சொல்லொணுத இரண்டற்ற அத்துவித நிலையை அடைந்து பேரின்பம் எய்துவது.
குட்டுதல் வலக் கையை முன்னுகவும், இடக்கையைப் பின்னகவும் முட்டியாகப் பிடித்துக்கொண்டு, குட்டுவதால் அவ்விடங்களில் உள்ள, நரம்புகளில் அமிர்தம் சுரக்கின்றன என்று கூறுகின்றனர்.
m-ബി--------

Page 115
184 சைவ சமய சிந்தாமணி
கடவுளை அடையும் வழி இயல்
புண்ணியங்கள்
விளக்கம் : சிவபெருமான் ஆன்மாக்களுக்காக, அரு ளிச் செய்த முதல் நூல்கள் வேதம், சிவாகமங்கள் என்பன: இந் நூல்கள் எவை என்பதைப்பற்றி, சமய இயலில், சைவ சமய நூல்கள் என்னும் பகுதியில் காட்டினுேம்.
அந் நூல்களில் விதிக்கப்பட்டபடி செய்யக் கட்டளை இடப்பட்டவை புண்ணியங்கள்; விலக்கப்பட்டவைகள்; பாவங்கள்; கடவுளை அடைய விரும்பினேர், புண்ணியங்க ளாகிய வழிகளின்படியே செல்லல் வேண்டும்; அவற்றை இங்கு காண்க. , விலக்கப்படவேண்டியவைகளை, பாவத்தின் கீழ்க் காண்க.
புண்ணியம், தருமம், அறம், நல்வினை என்பது ஒரே பொருளைக் குறிக்கும். எல்லாச் சமயங்களிலும், அறம், பாவங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன; சைவ சமயம், முழு வதும் புண்ணிய வழியே கூறுகின்றது. நம் சமயம் கூறும் எத்தனையோ புண்ணியங்களை வேறு சமயங்கள் ஒத்துக் கொள்ளமாட்டா. செய்பவர்களுடைய கருத்துக்கும், பக்கு வத்துக்கும் ஏற்கவே, அவைகள் பலன் தருகின்றன.
புண்ணியங்கள், காமிய கர்மங்கள், நிஷ்காமிய கர்மங் கள் என இருவகைப்படும்.
காமிய கர்மங்கள் : யாதாயினும் பயனை விரும்பிச் செய்யும் அறங்கள். இதைப் பசு நல்வினை-பசு புண்ணியம் என்பர்; விரும்பிச் செய்வதால், அதன் பயணுகிய இன்பங் களை அனுபவித்தபின், மீட்டும் பிறவியை எடுக்கவேண்டும்:

-கடவுளை அடையும் வழி இயல் 185
இப்படியே நெடுக நடந்துகொண்டிருக்கும்; மோட்சம். முத்தி கிட்டமாட்டாது.
நிஷ் காமிய கர்மம் : ஒருவிதமான பயனையும் விரும்பாது செய்யுந் தருமங்கள்; இதைச் சிவ நல்வினை-சிவ புண்ணியம் என்பர்; இது, சிவ அர்ப்பணமாக - சிவ தொண்டாகச் செய் யப்படும்; இதுவே பிறவியை ஒழித்து, மோட்சத்தை-முத்தி யைக் கொடுப்பது.
தமிழ் மறை கூறும் பொது அறங்கள்
தாயை வணங்கல் ாகை-கொடுத்தல் தந்தையை வணங்கல் பிறர் பொருள் விரும்பாமை ஆசிரியனை வணங்கல் h6llQ 6ILIMU0 குருவை வணங்கல் கள் உண்ணுமை பெரியோர்களை வணங்கல் கோபியாமை உண்மை பேசல் பிறர் மனை நயவாமை செய்ந் நன்றி அறிதல் வஞ்சன இல்லாமை அன்புடைமை பொருமை இல்லாமை நடுவு நிலைமை கோள் சொல்லாமை பொறுமை விருந்தினரை உபசரித்தல் தெய்வ நம்பிக்கை சுற்றத்தை உபசரித்தல் தெய்வ வழிபாடு தன்னக் காத்தல் சந்தோஷமுடைமை மனைவி, மக்களைக் காத்தல் ஒழுக்கமுடைமை புறங் கூருமை
சுத்தமுடைமை
அம்மை வளர்த்த அறங்கள்-32
1. ஆதுலர்க்குச் சாலை-வீடில்லாத ஏழைகளுக்கு வீடு
கொடுத்தல்.
2. ஓதுவார்க்கு உணவு-படிக்கும் அநாதைகளுக்கு உணவு
ஈதல்,
24

Page 116
186 சைவ சமய சிங்தாமணி
3. அறவைச் சோறு-அகதிகளுக்கு அன்னம் இடல்.
4. அறவைத் தூரியம்-அகதிகளுக்கு வஸ்திரம் கொ
டுத்தல். 5. அறவைப் பிணம் சுடுதல்-அநாதைப் பிணங்களைச்
சுடுதல்.
6. தின்பண்டம் நல்கல் - ஏழைகளுக்கு ஆசைப்பட்ட
சுவை உள்ள தீன்பண்டங்களைக் கொடுத்தல்.
7. ஐயமிடல்-கூன், குருடு, சப்பாணி, முடம் முதலிய
ஏழைகளுக்குப் பிச்சை கொடுத்தல்.
8. வண்ணுன் கூவி-ஏழைகளின் அழுக்குத் துணிகளை
வெளுப்பித்துக் கொடுத்தல்.
9. நாவிதன் கூலி-அகதிகளுக்குத் தருமச் சவரம் செய்
வித்தல். '
10. தலைக்கு எண்ணெய்-தலையில் தடவவோ, தேய்த்து
முழுகவோ எண்ணெய் நல்கல்.
11. நோய் மருந்து-வியாதியால் வருந்துவோர்க்கு மருந்து
செய்வித்தல்.
12. கண் மருந்து-கண்நோய்க்கு மருந்து செய்தல். 13. மகப் பெறுவித்தல்-பிரசவ வேதனைப்படுவோர்க்கு
மகப் பெறவேண்டிய உதவிகள் செய்தல்.
14. மகப்பால் வார்த்தல்-பால் இல்லாத குழந்தைகளுக்குப்
பால் கிடைக்க உதவி செய்தல்.
15. மகவு வளர்த்தல்-பராமரிக்க வழியற்றவர்களின் குழந்
தைகளை வளர்த்தல்-வளர்ப்பித்தல். 16. பிறர் துயர் காத்தல்-பெரியாரை-மெலியாரை, வலி
யார் வருத்தும்போது, அவர்களைக் காத்தல்.

-கடவுளை அடையும் வழி இயல் 187
7.
8.
I9.
20.
2丑。
多2、
23.
24.
25.
26.
27.
28.
29,
சிறைச் சோறு-சிறையில் இருப்பவர்களுக்கு உணவு ஈதல்.
காதோலை-ஆசையுள்ள ஏழைகளுக்கு, தோடு முதலிய ஆபரணங்கள் அணிய உதவல்.
மடம்-தல, தீர்த்த, யாத்திரை செய்பவர்களுக்கும், ஏழைகள் தங்குவதற்கும், சத்திரங்கள் அமைத்தல்.
தடம்-தாகத்தால் வருந்தும் உயிர்களுக்கு, நீர்நிலைகள் அமைத்து வைத்தல்,
சோலை-வழி நடப்போர் இளைப்பாறுவதற்காய், நிழல் மரங்கள் அமைத்து வைத்தல்.
தண்ணிர்ப் பந்தல்-விடாய் தணிப்பதற்காய் அவசிய இடங்களில், நீர்ப் பந்தல்கள் வைத்தல். பசுவுக்கு வாயுறை-மாடு, ஆடு ப்ோன்ற மிருகங்க ளுக்கு புல் முதலிய உணவு கொடுத்தல்,
ஆவுரிஞ்சு தறி-பசுக்கள் தினவு தீரும் பொருட்டு; தறிகள் நாட்டிவைத்தல். ஏறு விடுதல்-இன விருத்திக்காய்ப் பொலி காளைகளை விடுதல்.
விலங்கிற்கு உணவு-உணவின்றி வருந்தும் மிருகங் களுக்கு உணவு ஊட்டுதல்.
விலைகொடுத்து உயிர் காத்தல்-கொலை செய்யப்பட இருக்கும் உயிர்களைப் பொருள் கொடுத்தாயினும் நீக்கல். சுண்ணம்-தாம்பூலம் அருந்தக் கேட்பவர்க்குச் சுண் ணம் உதவல்.
கண்ணுடி-ஏழைகளுக்கு முகம் பார்க்கவோ, அல்லது கண் பார்வைக்காகவோ, கண்ணுடி உதவுதல்.

Page 117
88 சைவ சமய சிந்தாமணி
விபரீதமாய்ப் பொருளை விளங்கிக் கொள்ளாதிருக்கும் படி, மிகுதியான அறங்கள் விடப்பட்டன. இவ் அறங் களில் பல தற்காலம் அரசினராலும், சமய, சமூக, ஸ்தா பனங்களாலும், தனி மனிதர்களாலும் செய்யப்பட்டு வரு கின்றன.
சைவப் புண்ணியங்கள்
(1) கொல்லாமை (2) கொன்றதைத் தின்னமை-புலால் உண்ணுமை (3) தென்புலத்தார் கடன் செய்தல்-பிதிர்கடன் (4) விரதம் காத்தல் (5) சிவ பூசை செய்தல் (6) மகேசுரகுரு பூசைகள் செய்தல்-செய்வித்தல் (7) புண்ணிய தல, தீர்த்த யாத்திரை செய்தல் (8) சைவ சித்தாந்த, தேவார, திருவாசக, திருக்குறள் முதலான சன்மார்க்க நூல்களைப் படித்தல், கேட்டல் ஆகியனவாம்.
பதி புண்ணியங்கள்
சிவ புண்ணியங்கள், ஞான சாதனங்கள் எனவும் அழைக்கப்படும்.
மேற்காட்டிய புண்ணியங்களை, சென்மங்கள் தோறும் செய்து வர, அன்பு முதிர்ந்து, பரிபக்குவம் உயர்ந்து, கட வுளை அடையவேண்டும் என்று மேலான ஆசை உண்டாகும். அப்பொழுது, இப்புண்ணியங்களைப் பலன் கருதிச் செய் தால், பத முத்திகளையும், பலன் கருதாது சிவப் பணியாகச் செய்தால், அபர, பர, முத்திகளையும் நல்கும்.
இவைகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படும். இவைகள் உண்மைச், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும், செய்யும் கருத்து வகையால் இரு வகைப் படும். உபாயச் சரியை ஆதிகள், மேற்சொன்ன, பலன் கருதிச் செய்யப்படுபவைகள்; இவைகள் உண்மைச் சரியை களைச் செய்வதற்குச் சாதனமாகும்; மேலும், பேர், புகழ், கருதி இவை செய்யப்படுவன; ஆகையால் இவ்வாறு செய்

-கடவுளை அடையும் வழி இயல் 189
தோர், பூg கண்ட உருத்திரர் புவனங்களுக்குக் கீழுள்ள புவனங்களில், அப் புண்ணிய பலன்களை அனுபவித்தற்காய், சாலோக, சாமீப சாரூப, சாயுச்சியம் என்கின்ற பத முத்தி களைப் பெறுவர். அப்பதவிகளில் இருந்து, புண்ணியங்களை அனுபவித்தபின், மீட்டும் பிறவியை அடைவர்.
உண்மைச் சரியை, கிரியை, யோகம் என்பன நிஷ்காமிய மாய்ச் செய்யப்படுவன, இம்மூன்றின் முடிவில் சிவ இருவினை ஒப்பும், மல பரிபாகமும், சத்தினிபாதமும் வந்தெய்தும்; எய்தினுல், திருவருட் சத்தியால், ஞான ஆசரியர் தோன்று வர்; ஞான தீட்சைகள் செய்து, ஞான உபதேசமும் செய் வார்; அப்பொழுதுதான் கடவுளை அடையமுடியும். ஞானத் தைப் பெற்றுக்கொள்ளாது, உண்மைச் சரியை, கிரியை, யோகங்களை மாத்திரம் அனுட்டித்தோர், அவரவர்களின் சாதனங்களுக்கு ஏற்றபடி, பூஜீ கண்ட உருத்திர புவனங் களுக்குமேல், சுத்த வித்தைக்குக் கீழுள்ள புவனங்களில் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியம் ஆகிய உயர்ந்த பதவிகளைப் பெறுவர்.
பின் அவர்கள் பிறவி எடுத்து, உண்மை ஞானம் கை கூடப்பெற்று, ஞான ஆசரியணுல் ஞானுேபதேசம் செய்யப் பெறுவர். இந்த ஞானமும், பெறுவோரின் வன்மை, மென் மைகளால், அபர முத்தியையோ, பரமுத்தியையோ கொடுக்கும்; அபரமுத்தியைப் பெற்றவர், பின் பரமுத்தி யைப் பெறுவர்; பரமுத்திதான் பிறவா இரண்டற்ற முடி வான பேரின்ப நிலையாம்.
உண்மை ஞானத்திற்குச் சாதனமாயுள்ள சரியை ஆதி களைச் சிறிது விளக்கமாய்க் கீழ்க் காண்க.
1. சரியை : இது, தாசமார்க்கம் எனவும் பெயர் பெறும். அதாவது, எசமானனும் அடிமையும்போல; சிவபெரு மான் எசமானன், அடிமை செய்பவன் பய பக்தியாய் ஊழியம் செய்து, நன்மையை எசமானனிடம் வேண்டி

Page 118
190 சைவ சமய சிந்தாமணி
நிற்பதுபோல், ஆன்மாக்கள் அவருக்குத் தொண்டுகள் செய்து, வேண்டி நிற்றல்; இந்நிலையிலுள்ளோர் புறத் தொழில் மாத்திரையானே கடவுளின் உருவத் திரு மேனியை ஆலயங்களில் வழிபடுவர்.
இவர், கோயில் கட்டல், விக்கிரகஞ் செய்தல், திரு விழாக்கள் செய்தல், ஆலய தொண்டுகள் செய்தல் முதலிய வைகளில் ஈடுபடுவர். தொண்டுகளைப் பின் காண்க. இதன் பலன் சாலோக பதவி பெறுதல்; அதாவது முன் சொன் னபடி, கணபதி, குமரர், சண்டேசுரர் முதலிய பூரீ கண்ட உருத்திர மூர்த்திக்கு மேலுள்ள புவனங்களில், அதாவது அந்த ஈச்வர உலகங்களில் ஒர் இடத்தில் வசித்தல்.
2. கிரியை இது, புத்திர மார்க்கம் எனப்படும்; சிவ பெருமானைத் தந்தையாகவும், தன்னை மகளுகவும் கொண்டு, வழிபடும் முறை; மகன் தகப்பனை அணுகி, அணைந்து, தொட்டு, வேண்டியவை பெறுவதுபோல, சிவலிங்கம் முதலாகிய திருவுருவங்களை, அணுகியும், தொட்டும், அளைதலும், அபிஷேகம், நைவேத்தியம், பூசை முதலியவைகளால், வழிபாடு செய்து வேண் டல்; இது, இந்திரியங்களும், மனமும், கூடித்தொழில் படச்செய்வதாய் உள்ளது. ஆகவே, புற, அக முயற் சிகளால் வழிபடுவது; பரார்த்த பூசை, ஆன்மார்த்த பூசையே இக்கிரியா மார்க்கமாகும். இதன் பலன் சாமீப பதம் பெறுதல்; அதாவது, முன்சொன்ன ஈச்வர உலகங்களில், அப்பத முதல்வர் முன்னிலையில் சமீப மாய் இருந்து தொண்டுகள் செய்தல்,
3. யோகம் : இது, சகமார்க்கம் எனப்படும்; அதாவது தோழனும், தோழனும் எவ்வாறு தம்முள் வேறு பாடில்லையோ அவ்வாறு பெருமானை எண்ணி வழிபடு வது. அகத்தொழில் மாத்திரையானே, அவரது அரு வத் திருமேனியை, அறிவு மாத்திரையால் வழிபடு . {Ylgyته

-கடவுளை அடையும் வழி இயல் 19
பிராண வாயுவை இயக்கி, புலன்கள் வழியே மனதைப் போகவிடாமல் அடக்கி, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சத்தியை எழுப்பி, புருவ மத்தியில் தியானித்து, பின் தியா னிப்போனும், தியானமும் தோன்ருது, சிவம் ஒன்றையே கண்டு, அமிர்தபானம் உண்டிருத்தலே வழிபாடாகும். இதன் பலன் சாரூப பதவியாகும்; மேற்காட்டிய உலகங்க ளில், அப்புவன பதிகளின் உருவங்களைப் பெற்றிருத்தல்,
4. ஞானம் . இது, சன்மார்க்கம் எனப்படும்; அதாவது, நாயகனும், நாயகியும் கூடி, இன்பம் அனுபவிக்கும் போது, ஈர் உடலாயிருந்தாலும், இன்ப நிலையில் ஓர் உடல் போல, சிவத்தோடு இரண்டற்று நிற்கும் நிலை. மேற்சொன்ன மூன்று சிவபுண்ணியங்களின் முடிவில், முன்சொன்னபடி, சிவ இருவினை ஒப்பும், மல பரிபாக மும், சத்தினி பாதமும் எய்தியபின், சற்குருநாதன் தோன்றுவர். அவர், பதி, பசு, பாசங்களாகிய ஞானங்களை உபதேசிப்பர்; சீடன் அவ்வுபதேசங்களைக் கேட்டு, சிந்தித்து, மனம் தெளிந்து, நிட்டை கூடுவன்.
ஞானத்தின் வகையும் பதவியும்
ஞான உபதேசங்களைக் கேட்கும்போதும், சீடனிடம் உள்ள வன்மை, மென்மையின் சத்தினி பாதத்துக்கு ஏற்கவே அந்த ஞானமும் கிட்டும்; அவைகளின் வகை நான்கு.
1. உண்மை ஞானத்தில், கேட்டல் கைகூடினல் சரியை ஆகும்; இவர்கள் சுத்த தத்துவத்தில், சுத்த வித்தையா கிய தத்துவத்தில் சாலோக சாயுச்சியம் பெறுவர்.
2. உண்மை ஞானத்தில், கேட்டலுடன், சிந்தித்தல்
கைகூடினுல் கிரியையாகும்; இவர்கள் சுத்த தத்துவத்
தில், மாகேச்வர மூர்த்தி தத்துவத்தில், சாமீப சாயுச் சியம் பெறுவர்.

Page 119
192 சைவ சமய சிந்தாமணி
3. உண்மை ஞானத்தில், கேட்டல், சிந்தித்தலுடன், தெளிதலும் கைகூடினுல், யோகமாகும்; இவர்கள் சுத்த தத்துவத்தில் உள்ள, சதாசிவ தத்துவத்தில், சாரூப சாயுச்சியம் பெறுவர்.
4. உண்மை ஞானத்தில், கேட்டல், சிந்தித்தல், தெளி தலுடன் பூரண நிட்டை கைகூடப் பெருதவர், கிஞ் சித்துவ ஞானமுடையவராவர்; இவர்கள் சுத்த தத் துவத்தில் உள்ள சிவ, சத்தி, தத்துவங்களில் சாயுச் சியத்தில் சாயுச்சியம் பெறுவர்.
5. உண்மை ஞானத்தில் பூரண ஞானம், கேட்டல், சிந் தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல், பூரணமுடைய வர்கள், முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த, சொரூப சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்ப முத்தி அனுபவிப்பர்.
இதுவே முடிவான நிலையாகும். 1ம், 2ம், 3ம் நிலையார் பெறுவதையே அபர முத்தி என்றும். 4ம் நிலையார் பெறு வதை கிஞ்சித்துவ முத்தி என்றும் கூறுவர். அபர முத்தி பெற்றவர்கள் பிறவி எடுப்பதில்லை; அவ்விடங்களில் இருந்தே பரமுத்தியை அடைவர். முன்சொன்ன பத முத்தி களைப் பெற்ருேர் உண்மை ஞானம் பெறுவதற்காக சில பிறவிகளை மாத்திரம் எடுப்பர்.
சைவ சமயம் கூறும் பரமுத்தியை வேறு எந்தச் சமயத் திலாயினும் பெறமுடியாது. முத்தி-பேரின்பம். எவ் வகைச் சமயத்திலே இருந்தாலும், எவ்வகை ஆன்மாக்களா யிருந்தாலும், எத்தனை சென்மங்களையாயினும், காலங்களை யாயினும், கடந்த பிறகேனும், இம்முத்தி பெற்றே தீருவர். இறைவன் பஞ்சகிருத்தியம் செய்வதின் இரகசியம் இதைக் கொடுப்பதற்காகத்தான். ஆகையால், எந்த ஆன்மாக் களுக்கும் நித்திய நரகம் என்பதில்லை. சைவ சமய ஞான நூல்கள் இவ்வாறு கூறுகின்றன. பொய்ச் சமயங்களே

-கடவுளை அடையும் வழி இயல் 193
நித்திய நரகம் உண்டென்று பிதற்றும். அறியாமைதானே! விவரமாய்ச் சைவ சித்தாந்த நூல்களிற் காண்க.
சிவ தொண்டுகளாவன:
சைவ சமயிகள் எவராயினும் முன் சொன்ன புண்ணியங் களுடன், இச் சிவ தொண்டுகளையும் இயன்றளவு செய்து கொண்டுவருதல் கடவுள் அருளைப் பெறுவதற்கு ஏதுவாகும்; இவைகளைப் பயன் கருதாது செய்து வருதல், உண்மைச் சரியை, கிரியை ஆகிய சிவ சாதனங்களாகும்; வேலை செய்து தான் கூலி பெறமுடியும் என்பது உண்மையானல் இவைக ளும் அங்ங்னம் வேலைகளே.
1. திருவலகிடுதல் : ஸ்நானம் செய்து சுத்தமாகி, 2,6) யத்திற் சென்று, மெல்லிய துடைப்பங்களால், கிருமி, கீடங்கள் வருந்தாமல் கூட்டிக் குப்பைகளை அகற்றுதல்.
2. திருமெழுக்கிடுதல் : சுத்தமான சாணத்தால், செங் கல், மண், சுண்ணும்பால் ஆகிய, கோப்பில் மண்டபங் களை மெழுகல் வேண்டும்; கருங்கல், சீமெந்து நிலங் களைக் கழுவுக. c
3. திருநந்தவனம் வைத்தல் : சுத்தமான இடத்தில் சுவாமிக்கு உகந்த, பூ, பத்திரங்களுக்கு உரிய மரம், செடி, கொடிகளை நாட்டிப் பாதுகாத்தல், கோயிலுக் குப் போகும் போதுள்ள புனிதம்போல், இதற்குள்ளும் பிரவேசிக்கவேண்டும். எச்சில் உமிழ்தல், மூக்கு நீர் சிந்தல், அவசிய கருமங்கழித்தல், குளித்தல், சீலை தோய்த்தல், பாதரட்சையுடன் செல்லல் ஆதியன செய்யக்கூடாது; அப் பூக்கள் கடவுள் பூசைக்கு அன்றி வேறு கருமங்களுக்கு உபயோகிக்கக்கூடாது.
4. பத்திர புஷ்பம் எடுத்தல் : ஸ்நானம் செய்து, விபூதி
தரித்துக்கொண்டு, பூ எடுக்கும் பாத்திரத்துடன்
சென்று எடுக்கவேண்டும்; முறையை சிவத்திரவிய இயலில் காண்க.

Page 120
194
சைவ சமய சிந்தாமணி
0.
Il Il .
. பூமாலை தொடுத்தல் : சுத்தமான இடத்தில் இருந்து
கொண்டு வீண் வார்த்தை பேசாமல், இண்டை, தொடை, கண்ணி முதலிய மாலைகளைக் கட்டிக் கொடுத்தல். உதவாத புட்பங்கள், சிவத்திரவிய இய லில் காண்க.
துாபம் இடுதல்
. தீபம் இடுதல்;
. அபிஷேகம் செய்தல். மேற்கூறிய மூன்றையும் விபர
மாய்ச் சிவத்திரவிய இயலில் காண்க.
. தோத்திரம் செய்தல் : ஆலயங்களில் படிக்சக்கூடிய
திருமுறைகளையும், அருட்பாக்களையும், அன்பர் பாடல் களையும், பக்தியுடன் மனங்கசிந்து, முறையாய்ப் பாடு தல்; கூடியிருந்து பஜனை பண்ணல், சைவ சமயச் சொற்பொழிவுகள், கூட்டுப் பிரார்த்தனை, செபம் ஆதியன செய்தல்.
ஆனந்தக் கூத்தாடல் : பக்தியால் தன்னை அறியா மலே ஆனந்தம் மேலிட்டு ஆடநேர்ந்தால், மற்றவர் களைப் பொருட்படுத்தாது ஆடுதல்.
வாத்தியங்கள் ஒலிப்பித்தல் : சதங்கை, சிலம்பு, கண்டாமணி, சங்கு, வீணை, தாளம், வேய்ங்குழல், பேரிகை, மத்தளம் இவை ஒசை செய்தல் வேண்டும்; யோகிகள் தம்முள்ளே இவைகளின் ஒசைகளைக் கேட் கின்ருர்களாம்.
பிறதொண்டுகளாவன
விளக்கேற்றல், தீவட்டி பிடித்தல், கண்ணுடி தாங்குதல்
செய்வோர் சிவஞானத்தையும், குடைபிடிப்போர் ஆஞ்ஞா
சக்கரம் பலத்தையும், வாகனங் காவுவோர் கணநாத ராய்க் கயிலாயத்தையும், தூபம் இடுவோர் ஆணவமல சத்தி

-கடவுளை அடையும் வழி இயல் 195
நீக்கத்தையும், சாமரை வீசுவோர் மலநிவாரணம் திருவருட் செல்வத்தையும், கருப்பூர தீபம் தாங்குவோர் அத்துவித முத்தி அடைதலையும், அலகிடல், மெழுகல் செய்வோர்,
காமம், வெகுளி, நோய் நீக்கத்தையும் பெறுவார்கள்.
மேலும், பூந்தோட்டத்துக்கு நீர் இறைத்தல், வீதிகளில் உள்ள தேவையற்ற புல், பூண்டு, செடி, கொடி, மரங்களை அகற்றல், கோயில், குளம், வீதிகளில், எச்சில் உமிழாமலும்,
மல சலம், கழிக்காமலும், பாதுகாத்தல், குளித்தல், சுத்த ஆடை, விபூதி இல்லாதவர்கள், மேலில் வேட்டி, சட்டை, தொப்பி இட்டுக்கொண்டவர்கள், வெற்றிலை பாக்கு, புகை யிலை, பீடி, சீக்கிறற் பிடித்தவர்கள், மது, மாமிசம், அருந் தியவர்கள், ஆகிய இன்னேர், கோயிலுட் பிரவேசியாதபடி பாதுகாத்தல், திரு விழாக் காலங்களில் வீதியில் நீர் தெளித்து, சுத்தம் செய்தல், தேர் வடம் பிடித்தல், கொடி ஆலவட்டம் பிடித்தல், ஆகியவையும் இவை போன்ற பிறவுமாம்.
கோயிற் பராமரிப்பு
சிவ சொத்துப் பாதுகாப்பு. கோயில் பரிபாலிப் பாளர்கள் - முகாமைக்காரர், சமய தீட்சை பெற்றவர்க ளாய், ஆசாரம், அனுட்டானம், உடையவர்களாய் சமய அறிவுடையவர்களாய், மது மாமிச, பட்சணம் இல்லாதவர் களாய் இருத்தல் வேண்டும்.
கோயிலுக்குரிய, அசைவற்ற, அசைவுள்ள சொத்துக்களை நேர்மையான முறையில் பாதுகாத்தல் வேண்டும். பூசைகள் விழாக்களைக் காலந்தோறும் கிரமமாய் நடக்கும்படி, நிர்வகித்து வருதல் வேண்டும்.
காவடி எடுப்பதின் பொருள்
இந்தக் காலம் பெரும்பாலானுேர், காவடிகள் எடுக்கின் றனர்; அவை பாற்காவடி, கருப்பூரக் காவடி முதலிய பல வகைப் படுகின்றன. காவடி முருகப் பெருமான் ஆலயங்

Page 121
196 சைவ சமய சிந்தாமணி
களிலேதான் மிகுதியாக எடுக்கப்படுகின்றது; ஒரு பெரியார் இதைப் பற்றிக் கூறும் கருத்தைச் சுருக்கமாய் அறியத்தரு கின்ருேம்.
உலக இன்பங்களை வேண்டிக் கடவுளுக்குக் காவடி எடுப் பது, உபாயக் காவடியாய் வெறும் அன்னக் காவடியாக இருக்கின்றது; உண்மைக் காவடி வேறு. அதாவது : பார் வதி தேவியாரின் திருக்கலியாணத்தால், தென் திசை தாழ, அகத்திய முனிவரை அங்கு செல்லுமாறு சிவபெருமான் பணித்தார்; அகத்தியர் திருக்கலியான கோலத்தை, அங்கே காட்டவேண்டும் என்றும், இமய மலையின் அடையாளமாய் ஒன்று தரவேண்டும் என்றும் கேட்டார்;
இறைவன் பக்கத்தில் இருந்த, சத்திகிரி, சிவகிரி இரண் டையும், கொண்டு செல்லுமாறு பணித்தார். முனிவர் தம் மாணுக்கரில் சிறந்த, இடும்பன் என்பவனை எடுத்து வரும்படிச் சொன்னர்; அவன் காட்டில் ஏழு கணுக்கள் உள்ள கல்மூங்கில் ஒன்றை வெட்டி, அதன் அந்தங்கள் இரண்டிலும், அக்கிரிகளைக் கட்டிக் கொண்டு வந்து பழனி யில் இறக்கினன்; சிவகிரியின்மீது, பழனி ஆண்டவணுகிய பால குமாரன் தோன்றி, தரிசனை கொடுக்க, அவன் பேரின்ப நிலையை எய்தினுன் என்பது கதை.
யோக முறையில், அகத்தியர் சிறந்த சித்த புருஷர்; அரக்கர் சுயநலம் கருதி உழைக்கும் உலகமார்க்கத்தார்; இடும்பன் அவர்கள் குலகுரு; அதன் கருத்து, அரக்கரிலும் பார்க்க, மனம், மொழி, மெய்களால் உயர்ந்து, யோகம் பயிலத் தகுதி வாய்ந்தவன் இடும்பன்; ஆன்ம ஈடேற்றத் தைக் கருதி, நிவிர்த்தி மார்க்கம் எய்தி, தவராஜ யோகி யும், வித்தகச் சித்தருமான அகத்தியரை அடைகிருன்; அவர், அவனுடைய மூலாதாரத்திலுள்ள, சத்திகிரியாகிய குண்டலினி சத்தியை, பிரம்மதண்டம் என்ற ஏழு முடிப்பை உடைய முள்ளந்தண்டாலும், அதன் நடுவே ஓடும் சுழுமுணு நாடியாலும், தலை உச்சியில் சகச்சிராரத்தில் உள்ள சிவகிரி

-கடவுளை அடையும் வழி இயல் 197
யாகிய பரமசிவத்துடன் இணைத்து, அழகே உருக்கொண்ட பால குமாரனை இடும்பன் உச்சிமேல் காட்டிக் கொடுக்கச் செய்து, அவனை உய்யச் செய்கின்ருர்; சிவராஜயோகத் தலைவனே அந்த முருகன். ஆருதாரம்= ஆறுமுகம் ஆறு அத்துவா ஆறு சத்தி ஆறு எழுத்து.
காவடி = கா + அடி = சரண் புகுந்தோரைக் காக்கும் சேவடி,
உபாயக் காவடியாய் இப்பொழுது நாம் சமர்ப்பிக்கும் காவடி மேற்காட்டிய உண்மைக் காவடிக்குக் கொண்டு செல்ல உதவி புரியட்டும்.
அரசு சுற்றலின் கருத்து
மரங்களில், அரசு, ஆல், வேம்பு முதலியன தெய்வீகத் தன்மையுடையன; இதனை முன்னும் அரசாணி என்பதில் குறிப்பிட்டோம்; அரசு சிவத்தைக் குறிப்பது; திரி மூர்த்தி வடிவமானது; இதனல், இதை வலம் வருகின்ருர்கள். நோ யாளரும் புத்திரப் பேரில்லாத மகளிரும் அரசை வலம் வந்து பேறு பெற்றிருக்கின்றனர் என்று கூறுகின்றனர்; ஆதலால் இதனை வலம் வருதல் நலம்.
ஒரு பெரியார் கூறுவன வருமாறு:- நம்முடைய தேகத்தில் நரம்புக் குழாய்களில் வியான வாயு ஒடி, நரம்பு களைப் பலப்படுத்துகின்றது; இவ் வாய்வு குறைந்தால் நரம் புத் தளர்ச்சி, எய்ப்பு, இளைப்பு ஆகியன ஏற்படுகின்றன.
அரச மரம் வியான வாயுவை அதிகம் வெளிப்படுத்து கிறபடியால், அந்த நோயாளர்கள் அரச மரத்தைச் சுற்றி வந்தால், வியான வாயுவை அதிகமாகப் பெற்றுச் சுகம் அடைவார்கள் என்றும் கூறுகின்றனர்.
பிறவித் துன்பத்தில் இருந்து, நீங்க விரும்புகிறவர்கள் இப்பகுதியிற் சொல்லிய, புண்ணியங்களைப் படிப்படியாகச்

Page 122
198 சைவ சமய சிந்தாமணி
செய்து வருவர்; அப் புண்ணிய முதிர்ச்சியால், பதி புண் ணியங்களைச் செய்து, பிறவாப் பேரின்பம் எய்துவர்.
மலை உச்சியை அடைய, கீழ் இருந்து, ஒவ்வொரு படி யாய் ஏறவேண்டும்; கீழ் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பாய் உயர்ந்துதான் பத்தாம் வகுப்பை அடைய முடியும் மரம், அரும்பு, மலர், காய், முறையாய் உண் டாகித்தான் கணியாக முடியும்; இவை நாம் கண்ட முறைகள்; அவ்வாறே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சிவ சாதனங்களும் ஆகும்.
" விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்ருே பரபரமே "
- தாயுமானவர்
நில பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர் வதன்முன் அலகீட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனந்தேத்திப் புகழ்ந்து பாடித் தல யாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சய போற்றி போற்றி யென்றும் அலை புனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும் ஆரூரா வென்றென்றே அலகு நில்லே "
திரு முறை.
பாவங்கள்
விளக்கம் : பாவம், தீமை, அதர்மம், மறம், கொடுமை என்பன ஒரு பொருள் சொற்கள். வேத, சிவாகமங்களில் விலக்கப்பட்டன பாவங்கள் இவை மனம், வாக்கு, காயங்களால் வந்தேறுகின்றன.

-கடவுளை அடையும் வழி இயல் h 199
மகா பாதகங்கள்
கொலை, களவு, கள்ளுண்ணல், பிறர் மனை நயவல், சூதாடுதல் என்பனவாம். இப் பஞ்ச மகா பாதகங்களில் இருந்தே, மற்றைப் பாவங்கள் எல்லாம் தோன்றுகின்றன. புண்ணியங்கள் என்று சொல்லிய பகுதியில் கூறின எல்லா வற்றிற்கும் மாருனவைகள் பாவங்களாகும்; மேலும் சிலவற்றை இங்கு காண்க.
சிவ சொத்துத் திருடல்
கோயிற் பொருள்களை, எவ்வகை நியாயங் கருதியே னும், தனதாக்கியோ, அபகரித்தோ, அழித்தோ, முறைகேடு செய்தோர் யாவரும், சிவ சொத்துத் திருடியவராகவே கணிக்கப்படுவர்; இவர்கள் தலைமுறை தலைமுறையாக நாசமுறுவர்; ' கோயிற் சொத்துக் குல நாசம் '' என்பது பழமொழி. அன்றியும்,
" அந்தோ புரமெரித்தஅண்ணல் அடியார் பொருள்கள்
செந்தீயினும் கொடியதீ - செந்தீயை நீங்கிற் சுடாதே நெடுந்துரம் போனுலும் ஏங்கச் சுடுமே யிது"
என்பதை ஆராய்ந்தறிக.
இதற் கொரு கதையை, நாம் எழுதிய, சைவக் களஞ் சியம் 111, சைவ இலக்கிய கதா மஞ்சரி, 11ம் பாகம் 60ம் கதையில் காண்க.
கோயிலில் செய்யத் தகாத குற்றங்கள் (பாவம்)
பிற தொண்டுகள் என்ற பகுதியில், விலக்க வேண்டிய சில, அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுடன் மன அமைதியின்றிப் போதல், உயர்ந்த ஆசனத்திருத்தல், தூங் குதல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், மயிர் கோதி முடித் தல், சூதாடல் பாதரட்சையுடன் செல்லல், விக்கிரகங்க

Page 123
200 சைவ சமய சிந்தாமணி
ளைத் தொடுதல், நிர்மாலியத்தைக் கடத்தல், தூபி, கொடித் தம்பம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழலை மிதித்தல், தொடுதல், வீண்வார்த்தை பேசல், விளையாடல், சுவாமிக் கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், ஓடி வலம் வருதல், ஒரு தரம் இரு தரம் பிரதட்சணம் செய்தல், அகாலத்தில் தரிசித்தல், திரையிட்ட பின் தரிசித்தல், திரு விளக்கு அவியக் கண்டும் தூண்டாதிருத்தல், இருளில் வணங்குதல், திருவிழாவில் சுவாமி வீதி வலம் வரும்போது, உள்ளே சென்று வணங்குதல், முன் சொன்ன தொண்டுகளாகிய, தீவட்டி பிடித்தல் முதலியவைகளைச் செய்ய மனம் கூசுதல், செய்பவர்களை இகழ்தல், இரு முகூர்த்தங்களுக்கு இடையில் செல்லல், தரிசனைக்கு வந்த பெண்களைத் தீண்டுதல், அவர் களை இச்சித்துப் பார்த்தல், வீண் கீதங்கள் பாடல், கேட் டல், ஆகியவை பாவங்கள்.
பலிகொடுத்தல்
பொதுவாய்ப் பலி கொடுத்தல் என்ற சொல் தேவர் களுக்கு உணவு-நைவேத்தியம் இடுதல் என்பது கருத்தாகும்; அது தற்காலம் உயிர்ப் பிராணிகளைக் கொன்று, ஊனை நிவே தித்தல் என்னும் பொருளில் நடைபெறுகின்றது. இதைப் பற்றியே இங்கு சொல்லப்படுகின்றது.
** எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் ‘’ என்றது சைவ ஞான நூல்; “கொலை பாவங்களில் ஒன்று ஆடு, மாடு, கோழி முதலிய உயிர்களைக் கொன்று, சுவாமிக்குப் படைக்க, சைவத்தில் இடமில்லை; உயிர்களில் இரங்கி, அன்பு கொண்டு, பாதுகாப்பவர் இடமே சிவபெருமான் அன்பு கொள்வர்; ஒரு முல்லைக் கொடிக்குத் தேரையும், குளி ரால் வருந்திய மயிலுக்கு, தன் போர்வையையும், ஒரு புரு வுக்காகத் தன், தசையை அரிந்து கொடுத்தவனும், நம் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர்.
உயிர்ப் பலி கேட்குந் தெய்வங்கள் சைவத் தெய்வங்கள் அல்ல; அவை தேவதைகளே; அவற்ருல் நமக்கு யாதும்

-கடவுளை அடையும் வழி இயல் 2O1
பயனில்லை; அத் தேவதைகள் நன்மைக்குப் பதில் தீமையே செய்யும். ஆகையால் பலியிடுவதை எந்தச் சிவாலயங் களிலும், செய்தல் ஆகாது; அதை நிறுத்தினுல் அத் தேவதை "" நம்மை வருத்துமோ ' என்று அஞ்ச வேண் டியதும் இல்லை.
சிலர் வேதத்தில் யாகத்திற்காக உயிர்களைப் பலியிடலா மென்று சொல்லப்பட்டிருக்கிறது என்பர்; பலி செய்யப் பட்ட உயிர்களை எழுப்பினுலே யாகத்தின் உண்மையான பலனையும் அடைவார்கள் என்றும், அல்லாவிட்டால் பாவப் பலனையே அனுபவிப்பார்கள் என்றும், அதிலேயே கூறப் பட்டிருக்கிறதாகப் பெரியோர் கூறுகின்றனர்.
மேலும், அவ் வேத விதியை நம்பி முன்னுெரு முறை அப்பைய தீட்சித சுவாமிகள், உயிர்களைப் பலியிட்டு, யாகம் ஒன்று செய்து, முடிவில் அவ் உயிர்கள், உயிர்பெற்று எழா மையினலே, சுவாமிகள் பாவத்துக்கு அஞ்சி, மனம் வருந்தி, "" நம்பி உயிர்களைக்கொன்றேன்; அவைகள் எழும்பவில்லை; என்னைப் பாவத்திலிருந்து காப்பாற்றுக,' என்று பெரு மானை வேண்டியதாகவும், அப்பொழுது, 'கலியுகத்தில் பலி யிடப்படும் உயிர்கள் எழுப்பப்படமாட்டா, இனி அவ்வாறு செய்யவேண்டாம்; இவ் உயிர்களை மாத்திரம் எழுப்பித்தரு வோம்; இது கடைசியாக இருக்கட்டும்', என்று ஒர் அசரீரி சொல்லி, அவ்வாறு நடந்து சுவாமிகள் பாவப் பழியில் இருந்து நீங்கினர் என்றும், ஒரு பெரியார் கூறியிருக் βξσότ(αγrf.
** எவ்வுயிரும் என்னுயிர்போல் இரங்கி அருளவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே ' என்ருர் அநு பூதிச் செல்வர் தாயுமானவர்.
தாசியர் நடனம்
பழங்காலத்தில் ஆலயங்களில் தேவடியாள் (தேவ+ அடி யாள்) என்ற ஒருபகுதியர் சிவதொண்டுகள் செய்து வந்தார்
26

Page 124
2O2. சைவ சமய சிந்தாமணி
கள் என்றும், அவர்கள் உருத்திரகணிகையர் என்ற வம்சத் தவர்கள் என்றும், கடவுளிடத்து மிகுந்த பய பக்தி, வைராக்கியம் உடையவர்களாய் இருந்தார்கள் என்றும், ஒழுக்கம் சைவ ஆசாரங்களில் இழுக்கில்லாதவர்களாய் இருந்தார்கள் என்றும், நூல்களாலும், பெரியோர் வாயிலா லும் அறிகின்ருேம்.
புண்ணியப் பகுதியில் சிவ தொண்டுகள் என்று கூறப் பட்ட தொண்டுகளையே அவர்கள் செய்து கொண்டு வந்தார் கள்; சுவாமியின் முன்னிலையில் அவருடைய நடனத்தை நடித்து வந்தார்கள்; அந் நடிப்பைக் காண்பவர்களுக்கு, சிவ பக்தியையும், பரவசத்தையும், நல்கும் என்றும், அந் நடிப்போரை, பிறர் சிவ அடியாராகக் கருதி, அவர்களி டம், அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள் என் றும் பெரியோர்கள் கூறுகின்றனர்.
நம் சமய அறிவீனர்கள் சிலர், ' தேவடியாள்கள் வந் தால் கோயிலில் கூட்டம் அதிகமாகும்; அதனுல் வரும்படி உண்டாகும்’ என்று சொல்லுவர். கோயில் பக்திக் குரிய இடம் அன்றி, வேடிக்கை பார்க்கும் காவாலிக் கூட்டத்துக் குரிய இடமில்லை! இது காலத்துக்கு உகந்ததல்ல. எனவே நம் பெரியோர்கள் சொல்லைக் கடைப்பிடித்து, சைவ சமய வளர்ச்சி கருதி, தாசியர் ஆட்டத்தை, கோயில் முகாமைக் காரரும், திருவிழாக்காரரும், பொது மக்களும், புண்ணியங் கருதி நீக்குவார்களாக
ஒதுக்கல்
சாதி பற்றிச் சைவ சமயத்தில் உள்ள ஒரு பகுதியாரை, தீண்டாதார் என்று கோயிலுட் பிரவேசிக்க சிலர் மறுத்து வருகின்றனர்; சாதியில்லைச் சைவத்தில்; தொழில் உண்டு. வினைப் போகத்துக் கேற்ப, ஒவ்வொருவனுக்கும் தொழில் வாய்க்கும்; தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை.

-கடவுளை அடையும் வழி இயல் 203
கோயிலில் சென்று தரிசனம் பண்ணத் தகுதி இல் லாதாரை, புண்ணியப் பகுதியில் பிற தொண்டுகள் என் பதிலும், செய்யத்தகாத குற்றங்கள் என்பதிலும், முன்னே காட்டினுேம்; அக் குற்றங்களை உடையோர், எவராயிருந்தா லும், கோயிலுட் பிரவேசிக்க இடம் கொடுக்கக் கூடாது. **சாதியிலும் சமயமே சிறந்தது" என்ருர் ஐந்தாம் குரவர்; சாதியிலும் சைவ சமய ஆசாரமே வேண்டற்பாலது. ** பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் ' என்ருர் தமிழ் மறை யாளர்; ' சாதியிரண்டொழிய வேறில்லை ' என்ருர் மூதாட் டியார்.
சைவ சமயிகளுக்கு, உயர்வு, தாழ்வு, அளிப்பது தீட் சையே; இத்தீட்சை அந்தணர் முதல் தீண்டாதார் ஈருகப் பெறலாம் என்கின்றனர். சிவபெருமானுக்குச் சாதி வேண் டியதில்லை என்பதை, பெரிய புராணம் கூறும் அடியார்க ளில் இருந்து அறியலாமன்றே! ஆகையால், சுத்தமுடைய ராய், அன்புடையராய், மது, மாமிச பட்சணம் இல்லா தவர்களாய், கடவுளை வணங்க வருபவர்களை, சாதி பற்றி ஒதுக்கி, அவர்களுக்கு வணங்க உரிமை கொடாது மறுப் பது, சைவ சமயத்திற்கு இழுக்கு ஆகும். அப்படிச் செய் பவர்களுக்குப் பெரும் பாவமும் உண்டாகும்.
ஆசௌசம்
இது, அசுத்தம், தீட்டு, குற்றம் எனப் பலவாறு கூறப் படும்; பிள்ளைப் பேறு, இறத்தல், சவத்தின் பின்செல்லல், சவம் சுடுதல், கட்டி அழல், ஆசௌசிகள் அன்னம், புசித்தல், அவர்களோடு அளைந்து திரிதல், மாதவிடாய், முத லியனவற்றை ஆசௌசம் என்பர்.
இக் காலங்களில், சுப கருமங்கள், ஆலயதரிசனம், முதலியன செய்தல், நல்லதல்ல என்பர். இது விளங்கப் படுத்துவதற்குக் கடினமானது. பொதுவாய்த் தேக சுகா தாரத்தை அடுத்தது என்பர்; அதன் நியாயங்கள் பல; ஒவ்

Page 125
204 -சைவ சமய சிந்தாமணி
வொருவருடைய ஒழுக்கத்திற்கு, ஏற்றவாறு கூடியும் குறைந்தும் உள்ள நாட்களில் இவை சுத்தியுண்டாகக் கூடியன. இவை நீங்கும் முறைகளாவன :- சில அவற்றுக் குரிய கால எல்லையில் ஸ்நானம் செய்வதாலும், சில உடன் ஸ்நானம் செய்வதாலும், சில அவற்றுக்குரிய கால எல்லை யிலும் கழிந்து விடும்.
ஆசெளசத்தின் முடிவில், சில சுத்திகரிப்புக் கிரியைக ளும், சமயாசாரியர்களால் செய்யப்படுகின்றன. அவை செய்த பின், உடலும், மனதும், புனிதமானதுபோல் நமக்கே ஒருவகையான உணர்ச்சியையும் திருப்தியையும் கொடுக்கின்றன.
இது, ஆரியர்களுடைய சாதிக் கட்டுப்பாட்டு வைப்பு என்பர் ஒரு சாரார். எப்படிப் பார்த்தாலும், அந்த ஆசௌச காலங்களில் நமது மனச் சாட்சியில், நமக்கே ஒரு விதமான, அருவருப்பு உண்டாவதை உணருகின்ருேம்.
வியாபாரம்
முக்கியமான புண்ணிய ஆலயத் தலங்கள், விசேட காலங்களிலும், மகோற்சவ காலங்களிலும், வியாபாரத் தலங்களாய் மாறிவருகின்றன. பிற ஊர்களில் இருந்து வந்து, தங்கித் தரிசனம் பண்ணுபவர்கள் உளராயின், அவர்கள் பொருட்டு, கடவுட் பூசைக்குரிய பொருட்களும், யாத்திரைக்காரரின் உணவுக்குரிய பொருட்களும் புற வீதி யில் வைத்து விற்க விடலாம். சுத்தமாகச் சமைத்த, சைவ உணவுச் சாலைகளும் சைவ சமயிகள் வைத்திருக்கலாம்.
உள் வீதிகளில் எவ்வகையான வியாபாரமும் நடத்த இடங் கொடுக்கக்கூடாது. கோயிலுக்கு வரும்படி கருதி, கடைகள் கட்டிக் கொடுத்து, வாடகை வாங்கி, கோயில் நிர்வாகத்தை, நடத்த எண்ணுவது பாவமாகும்.

-கடவுளை அடையும் வழி இயல் 205
வீண் செலவு
சைவ சமயம், வறியவர் தொடக்கம் பரம ஞானிகள் வரை, அவரவர் தகுதிக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப, வழி படுவோருக்கு, கிரியை விதிகளை அமைத்திருக்கின்றது. அதை உணராது, புகழைக் கருதி, மகோற்சவம் முதலிய கோயில் காரியங்களில், தகுதிக்கு மேல், கடன் பட்டும், கோயில் காரியங்களைச் சிலர் நடத்தி வைக் கின்றனர்.
இவ்வாறன்றிப் புண்ணியப் பயனைக் கொடுக்கும், அபி ஷேகம், யாகப் பொருட்கள் முதலிய காரியங்களில், உலோப மின்றிச் செலவுசெய்து, மிகுதியிருந்தால் திருப்பணிகளுக்கு, சைவப் பாடசாலைகளுக்கு, சைவ அநாதைகளுக்கு, உதவு தல், புண்ணியப் பகுதியில் தோத்திரம் செய்தல் என்ற பகு தியிற் சொல்லிய, இயன்றவைகளைச் செய்து கொள்ளல் ஆகியவைகளுக்குச் செலவிடலாம். அதனுல் வரும் புண் ணியத்தையும் நாம் அடைவோம்.
* பரனடிக்கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்
பரனடிக்கன்பிலார் செய் புண்ணியம் பாவமாகும் "
என்றது சைவ ஞான நூல்
சாத்துப்படி
சுவாமிக்குச் சாத்துப்படி சாத்துவதாயின் விலையுள்ள, பொன், வெள்ளி, இரத்தினங்கள் ஆகியவற்ருல் செய் யப்பட்ட சுத்த ஆபரணங்களால், பட்டு வஸ்திரங்களால், விதிக்கப்பட்ட புஷ்பங்களால், சுத்தமானவர்களால் சாத்தப் படல் வேண்டும்.
விதிக்கப்படாத பூக்களினலும், சீலை மாலைகளாலும், அழுக்குச் சீலைகளாலும், கடுதாசி மாலைகளாலும், பித்தளை முதலிய போலி ஆபரணங்களாலும், விக்கிரகத்தைத் தீண்

Page 126
2O6 சைவ சமய சிந்தாமணி
டத் தகாதவர்களாலும், சாத்துப்படி செய்விக்கக்கூடாது; செய்யவும்படாது.
பாவங்களும் ரோகங்களும்
விலக்கப்பட்ட பாவங்களைச் செய்தால், நரகத்தில் துன் பங்கள் அனுபவிக்க வேண்டும்; சில பாவங்களுக்கு, பிறவி எடுத்து அனுபவிக்கவும் நேரிடும். நோய்கள் வந்து தீர்க்கப் பட முடியாவிட்டால், அவற்றைக் கர்ம நோய்கள் என்று உலகத்தார் கூறுவர், சிலவற்றை இதன் கீழ்க் காண்க.
சிவபெருமானை நிந்தித்தல், குருவை நிந்தித்தல், குரு பத்தினியை நிந்தித்தல், முதலியன செய்தால் முயலகன் நோயால் வருந்துவர்.
குருவை, அந்தணரைக் கோபித்தால் மண்டை நோயும்; குருவை மினிதராய்ப் பாவித்தால், யோனி நோயும்; பிர மக் கொலை செய்தால் கூடியரோகமும்; குருதார கமனம், ஏரி, குளங்களை வெட்டினுல் குட்டமும் மெய்யடியார்களை நிந்தித் தாலும் குட்டமும்; அதிதிகளுக்கு அன்னங் கொடாவிட் டால் கர்ண ரோகமும்; தபோதனருடைய அன்னத்தைத் திருடினேர், பொய்ச் சாட்சி சொன்னேர் க்கு வாய்ப் புண்ணுேயும்; பிறர் பொருளைக் கவர்ந்தவர், அதற்குத் துணை செய்தவர்; உபாயங்கள் சொன்னவர், நேத்திர ரோக மும், காலில் வியாதியும்; புடவை திருடினேர் வெண்குட்ட மும்; பசுவதை பிறவிக் குருடர் அன்ன சத்திரம், தண் ணிர்ப் பந்தல் அழித்தோர், நீர்த் தோஷமும், உதர நோயும்; வேதாகமம், பெரியோர்கள் நிந்தனை செய்தோர்க் குப் பைத்தியமும்; உண்டாகும். வேறு பாவங்களுக்கு, சிவ தரு மோத்திரம் முதலிய நூல்களைப் பார்க்க.

-குரு, சங்கம இயல் 2O7
குரு, சங்கம இயல்
விளக்கம் : சிவபெருமான் நின்று அருள் செய்யும் முறைகளை கடவுள் இயலில் அறிந்தோம். அவர் குருவினிட மும், சங்கமர்களிடமும் நின்று அருள் செய்வதை இவ்விய லில் அறிவோம். அவர் நின்று அருள் செய்யும் இடங்களைக் கோயில்கள் என்று அழைக்கின்ருேம்.
கோயில் படமாடக் கோயில், நடமாடக் கோயில் என இரண்டு வகை; கோயில் அமைப்பு இயலில் படமாடக் கோயிலைக் காட்டினுேம்; அக்கோயில்களில் சிவலிங்கம் முத லாகிய திருமேனிகளில் நின்று அருள் செய்வதைக் கடவுள் இயலில் அறிந்தோம்.
குரு, சங்கமர்களுடைய உள்ளத்தையும், அவர்க ளுடைய சிவ வேடங்களையும், இடமாகக் கொண்டு நின்று, அருள் புரிவதையே நடமாடக் கோயில் வழிபாடாகும் என்று நமது சைவ சமய நூல்கள் கூறுகின்றன.
" படமாடக் கோயில் பகவற்கொன் றிகில் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற்கொன் றீகில் படமாடக் கோயில் பகவற்க தாமே '
திருமந்திரம்,
குரு
குரு = கு+ரு = பாசத்தை நீக்குபவர் என்பது பொருள், இவர்கள் தீட்சா குரு, வித்தியா குரு, போதக குரு எனப்
பல வகையர்; இவர்களை, குரு, ஆசாரியன், தேசிகன், ஐயன், பட்டர்கள் என்ருலும் பொருள் ஒன்றே.

Page 127
208 சைவ சமய சிந்தாமணி
குரு-அறியாமையை நீக்கி அறிவை (ஞானத்தை)க் கொடுப்பவன்;
ஆசாரியன்=தன்னை அடைந்தவரிடமுள்ள குற்றங்களை நீக்குபவன்.
தேசிகன் =ஒளிபோற் பிரகாசிக்க அறிவை வளர்ப்பவன்.
ஐயன் - மாணுக்கனைவிட அறிவிலும், ஏனைய தன்மை களிலும் தலைமையானவன்.
இவர்களில் எழுத்தறிவிப்பவன், தீகூைடி செய்பவன், வீடுகளில் நன்மை, தீமைச் சடங்குகளைச் செய்துவைப்பவன், சிவஞான நூல்களைப் போதிப்பவன் யாவரும் அடங்குவர். பரிபக்குவம் நிரம்பியபொழுது, பிறவியை ஒழிக்க, ஞான ஆசாரியராய் வருபவரே மேலான ஞான குருவாவர்.
சங்கமர்
சங்கமர் என்பது, நிர்வாண தீட்சிதர், விu உசிதர், சமய தீட்சிதர் என்னும் மூன்று விதமான சிவபக்தர்களா வர். இவர்களை மனிதர் எனக் கருதாது, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினலும், சிரத்தையோடு வழிபட வேண்டும்; ஆலயங்களில் பிரதிட்டை பண்ணி வைத்திருக் கும் திருவுருவங்களை, சிலை என்று நினைப்பவர்களும், சைவ ஆசாரங்களைக் கைக்கொள்ளும் சிவபக்தரை, அடியார்களை, மேற்காட்டியவர்களை மனிதர் என்று நினைப்பவர்களும் அழிவை அடைவர்.
1. வணங்க நியாயம் : சிவபெருமான் வேறு இவர்கள் வேறு என்று எண்ணுதபடி நிற்றல்; சிவபெருமானை நினைக்கச் செய்யும் திருவேடமுடைமை; தினமும் திருப்பஞ்சாட்சர செபமும், வேறு மந்திரங்களையும் உச் சரித்தல்; சிவோகம் பாவனை, பிரசாத யோகம் இவை களைச் செய்தல்; தம்மின் இரண்டறக் கலந்து நிற் கும் சிவத்தோடு கலந்து நிற்குந் தன்மை; சிவமாய்

-குரு, சங்கம இயல் 209
27
எண்ணி வழிபடுதற்குரிய, வேடமோ, பாவனையோ, செயல்களோ மூன்றில் ஒன்றேனும், இரண்டேனும், மூன்றுமேனும் இவர்களிடம் அமைந்திருத்தலே யாகும்.
. தகுதியில்லாரை வணங்கல் : குரு, சங் க ம ர் கள்
வேடம், பாவனை, செயல்கள், உடையவர்களாய், உண்மைத் தன்மை இல்லாதவர்களாய், இருந்தாலும் நாம் வணங்கவேண்டும்; ஏனென்ருல், நாம் செய்யும் வணக்கம், அவருடைய சரீரத்துக்கு அல்ல; அவர் உள் ளும், அவர் வேடத்திலும் இருக்கும் சிவபெருமா னுக்கே உரியது. அவர் நம்மை ஏமாற்றும் குற்றத் துக்கு, அவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்.
. அடியார் பக்தியின் உண்மை நமக்கு நமது மனைவி,
மக்களிடம் அன்பு இயற்கையில் ஏற்படுகிறது. இவ் வன்பு எங்ங்ணம் அவர்களுடைய சுற்றத்தாரிடத்தும் சென்று பரவுகிறதோ, அங்ங்னமே சிவபெருமா னிடத்து ஏற்பட்டுள்ள அன்பு அவருடைய சுற்றத்தா ராகிய அடியாரிடத்தும் சென்று பரவவேண்டும். இங் ங்ணம் அடியாரிடத்து அன்பில்லாதவர் சிவனிடத்தும் அன்பில்லாதவரேயாவர்.
. சிவ பக்தியை வளர்க்க வழி : காமப் பற்றுடையார்,
அப்பற்று உடையவர்களையே தேடி நட்புக்கொள்வர்; ஏனெனில், தம்மிடமுள்ள காமப் பற்று வளர்த்தற்கு வழி அதுதான்; அப்பற்று இல்லாதாரை வெறுப்பர். அதுபோல, சிவபெருமானிடம் பக்தியுடையார், அதை மேலும் மேலும் வளர்த்தற்காக; அப் பற் றுடைய, குரு, சங்கமர், சிவ பக்தர், சிவனடியார், சிவ சின்னங்களை உடையவர், இவர்களை வணங்கலும்,
கூடுதலும், செய்வர். ** தொண்டர்தம் பெருமையைச் சொல்லலுமரிதே ’’, ‘* அடியார் நடுவுளிருக்கும் அரு ளைப் புரியாய் "", "தொழும்பர் உளக்கேற்றும்

Page 128
2O சைவ சமய சிந்தாமணி
விளக்கே ', 'மாலற நேயம், மலிந்தவர் வேடமும், ஆலயந்தானும் அரனெனத் தொழுமே ' என்ற ஞான மொழிகளால் அறிக.
5. வணங்கும் முறை : பெரியோர்களைக் காணப் போகும் பொழுது வெறுங் கையை ஆட்டிக்கொண்டு போவது வழக்கமில்லை; அதுபோல, சுவாமி தரிசனம், குரு தரி சனத்துக்கும்; அவர்களுக்குப் பொருத்தமான, இயன்ற யாதும் கொண்டுபோக வேண்டும். அப்பொருளை அவர்கள் முன் வைத்து, வணங்கவேண்டும்; அவர் அனுமதியுடன் இருக்கவேண்டும்; விபூதி தந்தால் வாங்கித் தரித்துக்கொண்டு, மீண்டும் வணங்க வேண்டும்.
அவர் நம் வீட்டுக்கு வந்தால், விரைந்து எழுந்து, எதிர் கொண்டு வணங்கி, இன் சொல் கூறி, அழைத்து வந்து உயர்ந்த ஆசனத்திருத்தி, இயன்ற பொருள்களை முன் வைத்து, வணங்கிப் பூக்களால் திருவடிகளை அர்ச்சித்து, விபூதி வாங்கித் தரித்துக்கொள்ளல் வேண்டும். பின் அவர் கட்டளைப்படி இருந்து, விஷயம் முடிந்து செல்லும்போது, சிறிது தூரம் பின் சென்று, வழிவிடவேண்டும். இரவு காலங் களில் அவருக்கு முன்னல், துணை போதலும் வேண்டும்.
6. செய்யத் தகாத குற்றங்கள் அவர்களைக் கண்டவுடன் இருக்கை விட்டு எழாமை, செல்லும்பொழுது எழுந்து உடன் செல்லாமை, அவர் முன் உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டல், தூங்கல், வெற்றிலைப் பாக்கு, சுருட்டு முதலிய பாவித்தல், சிரித்தல், பாதுகையோடு காணப்போதல், வாகனம் ஏறிச் செல்லல், அவர் தருவதை ஒரு கையால் வாங் குதல், ஒரு கையால் தாம் கொடுத்தல், புறங்காட் டல், பாராமுகமாய் இருத்தல், அவர் பொருட்களை உத்தரவில்லாமல் நாம் பாவித்தல், அவர் நாமத்தை மரியாதையின்றிக் கூறுதல் ஆதியனவாம்.

குரு, சங்கம இயல் 21
7. வணங்கலாகாத காலங்கள் : படுத்திருக்கும்பொழுதும், வழிநடக்கும்பொழுதும், புஷ்பம் எடுக்கும்பொழுதும், குளிக்கும்பொழுதும், அனுட்டானம், பூசை, தியானம், ஓமம், திவசம், உண்ணல், ஆகிய நேரங்களிலும், அரச சபையில் இருக்கும்பொழுதும் வணங்கல் ஆகாது.
8. குரு பூசை செய்தல் : வழிபட்ட குரு உயிரோடிருக் கும்பொழுதும், அல்லது சிவபதம் அடைந்தபொழு தும், குருவுக்குப் பூசைசெய்து வரவேண்டியது முறை யாகும். அவரை அன்றி, சமயாசாரியர்கள், சந்தான சாரியர்கள், கூடுமானுல் அறுபத்து மூன்று நாயன்மார் கள், முதலியோர்க்கும், அவர்கள் சிவபதம் அடைந்த நாட்களில் குருபூசை செய்தல் நன்மை,
தனித்தாயினும் பலர் கூடியாயினும் செய்யவேண்டி யது. குரு பூசைக்கு வரும், அடியார்களைப் பக்தியுடன் அன்ன பானுதிகளால் உபசரிக்கவேண்டும். இயல்பு இல்லா ஆசாரமாயும், போய் இருந்து தம்மாலான திருத் தொண்டு செய்தல் வேண்டும்.
மாகேசுர பூசை
விளக்கம் : கடவுள் இயலில் கூறிய மாகேசுர முகூர்த் தங்கள் எதையாவது ஒன்றை வழிபடுவோர் மாகேசுரராவர். இவர்கள் சமய தீட்சிதர், விசேஷ தீட்சிதர், நிர்வாண தீட் சிதர், ஆசாரிய அபிஷேகர் என்னும் நால்வகைத் தீட்சிதராக இருப்பர். இவ்வகையோரை மாகேசுர மூர்த்தமாய்ப் பூசித்தல் வேண்டும்.
1. பாகஞ்செய்வோர் தகுதி : சைவர்களாய், தீட்சை பெற்றவர்களாய், நித்திய கருமம் நியமம் உடையவர் களாய், சுத்தமுடையவர்களாய், பூசைக்குரிய பொருள் களை, பூசைக்கு முன் புசிக்க நினைத்தலும் செய்யாத வர்களாய் இருக்கவேண்டும். முழு இலக்கணமும்

Page 129
22 சைவ சமய சிந்தாமணி
அமையப் பெருவிட்டாலும், அவசியமாய்க் கருதக் கூடிய, சில இலட்சணங்களாவது இருத்தல் வேண்டும்.
2. பூசைக்குச் சமைக்கலாகாத பதார்த்தங்கள் உள்ளி, வெள்ளுள்ளி; உருண்டைச் சுரைக்காய், கொம்மட்டிக் காய், செம்முருங்கைக்காய். அத்திக்காய், வெண்கத் தரிக்காய், பசளைக் கீரை, வள்ளிக் கிழங்கு, கொவ்வைக் காய் முதலியன.
3. பந்தியிருத்தும் முறை : மாகேசுரராய் வருபவரைக் கண்டவுடன் அஞ்சலி செய்து எதிர்கொண்டு, அழைத்து வந்து, திருவடி விளக்கி, தீர்த்தத்தைச் சிரமேல் தெளித்து, வணங்கிய பின், பந்தியில் முதல் ஆசாரியாபிஷேகம் பெற்றவரும், அடுத்து முறையே நிர்வாண, விசேட, சமய, தீட்சை பெற்றவர்களையும் இருத்தல் வேண்டும்.
தேவாரம் முதலிய திருமுறைகளை ஒத, அன்னம் கறி முதலியவைகளைப் படைத்து, பத்திர புட்பங்களால் அருச் சனை செய்து, தூப, தீபம் கொடுத்து, அவர்கள் எதிரே பூக் களைத் தூவி வணங்கி, ஆசீர்வாதம் பெற்றபின் அமுது செய் வித்தல் வேண்டும். பந்தியின் தலைப்பில் விளக்கேற்றி, பக் கத்தில் வாழையிலையிட்டு, அதிலும் அன்னம் கறி முதலியன படைத்து பூசை செய்தல் வேண்டும். எந்தப் படைப்புடை யாரைக் குறித்து, மாகேசுர பூசை செய்கின்ருேமோ, அவ ருக்கே அந்தப் படைப்பு: மாகேசுர பூசை செய்யும் கர்த்தா அதில் உட்கார்ந்திருந்து சாப்பிடவேண்டும்; மற்றவர்களை யும் அவ்வாறே அவர் நினைக்க வேண்டும்.
4. தட்சணை கொடுத்தல் : திருவமுது செய்து, வாய், கரம் சுத்திசெய்து கொண்டபின், சந்தனம், தாம் பூலாதி வழங்கி, வணங்கி, விபூதி வாங்கித் தரித்துக் கொள்ளல் வேண்டும்; தட்சணை வேண்டிக்கொள்ளும் வழக்கமுடையோருக்கு, அவர்கள் பெற்றுக்கொள்வார் களானல், அது ஈதலும் வேண்டும்.

-குரு, சங்கம இயல் 23
5. அருகர் அல்லாதார் : சிவம், குரு, அடியார், சிவ சாத்திரம், இவைகளை நிந்திப்பவர்கள், சிவத்திரவிய அபகாரிகள், சிவ தீட்சை இல்லாதவர்கள், நித்திய கருமம் விடுத்தவர்கள், பொய்ச் சாட்சி சொல்பவர்கள் ஆகியோர் மாகேசுர பூசைக்கு அருகரல்லர்.
6. பந்தி வஞ்சனை ஆகாது பந்தியில் இருக்கும் எல்லா ரையும், நாம் நினைத்துச் செய்யும் மாகேசுரராகவே, சமமாய்ப் பாவித்தல் முறையாகும்; பதார்த்தங்களை யும் சிலருக்குக் கொடுத்தும் கொடாமலும், வஞ்சனை யாய்ப் பரிமாறல் ஆகாது; பாவம், இவர்கள் அல்லாத கூன், குருடு, ஏழை முதலிய பிறர் வந்தாலும் அவர் களை இன்சொல் கூறி, தனிப் பந்தியாக வைத்து, அன் னங் கொடுத்து மகிழ்விக்கவேண்டும்.
7. அவசியம் செய்யவேண்டிய காலங்கள்: தீக்கை பெற்ற போது, சிவபூசை எழுந்தருளப் பண்ணியபோது, விர தம் அனுட்டிக்கும்போது, உபவாசம் இருந்து பார ணம் பண்ணும்போது, வித்தியாரம்பஞ் செய்யும் போது, தல யாத்திரை புறப்படும்போது, திரும்பி வந்தபோது, கோயிலில் பிரதிட்டை, உற்சவம் நடக் கும்போது, ஆகிய சுபகாலங்களில் செய்யவேண்டும். மாகேசுர பூசையில் சொல்லவேண்டிய தேவாரங்களை யும், ஆசீர்வாதங்களையும், பூசை செய்விப்போர் சொல்லவேண்டியவைகளையும், பூரிலயூரீ ஆறுமுக நாவ லர் அவர்கள் சைவ வினவிடை, கழகச் சைவ விஞ விடை, இரண்டாம் பாகங்களிற் காண்க.
மேற்காட்டிய காலங்களில், சில ஊர்களில், சேகண்டி அடித்து, சங்கூதி, இப்பூசையின் பாவனையாகச் செய்விக்கின் றனர். இவ்வாறு செய்து பூசைகள் முடிப்போரை, சில ஊரவர்கள் ஆண்டிகள் என்கின்றனர்.

Page 130
214 சைவ சமய சிந்தாமணி
விரத இயல்
விளக்கம் : விரதம், நோன்பு, கிழமை என்பன ஒரே பொருள் உடையன. எல்லாச் சமயங்களிலும் விரதங்கள் இருக்கின்றன. சைவ சமயத்தில் அனேக வகையான நோன்புகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒருவர் அனுட்டிக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. மக்கள் பல நிலைகளை உடையவர்கள். அவரவர்கள் பக்தி. வசதி, விருப் பம், பொருள், இடம், காலம், பருவம் முதலியன நோக்கி விரதம் பலவாயின.
விரதங்களைத் திடசித்தமின்றி, பெயருக்கோ, புகழுக்கோ மற்றவர்கள் கட்டாயத்துக்கோ மேற்கொள்ளக்கூடாது. அப்படிக் கொண்டால், தேக இளைப்பு, மனச் சோர்வு, கடவுள் பேரில் வீண்பழி, நோய் முதலிய தீமைகளைச் சம்பா தித்தற்கு ஏதுவாகும். "இயல்பலாதன செயேல்' என் Lugi/ (pg| 6ðMT.
விரதமாவது
மனம் பொறிகளின்வழிப் போகாது, நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும், மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினலும், கடவுளை விதிப்படி மெய்யன்போடு வழிபடுதலாம். நோக்கம் இதிலேயே தெளி வாய்த் தெரிகிறது. ** நோன்பென்பதுவே கொன்று தின் ஞமை' என்பது நீதி வாக்கியம். சைவ சமயத்தின் முதல் விரதம் இதுதான். இவ்விரதம் ஒன்றையே கடைப்பிடித் தாலும் போதும். 'கொல்லான் புலாலை மறுத்தானக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்'. யாதாயினும் பயன் கருதி விரதம் அனுட்டிப்பதை, காமியம் என்றும், பயன் கருதாது அனுட்டிப்பதை நிஷ்காமியம் என்றும் கூறப்படும். என்ன கருத்துடன் அனுட்டித்தாலும், இறைவன், சுமந் தார்களுக்குத் தக்க கூலி கொடுக்காமலே விடான்.

-விரத இயல் 215
பிரயோசனம்
தேக சுத்தி, நோயின்மை, தீர்க்காயுள், மனத்தூய்மை, பாவநீக்கம், நினைத்த காரிய சித்தி, மகிழ்ச்சி, கடவுள் பக்தி, ஆகிய எண்ணிறந்த நன்மைகள் உண்டாகும்.
விரத வகைகள்
சிவ, சத்தி, விநாயக, சுப்பிரமணிய, வைரவ, வீர பத்திர, விஷ்ணு, பிதிரர் முதலிய பல விரதங்களுடன், வேறு விரதங்களும் இருக்கின்றன.
விரதம் அனுட்டிக்கும முறை
விரத தினத்தன்று காலையில் எழுந்து, காலைக் கடன்களை ஒழுங்காய் முடித்துக்கொள்ளல் வேண்டும்; பின் ஸ்நான ஞ் செய்து சுத்த வஸ்திரம் தரித்துக்கொண்டு, தீட்சை பெற் ருேர் அனுட்டானம் செய்துகொண்டு, ஆலய தரிசனம் செய் தல் வேண்டும்; அன்று முழுவதும், திருமுறை ஓதல், புரா ணம் படித்தல், கேட்டல், சிவ தொண்டுகள் செய்தல், சம யப் பிரசங்கங்கள் கேட்டல் முதலிய நற்காரியங்களாலே, சிவப் பொழுதாய்ப் போக்கல் வேண்டும். தாம்பூலம் அருந்தல், சுருட்டு முதலியன பிடித்தல் ஆகாது. விரதங்க ளைச் சங்கற்பித்துக்கொண்டு, ஆரம்பிக்கவேண்டும்; குறித்த காலம் அளவும் கைக்கொள்ளல் நல்லது.
1. உத்தமம் : உபவாசம், உணவு ஒன்றும் அருந்தாது இருப்பது; இயலாவிட்டால், பகல் நீங்கிய பின், சுவாமி தரிசனம் செய்துகொண்டு, இரவில், தீர்த்தம், நீர், பால், இளநீர் முதலிய ஒருவகையான நீரா காரத்தை உட்கொள்ளலாம்.
மத்திமம் : பகற் பொழுதைக் கழித்துத் தரிசனை செய்
தலின், இரவில் ஏதாயினும் ஒருவகைப் பழங்களை அற் பமாய் அருந்தலாம். உத்தமம். மத்திம நிலைகளைக்

Page 131
216
சைவ சமய சிந்தாமணி
கைக்கொள்ளுவோர் விரதத்துக்கு முன்நாள், ஒரு பொழுது உணவும், அன்று இரவு, அற்பமாய் யாதும் ஒரு பலகாரமும் உண்ணலாம்.
. அதமம் : பகற் பொழுது ஒரு நேரமாய், புற்கை
வகைகளில் ஒன்றேனும், பலகார வகைகளில் ஒரு வகை யையேனும், அருந்தலாம். இதுவும் இயலாதவர்கள் ஒரு நேரமாய்ச் சோறு கறி உட்கொள்ளலாம்; இவ் வகையார் விரும்பினல், இரவில் அற்பமாய்ப் பழமே னும், நீரேனும், அருந்தலாம்; சில விரதங்களுக்கு இர வில் யாதும் உண்பது விலக்காகும்; விரதம் என்ருல் சாப்பிடுவதுதான் என்ற கருத்துக்கு இடம் வைக்கக் கூடாது. சுகத்துக்கு அது உகந்ததல்ல. விரதம் முடிந்த அடுத்த நாள் பாரணம் (விரதத்தை இறக்கு தல்) காலை ஐந்து நாழிகைக்குள் செய்வது உத்தமமா கும். பாரணம் பண்ணிய பின் பகலில் நித்திரை கொள்ளல் ஆகாது. அன்று இரவில் யாதும் பலகா ரம் அருந்தலாம்; சோறுண்ணலாகாது. இது உபவா சம் இருந்த விரதங்களுக்கே உரியது.
சிவ விரதங்கள்
,ʻI .
மகா சிவராத்திரி விரதம் : மாசித் தேய்பிறை சதுர்த் தசியில் வருவது.
சோமவாரம் கார்த்திகை மாத முதல் சோமவாரம் (திங்கள்) தொடங்கி அனுட்டிப்பது.
திருவாதிரை : மார்கழி மாதத்தில் திருவாதிரையில்
நடராஜப் பெருமான வேண்டுவது; இதில், களி, பிட்டு, நிவேதனம் வைத்து, அடியார்களுக்கும் நிவேத
னம் பண்ணுதல் வேண்டும்.
பிரதோஷம் : ஒவ்வொரு வளர்பிறை தேய்பிறை
இரண்டிலும், பதின்மூன்ரும் திதியாகிய, திரயோதசி யில் சூரியன் அஸ்தமிக்குமுன், மூன்றே முக்கால் நாழி

-விரத இயல் 217 -ی
கைக்கும், பின் மூன்றே முக்கால் நாழிகைக்கும் இடைப்பட்ட புண்ணிய காலமாம். ஐப்பசி, கார்த் திகை, சித்திரை, வைகாசி மாதங்களில் வருவது சனிப் பிரதோஷமாம். அக்காலம் தொடக்கமாகக் கொள் ளுவது முறையாகும். இவ்விரத காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்வதே முறையாகும். அதை ஆலய தரிசன இயல், சோம சூத்திரப் பிரதட் சனத்தில் காண்க.
5. உமாமகேச்வர விரதம் : கார்த்திகை மாதம் பூரணை யில் அனுட்டிப்பது பகலில் ஒருபோது உணவும், இர வில் பலகாரமும் சாப்பிடலாம்.
6. கலியாண சுந்தர விரதம் : பங்குனி மாதம் உத்திரத் தில் அனுட்டிப்பது பகலில் ஒன்றும் உட்கொள்ளாது, இரவில் பாயசம், பால், பழம் ஏதும் ஒன்று உட்கொள் ளலாம்.
7. கேதார விரதம் : புரட்டாதி வளர்பிறை அட்டமி முதல், அடுத்து வரும் தேய்பிறைச் சதுர்த்தசி வரை இருபத்தொரு நாட்களேனும், அல்லது அம்மாதம் தேய்பிறைப் பிரதமை முதல் சதுர்த்தசி வரை பதி ஞன்கு நாட்களேனும், அல்லது அம்மாதத் தேய்பிறை அட்டமி முதல் சதுர்த்தசி வரையில் ஏழு நாட்களே னும், அல்லது அம்மாதத் தேய்பிறைச் சதுர்த்தசியில் அன்று ஒரு நாளாயினும், ஆகிய நாலு வகையிலும், ஒரு வகை விரதம் அனுட்டிப்பது.
இதில் இருபத்தொரு இழையாலாகிய காப்பை, ஆடவர் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் தரிக்கவேண் டும்; சதுர்த்தசியில் உபவாசமும், மற்ற நாட்களில் ஒருபோ தும் உண்ணலாம். சதுர்த்தசி அன்று, கும்பத்தில் பூசை செய்து, உப்பில்லாமல் பணியாரங்களை நிவேதிக்கவேண் டும்; உபவாசம் இருப்பவர்கள் நிவேதனம் உண்ணலாம்.

Page 132
218 சைவ சமய சிந்தாமணி
8. சூலவிரதம் : தைமாதம் அமாவாசையில் அனுட்டிப் பது; அது, இச்சை, ஞானம், கிரியை வடிவான சத்தி யைக் குறிப்பது; அம்மூன்றும் சிவபெருமானுடைய சத்தி. 9. இடபவிரதம் : வைகாசி மாத வளர்பிறை அட்டமி யில் அனுட்டிப்பது; இடபவாகனருடராகிய சிவனுக் குரியது.
தேவி விரதங்கள்
1. வெள்ளிக்கிழமை : சித்திரை மாத வளர்பிறை, முதல் வெள்ளி தொடங்கி அனுட்டிப்பது பகலில் உணவும், இரவில் பலகாரமும் உண்ணலாம்.
2. ஐப்பசி உத்திரம் : ஐப்பசி உத்திரத்தில் அனுட்டிப் பது பகலில் ஒருபோது உணவு கொள்ளல் வேண்டும்.
3. நவராத்திரி : புரட்டாதி மாதம் வளர்பிறைப் பிர தமை முதல், நவமி முடிய ஒன்பது நாளும், கும்பத் தில் தேவியைப் பூசிப்பது; முதல் எட்டு நாளும் ஒரு போது உணவும், ஒன்பதாம் நாள் உபவாசமும் உத் தமமாகும்.
விநாயகர் விரதங்கள்
1. வெள்ளிக்கிழமை : வைகாசி மாத வளர்பிறை
வெள்ளி தொடக்கம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
அனுட்டிப்பது. உபவாசம் உத்தமம்; இல்லாவிட்டால் பாலாவது, பழமாவது நலம்.
2. விநாயக சதுர்த்தி ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிப்பது; அன்று இரவு சந்திரனைப் பார்க்கலாகாது; மோதகம், கொழுக்கட்டை, எள் ளுருண்டை, வடை முதலிய நிவேதனங்கள் வைக்க லாம். விரதகாரரும் விரதம் முடிந்தபின் உண்ணலாம்.

-விரத இயல்
3.
219
விநாயக சஷ்டி : கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமை முதல், மார்கழி வளர்பிறைச் சஷ்டி முடிய இருபத்தொரு நாள் அனுட்டிப்பது; இதில் இருபத் தொரு இழையாலாகிய காப்பைக் கட்டிக்கொண்டு, முதல் இருபது நாளும் ஒரு போது உணவும் கடைசியில் உபவாசமும் இருப்பது.
சுப்பிரமணிய விரதங்கள்
.
வெள்ளிக்கிழமை : ஐப்பசி முதல் வெள்ளி தொடங்கி, ஒவ்வொரு வெள்ளியும் அனுட்டிப்பது. உபவாசம் உத்தமம்; மூன்று வருடம் விடாமல் கொள்ளல்வேண்
டும்.
. திருக்கார்த்திகை கார்த்திகை மாதம் கார்த்திகை
நட்சத்திரம் தொடங்கி, ஒவவொரு கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரங்களிலும் விரதம் அனுட்டிப் பது; உபவாசம் உத்தமம்; இருபத்தொரு வருடம் அனுட்டிக்கவேண்டியது விதியாகும்.
. கந்தர் சஷ்டி : ஐப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை
முதல், சஷ்டி முடிய ஆறு நாளும் அனுட்டிப்பது; முதல் ஐந்து நாளும் முன் விரதம் அனுட்டிக்கும் முறை என்று சொல்லிய ஏதாயினும் ஒரு முறையைக் கைக்கொள்ளலாம்; சோற்றுணவு விரதத்திற்குகந்த தல்ல. ஆரும் நாள் எல்லா முறையிலும் விரதம் அனுட்டித்தவர்கள் உபவாசம் கட்டாயம் இருக்க வேண்டும். ஆறு வருடங்கள் அனுட்டிக்கவேண்டும். விரும்பியோர் மாதந்தோறும் வரும் வளர்பிறைச் சஷ்டியிலும் அனுட்டிக்கலாம்.
வயிரவ விரதம்
1.
தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கி, ஒவ்வொரு செவ்வாயும் (மங்களவாரம்),

Page 133
220 சைவ சமய சிந்தாமணி
2. சித்திரை மாதப் பரணி நட்சத்திரத்தையும்,
3. ஐப்பசி மாதப் பரணர் நட்சத்திரத்தையும் விரதமாய்
அனுட்டிப்பது.
காபாலம், காளாமுகம் என்னும் மதக்கொள்கை உடை யாரே, வயிரவ வணக்கம் செய்துவந்தனர்; அது மிகப் பயங் கரமான வழிபாடு; தற்காலம் அது அழிந்து போயிற்று. காவற் கடவுளாகவே, சிலர் தற்காலம் வயிரவமூர்த்தியை வழிபட்டு வருகின்றனர்.
வீரபத்திர விரதம்
மங்களவாரமாகிய செவ்வாய்க்கிழமையை ஒவ்வொரு வாரமும் அனுட்டிப்பது.
விஷ்ணு விரதங்கள்
1. ஏகாதசி விரதம் : மாதந்தோறும் பூர்வ பட்சத்தில்
வரும் ஏகாதசியை அனுட்டிப்பது.
2. வைகுண்ட ஏகாதசி : மார்கழி மாதம் பூர்வ பட்சத் தில் வரும் ஏகாதசியை அனுட்டிப்பது; இது சுவர்க்க வாயில் ஏகாதசி எனவும் பெயர் பெறும் .
3. குரீராமநவமி பங்குனி மாதப் பூர்வ பட்ச நவமியை
அனுட்டிப்பது.
4. பூநி கிருஷ்ண ஜயந்தி : ஆவணி மாதம் அமர பட்சத்
தில் அட்டமியை அனுட்டிப்பது.
ஏகாதசி விரதத்துக்கு உத்தமம் உபவாசம் இல்லாவிட் டால், இரவில் பலகாரம் உண்ணலாம்; அன்னம் உதவாது; மற்றை விரதங்களுக்கு ஒருபோது பகலில் அன்னம் உண்ண லாம்.

-விரத இயல் 221
பிதிர் விரதங்கள்
1. சிராத்தம் வருடந்தோறும், தந்தை, தாயார் இறந்த மாதம், பட்சம், திதி, வரும் நாட்களில், விரதம் இருந்து, ஐயர் மூலமாய், எட்டுவித சிராத்தம் செய்து, எள்ளும் தண்ணிரும் இறைத்து, அனுட்டிப்பது; இதை ஆட்டைத் திவசம் , திதி, என்றும் அழைப்பர்.
2. மகாளயம் ; புரட்டாதி மாத, அமர பட்சத்தில் இறந்த திதியில், அல்லது அப்பட்சத்துள் அனுட்டிப் டது.
3. அமாவாசை பிதிர் விரதம், தகப்பன் இறந்தவர்கள்
மாதந்தோறும் அமாவாசையை அனுட்டிப்பது.
4. பூரனை ; இது சந்தான விரதம்; தாயார் இறந்தவர் கள் மாதந்தோறும் பூரணையை அனுட்டிப்பது. பிதிர் விரத காலங்களில் கட்டாயம் பகல் ஒருபொழுது" உணவு உட்கொள்ளல் வேண்டும். இதன் விளக்கம்
கிரியை இயல் அபரக் கிரியையில் கூறினுேம்,
" தம்பொருளென்ப தம்மக்கள் அவர் பொருள்
தந்தம் வினையால் வரும் "
* நன்றி மறவேல் ‘’ கருத்தை அறிக.
உத்தியாபனம்
குறிக்கப்பட்ட ஏதும் ஒரு விரதத்தை ஒரு கால எல்லை வரையும், அனுட்டிப்பதாய்ச் சங்கற்பம் (நிட்சயம்) செய்து கொண்டவர்கள், அக்கால எல்லையின் முடிவில் உத்தியா பனம் செய்துகொள்ளுதல் வேண்டும். உத்தியாபனம்= விர தத்தை நிறுத்துதல்; இது செய்தாலே பூரண விரத பலன் உண்டாகும்; விரும்பினுல் மீட்டும் அவ்விரதத்தை அனுட் டிக்கலாம் .

Page 134
222 சைவ சமய சிந்தாமணி
அனுட்டிக்கமுடியாத பிரதான காரணங்கள் இருந்தால், அக்காரணங்கள் இறைவனுக்கு நன்கு தெரியும். அதனுல் கவலையும், மனவருத்தமும் கொள்ளவேண்டியதில்லை. அவ் வளவுக்கும் உரிய பலனையும் கொடுப்பார். அலட்சியமாய் விட்டவர்கள் இப்படிக் காத்திருக்க நியாயம் இல்லை. பிதிர் விரதங்களுக்கு உத்தியாபனம் இல்லை.
ஆடி மாதம் வரும் ட செவ்வாய்கள் ஆவணி மாதம் வரும் - ஞாயிறுகள் ! புரட்டாதி மாதம் வரும் - சனிகள் விரதமாய், அனுட்டிக்கின் ஐப்பசி மாதம் வரும் - வெள்ளிகள் றனர்.
இவைகளையும் சைவமக்கள்
سس سحسسسسسسسسسسسسست.

--திருமுறைப் பிரார்த்தனை இயல் 223
திருமுறைப் பிரார்த்தனை இயல்
தேவாரம்
1. பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
2. நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன் அடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே.
3. காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி
ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத ஞமம் நமச்சி வாயவே.
4. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே.
5. அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனுர்க்கு எல்லை இல்லதோர் அடிமைபூண் டேனுக்கே.
6. எங்கே னும்இருந்துன் அடியேனுனை நினைந்தால் அங்கே வந்தென்னேடும் உடனுகி நின்றருளி இங்கே யென்வினையை அறுத்திட் டெனயாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

Page 135
224
சைவ சமய சிந்தாமணி
O.
1.
2.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயன்
திருநீறே.
. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொன்னர் மேனியனே புலித்தோலை யரைக்
கசைத்து மின்னர் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை
அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான் மற வாதேநினைக் கின்றேன் மனத் துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேன் என லாமே.
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்
மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்
கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த
வருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்
உன்னுமம் என்னுவில் மறந்தறியேன்

-திருமுறைப் பிரார்த்தனை இயல் --- 225
13.
4.
5.
16,
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேனடி யேன தி கைக்கெடில
வீரட்டா னத்துறை யம்மானே.
மற்றுப்பற்றெனக் கின்றிநின்திருப் பாதமே மனம்
பாவித்தேன் பெற்றலும்பிறந் தேனினிப்பிற வாததன்மைவந்
தெய்தினேன் கற்றவர்தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக்
கொடுமுடி நற்றவாவுனை நான்மறக்கினும் சொல்லுநா
நமச்சிவாயவே.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி
யென் மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா
திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த
தீவண்ணனே.
என்னபுண்ணியஞ் செய்தனைநெஞ்சமே யிருங்கடல்
வையத்து முன்னைநீபுரி நல்வினைபயனிடை முழுமணித்
தரளங்கள் மன்னுகாவிரி சூழத்திருவலஞ்சுழி வாணனை
6jfi LuftJ IJ
பன்னியாதரித் தேத்தியும்பாடியும் வழிபடுமதஞலே.
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவழம்போல் மேனியிற் பால்
வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்
பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே .

Page 136
226
7.
8.
9.
2●。
சைவ சமய சிந்தாமணி
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
அப்பன் நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
யிறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
திருவேயென் செல்வமே தேனே வானேர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலரு நில்லே.

--திருமுறைப் பிரார்த்தனை இயல் 227
2 1 .
22.
எல்லா வுலகமு மானுய் நீயே
யேகம்பம் மேவி யிருந்தர்ய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்ருய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
திருவாசகம் மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை
• யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி யுள்ளம் பொய்தான் தவிர்ந் துன்னைப்போற்றி சயசய
போற்றியென்னுங் கைதான் நெகிழ விடேனுடையா யென்னைக்
கண்டுகொள்ளே .
23.
24.
கடையவ னேனைக் கருணையி னற்கலந் தாண்டு
கொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய் விறல்
வேங்கையின்தோல் உடையவ னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத்
தாங்கிக்கொள்னே
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் நீற்ருய்
பங்கயத் தயனும்மா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்த மேவியகீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே

Page 137
228
25.
26.
27.
28
சைவ சமய சிந்தாமணி
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபத மளித்த
செல்வமே சிவ பெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே. பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ
பாவியே னுடைய ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா
ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர் பளிங்கின் திரன்மணிக் குன்றே
சித்தத்துட் தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் ணுடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன் செய் அம்பலத் தரசே ஏறணி கொடியெம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே.

-திருமுறைப் பிரார்த்தனை இயல் 229
29. கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
30.
31.
32.
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந் தனவே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட
வீந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய
தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே
யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு
கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கண் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம் புகுந் தண்டங் கடந்த பொருளள வில்லதோ ரானந்த
வெள்ளப் பொருள் பண்டு மின்றுமென்று முள்ளபொரு ளென்றே
பல்லாண்டு கூறுதுமே
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
w தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர் சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேரு விடங்கன் விடைப்
tiss
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே .

Page 138
23O
சைவ சமய சிங்தாமணி
33.
34.
、5.
36.
திருப்புராணம்
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
அண்ணலே யென யாண்டு கொண்டருளிய வமுதே விண்ணிலே மறைந் தருள்புரி வேத நாயகனே கண்ணினுற் திருக் கைலையி லிருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள் புரியெனப்
பணிந்தார்.
தண்ணளி வெண் குடைவேந்தன் செயல் கண்டு
தரியாது மண்ணவர் கண்மழை பொழிந்தார் விண்ணவர்
பூமழை பொழிந்தார் அண்ண லவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடை
மேல்,
விண்ணவர்கள் தொழ நின்ருன் வீதி விடங்கப்
பெருமான் .
உமாதேவியார்
சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி கரும் புருவச் சிலை போற்றி
கவுணியர்க்குப் பால்சுரந்த கலசம்போற்றி இரும்பு மனம் குழைத் தென்னை
எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி அரும்பு மிள நகை போற்றி
ஆரண நூபுரஞ் சிலம்பும் அடிகள்போற்றி

திருமுறைப் பிரார்த்தனை இயல் 231
37.
38.
39.
40,
4.
அலகிலாக் கருணை யென்னும் அந்தளி ரீன்று
N தொல்லை உலகெலாம் பூத்துக் கங்கை யுவட்டெடுத் தொழுகுஞ்
GଣFଡୀ மலையினிற் படர்ந்த பச்சை மரகதக் கொடியை
ஞானக் கலையமு தொழுகு தீஞ்சொற் கணியினைக் கருத்துள்
வைப்பாம்.
விநாயகர்
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
வானுலகு மண்ணுலகு வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞான மத மைந்துகர மூன்றுவிழி நால்வாய் யானைமுக னைப்பரவி யஞ்சலி செய்கிற்பாம்.
உள்ளமெனுங் கூடத்திலூக்கமெனுந் தறிநிறுவி
உறுதியாகத் தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
யிடைபடுத்தித் தறுகட்பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு
கருணையென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து
வருவினைகள் தீர்ப்பாம். முருகப் பெருமான் புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி
மேலாம் நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையு மடியனுக்கி யிருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கள்
போற்றி.

Page 139
232
-சைவ சமய சிந்தாமணி
每2。
43。
44.
45.
46,
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணையாறுமுகப் பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே
போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே
போற்றி.
நண்ணினர்க் கினியா யோலம் ஞான நாயகனே
யோலம் பண்ணவர்க் கிறையே ( யாலம் பரஞ்சுட ருருவே
யோலம் எண்ணுதற் கரியா யோலம் யாவையும் படைத்தா
யோலம் கண்ணுதற் பெருமா நல்கும் கடவுளே யோல
மோலம்.
வயிரவ மூர்த்தி பரமனை மதித்திடாப் பங்கை யாசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியு மகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
வீரபத்திரக் கடவுள் அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும் முடிந்திட வெருவியே முனிவர் வேதியர் உடைந்திட மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம்.
இலக்குமிதேவி செங்கமலப் பொலந்தாதிற் திகழ்ந்தொளிரு
மெழில்மேனித் திருவே வேலை யங்கணுலகிருள் துரக்கு மலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க் கூட்டும் பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் எங்குளேநீ யவணன்ருே மல்லல்வளம்
சிறந்தோங்கி யிருப்ப தம்மா.

-திருமுறைப் பிரர்ர்த்தனை இயல் 233
வாணிதேவி
47. பழுதகன்ற நால்வகைச் சொன்மல ரெடுத்துப்
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகி யணிபெற
முக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரிச் சுரும்புந் தேனும்
கொழுதகன்ற வெண்தோட்டு முண்டகத்தாளடி
முடிமேற் கொண்டு வாழ்வாம்.
சண்டேசுரர்
48. பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த புனிதற் கமைக்கும் பொருளன்றி மின்னுங் கலனடைகள் பிறவும்வேறு தனக்கென்
றமையாமே மன்னுந் தலைவன் பூசனையில் மல்கும் பயனை
யடியார்கள் துன்னும்படி பூசனை கொள்ளும் தூயோனடித்
தாமரை தொழுவாம்.
திருப்புகழ்
49. இருவினையின் மதிமயங்கித் திரியாதே யெழுநரகிலுழலு நெஞ்சத் தலையாதே பரமகுரு வருள்நினைந்திட் டுனர்வாலே
பரவுதரிசனையை யென்றற் கருள்வாயே தெரிதமிழை உதவுசங்கப் புலவோனே சிவனருளுமுருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியுமன்பர்க் Q356fGuri Geor கனகசபை மருவுகந்தப் பெருமாளே.
30

Page 140
234 சைவ சமய சிந்தாமணி
*0. அபசார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநான் நினைந்தருள் பெறுவேனே இபமாமுகன் தனக் கிளையோனே இமவான் மடந்தையுத் தமிபாலா செபமாலை தந்தசற் குருநாதா திருவாவினன் குடிப் பெருமாளே.
மேற்காட்டியவைகளைப் போல் பலவற்றை திருமுறை களிலும், அறிந்தவர்களிடமும் இருந்து, கற்றுக்கொள்ள வும். பெம்மானை அடிக்கடி வாழ்துவீராக.
ബത്തബ്മrmബത്ത

-பிரார்த்தனை 235
பிரார்த்தனை
தனித்தேனும் கூடியிருந்தேனும், இறைவனை ஒவ்வொரு வரும் சிறிது நேரம் கண்ணை மூடி வேண்டுதல் மிகுந்த பயனைக் கொடுக்கும்.
கோயில்களில், மடங்களில், வெளியான இடங்களில் பலர் கூடியிருந்து, கூட்டுப் பிரார்த்தனைகள் இந்தக் காலம் நடத்துகின்றனர். இதைச் செய்தே மகாத்மா காந்தி யடிகள், பெரிய காரியங்களைச் சாதித்துப் போயினர்.
இது இறைவனேடு நம்மை இணைக்கும் பொற் சங்கிலி போ ன் ற தென் பர், திருப்பெருந்திரு, குன்றக்குடி
அடிகளார்.
கிறிஸ்தவ சமயத்தவர்கள் செபம் பண்ணுவதை நம் மவர் நன்கு அறிவர். ஆகையால், வீட்டில் ஒவ்வொரு வரும், தனித்து மாத்திரமல்ல, குடும்பத்தார் யாவரும் ஒருங்கு சேர்ந்து, கூடியிருந்து, ஒரு குறித்த நேரத்தை ஒழுங்குசெய்து, ஒரு இடத்தில் அமைதியாய் இருந்து, பின் மாதிரிக்குக் காட்டியனவற்றில் ஒன்றையோ, அல்லது, அது போன்ற ஒன்றை உண்டாக்கியோ தினமும் பிரார்த்தனை செய்துவரவும்.
தீய எண்ணங்கள், வீண் ஆசைகள் உண்டாகா. பொறிகள், புலன்கள், கரணங்கள் யாவும், இறைவனில் ஒருப்பட்டு, அன்பும், நல்வாழ்வும், புத்துணர்ச்சியும், புதுப் பலமும். பிற நன்மைகளும் உண்டாகும். பின்வருவன பெரியோர்களால் வெளியிடப்பட்டன.

Page 141
236 சைவ சமய சிந்தாமணி
பிரார்த்தனை (1)
நீ உன்னைச் சரணம் அடைந்தவர்களுக்கு மரணத்தைப் போக்குவாய்; நீ இயல்பாயுள்ள பேரானந்த வடிவு பெற் றுள்ளன; நீ உனது அன்பர்களிடத்து, நேசம் உடையாய்; உலகத்துக்குத் தந்தையும் தாயும் நீயே.
உன்னைப் புகலாகக் கொண்டவர்களுடைய துயரத்தை அழிப்பதில் நித்தியமாக ஈடுபட்டுள்ளவனே. தீனர்கட்குக் கருணைக் கடலானவனே நினக்கு வணக்கம்.
இறைவா! நீ இரண்டற்ற ஏகப் பிரம்மமாவாய் நீயே அனைத்தும்; நீயே மெய்ப் பொருள்; நின்னையன்றி வேறென் றும் இல்லை என்பதும் மெய்யே.
துயர் களைவோனே! நிலையாக யாண்டும் வாழ்பவன் நின்னை அன்றி, வேருென்றும் இல்லை என்பதும் உண்மையே.
பரம நாதனே! ஆதலால், நின்னையே சரண் என அடைந்தேன்.
திருச் சிற்றம்பலம்.
ஓம் தத் சத்
பிரார்த்தனை ( 11)
அருட் பெருஞ் சோதீ! தனிப் பெரும் பொருளே! அடி
யாருக்கு அருளும் ஆனந்தத் தேவே! உன் அடிமலர் இணை கட்கு அடைக்கலம் அடைக்கலம்.
உனது அண்டப் படைப்பில், அடிமையின் நிலைமை அணுவிலும் அணுவென அறைதலும் அதிகமே. ஆயினும் எமை நீ, அன்னையைப்போல, அன்புடன் பேணி, அருள் புரிகின்றன.

-பிரார்த்தனை 237
இன்னமும் எங்கள்தம் இருவினை நீக்கி, இன்னருள் புரிந்து, நன் நயம் பெருகும் நலம் பல தருவாய்.
முத்தியளித்திடும் முதல்வா ! எம்தம் சித்தம் திருத்தி, சீர்பெறச் செய்வாய். தீய செயல்கள், யாம் சிறிதளவும் செய்யாதிருக்கத் திருவருள் புரிவாய்.
பிறப் பென்னும் பெரு நோய் பிடித்திடாது, எமக்குச் சிறப்புடன் முத்தி சீருடன் அருளே.
திருச் சிற்றம்பலம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
நமப் பார்வதி பதயே - அர அர மகாதேவா. கோவிந்த நாம சங்கீர்த்தனம். கோவிந்தா, கோவிந்தா. சிற்ச பேசா - சிவ சிதம்பரம். தென் நாடுடைய சிவனே போற்றி-எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்யக் குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவந்தி விளங்குக உலகம் எல்லாம்.
சிவன் சேவடி போற்றி,
முற்றிற்று.

Page 142
238 சைவ சமய சிந்தாமணி
நல் வாழ்வுக்கு வழிகள்
உடல், உடை, உணவு சுத்தமாய் இருத்தல் வேண்டும் , மது, சூது முதலிய தீமைகளை நீக்கல் வேண்டும். உள்ளத்தில் தீய எண்ணங்களுக்கு இடம் அளிக்காது இருக்கவேண்டும்.
அன்பு, அருள், இரக்கம், உயிர்களிடம் இருக்க வேண்டும்.
உயர்ந்த நல்ல எண்ணங்களையே எண்ணல் வேண்டும்.
கடவுளிடத்து நம்பிக்கை வைக்க வேண்டும்.
தெய்வ பக்திக்குரிய நூல்களையே கற்க, கேட்க, வேண்டும்.
சமய ஆசாரங்களைக் கைக்கொள்ள வேண்டும். தீட்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாட்சர செபம் செய்தல் வேண்டும்.
ஆலய தரிசனம் வாய்க்கும் போதெல்லாம் செய்ய வேண்டும்.
பக்தர்கள், சிவனடியார்களைச் சிவ மா க க் கருதல் வேண்டும்.
பெரியோர்களுக்கு வணக்கம் செய்தல் வேண்டும். பெரியோர்களைச் சார்ந்து ஒழுகல் வேண்டும். இயன்ற அளவு சிவதொண்டுகள் செய்தல் வேண்டும் ,

-கல் வாழ்வுக்கு வழிகள் 239
சிறிது நேரமாவது தினமும் தனித்திருந்து கடவுளைத் தியானம் செய்ய வேண்டும்.
கூட்டுப் பிரார்த்தனை வீட்டிலோ கோயிலிலோ, செய்தல், செய்யும் இடங்களில், கலந்து கொள்ளல்
வேண்டும்.
சன்மார்க்கத்திற்குரிய சமய போதனைகள் கேட்க வேண்டும்.
சோம்பலும் சோர்வும் இன்றி உழைக்க வேண்டும்.
அறவழியில் நின்றும் வழுவாதிருத்தல் வேண்டும்.
தம்மைச் சார்ந்தவர்களையும், பிறரையும் இயன்ற அளவு ஆதரிக்க வேண்டும்.
துன்பங்களைச் சகித்துக்கொள்ளல் வேண்டும்.
விருப்பு, வெறுப்பு அற்று இருக்கவேண்டும்.
எல்லாம் இறைவன் திருவுளப்படி நடக்கின்றன என்று உறுதி கொள்ளல் வேண்டும்.
சைவத்தின் மேல் சமயம் இல்லை. சிவத்தின் மேல் தெய்வம் இல்லை. வாழ்க! மக்கள்.
ര്യക്ത

Page 143
240 சைவ சமய சிங்தாமணி
ஆக்கியோன் எழுதிய நூல்கள்
ma
சைவக் களஞ்சியம்
1ம் பாகம் சைவ சமய பாலர் போதினி 11ம் பாகம் சைவ சமய இளைஞர் போதினி
111 ம் பாகம் இந்து மாணவர் பக்திப் பாடற்
Lint LDødsflupnt &a
IVம் பாகம் இந்து சமய மாதங்களின் மகத்துவ
மான்மியம்
V ம் பாகம் சைவ இலக்கியக் கதா மஞ்சரி V1ம் பாகம் சைவ சமய சிந்தாமணி (இந்நூல்) VIம் பாகம் சித்தாந்த சிரோன்மணி
1ம் பகுதி-அகிலாண்ட புவன விளக்கம் அல்லது எங்கள் பூமி சாஸ்திரம் 2ம் பகுதி--ஞானத் திறவுகோல் அல்லது
அளவை இலக்கணம் 3ம் பகுதி-நாம் என்ன சமயம்? என்ன
கொள்கை?
இது மட்டக்களப்பு, இந்து பரிபாலன சபையாரால்
வெளியிடப்பட்டது.

பக்கம்
14
18
27
56
77
78
84
33
64
84
189
197
225
228
234
வரி
26
26
15
18
13
18
I
I9
6
15
I 6
I
பிழை திருத்தம்
பிழை ன் ஆமாவின் பாதத்தைத் கூறுதற்காம் சணுதர் தவந்
முறைகள்
பஞ்சராத்திரி காலகண்டம்
பாவர்
என்பது ஆசரியனல் பேரில்லாத சூழத்திரு திரன்மணிக் வாழ்துவீராக
திருத்தம் ஆன்மாவின் பாகத்தைத் கூருதற்காம் சஞதனர் தலந்
கிரியை முறைகள் பஞ்சாராத்திரி காளகண்டம்
பாலர்
என்பன
ஆசாரியனல் பேறில்லாத சூழ்திரு
திரண்மணிக்
வாழ்த்துவீராக

Page 144