கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும்

Page 1
வெளியீடு
 
 
 
 
 
 
 
 

iaЈПBIJI
ಜೀಣಾ
貂

Page 2


Page 3

இந்து கலாசாரம்
கோயில்களும் சிற்பங்களும்
பதிப்பாசிரியர்:
பேராசிரியர் சி. பத்மநாதன்
வெளியீடு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு - 4 2OO1

Page 4
நூற்பதிப்புத் தரவுகள்
நூல்
பதிப்பாசிரியர்
முதற் பதிப்பு பதிப்புரிமை பிரதிகள்
அளவு
அச்சு
பக்கங்கள்
கடதாசி
வெளியீடு
அச்சுப்பதிப்பு
விலை
இந்து கலாசாரம் - கோயில்களும் சிற்பங்களும்
(2000ம் ஆண்டு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்துசமய ஆய்வரங்கிற் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு)
பேராசிரியர் சி. பத்மநாதன் B.A. (Cey)
Ph.D (London) LFIBA வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்.
டிசம்பர், 2001
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
80 கிராம்
வெள்ளை அச்சுத்தாள்
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
248 1/1, காலி வீதி
கொழும்பு 04. யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட், 48 பீ, புளூமெண்டால் வீதி,
கொழும்பு 13.
ரூபா 500

HIND CCTORE
Temple Art ond Architecture
Editor : S. Pathmanathan B. A., Ph.D. (London) LFIBA
Publisher
The Dept. of Hindu Religious & Cultural Affairs
Colombo
2001

Page 5
BIBLOGRAPHICAL DATA
Title
Author
First Edition
Copy right
No. of copies
Size
Printing
Paper
No. of. pages
Puhlished by
Printed at
Price
Hindu Culture
Temple Art and Architecture
S. Pathmanathan B. A. (Ceylon) Ph. D. (London) LFIBA Professor of History University of Peradeniya
December 2001
The Dept. of Hindu Religious & Cultural Affairs
1000
1/8
Offset
80gm. White Print
The Dept. of Hindu Religious & Cultural Affairs
Ministry of Hindu Religious Affairs 248 l/1, Galle Road, Colombo - 04
Unie Arts (Pvt) Ltd.
48 B, Bloemendhal Road, Colombo - 13
RS. 500/-
iv

பாராட்டுரை
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம்பத்மநாதன் அவர்களின் அயரா முயற்சியினால் தயாரிக்கப்பெற்று, எனது அமைச்சின், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள இந்து கலாசாரம்: கோவில்களும் சிற்பங்களும் என்ற நூல் இந்து கலாசார ஆராய்ச்சிக்கொரு புதிய பரிமாணமாக விளங்குகின்றது.
மனித நாகரீகத்தில் இந்து மதம் வரலாற்றுக்கு முற்பட்ட பழம் பெரும் மதமாகும். நமது ஆலயங்கள் மனித விழுமியங்களை எடுத்துக்காட்டும் பளிங்குக் கண்ணாடிகள். பாரத தேசத்தின் பல பாகங்களிலும் அரசு செலுத்திய மன்னர்கள் பக்தியை வளர்க்கும் பாங்குடன் கலையம்சங்கள் நிறைந்த சிற்பங்களை ஆலயங்களில் வடிவமைத்தனர். இதனால் இந்து
ஆலயங்கள் என்றும் கலைக்கூடங்களாகக் காட்சி தருகின்றன.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2000ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்து மத ஆய்வரங்கின் பொழுது படிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் அறிஞர்களும், இலங்கை அறிஞர்களும் ஆய்வரங்கில் கலந்து கொண்டு வாசித்த ஆய்வுக் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆய்வரங்கை நெறிப்படுத்திய பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் கட்டுரைகள் அனைத்தையும் துல்லியமாகப் பார்வையிட்டு வேண்டிய திருத்தங்கள், பிற்சேர்க்கைகள் என்பவற்றை மேற்கொண்டு, இந் நூல் மூலம் மிகச் சிறந்ததொரு ஆவணத்தைத் தயாரித்துள்ளார். ஆராய்ச்சிக் கட்டுரைகளை முழுமைப்படுத்துவதற்காகப் பல்வேறு சான்றுகளையும் தேடி, இந்தியாவின் பல

Page 6
viii
வெளியீட்டுரை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வுப் பிரிவின் வெளியீடாக "இந்து கலாசாரம் - கோயில்களும், சிற்பங்களும்” எனும் நூல் வெளியிட்டு வைக்கப்படுகின்றது.
இந்நூலில் கோயில்கள், சிற்பங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை திணைக்களத்தினால் 2000 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட இந்துசமய ஆய்வரங்கின்போது சமர்ப்பிக்கப்பட்டவைகளாகும்.
திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில், இவ்வாய்வரங்கினை பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் சிறப்பாக நெறிப்படுத்தினார். கோயிற்கலைகள் தொடர்பான பல்வேறு காலகட்டத்து அம்சங்களையும் தமிழக, இலங்கை அறிஞர்கள் ஆய்வுசெய்து கட்டுரைகள் சமர்ப்பித்தனர். ஒவ்வொரு தலைப்பிற்குமேற்ப இக்கட்டுரைகள், மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளன. நூலை மேலும் கனமுள்ளதாக்கும் வகையில், பேராசிரியர் அவர்கள் அவசியமான திருத்தங்களைச் செய்துள்ளதோடு முக்கியமான செய்திகளையும் இணைத்துக் கொண்டுள்ளார். மேலும், கட்டுரைகளுக்குப் பொருத்தமான வண்ணப் படங்களையும் பேராசிரியர் அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தேடித்தந்துள்ளமை நூலின் பெறுமதியை இன்னுங் கூட்டுகின்றது.
இவ்வேளை, இக்கருத்தரங்கில் கட்டுரைகள் சமர்ப்பித்த ஆய்வாளர்கள் அனைவருக்கும், ஆய்வரங்கை நெறிப்படுத்தியதோடு, ஆய்வுக் கட்டுரைகளையும் தொகுத்துத் தந்த பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
இந்நூலின் பதிப்புப்பணியில் முன்னின்று உதவிய திணைக்கள ஆய்வுப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. க. இரகுபரன், திணைக்களத் தகவல் உத்தியோகத்தர் திரு. ம. சண்முகநாதன் ஆகியோருக்கும் நன்றி சுறக் கடமைப்பட்டுள்ளேன். நூலை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய யூனி ஆர்ட்ஸ் அச்சக உரிமையாளர், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
கோயிற் கலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இந்நூல் சிறந்த பொக்கிஷமாக அமையும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
248 1/1, காலி வீதி, சாந்தி நாவுக்கரசன் கொழும்பு 04 பணிப்பாளர் ,
இந்துசமய கலாசாரஅலுவல்கள் திணைக்களம்.
vË

கோயில்களும் சிற்பங்களும் என்னும் இந்நூல் இந்து சமய கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்படும் இந்து கலாசாரம் என்னுந் தொகுதியின் முதலாம் பாகமாகும். அத்தொகுதியின் இரண்டாம் பாகமான நடனங்களும் ஒவியங்களும் என்னும் நூலும் மிக விரைவிலே வெளிவரும். இந்நூல்கள் இரண்டும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நுண்கலைக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியிற் பயிலும் மாணவர்களதும் போதனாசிரியர்களதும் தேவைகளைக் குறிப்பாகக் கருத்திற் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளன.
கோயில்களும் சிற்பங்களும் என்னும் இந்நூல் ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கிய பதினேழு கட்டுரைகளிற் பத்துக் கட்டுரைகள் கோயிற் கட்டிடக் கலை பற்றியவை. எல்லோரா பற்றிய கட்டுரையிற் குடைவரைக் கோயில்கள், மலைதளி என்பன பற்றிய விவரங்களும் அவற்றிற் காணப்படும் சிற்பங்களைப் பற்றிய வர்ணனைகளும் அடங்கியுள்ளன. ஏனைய ஆறு
கட்டுரைகளும் கோயிற் சிற்பங்களைப் பற்றியனவாகும்.
கோயிற் கட்டிடங்களைப் பற்றியும் சிற்பங்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன. அவற்றிற் சில ஆராய்ச்சி பூர்வமானவை; அவை வித்துவப்புலமை மிக்கவர்களால் எழுதப்பட்டவை. அவை பெரும்பாலும் ஆங்கில மொழியில் உள்ளன. இப்பொழுது தமிழிலும் சிலர் எழுதத் தொடங்கியுள்ளனர். ஆயினும், கோயில்களின் கட்டுமானங்களைப் பற்றிய விவரங்களையும் சிறப்புகளையும் காலவரையறையின் அடிப்படையிலே வகுத்துத் தமிழ் மொழியிலே ஓரளவு விரிவாகவும் தொளிவாகவும் விளக்கும் நூல்களில் இதுவே முதலானது. நாகர, வேஸர, திராவிட கலைப்பாணிகளில் அமைந்த கோயில்களைப் பற்றிய

Page 7
v
பாகங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுக் கட்டுரைகளுடன் தொடர்புடைய வர்ணப்படங்களையும் தேடிப்பெற்று, நூலுடன் இணைத்துள்ளமை அவரின்
தகைமைக்குச் சான்றாக விளங்குகின்றது.
இந்து கலாசாரம்: கோவில்களும் சிற்பங்களும் என்னும் இந் நூல் இந்து ஆலயங்களுக்கும் சிற்ப கலைகளுக்குமுள்ள தொடர்பையும் இந்து சமய பண்பாட்டின் முக்கியத்துவத்தையும் அதிநுட்பமாக ஆராய்ந்து நிற்கின்றது. பல்கலைக்கழகக் கல்வி வரை இந்து EFLOU கலாசாரத்தை ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கும், இவை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. பேராசிரியர் பத்மநாதன் அவர்களை அறிய வாய்ப்புக் கிடைத்தபொழுது வரலாற்றுத்துறையிலும் இந்து கலாசாரத்துறையிலும் அவருக்கிருந்த புலமையையும், பற்றையும் அறிந்து நான் வியப்புற்றேன். யாழ்ப்பாண இராச்சியம் என்றதொரு அரிய வரலாற்று நூல் உட்பட அவரின் ஆக்கங்கள் ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் இந்து நாகரீகத் துறை மாணவர்களுக்கும் அரும் பொக்கிஷமாகக் காலத்தினால் அழியாது நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரின் பணிக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள், நல்லாசிகள்; நன்றிகள்.
இந்நூல் வெளியிடும் பணியை நிறைவேற்றுவதற்கு, பேராசிரியருக்கு பக்கபலமாக நின்றுழைத்த இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் மற்றும்
அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
ܬܐ ܠܶܗܶ ܗܒܝ ܘܪܶܗ ܓ݁ܶܢ̄ܬ̇ܝܼܢ ܟ݂ தியாகராசா மகேஸ்வரன் 248 2/1 காலி வீதி இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் கொழும்பு-04

wii
வாழ்த்துரை
AfPo5 சமூகத்தின் கலை, கலாசார பண்பாடு போன்ற மேம்பாடுகளை உணர்ந்து கொள்வதற்கு அச்சமூகம் சார்ந்த வரலாற்றுத் தரவுகளை அறிந்து கொள்வது மிகவும் பயனுடையதாகும்.
இந்து கலாசாரம் தொன்மை வாய்ந்ததொன்று. ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற சிந்துவெளி நாகரிகத் தொன்மைகள் மூலம் இவற்றை உணர்ந்து கொள்ளலாம். பண்டைய தமிழ்நாட்டு அரசுகளின் கலைப்பாணிகளையும் வரலாறுகளையும் நாம் முதலில் தெளிந்து கொள்ளவேண்டும்.
அத்தெளிவை வெளிக்கொணருவதில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் பதிப்பில் உருவாகியுள்ள இந்து கலாசாரம் மிகவும் பயன்பாடு மிக்க நூலாக அமைந்துள்ளது எனக் கூறலாம்.
2000 ஆண்டில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நுண்கலை வளர்ச்சி எனும் கருப்பொருளில் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் திருத்தம் செய்யப்பட்டும், புதிதாக எழுதப்பட்டும் உள்ளடக்கப்பட்டு சிறப்பு நூலாக இந்நூல் வெளிவருகின்றது.
பல்லவர், சோழ, நாயக்கர், விஜயநகர காலத்து கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பன பற்றி மிகவும் தெளிவான முறையில் எழுதப்பட்டுள்ளதுடன் அழகிய புகைப்படங்களையும் தாங்கி நிற்பது நூலின் சிறப்பம்சமாகும். உயர்வகுப்பில் கல்வி பயிலும் அனைத்து மாணவருக்கும் பயன்படக்கூடிய சிறந்ததொரு வரலாற்றுப் பொக்கிஷமாக வெளிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளில் இந்நூற்பதிப்பு மிகவும் காத்திரமானது என்பதைத் தெளிவுபடுத்தி நிற்கின்றது.
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் மிகவும் பொறுமையுடன் இப்பணியை மேற்கொண்டுள்ளார். அவரை நான் மனதாரப் பாராட்டுகின்றேன்.
ஆய்வரங்கில் கட்டுரைகளைப் படித்த அறிஞர்கள், நூலை வெளிக்கொணர்வதில் கடமை உணர்வுடன் செயற்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.
இந்து கலாசாரம் தொடர்பான வரலாறுகளைத் தேடும் அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவானதொரு வரலாற்று தரவுகளைத் தரும் நூலாக இது அமைவு பெறுகின்றது என்பதில் ஐயமில்லை.
க. பரமேஸ்வரன்
248 2/1, காலி வீதி, செயலாளர், கொழும்பு-04 இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு

Page 8
xiii
வண்ணப்படங்கள் வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு குழுவினராற் தயாரிக்கப்பட்டன. "இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 17ஆம் நூற்றாண்டு வரை நிலவிய தொடர்புகள்” என்னும் விடயம் தொடர்பான ஆராய்ச்சித் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு இந்நூலின் பதிப்பாசிரியர் தலைமையிலான குழுவொன்றிற்கு இந்தியா - இலங்கை நிறுவனம் 2001ஆம் ஆண்டிலே ஆதரவு வழங்கியது. அதன் முதலாவது கட்டத்திலே தென்னிந்தியாவிலுள்ள திருத்தலங்கள், வரலாற்று மையங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. கட்டடங்கள், படிமங்கள், ஒவியங்கள், தொல்பொருட் சின்னங்கள் என்பவற்றின் நூற்றுக்கணக்கான வண்ணப் படங்களைத் தயாரித்துக் கொள்ள முடிந்தது. அவற்றிற் சில இங்கு வெளியிடப்படுகின்றன. இந்தியா - இலங்கை நிறுவனத்துக்கு எமது நன்றிகள் உரித்தானவை. இந்த நூலை ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கும் அந்த நிறுவனம் வழங்கிய வாய்ப்பின் வழிக்கிடைத்த அனுபவங்களே ஏதுவாயிருந்தன என்பதை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் சிலவற்றைச் செம்மையாக எழுதிக் கொள்வதற்கு மதுரைப் பல்கலைக்கழகத்து நுண்கலைத்துறைப் பேராசிரியர் சேதுராமன், தமிழ் நாடு தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த முனைவர்கள் ச. இராசகோபால், வேதாசலம், சாந்தலிங்கம் ஆகியோர் வழங்கிய உதவிகளும் ஆலோசனைகளும் மிகவும் ஆக்கபூர்வமானவை. இந்நூலில் வனப்புடன் விளங்கும் சில வண்ணப்படங்கள் நண்பர்கள்
வேதாசலம், இராசகோபால் ஆகிய இருவராலும் எமக்கு வழங்கப்பெற்றவை.
இந்நூலின் ஆக்கம் பற்றிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தின் இனிமையான சில அம்சங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலின் முக்கியத்துவம் பற்றிப்படிப்படியாக உணர்ந்து கொண்டதும் இந்து
艾麓

... xiii
சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அதனை வெளியிடுவதற்கான பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார்.
உதவிப் பணிப்பாளராகிய திரு. எஸ். தெய்வநாயகம் நூலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைக் கடமை உணர்வோடு செய்தார். அத்திணைக்களத்தைச் சேர்ந்தவரும் வித்துவப் பிரியருமான திரு. ம. சண்முகநாதன் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. க. இரகுபரன் ஆகியோர் நூலின் எழுத்துப் பிரதியினையும் அச்சுப்பிரதிகளையும் படித்துத் தவறுகளை நீக்கி, நூல் செம்மை நலம் பெறுவதற்கான கடமைகள் புரிந்துள்ளார்கள். இவர்கள்
அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தானவை.
முடிவாக யூனி ஆர்ட்ஸ் அச்சக நிறுவனத்தின் உரிமையாளரைப் பற்றியும் இந்நூலைக் கணினியில் முறைப்படுத்தியோர் பற்றியுங்குறிப்பிட்டாக வேண்டும். சமயாபிமானியும் கலாரசிகருமான விமலேந்திரன் இந்நூலைச் செம்மையாக வெளியிடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மிகுந்த பொறுமையோடும் கடமை உணர்வோடும் நூலின் பிரதியை இ. சுதர்ஷினி, பா. டெபோரா முதலியோர் செம்மையாகக் கணினியில் வடிவமைத்துள்ளனர்.
இவர்களுக்கு எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 9
கட்டுரைகள் அடங்கியிருப்பதும் இந்நூலின் மற்றொரு சிறப்பாகும். கோயிற் கட்டுமானங்களைப்பற்றிய விவரங்களை இந்த நூலிற் காணப்படும் அளவிற்கு தமிழிலுள்ள வேறெந்த நூலிலுங் காணமுடியாது. பல்லவர் காலக் கட்டடங்களைப் பற்றியும் சிற்பங்களைப் பற்றியும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் மிகவும் விவரமானவை; அவை ஆராய்ச்சி முடிபுகளின் அடிப்படையில் எழுதப்பெற்றவை. பல்லவர் காலத்துக் கலை பற்றி இவ்வளவு விரிவான விவரங்கள் இதுவரை ஆங்கிலத்திலோ தமிழிலோ
எழுதப்படவில்லை.
சோழர் கலைப்பாணி, விஜயநகர கலைப்பாணி,நாயக்கர் கலைப்பாணி என்பவற்றைப் பற்றிய கட்டுரைகளும் விரிவானவை. இதுவரை காலமும் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆராய்ச்சி முடிபுகளின் அடிப்படையிலும் அவை உருவாக்கப்பெற்றுள்ளன. நாகரம்,வேஸரம் என்னும் வகைகளைச் சேர்ந்த கலைப்பாணிகள் ஒவ்வொன்றினைப் பற்றியும் மும்மூன்று கட்டுரைகள் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. குப்தர் காலத்தில் உற்பத்தியாகிய நாகரம் பத்தாம் நூற்றாண்டளவில் அதன் வளர்ச்சியின் உன்னத கட்டத்தை அடைந்தது. நாகரத்தின் உன்னதக் கோலத்தை கஜுராஹோவிலும் கலிங்கத்திலுமுள்ள கோயில்களிற் கண்டு கொள்ளலாம்.
வேஸரம் என்று சொல்லப்படும் கட்டுமான முறை விந்திய மலைத் தொடருக்கும் நுங்கபத்திரை நதிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் வழங்கியது. அது கதம்ப நாகரக் கட்டுமான முறை, வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு விருத்தி பெற்றது. நாகரம், திராவிடம் ஆகியவற்றின் கலப்பினால் அமைந்த வேஸரம் கல்யாணிச் சாளுக்கியரின் கட்டடங்களிலும் ஹொய்சள மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும்
சிறப்பம்சங்களைப் பெற்றது. கர்நாடகத்துக் கலைஞரின் கைவண்ணத்தால்

xi
அது பிரதேச தனித்துவத்தைப் பெற்றது. நாகர கட்டுமான முறை வானோங்கு சிகரங்களை மையமாகக் கொண்டது. ஆதியிலே விமானமே திராவிடத்தின் பிரதான அம்சமாக விளங்கியது. காலப்போக்கில் விமானத்தைச் சுற்றி
அமைந்த பிராகாரங்களும் கோபுரங்களும் கூடிய சிறப்பினைப் பெற்றன. அலங்கார வேலைப்பாடுகள் பொருந்திய தூண் வரிசைகளும் வனப்பு மிக்க வேலைப்பாடுகள் பொருந்திய மண்டபங்களும் உருவாக்கப்பட்டன. வேஸர பாணியில் அமைந்த கோயில்களிற் பிரமாண்டமான தோற்றமுடைய
கட்டடங்களிலன்றி நுண்ணிய வேலைப்பாடுகளிலும் வனப்புமிகுந்த சித்திரக்
கோலமான மிதமான அளவுடைய கோயில்களை அமைப்பதிலுங் கவனஞ்
செலுத்தினார்கள்.
நாகரம், வேஸரம், திராவிடம் ஆகியவற்றின் வேறுபாடுகளையும், நுட்பங்களையும் ஆலயங்களில் அமைந்திருக்கும் படிமங்களின் அம்சங்களையும் பற்றி இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். கட்டுரைகளில் வர்ணிக்கப்படும் கட்டடங்கள், சிற்பங்கள் என்பவற்றுட் பலவற்றின் நிழற்படங்கள் இந்நூலில்
வெளியிடப்படுகின்றன. அப்படங்களும் இரு விதமானவை. வண்ணப்படங்கள் எல்லாம் இந்நூலின் பதிப்பாசிரியர் வெவ்வேறு காலகட்டங்களிலே ஆராய்ச்சி வேலைகளில், பிறருடன் கூடி, ஈடுபட்டிருந்த பொழுது தயாரிக்கப் பெற்றவை. 1997 இல் ஜப்பானிய பேராசிரியர் நொ. காரஷிமா தலைமையில் ஜப்பான், இலங்கை, இந்தியா ஆகிய தேசங்களைச் சேர்ந்த ஆய்வாளர் குழுவொன்று கர்நாடக மாநிலத்துத் தொல்பொருட் சின்னங்களை நேரிலே பார்ப்பதற்கும் ஆராய்வதற்கும் சென்றது. வாதாபி, ஐகொளே பட்டதகல், விஜயநகரம் (ஹம்பி) ஆகியவிடங்களிலுள்ள கோயில்கள், கட்டிடங்கள், தொல்பொருட் சின்னங்கள் என்பவற்றின் படங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றிலே சிலவற்றை
இங்கு வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய போராசிரியர் காரஷிமாவிற்கு
எமது நன்றிகள் உரித்தானவை. தமிழகத்துக் கோயில்கள் பற்றிய

Page 10
O1.
O2.
03
O5.
O7.
08.
O9.
10.
Contents
Preface
Introduction
S. Pathmanathan
Gupta Temples
S. Pathmanathan
Chalukyan Temples
S. Pathmanathan
Pallava Architecture
R. Kalaikkovan
Pallava Sculpture
R. Kalaikkovan
The Art and Architecture of Ellora
S. Pathmanathan
The Architecture of the Chola Temples
M. Nalini
Chola Sculpture
M. Nalini
The Iconography of the Chola period
Velusamy Suthanthiran
Page
Xνi
O1
21
31
51
85
119
147
171
193

11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
The Temples of Khajuraho
S. Pathmanathan
The Temples of Orissa
S. Pathmanathan
The Temples of Karnataka under the
Chalukyas of Kalyani
S. Pathmanathan
Hoysala Temples
S. Pathmanathan
Vijayanagara Art and Architecture
S. Pathmanathan
Temple Sculptures of the Vijayanagara period
Raju Kalidas The Dravidian Style of Architecture under the
Nayaks of Madurai
S. Pathmanathan
The Sculptures in the Great Temple of Madurai
S. Pathmanathan
The Sculpture of the Nayakkar period
K. K. Rajarajan
A select Bibliography
Index
Contributors
211
223
237
253
263
301
325
369
393
425
431
442

Page 11
xvi
Kadambas and the Chalukyas of Badami and developed to maturity later, during the period of the Chalukyas of Kalyani and their successors, the Hoysalas of Dorasamudra. The dravida style, which had its beginnings under the early Pallavas of Kanci developed to full maturity under the Cholas. The elaboration of the temple complexes in respect
of dimensions and ornamentation was carried on further under the
Vijayanagara and Nayakkar rulers and the climax in the development of the style is exemplified by the complex and grand formations at
Kanchipuram, Thiruvannamalai, Vellore, Sri Rangam and Madurai.
The development of the temples in the three (or four) styles referred to here earlier are described in eleven chapters in this volume. The contributions on the temples in the dravida style are relatively more comprehensive as the respective contributors had the benefit of personal observation and sometimes, even a close examination of all the major monuments. Although the descriptions of the temples in the nagara and vesara styles are comparatively brief care has been taken to focus on their salient features and present information pertaining to them in the light of recent studies. The other six chapters in this volume contain comprehensive descriptions of sculpture and iconography on
the basis of evidence from archaeological monuments.
The inspiration for compiling the present volume was derived from the editor's participation in and experience gained from two projects: "Medieval Maritime Commerce in the Indian Ocean" (1997-2000) and "Indo-Lankan relations in pre-colonial times". The participants in both
projects were multi-national. The first of these was supported by the

Taisho University of Japan and the Japanese historian Noboru Karashima served as the team leader. Under that project we had visited Aihole, Badami, Pattadakal, Hampi and several other historical and archaeological sites in Karnataka. The photographs of many monuments were taken by the members of the team, and the photographs of Chalukya and Vijayanagara monuments illustrated in this volume were supplied by Professor Karashima. We have pleasure in acknowledging his
courtesy of granting permission to publish them.
The second project of which we were the co-ordinators was supported and funded by the India-Sri Lanka Foundation, an intergovernmental Organization formed recently with the objective of facilitating academic co-operation between the two countries. Most of the colour photographs of monuments illustrated here were taken by Dr. M. Somathilake, a member of the team. The support extended by the India-Sri Lanka Foundation and its staff is deeply appreciated.
We have pleasure in recording the inspiration provided by Professors Y. Subbarayalu and P. Shanmugam who clarified issues relating to some monuments and provided unqualified support to our activities pertaining to the two projects in India. The support and assistance provided by Professors. S. Raju and K. Rajan, Drs. V. Vedachalam, N. C. Shanthalingam, S. Rajagopal, G. Sethuraman and Professor Vijaya Venugopal have contributed substantially for the
production of this volume.

Page 12
ല്ലുe
7ெhe present volume, which is a compilation of seventeen articles on temple architecture and sculpture, is the first of a series of two volumes on the art and architecture of the Hindu temple undertaken for publication by the Department of Hindu Religious and Cultural Affairs. The second volume consisting of articles on dances and paintings is expected to be published soon. The work on these volumes was completed in 2001 and the copies of the manuscripts were handed over
to this Department in September of that year.
The two volumes, which are quite comprehensive, cover almost all important aspects of temple art and architecture. They represent a major contribution to Art History written hitherto in the Tamil language. All the contributions included in the present volume are not of a uniform quality. Some are brief while the others are long and comprehensive and based on personal observations, careful examination of monuments and researches conducted on a systematic basis. Yet, on the whole, this volume contains a comprehensive account of the origins and development of the Hindù temple in varied forms and styles, from the period of the Imperial Guptas in North India up to the 18th century, when the process of development was at its climax under the Nayaks of Madurai in South India. In the present volume, the expression Hindu architecture is applied primarily to designate the whole range of forms
and styles representative of Hindu temples. The Hindu temple, which

xvii
had its origins in the Gupta period (A.D. 320-550), evolved in course of time into a vast and composite structure of imposing dimensions and architectural grandeur, with several component parts most of which
were aesthetically conceived and designed exquisitely.
The main styles of Hindu temple architecture are traditionally referred to as nagara, vesara and dravida. According to some silpa
sastra texts these styles are defined in the following manner:
"Nagara is that in which the - Vimāna is quadranqular throughout; Vésara is the one in which the vimana is crowned by a circular sikhara above the neck; and Dravida is the one in which the Vimana is crowned by an
octagonal or hexagonal sikhara above the neck".
Yet, a fourth style, the kalinga is referred to in some medieval records, after the development of the towering temples of Orissa since
the 11th century. The kalinga was an offshoot of the nagara style.
According to the kamikagama architectural styles are differentiated on a regional basis. The nagara was the one prevailing in the region from the Himalayas to the Vindhyas; the vesara style was the one found in the Deccan, particularly in the basin of the Krishna; and the dravida style should refer to the monuments in the region from the valley of the Krishna to Cape Comorin. The monuments in the vesara style have been largely influenced by both the nagara and
dravida styles. The vesara had its origins in Karnataka under the

Page 13
Finally, we have pleasure in recording our appreciation of the efforts made by Shanthi Navukkarasan and S. Theivanayagam respectively the Director and Assistant Director of the Department of Hindu Religious and Cultural Affairs to bring out this volume without delay. Mr. Vimalendran, the proprietor of Unie Arts (Private) Limited, has taken a personal interestin bringingöut this volume as a production
of high quality.
It is hoped that this volume written in simple and elegant-style will arouse the intellectual curiosity of students and teachers at schools, universities and colleges of Fine Arts, and promote their interest in the study of Hindu Culture in general and the aesthetic conceptions and
philosophical ideas symbolised by Hindu monuments.

Ol.
Ose.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
பொடுளடக்கம்
பாராட்டுரை
வாழ்த்துரை
வெளியீட்டுரை
பதிப்புரை
முன்னுரை
குப்தர் காலக் கோயில்கள்
- சி. பத்மநாதன்
வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி
- சி. பத்மநாதன்
பல்லவர் காலக் கட்டடக்கலை
- இரா. கலைக்கோவன்
பல்லவர் காலச் சிற்பக்கலை
- இரா. கலைக்கோவன்
தக்கணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும் - சி. பத்மநாதன்
சோழர் காலக் கட்டடக்கலை
- மு. நளினி
சோழர் காலச் சிற்பக்கலை - மு. நளினி
சோழர் காலப் படிமக்கலை
- ஆ. வேலுசாமி சுதந்திரன்
பக்கம்
2L
3.
8S
19
147
7.
195

Page 14
5.
16.
7.
8.
19.
sO.
21。
22。
s23.
24。
2S、
கஜுராஹோ ஆலயங்கள்
- சி. பத்மநாதன்
கலிங்கத்துக் கோயில்கள்
- சி. பத்மநாதன்
கல்யாணிச் சாளுக்கியர் கலைப்பாணி
- சி. பத்மநாதன்
ஹொய்சளர் கலைப்பாணி
- சி. பத்மநாதன்
விஜயநகர கலைப்பாணி
- சி. பத்மநாதன்
விஜய நகரக் காலச் சிற்பக்கலை
- இராசு காளிதாஸ்
நாயக்கர் கலைப்பாணி
- சி. பத்மநாதன்
நாயக்கர் காலச் சிற்பக்கலை
- சி. பத்மநாதன்
நாயக்கர் காலச் சிற்பக்கலை
- இ.கா. ராஜராஜன்
உசாத்துணை நூல்கள்
சொல்லடைவு
கட்டுரையாளர்
2l
ses 3
237
253
263
3Ol
32S
369
393
42S
43
44l

முன்னுரை
I
கோயில்களும் பண்பாட்டுக் கோலங்களும்
இந்துக் கோயில்கள் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய நீண்டகால வரலாற்றைக் கொண்டவை. இந்து சமய மரபில் உருவ வழிபாடு தோன்றிய காலம் முதலாகவே கோயில்கள் உற்பத்தியாகி வளர்ச்சிபெற்றன. வேதங்களில் உருவ வழிபாடு பற்றியும் கோயில்கள் பற்றியும் குறிப்புகள் காணப்படுவதில்லை. எனவே, வேதங்கள் தோன்றிய காலத்திற்குப்
பின்பே கோயில்கள் வழிபாட்டுத்தலங்களாக வளர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
இந்து சமுதாயத்தில் உருவ வழிபாடு, ஆலய வழிபாடு என்பன எவ்வாறு தோன்றின என்பது பற்றித் தெளிவான சிந்தனைகள் காணப்படவில்லை. கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய இந்திய மாநிலங்களில் ஆதி காலத்தில் நிலவிய பெருங்கற் பண்பாட்டு மக்களின் கட்டட அமைப்புகள் வழிபாட்டுக்குரிய கட்டடங்களான கோயில்களுக்கு முன்மாதிரியாக அமைந்தனவென்று அறிஞர் சிலர் கொள்வர். பெருங்கற் பண்பாட்டு மக்கள் சதுரமான கல்லறைகளையும் வட்ட வடிவமான கல்லற்ைகளையும் அமைத்தனர். அக்கல்லறைகளில் வழிபாடுகள் இடம் பெற்றதற்கான அடையாளங்கள் உண்டென்பதும் கவனித்தற்குரியதாகும். ஆதிகாலப் பெளத்தக் கோயில்களுக்கும் பெருங்கற் பண்பாட்டு மரபிற்குமிடையே கருத்து நிலையில் ஒற்றுமை காணப்படுகின்றது. பெருங்கற்காலக் கல்லறைகள் பள்ளிப்படைகளாகவே அமைக்கப்பட்டன. ஆதி காலச் சேதியங்களும் அத்தகையனவாகும். புத்தர்பிரானின் சடலத்தின் சாம்பல், ரோமம், எலும்பு முதலியவற்றில் ஒன்றின் பாகத்தைப் பேழையிலோ

Page 15
2 முன்னுரை
தாழியிலோ அடைத்து, அதனைப் புதைத்து, அவ்விடத்திலே நினைவுச் சின்னமான சேதியத்தினை அமைத்து, வழிபடுவது பெளத்தராயினோரின்
ஆதி வழக்கமாகும்.
பெருங்கற்காலத்துக் கல்லறைகளை முன்மாதிரியாகக் கொண்டு ஆதியான இந்துக் கோயில்களின் மூலஸ்தானம் உருவாக்கப்பட்டதென்று கருத முடிகின்றது. கல்லறையினைச் சுற்றி வலம்வரும் பாதை போன்ற அமைப்பும், அதனைச் சுற்றிச் சுவர் போன்ற கல்லடுக்கும் கொடுமணல் போன்ற இடங்களிலுள்ள பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களிடையே
காணப்படுகின்றன.
வரலாற்று ரீதியாக நோக்குமிடத்துக் கிரேக்க நாகரிகச் செல்வாக்கின் பயனாகவே இந்திய துணைக்கண்டத்தில் உருவ வழிபாடு பெரு வழக்காகியது என்பது தெளிவாகப் புலனாகின்றது. வேத காலத்து இந்தியர்களைப் போலன்றிப் புராதன காலத்துக் கிரேக்கர் தாம் போற்றி வழிபட்ட தேவர்களின் பேரால் ஆலயங்களை அமைத்து அவற்றில் வழிபாடு ஆற்றினர். தேவர்களின் கோலங்களை மனிதரின் வடிவத்திலே சிற்பங்களாக அமைத்து, அவற்றை ஆலயங்களிலே தாபனம் பண்ணி வழிபாடு செய்தனர். ஆண் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் கிரேக்கர் கோயில்களை அமைத்தனர். அப்போலோ, அதீனி என்னும் தெய்வங்களின் வழிபாட்டிற்குரிய கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை.
கிரேக்கர் மனித வாழ்க்கையின் பூரணத்துவத்தின் மூலம் தெய்வீகத்தை உணர்ந்தனர். தேவர்கள் அளப்பரிய ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்கள், மிகுந்த அழகுடையவர்கள் என்று கிரேக்கர் கருதினர். எனவே, அழகினையும் வலிமையினையும் கலை வனப்புடன் பிரதிபலிக்கும் வண்ணமாகத் தேவரின் பிரதிமைகளை வடித்தனர். கிரேக்கரின் கலைத்திறன் ஐரோப்பாவில் நெடுங்காலமாகப் புகழ்ந்து போற்றப்பட்டமையும் குறிப்பிடற்குரியது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 3
இந்தியாவிலே சமயப் புத்தெழுச்சி ஏற்பட்டவொரு கால கட்டத்திலே கிரேக்கச் செல்வாக்குப் பரவியமை குறிப்பிடத்தக்கது. LEB Π அலெக்சாந்தருடைய படையெடுப்புகளுடன் அது ஆரம்பமாகியது. கி. மு. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே மோரிய வம்சத்தவரின் ஆதிக்கம் ஏற்படுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மகா அலெக்சாந்தர் இந்தியாவின் வடமேற்குப் பாகங்கள் மீது படையெடுத்துச் சென்றான். அவனாற் கைப்பற்றப்பட்ட பகுதிகள் சிலவற்றிலே படைவீரர், வணிகர், கலைஞர், கம்மாளர் முதலியோர் அடங்கிய யவனக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. அலெக்சாந்தரின் ஆதிக்கம் இந்தியாவில் ஒடுங்கிய பின்பு அத்தகைய யவனர்கள் இந்தியாவிலே தங்கியிருந்து இந்திய சமுதாயங்களோடு இணைந்துவிட்டனர்.
யவனப் படையெடுப்புகள் ஏற்பட்ட காலத்திலே பெளத்தம், சமணம் ஆகிய சமய நெறிகள் பெருவளர்ச்சி அடைந்தன. சைவம், வைணவம், ஸ்காந்தம் முதலிய சமயங்களும் பெருஞ் செல்வாக்குப் பெற்றன. கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் மோரியரின் ஆதிக்கம் தளர்வுற்ற கால கட்டத்தில் யவனர்கள் இந்தியா மீது படையெடுத்துச் சென்று அதன் வடமேற்குப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். மகா அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவனாகிய செலியூக்கஸ் நிக்கேற்றர் உருவாக்கிய பரந்த இராச்சியம் சீரழிந்ததன் விளைவாக யவனப் படையெடுப்புகள் இந்தியா மீது ஏற்பட்டன. டெமெற்றியஸ், இயூக்கிரதீசு முதலானவர்கள் இந்தியாவின் சில பாகங்களில் யவனரின் ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஏறக்குறைய முப்பது கிரேக்க மன்னர்கள் வடமேற்கிந்தியாவில் ஆட்சி புரிந்தனர் என்பதை அவர்கள்
வழங்கிய நாணயங்கள் மூலமாக அறிய முடிகின்றது.
இந்தியாவிற்குச் சென்று அங்கு தங்கிவிட்ட யவனர் இந்திய சமயங்களான பெளத்தம், வைணவம் போன்றவற்றினாலே கவரப்பட்டு,
அவற்றைத் தழுவிக் கொண்டனர். மெனாந்தர் என்னும் யவன அரசன்

Page 16
4. முன்னுரை
மிலிந்த பஞ்ஞ என்னும் பெளத்த நூலின் ஆசிரியனாவான். பர்மா தேசத்துப் பெளத்தர்களின் திரிபிடகத்தில் அந்நூலும் அடங்கியுள்ளது. இந்திய சமய வழிபாடுகளை யவனர் பின்பற்றியதன் விளைவாகக் கிரேக்கப் பண்பாட்டம்சங்கள் இந்தியப் பண்பாட்டிலே படிந்து விட்டன. இந்திய சமய வழக்கில் உருவ வழிபாடு அழுத்தம் பெற்றது. இந்து கிரேக்க மன்னர்களின் ஆதரவுடன் கிரேக்கரான கலைஞர்கள் புத்தபிரானின் உருவங்களை வழிபாட்டுச் சின்னங்களாக வடிவமைத்தனர். இந்திய சமய சிந்தனைகள் கிரேக்க கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்டன. காந்தாரக் கலைப்பாணி என்னுஞ் சிற்பக்கலை மரபு உதயமாகியது. அது யவனருக்குப்பின் அதிகாரம் பெற்ற குஷாணரின் காலத்திலே பெருவிருத்தி பெற்றது. கலாசார மரபுகளைப் பொறுத்தவரையிற் கிரேக்கர் உருவாக்கிய வழமைகளை, அவர்களுக்குப் பின்வந்த சக - பாஹ்லவரும் குஷாணரும் பின்பற்றியமை குறிப்பிடத்தக்கது. அரச முத்திரைகளிலும் உலோக நாணயங்களிலும் சமயச் சின்னங்களும் கடவுட் படிமங்களும் இடம் பெறலாயின. அவற்றுள் மிகப் புராதனமானவை வடமேற்கு இந்தியாவிலிருந்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சமகாலத் தென்னிந்திய நாணயங்களிலும் அத்தகைய உருவங்கள் உள்ளன என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளின் மூலமாகத் தெரியவந்துள்ளது. சைவம், வைணவம், ஸ்காந்தம் முதலிய சமயங்களுக்குரிய மிகவும் புராதனமான சின்னங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியான உத்தராபதத்திற் கிடைத்துள்ள நாணயங்கள், அரச முத்திரைகள் என்பவற்றிலே காணப்படுகின்றமையுங் குறிப்பிடற்குரியதாகும்.
சைவம், வைணவம் முதலான சமய நெறிகள் வைதீகம் சார்ந்தவை. ஆயினும், வேதங்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் இடம்பெறாத பல புதிய அம்சங்களை உள்ளடக்கியவை. அவை இந்திய சமுதாயத்தில் மேலோங்கியதன் பயனாகப் புராணங்கள் எழுந்தன. மகா புராணங்கள் பதினெட்டு என்பது மரபு. அவை சைவம், வைணவம் முதலான சமய
நெறிகளைப் பற்றிய மரபுகள் எல்லாவற்றையும் விரிவாக விளக்குங்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் S
கருவூலங்களாக அமைகின்றன. அவை பஞ்ச லக்ஷணங்களை உடையவை என்பர். ஆயினும், சமய நெறிகள் பற்றிய தத்துவங்கள், புராணக் கதைகள், வழிபாட்டு நெறிகள் முதலியவற்றை விரிவாக விளக்கும் நூல்களாகவும் அவற்றைக் கொள்ளலாம். ஆலய வழிபாடு வழமையாகியதும் அவற்றை விளக்கும் நூல்களான ஆகமங்கள் உற்பத்தியாகின. ஆலய வழிபாடுகள் ஆகமப்பிரகாரமானவை. இந்து சமயத்தில் வேதமும் ஆகமமும் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன. உருவ வழிபாடு, ஆலய வழிபாடு என்பன பற்றி வேதங்கள் சொல்வதில்லை. அவை வழமையாகிய காலத்தில் அவற்றை விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் ஆகமங்கள் உருப்பெற்றன. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களை உடையவை. வரலாற்று ரீதியான சைவமும் வைணவமும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆகமங்களிற் பிரதிமாலசுஷணங்களும் கட்டடம், சிற்பம் என்பவற்றை உருவாக்கும் முறைகளைப் பற்றியும் சொல்லப்படுகின்றது. அத்துடன் கட்டடம், சிற்பம் என்னுங் கலைகளைப் பற்றிச் சிற்ப சாஸ்திரம் என்னும் வகையிலுள்ள நூல்களும் விளக்குகின்றன. மானசாரம், மயமதம், காசிபம், சகளாதிகாரம், ரூப மண்டனம் முதலிய நூல்கள் அந்த வகைக்கு உரியனவாகும். தொன்று தொட்டு இந்நூல்கள் ஸ்தபதிகளாலும் ஆலய நிர்மாணகாரர்களினாலும் பயிலப்பட்டும்பின்பற்றப்பட்டும் வருகின்றன. ஆயினும், சிற்ப சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்துக் கோயில்கள் பிரதிபலிக்கும் கட்டட, சிற்பக் கலைகளின் பரிமாண வளர்ச்சிகளை விரிவாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியாது. கட்டட, சிற்பக் கலைகளை ஆராய்வதற்குச் சிற்ப சாஸ்திர நூலறிவு ஓர் இன்றியமையாத் தேவையாகும். ஆயினும், அதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விதமான தோற்றமும் கட்டட வேலைப்பாடுகளும் பொருந்திய ஆலய அமைப்புகளின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது. தொல்பொருட் சின்னங்கள் பற்றிய தெளிவான விளக்கமும் அறிவும் அத்தியாவசியமானவை. 19 ஆம் நூற்றாண்டு முதலாக
அறிவியல் அடிப்படையில் இந்துக் கட்டடக் கலையின் வரலாற்றைப் பல

Page 17
6 முன்னுரை
அறிஞர்கள் ஆராய்ந்து நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளனர். பிரெஞ்சு அறிஞரான டூப்ரோயில், ஆங்கிலேயர்களான பேர்சி பிரவுண், வின்சென்ற் ஸ்மித், றோலின்சன் என்போரும் ஆனந்த குமாரசுவாமி, ஸ்ரெலா கிறாம்றிஷ்ச் போன்ற மேதைகளும் அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள். ஆராய்ச்சி பூர்வமான அந்நூல்கள் மூலமாகவே கோயிற் கட்டடக் கலை பற்றிய அறிவு சர்வதேச மட்டத்தில் அறிஞர்களிடையே பரவியுள்ளது. இந்தியத் தொல்பொருள் திணைக்களத்தின் ஆண்டறிக்கைகள் காலாகாலமாகப் புராதன
கோயில்களைப் பற்றிய அறிவு விருத்தியடைவதற்கு ஏதுவாய் அமைந்துள்ளன.
கோயில்களும் அவற்றின் அம்சங்களும்
மகா பிராசாதம் என்று சொல்லப்படும் பெருங்கோயிலின் ஆறு அங்கங்களைப் பற்றிச் சிற்ப சாஸ்திரங்கள் கூறும். அவை அதிஷ்டானம் (தளம்), பாதம் (தூண்), பிரஸ்தரம் (கபோதம்), கண்டம் (கழுத்து), சிகரம் (கூரை), ஸ்தூபி என்பனவாகும். தில்லைஸ்தானத்தில் உள்ள சாசனம் ஒன்று அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம், உத்திரம், போதிகை, ஜகதி, பட்டிகை, கண்டம், குமுதம் என்னும் ஆலயப் பகுதிகளைக் குறிப்பிடுகின்றது.
அதிஷ்டானம்
ஆலயத்தின் அடிப்பாகம் அதிஷ்டானம் எனப்படும். அது கட்டடத்தின் அடித்தளமாகும். ஆலயத் தூண்களையும் சுவர்களையும் அது தாங்கி நிற்கும்.
அதிஷ்டானம் பல படைகளைக் கொண்டிருக்கும். உபானம், பத்மம்,

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 7
ஜகதி, குமுதம், கல, கம்பம், பட்டிகை என்பன அதிஷ்டானப் படைகளாகும். சில சமயங்களிலே அதிஷ்டானத்தின் கீழ் உபபீடம் அமைந்திருக்கும். அதுவும் அதிஷ்டானத்தில் உள்ளவாறு பல படைகளைக் கொண்டதாய் அமைந்திருக்கும்.
கர்ப்பகிருகம்
ஆலயத்தின் மூலஸ்தானம் கர்ப்பகிருகம் எனப்படும். அதுவே கோயிலின் மிகப் புனிதமான பாகமாகும். ஆலயத்திற்குரிய மூலவரின் படிமம் அங்கு ஸ்தாபனம் பண்ணப்பட்டிருக்கும். அதன் சுவர்களின் உட்பக்கத்திற் பொதுவாகச் சிற்பங்கள் அமைக்கப்படுவதில்லை. இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகிய பல்லவ மன்னர் காலத்துக் கோயில்கள் இதற்குப் புறநடையானவை, கர்ப்ப கிருகத்துச் சுவர்களின் வெளிப்புறத்திலே தேவகோஷ்டங்கள் அமைந்திருக்கும்.
அவற்றின் மேலே தோரணங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
கர்ப்பகிருகத்திற்கு முன்னால் அர்த்தமண்டபம் அமைந்திருக்கும். அதனைச் சோழர் காலத்துச் சாசனம் ஒன்று திரு இடைக்கட்டு என்று குறிப்பிடுகின்றது. சில கட்டடங்களிலே அர்த்தமண்டபமும் கர்ப்பகிருகத்தை ஒட்டியதாய் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருவையாறு பஞ்ச நதீஸ்வரர் கோயில், கீழையூர் அவனிகந்தர்ப்ப ஈஸ்வரம் ஆகியவற்றில் ஆதியில் இரண்டும் தனித்தனியாக அமைந்திருந்தன. பிற்காலத்தில் அவற்றிடையே அந்தராளத்தை அமைத்து இரண்டையும் தொடுத்து விட்டனர். காஞ்சிபுரம் கைலசநாதர் கோயிலிலும் இவ்விதமான மாற்றம் ஏற்பட்டுவிட்டது. பூஞ்சை என்னுமிடத்திலுள்ள கோயிலிற் கர்ப்பகிருகத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையிலே அந்தராளம் அமைந்திருப்பதோடு அர்த்த மண்டபத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடையிலும் அந்தராளம் அமைக்கப்பட்டுள்ளது.

Page 18
8 முன்னுரை
கோனேரி இராசபுரத்திற் கர்ப்பகிருகத்தைச் சுற்றித் திருநடை மாளிகை என்று சொல்லப்படும் முகடுபொருந்திய திருச்சுற்றுமண்டபம் அமைந்திருக்கின்றது. விருத்தாசலம், தில்லைஸ்தானம் ஆகிய இடங்களிலே ஸ்நபன மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. விமானத்தின் மூல தளத்திலே, தேவகோஷ்டங்களில் மேல்வரும் ஒழுங்கிலே தேவர் படிமங்கள் அமைய வேண்டும் என்று மயமதம் கூறும் கிழக்கிலே துவாரபாலகர், நந்திகேசர், காலன்; தெற்கிலே தகூதிணாமூர்த்தி; மேற்கிலே மகாவிஷ்ணு அல்லது இலிங்கோற்பவர்; வடக்கிலே பிரமதேவன். அர்த்த மண்டபத்தின் தெற்கிலே விநாயகர், நடராஜர் ஆகியோரின் படிமங்களையும் வடக்கிலே காத்தியாயனி, க்ஷேத்திரபாலகர் என்போரின் உருவங்களையும் பிரதிஷ்டை பண்ண வேண்டும் என்பது சாஸ்திர
பிரமாணமாகும்.
விமான தேவதைகளைக் குறித்து ஈசான சிவகுரு தேவபத்ததி என்னும் நூல் மேல்வருமாறு கூறும் “விமானச் சுவர்களில் எல்லாத் திசைகளிலும் கடவுட் படிமங்களை ஸ்தாபனம் பண்ண வேண்டும், தெற்கிலே தகூழிணாமூர்த்தியையும், மேற்கிலே இலிங்கோற்பவர் அல்லது விஷ்ணுவையும், வடக்கிலே துர்க்கை அல்லது பிரமனையும் தாபனம் பண்ண வேண்டும். அர்த்த மண்டபச் சுவரிலே விநாயகரையும் அதன் வடகிழக்கு மூலையிலே கூேடித்திர பாலகரையும் பிரதிஷ்டை பண்ணிக் கொள்ளலாம்"
பொதுவாகச் சோழர் காலத்து விமானங்களிலுள்ள தேவ கோஷ்டங்களிற் சாஸ்திர பிரமாணங்களுக்கு அமையவே கடவுட் படிமங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சில தலங்களிலே வேறுபாடுகள் காணப்படுகின்றன. விரலூர், திருவாமத்தூர், லால்குடி ஆகியவற்றிலுள்ள ஆலயங்களின் வடக்கிலே பிக்ஷாடனரின் வடிவம் அமைந்திருக்கின்றது. திருக்கட்டளையிற் திரிபுராந்தகர், விஷ்ணு, பிரமா ஆகியோரின் படிமங்கள் உள்ளன. திருவெறும்பூரிலே மேற்கிலுள்ள தேவகோஷ்டத்திற் ஹரிஹரரின்
படிமம் காணப்படுகின்றது. கும்பகோணத்து நாகேஸ்வரம், லால்குடி சப்த

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 9
ரிஷிஸ்வரம், அவனிகந்தப்ார்ப்ப ஈஸ்வரத்து இரட்டைக் கோயில்கள் ஆகியவற்றிலே கிழக்கிலுள்ள தேவ கோஷ்டங்களில் ஸ்தானகக் கோலத்திலும் ஆசனக் கோலத்திலும் அமைந்த சுப்ரமணியக் கடவுளின் பிரதிமைகள் உள்ளன. திருச்செந்துறைக் கோயிலின் விமானத்தின் தென்புறத் தேவகோஷ்டத்திலே ரிஷபவாகன தேவரின் படிமம்
காணப்படுகின்றது.
தோரணம்
தேவ கோஷ்டங்களின் மேற்பக்கத்தில் அமைந்திருக்கும் தோரணம் அலங்கார வேலைப்பாடுகள் பொருந்திய அம்சமாகும். அது அலங்காரக் கோலமான திருவாசல் போன்றிருக்கும். சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தோரண வாயில்கள் இந்திய கலை வரலாற்றிற் பிரசித்தமானவை. புவனேஸ்வரத்திலுள்ள முக்தேஸ்வரத்தில் அமைந்திருக்கும் தோரணமும் அத்தகையனவற்றில் ஒன்றாகும். பல்லவர்களதும் சோழர்களதும் கலைப்பாணியில் தோரணம் தேவ கோஷ்டத்தை அணி செய்யும் அலங்கார
வேலைப்பாடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பத்திரம், புஷ்பம், இரத்தினம், சித்திரம் என்னும் நான்கு வகைத் தோரணங்களைப் பற்றி மானசாரம் வர்ணிக்கின்றது. பத்திர தோரணம்
என்பது பிறை போன்று, இலைகளால் அலங்கரிக்கப்பட்ட, வளைந்த தோற்றமுடைய அம்சமாகும். அதன் அடியிலும் மேற்பாகத்தின் நடுவிலும் மகர வடிவங்கள் அமைந்திருக்குமிடத்து அது மகர தோரணம் எனப்படும். மகர
தோரணம் பொதுவாக ஐந்து வளைவுகளைக் கொண்டிருக்கும். சில
சமயங்களிலே அன்னம் போன்ற பறவைகளின் உருவங்களும் அதிலே இடம்பெறும். பறவைகளின் உருவங்கள் இடம்பெறுமிடத்து மகர தோரணம்
சித்திர தோரணம் என்று சொல்லப்படும். சில சமயங்களில் வித்யாதரர்,

Page 19
10 முன்னுரை
பூதகணங்கள், சிங்கம், யாழி, அன்னம், குழந்தைகள், மாலைகளையும் மலர்களையும் ஏந்திய மனிதர் ஆகியோரின் உருவங்களும் இத்தகைய தோரணங்களில் அமைக்கப்படும். தோரணத்திலே தேவரின் படிமம்
ஒன்றையும் சேர்ப்பதுண்டு.
விமானமும் விமான தேவதைகளும்
விமானம் என்ற சொல்லைப் பலரும் பலவாறு விள்க்கியுள்ளனர். உபானம் முதலாகத் தூபி வரையுள்ள ஆலயம் முழுவதும் விமானம் எனப்படும் என்பதைத் தஞ்சைப் பெருவுடையார் கோயிற் சாசனங்கள் மூலம் அறிய முடிகின்றது. தானும் தனது தமக்கையாரும் தேவிமாரும் பெருவுடையார் கோயிலுக்கு வழங்கிய தானங்களைக் கோயில் விமானத்திலே சிலாலேகமாக எழுதுமாறு கட்டளையிட்டதாக முதலாம் இராஜராஜன் குறிப்பிடுகின்றான். அந்தச் சாசனங்கள் எல்லாம் கர்ப்பகிருகச் சுவர்களிலும் அதிஷ்டானப் பகுதிகளிலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆதலால், விமானம் என்பது கட்டடத்தின் முழுப்பகுதியினையுங் குறிக்கும் என்பது தெளிவாகின்றது.
விமான தேவதைகள் கர்ப்பகிருகத்தின் சுவர்களிலுள்ள தேவகோஷ்டங்களில் மட்டுமன்றி மேற்றளங்களிலுள்ள கோஷ்டங்களிலும் கிரீவத்தின் தேவகோஷ்டங்களிலும் அமைக்கப்படும். திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் விமானத்து இரண்டாவது தளத்திலே, தெற்கிலே பிக்ஷாடனரும், மேற்கிலே மகாவிஷ்ணுவும், வடக்கிலே பிரமனும் அமர்ந்திருக்கின்றனர். கிரீவத்தின் தெற்கிலே தகூறிணாமூர்த்தியும் மேற்கிலே வராகமூர்த்தியும் வடக்கிலே பிரமாவும் கிழக்கிலே இந்திரனுங் காணப்படுகின்றனர். கொடும்பாளூர் மூவர்கோயில், கீழையூர் அவனி கந்தர்ப்ப ஈஸ்வரம் ஆகியவற்றிலும் விமான தேவதைகள் இதே வரிசையில்
அமைந்துள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
வைணவக் கோயில்களில் விமான தேவதைகள் வேறு விதமாக அமைக்கப்பட்டன. பஞ்சராத்திர ஆகமம் விமானத்தின் ஏழு தளங்களில் அமைக்கப்பட வேண்டிய விமான தேவதைகளைப் பற்றிய விவரங்களை வர்ணிக்கின்றது. முதலாவது தளத்திலே குமுதன், உபேந்திரன், நடனமாடும் வித்யாதரர் முதலிய கண தேவதைகளின் உருவங்கள் அமைக்கப்படும். இரண்டாவது தளத்திலே நரநாராயணரின் உருவங்களும் ஹரி, கிருஷ்ணர் ஆகியோரின் பிரதிமைகளும் கேசவர் முதலான விஷ்ணுவின் பன்னிரண்டு தோற்றங்களும் இடம் பெறும். மூன்றாவது தளத்திலே மகாபுருஷர், சத்ய, அச்சுத, அநந்த என்போரது பிரதிமைகளும் திக்குபாலகர் எண்மரது படிமங்களும் ஆதித்யர் பன்னிருவரது கோலங்களும் கந்தருவர், அப்ஸரர், கின்னரர் என்போரின் உருவங்களும் அமைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆயினும், இத்தகைய விமான தேவதைகள் இன்றுள்ள கோயில்களிற் காணப்படுவதில்லை. பெரும்பாலான கோயில்கள்
புனர்நிர்மாணம் பெற்றுவிட்டன.
சிற்றுருவச் சிற்பங்கள்
வியாழமாலத்தின் மேலும், தூண்கள், தேவகோஷ்டங்கள் என்பவற்றை ஒட்டிய அரைத்தூண்கள் என்பவற்றின் கீழும் கலை வனப்புமிகுந்த சிற்றுருவச் சிற்ப வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே சில சிவன், விஷ்ணு ஆகியோரின் பல்வகைத் தோற்றங்களாகும். வேறு சில புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டவை. காமரசவல்லியிலுள்ள காற்கோடக ஈஸ்வரம், தக்கோலத்துத் திருவூறல் மகாதேவர் கோயில், புள்ளமங்கை பிரமபுரீஸ்வரம், பூஞ்சை நல்துணை ஈஸ்வரம், திருக்கண்டியூர் திருவீரட்டானேஸ்வரம், கும்பகோணத்து நாகேஸ்வரம் முதலிய சோழர் காலத்துக் கோயில்களில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை மிகுந்த வனப்புடன்
விளங்குகின்றன.

Page 20
12 முன்னுரை
கோயில் வகைகள்
கோயில்களின் அளவுப்பிரமாணங்கள், கட்டட அமைப்பு புறத்தோற்றம் முதலியவற்றின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துவது வழக்கம். அளவின் அடிப்படையிலே சிறிய கோயில்களை அல்ப பிராசாதம் என்றும் பெரியனவற்றை மகாபிராசாதம் என்றுஞ் சொல்வது வழக்கம். அவற்றின் தளங்களை அடிப்படையாகக் கொண்டுங் கோயில்களை வகைப்படுத்துவர். ஏக தளம், துவிதளம், திரிதளம் முதலான அடைமொழிகளைக் கொண்டும் அவற்றை வர்ணிப்பர். கட்டடத்தின் வடிவமைப்பு, புறத்தோற்றம் என்பவற்றின் அடிப்படையிலுங் கோயில்கள் வர்ணிக்கப்படும். சதுராஸ்ரம்(சதுரம்), விருத்தம் (வட்டம்), சதுராஸ்ரதீர்க்கம் (நீள்சதுரம்), ஹஸ்திப்பிருஷ்டம் (தூங்கானை மாடம்), விருத்தாயதம், கூடிட்கோணம், அசுஷ்டாஸ்ரம் (எண்கோணம்) என்றுங் கோயில்கள் வகை
செய்யப்படும்.
பொதுவாகச் சிற்ப சாஸ்திரங்கள் நாகரம், வேஸரம், திராவிடம் என்னும் மூவகைக் கோயில்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மானசாரம், சுப்பிரபேத ஆகமம் ஆகிய நூல்கள் இவற்றை மேல்வருமாறு வருணிக்கின்றன.
“அடியிலிருந்து நுனிவரை நாற்சதுரமாய் அமைந்த விமானம் நாகரம் எனப்படும்” “கிரீவத்திற்கு மேலான சிகரம் வட்டமாக அமைந்திருக்குங் கோயில்
o 9 வேஸரம் எனப்படும்;
'திராவிட விமானங்களில் கிரீவத்திற்கு மேலான சிகரம்
கூடிட்கோணமாகவோ எண்கோணமாகவோ அமைந்திருக்கும்"

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 13
திராவிடம், வேஸரம் என்னும் வகைகளைச் சேர்ந்த தூங்கானை மாடக் கோயில்களைப் பற்றியும் மானசாரங் குறிப்பிடுகின்றது. தமிழ் நாட்டுக் கோயில்களைத் திராவிட விமானங்கள் என்று சிற்ப சாஸ்திரங்கள்
குறிப்பிடுகின்றன.
இவற்றின் வேறுபாடுகள் பிராந்திய அடிப்படையில் அமைந்தவை என்று காமிகாகமம் கூறுகின்றது. இமயம் முதல் விந்தியம் வரையிலுள்ள கோயில்கள் நாகரம் என்னும் வகைக்குரியவை என்றும், கிருஷ்ணாநதிப் பள்ளத்தாக்கிலுள்ளவை வேஸரம் என்றும், அப்பகுதிக்கும் குமரிமுனைக்கும் இடைப்பட்ட ஆலயங்கள் திராவிடமானவை என்றும் அது குறிப்பிடுகின்றது. வேஸரம் என்ற வகைக்குரிய கோயில்களிலே நாகரம் திராவிடம் ஆகியவற்றின் சாயல்கள் படிந்துள்ளன. தக்கிணத்திலே கதம்பர் காலத்தில் உற்பத்தியாகி வாதாபிச் சாளுக்கியரதும் கல்யாணிச் சாளுக்கியரதும் காலங்களிற் பெருவளர்ச்சி அடைந்த வேஸர கலைப்பாணி 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளிலே ஹொய்சளரதும் காகதீயரதும் ஆட்சியில் உன்னத வ்ளர்ச்சி அடைந்தது.
கலிங்கம் என்னும் நான்காவது கலைப்பாணி ஒன்றினைப் பற்றி மத்திய காலச் சாசனம் ஒன்று குறிப்பிடுகின்றது. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடச் சாசனம் ஒன்று வம்மோஜ என்னும் ஸ்தபதி ஒருவனைப் புகழ்ந்துரைக்கின்றது. சிகே என்னுமிடத்துப் படோக என்பவரின் சீடனாகிய வம்மோஜ கலியுகத்து விஸ்வகர்மா என்றும் அறுபத்திநான்கு கலைகளிலும் வல்லவன் என்றும், அறுபத்தி நான்கு வகையான மாளிகைகளையும் நாகரம் கலிங்கம் திராவிடம் வேஸரம் என்னும் நான்கு வகையான ஆலயங்களையும் நிர்மாணஞ் செய்வதிலே நிபுணன் என்றும் அவனை வர்ணிக்கின்றது. (நாகர - கலிங்க - த்ராவிட - வேஸ்ர - சதுர்ஜாதிபிரசாத விநில்மித சூத்ரதாரி) கலிங்க தேசத்தில் அமைக்கப்பட்ட கோயில்கள்

Page 21
14 முன்னுரை
நாகர பாணியை ஒத்தனவாயினும் தனிமையான பாங்கினைக் கொண்டவை. கலிங்கத்துச் சிற்ப சாஸ்திரங்களும் தனிச் சிறப்புடையவை. ஆலயங்களை வர்ணிப்பதற்கு அவை பயன்படுத்திய கலைச் சொற்களும் தனிச் சிறப்பானவை.
பரிவாரதேவர் கோட்டங்கள்
குப்தர் காலம் முதலாக ஆலயங்கள் சிலவற்றிலே பரிவாரதேவர் கோட்டங்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறான கோட்டங்கள் பொருந்திய கோயில்கள் பஞ்சாயதனக் கோயில்கள் எனப்படும். பிரதான கோயில் வளாகத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மதில்கள் அமைக்கப்படும். பிராகாரத்தினுள் நான்கு மூலைகளிலும் தேவகோட்டங்கள் அமைக்கப்படும். விநாயகர், சுப்பிரமணியர், அம்மன், ஸப்தமாதர் முதலியோருக்குத் தனிக்
கோயில்கள் அமைக்கப்படும்.
சோழர் காலத்து முற்பகுதியைச் சேர்ந்த கோயில்களில் மதில் சூழ்ந்த ஒரு பிராகாரம் மட்டுமே அமைந்திருந்தது. கோயில் வளாகத்திலே அக்டிடபரிவாரக் கோயில் என்னும் எட்டுத் தேவகோட்டங்கள் அமைந்திருந்தன. கர்ப்பகிருகத்தை ஒட்டியமைந்த அங்க ஆலயங்களில் இருந்து அவை வேறுபட்டவை. முதலாம் பராந்தகன் காலத்துச் சாசனம் ஒன்று எழும்பூரிலுள்ள கடம்பவனேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டபோது அஷ்ட பரிவாரக் கோயில்களும் அமைக்கப்பட்டமையினைக் குறிப்பிடுகின்றது. நார்த்தாமலையிலுள்ள விஜயாலய சோழேஸ்வரத்திலே மூலஸ்தானத்தைச் சுற்றி ஆறு பரிவாரதேவர் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஏகதள விமானமும் அர்த்த மண்டபமும் அமைந்திருக்கின்றன.
திருக்கட்டளை சுந்தரேஸ்வரத்தில் ஏழு பரிவார தேவர் கோயில்கள் நன்கு பேணப்பட்ட நிலையிலே காணப்படுகின்றன. அவற்றிலே சூரியன், சப்தமாதர், விநாயகர், சுப்பிரமணியர், சந்திரன், சண்டேஸ்வரர், ஜேஷ்டாதேவி

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
ஆகியோரின் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சாசனங்கள் பலவற்றிலே மூலவருக்கும் பரிவார தேவர்களுக்கும் வழங்கப்பட்ட தானங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. காசிபம் என்னுஞ் சிற்ப நூலின் 46ஆம் படலத்திலே பரிவார தேவர் கோயில்களிற் தாபனம் பண்ணப்பட வேண்டிய தேவர்களைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. விருஷவ தேவர், அக்கினி, துர்க்கை, சப்தமாதர், வீரபத்திரர், விநாயகர், சுப்பிரமணியர், ஜேஷ்டாதேவி சூரியன் ஆகியோரில் ஒவ்வொருவரை அக்ஷட பரிபாலதேவர் கோயில்கள் ஒவ்வொன்றிலும் தாபனம் பண்ண வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆயினும், மயமதம் பரிவார தேவர்களைப் பற்றி வேறு விதமாகச் சொல்லுகின்றது. நந்தி, கணபதி, பிரம்மா, குகன், சப்தமாதர், ஆரியமான், அச்சுதன் என்போர் அக்ஷட பரிவாரதேவர் என்று அது குறிப்பிடுகின்றது.
கோபுரம்
கோபுரம் தென்னிந்தியக் கட்டட அமைப்பின் சிறப்பான அம்சமாகும். நாகர முறையில் அமைந்த கோயில்களிலே கோபுரங் காணப்படுவதில்லை. அது பிரதான வாசலில் அமைக்கப்படும் அலங்காரத் தோற்றமான, பிரமாண்டமான அமைப்பாகும். 12ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவிலே கோயிலின் மூலஸ்தானமாகிய விமானத்தையே அளவிற் பெரியதாகவும் வனப்பு மிக்கதாகவும் அலங்காரமான தோற்றங் கொண்டதாகவும் அமைத்தார்கள். விமானத்தின் வளர்ச்சியின் உன்னத நிலையினைத் தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழேஸ்வரம் முதலியவற்றிலே காணலாம். 12ஆம் நூற்றாண்டிலும் ஆலய அமைப்பில் விமானமே பிரதானமான பகுதியாக விளங்கியது. 12ஆம் நூற்றாண்டு முதலாகக் கோபுரம் விமானத்தினைக் காட்டிலும் மிகப்பெரிய அளவு கொண்டதாக அமைக்கப்பட்டது. கோயில் விசாலமாகி விருத்திபெற்றுப் பல பிராகாரங்கள் பொருந்தியதாக வளர்ச்சியடைந்த காலத்திற் கோபுரம் ஆலயத்தின் மிகப்பெரிய பாகமாக உருப்பெற்றது.

Page 22
16 முன்னுரை
மானசாரம் ஐவகைக் கோபுரங்களை வர்ணிக்கிறது. பிராகாரச் சுவர்களின் நடுவில் அமைந்த வாயிற் புறங்களிற் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றமை பற்றி அதிலே சொல்லப்படுகின்றது. முதலாம் பிராகாரத்துக் கோபுரம் ஏகதளமாய் அல்லது திரிதளமாய் அமைந்திருக்கும் என்று அதிலே சொல்லப்படுகின்றது. இரண்டாம் பிராகாரத்துக் கோபுரம் இரண்டு முதல் நான்கு வரையான தளங்களைக் கொண்டிருக்கும். முதலாம் பிரகாரத்துக் கோபுரம் துவாரஸோபாஎன்று சொல்லப்படும். இரண்டாம் பிராகாரத்துக் கோபுரம் துவாரசாலை என்று சொல்லப்படும். துவாரபிராசாதம் என்னும் மூன்றாம் பிராகாரத்துக் கோபுரம் மூன்று முதல் ஐந்து தளங்களை உடையதாய் இருக்கும். நான்காம் பிராகாரத்துக் கோபுரம் துவாரகர்மியம் எனப்படும். அதில் நான்கு முதல் ஏழு வரையான தளங்கள் அமைக்கப்படும். துவார கோபுரம் என்னும் ஐந்தாம் பிராகாரத்துக் கோபுரம் ஏழு முதல் பதினாறு வரையான தளங்களை உடையதாய் இருக்கும். திருவரங்கத்திலே ஏழு பிராகாரங்களும் இருபத்தியொரு கோபுரங்களும் அமைந்துள்ளன.
சோழர் காலத்து முற்பகுதியைச் சேர்ந்த கோயில்கள் சிலவற்றிலே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கீழையூர் அவனி கந்தர்ப்பஈஸ்வரத்திலே கோபுரம் அமைந்திருக்கிறது. கோபுரவாசல் கல்லால் அமைந்தது. மேற்பகுதி செங்கல் வேலைப்பாடாகும். அது மூன்று நிலைக் கோபுரம் ஆகும். மேற்பகுதியினைச் செங்கல், சுண்ணாம்பு, சுதை என்பன கொண்டு அமைத்துள்ளனர். மேலைப் பழுவூரிலுள்ள சுந்தரேஸ்வரத்திலும் ஒரு பழைய கோபுரம் அமைந்திருக்கின்றது. இரு கோபுரங்களும் முதலாம் ஆதித்தன் காலத்தவை. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் இரு பிராகாரங்களிலும் முன்புறத்து வாசல்களிலே கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. அக்கோபுரவாசல்கள் கேரளாந்தகன் திருவாசல், இராஜராஜன் திருவாசல் என்னும் பெயர்களால் வழங்கிவந்தன. உட்கோபுரம் மூன்று தளங்களைக்
கொண்டது. அதன் மேலே சாலை போன்ற அமைப்புகளும் ஐந்து

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் T7
ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் துவாரபாலகர்களின் பெருவடிவங்கள் நான்கு கரங்களுடன் காணப்படுகின்றன. முதலாவது தளத்திலே கிராதார்ஜுனியம் போன்ற புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. வெளிக் கோபுரத்தில் ஐந்து தளங்கள் அமைந்திருக்கின்றன. முதலாவது தளத்தின் உட்புறத்திலே பிரம்மா, தகூழிணாமூர்த்தி ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. கோபுர வளர்ச்சி சோழர்காலக் கலைப்பாணியின் பிரதான அம்சங்களில் ஒன்றாகும். பிற்காலச் சோழர்கள் சிதம்பரம் கோயிலைப் புனரமைத்து விரிவாக்கஞ் செய்தனர். முதலாங் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், இரண்டாங்குலோத்துங்க சோழன் ஆகியோரின் திருப்பணிகளின் பயனாகச் சிதம்பரம் மிக விசாலமான பேராலயமாக வளர்ச்சி பெற்றது. நிருத்தசபை, காமகோட்டம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நீராழி மண்டபம், திருநடைமாளிகை, சுற்றுப்பிராகாரங்கள் முதலான யாவையும் அவர்களால் அமைக்கப் பெற்றவை. நான்கு திசைகளிலும் பிராகாரங்களை ஒட்டிக் கோபுரவாசல்களிலே பிரமாண்டமான ஏழு நிலைக் கோபுரங்கள்
அமைக்கப்பட்டன.
சோழர் காலத்திற் சிதம்பரத்தில் வளர்ச்சி பெற்ற கோபுர அமைப்புமுறை விஜயநகர காலத்திலே தென்னிந்தியக் கோயில்களின் இன்றியமையாத பேரம்சமாகியது. பிரதான தலங்கள் எல்லாவற்றிலும் பல புதிய கட்டடங்களும் பிராகாரங்களும் பிரமாண்டமான கோபுரங்களும் அமைக்கப்பட்டன. மதுரை நாயக்கர்களின் காலத்திலே திராவிட கலைப்பாணியின் வளர்ச்சி பூரணமாகியது. நாயக்கர்கள் வானளாவிய கோபுரங்களை மதுரை, திருவரங்கம் முதலான தலங்களிலே உருவாக்கினார்கள். கோபுரங்கள் எல்லா வற்றிலும் மதுரை மீனாகூழியம்மன் கோயிலில் அமைந்தவையே சாலவுஞ் சிறந்தவை; அளவில் மிகவும் பெரியவை; வனப்பு மிகுந்தவை; அலங்காரக்
கோலமானவை.

Page 23
8 முன்னுரை
இந்துக் கோயில்களைக் காலவரையறை அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் நோக்குவதன் மூலமே அவற்றின் வரையிலா வனப்பினையும் மகிமையினையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். எனவேதான் தொல் பொருட் சின்னங்களின் துணைகொண்டு காலக்கிரம அடிப்படையிலும் பிரதேச அடிப்படையிலும் அவற்றை வகைப்படுத்தி, அவை ஒவ்வொன்றினைப் பற்றியும் தனித்தனியான கட்டுரைகளை இத்தொகுதியிற் சேர்த்துள்ளோம். இந்துக் கோயில்களின் தோற்றம், அவற்றின் ஆரம்பகால வளர்ச்சி என்பவற்றை விளக்கும் வகையில் குப்தர்காலக் கோயில் பற்றிய கட்டுரை அமைகின்றது. தக்கிணத்திலே தோன்றிய ஆதியான கற்றளிகளின் சிறப்புகள் வாதாபிச்சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் பற்றிய பகுதியிலே விளக்கப்படுகின்றன. திராவிட கலைப்பாணி தோன்றி வளர்ந்தவாற்றை நான்கு கட்டுரைகளிலே விரிவாகப் பார்த்துக் கொள்ளலாம். பல்லவர் காலக் கோயில்கள் பற்றிய கட்டுரை ஆராய்ச்சிபூர்வமானது. அதிற் பிறநூல்களிலே காண முடியாத விவரங்களும் விளக்கங்களும் இடம்பெறுகின்றன. சோழர் காலக் கலைப்பாணி பற்றிய கட்டுரையிற் சோழப் பெருமன்னரின் ஆட்சிக் காலத்திலே தென்னிந்தியக் கட்டடக் கலையில் ஏற்பட்ட உன்னதமான வளர்ச்சிப் பண்புகளை அறிந்து கொள்ளலாம். விஜயநகர காலத்துக் கோயில்கள், நாயக்கர் காலத்துக் கோயில்கள் என்பன பற்றிய கட்டுரைகளிலே திராவிட கலைப்பாணியின் வளர்ச்சி நிறைவு பெற்றமையினையும் அதன் சிறப்பம்சங்களையும் அறிந்து கொள்ளலாம். வேஸர கலைப்பாணியின் விநோதங்களை விளக்கும் வகையிற் கல்யாணிச் சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் பற்றிய கட்டுரை அமைகின்றது. அதே போலக் கர்நாடகத்து ஹொய்சளர் கலைப்பாணியின் கலைத்திறனுஞ் சிறப்பும் வேறொரு கட்டுரையிலே விளக்கப்படுகின்றன. இவ்வண்ணமாகவே நாகர கலைப்பாணியின் பொதுப்பண்புகளும் பிராந்திய வேறுபாடுகளும் கஜுராஹோ, கலிங்கத்துக் கோயில்கள் என்பன பற்றிய கட்டுரைகளிலே ஓரளவு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. கோயில்களிலே காணப்படும் சிற்பங்களைப் பற்றியும்
நான்கு விரிவான கட்டுரைகள் இதில் இடம்பெறுகின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 19
இலங்கையிலே பல்லாண்டுகளாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்து நாகரிகம் ஒரு பிரதான பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது. அது மாணவர்கள் விரும்பிக் கற்கும் பாடமாகவும் அபிமானத்தோடு நோக்கும் கல்வி நெறியாகவும் அமைகின்றது. ஆயினும், மாணவர்கள் படிப்பதற்கு வேண்டிய ஆதார நூல்களும் கருவி நூல்களும் அவர்களுக்குக் கிடைக்காமை ஒரு பெருங்குறையாகும். இந்துசமயம், தத்துவம், இந்துநாகரிகம் என்பவற்றின் பல்வேறு அம்சங்களைப்பற்றி நன்கு ஆராய்ந்து எழுதிய நூல்கள் ஆங்கிலத்திலும் வேறு சில ஐரோப்பிய மொழிகளிலும் அதிகம் உள்ளன. பன்மொழிப் புலமையும் சமயநூல்கள், தொல்பொருட் சின்னங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடும், அறிவாற்றலும் ஆராய்ச்சிப் புலமையும் ஒருங்கே கைவரப்பெற்ற வித்யாவிற்பன்னர் பலர் உன்னதமான நூல்கள் பலவற்றை எழுதியுள்ளனர். கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்நாட்களில் ஆங்கில மொழி அன்னியமாகிவிட்டதால் ஆங்கில நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை. தமிழ் மொழியில் அவற்றிற்கு நிகரான நூல்கள் எவையும் இல்லையென்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அந்நூல்களிற் சிலவற்றைத் தெரிந்து தமிழிலே மொழி பெயர்த்து வழங்கும் திட்டம் எதுவும் அரசாங்க நிறுவனங்களிடமோ தனியார் நிறுவனங்களிடமோ காணப்படவில்லை. இந்த நிலையிலே இந்துக் கோயில்கள் சார்ந்த கட்டடக்கலை, சிற்பக்கலை என்பன பற்றிச் சில அடிப்படையான அம்சங்களையும் பொதுவான விளக்கங்களையும் பெற்றுக் கொள்ளுவதற்கு இத்தொகுதியில் அடங்கிய கட்டுரைகள் ஓரளவு துணைபுரியும் என்ற நோக்கத்தில் மாணவர் சமுதாயத்திற்கு இதனை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
★ ★ ★

Page 24

குப்தர் காலக் கோயில்கள்
சி. பத்மநாதன்
இந்தியக் கட்டடக்கலை மிக நீண்டகாலத்து வரலாற்றைக் கொண்டது. அது பன்முகப்பட்டது. அது மிகத் தொன்மைக் காலத்தில் உற்பத்தியாகி வளர்ச்சி பெற்று வந்துள்ளது. ஏறக்குறைய நாலாயிரம் வருடங்களுக்கு முன் நிலை பெற்ற மொஹெஞ்சதாரே, ஹரப்பா ஆகிய நகரங்களின் கட்டடங்கள் மிகவும் பிரசித்தமானவை. அங்கு அமைந்திருந்த கட்டடங்களிற் கோயில்களின் அடையாளம் காணப்படவில்லை. மாளிகைகள், வீடுகள், அரண்கள், தானியக் களஞ்சியங்கள், பொது அரங்குகள் முதலானவற்றின் அழிபாடுகளே அங்கு காணப்பெற்றன.
இந்து சமயத்திற்கு மூலமான வேதங்கள் உருவ வழிபாடு பற்றியும், விக்கிரகங்கள் அமைந்த கோயில்கள் பற்றியும் பேசுவதில்லை. உபநிடதங்கள் அருவமாகி, எங்கும் வியாபகமாகிப் பிரபஞ்சமனைத்திலும் செறிவாகியுள்ள பிரமத்தைப் பற்றியே வர்ணிக்கின்றன. கோயில்கள் உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டவை. உருவ வழிபாடு இந்து சமயத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலே தோன்றியது. யவன நாகரிகத்தின் செல்வாக்குப் பெருமளவில் ஏற்பட்டதன் பயனாகவே உருவவழிபாடு இந்தியாவிலே வழக்கில் வந்தது குறிப்பிடத்தக்கது. அலெக்சாந்தருடைய படையெடுப்பு கி. மு. 4 ஆம் நூற்றாண்டின் கடைக் காற்பகுதியில் நடைபெற்றது. அதற்குப் பின்பு மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலே கிரேக்கர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளைக் கைப்பற்றிச் சில காலம் ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்திற் காந்தாரக்கலை உற்பத்தியாகியது. இந்திய சமய மரபுகளும், கிரேக்கரின் கலை மரபுகளும் சங்கமமாகியதனால் காந்தாரக்கலை உற்பத்தியாகியது. அக்காலத்திலே பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த பெளத்த சமயத்திற் பல மாற்றங்கள் ஏற்பட்டன. புத்தர்பிரானின்

Page 25
22 குப்தர் காலக் கோயில்கள்
உருவங்களையும், போதி சத்துவரின் உருவங்களையும் காந்தாரக் கலைஞர்கள் வனப்பு மிகுந்த சிற்பங்களாகக் கிரேக்கக் கலைப்பாணியில் வடித்தனர். உருவ வழிபாடு பெளத்த சமயத்திலே தோன்றி எங்கும் பரவியது. புத்தர்பிரானின் வாழ்க்கை வரலாற்றிலுள்ள அம்சங்களையும் ஜாதகக் கதைகளையும் கோயில்களிலும், குகைக்கோயில்களிலும் சிற்பங்களாக அமைத்தனர். மிக விரைவிலே இந்த வழக்கம் பரத கண்டம் முழுவதிலும் பரவியது.
இதற்கு முன்பு இந்திரன், வருணன், சூரியன், மித்திரன் முதலான தேவர்களைச் சிலைகளிலே உருவங்களாக வடிக்கும் வழக்கம் இல்லை. ஆனால், கிரேக்க நாகரிகத்திலே அவர்களை ஒத்த தேவர்களை மானிட வடிவிலே கட்டழகு பொலிந்த வண்ணமாகக் கல்லிலும், பளிங்கிலும் அமைக்கும் வழக்கம் மிகவும் புராதனமானது. புராதன உலகிலே கிரேக்க நாட்டுச் சிற்பிகள் மகோன்னதமான கலைப் படைப்புக்களை உருவாக்கினார்கள். கிரேக்க கலாசார மரபின் செல்வாக்கினாலே இந்திய சமய மரபுகளிலே பிரதானமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. பெளத்தர்கள் பின்பற்றிய உருவ வழிபாட்டு முறைகள் சமணம், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வழமையாகிவிட்டன. பெளத்தர்கள் கோயில்களிலே பெளத்த படிமங்களைத் தாபனம்பண்ணி வழிபாடாற்றினார்கள். அவர்களைப் போன்று இந்தியாவிலுள்ள பிற சமயத்தவரும் விக்கிரகங்களைத் தாபனம் பண்ணி ஆலயங்களிலே வழிபாடு செய்யத் தொடங்கினார்கள். அவ்விதமாகவே கோயில் வழிபாடு இந்துக்களிடையே உற்பத்தியாகியது. கி. மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இந்துக் கோயில்களின் அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை. யவனர்களின் ஆட்சிக் காலம் முதலாகவே சைவம், வைணவம், கெளமாரம் தொடர்பான சமய சின்னங்கள் நாணயங்களிலும் முத்திரைகளிலும் கிடைக்கின்றன. அத்துடன் அவற்றுள் மிகவும் பழைமையானவை வடமேற்கு இந்தியாவிற் கிடைத்துள்ளமையும் கவனித்தற்குரியது.
வழிபாட்டு நிலையங்களான கோயில்களை மரம், களிமண், செங்கல், கருங்கல் முதலியவற்றினால் அமைத்துக் கொள்ளும் வழக்கம் புராதனகாலம் முதலாகக் காணப்பட்டது. கட்டடங்களின் தோற்றத்திலும் அமைப்பிலும் காலப்போக்கிற் பிரதேச அடிப்படையிலான வேறுபாடுகளும், காலக்கிரமத்தில் அபிவிருத்திகளும் ஏற்படலாயின. அவற்றை அமைக்கும் முறைகளைப்பற்றியும் அவற்றின் அம்சங்களைப் பற்றியும் விளக்கும் வண்ணமாக நூல்கள் எழுதப்பட்டன. கட்டடங்களையும் சிற்பங்களையும் அமைக்கும் முறையை

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 23
விவரிக்கும் நூல்கள் சிற்ப சாஸ்திரங்கள் எனப்படும். இப்பொழுது கிடைக்கின்ற சிற்பசாஸ்திர நூல்கள் பெரும்பான்மையும் கோயில் அமைப்பானது மிக வளர்ச்சி அடைந்த கால கட்டத்தைச் சேர்ந்தனவாகும்.
கோயில்களை மண்தளி, குடபோகம், மலைத்தளி, கற்றளி என்ற பிரிவுகளாக வகை செய்வர். களிமண், செங்கல் ஆகியன கொண்டு அமைக்கப்படும் கோயில்கள் மண்தளிகளாகும். அவ்விதமான கோயில்களைச் சிரமமின்றி எங்கும் அமைத்துக் கொள்ளலாம். குகைகளைக் குடைந்து அமைக்கும் கட்டடங்கள் குடபோகம் என்னும் வகைக்குரியவை. மலைகளை மேலிருந்து கீழாகச் செதுக்கி அமைக்கப்படும் கோயில்களை மலைதளி என்பர். மலைத்தொடர்களும் மலைப்பாறைகளும் அமைந்திருக்கும் நிலப்பகுதிகளில் மட்டுமே குடபோகம், மலைதளி ஆகியவற்றை அமைக்கலாம். எனவே, தகூSணாபதத்திலும் அதற்குத் தெற்கிலுள்ள பகுதிகளிலும் அத்தகைய அமைப்புகள் பல்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு அளவுகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில மிகவும் பிரசித்தமானவை. கங்கைச் சமவெளியிலே மண்டளிகளையும் கற்தளிகளையுமே அமைத்துக் கொள்ளலாம்.
வட இந்தியாவிலுள்ள இந்துக் கோயில்களின் வளர்ச்சியினைக் குப்தப் பேரரசர் காலம் முதலாக அறிந்து கொள்ள முடிகின்றது. அக்காலத்திற் செங்கல், கல் ஆகியவற்றைக் கொண்டு வழிபாட்டு நிலையங்களை அமைத்தனர். அவை அடிப்படையிற் சில பொதுப் பண்புகளைக் கொண்டிருந்தன. ஆயினும், கட்டட அமைப்பின் அம்சங்களிற் சில வேற்றுமைகள் காணப்பட்டன. அக்காலக் கோயில்களை மேல்வரும் ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்: 1) தட்டையான கூரையுடன் இணைந்த சதுரமான மூலஸ்தானம், ஒடுக்கமான சிறிய மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கோயில்கள். 2) மேலே மூடப்பெற்ற திருச்சுற்றாலை பொருந்திய தட்டையான கூரையுடன் அமைந்த சதுரமான மூலஸ்தானம், சிறிய மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கோயில்கள். 3) மேலே சிறிய சிகரம் அமைந்துள்ள சதுரமான மூலஸ்தானம் கொண்ட
கோயில்கள். 4) பின்புறத்தில் 'வில் வளைவான தோற்றத்துடன் வண்டிக்கூடாரம் போன்ற
கூரையுடைய சதுரமான அமைப்புக் கொண்ட கோயில்கள். 5) நான்கு திசைகளையும் நோக்கிச் சிறிது நீளமான முகப்புகளைக் கொண்ட
வட்ட வடிவில் அமைந்த கோயில்கள்.

Page 26
24 குப்தர் காலக் கோயில்கள்
இவற்றிலே நான்காம் ஐந்தாம் வகைகளைச் சேர்ந்தவை முற்காலத்தைச் சேர்ந்த கட்டடங்களையும் குறிப்பாக ஆந்திர தேசத்து சேதியசாலைகளையும் முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள தேர் எனும் தலத்திலுள்ள கோயிலும், கிருஷ்ணா மாவட்டத்துச் செஸார்லா என்னும் ஊரில் உள்ள கபோதேஸ்வரம் கோயிலும் நான்காவது வகைக்குரியவை. அவ்விரண்டும் நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளிலே கட்டப் பெற்றவை. அவை அளவிற் சிறியனவாகவும் சாதாரணமான வேலைப்பாட்டில் அமைந்தனவாகவுங் காணப்படுகின்றன. ஐகொளேயிலுள்ள துர்க்கை கோயிலும் அந்த வகைக்குரியது. அது ஆறாம் நூற்றாண்டிற் கட்டப்பெற்றதென்று கொள்ளலாம். அதன் மூலஸ்தானக் கூரை தட்டையானது. அதன் மேலே சிகரம் உள்ளது. மூலஸ்தானத்தைச் சுற்றித் தூண்கள் பொருந்திய திருச்சுற்றாலை அமைந்துள்ளமை அதன் சிறப்பம்சமாகும். அந்தக் கோயில் மிக உயரமான அதிஷ்டானத்தில் அமைந்திருக்கின்றது. அதிஷ்டானத்தின் தளங்கள் சிலவற்றிலே சிற்ப வரிசைகள் சிறப்புடன் அமைந்துள்ளன. மணிநாகன் கோயிலான மணியார் மடம் ஐந்தாம் வகைக்குரியது. செங்கல்லினால் அமைந்த அக்கோயில் வட்ட வடிவமானது. கோயிலின் பாகங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளிலே கட்டப்பெற்றவை. அவற்றுட் சில குப்தர் காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆலயம் தோற்றத்தில் வட்டவடிவமானது. நான்கு பக்கங்களிலும் சற்று முன்புறமாக நீண்ட அமைப்புகள் உள்ளன. கட்டடத்தைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் தேவ கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே சுதையில் உருவாக்கப்பட்ட அழகு வாய்ந்த சிற்பங்கள் இருந்தன. வடக்குப் புறத்திலே நுளைவாயில் உள்ளது. ஆலயம் வட்டமான பிராகாரத்தினுள்அமைந்திருந்தது.
முதலாவது வகைக்குரிய கட்டடங்கள் கோயிற் கட்டடக் கலை வரலாற்றைப் பொறுத்த வரையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றிலே காணப்படும் பிரதான அம்சங்கள் இந்துக் கோயில்களின் தோற்ற வளர்ச்சிக்கு மூலமானவை என்று கொள்ளலாம். இரண்டாம் மூன்றாம் வகைகளுக்குரிய கோயில்களும் அடிப்படையில் இவற்றைப் போன்ற அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் மேலதிகமான அம்சங்களே வேறுபாடுகளுக்கு ஏதுவாகின்றன. இந்த வகைக்குரிய கோயில்களிற் பல சாஞ்சி, திகாவா, ஏரான் என்னும் இடங்களில் நன்கு பேணப்பட்ட நிலையிலே காணப்படுகின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 25
கட்டட அமைப்பைப் பொறுத்த வரையிற் சாஞ்சியிலுள்ள பதினேழாவது ஆலயம் மிகச் செம்மையானதாகவும் வனப்புடையதாகவும் காணப்படுகின்றது. அது அளவிலே சிறிய கோயில்; மூலஸ்தானம் சதுரமானது. அதற்கு முன்னால் தளத்திற் சதுர அமைப்புடைய மண்டபம் காணப்படுகின்றது. பிற் காலத்துக் கோயில்களின் சீராக அமைந்த அதிஷ்டானம் அதிலே காணப்படவில்லை. கற்படைகளைத் தாங்கக் கூடிய பலமான அத்திபாரத்தின் மேலே கோயில் அமைந்துள்ளது. மண்டபம் உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதையும் கல்லினால் அமைத்துள்ளனர். நாற்சதுரமான கற்பாளங்களைக் கொண்டு கற்றளி அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களிலும் தளத்திலும் செப்பனிடப்பட்ட கற்கள் சீரான முறையிலே அடுக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானச் சுவர்களிலே எதுவிதமான சிற்ப வேலைப்பாடுகளும் காணப்படவில்லை. மூலஸ்தானத்தின் கூரை தட்டையானது. சுவர்களின் மேல் நீளமான கற்களை அடுக்கி வைத்துள்ளனர். அவை எல்லாம் இறுகப் பொருந்தும் வண்ணமாக ஓரங்களிலே செதுக்கிக் கொளுவப்பட்டுள்ளன.
மண்டபத்தின் முகப்பில் நான்கு தூண்கள் உள்ளன. மூலஸ்தானச் சுவர்களை ஒட்டி ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு தூண் உள்ளது. தூண்கள் அடியிலே சதுரமானவை. அதற்கு மேலுள்ள பகுதி எண்கோணமானது. அதற்கு மேற் பல பட்டைகள் அமைந்த பகுதி தெரிகின்றது. மணி போன்ற அமைப்பும் சதுரவடிவில் அமைந்த மேற் பாகங்களும் கவர்ச்சியான முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. இதைப் போன்ற கோயில்கள் திகாவா, ஏரான் என்னும் இடங்களிலுங் காணப்பட்டன.
இரண்டாவது வகையிலுள்ள கோயில்களின் அம்சங்களை நாச்னா, குடார என்னுமிடத்திலுள்ள பார்வதி கோயில், பூமாராவிலுள்ள சிவன் கோயில், ஐகொளேயிலுள்ள லாத்-கான், கொண்டகுடி, மேகுடி என்னும் ஆலயங்கள் ஆகியவற்றிலே காணலாம். அவற்றுள் முதல் இரண்டும் மத்திய இந்தியாவிலுள்ளன. ஏனையவை கர்நாடகத்திலுள்ளன. வங்காளத்திலே தினாஜ்பூர் மாவட்டத்தில் வைகிராம் என்னும் ஊரிலே காணப்படுகின்ற செங்கல்லினால் அமைந்த பாழடைந்துள்ள கோயிலும், கோவிந்த சுவாமி கோவிலும் இவற்றைப் போன்றனவாகும். இந்த வகையைச் சேர்ந்த கோயில்களிலே தட்டையான கூரையுடன் அமைந்த சதுரமான மூலஸ்தானம், அதனைப் போன்ற அமைப்புடைய கட்டடம் ஒன்றின் மத்தியிலே அமைந்து காணப்படும். எனவே, மூலஸ்தானமானது ஒன்றனுள் இன்னொன்றாக அமைந்த இரண்டு சதுரமான கட்டடங்களை உடையதாகும். இரண்டின்

Page 27
26 குப்தர் காலக் கோயில்கள்
சுவர்களுக்கும் இடையில் மூடப்பெற்ற திருச்சுற்றாலை அமைந்திருக்கும். மூலஸ்தானத்திற்கு முன்பாக, அதனிலுஞ் சற்றுக் குறைவான அகலமுடைய மண்டபம் இருக்கும். அதன் முன்பாகப் வாயிற் படிகள் காணப்படும். மூலஸ்தானத்தின் வெளிப்புறச் சுவர்களிற் காற்றோட்டம் கருதித் துவாரங்கள் வரிசைக்கிரமமாக வெட்டப்பட்டிருக்கும். நாச்னா குடாரவில் ஆதிமூலத்தின் சுவர்களிலும் இவ்விதமான துவாரங்கள் அமைந்திருப்பதனைக் காணலாம். அங்குள்ள பார்வதி கோயிலிலும் ஐகொளேயிலுள்ள துர்க்கை அம்மன் கோயிலிலும் மூலஸ்தானத்தின் மேல் உயரம் குறைந்த சிகரம் காணப்படுகின்றது.
பூமாரா சிவன் கோவிலின் கட்டட அமைப்பு இவற்றைக் காட்டிலும் ஓரளவு விருத்தி பெற்றதாகும். அதன் வாயிற் படிகளின் இருபக்கங்களிலும் ஒவ்வொரு சிறிய கோட்டம் அமைந்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். காலப் போக்கிலே இந்த அம்சம் மேலும் விருத்தி பெற்றுள்ளது. நாலந்தாவிலுள்ள கோயில் அழிபாடுகளிடையே அத்தகைய அமைப்புகள் முன்னேற்றமான முறையில் உருவாகி இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. நாலந்தாவிலே பஞ்சாயதனக் கோயில் வடிவத்தைப் பிரதிபலிக்கும் அழிபாடுகள் உள்ளன. நாச்னா - குடார பார்வதி கோயில் முதலாம் வகைக்குரிய கோயில்களைப் போல, எளிமையும் எழிலும் பொருந்திய அமைப்பாக விளங்குகின்றது. மண்டபத் தூண்களிலே குடபோகங்களில் உள்ளவற்றை ஒத்த நுண்ணிய வேலைப்பாடமைந்த சிற்பங்கள் உள்ளன. வெளிப்புறச் சுவர்களிலும் அழகு வாய்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. ஐகொளேயிலுள்ள லாத்கான், கொண்டகுடி என்னும் கோயில்கள் இதற்குக் காலத்தாற் சிறிது பிற்பட்டனவாகும். பூமாரா சிவன் கோயிலில் அலங்கார வேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. தேவ கோட்டங்களிலே கணங்கள், கீர்த்தி முகங்கள், தேவர் படிமங்கள் ஆகியன அமைந்துள்ளன. தூண்கள், வாசற் கதவுகள் ஆகியவற்றின் வேலைப்பாடுகளின் அடிப்படையில் அக்கோயில் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று கருதலாம். சக வருஷம் 556 இல் (கி. பி. 634) ரவிகீர்த்தியினால் ஐகொளேயில் அமைக்கப்பட்ட மேகுடி என்னும் ஜினாலயம் முன்னையவற்றைக் காட்டிலும் காலத்தாற் பிற்பட்ட கோயிலாகும். குப்தர் காலக் கோயில்களிற் பித்தர்கோன் ஆலயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சதுரமான மூலஸ்தானம், மண்டபம்
ஆகியவற்றுக்கிடையிலே சிறிய அந்தராளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 27
அந்தராளத்தின் மேல் அமைந்த சிறிய வாயிற் புறமும் முகப்பு மண்டபங்களும் உள்ளே அண்டவடிவமுடைய கூரைகளைக் கொண்டுள்ளன. மூலஸ்தானம், அந்தராளம் ஆகியவற்றின் மேற் சிகரங்கள் உள்ளன. வாசலைத் தவிர்ந்த ஏனைய மூன்று பக்கங்களிலும் முன்புறமாக நீண்ட கட்டட அமைப்புகள் காணப்படுகின்றன. அவற்றின் மேற்புறத்திலே சுடுமண் உருவங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது வகைக்குரிய கோயில்களில் மூலஸ்தானத்தின் மேற் சிறிய அளவிலான சிகரம் அமைந்திருக்கும். இதைத் தவிர ஏனைய அம்சங்களில் அக்கோயில்கள் கட்டட அமைப்பில் முதலாவது வகைக்குரியனவற்றைப் போன்றனவாகும். சமயச் சார்புடைய கட்டடங்களை அமைக்குமிடத்து அவற்றை உயரம் மிக்கனவாக நிர்மாணித்துக் கொள்வதில் பொதுவாகக் கலைஞர்கள் ஈடுபாடு கொண்டிருந்தனர். சிகரத்தின் மூலம் கோயில் அமைப்பானது அலங்காரமான கோலத்தைப் பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டுச் சாசனங்கள் சில ஓங்கி எழுந்த மகத்தான சிகரங்களை உடைய ஆலயங்களைப் பற்றி வர்ணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயினும், இதுவரை அடையாளம் காணப்பெற்ற கோயில்களின் இடிபாடுகளிடையே ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சிகரம் எதுவும் காணப்படவில்லை. தியோகாரிலுள்ள தசாவதாரக் கோயில், சிகரம் அமைந்த கோயில்களுக்குச் சிறந்த ஒர் எடுத்துக் காட்டாகும். நாச்னாகுடாரா சிவன் கோயில், பட்டாரி மகாதேவர் கோயில், வீதர் கோனிலுள்ள மண்டளிக் கோயில் ஆகியவற்றிலும் சிகரங்கள் அமைந்திருந்தன. புத்த காயாவிலுள்ள மகாபோதி ஆலயத்தில் அமைந்த சிகரத்தை சுவன்-ஸாங் வர்ணித்துள்ளார். ஐகொளேயிலுள்ள துர்க்கையம்மன் கோயில், குச்சிமல்லி குடி ஜினாலயம் ஆகியவற்றிலும் மூலஸ்தானத்தின் கூரையின் மேற் சிகரங்கள் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றின், கட்டட அமைப்பும் ஏனைய அம்சங்களும் வட இந்தியாவிலுள்ள கோயில்களைக் காட்டிலும் பெரிதும் வேறுபட்டவை. தியோகார், வீதர் கோன் ஆகியவற்றிலுள்ள ஆலயங்கள் அந்த வகைக்குரிய கோயில்களின் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன என்று கொள்ளலாம். கற்றளியான தசாவதாரக் கோயில் மிக அகலமான தளத்தின் மேல் அமைந்துள்ளது. அந்தத் தளத்தினை அடைவதற்கு அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. தளமானது அதிஷ்டானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதன் எல்லாப் புறங்களிலும் சிற்பங்கள்

Page 28
28 குப்தர் காலக் கோயில்கள்
பொருந்திய கோஷ்டங்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தின் சுவர்களின் வெளிப்புறத்திலே தேவகோஷ்டங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் பக்கங்களிலே அரைத்தூண்கள்அமைக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் இரட்டைப் படையாக அமைந்த கொடுங்கை காணப்படுகின்றது. அதன் நடுவிலே கூடுகள் பொருந்திய வரிமானம் அமைக்கப்பட்டுள்ளது. கொடுங்கையின் மேற் பல் தள அமைப்பான சிகரம் இருந்தது. அது இடிந்து விழுந்து விட்டதால் அதன் அம்சங்களை விவரிக்க முடிவதில்லை.
செங்கல்லினால் அமைந்த வீதர்கோன் ஆலயம் சதுரமான மூலஸ்தானம், அதே வடிவில் அமைந்த அர்த்த மண்டபம், அவற்றை இணைக்கின்ற அந்தராளம் ஆகிய அம்சங்களுடன் அமைந்திருந்தது. அந்தராளமும் வாயிற்புறமும் அரை வட்ட வடிவம் கொண்ட கூரைகளினால் மூடப்பட்டிருந்தன. விமானம், மூலஸ்தானம், அந்தராளம் ஆகியவற்றின் மேற் கூம்பிய வடிவில் அமைந்த சிகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நில மட்டத்தில் ஆலயம் சதுரவடிவில் அமைந்துள்ளது. நான்கு புறங்களிலும் கட்டடம் முன்புறமாக நீண்ட அமைப்புகள் பொருந்தியதாகக் காணப்பட்டது. சிகரத்தின் தளங்களிலே கீழ் அமைந்த, தளம் ஒவ்வொன்றிலும் பார்க்க அதன்மேல் அமைந்த தளம் அளவிற் சிறியதாகும். அதிலே காணப்படுகின்ற சிற்ப வேலைப்பாடுகள் கட்டட அமைப்பின் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வீதர் கோன் கோயிலை ஆறாம் நூற்றாண்டிற்குரியதாகக் கொள்ளலாம். அதன் சிகரம் குப்தர் காலத்துக் கட்டட அமைப்பின் அம்சங்களுடன் காணப்படுகின்றது. அதிலே காணப்படும் சுடுமண் படிமங்களும் வனப்புமிக்கனவாகவும் கலையம்சங்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.
புத்தகாயாவிலுள்ள மகாபோதிக் கோயில் ஆதியில் குப்தர் காலத்திலே அமைக்கப் பெற்றதாகும். ஆயினும், பின்பு பல்வேறு காலப்பகுதிகளில் அது புனரமைக்கப்பட்டது. ஆதலினாலே அதன் ஆதியான தோற்றத்தின் விவரங்களை வர்ணிக்க முடிவதில்லை. அது இப்பொழுது ஒரு பிரமாண்டமான சிகரமாகக் காட்சியளிக்கின்றது. அதன் தளங்கள் ஆமலக வடிவில் அமைந்தவை. மிகப் பிற்காலத்திலே அமைக்கப்பட்ட அதன் கோபுரவாசல் கிழக்குப் பக்கத்திலே அமைந்திருக்கின்றது. சிகரத்தினுடைய நான்கு பக்கங்களிலும் ஒன்றன் மேல் ஒன்றாகச் சிற்பங்கள் பொருந்திய

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 29
கோட்டங்கள் அமைந்த வரிமானங்கள் கவர்ச்சியான கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சிகரத்தினுடைய பீடத்தின் நான்கு மூலைகளிலும் அதனைப் போன்ற தோற்றமுடைய சிறு சிகரங்கள் உள்ளன. இக் கோயிலை நேரிலே பார்த்த சுவன்-ஸாங் அதனை வர்ணித்துள்ளார். அவருடைய வர்ணனைகளின் அடிப்படையிற் கட்டட அமைப்பிலே அது வீதர்கோன் ஆலயத்தை ஒத்திருந்தது என்று கருத முடிகின்றது. நாலந்தாவிலே பிரமாண்டமான அளவுடைய பெளத்த கோயில் ஒன்று நரசிம்ம குப்தனால் அமைக்கப் பெற்றது. அதன் சிகரம் 300 அடி உயரம் கொண்டது என்பர் சுவன்ஸாங் காலப் போக்கில் அக் கோயில் இடிந்து அழிந்து விட்டது. அதன் பிரமாண்டமான அதிர்ஷ்டானம் மட்டுமே எஞ்சியுள்ளது. ܐܗܝ
படாரி என்னும் இடத்திலுள்ள கோயிலும் ஆறாம் நூற்றாண்டிற்குரியதாகும். அதன் கட்டடத்தின் குறிப்பிடத்தக்க அளவு பகுதிகள் இன்றுவரை பேணப்பட்டுள்ளன. ஆலயத்தினுடைய சிகரமானது கோயிலின் அகலத்தைக் காட்டிலும் இரு மடங்கு பெரிய அளவுடையதாகும். அந்த வகையில் வராக மிகிரர் சொல்லிய விதியின் முறையே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சிகரமானது அடியிலே நிமிர்ந்த வண்ணமாகவும் மேற்புறம் கூம்பிய கோலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. நாச்னா குடார சிவன் கோவில், சிர்ப்பூர் லக்ஷமணர் கோயில் ஆகிய ஏழாம் நூற்றாண்டின் கட்டடங்களிலும் இதே போன்ற அமைப்பினைக் காணலாம்.
இறுதியாக சிர்ப்பூர் லக்ஷமணசுவாமி கோயிலின் அமைப்பைக் கவனித்தல் வேண்டும். அங்கு காணப்படும் சிகரம் ஆதிகாலச் சிகர அமைப்புகளிலே மிகவும் வனப்புடையதாகும். வழமைபோல மூலஸ்தானம் சதுரமானது. அதன் முன்புறமாக மண்டபம் அமைந்துள்ளது. இரண்டும் உயரமான பீடத்தின் மேலே கட்டப்பட்டுள்ளன. வீதர்கோன் கோவிலைப் போல அதன் மூலஸ்தானத்தின் நான்கு புறங்களிலும் முன்புறமாக நீட்டி அமைக்கப்பட்ட கட்டடப் பகுதிகள் உள்ளன. காற்றோட்டமும் வெளிச்சமும் போதியளவில் ஏற்படும் வகையிற் கட்டடம் சிறப்பாக நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. சிகரத்தின் மேலே பூரணமான தோற்றங் கொண்ட ஆமலகம் அமைந்துள்ளது. கட்டடத்தின் பகுதிகள் அலங்காரமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. பொதுவாக அதன் அம்சங்கள் அனுபவ முதிர்ச்சியினையும் கட்டடக் கலையின்
முன்னேற்றமான வளர்ச்சிக் கட்டத்தையும் பிரதிபலிக்கின்றன.

Page 29
30 குப்தர் காலக் கோயில்கள்
தொகுத்து நோக்குமிடத்து, இந்துக் கோயில்களின் தோற்ற வளர்ச்சிகளைப் பொறுத்தவரையிற் குப்தர் காலம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதுவரை கிடைத்துள்ள தொல்லியற் சான்றுகளின்படி காலத்தால் மிக முற்பட்ட இந்துக் கோயில்கள் குப்தர் காலத்திற்கு உரியவை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலம் முதலே கோயில்களின் கட்டட அமைப்பின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடிகின்றது. குப்தர் காலத்திற் கணிசமான அளவினைக் கொண்ட கோயில்களை அமைத்தார்கள். சிவன், விஷ்ணு, அம்மன், குமாரக்கடவுள் ஆகியோரின் படிமங்களை மூலஸ்தானத்திலே தாபனம் பண்ணி வழிபாடு, ஆற்றுவதற்கென்று கோயில்களை அமைத்தார்கள். கட்டடங்கள் நெடுங்காலம் நின்று நிலைபெறும் வண்ணமாக அவற்றைத் தளிகளாகச் செங்கல்லினாலும் கருங்கல்லினாலும் அமைத்தார்கள். வெவ்வேறு வடிவங்களிலே ஆலயங்களை அமைத்தார்கள் சில கோயில்களிள் மூலஸ்தானங்கள் சதுரமானவை; வேறு சில இரட்டைச் சதுரமானவை, இன்னுஞ் சில வட்டவடிவமானவை. இந்த அமைப்பு முறையானது காலக்கிரமத்திலே நாவலந்தீவு எங்கும் பரவியது. அதற்கப்பாலும் சொர்ணபூமியிலுள்ள தேசங்கள் அனைத்திலும் அதன் செல்வாக்கு ஏற்பட்டது. காலப் போக்கிலே குப்தர் காலத்திலே தோன்றி வளர்ச்சி பெற்ற கட்டட அமைப்புகளின் அடிப்படையில் இணையிலாத வனப்பும் பிரமாண்டமான தோற்றமும் கொண்டதான இந்துக் கோயில் உற்பத்தியாகியது. அதன் அம்சங்களைச் சிற்ப சாஸ்திரங்களும் ஆகம நூல்களும் வர்ணிக்கின்றன.

வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி
சி. பத்மநாதன்
சாளுக்கியரின் ஆதிக்கம்
நீர்க்கிணத்திலே ஐந்தாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற சாளுக்கியர் தகூறினாபதத்திலே வலிமைமிக்க இராச்சியம் ஒன்றை உருவாக்கினார்கள். அவர்கள் வாதாபியினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தமையினாலே வாதாபிச் சாளுக்கியர் என்று சொல்லப்படுவர். அரசியல், சமயம், கலை ஆகிய துறைகளிலே அவர்களின் ஆட்சிக் காலத்திற் பல வளர்ச்சிகள் ஏற்பட்டன. சாளுக்கியர் சுலபமாகத் தென்னிந்தியத் தீபகற்பத்திலே தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியன அவர்களின் ஆட்சியின் கீழ் வந்தன. அங்குள்ள பழைய அரச வம்சங்களை அதிகாரத்தினின்றும் நீக்கிச் சாளுக்கியர் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டனர். ஆந்திரதேசத்திலே காணப்பெற்ற பல சிறிய இராச்சியங்களைக் கைப்பற்றி அங்கு தங்கள் வம்சத்தவரின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள். ஏழாம் நூற்றாண்டிலே விஷ்ணுவர்த்தனன் காலம் முதலாகச் சாளுக்கியரின் கிளை மரபினர் அங்கு ஆட்சிபுரிந்தனர். அவர்களின் இராச்சியம் வேங்கி தேசம் என்று வழங்கியது. .
மேற்கிலே, குஜராத்திலும் சாளுக்கியர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினாட்டினார்கள். அங்கே அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக ஏற்பாடுகளின் மூலம் சாளுக்கியரின் கிளை வம்சம் ஒன்று உற்பத்தியாகியது. தகூவினாபத பதி என்னும் விருதினைச் சாளுக்கியர் தங்கள் சாதனைகளாலே உரிமையாக்கிக் கொண்டனர். சாளுக்கியப் பேரரசு சமகாலத்துப் பரத கண்டத்து அரசியலில் ஒரு பெருஞ் சக்தியாக விளங்கியது. வட இந்திய மன்னர்களோடு சாளுக்கியர் பல விதமான தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள். வடக்கிலே எழுச்சி பெற்ற சமகாலத்து

Page 30
32 வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி
இராச்சியங்கள் மீது அவர்களின் செல்வாக்குப் பல்வேறு வகைகளில் ஏற்படலாயிற்று. இரண்டாம் புலிகேசி கன்னோசிப் பெருமன்னனாகிய பூரீ கர்ஷனைத் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியைப் புலிகேசியின் பிற் சந்ததியினர் தங்கள் பட்டயங்களிலே பெருமிதத்துடன் குறிப்பிட்டு வந்தனர்.
சாளுக்கியப் பேரரசிலே பிரதானமான இந்திய சமய நெறிகள் எல்லாஞ் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெளத்த சமயம் பெருமளவுக்கு மக்கள் மத்தியிலே செல்வாக்கினை இழக்கத் தொடங்கியது. ஆயினும், பெளத்த சமயச் சார்புடைய பிரசித்தமான குடபோகங்களும் ஒவியங்களும் மேற்குத் தக்கிணத்தில் அவர்களின் காலத்திலே விருத்தி பெற்றன. சமணம், சைவம், வைணவம் ஆகிய சமய நெறிகள் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்தன. அவற்றைச் சார்ந்த கோயில்களும் பிற சமய நிறுவனங்களும் சாளுக்கியரின் ஆதரவைப் பெற்றன.
சாளுக்கிய வம்சத்தின் உற்பத்தி பற்றிய கதைகள் அவர்களின் சிலாசா சனங்களிலும் செப்பேடுகளிலுங் காணப்படுகின்றன. அவை புராணக் கதைகளைப் போன்றவை; சமஸ்கிருத மொழியில் காவிய நடையிலே அமைந்தவை. சாளுக்கியர் வராக இலச்சினையைத் தங்கள் சின்னமாகக் கொண்டிருந்தனர். நிலவுலகினைக் கலியினின்றும் அவர்கள் காப்பாற்றினார்கள் என்று அவற்றிலே நயம்படக் கூறப்படுகின்றது. பேரூழியிற் கடலில் அமிழ்ந்த பூவுலகினைத் திருமால் வராக அவதாரமாகி மீட்ட கதை சாளுக்கியர்களின் கட்டடங்களிலே, பல இடங்களிலே சிற்பமாக வடிக்கப் பெற்றுள்ளது. சாளுக்கியர் வாதாபியினை அரண் செய்து அதனை இராசதானியாகக் கொண்டிருந்தனர். அங்கும் அதற்குச் சமீபமாக அமைந்த ஐகொளே, பட்டதகல் என்னும் நகரங்களிலும் அவர்கள் காலத்துக் கட்டடங்கள் பெரும்பான்மையுங் காணப்படுகின்றன. சாளுக்கியர் காலத்திலே, தக்கிணத்திலே சமஸ்கிருதக் கல்வி பெரிதும் விருத்தி பெற்றிருந்தது. எல்லாச் சமயத்தவரிடையிலும் அது பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்தது. உயர் கலா பீடங்களும் வித்யா பீடங்களும் உருவாகி இருந்தன. சமய தத்துவங்களோடு காவியம், இதிகாசம், புராணம், நாடகம், தர்மசாஸ்திரம், இலக்கணம், பாட்டியல் முதலானவற்றைப் பயின்ற புலவர்கள் பலர் வாழ்ந்தனர். அக்காலத்துக் கோயில்கள் கல்வியிலும் கலாசாரத்திலும் ஏற்பட்ட பன்முகப்பட்ட வளர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 33
தக்கிணத்திலே மிகப் புராதனமான வைதீக சமயச் சார்புடைய கோயில்கள் நாகார்ஜுன கொண்டாவிலே காணப்படுகின்றன. இசுஷ்வாகு மன்னர்களின் காலத்தில் மண்டளிகளாக அமைக்கப்பட்ட கோயில்களின் அழிபாடுகள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வுகளினால் அடையாளங் காணப்பட்டன. அவற்றிலே மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கோபுரம், கொடிமரம் ஆகிய அம்சங்கள் பிராகாரத்தினுள் அமைக்கப்பட்டிருந்தன. பரிவார தேவர் ஆலயங்கள் ஒரு கோயிலில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்திலும் தமிழகத்திலும் கலிங்கத்திலும் பிற்காலத்திற் படிப்படியாக விருத்தி பெற்ற ஆலய அமைப்பின் மூலங்களை நாகார்ஜுன கொண்டாவில் அவதானிக்க முடிகின்றது. பரிவாரதேவர் ஆலயங்களிற் சதுரமாயும் எண்கோணமாயும் வட்டமாயும் அமைந்த சிகரங்கள் உள்ளமையும் கவனித்திற்குரியது. பிற்காலத்திலே நாகர, திராவிட, வேஸர கலைப்பாணிகளின் முன்னோடிகளான அமைப்புகளும் அங்கு உள்ளன.
வாதாபிக் குகைக் கோயில்கள்
வாதாபிச் சாளுக்கியர் காலத்திலே குடபோகங்களும் கற்றளிகளும் அமைக்கப்பட்டன. குடபோகங்கள் வாதாபியிலே காணப்படுகின்றன. வாதாபியிலுள்ள அரண்மனை, அரண்கள், குடபோகங்கள் ஆகியவற்றின் கட்டடவேலைகள் மங்களேசனால் (கி. பி. 598-609) ஆரம்பிக்கப்பட்டவை. வாதாபியிலுள்ள ஏரியினைச் சுற்றிச் சிறியனவும் பெரியனவுமான கட்டடங்கள் பல அமைந்துள்ளன. தென்கிழக்கிலே பல மண்டபங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வைதீக சமயக் கோயில்களாக அமைந்த மூன்று மண்டபங்களும் குடபோகமான சமணக் கோயில் ஒன்றுங் குறிப்பிடத்தக்கவை. முதல் மூன்று குடபோகங்களும் மங்களேசனுடைய காலத்தவை. அவற்றிலே இந்நாட்களில் மூன்றாவது கோயில் என்று சொல்லப்படும் குடபோகம் மிகப் பெரியது. அக்கோயில் விஷ்ணுவுக்குரியதாகும். திருமாலின் அனந்தசயனக் கோலமும் நரசிம்ம அவதாரமும் சுவரிலுந் தாழ்வாரத்திலும் நுட்பமான வகையிலே கவர்ச்சி பொருந்திய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளன. திருமால் பூவராகமாகிப் பூகோளத்தை ஊழிக்கடலிலிருந்து மீட்குங் காட்சி அங்கு அற்புதக் கோலத்தில் அமைந்துள்ளது.

Page 31
34 வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி
இரண்டு என்ற இலக்கமிடப்பட்ட குடபோகமும் விஷ்ணு கோயிலாகும். அது முன்னையதைக் காட்டிலும் அளவிற் சிறியது. இரண்டிற்கும் இடையே அமைந்திருக்கின்ற குடபோகம் சிவன் கோயிலாகும். இக்குடபோகங்கள் தூண்கள் பொருந்திய தாழ்வாரம், மண்டபம், கருவறை என்னும் பகுதிகளைக் கொண்டவை. சுவர்ப்பாகங்கள் பளபளப்பாகத் தோன்றும் வண்ணமாகச் செம்மையாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றிலே திறந்த முற்றங்களும் உள்முற்றங்களும் அமைந்திருக்கின்றன. தாழ்வாரத் தூண்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று வளைவடைப்புகள் காணப்படுகின்றன. சில அம்சங்களில் அவை குப்தர் காலத்துத் தூண்களை ஒத்திருக்கின்றன. பெரிய விஷ்ணு கோயில் 70 அடி நீளங் கொண்டது. அதில் வரிசையாக ஆறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு மூலையிலும் சுவரோடு ஒட்டிய தூண்களும் இடம்பெற்றுள்ளன. இக்கோயில்களின் வாயிற் புறங்களிற் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன. பீடத்திலே நிரையாக வனப்புமிக்க கோலத்திற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கற்றளிகள்
ஐகொளே
சாளுக்கியர் காலத்துக் கற்றளிகளுள் மிகப் பழைமையானவை ஐகொளே என்னும் இடத்திலே காணப்படுகின்றன. அங்கு ஏறக்குறைய 150 கோயில்கள் அமைந்திருக்கின்றன. அவை வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. சைவக் கோயில்கள், வைணவக் கோயில்கள், சமண ஆலயங்கள், பெளத்தக் கோயில்கள் எனப் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த ஆலயங்கள் பெருந்தொகையிலே, சுற்றளவு குறைந்ததானத்திலே அமைக்கப்பட்டுள்ளன. தொல்பொருட் சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து ஐகொளே ஒரு புராதன கோயில் நகரமாகக் காட்சியளிக்கின்றது. அங்கே காணப்படுங் கோயில்கள் வாதாபிச் சாளுக்கியரின் ஆட்சிக் காலத்திற்குரியவை. இந்தியக் கலை வரலாற்றில் ஐகொளேயினை ஒத்த வேறு ஒரு நகரங் காணப்படுவதில்லை. அது கட்டடக் கலையின் பரீட்சார்த்த நிலையம் என்ற வகையில் பரத கண்டத்தில் ஈடிணையற்றதாக விளங்கியது. அங்கு பல்வேறு சமயப் பிரிவினருங் கூடி வாழ்ந்தனர். தத்தம் வழிபாட்டுத் தேவைகளுக்கேற்ப வெவ்வேறு விதங்களிலே கோயில்களை அமைத்தனர்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 35
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டினைப் பிரதிபலிக்கின்ற தலமாக ஐகொளே விளங்கியது. பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அங்கே தங்கியிருந்து தளிகளை உருவாக்கினர். தக்கிணத்தின் நாலாபக்கத் திலிருந்தும் கலைஞர்கள் அங்கு சென்று கட்டடங்களை அமைப்பதில் ஈடுபட்டார்கள். அங்கு உருவாக்கப்பெற்ற மரபுகள் காலப்போக்கிற் பட்டதகல், வாதாபி ஆகிய நகரங்களையும் அடைந்தன.
லாட்கான்
ஐகொளே நகரில் இருந்த கோயில்களுள் மிகப் பழைமையானது லாட் கான் என இந்நாட்களில் வழங்கும் கோயிலாகும். அது கி. பி. 620 ஆவது ஆண்டளவிலே கட்டப்பட்டது. அக்கோவில் 50 சதுர அடி சுற்றளவினைக் கொண்டது. கூரை தாழ்வாகவும் சமதளம் உடையதாகவும் அமைந்துள்ளது. கோயில் மூன்று பக்கங்களிற் சுவர்களினாலே முற்றாக மறைக்கப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலுமுள்ள சுவர்களிலே கல்லினால் அமைந்த வாதயானங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்குப் புறத்திலே மூடப்படாத முகமண்டபம் அமைந்துள்ளது. அதன் தூண்களிலே கங்கை, யமுனை ஆகிய ஆற்றுத் தேவதைகளின் உருவங்கள் வனப்புமிக்க கோலத்திற் செதுக்கப்பட்டுள்ளன.
லாட்கான் அமைப்பிலே தூண்கள் அமைந்த மண்டபம் ஒன்றினைப் போலவே காட்சியளிக்கின்றது. அதில் இரண்டு சதுரங்கள் ஒன்றினுள் மற்றையது என்ற வகையில் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றின் எல்லைக்கோடுகள் நான்கிலும் இடையிடையே தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. உட்புறமாக உள்ள சதுரத்தில் நந்தியின் உருவம் உள்ளது. அது அழவிற் பெரியது; அலங்காரமான தோற்றமுடையது. கோயில் சிவாலயம் என்பதற்கு அதுவே அடையாளமாகும். அக்கட்டடத்திலே கருவறை தனியொரு அமைப்பாக உருவாக்கப்படவில்லை. அது வழமைக்கு மாறாக மண்டபத்தினுள்ளே மேற்குப்புறச் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. கட்டடச் சுவரின் வெளிப்புறங்களில் அழகிய அரைத்துTண்கள் அமைந்துள்ளன. இங்கு காணப்படுந் தூண்கள் அமைப்பிலே தனித்துவமானவை; வட இந்திய கலைப்பாணியிலிருந்து பெரிதும் வேறுபட்டவை. தூணின் கழுத்துக்கு மேலுள்ள பலகையும் போதிகையும் அகலமானவை. அவற்றிற்கு இடையிலுள்ள

Page 32
36 வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி
வளைவடைப்புகள் ஒரு மெத்தையில் அமைந்துள்ளது போற் காணப்படுகின்றன. தக்கிணத்துக் கலைப்பாணிகளைச் சேர்ந்த தூண்வடிவங்களுக்கு எல்லாம் சாளுக்கியரின் கோயில்களிலுள்ள தூண்களே மூலமானவை.
முகமண்டபத்திலே அமைந்திருக்கின்ற கல் இருக்கையானது அதன் மேல் இருப்பவர்கள் பின்புறமாகச் சாய்ந்து கொண்டு இருக்கத்தக்க வகையில் வளைவாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்ற கல்லாசனங்கள் பிற்காலத்தில் அமைந்த மண்டபங்களிலே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தாழ்வான கூரைகள் நீளமான கற்பலகைகளை நீளப்பாட்டில் ஒன்றுடன் ஒன்று கொழுவி அமையும் வண்ணமாகச் சுவர்களின் மேல் இடப்பட்டுள்ளன. இத்தகைய கூரை அமைப்பு தனித்தன்மை கொண்டதாகும். இந்த முறையைப் பின்பற்றிப் 13 ஆம் நூற்றாண்டுவரை பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. லாட் கான் ஆலயத்தின் சுவர்கள் ஒரே விதமாகவும் செம்மையாகவும் அமைக்கப்படவில்லை. அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட அளவுகளில் உள்ளன. போதிய அனுபவம் இன்மையால் மிகுந்த அளவிலே கற்களை வீணாக்கியுள்ளனர். தூண்களும் மண்டபங்களின் சுவர்களும் நேர்த்தியாகச் செதுக்கப்படவில்லை. அவை பளபளப்பானவையாகக் காணப்படவில்லை.
துர்க்கையம்மன் கோயில்
ஐகொளேயிலே காணப்படுகின்ற பிரதான கோயில்களுள் துர்க்கையம்மன் கோயிலும் ஒன்றாகும். அக்கோயில் வெளிப்புறத்தில் 84 அடி நீளமானது. மூலஸ்தானம், மண்டபம்,முகமண்டபம் என்னும் மூன்று பிரதான அம்சங்கள் அதில் உள்ளன. கோயிலின் பின்புறம் வில் வளைவான தோற்றங் கொண்டது. மூலஸ்தானத்தின்மேற் சிகரம் அமைக்கப்பட்டுள்ளது. அமைப்பிலே இக் கோயில் பெளத்த கோயில்களின் அம்சங்கள் சிலவற்றைக் கொண்டதென்று சிலர் கருதுவர். மூலஸ்தானமும் அர்த்த மண்டபமும் சேர்ந்த பகுதி 60 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்டது. முகமண்டபம் 24 அடி நீளமானது. மூலஸ்தானத்தைச் சுற்றி வரிசையாக அமைந்த தூண்களின் நடுவில் திருச்சுற்றாலை உள்ளது. அவ் வண்ணமாகவே முகமண்டபத்தின் தூண்களிடையிலே நடைபாதை காணப்படுகின்றது. தூண்களிடையிலான பாதை வழியாகச் சென்றதும், 44 அடி நீளமான அர்த்த மண்டபத்தை அடைய முடிகின்றது. அதன் முனையிலே

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 37
அரைவட்ட வடிவில் அமைந்த கர்ப்பகிருகம் காணப்படுகின்றது. அதன் முன்பாகக் குடவடிவில் நான்கு தூண்களும் சுவரோடு ஒட்டிய இரண்டு சதுரத் தூண்களும் காணப்படுகின்றன. சுவரை அண்டிய தூண்களின் ஒரமாகவே திருச்சுற்றாலை வழியே செல்ல முடியும். திருச்சுற்றாலைக்கும் மூலஸ்தானத்திற்கும் போதியளவு காற்றோட்டமும் வெளிச்சமும் பரவக்கூடிய வகையிலே பின்னல் திரை போன்று கற்பலகைகள் பொருத்தப் பட்டுள்ளன. மூலஸ்தானத்தின் மேல் அமைந்துள்ள சிகரம் வட இந்தியாவிலே வளர்ச்சி பெற்ற நாகர பாணிக்குரிய ஆமலக வடிவத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஆலயம் மிக உயரமான பீடம் ஒன்றிலே அமைந்துள்ளது.
தளங்களிலே அழகிய சிற்பங்கள் வரிசையாக அமைந்துள்ள ஐகொளேயிலுள்ள துர்க்கையம்மன் கோயில் அமைப்பிலே தனித்துவமானது. மிக உறுதியாக அமைக்கப்பட்டதால் இன்றுங் கம்பீரமான கோலத்துடன் அது காணப்படுகின்றது. மகிஷமர்த்தினியின் வடிவம் மிகவும் நுட்பமான சிற்ப வேலைப்பாடாகும்.
ஹ" ச்சிமல்லிகுடி
சாளுக்கியர் காலத்தில் ஏற்பட்ட கட்டடக்கலை வளர்ச்சிக்குச் சிறந்தவோர் எடுத்துக் காட்டாக ஹச்சிமல்லிகுடிக் கோயில் விளங்குகின்றது. அது சிறிய கற்களினாற் செம்மையாக அமைக்கப்பட்ட கற்றளியாகும். கர்ப்பகிருகம், அந்தராளம், மண்டபம் என்னும் பகுதிகள் அதில் அமைந்துள்ளன. கர்ப்பகிருகத்தின் மேல் நாகர முறையிலான சிகரம் அமைந்திருக்கின்றது. அந்தராளம் அழகிய கோலத்தில் அமைந்துள்ளது.
மண்டபம் நீள் சதுர வடிவமானது. அதன் ஒரு புறத்தில் குடம் போன்ற அமைப்புக் காணப்படுகின்றது. குடத்தின் பக்கத்தில் அமைந்திருக்கும் தூண்களுக்கிடையிலே உள்ளே செல்வதற்கான கதவு அமைந்திருக்கின்றது. மண்டபத்தின் நடுவில் இரண்டு கற்றுாண் வரிசைகள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு வரிசையிலும் மூன்று தூண்கள் உள்ளன. கோயிலைச் சுற்றிப் பிரதசுஷிண பாதை காணப்படுகின்றது. அது கூரையினால் மூடப்பட்டுள்ளது. ஆலயம் சாந்தாரக் கோயில் வகைக்குரிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அது அளவிலே சிறியதாயினும் வேலைப்பாட்டில் வனப்புடையது. சில அம்சங்களில் அது துர்க்கையம்மன் கோயிலை ஒத்திருப்பதனைக் காணலாம்.

Page 33
ES வாதாபிச் சாளுக்கியர் கலைப்பாணி
மேகுடி சமணக் கோயில்
கற்றளியாக அமைந்த மேகுடி என்னும் சமணக் கோயில் ஐகொளேயில் அமைந்துள்ள கட்டடங்களில் மிகச் சிறந்தவொன்றாகும். அது ரவிகீர்த்தி என்னுஞ் சமண முனிவரால் 634 ஆம் ஆண்டளவிலே இரண்டாம் புலிகேசியின் ஆதரவுடன் அமைக்கப்பட்டது. அதன் வளாகத்திலே அமைந்திருக்கின்ற ஜகொளே பிரசஸ்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகும். அது புலிகேசியின் சாதனைகளைக் காவிய நடையில் நயம்பட வர்ணிக்கும் ஆவணமாகும். அதனைத் தொகுத்த ரவிகீர்த்தி தான் காளிதாசர், பாரவி என்போரின் வழியில் வந்த கவிவாணரென்று உரிமை பாராட்டுகின்றார்.
ஐகொளேயில் ஏற்பட்ட கட்டடக்கலை வளர்ச்சியின் உன்னதக் கோலத்தை மேகுடியிலே காணலாம். மிகுந்த முன்னேற்றமான வேலைப்பாடுகளையும் கலையம்சங்களையும் அக்கோயில் பிரதிபலிக்கின்றது. அதன் அலங்கார வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமானவை. சுவர்களின் வெளிப்புறத்திலே மாடக்குழிகளும் அவற்றின் ஓரங்களிலே மெலிந்த தோற்றங்கொண்ட அரைத் தூண்களும் சிறப்பான முறையில் அமைந்திருக்கின்றன. மூலஸ்தானம், மண்டபம் ஆகியன கோயிலின் பிரதானமான பகுதிகளாகும். இடையில் அமைந்துள்ள அந்தராளத்தினால் அவை இணைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தைச் சுற்றியமைந்துள்ள பகுதி சிற்பக் கூடம் போன்ற தோற்றமுடையது. மண்டபத்தை மூடியுள்ள கூரையைத் தாங்கும் நிலையிற் கற்றுாண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. செம்மை நலம் பொருந்திய மேகுடி ஆலயம் பிற்காலத்து வேலைப்பாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துவிட்டது.
பட்டத கல்
வாதாபியிலிருந்து 10 மைல் தூரத்திலுள்ள பட்டதகல் நகரத்திலே சாளுக்கிய மன்னர் காலத்துக் கோயில்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒரு பொதுவான வளாகத்தினுள் அமைந்துள்ளன. சாளுக்கியர் கலைப்பாணியின் வளர்ச்சியிலுள்ள இறுதிக் கட்டத்தைப் பிரதிபலிக்கும் பத்துக் கோயில்கள் அங்குள்ளன. அவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளிற் கட்டப்பெற்றவை. அவற்றுட் சில நாகர அமைப்பின் அம்சங்கள் பொருந்தியவை, வேறு சில

G. JITHII'ld
சாளுக்கியர் கலைப்பாணி
வாதாபிக் குகைக் கோயில் பூவராகம்
வாதாபிக் கோட்டை காவலரண்
வாதாபிக் கோயிற் சிற்பம்

Page 34
வாதாபி LDITE basilly சிவாலயம்
ஐகொளே துர்க்கையம்மன் கோயில்
ஐகொளே துர்க்கையம்மன் கோயிற் சிற்பம்
 

ஐகொளே பூவராகர் ஐகொளே கோயிற் சிற்பம்
பட்டதகல் கோயில்கள்

Page 35
பட்டதகல் கோயில்கள்
பட்டதகல் விரூபாக்ஷர் ஆலயம்
பட்டதகல் கோயில்கள்
 
 
 

பட்டதகல் வாதாபிச் சாளுக்கியர் கோயில்

Page 36
-- வாதாபிச் சாளுக்கியர் கலைப்பான
திராவிட பாணியில் அமைந்தவை. (1) பாபநாதர் கோயில் (2) சம்புவிங்கேசுவரம் (3) காசிநாதர் கோயில் (4) கார்சிதேசுவரர் கோயில் ஆகிய நான்கும் நாகர பாணியில் அமைந்தவை. திராவிட கலைப்பாணியில் அமைந்துள்ள கோயில்கள் மேல் வருவனவாகும். (1) சங்கமேஸ்வரம் (2) விரூபாக்ஷர் ஆலயம் (3) மல்லிகார்ஜுனம் (4) கலக்நாதர் கோயில் (5) சும்
மேஸ்வரம் (6) சமனாலயம், பட்ட தகல் நகரிலமைந்த
கோவில்களுள் பாபநாதம் (680),
பல்விகார்ச்சுனர் கோயில்
பட்டதகல் விரூபா கூடிர் ஆலயம் (725) ஆகியவிரண்டும் அளவிற் பெரியனவாக அமைந்திருப்பதோடு முறையே நாகர திராவிட
கலைப்பாணிகளின் அம்சங்களையும் சிறப்பாகப் பிரதிபலிக்கும் கட்டட அமைப்புகளாக விளங்குகின்றன. பட்டதகலில் அமைந்துள்ள கோயில்கள் யாவும் கற்றளிகள் என்பதுங் குறிப்பிடத்தக்கது. கி. பி. 680 ஆம் ஆண்டளவிலே நிர்மாணிக்கப் பெற்ற பாபநாதம் 90 அடி நீளங் கொண்ட அமைப்பாகும். ஆயினும், அதில் அடங்கியுள்ள கட்டடங்கள் தாழ்வானவை. நீளத்திற்கு ஏற்பப் பொருத்தமான வகையில் அவற்றின் உயரம் அமைந் திருக்காதமையினாற் கோயில் வனப்பான கோலத்தைப் பெற்றிருக்கவில்லை.
விமானத்தின் சிகரம் நாகர பாணியில் அமைந்துள்ளது. அதன் அந்தராளம் செம்மையாக அமையவில்லை. மூலஸ்தானத்தையும் அதன் முன்புறமாக அமைந்த மண்டபத்தையும் இணைக்கும் கட்டடம் போலல்லாது அது ஒரு சபாமண்டபம் போல அதிக சுற்றளவுடன் கானப்படுகின்றது. அதற்கு முன்னால் மண்டபம், முகமண்டபம் ஆகிய அமைப்புகள் காணப்படுகின்றன. கோயிலின் உட்புறச் சுவர்களும் தூண்களும் உறுதிப்பாடும் பிரமாண்டமான தோற்றமுங் கொண்டனவாக அமைந்துள்ளன. இக்கோயிலின் அதிஷ்டானமும் கொடுங்கைகளும் மூலஸ்தானத்தில் இருந்து தனித்துக் காணப்படுகின்றன. மண்டபத்தின்
 

இ ந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
பாபநாதர் கோயில் - பட்டதகள்
நடுவிற் கலசம் உள்ளது. அதன் பக்கத்தில் நான்கு தூண்கள் உள்ளன. சுவரோடு ஒட்டியுள்ள தூண்கள் அமைப்பிற் சதுரமானவை. கற்றுாண்களின் மேற்பாகத்திற் சிறப்பான அலங்கார வேலைப்பாடுகள் அமைந்திருக்க வில்லை. வெளிப்புறச் சுவர்களிலுள்ள கபோதம் பாரமான தோற்றங் கொண்டுள்ளது. அதற்கு மேலமைந்த கைபிடிச் சுவரில் அலங்கார வடிவங்கள் அமைந்துள்ளன. சுவர்களில் மாடக் குழிகள் அமைந்துள்ளன. அவற்றின் ஓரங்களில் நன்கமைந்த அரைத்தூண்களும் மேற்புறத்திலே கபோதமும் அதன் மேற் கவிகையும் உள்ளன. கட்டடத்தின் மேற்புறத்திலே 30 அணிவரிசைகள் அலங்கார வேலைப்பாடுகளாக அமைந்துள்ளன.
இரண்டாம் விக்கிரமாதித்தனின் காலத்திலே அவனது தேவியான ரங்கபதாகையின் முயற்சியால் விரூபாக்ஷர் ஆலயம் அமைக்கப்பட்டதென்று கொள்வர். அதிலே பல்லவர் கலைப்பாணியின் செல்வாக்குக் காணப்படுகின்றது. சில அம்சங்களிலே அது காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலை ஒத்திருக்கின்றது. விக்கிரமாதித்தன் தொண்டை நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றபோது காஞ்சியினுள் நுழைந்து வெற்றிவிழாக் கொண்டாடினான். அங்குள்ள கோயில்களின் வனப்புமிக்க தோற்றம் அவனைப் பெரிதுங் கவர்ந்தது. அங்குள்ள கோயில்களுக்கும் அந்தணர்களுக்குந் தானங்களை வழங்கி அவற்றைச் சிலாசாசனம் பண்ணுவித்தான். அவன் காஞ்சி நகரிலிருந்து தனது இராசதானிக்குத்

Page 37
斗白 வாதாபிச் சாளுக்கியர் கனiப்ப 11
திரும்பிச் சென்றபோது சிற்பக் கலைஞர் சிலரையும் அழைத்துச் சென்றான் என்று சிலர் கொள்வர். கர்நாடக தேசத்து மரபினதும் தமிழகத்துக் கட்டடக்கலை அம்சங்களினதும் செம்மையான சேர்க்கையினை விரூபாக்ஷர் ஆலயம் பிரதிபலிக்கின்றது. குண்ட என்ற சிற்பாசாரியனின் மேற்பார்வையில் அக்கோயில் நிர்மா னிக் கப்பட்டது. அவனுக்குத் திரிபுவனாசாரிபன் மகா கூடேஸ்வரம் என்னும் பட்டம் அரசனால் வழங்கப்பெற்றது என்பதை ஆலயத்திலுள்ள சாசனம் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
பிராகாரத்தினுள் அமைந்துள்ள விருபாக்ஷர் ஆலயம் 120 அடி நீளமானது. அதில் மூலஸ்தானம், மண்டபம், முகமண்டபம், நந்திமண்டபம் ஆகிய அமைப்புகள் உள்ளன. மூலஸ்தானம், மண்டபம் ஆகியன அந்தராளமின்றித் தனித்தனியாக அமைந்துள்ளன. மூலஸ்தானத்தின் மேலமைந்த சிகரம் பலதள அமைப்பாகும். விமானதளங்கள் சதுரவடிவமானவை; ஒவ்வொன்றும் கணிசமான அளவில் அகலமும் உயரமுங் கொண்டுள்ளன. மேலிலுள்ள தளங்கள் ஒவ்வொன்றும் அதன் கீழ் அமைந்துள்ளதைக் காட்டிலும் அளவிற் சிறியதாகும். ஆலயத்தின் வெளிப்புறச் சுவர்களில் அமைந்திருக்கும் மாடக் குழிகள் வனப்புடன் விளங்குகின்றன. அவற்றிலே ஜன்னல் வடிவங்களும் சிற்பங்களும் மாறி மாறி அமைந்துள்ளன. சிவபெருமானின் உருவங்களும் நாகலோகத்தவரின் உருவங்களும் இராமாயணக் கதையினை விளக்கும் சிற்பங்களும் அவற்றிடையே காணப்படுகின்றன. கட்டட அமைப்பின் பிரிக்க முடியாத அம்சங்களாகச் சிற்பங்கள் பொருந்தியுள்ளமை கட்டட
வேலைப்பாட்டின் சிறப்பம்சமாகும்.
 

இந்து கலாசாரம்= கோயில்களும் சிற்பங்களும் 구
மூலஸ்தானத்தைச் சுற்றிப் பிரதசுழின பாதை காணப்படுகின்றது. தூண்கள் பொருந்திய மண்டபத்தின் பக்கங்களிற் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே பின்னல் திரை போன்ற கோலத்திற் கற்பாளங்களிற் துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வனப்பு மிகுந்த கோலத்தினாலும் செம்மையான அளவுப் பிரமாணங்களினாலும் சிற்ப வேலைப்பாடுகளின் சிறப்பினாலும் விருபாகூடிர் ஆலயம் வாதாபிச் சாளுக்கியரின் கோயில்களிற் தலை சிறந்ததாக விளங்குகின்றது. அதன் அம்சங்கள் பலவற்றைக் கல்யாணிச் சாளுக்கியர் பன்னிரெண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலே குக்கனூர்,லக்குண்டி ஆகிய இடங்களில் அமைந்த கோயில்களிற் காணலாம். சங்கமேஸ்வரம் என்னுங் கோயிலும் அமைப்பிலே இதனைப் பெரிதும் ஒத்ததாகும். ஆனால், அதன் மண்டபம் சுவர்களின்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
வாதாபிக் கற்றளிகள்
வாதாபியிலே குடபோகங்களும் கற்றளிகளும் அமைந்திருக்கின்றன. மகாகூடேஸ்வரம், மாலகிட்டி சிவாலயம் ஆகியவிரண்டும் கற்றளிகளாகும். அவற்றின் கட்டுமானங்கள் சில அம்சங்களிலே ஐகொளேயில் அமைந்துள்ள கோயில்களை ஒத்தனவாகும். அவை கர்ப்பகிருகம், அந்தராளம், மண்டபம் என்னும் வழமையான பாகங்களோடு அமைக்கப்பட்டுள்ளன. மகா கூடேஸ்வரம் கி. பி. 600 ஆம் ஆண்டளவிலே அமைக்கப்பெற்றது. அதன் விமான சிகரம் திராவிட விமானம் போலானது.
மாலகிட்டி சிவாலயம், வாதாபியிலே மலைகளின் நடுவில் அமைந்திருக்கின்றது. அதன் பகுதிகளின் அளவுப்பிராமாணங்கள் மிகவும் பொருத்தமானமை, கட்டுமான வேலைகள் மிகவும் சீரான முறையில் அமைந்துள்ளன. அதன் விமானம் திராவிட விமானங்களைப் போல எண்கோணமாய் அமைந்துள்ளது. மாலகிட்டி சிவாலயம் காலத்தால் மகாகூடேஸ் வாத்திற்குப் பிற்பட்டது. அதனால், அதன் வேலைப்பாடுகள் கூடுதலாக வளர்ச்சிபெற்ற கலைப்பண்புகளைக் கொண்டுள்ளன. அதன் விமானம் 56 அடி உயரமானது. கர்ப்ப கிருகமும் அந்தராளமும் சதுரமானவை. சுவர்களின் மேலே கபோதம் நீண்டு தொங்கும் கோலத்தில்

Page 38
வாதாபிச் சாளுக்கியர் கலைப்பானி
நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களின் வெளிப்புறத்து மாடக்குழிகளும் அரைத்தூண்களும் செம்மையாக அமைந்துள்ளன. அளவிலே சிறிதாயினும் மாலகிட்டி சிவாலயம் சாளுக்கியர் கலைப்பாணியின் சிறப்பம்சங்களைப் பிரதிபலிக்கும் வனப்புமிக்க கோயிலாக விளங்குகின்றது.
அக்கோயிலுக்குச் சமீபத்திலே சிதைவடைந்த ஆலயமொன்று காணப்படுகின்றது. அதன் கர்ப்பகிருகத்தைச் சுற்றிப் பிரதசுழினபாதை அமைக்கப்பெற்றுள்ளது. அதற்கு முன்னாலே தூண்களோடு அமைந்த மண்டபம் காணப்படுகின்றது. நன்கு செதுக்கப்படாத கற்களினால் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதால் அது ஒரு ஆரம்பகாலக் கற்றளியாகக் கொள்ளத்தக்கதாகும். அது மகாகூடேஸ்வரம், மாலகிட்டி சிவாலயம் என்பன
வற்றுக்கு முற்பட்டதென்றுங் கருதலாம்.
ஆலம்பூர்
ஆலம்பூர் என்னும் இடத்திலும் வாதாபிச் சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் உள்ளன. அது தார்வாருக்குச் சமீபத்திலே, துங்கபத்திரை ஆற்றங்கரையிலே அமைந்துள்ள நகரமாகும். அங்கு பட்டதகலிற் போல பிராகாரம் ஒன்றினுள் அமைந்துள்ள பரந்த வளாகத்திலே அருகருகே பல கோயில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் நாகர பாணிக்குரிய அம்சங்களைக் கொண்டவை. அவற்றுட் பெரும்பாலானவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளிலே கட்டப்பெற்றன. அவை அமைப்பிலும் உருவத்திலும் பட்டதகலிலுள்ள பாபநாதர் கோயிலைப் போன்றவை.
ஆலம்பூரில் எல்லாமாக ஒன்பது கோயில்கள் உள்ள்ன. அதனால், அவற்றை நவ பிரமா கோயில்' என்பர். அவற்றுள் விசுவபிரமம், வீரபிரமம், குமாரபிரமம், பாலபிரமம், பத்மபிரமம், கருடபிரமம், சொர்க்க பிரமம் ஆகிய எட்டுக் கோயில்களும் நாகர பாணியில் அமைந்தவை. தாரக பிரமம் திராவிட பாணியிலுள்ள கோயிலாகும். கட்டட அமைப்பினைப் பொறுத்தவரையில் சொர்க்க பிரமம், பிரபாக் கோயில் என்பன சிறப்புமிக்கவை. அவை இரண்டும் சாளுக்கியரின் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

இ ந்து கiாாரம்- கோயில்களும் சிற்பங்களும் 1)
ஆலம்பூரிலுள்ளவற்றில் மிகப் பெரிய கோயில் 75 அடி நீளமும் 50 அடி அகலமுங் கொண்டுள்ளது. நீள் சதுரவடிவில் அமைந்துள்ள ஆலம்பூர்க் கோயில்களில் ஒரு மூலையிற் கலசமும் அதனைச் சுற்றிலும் இரு புறமும் வளைந்து வளர்ந்து நிற்கும் தூண் வரிசைகளும் அதனையடுத்துப்பிரதசுஷின பாதையுங் காணப்படும். குப்தர் காலக் கோயிலமைப்பின் சற்று வளர்ச்சி
பொருந்திய நிலையினை அவற்றிலே காணலாம்.
விஸ்வபிரம்மா கோயில் - ஆவம்பூர்

Page 39

பல்லவர் காலக் கட்டடக் கலை
இரா. கலைக்கோவன்
ர்ேட்டடக் கலையைச் சமயஞ் சார்ந்த, சாராத கட்டட அமைப்புகள் எனக் கொண்டு இரு பிரிவாக்குவர். பல்லவர் காலத்துக் கட்டடங்களாய் இன்று நமக்குக் கிடைத்திருப்பவை அனைத்தும் சமயஞ் சார்ந்தவை என்பதால், இங்கு நாம் காணவிருக்கும் கட்டடக் கலையைச் சமயஞ் சார்ந்த கட்டடக் கலையாகக் கொள்ளலாம்.
ஏதத் அனிஷ்டகம் அத்ருமம் அலோகம் அசுதம் விசித்திர சீத்தேன நிர்ம்மாபிதம் நிருபேண பிரம்ம ஈசுவர விஷ்ணுலக்கூழித ஆயதனம்
செங்கல், சுதை, மரம், உலோகமின்றி மும்மூர்த்திகளுக்குக் கோயி லெடுக்கப்பட்ட தகவலைத் தரும் முதலாம் மகேந்திரவர்மரின் மண்டகப்பட்டுக் கல்வெட்டுடன் பல்லவர் காலக் கட்டக்கலை தொடங்குகிறது. பல்லவர் காலத்தில் குடைவரைகள், செதுக்குத் தளிகள், கட்டுத்தளிகள் எனும் மூன்று வகையான கோயிலமைப்புகளைக் காணமுடிகிறது. இவற்றுள் முதற்கட்ட உருவாக்கங்களான குடைவரைகளை அவற்றின் தோற்றம், உள்ளடக்கம் என்பனவற்றைக் கொண்டு இரு பருவங்களில் அடக்கலாம்.
முதற் பருவம் சித்ரகாரப் புலியான முதலாம் மகேந்திரவர்மர் காலத்திலே தொடங்கி நயனமனோகரரான ராஜசிம்மர் காலத்தில் முடிந்தது. இப்பருவத்திலே தோன்றிய குடைவரைகள் முகப்பு, மண்டபம், கருவறை என்றமைந்தன. இடைவெளிகளோடு கூடிய முழுத்துரண்களும், பக்கச் சுவர்களோடு கூடிய அரைத்தூண்களும் கொண்டமைந்த முகப்பின் இடைவெளிகள் அங்கணங்கள் எனப்பட்டன. சதுரம், கட்டு, சதுரம் என்ற மைந்த எளிய தூண்களின் போதிகைக்கைகள் உத்திரம், வாஜனமெனும் கூரையுறுப்புகளைத் தாங்கி நின்றன. பாறையின் முன் நீட்டலே

Page 40
52 பல்லவர் காலக் கட்டடக் கலை
கபோதமானது. மண்டபம் மற்றுமொரு வரிசைத் தூண்களாலோ தரையில் காட்டப்படும் உயர மாறுபாடுகளாலோ இரண்டாகப் பகுக்கப்பட்டு முக மண்டபம், அர்த்த மண்டபம் என்றாயிற்று. முதற் கோயிலான மண்டகப்பட்டு லக்கூழிதாயனத்தில் அர்த்தமண்டபத்தின் பின்சுவர் மூன்று கருவறைகளைப் பெற்றது. இறைத் திருமேனிகள் செதுக்கப்படாத இக் கருவறைகளில் மரம், சுதை, அல்லது ஒவியமாகவே இறைவடிவம் இடம் பெற்றிருந்தது என்பது அறிஞர் முடிவு. மாமண்டூர் முதற் குடைவரை, மகேந்திரவாடிக் குடைவரை, வல்லம் முதற் குடைவரை, பல்லாவரம் குடைவரை ஆகியன ஏறத்தாழ மண்டகப்பட்டு அமைப்பைப் பின்பற்றி, ஆனால் கருவறை எண்ணிக்கையில் மாற்றங்களுடன் அமைந்தன.
முதற்பருவத்தின் வளர்நிலைகளைச் சிராப்பள்ளி லலிதாங்குரம், தளவானூர் சத்ருமல்லேசுவரம், சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரம் ஆகிய குடைவரைகள் கொண்டமைந்தன. லலிதாங் குரத்தில் முக மண்டபப் பக்கச் சுவர்களுள் ஒன்று கருவறை பெற, மற்றொன்று சுவர் முழுவதும் வியாபித்த கங்காதரரின் புடைப்புச் சிற்பத்தைக் கொண்டது. முறையான தாங்குதளம், உறுப்புகள் பெற்றமைந்த அரைத்துரண்கள், முழுமையடைந்த கூரை ஆகியவற்றை வலிதாங்குரக் கருவறையிற் காணமுடிகிறது. இக்கூரை வலபி, கந்தர்வத்தலைகள் என்பன அமைந்துள்ளது. அது கூடுகளோடு கூடிய கபோதம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாமரைப் பதக்கங்கள் தவிர்த்த பிற தூண் அலங்கரிப்புகளும் முதன் முறையாக இங்கு இடம் பெற்றுள்ளன.
அவனிபாஜன பல்லவேசுவரம் பல முதல்களுக்குச் சொந்தமானது. ஆடற் சிற்பங்கள் இடம் பெற்ற முதற் குடைவரையாக இதைக் கருதலாம். ஒள்வாள் அமலை எனக் கருதத்தக்க கோல்த்திலமைந்த ஆடவர் சிற்பங்கள் இரண்டு இங்குள்ளன. தூண் சதுரங்களில் இறையுருவச் சிற்பங்கள் இடம்பெற்ற முதற் குடைவரையும் இது தான். குடைவரைக்கு முன் மிகப்பெரிய அளவிலான பிற்காலக் கட்டுமானங்கள் எழுப்பப்பெற்ற ஒரே மகேந்திரக் குடைவரையும் இதுதான்.
தளவானூர் சத்ருமல்லேசுவரம் சில புதிய உருவாக்கங்களைப் பெற்றது. தாங்குதளத்தோடு கூடிய குடைவரை முகப்பு, ஸ்தம்ப தோரணமாய் முகப்பிலமைந்த நுழைவாயில் மகரதோரணம், கருவறைக்கு முன்னமைந்த முன்றில் ஆகியவற்றைக் குடைவரை வரலாற்றில் முதன் முறையாக இங்குதான் பார்க்கிறோம். இவற்றுள் ஸ்தம்பதோரணம் முகப்பு முழுத்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 53
தூண்களின் போதிகைகள், கூரையுறுப்புகளான உத்திரம், வாஜனம் ஆகியவற்றை உள்ளடக்கிச் செதுக்கப்பட்டுள்ளது. இதுவே பல்லவர் கலை வரலாற்றின் முதல் மகர தோரணம்.
திருக்கழுக்குன்றத்து ஒரு கல் மண்டபம், மாமல்லபுரத்து தருமராசர் மண்டபம், கோடிக்கல்மண்டபம், கோனேரி மண்டபம் ஆகியனவும் முதற்பருவக் குடைவரைகளுள் அடக்கமாகும். இவற்றுட் கழுக்குன்றம் குடைவரை முதலாம் நரசிம்மவர்மரின் காலத்ததாகக் கருதப்படுகிறது. நான்முகனும் விஷ்ணுவும் அர்த்த மண்டபப் பின் சுவர்ச் சிற்பங்களாக விளங்கக் கருவறை இறையிலியாக விளங்கும் இக் குடைவரையின் முதன்மைக் கடவுள் சோமாஸ்கந்தராக இருந்திருக்கலாமென்பது எமது கருத்தாகும். கோடிக்கல் மண்டபக் கருவறை வாயிலின் இருபுறத்தும் காவற்பெண்டுகளின் சிற்பங்கள் காணப்படுவதால் இக்குடைவரை கொற்றவைக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். கோனேரி மண்டபமே முதன் முதலாக இந்திரகாந்தத் தூண்களைப் பெற்ற குடைவரையாகும்.
இக்காலப் பிற குடைவரைகளாகக் குரங்கணில் முட்டம், மேலைச்சேரி, மாமண்டூர்க் குடைவரைகள், அரகண்ட நல்லூர், விளாப்பாக்கம், சிங்கவரம், சிங்கப் பெருமாள் கோயில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். முகப்பு, மண்டபம், கருவறை என்ற அமைப்பில் இக் குடைவரைகளில் மாற்றமில்லையாயினும் கருவறைகளின் எண்ணிக்கை, வாயிலமைப்பு, காவலர் சிற்பங்கள் ஆகியவற்றில் மாற்றங்களைக் காணமுடிகிறது. குரங்கணில் முட்டம் உள்மண்டபப் பின் சுவரில் மட்டுமல்லாது, பக்கச் சுவர்களிலும் கருவறைகள் கொண்டுள்ளது. மாமண்டூர் மூன்றாம் குடைவரையில் முக மண்டபப் பக்கச் சுவர்களிலும் கருவறைகள் உள்ளன. அதிக அளவில் கருவறைகள் கொண்டமைந்த குடைவரை இது தான். இக்கருவறைகள் சுவரோடு ஒன்றியும், சுவரிலிருந்து முன் தள்ளியும் இரு விதமாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறைகளின் முன் அவற்றை அடையப் படிக்கட்டுகள் உள்ளன. இவற்றின் கீழ்ப்படி பெரும்பாலான குடைவரைகளில் சந்திரக்கல்லாக உள்ளது. சில கருவறைகள் நிலை அமைப்புப் பெற்றும், சில அத்தகு அமைப்பின்றியும் உள்ளன. பெரும்பாலான கருவறைகள் வாயிலையொட்டிக் காவலர்கள் அல்லது அடியவர்களோடு கூடிய கோட்டங்களைப் பெற்றுள்ளன. இக் குடைவரைகளின் கூரையுறுப்புகளாக உத்திரம், வாஜனம் என்பன மட்டுமே காணப்படுகின்றன.

Page 41
54 பல்லவர் காலக் கட்டடக் கலை
குடைவரைகளின் இரண்டாம் பருவம் ராஜசிம்மர் காலத்திலே தோன்றி தந்திவர்மர் காலம் வரை தொடர்ந்தது. இப்பருவக் குடைவரைகளுள் தலையாயன மாமல்லபுரத்தில் அமைந்தன. இவையனைத்துமே சுவர்ச் சிற்பங்கள் கொண்டவை, இவற்றைப் வெற்றுக் கருவறைக் குடைவரைகளாகவும், திருமேனிக் கருவறைக் குடைவரைகளாகவும் பிரிக்கலாம். வெற்றுக் கருவறைக் குடைவரைகளுள் பரமேசுவர மகாவராக விஷ்ணு கிருகமும், புதுவராகக் குடைவரையும் அடக்கமாகும். இக்குடைவரைகள் இரண்டுமே அனைத்துச் சுவர்களிலும் சிற்பங்கள் கொண்டவை. மகாவராக விஷ்ணு கிருகம் விலங்கடித் தூண்கள் பெற்ற முதல் குடைவரையாகும். பல்லவப் பெருவேந்தர்களின் பெயரோடு கூடிய உருவச் சிற்பங்களைக் கொண்ட ஒரே குடைவரையும் இதுதான்.
மகாவராகர், வராகர் குடைவரைகள் இரண்டிலுமே சுவர்ச் சிற்பங்களுக்குக் கருவறைத் தகுதி தரப்பட்டுள்ளது. இவற்றின் கீழ்த் தாங்குதளமும் மேலே கூரையுறுப்புகளும் காட்டப்பட்டுள்ளன. வலபியில் அன்னவரியும், சில இடங்களில் இலைப் பின்னலும் காட்டப்பட்டுள்ளன. கருவறை இவ்விரண்டு குடைவரைகளிலுமே வெறுமையாக உள்ளது. முதன் முறையாகக் குடைவரை முகப்புகளின் மேல் ஆரங்கள் காணப்படுவதும் இக்குடைவரைகளில்தான். இவ் ஆரங்கள் தொடர்ந்தமைந்த சாலைகளையும், அவற்றையிணைக்கும் ஆரச்சுவரையும் உறுப்புகளாய்க் கொண்டவை. சாலைகள் வேதிகைத் தொகுதி, கிரீவம், சிகரம், கலசம் எனும் நான் கங்கம் கொண்ட சிறு விமானங்கள், இவற்றில் அல்ப நாசிகைகள் அமையும். ஆரச்சுவர், சுவர், உத்திரம், வாஜனம், கபோதம், மேற்கம்பு கொண்டமையும். ஆரச் சுவரில் உருவாக்கப்படும் நாசிகைகள் சூத்ர நாசிகைகள் எனப்படும். இந்நாசிகைகளின் செவ்வகங்கள் வெறுமையாய் அல்லது அலங்கரிப்புகள் கொண்டு திகழ, மேல் வளைவுகளின் கூடுகள் கந்தர்வத் தலைகள் கொள்ளும்.
சுவர்ப் பரப்புகளில் சிற்பங்களும் கருவறைகளில் பாறைச் செதுக்கலாய் இறைத் திருமேனிகளும் கொண்டமைந்த குடை வரைகளுள் மகிஷா சுரமர்த்தனி, ராமாநுஜர் மண்டபம், அதிரண சண்டேசுவரம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இவற்றுள் மகிஷாசுரமர்த்தனி குடைவரை, தளவானூர் சத்ருமல்லேசுவரம் போலக் கருவறையின் முன் முன்றில் பெற்றுள்ளது. மண்டபத்தின் பின் சுவரிலமைந்த மூன்று கருவறைகளுள் நடுக்கருவறை மட்டுமே சோமாஸ்கந்தரை இறைத்திரு மேனியாகப் பெற்றுள்ளது. முதன் முதலாக சோமாஸ்கந்தர் கல்திருமேனியாக அறிமுகமாகும் குடைவரை

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 55
இதுதான். ராமாநுஜர் மண்டபத்துக் கருவறைகள் சிதைக்கப் பட்டிருந்தாலும் சுவடுகள் கொண்டு அங்கும் மூன்று கருவறைகள் இருந்தமை உய்த்துணரப்படும். இக் குடைவரையின் முகப்பையொட்டி இருபுறத்தும் அகழப்பட்டுள்ள விரிவாக்கப் பகுதிகளில் ஏக தள விமானங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இவையே காலத்தால் முற்பட்ட கல் விமான மாதிரிகள்.
அதிரண சண்டேசுவரம், கருவறையிலும், அதன் இரு புறத்தமைந்த மண்டபத்தின் பக்கச் சுவர்களிலும் சோமாஸ்கந்தரைக் கொண்டுள்ளது. இக்குடைவரையிலேயே தமிழ் நாட்டளவில் நாகரி எழுத்துக்களில் அமைந்த முதற் கல்வெட்டு கிடைத்துள்ளது. பஞ்ச பாண்டவர் குடைவரையென்று அழைக்கப்படும் மாமல்லபுரத்துக் குடைவரைக் கோயில் பல்லவர் கட்டடக் கலையின் ஒரு திருப்பு முனை எனலாம். இங்குதான் கருவறையைச் சுற்றி வலம் வருவதற்கு வாய்ப்பாகத் திருச்சுற்றமைக்கும் முயற்சி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முயற்சி முழுமை பெறவில்லை. இதே போன்றதொரு முயற்சி சற்று முற்பட்ட காலத்திலேயே மாமண்டூர் மூன்றாம் குடைவரையில் மேற்கொள்ளப்பட்டுக் கைவிடப்பட்டது. பஞ்சபாண்டவர் குடைவரையின் ஆரம் முதன் முறையாகக் கர்ண கூடங்களைப் பெற்றுள்ளது. இக் குடைவரை முகப்பில் Bracket Figures என்றழைக்கப்படும் தாங்கு சிற்பங்கள் தாவுயாளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இத்தாவு யாளிகள் தூண் பலகைகளில் நின்றபடி கபோதம் தாங்குகின்றன. இவற்றின் தொடக்கத் தோற்றம் வராகக் குடைவரையிற் காணலாம்.
திரிமூர்த்திக் குடைவரை மண்டபமிழந்த கருவறைகளின் தொகுப்பாகும். மூன்று கருவறைகளும், தென்புறத்தே சுவர்ப்பரப்பில் மகிஷாசுரமர்த்தனியின் புடைப்புச் சிற்பமும் கொண்ட திரிமூர்த்திக் குடைவரை வளாகம் முழுமை பெறவில்லை. சிவபெருமான், விஷ்ணு, சுப்பிரமணியர் என மும்மூர்த்திகளும் முற்றிலும் பாறைச் செதுக்கல்களாக இங்கு வடிவம் பெற்றுள்ளனர். மண்டபமற்ற, ஆனால் பெரிய அளவிலான கருவறைத் தொகுப்புகள் கொண்டு, ஆரம் பெற்றமைந்த ஒரே குடைவரை இதுதான்.
நகரத்தார் மலையாக இருந்து நார்த்தாமலையாகத் திரிந்துள்ள சிற்றுாரில் உள்ள பழியிலி ஈசுவரம், விஷ்ணு குடைவரை, மலையடிப்பட்டிக் குடைவரைகள், குன்றாண்டார் கோயில், திருமெய்யம் குடைவரைகள், தேவர்மலை, பூவாலைக் குடி குடைவரை, மலையடிக்கோயில் போன்றவை பல்லவர்கால முத்தரையர் பணிகள். இவற்றுட் பெரும் பாலானவை கல்வெட்டுகளைக் கொண்டுள்ளன. இக்குடைவரைகளும் பல்லவக் குடைவரைகள் போலவே முகப்பு, மண்டபம், கருவறை என்ற

Page 42
56 பல்லவர் காலக் கட்டடக் கலை
அமைப்பிலிருந்தாலும் அர்த்த மண்டபம், முக மண்டபம் என்ற பிரிப்பின்றி ஒரே மண்டபம் கொண்டமைந்துள்ளன. பல்லவர் குடைவரைகளுக்கும் இக்குடைவரைகளுக்கும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் சிற்ப அமைவுகளில் உள்ளன. பாறையில் உருவான சண்டேசுவரர், லிங்கத் திருமேனி, நந்தி, எழுவர் அன்னையர் தொகுதி, பிள்ளையார் ஆகியன குறிப்பிடத்தக்கன. விலங்கடித் தூண்கள் மலையடிப்பட்டி விஷ்ணு குடைவரை தவிரப் பிறவற்றில் அமையவில்லை. கூரையுறுப்புகளில் வலபி, பூமி தேசம் என்பனவும், ஆர உறுப்புகளும் இக்குடைவரைகளில் எங்கும் இடம் பெறவில்லை. சிங்கவரம் விஷ்ணு குடைவரை, மலையடிப்பட்டி ஒளிபதி விஷ்ணு கிருகம், திருமெய்யம் விஷ்ணு குடைவரை ஆகிய மூன்றிற்கும் சிற்பச் செறிவிலுள்ள வேறுபாடுகள் குடைவரையமைப்பில் இல்லையெனலாம். திருவெள்ளறையிலுள்ள இரண்டு குடைவரைகளும் பல்லவர் காலப்பணிகள். இவற்றுட் பெருமாள் கோயில் வளாகத்திலுள்ள குடைவரை எதிரெதிர் கருவறைகளைக் கொண்டது. இக் குடைவரைகள் எதிலும் முன்றில் இடம் பெறாமை குறிப்பிடத்தக்கது.
தூண்கள்
பல்லவர் காலக் குடைவரைத் தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலே தொடங்கி, நன்கு வளர்ச்சியுற்ற உறுப்புகளைப் பெற்றுக் கலைச் சிறப்பில் முதிர்ந்தன. ஓமம், தூணுடல், இடைக்கட்டு, மாலைத் தொங்கல், தானம், தாமரைக் கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி அல்லது தாமரை, பலகை, வீரகண்டம், போதிகை எனப் பல்வேறு உறுப்புகள் தூண்களில் அமைந்தன. நான்முகம், எண்முகம், பன்முகம், உருளையென அமைப்பிலும் இவை பல்வகைப்பட்டன. இவற்றின் போதிகைகள் தொடக்க காலத்தில் வெறுமையாகவும், பிறகு தரங்கம், பட்டை பெற்றும் அமைந்தன. வளைந்தும், விரிகோணத்திலும் அமைந்த இப்போதிகைகளிற் சுருள்களும் இடம்பெற்றன. விலங்கடித்துரண்கள் யாளிகளையும், சிம்மங்களையும் அடியுருவங்களாய்க் கொண்டன.
தாங்கு தளம் பெரும்பாலான இடங்களிற் பாதபந்தமாகவே அமைந்துள்ளது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடும் பாதங்களோடும் கூடிய கண்டம், பட்டிகை மேற்கம்பு என்பவை பாதபந்த அதிட்டானத்தின் உறுப்புகளாகும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 57
மகர தோரணம்.
மகர தோரணங்கள் இரண்டு குடைவரைகளில் மட்டுமே காணப்படுகின்றன. தளவானூர் சத்ருமல்லேசுவரம், திரிமூர்த்தி ஆகிய இவற்றுள் திரிமூர்த்தித் தோரணம் சற்று விரிவான முறையில் அமைந்துள்ளது.
பெரும்பாலான குடைவரைகள் மலையடிவாரங்களில் அல்லது நிலமட்டத்திலுள்ள பெரும்பாறைகளில் அகழப்பட்டுள்ளன. மாமண்டூர் மூன்றாம் நான்காம் குடைவரைகள், வல்லம் குடைவரைகள் லலிதாங்குரம், சிங்கவரம் போன்றவை மலைகளின் மேற் பகுதிப் பாறைகளில் வெட்டப்பட்டுள்ளன.
மலை தளிகள்
பல்லவர் கட்டடக் கலையின் இரண்டாம் கட்டமாகச் செதுக்குத் தளிகளைக் குறிப்பிட வேண்டும். பாறைகளை முன்னிருந்து பின்னாகக் குடைந்து அமைக்கப்பட்டவை குடைதளிகள். மேலிருந்து கீழாகப் பாறைகளைச் செதுக்கி, வேண்டாதன அகற்றி, ஒரு முழுப் பாறைப் பகுதியை விமானமாக்கிவிடும் கலையே செதுக்குத் தளிகள் எழத் தளமாயிற்று. பல்லவர்கள் இதுபோல் ஒன்பது செதுக்குத் தளிகளை உருவாக்கியுள்ளனர். இவை குடைதளிகள் போலன்றி ஆறங்கம் கொண்டு விமானங்களாயின. குடைதளிகள் கொண்டிருந்த தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகளின் மேல் கிரீவம், சிகரம், தூபி எனும் கூடுதல் மூன்று உறுப்புகளை அமைத்து, இச் செதுக்குத் தளிகளை விமானங்களாக பல்லவச் சிற்பிகள் எடுத்தனர்.
விமானம் எனும் கலைச்சொல் அடித்தளத்திலிருந்து தூபி வரையிலான கட்டமைப்பைக் குறிப்பதாகும். இவ்விமானத்தின் ஆறங்கங்களுள் முதலுறுப்பான தாங்குதளத்தின் கீழ்த் துணைத்தளம் அமைத்து விமானத்தின் உயரத்தைக் கூட்டுவதுண்டு. ஒரு தள விமானம் எனும் எளிய அமைப்பு தாங்குதளம், சுவர், கூரை, கிரீவம், சிகரம், தூபி எனும் ஆறு அங்கங்கள் கொண்டது. விமான உயரத்தைக் கூட்டத் தளங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதுண்டு. ஒவ்வொரு தளக் கூட்டலும் அரமியம்' எனும் கலைச் சொல்லால் அறியப்பட்டது. இவ்வரமியமும் சுவர், கூரை கொண்டமைந்தது. இருதள, முத்தள விமானங்களைச் செதுக்குத்தளிகளில் காணமுடிகிறது.

Page 43
58 பல்லவர் காலக் கட்டடக் கலை
மாமல்லபுரத்திற் காணப்படும் ஒன்பது செதுக்குத் தளிகளில் ஐந்து மேற்கு நோக்கியவை. ஒன்று தெற்கு நோக்கியது. இரண்டு கிழக்கு நோக்கியவை. ஒன்று வடக்கு நோக்கியது. இவ்வொன்பதுமே நிறைவடையாத தளிகளென்றாலும் இரண்டு மட்டும் கருவறைகளில் தெய்வ வடிவங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் இரண்டு தளிகள் அத்யந்த காம பல்லவேசுவர கிருகம் என்று கல்வெட்டுகளில் பெயரிடப்பட்டுள்ளன. இவ்வொன்பதனுள் கொற்றவைத் தளியும், பீமத் தளியும் ஒரு தள விமானங்கள். தருமராசர் தளி முத்தள விமானம். ஏனையன அனைத்தும் இருதள விமானங்கள். இவற்றுள் வலையன் குட்டைத் தளியும், வடக்குப் பிடாரித் தளியும் தூய நாகர இரு தள விமானங்கள். அருச்சுனதளி, தெற்குப் பிடாரிதளி, தருமராசர் தளி ஆகியவை கலப்புத் திராவிட விமானங்கள். பீமதளியும், கணேசர் தளியும் தூய சாலை விமானங்கள். நகுல சகாதேவர் தளி தூய இரு தளத் தூங்கானை மாடத்தளி, கொற்றவைதளி நாகர ஒரு தள விமானம். இதில் கிரீவம் கண்ணுக்குப்புலப்படாமையின் இதை விமானம் எனக் கொள்ளாதாரும் உண்டு.
துணைத் தளமோ, தாங்கு தளமோ உருவாகாத விமானங்கள் ஆறு. கொற்றவை தளியும், அருச்சுன தளியும் ஒரே துணைத் தளத்தின் மீது ஒரே விதமான தாங்கு தளம் கொண்டு அமைந்துள்ளன. இத்தாங்கு தளத்தைப் பாதக்கட்டு என்றும் சிற்பிகள் கூறுவர். தருமராசர் தளிகபோதபந்தத் தாங்கு தளம் கொண்டமைந்துள்ளது. பல்லவர் படைப்புகளில் பொதுவாகக் காணப்படும் மூவகைத் தாங்கு தளங்களுள் பிரதிபந்தம் கட்டுத்தளிகளில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
கணேசரதம், அருச்சுனர் தளி, வலையன் குட்டைத்தளி, பிடாரிதளிகள் ஆகிய ஐந்தும் முகமண்டபம் கொள்ள, தருமராசர் தளியும், நகுல சகாதேவர் தளியும் முன்றில்கள் கொண்டுள்ளன. கொற்றவை தளிக்கு இதுபோன்ற அமைப்புகள் ஏதுமில்லை. பீம, தருமராசர் தளிகள் தவிர ஏனைய தளிகள் ஏழும் அரைத்தூண்கள் பொருந்திய சுவரமைப்புகள் உடையன. கொற்றவை தளியிலும், வடக்குப்பிடாரிதளியிலும் சுவர்களில் மகர தோரணத்துடன் கூடிய கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. வலையன் குட்டைத் தளியில் ஒரு சுவரில் மட்டும் இவ்வமைப்பு உள்ளது. கொற்றவைதளிக் கோட்டங்கள் மகிஷாசுரமர்த்தினியைக் கொண்டுள்ளன. பிடாரிரதக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. அருச்சுனதளியின் சுவர் பக்கத்திற்கு மூன்று பிதுக்கங்கள் பெற்று, பிதுக்கம் ஒடுக்கம் இரண்டிலும் கோட்டங்கள் அகழப்பட்டு அமைந்துள்ளது. இத்தளியின் தாங்கு தளமும்,

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 59
கூரையுறுப்புகளும் சுவரமைப்பிற்கேற்ப முன் தள்ளியும் ஒடுங்கியும் அமைந்துள்ளன. இதே போல் பிதுக்கம் பெற்ற சுவரமைப்புடைய மற்றொரு தளி கணேசரதம். வலையன் குட்டை ரதத்தின் சுவர்களில் பஞ்சரம் இடம்பெற்றுள்ளது. நகுல சகாதேவ ரதத்தின் சுவர்கள் நான்முகத் தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பீமத்தளியும், தருமராசர் தளியும் நாற்புறமும் குடைவரை முகப்புப் போன்ற முகப்புகள் பெற்றுள்ளன. இம் முகப்புகளுட் சில நிறைவடையவில்லை. இம்முகப்புகளின் பின் கருவறையைச் சுற்றிவர வாய்ப்பாகச் சுற்றுவழி திட்டமிடப்பட்டு நிறைவடையாப் பணியாய் விடப்பட்டுள்ளது. இவ்விருதளிகளிலுமே முகப்புகளை அடுத்துப் பக்கச் சுவர்கள் இருந்தாலும்,தருமராசர் தளியில் மட்டுமே இவற்றில் இறையுருவோடு கூடிய கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. கோட்ட அணைவுத் தூண்களிற் சட்டத்தலை அமைப்பு கணேசரதத்தில் காணப்படுகிறது.
கூரையுறுப்புகள் அனைத்துத் தளிகளிலும் ஒன்று போல இடம் பெற்றிருந்தாலும், அவற்றின் அலங்களிப்பில் வேறுபாடுள்ளது. கொற்றவை தளியும், அர்ச்சுன தளியும் வலபியில் பூதமாலை பெற்றுள்ளன. கணேசர் தளியில் முன் மண்டப வலபியில் மட்டுமே பூதமாலை உள்ளது. தருமராசர் தளியில் கணதோரணம் அமைந்துள்ளது. இது குடைவரைக் காலத்திலேயே உருவாக்கப்பட்ட உத்தியாகும். மாமல்லபுரம் ராமாநுஜர் மண்டபத்து வலபியில் கணதோரணத்தைப் பார்க்கலாம். வலையன் குட்டைத்தளிவலபி அம்சமாலை பெற்றுள்ளது.
கொற்றவை, கணேசர், அருச்சுனர், நகுல சகாதேவர் தளிகளில் மட்டுமே ஆதிதளக் கருவறை உருவாகியுள்ளது. பிற தளிகளில் கருவறை உருவாக்கம் பெறவில்லை. கொற்றவைதளிக் கருவறையில் இறைவியும் அடியவர்களும் கணங்களும் காட்டப்பட்டுள்ளனர். பிறதளிக் கருவறைகள் வெறுமையானவை. பிற்காலப்பிள்ளையார் ஒருவர் இடம் பிடித்துள்ள கணேசதளி அத்யந்த காமப் பல்லவேசுவர கிருகமென்று அழைக்கப்படுகிறது.
ஆதி தள ஆர அமைப்பில் தளிகளிடையே வேறுபாடுகள் உள்ளன. பீமதளியின் ஆரச்சுவரில் வழக்கமான சூத்ர நாசிகைகளுக்குப் பதிலாகப் பஞ்சரம் போன்ற உறுப்புகள் ஒவ்வோர் ஆரச்சுவர்த் துண்டுக்கும் இரண்டென வடிக்கப்பட்டுள்ளன. கணேசர் தளியில் இதே இடத்தில் செவ்வக ஸ்புடிதங்கள் உள்ளன. தருமராசர் தளியின் முகமண்டப ஆரம் பஞ்சரங்களையும் கர்ண சாலைகளையும் பெற்றுள்ளது. இக்கர்ண சாலைகள் முதன்முதலாக அறிமுகமாகும் இடம் இத்தளிதான். அனைத்துத் தளிகளிலும் முகமண்டப ஆரம் ஆதிதள ஆரத்தோடு இணைக்கப்பட்டடுள்ளது. கணேசர் தளியில்

Page 44
பல்லவர் காலக் கட்டடக் கலை
ஆதிதள மேற்கு ஆரம் சாலைகளின்றிக் காட்டப்பட்டுள்ளது. தருமராசர் தளி தவிர ஏனைய அனைத்து இரு தளத் தளிகளிலும் ஆரம் அர்பித ஆரமாக, இரண்டாம் தளத்தோடு ஒட்டி உறவாடி அமைந்துள்ளது. தருமராச ரதத்தில் மட்டுமே ஆரம் அனர்பிதமாக, அரமியத்தைச் சுற்றிவர வழிவிட்டு ஒதுங்கியமைந்துள்ளது.
இரண்டாம் தள அரமியச் சுவர்கள் தருமராசர், கணேசர் தளிகளில் மட்டும் பிதுக்கங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தருமராசர் தளி பிதுக்க, ஒடுக்கங்களில் சிற்பங்களோடு கூடிய கோட்டங்கள் கொண்டுள்ளது. வடக்கு, தெற்குப் பிடாரிதளிகள் சுவரின் கர்ணபத்திகளில் சிற்பங்களோடு கூடிய கோட்டங்களும் சாலைப்பத்தியில் வெறுங்கோட்டமும் பெற்றுள்ளன. அருச்சுனதளிஇதைப்பின்பற்றியுள்ளது. வலையன் குட்டைத் தளியில் சுவரின் இருபுறத்தும் செவ்வக ஸ்புடிதங்கள் பெரிய அளவிற் செதுக்கப்பட்டுள்ளன. நகுல சகாதேவர் தளியின் அரமியச் சுவர் கீழ்த் தளம் போலவே நான்முக அரைத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டுக் கோட்டங்களின்றி உருவாக்கப்பட்டுள்ளது. கூரையுறுப்புகளில் வலையன் குட்டைத் தளியில் மட்டும் வலபி இடம்பெறவில்லை. ஏனைய வலபிகள் சில அம்சமாலை பெற்றும், சில பூதமாலை பெற்றும், சில வெறுமையாகவும் உள்ளன.
இரண்டாம் தள ஆரம் வடக்குப் பிடாரிதளி தவிர ஏனைய இரு தளத் தளிகளில் இடம் பெற்றுள்ளது. வலையன் குட்டைத் தளி, தருமராசர் தளி போன்றவற்றில் இது நான்கு அங்க ஆரமாகவும், தெற்குப் பிடாரித் தளி, அருச்சுனதளி, நகுல சகாதேவர்தளி, கணேசர் தளி ஆகியவற்றில் மூன்றங்க ஆரமாகவும் அமைந்துள்ளது. நகுல சகாதேவர் தளியில் இவ்வாரத்தின் தென்பகுதியில் கர்ணகூடங்களுக்கு இடைப்பட்ட நிலையிற் சாலைகளுக்கு மாற்றாகப் பஞ்சரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பஞ்சரங்களும் கூடங்கள் போலவே வேதிகையற்றுள்ளன. கணேசர் தளியின் தென், வட பக்கங்களில் இரண்டாம் தள ஆரம் இடைச் சாலைகளின்றிக் கூடங்கள் மட்டுமே பெற்றமைந்துள்ளது. இத் தளியின் இரண்டாம் தள ஆரச்சுவரில் சூத்ர நாசிகைகள் இடம்பெறவில்லை.
கிரீவம் காட்டப்படாத ஒரே செதுக்குத்தளி கொற்றவை தளிதான். ஏனையவற்றுள் மிக உயர்ந்த கிரீவம் பீம தளியிலும், அடுத்துக் கணேசர் தளியிலும் அமைந்துள்ளது. மிகக் குறைந்த உயரமுடைய கிரீவம் வலையன் குட்டைத் தளியிற் காணப்படுகிறது. இக்கிரீவம் எனும் கழுத்துப் பகுதி நாகரத் தளிகளில் நான்முகமாகவும், திராவிடத் தளிகளில் எண்முகமாகவும் ஒரே அளவுகளில் அமைய, சாலைத் தளிகளில் மட்டும் இரு வேறு அளவுகளில்

மாமல்லபுரம்
ܡܫܝܼܛܩܼܒܲܛܐ ரதங்கள.
LDITLi LILT தர்மராஜரதம்

Page 45
மாமல்லபுரம் சகாதேவ ரதம்
மாமல்லபுரம் பீமரதம்
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
 
 
 
 

கணேச ரதம் மாமல்லபுரம்
திருமூர்த்திக்
குகை மாமல்லபுரம்
கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம்

Page 46
SiDSSS TT i i SS ------
கைலாசநாதர் கோயில் சாந்தார
விமானம் காஞ்சிபுரம்
கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம்
 
 
 

வைகுந்தப்
பெருமாள் கோயில்
காஞ்சிபுரம்
வைகுந்தப் பெருமாள் கோயில்
அதிஷ்டானப் படைச்சாசனம்,

Page 47
ார்
திரமே
filJIJġibllJ ITEFL
பெ
所L 田
TT
ருமா
ல்
கோபி
அதிஷ்டான
ம்.
t
ரமேரூ
தி
gБошШТf
உத்
品–
மண்டபம்
 
 

E.
EFTER
மாமல்லபுரம் முகுந்த நாயனார் கோயில்

Page 48
68 பல்லவர் காலக் கட்டடக் கலை
அமைந்துள்ளது. வேதிகை, ஒரங்களில் நான்முக அரைத்தூண்கள் அணைத சுவர்ப்பகுதி, வாஜனம், வலபி என அமையும் கிரீவத்தின் வலபியில் நகுல சகாதேவத் தளியில் மட்டும் அம்சமாலையுள்ளது. பிடாரித் தளிகளிலும், தருமராசர் தளியிலும் பூதமாலை இடம் பெற்றுள்ளது. பிற தளிகளில் வெறுமையான வலபியே காட்டப்பட்டுள்ளது. வலையன் குட்டையில் வலபியே இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
சிகரம்
வெவ்வேறு விதமான அலங்கரிப்புகளோடு கூடிய சிகரம் வலையன் குட்டை, வடக்குப் பிடாரி தளிகளில் நாகரமாகவும், அருச்சுனர், தருமராசர், தெற்குப் பிடாரி தளிகளில் திராவிடமாகவும், பீம, கணேசர் தளிகளில் சாலையாகவும், நகுல சகாதேவர் தளியில் தூங்கானை மாடமாகவும் உள்ளன. சிகரம், கிரீவம் இரண்டையும் உட்படுத்திப் பெரு, சிறு நாசிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாசிகைகள் நாகர, திராவிட சிகரங்களில் ஒன்றுபோல அமைந்துள்ளன. செவ்வகக் கீழ்ப்பட்டி, தலைப்போடு கூடிய வளைவான மேற்கூரை கொண்டுள்ள இந் நாசிகைகளின் தலைப்பும் வளைவான மேற்கூரையும் கொடிக் கருக்குகள், பூப்பதக்கங்கள், இலைப் பின்னல்கள் எனப்பல்வேறு அலங்காரங்கள் கொண்டுள்ளன. மேற்கூரையின் உட்குழிவில் காளைத் தலையையொத்த பாறைச் செதுக்கல்கள் காணப்படுகின்றன.
சாலை, தூங்கானை மாடத்தளி, நாசிகைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. தூங்கானை மாடத்திற் பின்புறம் ஒரு பெரு நாசிகையும் பக்கப் பகுதிகளிற் கிழக்கிலும் மேற்கிலும் இரு நாசிகைகளும் காட்டப்பட்டுள்ளன. கிழக்கு மேற்குப் பெரு நாசிகைகளின் இருபுறத்தும் இரு சிறு நாசிகைகள், சற்றுத் தள்ளிய நிலையில் வெட்டப்பட்டுள்ளன. இந்நாசிகைகள் அனைத்துமே கீழுள்ள செவ்வகப்பகுதியில் அணைவு அரைத் தூண்களையும் இடைப்பட்ட சுவர்ப் பகுதியையும் பெற்றுள்ளன. கணேசத் தளியின் சிறு நாசிகைகள் இதே அமைப்புடன் வேதிகைப் பகுதியும் கொண்டுள்ளன. இத்தளியின் பெரு நாசிகை பஞ்சரம் போலக் கபோதமும் கிரீவமும் பெற்று அமைந்துள்ளது. கணேச தளி நாசிகைத் தலைப்புகள் பிற நாசிகைகளில் இருப்பது போல அல்லது சூலத்தலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பீம தளியின் அனைத்து நாசிகைகளும் கீழ்ப்பகுதியில் அரைத்துரண்கள் அணைந்த சுவரும், சுவரில் கோட்டமும் கொண்டுள்ளன. பெரும்பாலான கோட்டங்களிற்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 69
சிற்பங்கள் உள்ளன. கிரீவ நாசிகைகளிற் பல்லவப்பகுதியில் சிற்பங்கள் இடம் பெறும் முதற் தளியாகப் பீம தளியைக் குறிப்பிடலாம். பீம தளியின் பெரு நாசிகைகள் கபோதம், பூமிதேசம், கிரீவம் பெற்று பஞ்சரங்களெனக் காட்சி தருகின்றன. பின்னாளைய கட்டுமானங்களில் இதுபோல் நாசிகைகளைக் காணமுடிவதில்லை.
தூங்கானை மாடத்தளிச் சிகரத்தின் முன் பகுதி, அலங்கரிக்கப்பட்ட முகப்பட்டிகையோடு கூடிய உள்ளடங்கிய அரை வட்டக் குழிவாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழிவில் மதலைத் தோரணங்களும் தாவுயாளிகளும் உள்ளன. நடுவில் தூபி தவிர, பிற பகுதிகள் திராவிடமாய் அமைந்த சிறு விமானமொன்று செதுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் வரிசையில் இதுவே முதல் திராவிட விமானமெனலாம். இவ்விமானத்தின் தூண்கள் கிரீவப் பகுதியிலும் பிற மேற்பகுதிகள் அனைத்தும் சிகரப் பகுதியிலுமாய் இடம் பெற்றுள்ளன.
கணேச தளி சிகரத்தின் வடக்கு, தெற்கு முகங்கள் அலங்கரிக்கப்பட்ட முகப்பட்டியோடு கூடிய, நீள் வட்டக் குழிவு கொண்டுள்ளன. இக்குழிவின் மேற்பகுதியும் தாவுயாளிகளோடு கூடிய மதலைத் தோரணங்கள் கொண்டுள்ளன. நடுப்பகுதியில் தூய வேசர வடிவிலான சிறு விமானமொன்று வெட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக் கலை வரலாற்றில் காட்சி கொடுக்கும் முதல் வேசர விமானமாக இதைக் கொள்ளலாம். பீமத்தளி சிகரத்தின் வட தென் குழிவுகளும், முகப்பட்டி மதலைத் தோரணம் கொண்டிருப்பதுடன் குழிவின் நடுவே நாகர தளமும் வேசர சிகரமும் கொண்ட கலப்பு விமானங்களைச் செதுக்கலாகப் பெற்றுள்ளன. இவ்விமானங்கள் கணேச தளி வேசர விமானம் போலவோ அல்லது தூங்கானை மாடதிராவிட விமானம் போலவோ முழுமையுறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கற்றளிகள்
செதுக்குத் தளிகள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே கட்டுத்தளிகளும் கற்றளிகளாக உருப்பெறத் தொடங்கியதாகக் கருதலாம். கூரம் செப்பேடு குறிப்பிடும் தளி செங்கற்றளியாக இருப்பதால் ராஜசிம்மரின் காலத்திலேயே முதற் கற்றளி உருவானதாகக் கொள்ளலாம். ராஜசிம்மரின் கைவண்ணங்களாக உருவாகியுள்ள கற்றளிகள் மாமல்லபுரம், பனைமலை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் இன்றும் நிலைபெற்றுள்ளன. இவற்றை அளவு கொண்டு சிறு தளிகள், பெருந்தளிகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

Page 49
70 பல்லவர் காலக் கட்டடக் கலை
சிறு தளிகள்
மாமல்லபுர உலக்கணேசுவரம், முகுந்த நாயனார் கோயில், காஞ்சிபுரம் இறவாதான் ஈசுவரம், பிறவாதான் ஈசுவரம், ஐராவதேசுவரம், மகேந்திரவர்மேசுவரம், கழுக்குன்றம் வேதகிரீசுவரம் ஆகியன ராஜசிம்மர் காலச் சிறுதளிகள். கடற்கரைக் கோயில் வளாகம், பனை மலையீசுவரம், காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் ஆகியன அவர் காலப் பெருந்தளிகள்.
கற்களை அளவாக அறுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட இக் கற்றளிகள் கட்டமைப்பில் பல புதிய உத்திகளுக்கு வழிவகுத்தன. உலக்கணேசுவரம் விமானமும் சிறுமுக மண்டபமும் கொண்டமைந்த ஒரு தள விமானமாகும். துணைத்தளத்தின் மீது பிரதி பந்த தாங்குதளம் கொண்டெழும் இவ்விமானத்தில் சுவர்ப் பிரிப்பு இல்லை. ஒவ்வொரு சுவரிலும் திசைக்குரிய சிற்பத்தோடு கூடிய ஆழமான கோட்டங்கள் உள்ளன. சுவர்த் திருப்பத் தூண்கள் தாவுசிம்மத் தூண்களாக அமைய, இவற்றிற்கும் நடுக் கோட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கோட்டத்தின் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றென இரு முழுமையடைந்த சுவர்ப்பஞ்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இப்பஞ்சரங்களுக்கேற்பத் தாங்குதளம் பிதுக்கம் கண்டுள்ளது. தாங்குதளம் தொட்டுக் கபோதக் கூட்டைச் சிகரமாகக் கொண்டெழும் இவ்வகை பஞ்சரங்கள் நிஷ்கராந்த பஞ்சரங்கள் என்றழைக்கப்படும். உலக்கணேசுவரத்தில் இப்பஞ்சரங்கள் ஒவ்வொன்றும் கால்களுக்கு இடைப்பட்ட சுவரில் சிற்பங்களைக் கொண்டுள்ளன. முக மண்டபத்தின் மேற்குச் சுவரிலும் இப்பஞ்சரங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் காலப் பல்லவக் கற்றளிகளில் நிஷ்கராந்தப் பஞ்சரங்கள் அமைந்திருப்பது உலக்கணேசுவரத்திலும் மகேந்திரவர்மே சுவரத்திலும்தான் என்பது இங்கு நினைக்கத்தக்கது.
முகுந்த நாயனார் கோயில் இரு தள திராவிடக் கற்றளியாகும். இதுவும் முன்னால் முகமண்டபம் கொண்டுள்ளது. விமானத்தின் கருவறைச் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரச்சுவர் பீமத்தளியிலிருப்பது போல் பஞ்சரங்களொத்த இரட்டை நாசிக் கோட்டங்களைப் பெற்றுள்ளது. இரண்டாம் தள அரமியச் சுவர்கள் நடுக் கோட்டமும் அதன் இரு புறத்தும் பஞ்சரங்களும் பெற்றுள்ளன. இது உலக்கணேசுவர கீழ்த்தள அமைப்பைப் பின்பற்றிய அமைவாகும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 7
இறவாதான் ஈசுவரம் இருதளநாகர விமானம். பாதபந்த அதிஷ்டானத்துடன் எழும் இதன் ஆதிதளச் சுவர்கள் தாவுயாளித் தூண்களால் ஓரங்களில் அரவணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவரும் நான்முகத் தூண்கள் இரண்டினால் மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. ஒரத் தூணுக்கும் நான்முகத் தூணுக்கும் இடைப்பட்ட கர்ணபத்திகள் கோட்டங்கள் பெற்றுவாயிற் காவலர் சிற்பங்களுடன் விளங்குகின்றன. வாயிற் காவலர் சிற்பங்களுக்கு மேல் இக்கோட்டம் தடுக்கப்பட்டு மேலும் ஒரு சிற்பம் பெற்றுள்ளமை செதுக்குந் தளிகளில் காணப்படாத புதிய உத்தியாகும். நான்முகத் தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப் பகுதி, சாலைப்பத்தியில் கோட்டம் பெற்று அணைவுத் தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் இரு புறத்தும் உள்ள சுவர்ப் பகுதிகளும் புறத்திற்கொரு கோட்டம் பெற்றுச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இப்பகுதிகள் ஆரத்திலமையும் ஆரச் சுவர்ப் பகுதிக்கு நேர்கீழாக உள்ளவையாகும்.
இறவாதான் ஈசுவரத்தில் மகரதோரணங்கள் மிகுந்த சிறப்புப் பெற்றுள்ளன. குடைவரைகள், செதுக்குத்தளிகளை விட இக்கற்றளித் தோரணங்கள் மிக விரிவாகவும் அழகுபடவும் செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தோரணங்களின் நெற்றிக் குழிவுச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை, ஆதிதள ஆர உறுப்புகளான கூடங்களும், சாலையும், முதன் முறையாக ஆறங்கம் கொண்டு அமைந்துள்ளன. இரண்டாம் தள அரமியக் கபோதம் வரை நீளும் இவ்வாறங்க ஆரம் ராஜசிம்மர் காலப் புதுமையாகும். ஆரச் சுவரில் இரண்டிரண்டு செவ்வக ஸ்புடிதங்கள் உறுப்புகளுக்கு இடைப்பட்டனவாய் உள்ளன. இரண்டாம் தள அரமியம் முகுந்த நாயனார் கோயிலைப் போலவே சுவர்ப் பஞ்சரங்கள் பெற்றுள்ளது. முகுந்த நாயனார் பெருநாசிகைகள் போலவே இங்குள்ள பெருநாசிகைகளும் சிற்பங்களைப் பெற்றுள்ளன. இரண்டாம் தள அரமியத்திற்கு மேல் ஆர உறுப்புகள் இல்லாமையுடன் வேதிகையின் நான்கு மூலைகளிலும் நந்தி காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இம்மாற்றம் முகுந்த நாயனாரில் இடம் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய கோயில்
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் வளாகத்துள்ளிருக்கும் மகேந்திரவர்மேசுவரம் தூய இருதள சாலைத்தளியாகும். இதில் சுவர்ப் பஞ்சரங்கள், இணைந்த ஒமப்பகுதியாக யானைத் தலையைக் கொண்டிருப்பது புதுமையான அமைப்பாகும். பஞ்சரத்தின் கோட்டம் இரு

Page 50
72 பல்லவர் காலக் கட்டடக் கலை
பிரிவுகளாக்கப்பட்டுச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இதன் இரண்டாம் தள அரமியம் நடுக்கோட்டமும் செவ்வக ஸ்புடிதங்களும் பெற்று வலையன் குட்டைத்தளி அரமியத்தை நினைவூட்டினாலும், இந்த ஸ்புடி தங்களையடுத்துள்ள சுவர்ப் பகுதிக் கோட்டங்கள், வலையன் குட்டைத் தளியிலிருந்து விலகி இங்கு அரமியச் சுவர் விரிவாக்கப்பட்டிருப்பதைத் தெளிவாக்குகின்றன. சாலை சிகரத்தின் பக்கக் குழிவுகளும், முன்பின் பெருநாசிகைகளும் தெய்வத் திருமேனிகளைப் பெற்றுள்ளன. செதுக்குத்தளிச் சாலை விமானங்கள் போல் இங்கு சாலையின் அகலப் பகுதிகளிற் பல நாசிகைகள் இடம் பெறாது ஒரே ஒரு பெருநாசிகை மட்டும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் முன்னும், கோயிற் திருச்சுற்றின் நாற்புறத்திலும் அமைந்துள்ள இரு தள திராவிட, சாலை விமானங்கள், பிறவாதான் ஈசுவரம் ஆகியவை ஒரே வார்ப்பிலமைந்தவை. இவற்றின் ஆதிதளச் சுவர்கள் ஒரே அணைவுத் தூண்களும், கோட்ட அணைவுத் தூண்களும் கொண்டவை. ஒரே அணைவுத் தூண்கள் விலங்கடித் தூண்கள், ஆதிதளச் சுவர்கள் போலவே அரமியச் சுவர்களிலும் பக்கத்திற்கொரு கோட்டம் இடம் பெற்றுள்ளது. இக் கோட்டத்தின் இரு புறத்தும் செவ்வக ஸ்புடிதங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்குக் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இரண்டைக் குறிக்கலாம். ஆரம்ற்ற தளங்கள் முதல் மாற்றம், வெளி விமானங்களிலும் உட்புறத்துள்ள சாலை விமானங்களிலும் இரண்டாம் தள அரமியத்திற்கு வேதிகை காட்டப்பட்டுள்ளது. இது பல்லவர் கட்டட அமைப்புகள் எவற்றிலும் இதுவரை காணப்படாத புதுமையாகும். பின்னாளைய பல்லவ, சோழ அரமியங்களில் கூட இவ்வுறுப்பு அரிதாகவே சேர்க்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்துக் கோயில்கள்
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வளாகம் மூன்று தளிகளைப் பெற்றமைந்துள்ளது. கிழக்கில் நான்கு தள சத்திரியசிம்மேசுவரம், நடுவில் ஒரு தள நரபதி சிம்மவிஷ்ணுகிருகம், மேற்கில் முத்தள ராஜசிம்மேசுவரம் இவையனைத்தையும் சுற்றிவளைத்துத் திருச்சுற்று மதிலும், மேற்கில் அழிந்து போன கோபுரத்தின் எச்சங்களும் உள்ளன. ராஜசிம்மேசுவர விமானத்தின் முன், இருந்தழிந்த மண்டபங்களின் அடித்தளங்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளோடு கூடிய பலித்தளம், கொடித்தளம் ஆகியவையும் உள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 73
இக்கோயில் வளாகத்திலிருந்து சில புதிய கட்டமைப்புகளும் அண்மைக் காலத்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. w,
கடற்கரைக் கோயில் வளாகத்துள்ள மூன்று தளிகளில் நரபதி சிம்ம விஷ்ணு கிருகம் காலத்தாற் பழமையானது. முகமண்டபமும் கருவறையும் கொண்ட இம்மண்டபத்தளியின் ஒரு பகுதி பாறைச் செதுக்கலாகவும் மறுபகுதி கட்டுமானமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்று செதுக்கலும் கட்டுமானமும் கலந்தமைந்த விமானம் பல்லவர் காலப் பகுதியில் இது ஒன்றுதான். பாதபந்தத் தாங்குதளம் கொண்ட இவ்விமானத்துட் பாறைச் செதுக்கலாய் சயனவிஷ்ணுவின் உருவம் அமைந்துள்ளது.
ராஜசிம்மேசுவரமும், சத்திரிய சிம்மேசுவரமும் பத்ம பந்தத் தாங்கு தளத்தின் மீது அமைந்த முத்தள, நாற்றளத் திராவிட விமானங்களாகும். இரண்டும் ஏறத்தாழ ஒரே அமைப்புடையவை. இரண்டுமே முதற் தளத்திலும், மேற்றளத்திலும் ஆரமேற்காதமைந்தவை. ராஜசிம்மேசுவரத்தின் கிழக்குச் சுவரும், நரபதிசிம்ம விஷ்ணு கிருகத்தின் மேற்குச் சுவரும் ஒரே சுவராக அமைந்து, இரு தளிகளையும் பிரிப்பது பல்லவக் கட்டுமானத்தில் இதுவே முதல் முறை. மிக இயல்பாக இவ்வுத்தியைக் கையாண்டு, இருந்ததையும் அதன் முன் புதிதாக மற்றொன்றையும் ஒன்றிணைந்துக் கட்டியிருக்கும்பாங்கு சிறப்புக்குரியதாகும்.
இச்சிம்மேசுவரங்களின் தளக் கட்டுமானங்கள், நடுக்கோட்டம், இருபுறத்தும் செவ்வக ஸ்புடிதங்கள் என்ற அமைப்பில் உருவாகியுள்ளன. சில ஸ்புடிதங்களின் செவ்வகங்கள் சிற்பங்களைப் பெற்றுள்ளன. சத்திரிய சிம்மேசுவரத்தின் ஆதிதளக் கூரை மீது நான்கு மூலைகளிலும் அமர்ந்த சிம்மங்கள் இருந்தப்பட்டுள்ளன. இது போலவே இத்தளத்தின் மேற்றளக் கூரை மீதும், ராஜசிம்மேசுவரத்தின் மேற்றளக் கூரை மீதும் சங்கூதும் கணங்கள் உள்ளன. சத்திரிய சிம்மேசுவர இரண்டாம் தள ஆரத்தில் பஞ்சரங்கள் காட்டப்பட்டிருப்பதுடன் அவற்றின் மேல் வளைவுக்கூடுகள் சிற்பங்கள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரச்சாலைகளின் அல்ப நாசிகைகளிலும் சிற்பங்கள் உள்ளன. ஒரு கற் தளிகளிலும், இறவாதான் ஈசுவரத்திலும் ஆரநாசிகைக் கூடுகளில் இடம்பெற்ற காளைத்தலை போன்ற செதுக்கல்கள் இங்கு முற்றிலுமாய் வழக்கிழந்து விடுவதைக் காணமுடிகிறது. அதற்குப் பதிலாகப் பெரும்பாலான ஆரநாசிகை வளைவுகள் கந்தர்வத் தலைகளையும், பல்வேறு சிற்ப வடிவங்களையும் பெற்றமைந்துள்ளன.

Page 51
74 பல்லவர் காலக் கட்டடக் கலை
சத்திரிய சிம்மேசுவரம் தனியொரு திருச்சுற்றுமதில் பெற்றுள்ளது. இதன் உட்புறச் சுவர் நன்கு பகுக்கப்பட்டுச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்களுள் பெரும்பான்மையானவை முற்றிலுமாய் அழிந்துவிட்டன. இச்சுவரின் புறத்தே வெற்றுக் கோட்டங்கள் உள்ளன. இச்சுவரின் கிழக்கிற் காட்டப்பட்டுள்ள திறப்பு, கோபுரதுவாரம் போல் அமைந்து கிழக்கு நோக்கிய இக்கோயிலுக்கான நேர் வாயிலாகியுள்ளது. இதன் வழியே தெரியும் கடலலைகளின் வீச்சு இக்கோயில் வளாகம் கட்டப்பட்ட காலத்தில் இத்துறைமுக நகரின் பெருமைக்குரிய படைப்பாகப் பொலிந்திருந்த தென்பதைக் கூறாமல் கூறுவதாய் அமைந்துள்ளது. இவ்வளாகத் தளிகளின் தூண்கள் தாவுசிம்மம், குதிரை, யானை போன்ற விலங்கடிகளைப் பெற்றுள்ளன. சத்ரிய சிம்மேசுவரத்தின் முகமண்டபக் கூரையில் சாலைகளுக்கிடையே பஞ்சரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை இதே தளியின் இரண்டாம் தள ஆரப்பஞ்சரங்களையொத்துள்ளன. ராஜசிம்மேசுவர முகமண்டபத்தின் மீது ஆரச் சுவரால் இணைக்கப்பட்ட இரண்டு கூடங்கள் மட்டுமே உள்ளன. ஆரச்சுவர் மீது அமர்ந்த நந்தி காட்டப்பட்டுள்ளது.
இவ்விரு விமானங்களின் பின் சுவரில் சோமாஸ்கந்தர் இடம் பெற்றிருந்தாலும், ராஜசிம்மேசுவரத்து இறைவடிவம் சத்திரிய சிம்மேசுவரத்து வடிவத்தை விட அழகானது. குறிப்பாக உமாதேவியின் வடிவத்தைக் கூறலாம். சத்திரிய சிம்மேசுவரத்திற் கூடுதலாக ஒரு தாராலிங்கமும் காணப்படுகிறது.
ராஜசிம்மேசுவரம், சத்திரிய சிம்மேசுவரம் ஆகிய இரு விமானங்களும் தனித்தன்மை வாய்ந்த பல்லவக் கட்டுமானங்கள். சரியான இடைவெளிகளுடன் கூடிய இத்தளங்களின் கூம்பு வடிவமான கட்டமைப்பைத் தமிழ் நாட்டுக் கட்டடக்கலை வரலாறு எப்போதுமே மறுபதிவு செய்யவில்லையென்பது இதன் பெருமைக்குச் சான்றாகும். உயரமான ஆனால், அகலக் குறைவான இவற்றின் மேற்றளங்கள் பல்லவக் கணக்கிலிருந்த அழகுணர்ச்சி மேலாண்மையை வெளிப்படுத்துகின்றன. மேற்றளங்கள் ஆரமிழந்தமையால் கிரீவத்தின் சுற்றளவுக் குறைவும், நீட்சியும் இணைந்து விமானத் தலைப்பிற்கே தனிக்கவர்ச்சியைத் தந்துவிடுகின்றன. இவ்வழகும் அமைப்பு நேர்த்தியும் வேறெந்தப் பல்லவக் கட்டுத் தளியிலும் காணமுடியாத சேர்க்கையாகும். இதற்கேற்றாற் போல இவற்றின் கலசங்களும் நீண்ட கூர்முனைகளுடன் அமைந்து இவற்றின் எழிலைப் பன்மடங்காக்குகின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 75
பனைமலைக் கோயில்
விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ இருபது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அனந்தபுரத்தை அடுத்தமைந்துள்ள சிற்றுாரே பனைமலை. இவ்வூர் மலையின் மேல் ராஜசிம்மரின் கல்வெட்டோடு காட்சியளிக்கும் முத்தள விமானம் நாகரதளங்களும் திராவிட கிரீவ சிகரமும் பெற்ற கலப்புத் திராவிட விமானமாகும். இதன் முதல் இரு தளங்கள் மட்டுமே பழைய கட்டமைப்பிலுள்ளன. மேற்றளமும் கிரீவசிகர உறுப்புகளும் பின்னாளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் அமைக்கப் பெற்ற பல்லவ விமானங்களிலிருந்து இது கட்டமைப்பில் முற்றிலும் மாறுபட்டுள்ளது. இவ்விமானத்தின் ஆதி தளச் சாலைப் பகுதிகள் (பத்ரசாலை) கர்ண பகுதிகளிலிருந்து விடுபட்டு நாற்புறத்தும் நன்கு முன்தள்ளியமைந்து தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய முத்திசைகளில் தனித்திருமுன்களாகியுள்ளன. கிழக்கில் இச்சாலைப் பகுதி கருவறைக்கு முன் சிறு மண்டபம் போலச் சுவர்களில் நான்முகனையும் விஷ்ணுவையும் சிற்பங்களாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதை அர்த்த மண்டபமாய்க் கருதுவாரும் உளர். இத்தளியின் பாதபந்த தாங்குதளத்தில் இரண்டு மாறுதல்களைக் காணமுடிகிறது. ஜகதி பெருந்தாமரையாய் மாமல்லபுரத்துச் சிம்மேசுவரங்களைப் போலமைய, கண்டப் பகுதியின் திருப்புமுனைகளில் யானைத்தலைகள், அமைந்துள்ளன. இவை தளியின் தாங்கு தளத்திற்கே உயிரூட்டுகின்றன எனலாம்.
பனைமலைத் தளியின் சாலைத் திருமுன்கள் சுவர்களில் மகர தோரணங்களோடு கூடிய வெற்றுக் கோட்டங்கள் பெற்றுள்ளன. ஒரு தளத் திருமுன்களான இவற்றின் கூரைமீது ஆறங்கச்சாலைகள் ஆர உறுப்புகளாக அமைந்துள்ளன, இவற்றைச் சாலைத் திருமுன்களின் இரண்டாம் தளம் எனக் கருதி இச்சாலைத் திருமுன்களை இரு தள விமானங்களாகச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். பனைமலைத் தளி விமான ஆதிதளத்தின் ஆர உறுப்புகளும் ஆறங்கம் கொண்டவையே. இவ் ஆர உறுப்புகளின் சுவர்கள் செவ்வக ஸ்புடிதங்கள் பெற்றுள்ளன. விமானத்தின் இரண்டாம் தள அரமியத்திலும் சாலைப்பத்திகள் நன்கு முன்தள்ளியமைந்துள்ளன. இவற்றின் மீது வேதிகையற்ற ஆரம் அமர, மூன்றாம் தளம் பிற்காலக் கட்டுமானமாக உயர்கிறது. பனைமலைத் தளியின் வடக்குச் சாலைத் திருமுன் பல்லவ ஒவிய எச்சங்களைக் கொண்டுள்ளது. கருவறையின் நடுவில் லிங்கத்திருமேனியும், பின் சுவரிற் சோமாஸ்கந்தர் சிற்பமும் காணப்படுகின்றன.

Page 52
76 பல்லவர் காலக் கட்டடக் கலை
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம், (கயிலாசநாதர் கோயில்) ராஜசிம்மர் காலக் கட்டடக் கலையின் உச்ச வெளிப்பாடு. அதன் விமானம் பனைமலைத் தளியின் விரிவாக்கம். பனைமலைத் தளியில் சாலைப்பத்திகள் மட்டுமே முன் தள்ளியமைந்து தனித் திருமுன்களாய் ஏற்றம் பெற்றன. காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரத்திற் சாலைப்பத்திகளுடன், கர்ணபத்திகளும் வெளிவாங்கி, விமானத்தின் துணைத்திருமுன்களாய், ஒரு தளக் கட்டமைப்பில் உருவாகியுள்ளன. இதனால் ராஜசிம்மேசுவரம், மைய விமானமும் அதனைச் சுற்றிலும் ஒட்டி அரவணைத்த நிலையில் ஏழு ஒரு தள விமானங்களும் பெற்றது. கிழக்குச் சாலைபத்தி, கருவறையின் முன் மண்டபம் போல அமைந்துள்ளது. மைய விமானத்தின் அதிட்டானமும், கூரையுறுப்புகளும் தொடர்பறாது இவ்வொருதளத் துணை விமானங்களையும் அரவணைத்துக் கொள்வதால், விமானக் கட்டமைப்பின் வெளித்தோற்றம் எழிலார்ந்து விளங்குகிறது.
விமானத்தின் பாதபந்தத் தாங்குதளம் கருங்கல் உபானத்தின் மீது நிற்கிறது. தாங்கு தளத்தின் பட்டிகையும் கருங்கல் வேலைப்பாடாகும். ஏனைய விமான உறுப்புகள் மணற்கல்லால் ஆனவை. இத்தாங்குதளத்தின் சிறப்பம்சம் இதன் ஜகதிதான். இதுவரையில்லாப் புதுமையாய், ஜகதியின் முகப்பு, மேல், கீழ் விளிம்புகள் பெற்று, இடைப்பட்ட பகுதியில் கணவடிவங்களைக் கொண்டுள்ளது. திருப்பு முனைகளில் யாளி முகங்கள். இக் கணங்கள் ஆடுமாறும், போரிடுமாறும் உள்ளன. மனித, அசுர, விலங்கு முகக் கணங்களுள் மகிஷத் தலைக்கணம் குறிப்பிடத்தக்கது. கண்டபாதங்கள் பனைமலைத் தளிபோல யானை முகப்புகள் கொண்டுள்ளன.
மைய, துணை விமானங்களின் சுவர்ப்பகுதிகள் எண்முக தாவு யாளித் தூண்களால் அணைக்கப்பட்டுள்ளன. இவற்றிலுள்ள கோட்டங்கள் நான்முக அணைவுத் தூண்களைப் பெற்றுள்ளன. கோட்டங்கள் அனைத்திலும் அற்புதமான சிற்பங்கள் ஒரு தள விமானங்கள் அனைத்தும் பனைமலைத் தளிபோல் ஆறங்க ஆர உறுப்புகளைப் பெற்றுள்ளன. மைய விமானம் கருவறையைச் சுற்றி இரு சுவர்களும், சுவர்களுக்கிடைப்பட்ட சுற்று வழியும் கொண்டு சாந்தாரமாய் அமைந்துள்ளது. சுவர்களுக்கிடைப்பட்ட கூரைப் பகுதி பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ளது. கருவறையுள் லிங்கமும் பின் சுவரிற் சோமாஸ்கந்தர் சிற்பமும் உள்ளன. ஒரு தள விமான ஆர உறுப்புக்களை மைய விமான ஆரத்துடன் இணைத்துக் கொள்ளுமாறு

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 77
இடைப்பட்ட பகுதிகளிற் சாலைகளை நிறுவியுள்ள போக்கு, கீழ்த் தொடரொழுங்கை மேற் பகுதியிலும் நிறைவு செய்வதாய் உள்ளது. நான்கு தளங்கள் கொண்டுள்ள மைய விமானத்தின் இரண்டாம், மூன்றாம் தளங்கள் மேலும் ஆரங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தள ஆரத்திற் பஞ்சரங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் பனைமலைத் தளியிலும் முதல் தளக் கூரையில் ஆரம் இடம் பெறுவது, மல்லைத் தளிகளிலிருந்து மாற்றம் காட்டும் அமைப்பெனலாம். இரண்டாம் தள ஆரப் பஞ்சரங்கள் புது வரவு. நான்காம் தளத்தின் மேல் நந்திகள் அமர்ந்துள்ளன. கிரீவமும் சிகரமும் திராவிடமாக அமைய, பெரு நாசிகைகளில் கிழக்கிற் சிவபெருமான், தெற்கில் தஷிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
துணை விமானங்கள் அனைத்தும் உட்சுவரில் அற்புதமான பேரளவுச் சிற்பங்களைப் பெற்றுள்ளன. திருச்சுற்றில் மதிற் சுவரையொட்டிக் கட்டப்பட்டிருக்கும் இரு தளத் திராவிட, சாலை விமானங்களும் உட்புறத்தே சிற்பங்களும் ஒவியங்களும் கொண்டுள்ளன. விமானத்தின் முன்னுள்ள ராஜசிம்ம மண்டபம் தெற்கு, வடக்கு, கிழக்கு முகங்களில் முகப்புகளைக் கொண்டுள்ளது. இம் முகப்புகள் ஒவ்வொரு திசையிலும் இரு நான்முகத் தூண்கள், சுவரோடு ஒட்டிய இரு அரைத் தூண்கள் பெற்றுள்ளன. அரைத்துரண்களையொட்டிய சுவர்ப் பகுதிகள் கோட்டங்களில் வாயிற் காவலர், தெய்வ வடிவங்கள் கொண்டுள்ளன.
காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் பல்லவர் காலக் கட்டடக் கலையின் மைல்கல். பல்லவர் காலத்தெழுந்த முதற் சாந்தார விமானம். தமிழ்நாட்டின் இரண்டு அங்காலயங்களுள் முதலாவது; முதன்மையானது. திருச்சுற்று முழுவதும் இரு தள விமானங்களால் சூழப் பெற்ற ஒரே விமானம். பல்லவர் காலத்தெழுந்த இரண்டு நாற்றள விமானங்களுள் முதலாவது; முதன்மையானது. பல்லவர் தளிகளிலேயே அதிக அளவிற் சிற்பங்களைக் கொண்டமைந்த ஒரே கோயில். பல சைவ இறைக் கோலங்கள் முதன் முதலாக ராஜசிம்மேசுவரத்தில் தான் முகம் காட்டுகின்றன. சுவர்ப் பிரிப்பு, சுவரில் கோட்ட அமைப்பு, கோட்டங்களின் உட்பகுப்பு, அலங்கரிப்பு, தோரணங்கள் எனப் பல்லவர் கலைத்திறம் உச்சத்தில் மிளிரும் இடம் ராஜசிம்மேசுவரம். கற்றளியின் முன் கற்றளியுடன் இணைக்கப்படாமல் முழுமையான அளவில் மண்டபமொன்று காணப்படுவதும் ராஜசிம்மேசுவரத்தில் தான். பல்வேறு வடிவங்களில் கிரந்த எழுத்துக்களில் கல்வெட்டுகள் காணப்படும் ஒரே

Page 53
78 பல்லவர் காலக் கட்டடக் கலை
கோயில் இதுதான். பல்லவக் கற்றளிகளின் முதல்வனாக விளங்கும் இத்திருக்கோயில் இன்றளவும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. வரலாற்றுப் பின்னணியோடு கூடிய கட்டட, சிற்ப, ஒவிய, இலக்கியஞ் சார்ந்த விரிவான கள ஆய்வுகள் தமிழ் நாட்டுக் கலை, வரலாற்றில் இத்தளியின் சரியான இருப்பிடத்தை நிர்ணயிக்க உதவும்.
ராஜசிம்மரின் காலத்தெழுந்த மாதங்கேசுவரமும், இரண்டாம் நந்திவர்மர் காலத்தெழுந்த முக்தேசுவரமும் ஏறத்தாழ ஒரே அமைப்புடையவையென்றாலும் சிறு சிறு வேறுபாடுகள் கொண்டவை. மேற்கு நோக்கிய இம் முத்தள தளிகள் இரண்டும் முகப்புடன் கூடிய முக மண்டபமும், கலப்பு வேசர விமானமும் கொண்டவை. முக்தேசுவரத்தின் முகப்புப் பக்கச் சுவர்களில் வாயிற் காவலர்கள் உண்டு. இரண்டுமே துணைத்தளமும், பாதபந்தத் தாங்குதளமும் கொண்டவை. விமானம், முகமண்டபம் இரண்டின் சுவர்களும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பான்மையன சிதைந்துள்ளன. முகமண்டபத்தின் உட்சுவரிலும் சிற்பங்கள் உள்ளன. ஆதி தள, இரண்டாம் தள ஆரங்களில் பஞ்சரங்கள் இல்லை. முக்தேசுவர முகமண்டப ஆரம் ஆரச்சுவரில் செவ்வக ஸ்படிதங்களைக் கொண்டுள்ளது. இது கணேசத் தளியில் காணப்படும் நிலையாகும். விமானத்து இரண்டாம் தள ஆரச் சுவரிலும் இதே அமைப்பு இரட்டை ஸ்படிதங்கள் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாம் தள அரமியத்தில் வலையன் குட்டை பாணியிலமைந்த சுவர்ப் பஞ்சரங்கள் உள்ளன. இவற்றை மாதங்கேசுவரத்திற் காணமுடியவில்லை. கிரீவ வேதிகையின் நான்கு மூலைகளிலும் நந்திகள் அமர்ந்துள்ளன. இரு விமானங்களிலுமே பெரு நாசிகைகளில் இறைச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. முக்தேசுவரம் தர்ம மகாதேவியின் தளிப்பரிவாரக் கல்வெட்டைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தளியாடற் பெண்கள் பற்றிய காலத்தால் முற்பட்ட முதற் கல்வெட்டு, எங்கள் ஆய்வு மையத்தால் மாமல்லவபுரத்தில் வராகர் குடைவரையருகே கண்டறியப்பட்டது. முக்தேசுவரம் கல்வெட்டு இதற்குப் பிற்பட்டது.
பரமேஸ்வர விண்ணகரம்
இரண்டாம் நந்திவர்மரின் தலையாய திருப்பணியாகக் கருதப்படும் பரமேசுவர விண்ணகரம் இன்று வைகுந்தப் பெருமாள் கோயிலென அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் இன்று காணக் கிடைக்கும் முழுமையுற்ற முத்தளக் கருவறைக் கோயில்களுள் பழமையானதும் சிறப்புக்குரியதுமான

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 79
இக்கோயில் விமானம், முகமண்டபம், உள்சுற்று, திருமாளிகை, வெளிச்சுற்று, புறமதில், கோபுரம் கொண்டமைந்த பெரு வளாகமாய்க் காட்சி தருகிறது. மேற்கு நோக்கிய இத்தளி விமானத்தின் நான்கு தளங்களுள் முதல் மூன்று தளங்கள் முறையே விஷ்ணுவின் நின்ற, அமர்ந்த, சயனக் கோலங்களைக் கொண்டுள்ளன. நான்காம் தளம் வெற்றுத் தளமாக அமைய மேலே திராவிட கிரீவமும் சிகரமும் உள்ளன.
ஆதிதளக் கருவறையைச் சுற்றி எழும் மூன்று சுவர்களுள் வெளிச்சுவர் ஆதி தளத்துடன் முடிய, இடைச்சுவர் இரண்டாம் தள வெளிச்சுவராய்த் தொடர்ந்து அத்தளத்துடன் நிறைவு பெறுகிறது. உட்சுவர் மூன்றாம் தளக் கருவறையின் புறச் சுவராக வளர்ந்து அத்தளத்துடன் முடிகிறது. இத்தளக் கூரையின் மீதே நான்காம் தளக் கட்டுமானம் அமர்ந்துள்ளது. வெளிச்சுவர்க் கூரை மீது முதல் தள ஆரமும், இடைச்சுவர்க் கூரை மீது இரண்டாம் தள ஆரமும், உட் சுவர்க் கூரை மீது மூன்றாம் தள ஆரமும் அமர, நான்காம் தளம் ஆரமற்றுள்ளது.
இரண்டாம், மூன்றாம் தளங்களுக்குச் செல்லும் வழி விமான ஆதிதளத்தின் கிழக்குப் பகுதியிற் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. ஆதிதளம் பாதபந்தத் தாங்கு தளத்துடன் கூரைவரை பிதுக்கங்களைப் பெற்றுள்ளது. அகலமான மையப் பிதுக்கம் பத்ரசாலைப் பிதுக்கமாக, ஆறங்கசாலையை ஆர உறுப்பாகக் கொண்டு காட்சிதருகிறது. பத்ரசாலைப் பத்திக்கும் கர்ணபத்திகளுக்கும் இடைப்பட்ட சுவர்ப் பகுதியில் பக்கத்திற்கு இரண்டு சுவர்ப் பஞ்சரங்கள் நடுவில் கோட்டத்துடன் உள்ளன. இவையனைத்திலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் தள ஆரம் பத்ரசாலை, பக்கச் சாலைகள், கர்ண கூடங்கள் கொண்டு அனர்ப்பிதமாக அமைய, இரண்டாம் தளம் அரைத் தூண்களால் அணைக்கப்பட்ட நான்கு பிதுக்கங்களுடன் எழுகிறது. இந்நான்கு பிதுக்கங்களுமே சிற்பங்கள் உள்ள கோட்டங்களை உடையன. இவற்றின் அனர்ப்பித ஆரமாக இரண்டு சாலைகளும், கர்ண கூடங்களும் இயல்பான அளவிலே காட்டப்பட்டுள்ளன. மூன்றாம் தளம் அரைத்துTண்களால் அணைக்கப்பட்ட மூன்று வெற்றுப் பிதுக்கங்களுடன் அமைய ஆரம் கூடங்களும் சாலையுமாக உள்ளது.
நான்காம் தளம் நடுக் கோட்டமும், சுவர்ப் பஞ்சரங்களும் கொள்ள, கிரீவ

Page 54
80 பல்லவர் காலக் கட்டடக் கலை
வேதிகையின் மீது அந்நாளில் அமர்ந்த சிம்மங்களும், இந்நாளில் கருடனும் காணப்படுகின்றன.
மாளிகை முகப்பு நாற்றிசையிலும் தொடர்ந்தமைந்த சிம்மத் தூண்களைக் கொண்டுள்ளது. இதன் உட்சுவரில் பல்லவர் வரலாறு சிற்பத் தொகுதிகளாக இடம் பெற்றுள்ளது. பேராசிரியர் மீனாட்சி இது குறித்து விரிவான நூலொன்று எழுதியுள்ளார். கூடித்ரிய சிம்மேசுவரச் சுற்றுச் சுவர் அமைப்பைத் தழுவியமைந்த கட்டமைப்பு இதுவாகும்.
பரமேசுவர விண்ணகரமும், ராஜசிம்மேசுவரத்தைப் போலவே பல முதல்களுக்குரிய சிறப்பான தளியாகும். முதல் திருச்சுற்று மாளிகை, முதல் முத்தளக் கருவறைகள், விஷ்ணுவின் பல திருத்தோற்றங்களைக் கொண்ட முதற்கோயில் என இதற்கும் முதல்வன் தகுதிகளுண்டு. இத் தளியின் அர்த்த மண்டபத் துரணொன்றின் மாலைத் தொங்கலில் தான் பெண்ணொருவர் ஆடும்குஞ்சிதக்கரணச்சிற்பம் எம்மைய ஆய்வாளர்களாற் கண்டறியப்பட்டது. தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட பழமையான மானுடக் குஞ்சித கரணச் சிற்பம் இது தான். ராஜசிம்மருக்கு மிகப் பிடித்த இக்கரணத்திற் சிவபெருமானின் நடனத் தோற்றங்கள் அவரது கோயில்கள்
பலவற்றுள் இடம்பெற்றுள்ளன.
திருப்பட்டுர்க் கைலாசநாதர் கோயில்
திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலமைந்த ஒரே சாந்தாரப் பல்லவ விமானமாகும். எழிலார்ந்த இந்த விமானம் மக்களாலும், அரசாலும், கைவிடப்பட்ட நிலையிற் தற்போது எங்கள் மையத்தாலும், சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையாலும் இணைந்து பராமரிக்கப்படுகிறது. இரு சுவர்களும் இடையிற் சுற்றுவழியும் கொண்ட கருவறைத் தளமும், மேற்றளங்கள் மூன்றும் நாகரமாய் அமைய, கிரீவமும் சிகரமும் திராவிடமாய் உள்ள இவ்விமானத்தின் கருவறையில் தாராலிங்கம் இடம் பெற்றுள்ளது. ஆதிதளச் சுவர்கள்
ஒவ்வொன்றும் ஐந்து பிதுக்கங்களைக் கொண்டுள்ளன. ஒரக்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 8
கர்ணபத்திகளும், நடுப் பெருஞ்சாலைப் பத்திகளும், இடைப்பட்ட சாலைப்பத்திகளும் நான்முக அரைத் தூண்களால் அணைக்கப்பட்டுச் சிற்பங்கள் உள்ள கோட்டங்களைக் கொண்டுள்ளன. இடைப்பட்ட ஒடுக்கங்களிலும் பரவலாய்ச்சிற்பங்கள் முதல் தள ஆரம் ஆறங்க உறுப்புகள் கொண்டு இரண்டாம் தள அரமியத்தைச் சுற்றிவர வாய்ப்பாக அனர்ப்பிதமாய் நகர்ந்துள்ளது. ஆரம் முழுவதும் சிற்பங்கள் இருந்தாலும் சிதைவின் காரணமாக அடையாளம் காணக்கூடவில்லை. இப்படி ஆரம் முழுவதும் சிற்பங்கள் அமைவதை உத்தரமேரூர் கயிலாசநாதர் கோயிலிலும் காணமுடிகிறது.
இரண்டாம் தள அரமியம் நான்கு பிதுக்கங்களும், மூன்றாம் தள அரமியம் மூன்று பிதுக்கங்களும் கொண்டு உரிய ஆர உறுப்புகளை அர்பித ஆரங்களாகக் கொள்ள நான்காம் தளம் ஆரமின்றி அமைந்துள்ளது. ஆதி தளத்தின் இரு சுவர்களும் கதலிகா கர்ணமுறையில் நெருக்கப்பட்டு அகலக் குறைவான நிலையிற் பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ளது. இத்தளியின் பாதபந்த அதிஷ்டானம் துணைத் தளத்தின் மீதமைந்துள்ளது. துணைத் தளத்தின் பத்ம உபானம், கண்டத்தின் கீழ்க்கம்பு, பாதங்கள் அனைத்துமே அலங்கரிப்புடன் உள்ளன. தாங்கு தளத்தின் ஜகதி, குமுதம் ஆகியவையும் சிறப்பான அழகூட்டலைப் பெற்றுள்ளன. ஜகதியில் சிம்மமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அரைத் தூண்கள், ஒரத் தூண்கள் என அனைத்துத் தூண்களும் அமர்ந்த நிலையில் ஒரு கால் தூக்கிய யாளிகளை விலங்கடிகளாகப் பெற்றுள்ளன. இத்தளியை ராஜசிம்மர் கால இறுதிப்
பணியாகக் கொள்ளலாம்.
உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில்
தந்திவர்ம பல்லவர் காலப் பணிகளாக எழுந்த விமானங்களுள் கட்டடக் கலையமைப்பிற் குறிப்பிடத்தக்க கூறுகளைப் பெற்று விளங்குவது உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயிலாகும். காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் விமானம் போல இதுவும் முத்தளக் கருவறைகள் கொண்ட விமானம்தான் என்றாலும், இதற்கு நான்காம் தளமில்லை. ராஜசிம்மரின்

Page 55
82 பல்லவர் காலக் கட்டடக் கலை
பனைமலையீசுவரர் விமானம் போல் இதற்கும் தெற்கு, மேற்கு, வடக்கு, பத்ரசாலைப் பகுதிகளில் துணை விமானங்கள் உள்ளன. வைகுந்தப் பெருமாள் கோயிலின் விமான அமைப்பும் பனைமலையீசுவரத்து விமான அமைப்பும் கலந்தமைந்த இவ்விமானம் பரமேசுவரப் பெருந்தச்சரால் அமைக்கப்பட்டதென்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவர் மரபிலிருந்து விலகிக் கருங்கல், செங்கல், சுதை மூன்றும் கொண்டு உருவாக்கப்பட்ட கலப்புக் கட்டுமானமான இவ்விமானத்தின் துணைத்தளமும் தாங்குதளமும் மட்டுமே கற்பணி. இரண்டுமே நன்கு உருவாக்கப்பட்டு அலங்கரிப்பும் பெற்றுள்ளன. துணைத் தளத் திருப்பங்களில் அமர்ந்து ஒரு கால் உயர்த்திய சிம்மங்கள் காணப்படுகின்றன. இத்திருப்பங்களில் அமரும் தாங்குதள ஜகதி மகாபத்மமாகி முனைகளில் சக்கரவாகப்பறவைகளின் வடிப்பைப் பெற்றுள்ளது. குமுதம் இப்பகுதியில் மட்டும் தாமரையிதழ்களால் தழுவப்பட்ட கடகாவிருத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. கண்டமும் பட்டிகையும் பிரதிவரியாகியுள்ளன. சுருங்கச் சொன்னால் திருப்பங்களில் பத்மபந்தமும், நேர்ப்பகுதிகளில் பாதபந்தமும் தாங்கு தள அமைவாக உள்ளன.
செங்கற் சுவர்களில் நான்முகத் தூண்கள், ஆரம் ஆறங்க உறுப்புகளுடன் அனர்ப்பிதமாக அமைந்து இரண்டாம் தள அரமியத்தைச் சுற்றி வர வழி விட்டுள்ளன. இரண்டாம் தள அரமியமும் ஆதி தளம் போலவே தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளில் துணைத் திருமுன்களும் கிழக்கில் முக மண்டபமும் பெற்றுள்ளன. இரண்டாம் தள ஆரம் அர்ப்பிதமாக அமைந்து மூன்றாம் தளத்தோடு ஒட்டி உறவாடுகிறது. பெருமாளின் சயனக் கோலத்தைக் கொண்டிருக்கும் இத்தளம் செவ்வகமாக உள்ளது. இதன் மீது வேசர கிரீவமும் சிகரமும் இடம் பெற்றுள்ளன.
ஆதி தளத்தின் தெற்கு, மேற்கு, வடக்குத் துணைத் திரு முன்களை அடையப் படிகள் உள்ளன. இப்படி வரிசையின் முகப்புச் சுவரில் கலைவாணி, ரதி மன்மதன், பிருகு என்போரின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆலம்பாக்கம் வரதராசப் பெருமாள் கோயில் கீழே வெற்றுத் தளமும் அதன் மீது கருவறைத் தளமும் கொண்டமைந்தது. இவ்வகை விமானங்களை மாடக் கோயில்கள் என்பர். வெற்றுத் தளம் கருவறைத் தளம் இரண்டுமே ஐந்து பிதுக்கங்களைக் கொண்டுள்ளன. கீழ்த் தளத்தின் நடுப்பத்திகளிற்
கோட்டங்களும் சிற்பங்களும் உள்ளன. கோட்டங்கள் வாஜன உத்திரமும் மகர

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 83
தோரணமும் பெற்றுள்ளன. மிக மோசமான நிலையிற் சிதைந்திருக்கும் இக்கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் உள்ளது.
தக்கோலத்திலுள்ள ஜலநாதீசுவரர் விமானமும், திருத்தணி வீரட்டானேசுவரமும் பல்லவ வேந்தன் அபராஜிதன் காலத்தவை. இவ்விரண்டனுள் ஜலநாதீசுவரம், பிரதிபந்த அதிட்டானம் கொண்டுள்ளது. சுந்தர வரதப் பெருமாள் கோயில் போல இங்கும் குமுதம் கடகாவிருத்தமாகத் தாமரைவரி அணைவில் உள்ளது. அங்குத் திருப்பங்களில் மட்டும் பெற்ற அமைப்பு இங்குக் குமுதம் முழுவதற்குமாய்க் காட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட நான்முகத் தூண்களும் அழகான சிற்பங்களைக் கொண்ட கோட்டங்களும் உடைய சுவரின் கூரையுறுப்புகளில் வலபியில் பூதமாலையுள்ளது. அர்த்த மண்டபக் கோட்டங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கிற் துர்க்கையும் தாபனம் பண்ணப்பட்டுள்ளனர்.
திருத்தணி வீரட்டானேசுவரம் அபராஜிதரின் காலத்தில் நம்பியப்பியாற் கட்டப்பட்டது. முற்றிலும் கருங்கல் திருப்பணியான இவ்வொரு தள விமானம் நாகர தளமும் தூங்கானை மாட சிகரமும் கொண்டது. கிரீவ சிகர முகப்புக் குழியில் உள்ள கோட்டத்தில் உமா சகிதர் இடம் பெற்றுள்ளார்.
திருவதிகை வீரட்டானேசுவரம் காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரத்தைப் பின்பற்றி இரண்டாம் பரமேசுவரவர்மரின் காலத்தில் எழுப்பப்பட்டதாகலாம். முப்புறத்தும் துணை விமானங்களோடு அமைந்துள்ள இதன் மைய சாந்தார விமானம் நான்கு தளங்கள் கொண்டது. இதன் கபோதபந்தத் தாங்குதளம் பதின்மூன்றாம் நூற்றாண்டுத் திருப்பணியின் போது உருவானது. திராவிட கிரீவ சிகரம் பெற்றுள்ள இவ்விமானத்தின் புறத்தோற்றமும் சுதையுருவங்களும் அண்மைக் காலத் திருப்பணியால் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
பல்லவர் காலக் கட்டடக் கலை மண்டபக் கோயில்களாய்த் தொடங்கி, செதுக்குத் தளிகளாய் ஒரு தளம், இரு தளம், முத்தளம் பெற்று, கலைநயம் மிகுந்த கட்டுமானச் சிறப்புக்களுடன் கற்றளிகளாய் மலர்ந்த காலமே தமிழ்நாட்டுக் கலை வரலாற்றின் பொற்காலம். பின்னாளைய மரபுகளின் பல்வேறு கைவண்ணங்களுக்குக் கால் கோள் நிகழ்த்திய பல்லவர்களைக்
கட்டடக் கலை விற்பன்னர்கள் என்றழைப்பது சாலப் பொருந்துவதாகும்.

Page 56

பல்லவர் காலச் சிற்பக் கலை
இரா. கலைக்கோவன்
பிரதிமால கூடினங்கள்
சிற்ப நூலார் படிமங்களைச் சித்திரம், சித்திரார்த்தம், சித்ரா பாசம் என்று மூவகைப்படுத்துவர் (கணபதி ஸ்தபதி - 8). எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய அளவிலும், அமைப்பிலும் இயற்றப்பட்டுப் புலப்படுத்தப்படும் படிமங்கள் சித்திரமெனப்படும். உற்சவப் படிமங்களாக விளங்கும் உலோகத் திருமேனிகள் இவ்வகையின. படிமங்களின் முற் பகுதி உறுப்புகள் மட்டும் இயற்றப்பட்டுப் பின் உறுப்புகள் புலப்படுத்தப்படாமல் அமையும் படிமங்கள் சித்ரார்த்தமாகும். சுவர்களில், தூண்களில் அமையும் சிற்பங்கள் இவ்வகையின, புடைப்பின்றித் தீட்டப்படும் ஒவியங்கள் சித்ரா பாசமெனப்படும். பல்லவர் காலத்தில் இம் மூவகைப் படிமங்களுமே உருவாக்கப்பட்டன.
படிமங்கள் செய்த இடங்களிலிருந்தோ அல்லது நிறுவப்பட்ட இடங்களிலிருந்தோ அசைக்க இயலா வண்ணம் அல்லது அசைக்கக்கூடா நிலையில் இருப்பின் அவை அசலம் எனப்படும். பாறைச் சிற்பங்கள் இத்தகையன. ஓரிடம் விட்டு வேறிடம் நகர்த்தக் கூடிய வண்ணம் இருப்பினும் அல்லது அந்நோக்கத்தில் நிறுவப்பட்டிருப்பினும் அவை சலம் எனப்படும். உலோகப் படிமங்கள் இத்தகையன. இடம் விட்டு இடம் மாற்றக் கூடியதெனினும் மாற்றக் கூடாது என்ற நோக்கில் நிறுவப்பட்ட படிமங்கள் சலாசலம் எனப்படும். கருங்கல் படிமங்கள் இத்தகையன. பல்லவர் காலத்தில் இம் மூவகைப் படிமங்களுமே காணப்படுகின்றன.
தெய்வத் திருவுருவங்கள் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என மூவகைப்படும். யோகமுத்திரை, சாந்தநிலை, அச்சம் அகற்றி அன்பர்க்கு வேண்டுவன தரும் கைகள் என அமைந்த படிமங்கள் சாத்விக வகையின,

Page 57
86 பல்லவர் காலச் சிற்பக் கலை
தட்சிணாமூர்த்தி, சந்திரசேகரர் படிமங்களைச் சான்றாகக் கூறலாம். நின்ற கோலத்தில் அல்லது ஊர்தியிலமர்ந்த கோலத்தில் அணிகலன்கள், கருவிகளுடன் அச்சம் அகற்றி அருளும் கைகள் கொண்டு விளங்கும் படிமங்கள் ராஜஸ வகையின, ஆறுமுகப்பெருமானின் திருக்கோலம் இதற்குச் சான்றாகும். படைகளால் கொடியவர்களைக் கொல்வதாகவும், அச்சுறுத்தும் தோற்றம் கொண்டதாகவும், போர்த் தொழிலில் மகிழ்ச்சியுடையதாகவும் விளங்கும் தோற்றம் தாமஸத் திருவுருவமாகும். மகிகூடிாசுரமர்த்தினி தோற்றங்கள் இவ்வகையின, இம்மூவகைப்படிமங்களுமே பல்லவர் பணிகளில் இடம் பெற்றுள்ளன.
படிமங்களைச் சிற்றுருவப் படிமங்கள், இடைநிலைப் படிமங்கள், பெரும் படிமங்கள், பேரளவுப் படிமங்கள் என அளவுகொண்டு நால்வகைப்படுத்தலாம். இந் நால்வகையினவுமே பல்லவச் சிற்பிகளால் உருவாக்கப்பட்டன. மிகச் சிறிய சிற்பம் காஞ்சிபுரம் பரமேசுவர விண்ணகர அர்த்த மண்டபத் தூணொன்றின் மாலைத் தொங்கலில் காணப்படுகிறது. இடைநிலைப் படிமங்கள் பூதமாலைகளிலும் சுவர்களிலும் பல தளிகளில் உள்ளன. பெரும் படிமங்களாய்க் கோட்டச் சிற்பங்களைச் சுட்டலாம். பேரளவின லலிதாங்குரக் கங்காதரர் போற் பல தளிகளில் இடம் பெற்றுள்ளன.
படிமங்களின் தோற்றத்தில் கை (32-45) அமைதிகள் பங்க இலக்கணம் (47 - 50), நிலைக்கோலம் (57 - 64), தலைக்கோலம் (73 - 89), அணிகலன்கள் (90 - 105), ஆடைகள் (106- 110), கருவிகள் (18 - 137) என்பன முக்கிய இடம் பெறுகின்றன. சிற்பச் செந்நூலில் இருபத்தெட்டு வகையான தொழிற் கைகளையும் (ஒற்றைக்கை 24 இரட்டைக்கை 4), நான்கு வகையான எழிற் கைகளையும் (கஜம், தண்டம், டோலம், பிரசாரிதம்) காணமுடிகிறது. இவற்றுள் பெரும்பான்மையான கையமைதிகள் பல்லவச் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அபயம், கர்த்தரீமுகம், விஸ்மயம், கடகம், கடி, ஊர், நித்ரா ஆகியவற்றைப் பரவலான அளவிற் காண முடிகிறது. குறைந்த வளைவுடைய திருமேனிகளை ஆபங்கமென்றும், நிறைந்த வளைவுடைய திருமேனிகளை அதிபங்கமென்றும், வளைவற்ற நேர்நிலைப் படிமங்களைச் சமபங்கமென்றும் கூறுவர். ஆபங்கத் திருமேனியாய்த் திரிபுராந்தகரையும், அதிபங்கத் திருமேனியராய் வீணாதரரையும், சமபங்கத் திருமேனியராய் விஷ்ணுவையும் கூறலாம். பல்லவர் படைப்புகளில் இம்மூவகைத் திருமேனிகளுமே உள்ளன.
படிமக் கோலங்கள் நின்ற, அமர்ந்த, சயன நிலைகளில் அமைகின்றன. சமபாதஸ்தானகம், வைதஸ்திக ஸ்தானகம், (இரு கால்களும் புறத்தே

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 87
திரும்பிய நிலை) அர்த்த வைதஸ்திக ஸ்தானகம், வைசாகம் (ஒரு கால் ஊன்றி மற்றொரு கால் சிறிது முன் வைத்து), வைஷ்ணவம் (ஒரு கால் ஊன்றி ஒரு கால் சிறிதே மடக்கி), ஸ்வஸ்திகம், ஆலிடம் (இடக்கால் முன் எட்டி வைத்து வலக்கால் பின்னோக்கி நீட்டி), பிரத்யாலிடம், ஊர்த்வஜாறு, ஏகபாதம் எனும் நின்ற நிலைகள் அனைத்துமே பல்லவர் சிற்பங்களிற் கையாளப்பட்டுள்ளன. அமர்வு நிலைகளில் சுகாசனம், உத்குடிகாசனம் ஆகியன பரவலாகவும் (ஒரு கால் இருக்கையில் குத்துக்காலாக, மறுகால் கீழே தொங்கலாக) பத்மாசனம் (கமலாசனம், பரியங்காசனம், வஜ்ராசனம்), அர்த்தபத்மாசனம், லலிதாசனம் (இரு கால்களும் இருக்கையின் மேல் ஒன்று கிடையாய், மற்றொன்று குத்துக் காலாய் நிமிர்த்தி), மகாராஜலீலாசனம் (லலிதாசனத்தில் தூக்கி நிறுத்திய முழங்கால் மீது வலமுழங்கை லலிதமாக நீட்டியவாறு) யோகாசனம், ஸ்வஸ்திகாசனம், கருடாசனம் ஆகியவை ஓரளவும் இடம் பெற்றுள்ளன.
அணி அலங்காரங்கள்
தலைக் கோலங்களில் பல்வகைப்பட்ட சடை மகுடங்கள், சடை பாரம், சடை மண்டலம், விரிசடை, கேசபந்தம், தமிழம், கிரீடம், காண்டம் ஆகியன பல்லவச் சிற்பங்களிற் பரவலாக இடம்பெற்றுள்ளன. சிற்பச் செந்நூலிற் காணவியலாத தலைக் கோலங்கள் சிலவும் பல்லவச் சிற்பங்களில் அமைந்துள்ளன. பத்ர, மகர குண்டலங்கள் கண்டிகை, சரப்பளி, சவடி முத்தாரம், மணியாரம், வீரச் சங்கிலி, பூணுரல், ஸ்வர்ண வைகாகூடிம், உதரபந்தம், தோள்வளை, கைவளை, மேகலை, அரைப்பட்டிகை, குறங்கு செறி, வீரக்கழல், நூபுரம் போன்ற அணிகலன்களும் கோவண ஆடை, தோலாடை, மரவுரியாடை, பஞ்சாடை, பட்டாடை, இடைக்கட்டுகள், மார்புக் கச்சை ஆகிய ஆடைகளும் பல்லவச் சிற்பங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகளும், சின்னங்களும் சிற்பச் செந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் பல்லவப் படைப்புகளில் அவற்றுள் சிலவற்றையே காணமுடிகிறது. பரவலாகக் காணக்கூடிய பொருட்கள் மற்றும் கருவிகளுள் மழு, சங்கு, சக்கரம், அக்கமாலை, தீ, அம்பு, வில், கேடயம், கத்தி, பெருந்தடி, குண்டிகை, முத்தலை ஈட்டி, சாமரம், தலையோடு ஆகியன குறிப்பிடத்தக்கன. சிவபெருமானின் சிற்பங்கள் பல வீணை, பாம்பு ஏந்தியுள்ளன. பல சிற்பங்களின் கைகளில் மலர்கள் உள்ளன. ஆதிவராக மகிகூடிசுர மர்த்தனியின் கை மீது கிளி கொஞ்சுகிறது.

Page 58
88 பல்லவர் காலச் சிற்பக் கலை
பல்லவச் சிற்பங்களில் அன்னம், மகரம், சக்கரவாகப் பறவை, யானை, சிம்மம், யாளி, குரங்கு, மான், காட்டுக் கோழிகள், பூனை, எலி, நந்தி, குதிரை முதலிய பறவைகளும் விலங்குகளும் இடம் பெற்றுள்ளன.
தெய்வங்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், துறவிகள் எனப் பல்வேறுபட்ட சிற்பத்திருமேனிகளைப் படைத்துச் சென்ற பல்லவச் சிற்பிகளின் கலைத்திறம், தமிழ் நாட்டுக் கலை வரலாற்றில் அவர்கள் பெறும் இடம் ஆகியவற்றை நீண்ட ஆய்வுகளுக்குப் பின் அறிஞர் சிலர் எடுத்துரைத்துள்ளனர். அவற்றுள் தலையாயதாகக் கருதத்தக்கன கலை மேதை கூ. ரா. சீனிவாசனின் அரிய படைப்புகள்.
வாயிற் காவலர் வடிவங்கள்
பல்லவர் காலச் சிற்பங்களைக் குடைதளிச் சிற்பங்கள், செதுக்குத்தளிச் சிற்பங்கள், கட்டுத்தளிச் சிற்பங்கள் என்று இடம் நோக்கி மூவகைப்படுத்தலாம். காலத்தின் அடிப்படையில் ராஜசிம்மருக்கு முற்பட்டவை, அவர் காலத்தவை, அவருக்குப் பிற்பட்டவையென்றும் மூவகைப்படுத்தலாம். குடைதளிகளிற் காணப்படும் பல்லவச் சிற்பங்கள் இரு பருவங்களில் அடங்கும். முதற் பருவம் முதலாம் மகேந்திரர், முதலாம் நரசிம்மர் காலத்தனவாகும். இப்பருவத்தில் வாயிற்காவலர் சிற்பங்களே பெருமளவில் உருவாகின. மண்டகப்பட்டு, கழுக்குன்றம், மாமண்டூர்க் காவலர் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. உடற் கூறியல் அமைப்பு (Anatomy) இச் சிற்பங்களில், பிறவற்றிலும் மேம்பட்டுக் காணப்படுகிறது. மண்டகப்பட்டு மேற்குக் காவலரின் தலையலங்காரம் குறிப்பிடத்தக்கது. இவ்வலங்காரம் பின்னால் வந்த எந்தப் பல்லவச் சிற்பத்திலும் காணப்படாமையும் கவனிக்கத்தக்கது. தலை மகுடத்தின் மேற்புறமிருந்து கீழிறங்கும் கூந்தல், ஒன்று போலமைந்த மூன்று அழகணிகளாற் கட்டப்பட்டுள்ளது. இவ்வழகணிகள் நடுவில் இரு வளையங்களையும், முனைகளில் விரல்களென விரியும் அமைப்பையும் பெற்றுள்ளன. ஆபங்கராய் மிக இயல்பாகப் பெருந்தடியின் மீது ஒரு கையும், இடுப்பில் மறுகையுமாக நிற்கும் இம் மேற்களின் தோற்றம், மகேந்திரர் காலக் குடைவரைக் காவலர்களிற் தனித்துவம் வாய்ந்ததெனலாம். மாமண்டூர் உருத்ரவாலிசுவரத்து வாயிற் காவலர்களுள் வட கருவறையின் தென்புறக் காவலர் குறிப்பிடத்தக்கவர். இடக் கையைப் போற்றி முத்திரையில் காட்டி,

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 89
வலக்கையைத் தொடையில் இருத்தி இலேசான புன்னகையுடன் காட்சி தரும் இவ்வடிவத்தின் உடலமைப்பும், பங்கமும் மிகச் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன. நீண்ட கால்கள், ஒடுங்கிய வயிறு, இயல்பான அளவிற்கு அகன்ற மார்பு, நீள் உருண்டை முகம், குறைவான ஆடையணிகள், மலர்ச்சியான உணர்வு
வெளிப்பாடு என இச்சிற்பம் இப்பருவக் காவலர்களுள் முதன்மை பெறுகிறது.
சிவபெருமானின் நடனக் கோலம்
குரங்கணில் முட்டத்திலும், அவனி பாஜன பல்லவே சுவரத்திலும், வல்லம் குடைவரையிலும் கொம்பு முளைத்த காவலர்கள் உள்ளனர். இவற்றைக் கொம்புகள் எனக் கொள்வதிலும் சூல இலைகளாகக் கொள்ளலாமோ எனத் தோன்றுகிறது. அவனி பாஜன பல்லவே சுவரமும், லலிதாங்குரமும் இப்பருவச் சிற்பக் கலையாற்றலின் சான்றுகளாய் அமைந்துள்ளன. அவனி பாஜனத்தில்தான் சோழர் கால ஆனந்தத் தாண்டவத்திற்கு விதை ஊன்றப்பட்டுள்ளது. குடைவரைத் தூண்களுள் ஒன்றின் மேற் சதுரத்தில் தமிழ் நாட்டின் முதல் புஜங்கத்ராசித சிவ கரணக் கோலம் காணப்படுகிறது. வலக்காலை ஊன்றி, இடக்காலை உயர்த்தி வலப்புறம் குறுக்காக வீசி, விரிசடையும் நெற்றிக் கண்ணுமாய், புஜங்கம் காலருகே படமெடுத்து நிற்க, புஜங்கத்ராசிதம் காட்டும் சிவபெருமானின் இந்தக் கரணக் கோலம் தமிழ் நாட்டின் மிகப் பழமையான ஆடற் கோலம் எனலாம். இதிற் சிவபெருமானின் பின் கைகளில் தீயகலும் மழுவுமுள்ளன. முன் கைகள் அபயத்திலும், டோலத்திலும் உள்ளன. சிவபெருமானின் இடப்புறம் முழவு தட்டும் கலைஞர், வலப்புறம் ஆடலைப் போற்றிப் பரவும் கணம். பல்லவர்களின் தொடக்கக் காலத்திலேயே கரணங்கள் சமுதாயத்தில் பெற்றிருந்த மதிப்பையும், நாயன்மார்கள் ஆடல்நாயகராய்ச் சிவபெருமானை உயர்த்தியமைக்குச் சமுதாயம் அளித்த அங்கீகரிப்பையும் இத்தோற்றம் புலப்படுத்த வல்லது.
இதே குடைவரையிலுள்ள போர் வீரர் சிற்பங்களும் காணத்தக்கவை. ஓங்கிய வாளும் கேடயமுமாய் இவ்வீரர்கள் ஆடுமாறு போலக் காட்சி தருவதால் ஒள்வாள் அமலைக் கூத்தின் வெளிப்பாடாக இவர்களைக் கருதலாம். நிமிர்த்திய முகமும், வலிய மேனியும், வீரக் குறிப்பும் இச்சிற்பங்கள் வழி பல்லவர் போர்த்திறம் பேசுகின்றன.

Page 59
90 பல்லவர் காலச் சிற்பக் கலை
கங்காதரர்
சிராப்பள்ளி லலிதாங்குரத்திலுள்ள கங்காதரர் திருமேனி இப்பருவச் சிற்பக் காட்சிகளின் உச்சம். படக் காட்சி போல குடைவரையின் முகமண்டபச் சுவர் முழுவதும் வியாபித்துள்ள இச்சிற்பம், சிறு மேடை முகப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. மேடையில் ஒரு காட்சி என்றே உணருமாறு போலப் பக்குவப்படுத்தப்பட்டுள்ள இச் சிற்பத் தொகுதியின் நாயகராய்ச் சிவபெருமான் காட்சி தருகின்றார். தமிழ் நாட்டுக் குடை வரைகளிற் கங்காதர மூர்த்தியின் தோற்றம் மூன்றே இடங்களில்தான் உள்ளது. ஒன்று கோகர்ணம். அது பாண்டியர் கை வண்ணமாகக் கருதப்படுகிறது. பிற இரண்டனுள் லலிதாங்குரம் தவிர்ந்த மற்றொன்று மல்லை ஆதிவராகரிலுள்ளது. இம் மூன்றனுள் சிறப்புக்குரியவர் லலிதாங்குரக் கங்காதரர்தான். ஊர்த்வஜாறு நிலையில் வலக்காலை முயலகனின் தலைமீதும், இடக்கை மீதும் நிறுத்தி, இடக்காலை ஊன்றி, ஆபங்கராய் நிற்கும் பெருமானின் வலமேற்கை சடைப்புரியொன்றில் கங்கையை ஏற்கிறது. கீழ்ப்பாய்ச்சிய பட்டாடை, எழிலார்ந்த சடை மகுடம் வலப்புறம் இலேசாய் ஒருக்களித்த தோற்றம். பெருமானின் இருபுறத்தும் மேலே போற்றிக் கைகளுடன் கந்தவர்கள். கீழே கருடாசனத்தில் அடியவர்கள், இடைப்பட்ட பகுதியில் முனியுங்கவர்கள். மேடை நாடகத்தின் உச்சக் காட்சி போல உயிரோட்டத்துடன் செதுக்கப்பட்டிருக்கும் இச்சிற்பத் தொகுதி மகேந்திரர் காலச் சிற்பிகளின் செதுக்குத் திறம் காட்டுவதாய் அமைந்துள்ளது.
மகிஷாசுரமர்த்தனி
குடைதளிகளில் வந்த இரண்டாம் பருவச் சிற்பங்கள் அனைத்துமே குறிப்பிடத்தக்கவைதான் என்றாலும் அவற்றின் மகுடமாய்த் திகழ்வது மகிக்ஷசுரமர்த்தனியின் போர்க்கோலம்தான். தமிழ் நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் இத்தகு உயிர்ப்புள்ள போர்க்காட்சி இல்லையெனலாம். இதற்கு இணையான காட்சி ராஜராஜிசுவர விமானத்தின் முதல் தளச் சாந்தார நாழியில் திரிபுராந்தகப் போராக ஒவியத் தீட்டலாய்க் கண்களுக்கு விருந்தாகிறது. மண்டபச் சுவர் முழுவதும் வியாபித்துள்ள மகிஷாசுரமர்த்தனி போர்க்கோலச் சிற்பத் தொகுதியில் சிம்மத்தின் மீதமர்ந்து போர் தொடுக்கும் தேவியும் எதிர்த்துத் தாக்க முயலும் மகிஷாசுரனும் மைய நாயகர்களாய் அமைய, சுற்றிலும் இரு தரப்பு வீரர்களின் பல்வேறு தோற்றங்கள்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 9.
தெரிகின்றன. இத்தொகுதியிற் பாதிக்கும் மேலாக மர்த்தனியின் படை பரவியிருப்பதும், தேவியின் படை உற்சாகத்துடன் முந்த, அசுரனின் படை பின்வாங்கும் நிலையிலிருப்பதும், அப்படைவீரர்கள் சிலர் வெட்டுண்டும், வேதனையுற்றும் வீழ்ந்திருக்கும் அமைப்பும், போரில் மர்த்தனி வெற்றி வாகை சூடிக் கொண்டிருப்பதை மிக நயமாக எடுத்துரைக்கின்றன. பல்லவர் காலப் போர்க் கருவிகள், போர் முறைகள் என்பவற்றை அறிய இச்சிற்பத் தொகுதி பெருமளவிற்கு உதவுகிறது. சிம்மத்தின் மீது சலனமற்று அமர்ந்திருக்கும் சிம்மவாகினியின் தோற்றமும், ஆலிடத்தில் அதிர்ந்து தோன்றும் மகிக்ஷாசுரனும் கண்கொள்ளா உணர்வுப் புதையல்கள்.
மகாவராகர் மகிஷாசுரமர்த்தனியும் குறிப்பிடத்தக்கவர். போர் முடிந்து மகிடனின் தலைமீது ஆபங்கராய் நிற்கும் அம்மையின் ஸ்வஸ்திக நிலையும், தலைச் சாய்வும் அழகின் மென்மையை எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. பின் கைகளில் கருவிகள் முன் கையொன்றில் கிளி. சங்க காலத்துப் பாடல்களிலேயே முன்கையிற் கிளி ஏந்தும் பழக்கம் காணப்படுகிறது. ஹொய்சலர் சிற்பங்கள் வரை தொடரும் இப்பாணி பல்லவ உலகில் இங்கு மட்டுமே இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தேவியின் காவலர்களாய் இருபுற ஒரத்திலும் வாயிற் பெண்டுகள். இக்காவற் பெண்டுகளுள் ஒருவர் வில்லி, மற்றொருவர் வாளரசி. தேவியைப் போலவே ஸ்வஸ்திக நிலையில் மிளிரும் இக் காவற் பெண்டுகள் தமிழ் நாட்டின் தொடக்க காலக் கலை வரலாற்றில் மூன்று இடங்களிலே தான் இடம் பெற்றுள்ளனர். மாமல்லையின் கோடிக்கல் மண்டபம், மகாவராகர் குடைவரை, செதுக்குத் தளியான திரெளபதி தளி என்பன அவையாகும்.
சோமாஸ்கந்தர்
மூன்று குடைவரைகளிலும் சோமாஸ்கந்தர் காணப்பட்டாலும் மகிஷாசுரமர்த்தனி நடுக் கருவறைச் சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மாசனத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நந்தியின் மீது இடக்கால்களை ஊன்றித் தேவியும் தேவனும் அமர்ந்துள்ளனர். இறைவன் சுகாசனம், இறைவியின் வலக்கால் பார்வையில் இல்லை. அவரது வலத் தொடையில் தந்தைக்காய்த் தாவும் சேயாய் முருகன். இறைவனின் இருபுறமும் பின்புலத்தில் நான்முகன், விஷ்ணு மார்பளவாக, இறைவியின் தலைக்கு மேலாகக் குடை, சிம்மாசனத்தின் கீழ் போற்றியமர்ந்திருக்கும் கணம். சிவபெருமான் சிரஸ்சக்கரத்துடன் பாம்பேந்தியாய் அமர்ந்துள்ளார்.

Page 60
92 பல்லவர் காலச் சிற்பக் கலை
இடைக்கட்டின் இருபுறத்தும் காட்டப்பட்டிருக்கும் பட்டுக் குஞ்சலங்கள் மாமல்லபுரத்திலுள்ள வேறெந்தச் சிவபெருமானின் சிற்பத்திலும் இடம் பெறாத புதிய ஆடையமைப்பாய் மிளிர்கின்றன. குடும்பமெனும் சித்தாந்தத்தை வெளிப்படுத்துமாறும், சைவம், சாக்தம், கெளமாரம் எனும் முப்புரிவுகளை ஒருங்கிணைக்குமாறும் அமைந்த இச்சிற்பம் தமிழ் நாட்டுக் கலை வரலாற்றிற்குப் பல்லவர்களின் கொடையெனலாம். சோழர்கள் காலத்திலும், பெருஞ்சிறப்போடு, உலோகத் திருமேனிகளாகி வழிபாட்டிலிருந்த இச் சிற்பத் தோற்றம் பல்வேறு சிறு சிறு மாறுபாடுகளுடன் இரண்டாம் நந்திவர்மருக்கு முற்பட்ட பல்லவக் கோயில்கள் பவவற்றுள் இடம் பெற்றுள்ளது.
பூவராகர்
குடைவரைக்கால அற்புதங்களுள் வராகர் குடை வரையிலுள்ள பூவராக மூர்த்தி ஒரு மைல்கல். இதற்கிணையான ஒரு பூவராகச் சிற்பம் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் எந்தக் காலத்திலும் எந்த மரபிலும் உருவாக்கப்படவில்லையெனத் துணிந்து கூறலாம். நெடிய ஆகிருதியாய் வராகமும், உயர்த்திய அவர் வலக்கால் கீழ் அஞ்சலியிற் கெஞ்சும் நாகராசரும், வலத்தொடையின் மேலமர்ந்தபடி இறைவனின் இரு கைகளால் அரவணைக்கப்பட்டிருக்கும் பூமாதேவியும், உடன் கூட்டமும் மிக நயமான சிற்பங்கள். பல்லவர் தம் தொடக்கக் காலத்தில் வழக்கிலிருந்த சிறப்பான வைணவ மூர்த்தங்களுள் பூவராகரும் ஒன்றென்பதை மகாவராகர் குடைவரையின் பெயர் கொண்டும், இச்சிற்பத்தின் இடம், நேர்த்தி கொண்டும் நன்குணரலாம். மகாவராகர் குடைவரையிற் பல்லவ அரசர்களின் உருவச் சிற்பங்கள் இடம் பெற்றன. தமிழ் நாட்டின் காலத்தால் முற்பட்ட, பெயர்ப் பொறிப்புடன் கூடிய உருவச் சிற்பங்கள் இவையே.
சுப்பிரமணியர்
இரண்டாம் பருவக் குடைதளிக் காவலர்களில் திரிமூர்த்திக் குடைவரையின் தென்கோடிக் காவலர் எழிலார்ந்தவர். ஒருக்களித்த கோலத்தில், மானுட உடம்பின் அத்தனை அழகுகளையும் படம்பிடிக்கும் இச்சிற்பம், சூரிய ஒளியில் தகதகக்கும் போது பல்லவ உளித்திறத்தின் உச்சம் காட்டுகிறது. இதே குடைவரையின் சுப்பிரமணியர் சிற்பமும், பிரும்ம சாஸ்தாவாக, வீரச்சங்கிலியோடு இளமை பொலிந்த திருவுருவாய்க்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 93
காட்சிதருகிறது. சமபங்க கோலந்தான் என்றாலும், சரப்பளி தவிர வேறெதுவும் கழுத்தில் இல்லையென்றாலும், உடலமைப்பும், முகமெய்ப்பாடும் இச்சிற்பத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றன. கல்லுருவில் சுப்பிரமணியரைத் தமிழ் நாட்டுக் கலை வரலாறு சந்திக்கும் முதலிடம் இதுதான்.
இக்காலத் தெழுந்த சிறப்புக்குரிய அலங்கரிப்புகளாத் தாமரைப் பதக்கங்களையும், லலிதாங்குர மகர வடிவத்தையும் கூறலாம். சத்ருமல்லேசுவர மகர தோரணம் கபோதக் கூடு கந்தர்வர்கள், கூட்டுத் தலைப்பின் வளைவின் பூத் தொங்கல்கள் ஆகியனவும் குறிக்கத்தக்கன. திரிமூர்த்திக் குடைவரை மகரதோரணம் ஈடு இணையற்றது.
செதுக்குத் தளிகளின் சிற்பங்கள்
செதுக்குத் தளிகளில் அற்புதமான சிற்பங்கள் அருச்சுனர் ரதத்திலும், தருமராசரதத்திலும் இடம் பெற்றுள்ளன. முத்தள ஒரு கல் தளியான தருமராஜரதம் கல்வெட்டுகளில் அத்யந்த காம பல்லவேசுவர கிருகம் என்றழைக்கப்படுகிறது. அதன் மூன்று தளக் கோட்டங்களிலும், மேற் கருவறையிலுமாய் நாற்பத்தொன்பது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுட் சில ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளன. கீழ்த் தளச் சிற்பங்கள் எட்டினுள் ஒன்று பல்லவ அரசரின் உருவச் சிற்பமாக விளங்க, ஏனைய ஏழும் இறைவடிவங்கள். அவற்றுள் ஒன்று நான்முகன், ஒன்று பிரும்மசாஸ்தா, மூன்று சிவபெருமான். இரண்டு கலப்பு இறையுருவங்கள். அம்மையப்பர் பல்லவக் கலை வரலாற்றில் இடம் பெறும் முதல் தளி இதுதான். ஹரிஹரர் மகாவராகரில் அறிமுகமாகி இங்கு விளக்கமாகிறார். கீழ்த்தளச் சிற்பங்களுள் ஒன்றில்தான், சிவபெருமானின் பின்கைகள் ஒன்றில் தொடர்ந்து இடம் பெறும் மிருகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தாருகாவனக் கதையுடன் தொடர்புடைய பல அம்சங்களை இங்குள்ள சிற்பங்கள் கொண்டுள்ளன.
இடைத்தளச் சிற்பங்கள் இருபத்தொன்று. இவற்றுட் சிவத் தொடர் புடையவை பன்னிரண்டு. இப்பன்னிரண்டுமே தனித்துவம் வாய்ந்தவையென்றாலும் சில முதன்மையானவை. கங்காதரர், ஏற்கனவே மகேந்திரர் கால லலிதாங்குரத்தில் அறிமுகமாகியிருந்தாலும், மகாவராகரில் இடம் பெற்றிருந்தாலும், தொடர்ந்து பல தளிகளிற் பல்லவ, பாண்டிய, சோழ வீச்சுக்களோடு உருவாகியிருந்தாலும், அத்யந்த காமத்தில் தனிப்

Page 61
94 பல்லவர் காலச் சிற்பக் கலை
பொலிவோடு மிளிர்கிறார். பல்லவ, பாண்டிய குடைவரைக் கங்காதரர்கள் தம் சடைப்புரியிலேயே கங்கையை ஏற்கின்றனர். ஆனால், அத்யந்தக் கங்காதரர் மடித்தும் நீட்டியும் உள்ள தம் இடமேற்கை விரல்களில் கங்கையைத் தாங்குகிறார். மண்டியிட்டு அஞ்சலித்து வரும் கங்கை ஆணவம் அழிந்தவளாக, அய்யனின் பெருமை புரிந்தவளாக, அருளைப் பெற்றவளாகப் புனையப்பட்டுள்ளாள். கச்சம் வைத்த பட்டாட்ையுடன் ஊர்த்வஜாறு கோலத்தில் இறைவன் காணப்படுகிறார்.
சண்டேசுவர அனுக்கிரகம், முதல் இராசேந்திர சோழரின் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பத்தால் உலகப்பெருமை பெற்றது. இவ்வடிவத்தைப் பல முற்சோழர் கோயில்கள் கண்டபாதச் சிற்பமாகவும், மகரதோரணச் சிற்பமாகவும் பெற்றுப் புகழடைந்துள்ளன. இவ்வடிவத்தின் முதல் தோற்றம் அத்யந்த காமத்தில்தான். அணுக்கரை அன்புதவழநோக்கியவராய் வலப்புறம் சிவபெருமான் காணப்படுகிறார். பணிதலின் விளக்கம் போல் பத்திமைபூண்டு நிற்கும் சண்டேசுவரரின் வலக்கை வாய்பொத்த உயரும் பாவனையில் இருக்க, இடக்கை தாங்கலாய் வலமுழங்கையின் கீழே பெருமிதம், பணிவு எனும் இரண்டு உணர்வுகளின் வெளிப்பாடுகளைத் திருமுகத் தோற்றமாய்க் காணவிழைவோர்க்குச் சிவபெருமானும், சண்டேசுவரரும் களஞ்சியங்களாய் உதவுவர்.
கங்காளரும், காலாரியும் கூட இத்தளியில்தான் கல்லில் முகவுரை பெறுகின்றனர். வீணாதரர் வடிவங்கள் இத்தளத்தில் வடக்கிலொன்றும், தெற்கிலொன்றுமாய் இரண்டாக இருந்தபோதும், வடபுறத்தே தனித்தும் தென்புறத்தே துணையுடனும் காட்டப்பட்டிருப்பதால் காட்சியளவிலும், இரண்டு சிற்பங்களிலும் வெளிப்படும் இசைமயப்பு மாறுபாட்டால் உணர்வளவிலும் மாறுபடுகின்றன. வீணை இரண்டு சிற்பங்களிலும் ஒன்று போலவே காட்டப்பட்டிருப்பினும், சிவபெருமான் அதை ஏந்தியிருக்கும் முறையிலும், வலக்கை தந்திகளை மீட்டும் பாவத்திலும் வேறுபாடுகள் உள்ளன. வடபுறத்தாரின் வீணைக்குடம் மார்பின் இடப்புறம் பொருந்தி மார்பகம் போன்றதொரு தோற்றத்தை அறிஞர் சிலருக்குக் காட்ட, தென்புறத்தார் குடம் மார்பின் நடுப்பகுதியில் பொருந்தி அம்மாயையை அகற்றுகிறது. வீணையைப் பிடித்திருக்கும் முறையிலும் இவ்விரு சிற்பங்களிடையே வேறுபாட்டைக் காணமுடிகிறது. வடபுறத்தாரின் கைகள் வீணையை ஏந்தியிருப்பது போல் அமைய, தென்புறத்தாரின் கைகள் அதை மீட்டுமாறு போலக் காட்டப்பட்டுள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 95
உணர்வளவிலும் இவ்விரு சிற்பங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு காட்டப்பட்டிருப்பது கல்லிற் கைவண்ணம் காட்டும் கலைஞர்களின் உளியாற்றலுக்குச் சான்றாய் அமைந்துள்ளது. வலச் சாய்வாகக் கீழே தாழ்ந்த வடபுறத்தாரின் முகத்தில் வாசித்து முடித்து அந்த வாசிப்பின் நெட்டுயிர்ப்பில் நெகிழ்ந்து போயிருக்கும் தன்மையையும், முடிந்து போனாலும் முடியாதது போல் நிறைந்து பரவியிருக்கும் இசை மயக்கத்தின் இளக்கத்தையும் பல்லவ விரல்கள் பாங்காய்க் காட்டியுள்ளன. தென்புறத்தாரின் நிலை வேறு. அதை அவர் விரல்களும், முகமும், துணையிருப்பின் புளகாங்கிதமும் துல்லியமாகக் காட்டிவிடுகின்றன, இதை நேயர் விருப்பமாகவும் கொள்ளலாம். நேயமுடன் நெருக்கமானவர்க்கு வாசித்துக் காட்டி எப்படியிருக்கிறது இந்தப் பண்? என்பதுவாய்ப் பார்வை வீசும் பரமசிவனின் திருவிளையாடலாகவும் கொள்ளலாம். தேவாரவரிகளின் திருவிளக்கமாகவும் நினைக்கலாம். பின்னாளிலே தொடர்ந்து பல்லவர் கைவண்ணமாகவும், சோழர் போற்றிய வடிவமாகவும் பலதளிகளில் இடம் பெற்ற இவ் வீணாதரர் வடிவம் அத்யந்த காமத்திற்கிணையான படிமத்தைப் பெற்றிருப்பது பழுவூர்த் தென் வாயில் பூரீ கோயிலிலும், குடந்தை நாகேசுவரரிலும் தான்.
நாட்டிய கரணச் சிற்பம்
தமிழ் நாட்டின் வேறெந்தத் தளியிலும் காணவியலாத சிற்பமொன்று இத் தளியில் இடம் பெற்றுள்ளது. பரதரின் நாட்டிய சாத்திரத்தில் இடம்பெறும் கரண வரலாற்றின் ஒரு காட்சி இங்கு பதிவாகியுள்ளது. இறைவனாடிய நூற்றெட்டுக் கரணங்களையும் அவரது சீடரான தண்டு கற்றறிந்து இறைவன் ஆணைப்படி அவற்றைப் பரதருக்குக் கற்றுத் தந்ததாக நாட்டிய சாத்திரம் பேசும். இறைவன் ஆடிய கரணங்கள் தஞ்சாவூர் ராஜராஜீசுவர சாந்தார நாழியிற் சிற்பங்களாகியுள்ளன. அவற்றைக் கற்றுத் தண்டு இறைவன் முன் ஆடிக் காட்டுவது அத்யந்த காமத்திற் பதிவாகியுள்ளது. இறையாணைக் கொப்பப் பரதருக்கு இவற்றைத் தண்டு ஆடிக் காட்டுவது குடந்தை சாரங்கபாணி கோயில் கோபுரத்திற் காட்டப்பட்டுள்ளதென்பதைக் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துரைத்த பெருமையை எங்கள் மையம் பெறுகிறது.
அத்யந்த காமத்தில் உள்ள சிவதண்டு சிற்பத்தில், ஆசிரியப் பெருமிதத்தில் இறைவனும், மாணவப் பணிவிலே தண்டுவும் உள்ளனர். வலக்காலைத் தரையிலூன்றி, இடக்காலை ஊர்த்வ ஜானுவாய் உயர்த்திக்

Page 62
96 பல்லவர் காலச் சிற்பக் கலை
கரணம் காட்டும் தண்டுவின் சற்றே தாழ்ந்த முகத்தில் பணிவும், கற்ற வித்தையைக் கற்பித்தவரிடமே செய்து காட்டும் பெருமையும் சமவிகிதத்திற் சங்கமித்துள்ளன. கூர்ந்து நோக்கும் கூர்நாசியரான சிவபெருமானின் முகத்தில், கற்றுத் தந்ததைக் கசடறப் பயின்று, இம்மியும் பிசகாமல் செய்து காட்டும் மாணவனிடம் இயல்பாகவே ஆசிரியருக்கு எழும் பெருமிதமும், கனிவும் பூரித்துள்ளமையைக் காணமுடிகிறது. இயக்கம் தண்டுவிடமும், இருந்து நோக்கல் பெருமானிடமும் எனச் சிற்பி பகுத்துப் படைத்திருக்கும் இத்தொகுதி அந்நாளில் நாட்டிய சாத்திரம் பல்லவச் சமுதாயத்தில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுவதாய் அமைந்துள்ளது.
தளிப்பரிவாரத்தாரின் கோலம்
இத்தளி இரண்டாம் தளத்தின் மற்றொரு சிறப்பு தமிழ் நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் இல்லாத தளிப்பரிவாரச் சிற்பங்கள் இங்கு இடம் பெற்றிருப்பதுதான். வலக்கை தாளத்திற்கு ஏற்பத் தோள்மீது சாய்ந்த நரம்பிசைக் கருவியை இடக்கையால் மீட்டிய படி நிற்கும் இளம் பாணர், தோளில் கிடத்திய தளிச்சாவியை இடக்கையால் பிடித்தபடி, வலத்தோள் தாங்கும் இறைவன் படையல் மண்டையை வலக்கையால் தாங்கிவரும் பரிசாரகர், இடக்கைக் குடலையிலிருந்து வலக்கையால் பூவள்ளித் தூவும் சிவாச்சாரியார், அவரது பூசனைக்கு மணியொலிக்கும் மற்றொரு பரிசாரகர், தளிக்கு வேண்டுவன கொண்ட பாத்திரத்தை இடக்கையில் ஏந்தி, சிலம்புகள் சங்கீதம் சிந்த நடைபழகும் தளிப்பெண்டு என அர்த்தத்தோடு பொருந்தியிருக்கும் இத்தளிப் பரிவாரக் காட்சி அத்யந்த காமத்தின் தனிச் சொத்தாகும்.
மூன்றாம் தள அரமியச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும் பத்தொன்பது சிற்பங்களுள் இருவர் காவலர். மூன்று தெய்வச் சிற்பங்கள். எஞ்சிய பதினான்கும் அடியவர்கள். இத்தனை அடியவர்கள் தளி சூழ எழுந்தருளியிருக்கும் காட்சி தமிழ் நாட்டின் வேறு எந்தப் பழங் கோயிலிலும் காணக் கிடைப்பதில்லை. கருவறைத் தெய்வமாக அமைந்துள்ள சோமாஸ்கந்தர் சிற்பத்திலும் பிற சோமாஸ்கந்தர் சிற்பங்களில் காணவியலாத மாறுபாடுகள் உள்ளன.
பல்லவர் சிற்பக்கலை வரலாற்றில் பல திருப்பு முனைகள் அமைந்துள்ளன. லலிதாங்குரம் முதல் திருப்புமுனை, இரண்டாம் திருப்புமுனையாக மகாவராகரைச் சுட்டலாம். மூன்றாம் திருப்புமுனை அத்யந்தகாமமான

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 97
தர்மராசர்தளிதான். கட்டட அமைவிலாகட்டும், சிற்பச் செறிவிலாகட்டும், கல்வெட்டுகளிலாகட்டும் இதற்கு இணையான தளி பல்லவர் பூமியில் காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரத்தைத் தவிர வேறொன்றில்லையென்று துணிந்து கூறலாம்.
மாமல்லை அருச்சுனர் தளிச் சிற்பங்களும் அற்புதமானவை; குறிப்பாகத் தளியின் கிழக்குக் கோட்டத்திலிருக்கும் பல்லவப் பெண்கள் சரியான உடலமைப்பு, இயல்பான மெய்ப்பாடு, ஆடை அணிகலன்களில் எளிமை கொண்டு திகழும் இச்சிற்பங்கள் இப்பருவத்தின் கலை உன்னதங்கள்.
குடை வரைகளிலும், செதுக்குத் தளிகளிலும் காணப்படும் சிற்பங்கள் திசை வரையறைகளுக்குள் வராதவை. ஆகமப்பிடிமானங்களும் கடுமையாக இருந்திராவென்றே கொள்ளுமாறு அமைப்புக் கொண்டவை. சைவ, வைணவ, சாக்தப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தந்து வளர்ந்தவை. எளிமையான தோற்றம், எழிலார்ந்த உடல் நிலைகள், குறைவான ஆடையணிகள், இயல்பான கையமைதிகள் இக்கால கட்டச் சிற்பங்களில் மிளிர்கின்றன. தலையலங்காரங்கள் பல்வகையின எனினும் தலையணிகள் குறைவாகவே உள்ளன.
கங்காவதரணம்
இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் பாறைச் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. அருச்சுனன் தவமென்றும், கங்கையை வேண்டிப் பகீரதன் இருந்த தவமென்றும் இருவிதமாக அர்த்தப்படுத்தப்படும் பாறைச் சிற்பக் காட்சி தமிழ் நாட்டுக் கலை வரலாற்றிற்குப் பல்லவர் தந்த பெருங் கொடையாகும். இருபெரும் பாறைகளின் முகப்புகளில் பல்லவச் சிற்பிகளின் உளிகள் நர்த்தனமாடி விளைவித்திருக்கும் இச்சிற்பக் காட்சி பெருங்காடொன்றைக் கண்முன் நிறுத்துகிறது. இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி தமிழ் நாட்டுக் கலை வரலாற்றில் இப்படியொரு இயற்கை சூழ் பின்புலத்தோடமைந்த விரிவான பரப்பளவில் சிற்பக்காட்சி உருவானதேயில்லை என நினைந்து உணர்ந்து மகிழுமாறு படைக்கப்பட்டிருக்கும் இதன் இரு பகுதிச் சிற்பங்களும், தவக்காட்சி நோக்கியே திரும்பியுள்ளன. மனிதர்கள், தேவர்கள், கணங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் இடம்பெற்றிருக்கும் இச்சிற்பத் தொகுதியில் தூய நாகரவிமானமொன்றும் காட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவைக் கருவறைத் தெய்வமாகக் கொண்டிருக்கும் இவ்விமானம் பல்லவர் பகுதியில்

Page 63
98 பல்லவர் காலச் சிற்பக் கலை
கிடைக்கும் இரண்டாவது மாதிரி விமானமாகும். இதற்கு முன் இதுபோன்ற இரு விமானங்களை ராமாநுஜ மண்டபத்தின் புறச் செதுக்கல்களாய்க் காணமுடிகிறது.
பல்லவர் கால உடற்கூறியல், மெய்ப்பாட்டியல், சமுதாயவியல்களை அறிய இச் சிற்பத் தொகுதி பெருமளவு உதவுகிறது. பல்லவ மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அவர்தம் காலச் சடங்குகள், அவர்தம் அமர்வு முறை, வாழ்க்கைப் போக்குகள் எனப் பல்விதமான தரவுகளை இச் சிற்பத் தொகுதி வழங்குகிறது. பல்லவர் காலத்திருந்த விலங்கினங்கள், பறவையினங்கள் பற்றி அறியவும் அக்கால முனியுங்கவர்களின் வாழ்க்கைச் சூழல் விளங்கவும் கூட இத்தொகுதி உதவுகிறது. மனித இயல்புகளை ஒரு சமயக் கதையின் பின்னணியில் கொடையாக வழங்கிடும் இச் சிற்பத் தொகுதி உலகக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
காஞ்சிப் பெரிய கோயிற் சிற்பங்கள்
கட்டுத் தளிக் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் பல்லவச் சிற்பக் கலையின் மற்றொரு திருப்புமுனையெனலாம். ஏழு துணை விமானங் களுடன் எழுந்து நிற்கும் முதன்மை விமானமும் அதைச் சூழ நிற்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இரு தள திராவிட, சாலை விமானங்களும் சிற்பங்களால் இழைக்கப்பட்டுள்ளன. இதற்கிணையாகச் சிற்பங்களால் இழைக்கப்பட்டிருக்கும் மற்றொரு விமானத்தைச் சுட்ட வேண்டுமானால் அது சோழர் பூமியிற் பிறந்த தாராசுரத்து ராஜராஜேசுவரமாகவே அமையும்.
பல்வேறு அளவிலான சிற்பங்கள் ராஜசிம்மேசுவரத்தில் இடம் பெற்றுள்ளன. ஜகதியில் காணப்படும் பூதவரி, கோட்டங்களையொட்டிச் சுவர்ப் பிரிப்புகளுக்குள் செதுக்கப்பட்டிருக்கும் தொடர்புடைய சிற்றுருவச் சிற்பங்கள் ஒருவகை. பல்லவத் தளிகளுள் ராஜசிம்மேசுவர ஜகதியில் காணப்படுவது போல் தெளிவான தீர்க்கமான பூதகணங்களை வேறெங்கும் காண முடிவதில்லை. இங்குள்ள கணங்கள் அனைத்தும் பல்வேறு செயற்பாடுகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்து வழக்கிலிருந்த போர்க் கருவிகளையும், ஆடற் கோலங்களையும், பல்வேறு விதமான மெய்ப்பாடுகளையும் இச்சிற்ப வரியில் காணமுடிகிறது.
கணேசர் சிற்பம் கோட்டச் சிற்பமாக, மலர் கொண்டு போற்றுவாருடன் காட்டப்பட்டுள்ளது. பல சைவத் திருவுருவங்கள் இங்குதான் முதல் அறிமுகம் பெறுகின்றன. பிரம்ம சிரச்சேத மூர்த்தி, கிராதார்ச்சுனர், கஜசம்காரர், பிரம்ம,

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 99
இந்திர, காம அணுக்கிரக மூர்த்திகள், கலியாண சுந்தரர், லிங்கோத்பவர், கெளரி பிரசாதர், உமா மகேசுவரர், பைரவர் என இவ்வரிசை நீளமானது. சேட்டைத் தேவியின் சிற்பமும் பல்லவப் பகுதியில் முதன் முதலாக இங்குதான் காணப்படுகிறது. இச் சிற்பங்களுடன் கார்திகேயரையும் பிறப்பு வரலாறு சூழ இங்குதான் தரிசிக்க முடிகிறது.
கின்னரர்கள், இசைப் பாணர்கள், கலைஞர்கள் கைகளில் குழல், வீணை என இசைக் கருவிகள். முழவுகளும் காட்டப்பட்டுள்ளன. குழல், முழவு முதலிய இசைக் கருவிகள் ராஜ சிம்மேசுவரத்தில் தான் முதன் முதலாகக் காணக் கிடைகின்றன. ஒருமுக முழவுகளே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. இரட்டை முழவுகளும் உள்ளன. குட முழவும் ராஜசிம்மேசுவரத்தில் இடம் பெற்றுள்ளது. வீணையின் பல பரிமாணங்களைக் காணமுடிகிறது. வீணையை அமர்ந்து வாசிப்பவர்கள் பெரும்பாலராக உள்ளனர். தாள மிசைக்கும் கணங்களும் உள்ளன.
ஒரு சுவர்க் கோட்டம் இவ்விமானத்தில் எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டாலே பல்லவச் சிற்பாசிரியர்களின் கைத்திறமும் கற்பனை வளமும் புரிந்து விடும். வீராசனத்தில் அமர்ந்திருக்கும் ஆலமர் அண்ணல் காலையும் இடுப்பையும் யோகபட்டம் பிணைந்துள்ளது. அய்யன் அமர்ந்துள்ள ஆசனத்தின் கீழ் இரண்டு மான்கள். ஒன்று மேல் நோக்கியுள்ளது. இறைவனின் பின்னாற் கிளைகளுடன் பொலியும் மரம். கோட்ட அணைவுத் தூண்களில் ஒமமாய் அமர்ந்த மூன்று யாளிகள். இடைக்கட்டாயத் தாமரை, மேலே தோரணம்; மற்றொரு தாமரைக் கட்டு. தூண்களின் மேல் புதுவிதமான மகரதோரணம். ஒவ்வொன்றாய் அமையும் பக்கக் கீழ் மகரங்களுக்கு மாறாக, இங்கு மகரங்கள் இரட்டையாய் அமைந்து தோகை விரிக்கின்றன. இணையின் முதல் மகரம் வலபி மீதமர, இரண்டாம் மகரம் பலகை மீது அமர்ந்துள்ளது. தோகை விரிந்து, பக்கச் சுவரின் மேற் பிரிவு வரை பரவியுள்ளது. முதல் மகரங்களின் அகலத் திறந்த வாய்களிலிருந்து வெளிப்பட்டாற் போல் கணமொன்று நெற்றிச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. கோட்டத்தை யொட்டியுள்ள இருபக்கச் சுவரும் சிறு இடைத் தடுப்புகளாற் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் மலர்களும், சிங்கங்கள் இரண்டும் ஒன்றன் கீழ் ஒன்றாய் உள்ளன. இறுதிப் பிரிவில் இறைவனிடம் பாடம் கேட்கும் முனிவர் பெருந்தகைகள், வலப்புறமும் இதே சிற்ப அமைவுகள். முனிவர்களுள் மூத்தவர் தாடியுடன் இருக்கிறார். இளையவர் வாய்புதைத்துப் பாடம் கேட்கிறார். வீராசன ஆசிரியரின் கீழ் யானை மண்டியிட்டு முகம் காட்டி அமர்ந்துள்ளது.

Page 64
100 பல்லவர் காலச் சிற்பக் கலை
இயல்பான மகரதோரணங்களும் சில கோட்டங்களின் மேல் காணப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு தோரணமும் அமைப்பு முறையில், உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் விதத்தில் வேறுபாடுகளைக் காட்டுமாறு உள்ளன. இத்தோரணங்களைப் பற்றியே தனி ஆய்வு மேற்கொள்ளுமளவு கலை நுணுக்கங்களும், கற்பனைச் செறிவும், உள்ளடக்கமும் உள்ள அலங்கரிப்புகள் இவை. லிங்கோத்பவர் பல்லவர் பகுதியில் முதல் முதலாக அறிமுகமாகும் தளி இது. கோளமாய்ப் பிளந்த லிங்கத்திலிருந்து இறைவன் முழங்கால் வரை தெரியக் காட்சி தருகிறார். எட்டுக் கைகள், சூலம், மழு எனப் பல்வேறு கருவிகள். வலமுன்கை அபயம் காட்ட, இட முன்கை கடியாய் இடுப்பிலிருத்தப்பட்டுள்ளது. சமபங்கத்தில் நிற்கும் சிவபெருமானின் நெடிய சடை மகுடத்தில் பிறை இடம் பெற்றுள்ளது. இடைக் கட்டுகளும், முப்புரி நூலும், உர்ஸ்சூத்திரமும், வளைகளும், குண்டலங்களும் அவருக்கு அழ கூட்டுகின்றன. இறைவனுக்குக் கீழே வராகராய்த் திருமால் பூமியைக் குடைந்து முன்னேறுகிறார். கோட்டத்தின் இருபுறத்துமுள்ள பக்கச் சுவர்களின் மேற்பகுதியில் போற்றும் கந்தர்வர்கள். கீழே, வலப்புறம் நான்முகன், இடப்புறம் விஷ்ணு.
ராஜசிம்மர் காலத்தில் சைவம் மிக எழுச்சியுற்று இருந்ததை, சைவத் திருமேனிகளின் பெருக்கமும், அவை வரையறுக்கப்பட்டிருக்கும் பாங்கும், சிறப்புநிலையெய்தும் போக்கும் நன்குணர்த்துகின்றன. அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்களில் விளக்கியிருக்கும் பல இறை வடிவங்கள் ராஜசிம்மேசுவரத்தில் உயிர்த்துடிப்புள்ள சிற்பங்களாகியுள்ளன. பல்லவர் காலச் சிற்பக் கலையின் உன்னதக் களமாக தருமராச ரதத்தையடுத்து, ராஜசிம்மேசுவரத்தையே குறிப்பிட முடியும்.
ராஜசிம்மேசுவரத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு, இங்கு காணப்படும் ஆடற் சிற்பங்கள். விருச்சிகம், ஊர்த்வஜாறு, குஞ்சிதம், அர்த்த ஸ்வஸ்திகம் ஆகிய கரணங்களில் அமைந்த சில ஆடல் தோற்றங்களை இங்குக் காணலாம். ஊர்த்வ தாண்டவம் இங்கு மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. சுற்று விமானங்களில் தென் கோடி விமானத்தின் முகப்புச் சுவரில் காட்டப்பட்டிருக்கும் இவ்வாடல் தோற்றம், பல்லவத் தளிகளிற் காணப்படும் ஊர்த்வதாண்டவக் கோலங்களில் தலையாயதாகும். இவ் இறையாடலுக்குக் கணங்கள் குடமுழவும், சிரட்டைக்கின்னரியும் வாசிக்கின்றன. இச் சிரட்டைக் கின்னரி முதன் முதலாகத் தோன்றும் இடமும் ராஜசிம்மேசுவரம் தான். மகிழ்ந்தாடும் இறைவனின் இடப்புறம் அதை நின்று நோக்கும் உமை, ஆடலின் உத்வேகத்தில் இறைவனின் அத்தனை கைகளும் இயக்கத்தில் உள்ளன.

ந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 101 இ ளு ஞ
இடைக்கட்டும் அதன் முடிச்சுத் தொங்கல்களும் அலைபாய்கின்றன. சிலகைகள் கருவிகளேந்தியும், சில கைகள் முத்திரைகள் காட்டியும் ஆடற் பொருளுணர்ந்த வலக்கால், மார்பின் முன்னாக நெடிதுயர்ந்து பாதத்தை வலப் புறமாகத் திருப்பியுள்ளது.
இறைவனின் குஞ்சிதக் கரணம் ராஜசிம்மருக்குப் பிடித்த ஆடற்கோலம் போலும். அவர் கைபட்ட கற்றளிகள் அனைத்திலும் இத்திருக்கோலம் தவறாமல் இடம் பெற்றுள்ளது. வலப் பாதத்தையும், இடமுழங்காலையும் தரையில் ஊன்றி ஆடும் இக்கரணம் சுழன்றாடும் வகையைச் சேர்ந்தது. இங்கும் கைகளில் பல கருவியேந்தியுள்ளன. வலமுன்கை வேழக் கையாக இடப்புறம் நீண்டுள்ளது. இடமுன்கை நீண்டுயர்ந்து, தலைக்கு மேல் அமர்ந்துள்ளது. இடப்புறம் உமை நித்ரா அஸ்தத்தில் வலக்கை வைத்து நின்ற கோலத்தில் இவ்வாடலை நோக்குகிறார். வலப்புறம் இசைக் கலைஞர்கள். கீழே கணங்களின் ஆட்டம். அப்பர் பெருமானின் 'சொக்கமது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் நக்கர்’ என்ற பாடலடிகளும், எண்டோள் வீசி மாநடம் ஆடும் அம்மான்’ என்ற பாடலடிகளும்தான் நினைவுக்கு வருகின்றன.
ராஜசிம்மேசுவர மண்டபத்தின் மேற்குச் சுவர் உச்சியில் பஞ்சரக் கூட்டில் காணப்படும் ஆடற் சிற்பம் தனித் தன்மையது. இதில் நடுநாயகமாகச் சிவ பெருமானும் இருபுறத்தும் உமையும் நந்திகேசுவரரும் இடம் பெற்றுள்ளனர். சிவபெருமான் இதில் குஞ்சிதக் கரணம் காட்டுகிறார். ராஜசிம்மர் தளிகளிற் காணக்கிடைக்கும் சிவபெருமானின் குஞ்சித கரணச் சிற்பங்களில் இது அளவிற் சிறியதாகும். இறைவனின் இடப்புறம் உமையன்னை ஒல்காப் பேரெழிலுடன் ரசித்து நின்றபடி இறைவனின் கரணத்தைக் கண்டு மகிழ வலப்புறம் நந்தியெம்பெருமான் புஜங்கத்ராசிதக் கரணத்தில் ஆடி மகிழ்கிறார். இறைவனும் நந்தியும் இணைந்து வெவ்வேறு கரண்ங்களில் காட்சி தருவது நாமறிந்தவரை பல்லவப்பகுதியில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் எவற்றிலும் காணவியலாத அற்புதமாகும்.
ராஜசிம்மேசுவரத்துச் சிற்பங்களுட் குறிப்பிடத்தக்க சிறப்புடையவையாகச் சிம்மவாகினி மகிகூடிசுரமர்த்தனியின் பல்வேறு திருத்தோற்றங்களைச் சுட்டலாம். பின்னால் குடை - அதன் முன்னால் ஒரு கால் தூக்கிய சிம்மம். அதற்கும் முன்னால் வலக்காலைத் திரயச்ரமாக்கி இடக்காலை உயர்த்தி சிம்மத்தின் மீது இருத்தி அதிபங்கத்தில் நிற்கும் சிம்மவாகினி, வலமுன் கை ஊரு அஸ்தமாக விளங்க இடமுன்கை உயர்ந்து வில்லைப் பிடித்துள்ளது. பின்கைகள் எட்டனுள் சிலவற்றில் மழு, கேடயம், முத்தலை ஈட்டி எனக் கருவிகள். இருத்திய கைக்கும் உயர்த்திய கைக்குமேற்பப் பொலியும்

Page 65
102 பல்லவர் காலச் சிற்பக் கலை
இளமார்பகங்கள் வலப்புறச் சாய்வான தலையின் இருபுறத்தும் தோள்களில் அம்புக் கூடுகள். சிம்மவாகினியின் இந்த நிற்குந் தோற்றம் ஈடு இணையற்ற கலைப்படைப்பாகும்.
ராஜசிம்மேசுவரத்தின் துணை விமானங்களுள் பேரளவினவான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கங்காதரர், பிச்சாடனர், குஞ்சிதக் கரணர் என இவை பல்வகையின. இவற்றுட் பிச்சாடனர் தொகுதி சிறப்பான அமைவாகும்.
இறவாதான் ஈசுவரம்ராஜசிம்மர் காலத்தெழுந்த மற்றொரு அற்புதச் சிற்பக் களஞ்சியமாகும். கொற்றவையின் காவற் பெண்டாய்த் தளியின் வடக்கில் காட்சி தரும் பல்லவ நங்கை, ஸ்வஸ்திக நிலையில் தேவியை நோக்கியபடி நிற்கிறார். மாமல்லைக் காவற் பெண்களுக்கு இணையான தோற்றம். வில்லைப் பிடிக்க உயர்ந்திருக்கும் இடக்கைக்கேற்ப மார்பக உயர்வு, உடற் கூறியல் அமைவுகளில் பல்லவச் சிற்பிகள் எத்தனை நளினத்தைக் காட்டியுள்ளனர் என்பதற்கு இச் சிற்பம் சிறந்த எடுத்துக் காட்டாகும். இத்தளியின் அர்த்த மண்டபத்திலுள்ள ஊர்த்வ தாண்டவம் அளவில் பெரியதென்றாலும் சுதைப்பூச்சால் தன் நயம் இழந்துள்ளது. அண்ட முற நிமிர்ந்தாடும் அப்பன்' எனும் காரைக்காலம்மையின் பதிக அடியை இச்சிற்பம் பொருள் பொதிந்ததாக்குகிறது.
ஜலந்தரஹரமூர்த்தியின் மாறுபட்ட கோலத்தை இறவாதான் ஈசுவரம் கொண்டுள்ளது. தருமராசர் தளியில் ஜலந்தரன் தரையில் அமர்ந்து கிடக்கப் பின்னால் இறைவன் கையில் சக்கரத்துடன் காட்சி தருகிறார். இது ஜலந்தர சம்ஹாரத்திற்கு முன் படம் பிடிக்கப்பட்ட காட்சி. இறவாதானில் ஜலந்தரன் சரிந்துள்ளான். வலத்தோளில் சக்கரம் பாய்ந்துள்ளது. மேலே சிவபெருமான் யோக மூர்த்தியாய் அமர்ந்துள்ளார். இது ஜலந்தர சம்காரம் முடிந்ததும் படம் பிடிக்கப்பட்ட காட்சி. இதுபோல் ஒரே கதையின் இரு வேறுபட்ட நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் சிற்பங்களைப் பல்லவத் தளிகளிற் பார்க்கமுடிகிறது. கங்காளமூர்த்தியை மற்றொரு சான்றாகக் காட்டலாம். தருமராஜரதத்திற் கங்காளர் தனியராய்த் தண்டைத் தோளில் கிடத்தி நடக்கிறார். இறவாதான் ஈசுவரத்தில் கங்காளரை மண்டியிட்டு வணங்கியவராய் ஒரு பெண் பின்னால் மற்றொரு பெண். இதே போன்ற சிற்பம் முக்தேசுவரத்திலும் உள்ளது. கங்காதரமூர்த்தி மற்றொரு சான்று. லலிதாங்கு ரதத்தில் சிவபெருமானின் சடைப்புரியில் வந்தமரும் கங்கை, தருமராஜ ரதத்தில் அவரது இடக்கை விரல்களின் மீதமர்கிறார். இரு இடங்களிலும் உமையில்லை. இறவாதான் ஈசுவரத்தில் ஊர்த்வமாய் உயர்த்தியிருக்கும்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 103
இறைவனின் இடக்கால், தொடைமீது வலக்கையை நெகிழ்த்தியிருத்தியவாறு உமை, அம்மையின் முகம் இறைவனை நோக்கித் திரும்பியுள்ளது. இறைவனின் இடப்பின்கையில் கங்கை, ராஜசிம்மேசுவரத்தில் காட்சி மாறுகிறது. இறைவியின் வலக்கை தளமொன்றின் மீது இருத்தப்பட்டுள்ளது. ஊர்த்வஜாதுவாய் இறைவனின் இடக்கால் இறைவியின் மார்பருகே உயர்ந்து அவரின் இடைக்கு மேலான உடற்பகுதியை மறைக்கிறது. இடமுன்கை இழுக்கும் சடைப்புரியில் கங்கை. ஒரே சிற்பத்தின் தோற்றத்தில் பல்லவத் தளிகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காட்டியிருப்பது, பல்லவச் சிற்பிகளின் கற்பனையாற்றலையும் ஆகம வரையறைப்பிடிகளுக்குள் அவர்தம் வெளிப்படுத்தும் ஆற்றல் இறுகச் சிக்கிவிடாத இளக்கமான சூழலையும் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது. பல்லவக் கலையுலகில் ஒவ்வோர் இறை வடிவத்தின் தோற்றம், வளர் நிலைகள், முத்தாய்ப்பு என ஆராய்வது அவ்வத்திருமேனி தொடர்பான புராண இலக்கியப் பின்புலங்களை அறிந்து கொள்ளவும், அவற்றின் மீது சமுதாயச் சிந்தனைகள் விளைவித்த விரிவாக்கங்களை விளங்கிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.
இறவாதான் ஈசுவரத்திற் காணப்படும் அரிய சிற்பமொன்று ராஜசிம்மேசுவரத்திலும் இடம் பெற்றுள்ளது. இதில் கயிலாயநாதராய்ச் சிவபெருமானும் அவரருகே உமையும் அமர்ந்துள்ளனர். சுற்றிலும் தேவர்கள், கந்தர்வர்கள், கணங்கள். இதில் இறைவனின் இடமேற்கை இறைவனின் தோளுக்குப் பின்னாய்த் தெரியும் லிங்க வடிவைத் தொட்டுப் பற்றியவாறுள்ளது. இறைவன் இறைவி இருவருமே முகத்தை இடப்புறம் திருப்பியுள்ளனர். அர்த்த மண்டப வடசுவரின் மேற்பகுதி முழுவதும் நிறைந்திருக்கும் இச் சிற்பக் காட்சி சுதைப் பூச்சால் பின்புல விளக்கம் பெற முடியாத அளவிற்குப் பாழ்பட்டுள்ளது.
கட்டுத்தளித் தோரணங்களிற் காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரத்தையடுத்து இறவாதான் ஈசுவரத்து மகர தோரணங்க்ளைத்தான் நிறுத்த முடியும். பெரும்பாலான தோரணங்கள் அழிவின்றிக் கிடைத்துள்ளன. இம்மகர தோரணங்கள் அனைத்துமே பக்க மகரங்கள் இரண்டு உமிழும் வளைவாய்த் திகழ்கின்றன. மேல் கீழாக ஈரிணை மகரங்களோ, கீழாகவே எதிரெதிராக ஈரிணை மகரங்களோ இங்குள்ள அமைப்புகளில் இல்லை. மகரங்களின் மேல் அவற்றின் துதிக்கைகளைப் பிடித்தாற்போல் கணங்கள். அங்காத்த மகரங்களின் மேற் சுருட்டிய துதிக்கைகளுக்கு இடைப்பட்ட நிலையில் இரு தோரண வளைவுகள். இவ்வளைவுகளின் கீழ், மகரங்களுக்கு இடையில் யோகசிவன், முருகன் என இறையுருவங்கள் மேலே குடை, இருபுறத்தும்

Page 66
104 பல்லவர் காலச் சிற்பக் கலை
சாமரங்கள். யோக சிவனார் பின் கைகளில் அக்க மாலையும் குண்டிகையும் கொண்டு முன் கைகளைக் கடகத்தில் வைத்துள்ளார். செவிகளில் மகர, பத்ர குண்டலங்கள்; யோகாசனத்தில் யோகபட்டத்துள் அமர்ந்திருக்கும் இறைவன் முன் இருபுறத்தும் படையலுடன் பாத்திரங்கள்.
திருச் சுற்றுச் சுவர்களை நிறைத்தவாறு சிற்பங்கள் காணப்படும் பல்லவத் தளிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று மாமல்லபுரம் சத்திரிய சிம்மேசுவரம். மற்றொன்று காஞ்சிபுரம் பரமேசுவர விண்ணகரம். சத்திரிய சிம்மேசுவர சுற்றுச் சுவர்ச் சிற்பங்கள் பேரழிவிற்கு உட்பட்டிருந்தபோதும் சுவரைச் சிறு சிறு பத்திகளாகப் பிரித்திருக்கும் பாங்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் எஞ்சியிருக்கும் சிற்பங்களின் நேர்த்தியும் இவ்வளாகம் பல்லவர் காலத்தில் கலைதிகழ் வளாகமாக வாழ்ந்திருந்ததைத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றன. ராஜசிம்மரின் இந்த உத்தியை இரண்டாம் நந்திவர்மரான பரமேசுவரர் பின்பற்றியதைப் பரமேசுவர விண்ணகரம் உணர்த்துகிறது. இதன் மாளிகைச் சுவர் பல்லவர் வரலாற்றை எடுத்துரைக்கச் சிற்பிகளுக்குப் பயன்பட்டுள்ளது. தேவைக்கேற்பப் பத்திகள் பிரித்துச் சதுரங்களாகவும் செவ்வகங்களாகவும் சுவர்ப்பகுதியை வரையறை செய்து பல்லவர் மரபு வழியையும் பல்லவ சமுதாயத்தையும் சிற்பங்கள், கல்வெட்டுகள் வழி வரலாறாக்கியிருக்கும் பல்லவ உளிகள் அக்கால கட்ட வரலாற்றுணர்விற்குச் சான்றாகின்றன.
சுவர்களைக் கர்ணசாலை, பஞ்சரப்பத்திகளென பெரும் பத்திகளாக மட்டுமல்லாது, இவை ஒவ்வொன்றையும் கோட்டத் தேவைக்கேற்ப சிறு சிறு பத்திகளாகவும் பிரிக்கப்பழகியவர்கள் பல்லவச் சிற்பிகள். இந்தக் கலைமுறை கட்டுத் தளிகளின் தொடக்கக் காலத்திலேயே தொடங்கி விடுகிறது. இறவாதான் ஈசுவரம், கடற்கரை வளாகத் தளிகள், காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் முதலிய ராஜசிம்மர் காலக் கட்டுத் தளிகள் இவ்வகைச் சுவர்ப் பிரிப்பு உத்திகளுக்கும், பிரிவுகளுக்கேற்பச் சிற்பங்களை அமைக்கும் ஆற்றலுக்கும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. இந்த ஆற்றலை வரலாறு எழுதப் பயன்படுத்திக் கொண்டார் இரண்டாம் நந்திவர்மர். பதவியேற்புக் காட்சிகள், போர்க்களங்கள், அரசவைகள், ஆடரங்குகள், ஊர்ப்புறங்கள் எனப் பல்லவர் கால அரச, மக்கள் வாழ்க்கையும், தேவகுலங்களும் இச்சிற்பத் தொடரில் இடம் பெற்றுள்ளன.
தாராசுரம் ராஜராஜேசுவரத்தில் காணுமாறு போல சில சென்டி மீட்டர் அளவுள்ள சிற்பங்களும் இத் தொடரில் இடம் பெற்றுள்ளன. ஒரு பெருஞ்சதுரத்தை ஒன்பது சதுரங்களாகப் பகுத்துக் காட்சிகளைப் படைத்துள்ள முறையும் இங்குக் காணக்கிடைக்கிறது. ஒருவர் அமர்ந்து

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 105
குடமுழவு தட்ட மற்றொருவர் ஆடும் காட்சி ஓரிடத்திலும், இருவர் அமர்ந்து வீணை வாசிக்கும் இசைக் காட்சி ஓரிடத்திலும் பார்வையாளர்கள் புடைசூழப் படைக்கப்பட்டுள்ளது.
திருப்பட்டுர்க் கயிலாசநாதர் கோயில் பல்லவ சிற்பிகளின் அலங்கார ஆற்றலுக்கொரு சிறந்த எடுத்துக்காட்டாய் மிளிர்கிறது. தொண்டைநாட்டை விட்டுத் தள்ளி சோழ பூமியில் அமைந்திருக்கும் இக்கோயில் ராஜசிம்மரின் இறுதிக் காலப் பணியாகலாம். துணைத் தளத்தின் உபானம், கண்ட பாதங்கள், கம்பு ஆகியவற்றிற் காணப்படும் தாமரைவரிகள், தோரணங்கள், அமர்ந்த சிம்ம உருவங்கள், பதக்கங்கள், மணிச்சரங்கள், மணிச்சட்டங்கள் ஆகியவற்றையும் அரைத் தூண்களிலுள்ள மாலைத் தொங்கல், ஸ்தானம், சுவரின் மகரதோரணம், தாங்கு தளத்தின் ஜகதி,குமுதம் ஆகியவற்றில் காணப்படும் அழுத்தமான, எளிய ஆனால் எழிலான இலைத் தோரணங்கள், பூப்பதக்கங்கள், பூச்சரங்கள், வகை வகையான மணிகள் ஆகியவற்றையும் கண்ணுறும் போது அலங்கரிப்புப் பணியில் பல்லவச் சிற்பிகளுக்கிருந்த ஆளுகையின் வலிமையை விளங்கிக் கொள்ளமுடிகிறது. இந்த அலங்கரிப்புகள் கண்களை உறுத்துவனவாய் அமையாது, தேவைக்கு மீறி இல்லாது, அளவாய், இயல்பான அளவுகளில், இலக்கிய வருணனைகளைக் குறிப்பாகச் சிலம்பின் இந்திரவிழா ஊரலங்கார அடிகளை நினைவூட்டுமாறு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பட்டுர்க் கயிலாசநாதர் கோயில் சுவர்க் கோட்டச் சிற்பங்கள் சிதைந்திருந்தாலும் பல்லவத் திறம் பேசுவனவாய் அமைந்துள்ளன. தென் சுவர் பத்ரசாலைப்பத்தி தட்சிணாமூர்த்தியும், வட சுவரில் அதே பத்தியில் இடம் பெற்ற ஊர்த்வஜாறு சிவனும் குறிப்பிடத்தக்க சிற்பங்கள். ஊர்த்வஜாறு கரணக்கோலம் காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரத்திலேயே காணக்கூடியதாய் விட்டாலும் அதனினும் பேரளவினதாய் இங்குள்ள சிற்பம் அமைந்துள்ளது. பல்லவக் கலையுலகில் ஊர்த்வஜாறுவில் கிடைக்கும் சிவபெருமான் சிற்பங்கள் இரண்டுதான். பல்லவரின் சமகாலப் பாண்டியக் கலையுலகில் இக் கரணத் தோற்றத்தைக் காணமுடிவதில்லை. ஆனால், முற்சோழர் காலத்தில் இச் சிற்பம் உவந்து ஏற்கப்பட்டுப் பரவலாக்கப்பட்டுப் பல தளிகளில் பரிணமித்தது. திருப்பட்டுர் ஊர்த்வஜாறு கரணர் எண்டோள் வீசியாடும் எழிலர். வல முழங்காலை உயர்தியவர். வலமுன்கையை அபயத்தில் இருத்தி இடமுன்கையை வேழக்கையாய் வீசியாடும் எம்பெருமானின் சிதையாத கையில் தலையோடும் முத்தலையீட்டியும் மழுவும் தமருகமும் உள்ளன. கணுக்கால்களிற் கிண்கிணி. இச் சிற்பத்தின் அதிபங்கத் தோற்றம்

Page 67
பல்லவர் காலச் சிற்பக் கனவ
ஆடலசைவுகளுக்குஅமைவாகப் பொருந்தியுள்ளது. கீழே இசைக் கலைஞர்கள் இருவர். ஒருவர் ஒரு முக முழவுகள் இரண்டை அருகருகே இருத்தி இயக்க, மற்றொருவர் சிரட்டைக் கின்னரியின் மீட்டலில் மெய் மறந்துள்ளார்.
இதே தளியின் தென் மேற்குக் கரனபத்திக் கோட்டத்தில் பதஞ்சலியின் உருவம் இடம் பெற்றுள்ளது. பல்லவப் பகுதியிற் காணப்படும் பிற பதஞ்சலி வடிவங்களிலிருந்து இவ்வடிவம் சற்றே மாறுபட்டுள்ளது. இச் சிற்பத்தில் இவர் தம் இரு கைகளிலும் முத்தலைப் பாம்பொன்றைப் பிடித்துள்ளார். பாம்பின் வாலை இடக்கையும் படமெடுத்த தலையின் முற்பகுதியைத் தொட்டு வருடுமாறு போல வலக்கையும் உருவகிக்கப்பட்டுள்ளன.
நாற்றளக் கலப்புத் திராவிட விமானமான இத்தளியில் அரிய சிற்பங்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. அவற்றுட் குறிப்பிடத்தக்க ஒன்று சிவ பெருமானுடையது. வலமுன்கை முத்தலையீட்டி கொள்ள, இடமுன்கை இடுப்பிலுள்ளது. பின் கைகளில் ஒன்று பாம்பு கொள்ள, மற்றொன்று கடகத்திலுள்ளது. சடை மகுடத்தின் இடப்புறம் பிறை, பெருமானின் இருபுறமும் கீழ்ப்புறத்தே பக்கத்திற்கொருவராய் அடியவர்கள் இருவர். மேற் புறத்தே குதிரையும் சிம்மமும் காட்டப்பட்டுள்ளன. சுதைப்பூச்சின் மிகையால் இச்சிற்பம் பல்லவர் வடித்ததா, பின்னாளிலே திருப்பணியாளர் விதைத்தா என்பதைத் தெளிவாய் அறியக் கூடவில்லை.
பல்வலர் கால ஆடற் சிற்பங்களுட் சில அவை இடம்பெற்றிருந்த தளிகள் அழிவுற்றதால் காஞ்சிபுரம் கச்சபேசுவரர் தளியிலும் தான்தோன்றீசுவரர் தளியிலும் மட்டும் இடம்பெற்றுள்ளன. கச்சபேசுவரர் சிற்பங்கள் முனிவர்கள் ஆடலையும், தான் தோன்றீசுவரர் சிற்பங்கள் நாடகக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் சித்திரிக்கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்தாடும் ஆடல், மகளிர் இணைந்தாடும் ஆடல் என்று பல காட்சிகள் இங்குள்ளன. இவ்வாடற் கலைஞர்களின் ஆடையணிகலன்கள், மெய்ப்பாடுகள், உடற் கூறியல், உடல் நிலை, கையமைதிகள் அனைத்தும் பல்லவர்கால எளிமையை, அழகைத் துல்லியமாய் உணர்த்துமாறு அமைந்துள்ளன.
பல்லவர் காலச் சிற்பங்கள் என அவர் காலத்தளிகளில் இடம் பெற்ற சிற்பங்களை மட்டுமல்ல, சில தளிகளையே கொள்ளலாம். குறிப்பாகச் செதுக்குத்தளிகள் அனைத்துமே பல்லவர் காலச் சிற்பங்கள் தான். பெரும் பாறைகளை, குன்றுகளைத் திட்டமிட்டுச் செதுக்கிச் சீரமைத்துத் தளிச் சிற்பங்களாக்கியிருக்கும் பல்லவக் கைகளின் கலை மாண்பை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். ஒன்பது செதுக்குத் தளிகளில் ஒவ்வொன்றும் ஒருவகையில் சிறப்புடையதாகும். நாகரம், திராவிடம், சாலை, தூங்கானை

மாமல்லபுரம கங்காவதாரக் காட்சி
மாமல்லபுரம்
GTGDEF
ற்பக்கலை
கங்காவதாரத்தின் ஒரு பகுதி
மாமல்லபுரம் கங்காவதாரத்தின் மற்றொரு பகுதி
訓 &고 읽고 ~]

Page 68
மாமல்லபுரம் கிருஷ்ன மண்டபம் கோகுலம்
மாமல்லபுரம் கிருஷ்ன மண்டபம்
இடபம்
 

ம் மகிஷாசுர மண்டபம்
LIDITLDE) ELLIT LI L In
ருஷ்ண
15남
후 홍
翻
=r
잃 E
勋
5山
E=
"=
15E
|-
-1
Ë
旧邮
胡母
川部
几
烟”加
制隔 E
■出 E5
மாமகப்பேபுரம ம

Page 69
.  ̄1 10 5 1 5 : 15 1
¬¬ 1 : 5 1
݂ ݂ ݂
݂ ݂
மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபம் ஆயர்பாடி
மாமல்லபுரம் அம்மனின் வடிவம் மாமல்லபுரம் திரிமூர்த்தி மண்டபம்
 
 

LIDTLOGUSULIJ LID
ம் திரிமூர்த்தி மண்டபம்
மாமல்லபுர
வராக அவதாரம்
LOTTLOSNJENULITTL) geny LLOFTIT

Page 70
தக்கோலம் கொற்றவை
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் சோமாஸ்கந்தர்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் குஞ்சித கான தாண்டவம்
 

பாளி மண்டபம்
சாளுவன குப்பம்
சாளுவன் குப்பம் மகிஷமர்த்தனி

Page 71
உத்திரமேரூர் சுந்தர வாதப் பெருமாள் கோயில் ரதி மன்மதன்
உத்திரமேரூர் சுந்தா வரதப் பெருமாள் கோயில் லக்ஷமி
மாமல்லபுரம் தர்மராஜரதம் கலசம் ஏந்திய தளிர்ப்பெண்
 

கிருஷ்ண மண்டபம் மாமல்லபுரம் மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபம்
கிருஷ்ணன் கல் மழையிலிருந்து ஆயர்களைக் காப்பாற்றிய காட்சி)

Page 72
| If பல்லவர் காளச் சிற்பக் க3),
மாடமென்று பல்வகை விமான அமைப்புகளைக் கல்லில் செதுக்கித் தந்திருக்கும் சிற்பியர் உளித்திறம், உழைப்பு, ஆற்றல் நம்மை பெருவியப்பிலாழ்த்துகின்றன. சிற்பத்திற்குட் சிற்பமாய் இந்தத் தளிச் சிற்பங்களிலே தளச் சிற்பங்கள் தருமராச ரதம், அருச்சுன ரதம், பீம ரதம் மூன்றும் அதிக அளவிலான சிற்பங்களைப் பெற்றுள்ளன.
சாளுவன் குப்பத்திலுள்ள யாளி மண்டபம் ராஜசிம்மர் காலச் சிற்பக் கலையாற்றலுக்கு உரைகல்லாக விளங்க வல்லது. பெரும் பாறையொன்றின் முகப்பைப் பதினொரு பாளி முகங்களாக வடிவமைத்து உட்புறத்தே மண்டபத்தளி யொன்றைச் செதுக்கியமைத்திருக்கின்றனர். இதன் கீழ் முகப்பில் இருபுறமும் தாங்குதளம்; இடையே ஊடறுத்துப் பிடிச்சுவருடன் படிகள். மண்டபத் தளியின் புறத்தே பக்கச் சுவர்களில் ஆழமான கோட்டங்கள்; தளிமுகப்பில் பாளித் தூண்கள், அவை தாங்கும் கூரையுறுப்புகள், இவ்யாளி மண்டபத் தளியின் பக்கப்பாறை யானைகளையும் அவற்றின் மீதான அம்பாரிகளையும் காட்டப் பயன்பட்டுள்ளது. இரண்டு யானை முகங்களுக்கும் இடையில் தூனொன்று அம்பாரிகளில் இறை வடிவங்கள் எத்தகு கற்பனையாற்றல் இருந்திருந்தால் இத்தகு கலைப் படைப்புகளுக்கு வித்திட்டிருக்க முடியுமென்று வியக்க வைக்கும் இப்படைப் பொத்த மற்றொரு படைப்பு தமிழ் நாட்டுக் கலை வரலாற்றில் எக்காலத்தும் தோன்றவில்லை. இது போன்ற பல்லவப் படைப்புகள் சில, மல்லைக் கடலோரத்தே புறக்கணிக்கப்பட்ட நிலையில் அலைகளின் அரவணைப்பில் பல்லவ உளிகளின் பெருமையைத் தண்ணிரில் எழுதிக் கொண்டு, அரவணைக்கப்படும் காலம் நோக்கிக் கண்ணிருடன் காத்திருக்கின்றன.
பல்லவர் காலத் தனிச் சிற்பங்கள் பல தமிழ் நாட்டின் பல பகுதிகளிற் கிடைத்துள்ளன. அவற்றுள் மகுடமாய் அமைந்துள்ள ஒன்று சாளுவன் குப்பம் அதிரண சண்டேசுவரம் வாயிலில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. மகிஷாசுரமர்த்தனியின் போர்க் கோலப் புனைவாகப் புலர்ந்துள்ள இச்சிற்பம், பன்னிரண்டு உருவங்களைப் பெற்றுள்ளது. பாய்ந்து தாவும் சிம்மத்தின் மீது சாய்ந்தபடி வில்லேந்திய மகிஷாசுரமர்த்தனியின் இடக்கால் ஊர்த்வஜாதுவாய் சிம்மத்தின் உடல் மீதும் வலப்பாதம் சிம்மபாதத்தின் மீதும் ஊன்றியுள்ளது. தேவியின் பின் கைகளில் சங்கு, சக்கரம், சுற்றிலும் தேவியின் படை வீரர்கள் எதிரில் மகிடன். இராமலிங்க அடிகள் சொன்னவாறு பட்டதெல்லாம் போதுமெனுமாறு கையமைதி காட்டித் தரையில் வீழ்ந்துள்ளான். அவன் வலப்புறம் முழுவதும் கணங்களின் தாக்குதல் உயிரோட்டம் நிறைந்த இந்தப் போர்க்காட்சிச் சிற்பம் பல்லவச் சிற்பக் கலையாற்றலின் உன்னதம்.

இந்து காாாள்- கோயில்களும் சிற்பங்களும் |구
ராஜசிம்மருக்குப் பிற்பட்ட பல்லவத் தளிகளில் உத்தரமேரூர் சுந்தரவாதப் பெருமாள் கோயில் வளாகத்துட் கானப்படும் அலங்களிப்பு உத்திகளும் படிப்புறச் சுவர்களிற் காணப்படும் ரதி மன்மதன், கலைமகள் முதலிய சிற்பப் படைப்புகளும் குறிப்பிடத்தக்கன. முக்தேசுவரம், மாதங்கேசுவரம், திரி புராந்தகேகவாம் முதலிய தளிகளின் சிற்பங்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளன. அபராசிதன் பணிகளாகக் கருதப்படும் ஜலநாதீசுவரம் கோட்டச் சிற்பங்களும், திருத்தணி வீரட்டானேசுவரம் அன்னையர் எழுவர் சிற்பங்களும் குறிப்பிடத்தக்க சிறப்புடையன. ஜலநாதீசுவரம் துர்க்கை பேரெழிலினர்.
பல்லவர் காலத்தெழுந்த முத்தரையர் தளிகளில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் பல்லவச் சிற்பங்களை ஒத்தமைந்துள்ளன. விஜயாலய சோழீசுவரம், ஒளிபதி விஷ்ணு கிருகம், திருவாலத்துர் தளி, திருமெய்யம் குடைவரை, குன்றாண்டார் கோயில் ஆகிய தளிச் சிற்பங்களுட் குறிப்பிடத்தக்கவை சண்டேசுவரர், எழுவர் அன்னையர் சிற்பங்களாகும். விஜயாலய சோழீசுவரத்து ஆடற் சிற்பங்களும் சிறப்பானவை. குன்றாண்டார் கோயிற் காவலர் சிற்பம் சிறப்பான வடிவமைப்புக் கொண்டது.
பல்லவர் காலச் சிற்பக் கலையின் மகோன்னதமான காலகட்டம், ராஜசிம்மருடன் முடிவதாகக் கொள்ளலாம். எளிமை, பூரணத்துவம், இயல்பான அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கினைவாக நெகிழ்ச்சியுடன் உருவாக்கப்பட்ட எழில் நிறைந்த சிற்பங்களை இந்தக் காலகட்டத்திலே தான் மிகுதியாகக் காணமுடிகிறது. முதலாம் மகேந்திரவர்மர் காலத்திலே தொடக்கி வைக்கப்பட்ட பல்லவச் சிற்பக் கலை இராஜசிம்மர் காலத்தில் உச்சத்தையடைந்து பின் கீழிறங்கத் தொடங்கியதாகவே குறிக்க வேண்டியுள்ளது.
பல்லவராசன் மனைவியருடன் பல்லவராசன் - மாயல்வபுரம்

Page 73

தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
சி. பத்மநாதன்
பரத கண்டம் முழுவதிலும் அமைக்கப்பட்ட இந்து சமயம் தொடர்பான குடைவரைக் கோயில்கள், மலைதளிகள் என்பவற்றில் மிகவும் விசாலமானவை, எல்லோரா, எலிபந்தா, சோல்செற் என்னும் இடங்களில் அமைந்துள்ளனவாகும். அவை எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளிலே நிர்மாணிக்கப்பட்டவை. தக்கிணத்துச் சக்கரவர்த்திகளான இராஷ்டிரகூடரின் காலத்தில் அக்கோயில்கள் உருவாக்கப்பட்டன. இராஷ்டிரகூடர் மான்யாகேடம் என்னும் இராசதானியிலிருந்து மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த பேரரசை உருவாக்கியிருந்தனர். இராஷ்டிரகூட மன்னர்கள் தகூழினாபதத்தில் மேலாதிக்கம் பெற்றிருந்ததோடு நாவலந்தீவு முழுவதிலுமே படைபலத்தில் முன்னணியில் இருந்தனர். பெருந்தொகையான குதிரை வீரர்களைக் கொண்ட படைகள் அவர்கள் வசமிருந்தன. தெற்கிலே காஞ்சிபுரம் முதலாக வடக்கிலே கன்னோசி வரையான பகுதிகளில் அவர்களின் படைகள் பல அரிய சாதனைகளைப் புரிந்தன. பல தடவைகள் வட இந்தியா மீது படையெடுத்துச் சென்ற இராஷ்டிரகூடர் வங்காளத்துப் பாலர்களையும் மாளவத்துப்பிரதீஹாரரையும் தோற்கடித்துத் தங்கள் மேலோங்கிய வலிமையைப் பரத கண்டத்தவர்க்கு உணர்த்திக் கொண்டனர்.
சைவர்களான இராஷ்டிரகூடரின் ஆட்சியிற் சைவம்,வைணவம், சமணம் பெளத்தம் ஆகிய சமயங்கள் தக்கிணத்திலே நிலைபெற்றன. சைவமும் வைணவமும் பொது மக்களின் ஆதரவைப் பெற்ற சமய நெறிகளாக எழுச்சி பெற்றிருந்தன. பெளத்தம் ஆதரவு குன்றிய நிலையிற் காணப்பெற்றது. மலைப் பகுதிகளிலுள்ள குடபோகங்களான பெரும்பள்ளிகளிற் பெளத்த சங்கத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் முற்காலங்களிற் போல மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. பெளத்தம் தொடர்பான தானசாசனங்களும் எட்டாம் நூற்றாண்டு முதலாகக் கிடைக்கவில்லை. சமண சமயம் சில வணிக சமூகங்களினதும் அரசரதும் ஆதரவுடன் தொடர்ந்தும்

Page 74
20 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
நிலைபெற்று வந்தது. சமணப் பள்ளிகளும் சமணக் கோயில்கள் சிலவும் இராஷ்டிரகூடர் காலத்திலும் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் மலைகளைக் குடைந்தும் வெட்டியும் கட்டடங்களை நிர்மாணிக்கும் முறை ஒரு நீண்ட கால வரலாற்றைக் கொண்டதாகும். அதன் ஆரம்பம் வட இந்தியாவில் மோரியரின் ஆட்சியில் ஏற்பட்டது. அதன் இறுதிக் கட்டத்தைத் தக்கிணத்திலே, இராஷ்டிரகூடரின் ஆட்சிக் காலத்திற் காணமுடிகின்றது. சாதவாகனர் காலத்திலும் சாளுக்கியர் காலத்திலும் பிரமாண்டமான தோற்றமுடைய பெளத்தப் பள்ளிகளும் கோயில்களும் மேற்குத் தக்கிணத்திற்குடபோகங்களாக அமைக்கப்பட்டன. வாதாபியிலுள்ள குடபோகங்களே சைவம், வைணவம் என்னுஞ் சமயங்கள் தொடர்பான மிகவும் புராதனமான குடைவரைக் கோயில்களாகும்.
இராஷ்டிரகூடர் எல்லோராவில் அமைத்துள்ள குடபோகங்கள் எல்லாம் சிவாலயங்களாகும். அங்கு எல்லாமாக 16 குடபோகமான சிவாலயங்கள் உள்ளன. எலிபந்தாவிலும் சோல்செற்றிலும் அமைந்துள்ள குடபோகங்களும் வடிவமைப்பில் அவற்றை ஒத்தனவாகும். இராஷ்டிரகூடர் காலத்துக் குடபோகங்கள் அளவிலே பிரமாண்டமானவை. எல்லோராவிலுள்ள ராவண - க - கை தசாவதாரம், ராமேஸ்வரம், துமார் லென முதலானவற்றைப் போன்ற மிகப் பெரிய குகைக் கோயில்கள் வேறெங்கும் காணப்படுவதில்லை. அவற்றிலே பெருந்தொகையான சிற்பங்கள் உன்னதக் கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சிற்பங்களின் காரணமாக எல்லோராக் கோயில்கள் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றன. இந்தியப் படிமக்கலை வரலாற்றின் சிறப்பு மிகுந்த அத்தியாயம் ஒன்று எல்லோராவில் அமைந்திருக்கின்றது. மிகவும் ஆழமான சமயப் பற்றினையும் பெளராணிக மரபுகளின் மூலமாக ஏற்பட்ட தத்துவ சிந்தனைகளையும், இகமும் பரமுமாகி அவ்விரண்டினையும் கடந்த பரம்பொருள் பற்றிய நோக்கினையும் பிரதிபலிக்கும் காட்சிகளாக அவை விளங்குகின்றன. ஆலயத்தை வலம்வரும் பொழுது புராணக் கதைகளும் தத்துவ சிந்தனைகளும் அதன் எல்லாப் பகுதிகளிலும் படிமக் கோலமாக வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சிற்ப வேலைப்பாடுகளும் உன்னதக் கோலமானவை. உருவங்களின் அங்கலக்ஷணங்களும் பிரதிமாலசுஷ்ணங்களும் சிற்ப நூல் விதிகளுக்கு ஏற்றவாறு அமைந்திருப்பினும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களின் ஆழமான அனுபவம், கலையுணர்வு என்பவற்றின் காரணமாக ஒவ்வொரு காட்சியும் தனிச் சிறப்புடன் விளங்குகின்றமை குறிப்பிடற்குரியது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 2
அந்த வகையில் எல்லோராவுக்கு நிகரான வேறொரு தலம் காணப்படுவதில்லை. −
ஒரு வகையில் எல்லோராவை ஐஹொளேயுடன் ஒப்பிடலாம். கர்நாடகத்துக் கலாசார மையமான ஐஹொளேயில், ஒரு சிறிய நிலப்பரப்பில், வாதாபிச் சாளுக்கியர் காலத்தில் அமைக்கப்பெற்ற 150 சிறியனவும் மிதமான அளவினை உடையனவுமாகிய கோயில்கள் உள்ளன. தோற்றத்திலும், வடிவமைப்பிலும் வெவ்வேறு வகையான கட்டடங்கள் ஏக காலத்தில் அங்கு அமைக்கப்பட்டன. நாட்டின் பல பாகங்களிலுமிருந்து சென்ற கலைஞர்கள் வெவ்வேறு விதமான கலைப்பாணிகளிலுள்ள அமைப்புகளை முன் மாதிரிகளாகக் கொண்டு கட்டடங்களை உருவாக்கியுள்ளனர். ஐஹொளே கட்டடக் கலைஞரின் பாசறையாகவும் பயிற்சி நிலையமாகவும் விளங்கியது. அது சாளுக்கியர் கலைப்பாணியின் உருவாக்கத்திற்குத் தோற்றுவாயாக அமைந்தது. அந்தக் கலைப்பாணியின் வளர்ச்சி நிலையினை வாதாபி, குச்சிமல்லிகுடி, பட்டதகல் என்பவற்றிலுள்ள ஆலயங்களிற் கண்டு கொள்ளலாம்.
எல்லோராவிலுள்ளவற்றைப் போன்று பெருந்தொகையான சிற்பங்களைப் பத்தாம் நூற்றாண்டு வரையான கோயில்களில் வேறெங்குமே காணமுடிவதில்லை. அது பெருமளவிலே சிற்பக் கலைஞர் கூடிய தலமாக விளங்கியது. அவர்களின் தகைமைகளைப் படைப்புகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்கள் சிற்ப நூல்களிலே தேர்ச்சி கொண்டிருந்தனர் போலவும் புராண நூல்களிலும், சமய நூல்களிலும், காம நூல்களிலும் புலமை பெற்றவர்கள் போலவுந் தெரிகின்றது. அவர்களின் கைவண்ணத்திற் சாஸ்திரப் புலமையும் அதீதமான கற்பனா சக்தியும் அனுபவ ஆற்றலும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.
குடைவரைக் கோயில்கள்
எல்லோராவில் மலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் 16 குடபோகங்கள் சைவக் கோயில்களாகும். அவை 13 முதல் 29 வரையான இலக்கமிடப்பட்டவை. அரை மைல் நீளமான மலைப் பகுதியில் அவை அமைக்கப்பட்டுள்ளன. ராவண - க - கை (14), தசாவதாரம் (15), ராமேஸ்வரம் (21), துமார் லென என்பன அவற்றுட் பிரதானமானவை. அக்குடபோகங்கள் வடிவமைப்பில் மூன்று வகைப்படும். முதலாவது வகையிலுள்ள கோயில்களிலே தூண்களோடு கூடிய மண்டபமும்

Page 75
122 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
மண்டபத்தின் பின்புறச் சுவரிலே கருவறையுங் காணப்படும். தசாவதாரம் அவ்வகைக்குரிய கோயிலாகும். அந்த ; வகையிலுள்ள கோயில்கள் முற்காலத்துப் பெளத்த சமயக் கட்டடங்களை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன. இரண்டாவது வகைக்குரிய கோயில்களிற் * கருவறை மண்டபத்தினின்றும் ప్లేళ్ల வேறுபட்டதாய் அமைந்திருக்கும்; સ્ટ્ર கருவறையைச் சுற்றி பிரதஷிண பாதை * அமைக்கப்பட்டிருக்கும். ராவண - க - கை, ராமேஸ்வரம் என்பன
எல்லோராக் குடயோகம் அத்தகையனவாகும். மூன்றாவது வகையிலுள்ள கட்டடங்களிற் பிரமாண்டமான அளவுடைய மண்டபத்தின் நடுவிற் கருவறை அமைந்திருக்கும். எல்லேராவிலுள்ள துமார் - லென, எலிபந்தாவிலுள்ள குடைவரைக் கோயில், சோல்செற் தீவிலுள்ள யோகேஸ்வரி என்னுங் குடபோகம் ஆகியன அத்தகையனவாகும்.
தசாவதாரக் கோயில்
முதலாவது வகையைச் சேர்ந்த குடைவரைகளிற் தசாவதாரம் மிகச் சிறப்புடையதாகும். அதில் அமைந்துள்ள சிற்பங்களின் கலைப்பண்புகள் உன்னதமானவை. தசாவதாரக் கோயில் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே அமைக்கப்பட்டது. அங்குள்ள நிருத்த மண்டபத்திலே இராஷ்டிரகூட வம்சத்து முதலரசனாகிய தந்திதுர்க்கனுடைய சாசனம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஆலய தரிசனம் பண்ணிய செய்தி அதிலே சொல்லப்படுகின்றது. மலையிலே வெட்டிய விசாலமான படிக்கட்டுகள் மூலம் கோயிலை அடைய முடியும். கோயில் வளாகத்தின் நடுவே நிருத்த மண்டபமும் அதன் பின்னால் பிரமாண்டமான மண்டபமும் குடைவரையாக அமைக்கப்பட்டுள்ளன. நிருத்தமண்டபம் நான்கு தூண்களுடன் காணப்படுகின்றது. அதன் அருகிலே எல்லாப் பக்கங்களிலும் சுற்றுவழி ஒன்று அமைந்திருக்கின்றது. முற்பக்கத்திலும் பிற்பக்கத்திலும் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன. நிருத்த மண்டபத்திற்கு அப்பால்
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 23
இருதள அமைப்பான பெரு மண்டபம் அமைந்திருக்கின்றது. அதன் அடித்தளத்தினைச் சென்றடைவதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அது 97 அடி நீளமும் 50 அடி அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையதாகும். அதிலே 14 பிரமாண்டமான, சதுர வடிவில் அமைந்த தூண்கள் காணப்படுகின்றன. இடப் பக்கத்திலே அமைந்துள்ள படிக்கட்டுக்களின் வழியே மண்டபத்தின் மேற்றளத்தை அடையலாம். மேற்றளம் அளவிற் பெரியது. அது 105 அடி நீளமும் 95 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதன் கூரை தட்டையானது. மண்டபத்தில் 44 தூண்கள் 6 வரிசைகளில் அமைந்துள்ளன. நடுவில் உள்ள தூண் வரிசைகளின் எதிரே மேலும் இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. மண்டபத்தினுடைய பிற்கவரின் நடுவிலே கருவறை குடையப்பட்டுள்ளது. அதில் மூலமூர்த்தியாக இலிங்கம் அமைந்திருக்கின்றது. தூண்கள் சதுரமானவை; அலங்கார வேலைப்பாடுகள் அவற்றிலே அமைக்கப்படவில்லை. மண்டபத்தின் சுவர்ப்புறங்களில் வனப்புமிக்க வண்ணமாக அரைத் தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கிடையே மலைப்பாறைகளை ஆழமாக வெட்டிப் பெருந் தொகையான கவர்ச்சிமிக்க சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். சிவனைப் பற்றிய புராணக்கதைகளையும் வைணவ மரபிலுள்ள கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கோயிற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தகாசுர மூர்த்தி
இக்குடைவரையிலே சைவம்,வைணவம் என்பன தொடர்பான புராணக் கதைகள் சிற்பக் காட்சிகளாக வடிக்கப்பட்டுள்ளன. உருவங்கள் மிக நுட்பமாகவும் கவர்ச்சி மிக்க கோலத்திலுஞ் செதுக்கப்பட்டுள்ளன. சினம், பயம், மகிழ்ச்சி, பயங்கரம், காதல், விஸ்மயம் முதலான பாவங்கள் இங்குள்ள வடிவங்களிலே மிகுந்த சாதுரியத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோபக்கனலை வீசுங் கோலத்தில் அந்தகாசுரவத மூர்த்தியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அசுரனுக்கு எதிரான மகேஸ்வரனின் போரை அமைதியாக இருந்து அவதானிக்கும் பார்வதியின் ஆசனக் கோலம் மிகவுங் கவர்ச்சியானதாகும். சிவன் - பார்வதி கலியாணம் இன்னொரு காட்சியாகும். வழமையாகக் கன்னிப் பெண்களுக்குரிய நாணமும் அச்சமும் பார்வதியின் கோலத்திலே சிறப்பாக விளங்குகின்றன.

Page 76
24 தக்கினத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
நிருத்த மண்டபம்
பிரதான கோயிலுக்கு முன்புறமாகச் சதுக்கத்தின் நடுவிலே, உயரமான அதிஷ்டானத்தில் அமைந்த சதுரமான மண்டபம் இருக்கின்றது. அது நாட்டியக் கரணங்களை விளக்குவதற்கான அரங்கமாக அமைக்கப்பட்டிருந்தது. கீழ் மாடத்திலே பின்புறச் சுவரிலே நான்கு கூடங்கள் குடையப்பட்டுள்ளன. மேல்மாடத்திலே சுவரை ஒட்டி ஒரு தனிக்கூடம் குடையப்பட்டுள்ளது. நிருத்த மண்டபத்தின் வாசற் கதவின் இரு பக்கங்களிலும் அழகிய துவாரபாலகர் வடிவங்கள் அமைந்திருக்கின்றன. இடது பக்கத்திலே அமைந்திருப்பது ஜமுனாதேவியின் கோலமாகும். உருவத்தின் பீடம் ஆமைவடிவமாகும். வலப்பக்கத்திலே மகரத்தைப் பீடமாகக் கொண்ட கங்கையின் வடிவம் அமைந்திருக்கின்றது.
மண்டபம் சதுரமானது, அதில் நான்கு சதுரமான தூண்கள் காணப்படுகின்றன. வெளிப்புறச் சுவர்களிலே பெண்களின் அழகிய கோலமான சிற்பங்களும் கோயில்களின் சிறிய வடிவங்களும் மாடக்குழிகளில் மிகுந்த வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளன. குறுங்கோயில்களிலே அலங்கார வேலைப்பாடுகள் பொருந்திய சிகரங்கள் காணப்படுகின்றன. அவற்றிலே தாண்டவக் கோலமான சிவனின் சிறிய சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. மூலைகளிலே மைதுனக் கோலத்தில் அமைந்த காதலரின் வடிவங்கள் அமைந்திருக்கின்றன. மண்டபத்தின் கூரையின் மேல் யாளி வடிவங்களும் யாளி வடிவங்களும் பெரும் அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டபமும் அங்குள்ள சிற்பங்களும்
தசாவதாரக் குடைவரையின் முதலாவது தளத்திலே அளவிற் பெரியதான மண்டபம் அமைந்திருக்கின்றது. அதிலே 18 பிரமாண்டமான, சதுர வடிவில் அமைந்த தூண்கள் உள்ளன. அவை மூன்று நிரைகளாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் பின்புறச் சுவரிலே நான்கு கூடங்கள் குடையப்பட்டுள்ளன. இடப்பக்கத்திலே இரண்டாம் தளத்திற்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அதன் ஒரமாக உள்ள சுவரிலே கணபதி, உமாமகேஸ்வரர், மகிஷமர்த்தனி, அர்த்தநாரீஸ்வரர் முதலான பதினொரு கடவுட் படிமங்கள் அமைந்திருக்கின்றன. அளவிற்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 25
சிறியனவான அப்படிமங்கள் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றன. படிக்கட்டுகளைக் கடந்ததும் இடப்பக்கத்திலே உயரமான பீடத்தில் அமைந்த ஒரு சிறிய மாடம் உள்ளது. அதன் வலது புறத்திலே இருண்ட அறை காணப்படுகின்றது. மண்டபத்தின் வாசற்கதவின் பக்கங்களிலே துவாரபாலகரின் வடிவங்கள் உள்ளன. பிரதான மண்டபம் மிகப் பெரியது. மலையினை உட்புறமாகக் குடைந்து அது உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு நிரைகளில் அமைந்த 48 தூண்கள் அங்கே காணப்படுகின்றன. தூண்களின் கீழ்ப்பாகம் வேலைப்பாடுகளின்றி வெறுமையாகக் காட்சியளிக்கின்றது. மேற்பாகத்திலே அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன. மூலைகளிலே வாமனரின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மேலமைந்த பகுதியிற் படிமங்களும் விலங்குகளின் உருவங்களும் யக்கூடிரின் உருவங்களும் இலை, மலர் முதலியவற்றின் உருவங்களும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. வாயிற்புறத்தில் உள்ள அரைத் தூணிலே கவர்ச்சிமிக்க சிற்பங்கள், அமைக்கப்பட்டுள்ளன. கலசம், அப்சரசுகளின் கோலம், இணை யாளி வடிவங்கள் முதலியன காணப்படுகின்றன. கலசத்திலே தாமரை மலர் வடிவம் அமைந்திருக்கின்றது. அதிலே சரஸ்வதியின் உருவஞ்செதுக்கப்பட்டுள்ளது. நிவேதனப் பொருள்களை எடுத்துவரும் அடியார்களின் உருவங்களும் காணப்படுகின்றன.
சிவ மூர்த்தங்கள்
இடதுபக்கத்துச் சுவரில் ஆறு அங்கணங்களிலும் சிவமூர்த்தங்களின் வடிவங்கள் காட்சியளிக்கின்றன. முதலாவது காட்சி அந்தகாசுரவத மூர்த்தியின் கோலமாகும். வடிவத்தில் எட்டுக் கரங்கள் உள்ளன. ஆலீடாசானம் என்ற ஸ்தானகக் கோலத்திற் சிவனது உருவம் அமைந்திருக்கின்றது. கரங்களில் ஏந்திய ஆயுதத்தின் நுணியிலே அந்தகாசுரனின் உருவந் தெரிகின்றது. அவனுடைய குருதி நிலத்தில் விழுமிடத்து ஒவ்வொரு சொட்டிலிருந்தும் அவனது தனித்தனி வடிவங்கள் தோன்றும் என்பதால் அவனது உடலில் இருந்து சொரிகின்ற இரத்தத்தைக் கலசத்தில் ஏந்திய கோலத்தில் வாகேஸ்வரியின் உருவம் அமைந்திருக்கின்றது. இடது புறத்திலே வாகேஸ்வரியை நோக்கிய நிலையிற் பார்வதியின் உருவந் தெரிகின்றது.

Page 77
26 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
சிவ தாண்டவம்
இரண்டாவது காட்சி சிவனுடைய லலிதமான நடனக் கோலமாகும். உருவம் திரிபங்கமானது, அதிலே எட்டுக் கரங்கள் அமைந்திருக்கின்றன. கரங்களில் ஒன்று கஜகஸ்தமாகும். ஏனைய கரங்கள் திரிபதாகம், பதாகம், சூசி,தர்வினி முதலிய முத்திரைகளில் உள்ளன. அருகிலே வாத்தியகாரர் இசை மிளற்றுங் காட்சி தெரிகின்றது. ஒருவர் மிருதங்கத்தை ஒலிக்கின்றார். இருவர் புல்லாங்குழலுடன் காணப்படுகின்றனர். சிவனின் அருகிலே பார்வதியும் குமாரக் கடவுளுங் காணப்படுகின்றனர். அவர்களுக்குமேற் பறந்து செல்லும் வித்தியாதரரின் வடிவங்கள் செம்மையாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது காட்சியிலே யோனி ஒன்றின் வடிவந் தெரிகின்றது.
சிவனும் பார்வதியும்
நான்காவது காட்சி சிவனும் உமாதேவியாரும் தாயம் விளையாடுகின்ற கோலமாகும். சிவன் ஒரு கையினாலே பார்வதியை அணைத்த வண்ணமாகக் காணப்படுகிறார். பார்வதியின் கரம் ஒன்று விஸ்மய முத்திரையில் அமைந்திருக்கின்றது. அவர்களின் இரு பக்கங்களிலும் சாமரை தாங்கிய பரிவாரத்தார் இருவர் காணப்படுகின்றனர். கீழே நந்தியின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் மேற்பகுதியிலே பறந்து செல்லும் வித்யாதரர் மாலைகளோடு வருங்காட்சி இடம் பெறுகின்றது.
கலியானசுந்தரர்
ஐந்தாவது காட்சியிலே கலியாணசுந்தர மூர்த்தியின் வடிவங் காணப்படுகின்றது. அதன் நடுவிலே மகேஸ்வரரின் உருவந் தெரிகின்றது. பார்வதியின் கைகளைப் பிடித்த கோலத்திற் சிவனுடைய உருவத்தை அமைத்துள்ளனர். இருவருக்கும் முன்னாற் புரோகிதராகப் பிரமன் வந்திருக்கின்றார். மேலுள்ள இருவரிசைகளில் வருணன், இந்திரன், அக்கினி, இயமன், வாயு, ஈசானன், நிருதி என்னுந் திக்குப்பாலகரின் உருவங்கள் தெரிகின்றன. அவர்கள் முறையே தத்தமக்குரிய வாகனங்களாகிய மகரம், யானை, ஆட்டுக்கடா, எருமை, மான், இடபம், மானிடம் ஆகியவற்றுடன் காணப்படுகின்றனர்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 27
இராவண அனுக்கிரக மூர்த்தி
ஆறாவது காட்சி இராவணனுக்கு அனுக்கிரகம் வழங்கிய கோலமாகும். சிவன்-பார்வதி ஆகியோரின் வடிவங்கள் ஆசனக் கோலத்தில் அமைந்திருக்கின்றன. சிவனுடைய வடிவத்திலே நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உமாதேவியாரை அணைத்த கோலமானது; மற்றொன்று பாம்பினைப் பிடித்த வண்ணமானது. இன்னொன்று நிலத்தில் ஊன்றிய கோலமானது. கீழே பத்துக் கரங்கள் ப்ொருந்திய இராவணனது உருவம் அமைந்திருக்கின்றது.
uULD 3Frbij 35 TJ D
பின்புறச் சுவரிலே வரும் முதலாவது காட்சி யம சங்காரம் பற்றியதாகும். யமனிடம் இருந்து மார்க்கண்டேயருக்கு அபயம் வழங்குங் கோலத்தில் நான்கு கரங்களுடன் சிவன் தோன்றுங் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளில் திரிசூலம் ஏந்தி, யமனை வதை செய்யுங்காட்சி தெரிகின்றது. மற்றொரு கரம் கடிகஸ்தமாகும். நான்காவது கரம் மேல் நோக்கி உயர்த்திய கோலமானது, மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவிய கோலத்திற் காணப்படுகிறார். சிவலிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்டதும், யமசங்காரம் இடம்பெறுங் காட்சி சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. யமனுடைய கையிலே பாசக்கயிறு தெரிகின்றது. மார்க்கண்டேயருடைய கழுத்தைச் சுற்றி இழுக்கும் நிலையில் அது அமைக்கப்பட்டிருக்கின்றது.
கங்காதரர்
இரண்டாவது காட்சி ஸ்தானக நிலையிலுள்ள கங்காதர மூர்த்தியின் கோலமாகும். சிவனுடைய உருவத்திலே நான்கு கரங்கள் உள்ளன. ஒரு கரம் கடிகஸ்தமாகும்; மற்றொன்று மாலை ஏந்திய கோலமானது; இன்னொரு கரம் உமாதேவியாரை அணைத்த வண்ணமாய் உள்ளது. நான்காவது கரத்தில் அமைந்திருக்கும் வடிவந் தெளிவாகத் தெரியவில்லை. நந்தியின் உருவம் சிவனது வலப்பக்கத்திலே தெரிகின்றது. இடப்பக்கத்திலே உமாதேவியாரின் உருவம் காணப்படுகின்றது. அதன் கைகள் இரண்டும் இடுப்பிலே படிந்துள்ளன. உமாதேவியாரின் கோலம் சிவனை நோக்கிச் சற்று

Page 78
128 தக்கினத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
வளைந்த நிலையிற் காணப்படுகின்றது. மேலே துதிக்கையை உயர்த்திய கோலமான யானையின் உருவந் தெரிகின்றது. தாமரை மலர்ப் பீடத்திலே அமர்ந்திருக்கும் ரிஷி ஒருவரின் வடிவத்திற்கு அது ஆதாரமாய் உள்ளது. ரிஷியின் கரம் ஒன்று அபயகரமாகும். மற்றொன்றிலே கலசத்தின் வடிவம் தெரிகின்றது. மேலே பறந்து செல்லும் வித்யாதரரின் உருவங்கள் காணப்படுகின்றன.
கனேசரும் சரஸ்வதியும்
அர்த்த மண்டபத்தின் இடப்பக்கத்துச் சுவரிலே கணேசரின் ஆசனக் கோல வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோராவிலுள்ள கணேசரின் படிமங்களிலே இதுவே மிகப் பெரியதாகும். கற்ப கிருகத்தின் வாயிற் கதவிற்கு வலப்புறத்திலே மூன்று பெண்ணுருவங்கள் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. நடுவிலே இரட்டைத் தாமரைப் பீடத்திலே வீற்றிருப்பது சரஸ்வதியின் வடிவம் போலத் தெரிகின்றது. தாமரையின் தண்டினை நாகினிகள் இருவர் தாங்கிய வண்ணமாய் உள்ளனர். அவர்களின் அருகிலே தாமரை இதழ்கள் இயற்கை வனப்புடன் தோன்றும் வண்ணமாகச் செதுக்கப்பட்டுள்ளன. சரஸ்வதியின் வடிவம் லலிதாசனக் கோலமாகும். இரு பக்கங்களிலும் தேவ கன்னியரின் உருவங்கள் உள்ளன.
கர்ப்பகிருகத்தின் கதவின் இரு பக்கங்களிலும் அளவிற் பெரிய துவாரபாலகரின் வடிவங்கள் அமைந்துள்ளன. அவ்வடிவங்கள் தாமரைப் பீடங்களில் அமைந்திருக்கின்றன. அப்பீடங்கள் யானைகளின் மேல் அமைந்திருக்குங் கோலமானவை. இறையகத்தினுட் சிவலிங்க வடிவம் அமைந்திருக்கின்றது.
கஜலஷ்மி
அர்த்த மண்டபத்துப் பின்புறச் சுவரின் வலது பக்கத்திலே கஜலக்ஷமியின் கவர்ச்சி பொருந்திய உருவங் காணப்படுகின்றது. உருவம் ஆசனக் கோலமானது. பீடம் இரட்டைத் தாமரை மலர் வடிவமாகும். அதனை ஐந்துதலை நாக உருவங்கள் தாங்கி நிற்பது ஒரு சிறப்பம்சமாகும். லகூழிமியின் வடிவத்திற்கு மேலே ஒவ்வொரு பக்கத்திலும் நிற்கும் யானைகள் இரண்டு, லகூறிமியின் தலைமேல் அபிஷேக நீரை வார்க்கின்றன. லகூSமியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிற்கும் தேவமாதர் இருவர் கலசம் ஏந்திய கோலத்திலே காணப்படுகின்றனர். அவர்களின் அருகிலே நாக லோகத்துக்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 29
காதலரின் வடிவங்கள் காணப்படுகின்றன. நாகராசனின் தலையில் ஐந்து படங்கள் உள்ளன. நாக அரசியின் தலை ஒற்றைப் படத் தலையாகும். நாகராசன் கலசம் ஏந்திய கோலத்திலும் நாக அரசி கைகூப்பித் தொழுங் கோலத்திலுங் காணப்படுகின்றனர்.
கார்த்திகேயர்
அர்த்த மண்டபத்து வலது பக்கத்துச் சுவரிலே நான்கு கரங்களுடன் கார்த்திகேயரின் வடிவம் அமைந்திருக்கின்றது. அதன் பிரதிமாலசுஷ்ணங்கள் தனிச்சிறப்புக் கொண்டவை. உருவம் ஸ்தானகக் கோலமானது. ஒரு கையிலே திரிசூலங் காணப்படுகின்றது. இன்னொன்றிலே தாமரை மலர் தெரிகின்றது. மற்றக் கைகளிலே மாங்கனி போன்ற வடிவங்கள் உள்ளன. குமாரக் கடவுளின் கையிலுள்ள கனியைக் கொத்தித் தின்னுங் கோலத்தில் மயில் உருவம் அமைந்திருக்கின்றது. மண்டபத் தூண்களின் மேற்பாகத்திலே வளைவடைப்புகளும் வனப்புமிக்க சிற்பங்களும் அமைந்திருக்கின்றன.
இலிங்கோற்பவர்
அர்த்த மண்டபத்துப் பின்புறச் சுவரிலே இலிங்கோற்பவ மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி ஆகியோரின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய தூணிலே சிவனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. கரங்களில் ஒன்று அபயகரமாய் அமைந்துள்ளது. ஒரு கரம் இடுப்பிலே தங்கியுள்ளது. மூன்றாவது கரம் மழுவேந்திய கோலமானது. நான்காவது கரத்தில் மானின் வடிவம் அமைந்துள்ளது. தூணின் வலப்புறத்திலே பிரமாவினதும் விஷ்ணுவினதும் உருவங்கள் தெரிகின்றன.
திரிபுராந்த கர்
திரிபுராந்தகரின் வடிவத்திலே எட்டுக்கரங்கள் உள்ளன. அம்பு, வாள், கேடயம் ஆகியன கைகளிலே காணப்படுகின்றன. ஒரு கரம் விஸ்மய முத்திரையில் அமைந்துள்ளது. இரு கரங்கள் வில்லை வளைத்து அம்பினை எய்யுங் கோலத்தில் அமைந்துள்ளன. சிவன் தேரில் வீற்றிருந்து செல்லுங் காட்சி தெரிகின்றது. அதிலே நான்கு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளன. சாரதியாகப் பிரமன் அமைந்துள்ளார்.

Page 79
30 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
தசாவதாரக் காட்சிகள்
மண்டபத்தின் வலதுகைப் பக்கச் சுவரிலே திருமாலின் ஐந்து அவதாரங்கள் பற்றிய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்து அவதாரங்களில் ஐந்து மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அச்சிற்பங்களின் காரணமாகவே கோயில் தசாவதாரம் என்னும் பெயரால் வழங்குகின்றது. சிற்பங்களிலே கிருஷ்ணாவதாரம் முதலாவது காட்சியாக அமைந்துள்ளது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையினை இரண்டு கைகளால் உயர்த்துங் காட்சி தெரிகின்றது. ஏனைய நான்கு கரங்களில் ஒன்று கடிஹஸ்தமாய் உள்ளது; இன்னொன்று சங்கினை ஏந்திய கோலமானது. கிருஷ்ணரின் வலப்பக்கத்திற் பசுக்கள் தெரிகின்றன.
இரண்டாவது சிற்பம் மகாவிஷ்ணுவின் அனந்தசயனக் கோலமாகும். அது பாம்பணைப்பள்ளியிலமைந்தசயனக் கோலம். நான்கு கரங்களில் ஒன்று முழந்தாளிற் படிந்துள்ளது; இன்னொன்று நாபியைத் தொடும் நிலையிற் காணப்படுகின்றது; மூன்றாவது கரம் தலையணையின் கீழே படிந்துள்ளது; நான்காவது கரம் மரமொன்றின் கிளையினைப் பற்றிய நிலையிற் காணப்படுகின்றது. கால்களிலொன்று அனந்தனின் மேல் அமைந்துள்ளது; மற்றக்கால் லசுஷ்மியின் மடியில் அமைந்திருக்கின்றது. நாபிக் கமலத்தில் பிரமன் வீற்றிருக்கும் கோலந் தெரிகின்றது. அனந்தனின் அருகில் ஆயுத புருஷர் எழுவரின் உருவங்கள் தெரிகின்றன.
திருமால் கருடவாகனத்தில் அமர்ந்து செல்லுங் காட்சி மூன்றாவது சிற்பத்திலே வடிவமைக்கப்பட்டுள்ளது. கருடனின் கோலம் மனித வடிவமும் இறகுகளும் பொருந்திய ஒன்றாகும். கருடனின் இடுப்பிலே கடிசூத்திரம் சங்கிலி போன்று அமைந்திருக்கின்றது. நான்கு கரங்கள் கொண்ட திருமாலின் வடிவத்தைக் கைகளிலே தாங்கிக் கொண்டு கருடன் பறந்து செல்லுங் கோலம் தெரிகின்றது.
வராக மூர்த்தியின் வடிவம் ஆறு கரங்களுடன் அமைந்திருக்கின்றது. காலொன்று ஆதிசேடனின் தலைமேல் ஊன்றிய கோலத்திற் தெரிகின்றது. மற்றக்காலின் அருகில் அஞ்சலிக் கோலத்தில் நாகராசனொருவனின் உருவம் காணப்படுகின்றது. ஆறு கரங்களில் ஒன்று கடிஹஸ்தமானது; மற்றொன்று சங்கினை ஏந்திய கோலமானது; இன்னொன்று கதையினைத் தாங்கியுள்ளது; இரு கரங்கள் பூமியினைப் பிடித்த கோலமானவை. முகம் பன்றிமுகம் போல அமைந்துள்ளது.
திரிவிக்கிரம மூர்த்தி வடிவத்திலே எட்டுக் கரங்கள் அமைந்துள்ளன. வாள், கதை, அம்பு, சங்கு, சக்கரம், வில், கேடயம் ஆகியவற்றை ஏந்திய

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
கோலத்திற் கைகள் அமைந்திருக்கின்றன. ஒரு கரம் சூசிகரமாயுள்ளது. இடது கால் மேனோக்கி உயர்த்தி, வீசிய கோலத்தில் அமைந்திருக்கின்றது. காலின் அருகிலே குடைபிடித்த கோலத்தில் வாமனரின் வடிவம் தெரிகிறது. வாமனரின் அருகிலே தைத்தியரின் புரோகிதரான சுக்கிராச்சாரியாரின் உருவம் காணப்படுகின்றது. கருடன், மகாபலி ஆகியோரின் வடிவங்கள் இடப்பக்கத்திலே காணப்படுகின்றன. நரசிங்க மூர்த்தியின் வடிவத்திலே சங்கு, பரசு ஆகியவற்றை ஏந்திய கோலத்தில் இரண்டு கைகள் அமைந்துள்ளன. மற்றொரு கரம் கடிகஹஸ்தமாய் உள்ளது. வேறொன்று சபடதான முத்திரையில் உள்ளது. இரணியனின் இரு கைகளில் வாளுங் கேடயமுங் காணப்படுகின்றன. இருவரதும் கால்கள் சமரிலே பின்னமாகிப் பிணைந்துள்ள கோலம் சிறப்பாக அமைந்துள்ளது. இரணியன் திகிலடையும் வண்ணமாக நரசிங்க மூர்த்தி மிகுந்த வேகத்துடன் அவன் மேலே தாவிப் பாய்ந்து, அவனைக் கைப்பற்றுங் காட்சி உன்னதக் கோலத்திற் சித்திரிக்கப்பட்டுள்ளது.
ராவண - க - கை
இரண்டாவது வகைக்குரிய கோயில்களிலே 14 ஆவது கோயிலான இராவண - க - கை என்பதும் 21 ஆவது கோயிலான இராமேஸ்வரமும் குறிப்பிடத்தக்கவை. இராவண - க - கை எளிமையான தோற்றத்தைக் கொண்ட கட்டட அமைப்பாகும். அது 87 அடி நீளமும் 52 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதில் முற்புறமாக உள்ள மூன்றில் இரண்டு பாகமும் ஒரு மண்டபம்போல அமைந்துள்ளது. அதன் பிற்பகுதி கோயிலின் மூலஸ்தானமாகும். மண்டபத்திலே பெருந்துாண்கள் அமைந்திருக்கின்றன. மண்டபத்தில் எல்லாப் பக்கங்களிலும் தூண் நிரைகள் அமைந்துள்ளன. முற்பக்கத்தில் மட்டும் இரண்டு தூண் வரிசைகள் காணப்படுகின்றன. தூண் வரிசைகளுக்கும் சுவர்களுக்கும் இடையில் அமைந்த இடைகழிகள் மூலஸ்தானத்தைச் சுற்றி அமைந்துள்ள பிரதசுஷிண பாதையை அடைவதற்கேற்ற வழிகள் போல உருவாக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தின் பிற்கவரின் நடுப்பாகத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வாசலின் இரு பக்கங்களிலும் துவாரபாலகரின் உருவங்களும் கடவுட் படிமங்களும் கம்பீரமான கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
எல்லோராவிலுள்ள 14 ஆவது குகைக் கோயில் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். அதன் மண்டபத்திலே 12 தூண்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் அடியிலே பீடம்

Page 80
32 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
காணப்படவில்லை; கம்பம் சதுரமானது. மேற்பக்கத்தில் இலை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலே வாமன உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னுள்ள சாலையின் இடப்பக்கத்தில் உள்ள தூணிலே தாமரை மேல் அமர்ந்த பெண்ணுருவம் தெரிகின்றது. பக்கத்திலே பரிவாரத்தாரின் உருவங்களும் யக்ஷன் ஒருவனின் வடிவமுந் தெரிகின்றன. சாலைக்கு இடப்பக்கத்திலுள்ள சுவர் 5 அங்கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கணங்களுக்கு இடையிலே அமைந்துள்ள அரைத்தூண்களில் அலங்காரத் தோற்றமுடைய சிற்பங்கள் காணப்படுகின்றன. நடுவிலே பெண்தெய்வத்தின் உருவம் செம்மையாக அமைந்து காணப்படுகின்றது. அதற்கு மேல் இலைகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலுள்ள பகுதியில் அகலப்பாட்டில் இரு தளங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றிலுந் தோரணங்கள் போன்ற வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பக்கத்திலுள்ள இடைவெளிகளிலே மாலை வடிவங்களும் தாமரை மலர் வடிவங்களுங் காணப்படுகின்றன. அதற்கு மேலே மயில், மலர் போன்ற உருவங்கள் தெரிகின்றன. தூணின் தலைப்பாகத்திற் கபோதங்கள் அமைந்துள்ளன. அவற்றின் மேல் பலகை அமைந்திருக்கின்றது. பலகைக்கு மேலுள்ள பாகத்தில் வானிற் பறந்து செல்லும் ஆண், பெண் உருவங்களும் கணங்களின் வடிவங்களும் புலிமேல் இவர்ந்து செல்வோரின் உருவங்களும் அமைந்துள்ளன.
துர்க்கை
முன்னுள்ள சாலையின் இடதுபுறச் சுவரிலே துர்க்கையின் கோலம் அமைந்திருக்கின்றது. சிங்கத்தின் மேல் வலது காலை ஊன்றிய கோலத்தில் அம்மனின் வடிவந் தெரிகின்றது. வடிவத்திலே நான்கு கரங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று திரிசூலத்தைப் பிடித்த வண்ணம் தெரிகின்றது. கிரீடம், கடிசூத்திரம், ஆரம், தோடுகள், வாகுவலயம், வளையல்கள் என்பவை ஆபரணங்களாக உள்ளன. வஸ்திரம் மிகவும் மென்மையான துகில் போலத் தெரிகின்றது.
கஜல சுஷ்மி
இரண்டாவது சிற்பம் கஜலக்ஷமியின் வடிவமாகும். உருவம் லலிதாசனக் கோலமானது; அதன் பீடம் இரட்டைத் தாமரை மலர் வடிவமாகும். கஜலக்ஷமியின் கழுத்தில் இரண்டு ஆரங்கள் தெரிகின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 33
காதணிகள் அளவிற் பெரியவை. வளையல், கிரீடம், வாகுவலயம் முதலிய ஆபரணங்களுங் காணப்படுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு கரங்களுடனும் கலசமேந்திய கோலத்திலும் ஒவ்வொருவர் காணப்படுகின்றனர். மேலே ஒவ்வொரு பக்கத்திலும் நின்ற வண்ணமாக யானைகள் அபிஷேக நீரை வார்க்கின்றன. வடிவத்தின் கீழே தாமரை மலர்களும் மலர் மொட்டுகளும் நாக லோகத்தவரதும் நீர்வாழ்வனவற்றினதும் உருவங்கள் மிக நுட்பமான முறையிலே செதுக்கப்பட்டுள்ளன.
வராக அவதாரம்
விஷ்ணுவின் வராக அவதாரம் ஆசனக்கோலத்தில் மூன்றாவது சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்கத்திலே பூரீதேவி, பூதேவி ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. விஷ்ணுவின் வடிவத்தில் நான்கு கரங்கள் அமைந்திருக்கின்றன. அருகிலே நான்கு பெண்ணடியார்களின் உருவங்கள் தெரிகின்றன. அவற்றின் தலைகளைச் சுற்றிப் பிரபா மண்டலங்கள் அமைந்திருக்கின்றன. அவர்களில் இருவர் சாமரைகளுடன் காணப்படுகின்றனர். பூதேவி, பூரீதேவி ஆகியோர் ஆசனக் கோலத்திற் கால்களை மடித்த வண்ணம் அமர்ந்துள்ளனர். அவர்கள் வழமையான ஆபரணங்களை அணிந்துள்ளனர். வஸ்திரங்கள் மென்மையான தோற்றத்துடனும் மடிப்புகளுடனும் அமைந்திருக்கின்றன. இந்தச் சிற்பத்திற்குக் கீழே ஆறு சிறிய உருவங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு பெண்களின் உருவங்களாகும். வலது பக்கத்திலுள்ள முதலாவது உருவம் கருடனுடைய வடிவமாகும். அதிலே இறகுகள் தெளிவாகத் தெரிகின்றன. இடது பக்கத்திலுள்ள முதலாவது உருவம் புல்லாங்குழல் வாசிக்குங் கோலமானது. அதனை அடுத்துள்ள வடிவம் தாளவாத்தியம் செய்யும் பெண்ணின் உருவமாகும். அதற்கருகில் அமைந்திருக்கும் வடிவமும் பெண்ணின் உருவமாகும். அதன் வலப்பக்கத்திலே ஆசனக் கோலமான ஆண்களின் வடிவங்கள் தெரிகின்றன
பூனி தேவி சகிதமான விஷ்ணு
ஐந்தாவது தொகுதியில் அமைந்துள்ள சிற்பத்தில் விஷ்ணுவினதும் பூரீதேவியினதும் உருவங்கள் காணப்படுகின்றன. விஷ்ணுவின் ஆசனக்கோலம் அர்த்தபரியங்க ஆசனமாகும். ஒரு கால் மடித்தும் மற்றக்கால் உயர்த்திய கோலத்திலுங் காணப்படுகின்றன. விஷ்ணுவின்

Page 81
134 தக்கினத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
உருவத்தில் அமைந்துள்ள கரங்களில் ஒன்று ஒடிந்துவிட்டது. இன்னொன்று விஸ்மய முத்திரையிற் காணப்படுகின்றது. வேறொரு கரம் எதனையோ பற்றிய நிலையிற் காணப்படுகின்றது. மற்றைய கரம் பூரீதேவியைப் பற்றிய கோலத்தில் அமைந்திருக்கின்றது. பூரீ தேவியின் உருவம் மிகவுங் கவர்ச்சியான கோலத்தில் அமைந்திருக்கின்றது. சிகையலங்காரம் மிகவுஞ் சிறப்பானது. கிரீடம் அலங்காரக் கோலமானது. அவர்களின் அருகிலே நான்கு பெண்கள் நிற்கின்றனர். அவர்களின் கேசம் சடைமுடியாக அமைந்திருக்கின்றது. இருவர் சாமரைகளை ஏந்திய நிலையிலே காணப்படுகின்றனர். ஒருவரின் வடிவம் கலசமேந்திய கோலமாகும். மற்றவரின் கையிலே பேழை ஒன்று தெரிகின்றது. இவ்வுருவங்களின் கீழே வேறு வேறான ஆசனக்கோலங்களில் அமைந்திருக்கும் ஆண்களின் வடிவங்கள் ஏழு காணப்படுகின்றன. அவர்களை ஆயுத புருஷர்கள் என்று வர்ணிக்கலாம். ஒருவர் புல்லாங்குழலுடனும் இன்னொருவர் தாளங்களுடனும் காணப்படுகின்றனர்.
துவாரபாலகர்
கர்ப்பகிருகத்துக் கதவின் வலப்பக்கத்திலே துவாரபாலகரின் பெரிய உருவம் ஒன்று காணப்படுகின்றது. இரு கரங்களில் ஒன்று அபயகரமானது. மற்றக்கரம் இடுப்பில் ஊன்றிய கோலமானது. காதணிகள், ஆரம், வாகுவலயம், வளையல், அரைஞாண் என்பன ஆபரணங்களாக விளங்குகின்றன. மேலே மாலைகள் கொண்டுவரும் வித்யாதரர் இருவரின் உருவங்கள் காணப்படுகின்றன. கீழே வலக்காலுக்குச் சமீபமாக, ஒரு வளைந்த தடியிற் சாய்ந்து கொண்டு துவாரபாலகரை நோக்கிய நிலையில் நிற்கின்ற வாமன வடிவந் தெரிகின்றது.
கங்கையும் யமுனையும்
வலப்பக்கத்திலே கவர்ச்சியான கோலமுடைய இயற்கை அழகு கொண்ட பெண்ணுருவம் காணப்படுகின்றது. அது மகரத்தின் மேல் நிற்கின்ற கங்கையின் வடிவமாகும். அருகிலே பணிப்பெண்கள் இருவர் காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் கங்கையின் தலைமேல் குடைபிடித்த நிலையிற் காணப்படுகின்றார். கங்கையின் உருவம் செம்மையாகச் செதுக்கப்பெற்றுள்ளது. இடை பருத்தும் தனபாரம் மிகுந்தும் காணப்படுகின்றன. வஸ்திரம் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடனும்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 35
மடிப்புகளுடனும் அமைந்துள்ளது. வலப்பக்கத்திலே வானத்திலிருந்து பூமாலையோடு வருகின்ற தேவகன்னியின் கோலந்தெரிகின்றது. மேலும், அந்தப் பக்கத்திலே துவாரபாலகரின் பெரிய உருவம் அமைந்திருக்கின்றது. கீழே வாமன வடிவங்கள் இரண்டு காணப்படுகின்றன. சற்றுத்துாரத்திலே, வலது புறத்திலே ஆமையின் மேல் நிற்கின்ற கோலத்தில் யமுனையின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. வாமனராகிய இரு பெண்கள் அருகிலே காணப்படுகின்றனர். ஒருவர் யமுனையின் மேற் குடைபிடித்த நிலையிலே காணப்படுகின்றார்.
வலது பக்கச் சுவரிலே அமைந்துள்ள முதலாவது சிற்பம் லலிதாசனக் கோலமான வீரபத்திரரின் வடிவமாகும். வலது பக்கத்துப் பின் கையில் டமருகமும் இடது பக்கத்துப் பின்புறக் கையிலே மழுவும் அமைந்திருக்கின்றன. இடப்புறத்து முன்கரம் ஆசனத்தில் ஊன்றிய கோலமானது.
சப்தமாதர்
இவ்வடிவத்திற்கு அருகிலே சப்தமாதரின் வடிவங்களும் அவர்களின் குமாரரின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வீரபத்திரரின் அருகிலே பிராமியின் வடிவம் அமைந்திருக்கின்றது. அதன் இடப்புறத்தோளிலே மான்தோல் தெரிகின்றது. ஆசனத்தின் கீழே அன்னப்பறவையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பிராமியின் பக்கத்திலே மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் முறையே இடபம், மயில், கருடன், வராகம், யானை, ஆந்தை என்பவற்றுடன் காணப்படுகின்றனர். அவர்களை அடுத்துக் கணேசர் வாம லலிதாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். அவருக்கு முன்னாலே தாம்பாளத்தில் மோதகங்கள் தெரிகின்றன. கணேசரின் கரங்களிலே ஒடிந்த தந்தம், மழு, மோதகம் என்பன தெரிகின்றன. நான்காவது கரம் அபயகரமாகும். அதற்கருகிலே மகாகாளர், காளி ஆகியோரின் கோரமான வடிவங்கள் அமைந்துள்ளன.
அந்த காசுர மூர்த்தி
வலது பக்கத்துச் சுவர் ஐந்து பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் முதலாவது பிரிவிலே அந்தகாசுரவத மூர்த்தியின் வடிவம் கம்பீரமான தோற்றத்துடன் விளங்குகின்றது. அதன் வலது பக்கத்தில்

Page 82
136 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
நான்கு கரங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று யானையின் தலை ஒன்றினைப் பற்றிய வண்ணமாய் உள்ளது, மற்றொன்று இராட்சதன் ஒருவனைப் பற்றிய கோலத்தில் அமைந்திருக்கின்றது. மூன்றாவது கரம் வாளினையும் நான்காவது கரம் ஈட்டியினையும் ஏந்திய கோலத்திற் காணப்படுகின்றது. இடது கரங்கள் அந்தகாசுரன், ஈட்டி, கபாலம் முதலியவற்றைப் பற்றிய கோலத்தில் உள்ளன. கால்களுக்கிடையிலே கணேசரின் சிறிய உருவந் தெரிகின்றது. இடப்பக்கத்திலே பார்வதியும் வலப் பக்கத்திலே வாமனர் ஒருவரும் காணப்படுகின்றனர்.
இராவண அனுக்கிரக மூர்த்தி
இரண்டாம் பிரிவில் இராவண அனுக்கிரக மூர்த்தியின் உருவம் அமைந்திருக்கின்றது. தனது பத்துக்கரங்களினால் இராவணன் கைலாசமலையைப் பெயர்க்க மேற்கொள்ளும் முயற்சி அழகாக வடிக்கப்பட்டுள்ளது. சிவ பெருமான் தனது இரு கரங்களினாற் பார்வதியை ஆதரிக்குங் கோலத்திலே காணப்படுகின்றார். மூன்றாவது கரம் வலது பக்கத்து இடையில் ஊன்றிய நிலையிலே காணப்படுகின்றது. நான்காவது கரம் விஸ்மயக் கோலத்தில் உள்ளது. பார்வதி சிவன்மேற் சாய்ந்த கோலத்திலே காணப்படுகின்றார். பரிவாரத்தார் நால்வரின் உருவங்கள் அருகிலே அமைந்திருக்கின்றன.
சிவனின் தாண்டவக் கோலம்
சிவனுடைய தாண்டவக் கோலம் மூன்றாவது பிரிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்க அசைவுகள் மிகவும் வேகமான கோலத்துடன் தெரிகின்றன. சிற்பியின் நாட்டிய சாஸ்த்திரப் புலமையினைத் தாண்டவ மூர்த்தியின் அங்க லக்ஷணங்கள் பிரதிபலிக்கின்றன. மேலே இரு பக்கங்களிலும் வாகனங்கள் சகிதமான அட்ட திக்குப்பாலகரின் உருவங்கள் தெரிகின்றன. சிவனது வலக்காலின் பின்னாலே மகாகாளரின் ஆசனக் கோலந்தெரிகின்றது. சமீபத்திலே வாத்தியகாரர் மூவர் காணப்படுகின்றனர். ஒருவர் மிருதங்கம் ஒலிக்கின்றார். மற்றொருவர் புல்லாங்குழல் வாசிக்குங் கோலத்திற் காணப்படுகின்றார். இன்னொருவர் தாளங்களுடன் இருக்கின்றார். அவற்றிற்கு அருகிலே தூண் ஒன்றிற் சாய்ந்த கோலத்தில்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 137
பார்வதியின் வடிவந் தெரிகின்றது. கால்கள் பின்னிய கோலமானவை. அம்மனின் உருவம் மிகவுங் கவர்ச்சியான கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது அங்கணத்திலே சிவனும் பார்வதியும் தாயம் விளையாடும் கோலம் அமைந்திருக்கின்றது. அவர்களின் சமீபத்திலே பரிவாரத்தாருஞ் சிவகணங்களும் காணப்படுகின்றன.
ஐந்தாவது பிரிவில் மகிஷமர்த்தனியின் கோலம் அமைந்திருக்கின்றது. வலது கால் மகிஷத்தினை ஊன்றிய கோலமானது; வடிவத்திலே நான்கு கரங்கள் தெரிகின்றன. ஒன்றிலே திரிசூலமும் மற்றொன்றிலே வாளும் காணப்படுகின்றன. மூன்றாவது கரம் மகிஷத்தின் தலையைப் பிடித்த கோலமானது. நான்காவது கரம் சிதைந்து விட்டது. மகிஷமர்த்தனியின் வடிவம் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம்
எல்லோராக் குடைவரைகளில் இரண்டாவது வகைக்குரியதான இராமேஸ்வரம் எளிமையான தோற்றங் கொண்ட பிரமாண்டமான அமைப்பாகும். அதில் நந்தி மண்டபமும் மண்டப வடிவமான கோயிலும் பிரதான பாகங்களாக அமைந்திருக்கின்றன. நந்தி மண்டபத்தில் நந்தியின் உருவம் உயரமான அலங்கார வேலைப்பாடுகள் பொருந்திய பீடத்தில் அமைந்திருக்கின்றது. அதற்கு அப்பால் மண்டபம் தெரிகின்றது. அதன் முற்பக்கத்திலே அரைச் சுவரைத் தளமாகக் கொண்டு நான்கு மிகவும் விசாலமான கட்டைத் தூண்கள் அமைந்திருக்கின்றன. அச்சுவரின் நடுவிலே மண்டபத்திற்குச் செல்லும் வழி அமைந்திருக்கின்றது. மண்டபம் 25 அடி அகலமும் 69 அடி நீளமுங் கொண்ட அமைப்பாகும். பின்புறச் சுவரின் நடுப்பாகத்தைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாசலின் இருபக்கங்களிலும் துவாரபாலகரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தைச் சுற்றிச் சுவர்களிலே சிற்ப வடிவங்கள் வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளன.
துமார் - லென
மூன்றாவது வகைக்குரிய கோயில்களிலே துமார்-லென பிரசித்தி
பெற்ற ஆலயமாகும். அக்கோயில்களின் மண்டபங்கள் குருசு வடிவில் அமைந்துள்ளன. அத்துடன் கோயிலின் மூலஸ்தானம் மண்டபத்தின் நடுவில்

Page 83
138 தக்கினத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
அமைந்திருப்பது அவற்றின் சிறப்பம்சமாகும். எல்லோராவில் அமைந்துள்ள குடைவரைகளிலே துமார்-லென மிகப் பெரியதாகும். அதன் நடுவிலே பிரமாண்டமான தோற்றமுடைய கருவறை அமைந்திருக்கின்றது. அது நான்கு பக்கங்களிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றிலும் பிரமாண்டமான அளவுடைய துவாரபாலகர் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபம் 150 அடி நீளமும் 150 அடி அகலமுங் கொண்ட நாற்சதுர வடிவமான அமைப்பாகும். மண்டபத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து தூண்கள் வரிசையாக அமைந்துள்ளன. மண்டபத்தின் பக்கவாசல்கள் இரண்டுக்கும் முன்னால் மேலே மூடப்பட்ட நடை பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் இரு பக்கங்களிலும் தூண் வரிசைகள் காணப்படுகின்றன.
எலிபந்தாவில் அமைக்கப்பட்டிருக்கின்ற குடைவரைக் கோயில் அளவிற் சற்றுச்சிறியதாகும். அது 130 அடி நீளமும் 129 அடி அகலமுங் கொண்டுள்ளது. அது அமைந்திருக்கும் மலைப்பாறையின் இயல்பிற்கு ஏற்பக் கோயிலின் வடிவமைப்பிலே சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலே மூன்று வாசல்கள் அமைந்திருக்கின்ற பொழுதிலும் குருசு வடிவமாக அது விருத்தி பெற்றிருக்கவில்லை. மண்டபத்தில் அமைந்த தூண்களும் அவற்றின் வேலைப்பாடுகளும் எல்லோராவில் உள்ளவற்றைப் போன்றவை. நடுவில் அமைந்திருக்கின்ற கர்ப்பகிருகமும் அதிலுள்ள சிற்பங்களும் வேலைப்பாடுகளிற் துமார் - லெனவில் உள்ளனவற்றை ஒத்திருக்கின்றன. வாசற்படிகளின் பக்கத்திற் சிங்க உருவங்கள் கம்பீரமான தோற்றத்துடன் விளங்குகின்றன. மண்டபத்திற்கு அருகிலே அமைக்கப்பட்டிருந்த வேறொரு கட்டடத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. எலிபந்தாவிலே காணப்படுஞ் சிற்பவடிவங்கள் எல்லோராவில் உள்ளவற்றைக் காட்டிலும் வனப்புமிக்கவை. குறிப்பாக அதன் தென்சுவரிலே காணப்படுஞ் சிற்பங்கள் தனிச் சிறப்புடையனவாகும். அங்குள்ள வடிவங்களிலே மிகப் பிரசித்தமானது திரிமூர்த்தி வடிவம் ஆகும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைப் புரிகின்ற மூலமூர்த்தியை மூன்று முகங்களோடும், அவை ஒவ்வொன்றிற்கும் உரிய முகபாவங்களோடும், அற்புதக் கோலத்தில் வடிவமைத்துள்ளனர். அங்குள்ள அர்த்தநாரி வடிவமும் சிவன்-பார்வதி ஆகியோரின் சிற்பமும் உன்னதமான படைப்புகளாகும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 139
கைலாசநாதர் கோயில்
கட்டடக்கலை வரலாற்றிலே அதிசயமானது என்று கொள்ளத்தக்க கைலாசநாதர் கோயில் ஒரு மலைதளியாகும். மலையை வெட்டிக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய சிறப்புகளை இராஷ்டிரகூடரின் செப்புப்பட்டயம் ஒன்று மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
'ஏலாபுரத்திலே மலையிலே மன்னனால் அமைப்பிக்கப்பட்ட இந்த அற்புதமான ஆலயத்தைக் கண்டதும் இரதங்களிலே வானத்திற் செல்லும் மானிடர்கள் இச்சிவாலயமானது கலைஞராற் படைக்க முடியாத ஒன்று; அது இறைவனால் உருவாக்கப்பட்டது என்று பேசிக்கொள்கிறார்கள். அதனை நிர்மாணித்த ஸ்தபதி அதன் வனப்பைக் கண்டு திகைப்படைந்தான்.”
சமகாலத்திலே வாழ்ந்த தக்கிணத்தவர்கள் கைலாசநாதர் கோயிலின் வனப்பினைக் கண்டு வியப்புற்றனர்; அதன் வேலைப்பாடுகள் இணையிலாதவை, அற்புதமானவை என்றவாறு கருதினார்கள் என்பதற்குச் செப்புப்பட்டயத்திற் காணப்படும் வர்ணனை ஒரு சிறந்த உதாரணமாகும்.
எல்லோராக் கோயில் சைவசமய மரபிலுள்ள பெளராணிகமான கதைகளையுந் தத்துவங்களையும், இந்து கலைமரபின் உன்னதமான பாங்கினையும் ஒருங்கே நிகரற்ற வனப்புடன் பிரதிபலிக்கின்ற சின்னமாக விளங்குகின்றது. திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளும், சாளுக்கியர் கலைப்பாணிக்குரிய பண்புகளும் அதிலே சேர்ந்து விடுகின்றன. அது அளவுப் பிரமாணங்களிற் பிரமாண்டமானது. அதன் அலங்கார வேலைப்பாடுகள் உன்னதமானவை. கட்டுமான வேலைப்பாடுகளும் கலைவனப்புடையவை. அது மாமல்லபுரத்து மலைதளிகளைப்போல மலையை வெட்டி உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அளவுகொண்ட ஆலயமாகும். ஆயினும், மாமல்லபுரத்து மலைதளிகளைப் போலன்றி எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் கோயிலுக்குரிய எல்லா அம்சங்களும் அமையப்பெற்ற முழுமையான வடிவமாகும். கட்டடம் அமைந்துள்ள நிலப்பரப்பு 250 அடி நீளமும் 150 அடி அகலமுங் கொண்டுள்ளது. நடுவில் அமைந்த கோயில் 145 அடி நீளமும் 62 அடி அகலமும் 100 அடி உயரமுங் கொண்ட அமைப்பாகும். செம்மையாக அமைக்கப்பெற்ற வாசற்கதவுகளும் பலகணிகளும் மேற்தளங்களுக்குப் போகும் படிக்கட்டுகளும் அமைந்திருக்கின்றன. மேல் மாடங்களிலுள்ள தளப்பகுதிகள் பளபளப்பாகவும் மிருதுவாகவும் அமைந்திருக்கும் வண்ணஞ் செதுக்கப்பட்டுள்ளன. அதன் திருச்சுற்று மாளிகையிலே நிரை நிரையாக

Page 84
140 தக்கிணத்துக் குடயோகங்களும் மலைதளிகளும்
அமைந்திருக்கும் பிரமாண்டமான தூண்களிலே புராண நூல்களிலே விளக்கப்படுகின்ற கதைகளை ஆதாரமாகக்கொண்ட அளவிற் பெரியதான 42 சிற்பங்கள் காணப்படுகின்றன.
கைலாசநாதர் கோயில் பட்டதகலிலுள்ள விரூபாக்ஷர் ஆலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்று கருதுவதற்கு இடமுண்டு. எல்லோராவிலே முன்பு பிரமாண்டமான குடபோகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், வடிவமைப்பிலே அவற்றில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதான மலைதளியான கைலாசநாதர் கோயில் தோற்றத்திலே கற்றளி போன்றதாகும். அதன் நிர்மாணகாரர்கள் கற்றளிகளுக்குரிய சிற்ப சாஸ்திரப்பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசித்திரமான கோயிலை உருவாக்கியுள்ளனர். கட்டடம் பிரமாண்டமானது. எனினும், சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமானவை. விமான சிகரங்கள், பரிவாரதேவர் ஆலய சிகரங்கள், தாமரைமலர்ப் பீடங்கள் கூரையின் மேல் அமைந்த யானைகள், யாளிகள், கர்ணகூடுகள், சாலைகள், கபோதங்கள் என்பனவும் சுவர்களிலே செதுக்கப்பெற்றுள்ள வானிற் பறந்து செல்லுங் கந்தருவரின் காட்சிகளும் மிகுந்த வனப்புடனும் மிக நுட்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அதிஷ்டானம் மிக உயரமாகவுஞ் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது. வியாளவரி, ஜகதி, உபானம் என்பவற்றில் உள்ள உருவங்கள் அதிக கவர்ச்சி மிக்கவை.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் ஒரு வரையறையான திட்டத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தின் மூன்று பக்கங்களிலே கிடங்குகள் ஆழமாக வெட்டப்பெற்ற பின்பு கட்டடத்தின் பாகங்கள் கருவிகளினாலே வெட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டன. 200 அடி நீளமும் 100 அடி அகலமும் 100 அடி உயரமுங் கொண்ட மலைப்பகுதியை அடிப்படையாகக்கொண்டு ஆலயம் உருவாக்கப்பட்டது. வேலைப்பாடுகள் மேலிருந்து கீழாக முன்னேற்றம் அடைந்தன. கட்டடத்தின் அளவுப் பிரமாணங்களும் பகுதிகளும் மண்டபங்கள், தூண்கள், படிக்கட்டுகள், சிற்பக்காட்சிகள், சிகரங்கள் முதலிய எல்லாம் ஒரு வரைந்த திட்டத்திற்கு அமைய மலையிலே பொழியப்பட்டன என்று கலாவிமர்சகர்கள் கருதுகின்றனர். அதன் வேலைப்பாடுகளை நிறைவேற்றிய சிற்பக் கலைஞர்கள் ஆலயத்தின் வடிவமைப்பினையும் தாம் செய்து முடிக்க வேண்டிய வேலைப்பாடுகளையும் பற்றி முன்கூட்டியே அறிந்திருத்தனர் என்பது தெரிகின்றது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 141
கைலாசநாதர் கோயில் முன்கண்டவாறு வடகலைப்பாணி, தென்கலைப்பாணி என்பவற்றின் சங்கமத்தைப் பிரதிபலிக்கின்றது. அதன் வடிவமைப்பு கூடுதலாகத் திராவிட கலைப்பாணியின் சாயலைக் கொண்டுள்ளது. கோபுரவாசல், நந்திமண்டபம், விமானம், அதனை ஒட்டிய மண்டபம், திருச்சுற்று மாளிகை, பரிவாரதேவர் கோயில்கள் என்னும் பகுதிகள் திராவிடகலைப்பாணியைச் சேர்ந்த கோயில்களில் உள்ளவற்றை ஒத்தனவாகும். கோயில் முற்றத்திலே வடக்கிலுந் தெற்கிலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தின் வடக்குப் புறத்திலே இலங்கேஸ்வரம் என்னுங் கோயிலும் ஆற்றுத் தேவதைகளின் ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. அவை பிற்காலத்திலே உருவாக்கப்பட்டிருத்தல் கூடும். வாயிற் கோபுரத்தில் சாலைச் சிகரங் காணப்படுகின்றது. கிரீவம் நாற்சதுரமாக அமைந்திருக்கின்றது. அதன் மேல் அமைந்த சிகரம் வண்டிக் கூடாரம் போன்றது. 25 சதுர அடி அளவினைக் கொண்ட நந்தி மண்டபம் அலங்காரவேலைப்பாடுகள் கொண்ட பீடத்தில் அமைந்திருக்கின்றது. அதிஷ்டானத்து உபானத்திலே அரைத்துரண் வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றின் மேற்பக்கத்திலே சிற்ப வேலைப்பாடுகளும், அவற்றிற்கு மேலே யானை வரிசையும் கபோதமும் உள்ளன. அடித்தளப்பகுதியிலுள்ள கண்டத்திலே மைதுனக் கோலங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நந்தி மண்டபத்திற்கும் கோபுர வாசலுக்கும் இடையிலே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அலங்காரத்தோற்றமுடைய விமானம் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 164 அடி நீளமும் தெற்கு வடக்காக 109 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதிஷ்டானம் தேர் ஒன்றின் அடிப்பாகத்தைப் போன்ற வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த உயரத்தைக் கொண்டிருப்பதால் அதிஷ்டானம் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. யானைகள் தாங்கி நிற்கும் இரதம் ஒன்றினை ஒத்த கோலத்துடன் கோயில் விளங்குகின்றது. அதிஷ்டானத்தின் நடுப்பாகத்திலே யானைவரிசையும் சிங்க வரிசையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் தெற்குப்புறத்திலும் வடக்குப் புறத்திலும் அதனைச் சென்றடைவதற்குப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் முன்னால் அமைந்துள்ள மண்டபம் கிழக்கு மேற்காக 55 அடி நீளமும் தெற்கு வடக்காக 57 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதிலே சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய 16 தூண்கள் உள்ளன. அவை நான்கு

Page 85
142 தக்கினத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
தொகுதிகளில் அமைந்து காணப்படுகின்றன. அதனால் மண்டபம் ஒரு நவரங்கசாலையின் தோற்றத்தினைக் கொண்டுள்ளது.
திருச்சுற்று மாளிகையில் அமைந்திருக்கின்ற தேவகோட்டங்கள் பெளராணிகமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங்களுடன் விளங்குகின்றன. அவற்றிலே திரிபுராந்தகரின் கோலம், திருமால் மகாவலியை பூலோகத்திலே தூக்கி எறிதல், மகா விஷ்ணு இரணியனை வென்றடக்குதல், தசக்கிரீவன் தனது தலை ஒன்றைச் சிவனுக்குப் பலியாக வழங்குதல் முதலிய காட்சிகள் கல்லிலே வடிக்கப்பட்டுள்ளன. உருவங்கள் எவரையும் இலகுவிற் கவரக்கூடிய கலைவனப்பு மிகுந்தவை. அவற்றின் வேலைப்பாடு உன்னதமானது.
இலங்கேஸ்வரம்
கைலாசநாதர் கோயிலின் அருகிலே, அதன் வடபுறத்திலே அமைந்திருக்கும் இலங்கேஸ்வரம் என்னுங் கோயிலும் வனப்பு மிகுந்த கட்டமாகும். இடப்பக்கத்திலுள்ள சாலை ஒன்றில் அமைந்திருக்கும் படிக்கட்டின் மூலமாக அதனை அடையலாம். படிகளின் மீது ஏறிச் செல்லும் போது வனப்புமிக்க ஆலயம் ஒன்றைப் பார்க்க முடிகின்றது. அதன் வேலைப்பாடுகளும் கலை வனப்பும் கவர்ச்சியும் மிக்கவை. முன்பக்கத்திலே கிழக்கு மேற்காகச் சாலை ஒன்று அமைந்திருக்கின்றது. சாலையினை அடுத்து நந்திக் கோட்டம் காணப்படுகின்றது. அதற்கு அப்பால் பிற்சுவரினை ஒட்டிப்பிரதான ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தியின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. அது உயரமான பீடம் ஒன்றிலே செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் விமானம் 11 அடி உயரமான அதிஷ்டானத்தில் அமைந்திருக்கின்றது. அதிஷ்டானப் படைகளிலே மைதுன வடிவங்கள் அழகிய கோலத்திலே வடிக்கப்பட்டுள்ளன. இலங்கேஸ்வரம் 123 அடி நீளமும் 60 அடி அகலமுங் கொண்ட வனப்புடைய ஆலயமாக விளங்குகின்றது. நந்தி கோட்டத்தின் இரு பக்கங்களிலும் ஒவ்வொரு யானையின் பெருவடிவம் அமைந்திருக்கின்றது. அவை ஒவ்வொன்றும் யானையின் இயல்பான அளவுப்பிரமாணங்கள் கொண்ட கம்பீரமான வடிவமாகும். அவை உயிரோட்டம் உள்ளனவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடற்குரியது. ஆலய வளாகத்திலே 45 அடி உயரமான துவஜஸ்தம்பங்கள் காணப்படுகின்றன. அவை திராவிட கலைப்பாணியிலுள்ள தூண்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் கைலாசநாதர் கோயிலின் துணைக்கோயில் போல அமைந்து காட்சியளிக்கின்றது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 143
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் கலை வடிவம் என்ற வகையிலே இணையிலாப் பெருமை கொண்ட ஆலயமாகும். அதனை ஒத்த அளவுப் பிரமாணங்களுடன் இந்தியாவிலே வேறெந்தக்கோயிலும் 10 ஆம் நூற்றாண்டுவரை அமைக்கப்படவில்லை. ஒரு மலைதளி என்ற வகையிலும், வனப்பிலும், எடுப்பான தோற்றத்திலும், அளவுப் பிரமாணங்களிலும் அதில் அமைந்துள்ள சிற்பவடிவங்களின் நுட்பம்மிகுந்த வேலைப்பாட்டிலும் அதற்கு இணையான வேறொரு கோயில் முழு உலகிலுமே காணப்படவில்லை.
சிற்பங்கள்
கைலாசநாதர் கோயிலிற் பெருந்தொகையான சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் வனப்பும் வேலைப்பாடுகளும் மிகவுஞ் சிறப்பானவை. திருவாசலின் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் புராணங்களையும் மகாபாரதக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட சிற்பங்கள் பல காணப்படுகின்றன. இடப் புறத்திலே சிவன், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்ச்சுனன், அக்கிணிதேவன், மகிஷமர்த்தனி முதலியோரின் படிமங்கள் உள்ளன. சிவனுடைய வடிவம் ஒன்றிலே எட்டுக் கரங்கள் அமைந்திருக்கின்றன. வேறொன்றிலே இலிங்கத்திலிருந்து சிவன் வெளிப்படுங் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. அருகிலே விஷ்ணுவும் பிரமனும் சிவனை வணங்கும் கோலத்திற் காணப்படுகின்றனர். சிவனே முழுமுதற் கடவுள் என்னும் கருத்து அதனால் உணர்த்தப்படுகின்றது. இன்னொரு வடிவத்திலே நான்கு கரங்களுடன் சிவனுடைய உருவம் அமைந்துள்ளது. அதன் ஒரு கரம் சூலம் ஏந்திய கோலமானது. மகாவிஷ்ணுவின் வடிவம் கருட வாகனத்தில் அமர்ந்த வண்ணம் பறந்து செல்லும் கோலமானது. ஒரு கையிலே தாமரையும் மற்றக் கையிலே சக்தியும் தெரிகின்றன.
மூன்று சிற்பங்கள் அர்ச்சுனனைப் பற்றியவை. அவற்றுள் ஒன்றிலே அர்ச்சுணனின் சந்நியாசக் கோலம் தெரிகின்றது. மற்றொன்றிலே அவன் சுபத்திரையோடு யானைமேற் கூடியிருக்கும் காட்சி தெரிகின்றது. வேறொன்றிலே அவன் தன்னைத் துரத்திச் செல்பவர்களோடு போரிடும் கோலம் தெரிகின்றது. ஒரு புறத்திலே தனது படைக்கலமான கலப்பையுடன் பலராமன் காணப்படுகின்றான்.
அக்கினி தேவனின் உருவமும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வடிவத்திலே ஆடு வாகனமாக அமைந்திருக்கின்றது. கிரீடம், தோடு, கண்டிகை, ஆரம், கடிசூத்திரம் என்பன ஆபரணங்களாய் அமைந்துள்ளன.

Page 86
144 தக்கிணத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
இன்னொரு சிற்பத்திலே நாக குமாரன், நாக கன்னி என்போரின் உருவங்கள் அமைந்துள்ளன. அரச குமாரர்களின் தகுதிக்கு ஏற்றவாறு இருவரும் மிகுதியான ஆபரணங்களை அணிந்துள்ளனர். நாக கன்னியின் வலது கையிலே தாமரை மலர் காணப்படுகின்றது. அதன் முழங்கை வலது பக்கத்திலே நிற்கின்ற வாமனக் கோலமான பெண்ணின் தலைமேற் தங்கியிருக்கின்றது. வலது பக்கத்திலே மேற்புறமாகப் பறந்து செல்லுகின்ற ஒரு வடிவம் காணப்படுகின்றது. அவற்றிற்கு அருகிலே மகிக்ஷாசுரமர்த்தினியின் உருவம் அமைந்திருக்கின்றது. கீழே வராகமும் மேலே குடையும் தெரிகின்றன. கிரீடம், தோடுகள், முத்துமாலை, வளையல்கள் என்பன தெரிகின்றன. இரு பக்கங்களிலும் மாலைகளையும் சாமரைகளையும் ஏந்திய கன்னிப் பெண்களின் வடிவங்கள் காணப்படுகின்றன. அருகிலே அக்கினி தேவனின் உருவம் தாடியுடன் காணப்படுகின்றது. அதன் மகுடம் சடைமுடி போன்றதாகும். உருவம் முக்காலியிலே அமைந்திருக்கும் சவ்யலலிதாசனக் கோலமாகும்; இடதுகை இடக் காலிலே படிந்திருக்கின்றது. அக்கினி தேவனின் அருகிலே மகரத்தின் மேல் அமர்ந்திருக்கும் கங்கையின் வடிவம் காணப்படுகின்றது. அதன் தலை மேல் ஆதபத்திரம் தெரிகின்றது. ஒரு கரம் வலப்புறத்திலே நிற்கின்ற வாமனரின் தலைமேற் தங்கியிருக்கின்றது. இரு மருங்கிலும் சாமரை ஏந்திய ஒவ்வொருவர் காணப்படுகின்றனர்.
ஆலயத்தின் நுழைவாசலின் வலப்பக்கத்திற் பன்னிரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றிலே முதலாவது வடிவம் ஆமைமேல் இருக்கும் யமுனாதேவியின் கோலமாகும்; அதன் தலையின் மேல் குடையின் உருவந் தெரிகின்றது. இருமருங்கிலும் சாமரை ஏந்தியவர்களின் வடிவங்கள் ஒவ்வொன்று தெரிகின்றன. இடக்கரம் அருகில் நிற்கும் ஒருவரின் தலைமேல் அமைந்திருக்கின்றது. அருகிலே சவ்ய லலிதாசனத்தில் இருக்கும் அக்கினி தேவனின் உருவங் காணப்படுகின்றது. அவ்வுருவத்திலே தாடி அமைந்திருக்கின்றது. கேசம் சடைமுடியாகக் கட்டப்பட்ட கோலமாய் உள்ளது; இடக்கரம் இடது காலிலே படிந்திருக்கின்றது. அக்கினி தேவனின் அருகிலே தேவதை ஒன்றின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் நாகசூமாரன், நாககன்னி என்போரின் உருவங்கள் காணப்படுகின்றது. நாகசூமாரனின் தலையின் மேல் ஐந்துதலை நாகபடம் தெரிகின்றது. அதேபோல நாககுமாரியின் தலைமேலும் நாகபடங் காணப்படுகின்றது. இருவரின் உருவங்களிலும் ஆபரண அலங்காரங்கள் மிகுந்து காணப்படுகின்றன. நாககுமாரியின் உருவத்தில் வஸ்திரம் இடையின் கீழ்மட்டுமே அமைந்திருக்கின்றது. அவற்றை அடுத்து இந்திரன், இந்திராணி, இயமன்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 145
முதலியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. அவற்றிற்கு அப்பால் வராக அவதாரமான விஷ்ணுவின் கோலம் அமைந்திருக்கின்றது. வராக முகமும் மானிட வடிவும் பொருந்திய கோலம் காணப்படுகின்றது. கண்டிகை, வாகுவலயம், வளையல்கள், கடிசூத்திரம் முதலான ஆபரணங்கள் உருவத்திலே அமைந்திருக்கின்றன. வராக மூர்த்தியின் வடிவத்தில் எட்டுக்கரங்கள் காணப்படுகின்றன. மேலே இரு பக்கங்களிலும் வித்யாதர வடிவங்கள் காணப்படுகின்றன. இதனை அடுத்து மகாவிஷ்ணுவின் வேறு மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன. அவற்றுள் ஒன்று கருட வாகனத்தில் வீற்றிருந்த வண்ணம் திருமால் வானத்திலே பறந்து செல்லுங் கோலமாகும். திரிவிக்கிரமர் உருவமும் நரசிங்க மூர்த்தியின் வடிவமும் அருகிலே செதுக்கப்பட்டுள்ளன. இறுதியாக ஆறுகரங்கள் கொண்ட சிவனின் தாண்டவக் கோலம் அமைந்திருக்கின்றது.
முக மண்டபத்திலே மகிஷாசுர மர்த்தினியின் வடிவமும் கணேசரின் உருவமும் கஜலக்ஷமியின் சிற்பமும் வனப்புமிக்க கோலத்தில் அமைந்திருக்கின்றன.
மகிஷமர்த்தினி
திருச்சுற்று மாளிகையின் இடப்பக்கத்துச் சுவரிலே மகிஷமர்த்தினியின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகிகூடிாசுரன் வலக்கையிலே கதையை ஏந்திய வண்ணம் இடது காலைத் தூக்கிய கோலத்திலே காணப்படுகின்றான். அம்மனின் உருவம் புலிமேல் அமர்ந்திருக்குங் கோலமானது. வலக் கரங்களிலே திரிசூலம், அம்பு, வில்லு ஆகியன தெரிகின்றன. இடக்கரங்களில் வில், கேடயம் ஆகியன அமைந்திருக்கின்றன. மகிஷாசுர சம்ஹாரத்தைப் பார்ப்பதற்குத் தேவர்கள் வந்திருக்கின்றனர். இந்திரன், குபேரன், யமன், அக்கினி, நிருதி, வருணன், சிவன் ஆகியோர் முறையே ஐராவதம், குதிரை, எருமை, ஆட்டுக்கடா, மானிடம், மகரம், இடபம் ஆகிய வாகனங்களில் அமர்ந்த கோலத்திற் காணப்படுகின்றனர். இந்தச் சிற்பத்திற்கு அருகிலே கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் குடையாகப் பிடித்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இடப்பக்கத்திலே பசுக்களும் ஆயர்பாடிச் சிறுவர்களின் உருவங்களும் தெரிகின்றன. அதற்கு அப்பால் மன்மதன் - இரதி, மகாவிஷ்ணு - லக்ஷமி முதலானோரின் படிமங்கள் தெரிகின்றன.

Page 87
146 தக்கினத்துக் குடபோகங்களும் மலைதளிகளும்
ஆற்றுத் தேவதைகளின் கோட்டம்
திருச்சுற்றாலையின் இடப்பக்கச் சுவரிலே ஆற்றுத் தேவதையின் ஆலயம் ஒன்று குடைவரையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய கோட்டம் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் ஆற்றுத் தெய்வங்களுக்கு உரியதாகும். அதிலே இரண்டு தூண்களும் இரண்டு அரைத் தூண்களும் அமைந்திருக்கின்றன. சரஸ்வதியின் வடிவம் ஸ்தானகக் கோலமானது; துவிபங்கமானது. அது தாமரைப் பீடத்தில் அமைந்திருக்கின்றது. அந்த வடிவம் மிகவும் அலங்காரமான வேலைப்பாடுகள் பொருந்திய தோரணத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் பின்னால் செடிகளின் உருவங்கள் தெரிகின்றன. மகுடம், ஆரம், ஒட்டியாணம் என்பன ஆபரணங்களாக விளங்குகின்றன. வஸ்திரம் இடையின் கீழ் அமைந்து இரு கால்களுக்கும் நடுவிலே அலங்காரமான கோலத்துடன் தொங்குகின்றது.
மத்தியில் அமைந்துள்ள கங்கையின் வடிவம் ஸ்தானகக் கோலமானது; அபங்கமானது; அது மகரத்தின் மேல் அமைந்திருக்கின்றது. தலையைச் சுற்றிப்பிரபா மண்டலங் காணப்படுகின்றது. தலையிலே மகுடமும் கழுத்திலே ஆரமும் கைகளிலே வளையல்களும் இடையிலே ஒட்டியாணமும் கால்களிலே சதங்கைகளும் ஆபரணங்களாக விளங்குகின்றன. உருவத்தின் பின்னால் மலர்ச் செடிகள் தெரிகின்றன. வஸ்திரம் கால்களுக்கிடையில் மடிப்புகளாகத் தொங்குகின்றது. வலப்பக்கத்திலே யமுனையின் உருவம் ஸ்தானகக் கோலத்தில் அமைந்திருக்கின்றது. அது துவிபங்கமானது; ஆமையின மேல் அமைந்திருக்கின்றது. மற்றைய அம்சங்களில் அது கங்கை சரஸ்வதி ஆகியோரின் வடிவங்களை ஒத்திருக்கின்றது.
இந்து சமய மரபிலே திருவேனி சங்கமம் மிகவும் புனிதமான தலமாகும். அதிலே நீராடுவதன் பலனாகப் பாப விமோசனமும் முத்தியுங்கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். திருவேணி சங்கமத்தைக் குறிக்கும் அடையாளமாக மூன்று ஆற்றுத் தேவதைகளின் ஆலயம் எல்லோராவில் அமைக்கப்பட்டுள்ளது என்று கருதலாம். கைலாசத்திற்கு யாத்திரை போகும் வழியிலே திருவேனி சங்கமத்தில் நிராடிச் செல்ல வேண்டும் என்பது நியதியாகும். இராஷ்டிரகூட மன்னர்கள் சைவ சமயத்திலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கைலாயநாதருக்கு ஈடிணையற்ற வனப்புடைய ஆலயத்தை எல்லோராவிலே அமைத்த பொழுது சைவ சமய மரபிலுள்ள கதைகளையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் உருவகப் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோயிலின் இடப்பக்கத்துச் சுற்றாலையிலே இரண்டு யானைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை இயல்பான உயிரோட்டத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனுங் காட்சியளிக்கின்றன.

சோழர் காலக் கட்டடக் கலை
மு.நளினி
ஆதித்த சோழன் காலத்துக் கோயில்கள்
விஜயாலய சோழருடன் தொடங்கி மூன்றாம் ராஜேந்திர சோழருடன் முடிவு பெறும் ஏறத்தாழ நானூறு ஆண்டுகட்கு இடைப்பட்ட சோழப் பெருவேந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் மலர்ந்த கோயிற் கட்டடக் கலை வளர்ச்சியை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். முதலாம் ராஜராஜரின் ராஜராஜிசுவரத்துக்கு முற்பட்ட கட்டட அமைப்புகள் முதற் பிரிவில் அடங்கும். இரண்டாம் பிரிவுராஜராஜிசுவரத்துடன் தொடங்கி திரிபுவன வீரேசுவரத்துடன் முடியும்.
அன்பில் செப்பேடுகள் விஜயாலயரின் மகனும் முதலாம் பராந்தகரின் தந்தையுமான ஆதித்த சோழர் காவிரியின் இரு கரையிலும் பல கற்றளிகளை உருவாக்கியதாகப் போற்றுகின்றன. சோழர் காலக் கோயில்களை நன்கு ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டிருக்கும் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் பழைய திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்பத்தெட்டுக் கோயில்களை ஆதித்தன் காலக் கோயில்களாகக் கல்வெட்டடிப் படையில் அடையாளம் கண்டுள்ளார். இவற்றுள் திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர், குமாரவயலூர் திருக்கற்றளிப் பரமேசுவரர், திருவிடை மருதூர் மகாலிங்கர் போன்ற சில தளிகள் திருப்பணிகளால் உருமாறி ஆதித்தர் காலக் கட்டட அமைப்பை இழந்துள்ளன. நேமம் ஐராவதேசுவரம், தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் போன்ற சில கோயில்கள் திரு. கே. வி. செளந்தரராஜன் முதலிய அறிஞர்களால் முத்தரையர் கட்டுமானங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய கோயில்களுள் திருச்சோற்றுத் துறை ஒதவனேசுவரர், திருப்பூந்துருத்தி பஷ்பவனேசுவரர், திருவேதிகுடி வேதபுரீசுவரர், திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர், குடந்தை நாகேசுவரர்,

Page 88
148 சோழர் காலக் கட்டடக் கலை
திருவையாறு பஞ்சநதீசுவரர், திருக்கட்டளை சுந்தரேசுவரர் , திருக்காட்டுப் பள்ளி அக்னிசுவரர், கீழையூர்த் தென் வாயில் பூரீகோயில், லால்குடி சப்தரிசீசுவரர், திருப்புறம்பியம் சாட்சிநாதர், திருஎறும்பியூர் எறும்பீசுவரர், திருச்செந்துறை சந்திரசேகரர் ஆகிய தளிகளை ஆதித்தர் காலக் கற்றளிகளாகக் கல்வெட்டுகளின் அடிப்படையிலும், கட்டட உறுப்புகளின் ஒருமித்த அமைவு கொண்டும் அறிஞர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
முதலாம் பராந்தக சோழன் காலத்துக் கோயில்கள்
முதலாம் பராந்தகர் காலக் கோயில்களாக திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் இருபத்தொன்பது கோயில்களைத் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தென்னார்காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களிற் கல்வெட்டுகளின் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளார். இவற்றுள் உய்யகொண்டான் திருமலை உஜ்ஜிவநாதர், நங்கவரம் சுந்தரேசுவரர், அந்தநல்லூர் ஆலந்துறை மகாதேவர், சித்தலிங்கமடம் வியாக்ரபாதேசுவரர், திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர், மதுராந்தகம் சிவன், விஷ்ணு கோயில்கள், திருவாமாத்தூர் அபிராமேசுவரர், காட்டுமன்னார்குடி வீரநாராயண விண்ணகர் முதலிய கோயில்கள் திருப்பணிகளால் உருமாறியுள்ளன. கரடி மகாதேவர், எறும்பூர்க் கடம்பவனேசுவரர், சோழபுரம் சிவன்கோயில் ஆகியன மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையிற் சிதைந்துள்ளன. எஞ்சியுள்ள கோயில்களுட் புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர், திருச்சென்னம் பூண்டி சடையாரி, கிராமம் சிவலோகநாதர், திருநாமநல்லூர் திருத்தொண்டீசுவரர், திருவாவடுதுறை கோமுக்தேசுவரர் ஆகிய ஐந்து கோயில்கள் அறிஞர் சிலரால் கட்டட அமைவின் அடிப்படையில் முதலாம் பராந்தகர் காலக் கற்றளிகளாக இனங்காணப்பட்டுள்ளன. திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் ஆதித்தர் காலக் கோயில்களாகக் குறிப்பிடும் ஆலம்பாக்கம் கைலாசநாதர், திருக்கண்டியூர் வீரட்டானேசுவரர், திருப்பால்துறை ஆதிமூலேசுவரர், சீனிவாசநல்லூர் குரங்கநாதர், வாலிகண்டபுரம் வாலிகண்டீசுவரர் ஆகிய கோயில்கள் அறிஞர் எம். ஏ.
தாக்கியால் பராந்தகர் காலக் கோயில்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 149
சுந்தர சோழன், உத்தம சோழன் ஆகியோர் காலத்துக் கோயில்கள்
முதலாம் பராந்தகருக்கும் முதலாம் ராஜராஜருக்கும் இடைப்பட்ட அரசர்களின் காலத்தில் எழுந்த கோயில்களாகப் பொன்செய் நல்துணை ஈசுவரம், பெருங்குடி அகத்தீசுவரம், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர், திருக்கோடிக்காவல் சிவன் கோயில், கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர், ஆனாங்கூர் சிவன் கோயில், திருநறையூர் சித்தநாத சுவாமி, குற்றாலம் சோழீசுவரர், கோவிலடி திவ்யஞானேசுவரம், தொடையூர் பிஷமங்களேசுவரம், திருநாகேசுவரம் நாகேசுவரர், செம்பியன்மாதேவி கைலாசநாதர், திருக்கருகாவூர் சிவன் கோயில், கோவிந்தபுத்தூர் கங்கசடாதரர், கீழைப்பழுவூர் ஆலந்துறையார், கொடும்பாளூர்த்தளிகள் முதலியவற்றை திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். இவை அனைத்துமே பழங்கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
பல்லவர் காலத்திலேயே செம்மையான நிலையை எய்திய தமிழ் நாட்டுக் கோயிற் கட்டடக் கலை ராஜராஜிசுவரத்துக்கு முற்பட்ட சோழர் காலத்தில் பெருவளர்ச்சியுற்றதாகக் கூறமுடியாது. ஆனால், உறுப்புகளின் அமைவில், அழகூட்டலிற் பல மாற்றங்களைக் கண்டது. அக்காலகட்டக் கற்றளிகள் விமானம், அர்தத மண்டபம் கொண்டமைந்தன. சில கோயில்கள் எண் பரிவாரத் திருமுன்கள் கொண்டன. இக்கோயில்கள் அனைத்துமே கோபுரங்களுடன் கூடிய மதிலாற் சூழப்பட்டன. இன்று இக்கோபுரங்கள் திருப்பணிகளுக்களாகி உருமாறியுள்ளன. மிகச் சில கோபுரங்களின் ஆதி தளங்கள் மட்டுமே பழங்கட்டுமானத்தின் எச்சங்களாகக் காட்சிதருகின்றன. கீழையூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருக கோபுர ஆதி தளத்தைச் சான்றாகக் கூறலாம். இக்கட்டுமானம் பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்துாண்களோடு கூடிய சுவர், உரிய உறுப்புகளோடு அமைந்த கூரை பெற்றுள்ளது. வலபி வளமான பூத வரி பெற, வாயில் நிலை கொடிக்கருக்கு அலங்களிப்புடன் விளங்குகிறது.
இக்காலகட்ட விமானங்கள் தூய நாகரமாகவோ அல்லது கலப்பு வேசரக் கட்டுமானங்களாகவோ அமைந்தன. கலப்புத் திராவிட விமானங்களைக் காணமுடியவில்லை. பல்லவர் காலத்தில் இது பெரு வழக்கிலிருந்ததை இங்கு நினைவுகூரலாம். தூய நாகரத்திற்குக் கீழையூர்த் தென் வாயில் ழரீகோயிலையும், புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயிலையும், கலப்பு வேசரத்திற்குக் கீழையூர் வடவாயில் பூரீகோயிலையும், பெருமுடி சுகத்தீசுவரர்

Page 89
|5D சோழர் காலக் கட்டடக் கலை
கோயிலையும் சான்றுகளாகக் கூறலாம். இவ்விருவகையுமே ஏறத்தாழ ஒரே அளவிலிருப்பதாகக் கூறலாம். இக் கலப்பு விமானங்களும் தளக் கட்டுமானங்களை நாகரமாகவே கொண்டுள்ளன. தூய திராவிட, வேசர, தூங்கானைமாட விமானங்களையும், கலப்புத் திராவிட விமானங்களையும் இக்காலகட்டத்தில் காணக்கூடவில்லை. பல்லவர் காலச் சாலைத் தளிகளும் இக்கால கட்டத்தில் அமைந்ததாகத் தெரியவில்லை.
விமானத்தின் தளப் பத்திப் பிரிப்புகள், சில தளிகளில் நேர் கோட்டிலும், சில தளிகளில் பிதுக்க ஒடுக்கங்களாகவும் அமைந்துள்ளன. ஒரே நேர்கோட்டில் அமைந்த விமானங்களாகப் பெருமுடி அகத்திசுவரர், கோயிலடி திவ்யஞானேசுவரர் கோயில்களைக் குறிக்கலாம். பெரும்பாலான விமானங்கள் சாலைப் பத்தி மட்டும் பிதுக்க முற்ற நிலையில் உள்ளன. கீழையூர் வடவாயில், தென்வாயில் பூரீகோயில்கள் இத்தகையன. பிதுக்க ஒடுக்கங்களைப் பெற்ற விமானங்களாக சீனிவாசநல்லூர் குரங்கநாதர், திருப்புறம்பியம் சாட்சீசுவரநாதர் கோயில்களைக் குறிக்கலாம். அர்த்த மண்டபங்கள் பெரும்பாலும் விமான அமைவைப்பின்பற்றியும், சில இடங்களில் மாறுபட்டும் காட்டப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்தில் பெருவழக்குப் பெற்ற பாதபந்தத் தாங்கு தளமே இக்கற்றளிகள் பெரும்பாலானவற்றின் தாங்குதளமாகத் தொடர்ந்தமைந்தது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை, துணைக்கம்பு எனும் முதன்மை உறுப்புகளோடு தாமரை வரிகள், கம்புகள் ஆகியவற்றை உரிய இடங்களில் நுழைத்தும் உபானத்தைத் தாமரையாக வடித்தும் பாதபந்தத் தாங்குதள கட்டமைப்பிலேயே பல மாறுதல்களைப் பெற்றமைந்த கற்றளிகளும் இவற்றுள் உண்டு. பாதபந்தத் தாங்குதளத்தோடு பத்ம உபானம் பெற்றதால் ஒதவனேசுவரர், நாகேசுவரர் விமானங்களின் தாங்குதளங்கள் பத்ம வகையினவாகக் கொள்ளப்படுகின்றன. கண்ட பாதங்களில் இதிகாச, புராணக் காட்சிகளைச் சிற்றுருவச் சிற்பங்களாகக் காட்டும் முறை முதன் முதலாக இப்பருவத்தில்தான் தோன்றியது. இத்தகு சிற்பங்களை நாகேசுவரர், பிரம்மபுரீசுவரர், சடையாரிக் கோயில் முதலியவற்றில் காணலாம்.
பாதபந்தத் தாங்குதளத்திற்கு அடுத்தாற்போல் பிரதிபந்த, பத்ம பந்தத் தாங்குதள அமைப்புகள் கானப்படுகின்றன. இவையிரண்டும் ஜகதி, உருள்குமுதம், பிரதிவளி எனும் உறுப்புகளையே பெற்றமைந்தாலும், ஜகதி பெருந்தாமரையாக வடிக்கப்பட்டிருந்தால் அதன் பொருட்டு அக்கட்டமைப்பை பத்ம பந்தம் என்பர். திருச்செந்துறை, வாலிகண்டீசுவரர் கோயில்கள்

சோழர் காலக் கட்டடக்கலை
அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம் பளுவூர் பிரதிபந்த தாங்குதளம்
- பருவூர்

Page 90
சோழர் காலத்து கோயில்கள்
تضحكسخصحسيكييتي இ
திருவாலிஸ்வரம் சிவன் கோயில் பன்னார் கோயில் கோபால சுவாமி
துவிதள filmTATL கோயில் சாவ விாகனம்
 

.(1_1 1
=
தஞ்சைப் பெருங் கோயில் கங்கை கொண்ட
சோழேஸ்வரம் - விமா னம்
தஞ்சைப் பெருங்கோயில் கோபுரவாசல்

Page 91
கங்கை
கொண்ட சோழேஸ்வரம்
திருச்சுற்று LITiflin.H.
கங்கை
கொண்ட சோழேஸ்வரம் மகாமண்டபம்
கங்கை
கொண்ட சோழேஸ்வரம் வாயிற் காவலர்
 

濂,* கங்கை கொண்ட சோழேஸ்வாம் கங்கை கொண்ட சோழேஸ்வரம்
விமானத்து மாடக்குழி விமானத்து மாடக்குழி
盧灣臺豎 క్ష్ ܀
கங்கை கொண்ட சோழேஸ்வரம் விமானத்தின் பின்புறத் தோற்றம்

Page 92
மேலைக் கடம்பூர் அமிர்தகடேசுவரர்
திரிபுவனம் கோயில் துவிதன விமானம்
 

சிதம்பரம் வடக்கு கோபுரம்
சிதம்பரம்
மண்டபம்
சிதம்பரம் மண்ட மும் கோபுரமும்
ܝܲܬܝܼܢܬܐ ܒܗ̱ܬ̣ܝܼܐ̣ܣܛ

Page 93
ിട്ടll||tf 68|| ||6|| [[ ]
由 t ரதது மீன் சின்னம்
நாடடிய காங்காங்கள
சிதம்பரம் கீழைக் கோபுரத்தின் கீழ்ப்பகுதி நாட்டிய கரணங்கள்
 
 

இந்து பாராம்- கோயின்கரும் சிய்ய ங்களம் ill
இவ்வகையின. பல்லவச் செதுக்குத் தளியான தர்மராஜரதத்திற் காணேப்படும் கபோத பந்தத் தாங்கு தளம் இப்பருவத்தைச் சேர்ந்த பிரம்மபுரீசுவரர் கோயிலில் எடுப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான விமானங்களின் சுவர்கள் தாங்குதளத்தின் மேல் அமைந்துள்ள வேதிகைத் தொகுதியுடன் தொடங்குகின்றன. இன் வேதிகைத் தொகுதி பாதங்களோடு கூடிய கண்டம், மேற்கம்பு, அதபத்ம வரி தழுவிய வேதிகை என அமையும். வேதிக் கண்டத்தின் பாதங்களிலும் இதிகாச புராணக் காட்சிகளைச் சித்திரிக்கும் சிற்றுருவச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சான்றாகப் பிரம்மபுரிசுவார். நாகேசுவரர் தளிகளைக் கூறலாம். பொதுவாக நான்முக அரைத்தூண்களும், சிறப்பாகச் சில தனிகளில் எண்முக பன்முக அரைத்துரண்களும் சுவர்த் தூண்களாக அமைந்துள்ளன. அரிதாக உருளைத் தூண்களும் கானப்படுகின்றன. இவை பத்திப் பிரிப்புகளின் அனைவுத் தூண்களாகவும், சுவரில் பதிக்கப்பட்ட அலங்களிப்புகளாகவும் அமையும். முற்றிலும் நான்முக அரைத்துண்கள் கொண்டமைந்த விமானங்களாக நாகேசுவரர், கடம்பவனேசுவரர், திருத்தொண்டீசுவரர் விமானங்களைச் சுட்டலாம். எண்முகத் தூண்கள், உருளைத் தூண்கள், நான் முகத் தூண்கள் மூன்றும் கலந்தமைந்த கட்டமைப்புகளாகக் குரங்கநாதர், சடையாளி கோயில் விமானங்களைச் சுட்டலாம்.
கோட்ட அனைவுத் தூண்கள் பெரும்பாலும் சட்டத் தலையுடன் கூடிய நான்முக அல்லது உருளைத் தூண்களாகவே அமைகின்றன. அரிதாக எண்முகத் தூண்களும் அமைவதுண்டு. எடுத்துக் காட்டாக சப்தரிஷிகவார் விமானத்தைக் குறிப்பிடலாம். இத்தூண்கள் உடல், மாலைத் தொங்கல், ஸ்தானம், தாமரைக் கட்டு, கவசம், தாடி, கும்பம், பாவி அல்லது தாமரை, பலகை, விரகண்டம், போதிகை கொண்டமையும்.
பிரம்மபுரீசுவரர், குரங்கநாதர் விமானச் சுவர்களிலுள்ள அரைத்து விண்கள் ஓமம் எனும் அடிப்பகுதியைப் பெற்றுள்ளன. தூண்களின் மாலைத் தொங்கல் மற்றும் ஸ்தா ளம் பகுதிகளில் எழிலார்ந்த சிற்றுருவச் சிற்பங்களை இப்பருவத்தில்தான் பரவலாகவும், பெருமளவிலும், காணமுடிகிறது. பல்லவத் தளியான காஞ்சிபுரம் பரமேசுவா விண்ணகரத்தில் இதன் தொடக்க நிலையைக் கண்ணுற்றாலும் வளர்நிவைகளை இப்பருவத்திலேயே காலான முடிகிறது. பிரம்மபுரீசுவரர், பொன்செய் நல்து5ை00 சுவோர். குரங்கநாதர் தளிகள் இத்தகு சிற்பங்களின் கருவூலங்களாக விளங்குகின்றன. இவை பற்றி விரிவாகச் சோழர் கால சிற்பக்கலை என்ற தலைப்பின் கீழ்ப் பார்க்கலாம்.

Page 94
160 சோழர் காலக் கட்டடக் கலை
கலசம், தாடி, கும்பம், தாமரை, அல்லது பாலி ஆகிய உறுப்புகள் சில தளிகளில் சிறந்த அலங்கரிப்பைப் பெற்றுள்ளன. இப்பருவப் போதிகைகள் தரங்கக் கைகளுடன் அமைந்தாலும் அலைகளிடையே ஒரு தாழ்ச்சி பெற்றுப் பல்லவத் தரங்கத்திலிருந்து வேறுபடுகின்றன. இத்தாழ்ச்சியைக் குளவு என்பர்.
வேதபுரீசுவரர், ஆபத்சகாயேசுவரர், நாகேசுவரர், சடையாரி முதலிய தளிகளில் சாலை, கர்ணப் பத்திகள் அனைத்துமே பிதுக்கமாக அமைந்து இடைப்பட்ட பகுதிகளில் ஒடுக்கங்களைக் கொண்டுள்ளன. இவை அனைத்திலும் சாலைப் பத்திகள் மட்டுமே கோட்டங்கள் பெற்றுள்ளன. சாலைப் பத்திகளை ஒட்டிய ஒடுக்கங்களிலும் அளவில் சிறுத்த கோட்டங்கள் உள்ளன. ஒதவனேசுவரர்,நாகேசுவரர், ஆபத்சகாயேசுவரர் ஆகிய தளிகளில் ஒடுக்கக் கோட்டங்களும் சிற்பங்கள் கொண்டுள்ளன. பிரம்மபுரீசுவரர், வசிஷ்டேசுவரர் விமானங்களின் ஒடுக்கங்களில் நிஷ்கராந்த பஞ்சரம் இடம் பெற்றுள்ளது. எறும்பீசுவரர் விமானத்தில் சாலை, கர்ண பத்திகளுக்கிடையே இப்பஞ்சரம் காணப்படுகிறது. மாமல்லபுரம் வலையன்குட்டைத் தளியிலும், உலக்கனேசுவரத்திலும் காணப்படும் சுவர்ப்பஞ்சரங்களின் வளர்நிலைகளாக இவற்றைக் கொள்ளலாம்.
கர்ண பத்திகள் கோட்டங்களின்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பல்லவ மரபிலிருந்து ஏற்படும் விலக்கமாகும். திருத்தொண்டீசுவரம், திவ்யஞானேசுவரம், அகத்தீசுவரம் விமானங்கள் சாலைப் பத்தியில் மட்டும் கோட்டங்கள் கொண்டுள்ளன. இக்கோட்டங்கள் வேதியை ஊடறுத்துத் தாங்குதளம் வரை நீண்டுள்ளன. பல்லவக் கோட்டங்களை விடச் சோழர் கோட்டங்கள் நன்கு வரையறுக்கப்பட்டு, முழுமையடைந்த நிலையில் அதற்குரிய இறைவடிவம் மட்டும் பெற்றுத் திகழ்கின்றன.
சட்டத் தலையுடன் கூடிய கோட்ட அணைவுத் தூண்கள் வீரகண்டத்தின் மீது உத்திரம், வாஜனம், தாமரை வலபி பெற்று மேலே மகர தோரணம் கொண்டுள்ளன. பல்லவர் காலத்தில் இவ்வணைவுத் தூண்களின் பலகைகளின் மீது மகரங்கள் அமருமாறு அமைக்கப்பட்ட முறை இப்பருவத்தில் முற்றிலுமாய் மாறியமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டத்தலைத் தூண்களும் இப்பருவத்திலேயே பெருவழக்குப் பெற்றன. கோட்டங்களை ஒட்டிய பக்கச் சுவர்களில் கோட்டத் தெய்வத்தோடு தொடர்புடைய சிற்பக் காட்சிகளை அமைக்கும் முறையைச் சில விமானங்களிற் காணமுடிகிறது. பிரம்மபுரீசுவரர் இவ்வகைச் சிற்பங்களை அனைத்துக் கோட்டங்களை ஒட்டியும் பெற்றுள்ளது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 16
மகர தோரணங்களில் பூத கணங்களையும், சிவபெருமானின் ஆடல் தோற்றங்களையும், கீழ் மகரங்களுக்கு இடைப்பட்ட வளைவிலும் மேல் மகரங்களுக்கு இடைப்பட்ட வளைவிலும் காட்டும் போக்கு இப்பருவத் தளிகளில் காணப்படுகிறது. தென்வாயில் பூரீகோயிலின் தென் மகர தோரணத்தில் சிவபெருமானின் ஊர்த்வஜாறு கரணத் தோற்றம் மிகச் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுரீசுவரர் வட தோரணத்தில் மற்றொரு ஆடல் தோற்றம் காணப்படுகிறது. திருஎறும்பியூர் தென் தோரணம் காலத்தால் முற்பட்ட சிவபெருமானின் புஜங்கத்திராசித கரணக் கோலத்தைக் கொண்டுள்ளது. சில தோரணங்கள் விஷ்ணுவோடு தொடர்புடைய புராணக் காட்சிகளைச் சித்திரிக்கின்றன.
இப்பருவத் தளிகளின் கூரையுறுப்புகளாக வாஜனம், வலபி, கபோதம் ஆகியவை இடம் பெறுகின்றன. பெரும்பாலான வலபிகள் பூதவரியால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மிகச் சிறந்த பூதவரி வலபிகளைத் தென்வாயில், வடவாயில் பூரீகோயில்களிலும், ஆபத்சகாயேசுவரரிலும் காணலாம். சுவர்ப் பலகைகளின் மீது நின்றவாறு கபோதம் தாங்கும் தாங்கு சிற்பங்கள் (Bracket Figures) பல்லவர் காலத்தில் தாவு யாளிகளாக அமைந்தன. இவை இப்பருவ காலத் தளிகளில் கரணக் காரிகைகளாய் மாறின. பிரம்ம புரீசுவரர், நாகேசுவரர், திருத்தொண்டீசுவரர் தளிகள் சிறந்த எடுத்துக் காட்டுகளாய் அமையும். கூரையின் வெளியிழுப்பாக வளைந்திறங்கும் கபோதம், விளிம்பில் சந்திர மண்டலம் பெற்றும், மேற்பரப்பில் மூலை மற்றும் மையப் பகுதிகளில் கொடிக்கருக்குகள் பெற்றும், அமைந்துள்ளது. கபோதக் கூடுகள் பெரும்பாலான தளிகளில் சிம்மத் தலையமைப்புக் கொண்டுள்ளன. இது பல்லவ முறைக்கு மாறுபட்டது. கபோதக் கூடுகளில் கந்தர்வத் தலைகளே பெருமளவில் அமைந்த பல்லவ மரபிலிருந்து விலக்கமேற்பட்டு பல்வேறு புராணக் காட்சிகள், ஆடற் சிற்பங்கள், இறை உருவங்கள் இக்காலத்தமைந்தன.
ஆதிதளக் கோட்டங்களில் தென்புறம் தகூழிணாமூர்த்தியும், மேற்கில் அம்மையப்பர், விஷ்ணு, லிங்கோத்பவர் ஆகிய மூவருள் ஒருவரும், வடக்கில் நான்முகனும் இடம்பெற, அர்த்த மண்டபத் தென் கோட்டத்தில் கணேசரும், வடகோட்டத்தில் துர்க்கையும் இடம்பெறும் மரபு பெருமளவிற்குப் பின்பற்றப்பட்டது. எறும்பீசுவரர் விமானத்தில் மேற்குக் கோட்டத்தில் ஹரிஹரர் இடம் பெற்றிருப்பது விதிவிலக்காகும். சந்திரசேகரர், திருத்தொண்டீசுவரர் ஆகிய இரு தளிகளில் தென் கோட்டத்தில் தட்சிணாமூர்த்திக்குப் பதிலாக ரிஷப தேவர் இடம் பெற்றுள்ளார். சற்றுப் பிற்பட்ட தளிகளில், செம்பியன்

Page 95
62 சோழர் காலக் கட்டடக் கலை
மாதேவி திருப்பணிகளில், கோட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அகஸ்தியர், பிச்சாடனர், கங்காதரர், நடராஜர், ஆலிங்கனமூர்த்தி முதலிய சிற்பங்களும் இடம்பெறலாயின.
இப்பருவத் தளிகளிற் பெரும்பாலானவை இரு தள விமானங்களாக அமைந்துள்ளன. மிகச் சிலவே ஒரு தள விமானங்களாக உள்ளன. அகத்தீசுவரம், எறும்பீசுவரம், திருத்தொண்டீசுவரம் ஆகியன ஒரு தள விமானங்கள். அவற்றுள் திருத்தொண்டீசுவரம் தூய நாகர விமானம். ஏனைய இரண்டும் கலப்பு வேசரமாக உள்ளன. இரு தள விமானங்கள் பெரும்பாலும் நாகரமாகவும், சில கலப்பு வேசரமாகவும் உள்ளன. லுதவனேசுவரம், தென்வாயில் பூரீகோயில், நெய்யாடியப்பர், ஆபத்சகாயேசுவரர், குரங்கநாதர் விமானங்கள் தூய நாகர இரு தள விமானங்கள். வேதபுரீசுவரரும், வடவாயில் பூரீகோயிலும் இரு தளக்கலப்பு வேசர விமானங்கள் பிரம்மபுரீசுவரர் கோயில் முத்தளத் தூய நாகரம்.
ஒரு தள விமானங்கள் ஆதிதளக் கூரைக்கு மேல் வேதிகை, கிரீவம், சிகரம், தூபி பெற்றமைந்துள்ளன. கிரீவ, சிகர நாசிகைகளிற் பெரும்பாலும் வடக்கில் நான்முகனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் சிவபெருமான் அல்லது முருகனும், மேற்கில் விஷ்ணுவும் காணப்படுகின்றனர். கிரீவ சுவரில் அரிதாகவே நான்முக அரைத்தூண்களையும், விருத்த ஸ்புடிதங்களையும் காணமுடிகிறது. இதற்கும் உடையார்குடி அனந்தீசு வரம் சிறந்த சான்றாகும். பெரும்பாலான கிரீவ சிகரங்கள் செங்கல் கட்டுமானங்களாக உள்ளன.
இரு தள விமானங்களில் ஆதிதளக் கூரைமீது ஆர உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. இவை பொதுவாக ஒவ்வொரு புறத்தும் சாலை, சாலையின் இரு புறத்தும் கர்ணகூடம், இவற்றை இணைக்கும் ஆரச் சுவர் என அமைந்துள்ளன. பல்லவத் தளிகளில் இடம்பெற்ற பல்சாலை அமைப்பு சோழத் தளிகளில் இல்லை. ஆனால், ஆறங்கச் சாலைகள் தொடர்ந்து இடம்பெற்றன. சந்திரசேகரர், தென்வாயில் பூரீகோயில், கொடும்பாளூர் நடுத்தளி ஆகியவற்றில் இத்தகு சாலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கர்ண கூடங்கள் வழக்கமான நான்கு அங்கங்களுடன் அமைந்திருப்பதுதான். ஆரத்தில் இடம்பெறும் அல்ப, சூத்ர நாசிகைகள் பல்லவத் தளிகள் பேர்ல் அல்லாது ஒரே அமைப்புடன் காட்சியளிக்கின்றன. மிகச் சில விமானங்கள் தவிர ஏனையவற்றில் அல்ப நாசிகைகள் மட்டுமே

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 163
சிற்பங்கள் கொண்டுள்ளன. வடவாயில், தென்வாயில், பூரீகோயில்கள், சந்திரசேகரர், கொடும்பாளூர்த் தளிகள், திருக்கட்டளை சுந்தரேசுவரர் ஆகியவற்றில் ஆரம் முழுவதும் அற்புதமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இரு தள விமானங்களின் இரண்டாம் தள அரமியம் குரங்க நாதர் தவிர ஏனைய கோயில்களில் அர்ப்பித ஆரத்திற்குப் பின்னெழும்பும் சுவரின் மேற்பகுதிகளாகவே காட்டப்பட்டுள்ளன. பெரும் பாலும் கலசத்திலிருந்து தொடங்கும் அரைத்தூண்களும், அவற்றின் மேலுறுப்புகளும், கூரையும் கொண்டு இத்தளம் அமைந்துள்ளது. தென்வாயில், வடவாயில் பூரீகோயில்கள் போல் சில விமானங்களில் இத்தளத்தின் சாலைப் பத்தி பிதுக்கமாய் உள்ளது.
அரமியத் தூண்கள் அனைத்து விமானங்களிலும் நான்முகமாகவே உள்ளன. கொடும்பாளூர் நடுத்தளியில் தூண்களுக்கிடையே விருத்த ஸ்புடிதங்கள் காணப்படுகின்றன. இப்பருவத் தளிகள் எவற்றிலும் இரண்டாம் தள அரமியத்தில் கோட்டங்களையோ, சிற்பங்களையோ காணமுடியவில்லை. இருதள விமானங்களில் இரண்டாம் தளத்தின் மேல் ஆரம் அமைக்கும் பழக்கம் இப்பருவக் கோயில்கள் எவற்றிலும் காணப்படவில்லை.
கிரீவ வேதிகையின் நாற்புறத்தும் இப்பருவக் கோயில்கள் அனைத்திலும் அமர்ந்த நந்திகள் இடம் பெற்றுள்ளன. கிரீவ சுவரில் வேதபுரீசுவரம் போன்ற ஒரிரண்டு தளிகள் சிற்பங்களைக் கொண்டுள்ளன. பிற கோயில்களில் இவ்வமைப்பு இல்லை. கிரீவ, சிகர நாசிகைகள் ஒரு தள விமானங்கள் போலவே சிற்பங்களைக் கொண்டுள்ளன.
இராஜராஜிசுவரத்திற்கு முற்பட்ட இப்பருவத் தளிகளில் பல்லவக் கட்டட மரபின் தொடர்ச்சியாக விமானப் பொது அமைப்பு, விருத்த ஸ்புடிதங்கள், ஆறங்கச் சாலைகள், கிரீவ நந்திகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. பாதபந்தத் தாங்குதளச் சிற்றுறுப்புகள், கண்ட பாதச் சிற்பங்கள், மாலைத் தொங்கல், ஸ்தானம், தாமரைக் கட்டுச் சிற்றுருவச் சிற்பங்கள் போதிகைக் குளவு ஆகியவற்றைப் புதியனவாகக் குறிப்பிடலாம். இப்பருவத்தெழுந்த எந்தத் தளியும் பல்லவர் கைவண்ணமான கடற்கரைக் கோயில் வளாகம் போலவோ, சிற்பக் களஞ்சியமான காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் போலவோ, கட்டடமும், சிற்பமும் கலந்தியைந்து உருவான முத்தளச் செதுக்குத் தளியான தர்மராஜரதம் போலவோ பெருமைப்படைப்புகளாய் எழவில்லை எனினும் கலை வரலாற்றில் அவற்றிற்கென ஓரிடமுண்டு.

Page 96
r சோழர் காவக் கட்டடக் கலை
விமானங்கள்
(р. 5, 60 I LI ராஜ ராஜ ருக் கும்
t L ចំ 四
குலோத்துங்கருக்கும் இடைப்பட்ட காலத்தில் இரு வ  ைக பா ன விமானங்கள் எழுந்தன. முதல் வகையின் முதலாம் ராஜராஜருக்கு முற்பட்ட அமைப்பைப் பின்பற்றி ஒரு தள, இரு தள அல்லது முத்தள விமானங்களாக அமைந்தன. இவ்வகை விமானங்களுட் குறிப்பிடத்தக்கன
மதகடிப்பட்டு குண்டங்குழி மகாதேவர், எசாலம் ராமநாதேசுவரம், மேல்பாடி அறிஞ்சிகை ஈசுவரம், பழையாறை பஞ்சவன் மாதே விசுவரம், பொலன்னறுவை வானவன்மாதேவிசுவரம், தாதபுரம் சிவன் கோயில், சேரமாதேவி ராமசுவாமி, மன்னார்கோயில் கோபாலசுவாமி, திருவாவீசுவரம் சிவன் கோயில், பிரம்மதேசம் கைலாசநாதர், திருவொற்றியூர் ஆதிபுரிகவரர், மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் முதலிய கோயில்களின் விமானங்களாகும்.
இரண்டாம் வகையின தஞ்சாவூரில் உருவான ராஜராஜீசுவரத்தைத் தொடர்ந்து பல்தள விமானங்களாக எழுந்தன. கங்கை கொண்ட சோழீசுவரம், தாராகரம் ராஜராஜேசுவரம், திருபுவனம் திரிபுவனவிரேசுவரம் இவ்வகையின.
முதல் வகையைச் சேர்ந்த மன்னார்கோயில் கோபாலசுவாமி தளி, சாலை வகையைச் சார்ந்தது. ஏழு பத்திகளாகப் பிரியும் விமானச் சுவர் பிரதிபந்தத் தாங்குதளத்தில் மிகப் பெரிதாக எழுந்துள்ளது. மூன்று தளங்களில் பல்லவர் கால சுந்தரவாதப் பெருமாள் கோயில் போல விஷ்ணுவின் நின்ற, அமர்ந்த, சயனக் கோலங்களைக் கொண்டு திகழும் இத்தளியின் கவர்களில் நான்முக அரைத்தூண்கள் பத்திகளுக்கிடையில் கோட்டப் பஞ்சரங்கள், மேற்றளங்கள்
செங்கல் கட்டுமானம் தள ஆரங்கள் அனர்ப்பிதமாக உள்ளன.
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 15
இது போலவே முத்தளம் கொண்ட ராமசுவாமி கோயில் விமானம் பாதபந்தத் தாங்குதளத்தில் எழுந்துள்ளது. இதன் மேற்றளங்களும் செங்கல் கட்டுமானங்களே. பிரம்மதேசம் கைலாசநாதர் விமானம் பாதபந்தத் தாங்குதளத்தின் மீது அமைந்துள்ளது. இதன் கவர்த்தூண்கள் மாலைத் தொங்கல், ஸ்தானம்,கலசம் ஆகியவற்றில் மிகச் சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. பலகை இரட்டைப் பலகை போல வடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருவாவிசுவரர் விமானம் இப்பருவத்தில் எழுந்த விமானங்களுள் தனித்துவம் வாய்ந்தது. இவ்விருதள திராவிட விமானத்தின் ஆதிதளப் பத்திகள், மேல் ஆரங்களோடு இணைந்த நிலையில் தனி விமானங்களைப் போலக் காட்சிதருகின்றன. பிரதிபந்தத் தாங்குதளமும் கோட்டங்களற்ற சுவரும், ஆரச் சிற்பங்களும் இவ்விமானத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள், சோழர் காலத்து இரண்டாம் பருவத்தில் எழுந்த சிறு விமானங்களுள் இது ஒரு மைற் கல் எனலாம். திருவொற்றியூர் ஆதிபுரீசுவரரும், கூவம் திரிபுராந்தகேசுவரமும் முத்தளத் தூங்கானை மாடத் தளிகள். ஆதிபுரீசுவரர் ரவி தச்சராற் கட்டப்பட்டது. பத்மபந்தத்தின் மீதெழும் ஆதிதளச் சுவரில் நான்முக, எண்முக, உருளைத் தூண்கள் உள்ளன. ஆரத்தில் பஞ்சரங்கள் உள்ளன. இக்காலத்தளித் தூண்களின் போதிகைகள் வெட்டுப் போதிகைகளாக உள்ளன.
மேலைக் கடம்பூர் அமிர்தகடேசுவரர் ரதம் போல் அமைந்த இரு தள விமானமாகும். இதன் நாகர ஆதிதளத்துடன் வடக்கிலும், தெற்கிலும் நான்கு சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம் கொண்டுள்ள இதன் சுவர்களில் அழகிய வேலைப்பாடமைந்த முற்றிலும் புத்தமைப்புக் கொண்ட எண்முகத் தூண்கள். இத்தூண்களின் பல பகுதிகளிற் சிற்பங்கள். பலகைகளின் மேல் தாவுயாளிகள், தாங்கு சிற்பங்களாய் ஆடற்பெண்கள். போதிகைகள் பூமொட்டுக் கொண்டுள்ளன. கபோதம் சந்திர மண்டலமும் நெடுக்குச் செதுக்கலும் பெற்றுள்ளது. தேவகோட்டங்கள் முன்றில்கள் பெற்றுள்ளன. இவற்றின் மேல் வித்யாதரர்கள் தாங்கும் பெருநாசிகைகள். இவை இரண்டாம் தள அரமியம் வரை நீள்கின்றன. திராவிடமாக உள்ள இரண்டாம் தள அரமியத்தில் விருத்த ஸ்புடிதங்கள் உள்ளன. எண்முக கிரீவத்திற் சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பருவ
விமானங்களுள் அமிர்தகடேசுவரர் விமானம் தனித்துவம் வாய்ந்தது.

Page 97
166 சோழர் காலக் கட்டடக் கலை
தஞ்சைப் பெருங்கோயில்
சோழர் காலக் கட்டடக் கலையின் உன்னத வெளிப்பாடாய், தமிழினமே பெருமைப்படக்கூடிய மாபெரும் படைப்பாய் தஞ்சாவூரில் முதலாம்ராஜராஜரால் உருவாக்கப்பட்ட ராஜராஜிசுவரம் தட்சிணமேகு எனப் பெருமைபடுத்தப்பட்ட இமாலய விமானம் ஆகும். மிகப் பரந்துபட்ட பரப்பில் அகலமான அடித்தளத்தில் தொடங்கி மேலே செல்லச் செல்ல அகலம் குறுகி பதினைந்து தள விமானமாய் தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்டடச் சிறப்பாய் அது விளங்கும். அதன் கலசத்தின் உயரம் மட்டும் 13 அடி அடி முதல் முடி வரை கற்றளியாய் அமைந்த இத்திருக்கோயில் பல முதல்களுக்குச் சொந்தமானது. கேரளாந்தகன் திருவாசல், ராஜராஜன் திருவாசல் எனும் பெயர்களில் அமைந்த இரு அகன்ற கோபுரங்களையும், அவற்றோடு சூழ்ந்த திருமதில்களையும் கொண்ட இத்திருக்கோயிலே பழங்கோபுரங்களை அதே கட்டமைப்பில் கொண்டிருக்கும் முதற் சோழத் தளி எனலாம்.
இராஜராஜன் திருவாசலின் ஆதிபூமியும் முதல் தளமும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாகத் துணைத்தளமான ஆதிபூமி நான்கு திசைகளிலும் பல அரிய புராணச் செய்திகளைச் சிற்பக் காட்சிகளாகக் கொண்டுள்ளது. துணைத் தளத்தில் இத்தனை சிற்பக் காட்சிகளுடன் அமைந்த ஒரே சோழர் கோபுரம் இதுதான். இவ்வாயிலுடன் இணைந்தமைந்த திருச்சுற்றுமாளிகை இரு தளங்கள் கொண்டுள்ளது. இவ்வமைப்புமுறை இதற்கு முற்பட்ட திருக்கோயில்களில் இருந்தமைக்குச் சான்றில்லை. இம்மாளிகையின் கீழ்த்தளத்தில் எண்திசைக் காவலர்களின் திருமுன்களும் பல்வேறு இறைத் திருமுன்களும் உள்ளன. இது போல் எண்திசைக் காவலர்களின் திருமுன்கள் கொண்டமைந்த முதல் மாளிகையும் ஒரே மாளிகையும் இது தான். இரு தள விமானங்களாக அமைந்துள்ள இத்திருமுன்கள் அனைத்தும் கதலிகாகரண முறையில் மூடப்பட்டுள்ளன. ஆறடி உயரமுள்ள துணைத்தளத்தின் மீது எட்டேகால் அடி உயர பத்மபந்தத் தாங்குதளம் அமைய அதன் மீது ராஜராஜிசுவர விமானம் கண்கொள்ளாக் காட்சியாய், கட்டமைப்புச் செயல் முறைகள் விளங்காப் புதிராய் ஏறத்தாழ இருநூறு அடி உயரத்திற்கு எழுகிறது. சிற்பங்களற்ற துணைத்தளமும் முத்துமுத்தாய் கல்வெட்டெழுத்துக்கள் பொறித்த தாங்குதளமும் இக்கட்டடத்தின் தனிச்சிறப்பு. ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்ட ஆதிதள, முதற்தளச் சுவர் ஒடுக்கங்கள் குடப் பஞ்சரங்களைப் பெற்றுள்ளன. முதற்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 167
தளத்தின் அனைத்துப் பத்திக் கோட்டங்களும் பல்வேறு இறை தோற்றங்களைப் பெற்றிருக்க, இரண்டாம் தளக்கோட்டங்கள் திரிபுராந்தக வடிவத்தையே கொண்டுள்ளன.
பத்ர சாலைக் கோட்டங்கள் இரு தளங்களிலும் நாற்புறத்தும் வாயில்களாக அமைந்து ராஜராஜிசுவர விமானத்தைச் சர்வதோபத்ர விமானமாக்கியுள்ளன. இப் பத்ர சாலைக்கோட்ட வாயில்களின் இருபுறத்தும் கீழ்த் தளத்திற் காவலர் வடிவங்களும்,மேற்றளத்தில் திரிபுராந்தக வடிவங்களும் காட்டப்பட்டுள்ளன. பிரம்மபுரீசுவரர் பாணியைப் பின்பற்றிக் கோட்டச் சிற்பங்களின் இரு புறத்துமுள்ள ஒடுக்கங்களில் தொடர்புடைய சிற்பங்கள் சிறிய அளவினவாய்க் காட்டப்பட்டுள்ளன. சுவர் அரைத்துரண்கள் அனைத்தும் நான்முகமாக உள்ளன. போதிகைகள் வெட்டுப் போதிகைகளாக உத்திரம் தாங்குகின்றன. முதல் இரு தளங்கள் அமைப்பிலும், கட்டுமுறையிலும் குரங்கநாதர் கோயிலைப்பின்பற்றியுள்ளன. இரண்டாம் தளத்திற்கு மேல் அமையும் ஆரம், மேற்றளங்கள் அனைத்திலும் இறுதித் தளம் தவிர அர்ப்பிதமாகவே அமைந்துள்ளது. ஆர உறுப்புகள் இதுவரை பார்த்திராத தோற்றங்கள் காட்டுகின்றன. சில ஆறங்கம் கொண்டு அமைந்துள்ளன. அரமியச் சுவர்கள் மேற்செல்லச் செல்லக் குறுகிப் பலகை, வீரகண்டம் காட்டுமளவில் தூண்களைப் பெற்று உரையுறுப்புகளுடன் முடிகின்றன. இறுதி தள வேதிகையின் மேல் நான்கு மூலைகளிலும் நந்திகள் முற்றிலும் கருங்கல்லால் ஆன இவ் ஆளுயர நந்திகள் இயல்பான அழகு படைத்தவை. கிரீவச் சுவரில் வடமேற்கில் ஆளுயரச் சிற்பமொன்று காணப்படுகிறது. அது சோழர் காலத்திற் கொடிமரமாகப் பயன்பட்டதெனக் கருதலாம். கிரீவ சிகர நாசிகைகளிற் பேரளவிலான இறைத் தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
கருவறையைச் சுற்றி இரு சுவரமைப்புப் பெற்ற சாந்தார விமானமான ராஜராஜிசுவரம் மிகப்பெரிய லிங்கத் திருமேனியைக் கொண்டுள்ளது. அதன் முதலாவது தளச் சாந்தார நாழியிற் சோழர், நாயக்கர் கால ஒவியங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தளச் சாந்தார நாழியிற் சிவபெருமானின் கரணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்விமானத்தின் உச்சித் தளமும், திராவிட சிகரமும் பல கற்களால் ஆனவை. இவ்விமானத்தின் நிழலும், தூபிக் குடத்தின் நிழலும் கட்டட வளாகத்திற்குள் விழுவது கண்கூடு. சாந்தார நாழிகை இரு சுவர்களையும் இரண்டாம் தளத்திற்கு மேல் கதலிகாகரண முறையில் நெருங்கி ஒரு சுவராக்கியிருக்கும் புதிய கட்டுமானம். அது முதன் முறையாக ராஜராஜிசுவரத்திற் காணப்படுகிறது.

Page 98
168 சோழர் காலக் கட்டடக் கலை
விமானத்தையும், அதன் முன்னிருக்கும் மண்டபங்களையும் இருபுறமும் திறப்புள்ள இடை நாழிகையொன்று இணைக்கிறது. மூன்றடுக்குள்ள இவ்விடைநாழிகை வடக்கிலும், தெற்கிலும் கொண்டுள்ள படி வரிசைகள்,தம் பிடிச் சுவரில் எழிலார்ந்த சிற்பங்களைக் கொண்டுள்ளன. இவ் இடை நாழிகையின் கூரையைக் கனத்த, நெடிய நான்முகத் தூண்கள் தாங்குகின்றன. விமானத்திற்கு முன் அமைந்துள்ள ஒரு தள மண்டபங்களும் விமானம் போலவே கட்டமைப்புக் கொண்டுள்ளன. இதன் வடக்கிலுள்ள இரு
தள சண்டேசுவரர் விமானம் கலப்புத் திராவிட வகைக்குரியது.
கங்கை கொண்ட சோழீஸ்வரம்
இராஜராஜிசுவரத்தைப்பின்பற்றி அமைந்த கங்கை கொண்ட சோழிசுவரம் பல தனிச் சிறப்புகளை உடையது. இராஜராஜிசுவரத்தை விடக் குறைந்த அளவிலான தளங்களைக் கொண்ட இவ்விமானம் அதைப் போல் கூர்முனை கொள்ளாமல் நான்காம் தளம் வரைஅகலமாகவே அமைந்தது. பின் மெல்லச் சதுர அமைப்பை இழப்பதுபோல ஒரு தோற்றம் தந்து உயரும் கட்டுமானமாகும். கிரீவமும், சிகரமும் வேசரமாக அமைந்த இக்கலப்பு விமானம் இரண்டாம் தளத்திலிருந்து எட்டாம் தளம் வரை ஆரங்களைப் பெற்று ஒன்பதாவது தளத்தில் ஆரமின்றி அமைந்துள்ளது. அதன் துணைத் தளம் கொடிக்கருக்குகளையும் சிம்ம உருவங்களையும் பெற்றுள்ளது. ஆதிதள, முதல்தளச் சுவர்களில் விஷ்ணுகாந்த அரைத்துரண்கள் இடம் பெற்றுள்ளன. பத்ரசாலைப் பத்திகளில் வாயில்கள் இல்லை. கோட்டச் சிற்பங்கள்ை அடுத்துள்ள சுவர்களில் தொடர்புடைய சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. கோட்டங்களுக்குக் கீழும் தொடர்புடையில் சிற்பங்கள் காணப்படுவது இத்தளியின் சிறப்பம்சமாகும். இரண்டாம் தள ஒடுக்கங்களிற் குடப் பஞ்சரங்களுக்குப் பதிலாகக் கோட்டங்களும் அவற்றுள் சிற்பங்களும் காணப்படுகின்றன. இராஜராஜிசுவரத்திலிருந்து மாறுபட்டு இரண்டாம் தளப்பிதுக்க, ஒடுக்கக் கோட்டங்களும் பல்வேறு சிற்பங்களைக் கொண்டுள்ளன. இவ்விமானமும் முன்னுள்ள மண்டபங்களோடு இடை நாழிகையால் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விமானத்தின் வட, தென் புறங்களில் வளாகத்திற்குட்பட்டு இரு தள விமானங்கள் வட, தென் கயிலாயங்களாய் அமைந்துள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 69
தாராசுரம் கோயில்
தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜரால் எழுப்பப்பட்ட ராஜராஜேசுவரம் தூண்களின் வடிவமைப்பிலும், சிற்பங்களின் செழிப்பிலும் புதிய பதிவுகளைச் செய்ததெனலாம். அதன் ஐந்து தள விமானம் துணைத் தளத்தின் மீது கபோத பந்தத் தாங்குதளம் தாராசுரம் கோயில் கொண்டு அமைந்துள்ளது. ஐந்து பத்திகளாய்ப் பிரியும் சுவர், பத்ர
பத்திகளிலும் கர்ண பத்திகளிலும் சிற்பங்களுடன் கூடிய தேவகோட்டங்களைக் கொண்டுள்ளது. ஒடுக்கங்கள் குடப்பஞ்சரங்கள் பெற்றுள்ளன. தாங்குதள வேதி கண்டப் பகுதியில் அற்புதமானச் சிற்றுருவச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. துணைத்தளத்தின் கண்டப் பகுதியிலும் அருமையான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிற்பங்களால் இழைக்கப்பட்டுள்ள ஒரே சோழர் கோயில் வளாகம் என்று இதைக் கூறலாம். விமானத்தின் முன் அர்த்த மண்டபமும் இடை நாழிகையும் அமைந்துள்ளன. இடைநாழிகை அர்த்த மண்டபத்தையும் பெருமண்டபத்தையும் இணைக்கிறது. இது முன்னிரு கோயில்களிலிருந்து
மாறுபட்ட நிலையாகும்.
திரிபுவனவீரேசுரம்
திரிபுவனவீரேசுவரம் சோழர் காலக் கட்டுமானத் திறனின் முடிவுரை எனலாம். கபோதபத்ர துணைத்தளமும், கபோதபந்தத் தாங்குதளமும் கொண்டு ஏழு தளங்களுடன் எழும் இவ்விமானம் வேசர சிகரத்தைக் கொண்டது. ஏறத்தாழத் தாராசுரத்தைப் போன்ற கட்டமைப்புடைய இவ்விமானம் முன்னால் அர்த்த மண்டபமும் அதைப் பெருமண்டபத்துடன்
இணைக்கும் இடைநாழிகையையும் கொண்டுள்ளது.

Page 99
70 சோழர் காலக் கட்டடக் கலை
இராஜராஜி சுவரத்திற்கு முற்பட்ட சோழர் கால வி ம |ா ன ங் க ளி ன் சிறப்பம்சங்களாக மாறுபட்ட பாதபந்த, பிரதிபந்தத் தாங்குதளங்கள், தாங்குதள வேதி, கண்ட பாதங்களில் ? சிற்றுருவச் சிற்பங்கள், : அமைப்பான ஆழமான
கோட்டங்கள், சிற்றுருவச்
சிற்பங்களோடு கூடிய மகர தோரணங்கள், வளர்ச்சியுற்ற பஞ்சரங்கள், கோட்ட அணைவுத் தூண்களாய்ச் சட்டத்தலைத் தூண்கள், குளவுடன் கூடிய போதிகைகள், வனப்பான பூதமாலை, தூய நாகர அல்லது கலப்பு வேசர வடிவங்கள், கோட்டங்களின் அதிகரிப்பு, எழிலாந்தக் கோட்டச் சிற்பங்கள், ஆறங்கச் சாலைகள், எளிய அரமியங்கள் ஆகியவற்றைக் குறிக்கலாம். இராஜராஜிசுவரத்திற்குப் பிறகும் இத்தகு விமானங்கள் தொடர்ந்தெழுந்தன.
இராஜராஜிசுவரமும் அதைத் தொடர்ந்து எழுந்த பெரு விமானங்களும் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் முத்திரை பதித்தன. இருநூற்றுப் பதினாறடி உயரத்தில் எழுந்த ராஜராஜிசுவர விமானம் தமிழ்க் கட்டுமான அறிஞர்களின் திறம் பேசும் தட்சிண மேருவாய் இன்றும் வருவாரையும் அறிந்தாரையும் வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறது. கலை வரலாற்றின் பல முதல்களுக்குப் பிறப்பிடமான ராஜராஜிசுவரம் சோழர் கட்டடக் கலையின் உச்சமெனலாம். ஒன்பது. ஏழு ஐந்து தளங்களுடன் தொடர்ந்தமைந்த பெரு விமானங்களும், சோழர் கட்டடக் கலை அறிவை நின்று பறை சாற்றிக் கொண்டுள்ளன. அறிவியல் பின்புலத்தோடும், அளப்பற்ற ஆர்வத்தோடும், இணைசொல்ல முடியாத ஈடுபாட்டோடும் சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் சோழச் சமுதாயத்தின் உறுதுணையோடு சோழப் பெருந்தச்சர்கள் எழுப்பிய காலத்தை வென்று நிற்கும் இக்கலைக் கோயில்களைப் புரப்பதும், அவற்றினின்று வேண்டுவன கற்பதும் இந்த தலை முறைக்கும் இனிவரும் தலைமுறைகளுக்கும் கடனாகும்.
 

சோழர் காலச் சிற்பக்கலை
மு. நஎரினி
பல்லவர் காலச் சிற்பக் கலை பல சோதனைக் களங்களைத் தாண்டி நிலைபெற்றது. சோழர் காலச் சிற்பக் கலை அந்த வெற்றியின் அடித்தளத்தில் பல்கிப் பெருகியது. சோழர் காலச் சிற்பங்கள் முதலாம் ராஜராஜருக்கு முற்பட்டவை, அவருக்குப்பிற்பட்டவை என இருபெரும் பகுப்புகளிற் காணலாம். இராஜசிம்ம பல்லவர், அவரது பின்தோன்றல்கள் காலத்தெழுந்த தளிகளைப் போலவே சோழர் காலத் தளிகள் கட்டமைப்பின் பல்வேறு இடங்களிலும் சிற்பங்கள் பெற்றுப் பொலிந்தன. துணைத்தளம், தாங்குதளம், சுவர், தூண், கூரை உறுப்புகள், ஆர உறுப்புகள், கிரீவச் சுவர் என விமானத்தின் அரமியம் தவிர்த்த அத்தனை பகுதிகளிலும் சோழச் சிற்பாசிரியர்கள் தங்கள் கைவண்ணம் காட்டியுள்ளனர். இடத்திற்கேற்ப அவை சில சென்டி மீட்டர் அளவிலிருந்து நான்கு மீற்றர் அளவு வரையிலான உயரம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இறைத் தோற்றங்கள், தேவர்கள், கணங்கள், அசுரர்கள், திசைக் காவலர்கள், முனிவர்கள், அரச மரபினர், மனித உருவங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள் என எதையும் விடாது, சிற்ப வடிவில் சித்திரித்துள்ளனர் சோழச் சிற்பிகள். சோழர் காலச் சிற்பங்களில் நெகிழ்ச்சிகள் ஆங்காங்கே இருந்தாலும், ஆகமக்கோடுகளின் ஆதிக்கத்தைப் பார்க்கமுடிகிறது. புராணம், இதிகாசம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தந்து சிற்பப்பின்புலங்கள் திட்டமிடப்பட்டிருந்தாலும், இலக்கிய பின்பற்றல்களும் ஒரு சிலவாய்க் காணப்படுகின்றன.
இராஜராஜருக்கு முற்பட்ட சிற்பங்களை இருபருவங்களில் அடக்கலாம். செம்பியன்மாதேவிக்கு முற்பட்டவை நளினமாகவும், இறுக்கம் குறைந்தும், பெரும்பாலும் ஆபங்கத்திலும் காணப்பெறும். உடற்கூறியல், பல்லவச் சிற்பங்களை அடியொற்றி அமைய, ஆடை அணிகலவன்கள் அவற்றைப் போலவோ அல்லது சற்றுக் கூடுதலாகவோ இடம்பெறும். குறிப்பாகக்

Page 100
I72 சோழர் காவச் சிற்பக்கவை
குறங்குசெறி, தாரகைச் சும்மை, அரும்புச்சரம், சூடகம், தொய்பகம், சிற்பச் செந்நூலில் கானப்பெறாத பல்வேறு வகையான குண்டலங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பல்லவர் காலத்திலும் எண்ணிக்கையில் அதிகமான கருவிகளையும் இக் காலகட்டத்திற் கானமுடிகிறது. இது போலவே இசைக்கருவிகளும் பல் வகையினவாக இடம்பெற்றுள்ளன.
செம்பியன்மாதேவி காலத்துச் சிற்பங்கள் துர்க்கை ஆகமப் பிடிப்புடன் அமைந்துள்ளன. தஞ்சைப் பெருங்கோயில் கண்டபாத, மகாதோரண கபோதக் கூடுச் சிற்பங்களாக இடம்பெற்று வந்த சிவபெருமானின் புஜங்கத்திராசிதம், தேவகோட்டத்தில் இடம்பெறுவது இக்கால கட்டத்தில்தான். இதுபோலவே செம்பியன்மாதேவிக்கு முற்பட்டுப் பரவலாகக் காணப்படும் ஸ்வஸ்திகக் கானச் சிற்பங்கள்,செம்பியன்மாதேவி காலத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. அம்மைக்கு முற்பட்ட பூதவரிகளிற் காணப்படும் உயிர்ப்பும், காட்சி அமைவுகளும், உணர்வு வெளிப்பாடுகளும் இவர் கால வலபிவரிகளிற் காணுமாறு இல்லை.
முதலாம் ராஜராஜருக்கு முற்பட்ட தளிகளின் தாங்குதளங்களில் கண்டபாதப் பகுதி எண்ணற்ற சிற்பங்களை உருவாக்கச் சோழச் சிற்பிகளுக்கு வசதியான இடமாய் அமைந்தது. இத்தளிகளில் வேதிக்கண்டமும் அமைந்ததால் அதன் கண்டபாதங்களிலும் சிற்றுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
சுவர்களிற் காட்டப்பெறும் நுரைத்துரண்களின் பாதங்களாகத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியிலும் வேதிகைத் தொகுதியின் கண்டப் பகுதியிலும் இடம்பெறும் சதுரப் பிதுக்கங்களே கண்டபாதங்களாகச் சிற்றுருவச் சிற்பங்கள் ஏற்கும் தளமாக அமைந்தன. புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர்,
குடந்தை நாகேசுவரர், எறும்பியூர் எறும்பீசுவரர், கண்டியூர் விரட்டானே மகா வசமி சுவரம், கிராமம் சிவயோகநாத சுவாமி, " பெருங்கோயில்
 
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
திருப்புறம்பியம் சாட்சிசுவரநாதர், " பொன்செய் நல்துணை ஈசுவரம் முதலிய தளி விமானங்களின் கண்டபாதங்கள் புராண, இதிகாசத் தொடர்பான அற்புதமான சிற்றுருவச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர். அதன் விமான, அர்த்த மண்டப வேதிக் கண்டபாதங்களிலே தேர்ந்தெடுக்கப்பட்ட இராமாயனக் காட்சிகள் தொடரான சிற்பங்களாக சரஸ்வதி வடிக்கப்பட்டுள்ளன.
தஞ்சைப் பெருங்கோயில் இலட்சுமணா 岛 முன்னாற் செல், சீதை உன்னை அடுத்தாற் போற் செல்லவேன்டியது, நான் உங்கள் இருவருக்கும் பின்னால் வருவேன்' என்று இராமர் பேசுவதாகத் தம்முடைய சக்கரவர்த்தித் திருமகனில் ராஜகோபாலாச்சாரியார் வால்மீகியிலிருந்து மேற்கோள் காட்டிக் குறிப்பிடுவார். அதை அப்படியே இம்மியும் பிசகாமல் புள்ளமங்கை பிரதிபலித்திருக்கிறது. இராமர், இலட்சுமணர், சீதை காட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான இடங்களிற் குறிப்பாகப் பயனக் காட்சிகளில் இந்த ஒழுங்கு இனிதே பின்பற்றப்பட்டிருக்கிறது. தாடகை வதம், அகலிகை சாபம் நீங்கல், குகள் ஒடத்தில் கங்கையைக் கடத்தல், காளிந்தி நதியில் தெப்பப்பயணம், தண்டகாரண்யத்தில் விராதன் சந்திப்பு, அவன் கைகளை ஒடித்து இராமர், இலட்சுமணர் தப்புதல், சரபங்க மகரிஷி சுதீக்ஷன மகரிஷி சந்திப்பு, சூர்ப்பனகை மோகம், மூக்கரிவு, தம்பி கரனிடம் முறையீடு, மாரீச மான், இராவணன் சீதையைத் தேரிலெடுத்தல், சடாயு தாக்கல், செய்தி சொல்லி இறத்தல், கவந்தன் அழிப்பு, வாலி மரணம் என இராமாயணத்தின் எண்னற்ற காட்சிகள், இருபது சென்டி மீட்டருக்கு உட்பட்ட அளவுள்ள சின்னஞ்சிறு சதுரங்களில் சிறக்கச் செதுக்கப்பட்டுள்ளன. இராவணன் சீதையைத் தேரில் அழைத்துச் செல்லும் காட்சி அக்காலத் தேர்களின் வடிவமைப்பைக் காட்டுவதோடு அலங்கரிப்பையும் உணர்த்துகிறது. இதில் இராவணன் தேரோட்ட அவனை நோக்கி அமர விரும்பாதவர் போல் சீதை திரும்பி அமர்ந்திருக்கும் நிலையும், வலக்கையைத் தேர்ச் சட்டத்தின் மீது ஊன்றி குனிந்த தலையை இடக்கையால் தாங்கியிருக்கும் அமைப்பும், வெறுப்போடு கூடிய அவர் சோகத்தை நன்கு புலப்படுத்துமாறு அமைந்துள்ளன.

Page 101
74 சோழர் காலச் சிற்பக் கலை
வாலியின் முடிவுஒப்புயர்வற்ற சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவலச் சுவையின் அத்தனைப் பரிமாணங்களையும் இந்த சின்னஞ் சிறு சிற்பம் மிக நுணுக்கமாகப் படம் பிடித்து விடுகிறது. கன்னத்தில் கைவைத்துத் தலை குனிந்து அமர்ந்திருக்கும் அங்கதனின் மடியில், அவரது வலக்கையையே சாய்வணையாகக் கொண்டு முகத்தைச் சாய்த்தபடி மரணப் படுக்கையில் இருக்கும் வாலி, தன் வலது காலை, கால்மாட்டில் சோகப்பிழம்பாய் அமர்ந்திருக்கும் தாரையின் மடியில் கிடத்தியுள்ளார். 'போய்விட்டதே எல்லாம் என்பது போல் இரு கைகளையும் அகல விரித்துப் புலம்பும் தாரையின் தோழி ஒருபுறமும், இரு கைகளையும் தலையில் வைத்தபடி செய்வதறியாது திகைக்கும் மற்றொரு தோழி இடப்புறமும் அவலத்தின் உச்சத்திலிருக்க, வாலியின் படுக்கைக்குக் கீழே அவலத்தின் முத்தாய்ப்பில் பிற வானரங்கள், ஒன்று இரு கைகளையும் தலைமேல் வைத்தபடி இருக்க, மற்றொன்று ஒரு கையைத் தலைமேல் வைத்துத் துயரம் காட்டுகிறது. இன்னொரு வானரமோ தாளமுடியாத துன்பத்துடன் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறது. பொன்செய் நல்துணை ஈசுவரத்துக் கண்ட பாதத்தில் ஏறத்தாழ இதே போன்றதொரு சிற்பம் வாலியின் இறுதிக் காலத்தைப் பதிவுசெய்துள்ளது.
இராமாயணக் காட்சிகளினூடே விஷ்ணுவுடன் தொடர்புடைய புராணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் திரிவிக்கிரமர் சிற்பம் அளப்பரிய எழிலுடையது. மாமல்லபுரம் வராகர் குடைவரையின் தென்சுவர் முழுவதும் பரவியிருக்கும் திரிவிக்கிரமக் கோலத்தை நினைவூட்டும் இச்சிற்பத்தில் வானுற உயர்ந்த திருமாலின் இடக்காலைத் தாமரையின் மீதமர்ந்த நான்முகன் பிடித்திருப்பது போலக் காட்சி புனையப்பட்டுள்ளது. அற்புதமான விஸ்மய முத்திரையும், போர்க்களம் புகுவார் போல் வலக்கை வில் பிடிக்க, இடக்கை முதுகின் அம்புக்கூட்டிலிருந்து அம்பெடுக்க, இறைவனின் திருக்கோலம் உணர்வுகளின் கலவையாக விளங்குகிறது. கீழே வாமனக் கதை. இதே பகுதியில் கருடனை அரவணைத்த விஷ்ணு காட்சிதருகிறார். மாமல்லபுரம் அர்ச்சுனர் தளி, தர்மராஜர் தளி ஆகியவற்றிற் காணப்படும் விஷ்ணு கருடன் சிற்பங்களை இச்சிற்பம் எதிரொலிக்கின்றது.
இதே கோயிலின் தாங்குதளக் கண்டபாதங்களில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு சிற்பமுமே முற்சோழர் கால உளி வண்ணம் பேசும் சிற்ப அற்புதங்கள். சண்டேசுவர அநுக்கிரகமூர்த்தி, உமாசகிதர், கஜசம்ஹாரர், அம்மையப்பர், காமதகனர், ரிஷபாந்திகர் போன்ற சிவபுராணச் சிற்பங்களும், சிவபெருமானின் ஆடற்கரணச் சிற்பங்களும், காளி, மகிக்ஷாசுரமர்த்தனியின் போர்க் கோலங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது.சிவபெருமானின் தண்டபக்ஷம். இக்கரணத் தோற்றம் தமிழ் நாட்டில் இரண்டே

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 175
திருக்கோயில்களில்தான் காணக்கிடைக்கின்றது. வலக்காலை ஊர்த்வஜாதுவாக்கி இடமுன்கையை வேடிக்கையாய் அதன்மீது படரவிட்டு கைகளில் மழு, முத்தலை ஈட்டி, தீச்சுடர், துடி முதலியன கொண்டு சடைமசூடராய் இறைவன் ஆடும் இந்தக் கரணத்திற்குச் சிரட்டைக் கின்னரியுடன் ஒரு கணமும், குடமுழவுடன் மற்றொரு கணமும் இசை சேர்க்கின்றன.
கஜசம்ஹாரம், சம்ஹாரத்தின் யதார்த்த நிலையைக் காட்டுமாறு போல அச்சுறுத்துவதாய் வடிக்கப்பட்டுள்ளது. வேண்டாமென வலக்கை உயர்த்தி சம்ஹாரம் நடக்கும் இடத்திலிருந்து விலகித் திரும்பும் உமையின் கையிலிருந்து முருகன் தோழிக்காய் தாவுவதும், தாவி வரும் குழந்தையைத் தாங்கிக் கொள்ளத் தோழி தவிப்பதும், உமையின் அஞ்சிய தோற்றமும், சிவபெருமானின் அதிபங்கக் கோலமும் இந்தச் சின்னஞ்சிறு சிற்பத்தை அரிய கலைவடிவமாகப் பதிவுசெய்கின்றன.
பொன்செய் நல்துணை ஈசுவரத்துக் கண்டபாதச் சிற்பங்களுள் சீவக சிந்தாமணியின் யாழ்ப் போட்டியைச் சித்திரிக்கும் சிற்பம் குறிப்பிடத்தக்கது. வலப்புறம் ஆடவர் இருவர் அமர்ந்திருக்க, இடப்புறம் பெண்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே திரை உள்ளது. இது சீவக சிந்தாமணி சுட்டும் பளிக்கொளிமணிச்சுவர் எழினியாகலாம். யாழ் வாசிக்கும் ஆண் வடிவத்தை ஜிவகனாகவும் உடனுள்ள வடிவத்தை அவர் நண்பர் புத்திசேனனாகவும், யாழ் வாசிக்கும் பெண்ணைக்காந்தருவதத்தையாகக் கொள்ளலாம். காந்தருவ தத்தைக்கு அருகே பேடியான வீணாபதியும் உடன் இரு தோழியரும் காட்டப்பட்டுள்ளனர்.
குடக் கூத்து
கிராமம் சிவயோகநாத சுவாமி கோயில் கண்டபாதச் சிற்பங்களுள் விஷ்ணுவின் குடக்கூத்துச் சிற்பம் அரிய சிற்பமாகும். இது அடியார்க்கு நல்லார் கூற்றுப்படியே பல குடங்களை வீசிக் குடக்கூத்தர் ஆடுமாறு செதுக்கப்பட்டுள்ளது. ஆடுவாரின் வலமேற்கையில் இரண்டு குடங்களும், இடமேற்கையில் ஒரு குடமும், வலக்காலின் கொண்டைப் பகுதியில் ஒரு குடமும், இட முழங்காலருகே ஒரு குடமும் காட்டப்பட்டுள்ளன. கூத்தரின் இருபுறமும் சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்குடக்கூத்து ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட சோழர் கோயில்களில் ஆடவர் ஆடுவது போலவும் மகளிர் ஆடுவது போலவும் காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 102
76 சோழர் காலச் சிற்பக் கலை
புஜங்கத்திராசித நடனம்
திருப்புறம்பியம் சாட்சீசுவரநாதர் கோயில் கண்டபாதத்தில் வலக்காலை உயர்த்தி புஜங்கத்திராசிதம் காட்டும் சிவபெருமானின் அரிய சிற்பம் இடம்பெற்றுள்ளது. திருச்சென்னம்பூண்டி, குறிப்பிடத்தக்க சிவ கரணத் தோற்றங்களைச் சிற்பங்களாகக் கொண்டுள்ளது. செம்பியன்மாதேவி திருப்பணிகளான திருமயானம், திருக்கோடிக்காவல், கோனேரிராஜபுரம் சிவன் கோயில்களிலும் சிவபுராண, சிவநடனச் சிற்பங்கள் இடமபெற்றுள்ளன.
சீமந்த, மகப்பேறுக் காட்சிகள்
சுவர்த் தூண்களின் மாலைத் தொங்கல், ஸ்தானப்பகுதிகளில் சிற்றுருவச் சிற்பங்களை இப்பருவச் சோழர் கோயில்களில் மிகுதியாகக் காணமுடிகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கன நல்துணை ஈசுவரம், குரங்கநாதர், பிரம்மபுரீசுவரர் விமானங்கள். குரங்கநாதர் மாலைத் தொங்கல் சிற்பங்களுள் ஆடற் காட்சிகளும், சீமந்தம், மகப்பேறு தொடர்பான காட்சிகளும் உள்ளன. தமிழ் நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் காணமுடியாத சிறப்புடைய சீமந்த, மகப்பேற்றுக் காட்சி குரங்கநாதரின் தனிச் சொத்தாகும். இசையாசிரியருடன் கூடிய ஆடல் அணங்குகளை கரணக் கோலங்களில் இங்கு காணமுடிகிறது. பிரம்மபுரீசுவரர் ஆடற் காட்சிகள் குறிப்பாக ஸ்வஸ்திகக்கரணங்கள் பராந்தகர் காலப் புதையல் எனலாம். அர்த்த ஸ்வஸ்திகம், வக்ஷ ஸ்வஸ்திகம் முதலிய ஸ்வஸ்திகக் கரணங்கள் இங்குப் பலவாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. சோழர் காலத்திற் கரணங்கள் பெற்றிருந்த செல்வாக்கை இச்சிற்பங்கள் நிறுவ வல்லன. தாளம், உடுக்கை, ஒரு முக முழவுகள், குழல் முதலியன இசைக்கருவிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இசைக்கலைஞர்கள் இங்குப் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்.
நாட்டியக் கரணங்கள்
அர்த்த மண்டபத் தூண்களில் மாலாஸ்தானத்தில் ஊர்த்வஜாது, சூசிவித்தா, அர்த்த ஸ்வஸ்திகக் கரணங்களில் பெண்களின் சிற்பங்கள் எழிற்படச் செதுக்கப்பட்டுள்ளன. இத்தோற்றங்களுள் ஒன்று இதே கோயிலில் தாங்கு சிற்பமாகவும் வடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குழு நடனங்களும், தனியார் ஆடல் தோற்றங்களும், தஞ்சாவூர் ராஜராஜிசுவர

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 77
ஒவியக் காட்சியில் இடம்பெற்றுள்ள பிரம்மரக கரணத்தின் முன்னோடித் தோற்றமும் இத்தூண்களின் ஸ்தானப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.
நல்துணை ஈசுவரத்தின் அர்த்த மண்டப வாயிலருகில் உள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், ஸ்தானப் பகுதிகளில் மூன்று ஆடற் காட்சிகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. ஸ்தானப் பகுதியில் சுடர்முடிக்காளியின் அர்த்த ஸ்வஸ்திகம் குழு ஆடலாய் மலர்ந்துள்ளது. கீழே பெண் கலைஞர்கள் குழல் வாசிக்க, இரண்டு காரிகைகளின் அர்த்த ஸ்வஸ்திகம். இந்த சிற்பங்களின் அழகை, ஆடல் அசைவுகளின் நயத்தை, மெய்ப்பாட்டு அற்புதத்தைச் சொற்களால் சிறைப் பிடிக்க முடியாது. பல விமானத் தூண்களில் இது போன்ற ஆடற் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தாலும் பிரம்மபுரீசுவரத்து, நல்துணை ஈசுவரத்துச் சிற்பங்களுக்கு அவை ஈடாகா.
மகர தோரணங்கள்
மகர தோரணங்கள் பல்லவர் காலத்திலேயே வழக்கிற்கு வந்துவிட்ட அலங்கரிப்புகள். சோழர் காலத்தில் இவை ஒரே மாதிரியான அமைப்பில் வரையறுக்கப்பட்டன. மகர தோகைகள் அளவாக நிறுத்தப்பட்டன. தோரணமே வலபிக்கு மேல் அமைக்கப்பட்டது. கீழ்ப் பகுதியில் பக்க மகரங்கள் இரண்டும் மேற்பகுதியில் இணை மகரங்கள் இரண்டும் அமையத் தோரணம் உருவாகும். இத்தோரணத்தின் கீழ் வளைவிலும், நெற்றிப் பகுதியிலும் சிற்பங்கள் இடம் பெற்றன. தோரணத்தில் இலைச் சரம், பூச்சரம், யாளி வீரர்கள், கணங்கள் எனப் பலவும் இடம்பெற்றன.
இப்பருவச் சோழர் கால மகர தோரணங்களும் இணையற்றன. திருமீயச்சூர் முயற்சிநாதர், கீழையூர் தென்வாயில் பூரீகோயில், குரங்கநாதர் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளன. கங்கசடாதரர், திருவேள்விக்குடி விமானங்களையும் குறிப்பிடலாம். முயற்சிநாதர் விமானத்திற் கங்காதரர், கல்யாணசுந்தரேசுவரர், காலாரிமூர்த்தி, மகிடாசுரமர்த்தனி கீழ்வளைவுகளில் இடம்பெற, மேல் வளைவுகளில் ஆனந்தத் தாண்டவரும் அம்மையப்பரும் காட்டப்பட்டுள்ளனர். கங்காதரர் சிற்பத்தில் சிவனும் உமையும் நடுநாயகமாக அமைய இருபுறத்தும், சாமரப் பெண்கள்; கீழே போற்றுவனவாய் இரு கணங்கள். இப்பருவகாலக்கங்காதரத் தோற்றங்களில் இது சற்று மாறுபட்டதாகும். இறைவனின் இடக்கை அன்னையின் கரண்ட மகுடத்தைத் தொட்டவாறு காட்டப்பட்டுள்ளது. இதே விமானத்தின் தேவகோட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட கங்காதரக் கோலம் காணப்படுகிறது. இதில் உமை

Page 103
178 சோழர் காலச் சிற்பக் கலை
இடப்புறமாகத் திரும்பியுள்ளார். இறைவனின் வல முன் கை அவரது முகத்தைத் திருப்ப முனைவது போல் காட்டப்பட்டுள்ளது. இடப் பின்கை சடைப்புரியில் கங்கை.
எறும்பீசுவர விமானத்தோரணங்களில் சாமரங்களும், குத்து விளக்குகளும், குடையும் பொருந்த கைகளில் மலரேந்திய லட்சுமியின் அர்த்தபத்மாசனக் கோலம். மற்றொரு மகர தோரணத்தில் நான்முகன். குரங்கநாதர் விமான மகர தோரணத்தில் அற்புதமான பூவராகர் இடம்பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் காணப்பெறும் சிறிய அளவிலான பூவராக வடிவங்களுள் இதுவே இணையற்ற கலைத்திறம் பெற்றுள்ளது. கீழையூர்த் தென்வாயில் பூரீகோயிலின் வட மகர தோரணத்தில் சிவபெருமானின் ஊர்த்வஜாறு கரணம், இசைக் கலைஞர்கள் சூழப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்டபாதங்கள் போலவே மகர தோரணங்களிலும் பல்வேறு விதமான சிற்பங்கள் இடம்பெற்றமை அறியப்படும்.
விமானங்களிற் பூதவரிகள்
கூரை உறுப்பான வலபியில் இப்பருவகால விமானங்கள் அனைத்திலும் பூதவரி காணப்படுகிறது. பல்வேறு செயற்பாடுகளில் இறைவனின் கணங்கள் இயங்குமாறு அமைக்கப்படும் இவ்விமானத்தொடர், செதுக்கப்பட்ட காலத்து வரலாற்று விடிவிளக்காய் அமைகிறது. பெரும்பாலான விமானப் பூதவரிகள் சிறக்க அமைந்திருந்தாலும், வித்தியாசமான சிற்பங்களோடு விளங்குபவை வடவாயில், தென்வாயில் பூரீகோயில்களின் பூதவரிகளும், கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர், சந்திரசேகரர் விமான பூதவரிகளும் ஆகும். கீழையூர்த் தென்வாயில் பூரீகோயில் பூதவரியில் அனுபவித்துப்பாடுமாறு போல இரண்டு கணங்கள் காட்டப்பட்டுள்ளமை, கச்சேரிக் காட்சியைக் கண்முன் நிறுத்துகின்றன. இவ் வரியிலுள்ள கணங்கள் கொண்டுள்ள பல்வேறு இசைக்கருவிகளுள் குடமுழவு குறிப்பிடத்தக்கது. ஊது கொம்புகள், பல்வேறு அளவிலான தாளங்கள், குழல்கள், பல்வேறு வகையினவாய் மத்தளங்கள், வீணைகள், ஒரு முக முடிவுகள், சிரட்டைக் கின்னரி என எண்ணற்ற இசைக்கருவிகளை இவ்வரிகளிற் காணமுடிகிறது. தமிழ்நாட்டு இசைக்கருவி வரலாறு எழுதுவோர் இப்பூதவரிகளைத் தவறாது காணல் வேண்டும்.
கூரையின் வெளியிழுப்பான கபோதம், கூடுகள், பெற்றுத் திகழ்வது பல்லவர் காலத்திலிருந்து இருந்துவரும் அமைப்பாகும். இக்கூடுகளிற் கந்தர்வத் தலைகள் பல்லவர் காலத்தில் இடம்பெற்றன. இராஜசிம்மர்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 179
காலத்தில் இக்கூடுகளில் சிற்பங்களை அமைக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடற்கரை வளாக விமானக் கூடுகளில் விநாயகர் சிற்பங்களைக் காணமுடிகிறது. இராஜராஜிசுவரத்துக்கு முற்பட்ட சோழர் விமானங்கள் சிலவற்றின் கூடுகளில் பல்வேறு வகையான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் விமானக் கபோதக் கூடொன்றில் தொடக்கக் கால புஜங்கத்ராசித சிவ கரணக் கோலம் செதுக்கப்பட்டுள்ளது. கீழப்பழுவூர் ஆலந்துறையார் விமானக் கபோதக் கூட்டில் அற்புதமான திரிபுராந்தகர் சிற்பமும், குடக்கூத்தும் இடம்பெற்றுள்ளன. திருவிசலூருக்கருகில் உள்ள கற்கடேசுவரர் கபோதக் கூட்டில் பல கரங்களோடு கூடிய ஊர்த்வதாண்டவர் காட்சி தருகிறார். திருமீயச்சூரில் கண்ணப்பர் வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இதில் கண்ணப்பர் சிவலிங்கத்தில் கண்ணிருந்த இடத்தில் கைவைத்துமற்றொரு கையால் கண்ணகழ்வு செய்கிறார். சிவலிங்கத்திலிருந்து வெளிப்படும் கை கண்ணகழும் அவர் கையைத் தடுக்கிறது. முதலாம்ராஜராஜர் காலம் வரை கண்ணப்பர் வரலாறு இப்படித்தான் இருந்தது.
கோட்டச் சிற்பங்கள்
சோழர்க் காலச் சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கவை கோட்டச் சிற்பங்கள். ஆகம வரையறைக்குட்பட்ட அதே சமயம் தனித்துவம் வாய்ந்த சிற்பங்கள் இக்காலத்தே உருவாயின. விமானத்தின் ஆதி தளத் தென் கோட்டத்தில் ரிஷபாந்திகர் சில தளிகளிலும் தட்சிணாமூர்த்தி பல தளிகளிலும் இடம்பெற்றனர். வீராசனத்தில் சிறு கோரப் பற்களுடன் எழிலரசராய் அமர்ந்திருக்கும் வடவாயில் பூரீகோயில் தட்சிணாமூர்த்தி தனியர். எறும்பூர் கடம்பவனேசுவர் தட்சிணாமூர்த்தியும் வீராசனர்; தனியர். இவ்விரண்டு சிற்பங்களுமே இணையற்ற எழில் படைத்த இப்பருவ காலத் தட்சிணாமூர்த்திப் படிவங்களாகும். குரங்கநாதரிற் சுற்றிலும் விலங்குகளும் முனிவர்களும். இந்தப் புடைபடை சூழ் அமைப்பே பெருவழக்குப் பெற்றது. வடக்குக் கோட்டத்தில் நான்முகனும் மேற்குக் கோட்டத்தில் அம்மையப்பர், லிங்கோத்பவர், விஷ்ணு ஆகியோருள் எவரேனும் ஒருவரும் இடம்பெற்றனர். நான்முகன் சிற்பங்களில் வர்ணிக்க முடியாத வனப்புடையது பிரம்மபுரீசுவரர் விமானத்தின் மேற்கில் சுவர்ச் சிற்பமாக, லிங்கோத்பவரின் வலப்புறம் இடம்பெற்றுள்ளது. இளமை ததும்பும் இந்த வடிவம் கங்கை கொண்ட சோழிசுவரத்தில் முதுமையின் முத்தாய்ப்பில் காட்டப்பட்டிருப்பது கருதத்தக்கது.

Page 104
180 சோழர் காலச் சிற்பக் கலை
அர்த்த மண்டபத் தென் கோட்டத்தில் இடம்பெற்ற விநாயகர் சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கது பிரம்மபுரீசுவரர் விமானத்தில் இடம்பெற்றுள்ளது. அலங்காரக் குடையின் கீழ் லலிதாசனத்தில் விநாயகர்; இருபுறச் சுவரிலும் கணங்கள்; சாமரத்துடன் ஒன்று, படையல்களுடன் மற்றொன்று சிரட்டை கின்னரியுடன் ஒன்று, மற்றொன்றோ பிள்ளையாரின் வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வருகிறது. நல்துணை ஈசுவரம் கணேசரும் அழகானவர். இவருக்கும் குடை தலையின் இருபுறத்தும் போற்றுவாராய் கணங்கள் உண்டு.
அர்த்த மண்டப வடக்குக் கோட்டத்தில் இடம்பெற்ற கொற்றவை, பல கோயில்களில் சிறப்புக்குரிய சிற்பமாகக் காட்சியளிக்கிறார். பிரம்மபுரீசுவரர், சாட்சிநாதர், பக்தவச்சலேசுவரர் மண்டபக் கொற்றவைச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. பிச்சாடனர், வீணாதரர், கங்காதார், நடராஜர், ஆலிங்கனமூர்த்திஎனப்பல மூர்த்தங்கள் செம்பியன்மாதேவி திருப்பணிசெய்த விமான மண்டபக் கோட்டங்களில் இடம்பெற்றன. செப்பியன்மாதேவிக்கு முற்பட்ட விமானங்கள் சிலவற்றின் கோட்டங்களிற் சாமரப் பெண்கள், அழகு நங்கையர், அடியவர்கள் சிற்பங்களைக் காணமுடிகிறது. குரங்கநாதர், நாகேசுவரர் விமானங்கள் சிறந்த சான்றுகளாகும்.
நாசிகைச் சிற்பங்கள்
இப்பருவக் கோயில்களின் ஆர நாசிகைகளிலும் அற்புதமான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. தென்வாயில், வடவாயில் பூரீகோயில்கள், பெருமுடிஈசுவரர், கொடும்பாளூர்த் தென்தளி, பிரம்மபுரீசுவரர் ஆகியன குறிப்பிடத்தக்கன. கொடும்பாளூர்த் தென்தளி காலாரிமூர்த்தி உலகப் புகழ் பெற்ற சிற்பமாகும். நடுத்தளியின் அல்ப நாசிகையில் லிங்கத்தைத் தோளில் ஏந்திய சிவபெருமான் காட்சிதருகிறார். இதே போன்றதோர் சிற்பம் தென்வாயில் பூரீகோயில் நாசிகையிலும் இடம் பெற்றுள்ளது. பிரம்மபுரீசுவரரில் எழிலார்ந்த அம்மையப்பர் வடிவமும் ரிஷபதேவர் வடிவமும் இடம்பெற்றுள்ளன. வடவாயில் பூரீகோயில் விஷ்ணு, தென்வாயில் பூரீகோயில் வீணாதரர் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இச்சிற்பங்களின் அமைப்பு, அலங்கரிப்பு, சிறப்பு மூன்றும் இப்பருவச் சோழச் சிற்பிகளின் கற்பனையாற்றல், கலைத்திறன் காட்டுவனவாகும்.
இப்பருவத்தளிகளின் மகாநாசிகைகளிலும்,சூரநாசிகைகளில் இடம்பெற்றார் போலவே அமர்ந்த, நின்றகோலச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விஷ்ணுவும், வடக்கில் நான்முகனும், கிழக்கில் சிவபெருமான், முருகன், சந்திரன் ஆகியோரில் ஒருவரும் இடம்பெற்றனர்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 18
இதிகாச புராணக் கதைகள்
முதலாம் ராஜராஜரின் ராஜராஜிசுவரத்திலும் தொடர்ந்தமைந்த பெருவிமானங்களிலும் உயரமான துணைத்தளங்கள் கட்டப்பட்டன. கோபுரங்களிலும் இதுபோன்ற துணைத்தளங்கள் அமைந்தன. இராஜராஜிசுவரத்து ராஜராஜன் திருவாசல் துணைத்தளம் குறிப்பிடத்தக்கது. இதிற் பல சிவபுராணக் காட்சிகளும், கண்ணப்பர் வரலாறும் இடம்பெற்றுள்ளன. நக்கீரதேவ நாயனாரின் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தைப் பின்பற்றிக் கண்ணப்பர் வரலாறு அமைந்துள்ளது. இறைவனுக்கு உடும்பைப் படையலளிப்பதும், அமர்ந்த நிலையில் கண்ணகழ்வதும், லிங்கக் கை தடுப்பதும் அரிய காட்சிகளாகும். இதுபோன்ற அமர்ந்த கண்ணகழ்வு மேல்பாடி அறிஞ்சிகை ஈசுவரம், திருவாலிசுவரம் விமானங்களிற் காணப்படுகிறது. இதனால் கண்ணப்பர்லிங்கத்திருமேனியில் கால்வைத்து கண்ணகழ்ந்த கதை பின்னாளைய இணைப்பு என்பதை அறியலாம்.
கிராதார்ச்சுனியக் காட்சி வில்லிபாரதப் பின்புலத்தில் அமைந்துள்ளது. வேட்டுவராய் வரும் சிவனும் உமையும் முருகனையும் கொண்டுள்ளமை வில்லிபாரதக் காட்சியாகும். கிராதார்ச்சுனியத்தில் முருகன் சுட்டப்படாமையும், வில்லிபாரதம் காலத்தால் பிற்பட்டது என்பதும் ராஜராஜிசுவர சிற்பத்திற்கு வேறொரு பாரதப் (பெருந்தேவனார் பாடிய பாரத வெண்பா) பின்புலம் இருப்பதை உணர்த்துகின்றன.
இப்பருவ விமானங்களின் கண்ட, வேதிபாதங்களில் சிற்பங்களமைக்கும் பழக்கம் தொடர்ந்தது. திருமங்கலம் சாம வேதிசுவரம், திருவிசலூர் பிச்சதேவர், பாச்சில் அமலீசுவரம், மதகடிப்பட்டு குண்டங்குழி மகாதேவர், பைஞ்ஞீலி பைஞ்ஞீலிசுவரர், உலகபுரம் சிவன் கோயில் விமானங்கள் குறிப்பிடத்தக்கன. சாமவேதீசுவரரில் இராமாயணம் தொடர் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளது. பைஞ்ஞீலியில் ஆடற் சிற்பங்கள் உள்ளன. தாராசுரத்து ராஜராஜேசுவர வேதிபாதம் நாயன்மார் வரலாறுகளைத் தொடர்ச் சிற்பங்களாகக் கொண்டுள்ளது. திரிபுவனக் கண்ட பாதம் அரிய சிற்பங்களின் களஞ்சியமாக உள்ளது.
சாமவேதீசுவரர், ராஜராஜேசுவரர் விமானச் சுவர்த் தூண்களின் ஒமங்களிற் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மாலைத் தொங்கல், ஸ்தானம் ஆகியவற்றில் சிற்பங்கள் இடம்பெறுவது இக்காலகட்டத்திற் குறைந்தது. மேல்பாடி அறிஞ்சிகை ஈசுவரம், திருவையாறு பஞ்சநதீசுவரம், தாராசுரம்

Page 105
|}է: சோழர் கார்ச் சிற்பக் கண்டிய
ராஜராஜேசுவரம் விமானத் தூண்களின் மாலைத் தொங்கல்களில் சிற்றுருவச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் பஞ்சநதிசுவரர், ராஜராஜேசுவரர் மண்டபத் தூண்களின் பாலைத் தொங்கல் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. இவற்றுட் பலவகையான ஆடற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஊர்த்வஜாரு, விருச்சிகம், அர்த்த ஸ்வஸ்திகம் முதலிய கானக் கோலங்களும், ஊர்த்வ. ஆனந்தத் தாண்டவ வடிவங்களும் கலைநயத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளன. தூணின் பிற பகுதிகளில் இடம்பெறும் சிற்பங்களை, அமிர்தகடேசுவரர். ராஜராஜேசுவரம் விமானங்களிற் காணலாம். மேலைக் கடம்பூர் சிற்பங்கள் கூர்மையான வடிப்புத் திறனும் சிற்ப நேர்த்தியும் கொண்டவை. இராஜராஜேசுவரம், அமலீசுவரம் விமான மகர தோரணங்கள் இப்பருவ காலப் படைப்புகளிற் குறிப்பிடத்தக்கன. உலகபுரம் சிவன், விஷ்ணு கோயில் மகா தோரணங்களும் நன்கமைந்தவை. கபோதக் கூடுகளிற் சிற்பங்கள் அமைப்பது இக்கால கட்டத்திலும் தொடர்ந்தது. இராஜராஜேசுவரம், திருவாலிசுவரம், ஆகியன இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இக்கால கட்ட விமான வலபிகளிலும் பூதவரிகள் தொடர்ந்து இடம்பெற்றன. தாங்கு சிற்பங்கள் மேலைக் கடம்பூரில் ஆடற்பெண்களாகவும் தாவுயாளிகளாகவும் வடிவெடுத்துள்ளன.
கோட்டச் சிற்பங்கள் பல விமானங்களிற் காணப்பட்டாலும் சுவர்ச் சிற்பங்கள் ராஜராஜீசுவரம், கங்கை கொண்ட சோழீசுவரம் போன்ற சில விமானங்களிலேயே இடம்பெற்றுள்ளன. கங்கைகொண்ட சோழிசுவரத்து சரஸ்வதி, சண்டேசுவர அணுக்கிரகமூர்த்தி, காமதகன மூர்த்தி முதலிய சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. இராஜராஜிசுவரத்து இடைநாழிகைப் பிடிச் சுவர்களில் இடம்பெற்றுள்ள சிவபுரானச் சிற்பங்கள் ஒப்புயர்வற்றவை. தக்கயாகம், கங்காதரர், சண்டேசுவர அணுக்கிரகர், கல்யானை சுந்தரேசுவார், திரிபுராந்தகர் சிற்பங்கள் சிறப்புக்குரியனவ. இக்கால கட்டத்தில் அறிமுகமான புதிய சிற்பங்களுட் சபர் குறிப்பிடத்தக்கவர். இராஜராஜேசுவரம் மகாமாயா போன்ற பல புதிய சிற்பங்களைக் கோட்டச் சிற்பங்களாகக் கொண்டுள்ளது. இதைக் கல்வெட்டு கொண்டு சூரியன் என்பாரும் உளர்.
இக்காலகட்ட விமானங்களில் குறிப்பிடத்தக்க ஆரச் சிற்பங்கள் இடம்பெற்றிருக்கும் கோயில்களாக பிரம்மதேசம் கைலாசநாதர், திருவா வீசுவரர் ஆகியவற்றைக் கூறுலாம். திருவாலிக வரத்திற் சில புதுமையான சிற்பங்களைக் காணமுடிகிறது. தக்கனுக்குத் தலைதரும் காட்சி,

USi6OGL)
- Fl
Hi GIELDHF.
சோழ
ங்கல் காளியின் நடனம்
கதை தூணின் பாலைத் தொ
புள்ள மங்கை தாங்கு சிற்பம்

Page 106
பழுவூர் சப்தமாதர்
(வைஷ்னவி, வராகி, இந்திராணி, சாமுண்டி)
 

(3JIIJі Лјішіі
புள்ள மங்கை தேவகோட்டச் சிற்பம் பிரமன்
கோனேரி ராசபுரம் தேவ கோட்டச் சிற்பம் லிங்கோத்பவர்

Page 107
திருவாவிஸ்வரம் தக்கன் வதம்
துக்காச்சி நாட்டியச் சிற்பங்கள் அமைந்த தூண்
 

கங்கை கொண்ட சோழேஸ்வரம்
வெளிவாயில் துவார பாலகர்
தஞ்சைப் பெரிய கோயில் துவாரபாலகர்
கங்கை கொண்ட சோழேஸ்வரம் சரஸ்வதி

Page 108
கங்கை கொண்ட சோழேஸ்வரம் சண்டேசானுக் கிரக மூர்த்தி
சிதம்பரம் கோபுரம் அதிஷ்டானப் பகுதி
 
 

சிதம்பரம் கீழைக் கோபுரம் மன்மதன்
சிதம்பரம் கிழக்குக் கோபுரம் அகஸ்தியர்

Page 109
90 சோழர் காலச் சிற்பக் கலை
உமையின் ஒற்றைக் கால் தவம் ஆகியன அவற்றுட் குறிப்பிடத்தக்கன. திருவாலிசுவரம் பூமி தேசமும் குறிப்பிடத்தக்கது. ஒட்டமும், நடையுமாய்த் தொடரும் யாளிகளுக்கிடையே சாலை லிங்கோத்பவருக்குக் கீழே வராகமூர்த்தியும் இடம்பெற்றிருப்பது அபூர்வமான படைப்பாகும்.
கிரீவ சுவரில் சிற்பங்கள் இடம்பெற்ற விமானங்கள் மிகச் சிலவே. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர், அமிர்தகடேசுவரர் விமானங்களில் ஆடற் சிற்பங்களும் புராணச் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. மகாநாசிகைச் சிற்பங்கள் அனைத்து விமானங்களிலும் முதற்பருவம் போலவே இடம்பெற்றன.
சிற்பங்களின் சிறப்பம்சங்கள்
சோழர் காலச் சிற்பக் கலையைப் பொறுத்தமட்டில் இரண்டு பருவங்களிலுமே பல அற்புதமான படைப்புகளைக் காணமுடிகிறதென்றாலும் முதற் பருவத்தின் மகுடங்களாக பிரம்மபுரீசுவரர், நாகேசுவரர், தென்வாயில் பூரீகோயில், கொடும்பாளூர்த் தளிகள் ஆகியவற்றைக் குறிக்கலாம். இக்காலகட்டச் சிற்பங்கள், சிற்ப நூல்கள் விவரிக்கும் பல்வகையான தலைக்கோலங்கள், கையமைதிகள், ஆடை அணிகலன்கள், நிலைகள், ஆசனங்கள் என்பவற்றைக் கொண்டு விளங்குகின்றன. பல்லவர் காலத்திலிருந்த நளினம் தொடர்ந்து காணப்பட்டாலும் ஆகம இறுக்கங்கள் மிகைப்படுவதை உணரமுடிகிறது. கூடுதலான அணிகலன்களையும் பார்க்கமுடிகிறது. இக்காலகட்ட வாயிற் காவலர்கள், அன்னையர், எழுவர் சேத்ரபாலர் சிற்பங்கள் பேரெழில் வாய்ந்தவை. பல்லவ மரபிலிருந்து மாறுபட்டு நான்கு கைகளுடன் காட்சிதரும் காவலர்கள், கோரப் பற்கள், விதவிதமான குண்டலங்கள், மணிகள் கோர்த்த சதங்கைகள், வித்தியாசமான ஆடைகள் ஆகியவற்றுடன் தர்ஜனியும், விஸ்மயமுமாய்க் காட்சிதருகின்றன. சிலர் சூலத் தலையர்களாக உள்ளனர்.
கை அமைதிகளுள் அபயமும், கத்தரீமுக ஹஸ்தமும், கடகமும் கூடிய வலம்பிதமும் பெரும்பங்கு வகிக்கின்றன. சுகாசனம், யோகாசனம், லலிதாசனம் ஆகிய மூன்றும் பரவலாகக் காணப்படுகின்றன. ஸ்தானங்களில் சமபாதமும் வைஷ்ணவமும் அதிக அளவிற் காணப்படுகின்றன. பல்லவர் காலத்தில் மிகக் குறைந்த அளவிற் காணப்படும் விரிசடை இக்கால நடராஜப் படிமங்கள் பெரும்பாலானவற்றிலே காணப்படுகிறது.

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 9.
இரண்டாம் காலகட்டத்தில் திருவாலீசுவரம் போன்ற மிகச் சில விமானங்கள் தவிர பிறவற்றிற் சிற்பங்கள் நளினக் குறைவாகவே அமைந்துள்ளன. சரபர் போன்ற புதிய வரவுகள் துக்காச்சி, தாராசுரம், திரிபுவனவிரேசுவரம், சிதம்பரம் ஆகிய இடங்களிற் காணப்படுகின்றன. ஆடற்கரணச் சிற்பங்களைத் தொடராக அமைக்கும் முயற்சி இப்பருவத்தில் மலர்ந்தது. தஞ்சாவூர் ராஜராஜிசுவரம், கும்பகோணம் சாரங்கபாணிகரணத் தொடர்கள் சிவபெருமானும் தண்டுவும் நிகழ்த்துமாறு அமைந்தவை. மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் விமான கரணச் சிற்பங்கள் தூண் மாலைத் தொங்கல்களில் இடம் பெற்றுள்ளன. செம்பியன்மாதேவியாற் கோட்டச் சிற்பமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடராஜர் முதலாம் குலோத்துங்கருக்குப் பிறகு அருகி மறைகிறார். கங்காதரர், காலாரிமூர்த்தி, பிச்சாடனர், கங்காளர், கல்யாணசுந்தரேசுவரர் போன்ற கோட்டச் சிற்பங்களும் இக்கால கட்டத்தின் இரண்டாம் பருவத்தில் வழக்கிழப்பதைக் காணமுடிகிறது.
கை அமைதிகள், ஆடை அணிகலன்கள், நிலைகள், தலைக்கோலங்கள் ஆகியவற்றில் அதிக மாற்றமில்லை என்றாலும் முதற் பருவத்து நெகிழ்ச்சியையும் நுணுக்கத்தையும் காணக்கூடவில்லை. இக்கால கட்டத்தில் வந்த பெருங்கோயில்களும், பெருஞ் சிற்பங்களுக்கு கங்கைகொண்ட சோழிசுவரமும் பல்வேறு அளவிலான சிறிய சிற்பங்களுக்கு ராஜராஜேசுவரமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பல்வேறு புராணக் கதைகள், எண்ணற்ற ஆடற் சிற்பங்கள் என விமானம், மண்டபம், திருச்சுற்று மாளிகை, கோபுரம் ஆகியவை அனைத்திலும் தங்கள் திறனார்ந்த கைகளால் இழைத்துக் காட்டியிருக்கும் பிற்சோழர் சிற்பிகளின் சாதனைகளாக ராஜராஜேசுவரம் தமிழ் நாட்டுச் சிற்பக்கலை வரலாற்றில் ஒரு மை கல் எனலாம்.
பல்லவர்களைத் தொடர்ந்து கோயிற் கலைகளைப் போற்றி வளர்த்த சோழப் பெருவேந்தர்கள் தங்கள் கால நம்பிக்கைகள், சமயச் சடங்குகள், போர் முறைகள், மக்கள் வாழ்க்கை எனப் பெருங்கொடையை அவர்கள் எடுப்பித்த கோயில் வளாகங்களில் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். அவை தொட்டனைத் தூறும் மணற்கேணி போலக் காண்பார் கருத்திற்கேற்ப வரலாறு தந்திடும் பதிவுகள்.

Page 110

சோழர் காலப் படிமக் கலை
ஆ. வேலுசுவாமி சுதந்திரன்
விஜயாலய சோழனுடைய ஆட்சிக் காலத்திலே நிசும்பசூதனி ஆலயம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டது. சோழர் காலத்துக் கோயில்கள் என்று கொள்ளப்படுவனவற்றுள் அதுவே மிகப் பழமையானது போலத் தெரிகிறது. அதன் மூலஸ்தானத்தில் அமைந்திருக்கும் நிசும்ப சூதனியின் வடிவம் மிகுந்த வனப்புடையதாகும். உருக்கோட்டையிலுள்ள நார்த்தாமலையில் அமைந்திருக்குங் கோயில்களில் ஒன்றான விஜயாலய சோழீஸ்வரம் என்பதும் அவர்களுடைய காலத்தைச் சேர்ந்ததாகும். அங்கு அழகுமிக்க சிற்பங்கள் பல உள்ளன. சப்தமாதரின் உருவங்கள் வேலைப்பாட்டிற் சாலச் சிறந்தவை. விமானத்தில் அமைந்துள்ள நரசிம்மர், வீணாதர தகூரிணாமூர்த்தி என்போரின் சிற்பங்களும் அத்தகையனவாகும். அக் கோயிலிற் காணப்படுந் துவாரபாலகர் உருவங்களும் சோழர் கலைப்பாணிக்குரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. தக்கோலத்துத் திருவூறல் மகாதேவர் கோயிலைச் சேர்ந்த பிரம்மா, தகூழிணாமூர்த்தி ஆகியோரின் படிமங்கள் முதலாம் ஆதித்தனுடைய காலத்துச் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிற் சிற்பங்களும் அதிக சிறப்புக் கொண்டவை. அங்குள்ள விநாயகரின் படிமம் வினோதமான அம்சங்களுடன் காணப்படுகின்றது. அதன் பீடம் பத்மாசனமாகும். தலையின் மேலே அரைவட்டக்குடையின் கோலந் தெரிகின்றது. உருவத்தின் மேற்பகுதியில் அஞ்சலிக் கோலத்திற் கந்தருவரின் வடிவங்கள் தெரிகின்றன. இருபக்கங்களிலும் பூதகணங்கள் காணப்படுகின்றன. புள்ளமங்கையிலுள்ள இலிங்கோத்பவரின் படிமமும் சிறப்புமிக்கதாகும். மேற்புறத்திலே நான்கு கரங்களுடன் பறந்து செல்லும் பிரம்மாவின் வடிவமும் கீழ்ப்பகுதியிலே வராக மூர்த்தியின் உருவமும் அமைந்துள்ளன. தூண்களின் அடிப்பாகத்திற் பல விதமான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்மதன் ரதியுடன் தேரிலே செல்லுங்காட்சி, கஜசம்ஹாரம், பூவராகம் போன்றவை சிற்பங்களாகச்

Page 111
194 சோழர் காலப் படிமக் கலை
செதுக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபச் சுவரிலே அமைந்திருக்கின்ற துர்க்கையின் வடிவம் கவர்ச்சி மிக்க ஒன்றாகும். எருமையின் தலைமீது கால்களை ஊன்றிய கோலத்தில் அம்மனின் வடிவம் எட்டுக் கரங்களுடன் தெரிகின்றது. கைகளிலே சங்கு, சக்கரம், வாள், வில், கேடயம் என்பன காணப்படுகின்றன. கைகளில் ஒன்று அபய முத்திரையில் அமைந்துள்ளது. மற்றொன்று இடுப்பினைப் பற்றிய கோலத்திலே காணப்படுகின்றது. தேவ கோட்டத்தின் இரு பக்கங்களிலும் மானும் சிங்கமும் தெரிகின்றன. அருகிலே கழுத்தை அரிந்துகாட்டும் வீரர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஒத்த சிற்பங்கள் திருச்செங்காட்டங்குடி கணபதி ஈஸ்வரர் ஆலயத்திலும் மாயவரத்துப் புஞ்சை நல்துணை ஈஸ்வரர் ஆலயத்திலும் காணப்படுகின்றன.
எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயிற் சிற்பங்கள் முதலாம் பராந்தகனின் காலத்துப் படிமக் கலைக்குச் சிறந்த உதாரணங்களாகும். அங்கு மகாயோகியின் வடிவிற் சிவனுடைய உருவம் அமைந்துள்ளது. மேலிரண்டு கரங்களிலும் மான், மழு என்பன தெரிகின்றன. கீழிரண்டு கைகளும் யோக முத்திரையிற் தொடைமீது அமைந்திருக்கின்றன. பிரம்மாவின் உருவமும் யோகாசனக் கோலத்தில் அமைந்துள்ளது. செம்பியன் மாதேவியின் திருப்பணியான கோயில்களில் அழகு மிகுந்த சிற்பங்கள் பல உள்ளன. கோனேரி ராசபுரத்து உமாமகேஸ்வரர் ஆலயச் சிற்பங்கள் மிகச் சிறப்புடையவை. அங்கு இலிங்கத்தை வணங்குங் கோலத்திற் கண்டராதித்தனுடைய வடிவம் மிகச் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தின் தெற்குச் சுவரிலே ஆலயத்தை நிர்மாணித்த ஸ்தபதியின் வடிவஞ்செதுக்கப்பட்டுள்ளது. அவனுடைய பெயர் அரசரன் சேகரனான சாத்தன் குணபட்டன் என்பதாகும். இராசகேசரி மூவேந்த வேளான் என்னுஞ் சிறப்புப் பெயரும் அவனுக்குரியதாகும். அர்த்த மண்டபத்திலே காணப்படும் நடராசர், காளி, இடபாரூடர், பிச்சைதேவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரின் சிற்பங்கள் அதிக சிறப்புடையவை. கும்பகோணம் நாகேஸ்வரம் கோயிலிற் கருவறையிலும் அர்த்த மண்டபத்திலும் அடியார்களின் கோலத்தில் அமைந்த முழு உருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஒரு சிற்பக்கலைக் கூடமாக அமைந்திருப்பது முதலாம் ராஜராஜனால் அமைக்கப்பட்ட தஞ்சைப்பெருங் கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும். அதிலே பதினெட்டு துவாரபாலகரின் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றுந் தனிக்கல்லில் அமைந்தது; எட்டரை அடி உயரங் கொண்டது; கம்பீரமான

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 195
தோற்றங் கொண்டது. அக்கோயிலிலே காணப்படும் இலக்குமி, சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்கள் உன்னதக் கோலமானவை. வனப்பில் அவற்றுக்கு நிகரான வடிவங்கள் வேறெங்காவது காணப்படுவதில்லை. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் வெளிப்புறச் சுவர்களில் அமைந்துள்ள நடராசர். இலிங்கோத்பவர், சந்திரசேகரர், ஆலிங்கன சந்திரசேகரர் ஆகியோரின் வடிவங்கள் கலைப்பண்புகள் பொலிந்த வண்ணம் அமைந்துள்ளன. அரியும் அரனும் ஒன்று என்ற சிந்தனையின் அடிப்படையில் அரிஹரனின் உருவம் அற்புதக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையின் உட்பக்கத்தில், மேல் தளத்தில், நாட்டியக் கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நாட்டிய சாஸ்திர இலக்கணங்களுக்கு அமைய காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிற் சில கரணங்கள் செம்மையாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன. நாட்டிய சாஸ்திரம் விளக்குங் கரணங்கள் எல்லாவற்றையும் ஆலயம் ஒன்றிலே சிற்பக் கோலத்தில் அமைத்துக் கொள்ளும் முயற்சி தமிழகத்திலே முதன் முதலாக இராஜராஜனால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ காரணத்தினால் அந்தப் பணிமுற்றுப்பெறவில்லை. நூற்றியெட்டுக் கரணங்களுக்குப் பதிலாக எண்பத்தொரு கரணங்களே சிற்பக் கோலத்தில் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையைச் சுற்றி உண்ணாளிகைப்பகுதியில் வீரபத்திரர், சத்யோசாதமூர்த்தி ஆகியோரின் வடிவங்கள் உள்ளன. திருச்சுற்றிலே வராகியின் சிற்பம் காணப்படுகின்றது. ஆதியான நந்தியின் உருவம் சிதைவுற்றுள்ளதால் அதனை நீக்கிவிட்டு நாயக்கர் காலத்தில் ஒரு புதிய வடிவத்தை அமைத்துள்ளனர். கோயிலின் அளவுப்பிரமாணங்களுக்கும் இணையிலாத வனப்பிற்கும் பொருத்தமான வகையில் நாயக்கர் காலச் சிற்பிகள் ஈடும் எடுப்புமற்ற கோலத்தில் நந்தியின் உருவத்தை வடிவமைத்துள்ளனர்.
கங்கை கொண்ட சோழ ஈஸ்வரம்
முதலாம் இராசேந்திர சோழனால் அமைக்கப்பெற்ற கங்கை கொண்ட சோழ ஈஸ்வரத்திற் சோழர் காலச் சிற்பக்கலையின் உன்னத நிலையினைக் காண முடிகின்றது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களிலும் மண்டபத்தின் புறச் சுவர்களிலும் சிற்ப சாஸ்திரங்களிற் கூறப்படும்பிரதிமாலக்ஷணங்களையும் உன்னதமான கலைப்பண்புகளையும் பிரதிபலிக்கின்ற பல விதமான சிற்பங்கள் உள்ளன. கருவறைச் சுவரிலே காணப்படும் நடராசர் வடிவம்

Page 112
196 சோழர் காலப் படிமக் கலை
தனிப்பண்புகளைக் கொண்டதாகும். ஆடவல்லானின் தாண்டவத்தைக் கண்டுகளிப்பதற்கு விநாயகரும் முருகனும் வந்திருக்குங் காட்சி சிற்ப வடிவில் அமைந்திருக்கின்றது. அவர்கள் இருவரும் தத்தம் வாகனங்களில் அமர்ந்திருக்கின்றனர். அருகிலே பிருங்கியும் பூதகணங்களும் தாண்டவக் கோலத்தை வியப்புடன் பார்த்து இரசிக்கின்றனர். காரைக்காலம்மையார் நடனத்திற்கு இசைவாகத் தாளங் கொட்டுகிறார். ஒரு புறத்திலே உமாதேவியார் காளையின் மீது சாய்ந்த நிலையில் மகேஸ்வரனுடைய ஆட்டத்தைப் பார்த்து இரசிக்கின்றார். அருகிலே காளியும் நடனமாடுகிறாள். சோழர் காலச் சிற்பக் கலையின் பெருஞ்சிறப்பிற்கு இந்த வடிவம் பிரதானமான ஒர் உதாரணமாகும்.
கங்காதர மூர்த்தியின் வடிவம் சிறப்பான கோலத்துடன் விளங்குகின்றது. அருகிலே பிரமன், சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரின் வடிவங்கள் அமைந்திருக்கின்றன. பிரமனுடைய உருவத்திலே நீண்டதாடி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிற்பம் இராஜேந்திர சோழனுடைய கங்கைப் படையெடுப்பினை நினைவுபடுத்துகிறது. பொதுவாக வட இந்தியச் சிற்பங்களில் மட்டுமே பிரமனுடைய உருவம் தாடியுடன் காணப்படும். காலாந்தகர், மதனாந்தகர் என்பவற்றின் வடிவங்களோடு மகிஷத்தின் மேல் எட்டுக் கரங்களுடன் ஸ்தானக நிலையில் அமைந்திருக்கும் துர்க்கையின் வடிவமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழேஈஸ்வரத்திலே அமைந்திருக்கின்ற சண்டேச அனுக்கிரஹமூர்த்தியின் சிற்பம் கலாவிமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஒரு வடிவமாகும். சண்டேசருக்கு பூமாலை சூடிக் கோயிலின் காவலர் என்ற பட்டத்தைச் சிவபெருமான் வழங்குங் காட்சி அற்புதக் கோலத்திலே அமைக்கப் பெற்றுள்ளது. மகேஸ்வரனின் அருகிலே உமாதேவியாரின் வடிவந் தெரிகின்றது.
அர்த்த மண்டபத்துச் சுவரிலும் சிறப்பு மிகுந்த சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலொன்று ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சித்த மாயவனுக்கு சிவன் அருள் வழங்கியமையினைப் பற்றிய கோலமாகும். இராவண அனுக்கிரஹ மூர்த்தியின் கோலமும் அங்கே காணப்படுகின்றது. சிவனுக்கும் உமாதேவியாருக்கும் இடர்புரிந்த இராவணனுக்குத் தண்டனை வழங்கி, பின் அருள் கொடுத்தமை அதில் உருவமைக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் வேறொரு சிற்பம் மார்க்கண்டேயருக்கு அனுக்கிரஹம் வழங்கியமை பற்றிய காட்சியாகும். கங்கை கொண்ட சோழ ஈஸ்வரத்துத் துவார பாலகர் வடிவங்கள் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றன. அவற்றுள் ஒவ்வொன்றுந் தனிக் கல்லிலே செதுக்கப்பட்டுள்ளன.

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 197
கங்கை கொண்ட சோழேஈஸ்வரத்துச் சிறப்பு அம்சங்களில் ஒன்று அங்குள்ள செளரயீடமாகும். அது மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கின்றது. அது சதுரமான பீடம் ஒன்றில் அமைந்த தாமரை மலரின் தோற்றங் கொண்டது. அமைப்பிலே கட்டடம் இரு தளங்களினால் ஆனது. மேலுள்ள தளத்தில் எண்திசைகளையும் நோக்கிய எட்டுக் கிரகங்களின் மூர்த்தங்கள் உள்ளன. அடித்தளமானது ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் இரதத்தின் கோலம் போல உருவாக்கப் பெற்றுள்ளது. குதிரைகள் ஏழும் வாரத்திலுள்ள ஏழு நாட்களையும் அடையாள பூர்வமாக உணர்த்தும். சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்த தாமரை இதழ் போன்ற 12 சட்டங்களும் பன்னிரு மாதங்களையுங் குறிக்கும். புவனம் சூரிய மண்டலமாய் இருப்பதனையும் கால சக்கரமானது சூரியனை அடிப்படையாகக் கொண்டு நாள், வாரம், மாதம் என்ற வகையிலே வரிசைக் கிரமமாகச் சுழன்று செல்வதையும் அற்புதமான வகையிலே செளரயீடம் சித்திரிக்கின்றது.
முதலாம் ராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோரின் காலங்களுக்குரிய சிற்பங்களில் அதிக சிறப்புடையவற்றுட் சில திருச்செங்காட்டாங்குடி கணபதி ஈஸ்வரர் கோயில் அட்டமூர்த்தி மண்டபத்தில் உள்ளன. அங்கே காணப்படும் வைரவர், பிக்ஷாடனர், கங்காள மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, கால சம்ஹார மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் மிக அழகு பொருந்திய வகையிலே உருவாக்கப்பெற்றுள்ளன.
மேலைக்கடம்பூர்ச் சிற்பங்கள்
முதலாங் குலோத்துங்க சோழனுடைய காலத்திற் சோழர் சிற்பக்கலை வரலாற்றில் ஒரு திருப்பம் ஏற்பட்டதென்று கருதலாம். அவன் காலம் முதலாக பெருமளவிலான கட்டடங்களுஞ் சிற்பங்களும் வனப்பு மிக்க கோலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றிலே சில புதுமையான அம்சங்களும் மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளும் அமைந்திருக்கின்றன. பேரம்பலத்திலே, நிருத்த சபையிலே அமைந்திருக்கின்ற ஊர்த்துவ தாண்டவக் கோலம் உன்னதமான வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கின்றது. நடராசப் பெருமான் நெற்றிவரைக் காலைத் தூக்கியாடுங் கோலம் அற்புதமான வகையிலே செதுக்கப்பட்டுள்ளது. தாண்டவம் காளிக் கெதிரான போட்டியாட்டம் என்பதால் ஈஸ்வரனின் முகம் கோபமடைந்த தோற்றத்தைக் கொண்டுள்ளது. தில்லைக் கோயிலை விஸ்தாரமாக்குந் திருப்பணிகள் ஜயதரனான முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஆரம்பமாகி மூன்றாங்

Page 113
198 சோழர் காலப் படிமக் கலை
குலோத்துங்கன் காலம் வரை நடைபெற்றன. முதலாங் குலோத்துங்கனுடைய காலத்துச் சிற்பங்களிலே மிகச் சிறப்பானவை மேலைக் கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலுள்ளன. அக்கோயில் இரதம் போன்ற வடிவத்துடன் அமைந்திருக்கின்றது. இரதம் போன்ற கட்டட அமைப்பு காவிரிப்பூம் பட்டினத்து சாயாவனேஸ்வரர் கோயிலிலுங் காணப்படுகின்றது. அங்குள்ள முக மண்டபம் இரதம் போன்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலைக்கடம்பூர் கோயிலிற் காணப்படும் ஞானதசுஷிணாமூர்த்தி, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், கங்காதரர், அகத்தியர், கணபதி ஆகியோரின் சிற்பங்கள் மிகுந்த சிறப்புடையவை. ஆணவத்தின் வடிவமான மகிஷாசுரனை அழித்த வண்ணமாய் பத்ம பீடத்திலே அம்மன் ஸ்தானக நிலையிலே காணப்படுவது சிறப்புமிக்க காட்சியாகும். மகிஷத்தினுடைய தலை கீழே வெட்டப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. சூரியனார் கோயில் குலோத்துங்கன் காலத்து படிமக்கலை வளர்ச்சிக்கு மற்றும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். நவக்கிரகங்களிற் பலவற்றுக்குச் சோழர் காலத்தில் வெவ்வேறிடங்களிலே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திங்களுக்குத் திங்களூரிலுஞ், செவ்வாய்க்கு வைத்தீஸ்வரர் கோயிலிலும், புதனுக்குத் திருவெண்காட்டிலும், வியாழனுக்கு ஆலங்குடியிலும், வெள்ளிக்குக் கஞ்சனூரிலும், சனிக்குத் திருநள்ளாற்றிலும், இராகுவிற்குத் திரு நாகேஸ்வரத்திலும், கேதுவிற்கு மேலப் பெரும்பள்ளத்திலுங் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வண்ணமே சூரியனார் கோயிலும் அமைந்திருக்கின்றது.
தாராசுரம் ராஜராஜேஸ்வரம்
சோழர் காலத்துப் பிரதானமான கோயில்களில் தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரம் என்னுங் கோயிலும் ஒன்றாகும். அது பன்னிரண்டாம் நூற்றாண்டிலே இரண்டாம் ராஜராஜனால் அமைக்கப்பெற்றது. அது ஆரம்பத்திலே ராஜ ராஜேஸ்வரம் என்னும் பெயருடன் விளங்கியது. அருமையான சிற்பங்களைக் கொண்டு விளங்கும் சிற்பக்கலைக் கூடமாக அது காட்சியளிக்கின்றது. மிகவுங் கவர்ச்சியான, உன்னதமான படிமங்கள் நூற்றுக் கணக்கில் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதுமையான வடிவங்களில் ஒன்று சரபமூர்த்தியின் வடிவமாகும். இரணியனைக் கொன்ற பின்பும் ஆவேசந் தணியாது அகோரமான தோற்றத்துடன் விஷ்ணு காணப்பெற்றமையால் அதனையிட்டுத் தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 199
சரபமூர்த்தியின் வடிவம் மனிதன், பறவை, மிருகம் ஆகிய மூன்று பிறவிகளின் அம்சங்களோடு கூடியமைந்த ஒன்றாகும். அந்த வடிவத்திலே மனிதனுக்குரிய முகமுங் கைகளும் மிருகத்தின் உடலும் பறவையின் இறகுகளும் ஒன்று கூடி அமைந்துள்ளன. சரப மூர்த்தியின் உருவத்திலே அதன் தடித்த கால்கள் நரசிம்மனை ஊன்றிய வண்ணம் அமைந்துள்ளன. நரசிம்மரான விஷ்ணு கூப்பிய கைகளோடு தொழுத நிலையில் அமைந்துள்ளார். சரபத்தின் மேலே குடை, சாமரம் ஆகியவற்றின் உருவங்கள் தோன்றுகின்றன. அதற்கு மேல் கரங்கூப்பி வணங்கும் நிலையிற் தேவர்கள் தோன்றுகின்றனர்.
விக்கிரம சோழனுடைய காலத்து ஆலயங்களில் ஒன்றான விக்கிரம சோழீஸ்வரர் கோயிலிலும் சரபமூர்த்தியின் வடிவங் காணப்படுகின்றது. அங்கே நரசிம்மரின் கைகள் செயலிழந்து தொங்கிய நிலையில் இருக்கின்றன. தாராசுரத்திற் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு சிறப்புமிக்க சிற்பங்கள் பலவற்றைச் செதுக்கியுள்ளனர். அங்கு காணப்படும் வடிவங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் ஆகியவற்றுள் உள்ளவற்றைக் காட்டிலும் வனப்பிற் சிறந்தனவாகக் காணப்படுகின்றன. கலியாணசுந்தரர், நடராசர், துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் கவர்ச்சிமிக்கவை. தஞ்சைப் பெரிய கோயில் உட்கோபுரத்தின் அடிப்பாகத்தில் மட்டுமே சில தொடர்நிலைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், தாராசுரத்தில் அதிக எண்ணிக்கையில் அவ்விதமான சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. விஜயநகர காலத்துக் கலைப்பாணிக்கு தாராசுரத்துப் படிமங்கள் முன்னோடியாக அமைந்தன என்று கொள்ளலாம்.
முகமண்டபத்திலே மூன்று தலைகளுடனும் எட்டுக்கைகளுடனும் ஒரு பக்கத்தே பெண்ணின் அங்க இலட்சணங்களும் பொருந்தி அமைந்திருக்கும். வடிவம் சோழர் காலச் சிற்பக்கலையில் விநோதமான ஒரு படைப்பாகும். இதனை ஒத்த வடிவம் வேறெங்குங் காணப்படவில்லை. இந்த வடிவத்தை அர்த்தநாரி என்றும், மாகாளி என்றும், சூரிய சக்தி என்றும், மகாமாயா என்றும் பல்வேறு விதமாகப் பலரும் வர்ணித்துள்ளனர். சாசனக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்தவர்கள் அதனைச் சூரியனின் வடிவம் என்று கருதுவர்.
இரண்டாம் இராஜ ராஜனது காலத்துச் சிறப்பு வாய்ந்த சிற்பங்களுள் வேறொன்று தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள கங்காள மூர்த்தியின் படிமமாகும். தோளின் மேலே கங்காளம் அமைந்திருக்கின்றது. அருகிலே இரண்டுக்கு மேலாகக் கணங்களின் வடிவம் அமைக்கப்பட்டிருப்பதும், அதே போன்ற அளவிலே பெண்ணுருவங்கள் காணப்படுவதும், அதன் விநோதமான

Page 114
2OO சோழர் காலப் படிமக் கலை
அம்சங்களாகும். இதுவரை காணப்பெற்ற கங்காளமூர்த்தி வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. கூர்ம புராணத்திலே காணப்படும் வர்ணனைக்கு அமைய அது உருவாக்கப்பட்டுள்ளது. பல விதமான இசைக் கருவிகளை ஒலிக்குங் கோலத்திலே கணங்களின் உருவங்கள் அமைந்திருக்கின்றன. பெண்களின் உருவங்கள் கலைநயம் பொலியும் வண்ணமாக உருவாக்கப்பட்டுள்ளன. சிவனைப் பார்த்த நிலையில் ஒரு பெண்ணின் ஆடை உடலிலிருந்து தளர்கின்றது. நாணம் ஏற்பட்டதால் அவள் ஒரு கையால் தளரும் ஆடையைப் பற்றிக் கொள்கிறாள். மற்றொரு பெண் சிவனைக் கண்டதும் அவனுடைய அழகில் மயங்கி விடுகிறாள். மீண்டும் ஒரு முறை பார்க்காதது போல முகத்தை ஒரு புறந் திருப்புகிறாள். அந்தச் சிற்பம் மேல்வரும் திருக்குறட் பாடலை நினைவுபடுத்துகின்றது.
“யான் நோக்கும் காலை நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்லநகும்”
தாராசுரத்து ராஜராஜ ஈஸ்வரத்தின் கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றின் அதிஷ்டானப் பகுதிகளிலே சைவ நாயன்மார்களின் புராண வரலாறுகளை விளக்குஞ் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பெரிய புராணத்தின் செல்வாக்கிற்கு இச் சிற்பங்கள் தக்க சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. தெற்குச் சுவரின் அதிஷ்டானப்பகுதியிலே திருஞான சம்பந்தர் கையிற் கிண்ணம் ஏந்திய கோலத்திலே காணப்படுகிறார். அருகிலே அவரின் தந்தையாரின் உருவம் கையிலே கோல் ஏந்திய வடிவத்தில் அமைந்திருக்கின்றது. அந்தக் காட்சி சீர்காழியிலே சம்பந்தப் பெருமான் ஞானப்பாலருந்திய அற்புதத்தினைக் குறிக்கின்றது. அவ்வண்ணமாகவே ஏனைய நாயன்மார்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அங்கே சிற்பக் கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளன.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் திருப்பதிகம் பாடியோரின் தொகை 58 எனச் சாசனங்கள் கூறும். ஆயினும், அவர்களின் சிற்பங்கள் அங்கே அமைக்கப்படவில்லை. ஆனால், தாராசுரத்திலே பிராகாரச் சுவர்களில் அங்கிருந்து திருப்பதிகம் ஒதிய ஒதுவார்களின் உருவங்கள் படிமங்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் படிமத்தின் கீழும் அவரவர் பெயர்கள் பொறிக்கப்பெற்றுள்ளன. அது அச் சிற்பங்களைப் பொறுத்த வரையில் ஒரு சிறப்பம்சமாகும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 201
திரிபுவனம் கோயில்
கம்பஹாரேஸ்வரம் என்று இந்நாட்களில் வழங்கும் திரிபுவனவீர - ஈஸ்வரத்திலே காணப்படுஞ் சிற்பங்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துச் சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். அதிஷ்டானப் பகுதிகளிலே இராமாயணக் காட்சிகள் சிற்பக் கோலத்தில் அமைந்துள்ளன. இராமன், இராவணன், வாலி, சுக்கிரீவன் முதலியோர் புரிந்த போர்களின் காட்சிகள் அங்கே செதுக்கப் பெற்றுள்ளன. இராமருடைய கல்யாண வைபவம் கலை வனப்பு மிகுந்த கோலத்திலே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிற் காணப்படுஞ் சிற்பக்கலை அம்சங்களிலே குறிப்பிடத்தக்கவை தூண்களின் வடிவங்கள் ஆகும். பல்லவர் காலத்திலே தூண்களின் அடிப்பாகத்தில் அமர்ந்த நிலையிலும், முன்னங்கால்களை உயர்த்திய நிலையிலுஞ் சிங்க உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அம்சம் சோழர் காலத்திலுங் கட்டடங்களிலே சிறப்பிடம் பெற்றது.
தாராசுரத்துக் கோயிலின் இராஜகம்பீரன் மண்டபத்திலுள்ள தூண்களிற் காணப்படுஞ் சிங்க உருவங்கள் அளவிலே பெரியவை. அவை கம்பீரமான தோற்றங் கொண்டவை. விஜயநகர காலத்திலுந் தூண்களில் அவற்றை ஒத்த சிங்க உருவங்கள் இடம்பெறலாயின. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். ஒரு கலைப் பாணியின் பிரதான அம்சங்கள் குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தின் எல்லைக்குள் அடங்கிவிடாது காலச் சக்கரத்திலே தொடரோட்டமாக அமையும் என்பதற்குத் தூண்களில் அமைந்த சிங்க உருவங்கள் சிறந்த உதாரணமாகும். விஜயநகர, நாயக்கர் காலங்களில் இரண்டுக்கு மேற்பட்ட அமர்ந்த நிலையிலுள்ள சிங்க உருவங்கள் தூணின் கபோதமாகிய பாகத்தில் அமைந்திருப்பது வழமை. விஜய நகர காலத்துத் தூண்களிலுள்ள சிங்க உருவச் சிற்பங்கள் மிகவுஞ் செம்மையான கோலத்திற் செதுக்கப்பட்டுள்ளன.
வைணவப் படிமங்கள்
சைவ சமயந் தொடர்பான படிமக் கலை போல வைணவம் சார்ந்த படிமக்கலையும் சோழர் காலத்திற் பெருவளர்ச்சியடைந்தது. விழுப்புரம் எண்ணாயிரத்தில் அமைந்திருக்கும் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில் முற்காலங்களில் ராஜ ராஜ விண்ணகரம் என்னும் பெயரால் வழங்கியது. அங்குள்ள வைணவச் சிற்பங்கள் எல்லாம் சோழர் காலத்தில் அமைந்தவை.

Page 115
2O2 சோழர் காலப் படிமக் கலை
மகா விஷ்ணுவின் வடிவத்திலே இடம் பெறும் சக்கரம் பல்லவர் காலத்துப் பிரயோகச் சக்கரமாக அமையாது உத்யோகச் சக்கரமாக விளங்குகின்றது. செங்கல்பட்டிலுள்ள திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோயிற் சிற்பங்களும் மிகச் சிறந்தனவாகும். அங்குள்ள கல்வெட்டொன்று கிருஷ்ண பெருமானை வெண்ணெய் பூத்தர் என்று குறிப்பிடுகின்றது. அங்குள்ள இராமரது சிற்பங்களும் மிகுந்த வனப்புடையவை. திருநெல்வேலியிலுள்ள பள்ளிகொண்டார் சந்நதி (சோழேஸ்வரர் கோயில்) திருச்சுற்றில் அனந்தசயன விஷ்ணு, பூரீதேவி, பூதேவி ஆகியோரின் கற்சிற்பங்களும், இராமன், விஷ்ணு, ழரீதேவி, கிருஷ்ணர் ஆகியோரது உலோகப் படிமங்களும் அமைந்திருக்கின்றன. திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் சந்நிதியில் இடம்பெறும் அனந்தசயன விஷ்ணுவின் சிற்பம் சோழர் காலத்திற்குரியதாகும். அங்குள்ள விஷ்ணுவின் உலோகப்படிமம் சிறப்பம்சங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. மேலிரண்டு கைகளிலும் சங்கு, சக்கரம் என்பனவும் கீழிரண்டு கைகளில் அமிர்த கலசங்களும் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். சேர்மாதேவியிலுள்ள இராமசுவாமி கோயிலிலும் பல அழகிய சிற்பங்கள் உள்ளன. அங்குள்ள கோயில் முதலாம் இராஜராஜனின் சிறப்புப் பெயரால் நிகரிலிச் சோழ விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே விஷ்ணு, பூரீதேவி, பூதேவி, பிருகு, மார்க்கண்டேயர் ஆகியோரின் சிற்பங்களும் இராமர், சீதாபிராட்டியார், இலக்குமணர், அனுமார் முதலியோரின் உலோகப் படிமங்களும் அதிக சிறப்புடையவை. மன்னார் கோயிலைச் சார்ந்த கோபால சுவாமி கோயில் ஆதியிலே இராஜேந்திர சோழ விண்ணகரம் என்னும் பெயரால் வழங்கியது. அங்கு காணப்படும் மகா விஷ்ணுவின் வடிவத்தில் மேலிரு கரங்களிலும் சங்கு சக்கரங்கள் என்பன காணப்படுகின்றன. ஏனைய கரங்களில் ஒன்று அபய முத்திரையில் அமைந்துள்ளது. மற்றொன்று கதையில் அமைந்திருக்கின்றது. நவநீத கிருஷ்ணர், இராமர், சீதாபிராட்டியார், இலக்குமணர், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் உலோகப்படிமங்கள் அங்குள்ளன.
வெண்கலப் படிமங்கள்
தமிழக வரலாற்றிலே வெண்கலப் படிமங்களின் பொற்காலம் என்று சொல்லப்படுவது சோழப் பேரரசர் காலம் ஆகும். ஒப்பீட்டளவிலே நோக்குமிடத்து பல்லவர், பாண்டியர், விஜயநகர ராயர், நாயக்க மன்னர் ஆகியோரின் காலங்களில் உருவாக்கப்பட்ட வெண்கலப் படிமங்களின்

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 203
தொகை மிகக் குறைவாகும். கலைச்சிறப்பினை நோக்குமிடத்தும் சோழர் காலத்துப் படிமங்களே மிகச் சிறப்புடையனவாகும். தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம் என்னும் உலோகங்களைக் கலப்பதன் மூலம் வெண்கலம் உருவாக்கப்படும். போதியளவிலே தங்கம் கலக்கப்பட்டிருப்பதன் காரணமாகச் சோழர் காலத்து வெண்கலப் படிமங்கள் பளபளப்பான தோற்றத்துடன் காணப்படுகின்றன. சோழர் காலத்து வெண்கலப் படிமங்களில் நடராச வடிவம் மிகவும் பிரசித்தமானது, அது உலகின் பல பாகங்களிலுமுள்ள அருங் காட்சியகங்களிலே வைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இலங்கையிலும் நடராசரின் வெண்கலப் படிமங்கள் பல அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப் பெற்றுள்ளன. கொழும்பிலுள்ள அருங்காட்சியகத்திலும் அவறுட் சிலவற்றைப் பார்க்கலாம்.
சைவ சமய வரலாற்றிலே சோழப்பேரரசர் காலம் பொற்காலம் என்று போற்றப்படுகின்றது. அக்காலத்தில் சிவனது தாண்டவக் கோலங்களில் ஆனந்த தாண்டவம் என்னும் வடிவமே சைவர்களைப் பெரிதுங் கவர்ந்தது. சைவ மரபிலே உத்தமோத்தம தானம் என்று கொள்ளப்படும் பேரம்பலத்திலே நடராசரே முதன்மையானவராக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோயில் என்றால் பேரம்பலம் என்று கொள்ளப்படும் அளவிற்கு அது முதன்மைபெற்றிருந்தது. பிற்காலச் சோழ மன்னரும் நடராசரைக் குல தெய்வமாகப் போற்றினார்கள். சிதம்பரத்தைக் குறிப்பிடுமிடத்து அவர்களின் மெய்க்கீர்த்திகள் தங்குல நாயகன் தாண்டவம் பயிலும் அம்பலம்” என்று சொல்லுகின்றன.
நடராசர் படிமத்தைப் பற்றிச் சாசனம் ஒன்றிலே மேல்வரும் பகுதி காணப்படுகின்றது, “கீழ்க்கிடந்த முயலகனோடும் கூட பாதாதி கேசாந்தம் முக்காலே அரைக்கால் முழ உசரமும், பூரீ ஹஸ்தம் நாலும், ஜடைமேல் கங்காபட்டாரகியும், ஜடை ஒன்பதும், பூமாலை ஏழும் உடைய தலமாக எழுந்தருளிவித்த ஆடவல்லார் திருமேனி ஒன்று; ரத்தின நியாசம் செய்து இவர் எழுந்தருளி நின்ற மூவிரல் உசரமுடைய பத்மம் ஒன்று; ஐவிரல் உசாத்தில் அரை முழ நீளத்து பதிற்று விரல் அகலமுடைய பீடம்” சோமாஸ்கந்த மூர்த்தியின் வடிவங்களும் சோழப் பேரரசின் காலத்திற் பெருந்தொகையில் உருவாக்கப் பெற்றன. திருப்புகழுர் ஆலயத்திற் காணப்படும் சோமாஸ்கந்த மூர்த்தியின் படிமத்திற் சிறப்பம்சங்கள் உள்ளன. சிவன், உமை, கந்தன் ஆகிய மூவரின் உருவங்களும் இவ்வடிவத்திலே இடம்

Page 116
204 சோழர் காலப் படிமக் கலை
பெறும் இம் மூன்று உருவங்களும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்னும் மூன்று தத்துவங்களின் உருவகமானவை என்று சிலர் கொள்வர். பெரும்பாலான உலோகப்படிமங்களில் உமையின் இடது கரம் கடக முத்திரையிலும் வலது கரம் வரத முத்திரையிலும் அமைந்திருக்கின்றன. சில சமயங்களில் இடக்கரமானது சிம்மகர்ண முத்திரையிலும் அமைந்திருக்கும். வேறு சில படிமங்களில் இடக்கரம் பீடத்தில் ஊன்றிய கோலமாய் இருக்கும். திருப்புகழுர்ப் படிமத்தில் உமாதேவியாரின் கரம் ஒன்றிலே நந்தியின் உருவம் காணப்படுகின்றது. இவ்விதமான கோலம் ஆகமங்களிலே சொல்லப்படவில்லை. முதல் முதலாக இதுபோன்ற படிமம் இராம நந்தீஸ்வரம் என்னும் ஆலயத்திலே இடம் பெற்றது. அக்கோயிலைப் பற்றிய ஐதீகங்களின்படி இராமர் அங்கு சிவனை வழிபட்டதாகவும் அதற்கு நந்தி தடையாக இருந்தமையால் உமாதேவியார் நந்தியைக் கையிலே பிடித்து வைத்துக் கொண்டார். அந்தக் கதையின் அடிப்படையிலேயே அங்குள்ள சோமாஸ்கந்த படிமம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
வழமைக்கு மாறான அம்சம் ஒன்று திருப்பனையூரிலே காணப்பெற்ற சோமாஸ்கந்த வடிவத்திலுள்ளது. அதிலே சிவனுடைய கீழ்வலக்கரம் கடக முத்திரையில் அமையாது மாங்கனியைப் பற்றிய கோலத்திற் காணப்படுகின்றது. இது விநாயகருக்கும் முருகனுக்கும் இடையில் உலகத்தை அறியும் பொருட்டு ஏற்பட்ட போட்டியினையும் அதிலே வெற்றியாளருக்கு மாங்கனி கொடுத்தமை பற்றிய கதையினையும் நினைவுபடுத்துகின்றது.
பிக்ஷா டனர்
சோழர் காலத் திருமேனிகளில் ஒன்றான மேலப்பெரும்பள்ளம் வலம்புரிநாத சுவாமி கோயிலிற் காணப்படும் பிக்ஷாடனரின் வடிவத்திற் சில சிறப்பம்சங்கள் தெரிகின்றன. அதிலே ஆடையுடன் வீணையைப் பிடித்த கோலத்திற் பிக்ஷாடனர் காணப்படுகிறார். தேவாரப் பாடலிலே வீணாதர பிக்ஷாடனரைப் பற்றிய குறிப்பு வருகின்றது. வேறு எத்தலத்திலும் வீணாதர கோலத்தில் பிக்ஷாடனரின் வடிவங் காணப்படவில்லை.
திருவிடை மருதூரிலுள்ள நடராசரின் திருவுருவம் சிறப்பியல்பு கொண்டதாகக் காணப்படுகின்றது. வழமையாக நடராசர் வடிவங்கள் விரிந்த

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 205
சடையுடன் அமைந்திருக்கும். ஆயினும், அங்குள்ள படிமத்தில் அதற்குப் பதிலாகச் சடாமகுடம் காணப்படுகின்றது. அதிலே கொக்கின் இறகும் கபாலமும் அமைந்துள்ளன. மகுடத்திலே அர்த்த சந்திரனும் பாம்பும் கொன்றை மலருந் தெரிகின்றன. காதணிகள் பத்ர, மகர குண்டலங்களாகும். கழுத்திலே கண்டிகையும் ஆரங்களும் அணிகலன்களாக உள்ளன. குனித்த புருவமும் குமிழ் சிரிப்பும் தோன்றும் வகையிலே இவ்வடிவத்தைச் செம்மையாக வார்த்துள்ளனர். இடக்கரம் கஜகஸ்தமாயுள்ளது. மற்றைய கரம் அக்கினி ஏந்திய கோலத்தில் உள்ளது. வலக்கரம் ஒன்று அபய ஹஸ்தமானது; மற்றையது துடியினை ஏந்திய கோலத்தில் உள்ளது.
இத்திருமேனியின் எடுத்த பொற்பாதம் எழிலுடன் விளங்க மற்றையது ஊன்றிய கோலத்தில் உள்ளது. திருப்பாதங்களிலே வீரக்கழல் பாதசரம் போன்றன அணிகளாக உள்ளன. கீழே வீழ்ந்து கிடந்து, நிமிர்ந்து நோக்கும் முயலகனின் வடிவங் காணப்படுகின்றது. முழு வடிவமும் பிரபாமண்டலத்தில் அமைந்திருக்கின்றது. நடராசர் வடிவத்தின் அருகிலே வழமையாகச் சிவகாமசுந்தரியின் கோலத்தில் உமாதேவியாரின் உருவம் அமைந்திருக்கும். வழமையாக அம்மனின் படிமம் பத்ம பீடத்தில் அமைந்திருக்கும். உருவம் திரிபங்கமாய் இருக்கும். இடையிலும் கழுத்திலும் வளைவுகள் ஏற்படக்கூடிய வண்ணம் உருவம் அமைந்திருக்கும். கால்களில் ஒன்று நேராக ஊன்றிய கோலத்திலும் மற்றையது சற்று மடித்து வளைந்த கோலத்திலுங் காணப்படும். வலக்கரம் மலரேந்திய வண்ணம் கடக ஹஸ்தமாகவும் இடக்கரம் டோல ஹஸ்தமாகவும் அமைந்திருக்கும். மார்பகங்கள் திரட்சி பொருந்திய கோலத்திலே அமைந்திருக்கும். மகர குண்டலம், ஆரம், அட்டியல், பாகுமாலை, வளையல், நூபுரம், கழல், கண்டை, பாதசரம் ஆகியன ஆபரணங்களாக அமையும்.
இடப வாகனர்
விருஷய வாகனர் என்பது சிவனின் திருவுருவங்களில் ஒன்றாகும். சோழர் காலத்திலே உருவாக்கப்பட்ட இடபவாகனரின் சிற்பங்கள் பல அருங் காட்சியகங்களிலும் ஆலயங்களிலும் உள்ளன. அதனைப் பற்றிய குறிப்புகள் சில கல்வெட்டுக்களிலுங் காணப்படுகின்றன. இடபவாகனரின் வடிவத்திலே சிவனின் உருவம் சடாமகுடத்துடன் காணப்படும். சென்னை

Page 117
206 சோழர் காலப் படிமக் கலை
அருங்காட்சியகத்திலுள்ள படிமத்தின் அமைப்பு வழமைக்கு மாறுபட்டதாகும். அது தலைப்பாகையுடன் காணப்படுகின்றது. இக் கோலம் படிமக்கலையிற் புதுமையானதாகும். நந்திமேல் இறைவன் சாய்ந்திருப்பது போன்ற அமைப்பும் கரங்களின் தோற்றமும் தலைப்பாகையிலுள்ள பிறைச்சந்திரனும் கொன்றை மலரும் அழகு பொலிந்த கோலத்திற் தெரிகின்றன. உமாதேவியாரின் உருவம் அருகிலே கவர்ச்சிமிகுந்த கோலத்துடன் காணப்படுகின்றது. யெளவனத்தின் கவர்ச்சியும் பெண்மையின் அழகும் நளினமும் வனப்புடன் அமைந்துள்ளன.
கலியாண சுந்தரர்
சிவன் பார்வதி திருக்கலியாணத்தை விளக்கும் கோலம் கலியான சுந்தரர் படிமமாகும். அதிலே சிவன் தனது வலக்கரத்திலே அம்மனின் வலக்கரத்தைப் பற்றியிருக்குங் கோலம் காணப்படும். மகாவிஷ்ணு உமாதேவியாரின் சகோதரனாகத் தோன்றுவார். இலக்குமி உமாதேவியாரின் தோழியாகக் காட்சியளிப்பார். திருமால் தாரைவார்த்து உமாதேவியாரைச் சிவனிடம் ஒப்படைக்கும் கோலத்திலே காணப்படுவார். சிவனுடைய வலது கால் சற்று வளைந்து ஊன்றிய கோலமாய் இருக்கும். இடது பாதம் நேராக அமைந்திருக்கும். கரங்களிலே மானும் மழுவுங் காணப்படும். மகுடம் சடாமகுடமாயிருக்கும். நெற்றிக்கண் தெளிவாகத் தோன்றும். அது போலவே ஏனைய பிரதிமாலசுஷணங்களும் சிறப்புடன் காணப்படும். கலியாணசுந்தரர் படிமத்திலே காணப்படும் மகாவிஷ்ணுவின் உருவத்திற் கிரீடம் மகுடமாக அமைந்திருக்கின்றது. உபவீதம், உதரபந்தம், கண்டி, பூரீ வத்ஸம், சங்கு சக்கரம் என்பன பிரதான அம்சங்களாக விளங்குகின்றன. மொத்தத்தில் உருவம் அழகு மிக்க கோலத்துடன் காணப்படுகின்றது. பொதுவாகக் கலியாண சுந்தரர் படிமத்திலே திருமகளின் உருவம் இடம் பெறுவதில்லை. எல்லோராக் குகைக் கோயில்களில் மட்டுமே திருமகளின் உருவத்தையும் சித்திரித்துள்ளனர். அதுபோல உலோகப்படிமங்களைப் பொறுத்த வரையில் இப்படிமம் புறநடையாக அமைகின்றது. கலியாணசுந்தரரின் கோலத்தில் திருமகளைச் சேர்த்தமை சோழர் காலப் படிமக்கலையில் ஏற்பட்ட ஒரு புதுமையாகும். உமாதேவியாரின் கழுத்திலே மங்கல நாண் காணப்படவில்லை என்பதுங் குறிப்பிடத்தக்கது. நித்திய கல்யாணியாகிய உமையவள் என்றுங் கன்னியானவள் என்பது சைவ சமய தத்துவம் என்பதுங் குறிப்பிடத்தக்கது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 2O7
திரிபுராந்த கர்
முப்புரம் எரித்த அற்புத நாயகனைத் திரிபுராந்தகர் என்பர். திரிபுராந்தகரின் உருவங்கள் சோழர் காலத்தில் அமைந்த கோயில்களிலே நூற்றுக்கணக்கில் அமைந்துள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள திரிபுராந்தகரின் படிமங்கள் அழகு பொருந்தியவை; அற்புதக் கோலமானவை. வீரரசத்தின் இயல்புகள் மேலோங்கிய பாவத்தில் மகேஸ்வரனுடைய கோலத்தை இவற்றிலே வடிவமைத்துள்ளனர். பல உருவங்களில் தண்டு படைக்கலமாக அமைந்திருக்கின்றது. ஒரு கால் பலமாக ஊன்றிய கோலத்திலும் மற்றைய கால் தூக்கி மடித்த கோலத்திலும் அமைந்திருக்கும். வெண்கலப்படிமங்கள் சிலவற்றிலே வில்லேந்திய கோலத்திற் திரிபுராந்தகரின் உருவம் அமைந் திருக்கின்றது. ஒரு பெரு வீரனுக்குரிய உத்வேகமும் போரில் அடைந்த வெற்றியின் காரணமாகப் பொலிகின்ற பெருமித உணர்வும் பிரதிபலிக்கப்படும் வண்ணமாகத் திரிபுராந்தகரின் உருவம் அமைந்திருக்கும். பக்கத்திலே நாயகியான திரிபுர சுந்தரியின் கோலம் காணப்படும். தேவியின் முகம் வட்ட வடிவில் அமைந்திருக்கும். உடல் சற்று வளைந்த கோலத்தில் அமைந்து காணப்படும்.
கண்ணப்ப நாயனார்
அறுபத்திமூன்று சைவ நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பர் தேவார முதலிகளினாலே மிகவும் போற்றப்படுபவர். சிவபெருமான் மீது அவர் கொண்ட அன்பு ஒப்பிலாதது என்று தேவார முதலிகள் கண்ணப்பரின் பக்தியைப் போற்றிப் பாடியுள்ளனர். கண்ணப்பநாயனார் வர்ணப்பாகுபாடுகளுக்கு அப்பாலானவர். சாதியில் வேடர், சமயாசாரங்களும் வேதாகம முறைகளும் அறியாதவர். ஆயினும், சிவபெருமான் மீது அவர் கொண்ட பக்தி அளவிலாதது. கண்ணப்பர் திருமறம் என்ற பெயரால் அவரின் பக்தியைப் போற்றிப்பாடும் இரண்டு பழம் பனுவல்கள் உள்ளன. பெரிய புராணத்திலே, கண்ணப்பநாயனார் புராணத்திலே கண்ணப்பரைப்பற்றிய மரபு வழிக் கதைகளை உள்ளத்தை உருக்கும் வகையிலே சேக்கிழார் பெருமான் பாமாலை செய்துள்ளார். சோழர் காலம் முதலாகவே கண்ணப்பரின் படிமங்களைக் கல்லிலும் உலோகத்திலும் அமைத்தார்கள். தஞ்சாவூர் அருங்

Page 118
208 சோழர் காலப் படிமக் கலை
காட்சியகத்திலே கண்ணப்ப நாயனாரின் படிமம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதிலே சிவபெருமானுக்கு அர்ச்சனையாகக் கண்ணப்பர் கண்மலர் சாத்துகின்ற அற்புதக் கோலம் சிறப்புமிக்க வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சைவ மரபிலுள்ள சிவனடியார்களிலே கண்ணப்பர் வன்றொண்டர் என்னும் வகையினரைச் சேர்ந்தவர். சிவபெருமான் மீது அளவிலாத பற்றினைக் கொண்டவர்கள் வன்தொண்டர். சிவ நிந்தனை செய்வோரைத் தண்டனை செய்வதில் அவர்கள் மிக ஆர்வங் காட்டுவர். அவர்களுடைய பக்தி அளப்பரியது. அதன் நிமித்தம் உயிரையும் தியாகஞ் செய்வதற்கு வன்தொண்டர் தயாராயிருப்பர்.
கண்ணப்பரின் படிமத்திலே கையில் வில்லும் அம்பும் காணப்படும். முடி கேஸபந்தமானது. அதிலே இறகுகள் செருகப்பட்ட வடிவந் தெரியும். இடையிலே தோலாலான ஆடையின் கோலந் தெரியும். வேட்டுவருக்குரிய தோற்றத்தைச் சித்திரிக்கும் வகையிற் பிரதிமாலசுஷ்ணங்கள் அமைந்திருக்கும்.
வைணவச் சிற்பங்கள்
சைவ சமயத்தைப் போலத் தமிழகத்திலே வைணவமும் சோழர் காலத்திற் பெரு வளர்ச்சி அடைந்திருந்தது. பாடல் பெற்ற வைணவக் கோயில்கள் பெரும் பான்மையும் சோழராட்சியிலே புனர்நிர்மாணம் பெற்றன. முற்காலங்களில் மண்தளிகளாக அமைந்த பெரும்பாலான கோயில்கள் புனர்நிர்மாணம் பெற்ற காலத்திற் கற்றளிகளாக அமைக்கப்பட்டன. கட்டட அமைப்பினைப் பொறுத்த வரையில் ஈஸ்வரங்களைப் போலப் பெருமாள் கோயில்களும் சமகால கட்டடக் கலையின் அம்சங்களைக் கொண்டு விளங்கலாயின. அதிஷ்டானப் பகுதிகளிலும் விமானத் தளங்களிலும் கோயிலின் வேறு பகுதிகளிலும் வைணவ மரபோடு தொடர்புடைய ஐதீகங்களையும் மரபுகளையும் காட்சிப் பொருளாகச் சிலையில் வடிவமைத்தார்கள். ஆழ்வார் பாசுரங்களிலே இடம் பெறுங் கதைகள் இவற்றிலே சிறப்பிடம் பெறலாயின. சோழர் காலத்து வைணவக் கோயில்களிலும் திருப்பதிகம் ஒதும் வழக்கம் ஏற்பட்டது. ஆழ்வார்களதும் ஆண்டாளதும் பாசுரங்களை ஒதுவதற்கென்று அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் ஆழ்வார்களின் படிமங்களைக் கோயில்களிலே தாபனஞ் செய்து அவற்றிற்கு வழிபாடு ஆற்றினார்கள். கல்லிலும் உலோகத்திலும் அவர்களின் படிமங்கள் உருவாக்கப்பட்டன. சைவக் கோயில்களிலும் பாகவத மரபிலுள்ள ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 209
புஞ்செய் நல்துணையீஸ்வரர் கோயிற் கருவறையின் அதிஷ்டானத்திலே கிருஷ்ண பெருமான் பூதகியை அழிக்குங் காட்சி புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. அவளுடைய கைகள் வெட்டி வீசப்பட்ட நிலையிலே தெரிகின்றன. கிருஷ்ணன் ஹம்சனுடைய குவலையாபீடம் என்னும் யானையைக் கொன்ற காட்சி இலக்கியங்களிலும் சிற்பக் கலையிலும் ஒவியங்களிலும் சிறப்பிடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. சைவர், வைணவர், சமணர் என்ற பேதமின்றி எல்லோரும் அக்கதையிலே ஈடுபாடு கொண்டனர். ஆழ்வார்களின் பாடல்களிலே அது சிறப்பித்துக் கூறப்படுகின்றது. கும்பகோணத்து நாகேஸ்வரர் சுவாமி கோயிலில் அக்கதை புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. புஞ்செய் நல்துணை ஈஸ்வரங் கோயிலிலும் கிருஷ்ணன் குவலையாபீடம் என்ற கொல்யானையை அடக்குங் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் ஏந்தியுள்ள சக்கரத்தினாலே கிருஷ்ணர் யானையைத் தாக்குகின்றார்.
“கொல் யானை அணிநுதல் அழுத்திய ஆளிபோல்’ என கலித்தொகையில் வருந்தொடர் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. திருவேந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலிலே கிருஷ்ணர் வலக்கையினாலே யானையின் தந்தத்தைப் பிடித்துக் கொண்டு மற்றக்கையினால் அதன் துதிக்கையைப் பிடிக்குங் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைப் பற்றி ஆழ்வார்கள் பாடியிருப்பதால் அது ஒரு புராதன தலம் என்று கொள்ளத்தக்கது.
கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில் விமானத்தின் அடிப்பாகத்திலே பறவை வடிவாகி வந்த பஹாசுரனைக் கிருஷ்ணர் கொல்லுங் காட்சி சிற்ப வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலே கிருஷ்ணர் பறவையின் வாயைப் பிளந்து தனது பேராற்றலை வெளிப்படுத்துகின்றார். கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைப் பெயர்த்துக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையுங் காப்பாற்றுங் காட்சியும், அவர் தேனுகா என்ற அசுரனைக் கொலை செய்யுங் காட்சியும் அக்கோயிலிற் சிற்பவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து நிற்கும் வேளையிற் பலராமர் தோளிலே கலப்பையைச் சுமந்த கோலத்துடன் அருகிலே காணப்படுகின்றார். கிருஷ்ணரின் சமீபமாக இரண்டு காளைகளின் வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோவர்தன மலையைக் குடையாகக் பிடித்து நிற்குங் காட்சி மாமல்லபுரம் குடபோகத்திலும் அமைந்துள்ளது.

Page 119
20 சோழர் காலப் படிமக் கலை
காளியன் என்ற பாம்பின் தலைமேற் பாலகிருஷ்ணர் நடனமாடுங் கோலம் நாகேஸ்வரம், திருவேந்திபுரம் ஆகிய கோயில்களில் சிற்பவடிவிலே உருவாக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரத்திலுள்ள வடிவத்திலே கிருஷ்ணர் பாம்பின் தலை மீது நின்று கொண்டு, இடது கையால் அதன் வாலைப்பிடித்து நடனமாடுகிறார். அருகிலே வாத்தியக்காரர் இருவரின் உருவங்கள் தெரிகின்றன. ஒருவர் தாளமடிக்கின்றார். மற்றவர் தோற்கருவியொன்றை மிழற்றுகிறார். இக்காட்சிக்கு அடிப்படையான கதைகள் திருப்பாசுரங்களிலும் வருகின்றன. “ பூத்த நீள் கடம்பேறி புகப்பாய்ந்து, வாய்த்த காளியன் மேல் நடமாடியவன் கண்ணன்” என்று ஆண்டாள் பாடினார். கிருஷ்ணன் கோபியர்களுடன் விளையாடுங் காட்சி திருவேந்திபுரத்திலே சிற்பமாக அமைந்திருக்கின்றது. கோபியர் இருவர் ஆடைகள் அற்ற கோலத்திலே காணப்படுகின்றனர். அவ்வேளை கிருஷ்ணன் மரத்தின் மேல் அமர்ந் திருக்கின்றான். தஞ்சைப் பெருங் கோயில் உட்கோபுரத்திலும் இக்காட்சி சுதையிலே சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரத்திலே திருமால் யானைக்கு மோட்சம் அளிக்குங் காட்சியும் காணப்படுகின்றது. திருமால் நான்கு கரங்களுடன் தோன்றுகின்றார். வலது மேற்கரத்தினால் அவர் சக்கரத்தை ஏவுகிறார். அருகிலே யானையானது பெருந்தத்தங்களோடு காணப்படுகின்றது.

கஜுராஹோ ஆலயங்கள்
6dyقLD5/JقL گوه
மத்திய பாரதத்தில் வளர்ச்சி பெற்ற நாகரபாணியில் அமைந்த, கலைவனப்பு மிகுந்த கோயில்கள் கஜுராஹோ என்னும் ஊரில் உள்ளன. அந்த ஊர் விந்தியப் பிரதேசத்தில் உள்ளது. அது மத்தியப் பிரதேச மாநிலத்து சச்சாத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஈச்சமரத்தைக் குறிக்கும் கஜுர் என்ற சொல்லின் அடிப்படையிற் கஜுராஹோ என்னும் பெயர் உருவாகியது என்பர்.
அங்குள்ள கோயில்கள் யாவும் சந்தெலா வம்சத்தவரான இராச புத்திரர்களால் பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில் அமைக்கப் பெற்றவை. அந்த வம்சத்தைச் சேர்ந்த முற்கால மன்னர்கள் வைணவராய் விளங்கினர். பிற் காலத்தவர் சைவராயிருந்தனர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கஜுராஹோவிற்கோயில்கள் பல அமைக்கப்பட்டன என்பதற்கு அங்குள்ள சாசனங்கள் சான்றாயுள்ளன. ஆயினும், கஸினி முகமுதுவின் படையெடுப்புகளின் காரணமாகவும் கலச்சூரி வம்சத்தவரின் ஆதிக்கப் படர்ச்சியின் விளைவாகவும் அங்கு பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலே கட்டட வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. அந்நூற்றாண்டின் பிற்பகுதியிற் சந்தெலா வம்சத்தவர் கஜுராஹோப் பகுதியில் மீண்டும் அதிகாரம் பெற்றனர்.
பல சமயக் கோயில்கள்
கஜுராஹோவிலே சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் உரிய கோயில்கள் உள்ளன. கந்தர்ய மகாதேவர் கோயில், விஸ்வநாதர் கோயில் ஆகியன சைவக் கோயில்களிற் பிரதானமானவை. வைணவக் கோயில்களில் இராமச்சந்திரர் ஆலயம் பிரசித்தமானது. சமணக்

Page 120
22 கஜுராஹோ ஆலயங்கள்
கோயில்களிற் பார்சுவநாதர் கோயில் மிகுந்த சிறப்புடையது. அவை அனைத்தும் மத்திய பாரதக் கோயிலமைப்பின் முழுமையான வளர்ச்சி நிலையைப் பிரதிபலிக்கின்றன. கட்டட அமைப்பு முறையிலும், சிற்ப வேலைப் பாடுகளிலும் அவற்றிடையே பல பொதுப் பண்புகள் காணப்படுகின்றன. கட்டடங்கள் மிகச் செம்மையாகவும் மிகுந்தவனப்புடனும் அமைக்கப் பட்டுள்ளன. சிற்பங்களில்
ராமசந்திரர் கோயில் கஜ"ராஹோ
மனிதரின் மனோபாவங்களும் அங்க லக்ஷணங்களும் இயற்கை வனப்புடன் மிக நுட்பமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தியக் கலை வரலாற்றில் அங்குள்ள ஆலயங்களுக்கும் படிமங்களுக்கும் தனியான ஓர் இடமுண்டு.
கஜுராஹோவில் அமைந்துள்ள கோயில்கள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறக்கற்களாற் கட்டப்பெற்றுள்ளன. கட்டடத்திற்குப் பயன்படுத்திய கற்கள் நுட்பமான வேலைப்பாடுகளைச் செய்துகொள்வதற்கு மிகவும் பொருத்தமானவையாகக் காணப்பட்டன. மிகுந்த சிறப்புடையதான சவுசத் யோகினி என்னுங் கோயில் மட்டும் கருங்கற் திருப்பணியாகும்.
அடிப்படைப் பண்புகள்
கஜுராஹோவில் அமைந்திருக்கும் கோயில்கள் மிக உயரமான அதிஷ்டானங்களிற் கட்டப்பட்டுள்ளன. அதனால் அவற்றின் அடித்தளம் மிக உறுதியாக அமைந்திருக்கும். அக்கோயில்களைச் சுற்றிப்பிராகாரச் சுவர்கள் அமைக்கப்படுவதில்லை. அங்குள்ள கோயில்கள் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், அந்தராளம், மண்டபம், முகமண்டபம் என்பனவற்றை ஒத்த அமைப்புகளைக் கொண்டவை. அவை எல்லாம் நீளப்பாட்டில், ஒன்றன் முன் ஒன்றாக, ஒரு பொதுவான அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், மண்டபங்களின் கூரைகள் தென்னிந்தியக் கோயில்களிற் போலத் தட்டையாக அமைவதில்லை. அவை ஒவ்வொன்றும் அடியிலிருந்து நுனிவரை மேனோக்கிய சரிவுடன் கூம்பிய கோலத்திற் காணப்படும். வெளித்தோற்றத்தில் அவை, ஒரே வரிசையில் அமைந்த சிகரங்கள் போலக் காட்சியளிக்கும். நுழைவாயில் வழியாக முன்னேறிச் செல்லுமிடத்து
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 213
காணப்படும் ஒவ்வொரு கட்டடப் பகுதியின் சிகரமும் கூடிய உயரமுடையதாய் அமைந்திருக்கும். இன்னுமொரு வழியிலே சொல்வதானால் ஒரு கோயிலமைப்பில் அடங்கும் கட்டடத் தொகுதியில் மூலஸ்தானத்தின் சிகரமே மிகக்கூடிய உயரங் கொண்டதாயிருக்கும். அதே சமயம் ஆலயத்தின் திருவாசலுடன் கூடிய மண்டபத்தின் சிகரமே குறைந்த உயரங் கொண்டதாய் இருக்கும். அவற்றுக்கு நடுவில் மா : ": அமைந்த கட்டடப் பகுதிகளின் சிகரங்களின் தரலதேவர் கோயில்
கஜ"ராஹோ
苓母密浴深姆
உயரம் அவற்றுக்கு இடைப்பட்ட அளவினைக் கொண்டிருக்கும்.
அதிஷ்டானப் பகுதியின் மேலமைந்த கட்டடம் தென்னிந்தியக் கோயில்களைப் போலச் சதுரமாகவோ நாற்சதுரமாகவோ அமைவதில்லை. அவற்றிலே விமான தளங்கள் அமைவதில்லை. முழுக் கட்டடமும் அடியிலிருந்து நுனி வரை மேனோக்கிய சரிவினைக் கொண்டதாயிருக்கும். அது ரேகா சிகரம் என்று சொல்லப்படும். கற்களை ரேகை வடிவில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவதன் மூலம் கட்டடம் அதற்குரிய தோற்றத்தைப் பெறுகின்றது. ரேகா பாகங்களுக்கு இடையிலே நேராக அமைந்த இடைவெளிகள் காணப்படும். வேலைப்பாடு மிக நுட்பமானது. கட்டடங்களின் தோற்றம் மிகுந்த கவர்ச்சி பொருந்தியது. உயரப்பாட்டிலும் அகலப்பாட்டிலும் கற்கள் வரிசை, வரிசையாகவும் மிகவுஞ் செம்மையாகவும் அடுக்கப்பட்டிருக்கும். அவை காட்சியில் அற்புதக் கோலமானவை. இடையிடையே அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களின் வனப்பின் விளைவாகக் கட்டடம் அதீதமான சிறப்பினைப் பெறுகின்றது.
சில கோயில்களில் நான்கு பக்கங்களிலும் சிறிய கோயில்கள் அமைந்திருப்பதால் அவை பஞ்சாயதனக் கோயில்களின் தோற்றத்தைப் பெறுகின்றன. இங்குள்ள கோயில்கள் அங்க சிகரங்கள் பொருந்தியவை, அங்க சிகரங்கள் இல்லாதவை என இருவகையினவாகக் காணப்படுகின்றன. கலிங்கத்துக் கோயில்கள் சிலவற்றிற் போலக் கஜுராஹோவிலுள்ள சிகரங்கள் சிலவற்றைச் சுற்றி அங்க சிகரங்கள் காணப்படுகின்றன. அத்துடன் சில கோயில்களில் மூலஸ்தானத்தைச் சுற்றி மூடப்பட்ட திருநடைமாளிகைகள் அமைந்துள்ளன. பொதுவாக

Page 121
214 கஜ"ராஹோ ஆலயங்கள்
அங்கசிகரங்களும் திரு நடைமாளிகைகளும் இல்லாத கோயில்கள் காலத்தால் முற்பட்டவையென்று கொள்வதற்குக் காரணங்கள் உண்டு. ஆயினும், அமைப்பு முறையில் மிக நெருக்கமான தொடர்புகள் காணப்படுவதால் இரு விதமான கோயில்களும் சில சமயங்களில் ஏக காலத்தில் உருவாக்கப்பட்டன என்றும் கொள்ளலாம்.
ஆரம்ப காலத்துக் கோயில்கள்
காலஅடிப்படையில் நோக்குமிடத்து ஆதிநாதர் கோயில், வாமனர் கோயில் என்பன முதலிடம் பெறுகின்றன. அவை இரண்டும் ஒரே மாதிரியான அமைப்பினைக் கொண்டவை. வாமனர் கோயில் அமைப்பிற் சப்தரதம் போன்றது. அதன் சிகரம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதனைச் சுற்றி அங்க சிகரங்கள் காணப்படவில்லை. இடையிடையே சேதியம் போன்ற கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானச் சுவர்களில் வனப்புமிக்க சிற்பங்கள் கவர்ச்சி பொருந்திய வண்ணமாக வடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் நுட்பமான வேலைப்பாடு, வனப்புமிக்க கோலம் என்பவற்றின் காரணமாக அவை மிகப் பிரசித்தமானவை. இந்திய சிற்பக்கலை மரபின் உன்னதமான பண்புகளை அவற்றிலே காணமுடிகின்றது.
ஆதிகாலத்து நாகரபாணிக் கோயில்களிற் போல அதன் சிகரம் தாழ்வான உயரத்துடன் அமைக்கப்பெற்றுள்ளது. அதன் கண்டியின் உச்சிவரை ராஹாபாகங்கள் காணப்படுகின்றன. அதில் அமைந்திருக்கும் இரட்டை ஆமலகங்களும் கோயிலின் ܦܼܲ ܪܨܚܐ ܨ ۹۱ நீளப்பாட்டிலுள்ள கட்டடங்களும் ஆலயவமைப்பு முறையானது விருத்தி பெற்றுள்ள ஒரு காலப்பகுதியைக் குறிக்கின்றன.
பார்சுவநாதர் கோயிலின் அண்மையிலுள்ள ஆதிநாதர் கோயில் அளவிலே சிறியது. ஆயினும், அது ரம்மியமான தோற்றத்தினைக் கொண்டுள்ளது. அதன் மண்டபமும் ஏனைய
Sp பாகங்களும் பிற்காலத்திலே wox-am-M- * செங்கல்லினாற் கட்டப்பெற்றவை. உயரமான
பார்சுவநாதர் கோயில் O Yr o 0
LT 6ðIT 6Ս 6) LO 85 86 ft) கஜ ராஹோ அதிஷ்டானத்தி அமைந்திருக்கு
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 25
மூலஸ்தானம் சப்தரத அமைப்பினைக் 夔 கொண்டது. அதன் வாடத்திலே ஏழு பிரிவுகள் உள்ளன. கர்ப்பகிருகச் சுவர்களில் மூன்று வரிசைகளிற் சிற்பங்கள் கவர்ச்சி பொருந்திய கோலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. சிகரமானது ஏழு பாகங்களுடன் ஓங்கியெழும் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதன் ராஹாபாகங்கள் கண்டிக்கு மேலாகச் சென்று ஆமலகத்துடன் சேருகின்றன. பார்சுவநாதர் கோயிலிற் போலச் கோனகங்கள் கண்டிக்கு
மேலாக நிமிர்ந்துள்ளன. ஆதிநாதர் O திருநடைமாளிகை பொருந்திய கஜ"ராஹோ
கோயிலைச் சாந்தார அமைப்பு என்று சொல்வர். சாந்தார அமைப்பிலே பிரதசுஷின பாதை என்னும் திருச்சுற்று இரு பக்கங்களிலுஞ் சுவர்களாற் சூழப்பட்டிருக்கும். சாந்தார வகைக்குரியதான இராமச்சந்திரர் கோயில் பஞ்சரத அமைப்பாகும். அதன் அந்தராளத்தின் கூரை சரிவான தோற்றங் கொண்டது. பக்கங்களிலுள்ள சுவர்களில் யன்னல்களுந் தாழ்வாரங்களுங் காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரை கலிங்கத்துக் கோயில்களிலுள்ள ஜகமோகனத்தில் அமைந்துள்ளதைப் போன்றதாகும்.
சமணக் கோயில்கள்
சமணக் கோயில்களிற் சிறப்பு மிக்கதான பார்சுவ நாதர் கோயில் அளவிலே சிறியதாயினும் மிகவுங் கவர்ச்சியான தோற்றங் கொண்டது. அதன் இறையகத்தின் பின்புறத்திலும் முன்புறத்திலுங் கட்டடங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. மண்டபத்தின் இரு பக்கங்களிலும் அமைந்த சாலைகள் திருச்சுற்றாலையின் தொடர்ச்சியான அம்சங்கள் போலத்தோன்றும் வண்ணமாக அதனுடன் சங்கமமாகி உள்ளன. மத்தியில் அமைந்துள்ள ரதத்தில் மட்டுமே கல்லிலமைந்த பலகணிகள் உள்ளன. அவற்றின் மூலமாகவே காற்றும் வெளிச்சமும் கட்டடத்தினுள்ளே செல்ல முடிகின்றது. புறச்சுவர்களிற் பலகணிகள் அமைக்கப்படவில்லை. அதனாற் கோயிலின் உட்புறத்திலே போதிய வெளிச்சம் காணப்படுவதில்லை. எனவே, அங்கு பெருந்தொகையில் உள்ளனவும் வனப்புடன் அமைந்துள்ளனவுமான சிற்பங்கள் பிரகாசத்துடன் விளங்குவதில்லை.

Page 122
216 கஜுராஹோ ஆலயங்கள்
சைவக் கோயில்கள்
சைவக் கோயில்களான விஸ்வநாதர் கோயில், கந்தர்ய மகாதேவர் கோயில் என்பனவே கஜுராஹோவில் அமைந்துள்ள ஆலயங்களில் மிக முக்கியமானவை. மத்திய பாரதத்துக் கட்டடக்கலை மரபின் உன்னத வளர்ச்சி நிலையினையும் அதன் கவர்ச்சி மிக்க அம்சங்களின் வெளிப்பாட்டினையும் அவற்றிலே காணமுடிகின்றது. பல நூற்றாண்டுகளாக வளர்ச்சிபெற்ற மரபொன்றின் முதிர்ச்சியான கோலத்தை அவற்றிலே காணலாம். அக்கோயில்கள் இரண்டும் வரையிலாத வனப்பு வாய்க்கப் பெற்றவை. அவற்றுள் விஸ்வநாதர் கோயிலைக் காட்டிலும் கந்தர்ய மகாதேவர் கோயில் அளவிற் பெரியதாகும். கோயிலுக்குரிய எல்லா அம்சங்களும் பொருந்திய கந்தர்ய மகாதேவர் கோயில் உயர்ந்த அதிஷ்டானத்தில் அமைந்துள்ளது. அதன் சிகரமானது படை படையாக அமைந்த சிற்ப வரிசைகளைக் கொண்டுள்ளது. அது கூம்பிய கோலத்தில் மேனோக்கிய வண்ணமாக ஓங்கி எழுந்ததோற்றத்துடன் விளங்குகின்றது. தோற்றத்திலே கைலாய மலையைப் போன்று காட்சியளிக்கும் விதமாக அதன் சிகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கந்தர்ய மகாதேவர் கோயில் 109 அடி நீளமும் 60 அடி அகலமும் 16.5 அடி உயரமுங் கொண்டுள்ளது. நீள் சதுரமான 28.5 அடி உயரங் கொண்ட தளத்தின் மேல் ஆலயம் அமைந்துள்ளது. பின்புறமாக அமைந்துள்ள சுற்றுத் தாழ்வாரத்திற்கும் திருசுற்றுப்பாதைக்கும் காற்றும் வெளிச்சமும் நுழைவதற்கு ஏற்ற வகையிலே சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிஷ்டானத்தின் 13ஆவது அடி உயரத்திலிருந்து கோயில் உச்சிவரை அலை அலையாகச் சிகரம் வளர்த்து செல்கின்றது.
மலைத் தொடரொன்று படிப் படியாக உயர்ந்து, பல தளங்களைக் கொண்டு, அவற்றின் மேலே சிகரங்கள் காட்சியளிப்பதனைப் பிரதிபலிக்குமாப் போல இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சிகரத்தைச் சுற்றி அங்க சிகரங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இக் கோயிலில் எல்லாமாக 85 அங்க
கந்தர்ய மகாதேவர் கோயில் கஜ"ராஹோ
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 27
சிகரங்கள் உள்ளன. அர்த்த மண்டபம், அந்தராளம், மண்டபம் ஆகியனவும் சிகரங்கள் போன்ற கூரைகளைக் கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஆமலகம், கலசம் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன.
கந்தர்ய மகாதேவர் கோயில் கிழக்கு வாசல் கொண்டது. அதன் வாசற்புறத்திற் படிக்கட்டுகளால் அமைந்த வழிப்பாதை உண்டு. அதிற் கவர்ச்சி பொருந்திய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வாசற் கதவுகளில் மலர் வடிவங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. வாசல் வழியே உள்ளே சென்றதும் நாற்கோண வடிவில் அமைந்த அர்த்த மண்டபத்தைக் காணலாம். அதற்குப் பின்னாற் சதுரமான மண்டபம் ஒன்று உள்ளது அதற்கப்பால் அந்தராளம் அமைந்துள்ளது. அதன் தாழ்வாரங்களும் திருநடைமாளிகையின் கூரையும் வேறுபாடின்றிச் சங்கமமாகிய தோற்றத்துடன் காணப்படுகின்றன. கட்டடங்கள் ஒவ்வொன்றினதும் அடித்தளம் உயரத்தில் வேறுபட்டதாகும். வாசற்புறத்திலிருந்து மண்டபங்களினூடாக மூலஸ்தானத்தை நோக்கிச் செல்லுமிடத்து மலையின் அடிவாரத்திலிருந்து மேலே ஏறிச் செல்வதைப் போன்ற உணர்வு ஏற்படும் வகையிற் கட்டடங்கள் அமைந்துள்ளன.
இக்கோயிலின் சுவர்களில் மிகப்பெரிய சிற்பங்கள் பட்டை பட்டையாக மூன்று, நான்கு அடுக்குகளிற் காணப்படுகின்றன. யானைகள், குதிரைகள், அவற்றின் மீது அமர்ந்து கொண்டு வேட்டையாடும் மனிதர்கள், பாடகர், வாத்தியக்காரர், நடனமாடுவோர், அடியார்கள், காதலர் முதலியோரின் உருவங்கள் அமைந்திருக்கின்றன. பெண்களின் சிற்ப அணிவரிசைகள் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அங்கலகூடிணங்களும் அபிநயங்களும் மிகக் கவர்ச்சியான கோலத்திற் காணப்படுகின்றன.
கந்தர்ய மகாதேவர் கோயில் சந்தெலா வம்சத்து மன்னனாகிய வித்தியாதரன் (கி.பி.1010-1059) என்பவனால் அமைக்கப்பெற்றது. மண்டபச் சுவரை ஒட்டியுள்ள தூணிற் காணப்படுஞ் சாசனம் ஒன்றினால் இதனை அறியமுடிகின்றது.
விஸ்வநாதர் கோயில்
விஸ்வநாதர் கோயில் கந்தர்ய மகாதேவர் கோயிலுக்கு அண்மையில், அதற்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. அதன் சுற்றளவு 87அடி நீளமும் 46 அடி அகலமும் கொண்டதாகும். இரு கோயில்களின் வேலைப்பாடுகளும் ஒரே விதமானவை. இக்கோயில் கி.பி.1000 ஆம் ஆண்டளவிலே கட்டப் பெற்றது. இந்தக் கோயிலுக்கு முன்புறத்திலே வனப்பு மிகுந்த நந்தி மண்டபம்

Page 123
218 கஜ"ராஹோ ஆலயங்கள்
காணப்படுகின்றது. அதில் அமைந்திருக்கும் 6அடி உயரமான நந்தி கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுகின்றது.
விஸ்வநாதர் கோயிற் சிற்பங்கள் மிகப் பிரபல்யமானவை. அவற்றிலே புல்லாங்குழல் வாசிக்கும் பெண்ணின் உருவமும், குழந்தை ஒன்றை முத்தமிட்ட வண்ணமாகக் காணப்படும் பெண்ணின் கோலமும் பழக்குலையினையும் கிளி ஒன்றினையும் ஏந்திக் கொண்டுள்ள நிலையில் அமைந்துள்ள மங்கையின் வடிவமும் சாலச் சிறந்தவை.
விஷ்ணு கோயில்
லஷ்மணர் ஆலயம் என்று சொல்லப்படும் விஷ்ணு கோயில் விஸ்வநாதர் கோயிலுக்குத் தென்புறத்தில் அமைந்திருக்கின்றது. அது 85அடி நீளமும் 44 அடி அகலமும் கொண்டுள்ளது. விஸ்வநாதர் கோயிலைப் போலவே விஷ்ணு கோயிலும் பஞ்சரத அமைப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தின் மூலைகளிலே கோட்டங்கள் அமைந்திருக்கின்றன. பிரமன், விஷ்ணு போன்ற கடவுளர் படிபங்கள் அவற்றிலே காணப்படுகின்றன. பிரதான கோயிலின் கருவறையிலே மகாலசுஷ்மி சமேதரான மகாவிஷ்ணுவை மூலமூர்த்தியாக ஸ்தாபனம்பண்ணியுள்ளனர். திருவாசலில் அமிர்த மதன வரலாறு சிற்பக் கோலத்திற் காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மூல மூர்த்தியை மும்முகங்களுடன் அமைத்துள்ளனர். ஒரு முகம் மனிதக் கோலமானது; வேறொரு முகம் நரசிங்கம் போன்றது; மூன்றாவது முகம் வராக வடிவமானது.
தேவி ஜெகதாம்பாள் கோயில்
கஜுராஹோவிலுள்ள கோயிற் கட்டடக் கலையின் அம்சங்களை ஒருவாறு புரிந்து கொள்வதற்கு அங்குள்ள வேறு சில கோயில்களைப் பற்றியும் இங்கு கவனிப்பது அவசியமாகும். தூலதேவன் கோயில் என வழங்கும் ஆலயம் அமைப்பிலே முன்னையவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாகும். அது ஒரே மாதிரியான அணிவரிசைகளையும் வெவ்வேறு விதமான தள சிகர வரிசைகளையுங் கொண்டுள்ளது. அதனால், இது ஆரம்ப காலத்துக் கோயிலென்று சிலர் கொள்வர்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 29
கந்தர்ய மகாதேவர் கோயிலுக்கு வடக்கிலுள்ள தேவி ஜகதாம்பாள் ஆலயம் முன்னொரு காலத்திலே விஷ்ணு கோயிலாக விளங்கியது. ஒரு காலகட்டத்திலே அது காளி கோயிலாக மாற்றப்பட்டது. அது 77 அடி நீளமும் 50 அடி அகலமுங் கொண்டுள்ள சாந்தாரக் கோயிலாகும். அதில் வனப்பு மிக்க சிற்பங்கள் அமைந்துள்ளன.
சூரிய நாராயணரை மூலவராகக் கொண்ட சித்த குப்தர் கோயில் தேவி ஜெகதாம்பாள் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நாராயணர் உலகினை வலம் வரும் கோலத்தில் மூலவர் படிமம் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 87 அடி நீளமும் 57 அடி அகலமுங் கொண்டுள்ளது.
சந்தெலா வம்சத்து அரசர்களின் ஆரம்ப காலக் கோயில்களில் ஒன்றான மாதங்கேஸ்வரர் கோயில் மிகுந்த வனப்புடையதாகும்.
பார்சுவநாதர் கோயில்
கஜுராஹோவில் வளர்ச்சி பெற்ற நாகர கலைப்பாணியின் உன்னத நிலையினை அங்குள்ள சமணக் கோயில்களிற் காணலாம். அவற்றில் அதிஷ்டானம், சுவர், அணிவரிசைகள், சிற்பங்கள், சிகரம் ஆகியவை முற்காலக் கோயில்களில் உள்ளவற்றைக் காட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளன. கஜுராஹோவில் எல்லாமாக 6 சமணக் கோயில்கள் உள்ளன. அவற்றின் தோற்றம் சைவ, வைணவக் கோயில்களிலிருந்து சிறிது வேறுபட்டதாகும். சிகரத்தின் அமைப்பு, சாளரங்களின் வடிவமைப்பு ஆகிய அம்சங்களில் அவை இந்துக் கோயில்களிலிருந்து சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.
சமணக் கோயில்களிற் பெரியதும் மிகச் சிறந்ததுமான பார்சுவநாதர் கோயில் தங்கா (954 - 1002) என்னும் அரசனின் காலத்தில் அமைக்கப்பட்டது. அது 60 அடி நீளமும் 30 அடி அகலமுங் கொண்ட மிதமான அளவுடைய கோயிலாகும். ஆலயம் கிழக்கு நோக்கியது. வாசலிலே மகர தோரணம் காணப்படுகின்றது. அதன் மூலஸ்தானம் சாளரமின்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி மிகவும் விசாலமான திருச்சுற்றாலை காணப்படுகின்றது.
பார்சுவநாதர் கோயிலிற் காணப்படும் சிற்பங்கள் வைதீக மரபிலுள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை. புராண, இதிகாசக் கதைகள் பலவற்றை விளக்கும் வடிவங்களாக அவை அமைந்துள்ளன. கிருஷ்ணர் பால்யப் பருவத்தில் ஆயர்பாடியிலே புரிந்த லீலைகளும் அதிசயங்களும்

Page 124
220 கஜுராஹோ ஆலயங்கள்
அவற்றிலே சித்திரிக்கப் பெற்றுள்ளன. உயிர்த்துடிப்பான பெண்ணுருவங்கள் பல பார்சுவநாதர் கோயிற் சிற்பங்களிடையே காணப்படுகின்றன. அவற்றிலொன்று காதற் கதையினைப் பத்திரத்தில் எழுதும் கன்னி ஒருத்தியின் வடிவமாகும். மற்றொன்று காலிலே தைத்த முள்ளை எடுக்கும் கோலத்தில் அமைந்த மோகினியின் உருவமாகும். வேறொரு சிற்பத்திலே குழந்தையை முத்தமிடும் மங்கையின் கோலம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமயிரை வாரி நெற்றியிலே திலகமிடும் பொண்ணொருத்தியின் உருவம் எழில்மிக்க உருவமாக வேறொரு சிற்பத்திலே உருவாக்கப்பட்டுள்ளது.
காம நூலும் சிற்பக் கோலங்களும்
கஜுராஹோவில் அமைந்துள்ள கோயில்கள் அவற்றிலே காணப்படும் சிற்பங்களின் காரணமாக ஈடிலாத சிறப்பினைப் பெற்றுள்ளன. கந்தர்ய மகாதேவர் கோயில், விஸ்வநாதர் கோயில், லஷ்மணர் கோயில், தேவி ஜெகதாம்பாள் கோயில், சமணரின் ஆலயமான பார்சுவநாதர் கோயில் முதலியவற்றில் ஒப்பற்ற வனப்புடைய உன்னதமான சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதிஷ்டானப் பட்டைகளில் அமைந்த அணி வரிசைகளிலே பலவிதமான கோலங்களிலே சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சுவர்களிலும் மண்டபத் தூண்களிலுங் காணப்படும் சிற்பங்கள் வேறொரு வகைக்குரியவை. மனிதர் வடிவங்கள் உயிரோட்ட முள்ளனவாக இயற்கைப் பண்புகளுடனும், அளவுப் பிரமாணங்களுடனும் உன்னதமான முறையிலே அமைக்கப் பட்டுள்ளன. மானிடரின் வடிவங்கள் பெருந்தொகையிலும் உன்னதமான வகையிலும் கஜுராஹோவிற் போலப் பரத கண்டத்தில் வெறெங்குங் காணப்படுவதில்லை. ஒரு வகையில் அவற்றுக்கு நிகரான பெருந்
தொகையான சிற்பங்களை உலகில் வேறெங்குமே காணமுடிவதில்லை. மறுமலர்ச்சிக் უბ காலத்திலும் இவற்றுக்கு நிகரான உன்னதமான கஜ"ராஹோ சிற்பம்
xx
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 22
சிற்பங்கள் ஜரோப்பிய தேசங்களில் உருவாக்கப் படவில்லை என்று கூறின் அது மிகையாகாது.
கஜுராஹோவிலுள்ள சிற்பங்கள் பெரும்பான்மையும் அளவிலும் உயரத்திலும் மனிதரின் இயற்கையான தோற்றங்களை ஒத்தனவாகவே காணப்படுகின்றன. அவற்றின் செய்வண்ணம் வனப்புமிக்கது. அங்க
லக்ஷணங்கள் உயிர்த்துடிப்பான கோலங்
கொண்டவை. புராதன கிரேக்கத்துச்
2. ぶふリ
గొ_{ ※簽
செஎாஷத் யோகினி கஜ ராஹோ
சிற்பங்களை அவை ஒத்துள்ளன. கருத்துகளையும் காட்சிகளையும் கவிஞர் சொற்களால் நயம்பெற வர்ணிப்பதைப் போலக் கலைஞன் தன் கை வண்ணத்தாலும் கற்பனா சக்தியாலும் காட்சிகளையுங் கொள்கைகளையும் கல்லில் வடிக்கின்றான். அங்க அசைவுகளும் முகபாவனையும் நேத்திரங்களின் நுட்பமான கோலமும் கலாதத்துவத்தைப் பிரதிபலிக்கும் சாதனங்களாகும்.
கஜுராஹோவிலுள்ள சிற்பங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் கலாரசனையுடன் புலப்படுத்தும் பான்மை கொண்டவை. அரண்மனைக் காட்சிகள், அரசர் ஆயமும் சுற்றமும் சூழக் கொலு &::::: SR வீற்றிருக்குங் காட்சிகள், படைகள் பவனி
செல்லுதல் போன்ற காட்சிகள் அரச வம்சத்தின் பிரதாபங்களை விளக்குவனவாய் உள்ளன. இத்தலத்திற் காணப்படும் ராஜசாசனங்களின் வாசங்களும் சில சமயங்களிலே சிற்பக் கோலங்களை அடையாளங் கொள்வதற்கு ஆதாரமாய் உள்ளன என்பது அண்மைக் கால ஆராய்ச்சிகளில் வற்புறுத்தப்படுகின்றது.
கடவுட் படிமங்களும் இங்கு பெருந்தொகையிற் காணப்படுகின்றன. பெளராணிக மரபிலுள்ள கதைகளும் கோட்பாடுகளும் பல சிற்பங்களில் உணர்த்தப்படுகின்றன. ஆயினும், அப்படிமங்கள்
கஜ"ராஹோ சிற்பம்

Page 125
222 கஜுராஹோ ஆலயங்கள்
குணம், குறி என்பவற்றால் மண்ணக மாந்தரையே ஒத்தனவாகக் காணப் படுகின்றன. கஜுராஹோக் கலைஞர்களின் கற்பனையில் பூலோகமே தேவலோகம் என்ற சிந்தனை மேலோங்கியது என்று சிந்திக்க இடமுண்டு.
காம நுகர்வால் ஏற்படும் உணர்வுகள் வெளிப்படையாகச் சொற்களால் வர்ணிக்க முடியாதவை என்பது பழந்தமிழ் இலக்கிய மரபாகும். சமஸ்கிருத மொழியில் அகம், புறம் என்ற வேறுபாடுகள் இல்லாத போதும் காமரசனை பற்றிய உணர்வுகளுக்கு வரையறை அமைத்துக் கொள்வது மரபு. மகாகவிகளான வான்மீகி, காளிதாஸர், மாகர் முதலியயோர் காதலரின் உணர்வுகளை உவமான உவமேயகங்களாற் குறிப்பிடு வதன்றிச் சேர்க்கையினால் ஏற்படும் உணர்வுகளை விவரமாக வர்ணிப்பதில்லை.
கஜுராஹோவிற் கலைஞர்கள் இலக்கிய வாதிகளின் மரபுகளைத் தகர்த்து விட்டனர். காம உணர்வுகளையும், மைதுனக் கோலங்களையும், அவற்றால் ஏற்படும் விதம் விதமான அனுபவங் களையும் வெளிப்படையாகக் கவர்ச்சி மிக்க சிற்பங்களாக வடித்துக் கொள்வதைத் தமது பணியாகக்
«mw•wነ *mŠ.8 ,''w Xmw(w“m ·ነ ̇
கஜுராஹோ சிற்பங்கள்
57 as
*?
கொண்டனர். வாத்ஸ்யாயனர் போன்ற காமநூலோர் சொன்ன விளக்கங்களுக்கு அவர்கள் கல்லில் வடிவஞ் செய்தனர். தாந்திரீகம் வட இந்தியாவில் மேலோங்கிய காலத்திற் கஜுராஹோக் கோயில்கள் தோன்றியமையுங் குறிப்பிடற்குரியது. இந்து சமய சிந்தனையிலும் பண்பாட்டு மரபிலும் நாயகன் - நாயகி பற்றிய கோட்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதும் கவனத்திற்குரியது.
 
 
 
 

கலிங்கத்துக் கோயில்கள்
சி பத்மநாதன்
பல அரச குலங்களைச் சேர்ந்த மன்னர்களின் ஆதரவுடன் கலிங்கத்திலே கலை வனப்புமிக்க கோயில்கள் பெருந்தொகையில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கி.பி. 700-1300 ஆகிய காலப்பகுதியே இந்துக் கோயில்களின் பெருவளர்ச்சிக் காலமாகும். புராதன கோயில்களைப் பொறுத்த வரையில் இந்துஸ்தான் சமவெளிகளில் உள்ளவற்றைக் காட்டிலுங் கூடுதலானவை கலிங்கத்திலுள்ளன என்பது ஒரு கணிப்பாகும். அந்நியர் படையெடுப்புகளாற் பெரிதும் பாதிக்கப்படாதமையினால் அவை அழிவுறாது நிலைபெற்று வந்துள்ளன. அளவிற் சிறியனவும் பெரியனவாகவும் உள்ள கோயில்கள் புவனேஸ்வர், பூரி, முகலிங்கம் முதலிய நகரங்களில் நூற்றுக்கணக்கில் உள்ளன. கோயில் நகரமான புவனேஸ்வரத்தில் மட்டும் பல வகையான ஆலயங்கள் காணப்படுகின்றன.
கலிங்க தேசத்துக் கோயில்கள் கலைவனப்பு மிக்கவை; கவர்ச்சியான தோற்றத்துடன் அமைந்தவை. அவற்றின் அமைப்பு முறையுந் தனிரகமானது. அவற்றை நிர்மாணிக்கும் முறையினை விளக்குஞ் சிற்ப சாத்திரங்களும் பிரதேச தனித்துவத்தைப் பிரதிபலிப்பவை. அக்கோயில்கள் அனைத்தும் நாகர பாணியைச் சேர்ந்தவை. வட இந்தியாவிலே தோன்றி விருத்தி பெற்ற கோயிலமைப்பு முறையினை நாகர கலைப் பாணி என்று சிற்ப சாத்திரங்கள் வர்ணிக்கும். இமயமலைச் சாரல்கள் முதலாகத் தெற்கிலே கர்நாடகம் வரை நாகர பாணியின் செல்வாக்குப் பரவியுள்ளது. நாகர பாணியிலுள்ள பழங் கோயில்கள் வட இந்தியாவிலே துருக்கியரின் ஆட்சியில் அழிந்துவிட்டமையாற் கலிங்க தேசத்துக் கோயில்கள் மூலமாகவே அக்கலைப்பாணியின் பரிணாம வளர்ச்சியினை அறிந்து கொள்ள முடிகின்றது என்பதுங் கவனத்திற்குரியது.

Page 126
224 கலிங்கத்துக் கோயில்கள்
கோயில்களின் கட்டட அமைப்பினை விளக்குவதற்குக் கலிங்கத்திலே தனித் துவமான சொற்களை வழங்கினார்கள். விமானம்,மண்டபம், கோபுரம் முதலிய பதங்கள் அங்கு வழங்கப்படுவதில்லை. மூலஸ்தானமும் அதன் மேல் அமைந்து ஓங்கி எழுந்த கட்டடமும் ரேகா தேயூல் எனப்படும். மகா மண்டபத்தின் இடத்தில் அமையுங் கட்டடம் பத்ர தேயூல் என்று சொல்லப்படும். அதற்கு முன்னால் அமைக்கப் பெறும் நிருத்த மண்டபத்தை நடமந்திர (ம்) என்பர். இலிங்கராஜர் கோயில் தமிழகத்துக் கோயில்களின் கலியாண புவனேஸ்வரம்
மண்டபம் போன்றதான அமைப்பு அங்கு போகமந்திர (ம்) என்று வர்ணிக்கப்படும்.
கட்டடத்தைக் கீழிருந்து மேலாக நோக்குமிடத்து அதிலே பிஷ்ட (ம்), வாட(ம்), பரண்ட(ம்), கண்டி என்னும் நான்கு பிரதானமான பகுதிகள் உண்டு. கோயிலின் அடித்தளமான பீடமே பிஷ்ட(ம்) எனப்படும். சில கோயில்களில் அது அமைக்கப்படுவதில்லை. அதற்கு மேலுள்ளதும் சுவர்கள் பொருந்தியதுமான பாகம் வாட(ம்) எனப்படும். அது சதுரமான வடிவமுஞ் சரிவில்லாது நேராக உயருகின்ற தோற்றமுங் கொண்டிருக்கும். வாட (ம்), கண்டி என்பவற்றுக்கு இடையில் அமைந்து காணப்படுவது பரண்ட(ம்) என்பதாகும். கோயிலின் மேற்பாகமான கண்டி, சிகரம் எனவும் வழங்கும். அது பூமி என்னும் பல மண்டலங்களைக் கொண்டது. அவை ரேகை போன்ற தோற்றத்துடன் ஒன்றின் மேல் ஒன்றாய் அமைந்திருக்கும். கண்டியின் உச்சியில் அமைக்கப் பெறும் ஆமலக - சிலா என்னும் பெருங்கல்லானது விரிந்த குடையின் தோற்றங் கொண்டிருக்கும். மூலஸ்தானத்திற்கு நேர்முன்பாக அமைந்திருக்கும் மண்டபம் ஜகமோகன(ம்) என்றுஞ் சொல்லப்படும். அதுவும் உட்புறத்திற் சதுரமான வடிவில் அமைந்திருக்கும். அதன் சிகரம் பத்ரதேயூல் எனப்படும். அது ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த பல பூமிகளை உடையதாய் இருக்கும். அவற்றுள் மேலுள்ள ஒவ்வொன்றும் அதன் கீழ் அமைந்திருப்பதைக் காட்டிலுஞ் சிறியதாய் இருக்கும். அதனால் ஜகமோகனத்தின் சிகரமும் உட்சரிவு கொண்ட கூம்பிய தோற்றத்தைக் கொண்டிருக்கும். ரேகா தேயூல், பத்ர தேயூல் ஆகியவற்றின் கண்டியின்
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 225
மேற்புறத்திலே சில பொதுவான அம்சங்கள் காணப்படும். அவற்றின் தொகுதியை மஸ்தக (ம்) என்பர். முதலிற் காணப்படுவது வேகி என்னுங் கண்டமாகும். அதன் மேலே ஆமலக - சிலா என்ற செம்மைப்படுத்தப் பெற்ற குடைக்கல் வைக்கப்பட்டிருக்கும். பத்ர தேயூல் அளவிலே மிகப் பெரியதாக அமையுமிடத்து வேகி, ஆமலக - சிலா ஆகிய இரண்டுக்கும் இடையில் மணியின் தோற்றமுடைய அம்சங் காணப்படுவதும் உண்டு. ஆமலக - சிலாவின் மேலே கபூரி என்னும் அண்ட வடிவமான பகுதி அமைந்திருக்கும். அதன் மேற் கலசம், ஆயுதம், துவசம் ஆகியன அமைந்திருக்கும்.
கலிங்கத்துக் கோயில்களின் அமைப்பிற் காணப்படும் மற்றொரு சிறப்பம்சம் புறச்சுவர்களின் நடுவிலே கட்டடமொன்று அமைந்திருப்பதாகும். சுவர்ப்புறத்திலே கட்டடம் ஒன்று அமையுமிடத்து வாடம் மூன்று பாகங்களாகப் பிரிந்து நிற்கும். நடுப்பாகம் மற்றையவற்றுக்கு முன்பாக நீண்டிருக்கும். இத்தகைய கட்டட அமைப்பினைத் திரிரதம் என்பர். பஞ்சரதம், சப்தரதம், நவரதம் என்னும் அமைப்புகள் கொண்ட பெருங் கோயில்களும் உள்ளன.
பரசுராமேஸ்வரம்
கலிங்கத்துப் புராதன கோயில்களை (1) கி. பி. 750 - 900, (2) 900100, (3) 1100-1350 என்னும் மூன்று காலப்பிரிவுகளுக்கு உரியனவாக வகை செய்யலாம். அவற்றுள் மிகப் புராதனமானவற்றிலே புவனேஸ்வரத்திலுள்ள பரசுராமேஸ்வரம் என்பதே மிகச் சிறப்புடையதாகும். அதிலுள்ள கட்டடங்களும் சிற்பங்களும் எட்டாம் நூற்றாண்டுக்குரியனவாகும். சத்துருக்னேஸ்வரம், ராமேஸ்வரம் ஆகிய கோயில்கள் அதனிலும் முற்பட்டவை என்று கொள்வதற்கான காரணமுண்டு. அவை தியோகாரிலுள்ள தசாவதாரக் கோயிலைப் பல அம்சங்களில் sig § ஒ த் தி ரு க் கி ன் ற ன . མཚོ༈ ཀ ། விந்துசரோவர் என்னும் குளத்தில் அமைந்துள்ள சிறிய கோயிலும் அமைப்பு முறையில் பரசுராமேஸ்வரத் தைக் காட்டிலும் பழமையானதாகும்.
கலிங்க தேசத்திலுள்ள மிகப்பழைய கோயில்களின்
பரசுராமேஸ்வரம் - புவனேஸ்வரம் பிரதான அமசங்களைப கலிங்கம்

Page 127
226 கலிங்கத்துக் கோயில்கள்
பிரதிபலிக்கும் கோயிலாகப் பரசுராமேஸ்வரம் விளங்குகின்றது. கலிங்க தேசத்துக் கோயில்கள் பலவற்றுக்கு அது முன்மாதிரியாக விளங்கியது. அது 48 அடி நீளங் கொண்டது. அதன் மூலஸ்தானம் திரிரதப்பாங்கில் அமைந்துள்ளது. பாவாக (ம்) எனப்படும். தளத்தில் மூன்று படைகள் உள்ளன. அதன் பரண்டத்தில் மனிதரின் உருவங்களும் வேறு வடிவங்களும் அமைக்கப் பெற்றுள்ளன. கண்டி உயரங் குறைந்ததாக அமைந்துள்ளது. சிகரம் ரேகை வடிவிலமைந்த ஐந்து பூமிகளைக் கொண்டுள்ளது. ஐந்தாவது பூமியின் மேல் விசம என்னும் வேகி காணப்படுகின்றது. சதுரஞ் சதுரமாக வளர்ந்து செல்லும் கண்டியின் மேலுள்ள மஸ்தகப் பகுதி வட்ட வடிவமான பாகங்களைக் கொண்டுள்ளது. தோபிச்ச சிம்மம் எனப்படுஞ் சிங்க உருவங்கள் நான்கு மூலைகளிலும் ஆமலக சிலாவைத் தாங்கி நிற்கின்றன.
கர்ப்பகிருகத்தின் தாங்குதளம் மிகவும் உயரமானது. கர்ப்பகிருகத்தின் சுவர்களின் வெளிப்புறங்களிலே மாடக்குழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சுவரிலும் மூன்று மாடக்குழிகள் அடுக்கடுக்காய் வளர்ந்து குவிந்து காணப்படுகின்றன. சுவர்களிலும் சிகரத்தின் அடிப்பகுதிகளிலும் மைதுனக் கோலமான வடிவங்களும் வேறு சிற்பங்களும் காணப்படுகின்றன. கிழக்கிலுந் தெற்கிலுமுள்ள சுவர்களில் விநாயகரின் படிமங்களும் கார்த்திகேயரின் உருவங்களும் அமைந்துள்ளன.
கோயிலின் அடித்தளமாகிய பாவாகத்தின் மேலுள்ள படைமேல் அமைந்திருக்கும் பாதம் எனப்படுவதற்கும் சிகரத்தின் மேற்பாகமான கண்டிக்கும் இடையில் அமைந்த பரண்டம் தனித்துக் காணப்படுங்கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சதுரங்கமான கட்டடங்களில் மைதுன வடிவங்கள் செதுக்கப்பெற்றுள்ளன. சிகரத்தின் முகடு உட்குவிந்த வண்ணமாகவும் குறைந்த உயரத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. சிகரத்தின் ராகபாகம் என்னும் நடுப்பாகமாக மாடக்குழி அமைந்துள்ளது. மற்ற இரு பங்கங்களிலுமுள்ள மாடக்குழிகள் அநுராஹ பாகங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
பரசுராமேஸ்வரத்திலே சிகரத்தின் உயரம் கர்ப்ப கிருகத்தின் நீளத்தைக் காட்டிலும் மூன்று மடங்கானது. நாகர பாணியிலமைந்த வேறு கட்டடங்களிற் காணப்படாத அம்சமொன்று இதன் சிகரத்திலுண்டு. மேலுள்ள தளங்களை ஒவ்வொன்றாக நீக்கினாலும் எஞ்சியுள்ள பகுதி முழுமையான சிகரம் போலவே காட்சியளிக்கும்.
ஜகமோகனம் இரு தள அமைப்பாகும். அது நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. அதன் சரிவான கூரையினை உட்புறமாகவுள்ள இரண்டு

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 227
வரிசைகளில் அமைந்த தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு வரிசையிலும் மும்மூன்று தூண்கள் காணப்படுகின்றன. பிற்காலத்துக் கோயில்களிலே ஜகமோகனத்திலே தூண்கள் அமைக்கப்படுவதில்லை. ஜகமோகனத்தில் மூன்று வாசல்கள் அமைந்திருந்தன. முன்புறத்து வாசலைப் பிற்காலத்திலே கற்பலகைகளினால் அடைத்து விட்டனர். காற்றோட்டமும் வெளிச்சமும் உண்டாகக்கூடிய முறையிற் பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை கற் பலகைகளைத் துளைத்துப் பின்னல் திரை போல் அமைக்கப்பட்டுள்ளன. நடனக் கோலங்களும் இசைவாணரின் உருவங்களும் மிகவும் நுட்பமான முறையில் அவற்றிலே செதுக்கப்பெற்றுள்ளன. சுவர்களில் மாடக்குழி வரிசைகளும் அவற்றின் கீழ் அணிவரிசைகளும் அமைந்துள்ளன. அவற்றிலே சிவன், சூரியன், அக்கினி, யமன், வருணன், கங்கை, யமுனை, சப்தமாதர் முதலியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வைதல் தெயூல்
கலிங்க தேசத்துப் புராதன கோயில்களிலே புவனேஸ்வரத்து வைதல் தெயூல் என்னுங் கோயிலும் சிறப்புடையதாகும். அதன் கட்டுமானச் சிறப்பினாலும், அதிலுள்ள வனப்பு மிக்க சிற்பங்களினாலும், அளவுப் பிரமாணங்களின் செம்மையினாலும் அது கலாவிமர்சகர்களினாற் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. அது அளவிற் சிறியது. 25அடி நீளமும் 18 அடி அகலமும் கொண்டது. அதன் உயரம் 35 அடியாகும். கர்ப்பகிருகம், சிகரம், ஜகமோகனம் என்பவற்றின் கட்டட அமைப்புகள் தனித்தன்மையானவை. சிகரம் நாகரபாணியின் அம்சங்களையும் திராவிட பாணியின் அம்சங்களையுங் கொண்டுள்ளது. அது இரட்டை அடுக்குச் சிகரமாகும். அதன் கீழ்ப்பாகம் அண்ட வடிவமானது. மேற்பாகம் தூங்கானை மாடம் போன்றது. அதன் உச்சியிலே சூலங்கள் அமைந்துள்ள மூன்று கலசங்கள் காணப்படுகின்றன.
ஜகமோகனம் நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது. அதன் ஒவ்வொரு மூலையிலும் நாகர சிகரங்கள் அமைந்துள்ள கோட்டங்கள் காணப்படுகின்றன. அதனால், இவ்வாலயம் பஞ்சாயதனக் கோயிலாகக் கொள்ளப்படும். ஆலயச் சுவர்களில் அமைந்திருக்கும். மாடக்குழிகளில் அழகிய சிற்பங்கள் உள்ளன. சுவரையொட்டியுள்ள சதுரத் தூண்களின் தலைப்பிலே கஜசிம்ம உருவங்கள் அமைந்திருக்கின்றன. அரைத்தூண்களிலும் வனப்புமிக்க சிற்பங்களும் அலங்கார

Page 128
228 கலிங்கத்துக் கோயில்கள்
வேலைப்பாடுகளுங் காணப்படுகின்றன. சுவர்களிலுள்ள மாடங்களிலும் சிகரத்திலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. சிவனது தாண்டவக் கோலமும் மகிஷாசுர மர்த்தனியின் வடிவமும் சுவர் மாடங்களிற் காணப்படுகின்றன. சிகரத் தளங்களின் இடைப்பகுதிகளிலும் விளிம்புகளிலும் அலங்கார வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. நடேசரின் வடிவமும் சூரியன் தேரிலமர்ந்து வலம்வரும் காட்சியும் சிகரத்துக் கிழக்குப் பக்கத்திலே தெரிகின்றன. கதிரவன் அமர்ந்திருக்கும் ரதம் ஏழு குதிரைகள் பூட்டிய விமானமாகும். அதனை அருணன் செலுத்துங் காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. உஷாவும் பிரதி உஷாவும் தோன்றுகின்றனர். அப்சரஸ் மாதரின் உருவங்கள் வஸ்திரமில்லாத கோலத்திலே வசீகரமான தோற்றத்துடன் விளங்கும் வண்ணமாகத் தூண்களிற் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தநாரீஸ்வரரின் படிமமும், போர் வீரர், குதிரை வீரர் என்போரின் உருவங்களும் உயிரோட்டமான கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. சப்தமாதர், விநாயகர், வீரபத்திரர் ஆகியோரின் வடிவங்கள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்திலே சாமுண்டியின் பிரதிமை தாபனஞ் செய்யப்பட்டுள்ளது.
முக்தேஸ்வரம்
புவனேஸ்வரத்திலுள்ள முக்தேஸ்வரம் மிகுந்த வனப்புடன் விளங்கும் ஆலயமாகும். அது கி. பி. 975ஆம் ஆண்டளவிலே கட்டி முடிக்கப்பெற்றது. அது 45 அடி நீளமும், 25 அடி அகலமும், 35 அடி உயரமுங் கொண்டது. அதன் வேலைப்பாடுகள் பரசுராமேஸ்வரம், வைதல் தெயூல் என்பவற்றில் உள்ளவற்றைக் காட்டிலுங் காலத்தாற் பிந்தியனவாகும். அதன் முன்புறத்திலே அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த தோரண வாயில் நாகர கலைப்பாணியின் அம்சங்களோடு அமைந்திருக்கின்றது.
மூலஸ்தானத்திலும் ஜகமோகனத்திலும் அடியிலிருந்து உச்சிவரை அமைக்கப்பட்டுள்ள சிற்ப வரிசைகளின் காரணமாகக் கட்டடம் அலங்காரக் கோலத்துடன் அமைந்திருக்கின்றது. முக்தேஸ்வரம் அமைப்பிலே பஞ்சரதக் கோயிலாகும். ஜகமோகனத்திலுள்ள சிகரந் தாழ்வானது. அதன் முகப்பிலே சிங்கத்தின் வடிவம் அமைந்துள்ளது. அது தோபிச்சசிம்மமாகக் கலசத்தில் அமைந்திருக்கின்றது. மூலஸ்தானம், ஜகமோகனம் ஆகியவற்றின் உட்புறச் சுவர்களிலும், வெளிப்புறச் சுவர்களிலும் அலங்காரச் சிற்பங்களும் கடவுட்படிமங்களும் கவர்ச்சிமிக்க தோற்றத்துடன் அமைந்திருக்கின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 229
சு வ ர் க ளி ல் நாக தேவதைகளின் உருவங்களும் நாகிகளின் உருவங்களும் அமைக்கப் பெற்றுள்ளன. சுவர்களை ஒட்டியுள்ள தூண்களில் L6)6 மேல் அ ம ர் ந் தி ரு க் கு ம் இரட்டைச் சிம்மங்களின்
உ ரு வ ங் க ள் செதுக்கப்பட்டுள்ளன. நிருத்த கணபதி, கார்த்திகேயர், நாட்டியப் பெண்கள், இசைவாணர், தேவதைகள், தேவகணங்கள் என்போரின் உருவங்கள் ஜகமோகனத்துச் சுவர்களில் அணிவரிசைகளாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே
முக்தேஸ்வரம், புவனேஸ்வரம் - கலிங்கம்
சப்தமாதர் வடிவங்கள் முதன்மை பெற்றுள்ளன.
முக்தேஸ்வரத்தின் கட்டட வேலைப்பாடுகளும் சிற்ப அணிவரிசைகளும் பிரதீகாரரின் கோயில்களிலுள்ளவற்றைப் போன்றவை. கலிங்க தேசத்துக் கட்டடக்கலை வளர்ச்சியில் ஒரு பிரதான கட்டத்தை அது பிரதிபலிக்கின்றது. அது ஒரு இடைநிலைக் காலத்துக் கோயிலாகும். பரசுராமேஸ்வரத்தைக் காட்டிலும் அது இரண்டு நூற்றண்டுகளுக்குப் பிற்பட்டதாகும். சிகரத்தைச் சுற்றி அங்க சிகரங்கள் அமைந்திருப்பதால் முக்தேஸ்வரம் மிகுந்த வனப்புடன் காட்சியளிக்கின்றது. அதில் மூலஸ்தானமும் ஜகமோகனமும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருப்பதோடு அவை ஒரே கட்டடம் போல் இணைந்து விடுகின்றன. நாகரமுறையினை மூலமாகக் கொண்டு வளர்ச்சியுற்ற கலைப்பாணி பிராந்தியத்திற்குச் சிறப்பான அம்சங்களைப் பெற்று விடுகின்றமையினை முக்தேஸ்வரத்திலே காணலாம். கலிங்க தேசத்துக்குச் சொந்தமான கலைப்பாணியின் உருவாக்கத்தை அது பிரதிபலிக்கின்றது. மத்திய காலத்திலே கலிங்கத்திற்குச் சிறப்பாகவுள்ள நான்காவது கட்டடக் கலைப்பாணி பற்றிச் சாசனக் குறிப்புள்ளமையுங் குறிப்பிடற்குரியதாகும்.
தாழ்வான சுவர்கள் பொருந்திய பிரகாரத்தின் நடுவில் முக்தேஸ்வரம் அமைந்திருக்கின்றது. அதன் நுழைவாயில் தோரண வாசலாகும் பதினாறு கோண வடிவிலமைந்த இரு தூண்களின் மேலே தோரணம் அமைந்துள்ளது. பல பகுதிகளைக் கொண்ட அத்துரண்கள் சதுரமான பீடங்களில் அமைக்கப்

Page 129
230 கலிங்கத்துக் கோயில்கள்
பெற்றுள்ளன. அவற்றின் மேலே ஆமலகமும் வேதிகையும் பரந்து நீண்ட வண்ணமாக அமைந்துள்ளன. அவற்றைப் பீடமாகக் கொண்டு தோரணம் உருவாக்கப் பெற்றுள்ளது. தோரணத்தில் மலர் வடிவங்கள், தலைகளை வெளியே நீட்டுகின்ற மனித உருவங்கள் அமைந்த கூடுகள், சயனக் கோலத்து மங்கையரின் தோற்றங்கள், மகர உருவங்கள் முதலியன கவர்ச்சி மிக்க வண்ணமாய் உருவாக்கப் பெற்றுள்ளன. இது போன்ற தோரண வாயில் கலிங்கத்திலுள்ள பிற கோயில்களிற் காணப்படுவதில்லை. சுவாமியைத் திருவிழாக் காலங்களிலே ஊஞ்சல் ஆட்டுவதற்கு இது பயன்படுத்தப் பெற்றது என்பது ஐதீகம்.
மூலஸ்தானம் 76 நீளமும் அகலமுங் கொண்டது. அதன் உயரம் 35 வரையானது. ஆயினும், இக்கோயில் வனப்பிலும் கட்டட அமைப்பின் செம்மையிலும் அற்புதமானது. அதனைக் கலாவிமர்சகர் பலரும் சாலப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மூலஸ்தானத்தின் மூலைகள் ரேகை போன்ற வளைவு கொண்ட வடிவத்தில் உருவாக்கப் பெற்றுள்ளன. சிறிய பீடத்தில் அமைந்துள்ள மூலஸ்தானம் பஞ்சரத அமைப்பினைக் கொண்டது. இங்குள்ள ஜகமோகனத்திலே கலிங்கத்துச் சிகரத்தின் அம்சங்கள் பெரும்பான்மையும் உள்ளன. விட்டத்தில் வட்ட வடிவமுந் தோற்றத்திற் கூம்பிய கோலமுங் கொண்ட சிகரம், ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய தளங்களால் அமைந்தது. சைத்தியம், கூடு, கீர்த்தி முகம் என்பனவும் அலங்கார வேலைப்பாடுகளும் கட்டடத்தின் அளவுக்கும் அமைப்புக்கும் பொருத்தமான வகையில் மிகுந்த வனப்புடன் சிற்பிகளால் உருவாக்கப்பட்டுள்ளன.
அமைப்பிலே முக்தேஸ்வரத்தைப் போன்ற கோயில்கள் புவனேஸ்வரத்திலும் வேறு ஊர்களிலும் உள்ளன. அவை பெரும்பாலும் எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு உரியனவாகும். அவற்றிலே காணப்படும் அம்சங்கள் பத்தாம் நூற்றாண்டுக் கோயில்கள் சிலவற்றிலும் இடம் பெற்றுள்ளன.
அதன் இரண்டாவது வளர்ச்சிக் கட்டத்தில் நாகர பாணியில் அமைந்த கோயிலானது கலிங்கத்திற் சில தனித்துவமான அம்சங்களோடு விருத்தியுற்றது. நீள, அகலத் தோற்றங்களில் ஆலயம் பெரு விருத்தி பெற்றது. அத்திபார அமைப்பிலே புதிய அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. திரிரத அமைப்பு, பஞ்சரதம், சப்தரதம், நவரதம் என்று விஸ்தாரமாகியது. இதனாற் கோயிலின் பகுதிகளான கட்டடங்கள் பலவாகிப் பெருகின. ரத அமைப்பு ஒவ்வொன்றும் மூலஸ்தானம், ஜகமோகனம் என்பவற்றைப் போல பல ரத அமைப்பாகியது. ஆரம்ப காலத்துக் கோயில்களின் வாடம்; பாவாக (ம்),

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 23
ஜங்க (ம்), பரண்ட (ம்) என்னும் பகுதிகளைக் கொண்டிருந்தது. பின்பு ஜங்கமானது தலஜங்கம், உபரஜங்கம் என்று இரு பிரிவுகளாகியது. அவை இரண்டும் வாடத்தின் நடுவிலுள்ள வாந்தனம் என்னும் வரியினால் வேறுபடுத்தப்பட்டன. இதற்கேற்பப் பாவாகத்திலும் பரண்டத்திலுமுள்ள வரிமானங்களும் பெருகலாயின. கண்டியிலுள்ள தளங்கள் மிகப் பலவாகப் பெருகியதால் அது மிகவும் பெரிதான உயரத்தைப் பெற்றது. மேலும், கண்டியின் உட்புறச் சரிவு குறைந்து, அது ஓரளவு நேராக நிமிர்ந்த வண்ணமாய் மேலோங்கி எழுந்தது. காலத்தால் முற்பட்ட கோயில்களிற் சிகரத்தின் உயரம் மூலஸ்தானத்தின் நீளத்தின் மும்மடங்காய் அமைந்திருந்தது. காலப்போக்கில் அவற்றின் அளவு 1 : 4, 1 : 5 என்ற வண்ணமாகியது. கோனரகச் சிகரத்தின் உயரம் மூலஸ்தானத்தின் நீளத்தைக் காட்டிலும் 7 மடங்கு உயரங்கொண்டது. ஆலயத்தின் அத்திபாரம் விஸ்தாரம் அடைவதற்கு அமையச் சிகரத்தின் உயரம் அதிகரிக்கின்றமை கலிங்கத்துக் கட்டடக் கலை வளர்ச்சியின் ஒரு பிரதான அம்சமாகும்.
பிரம்மேஸ்வரம்
கி. பி. 900-100 ஆகிய காலப்பகுதியிற் பிரதேச தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாகக் கலிங்க தேசத்திலே கோயிலமைப்பு வளர்ச்சி ; oš స్ట్రో பெற்றது. புவனேஸ்வரத்திலுள்ள ം. " சித்தேஸ்வரம், கேதாரேஸ்வரம், பிரம்மேஸ்வரம், முக்தேஸ்வரம் ஆகியவற்றின் அமைப்பிலே ஆதியான நாகர கலைப்பாணி கலிங்கத்துக் கட்டடக் கலைப்
பாணியாக மாற்றம் பெறுவதை
ரமேஸ்வரம்புவனேஸ்வரம் அவதானிக்க முடிகின்றது. கலிங்கம் அளவில் ஒரளவு சிறியவையான
இக்கோயில்கள் பத்தாம் நூற்றாண்டிலே கட்டப் பெற்றவை. உத்யோத கேசரியின் ஆட்சியின் 18ஆம் ஆண்டிலே அவனுடைய தாயாரான கோலாவதியினால் அமைக்கப்பெற்ற பிரம்மேஸ்வரம் அமைப்பிற்பஞ்சாயதனக் கோயிலாகும். அதன் சுற்றுப் பிராகாரத்தின் நான்கு மூலைகளிலுஞ் சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. அது சித்தேஸ்வரம், கேதாரேஸ்வரம் என்பவற்றைப் பொதுப்பண்புகளில் ஒத்திருப்பினும் வேலைப்பாட்டிலுங்

Page 130
232 கலிங்கத்துக் கோயில்கள்
கலைநுட்பத்திலும் பிரம்மேஸ்வரம் சிறப்பு மிக்கதாய் விளங்குகின்றது. மூலைப்பாகங்கள் இங்கே ரேகை போன்ற வளைவுடன் அமைந்துள்ளன. இக்கோயிலின் கண்டி, முன்னைய கட்டடங்களைப் போலன்றி, அடியிலிருந்து நேராக நிமிர்ந்த வண்ணம் எழுந்து உச்சிப்பாகத்தில் மட்டுமே உட்சரிவினைப் பெறுகின்றது. அத்துடன் கண்டியின் தளத்தின் அடியில் அமைந்துள்ள அங்க சிகரங்களின் பொருத்தமான அளவுப் பிரமாணங்களுஞ் செம்மையான அமைப்பும் ஆலயத்தினை மேலும் அணி செய்கின்றன. கீர்த்தி முகங்கள் கட்டடத்தின் புதிய அம்சமாக இக்கோயிலிற் காணப்படுகின்றன. தோபிச்ச சிம்மத்தின் பீடமாகக் கீர்த்திமுகம் அமைந்துள்ளது. ஜகமோகனத்தின் சிகரம் இங்கு நேர்த்தியான தோற்றத்தையும் ஒரு புதுப் பொலிவினையும் பெறுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
ராஜ ராணி
ராஜ ராணி என வழங்குங் கோயில் கலிங்கத்துக் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் பிரதிபலிக்கின்றது. பழனமும் வயலுஞ் சூழ்ந்துள்ள இக் கோயில் சித்தாரண்யத்திற்குக் கிழக்கே கால் மைல் தூரத்திலுள்ளது. (இ) ராஜ ராணியா எனப்படும் மஞ்சள் நிறமான மணற்கல்லால் அமைந்த காரணத்தால் ராஜ ராணி என்னும் பெயர் கோயிலுக்குரியதாகியது. அது பஞ்சரதத் தளியாகும்.
அதன் மூலஸ்தானம் சதுரவடிவில் உருவாக்கப் பெற்ற போதும் சுவர்ப்புறங்களில் அமைந்த கட்டடப் பகுதிகளின் காரணமாக இக்கோயில் வட்டவடிவமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. கண்டியைச் சுற்றியும் அதனை ஒட்டியும் அமைந்து பல்கிப் பெருகியுள்ள வனப்புமிகுந்த அங்க சிகரங்களால் அலங்காரத் தோற்றத்தை ஆலயம் அடைந்துள்ளது. வாடத்திலே மிகுந்து காணப்படுஞ் சிற்பங்கள் கவர்ச்சி பொருந்திய வண்ணம் செதுக்கப் பெற்றுள்ளன. இக்கோயிலின் சிகரம் அமைப்பிலே கஜுராகோவிலில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. இன்னுமொரு அம்சத்தில் ராஜ ராணி மத்திய கலிங்கம்
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 233
இந்தியாவிலுள்ள கோயில்களை ஒத்திருக்கின்றது. அதன் அங்க சிகரங்களில் இரட்டை ஆமலங்கள் பொருந்தியுள்ளமை கவனிதற்குரியது. ஜகமோகனத்திலே புதுமையான சிற்ப அலங்கார வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. சுவர்களை ஒட்டிய சதுரமான இரட்டைத் தூண்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கிடையிலே, அடியில் யானைமேல் நிற்கும் சிங்க உருவங்களும், மேலே நாக வடிவங்களுஞ் செதுக்கப் பெற்றுள்ளன. வாசலில் அமைந்துள்ள தளங்களிலும் இவ்விதமான வடிவங்கள் காணப்படுகின்றன.
இலிங்கராஜர் கோயில்
கலிங்கத்துக் கோயிலமைப்பின் வளர்ச்சியின் உன்னத நிலையினை லிங்கராஜர் கோயிலிற் காணமுடிகின்றது. திரிபுவனேஸ்வரர் பள்ளிகொள்ளுங்கோயிலாக அன்மக்கப் பெற்றதாற் புவனேஸ்வரம்) என்னும் பெயரும் அதற்கு உரியதாகியது. கோயில் அமைந்துள்ள நகரமும் அதன் காரணமாகப் புவனேஸ்வர(ம்) என வழங்கி வருகின்றது. ஓங்கி உயர்ந்து எழுந்த எடுப்பான தோற்றத்தினாலும் கலை வனப்பினாலும் கவர்ச்சி மிக்க சிற்பங்களின் செம்மையான தோற்றத்தினாலும் விசாலமான கட்டட அமைப்புகளின் நேர்த்தியான நிர்மாணத்தினாலும் அற்புதக் கோலத்துடன் ஆலயம் விளங்குகின்றது.
கோயிலின் சிகரமானது 160அடி உயரங் கொண்டது. புவனேஸ்வரத்திற்கு அப்பாலே பல மைல் தூரத்திலிருந்தும் அதனைப் பார்க்க முடிகின்றது. அதன் உன்னதமான கண்டி பரண்டத்திலிருந்து சிறிதளவான உட்சரிவுடன் மேல்நோக்கி எழுகின்றது.
லிங்கராஜர் கோயிலில் ரேகா தேயூல் என்பதோடு ஜகமோகனம், நாடமந்திரம், போகமந்திரம் என்னுங் கட்டடங்களுங் காணப்படுகின்றன. நேரான ஒரே பீடத்தில் அவை அனைத்தும் ஒன்றன் முன் ஒன்றாக அமைந்துள்ளன. ரேகா தேயூல், ஜகமோகனம் ஆகியவிரண்டும் பஞ்சரத அமைப்புடையவை. ஜகமோகனத்தின் கண்டி இரண்டு போதலங்களால் அமைந்துள்ளது. சதுர வடிவமான போதலங்களின் மேல் வேகி, ஆமலகசிலா, கபூரி என்பன வழமைபோல் வட்டமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஜகமோகனத்தின் உச்சிப்பாகம் நிலத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ளது. அதன் பிரமாண்டமான வடிவத்தாலும் வனப்புமிக்க தோற்றத்தாலும் இங்குள்ள ஜகமோகனம் பிரசித்தமானது. உன்னதமான சிகரத்தின் கோலத்திற்கு ஏற்புடையதாக அது அமைந்துள்ளது.

Page 131
234 கலிங்கத்தக் கோயில்கள்
லிங்கராஜர் கோயிலின் சிகரமும் ஜகமோகனமும் ஒரே காலத்தவை; பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப் பெற்றவை. வனப்பிலுங் கலைச் சிறப்பிலும் அவை எல்லாம் ஒரே தரத்திலுள்ளவை. கோயிற் பிரகாரத்தினுட் காணப்படுஞ் சிறிய கட்டடங்களில் அம்மன் கோயிலான பகவதி ஆலயம் சிறப்புமிக்கது. கலை வனப்பில் அது உன்னத வர்க்கத்தைச் சேர்ந்தது. அதிலுள்ள சிற்பங்கள் அதிரம்மியமான கோலத்தில் அமைக்கப்பட்டவை. லிங்கராஜர் கோயிலின் வளாகம் 520 அடி நீளமும் 465 அடி அகலமுங் கொண்ட நீள் சதுரமாகும். பிராகாரச் சுவர்கள் மிகுந்த அகலமும் உயரமுங் கொண்ட பிரமாண்டமான அமைப்புகளாகும். பிராகாரத்தினுள்ளே உயரமான மேடையொன்றுங் காணப்படுகின்றது.
அமைப்பிலே லிங்கராஜர் கோயிலை ஒத்த ஆலயங்கள் பல புவனேஸ் வரத்திலும் வேறு நகரங்களிலுமுள்ளன. பொதுவாக அவை யாவும் அளவுப் பிரமாணங்களிலும் வனப்பிலும் அதனிலுங் குறைந்தவை. ஆயினும், அழகு மிக்கன என்ற வகையிலும் கலிங்கத்துக் கலைமரபின் ஒரு பிரதான கட்டத்தைப் பிரதிபலிப்பவை என்பதாலும் அக்கோயில்களுங் கவனத்திற்குரியவை.
ஜகந்நாதர் கோயில்
தல யாத்திரைகளினாலே சிறப்புற்ற பூரி நகரில் அமைந்துள்ள ஜகந்நாதர் கோயில் பரத கண்டம் முழுவதிலுமே போற்றப்படும் பேரமைப்பாகும். அதன் கட்டடத் திருப்பணிகள் அனந்தவர்மன் சோடகங்கனின் ஆதரவுடன் கி. பி. 1100 ஆம் ஆண்டளவிலே ஆரம்பிக்கப்பட்டன. அமைப்பிலே அது லிங்கராஜர் கோயிலைப் போன்றது. 9] ஜகமோகனம், நாடமந்திரம், போக மந்திரம் என்னும் பகுதிகளையுங் கொண்டது. அது 310 அடி நீளமும் 80 அடி அகலமுங் கொண்ட கட்டட
அமைப்பாகும். அதன் சிகரம் 200 அடி r உயரங் கொண்டது. ജത്ത
ஜகந்நாதர் கோயில் - பூரி
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 235
நாட மந்திரம் 80 அடி நீளமும் அகலமுங் கொண்டது. வழமைக்கு மாறாக அது தூண்கள் பொருந்திய மண்டபமாக அமைந்துள்ளது. நான்கு வரிசைகளாக அமைந்த தூண்கள் மண்டபத்தின் முகட்டினைத் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள் உள்ளன. பிரதான கட்டடத்தைச் சுற்றி ஏறக்குறைய 40 சிறிய தேவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தைச் சுற்றி மூன்று பிராகாரங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பக்கச் சுவரின் நடுவிலும் வாசல்கள் உள்ளன. காலாகாலமாக ஏற்பட்ட திருத்தங்களினாலுஞ் சுண்ணாம்புப் பூச்சினாலும் ஜகந்நாதர் கோயிலின் கலைவனப்புங் கவர்ச்சியும் மங்கிவிட்டன.
கோனரகம்
கோனரகத்துச் சூரியனார் கோயில் கலிங்கத்துக் கலைஞர் நிர்மாணித்த ஆலயங்களிலே மகோன்னதமானது. நரசிங்க தேவனால் (1238-63) அமைக்கப்பெற்ற இக்கோயில் பூரி நகரத்திற்கு வடகிழக்கிலே இருபது மைல் தூரத்திற்கு அப்பாலே, கடற்கரைக்குச் சமீபத்திலே அமைந்துள்ளது. அது மகோன்னதமான மனோசக்தி வாய்ந்தோரால் நிர்மாணிக்கப் பெற்றதென்றும் அதன் வரைவிலாப் பெருமையாலே திருப்பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்றும் கலாதத்துவ விமர்சகரான பேர்ஸி பிறெளன் கூறுகின்றார். இந்தியக் கட்டடக் கலைஞர்கள் அமைத்த பிரமாண்டமான வனப்பு மிகுந்த ஆலயங்களுள் அதுவும் ஒன்றாகும். ஏழு குதிரைகள் பூட்டிய இரதம் போன்ற அற்புதக் கே m ல த் தி லே சூரியனார் கோயில் கோன ரக த்திலே நிர்மாணிக்கப்பட்டுள்ளது பீடத்தின் நீளப்பாட்டுப் ப க் க ங் க ள் ஒவ்வொன்றிலும் 10 அடி உயரமுள்ள 12 ச க் க ர ங் க ள் வனப்புமிக்க வண்ணம்
உருவாக்கப்பட்டுள்ளன.
சூரியனார் கோயில் - கோனரகம் கலிங்கம்

Page 132
236 கலிங்கத்துக் கோயில்கள்
முன்புற வாசலின் படிக்கட்டுகளின் ஒரங்கள் ஒவ்வொன்றிலும் ஏழு குதிரைகளின் உருவங்கள் உள்ளன.
கடினமான வேகத்துடன் கனம்மிகுந்த வாகனத்தை அதிக சிரமத்தோடு கம்பீரமாக இழுத்துச் செல்லும் அலங்காரக் கோலத்துடன்
குதிரைகளின் வடிவங்கள் அமைக்கப்
பட்டுள்ளன. அவற்றை நிர்மாணித் தவர்களின் கற்பனைத்திறன் வியப்பிற்குரியது; கலைத்திறன் ஒப்பிடற்கு அரியது.
கோனரகம் - ஆதிதளப் பகுதி கலிங்கம்
கோனரகத்துக் கோயில் 875 அடி நீளமும் 540 அடி அகலமுங் கொண்ட மாபெரும் பிரகாரத்தினுள் அமைந்திருந்தது. அதன் பிரமாண்டமான சிகரமும் நாடமந்திரத்தின் கண்டியும் காலப்போக்கில் இடிந்து வீழ்ந்துவிட்டன. ஆயினும், இடிபாடுகளுக்கிடையிலுஞ் சுவர்களிலுங் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள் ஆலயத்தின் வரைவிலாச் சிறப்பிற்குச் சான்றாக உள்ளன. வனப்பு மிகுந்த பல உருவங்களுந் தேவர் படிமங்களும் காமரசனையின் நுட்பங்களை உணர்த்தும் உருவங்களும் அவற்றிடையே காணப்படுகின்றன.
நாடமந்திரமானது தனியான கட்டடமாகப் புறவாசலின் நேரே அமைந்துள்ளது. மிக உயரமான பீடத்தில் அதனை அமைத்துள்ளனர். பிரதான கோயிலின் அம்சங்கள் பலவற்றை அமைப்பிலே பிரதிபலிக்கும் வகையிலே இக் கட்டடம் உருவாகியிருந்தது. போகமந்திரமுந் தனியொரு அமைப்பாக விளங்கியதோடு கோயிலுக்கு முன்பாகவன்றி நாடமந்திரத்தின் பக்கத்திலே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜகமோகனம் மட்டுமே இங்கு அழிவுறாத நிலையிற் காணப்படுகின்றது. அது 100 அடி நீளமும் அகலமுங் கொண்ட அமைப்பாகும். அதன் கண்டி 100 9 تا உயரமானது. பிரகாரத்தினுள் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இராமச் ܀» சந்திரர் கோயில் இங்குள்ள , * தேவக் கோட்டங்களிலே இலிங்கராசர் சிறப்புமிக்கது.
بهع
పS
கோயில் புவனேஸ்வரம் கலிங்கம்
డడ్లీ
 
 
 

கல்யாணிச் சாளுக்கியர் கலைப்பாணி
சி. பத்மநாதன்
சாளுக்கியரின் ஆதிக்கம்
ர்ேல்யாணபுரம் என்னும் நகரை இராசதானியாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சாளுக்கிய வம்சத்தவரைக் கல்யாணிச் சாளுக்கியர் என்பர். அவர்கள் வாதாபிச் சாளுக்கியிருக்குப் பிற்பட்டவர்கள். அவர்களின் ஆட்சி 10 முதல் 12 வரையான நூற்றாண்டுகளில் நடைபெற்றது. கல்யாணிச் சாளுக்கியர் வாதாபி மன்னர்களின் வழிவந்தவர்கள் என்று அவர்களின் ஆவணங்கள் கூறும். வாதாபிச் சாளுக்கியர்களின் வராகலாஞ்சனம் முதலானவற்றையே கல்யாணிச் சாளுக்கியர்களும் அரச சின்னங்களாகக் கொண்டனர்.
கல்யாணிச் சாளுக்கியர் தக்கிணத்திலே வலிமை பொருந்திய பரந்த இராச்சியமொன்றை உருவாக்கியிருந்தனர். கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியன அவர்களின் ஆதிக்கவலையமாக அமைந்திருந்தன. அவர்களின் செல்வாக்கு வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஏற்பட்டிருந்தது. வடக்கிலே மத்தியப்பிரதேசம், செளராஷ்டிரம் என்பன மீது அவர்கள் பல முறை படையெடுத்தனர். தெற்கிலும் கிழக்கிலும் கங்கபாடி, வேங்கி என்பவற்றின் காரணமாகச் சாளுக்கியருக்கும் சோழருக்கும் இடையில் 100 வருடங்களுக்கு மேலாகப் போர்கள் நடைபெற்றன. கல்யாணிச் சாளுக்கியரின் ஆட்சி இரண்டாம் தைலன் என்பவனின் காலத்தில் ஏற்பட்டது. அவன் 973 - 74 ஆம் ஆண்டளவில் தங்கிணத்திலே இராஷ்டிரகூடரின் ஆட்சியை ஒழித்தான். ஆகம மல்லன், புவனேகமல்லன் என்னும் பட்டங்களையும் அவன் சூடிக்கொண்டான். ஆரம்பத்தில் மான்யாகேடம் அவனுடைய இராசதானியாக விளங்கியது. காலப்போக்கிலே சாளுக்கியர் கல்யாணபுரத்தைத் தங்கள் தலைநகரமாக அமைத்துக் கொண்டனர்.

Page 133
238 கல்யாணிச் சாளுக்கியர் கலைப்பாணி
சோமேஸ்வரம் - கடக்
தைலனுக்குப்பின்வந்த மன்னர்களில் சத்யாஸ்ரேன், சோமேஸ்வரன், ஆறாம் விக்கிரமாதித்தன் என்போர் மிகுந்த சிறப்புடையவர்கள். சத்யாஸ்ரயனுடைய ஆட்சிக்காலத்திலே சோழருக்கும் சாளுக்கியருக்கும் இடையிலே போர்கள் ஏற்பட்டன. கங்கபாடி, நுளம்பபாடி என்னும் இராச்சியங்களைக் கைப்பற்றிய பின் சாளுக்கியரின் தென் மண்டலங்களையும் சோழர் கைப்பற்றி விட்டனர். ஜெயசிங்கன், சோமேஸ்வரன், ஆறாம் விக்கிரமாதித்தன் (1076 - 1126) ஆகியோரின் காலங்களிற் சோழருக்கும், சாளுக்கியருக்கும் இடையில் உக்கிரமான போர்கள் இடம்பெற்றன.
ஆறாம் விக்கிரமாதித்தனின் ஆட்சியில் மிகவும் வலிமை பெற்று விளங்கிய சாளுக்கியரின் ஆதிக்கம் அவனுக்குப் பின்பு வந்த மன்னர்களின் காலத்தில் வீழ்ச்சியுற்றது. பில்கணர் என்னும் கவிவாணர் விக்கிர மாதித்தனுடைய வாழ்க்கை வரலாற்றை விக்கிரமாங்கதேவசரிதம் என்னும் காப்பியமாக எழுதியுள்ளார். சமகாலக் கவிஞரில் அவர் புகழ்மிக்கவர். புருஷோத்தமனுக்குரிய அம்சங்கள் எல்லாம் அமையப்பெற்ற ஒரு மன்னனாக விக்கிரமாதித்தனை பில்கணர் இலக்கிய ரசனையோடு வர்ணித்துள்ளார். அதனால், விக்கிரமாதித்தனின் நாமம் மரபுவழியான இலக்கிய வரலாற்றிலே நிலைபெறலாயிற்று. விக்கிரமாங்க தேவசரிதத்தைச் சில அம்சங்களிற் பாணபட்டரின் ஹர்ஷிசரிதத்திற்கு ஒப்பிடலாம். விக்கிரமாதித்தனைப் பெருவீரனாகவும் சக்கரவர்த்தியாகவும் இராசதர்மத்தின் புகலிடமான வனாகவும் பில்கணர் படைத்துள்ளார்.
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 239
தக்கிணத்துப் பண்பாட்டு வரலாற்றிலே கல்யாணிச் சாளுக்கியரின் காலம் சிறப்புமிக்க ஒரு காலமாகும். அது உற்பத்திப் பெருக்கமும் வாணிபமும் செல்வமும் செழித்தோங்கிய காலமாகும். சாளுக்கியர் பேரரசு பரதகண்டத்தின் ஏனைய பகுதிகளோடு வர்த்தகம், கலாசாரம் ஆகிய துறைகளில் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது. கல்யாணபுர மன்னர்கள் சமய நெறிகள் பலவற்றிற்கும் ஆதரவு வழங்கினார்கள். வித்யாதரிசிகளும் வித்யாபீடங்களும் அவர்களிடமிருந்து மிகுந்த அளவிலே ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆலயங்களுக்கும் சமயகுரவருக்கும் கவிஞருக்கும் கலைஞருக்கும் தானங்களையும் மானியங்களையும் வழங்கி மன்னர்கள் சிறப்புச் செய்தார்கள். கல்யாணிச் சாளுக்கியர் காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு அபிவிருத்திகளையும் நாகரிக வளர்ச்சிகளையும் விவரமாக அறிந்து கொள்ளக்கூடிய கருவூலமாக மானசொல்லாச என்னும் நூல் விளங்குகின்றது. அது அபிலாஷிதார்த்த சிந்தாமணி என்றுஞ் சொல்லப்படும். சோமேஸ்வரன் என்னும் மன்னன் அதனை எழுதினான். அறிவுக்களஞ்சியமாய் அமைந்துள்ள மானசொல்லாச ஐந்து பிரகரணங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் 20 அத்தியாயங்கள் உள்ளன. அரண்மனையினை மையப்படுத்தி உலகியல் சம்பந்தமான அறிவு தொடர்பான விவரங்கள் நூலிலமைந்துள்ள 100 அத்தியாயங்களிலுஞ் சொல்லப்படுகின்றன. கட்டடக்கலை, படிமக்கலை, ஓவியம் முதலான நுண்கலைகளைப் பற்றியஅறிவுக் களஞ்சியமாகவும் அது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சாளுக்கிய மன்னனான சோமேஸ்வரன் சமகாலத்து அனுபவங்களின் அடிப்படையிலே நுண்கலைகளைப் பற்றி விரிவாக விளக்கினான். சாளுக்கியர் கலைப்பாணியின் அம்சங்களை அவை வார்த்தைகளால் வர்ணிக்கின்றன. சாளுக்கியர் காலத்துச் சிற்பக்கலைஞர்களின் வினோதமான படைப்புகளை அவர்களின் காலத்துக் கோயில்களிலும் அவற்றிலமைந்துள்ள படிமங்களிலும் கண்டு கொள்ளலாம்.
வேஸர கலைப்பாணி
கல்யாணிச் சாளுக்கியர் காலத்துக் கட்டடங்கள் வேஸர கலைப்பாணிக்கு உரியவை. வேஸர கலைப்பாணியிலமைந்த கட்டடங்கள் விந்தியமலைக்கும் துங்கபத்திரை நதிக்கும் இடையிலமைந்த நிலப்பகுதியிலே காணப்படுமென்று சிற்பசாஸ்திரங்களும் ஆகமங்களும் கூறும். ஆனாலும்,

Page 134
240 கல்யாணிச்சாளுக்கியர் கலைப்பாணி
அவற்றைக் கர்நாடகத்திலேயே பொதுவாகக் காணமுடிகின்றது. வேஸர கலைப்பாணி முற்காலத்து வாதாபிச் சாளுக்கியரின் கட்டடக்கலையை மூலமாகக் கொண்டது. ஜகொளே, வாதாபி, பட்டதகல், ஆலம்பூர் ஆகிய நகரங்களில் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கற்றளிகள் பல உள்ளன. அந்நகரங்களிலே நாகர முறையிலும் திராவிட முறையிலும் கட்டப்பெற்ற கோயில்கள் அருகருகே அமைந்திருப்பதைக் காணலாம். கல்யாணிச் சாளுக்கியர் காலத்து ஸ்தபதிகள் நாகர கலைப்பாணியினதும் திராவிட கலைப்பாணியினதும் அம்சங்கள் கலந்த கோயில்களை நிர்மாணித்தனர். அதனாற் சாளுக்கியர் கலைப்பாணி தனித்தன்மை கொண்டதொரு கட்டுமான வகையாக விருத்திபெற்றது. கல்யாணிச் சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் நாகரம், திராவிடம் என்று வேற்றுமைப்படுத்த முடியாத அளவிலே பொதுமையான அம்சங்களோடு விளங்குகின்றன. வேஸரம் என்ற சொல்வழக்கும் கல்யாணிச் சாளுக்கியர் காலம் முதலாக ஆவணங்களிலே வருகின்றமை இங்கு கவனித்தற்குரியதாகும். வேஸர கலைப்பாணியின் வளர்ச்சியில் நாகரத்தினுடைய செல்வாக்கு அருகிவந்தது. திராவிட முறையிலமைந்த கட்டுமானங்களின் அம்சங்கள் சாளுக்கியரின் கோவில்களிலே அழுத்தம் பெற்றன.
திராவிடக் கலைப்பாணியில் உள்ளவாறு வேஸர கலைப்பாணியிலும் கட்டட அமைப்பிலே விமானம், மண்டபம் ஆகிய இரண்டும் பிரதானமான பகுதிகளாக விளங்குகின்றன. விமானத்தின் மேற்புறத்திலே பல்தள அமைப்பு இடம்பெறுகின்றது. அதன் உச்சியிலே ஆமலக வளைவு கொண்ட அம்சம் காணப்படும். அது அண்ட வடிவினதாய் அமைந்திருக்கும். மண்டபங்கள் விமானத்தைக் காட்டிலும் கூடிய அகலத்துடன் காணப்படும். அவற்றின் கூரை தட்டையான சமதளமாக அமைந்திருக்கும். திராவிடக் கலைப்பாணியிற் போல மண்டபங்களிற் தூண்கள் அமைந்திருக்கும். விமானதளங்களிலுள்ள கோஷ்டங்கள் தனிரகமானவை. அவை நாகரசிகர அமைப்பிலுள்ள அம்சங்களுடன் விளங்கும். கோஷ்டங்கள் நாகர சிகரங்களைப் போல அடியிலிருந்து மேலாக, ஒன்றன் மேலொன்றாக நேர்கோட்டில் அமைந்திருப்பதனாற் சிகரம் மிகவும் அலங்காரமான தோற்றத்தைப் பெறுகின்றது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 24
கல்யாணிச் சாளுக்கியர் காலத்துக் கோயில்களில் மூலஸ்தானத்தைச் சுற்றி மூடப்பெற்ற திருச்சுற்றாலை காணப்படுவதில்லை. அந்த வகையில் அவை தோற்றத்திற் திராவிட விமானங்களிலிருந்து வேறுபடுகின்றன. மண்டபங்களின் புறச்சுவர்களின் அமைப்பில் நாகர பாணியின் அம்சங்களும் திராவிடபாணியின் அம்சங்களும் கலப்புற்றுள்ளன. வட இந்தியக் கோயில்களைப் போல வெளிப்புறத்திலே சுவர்கள் நடுவிற்பிதுக்கமாயிருக்கும். அவற்றிலுள்ள இடைவெளிகளிலே நாகர சிகரங்கள் போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். அவற்றின் ஒரங்களிலே திராவிடமான கட்டடங்களிற் காணப்படுவதைப் போன்று அரைத் தூண்களின் வடிவம் அமைந்திருக்கும். காலப்போகிலே நகூடித்திர வடிவமான கட்டட அமைப்பு உருவாக்கப்பட்டது. டம்பல் என்னும் இடத்திலுள்ள தொட்டவாசப்பர் கோயில் அதற்கோர் உதாரணமாகும். பின்பு, ஹொய்சலர் காலத்திலே நகூடித்திர வடிவமான கோயில்கள் தென் கர்நாடகத்திலே வழமையாகிவிட்டன.
கல்யாணிச் சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் சிலவற்றில் மண்டபம் ஒன்றைச் சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட மூலஸ்தானங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இரண்டு, மூன்று அல்லது நான்கு மூலஸ்தானங்கள் பல இடங்களில் இம்மாதிரியாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒவ்வொன்றும் விமானங்களோடு அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வகையான கட்டடங்கள் மிகவும் அலங்காரமான தோற்றத்துடன் விளங்குகின்றன. கல்யாணிச் சாளுக்கியர் சோழர்களைப் போல பிரமாண்டமான தோற்றமுடைய கோயில்களை அமைப்பதிற் கவனஞ் செலுத்தவில்லை. அவர்களின் கோயில்கள் மிதமான அளவு கொண்டவை. ஆனால், மண்டபத் தூண்கள், கூரை முகடுகள், விதானங்கள், வாயிற் கதவுகள், வெளிப்புறச் சுவர்கள் முதலியவற்றின் வனப்பில் அதிக கவனஞ் செலுத்தினார்கள். சாளுக்கியக் கலைஞர் கோயில்களை நிர்மாணிக்குமிடத்து பச்சை நிறமுடைய கற்களையும் கருநீலமான கற்களையும் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர். தேவைக்கு ஏற்றவாறு அந்த வகையான கற்களைக் கருவிகளினாலே மிகுந்த நுட்பத்துடனும் வனப்புடனும் செதுக்க முடிந்தது. மிக நுட்பமான வேலைப்பாடுகளையும் அதிக வனப்புடைய சிறிய உருவங்களையும் அவற்றிலே வடிவமைத்தனர். பளிங்கு போலப் பிரகாசிக்கும் தன்மை அந்தக் கற்களின்

Page 135
242 கல்யாணிச்சாளுக்கியர் கலைப்பானி
இயல்பான அம்சமாகும். அவற்றில் அமைக்கும் வேலைப்பாடுகள் ஆபரணங்களிலும் துணிகளிலும் அமைக்கப்படும் சித்திர வேலைப்பாடுகளைப் போல மிகவும் நுட்பமான கோலமானவை; மிகவும் கவர்ச்சியானவை.
கர்நாடக தேசத்திற் பல இடங்களிலே நூற்றுக்கணக்கான கோயில்களைச் சாளுக்கியர் அமைத்தனர். ஆயினும், அவை நன்கு அடையாளங் காணப்பட்டு விபரிக்கப்படாமையால் இந்தியக் கட்டடக் கலைவரலாறு பற்றிய நூல்களிலே அவற்றைப் பற்றித் தனியான, விரிவான அத்தியாயங்கள் எழுதப்படவில்லை. நுண்கலை இரசிகர்களும் ஆய்வாளர்களும் கடந்த சில தசாப்தங்களாக அவற்றிலே கவனஞ் செலுத்தியதால் அக்கோயில்களைப் பற்றிய விவரங்கள் ஓரளவிற்கு இந்நாட்களில் வெளிவருகின்றன. சில பிரதானமான தலங்களிலுள்ள கோயில்களை உதாரணங்களாகக் கொண்டு வேஸர கலைப்பாணியின் சிறப்பியல்புகள் இங்கு சுருக்கமாக வர்ணிக்கப்படுகின்றன.
குக்கனூரிலுள்ள கல்லேஸ்வரம்
முன்னாட்களில் நிலைபெற்ற ஹைதராபாத் இராச்சியத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள குக்கனூர் என்னும் ஊரிற் பல பழைய கோயில்கள் உள்ளன. அவற்றிலே கல்லேஸ்வரம் என்னும் ஆலயம் முற்காலத்துக் கட்டட அமைப்பு வேசரமாக விருத்தி பெறுவதைப் பிரதிபலிக்கின்றது. அதில் விமானம், அந்தராளம், மண்டபம் என்னும் பகுதிகள் அமைந்திருக்கின்றன. முன்புறத்தில் நந்திபீடம் அமைந்துள்ளது. புறச்சுவர்களில் அமைந்துள்ள கோட்டங்களிலே தேவர்களின் படிமங்களுக்குப் பதிலாகச் சிகரங்களின் குறுவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியக் கோயிற் கட்டட அமைப்பினைப் பொறுத்தவரையில் இது ஒரு புதுமையாகும். காலப்போக்கில் இந்தமுறை பல கட்டட அமைப்புகளிற் கையாளப்பட்டமையினை அவதானிக்க முடிகின்றது. விமானத் தளங்கள் உயரங் குறைந்தனவாக உள்ளன. மேற்புறத்திலுள்ள பகுதிகள் இரட்டை வளைவுடைய அம்சங்களாக அமைந்துள்ளமையும் ஒரு புதுமையாகும். திராவிட கட்டுமானத்தின் சில அம்சங்கள் மாற்றமடைந்து சாளுக்கியர் கலைப்பாணிக்குரிய விமானத் தோற்றம் உருப்பெற்றமைக்குக் கல்லேஸ்வரம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 243
லக்குண்டி சமணக்கோயில்
கல்யாணிச் சாளுக்கியர் கலைப்பாணியின் அபிவிருத்தியிலுள்ள இரண்டாவது கட்டத்தை லக்குண்டியிலுள்ள சமணப்பள்ளியிற் காணலாம். தார்வார் மாவட்டத்திலே கடக் என்னுந் தலத்திற்கு வடகிழக்கில், ஒன்பது மைல் தூரத்தில் லக்குண்டி என்னும் ஊர் அமைந்திருக்கின்றது. அங்கே கருமை நிறமான குளோரைற் சிஸ்ட் என்னும் வகையான கல்லைக் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர். மிகவும் மென்மையான இழைகளோடு கூடியமைந்த அந்தக் கல் நுட்பமான வேலைப்பாடுகளைச் செதுக்குவதற்கு மிகவும் உகந்ததாகும். மலரிதழ் போன்ற கோலமான வேலைப்பாடுகளை லக்குண்டியில் அமைத்துள்ளனர்.
லக்குண்டியிற் பல புராதனமான கட்டடங்கள் காணப்படுகின்றன. அவற்றிலே மிகவும் புராதனமானதென்று கருதப்படும் சமணப்பள்ளி கட்டுமானத்திற் குக்கனூர் கல்லேஸ்வரத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம் என்னும் பாகங்கள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பில் அது திராவிடமான கட்டுமானமாகும். அதன் வெளிப்புறச் சுவர்களிலுள்ள வேலைப்பாடுகள் கல்லேஸ்வரத்தில் உள்ளவற்றை முன்மாதிரியாகக் கொண்டவை. ஆயினும், அவை மிகுந்த வனப்புடையவை; முன்னேற்றங் கொண்டவை, கோஷ்டங்களின் அருகிலமைந்த அரைத்துரண்கள் மெலிந்தனவாகவும் மேற்புறத்தில் அலங்காரமான தோரணங் கொண்டனவாகவும் விளக்குகின்றன.
செளத்தம்பூர் முக்தேஸ்வரம்
தோற்றத்தில் லக்குண்டி ஆலயத்தைப் போன்ற பல கோயில்கள் சாளுக்கியரின் இராச்சியத்தில் நிர்மாணிக்கப்பட்டன. செளத்தம்பூரிலுள்ள முக்தேஸ்வரம் அவற்றில் ஒன்றாகும். ஆலயம் அளவிற் சிறியது; தோற்றத்தில் வனப்பு மிக்கது. மண்டபத்தின் முன்பாக அமைந்த முகமண்டபங்களைச் சுற்றிக் கக்ஷாசனங்கள் அமைந்திருக்கின்றன. அது நாகர பாணியிலுள்ள அம்சங்களில் ஒன்றாகும். சுவர்களின் வெளிப்புறத்தில் அமைந்த அலங்கார வேலைப்பாடுகள் அழுத்தமானவையாகவும், செம்மையானவையாகவும் காணப்படுகின்றன. அதிஷ்டானப் படைகளிலுள்ள அலங்கார

Page 136
244 கல்யாணிச்சாளுக்கியர் கலைப்பாணி
வேலைப்பாடுகளும் வனப்புடன் விளங்குகின்றன. அவற்றின்மேல் அமைந்திருக்கும் அலங்காரச் சிற்பங்கள் கவர்ச்சியான தோற்றங் கொண்டவை. மாடக்குழிகள் எல்லாம், எல்லாத் தளங்களிலும், கீழிருந்து மேலாக ஒரே வரிசையில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து காணப்படுங் கோலத்தினால் விமானம் மிகுந்த சிறப்புடன் விளங்குகின்றது. ஓரளவிற்கு நாகர சிகரங்களின் தன்மையை அவை பிரதிபலிக்கின்றன. விமானத்தில் அமைந்த தூபி இரட்டைப்பட்டை அமைப்பாகும். நடுவிலே நேரான வரிமானமும், அமைந்துள்ளது. ஹாவேரியிலுள்ள சித்தேஸ்வரம், ஹாலஹல்லி என்னுமிடத்துச் சோமேஸ்வரம், இரல்கி என்னும் தானத்துச் சித்தராமேஸ்வரம் ஆகிய கோயில்கள் முக்தேஸ்வரத்தைப் போன்றவை. அவற்றுள் மூன்று விமானங்களோடு அமைந்துள்ள சோமேஸ்வரம் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றது. அக்கோயில்கள் 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவை.
லக்குண்டிக் காசிவிஸ்வேஸ்வரம்
சாளுக்கியர் கலைப்பாணியின் பூரணமான வளர்ச்சியினை 12 ஆம் நூற்றாண்டுக் கோயில்கள் பலவற்றிலே காணலாம். அக்கலைப்பாணியின் அம்சங்கள் எல்லாவற்றையும் லக்குண்டியிலுள்ள காசிவிஸ்வேஸ்வரர் ஆலயத்திற் கண்டுகொள்ளலாம். அது 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பெற்றது. தலத்திலே இரண்டு மூலஸ்தானங்கள் உள்ளன. பிரதானமான கோயிலின் எதிர்ப்புறத்தில், அதனை நோக்கிய வண்ணமாக இரண்டாவது விமானம் அமைந்துள்ளது. விமானங்கள் பல்தள அமைப்புகளாகும். ஆனால், தளங்களின் வேறுபாடுகளை நெருக்கமாக அமைந்துள்ள அலங்காரச் சிற்பங்கள் மறைந்துள்ளன. கீழிருந்து மேலாக ஒரே வரிசையில் அமைந்த கோஷ்டங்கள் நாகர சிகரத்தின் நிமிர்ந்தெழும் ஓங்கிய கோலத்தைப் பிரதிபலிக்கின்றன. சிகரத்தின் அலங்கார வேலைப்பாடுகள் தன்மையில் விசேடமானவை. நானாவிதமான வடிவங்களும் மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளும் அவற்றிலே காணப்படுகின்றன. வாயில்களில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமானவை; ஈடும் எடுப்பும் அற்றவை துகில்களிற் காணப்படும் நுட்பமான சித்திரங்களைப் போல அமைந்தவை. சிற்ப அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படும் கட்டடங்களிற் காசிவிஸ்வேஸ்வரம் தலைசிறந்ததாகும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 245
இட்டகி மகாதேவர் ஆலயம்
இட்டகி மகாதேவர் கோயில் வேறொரு வகைக்குரிய அமைப்பாகும். அது 12 ஆம் வருடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. பல படைகள் பொருந்திய, பொதுவானதும் மகத்தானதுமான,அதிஷ்டானமொன்றில் அமைக்கப்பட்டுள்ள கோயில்களின் நடுவில் அது காணப்படுகின்றது. அக்கோயிலின் நிர்மாணம் பற்றிய விவரங்களைக் கூறும் சாசனமொன்று அதனைத் தேவாலயச் சக்கரவர்த்தி என்று வர்ணிக்கின்றது. சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் எல்லாவற்றிலும் அதனை உன்னதமானதாகக் கொள்ளலாம்.
அக்கோயிலின் எல்லாப் பகுதிகளும் மிகவும் பொருத்தமான அளவுப் பிரமாணங்களோடு அமைக்கப்பட்டுள்ளன. அதனாற் கட்டடத்தின் கலையம்சங்கள் மாசுமறுவின்றிப் பொலிவுடன் விளங்குகின்றன. அலங்காரச் சிற்பங்கள் எல்லாம் அவற்றிற்குரிய இடங்களிலே பொருத்தமான அளவுகளிலும் மிக நுட்பமான வேலைப்பாடுகளுடனும் அமைக்கப் பெற்றுள்ளன. இட்டகி மகாதேவர் கோயில் லக்குண்டியிலுள்ள காசிவிஸ் வேஸ்வரத்தைக் காட்டிலும் அளவுப் பிரமாணால்களிற் பெரியதாகும். அதன் அலங்கார வேலைப்பாடுகளும் லக்குண்டிக் கோயிலுள்ளவற்றைக் காட்டிலுஞ்
சிறப்பானவை.
மகாதேவர் கோயில் - இட்டகி

Page 137
24մ: கல்யாணிச் சாளுக்கியர் கலைப்பானரி
அதிலே மூலஸ்தானம், அந்தராளம், மண்டபம் என்னும் பகுதிகளும் முன்புறத்தில் நந்திபீடமும் அமைந்திருக்கின்றன. அவை அனைத்தும் வழமை போல ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் கிழக்கு நோக்கிய கட்டுமானமாகும். அலங்கார மண்டபத்தில் நானாவிதமான தோற்றங்களுடன் உருவாக்கப்பெற்ற 68 தூண்கள் உள்ளன. நடுவில் அமைந்துள்ள 4 தூண்கள் முகட்டைத் தாங்கி நிற்கின்றன. அதி அற்புதமான வேலைப்பாடுகள் அவற்றிலே காணப்படுகின்றன. அந்த மகா மண்டபத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையில் அளவிற் சிறியதான அந்தராளம் அமைந்துள்ளது. அதன் நடுவில் நந்தியின் உருவமொன்று அழகிய கோலத்துடன் விளங்குகின்றது. தூண்களிலும் கதவுநிலைகளிலுங் காணப்படும் சிற்பங்கள் வெள்ளியிலும் தங்கத்திலும் அமைக்கப்படும் உலோக வேலைப்பாடுகளைக் காட்டிலும் வடிவமைபிற்
சிறந்தவையென்று கலாவிமர்சகர் கருதுவர்.
குருவட்டி மல்லிகார்ச்சுனர் கோயில்
குருவட்டி என்னும் இடத்திலுள்ள மல்லிகார்ச்சுனர் கோயிலும் வேசர கலைப்பாணியிலுள்ள கோயில்களின் தனிச்சிறப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அதிலே மூலஸ்தானம், அந்தராளம், மண்டபம் என்னும் பகுதிகள் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன. முன்புறத்தில் அவற்றோடு தொடுக்கப்படாத பெரியதொரு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இக்கோயிலிற் காணப்படும் தூண்களின் போதிகைகளில் மிகநுட்பமான வகையில் சார்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடக் என்னுந் தலத்தில் ஒரு பொதுவான வளாகத்திலே சாளுக்கியர் காலத்துக் கோயில்கள் பல காணப்படுகின்றன. அங்குள்ள சரஸ்வதி கோயில் அதன் கட்டட அமைப்பின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றது. அது ஒரு சாந்தாரக் கோயில் போல அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தைச்
சுற்றி மூடப்பெற்ற சுற்றாலை ஒன்று அதில் உள்ளது.

கல்யாணிச் சாளுக்கியர் கலைப்பாணி
கல்யாணிச் சாளுக்கியர் கோயில்
கல்யாணிச் சாளுக்கியர் காலத்துக் கோயில்
கல்யாணிச் சாளுக்கியர் கோயில் - கடக்

Page 138
கல்யாணிச் சாளுக்கியர் காலம்
கோயில்
மண்டபம்
கல்யாணிச் சாளுக்கியர் காலம் மண்டபம் லக்குண்டி
கல்யாணிச்
சாளுக்கியர் தூண்
லக்குண்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்யாணிச் சாளுக்கியர் காலத் தூண்
கல்யாணிச் சாளுக்கியர் மாடக் குழிச் சிற்பம் - தக்ஷணாமூர்த்தி

Page 139
250 கல்யாணிச்சாளுக்கியர் கலைப்பாணி
கடக்கிலுள்ள சோமேஸ்வரம் சாளுக்கியர் கலைப்பாணி, ஹொய்சலர் கலைப்பாணி ஆகிய இரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பிரதிபலிக்கும் அமைப்பாகும். அதன் சுவர்களில் அலங்காரச் சிற்பங்களாக மனித வடிவங்கள் இணைந்துள்ளமை ஒரு புதிய அம்சமாகும். அதிஷ்டானப் படைகளின் அமைப்பிலும் சில சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன. அப்பண்புகள் பிற்காலத்திலே ஹொய்சளரின் கோயில்களில் விருத்தி பெற்றன.
பிற்காலத்துச் சாளுக்கியர் கலைப்பாணியின் அம்சங்களைத் தொகுத்து நோக்குமிடத்து மேல்வரும் விவரங்களை அவதானித்துக் கொள்ளலாம்; வேசரபாணி என்று சிற்பசாஸ்திரங்கள் கூறுங் கோயிற் கட்டுமானமுறை கல்யாணிச் சாளுக்கியர் காலத்தில் ஒரு தனித்துவமான கலைப்பாணியாக வளர்ச்சி பெற்றது. அது வாதாபிச் சாளுக்கியரின் கட்டட அமைப்பு முறையினை மூலமாகக் கொண்டிருந்தது. ஐகொளே, பட்டதகல், ஆலம்பூர் ஆகிய நகரங்களில் வாதாபிச் சாளுக்கியர் பல கற்றளிகளை அமைத்தனர். அவற்றிற் சில வட இந்தியக் கோயில்களைப் போன்றவை. வேறு சில தென்னிந்தியக் கோயில்களைப் போன்றவை. ஒரே வளாகத்தினுள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில், இரு மரபுகளையும் பின்பற்றி அருகருகே கோயில்களைக் கர்நாடக தேசத்தில் அமைத்துள்ளனர். அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு லக்குண்டி, குக்கனூர், இட்டகி, செளத்தம்பூர், கடக் முதலான இடங்களில் 11ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளிலே கற்றளிகளை அமைத்தனர். வேஸர கலைப்பாணியில் அமைந்த ஆலயங்கள் கர்நாடக தேசத்திலும் அதற்கு வெளியிலுள்ள ஊர்களிலும் நூற்றுக் கணக்கில் உள்ளன.
வேசர கலைப்பாணியில் நாகரத்தின் அம்சங்களையும் திராவிடக் கலைப்பாணியின் அம்சங்களையும் தக்கிணத்துச் சிற்பிகள் வெவ்வெறு அளவுகளிற் சேர்ந்துள்ளனர். கல்யாணிச் சாளுக்கியரின் கோயில்கள் அமைப்பிலுந் தோற்றத்திலும் தமிழகத்துக் கோயில்களைச் சில அம்சங்களில் ஒத்திருக்கின்றன. மூலஸ்தானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மண்டபம் என்பன எல்லாக் கோயில்களுக்கும் பொதுவானவையாகும். சில தலங்களில்
அலங்கார மண்டபம் ஒன்றினையும் முன்புறத்தில் அமைத்தார்கள், சைவக்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 25
கோயில்களில் நந்தி மண்டபம் அமைந்திருக்கும். சைவ, வைணவ, சமணக் கோயில்கள் எல்லாம் பொதுவான அம்சங்களுடன் விளங்குகின்றன.
அதிஷ்டானப் படைகள் நிரையான சிற்பவரிகளோடு சிறப்புற்று விளங்கின. பொதுவாக ஆலயங்கள் எல்லாம் மிதமான தோற்றங் கொண்டவை. மூலஸ்தானம் தாழ்வான தோற்றங் கொண்டிருக்கும். அதன் தளங்கள் திராவிடப் பாணியில் உள்ளவற்றைப் போன்றவை. ஆயினும், தலங்களில் அமைந்துள்ள கோட்டங்கள் கீழிருந்து மேலாக ஒரே வரிசையில் அமைந்திருக்கும் கோலம் தனிச்சிறப்புடையதாகும். நாகர சிகரங்களிற் படைகள் நேராக நிமிர்ந்து அமைந்திருப்பதைப் போன்று அந்த வரிசைகள் காட்சியளிக்கின்றன.
கற்றளிகளை அமைப்பதற்குப் பயன்படுத்திய வண்ணக் கற்கள் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பளபளப்பான வனப்பு மிக்க தோற்றத்திற்கும் ஏதுவாயிருந்தன. சுவர்களின் வெளிப்புறத்தில் அமைந்த கோட்டங்களில் படிமங்களுக்குப் பதிலாக விமான சிகரத்தின் பிரதிமைகளை அமைக்கும் விதமும் ஒரு புதுமையாகும் சாளுக்கியரின் மென்மையான அலங்காரத் தோற்றமுடைய வனப்பு மிகுந்த கோயில்களை அடிப்படையாகக் கொண்டு கர்நாடக தேசத்தில் ஹளேவீடு, தோரசமுத்திரம், வேலூர் முதலிய நகரங்களிலே ஹெய்சலர் அற்புதக் கோலமான ஆலயங்களை அமைத்தனர்.

Page 140

ஹொய்சலர் கலைப்பாணி
சி பத்மநாதன்
1ே1ளுக்கியர் காலத்தில் மலர்ச்சிபெற்ற வேஸர கலைப்பாணி துவார சமுத்திரத்து ஹொய்சல மன்னர்களின் ஆட்சிக் காலத்திலே கர்நாடக தேசத்தில் முதிர்ச்சி நிலையினை அடைந்தது. ஹொய்சல இராச்சியத்தின் பகுதிகளில் அமைக்கப்பட்ட 80 ஆலயங்கள் உள்ளன. அவை பொது அம்சங்களைப் பொறுத்தவரையில் அடிப்படையிற் சாளுக்கியர் காலத்துக் கோயில்களைப் போன்றனவாகும். மத்தியில் அமைந்த மண்டபத்தைச் சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்களை அமைத்துக் கொள்ளும் முறை அந்தக் கலைப்பாணிக்குச் சிறப்பாகவுள்ள அம்சமாகும். சில இடங்களிலே இரண்டு கோயில்களும், வேறு சில தலங்களிலே நடுவிலுள்ள மண்டபத்தைச் சுற்றி மூன்று கோயில்களும், இன்னுஞ் சிலவற்றில் ஐந்து கோயில்களும் அமைந்திருக்கின்றன. இவ்விதமாக ஒரு கட்டட அமைப்பினுட் பல கோயில்களை அமைத்துக் கொள்வதிற் சாளுக்கியர் காலத்துச் சிற்பிகள் ஹொய்சலர் காலத்தவர்களுக்கு முன்னோடிகளாவர்.
ஹொய்சலர் கலைப்பாணியில் மூலஸ்தானங்கள் நகூடித்திர வடிவில் அமைந்திருக்கும். அந்த வகையில் டம்பலிலுள்ள சாளுக்கியர் காலத்து தொட்ட வசப்பர் கோயில் ஹொய்சல கட்டடக் கலைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது. நாகர கலைப்பாணியிலுள்ள சில கோயில்களும் நகூடித்திர வடிவிலமைந்திருப்பது கவனித்தற்குரிய ஒன்றாகும். ஹொய்சலர் காலத்துக் கோயில்களின் அதிஷ்டானம் மிக உயரமாகவும் விசாலமாகவும் அமைந்திருக்கும். அதன் மேல் அமைந்த கட்டடத்தைப் போல அதிஷ்டானமும் நக்ஷத்திர வடிவில் அமைந்திருக்கும். அதன் கோணங்களும் வளைவுகளும் கட்டடத்தின் அமைப்புக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டிருக்கும். ஹொய்சலரின் கோயில்களிலே திருநடைமாளிகை கட்டடத்தினுள் அமைந்திருப்பதில்லை. அதிஷ்டானத்தின் மேலுள்ள விசாலமான வெளிப்பகுதியே பிரதசுஷிண பாதையாகப் பயன்படுத்தப்படும்.

Page 141
254 ஹொய்சலர் கலைப்பாணி
வடிவமைப்பிற் சாளுக்கியர் காலத்துக் கோயில்களை ஒத்தனவாயினும் ஹொய்சலரின் கோயில்களிற் சில சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அதற்குப் பெரும்பாலும் சிற்ப வேலைப்பாடுகளும் அலங்கார வேலைப்பாடுகளும் ஏதுவாய் அமைகின்றன. சாளுக்கியர்கள் பிரமாண்டமானவையும் கனதியானவையுமாகிய மணற் கற்களைப் பயன்படுத்திக் கட்டடங்களை உருவாக்கினார்கள். ஹொய்சலர் பயன்படுத்திய கற்கள் அவற்றிலிருந்து வேறுபட்டவை. அவை வண்ணத்திற் கருமையானவையாகவும் கருநீலமானவையாகவும் காணப்பட்டன. மிக நுண்ணிய உளிகள் கொண்டு விரும்பிய வண்ணம் வெட்டுவதற்கும், செதுக்குவதற்கும், அழுத்துவதற்கும் மிகப்பொருத்தமுடைய கற்களாக அவை காணப்பட்டன. கர்நாடக தேசத்தவர்கள் மரத்திலும் யானைத் தந்தங்களிலும் நுண்ணிய உருவங்களைச் செதுக்கி வனப்புமிக்க வேலைப்பாடுகளைச் செய்வதிலே நெடுங்கால அனுபவமும் இணையிலாத ஆற்றலுங் கொண்டிருந்தனர். அந்த அனுபவங்களை அடிப் படையாகக் கொண்டு மரகதம் பதித்த தங்க நகைகளைப் போலச் சித்திர வேலைப்பாடமைந்த உருவங்களைக் கல்லிலே செய்தனர். ஆதலினால், ஹொய்சலரின் கோயில்கள் சிற்பக் கலையின் நுட்பங்களை விளக்கும் அமைப்புக்களாக விளங்குகின்றன. அதிஷ்டானத்திலும் சுவர்களின் வெளிப்புறங்களிலும் சித்திரம் போல அமைந்த அளவிலாத அழகுடைய சிற்பங்களை அமைப்பதில் ஈடுபட்டார்கள்.
பொதுவாக மிக உயர்ந்து காணப்படும் அதிஷ்டானம் நில மட்டத்திலிருந்து ஒன்பது அல்லது பத்து அடி வரை உயரங் கொண்டதாய் இருக்கும். அதிலே ஒன்பது படைகள் இடம்பெறும். அவை ஒவ்வொன்றிலும் விலங்குகளினதும் மனிதர்களதும் நாகர், கின்னரர் முதலியோரதும் உருவங்கள் அடுக்கடுக்காக வரிமானங்களின் தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றிலே காணப்படும் யனைகளுங் குதிரைகளும் மிகவுங் கம்பீரமான தோற்றங் கொண்டவை. அன்னப்பறவைகளின் நிரைகளும் மலர்வடிவங்களும் மலர்க் கொடிகளும் அதிஷ்டானப்படைகளிலே அமைந்திருக்கின்றன. அதிஷ்டானத்தின் உயர்ந்த எடுப்பான கோலத்தினாலும் அதில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகளின் வரைவிலாத

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 255
வனப்பினாலும் ஹொய்சலர் கலைப்பாணியிலுள்ள கோயில்கள் கட்டட சிற்பக்கலை வரலாற்றிலே சிறப்பிடம் பெறுகின்றன. இந்தக் கலைப்பாணிக்குரிய கோயில்களில் மூலஸ்தானத்திற்கு முன்னால் அமைந்திருக்கும் அந்தராளம் போன்ற அமைப்பினைச் சுகநாசி என்பர். அதற்கு முன்புறமாக உள்ள பகுதி நவரங்கம் எனப்படும். அது திராவிட கலைப்பாணியிலுள்ள அர்த்த மண்டபத்திற்கு நிகரானது. வாயிற் புறத்திற்குச் சமீபமாயுள்ள மண்டபம் முக மண்டபம் என்று சொல்லப்படும். சுவர்களின் மேற்புறத்திற் கட்டடத்தைச் சுற்றிக் கபோதம் அமைந்திருக்கின்றது. மண்டபத்தில் அது ஒரு அடுக்கிலே அமைந்திருக்கின்றது. அதன் மேற் ககூடிாசனங்கள் காணப்படுகின்றன. அவற்றின் மேலுள்ள பகுதிகள் துளைக்கப்பட்டுள்ளன. ஒரங்களிலே வேலைப்பாடுகளுடன் அமைந்த அரைத் தூண்கள் காணப்படுகின்றன.
விமானத்தின் சுவர்கள் இரு வேறு பாகங்களாகத் தோன்றும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் இடையே சிறிய வடிவிலான கபோதங்கள் அமைந்திருக்கின்றன. ஹொய்சலர் காலத்துக் கோயில்களின் சுவர்களும் சிகரங்களும் அகலப்பாட்டிலமைந்த அலங்காரச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. விமானத்திலும் அதிஷ்டானத்தில் உள்ளவற்றைப் போன்ற மூன்று அணிவரிசைகள் அமைந்துள்ளன. விமானத்திலே இடைவெளியின்றி அடுக்கடுக்காகச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மூலஸ் தானத்தைப் போன்று விமானமும் கூம்பிய கோலத்திலும் நக்ஷத்திர வடிவத்திலும் அமைந்திருக்கும். ஹொய்சலர் கலைப்பாணியில் விமானங்கள் பிரமாண்டமானவையாகவும் ஓங்கியெழுந்த கோலத்திலும் அமைக்கப்படுவதில்லை. நவரங்கத்திலும் முக மண்டபத்திலும் வரிசையான தூண்கள் அமைந்திருக்கும். அவை பெரும்பாலும் திராவிட கலைப்பாணிக் கோயில்களிலுள்ளவற்றை ஒத்திருக்கும். அவை பொதுவாகத் தனிக்கல்லில் அமைக்கப்பட்டிருக்கும். சதுரவடிவங் கொண்டமைந்த தூண்கள் அழகிய தலைப்புகளையும் மேற்பாகத்திலே மதனிகை என வழங்கும் சித்திரக் கோலமான படிமங்களையுங் கொண்டிருக்கும்.
ஹொய்சலர் கலைப்பாணிக்குரிய கோயில்கள் பலவற்றின்
மேற்பகுதிகள் கட்டி முடிக்கப்பெறாத நிலையிலே காணப்படுகின்றன. வேறு

Page 142
256 ஹொய்சலர் கலைப்பாணி
சில கோயில்களின் மேற்பகுதிகள் காலக்கிரமத்திலே சிதைவுற்று இடிந்து அழிந்து விட்டன. ஆயினும், அவற்றின் எஞ்சிய பாகங்களில் எண்ணிறந்த சிற்பத் தொகுதிகளும் வனப்புமிக்க தளங்களும் அமைந்திருக்கின்றன. இன்றும் நன்கு பேணப்பட்ட நிலையிலே காணப்படும். ஆலயங்களிற் சோமநாதபுரத்துக் கேசவர் கோயிலும் வேலூரிலுள்ள சென்ன கேசவர் ஆலயமும் ஹளேவீட்டு ஹொய்சால ஈஸ்வரர் கோயிலும் ஹொய்சலர் கலைப்பாணியின் உன்னதமான உதாரணங்களாக விளங்குகின்றன. அம்மூன்று கோயில்களிலும் ஹொய்சால ஈஸ்வரம் தலைசிறந்ததாகும். அது ஹொய்சலரின் தலைநகரான ஹளேவீட்டில் அமைக்கப்பட்டது. அங்கு அரசர்களால் அமைக்கப்பட்ட சில சமணக் கோயில்களும் வேறு பல கோயில்களும் உள்ளன.
ஹொய்சால ஈஸ்வரம்
ஹொய்சால ஈஸ்வரம் 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்டதென்பர். அது நகூடித்திர வடிவிற் கட்டப்பெற்றுள்ளது. விமானத்திலே சிகரம் அமைந்திருக்கவில்லை. அதன் அதிஷ்டானத்திலே அரிய, சிறப்புவாய்ந்த வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. அடித்தளத்திலே யானைகள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடுவது
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
..
ஹொசாலேஸ்வரம் தளவரிசை சிற்பங்கள்
عہ:g:#;" y: ya:Aggڈ ہیڈنگ لا پہلڈ ہفتہ مجھلیول 14: باً ’’سما\
"ofi `oj » {*::*ĝX*(2*::*::*::: >.. ܛ̄ܠ ܐܣܛܙܲܨܵ1:i±àܥܠܲ؟
#*
· sa
i 奖怒蕊
257
போல் அணி வ ரி  ைச யி ல் உ ரு வ ங் க ள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலே கு தி  ைர க ள் , யாளிகள், இடபங்கள், அன்னப்பறவைகள் முதலிய வற்றின் அணி வரிசைகளும் ஒன்றன் மேல் ஒன்றா க வுள் ள அ தி ஷ் ட I ன ப் ப  ைட க ளி ல் அமைந்திருக்கின்றன. வேறொரு படையிலே g) т п що п ш 60от ф க ரா ட் சி க ஞ ம் ш в т. и т. т 5 в. காட்சிகளும் சிற்பக்  ேக ர ல த் தி ல்
க்கப்பட்டுள்ளன. மேல் தளத்திலே
அமைந்துள்ள சாளரங்களின் கல் அடுக்குகளிலே சீரான முறையில் துளைகள் குடையப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் அமைந்த மூன்றடி அகலமான மாடக்குழிகளிற் கடவுட் படிமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலின் முன்னால் அளவிலே பெரிதான நந்தி மண்டபம் இருக்கின்றது. அதிலே நந்தி உடையாரை நோக்கிய வண்ணமாக அமைந்திருக்கின்றது. நந்தி கம்பீரமான தோற்றத்துடனும் வனப்புமிகுந்த கோலத்துடனும் விளங்குகின்றது. கோயிலின் இரண்டு பக்கங்களிலும் மகர தோரணங்கள் அமைந்திருக்கின்றன. தெற்கிலமைந்த வாயிற்புறத்தில் உன்னதமான வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலே சிவபெருமானின் கவர்ச்சிகரமான நடனக்கோலம் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாயிற்புறத்தின் பக்கங்களிலும் சிறப்புமிக்க உருவங்கள்

Page 143
258 ஹொய்சலர் கலைப்பாணி
அமைந்திருக்கின்றன. அவற்றிலே சாலா என்பவன் புலியைக் கொல்லுங் காட்சி குறிப்பிடற்குரியது. நர்த்தன விநாயகர், நடனக்கோலமான சரஸ்வதி, நரசிம்மர், கோவர்த்தனர் முதலியோரின் உருவங்களும் சுவர்களிலுந் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஹளேவீட்டிலுள்ள கேதாரீஸ்வரர் கோயிலும் வனப்புமிகுந்த ஒர் ஆலயம் ஆகும். ஹொய்சால ஈஸ்வரத்தை அவதானித்த மேல்நாட்டவர் சிலர் அதன் கலை வனப்பினாற் கவரப்பெற்று அபிமான உணர்வோடு அதனைப் பாராட்டியுள்ளனர். கட்டடக் கலையின் வளர்ச்சி முதிர்ச்சியாகிக் கனிந்த நிறைவினை அங்கு காணலாம் என்று பேர்கசன் என்னும் கலாவிமர்சகர் கூறுவார்.
சென்ன கேசவர் கோயில்
வேலூரிலுள்ள சென்னகேசவர் கோயில் ஹொய்சல மன்னர்களினால் அமைக்கப்பெற்ற சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகும். அது அளவிலே மிகவுஞ் சிறியது. ஆனால், கலை வனப்பில் அது ஒப்பற்று விளங்குகின்றது. அதன் கட்டடக்கலை மரபும் சிற்ப வடிவங்களும் ஹளே வீட்டிலுள்ள கோயில்களில் உள்ளவற்றைக் காட்டிலுந் தரத்தால் உயர்ந்தனவாகும். இக்கோயிலின் வெளிச் சுவரிலே அமைந்திருக்கும் படிமவரிசைகளில் மதனிகை வடிவங்கள் சாலச் சிறந்தனவாகும். அதிஷ்டானத்தின் மேற்படையில் ஏறக்குறைய 40 பெண்களின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு கோலங்களிலே காணப் படுகின்றனர். திலகமிடுங் கோலத்திலும், கையிலே கிளியை ஏந்திய நிலையிலும், மலர்ச்செடியின் கீழ் ஒதுங்கியிருக்குங் கோலத்திலும், காதலரை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்குங் கோலத்திலும், ஆடையை உதறி நிற்குங் கோலத்திலும் பெண்களின் உருவங்கள் தெரிகின்றன. நவரங்கத்திலே அற்புதமான கோலத்திற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விதானத்திலே தொங்கும் நிலையில் மலர்ந்த தாமரையின் கோலம் விசித்திரமான முறையிலே செதுக்கப்பட்டுள்ளது. நவரங்கத்தின் விதானம் தாமரை பூத்த தடாகம் போல அமைந்து காணப்படுங் காட்சி சாலச் சிறந்ததாகும். அதனை ஒத்த நானாவிதமான சிற்பங்கள் நவரங்கத்திலும் கோயிலின் மற்றைய எல்லாப்
பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 259
மூலஸ்தானத்திலே சென்னகேசவரின் படிமம் ஆறடி உயரத்தில் அமைந்திருக்கின்றது. மூலவரை விசயநாராயணன் என்று குறிப்பிடுவர். மூலவரைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்திலே தசாவதார வடிவங்கள் காணப்படுகின்றன. மூலஸ்தானத்தின் வாயிலிலே துவாரபாலகரின் உருவங்கள் உள்ளன. இரண்டாம் பிராகாரத்தில் நாராயணர், வேணுகோபாலர், விநாயகர், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தனி முதலியோரின் படிமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நவரங்கமானது 92 அடி நீளமும் 78 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதில் 46 தூண்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மத்தியில் அமைந்த 4 தூண்கள் மட்டுமே ஒரேவிதமான வேலைப்பாட்டில் அமைந்துள்ளன. மற்றவை ஒவ்வொன்றுந் தனித்தனியான வடிவமைப்பில் உள்ளன. நானாவிதமான கோலங்களில் வேறு வேறு சிற்ப உருவங்களைத் தூண்கள் தாங்கி நிற்பதால் நவரங்கம் கலையழகு பொலிந்த வனப்புடன் விளங்குகின்றது. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கலைஞனால் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாகச் சிற்ப வடிவங்களை உன்னதமான கோலத்தில் அமைத்துக்கொள்வதில் ஈடுபடலாயினர்.
சோமநாதபுரத்துக் கேசவர் கோயில்
இது ஹொய்சலர் கலைப்பாணியின் முழுமையான வளர்ச்சி நிலையைப் பிரதிபலிக்கும் கோயிலாகும். அது ஒரு முத்தளிக் கோயிலாகும். அது 87 அடி நீளமும் 83 அடி அகலமுங் கொண்டுள்ளது. கோபுர வாசல் கிழக்கிலமைந்திருக்கின்றது. அக்கோயில் 215 அடி நீளமும் 177 அடி அகலமுங் கொண்டுள்ள சுற்றுப் பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றது. திருச்சுற்றாலையில் 64 கோட்டங்கள் அமைந்திருந்தன. W சோமநாதபுரத்துக் கேசவர் கோயில் கி. பி. 1268 இல் மூன்றாம் நரசிம்மனின் அமைச்சனாக விளங்கிய சோமநாதன் என்பவனால் அமைக்கப் பெற்றது. அதனைப் போன்ற மூன்று விமானங்களைக் கொண்ட பல கோயில்கள் அதற்கு முன்பு கர்நாடக தேசத்திலே
அமைக்கப்பட்டிருந்தன. நங்க மங்கலத்துக் கேசவர் கோயில்,

Page 144
:Լ] ஏெழாய்வர் சுவைப்பாளரி
கேசவர் கோயில் - சோாநாதபுரம் இருவேறு தோற்றங்கள்)
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் ጋዛî !
கோரமங்கலத்து பூவேஸ்வரர் கோயில், ஹர்னஹல்லி கேசவர் கோயில், நுக்கிஹல்லி லக்ஷமி நரசிம்மர் கோயில் என்பன அத்தகைய அமைப்புகளாகும். காலத்தால் அவற்றிலும் பிற்பட்டதான சோமநாதபுரக் கோயில் அமைப்பிலே வனப்புமிக்கதாகவும் மிகச் சிறந்த வேலைப்பாடுகள் பொருந்திய தாகவும் அமைந்துள்ளது. மண்டபத்தைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மூன்று கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் நசுடித்திரவடிவில் அமைந்திருக்கும் மிக உயரமான அதிஷ்டானத்திலே கட்டப்பெற்றுள்ளன. கோயில்களைச் சுற்றி எழு அடி அகலமான பிரதசுஷிண பாதையுள்ளது. அதிஷ்டானத்திலே பிற கோயில்களைப்போல ஒடும் யானைகள், குதிரைகள், பாளிகள் முதலியவற்றின் அணிவரிசைகள் சிறப்பான வகையிலே சித்திரிக்கப் பட்டுள்ளன. வலப்பக்கச் சுவரிலே இராமாயணக் காட்சிகளும் இடப்பக்கச் சுவரிலே மகாபாரதக் காட்சிகளும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றோடு தெய்வப் படிமங்களும் இடையிடையே வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் அவற்றின் வளைவடைப்புக்களிலும், விதானத்திலும் கவர்ச்சிமிக்க சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன. மூலஸ்தானங்களிற் கேசவர், ஜனார்த்தனர், கோபாலர் ஆகியோர் மூலமூர்த்திகளாக அமைந்துள்ளனர். ஹொய்சலர் கலைப்பாணியில் மூன்று கருவறையுடைய கோயில்களையும், நான்கு கருவறைகளையுடைய கோயில்களையும், இரண்டு கருவறைகளையுடைய கோயில்களையும் அமைப்பது வழக்கம். அரிசிக் கரையிலுள்ள ஈஸ்வரன் கோயில், ஹரிஹாரிலுள்ள ஹரிஹரன் கோயில் என்பன இரட்டைக் கோயில்களாகும். ஈஸ்வரன் கோயில் கி. பி. 1220 இல் அமைக்கப்பெற்றது; மற்றையது கி. பி. 1224 இலே கட்டப்பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் 1113 இல், தொட்ட தேத்வாளி என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட லக்டிமிதேவி ஆலயம் நான்கு விமானத்தளியாகும்.
கர்நாடக தேசத்திற்குச் சிறப்பாக உரிய வேளuர கலைப்பாணி கல்யாணிச் சாளுக்கியர் காலத்திலே தனியான பண்புகளுடன் வளர்ச்சியடைந்தது. வாதாபிச் சாளுக்கியர் காலத்துக் கட்டடங்களும் இராஷ்டிரகூடர் காலத்துக் கோயில்களும் அதற்கு முன்னோடிகளாக விளங்கின. கல்யாணிச் சாளுக்கியர்கள் கலிங்க தேசத்து அரசர்களைப்

Page 145
s ரொப்பர் 11:மப்பான3
போலவும் சோழ மன்னர்களைப் போலவும் பிரமாண்டமான தோற்றமுடைய கட்டடங்களை அமைத்துக் கொள்வதில் ஈடுபாடு கொள்ளவில்லை. தோற்றத்தில் பெரியவனவன்றி புலக்காட்சிக்குக் கவர்ச்சியானவையே உன்னதமானவை என்பது அவர்களின் கலாதத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடென்று கருதமுடிகின்றது. அவர்களின் ஆட்சிக் காலத்திற் கர்நாடகத்துக் கோயில்கள் சித்திரக்கோலமான நுண்ணிய வேலைப்பாடமைந்த சிற்பங்கள் நிரம்பிய கலைக் கூடங்களாக அமைந்து காணப்பட்டன. விஜயநகர காலத்திற் கர்நாடகத்துக் கோயில் அமைப்பு மேலும் வளர்ச்சியடைந்தது. அதன் அம்சங்கள் தமிழகத்துக்
கலைப்பானியோடு கலப்புற்றன.
ைெராய்சாளர் காபி சிற்பங்கள்
 

விஜயநகர கலைப்பாணி
ரீ தத்துசதிகள்
விஜயநகரம்
பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலே (கி. பி. 1335) கர்நாடக தேசத்தின் தென்பகுதியில் உதயமாகிய விஜயநகரம் காலப்போக்கில் ஒரு பெரும் பேரரசாக வளர்ச்சி அடைந்தது. அது கர்நாடக தேசத்தின் பெரும் பகுதியையும், ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும் தமிழகத்தையும் உள்ளடக்கிய அமைப்பாக விளங்கியது. விஜயநகரம் பதினைந்தாம் நூற்றாண்டிலே, கிருஷ்ண தேவ ராயரின் ஆட்சியில் உன்னத நிலையை அடைந்தது.
துருக்கியரின் ஆதிபத்தியத்திலிருந்து மீட்சிபெற்று, இந்து கலாசாரத்தின் புகலிடமாக விளங்குவதற்கென்று அமைக்கப்பெற்ற விஜயநகரம் தென்னிந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. வளத்திலும், ஆதிக்கபலத்திலும், கலைவனப்பிலும், மாடமாளிகைகள், கோபுரங்கள், கடைவீதிகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றின் சிறப்பிலும் அதற்கு நிகரான வேறெந்த நகரமும் வித்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் அமைந்திருக்கவில்லை. இந்தியாவிற்கு வந்த மேனாட்டவர் உரோமாபுரிக்கு நிகரான பெருநகரமாக, அலங்காரக் கோலத்துடன் விஜயநகரம் விளங்குவதைக் கண்டு வியப்புற்றனர்.
அத்துணைச் சிறப்பு வாய்ந்த நகரம், 1565 ஆம் ஆண்டிலே ராமராயர் தலைக்கோட்டைப் போரிலே மாண்டதும், வஞ்சினங்கொண்ட பகைவர்களாற் பல மாதங்களாக இடித்தழிக்கப்பட்டது. அரண்மனைகளும், அரச மாளிகைகளும், கோட்டைகளும், கோயில்களும், அங்காடிகளும், விதிகள் தோறும் அமைந்த வீடுகளும் பிரதானிகள், வணிகர் ஸ்தானிகர் முதலிபோரின் மாளிகைகளும் இடிந்து வீழ்ந்தன. முன்னொரு காலத்திலே

Page 146
264 விஜயநகர கலைப்பாணி
அமராவதி போல் அமைந்திருந்த அற்புதக் கோலமான நகரம் குடியிருக்க முடியாத கொடும்பாழாகி விட்டது. அதன் அழிபாடுகள் ஹம்பியிலே, பல சுற்றுமைல் வட்டத்திலே காணப்படுகின்றன. அவற்றைப் பார்ப்பதற்கு பல நாட்கள் செல்லும். பாழடைந்த நகரம் காலப்போக்கில் மண்மேடுகளாகி மறைந்து விட்டது. பிரித்தானியர் காலம் முதலாக இன்றுவரையுள்ள தொல்லியல் விற்பன்னர்கள் மண்மேடுகளை அகழ்ந்து அரியனவும் பெரியனவுமாகிய தொல்பொருட் சின்னங்களை வெளிக்கொணர்ந்த வண்ணமாயுள்ளனர். அரண்மனையின் அத்திபாரங்களும், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த படிக்கட்டுகள் பொருந்திய நீர்த்தேக்கமும், மகாநவமி மண்டபம் எனப்படும் ராயர்களின் சபா மண்டபத்தின் அதிஷ்டானப் பகுதியும் மையப்பகுதியில் உள்ளன. அவற்றுக்குச் சமீபமாக, ஒரு பக்கத்திலே விசித்திரமான முறையிலமைந்த நீரேந்து கால்வாய் அமைந்துள்ளது. மற்றப்பக்கத்திலே, சற்றுத் தூரத்திலே, பத்மமஹால் என்று சொல்லப்படும் அந்தப்புரக் கட்டடமொன்றும், ராயர்களின் பட்டத்து யானைகளுக்குரிய யானைப்பந்தியும் காணப்படுகின்றன. அவை நன்கு பேணப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றுக்கப்பால் கோயில்களின் இடிபாடுகள், கடைவீதிகளின் அழிபாடுகள், கோட்டைவாசல்களின் இடிபாடுகள் என்பன பரந்து காணப்படுகின்றன.
விஜயநகர காலத்துப் பண்பாட்டுக் கோலங்கள்
தென்னிந்திய வரலாற்றிலே விஜய நகர காலம் பல சிறம்பம்சங்கள் பொருந்திய காலமாகும். நிர்வாக முறையிலும் சமுதாயவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாயின. விஜயநகர ராயர்கள் தங்கள் பேரரசின் பகுதிகளை இராச்சியம், என்னும் பெரும்பகுதிகளாக அமைத்து, அவற்றின் நிர்வாகத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை உருவாக்கியிருந்தனர். அரச குடும்பத்தவரையும், படைத்தலைவர்களையும், விசுவாசம் மிக்க வேறு பிரதானிகளையும் அவற்றில் இராசப்பிரதிநிதிகளாக நியமித்தனர். முள்வாயி இராச்சியம், சந்திரகிரி இராச்சியம், படை வீடு இராச்சியம் முதலியன இராச்சியப் பிரிவுகளாகும். தமிழகத்திலே மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் சமஸ்தானங்கள் உருவாகியிருந்தன. அவற்றில் இராசப்பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் நாயக்கர் என்னும் பதவிப் பெயரைக் கொண்டிருந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலே, தலைக்கோட்டைப்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 265
போரின் விளைவாக விஜயநகர ராயர்களின் ஆதிக்கம் சரிந்ததும் நாயக்கர் பரம்பரை அடிப்படையிலே சுதந்திரமாக ஆட்சி புரியத் தலைப்பட்டனர்.
விஜயநகர காலத்திலே தென்னிந்திய சமுதாயத்திலும் கலாசார வளர்ச்சிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. தெலுங்கு தேசத்துப் பிரதானிகளும் கர்நாடகத்தவர்களும் நிர்வாக அமைப்பிலும் படைகளிலும் பிரதானமான பதவிகளைப் பெற்றனர். மதுரை, தஞ்சாவூர், செஞ்சி முதலான இடங்களில் இராசப் பிரதிநிதிகளாகச் சென்ற நாயக்கர் தெலுங்கர் என்பது குறிப்பிடற்குரியது. அவர்களின் வசமாயிருந்த படைகளிலும் கர்நாடகரும் தெலுங்கரும் பெருமளவிலே காணப்பட்டனர். அவர்களுக்கு நிலமானியங்கள் வழங்கப்பட்டன. பெருந்தொகையான பிராமணரும், நெசவாளரும், கம்மாளரும் வணிகரும் அதற்கு வடக்கிலுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கு குடிகளாயினர். மக்கட் செறிவு, சனசஞ்சாரம் என்பவற்றிலே விஜயநகரப் பேரரசிலே புதிய பரிமாணங்கள் ஏற்பட்டன. அதன் பிரதிபலனாகக் கலாசாரப் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க வகையிலே, மொழி வேறுபாடுகளைக் கடந்த நிலையில் ஏற்பட்டது. தென்னிந்தியா அனைத்திலும் கலாசாரப் பொதுமை அழுத்தம் பெறுவதற்கு விஜயநகரப் பேரரசு ஏதுவாகியது. வைதீக மரபினை அடிப்படையாகக்கொண்ட இலக்கியபண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டது. கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சிகளிடையே பொதுப்பண்புகள் காணப்படுகின்றன. புராணம், இதிகாசம், காவியம் ஆகியவற்றின் செல்வாக்கு அவற்றிடையே மிகுந்து காணப்படுகின்றது. ஆலயங்களையும் ஆலய வழிபாட்டினையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வளர்ச்சிகளும் பண்பாட்டு வளர்ச்சிகளும் மொழிவழியாக அமைந்த நான்கு தென்னிந்தியப் பிராந்தியங்களிலும் பொதுவானவையாகும். விஜயநகர காலம் தமிழ் இலக்கியத்திலே தலபுராணங்கள் தோன்றிய காலமாகும். பிரபந்தங்களிற் பெரும்பாலானவையும் அக்காலம் முதலாகத் தோன்றியவை என்பது குறிப்பிடற்குரியதாகும். அவை கோயில்களைப் பற்றியவை என்பதும் கவனித்தற் குரியது.
கட்டடக்கலை, நடனம், இசை, ஓவியம் ஆகிய துறைகளிற் பொதுவான அம்சங்களின் அடிப்படையிலே புதிய மரபுகள் தோன்றலாயின. அவை பரஸ்பரத் தொடர்புகளின் மூலமாகவும் பரஸ்பரச் செல்வாக்குகளின் விளைவாகவும் ஏற்பட்டவை. கட்டடம், சிற்பம் ஆகிய துறைகளிலே கர்நாடக மரபுகளும் தமிழக மரபுகளும் வேறுபாடின்றிக் கலப்புற்று விடுகின்றன. ஓவியக்கலையில், விஜயநகர காலத்தில், கர்நாடகத்திலும் ஆந்திர

Page 147
266 விஜயநகர கலைப்பாணி
தேசத்திலும் ஒரு புதிய கலைப்பாணி உருவாகியது. அது விரைவிலே தமிழகத்திலும் பரவிவிடுகின்றது. பிரதானமான தென்னிந்தியக் கோயில்கள் பலவற்றிலே விஜயநகர காலத்தில் வரையப்பெற்ற வண்ண ஒவியங்கள் இன்றும் வனப்புடன் விளங்குகின்றமையைக் காணலாம். இசைக்கலையைப் பொறுத்தமட்டில் கர்நாடக சங்கீதம் வளர்ச்சிபெற்ற காலமாக விஜயநகர காலம் விளங்குகின்றது. அதிலே தமிழிசையும் தெலுங்கு இசைமரபும் சங்கமமாகிவிடுகின்றன. தென்னிந்திய கலாசாரப் பொதுமையினைப் பிரதிபலிக்கும் சாதனமாகக் கர்நாடக சங்கீதம் விளங்குகின்றது. கதக்களி, யகூடிகானம், குச்சுப்புடி என்னும் நாட்டிய வகைகள் விஜயநகர காலம் முதலாக உற்பத்தியான பிரவிருத்திகளை ஆதாரமாகக் கொண்டவை.
கோயிலமைப்பில் மாற்றங்கள்
விஜயநகர காலத்திலே தென்னிந்தியக் கட்டடக்கலையிற் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஏற்பட்டன. விஜயநகரத்திலும் அதன் மேலாட்சியின் கீழமைந்த மாநிலப்பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பல புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. பல கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டன. விஜயநகரத்திலுள்ள விட்டலசுவாமி கோயில், ஹஸாரராமர் கோயில், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள லெபாகூழி என்னுமிடத்துக் கோயில், வேலூர் சல கண்டேஸ்வரம், தேவிகாபுரத்து அம்மன் கோயில் முதலியன புதிதாக அமைக்கப்பட்ட கோயில்களாகும். புராதனமான தலங்கள் பலவற்றிலும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. சோழராட்சிக் காலத்தைப் போல விஜயநகர காலமும் தென்னிந்தியாவிலே கோயில்கள் புனரமைப்புப் பெற்ற காலமாகும். நூற்றுக்கணக்கான தலங்களிலே சிதைவுற்ற பழங்கட்டடங்கள் இடிக்கப்பெற்றுப் புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. மதுரை, ழரீரங்கம், காஞ்சிபுரம், அழகர்மலை முதலியவற்றில் அவ்விதமான புரைமைப்பு வேலைகள் இடம்பெற்றன. அவற்றிலே நன்கு பேணப்பட்ட நிலையிலுள்ள சில கட்டடங்கள் தொடர்ந்தும் நிலைபெற்றன. நூற்றுக்கணக்கான தலங்களிலே புராதனமான கட்டடங்களைச் சுற்றியும், அவற்றுக்கிடையிலும் புதிய கட்டடங்கள் அமைக்கப் பெற்றன. அதனாற் கோயில் வளாகம் விசாலமாகிப் பேரமைப்பாகியது. கோயிலின் பிரமாண்டமான தோற்றம் விஜயநகர கலைப்பாளிையின் ஒரு அம்சமாகும்.
விமானங்கள் பொருந்திய கற்றளிகளைச் சில நகரங்களிலே பல்லவ மன்னர்கள் அமைத்தனர். சோழப்பேரரசர் காலத்தில் அத்தகைய கோயில்கள்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 267
தமிழகம் முழுவதிலும்
960) L055 uUL-L 60T. அயல் நாடுகள் சிலவற்றிலும் சோழர் கலைப் பாணியில் அமைந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. பிற்காலச் சோழரின் ஆட்சியிலே கட்டட அ  ைம ப் பி லே குறிப்பிட ற்குரிய ம ர ற் ற ங் க ள் ஏற்பட்டன. அவை நிருத்த சபை - சிதம்பரம்
சிதம்பரம் கோயிலை மையமாகக் கொண்டிருந்தன. பன்னிரண்டாம்,
பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலே அங்கு திருக்காமக் கோட்டம், நூற்றுக்கால் மண்டபம், திருத்தேர்க்கோயில், ஆயிரங்கால் மண்டபம், திருநடைமாளிகை, எழுநிலைக் கோபுரம், சுற்றுப்பிராகாரங்கள் என்னும் பல அமைப்புகள் தோன்றியிருந்தன. சைவசமய மரபிலே கோயில் எனப்படுவதாகிய சிதம்பரம் அளவுப் பிரமாணங்களிலும் அலங்காரத் தோற்றத்திலும் தென்னகத்திலே தலைமைக் கோயிலாகியது. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பின்பு விஜயநகரப் பேரரசின் பல பகுதிகளிலே கோயிலமைப்புகள் பெரு வளர்ச்சி அடைந்தன.
பிற்காலச் சோழரின் ஆட்சியிலே, குறிப்பாகச் சிதம்பரத்திலே காணப்பெற்ற சோழர் கலைப்பாணியின் சிறப்பம்சங்கள் விஜயநகர காலத்திலே திராவிட கலைப்பாணியின் பொது அம்சங்களாகிவிடுகின்றன. பாண்டியப் பேரரசரின் காலத்திலே, சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளனவற்றைப் போன்ற அம்சங்கள் தென் தமிழ்நாட்டிலும் விருத்தி பெற்றிருந்தன என்பதும் இங்கு கவனித்தற்கு உரியதாகும். தமிழகத்திலுள்ள பிரதானமான தலங்கள் பலவற்றிலே திருக்காமக் கோட்டம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருநடை மாளிகை, பல்தளக் கோபுரங்கள், சுற்றுப்பிராகாரங்கள் என்னும் அமைப்புகள் விஜயநகர காலத்தில் மிகுந்த வனப்பும் உறுதிப்பாடும் கொண்டு விளங்கும் வண்ணமாக அமைக்கப்பட்டன. கோயில் வளாகம் பல சுற்றுப்பிராகாரங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் வானோங்கு கோபுரங்கள் அமைந்திருக்கும்.

Page 148
268 விஜயநகர கலைப்பாணி
விஜயநகர கலைப்பாணியில் ஆலயம் பிரமாண்டமாய் அமைந்திருப்பதோடு அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் விளங்கும். அந்த வேலைப்பாடுகளும் மண்டபங்களிலும் தூண்களிலுஞ் சிறந்து விளங்கும். விஜயநகர காலத்திற் கோயில் வளாகங்களில் பல வகையான மண்டபங்கள் அமைக்கப் பெற்றன. அவை பல வரிசைகளில் அமைந்த தூண்களோடு விசாலமான கட்டடங்களாக அமைந்திருக்கும், அவற்றிலே கல்யாண மண்டபம் எல்லாவற்றுள்ளும் சிறப்புடையதாயிருக்கும். அது முற்காலங்களிலே காணப்படாதவொன்று, அதனை அமைக்கும் வழக்கம் விஜயநகர காலத்தில் ஏற்பட்ட ஒன்றாகும். உயரமான அதிஷ்டானத்தில் அமைந்திருக்கும் கல்யாண மண்டபத்தின் நடுவிலமைந்த பீடத்திலே, சுவாமியினதும் அம்மனதும் படிமங்களை அலங்காரக் கோலத்துடன் வைத்து வருடந்தோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண உற்சவம் விஜயநகர காலம் முதலாகத் தென்னிந்தியக் கோயில்களிலே பொதுவழக்காகிவிட்டது, கல்யாண மண்டபம் பக்கச் சுவர்களின்றி அமைந்திருக்கும், அதன் கூரை தட்டையானது. மண்டபம் முழுவதும் கல்லினால் அமைந்திருக்கும். அதிலுள்ள தூண்களிற் காணப்படும் அற்புதக் கோலமான சிற்ப வேலைப்பாடுகளின் காரணமாகக் கல்யாண மண்டபம் ஒர் அலங்கார மண்டபம் போலக் காட்சியளிக்கும். கற்றுரண்களிலே புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட சிற்பங்களும் கடவுட் படிமங்களும் கலைநயம் மிகுந்த கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
விஜயநகரகலைப்பாணியிலே தூண்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவை அளவிற் பெரியவை மிகவும் உயரமானவைமிகுந்தசுற்றளவினைக் கொண்டவை, ஒவ்வொரு தூணும்
கூட்டுத் தூண்கள் போலக் காட் 55 பட்டிருக்கும். நடுவில் அமைந்த பிரதானமான தூணைச் சுற்றி வேறும் 6) தூண்கள் அமைந்த
குதிரைத்தாண் - பூgரங்கம்
கோலமாயிருக்கும்.
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 269
விஜயநகர கலைப்பாணியிலே தூண்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவை பல நூற்றுக் கணக்கில் ஆலயவளாகத்திலே காணப்படும். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றிலே தூண்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. அவை பல விதமான கோலங்களில் அமைந்துள்ள கூட்டுத் தூண்களாகும். அவை சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய அலங்காரத் தூண்களாகக் காணப்படுகின்றன. அவற்றிலே அளவிற் பெரிதான உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலவற்றிலே கம்பீரமான தோற்றங்கொண்ட தாவிப் பாயும் போர்க் குதிரையின் வடிவம் அமைந்திருக்கின்றது. கடிவாளம் பூட்டிய குதிரையின் மேல் போர்வீரன் அமைந்திருக்கும் கோலத்திலே உருவம் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டிருக்கும். பூநீரங்கத்திலே, குதிரைகளரி என்று சொல்லப்படும் சேஷாத்திரி மண்டபத்திலும் வேலூர் சலகண்டேஸ்வரர் கோயிலிலுங் காணப்படும் குதிரை வடிவங்கள் கலைவனப்பில் உன்னதக் கோலமானவை.
சிங்கத்தின் உருவம் அமைந்த தூண்கள் இன்னொரு வகையானவை. பல்லவர் கலைப்பாணியில் யாளித் தூண்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. பிற்காலக் குடபோகங்களிலே தோன்றிய யாளித்தூண்கள் இராஜசிம்ம பாணியிலமைந்த கோயில்களிலே கட்டடத்தின் எல்லாப் பாகங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விஜயநகர காலத்திலே சில சமயங்களில் முற்கால வழமைப்படி தூணின் அடிப்பாகத்திலே யாளியின் உருவத்தை அமைத்தனர். மண்டபங்களில் அமைந்துள்ள கலப்புத் தூண்களிலே சாலையை நோக்கிய துணைத் தூணிலே, அதன் மேற்பாகத்திலே, வாயைப் பிளந்துகொண்டு முன்னங் கால்களைத் தூக்கி நிற்கும் நிலையிற்சிங்கத்தின் முழுவடிவம் அமைக்கப்பட்டது.
விஜயநகர கலைப்பாணியிலே பொதுவாக மூன்று வகையான தூண்கள் காணப்பட்டன. சில சமயங்களில் ஒரிடத்திலேயே அம்மூன்று வகைகளைச் சேர்ந்த தூண்களும் அமைந்திருந்தன. 6905 வகையிலுள்ளவற்றிலே பிரதானமான நடுத்துணை ஒட்டிய வண்ணமாகப் பக்கங்களிலே பிரமாண்டமான சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூணமைப்புகள் காணப்படும், குதிரைத் தூண்கள் , யாளித் தூண்கள், கடவுட் படிமங்கள், செதுக்கப்பட்ட தூண்கள் முதலியன அந்த வகைக்குரியனவாகும். அவ்விதமான தூண்கள் ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், திருநடைமாளிகை போன்றவற்றிலே காணப்படும்.

Page 149
270 விஜயநகர கலைப்பாணி
இரண்டாவது வகையிலுள்ள தூண்களில் நடுவிலுள்ள பிரதானமான தூணைச் சுற்றி உருண்டை வடிவான மெலிந்த கம்பங்கள் அமைந்திருக்கும். அவை எல்லாம் ஒரே கல்லிலே செதுக்கப்பெற்றவை. கம்பங்கங்கள் ஒவ்வொன்றையும் கைவிரல்களாற் தட்டும் பொழுது வெவ்வேறு விதமான இசையொலி கிளம்பும் வண்ணமாக மிக நுட்பமான முறையில் அவை அமைக்கப்பட்டிருக்கும். கர்நாடக சங்கீத முறையிலுள்ள சப்தஸ்வரங்கள் ஒலிக்கும் வண்ணமாக அவை உருவாக்கப்பட்டிருக்கும். விஜயநகரத்து விட்டல சுவாமி கோயில் மண்டபத்தூண்கள் அவற்றிலே பிரசித்தமானவை.
மூன்றாம் வகையிலுள்ள தூண்களின் அமைப்பு வேறுபட்டதாகும். கோயிலின் மாதிரியான சிற்றுருவங்கள் வனப்புமிகுந்த கோலத்திலே கீழிருந்து மேலாகப் பல வரிகளிலே செதுக்கப்பட்டிருக்கும். சில சமயங்களிற் சிகரம், கோபுரம் என்பவற்றிலுள்ள மாடங்களை ஒத்த நுண்ணிய உருவங்கள் தூண்களிலே அமைந்திருக்கும். விஜயநகரக் காலத்துத் தூண்களிலே மேற்பகுதியிற் புஷ்பபோதிகை சிறப்பம்சமாக விளங்கும். போதிகையானது வளைந்து நீளமாகத் தொங்குங் கோலத்தில் அமைந்திருக்கும். அதன் முகப்பிலே ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கிய மலர்கள் கீழ்ணோக்கித் தொங்கும் கோலம் தெரியும். போதிகையின் முகப்பிலே கவிழ்த்த தாமரைமொட்டின் உருவம் அமைந்திருக்கும். தூண்களின் அமைப்பின் மூலம் விஜயநகர கலைப்பாணியிலுள்ள கட்டடங்களைச் சிரமமின்றி அடையாளங் காணலாம்.
கர்நாடகத்துக் கோயில்கள்
விஜயநகர காலத்துக் கோயில்களைக் கர்நாடகத்துக் கோயில்கள் என்றும், ஆந்திர தேசத்துக் கோயில்கள் என்றும், தமிழகத்துக் கோயில்கள் என்றும் பிராந்திய அடிப்படையில் வகை செய்யலாம். அம்மூன்று பிராந்தியங்களிலும் தனியான பண்புகளைக் கொண்ட கட்டக்கலை மரபுகள் நெடுங்காலமாக வளர்ச்சி பெற்றிருந்தன விஜயநகர காலத்திலே அவற்றுக்கிடையிலான பொதுப்பண்புகள் மேலும் வலுப்பெற்றன. திராவிட கலைப்பாணியின் செல்வாக்கு கர்நாடக மாநிலத்துக் கட்டடங்களிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டது.
விஜயநகர காலத்துக் கர்நாடகத்துக் கோயில்களில் சிருங்கேரியிலுள்ள சங்காராசாரியார் பீடத்திற்குச் சொந்தமான வித்தியாரண்யர் கோயிலும் விஜயநகரத்துவிட்டல சுவாமி கோயில், ஹஸாரராம ஆலயம் என்பனவும் சாலச்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 27
சிறந்தனவென்று கலைவரலாற்று ஆசிரியர்களாற் போற்றப்படுகின்றன. அவற்றுள் கேழடிப் பிராந்தியத்துக் கலைப்பாணியைப் பிரதிபலிக்கின்றதான வித்தியாரண்யர் கோயிலின் அதிஷ்டானம் அற்புதக் கோலமானது என்பர். அதிலமைந்த சிற்ப வேலைப்பாடுகள் காண்போரைக் கவரும் வனப்பு மிக்க வசீகரத் தோற்றங் கொண்டவை. அக்கோயிலைப்பற்றிய விவரங்கள் நூல்களிலே வெளிவராதுள்ளமையால் அவற்றைப் பற்றி எதனையும் கூறுமாறில்லை.
விஜயநகர கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கோயில்களிலே விட்டலசுவாமி கோயில் சாலச்சிறந்ததாகக் கொள்ளப்படும். அதன் திருப்பணி வேைைலகள் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் (1509-1529) ஆரம்பமாகி அச்சுதராயரின் (1529-1542) காலம்வரை நடைபெற்றன. அதிலே கட்டட வேலைகள் முழுமையாக நிறைவேறவில்லை. விட்டலசுவாமி கோயிலானது 500 அடி நீளமும் 310 அடி அகலமும் கொண்ட பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றது. பிராகாரத்தின் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் கோபுர வாசல்கள் அமைந்திருக்கின்றன. பிராகாரச் சுவர்களை ஒட்டி மூன்று வரிசைகளில் அமைந்த தூண்கள் பொருந்திய திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கின்றது.
கோயில் வளாகத்தில் 6 பிரதானமான கட்டடங்கள் அமைந்திருக்கின்றன. கர்ப்பகிருகத்து மூலவர் மகாவிஷ்ணுவின் ஒரு கோலமாகிய பாண்டுரங்கர் என்னும் விட்டலசுவாமியின் படிமமாகும். ஆலயம் மிகவும் நீளமானது; கிழக்கு நோக்கிய அமைப்பினைக் கொண்டது. அது 230 அடி நீளமானது. அதன் உயரம் 25 அடியாகும். விமானசிகரம் செங்கல்லினால் அமைக்கப்பட்டிருத்தல் கூடுமென்றும் அது காலப்போக்கிலே சிதைவுற்று மறைந்துவிட்டது என்றுஞ் சிலர் கருதுவர். கர்ப்பகிருகம் 75 அடி நீளமான பக்கங்கள் கொண்ட சதுரமான அமைப்பாகும். அதனைச் சுற்றிச் சுற்றாலை அமைந்துள்ளது.
கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இவற்றில் முதலிரண்டும் அடங்கிய பகுதி 135 அடி நீளமும் 67 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதன் சுவர்களின் வெளிப்புறத்திலே தேவகோட்டங்களும், அரைத்துரண்களும், அலங்கார விதானங்களும் நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்திலும் மகாமண்டபத்திலும் தூண்வரிசைகள் உள்ளன. அர்த்த மண்டபத்துக்கு மூன்று வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் மகாமண்டபத்தினூடாகச் செல்லும் வாசல். வடக்கிலுந் தெற்கிலுமுள்ள

Page 150
272 விஜயநகர கலைப்பாணி
வாசல்களைப் படிக்கட்டுகள் மூலம் அடையவேண்டும். அவற்றுக்கு மேலே தூண்களோடு கூடிய சிறிய முகமண்டபங்கள் அமைந்துள்ளன.
சுவர்களற்றதான மகாமண்டபம் 100 அடி நீளமான பக்கங்களைக் கொண்டுள்ளது. அது குமுதப்படைகள் அமைந்த, ஐந்தடி உயரமான அதிஷ்டானத்தின் மேல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் மூன்று பக்கங்களில் வாசல்கள் உள்ளன. வாசற்படிகள் வழியாக ஏறிச்சென்று அவற்றை அடையலாம். வாசற்படிகளின் முன்னால், அவற்றின் ஓரங்களிலே யானைகளின் உருவங்கள் கவர்ச்சிமிக்க கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்திலே உன்னதமான வேலைப்பாடுகளுடன் அமைந்த கலப்புத்துரண்கள் காணப்படுகின்றன. அவற்றிலே கம்பீரமான தோற்றங்கொண்ட போர்க் குதிரைகளின் வடிவங்களும் யாளிகளின் உருவங்களும் அலங்காரமான தோற்றத்துடன் அமைந்துள்ளன. சில கலப்புத்தூண்களிற் காணப்படுங் கம்பங்கள் கைவிரல்களினாலே தட்டப்படுமிடத்துச் சப்தசுவரங்களை ஒலிக்கின்றன. மகாமண்டபத்திலே 12 அடி உயரமான 56 கலப்புத்துரண்கள் உள்ளன. அவற்றிலே 16 தூண்கள் நீள்சதுரமான மையப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன. ஏனைய தூண்கள் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
விட்டலசுவாமி கோயில் வளாகத்திலுள்ள கட்டடங்களிற் கல்யாணமண்டபமே மிகுந்த வனப்புடையதாகும். மகாமண்டபத்திற்குத் தென்கிழக்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தின் பக்கங்கள் 6.2 அடி நீளமானவை. அது குமுதப்படைகளைக் கொண்ட உயரமான அதிஷ்டானத்தில் அமைந்திருக்கின்றது. அதன் மூன்று பக்கங்களிலும் வாசற்படிகள் உள்ளன. அதில் எல்லாமாக 48 கலப்புத்தூண்கள் அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுந் தனிக்கல்லிலே செதுக்கப்பெற்றவை. தூண்களின் சிற்பவேலைப்பாடுகள் மிகுந்த சிறப்புடையவை. விஜயநகர கலைப்பாணிக்குரிய கட்டடங்களிலுள்ள மற்றைய கல்யாண மண்டபங்கள் எல்லாவற்றுக்கும் விட்டலசுவாமி கோயில் மண்டபமே முன்மாதிரியாக அமைந்திருந்தது என்று கொள்ளலாம்.
கல்யாணமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு அழகிய தேர் அமைந்திருக்கின்றது. அதன் அடிப்பாகமும், சக்கரங்களும், தேரின் முதற்றளமும் ஒரே கல்லிலே செதுக்கப்பட்டுள்ளன. அதன் சிகரமும் மேற்பகுதியின் மற்றப் பாகங்களும் சுதை, மரம் போன்றவற்றால் அமைக்கப்பட்டவை. அவை காலப் போக்கிற் சிதைந்துவிட்டன. அதனைப் போன்ற கற்றேர்கள் தாத்பத்திரி, திருவாரூர் முதலிய தலங்களிலுங் காணப்டுகின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 273
ஹஸாரராமர் கோயில்
விஜயநகர இராசதானியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஹஸாரராமர் கோயில் அளவிற் சிறியதாயினும் விஜயநகர கலைப்பாணியின் Ա ད། ། : . செம்மை நலன்களைச் சிறப்புற வெளிக்காட்டும் சித்திரக் கோயிலாகும். அது அரசகுடும்பத்தவரும் அவர்களின் உரிமைச் சுற்றமும் வழிபாடு செய் வதற்குரிய கோயிலாக விளங்கியது. அது 24 அடி உயரமானசுவர்களையுடைய பிரகாரத்தினுள் அமைந் திருக்கின்றது. கட்டட வமைப்பு கிழக்கு நோக்கிய
வணணமானது
கோ யி ல் வளாகத்தினுட் கர்ப்ப , " : கிருகம், அந்தராளம், ஹஸாரராமர் கோயில் - விஜயநகரம் அர்த்தமண்டபம், முக
ہ&*جہ“”
மண்டபம் ஆகியன நேர் வரிசையில் அமைந்திருக்கின்றன. அளவிற்பெரியனவான கோயில்களிற்போலப் பரிவாரதேவர் சந்நிதானங்களும், கல்யாண மண்டபம், திருக்காமக் கோட்டம் ஆகியனவும் அதிலுள்ளன. கோயிலின் கிழக்குப் பக்கத்திலே கோபுரவாசல் அமைந்திருக்கின்றது. கோபுரவாசல் வழியே சென்றதும் முகமண்டபம் காணப்படும். அதன் நடுவிலுள்ள சதுரத்தில் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் உள்ளன. அவை கருமை வண்ணமான கற்களில் அமைந்தவை. அவற்றின் வேலைப்பாடுகளிலே தனிப் பண்புகள் காணப்படுகின்றன. தூண்களின் நடுவிலே நீள்சதுர வடிவமும் கனசதுர வடிவமும் மாறி மாறி அமைந்திருக்கின்றன. பிராகாரத்தின் வடக்கிலுந் தெற்கிலும் நுழைவாசல்கள் அமைந்துள்ளன. அவற்றின் முன்னால் முக மண்டபங்கள்

Page 151
274 விஜயநகர கலைப்பாணி
காணப்படுகின்றன. விமானம் 50 அடி உயரமானது. அதன் முதலாவது தளம் கருங்கல் வேலைப் பாடாகும், அதன்மேல் அமைந்துள்ள பகுதிகள் செங்கல்லால் ஆனவை. sy
லெபாகூவி வீரபத்திரர் கோயில்
ஆந்திரப் பிரதேசத்தில் ஆனந்தபுர மாவட்டத்தில், லெபாகூரி என்னும் ஊர் உள்ளது. அது கருநாடகப் பகுதிகளுக்குச் சமீபமான தெலுங்குப் பிரதேசத்திலுள்ள ஊராகும். அவ்வூரிலமைந்த பகுதி முற்காலத்தில் விஜயநகர இராச்சியத்தின் பகுதியாக அமைந்திருந்தது. அங்கு 16 ஆம் நூற்றாண்டிலே கட்டப்பெற்ற பெருங்கோயிலொன்றுண்டு. 9S இந்நாட்களிலே தலயாத்திரைகளுக்குரிய தலமாக விளங்குகின்றது. அது விஜயநகர கலைப்பாணியின் கலைக்கூடமாக அமைந்திருப்பதால் உல்லாசப் பிரயாணிகளும் ஆராய்ச்சியாளரும் அங்கு நாள்தோறும் செல்கின்றனர். கோயில் மண்டபங்களின் விதானங்களிலே வனப்பு மிகுந்த ஒவியங்கள் வரையப் பெற்றுள்ளன.
லெபாகூழியிலுள்ள கோயில் வீரூபண்ண, வீரண்ன என்னும் சகோதரர்களால் அமைக்கப்பட்டது. அவர்கள் பேணுகொண்டாவிலுள்ள நந்திலக்கிச்செட்டியின் புதல்வராவர்; விஜயநகர மன்னரின் அரசப் பிரதானிகளாகக் கடமை புரிந்தவர்கள். ஆலயம் வீரபத்திரக் கடவுளின் கோயிலாக நிர்மாணிக்கப் பெற்றது. வீரபத்திரக் கடவுள் வழிபாடு தெலுங்கு தேசத்தவரிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது.
விஜயநகர காலத்துக் கோயில்களில் லெபாகூழிக் கோயில் தனிப் பண்புகளைக் கொண்ட கட்டடவமைப்பாகும். அது ஒரு முத்தளியாகும். நடுவிலுள்ள மண்டபத்தைப் பொதுமையாகக் கொண்டுள்ள மூன்று தளிகள் லெபாகூரியில் உள்ளன. அந்த வகையில் அது கல்யாணிச் சாளுக்கியரதும், ஹோய்சளரதும் கோயில்களை ஒத்ததாகும். மண்டபத்தின் விதானத்திலே வீரபத்திரரின் பேருருவம் வரையப்பட்டுள்ளது. அதனருகில் வீரூபண்ண, வீரண்ண ஆகியோரின் உருவங்களும் சித்திரக் கோலமாயுள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 275
லெபாகூரியிலுள்ள மூன்றுதளிகளும் சிவன், மகாவிஷ்ணு, வீரபத்திரர் ஆகியோரை மூலவராகக் கொண்டவை. ஈஸ்வரனுக்குரிய சந்நிதானம் பெருமாள் கோயிலை எதிர்நோக்கிய கோலத்தில் அமைந்துள்ளது. நடுவில் அமைந்துள்ள பிரதானமான தளி வீரபத்திரக் கடவுளின் கோயிலாகும். கோயில் வளாகம் உயரமான மதில்களாற் சூழப்பெற்ற பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றது. பிராகாரத்தினுள் அமைந்திருக்கும் கட்டடங்களில் உட்பிராகாரத்துக்கும் ஒடுங்கிய அர்த்தமண்டபத்திற்கும் இடையிலுள்ள மண்டபமே கலைநயம் பொருந்திய வேலைப்பாடுகளைப் பொறுத்தமட்டில் சாலவும் சிறந்ததாகும்.
நாட்டிய மண்டபத் தூண்களிலுள்ள சிற்பங்கள் மிகுந்த சிறப்புடன் விளங்குகின்றன. ஒவ்வொரு தூணிலும் பல உருவங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. நாட்டியக் கரணங்களும், மேள வாத்தியமும் தேவலோகத்தவரின் இசைக் கச்சேரிகளும் கவர்ச்சி மிகுந்த தோற்றத்துடன் விளங்கும் வண்ணமாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரமன் மேளவாத்தியம் செய்யுங் காட்சி மிகுந்த சிறப்புடன் விளங்குகின்றது. தும்புரு வீணை மீட்டும் காட்சி, நந்தி உடுக்கினை ஒலித்தல், ரம்பையின் உன்னதமான நாட்டியம், சிவபெருமானின் புஜங்கத்திராஸித நடனக் கோலம் முதலிய யாவும் கலைநயம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகின்றன. உள்மண்டபத்திலே கஜாந்தகர், நர்த்தன கணபதி, தூர்க்காதேவி ஆகியோரின் உருவங்கள் அழகிய கோலத்தில் அமைந்துள்ளன.
தொண்டை நாட்டுக் கோயில்கள்
தொண்டை நாட்டிலே, விஜயநகர காலத்திலே சில கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டன. அவை செஞ்சியிலுள்ள நாயக்கர் சமஸ்தானத்தின் கீழமைந்த பகுதிகளிற் காணப்பட்டன. வேலூர்க் கோட்டையினுள் அமைக்கப்பெற்ற ஜலகண்டேஸ்வரம் அவற்றிலே தலைசிறந்த ஆலயமாகும். கோட்டைக்குள்ளே வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள அக்கோயிலின் வளாகம் மிகப் பெரியதாகும். அதன் மிகப் பெரிய கோபுரவாசல் தெற்குப் பிராகாரச் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. அக்கோயிலிற் காணப்படும் கல்யாணமண்டபம் கலாவிமர்சகரினாலே பெரிதும் போற்றப்படுவது. அது

Page 152
교구f
ஜலகண்டேஸ்வரம் கோபுரம்
விஜயநகர கனடிப்பாணி
 ேக |ா புர வா ச வி ன் இ ட ப் ப க் க த் தி ல் அமைந்திருக்கின்றது. அதிலுள்ள கலப்புத் தூண்களிலே தாவிப் பாயும் போர்க் குதிரைகளின் உருவங்கள் கம்பீரமான  ேத | ற் ற த் து ட ன் காணப்படுகின்றன. அவற்றிலே கடிவாளம், வளையம், சவுக்கு முதலிய தனியாகக் கோலத்திலே மிகவும் நுட்பமாகச்
அம்சங்கள் தனித் காணப்படுங்
செதுக் கப் பெற்றுள் ளன . thisôlLLUTT 600T நடுவிலே ஒரு சதுரமான மேடை
மண்டபத்தின்
அமைந்திருக்கின்றது. அதன் நான்கு மூலைகளிலும் தூண்கள் நிறுத்தப் பெற்றுள்ளன. அம்மேடையைத் தாங்கி நிற்குமாற் போல் ஆமையின் வடிவம்
அமைந்திருக்கின்றது.
ஆலயத்திலே மூலவராக இலிங்கம் அமைந்திருக்கின்றது. கோயில்
விமானம் அழகிய கோலத்துடன் காட்சியளிக்கின்றது. கர்ப்பகிருகத்துக்கு முன்னால் அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியன அமைந்துள்ளன. ஜல இரண்டு
பிராகாரங்கள் உள்ளன. அவற்றை
கண்டேஸ்வரத்தில்
யொட்டிய திருச்சுற்று மாளிகைகளில் வனப்புமிக்க வேலைப்பாடுகள் அமைந்த தூண் வரிசைகள் காணப்படுகின்றன. வடகிழக்கு மூலையிலே இசைத் தூனொன்று செதுக்கப்பட்டுள்ளது. உட்பிராகாரத்தின் வடமேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும்
கச்சி ஏகம்பம் வாயிற் கோபுரம்
 
 

இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும் ללני
கச்சி ஏகம்பம் கோபுரம், மண்டபம்
தேவகோட்டங்களும் மேடைகளுங் காணப்படுகின்றன. கோபுரம் பதினாறாம் நூற்றாண்டுக் கட்டடங்களின் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதிற் பத்மம், பஞ்சாம், கும்ப பஞ்சரம், கூடு முதலிய அம்சங்கள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
விரிஞ்சிபுரத்திலுள்ள மார்க்கசகாயநாதர் கோயிலும் விஜயநகர காலத் திருப்பணியாகும். கட்டட அமைப்பிலும் சிற்ப வேலைப்பாடுகளிலும் அது ஜல கண்டேஸ்வரத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. பிரதான கோயிலும், அதனைச் சுற்றியுள்ள தேவகோட்டங்களும் கலைவனப்பில் வேலூர்க் கோயிலைப் போன்றவை. வடவார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தேவிகாபுரத்துப் பெரியநாயகி அம்மன் கோயிலும் விஜயநகர காலத் திருப்பணியாகும். அது இம்மடி நரசிங்க நாயக்கரால் அமைக்கப்பட்டதாகும். கோயில் கிழக்கு நோக்கியது. அது 143 மீற்றர் நீளமும் 74 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. கோயிற் பிராகாரச் சுவரின் வெளிப்பக்கத்தில் யானை, குதிரை, பன்றி முதலியவற்றின் சிற்பங்களின் அணிவரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற் சுற்றுப்பிராகாரங்கள் இரண்டு காணப்படுகின்றன. வெளிப்பிரகாரத்துக் கோபுரம் மிகவும் உயரமான
எழுநிலைக் கோபுரமாகும். இரண்டாம் பிராகாரத்தினுட் கல்யாண மண்டபம்,

Page 153
278 விஜயநகர கலைப்பாணி
தேரடி மண்டபம், திருக்குளம், சிறு மண்டபங்கள் முதலியன அமைந்துள்ளன. உட்பிராகாரச் சுவர்களின் இரு பக்கங்களிலும் யாளி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்திலுள்ள பிரதான கோயில்களான ஏகாம்பரநாதர் கோயில், வரதராசப் பெருமாள் கோயில் ஆகியவிரண்டும் விஜயநகர காலத்திற் புனர்நிர்மாணம் பெற்றன. அவற்றின் கோபுரங்களும் பிராகாரங்களும், மண்டபங்களும், திருச்சுற்று மாளிகைகளும் மிகவும் பிரமாண்டமானவை. விஜயநகர காலத்திலே தமிழகத்திற் புனரமைக்கப்பட்ட கோயில்களில் அவையே மிகவும் பெரியனவாகும். வரதராசப்பெருமாள் கோயிலின் கல்யாண மண்டபத்தூண்களிலே தனிச்சிறப்புடைய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. புராணக் கதைகளும், குறிப்பாகத் திருமாலின் அவதாரங்கள் பற்றிய கதைகளும் மிக நுட்பமான முறையிலே சிற்பக் காட்சிகளாக வடிக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கதை சொல்லும் விதமாக அவற்றிலே சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சோழநாட்டுக் கோயில்கள்
பாடல்பெற்ற தலங்களிற் பெரும்பாலானவற்றைக் கொண்டுள்ள சோழநாட்டிலே பல பெருங்கோயில்கள் திருக்காம கோட்டம், சுற்றுப் பிராகாரங்கள், நூற்றுக்கால் மண்டபங்கள், கோபுரம் முதலிய புதிய கட்டடங்களைப் பெற்று விசாலமாகிப் பொலிவு பெற்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் அமைந்திருக்கம் திருக்காமக் கோட்டமான பெரியநாயகி அம்மன் கோயில் விஜயநகர காலத்திலே அமைக்கப்பட்டதாகும். தலத்திலே நாயக்கர் காலத்திலே புதிதாக அமைக்கப்பெற்ற காளையின் உருவத்திற்கு வலப்புறத்திலே அமைந்துள்ள அம்மன் கோயில் வேலைப்பாடுகளிலும் அளவுப்பிரமாணங்களிலும் பெருவுடையார் கோயிலுக்குப் பொருத்தமான அமைப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் வேலைப்பாடுகள் விஜயநகர காலத்தின் முற்பகுதிக்கு உரியனவாகும்.
திருவரங்கத்தின் வரலாற்றிலே விஜயநகர காலம் ஒரு பிரதானமான வளர்ச்சிக் கட்டமாகும். அக்காலத்தில் அங்கு ஆரம்பமாகிய புனர்நிர்மாண வேலைகள் நெடுங்காலமாக நடைபெற்றன. உட்பிராகாரங்களும், அவற்றின் கோபுரங்களும், ஆயிரங்கால் மண்டபமும் சேஷாத்திரி மண்டபமும் அக்காலத்துக்கு உரியனவாகும். குதிரைக் களரி எனும் சேஷாத்திரி

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 279
மண்டபத்திலுள்ள தூண் வரிசைகள் அவற்றிலுள்ள தாவிப் பாயும் குதிரைகளின் உருவங்களின் காரணமாகக் கலாவிமர்சகர்களின் கவனத்தைப் பெற்றன. மண்டபங்களிலே கலப்புத் தூண்களையும், அவற்றின் ஒரு முகத்திலே போர்க்குதிரையின் முழுமையான வடிவத்தையும் அமைக்கும் முறை தென்னிந்தியக் கலைமரபிலே முதன்முதலாக விஜயநகர காலத்திலே ஆரம்பிக்கப்பட்டது. திருவரங்கத்திற்போல உன்னதமான வேலைப்பாட்டுடன் பெருந்தொகையான தூண்களில் போர்க்குதிரையின் உருவங்கள் வேறெங்கும் அமைக்கப்படவில்லை. குதிாைக் களரியிலே காணப்படும் குதிரை வடிவங்கள் கம்பீரமான தோற்றத்துடனும் எழிலார்ந்த கோலத்துடனும் விளங்குகின்றன. அவை அதிவேகத்திலே தாவிப் பாயும் குதிரைகளின் வடிவங்கள். அவை அளவிலாத பேராற்றலுக்கும் தணியாத உத்வேகத்துக்கும் உருவகமாக அமைந்த வடிவங்கள். ஒவ்வொன்றும் சராசரியாக ஒன்பது அடி உயரங்கொண்டவை. அவற்றைச் செலுத்தும் சாரதிகளாக அவற்றின் மேலே போர்வீரர் அமைந்திருக்கின்றனர். கலைவனப்பில் அவை இணையிலாதவை; அற்புதக் கோலமானவை.
மதுரைக் கூடல் அழகர் கோயில்
விஜயநகர காலத்திற் பாண்டி நாட்டிலே புராதனமான வைணவ தலங்களிலும் சைவத் தலங்களிலும் பல புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. தொண்டைநாடு, சோழநாடு ஆகியவற்றிலுள்ள கோயில்களிற் போல பாண்டி நாட்டுத் திருத்தலங்களிலும் காமகோட்டம், கல்யாண மண்டபம், திருநடைமாளிகை, சுற்றுப்பிராகாரங்கள் முதலியன அமைக்கப் பெற்றன. இந்தவகையில் மதுரைப் பெரிய கோயிலைப் போலக் கூடல் அழகர் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், திருவாதவூர் ஆகியன குறிப்பிடத் தக்கவை. கூடல் அழகர் கோயில் மதுரையிலுள்ள ஒரு புராதனமான விண்ணகரமாகும். அது மீனாகூதியம்மன் கோயிலுக்கு அண்மையில், அதற்குத் தென்மேற்கிலே அமைந்துள்ளது. கூடல் புராணம் என்பது அதற்குரிய தலபுராணமாகும். கூடல் அழகர் கோயிலின் விமானம் மிகவும் உயரமாகவும் வனப்பு மிக்கதாகவும் அமைந்திருக்கின்றது. அது அங்குள்ள கோபுரங்களைக் காட்டிலும் மேலோங்கி விளங்குவது கோயிலின் ஒரு சிறப்பம்சமாகும். அது அஷ்டாங்க விமானம் என்னும் வகைக்குரியதாகும். அது சதுரமான பீடத்தின் மேல் அமைந்திருக்கின்றது. அதன் தளங்கள்

Page 154
280 விஜயநகர கலைப்பாணி
நீள் சதுரமானவை. அமைப்பிலே திராவிட கலைப் பாணியின் அம்சங்களைப் பெற்றவை. அதன் சிகரம் வட்டமானது. அதன் மேற் பொன்மயமான ஸ்தூபி அமைந்திருக்கின்றது விமான தளங்களிலே கீழ் இருந்து மேலாக முறையே ஆசன, சயன, ஸ்தானக கோலங்களிலே திருமாலின் படிமங்கள் அமைக்ப்பட்டுள்ளன. அந்த ஒழுங்கு காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் விமானத்தின் அமைப்பினைப் போன்றதாகும்.
கோயிலின் கட்டட வேலைப்பாடுகள் விஜயநகர கலைப்பாணிக்கு உரியனவாகும். இக்கோயிலிலே காணப்படும் கர்ணகூடுகள், பஞ்சரங்கள், சாலைகள் என்பன பல தளங்களைப் பெற்றுச் சிறு கோயில்களைப் போன்று அமைந்துள்ளன. கும்ப பஞ்சரங்களும் அவ்வண்ணமாகவே அமைந்துள்ளன. அதிஷ்டானப் படைகளிலே வைணவ மரபிலுள்ள புராணக் கதைகள் சிற்ப வடிவிலே செதுக்கப் பெற்றுள்ளன. கோயிலின் மண்டபத்திலே விஜயநகர இராசப் பிரதானிகளின் பிரதிமைகளும் வைணவ மரபு பற்றிய சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குரிய காமகோட்டம் அண்மைக் காலத்திலே முற்றாக இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப் பெற்றுள்ளது. இக் கோயிலுக்கு விஜயநகர ராயர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் வழங்கிய தானங்களை வர்ணிக்கும் சாசனங்கள் கோயில் வளாகத்தில் இருந்தன. அர்த்த மண்டபத்திற்கு வேண்டிய கற்களை கந்தாடை கோணம்மான் என்பவர் வழங்கினார் என்றும் இம்மடி எல்லப்பநாயக்கரின் பரிபாலனக் காலத்தில் அது கட்டி முடிக்கப் பெற்றது என்றும் இராமராயரின் காலத்துச் (கி. பி. 1547) சாசனம் ஒன்றிலே குறிப்பிடப் பெற்றுள்ளது. பதினாறாம் நூற்றாண்டிலே புராதனமான கட்டடங்களை இடித்து விஜயநகர கலைப்பாணியிலே கூடல் அழகர் கோயிலைப் புனர் நிர்மாணஞ் செய்தார்கள் என்று கொள்ள முடிகின்றது.
கள்ளழகர் கோயில்
தென்னாட்டிலுள்ள பிரதானமான விண்ணகரங்களில் ஒன்றான கள்ளழகர் கோயில் மதுரைக்கு வடக்கிலே, அதற்குப் பன்னிரண்டு மைல் தூரத்திலே, அழகர் மலையின் அடிவாரத்திலே அமைந்திருக்கின்றது. முற்காலங்களிலே கோயிலும் அதன் சுற்றாடலில் அமைந்த ஊரும் அரண்களாற் சூழப்பட்டிருந்தன. ஊர்மக்களின் குடியிருப்புக்கள் காலப்போக்கில் மறைந்து

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 28
விட்டன. கோயிலின் பாகங்களும் அரண்களின் சில பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. அரணின் தெற்கு வாசல் வழியாகச் சென்றதும் அலங்கார விநாயகர் கோயில் என்னும் ஆலயத்தை அடையலாம். அதைக் கடந்து வெளிப்பிராகாரத்துத் தெற்கு வாசலான இரணியன் வாசல் மூலம் அழகர் கோயில் வளாகத்தை அடைய முடியும். வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பக்கத்திலே புராதனமான சுப்பிரமணியர் கோயிலின் அழிபாடுகள் பெருமண்மேடாக அமைந்துள்ளன. மூன்றாம் பிராகாரத்துக் கிழக்கு வாசலில் மிக உயரமான ஏழு நிலைக் கோபுரம் அமைந்திருக்கிறது. அதன் வாசல் பதினெட்டாம்படி வாசல் எனப்படும். நேர்வரிசையில் அமைந்த அம்சங்கள் பொருந்திய வனப்பு மிகுந்த அக்கோபுரம் பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப் பெற்றது. அக் கோபுர வாசலிற் கறுப்பண்ண சுவாமிக்கு வழிபாடு நடைபெறும் அதற்கு வடக்கில் அமைந்திருக்கின்ற வந்திவாசல் என்பதன் மூலமாகவே பெரும்பாலான அடியார்கள் கோயிலுக்குப் போகின்றனர். அதன் மூலம் சென்றதும் விசாலமான முற்றத்தை அடையலாம். அதிலே பல மண்டபங்கள் காணப்படுகின்றன. அவற்றிலே கல்யாண மண்டபம் மிகப்பெரியதாகும். வேறு கோயில்களில் உள்ளவற்றைப் போல இங்கும் கல்யாண மண்டபம் அலங்கார வேலைப்பாடுகள் பொருந்திய பிரமாண்டமான தூண்களுடன் அமைந்திருக்கின்றது. அங்குள்ள தூண்களிலே யாளி வடிவங்களும் கடவுட் படிமங்களும் மன்னர்களின் உருவச் சிலைகளும் எழிலார்ந்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், லக்ஷமி, கிருஷ்ணர், கருடாரூட மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர்,திரிவிக்கிரமர், ரதி-மன்மதன் என்போரின் உருவங்கள் அவற்றிலே செதுக்கப் பெற்றுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1573-1595) ஆட்சிபுரிந்த கிருஷ்ணவீரப்ப நாயக்கர், இரண்டாம் விஸ்வநாத நாயக்கர் ஆகியோரின் உருவச் சிலைகள் அங்கு அமைந்திருக்கின்றன. மண்டபத்தின் கட்டட வேலைப்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டிற்கு உரியவை. அதன் சமீபமாக உள்ள சிறிய மண்டபங்கள் விஜயநகர காலத்துப் பல்வேறு கட்டங்களுக்கு உரியனவாகும்.
கல்யாண மண்டபத்திற்குப்பின்னால் அமைந்திருக்கும் தொண்டமான் கோபுர வாசல் ஊடாக கோயிலின் மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். அக்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டமைந்தது. அதன் அதிஷ்டானத்தில் உபானம், கண்டம், குமுதம், அகரப்பட்டியல் என்னும் படைகள் உள்ளன. அதன் சுவர்களிலுள்ள அரைத்துரண்களிலே பலகை,
இதழ், கபோதம், போதிகை என்னும் அம்சங்கள் காணப்படுகின்றன.

Page 155
282 விஜயநகர கலைப்பாணி
கோபுரத்தின் தள வேலைப்பாடுகள் பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளுக்கு உரியவை. மூன்றாம் பிராகாரத்தின் தெற்குப் பக்கத்திலே அமைந்துள்ள திருமலை நாயக்கன் பிராகாரத்தில் பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல கட்டடங்கள் உள்ளன. ஆழ்வார் சந்நிதி, தாயார் சந்நிதி, பள்ளியறை என்ற கிரமவரிசையில் அவை அமைந்திருக்கின்றன. இந்தப் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலே மேட்டுக் கிருஷ்ணர் கோயில் அமைந்திருக்கின்றது. அதனை ஒட்டி ஆறு தூண்வரிசைகள் பொருந்திய மகாமண்டபம் காணப்படுகின்றது. அதன் தெற்குச் சுவரிலே முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய சாசனம் உண்டு. அதிலே கோயில் பொன் மேய்ந்த பெருமாள் திரு மண்டபம் என்று எழுதப்பட்டிருக்கின்றது. கிருஷ்ணன் கோயிலின் அதிஷ்டானம் உபானம், பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம் என்னும் படைகளைக் கொண்டுள்ளது. சுவர்களை ஒட்டிய அரைத் தூண்களிற் புஷ்ப போதிகை காணப்படுகின்றது. மாடக்குழிகளின் ஒரமாகவுள்ள அரைத் தூண்களின் மேலே கபோதம், கூடம், சாலை என்னும் அமைப்புகள் தெரிகின்றன. விஜயநகர கலைப்பாணிக்குரிய எல்லாவகையான கூட்டுத் தூண்களும் இம் மண்டபத்திலே காணப்படுகின்றன. கிழக்குப்பிரகாரத்தின் வழியே ஆரியன் மண்டபத்தை அடையலாம். அளவிற் பெரிதான அம் மண்டபம் விஜயநகர கலைப்பாணியில் அமைந்த ஒன்றாகும். ஒருவகைத் தூண்களின் அடிப்பாகத்தில் யாளியின் உருவம் அமைந்துள்ளது. ஆரியன் மண்டபத்திலே அமைந்திருக்கும் தூண்களில் வெவ்வேறு காலங்களுக்குச் சிறப்பாக உரிய கோலத்துடன் புஷ்பபோதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆரியன் மண்டபத்து ஆரியன் வாசல் வழியே இரண்டாம் பிராகாரத்தை அடைய முடியும் அதிலே வைரவர் கோயிலும் விநாயகர் கோயிலும் அமைந்திருக்கின்றன. அவற்றிலே அடியார்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கப்படும். கள்ளழகர் சந்நிதியின் கர்ப்பகிருகம் வட்ட வடிவமானது. அதன் மேல் அமைந்த விமானமும் அவ்வண்ணமானது. அதன் பிரதசுழின பாதையும் வட்டமான தோற்றங்கொண்டதாகும். அந்த வட்டமான பிரதசுஷிண பிரகாரம் நங்கல் குன்றம் பிராகாரம் என்று சொல்லப்படும். அதன் சுவர்களில் துளையிட்டுச் செம்மையாக அமைக்கப்பட்ட பலகணிகள் உள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 283
வைணவ கோயில்களிலே சயனக் கோலத்து மூலவரைக் கொண்ட சந்நிதானங்களில் விமானத்தை வட்டமாகவோ வண்டிக் கூடாரம் போலவோ அமைப்பது வழமை. ஆனால், இங்கு வழமைக்கு மாறாக ஸ்தானகக் கோலத்தில் மூலவர் அமைந்த சந்நிதானத்தில் விமானம் வட்டவடிவில் அமைந்துள்ளது.
மூலவரை பூரீ பரமசுவாமி என்று சொல்வர். ஒரே பீடத்திலே அவரின் இரு பக்கங்களிலும் பூரீதேவி, பூதேவி ஆகியோரின் படிமங்கள் அமைந்துள்ளன. அழகர், பூரீ செளந்தரராஜர் என்பன உற்சவ மூர்த்தியின் திரு நாமங்கள். கர்ப்பகிருகத்தின் மேல் அமைந்துள்ள கட்டடம் சோமச்சந்த விமானம் என்று சொல்லப்படும். அதன் கிழக்குப் பக்கத்திற் பிதுக்கமாய் அமைந்துள்ள மாடக்குழியிற் கருடவாகனரின் உருவம் அமைந்திருக்கின்றது. அதன் கீழ் கஜலக்ஷமியின் உருவம் தெரிகின்றது. சிகரத்தின் மேல் மூன்று தூபிகள் அமைந்திருக்கின்றன. விமானம் முழுவதும் பொன்முலாம் பூசப்பெற்றுள்ளது. இராய கோபுரம் வெளிப்பிராகாரத்திலே, இரணியன் வாசல் அமைந்துள்ள தெற்குப் பக்கத்திலே அமைந்திருக்கின்றது. தெற்குச் சுவருக்கும் கோயிலுக்கும் இடையிலே வசந்த மண்டபம் என்னும் பழைய கட்டடம் காணப்படுகின்றது. அது பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளிலே கட்டப் பெற்றதாகும். அதன் விதானத்திலே வைணவ மரபிலுள்ள புராணக் கதைகளையும் இராமாயணக் கதைகளையும் விளக்கும் வண்ண ஒவியங்கள் வரையப் பெற்றுள்ளன. அவை சமகாலத்திலே திருப்பருத்திக் குன்றத்தில் வரையப்பட்ட ஓவியங்களை ஒத்திருக்கின்றன.
திருமோகூர்
மதுரைக்கு வடகிழக்கிலே, ஆறுமைல் தூரத்தில் அமைந்துள்ள திரு மோகூர் பிரசித்தமான 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். அது நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மணவாள மாமுனி ஆகியோரின் பாடல்களைப் பெற்ற சிறப்புடையதலம். அது மோகன ஷேத்திரம் என்று சொல்லப்படும். அங்குள்ள
இறைவரைக் காளமேகப் பெருமாள் என்றும் இறைவியை மோகன வல்லித்

Page 156
284 விஜயநகர கலைப்பாணி
தாயார் என்றும் சொல்வது வழக்கம். புராதன தலமான திருமோகூரிலே பதினான்காம் நூற்றாண்டு முதலாக அமைக்கப் பெற்ற கட்டடங்கள் உள்ளன. ஆலயம் அளவிற் சிறியது; அதன் பிராகாரச் சுவர்கள் வழமைக்கு மாறாக மிகவும் உயரமானவை. கோயிற் பிராகாரங்களில் அழகான மண்டபங்கள் பல காணப்படுகின்றன. அதன் கிழக்கு வாசலுக்கு அண்மையிற் கம்பத்தடி மண்டபம் காணப்படுகின்றது. அதிலே கட்டப் பொம்மனின் படைத்தலைவர்களான பெரியமருது, சின்னமருது என்போரின் அழகிய உருவச்சிலைகள் உள்ளன. அந்த மண்டபத்திற்கு அப்பால் கருட மண்டபம் காணப்படுகின்றது. அதன் தூண்களிலே இராமர், சீதை, இலக்குமணர், இரதி, மன்மதன் ஆகியோரின் படிமங்கள் கவர்ச்சி மிக்க கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்துள்ள மகாமண்டபத்திலே காணப்படுந் தூண்கள் விஜயநகர கலைப் பாணியில் அமைந்தனவாகும்.
காளமேகப் பெருமாள் சந்நிதானத்தின் கர்ப்பகிருகம் சதுரவடிவில் அமைந்துள்ளது. அதிஷ்டானத்திலே பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம் என்னும் படைகள் காணப்படுகின்றன. சுவர்களும் அரைத்துரண்களும் வேதியின் மேற் கட்டப்பெற்றுள்ளன. மத்திய பகுதியில் அமைந்த சாலையில் மாடக்குழி அமைந்துள்ளது. அதன் இரு பக்கங்களிலும் மேற்புறத்திலே கும்ப பஞ்சரங்கள் அமைந்துள்ளன. அரைத் தூண்களிலே கூடும் சாலையும் பொருந்தியுள்ளன. போதிகைகள் விஜயநகர கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளன. கொடுங்கையின் மேல் வியாளமாலம் தெரிகின்றது. மகர வடிவங்கள் பல கபோதத்தின் மேல் நீட்டிய கோலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம் இருதள விமானமாகும். அது வட்ட வடிவமானது. நான்கு பக்கங்களிலும் பிதுக்கமாய் அமைந்துள்ள கூடுகள் காணப்படுகின்றன. தளங்களுக்கிடையிலே சிங்கக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் வேலைப்பாடுகளின் அடிப்படையில் காளமேகப் பெருமாள் கோயில் பதினாறாம் நூற்றான்டின் நடுப்பகுதிக்குரிய தென்று கொள்ளத்தக்கதாகும். ஆயினும், மூலஸ்தானத்திலே பாண்டியர் கலைப் பாணியின் அம்சங்கள் சில காணப்படுகின்றன. வடகிழக்கு மூலையிலே கூறி்ராப்தி சயனர் சந்நிதி அமைந்திருக்கின்றது. அதன் மண்டபத்திலே எட்டுத்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 285
தூண்வரிசைகள் உள்ளன. அங்குள்ள தூண்களிற் புராதனமான கலைப்பாணிக்குரிய அம்சங்கள் தெரிகின்றன. தூண்கள் சதுரமானவை. அவற்றின் மேலே புராதன கால அமைப்புடைய இதழ் வடிவமும் இரட்டைப் பலகையும் அமைந்துள்ளன. நாக பந்தங்கள் அவற்றில் அமைக்கப்படவில்லை. மாடக்குழிகளின் ஓரங்களிலுள்ள குறுந்துரண்களின் மேற் தோரண வடிவந் தெரிகின்றது. கூrராப்தி சயனர் கோயில் பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளிலே கட்டப்பெற்றது என்று கருதலாம். கோயில் வளாகத்திலுள்ள சுவர்களிலே பாண்டியர் காலத்துச் சாசனங்கள்
காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருவாதவூர்
மதுரைக்குத் தென்கிழக்கிலே, பதினாறு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திருவாதவூர் சைவசமய மரபிலே மிகுந்த சிறப்புடைய தலமாகும். சங்கப் புலவர்களில் மிகுந்த சிறப்புப் பெற்றவரான கபிலரும் மாணிக்கவாசக சுவாமிகளும் திருவாதவூர் வாசிகள் என்பது குறிப்பிடற்குரியது. அங்கு பள்ளி கொண்ட உடையாரை வேதபுரீஸ்வரர் என்றும் வேதநாதர் என்றுஞ் சொல்வர். தமிழிலும் வட மொழியிலும் அதனைப் பற்றிய தலபுராணங்கள் உள்ளன. கோயிலின் கர்ப்பகிருகம் சதுரமானது. அதன் மேல் அமைந்த விமானம் திராவிட விமானம் ஆகும். மூலஸ் தானத்திற்கு முன்னால் அர்த்தமண்டபம் மகாமண்டபம் என்பன காணப்படுகின்றன. அவற்றுக்குத் தென்புறத்திலே ஆறுகால் பீடம் என்னும் மண்டபம் அமைந்திருக்கின்றது. அதிலுள்ள தூண்கள் எண்கோண அமைப்புக் கொண்டவை. அந்த மண்டபத்திற்கு மேலே பிரமாண்டமான பிரஸ்தரம் காணப்படுகின்றது. அது மிகப் பெரிய கற்பாளங்களைக் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளது. அக் கற்பாளங்கள் பத்து முதல் பதினான்கு அடி வரையான நீளங் கொண்டவை.
நடராசர் சந்நிதியின் முன்பு மிக அழகுடைய மண்டபம் அமைந்திருக்கிறது. அதிலே யாளி வடிவங்கள் செதுக்கப் பெற்ற கலப்புத் தூண்கள் காணப்படுகின்றன. தூண்கள் விஜயநகர கலைப்பாணியில்

Page 157
விஜயநகர கலைப்பாணி
விஜய நகரம் உள் கோட்டை
வாசல்
விஜய நகரம் உட் கோட்டை
வாசல் பின்புறத் தோற்றம்
விஜய நகரம் விட்டலசுவாமி
கோபில்
 

விஜய நகரம் மகாநவமி
LTILLL)
அதிஷ்டானம்
1-15
|-
விஜய நகரம் அதிஷ்டானச் சிற்பங்கள்
விஜய நகரம் அதிஷ்டானம் சிற்ப அணிவரிசைகள்

Page 158
விஜய நகரம் பானைப் பந்தி
விஜய நகரம் பத்ம மஹால் (அந்தப் புரம்)
 
 

விஜய நகரம்
விட்டல சுவாமி கோயிற் திருச்சுற்று மண்டபம்
விஜய நகரம்
விட்டலசுவாமி கோயில் மாடக்குழிச் சிற்பங்கள்
விஜய நகரம் விட்டல சுவாமி
கோயில் மகா மண்டபம், யாழித்
தூண்கள்

Page 159
விஜய நகரம் விட்டலசுவாமி கோயில் மகா மண்டப இசைத் தூண்கள்
కొవ్రో
விஜய நகரம் விட்டல சுவாமி கோயில் கல்யான மண்டபம் ஜப்பானியப் பேராசிரியர் சாத்தோ மிகளுடன்)
விஜய நகரம் விட்டல சுவாமி
கோயில் வளாகம்
துலாபாரத் தோரனம்
 
 

西宮高드國的) 평영역&D南部8 源守드民편M에 들u民남 m部ws

Page 160
| , :
T
காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கல்பான மண்டபம்
 

காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் திருச்சுற்று மாளிகை

Page 161
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கிழக்குக் கோபுரம்
 

.¬. ̧ ¬ ်ိန္တိ။ R ်းဗွိုးနှိမ့် சிதம்பரம் தெற்குக் கோபுரம் ஆசாரிகளின் பிரதிமைகள் 1. அவன் நம்பி காரனாசாரி 2. திருப்பிறைக் கோன் ஆசாரி திருமருங்கன்
3. விருத்த கிரியில் சேவுகப் பெருமாள் 4. சேவுகப் பெருமாள் மகன் விசுவமுத்து

Page 162
திருப்பருத்திக் குன்றம் வர்த்தமானர் கோயில் ஒரு புறத்திலிருந்து கோயிலின்
(pg. 50 LOLIT50T தோற்றம் நன்றி: இந்தியW-இங்கே நிறு:ார் - ????
வர்த்தமானர் கோயில் சங்கீத மண்டபம்
(፲ሩo ፳gሠፅ துTண்டு)
நன்றி இந்திT-இWங்கை
நிதMாம்
சங்கீத மண்டபத்து விதானத்தின் தோற்றம் நன்றி: இந்திர-இலங்கை
நிறுவனம் -2
 

சங்கீத மண்டபத்து ஒவியம்
நாயக்கர் காலம் நன்றி:
இந்தி-இலங்கை
நிறுனர் -2
இத்'
།
, E###సో= 出田i占
E": "EE 82.883 ہی क्याम । 占
|3; #ბა-ნევაზე. ი.
--
a WANA NA LI GčNTLLği
ஒவியம் நாயக்கர் காலம்
நன்றி ట్రిந்தியா-இLWጃwሸyጃ
ಕ್ರಿಶ್ಠಿàಕಿಳಿà
சங்கீத மண்டபத்து
நாயக்கர் காலம்
நன்றி இந்திய-இலங்கை

Page 163
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் விஜய நகர-நாயக்கர் காலம்
ஜலகண்டேஸ்வரம் விஜய நகர காலம்
திருவண்ணாமலை விஜய நகர-நாயக்கர் காலம்
 
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
அமைந்தவை. அப்பாணிக்குச் சிறப்பம்சமாக உள்ள பல மலர் வடிவங்கள் கொண்ட புஷ்ப போதிகைகளும் அந்த நூற்றுக்கால் மண்டபத் தூண்களிலே காணப்படுகின்றன. தென்மேற்கு மூலையிலே காளிஸ்வரர் கோயில் அமைந்திருக்கின்றது. அதன் மண்டபத்திலே எண்கோணமான கட்டைத்துரண்கள் அமைந்துள்ளன. தூண்களின் புஷ்ப போதிகைகள் பதினாறாம் நூற்றாண்டிற்குரிய கலைப் பாணியில் அமைந்துள்ளன. மூலஸ்தானத்திற்குச் சமீபத்திலே திருக்காமகோட்டம் அமைந் திருக்கின்றது. மேற்குப் பிராகாரச் சுவரின் அருகிலே சப்தமாதரின் படிமங்கள் கானப்படுகின்றன. வடக்குச் சுவரின் அருகிலே திருவாதவூரடிகளின் படிமம் சிதைவுற்ற நிலையிலே காணப்படுகின்றது. காளமேகப் பெருமாள் கோயிலின் மூலஸ்தானமும் மண்டபங்களும் வனப்பு மிகுந்த கோலத்துடன் அமைக்கப் பெற்றுள்ளன. விஜயநகர கலைப்பாணியின் உன்னதமான பண்புகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவை விளங்குகின்றன. பாண்டி நாட்டிலே விஜயநகரப் பேரரசரின் காலத்திற் பல புதிய ஆலயங்கள் அமைக்கப்பட்டதோடு புராதனமான தலங்கள் பலவற்றிற் கட்டடங்கள் புனர்நிர்மானம் பெற்றன. மதுரைப் பெரிய கோயிலிலும் விஜயநகரகாலக் கலைப்பாணியில் அமைந்த மண்டபங்களும் சந்நிதானங்களுங் கோபுரங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடற்குரியதாகும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு மதுரை நாயக்கரின் ஆட்சிக் காலத்திலே
திராவிடக் கலைப்பாணியின் வளர்ச்சி நிறைவு பெற்றது.

Page 164

விஜயநகர காலச் சிற்பக்கலை
இராசு காளிதாஸ்
விஜயநகர மன்னர்கள்
ர்ேநாடகத்தைச் சேர்ந்த பெல்லாரி மாவட்டத்திலே ஒசுப்பேட்டை என்னும் ஒர் ஊர் உள்ளது. அதில் இருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் ஹம்பி என்ற சிற்றுார் காணப்படுகின்றது. அதுவே சுமார் 700 வருடங்களுக்கு முன்பு விஜயநகரம் என்னும் பெயராற் சிறப்புற்று விளங்கியது. அங்கே பெருநகரம் ஒன்றின் அழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. விஜயநகரம் சங்கம சகோதரர்களினாற் பதினான்காம் நூற்றாண்டிலே இராச்சியம் ஒன்றின் தலைநகரமாக அமைக்கப்பட்டது. தென்னாட்டு இந்துக்களைத் துருக்கியர் ஆதிக்கத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கென்றும், இந்து சமயத்தையும் அதனைச் சார்ந்த கலாசாரத்தையும் காப்பாற்றுவதற்கும் அந்த இராச்சியம் அமைக்கப்பட்டது. காலப் போக்கிலே அது விஸ்தாரமாகிப் பெரும் பேரரசாகியது. கர்நாடக தேசத்தின் பெரும்பகுதியும் தமிழகமும் தெலுங்கு தேசத்தின் பல பாகங்களும் அதில் அடங்கியிருந்தன. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரத்தின் ஆதிக்கம் உன்னத நிலையிலே காணப்பட்டது.
சங்கமர் (1336 - 1486), சாளுவர் (1418 - 1505), துளுவர் (1505 - 1570), ஆறவீடு (1572 - 1649) என்னும் வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் வரிசைக்கிரமமாக விஜயநகரத்தை ஆட்சி புரிந்தனர்.

Page 165
302 விஜயநகர கால சிற்பக்கலை
பொதுவாக அவர்கள் எல்லோரும் கலை வளர்ச்சிக்கு ஆதரவு புரிந்தனர். இரண்டாம் தேவராயன் (1422-1446), மல்லிகார்ச்சுனன் (1447 - 1465),
வீரநரசிம்மன் (1505 - 1509), பூநீரங்கன் (1572 - 1585) முதலிய பேரரசரின் காலங்களில் இலக்கியம், கட்டடக்கலை, சிற்பக்கலை போன்றவற்றில் உன்னத வளர்ச்சிகள் ஏற்படலாயின. கி. பி. 1565ஆம் ஆண்டு தலைக்கோட்டையில் நடந்த போரிலே தக்கணத்துச் சுல்தான்கள் ஐவரும் ஒன்று கூடித் தாக்கி விஜயநகரத்தை அழித்தனர். துளுவர்களின் ஆட்சிக்கால முடிவில் இப்பெருங்கேடு நிகழ்ந்த போதும் ஆறவீடு வம்சத்தவர் தோன்றி விஜயநகரப் பேரரசைப் புனர்நிர்மாணஞ் செய்தனர். சாளுவர் காலத்திலே கேழதி, இக்கேரி, மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்பவற்றிலே நிறுவப்பட்ட நாயக்க வம்சத்தவர் விஜயநகர காலத்துக் கலாசார மரபுகளைப் பேணிப் போற்றி அவை மேலும்
அபிவிருத்தி அடைவதற்கு வழிவகை செய்தனர். தென்னிந்தியக் கலை வரலாற்றைப் பொறுத்தவரையில் நாயக்கர் காலம் விஜயநகரப்
பண்புகளின் தொடர்ச்சிக்காலம் ஆகும்.
விஜயநகர அழிபாடுகளும் சிற்பங்களும்
ஒசுப்பேட்டையில் இருந்து பேரூந்திலே பிரயாணஞ் செய்து,
முதுவீரண்ணா என்று அழைக்கப்படும் வீரபத்திரன் கோயிலருகிலே இறங்கி நடந்துசென்றால் விஜயநகரத்துக் கட்டடங்களினதும் சிற்பங்களினதும் சிறப்பினை அழிபாடுகளின் மூலம் கண்டறியலாம்.
வீரபத்திரர் கோயிலிலே மிகப்பெரிய சிற்பங்கள் சில காணப்படுகின்றன.
வீரபத்திரர், இலக்குமி, நரசிம்மர், கடுகுகணபதி, சிவலிங்கம், நந்தி ஆகிய உருவங்களைக் காணலாம். வீரபத்திரரின் கோலம் உத்தாரமானது. படிமம் ஸ்தானக நிலையில் அமைந்துள்ளது. கரங்கள்
ஒவ்வொன்றிலும் கத்தி, வில், அம்பு, கேடயம் என்பன

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 303
அமைந்திருக்கின்றன. கனல் தெறிக்குங் கண்களுடன் தக்கனைத் தண்டித்த வீரபத்திரரை அந்நாட்களிலே போர்க் கடவுளாக வழிபட்டனர். கன்னட-தெலுங்கு நாயக்கர் வீரபத்திரரைத் தம் குல தெய்வமாகப் போற்றினார்கள். அந்த மரபு இன்று வரை நிலவி வருகின்றது.
விஜயநகரச் செல்வாக்கு கர்நாடகத்திற்கு அப்பாற் பரவிய பொழுது தமிழகம், தெலுங்குதேசம், கலிங்கதேசம் ஆகியவற்றிலும் வீரபத்திரர் வழிபாடு அதிக செல்வாக்கினைப் பெறத் தொடங்கியது. வீரபத்திரரின் படிமங்களைத் தென்னிந்தியா முழுவதிலுங் காண முடிகின்றது. உதாரணமாகத் தெலுங்கு தேசத்திலே லெபாஷி, பூரீசைலம் என்பவற்றிலே வீரபத்திரருக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே மதுரை, தாடிக்கொம்பு என்னுமிடங்களில் வீரபத்திரரின் சிற்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. விஜயநகரத்திலே காணப்படும் உத்தான வீரபத்திரரைச் சதாசிவராயரின் ஆட்சிக்காலத்தில் 1545இல் பிரதிஷ்டை செய்தனர். ஆயினும், வீரபத்திரர் வழிபாடும் அதற்குரிய வழிபாட்டுச் சின்னங்களும் தென்னிந்தியாவிலே அதற்கு முன் நெடுங்காலமாக நிலைபெற்றுள்ளன. உத்தான வீரபத்திரரின் கோலம் மிகப்பெரியது. எனினும், அவர் பள்ளி கொள்ளுங் கோயில் அளவிற் சிறியதாகும். அது முதுவீரம்மன் கோயில் என்று குறிக்கப்படுகின்றது. இந்நாட்களிலும் அங்கு வழிபாடு நடைபெறுகின்றமை குறிப்பிடற்குரியதாகும். அக்கோயிலைத் தாண்டிச் சென்றதும் விஜயநகரத்தின் வானளாவிய பெருங் கோயில்களைக் காணலாம்.
நரசிம்மர்
நெல்லும் கரும்பும் விளைகின்ற வயல்கள் நடுவே அமைந்துள்ள பாதை வழியே சிறு தூரம் நடந்து சென்றதும் விஜயநகரத்தினுட் பிரவேசிக்கலாம். அங்கு இடப்பக்கத்திலே இரு உருவங்கள் தென்படும்.

Page 166
304 விஜயநகர கால சிற்பக்கலை
அவற்றிலொன்று யோகநிலையில் உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ள இலக்குமி - நரசிம்மர் வடிவமாகும். மற்றையது நிலத்திலே நடப்பெற்றுத் தண்ணிரைப் பீடமாகக் கொண்டு தோன்றும் சலகண்ட மகாலிங்கம் என்பதாகும். நரசிம்மர் வழிபாடு மிகவும் புராதனமானது. குப்தர் காலக் குடபோகங்களிலே கருவறை மூர்த்தியாக நரசிம்மர் விளங்குகின்றார். மனித உடலின் அம்சமும், சிங்கத்தலையும் கூடி அமைந்தவர் நரசிம்மர். வைணவ மரபிலே நரசிம்மருக்குச் சிறப்பிடம் உண்டு. திவ்விய பிரபந்தப் பாசுரங்களிலே நரசிம்மர் போற்றப்படுகின்றார். பாண்டியர், பல்லவர் காலத்தில் நரசிம்மரின் வடிவங்கள் கோயில்களில் அமைக்கப் பட்டிருந்தன. நாமக்கல், ஆனைமலை, சிங்கப்பெருமாள் கோயில் என்பவற்றிலே கருவறையில் வீரநரசிம்மரின் உருவம் அமைக்கப்
பட்டுள்ளது.
போராற்றலின் உருவமாகிய வீரநரசிம்மரைத் தங்கள் அபிமானத்திற்குரிய கடவுளாக விஜயநகர மன்னர்கள் போற்றினார்கள். அவரின் நாமத்தை தங்கள் புதல்வர்கள் சிலருக்கும் சூட்டினார்கள். நரசநாயக்கர், சாளுவநரசிம்மன், இம்மடிநரசிம்மர் என்னும் பெயர்கள் அத்தகையனவாகும். அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்ட அவதாரம் செய்த வீரநரசிம்மர், தனது பணி நிறைவேறியதும். யோகநாயகராய் இலக்குமியுடன் அமர்ந்து விடுகிறார். பொதுவாக அந்த நிலையில் அவரின் படிமம் பத்திராசனத்தின் மேல் அமைந்திருக்கும். ஆனால், விஜயநகரத்தில் அவர் பாம்பனைப் பள்ளியில் வீற்றிருக்கிறார். அதே சமயம் இராசநாகத்தின் ஆறு படங்கள் அவரின் சிங்கத் தலைக்குமேற் தோன்றுகின்றன. நாக படங்களுக்கு மேல் மேலும் ஒரு சிங்கத்தலை தோன்றுவது படிமக்கலையில் ஒரு புதுமையாகும். மேலே காணப்படும் சிங்கமுகம் மகர தோரணத்தின்
முடியில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

ந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 305 இ ளு ளு
கணபதி
கடுகு கணபதியாகிய விக்கின விநாயகர் பத்திராசனத்தின்மேல் லலிதாசனக் கோலத்தில் அமர்ந்திருக்கின்றார். கரங்களிலே அங்குசம், பாசம், மோதகம், தந்தம் என்பன காணப்படுகின்றன. அவருடைய முடி கரண்ட மகுடமாகும். காதுகள் சுளகு போல் விரிந்த தோற்றமுடையவை. வயிறு மத்தளம் போன்றது. உதரபந்தம், உபவிதம் முதலான பல ஆபரணங்கள் தெரிகின்றன. கணபதி வழிபாடு குப்தர் காலம் முதலாக நிலவி வந்திருக்கின்றது. காணபத்யம் என்பது தனியொரு வழிபாட்டு நெறியாகவும் கொள்ளப்பட்டது. கர்நாடக தேசத்தில் கணபதி வழிபாடு சிறப்புப் பெற்றிருந்ததனை அவதானித்த வெளிநாட்டவர்களும் அதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். துவாரசமுத்திரத்திலே அமைந்திருந்த விக்னேஸ்வரர் கோயிலைப்பற்றி தொமின்கோ பைஸ் என்னும் போர்த்துக்கேயர் வர்ணிக்கின்றார். அங்கே காணப்பட்ட மனித உடலும் யானைத்தலையும் தும்பிக்கையும் தந்தங்களும் கொண்டிருந்த படிமத்தைப் பற்றி அவர் வர்ணிக்கின்றார். இப்படிமத்திலே ஆறு கரங்கள் முன்பு இருந்தன என்றும், அவற்றில் இரண்டு விழுந்து விட்டன என்றும், எஞ்சிய இரண்டும் விழும் சமயத்திலே பிரளயம் நிகழும் என்றும், அங்குள்ளவர்கள் கூறியதாக அவர் குறிப்பிடுகின்றார். விநாயகருக்குத் தினந்தோறும் அமுதுபடைத்து வழிபாடு செய்தனர். அச்சமயத்தில் நாட்டியப்பெண்கள்
உபசாரமாக நடனமாடுவது வழமை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
விரூபா கூடிர் கோயில்
விஜயநகரத்தின் வடபுறத்திலே கருங்கற் பாறைகளை
ஊடறுத்துச் செல்லும் துங்க பத்திரை ஆறு ஓடுகின்றது. தென்மேற்கிலே ஹேம கூடம் என்னும் மலை காணப்படுகின்றது.

Page 167
306 விஜயநகர கால சிற்பக்கலை
அதன் மேலே கதம்ப - நாகர கலைப்பாணியில் அமைந்த சமண வஸ்திகளும் இந்துக் கோயில்களும் அமைந்திருக்கின்றன. தென்கிழக்கு மூலையிலே மாதங்கபர்வதம் என்னும் மலை உள்ளது. மேற்கிலே விரூபாக்ஷர் ஆலயமும் கிழக்கே அரசரின் சபாமண்டபமும் அமைந்துள்ளன. அவற்றிற்கிடையே அங்காடிகளில் அமைந்த கட்டடங்களின் அழிபாடுகளும் கடைவீதிகளின் சுவடுகளுந் தெரிகின்றன. விரூபாக்ஷர் ஆலயத்திற்கு வடக்கே பம்பாதேவி கோயில் அமைந்திருக்கின்றது. அது புராதனமானது. கிராம வாசிகள் வழிபட்ட பம்பாதேவி என்னும் கிராமியத் தெய்வத்தை வழிபடுவதற்கென்று அது அமைக்கப்பட்டது. இரண்டாம் தேவராயரின் காலத்திலே (1422 - 1426) பிரமாண்டமான கட்டடமாக விரூபா கூடிர் ஆலயம் அமைக்கப்பட்டது. விஜயநகர கலைப் பாணியில் அமைந்த கோயில்களில் அது உன்னதமான கட்டடமாகும். அதிலே யாளித் தூண்கள், அலங்கார மண்டபம், கோபுரங்கள், பிராகாரம் முதலிய அம்சங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. மகாமண்டபத்தின் முகட்டு விதானத்திலே சித்திரங்கள் வரையப்பெற்றிருந்தன. திரிபுராந்தகர், கலியாணசுந்தரர், கல்கி ஆகியோரின் உருவங்கள் சிறப்பான
கோலத்தில் வரையப் பெற்றுள்ளன.
விஜயநகரப் பகுதிகளுங் கோயில்களும்
விரூபாக்ஷர் ஆலயம் அமைந்த தானத்தை மையப்பகுதியாகக் கொண்ட விஜயநகரம் காலப் போக்கிலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றது. அதில் விரூபா கூடிபுரம், அச்சுதபுரம், விட்டலபுரம், கிருஷ்ணாபுரம், கமலாபுரம், வரததேவி அம்மன் பட்டினம்,
மலப்பனங்குடி, அநந்தசயனக் குடி, நாகலாபுரம், ஒசுப்பேட்டை

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 307
திருமலாதேவி அம்மன் பட்டினம் என்பன அதன் பகுதிகளாகும். அப்பகுதிகளிற் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றிலே அநந்தசயனக்குடி கோயில், மலப்பனங்குடி மல்லையா கோயில், பாலகிருஷ்ணன் பட்டினக் கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. ஹேமகூட மலையிலும் பல இந்துக் கோயில்களும் சமணக் கோயில்களும் அமைந்திருந்தன. விரூபாக்கன் கோயில், மாதங்க மலைமேல் அமைந்த மாதங்கேஸ்வரர் ஆலயம், அச்சுதபுரத்து திருவேங்கலநாதன் கோயில், துங்கபத்திரைக் கரையிலே காணப்படுங் கோதண்டராமன் கோயில் ஆகிய கோயில்கள் மிகப் பிரசித்தமானவை.
அரண்மனை வளாகத்திலே சிறப்புமிக்க பல கட்டடங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. அரண்மனைக் கட்டடங்கள், தாமரை மஹால், ஹஸாரராம ஆலயம், தர்பார் வளாகத்தில் அமைந்திருக்கும் புஷ்கரணி, மகாநவமி மண்டபத்து அதிஷ்டானம், கமலாபுரத்தருகிலுள்ள இரகுநாதன் கோயில், துங்கபத்திரையின் தென்கரையிலுள்ளதும் கல்லாலான இரதத்துடனும் கல்யாண மண்டபத்துடன் கூடியதுமான விசய விட்டலர் கோயில் ஆகியனவற்றின் சிற்ப வேலைப்பாடுகள்
உன்னதமானவை.
வித்யாசங்கர் கோயில்
விஜயநகர கலைப்பாணிக்கு உன்னதமான எடுத்துக்காட்டாகச் சிருங்கேரியில் அமைந்துள்ள வித்தியாசங்கரர் கோயில் காணப்படுகின்றது. அது ஸப்தரத வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கருவறையிலே மூலவர் மூவரின் உருவங்கள் உள்ளன. சாளுக்கியர் கலைப்பாணியின் அம்சங்களையும் கெழதி நாயக்கரின் கலைப்பாணியின் அம்சங்களையும் கொண்டுள்ள அற்புதக் கோலமான
அந்த ஆலயம் ஒரு சிற்பக்கூடமாகச் சிறந்து விளங்குகின்றது. அது

Page 168
308 விஜயநகர கால சிற்பக்கலை
பத்திரா நதியின் கரையிலுள்ள சங்கர மடத்தின் பீடமாக விளங்கும் சிருங்கேரியைச் சேர்ந்ததாகும். இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் அக்கோயிலுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. சங்கரர் மடத்தின் அதிபரான வித்யாரண்யர் விஜயநகரத்தை அமைத்துக்கொள்வதில் சங்கம சகோதரர்களுக்குப் பெருமளவிலே ஆதரவு புரிந்தார். விஜயநகரத்தின் தோற்றம் பற்றிய மரபுவழிக் கதைகள் அவருக்குச் சிறப்பிடம் வழங்குகின்றன. அவரின் உருவச் சித்திரங்கள் ஒவியமாகவும் சுதைச் சிற்பமாகவும் விரூபாக்ஷர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.
இருதள பீடத்தில் அமைந்த வித்தியாசங்கரர் கோயிலின் சுவர்ப்பகுதிகளிலே விநோதமான வடிவுகொண்ட சிற்பவரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதோபத்திரமாக நான்கு திசைகளிலும் வாயிலை ஒட்டிச்சிற்பங்கள் சீராக அமைக்கப்பட்டுள்ளன. திருமாலின் தசாவதாரங்களான வராகம், நரசிம்மம், மச்சம், கூர்மம் முதலியன அங்கு சிற்பக்கோலத்தில் உள்ளன. சமண தீர்த்தாங்கரரின் உருவங்களும் குதிரையின் மீது அமர்ந்த கல்கியின் வடிவங்களும் அங்கே காணப்படுகின்றன. தேவியை மடியில் வைத்திருக்குங் கோலத்திற் பிரமனது உருவமும் ஏழுதலை ஆதிசேடன் மேல் அமர்ந்த இலக்குமி நரசிம்மரின் சிற்பமும் அங்குள்ளன. முகமண்டபத்திலுள்ள தூண்களின் சிற்ப அமைதிகள் மிகவுஞ் சிறப்புடையவை.
விஜயநகர காலக் கோயில்களின் வடிவங்கள்
விஜயநகரம் கர்நாடக தேசத்திலே தோன்றிக் காலப்போக்கில் தென்னிந்தியப் பகுதிகள் பலவற்றை உள்ளடக்கிய பேரரசாக வளர்ச்சி அடைந்திருந்தது. தென்னிந்தியக் கட்டடக்கலை வளர்ச்சியில் விஜயநகரம் ஒர் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளது. விஜயநகர கலைப்பாணியில் திராவிட கலைப்பாணியின் செல்வாக்கு

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 309
மேலோங்கியது. கர்நாடகத்துக் கோயில்களிலும் அதன் செல்வாக்கு மிகுந்தளவிலே ஏற்பட்டது. திராவிட கலைப்பாணியிலுள்ள கோயில்கள் ஆறு கோணமான அல்லது எட்டுக்கோணமான சிகரத்தைக் கொண்டிருக்கும். பல்லவர் காலத்துக் கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில் முதலிய ஆலயங்கள் நீளப்பாட்டிற் கர்ப்பகிருகம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தன. சோழர் காலத்திலே முக மண்டபம் எனப்படும் அக்கிரமண்டபம், நந்திபீடம், கொடிமரம், பலிபீடம்,
கோபுரவாசல் என்னும் அம்சங்களையும் கட்டட அமைப்பிற் சேர்த்துக்
கொள்வது வழமையாகி விட்டது.
விஜயநகர காலத்திலே ஆலய வழிபாட்டிலும் கோயிற் கிரியைகளிலும் பல புதிய அம்சங்கள் சேர்ந்து விட்டதாற் கட்டடத்தைப் பிரமாண்டமான அமைப்பாக விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பிற்காலச் சோழர்கள் தில்லை நடராசரைக் குல தெய்வமாகப் போற்றினர். கோயில் என்றால் சைவ சமய மரபிலே பேரம்பலத்தைக் குறிக்கும் அளவுக்குச் சிதம்பரம் மிகச்சிறப்புடைய தலமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் குலோத்துங்க சோழன் காலம் முதலான மன்னர்களின் கட்டடத்திருப்பணிகளின் பயனாக அத்திருத்தலம் அதன் முன்னைய நிலையைக் காட்டிலும் ஆறு மடங்கு பெரிதாகியது. திருக்காமகோட்டம், நூற்றுக்கால் மண்டபம், நீராழி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், எழுநிலைக் கோபுரங்கள், மூன்று சுற்றுப்பிராகாரங்கள் என்பன அமைக்கப்பட்டன. அத்துடன் மூலஸ்தானத்திலே கவர்ச்சி பொருந்திய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட
நடராசர் சிலையும் முதலாங் குலோத்துங்கனின் காலத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடற்குரியது. சிதம்பரம் கோயிலின் வடிவமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு விஜயநகர காலத்திலே தமிழகத்தின் பிரதான கோயில்கள் விரிவாக்கம் பெற்றன. எனவே, விஜயநகர கலைப்பாணி பற்றிப்
பேசுமிடத்து திருக்காம கோட்டம், ஆயிரங்கால் மண்டபம், வானளாவிய

Page 169
30 விஜயநகர கால சிற்பக்கலை
கோபுரம், சுற்றுப்பிரகாரங்கள் ஆகியவற்றின் மீது கவனஞ் செலுத்த வேண்டும்.
விஜயநகர காலத்தில் மிகப் பெருமளவிலே படிமங்கள் உருவாக்கப்பட்டன. உலோகத்திலும் கல்லினாலும் மரத்தினாலும் சுதையினாலும் சிற்பங்களையும் படிமங்களையும் விக்கிரகங்களையும் அலங்கார வடிவங்களையும் உருவாக்கி ஆலயங்களிலே அமைத்தார்கள். தேவ கோட்டப் படிமங்கள், உற்சவ விக்கிரகங்கள், மூலவர் படிமங்கள், விமானம், கோபுரம் ஆகியவற்றின் அலங்காரச் சிற்பங்கள் எனப் பல வகையான உருவங்கள் செய்யப்பட்டன. விஜயநகர காலத்தைப்போல முன்னைய காலங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் அவை அமைக்கப்படவில்லை. உதாரணமாகச் சொல்லின், ஒரு மரத்தேரிற் சராசரி 300 சிற்பங்கள் இருப்பின், தமிழகத்தில் 500 தேர்கள் இருக்கக் கூடுமாயின் எல்லாமாக 1,50,000 மர வேலைப்பாட்டிலமைந்த சிற்பங்கள் இருந்திருக்க வேண்டும் என்று கொள்ளலாம். அதே போல ஒரு கோபுரத்தில் 700 சுதைச்சிற்பங்கள் அமைந்திருக்கும் என்று கொண்டால், தமிழகத்தில் 500 கோபுரங்கள் இருந்தால் 3,50,000 சிற்பங்கள் வரை இருந்தன என்று கணக்கிடலாம்.
தேவிகாபுரம் பெரிய நாயகியம்மன் கோயில் முக மண்டபத்துத் தூண் ஒவ்வொன்றிலும் மூன்று நிலைச் சதுரப்பட்டையில் பன்னிரண்டு சிறிய கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. அம்மண்டபத்தில் முப்பது தூண்கள் உள்ளன. அவற்றில் எல்லாமாக 432 கற்சிற்பங்கள் எழில் பொருந்திய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளன. விஜயநகர காலத்து மண்டபங்கள் அனைத்தையுங் கணக்கெடுத்து, அவற்றிலுள்ள சிற்பங்களை அளவிடுவதற்குக் கணிப்பொறியாலும் இயலாது எனின் மிகையாகாது. அவற்றிலே காணப்படுஞ் சிற்ப விநோதங்கள் அதிசயமானவை. மதுரையிலே சுந்தரேஸ்வரர் கோயிலின் அருகிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பஞ்சமுக நரசிம்மியும் மீசையுடைய முகமும்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 3.
பருத்து அகன்ற மார்பகங்களை உடைய அலியின் சிற்பங்களுங் காணப்படுகின்றன. திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடமாடும் நரசிம்மனைக் காணலாம். இவற்றைப் போன்ற உருவங்கள் பல
தலங்களில் உள்ளன.
விஜயநகர மன்னர்களின் திருப்பணிகள்
விஜயநகரப் பேரரசர்கள் தென்னிந்தியாவின் பல பாகங்களிலே கோயிற் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டனர். பல தலங்களிலே பழுதடைந்த கோயில்களைப் புனராக்கம் செய்தனர். வேறு பல தலங்களிலே புதிய கட்டடங்களை அமைத்துக் கோயில் வளாகத்தை மிகப்பெரியதாக மாற்றி அமைத்தனர். பொன் முதலிய உலோகங்களையும் வராகன் முதலான பொற்காசுகளையும் ஆலயத் திருப்பணிகளுக்கென்று ராயர்கள் வாரி வழங்கினார்கள். மூல மூர்த்திகளுக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினார்கள். நித்திய, நைமித்திய கருமங்களைச் செய்வதற்கென்று பல வகையான நன்கொடைகளைக் கோயில்களுக்கு வழங்கினார்கள். கோயில்களிலே மந்திரோபாசனை செய்வோர்க்கும் ஆராதனை செய்யும் பிராமணருக்கும் சிவயோகிகளுக்கும் பாகவதர்களுக்கும் சீவிதமாகவும் அன்னதானக் கொடைகளுக் கென்றும் நன்கொடைகளை வழங்கினார்கள். சில சமயங்களிலே திருவிழாக் காலங்களில் ஆலய தரிசனம் பண்ணிச் சிறப்புச் செய்தனர். அவற்றைப் பற்றிய செய்திகள் பெரும்பாலுஞ் சாசனக் குறிப்புகளாக
உள்ளன. கீழ்வருவன அவற்றுட் சிலவாகும்:
1. சக வருடம் 1315இல் (கி.பி. 1393) இரண்டாம் ஹரிஹரராயர் காஞ்சி காமா கூறி அம்மன் கோயிலுக்குத் தாமிர நிலைக் கதவு 6ugrijef60TTsi (EI- III, No. 32, p. 230).

Page 170
32
விஜயநகர கால சிற்பக்கலை
சக வருடம் 1334இல் (கி. பி. 1412) அரிஹரராய உடையார் என்பவர் பவானி வட்டத்திலே பரிபாலகராக விளங்கிய காலத்தில் திருவரங்கநாதர் கோயிலுக்குத் தானங்கள் வழங்கினார். அமுது, கற்பூரஆராதனை,நந்தாவிளக்கு, சந்தனக்காப்பு, மலர்மாலைகள், நறும்புகை, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை இடுவதற்கென்று அறக்கட்டளை செய்தார். மேலும், நந்தவனம் ஒன்று இடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே அன்னதானம் வழங்குவதற்கென்று அரிசி, பருப்பு, நெய், காய்கறி, மோர், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றைக் கிரமமாகக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (El-XVI, No. 15, p. 226).
இரண்டாம் தேவராயனின் திருவரங்கச் செப்பேடுகள் கி. பி. 1428இல் அரங்கனுக்கு 12 நந்தா விளக்குகளும் மாலைகளும் வழங்கியமை பற்றித் தெரிவிக்கின்றன. (El-VVII, No. 9, p. 117).
மல்லிகார்ச்சுனனின் திருவரங்கச் செப்பேடுகள் கி. பி. 1462இல் அரங்கனுக்கு நித்திய அன்னமும், தாம்பூலமும், மாலையும் வழங்கி சமபந்தி நிறுவித் தானஞ் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் (85söSGé6öTp6OT. (EI- XVI, No. 28, pp. 352-3).
இரண்டாம் விரூபாக்ஷனின் பூரீசைலம் செப்பேடுகள் கி. பி. 1466இல் நித்திய பூசைக்கும் (போகம்) விழாக்களுக்கும் பூமிதானம் வழங்கியமையினைப் பதிவு செய்கின்றன. (El-XV, No. 2, p. 25).
ஒசுப்பேட்டைக்கு அருகிலுள்ள சங்கலாபுரக் கல்வெட்டு கி. பி. 1513இல் கிருஷ்ணதேவ மகாராயர் அங்கே கோடி விநாயகருக்கு வழிபாடு, தேர்த்திருவிழா, கோயிற்றிருப்பணி என்பவற்றுக்கு வழங்கிய தானங்களை வர்ணிக்கின்றது. (El- IV, No. 38, p. 269).

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 33
7.
10.
கிருஷ்ணதேவ மகாராயரின் பிரான்மலைக் கல்வெட்டு (கி. பி. 1518) அங்குள்ள நல்லமங்கை பாக சுவாமி ஆலயத்திற்கு வழங்கிய நித்தியபோக தானங்களை அறிவிக்கின்றது. (EI- XXI, No. 19, p. 124).
கிருஷ்ணதேவ மகாராயரின் சாசனமொன்று அசலாபுரி எனப்பட்ட கொண்டவீடு (ஆந்திரப் பிரதேசம்) நகரில் இராகவனுக்குக் கோயில் கட்டப்பட்டு, திருமதில், கோபுரம் என்பன எடுக்கப்பட்டமை பற்றித் தெரிவிக்கின்றது. தங்கத்தாற் படிமம் வார்த்து வழங்கப்பட்டது. மேலும், மங்கள சைலத்திலே நரசிம்மன் கோயிலில் அரிக்கு இளங்கோயில் (பிராசாதம்) அமைக்கப்பட்டு, அதற்குத் தங்கக் கும்பங்கள்
அணிசேர்க்கப்பட்டன.
மேற்படி ஆண்டில் மகாராயரின் மந்திரியான சாளுவதிம்ம கொண்டவீட்டில் இராமபத்திரனுக்குக் கோயில் கட்டி, ஒன்பது கலசங்கள் நிறுத்தி, கோபுரம், பிராகாரம், உத்சவ மண்டபம் இணைத்து, உத்சவ விக்கிரகங்கள், தங்க நகைகள், முத்து மாலைகள் என்பனவற்றைத் தானம் பண்ணினார். (El
VI, No. 32, p. 231).
கிருஷ்ணதேவ மகாராயரின் காஞ்சிபுரம் செப்பேடுகள், அவர் 1522இலே பல புனித தலங்களைத் தரிசித்துத் தானங்கள் வழங்கியமையினை வர்ணிக்கின்றது. சிதம்பரம், விருப்பாக்கம், திருக்காளத்தி, திருப்பதி, காஞ்சி, அகோபிலம், சங்கமம், திருவரங்கம், கும்பகோணம், மகாநதிதிர்த்தம்,நிவ்ருத்தி, கோகர்ணம், இராமசேது ஆகிய தலங்களுக்கு மகாராயர் யாத்திரை போனதாகச் சொல்லப்படுகின்றது. (EI-XIII, No. 8, p. 132).

Page 171
34
விஜயநகர கால சிற்பக்கலை
12.
13.
14.
கிருஷ்ணதேவ மகாராயரின் உதயம்பாக்கம் சாசனம் (கி. பி. 1528) காஞ்சிபுரத்துச் சங்கராச்சாரியார் மடத்துச் சந்திரசேகர சரசுவதி ஆச்சாரியாரின் மாணவர் சதாசிவ சரசுவதி அவர்களுக்கு வழங்கிய G85T6DLulsb60Tä sigib. (EI- XIV, No. 12, p. 169).
அச்சுதராயரின் கடலாடி செப்பேடுகள் (கி. பி. 1529) அவர் திருக்கோகர்ணம், சங்கமம், சிதம்பரம், சோனாத்ரி, விரிஞ்சிபுரம், காஞ்சி, திருக்காளாத்தி, கும்பகோணம் ஆகிய தலங்களிலுள்ள கோயில்களுக்கு வழங்கிய தானங்களின் விவரங்களைக் (85LSGå6öTp6T. (EI- XIV, No. 12, p. 169).
திருவரங்க நாதருக்குச் சிந்தாமணி என்னுங் கிராமத்தைச் சதாசிவராயர் மானியமாகக் கொடுத்தமை பற்றித் திருவரங்கத்திலுள்ள கல்வெட்டொன்று (கி. பி. 1545) (85süSGésöTpgl. (EI- XXIX, No. 9, p. 77).
அரங்கநாதருக்கு இரத்தினக்கற்கள் பதித்த கவசம், பீதாம்பரம், கழுத்துமாலைகள், உஷ்ணிசம், கிரீடம், குண்டலங்கள், கடிசூத்திரம் முதலியவற்றை வேங்கடபதி மகாராயர் வழங்கியமையினை வெள்ளங்குடி பட்டயம் (கி. பி. 1598) மூலம் அறியமுடிகின்றது. மேலும், தேரோட்டம், நித்திய சேவைகள் என்பனவற்றுக்கு வேண்டிய
பொன்னும் பொருளும் இராயரால் வழங்கப்பட்டன.
இதுவரை மேற்கோளாகக் கையாளப்பட்ட சாசனக் குறிப்புகள்
கிடைக்கின்றவற்றில் ஒரு சிலவேயாகும். ஆயினும், அவை தென்னகம்
முழுவதிலுமுள்ள பிரதானமான தலங்களுக்கு விஜயநகர ராயர்கள் காலா
காலம் யாத்திரை போனமைக்கும், அவற்றுக்குத் தானங்களை வழங்கி, ஆலய

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 35
தருமங்களையும் கோயிற் கலைகளையும் பாது காத்தமைக்கும் சிறந்த உதாரணங்களாகும்.
விஜயநகர கலைப் பாணியில் அமைந்த கட்டடங்கள் பலவிடங்களில் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தாடிபத்திரி என்னும் ஊரிலுள்ள இராமலிங்கேஸ்வரம் அவற்றில் ஒன்றாகும். அதில் ராயகோபுரங்களும் வேங்கடரமணனின் திருப்பணியான மகாமண்டபமும் உள்ளன. மூன்று மூலஸ்தானங்கள் அமைந்த திருகூடாசலம் என்னும் லெபாகூழி கோயில் விஜயநகர காலத்து ஆலயங்களில் ஒன்றாகும். அதில் இரகுநாதன், வீரபத்திரன், பாபவிநாசன் ஆகியோர் மூலவராயுள்ளனர். பேணு கொண்டாவிலுள்ள சிவன் கோயிலும் இராமர் கோயிலும், புஷ்பகிரியில் அமைந்திருக்கும் சென்னகேசவர், சந்தானமல்லேசுவரர், உமாமகேசுவரர் கோயில்களும் விஜயநகர காலத்தனவாகும். சோமபாலம் சென்னராயன் கோயிலும் அதன் மகாமண்டபம், கல்யாணமண்டபம் என்பனவும் அக்காலத்தனவாகும். சந்திரகிரியிலுள்ள ஒன்பது கோயில்களும் பூரீசைலம் மல்லிகார்ச்சுனர் கோயில், பிரமராம்பாள் கோயில் என்பனவும் திருப்பதியிலுள்ள பல கட்டடங்களும் விஜயநகர கலைப்பாணியில் அமைந்தவை.
விஜயநகரம் கி. பி. 1565 இல் அழிக்கப்பட்டதும் ஆறவீடு வம்சாவழியினரான ராயர்கள் சந்திரகிரியை இராசதானியாகக் கொண்டனர். பின்பு, இராசதானி தமிழகத்தின் வடபகுதியிலுள்ள வேலூருக்கு மாற்றப்பட்டது. அவ்விரு நகரங்களிலும் விஜயநகர காலத்துக் கட்டடங்கள் உள்ளன. சாசனங்கள் மூலம் கோயில்கள் சிலவற்றைப் பற்றி மட்டுமே அறிந்து கொள்ளலாம். கோயில்களை அடையாளங் காண்பதற்கும், அவற்றின் தோற்ற வளர்ச்சிகளை கால வரிசையில் வரையறைப்படுத்திக் கொள்வதற்கும், இலக்கியங்களும்
கர்ணபரம்பரைக் கதைகளும் ஒரு வகையில் ஆதாரமாயுள்ளன.

Page 172
l விஜயநகர கான சிற்பக்கவை
 ெத ன் னி ந் தி ய க் கட்டடக்கலை வரலாற்று ஆ ரா ய் ச் சி ப ா ள ரி ல் மு ன் னே T டி க ள | ன டூப்ரோ பில், பெர்கஸன்,
பெர்ஸி பிரவுண், ஹவெல்
நீலகண்ட சாஸ்திரி முதலியோர் தமிழகத்திலுள்ள
கோயில்களில் (5
சிலவற்றையே விஜயநகர
கலைப்பாணிக்குரியனவாக
t
தாடிக்கொம்பு திருவிக்கிரமம் அடையாளங் கண்டனர்.
வேலூர் சலகண்டேஸ்வரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்,வரதராசப்பெருமாள் கோயில், சிதம்பரம், திருவரங்கம், மதுரை மீனா கூதி அம்மன் கோயில் ஆகியவற்றிலுள்ள கட்டடங்களே விஜயநகர கலைப்பாணிக்குரிய உதாரணங்களாகக் கொள்ளப்பட்டன. ஆனால், உண்மையில் விஜயநகர காலத்துக் கோயில்கள் தமிழகத்து மாவட்டங்கள் எல்லா வற்றிலும்
உள்ளன.
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலே தாடிக்கொம்பு, அழகர்கோயில், ஆனைமலை, திருமோகூர், திருவாதவூர், திருப்பரங்குன்றம் போன்ற பலவிடங்களில் அக்காலத்துக் கோயில்கள் பலவற்றைக் காணலாம். இலக்கியக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு விஜயநகர காலத்திற் குரியனவாகிய 200 கோயில்களை இ. கா. கே. இராசராசன் அடையாளங் கண்டுள்ளார்.
லெபாசுழியில் அமைந்திருக்கும் திரிசுடடாசலக் கோயில் வீரபத்திரர் வழிபாட்டிற்குச் சிறப்பாகவுரிய தலமாகும். அங்கே, ஆதியில், விஜயநகரத்துப் பம்பாதேவியினை ஒத்தவொரு கிராம தேவதை வழிபாடு
 
 

இந்து சுவாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 3.
நிலவியதென்பர். 'இரத்தக் கண்ணி என்ற தேவதையின் வழிபாடு நிலவியதன் காரணமாக லெபாசுழி என்னும் பெயர் உருவானதென்று கருதலாம். ஆயினும், சமஸ்கிருத மொழியில் லேப; என்றால் ஒட்டுதல், மூதாதையருக்குப் பிண்டம் வழங்கிக் கையைத்துடைத்தல் அல்லது தீட்டு என்று பொருள்படும். லேபபாகின் என்பது தந்தைவழி 4 முதல் 6 வரையான தலைமுறையிலுள்ள மூதாதையரைக் குறிக்கும். உலோகத்தாலான கண்கள் ஒட்டப்பட்ட விக்கிரகத்தின் மூலம் வழிபடும் தேவதையொன்றினை லெபாசுழி என்று குறிப்பிட்டனர் என்றுங் கருதலாம். இன்றும் நாட்டுப்புறங்களில் இவ்வழக்கு நிலவுகிறது. அத்துடன் பிதிர்களுக்கு ஆண்டு தோறும் செலுத்தும் கடன்களை ஏற்கும் தேவதையாகவும் லெபா கூழியைக் கொள்ளலாம். இத்தலத்திலே தக்கனைச் சங்காரம் பண்ணிய வீரபத்திரர் முதலிடம் பெறுவதால் லெபாகூழி உமையோடு தொடர்புடையவளாகலாம். தக்ஷ பிரஜாபதி உமையின் தந்தையாவான். சிவனின் உக்கிராம்சமாகிய வீரபத்திரனுடன் தொடர்புடையவன் என்பதால் லெபாசுழி காளியாதலுங் கூடும்.
நாகலிங்கம் லெபாசுழியிற் காணப்படும் மிகப்பெருஞ் சிற்பங்களில் ஒன்றாகும். மூன்று தளமாக அமைந்த நாகத்தின்
சுருள்களின் மேல், ஏழு படங்களுக்குக் கீழே யோனியுடன் அமைந்த லிங்கம் அமைக் கப் பட் டு ஸ் ௗ து . இவ்வகையான நாகலிங்கங்கள் விஜயநகர காலம் முதலாக வழிபடப்பட்டன. கல்யாண
மண்டபத்திலே அமைந்திருக்கும்
சிற்பத்தூண் - ஜலகண்டேஸ்வரம்

Page 173
፵|8 விஜயநகர கால சிற்பக்களை
கல்யாணசுந்தாரின் சிற்பம் வனப்பு மிக்கதாகும். திருக்கைலாய
மலையிலே கல்யாண வைபவம்
நடைபெறுவது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சபையிலே பிரமன், திருமால், முனிவர்கள், அட்டதிக்குப் பாலகர் முதலியோர் அமர்ந்திருக்கின்றனர்.
இங்குள்ள மண்டபங்களிற் கிராத
வடிவிலே பன்றியை வேட்டையாடும்
சிற்பத்துரண் - கிருஷ்ணபுரம்
சிவன், பாய்ந்து கிராதனைத் தாக்கும் வராகம், சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெறும் இராவணன், கைகூப்பிய கோலத்தில் மனித உடலும் மாட்டுத்தலையின் வடிவமும் பொருந்திய நந்திதேவர், அகன்ற கண்களும் மீசையும் அமைந்துள்ள கோலத்துடன் வாளுடன் தோன்றும் வீரபத்திரர், கோரமான பார்வையுடன் வாயைப் பிளந்த வண்ணமாகத் தோன்றும் யோகநரசிங்கரின் சித்திரங்கள் என்பன ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன.
இவற்றிலே சிறப்பு மிகுந்த சித்திரமாக விளங்குவது ஐந்து முகங்களும் பத்துக் கரங்களுமுடைய மகாவிஷ்ணுவின் உருவமாகும். கிரீட மகுடங்களையும் பீதாம்பரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதனை விஷ்ணுவின் கோலமென்று அடையாளங் காண முடிகின்றது. முன்னிரு கரங்களும் அபயவாத கரங்களாய் உள்ளன. பின்னுள்ள கரங்களிற் சங்கு, சக்கரம், அம்பு, வில், வச்சிராயுதம், உடுக்கை என்பன உள் ளன. மும்மூர்த்திகளிலே தாமே முதலான மூர்த்தி என்ற நிலையில் விஷ்ணு தோன்றுகிறார். திருமாலை 'மூவரில் முன்முதல்வன்' என்று பெரிய திருமொழி வர்ணிக்கின்றமையுங் கவனித்தற்குரியது. வீரபத்திரன் கோயிலில் விலங்கு வடிவத்திலே காணப்படும் நந்தி ஒரு அலங்கார
வேலைப்பாடாகும்.
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
தூண்களில் அமைந்த சிற்பங்கள்
விஜயநகர காலத்திலே தூண்களிற் சிறிய சிற்பங்களை வடிக்கும் முறை விருத்தியடைந்தது. பெரியபுராணத்திலே வரும் சிறுத்தொண்டர் கதை, கிராதார்ஜுனியக் கதை முதலானவற்றின் அம்சங்கள் தூண்களிலே சிற்ப வடிவங்களாக அமைக்கப்பட்டன. சிறுத்தொண்டருக்குச் சிவன் பிள்ளை வரம் அருள்வது, சீராளனின் பிறப்பு, சிவன் அன்னதானங் கேட்டு வருதல், சீராளனின் தலை வெட்டப்படுவது, வைராகியான சிவன் அன்னமுண்பதற்கு ஆசனத்தில் அமர்தல், சிவன் பார்வதி சமேதராய்க் காட்சி கொடுத்துச் சீராளனை உயிர்மீட்டல், சிறுத்தொண்டருக்கு அருள் புரிதல் போன்ற காட்சிகள் தூண்களிலே சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகச் சைவ சமயமரபிலுள்ள சிறுத்தொண்டர் புராணக் கதையினை அடிப்படையாகக் கொண்ட சிற்ப வடிவங்கள் ஆந்திரப் பிரதேசத்திலும் கர்நாடகத்திலும்
அமைக்கப்பட்டுள்ளன.
அர்த்தமண்டபத் தூண்களிலே
பலவிதமான சிறிய சிற்பங்கள் அமைக்கப்பட்டன. உமாதேவியார், கணபதி, நந்திதேவர் ஆகியோருடன் ஆனந்த தாண்டவம் புரியும் நடராசர்,
துர்க்கை, திரிபுரம் எரித்த விரிசடைக்
கடவுள், காலகாலன், சாலபாஞ்சிகை
முதலியோரின் உருவங்கள் லெபாகூரி
முதலிய கோயில்களிற் காணப்
படுகின்றன.
சிவபூசை செய்யும் கூர்மம்
திருக்கழுக்குன்றம்

Page 174
320 விஜயநகர கால சிற்பக்கலை
மண்டபங்கள்
விஜயநகர காலத்து மண்டபங்கள் பலவற்றிலே யாளித்துரண்கள் அலங்காரக் கோலத்துடன் அமைக்கப்பட்டன. ழரீசைலத்து மல்லிகார்ச்சுனர் ஆலயத்தின் பிரமராம்பாள் தேவியின் முகமண்டபம் யாளித் தூண்கள் பொருந்திய ஒரு அலங்கார வேலைப்பாடாகும். விஜயநகரத்து விட்டல சுவாமி கோயில், விரூபா கூடிர் ஆலயம், ஹஸாரராமர் கோயில் என்பவற்றிலும், வேலூர் சலகண்டேஸ்வரம், திருவரங்கம், பூரீவில்லிபுத்தூர், தாடிக்கொம்பு, திருமுட்டம் ஆகியவற்றிலுள்ள ஆலயங்களிலும் யாளித்தூண்களும் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த தூண்களுங் காணப்படுகின்றன.
பூரீசைலத்தில் அமைந்துள்ள கோயில் வளாகத்துச் சுற்றுமதில் அதில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகளின் காரணமாக மிகுந்த சிறப்பினைப் பெறுகின்றது. சிற்பங்களினாற் சிறப்புற்று விளங்கும் திருமதில் களையுடைய கோயில் அங்குள்ளதனைப் போல பரத கண்டத்தில் வேறெங்குங் காணப்படுவதில்லை. அட்டமாசித்தி பெற்ற சித்தர்களின் சாதனைகளை விளக்கும் சிற்பங்கள் காணப்படுவதாற் பூரீசைலத்துக் கோயில் சித்தர்தலம் எனப்படும்.
ஊர்த்துவரேதசு என்னும் கோலத்திற் சமண தீர்த்தாங்கரரைப் போலச் சமபாதத்தில் நிற்கும் சிவன், மகிஷமர்த்தினியான அட்டபுயநாயகி, கதாயுதத்தை ஏந்திய கோலத்தில் அமைந்திருக்கும் யோகநரசிம்மர், இலிங்கத்திலிருந்து தோன்றி அக்கமகாதேவிக்கு அருள் பாலிக்கும் கோலமான சிவன் முதலியோரின் உருவங்கள் நுட்பமான வேலைப்பாடுகளாகும்.
திருக்குறுங்குடி, அழகர்கோயில், தாடிக்கொம்பு, விருத்தாசலம், கும்பகோணம், சேரன்மகாதேவி, திருவில்லிபுத்துார், திருக்கோயிலூர், செஞ்சி, நாங்குனேரி, திருநெல்வேலி, திருவைகுண்டம், வந்தவாசி,

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 321
அரியலூர், திருக்கண்ணமங்கை, குடுமியான்மலை, சுசீந்திரம், தாரமங்களம், தென்காசி, திருவானைக்கோயில், லால்குடி, திருப்புத்தூர், திருவொற்றியூர், மைலாப்பூர்,திருவல்லிக்கேணி, திருப்புவனம் (மதுரை), சிதம்பரம் முதலிய தலங்களில் விஜயநகர கலைப்பாணியில் அமைந்த வேலைப்பாடுகள் உள்ளமை அண்மைக்கால ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவாகியுள்ளது. இத்தலங்கள் சிலவற்றிலே கட்டடங்கள் எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. வேறு சிலவற்றிலே மண்டபம், கோபுரம், பிராகாரம் முதலிய அமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன. திருவரங்கம், திருப்பதி, அழகர்கோயில் ஆகியன மிகப் புராதனமான வழிபாட்டுத் தலங்களாகும். ஆயினும், அவற்றிலே காணப்படும் பெருங்கட்டடங்களிற் L6) விஜயநகர கலைப்பாணியில் அமைந்தனவாகும். ஆறுபடை வீடுகளிலுள்ள கோயில்களும் விஜயநகர காலத் திருப்பணிகளாகும்.
புராதன காலத்துக் குடவரைக் கோயில்கள் அமைந்திருக்கும் ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருக்கோகர்ணம், குடுமியாமலை, குன்றாண்டார் கோயில் முதலிய தலங்களில் விஜயநகர காலத்தில் ஆலயங்கள் விரிவாக்கம் பெற்றன. இக்கோயில்களில் மரம், கல், சுதை, உலோகம் எனபவற்றில் அமைக்கப்பட்ட எண்ணற்ற சிற்பங்கள் உள்ளன. இராமகாதை, ஹரிவம்சம், பாகவத புராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலியவற்றிலே காணப்படும் கதைகளை ஆதாரமாகக் கொண்டு பெருந்தொகையான சிற்பங்கள் இக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன.
நரசிம்ம அவதாரத்தின் பல்வேறு கோலங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணிலிருந்து மனித உடலும் சிங்கத்தின் தலையும் பொருந்திய கோலத்தில் நரசிம்மர் வெளிப்படுவதைத் திருவானைக் கோயிலிற் காணலாம். நரசிம்மர் இரணியனுடன் சமர் புரிதல், இரணிய சங்காரம், இலக்குமி-நரசிம்மர், அகண்ட பேரண்ட நரசிம்மர், நரசிம்மி முதலிய வடிவங்களைத் திருக்குறுங்குடி,
விருத்தாசலம் போன்ற தலங்களிற் காணலாம்.

Page 175
322 விஜயநகர கால சிற்பக்கல்ை
விஜயநகர காலத்துச் சிற்பங்களிலே திருமாலின் தசாவதாரக் கோலங்கள் குறிப்பிடத்தக்கவை. சிருங்கேரி, அழகர்கோயில் ஆகிய இடங்களில் பத்து அவதாரங்களையும் விளக்குஞ் சிற்பங்கள் ஒரே வரிசையில் உள்ளன. மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், இராமாவதாரம் ஆகியவற்றின் வடிவமான சிற்பங்கள் காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில் ஆகியவற்றில் அமைந்திருக்கின்றன. திருவிளையாடற் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங்கள் மதுரை மீனாகூறிசுந்தரேஸ்வரர் கோயிலிலும் பெரியபுராணக் கதைகளை விளக்குஞ் சிற்பங்கள் தேவிகாபுரத்திலும் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணத்தில் வர்ணிக்கப்படும் மும்முலைத் தடாதகை சுந்தரேஸ்வரரைப் போருக்கு அழைக்கும் காட்சி மதுரை மீனாகூழி அம்மன் கோயிற் புதுமண்டபத்திலே வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்முலைத் தடாதகை மகிஷமர்த்தினியின் கோலமாகி எருமைத் தலைமேற் காலூன்றி நிற்கும் காட்சி திருப்பரங்குன்றத்துக் கல்யாண மண்டபத்திலே சிற்பக் கோலமாக அமைந்துள்ளது.
மச்ச-கூர்ம-வராக கர்வபங்க மூர்த்தி என வர்ணிக்கப்படும் சிற்ப வடிவங்கள் சைவக் கோயில்கள் சிலவற்றிலே காணப்படுகின்றன. சிவன் அல்லது முருகன் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய அவதாரங்களின் கர்வத்தை அடங்குங் கோலத்தைப் பிரதிபலிக்குஞ் சிற்பங்கள் சில கோயில்களில் உள்ளன. தமது அவதார காரியம் முடிந்தும் சினந்தணியாது உலகில் இடர் புரிந்தமையின் காரணமாகத் திருமால் தண்டனை பெற்று மீட்சி பெற்றார் என்ற கதைகள் காலப் போக்கில் உருவாகின. சரபபராணக் கதைகள் அத்தகையனவாகும். அழகுமலைத் தேரில் முருகன் வராகத்தை வதைப்பதும், மீட்கப்பட்ட திருமால் சங்கு, சக்கரம் என்பவற்றை ஏந்திய நிலையில் அஞ்சலிபந்தமாக நிற்குங் கோலமும் தெரிகின்றது. இதே போன்ற காட்சியைத் திருவாரூர் முருகன் தேரிலுங் காணலாம். நரசிம்மர் இரணியவதம் புரிந்த மகாதேவர். நரசிம்மரை அடக்குவதற்கென்று தோன்றியவர் சரபமூர்த்தி.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 323
சரபத்தில் மானிட அம்சங்களோடு விலங்கு, பறவை என்பவற்றின் அம்சங்களுஞ் சேர்ந்துவிடுகின்றன. சீறிய சிங்கம் சரபனிடம் படும்பாட்டைச் சிற்பத்திற் காண்பது விந்தையான காட்சியாகும்.
திருமால் அவதாரங்களின் எலும்புகளைக் கங்காளமாகக் கட்டிச் சுமந்து செல்பவர் கங்காளமூர்த்தி. சிவன் சரபமாகி நரசிம்மனை அடக்கினானென்று சைவர் கொள்வதால், வைணவர் நரசிம்மரை அட்டமுக அகண்ட பேரண்டம் என்னும் எட்டுத் தலையுடைய அகண்ட பேரண்ட பறவையாக்கிச் சிவனைத் தண்டிப்பதாகச் சிற்பம் படைத்தனர். இத்தகைய நான்கு வடிவங்களை எம்மால் அடையாளங் காண முடிந்தது. வில்லியனூர் கணபதி தேர், திருவில்லிபுத்தூர் ஆழித்தேர், திருவரங்கத்து நரசிம்மன் இளங்கோயில் ஒவியம், திருவரங்கத்துத் தெற்குத் தெருவீதியிலுள்ள கோபுரத்துச் சுதைச் சிற்பம் என்பவற்றில் அவை காணப்படும்.
அட்டமுக அகண்ட பேருண்ட வடிவத்தில் சிங்கம், புலி, குதிரை, பன்றி, குரங்கு, கழுகு, கரடி, பாம்பு என்பவற்றின் முகங்கள் உள்ளன. புலி தவிர்ந்த ஏனைய யாவும் வைணவ சம்பந்தமானவை என்பது புராணக் கதைகளால் அறியப்படும். சைவத்துடன் தொடர்புடையதான புலி வடிவம் அட்டமுக அகண்ட பேரண்டத்தோடு சேர்ந்து கொள்வதும் வியப்பிற்குரியதன்று. ஐமுக நரசிங்கனைச் சிவாம்சமாகச் சாத்திரங்கள் கொள்வதுண்டு. ஒவ்வொரு முகத்திலும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றின் அடையாளமான முக்கண் அமைந்திருக்கும். இராமரின்
உத்தம பக்தனாகிய அனுமனையும் சிவாம்சமாகக் கொள்வர்.
காமக் கோலங்கள்
இந்து சமய மரபிலே ஆன்மா இறைவனை அடைவதற்கு (1) யோக மார்க்கம், (2) போகமார்க்கம் என்னும் இரு வழிகள் உள்ளன என்று கொள்ளப்படும். தவம், புலனடக்கம், ஞானம் என்பவற்றால் பிரமத்தை
அடைவது யோக மார்க்கமாகும். தந்திர முறையினைச் சாதகன் போகத்திலே

Page 176
324 விஜயநகர கால சிற்பக்கலை
மூழ்கிப் பரத்தைக் காண்கிறான். போக மார்க்கத்திற் செல்வோர் மச்சம், மாமிசம், மது, முத்திரை, மைதுனம் என்னும் பஞ்ச மகரங்களையும் ஒப்புக்கொள்வர். காபாலிகர், காளாமுகர், சாக்தர் முதலாயினோர் போக மார்க்கத்தில் நின்றனர். வங்கதேசம், கலிங்கம், மத்திய பாரதம் ஆகியவற்றிலே பரவியிருந்த தந்திர மார்க்கத்தின் செல்வாக்கு தென்னிந்தியாவிலும் ஏற்பட்டது.
பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் அமைக்கப்பட்ட சிற்பங்களிலே மைதுனக் கோலங்கள் இடம்பெறவில்லை. ஆனால், விஜயநகர காலத்திற் காம உணர்ச்சிகளைப் பல்வேறு கோலங்களிற் பிரதிபலிக்குஞ் சிற்பங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. முத்தமிடும் காட்சிகள், ஆலிங்கனத் தோற்றம், காம உணர்ச்சியால் ஏற்படும் பலவகையான வெளிப்பாடுகள் என்பன சிற்ப வடிவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் வர்ணிக்கும் புராணக் கதைகள் பல சிற்பக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுத்து நோக்குமிடத்து விஜயநகர காலத்திலே பெருந் தொகையான சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அவை கடவுட் படிமங்களாகவும் அலங்காரச் சிற்பங்களாகவும் அமைந்தன. புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றிலுள்ள கதைகளை ஆதாரமாகக் கொண்ட சிற்பங்கள் மிகுதியாக உருவாக்கப்பட்டன. வைணவக் கோயில்களில் தசாவதாரங்களின் தோற்றத்தை விளக்கும் சிற்பங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டன. சரபமூர்த்தி, வீரபத்திரர் என்போரின் உருவங்களும் மைதுனக் கோலமான வடிவங்களும் முற்காலங்களிற் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. சிறுத்தொண்டர் பற்றிய கதை தெலுங்கு தேசத்துக் கோயில்களிலும் கர்நாடகத்துக் கோயில்களிலும்
சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமை இன்னொரு சிறப்பம்சமாகும்.

நாயக்கள் கலைப்பாணி
சி பத்மநாதன்
நிர்மிழகக் கட்டடக் கலையான திராவிடக் கட்டடக் கலைப்பாணியின் இறுதிக் கட்டமாக அமைவது நாயக்கர் காலத்துக் கலைப்பாணியாகும். பதினாறாம் நூற்றாண்டிலே, 1565 இல் தலைக் கோட்டைப் போரின் விளைவாக விஜயநகரம் அழிந்த பின்பு, தமிழகத்திலே, விஜயநகர ராயர்களின் பிரதிநிதிகளான நாயக்கர் சுதந்திரமாக ஆட்சிபுரிந்தனர். மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களிலிருந்த நாயக்கர் தனித் தனியான இராச்சியங்களை ஆட்சி புரிந்தனர். அவர்களில் மதுரை நாயக்கரே பிரபல்யமானவர்கள். பாண்டிநாடும் திருச்சி, திருவரங்கம் முதலிய பட்டினங்கள் அடங்கிய சோழநாட்டுப் பகுதிகளும் அவர்களின் வசமாயிருந்தன. தமிழகத்துக் கோயிலமைப்பின் இறுதியான வளர்ச்சிக்கட்டம் மதுரை நாயக்கரோடு பெரிதும் தொடர்பு கொண்டதாகும்.
தமிழ் நாட்டுக் கட்டடக் கலை மரபு மதுரை நாயக்கரின் காலத்தில் மேலும் பெரு வளர்ச்சி அடைந்தது. விஜயநகர காலத்திலே தென்னகக் கோயில்கள் இராய கோபுரம், கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய யாளித்துரண்கள் எனப் பல புதிய அம்சங்களைப் பெற்று விசாலமாகிப் பொலிவுடன் விளங்கின. அந்த வகையான கட்டட அமைப்பு நாயக்கரின் காலத்தில் மேலும் அபிவிருத்தியடைந்தது. புதிய பல பிராகாரங்கள் ஆலயங்களைச் சுற்றி அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிராகாரத்திலும் நான்கு பக்கங்களிலும் கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டன. கோபுரங்கள் பல தளங்கள் பொருந்தியனவாய் வானத்து முகில்கள் தோயும் வண்ணம் உயரமாக ஓங்கி எழுந்த கோலத்தில் அமைக்கப்பட்டன. மதுரை, திருவரங்கம் ஆகிய தலங்களிலே ஒப்புயர்வில்லாத கட்டட அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

Page 177
326 நாயக்கர் கலைப்பாணி
மதுரையிலே விசுவநாத நாயக்கர் காலத்திற் கட்டட வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. திருமலை நாயக்கருடைய காலத்தில் (1623-1659) மிகச் சிறந்த கோயில்களும் மண்டபங்களும் மதுரையிலே தொடர்ந்து கட்டப்பட்டன. நாயக்க மன்னர்கள் பழைய கோயில்களைப் புனரமைத்தார்கள். கோயில் வளாகங்களிலே பிரதானமான ஆலயங்களைச் சுற்றித் திருக்காமகோட்டம் போன்ற துணைக் கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். பிரமாண்டமான கோபுரங்களையும் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த வனப்புமிக்க மண்டபங்களையும் உருவாக்கினார்கள். கோயில்களிலே முன்பிருந்த மதில்களுக்கு வெளியே புதிய பெரிய மதில்களையுங் கட்டினார்கள். மதில்களுக்கிடையிலுள்ள நான்கு மூலைகளும் ஒரே அகல முடையதாய் இருக்கும். ஒவ்வொரு மதிலின் நடுவிலும் கோபுரவாயில் அமைந்து காணப்படும். ஒவ்வொரு பிராகாரத்திலும் நான்கு கோபுரவாயில்கள் அமைந்திருக்கும். பிராகாரங்களில் நூற்றுகால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருக்குளம் முதலியனவும் அமைந்திருக்கும். திருவரங்கத்திலே நீள் சதுரவடிவிலான ஏழு திருச்சுற்றுகள் அமைந்து காணப்படுகின்றன. திருச்சுற்றுகள் முடியும் இடங்களிலெல்லாம் தூண்களும், அவற்றிலே மனிதரைப் போன்று உயரமான சிற்ப வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே சில கடவுளர் படிமங்களாகும். வேறு சில மன்னர்களின் பிரதிமைகளாகும்.
நாயக்கர் கலைப்பாணியில் அமைந்த கோயில்கள் மதுரையில் மட்டுமன்றி தமிழகத்தின் எல்லாப்பாகங்களிலும் காணப்படுகின்றன. மதுரை, திருவரங்கம், திருவானைக்கா, திருவாரூர், இராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, பூரீ வில்லிபுத்தூர் முதலிய தலங்களிலெல்லாம் நாயக்கர் கலைப்பாணியின் அம்சங்களைக் காணமுடிகின்றது.
மதுரைக் கோயில்
மதுரைக் கலைப் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது மதுரை மீனாட்சியம்மன் கோயிலாகும். மதுரையிலே மீனாகூழி அம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் தனித்தனியாக இரு பெருங் கோயில்கள் அமைக்கப்பட்டன. 850 அடி நீளமும் 725 அடி அகலமுங் கொண்டுள்ள நீள் சதுரமான முற்றத்திலே அக்கோயில்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 327
அவை ஒவ்வொன்றும் அருகருகில், கிழக்கு நோக்கிய கோலத்தில், அமைந்துள்ளன. முற்றத்தின் நான்கு பக்கங்களும் உயரமான மதில்களாற் சூழப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் கோபுரவாயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பிரதான வாயில் கிழக்குப் பக்கம் உள்ளது. அதிலிருந்து கோயிலை நோக்கி 200 அடி நீளமும் 100 அடி அகலமுங் கொண்ட விசாலமான பாதை அமைந்திருக்கின்றது. அதன் இரு பக்கங்களிலும் மிக உயரமான தூண்கள் அமைந்திருக்கின்றன.
மீனாகூதி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குத் தென்புறமாக அமைந்திருக்கின்றது. அதற்குக் கிழக்கே வனப்புமிக்கதான பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. பிரதானமான மண்டபங்கள், மூலஸ்தானங்கள் இரண்டிற்கும் கிழக்கிலுள்ள வெளிமதிலுக்கும் இடையே காணப்படுகின்றன. பிராகாரச் சுவர் ஒவ்வொன்றின் நடுவிலும் பிரமாண்டமான அளவு கொண்ட கோபுரம் உள்ளது. பிரதானமான கோபுரவாசல் கிழக்குப் பிராகாரச் சுவரோடு அமைந்திருக்கின்றது. ஆயினும், இந்நாட்களில் அஷ்டசக்தி மண்டபம், வழியாகவே பெரும்பாலான அடியார்கள் கோயிலுக்குட் போகின்றனர். அது அம்மன் கோயிலுக்கு நேரில் அமைந்துள்ளது.
அஷ்டசக்தி மண்டபத்தின் வழியாக ஐந்து அங்கணங்களைக் கொண்ட மீனாகூழிநாயக்க மண்டபத்தை அடையலாம். அதற்கு மேற்கிலே எழுநிலைக் கோபுரமான சித்திரகோபுரம் உள்ளது. மதுரைக் கோபுரங்களில் அதுவே மிகவும் உயரமானது, சித்திரகோபுர வாசலிலிருந்து முதலிமண்டபம் வழியாகப் போனாற் பொற்றாமரைக் குளத்தைச் சூழ்ந்துள்ள சித்திர மண்டபத்தை அடையலாம். அதன் வடக்கு, கிழக்கு விதானங்களிலே திருவிளையாடற் புராணத்திலே சொல்லப் படுகின்ற 63 லீலைகளைப் பற்றிய நவீன காலத்து ஒவியங்கள் உள்ளன. 170 அடி நீளமும் 120 அடி அகலமுங் கொண்ட பொற்றாமரைக் குளம் கோயில் வளாகங்களில் அமைந்திருக்கும் குளங்களிலே மிகவும் வனப்புடையது. சித்திர மண்டபத்தின் வடக்கிலிருந்து பார்க்குமிடத்து தெற்குக் கோபுரமும் பொற்றாமரைக் குளமும் கவர்ச்சிமிக்க தோற்றத்துடன் விளங்கும். குளத்திற்கு மேற்கிலே மங்கம்மாள் மண்டபம், எண்ணைக்காப்பு மண்டபம் என்பன காணப்படுகின்றன. வடமேற்கிலே கிளிகட்டி மண்டபம் அமைந்துள்ளது. அது அம்மன் சந்நிதி கோபுரத்துக்கு முன்னால் அமைந்திருக்கின்றது.

Page 178
328 நாயக்கர் கலைப்பாணி
சந்நிதி கோபுரத்தினூடாக அம்மன் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தை அடையலாம். அது 225 அடி நீளமும் 150 அடி அகலமுங் கொண்டது. அதன் வடகிழக்கு மூலையிலே திருமலை நாயக்கரதும், அவரது தேவியரதும் சிற்ப வடிவங்கள் உள்ளன. அவை சுதையினால் அமைந்தவை. அவ்வுருவங்கள் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள கொலு மண்டபத்தை நோக்கிய கோலத்தில் அமைந்துள்ளன.
நவராத்திரி விழா வழமையாகக் கொலு மண்டபத்திலே கொண்டாடப்படும். அதற்கு வடக்கிலே கடக கோபுரம் அமைந்திருக்கின்றது. வடக்குச் சுற்றாலை வழியாகச் சென்று திரும்பி இரண்டாம் பிராகாரத்தை ஒட்டியமைந்த சுற்றாலை வழியே போய் ஆறுகால் பீடத்தை அடையலாம். அதனைக் கடந்ததும் முதலாம் பிராகாரத்தை அடையலாம். அது 125 அடி நீளமும் 70 அடி அகலமுங் கொண்டது. அதன் நடுவில் மீனாகூழி அம்மன் சந்நிதி உள்ளது. அதிற் கர்ப்பகிருகமும் மகாமண்டபமும் உள்ளன. மண்டபத்திற்கு மேற்கிலே பள்ளியறை அமைந்துள்ளது.
கிளிகட்டி மண்டபத்துனுாடாக நடுக்கட்டு கோபுர வாசல் வழியாகச் சுந்தரேஸ்வரர் கோயிலை அடையலாம். 420 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட அதன் இரண்டாம் பிராகாரத்தில் முக்குறுணிப் பிள்ளையார் என்று சொல்லப்படும் விநாயகரின் பெருவடிவம் உள்ளது. அப்பிராகாரத்தின் மேற்கு மதிலையொட்டி பாலக கோபுரமும் ஈஸ்வரங்களான பல தேவகோட்டங்களுங் காணப்படுகின்றன. வடமேற்கு மூலையிலே சங்கத்தார் கோயில் உள்ளது. வடக்குச் சுற்றாலையிற் கரியமாணிக்கர் கோயில் அமைந்துள்ளது. அதன் மண்டபம் வடக்கிலுள்ள சின்னமொட்டைக் கோபுரத்துடன் இணைகின்றது. சபாபதி சந்நிதி அடங்கிய நாயக்க மண்டபம் என்னும் நூற்றுக்கால் மண்டபம் இரண்டாம் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது. அதற்கு முன்னால், கிழக்குப் பிராகாரத்தில் கம்பத்தடி மண்டபமும் நந்தி கோயிலும் காணப்படுகின்றன. தென்கிழக்கு மூலையில் ஞானசம்பந்தர் கோயில் அமைந்திருக்கின்றது.
சுவாமி கோயிலின் முதலாம் பிராகாரம் 250 அடி நீளமும் 150 அடி அகலமுங் கொண்டது. சந்நிதி கோபுரவாசல் வழியாக அதனுட் போகலாம். அதன் தெற்குப் பிராகாரச் சுவரோடு கூடிய சாலையில் 63 நாயன்மாரின் படிமங்கள் உள்ளன. வடமேற்கு மூலையில் சுந்தரேஸ்வரரின் எழுந்தருளியான

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 329
உற்சவமூர்த்தியின் பள்ளிபீடமான மதுரை நாயக்கர் சந்நிதானம் அமைந்துள்ளது. முதலாம் பிராகாரத்தின் வடக்குப் பக்கத்தில் எல்லாம் வல்ல சித்தரின் சந்நிதானம் அமைந்துள்ளது. கிழக்கிலுள்ள ஆறுகால் பீடத்தின் வழியே மகாமண்டபத்தை அடையலாம். அதிலமைந்துள்ள வெள்ளியம்பல சபையில் இடது காலை ஊன்றிய வண்ணம் தாண்டவம் புரியும் நடராஜரின் உருவம் காணப்படுகின்றது. மகாமண்டபத்திற்கும் கர்ப்பகிருகத்திற்கும் இடையில் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.
நாயக்க கோபுரவாசல் வழியாகச் சுவாமி கோயிலிருந்து வெளியே சென்றதும் ஒரு பெரிய முற்றத்தை அடையலாம். அதிலே பல மண்டபங்கள் காணப்படும். நாயக்க கோபுரத்தின் தெற்குப் புறமாகவுள்ள இரண்டாம் பிராகாரத்துக் கிழக்குச் சுவரின் சமீபத்திலே கல்யாண மண்டபம் உள்ளது. அதற்கும் நாயக்க கோபுரத்துக்கும் இடையிலே சுப்பராயர் மண்டபம் காணப்படுகின்றது. நாயக்க கோபுரம், கிழக்குக் கோபுரம் என்பவற்றிக்கு இடையிலே வீரவசந்தராய மண்டபம் அமைந்திருக்கின்றது. அதற்கு வடக்கிலே ஆயிரங்கால் மண்டபம் காணப்படுகின்றது. முத்துராம ஐயர் மண்டபம், கல்யாணசுந்தர முதலியார் மண்டபம், சேர்வைக்காரர் மண்டபங்கள் என்பன வீரவசந்தராய மண்டபத்திற்குத் தெற்கில் உள்ளன. கிழக்குக் கோபுரத்திற்கு வெளியே, வீதிக்கு அப்பால் திருமலை நாயக்கரின் திருப்பணியான புது மண்டபம் அமைந்திருக்கின்றது.
திராவிடக் கலைப்பாணியின் முழுமையான வளர்ச்சிக் கோலத்தை மதுரையிலே காண முடிகின்றது. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகக் கோயிற் கட்டடக் கலையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை அங்குள்ள கட்டடங்கள் பிரதிபலிக்கின்றன. பாண்டியப் பேரரசர் காலத்துக் கலைப்பாணியின் அம்சங்களும், விஜயநகர ராயர்களின் காலத்துக் கட்டட முறைகளும், அவர்களின் பின் வந்த நாயக்கர் கலைப்பாணியின் உன்னதமான வடிவங்களும் அங்கு அமைந்துள்ளன. பாண்டியர் காலத்துக் கட்டடங்கள் அங்கு மிகச் சிலவே உள்ளன. ஆயினும், பாண்டியர் காலக் கட்டட அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு மதுரைக் கோயில் வளர்ச்சி அடைந்தது என்பது கவனித்தற்குரியதாகும். கிழக்கு, மேற்குக் கோபுரங்களின் அடித்தளங்களிலும் கடக, பாலக கோபுரங்களிலும் பாண்டியர் கலைப்பாணியின் அம்சங்கள் தென்படுகின்றன. நேரான மூலைகளைக் கொண்ட கோபுர தளங்களும், பிற்காலத்திற்குரிய வளைவு கொண்ட

Page 179
330 நாயக்கர் கலைப்பாணி
மூலைகளோடு அமைந்த கோபுரங்களும் மதுரையில் உள்ளன. உட்கோபுரங்கள் எல்லாம் முதலாவது வகைக்குரியனவாகும். வெளிக்கோபுரங்கள் பொதுவாக இரண்டாவது வகையில் அமைந்துள்ளன.
விஜயநகர காலத் தூணமைப்புகள் மதுரையிலே தனிப் பண்புகளைப் பெற்று விடுகின்றன. ஒற்றைக் கல்லிலே நடுவிலுள்ள தூணோடு இணைந்திருக்குமாற் போல வேறு பல தூண்களையும் சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்குவது விஜயநகர கால வழமையாகும். அந்த வழமை கர்நாடக தேசத்திலும் தமிழகத்திலும் ஏற்பட்ட ஒன்றாகும். பொதுவாக நடுவிலமைந்த தூண் பிரமாண்டமான தோற்றமுடையதாகவும் சதுரமானதாகவும் அமைந்திருக்கும். அதனைச் சுற்றியமைந்த தூண்கள் உருண்டை வடிவினவாகவும் மெலிந்த தோற்றங் கொண்டனவாகவுங் காணப்படும். மதுரையிலே துணைத் தூண்கள் சதுரமாகவும் இடைவெளியின்றி முழுமையும் நடுத்தூணை ஒட்டியவிதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. விஜய நகர காலத்தில் மதுரையில் அமைக்கப்பட்ட மண்டபங்களிலுள்ள தூண்கள் யாவும் யாளித்தூண்களாக அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நாயக்கர் காலத்துச் சாலைத் தூண்களில் மட்டுமே பாய்மாவின் உருவங்கள் அமைக்கப்பட்டன.
சுந்தரேஸ்வரர் கோயில்
சுந்தரேஸ்வரர் கோயிலின் கர்ப்பகிருகம் சதுரமானது; ஒவ்வொரு பக்கமும் 33 அடி நீளமானது. அதன் தாங்குதளம் உபபீடம், அதிஷ்டானம் என்னும் பகுதிகளைக் கொண்டது. தெற்கு, மேற்கு, வடக்குப் புறங்களில் கர்ப்பகிருகச் சுவர்கள் 6 அடி நீளத்திற்குப் பிதுக்கமாகியுள்ளன. அவற்றிலே முறையே தகூழிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரின் படிமங்கள் உள்ளன. தேவகோட்டம் ஒவ்வொன்றினதும் இருபக்கங்களிலும் கோட்டங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோட்டத்திலும் பத்து அடி உயரங்கொண்ட யானையின் உருவம் வனப்பு மிகுந்த கோலத்துடன் விளங்குகின்றது. அவற்றின் அணிகலன்களிடையே வேறுபாடுகள் உள்ளன. சுந்தரேஸ்வரர் கோயில் இந்திரனுடைய கட்டளைப்படி விஸ்வகர்மாவினால் அமைக்கப்பெற்றது என்பது ஐதீகம், அதனால் அதனை இந்திர விமானம் என்பர். அட்ட திக்கஜங்கள் தாங்கி நிற்கும் கோலத்தில் விமானம் அமைந்துள்ளது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 33
கருவறை உட்புறத்திலே 11அடி சதுரமாகும். அதன் சுவர் 8 10"அகலங் கொண்டது. கருவறையின் நடுவிலே சுயம்புலிங்கமும், அதன் வடகிழக்கு மூலையில் மனோன்மணி அம்மனின் படிமமுங் காணப்படுகின்றன. கருவறைக்கும் 8 அடி அகலமுடைய அந்தராளத்திற்கும் நடுவில் 4 அடி நீளமான இடைவழி உண்டு. அந்தராளத்திற்குக் கிழக்கில் அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றின் அதிஷ்டானங்கள் ஒரே விதமானவை.
அர்த்த மண்டபத்துக்கு முன்னால் முகமண்டபம் அமைந்திருக்கின்றது. அவற்றிற்கிடையே கதவு அமைந்துள்ளது. அதன் மேலமைந்த தோரணத்திலே கஜலக்ஷமியின் வடிவம் உண்டு. கதவின் இரு பக்கங்களிலும் துவாரபாலகரின் கம்பீரமான உருவங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் அருகே, ஒரு பக்கத்தில் வல்லவ கணபதியின் உருவமும் மற்றப் பக்கத்தில் மயில்வாகனரான சுப்பிரமணியரின் வடிவமும் உள்ளன.
முகமண்டபத்துக்கு முன்பாகவுள்ள மகாமண்டபம் 85 அடி நீளமும் 55 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு பக்கத்துப் புறச்சுவரிலும் நான்கு தேவகோஷ்டங்கள் உள்ளன. மகாமண்டபத்துச் சுவர்களிலே திருவிளையாடற் புராணக் கதைகளைக் குறிக்கும் பல சுதைச் சிற்பங்கள் உள்ளன. மகாமண்டபத்திற்கு இரண்டு வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கிலே ஆறுகால் பீடம், வழியாக அமைந்துள்ளது. மற்றது தெற்குப் புறத்திலே சபாபதி சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்போரின் உருவங்கள் சபாபதி சந்நிதியின் சமீபத்தில் உள்ளன. சந்நிதியிலுள்ள ஆடவல்லாரின் படிமம் ஆறடி உயரமானது. அது வெள்ளிக்கவசம் பூண்டவண்ணமாய் உள்ளது. அம்மனின் ஸ்தானகக் கோல வடிவம் அருகில் அமைந்திருக்கின்றது.
ஆறுகால் பீடத்தின் அமைப்பு குறிப்பிடத்தக்க அளவிலே கவர்ச்சியானது. அதன் எண்கோணப்பட்டைத் தூண்களின் போதிகைகளிலே தாமரை மொட்டுப் போன்ற பூமுனைகள் காணப்படுகின்றன. தூண்களின் வேலைப்பாடு 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. பீடத்தின் படையொன்றிலே நாட்டியக் கோலத்தில் உள்ளவர்களின் உருவங்கள் வரிசையாக உள்ளன. அவை வெவ்வேறு கரணங்களின் விளக்கமாய் உள்ளன. அருகிலே வாத்தியகாரரின் உருவங்களுந் தெரிகின்றன. தாமரை வடிவங்கள் வரிசையாக அமைந்துள்ள கபோதத்தின் மேலே நடனக் கோலங்கள் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

Page 180
R? நாாக்கர் க912ப்பாக
மீனாகூவி அம்மன் கோயில்
மீனாகூதி அம்மன் கோயில் அதற்கு வடக்கிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயிலைக் காட்டிலுஞ் சிறியதாகும். அதன் சதுரமான கர்ப்பகிருகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றும் 25 அடி நீளமானது. அதன் அர்த்த மண்டபம் 45 அடி நீளமும் 25 அடி அகலமுங் கொண்டுள்ளது. கர்ப்பகிருகத்து வாசலின் மேலுள்ள தோரணத்தில் கஜவகர்ஷமியின் வடிவம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்துச் சுவர்கள் வெறுமையானவை. அதிலே தூண்கள் கானப்படவில்லை. அதன் வாபிற்புறத்தில் இருபக்கங்களிலும் நான்கு கரங்கள் பொருந்திய துவாரபாலகர் உருவங்கள் கானப்படுகின்றன.
கர்ப்பகிருகச் சுவர்களில் மூன்று பக்கங்களிலே தேவகோஷ்டங்கள் உள்ளன. அவற்றின் ஓரங்களிலே அரைத்தூண்களும் சிறு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகியோரின் படிமங்கள் முறையே தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலுமுள்ள நடுக் கோஷ்டங்களிலே தாபனமாகி உள்ளன.
மகாமண்டபத்தில் ஆறு தூண் வரிசைகள் உள்ளன. அதன் நடுவிலே விசாலமான இடைவழி அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு பக்கத்திலும் தூண்வரிசைகளுக்கிடையிலே மும்மூன்று அங்கணங்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவிலுள்ள தூண்கள் கரியமானரிக்க தேவர் ஆலயத்தூண்களைப் போன்றவை. அங்கணங்களோடு கூடிய தூண்கள்
சதுரமானவை.
பள்ளியறையும், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் கோட்டங்களும் வேலைப்பாட்டில் அம்மன் கோயிலை ஒத்தவை. மீனா கூதியம்மன் கோயிலின் வேலைப்பாடுகள் 15 ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணிக்குரியவை என்று ஆராய்ச்சியாளர் கருதுவர்.
மண்டபங்கள்
மதுரைக் கோயிலில் மண்டபம், திருச்சுற்றாலை, திருநடைமாளிகை என்னும் அமைப்புகள் வனப்புடன் விளக்குகின்றன. அவற்றின் கட்டட அமைப்புகளும் கவர்ச்சி மிக்க சிற்பங்களும் ஆலயத்தின் உன்னதமான கோலத்திற்கு உறுதுனை பாகின்றன. மண்டபங்களிலே கிளிகட்டி மண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், புது மண்டபம் என்னும் நான்கும்

நாயக்கள் கலைப்பாணி
மதுரை மீனாகூழியம்மன் கோயிற் பொற்றாமரைக் குளம்

Page 181
ற்
நீண் கோயி
|DL)
மதுரை மீனாசுதிய
கோபுரம்
க்
கிழக்கு
இன் கோயில்
ம்
Ll
山 ལྷོ་ s= 홍 *山 ==* 阅 蜀 5山
க் கோபுர
வடக்குக்
 

மதுரை மீனாகூழியம்மன் கோயில் மண்டபம்
மதுரை மீனாசுழியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம்

Page 182
Tup的) 환n日官部3&Mülu民院) 長m열m建常u&m Dug|홍n
 

மதுரை மீனாகூழியம்மன் கோயில் மேற்குக் கோபுரம் மேற்பகுதி
மதுரை மீனாகூழியம்மன் கோயில் வடக்குப் பிராகாரம்

Page 183
மதுரை மீனாகூழியம்மன் கோயில் மேற்குக் கோபுரம்
மதுரை மீனாசுழியம்மன் கோயில் தெற்குக் கோபுரம்
 

திருவரங்கம் திருவரங்கம் வெளிக் கோபுரம்
திருவாங்கம்

Page 184
திருவாங்கம் குதிரைத் தூண்
 

டி" {
தஞ்சை நாயக்கர் மண்டபம் தஞ்சை நாயக்கர் மாளிகை
தஞ்சை நாயக்கர் மாளிகை

Page 185
தஞ்சை நாயக்கர் மாளிகை
காஞ்சிபுரம் காமாசுழியம்மன்
கோயில் மூலஸ்தானம்
காஞ்சிபுரம் காமாசுழியம்மன் கோயிற் கோபுரம்
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் B
அதிவிசேடமானவை. கம்பத்தடி மண்டபம் கொடிக்கம்ப மண்டபம், சுந்தரேஸ்வரர் மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், என்னும் பெயர்களாலும் வழங்கும். அது நாயக்க கோபுரத்துக்கும் சந்நிதி கோபுரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள அம்மண்டபத்தில் நந்திபீடமும், இரண்டு கொடித்தம்பங்களும், பலிபீடமும் அமைந்துள்ளன. உன்னதமான சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய தனிக்கல்லில் அமைந்த எட்டுத் தூண்கள் அங்குள்ளன. ஒவ்வொரு தூணிலும் 24 சிவமூர்த்தங்களும் வனப்புமிக்க கோலத்துடன் விளங்கும் வண்ணமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ரிஷபாரூடர், ரிஷபவாந்திகர், மீனாகூழிசமேத கல்யாணசுந்தரர், சோமாஸ்கந்தர், கைலாசாரூடர், திரிபுராந்தகர் ஆகிய வடிவங்கள் சாலச் சிறந்தவை.
இரண்டாம் பிராகாரத்தின் வாயிலின் சமீபத்திலே, நாயக்க கோபுரத்தின் இரு பக்கங்களிலே 10 அடி உயரங்கொண்ட கடவுட் படிமங்கள் உள்ளன. ஊர்த்துவ தாண்டவர், அகோரவிரபத்திரர், அக்கினி வீரபத்திரர், காளி முதலியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நந்தி பீடத்திலுள்ள இடபம் இயல்பான அளவுடையது. அதன் தோற்றம் கம்பீரமானது. கொடித்தம்பங்களின் வேலைப்பாடும் செம்மையானது கம்பத்தடி மண்டபத்தின் விதானம் மிகவும் உயரமானது. அதிலுள்ள தூண்களும் மிகவும் பெரியவை நடுவிலுள்ள இரண்டு வரிசைகளிலுமுள்ள தூண்கள் நாற்கோன அமைப்புக் கொண்டவை. அவற்றிலே வனப்பு மிக்க சிற்பங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மூன்றாம் வரிசையிலுள்ளவை கூட்டுத் தூண்களாகும். அவற்றின் நடுவிலே பல்கோனப் பட்டைத் தூண்கள் உள்ளன. பிராகாரத்தின் கிழக்குச் சாலை ஞானசம்பந்தர் கோயிலுடன் இணைந்து விடுகின்றது. வடக்கில் அது நாயக்கன் மண்டபம் என்னும் நூற்றுக்கால் மண்டபத்தைச் சேருகின்றது.
கம்பத்தடி மண்டபம் பதினாறாம் நூற்றாண்டிலே கிருஷ்ன வீரப்ப நாயக்கரின் காலத்திலே (1572-1595) கட்டப்பெற்றது.
நாயக்க மண்டபம்
சுந்தரேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்து வடகிழக்கு
மூலையிலுள்ள நாயக்க மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். உயரிய பீடத்தில் அமைந்துள்ள அதனைக் கம்பத்தடி

Page 186
344 நாயக்கர் கலைப்பாணி
மண்டபத்திலிருந்து படிக்கட்டுகள் வழியே சென்று அடையலாம். அதிலே உயரங் குறைந்த தாங்குதளத்தில் அமைந்த சபாபதி கோட்டம் உள்ளது. அங்கு கல்லிலே செதுக்கப்பெற்ற நடராஜரின் பெரும் படிமம் காணப்படுகின்றது. அக்கோட்டத்திற்கு முன்னால் நான்கு தூண்கள் பொருந்திய சிறிய மண்டபம் உள்ளது. தூண்கள் கருங்கல்லில் அமைந்தவை; பளிங்கு போன்ற பளபளப்பான தோற்றங் கொண்டவை. எட்டுத் திக்கு யானைகளும் தாங்கி நிற்குமாப் போல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரின் படிமங்களும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீனாகூழி கலியாணத்தை விளக்கும் சிற்பங்கள் ஆலயத்தில் அமைந்துள்ளன. இம்மண்டபம் சின்னப்பன் என்பவனால் சக வருஷம் 1448 இல் (கி. பி. 1526) அமைக்கப்பெற்றதென்று திருப்பணி விவரம் என்பதிலே எழுதப்பட்டுள்ளது. குட்டி நாட்டுமல்லய சின்னப்பனால் அது கட்டப்பெற்றது எனத் திருப்பணிமாலை கூறுவதும் கவனத்திற்குரியதாகும்.
கிளிகட்டி மண்டபம்
அதில் அமைந்திருக்கும் அலங்கார வேலைப்பாடுகளின் காரணமாக மதுரையிலுள்ள மண்டபங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானதான கிளிகட்டி மண்டபம் பொற்றாமரைக் குளத்திற்கு மேற்கில் உள்ளது. அதனுடாக மீனாகூரி அம்மன் கோயிலுக்குப் போகலாம். அது இரு வரிசைகளிலே தூண்கள் பொருந்திய சாலை போன்ற அமைப்புடையதாகும். தூண்களிற் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிகவுஞ் சிறப்பானவை. பஞ்சபாண்டவர், திரெளபதி ஆகியோரின் உருவங்கள் அவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. கிராத வேடத்திற் சிவனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வாலி, சுக்கிரீவன் என்போரின் உருவங்களும் அங்குள்ளன. பல தூண்களில் யாளி உருவங்கள் அமைந்துள்ளன. மண்டபத்தை அடுத்துள்ள அம்மன் சந்நிதானத்தின் வாசலின் இருபக்கங்களிலும் துவாரபாலகரின் உருவங்கள் மிகவும் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே இரண்டு கைககள் மட்டுமே அமைந்துள்ளன.
கிளிகட்டி மண்டபம் பஞ்சபாண்டவர் மண்டபம் என்றும் புருஷாமிருக மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். சிராமலை செவ்வந்திமூர்த்திச் செட்டியின் மகனாகிய திருவம்பல செட்டியால் இம்மண்டபம் கட்டப்பெற்றது என்பதைத்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 345
திருப்பணிமாலை மூலம் அறிய முடிகின்றது. விஜயநகர இராசப்பிரதானியான திம்மய்ய நாயக்கராற் புருஷாமிருக மண்டபம் அமைக்கப்பட்டதென்ற குறிப்பும் திருப்பணி விவரம், திருப்பணிமாலை என்பவற்றிலே காணப்படுகின்றது. எனவே புருஷாமிருக மண்டபம் தனியானவொரு அமைப்பாக முற்காலங்களிலே கொள்ளப்பட்டதென்று கருதலாம்.
கிளிகட்டி மண்டபத்து விதானமும் தூண்களும் ஒளிமிகுந்த வண்ண ஒவியங்களுடன் விளங்குகின்றன. சைவசமயம் தொடர்பான சிற்ப லக்ஷணங்களின் விளக்கமாக அவை அமைந்துவிடுகின்றன. பலவிதமான சிவனின் மூர்த்தங்களும் விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் முதலியோரின் உருவங்களும் அங்கு வரையப்பெற்றுள்ளன.
ஆயிரங்கால் மண்டபம்
அளவிற் பெரியதான ஆயிரங்கால் மண்டபம் ஆதிவீதியில் அமைந் திருக்கின்றது. அதன் வடக்கு, கிழக்குப் பக்கங்கள் வெளிப்பிராகாரச் சுவருக்கு அண்மையில் உள்ளன. 250 அடி நீளமும் 240 அடி அகலமுங் கொண்ட அம்மண்டபத்தில் எல்லாமாக 985 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றின் வேலைப்பாடு விஜயநகர கலைப்பாணிக்குரியதாகும். மண்டபம் தெற்கு நோக்கியது. வாயிற்புறத்தினூடாகச் சென்றதும் தெற்கு வடக்காகப் பெருவெளி காணப்படுகின்றது. அதன் ஒரங்களிலே இரு தூண்வரிசைகள் உள்ளன. அதற்கு மேற்கிலும் கிழக்கிலும் தூண்வரிசைகள் பொருந்திய பகுதிகள் உள்ளன. மண்டபத்தின் நடுவிலே, வடக்குப் புறத்திலே, சபாபதி அரங்கம் அமைந்திருக்கின்றது. அதிலே கூர்மபீடத்தை ஆதாரமாகக் கொண்ட தாண்டவ மூர்த்தியின் பேருருவம் அமைந்திருக்கின்றது. அதன் தாங்குதளம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. சபாபதி அரங்கத்திற்குப் போகும் வழியில் யாளித்துரண்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால்மண்டபத்தின் சிறப்பம்சம் அதன் தூண்களிற் காணப்படும் சிற்ப வேலைப்பாடாகும். பிரமாண்டமான உருவங்கள் செதுக்கப்பட்ட அலங்காரமான சிற்பங்கள் வேறு பல இடங்களிலுங் காணப்படுகின்றன. ஆயினும், இம்மண்டபத்திலே காணப்படும் சிற்பங்கள் பல தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதிற் காணப்படும் கடவுட் படிமங்கள் சிற்பநூல்களிற் கூறப்படும்

Page 187
346 நாயக்கர் கலைப்பாணி
பிரதிமாலக்ஷணங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டவை. ஆயினும், அவை உயிரோட்டமான கோலங் கொண்டவை. அங்கலகூடிணங்களின் அளவுப் பிரமாணங்கள் இயல்பான உருவங்களில் உள்ளவற்றைப் போன்றவை. மதுரையிலுள்ள தூண்கள் கருங்காலி போன்ற கருமையான கற்பாளங்களில் உருவாக்கப்பட்டவை. அவற்றிலே செதுக்கப்பெற்ற சிற்பங்கள் எண்ணைய் பூசினாற் போலப் பளபளப்புடன் மிளிர்கின்றன. அவற்றின் முகபாவங்களும், அங்காபிநயங்களும், ரஸபாவங்களும் வரைவிலாத வனப்புக் கொண்டவை.
முதலிரு வரிசைகளிலுள்ள தூண்களில் அங்கம் வெட்டின சிவன், கங்காள மூர்த்தி, கண்ணப்ப நாயனார், அரியநாத முதலியார், அரிச்சந்திரன், சந்திரமதி, குறத்தி, குறவன் முதலியோரின் உருவங்கள் இணையிலாத வகையில் வடிக்கப்பெற்றுள்ளன. இரண்டாம் வரிசையிலுள்ள தூண்களில் பாண்டியராசர், திரிபுராந்தகர், கணேசர், சுப்பிரமணியர், நாகராஜர், சரஸ்வதி, துவாரபாலகர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. மோகினி, பிச்சாடனர், அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், காளி, திரெளபதி, முதலியோரின் சிற்பங்கள் நடு வரிசைத் தூண்களிலே அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபத் தூண்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்த கூட்டுத் தூண்களாகும். நடுவிலுள்ள பிரதானமான தூண்கள் பூமுனை பொருந்திய போதிகைகளுடன் காணப்படுகின்றன. மேற்குப் பக்கத்திலுள்ள மண்டபத்தின் அடித்தளத்திலே புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபம் அரியநாத முதலியாரின் திருப்பணியாகும். அவர் முதல் நான்கு நாயக்க மன்னரின் காலங்களிற் சேனாதிபதியாகவும் அமைச்சராகவும் கடமை புரிந்தவர். அரியநாத முதலியாரின் படிமமொன்று முன்வரிசையிலுள்ள தூணொன்றில் அமைக்கப்பெற்றுள்ளது. திருப்பணி விவரம், திருப்பணி மாலை என்பவற்றிலுள்ள குறிப்புகளினால் அம்மண்டபம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரின் காலத்தில், கி. பி. 1572 ஆம் ஆண்டிலே கட்டி முடிக்கப்பெற்றது என்பதனை அறிய முடிகின்றது.
புது மண்டபம்
உன்னதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள புதுமண்டபம்
திருமலை நாயக்கர் காலத் திருப்பணியாகும். அது கி. பி. 1626-1633 ஆகிய காலப்பகுதியிலே கட்டி முடிக்கப் பெற்றது. அது 320 அடி நீளமும் 105 அடி

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 347
அகலமுங் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரத்துக்கு முன்னால் அமைந்திருக்கும் புது மண்டபம் ஒரு நெடுஞ்சாலை போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. நீளப்பாட்டில் அதன் நடுவில் ஒர் இடைவழி அமைந்துள்ளது. அதனிரு பக்கங்களிலும் இவ்விரு அங்கணங்களைக் கொண்ட சாலைகள் காணப்படுகின்றன. மண்டபத்தில் நான்கு தூண் வரிசைகள் உள்ளன. நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ள நான்கு வகையான தூண்கள் அங்குள்ளன. அவற்றுட் கூட்டுத் தூண்கள் ஒரு வகையினவாகும். யாளித் தூண்கள் இரண்டாம் வகையினைச் சேர்ந்தவை. மூன்றாம் வகையிலுள்ளவை கடவுட் படிமங்கள் செதுக்கப்பட்டவை. மன்னர்களதும், பிரதானிகளதும், மனிதர் பிறரதும் உருவங்களைக் கொண்ட தூண்கள் நான்காவது வகைக்குரியவை.
புதுமண்டபத்தின் மேற்குப் பகுதியில் வசந்த மண்டபம் என்று சொல்லப்படும் பகுதி உண்டு. அதில் ஒரு தளத்தில் நிறுவப்பட்ட கருமையான, பளபளப்பான தூண்களின் மேல் விதானமொன்று அமைந்திருக்கின்றது. உற்சவ காலத்திற் சில சமயங்களிலே மீனாகூழி சமேதரான சுந்தரேஸ்வரரின் எழுந்தருளி விக்கிரகம் அங்கு வைக்கப்படும். விஸ்வநாதர் முதலாகத் திருமலை நாயக்கர் வரையுள்ள மன்னர்களின் உருவங்கள் மத்தியிலுள்ள இரண்டு வரிசைகள் ஒவ்வொன்றிலுமுள்ள ஐவைந்து தூண்களிலே அமைக்கப்பட்டுள்ளன. குதிரைத் தூண்களும் யாளித்துண்களும் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள வரிசைகளிற் காணப்படுகின்றன.
அஷ்ட சக்தி மண்டபம்
மீனாகூழி அம்மன் கோயிலுக்கு நேராக அமைந்திருக்கும் அஷ்ட சக்தி மண்டபம் இந்நாட்களிற் பிரதான நுழைவாயிலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதன் முன்புறத்திலே அளவிற் பெரிதான கோபுரவாசல் அமைந்திருக்கின்றது. பக்கச் சுவர்களின் மேற்பகுதியில் விநாயகரதும் சண்முகரதும் படிமங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இரண்டு தூண்வரிசைகள் அமைந்துள்ளன. முதலாகவுள்ள தூண்களில் அஷ்டசக்திகளின் உருவங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இரண்டாம் வரிசைத் தூண்களில் நாயக்க மன்னர் நால்வரின் பிரதிமைகள் காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரை வில்வளைவான அமைப்புடையது. விதானத்திலே அம்மனுக்குரிய யந்திரங்கள் ஐந்தும், அவற்றைச் சுற்றி மலர் வடிவங்களும் வண்ண ஒவியங்களாக

Page 188
348 நாயக்கர் கலைப்பாணி
வரையப்பெற்றுள்ளன. மண்டபத்தின் மேற்கெல்லையில் மகாகணபதி, சண்முகர் ஆகியோரின் படிமங்கள் உன்னதமான கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அஷ்டசக்தி மண்டபம் திருமலை நாயக்கரின் அந்தப்புரப்பெண்ணொருத்தியாற் கட்டப்பெற்றது என்பர்.
மீனாகூவி நாயக்க மண்டபம்
வீரவசந்தராய மண்டபம் கிழக்குக் கோபுரத்தை ஒட்டி அமைந்திருக்கின்றது. அது அளவுப் பிரமாணங்களிற் புதுமண்டபத்தை ஒத்ததாகும். அதன் நடுவில் இடைவழியும் ஒரங்களிலே சாலைகளும் அமைந்துள்ளன. வரிசைகளாக அமைந்துள்ள தூண்கள் கூட்டுத் தூண்களாகும். அவை பலவகையான வேலைப்பாடுகள் கொண்டவை. அவை தாங்கி நிற்கும் கூரை நீளமான கற்பாளங்களினால் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பக்கத்திலுள்ள தூண்களில் உருத்திரன், உருத்திரகாளி, காலகரமூர்த்தி, முதலியோரின் உருவங்கள் தூண்களிற் செதுக்கப்பட்டுள்ளன. விதானத்திலே தாமரைமலரும் நாட்டியக்காரரின் வடிவங்களும் கவர்ச்சி மிக்க கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரவசந்தராய மண்டபம் திருமலை நாயக்கரின் சகோதரரான முத்துவீரப்பநாயக்கரின் திருப்பணியானது என்று திருப்பணி விவரம் கூறும். அது சகவருடம் 1533க்குச் சமமான கி. பி. 1611 இலே கட்டி முடிக்கப்பெற்றது.
முதலிப்பிள்ளை மண்டபம்
சித்திர கோபுரத்துக்கும் பொற்றாமரைக்குளத்தின் வடகிழக்குமூலைக்கும் இடையில் அமைந்துள்ள முதலிப்பிள்ளை மண்டபம் வெளிச்சமின்றி இருட்டாயிருப்பதாற் கரிய மண்டபம் என்றுஞ் சொல்லப்படும் அதிலே சித்திர வேலைப்பாடுகள் அமைந்த பன்னிரண்டு தூண்கள் உள்ளன. அவற்றிலே பிச்சாடனர், மோகினி என்போர் பற்றிய புராணக்கதை வடிவமான சிற்பங்கள் சிறப்பான முறையிலேசெதுக்கப்பட்டுள்ளன. ஆறாவது தூணிலே அமைந்திருக்கும் சிற்பம்மண்டபஸ்தாபகரின் கோலமானது என்று கருதலாம். சித்திர கோபுரத்தைக் கட்டிய கடந்தை முதலியார் இம்மண்டபத்தை அமைப்பித்தாரென்று திருப்பணி விவரம், திருப்பணிமாலை என்பன குறிப்பிடுகின்றன.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 349
சேர்வைக்கார மண்டபம்
வீரவசந்தராய மண்டபம், மீனாகூழிநாயக்க மண்டபம் ஆகியவற்றிற்கு இடையிலமைந்த முற்றத்திலே நவீன கால அமைப்புகளான முத்துராம ஐயர் மண்டபம், கல்யாணசுந்தர முதலியார் மண்டபம், மீனாகூழிநாயக்க மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. அவை அளவிற் சிறியனவாயினும் அழகிய வேலைப்பாடுகள் பொருந்தியனவாகக் காணப்படுகின்றன. தூணமைப்புகளே அவற்றின் பிரதானமான சிறப்பம்சமாகும். அவற்றின் தூண்கள் உயரமானவையாகவும் மெலிந்த தோற்றத்துடனும் அமைந்துள்ளன. அவற்றின் பூமுனை பொருந்திய போதிகை வனப்புமிக்க கோலமானவை.
ஆதி வீதியிலும் அழகான சிறிய மண்டபங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு மூலையிற் காணப்படும் ஆறுமுத்த முதலிமண்டபம் கி.பி.1760 ஆம் ஆண்டளவிலே கட்டப்பெற்றதாகும். வெங்கடேஸ்வர முதலியாரின் திருப்பணிகளான தென்மேற்கிலுள்ள திருமச்சி நாயக்க மண்டபம், வடகிழக்கிலுள்ள தட்டுச் சுற்று மண்டபம் என்பன குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள மண்டபங்களிற் காலத்தால் முற்பட்டது பெச்சக்கால் மண்டபம் என்பதாகும். அது கி.பி. 1658 ஆம் ஆண்டளவிலே பெச்சியக்கா என்னும் பெண்ணால் அமைப்பிக்கப்பெற்றது.
கல்யாண மண்டபம்
கல்யாண மண்டபம் சுந்தரேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்துக் கிழக்கு மதிலை ஒட்டி அமைந்திருக்கின்றது. அது அமைக்கப்பட்ட பொழுது சுவர்களின்றிக் காணப்பட்டது. அதிலே தோரணங்கள் அமைந்துள்ளன. அதன் நடுவிலே கருமையான கற்றுாண்கள் பொருந்திய பெரும் பீடம் அமைந்துள்ளது. அதன் மேலான விதானம் மரத்தால் அமைக்கப்பட்டதாகும். அதில் உன்னதமான வேலைப்பாடுகள் உள்ளன. கல்யாண மண்டபம் விஜரங்க சொக்கநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது. வருடாந்த உற்சவமான மீனாகூழி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அங்கு நடைபெறுவது வழமை. குண்டோதரனின் வடிவமொன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது.

Page 189
350 நாயக்கர் கலைப்பாணி
அன்னக்குளி மண்டபம்
மேலைக்கோபுரத்திற்கு மேற்கிலே இம்மண்டபம் காணப்படுகின்றது. அது நான்கு சிறிய மண்டபங்கள் அடங்கிய தொகுதியாகும். அதன் முகப்பிலே நான்கு பெரிய யானைகளின் கல்லுருவங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் போன்ற உருவங்கள் சுந்தரேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்திலுள்ள திருஞானசம்பந்தர் சந்நிதியிலுங் காணப்படுகின்றன. இங்குள்ள மூன்றாவது மண்டபத்தில் யாளித்துரண்கள் அமைந்துள்ளன. யாளி உருவங்கள் கட்டையானவை; மெலிந்த தோற்றங் கொண்டவை. அவை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளவற்றைப் போன்றனவாகும். தெற்கிலும் வடக்கிலும் அமைந்திருக்கும் நடுத்தூண்களிற் பிரமன், விஷ்ணு ஆகியோரின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்காவது மண்டபத்தில் அழகான வேலைப்பாடுகள் அமைந்துள்ள கூட்டுத்தூண்கள் உள்ளன. தெற்கிலுள்ள தூண்களிலே பாண்டியராசர், வியாக்கிரபாதர், சாமரை தாங்குபவர், பிரம்மா ஆகியோரின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல வடக்கிலுள்ள தூண்களில் விஷ்ணு, பதஞ்சலி முனிவர், அரசி என்போரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்திற் காணப்படும் சிற்பங்கள் கலைவனப்பில் உன்னதமானவை. அங்கலகூடிணங்களையும், உணர்ச்சி பாவங்களையும் அணியலங்காரங்களையும் கலைஞர் வெளிப் படுத்தியிருக்கும் கோலம் அற்புதமானது.
கோபுரங்கள்
மதுரைக் கோபுரங்கள் வானோங்கு கோபுரங்கள். அவை நெடுநிலைக் கோபுரங்கள், அழகு மிகுந்தவை; வேலைப்பாட்டில் உன்னதமானவை; அவற்றுக்கு நிகரானவை வேறெங்குங் காணப்படுவதில்லை. பாண்டியர்கள் உருவாக்கிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு சில கோபுரங்கள் பிற்காலத்திலே கட்டப்பெற்றன. வேறு சில பாண்டியர்களாற் கட்டிமுடிக்கப்பெற்றவை. மற்றக் கோபுரங்கள் அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பிற்காலங்களிலே கட்டப்பெற்றவை, அவற்றிலே கூடம், பஞ்சரம், சாலை என்னும் அமைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. வெளிக்கோபுரங்கள் எல்லாம் ஒன்பது தளங்களோடு அமைந்தவை. அவை ஒவ்வொன்றும்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 35
ஏறக்குறைய 150 அடி உயரமானவை. அவை எல்லாம் மேனோக்கிய உட்சரிவான வளைவுகளுடன் அமைக்கப்பெற்றுக் கவர்ச்சி மிகுந்த கோலத்துடன் விளங்குகின்றன.
வெளிக்கோபுரங்களிற் கீழைக்கோபுரமே மிகவும் புராதனமானதாகக் கொள்ளப்படுகின்றது. அது காலாகாலமாகப் புனர்நிர்மாணம் பெற்றுள்ளது. அதன் புராதனமான அம்சங்கள் அடிப்பாகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அதிலுள்ள தேவகோட்டங்களும், மாடக்குழிகளும், கூடுகளும் சீர்குலைந்த நிலையிற் காணப்பட்டன.
கீழைக் கோபுரத்தின் தாங்குதளம் கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதி செங்கல் வேலைப்பாடாகும். அதன் வாசலிலுள்ள கதவு 35 அடி உயரமானது. கோபுர தளங்கள் ஒவ்வொன்றிலும் கூடம், சாலை, பஞ்சரம் என்பன வரிசைக் கிரமமாய் அமைந்துள்ளன. திருவிளையாடற் புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட சுதைச் சிற்பங்கள் தளங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் புனராக்கஞ் செய்யும் பொழுது நவீனகாலக் கட்டடப் பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
கோபுர வாசலில் இரண்டு சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றின் வாசகங்கள் மேல்வருமாறு அமைந்துள்ளன: 1 திரிபுவனச்சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான்
சுந்தரபாண்டியன் திருக்கோபுரம். 2. திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான்
அவனிவேந்தராமன் திருக்கோபுரம். அவனிவேந்தராமன் என்பது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் (1251-1268) விருதுப் பெயர்களில் ஒன்றென்பதால் இரு சாசனங்களும் சுந்தரபாண்டியனையே குறிப்பிடுகின்றன என்பது தெளிவாகும். கோபுரம் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது என்றும், அதனால் அது அவன் பெயரால் வழங்கியது என்றுங் கொள்வதற்கு இச்சாசனங்கள் ஆதாரமாகின்றன. சுவாமி கோயிலுக்குரிய கோபுரம் சக வருடம் 140 இல் (1218) சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது என்ற குறிப்பு திருப்பணி விவரத்தில் உண்டு. சுந்தரபாண்டிய கோபுரம் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பட்டதென்று திருப்பணிமாலை கூறும். கீழைக் கோபுரத்திற் பாண்டியரின் இலச்சினையாகிய இணைக்கயல் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

Page 190
352 நாயக்கர் கலைப்பாணி
கோபுரம் தொடர்பான திருப்பணி வேலைகள் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தொடங்கிவிட்டன என்றும் அது பதின்மூன்றாம் நூற்றாண்டிலே சடையவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்திலே கட்டி முடிக்கப்பெற்றது என்றும் கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1230), சடையவர்மன் குலசேகரன் (1236 -), சடையவர்மன் குலசேகரன் (190-) ஆகியோரின் சாசனங்கள் இரண்டாம் தளத்தில் உள்ளன.
மேலைக் கோபுரம்: ஒன்பது தளங்களோடு அமைந்துள்ள மேலைக்கோபுரம் 14 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஆதி வீதியிலுள்ள ஒன்பது தளங்களோடு கூடிய மேலைக் கோபுரத்தைப் பராக்கிரம பாண்டியன் அமைப்பித்தான் என்று திருப்பணி விவரத்திலே கூறப்பட்டுள்ளது. திருப்பணி மாலையும் அவ்வாறே கூறுகின்றது. கோபுரத்தின் அதிஷ்டானம் நிலத்திலே புதைந்துவிட்டது. புராணக்கதை விளக்கமான சிற்பங்களும் கடவுட் படிமங்களும் கோபுர தளங்களிலே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே திருப்பாற்கடலைக் கடையும் காட்சியும் ரிஷபாரூடரின் கோலமும் மிகுந்த சிறப்புடையவை.
தெற்குக் கோபுரம் தெற்குக் கோபுரம் சிராமலை செவ்வந்தி என்பாரின் திருப்பணியானதென்று திருப்பணி விவரம், திருப் பணிமாலை என்பவற்றிலே சொல்லப்படுகின்றது. அது கி. பி. 1478 ஆம் ஆண்டளவிலே கட்டப்பெற்றது. அது விஜயநகர கலைப்பாணியில் அமைந்தது என்பது வரலாற்றுக் குறிப்புகளாலும் கட்டட வேலைப்பாடுகளாலும் உணரப்படும். தென்கோபுரமான பணியாரக்கடைக் கோபுரத்தைப் பெரிய செவ்வந்திலிங்கம் செட்டி கட்டினார் என்று பூgதாள என்னும் நூலிலே எழுதியுள்ளனர்.
தாங்குதளத்தின் நிலைகள் இரண்டும் கருங்கல்லால் அமைக்கப்பட்டவை. மேற்றளங்கள் செங்கல் வேலைப்பாடானவை. கோபுரத்தின் தோற்றம் உன்னதக் கோலமானது. பொற்றாமரைக் குளத்துக்குச் சமீபமாக அமைந்திருப்பதால் அது மிகுந்த வனப்புடன் விளங்குகின்றது. அதன் அரைத் தூண்களின் அடியில் யாளி வடிவங்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளன.
வடக்குக் கோபுரம்: ஒன்பது தளங்களைக் கொண்ட வடக்குக் கோபுரத்திலே அண்மைக் காலம் வரை சிகரம் கட்டப்பெறாமையால் அது மொட்டைக் கோபுரம் என்று சொல்லப்படும். 19ஆம் நூற்றாண்டிலே அதன்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 353
சிகரம் நாட்டுக்கோட்டைச் செட்டிகளாற் கட்டுவிக்கப்பட்டது. பீடத்திலுள்ள தளங்கள் இரண்டும் கல்லினாற் கட்டப்பெற்றவை. கோபுரத்தின் அமைப்பும் வேலைப்பாடும் தெற்குக் கோபுரத்தின் அம்சங்களை ஒத்திருக்கின்றன. தேவகோட்டங்களிலே குறுந்துாண்கள் அமைந்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். அதிலுள்ள தூண்களின் கபோதங்களிற் புஷ்பபோதிகைகள் காணப்படுகின்றன. அது 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரிய கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளது. கிருஷ்ண வீரப்ப நாயக்கரின் காலத்தில் அது கட்டப்பெற்றது என்பதைத் திருப்பணி விவரம் மூலமாக அறியமுடிகின்றது.
புது மண்டபத்திற்குக் கிழக்கிலுள்ள இராயகோபுரத்தின் தாங்குதளம் கீழைக்கோபுரத்தில் உள்ளதைக் காட்டிலும் இருமடங்கு விசாலமானது. அது 200 அடி நீளமும் 120 அடி அகலமுங் கொண்டது. அதன் நிர்மாண வேலைகள் திருமலை நாயக்கரின் காலத்தில் ஆரம்பித்தன. அதிலே 50 அடிக்கு மேலான உயரமுடைய பிரமாண்டமான தூண்கள் அமைந்திருக்கின்றன. அதிஷ்டானத்திலே அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளன. மாடத் தூண்கள் அளவிற் பெரியவை. அரைத்துரண்களிலே யாளி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரதும் அவரது தேவியரதும் பிரதிமைகள் பல அதிலே உருவமைக்கப்பட்டுள்ளன. மீனாகூழியின் பட்டாபிஷேகக் காட்சி சுவரிலே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
வெளிக்கோபுரங்களைத் தவிரக் கோயில் வளாகத்தில் எட்டு உட்கோபுரங்கள் உள்ளன. அவற்றுட் சித்திரக் கோபுரம் ஏழு தளங்களைக் கொண்டுள்ளது. ஏனையவை அதனிலுஞ் சிறியனவாகும். மீனாகூழி அம்மன் கோயிலுக்கு முன்னால் அமைந்திருக்கும் சித்திரக் கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டளவிலே அரியநாத முதலியாரின் மகனாகிய காளத்தி முதலியாராற் கட்டப்பெற்றது. அதன் தளங்கள் பொருத்தமான அளவுப் பிரமாணங்களுடனும் வனப்பு மிக்க கோலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமி கோயிலின் முன்னால் அமைந்த நாயக்க கோபுரம் 16 ஆம் நூற்றாண்டிலே கட்டப்பெற்றது. அரசரின் தர்மமாக அச்சுத ராயரின் (15291542) அடப்பமான ஈஸ்வரப்பவின் மகனான லிஸ்வப்ப என்பவரால் அது கட்டப்பெற்றதென்று சாசனக் குறிப்புண்டு. அது ஐந்து தளக் கட்டடமாகும். சுவாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையிலே காணப்படும்

Page 191
354 நாயக்கர் கலைப்பாணி
ஐந்துதளக் கோபுரமான நடுக்கட்டுக் கேபுரமும் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிற் கட்டப்பெற்றதாகும். நடுக்கட்டுக் கோபுரத்தின் கோஷ்டங்களில் அமைந்திருக்கும் நடராஜ வடிவமும் சண்முகரின் படிமமும் மிகவும் அழகானவை. நாயக்க கோபுரத்திலுள்ள வைரவர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்களுஞ் சாலச் சிறந்தவை. கி.பி. 1559 ஆம் ஆண்டுக்குச் சமமான சக வருடம் 1481 இல் நடுக்கட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டதென்று திருப்பணி விவரத்திலே எழுதப்பட்டுள்ளது. அது செவ்வந்திமூர்த்தியால் அமைக்கப்பட்டதாகும்.
மதுரையிலுள்ள கோபுரங்கள் எல்லாவற்றிலும் கடககோபுரமே மிகப் பழமையானது போலத் தெரிகின்றது. அதன் வேலைப்பாடுகளின் அடிப்படையில் அதனைப் 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கட்டடமாகக் கொள்ள முடிகின்றது. அம்மன் கோயிலின் மேற்கு வாசலிலுள்ள அக்கோபுரம் 16 ஆம் நூற்றாண்டிலே புனரமைக்கப்பட்டது என்று கொள்வதற்கான காரணம் உண்டு. சுவாமி கோயிலின் மேற்கு வாசலில் அமைந்திருக்கும் பாலக கோபுரம் கடக கோபுரத்தைப் போன்ற அமைப்பாகும். சக வருடம் 1296 (கி.பி. 1374) இல் அதனை மல்லப்பன் என்பவர் அமைப்பித்தார் எனத் திருப்பணி விவரத்தில் எழுதப்பட்டுள்ளது. அதிலுள்ள கூடுகள் பாண்டியர் கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளன. அதன் பூதகண வரிசையும் கொடுங்கை மேல் அமைந்துள்ள வியாளவரியும் கடக கோபுரத்தில் உள்ளவற்றைப் போன்றவை. பாலக கோபுரத்தை முன்மாதிரியாகக் கொண்டு நவீன காலத்துக் கோபுரங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.
சின்ன மொட்டைக் கோபுரம் சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. நாயக்க கோபுரம், நடுக் கட்டுக் கோபுரம் என்பவற்றை அது பல அம்சங்களில் ஒத்திருக்கின்றது. அது கி.பி.1560 ஆம் ஆண்டளவிலே செவ்வந்திவேலன் என்பவராற் கட்டப்பெற்றது என்பர். அதன் கட்டட வேலைப்பாடுகள் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியவை.
சந்நிதி கோபுரங்கள் இரண்டும் பழமையானவை. சுவாமி கோயிற் சந்நிதி கோபுரத்திலே 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கலைப்பாணியின் அம்சங்கங்கள் காணப்படுகின்றன. மீனாகூழி அம்மன் கோயிலுக்குரிய சந்நிதி கோபுரம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய கலைப்பணியின் அம்சங்களைக் கொண்டுள்ளது. கோபுர அமைப்பானது பாண்டியப் பேரரசர் காலம் முதலாக நவீன காலம் வரை அடைந்த பரிணாம வளர்ச்சிய்ை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான அம்சங்கள் மதுரையில் உள்ளமை குறிப்பிடற்குரியது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 355
திருப்பரங்குன்றம்
ஆறு படைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் ஏறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களாக நிலைபெற்று வந்துள்ள புராதனமான வழிபாட்டுத் தலமாகும். அது மதுரைக்குத் தென்மேற்கில் நான்கு மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. விஜயநகர - நாயக்கர் காலங்களிலே திருப்பரங்குன்றத்திலே பல மண்டபங்களும் கோபுரமும் அமைக்கப்பெற்றன. நாயக்கர் கலைப்பாணிக்குரிய பல சிறப்பம்சங்களை அவற்றிலே காணமுடிகின்றது.
கர்ப்பகிருகத்தின் முன்னால் அமைந்துள்ள 'அர்த்த மண்டபம் நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. அதன் தூனொன்றிலே திருமலை நாயக்கரின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளதால் அம்மண்டபம் அவரின் திருப்பணியானதென்று கருதலாம். அதற்கு முன்னால் மகாமண்டபமும் கம்பத்தடி மண்டபமும் உள்ளன. நாயக்க மன்னர் இருவரின் உருவங்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ளன. அவை அடையாளங் காணப்படவில்லை. அதிற் பராசரர், வேதவியாசர் ஆகியோரின் படிமங்கள் உன்னதக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பத்தடி மண்டபத்தின் கீழே திருவாசி மண்டபம் அமைந்துள்ளது. அதன் வாசற்படிகளின் ஓரங்களிலே குதிரை உருவஞ் செதுக்கப்பட்ட சிறு கற்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைகளின் சிற்பங்களுக்குப்பின்னாற் சக்கரங்களின் வடிவங்கள் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபத்திலே திருவிளையாடற் புராணக் காட்சிகள் சிற்பங்களாகத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிவன் தாயின் வடிவங் கொண்டு, தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டுங் காட்சி, புலி மான் குட்டிகளுக்குப் பாலூட்டுதல், மீனாகூழியின் திக்விஜயம், மீனாகூஜி திருக்கல்யாணம், சுவரதேவரின் உருவம், ஊர்த்துவதாண்டவக் கோலம் முதலியன சிறிய வடிவங்களாய் அமைந்துள்ளன.
திருவாசி மண்டபத்திற்கு நேராக வசந்த மண்டபம் உள்ளது. வசந்த மண்டபத்துக்குப் போகும் வழியில் அஷ்டசக்திகளில் நால்வரின் உருவங்கள் காணப்படுகின்றன. முத்தம்பல முதலியாரின் அழகிய படிமம் ஒன்றும் அங்குள்ளது. திருவாசி மண்டபத்தின் முன்னால் விஜயநகரப் பாணியிலமைந்த ஏழுநிலைக் கோபுரம் அமைந்திருக்கின்றது. அதன்

Page 192
356 நாயக்கர் கலைப்பாணி
அதிஷ்டானத் தளங்கள் இரண்டும் கல்லினால் அமைக்கபட்டவை. அதன் மேலுள்ள கூடம், பஞ்சரம், சாலை என்பவை நேர்த்தியாக அமைந்துள்ளன. அதன் சுவர்களிலே மாடக்குழிகளும், அவற்றின் அருகிலே அரைத்தூண்களும் குறுந்துாண்களும் உள்ளன. கோபுரமும் திருமதிலும் விஸ்வநாத நாயக்கரின் பேரனான கிருஷ்ண வீரப்ப நாயக்கராற் கட்டப்பெற்றவை என்பது கோபுரத்திலுள்ள சாசனங்கள் இரண்டின் மூலம் அறிய முடிகின்றது. அச்சாசனங்கள் சகவருடம் 1505 இல் (கி. பி. 1583) எழுதப்பட்டவை.
கோபுரவாசலைக் கடந்ததும் ஆஸ்தான மண்டபத்தை அடையலாம். அது 116 அடி நீளமும் 94 அடி அகலமுங் கொண்டது. அதில் 25 அடி உயரமான 48 தூண்கள் உள்ளன. முன்வரிசையிலுள்ள தூண்களிற் குதிரை வடிவங்களும் சிலவற்றிலே யாளி உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நடராஜர், மீனாகூழி, பதஞ்சலி, வியாக்கிரபாதர், ஊர்த்துவ தாண்டவர், காளி ஆகியோரின் படிமங்கள் தூண்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மண்டபத்தின் நடுவிலுள்ள அங்கணத்திலே அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியர் தெய்வயானையம்மன் திருமணக்கோலம் கவர்ச்சிமிக்க வண்ணமாய் அமைக்கப்பட்டுள்ளது. இராணி மங்கம்மாளின் பிரதிமையொன்றும் ஆஸ்தான மண்டபத்தில் அமைந்துள்ளது. கம்பத்தடி மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றிலே விஜயநகர கலைப்பாணியில் அமைந்த தூண்கள் காணப்படுகின்றன. அவற்றின் கபோதங்கள் புஷ்பபோதிகைகளோடு அமைந்திருக்கின்றன.
திருவரங்கம்
சைவசமய மரபிலே கோயில் எனப்படுவது சிதம்பரம் என்றாற் போலத் தமிழக வைணவ மரபிலே திருவரங்கம் தலங்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்தது. அது மிகவும் புராதனமானது; நீண்டகால வரலாற்றினைக் கொண்டது. ஆழ்வார்கள் பலரின் பாடல் பெற்ற சிறப்பு அதற்குண்டு. பூரீ இராமானுஜரும் ஆச்சார்யர்களிற் பலரும் அதனைத் தலைமைத் தானமாகக் கொண்டு தங்கள் இயக்கங்களை நடத்தினார்கள்.
சோழராட்சிக் காலம் முதலாக அமைக்கப் பெற்ற கட்டடங்கள் திருவரங்கத்தில் உள்ளன. இறையகமும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களும் காலகாலம் புனரமைக்கப்பட்டமையால் மிகப் பழைமையான கட்டடங்களின்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 357
கலைக்கோலங்கள் மாறிவிட்டன. மூலஸ்தானப் பகுதியிலே பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பெற்ற கட்டடங்களின் பகுதிகள் தெரிகின்றன. இரண்டாம் பிராகாரத்தில் ஹொய்சள வீரநரசிம்ம தேவன் காலத்துத் திருப்பணியான சந்நிதி அமைந்திருக்கின்றது. அது கர்நாடகத்திற்குச் சிறப்பாக உரிய ஹொய்சளர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. ஏனைய கட்டடங்கள் எல்லாம் விஜயநகர காலத்திலும் நாயக்கர் காலத்திலுங் கட்டப்பெற்றவை.
தென்னிந்தியக் கோயில்கள் எல்லாவற்றிலும் பூரீரங்கமே மிகப் பெரியதாகும். அது மிகவும் விசாலமான வளாகத்தினுள் அமைந்திருக்கின்றது. நாற்சதுரமான அதன் வெளிப்பிராகாரம் 2,850 அடி நீளமும் 2,475 அடி அகலமுங் கொண்டுள்ளது. கோயில் வளாகத்திலே எல்லாமாக 21 கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே சில கட்டிமுடிக்கப் பெறாதவை. பூரீரங்கத்து ஆயிரங்கால் மண்டபம் பிரமாண்டமானது. அதன் தூண்களில் அமைந்துள்ள சிற்பங்களும் மிகுந்த சிறப்புடையவை.
நடுவிலமைந்த கோயிலைச் சுற்றி எல்லாமாக ஏழு பிராகாரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று வெளிப்பிராகாரங்களும் கோயிலின் பகுதிகளாவும் அதனைச் சூழ்ந்துள்ள நகரத்தின் பகுதிகளாகவும் இணைத்திருக்கின்றன. அவற்றிலே காணப்படும் பிராகாரங்கள் பிரமாண்டமானவை. ஏழாம் பிராகாரத்தின் தெற்குவாசலிலுள்ள கோபுரங்கள் இரண்டும் கட்டிமுடிக்கப் பெறாத மொட்டைக் கோபுரங்களாக விடப்பட்டிருந்தன. அவை 300 அடி உயரமான சிகரத்தைத் தாங்க வல்ல பிரமாண்டமான தாங்குதளங்களாக அமைக்கப்பட்டிருந்தன.
கோயிலின் மத்திய பகுதி நான்காம் பிராகாரத்தினுள் அடங்கியதாகும். அப்பிராகாரம் 1,235 அடி நீளமும் 849 அடி அகலமுங் கொண்டுள்ளது. வடக்கிலும்,தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ள மதில்களிலே கோபுர வாசல்கள் உள்ளன. அவற்றுட் கீழைக் கோபுரமே மிகப்பெரியதும் இணையிலா வனப்பும் கொண்டதுமாகும். அதற்குச் சமீபத்திலே, நான்காம் பிராகாரத்திலே சிறப்பு மிக்கதான ஆயிரங்கால் மண்டபம் அமைந்திருக்கின்றது. வேறு பல மண்டபங்களும் அந்தப் பிராகாரத்திலே காணப்படுகின்றன.
மூன்றாம் பிராகாரம் 767 அடி நீளமும் 503 அடி அகலமுங் கொண்டது. அதன் வடக்குப் பக்கத்திலும் தெற்குப் பக்கத்திலும் கோபுரங்கள் அமைந்துள்ளன. பிரதான வாசலான தெற்குக் கோபுரவாசல் வழியே சென்று கருட மண்டபத்தை அடையலாம். அதன் நடுவிலே தூபி போன்ற

Page 193
358 நாயக்கர் கலைப்பாணி
அமைப்பினைச் சிகரமாகக் கொண்ட சந்நிதானம் காணப்படுகின்றது. கருட மண்டபத்திலே தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. அதனருகே சூரியபுஷ்கரணி என்னும் குளம் அமைந்திருக்கின்றது. அப்பிராகாரத்தின் வடக்கு எல்லையிற் சந்திர புஷ்கரணி என்னும் குளம் காணப்படுகின்றது.
இரண்டாம் பிராகாரம் 426 அடி நீளமும் 295 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதிற் தூண்வரிசைகள் பொருந்திய மண்டபங்கள் நிறைந்துள்ளன. அதன் மேற்குப் பக்கத்திலே நீளமான திருநடமாளிகை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கிலுந் தெற்கிலும் கோபுர வாசல்கள் உள்ளன. தெற்குக் கோபுர வாசல் வழியாக முதலாம் பிராகாரத்தை அடையலாம். அது 240 அடி நீளமும் 181 அடி அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையது. அதனுட் கர்ப்பகிருகமும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களும் உள்ளன. கர்ப்பகிருகம் வட்டமானது. அதன் விமானம் பொன் மயமானது; வண்டிக் கூடாரம் போன்ற தோற்றங் கொண்டது.
திருவானைக்கா
திருவரங்கத்திற்கு ஒரு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஜம்புகேஸ்வரம் என்னுந் திருவானைக்கா நான்கு பிராகாரங்கள் பொருந்திய ஆலயமாகும். அது தமிழகத்திலுள்ள மிகப்புராதனமான சைவத்தலங்களுள் ஒன்றாகும். தேவார முதலிகளின் பாடல் பெற்ற சிறப்பு அதற்குண்டு. காலாகாலம் நடைபெற்ற புனர்நிர்மாண வேலைகளினாலே ஆதியான கட்டடங்களின் சுவடுகள் மறைந்துவிட்டன. ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் அது கற்றளியாக நிர்மாணிக்கப்பட்டது என்று கருதலாம். அங்கு பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் அமைந்த கோபுரவாசல் காணப்படுகின்றது. கோபுரத்திலே பதின்மூன்றாம் நூற்றாண்டிற் பாண்டியர்கள் தங்கள் இலச்சினையான இணைக்கயல் வடிவத்தைப் பொறித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்துக் கோயிலின் இப்போதைய வடிவம் விஜயநகர நாயக்கர் கலைப்பாணியின் அம்சங்கள் பொருந்திய கோலத்திலே காணப்படுகின்றது.
கோயிலின் முதலிரு பிராகாரங்களும் கூரையால் மூடப்பட்டிருக்கின்றன. ஆலயம் கிழக்கு நோக்கியது. எனவே, அதன் பிரதான கோபுரவாயில் கிழக்கில் அமைந்திருக்கின்றது. அதனுTடாக மூலஸ்தானத்தை நோக்கிச் செல்லும் பாதையில்,இரு பக்கங்களிலும் 112 தூண்கள்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 359
காணப்படுகின்றன. வலப்பக்கத்திலே திருக்குளம் அமைந்திருக்கின்றது. அதனைச் சுற்றி இருதளங்களைக் கொண்ட மண்டபம் காணப்படுகின்றது. அவற்றிற்கிடையிலே இலிங்கம், நந்தி மண்டபம், கொடிக்கம்பம் போன்றவை காணப்படுகின்றன. பிற நாயக்கர் காலத்துக் கோயில்களைப் போல அதிலுள்ள மண்டபங்களும் திருச்சுற்று மாளிகைகளும் மிக விசாலமானவையாக அமைந்திருக்கின்றன. அவற்றிலே வரிசையாக அமைந்துள்ள தூண்கள் மிகவும் உயரமானவை. அத்துரண்களில் அமைந்திருக்கும் சிற்பங்கள் மதுரையிலுந் திருவரங்கத்திலும் உள்ளவற்றின் வனப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும், கோபுர வாசலின் முன்னால் அமைந்திருக்கும் மண்டபத்திலே புராணக்கதைகளையும் கடவுளரின் கோலங்களையும் விளக்கும் உன்னதமான நாயக்கர் காலச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
இராமேஸ்வரம்
இந்துக்களின் மிகப் புனிதமான தலங்களுள் ஒன்றாக விளங்கும் இராமேஸ்வரத்திலே மிக விசாலமான கட்டட அமைப்புகள் காணப்படுகின்றன. கோயில் வளாகத்தினுள் பல்வேறு காலங்களைச் சேர்ந்த வெவ்வேறு கோயில்களுங் கட்டடங்களும் அமைந்திருக்கின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவை ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டடக் கலை வளர்ச்சியினைப் பிரதிபலிக்கும் பான்மையில் அமைந்துள்ளன. சோழச் சக்கரவர்த்திகள் காலத்துக் கோயில்களும் பாண்டிய மன்னர் காலத்துக் கட்டடங்களும் விஜயநகரக் காலத்துத் திருப்பணிகளும் நாயக்கர் காலத்துக் கட்டடங்களும் சேதுபதிகளின் திருப்பணிகளும் அங்கே காணப்படுகின்றன.
இராமேஸ்வரம் கோயில் ஒர் உயரமான பீடத்தில் அமைந்திருக்கின்றது. அதனைச் சுற்றி மூன்று பிராகாரங்கள் உள்ளன. மூன்றாம் பிராகாரத்திற்கும் வளாகத்தின் வெளிப்புறச் சுவருக்கும் இடையில் இடைவெளியின்றிப் பூஞ்சோலைகளுந் தோப்புகளும் அமைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கோயிலுக்கு வேண்டிய மலர்கள் கிடைக்கின்றன. சிலர் இந்தப் பகுதியை நான்காவது பிராகாரமாகக் கொள்வர். முதலாம் பிராகாரத்தினுட் பல கட்டடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே இராமநாத சுவாமி கோயிலும் திருக்காமகோட்டமான பர்வதவர்த்தினி அம்மன் கோயிலும்

Page 194
360 நாயக்கர் கலைப்பாணி
அமைந்திருக்கின்றன. அவற்றிற்கிடையே தென்புறத்தில் ஒரு சுவர் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள பிரகாரம் 57.43 மீற்றர் நீளமும் 36.5 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. இராமநாத சுவாமி கோயில் 0.9 மீற்றர் உயரமான பீடத்தில் அமைந்திருக்கின்றது. அதே உயரத்தில் நான்கு பக்கங்களிலுமுள்ள பிராகாரச் சுவர்களை ஒட்டியுள்ள மேடைகளில் தேவகோட்டங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே பரிவார தேவர்களினதும் வேறு தேவர்களினதும் படிமங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தைச் சுற்றியுள்ள திருநடைமாளிகை மங்கலவீதி என்னும் பெயரால் வழங்குகின்றது.
திருக்காம கோட்டத்தின் சுற்றுப் பிராகாரப் பகுதி 40.38 மீற்றர் நீளமும் 18.7 மீற்றர் அகலமுங் கொண்டது. அந்தப் பிராகாரத்தினுள் இராமநாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், விசாலாட்சியம்மன் கோயில், நடராசர் சந்நிதி, பர்வதவர்த்தினி சந்நிதி, இராமசாமிகோயில், சோமாஸ்கந்தர் கோட்டம் முதலானவை அமைந்திருக்கின்றன. பிராகாரத்தின் நிலமட்டத்தில் கல் அடுக்கப்பட்டுள்ளது. இராமநாதசுவாமி கோயில் விமானம் முத்தள விமானமாகும். மூலஸ்தானம் 10, 3 மீற்றர் நீளமுடைய பக்கங்களைக் கொண்ட சதுரமாகும். மூலஸ்தானம் அடியிலிருந்து பிரஸ்தரமம் வரை 4.3 மீற்றர் உயரங் கொண்டதாகும். கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம் ஆகியவற்றிற்கிடையே அந்தராளம் அமைந்திருக்கின்றது. அர்த்தமண்டபத்திற்கு முன்னால் அளவிற்பெரிதான மகாமண்டபம் அமைந்திருக்கின்றது. அது 40.76 மீற்றர் நீளமும் 26.23 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. அதிலே வரிசையாக அமைந்த தூண்கள் பல உள்ளன. அது வழிபாடு செய்கின்ற அடியார்கள் கூடிநிற்கும் இடமாகும். அர்த்த மண்டபத்து வாயிற்கதவின் மேலே கஜலக்ஷமியின் உருவம் அமைந்திருக்கின்றது. அதன் இரு புறங்களிலும் துவாரபாலகரின் உருவங்கள் காணப்படுகின்றன. கர்ப்பகிருகத்திலே மூல பேரன் என்று சொல்லப்படும் இலிங்கம் உள்ளது. அதனை இராமபிரானும் சீதாபிராட்டியாரும் தாபனம் பண்ணினார்கள் என்பது ஐதீகமாகும். அதன் காரணமாக அது இராமலிங்கம் என்று சொல்லப்படும். அது மணற்கல்லில் இருந்து செதுக்கிய வடிவமாகும். கற்பகிருகத்திலே ஸ்படிக லிங்கம் ஒன்றும் அமைந்திருக்கின்றது. அதற்கு முதலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 361
காசி விஸ்வநாதர் கோயில்
இராமலிங்கசுவாமி கோயிலுக்கு அண்மையிலே, வடக்குப் பக்கத்திலே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. அது 52 மீற்றர் நீளமும் அகலமுங் கொண்ட சதுரமான அமைப்பாகும் அதிலே காணப்படும் இலிங்கத்தை காசியில் இருந்து கொண்டுவந்து அனுமார் தாபித்தார் என்று சொல்வர். கோயிலின் சுவர்களிலே வனப்புமிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. அக்கோயில் இராமலிங்கசுவாமி கோயிலுக்குரிய மகாமண்டபத்தின் ஒர் அங்கமாக அமைந்திருக்கின்றது. வாசற் கதவின் இரு பக்கங்களிலும் உலோக வார்ப்பான
துவாரபாலகர்களின் உருவங்கள் உள்ளன.
சோமாஸ்கந்தர் கோட்டம்
பிரதான கோயிலின் மகாமண்டபத்தின் தெற்குப் பக்கத்தில், அதனுடன் இணைந்த வண்ணமாகச் சோமாஸ்கந்தர் கோட்டம் அமைந்திருக்கின்றது. அது 4.9 மீற்றர் நீளமான பக்கங்களைக் கொண்ட சதுரமான அமைப்பாகும். அதிலுள்ள சுவர்களிலும் அழகிய சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரஸ்தரம் வரை உள்ள பகுதி 3.8 மீற்றர் உயரமானதாகும். கர்ப்பகிருகத்திலே உலோக வார்ப்பான சோமாஸ்கந்தரின் படிமம் அமைந்திருக்கின்றது. வாசற்கதவின் இரு பக்கங்களிலும் உலோகத்தில் அமைந்த துவாரபாலகர் படிமங்கள் உள்ளன.
மகாமண்டபத்திலே இராமர், இலக்குமணர், சீதாபிராட்டியார் ஆகியோரின் உலோகப் படிமங்களும் சீதாராமர் கல்யாணக்கோலமான உலோகப் படிமமும் கவிகை ஒன்றின் கீழ் அமைந்திருக்கின்றன. அத்துடன் அஞ்சலிபந்தமான கோலத்தில் அனுமாரின் உருவம் அமைந்திருக்கின்றது. பிராகாரத்தினுள் அகஸ்தீஸ்வரஸிங்கம், கந்தமாதனேஸ்வரஸிங்கம் முதலான இலிங்க உருவங்கள் காணப்படுகின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களின் உலோகப் படிமங்களும் எழுபத்திரண்டு சிவனடியார்களின் கற்சிற்பங்களுங் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Page 195
362 நாயக்கர் கலைப்பாணி
நடராசர் சந்நிதிகள்
கோயிலின் வடக்குப் பக்கத்திலே சிவமூர்த்தங்கள் அமைந்திருக்கும் இரண்டு சந்நிதிகள் உள்ளன. அவற்றிலொன்று அம்பலவாணர் சிவகாமசுந்தரி ஆகியோரின் திருக்கோயிலாகும். மற்றையது சிதம்பரேஸ்வரர் ஆலயமாகும். இவ்விரண்டிலும் சிவகாமி சமேதரான நடராசரின் உலோகப்படிமங்கள் உள்ளன.
விசாலாட்சி அம்மன் கோயில்
வடக்குப் பக்கத்திலே அமைந்திருக்கின்ற விசாலாட்சி அம்மன் கோயிலின் பகுதிகள் பல இரண்டாம் பிராகாரத்தை ஒட்டி அமைந்திருக்கின்றன. அதன் விமானம் ஏகதள விமானமாகும். சமீபத்திலே கோடி தீர்த்த மண்டபம் என்பது காணப்படுகின்றது. அதற்கு அண்மையிலே நர்மதேஸ்வரர், ஏகாதஸபுத்திரர் ஆகியோரின் படிமங்கள் உள்ளன.
இராமநாதசுவாமி கோயிலின் உட்பிராகாரச் சுவர்களிற் செம்மைப்படுத்தப்பட்ட கருங்கற்களாற் கிழக்கு வாசலின் சமீபத்திலே சூரியன், சந்திரன், உரோகிணி, கார்த்திகை, உஷா, பிரதி உஷா ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தினுடைய தென்கிழக்கில் சர்வதீர்த்தம் என்னும் கிணறு அமைந்துள்ளது. பிராகாரத்தினுள் ஆடல்செய் மண்டபம் என்னும் நடமாளிகை அமைந்திருக்கின்றது.
நந்தி மண்டபம்
ஆலயத்தின் முன்னால், உட்பிராகாரத்தினுள் அமைந்திருக்கும் நந்தி மண்டபம் வனப்புமிக்க கட்டட அமைப்பாகும். அதிலே மிகுந்த வனப்புடைய 38 தூண்கள் உள்ளன. அளவில் மிகப்பெரியதான சுதையில் அமைக்கப்பட்ட நந்தியின் உருவம் அங்கு காணப்படுகின்றது. அது 6.9 மீற்றர் நீளமும் 3.6 மீற்றர் அகலமும் 5.25 மீற்றர் உயரமுங் கொண்ட கம்பீரமான வடிவமாகும். அதனைத் திருமலை நாயக்கரும் மகனாகிய கிருஷ்ணப்ப நாயக்கனும் அமைத்தனர் என்று கோயில் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளது. நந்தி மண்டபத்திற்கருகிலே கொடிமரமும் பலிபீடமும் அமைந்திருக்கின்றன. ஏகதள விமானம் பொருந்திய விநாயகர் கோட்டமும் சுப்பிரமணியர் கோட்டமும் அதற்கண்மையில் அமைந்திருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோட்டத்திற்கு முன்னால் உயரிய பீடம் ஒன்றிலே நவக்கிரக பீடம் அமைந்திருக்கின்றது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 363
பர்வதவர்த்தினி அம்மன் கோயில்
சோழர், பாண்டியர் காலங்களிலும் ஆகமப் பிரகாரமாகத் திருக்காம கோட்டத்தை மூலவர் கோயிலின் இடப்பக்கத்தில் அமைப்பது வழமை. ஆனால், விஜயநகர நாயக்கர் காலங்களில் இதற்கு எதிர்மாறான முறையிற் திருக்காம கோட்டத்தை அமைத்தனர். அக்காலத்தில் அம்மனை இறைவனின் வாமபாகினியாக அன்றி தகூழினபாகினியாகக் கொண்டனர். கலியாண வைபவங்களில் மாங்கல்ய தாரணத்திற்கு முன்பு மணப்பெண்ணுக்கே முதன்மை உரியது என்ற கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கு ஏற்பட்டது. இராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் முதலிய தலங்களிற் திருக்காமகோட்டம் மூலவர் கோயிலின் வலப்பக்கத்தில் அமைந்து விடுகின்றது. திருக்காமகோட்டம் அமைந்துள்ள பிரகாரப்பகுதி 40.4 மீற்றர் நீளமும் 18.7 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம் ஆகிய இரண்டும் சுமார் 10 மீற்றர் நீளங் கொண்டவை. அவற்றின் அகலம் 4.6 மீற்றர் ஆகும். இறையகம் பிரஸ்தரம் வரை 3.9 மீற்றர் உயரங்கொண்டது. மூலஸ்தானத்திலே பர்வத வர்த்தினியின் படிமம் ஆசன நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்து வாசலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய ஆறு தூண்கள் உள்ளன. அவற்றோடு வேறு பல தூண்களும் அங்குள்ளன.
ஆலயத்தின் பின்னால் தென்மேற்கு மூலையிலே இரட்டை விநாயகரின் கோயில் இருக்கின்றது. இந்தக் கோயிலைச் சந்தான செளபாக்ய கணபதி கோயில் என்று குறிப்பிடுவர். தென்மேற்கு மூலையிலே அனந்த சயனக் கோலத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் காணப்படுகின்றது.
சுக்கிரவார மண்டபம்
வெள்ளிச்சபுக்கை என்றும் நவசக்தி மண்டபம் என்றுஞ் சொல்லப்படும் நீள்சதுரமான சுக்கிரவார மண்டபம் அம்மன் கோயிலுக்கு முன்னால் அமைந்திருக்கின்றது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் திருவிழா நடைபெறுவதால் அது சுக்கிரவார மண்டபம் என்று சொல்லப்படும். அதிலே 32 தூண்கள் காணப்படுகின்றன. தேவியின் கோலங்களும் சேதுபதிகளின் உருவங்களும் அவற்றிலே சிற்பங்களாக வடிக்கப்பெற்றுள்ளன. கோயிலையும்

Page 196
364 நாயக்கர் கலைப்பாணி
மண்டபத்தையும் பிரிக்கின்ற சுவரிலே அஷ்டலசுடிமியின் வடிவங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு மூலையிற் சந்திரசேகரர், பிரமன், விஷ்ணு முதலியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டபத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலே தூண்வரிசைகள் அடங்கிய வேறொரு மண்டபம் உள்ளது. அதன் தூண்களிலே இராமரதும், அனுமாரதும், அடியார்கள் பலரதும் சிற்பவடிவங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் பிராகாரம் 116 மீற்றர் நீளமும் 94 மீற்றர் அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையதாகும். அதன் சுற்றுமதில் பிரமாண்டமான தோற்றத்துடன் அமைந் திருக்கவில்லை. அதன் மதிற் சுவர்கள் 5.48 மீற்றர் உயரங் கொண்டவை. அதன் வடக்குப் பக்கத்திலே பாழடைந்த நிலையில் 32 தூண்கள் காணப்படுகின்றன. கேயிலின் மடப்பள்ளி இதன் தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்கின்றது. கங்கை, யமுனை, காயா, சூரியன், சந்திரன், பிரம்ம கத்திய விமோசனன் என்னுந் தீர்த்தக் கிணறுகள் வடக்குப் பகுதியில் உள்ளன. கிழக்குப் பகுதியிலே சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்னும் கிணறுகள் உள்ளன. இரண்டாம் பிராகாரம் விஜயநகர காலத்து திருப்பணியாகும். இராமேஸ்வரத்திலே மூன்றாம் பிராகாரத்தைச் சுற்றி மிகப் பெரிய திருச்சுற்றுமாளிகை அமைந்திருக்கின்றது. இதனைப் போன்ற அளவுடைய வேறொரு அமைப்பு தமிழகத்தில் வேறெங்குங் காணப்படுவதில்லை. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுப்பாதையானது 17 அடியிலிருந்து 21 அடிவரை அகலமுடையதாகும். நில மட்டத்தில் இருந்து கூரைவரை அது 25 அடி உயரங்கொண்டதாகும். அதில் வரிசை வரிசையாகத் தூண்கள் அமைந்துள்ளன. கோயிலைச் சுற்றி அமைந்திருக்குந் திருச்சுற்றுமாளிகை முற்றிலும் கூரையினால் மூடப்பட்டுள்ளது. அது மிக உயரமான தோற்றங் கொண்டது. 3,000 அடி நீளமான திருச்சுற்றுப் பாதையில் அமைந்துள்ள தூண் ஒவ்வொன்றும் 5 அடி உயரமுள்ள அடித்தளத்தில் அமைந்துள்ளது. தூண்கள் சராசரியாகப் பன்னிரண்டு அடி உயரமானவை.
மூன்றாம் பிராகாரம் தெற்குப் பக்கத்திலே 207 மீற்றர் நீளமும் வடக்குப் பக்கத்திலே 195 மீற்றர் நீளமுங் கொண்டுள்ளது. கிழக்குப் பக்கத்தில் அதன் நீளம் 130 மீற்றராகும். மேற்குப் பக்கம் 18 மீற்றர் நீளங் கொண்டது. அதில் எல்லாமாக 1,212தூண்கள் உள்ளன. அது சொக்கட்டான் மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். சபாபதி கோயில், கந்தமாதனேஸ்வரம், இராமலிங்கப் பிரதிஷ்டை, சேது மாதவர் கோயில் என்பனவும் அவற்றோடு சோழர் காலத்தில்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 365
அமைக்கப்பட்ட மூன்று கோயில்களுங் காணப்படுகின்றன. கல்யாண மண்டபம், அநுப்பு மண்டபம் என்னும் கட்டடங்களும் இதிலே காணப்படுகின்றன. அவை இரண்டும் சேதுபதிகள் காலத்துத் திருப்பணியாகும். பிற தலங்களிலுள்ள விஜயநகர நாயக்கர் காலத்து மண்டபங்களைக் காட்டிலும் இவை அளவிற் சிறியனவாகும். இராமேஸ்வரத்திலே மண்டபத் தூண்களிற் கடவுளர் படிமங்களும், ஆடல் மகளிர் படிமங்களும், விலங்குகளின் உருவங்களும் சிற்பங்களாக அமைந்துள்ளன. குதிரைகளின் மேலும் யானைகளின் மேலும் ஏறிச் செல்லும் வீரர்களதும் வேட்டைக்காரரதும் உருவங்கள் மிகுந்து காணப்படுகின்றன. தூண்களிலே பத்மாசனம், கருக்குப் பட்டை, பாதம், பத்மமாலை, கண்டம், கலசம், விருத்தம், தடி, கண்டம், கும்பம், கண்டம், பத்மம், பலகை, வீரகண்டம், போதிகை என்ற வண்ணமாகப் பகுதிகள் அமைந்திருக்கும். சதுரவடிவமான தூண்கள் பொதுவாக மண்டபங்களினதும் பிராகாரங்களினதும் சுமையைத் தாங்கி நிற்கும் வண்ண்ம் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களிற் கருக்குப்பட்டை, பாதம் என்னும் பகுதிகளிற் சிற்பங்களும், அலங்கார வேலைப்பாடுகளும், மனிதரின் மாதிரி உருவங்களும் அமைந்திருக்கின்றன. தூண்கள் பிரமாண்டமான அளவு கொண்டவை. கனதியான சிற்பங்களைத் தாங்கும் பல பாகங்கள் இண்ைக்கப்பெற்ற கோலத்தில் அமைந்தவை.
கோபுரங்கள்
இராமேஸ்வரத்திலே நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. கிழக்கிலும் மேற்கிலும் கோபுரங்கள் அமைந்துள்ளன. வடக்கிலுந் தெற்கிலும் கோபுரங்களின் அதிஷ்டானங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கோபுரங்கள் நாயக்கர் காலத் திருப்பணிகளாகும். கிழக்குக் கோபுரம் இரண்டாம் பிராகாரத்திற்கு முன்னால் அமைந்திருக்கின்றது. ஏழு தளங்களுடன் அமைந்துள்ள அக்கோபுரம் மிகுந்த வனப்புடனும் உறுதியுடனும் விளங்குகின்றது. அது பாண்டியர் காலத்து அதிஷ்டானம் ஒன்றிலே அமைந்திருக்கின்றது. அது கி. பி. 1659 ஆம் ஆண்டு தளவாய் சேதுபதியினால் அமைக்கப்பெற்றது என்பது ஒர் ஐதீகம். ஆயினும், சாசனக் குறிப்பின் அடிப்படையில் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமேஸ்வரத்திலே கோபுரம் ஒன்று காணப்பட்டதென்று பேராசிரியர்

Page 197
366 நாயக்கர் கலைப்பாணி
இராமன் கருதுகிறார். மேற்குக் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்ளே அதன் பகுதிகள் சிதைவடையாத நிலையில் இருக்கின்றன. அதிலே மிக முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பூதகணங்கள், இடபங்கள், கிருஷ்ணர், இராதை, ருக்மணி, ரிஷி பத்தினியர், பிக்ஷாடனர் ஆகியோரின் உருவங்கள் இந்தக் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. f
இராமேஸ்வரம் வெவ்வேறு காலங்களில் அமைக்கப்பெற்ற பல கோயில்களையும் கட்டட அமைப்புகளையும் கொண்ட தலமாக விளங்குகின்றது. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் உருவாக்கப்பெற்ற கட்டடிங்கள் அங்குள்ளன. மூன்றாம் பிராகாரத்திற்கு வெளியிலுள்ள கோயில்கள் சோழர் காலத்திற்குரியவை. கலியாண மண்டபம், அனுப்பு மண்டபம் முதலானவை சேதுபதிகளின் காலத்தவை. ஏனையவை பெரும்பாலும் விஜயநகர நாயக்கர் காலங்களைச் சேர்ந்தவை. அங்குள்ள பிரதானமான கோயில்களும் அதிவணப்புமிக்கதான திருநடைமாளிகையும் திருமலை நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் காலங்களுக்குரியனவாகக் |-
திருநெல்வேலிக் கோயில்கள்
நாயக்கர் பாணியில் அமைந்த இரு பெருங் கோயில்கள் திருநெல்வேலியிலும் பூரீ வில்லிபுத்துாரிலுங் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் அமைந்த கோயில், இரட்டைக் கோயில் அவற்றில் ஒன்று ஈஸ்வரமாக அமைந்தது. மற்றையது திருக்காமக்கோட்டமான அம்மன் அடி அகலமுங் கொண்ட நீள் சதுரவடிவான முற்றத்தில் அமைக்கப்ப்ட்டிருக்கின்றன.
கோயிலாகும். அவை இரண்டும் 760 அடி நீளமும் 5
இரண்டு கோயில்களும் சம அளவிலான தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்திற்கு முன்னால் அந்தராளம், அர்த்த மண்டபும், மகாமண்டபம் என்பன அமைந்திருக்கின்றன. வெளிப்புறத்திலே ஒவ்வொரு பக்கத்திலும் பிராகாரச் சுவரின் நடுவிற் கோபுரம் அமைந்திருக்கின்றது. வரிசையான தூண்கள் அமைந்த மண்டபங்களும் ஆயிரங்கால் மண்டபமும் வெளிப்புறத்தில் அமைந்திருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபம் 520 அடி மும் 63 அடி அகலமுங் கொண்டது. அதிலே 10 வரிசைகளில் 1,000 தூண்கள் காணப்படுகின்றன. திருநெல்வேலிக் கோயிலைப் போன்ற அமைப்பு பூரீ
 
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 367
வில்லிபுத்தூரிலே காணப்படுகின்றது. அது நில மட்டத்தில் இருந்து உச்சிவரை செங்கற் திருப்பணியாக அமைந்திருக்கின்றது. பூச்சுக்களுக்குச் சுண்ணாம்பைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் கோபுரம் 13 தளங்களுடன் மிக உயரமாக எழுந்து நிற்கும் மண்டபத்தைப் போலத் தெரிகின்றது; அது 100 அடி உயரங் கொண்டதாகும். அதன் கூரை பெளத்த கோயில்களிலே காணப்படுவனவற்றை ஒத்திருக்கின்றது. நடுவிலே அது சூரியனைப் போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கின்றது. அதன் மூலைகள் குவிந்தும் மேற்புறம் வளைந்தும் அமைந்துள்ளன. தென்னிந்தியக் கோபுரங்களிலே அமைப்பிலுந் தோற்றத்திலும் தனிமை பொருந்தியதாக அக்கோபுரம் விளங்குகின்றது.
நாயக்கர் காலக் கட்டடக்கலை வளர்ச்சியைப் பற்றிய இப்பகுதியில் சோழநாட்டுக் கோயில்கள் பற்றியுங் குறிப்பிடுவது அவசியமாகும். திருவாரூர் தியாகேசர் கோயிலும், தொண்டை மண்டலத்து வட ஆர்க்காடு மாவட்டத்து திருவண்ணாமலைக் கோயிலும் நாயக்கர் காலக் கட்டடங்களைக் கொண்டுள்ளன. திருவாரூர்க் கோயில் மிகவும் புராதனமானதாகும். தேவார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்குள்ள கோயில் சிறப்புற்று விளங்கியது. அங்குள்ள கோயில் கற்றளியாக அமைக்கப்பட்டது. காலப்போக்கில் புதிய அமைப்புக்களைப் பெற்றுப் படிப்படியாகக் கோயில் அளவிலே பெரிதாக வளர்ச்சியடைந்தது. திருவாரூரிலே தியாகேசருக்கும் வான்மீகேசருக்கும் தனித்தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கருவறைகள் ஏறக்குறைய 190 அடி நீளமும் 160 அடி அகலமுங் கொண்ட பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றன. கட்டடங்கள் கிழக்கு நோக்கியவை. கிழக்குப் பக்கத்துச் சுவரின் நடுவிலே கோபுரவாசல் அமைந்திருக்கின்றது. அதன் மேல் அமைந்த கோபுரம் இராய கோபுரம், அது பதினைந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றதென்று சொல்லப்படுகின்றது. இரண்டாம் பிராகாரம் 400 அடி நீளமும் அகலமுங் கொண்டுள்ளது. அதன் கிழக்கிலும் மேற்கிலுங் கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. மூன்றாம் பிராகாரம் ஏறக்குறைய 960 அடி நீளமும் 730 அடி அகலமுங் கொண்டதாகக் காணப்படுகின்றது. அதன் கிழக்கு வாசலிலும் மேற்கு வாசலிலும் பிரமாண்டமான கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. மூன்றாம் பிராகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் ஒன்று கட்டி முடிக்கப்பெறாத நிலையிற் காணப்படுகின்றது. வெளிப்பிரகாரத்தின் கிழக்குக் கோபுரம் வேலைப்பாட்டில் அதி சிறப்புமிக்க கோபுரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே அமைக்கப்பட்டதென்று

Page 198
368 நாயக்கர் கலைப்பாணி
கொள்ளலாம். அக் கோபுரத்தில் கீழ்த்தளங்கள் மூன்றும் அலங்காரமான தோற்றத்துடன் அமைந்திருக்கின்றன. அவற்றிலே காணப்படும் அரைத் தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளும் அளவிலே பெரியனவாகவும் வனப்புடையனவாகவும் விளங்குகின்றன. அவற்றுக்கு மேலுள்ள தளங்கள் இரண்டில் மாடக்குழிகளும் கருமை நிறங்கொண்ட வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூரில் ஒன்றனுள் ஒன்றாக அமைந்திருக்கும் மூன்று பிராகாாங்களிலும் கோபுரங்கள் சிறப்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். திருவண்ணாமலைக் கோயிலும் அமைப்பில் அதனைப் போன்றதாகவே காணப்படுகின்றது. அதன் வெளிப்பிராகாரத்துக் கோயில்கள் நாயக்கர் காலத்திற் குரியவை.
நிறைவாக தஞ்சை இராஜராஜேஸ்வரமுடையார் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயிலைக் குறிப்பிடலாம். அது 120 அடி நீளமும் 35 அடி அகலமுங் கொண்ட கட்டடமாகும். அதிலே 55 அடி உயரமுடைய விமானங் காணப்படுகின்றது. கலையழகிலே சோழரின் மகோன்னதமான ஆலயத்தின் இணையிலா விமானத்தின் வனப்பிற்கு நிகரான வகையில் இக்கோயிலின் விமானத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டிலே தமிழகத்துக் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
திருமலை நாயக்கர் மஹால் - மதரை
 

நாயக்கள் கால சிற்பக் கலை
சி. பத்மநாதன்
மதுரைக் கோயிற் சிற்பங்கள்
பரத கண்டத்திலே கட்டடக் கலை வரலாற்றிலே தனிச்சிறப்புடன் விளங்குகின்ற மதுரைக் கோயில் சிற்பக் கலை வரலாற்றைப் பொறுத்தவரையிலும் முதன்மைத் தலமாக விளங்குகின்றது. அங்கு போல வேறெங்கும் பெருந்தொகையான சிற்பங்களைக் காண முடிவதில்லை. சோழர் காலச் சிற்பக்கலையைப் பொறுத்தவரையில் வெண்கலப்படிமங்களைப் பற்றிச் சிந்திக்கின்றோம். கற்சிற்பங்களைப் பொறுத்தவரையில் மூலவர் படிமங்களும் விமானத்தின் சுவர்ப்புறங்களில் அமைந்த சிற்பங்களும் அதிகப் பிரசித்தமானவை. ஆனால், நாயக்கர் காலத்தைப் பொறுத்தவரையிற்கோயில் மண்டபங்கள் எல்லாம் சிற்பக் கலைக் கூடங்களாக விளங்குகின்றன. ஆயிரங்கால் மண்டபம், கல்யாண மன்டபம், திருச்சுற்று மாளிகை முதலான அமைப்புகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான பிரமாண்டமான தூண்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே பல்லாயிரக் கணக்கான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மதுரைக் கோயிற் கடவுட்படிமங்களும் மன்னர்களதும் பிரதானிகளதும் உருவங்களும் பெருந் தொகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடவுட் படிமங்கள் ஆகமப் பிரகாரமானவை. சிற்ப நூல்களிலே சொல்லப்படுகின்ற பிரதிமாலசுஷணங்களுக்கு அமைய அவை உருவாக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணம், ஹாலஸ்ய மகாத்மியம் சிவபுராணங்கள் முதலியவற்றிலே சொல்லப்படுகின்ற கதைகளுக்கு விளக்கமான சிற்பங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. மதுரையிலே
தூண்களுக்கும் கட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட கருங்கல் மிகவும்

Page 199
37Ο நாயக்கர் கால சிற்பக் கலை
கருமையானது; கருங்காலி போன்ற தோற்றமுடையது. உளிகளினாலே செதுக்கப்படுமிடத்து மெழுகு பூசினாற்போல் பளபளப்பாக மினுங்கும் தன்மை கொண்டது. அங்கே விஜயநகர நாயக்கர் காலக் கலைஞர்கள் உன்னதமான சிற்பங்களை வடித்துள்ளனர். தமிழகத்திலே சிற்பக்கலை வளர்ச்சி நாயக்கர் காலத்தில் முதிர்ச்சி நிலை அடைந்தது. பொதுவாக உருவங்கள் பிரமாண்டமானவை; மிகுந்த வனப்புடையவை; தனிச் சிறப்புடைய ஒரு கலைப்பாணியின் அம்சங்களைப் பிரதிபலிக்கும் பான்மை கொண்டவை. சோழர் காலச் சிற்பங்களோடு ஒப்பிடுமிடத்து அவை கனதியான தோற்றங் கொண்டவை. மதுரைக் கோயிலிலுள்ள சிற்பங்களைக் கடவுட் படிமங்கள், உருவச் சிற்பங்கள் என இரண்டு பிரதான வகையினவாக வகுத்து நோக்கலாம். விமானங்களிலும் கோபுரங்களிலும் அமைந்திருக்கும் சிற்பங்கள் வேறொரு வகைக்குரியனவாகும். மண்டபங்களிலும் அவற்றிலுள்ள தூண்களிலும் அமைந்திருக்கும் வடிவங்களே இங்கு வர்ணிக்கப்படுகின்றன.
கடவுட் படிமங்கள்
1) திருக்கல்யாணம்
கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றிலே மீனாகூழி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிற்பக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் போல புது மண்டபத்திலும் ஒரு சிற்பம் அமைந்திருக்கின்றது. அதிலே நின்ற கோலத்திற் சிவன் வலக்கரத்தால் மீனாகூஜியின் வலது கையைப் பற்றி நிற்கும் கோலம் தெரிகின்றது. இடப்பக்கத்திலே திருமால் தாரைவார்த்து கன்னிகாதானம் செய்யுங் காட்சி அமைந்திருக்கின்றது. அவர்களுக்குப் பின்னால் மரத்தின் உருவம் தெரிகின்றது. இந்திரனால் மீனாகூழிக்கு வழங்கப்பட்ட கற்பகதருவே அதுவாகும். இவர்களுக்குச் சமீபத்திலே பிரமன் புரோகிதராக இருந்து ஓமம் வளர்க்கும் காட்சி தெரிகின்றது. பக்கத்திலே பெண்கள் இருவரின் உருவங்கள் தெரிகின்றன. பிரதிமாலசுஷ்ணங்கள் எல்லாம் ஆகமப் பிரகாரமானவை. L目gh
மண்டபத்திலுள்ள சிற்பம் பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப் பெற்றது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 37
கம்பத்தடி மண்டபத்துச் சிற்பம் 1870 இல் வடிக்கப் பெற்றது. இரண்டும் ஒரே பாணியில் அமைந்தவை. மணமக்களின் முகபாவமும் அங்க லக்ஷணங்களும்
இணையிலாத வகையிலே சித்திரிக்கப் பெற்றுள்ளமை கவனிக்கத் தக்கது.
2. திரிபுராந்தகர்
திரிபுராந்தகரின் உருவங்கள் பல இடங்களில் உள்ளன. புது மண்டபத்தில் இரு வடிவங்கள் காணப்படுகின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் ஒன்றும் கம்பத்தடி மண்டபத்தில் ஒன்றும் உள்ளன. முப்புரங்களைச் சிவன் அழித்த காட்சியைத் திரிபுராந்தகர் வடிவம் குறிக்கின்றது. வேதத்திலே சம்ஹிதை, பிராமணம் ஆகிய பகுதிகளிலே. திரிபுரதகனம் பற்றிக் குறிப்புகள் உள்ளன. மகாபாரதத்திலே கர்ணபருவத்தில் அதனைப் பற்றிய வர்ணனை காணப்படுகின்றது. திரிபுராந்தகரின் எட்டு வடிவங்கள் பற்றிச் சொல்லப்படுகின்றது. கம்பத்தடி மண்டபத்திலுள்ள உருவத்திலே சிவன் இரதத்தின் மேற்செல்லுங் காட்சி அமைந்திருக்கின்றது. வலதுகால் இரதத்தின் பாகத்திலே அமைந்திருக்கின்றது. இடதுகால் முன்னால் ஊன்றிய கோலத்திற் தெரிகின்றது. சாரதியாகப் பிரமா வந்திருக்கின்றார். விஷ்ணு, அக்கினி, யமன், சாவித்திரி முதலிய தேவர்கள் படைக்கலங்களாக வடிவெடுத்துள்ளனர்.
புது மண்டபத்திலுள்ள திரிபுராந்தகர் வடிவம் வேலைப்பாட்டில் முன்னையதைக் காட்டிலுஞ் சிறந்ததாகும். உருவத்தின் எல்லா அம்சங்களும் செம்மையாகவும் ஒளி மிளிரும் வண்ணமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சிற்பத்தில் இரதம் காணப்படவில்லை. சிவனுடைய உருவம் பீடம் ஒன்றிலே அமைந்து காணப்படுகின்றது. சிவனுடைய உருவத்தின் கீழே கணேசரின் வடிவம் தெரிகின்றது. ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள திரிபுராந்தகரின் வடிவம் அதிக சிறப்புடையதாகும். அது விநாயகர், பாண்டியராசன் ஆகியோரின் உருவங்களுக்கிடையிலே காணப்படுகின்றது.
உருவத்தின் அங்க லக்ஷணங்கள் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றன. அது

Page 200
372 நாயக்கர் கால சிற்பக் கலை
கம்பீரமான தோற்றத்துடன் உயிரோட்டமான கோலத்துடன் காணப்படுகின்றது. அம்பிலே திருமாலுடைய வடிவம் மிகவும் நுட்பமான முறையிலே செதுக்கப்பட்டுள்ளது.
3) உமா சகித மூர்த்தி
உமாதேவியாரும் ஈஸ்வரரும் ஆசனக் கோலத்தில் அமைந்திருக்குங் காட்சி இதிலே விளங்குகின்றது. உமாதேவியாரின் உருவம் இறைவனின் இடப்பக்கத்தில் உள்ளது. அம்மனின் வலதுகால் மடித்தும் இடதுகால் மடித்துக் கீழ் நோக்கித் தொங்கும் நிலையிலும் காணப்படுகின்றன. திருக்கலியாணத்திற்குப் பின்பு அடியார்களுக்குக் காட்சி கொடுத்த நிலை இதுவாகும். இரண்டு சிற்பங்களும் ஒரே தூணில் அமைந்திருக்கின்றன.
4) சுகாசனக் கோலம்
கம்பத்தடி மண்டபத்திலே, அடுத்துள்ள தூணிலே சுகாசனக் கோலமும் காலஹரமூர்த்தியின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன. சுகாசனக் கோலத்தில் இறைவனும் தேவியும் ஆசனக் கோலமாய் உள்ளனர். முன்வலக்கரம் அபயகரமாகும். பின் வலக்கரத்தில் அகூடிமாலை காணப்படுன்றது. முன் இடக்கரம் வரத கரமானது. அதன் பின்னுள்ள கரம் சூலம் ஏந்திய கோலத்தில் அமைந்துள்ளது. சிவனுடைய வலது கால் மடித்துக் கீழ் நோக்கித் தொங்கும் நிலையில் அமைந்துள்ளது. அம்மனின் வலக்கரம் மலரேந்திய கோலத்தில் உள்ளது. இடதுகை பீடத்தில் அமைந்துள்ளது. இடதுகால் பீடத்திலே தொங்கிய வண்ணமாயுள்ளது. சிவனது இடதுகால் அம்மனின் வலது கால் மேற் படிந்திருக்கின்றது.
5) காலஹர மூர்த்தி
இது மார்க்கண்டேயருக்குச் சிவபெருமான் அபயம் அளித்த கதையை விளக்குஞ் சிற்பமாகும். சிவனடியார்களில் உத்தமோத்தமரான மார்க்கண்டேயர் பதினாறு வயது அடைந்ததும் இறக்க நேரிடும் என்று

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 373
சொல்லப்பட்டது. சமயம் வந்ததும் அவருடைய உயிரைக் கொள்வதற்கு எமராசன் வந்தான். தன்னைக் காத்தருளச் சிவபெருமானை மார்க்கண்டேயர் இறைஞ்சி வேண்டினார். சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தார். அதிலிருந்து தோன்றிய இறைவன் காலனை அடக்கி மார்க்கண்டேயருக்கு அபயமளித்தார். சூலமேந்திய கோலத்திற் சிவன் எமராசனை அடக்குங் காட்சி இதிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் வலக்கரத்தில் மழுவும் பின் வலக்கரத்திற் சூலமுங் காணப்படுகின்றன. முன் இடக்கரத்திற் கபாலமும், அதன் பின்னுள்ள கரத்திலே மானும் தெரிகின்றன. வலதுகால் பீடத்தை ஊன்றிய வண்ணமாய் உள்ளது. இடது கால் காலனின் கழுத்தினை ஊன்றிய கோலத்திற் காணப்படுகின்றது. இலிங்கத்தின் மறுபுறத்திலே மார்க்கண்டேயரின் வடிவம் அதனைக் கட்டிப்பிடித்த கோலத்திலே
தெரிகின்றது.
6) நடராஜர் வடிவம்
கம்பத்தடி மண்டபத்துமூன்றாவது தூணிலே ஆடவல்லானின் உருவம் அமைந்திருக்கின்றது. வெள்ளியம்பலத்திலும் நாயக்க மண்டபத்திலும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அளவிலே பெரிய நடராஜர் வடிவங்கள் அமைந்துள்ளன. மீனாகூரி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ தினத்திலே வியாக்கிரபாதர், பதஞ்சலி ஆகியோரின் பொருட்டுச் சிவபெருமான் தாண்டவம் புரிந்தார் என்பது புராணக் கதை. பொன்னம்பலத்திலே தாண்டவம் பயின்ற நடேசப் பெருமான் அவ் இருவர்களின் பொருட்டு வெள்ளியம்பலத்திற் திருநடனம் செய்தார். இக்கதையை அடிப்படையாகக் கொண்டு திருவாலவாய் வெள்ளியம்பலம் என்று வர்ணிக்கப்பட்டது. பாண்டியர்கள் நடராஜர் சபைக்கு வெள்ளிவிதானம் அமைத்தனர். வெள்ளியம்பலத்திலே சிவபெருமான் ஆடுகின்ற கூத்து சற்று வேறுபட்டதாகும். அங்கு இடக்கால் முயல்கன் மீது ஊன்றிய கோலத்தில் அமைந்திருக்க வலக்கால் வீசித்தொங்கிய நிலையிற் காணப்படும். கம்பத்தடி மண்டபத்து நடராசரின் கோலம் பொன்னம்பலத்திலுள்ளதைப் போன்றதாகும்.
சிவனுடைய முடி ஜடாமகுடமாகும். முன் இடக்கரம் கஜகஸ்தமாகும். அதன்

Page 201
374 நாயக்கர் கால சிற்பக் கலை
பின்னுள்ள கரம் அக்கினிச் சுவாலை ஏந்திய கோலமானது. முன் வலக்கரம் அபயஹஸ்தமாகும். பின் வலக்கரம் டமருஹம் ஏந்தியுள்ளது. வீசித் தொங்கிய இடக்கால் முயலகன் பிடித்துள்ள பாம்பின் தலைமேற் தங்கியுள்ளது. அருகிலே பார்வதியின் உருவம் அமைந்துள்ளது. நடராசரின் உருவத்தின் கீழ் நான்கு கரங்களுடன் நந்திதேவர் காணப்படுகின்றார். முன்னிரண்டு கைகளும் மத்தளம் கொட்ட பின்னிரு கைகளும் மான், மழு ஏந்திய கோலமாயுள்ளன. நந்திதேவரின் இரு பக்கங்களிலும் வியாக்கிரபாதர், பதஞ்சலி ஆகியோர் காணப்படுகின்றனர். அதே தூணின் வேறொரு பக்கத்தில் மகாவிஷ்ணு மேளங் கொட்ட, தும்புரு, நாரதர் ஆகியோர் வீணை இசைக்கின்றனர். அத்துடன் மிக மெலிந்த தோற்றத்துடன் காளியின் உருவமும் தெரிகின்றது. தூணின் அடுத்த பக்கத்திலே பிரமா தாளம் போடுங் காட்சி தெரிகின்றது. திருநடம் காண்பதற்கு வந்த மற்றைய தேவர்களதும் ரிஷிகளதும் உருவங்கள் தெரிகின்றன. தூணின் வேறொரு பக்கத்தில் காமதகனரின் உருவம் அமைந்துள்ளது.
கம்பத்தடி மண்டபத்திலுள்ள நான்காவது தூணிலே சந்திரசேகரர், இலிங்கோத்பவர், ரிஷபாந்திகர். இராவண அனுக்கிரக மூர்த்தி ஆகியோரின் உருவங்கள் ஆகம விதிகளுக்கு அமைய அழகாக
அமைக்கப்பட்டுள்ளன.
7) ரிஷபாந்திகர்
காளையின் மேற் சிவனும் பார்வதியும் அமைந்திருக்கும் உருவம் ரிஷபாரூடரின் வடிவம் போன்றதாகும். காளை தலையை உயர்த்தி நிற்குங் கோலம் இவ்வடிவத்தின் சிறப்பம்சமாகும். சிவனுடைய முன் வலக்கரம் அபயஹஸ்தமானது. அதன் பின்னமைந்த கரம் மழு ஏந்தியுள்ள கோலமானது. முன் இடக்கரம் தொடையில் தங்கும் வண்ணமாக அமைந்துள்ளது. பின் இடக்கரம் மான் ஏந்திய கோலமானது. சிவனதும் அம்மனதும் கால்கள்
அமைந்திருக்கும் கோலம் ஆகமப் பிரகாரமானது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 375
8) இலிங் கோத்பவர்
கம்பத்தடி மண்டபத்திலே தூண் ஒன்றிலே ரிஷபாந்திகரின் உருவத்திற்கு வலப்பக்கத்திலே இலிங்கோத்பவரின் உருவம் அமைந்துள்ளது. இலிங்கம் நான்கு பட்டைத் தூண்போல் ஆனது. அதன் கோணங்கள் வட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளன. வழமை போலச் சிவனுடைய உருவம் லிங்கத்தில் இருந்து வெளிப்படுமாற் போல் உருவாக்கப்பட்டுள்ளது. முழங்காலின் கீழ் அமைந்த பகுதி உருவத்திலே செதுக்கப்படவில்லை. சிவனுடைய கோலம் சந்திரசேகரர் வடிவமாகும். முன் வலக்கரம் அபயஹஸ்தமாகும். முன் இடக்கரம் தொடையிலே தங்கியுள்ளது. இலிங்கத்தின் மேற்பக்கத்திலே அன்னப்பறவையின் உருவமும் பிரமாவின் தலையும் கைகளும் செதுக்கப்பட்டுள்ளன. திருமால் வராக அவதாரமாக வருங்காட்சி இலிங்கத்தின் அடியிலே தெரிகின்றது. வலப்பக்கத்திலே பிரமனும் இடப்பக்கத்திலே விஷ்ணுவும் கைகூப்பி வணங்குங் கோலத்திலே காணப்படுகின்றனர். இதனைப் போன்ற இலிங்கோத்பவரின் வடிவங்கள் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலிலும் தசாவதார குடபோகத்திலுங் காணப்படுகின்றன. கீழமாத்துார் சிவாலயத்திலும் இவ்வாறான வடிவம் உண்டு. இலிங்கத்திலிருந்து சிவன் வெளிப்படுவதும் மேலே பிரமன் பறந்து செல்வதும் அடியிலே திருமால் வராகமாகி நிலத்தை உழுவதும் அதிலே சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
9) இராவண அனுக்கிரக மூர்த்தி
கைலாய மலையை இராவணன் பெயர்க்க முற்படுங் காட்சி இரண்டு சிற்பங்களில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று புது மண்டபத்திலே காணப்படுகின்றது. அது மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. சிவனும் பார்வதியும் உமாசகிதர் கோலத்திலே அமைந்திருக்குங் காட்சி புது மண்டபத்துச் சிற்பத்திலே காணப்படுகின்றது. அவர்களின் ஆசனத்தின் கீழ் வழமைபோலக் கைலாய மலையின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முனிவர்
கணங்கள் இறைவனை இறைஞ்சிய கோலத்திற் காணப்படுகின்றனர்.

Page 202
F. நாாக்கர் கா: சிற்பக் காங்
இராவணன் முன்னால் முழந்தாளில் நின்று பத்துத் தலைகளையும் சாய்த்து இருபது கரங்களையுங் கூப்பிச் சிவனின் பெருமைகளைப் பாடுங் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைப் போன்ற சிற்பம் ஒன்று கம்பத்தடி மண்டபத்துத் தூண் ஒன்றில் அமைந்துள்ளது. அதிலே பீடத்திற் கூடுதலான அலங்காா வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. சிவனுடைய முன்கரங்கள் அமைந்துள்ள விதமும் சற்று வேறுபட்டதாகும். இராவணனுடைய வதனம் ரெளத்ா பாவத்துடனும்
உமாசகிதரின் கோலம் சாந்த சொரூபமாகவும் அமைந்துள்ளன.
10) விருஷப வாகனர்
சிவனும் பார்வதியும் உமா சகிதர் கோலத்தில் இடபத்தின் மேல் அமர்ந்திருக்குங் காட்சி கம்பத்தடி மண்டபத் தூண் ஒன்றிலே செதுக்கப்பட்டுள்ளது. வஸ்திராபரணங்களும், அங்க இலக்ஷனங்களும்,
முத்திரைகளும் வழமைபோலக் காணப்படுகின்றன.
11) ஓரகபாத மூர்த்தி
ரிஷபாரூடர் வடிவம் அமைந்திருக்கும் அதே பக்கத்தில் ஏகபாத மூர்த்தியின் உருவமுங் காணப்படுகின்றது. அதனையொத்த வடிவம் ஒன்று புது மண்டபத்திலும் அமைந்திருக்கின்றது. இரண்டு உருவங்களும் சில அம்சங்களில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. 니 மண்டபத்திலுள்ள படிமத்திலே சிவனது வலப்பக்கத்தில் இருந்து பிரமனும் இடப்பக்கத்தில் இருந்து மகாவிஷ்ணுவும் தோன்றுகின்றனர். இருவரின் வடிவங்களிலும் கால்கள் தெரியவில்லை. முன்னிரு கரங்களும் அஞ்சலி ஹஸ்தமாய் அமைந்திருக்கின்றன. பின்னுள்ள கரங்கள் வழமையான சின்னங்களை ஏந்திய வண்ணமாயுள்ளன. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பத்திலே சிவனுடைய உருவம் மட்டுமே தெரிகின்றது. அதிலே பிரமனதும் விஷ்ணுவினதும் உருவங்கள் கானப்படவில்லை. எகபாத மூர்த்தியின் உருவத்தின் கீழ் மூன்று கோயில்களின் பிரதிமைகள்
அமைக்கப்பட்டுள்ளன.

நாயக்கர் காலச் சிற்பக்கலை
மதுரை மீனாகூழியம்மன் கோயில் ஆடவல்லார்
மதுரை மீனாகூழியம்மன் கோயில் சோமாஸ்கந்தர்

Page 203
மதுரை மீனாகூஜியம்மன் கோயில் வல்லப கணபதி நடனக் கோலம்
மதுரை மீனாகூரியம்மன் கோயில் வல்லப கணபதி ஆசனக் கோலம்
 

மதுரை மீனாசுழியம்மன் கோயில் சிவபெருமான்
மதுரை மீனாசுழியம்மன் கோயில் திரிபுராந்தகர்
மதுரை மீனாசுழியம்மன் கோயில் மயில்வாகனர்

Page 204
மதுரை மீனாகூழியம்மன் கோயில்
மதுரை மீனாகூதியம்மன் கோயிற்
கற்தூண் சிற்பம். அம்பிகை
மதுரை மீனாகூழியம்மன் கோயில் ஐயனார்
 
 
 

மதுரை மீனாசுழியம்மன் கோயிற் கற்தூண் சிற்பம். - சித்திரப்பாவை
ಘ್ವಿ
மதுரை மீனாசுழியம்மன் கோயில் ரதி
மதுரை மீனாகூரியம்மன் கோயில் விறிவி

Page 205
மதுரை மீனாகூழியம்மன் கோயில் மதுரை மீனாகூழியம்மன் கோயில்
குறத்தி பிள்ளையை ஏந்திய கோலத்திற் தாய்
மதுரை மீனாசுழியம்மன் கோயிற் குதிரைத் தூண்
 
 

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 38
12) அர்த்தநாரி வடிவம்
அதே தூணில் அர்த்தநாரி வடிவம் அமைந்திருக்கின்றது. அதிலே வழமைபோல வலப்பக்கத்தில் ஈஸ்வரனுக்குரிய லக்ஷணங்களும் இடப்பக்கத்திலே அம்மனுக்குரிய அம்சங்களும் அமைந்திருக்கின்றன. பார்வதியின் கை லோலஹஸ்தமான தொங்கு கரமாயுள்ளது. வடிவத்திலே சிவனுக்குரிய பாதியில் முன்கரம் அபயஹஸ்தமாக அமைந்திருக்கையில் பின்கரம் மழு ஏந்திய கோலத்திற் காணப்படுகின்றது. புது மண்டபத்திலுள்ள அர்த்தநாளியின் வடிவம் கூடிய வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. அதிலே அம்மனின் பாகத்தில் இரண்டு கரங்கள் காணப்படுகின்றன. முன்கரம் லோல ஹஸ்தமாகும்.
13) ஹரிஹர மூர்த்தி
அர்த்தநாரியின் இடப்பக்கத்தில் அமைந்திருக்கின்ற ஹரிஹர மூர்த்தியின் வடிவத்தின் ஒரு பாகம் சிவனுக்குரிய அம்சங்களையும் மற்றப் பாகம் திருமாலின் அம்சங்களையும் கொண்டுள்ளது. அர்த்தநாரி வடிவத்தைப் போல இதிலே வலப்பாகத்திற் சிவனுக்குரிய அம்சங்கள் காணப்படுகின்றன. அதில் முன்கரம் அபயகரமாக அமைந்துள்ளது. பின்கரம் மழு ஏந்திய கோலத்திற் தெரிகின்றது. இடப்பாகத்தில் முன்கரம் கதையினைப் பிடித்த வண்ணமாயுள்ளது. பின்கரம் சக்கரம் ஏந்திய நிலையிற் காணப்படுகின்றது. இதனை ஒத்த உன்னதமான வேலைப்பாடு கொண்ட சிற்பம் ஒன்று புது மண்டபத்திலே காணப்படுகின்றது. அதிலே இடப்பாகத்தில் விஷ்ணுவின் முன்கரம் கடஹகஸ்தமாய் அமைந்திருக்கின்றது. அதன் உருவம் பெரியது, மிகுந்த வனப்புடையது.
14) தசுவினாமூர்த்தி
அதே தூணின் வடக்கு முகத்திலே தகூழிணாமூர்த்தியின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. கைலாசமலையிலே ஆலமரத்தின் கீழே யோகாசனக் கோலத்திலே ஈஸ்வரன் அமர்ந்திருக்குங் காட்சி சிறப்பான முறையிலே செதுக்கப்பட்டுள்ளது. முழங்கால் மட்டத்தில் மடித்துத் தொங்கும் வலக்கால் முயலகன் மேல் தங்கும் நிலையில் உள்ளது. இடக்கால் மடித்து வலக்கால் மேல் அமைந்திருக்குங் கோலத்தில் உள்ளது. இறைவனை வணங்கும்

Page 206
384 நாயக்கர் கால சிற்பக் கலை
ரிஷிகளதும் முனிவர்களதும் உருவங்கள் தெரிகின்றன. தஷிணாமூர்த்தி உருவத்திற்கு எதிரிலே அமைந்துள்ள தூணில் காமதகனரின் சிற்பம் அமைந்திருக்கின்றது. தலையிலே ஜடாபாரம் அமைந்திருக்கின்றது. முன் வலக்கரம் ஞானமுத்திரையில் அமைந்துள்ளது. முன் இடக்கரம் வரதகரமாகும். கையிலே ஏட்டின் உருவம் தெரிகின்றது.
15) கஜஹார மூர்த்தி
மதுரைக் கோயிலில் கஜஹார மூர்த்தியின் இரண்டு வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கம்பத்தடி மண்டபத்தில் தகூழிணாமூர்த்தியின் சிற்பம் காணப்படும் தூணின் அருகிலுள்ள கம்பத்திலே காணப்படுகின்றது. மற்றையது புது மண்டபத்தில் இருக்கின்றது. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பம் மரபுவழியான வேலைப்பாடுகளுடன் அமைந்திருப்பதோடு அலங்காரத் தோற்றத்துடனும் காணப்படுகின்றது. சிவனின் உருவம் எட்டுக் கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பின் கரங்கள் இரண்டும் யானைத் தோலைப் பிடித்த கோலத்தில் உள்ளன. மழு, சூலம், அம்பு ஆகிய படைக்கலங்கள் வலக்கரங்கள் மூன்றில் அமைந்திருக்கின்றன. மான், கபாலம், வில் ஆகியவற்றின் வடிவங்கள் வலக்கரங்கள் மூன்றிலே காணப்படுகின்றன. வலக்கால் முற்புறமாக உயர்த்தி யானையின் தோளில் தங்கும் வண்ணமாக அமைந்திருக்கின்றது. பிரதிமையின் பீடத்திலே இறைவனை வணங்கும் முனிவர்களின் உருவங்கள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. கம்பத்தடித் தூணிலே சிவனுடைய கோலத்தைக் கண்டு பயத்தினால் உருக்குலைந்த கோலத்தில் நிற்கும் பார்வதியின் உருவம் அமைந்திருக்கின்றது. அம்மனின் அருகிலே குமாரக் கடவுளின் வடிவம் தெரிகின்றது.
16) · Í'dar sr L-60 si
மதுரையிலே பிச்சாடனரின் உருவங்கள் கோயிலின் பல பகுதிகளிற் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், முதலி மண்டபம் ஆகியவற்றிலுள்ள தூண்களிலும் சுந்தரேஸ்வரர் கோயில் முதலாம் பிராகாரத்திலும் அவ்வுருவங்கள் காணப்படுகின்றன. கோபுரங்களின் பல

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 385
இடங்களிலே பிச்சாடனரின் சுதை உருவங்கள் அமைந்துள்ளன. பிச்சாடனரின் மூன்று அடி உயரமான உலோகப் படிமம் ஒன்று சுவாமி கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் சிலவற்றிலே எழுந்தருளியாக எடுத்துச் செல்லப்படும். ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள சிற்பமே அவை எல்லாவற்றிலும் மிகுந்த வனப்புடையதாகும். அதன் உயரம் ஆறடிக்கு மேலானது. அதில் நான்கு கரங்கள் அமைந்துள்ளன. முன்வலக்கரமானது மான் ஒன்றின் தலையிலே தங்கியிருக்கின்றது. பின் வலக்கரம் சூலம் ஏந்திய கோலமானது. முன்னிடக் கரத்திலே கபாலந் தெரிகின்றது. பிச்சாடனரைச் சுற்றி அரவங் காணப்படுகின்றது. காலிலே பாதணிகளும் கண்டாமணிகளுந் தெரிகின்றன. இடப்பக்கத்திலே ரிஷிபத்தினிகள் இடுகின்ற பிகூைடியினை ஏந்தும் கலசத்தோடு வாமனக் கோலமான ஒருவரின் உருவம் அமைந்துள்ளது. தூணின் மற்றொரு முகத்திலே அனசூயா முதலான ரிஷிபத்தினிகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பத்தில் அங்கங்களின் அளவுப் பிரமாணங்கள் பொருத்தமான வகையில் அமைக்கப்படவில்லை. மானினுடைய உருவம் செம்மையாக அமையவில்லை.
அதிலே ரிஷி பத்தினிகளின் உருவங்களும் அமைக்கப்படவில்லை.
17) உருத்திரன்
கம்பத்தடி மண்டபத்திலே பிச்சாடனரின் உருவத்திற்குப் பக்கத்திலே உருத்திரனின் உருவம் அமைந்துள்ளது. வலக்கரங்கள் இரண்டும் சிதைந்து விட்டன. பிற்காலத்தில் அவற்றைச் சுதை கொண்டு புனராக்கஞ் செய்துள்ளனர். சடை அக்கினிச் சுவாலை போல அமைந்திருக்கின்றது. பெருத்த மீசையும் பற்களும் வடிவத்திலே தெரிகின்றன. அளவுக்கு மேலாக ஆபரணங்கள் அமைந்திருக்கின்றன. திரிசூலம், மழு, அம்பு, வாள் ஆகியன வலப்பக்கத்திலுள்ள நான்கு கரங்களிலும் அமைந்திருக்கின்றன. இடப்பக்கத்துக் கரங்களிலே கபாலம், மான், மணி, கேடயம் என்பன தெரிகின்றன. முகப்புப் புறமாகப்படுத்திருக்கும் அசுரன் மேல் உருத்திரனின் வடிவம் அமைந்திருக்கின்றது. இந்தப்படிமம் வனப்புடையதாக அமையவில்லை. வீரவசந்தராய மண்டபத்தில் உருத்திர காளி சமேதரான உருத்திரனின் படிமங்கள் இரண்டுள்ளன. அவ்வடிவங்கள் செம்மை நலம் பொருந்திய

Page 207
386 நாயக்கர் கால சிற்பக் கலை
கோலத்தில் அமைந்துள்ளன. சடை வழமைபோல மிக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலே சித்திரிக்கப்பட்டுள்ளது. சடையிலே இலிங்கம் தெரிகின்றது. உருத்திரனுடைய உருவத்தில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. பின் வலக்கரத்தில் மழுவும் பின் இடக்கரத்தில் மானும் அமைதிருக்க்கின்றன. முன் இடக்கரத்திலே கேடயம் தெரிகின்றது. முன் வலக்கரம் உடைந்து விட்டது. ஆரங்கள் எல்லாம் அழகாக அமைக்கப்பட்டடுள்ளன. அவற்றில் அடியிலுள்ளது கபால மாலையாகும். முழங்காலிலும் கணுக்காலிலும்
ஆபரணங்கள் அமைந்துள்ளன.
18) கிராதார் ஜூனர்
அர்ஜூனன் தவமிருந்து மகேஸ்வரனிடம் இருந்து பாசுபதம் பெற்ற கதை மகாபாரதத்திலுள்ள வனபர்வத்திலே சொல்லப்படுகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு உருவமைக்கப்பட்டது கிராதார்ஜூனமூர்த்தி வடிவமாகும். அது கம்பத்தடி மண்டபத்துத் தூண் ஒன்றிலே அமைக்கப் பட்டுள்ளது. அர்ஜூனனுக்குப் பாசுபதம் வழங்கிய நிலையில் ஈஸ்வரனின் உருவம் அமைந்திருக்கின்றது. அதற்கு முன்னால் அம்பு, வில்லு ஆகியவற்றை ஏந்திய கோலத்தில் அர்ஜூனனுடைய வடிவம் தெரிகின்றது. இந்தச் சிற்பம் ஆகமங்களிலே சொல்லப்படும் விதிகளுக்கு முரணான வகையில்
அமைக்கப்பட்டடுள்ளது.
19) சோமாஸ்கந்தர்
கம்பத்தடி மண்டபத்திலுள்ள சோமாஸ்கந்தர் வடிவம் அதிக சிறப் புடையதாகும். அம்மையப்பரின் உருவங்கள் ஆசனக் கோலத்திலும் சுகாசன நிலையிலும் உள்ளன. அவர்களுக்கிடையிலே நடனமாடும் குமரேசனின் வடிவம் அமைந்திருக்கின்றது. சிவனுடைய முன்வலக்கரம் அபயகரமாய் உள்ளது. முன்னிடக்கரம் சிங்ககரணமாய் அமைந்துள்ளது. பின் வலக்கரத்திலே மழுவும் பின் இடக்கரத்திலே மானும் வழமைபோல அமைந்துள்ளன. அம்மனின் வலக்கரம் மலரேந்திய கோலமானது. இடக்கரம் ஆசனத்தில் அமைந்துள்ளது. குமரேசரின் கைகள் இரண்டும் மலரேந்திய வண்ணமானவை, மகுடம் கரண்டமசூடமாகும்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 387
20) ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
சிவன் காளியோடு போட்டியாக ஆடிய நடனம் ஊர்த்துவ தாண்டவம் ஆகும். ஊர்த்துவ தாண்டவத்திலே சிவன் வலக்காலைத் தலையின் மட்டத்திற்கு உயர்த்தி ஆடுகின்ற கோலம் அமைந்திருக்கும். நாட்டியத்திலே காளிக்கு நிகரானவர்கள் இல்லை. காளியும் சிவனும் போட்டியாக ஆடினார்கள். இறுதியிலே காளியை வெற்றிகொள்ளும் வண்ணமாகச் சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். நாணத்தின் காரணமாகக் காளியினால் அவ்வாறு ஆடிக்கொள்ள முடியவில்லை. ஊர்த்துவ தாண்டவக் கோலச் சிற்பங்கள் புது மண்டபத்திலும் கம்பத்தடி மண்டபத்திலும் உள்ளன. வலது பக்கத்திலுள்ள ஐந்து கைகளிலும் டமருகம், மழு, அம்பு, ஈட்டி, சூலம் ஆகியன அமைந்துள்ளன. இடப்பக்கத்துக் கரங்களிலே அக்கினி, மான், அம்பு, கேடயம், மணி ஆகியன தெரிகின்றன. சிவனுடைய இடக்காலின் கீழ் முயலகனின் உருவம் அமைந்திருக்கின்றது. புது மண்டபத்திலுள்ள வடிவத்தின் பிரதிமாலசுஷணங்கள் சற்று வேறுபட்டனவாகும். கரங்களிலுள்ள படைக்கலங்கள் அதிலே வேறு விதமாக அமைந்துள்ளன. காளியின் உருவம் பஞ்சமுக வாத்தியத்தை இசைக்கும் கோலத்தில் அமைந்திருக்கின்றது. பீடத்திலே நந்தி மேளங்கொட்டும் கோலமும், தாளம்போடும் நிலையிற் பிரமாவின் வடிவமும், திருமால் பதாக என்னும் கருவியை மிழற்றும் கோலமும் செதுக்கப்பட்டுள்ளன. புது மண்டபத்திலுள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் வடிவம் உன்னதமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலை வனப்பில் மதுரையிலே காணப்படுஞ் சிற்பங்களிற் சாலவுஞ் சிறந்தனவற்றுள் ஒன்றாக அது கொள்ளப்படுகின்றது. அங்கலக்ஷணங்களும் பாவங்களும் உன்னதமான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. வடிவம் வசீகரமான தோற்றங் கொண்டது. கலாதத்துவமும் அனுபவ முதிர்ச்சியும் ஒப்பற்ற வகையில் இவ்வடிவத்திலே பிரதிபலிக்கின்றன.
21. கா எரி
காளியின் உருவங்கள் இரண்டு கும்பத்தடி மண்டபம், புது மண்டபம் ஆகியவற்றிலே காணப்படுகின்றன. கலை வனப்பிலும் வேலைப்பாடுகளின் சிறப்பிலும் அவை இரண்டும் மிகச் சிறந்தவை. ஏறத்தாள ஒரே

Page 208
388 நாயக்கர் கால சிற்பக் கலை
தன்மையானவை. இரண்டு உருவங்களிலும் எட்டுக் கரங்கள் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பத்திலே கேசபந்தம் அக்கினிச் சுவாலை போலத் தோன்றுகின்றது. திரிசூலம், அம்பு, டமருகம் ஆகியன வலக்கரங்களில் உள்ளன. இடக்கரங்கள் கபாலம், வில், வச்சிரம் என்பவற்றை ஏந்தியுள்ளது. காளியின் இடக்கால் கணம் ஒன்றை ஊன்றிய கோலத்தில் அமைந்திருக்கின்றது. புது மண்டபத்திலுள்ள வடிவம் உக்கிரம் மிகுந்த தோற்றங் கொண்டுள்ளது. அதன் வலக்கரங்களிலே திரிசூலம், அம்பு அங்குசம், ஈட்டி என்பன அமைந்துள்ளன. இடக்கரங்களிலே கபாலம், வில், பாசம், கேடயம் ஆகியன காணப்படுகின்றன. உருவத்திலே ஆபரணங்கள் மிகுந்து காணப்படுகின்றன. வீரவசந்தராய மண்டபத்தில் உருத்திரனின் வடிவத்திற்கு அருகிலே உருத்திரகாளியின் உருவம் காணப்படுகின்றது. கிரீடம் ஜுவாலமாலமாக அமைந்திருக்கின்றது. பின்புறத்திலே ஐந்துதலை நாகம் தெரிகின்றது. காளியின் உருவம் நடனக் கோலமாகும். அதில் எட்டுக் கரங்கள் காணப்படுகின்றன. முன் வலக்கரம் விஸ்மயமுத்திரையில் உள்ளது. ஈட்டி, சக்கரம், அங்குசம் என்பன ஏனைய வலக்கரங்களில் உள்ளன. இடக்கரங்களிலே கபாலம், கேடயம். சங்கு. அங்குசம் ஆகியன அமைந்துள்ளன. நடனத்தோற்றம் லாவண்யமான கோலத்தில்
அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
22) வீரபத்திரர்
நாயக்கரின் ஆட்சிக் காலத்திலே வீரபத்திரர் வழிபாடு மிகுந்த செல்வாக்குப் பெற்றது. மதுரைக் கோயிலில் வீரபத்திரரின் வடிவங்கள் பல உள்ளன. அவற்றின் பிரதிமால்கூடிணங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர் ஆகியோரின் உருவங்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ளன. அவை வழமையானவை; ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, காளி ஆகியோரின் உருவங்களைப் போல அளவிற் பெரியவை. தக்க யாகத்திலே தன்னை அவமானப்படுத்தியமைக்குப் பழிவாங்கும் வண்ணமாகத் தக்கனை அழிக்குமாறு வீரபத்திரர், பத்திரகாளி
என்போர் சிவனால் அனுப்பப்பட்டனர் என்பது புராணக் கதை. அகோர

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 389
வீரபத்திரரின் உருவத்தில் ஜடாமகுடம் அக்கினிச் சுவாலைகளால் அமைந்திருக்கின்றது. வலக்கரங்களில் ஒன்று சூலம் ஏந்திய கோலமானது. மற்றொரு கரம் அம்பறாத்தூணியிலிருந்து அஸ்திரத்தை எடுக்கும் நிலையில் அமைந்திருக்கின்றது. மான், மழு, டமருகம் என்பன மற்றக் கைகளில் உள்ளன. இடக்கரங்களிலே கேடயம், வில், வச்சிராயுதம், மான் முதலியவற்றின் உருவங்கள் அமைந்திருக்கின்றன. வடிவத்தின் பிரதிமாலசுஷ்ணங்கள் ஆகமப் பிரகாரமானவை. மீனாகூழியம்மன் கோயிலின் தென்புறமாக அமைந்துள்ள யவந்தீஸ்வரர் சந்நிதியிலும் வீரவசந்தராய மண்டபத்திலும் வீரபத்திரரின் உருவங்கள் அமைக்கப்படுள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தில் பல உருவங்கள் உள்ளன. அதிலுள்ள முதலாவது தூணிலே அகோரவீரபத்திரரின் உருவம் அமைந்திருக்கின்றது. தோற்றம் பயங்கரமானது. தொங்கும் மீசையும் நீண்ட கோரப்பற்களுங் காணப்படுகின்றன. ஜடாமகுடத்திலே இலிங்கத்தின் உருவம் நடுவில் அமைந்திருக்கின்றது. சிகைச் சக்கரத்தில் சிங்கமுகம் காணப்படுகின்றது. இடது கரத்திற் கேடயமும் வலது கரத்தில் வாளின் கைபிடியும் காணப்படுகின்றன. கழுத்திலே தொங்கும் கபாலமாலையின் உருவம் தெரிகின்றது. கால்கள் இரண்டும் மனிதவடிவம் ஒன்றை உழக்கும் கோலத்தில் அமைந்திருக்கின்றன. அது தகூடினுடைய உருவமாகும். கம்பத்தடி மண்டபத்திலும் அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர் ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன.
23) அஷ்ட சக்திகள்
சக்திகள் எண்மரின் உருவங்கள் அஷ்டசக்தி மண்டபத்தில் அமைந்துள்ளன. இடைவெளியின் இரு பக்கங்களிலும் அவை காணப்படுகின்றன. யக்ஞரூபினி, சியாமளை, மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் படிமங்கள் வடக்குப் பக்கத்திலும் கெளமாரி, ரெளத்திரி, வைஷ்ணவி, மகாலகூழிமி என்போரின் உருவங்கள் தெற்குப் பக்கத்திலும் அமைந்துள்ளன. எல்லாச் சிற்பங்களும் ஏறக்குறைய ஐந்து அடி உயரமானவை. சமபங்க நிலையில் தூண்களிலே அவை செதுக்கப்பட்டுள்ளன. ரெளத்திரி, மனோன்மணி ஆகியோர் தவிர்ந்த ஏனையோரின் முன்கரங்கள் அபயமாகவும்

Page 209
390 நாயக்கர் கால சிற்பக் கலை
வரதமாகவும் உள்ளன. மனோன்மணி, ரெளத்திரி நீங்கலாக உள்ள சக்திகளின் முடிகள் கிரீட மகுடங்களாகும் யக்ஞ ரூபினியின் பின்வலக் கரத்திலே சுருவமும் பின்னுள்ள இடக்கரத்திலே மலர்வடிவமும் அமைந்துள்ளன. சியாமளையின் கரங்கள் தாமரை, நீலோற்பலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. மகேஸ்வரியின் கரங்களிலே தாமரை மலரும் பாசமும் தெரிகின்றன. மனோன்மணியினுடைய சின்முத்திரையில் அமைந்த வலக்கரத்தில் அக்ஷமாலை தெரிகின்றது. முன் இடக்கரத்தில் நிலோற்பலம் அமைந்துள்ளது. மற்றக்கரங்களில் தாமரை மலர்கள் உள்ளன. முடி ஜடா மகுடமாக அமைந்துள்ளது. கெளமாரியின் பின்கரங்கள் இரண்டும் சக்தி, வச்சிராயுதம் ஆகியவற்றை ஏந்திய வண்ணமாயுள்ளன. ரெளத்திரியின் சடாமகுடம் அக்கினிச் சுவாலைகளினால் அமைந்தது; உதடுகளின் ஓரங்களிலே கோரமான பற்கள் தெரிகின்றன. முன் வலக்கரத்திற் சூலமும் இடக்கரத்திற் கபாலமும் அமைந்துள்ளன. பின் வலக்கரத்தில் டமருகமும் இடக்கரத்திற் சங்கும் காணப்படுகின்றன. வைஷ்ணவியின் முடி கீரிட மகுடமாகும். நெற்றியிலே திரிபுண்டரம் தெரிகின்றது. பற்கள் கோரமானவை. பின் வலக்கரம் சக்கரம் ஏந்தியுள்ளது. பின் இடக்கரத்தில் சங்கு அமைந்துள்ளது. மகாலஷ்மியின் பின் கரங்கள் தாமரை மலர்களை
ஏந்திய கோலமானவை.
24) விநாயகர்
விநாயகரின் படிமங்கள் பல காணப்படுகின்றன. கோயில் வளாகத்திலே விநாயகர் கோட்டங்களும் அமைந்துள்ளன. கிளிகட்டி மண்டபத்து சித்தி விநாயகர் சந்நிதி தலவிநாயகருக்கு உரியதாகும். சுந்தரேஸ்வரர் கோயிலின் நடுக்கட்டு கோபுரத்திற்கு முன்னால் முக்குறுணிப் பிள்ளையாரின் பெருவடிவம் அமைந்திருக்கின்றது. அதிலே நான்கு கரங்கள் காணப்படுகின்றன. முன் வலக்கரத்தில் தந்தமும் பின் வலக்கரத்தில் அங்குசமும் அமைந்துள்ளன. முன் இடக்கரத்திலே மோதகமும் மற்றக்கரத்திலே பாசமும் அமைந்திருக்கின்றன. உருவம் பத்மாசன நிலையில்
அமைக்கப்பட்டுள்ளது.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 39
அசுஷ்ட சக்தி மண்டபத்தில் எலி வாகனத்தில் அமர்ந்த பிள்ளையாரின் வடிவம் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இடப்பாகத்திலே தேவியின் உருவம் தெரிகின்றது. படிமத்திலே பத்துக் கரங்கள் அமைந்துள்ளன. அங்குசம், தந்தம், சக்கரம் ஆகியவை வலக்கரங்கள் மூன்றில் அமைந்துள்ளன. இடக் கரங்களிலுள்ள உருவங்களில் தாமரை, கரும்பு வில், பாசம் என்பனவே தெளிவாகத் தெரிகின்றன. முன் இடக்கரம் தேவியை அணைத்த வண்ணமாயுள்ளது. துதிக்கையிலே கலசம் அமைந்திருக்கின்றது. ஆயிரங்கால் மண்டபத்திலும் மகா கணபதியின் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
25) குமாரக் கடவுள்
நான்கு கரங்கள் பொருந்திய சுப்பிரமணியரின் வடிவம் ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்திருக்கின்றது. மயில் வாகனராகி அவர் காட்சியளிக்கின்றார். பின்கரங்களில் சக்தி, வச்சிராயுதம் ஆகியவை அமைந்திருக்கின்றன. முன் வலக்கரம் அபயகரமாக அமைந்துள்ளது. முன் இடக்கரம் மயிலைப் பிடித்த கோலத்திலே தெரிகின்றது. அசுண்டிட சக்தி மண்டபத்தில் ஆறுமுகக் கடவுளின் வடிவம் அமைந்திருக்கின்றது. அதிலே பன்னிரண்டு கரங்கள் உள்ளன. முன்கரங்கள் இரண்டும் அபயமாகவும், வரதமாகவும் உள்ளன. மணி, அம்பு, வாள், சக்கரம், பாசம் ஆகியன வலக்கரங்களில் அமைந்திருக்கின்றன. இடக்கரங்கள் வேல், வில், கேடயம், மலர், கோழி ஆகியவற்றைப் பிடித்த வண்ணமாய் உள்ளன. கோபுரங்கள்
சிலவற்றிலும் குமாரக் கடவுளின் உருவங்கள் காணப்படுகின்றன.
26) சரஸ்வதி
ஆயிரங்கால் மண்டபத்திலே உன்னதமான வேலைப்பாடுகளுடன் கூடிய சரஸ்வதியின் படிமம் செதுக்கப்பட்டுள்ளது. கைகளிலே வீணையின் உருவம் அமைந்திருக்கின்றது. அங்கலகூடிணங்களும் அபிநயங்களும் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. தலையிலே கிரீடம்
அமைந்திருக்க வில்லை.

Page 210
392 நாயக்கர் கால சிற்பக் கலை
27) கங்காள மூர்த்தி
ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ள கங்காள மூர்த்தியின் வடிவம் ஆகமங்களிலே சொல்லப்படும் அமைப்பில் இருந்து சில அம்சங்களில் வேறுபட்டதாகும் . மூர்த்தியினுடைய முன் வலக்கரம் மானைத் தொடுங் கோலத்தில் அமைந்துள்ளது. பின் வலக்கரம் டமருகம் ஏந்தியுள்ளது. முன் இடக்கரத்தில் கபாலம் அமைந்துள்ளது. சூல தண்டம் பின் இடக்கரத்தில் அமைந்துள்ளது. கங்காளர் வஸ்திர தாரணராகக் காட்சியளிக்கின்றார். பாதங்களிலே அணிகள் தெரிகின்றன.
28) இரதியும் மன்மதனும்
ரதி மன்மதன் ஆகியோரின் உருவங்கள் ஆயிரங்கால் மண்டபத்திலே அமைக்கப்படுள்ளன. மன்மதனுடைய உருவம் சிதைவுற்றுள்ளது. கைகள் இரண்டும் உடைந்துவிட்டன. கையில் ஏந்திய கரும்பு வில்லின் ஒரு சிறிய துண்டமே எஞ்சியுள்ளது. இரதியின் வடிவம் நன்கு பேணப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. ரதியை அழகின் உருவமாக வியக்கத்தக்க வண்ணம் கலைஞர் வடித்துள்ளமை போற்றுதற்குரிய சாதனையாகும். அன்னப்பறவையின் மேல் அமர்ந்திருக்கும் கோலத்தில் வடிவம் தெரிகின்றது. பக்கத்திலே அமைந்திருக்கும் சாமரை வீசும் உருவம் அற்புதக் கோலமானது.
மண்டபத்தூண்களிலே நாயக்கமன்னர்களின் உருவங்களும் அவர்களின் தேவியரின் வடிவங்களும் திருப்பணி செய்த பிரதானிகளின் உருவங்களும் பல இடங்களிலே காணப்படுகின்றன. எல்லா நாயக்க மன்னர்களின் வடிவங்களும் மண்டபங்களிலே அமைக்கப்பட்டிருக்கின்றமைஒரு சிறப்பம்சமாகும் கற்சிற்பங்கள் இயல்பான தோற்றங் கொண்டனவாகவும் உயிரோட்டம் உள்ளனவாகவும் அமைந்திருக்கின்றன. அவர்களுக்குரிய வஸ்திர அலங்காரங்களும் பதவிச் சின்னங்களான அணிகலன்களும் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபத்திலே காணப்படும் குறவன், குறத்தி, வேடன்,
சிறந்தவை இவற்றைப் போன்ற யதார்த்த பூர்வமான மனித உருவங்களின் மாதிரி வடிவங்களைக் காண்டல் அரிது. மதுரைக் கோயில் விஜயநகர நாயக்கர் காலச் சிற்பக்கலையின் அருங்காட்சியகமாக விளங்குகின்றது. அங்குள்ள வடிவங்கள் தமிழகத்துகட்டடசிற்பக்கலைவளர்ச்சியின் உன்னதகட்டத்தைப்பிரதிபலிக்கின்றன.

நாயக்கர் காலச் சிற்பக்கலை
இ. கா. ராஜராஜன்
நாயக்கர் காலச் சிற்பக்கலை எனத் தலைப்புக் கொடுக்கப் பட்டிருந்தாலும், நாயக்கர் சிற்பக்கலை எனக் கூறி காலத்தை விடுத்திருக்கலாம். நாயக்கர் காலம் விசயநகரத்தின் தொடர்கதையே. சோழர் கலையினை முன்', 'இடை', 'கடை எனப் பிரித்துக் கூறுவது போல் விசயநகரக் கலை முன், பின்' என்றும் கூறலாம். பிற்பகுதியில் விசயநகரப் பேரரசர்கள் தம் ஆளுமை இழந்து பின்னணிக்குத் தள்ளப்பட்டமையால் அவருக்குக் கட்டுப்பட்டு கி.பி. 1565க்கு முன்னர் மகாமண்டலங்களில் ஆட்சிபுரிந்த நாயக்கர் தாமே தமது எல்லைக்குள் பேரரசர் ஆகின்றனர். அதாவது 33 பேரரசர் புரவலராய் இருந்து பரிபாலித்த கலை நான்கு (கெழுதி, செஞ்சி, மதுரை, தஞ்சாவூர்) நாயக்க மரபினர் ஆட்சியில் பிரிந்து செல்கிறது. அடிமரம் ஒன்றுதான். அதுவே விசயநகரம்; கிளைகள் நான்கு நாயக்க வம்சாவழியினர். விசயநகரம் விட்டுச்சென்ற கோயிற் கட்டடக்கலை மற்றும் சிற்பமரபினை நாயக்கர் தம் கையிலெடுத்துச் சென்றனர். உவமை வடிவில் கூறினால் விசயநகரம் இருண்டு கிடந்த 14ஆம் நூற்றாண்டுத் தென்னகத்தில் ஒளிவீச இந்து தர்மம் என்னும் பந்தமேந்தி வெளிப்பட்டது. முகமதியர்களின் பிடியிலிருந்து தென்னகத்தை மீட்டுப் பயணித்த காலத்தே 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீழ்ச்சியினைக் காணநேரிட்டது. கீழே விழாமல் இருப்பதில் நாம் பொறுமை இல்லை, விழும் ஒவ்வொரு காலமும் எழுந்து நிற்பதே பேராண்மை," என்னும் கோட்பாட்டிற்கு இணங்க விசயநகரத்தைத்
* guff. 85ff. GebeslymsJTéF6ör (Alexander von Humboldtpost-doctoral Fellow Institut für Indische Philologie und Kunstgeschechte, Freie Universität Berlin, Berlin). ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வேட்டின் (Art of the Nayakas, Tamil University, 2 vols. 1998) 56gs gi(53,5th.

Page 211
394 நாயக்கர் கால சிற்பக் கலை
தூக்கி நிறுத்தி, மகாராயர் இடத்தில் தாமிருந்து அவர் இட்ட, விட்ட பணியினைத் தொடர்ந்தனர் நாயக்கர். கலை அமைதியிலும் கோயில் விரிவாக்கத்திலும் சோழர் - முற்காலம், சோழர் - பிற்காலம் ஆகிய பிரிவுகளில் காணப்படுவது போல் மாற்றங்கள் காணப்படும் இவ்வடிப்படையில் விசயநகர நாயக்கர் கலை எனக்கூறி, முன்னதை முதற்பகுதி எனவும் பின்னதை இரண்டாம் பகுதி எனவும் கூறலாம். பல்லவர் - முற்காலப் பாண்டியர் காலத்தில் தொடக்கம் பெற்ற கோயிற் கட்டட சிற்பக்கலை நாயக்கருடன் முற்றுப் பெறுகிறது எனலாம். அவர்தம் காலத்திற்குப் பின்னர் பல்லவர் - சோழர் பாணி வரலாற்றுப் பனிமூட்டத்தில் ஆழ,3 விசயநகர - நாயக்கர் பாணி நிலைபெற்றுத் தொடரலாயிற்று.
நாயக என்னும் சொல் நாயக்கர் எனத் தமிழிலும், நாயுடு எனத் தெலுங்கிலும் வழங்கப்பெற்றது. நாயக் என ஐரோப்பியர்களால் உருமாற்றம் செய்யப்பட்ட வம்சாவழிப் பெயரை ஆரம்பகாலத்தில் நாயக்கர் வரலாற்றை 6TgáSlu gól65i Glu(5LDö356ír (Aiyar 1924, Virddhagirisan 1942, Srinivasachariar 1943, Swaminathan 1957) 6.035uUT6diru-60Trio/ BEITu85 (ndyaka) என்னும் வடமொழிச்சொல் பல பொருள்களைத் தரும் (Rajarajan 1998: 1-2); தலைவன், வழிநடத்துவோன், முதல்வன், பிரபு, தளபதி, ஆணையிடுவோன், காப்பியத் தலைவன் (உ-ம். கங்காதேவி தீட்டிய மதுராவிசயத்தின் குமார கம்பணன்), கழுத்தாபரணத்தின் வைரக்கல் முக்கிய உதாரணம் - நாயகம் (paradigm), சாக்கிய முனியின் (புத்தர்) ஒரு பெயர், பேரரசன், மாமன்னன் (Bhide 1990:596) எனப்பட்டவை. நாயக்க மரபினர் விசயநகரப் பேரரசு ஆட்சிக் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இத் தொடர்பே இவர்களை மதுரை (நாகமநாயகன், அவர் மகன் விசுவநாதநாயகன்), தஞ்சாவூர் (செவ்வப்பநாயகன், இவர் துணைவியார் முர்த்திமாம்பா, விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயரின் மனைவி திருமலாம்பா தேவியின் உடன்பிறந்த சகோதரி)7 செஞ்சி, கெழதி இக்கேறி ஆகிய மண்டலங்களில் நாயக்கர்களாக நியமிக்கத் தகுதியை உருவாக்கியது. மேலும் இவர்களின் முன்னோடிகள் மிகச் சிறந்த போராளிகள்; அவர்கள் அகண்ட பேரரசின் தூர தேசங்களில் அமைதியும்
தருமமும் தழைக்க மகாராயரால் அனுப்பப்பட்டனர். முன்னர்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 395
மகாமண்டலேசுவரன் எனப்பட்டு பின்னர் நாயகன் ("நாயகனாய் நின்ற நந்தகோபன்" திருப்பாவை 16) என்னும் பட்டத்துடன் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சுய ஆட்சி உரிமை பெற்றனர். கி.பி. 1565இல் விசயநகரம் கீழ்ப்பட்டபின் கட்டுப்பாடு அல்லாத தம் ஆட்சி பெற்றனர். இருப்பினும் இவர்கள் தாம் விசயநகரத்தின் வாரிசுகள் என்பதை மறக்காமல் ஆறவீடு மரபினருக்கு
8. காலப்போக்கில் முகமதியன் படையெடுப்புகளும்,
ஆதரவைக் காட்டினர் ஐரோப்பிய கிழக்கிந்திய (போர்சுசீசியன், டச்சுநாட்டான், பிரெஞ்சுக்காரன், ஆங்கிலேயன்) கம்பெனி நடவடிக்கைகளும் நாயக்கரை வரலாற்றுப் பனிமூட்டத்தில் ஆழ்த்தின.
குலம் நான்காயினும் நாயக்கரில் நீண்டகாலம் ஆண்டவர் கெழதிஇக்கேறி குடும்பத்தினரே (சுமார் 1500-1760). துளுநாடு எனப்படும் கடற்கரை, அதைத் தொடரும் மலைநாட்டுப் பகுதிகளில் (சிமோகா மாவட்டம், கருநாடகம்) பெயர்பெற்ற வீரசைவ விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த செளடப்ப கவுடர் (1500-1504) விசயநகரத்தின் சாளுவர் ஆட்சிக்காலத்தில் கெழதி என்னும் மலைநாட்டுப்பகுதியில் (Manddzone, Kamataka) நாயக்கராக நியமிக்கப்பட்டார். மண்வளம் சிறந்து இயற்கைச் செல்வங்களுடைய இப்பகுதியின்" மேற்புறம் உள்ள கடற்கரை மீது முகமதிய பீசபூர் சூல்தான் ஒரு கண் வைத்திருந்தான். கடற்கரையில் போர்ச்சுக்கீயர் போக்குவரத்தும் அதிகரித்து வந்தது". விசயநகரத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்த இந்நாட்டைக் காக்க அங்கு வீரத்திற் சிறந்த கெழதித் தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரையே அப்பகுதியின் பாதுகாவலராய் சாளுவராயர் நியமித்தனர். சதாசிவ நாயக்கன் (1544-1565) காலத்தில் கெழதி என்னும் சிறிய கிராமத்தின் அருகில் (சுமார் 5 கி. மீ.) உள்ள இக்கேறி என்னுமிடத்திற்கு தலைநகர் மாற்றப்பட்டது. கெழதியிலும் இக்கேறியிலும் இவர்தம் குலதெய்வமாகிய வீரபத்திரனுக்கு (அகோரேசுவரர்) கோயில் எழுப்பப்பட்டது. வாணிக அரசியல் பெருகிவந்த காசர்கோடு, மங்களூர் போன்ற பட்டணங்களிற் கோட்டைகளும் கோயில்களும் எழுப்பப்பட்டன. இப்பகுதியில் உள்ள பட்கல் என்னும் ஊரில் மிகச் சிறப்புற்ற குடிசை வடிவிலமைந்த கோயில்கள் கட்டப்பட்டன. முதலாம் வேங்கடப்பட நாயக்கன் (1586-1629) ஒரு தலையாய வீரன், “துளுநாட்டின் (விரோதிகளாகிய)

Page 212
396 நாயக்கர் கால சிற்பக் கலை
யானைகளுக்கு (இவர்) வைர அங்குசம்” எனப்பட்டார். கடற்கரை நாட்டில் பீசபூர் (அதில்ஷா) சுல்தான் மற்றும் போர்ச்சுகீசியரின் நடவடிக்கைகளை வேட்கடப்பர் கட்டுப்படுத்தினார். டெல்லாவாலே (Dela Vale) என்னும் இத்தாலிய பயணிநாயக்கரின் ஆட்சியில் சாலைப்பயம் (highway robbery) இல்லை என்று சான்றிதழ் வழங்குவதுடன், அரசியார் எவ்வித செருக்கும் இல்லாமல் நாட்டுப்புறத்தில் காணப்பட்டார் எனவும், அவர்தம் பேச்சு (quality of Speech) அரச பரம்பரையை நினைவுகூர்வதாகவும் முத்திரையிட்டார். வீரபத்திர நாயக்கர் (1629-45) தலைநகரை இக்கேறியில் இருந்து பிதநூறுவுக்கு மாற்றினார். சிவப்ப நாயக்கர் (1645-60) காலத்தில் போர்ச்சுகீசியர் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டு கடற்கரை நாடு நாயக்கரின் பிடிக்குள் அடக்கப்பட்டது. சோமசேகர நாயக்கர் (1663-71), ()ெசன்னம்மா (1677-97), முதலாம் பசவப்ப நாயக்கர் (1797-1714), இரண்டாம் பசவப்பன் (1939-54), வீரம்மா? (1757-63) ஆகியோர் காலத்தில் மராட்டியர் மற்றும் அயிதர் அலி ஆகியோர் படையெடுப்புகளால் கடற்கரை நாடும் மலைநாடும் தாக்கப்பட்டு இக்கேறியில் நாயக்கர் ஆட்சி வீழ்த்தப்பட்டது.
மதுரையில் விசயநகரப் பேராட்சி கி.பி. 1371 இல் தொடங்கியது. புக்கதேவரின் புதல்வர் குமாரகம்பணர் முகமதிய மதுரைச் சுல்தான் (Sultanate of Malobar) tolufilolobig ET"60L Lf"(вјth Gшт(5*(5) அனுப்பப்பட்டார். காஞ்சியில் இவர் முகாமிட்டிருந்த தருணம் மதுரை மகாதேவி அவருக்கு கனவில் தோன்றி, பாண்டியரின் போர்வாளை வழங்கி, அதர்மத்தின் பிடியிலிருந்து தம் நாட்டை மீட்டுத் தருமாறு ஆணையிட மதுராவிசயம் நடந்தது என்பார் இவரது துணைவியாராகிய காப்பியம் படைத்த கங்காதேவி. கம்பணரின் வருகைக்கு முன் புலியூர் (சிதம்பரம்), திருவரங்கம் ஆகிய கோயில்கள் இடிபட்டுக் கிடந்தனவாம். மதுரை செல்லும் வழியில் தென்னை மரங்களில் இளநீர் இருக்கும் இடத்தில் மனிதத் தலைகள் தொங்கியதாம். வேள்விப்புகை மணக்கும் அந்தணர் குடியிருப்புகளில் (agrahara) முகமதியர் முகாமிட்டு மாட்டிறைச்சியைச் சுடும் நாற்றம் வீசியதாம்" குங்குமமும் சந்தனமும் பூசி மகளிர் குளித்த தாமிரபரணி ஆற்றில் மனிதக் குருதி ஓடியதாம் (KalidoS 1976 :218, Thomas 1985 14-15). துலுக்கனின் (திருக்கோலக்குடி கல்வெட்டு, Thomas 1985:12) பிடியிலிருந்து நாட்டை மீட்டு இந்துதர்மம் சிறக்கக் கோயில்கள்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 397
திறக்கப்பட்டன.* தென்கோடியிலமைந்த பேரரசுப் பகுதிகளில் விசயநகர காவலர்களாய் மகாமண்டலேசுவரர்கள் அனுப்பப்பட்டனர். கிருஷ்ண தேவராயர் காலத்திலே தென்மண்டலத்திற் பேரரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகளை அடக்கும் பொருட்டு காசியபகோத்திரத்தைச் சார்ந்தநாகம நாயக்கர் அனுப்பப்பட்டார். அவரைத் தெடர்ந்து அவரது திருமகன் விசுவநாதன் கி.பி. 1529இல் முதல் நாயக்கராக மதுரைக்கு விசயம் செய்தார்." அவரைத் தொடர்ந்து 14 நாயக்கர்களும் நாயகிகளும் மதுரையில் கோலோச்சினர். அவர்களிற் சிறந்தோர் முதலாம் கிருட்டிணப்பன் (1564 - 72), வீரப்பன் (1572-95), இரண்டாம் கிருட்டினப்பன் (1595 - 1601), திருமலை (1623-59), சொக்கநாதன் (1569-82), மங்கம்மாள் (1689-1706) என்போராவர். மதுரை பாண்டியர்களுடன் தொடர்புடையதெனினும், இன்றுள்ள மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயமும் அதன் இணைப்புகளும் நாயக்கர்களாற் புதுபிக்கப்பட்டு மேலும் விரிவாக்கப்பட்டனவாகும். திருவாலவாயுடையார் திருப்பணி மாலை, திருவாலவாய்த்தளியான் பழம் வரலாறு என்பன செப்பும் விவரங்கள் இவை. திருப்பணிமாலை 106 பாடல்களில் திருப்பணி பற்றிக் கூறுகின்றது. இவற்றில் 13 பாடல்கள் தேவேந்திரன், ஐராவதம்"(இந்திரன், வெள்ளை யானை), மலையத்துவசன்,பாண்டிய மன்னர் (சுந்தரன், விக்கிரமன், பராக்கிரமன்) ஆகியோர் வரலாறு கூறும். ஏனையவை (93 பாடல்கள்) நாயக்க மன்னர் மற்றும் அவர்காலப் பெருமக்கள் திருவாலவாயுடையானுக்கு அளித்த தானங்களையும் எடுப்பித்த கட்டடங்களையும் பட்டியலிடும். இன்றுள்ள கோயிலின் மூலப்பகுதி முதலாக வெளி மண்டபங்கள் ஈறாக அனைத்தும் நாயக்கர் திருப்பணிகளாகும். கிழக்கு, மேற்கு இராய கோபுரங்கள் சுந்தரன் மற்றும் பராக்கிரம பாண்டியன் எழுப்பியதெனப்படும். இவற்றில் உள்ள (2:235) சுதைச் சிற்பங்கள் நாயக்கர் கைவண்ணமே (Rajarajan 1997:26). பாண்டியர் காலக் கோயில் மாலிக்காபூர்' போன்ற சுல்தானிய படையெடுப்பாளரால் உடைக்கப்பட்டன. பின்னர், குமாரகம்பணரும் அவர் வழித்தோன்றல்களும் இடித்த கட்டடங்களைப் புதுப்பித்து புதியனவற்றை உருவாக்கினர்.
திருப்பணிமாலை பட்டியலிடும் நாயக்கர் மற்றும் அவர் வழியினர் பின்வருவோர். விசுவப்பன் (பா. 14), கம்பண உடையார் (பா. 18), திம்மப்ப
நாயக்கர் (பா.25), பட்டுத்திருமலை நாயக்கர் (பா.32), கிருட்டிணப்ப (பொம்ம)

Page 213
398 நாயக்கர் கால சிற்பக் கலை
நாயக்கர் (பா.41), இலிங்கம நாயக்கர் (பா.44), இராமப்ப நாயக்கர் (பா.46) விசுவநாத நாயக்கர் (பா.49), கிருட்டிணவீரப்ப நாயக்கர் (பா. 51-55), வீரகிருட்டிணப்ப நாயக்கர் (பா. 59), விருப்பணன் (பா.71), முத்துவீரப்ப நாயக்கர் (பா.75) திருமலைநாயக்கர் (பா. 80-86), விசயரங்க சொக்கநாத நாயக்கர் (பா. 95) மீனாட்சி நாயக்கர் (பா.97), அழகிரி(பா.106) ஆக மொத்தம் 75 புரவலர்கள். சிலர் செட்டி எனப்படுவர். உ-ம் சிராமலைச் செவந்திமூர்த்தி செட்டி (பா.23), திருவலம்பச்செட்டி (பா83), வேலப்ப செட்டி (பா.34), மூர்த்தி செட்டி (பா.36), நாகு செட்டி (பா.63), பாப்பு செட்டி (பா.65) சிலர் முதலி எனப்படுவர், உ-ம். அரியநயினாமுதலி(பா49), நயினா முதலி(பா.58)". ஒானப்பிரகாச பண்டாரம் (பா.77) குப்பையாண்டி (பா.38) ஆகியோரும் உளர்.
முன் கண்ட புரவலர்களால் எடுப்பிக்கப்பட்ட கட்டடங்களாவன ஈசுவரம் (தளி, விமானம்) இந்திரவிமானம்" நந்திக்கு கோயில், தக்கணன் கோயில், கொடிமரம் (துவசத்தம்பம்), கோபுரங்கள், திருத்தேர்கள், தந்தப் பல்லக்கு போன்ற வாகனங்கள், திருமதிற்கற்று, திருமதில், பல மண்டபங்கள் என்பனவாகும். மண்டபங்கள் நடராசர், உத்சவமூர்த்திகள், அங்கயற்கண்ணி, அறுபத்துமூவர் (நாயன்மார் 63) ஆகியோருக்கும்; விழாக்கள் (பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல்,* எழுகடல் அழைத்தமை, வசந்த விழா) எடுக்கப்பட்டன. ஏனைய மண்டபங்களாவன: பொற்றாமரைக் குளச் சுற்று, கொடிக்கம்பம், நூறுகால், ஆயிரங்கால், வீரவசந்தம். புது? தேர்முட்டி* எனப் பலவாகும். “திருமலை நாயக்கன் சமுத்திரமெனும் தெப்பக்குளம் கண்டனன்” (பா 80-81). அதில் மைய மண்டபமெனும் நீராழிமண்டபம் படைத்தனன் (KalidoS 1981: 205-10).
கோயில் ஒழுகு'என்னும் திருவரங்கத் திருப்பணிமாலை கம்பயதண்ட நாயக்கர்? கரியமாணிக்கத் தண்டநாயக்கர் என்போர் பற்றித் தொடங்கிப் புராணக் கதைக்குள் செல்லும். அரங்கவிமானம் என்னும் தங்கவிமானம் ஆதிபிரம்மனால் சத்தியலோகத்தில் வழிபடப்பட்டதாகவும், பின்னர் இக்சுவாகு.??
கொணரப்பட்டதாகவும், மணலில் மூழ்கியிருந்த விமானத்தை கிளிச்சோழன்
விபீடணன்? வழி அயோத்தியிலிருந்து திருவரங்கம்
வெளிக்கொணர்ந்ததாகவும் கூறப்படும். சோழர், ஆழ்வார்கள் (திருமங்கை), பாண்டியர் காலத்திற்குப் பின்னர் முகமதியன் இழிசெயலும் அவரைத்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 399
தொடர்ந்து விசயநகர-நாயக்கர் வருகையும் பதிவு செய்யப்படுகின்றன. தென்நாயக்கர், கிருட்டினப்ப நாயக்கர், குமார (இளவரசன்) கிருட்டிணப்ப நாயக்கர் ஆகியோர் திருவரங்கனுக்கு வழங்கிய தானங்கள் பட்டியலிடப்படுகின்றன.
தஞ்சை நாயக்கர் விசயநகரப் பேரரசர் அச்சுதராயருடன் குலத் தொடர்புடையவர். முதலாமவர் செவ்வப்ப நாயக்கரின் துணைவியார் முர்த்திமாம்பா அச்சுதராயரின் பட்டத்துராணி திருமலாம்பாவின் உடன்பிறந்த சகோதரியாவார். செவ்வப்பர் (பொன்னார்மேனியன் 1535-64), அவர்தம் புதல்வர் அச்சுதப்ப நாயக்கர் (1564-90), இராகுநாத நாயக்கர் (1590-1632), விசயராகவ நாயக்கர் (1632-74) ஆகியோர் தஞ்சைத் தரணியை ஆண்டனர். இவர்களது காலத்தில் நலிந்த நிலையிலிருந்த முற்காலக் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு (உ-ம். இராசராசேசுவரம், தஞ்சை) புதியன பல கட்டுப்பட்டு (மன்னார் குடி), சோழர் காலத்திற்குப் பின்னர் கலைகள் புத்துயிர் பெற்றன. தமிழகத்து அரசியல் வரலாற்றிலே சிறப்பிடம் பெற்ற இடம் செஞ்சி. அதுவடக்கிலிருந்தும் (டெல்லி) மேற்கிலிருந்தும் (கருநாடகம்) படையெடுப்புகள் நிகழும் காலத்தே தாக்குதலுக்குட்பட்ட நிலப்பரப்பு. அதன் முக்கியம் கருதி அங்கு ஒரு நாயக்கர் பீடம் நிறுவப்பெற்றது. இவர்களது ஆளுமை பாலாற்றின் வடகரையில் குணதிசைக் கடல் வரை பரவியது. குமாரகம்பணன் காலத்தில் (14-ஆம் நூற்றாண்டு) தூந்திரராச்சியம் எனப்பட்டது. இங்கு பல மகாமண்டலேசுவரர் ஆட்சிக்குப் பின்னர் கிருட்டிண தேவராயர் காலத்தில் வையப்பர் நாயக்கராக நியமிக்கப்பட்டார். (Krishnaswami 1964 : 248). வையப்பன் (1526-41), பெத்த (பெரிய) கிருட்டிணப்பன் (1541-44), முதலாம் கிருட்டிணப்பன் (1567-75), சுரப்பன் (1544-67), கொண்டம நாயக்கன் எனப் பலர் செஞ்சியில் ஆண்டனர். தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கோயிற்கலையை வளர்த்தனர். வேலூர், விரிஞ்சிபுரம் , திருவண்ணாமலை, செஞ்சி எனப்பல இடங்களில் செஞ்சிநாயக்கர் திருப்பணிகளைக் காணலாம். செஞ்சியில் பல கோட்டைகளை எடுத்து தேசப் பாதுகாவலராய்த் திகழ்ந்தனர். இன்று அழிவுகளுக்கிடையே காணப்படும் தொல்நகரமாகிய செஞ்சி அக்காலத்தில் விசயநகரத்திற்கு ஈடாக நின்றது. (Michell 1991:143-60).
நான்கு நாயக்க மரபினரும் வெளியிட்ட சாசனங்கள் மூலமும் அவர்களின் காலத்து நூல்கள் சிலவற்றின் மூலமும் நாயக்கரின் திருப்பணிகள் பற்றி அறிய முடிகின்றது. அவற்றைப் பற்றிய விவரங்களிற் சில மேல்வருவனவாகும்.

Page 214
400
நாயக்கர் கால சிற்பக் கலை
1)
2)
3)
4)
5)
6)
கெழதி நாயக்கர் வரலாறு கூறும் சிரீதத்துவ ரத்தினாகரம் தொட்ட (Dodda பெரிய) சங்கன நாயக்கர் (16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) பரதகண்டத்தில் இராமேசுவரம் தொடங்கி காசிவரை புனிதயாத்திரை சென்று, தில்லி மொகலாயர் அவைமுன் ஒரு மல்யுத்தத்தில் வென்று பரிசு பெற்றதாகக் கூறும். அதை அவர் காசி விசவநாதர் ஆலயத்திற்குத் தானமாகக் கொடுத்தார். கெழதியில் உள்ள இராமேசுவரர் மற்றும் வீரபத்திரன் கோயில்களை எடுப்பித்தார். இக்கேறியில் கோட்டையும் அகோரேசுவரருக்குப் பெருங்கோயிலும் நிர்மாணித்தார் சேலம் மாவட்டம் அரகலூர் ஏறமஞ்சி துலுக்கன? நாயக்கர் என்பார் நீண்டகாலம் விடுபட்டிருந்த தேரோட்டத்தை நடத்தி, புதிய திருத்தேர் ஒன்றும் நிர்மாணித்தார் (ARE 1913, எண் 41) மதுரை நாகம நாயக்கர் (16ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) விரிஞ்சிபுரம் (வேலூர் அருகில்) கோயிலுக்கு தானங்கள் வழங்கினார். நாகம நாயக்கர் திருமகன் விசுவநாதன் (1529 - 64) மதுரைக் கோயிலை முற்றிலும் புதுப்பித்து (த.ஆ.ரா.ச. ப.323) திருவரங்கத்து அரங்கன் கோயிலுக்குத் தானங்கள் வழங்கினார். அவர் உருவாக்கிய பாளையங்களிற்° பாளையக்காரர்கள் கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்தனர்; உ-ம் இராமப்ப நாயக்கர் (களக்காடு ARE 1905, 129), அண்ணன் பசவண்ண (Basavanna) நாயக்கர் (திருக்குறுங்குடி), பெரிய இராமப்ப நாயக்கர் திருக்கோலங்குடி ARE 1916,65) வீரப்ப நாயக்கர் ஐயன் (கல்லிடைக்குறிச்சி ARE 1916,65), வீரப்ப நாயக்கர் ஐயன் (கல்லிடைக்குறிச்சி ARE 1907,113), இராமபத்திர நாயக்கர் (வடகரை - Gurfuug6Tb: Vadivelu 1915–21:680). சின்ன (சிறிய) செவ்வபர் (1535-64) தஞ்சை நாயக்கரான காலத்தில் சிரீசைலம், விருத்தாசலம், சோனகிரி (திருவண்ணாமலை), திருவரங்கம், சம்பகாடவி (மன்னார்குடி) ஆகிய கோயில்களுக்கு வாரி வழங்கிய தானங்களைப் பற்றி இரகுநாத உதயம், என்னும் இலக்கியம் கூறும். மதுரையின் முதலாம் கிருட்டினப்ப நாயக்கர் (1564-72) மதுரை மற்றும்
திருவரங்கம் கோயில்களுக்குச் சிறப்பான தானங்கள் வழங்கினார்.

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 401
7)
8)
9)
ஆலவாயுடையார் சுந்தர நாயக்கன்’ எனப்பட்டார். வெள்ளியம்பலம், வடக்கு ராயகோபுரம், ஆயிரங்கால் மண்டபம் இன்னபிற இவரால் மதுரைக் கோயிலிற் சேர்க்கப்பட்டன. (தளவாய் அக்ரகாரம் செப்பேடுகள், El, XI, ப.161) திருநெல்வேலி (இடக்கல், பாப்பாகுடி, கிருட்டிணாபுரம்), விசயபதி, தேவிகாபுரம் ஆகிய ஊர்களில் அவர் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றினார். அவர் சதாசிவராயரின் (1542-76) ஆணையை ஏற்றுக் கிருஷ்ணாபுரத்தில் “மந்தாரமலையை ஒத்த” கோபுரமும் இரங்கமண்டபமும் கூடிய கோயிலை திருவேங்கடநாதனுக்கு எடுப்பித்தார். திருத்தேரும் உத்சவங்களும் அணி சேர்க்கப்பட்டன (சதாசிவராயரின் கிருஷ்ணாபுரம் செப்பேடுகள் El, XI, ப. 331). தஞ்சை அச்சுதநாயக்கர் (1564-90) அரங்கநாதனுக்கு பொன்னாலான அரியாசனமும் ஆபரணங்களும் வழங்கியதாக இரகுநாத உதயம்' தெரிவிக்கும். கோயிலின் பொன் விமானம் புதுப்பிக்கப்பட்டு அரங்கனுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. கும்பகோணத்தில் இராமசுவாமி கோயிலை எடுப்பித்தார். மலையடிப்பட்டி குடவரையில் திருப்பணி செய்த அவரின் சாசனங்கள் இக்கோயிலில் அரங்கநாதனை திருவாய்மலை கண்ணிறைந்த பெருமாள் என விளிக்கும் (IPS912). வீரப்பநாயக்கர் (1572-95) காலத்தில் மதுரைக் கோயிலின் சிற்பக்கூடமான கம்பத்தடி மண்டபம் சேர்க்கப்டடது. சேரன் மாதேவி, இராமேசுவரம், பெரியகோட்டை (பழனி அருகில் - கதிரிநாத பெருமாள் ARE 1907,470) ஆகிய இடங்களில் கோயில்கள் எடுக்கப்பட்டன. இக்கேறி வேங்கடப்ப நாயக்கர் (1586-1629) கெளரவதுர்கா (துர்கா கோட்டை) என்னுமிடத்தைப் பிடித்து பவனதுர்கா எனப் பெயர் மாற்றம் செய்து அங்கு சித்தேசுவரன், விசுவேசுவரன், இலக்குமி - நாராயணன், மைலாரன் கோயில்களைக் கட்டினார். கோட்டைக்கு வெளியே விருப்பாக்கன், விட்டலன், நரசிம்மன், நந்தீசவரன் (வ்ருசேத்திரன்), வீரபத்திரன், குருநாதன் (முருகன்), காளி கோயில்கள் எடுக்கப்பட்டன. அவந்திசிவபுரம் என்னும் புதிய நகர் கண்டு, அதில் தாண்டவேசுரன், இரகுநாதன் கோயில்கள் படைத்ததாக சிவதத்துவ ரத்னாகரம்(ப345) தெரிவிக்கும்.

Page 215
402 நாயக்கர் கால சிற்பக் கலை
10) தஞ்சை இரகுநாத நாயக்கர் (1590-1632) காலத்தில் இராமேசுவரம், கும்பகோணம், திருவரங்கம், மன்னார்குடி, திருவையாறு (பஞ்சநதி), பசுபதி கோயில் (தேனுநாதன்), உப்பிலியப்பன் கோயில் (சிரீநிவாசத்தலம்) ஆகிய இடங்களிற் கோயில்கள் கட்டப்பட்டதாகக் கோவிந்த தீகூழிதரின் சாகித்யசுதா அறிவிக்கும் (SVH ப. 267). கும்பகோணம், திருவரங்கம் ஆகிய தலங்களில் முன்னர் தொடங்கப்பட்ட திருப்பணி இரகுநாதரால் தொடரப்பட்டிருக்க வேண்டும். கோபுரங்கள், மண்டபங்கள்,பிராகாரங்கள் சேர்க்கப்பட்டதாக அறியப்படுகிறது. 11) மதுரை இரண்டாம் கிரிஷ்ணப்ப நாயக்கர் (1565-1601) தானம்பெற்ற கோயில்களாக திருமுட்டம் (ARE 1916,266), பெரம்பலூர் (ARE 1913, 10) மதுரை,பத்மனேறி ஆகியவை குறிப்பிடுகின்றன. இரண்டாம் வேங்கட மகாராயரின் குனியூர் செப்பேடுகள் மதுரை நாயக்கர் மீனாட்சிசுந்தரேசன் அருள் பெற்றவர் எனக்கூறும் (EI, II, g,255). 12) திருமலை (1623-59) நாயக்கருடைய சாசனங்கள் ஆலடியூர், கபிலமலை, மேலாம்பூர், வேம்பக்குடி (சிவகங்கை), திருப்பாலத்துறை, புதூர் (திருமங்களம்) ஆகிய இடங்களிற் காணப்படும். மதுரைக் கோயிலுக்கு மிகப்பெரிய சேவை புரிந்த இவர், இன்றும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை சீர்செய்தார். விசயநகரத்து கிருஷ்ண தேவராயருக்குச் சமமான சமயப்பணியாற்றினார். 13) தஞ்சாவூர் விசயராகவ நாயக்கர் (1634-73) மன்னார்குடியில் கோபுரம், மண்டபம், பிராகாரம் எடுத்து மிகப் பல ஆபரணங்களை வழங்கினார். திருவரங்கன் மீது பக்தி கொண்டவர். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்புத்தூர் கோட்டைகளை நிர்மாணித்தார். 14) இக்கேறியின் சிவப்பநாயக்கர் (1645-60) கேதாரம், காசி, பூரீசைலம், கோகர்ணம், இராமேசுவரம் ஆகிய கோயில்களுக்குப்பணிபுரிந்தவர் என சிவதத்துவ ரத்னாகரம் (ப.347) தெரிவிக்கிறது. 15) மதுரைச் சொக்கநாத நாயக்கர் (1659-82) காலத்திற் கொங்குநாட்டுக் கோயில்கள் பரிபாலிக்கப்பட்டன. திருச்செங்கோடு (மலைமேல் காசி
விசுவநாதர்), கண்டிப்புதூர், குமாரபாளையம், சத்தியமங்களம் ஆகிய

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 403
இடங்களில் கோயில்கள் உருவாக்கம் பெற்றன. இராமநாதபுர சேதுபதிகள் இராமேசுவரம், திருக்கோட்டியூர், திருவாடனை, திருமெய்யம் ஆகிய இடங்களில் திருப்பணிகள் செய்தனர். மைசூர் உடையார் அரச பரம்பரையினர் அங்குள்ள சிரீரங்க பட்டினத்தில் அரங்கனுக்கு ஆலயம் கண்டனர்.
நாயக்க மன்னர்கள் குறிப்பிட்ட நிலப்பகுதிக்குள் ஆட்சிபுரிந்தாலும் பரதகண்டத்தின் வடபுலத்துக் கேதாரம், காசி முதல் தென்புலத்து இராமேசுவரம் ஈறாகப் புனித பயணம் மேற்கொண்டு ஆலய தருமங்கள் புரிந்தனர்.
படிமக்கலைக்கு மதுரைக் கோயிலின் மண்டபங்களும், கோபுரங்களும், ஒவியங்களும், தேரும் தெப்பக்குளமும் அளவிட இயலாத களஞ்சியங்களாகும். கற்சிற்பங்கள் மண்டபங்களிலும் (கம்பத்தடி, புது, ஆயிரங்கால்), சுதைச் சிற்பங்கள் கோபுரங்களிலும் (மற்றும் சுந்தரேசுவரர் கருவறைச் சுற்று சுவர்ப் பகுதியின் மேற்புறம்), மரச்சிற்பங்கள் தேர்களிலும் (இரண்டு சுந்தரேசுவரர், கூடல்அழகர், அழகர் கோயில்) காணப்படும். மேலும் பஞ்சலோக உத்சவ விக்கிரகங்களும் தந்த வார்ப்புகளும் விசயநகரத்தை 15 ஆம் நூற்றாண்டிற் கண்ட அப்துல்ரஸாக் “கண்ணின் மணி இப்படிப்பட்ட (கலையை) 356tioTL56ü606u” (pupil of the eye has neverseen) 6T6örpTi (Dallapiccola 1998136). சார்சு மிச்சல் வெளியிட்டுள்ள தந்தச் சிற்பங்கள் (அயல்நாட்டு அருங்காட்சியங்களில் காணப்படும்) அப்துல்ரசாக் கருத்தை உறுதி செய்கின்றன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திரிபுராந்தகன் பல்லவ - சோழர் கலையாண்மைக்கு நிகரானது.
நாயக்கர் மண்டபங்கள் சிலவற்றிலே காணப்படும் படிம அடுக்குகளை ஈண்டு கவனிக்கலாம். மதுரை சுந்தரேசுவரர் ஆலயத்தின் கம்பத்தடி மண்டபம் (வீரப்பநாயக்கர் காலம்) மிகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்தூண்களைக் கொண்டது. கிழக்கும் * மேற்குமாக இரு சிறிய கோபுரங்களுக்கு இடையே இம்மண்டபம் காணப்படும். வடகிழக்கு மூலையில் நூறுகால் மண்டபம் காணப்படும். இரண்டு வரிசையில் எட்டுத் தூண்களும் (4+4) கீழ்ப்பால் மேலும் ஆறு தூண்களும் நிலைபெற்றுள்ளன. கீழ்வரிசையில்
1, 2,5,6 தூண்களுடன் இணைக்கப்பட்ட சிற்பங்களாவன: (1) உக்கிரமாகாளி,

Page 216
404 நாயக்கர் கால சிற்பக் கலை
(2) கொடுகொட்டியாடும் சிவன், (3) வீரபத்திரன் (அக்னி), (4) வீரபத்திரன் (அகோரன்); மேல்வரிசையில் காணப்படுபவை: (5) சதாசிவன் (6) சதாசிவி எட்டுத் தூண்கள் குழுமத்தின் நடுவில் நந்த மண்டபம், பலிபீடம், கொடிமரம் (மேற்கு கிழக்காக) நிலைபெறுகின்றன. தென்மேற்கு மூலையில் உள்ள தூணிலிருந்து வலம் வந்தால் மேல்வரும் படிமக் கோப்புகளைக் காணலாம்: (7) இடபாரூடன் (8) ஏகபாதமூர்த்தி, (9) தேவியுடன் இடபாரூடன் (கீழே நவக்கிரக மண்டலம்), (10) அர்தநாரீசுவரன், (1) அரிஅரன் (12) சந்திரசேசரன், (13) கசசங்காரமூர்த்தி, (14) கங்காளமூர்த்தி, (15) அகோரமூர்த்தி, (16) பாகபதாத்திரமூர்த்தி, (17) கிராதன், (18) கல்யாணசுந்தரன், (19) திரிபுராந்தகன், (20) காலசங்காரமூர்த்தி, (21) சிவ-நடராசன், (22) காமதகனமூர்த்தி, (23) சக்ரதான மூர்த்தி (24) தக்சிணாமூர்த்தி, (25) சந்திரசேகரன், (26) சோமாஸ்கந்தன், (27) உமைசகிமூர்த்தி (28) உமைசகிதமூர்த்தி (29) காமதகனமூர்த்தி, மேலும் (30) இராவணானுக்கிரகமூர்த்தி - விக்கினேசுவர பிரசன்னமூர்த்தி.
ஆயிரம் தூண்களை உடைய மண்டபத்தின் (முதலாம் கிரிஷ்ணப்பன் காலம்) தென் திசையில் இரண்டு வரிசைத் தூண்கள் படிம வேலைப்பாடுடையவை. வாயிலுக்கு இடவலமாக மேற்கிலிருந்து கிழக்காக அமைக்கப்பட்டுள்ளவையாவன: காலசங்கார மூர்த்தி, கண்ணப்ப நாயனார், பிச்சதேவர், குதிரையோட்டி, குழந்தையுடன் குறத்தி, குறத்தி பாணன் இரண்டாம் வரிசையில் காணப்படுபவையாவன: கிரிஷ்ணப்ப நாயக்கர், திரிபுராந்தகன், ஆடும் சக்தி, வாயிற்காப்பான், மயிலேறும் கந்தன், பாணன், விறலி இங்கிருந்து வடபால் செல்லும் வழியில் சில சிற்பத் தூண்கள் காணப்படும் வலப்புறக் தூண் ஒன்றில் தடித்த மீசையும் பருத்த முலைகளுமுடைய அலி தோன்றுவான். வடகோடியில் உள்ள மேடை சிவநடராசன் இருப்பிடமாகலாம் முன்னிரு தூண்களில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் காணப்படுவர் 6 ஏனைய தூண்களில் சிறிய சிற்ப அலங்காரங்கள் உண்டு. இவற்றில் ஒன்று பஞ்சமுக நரசிம்மி வடிவமாகும்.
திருமலை நாயக்கர் எழுப்பிய புதுமண்டபம் (14X47 மீட்டர்) மற்றுமொரு சிற்பக் கூடமாகும். இதற்கு இணையானது தென்னகத்தில் வேறு எங்கும்

ந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 405 இ ளு ளு
காணப்படவில்லை. அது கிழக்கு மேற்காக ஆறு வரிசைகளில் 176 சித்திரத் தூண்களால் ஆக்கப்பட்டது. மண்டபத்தைச் சுற்றி நீர் நிரப்பக் கல்தொட்டி காணப்படும்" தூண்கள் மேல் வரும் சீரில் அமைந்துள்ளன.
தெற்கு 28 + 28 வடக்கு
30, 2- *30 26t 26
வெளிவரிசையிற் (28+28) சிற்பத் தூண்கள் இல்லை. இரண்டாம் வரிசையின் தென்கிழக்கு: (1) ஏகபாதன் வடகிழக்கு (2) கசசங்காரமூர்த்தி: தென்மேற்கு (3) இராவணானுக்கிரகமூர்த்தி, வடமேற்கு (4) திரிபுராந்தகன் இப்படிமங்களை அடுத்து மேல்வருவோர் இடம்பெறுகின்றனர். (5) காளி (6) கொடுகொட்டியாடும் சிவன், (7) போர்க்கோலம் பூண்ட மும்முலைத் தடாதகை, (8) தடாதகையை
எதிர்க்கும் சிவன். மேலும் காணப்படும் சிற்பங்களாவன:
கிழக்குவரிசை மேற்கு வரிசை
சந்திரன் கல்யாண சுந்தரன் திருவிளையாடல் பிரம்மன் திருவிளையாடல் இந்திரன் (முருகன்?) சூரியன் அர்த்தநாரீசுவரன் துவாரபாலகர் அதிகாரநந்தி துவாரபாலகர் அரிஅரன் பதஞ்சலி திருவிளையாடல் வியாக்ரபாதர் திருவிளையாடல்
திருமலை நாயக்கர் காலக் கலையில் திருவிளையாடற் புராணம் மிகுவது ஈண்டு நோக்கப்படல் வேண்டும்.
நாயக்கர்களின் மற்றுமொரு சிறப்பு இம்மன்னர்களின் சிற்பங்கள் (portraitsculpture) காணப்படுவது திருப்பரங்குன்றத்து வடபால் குடவரை முன் உள்ள மண்டபத் தூணில் திருமலை மன்னர் தேவிகளுடன்
தோன்றுவார். இம்மண்டகம் இவர் காலத்தில் சேர்க்கப்பட்டதெனப் பகரும்

Page 217
406 நாயக்கர் கால சிற்பக் கலை
புதுமண்டபத்தில் உள்வரிசைத் தூண்களில் இருபுறமும் மதுரை நாயக்கர்
மேல்வருமாறு தோன்றுகின்றனர்.
வடவரிசை தெற்கு வரிசை விசுவநாதன் கிருட்டிணப்பன் குமார கிருட்டிணப்பன் கசுதூரிரங்கப்பன் பெரிய வீரப்பன் முத்துகிருட்டிணன் கிருட்டிணப்பன் முத்துவீரப்பன் இலிங்கமன் திருமலை
நாயக்கர் சிற்பங்கள் விசுவநாதர் முதலாக புதுமண்டபத்தை எடுப்பித்த திருமலை வரை காணப்படும் ஒரே இடம் மதுரைதான். திருமலை கண்ட வரலாற்றுப் பார்வையினை இது சுட்டிநிற்கும்.
முதலாம் கிருட்டிணப்பன் எழுப்பிய கிருட்டிணாபுரம் வேங்கடவன் திருக்கோயில் உட்பிராகாரத்தில் காணப்படும் அவை (சபா) மண்டகம் யாளி மற்றும் சிற்பத் தூண்களுடன் கூடிய அருங்கலைக்கூடம். கிழக்கு-மேற்காக அமைக்கப்பட்டுள்ள இருவரிசையில் 14 (7+7) தூண்களுடையது. அழகர்கோயில் கல்யாண மண்டபத்தில் காணப்படுவது போல் யாளி மற்றும்
சிற்பத்துரண்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன. (கிழக்கிலிருந்து மேற்காக)
தெற்கு வரிசை வடக்குவரிசை
யாளி யாளி வீரபத்திரன் வீரபத்திரன் (ஆடும் கோலம்) (அல்லது அவரது அடியார்) யாளி uT6f மன்மதன் இரதி யாளி யாளி பீமன் முனிவரும் பெண்ணும் (அல்லது பூதகணம்) (கல்யாணசுந்தரன்?)
கோயிலின் வெளிப்பிராகாரத்து வடகிழக்கு மூலையில் வீரப்பன் மண்டபம்
எனும் யாளித் தூண்களால் (தெற்கு வடக்கில் 10+10) எழுப்பப்பட்ட கூடம்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 407
உண்டு. இதன் முன் கிழக்கு-மேற்காக ஆறு சிற்பத்தூண்கள் கிழ்க்கண்ட படிமங்களைத் தாங்கி நிற்கின்றன: (1) ஆடும் குறவன், (2) ஒரு இளவரசனைச் சுமந்து செல்லும் குறத்தி, (3) அர்ச்சுனன், (4) கர்ணன்,° (5) ஒரு இளவரசியைச் சுமந்து செல்லும் குறவன், (6) பூலோகரம்பை (மோகினி)"
கொங்கு நாட்டிலுள்ள தாரமங்களம் அப்பகுதியின் நாயகமாகும். கிருட்டிணாபுரத்தைப் போல் வடிவமைக்கப்பட்ட இக்கோயிலின் இராய கோபுரத்தைக் கடந்து சென்றால் இரு அழகிய யாளித் தூண்களைக் கொண்ட முகப்பினைக் காணலாம் கைலாச நாதன் கோயில்" கருவறையின் இருமருங்கிலும் கிழக்கு - மேற்காக அமைக்கப்படுள்ள சிற்பத் தூண்
வரிசைகள் (colonnade) காணப்படும் இவற்றில் இணைக்கப்பட்ட
சிற்பங்களாவன:
வடக்குவரிசை தெற்கு வரிசை இருடி பத்தினி சண்டிகேசுவரன் இருடி பத்தினி இருடி தேவி நாவுக்கரசர் பிச்சதேவன் ஞானசம்பந்தன் இருடிபத்தினி இரதி மோகினி மன்மதன் பதஞ்சலி காமாட்சி வியாக்ரபாதன் JiboT இருடி மாணிக்கவாசகர் கொடுகொட்டியாடும் சிவன் காளி கங்காதரன் சேத்திர பாலகன் ஆலிங்கனமூர்த்தி தக்சிணாமூர்த்தி திருமால் பிரதோசமூர்த்தி வீரபத்திரன் வீரபத்திரன் (அகோரேசுவன்) (அக்னி)

Page 218
4.08 நாயக்கர் கால சிற்பக் கலை
பொதுவாக இருபுறம் (அதாவது வடக்கு வரிசை, தெற்கு வரிசை) நிலைபெறும் தூண்களின் சிற்பங்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்வது போல் அமைக்கப்படும்; உ+ம் . நரசிம்மன் இரணியன் யுத்தம் - இரணியவதம் (தாடிக்கொம்பு, அழகர்கோயில்), கொடுகொட்டியாடும் சிவன் - காளி அல்லது இவை அருகருகேயும் அமைக்கப்படலாம்; உ+ம் கொடுகொட்டியாடும் சிவன் - காளி அக்னிவீரபத்திரன் - அகோரேசுவரன் (மதுரை கம்பத்தடி மண்டபம்) ஆனால் தாரமங்கலத்தில் இவ்விரண்டு பாணியும் காணப்பட்டாலும் (உ+ம் 1 கொடுகொட்டியாடும் சிவன் - காளி, 2 இரதி - மன்மதன், பதஞ்சலி வியாக்கிரபாதர்) எனையன கிரமத்துடன் அமைக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இடிந்திருந்த இக்கோயில் பிற்காலத்தில் சீர்செய்து நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும். அச்சமயம் மேலே செல்லிய வண்ணம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிழே கண்டபடி படிமஅடுக்கு அமைத்திருந்தால் தத்துவார்த்தமாக இருந்திருக்கும்.
தேவி
வடக்குவரிசை தெற்கு வரிசை
வீரபத்திரன் (அக்னி) வீரபத்திரன் (அகோரேசுவரன் கொடுகொட்டியாடும் சிவன் காளி பதஞ்சலி வியாக்ரபாதன் ஞானசம்பந்தன் நாவுக்கரசன் ஆலிங்கனமூர்த்தி சண்டிகேசுவரன் இருடிபத்தினி இருடி இருடிபத்தினி இருடிபத்தினி பிச்சைதேவன் மோகினி கங்காதரன் ஐயனார் மாணிக்கவாசகர் இருடி காமாட்சி தட்சிணாமூர்த்தி மன்மதன் இரதி சேத்திரபாலகன் பிரதோசமூர்த்தி அயக்கிரீவன் JoLoT
திருமால்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 409
முற்காலத்து கட்டட-சிற்ப வடிவமைப்பை பிற்காலத்தில் சீர்செய்யும் பொழுது சீரழிவும் ஏற்படலாம். காஞ்சி கைலாயநாதன் கோயிலிற் பல்லவர் காலச் சிற்பங்களுக்கு மேற் பிற்காலத்தில் ஒட்டப்பட்ட சாந்து (plaster) வேலைப்பாடு இதற்கு நல்ல உதாரணம் (மேலும் காண்க: வைகுண்டப் பெருமாள் கோயில் மற்றும் மலையடிப்பட்டி அரங்கன் குடவரை) காஞ்சி கைலாயநாதன் மற்றும் திருத்தணி வீரட்டானத்தில் காணப்படும் சப்த மாதர்கள் தம் இடம்பெயர்வது g6l6 Tgg751T6ör (cf. Kalidos 2000).*?
சிற்பத் தூண்கள் விசயநகரம் தொட்டு (உ+ம். விட்டலன்) தென்னகம் முழுவதும் காணப்பட்டாலும் மதுரைப் பகுதி நாயக்கர் கால மண்டபங்களைப் போல் (உ-ம் -புது- கம்பந்தடி தூண்களே சித்திரமாகத் தோன்றுவது அரிது தஞ்சை, செஞ்சி, கெழதியிலும் அரிதே தஞ்சை, மன்னார்குடி கும்பகோணம் (Nanda et al 1997 படங்கள் 3-11), திருமுட்டம் திருவண்ணாமலை (ஆயிரங்கால் மண்டகம்), தேவிகாபுரம் (அனைத்து மண்டகங்கள்) விரிஞ்சிபுரம் (மண்டகங்கள்), சிருங்கேரி (மகாமண்டபம்) பட்கல் (சுவர்ப்பகுதி அடிமட்டம்) ஆகிய இடங்களில் சிறப்பான சிற்பங்களுடைய தூண்கள் தென்படும். இவற்றில் சதுரப்படையான பகுதிகளில் (4.8 அல்லது 12) சிற்பங்கள் ஒரே தூணில் காணப்படலாம் இவை மதுரைப் பகுதியிலும் உண்டு சோழர் காலத்திலும் (உ+ம் தாரசுரத்து இரத மண்டபம்) முன்னதாக பல்லவர் காலத்திலும் (உ+ம் சீயமங்கலம் குடவரைத் தூண்கள்) இவை வெளிப்பட்டன. விசயநகர - நாயக்கர் காலத்தில் இப்பெருக்கம் மேலும் பெருகி வரலாறு படைத்தது.
சிரீதத்துவநிதி என்னும் சிற்பக் களஞ்சியம் மைசூர் உடையார் வம்ச கிருட்டிணராசரால் தொகுக்கப்பட்டது. மூன்று தொகுதிகளாக தஞ்சாவூர் சரசுவதிமகால் நூலகம் வெளியிட்ட இது வடமொழி மூலம் கிரந்தத்தில் தமிழாக்கத்துடன் உள்ளது. நான்கு முக்கிய பிரிவுகளில் படிம gabi,660 3605 (pratimalaksana through dhyanaslokas) u'gus51Gib முதலாவது சக்தி தத்துவநிதி, இரண்டாவது விட்டுணு தத்துவநிதி, மூன்றாவது சிவதத்துவநிதி (இதில் கணபதியும் சுப்பிரமணிய - முருகனும் அடங்குவர்), நான்காவது பிரம்மதத்துவநிதி (பிரம்மா ஏனைய சிறுதேவதைகள் (minor gods,உ+ம் அட்டதிக்கு பாலகர்) இதில் அடக்கப்படும்). சார்சுமிச்சல்
43

Page 219
40 நாயக்கர் கால சிற்பக் கலை
(1995: அத் 6), சுவான் அண்டிங்டன் (1993 அத் 24) பல படிமங்களைப் பட்டியலிட்டாலும் இவ்வாசிரியரின் (Rajarajan 1998 அத் 4) முனைவர் பட்ட ஆய்வேடு சீரீதத்துவநிதியைப் பின்பற்றிப் பல புதிய தரவுகளைத் தரும். கலாநிதி மிச்சல் அவர்களின் தொகுப்பிற் காணப்படும் அரிய சிற்பங்களாவன: 1) சங்கு, சக்கரம், கத்தி, கருடன், வராகம் கொண்ட விசயநகர சின்னம்
(emblem) (கல் படம் 1) - அழகர்கோயில், 2) சோமாசுகந்தர் - பஞ்சலோகம் (படம் 12) - சான்பிரான்சிசுகோ
அருங்காட்சியகத்தில் உள்ளது. 3) கிருட்டிண தேவராயர் அஞ்சலிபந்தகத்தில் நிற்கும் படிமம் சுமார் 35 வயது
மதிப்பிடலாம் (கல், படம் 114): சிதம்பரம் நடராசர் கோயில். 4) வேங்கடவன் நின்ற கோலத்தில் (சங்கு, சக்கரம், ஊரு, அபயக் கைகள்) “மனத்துக்கினியான்” (திருப்பாவை 12) எனக் கோதை பாடியதை ஒத்த இனிய முகம் (கல், படம் 115) 5) அழகு காட்டும் நங்கை (கல், படம் 116), வேணுகோபாலன் இளங்கோயில்,
திருவரங்கம். 6) ஐந்துதலை சுகாசனத்தில் அமர்ந்து ஆதிசேடன் மேல் (சங்கு, சக்கரம், பழம் போன்ற பிண்டம், கதை கையிலேந்தி) பீதாம்பரமும் கிரீட மகுடமும் சகலாபரணங்களும் தரித்த வைகுண்டமூர்த்திக்கு இருவர் குடமுழுக்கு செய்யும் அரிய சிற்பம் (கல்தூண், படம் 131) இராமசுவாமி கோயில், கும்பகோணம். 7) இரு மனைவியருடன் அஞ்சலி பந்தமாக நிற்கும் நாயக்கர், அலங்கார
மண்டகம் திருமுட்டம் பூவராகன் கோயில் (கல், படம் 133). 8) கைத்தாளம் வாசிக்கும் பேயுருக் கொண்ட காரைக்காலம்மையார், பஞ்சலோகம், நெல்சன் அட்சின்சு அருங்காட்சியகம், கான்காசு நகரம், (படம் 149). 9). கீழ்க்கண்ட தந்தவார்புகள் (தனிமனிதர் அல்லது அருங்காட்சியக சேர்ப்புகள்): விமானத்தினுள் அரங்கநாதன். மீனாட்சி கல்யாணம், சரச லீலை புரியும் அரசனும் அரசியும், இரு பெண்களுடன் இன்பம் காணும் அரசன், மேலும் சில காமக்
கேளிக்கைகள் ( படங்கள் 152-257)

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 4.
சுசான் அண்டிங்டன் தெரிவு செய்து வெளியிட்டுள்ள சிற்பங்களாவன:
1) தஞ்சைப் பெருவுடையார் முருகன் கோயில் கோட்ட மூர்த்தியாகிய
மயில்வாகனன், துவாரபாலகன் (படங்கள் 24:2-3). 2) வண்ணம் தீட்டப்பட்ட திருமலை நாயக்கரும் துணைவியர் இருவரும்,
மதுரை (கல், pl. 38). 3) பிச்சமூர்த்தியும் தொடரும் பெண்களும் ஒவியம், நடராசன் கோயில்,
சிதம்பரம் (p. 39).
கும்பகோணம் இராமசுவாமி கோயிற்சிற்பங்கள் (Nanda 1997:1-15), இதே கோயில் தேர்ச் சிற்பங்கள் (Dallapicola 1994 11-24), கூடல் அழகர் கோயில் தேர்ச் சிற்பங்கள் (Rajarajan 1998 329-48) சுதைச் சிற்பங்கள் (Kalidos 1997b19-40), தாடிக்கொம்பு இரங்கமண்டபம் (Gopalakrishnan 1996:415-31), திருவண்ணாமலைக் கோபுரங்கள் (Gravely 1959), ஏகபாதமூர்த்தி (GrOSSato 1987 படங்கள்), சிதம்பரம் கோபுரங்கள் (Harle 1963), 656 IyrĞJG5h (Rao 1967/ Auboyer 1994/ Kalidos 2000a), g556) 16dioT600TTLo606u éfiburães56oir (L'Hernault 1990) Gg5fé, éfgiburājiè956ît (Kalidos 1989, Michell 1992), சுசீந்திரம் கோயில் (Pillay 1953), வரதராசசுவாமி கோயில் (Raman 1975), கெழதிநாயக்கர் கலை (Sundara 1987) எனப்பல ஆய்வுகள் வெளியிடப்பட்டிருப்பினும் நாயக்கர் கலையின் முழுப் பரிமாணமும் இன்றளவும் அளக்கப்படவில்லை (Rajarajan1998. அத்.1),
காணப்பட்ட ஒருசில அரிய சிற்பங்களைப் பற்றி சுருக்கமாக இவ்விடத்தில் கூறி இக்கட்டுரையை முடித்தல் நலம்,* தேவியின் வடிவங்களாவன (சத்திநிதி):தடாதகை கதை (அட்டசக்தி மண்டகம், மதுரைப் பெருங்கோயில்), திருமந்திரம் (பா,699) கூறும் “தானே எழுந்த தத்துவநாயகி” சதாசிவி (மதுரைக் கோபுரங்கள்), புவனேசுவரி (வீரபத்திரன் கோயில், கெழதி), மண்டலத்தில் காணப்படும் சகஇலக்குமி (திருவண்ணாமலை இராய கோபுரம்), மகிடனை வதம் செய்யும் தேவியின் தொடர் சிற்பங்கள் (தேவிகாபுரம், முகப்புமண்டகம்), துர்கை (சிவப்பநாயக்கர் அருங்காட்சியகம் சிமோகா), குழந்தையுடன் தோன்றும் கந்த துர்கை (தேவிகாபுரம் முகப்பு மண்டகம்), சப்தமாதர் (வீரபத்திரன் கோயில், கெழதி), நரசிம்மி (விருத்தாசலம்), ஆடும் வைணவி (விரிஞ்சிபுரம் மண்டகம்), இருடிகளைச் சாடும் மோகினி (திருமுட்டம்
அலங்கார மண்டகம்) என இன்னம் பல.

Page 220
412 நாயக்கர் கால சிற்பக் கலை
திருமாலின் கோலங்கள் பல சித்தரிக்கப்படுகின்றன இவற்றில் குறிப்பிடத்தக்கவையாவன: பசு உடலுடன் இடுப்புக்கு மேல் சங்கு சக்கரத்துடன் தோன்றும் மகாவிட்டுணு (Virat Purusa பிரம்மன் இப்பசுவின் பால் பருகுவது போல் - திருமுட்டம் அலங்கார மண்டகம்)," பல்வேறு கடவுளர் சேகம் ஏந்தி நிற்கத் தோன்றும் வைகுண்டமூர்த்தி (இராமகோபுர அடிப்பகுதி, வெங்கடரமணன் கோயில் செஞ்சி), துவாதச (12) மூர்த்திகள் (திருவரங்கன் கோயிலினுள் உள்ள குளக்கரை சுதைச் சிற்பங்கள்), தாமரைப் பீடத்தில் பாதத்தை நீட்டி தேவர் (திருமகள், நிலமகள், கருடபுருடன், அனுமன்) புடைசூழ ஆதிசேடன் மேல்பள்ளிகொண்ட வெங்கடரமணன் (மேற்படி செஞ்சி கோபுரம்) நாட்டிய கோத்தில் (ஆனந்த தாண்டவம்) திருமால் (முருகன் இளங்கோயில் தஞ்சை,சலகண்டேசுவரன் மண்டகம் வேலூர்)°கருடன் மீது நின்ற கோலத்தில் கருடநாராயணன் (வேலூர் மண்டகம்), ஆடும் வராகமூர்த்தி (விரிஞ்சிபுரம் கல்யாண மண்டகம்), ஆடும் நரசிம்மன் (திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டகம்)," ஆடும் திருவிக்கிரமன் (தேவிகோபுரம் மண்டகம்) (Rajarajan 1999) இராமாயாண தொடர்ச் சிற்பங்கள் (கூடல் ஆழகர் தேர், வடுவூர் தேர், குடந்தை இராமசுவாமி தேர் மற்றும் ஒவியங்கள் - (Nanda 1997: கலர்ப் படங்கள்) தானிப்பாடி தேர், திருகோகர்ணம்? ஒவியங்கள், கேதபப்யா கோயில் - பட்கல்), கல்பகவிருட மரத்திலிருந்து கோபியர் ஆடை திருடும் கண்ணன் (வேலூர் கல்யாண மண்டகம்),* சக்கரத்தாழ்வார் (திருமோகூர், காலமேகப்பெருமாள் கோயில் – cf. Begley 1973) 6T6IOT g6örgguh Lu6u.
சிவதத்துவதிதி ஐந்து முகங்கொண்ட மகேசுவரன், 25 முகங்கொண்ட மகாகைலாசமூர்த்தி, 10 அல்லது 32 கரங்களுடைய அகோரமூர்த்திகளை முன்வைத்து தொடங்கும். இப்படிமங்கள் தென்னகம் முழுவதும் காணப்படுவதலால் இவர்கள் முன்னிலைக் கடவுளர்களாக போற்றப்பட்டமை புலப்படும். இக்கேறியில் உள்ள அகோரேசுவரர் ஆலயம், கெழதி வீரபத்திரன், தேவிகாபுரம் தாரமங்களம், தாடிக்கொம்பு மதுரை (கம்பத்தடி மண்டகம்), கிருட்டிணாபுரம் ஆகிய இன்ன பிற கோயில்களில் காணப்படும் வீரபத்திரன் படிமங்கள் இவர் வழிபாடு ஆழமாக வேரூன்றி இருந்ததைச் சுட்டும் மதுரைக் கோபுரங்களில் காணப்படும் சதாசிவன் மற்றும் மகாசதாசிவன் கற்சிலைகளும் சுதையும் மேலும் தொடரும் நாயகங்களாகும்" மகா அகோரமூர்த்தி தமது

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 413
32 கரங்களில் தாங்கும் சின்னங்கள் ஆயுதங்களாகக் கீழ்க் கண்டவை குறிப்பிடப்படும். அபயம் கட்கம், சூலம், சக்கரம். உடுக்கை, எழும்பு அம்பு, கதை, தாமரை, கபாலம், ஞானமுத்திரை, குந்தாயுதம், அங்குசம், சபமாலை, கட்வங்கம், பரசு (இடக்கைகள்), வாதம், பலகை, உளி, பாசக்கயிறு முத்கரம் (mudgara), பாம்பு, நெருப்பு, மான், மணி, வில், கடிக்கை (kat hasta), இரத்தினம், நீலோத்பலம், கலசம், உலக்கை, புத்தகம் (வலக்கைகள்) (Rajarajan 1999a) இவ்வகைப்பட்ட (10 அல்லது 32 கரங்கள்) படிமங்களை மதுரைக் கோபுரங்களில் தென்படும் (Kalidos 1997b படம் 7) தேவிகாபுரம் விரிஞ்சிபுரம், வேலூர் மண்டகங்களில் வீரபத்திரன் தக்கணைத் தண்டித்த தொடர் சிற்பங்களைக் காணலாம். இவற்றில் சில வீரபத்திரனை கபாலமாலையுடன் காட்டும். சிவப்பநாயக்கர் அருங்காட்சியகத்தில் காளியும் ஆட்டுத்தலை தக்கணும் உடன் தோன்றும் பல கற்சிலைகள் உண்டு சிவனாரின் பல்வேறு நடனக் கோலங்கள் வெளிப்படுகின்றன (ஆனந்ததாண்டவம், கொடுகொட்டி அல்லது லலாடதிலகம். பின்னது தமிழக தேர்ச் சிற்பங்களில் உள்ளதாக 120 பட்டியலிடப்பட்டுள்ளன. KalidOS 1996: 408 - 41 படங்கள்) உமாமகேசுவரன் (கெழதி), கல்யாணசுந்தரன் (மதுரை), பிச்சைதேவர் (வேலூர்), காமதகனமூர்த்தி (சிருங்கேரி), காலசங்காரன் (தேவிகாபுரம்), திரிபுராந்தகன் (மதுரை ஆயிரங்கால் மண்டகம்), மதயானையுரி போர்த்தவன் (தஞ்சை முருகன் இளங்கோயில்) அர்த்தநாரீசுவரன் (தஞ்சை), இரதி (வேலூர்) தக்கிணன் (திருமெய்யம், காளையார் கோயில்) இலிங்கோத்பவமூர்த்தி (தேவிகாபுரம் இராயகோபுரம்), இடபாரூடராய் ஏகபாத மூர்த்தி (திருவானைக்கோயில்), சரபமூர்த்தி(மதுரைக் கோபுரங்கள்), காலபைரவன் (சிவப்பநாயக்கர் அருங்காட்சியகம், சிமோகா) எனப் பல சிவமூர்த்தங்களும்; திருவிளையாடற் புராணம், 1 பெரியபுராணம் கதைகளும் கல், சுதை, மரம் ஆகிய மூலங்களில் சிற்ப உருப்பெறும்.
சிரீதத்துவநிதி கணபதி முருகன் இருவரையும் சிவதத்துவத்தில் அணைத்துக் கொள்ளும். முத்கலபுராணத்தில் கூறப்படும் 32 கணபதி வடிவங்களும் சைவாகமத்தில் கூறப்படுவதாக 17 சுப்பிரமணியர் படிமங்களும் விவரிக்கப்படுகின்றன. கணபதி படிமங்களாவன: பால - தருண- பக்த- வீர - öFé55 - 56íla - (divija), éFá5 9-éráflül (ucchista), düJ (kSipra), ஏரம்ப, இலக்குமி மகாவிக்கினேசுவர, விசய (vijaya), கல்ப - நிருத்த,

Page 221
414 நாயக்கர் கால சிற்பக் கலை
ஊர்த்துவவிக்கினேச - ஏகாக்சர (ekaksara), வரத, திரியக்சர - (triyaksara), sojugTu (KSipadaya), grfiJ (haridra), 6J6gig - (ekadanta), மிருட்டி (mrst) உத்தண்ட-ருணமோக்சந- டுண்டி, திவிமுக, திரிமுக, சிம்ம, யோக, துர்கா, சங்கடஹர என்பனவாகும். இப்படிமங்களின் இலக்கணம் விரிவாகக் கூறப்பெறுகிறது. சுப்பிரமணியன் படிமங்களாவன: சுப்பிரமணியன் கந்தன், அக்னிசாத (agnjata), செளரபேயன் (Saurabeya), காங்கேயன், சரவனோத்பவன், கார்த்திகேயன், குமரன், சண்முகம், தாரகாரி, சேநாநி (Semani), குகன், பிரம்மச்சாரி, தேசிகன், கிரவுஞ்சபேதன் (krangbheda), சிகி (Sikhi-மயில்) வாகனன், வேலாயுதன் எனப்படுவன?. இவை முழுமைபெற்றபட்டியல் எனக் கூறவியலாது. இவ்விரு மூர்த்திகளின் பல்வேறு புராணக் கதைகளும் சிற்பங்களில் வெளிப்படுகின்றன. தமிழகத் தேர்களில் கந்தபுராணக் கதைகள், குமாரசம்பவம் மற்றும் கெளமாரம் என்னும் தந்திரம் கூறும் படிமங்கள் இங்கு சிறப்பிடம் பெறும்; உ-ம் சரவணபவன், அருடனாரூடமூர்த்தி (ஆட்டுகிடா வாகனம்), பிரம்மசாத்தா, குருமூர்த்தி, தாரகன்வதம், கிரவுஞ்சமலையை எறிந்தவன், வள்ளி கல்யாணசுந்தரன், மொட்டை ஆண்டி, தேவசேனாதிபதி, வள்ளியுடன் காதல் விளையாட்டு, சர்வலோக பிரதக்சிணமூர்த்தி, கொடுகொட்டி யாடும் சிவனுடன் கைத்தாளமிட்டு ஆடும் முருகன், அக்னிசாக சுப்பிரமணியன்° இவற்றிற்கெல்லாம் சிகரம் சூட்டினாற்போல் பன்னிருமுக விராடபுருடன்? மதுரை மேற்கு ராய கோபுரத்திற் காணப்படுகிறான்.
மேற்கண்ட அறுவகைச் சமய கடவுளன்றி ஏனைய தேவர்களும் பிரம்ம தத்துவநிதியில் அடக்கப்படுவர். பிரம்மா (Brahma) படைக்கும் கடவுள். பிரம்மன் (Brahman) என்பது அனைத்துத் தேவர்களின் தொகுப்பு° (Ultimate Reality, the Absolute). GTGOTG6), Sijibloggigi) (Sig 6 strug பிரம்மனை (Brahman) குறிக்கும். பிரம்மா ஐந்து விதமானார். சைவாகமத்தில் இவர்கள் ஆத்ய-, லோகபாய-, பிரசாபதி-, விதி, விசுவகன்மா எனப்படுவர். பிரம்மாவின் படிமம் சோழர் காலந்தொட்டு வடக்கு நோக்கிய தேவகோட்டத்தில் (கருவறை) வெளிப்படும். இதே இடத்தில் விசயநகர நாயக்கர் காலக் கோபுரங்களிலும் இவர் தாமாகவோ அல்லது தேவியருடனோ தோன்றுவார். கொடிகொட்டியாடும் சிவனுடன் இவர் கைத்தாளம் வாசித்து நடனக் கோலத்திலும் காட்சி தருவார்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் V− 415
பிரம்மதத்துவநிதியில் அடக்கப்படும் தேவர்கள் மேல்வருமாறுபட்டியலிடப்
படுகின்றனர்:
1)
2)
பிரசாபதியர் : கௌதமன், பரத்வாசன், விசுவாமித்திரன், காசியபன், சமதக்கினி, வசிட்டன், அத்திரி ஆகிய எழுவர். இவர்களிற் சிலர் தட்சிணாமூர்த்தியுடன் தோன்றுவர்" விசுவாமித்திரன் மேனகையுடன் Gg5T6ôTg.J6ITri (Kalidos 1986 : LJLLb 9). அட்டநாகங்கள். ஆதிசேடன், வாசுகி, தக்கன் (பிரசாபதி வேறு), கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கன், குளிகன், ஆதிசேடன் திருமாலுக்கு:
“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்” (பொய்கை. திருவந்தாதி பா. 53) எனவே வைகுண்டமூர்த்திக்கு 'ஆனந்தம்' ஆசனம், அரங்கனுக்கு மெத்தை. திருப்பாற்கடலைக் கடையும் தருணம் வாசுகி கயிறாகத் தோன்றுவான்.
3) அட்டதிக்கு (எட்டுத்திசை) கசங்கள் (gajaS யானைகள்). ஐராவதம்,
பெளண்டரிகன், வாமனன், குமுதன், அஞ்சனன், புட்பதந்தன், சர்வபெளமன், சுப்ரதிகன். மதுரை சுந்தரேசுவரர் விமானம் எட்டுதிசை
58 A e யானைகளால் தாங்கப்படும். . ஐராவதம் கோயில் வாகனங்களில்
ஒன்றாகும்.
4) அட்டதிக்பாலகர் : இந்திரன் (கிழக்கு) அக்னி (தென்கிழக்கு), யமன்
5)
(தெற்கு), நிருத்தி (தென்மேற்கு), வருணன் (மேற்கு), வாயு (வடமேற்கு), குபேரன் (வடக்கு), ஈசானன் (வடகிழக்கு). திருப்பரங்குன்றம் கல்யாணமண்டபத்தில் இவர்தம் வாகனங்கள் மேலமர்ந்து சிற்பத் தூண்களில் காட்சி தருவர். கூடல்அழகர் தேர்ப்பீடத்தில் தத்தம் திசைகளில் நிலைநாட்டப்பட்டுள்ளனர். அட்டநதிகள்: கங்கை, யமுனை, கோதாவரி, கிருட்டிணா, ரேவா, தப்தி, வேணி, சரசுவதி. கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு வடபால் உள்ள கோயிலில் காவிரியுடன் இவர்களைக் காணலாம். நதி தேவதைகளுக்கு இந்திய பாரம்பர்யத்திலே தனியிடம் உண்டு. இந்து கலாசாரத்தின் சீவநாடிகளாம் இவர்கள்.

Page 222
416 நாயக்கர் கால சிற்பக் கலை
மேலும், தோன்றும் கடவுளர்களில் குறிப்பிடத்தக்கவர் அறுபத்துமூவர் (குறிப்பாக சண்டிகேசுவரன்), ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரிய புருடர்கள்" அறுபத்துமூவர் விழாவும் அவர்தம் உலோகத்திருமேனிகளும் (உ-ம். சுந்தரேசுவரர், மதுரை) பிரபலமடைந்தன. பிருங்கி (கெழதி), கருடன், கருடத் தம்பங்கள் (திருமுட்டம், பட்கல், செஞ்சி), அனுமன், நந்தி (தஞ்சை), நந்தித் தூண்கள் (கெழதி, பட்கல்) நவக்கிரகங்கள் (சூரியன், சந்திரன், குசன், புதன், பிரகசுபதி, சுக்கிரன்,சனி, இராகு, கேது), பன்னிரண்டு இராசிகள் (திருகோகர்ணம்), சித்தர்கள் (மதுரை, தேவிகாபுரம்), துவார - பாலகர்கள் (தஞ்சை முருகன்தளி), குறவன், குறத்தி" மற்றும் யாளி, மகரம், சார்தூலம் போன்ற அரிய விலங்குருவங்கள் நாயக்கர் கலையை நிறைவு செய்யும் படிம வகைகளாகும்.
காமசாத்திர சிற்பங்களும் அதிகமாகவே காணப்படும். மதுரை ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள அருங்காட்சியகத்தில் மி நீளமான ஆண்குறியை உடைய ஒருவன் அமர்ந்திருக்க குறியை யானைகள் பல சுமப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது. கற்பனை எனினும் ஆண்மையின் அதிகாரத்தை (masculine chauvinism) குறியிடுவது அறியப்படும். இதைப் போல ஆணைக் கடத்தும் பெண்ணும் மிகப் பருத்த முலையுடைய மோகினியும் (மதுரை கிளிக்கட்டு மண்டபம்) திமிர் கொண்ட பெண்ணைக் குறிப்பிடும். சிவகாசி அம்மன் கோயிலின் சாவித் துவாரத்தை மூடும் பூட்டின்மேல் ஆண்பெண் கலவைச்சிற்பம் காணப்படும். கலவிமூலம் கோயிலைத் திறக்கலாம் என்பது குறியீடாகலாம். திருப்பரங்குன்றம் இராயகோபுரத்தின் முன் உள்ள முகப்புமண்டபம் பல சிற்பத் தூண்களுடையது. ஒரு தூணில் ஆண் கீழேயும் அவன் தோளின் மேல் பெண்ணும், அவள் மேல் ஆணும், அவன் மேல் பெண்ணும் எனப் பலர் நிற்பர். ஆணின் குறி மேலெழுந்து பெண் குறியுடன் இணையும். உச்சியில் நிற்கும் பெண்ணின் வாழ்வழி ஆண்குறி வெளிபட்டு அம்புபோல் மேல்நோக்கிச் செல்லும். அதற்கு மேல் ஒரு சிறிய கோயிலில் கணபதி* மூலவராய் தோன்றுகிறார். குறியீடாவது கலவிமூலம் மேலெழும்பும் குறி, போகமே பரமாத்மாவை அடையும் மார்க்கம் என்பதாகும்.
நாயக்கர் சிற்பக்கலை என்பது ஒருகடல். அதில் குதித்து முத்தும் எடுக்கலாம். மூழ்கியும் போகலாம். இதன் பரப்பினையும் ஆழத்தையும்

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 47
அளவிடுவது அசாத்தியம். திருவரங்கம், மதுரை, தேவிகாபுரம், திருவண்ணாமலை, மன்னார்க்குடி, சிதம்பரம், திருமுட்டம், இக்கேறி போன்ற கோயில்களின் சிற்பச் செல்வத்தை முழுமையாகப் பாடம் செய்து அவற்றின் உட்பொருள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளதாக எவரும் பெருமை கொள்ளவியலாது. கற்றதும் கண்டதும் கை மண்ணளவு, கல்லாததும் காணாததும் இந்துமகா சமுத்திரம் போல் அகண்டது. அவர் தம்மை ஒரு குழந்தைக்கு ஒப்பிட்டு, கடற்கரையில் கூழாங்கற்களுடன்
* இந்தியக் கலையின் பல்வேறு காலப்
விளையாடுவதாகக் கூறினார். பரிணாமங்களை இந்தப் புண்ணிய பாரதம் முழுவதும் பணிந்து, தம் வாழ்வையே ஆய்வுக்குச் சமர்ப்பணம் செய்த வால்டர் இசுபிங் (Walter Spink) போன்ற சான்றோரும் இதையே கூறுகின்றனர். இந்தியச் சிற்பம் ஒரு கற்பக விருக்சம். பேரண்டத்தின் முழுமையை (cosmic totality) தன்னுள் அடக்கியது (Van Kooiர் 1985). பரதகண்டத்து தத்துவக் கோட்பாடுகளைச் சிற்பவுருவில் படைத்தது கலைஞனின் கைவண்ணம். சர்வ சாத்திரங்களில் வல்லவரான இவர் (Sthapati 1984) கண்திறந்த சிற்பபடிமங்கள் நாயக்கர் கலை என்னும் அண்ட வெளியில் மின்மினிகளாய் மின்னுகின்றன. மூடிய அறைக்குள் இருந்து இவற்றின் உட்பொருளைக் காணவியலாது.
தாள் திறவாய் ஆலயமணிக் கதவே தாள் திறவாய்."
அடிக்குறிப்பு
S.R. Balasubramanian Early, Middle’ and Later Cola Temples. "Our glory does not consist in never falling but in rising up every time that we fall' 3. ஆங்கிலத்தில் petrification அல்லது fossilization என்று கூறலாம். 4. மதுரை நாயக்கர் வரலாறு கூறும் மதுரைத் தலவரலா று இம்மன்னரை நாயுடு எனக்குறிப்பிடும் திருவாலவாயுடையார் திருப்பணி மாலை, தஞ்சாவூர் ஆந்திர ராகல சரித்திரம், இரகுநாத உதயம், சிவதத்வரத்னாகரம் போன்ற நாயக்கர் கால இலக்கியங்களில்

Page 223
48
நாயக்கர் கால சிற்பக் கலை
10.
இம்மன்னர்களது புராணக்கட்டுடன் கூடிய வரலாற்றைக் காணலாம். (Ayyangar 1919, Sastri & Venkataramanayya 1946, Satyanarayana 1996,. Krishnamurthy 1995). காளிதாசரின் சாகுந்தல நாயக-நாயகிக்கு பிறந்து பரதகண்டத்தின் மாமன்னனாகிய பரதன் ஒரு அமரநாயகன். சாகித்யதர்ப்பணம் (Sahityadarpana) நான்கு நாயகரைக் குறிப்பிடும்: dhirpdata(வீரமும் உயர்ந்த உள்ளமும் கொண்ட காப்பியத் தலைவன்), dhiroddhata(தன்னம்பிக்கையுள்ளவன்), dhirolaltita(வீரமும் உறுதியும் ஆனால் முன்கோபமுடைய தலைவன்), dhirapasanata (வீரமும் சாந்தமும் கொண்ட காப்பியத் தலைவன்) (Apte 1976: 273). இரசமஞ்சரி (Rasamaijani) மூவகை நாயகரை குறிப்பிடும். pati தலைவன், upapati உபதலைவன், Vaisiha விலைமாதருடன் தொடர்புடையவன். எனவே தஞ்சை செவ்வப்ப நாயக்கருக்கு சிரீதனமாக (dowry) வழங்கப்பட்டதெனப்படும். தலைக்கோட்டைப் போரில் (கி.பி.1565) தோல்விகண்ட பின்னர் ஆறவீடு மரபினர் ஆந்திரத்தில் உள்ள சந்திரகிரிக்குப் பின்னர் தமிழகத்து வேலூருக்கு இடம் பெயர்ந்தனர். இவையே பிற்கால விசயநகரங்கள். “The city of Vijayanagar was abandoned by the emperors to its own fate and from 1592 Chandragiri and later Vellore became Vijiayanagars” (Krishnaswami 1964:270). கவுட(ன்) (Gauda) தமிழில் கவுண்டன் (கொங்கு வேளாளர்?) வேளாண்மை மரபினர் எனப்படும். இம்மலைப்பகுதியில் தோன்றும் துங்க, பத்ரா என்னும் இரண்டு நதிகளும் இணைந்து துங்கபத்ராவாகின்றன. மலைகளில் விளையும் வாசனைப் பொருட்கள் (Spices and COSmetics) மேலைநாட்டு சந்தைகளில் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டவை. அராபிய கடல்வழி வணிகன் இவர்களுடன் போட்டியிட்டான் அல்லது
கடற்கொள்ளையனாக (pirate) நடமாடினான்.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 419
2.
13.
14.
15。
16.
17.
18。
இவர்களது பாரம்பர்யத்தில் பெண்கள்'சி (ji) என அழைக்கப்பட்டனர் போலும் (Virammaji). இது முகமதியர் அல்லது மராட்டியர் தாக்கமாகலாம். பக்திநெறி தழைத்த காலத்தே (7 - ஆம் நூற்றாண்டு) நாவுக்கரசர் "வேதமும் வேள்விப்புகையுமோவா”(தேவாரம் 62162) எனப்பாடியதில்லை முகமதியர்களால் அசுத்தம் செய்யப்பட்டதுதான் என்னே? இன்றும் குசராத்தில் உள்ள சோமநாதபுர நகரினுள் நுழைவோர் இவ்வுணர்வை அடைவது திண்ணம். மூடிக்கிடந்த ஆலவாயான் (மதுரை) கதவைத் திறந்த நாளன்று நறுமலர்கள் மணம் வீசக் கருவறை புதுப்பொலிவுடன் காணப்பட்டதாக மதுரைத் தலவரலாறு தெரிவிக்கும். காசி விசுவநாதர் பக்தரான நாகமநாயக்கர், அங்கு பயணம் செய்து, பின்னர் பிறந்த தம் மகனுக்கு அப்பெயரை இட்டார் எனப்படும். இவர் மதுரையில் மகாராயருக்கு அடிபணியாமல் புரட்சி செய்தமையால், அன்னார் மகனே தந்தையைப் பிடித்து வருமாறு அனுப்பப்பட்டார். மகாராயரின் அன்பைத் தம் ஆண்மையால் பெற்ற விசுவநாதர் மதுரையின் முதல் நாயக்கரானார். காண்க: பரஞ்சோதியின் திருவிளையாடற் புராணம்: 1 இந்திரன் பழிதீர்த்த படலம், 2.வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம், 44. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம், 47. கோயில் உடைக்கப்படுவதைப் பார்வையிட்ட துலுக்கன், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள உக்கிரமாகாளியின் கண்களிலே தீப்பொறி தெறிக்கக் கண்டு இக்கல்லில் அல்லா உள்ளான்' எனக் கூறி அழிவு வேலையை நிறுத்தியதாக செவிவழி வரலாறு கூறும். இதைப் போலவே கல்யானைக்கு மீண்டும் கரும்பு கொடுக்கப்பட்டதாம் (ஒப்பிடுக. பதஞ்சலி திருவிளையாடற் புராணம், படலம் 14). இதுநாயக்கர் காலத்து இறுதியில் மாபோசுகான் காலத்தில் நடந்ததாக மதுரைத்தலவரலாறு (ப. 10) கூறும். இன்று வழங்கிவரும் நாயக்க மரபினரில் பிரிவுகள் காணப்படும் கம்மவார், கவரை, பலிச்சா, வெலமா என்பவர். இவர்களில் பலிச்சா எனப்பட்டோர்
வாணிகத்திற் சிறந்தவராதலின் செட்டி எனவும் வழங்கப்பட்டனர்.

Page 224
420
நாயக்கர் கால சிற்பக் கலை
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
இவர்கள் இன்றைய முதலியா என்பது கேள்வி? இவர் பெயருடன் காணப்படும் நயினா, நாயுடு அல்லது நாயக்கர் என்பதன் திரிபே. பணமுதலீடு செய்தவனாகலாம். பண்டாரம், ஆண்டி என்போர் ஆலவாயில் இருந்த மடத்து சன்னியாசிகளாகலாம். பண்டாரம் என்போர் கோயிற் கணக்கராதலும் கூடும். சுவாமி (சொக்கநாதன், சுந்தரேசுவரன்) விமானம் எட்டு யானைகளால் தாங்கப்படுதலால் அட்டகச (astagaja) விமானம் எனப்படும். இது வைகை ஆற்றுக்கரையில் காணப்படும். ஏனெனில் பிட்டுக்கு மண்சுமந்த கதை (தி.வி.பு 30) வைகையுடன் தொடர்புடையது. புதுமண்டபம் யாளி-மற்றும் சிற்பத் தூண்களுடைய சிற்பக் கூடமாகும். இது சுவாமிகோயில் கிழக்கு இராயகோபுரத்தை ஒட்டி திருமதிலுக்கு வெளியே எடுக்கப்பட்டது. இதன்வழி திருமலை நாயக்கர் மேலும் ஒரு பிராகாரம் நீட்டிக்கத் திட்டமிட்டனர். புதுமண்டபத்தின் கீழ்ப்புறம் உள்ள மொட்டைக் கோபுரம் இப்பெருக்கத்திற்குச் சான்று பகரும். தேர் மண்டபம் கிழக்குச் சித்திரை வீதியிற் காணப்படும் இவ்வழி தேரோடும். தண்டநாயகன் என்பது அவர்தம் அரசாளுமையைக் குறிக்கும். இவர் (IkSvaku) சூரியகுலத்தின் முதல் பேரரசன் வடமொழியில் இக்சு (ikSu) என்றால் கரும்பு. இலங்காபதி இராவணனின் தம்பி அண்ணன் சிவபக்தன், இளவல் மாலவர் (இராமபிரான்) அடிப்பணிந்தார். துலுக்கருடன் உறவாடி இணக்கம் பெற்றனர் சில நாயக்கர். நிர்வாக சீர்திருத்தம் காண 72 பாளையப்பட்டுகள் உருவாக்கப்பட்டு அவற்றின் அதிபதிகளாக பாளையக்காரர் நியமிக்கப்பட்டனர். இவர் தம் ஆளுகைக்குட்பட்ட எல்லையில் வரி வசூல் செய்து நாட்டுக் காவல் புரிந்தனர். Percy Brown: The Dravidian Style, Madura, the Final Phase 6T60,T6Juh Hu ntington: The Nāyak period 6T60T6hqrib sim-mJ6Jri. G3Logpgh e5T6cioTe5: Michell: The New Cambridge History of India : Architecture

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 42
31.
32.
33.
34.
35.
and Art of Southern India: Vijayanaghara and the Successor States. Rajarajan: Art of the Nayakas. w இவ்வாய்வேட்டை மதிப்பீடு செய்த கலைவரலாற்றுப் பெருமகனார் Lodff(ELLIG56OL (Maurizio Taddei, Chief Editor, East and West (Rome), Istituto Univeersitario Orientale. Napoli. Italy)épé56oTL சான்றிதழ் வழங்கியுள்ளனர்: ". it is my opinion that, once it is published, the work by R. K. K. Rajarajan will remain for along time a fundamental reference book for Nayak architecture and iconography" (inserted by the scholar's guide). Fergussons, fig: "as an architectural designitis (Tyagarajasvami, Tiruvarir) altogether daetestable"; "completely marred by false System of design" (Srirangam); Smiths, sip: "local" and "semibarbaric".
ஐந்து சவங்கள் மீது அமர்ந்த சதாசிவி (PancapretaSanasini Sadasivikajarajan 1997: LLh 2, Kaslidos 1997 960L66фотGOTLLio), 25 முகமுடைய மகாசதாசிவன் (அமர்ந்த, நின்ற கோலங்கள்), ஈராறு முகங்கொண்ட முருகன் (KalisdoS 1999 படம்), ஒன்பது முகமுடைய சதாசிவன், ஐந்து முகமுடன் சிங்கத்தின் மீதமர்ந்த ஏரம்ப (Heramaba) கணபதி, மேலும் பல மதுரை கோபுரதரிசனம் காட்டும் பொருள் பொதிந்த அற்புதப்பதுமைகளாகும். இக்கோபுரத்தின் வடதிசை முதல் தளத்தில் சதாசிவன், விசுவகர்மா, பிரம்மா, பஞ்சமுக நரசிம்மி மற்றும் சதாசிவி கதைச் சிற்பங்கள் காணப்படும். இவன் மதுரைச் சல்தான்களில் கடைசியாகிய குர்பத் ஆசன்கங்கு என்பர் இரா. கா. கே. இராசராசன். இவன் பெண்ணைப் போல் ஆடை ஆபரணங்கள் அணிந்து (tranSVesticism) அலியானவன் இச்சிற்பத்தின் மீசை அராபிய பாணியில் உள்ளதால் இத்துலுக்கனை நையாண்டி செய்யும் நோக்குடன் அமைக்கப்பட்டிருக்கலாம் (படம் Soundararajan 1995:3).

Page 225
422
நாயக்கர் கால சிற்பக் கலை
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
இவ்விரு இருடிகளும் சிவன் நடனக் கோலத்தைக் காணும் பேறுபெற்றவர். கோடைக்கால விழாவில் நீர்நிரப்பி மண்டபத்திற்குக் குளிர்ச்சி ஊட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம். மழைக்காலத்தில் நீர் சேர்ந்து நிராழிமண்டபம் போலும் காணப்படும். ஆடும் கோலத்தில் வீரபத்திரன் தோன்றுவது புதுமை. மகாபாரத நாயகர்கள் நாயக்ககால மண்டபங்களிலே தென்படுவது வழக்கம். மதுரைகிளிக்கட்டுமண்டபம், திருமோகூர் முகமண்டபங்களில் இவர்களைக் காணலாம். ஒப்பிடுக; கிளிக்கட்டு மண்டபத்தில் மிகப்பருத்த முலைகளுடன் தென்படும் மோகினி (Virag0 ஆண் போன்ற பெண்). இவளை திருமெய்யம் அரங்கன் கோயில் முன் மண்டபத்திலும் காணலாம். தாரமங்களக் கோயில் மேற்கு முகம் நோக்கிய கருவறையைக் கொண்டது. இதன் வெளிப்பிரகாரத்தில், இராயகோபுரத்தை ஒட்டி வட-தென் மேற்கு மூலைகளின்) சகசுர (1000) முகலிங்கம் மற்றும் அவிநாசியப்பர் இளங்கோயில்கள் காணப்படும் மூலவர் கைலாசநாதர். உட்பிராகத்தில் வட-தென் மூலைகளில் சிவகாமசுந்தரி, ஆறுமுகன் இளங்கோயில்கள் உள்ளன. இவை பிற்கால சீரமைப்பின் வெளிப்பாடுகளாகலாம். சப்தமாதர்கள் கிரமமாவது: பிரம்மி, மகேசுவரி, கெளமாரி, வைணவி, வாராகி, ஐந்திரி, சாமுண்டா (உ-ம்) எல்லோரா குடவரை XX, XXII தக்லிடோகேசுவரம், மலையடிப்பட்டி). திருத்தணியில் பிரம்பி தவிர அனைவரும் இடம் பெயர்ந்துள்ளனர். காஞ்சி கைலாயத்தில் ஐந்திரி, மகேசுவரி, கெளமாரி23,6 ஆம் இடத்தில் காணப்படுவர் (KalidOS2000 அத் 4). மேலும் காண்க: திருவில்லிபுத்தூர், திருமோகூர், குடுமியாமலை, திருகோகர்ணம், திருமெய்யம், இராமேசுவரம். 6Slf6|Tš5th 5ITGöTa: Rajarajan 1998:141-229 இம்மண்டபம் புருடசுக்த மண்டபம் எனப்படும். இருக்குவேத 10-ஆவது மண்டலத்தில் உள்ள புருடசுக்த பாடல்கள் படைப்பின் (cosmic Creation)
கதைகூறும் (Basham 1971:241-42). இங்கு மகாவிட்ணு படைப்பின்

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 423
நாயகராகவும் பிரம்மா குழந்தையாகவும் உருவகிக்கப் பெறுகின்றனர்.
பாகவத புராணம் புருடசூக்தம் (PuruSaSப்kta) மகாவிட்ணுவின்
46.
47.
48.
49.
50.
5.
வெளிப்பாடே எனப் பகரும். தஞ்சை, சிதம்பரம், திருவண்ணாமலை கோயில்களிற் காணப்படும் பரதநாட்டிய கரணங்கள் சிவாம்சம் எனில் கும்பகோணம் (சாரங்கபாணி), திருமுட்டம் கோடியில் நாட்டிய கரணங்கள் விட்டுணுவாம்சம். முன்னது Dance of Siva 6T6tfisi Sisir GOTg) Dance of Visnu Gorils(?_sis. Iyesus' எனும் தெலுங்கு துதிப்பாடல் திருமால் -வேங்கடவனை பரதநாட்யாலங்கார(ன்)' என விளிக்கும் ஆழ்வார்களும் வேங்கடவனை நாட்டிய கோலத்திற் காண்பர். ஆடும் கருடக் கொடியுடையார் - வேங்கடம் (நாச்சியார் திருமொழி 93) ஆடுகூத்தன் (பெரிய திருமொழி 219) இரணியனை வதம் செய்யும் நரசிம்மன் ஆடும் கோலத்தில் காணப்படுவார் (தேவகிரி-யாதவர் - காலம், பிரதிட்டாணபுரம், மகாராட்டிரம்). திருமங்கையாழ்வார் கூற்றாவது
, p. ஆயிரந்தோள் எழுந்தாட
சிங்கவுருவில் வருவான் சித்திர கூடத்துளானே
பெரிய திருமொழி 338.
இராமாயண சிற்ப ஒவியங்களை முனைவர் பின்-ஆய்வுக்காக (Postdoctoral research) Ggsflo GeFigl p 605 LigGuigo (Alexandar von Humboldt ஆய்வுத் தகைமை பெற்றார் இரா.கா.கே.இராசராசன் (ஆய்வு வழிகாட்டியின் குறிப்பு). く / இதனால்தான் "அம்பரமே தண்ணீரே சோறே அருமருந்தே" (திருப்பாவை 17) எனப் பாடினாரோ கோதையம்மாள். இவை மயிலாடுதுறை, தேவிகாபுரம் கோபுரங்களிலும் காணப்படும். அகமதாபாத் கலிகோ அருங்காட்சியகத்தில் (Calico Museum of Textiles) காணப்பட்ட அரிய தேர்ச் சிலைகளில் நேர்த்தியான பல காட்சிகள் ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்டன. தடாதகையும் (சீலை அணிந்திருப்பதால் முலைகள் மறைக்கப்பட்டுள்ளன) கந்தரனும் தேர் மீது போர்க்கோலத்தில் எதிர்கொள்ள, காளியும் நந்தியும் உடன் தொடர்வர், 2) கடம்பமரத்தடியில் மீனாட்சி கல்யாணம், 3) தடாதகை முடிசூட்டுவிழா, 4) பிட்டுண்டு உறங்கும் கந்தானை பாண்டியன் சாட்டையால் அடித்தல், 5) கல் யானைக்கு கரும்பு கொடுத்தல்.

Page 226
424
நாயக்கர் கால சிற்பக் கலை
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
விரிவாக்கம் காண்க முயடனைடிள199973-74, 86-89 விரிவாக்கம் காண்க முயடனைடிள 1989; 122-30 cf. Subrahmanyāstottara (no. 79) virãtsutãyananmah (Gyps6ODg5 வடிவிலேயே மகா உருவம்).
விளக்கம் காண்க ஆடிசய 1996:18-28. பிராதணன் (brahmana) சதுர் (நான்கு) வர்ணங்களுள் ஒருவன். இவர்கள் நாரதன், சமதக்கினி, வசிட்டன், பிருகு, பரத்வாசன், சனகன், அகத்தியன் (காசியபீயம், படலம் 79;). எனவே, இது அட்டகசவிமானம் எனப்படும் (Jeyeehandrun 1985: படம் LJ. 16). ஆழ்வார்கள், ஆச்சாரியர் (இராமானுசர், மணவாள மாமுனி) கிருட்டிணா நதிதீரத்தில் (விசயவாடா தென்கரை) உள்ள உண்டவல்லிகுடவரையிலும் காணலாம். இவை பிற்கால (ரெட்டி) இணைப்பு. கருடனின் பல்திறப்பட்ட புராணச் சிற்பங்கள் பட்டியலிடப்பட்டு விளக்கம் பெறும் இவ்வாய்வு காட்டும் சிறப்புப் படிமங்கள் காண்க: பாலகில்யர் (Balakhiya-rsis) ஆலமரக்கிளையில் தலைகீழாகத் தொங்க, அதைப் புள்ளரசன் தன் அலகால் கொத்திச் செல்வது (திருக்குறுங்குடி); அனுமனும் கருடனும் இலிங்கத்தை அசைப்பது (பட்கல்). இவை தொட்டியம்பாளையத்து பொம்மியுடன் தொடர்புடைய மதுரைவீரன் கதைச் சிற்பங்களாகலாம். சக்தியின் யோனியைத் தும்பிக்கையால் சுவைக்கும் உச்சிட்ட கணபதியை தேவிகாபுரம் கல்யாண மண்டபத்தூணில் காணலாம். "I am a child playing with pebbles before the limitless ocean of knowledge'. (36) g5ö6 jögr Let noblethoughts come tous fromeVery Side2 Lij55 எண்ணங்கள் நம்மை ஒவ்வொரு திசையிலிருந்தும் வந்தடையட்டும். இது மனிதனுக்கு வேதாந்தம் கூறும் சுயதரிசனத்தை (Svayamprakasa: Vedantasara, ப.102) வழங்கும் இந்நிலையின் மனிதன் சுயவிளக்கம் பெறுவான்.
Atrayam purusah svayamjyotirbhavati (vedantasara L. 79).

425
உசாத்தணை நூல்கள்
இராசமாணிக்கனார், மா.
இராசவேல், சு,
சேஷாத்திரி. அ. கி.
இராசவேல், சு. திருமூர்த்தி, கோ.
இராசு, செ.
காசிநாதன், நடன.
(தொகுப்பாசிரியர்)
சேதுராமன், G.
பத்மநாதன், சி.
நவரத்தினம், க.
மானசாஸ்திர சில்பசாஸ்திரம்
சைவ சமய வளர்ச்சி, சென்னை : பாரி நிலையம், 1972 (இரண்டாம் பதிப்பு), 308 பக்கங்கள்
தமிழ்நாட்டுக்குடைவரைக்கோயில்கள், சென்னை பண்பாட்டு வெளியீட்டகம், 2000, 214 பக்கங்கள்.
தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழ்வாய்வுகள், சென்னை:
பண்பாட்டு வெளியீட்டகம், 1995, 214 பக்கங்கள்
கலைமகள் கலைக்கூடம், சென்னை : அசோகன் பதிப்பகம், 208 பக்கங்கள்
தமிழர் நாகரிகம் (முதல் தொகுதி), சென்னை: தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, 1994, 16 பக்கங்கள்.
தமிழ் நாட்டு சமுதாயப் பண்பாட்டுக் கலை வரலாறு மதுரை: J.J. பப்பிளிகேஷன்ஸ், 2001 (முதல் பதிப்பு 1997), 380 பக்கங்கள்
இலங்கையில் இந்து கலாசாரம் பகுதி-1 கொழும்பு இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், 2000, 457 பக்கங்கள்
தென்னிந்திய சிற்ப வடிவங்கள், யாழ்ப்பாணம் 1941
(பதிப்பாசிரியர்) வேங்கட சுப்பிரமணிய சாஸ்திரி, திருச்சிராப்பள்ளி சகாப்தம் 1885 (கி. பி.1963)

Page 227
426
Alice Boner,
Ananda
Coomaraswamy,
Balasubramaniam, S. R.
Balasubramaniam, S. R.
Balasubramaniam, S. R.
Card Radcliffe Bolon,
Douglas Barrett,
Douglas Barrett,
உசாத்துணை நூல்கள்
Principles of Composition In Hindu Sculpture: Cave Temple Period, Leiden: E.J. Brill, 1962,260 pages
History of Indian and Indonesian Art, London: Edward Golston, 1927; Munshiram Manoharlal, New Delhi (reprint), 1972.
Early Chola Temples Parantaka I to Rajaraja I (A.D. 907-985), I Bombay: Orient Longman, Calcutta, Delhi, Madras, 1971, 351 pages with 18 plates.
Middle Chola Temples Rajaraja I to Kulottunga I (A.D. 985-1070)I Faridabad, Haryana: Thompson Press Limited, 1975, 410 pages with 408 figures in plates
Later Chola Temples Kulottunga Ito Rajendra III (A.D. 1070-1280), Delhi: Mudgala Trust 1978, 447 pages with 447 figures in plates.
Forms of the Goddess Laija Gauri in Indian Art, Pennsylvania: The Pennsylvania State University Press, 1992, 89 pages + 130 figures in plates.
Early Cola Architecture and Sculpture, London: Faber of Faber, 1974
Early Cola Bronzes, Bombay: Bhulabhai Memorial Institute, 1965, 49 pages and 102 plates.

இந்த கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 427
Gangoly, O.C.
Gopinatha Rao, T.A,
Goswami, A., (ed.)
Gravely, F.H. and Ramachandran, T. N.,
Henry Stierlin,
Havell, E.B.,
Havell, E.B.,
Jitendra Nath Banerjea,
Kanwar Lal,
South Indian Bronzes, Calcutta. 1915, Elements of Hindu Iconography, Volumes 1 & 2, 1971.
Indian Sculpture, Calcutta, Allahabad, Bombay: Rupa & Co., 1959, 48 pages + 137 plates.
Cataloque of the South Indian Hindu Metal Images in the Madras Government Museum, Madress: Bulletin of the Madras Government Museum, 1932, 144 pages + 23 Plates.
Hindu India From Hhajuraho To The Temple City of Madurai. Clogne, Lisbon, London, New York, Paris, Tokyo: Tascher, 1998, 237 pages.
Indian Architecture, London: John Murray (first edition) 1913, (second edition) 1927, 282 pages.
The Ancient and Medieval Architecture of India: A Study of Indo-Aryan Civilisation, London: John Murray, 1915,
223 pages
The Development of Hindu Iconography, Calcutta: University of Calcutta, 1941, 459 pages.
Temples and Sculptures of Bhuvaneshwar, Delhi: Arts of Letters, 1970, 124 pages + 10 plates.

Page 228
428
உசாத்துணை நூல்கள்
Nilakanta Sastri, K.A.,
Percy Brown,
Ramesh Shankar Gupte, Mahajan, B.D.,
Raymond Barnier,
Richard Lannoy and Harry Baines
Sarkar, H.,
Sivaramamurti, C.,
Srinivasa Desikan,
Stella Kramrisch,
A History of south India, Madras: Oxford University Press, 1958.
Indian Architecture (Buddhist and Hindu Periods) Bombay: D. B. Taraporevala Sons & Co. Private Limited, 1956,262 pages.
Ajanta, Ellora and Aurangabod Caves.Bombay: Taraporevala and Sons & Co. Private Ltd., 1962.
Hindu Medieval Sculpture Paris: La Palme, 1949.
The Eye of Love in the Temple Sculptures of India, London: Rider and Company, 1976, 160 pages
An Archaeological Survey of Temples of Kerala, New Delhi: Archaeological Survey of India, 1978, 296 pages + 72 plates.
South Indian Bronzes New Delhi: Lalit Kala Academi, 1963
The Bronze Gallery A guide, Madras: Government Meseum, Madras, 1975, 52 pages.
Indian Sculpture In The Philadelphia Museum of Art, Philadelphia: University of Pennsylvania Press, 1968.

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 429
Stella Kramrisch,
Stella Kramrisch,
Stella Kramrisch,
Thomas E. Donaldson,
Vinlent A. Smith,
Selected writings of Stella Kramrisch Ed Barbara Stiller Miller Philadelphia: University of Pennsylvania Press, 1983
The Hindu Temple (2 vols) Delhi: Motilal Banarsidas (reprint of 1946 edition), 1976.
Pala and Sena Sculptures Reprinted from Rupam Oct. 1929, 20 pages.
Hindu Temple Art of Orissa, Leiden: E.J. Brill, 1984 (volume 1), 1986 (Volume 2),
1987 (Volume 3)
A History of Fine Art In India and Ceylon, Second Edition Revised by K. De.B.Codrington, Oxford: Clarenden Press, 1930, 238 pages.

Page 229

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 43 சொல்லடைவு
அக்கினி 17 அவனிவேந்தராமன் 293 அக்கினி வீரபத்திரர் 285 அஷ்டசக்தி மண்டபம் 279, 289, அகத்தீஸ்வரம்(பெருங்குடி) 125, 128 290 அகஸ்தியர் 130 அஷ்டலசுஷ்மி 306 அகோரவீரபத்திரர் 285, 288 அஷ்டாங்க விமானம் 235 அச்சுத 13 அஷ்டாஸ்ரம் 14 அச்சதராயர் 227 ஆகமம் 139 அசலம் 71 ஆகவமல்லன் 197 அத்யந்தகாம ஆதித்த சோழன் 123 பல்லவேஸ்வர கிருஹம் 52, 53,79, ஆதித்யர் 13
80, 81, 82 ஆதிநாதர் கோயில் 174 அதிபங்கம் 72 ஆப்சரசர் 13 அதிரணசண்டேஸ்வரம் 49, 93 ஆபத்சகாயேஸ்வரர் 128, 147 அதிஷ்டானம் 6, 27 ஆபங்கம் 72 அபயம் 72 ஆந்திரதேசம் 31 அந்தகாசுரமூர்த்தி 99, 101, fil ஆமலக சிலா 185, 190, 193 அந்தராளம் 7,27,28,137 ஆமலகம் 29 அநந்த 13 ஆயிரங்கால்மண்டபம் 223, 225 அம்பலவாணர் 304 287, 288 அம்மையப்பர் 129 ஆரியன் மண்டபம் 238 அன்னக்குழி மண்டபம் 292 ஆலந்துறை 147 அனந்த சயனம் 106, 162 ஆலம்பாக்கம் 124 அனந்தவர்மன் சோடகங்கன் 194 ஆலம்பூர் 43, 44 அர்த்த பத்மாசனம் 73 ஆழ்வார் சந்நிதி 237 அர்த்ததாரி 154, 319 இசைக்கருவிகள் 85, 144, 146 அர்த்த மண்டபம் 62, 67 இட்டகி மகாதேவர் 205 அர்த்தஸ்வஸ்திகம் 83 இடபவாகனர் 105, 106 அரமியம் 51545962 இறவாதான் ஈசுவரம் 57, 58
65; 68; 131 இந்திரன் 12 அரிச்சந்திரன் 288 இந்திரவிமானம் 282 அருச்சுனத்தளி 52, 53 இம்மடி நரசிங்க நாயக்கர் 233 அல்பயிராசாதம் 14 இரத்தினம் 9 அல்பநாசிகை 60 இரதி 240 அவனிகந்தர்ப்பஈஸ்வரம் 125 இரதி - மன்மதன் அவனிபாஜன பல்லவேஸ்வரம் 75 இராமச்சந்திரர் கோயில் 172

Page 230
432 சொல்லடைவு
இராமசாமி கோயில் 301, 302 எழுநிலைக் கோபுரம் 223, 237 இராமர் 140 ஏகபாதமூர்த்தி 318 இராமநந்தீஸ்வரம் 164 ஏகாம்பரநாதர் கோயில் 234 இராமராயர் 236 ஐகொளே 25, 34, 35, 38 இராமேஸ்வரம் 13, 301, 308 ஒதவனேசுவரர் 123, 128 இராய கோபுரம் 295 ஒதுவார்படிமங்கள் 160 இராவண அனுக்கிரக மூர்த்தி 106, 112, 317 இராஷ்டிரகூடர் 95, 96 கச்சபேசுவரர் 92 இலக்குமணர் 240 கட்டப்பொம்மன் 240 இலக்குமி நரசிங்கர் கடக் 207 இலங்கேஸ்வரம் 118 கடகம் 72 இலிங்கோத்பவர் 8, 10, 5, 119, 72
12g49, 37 கபிலர் 241 ஈசான சிவகுருதேவபத்ததி 8 கயூரி 185 உத்குடிகாசனம் 73 கபோதம் 46, 49 உத்தமசோழன் 2 சத : உத்திரம் 4, 47 46 |56 உத்யோத கேசரி 191 கங்காளமூர்த்தி lso ே နီး கங்காவதாணம் 83 உமாசகிதமூர்த்தி 315 கங்காள 80, 88 உமாமகேசுவரர் 85 Si60s % உருத்திரன் V 321 கங்கை கொண்ட - وت உருத்திர வாலீஸ்வரம் 74 சோழஈஸ்வரம் 152, 155, 156, உலக்கணேசுவரம் 57 157, 136, 150 ஊர்த்துவதாண்டவம் 297 கண்டராதித்தன் 154 ஊர்த்துவதாண்டவமூர்த்தி 285, 323 கண்டி 184, 186 ஊர்த்வஜானு 66, 93, 129, கண்டியூர் வீரட்டானேசுவரம் 140
142143144 கண்ணப்பநாயனார் 167, 168 146, 156 ਲ60ਗਸ 邯04 ஏகாம்பரநாதர் கோயில் 234 கணேசர்தளி 52, 53, எசாலம் 132 கணதோரணம் 53, 54, 56,65 எறும்பீஸ்வரர் 129, 140 கந்தர்யமகாதேவர் 171, 172, 176 ஏறும்பூர் 147 கந்தருவர் 84 எல்லோரா 95, 96, 97, 104 si 6, 7, 126 எலிபந்தா 95, 116 கர்ப்பகிருகம் 7

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்
433
கர்ணகூடம் கரணக் காரிகைகள் கருடாசனம் கல்யாண மண்டபம் கலக்நாதர் கோயில் கலியாணசுந்தரர் கள்ளழகர் சந்நிதி கஜசம்ஹாரர்
கஜலக்ஷமி
காகதீயர்
காசிநாதர் காசிதேஸ்வரர் கோயில் காசிபம் காசிவிஸ்வநாதர் கோயில் காசி விஸ்வேஸ்வரம்
காஞ்சிபுரம் காமக்கோட்டம் காமதகனர் காமரசவல்லி காமிகாகமம் கார்த்திகேயர்
காலாரி காவிரிப்பூம்பட்டினம் காளத்தி முதலியார் காளமேகப்பெருமாள் காளீஸ்வரர்கோயில்
தி கிராதவேடம் கிராதார்ஜுனர் கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணவீரப்பநாயக்கர்
கிளிகட்டி மண்டபம்
130
129
73
291
39
102,159,166
238
142, 143 104,109,238
15
39
39
5, 17 32, 302-3
204
8
7, 62-4
223
316
13
13
186, 189
80
158
295
239, 240
242
286
84, 322
119, 127, 227
237, 285, 295, 298 279,284,286
கீழைக்கோபுரம் கீழைப்பழுவூர் கீழையூர்
@ குடபோகம்
குடந்தை நாகேஸ்வரர் குப்தப்பேரரசர் குற்றாலம் குஞ்சிதகரணம் குஞ்சிதம் குண்டங்குழி மகாதேவர் கும்பம்
கும்பகோணம் குமாரக் கடவுள் குமாரவயலூர்
குமுதம் குன்றாண்டார் கோயில் குலோத்துங்கசோழன் குவலயாபீடம் கூடல் கள்ளழகர் கோயில் கூடல் அழகர்கோயில் கூடல் புராணம்
கே
கேசவர் கேதாரேஸ்வரம் கேரளாந்தகன் திருவாசல்
கொ கொடும்பாளூர் கொற்றவைதளி கொலு மண்டபம் கோபுரம் கோனரகம் கோனேரி இராசபுரம்
கோவிந்தபுத்தூர்
293,297 125, 147 7, 18, 124
33, 34 123, 140
23
125
67
86, 87
132
50
13
327
123
6, 7
49
I, 157-8 III, 16
169
235, 236 235, 236
235
13
191
134
125, 130, 131
53
280
59,125 191, 195-6
8, 125
125

Page 231
434 சொல்லடைவு
巴户 சிற்பசாஸ்திரம் 23 சத்துருக்னேஸ்வரம் 46,48 சிங்கவரம் 50 சத்துருமல்லேஸ்வரம் 46, 48 சின்னமொட்டைக் கோபுரம் சத்யாஸ்ரயன் 198 சிர்ப்பூர் லக்ஷ்மண சுவாமி சதாசிவராயர் 50, 111, 153, கோயில் 29 சப்தமாதர் 188, 189 dyrusiroff 46 சப்தரிஷீஸ்வரம் 9 சிராமலை செவ்வந்தி 294 சபாபதி சந்நிதி 283 சிவகாமசுந்தரி சண்டேசானுக்கிரகம் 142 சிவபுராணக் காட்சிகள் 149 சந்திரசேகரர் 72 சந்திரமதி 288 g சந்நிதி கோபுரம் 288 சீதை 240 சம்புலிங்ககேஸ்வரம் 39 சீனிவாசநல்லூர் 126 आी%)ló) 327
d 9. T சுக்கிரவாரமண்டபம் 305 சாத்தன் குணபட்டன் 154 சுகநாசி 211 ஸ்தபதி). சுகாசனம் 73, 314 சாத்விகம் 71 சுப்பிரமணியர் 9 சாஞ்சி 0. Q6 9 சுந்தரசோழன் 124 சாநதாக கோயில் 37 சுந்தரபாண்டியன் கோபுரம் 293 சாநதாரம 63, 64,67,70 O சாந்தாரவிமானம் 135 சுநதர வாதப பெருமாள் சாளுவன் குப்பம் 93 கோயில் 68 சுந்தரேஸ்வரர் 131 சாயாவனேஸ்வரம் 158
FT606) 58,63, 67,750 சுந்தரேஸ்வரர் கோயில் 282
சூரியன் 17
R ெ சிகரம் 6, 55, 56 சித்திரக் கோபுரம் 279 சென்னகேசவர் சித்திரகாரப்புலி 45 செவ்வந்தி மூர்த்தி 286, 296 சித்திரம் 6, 71 செஸrர்லா 24 சித்திர மண்டபம் 279 சித்தேஸ்வரம் 191 Gag சிதம்பரம் 19, 152, 223 சேதுபதிகள் பிரதிமைகள் 305,307 சிதம்பரேஸ்வரர் சேதுபதிகள் திருப்பணிகள் 307
304

இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும் 435
சேர்வைக்கார மண்டபம் 29 தி சேரமாதேவி தியோகார் 185 இராமசாமி கோயில் 162 திராவிடம் 1415,333942
திராவிட விமானம் 56,5759, 62, சோ 64,6748, 92 சோமநாதபுரம் 212, 215, 217 திருஇடைக்கட்டு 7 சோமாஸ்கந்தர் 47, 48, 49, திருஎறும்பியூர் எறும்பீஸ்வரர் 124
163, 164 திரிபுராந்தகர் 8,72,105,118 சோமநாதன் 215 147,356733 சோமேஸ்வரம் 212 திரிபுராந்தகேசுவரம் 133 சோமேஸ்வரன் 188-189 திரிபுவனாசாரியன் 41
செள திரிபுவனவீரர் செளரயீடம் 157 திரிபுவன வீரேசுரம் 152
திரிமூர்த்திகுடைவரை 49.79 l- திரிவிக்கிரமர் O6 டம்பல் திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் 131
திருக்கற்றளிப்பரமேசுவரர் 123 g5 திருக்கண்டியூர் 124 தக்கோலம் 13 திருக்கழுக்குன்றம் 47 தசாவதாரக் கோயில் 27 திருக்கோடிகாவல் 125 தசாவதாரம் 96.98 திருச்செந்துறை 124 தந்திதுர்க்கன் 98 திருச்சென்னம்பூண்டி 124,144 தந்திவர்மன் 48 திருச்சோற்றுத்துறை தர்ம மகாதேவி 65 ஒதவனேசுவரர் 123 தருமராசர்தளி 52.53 திருத்தேர்க்கோயில் 223 தருமராசர் ரதம் 47,88 திருப்பட்டூர்க்கைலாசநாதர் தளவானூர் ) 48,51 கோயில் 67.91 தஷிணாபதபதி 3. திருப்பணி மாலை 286-8 தஷிணாமூர்த்தி 8,64,72 290
129,320 293-4 திருப்பணி விவரம் 286-8, தா 290 தாத்பத்ரி 228 293-6 தாதாபுரம் 132 திருப்பராய்த்துறை 123 தாமரைக்கட்டு 50 திருப்பழனம் ஆபத்சகா தாமஸம் 7172 யேஸ்வரர் 123 தாருகாவனேசுவரர் 123 திருப்புறம்பியம் 141

Page 232
436
சொல்லடைவு
திருப்புறம்பியம் சாட்சிநாதர் 24
திருப்பூந்துருத்தி புஷ்பவனேசுவரர்
123
தில்லைஸ்தானம் 123 திருநாகேசுவரம் 125 திருநாம நல்லூர்
திருத்தொண்டீஸ்வரர்
திருமங்கையாழ்வார் 239 திருமலை நாயக்கர் 280 திருமோகூர் 239 திருவரங்கம் 17,234,
288-289
திருவண்ணாமலை 278,309 திருவாதவூரடிகள் 242 திருவானைக்கா 278,300 திருவாரூர் 228,278,
309
திருவாலீஸ்வரம் 132 திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் 124 திருவிடைமருதூர் மகாலிங்கர் 123
திருவிவிளையாடற் புராணம் 279
திருவெள்ளறை 50 திருவேதிகுடிவேதபுரீஸ்வரர் 123 திருவொற்றியூர் 231,316 துமார் லென 114 துர்க்கை 71 தூங்கானை மாடம் 56,133 துவாரபாலகர் 154 தெற்குக் கோபுரம் 294 தென்கைலாசம் 136 தேர் 24 தேவலயச் சக்கரவர்த்தி 205 தொட்ட வாசப்பர் கோயில் 209 தோபிச்ச சிம்மம் 186,188
192
பட்டதகல்
பட்டாடி மகாதேவர் கோயில் பட்டிகை
பத்திரம்
பத்திரசாலை பத்திரசாலைக் கோட்டம் பத்திரசாலைப்பத்தி
பத்மம்
பதஞ்சலி
பஞ்சபாண்டவர்
பஞ்சரம் பஞ்சராத்திர ஆகமம் பஞ்சாயதனக்கோயில் பரசுராமேஸ்வரம் பரண்டம் பரமேஸ்வரப்பெருந்தச்சன் பரமேசுவர மகாவிஷ்ணு கிரகம் பரமேஸ்வர விண்ணகரம் பராந்தக சோழன் பல்லவர் பார்ஸ்வநாதர் கோயில் பாலக கோபுரம்
பாலி
T6T5
பிச்சாடனர்
பிடாரித்தளி பித்தர் கோன் பிறவாதரன் ஈசுவரம் பிரத்யாலிடம் பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர்
32,35, 38-9,43
27,29 6,7,126
9
66
135
136
6
92,283,
286,292,
298,315-6
286
54
26
18,186
68
48
6590,27
124
45
172
280,296
50
186
130,320-1
52
26-8
57
126-9,35,

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்க்ளும் 437
பிரம்மேஸ்வரம் 191 நந்தி மண்டபம் 304 SJLn6T 8,10 நந்திலக்கிச் செட்டி 230 பிரஸ்தரம் 6 நம்மாழ்வார் 239 பில்கனர் 198 நரசிங்கதேவன் 195 பிக்ஷாடனர் 8,10 நரசிம்ம அவதாரம் 33 புது மண்டபம் 281,284, நரசிம்மமூர்த்தி 106 288 நரசிம்மன் 215 புவனேஸ்வரம் 9,184-5 நரசிம்மர் 159,161
1890-1 நரசிம்மவர்மன் 47 194 நரபதிசிம்மவிஷ்ணு கிரகம் 59 புள்ளமங்கை 13140-1, நவ பிரமா கோயில் 43
153 நாககன்னி 120 புஷ்பம் 9 நாககுமாரன் 120
நாகரம் 14,15, 16, புஜங்கத்ராசித கரணம் 75, 129, 33, 56,58, 140,144, 62, 67, 83, 147 92,125, பூதகணங்கள் 84 38 பூதமாலை 53,72 நாசிகை 56,58,59, பூதவரி 125, 129 65,131,135, பூஞ்சை 7, 13 148 .gIDITIJ 25 நாட்டிய கரணங்கள் 144, 145, பூவராகர் 78, 153 283 பெரியநாயகி அம்மன் நாடமந்திரம் 193-6, 149 (தேவிகாபுரம்) 233 . நாயக்க கோபுரம் 28, 185, பேணுகொண்ட 230 195 போக மந்திரம் 193-4, 196 நாயக்க மண்டபம் 28, 285-6 போதிகை 6, 47, 50 நாயன்மார் படிமங்கள் 280 நாயன்மார் வரலாறுகள் 149 ந நாரதர் 316 நடராசர் 156 நாலந்தா 26,29 நடராசர் நிசும்பசூதனி 153 (சாசன வர்ணனை) 163 நிஷ்க்ராந்த பஞ்சரம் 57, 128 நங்கமங்கலம் 215 நூற்றுக்கால் மண்டபம் 223,235 நந்தி 231 நெய்யாடியப்பர் 123 நந்திகேசுவரர் 87, 230 நேமம் ஐராவதேசுவரம் 123

Page 233
438 சொல்லடைவு
மாணிக்கவாசகர் 241 மகர தோரணம் 46, 5.135 uoffLososvLyth 47, 52 மகாகூடேஸ்வரம் 42, 43 மான்யாகேடம் 197 மகாதோரணங்கள் 58, 62, 69 unlा6ा फाष्th 5,9,14,15, மகா பிரசாதம் 6, 14 18 மகா புருஷர் 13 மானசொல்லாச 198 மகாராஷ்டிரம் 31 மார்க்க சகாயநாதர் 233 மகாராஜலீலாசனம் 73 மார்க்கண்டேயர் 162 மகாவராகர்குடைவரை 48 மீனாகூழி அம்மன் சந்நிதி 284 மகாவிஷ்ணு 8, 10 மீனாகூழிபட்டாபிஷேகம் 295 மகிஷாசுரமர்த்தனி 48,4972, மீனாகூழிநாயக்க
73,76,77, மண்டபம் 279 87,9300, முக்தேஸ்வரம் 9,65,94, 113,119, 188,189, 120,121, 190,191 142,148 முகலிங்கம் 84 மகேந்திரவர்மேஸ்வரம் 57, 58 முத்தரையர் கோயில்கள் 123 மகேந்திரவர்மன் 45 மும்மூர்த்தி 45 மகேந்திரவாடி 46 மூலபேரன் 302 மதுரை 278 மூவர்கோயில் 12 மதுரை நாயககா மேகுடி 25,38 சந்நிதானம் 28t மேல்பாடி அறிஞ்சிகை மதுரை மீனாகூழி 278 ஈசுவரம் 132 மங்கமமாளமணடபம 279 மேலைக்கடம்பூர் 132, 183 மங்கல வீதி 301 மோகன கூேடித்திரம் 239 மங்களேசன் 33 யமனாகேவி 100, 110 மண்டகபட்டு 45, 46, 74 முனாதே wy மண்தளி 23 112 மணவாளமாமுனி 239 ரங்கபதாகை 40 மணியார் மடம் 24 ரமயை 231 மன்னார் கோயில் 132 ரவிசீர்த்தி 26, 38 LDLLngib 5,8,17 ராமநாதேஸ்வரம் s 132 மலைதளி 51 ராமானுஜா மணடயம 49 மஸ்தகம் 185-6 ராமேஸ்வரம் 96, 185 மாடக் கோயில் 69 ராஜசிம்மன் 45, 48 மாதங்கேஸ்வரம் 65.94 ராஜசிம்ம மண்டபம் 49, 64 மாறவர்மன் 293 ராஜராணி 192

இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும் 439
ராஜராஜன் 12, 132, வராக மூர்த்தி 106,151,
134, 139, 153 149 வலபி 46,48,50, ராஜராஜன் திருவாசல் 134 53,54,55, ராஜராஜவிண்ணகரம் 161 129 ராஜராஜேஸ்வரம் 134, 137, வல்லம் 46, 75
150, 152 வல்லப கணபதி 283 ITGOOT-95-605 107 வாகேஸ்வரி 10 ராஜஸம் 96 வாடம் 184 ரிஷபதேவர் 129 வாதாபி 96 ரிஷய வாகனர் வாதாபிச் சாளுக்கியர் 15, 3132 ரிஷயாந்திகர் 147,148, வாமனர் கோயில் 174
316-7 வாயிற்காவ்லர் 58,74
வாஜனம் 47, 129 6) விக்கிரம சோழன் 159 லக்குண்டி 20204 விக்கிரமாதித்தன் 198 லசுஷ்மிநரசிங்கர் 217 விக்கிரமாங்கதேவ சரிதம் 198 லகூழித 46, 48 விசயநாராயணன் 215 லலிதாசனம் 73 விசாலாட்சியம்மன் லலிதாங்குரம் 447 கோயில் 302, 304
757832 விசித்திரசித்தன் 45 லாட் கான் 35 விட்டலசுவாமி கோயில் 226, 227, லால்குடி 81,124 228 லேபாகூழி 230, 23 வித்யாரண்யர் 226, 227,
228
ଘ]] விநாயகர் 8,17,148,
186 வசநத மணடம 297 விமானம் 1751,90 வடக்குக் கோபுரம் 294,295 விமான தேவதைகள் 11,13 வட கைலாயம் 136 விரலூர் 8 வம்மோஜ(ஸ்தபதி) 15 விருத்தம் 14 வரதராசப்பெருமாள் 234 விருஞ்சிபுரம் 233 (காஞ்சிபுரம்) விருஷயவாகனர் 318 வரதராசப்பெருமாள் 69 விஸ்மயம் 72 (ஆலம்பாக்கம்) விஸ்வகர்மா 15, 282 வராக அவதாரம் 109 விஸ்வநாதநாயக்கர் 237,278 6) T85 LOGTLLh விஸ்வநாதர் கோயில் 171,176

Page 234
440 சொல்லடைவு
விஜயநகரம் 119, 226 க்ஷேத்திரபாலர் 8 விஜயரங்க சொக்கநாத ஸ்தபதி 15 நாயக்கர் 291 ஸ்தானம் 127 விஜயாலய சோழேஸ்வரம் 16, 153 ஸ்தூபி விஜயாலய சோழன் 123, 153 ஸ்நபன மண்டபம் 6,8 வீணாதார் 72, 80 ஸ்வஸ்திக கரணம் 140,144, வீணை 85 145 வீரகண்டம் 127 ஸ்வஸ்திகாசனம் 73 வீரட்டானேசுவரம் 60,70,94 ரீதேவி 109, i10 (திருத்தணி) ஷட்கோணம் 14 வீரட்டானேசுவரம் 70 ஜகதி 7, 50, 62, (திருவதிகை) 63, 68, வீரபத்திரர் 17, 188, 69,
230, 231 ஜகந்நாதர் 194 வீரண்ண 230 ஜகமோகனம் 184, 187, வீரநரசிம்மர் விரூபண்ண 230 188, 190, வெள்ளியம்பலம் 281 192, 193, வேகி 184 194, 196 வேதகிரீசுவரம் 57,8788, ஜனார்த்தனர் 217
89 ஜலகண்டேஸ்வரம் 225,231, வேதபுரீசுவரம் 131, 241 232, வேதநாதர் 241 ஜலநாதீஸ்வரர் 69,94 வேதவியாசர் 297 (தக்கோலம்) வேங்கி 31 ஹர்னஹல்லி 217 வேலூர் 21 ஹரிஹரன் 155 வேஸரம் 199, 200 ஹளே வீடு 211, 214 வைதல் தெயூல் 187,188 ஹஸ்தியிருச்சம் 14 வைணவ சிற்பங்கள் 169 ஹொய்சளர் 15, 209 கூடித்திரிய சிம்மேஸ்வரம் 90 ஹொய்சாலேஸ்வரம் 212

44
கட்டுரையாளர்கள்
1. a6 6ao (Tf6f6 JT go 86 fa 6mfg Tsino, B.A., M.A., Ph.D.,
பேராசிரியர், துறைத்தலைவர், சிற்பக் கலைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. கலாநிதி இரா. கலைக்கோவன் M.B.B.S. M.A., Ph.D.
3. கலாநிதி மு. நளினி,
4. கலாநிதி சி. பத்மநாதன்,
5. கலாநிதி இ. கா. ராஜராஜன்,
கண் மருத்துவ நிபுணர்; ஆராய்ச்சியாளர்; இயக்குனர், டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்று ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி. B.A., M.A., M.Phil., Ph.D., சாசனவியலாளர் - ஆராய்ச்சியாளர், டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்று ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி விரிவுரையாளர், சீதாலக்ஷமி கல்லூரி திருச்சிராப்பள்ளி. B.A., Ph.D. (London)., LFIBA., வரலாற்றுத்துறைப் பேராசிரியர்; தலைவர், வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்; துணைத்தலைவர்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (1994-1999); உறுப்பினர், தேசியக் கல்வி ஆணைக்குழு (1991-2001); தலைவர், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் குழு
பிரதம ஆசிரியர், இந்து கலைக்களஞ்சியம்,
கட்டடக் கலைஞர், ஆராய்ச்சியாளர்.
6. கலாநிதி வேலுசாமி சுதந்திரன், B.A., Ph.D.,
சிரேஷ்ட விரிவுரையாளர், சிற்பக் கலைத் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Page 235
Contributors
Dr. Raju Kalidas, B.A., M.A., Ph.D., Professor and Head of Department,
Department of Sculpture, Tamil University, Taficavir
Dr. R. Kalaikkovan, M.B.B.S., M.A., Ph.D., Surgeon, Epigraphist, Researcher; Director, Dr. Rajamanikkam centre for Historical Studies,
Tiruccirappalli.
Dr. M. Nalini, B.A., M.A., MPhil., Ph.D., Epigraphist and Researcher, Dr. Rajamanikkam Centre for Historical Studies, Lecturer, Sitalaksmi College,
Tiruccirappalli
Dr. S, Pathmanathan, B.A., Ph.D. (Lond), LFIBA, Professor of History and Head of the Department of History, University of Peradeniya, Member, National Education Commission (1991-2001), Vice-Chairman, University Grants Commission (1994-1999), President, IATR, Sri Lanka National Unit, Editor-in-Chief, Hindu Encyclopaedia, Department of Hindu Religious
and Cultural Affairs.
Dr. R. K. Rajarajan, B.A., Ph.D., Architect, Researcher.
Dr. Velusamy Suthanthiran, B.A., Ph.D., Senior Lecturer, Department of
Sculpture, Tamil University, Tancavór


Page 236
442
Contributors
Dr. Raju Kalidas, B.A., M.A., Ph.D., Professor and Head of Department,
Department of Sculpture, Tamil University, Taficavir
Dr. R. Kalaikkovan, M.B.B.S., M.A., Ph.D., Surgeon, Epigraphist, Researcher; Director, Dr. Rajamanikkam centre for Historical Studies,
Tiruccirappalli.
Dr. M. Nalini, B.A., M.A., MPhil., Ph.D., Epigraphist and Researcher, Dr. Rajamanikkam Centre for Historical Studies, Lecturer, Sitalaksmi College,
Tiruccirappalli
Dr. S, Pathmanathan, B. A., Ph.D. (Lond), LFIBA, Professor of History and Head of the Department of History, University of Peradeniya, Member, National Education Commission (1991-2001), Vice-Chairman, University Grants Commission (1994-1999), President, IATR, Sri Lanka National Unit, Editor-in-Chief, Hindu Encyclopaedia, Department of Hindu Religious
and Cultural Affairs.
Dr. R. K. Rajarajan, B.A., Ph.D., Architect, Researcher.
Dr. Velusamy Suthanthiran, B.A., Ph.D., Senior Lecturer, Department of
Sculpture, Tamil University, Tancavór


Page 237
* BETUNEARTSFTLIncode