கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீன்குஞ்சுகள்

Page 1
| in h: Gonariumfasi, G
 


Page 2


Page 3

மீன் குஞ்சுகள்
ச. முருகானந்தன்
சமல்லிகைப் பந்தல் வெளியீடு"
இளவழகன் பதிப்பகம் 4. இரண்டாவது தெரு ஆண்டவர் ககர், கோடம்பாக்கம், சென்னை -600 024

Page 4
மீன் குஞ்சுகள் முதற் பதிப்பு: மே, 1994 C) ச. முருகானந்தன்
இலங்கையில் வெளியீடும் விற்பனை உரிமையும்;
மல்லிகைப் பந்தல்
மற்றும் குறிஞ்சி வெளியீடு 12925, ஜெம்பட்டா வீதி,
கொட்டாஞ் சேனை
கொழும்பு-13
அச்சிட்டோர் : அலைகள் அச்சகம்
36. தெற்குச் சிவன் கோயில்தெரு, கோடம்பாக்கம், சென்னை-600024

BIBLOGRAPHICAL, DATA
Title of the book Language
Written By
CopyRight of Published by
First Edition
Types Used Number of Copies
Number cf Pagese
Printing
Wraper Designed By
Subject Price
MEEN KUNCHUGA, Tamil
Dr. S. Muruganandah
Rmo (CEY)
Author Malikai Panthal May, 1994
O Point
000
124 ALAIGAL ACHAGAM Madras-600024.
Ramani
Short Stories Rs. 20 (India)

Page 5
sdrasst
எனது முதல் ஆக்கத்தை 'கலைஒளி" கையெழுத்துப் பிரதியில் வெளியிட்ட கருணையூரான் திரு. க.ை பேரின்பநாயகம் அவர்கட்கு.
எனது முதல் சிறுகதையை பிரசுரித்த தினகரன் ஆசிரியருக்கும், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, ஈழநாதம், சஞ்சீவி, முரசொலி, ஈழமுரசு, மல்லிகை, சுடர், கலாவல்லி, மாணிக்கம் கதம்பம், தாயகம், சிரித்திரன், சிகரம், தீபம், கணையாழி, இதயம் பேசு கிறது, மித்திரன் வாரமலர், அமிர்த கங்கை ஆசிரியர் களுக்கு.
எனது நாவல்களைப் பிரசுரித்த தாரகை, மித்திரன் வாரமலர் ஆசிரியர்கட்கு.
அடிக்கடி என்னை விமர்சிக்கும் எனது தம்பி
ச. ஜெயானந்தனுக்கும் இர சிகை தமிழ்ப் புதல்விக்கும்.
இலக்கிய நெஞ்சங்களை ஊக்குவிக்கும் திரு டொமினிக் ஜீவா அவர்கட்கு.
எனது எழுத்தை ஊக்குவிக்கும் விரிவுரையாளர் திரு. இ. இவலிங்கராஜா, பேராசிரியர் நந்தி ஆகியவர் களுக்கு
என் அன்பு வாசகர்களுக்கு

قومه
எமது கிராமத்தில சமூக சீர்திருத்த முயற்சிகளை முன்னெடுத்துப் போராடிய அமரர் ச.கா. முருகேசு அவர்கட்கும்
இதே காரணத்திற்குப் பேனா முனையால் போராடிய அமரர் செ. கதிர்காமநாதனுக்கும்,
எந்தையும் தாயுமாகிய சி. சண்முகம் ச. இராசம்மா ஆகியோர்க்கும்,
சமர்ப்பணம்

Page 6
இத்தொகுதி ஆசிரியரைப் பற்றி.
அழகான நடை, ஆழமான கரு அங்கும் இங்கும் அலையாமல் செல்லும் கட்டுக்கோப்பு, நிறைவான கதை. ச. முருகானந்தன் என்ற இந்த இளம் எழுத் தாளர் பழம்பெரும் எழுத்தாளர் அ.செ. முருகானந்த னுடைய பேனாவைத்தான் இரவல் வாங்கினாரோ?
அமரர் ககாவலூர் ஜெககாதன்.
குறுகிய காலத்திலேயே விமர்சகர்களின் கண்ணில் தட்டுப்பட்டவர் ச. முருகானந்தன். மீனவ மக்களின் வாழ்வோடு ஆரம்பிக்கும் கதை சுவையாக இருக்கிறது.
--கே. எஸ். சிவகுமாரன்
ஆரம்ப சிறுகதைகளே வளமானனதிர்காலப் படைப்பு களுக்கு கட்டியம் கூறி நிற்கின்றன. முற்போக்குச் சிந்தனைகள் இயல்பாகவே கதையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
அமரர் -CBuvErdAfhuir Renas sorpuŝo

”சென்னை "இலக்கிய சிந்தனை” தரமான ஒரு ஈழத்து இனம் எழுத்தாளனுக்கு அங்கீகாரம் அளித்திருக் கிறது.
=அந்தனி ஜீவா
குடும்ப உறவுகளைச் சித்தரிக்கும் போது ச. முருகா னந்தன் வெகு இயல்பாக எழுதுகிறார். மனிதநேயம் மிக்க இவரது படைப்புகள் வளமானவை.
-டாக்டர் எம். கே. முருகானந்தன்
சிறுகதையின் பொருள்கள் கூர்மையுடனும், முனைப்பு டனும் வெளிக் கொணரப்படுதல் அவசியம். கலைப் படைப்பின் ஒரு முக்கிய அம்சம் அது ரசிகனின் கருத்துக்கும் தொழிற்பாட்டுக்கும் இடமளிப்பதாக அமைதலாகும். இதிலே ச. முருகானந்தன் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
-பேராசிரியர் கா. சிவத்தம்பி
ாழத்தின் சிறந்த பத்துக் கதைகளில் ஒன்றாக ச. முருகானந்தனின் "வன்னேரி பொன்னேரியாகிறது, சிறுகதையைக் குறிப்பிடலாம். தான் வாழ்கின்ற பிரதேசத்தைக் கூர்ந்து நோக்கும் திறன் இயல்பாகவே ஆசிரியருக்கு இருக்கிறது.
-சி. சிவலிங்கராசா
எனது பெயரிலேயே ஒர் இளம் எழுத்தாளர் என்னை விட நன்றாகவே எழுதுகிறார். எனது பணி இவரைப் போன்ற இளைய தலைமுறை எழுத்தாளர்களினால் தொடரும்.
-அ. செ. முருகானந்தன்

Page 7
0 சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் ச. முருகா னந்தனின் கதை பங்காற்றுகிறது. மரணமுற்ற மீனவர்களின் செய்தியைக் கதையாக்கிய ஆசிரியர் கதைப் புலத்தை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.
-JORD SO GuarPr
D திசைத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி நல்ல
கதை படைத்துள்ளார் ச. முருகானந்தன்.
-CaraugboarCardi
D பேச்சு வழக்கிலுள்ள தமிழை அழகாகத் தன் கதை
களில் பயன்படுத்தும் இளைய தலைமுறையினரில் ச. முருகானந்தன் குறிப்பிடத்தக்கவர்.
-சி. வன்னியகுலம்

என்னுரை
சிறுமைகளைக் கண்டு சிற்றம் கொள்ளும் எவரும் அதை எதிர்த்துப் போராடவே செய்வர். போராட்ட வழிகள் வெவ்வேறாக இருக்கும். இந்த வகையில் எனக்குக் கிடைத்த ஆயுதம் பேனாவாகும்.
அநீதிகளையும், அடக்கு முறைகளையும், பிற்போக்கு வாதங்களையும் கண்டு சீற்றம் கொள்வது எனது சுபாவம். சமூகத்தைப் பல கோணங்களில் நோக்கும் வழக்கம் இருந்த என் சிறுபிராயத்தில் நல்லவற்றைத் தேடிப் படிக்கும் பழக்கம் மறைந்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதனால் ஏற்படுத்தப்பட்டது.
சமூக சீர்திருத்தத்தில் பேனா முனையின் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல என்ற உணர்வும், உள்ளத் தில் உள்வாங்கியவற்றை எனது நோக்கில் எடுத்துச் சொல்ல கலை இலக்கியம் சிறந்த மார்க்கம் என்ற தெளிவும் என்னை எழுத்தாளனாக்கியது.
ஜனசக்தி சனசமூக நிலைய கையெழுத்துப் பிரதியானச கலை ஒளி சஞ்சிகையில் என்னை ஒளிர வைத்த கருணை பூரானும், எனது முதல் ஆக்கமான கலைஒளி சிறுகதையை வாரமஞ்சரியில் பிரசுரித்த தினகரன் ஆசிரியர்களும் எனது எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர்களாவர்.

Page 8
10
எனது சிறுகதைகளைப் பிரசுரித்த சகல ஈழத்துப் பத்திரிகைகளும், தீபம், சிகரம், கணையாழி, இதயம் பேசுகிறது முதலான இந்தியப் பத்திரிகைகளும் என்னை நல்ல சிறுகதையாளனாக வளர்த்தெடுத்தன. இவர்களில் தீபம் பார்த்தசாரதி, மல்லிகை ஜீவா, சிரித்திரன் சுந்தர். தாரகை கணமகேஸ்வரன் முதலானோர் முக்கியமான வர்கள்.
எனது எண்பது சிறுகதைகளில் ஐம்பதுக்கு மேற்பட் டவை முதல் ஐந்து ஆண்டுகளில் பிரசுரமானவை. அடுத்த பத்தாண்டுகள் ஆமை வேகம் அதிலும் 1990 முதல் பூஜ்ஜியம் எனலாம். ܖ
எழுபதுகளின் பிற்பகுதிகளில் எடுத்த எடுப்பிலேயே சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசு கிடைத்தமையும் கணையாழி கதையான "புலி தெலுங்கு, ஹிந்தி மொழி களில் மொழி பெயர்க்கப்பட்டமை, ஈழத்து சிறுகதைப் போட்டிகளிலும், குறுநாவல் போட்டியிலும் பல பரிசில்கள் கிடைத்தமை, வாசகர்களின் வரவேற்பு,
விமர்சகர்களின் அவதானிப்பு என்பனவும் தன்னம்
பிக்கை ஊட்டின.
ஒரு கதாசிரியனுக்கு சமுதாயப் பொறுப்புகளும் அழகியல் உணர்வை மேம்படுத்தும் கடமைகளும் உண்டு. தான் வாழ்கின்ற சமுதாயத்தில் புரையோடிப் போயி ருக்கும் பிற்போக்கு வாதங்களை முறியடித்து, சமூக அபிவிருத்தியில் சரியான பாதையை ஏற்படுத்தி மானுட வாழ்வை நெறிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கலையிலக்கிய வாதிகள் பேனா ஏந்தாவிட்டால் அவர் களது ஆக்கங்கள் காலத்தால் அழிந்து விடுவதுடன், அர்த்தமற்றவையுமாகிவிடும். எனது படைப்புகளில் ஜனரஞ்சகமாக சமூக சீர்திருத்த முயற்சிகளை முன்வைத் துள்ளேன். வர்க்க முரண்பாடுகள், நிலமானிய அமைப்பு" களின் சீர்கேடுகள், சாதி பேதங்கள், பெண்ணடிமைத் தனம், என்பன என் கதைகளில் அலசப்படுகின்றன.

தான் வாழ்கின்ற காலத்தைப் பிரதிபலிக்காத எழுத்துக்கள் அர்த்தமற்றவையாகிவிடும். எனினும் எனது இத்தொகுதியில் இனப்பிரச்சினை தொடர்பான கதைகள் இடம் பெறவில்லை. அக்கதைகள் "அலியன்" யானை" என்ற தலைப்பில் அடுத்த தொகுதியாக வர உள்ளது. என்னால் இத்தொகுதியில் அலசப்பட்டுள்ள கதைகளும் இன்றைய எம் சமூக அமைப்பில் இனப் பிரச்சினையோடு பின்னிப் பிணைந்துள்ளன. பெண் விடுதலை, சாதியமைப்பின் சாவு மணி என்பன இன விடுதலையுடன் ஒன்றாகப் பெறப்பட வேண்டியவையே.
பல வழிகளிலும் உதவி புரிந்த அன்பர்களுக்கும். இத் தொகுதியை வெளியிடும் மல்லிகைப் பந்தலுக்கும், பதிப்பித்தளித்த சென்னை, இளவழகன் பதிப்பகத்தாருக் கும் மற்றும் கொழும்பு, குறிஞ்சி வெளியீட்டாளருக்கும் அட்டைப்படம் வரைந்த ஒவியர் ரமணி அவர்களுக்கும் என்னைப் பற்றி இத்தொகுதிக்கான குறிப்பு எழுதிய நண்பர் மேமன் கவிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எனது அன்பான வாசகர்களின் அபிப்பிராயங்கள் என் வளர்ச்சிப் பாதைக்கு உரமாதலினால் உங்கள் அபிப்பிரா" யங்களை வரவேற்கிறேன்.
நன்றிகள்
டாக்டர் எஸ். முருகானந்தன்
கரணவாய் கிழக்கு சச. முருகானந்தன்.
yaali.

Page 9
பதிப்புரை
ஈழத்துப் படைப்பாளர்களின் ஆக்கங்களைத் தமிழகத்தில் வெளியிடுவதில் இளவழகன் பதிப்பகம் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் வெளியீட்டு முயற்சி களில் சற்றுத் தளர்வு ஏற்பட்டபோதும், இல் வாண்டு பல நூல்கள் பதிப்பித்து வெளியிடப் படவுள்ளன. வாசகர்களின் மீதான நம்பிக்கை வீண்போகவில்லை. தொடர்ந்து எமது வெளியீடு கள் தொடரும்.
டாக்டர். ச. முருகானந்தன் அவர்களின் சிறு கதைகள் சில மீன் குஞ்சுகள்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருகிறது. ஒரு காலகட்டத் தில் உச்சநிலையில் இருந்த பல சமூகப் பிரச்சனை களுக்குத் தமது பேனா மூலம் தீர்வு காண முனைந்திருக்கிறார். இன்று இலங்கைச் சமூக நிலைப்பாடு எவ்வளவோ மாறிப்போய் இருக் கிறது. குறுகிய பத்தாண்டுகளுக்குள்ளாகவே இத்தனை மாற்றமா? வியப்பை அளிக்கிறது.
இக்கதைகளைப் படிக்கும் போது எமது பண்டைய வாழ்க்கை முறைகளை அறிவதுபோல் ஒருவித உணர்வு மேலோங்கியிருக்கிறது. தீபம், மல்லிகை போன்ற இதழ்களில் தமிழகத் திலும், ஈழத்திலும் அவ்வப்போது வெளியான இக்கதைகள், இத்தனை காலம் கழித்து நூலுருப் பெறுவது, எம்மிடையே நிலவும் பதிப்பு முயற்சி களில் உள்ள குறைபாட்டைக் காட்டுகிறது.

13
இன்றைய காலகட்டத்திற்கு இக்கதைகளில் சொல்லும் விடயம் பொருந்தவில்லை எனக் கருத்துரைக்கின்ற போது, ஒரு காலகட்டத்தில் முனைப்போடு இருந்த பல சமூகப் பிரச்சனை களை முறியடிக்கவும் இவை பயன்பட்டிருக் கின்றன என்பதை உதை வேண்டும். ஒரு சமூகத் தில் காணப்படும் பிற்போக்குத் தன்மான செயற் பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் தகர்த் தெறியும் நோக்குடன் படைக்கப்படும் இலக்கி பங்கள் அதன் கடமை முடிந்ததும் வழக்கிழந்து போவதில் தவறொன்றுமில்லை. ஒரு சமூகத்தில் என்றும் உள்ள பொதுவான சிக்கல்களையும் உணர்வுகளையும் பிரதிபலித்து நிற்கும் இலக்கி யங்களே காலங்கடந்து வாழும் தன்மை பெறு கின்றன. படைக்கப்பட்ட எல்லா இலக்கியங் களும் எல்லாக் காலகட்டங்களிலும் நிலைத்தி ருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படைப்புகளின் சமகால நெருக்கமும் நெகிழ்வும் அவற்றின் வாழ்நிலையை முடிவு செய்கின்றன.
இன்று திருக்குறளைப் போல, நாலடியார் போல என்றும் வாழும் இலக்கியங்களைப் படைக்க Genuată7 ugluu அவசியமோ, நோக்கமோ எமது படைப்பாளர்களிடமும் இல்லை; அதை எதிர் பார்க்கும் வாசகர்களும் இல்லை. உடனடிப் பிரச் சனைகளுக்குத் தீர்வு-இன்றைய சமூக மாற்றத் திற்கான கருத்துக்கள் என்பனவற்றை முன் வைக்கும் - போராட்டச் சூழலுக்கு உதவும் குறுகியகால வாழ்நிலை உடைய இலக்கியங்களே மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. இது இலக்கியங்களில் மட்டுமின்றி மக்களின் எல்லா நிலைகளிலும் எதிர்பார்க்கப்படும் இன்றைய சூழலுக்குரிய பண்பாக உள்ளது.

Page 10
14
"மீன் குஞ்சுகள்" சிறுகதைத் தொகுப்பைப் படிக்கிறபோது ஒரு காலகட்டச் சமூகத்தில் நிலவிய பிரச்சனைகளைப் புரிந்துகொள்கிறோம். உண்மையில் இவை ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றின் பதிவுகளே இதனால்தான் இந்தச் சிறுகதைகள் எந்த ஆண்டுகளில் எழுதப்பட்டது. என்ற குறிப்பைக் கொடுக்க வேண்டிய கட்டாயத் திற்கு உள்ளாகின்றன. இன்றைய காலகட்டத்தில் சமகாலப் பிரச்சனைகளை மையமாகக் கொள் ளாத படைப்புகளை வெளியிடுகிறபோது அவை எழுதப்பட்ட ஆண்டு விபரங்களைக் கொடுப்பது ஒரு சமாதான முயற்சியாகும்.
டாக்டர். ச. முருகானந்தன் அவர்கள் தமது படைப்புகளின் மூலம் அவை படைக்கப்பட்ட காலகட்டத்தின் சமூகப் பிற்போக்குத்தனங்களை யும், முரண்பாடுகளையும் தகர்த்தெறிவதில் அரும்பணி ஆற்றியுள்ளார் என்பதை, அப்பிரச் சனைகளில் இருந்து விடுபட்ட இன்றைய சமூகம் வெளிப்படுத்தி நிற்கிறது. இன்றாவது இவற்றை நூலுருவில் கொண்டுவர முடிந்ததே என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைய வேண்டும்.
வாசகர்களுக்கு இன்றைய பிரச்சனை சளுக்கான தீர்வுகளையும் விளக்கங்களையும் இவை அளிக்கின்றன எனச் சொல்லாமல், சமூகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் ஒரு எழுத் தாளனின் படைப்புகள் எந்தளவிற்கு உதவியிருக் கின்றன என்பதற்கு இக்கதைகள் சான்றா கின்றன.
கொழும்பு - குறிஞ்சி வெளியீடு, மல்லிகைப் பந்தல் வெளியீடு ஆகியவற்றின் வேண்டு கோளுக்கு இணங்கி எமது பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுகிறது. இதன் வெளியீட்டு

15
முயற்சிகளில் உதவிய மாத்தளைக் கார்த்திக்கேசு மல்லிகைப் பந்தல் உரிமையாளர், படைப்பாளர் க. முருகானந்தன் ஆகியோருக்கு எமது முதற் கண் நன்றிகள்.
நூலாக்கப் ப்னியில் உதவி புரிந்த அலைகள்" அச்சக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், பைண்டர் திருநாவுக்கரசு, படிகளைத் திருத்தம் செய்வதில் உதவி புரிந்த செல்வி.இ. சா. பர்வின் சுல்தானா, வே. சிற்றரசு, த. ஜெகநாதன் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.
சென்னை-600024 வே கருணாநிதி,
GLD-1994 இளவழகன் பதிப்பகம்
தயாராகும் ஆசிரியரின் பிற நூல்கள்:
1. அலியன் யானை (சிறுகதைத் தொகுதி)
2. ஒர் இளம் விதவை தனியே வாழ்கிறாள்
(இரு குறுநாவல்கள்)

Page 11
உள்ளே.
தாயும் சேயும்
யாருக்குச் சொந்தம் அறத்தின் குரல் மீன் குஞ்சுகள் அந்த நிழல்கள் இந்த நிஜங்கள் பாதை மாறிய பந்தங்கள் தந்திரம் ஒரு கிராமத்தின் கதை தீர்வு
புதுயுகப் பிரவேசம்
எங்கேதான் வாழ்ந்தாலும் புதிய பரிணாமங்கள்
7
30
36
A9
63
74
32
89.
97
OS

1. தாயும் சேயும்
"அடிக்காதேம்மா. அடிக்காதேம்மா. இனிமேல் எடுத்துத் தின்ன மாட்டேன்." அழுது துள்ளிய காந்தன் மங்களத்தின் பிடியிலிருந்து விட்டுபட்டுத் தெருப் பக்சம் ஓடினான்; மங்களமும் மகனைத் துரத்திக்கொண்டு அகப்பையுடன் ஓடிவந்தாள். அவன் Lut-606060tlas தாண்டித் தெருவுக்குச் சென்றபின், மங்களம் ஆற்றானம யால் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
பத்து வயதுச் சிறுவனான காந்தன் படுசுட்டி வீட்டுக் கஷ்டமே தெரியாத வயது; தினமும் ஏதாவது தில்லு முல்லுச் செய்து, பிடிபட்டு அடி வாங்காவிட்டால் அவனுக்குப் பொழுதே போகாது.
மங்களத்தின் கணவன் கணேசன் ஈரல் தருகி இளம் வயதிலேயே செத்துப் போனபின் அவளது அன்றாட வாழ்க்கையே சிரமமாகிப் போய்விட்டது. கணவன் போகும்போது கடனை மட்டும் விட்டு விட்டுப் போய் விட்டதால் தலையெடுக்கவே முடியவில்லை. மாதம் பிறக்கத் தவறினாலும் கடன்காரர்கள் வரத் தவறவே மாட்டார்கள். காலையில் அப்பம் கட்டு விற்றும், மாலை யில் வடை மோதகம் போன்ற பண்டங்களைச் செய்து விற்றும் ஏதோ காலத்தை ஒட்டினாள் மங்களம்.
காந்தன் படிப்பிலே படுசுட்டி! ஆனால் குழப்படிக்கும் குறைவில்லை. அம்மா விற்பனைக்காகச் செய்யும் பட்சணங்களைக் களவாடித் தின் பதில் அவனுக்கு
2-سس L5

Page 12
8 மீன் குஞ்சுகள்
அலாதிப் பிரியம். இன்றைக்கும் அப்படித்தான்.அவன் பாடசாலையிலிருந்து திரும்பியபோது வடை மணம் குப்பென்று கமகமத்தது. அவன் சோறு சாப்பிடும்போதும் அந்த மணம் தான். நொறுக்குத் தீனி ஆசை மனதில் தோன்றிவிட்டதால் சோறு வயிற்றில் இறங்கவில்லை. அம்மாவிடம் மெல்லக் கேட்டுப் பார்த்தான். "அம்மா.: எனக்கொரு வடை தா" அதெல்லாம் சந்தைக்குக், கொண்டுபோய் விற்பதற்கு.நீ சோத்தை சாப்பிடு." என்று கூறி மங்களம் மறுத்துவிட்டாள்.
காந்தன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது மங்களம் வேலிக்கரையில் நின்று, அடுத்த வீட்டுப் பரிமளத் துடன் கதைத்துக் கொண்டிருந்தாள், "இஞ்சார் தங்கைச்சி .ஒரு கொத்து அரிசி கைமாத்தாய் தாஹியே?.கூப்பன் எடுத்துப் போட்டுத் தாறன்" கைமாத்துக் கேட்பது அம்மாவின் தினசரிக் காரியங்களில் ஒன்று என்பது காந்தனுக்குத் தெரியும்.
"உன்னாணை இல்லை மங்களக்கா. எனக்கும் இரவைக்குச் சமைக்க அரிசியில்லை." பரிமளம் சாதுரி யத்துடன் பதிலளித்தாள். மங்களத்திடம் கைமாத்துக் கொடுத்தால் விரைவில் திரும்பி வராது என்று அவளுக்குத் தெரியும்
அவர்கள் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த காந்தன் இதுதான் சமயம் என்று மெல்ல அடுப்படிக்குள் நுழைந்தான். நான்கைந்து விடைகளை எடுத்துக் காற் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு வேகமாகத் திரும்பிய போது தண்ணிர்ச் செம்பும் மூக்குப் பேணியும் அவன் கால் பட்டு உருண்டது.
மங்களத்திற்குப் பாம்புக் காது: வேலியருகே நின்ற வளுக்கு இந்தச் சத்தம் கேட்கத் தவறவில்லை. "ஆ. அழிஞ்சு போவாரின்ர கோழியடி, நான் வாறன்."
என்று பரிமளத்திடம் விடைபெற்றுக் கொண்டு ஓடி வந்தாள் மங்களம்.

ச. முருகானந்தன் 19
வடை பைப் பைக்குள் வைத்துக் கொண்டு திருட்டு முழி முழித்தபடி மெல்ல நளுவ இருந்த மகனை எட்டிப் ஆபிடித்து முதுகில் இரண்டு சாத்துச் சாத்தினாள் மங்களம். காந்தன் ஊரைக் கூப்பிடுகிற மாதிரி அழுது ஆர்ப்பரித் தான்.
"செய்யுறதையும் செய்திட்டு அழுறியே?. கள்ள நாயே. நொட்டைத் தீனி தின்னாட்ட உன் வயிறு நிரம்பாதாக்கும்." திட்டியபடி அகப்பையை எடுத்து அகப்பைக் காம்பால் அவனை அடித்தாள் மங்களம். அவன் கையால் தடுத்து திமிறிக் கொண்டு ஓடினான். அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிதான் இது, மங்களம் திட்டித் தீர்த்தாள். தெருவில் சிறிது தூரம் ஓடிச் சென்ற காந்தன் அம்மா தொடர்ந்து துரத்தி வரவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு ஓடுவதை நிறுத்தினான். அவனுக்கு மூச்சு வாங்கியது. இதயம் படபட என்று அடித்துக் கொண்டிருந்தது. அகப்பைக் காம்பால் அடிபட்ட இடம் கொழுககட்டை மாதிரி வீங்கியிருந்தது. காயம்பட்ட இடத்தை மறுபடியும் தடவிப் பார்க்கையில் அவனது நெஞ்சு விம்மி வெடிக்கிறது.
"நான் நல்லாய்ப் படிக்கிறன் .அம்மாவுக்கு உதவி யாக வீட்டு வேலையும் செய்யுறன். மற்றப் பொடியள் பந்தடிக்கிறபோது நான் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கேன், அப்படியிருந்தும் ஏன் அம்மா அடிச்சா?. மற்றப் பிள்ளையளைப் போல அது இது வேணுமெண்டு நான் படுத்றேனா?.இந்த வடை மோதங்களிலை தானே ஆசை. அதுக்காக இப்படி அடிக்கிறதே.அம்மாவும்கும்மா வும்." என பலவாறாக யோசித்தான். அவனுக்கு அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
*இனிமேல் அம்மாவுக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கக்கூடாது. கடைக்குச் சீனி, உழுந்து வாங்கப் போறதுக்கும் நான்தான்.கூப்பன் அரிசி எடுத்து வாறதுக்

Page 13
20 மீன் குஞ்சுகள்"
கும் நான்தான். ஆட்டுக் கொட்டில் கூட்டுறதும் நான்" தான் எல்லாத்துக்கும் நான்தான் வேணும்.வடை மட்டும் எனக்குத் தர மாட்டாளாம்.தராட்டிலும் Upfohn யில்லை. ஆசையாய்ச் சாப்பிட எடுத்ததுக்கு இப்படி அடிக்கிறதே?. இனி மேற்பட்டு அம்மாவுக்கு ஒரு: வேலையும் செய்து கொடுக்கமாட்டன்.ஒ. அப்பதான் புத்தி வரும்." காந்தனின் குழந்தை மனது குரங்சாய்த் தாவிக் குதிக்கிறது. சிறிது நேரம் தெருவில்" நின்று யோசித்தான் காந்தன். "இப்ப வீட்டுக்குப் போனால் உதைதான் கிடைக்கும்." என எண்ணிக் கொண்டிருக்கையிலே அவனது சினேகிதன் குகன் வந்தான். ے 'டே ய் காந்தன்.கள்ளன் போலிஸ் விளையாட்டு விளையாடுவோம் வாநியாடா?."
"ஒ.விளையாடலாமே-"
"அப்ப சரி.நான்தான் போலீஸ்-நீதான் கள்ளன்." என்று ஆரம்பித்தான்.
"நான் மாட்டன்.நான் கள்ளனா?-நான்தான்" போலீஸ் நீதான் கள்ளன்.அப்படியெண்டால் தான் வருவேன் என்று கூறினான் காந்தன். அம்மா அவனைக் "கள்ள நாயே" என்று திட்டிய தாக்கம் இன்னும் அவனது மனதிலிருந்து விடுபடவில்லை. "அப்ப விளையாட்டு வேண்டாம்." என்று விருட்டென்று வீட்டை நோக்கி நடந்தான்குகன்.
காந்தன் வீட்டிற்குத் திரும்பிய போது அம்மா அங்கில்லை. மெளனமாக வந்தமர்ந்து விட்டுக் கணக்கைப் போட ஆரம்பித்தான். பென்சில் தேய்ந்து ஒரு அங்குல அளவுக்குக் கட்டையாகி விட்டிருந்தது.
"அம்மா வந்தவுடன் காசு வாங்கிக் கொண்டு பென்சில் வாங்க வேணும்" என ஒரு கணம் நினைத்தவன் மறு

அச. முருகானந்தன் 2
கணமே* சி. அம்மாகிட்ட இனி ஒண்டும் கேக்கிறதில்லை கேட்டால் வாங்கியா தரப்போறா?.பேச்சுத்தான் வாங்க வேண்டிருக்கும்.ஒரு வாரமாய்க் கணக்கு நோட்டு கேட் கிறேன்.வாங்கியா தந்தா?.நான் வாத்தியாரிட்டையும் அடி வாங்க வேண்டிக் கிடக்குதுரி.எனக்குப் படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணாங் கட்டியும் வேண்டாம்." புத்தகத்தை மூடி வைத்து விட்டு சாக்குக் கட்டிலில் வந்து படுத்தான் காந்தன். அடிபட்ட இடம் வலித்துக்கொண் டிருக்கிறது.
சிறிது நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிய மங்களம் மகன் படுத்திருப்பதைக் கண்டாள். 'டேய்.இந்த நேரத்திலை என்ன படுக்கை?.கொட்டப் பெட்டியுக்கை இரண்டுரூபா கிடக்கு. எடுத்துக் கொண்டு போய் செல்லாச்சியக்கையின் கடையிலை போய் வெங்காயம் வாங்கிக் கொண்டுவா." என்றாள்.
'எனக்கு நாளைக்குப் பள்ளிக் கூடம் கொண்டு போக பென்சில் இல்லை. வாத்தியார் அடிப்பர்." என்று காந்தன் கூறு முன்னரே அம்மா தொடங்கி விட்டாள். 'ஒ.இப்ப அது தான் அவருக்குத் தேவை.ஒரு மாதத் திலை பதினெட்டுத் தரம் பென்சில் வாங்கித் தர அப்பா வா இருக்கிறார்?.உன்னாட்டப் பிள்ளை மாடு மேய்ச்சுச் சம்பாதிக்குதுகள்."
"அப்ப நான் கடைக்குப் போக மாட்டன்.” இடக் காகப் பதிலளித்தான் காந்தன்.
"இன்னும் அடிவாங்கப் போறியா. முதுகு உழையு தெண்டால் சொல்லு."
காந்தன் அசையவில்லை.
"கடவுளாணை இண்டைக்கு அடி வாங்கிச் சாகப்
போறாய் பொடியா." பூவரசம் தடியொன்றைப் கிபிடுங்கி இலையை உருவினாள் மங்களம். காந்தனின்

Page 14
22 மீன் குஞ்சுகள்
மனதில் பயம் பற்றிக் கொண்டது. எனினும் அம்மா வின் சொற்படி கடைக்குப் போக அவனுக்குத் துளிகூட விருப்பமில்லை. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்ல? நினைத்தவனுக்கு திடீரென்று ஒரு "ஐடியா தோன்றியது. நான் ஆட்டுக்குக் குழை ஒடிக்கிறேன்." என்றான்.
அவனது யுக்தி பலித்தது. "அப்ப சரி. நான் கடைக்குப் போய்ட்டு வாறன். நீ குழையை வெட்டி ஆடு களுக்குப் போடு." என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் மங்களம். வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த காந்தன், "அம்மாவுக்கு வேலை செய்து கொடுக்கமாட்டன். நல்லாய்க் கஷ்டப்படட்டும்." என்று மனதில் கறுவிக் கொண்டான்.
மங்களம் கடையில் இருந்து திரும்பியபோது காந்தன் தனது முதுகுத் தழும்பு அவளது கண்ணில்படும் வண்ணம் நடை பயின்றான். அவனது எதிர்பார்ப்பு வீண் போக வில்லை. தழும்பு மங்களத்தின் கண்ணில் பட்டது. அருகே வந்த மங்களம், "என் பிள்ளையை நல்லா அடிச்சுப் போட்டன். ஐயோ மசுக்குட்டி கடிச்ச மாதிரி வீங்கிப் போச்சுது. வலிக்குதா என் ராசா." என்று ஆதரவோடு அவனை அணைத்தபடி அழுதாள். அவனை அடித்தவள் இப்பொழுது எதற்காக அழுகிறாள். அம்மா அழுவதைப் பார்க்கையில் அவனுக்கும் அழுகை வருகிறது,
"அம்மா." என்கிறான் காந்தன் அன்பொழுக.
"அழாதே ராசா. உனக்குப் பென்சிலும் கொப்பியும் வாங்கித் தாறன். இனிமேல் ஒரு நாளும் என் பிள்ளைக்கு அடிக்க மாட்டன். என் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை
யெல்லே."

2. யாருக்குச் சொந்தம்?
கோர்ட்டில் நிற்க ஆறுமுகத்திற்கு வெட்கமாக இருந்தது. நாலா பக்கமும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்திருக்கும் சனத்திரளைக் கண்டதும் தலையை கவிண்டு கொண்டான்.
சின்ன வயதிலிருந்தே போலிஸ், கோடு வழக்கு எதுவுமே அவனுக்குப் பிடிக்காது. பார்வையாளராகக்கூட கோர்ட்டையே எட்டிப்பார்க்காத-கோர்ட்டுப்படி ஏறாத ஆறு சிகம் கடந்த மூன்று நாலு மாதங்களாக கோர்ட்டு, வீடு என்று மாறி மாறி அலைகிறான். ஒ இத்தனைக்கும் அவன் உழைப்பின் பெரும்பங்கை விழுங்கிவிட்ட வீடு தானே காரணம்?
அது ஒரு கிரிமினல் வழக்கல்ல. சிவில் வழக்குத்தான். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆறுமுகத்தின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் சுப்பிரமணியம் இப்போது ஆறுமுகத்திற்கு வீடு தேவையென்ற நிலையில் கூட எழும்ப மறுத்தான். சுப்பிரமணியத்தின் மீது வழக்குத் தொடர் வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தனக்கு விருப்பமில்லாத கோர்ட்டை நாடினான் ஆறுமுகம்.
வழக்கு ஆரம்பித்த நாளிலிருந்து மாறி, மாறித் தவணை போடப்பட்டதால் ஆறுமுகத்தின் பாடு திண்டாட்டமாகிப்போய் விட்டது. ஒவ்வொரு தவணைக் கும் அலுவலகத்திற்கு லீவு போடவும், அலையவும், பிரயா சனத்திற்கும் சட்ட வல்லுனருக்குமாகச் செலவழிக்கவும் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

Page 15
24 மீன் குஞ்சுகள்
பாவம் அவனும் பிள்ளை குட்டிக்காரன். கலியான வயதில் இரண்டு பெண்கள், உயர் வகுப்பில் படிக்கும் பகன், வருத்தக்கார மனைவி இப்படிப் பல பிரச்சினை களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் அவனுக்கு இப்போது வழக்குச் செலவு இன்னொரு புறம் தவியாய்த் தவித்தான் ஆறுமுகம்.
ஒவ்வொரு தவணைக்கும் சட்ட வல்லுநருக்கு ஏதோ சிறு தொகை அளக்காவிட்டால் அவர் தகராறு பண்ணு வார். இந்த வீட்டு வழக்கையே நம்பித் தன் சொந்த வீட்டிற்கு அத்திவாரமும் போட்டு விட்டார் வழக்கறிஞர் சும்மா விடுவாரா?
தவணைகள் வந்து கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் சட்ட வல்லுனர்கள் பாடு கொண் டாட்டம். பாவம்; வழக்காடுபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
மனிதர்களின் நல்வாழ்வுக்காக வகுக்கப்பட்ட சட்டம் சில வேளைகளில் அவர்களுக்கே தீமையாக அமையும் சந்தர்ப்பங்களை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்.
வழக்கு ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால் ஆறுமுகம் ஒரு ஒரமாக நின்றபடி யோசித்தான். மன உழைச்சலும், உடல் அலைச்சலும் சேர்ந்து அவனுருவை மாற்றியிருந்தது. அவன் இளைத்துக் கறுத்துப் போயி ருந்தான். கண்களில் சோர்வும் சோகமும் புலப்பட்டன. கீழ் இமைகளுக்கடியில் கருமை படிந்திருந்தது. இந்த வழக்கின் மையப்பொருளான வீட்டைக்கட்ட அவன்பட்ட சிரமங்கள் திரைப்படம் போல் மனத்திரையில் தோன்றிய போது அவன் இதயத்தின் அடியிலிருந்து ஒரு நீண்ட பெரு மூச்சு வெளிப்பட்டது.
ஆறுமுகத்தின் தந்தை இவ்வுலகை விட்டுப் பிரிந்த போது ஆறுமுகத்திற்குப் பதினெட்டே வயதுதான் .

* முருகானந்தன் 2.
அப்போது அவர்களுக்கு இருந்த சொத்தெல்லாம் ஒரு சிறிய வீடுதான் குடும்பப் பொறுப்பு அவன் தலையில் விழவே அவன் மேற்படிப்பை நிறுத்திவிட்டு அரசதிணைக் களம் ஒன்றில் இலிகிதராகச் சேர்ந்தான்,
எந்தச் சோதன்ை வந்தாலும் சமாளிப்பேன் என்ற மன நம்பிக்கையும், விடாமுயற்சியும் அவனை வாழ்வில் முன்னேற்றியது.
வாழ்வு என்பது ஏதோ கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைவதல்ல ஆற்றில் மிதக்கும் சிறு துரும்பின் கதியல்ல வாழ்க்கை. காற்றடிக்கும் திசைச் கெல்லாம் சாய்ந்தால் வாழ்வில் முன்னேற முடியாது. சுய தேவைகளை அடைய தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முயற்சி செய்யவேண்டும் என எங்கோ எப்போதோ படித்தது ஆறுமுகத்தின் மனதில் ஆழமாகப்பதிந்திருந்தது தனக்கென்று ஒரு பொறுப்பு வந்து விட்டால் தான் ஒருவனது உண்மையான திறமையை உணர முடியும். சுயமாக இயங்க முடியாதவன் என ஆறுமுகத்தைப்பற்றித் தப்புக் கணக்குப் போட்டவர்கள் மூக்கில் விரல் வைத்து வியக்கும் வண்ணம் வாழ்வில் முன்னேறினான் ஆறுமுகம், அதிக சேமிப்பு என்று எதுவுமில்லா விட்டாலும் அக் குடும்பத்தைப் பீடித்திருந்த ஏழ்மையைப் பறக்கடித் தான்.
சகோதரிகளுக்கு மணம் முடித்துக்கொடுத்த பின் தனக் கென்றும் ஒரு துணையைத் தேடிக் கொண்டான்.
வீட்டு நிலையறிந்து மனைவி மல்லிகாவும் சிக்கள மாக நடந்து வந்ததால் ஆறுமுகத்திடம் சிறிது பணம் பதுங்க ஆரம்பித்தது. கையில் சேர்ந்த பணத்தைக்கொண்டு புதிய வீட்டிற்கு அத்திவாரமிட்டான் ஆறுமுகம்.
சிக்கனத்தை முன்னிட்டு குழந்தை வேண்டாம் என்று நினைத்திருந்த தம்பதிகளுக்கு நாளடைவில் அது பெரும்

Page 16
26 மீன் குஞ்சுகள் மனக்குறை ஏற்படுத்தவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு முழுக்குப் போட்டனர்.
நாட்கள் நகர்ந்தன. மல்லிகா மடி நிறைந்து மகள் ஒருத்தியை பெற்றுக் கொடுத்தபோது ஆறுமுகம் பூரித்துப் போனான். ஆனால் அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்ததால் செலவீனங்கள் அதிகரித்தபோது ஆறுமுகம் ஆடிப் போனான். இதற்கிடையில் தாயின் மரணம். மனைவியின் நோய் எனப் பல இழப்புகள் ஏற்படவே" கட்டிய வீடு பாதியிலேயே நின்றது.
இந்த நிலையில் அவனது வேட்கை அதிகரித்தது. வீடொன்றைக் கட்டி முடிக்கவேண்டுமென்ற வேட்கையில் வங்கியிலும், இலாக்காவிலும், நண்பர்களிடமும் சிறு தொகையாகவும் பெருந்தொகையாகவும் கடன் பட்டான் வீடு ஒருவாறு பூர்த்தியாகியது.
இதற்கிடையில் அவனைக் கொழும்புக்கு மாற்றியிருந் தார்கள். கட்டிய வீட்டில் ஒருசில மாதங்கள் தான் குடியிருக்கக் கொடுத்து வைத்தது அவனுக்கு
கடனுக்குக் கழிப்பது போக சிறிய தொகையே சம்பள மாக அவனது கையில் கிடைத்தது. இந்த நிலையில் தான் கொழும்பிலும், குடும்பம் யாழ்ப்பாணத்திலும் , இருந்தால் செலவுக்குக் கட்டுபடியாகாது என்பதனால் மனைவி மக்களையும் கொழும்புக்குத் தன்னுடன் அழைத் துச் சென்றான். கொழும்பில் அவர்கள் வாடகை வீட்டில் குடியிருக்க, ஊரில் சொந்த வீடு பூட்டிக்கிடந்தது.
அப்போதுதான் சுப்பிரமணியம் ஆறுமுகத்தின் வீட்டை வாடகைக்குக் கேட்டு வந்தான். சுப்பிரமணியம் ஒரளவு அறிமுகமானதாலும் வாடகையாகக் கிடைக்கும் பணம் கடனை அடைக்க உதவும் என்பதாலும், வீடு பாழாடையாமல் விளக்கு வைப்பதற்கு ஒருவர் தேவை யென்பதாலும் ஆறுமுகம் சம்மதித்தான்.

ச. முருகானந்தன் 27
வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி கொள்வது? அவ்வளவு சுலபமல்ல, அதில் வெற்றி பெற அன்பும் வலிமையும், அறிவும் திறமையும் கொண்டு செயற்பட்ட ஆறுமுகத்தின் வாழ்வு ஏதோ தடங்கலின்றித் தொடர்ந்தது.
படமின்றி, பகட்டான செலவின்றி, குடி சிகரெட் இன்றி சிக்கனமாக வாழ்ந்து கடனைச் சிறுகச்சிறுகஅடைத்தான் ஆறுமுகம்.
பதினான்கு வருடங்கள் வெளியூர்களில் சேவை செய்த பின் ஆறுமுகத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் கிடைத்தது. மாற்ற உத்தரவைக் கண்டதும் ஆறுமுகத் திற்கு ஒரே மகிழ்ச்சி,
"ஊருச்குப் போனால் சொந்த வீட்டில் குடியிருக்க லாம்; தோட்டம் செய்யலாம்: கோழி வளர்க்கலாம் அதிக அலைச்சல் கிடையாது' என எண்ணிய ஆறுமுகத் திற்கு ஒருவித நிம்மதி.
விட்டில் மாற்றத்தைப் பற்றிக் கேட்டதும் அனைவருக் கும் மனம் நிறைந்த திருப்தி.
தான் மாற்றத்தில் ஊருக்கு வருவது பற்றியும். வீட்டைக் காலிசெய்து தரும்படியும் சுப்பிரமணியத்திற்குக் கடிதம் எழுதி இரண்டு வாரமாகியும் பதில் வராததால் ஆறுமுகம் மீண்டுமொரு கடிதம் எழுதினான்.
அதற்கும் பதிலில்லை. வேறு வழியின்றி ஆறுமுகம் ஊருக்குப் போய் சுப்பிர மணியத்துடன் கதைத்தான்.
ஒய் காணும் உமக்குச் சட்டம் தெரியுமெல்லே பத்து வருஷத்துக்கு மேல் ஒருவர் வாடகை வீட்டில்
குடியிருந்தால் வீடு குடியிருந்தவருக்குத்தான் சொந்தம்” என சுப்பிரமணியம் எக்காளமிட்டான்.

Page 17
8 மீன் குஞ்சுகள்
நீர் பேசறது உமக்கே நல்லாயிருக்கா?" என்று கேட்டான் ஆறுமுகம். சுப்பிரமணியம் மெளனம் சாதிக் கவே ஆறுமுகம் தொடர்ந்தான்.
"அப்ப நீர் வீட்டைக் காலி பண்ண மாட்டீரோ”* சூடாக வார்த்தைகள் வெளியாகின.
ஓம்.நீர் செய்யுறதைச் செய்யும்' என்றான் சுப்பிர மணியம், ஆறுமுகத்தின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்தன.
இது பெரிய அநியாயம்-வேதனையாலும் ஆத்திரத் தாலும் ஆறுமுகத்தால் பேச முடியவில்லை. அவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஆனால் சுப்பிரமணியம் விட்டுக் கொடுக்கவே இல்லை.
ஆறுமுகத்தின் பக்கம் நியாயம் இருப்பதைக் கண்டஊர்ப் பெரியவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சுப்பிரமணியம் கேட்கவில்லை.
இறுதியில் ஆறுமுகம் கோர்ட்டுப் படியேறினான்.
O o
ஆறுமுகம். ஆறுமுகம்: ஆறுமுகம்." கோர்ட்டில் அவனைக் கூப்பிட்டதும் சுயநினைவுக்கு வந்தான்
ஆறுமுகம்,
வழக்கு விசாரணை தொடர்ந்தது. தீர்ப்பு ஆறுமுகத்திற்குச் சார்பாகவே அமைந்தது. சுப்பிரமணியம் பொறி கலங்கிப் போனான்.
சுப்பிரமணியம் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் சரியான செலவாளி. அவனது மனைவி சிவபாக் கியமும் சரியான "ஷோக்" பேர்வழி. பரம்பரைச் சொத்து களை விற்றுச் செலவிட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு வந்து

ச. முருகானந்தன் 29
இன்று நடுத் தெருவில் நிற்கவேண்டிய நிலைக்கு வந்து? விட்ட நிலையில் செய்வதறியாது திகைத்தான். கடன்
கொடுத்தவர்கள் அவனை நெருக்க ஆரம்பித்தனர். கடன்
பட்டு வழக்காடியதாலும் தோல்வி. சுப்பிரமணியம்
நடைப்பிணமானான்.
மறுநாள் அவனது உடல் பலாமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
அவனது முடிவு ஆறுமுகத்திற்கும் வேதனையைக் கொடுத்தது. ஆனாலும் அது அவனாகத் தேடிக் கொண்ட முடிவு. யார் என்ன செய்ய முடியும்?
இதற்கிடையில் வழக்கிற்காக ஆறுமுகத்திற்குக் கடன் கொடுத்தவர்களும் அவனை நெருக்கினர். தனது வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கி, கடன்களை அடைக்க வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டான் ஆறுமுகம்.
கோர்ட்டுப் படி ஏறியவர்கள் உருப்பட்டதில்லை
என்று யாரோ சொன்னது ஆறுமுகத்திற்கு நினைவுக்கு abs.
ஆறுமுகத்தின் வழக்கறிஞரின் புதுமனை புகுவிழா விற்கு ஆறுமுகத்திற்கும் அழைப்பு வந்திருந்தது.

Page 18
3. அறத்தின் குரல்
செல்வராஜா திடீரென்று இப்படிக் கேட்பான் என்று வேலாயுதம் எதிர்பார்த்திருக்கவில்லை.
"வேலாயுதம். நாங்கள் இரண்டு பேரும் வாற வெள்ளிக்கிழமையிலிருந்து லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போவம்.வல்லிபுரக்கோயில் திருவிழாவும் வருகுது.லீவு போட்டுக்கொண்டு போனால் இந்த இடையிலை நானும் உன்ரை வீட்டுப் பக்கம் ஒருக்கால் வரலாம்.நீயும் ஒருக்கால் என்னுடைய வீட்டுக்கு வரலாம். சினேகிதர் எண்டிருக்கிறனாங்கள் ஒருத்தரின் வீடு வாசல் இன்னொருத்தருக்குத் தெரியாமல் இருக் கிறம்" செல்வராஜனின் குரலில் அன்பு இழை யோடியது.
வேலாயுதத்திற்கு என்ன சொல்வதென்றே புரிய வில்லை. மறுத்துரைக்கவும் முடியாது. "ஓம்" என்று சொன்னாலும் பிரச்சினை.
வேலாயுதம் மருத்துவக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு கம்பளை ஆஸ்பத்திரிக்கு வந்த நாட்தொட்டு இந்த ஒன்பது மாதங்களாக செல்வராஜாவுடன் ஒரே குவாட்டேர்ஸில் தான் இருக்கிறான். இருவரும் மணமா காதவர்களாக இருந்ததால் வெகு சீக்கிரத்திலேயே நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். கடைத் தெருவுக் குப் போனாலும் சரி, மாலையில் "வாக்" போனாலும் சரி ஒன்றாகவே செல்வார்கள். இருவரையும் தனித்தனியே காண்பது என்பது மிகவும் அரிது.

சி முருகானந்தன் 3
இப்படிப்பட்ட நெருக்கமான நண்பன் கேட்ட போதும் கூட வேலாயுதன் தயங்குவதற்குக் காரணம் அவனது மனதில் இருந்த ஒரு உறுததல்தான்.
"என்ன வேலாயுதம் பேசாமல் நிற்கிறாய்' மீண்டும் செல்வராஜா )طالي ما شاهق வேலாயுதத்திற்குச் சங்கடமாகப் போய்விட்டது. நண்பனின் முகத்தை ஒருமுறை நோக்கி விட்டு மேலும் எதிர் நோக்கத் தைரியமில்லாமல் தலை அயைக் குனிந்து கொண்டான்.
எல்லா விடயங்களிலும் வெளிப்படையாக இருக்கும் வேலாயுதம் ஏன் தயங்குகிறான் என்று செல்வராஜா வுக்குப் புரியவில்லை. நண்பன் மீது எரிச்சல்கூட எட்டிப் பார்த்தது. சிறிது நேரம் அங்கு நிலவிய மெளனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவனாக செல்வராஜா, "நான் உன்னுடைய வீட்டுக்கு வாறதிலை உனக்கு விருப்ப மில்லைப் போல இருக்கு. அவ்வளவுதானே?.நானும் ஏதோ உன்னை என்னுடைய உயிருக்குயிரான சிநேகி தனாக நினைச்சேன்.ம்." அவனது கண்கள் கலங்கின.
வேலாயுதத்திற்கு அந்தரமாகப் போய்விட்டது. நண்பன் தன்ணைத் தப்பா கப் புரிந்து கொள்கிறான் என்றதும் அவனுக்கு நெஞ்சை அடைத்தது. உண்மைக் காரணத்தைச் சொல்லி விடலாமா என்றுகூட ஒரு கணம் நினைத்தான். தக்க தருணத்தில் உண்மையைச் சொல்லத் தான் வேண்டும். மறைத்து வைப்பதனால் பின்னுக்குச் சிக்கல்கள்தான் ஏற்படும் என்று அவனுக்குப்பட்டாலும் கூட, தான் ஒரு சலவைத் தொழிலாளியின் மகன் என்ற உண்மையைக் கூறுவதனால் பாதிக்கப்பட்டு விடுவேனோ என்று அவன் தயங்கினான்.
செல்வராஜா கண்கள் கலங்க ஜன்னலினூடே வெறித் துப் பார்த்துக் கொண்டிருந்தான. வேலாயுதத்திற்கு என்னவோ போல இருந்தது. நண்பனிடம் உண்மையைக்

Page 19
132 மீன் குஞ்சுகள்
கூறத் தயங்கினாலும் நண்பனைத் தேற்ற வேண்டும் போலத் தோன்றியது.
**செல்வராஜா. நீ என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது. என்னுடைய ஊர் சரியாசை பட்டிக்காடு. என்னுடைய வீடு குடிசை வீடு. உன்னை வரவேற்று உபசரிக்கக் கஷ்டமாக இருக்கும்." என்று.
மென்று விழுங்கினான்.
"நாங்கள் எல்லாம் பங்களாவிலையா இருக்கிறம். என்னுடைய வீடும் ஒரு பழைய கல்வீடுதான்." என் றான் சற்றுச் சினத்துடன். அவனது உணர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிந்த போதிலும் மேற்கொண்டுதான் தயங்குவதற்குரிய உண்மைக் காரணத்தை வேலாயுதத் தால் சொல்ல முடியவில்லை. சின்ன வயதில் பள்ளிப் பருவத்தில் "கட்டாடி" என்று அவனை நண்பர்கள் ஒதுககி வைத்த சம்பவங்கள் அவன் மனதில் தோன்றி மறைந்தன. ஏன்? இன்று அவன் படித்து முன்னேறி ஒரு உதவி வைத்தியனாக வந்த பின்னரும் கூட அவனது" கிராமத்திலுள்ள சாதித்தடிப்புள்ளவர்கள் அவனைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் அவன் கண்டுள்ளான். தனது சாதி தெரிந்தால் தனது நண்பனும் தன்னை ஒதுக்கிவிடுவானோ என்ற தாழ்வு மனப்பான்மை அவனது மனதில் இருந்ததால், அந்த உண்மையை மணந் திறந்து நண்பனிடம் கூற முடியவில்லை.
செல்வராஜா அவனது வீட்டிற்கு வந்தால் எப்படியும் அவனது சாதியை ஊகித்து அறிந்து விடுவான். வீட்டுத் திண்ணையில் பொட்டணியாகக் கட்டி வைக்கப்பட்டி ருக்கும் அழுச்குத் துணி மூட்டைகளும், மேசையிலிருக்கும் பெரிய ஸ்திரிக்கைப் பெட்டியும் அவனது சாதியைக் காட்டிக் கொடுத்துவிடும். சாதியைத் தெரிந்து கொண்ட பின்னர் நண்பன் எப்படி நடந்து கொள்வானோ?- சில கடந்த கால அனுபவங்கள் அவனை எச்சரித்தன.

ச. முருகானந்தல் 33
அவனது சாதி வெளியாகி விட்டால் அவனது by fly வலக நண்பர்கள்-குறிப்பாக அவன் மனதில் இன்ப நினைவுகளைக் கிளறி விட்டிருக்கும் வனிதா எல்லோருமே ஒதுங்கி விடுவார்களோ? - வேலாயுதன் தவியாய்த்தவித் தான். அவனது மன நிலையைப் புரிந்து கொள்ளாத செல்வராஜன், "சரி விட்டுத்தள்ளு. உன்னுடைய சினே கிதம் இந்த மட்டில்தானா?" என்றான் கசப்புடன்.
இப்போது வேலாயுதனுக்கு உறைத்தது. சரி. நடப்பது நடக்கட்டும் என எண்ணியபடி, "உன் இஸ்டம் வீவு போடுவோம்." என்றான். செல்வராஜாவின் முகம் மலர்ந்த அதே வேளையில் வேலாயுதனின் நெஞ்சு படக் "படக்" என்று அடித்துக்கொண்டது.
அவர்கள் திட்டமிட்டபடியே மறுநாள் ஊருக்குப் புறப்பட்டார்கள் . யாழ். புகையிரத நிலையத்தை வந்தடைந்ததும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவனது விட்டிற்கு வருவதாகக் கூறிவிட்டு வேலாயுதனிடம் விடை பெற்றான் செல்வராஜா,
வீட்டிற்குள் வந்ததும் மீண்டும் மனம் கலக்கம் கொண்டது.
தினமும் அவனது அப்பாவும், அயலவர்களும் அதி காலையில் சலவைக் கல்லில் "டப் டப்' என்று துணியை அடிக்கத் தொடங்கிவிட்டால் அது பத்து மணி வரை ஓயாது. அவனது சுற்றாடலில் சுமார் பத்துக குடிசை களில் அவனது உறவினர்கள் இருக்கிறார்கள். “ஒரு ஒடுங்கிய காணிக்குள்ளே அவர்களது.குடிசைகளைச் சுற்றி கவனிப்பாரற்றுக் கிடக்கும் பனங்கூடல்களும் வண் ணான் குளம்' என்று அழைக்கப்படும் நீர்த்தேக்கமும் அவனது சாதியைக் காட்டிக் கொடுத்து விடும். வேலா
புதனுச்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
5-3

Page 20
2. மீன் குஞ்சுகள்
"எனக்குத்தான் ஒரு தொழில் கிடைத்து விட்டதே. எப்படியும் பட்ட கடன்களை ஒருவாறு அடைத்து விடலாம் அப்பு இனியும் ஏன் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்?" என்று அவனது மனது ஆதங்கப்பட ஆரம் பித்தது. தன் மனதில் கிளர்ந்த எண்ணங்களை தகப்ப னிடம் கேட்டே விட்டான் வேலாயுதம்,
"அப்பு. இந்த வயசிலை நீங்கள் ஏன் இந்தத் தொழி லைச் செய்யவேணும்?. என்ரை வரும்படி காணும். நீங்கள் இந்தத் தொழிலைச் செய்யுறதாலை நாங்கன் எங்களுடைய சாதியைப் பறைசாற்றிக் கொண்டிருக் கிறம். என்னுடைய சினேகிதர் ஆரும் வந்தால் என்னைப் பற்றிக் கேவலமாய் நினைப்பாங்கள்.
மகனின் வார்த்தைகளைக் கேட்டதும் ராமுக் கட்டா டிக்குக்கோபம் பொத்துக்கொண்டு வந்தது அவர் உடம்பு பதற உதடு துடிதுடிக்க ஆக்ரோசத்துடன் சத்தம் போட்டார்.
"என்னடா சொன்னணி?. கேவலமோ?. எதடா கேவலம்?. எதடா கேவலம்?. எவனாய் இருந்தாலும், என்ன தொழில் செய்தாலும் உழைச்சுச் சம்பாதிக்கிறன் எண்டு பெருமைப்பட வேணுமடா. இன்னொருத்தன்ர கையை எதிர் பார்த்துக்கொண்டு சோம்பேறியாக வாழுறதுதாண்டா கேவலம். டேய். இந்த தொழிலைச் செய்து கிடைச்ச வருப்படியில் தானடா உன்னை வளர்த் தன் டாக்குத்தனுக்குப் படிக்க வச்சன். இண்டைக்கு நீ டாக்குத்தனாக இருக்கிறதுக்குக் காரணமே இந்தத் தொழில்தானடா. உன்னைப் படிக்க வைச்சதே கட்டாடிச்சாதியை இழிவு படுத்தாமல் மற்றவன் கணிக்க வேணும் எண்ட ஒரே நோக்கத்துக்குத்தானடா. ஆனா நீயே உன்னுடைய சாதியை இழிவுபடுத்துகிறாயடா. ஒருத்தனுக்கும் தான் சாதியிலை குறைஞ்சவன் எண்ட எண்ணம் இருக்கக் கூடாதடா. சாதி ஒழியறதுக்கு

ச. முருகானந்தன் 35
முக்கியம் அதுதானடா தேவை. நான் இன்ன சாதி எண்டு தயங்காமல் சொல்லக் கூடிய மனப்பக்குவம் தாழ்த் தப்பட்ட மக்களிடம் வந்த பிறகுதானடா சாதிப்பாகு பாடு எல்லாம் ஒழியும். பதவி வந்தவுடனே சாதியை மறைக்கிற குணம் எங்கட ஆக்களிடம் இருக்கிற வரை யிலும் சாதி முறை அழியாதடா.." மூச்சு விடாமல் அடுக்கிக் கொண்டே போனார் ராமுக் கட்டாடி.
வேலாயுதன் தலையைக் குனிந்து கொண்டு பேசாமல் நின்றான். அவன் கண்களில் நீர் நிறைந்து நின்றது. அப்பு வின் மனதைப் புண்படுத்தி விட்டேனே என்று வருந்தி னான். எவ்வளவு படித்திருந்தும் கூட, அவரவருக்கு அவரவர் செய்யும் தொழில் தான் தெய்வம் என்ற சின்ன மனோ தத்துவ உண்மையை உணரத் தவறிவிட்டேனே என்று வருந்தினான்.
ராமுக்கட்டாடி தான் தொடர்ந்தார். "இந்தக்கையும் காலும் வழங்குகிறவரை இந்தத் தொழிலைச் செய் வேண்டா. நான் உன்னை மாதிரிப் படிக்காட்டிலும் எனக்கு எண்டு ஒரு நியாயம் இருக்கு. நீ எந்தச் சமூகத் திலே பிறந்தியோ அந்தச் சமூகம் உன்னால பயனை அனுபவிக்க வேணும். அதுதானடா என்னுடைய
விருப்பம்."
"அப்பு. என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”* என்று குரல் தளதளக்கக் கூறினான் வேலாயுதம், இப் போது அவன் மனதில் நண்பனை எதிர் கொண்டழைப் :பதில் எதுவித தயக்கமும் இருக்கவில்லை.
*st-f' பங்குனி 1280

Page 21
4. மீன் குஞ்சுகள்
வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்க்த் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித் தம்பி. மார்கழி மாதப் பணிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரை யில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீர சொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இநதச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழி லும் தொடங்கிவிடும்.
நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.
"சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட நாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே" என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம் வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சி கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள் எல்லாம் கடலில் ஒடத் தொடங்கிவிடும். மீனவப் டெண்கன் குழந்தைகளுச்குக் கூட சிறுசிறு தொழில்கள்

ச. முருகானந்தன் 37
கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள் கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்,
"எங்கட பாடு பரவரயில்லை" மார்க்கண்டுவின் கூற்றை ஆமோதிப்பது போல வீரசொக்கன் கூறினான் அபிப்பிராயம் எதுவும் சொல்லாமல் யோசித்துக் கொண் டிருந்த சீனித்தம்பியின் பார்வை கடல் நீரில் பதிந்திருந்தது. கடலின் நீருள் ஒடி விளையாடும் மீன் குஞ்சுகளை நோக்கியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். எங்கிருத்தோ வந்த பெரிய மீன் ஒன்று மீன் குஞ்சுகளைத் தனது இரை யாக்கிக் கொண்டிருந்தது. சீனித்தம்பி இந்தக் காட்சியை நண்பர்களுக்குச் சுட்டிக் காட்டிய, படியே "இதைப் பார்க்கிறபோது உங்களுக்கு என்ன தோணுது?" என்று நண்பர்களிடம் கேட்டான். அவர்களுக்கு அவனது மன வோட்டம் புரியவில்லை கேள்விக் குறியோடு சீனித்தம்பி -யை நோக்கினார்கள்.
"இந்தக் காட்சி நம்ம வாழ்வைத்தான் பிரதிபலிக்குது. சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் முழுங்குகிற மாதிரியே நம்ம உழைப்பை எல்லாம் சம்மாட் டிக அமுக்கி விடுவாக .வள்ளங்களுக்குச் சொந்தக்காரர் என்கிற ஒரே காரணத் தாலே நம்ம உழைப்பில் பெரும் பங்கை அபகரித்து விடு கிறாரே! ம். நமக்குக் கிடைக்கிறதெல்லாம் சொறிப கூலிதானே! சோளகம் பிறந்திட்டா எங்கவயிறு என்னவோ நிரம்பும் தான்.ஆனா வாழ்வு முன்னேறுமா? ..இல்லியே' என்று கவலையுடன் கூறினான் சீனித்தம்பி, அவனது கூற்றிலுள்ள உண்மை மார்க்கண்டுவுக்கும் வீர சொக்கனுக்கும் புரிந்தது.
மூவரும் கடலை விட்டு வெளியே வந்து மணற் பரப்பில் நடந்தார்கள். கடற்கரை மணலில் துரித்துக் கொண்டிருந்த ஊரிகள் கால்களில் குத்தின. சினித்தம்பி மடியிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைத்து, புகையை ஒரு முறை நன்றாக உறிஞ்சி இழுத்துவிட்டு, 'சொற்தத் தில் நம்மெட்ட வள்ளம் இருந்து விட்டால் தாம

Page 22
38 மீன் குஞ்சுகள்
விரும்பிய மாதிரிச் சம்பாதிக்கலாம். பிச்சைக் கூலியை எதிர்பார்த்து சம்மாட்டி கிட்ட கையேந்தி நிற்கவேண்டிய தில்லை." என்றான் ஆதங்கத்துடன்.
வள்ளம் வாங்குவதற்கு வழி? பாவம் ஏழை மீனவர் களால் வள்ளம் வாங்குவதைப் பற்றி நினைத்துப் பார்க்க, முடியுமா இங்கே!
சோளகம் பிறந்து விட்டது இருள் மூற்றாக விலகாத அந்த அதிகாலை நேரம் கடற்கரையில் மீனவத் தொழிலா னர்களும், சம்மாட்டிகளும், வியாபாரிகளும் மீன்பிடித் துறையருகே கூடியிருந்தனர். நீர்க் காக்கைகளும், நாரை களும், கொக்குகளும், மற்றும் மீன்தின்னிப் பறவைகளும் ஒலி எழுப்பியபடி பறந்து கொண்டிருந்தன. கீழ்வானம் வெளுத்துக்கொண்டு வந்தது. இரவு மீன் பிடிக்கச் சென்ற வள்ளங்கள் கரைக்கு வரத் தொடங்கி விட்டன. எல்லா இரைச்சலையும் மீறிக்கொண்டு ஏலம் கூறுபவர் களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
"முப்பது ரூபா."
"நாப்பது ரூபா."
"அம்பது."
"யாரு அம்பது?.யாரு அம்பது ரூபா?. அம்பது ரூபா மூணாந்தரம்."
'அறுபது." என்றான் இரத்தினம்.
"அறுவது ரெண்ணாந்தரம்.காசிம் காக்கா, நீங்க. கேக்கலியா?. அறுவது மூணாந்தரம்." கண்மணி, சொக்கநாதன் சம்மாட்டியின் மீன்களுக்கு ஏலம் கூறிக். கொண்டிருந்தாள்.
"கொஞ்சம் உசக்ககவா இரிக்கி...சரி போவட்டும்த அறு வத்தி மூணு." காசிம் காக்கா கேட்டார்.

ச. முருகானந்தன் 39
"அறுவத்தி மூணு. அறுவத்தி மூணு. அறுவத்தி மூணு.கடைசித் தடவை.ம்.ஒருத்தரும் மேல கேக் கலியா.காசிம் காக்காவுக்குத்தான் வாசி.எடுங்க காக்கா" கண்மணி ஏலத்தை முடித்தாள்.
இத்தனை சலசலப்புக்குமிடையில் கடலை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் கெளரி. பரந்து கிடக்கும் நீலக்கடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில வள்ளங்கள் கரையை நோக்கி வந்து கொண் டிருந்தன. அவற்றில் ஒன்றில்தான் சீனித்தம்பியும் இருப் பான். ஒவ்வொரு வள்ளமும் கரையை நெருங்க நெருங்க அதில்தான் அவன் இருப்பதாகக் கெளரி எண்ணிக் கொள்வாள். அந்த நம்பிக்கையில் "சுள்" என்று அடிக்கத் தொடங்கிவிட்ட காலை இளம் வெயிலையும் பொருட் படுத்தாமல் வள்ளங்கள் வருவதையே பார்த்துக் கொண் டிருந்தாள். கருங்கடல் தொடர்ச்சியான பேரலைகளை வீசி எறிந்து கொண்டிருந்தது. மீனவர்களின் வள்ளங்கள் தூரத்தே கரும்புள்ளிகள் போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் கெளரிக்கும் சீனித்தம்பிக்கும் திருமணம் நடந்தது. அது ஏழ்மைக்கும் வறுமைக்குமிடையில் நடந்த ஒரு திருமணம். பசிக்கும் பட்டினிக்குமிடையில் நடந்த திருமணம் கெளரி வயதில் சின்னவளானாலும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு வேண்டிய திறமையும் குணாதிசயங்களும் அவளிடம் இருந்தது. அதுதான் அவள் கொண்டு வந்த தாய் வீட்டுச் சீதனம். இந்தக் குறுகிய காலத்தில் தம்பதி யினரின் அன்பு இறுகிப் பிணைந்து விட்டது. சீனித்தம்பி, வீரசொக்கன், மார்க்கண்டு ஆகிய மூவரும் வீரமுத்துச் சம்மாட்டிக்குச் சொந்தமான ஒரு வள்ளத்தில்தான் தொழில் புரிந்தனர். மூவரும் நெருங்கிய நண்பர்கள். வீரசொக்கனுக்கு இன்னமும் கலியாணமாகவில்லை.

Page 23
40 மீன் குஞ்சுகள்
அநேகமான வள்ளங்கள் எல்லாம் கரைக்கு வந்து விட்ட போதிலும் கணவன் சென்ற வள்ளம் வந்து சேராததால் கெளரி கலங்கினாள். 'சந்நிதி முருகனே. அம்மாளாத்தை.அவர் சுகமாக வந்து சேரணும்' என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டத் தொடங்கி விட்டாள். தினமும் கணவன் கடலால் திரும்பும்வரை அவள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிம்மதி யின்றித் தவிப்பது வழக்கம். அதிலும் என்றைக்குமில்லாத வாறு இன்று அதிக தாமதம் ஏற்பட்டு விட்டதால் அவள் மிகவும் குன்றிப் போயிருந்தாள். "அவருக்கு என்ன ஆயிடுச்சோ? அவள் இதயத்தில் கேள்விகள் பலமாக ஒலிக்கத் தொடங்கின.
ஏனைய வள்ளங்கள் எல்லாம் வந்து மீன்களும் விற்பனைக்கு வந்து விட்டதால் வீரமுத்துச் சம்மாட்டியும் நிலை கொள்ளாமல் தவித்தார். எங்கே தனது வள்ளம் கடலோடு போய்விட்டதோ என்ற பயமும் அவர் மனத் தில் எழுந்தது. கரையோரத்தில் மீன் விற்பனை இன்ன மும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கண்மணியும் இன்னும் சிலரும் வலைப்பாட்டிலிருந்த இராலை அள்ளிச் சாக்குகளில் கொட்டித் தரம் பிரித்தனர். அவர்கள் செய்யும் வேலைக்காக இறாலுடன் கலந்து வரும் சிறிய மீன்கள் ஊதியமாகக் கிடைக்கும். இன்னும் சிலர் ஐஸ் கட்டிகளை உடைத்து மீன்களுடன் கலந்து பெட்டிகளில் அடைத்துக் கொண்டிருந்தனர்.
கரையோரப் பகுதிகளில் வலைகளைக் காயப் போட்டுவிட்டு, அநேகமான தொழிலாளர்கள் கூலியை யும் இரண்டொரு மீன்களையும் சம்மாட்டிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு தமது குடிசைகளை நோக்கி நடத் தனர் வேலையை முடித்துக் கொண்டு குடிசையை நோக்கி நடந்த அந்தோனியிடம் வீரமுத்துச் சம்மாட்டி கேட்டார். "அவுகளைக் கண்டியா எலே.?"

அச முருகானந்தன் 41
'காணல. ஆனா பயப்படும்படி ஒண்ணுமில்ல. கடல் செத்துப் போய்த்தான் இருந்தது.வருவாக." அற்தோனியின் வார்த்தைகள் கெளரியின் மனதிலும் பாலை வார்த்தது. கலங்கிய கண்களுடன் நின்றிருந்த அவளைப் பார்த்த அந்தோனி, 'தங்கச்சி பயப்படாத. நான் சொல்லுறேன் பயப்பட வேணாம்.நம்பளை ஆண்டவன் கடலில் வாழ வெச்சிரிக்கான். கண்ணிரை விட்டுணு இருந்தா சரிப்யாபோயிடுமா? எதுக்கும் பயப் படாதே. ஆண்டவன் பாத்துப்பான். கண்ணைத் தொடைச் சுக்கோ" என்றபடி மடியிலிருந்த சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தான் காற்று துணை புரியாததால் "நாசங் கட்டின காத்து.' என்று முணுமுணுத்த :படியே மீண்டும் தீக்குச்சியைக் கிழித்தான். சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்ட அந்தோணி, "தங்கச்சி" என்று உற்சாகமாகக் கூறினான். "அதோ பாரு வள்ளம் ஒண்ணு வருகுது அவுக வள்ளந்தான் புள்ளே."
அந் தோனி காட்டிய திசையில் தூரத்தே ஒரு வள்ளம் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் கெளரியின் முகம் மலர்ந்தது. வீரமுத்துச் சம்மாட்டியும் வள்ளத்தை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு அது தனது வள்ளந்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சியில் கெளரியம்மாவிடம், "அதோ வருகுது.என் வள்ளம் தான்" என்றார் உற்சாகத்துடன், வேகமாகக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்த வள்ளத்தில் துடுப்பு வலித்துக் கொண்டிருந்த சீனித்தம்பியைக் கண்டதும் கெளரி குதூகலத்துடன் கரைக்கு ஓடினாள். இதுவரை இருளடைந்திருந்த அவள் முகம் பிரகாசமடைய ஆரம் பித்தது.
வள்ளம் கரையை அண்மித்ததும் சீனித்தம்பியும் நண்பர்களும் தண்ணிரில் இறங்கி வள்ளத்தைக் கரைக்குத் தள்ளினர். சுரையில் நின்ற சிலரும் உதவிக்குக் கை *கொடுத்தனர். கரையில் வள்ளத்தைத் தொடுத்து விட்டு

Page 24
42 மீன் குஞ்சுகள்"
சவளையும் வலையையும் தூக்கிக் கொண்டு வந்தான் சீனித்தம்பி. மிகுந்த களைப்பு அவனது முகத்தில் பிரதி பலித்திருந்தது. வள்ளத்தை எட்டிப் பார்த்த வீரமுத்துச் சம்மாட்டிக்கு ஒரே குதூகலம் சுறாவும் சீலாவும். நிறையப்பட்டிருந்ததே காரணம். வள்ளத்திலிருந்தே மீன்களை அள்ளிக் குவித்தபடியே மார்க்கண்டு கூறினான் "ராத்திரி காத்து பலமாயிருந்தது. துமியும் தொடங்கவே பயந்தே போயிட்டோம்."
"லே.கெட்டிக்காரக.அதனால என்ன? நிறைய மீன் பட்டிருக்கே.பலே பலே." என்று குதூகலித்தார் சம்மாட்டி இவர்களின் உள்ளக்கிடக்கையை உணராதவ ராக. இவரது வார்த்தைகள் சீனித்தம்பிக்கும் நண்பர் களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தின. அசதி மறுபுறம், மீன்களை அள்ளிக் கூடைகளில் குவித்தபடி ஏலம் கூறத் தொடங்கினாள் கண்மணி.
"இந்தா அம்மே.தினமும் நான்தான் வாங்கிக் கிறேன். நியாயமாக ஒரு கூலியைப் போட்டுத் தர வேண்டியது தானே? நூற்றி நாப்பது தர்ரேன்." என்றார் காசிம் காக்கா,
"இல்லை மொதலாளி. இருநூறுன்னாலும் போட்டுத் தரணும். நல்ல மானுளுவைச் சுறா, பாரை, சீலா எல்லாம் இருக்கு."
"சரி சரி நீ விடப் போறியா?.நூற்றி எழுபத்தி பஞ்சு.எடுக்கவா." என்றபடி சம்மாட்டியின் பக்கம் திரும்பி, "என்ன சம்மாட்டியார்?.எடுக்கவா?" என்றார் காசிம் காக்கா,
"என்ன காக்கா? உங்களுக்கு ரெண்ணு விலை சொல்லுவேனா? ஏதோ நியாயமாகக் கொடுங்க."
மீன் நல்ல விலைக்கு விற்பனையான போதிலும் சினித்தம்பிக்கும், வீரச்சொக்கனுககும் மார்க்கண்டு

ச. முருகானந்தன் 43
வுக்கும் வழக்கமான அதே கூலியைத்தான் கொடுத்தார் சம்மாட்டி. கறிக்குக் கொடுத்த மீன்களில் தான் சிறிது" தாராளம் இருந்தது மனதில் தோன்றிய எரிச்சலையும் ஏமாற்றத்தையும் அடக்கிக் கொண்டு சீனித்தம்பியும் நண்பர்களும் மனதில் குமுறினார்கள். சீனித்தம்பி தனக்குக் கிடைத்த மீன்களைக் கெளரியிடம் கொடுத்து விட்டுச் சோர்வுடன் நடந்து செல்கையில், "என்னிடம் சொந்தமாக ஒரு வள்ளம் இருந்தால் என அவனது மனம் அலை பாய்ந்தது.
அவனைத் தொடர்ந்து வந்த வீரசொக்கன், "இன்னிக்கென்னாலும் ஒரு ஐந்து ரூபா போட்டுத் தந்திருக்கலாமே" என்று தனது மனக்கிடக்கையைக் கூறி அங்கலாய்த்தான். அங்கே வந்து கொண்டிருந்த மார்க்கண்டுவும் அவனது ஆதங்தத்தை ஆமோதிப்பவன் போல, "நாம் நாணயமா வேலை செய்யுறோம். சம்மாட்டி பலே ஆளா இருக்காரு..கூடக் கேட்டால் பாய்வாரு.வேற வேல ஆட்கள் இருக்காக என்பாரு. ப்.காசு ஆசை பிடிச்ச பிசாசு." என்றான் வெறுப் ւյւ-6ն.
"இந்தச் சம்மாட்டிகளே இப்படித்தான். நமக்கு, ஒரு வயிறு, குடும்பம் இரிக்கென்னே நினைச்சுப் பார்க்க மாட்டாக, நமம உழைப்பாலேதானே பணம் சம்பாதிக். கிறாக என்ற எண்ணமே அவுகளுக்கு இல்லை." என்றான் சீனித்தம்பி .ம்.நம்ம கிட்ட ஒரு வள்ளம் இருந்துட்டா விரும்பின மாதிரிச் சம்பாதிக்கலாம்." வாழ்க்கையின் மீதுள்ள தாகம் விளைவிக்கின்ற கனவுகள் அந்தச்சமயத்தில் அவனது இதயக் கூட்டுக்குள் எட்டிப் பார்த்தது.
'ஏலாத காரியத்தை நெனைச்சு என்ன மச்சான் விரயோசனம்..ம்." என்ற வீர சொக்கனைப் பார்த்து, *லே.அப்படிச் சொல்லாதே. நெனைச்சா சாதிக்க

Page 25
44 மீன் குஞ்சுகள்
*முடியாத காரியம் எதுவுமே இல்லை. சிறுகச் சிறுகப் பணம் சேர்ப்போம். காலம் நேரம் கூடிவராமலா போகும்" என்றான் சீனித்தம்பி,
"இப்பவே கடன்.நாம எங்கே பணம் சேர்க்கிறது?" என்றான் மார்க்கண்டு.
"நீதான் உழைப்பதைக் கள்ளுக் கொட்டிலிலேயே கொட்டிடுவியே. அப்புறம் ஏது மிச்சம்?" என்று அவனை மடக்கினான் சீனித்தம்பி.
சிறுது நேரம் மெளனமாக நடந்து வந்த வீரசொக் கன் சொன்னான்: "எங்களுக்குச் சொந்தத்தில் ஒரு வள்ளம் கிடைச்சால் பாதிவரும்படி வள்ளத்தில் கடலுக் குப் போகிறவனுக்குத்தான். உழைக்கிறவனுக்கு இல்லாத வரும்படி மற்றவனுக்கு எதுக்கு?"
நண்பர்கள் மூவரின் மனதிலும் வள்ள ஆசை வந்து விட்டது
00
"அம்மே சாப்பிட்டாகளா?" டவுனால் திரும்பிய சீனித்தம்பி கெளரியிடம் கேட்டான்.
'அவவுக்குச் சுகமில்லை. இருமிக்கிட்டே இருக்கா. கஞ்சிகூட வேணாமாம். மருந்து எடுத்தா நல்லதுங்க." கெளரி சொன்னதும் அறைக்குள் நுழைந்த சீனித்தம்பி தாயின் உடலைத் தொட்டுப் பார்த்தான். "உடம்பும் காயுது போலிருக்கே. லே. கெளரி. கசாயம் கொஞ்சம் காச்சு. நான் வீரசொக்கன் கடயில் ஆஸ்பிரின் குளிசை இரிக்கான்னு பார்த்துட்டு ஓடி வாரேன்."
"வந்த களையோட போறிக கொஞ்சம் கூழ் குடிக் கிறீகளா?"
அப்பொறமா வந்து குடிக்கிறேன். கசாயத்தை அடுப்பில வை. கொத்தமல்லி, சுக்கு எல்லாம் இரிக்கா?”

ச. முருகானந்தன் 45ኝ
"ஒ. நீங்க சிக்கிரமா வரப்பாருங்க."
அம்மா இவனைப் பெற்றதோடு நோயாளியாகி விட்டாள். அதற்கப்புறம் நித்திய நோயாளிதான். அம்மா தான் முதலில் செத்துப்போவாக என்று சின்ன வயதி லேயே இவன் நினைத்துக் கவலைப்பட்டதுண்டு. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது. திடகாத் திரமாக இருந்த அப்பா தான் திடீரென்று ஒரு நாள் கடலோடு போய்விட்டார். அம்மா வருடக் கணக்கில் படுக்கையோடு கிடந்து போராடிக் கொண்டிருக்கிறாள்.
சீனித்தம்பி உச்சிவெயிலில் நடந்துவந்து வீரசொக் கனின் பெட்டிக்கடையை அடைந்தான். அதைக் கடை என்று சொல்ல முடியாது. வீட்டில் ஒரு பகுதிதான் கடை வள்ளமும் ஒன்று சொந்தத்தில் வாங்கவேண்டும் என்ற அவாவில் வருமானத்தை அதிகரித்து பணம் சேமிக்க வேண்டும் என்பதற்காக வீரசொக்கன் இந்தப் பெட்டிக் கடையை அமைத்திருந்தான். சுற்று வட்டத்தில் வேறு கடைகள் இல்லாததால் அவனது கடையில் வியாபாரம் சுமாராக நடந்தது. பீடி. சுருட்டு, என்வலப் முத்திரை, சீனி, தேயிலை இப்படிப் பொருட்களின் பட்டியலை ஒரே பார்வையில் கூறிவிடலாம். அவனது அம்மாவும் தங்கை யும் அவன் தொழிலுக்குப் போகும் வேளைகளில் கடை யைக் கவனித்துக் கொள்வார்கள்.
கடையில் எவரையும் காணவில்லை. அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் சத்தம் கேட்டது. "லே. ஆஸ்பிரின் வெச்சிருக்கிறியா?" என்று சீனித்தம்பி குரல்கொடுத்ததும் குசினியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வீரசொக்கன் சாப் பாட்டை முடித்துக் கொண்டெழுந்தான். சாரத்தை அவிட்டு அதன் மேற் பகுதியால் வாயைத் துடைத்தபடி பெரிய "ஏவறை" ஒன்றை விட்டுக் கொண்டு வெளியே வந்த வீர சொக்கன் சீனித்தம்பியைக் கண்டதும், 'என்ன உச்சி வெயில்ல வந்திருக்கே?' என்று கேட்டபடியே. உட்கார் என்று சாக்குக் கட்டிலைக் காட்டினான்,

Page 26
45 மீன் குஞ்சுகள்
"நான் இப்ப இருக்க வரல்ல. அம்மே காய்ச்சலில் கிடக்கிறாக. ஆஸ்பிரின் வைச்சிருக்கியான்னு பார்க்க வந்தேன்." வீரசொக்கனிடம் ஆஸ்பிரின் வில்லையை வாங்கிக்கொண்டு ஒட்டமும் நடையுமாக வீட்டுக்குத் திரும்பினான் சீனித்தம்பி.
'அம்மே. ஆஸ்பிரின் குளிசை. காய்ச்சல் வெளுத்து வாங்குது. குடியுங்கென்னா.லே கெளரி காசாயம் காச்சினியா? கொண்டு வா. அம்மே. கசப்பாகத்தான் இருக்கும். அதுக்காகக் குடிக்காமல் விட்டா காய்ச்சல் மாறிவிடுமா? தாயை எழுப்பி கசாயத்தையும் ஆஸ்ரீபிரீ னையும் கொடுத்துவிட்டு சாப்பிடுவதற்குக் குசினிக்குச் சென்று தட்டின் முன்னே உட்கார்ந்தான் சீனித்தம்பி. சோற்றையும் பாரை மீன் குழம்பையும் விட்டு மேலே கருவாட்டுப் பொரியலையும் வைத்துவிட்டுகணவன் சாப் பிடுவதையே ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான் கெளரி.
'நீ சாப்பிட்டியா? இல்லித் தானே? கொட்டிக் கலாமே.வா.வா." என்றழைத்தான் சீனித்தம்பி. தட்டைக் கழுவி கையிலேந்தியபடி சாப்பிட்டாள் கெளரி. குந்திக்கின்னு சாப்பிட்டேன். என்ன அவசரம்?" என்று சீனித்தம்பி சொன்னதும் கெளரியும் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
"கெளரி. பணம் எவ்வளவு சேர்ந்திருக்கு? நாம மூணு பேருமாகச் சேர்ந்தென்னாலும் ஒரு வள்ளம் வாங்க ம்ை என்று மார்க்கண்டுவும் சொக்கணும் சொன்னாக'
'இன்னும் முன்னூறு ரூபாவே சேறலை. நாம எப்ப தான் பணம் சேர்க்கப் போகிறோம்? எப்படித்தான் வள்ளம் வாங்கப் போகிறோம்?" என்று அவள் பதிலுக் குச் சலித்துக் கொண்டாள்.
'நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது. இருந்து பாரேன். என்றைக்காவது ஒரு நாள் எங்கட வள்ளம் கடலிலை ஒடத்தான் போகுது' காலம் மாறும். காத்து

ச. முருகானந்தன் 47
அளப்பவும் ஒரேதிசையில் வீசாது. காலம் வரும். இன்றைய .கனவுகள் தான் நாளைய நணவு சள்" அவன் அடித்துக் கூறினான் இப்போதெல்லாம் சீனித்தம்பிக்கு வள்ள நினைவுதான். கடந்த சில நாட்களாக அந்த வேட்கையில் அவனது குறிப்பறிந்து கெளரியும் அவனது இலட்சியம் நிறைவேற அயராது உழைத்தாள். கூடவே சிக்கன வாழ்க் கையையும் கடைப் பிடித்தாள். காலம் கனியுமா?
மனிதர்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று எதிர்பாராத செலவுகள் அடுத்தடுத்து வந்து சீனித்தம்பி யின் சேமிப்பைக் கரைத்து விட்டன தாயாரின் நோய், கெளரியின் பிரசவச் செலவு, இப்படிப் பல செலவுகள்! மார்க்கண்டு வாலும் சேமிகக முடியவில்லை பிரமச்சாரி யான வீரசொக்கனிடம் தான் பணம் சிறிது பதுங்க ஆரம் பித்தது கூடவே அதிஸ்டமும் அவனை நாடி வந்தது.
பொன்னுச் சம்மாட்டியின் மகள் இராசம்மாளின் கண் கள் இவன் மீது விழுந்தன மகளின் மன எண்ணத் திற்கு மதிப்பளிதது பொன்னுச்சம்மாட்டி வீரசொக் கனைத் தனது மகளுக்குத் திருமணம் பேசி வந்தார். சிறு தொகையையும், தனது வள்ளங்களில் ஒன்றையும் சீதன மாகக் கொடுக்க முன் வரவே வீர சொக்கனும் கலியாணத் திற்குச் சம்மதித்தான் திருமணம் நிறைவேறியது வீர சொக்சனுக்கு சொந்தம7க வள்ளம் கிடைத்ததும் சீனித் தம்பியும மிார்க்கண்டுவும் பூரித்துப் போயினர்.
მზ வீரமுத்துச் சம்மாட்டியிட மிருந்து விலகி இன்றுதான் முதன் முதலில் வீர சொக்கனின் வள்ளத்தில் மீன்பிடிக்கப் போவதற்குத் தயாராகினார்கள் சீனித் தம்பியும் மார்க் கண்டுவும். வீரசொக்கனின் வீட்டிற்கு வந்த இருவரும், அவன் இன்னமும் தயாராகாமல் நிற்க வே, ‘என்ன இன் அணிக்கு கடலுக்கு வரல்லியா?" என்று கேட்டனர்.
வீரசொக்கன் சிரித்தான், "இன்னிக்கு நான் வரல்ல." என்றான். கலியாணம் பண்ணிய புதிதில எல்லோரும் இப்படித்தான் என எண்ணியபடி சீனித்தம் பியும், மார்க்கண்டுவும் கடலுக்குப் புறப்பட்டனர். தமது சொந்தவள்ளத்தில் போவது போன்ற மகிழ்ச்சியுடன் இருவரு. கடலில் இறங்கினர். சுறா, வாளை, சீலா,

Page 27
48 மீன் குஞ்சுகள்
பாரை என்று வழக்கத்திலும் பார்க்க அதிக மீன்கள் ug- uLL-ST.
காலையில் கரைக்குத் திரும்பியபோது வீரசொக்கன் அவர்சளுக்காக காத்திருந்தான். மீன்களைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது. மீன் 180 ரூபாவிற்கு ஏலம் போனது. வீரசொக்கன் மட்டுமின்றி சீனித்தம்பியும் மார்க். கண்டுவும் கூட மகிழ்ந்தனர் ஆனால் இருவரின் மகிழ்ச் சியும் அதிக நேரம் நீடிக்கவிலலை. வழக்கமாக மற்றச் சம்மாட்டிகள் கொடுக்கும் அதே கூலியையும் இரண் டொரு மீன்களையும் மட்டுமே வீரசொக்கன் கொடுத்த போது அவர்களது இதயங்கள் சுக்கு நூறாகின. மகத்தான ஏமாற்றத்தை அவர்களால் தாங்க முடியவில்லை. வள்ளங் கள் கரைக்கு வந்து விட்டன. சம்மாட்டிகளுக்குக் கொண் டாட்டம் - வீரசொக்கன் சம்மாட்டி உட்பட.
O Od
மார்க்கண்டுவும் சீனித்தம்பியும் கடலில் கணுக் காலளவு நீரில் நின்றபடி உரையாடிக் கொண்டிருந்தனர்" சீனத்தம்பியின் பார்வை கடல் நீரில் பதிந்திருந்தது. கடல் நீருள் விளையாடிக் கொண்டிருந்த மீன்குஞ்சுகளை எங்கிருந்தோ வந்த பெரிய மீன் ஒன்று இரையாக்கிக் கொண்டிருந்தது. "என்ன பார்க்கிறே?" என்று கேட் டான் மார்க்கண்டு.
'மீன் குஞ்சுகளை பெரிய மீன் இரையாக்குகிறது. இதே சின்ன மீன்கள் பெரிய மீன்களான பின்னர் சினன மீன்களைச் சாட் பிடாமலா விடப் போகின்றது? இதை நினைத்தேன். சிரிப்பு வருகிறது" என்றான் சீனத்தம்பி.
அவன் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறான் என்று மார்க், கண்டுவுக்குப்புரிந்தது சீனித்தம்பி தொடர்ந்து கூறினான் "ஒரு தொழிலாளி பணக்காரனாகி விடுகிறதால தொழி லாளர் பிரச்சினைகள் தீர்ந்து விடாது தொழிலாள வர்க்கத்தினருடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் ர்வு காணப்படனும் உழைக்கிறவனுக்கு உழைப்பில்
பங்கு இருக்கணும். உண்மைதான்/காலம் கனியுமா?
gg தீபம் pur

5. அந்த நிழல்கள் இந்த நிஜங்கள்
கதையை எழுதி முடித்ததும் மீண்டும் அதை வாசித்தான். வாசித்து முடித்ததும் அங்கவீனமற்ற அழகான குழந்தையைப் பெற்ற தாய்க்கு ஏற்படுகின்ற பூரிப்பு அவனுக்கும் ஏற்பட்டது. பூரண திருப்தியடைந் தவன், அதை யாரிடமாவது வாசித்துக் காட்ட வேண்டு மென்ற எண்ணம் ஏற்படவே இவளைத் திரும்பிப் பார்த்தான்.
குழந்தையை அணைத்தபடி, சரிந்து ஒருக்களித்துப் படுத்திருந்த இவளின் முகத்திலிருந்த கடுகடுப்பைப் பார்த் ததும் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
கதைக்குத் தலைப்பிட வேண்டும்.
"என்ன தலைப்பிடலாம்?"-குழந்தை பிறந்ததும் பெயர் வைப்பதில் பெற்றோர்களுக்கு ஏற்படுகின்ற சுகானுபவம்
"இவர்கள் வித்தியாசமானவர்கள்"-தலைப்பு அவ் வளவு பொருத்தமாயில்லை. என்று எண்ணினான்.
இவளும் அவளும். சீச்சி. அவளும் இவளும் என்று வைத்தால் இன்னும் பொருத்தமாயிருக்குமோ?-தலைப்பு அழகாயில்லை.
L5-4

Page 28
SO மீன் குஞ்சு கன்
வேறு தலைப்பு.?-அதற்காகத் தலையைக் குடைந் தான். மின்னலாய் ஒரு தலைப்பு. தேனாக இனித்த தெய்வீக ராகங்கள்"-முழுத் திருப்தியில்லை. இன்னும் கொஞ்சம் மாற்றவேண்டும்.ஒ. ’தேனாய் இனித்த ஒரு தேவதை'- இதுதான் பொருத்தமான தலைப்புதலைப்பை எழுதினான் திருப்தி
தேவதை நினைவில் வந்தாள். 'ஒமை டியர் சுவிட் சந்திரா.இப்போது நீ எங்கே?' நீண்ட பெருமூச்சு
மனைவி அசைந்து படுத்தாள். திரும்பியவன் முகத் தைச் சுளித்துக் கொண்டான். "இவள் பெண்-பெண் வடிவம் கொண்ட பிசாசு"-மனதில் ஒரு நெருடல்.
விளக்கைத் தணித்துவிட்டு வந்து படுத்துக் கொண்
W
f6.
தூக்கம் வருவதாயில்லை.
இவனது அசைவில் மனைவி விழித்திருக்க வேண்டும்; இவனருகே வந்து படுத்துக் கொண்டாள். என்ன யோசிக் றிெயள் அத்தான்?" பகல் முழுவதும் அவனோடு சிடுசிடுத் தவள் இப்போது அன்பாக. மிக மென்மையாகக் கேட் கிறாள். "கவலைப் படாதையுங்கோ அத்தான்.கூடிய சிக்கிரம் திரும்பவும் வேலை கிடைச்சிடும்" அன்போடு இவனது தலையைக் கோதுகிறாள். "என்னிலை கோவமே அத்தான்?"
இவன் பதில் சொல்லவில்லை.
"கவலையிலேயும் விரக்தியிலேயும் நான் உங்களைப் பேசிப் போடுறன்.நான் அப்படிப் பேசுறது சரியான பிழை.இப்ப யோசிக்க என்னிலேயே எனக்கு வெறுப்பா யிருக்கு.உங்களை-கவலையோட இருக்கிற உங்களை இன்னும் கவலைப்படுத்திப் போட்டன். அதுதான் எனக்கிப்ப கவலையாயிருக்கு.ம்.உங்களைப் பேசுற

v. முருகானந்தன் 5
நேரத்திலே இது எனக்குத் தெரியவேயில்லை." இவன்
மூக்கை உறிஞ்சினாள்.
இவன் இப்பொழுதும் வாய் திறக்கவில்லை: கண்ணை மூடியபடியே மெளனமாகச் சிந்தனையில் ஆழ்ந்து போகிறான்.
இவன் இன்னும் அவளை நெருங்கி ஏதாவது ஆறுதல் சொல்லமாட்டானா என்ற தாபத்துடன் அவனது மார்புக் கேசங்களைத் தடவினாள்.
இவளது இப்போதைய தேவை இவனுக்குப் புரிகிறது. எனினும் புரியாத பாவனையில் கண்களை மூடியபடியே படுத்திருந்தான்.
இவள் விடுகின்ற பெருமூச்சு இவன் மனதை அரிக் கிறது. எனினும் பிடிவாதமாக கண்களை மூடியபடியே படுத்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்கள் மெளனத்தில் கரைகிறது.
அந்த மெளனத்தில் இவள் மனதை அடக்க முடியாமல் விம்மி.அவன் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனா?
இதைத்தான் அவனது மனைவி கேட்டாள். கடந்த மூன்று வருடங்களாக, ஸ்ரைக்கில் அவன் வேலை இழந்த நாட்தொட்டு தினமும் கேட்டுக் கொண்டுதாணி ருக்கிறாள்.
"ஒரு பொறுப்புள்ள கணவனாய் உங்களால் நடந்து கொள்ள முடியாதா?.நீங்கள் உழைத்துக் கொட்டுற பிச்சைக் காசில் என்னதான் செய்ய முடியும்?.இந்த லட்சணத்தில் குடிவேறு.சிகரெட்டையாவது விடுங்கோ எண்டாக் கேக்கிறியளில்லை." இவள் பேசுவாள். அவன் உசும்பினது கிடையாது.
"உங்களைக் கட்டி நான் என்ன சுகத்தைக் கண் டேன்?" இவள் சத்தம் வைத்துக் கேட்கின்ற போதும்

Page 29
52 மீன் குஞ்சுகள்
அவன் வாய் திறக்க மாட்டான். நாலாம் திகதியில் பிறந்தவளோடு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக். கொள்ள அவன் தயாராக இல்லை.
அவன் பேசாமலிருக்கிறானாம். இவள் குற்றப் பத்திரிகை வாசிப்பாள்.
அதற்கும் பதில் சொல்லமாட்டான் அளவுக்கு மிஞ்சி னால் அப்பால் போய்விடுவான். அவன் பதில் சொல்ல, அவள் வாய் காட்ட, அவனுக்கு வெறித்தனமான கோபம் வர, கைகளைப் பாவிக்க.வேண்டாம் அந்தத் தொல்லை.
அப்படியான நேரங்களில் அவன், மனைவி, குழந்தை, அந்தப் புனிதமான உறவு எல்லாமே அர்த்தமில்லாதது போல அவனுக்குத் தோன்றும். இதே இவன்தான் திருமணமான புதிதில் சொல்வான்." குடும்பம் ஒரு கதம்பம்.அதிலேயுள்ள பூக்கள் பலமாக நார்க்கயிற்றால் இணைக்கப்பட்டு, நெருங்கி ஒன்றோடொன்று ஐக்கிய மாகி, பூக்களின் தனித்தன்மைகளை இழந்து, மாலை யாகி.
இன்று மாலை கலைந்து பூப்பூவாய்ச் சிதறியிருப்பது போல, அவனும் தனியனாய் உணர்ந்தான்.
எது எப்படியிருந்தாலும் குழந்தையை அவனால் பிரிந்திருக்க முடியாது. இரத்த உறவை அறுத்தெறிவது. அவ்வளவு சுலபமா என்ன? குழந்தைக்கு-அதன் எதிர் காலம் நன்றாக அமைய அருகே ஒரு அம்மா என்றும் தேவை; வேறு எந்த அம்மா வந்தாலும் அது இந்தச் சொந்த அம்மா போலாகிவிட முடியாது என்று அவனுக்குத் தெரியும். எனவே அவனால் மனைவியைப் பிரிந்து போக முடியாது. அப்படிப் பிரிந்து போக வேண்டும் என்று அவன் நினைத்ததும் கிடையாது. எனவேதான் குடும்பத் தலைவனாக இருந்து கொண்.ே தணியனாய்.

ச முருகானந்தன் 53
எது எப்படியாயிருந்தாலும் அது அப்படியேயிருந்தது. அவனைப் பற்றியிருக்கும் பழக்கமும், விரக்தியும் ஒழிவதா யில்லை.
இவள்- அவனது அன்புக்கினியவள், இவளைக் கைப் பிடித்த நாளில் இப்படியில்லை. இன்ப ஊற்றாய், இனிய தேனாய் பணிவிடைகள் செய்வதிலும் சரி, படுக்கை ‘யறையிலும் சரி பாசத்தைக் கொட்டுவதிலும் சரி, ஒரு தேவதையாகத்தான் இருந்தாள். அவனும் ஓர் இனிய கணவனாயிருந்து இல்லாளை எந்நாளும் மகிழ்வித்தான்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தில் விகிதராக இருந்த அவனுக்கு மாதம் எழுநூறு ரூபா சம்பளம் நூறு ஆரூபாவுக்குக் குறையாத ஓவர் டைம்; இருநூறு ரூபாவுக்குக் ஆகுறையாத கிம்பளம்-அவன் கேட்காமலேயே தேடிவந்த
அந்த நாட்களில் வீட்டிலிருந்த குதூகலம்.
ரொபியும் கையுமாக அவன் வீடு திரும்புகின்ற சம்பள நாட்களில் குழந்தையிடமிருந்து குதூகலம்; சுளையாக ஆயிரத்தைக் கொடுக்கின்றபோது மனைவியின் முகத்தில் தெரிகின்ற பிரகாசம்; அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி அவன் இவளைச் செல்லமாய்க் கிள்ள, அவள் மெல்லமாய் சிணுங்க.ஒ. அந்தச் சினுங்கல்களில் தான் எத்தனை அர்த்தங்கள்
அந்தச் சொர்க்க வாழ்வெல்லாம் ஒரு ஜுலை மாதத் தோடு போக.
மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த ஜூலை மாதத்தில்தான், சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். "வேலைக்கு வராதவர்கள் வேலை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள்" என்று வானொலியிலும் பத்திரிகைகளிலும் ஆட்சியாளர்கள் அறிக்கை விடுத்தபோது, அது வெறும் "பூச்சாண்டி" என்றுதான் அவன் நினைத்திருந்தான். பின்னர் வேலை

Page 30
54 மீன் குஞ்சுகள்
ப்றிபோன போதுகூட, இரண்டொரு மாதங்களில் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கைஅவனுக்கிருந்தது.
ஆனால்.மூன்று வருடங்களாகிறது இன்னும்இல்லை.
தேர்தல் வந்தபோது- முடிந்தபோது- முடிந்த பின்னர் "இப்போ கிடைக்கும்.இப்போ கிடைக்கும்.” என்று ஆவலாய் எதிர்பார்த்து ஏமாந்து, வேலையிழந் தவர்களுக்காக சக தொழிலாளர்கள் குரல் கொடுப் பார்கள்-போராடுவார்கள் என்றெல்லாம் காத்திருந்து, எல்லா எதிர்பார்ப்புகளும் புஸ்வாணமாகிப் போக.
இவள் இப்பொழுதும் குத்திக்காட்டுவாள், "வேலைக் குப் போகும்படி சொன்னேன்.கேட்காமல் வேலை நிறுத்தம் செய்து போட்டு இப்ப இருந்து மாயுறம்." அவள் குற்றம் சாட்டுகின்றபோதெல்லாம் அவனுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வரும். கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வான்.
வேலை பறிபோன புதிதில், சிறு எதிர்பார்ப்பில் கொஞ்ச நாட்கள் சும்மா இருந்தான். வாழ்க்கைப் பிரச்சினைகளின் பாரம் தாங்காமல் கொஞ்சக் காலம் அவன் அனுபவித்த வேதனைகள் ஈடுசொல்லமுடியாதவை சீதனமாவது வாங்கிக் கொண்டு கலியாணம் செய்திருந் தால்." என்ற நப்பாசை முற்போக்கு எண்ணங்கள் கொண்ட எழுத்தாளனான அவனது அடி மனத்தையும் வருடவே செய்தது.
"முடிந்து போனதை நினைத்து ஆவதென்ன?-- ஞானோதயம் பிறக்கும்.
அடுப்பில் உலையேற வேண்டுமே, கடன்காரர் களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே-புடவைக் கடை தஞ்சம் கொடுத்தது. ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்து.

ச். முருகானந்தன் 55
அப்பொழுதும்கூட கைமாத்து வாங்குபவனுக்கு நானூறு குபா எந்த மூலைக்கு? வாழ்க்கைச் செலவு மலைபோல உயர்ந்துவிட்ட இந்த வேளையில்.யானைப் பசிக்குச் சோளப் பொரிதான்?
படம்- திருவிழா- பயணம் எல்லாவற்றையுமே கட்டுமட்டுப்படுத்தி வெறும் சோற்றுக்காய் வாழ்ந்து கொண்டு.
இத்தனை வேதனைகளுக்குமிடையில் ஒரே ஒரு ஆத்ம திருப்தி கதை எழுதுவதுதான்.
வேலை நிறுத்தத்தின்போது வேலையிழந்தவர்களின் பிரச்சினைகளை வைத்துப் பல கதைகள் புனைந்தான். ஆட்சியாளர்களுக்குப் பயந்தோ அல்லது அவர்களுக்குக் காக்காய் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, சில பத்திரிகைகள் அவனது அருமையான சிறுகதைகளை கூட நிராகரித்தன. வேறு சில பத்திரிகைகள் பிரசுரிக் கவும் செய்தன. ஆனால் அவன் எதையும் பொருட்படுத் தாமல் எழுதிக் கொண்டேயிருந்தான்.
மனைவி சிறுவாள். 'கண்டறியாத கதையும் கவிதை யும்.வீணாய் பேப்பர், மை, முத்திரையைச் செலவளிச்சு வேலைமினைக்கட்ட வேலை" இவளின் சீறலில் அவளை நினைப்பான்.
அவனும் அவளும் காதலர்களாக சஞ்சரித்த காலத்தில் அவனது 'மீன் குஞ்சுகள்" கதைக்கு இலக்கிய சிந்தனைப் பரிசு கிடைத்தபோதும், "புலி" கதைக்கு தங்கப்பதக்கம் கிடைத்து, பின்னர் அது தெலுங்கிலும், ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டபோதும் அவள் என்னமாய்ப் பூரித்துப் பாராட்டினாள். இப்பொழுதும் அதை நினைக் கையில் உடலெங்கும் மின்சாரம் பாய்வது போல இன்ப ம்ாற்றாய்.
sy BA 6ît......?

Page 31
56 மீன் குஞ்சுகள்
"ஒ.மை டியர் சுவீட் சந்திரா."
அப்போது அவளுக்குப் பதினாறு வயது: அவனுக்கு இருபது. இளமையின் முழு வார்ப்புக்களாக அவர்கள் இருந்த காலம் அவள் அவனது வீட்டுக்கு எதிர்வீட்டில் தான் குடியிருந்தாள்.
தினமும் காலையில் அவள் பள்ளிக்கூடம் புறப்படு கின்ற நேரங்களில் அவன் ஜன்னலருகே அவள் வரவுக் காகக் காத்து நிற்பான். அவளது தரிசனத்திற்காக காத்து நிற்கின்ற அந்தக் கணங்கள்தான் எவ்வளவு இன்ப மானவை?.ஒ அந்தக் காலங்கள் மீண்டும் வராதா?
இப்பொழுதும்கூட மனதின் பாரங்கள் எல்லாம் அந்தப் பரவசமான எண்ணங்களில் லேசாகி விடுவது போல.
காலை எட்டு மணிக்கெல்லாம் அந்தத் தெரு கலகலப் பாகிவிடும் வெள்ளை யூனிபோமில் அணியணியாய்ச் செல்கின்ற பாடசாலை மாணவிகள்! அவளும் வாசல் கேற்றைத் திறந்து கொண்டு வெளியே வந்து மற்ற மாணவிகளோடு கலந்து போய். அந்த ஒரு கணத்தில் கண்னை வெட்டி அவன் பக்கம் திரும்பி.விழிகளோடு விழிகளைப் பொருத்தி.
நாள் முழுவதும் அந்தத் தரிசனத்தை நினைத்துப் பார்ப்பதிலேயே இன்பமாய்க் கரைந்து போகும். இந்தப் பேரழகி எனக்கும் கிடைப்பாளா? இந்த இனியவன் என்னவளாவாளா?-நித்தம் நித்தம் மத்தாப்பாய் விரிகின்ற இனிய நினைப்புக்கள். அந்த நினைப்புக்களிலே கிடைக்கின்ற சொர்க்சுலோகம்.
மாலை வேளைகளில் அவள் அக்காவின் குழந்தை யைத் தூக்கி தாலாட்டும் சாக்கில் வாசல் பக்கம் வந்து குழந்தையோடு விளையாடுவது போல இவனுக்குச் சைகை காட்டி.

சி. முருகானந்தன் 57
அவளோடு கதைக்க வேண்டுமே என்று இவன் துடித்த துடிப்பு.
அந்த வாய்ப்பும் அவனைத் தேடிவர.
கண்ணகை அம்மன் ஆலய மூன்றிலை அவன் அடைந்தபோது அவனது கண்களையே அவனால் நம்ப முடியாமல்.ஒ.அவள்-அவளே தான்! அம்மனின் முன் நின்று மனமுருகி தேவதைபோல்.
அம்மனைத் தரிசிப்பதா? அல்லது அவளைத் தரிசிப் பதா? அவன் மனதில் ஒரு போராட்டம்-இறுதியில் அம்மன் தான் தோற்றுப் போனார். அவனது கண்களிலும்
மனமெங்கும் நிறைந்து நின்றவள் அவள் தான்
மிகநெருக்கத்தில் முதன் முதலாகப் பார்க்கின்றபோது அந்த அழகான நிலா முகமும், நாகக் கூந்தலும், சந்தன நிறத்தில் பளபளப்பான மெல்லிய இடையும்.
நெருக்கத்தில் அவனது அசைவில் அவள் கண்விழித்து, மருண்டு நோக்கி, நாணம் மேலிட தலையைக் குனிந்து நின்று.
அவன் அவளது அழகில் - நெருக்கத்தில் தடுமாறி நின்று, எப்படிப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருக்கையில் நான் போயிட்டு வர்ரேன் - என்று முணுமுணுப்பதுபோல் கூறிவிட்டு அவள் அவ்விடத்தை விட்டுப் போய் விட்டாள்.
தேவி தரிசனம் கிடைத்து விட்டது இனி அவளோடு பேசவேண்டும்
மறுநாள் -
அவளது வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது பார்வைகளைப் பரிமாறி. அவள் சைகை மூலம் அவனை அழைத்தாள்.

Page 32
S8 மீன் குஞ்சுகள்
அவனும் வாய்ப்பை நழுவ விடவில்லை.
நெருக்கத்தில் நின்று கண்வெட்டாமல் அவளையே" விழுங்கி விடுபவன் போல் பார்த்துக் கொண்டு "பூரித்துப் போய் அவன் அவளில் ஆழ்ந்து நிற்கையில், அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் அவள் இமைகள் படபடக்க விழிமலர்த்தி அவனது பார்வையுடன் ஒன்றிப்போய். ஒ. அந்த ஒரு கணத்திற்காகவே பிறப்பெடுத்தது போதும் என்றிருந்தது அவனுக்கு.
அவளது அந்த இனிய நினைப்பில் ஆழ்ந்து இவன் இந்த நீண்ட உறக் கம் வராத இரவில் நெடிய பெருமூச் சொன்றை வெடித்தான். அருகே படுத்திருந்த மனைவி மீண்டும் இவன் பக்கம் திரும்பி தனது கைகளை அவனது மார்பில் படரவிட - ஏனோ இவனுக்கு எரிச்சலாக இருந்தது.
மறுபுறம் திரும்பி ஒரு கணம் கண் விழித்துப் பார்த்த போது அந்த மங்கலான ஒளியில் எதிரே படுத்திருக்கும் அவர்களது குழந்தை தூக்கத்தில் சிரித்தபடி புரண்டு படுக்கிறான். பிஞ்சுக் கால்களும், கைகளுமாக மெத் தென்ற உடலுடன் அந்தச் சின்ன கப்பளிச் சட்டையுள் அடக்கமாகி அயர்ந்து துரங்கும் தன் குழந்தையைப் பார்த் ததும் மெைதங்கும் ஓர் இன்பப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல உணர்ந்தான்
இந்த அழகான குழந்தைக்கு தன்னை அப்பாவாக்கி பெயர் சொல்ல வைத்த பெருமை பத்து மாதம் சுமந்து பெற்ற இவளுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கை யில். ஒ. இவள் என்னுயிர் மனைவி. என்னோடு இரண்டறக் கலந்து ஐக்கியமானவள் என்ற நினைப்பு ஏற்பட்டது. எனினும் அதையும் மீறி ஒரு மெலிதான வெறுப்பு
இவளது கைகளை விலக்கிவிட்டு மீண்டும் இனிய நினைப்புகளில் மிதக்க ஆரம்பித்தான்.

ச. முருகானந்தன் 59
அவள் மரத்தில் சாய்ந்து கொண்டு அவனுக்காகக் காத்திருக்க, அவன் பூரிப்போடுஅவளருகே வந்து, அவளை ஒரு கணம் உச்சி முதல் பாதம் வரை பார்த்துப் பருகி, "ஷாம்பு" வைத்து முழுகிய கூந்தல் காற்றில் படபடக்கும் அழகை ரசித்து, பேச வார்த்தை வராமல்.
அவளும் நிமிர்ந்து அவனை நோக்கினாள். கண்கள் சங்கமித்ததும் சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
இப்போது அவனது பார்வை அவளது பூரித்த மார்பகங்களைத் தழுவி நின்று, ஒரு கணம் அந்த இளமை யில் திளைத்து நின்று, "ஒ. இவளுக்காக, இந்தக் காதலுக்காக, சுகமான பேரின் பத்திற்காக எதையும் இழக்கலாமே." என்று பூரித்து நின்றான்.
அவளது இதழ்கள் மெல்லமாய் அசைந்தனவேயன்றி வார்த்தைகள் வரவில்லை.
அவன் தான் பேச்சை ஆரம்பித்தான்.
"சந்திரா." நிலம் நோக்கி நின்ற அவள் அந்த இனிய அழைப்பில் சட்டென்று நிமிர்ந்தாள், "என்ன?" என்பது போலப்
புருவங்களை நிமிர்த்தி குழி விழப் புன்னகைத்தாள்,
அவன் மெளனமானான். சொல்ல வந்ததைச் சொல்ல முடியாததுபோல ஒரு தவிப்பு.
ஈற்றில் சொல்ல நினைத்ததை ஒருவாறு சொல்லி விட்டான்!
மலர்ச்சி; மகிழ்ச்சி; குறுகுறுப்பு: உள்ளமெல்லாம் இன்ப ஊற்றாய்.
ஒ. அந்த சுகமான, நினைவை விட்டகலாத காலங் /கள் அன்று தொட்டு ஆரம்பமான இனம் புரியாத

Page 33
60 மீன் குஞ்சுகள்
:பிணைப்பில் அவனும் அவளும் காதல் பறவைகளாகி உலகை மறந்து, முதல் முத்தத்திற்காகவே பிறவியெடுத்தது போல் பூரித்து நின்று.
எதிர்ப்பிருந்தால்தானே காதல் சுவைக்கும். வழமை யாகக் காதலர்களுக்கு வில்லன்களாக, வில்லிகளாக. வருகின்ற பெற்றோர்கள். இவர்கள் விசயத்திலும் வில்லர்களாக. அழுகை - கண்ணிர் - விரக்தி - பிடி வாதம்-வைராக்கியம்.
அந்த நாட்களை நினைக்கின்றபோது இப்போதும் இவனுக்குப் புல்லரிக்கிறது அவளுக்காக உயிரை விடவும் தயாராக இருத்த அவன்; அவனுக்காக அதற்கு மேலும் செய்யத் தயாராக இருந்த அவள்
அந்த நினைப்பில் படுக்கையில் படுத்திருக்கமுடியாமல் அவன் உருண்டு சரிந்தான்.
"ஏன் அத்தான் நித்திரை வரலையே?. என்ன அபலமான யோசனை?. எனக்குச் சொல்லக் கூடாதோ?-
மீண்டும் இவள் குறுக்கிடுகிறாள்.
அவன் பெருமூச்செறிகிறான். அவனது மனநிலை இவளுக்கு விபரீதமாகப் படுகிறது. யோசனையுடன் அவனைப் பார்க்கிறாள். அவன் இப்போது மல்லாந்து படுத்தபடி முகட்டை வெறித்துக்கொண்டிருந்தான். அவன் வேறு யாரையாவது மனதில் நிறுத்தித் தத்தளிக் கிறானோ!' - அந்த நினைப்பையே தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் துடியாய்த் துடித்தது. படுத்திருந்த கபடியே அவனைப் பார்த்து இவள் கேட்டாள்.
"இப்படியே யோசிச்சுக் கொண்டு படுத்திருக்கப் போறியளே காலமை கடைக்குப் போகவேணு மெல்லே?. நித்திரை கொள்ளுங்கோ. இனி நான் உங்க னோட சீறிச் சிணக்கமாட்டேன்." இவன் யோசனை அபுடன் அவளைப் பார்த்தான்.

ச. முருகானந்தன் 6
"என்னைக் கொஞ்சம் நிம்மதியாய்ப் படுக்கவிட மாட்டீரே" அவன் இவள் மீது எரிந்து விழுந்தான். அவனது சீறலில் இவள் ஒரு கணம் திகைத்துப்போகிறாள்.
இப்போது அவனிலிருந்து விலகி ஒருக்களித்துப் படுக் கிறாள்.
கொஞ்ச நேரம் மெளனத்தில் கரைகிறது.
பின்னர் இவளிடமிருந்து கண்ணிரும் கேவல்களும் வெடிக்கவே அவன் பதறிப் போகிறான். நிகழ்ந்துவிட்ட சினப்புக்கள் எவ்வளவு அனாவசியமானவை என்ற குற்ற உணர்வு முள்ளாய் அவன் மனதை உறுத்துகிறது. ஆனால் இவளும் நடைமுறையில் இப்படித்தான் என்பதை உணர்கின்றபோது. ஒ அனுதினமும் முட்டிமோதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் இவளும் ஆத்திரத்தில் சினந்துவிட்டு இப்போது அது தவறு என்று கலங்கி மன்னிப் புக் கேட்டு. ஒ சந்திரா என்னை மன்னிச்சிடம்மா. மானசீகமாய் ஒலிக்கிறது.
"என்ன சந்திரா அழுகிறீரே?" என்று இவள் பக்கம் திரும்பி கன்னத்தில் வடியும் கண்ணிரைத் துடைத்துச அருகே இழுத்தணைத்து 'அழாதே சந்திரா" என்று ஆறுதல் சொல்கின்றபோது "சீ.வீணாகக் கோபித்து விட்டேனே" என்ற எண்ணம் பிறக்கிறது.
அவளாக இருந்தபோது இனித்த இதே சந்திரா, காதலி என்ற ஸ்தானத்திலிருந்து மனைவி என்ற ஸ்தானத்தை அடைந்து, ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்ட இந்த நிலையில் ஏன் இனிக்கக் கூடாது?
இவள்தான் அவள், அவள்தான் இவள் - அவனது காதலி மனைவி இரண்டுமே ஒரே சந்திராதான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, புறச் சூழ்நிலைகள்தான் மனிதனை எவ்வளவு தூரம் பாதித்து விடுகிறது என்று. எண்ணிக்கொண்டான்.

Page 34
-62 மீன் குஞ்சுகள்
இன்னும் இவளது விசும்பல் அடங்கவில்லை. ஈரமாகி விட்ட தலையணையிலிருந்த அவளது முகத்தை மீண்டும் அருகே இழுத்து அணைத்து முத்தமிடுகின்ற இந்த நேரத் தில் இந்த முத்தமும் முதல் முத்தமாக இனிப்பதுபோல.
எல்லாம் மனிதனின் மனதில்தான் தங்கியிருக்கிறது என்று எண்ணினான். இனி இந்த இரவு இவர்களுக்கு இனிக்கும்.
கணையாழி டிசம்பர் - 1983

6. பாதை மாறிய பந்தங்கள்
வெயில் உச்சிக்கு வந்துவிட்டது. ஒசட்டி ஒழுங் கையில் தலையில் எண்ணெய்க் கடகத்துடன் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்த நல்லெண்ணெய் விற்கும் "எண்ணை ஆச்சி" வெயிலின் தகிர்ப்புத்தாங்க மாட் டாமல் எட்டி நடக்க முயன்றாள்; முடியவில்லை. வயதுக் கேற்றபடி ஆச்சியின் உடலும் இயக்கமும் தளர்ந்து போயிருந்தது.
கிழவியாக இருப்பதால் மட்டும் அவளை மற்றவர்கள் ஆச்சி யென்று அழைக்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் இந்த ஊருக்கு எண்ணெய் விற்க வந்த காலம் தொட்டு, இப்போது நரை விழுந்து, கூனி, நொடிந்து போனது வரை அவளை எண்ணை ஆச்சி என்றுதான் அழைக்கிறார்கள். "எண்ணை ஆச்சி" என்ற பெயரை அவளுக்குச் சூட் டியவர்கள் சிறுபராயத் தினர் தான். எண்ணை ஆச்சி கொண்டு வரும் எள்ளுப் பாகுக்கு சிறிசுகளிடம் இருக்கும் பிரியம்தான் ஆச்சியை அவர்கள் பால் ஈர்த்தது.
எண்ணை ஆச்சி பெரிய ஒலைக் கடகத்தில் எண் ணைக்கலனையும் சில எண்ணைப் போத்தல்களையும் எள்ளுப்பாகு நிறைந்த பழைய பால் மா தகரத்தையும் அடுக்கி அதைப் பக்குவமாகத் தலைமேல் வைத்து பின் கொய்யாமல்விட்ட லங்கா சேலையுடன் நடந்து வரும் போது பார்க்க வேண்டுமே.

Page 35
64 மீன் குஞ்சுகள்
ஊர் நாய்கள் எல்லாம் ஆச்சிக்குப் பழக்கப்பட்டவை. கேற்றைத் திறந்து கொண்டு நேராக வீட்டுக்குள் வந்து தாவாரத்தில் கடகத்தை இறக்கி, தலையை அமுக்காம விருப்பதற்காக வைத்திருநத சும்மாட்டையும் இறக்கி அருகே வைத்து, வாயால் காற்றை ஊதி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "பிள்ளை ஒரு போத்தி லாய்த் தரட்டோ?" என்று பக்குவமாகக் கேட்பாள். எண்ணெய் ஐந்து ரூபாவுக்கு கீழ் விற்ற காலம் தொட்டு, ஐம்பது ரூபாவுக்கு போய்விட்ட இன்றுவரை ஆச்சியுடன் பேரம் பேசி வெல்லுவதென்றால் அபூர்வம்தான்.
ஒரு நாளைக்கு ஒரு குறிச்சி என்று ஆச்சி வியா பாரம் பண்ணுவாள். காலையில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டால், மத்தியானம் வீடு வந்து சேர இரண்டு மணியைத் தாண்டி விடும். இத்தனைக்கும் அநேக நாட்களில் கொண்டு போகும் எண்ணெயில் பெரும்பகுதியை விற்று விடுவாள். சில நாட்களில் வியா பாரம் மந்தமாகவும் இருக்கும். அப்படியான நாட்களில் முழிவியளத்தில் பழி போய்ச்சேரும். படலையுக்கால வெளிக்கிடயுக்கை வேதாத்தை வெறுங்குடத்தோட வந்தவள்.சமாதானமாகிவிடுவாள். மாலை எண்ணெய் இடித்தல், எள்ளுப்பாகு தயாரித்தல் என்று பொழுது போய்விடும். அயராத உழைப்பினால்தான், மூன்று பிள்ளைகளுடன் முப்பது வயதில் கைம்பெண்டாச்சியான ஆச்சி, பிள்ளைகளை வளர்த்து படிப்பித்து கரை சேர்த்து இனி ஆச்சியின் கடைசி காலம்தான், யாரோ ஒரு பிள்ளையோடு ஒண்டிக் கொண்டு பேசாமல் காலத்தை ஒட்டிவிடலாம். ஆனால் உழைத்து வாழ்ந்த கட்டை யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் படுக்கையில விழுந்திட்டால் பிறகு பாருங்கோவன்டி என்று சும்மா இருக்கும்படி கூறும் பிள்ளைகளிடம் கூறிவிடுவாள்.

ச. முருகானந்தன் 65
ஒசட்டி மணல் பாதையைத் தாண்டி, வயல் வரம்பு களில் நடந்து, நாச்சிமார் கோயிலடி வெள்ள வாய்க் காலைக் குறுக்காகத் தாண்டி குடிசனம் நிறைந்த ஒழுங் கைக்கு வந்து கந்தவனம் வாத்தியார் வீட்டுப் படலை யைத் திறந்து கொண்டு பிள்ளோய்.எண்ணை வாங் கல்லையே? என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைய, அவளை அடையாளம் கண்டு கொண்ட "லக்கி நாய் வாலையாட்டி வரவேற்றது. அது ஆச்சிக்கு மட்டுமல்ல வீட்டுக்குப் புதிதாக வருபவர்களுக்குக் கூட வாலை ஆட்டும் பழக்கமுடையது.
ஆச்சியின் குரல் கேட்டு வெளியே வந்த செல்லல, "என்ன ஆச்சி கன நாளாய் இந்தப் பக்கம் காணன். நான் போனகிழமை நெல்லியடியிலை அழகன் கடையிலை காப்போத்தல் வாங்கினனான்,"
"இருந்தாப்போல ஒரு இருமல் பிடிச்சு மந்திகை ஆசுப்பத்திரியிலை ஒரு கிழமை கிடந்தனான் பிள்ளை. சரி பிள்ளை, இப்ப எவ்வளவு தாறது?."
"என்ன விலையணை ஆச்சி?." "போத்தில் ஐம்பதுக்குத்தான் விக்கிறனான் பிள்ளைக்கெண்டபடியால் நாப்பத்தெட்டு ரூவாப்படி
* றன்."
செல்லம் ஒரு நெளிப்பு நெளித்தாள். "ஆச்சியட்டை வரவர நெருப்பு விலை.நெல்லியடியிலை நாப்பத்தைஞ்சு ருபா தானே?"
"பிள்ளை அதுவும் இதுவும் ஒண்டே?.அவங்க னத்தினையைக் கலப்பங்கள் கண்டியோ? இது சுத்தமான நல்லெண்ணை பிள்ளை, இப்ப எள்ளு விக்கிற விலை யிலை இதுக்குக் குறைய விக்கேலாது மோனை. பருத்தித் துறையிலை போத்தல் அறுபது போகுதாம்.'"
5- گu

Page 36
66 மீன் குஞ்சுகள்
"சரியணை ஆச்சி. உன்னோடை கதைச்சு வெல் லேலுமே? ஒரு போத்திலைத் தாவண்ணை.அதோட ஐஞ்சாறு எள்ளுப்பாவும் தாணை"
"ஐயோ பிள்ளை.அதை மட்டும் கேட்காதை. அடுத்த முறை கொண்டாறன்.இது போனமுறை ராசம்மா சொல்லிவிட்டவ. மேள் பெரியபிள்ளையாயிருக் கிறாவெல்லே. "
'மூத்த குமர் முத்திப்போய், அதுக்கொரு வக்கில் லாமல் இருக்கினம்.இந்த லட்சணத்திலை அடுத்தவளின்ர சாமத்தியத் தண்ணிவார்வையை வலு எழுப்பமாய் கொண்டாடப் போகினமாம்.ம்.அது சரி, உனக்காச்சி அவையிலை தான் நெருக்கம். அவைக்கெண்டவுடனை ஒரு தனிச்சலுகை, நாங்கள் தாறது காசிலையே..?" செல்லம் விடுவதாயில்லை.
"என்ன பிள்ளை உப்படிப் பேசுறாய்?.எங்கை குடுத்தாலும் எனக்குக் காசி தானே?. நான் அதுக்குச் சொல்லயில்லை.வாக்கிலை ஒரு சுத்தம் இருக்க வேண் டாமே?.அது சரி மச்சாளும் மச்சாளும் முந்திச் சரியான வாரப்பாடு. இப்ப வர வர எட்டம் கட்டி நிற்கிறியள். ஏதேனும் பிரச்சினையோ?.அடஅ. அந்தத் திருவிழாப் பிரச்சினைக்குப் பிறகு இன்னும் ஒண்டு சேரல்லையே?* "காசிருக்கெண்டவுடனை அவைக்குச் சரியான தடிப்பு.இப்ப வாசியசாலை விசயத்திலையும், விளை யாட்டுப் போட்டியிலையும் கூட தாங்கள் தான் முன்ன ணிக்கு நிற்கப் பாக்கினம்..ஏன் எங்களட்டைக் காசில் லையே? எங்கட மேனுக்கு இப்ப நல்ல வரும்படி.." செல்லம் வெடித்தாள்.
"காசென்ன காசு, மணிசர்தானே பெரிசு?.நான் அயர்ந்து போனேன். இப்ப உங்கட மோன் படிப்பு முடிஞ்சு வெளிக்கிட்டுவிட்டு தெல்லே?.எங்கை வேலை?" ஆச்சி அக்கறையோடு விசாரித்தாள்.

ச. முருகானந்தன் 167
"பதுளையிலை உள்ளுக்காய் ஒரு டிஸ்பென் சரியிலை வேலை. போய்க் கொஞ்ச நாளையிலேயே கைராசிக்கார -டாக்குத்தர் எண்டு பேரெடுத்திட்டானாம். சம்பளத்தை விட நல்ல பிறைவேற் வரும்படி. அரிசி, தேங்காய், மாங் காய் எண்டு வாற வருத்தக்காறர் கொண்டு வந்து குடுக்குறாங்களாம். அதைவிட வீட்டிலை பிறைவேற்றா யும் வைத்தியம் செய்யுறானாம், எப்பிடிப் பார்த்தாலும் நாளொண்டுக்கு இருநூறு முன்னூறுக்குப் பிளையில்லை யாம். தம்பி இப்ப பத்து நாள் லீவிலை வந்து நிற்கு தெல்லே?.ஆளும் கொஞ்சம் கொழுத்திருக்கு." செல்லம் பெருமிதமாக அடுக்கிக் கொண்டே போனாள்.
'காசு பணம் பெரிசில்லைப் பிள்ளை.அங்கை சிங்களவரின்ர ஆய்க்கினை ஒண்டுமில்லையே? காசு பணம் எப்பவும் சமபாதிக்கலாம் .ஆளுக்கு ஒண்டு வரப்படாதெல்லே?" ஆச்சி பரிவோடு கேட்டாள்.
* அங்கை தம்பிக்கு எந்தவிதக் கரைச்சலுமில்லை. ஊர்ச்சனம் தம்பியைக் கடவுளாய் வச்சிருக்குதுகளாம். பதுளையிலை இந்த முறைக் கலவரத்திலை சரியான சேதம்.கனபேர் செத்துப் போச்சுதுகளாம். தமிழாக் களின் ரை கடை கண்ணி ஒண்டும் மிச்சமில்லையாம். எண்டாலும் தம்பிக்குச் சிங்களவரே சரியான பாதுகாப்பு குடுத்தவங்களாம் . அதுதான் தம்பி அகதியாயும் வர யில்லை." செல்லம் பெருமிதத்தோடு கூறினாள்.
"அது சரி பிள்ளை, மோனுக்கு இப்ப சம்மந்தம் செய்து வைக்கவில்லையே?"
"ஏன் ஆச்சி, உனக்குத் தெரிஞ்ச இடங்களிலை நல்ல பொம்பினையாய் இருக்கே?. ஆச்சி இப்ப தரகு வேலைக் கும் வெளிக்கிட்டுட்டா போலை?"
"நான் அதுக்காகக் கேட்கயில்லைப் பிள்ளை. ஒண்டுக்கை ஒண்டாய் இருக்கையுக்கை ஏன் இழுத்தடிப்

Page 37
68 மீன் குஞ்சுகன்
பான் எண்டதுக்காகத்தான் கேட்டனான்.கொஞ்சம் குடிக்கத் தண்ணி தாபிள்ளை."
செம்பு நிறைந்த தண்ணிருடன் திரும்பிய செல்லம் கேட்டாள், 'ஆரையணை சொல்கிறாய்?"
"உது என்ன புதுக்கேள்வியாய்க் கிடக்கு? உன்ர" மருமோளைத் தான். ராசப் மாவின் மூத்தவள் பவானி யைத்தான். ஆச்சி இப்படிச் சொன்னதில் நியாயம் இல்லாமலில்லை. செல்லத்தின் அண்ணன் இராசையா தான் ராசம்மாவின் கணவர். ஒரே வேலி, ஆச்சிக்கு இவர் களோடு இருபது வருடப் பழக்கம். இரண்டு குடும்பங் களும் தேனும் பாலுமாகத்தான் இருந்து வந்தனர். செல்ல மும், இராசம்மாவும் நல்ல அன்னியோன்னியம், கொடுத்து மாறல் எதிலும் குறைவில்லை. கந்தவனமும் இராசையாவும் கூட அப்படித்தான் ஒன்றாகத்தான் தவற ணைக்குப் போவார்கள். ஒரு வீட்டில் கொண்டாட்டம் எண்டால் மற்ற வீட்டவர்களும் தமது வீடுபோல் நின்று ஒத்தாசை புரிவது வழக்கம். பவானியின் பூப்பு நீராட்டு வைபவத்தின் போது கந்தவனம் மாஸ்டர் மகனையும் வைத்துக் கொண்டு சொன்னார். "இவள்தான் என்ர மூத்தமருமோள். இப்பவே சொல்லிப் போட்டன்." அந்த வார்த்தைகளில் அனைவருக்கும் பூரிப்பு
அந்த இரு குடும்பங்களுக்கிடையேயிருந்த வாரப் பாடு தொடர்ந்து வந்தபோது உச்சிலம்மன் கோவில் திருவிழா வந்தது. வழமைபோல எழுப்பமான திருவிழா சிகரம், சப்பறம், பிரசங்கம், மேளம், பாட்டுக்கச் சேரி. இப்படி வலு எழுப்பம்."
திருவிழாவின் போது வடக்குவீதியில் சிறு வாக்கு வாதம், இதுதான் அவர்களுக்கிடையிலான முதல் பிளவு தொடர்ந்து வாசிகசாலை, விளையாட்டுப் போட்டிப் sig i F60607&sit ...

ச. முருகானந்தன் 6ர
இப்போது கந்தவனம் குடும்பமும், இராசையா குடும்பமும் கீரியும் பாம்புமாகிவிட்டன. பொது வேலி a Gaucis கண்டாயம் அடைக்கப்பட்டுவிட்டது? இராசம்மாவின் கோழி செல்லம் வீட்டு முற்றத்திற்கு போய் விட்டால் ஒப்பாரி "அறுவாரின்ர கோழிப்பீ அள்ளத்தான் நேரம் சரி...". செல்லம் வீட்டு ஆட்டுக் குட்டி பொட்டுப் பிரித்துக் கொண்டு இராசம்மா வீட்டுக்கு வந்து விட்டாலோ 'அறுவாரின்ர ஆட்டுக்குட்டியாலை பயிரொண்டும் வைக்க முடியேல்லை" என்று தூற்றல் உறவு முறிந்தாலும் பரவாயில்லை, அது பகையாய் வளர்ந்து கொண்டு வந்தது. அவர்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற எண்ணை ஆச்சியின் கணிப்பும் தப்பாய்ப் போய்விட்டது.
ஆச்சி சொன்னதைக் கேட்டதும் செல்லம் சொன் னாள் 'என்னணை நீ விசர்க்கதை பறையுறாய்? உவை யின்ர பீத்தல் பொம்பிளையை நாங்கள் கடைசி வரைக்கும் செய்யமாட்டம். வெளியிலை எங்கையாவது லட்சம் சீதனம் வாங்கித்தான் செய்வம். வேற பொம்பிளை கிடைக்காமல் உவையின்ற கறுத்தப் பொம்பிளையைச் செய்யுறதோ?"
ஆச்சிக்கு முகம் ஒடிக் கறுத்துவிட்டது. எனினும் மேலும் சிறிதுநேரம் இருந்து கதைத்து விட்டு "நான் வாறன்" என்று எழுந்தாள். "அடுத்தமுறை எள்ளுப் பாவை மறந்து போயிடாதையணை." செல்லம் ஞாபக மூட்டினாள்,
ஆச்சி இராசம்மா வீட்டில் காலடி எடுத்து வைக்க "பப்பி" நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் கிடந்து விட்டது. அதற்கும் ஆச்சியைப்போல் வயது போய் விட்டது. புது நாய்க்குட்டி ஒன்று வாங்கவேண்டும் என்று சின்னவள் மேகலாவுக்கு ஆசை. சத்திக்கவில்லை.

Page 38
霄G மீன் குஞ்சுகள்
"வாணை ஆச்சி. செல்லம் வீட்டிலை மகாநாடு கட்டிப் போட்டு வராட்டில் உனக்குப் பத்தியப்படாதே என்னவாம், மேன்காரன் வந்திருக்கிறார் போலை." இராசம்மா’ ஆச்சியின் வாயைக் கிளறினாள்.
"எனக்கு எல்லாரும் ஒண்டுதான். பெரிசுமில்லை, சின்னனுமில்லை எல்லாரும் ஒற்றுமையாய் நல்லாயிருக்க வேணுமெண்டு தr ன் என்ர எண்ணம். அது சரி பிள்ளை, ஒரு போத்திலாய்த் தரட்டோ?."
"எள்ளுப்பாக் கொண்டரேல்லையேணை."
"மறப்பனே?. பிள்ளை வழிக்குவழி சொல்லி விட்டனியெல்லே!" ஆச்சி எள்ளுப்டாவை எடுத்துக் கொடுத்தபடியே கூறினாள். "அவையின்ரை மோனுக்கு இப்ப நல்ல வரும்படியாம். மாசம் ஐயாயிரத்துக்கு மேலை கிடைக்குதாம்."
"உதென்ன ஆச்சி விசர்க்கதை பிளக்கிறாய்? போன கிழமையும் சீட்டுக்காக ஐந்நூறு ரூபாவுக்காக ஒடித் திரிஞ்சவை." இராசம்மாவும் விட்டுக் கொடுப்பதா யில்லை.
"என்னவோ பிறைவேற் வரும்படியாம்." ஆச்சி இராசம்மாவைக் கிளறி விட்டாள்.
"லஞ்சம் வாங்கிறார் எண்டு சொல்லணை." "அதுசரி பிள்ளையின்ரை கலியாண விசயம் என்ன மாதிரி கிடக்கு?. பேந்து ஒரு சிலாவனையும் காணன்." "சில இடங்களிலை பாக்கிறம் காலம் வரட்டுமன்.” "ஏன் மருமோனைச் செய்யிற எண்ணமில்லையே?" "அவை எப்பிடியெண்டாலும் மருமேன் நல்ல போக்குத்தான். நான் ஒருக்கால் வள்ளிப் பிள்ளை பக்கையவையை விட்டுச் செல்லத்திட்டைக் கேட்பிச்சுப்

ச. முருகானந்தன் 7
பாத்தனான். அவள் பெரிய எழுப்பம் விடுறாள். ஒரு லட்சம் காசும், பதினைஞ்சு தங்கப்பவுண் நகையும் தரட் டாம். வீட்டுக்குச் சீற் அடிக்கவும் வேணுமாம்."
"அதுக்கென்ன, உங்களட்டை இல்லாத காசு பணமே? பொம்பிளைப் பிள்ளையை பெத்தனி கொஞ்சம் பணிஞ்சு போனால் என்ன?"
'ஊருலகத்திலை வேற மாப்பிளை இல்லாமல் உவை யளிட்டை போக வேணுமே?. லோச்சட்டம் கதைக் கிறவையோட பிறகென்ன கொண்டாட்டமும் சம்பந்த மும்?. அந்த நாளையிலை இவர் செய்த உதவியை எல்லாம் மறந்துபோட்டு இப்ப லட்சம் வேணுமாம்." இராசம்மாவின் குரலில் சீற்றம் தெரிந்தது.
"அண்ணன் தங்கைச்சிக்கு உதவுறதுதானே பிள்ளை? அதையேன் இப்ப சொல்லக் காட்டுறாய்..? ஒண்டுக் கை யொண்டி பந்தம் விட்டுப் போகாமல் அடி தொடரு மெல்லே?. அதோட இந்த நாளையிலை புறோக்கர்மார் கொண்டாற வெளியூர் மாப்பிளையையும் நம்பேலாது கண்டியோ?"- ஆச்சிக்கு உலக ஞானம் அதிகம்தான்.
"சரி எண்டாலும் காலம் நேரம் வரட்டுக்கன். நான் தோட்டத்துக்கு போய் மாட்டுக்குத் தண்ணி வச் சுட்டு வாறன். தேத் தண்ணி வாங்கிக் குடிச்சுட்டுப் போணை ஆச்சி, பிள்ளை நிக்கிறாள்." இராசம்மா விடை பெற்றாள்.
"ஆச்சி. தேத்தண்ணி தரட்டோ, இல்லாட்டில் மோர் தரடோணை?" பவானி அன்புடன் கேட்டதும், **இந்த வெய்லுக்கை தேத்தண்ணி என்னத்துக்குப் பிள்னை? மோரிலை கரைச்சுத்தாவன் ." என்று ஆச்சி அன்புடன் கூறினாள்.
மோருடன் வந்த பவானியின் மலர்ந்த முகத்தைப் பாசததுடன் பார்த்தாள் ஆச்சி. 'இவளைப் போய்க்

Page 39
72 மீன் குஞ்சுகள்
கறுப்பி என்றாளே செல்லம் என்ன லட்சணமான அடக்க ஒடுக்கமான பெண். என்று மனதில் நினைத்தபடி இவளையும் செல்லத்தின் மகன் குமாரையும் பக்கத்தே நிறுத்திக் கற்பனை பண்ணினாள். "பொருத்தமான சோடிதான்." ஆச்சியின் நெஞ்சத்திலிருந்து ஆழமான பெருமூச்சு. பந்தங்கள் சொந்தங்கள் எல்லாம் பாதை மாறிப்போகிறதே என்பதால் ஏற்பட்ட பெருமூச்சு! 'கொத்தான் வந்திருக்கிறார் போலை. காள்ை யில்லையே?'- ஆச்சி இதைக் கேட்கும்போது பவானியின் மூகம் முழுமதியாய் மலர்ந்தது.
"இப்ப கொஞ்சம் உடம்பும் வைச்சிருக்கு. உத்தி யோகக்களை முகத்திலை தெரியுது." ஆச்சி தொடத் தாள்.
"ஆளும் கொஞ்சம் சிவத்திருக்கிறார் ஆச்சி". பவானியின் அபிப்பிராயத்தைக் கேட்ட ஆச்சி சிரித்தாள். "அப்ப நீயும் கண்ணிலை வைச்சிட்டாய் எண்டு சொல்லன் பிள்ளை." ஆச்சி குறும்போடு சிரித்தாள். "என்னவோ பிள்ளை உங்கட இரண்டு குடும்பமும் பழையபடி ஒண்டு சேர வேணுமென்றுதான் என்றை ஆசை. உங்கட சம்பந்தம் சரி வந்தால் பழையபடி ஒற்றுமையாயிடலாம். அடிப்படையிலை இரண்டு பகுதி யிலையும் குறையில்லை. புரிஞ்சு கொள்ளாத சுபாவம் தான் பிளவுக்குக் காரணம்."
"நீ சொல்லுறது சரிதான் ஆச்சி. எனக்கும் விளங்குது. ஆனால் பெரியவை புரிஞ்சுகொள்ளுகின மில்லை." பவானி கவலையோடு கூறினாள்.
*நான் வாறன் பிள்ளை" கடவுள் இருக்கிறார். எல்லாம் நல்லபடி நடக்கும் பிள்ளை.'- ஆச்சி எழுந்து விட்டாள்.
எண்ணெய் ஆச்சி அடுத்தசில நாட்கள் வெவ்வேறு குறிச்சிகளுக்குப் போய் வந்தாள். இடையில் மறுபடி

ச முருகானந்தன் 3
இருமல், இம்முறை ஒரு கலவையோடு கட்டுக்கடங்கி
விட்டது. வாட்டில் நிற்கவில்லை.
மறுபடியும் பத்துப்பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் ஒசட்டிப் பக்கம் வந்தாள். செல்லம் விட்டுப் படலையைத் திறந்தபோதே எள்ளுப்பாகுவின் ஞாபகம் • போன தடவை சொல்லி விட்டிருந்ததால் இன்று மறவாமல் கொண்டுவந்திருந்தாள். வயது போய் விட்டா லும் ஆக்சிக்கு ஞாபகசக்தி குறையவில்லை.
செல்லத்தின் முகத்தில் கலகலப்பில்லை, ஆச்சியைக் கண்டதும் ஏற்படுகின்ற வழமையான உற்சாகமில்லை. அதை அவதானித்த ஆச்சி ஒளிவு மறைவின்றிக் கேட் டாள். "ஏன் பிள்ளை ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதும் சுகக் குறைவா? மேன் தானே டாக்குத்தர்."
"அந்தக் கேடு கேட்டவன்ர கதையைப் பறையாதை ஆச்சி, என்ன பொடி போட்டாளோ, என்ன வசியம் பண்ணினாளோ, எதைக்காட்டி மயக்கினாளோ தெரி யாது. அறுதலியைக் கூட்டிக்கொண்டு போய் இந்தச் சுக்கிமேன் பதிவுக் கலியாணம் செய்து போட்டான். இப்ப சோடியாய் பதுளைக் குப் போட்டினமாம்." என்று பொரிந்து தள்ளினாள் செல்லம்.
"எங்கடமேன் உவள் ராசம்மாவின்ர பொடிச்சி பவானியைக் கூட்டிக் கொண்டோடிட்டான். பெத்து வளர்த்து ஆளாக்கினனங்கடை மரியாதையைக் கெடுத்துப் போட்டான்." செல்லம் ஒப்பாரி வைத்தாள்.
எண்ணை ஆச்சிக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது.
- சிரித்திரன் -

Page 40
7. தந்திரம்
எரியமறுத்து அடம்பிடித்த ஈர விறகுகளைக் குனிந்து ஊதிவிட்டு நிமிர்ந்த செல்லம்மாவை கரிய நிறத்தில் படை படையாய் மிதந்து வந்த புகை மண்டலம் திணற வைக்கவே, மூச்சு முட்டுவது போல இருந்தது. "மாரி வந்திட்டால் இந்த ஆய்க்கினைதான். காய்ஞ்ச விறகாய் எடுத்து நனையாமல் ஒத்தாப்புக்குள்ளை குவிச்சு வைச்சிருக்கலாம். இவள் பிள்ளைக்கு இதுகளுக்கெங்கை நேரம்? பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்தால், ஒரு பிடி சாப்பிட்டுட்டு பழையபடி ரியூசன் எண்டு வெளிக் கிட்டுடுவள்’ என அங்கலாய்த்துக் கொண்ட செல்லம்மா, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல மறுபடியும் அடுப்பை ஊத ஆரம்பித்தாள். நீண்ட நேர பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் அவள் தன் முயற்சியல் வெற்றி கண்டாள். அடுப்பு விளாசி எரிய ஆரம்பிததது.
அரிசிப் பானையை நோட்டம் விட்டபோது ஒரு சுண்டு வரையில்தான் இருந்தது. சமாளிக்க வேண்டியது தான் என எண்ணிக் கொண்டாள். வீட்டில் அப்படி என்ன கனபேரா இருக்கிறார்கள்? அவள், மகள் ஆக இரண்டு சீவன்கள் தானே மேலதிகமாக ஒரு நாய் அவ்வளவுதான், கறிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது. முற்றத்து முருங்கை மரம் கை கொடுத் தது. முருங்கைக் காய் பிரட்டல்-கொஞ்சம் தண்ணிர்ப் பதமாய் வைக்கலாம்; முருங்கையிலையில் ஒரு சுண்டலஇன்றைய பொழுது பிரச்சினையின்றிக் கடந்து விடும்.

ச. முருகானந்தன் 75
செல்லம்மாவின் கணவன் கந்தையா கமம்தான் செய்து வந்தான். அடிமை, குடிமை வேலைகளுக்கு முழுக்குப் போட்ட ஆரம்ப நாட்களில் மிகவும் கஷ்டப் படத்தான் செய்தார்கள், எனினும் குத்தகை நிலத்தில் அவர்கள் சிந்திய வியர்வை வீண் போகவில்லை, பத்து வருடங்களுக்குள்ளாகவே சுப்புடையாரிடமிருந்து கந்தை யாவும், அவரது சகோதரி மீனாட்சியின் கணவன் ஆறு முகமும் பங்காக தாம் செய்த வயலை விலைக்கு வாங்கி விட்டனர். அதன் பின்னர் அயரா உழைப்பினால் அவர்கள் வறுமையிலும் ஒரளவு செழுமையாகவே வாழ்ந் தனர்.
ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் கந்தையா நிமோனியாக் காய்ச்சலில் மண்டையைப் போட, செல்லம் மாவின் பாடு திண்டாட்டமாகிப் போய் விட்டது. படித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியத்தையும், மேகலா வையும் எப்படித்தான் ஆளாக்கப் போகிறேனோ என்று அவள் கலங்கினாள். எனினும் படிப்பில் சுப்பிரமணியம் காட்டிய திறமை அவளுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் தெரிந்தது. எனவே அவனைக் கஷ்டப்பட்டுப் படிப் பித்தாள். அவனும் நன்றாகப் படித்து உயர்தரப் பரீட் சையில் திறமையாகச் சித்தியடைந்தான். ஆனால் இந்தச் சாக்கடை அரசியல் சமுதாய அமைப்பின் தாக்கத்தினால் பல்கலைக் கழகக் கதவுகள் அவனுக்கு மூடப்பட்டன. அடுத்தமுறை கிடைக்கும் என செல்லம்மா உறுதியாக நம்பினாள். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்கோ ஒடிவிட்டான்.
அவள் ஒப்பாரி வைத்தாள். அவளது ஒப்பாரி ஓய கனநாள் பிடித்தது.
மீண்டும் அவள் ஓடாய் உழைத்தாள். பெரும்போகத் தில் வயல் சிறிது கை கொடுக்கும். மற்றும்படி குத்தல் இடியல் என்று கூலி வேலையில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை ஒடும் மேகலாவைக் கஷ்டம் தெரியாமல்

Page 41
76 மீன் குஞ்சுகள்
வளர்த்தாள். இருக்கின்ற வீட்டையும் வயல் காணியையும் கொடுத்து ஒருத்தனின் கையில் அவளை ஒப்படைத்து விட்டால் அவள் நிம்மதியாகக் கண்ணை மூடிவிடலாம், ஆனால் மேகலாவோ படிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். இவளால் மறுக்க முடியவில்லை. காரணம் அவள் கெட்டிக்காரியாக இருந்ததுதான். நன்றாகப் படித்தால் நல்லதம்பி மாஸ்டரின் மூத்தவள் போல இவளும் ஒரு டொக்டராக வரக் கூடும்.
கனவுகள். கற்பனைகள். எதிர்பார்ப்புகள். காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
"என்னணை அம்மா இன்னும் கறி வைக்கல்லையே? எனக்கு நேரம் பேர்ட்டுது. மேகலா பரபரத்தாள்.
"கொஞ்சம் இரு பிள்ளை. முதல் பாலையும், புளி யையும் விட்டுட்டு ஒரு கொதி கொதிச்சவுடனை இறக்கி யிடலாம்? நீ சோத்தை ஆறப்போடு."
சாப்பிட்டு விட்டு மேகலா சங்கடப் படலையைத் திறந்து கொண்டு வெளியேறவும், சுப்புடையாரின் மூத்தவ ரான சுந்தரம்பிள்ளை உள்ளே வரவும் சரியாக இருந்தது. கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த செல்லம்மா வாசலுக்கு வந்து அவரை வரவேற்றாள். "ஐயா வாங்கோ. ஆளணிப்பியிருந்தால் நானே வந்தி ருப்பனே-" என்று பரபரத்தாள்.
"அதுக்கில்லைச் செல்லம்மா" என்று அவர் மறுபடியும் ஆரம்பித்த போது செல்லம்மா மீண்டும் குறுக்கிட்டாள். *இந்த மாதம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கோ. விதைப்புச் செலவும் இருக்கு, வாறமாதம் எப்படியும் வட்டியை எண்டாலும் தந்திடுறன் ஐயா"
"நீயேன் இப்ப பதகளிக்கிறாய்? நான் இப்ப அதுக்கு அவரயில்லை. உன்னிலை எனக்கு நம்பிக்கை இல்லாமலே?

ச. முருகானந்தன் 7ገr
இது வேற விசயம்" என்று பீடிகை போட்ட சுந்தரம் பிள்ளையை நிம்மதிப் பெருமூச்சுடன் பார்த்தபடி, நிக்கிறியள் ஐயா. இருங்கோவன்" என்றபடி நாற்கா லியை எடுத்தும் போட்டாள்.
தனது பெரிய சரீரத்தைப் புட்டுவத்தில் அமர்த்தியபடி ஒரு முறை வீட்டை நோட்டம் விட்ட சுந்தரம்பிள்ளை, ஏதோ நினைத்துக் கொண்டவராக, செல்லம்மாவிடம் இந்தப் பாச்சா பலிக்காது என்று சடுதியில் உணர்ந்து கொண்டு வந்த விசயத்தில் இறங்கினார்.
*செல்லம்மா. நீ இன்னும் வயல் உழயில்லையே..? சுந்தசஷ்டி மழைக்கு முந்தியெண்டாலும் விதைக்க வேண் டாமே? மற்றவங்கட காணியிலே பயிராப் போச்சு, நீ பேசாமல் விட்டிட்டிருக்கிறாய், கந்தையன் அந்தக் காலத் திலை எங்களுக்கு விசுவாசமாக இருந்தவன் எண்டதால சொல்லுறன் . நீ கைம்பெண்டாடிச்சி எண்டவுடனை உன்ர ஆக்கள் உன்னைப் பேய்க்காட்டப் பாக்கினை என்று பீடிகை போட்ட சுந்தரம்பிள்ளையை நிமிர்ந்து கேள்விக் குறியுடன் நோக்கினாள் செல்லம்மா.
"என்னடி ஆத்தை நீ கனநாள் வயல்பக்கம் போக யில்லைப் போலை. உன்ரை வயலை வடக்காலை பிடிச்சுப் போட்டாங்கள். வரம்பு கட்டலிலும் ஒரு ஒழுங்கு முறை யில்லை. உன்ரை வயலைத்தான் தின்னினம்." அவர் தொடர்ந்த போது ஒன்றும் புரியாமல் அவரை நோக்கி னாள் செல்லம்மா.
"என்னப்யா சொல்லுறியள்? கொஞ்சம் விளக்க மாய் சொல்லுங்கோவன்." என்று அவள் பரிதவிக்கவே சுந்தரம் பிள்ளை சமயம் பார்த்து வாழைப் பழத்தில் ஊசி ஏற்ற ஆரம்பித்தார். "செல்லம்மா, மாணிக்க வளை குளத் துக்குக் கிழக்காலை இருக்கிற அந்தந் துண்டு வயல் உன்னு டையது தானே உன்ர கொண்ணர் ஆறுமுகம் அதைத் தன்ர பங்கோட சேர்த்து உழுது விதைச்சிருக்கிறார்."

Page 42
s மீன் குஞ்சுகள்
"அந்தத் துண்டு எங்களுக்கே ஐயா?
'எடி விசரி. உன்ர காணி பூமியின்ர திக்கெல்லை தெரியாமல் நிண்டு திண்டாடுறாய். அவன் கந்தையன் உன்னைப் பெட்டிப் பாம்பாய் வீட்டுக்குள்ளை வைச்சிருந் ததாலே உனக் கொண்டும் சரிவரத் தெரியேல்லைப் போலை"
"அப்ப அண்ணரட்டைக் கேக்கட்டே ஐயா?
"நான் மனம் பொறுக்காமல் அவனட்ட சொல்லிப் பார்த்தனான். அவன் என்னோடயே சண்டைக்கு வாறான் தலைதெறிக்கக் குடிச்சிட்டு நிண்டதாலை நானும் பேசாமல் வந்திட்டன்"
'எதுக்கும் நான் ஒருக்கால் கேட்டுப் பாக்கிறன் ஐயா ..எனக்குப் பாதகமாய்ச் செய்ய மாட்டார்."
"விசரி. விசரி எல்லோரும் உன்னைப் போல நல்லவை யெண்டு நீ நம்புறாய். ஆனால் அவர்கள் உன்ரை தலை யிலை பச்சடி அரைக்கப் பாக்கினம். அதிலையும் உன்ர மச்சாள் ச்ன்னம்மா இருக்கிறாளே.சரியான அசமடுக்கல் கள்ளி. தோலிருக்கச் சுளை திண்டிடுவாள்? சுந்தரம் பிள்ளை சாதுரியமாக இயங்கினார்.
மச்சாளின் பெயரைக் கேட்டதும் செல்லம்மாவுக்கும் ரோசம் பிறந்தது "உவையின்ர புலுடா என்னிலை வாய்க் காது ஐயா.." என்று தட்டிக் கொண்டு கிளம்பினாள். சுந்தரம்பிள்ளை அவளைத் தடுத்து நிறுத்தினார். "பொறு ...பொறு. இப்பவே ஓடாதை, இக்கணம் என்னிவை தான்
பழிவரும். ஆறுதலாய்ப் போய்க் கேள். வீணாய் என்ர
பெயரை உதுக்குள்ள இழுத்துப் போட வேண்டாம். நான் பொதுவான ஆள்" அவர் விடை பெற்றார்.
அன்று மாலை செல்லம்மா நியாயம் கேட்டு ஆறு முகம் வீட்டுக்குப் போன போது ஒரு பிரளயமே ஏற்பட் டது, சின்னம்மாவும் வாய்க்காரி. லேசில் விடவில்லை.

ச. முருகானந்தன் 79
“எடி தேவடியாள் புரிசனைத் தின்னி, நீயும் உன்ரை குமரும் ஆடுற ஆட்டம் எங்களுக்குத் தெரியாதே. ஊரிலே யுள்ள ஆம்பிளையளையெல்லாம் தட்டிச்சுத்துறதுபோதா தெண்டு இப்ப கொண் ணரையும் தட்டிச் சுத்த வந்திட்டி யேடி பரத்தை"
"சின்னம்மா வாயைக் கொஞ்சம் அடக்கிப் பேசு. உனக்கும் இரண்டு குமருகள். உன்ரை மூத் கவள் ரியூசனுக் கெண்டு யாழ்ப்பாணம் போய் குதியென் குத்துறது தெரியாமல் என்ர பிள்ளையை வசை பாட வந்திட்டாய். இப்ப வீண் கதையை விட்டுட்டுச் சொல்லு, காணிக்கு என்ன சொல்லுறாய்?"
"அது எங்கட பங்கு. உறுதியில் இருக்கு. வேணுமெண் டால் நீ வழக்குப் போடு"
இடையில் வந்த ஆறுமுகம் குறுக்கிட்டார். ஐநூறு ரூபா பெறாத காணித துண்டுக்கு கோடேறுறதே? வசயம் தெரிஞ்ச ஒரு ஆளைக் கொண்டு உறுதியை வாசிப்பிச்சுப் பார்ததிட்டு முடிவு எடுக்கலாம்"
சின்னம்மா கணவன் மீது சீறிப்பாய்ந்தாள். நீங்கள் கொஞ்சம் பேசாமலிருங்கோ.உருப்படியாய் ஒரு காரியம் செய்யத் தெரியாது செய்யவும் விட மாட்டியள்" என்று அவரது வாயை அடக்கிவிட்டு செல்லம்மாவிடம் கூறி னாள். "நீ போய் வழக்கைப் போடு. கோட்டிலை பேசிப் பாப்பம்" செல்லம்மாவிடம் வழக்குப் பேசக் காசு இருக் காது என்பது சின்னம்மாவின் கணிப்பு.
ஆனால் செல்லம்மா விடவில்லை. சுந்தரம்பிள்ளை யிடம் ஓடினாள் திட்டம் போட்டுச் மசயலாற்றிக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளை அவளை உற்சாக மூட்டி எார். "நீ விடாதை. உனக்குத் தான் தீரும். வழக்குச் செலவுக்கு நான் கடன் தாறன். நல்ல அப்புக்காத்தாய்ப் பிப்படிம்."

Page 43
80 மீன் குஞ்சுகள்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும் ஆறுமுகத்துக்குக் கட்டளை வந்தது. கட்டளையைத் தூக்கிக் கொண்டு அவரும்சுந்தரம் பிள்ளையிடம்தான் ஓடினார். எதிர்பார்த் துக்காத்திருந்த சுந்தரம் பிள்ளை ஆறுமுகத்துக்கும் தூப மிட்டார். "மானப் பிரச்சனை எண்டு வந்தாப் பிறகு, சும்மா விடப்படாது. அவள் நல்ல அப்புக்காத்தாப் பிடிச் சிருக்கிறாள். அதுக்கு மேலாலை கியூசி ஒரு ஆளைப் பிடிப்பம். அப்பத்தான் வெல்லலாம். பழைய அடி உறுதி எல்லாம் வேணும். அதோடை உலாந்தாவைக் கூட்டி வந்து அளந்து சரிபார்க்க வேணும். இப்போதைக்கு ஒரு ஆயிரம் ரூபா இருந்தால் போதும். பிறகு தவணைக்குத் தவணை காசு கட்டலாம்" என்றார் சுந்தரம்பிள்ளை. ஆறுமுகம் சிறிது தயங்கவே, அவர் அழுங்குப் பிடியாகத் தொடர்ந்தார். "உன்ரை மனிசியையும், பிள்ளையையும் வசை பாடினவளைச் சும்மா விடப்படாது, அவள் வழக்கி லையும் நிண்டு பிடிக்கமாட்டாள். காசு பணமில்லை. வெற்றி உன்ர பக்கம்தான். காசு பணம் உனக்கு வேணு, மெண்டால் நான் தாறன்"
இறுதியில் வழக்கு கேட்டுக்கு வந்தது. தவணை, தவணை என்று இழுபட்டுக் கொண்டே போனது. இரண்டு பக்கத்துக்கும், எதிர்தரப்புக்குத் தெரியாமல் பண உதவியும், ஆலோசனை என்ற பெயரில் சதியும் செய்து வந்தார் சுந்தரம்பிள்ளை. இரு பகுதியினருக்கும் பணம் தண்ணிராய்க் கரைய இறுதியில் செல்லம்மாவும், சின்னம் மாவும் வழக்குப் பேசிக் களைத்துப் போனதுடன் பெரும் கடனாளியாகியும் விட்டார்கள். சுந்தரம்பிள்ளை எதிர் பார்த்த நாளும் வந்தது.
சுந்தரம்பிள்ளையிடம் வந்த செல்லம்மா சொன்னாள் "ஜயா வழக்குப் பேசி என்னாலை கட்டுப்படியாகாது. பேசாமல் அந்த ஐஞ்சு குழியையும் அவைக்கு எண்டே சமாதானமாய் விட்டுக் குடுக்கப் போறன்"

ச. முருகானந்தன் 8.
"அதுவும் சரிதான் செல்லம்மா. நீங்கள் ஒண்டுக்கை ஒண்டு. ஏன் வீணாய் வழக்காடி நாசமறுப்பான். அது சரி உன் ர கடனும் வட்டியும் எக்கச்சக்கமாய் ஏறிப்போச்சு மோனைப் பற்றி ஏதும் தகவல் கிடைச்சதே"
"அவன் அறுதலன் இனி எங்கை வரப்போறான். நூற்றுக்கணக்கிலை காணாமல் போன (பொடியளுக்கை அவனும் ஒருத்தனோ ஆர் கண்டது? அதை விடுங்கோ ஐயா. இப்ப உங்கட கடனை என்னாலை அடைக்க வேறு வழியில்லை. என்ர முழு வயலையும், சீமா பனங் காணித் துண்டையும் அறுதியாய் எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியிருந்தால் தாங்கோ ஐயா" செல்லம்மா கவலை யுடன் கூறினாள்.
"என்ன செல்லம்மா விசர்க்கதை பறையுறாய்? என்ர முதலுக்குத்தான் காணித் துண்டு பெறும். வட்டிக்கு என்ன செய்யப் போறாய் எண்டு நான் நினைக்கிறேன் நீ மிச்சம் இருக்கோ வெண்டுகேக்கிறாய். வேடிக்கையா யிருக்கு."
செல்லம்மா கண்கலங்க வெளியேறவும், சின்னம்மா இதே நோக்கத்திற்காக சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.
சுந்தரம்பிள்ளை தனது தந்திரத்தை எண்ணிக் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார்.
கமல்லிகை
A-6

Page 44
8. ஒரு கிராமத்தின் கதை
பரந்த கடற்கரை வெளியில் மீனறுப்பும், உப்புத் தடவலும், கருவாடு காயவைப்பும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுற்றுவட்டமெங்கும் வேலை செய் வோரின் உரையாடலும், மீன் வெடுக்குமாக.
செதிழ் விரித்து, உப்புத் தூளிட்டுக் குவிக்கப் பட்டி ருந்த மீன்களைக் கூடையிலிட்டு வெயிலில் பரவிக் கொண்டிருந்தபோது, "தங்கத்துரை" என்று அவனை அழைத்தார் சம்மாட்டியார், தொட்ட குறைவிட்ட குறை யாக சம்மாட்டியாரிடம் ஓடினான் தங்கத்துரை.
கருவாடெல்லாம் காயப் போட்டுக் காவலிரு. நான் போயிட்டு அந்திக்கு வர்ரேன், கவனமாய்ப் பார்த் துக்கோ." என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடை யைக் கட்டினார் சம்மாட்டியார்.
சவரிமுத்துச் சம்மாட்டியிடம் வேலை செய்யும் பல தொழிலாளர்களில் தங்கத்துரையும் ஒருவன் என்றாலும், அவன் மீது சம்மாட்டியாருக்கு வலு கரிசனை. எந்த வேலையென்றாலும் முகம் சுளிக்காமல் தன் வேலைபோல் மாடாய் உழைப்பதோடு நம்பிக்கைக்குப் பாத்திரமான வனாக இவன் இருப்பதுதான் காரணம். வலை பொத்தல், தரம் பிரித்தல் ஏலம் கூறல், கருவாடு போடுதல் எது வென்றாலும் சுறுசுறுப்பாகச் செய்வான். அவன் கடலுக் குப் போகும் நாட்களிலும் அதிக மீன் பட்டிருக்கும். நீ அதிர்ஸ்டக் காரண்டா என்று முதலாளி அடிக்கடி கூறினா லும், அரை வயிற்றுக்குக் காணக்கூடிய ஊதியம்தான்

அச, முருகானந்தன் 83
"கொடுத்து வருகிறார், முன்னர் அவன் தனியாக இருந்த போது சமாளிக்கமுடிந்தாலும் இப்போது வேதவல்லியைக் கைப்பிடித்த பின் வங்கிரோத்தடித்தது. அப்படி இப்படி என்று அவளும் வேலை வெட்டி செய்து வந்ததால் ஒருவாறு
சமாளிக்க முடிந்தது.
தங்கத்துரையின் உறவினர்கள், பரம்பரை பரம்பரை யாக அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த போதும் இன்றுவரை அவர்களில் எவருக்கும் ஒரு காணித் துண்டு கூட இல்லை. உழைத்து உழைத்து சம்மாட்டி களை உயர்த்தியதுதான் கண்ட மிச்சம். பரம்பரை பரம் பரையாகச் சம்மாட்டிகளிடம் கடன்பட்டு, அவர்களது நிலத்திலேயே குடிசையமைத்து வறுமையோடு வாழ்ந்து வந்தார்கள். சில சாதகமான காலங்களில் தென்பகுதிச் சம்மாட்டிகள் இங்குவந்து வாடியமைத்து மீன் பிடிக்கின்ற நாட்களில் எல்லோருக்கும் வேலை கிடைக்கும், ஆனால் அவர்கள் கொடுக்கும் ஊதியமும் அப்படி இப்படித்தான், அவர்களிடம் வேலை செய்வது உள்ளூர்ச் சம்மாட்டி களுக்குப் பிடிக்காது. இயந்திரப் படகுகள் சகிதம் வந்து மீனை எல்லாம் வாரிக் கொண்டு போவதாக உள்ளூர் சம்மாட்டிகள் புறுபுறுப்பார்கள் இதனால் இப்போதெல் லாம்(தென்பகுதிச் சம்மாட்டிகள் தொழிலாளர்களையும் அங்கிருந்தே அழைத்து வருவது சகஜமாகிவிட்டது.
ஆரம்பத்தில் ஓரளவு சுமுகமாக இரு சாராரும் பழகி வந்தாலும் கூட, காலப்போக்கில் உள்ளூர்க்காரர்கள் மீது தென் பகுதியினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பின் பிரச்சினைகள் உருவாகின. அதிலும் அரசமரத்தடி விகாரை வந்தபின் இரு சாராருக்குமிடயே பிடுங்குப்பாடு அதிகமாயிற்று இத்தனைக் ம் உள்ளூர்ச் சம்மாட்டிகளும் வெளியூர்ச் சம்மாட்டிகளும் நண்பர்களாகவே இருந்து கொண்டு அடியாட்கள் மூலம் அதை இதைச் செய்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் வெடிச்சத்தம் கேட்டால்

Page 45
84 மீன் குஞ்சுகள்
இங்கே கொக்கிளாயில் உள்ளுர்க்காரர்களின் குடிசைகள் எரிய ஆரம்பிக்கும். இப்படியே இரு சாராருக்குமிடையே குரோதம் வளர்ந்து வந்தது.
தங்கத்துரை வீண் வம்பு தும்புக்குப் போவதில்லை. ஆனாலும் கடந்தவருடம் அவனது குடிசைக்கும் தீ வைத்து விட்டார்கள். அப்புறம் அதை மறுபடியும் கட்டியெழுப்ப அவன் பட்ட பாடு அப்பப்பா அழிப்பது சுகம், ஆக்குவது கஷ்டம், என்பதை அனுபவ வாயிலாக அறிந்தான் தங்கத் துரை.
கிராமத்துக்குச் சென்று களிமண் சுமந்து வந்து கடற்கரை மணலுடன் கலந்து, பிசைந்து குழைத்து பெரிய பெரிய உருண்டையாக்கி, இரு பக்கம் பலகை யடித்து, நேர்தப்பாமல் அடுக்கி, மொங்கானிட்டிறுக்கி அந்த நான்கு சுவர்களையும் அமைக்க அவனும் வேதவல்லி யும் பட்ட சிரமம் எழுத்திலடங்காது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுக்காக வைத்து வரிந்து சட்டி கோப்பிசம் அமைத்து, தென்னங் கிடுகுகளை வரிந்து கட்டி மேய்ந்து முடிப்பதற்கிடையில் ஐஞ்நூறு ரூபா செலவாகி விட்டது. அப்புறம் பாத்திரம் பண்டம் என்று தட்டு முட்டுச் சாமான்கள் வாங்கியதிலும் ஏகப்பட்ட செலவு. சவரிமுத்துச் சம்மாட்டியார் கை கொடுத்திருக்காவிட்டால் அவர்கள் கதி அதோ கதிதான்,
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. காற்றின் அசைவு இல்லாததால் வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. கருவாடு பொறுக்கப் பறந்து வந்த பறவைகளை 'சூய்" என்று விரட்டிவிட்டு தலைப்பாவை அவிழ்த்து முகந்தில் வடிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டான் தங்கத்துரை. மற்றத் தொழிலாளர்கள் குடிசைகளுக்குத் திரும்பி விட்டார்கள்.
காதில் சொருகி வைத்திருந்த பீடித் துண்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு திரும்பியபோது,

ச. முருகானந்தன் 85
*சான்ன பாரைக் கருவாடா?" என்ற குரல் கேட்டு திமிர்த்
தான்.
ஆறடி உயரத்தில் அஜானுபாகுவாய், வெளுத்த வெள்ளச் சாரமும், வரிந்து கட்டிய பெல்ற்றும், கோட்டு மாக விரித்துப் பிடித்த குடையுடன் பியசேனா முதலாளி நின்று கொண்டிருந்தார்.
'பாரையும், வஞ்சூரமும் இருக்குங்க" தங்கத்துரை மெல்லச் சிரித்தான் பியசேனா, “எங்களுக்கு அதிக மீன் படுகுதில்லை" என்று பெருமூச்சு விட்டபடி கையிலிருந்த சுருட்டைச் சாம்பல் தட்டி ஒரு தரம் இழுத்துப் புகையை வதிக் கொண்டார்.
"அப்ப நான் வாரன்" பியசேனா புறப்பட்டதும் வாயுள் கசந்த எச்சிலைத் துப்பிவிட்டு அணைந்த பீடியை எறிந்தான். "இந்த அறுவானும், அந்தக் காவாலி மொட் டையனும் தான் போன வரிசமும் குடிசைகளை எரிப்பிச் சவங்கள். இந்த வரிசமும் வந்திட்டாங்கள்" என்று தனக் குள் முணுமுணுத்துக் கொண்டான் தங்கத்துரை.
மறுபடியும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு ஒரு கணம் என்னவெல்லாமோ யோசித்தான், கிழக்குப்புற மிருந்து சவளும், வலையுமாக வன்னிநாயகன் வந்து கொண்டிருந்தான்.
"என்ன வன்னியன், மீன் பட்டு தோ? "அறுவாங்கள் வாரியள்ளிக்கொண்டு போக வந்திட் டாங்கள், இனியெங்க சின்ன வள்ளக்காரருக்கு மீன் படு கிறது?’ வன்னியன் சலித்துக் கொண்டே நடந்தான்.
முகத்தைத் துடைத்த துண்டையுதறி மறுபடியும் முண்டாசாகக் கட்டிக் கொண்டு பறவைகளைக்கலைத்துக் கொண்டிருந்தபோது சாப்பாடும் கையுமாக வேதவல்லி வருவது தெரிந்தது. அருகே வந்ததும் முகமெல்லாம் சிரிப்
பாக அழகாகப் பூரித்தபடி சாப்பிட அழைத்தாள்.

Page 46
86 மீன் குஞ்சுகள்
தென்னைமர நிழலில் வந்தமர்ந்து கொண்டபோது, வேர்வை என்ன மாய் வடியுது என்று முந்தானையை எடுத்து அவன் முசத்தைத் துடைத்து விட்டாள். வேதவல்லி.
‘விடு. விடு. முதல்ல பசி வயிற்றைப் பிடுங்குது. கொண்டா" என்று பிடுங்கினான். அவள் அன்போடு குழைத்துத் திரட்டிக் கொடுத்தாள், 'ஊட்டிவிடு" என்று சிறு பிள்ளையாட்டம் அடம்பிடித்தான் தங்கத்துரை. *ஆசையைப் பாரு ஆசையை' என்றபடி அக்கம் பக்கம் ஆளில்லாததை அவதானித்து விட்டு நாணத்தோடு ஊட்டி விட்டாள். "மீன் குளம்பு நல்ல ருசி" என்றான். "உன் கை பட்டதால."
அவன் சொல்வதைப் புன் சிரிப்புடன் கண்களை மலர்த்தி வைத்துக் கொண்டு நாணத்தோடு ரசித்தாள். வேதவல்லி.
"குழந்தை முழிச்சு அழப்போகுது அவன் சாப்பிட்டு முடிந்ததும் அவள் அவசரமாக விடை பெற்றாள்.
மாலைவரை நின்று கருவாடெல்லாம் அள்ளி வாடி புள் வைத்து விட்டுத் தங்கத்துரை திரும்ப, மாலை ஆறு மணியாகி விட்டது. அவன் குடிசையை நோக்கி நடந்த போது வழியிலே எதிர்ப்பட்ட பேரம்பலம், "கொழும்பில என்னவோவாம். லொறிக்கார மன்சூர் சொன்னான்" என்று கூறினான். தங்கத்துரைக்கு அடிவயிற்றைக் கலக் கியது.
அவன் பயந்தது போலவே இரவு உள்ளுர்காரர்களின் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. குய்யோ முறையோ என்று குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பெண்களெல் லாம் அலறியடித்துக் கொண்டு ஓடினர். உயிாைப் பிடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள்.

ச. முருகானந்தன் 87
உள்ளூர்க் காரர்களுக்கும் ரோசம் வந்துவிட்டது "குட்டக் குட்டக் குனிபவன் மடையன்" என்ற ஞானோ தயத்தினால் நள்ளிரவுக்குப் பின்னர் இவர்களும் ஒன்று சேர்ந்து சென்று வெளியூர்க்காரர்களின் வாடிகளுக்குத் தீ வைத்தனர்.
பொலிசார் வந்துதான் நிலைமை கட்டுக்கடங்சியது.
கலவர நிகழ்வுகள், அழிவுகள், பாதிப்புகள் எல்லாம் நீண்ட நாட்சள் மனதை வாட்டின. மூன்று மாதங் களுச்குப் பின்னர் அகதி முகாம்களிலிருந்து திரும்பி வந்து எரிந்து சாம்பரான குடிசைகளைப் பார்த்தபோது தங்கத் துரைக்கு இரத்தம் கொதித்தது.
தமது சஷ்டங்களைப் பற்றி அரசாங்க அதிபர் எம். பீ. மந்திரி எல்லோருக்கும் மனு அனுப்பிய உள்ளுர்க் காரர்களுக்கு மேலிடத்திலிருந்து பால் வார்க்கும் செய்தி ஒன்று கிட்டியது?
அந்தப் பிரதேசத்தில் மாதிரிக் கிராமம் அமைக்கப்படப் போவதாகவும், அதிலே வீடிழந்தவர்களுக்கு வீடு வழங்கப் படும் என்றும் அந்தச் செய்தியிலே குறிப்பிடப்பட்டிருந் ததே அவர்களது குதூகலத்திற்குக் காரணமாகும்.
சொன்னபடியே வேலைசளும் துரிதமாக ஆரம் பித்தன.
சவரிமுத்துச் சம்மாட்டியாரின் நிலத்தில் ஒரு பகுதியை மாதிரிக்கிராமம் அமைக்க அரசாங்கம் சுவீகரித் தபோது அவரும் முழுமனதோடு கையளித்தார்.
கல்லு, மணல், செங்கட்டி, ஒடு, கூரைத்தகடு என்று லொறிலொறியாக வந்திறங்கின. மூன்றே மாதத்தில் அழகான சிறிய கல்வீடுகளைக் கொண்ட கிராமம் உருவானபோது தங்கத்துரையும் சுற்றத்தாரும் மகிழ்ந்து
44fiAlbASRiv f •

Page 47
88 . மீன் குஞ்சுகள்
வீடு வழங்குவதற்குப் பெயர்கள் கூட திரட்டப்பட்டு விட்டது. அடுத்த மாத முற்பகுதியில் திறப்புவிழா என்று அறிவிக்கப்பட்டும் விட்டது. அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வேதவல்லியும் தங்கத்துரை யும் பலவிதக் கற்பனைகளில் மிதந்தனர்.
கிராமம் திறக்கப்படுவதற்கு இன்னமும் ஒரே வாரம் இருந்தபோது திடீரென்று, லொறிகளிலும், பஸ்களி லுமாக பியசேனா முதலாளி, மற்றும் பலரும் வந்திறங்கி னார்கள். ஒவ்வொரு வீடாக அந்த மாதிரிக் கிராம வீடுகளை ஆக்கிரமித்தார்கள். ஒரு வீடு கூட மிஞ்ச வில்லை.
ஒரு வாரம் கடந்து ஒரு மாதம் கடந்து ஒரு வருடம் கடந்து, இன்னமும் அங்கு குடியேறியவர்கள் வெளி யேற்றப் படவுமில்லை, மாதிரிக் கிராமம் திறக்கப்படவு மில்லை.
"இன்னமும் ஒரு வாரத்துள் வெளியேறாவிட்டால் இங்கு அத்து மீறிக் குடியேறியவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்" என்று அரசாங்கம் அறிக்கை விட்டபோது தங்கத்துரையின் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது.
மறுபடியும் ஒருவாரம், ஒரு மாதம், ஒரு வருடம் ஒடிக் கரைந்தது.
"என்னங்க, அரசாங்கம் உத்தரவிட்டும் எதுவும்
நடக்கவில்லையே?" என்று வேதவல்லி கணவனிடம்
கேட்டாள். 'ம்." என்று நெடுமூச்செறிந்தான் தங்கத்
துரை. O
-LD6 aloa
1984

9. தீர்வு
சித்திரை மாத நண்பகல் வெயில் அனலாய் எரித்துக் கொண்டிருந்தாலும் வயல்வெளியில் வேலை மும்மூரமாக நடந்து கொண்டிருந்தது. சுற்றிச் சூழ காலபோக அறு வடை முடிந்து பொலிவிழந்து கிடந்த வயல்கள் எல்லாம் இந்த ஒரு வாரமாய் நீர் நிரம்பி சிறுபோக விளைச்ச லுக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.
தனது வயலில் கூலியாட்களுடன் சேர்ந்து வேல்ை செய்து கொண்டிருந்த செல்லக்கிளி ஒரு கணம் நிமிர்ந்து சுற்று முற்றும் பார்த்தான். கண்ணுக் கெட்டிய தூரமெங் கும் உழவும் நாற்று நடுகையும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது எங்கும் சேறும், சகதியும், தண்ணிரும், நாற்று நடுவோரின் நாட்டுப் பாடலுமாய்.
செல்லக்கிளி பெரும் கமக்காரன் அல்ல. சொக்க ராயன் குளம் இரண்டாம் யூனிற்றில் மூன்றேக்கர் வயற் காணியும், கரும்புத் தோட்ட மேட்டுப் புறத்தில் இரண் டேக்கர் காணியும்தான் அவனுக்குச் சொந்தம். அண் மையில்தான் ஆசை மச்சாள் அன்னத்தைக் கைப்பிடித் திருந்தான். அப்போது கால போக விதைப்பு நேரமாக து தந்ததால் கையில் அதிக காசுப் புழக்கம் இருக்கவில்லை. *ன்பு மனைவிக்கு ஆசையாக எதையும் வாங்கிப் போடவும் முடியவில்லை. வெறும் கழுத்தோடு வந்த அன்னத்துக்கு நகை நட்டுப் போட வேண்டும் என்பது அவனது அவா. ஆனால் அவன் ஆவலோடு எதிர்பார்த் திருந்த காலபோக அறுவடை காலை வாரிவிட்டபோது அவன் மிகவும் குன்றித்தான் போனான். பயிர் என்னவோ

Page 48
90- மீன் குஞ்சுகள்"
வழக்கத்திலும் பார்க்க நன்றாகச் செழிப்புற்று வளர்ந்து தான் வந்தது. தனது உழைப்பின் வெற்றிக் களிப்பில் பூரித்து நின்ற வேளையில்தான் காலம் தப்பிப் பெய்த மாசி மழை வில்லனாய் வந்தது. அணைக்கட்டு உடைப் பெடுத்து களனிகளை எல்லாம் மூடி வெள்ளம் பாய்ந்தது. வெள்ளம் வடிவதற்கு வாய்ப்பில்லாமலே இரண்டு மூன்று வாரங்கள் அடை மழை பொழிந்தது. அறுவடைச்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் எல்லாம் சரிந்து மண் ணோடு மண்ணாகி, வெள்ளத்துடன் அடித்துச் செல்லப் பட்டு விட்டன. மேலும் கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டன. எஞ்சியிருந்த ஆடு மாடுகளும் குளிரில் மடிந்தன. குடிசைச் சுவர்கள் எல்லாம் ஈரத்தில் பாறி விழவே, பலர் பாடசாலையில் தஞ்சம் புகுந்தனர். ஊரோடு ஒத்தபடி செல்லக்கிளியும் பலத்த பாதிப்புக் குள்ளானான். வெள்ளம் வடிந்தபின் வயலில் அறுவடை செய்ய வேண்டிய அவசியமே இருக்கவில்லை. மேட்டு நிலத்தில் குலை தள்ளிப் பூரித்திருந்த வாழை மரங்களில் பாதிக்கு மேல் முறிந்து விட்டன. செல்லக்கிளி நொடிந்து போனான். அவன் கட்டிய மனக் கோட்டைகள் எல்லாம்" மழை வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டது அல்லாமல் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்கே வக்கில் லாமல் போய்விட்டது. கூடவே விதைப்புக் காலத்தில் பெற்ற கடன் வட்டியாய்க் குட்டி போட்டுப் பெருகி யிருந்தது. இந்த லட்சணத்தில் தான் சிறு போக விதைப்பும் வந்தது.
கை வற்றிப்போன விவசாயிகளில் பலர் தமது சிறுபோகப் பங்கை பெரும் விவசாயியான மிருசுவில் கந்தசாமிக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்ட போதிலும் செல்லக்கிளி அப்படிச் செய்யவில்லை. சிறுபோகச் செலவுக்கு அவனிடமும் பணமும் இல்லைத் தான். ஆனாலும் சிறுபோகத்தைச் சொற்ப பணத்திற்குக் குத்தகைச்குக் கொடுத்துவிட்டால் உடனடி நிவாரணம்

ச. முருகானந்தன் 9.
கிடைக்குமேயன்றி மேலும் கடன் சுமை அதிகரிக்கவே வாய்ப்புண்டு என்ற தீர்க்கதரிசனத்தால், எப்பாடு பட்டாவது சிறுபோகத்தையும் செய்துவிடுவது என்று உறுதி கொண்டு கடன் பட்டு, இதோ சிறுபோக வேலை களையும் ஆரம்பித்து விட்டான். பங்குனிக் கடைசியிலி ருந்து கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அவனும் அன்னமும் எந்நேரமும் வயலில் தான்! அரைப் பதத்திற்குப் பெய்த மழை, அகட்டி உழவு உழ வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது. ஏர் மாடுகளுடனும், கலப்பை நுகங் களோடும் வயலில் இறங்கி பக்குவமாக உழுது பண் படுத்தி, சித்திரையில் திறக்கப்படும் குளத்து நீரின் முதற் பாய்ச்சலிலேயே நாற்று நட ஏதுவாக மேடையும் அமைத்துவிட்டான் செல்லக்கிளி.
குறித்தபடியே சித்திரை நடுக்கூற்றில் குளமும் திறக்கப்பட்டு விட்டதால் அவனது வயலில் இப்போது
நாற்று நடுகை நடந்து கொண்டிருக்கிறது.
நெற்றியில் வடிந்த வியர்வையை முண்டாசு கட்டியி ருந்த துவாயைக் கழற்றித் துடைத்துவிட்டு தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்தினான் செல்லக்கிளி.
கதிரவன் உச்சியைத் தாண்டி விட்டதால் வெயில் ஏறிக் கொண்டிருந்தது. வானில் சிறு முகிற் கூட்டம் கூட இல்லாததாலும், காற்றின் அசைவு அதிகமில்லாததாலும் வெப்பம் தாங்க முடியாமல் வியர்வை வடிந்து ஓடிக் கொண்டிருந்தது. கூலியாட்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். சோறு கொண்டு இன்னமும் அன்னம் வரவில்லையே என்று எண்ணியவனாக வடக்குப்புற பாலைமர நிழலில் சிறிது ஒதுங்கினான். அவனது முழங் கால் வரை சகதி அப்பிப்போயிருந்தது. மடியில் கிடந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு யோசனை யில் ஆழ்ந்தபடி வரிவரியான நாற்று நடுகையை ரசித்துப் பார்ந்த செல்லக்கிளி, குரல் கேட்டுத் திரும்பினான்.

Page 49
92 மீன் குஞ்சுகள்
"என்ன, நாற்று நடுகையா? நேரத்தோடயே ஆரம் 4பிச்சிட்டே." வாய்க்கால் ஒர வரம்பில் நடந்து வந்து கொண்டிருந்தார் கந்தசாமி.
செல்லக்கிளி மெல்லச் சிரித்தான். "பிந்தினால் போன முறை மாதிரி கடைக் கூற்றில் தண்ணியில்லாமல் போயிடும்."
"என்ன, எச் போரா, ஐ ஆர் எட்டா போட் டிருக்கே?
"நபர் நெல்லுங்க."
"பொலியுமா?’ கையிலிருந்த சுருட்டை ஒருதரம் ஊதிச் சாம்பல் தட்டிய கந்தசாமி, நம்பிக்கையீனமாக அவனைப் பார்த்தார். நோய்க்கு நின்று பிடிக்காதே"
*மருந்தடிக்கலாம்.குறுகிய காலப் பயிர் என்ப தால்தான் விதைச்சேன், பெரிய இனமாயிருந்தால் கடைக் கூற்றுக்குத் தண்ணி கிடைக்குமோன்னுதான்.போன தடவை கூட நாலாந் தண்ணியோட குளம் வத்திப் பயிரெல்லாம் காஞ்சு போச்சு. காலபோகமும் மழையிலை அழிஞ்சிட்டுது" செல்லக்கிளி விளககமளித்தான்.
"என்னவோ.." என்றபடி நடந்தார் கந்தசாமி.
கந்தசாமியிடம் பணமிருந்தது. வேலையாட்கள் இருந்தார்கள், கூடவே அணைவும் இருப்பதால் வருடா வருடம் அடாத்தாக விதைத்து கள்ளத் தண்ணிர் பாய்ச்சிப் பயிராக்கிவிடுவார். இம்முறையும் வழங்கப் பட்ட காணிக்கு மேலாக பல ஏக்கர்களில் பயிரிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இவரது அடாவாடித் தனத்தால் உண்மையான பங்காளிகளுக்கு முறைத் தண்ணிர் கிடைப்பதில்லை. இதனால் செல்லக்கிளிக்கும் இவர் மீது வெறுப்பு.

முருகானந்தன் 93
செல்லக்கிளி பீடித்துண்டை எறிந்துவிட்டு மறுபடி யும் வயலில் இறங்க நினைத்த போது தொலைவில் அன்னம் சோற்றுக் கடகத்துடன் வந்து கொண் டிருந்தாள்.
பாலைமர நிழலில் கடகத்தை இறக்கி வைத்துவிட்டு *நல்லாய் வேர்க்குது" என்றபடி முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். 'சாப்பிடுவமே."
செல்லக்கிளி கூலியாட்களையும் கூப்பிட்டான்.
"இருங்க, காலெல்லாம் சேறாயிருக்கு, கழுவிட்டு வாறன்" எழுந்து வாய்க்காலுக்குப் போனாள் அன்னம். அவளது இயல்பான எழிலிலும், அன்ன நடையிலும் ஒரு கணம் சொக்கிப் போனான் செல்லக்கிளி. "நான் குடுத்து வைச்சவன்.ம்.இந்த அறுவடையோட யெண் டாலும் ஒரு சங்கிலி வாங்கிக் குடுக்க வேணும். மீண்டும் கற்பனைகள் விரிந்தன. ஒரு வித எதிர்பார்ப்பில்தானே பலரின் வாழ்வு மகிழ்வோடு ஒடிக் கொண்டிருக்கிறது.
எல்லாரும் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வயலில்
இறங்கினார்கள், மாலையாவதற்குள் நடுகை முடிந்து விட்டது.
அடியுரமிடப்பட்டிருந்ததால் பயிர்கள் பசுமையாக வளர ஆரம்பித்தன. இரண்டாம் உரமிட்டு, பூச்சிக்கு மருந்தும் அடித்த பின்னர், பச்சைக் கம்பளமாய் விரிந்தி ருந்த வயற்பரப்பின செழுமையின் பொலிவில் பூரித்தான் செல்லக்கிளி;
இம்முறையும் வழக்கம் போல் பலர் அடாத்தாகவும் விதைத்திருந்தனர். கந்தசாமியின் பங்குதான் அதில் அதிகம். செய்ய வேண்டியதைச் செய்து கள்ளத் தண்ணி பாய்ச்சி வந்தார் கந்தசாமி, அதிகாரிகளும் கண்டும் காணாமலும் நடவடிக்கையெதுவும் எடுக்காமல் இருந் தனர், பின் மழை பெய்து குளத்தில் நீர் நிரம்பியிருந்ததால்

Page 50
*94 மீன் குஞ்சுகள்
*முதலில் யாருக்குமே பாதிப்பேற்படவில்லை. நாலாந் தண்ணியோடு'கதிர் வெடிக்க ஆரம்பித்தபோதுதான் நீர்ப் பாய்ச்சுதலில் பிரச்சினைகள்தோன்றின.
அன்று முறைத் தண்ணிர் பாய்ச்ச வந்த செல்லக்கிளி புடைத்துச் செழித்து குடலை தள்ள ஆரம்பித்த பயிரின் பொலிவில் தன்னை மறந்து ஒரு கணம் பூரித்தான். கற்ப னையில் அன்னத்தின் களுத்தில் சங்கிலி நெளிந்தது. பக்கத்துக் காணியில் நீர் நிரம்பி வடிய ஆரம்பித்ததும் தனது மடையை வெட்டித் திறந்துவிட்டு வீட்டிற்குப் புறப் பட்டான்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வயலில் தண்ணிர் பாய்ந்திருக்கவில்லை. வாய்க்காலில் வந்து கொண்டிருந்த தண்ணிரையும் காணவில்லை மேலே கந்தசாமியின் ஆட்கள் மறித்துக் கட்டிவிட்டார்கள். என்பதை ஊகிக்க அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
பெருவரம்பில் தாவி ஏறி வாய்க்கால் கரையோடு நடந்தான் செல்லக்கிளி. கந்தசாமியின் அடாத்த வயல் களில் தண்ணி அலையடித்துக் கிடந்தது. முறைக்கார னான அவனுக்கில்லாமல் தண்ணிரெல்லாம் அடாத்து வயலில் தேங்கி நின்றதைக் கண்டதும் அவனது உள்ளம் கொதித்தது.
இதற்கிடையில் ஒவசியர் இரண்டாம் வாய்க்காலை மறித்துக் கட்டி மூன்றாம் வாய்க்காலைத் திறந்து விட்டு விட்டார். செல்லக்கிளிக்குக் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை. ஒவசியரிடம் கெஞ்சினான். அவர் மசிய வில்லை. "உன்றை முறை முடிஞ்சுது. அடாத்துக் காரன்பாச்சினதுக்க நான் பொறுப்பே' அவரைக் கெஞ்சிப் பயனில்லை என்றறிந்ததும் கந்தசாமி யிடம் நியாயம் கேட்கப் போனான். அதற்கு அவரோ குதர்க்கம் பேசியதோடு அடியாட்களைக் கொண்டு மிரட்டவும் ஆரம்பித்தார். வீண் வம்பு தும்புக்குப்

-47. Cyf (g85 1768.7 556w 95
போகாத செல்லக்கிளி பின் வாங்க நேரிட்டது. ரி ஏ.யிடம் ஓடினான். "அடுத்த முறை முழிச்சிருந்து பாய்ச்சு" என்று கூறினார்.
அடுத்த தவணை வர இன்னும் இரண்டு வாரம் தாமத -மாகுமே. அதற்குள் பயிர் கருக ஆரம்பித்து விடுமே.
அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக செழித்து வந்த பயிர், இளமஞ்சளாகி கருக ஆரம்பித்தது. வானைப் பார்த்தான் மழையும் கை கொடுக்கவில்லை. வயல் எல்லாம் பாளம் பாளமாக வெடிக்க ஆரம்பித்தது. செல்லமாய் வளர்த்த குழந்தை நோயில் வாடும்போது ஏற்படுகின்ற தவிப்பு அவனுக்கு "கடவுளே இந்த முறை யும் வேளாண்மை பிழைச்சுதெண்டால் கடன்காரருக்கு என்ன மறுமொழி சொல்லுகிறது?
அடுத்த தண்ணீர் முறை வந்த போது பயிர் கருகத் தொடங்கி விட்டது. எனினும் இம்முறை நன்றாகப் பாய்ச்சினால் பயிரெல்லாம் தப்பிப் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் மனது அமைதி கொண்டது.
முறைத்தண்ணிரை வெட்டிவிட்டு விட்டுகண்விழித்துக் காத்திருந்தான் செல்லக்கிளி. ஒரு மாதிரி பயிரெல்லாம் தப்பியிடும்" என்று எண்ணியபடி யே கைகளில் படிந்த சகதியை ஒடி வரும் வாய்க்கால் நீரில் கழுவினான். தண்ணிரின் வேகம் குறைவது புரிந்தது. "கட்டை போட்டு மறிச்சுக் கட்டியிட்டாங்கள் போல" என்று ஆவேசமாக ஓடினான். அவன் எதிர் பார்த்தபடியே கந்தசாமியின் ஆட்களின் வேலைதான்.
வாய்க்காலைக் குறுக்காக மறித்துக் கட்டி தமது வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். உதென் னடா வேலை? அவன் பணிவாகத் தான் கேட்டான்.
"எங்களைக் கேட்க நீர் ஆர்?’ சூடாகக் கேட்டான் ஒருவன்.

Page 51
96 மீன் குஞ்சுகள்
முறைத் தண்ணிக்காரன்"
ஒவசியரைக் கேளும் மண்வெட்டியால் ஓங்கி மிரட்டி атптейт .
செல்லக்கிளி ஒவசியரிடம் ஓடினான். "அவங்கள் சண்டியன்கள். எனக்கும் வெளுத்துப் போடுவாங்கள்" வசியர் பயந்து பின்வாங்கினார். வெறும் பாவனை தானோ?
"இனி என்ன செய்வது?-மனது பலமாக அடித்துக் கொண்டது. சோர்வோடு வீட்டுக்குத் திரும்பியவன், மனைவியிடம் அனைத்தையும் கூறினான்.
"நாங்கள் பணிஞ்சு போறதுதான் பிழை. கெஞ்சி னால் மிஞ்சுறவங்களை மிஞ்சித்தான் umTř 'Gum Glo!”
حسه، و (oéelao --

10. புதுயுகப் பிரவேசம்
சயிக்கிள் ஸ்டாண்டில் விடுகின்ற சத்தமும், தொடர்ந்து செருமுகின்ற சத்தமும் கேட்டு சந்திரகாந்தா நிமிர்ந்து பார்த்தாள். எதிர்பார்த்த மாதிரி வித்தியாதரன் வந்து கொண்டிருந்தான். வாங்க" என்றபடி தையல் மெசினிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்து விட்டவள் *அண்ணை இல்லை" என்று சிரித்தாள். "நெல்லியடிக்குப் போனவர் வார நேரம்தான்"
"அம்மா." என்றிழுத்தான் வித்தியாதரன்.
சங்கக்கடைக்குப் போட்டார்" கதவைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் சந்திரகாந்தா. வித்தியாதரனுக்குச் சங்கடமாக இருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணோடு நிற்பதில் சிறு தயக்கம். அப்ப நான் பேந்து வாறன்." என்று திரும்ப நினைத்த வித்தியாதரனைக் கொக்கி போட்டு இழுத்தாள் சந்திர காந்தா. 'வந்து உள்ளே இருங்கோ. நான் தேத்தண்ணி போடுறான். இப்ப அண்ணை வந்திடுவர். லேஸ் வாங்கி வரத்தான் அனுப்பினனான்."
வித்தியாதரன் தயக்கத்துடன் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான், அவள் தேநீர் கொண்டு வந்து வைத்து விட்டு மறுபடியும் தையல் மெசினில் வந்தமர்ந்து கொண்டாள்.
அவன் தேநீரைப் பருகிய படி நிமிர்ந்து நோக்கினான். அவள் குறையில் விட்டுவந்த பிளவுசை மீண்டும் தைக்க
6-7

Page 52
98 மீன் குஞ்சுகன்
ஆரம்பித்தாள், அவளும் நிமிர்ந்து பார்த்தாள் எப்படித் தொடர்ந்து பேசுவது? என்ன பேசுவது என்ற தயக்கம் இருவர் முகத்திலும் தெரிந்தது.
"நீங்கள் தையல் பழகினனிங்களா? அவன்தான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.
'இல்லை" என்று மெதுவாகத் தலையசைப்பு கூடவே பெருமிதமும் நாணமும் கலந்து ஒரு புன் சிரிப்பு.
அவள் தலையில் கனகாம்பரச்சரம் இருந்தது. *ஷாம்பு' வைத்து முழுகிய பளபளப்பு கருங் கூந்தலில் தெரிந்தது. அவள் அணிந்திருந்த "வொயில்' சாறி அவளது நிறத்துக்குப் பொருத்தமாக இருந்தது.
*சேட் எல்லாம் தைப்பீங்களா? மீண்டும் அவன்தான் பேச்சைத் தொடர்ந்தான்,
வலது கைப் பக்கமுள்ள வீலில் உள்ளங்கை பதித்து வேகமாக ஒடிக் கொண்டிருந்த மெஷினை மெதுவாக்கி "வடிவாகத தைக்கமாட்டன், சின்னப் பொடியளுக் கெண்டால் தைக்கேலும்."
மீண்டும் மெஷின் வேகமாக ஓடியது. "எனக்கு ஒரு சேட்டுத் தைச்சுத் தருவியளே? "கிளுக்' என்ற சிரிப்புடன் ஒரு தலை கவிழ்ப்பு மெஷின் மேலும் சிறிது நேரம் ஒடி நின்றது. ஊசியை உயர்த்தி சட்டையை எடுத்து தொடர் நூலை வாயால் அறுத்து விட்டு, "நான் தைச்ச சேட்டைப் போட்டால் பிறகு உங்களை ஒருத்தரும் பாக்காயினம்" அவள் அழகாகச் சிரித்தாள்,
"இப்ப மட்டும் என்னவாம்? ஆரும் பாக்கினமே?” உதட்டைப் பிதுக்கியபடி சொன்னான் வித்தியாதரன். அவள் அவனை ஆழமாகப் பார்த்தாள். அவனும் பார்த் தான். பார்வைகள் ஆயிரம் அர்த்தங்கள் கூறி நின்றன .

- முருகானந்தன் 99.
வித்தியாதரன் இந்த வீட்டுக்குப் புதியவனல்ல. மாஸ்டர்-சந்திர காந்தாவின் அப்பா-உயிருடன் இருந்த காலத்திலேயே அடிக்கடி வந்து போயிருக்கிறான். அவனது அம்மா அரிசியிடிக்க தொட்டாட்டு வேலைகள் செய்ய வருகின்ற காலங்களில்-அப்போது அவன் சின்னக் குழந்தை அவனையும் கொண்டுதான் மாஸ்டர் வீட்டுக்கு வருவாள்
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் வித்தியா தானின் உறவினர்கள் மாஸ்டரின் சமூகத்தவர்களின் விட்டில் தொட்டாட்டு வேலைகள் செய்தார்கள். கலியாணவீடு செத்த வீடு, திவசம். அந்தியேட்டி இப்படி யாது விசேட நாட்களில் சமையல் வேலை இவர்களது பொறுப்புத்தான். ஆனால்கால ஓட்டத்தில் விழிப்புணர்ச்சி ரர் பட்டு இனி அடிமைத் தொழில் செய்வதில்லை என்று வி தியாதரனின் சமூகத்தவர்கள் முடிவுகட்டிய பின்னரும் கூட அவனது தாயார் வறுமை காரணமாக தொடர்ந்து ருத்தல், இடியல் வேலைகளை, கூலி வாங்கிச் செய்து வந்தால். வித்தியாதரன் தலையெடுத்து வந்த பின்னர் தான் முற்று முழுதாக குடிமைத் தொழிலைச் செய்யாமல் விட்டாள்.
வித்தியாதரன், மாஸ்டரின் மாணவனாக அவரது மகன் பிரபாகரனுடன் ஒரே வகுப்பில் தொடர்ந்து விக்கினேஸ்வராக் கல்லூரியிலும், பின்னர் பல்கலைக் கழகத்திலும் படித்தவனாதலால் இருவருக்கும் பால்ய பிராயம் தொட்டு சிநேகம் இருந்து வந்தது. அந்த இரு குடும்பத்தவர்களுக்குமிடையில் சாதி ஒரு வேலியாக இருக்கவில்லை.
மாஸ்டரின் திடீர் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிட்டா லும், பிரபாகரன் பட்டம் பெற்று வெளியேறி ஆசிரிய நியமனம் பெற்ற பின்னர் தலையெடுக்க ஆரம்பித்தது.

Page 53
00 மீன் குஞ்சுகன்
ஐந்து பெண்களைக் கரை சேர்த்தால் அரசனு ம் ஆண்டி யாவான் என்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தைப்" பொறுத்த வரை ஒரு பெண்ணுக்குச் சம்பந்தம் செய்து வைத்தாலே பெற்றோர்கள் துறவறம் பூண வேண்டியது தான்! இந்த லட்சணத்தில் பிரபாகரன் எம்மாத்திரம்?-- இரண்டு அக்காமாருக்குத் திருமணம் செய்து வைத்ததி லேயே கடனாளியாகி விட்டான். இப்போது தங்கை சந்திரகாந்தா இருபத்தியெட்டு வயதில் பயமுறுத்திக் கொண்டு நின்றாள். அதற்குப் பின்னர் சிவராசினிகடைக்குட்டி".
மாஸ்டர் குடும்பத்தில் எல்லோரும் நல்ல பிரயாசை அந்த நாளிலே, மாஸ்டர் வெண்காயம், மிளகாய், ரியூசன் என்று ஒரு நேரம் சும்மா இருக்க மாட்டார். அவரது வாரிசு பிரபாகரனும் அப்படித்தான். பெண்கள் மட்டும் சும்மாவா? தாயார் சந்தை வியாபாரம், சந்திரகாந்தா தையல் வேலை, சிவராசினி கோழிவளர்ப்பு
நியமனம் பெற்றுப் பிரிந்து போன பின்னரும் கூட ; பிரபாகரனும் வித்தியாதரனும் அடிக்கடி சந்தித்துக் சொள்ளத் தவறுவதில்லை. அப்படியான நேரங்களில் எல்லாம் பிரபாகரன் தங்கையின் திருமணம் பற்றிப் பிரஸ் தாபிப்பான். "உனக்குத் தெரிஞ்ச இடங்களில் இருந்தால் பார் வித்தி. சின்னதாயெண்டாலும் ஒரு உத்தியோக மாப்பிளையாய் பார்.மூத்ததுகளுக்கு உத்தியோகத்திலை செய்து கொடுத்ததால் இவளுக்கும் அப்பிடி ஒரு எதிர் பார்ப்பு.
அடிக்கடி இப்படிக் கூறினாலும் "வித்தி நீ என்ர தங்கச்சியைச் செய்யன்' என்று ஒருநாள் கூடக் கேட்ட தில்லை. அப்படிக் கேட்டால் இவன் "ஓம்" என்று விடு வான்,
பிரபாகரன் அப்படிக் கேட்காதற்குக் காரணமும் இருந்தது. இன்றுவரை அந்தக் கிராமத்தில் இவர் சளிரு.

9 \tyn, '') straw AS Sair O
வரின் சமூகத்தவர்களும் கலந்து பழகினாலும் திருமணத் தால் ஒன்று சேர்ந்ததில்லை. பரம்பரை பரம்பரையாக வந்த பண்பாட்டுப் போலிகள் இன்னமும் இதயத்துள் நீறுகொண்ட நெருப்பாய் இருந்து சாதி பேதம் பார்க்க வைத்துக் கொண்டிருந்ததுதான் காரணம்.
தனிப்பட்ட முறையில் பிரபாகரனிடமோ, அவனது குடும்ப உறுப்பினர்களிடமோ துளியும் துவேசம் கிடை யாது. ஆனால் சமுதாய வரம்பை மீற முடியாமல்.
தைத்து முடித்த சட்டையை எடுத்து மடித்து வைத்து விட்டு சந்திரகாந்தா எழுந்து வந்து "லைற்றைப் போட் டாள். "இப்ப போட்டால்தான் ரியூப் பல்ப் பத்தும். ஆறு மணிக்குப் பிறகு கறன் ற் குறைஞ்சு போறதால பத்த 09வக்கேலாது"
"என்ன பிரபாவை இன்னும் காணேல்லை." வித்தியாதரன் சொல்லிக் கொண்டிருக்கும் போது கேற் கிறீச்சிட்டது.
பிரபாகரன் தான் !
நண்பர்கள் நீண்ட நேரம் உரையாடினார்கள். வித்தியாதரன் வீட்டிற்குத் திரும்ப எட்டு மணியாகி * ليـسا -الهده
அன்று முழுவதும் அவன் சந்திரகாந்தாவின் நினை வாக இருந்தான். தனது சாதியைப் பற்றி இன்றுதான் எண்ணிக் கவலைப்பட்டான், மனதில் எழுகின்ற நியாய பூர்வமான உணர்ச்சிகளுக்குக் கூட சாதி தடை போடு கிறதோ?
தினம் தினம் மனதில் புழுக்கம் சந்திர காந்தாவும் கிட்டத்தட்ட அந்த நிலைதான். சந்திப்புகள் தொடர்கை யில் உணர்வுகளை மறைக்க முடியாமல் போக, அது காதலாய் அரங்கேறியது.

Page 54
102 lair (55atasair
பிரபாகரன் இதைக் கேள்விப்பட்டதும் சிறிது ஆடித். தான் போனான். தங்கையின் உறுதியும், அவள் பக்கத்தில் இருந்த நியாயமும் அவனைச் சிந்திக்க வைத்தது.
(plgoo one
திருமண நாளும் குறித்தாகிவிட்டது. செய்தி ஊரெல்லாம் பரவ. அவனது சமூகத்தவர்கள் வெகுண்டெழுந்தார்கள்,
*செல்லாச்சி.ஊரைப் பகைக்கிறதெண்டு வெளிக்கிட் டுட்டியோ" முற்றத்தில் கேட்ட அட்டகாசமான குரலில் பிரபாகரன் எட்டிப் பார்த்தான். 'தம்பியும் நிக்கிறீரே. ம்.உமக்குப் புத்தி கெட்டுப் போச்சே?." கந்தையர் ஆவேசமாகக் கேட்க, அவரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கிசுகிசுத்தனர்.
'எங்கட குலமென்ன, கோத்திரமென்ன. சாதியிலை இல்லாத மாதிரி புதிசா வெளிக்கிட்டிருக்கிறியள்” கந்தையரின் அட்டகாசச் சிரிப்பு அவர் வெறியில் நிற்கி றார் என்பதைப் பறைசாற்றியது.
அம்மா பதறிக் கொண்டிருந்தா. உள்ளேயிருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சந்திரகாந்தா விற்கு நெஞ்சை அடைத்தது. பிரபாகரன் முன்னால் வந்து "ஏன் மாமா முத்தத்திலை நிண்டு சத்தம் போடுறியள்? உள்ள வந்து ஆறுதலாகக் கதையுங்கோவன்" என்றான்.
“சீ. கேடு கெட்டுப் போன உன் ர வீட்டுத் திண்ணை யிலும் இனி மிதிக்கமாட்டம். எங்களுக்கு மானம் ரோசம் இல்லை எண்டு நினைக்கிறயே.சீ.தூ."
"மாமா...மரியாதை வேணுமெண்டா மரியாதை கொடுத்துப் பேசுங்கோ. இனியும் நான் பொறுக்க மாட்டன்" என்று ஆவேசமாகக் குறுக்கிட்டான் பிரபாகரன்.

ச. முருகானந்தன் 103
சரி..அப்படியாப் போச்சோ? நீ படிச்சனியெல்லே கொஞ்சம் யோசிச்சுப் பாரன். நாளைக்கு
எங்கட ஆக்களை அவர்கள் மதிப்பாங்களே.'
மாமா கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கோ. என்ர தங்கச்சியை வித்தியாதரனுக்குச் செய்து வைக்கப்போறன் அவன் நல்ல பொடியன், ஆயிரம் ரூபாய்க்கு மேலசம்பளம் எடுக்கிறான் தங்கச்சியை விரும் புறான். அதுக்கு மேலை என்ன கண்டறியாத சாதியும் இளவும்"
"ஏன் எங்கட சாதியிலை ஒரு மாப்பிளை உமக்குக் கிடைக்கயில்லையே?
"ஏன் உங்கட மகனைக் கூட கேட்டு வந்தனாள் தானே? எழுபத்தையாயிரம் சீதனம்;கேட்டனிங்களெல்லே எங்கட குடும்ப நிலை அறிஞ்சும் இப்படிக் கேட்டியள்
"உத்தியோக மாப்பிளை எண்டால் அப்படித்தான் இப்பமாக்கெற். ஏன் நீ உன் ர பொருளாதார நிலைக்கு ஏற்றமாதிரி பாத்திருக்கலாம் தானே?"
ஏன், கதிராமரின்ர மகன் இல்லையே? இருபதாயிரம்
தானே கேட்டவர்" அருகே நின்ற நல்லதம்பி குறுக்கிட் ι πή
*அந்தக் குடிகாரனுக்குச் செய்து கொடுக்கிற நேரம் அவள் வீட்டிலேயே இருக்கலாம்" கோபாவேசத்துடன் கூறிய பிரபாகரனைக் கண்டு கந்தையர் ஒரு கணம் நடுங்கித்தான் போனார்.
பிரபாகரன் தொடர்ந்தான். 'வித்தியாதரனும் உத்தியோக மாப்பிளைதான். சீதனம் ஒரு சதமும் கேட்க வில்லை.
கந்தையர் முடிவாகக் கேட்.ார். இப்ப நீ முடிவாக என்ன சொல்லுறாய்?"

Page 55
04 மீன் குஞ்சுகள்
"நான் அதுதான் அப்பவே சொல்லிவிட்டனே கலியாணம் நிச்சயித்தபடி நடக்கும்"
* உனக்கு அவ்வளவு திமிரோ? ஊரோட ஒத்து நிற்காட்டில் இனி உன்ர வீட்டுக்குச் செத்தவீடு, கலியான வீட்டுக்கும் ஒருத்தரும் இல்லையெண்டு நினைச்சுக் கொள். கந்தையர் முடிவாகச் சொன்னார்.
"மாமா. உங்கட மூத்தவன் மனோகரன் ஒரு வெளி நாட்டு வெள்னளக்காரியைச் செய்தது சரியெண்டால், நல்லதம்பிக் கிளாக்கரின்ர நடுவில் கமாரசாமி சிங்களத் தியைச் செய்தது சரியெண்டால், இப்ப என்ர தங்கச்சி ஒரு ஒரு தமிழனைச் செய்யுறது மட்டும் பிழையே? உங்கட நெஞ்சிலை கை வைச்ஆச் சொல்லுங்கோ' பிரபாகரன் நிதானமாகக் கேட்டான்.
கந்தையரால் பதில் சொல்ல முடியவில்லை. அதுவும் சரியான கேள்விதான் கூட வந்த ஒருவர் முணு
முணுத்தார்.
2) -மல்லிகை

11. எங்கேதான் வாழ்ந்தாலும்
உக்கிரமமாகப் பெய்து கொண்டிருந்த பணியையும் பொருட்படுத்தாமல். காற்றோ வெளிச்சமோ வராத அந்தச் சின்னஞ்சிறிய சமையல் அறைக்குள் ஈர விறகு எழுப்பிய புகை மண்டலத்திற்குள் முழுகி, இடிந்து போய்க்கிடந்த மண்ணடுப்பின் எதிரே அமர்ந்துகொண்டு தண்ணிரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.
அடுப்புப் புகட்டில் குப்பி விளக்கு எரிந்து கொண் டிருந்தது. அதிகாலையின் வரவை சேவல் அறிவித்து விட்ட போதிலும் வெளியில் இன்னமும் இருள் முற்றாக விலகவில்லை.
முத்தையா அறை மூலையில், சாக்கைப் போர்த்திக் கொண்டு முடங்கிப் போயிருந்தான், அந்தச் சின்னஞ் சிறு குடிசை வீட்டில் குசினியும், ஒரு அறையும் தாவார மும் மாத்திரம்தான் இருந்தது. மலையக குச்சு லயங் களில் வாழ்ந்து பழக்கப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதியதல்ல.
பம்பலக்கல்லை எஸ்டேட்டில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த காலத்திலையே வறுமைக்கும் பட்டினிக்கும் பழக்கப்பட்டவர்கள் தான். மலையத்தின் கொடுங்குளிரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, உடமை வர்க்கங்களுக்காக உழைத்து உழைத்துக் கண்ட மிச்சம் எதுவும் இல்லை. இருந்த கொஞ்ச நஞ்சப் பாத் திரம் பண்டங்களையும் பிற உடமைகளையும் 83 கலவரத் தில்முற்றாக இழந்துவிட்டு, கட்டிய துணியுடன் அகதி

Page 56
108 மீன் குஞ்சுகள்"
முகாமுக்கு வந்து அங்கு ஆறேழு மாதம் அஞ்ஞாதவாசம் செய்து, கடைசியில் வன்னேரியிலுள்ள ஆணை விழுந் தான் குடியேற்றத் திட்டத்தில் வந்து சேர்ந்தான் முத்தையா.
அக்கராயன் அகதி முகாமிலிருந்தபோதுதான் கண்ணம்மாவைக் காதலித்துக் கைப்பிடித்தான். என் றாவது ஒரு நாள் விடிவு வரத்தான் செய்யும் என்ற அதீத நம்பிக்கையுடன் இருவரும் எத்தனையோ கஷ்டங் களுக்கு மத்தியிலும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தார்கள். *றெட்பானா’ வழங்கும் "ரேசன்" வயிற்றைக் கழுவ உதவியது. அவர்களின் உதவியோடு, தமக்கு வழங்கப் பட்ட காட்டு நிலத்தை வெட்டி, துப்பரவாக்கி மிசவும் கஷ்டப்பட்டு இந்தக் குடிசை வீட்டை அமைத்து விட் டார்கள்.
நேரிய காட்டுத் தடிகளை வெட்டிக் குத்துக்கால் நட்டு புத்து மண் வெட்டிச் சுமந்து வந்து மணலோடு கலந்து தண்ணிர் ஊற்றி ஊறவிட்டுப் பிசைந்து குழைத்து பெரிய பெரிய உருண்டையாக்கி, இருபக்கமும் பலகை யடித்து, நேர் தப்பாமல் அடுக்கி மொங்கானிட்டு இறுக்கி அந்த நான்கு சுவர்களையும் அமைக்க முத்தையாவும் கண்ணம்மாவும் பட்ட சிரமம் அளப்பரியது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுக்காக வைத்து வரிந்து கட்டி தென்னங் கிடுகுசளால் வேய்ந்து ஒருவாறு குடி வந்தாகி விட்டது. பாத்திரம் பண்டங்கள் இலவசமாக "றெட் பானா"வால் வழங்கப்பட்டது. அருகிலேயே கிணறு வெட்டுவதற்குப் பண உதவி கிடைத்த தால் சீக்கிரத்திலேயே அதையும் வெட்டிக் கட்டி முடித்து விட்டான் முத்தையா. ஒரு நாள் இவனது நிலத்தைப் பார்வையிட்ட நிர்வாகி நேரிலேயே தனது பாராட்டுதல் களைத் தெரிவித்தார்.

ச. முருகானந்தன் 107
"எல்லோரும் முத்தையாவைப்போல உழைத்தால் விரைவிலேயே வன்னேரி பொன்னேரியாகிவிடும்" அவரது பாராட்டுதல்கள் அவனுக்கு மேலும் உற்சாகத் தைக் கொடுத்தது.
வெட்டிப் பண்படுத்திய காணித்துண்டைச் சுற்றி நெருக்கமான வேலி அமைத்துப் பாதுகாத்து உள்ளே காய்கறித் தோட்டம் போட்டான். முத்தையா, தக்காளி. கத்தரி மிளகாய் போன்ற நாற்றுக்களை கிளிநொச்சியி லிருந்து வாங்கி வந்து பாத்தி அமைத்து நட்டான். அவனது முயற்சியைப் பாராட்டி அவனுக்கு ஒரு'வாட்டர் பம்ப்" வழங்கப்பட்டது. இதனால் அவனது முயற்சிகள் மேலும் உயர்ச்சி பெற்றன.
இடையிடையே ஊன்றப்பட்ட வெண்டை பூசணி, பயிற்றை வித்துக்களும், தூவப்பட்ட முளைக்கீரை விதை களும் பச்சை பிடித்து முளைக்கத் தொடங்கியிருந்தன.
வெறும் காய்கறித் தோட்டமாக மட்டும் நின்று விடாமல், ஒரு நிரந்தரத் தோட்டமாக அதை ஆக்கிவிட வேண்டும் என்பது கண்ணம்மாவின் ஆசை. கண்ணம்மா தன் எண்ணத்தைக் கணவனிடம் கூறியதும் அவனும் அதை ஆமோதித்து ஒரு புறத்தே வாழை மரங்களும், கரையோரமாகத் தென்னம் பிள்ளைகளும் நட்டான். தோடை எலுமிச்சை, பலா மா என்ற வகைக்கு ஒன்" றிரண்டு மரங்களாக நட்டுப் பாதுகாத்தான்.
பெரு மரங்களை நட்டபோது விவசாய அலுவலர் களின் ஆலோசனைப்படி போதிய இடைவெளி விட்டு நாட்டிச் சதுரத்தில் இரண்டு முழ ஆழத்தில் கிடங்கு வெட்டி குழியில் உப்பும், சாம்பலும், எருவும் இட்டு பக்குவமாய் நாட்டினான், வானமும் வஞ்சகம் செய்யாத தால் வைத்த பயிரெல்லாம் வளமாய்த் துளிர்த்தன.

Page 57
03 மீன்குஞ்சுகள்
வரண்டு கிடந்த வாழையெல்லாம் புதிய இலைகள் *விட்டு தளிர்த்து வளர்ந்து தோகை விரித்தன. தென் னைகள் குருத்துவிட்டன. மாவும் பலாவும் வேரூன்றின.
காய்கறி பலன் தரத் தொடங்கியதும் இவர்களது கடன் பழு கொஞ்சம் குறைந்தது. கிளிநொச்சியில் வாரத் தில் இரண்டு நாட்கள் முறைச் சந்தை உண்டு. நாலா பக்கத்திலிருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் வரு வார்கள். தடங்கலின்றி விற்பனையாகுமாதலினால் முத்தையாவும் வாரத்தில் ஒரு தடவை முறைச் சந்தைக்குப் போவான். காய்கறிகளோடு வாழையிலையும் வெட்டிக் கட்டிக்கொண்டு விற்பனைக்குக் கொண்டு செல்வான்.
வன்னேரியிலிருந்து கிளிநொச்சி இருபது மைல்தான் -என்றாலும் காலையில் ஒரு தடவையும் பின்னர் மாலை யில் ஒரு தடவையும்தான் பஸ் வந்து போகும். பெருமழை என்றால் அதுவும் வராது.
இன்றும் முத்தையா சந்தைக்குப் போகும் முறை. அதுதான் அதிகாலையிலேயே கண்ணம்மா எழுந்து தேநீர் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறாள்.
அடுப்படியின் சலசலப்பில் அருண்ட முத்தையா எழுந்து காலைக்கடன்களை முடிக்க வெளியே சென்றான். இருளுக்கும் வெளிச்சத்துக்கு மிடையிலான அந்த மைமல் பொழுதில் வானத்து வெள்ளிகள் மங்கி மறைந்து கொண் டிருந்தன.
கண்ணம்மா தேநீரும் கையுமாக வந்தபோது, அடுக் -களைக்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள வாசற் படியில் புன்னகையோடு நின்று கொண்டு குறும்பாகச் சிரித்துக் கொண்டிருந்தான். கட்டையான சற்றே பெருத்த தோற்றம் அதனால் வயிறு தொந்தியாய்க் காணப்பட்டது.

ச. முருகானந்தன் 109
"இவ்வளவு வேலை செய்தும் வண்டி வத்துதில்லையே என்று செல்லமாகக் கேட்டபடி தேநீரை நீட்டினாள்" கண்ணம்மா.
"ஏன் அதால உனக்கு ஏதாவது இடை ஞ்சலா?
அவனது குறும்பைப் புரிந்து கொண்டு அவள் ராணத்தோடு சிரித்தாள்.
"ம் நானும் கஷ்டப்படுறேன் பலன்தான் இல்லை" அவளது மென்மையான வயிற்றுப்புறத்தையே நோக்கிய படி தேநீரை உறிஞ்சினான்.
"ஆமா, அதுக்கென்ன இப்ப அவசரம் இரண்டொரு வருஷம் போகட்டுமே" என்று சொன்னவள் சற்றுத் தயக்கத்தின் பின் தொடர்ந்தாள். "இந்த மாதம் இன்னும் முழுக்கு வரவீங்க"
"அப்படியா? என்று மகிழ்ச்சியோடு அவளை அணைத்து முத்தமிட்டான். "ஐயே ஒரு நேரம் காலம் இம்லீங்களா? எப்ப பார்த்தாலும் இதே எண்ணம்தான், அவள் பிகு டண்ணினாள். தேத்தண்ணி ஆறுது எடுத்துக் குடிங்க”
"நீ குடிச்சியா? அன்போடு கேட்டான் முத்தையா.
அவனுக்கு மனைவிமீது அளவு கடந்த ஆசை. *கண்ணு கண்ணு" என்று உருகிப்போய் விடுவான் . அவளுக்கு அவன் மீது உயிர்.
"சரி பஸ் வரப்போகுதுங்க"
மரக்கறிகளை சாக்கில் கட்டினான். கத்தரியும் வெண் டியும் நிறைய இருந்தன. இரண்டு பெரிய பூசினிக்காய்கள், வாழை இலைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சந்திச்கு பஸ் ஏறப்புறப்படும்போது கேட்டான் *கண்ணு உனக்கு என்ன வேணும்"

Page 58
10 மீன் குளுசுகள்
நீங்கதான் வேணும். அடுக்கான பற்கள் பளிச் *சிட்டன.
“வந்து கவனிக்கிறேன்" எட்டி நடந்தான்.
பஸ் வழக்கம்போல நிறைந்த சனத்துடனேயே வந்தது, கால் வைக்க முடியாதபடி மூட்டை முடிச்சுகள். ஒருவாறு முடிச்சுக்களையும் ஏற்றித் தானும் ஏறிக் கொண்டான்.
பஸ் கிளிநொச்சியை அடைந்தது. துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. "ஐயோ, அம்மா" என்ற அலறல்கள்.
முத்தையாவும் வேறு சிலரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர் பாதுகாப்புப் படையினரைத் தாக்க முயன்ற பத்துப் பயங்கர வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி "லங்கா புவத் தெரிவித்தாக வானொலியும், ரூபவாகினியும் அறி வித்தன.
-மல்லிகைக

12. புதிய பரிணாமங்கள்
பொன்னன் சாப்பிட்டுட்டு வந்து மிச்ச வேலையைச் செய்வம் மாணிக்க வாத்தியாரின் அழைப்பில் நிமிர்ந்த பொன்னன் மண்வெட்டியை ஒரு ஒரமாக வைத்துவிட்டு நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.
"நாம் போக. இந்தப் பளையையும் கொத்திப் போட்டு வாறன் நயினார்" பொன்னன் பணிவோடு கூறி னான். பொன்னனின் அடுத்த அடுத்த தலைமுறையினர் எல்லாம் எவ்வளவோ முன்னேறி விட்ட நிலையிலும் பழக்க தோஷத்தால் அவன் பழையவனாகவே இருந்தான். அதே பணிவு, அதே அடிமைத்தனம்.
பொன்னனின் மகன் மார் அவனது இந்தப் போக்கைக் கண்டித்துப் பேசுவார்கள் "ராசா. நான் இன்னும் கொஞ்ச நாளைய ஆள், எப்படியோ இருந்திட்டுப் போறன். நீங்கள் நல்லாயிருந்திட்டால் போதும்"
அப்புவை மாத்த முடியாது என்று மக்கள் சலித்துக் கொள்வார்கள். "அம்மாவின்ரை குறுக்குக் கட்டையும் மாத்தேலாது" என்று மக்கள் மார் சலித்துக் கொள் வார்கள்.
பொன்னன் தனது மூதாதையர் செய்து வந்த மர மேறும் தொழிலையும், தோட்டக் கூலி வேலைகளையுமே தனக்குத்தெரிந்த நாட்தொட்டு செய்து வருகிறான். அவனது வாழ்நாளில்தான் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் மும்முரமாக நடந்தது. ஆலயப் பிரவேசம்,

Page 59
112 மீன் குஞ்சுகள்
தேநீர்க் கடைப் பிரவேசம், அடிமை - குடிமை மறுப்பு முதலான போராட்டங்களில் எல்லாம் அவன் நேராகக் கலந்து கொள்ளாவிட்டாலும் முழுக்க முழுக்க அதை வரவேற்றான். எனினும் அவன் அதிகம் மாறவில்லை.
இருக்கிறது இன்னும் கொஞ்ச நாள்" இதுதான்" அவன் சொல்லும் சமாதானம்.
மாணிக்க வாத்தியாரின் வீட்டிலும், காணியிலும், தோட்டத்திலும் அந்த நாட்தொட்டே பொன்னன்தான் வேலை செய்வான். வாங்கிய கூலிக்கு வஞ்சகமில்லாமல் உழைப்பவனாதலினால் மாணிக்க வாத்தியாருக்கும் அவனில் வலு விருப்பம். சாதி வெறி தலைவிரித்தாடிய அந்த நாட்களிலேயே பொன்னனுக்குக் கிளாசில் தேநீர் கொடுத்துக் கெளரவித்தவர் என்ற வகையில் மாணிக்க வாத்தியார் மீது அவனுக்கும் பெருமதிப்பு உண்டு. மாணிக்கவாத்தியாரின் மகள் சந்திராவின் சீதனக காணி யில் குலை தள்ளிக் காய்த்திருக்கும் தென்னை மரங்கள் யாவும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பொன்னனால் நாட்டப் பட்ட வைதான். வேலியடைப்பு என்றாலும் சரி குப்பை சுமத்தல் என்றாலும் சரி, தோட்டம் கொத்துதல் என்றாலும் சரி பொன்னன்தான் அங்கே நிற்பான்.
பொன்னனைத் தவிர வேறு கூலியாட்களை அவர் பிடிப்பதில்லை. அவனோடு சேர்ந்து தானும் ஒரு கூலியாக வேலை செய்வது அவரது வழக்கம். இன்று வன்னேரியில் டாக்குத்தராக இருக்கும் அவரது மருமகன் கொண்டுவந்த கொடி எலுமிச்சை மரங்களையும், தோடை மரங்களையும் அடியுரமிட்டு நாட்டுவதற்காகவும், வேலியடைப்புக்கு ஒலை வெட் டவுமே பொன்னனை அழைத்திருந்தார் மாணிக்க வாத்தியார்.
ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த சார்வோலைகளை ஒன்றாகக் கட்டி தலையில் சுமந்தபடி மாணிக்கவாத்தி

க முருகானந்தன் 13
வாரின் வீட்டை அடைந்தான் பொன்னன். தலையிலிருந்த அலைக்கட்டை "பொத்" எனப் போட்டுவிட்டு திண்ணை யில் குற்தியபடி தலைப்பாகையாகக் கட்டியிருந்த சால் வைத்துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண் -mar.
சாப்பாட்டைக் கொண்டு வானை" குசினிக்குள் இருந்த மனைவியிடம் கூறுகிறார் மாணிக்க வாத்தியார் அவரது இரண்டாவது மகள் இந்திரா பிட்டும் சம்பலும் கொண்டுவந்து கொடுத்து விட்டு ஆட்டிற்குத் தண்ணிர் எடுத்துக்கொண்டு வைக்கப் போனாள்.
முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மாமரத்து நிழலில் அமர்ந்து கொண்டு மாணிக்கவாத்தியாரின் பேரக் குழந்தைகளான அகல்யா அனுசுயா, இந்திரன் ஆகி யோர் மண்விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டுவிட்டு எழுந்த பொன்னன் அவர்களது விளையாட்டை ஒரு கணம் ரசித்தான். மண்வீடு கட்டித் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகே மட்டை ad தடியொன்று கட்டி பக்குவமாக வைக்கப் பட்டிருந்தது.
"உதென்ன ராசா? பொன்னன் இந்திரனைக் கேட் Alnjaiv.
ogni diei...”
o Jair pringto"
"பிளேனிலை வந்து எங்கட வீட்டுக்குக் குண்டு போட்டால் சுட்டு விழுத்திறதுக்கு அவனது வீரமான பதிலில் பொன்னன் ஒரு கணம் மெய் சிலிர்த்தான். "மெய்யே உங்கட பேரன் சொன்னதைக் சேட்டியளே..? வாத்தியாரிடம் சொல்லுகின்ற பொன்னனின் கொடுப் புக்குள் ஒரு சிரிப்பு.

Page 60
14 மீன் குஞ்சுகள்,
"மக்கள் போராட்டத்தை சூழ்நிலைதான் உருவாக்கு கிறது. அடிக்குமேல் அடியடிச்சால் அம்மியும் நகரத்தானே செய்யும். அறுபதுகளில் உங்கட சாதியொழிப்புப் போராட்டமும் உப்பிடித்தானே உருவானது. இப்ப ஆமிக்காரன் அடிச்ச மாதிரி அப்ப எங்கடை ஆக்கள் உங்களை அடக்கியாளப் பாத்தினம். கடைசியிலை வெற்றி உங்களுக்குத் தானே? இப்பாதையில் போராட் டமும் கடைசியிலை வெற்றியும் நீதியின் பக்கம்தான், இருந்து பாரன்" மாணிக்க வாத்தியார் நீட்டி முழக்கினார். தேநீர் கொண்டு வந்த சந்திரா மகனைப் பெருமிதத் தோடு பார்த்தாள். "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பொன்னனிடம் தேநீரை நீட்டியபடியே பனங்கட்டி எல்லாம் கசிஞ்சு போச்சு" என்றபடி கடதாசித் துண்டில் பனங்கட்டியை நீட்டினாள். பனங்கட்டியை வாயில் போட்டு விட்டு பேப்பர் துண்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான் பொன்னன்.
என்ன பொன்னன் பேப்பரிலை போட்டிருக்கு கேட்ட சந்திராவின் உதட்டில் ஒரு சிரிப்பு.
"எனக்கென்ன தெரியுமாக்கும் வாசிக்க, என்றபடியே பேப்பரை அவளிடமே நீட்டுகிறான்.
"இன்றையிலையிருந்து வடக்குக் கிழக்கில ஒருத்தரும் கடலுக்கை மீன்பிடிக்கப் போகேலாதாம். காட்டுக்கிள்ளை யும் போகேலாதாம்"
பாவம் அப்பா மீன் பிடிக்கிறவையும், விறகு வெட்டு றவையும் என்னெண்டாம் சீவிக்கிறது" வெகுளி போலக் கேட்டான்.
"அதுதான் பொன்னன் எங்கட கஸ்டங்களை ஆரட் டைச் சொல்லி அழுகிறது நீதி சொல்ல வேண்டியவங் களே நிலை மாறி நிற்கையுக்கை நாங்கள் தொடர்ந்தும் பேசாமலிருந்து என்ன செய்யுறது தாவடி மாணிப்பாய்

47. (ypq585fTasov fiö456Äv 5
பக்கமெல்லாம் பிளேனிலை வந்து குண்டு போட்டதிலை கிழவன், குழந்தை, குருக்கள் எண்டு கன அப்பாவிகள் செத்துப் போச்சினம். மட்டக்களப்பிலையும், 66f நொச்சியிலையும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியளை உயிரேடை எரிச்சுப் போட்டங்களாம். கலிகாலம் முத்திப்போச்சு" சந்திரா பெருமூச்சு விட்டாள். 'வன்னேரிப் பக்கமும் ஒரே கரைச்சலாம். இவரும் அசண் டையாய் இந்திடுவர். அதுதான் எனக்கு நித்தம் பயம்"
"எங்கட பகுதிப் பொடியனையும் நெடுங்கேணியிலை சுட்டுப் போட்டாங்கள். நுளம் பெண்ணை ஒவசியராய் வேலை செய்து கொண்டிருந்த பொடியன். பாவம், இரண்டு பிள்ளையரூம் இருக்கு."
"பேப்பரிலை நானும் பார்த்தனான் பொன்னன்" என்றாள் சின்னவள் இந்திரா.
இந்திரா கோழிகளை முட்டைவிட அடைக்கச் சென்ற தும் பொன்னன் வாத்தியாரிடம் கேட்டான். "பிள்ளைக்கு சம்மந்தம் ஒண்டும் பேசயில்லையே ஆக்கும்:
"எங்கே ஊரிலை பொடியள் இருந்தால் தானே? கொஞ்சப் பொடியள் பரலோகம் போட்டுதுகள் . இன்னும் கொஞ்சம் வெலிக்கடையிலும், பூசாவிலையும் இன்னும் கொஞ்சம் உயிரைப் பணயம் வைச்சுக் காடு மேடு எண்டு திரியுதுகள். வசதியுள்ளதுகள் வெளி நாடெண்டு போட்டுதுகள். மிச்சமாய் இருக்கிறதுகளுக்கும் வேலை வெட்டியொண்டுமில்லை. வேலையிலை இருக்கிறதுகளும் எக்கச்சக்கமாய் சீதனம் எதிர்பார்க்குதுகள்" வாத்தியார் நெடுமூச்செறிந்தார்.
"என்னவாக்கும், நம்மட்ட இல்லாத காசு பணமே"
"என்ன பொன்னன் நீ, எல்லாரும் சொல்லுற மாதிரி நீயும் சொன்னால்? பொத்திப் பொத்திச் சேர்த்து வைச் இருக்கிறன் எண்டுதான் வாரிலை சொல்லுகினம். அவைக்

Page 61
6 மீன் குஞ்சுகள்
குத்தான் விளங்கயில்லை எண்டா உனக்கு விளங்க. வில்லை என்னட்டை எங்காலை காசு? எழுவத்தேளிலை காவத்தையிலை சிங்களவன் எல்லாம் அடிச்சுக்கொண்டு போயிட்டான். என்ர சம்பளம் செலவுக்கே மட்டு மட்டு. பிறகு இங்கை வந்து வந்து மிளகாய்த்தோட்டத்திலை கொஞ்சம் சம்பாதிச்சதை வைச்சுக்கொண்டு மூத்தவளின் ர காரியத்தை ஒருமாதிரி ஒப்பேற்றி போட்டன் பணக்கார மாணிக்க வாத்தியார் என்ட பெயர்தான். மகளுக்குச் சீதனமாய் ஒரு சதமும் போடயில்லை' இல்லைப் பாட்டு பாடினார் வாத்தியார்.
மேன் வெளிநாட்டிலையிருந்தும் ஒண்டும் அனுப்பு றேல்லையே ஆக்கும்? என்ர பெறாமேன் நிறைய அனுப்புறான்"
"அவன் இன்னும் அகதி முகாமிலைதான் இருக் கிறான். அனுப்புறதுக்குச் செலவளிச்ச காசே வந்து சேர
பில்லை”
"அப்ப பிள்ளையை ஏதாவது வேலையிலை சேர்க்க யில்லையே? படிச்ச பிள்ளையெல்லே பாக்க"
“என்ன செய்யுறது பொன்னன் எல்லாத்தும் இப்ப காசு வேணும். பத்தாயிரம் இருந்தால் ஆசிரியை வேலை எடுக்கலாம்.முந்திக் கொஞ்சக்காலம் எம்பீமார் அடிச்சினம் பிறகு அமைப்பாளர் மார் அடிச்சினம் இப்ப மந்திரிமாரைக் காணவேண்டியிருக்கு. அந்த நாளிலை சீனியர் பாஸ் பண்ணினவுடனை வீடு தேடி வந்துடுவங்கள் தங்கட பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கச் சொல்லி"
"இப்பவும் தேடி வருகினமாம்."
இது சம்பளமில்லாத வேலை. தொண்டர் ஆசிரியர்" "அப்ப நாங்கள் போவமே காணிக்கு?"

<1V..«0!b545f787 föAséAr
"உண்ணானைப் பொன்னன் உந்த ஒலையிலை இரண்டை சிறகடிச்சிட்டுப் போ, மாட்டுக்குக் கிளிச்சுப் போட்டிடலாம்" வாத்தியாரின் மனைவி அற்புதம் கூறி -னாள். வாத்தியாரின் மனைவி சாடிக்கேற்ற மூடி. ாதென்னோலைகளையெல்லாம் கிடுகாக்கி sssr Fridtól
விடுவாள். ஆடு, மாடு வளர்ப்பு என ஒரு நேரம் சும்மா இருக்கமாட்டாள்.
பொன்னன் கத்தியை எடுத்து விறு விறு' என்று ஓலைகள்ைச் சிறகடித்து விட்டு வாத்தியாருடன் புறப்பட் டான், மீண்டும் காணியில் வேலை தொடங்கியது.
"தென்னம் பிள்ளைகளுக்கும் காவோலை தாக்க வேனும் பொன்னன்” வாத்தியார் கதையோடு கதையாகக் காரியத்தில் கண்ணாக இருந்தார்.
வேலையும் ஓடியது. கதையும் தொடர்ந்தது.
அது சரி பொன்னன், உங்கடை வீட்டுப் பக்கம் தேற் றைக்கு என்னவோ பிரச்சினையாம்? பொடியள் துவக்குக் கொண்டு வந்தவங்களாம்"
"ஓம் வாத்தியார். சாதிப் பாகுபாடு அழிஞ்சு போச் செண்டதெல்லாம் வெறும் பேச்சுத்தான். கோயிலுக் குள்ளை போன தோடையும், தேநீர்க்கடைப் பிரவேசத் தோடையும் சாதிப் பாகுபாடு எல்லாம் அழிஞ்சு போச்செண்டு சொல்லேலாது நயினார். இப்பவும் நீறுபூத்த நெருப்பாக பல பேருடைய மனதில் சாதிவெறி இருக்கு" ,
"என்னடாப்பா, சோடிச்சுப் பேசுறாய்? விசயத்தைச் சொல்லன்.ம் பார்த்துக் கொத்து, வேரில பட்டுவிடும்
"உங்கட சிவலைத்தம்பி ஒவசியரின்ர மூத்த மோள் மூன்று மாதத்துக்கு முந்தி இயக்கத்துக்குப் போறன் ண்ண்டு எழுதிவைச்சிட்டுக் காணாமல் போனவளெல்லே. அவள் இயக்கத்திற்குப் போகையில்லையாம்".

Page 62
18 மீன் குஞ்சுகள்
"அப்ப."
"எங்கட சீனியன்ர பொடியன் சிவபாதத்தோட கூடிக் கொண்டு ஓடி வவனிக்குளத்தில இருந்திட்டு இப்ப சோடியாய் வந்திருக்கினம்".
*ஆர் அந்த மேசன் வேலை செய்யுற பொடியனோ டையோ?*
• • • ه ه طاه "இதென்ன அநியாயம்" "ஏனாக்கும் அநியாயம் எண்டுறியள்?"
"பெத்து வளர்த்து ஆளாக்கினவையை விட்டுட்டு உப்பிடி ஒடுறதே? வாத்தியார் ஒருவாறு சமாளித்தார்.
"அந்தப் பிள்ளைக்கும் இருபத்தெட்டு வயசாச்சு. கால நேரத்தோட கட்டி வைச்சிருந்தால் அது ஓடி யிருக்குமே?”
"எண்டாலும் பெத்ததுகளுக்கு இப்படி ஒரு தலை குனிவை ஏற்படுத்தியிருக்கக் கூடாதெல்லே’ என்றார் மாணிக்க வாத்தியார் . 'ஓடினதுதான் ஓடினவள் இந்தச் சினியளோனடதான் ஓடவேணுமே? சொந்தத்தில ஒரு பொடியனோட கூடி ஒடியிருக்கலாமே. மனதில் நினைத் ததை வாத்தியார் வார்த்தையில் வடிக்கவில்லை.
பிறகென்ன நடந்தது?"
எல்லாம் பழைய கதைதான். ஒவசியரின்ர ஆக்கள் சீனியன் வீட்டுக்கு வந்து பலாத்காரமாக தங்கட பெட்டை யைக் கூட்டிக் கொண்டு போகப் பார்த்தவை. அதுக் கிடையில் பொடியனையும் பெட்டையையும் ஒளிச்சுப் போட்டினம் எங்கட ஆக்கள்"
"அப்ப துவக்குச் சூடு”

ச. முருகானந்தன் 盟很罗
மேலதான் வெடி வச்சவை. ஆரோ இயக்கப் பொடியனாம், அவரும் கூட வந்து எச்சரிக்கை செய்” திட்டுப் போயிருக்கிறார். நாளைக்கிடையில பொம் பிளையை ஒப்படைக்காட்டில் நடக்கிறது வேறயாம்"
அப்ப சீனியன் என்ன செய்யப் போறானாம்?"
"அவைக்கு ஒரு இயக்கம் எண்டால், எங்களுக்கு, இன்னொரு இயக்கம் 'சப்போட்" இருக்கு. எங்கட பொடி யளும் இயக்கத்தில் இருக்கிறாங்கள்தானே?"
வாத்தியார் தலையைச் சொறிந்தார்.
"பொடியள் கண்ட கண்ட விசயங்களில தலையிட்டு வீணாகச் சப்போட் இழக்கப் போகுதுகள்" பொன்னனின் வார்த்தைகளிலுள்ள நியாயம் வாத்தியாருக்கும் புரிந்தது.
அன்று வேலை முடிந்து பொன்னன் போன பின்னரும் வாத்தியாரின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது. "இந்திராவுக்கும் காலாகாலத்தில் கலியாணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளும் ஒரு வேளை இப்படி ஒடிப்போகக் கூடும். அப்புறம் ஊரில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. வாத்தியாரின் மனதில் போராட்டம்.
கேட்டியே, ஒவசியரின் பெட்டை செய்த வேலையை மனைவியிடம் கேட்டார் வாத்தியார்.
"ஓம் நானும் கேள்விப்பட்டன்" "எங்கட இந்திராவுக்கும் காலாகாலத்தில கலியாணம்
செய்து வைக்க வேணும். இல்லாட்டில் ஏதும் ஏறுமா றாய்ப் போனாலும் கரைச்சல்”
"அதுதான் தம்பி போன கடிதத்தில எழுதினவ னெல்லே? ஜேர்மனியில் "சிற்றிசன் சிப்” எடுத்த பொடியன் ஒருத்தன் இருக்கிறானாம். இந்திராவை அங்கை அனுப்பி வைச்சால் கலியாணம் செய்து வைக்கலாமாம்?"

Page 63
12O மீன் குஞ்சுகள்
'அவ்வளவு தூரத்திற்கு கண்காணாத இடத்திற்கு
அனுப்பிப் போட்டு"
'தம்பியை விட்டிட்டு இருக்கையில்லையே? சந்திரா
ауто மருமோனும் எங்களோட இருக்கினம்தானே?"
"அதுகளும் வாற வரியம் சிங்கள வாருக்கு மாற்றம் வந்தால் விட்டிட்டு கனடாவுக்குப் போற பிளான்"
"நீங்கள் எல்லாத்துக்கும் தடை. பாஸ்போட்டை முதலில் எடுப்பம்"
வாத்தியார் இறுதியில் மனைவியின் பக்கம் சாய்ந் தார். "சரி உன்ர விருப்பம்’.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்திரா ஜேர்மனிக் குப் பயணமானாள். அங்கே தமையன் முன்னின்று அவளது திருமணத்தைச் செய்து வைத்தான்.
விமானத் தபாலில் கலியாணப் படங்கள் வந்தன. வாத்தியார் பெருமிதத்தில் மிதந்தார்.
நல்ல சோக்கான ஆம்பிளை, சோடிப் பொருத்தமும் நல்லாயிருக்குக் கண்டியே? மணிசியிடம் பெருமையாகச் Gagntaireport f.
"இப்பிடி ஒரு மாப்பிளை சீதனமும் கொடுக்காமல் கிடைச்சது பிள்ளையின்ர அதிஸ்டம்தான். அவள் பிறந்தபோதே ராசியான சாதகம் எண்டு தியாகுச் சாத்திரியார் சொன்னவர் பாருங்கோ" அற்புதமும் மகிழ் :வோடு கூறினாள்.
இவர்கள் பெருமையடிப்பதைக்கேட்ட மூத்தவள் சந்திரா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டாள்.
தாத்தா, ஊஞ்சலாட்டி விடுங்கோ. முற்றத்திலிருந்த அகல்யா அதிகாரத்தோடு அழைத்தாள். சித்தியின்ர படம் வந்திருச்குச் செல்லம்" என்றபடியே பேர்த்தியை

து (புருகானந்தன் 2
வஞசலாட்ட வந்தார் வாத்தியார். "சித்தி வேணாம்" சான்றாள் அகல்யா,
'மாப்பிளைக்கு மாசம் பதினையாயிரம் வரும்படி பாம்" வாத்தியாரின் பெருமிதம் அடங்கியபாடில்லை. சந்தோசமாக ஊஞ்சலாட்டியபடி மனைவியிடம் தனது மகழ்வான மன நிலையைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
"இந்திரா போனதோட இப்ப ஆடு மாட்டு வேலையும் என்னோடு பொறுத்துப்போச்சு" வாத்தியாரின் சம்சாரம் களி நீரைச் சுமந்து கொண்டு ஆட்டுக் கொட்டிலுக்குச் சென்றாள்.
"ஆட்டுக் கொட்டிலும் மேய வேணும். பொன்னனுக்கு ஒருக்கால் சொல்ல வேணும்"
"பொன்னனை விட்டால் உங்களுக்கு வேற ஆளில் லையே அப்பா? சந்திரா கேட்டாள்.
"ஆரெண்டாலும் அவனைப் போல வருமே? அவன்னர Audulayb, வேலையும், மரியாதையும்" வாத்தியார் கூறினார்.
ஒரு வாரத்தின் பின் ஒரு சனிக்கிழமை பொன்னன் ஆட்டுக் கொட்டில் வேய வந்திருந்தான். மேலே ஏறி அவன் வேய கீழே இருந்து வாத்தியார் கிடுகு எடுத்துக் கொடுத்தார். உரையாடலுடன் வேலை தொடர்ந்தது.
"பொன்னன். என்ரை மேனுக்கு ஜேர்மனியில் வேலை கிடைச்சிட்டுது. மருமேன்தான் ஒழுங்கு பண்ணிக் கொடுத்தவர்" பொன்னன் பழைய சேதியைக் கேட்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தான்.
பிள்ளைக்குப் போன மாதத்திலிருந்து முழுக்கும் வரயில்லையாம்?
"மெய்யே? இப்போது ஆவலுடன் கேட்டான் பொன்னன்.

Page 64
22 மீன் குஞ்சுகள்
வெய்யில் ஏற முன்னர் வேய்ச்சல் முடிந்தது.
பொன்னன் வாவன் சாப்பிடுவம், மணிசி இட்டலி அவிச்சிருக்கிறா?' மாணிக்க வாத்தியார் அழைத்தார்
கைகால் கழுவிக் கொண்டு சாப்பிட அமர்ந்தான் பொன்னன்.
என்ன பொன்னன் இண்டைக்கு ஒரே யோசனை யாய் இருக்கிறாய்? கலகலப்பைக் காணவில்லை" அற்புதம் இட்டலியை பரிமாறியபடி கேட்டாள்.
"ஒண்டுமில்லையாக்கும். பொன்னன் சிரித்தான்.
வாசலில் தபால்காரனின் மணி ஒலித்தது.
நீலநிற வானக் கடிதமொன்றை வாங்கி வந்தாள் சந்திரா. 'தம்பியின்ரை கடிதம்" என்றபடி அப்பாவிடம் நீட்டினாள் வாத்தியார் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தார். படித்துக் கொண்டிருக்கும்போதே அவரது முகம் களையிழந்தது மனைவியிடம் கடிதத்தைநீட்டினார்.
அற்புதம் கடிதத்தை வாசித்தாள்.
அன்புள்ள அப்பா, அம்மா அறிவது
இந்தக் கடிதத்தை வாசித்ததும் நீங்கள் அதிர்ச்சி யடையக் கூடும். இந்திராவின் அவர் வேறு யாருமல்ல, நமது பொன்னனின் பெறாமகன் முறையானவர்தான். இதை நான் முதலிலேயே மூடி மறைத்ததற்குக் காரணம், இது தெரிந்தால் நீங்கள் கலியானத்திற்குச் சம்மதிக்க மாட்டீர்கள் என்பதால்தான். இதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

முருகானந்தன் 123
இந்திரா பாடசாலையில் ஏ.எல். படித்துக் கொண்டி ருக்கும் போதே பரஸ்பரம் விரும்பியவர்கள்தான். எனினும் சமுதாய அமைப்பை மீற முடியாத தயக்கத்தினா லும், பயத்தினாலும் இந்திராவும் அன்னராசாவும் தமது உண்மை காதலுக்கு அணை போட்டனர். இதை எல்லாம் இங்கே ஜேர்மனியில் சில காலத்திக்கு முன்னர் அன்னராக விடமிருந்து தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும் பற்றி சந்திராக்காவுக்கும் பெரியத்தானுக்கும் எழுதி ஆலோசனை கேட்டேன். ஒரு நாள் ரெலெக்ஸில் பெரியத் தானுடன் நேராவும் கதைத்தேன். பெரியத்தான் அன்னராசு வீட்டாருடன் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்றார். பின்னர் நடந்தவை எல்லாம் உங்களுக்குத் தான் தெரியுமே
அப்பா, நீங்கள் ஒரு சீர்திருத்தவாதி. சாதிவெறி தலை விரித்தாடிய காலத்திலேயே சிரட்டைக்கும். போத்தி லுக்கும் பதிலாக கிளாசிலும், பேணியிலும் தண்ணி கொடுத்து சாதிக் கொடுமையை எதிர்த்தனிங்கள்தானே? உங்களது முன்னவர்கள் கொடுக்காத ஒரு சமத்துவத்தை நீங்கள் கொடுத்ததுபோலவே, நீங்கள் கொடுக்காத சமத் துவத்தை நான், சந்திராக்கா, பெரியத் தான் முதலான வர்கள் கொடுத்துள்ளோம். திருமணக் கலப்புகள் ஏற் படாத வரையில் சாதிவெறி முற்றாக ஒழியப்போவ தில்லை. இவை கூட ஒரு பரிணாம வளர்ச்சியின் நிலைப் பாடுதான். அகல்யா, அனுசுயா, இந்திரன் முதலான அடுத்த தலைமுறையின் காலத்தில் சாதி என்ற வேறுபாடு முற்றாகவே அழிந்துவிடும். அழிய வேண்டும் என்பது தான் எமது அவா. இங்கே ஜேர்மனியில் நாங்கள் எல்லோரும் தமிழ் அகதிகள்தான். எங்களுக்கிடையே வேறுபாடில்லை.
அம்மா, தயவுசெய்து மூக்கை உறிஞ்சாமல் எங்களைப் புரித்து கொள்ள முயலுங்கள். இந்திராவை ஒதுக்கி

Page 65
12 மீன் குஞ்சுகள்
வைத்து புதிய சாதி ஒன்று உருவாவதற்கு வழிவகுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மேலதிக விபரங்களைச் சந்திராக்காவிடமிருந்தும் பெரியத்தானிடமிருந்தும் தெரிந்துகொள்ளுங்கள்.
அன்பு மகன் சந்திரதாஸ். கடிதத்தைப் படித்து முடித்ததும் அற்புதம் கணவனை உற்று நோக்கினாள். அவளது கண்கள் கலங்கியிருந்தன. கடிதத்தில் உள்ளவற்றை ஊகித்துக் கொண்ட சத்திரா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டாள்.
என்ன வாத்தியார் மோன் எழுதியிருக்கிறார்?" மாணிக்க வாத்தியார் ஒரு கணம் பொன்னனை உற்றுப் பார்த்தார். "நான் இன்னும் கொஞ்ச நாளைய ஆள். இனி அவையின்ர காலம்தானே. அவையள் நல்லாச யிருந்தால் போதும்வவ."
சந்திரா நிறைவோடு அப்பாவை நோக்கினாள். O
- மல்லிகை -


Page 66


Page 67
இலக்சிய மருத்துவன் இலங்கையில் வைத்தியத் துறையி உள்ளோர்களில் படைப்பிடிக்கியத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் முகம்தான் ச. முருகானந்தன் அவர்கள்
மாநுட நேயமுடன் தான் ச சமூகத்தைப் பிடித்திருக்கும் பிணிகளுக் செய்வது மட்டுமல்லாமல், அச்சமூக வ ஒட்ட சக்திவாகத் திகழும் கருத் வழங்கும் ஒரு வலுமிக்க பேனா இவரு
இலங்கையில் படைப்புக்களங்க திறமையைக் கொண்டு ஆக்கிய சிறுகள் இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயம ச. முருகானந்தன் அவர்கள், தமிழக இலக்கிய சஞ்சிகைகளில் தனது சி வெளியிட்டதன் முல்பம், தமிழக இலக்கி பரிச்சயமான ஈழத்துச் சிறுகதை , திகழ்கிறார். அத்தோடு இந்தி, தெலு இந்திய தேசிய மொழிகளில் இவரது மொழிபெயர்க்கப் பட்டுள்ள்: எமக் சேர்க்கும் நிகழ்வாகும்
இலக்கியமென்பது சமூகத்தைச் படுத்தும் ஆத்மார்த்த மருத்துவம் எ ஆழமான உணர்வினை நண்பர் ச. கொண்டுள்ளார் என்பதற்கு இத் சிறுகதைகள் ஆதாரங்கூறுகின்றன.
 

பில் ஈடுபட்டு
துறையிலும் சில் இனைய
ார்ந்திருக்கும் து வைத்திசம் aria Gaia sa துக்களையும்: 55டது.
ரில் தனது தகள் மூலம் Taif its 3:Tl frt i:*55®gyyir hi | JGL" |றுகின்தேகங்கள் 'LI Pll:3i,3ťž: ஆசிரியராகத் ங்கு போன்ற | Jarl ific
குப் பெரும்:
செம்மைப் ன்ற கருத்தில் முருக 33ந்தன் தொகுதியின்
- மேமன்கவி