கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈரமுள்ள காவோலைகள்

Page 1

ശ്ല

Page 2


Page 3

ஈரமுள்ள
காவோலைகள்
எட்டு வானொலி
நாடகங்கள் (இலங்கை வானொலியில்
ஒலிபரப்பப்பட்டவை)
எம். பி. செல்லவேல்

Page 4
EERAMULLA
KAVOLAIKAL
Eight Radio Dramas
in TOnni
by
M. P. Se|CVel
First Edition November 1996. Price
Poges :
SAI EDUCATIONAL PUELICATIONS
Il 55, Concal Rocad, "SRI MURUGA BAVANAM Colombo - 06 NochchimunCai, Te: 5927O7 Koalladi - Uppodali,
BOffiCClOCI.

சமர்ப்பணம்
மனிதத்தை மதித்து
மனிதம் பேண
மரணித்த ஜீவன்களுக்கும்
மனிதம் வாழ
மாடாக உழைக்கும்
மனிதங்களுக்கும்
சமர்ப்பணம்.

Page 5

ஒரு சில வார்த்தைகள்! சொல்லலாமென நினைக்கிறேன். இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டுமென வரையறை செய்பவர்கள் பொங்கிவரும் சமுத்திரத்திற்கு அணைபோட முயலும் பிரகிருதிகள்’ என்பது எனது கருத்தாகும். மேலும் வாழ்க்கையின் அனுபவ நெருடல்கள் தான் சிறுகதைகளாகக், கவிதைகளாக, நாடகங்களாக முகிழ்க்கின்றன. இது சரியோ பிழையோ, எனது நெடுநாளைய உணர்வுப் பிரவாகத்தின் பிரசவமே இந்நாடகங்கள். என் வாழ்க்கையில் அன்றாடங் காய்ச்சிகள் முதல் உடைநலுங்கா வர்க்கத்தினர்வரை யான் பழகிப் பார்த்து, கேட்டு உய்த்த உணர்வுப் பிரவாகங்கள் இனியும் உள்ளே கிடக்கவொண்ணாது, உடைப்பெடுத்து சிறிய நீர்ப்பீலிகளைப் போன்று பீறிட்டவையே இந்நாடகங்கள். சமூக, சமய, விஞ்ஞான நாடகங்களாக வெளிப்பட்ட இந்நீர்ப் பீலிகளை ஆற்றுப்படுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனக் கல்விச்சேவை சமூகக்கண்ணாடி எனும் ஒலி அலை களில் தவளவிட்டு என்னை ஆசுவாசப்படுத்தியது. அவற்றில் சமூகம் சார்ந்த சமகாலப் பின்னணியைகொண்ட எட்டு
நாடகங்களை நூலுருவில் கொணர்ந்துள்ளேன்.
இந்நூலுக்கு ஒரு நோக்கு எனும் பெயரில் அணிந் துரை நல்கிய அருட்திரு அரச-ஐயாத்துரை முன்னாள்

Page 6
பணிப்பாளர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், இந்நாள் தொடர்பு ஊடக ஆலோசகர், தேசிய கல்வி நிறுவகம், மகரகம, அவர்கட்கும். இந்நாடகங்கள் சிறப்பான தயாரிப்புகளாக விளங்க மிகமுக்கிய காரணமாக விளங்கிய தயாரிப்பாளர் திரு. தடேபத்மகைலநாதன், ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் அவர் கட்கும். இதை நூலுருவில் ஆக்கித்தந்த திரு. M. A. ரஹ்மான், இளம்பிறை புக்மேக்கர்ஸ், சென்னை அவர்கட்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் இந்நாடகங்கள் நூலுருப் பெறுவதற்கு மிக உறுதுணையாகத் தோள்நின்ற துணைவி நிறாஞ்ஜினிக்கும் நன்றிகூறக் கடப்பாடுடையேன்.

ஒரு நோக்கு !
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனக் கல்விச் சேவையில் சமூகக் கண்ணாடி’ என்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற நாடகங்களுள் சமூகப்பின்னணிசார்ந்த எட்டு நாடகங்கள் நூலுருப் பெறுவது வரவேற்கத்தக்கது. பொதுவாகச் சமூகக்கண்ணாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டி நிகழ்ச்சியை மேம்படுத்திய நாடகங்கள் இவை எனக் கூறினால் மிகையாகாது. பல்லாயிரக் கணக்கான இரசிகள்கள் இந்நாடகங்களைச் சுவைத்தனர் என்பதற்கு இது சம்பந்தமாக எமக்குக் கிடைத்த நேயர் கடிதக் குவியல்கள்
சான்றுபகள்வனவாக உள்ளன.
இந்நாடகங்கள் சமூகத்தின் போக்கினைப் பல்வேறு கோணங்களிலும் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. சமூகத்தின் மூலப்பிரகிருதிகளான ஆசிரியர்கள் 'ஏற்றமுறாத ஏணிகளாக' இருப்பதையும், குறும்புத்தனமும் குழப்படியும் கொண்ட முள் போன்ற சிறுவன் ஒருவன் ஆசிரியை ஒருவரால் மலராக மலர்வதையும், போலிக் கெளரவங்களைச் சமூக அந்தஸ்து எனப் பறைசாற்றி அகதிகளான நிலையிலும், கெளரவ அகதிகளாக ஒரு சாராரைப் பாகுபடுத்தும் மனித மனங்களின் போக்கையும் சில நாடகங்கள் தெளிவுற எடுத்துக் காட்டுகின்றன. இன்னும் சமய அடிப்படை உண்மைகளை மறந்து அதனைக் காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் வன் செயல்களைத் தூண்டும் மனிதர்களின்
போக்கைத் 'தேரையும் கூட்டையும்' சந்திக்க வைப்பதன்

Page 7
மூலமும், முதிய பருவத்தில் பெற்றோர்களை உதிரப் போகும் காவோலைகளாகக்கருதி அவர்களின் உணர்வுகளைப் புரியாத பிள்ளைகளுக்கு அவர்கள் ஈரமுள்ள காவோலைகள் என்பதையும்
சில நாடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நாடகங்கள் யாவும் சமகாலப் பிரச்சினைகளையும், சமூகப் புரையோடிய புற்றுக்களாகத்திகழும் சில பழக்கவழக்கங்களையும் வெளிக் கொணர்ந்து அவற்றுக்குரிய யதார்த்த அணுகுமுறைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. இது தற்கால நிலையில் வேண்டப்படுவதொன்றாகும்.
இந்நாடகங்கள் நூலுருப் பெறுவதையிட்டு பெருமகிழ்வடைகி றேன். காரணம் வானொலி மூலம் செவி வழி நுழையாதவர்களுக்கு கண்வழி நுழைய இது வாய்ப்பளிக்கின்றது என்பதாலாகும். மேலும் சமூகக் கண்ணாடியின் இருவிம்பங்களில் ஒன்றான சமூகம் சார்ந்த நாடகங்களின் தொகுப்பே இந்த ஈரமுள்ள காவோலைகள். மறுவிம்பமான விஞ்ஞானம் சார்ந்த நாடகங்களும் நூலுருப் பெற்று வாசகள் கரங்களில் தவளவேண்டுமென்று எதிர்பார்த்து வாழ்த்தி விடைபெறும்
བ།) స్కా إجمچكاసాూరిமுன்னாள் கல்விச்சேவைப் பணிப்பாளர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தொடர்பு ஊடக ஆலோசகள் தேசிய கல்வி நிறுவகம்
LsÒ3b Jbl fò.

உள்ளே
நாடகங்கள்
ஏற்றமுறாத ஏணிகள் 01
ஒருமுள் மலராகிறது : 25
ஈரமுள்ள காவோலைகள் : 51 தேரும் கூடும் 70
கருணை உள்ளம் : 91
கெளரவ அகதிகள் : 140
பேசும் ஊமைகள் : 164

Page 8

1. ஏற்றமுறாத ஏணிகள்
காட்சி - 1
பாத்திரங்கள் : பசுபதி மாஸ்ரர், மாவட்ட கல்வி இலாகா அலுவலக
உத்தியோகத்தர்கள், (தங்கராஜா, தம்பையா)
இடம் அலுவலகம்
பின்னணி : அலுவலகம் ஒலி, டைப்பண்ணும் ஒலி, அலுவலக
அழைப்பு மணி ஒலி
தங்க : அண்ணை அங்கை பாருங்க. பாலாமணியோடை ஒரு
வாத்தியார் வாறார்.
தம் : புதுமுகம் போல கிடக்கடாதம்பி ஆளைப்பாத்தா அசல் சட்டாம்பி போலத்தான் இருக்கு காலிலை செருப்பு மில்லை. நாலுமுளவேட்டியும் பழங்குடையும், அசல் தமிழ்வாத்தியார் போல இருக்கடா தம்பி.
தங்க : என்ன இழவுக்கு வார்ரோ தெரியாது. எங்கட கழுத்தை
அறுக்கிறது இந்த வாத்திமாருக்கு தொழிலாப் போச்சு.
தம் : ஓமடாதம்பி : பென்சன் விசயமாத் தான் வாரர் போல இருக்கு ஒரு கொத்துக் கொத்தலா மெண்டா இவரிட் டைச் சரிவராது போல இருக்கு.
O1

Page 9
தங்க
தம்
தங்
11Šኽ
தம்
“Llቇ;
தம்
LS
ஏன் அண்ணை அப்படிச் சொல்லுறீங்க.
ஆளின்ரை தோற்றத்திலையே தெரியேலையே. இவரிட்டை
காசு, கீசு இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை.
அப்படிச் சொல்லேலாது அண்ணை. இப்படியான
ஆக்களிட்டைதான் அள்ளு கொள்ளையா இருக்கும்.
(செருமல் சத்தம்)
: என்ன வாத்தியார் வாருங்கோ வாருங்கோ
: என்னை எப்படித்தம்பி உங்களுக்குத் தெரியும்.
என்னட்டைப் படிச்சனிங்களே.
: இஞ்சை வாறவை வாத்திமார் தானே மற்றது எழுதி
ஒட்டினாப்போலை நீங்கள் இருக்கிறயள். பிறகென்ன.
: நீங்க வரவேற்கிறதைப் பார்த்து நான் என்னைத்
தெரிஞ்சனிங்களோ எண்டு நினைச்சிட்டன்.
; அது சரி வாத்தியார் என்ன விசயமாக வந்திருக்கிறியள்.
; தம்பி! நான் வேலையிலையிருந்து ஓய்வு பெற்று ஒன்பது
மாதமாப் போகப்போகுது. இன்னும் என்ர பென்சன் காசு வரேல்லை. அதுதான் எண்ணெண்டு கேட்டிட்டுப் போவமெண்டு வந்தன். ஒன்பது மாதமாய் சம்பளம் இல்லாமல் இருக்கிறது பெரிய கஷ்டமாய் இருக்கு. எங்கட பென்சனும் என்ன பெரிய சம்பளமே. அதைக்கூடத் தாறதுக்கு பெரிய கஷ்டப்படுறாங்கள். சாப்பாட்டுக்கு
O2

தம்
t
தம்
தங்
தம்
தங்
கடையளிலை பென்சன் காசு வரும் எண்டு சொல்லிச் சொல்லிக் கடன் வாங்கினன். அவனும் ஒன்பது மாதம் பொறுத்துப் பொறுத்து அலுத்துப் போனான். உடனை வையெண்டு தொண்டைப் பிடியாய்ப் பிடிக்கிறான்.
சரி சரி! உங்கட ’பைல் கள் இங்கை வந்திட்டுதோ
வாத்தியார்? மற்றது கொழும்பிலை பென்சன் டிப்பாட் மெண்டிலை இருந்து தேவையானவை வந்திட்டுதோ தெரியாது. எதுக்கும் உங்கட பைல் நம்பர் தெரியுமோ?
: இந்தாங்க தம்பி இந்தக் கடதாசியிலை எல்லா விபரமு
மிருக்கு (கொடுக்கிறார்)
; அப்பிடிவெளியிலை இருக்கிற வாங்கிலை இருங்கோ
வாத்தியார். நான் எல்லாத்தையும் பாத்திட்டு ஆறுதலா கூப்பிடுறன்.
சரி தம்பி! நான் வெளியிலை இருக்கிறன்.
: என்ண்ணை! உங்களுக்கு ஒரு தலையிடி வந்திருக்குப்
போல இருக்கு.
; என்ன செய்யிறது. என்ரை தலையெழுத்து, இந்த
இருபத்தைந்து வருசமா இந்தக் கிளார்க்கு உத்தி யோகந்தான். ஒரு புறமோசனுமில்லை. வாழ்க்கையிலை உயர்ச்சியுமில்லை. வாறன். வாத்தியாற்றை பைலை தேடி எடுக்க வேணும்.
: நீங்க ஏன் அண்ணை இதுக்கு எழும்பிப் போறிங்க. இவன்
O3

Page 10
தம்
தங்
தம்
தங்
தம்
தங்
பீயன் ட்டை நம்பரைக் குடுங்கோ. அவன் எடுத்திட்டு வருவான்.
ம், அதுவும் சரிதான். கந்தசாமி கந்தசாமி இஞ்சைவா.
இந்த நம்பள் உள்ளபைலை எடுத்திட்டுவா.
: அது சரி அண்ணை இந்த பென்சன் செய்யிறதைவிட
அரியஸ் செய்யிறது எங்களுக்கும் கொஞ்சம் லாபம்.
: ஒம் தம்பி! இந்த பழைய வாத்திமாரிட்டை ஒண்டும்
கறக்கேலாது. இப்பத்தைய வாத்திமார் வேலையைக் கெதியாச் செய்துமுடிக்கிறதுக்கெண்டு ஏதோ அஞ்சப் பத்தை குடுப்பாங்கள். அப்பிடி ஒண்டும் எனக்கு இந்த மாதம் வந்து சந்திக்கேல்லை. வந்ததெல்லாம் இந்த பென்சன் எடுக்கிற வேலைதான்.
: ஆ பைல் வந்திட்டுது, பாருங்கோ வாத்தியாருக்கும்
பென்சனிலை ஏதும் அரியஸ் இருக்கும். (தம்பையா, ண்பலை வாங்கிப் புரட்டிப் பார்க்கிறார்)
தம்பி பைல் (Perfect) "டேர்பக்ட் டாகத்தான் இருக்கு. பென்சன் டிப்பாட்மெண்டிலை இருந்து எல்லாம் வந்திட்டுது. வாத்தியாற்ற பையிலிலை எந்த விதமான குழறுபடியும் இல்லை. வாத்தியார் சேவையையும் நேர்மையாகத்தான் செய்திருக்கிறார்.
: கணக்குப் பாருங்கோ அண்ணை அரியஸ் எவ்வளவு
வருமெண்டு.
04

தம்
தங்
தம்
தங்
தம்
தங்
தம்
தங்
: ம். கிட்டத்தட்ட ஒரு 75,000 க்கு வரும்.
; அப்ப ஒரு 2000 பொருத்தம் பேசலாந்தானே. 75,000
கிடைக்கிற இடத்திலை ஒரு 2ஐ தந்தாலென்ன?
; அது இந்த கிழவங்களிட்டை சரிவராது. கேட்டாலே இது
பெரிய ஆபத்திலைதான் முடியும்.
: பைலிலை ஏதாவது அஜஸ்ட்மென்ட் செய்ய
வேணுமெண்டு சொல்லிக்கில்லிப் பாக்கிறதுதானே. பைலைப் பாருங்க ஏதும் சின்னப் பிழையள் கிளையஸ் இருக்கும்.
ஓ! ஒரு சின்னப்பிழை இருக்குத்தான். பென்சன் போமிலை
PaSubathi எண்டிருக்கு வாத்தியாற்றை கையொப்
u(ph Gu(Oli Pasupathi 6T635i La-Dieg).
: பிறகென்ன அண்ணை. இதுமட்டும் போதுமே.
வாத்தியாரிட்டை சொல்லிச் சமாளிக்க.
இது ஒரு பெரிய பிழையில்லைதானே. வாத்தியார் கேட்டிட்டால்? அல்லாட்டி எங்கட பெரியவரிட்டை போயிட்டா?
; வாத்தியாரைப் பாத்தா பெரியவரிட்டைப் போறமாதிரியே இருக்கு பயப் பிடாதீங்க நான் கதைக் கிறன் .
வாத்தியாரிட்டை உடனை பிழையைச் சொல்லக்கூடாது
அவரை முதலில ரெண்டு மூண்டுதரம் இஞ்சை வந்துபோகச் செய்யோணும். அதுக்குப் பிறகுதான்
O5

Page 11
தம்
udi
தம்
,
இடம்
விசயத்தை அவுக்கோணும். ஆளை உள்ளுக்கு கூப்பிட்டு விசயத்தை சொல்லாதீங்க. வெளியிலை போய் ஆளை அனுப்பிற்று வாங்கோ.
(தம்பையா கதிரை அரக்கி வெளியில் போகும் சத்தம்)
வாத்தியார் ! உங்கட பைல் இருக்கு ஆனால் கொழும்பிலை இருந்து பென்சன் டிப்பாட் மெண்ட் இன்னும் உங்கட பேப்பர்களை அனுப்பேல்லை. அதுகள் வந்தாத்தான் நாங்கள் என்னெண்டாலும் செய்யலாம்.
இல்லை தம்பி, இவன் குமரேசன் என்ட மாணவன் கொழும்பிலை எக்கவுண்டனாக வேலை பாக்கிறவன். அவன் லீவுக்கு வந்து நிக்கேக்கை தான் பென்சன் பகுதிக்கு போய் என்ர விசயம் பாக்கிறனெண்டு கடிதங்க ளெல்லாம் வாங்கிற்றுப் போனவன்.
; ஆனா இங்கே ஒண்டும் வரேல்லை. ஒருவேளை அடுத்த
6) மோ தெரியாது. எதுக்கும் நீங்க வாறகிழமை
6) Ob Sibl. 6l Sibl ஒருக்கா வந்து பாருங்கோவன்.
அப்ப சரி தம்பி! நான் அடுத்த கிழமை வாறன்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி 2
பசுபதி மாஸ்டர் வீடு.
பாத்திரங்கள் : பசுபதி மாஸ்டர், அவர் மனைவி தங்கம்மா
O6

LS
தங்
தங்
(பசுபதி மாஸ்டர் வீட்டுக்குள் நுழைகிறார்)
: தங்கம்! தங்கம்!
அப்பாடி! இந்த பஸ்ஸிலை என்னமாதிரித் தான் இப்பிடி அடைஞ்சு கொண்டு பிரயாணம் செய்யிறாங்களோ? வீட்டுக்கு வந்து சேருறதுக்கிடையிலை சீவன் போறது மாதிரி இருக்கு. (கதிரையை இழுத்துப் போட்டு உட்காரும் சத்தம்)
: வாருங்கோ வந்திட்டியளே! காலமை 7 மணிக்கு
வெளிக்கிட்டனீங்க. இப்ப 4 மணியாப் போகப்போகுது. இன்னும் காணே ல் லையே எண் டு யோசிச் சுக் கொண்டிருந்தனான். இவ்வளவு நேரமும் அங்கை என்ன செய்தீங்க.
இந்த பஸ்ஸிலை போயிட்டுவாறதெண்டாலே எவ்வளவு
நேரம் செல்லுது. போறதுக்கு ஒரு மணித்தியாலம் வாறதுக்கு ஒரு மணித்தியாலம். இனி அங்க அலு வலகத்திலை அவங்களைக் காணுறதுக்கும் கதைக்கிற துக்கும் காத்திருக்க வேணும். நாய் படாத பாடுபட்டு வாறன்.
இதுக்குத்தான் ஒரு ஆம்பிளைப் பிள்ளையாவது இருக்க வேணுமென்டு சொல்லிறது. வயது போன காலத்திலை அவங்களே இந்த வேலையெல்லாம் பாத்துக்குடுப்பாங்கள்.
அந்தப் பலனைத்தான் கடவுள் எங்களுக்குக் குடுக்
O7

Page 12
L
தங்
9
தங்
கேல்லையே. அது சரி போன விசயம் என்ன மாதிரி.
; அதை ஏன் கேட்கிறாய் தங்கம்மா? இவன் குமரேசன்
என்ர பென்சன் விசயம் பாக்கிறனெண்டு கடதாசியள் எல்லாம் வாங்கிற்றுப் போனவனல்லே அவன் ஒண்டும் கவனிக்கேலைப் போல இருக்கு. ஏனெண்டா அங்கை பென்சன் டிப்பாட்மெணி டிலையிருந்து ஒண்டும் வரேல்லையாம் எண்டு சொன்னாங்கள்.
: நீங்கதானே சொன்னிங்க. உங்கட மாணவன், நல்ல பெடியன்
எல்லா விசயத்தையும் செய்து தருவானெண்டு.
அவன் படிக்கேக்கை நல்ல கீழ்ப்படிவுள்ள கெட்டிக்காரப் பெடியனாயிருந்தவன். மற்றது அவனாத் தானே றோட்டிலை கண்டிட்டு என்ர விசயத்தை செய்து தாறன் எண்டு வாங்கிக் கொண்டு போனவன். அங்க என்ன பிரச்சினையளோ தெரியாது.
: ஒ சொன்னாப்போலை நான் மறந்து போயிற்றன்.
இண்டைக்கு உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கு. இருங்க எடுத்திட்டு வாறன்.
(சிறிது அமைதி)
இந்தாங்க ஆர் போட்டிருக்கோ தெரியாது. (கடிதத்தைப் பிரிக்கும் ஒலி)
: ஆ இது கொழும்பிலை இருந்துதான் வந்திருக்கு.
இவன் குமரேசன் தான் எழுதியிருக்கிறான்.
O8

தங்
: ஆ படியுங்கோ கேட்பம்.
(பசுபதி மாஸ்டர் படிக்கிறார்)
: அன்பும் மேன்மையும் தங்கிய பசுபதி ஆசிரியருக்கும்
அவர் குடும்பத்தவர்க்கும் இறைவன் அருளால் நலம்
கூறி உங்கள் நலத்துக்கும் எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன்.
மேலும் சேர் அறிவது, உடனடியாகவே உங்கள் விசயமாக
பென்சன் டிப்பாட்மென்டுக்கு சென்று உங்கள் விடயங்கள் எல்லா வற்றையும் கவனித்துத் தங்களுக்குரிய சகல ஆவணங்களும் அனுப்ப ஆவன செய்து விட்டேன். அவை தங்களுக்குக் கிடைத் திருக்குமென நினைக்கி றேன். காரணம் இரண்டு நாட்களுக்கு முன் அங்கு நான் மீண்டும் தங்கள் விடயமாகச் சென்ற போது, அவை யெல்லாம் அனுப்பப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். எனது காரியாலய அலுவல்கள் காரணமாக உடன் உங்களுக்குப் பதில் எழுத முடியவில்லை. மன்னித்துக் கொள்ளவும்.
மேலும் ஏதும் உதவிகள் இங்கு தேவைப் படின் தயங்காது கடிதம் எழுதவும். நான் அவற்றைச் செய்வதற்கு காத்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றிகூறி விடை பெறுகிறேன்.
இங்ங்ணம் உங்கள் அன்புள்ள மாணவன், செ. குமரேசன்.
O9

Page 13
தங்
தங்
til
தங்
இடம்
அப்ப இவங்க பென்சன் டிப்பாட் மென்டிலையிருந்து
ஒண்டும் வரேல்லை என்று சொன்னாங்களே! சும்மா
சொல்லி யிருப்பாங்களோ.
: ஒரு வேளை இன்னும் வந்து சேரேல் லையோ
தெரியேல்லை. இப்ப கொழும்பிலை இருந்து கடிதம் வாற தெண்டாலும் நாலைஞ்சு நாள் எடுக்குதுதானே.
; எதுக்கும் அடுத்த கிழமை வரச் சொல்லியிருக்கிறாங்கள்
போய்ப் பார்ப்பம்.
: சேமிப்பிலை கிடந்த காசும் முடியப்போகுது. உங்கட
பென்சன் வராட்டி பட்டினி கிடக்க வேண்டியதுதான்.
என்னவோ எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்.
களையாக்கிடக்குது தங்கம் தேத்தண்ணி ஏதும்
போட்டியே?
இருங்கோ போட்டுக்கொண்டு வாறன்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 3
: கல்வி இலாகா அலுவலகம்
பாத்திரங்கள் : தம்பையா, தங்கராஜா, பசுபதி மாஸ்டர், அதிகாரி
தங்
அண்ணை உங்கடை ஆள் வாறார்.
10

தம்
தம்
தம்
தம்
தம்
: ஆ! பசுபதி வாத்தியாரே வரட்டும். இண்டைக்கும்
ஏதாவது சொல்லி அனுப்ப வேணும். இரண்டு மூன்டுதரம் இங்கை வந்து அலைஞ்சு போனாதான் எங்கட வழிக்கு ஒத்துவருவினம்.
(பசுபதி மாஸ்டர் வருகிறார்)
; ஒ மாஸ்டரே வாங்கோ, வாங்கோ, சொன்ன மாதிரி
நாள்தவறாமை நேரந்தவறாமை வந்திட்டியள்?
தம்பி இந்த கடிதத்தை வாசிச்சுப்பார். கொழும்பிலை இருந்து பென்சன் பேப்பர் எல்லாம் இங்கை உங்களுக்கு அனுப்பப் பட்டுவிட்டதாம். என்னுடைய மாணவன் குமரேசன் எழுதியிருக்கிறான்.
: ஓம் வாத்தியார் நீங்கள் அண்டைக்குப் போய் 2 நாளிலை
வந்திட்டுது.
; அப்பாடா! இப்பதான் தம்பி எனக்கு வாயிலை பால்
வாத்தமாரிதி இருக்கு. நான் என்னவோ ஏதோ எண்டு பயந்துபோயிருந்தனான்.
உங்கட பைலில் இப்ப எல்லாம் சரி வாத்தியார். ஆனால்
உங்கட பேரிலைதான் சின்ன வேறுபாடு இருக்கு. அது.
என்னதம்பி அது?
; கொழும்பிலை இருந்து வந்த கடதாசியிலை PaSubathi
எண்டு உங்கட பெயர் எழுதப்பட்டு இருக்கு. ஆனால் நீங்கள் சப்மீற் பண்ணின பேப்பரிலை PaSupathi எண்
11

Page 14
தம்
தங்
தம்
டிருக்கு. அதுதான் பிரச்சினையாயிருக்கு.
; அப்ப என்ன தம்பி செய்யிறது. அது ஒரு எழுத்துத்தானே
வித்தியாசம். எண்ட பிறப்புச் சேட்டிபிக்கெற்றைப் பாத்தீங் கெண்டா அதிலை PaSupathy எண்டு தானே இருக்கு. அதை நீங்க மாத்தி எழுதலாந்தானே.
; அது எப்படி வாத்தியார் நாங்க செய்யிறது. நீங்க
வாத்தியாரா இருந்து கொண்டேஇப்படி மாத்தி எழுதச் சொல்லிறீங்க. இது எங்கட பெரியவருக்குத் தெரிஞ்சா பெரிய கரைச்சலாப் போயிடும்.
; அப்ப திரும்ப கொழும்புக்கு அனுப்ப வேணுமோ?
அப்பிடியெண்டால் இன்னும் நாள் போகுமோ தம்பி.
: நீங்க வெளியிலை இருங்க வாத்தியார். இன்னொருத்தர்
இருக்கிறார். அவரோட இதைப்பற்றிக் கதைச்சிட்டு சொல்லுறன்.
சரிதம்பி நான் வெளியிலை இருக்கிறன்.
(பசுபதி மாஸ்டர் வெளியே செல்லுதல்)
: அண்ணை! உங்கட கதையை கேட்டிட்டுத் தான்
இருந்தனான். நீங்க இருங்க நான் வெளியிலை போய் அவரிட்டை விசயத்தைக் கதைச்சு ஆளை வழிக்குக் கொண்டுவாறன்.
: என்னவோ ஏதோ! உனக்கோ எனக்கோ கரைச்சல் ஏதும்
வராமல் பார்த்திடு என்ன.
12

தங்
தங்
தங்
தங்
தங்
: நீங்க இருங்க நான் வாறன்.
(வெளியே போதல்)
யார் பசுபதி மாஸ்டர்?
: நான் தான் அது என்னதம்பி?
: இங்கை வாங்க உங்களோடை கொஞ்சம் பேசவேணும்.
வெளியிலை போய்க் கதைப்பம் வாங்க.
(வெளியில் செல்லுதல்)
மாஸ்டர்! உங்கட விசயமாக இப்ப தம்பையா என்னோட
கதைச்சவர். இந்தப் பெயர் மாறியிருக்கிற விசயமாக இப்ப தம்பையா என்னோட கதைச் சவர். இந்தப் பெயர் மாறியிருக்கிற விசயம் கொஞ்சம் சிக்கலானது. இது இனி கொழும்புக்கு அனுப்பி எடுக்கிறதெண்டா ஒரு மாதமோ 2 மாதமோ செல்லும்.
ஐயோ! தம்பி எனக்கு அவசரம் என்ர பென்சன் தேவையாயிருக்கு இதை நம்பி, நம்பி கடன் வாங்கி, தலைக்கு மேலை கடன் வந்திட்டுது. ஏதாவது நீங்கள் இங்கை இதை கொழும்புக்கு அனுப்பாமல் செய்யேலாதே?
; செய்யலாம் வாத்தியார். ஆனா இதுக்கு பொறுப்பா
யிருக்கிற ஒருதர் எங்களுக்கு மேலை இருக்கிறார். அவருக்கு ஏதாவது நன்கொடையாகக் கொடுத்தால் செய்யலாம்.
; என்னதம்பி அவருக்கு குடுக்கவேணும் அதைக்
13

Page 15
தங்
தங்
L
தங்
தங்
குடுத்தாவது அவரிட்டை செய்து தாங்க.
; அவருக்கு வாத்தியார் ஒரு ஆயிரம் ரூபாயாவது
குடுத்தாத்தான் சரிக்கட்டலாம்.
; என்னட்ட அவ்வளவு இல்லையே தம்பி,
உங்களுக்கு அரியசாக 75,000 ரூபாவுக்கு கிட்ட வருகுது வாத்தியார். இது பெரிய காசே குடுத்தா பேப்பருகள் கொழும்புக்கு போகாம இங்கையே சமாளிச்சிடலாம். அதோட அடுத்த கிழமையே நீங்கள் பென்சன் காசும் எடுத்திடலாம்.
; தம்பி! என்னட்ட இப்ப ஒரு சதக்காகிம் சத்தியமாய்
இல்லைத்தம்பி. வேணுமென்டா அந்த அரியஸ் காசிலை எடுங்கோ தம்பி.
: நாங்க அதிலை ஒண்டும் எடுக்கேலாது வாத்தியார்.
நீங்கதான் 'செக்கை மாத்திப் போட்டுத் தரவேணும்.
: நான் மாத்தினவுடனை அப்படியே சொன்னமாதிரி தாறன்
தம்பி, என்ரை விசயத்தை ஒருக்கா கெதியா கவனிச்சீங் கெண்டா நல்லது தம்பி.
வாத்தியார், இது ரகசியமாயிருக்கோணும். இஞ்ச உங்கட விசயம்மாதிரி கனபேற்றை பிரச்சினையள் இருக்கு.
அவங்கள் அறிஞ்சாங்களெண்டா தங்களுக்கும் இப்படிச்
செய்து தரச்சொல்லுவாங்க. நீங்க இந்த வயதுபோன காலத்திலை இப்படி நெடுக அலையிறீங்களே எண்டு
14

L
தங்
தம்
தங்
தம்
தங்
எண்ணித்தான் உங்கள் மீது இரக்கப்பட்டு இப்படி உதவி செய்ய நினைச் சனான். இதை ஒருத்தருக்கும் கதைச்சிடாதீங்கோ. நீங்க இருங்க மத்தியானம் எல்லாரும் சாப்பாட்டுக்குப் போவினம். அப்ப உங்கட பேரை மாத்தி, சில போம்களிலை நீங்கள் கையெழுத்துப் போடவேணும்.
அப்படியெண்டா நான் ஒரு இடமும் போகாம இங்கையே இருக்கிறன் தம்பி.
இந்த விசயத்தை ஒருத்தருக்கும் கதைச்சுப் போடாதீங்க. நான் வாறன்.
(உள்ளே போதல்)
- என்ன தம்பி! சிரிப்போட வாறாய்.
எல்லாம் சரிக்கட்டிப் போட்டன் அண்ணை. 1000 ரூபாதான் சரிப்பண்ணியிருக்கிறன். அரியசிலைதான் தாறனெண்டிருக்கிறார். நீங்கள் அவற்றை பென்சன் வேலை எல்லாத்தையும் கடகடெண்டு செய்துமுடித்து எக் கவுண்டனிட்டை செக் போட அனுப்புங்கோ.
: அதெல்லாம் செய்து முடிச்சிட்டன். மிச்ச வேலைகளையும்
இப்பவே செய்து முடிக்கிறன்.
(காட்சி மாறும் ஒலி)
வாத்தியாரை நான் வரச்சொல்லிறன். நீங்க அவரிட்டை
கையெழுத்து வேண்ட வேண்டிய இடத்திலையெல்லாம்
15

Page 16
தம்
தம்
U
தம்
தம்
தம்
வாங்கிக் கொள்ளுங்கோ.
: எல்லாரும் லஞ்சுக்கு போயிற்றாங்க. கெதியா நாங்களும்
விசயத்தை முடிச்சிடுவம் வரச் சொல்லு ஆளை. (பசுபதி மாஸ்டர் வருகிறார்)
; அப்ப. வாருங்கோ வாத்தியார். ஒரு மாதிரி உங்கட
விசயத்தை சமாளிச்சிட்டம் இதிலை எல்லாம் சைன் பண்ணுங்கோ.
(பேப்பர், பைல், அசையும் ஒலி)
அப்ப எப்பதம்பி பணம் கிடைக்கும்.
* எதுக்கும் நாளை மறுநாள் வாங்க. அதிகமாகக்
கிடைக்கலாம்.
: எனக்கு மேலை நீங்கள் இரக்கம் காட்டி இதைக் கெதியாச்
செய்து தாறதுக்கு மிக்க நன்றி தம்பி.
; அது இருக்கட்டும் வாத்தியார். இந்த விசயத்தை
வெளியிலை ஆருக்கும் கதைச்சுப் போடாதீங்கோ மற்றது அவருக்கு குடுக்க வேண்டிய காசையும் மறந்து
போகாதீங்கோ. பிறகு 'செக் கிடைச்சதுக்குப்பிறகு இந்தப் பக்கம் வராம விடுறேல்லை.
: நான் சொன்ன சொல்லுத் தவற மாட்டன் தம்பி.
சரி, அப்ப நீங்க போயிட்டு வாங்க. நாளையண்டைக்கு
16

சரியாக 10 மணிக்குவாங்க என்ன.
பசு : மிக்க நன்றி தம்பி போயிற்று வாறன்.
(பசுபதி மாஸ்டர் வெளியேறல்)
அதி : ஹலோ மிஸ்ரர். தம்பையா
தம் : யேஸ் சார்
அதி : இப்போ அதிலை வந்திட்டுப் போனாரே அந்தப் பெரியவர்.
அவரின் பெயரென்ன?
தம் : பசுபதி மாஸ்டர். அவர் அடிக்கடி இஞ்சை வந்து பென்சன் பணத்தை தரச் சொல்லி கரைச்சல் படுத்துவார். இண்டைக்கும் அது சம்பந்தமாகத்தான் வந்திட்டுப்
போறார்.
அதி : ஒ. கே.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 4
இடம் பசுபதி மாஸ்டரின் வீடு
பாத்திரங்கள் : பசுபதி மாஸ்டர், அவரின் மனைவி தங்கம்மா
தங் : என்ன இன்டைக்கு உசாரா வாறிங்க. போனகாரியம்
வெற்றிபோல இருக்கு.
பசு : ஒம் தங்கம். கடவுள் கிருபையாலை ஒருமாதிரி நாளை
17

Page 17
தங்
தங்
தங்
யண்டைக்கு பணம் கிடைக்கும் போல இருக்கு.
என்னங்க குமரேசன் எழுதினமாதிரி எல்லாம் அங்கை
இருக்குதே.
எல்லாம் அப்படியே வந்திருக்கு. அதாலை தான் இவ்வளவு
கெதியிலை பென்சன் கிடைக்கப்போகுது.
இண்டைக்கு நீங்க போன பிறகு கடைக் காரன் வந்தவன். இதுவரை வீட்டுச் சாமான்கள் வேண்டி 7000 ரூபாவுக்கு மேலை கடன் வந்திட்டுதாம். இனி கடன் தரேலாது எண்டு சொல்லிப்போட்டு பணத்தை கெதியாத் தரட்டாம் எண்டும் சொல்லிப்போட்டுப் போயிருக்கிறான்.
இன்னும் 2 நாளையிலை பணம் கிடைக்கும்தானே. அரியசாக ஒரு 75000 ரூபா வருகுதாம்.
: 75,000 ரூபாவா என்னாலை நம்பமுடி யேல்லை. இப்ப
ஒன்பது மாதமா இந்த மூன்று சேலையையும்தான் மாறி மாறிக் கட்டி வாறன். எனக்கு ரெண்டு சேலை வாங்கித்தந்திடுங்கோ. உங்களுக்கும் ஏதும் உடுப்புகள் வாங்கோணும்.
காசு கைக்கு வரட்டும் தங்கம். உன்னட்டையேதந்திடுறன். விரும்பின எல்லாத்தையும் வாங்கு இந்த வாத்திமாருக்கு
வாழ்க்கைப் படுகிற பொம்பிளையஸ் மற்றதொழிலிலை
இருக்கிறவங்களின்ரை பொம்பிளையள் மாதிரி சகல சுகங்களையும் அனுபவிக்கேலாது தானே தங்கம்மா?
18

தங்
L
இடம்
; ஏன் அப்படிச் சொல்லுறீங்க. உங்களோடை வாழுறதிலை
எனக்கு பூரண திருப்தியும் சந்தோசமும் தான்.
சரி, தங்கம்மா நான் குளிக்கப் போறன் கொஞ்சம் சுடுதண்ணி வையன்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 5
; அலுவலகம்
பாத்திரங்கள் : அதிகாரி, தம்பையா, தங்கராஜா, பசுபதி மாஸ்டர்
பின்னணி : (பசுபதி மாஸ்டர் அலுவலகத்தினுள் நுழைகிறார்)
தம் :
Llét
வாருங்கோ வாத்தியார். உந்தக் கதிரையிலை இருங்கோ. இன்னும் எக்கவுண்டன் உங்கட செக் கிலை கை யெழுத்துப் போடேல்லை எப்பிடியும். இண்டைக்கு கிடைச்சிடும்.
(அதிகாரி வருகிறார்)
: நீங்கள் பசுபதி வாத்தியார் தானே! நீர்வேலி கலைமகள்
வித்தியாலயத்தில் படிப்பித்தனிங்க தானே.
: ஓம் தம்பி! அது எவ்வளவு காலத்துக்குமுன்
படிப்பிச்சனான். ஏன் என்னை உங்களுக்குத் தெரியுமோ.
: சேர்! நான் தான் கருணாகரன். உங்கள் மாணவன்.
19

Page 18
தம்
தங்
தங்
உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியாது. நான் ஐந்தாம்
வகுப்பு படிக்கும் போது எனது தகப்பன் காலமாயிற்றார். நான் கால்ச்சட்டை தைக்க வழியில்லாமல் பள்ளிக் கூடம் வராமல் இருந்தன். ஒருநாள் நீங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவோட கதைத்து எனக்கு கால்சட்டை வாங்கித்
தந்து என்ர படிப்புத் தொடர வழிவகுத்தனிங்க.
அண்டைக்கு நீங்க அந்த சட்டையை தந்திராட்டி நான்
பள்ளிக்கூடமும் வந்திருக்க மாட்டன். இண்டைக்கு இந்த நிலையிலும் இருந்திருக்க மாட்டன்.
வாங்கோ சேர் உள்ளுக்கு வாங்க.
(அவரை தனது அறைக்கு கூட்டிச் செல்லுதல்)
எல்லாமே போச்சுது. நாங்கள் காசு கேட்டது எல்லாம்
இப்ப பெரியவருக்குத் தெரியவரப்போகுது. என்ன நடக்குமோ தெரியாது.
; உனக்கு மட்டுமே! எனக்குந்தான். வேலையிலிருந்து நிற்க
வேண்டித்தான் வரப்போகுது. ஒரு ஆயிரம் ரூபாவுக்கு
ஆசைப்பட்டு வாழ்க்கையே துலையப் போகுது.
: இப்ப பெரியவர் கூப்பிட்டுக் கேட்டால் என்ன செய்யிறது
எண்டு தெரியேல்லை.
; எனக்கும் தான் ஒண்டும் புரியேல்லை அண்ணை. அந்தா
பெரியவர் வாறார். என்ன நடக்கப் போகுதோ தெரியாது.
: மிஸ்ரர். தம்பையா இங்கையிருக்கிற எல்லா உத்தியோகத்
தர்களும் உடனடியாக எனது அறைக்கு வாருங்கோ.
2O

தங்
தம்
இடம்
எல்லோருக்கும் உடனை அறிவிச்சு வரச் சொல்லுங்கோ.
(அதிகாரி சொல்லி விட்டு உள்ளே போதல்)
அண்ணை வாத்தியார் சொல்லிப் போட்டார் போலத்தான்
இருக்கு எல்லோரையும் வரச்சொல்லியிருக்கிறார். என்ன நடக்குமோ தெரியேல்லை.
: எல்லோருக்கும் முன்னாலை எங்கட வண்டவாளம்
தெரியப்போகுது. மரியாதையும் போகப் போகுது.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 6
: அலுவலக அறை
பாத்திரங்கள் : அதிகாரி, உத்தியோகத்தர்கள், பசுபதி வாத்தியார்.
அதி
உங்களையெல்லாம் திடீரென்று நான் வரச்சொன்னது எதற்காகவுமல்ல. இங்கே இருக்கும் எனது குருவையும், அன்புத் தெய்வத்தையும் அறிமுகப்படுத்தத்தான். இவர் நான் படிக்கும் காலத்தில் எனது ஆசானாக இருந்தவர். தனியே படிப்பை மட்டும் இவர் எனக்குச் சொல்லித்தர வில்லை. உடையில்லாது பாடசாலைக்குப் போகாதிருந்த வேளையில் உடுப்பு வாங்கித் தந்து எனது படிப்புக்கு வழிவகுத்தவர். இன்று இந்த நிலையில் நான் இருப் பதற்குக் காரணம் இந்த சேர் தான். ஏன் நீங்கள் கூட இந்த நிலையில் இருப்பதற்கு உங்கள் ஆசிரியர்கள்தான்
21

Page 19
Ա*
காரணமாக இருப்பார்கள். உண்மையில் ஆசிரியர்கள் சுயநலம் கருதாத பிறவிகள். ஏணி போன்று நாம் வாழ்க்கை யில் உயர் நிலைக்கு ஏற உதவுபவர்கள்.
பொதுவாக நாம் ஆசிரியர்கள் என்ற ஏணியில் ஏறி மேலே வந்த பின்னர் அந்த ஏணியைக் கவனிப்பதேயில்லை.
ஏணிகள் அப்படியேதான் இருக்கின்றன. அவை மேலே ஏறுவதில்லை. அதன் மூலம் நாங்கள் தான் ஏறி மேலே செல்கின்றோம். அதேபோல் தான் இந்த ஆசிரியர்கள் என்ற ஏணிகள், நம்மையெல்லாம் உயர் நிலைக்கு ஏற்றிவிடு கின்றார்கள். ஆனால் அவர்கள் ஏற்றமுறாத ஏணிகளாகவே இருக்கின்றனர்.
சேர்! உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் சந்தோசமடை கிறேன். என்ன விடயமாக இங்கு வந்தீர்கள்.
என்ர பென்சன் விசயமாகத்தான் வந்தனான். 9 மாதமாக எனக்கு பென்சன் வரேல்லை.
; மிஸ்ரர். தம்பையா, இந்த ஒன்பது மாதமாக நீங்க என்ன
செய்து கொண்டிருக்கிறீங்க. அவரவர்களின் பென்சன் பணங்கள் விரைவாக கிடைக்க வசதிகள் செய்ய வேணும் எண்டு சேக்குலர் இருக்கிறது தெரியாதோ, சேர், எவ்வளவு காலமாக நீங்கள் இங்கை அலைஞ்சு கொண்டிருக்கிறியள்.
; அவங்களில்லை பிழையில்லை தம்பி. நான் இவ்வளவு
காலமும் வரும் வரும் எண்டு கவனிக்காம இருந்
22

அதி
தம்
திட்டன் போன கிழமை தான் இந்த விசயமாக முயற்சி எடுக்கத் தொடங்கினனான்.
ஏன் உங்கள் டொக்கியுமென்றிலை ஏதாவது பிரச்சினை
யிருக்கோ.
; அப்பிடி ஒண்டுமில்லையெண்டு இங்கை சொன்னாங்க.
இண்டைக்கு பென்சன் காசும் கிடைக்குமெண்டு சொல்லியிருக்கினம்.
(ரெலிபோன் அடித்தல்)
"ஹலோ" ஜெஸ் ஸ்பீக்கிங் ஆ! அப்படியா நான் உடனே
வருகிறேன்.
திடீரென்று டிவிசனல் ஒபிசுக்கு வரச்சொல்லி அறிவித்தல் வந்திருக்கு. நான் இப்பவே போக வேண்டியிருக்கு.
மிஸ்ரர். தம்பையா சேர் இன்ர விசயத்தை இண்டைக்கே முடிச்சு அனுப்ப வேணும்.
சேர், நான் போயிற்றுவாறன். நான் ஆறுதலாக உங்கட வீட்டுக்கு வாறன். (அதிகாரி வெளியேறுதல்)
(தங்கராஜாவும் தம்பையாவும் மீண்டும் உள்ளே வருதல்)
சேர், எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்க. சேர், எங்களை
எங்கள் வாழ்க்கையை நீங்கள் காப்பாத்தியிருக்கிறீர்கள். அற்ப காசு ஆசையால தவறாக நடந்து கொள்ள பார்த்த எங்களை உங்கள் பெருந்தன்மையாலும் நல்ல குணத்
23

Page 20
தாலும் திருத்திற்றீங்க. எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த ஏற்றமுறாத தியாகிகளாகிய ஆசிரிய ஏணிகளை மறந்திருந்த எங்களுக்கு நீங்கள் அதனைப் புரிய வச்சிட்டீங்க. நாங்கள் எங்கட தவறை உணந்திட்டம். எங்களை மன்னிச்சிட்டன் என்று உங்கட வாயால சொன்னால் தான், எங்கள் மனம் ஆறும் சேர். இப்படியான தவறுகளை இனி எங்கள் வாழ்நாளில் நினைத்தே பார்க்க மாட்டம் சேர். நினைத்தே பார்க்க மாட்டம் சேர்.
இதென்ன தம்பி, காலில விழுறீங்க. எழும்புங்க. என்னைப் பெரிய மனிசனாக்குறீங்க.
(அமைதியான ஒலி எழுதல்)
(21 - 07 - 1994 அன்று ஒலிபரப்பப்பட்டது)
24

2. ஒரு முள் மலராகிறது
பாத்திரங்கள் : சாரதா ஆசிரியை, கவிதா, சுமன், மாணவர்கள்.
இடம் : வகுப்பறை
பின்னணி : பாடசாலை மணி அடிக்கிறது. வகுப்பின் சத்தம்
எழுந்து கொண்டிருக்கிறது. ஒரு.மாண : ரீச்சர் வாறா சத்தம் போடாதீங்க.
(சிறிது நேரம் அமைதி நிலவுகிறது)
மாண : குட் மோர்ணிங் ரீச்சர்
சார : குட் மோர்ணிங் சில்றன். (Children)
(வகுப்பு அமைதியாக இருக்கிறது) (ஆசிரியர் பாடத்தை ஆரம்பிக்கிறார்)
சார : பிள்ளைகளே! நீங்கள் எல்லோரும் 'ஸ்கொலர்சிப் பரீட்சைக்கு" தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதிகமான நேரத்தை உங்கள் வீட்டில் படிப்பதற்கு செலுத்துங்கள்.
நான் இப்போது தமிழ் புத்தகத்தில் 26ம் பக்கமுள்ள பாடலை விளக்கப் போகிறேன். கவனமாகப் பாருங்கள்.
"ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். மாதாவை ஒரு நாளும்
25

Page 21
$2O)
কাৰ্য্য
(U)
[J
மறக்க வேண்டாம். வஞ்சனைகள் செய்வாரோடிணங்க
வேண்டாம்"
இந்தப் பாடலின் கருத்து எத்தனை பேருக்கு விளங்கி யுள்ளது. விளங்கியவர்கள் கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்.
(சிறிது நேர அமைதியின் பின்)
நல்லது. உங்களில் அதிகமானவர்களுக்கு விளங்கியுள்ளது. விளங்காத சில மாணவர்களும் விளங்கிக் கொள்வதற்காக நான் பாடலை ஒருமுறை விளக்குகிறேன்.
"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம். அதாவது படியாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். நீங்கள்
ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும்.
"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
(திடீரென்று)
: என்ன? என்ன நடந்தது.
: இங்கை பாருங்க ரீச்சர் "றபர் பாண்டாலை" யாரோ
பின்னுக்கு இருந்து கடதாசி அடிச்சிருக்கிறாங்க.
: யார் அது? பின்னுக்கு இருந்து இந்த வேலை செய்தது.
: சுமன் ரீச்சர், இவன் தான் றபர்பான்ட் வைச்சிருந்தவன்.
26

FFTEJ
SF TIJ
y
सृIJ
LY
வேறு :
सु[[J
என்ன சுமன்? இங்காலை வா?
(சுமன் மேசையை அரக்கி எழுந்துவரும் ஒலி எழுதல்)
- என்ன? நீ தான் அடிச்சியா?
- (தயங்கிய வண்ணம்) ஆமா ரீச்சர்.
: ஏன் அடிச்சாய்? வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது
உனக்குத் தெரியேல்லையா?
: நான். நான் (தயங்கியவண்ணம்) சும்மா கையிலை
வைச்சு இழுத்துக் கொண்டிருந்தனான் ரீச்சர். அது தவறிப் போயிற்றுது.
இல்லை ரீச்சர்! நான் பக்கத்திலை இருந்து பார்த்துக் கொண்டிருந்தனான் ரீச்சர், சுமன் வேணுமெண்டுதான் அடிச்சவன்.
; சுமன்! நீ எப்ப பார்த்தாலும் ஏதாவது குழப்படி
செய்தபடிதான் இருக்கிறாய். எப்பவாவது அடிவாங்காம இருந்திருக்கிறாயா? உனக்கு பிரம்பாலை நாலு தராம விடேலாது.
(ரீச்சர் பிரம்பால் அடிக்கும் ஒலி)
(போய் குழப்படி எதுவும் செய்யாம இரு பாப்பம் பின்னுக்கு)
(பாடமணி அடிக்கிறது)
27

Page 22
乐T町
母T町
&#[IJ
#[IJ
கவி
夺T町
கவி
(FTU
: இப்ப றெஜிஜ்டர் மாக் பண்ண வேணும்.
ரவிந்திரன்! - பிறசன்ற் ரீச்சர். சாம்! பிறசன்ற் ரீச்சர் செல்வி - பிறசன்ற் ரீச்சர் கவிதா - பிறசன்ற் ரீச்சர்
கவிதா இங்கை வா! (கவிதா வருகிறாள்)
- என்ன இது தங்கமாலை போட்டு வந்திருக்கிறாய்.
பாடசாலைக்கு இது போட்டு வரக்கூடாது, என்று உனக்குத் தெரியாதா? அதுசரி! ஏன் கடந்த ஒரு வாரமாகப் பாடசாலைக்கு வரவில்லை.
எனக்கு ரீச்சர் கூகைக் கட்டு வருத்தம் வந்தது ரீச்சர்.
அதுக்கு தங்கமாலை போடுறது வழக்கம் எண்டு அம்மா போட்டு விட்டவ. நேற்றுத்தான் ரீச்சர் கொஞ்சம் சுகமாயிற்றுது. அதனாலை தான் நான் போன கிழமை வரேல்லை.
- சரி சரி மாலையை இனிமேல் போட்டு வரக் கூடாது.
: ஒம் ரீச்சர்!
! இப்ப என்ன பாடம் உங்களுக்கு
உடற்பயிற்சி பாடம் ரீச்சர்.
: ரீச்சர் இன்றைக்கு வரேல்லை. நீங்கள் வகுப்பிலை சத்தம்
போடாம இருக்க வேணும். நீங்கள் சத்தம் போடுறதாலை
28

ஒரு
கவி
FCh
கவி
(O)
பக்கத்து வகுப்பிலை ரீச்சர் படிப்பிக்கேலாது. நீங்கள் சத்தம் போட்டீங்கெண்டா, கிளாஸ் ரீச்சர் என்னைத்தான், பிறின்சிபல் மடம் ஏசுவா.
(சாரதா எழுந்து போதல்) (மீண்டும் வகுப்பு கசமுச என சத்தம் போட ஆரம் பிக்கிறது) ィ つ
: கவிதா! உங்கட அம்மாவுக்கு தெரியுந் தானே,
பாடசாலைக்கு தங்க காப்போ, மாலையோ போட்டு வரக்கூடாதென்டு.
: இல்லையடி, இது இந்த வருத்தத்துக்கு போட்டா
கெதியா வருத்தம் மாறுமாம். அதுதான் அம்மா போட்டவ. இதை அம்மா கழட்ட மறந்து போனா. நானும் ஸ்கூலுக்கு வரேக்கை இதைப்பற்றி யோசிக்கேல்லை.
: கவிதா இப்ப மடம் கண்டாவெண்டா, எங்கட சாரதா
ரீச்சர் மாதிரி சும்மா விட்டுட்டு போகமாட்டா. நல்ல
பணிஸ்மென்ற் தான்தருவா.
; எனக்கும்பயமாகத்தான் இருக்கு எதுக்கும் நான்
மாலையை கழற்றி புத்தகப்பைக்குள்ளே வைக்கிறேன்.
சரி அப்படிச் செய்.
(காட்சி மாறும் ஒலி)
29

Page 23
இடம்
காட்சி - 2
: அதிபரின் அலுவலகம்
பாத்திரங்கள் : அதிபர், சாரதா ஆசிரியை, சுமன்.
அதி
9 LM
சார
அதி
- டே சுமன் இந்த தண்ணி ஒடற பைப்பை ஏன்
உடைச்சனி?
இல்லை சேர், நான் வேணுமென்டு உடைக் கேல்லை சேர். தண்ணிர் குடிக்கேலாம கஷ்டப்பட்டுக் கொண்டிருந் தாங்க. அப்பதான் நான் திறக்க முயற்சி செய்யேக்கை உடைஞ்சு போயிற்று.
உன்னை நம்பேலாது. எந்த ஆசிரியரைப் பார்த்தாலும் நீ சரியான குழப்படியெண்டுதான் சொல்லுறாங்க. மற்றது நீ செய்யேக்கை பாத்துக் கொண்டிருந்தவங்களே உன்னிலை தான் குற்றம் எண்டு சொல்லுறாங்க.
இல்லை சேர். நான் வேணுமெண்டு உடைகேல்லை. (இவ் வேளையில் சாரதா ஆசிரியர் அறையினுள் நுழைகிறார்)
வாங்க மிஸ் சாரதா! உங்கட வகுப்பு மாணவன் சுமன் செய்திருக்கிற செயலைப் பார்த்தீங்களா.
என்ன மடம்?
இவன் தண்ணி குடிக்கிற 'ரப் பை உடைச்சுப்
3O

போட்டான். இவனுக்கு நல்ல பணிஸ்மென் கொடுக்க வேணும். இங்காலை வாடா, நீ இந்த முறையோடை யாவது திருந்து.
பாத்தி
பின்னணி
மாண்
சாரதா
8(Ub
சாரதா
(பிரம்பால் அடிக்கிறார் அவன் அழுகிறான்)
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 3
; வகுப்பறை
மாணவர்கள், சாரதா ஆசிரியை
மணி அடிக்கிறது.
(வகுப்பினுள் ஆசிரியை நுழைகிறார்.)
குட் மோனிங் fjgi!
குட் மோனிங் சில்ட்றன். சிற்டவுண்.
ரீச்சர் ராமு அழுகிறான் ரீச்சர்.
ராமு இங்கே வா!
(ராமு அழுதபடி வருகிறான்)
ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது.
ராமு : ரீச்சர் சுமன் எனக்கு அடிச்சு என்ர'சேட் பொக்கற்றையும்
31

Page 24
சாரதா :
சுமன் :
சாரதா :
சாரதா :
கிழிச்சுப் போட்டான், ரீச்சர். (அழுகிறான்)
சுமன் (கோபத்துடன் கூப்பிடுகிறார்) வா இங்கை
என்ன ரீச்சர்?
(பிரம்பால் சரியாக அடிக்கிறார்) நீ திருந்த மாட்டியே! இப்ப கொஞ்சம் முதல்தான் அதிபர் ஏதோ ரப்பை(Tap) ஐ உடைச்சுப் போட்டாயெண்டு அடிச்சவர். அதுக் கிடையிலை அடியை மறந்து போனியே! உனக்கு சூடு சொரணை எதுவும் இல்லையே?
போ! வெளியிலை போய் நில்! உனக்கு இண்டைக்கு தண்டனை பாடம் முடியும் வரை நீ வெளியே நிக்கிறதுதான்.
(சிறிது நேர அமைதியின் பின்)
நாங்கள் அந்த மரத்துக்குக் கீழே போவோம் பிள்ளைகள். அங்கே அந்த அபிநயப் பாடலைப் படிப்பது நல்லது, என்று நினைக்கிறன் . எல்லோரும் வரிசையாய் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் போங்கோ சுமன்! நீ அங்கு வரத் தேவையில்லை. இங்கை வகுப்பிலைதான் இருக்க வேணும். (எல்லோரும் வெளியே போகிறார்கள்)
(பாடசாலை மணி அடிக்கிறது)
32

8(U)
சுமன் :
9?QUb
சுமன் :
SQCDb
சுமன் :
S?(b
(வகுப்பினுள் மாணவர்கள் நுழையும் ஒலி, கசமுசசத்தம்)
: சுமன் சாரதா ரீச்சருக்கு உன்னைப் பிடிக்குதில்லைப்
போல இருக்கு.
ஒமடா! நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் என்னிலை பிழைபிடிக்கிறதும், எனக்கு அடிக்கிறதுமாத்தான் எந்த நாளும் இருக்கிறா?
மற்றவங்க எத்தனை பேர் குழப்படி செய்யிறாங்க.
அவங்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி சாரதா ரீச்சர்
இருந்திடுவா.
இவவுக்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்கிறன் பாரு கெதியிலை.
: நானும் பார்த்திட்டுத்தான் இருந்தனான்டா சுமன் ராமு
செய்த குற்றத்தைப் பற்றி விசாரிக்காம உனக்கு அடிச்சிட்டா ரீச்சர்.
ஒமடா ராமு என்ர புத்தகத்தை இழுத்துக் கிளிச்சதாலை தானே நான் அவனுக்கு அடிச்சனான். அப்ப அவன் போட்டிருந்த அந்த பழைய சட்டையின்ர பொக்கற் கிழிஞ்சு போச் சு. அவன் என்னோட சண்டைக்கு வந்திராட்டி நான் ஏண்டா அடிக்கிறன்.
சுமன் உன்னோட எல்லா ரீச்சசும் வெறுப்பாத்தான்
இருக்கிறாங்க.
33

Page 25
சுமன் :
650:
சாரதா :
சாரதா :
ஏன் எங்கட கிளாஸ் சாரதா ரீச்சரே என்னை இப்பிடி அடிச்சா மற்ற ரீச்சஸ் அடிக்க மாட்டாங்களா? இவவுக்கு படிப்பிக்கிற பாடத்திலை மற்றவையும் திருந்த வேணும். (மணி அடிக்கிறது)
(சாரதா ரீச்சர் வருகிறார்)
குட்மோனிங் ரீச்சர்.
குட்மோனிங் சில்ட்றன். சிற்டவுண். நாங்கள் அந்த அபிநயப் பாடலை மீண்டும் படிப்போம். நீங்களெல்லாரும் கிறவுண்ட் (Ground) டிலை இருக்கிற அந்த மரத்துக்குக் கீழை வாங்க. எல்லோரும் வரிசையாகவும் அமைதியாகவும் போங்க.
(சிறிது நேர அமைதி)
ஹலோ! சுமன் நீ எங்க பேறாய். உனக்கு இன்று நாள் முழுவதும் தண்டனை கொடுத் திருக்கிறதை மறந்திட்டியோ. நீ இன்று செய்த பிழைகளுக்கு உனக்கு தண்டனை பாடங்களில் கலந்து கொள்ள விடுகிறேல்லை.
நீ அங்கை வரேலாது. வகுப்பிலை இருந்து படி
(மெல்லிய ஒலி எழுகிறது)
(பாடம் முடிந்த அறிகுறிக்கான மணி அடித்தல்)
(மாணவர்கள் வகுப்பினுள் நுழையும் சத்தம்)
பிள்ளைகளே! இப்போது நீங்கள் பயிற்சிப் புத்தகத்தை
34

را)?؟
சாரதா :
69(Iხ
சாரதா :
சாரதா :
L[[\[[6ბსბI :
IाJ5ा :
எடுத்து பதினான்காம் பயிற்சியைச் செய்யுங்கள். ஹோம் வேக் இருந்தால் கொண்டு வாருங்கள் திருத்த வேண்டும்.
ரீச்சர் தவணைச் சோதனைக்கு கட்ட வேண்டிய பணம்
கொண்டு வந்திருக்கிறன்.
எட்டு ரூபாய் தானே கொடுக்க வேண்டும். இதென்ன பத்துரூபாய் தருகிறாய் சில்லறையாக எட்டு ரூபாய் இல்லையா?
: இல்லை ரீச்சர்,
பொறு! எனது பையினுள் பார்ப்போம் சில வேளைகளில் சில்லறைக்காசு இருக்கலாம்.
(கான்ட் பேக்கைத் திறந்து கையை உள்ளே விடும் ஒலி)
(திடீரென்று) ஆ1 ஐயோ. என்ர கையிலை என்னவோ குத்திப் போட்டுது. (கைப்பையை திடீரென்று வீசிவிடுதல்)
(கைப்பையினுள் இருந்து மட்டைத்தேள் வெளியே ஓடுதல்)
மட்டத்தேள் ரீச்சர், இந்த மட்டத்தேள் தான் உங்கட பையிலை இருந்திருக்க வேணும். அதுதான் உங்கட கையிலை கடிச்சுப் போட்டுது.
ஆ இதெப்பிடி என்ர பையுக்குள்ள வந்தது. நான் சற்று
35

Page 26
S?Ġb
இன்
வே
சாரதா :
கமன் :
சாரதா :
$2O)
சாரதா :
முன்னமும் இதுக்குள்ளை கைவச்சனான் தானே. அப்ப இருக்கேல்லையே.
: ரிச்சர் மட்டத்தேள் ஒன்றை வீட்டிலை இருந்து வரேக்கை
சுமன் போத்தல் ஒன்றிலை கொண்டுவந்தவன்.
: நானும் பார்த்தனான் ரீச்சர் சுமன் காட்டினவன்.
: ரீச்சர் சுமன் தான் உங்கட பாக்குக்குள்ளை (Bag) இதை
விட்டிருக்க வேணும். நாங்கள் கிறவுண்டுக்கு போன நேரத்திலை சுமன் தான் இங்கை இருந்தவன் ரீச்சர்.
சுமன்! என்ன சொல்லுறாய் நீ! நீதானா மட்டத்தேளை
விட்டனி,
(மெளனமாக நிற்கிறான்)
என்ன ஒரு பதிலையும் காணேல்லை. அப்ப நீ தான் விட்டிருக்கிறாய்.
! உங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கப் போறனெண்டும்
இவன் சொன்னவன் மிஸ்.
கமன் பரவாயில்லை, ரீச்சருக்கு மேலை இருக்கிற கோபம் தீர்ந்ததா உனக்கு. நீ இப்பளனக்கு இப்படிச் செய்ததாலை நான் உனக்கு அடிக்கப் போறதில்லை. ஆனால் இதை நீ இப்ப வேறு ரீச்சருக்கு செய்திருந்தியெண்டால் நீ அடிவாங்கிறது மாத்திரமில்லாமல் கிளாஸ் ரீச்சர் எனக்கும் அவமானமா இருந்திருக்கும். இங்கை வா சுமன்,
36

ஏன் இப்படிக் குழப்படி செய்கிறாய். நீ நல்ல பிள்ளை. உனக்கு நான் அடிக்கிறது நீ திருந்த வேணுமெண்டுதான். உனக்கு அடிக்கிறதாலை எனக்கு என்ன பயன் அப்பா நீ நல்ல பிள்ளையா நடந்தா உனக்கும் பெருமை, எனக்கும் பெருமை, உன்னைப் பெற்ற தாய்தந்தை யருக்கும் பெருமைதானே சுமன்,
பழிவாங்குகிற குணம் கூடாது. இந்தப் புரியாத வயதிலை இப்படியான பழக்க வழக்கங்கள் காலூண்ட விட்டுட்டால் அது உன் பிற்கால வாழ்க்கையைத்தான் பாதிக்கும். அதனாலை தான் உன்னை அடித்தாவது திருத்த வேணு மென்று நினைக்கிறனான். அதாலை தான் சிலவேளை யிலை உனக்கு அடியும் போடுகிறனான்.
யாராவது உனக்குத் தீங்கு செய்தா நீ ஆசிரியரிடம் கூறு. அதைவிட்டு அவர்களோடு சண்டைக்குப் போகக் கூடாது. நீ இந்த மட்டைத்தேளை என்ர பையுக்குள்ளை பிடிச்சு விட்டு எனக்கு கடிக்கச் செய்ததாலை உனக்குச் சந்தோஷந்தானே!
சரி இனி மேலாவது நல்ல பிள்ளையா, மற்றவர்கள் உன்னை போற்றக்கூடிய பிள்ளையா இரு சரிதானே! போயிரு
(மணி அடிக்கிறது) (காட்சி மாறும் ஒலி)
37

Page 27
காட்சி - 4
இடம் : பாடசாலை வகுப்பறை, 5ஆம் ஆண்டு
பாத்தி : கவிதா, சுமன், சாரதா ஆசிரியை, ஏனைய
மாணவர்கள்.
பின்னணி : (வகுப்பறையில் மாணவர்களின் ஒலி)
(மணி அடிக்கிறது) (அமைதி நிலவுகிறது)
(பிறின்சிபல் ஒவ்வொரு வகுப்பாக பார்த்துக் கொண்டு வந்துகொண்டிருந்தார்) அதி : என்ன? சுமன் நீ மட்டும் தனியே இருக்கிறாய்? மற்றவர்கள்
எங்கே? என்ன பாடம் இப்போது?
சும : இப்போ உடற்பயிற்சி பாடம் சேர், அவர்களெல்லோரும்
கிறவுண்ட் (Ground) டிற்கு போய்விட்டார்கள்.
அதி : அப்ப நீ ஏன் போகாமல் இருக்கிறாய்?
கம : எனக்கு காலிலை ஏலாது சேர். அதாலை ரீச்சரே
வகுப்பிலை போய் இருக்கச் சொல்லிற்றா.
அதி சரி சரி சத்தம் போடாம புத்தகத்தை எடுத்துப் படிச்சுக்
கொண்டிரு.
(பிறின்சிபல் போகிறார்)
38

8(U)
கவி
கவி
9(ሠ
கவி
ஒரு
கவி
(பாடம் முடிந்ததற்கான மணி அடிக்கிறது) (மாணவர்கள் எல்லோரும் வகுப்புனுள் நுழையும் ஒலி)
கவிதா இன்டைக்கு நீ மாலை போடாமலே வந்திட்டாய்.
: நான் நேற்றே கழற்றி பாக்குக்குள்ளை வைச்சிட்டன்.
வீட்டிலை அம்மாட்டையும் சொல்லேல்லை. அதை எடுத்தும் குடுக்கேல்லை. பாக்குக்குள்ளைதான் இருக்கும். பாப்பம் ஒருக்கா.
(பாக்கைத் திறந்து தேடும் ஒலி)
(பரபரப்புடன்) ஐயோ என்ர மாலையைக் காணேல்லையடி
என்ன? நல்லாத் தேடிப்பாரடி (புத்தகங்களை வெளியே கொட்டும் ஓசை)
: இதுக்குள் ளை தானே கடதாசியிலை மடிச் சு
வைச் சிருந்தனான். காணேல்லையடி அம்மாட்டை அடிதான் வாங்க வேணும்.
; நீ வீட்டிலை எடுத்து வைச்சியோ தெரியாது.
இல்லையடி! நான் நேற்று ஸ்கூலாலை போன உடனேயே சித்தப்பா வீட்டுக்கு அவற்றை மகனின்றை பிறந்தனாள் கொண்டாட்டத்துக்குப் போயிற்றன். இரவும் அங்கதான் படுத்தனான். காலமைதான் வீட்டவந்து குளிச்சுப்போட்டு அப்பிடியே பாக்கை தூக்கிக்கொண்டு ஸ்கூலுக்கு வந்தனான். பாக்கும் திறந்தபடி கிடக்கேல்லை.பூட்டின
39

Page 28
SO)
கவி
8(O)
கவி
8(U)
கவி
S?(Ub
படிதான் கிடந்தது. எனவே வீட்டிலை நான் மாலையை எடுத்து வைக்கேல்லை.
அப்ப நீ பேத்டேக்கு வெளிக்கிட்டுப் போகேக்கையும்
உங்கட அம்மா கவனிக் கேல்லையே. உன்ர கழுத்திலை மாலையைக் காணேல்லை எண்டு கேக்கேல்லையே.
இல்லையடி அம்மா முதலிலேயே சித்தப்பா வீட்டுக்குப் போயிற்றா, பிறகு அங்கை ஆரவாரங்களில்லை அவவும் கவனிக் கேல்லை. நானும் சொல்லேல்லை.
: ஒரு வேளை இஞ்ச வகுப் பிலை ஆரும்
எடுத்திருப்பாங்களோ?
: நாங்களெல்லாரும் கிறவுண்டுக்குப் போன நேரத்திலை
வகுப்பிலை யார் இருந்தது.
: ஆ சுமன் தான் இருந்தவன். இவன் எடுத்திருப்பான்டி
இவன் சரியான குழப்படிதானே! களவெடுத்திருப்பாண்டி
: இப்ப என்னடி செய்யிறது. வீட்டிலை அம்மாட்டத்
தப்பேலாது.
: இதை பிறின்சிபல்லிட்டை சொல்லுவம். அவதான்
எப்படியும் இதை எடுத்துத் தருவா. வா போவம்.
(காட்சி மாறும் ஒலி)
அதிபர் அலுவலகம்
40

பாத்திரங்கள் : அதிபர், கவிதா, சுமன், சாரதா, ஆசிரியை
பின்
அதி
கவி
SLY
அலுவலகத்தில் கவிதா, சுமன் விசாரிக்கப்படுகிறார்கள்.
: கவிதா பாடசாலைக்கு மாலை போட்டுவரக் கூடாதென்று
தெரியுந்தானே.
: நேற்றே சாரதா ரீச்சர் சொல்லி நான் அதைக் கழற்றி
பாக்குக்குள்ளை வைச்சிட்டன்
; அப்போ அதை நீ வீட்டிலை எடுத்து வைச்சிட்டு
வந்திருக்கலாமே?
: நான் மறந்து போயிற்றன் மடம், அப்படியே பாக்கை
திறக்காமலே திரும்பவும் ஸ்கூலுக்கு எடுத்து வந்திட்டன். சுமன் தான் இதை எடுத்திருக்கவேணும் மடம்.
! நீ எப்படி இதைச் சுமன் எடுத்திருப்பான் என்று
சொல்லமுடியும்.
; உடற்பயிற்சிப் பாட நேரம் நாங்கள் எல்லோரும்
கிறவுண்டுக்கு போயிற்றம் சுமன் மட்டும் தான் வகுப்பிலை இருந்தவன்.
: சுமன்! நானும் கவனித்தனான். உடற்பயிற்சி பாடநேரம்
நீ தானே வகுப்பிலை இருந்தனி
: ஓம் மடம் நான் வகுப்பிலை தான் இருந்தனான். ஆனால்
நான் மாலையை எடுக்கேல்லை.
41

Page 29
அதி : நீ மட்டும் வகுப்பிலை இருந்திருக்கிறாய். பாக்கும் இருந்திருக்குது, மாலையைக் காணவில்லை. அது எப்படி மாயமாய் காணாமல் போனது. உண்மையைச் சொன்னியன்டால் ஒரு பிரச்சினையும் இராது. இல்லாட்டி உன்னை நான் பொலிசிலை பிடிச்சுக் கொடுக்க வேண்டி வரும்.
சும : (தயக்கத்துடன்) உண்மையாக நான் எடுக்கேல்லை மடம்
நான் கேள் சின்ர மேசைப் பக்கம் போகவே இல்லை.
அதி : உன்னிட்ட உண்மையைப் பேசி எடுக்கேலாது. அடியிலே தான் எடுக்கலாம். பியன் போய் சாரதா ரீச்சரை வரச்சொல்லு. (அதிபர் பிரம்பால் அடிக்கிறார்) சொல்லடா உண்மையை. மாலையை எடுத்து எங்க வைத்திருக்கிறாய்.
சும ஐயோ அடிக்காதீங்க மடம். நான் உண்மையா
எடுக்கேலை. சத்தியமா எடுக்கேல்லை. (அழுகிறான்) (அடி விழும் சத்தம், சுமன் அழும் சத்தம்)
அதி : மிஸ், சாரதா உங்கட வகுப்பு மாணவன் சுமன் பெரிய கள்ளனாய்ப் போயிற்றான். இவ்வளவு தூரத்துக்கு ஒரு மாணவன் வரும்வரை அவனை நீங்கள் வகுப்பிலை வைச்சிருந்திருக்கக் கூடாது. வேளியே அனுப்பியிருக்க வேணும்.
சார என்ன மடம் சொல்லுறீங்க.
W
அதி : கவிதாவின்ர மாலையைக் காணவில்லையாம். இவள்
42

ğFTU
स[[J
கவி
சார
மாலையைக் கழற்றி பாக்குக்குள்ள வைச்சிருந்திருக கிறாள். உடற்பயிற்சிப் பாடநேரம் சுமன் மட்டும் தான் வகுப்பிலே இருந்திருக்கிறான். மற்றப் பிள்ளைகள் எல்லாம் கிறவுண்டுக்குப் போயிருந்தார்கள். பாடம் முடிந்து வகுப்புக்கு வந்து பார்க்கேக்கை மாலையைக் காணேல்லையாம்.
கவிதா, நான் உனக்கு நேற்றே சொன்னனான் தானே, மாலையைப் போட்டுக் கொண்டு வரக்கூடாதெண்டு.
: நீங்க சொன்னவுடனேயே நான் மாலையைக் கழட்டி
பாக்குக்குள்ளை வைச்சிட்டன் ரீச்சர்.
வீட்டுக்குப் போனனிதானே வீட்டிலை விட்டிட்டு வந்திருப்பாய்.
இல்லை ரீச்சர், நான் பாக்கைத் திறக்கவுமில்லை. அம்மாட்டை எடுத்துக் குடுக்கவுமில்லை. அப்பிடியே பாக்கை இண்டைக்கு ஸ்கூலுக்கு கொண்டு வந்தனான்.
மிஸ் சாரதா, இவன் சுமன் எடுத்துத்தான் இருப்பான். இவனை திருத்த ஏலாத ஒரு கழுதை எண்டு எல்லா ரீச்சசும் சொல்லுறது உங்களுக்குத் தெரியாதா?
மடம், சுமனைப் பற்றி என்ன எண்டாலும் சொல்லுங்க. ஆனால் அவன் மாலை எடுத்திருப்பான் எண்டு நான் சொல்லமாட்டன்.
(கோபத்துடன்) என்ன ரீச்சர் சொல்லுறீங்க.
43

Page 30
स[IJ
சார
அதி
साJ
அதி
: குழப்படியும், குறும்புத்தனமும் உள்ள ஒரு பிள்ளை
களவெடுக்கும் இயல்புள்ளவனாக நிச்சயம் இருக்க வேண்டுமென்று ஏதாவது நிபந்தனை இருக்கிறதா மடம்.
ரீச்சர், உங்களைப் போல மாணவர்களுக்கு வக்காலத்து
வாங்குகின்ற ஆசிரியர்கள் இருக்கும்வரை அவங்கள் திருந்தவும் மாட்டாங்கள். அவங்களைத் திருத்தவு மேலாது.
: மடம்! நிச்சயமாகச் சொல்லுறன் சுமன் மாலையைத்
திருடியிருக்கமாட்டான்
: ரீச்சர், இப்பிடி பிள்ளையஸ் செய்யிற குற்றத்தைக்கூட
நீங்கள் மறைக்கப்பார்க்கிறீங்கள். பிள்ளையிட்டை இருந்து அடித்தோ, வெருட்டியோ உண்மையை வரவழைக்
கிறதைவிட்டு அவங்களுக்காகப் பேசி இன்னும் அவங்கள் குற்றம் செய்ய தூண்டுறீங்க நீங்க.
: மடம் சுமன் குறும்புக்காரன், குழப்படிகாரன்தான், ஏன்
எனக்குக்கூட குறும்பு செய்திருக்கிறான். ஆனால் இதுவரை அவன் வகுப்பில் திருடியதாக எந்த ஒரு சம்பவமும் நிகழவில்லை. எனவே நான் உறுதியாகச் சொல்கிறேன் சுமன் அந்த மாலையைத் திருடியிருக்க மாட்டான்.
மிஸ் சாரதா, நீங்கள் என்ன சொன்னாலும் என்னாலை
ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவனைப் பொலிசிலை பிடிச்சுக் குடுக்கிறதைத் தவிர வேறெதுவும் என்னாலை
44

FTJ
அதி
सृ[[J
于T町
செய்யேலாது.
மடம், நீங்கள் அவசரப்படுறிங்கள் மடம் இந்த விசயத்தை வடிவாக ஆராயாது பொலீசுக்குப் போகாதீங்க மடம் இதனால் இந்த பிள்ளையின் மனம் மேலும் பழி வாங்கும் உணர்ச்சி கொண்டதாக மாறலாம். பிள்ளைகளை நன்கு 6i Fitfulf LDLil.
(கோபத்துடன்) நீ என்ன எனக்கு புத்தி சொல்லிறது. இவனை பொலிசிலை பிடிச்சுக் கொடுக்கிறது மாத்திர மில்லாம இவனைப் பாடசாலையிலிருந்து நீக்கவும் முடி வெடுத்திருக்கிறன். உங்களைப் போன்ற ரீச்சர் மாரின் அசிரத்தைதான் இன்றைக்கு இப்படி நிகழ்ச்சி எண்ட பாடசாலையிலை நடக்க காரணமாயிருக்குது.
மடம் என்னுடைய அனுபவத்திலை சொல்லுறன்மடம், பிள்ளைகளைத் திருத்துவதற்கு இப்படியான தண்டனை சரியானதல்ல. இதனால் அப் பிள்ளைகளின்ர வாழ்வு, ஆளுமை பாதிக்கப்படும் மடம்.
அப்பிடியெண்டா? இந்தப் பிள்ளையின்ர காணாமற்போன மாலைக்கு யார் பொறுப்பு. அதுவும் பாடசாலையிலை காணாமல் போனதற்கு யார் பொறுப்பு.
மடம் நான் அந்த மாலைக்குப் பொறுப்பு. அவங்கட பெறுமதியை நானே கொடுக்கிறன். இனி சுமன் நல்ல பிள்ளையா நடப்பானென்று நான் உறுதிகூறுறன்.
இவ்வளவுதான் என்னாலை முடியும். இதுக்கு மேலை
45

Page 31
முடிவெடுக்கிறது உங்கடை பொறுப்பு இறுதியாக ஒன்று சொல்லவிரும்புகிறன். பிள்ளைகளின் மனம் சிதைந்து போகக்கூடிய, அவர்களின் ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய எந்த தண்டனையையும் ஆசிரியர்கள் வழங்குவது சரியல்ல. நான் வருகிறேன்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 6
இட பாடசாலை அதிபர் அலுவலகம்
பாத்திரங்கள் : அதிபர், கவிதாவின் தாய் கமலா
(கவிதாவின் தாய் உள்ளே நுழைகிறாள்)
கம : மடம் உடனடியாக வருமாறு சொல்லியனுப்பியிருந்தீர்கள்
அதுதான் வந்தனான்
இங்க பாருங்க அம்மா, பாடசாலைக்கு வரும் போது பிள்ளைகளுக்கு தங்கச் சாமான்கள் போட்டுவிடக்கூடாது என்று நிபந்தனை இருக்கிறது உங்களுக்குத் தெரியாதா?
: தெரியும் மடம், என்ன நடந்தது
உங்கட மகள் கவிதாவின் தங்க மாலை இங்கிை காணமல்
போயிற்று. நீங்க இதை உங்கள் மகளின்ரை கழுத்திலை போட்டு பாடசாலைக்கு அனுப்பி வைத்ததாலை தான் இப்படி ஒரு திருடே வகுப்பிலை நடந்திருக்கு.
46

by
Y
இடம்
என்ன சொல்லுறீங்க மடம் நான் நேற்றே மகளின்ரை பேக்குக்குள்ளை இருந்து தங்கமாலையை எடுத்து வீட்டிலே வச்சிட்டேனே. அவள் போட்டுக்கொண்டு
வரேல்லை.
அப்ப உன்னுடைய மகள் பாக்குக்குள்ளை மாலையைக் கொண்டு வந்ததெண்டும் அதை இங்கை யாரோ
எடுத்திட்டாங்களெண்டும் சொல்லி அநியாயமாக ஒரு மாணவனை குற்றமும் சாட்டி இருக்கிறாளே.
; அவளுடைய பாக்கிலிருந்து அதை நான் எடுத்து
வைத்தது அவளுக்குத்தெரியாது. அதுதான் அவள் அப்படிச் சொல்லியிருக்கிறாள்.
உங்கட மகளாலை இப்ப இங்க பெரிய விபரீதம் நடக்க
இருந்தது. நீங்களெல்லாம் பொறுப்புணர்ச்சியோட நடந் திருந்தால் இப்படியொருநிலை இங்கை ஏற்பட்டிருக் காது.
போங்க, போங்க இனிமேலாவது பிள்ளையளை ஸ்கூலுக்கு அனுப்பேக்கை தங்கச் சாமான்களாலை சோடிச்சு அனுப் பாதீங்க. பிள்ளைகளையும் கண்காணித்து அனுப்புங்க.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 7
5ஆம் ஆண்டு வகுப்பறை
47

Page 32
பாத்திரங்கள் : அதிபர், சாரதா ரீச்சர், சுமன், கவிதா மற்றும்
6 :
साJ
அதி :
स[[J
மாணவர்கள்.
(வகுப்பறை அமைதியாய் இருக்கிறது அதிபர் நுழைகிறார்)
குட் மோனிங் மடம்.
குட்மோனிங் சில்ட்றன், சிற்டவுன். ரீச்சர் என்ன கண்கலங்கியவண்ணம் இருக்கிறீங்க. 'சொறி ஐ ஆம் வெறி சொறி
என்ன மடம் சொல்லிறீங்க.
கவிதாவின் அம்மாவை இப்போது அழைத்து விசாரித்தேன். அந்தமாலையை அவ கவிதாவின் பாக்கிலிருந்து எடுத்து வீட்டிலேயே வைத்துவிட்டாவாம். ஆனால் அதைக் கவிதாக்கு சொல்லவில்லை.
அநியாயமாக ஒரு மாணவன் தண் டிக்கப்பட இருந்தானே. அவன் தண்டிக்கப்பட்டிருந்தால் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும். நீங்கள் அவசரப்பட்டு காரியம் ஆற்றியிருந்தால் விபரீதமான விளைவு ஏற்பட்டிருக்கும்.
சொறி சாரதா, நானும் அவசரப்பட்டுவிட்டேன் மாணவர் களே, நீங்கள் எல்லோரும் சுமன்மீது குற்றம் சுமத்தினீர் கள். எதையும் ஆராயாமலும், அறியாமலும் மற்றவர் களுடைய அவதானங்களை வைத்தும் முடிவுகட்டக்
48

சுமன் :
கூடாது கவிதா, ஒன்றும் அறியாத சுமன் மீது நீயும் உனது சக மாணவர்களும் குற்றம் சுமத்தினீர்கள். ஆனால் அது எவ்வளவு ஆபத்தமானது என்பதைப் பாத்தீர்களா?
சுமன்! நீ நல்ல பிள்ளை, குறும்பும், குழப்படியும் செய்வதால் தானே ஏனைய செயல்களுக்கும் நீ பொறுப்பானாய்.
என்னைவிட, இந்தப்பாடசாலை ஏனைய ஆசிரியர்
களைவிட சாரதா ரீச்சர் உன்னை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்.
அநியாயமாக ஒரு பாவத்தைச் சம்பாதிக்க இருந்த
என்னை உங்கள் ஆசிரியை காப்பாற்றி இருக்கிறார்.
ரீச்சர்! உங்களைக் காரசாரமான வார்த்தை களால் நான் ஏசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
நான் வருகிறேன்.
(அதிபர் போகிறார்) (மெல்லிய சோக இசை பின்னணியில் எழுந்து கொண்டிருக்கிறது)
(அழுதபடி) ரீச்சர் ரீச்சர் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ரீச்சர். எனக்காக, மடத்திடம் வாதாடியது மாத்திரமின்றி அவரிட்டை ஏச்சும் வாங்கியதை என்னாலை மறக்க முடியாமலிருக்கு ரீச்சர். நான் இப்ப
49

Page 33
திரிந்திற்றன் ரீச்சர். இனி ஒருக்காலும் நான் குழப்படி செய்யமாட்டன். நல்ல பிள்ளையாக இருப்பன். நீங்க எனக்காகப் பட்ட வேதனையும், தண்டனையும் போதும் ரீச்சர், புரிஞ்சிட்டன் ரீச்சர் நான் உணந்திட்டன் ரீச்சர், இனி சத்தியமாக நல்ல பிள்ளையாக, நல்ல மாணவனாக இருப்பன் ரீச்சர். என்னை மன்னிச்சிட்டன் என்று சொல்லுங்க ரீச்சர்.
(குலுங்கிக் குலுங்கி அழுகிறான்)
இதென்ன சுமன் காலை பிடிக்கிறாய். எழும்பு! நீ என்ன செய்தாலும் நல்ல பிள்ளை என்பது எனக்குத் தெரியும். அழாதை இப்பதான் நீ என்ர சிறந்த மாணவன்.
(காட்சி முடிவுறும் ஒலி)
(11 - 08 - 1994 அன்று ஒலிபரப்பப்பட்டது)
50

3.
பாத்திரம்
ஈரமுள்ள காவோலைகள்
காட்சி - 1
ராமு, அவன் மனைவி, சீதா, ராமுவின் தந்தை சுப்பையா, ராமுவின் தாய் முத்தம்மா.
பின்னணி : (ராமுவின் வீடு, ராமுவும், சீதாவும் முன் மண்ட
Us(UP
சுப் :
JT(p :
முத்
பத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுப்பையாவும் முத்தம்மாவும் உள்ளே வரும் ஒலி)
வாங்க அப்பா வாங்க அம்மா எப்ப மூண்டு மாசம்
முடியுமெண்டு பாத்துக்கொண்டிருப்பான் தம்பி. முடிந்ததுதான், உடனேயே உங்களை அனுப்பி விடுவான். ஒரு நாள் கூட அதிகமாக உங்களை வைச்சிருக்க
LT6.
ராமு! நீயும் உன்ர தம்பியும் சேர்ந்துதானே தீர்மானிச் சனிங்க. மூன்று மாதம் உன்னோடையும், மூன்று மாதம் அவனோடையும் நாங்கள் இருப்பதாக முடிவெடுத்தனிங்க. அவன் தன்ர காலக்கெடு முடிஞ்சுபோச்செண்டு அனுப்பின திலை என்ன பிழை இருக்கு.
இல்லை அப்பா தம்பி வாசன் உங்களிலை எவ்வளவு அக்கறையாயிருக்கிறானெண்டு சொல்ல வந்தனான்.
; ராமு! நீ மட்டும் என்ன எங்களை ரெண்டு மூண்டு
51

Page 34
कt]
ராமு :
நாள் கூடவா வைச்சிருக்கிறாய். நீயும் தான் எப்ப மூண்டு
மாதம் முடியும் எண்டு பாத்திருக்கிறாய். முடிந்த மறுநாளே எங்களை உன்ர தம்பி வீட்டுக்கு அனுப்பி விடுறாய். ம்..ம். (பெருமூச்சுடன்) இந்த வயது போன காலத்திலை எங்கட வாழ்க்கையும், தம்பி வாசம் மூண்டு மாதம், அண்ணன் வாசம் மூண்டு மாதம் என்று போய்க் கொண்டிருக்கு. இந்த வயது போன காலத்திலை ஒரு இடத்திலை ஆறுதலாக இருக்கேலாம கிடக்கு.
கொழும்பிலை வீடெடுத்து குடி இருந்தா இப்படித்தான் மாமி வீட்டுச் சொந்தக் காரன் வீட்டிலை கன பேர் இருக்கேலாது எண்டு சொல்லித்தான் தந்தவன். மற்றது தொடர்ந்து ஒரு வீட்டிலை உங்களுக்கும் வசதிக் குறைவாக இருக்கும் தானே. அதாலை தான் மாமி இப்படி உங்களை வைச்சிருக்க வேண்டியிருக்கு. வீடெடுக் கேக்கை மூன்றுபேருக்கு மேலை இருக்கேலாது எண்டு தான் தந்தவன். அப்படியிருக்கேக்கை நீங்க இரண்டு பேரும் தொடர்ந்து தங்கிறதை அவன் விரும்ப மாட்டான். அதாலை தான் இங்கையும், தம்பி வீட்டையும் மாறி மாறி உங்களை வைத்துச் சமாளிக்கிறம்.
: சரி சரி விடுங்க கதையை இப்ப ஏன் இந்தக்
கதையெல்லாம்.
அப்பா எனக்கு வெளியிலை வேலையிருக்கு போய் வரப்போறன். சீதா . . . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தேத்தண்ணி போட்டுக் கொடு.
52

சீதா
முத்
कtl
முத்
U
வரேக்கை நீங்க பால் வாங்கிட்டு வாங்க.
(ராமு வெளியேறும் சத்தம்) (சீதா உள்ளே போகும் சத்தம்)
- என்னப்பா? இந்த வயது போன காலத்திலை இங்கையும்
அங்கையும் அலைந்து கொண்டிருக்கிறது பெரிய சங்கடமாயிருக்கு இவள் கனடாவிலை இருக்கிற மூத்தவள் சாரதா வாறனென்டிருக்கிறாள். அவள் வந்தால் அவளோட போயிற்றால் நல்லது போல இருக்கு.
: முத்து . . இந்த நாளிலை கொழும்பு வாழ்க்கை
இப்படித்தான். அவங்களும் என்ன செய்ய முடியும். கொள்ளுப்பிட்டியிலை இருக்கிற வாசன்ற வீடைப் பார்த்தனிதானே எவ்வளவு சின்னதாயிருக்கு. அதுக்கிளை எப்படி நாலுபேரும் இருக்கிறது? ஒரு மாதிரிச் சமாளிச்சுக் கொண்டுதான் போகோணும்.
: ஒமப்பா . . . இது எங்கடை தலையெழுத்தில்லாம
வேறென்ன? அங்கை மானிப்பாயிலை இருக்கிற அந்தப் பெரிய வீட்டை விட்டுட்டு இங்கை வந்து நாங்கள் படுகிறபாடு. கடவுளுக்குத்தான் தெரியும். என்ன கஷ்டமெண்டாலும் எங்கட ஊர் வீட்டிலை இருக்குமாப் போலை வருமே . . இந்தப்பிள்ளையின்ரை பேச்சை நம்பி வந்த எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
: ஓம் முத்து . . அந்த முன்விறாந்தையிலை சாப்பிட்டுப் போட்டுக்காலை நீட்டி நிமிர்ந்து படுக்கிற சந்தோசம் எப்ப
53

Page 35
முத்
முத்
தான் வரப்போகுதோ? என்னெண்டாலும் எங்கட சொந்த இடம் மாதிரி வராது?
: என்ன செய்யிறது? கடைசிக்காலத்திலை இப்படி
அலைஞ்சு திரிய வேணுமெண்டு எங்களுக்கு எழுத்துப் போல இருக்கு. வயது போற காலத்திலை உடம்பும் இடங் கொடுக்குதில்லை.
(இந்நேரம் சீதா வருகிறாள்)
மாமி உங்கட கதையை நானும் கேட்டிட்டுத்தான்
இருந்தன். அங்கை 3 மாதம் இங்கை 3 மாதம் இருக்கிறது கஷ்டமெணி டால் மானிப்பாய்க்குத் திரும்பிப்போறதுதான் நல்லது. இங்கை கொழும்புச் சீவியம் இப்பிடித்தான். நாங்களும் இவர் எடுக்கிற சம்பளத்தோடை வீட்டு வாடை, பிள்ளையளின்ர செலவு, இவை எல்லாத்தையும் சமாளிச்சுத்தான் வாறம். இந்தப் பிரச்சினையள் தீர்ந்து போச்செண்டால் நாங்களும் ஊரோட வந்து இருக்கத்தான் எண்ணியிருக்கிறம்.
இல்லை சீதா . . . இந்த வயதுபோன காலத்திலை இப்படி
ஒரு சீவியமா எண்டு நினைச்சுத்தான் கதைச்சிட்டன். மற்றப்படி ஒருத்தரையும் குறை சொல்லிக் கதைக் கேல்லை.
நீங்கள் ஊரிலை படுகிற கஷ்டத்தை நினைச்சுத்தான்
எங்களோடை வந்திருக்க உங்களைக் கூப்பிட்டனாங்கள். அடுத்தது இப்ப ஊர் இருக்கிற நிலையிலை இங்கையும்
54

சுப்
இடம்
எல்லாம் கஷ்டம் தானே. எங்கட ஆக்களாலைதான் கொழும்பிலை வீடுகளின்ரை வாடையும் கூடிப்போச்சு. ஐந்நூறு அறுநூறு ரூபாவுக்கு வாடைக்கிருந்த வீடுகள் எல்லாம் இப்ப 5000க்குப் போச்சு. இப்ப இந்த வெளி நாட்டுப் பணம் வாறதாலை எங்கட ஆக்களும் போட்டி போட்டு வாடகைக்கு வீடு எடுக்கினம். இதாலை வீட்டுச் சொந்தக்காரர் கூட வீடு கொடுக்கிறதிலை சரியான
கறாராயிருக்கிறாங்கள்.
; எங்கட சீவியம் இப்படியாப் போச்சு. என்ன செய்யிறது.
நாங்கள் பாவம் செய்த பிறவிகளாய்ப் போயிற்றம்.
* வாங்க மாமி மாமா சாப்பிடுவம்.
காட்சி - 2
ராமுவின் வீடு
பாத்திரங்கள் : ராமு, சீதா
பின்னணி ' (முன்மண்டபத்தில் ராமுவும் சீதாவும் அமர்ந்து
ராமு :
கதைத்துக் கொண்டிருக்கின்றனர்)
சீதா இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேணுமெண்டா தம்பி வாசனையும் கூப்பிட்டுத்தான் கதைக்க வேணும்.
: இப்படிச் செய்தா என்னப்பா? உங்கட அப்பா எங்களோடை
55

Page 36
ராமு
ராமு
இடம்
யும், அம்மா உங்கட தம்பியோடையும் இருந்திட்டால்
இங்கையும் அங்கையும் மாறி மாறி அப்பாவும் அம்மாவும்
அலைஞ்சு கொண்டிருக்கிற அவசியம் ஏற்படாது தானே.
: இதுக்கு அம்மாவும் அப்பாவும் சம்மதிக்க வேணுமே
சீதா
; அவங்க சம்மதிக்காம விடுவாங்களா? ஒரு இடத்திலேயே
ஆறுதலாக இருக்கலாம் தானே. நான் நினைக்கிறன்
இதுக்கு உங்கட தம்பியும் ஒத்துக்கொள்ளுவாரெண்டு.
: அப்படியெண்டா அப்பான்ர பென்சன் காசு ஆருக்குச் சேரும்?
அரைவாசி அரைவாசியா எடுத்ததிட்டாப் போச்சு. அம்மா
அங்க இருக்கிற படியால் தம்பிக்கும் அரைவாசி கொடுக்கத்தானே வேணும்.
இப்ப நேரம் 4 மணிதானே. தம்பியும் வீட்டுக்கு
வந்திருப்பான். எதுக்கும் அவனுக்கு ஒரு ‘கோல்'(Cal) எடுத்திட்டு வாறன். இங்கை அவனை வரச்சொல்லுவம்.
எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திடலாம்.
- சரி அப்ப போயிட்டு வாங்க. (ராமு வெளியேறுதல்)
காட்சி - 3
- ராமுவின் வீடு
பாத்திரங்கள் : ராமு, சீதா, வாசன், முத்தம்மா, சுப்பையா
56

பின்னணி : (முன் மண்டபத்தில் ராமு, சீதா, வாசன், முத்தம்மா,
ராமு
முத்
6)TF
JП(U) :
சுப்
ராமு
முத்
சுப்பையா எல்லோரும் அமர்ந்திருக்கின்றனர்)
(கதவு தட்டப்படும் ஒலி)
: சீதா ஆரெண்டு பார்
(சீதா கதவைத் திறக்கிறாள்)
: ஆ1 வாங்க வாங்க இங்க தம்பி வாசன் வந்திருக்கு.
: ஆ! வாசனா? என்ன அவசரமா வாறாய்? பிள்ளையஞக்கு
ஏதும் சுகமில்லையோ?
: இல்லையம்மா! அப்படி ஒன்றும் இல்லை
நான் தான் வரச் சொன்னனான் அம்மா! கலந்து பேசி ஒரு முடிவெடுக்க வேணுமெண்டுதான் அவனை வரச்
சொன்னனான்.
: ஏன் என்ன விஷயம்?
: ஒன்றுமில்லை நீங்களும் அம்மாவும் அங்கை மூன்று
மாதம் இங்கை மூன்று மாதம் எண்டு அலையிறியள். இந்த வயது போன காலத்திலை உங்களுக்கும் கஷ்டமாய் இருக்குந்தானே.
; அப்படியெணி டால் நாங்கள் ஊருக்குப் போய்
அங்கையிருக்கிற எங்கட வீட்டிலை இருக்கலாம் தானே! இங்கை கொழும்பிலை உங்களுக்கும் பெரிய கஷ்டம் தானே.
57

Page 37
6Ts
முத்
UTCup :
முத்
சுப்
: என்னது ஊருக்குப் போகப் போறிங்களோ? நல்ல கதை
இது அங்கை இருந்து என்னத்தை செய்யப்போறிங்கள் எண்டுதான் உங்களை இங்கை கூட்டிட்டு வந்தநாங்கள். அப்படியாயிருக்கேக்கை நீங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போகப் போறனெண்டு சொல்றீங்கள்.
இல்லை மகன். இந்த வயது போன காலத்திலை உடம்பும் எங்களுக்கு இடங்கொடுக்குதில்லை. போய்ப் பேசாம BLñLDL- வீட்டோட்ை ஒய்வாய் இருந்திடலாந்தானே. இங்கை எங்களாலை உங்களுக்கும் தொந்தரவுதானே.
அம்மா! அங்க சாப்பாடுமில்லாமல் சனங்கள் சாகுதாம். நீங்களும் சாப்பாடில்லாமல் சாகப் போறியளே! அங்கை போற கதையை மட்டும் இனி நினையாதையுங்கோ, அங்க இருக்கிற சொத்து சுகமெல்லாம் இனி எங்கட கைக்கு வரப்போறதில்லை.
இவள் சாரதா கனடாவிலை இருக்கிற உங்கட அக்காவும் வாற மாதம் வாறதுக்கிருக்கிறாள். அவள் வந்து போகேக்கை அவளோடை கூடப் போகலாமெண்டால் இந்த மனிசன் ஒத்துவருகுதில்லை.
முத்தம்மா! நான் சொல்லுறது உனக்கு விளங்குதில்லை. இந்த வயது போன காலத்திலை எங்கட மண்தான் எங்களுக்குச் சொந்தம். இன்னொரு நாட்டிலை நாங்கள் அகதி எண்டு போய் குடியேறி அவங்க போடிற பிச்சைக்
காசிலை வாழ எனக்கு விருப்பம் இல்லை. கனடாவிலை
58

ராமு
6)|TF
எங்கட ஆக்கள் படுகிறபாடு இங்கை ஒருத்தருக்கும் தெரியிறேல்லை. அங்க இருந்து வாற காசு எங்கட கண்கள்ை மறைக்குது. எங்கட ஆக்கள் சோம்பேறியாய் மாறிட்டாங்கள். உழைக்காம காசு சம்பாதிக்கிற வழியத் தான் பாக்கிறாங்க. எந்த நாட்டிலை அகதிக்கெண்டு காசு கொடுக்கிறாங்களோ அங்கை வீட்டை வித்து வளவை வித்து பிள்ளையள அனுப்பிப் போடுறாங்க. இதெல்லாம் நல்லதே அடுத்தது அங்கத்தைக் கிளைமேற் எங்களுக்கு ஒத்துவராது. இங்கை கொழும்பிலையே இந்த சின்ன இடத்திலை காத்தாடிக் காத்திலை இருக்கிறதெண்டாலே பெரிய நரக வேதனையாயிருக்கு எங்கட ஊரிலை வெறும் மேலோடை இருக்கேக்கை அந்தத் தோட்ட வெளியுக் காலை வாறகாத்து உடம்பிலை பட்டா இருக்கிற சந்தோசத்தை நிைைனச்சா பெரிய வேதனையாத்தான் இருக்கு. மீண்டும் எப்பதான் அந்தக்காலம் வரப்போகுதோ! ?
அப்பா! நாங்கள் இப்படிச் செய்யலாமெண்டு இருக்கிறம். வாசன் வீட்டை அம்மாவும் நீங்களும் 3 மாசம் என்ரை வீட்டிலை 3 மாசம் மாறி மாறி இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமாயிருந்தால் தம்பியோட அம்மா இருக்கட்டும். என்னோட நீங்க இருங்க. அப்ப ஒருத்தரும் அலைய வேண்டியிருக்காதுதானே.
அது நல்ல யோசனை தான். வீட்டுக்காரனும் அதிகம் ஆக்கள் இருக்கெண்டு பிரச்சினை தரமாட்டான்.
ஓம் அண்ணா! அப்பிடியெண்டா நீங்கள் அம்மாவை
59

Page 38
ராமு
முத்
6F
வைச்சிருங்க. நான் அப்பாவை வைச்சிருக்கிறன்.
என்ன அம்மா! அப்பா! சரிதானே! உங்களுக்கும் அலைய
வேண்டியிராது. ஒரு இடத்திலையே நிரந்தரமாய் இருந்திடலாம்தானே.
- (பெருமூச்சுடன்) நாங்கள் என்ன சொல்லிறது. நீங்கள்
சொல்லிறதைக் கேட்டுத்தான் ஆக வேண்டியிருக்கு.
சரி அப்பா வாங்க. என்னோட, நான் கூட்டிற்றுப் போறன். புறப்படுங்க.
காட்சி - 4
பாத்திரங்கள் : வாசன், சுப்பையா
பின்னணி : வாசன் வீடு
6F
சுப்
6T.
அப்பா அப்பா
என்ன வாசன்,
அப்பா நாங்க ரெண்டு பேரும்ஓபிசிலை இருந்து வாறதுக்கு இண்டைக்கு கொஞ்சம் லேற்றாகும். கண்ணன் ஸ்கூலாலை வந்ததும் அவனை ரியுசனுக்கு கூட்டிக்கொண்டு போய் வாங்க. வரேக்கை பாலும், பாணும்,
மரக்கறியும் வாங்கிட்டு வாங்கோ மற்றது பைப்பிலை
தண்ணி வாறதும் குறைவா இருக்கு ரோட்டிலை இருக்கிற பைப்பிலை நாலுவாளி தண்ணி பிடிச்சு வையுங்கோ.
60

(வாசன் மேட்டார் சைக்கிளில் ஏறிச் செல்லும் ஒசை கேட்கிறது)
காட்சி - 5
பாத்திரங்கள் : ராமு, சீதா, முத்தம்மா
சீதா என்னப்பா இன்டையோட "கொன்கோட டிலை ஒடுற தமிழ்ப்படம் கடைசியாம். இண்டைக்கு எப்படியாவது போகோணும்.
ராமு அப்பசரி புறப்படு பாத்திடுவம்.
சீதா : மாமி! நாங்கள் இன்டைக்கு படத்துக்குப் போறம். இரவுச் சாப்பாட்டை நீங்கள் ஆக்கி வையுங்க. மற்றது முன் 'கோல் எல்லாம் அலங்கோலமாயிருக்கு அதையெல்லாம்
ஒழுங்கா ஒழுங்குபடுத்தி வைச்சிடுங்க.
(மோட்டார் சைக்கிள் புறப்படும் ஒலி கேட்கிறது)
காட்சி - 6
பாத்திரங்கள் : சுப்பையா, முத்தம்மா
பின்னணி (பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்)
(கோயிலின் சூழலைக்காட்ட மணி ஒலித்தல்)
சுப் பிள்ளையாரே! இந்த வயது போன காலத்திலை நாங்கள்
61

Page 39
சுப்
முத் :
சுப்
முத் :
ஒருத்தருக்கொருத்தர் துணையாக இருக்க வேண்டிய நேரத்திலை இப்படிப் பிரிஞ்சிருக்க வேணுமென்பது எங்கட தலையெழுத்தா ஐயா!
ஊர்ப்பிரச்சினை கூடத் தீருதில்லையே தீர்ந்தாலாவது ஊரோடபோயிடலாமே. மருதடியானே! உன் சன்னி தானத்துக்கு எப்ப வருவமோ? அதற்கு நீதான் விரைவில் அருள் புரிய வேணும் பிள்ளையாரப்பா
(கோவில் பூஜை மணி ஒலித்தல்)
இன்னும் முத்தம்மாவக்ை காணேல்லையே,
ஆ! அதோ வாறாள்.
என்ன முத்து இன்டைக்கு நேரமாப்போச்சு. ஏதாவது வேலை அதிகமோ?
ஒமப்பா மகனும் மருமகளும் யாரையோ பார்க்கப் போயிருந்தாங்கள். வரக் கொஞ்சம் நேரமாயிற்று. அதுதான் நானும் வரநேரமாயிற்று.
முத்தம்மா! நாங்கள் ஏதோ கொஞ்சம் புண்ணியமாவது செய்திருக்கிறம். இல்லாட்டி பிரிஞ்சிருக்கிற நாங்கள் வெள்ளிக்கிழமையிலை கோயிலிலை சந்திக்கிறமல்லவா?
அது சரி, எப்படியப்பா இருக்கிறியள். மருமகள் நேரத்துக்கு கவனிக்கிறாளே. நீங்கள் உங்கட உடம்பை கவனமாகப் பாக்கிறீங்களே.
62

சுப்
முத்
சுப்
முத்
சுப்
முத் :
(பெருமூச்சுடன்) நேரத்துக்கு சாப்பாடு மட்டும் கிடைச்சா போதுமா முத்து. மனத்திலை சஞ்சலமாயிருந்தா எல்லாமே வேதனையாத்தான் இருக்கும். நீ பக்கத்திலை
இருக்குமாப்பொலை வராது முத்தம்மா? ராத்திரியெல்லாம்
இந்தக் காலும் கையும் சரியா உளைஞ்சுது. உன்னைத் தான் நினைச்சன் முத்து நீ பக்கத்திலை இருந்திருந்தா இந்தக் காலைக் கையைப் பிடிச்சுவிட்டிருப்பியே. இந்த இளவு போன காலம் இப்படி எங்களைப் பிரிச்சு வைச்சிருக்கே. எங்கடை தலையெழுத்தை மாத்தேலுமோ முத்து.
வாசனிட்டை சொல்லி டொக்டரிட்டையாவது காட்டி மருந்தெடுங்க.
மருந்தெடுத்தாப்போலை மனம் சுகமாயிடுமோ முத்தம்மா? இனி சுடுகாட்டுக்குப் போற எனக்கு மருந்தென்னத்துக்கு
என்ன கதைக்கிறயள் நீங்கள் அங்கை ஏதும் கடுமையாக வேலை செய்யிறயளே.
அங்க பைப்பிலை தண்ணியும் வாறேல்ல. நான் றோட்டிலை இருக்கிற பைப்பிலை இருந்து தண்ணியும் இழுக்கிறனான். அதுவும் உடம்புக்கு கொஞ்சம் கடினம்தான் முத்தம்மா.
இந்த வேலையளெல்லாம் நீங்க ஏன் செய்யுறிங்க. வாசனுக்கு அறிவில்லையே! அவன் தண்ணியைத்தான் எடுத்துத் தந்தாலென்ன?
63

Page 40
சுப்
முத் :
சுப்
முத் :
சுப்
முத் :
சுப்
முத் :
அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க. வீட்டு அலுவல்களை அவங்களால பார்க்கேலாதுதானே.
எப்பிடியும் நீங்க கடுமையான வேலை செய்யாதீங்க. உடம்பைக் கவனமாப் பாத்துக் கொள்ளுங்க. உடம்புக்கு ஏதும் ஆயிற்று தெண்டா இங்கை ஆஸ்பத்திரி வழிய திரியேலாது. இங்க எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் உடனை ஒப்பிறேசன் செய்ய வேணுமெண்டுதான் சொல்லுவாங்க.
அது கிடக்கட்டும் முத்து. உன்ர பாடு எப்படி? ராமு எப்பிடி இருக்கிறான்.
எனக்கு ஒரு குறையுமில்லை நான் அங்கை நல்லாத்தான்
இருக்கிறன். அவங்களும் நல்லாத்தான் கவனிக்கிறாங்க.
இதென்ன முத்து கையிலை கட்டுப் போட்டிருக்கிறாய்.
அது சும்மா சின்னக் காயம் அப்பா. பாலைக் கொதிக்க வைக்கேக்கை சட்டி சுட்டுப் போட்டுது.
என்னப்பா! நீ குசினி வேலை செய்யிறயே அங்கை. இவ்வளவு காலமும் எங்களுக்காக நெருப்பத்ைதான் திண்டாய். இப்பவும் நெருப்பைத்தான் தின்ன வேணு மெண்டிருக்கிறியே? அவன் ராமுவுக்கு அறிவு இல்லையே?
அவங்கள் என்னைச் சமையல் கட்டுப் பக்கம் விட மாட்டங்க. நான்தான் சும்மா இருக்க அலுப்பா இருக்
64

சுப்
முத்
சுப்
முத் :
சுப்
முத்
கெண்டு குசினியிலை கொஞ்ச வேலையளை கூட மாட அவங்களோட செய்யிறனான்.
முத்து இப்ப நாங்கள் பிரிஞ்சிருக்கிறதுதான் எனக்கு பயமாயிருக்கு உன்ர உடல் நிலையையும் நீ கவனிக்க வேணும். இல்லாட்டி நீயும் வருத்தம் வாதையெண்டு பாயிலை விழுந்திடுவாய்.
எனக்கு அப்படியொண்டும் நடக்காதப்பா. அந்த மருதடியான் என்னைக் கைவிட மாட்டான். நீங்க கவலைப்படாதீங்க.
இல்லை முத்து! இதை நினைக்க எனக்குப் பெரிய வேதனையாய் இருக்கு. இந்தப் பிள்ளைகளுக்கு யோசனை கூட இல்லையே. வயது போன நேரத்திலை அப்பாவையும் அம்மாவையும் ஒன்றாய் இருக்க வைக்கிறதை விட்டு பிரிச்சு வச்சிருக்கிறாங்களே.
அவங்களிலை நாங்கள் ஒரு பிளையும் சொல்லேலாது. அவங்களும் என்ன செய்வாங்க. கொழும்பிலை இப்படித்தான் வாழ வேண்டுமெண்டிருக்கு.
பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு (பெருமூச்
சுடன்) இதுக்கு நீ மட்டும் என்ன விதிவிலக்கா முத்து.
சரியப்பா போயிற்றுவாறன். இனி அடுத்த வெள்ளிக் கிழமை எப்ப வருமெண்டு காத்துக்கொண்டிருப்பன். கோயிலிலை உன்னோட கதைச்சுப் பேசிறது எனக்கு
65

Page 41
கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. சரி பத்திரமாய் போயிற்றுவா.
காட்சி - 7
பாத்திரங்கள் : சீதா, முத்தம்மா, சாரதா
பின்னணி முன்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
முத்
FITJ
(கார் வந்து நிற்பாட்டும் ஒலி) (கார் கதவு திறந்து மூடும் ஒலி)
ஆரது மச்சாளா! சாரதா மச்சாளா! வாங்க வாங்க.
திடீரெண்டு வந்திட்டீங்க. அறிவிச்சிருந்தா நாங்கள் விமான விலையத்திற்கு வந்திருப்பமே.
எங்கை அண்ணா? அப்பா? அம்மா?
அண்ணா வேலைக்குப் போயிற்றார். மாமா வாசன் வீட்டிலை. அம்மா இங்க தான் இருக்கிறா. மாமி மாமி (கூப்பிடுகிறாள்)
(ஒ என்றபடி முத்தம்மா வருதல்)
அட! சாருவா வா மகளே! எப்பவந்தனி திடீரெண்டு. எங்க அவர் வரேல்லையோ,
அவரும் நானும் வாறெண்டுதான் இருந்தனாங்கள்.
அவருக்கு ஏதோ செமினார் என்று நிற்கவேண்டி
வந்திட்டுது. அதாலை நான் மட்டும் உடனடியா
66

முத்
स[[J
3Llf
புறப்பட்டு வந்திட்டன். அவர் அடுத்த கிழமைஅளவில் வருவார். எங்க? அப்பாவைக் காணேல்லை.
தம்பி வாசன்ரை விட்டிலைதான். அவங்களோட இருக்கிறார்.
நீங்கள் இங்கையும் அப்பா அங்கையுமா இருக்கிறீங்கள் சரி புறப்படுங்க அப்பாவைப் போய்ப்பார்ப்பம். (கார் திறந்து மூடும் ஒலி அதைத் தொடர்ந்து புறப்பட்டுச் செல்லும் ஒலி)
காட்சி - 8
; ராமுவிடு
பாத்திரங்கள் : ராமு, சீதா, வாசன், சாரதா
ராமு
ராமு
என்னப்பா இன்னும் மாமியைக் காணேல்லை. ஆறு மணியாகுது. வந்தவுடனேயே சாரதா அப்பாவைப் பார்க்கவெண்டு அம்மாவைக் கூட்டிற்றுப் போனவ.
இவன் வாசன் அங்கை மறிச்சிட்டான் போல இருக்கு. கனடாவிலை இருந்து அக்கா வந்திருக்கிறாள்தானே. தன்னோட வச்சிருந்தா அக்கா ஏதும் குடுப்பாள் எண்டு பிளான் பண்ணிற்றான் போல இருக்கு
இங்கப்பா நீங்க போய் மாமியைக் கூட்டிற்று வாங்க பிறகு உங்கட அக்கா எங்களுக்கு ஒன்றும் தராமல் போய்விடுவா
இங்க பார் சீதா வாசனைப்போல இருக்கு தனிய வாறான்.
அம்மாவைக் காணேல்லை.
67

Page 42
6.
ராமு :
jTCU) :
SF
स[J
: அண்ணா! அப்பாவும் அம்மாவும் இங்கை வந்தாங்களா?
: இல்லையே காலமை உங்கட அக்கா, அம்மாவையும்
கூட்டிக் கொண்டு உங்கட வீட்டுக்குத் தானே வந்தாங்க.
: நானும் வீட்டிலை இருக்கேல்லை சாரதாக்கா வீட்டுக்கு
வரேக்கை. இவதான் நிண்டிருக்கிறா. அப்பாவையும் கூட்டிக்கொண்டு உடனே போயிற்றாவாம் நான் இங்கை வந்திருப்பாங்க எண்டு இங்கை வந்தா?
ஒருவேளை கோயிலுக்குப் போயிருப்பாங்களோ?
LL 00LL SSLLS LLLLLLLL0E00LLL S0LL0LLS
s க்கு வெள்ளிக்கிழமை தாே
: கோயிலுக்கு போயிருந்தா இவ்வளவும் வந்திருக்க
வேணுமே 5 மணியோட பூசை எல்லாம் முடிஞ்சிடும்.
(கார் ஒன்றும் வாசலில் வந்து நிற்கும் ஒலி) (கதவுதிறந்து மூடும் ஒலி)
ஆ இங்கை சாரதா அக்கா வாறா ஆனால் அப்பாவையும் அம்மாவையும் காணேல்லை.
: வாங்க அக்கா வாங்க இவ்வளவு நேரமும் எங்கை
போயிருந்தீங்க. அப்பாவையும் அம்மாவையும் என்ர
வீட்டிலை விட்டிட்டு வந்திருக்கிறியா?
ஒருத்தற்ற வீட்டிலையும் நான் அவங்களை விட்டிட்டு
வரேல்லை. புது வீடொன்று எடுத்து அங்கதான் விட்டிட்டு
வந்திருக்கிறன்.
நீங்க என்னதான் நினைக்கிறீங்க வயது போன
68

அம்மாவையும் அப்பாவையும் சந்தோசமாக ஒன்றாக வைச்சிருக்கேலாட்டி அவங்களைப் பிரிச்சு வைக்காமலா வது இருந்திருக்கலாம் தானே. வயது போன அம்மாவும். அப்பாவும் காவோலைகள் தான்.
ஏனென்டா இன்டைக்கோ நாளைக்கோ விழுந்துபோக இருக்கும் காவோலை போல இருக்கிறாங்க. ஆனா அவங்களுக்கு உள்ளம் எண்டு ஒண்டு இருக்குதென்று உங்களுக்குப் புரியேல்லை. அந்த உள்ளத்திலே அன்பு பாசம் என்டொரு ஈரம் இருக்குது எண்டதும் உங் களுக்கு புரியேல்லை. வயது போன நேரத்திலை அப்பா வின்ர மனநிலை, உடல்நிலை எல்லாத்தையும் குருத் தோலைகளாக இருக்கிற உங்களாலையோ எங்களாலேயோ புரிந்து கொள்ள முடியாது. அதை காவோலையாக இருக்கிற அம்மாவால் தான் புரிந்து கொள்ள முடியும். வயது போன காலத்திலை அப்பாவுக்கோ அம்மாவுக்கோ ஆறுதல் எங்கட வார்த்தைகளல்ல. அவர்கள் ஒருதருக் கொருதர் பேசுறதுதான் ஆறுதல் இனி அம்மாவோ அப்பாவோ உங்கட வீட்டுக்கு வரமாட்டாங்கள். ஈரமுள்ள காவோலைகளான அப்பாவையும் அம்மாவையும் நீங்கள் விரும்பினால் போய்ப் பாருங்கோ அவர்களுக்குத் தேவையான சகல வசதியையும் நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறன்.
நான் போயிற்றுவாறன். (அமைதியான ஒலி எழுதல்)
(7 - 7 - 94 அன்று ஒலிபரப்பப்பட்டது)
69

Page 43
4 தேரும் கூடும்
காட்சி - 1
இடம் கிராமம்
பாத்திரம் - கைலாசபதி, ஆறுமுகம், கோவில் குருக்கள்
சாம்பசிவம், மயில்வாகனம்.
பின்னணி - கைலாசபதியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்
நடைபெறுகிறது.
கை : தம்பி ஆறுமுகம், இவர் குருக்களுக்கு சொல்லி
அனுப்பியிருந்தனான் இங்கை வரச்சொல்லி, இவர் இன்னும் வந்து சேரேல்லை.
; அப்ப இவரைப் பார்த்துக் கொண்டிருக்கேலாது நாங்கள்
விசயத்துக்கு வருவம்.
; தம்பி, மயில்வாகனம், இவ்வளவு காலமும் இந்தக்
கிராமத்திலை இந்தப் பிள்ளையார் கோயிலை பராமரிச்சுக் கொண்டு வாறது எங்கட குடும்பம்தான். எங்கட அப்பா, அவற்ற அப்பாவின்ர காலத்திலையெல்லாம் இந்தக் கிராமத்திலை எல்லாரும் சைவர்களாகத்தான் இருந்Sibl வந்தவை. இங்க உத்தியோகம் பார்க்க எண்டு வந்த ஒரு அஞ்சாறு குடும்பங்களாலைதான் இங்கையும் இந்த கத்தோலிக்க மதம் வந்தது. பிறகு இது படிப்படியாகபரவி
70

(Ֆ(U5
(Ֆ(5
மயி
பாத்திரம்
: குருக்கள் ஜயா! எங்களுக்கு உந்த உபதேசம் எல்லாம்
இப்ப தேவையில்லை. நீங்கள் எங்கட கோயிலிலை சம்பளத்துக்கு வேலை செய்ய வந்த குருக்கள் எங்கட ஆலய பரிபாலன சபை எடுக்கிற முடிவுக்கு நீங்கள் செவி சாய்க்க வேண்டியதுதான்.
தம்பி, நான் இந்த கிராமத்து நன்மைக்காகத் தான் சொல்லி
றன். நீங்கள் எந்த நேரம் பூசையைச் செய்யசொன்னாலும் நான் செய்ய தயாராயிருக்கிறன். அது உங்கட விருப்பம்.
மயில்வாகனம், நான் கடிதம் ஒண்டு தாறன். இந்த முறை
மாலை நேரத்திலை நாங்கள் தேர்த்திருவிழாவை நடத்த தீர்மானித்திருக்கிறதாலை நீங்கள் காலை நேரத்திலை கூடு சுத்துறதைச் செய்யுங்க எண்டு. இதை நீ கோயிலிலை பாதரிட்டைக் கொண்டு போய்க் கொடு சரி தானே.
கைலாசபதி, எதையும் செய்ய முதல் யோசிச்சு நிதானமாகச்
செய்யுங்க. பிறகு விளைவுக்காக வருந்த வேண்டி வரும்.
குருக்கள் ஜயா, எங்கட ஆலயப்பரிபாலன சபைத்தலைவர்
கைலாசபதி அண்ணை எடுத்த முடிவை இனி மாத்தேலாது.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி 2
அந்தோனியார் கோவில் கட்டடம்
பாதர், சிமியோன், திருச்செல்வம்
75

Page 44
பாதர்
fus
பாதர் :
திரு
பாதர் :
હીufી
பாதர் :
இங்கை பாருங்க . நீங்க இந்தத் திருச்சபையின்ரை அங்கத்தவர்களாகவும் பெருநாள் பொறுப்பாளர்களாகவும் இருக்கிறியள். பிள்ளையார் கோயில் பொறுப்பானவர் கைலாசபதியிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு தாங்கள் இந்தமுறை கோயில் தேர்த்திருவிழாவை மாலை நேரத்திலை நடத்தப் போகினம் எண்டு.
: பாதர், அதுக்கென்ன அவங்கள் நடத்தட்டன். அதுக்கேன்
எங்களுக்கு அறிவிக்கோணும்.
ஏதும் நாள் நட்சத்திரத்திலை அவர்கள் திருவிழா நடத்த வேணும், போல இருக்காக்கும்.
: நாளும் நட்சத்திரமும், அவங்களுக்கு மாறிமாறி வந்து
கொண்டிருக்கும். அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது.
இல்லை திருச்செல்வம் எங்கட கூடு சுத்தும் ஊர்வலத்தை காலை நேரத்திலை வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கினம்.
: பாதர், இந்தக் கிராமத்திலை காலங்காலமா நடந்துவாற
நிகழ்ச்சி இது. இதை எப்பிடி மாத்திறது.
சிமியோன், காலங்காலமாக நடந்துவாற நிகழ்ச்சிதான். அதைப்போல இந்தக் கிராமத்திலை கத்தோலிக்க மக்களும், சைவ மக்களும் எவ்வளவு அன்னியோன்னியமாக இருந்து வாறாங்கள். நானும் இந்தக் கிராமத்துக்கு வந்து 10 வருஷமாப் போகுது. எப்பவாவது சமயச்சண்டையைப் பார்த்தது கிடையாது. எங்கட அந்தோனியார் உற்ச
76

ઈીufો
பாதர் :
1िी
வத்திலை சைவ மக்களும் தானே கலந்து கொள்ளுறாங்க.
அதுக்காக, கைலாசபதி நினைச்சாப்போலை நாங்கள்
எங்கட வழமையான கூடுசுத்திற நேரத்தை மாத்தேலாது.
சிமியோன், விட்டுக்கொடுக்கிற மனப்பாண்மை இருக்க வேணும். யேசுவின் திருவாசகங்களை நினைத்துப் பார்த்தால் அவர் எல்லோருடனும் அன்பாக இருக்குமாறு சொல்வது தான் ஞாபகத்துக்கு வரும். எதிரியையும் நேசிக்க வேண்டும். எங்களுக்குக் கூடு சுத்திறதை எந்நேரம் செய்தாலென்ன? மாலை நேரத்தைவிட காலை நேரம்தான் நல்லது.
: பாதர், பொதுவாக காலை நேரத்திலை எங்கட
மக்களெல்லாம் தொழிலுக்கு போறவங்க, மாலை எண்டால் தான் எல்லாரும் ஊர்வலத்திலை கலந்துகொள்ள வசதியாயிருக்கும் எண்டுதான் அந்தநாளையிலை யிருந்து அதை நாங்கள் வழமையாக்கியிருக்கிறம்.
பாதர், கைலாசபதி தன்ர பணத்திமிரிலை நினைச்சமாதிரி
இந்த கிராமத்திலை செய்யலாமெண்டு நினைக்கிறான் போல இருக்கு அவன்ர கோயில் எண்ட மமதையிலை தான் நினைச் சமாதிரி செய்ய வேணுமெணி டு வெளிக்கிட்டிருக்கிறான் போல இருக்கு பாதர் என்னட்டை யும் காசு இருக்கு, செல்வாக்கு இருக்கு எண்டு அவனுக்குத் தெரியாது போல இருக்கு, நாங்கள் விட்டுக் குடுக்கிறேல்லை பாதர். அவன்ர எண்ணத்துக்கு நாங்கள் ஒத்துப்போகேலாது பாதர்.
77

Page 45
பாதர் :
திரு
பாதர் :
|L
சிமியோன், அவசரப்படாதே, யேசுவை சிலுவையிலை அறைந்த போது அவ்வளவு துன்பங்களையும் தாங்கி மனிதனுக்காக கஷடப்பட்டார். அவரின் பொறுமை யாலைதான் எங்கட பாவங்களைத் தானே சுமந்தார். அப்படிப்பட்ட பொறுமையின் சின்னமாகிய யேசுவை வழிபடுகிற கத்தோலிக்க மகனாகிய நீ பொறுமையை இழக்கக்கூடாது.
! உங்களுக்குத் தெரியாது பாதர், கைலாசபதி கத்தோலிக்க
சமயத்தை ஒரு குறைவாகத்தான் கருதிறவன். எங்கட எந்த ஒரு நிகழ்ச்சியிலையும் அவன் கலந்து கொள்ளுறேல்லை.
ஒரு கைலாசபதிக்காக இந்த கிராமத்திலை இருக்கிற அமைதி குழம்ப வேண்டும் என்று நினைக்கிறீங்களா நீங்கள்? இந்த அந்தோணியார் கோயில் முற்பக்கச் சுவரைக் கட்டித்தந்தது சைவ சமயத்தைச் சேர்ந்த ராமசாமி எண்டதை மறந்திட்டீங்களா? தன்ர நேர்த்திக் கடனை நிறைவேற்றுறதுக்காக இந்தக் கோவிலுக்கு மின்சாரம் பெற்றுத்தந்த தம்பிராசாவை மறந்திட்டீங்களா? இங்கை பாருங்க, இந்த கிராமத்திலை சைவ மக்களும் கிறிஸ்தவ மக்களும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல வாழ்ந்து வாறாங்க. இதைப்போய் குழப்பவேண்டாம் எண்டுதான் சொல்லிறன்.
பாதர், அவங்கட எண்ணத்துக்காக எங்கட வழமையாய்
நடக்கிற நிகழ்ச்சியை நாங்க மாத்த தயாராயில்லை. நாங்கள் வழமைபோலத்தான் செய்யவேணும்.
78

மயில் :
Gቓ(Uă
(Ֆ(Ա5
இண்டைக்கு ஒரு நூற்றம்பது குடும்பமளவுக்கு வந்திட்டுது.
என்னெண்டாலும் எங்கட சைவாக்கள் கூடத்தானே
இருக்கிறாங்கள்.
ஆ . . . இஞ்சை குருக்களப்யாவும் வந்திட்டார்.
வாங்க ஐயா, உங்களுக்காகத் தான் காத்துக்
கொண்டிருக்கிறம்.
; வீட்டிலையிருந்து வெள்ளன வெளிக்கிட்டிட்டன் ஆனால்
வழியிலை அந்த 'சேச் பாதர்' கண்டாப்போலை மறிச்சிட்டார். அதுதான் கதைச்சிட்டுவர கொஞ்சம் நேரம் போச்சுது.
: குருக்களப்யா எங்கட பிள்ளையார் கோயில் திருவிழாவும்
வரப்போகுது. காலங்காலமாக கத்தோலிக்கரும் தங்கட அந்தோனியார் பெருநாளை எங்கட திருவிழாக்காலத்திலை தான் செய்யிறவை. பாதரிட்டை சொல்லி அதை மாத்தி வேற நாட்களிலை வைக்கச் சொல்லேலாதா?
; அது சரியில்லை கைலாசபதி, எங்கட உற்சவம் எப்பிடி
நாள் நட்சத்திரம் பார்த்து வருகுதோ அதைப் போலதான் அவங்களும் ஏதோ விசேசமான நாளிலைதான் அதைச்
செய்யிறவை. அதை நாங்கள் மாத்தச் சொல்லி எப்பிடிக்
கேக்கிறது?
71

Page 46
மயில் :
(3)(i) :
மயி
(g()
குருக்கள் ஐயா, இந்தக் கிராமத்திலை சைவாக்கள் தான் அதிகமாக இருக்கிறம். எங்களை அவங்கள் அனுசரிச்சுப் போனால் தான் இந்தக் கிராமத்திலை அவங்கள் ஒற்றுமையாயிருப்பாங்கள். இல்லாட்டிப் பிரச்சனை தானே guT,
தம்பி மயில் வாகனம், உப்பிடி நினைக்கிறதும் சொல்லுறதும் மனிசப் பண்புஇல்லை. பெரும்பான்மை சிறுபான்மை எல்லாம் எண்ணிக்கையை வைச்சுத்தான். சொல்லுறீங்க. மதங்களிலை சைவம் பெரிசு கத்தோலிக்கம் சின்னன் எண்டோ அல்லது கத்தோலிக்கம் பெரிசு சைவம் சின்னன் எண்டோ இல்லை. நான் இந்தக் கோயிலுக்குக் குருக்களாக வர முன்னமே இங்கை அந்தோனியாற்றை உற்சவமும் எங்கடை பிள்ளையாற்றை திருவிழாக்களும் பத்து நாட்களுக்கு ஒரே மாதத்திலை ஒரே நாட்களிலை தான் நடந்துவருகுது.
; அதைத்தான் இந்தத் தலைமுறையோட மாத்தவேணு
மெண்டு சொல்லிறன்
தம்பி, தலைமுறையளை மாத்த நினைச்சு தவிக்கிற
சம்பவங்கள் இப்ப இந்தக் காலத்திலை கணக்க நடந்து கொண்டிருக்கு. இந்தக் கிராமத்திலை மக்களெல்லாம் எவ்வளவு ஒற்றுமையாக அன்பாக இருக்கிறாங்க. அதைக் குழப்பிறது நல்லாயில்லை. நான் அறிய கந்தசாமிக்கு இரத்தம் இல்லையெண்டு ஆசிர்வாதம்தான் இரத்தம் குடுத்தவன். மத்தேயுவின்ற மகளின்ர கலியான வீட்டிற்கு
72

(35(O)
மேளதாளம் பிடிச்சுவிட்டது உங்கட தர்மரெத்தினத்தர்ன் அவ்வளவுக்கு ஒற்றுமையாயிருக்கிறாங்கள். இதைப்போய் குழப்ப நினைக்கிறியளே.
: இல்லை குருக்களப்யா, எங்கட தேரும், அவங்கட கூடு
சுத்துற பெருநாளும் ஒரே நாளிலைதான் வருகுது. நாங்கள் எங்கட தேரை இவ்வளவு காலமும் 9 மணி 10 மணியளவிலைதான் இழுத்துக் கொண்டு ஊர் வலம் வாறனாங்கள். இப்ப எங்கட தேர் சுத்திறதை நாங்கள் மாலை நேரத்துக்கு மாத்தலாமெண்டு நினைக்கிறம். கோவில் நிர்வாக சபை ஆக்களும் இதைப்பற்றி என்னோட அண்டைக்கு கதைச்சவங்கள். அதுதான் இந்தமுறை யிலையிருந்து எங்கட தேர் சுத்துறதை பின்னேரம் 3 மணியிலையிருந்து தொடங்கி 7 மணிக்குளை முடிக்கிறதாக தீர்மானிச்சிருக்கிறம்.
; தம்பி, காலங்காலமாக இருந்து வருகிற ஒரு நியதியை
நீங்கள் மாத்தாதேயுங்கோ, காலை நேரத்திலை தேர் இழுக் கிறது தான் நல்லது. எங்கடமக்கள் காலையிலை எழும்பி தோய்ஞ்சு விரதம் பிடிச்சு தேர்த்திருவிழாவுக்கு வாறதுதான் நல்லம் இதை நீங்கள் மாலை நேரம் மாத்திறது அவ்வளவு நல்லதில்லை. மற்றது அவங்கள் அந்தோனியாற்றை கூடு சுத்திறது பின்னேரத்திலதான் வழமையாகச் செய்யிறாங்க. ஆனபடியால் அந்த நேரத்திலை தேரும் கூடும் வீதியிலை ஊருக்குள்ளை போறது இடைஞ்சலாயிருக்கும்.
; அது தான் அவங்களுக்கு சொல்லி அனுப்புவம், இந்த
73

Page 47
(35(O)
மயி
Eh(h
முறையிலிருந்து உங்கடை கூடு சுத்துறதைக் காலமையிலை வைக்கச்சொல்லி.
: இதுக்கு அவங்கள் ஒத்துவர மாட்டாங்கள். காலங்காலமாக
இங்கை மட்டுமல்ல எல்லா அந்தோனியார் கோவிலிலையும்
மாலை நேரத்திலை தான் கூடு சுத்திறவங்கள்.
; அப்பிடி அவை ஒத்துவராட்டி கூட்டை சுத்தாம நிறுத்த
வேண்டியதுதான்.
: தம்பி, இது கிராமத்துக்குள்ள இருக்கிற ஒற்றுமை
யையும் அமைதியையும் குலைக்கிற மாதிரிஇருக்கு. அந்தோனியாரை எங்கட சைவ ஆக்களும் வழிபடுறாங் கள். அவங்களும் மாலையிலை அந்தக் கூடு சுத்திற நிகழ்ச்சியிலை கலந்துகொண்டு தங்கட நேர்த்திக் கடனை தீர்க்கிறவை. இப்பிடி ஒற்றுமையாயிருக்கிற மக்களை நீங்கள் இரண்டாக்க நினைக்கிறியள். தம்பி, சைவசமயம் சுதந்திரமான சமயம். அதுயாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லேல்லை. ஒன்றே கடவுள் என்றுதான் சொல்லுது. அதிண்ரை உண்மைக்கருத்தை விளங்காமல் கதைக்கிறியள் சைவக்கடவுள் வேற, கத்தோலிக்கக் கடவுள் வேற, இஸ்லாம் வேறை எண்டு இங்கை இருக்கிறமக்கள்தான் சொல்லிறியள். ஆனால் இவை எல்லாம் உண்மையான இறைவனை அடையிற பல்வேறு வழிகள் என்பதை நீங்கள் ஒருதரும் உணருறீங்கள் இல்லை.
74

(5(U)
பாதர் :
(Šኴ(፴
பாதர் :
(5(D)
சொல்லை கேட்கமாட்டான் குருக்கள். இவனுக்கு இறைவன் தான் நல்ல பாடத்தைப் புகட்டவேணும்.
பாதர், உங்கட கூடு ஊர்வலமும் எங்கட தேர் ஊர்வலமும்
சந்திவரையும் தனித்தனியத்தான் வரும் அதுவரை பிரச்சினையில்லை. சந்தியாலை திரும்பி ஊருக்குள்ளை போகேக்கை தான் பிரச்சினையாயிருக்கப் போகுது. கைலாசபதி தேர்தான் முன்னுக்குப் போகவேணுமெண்டு நிற்கப்போறான். சிமியோனும் கூடுதான் முன்னுக்குப் போகவேணும் எண்டு நிக்கப்போறான். இப்ப என்ன செய்யிறது பாதர்.
குருக்கள் நாங்கள் ஒண்டு செய்வம், நாங்கள் ஒரு மணித்தியாலம் பிந்தி கூடுசுத்திறதை ஆரம்பிக்கிறம். நீங்கள் ஒரு மணித்தியாலம் முந்தி தேள் ஊர்வலத்தை ஆரம்பியுங்கள். அப்ப இரண்டும் சந்தியிலை சந்திக்கிற சந்தர்ப்பம் ஏற்படாது. இதாலை ஏதும் பிரச்சினைகள் வாறதைத் தவிர்த்துவிடலாம் என நினைக்கிறன்.
: இதற்கு சிமியோன் ஒத்துவருவானோ தெரியாதே பாதர்.
நான் எப்பிடியோ சிமியோனை சமாளிக்கிறன். நீங்கள் ஒரு மணித்தியாலத்துக்கு முதலே தேரை ஊருக்குள்ளை செலுத்திவிடுங்கள். எப்பிடியோ பாதர் இந்த கிராமத்தின் ஒற்றுமையையும், சிறப்பையும் காப்பாத்தி ஆக வேணும் பாதர்.
(காட்சி மாறும் ஒலி)
83

Page 48
இடம்
பாத்திரம்
6)
காட்சி - 4
- கைலாசபிள்ளையின் வீடு
- கைலாசபதி, ஆறுமுகம், மயில்வாகனம்
- ஆறுமுகம் பாதரிட்ட இருந்து ஒரு பதிலும் வரேல்லை.
நாளைக்கு தேர்த்திருவிழா. அவங்கள் கூடு சுத்திற நேரத்தை மாத்திறேல்லை எண்டு தீர்மானம் எடுத்திருக்கி றாங்க போலையிருக்கு இவங்களுக்கு நல்ல பாடம் படிப்பிச்சே ஆக வேணும்.
; அதுக்கு நான் ஏற்கனவே ஒழுங்கு செய்து முடிச்சிட்டன். : நாங்கள் அண்டைக்கு கதைச்சதைத்தானே சொல்லிறாய் ; அப்பிடித்தான்
; அவங்களை எங்கை நிக்கச் சொல்லி யிருக்கிறீங்க. எப்படிச்
செய்யவேணுமெண்டு சொன்னீங்க.
: சந்தியாலை திரும்பி ஊருக்குள்ளை போகேக்கை வாற
மதவடியிலை நிற்கச் சொல்லியிருக்கிறன்.
; அந்த பத்துப்பேரும் சம்மதிச்சிட்டாங்கள் தானே.
: ஒம் தேருக்கு முன்னாலை ஊருக்குள்ளை கூடு வந்தால்
வாற அவ்வளவு பேருக்கும் நல்ல அடி குடுக்கரெடியா யிருக்கிறாங்க அவங்கள்.
84

மயி
இடம்
பாத்திரம்
હીLfી
அடிக்கிறதென்ன! இனிமேல் இந்தக் கிராமத்திலை எங்களுக்கெதிரா நடக்கிற எண்ணம் வரக்கூடாத மாதிரி அவங்கட காலை, கையை தலையை உடைச்சுப்போடச் சொல்லு. அதாலை வாற பிரச்சினையளுக்கெல்லாம் நான் செலவழிக்கத் தயாராயிருக்கிறன்.
: நீங்க பாருங்க விசயத்தை நான் கச்சிதமா முடிச்சிடுவன்.
: இந்த விசயம் ரகசியமாயிருக்கவேணும். இதிலை என்ர
பேர் அடிபடக்கூடாது.
. அந்தளவுக்கு நாங்கள் விடமாட்டம்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 5
: சிமியோன் வீடு
: சிமியோனும், சிலரும்.
: எல்லாரும் நல்லாக் கேளுங்க. இந்த ஆறு பேரும் என்ர
லொறியுக்குள்ளை இருக்க வேணும். கூடு ஊர்வலத்துக்கு
முன்னாலை எங்கட லொறிவரும். நீங்கள் லொறியுக்
குள்ளை கத்தி, அரிவாள் எல்லாத்தையும் முதலே ஒழிச்சு
வைச்சிடுங்க. சந்தியிலை எங்கட கூடு கிராமத்துக்குள்ளை
போறதை அவங்கள் ஆரெண்டாலும் தடுத்தால் நீங்கள்
உங்கட கைவரிசையை காட்ட வேண்டியதுதான்.
85

Page 49
பாதர் :
பழிபாவமெண்டு பயப்படத் தேவையில்லை. என்ன வந்தாலும் இந்த சிமியோன் இருக்கிறான். இவங்கள் நினைச்சுக் கொண்டாங்கள் நாங்கள் கொஞ்சப் பேர் இருக்கிறதாலை இவங்களுக்குப் பயந்து வாழோணு மெண்டு. அது நடக்காது. இந்த சிமியோன் ஆரெண்டு இவங்களுக்குப் புரிய வைக்கிறன். ஆனா, ஒண்டு மட்டும் தெரிஞ்சு கொள்ளுங்க. நாங்க செய்யப் போற விசயம் எங்கட ஆக்கள் ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா ஒண்டுமே நடக்காது. என்ன யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க வெளிக்கிடுங்க.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 6
: ஊர்வலம் வந்துகொண்டிருக்கும் தெரு.
தேர் புறப்பட்டு வரும் ஒலிகள், மேளம் நாதஸ்வர ஒலிகள். . . . அடுத்து . . . கூடு வரும் ஒலி, செபம் செய்யும் ஒலி . இவைகள் சிறிது நேரம் மாறிமாறி ஒலித்துக் கொண்டிருத்தல். (கூடு வரும் ஒலியைத் தொடர்ந்து)
ஆண்டவரே, எதிர் பார்த்த மாதிரி நடைபெறவில்லையே. அதோ தேரின் ஊர்வலமும் எதிரேயல்லவா வந்து
86

பாதர் :
சிமி
பாதர் :
ઈીufી
பாதர் :
álህß]
பாதர் :
தம்பி சிமியோன், தேர் ஊர்வலமும், கூடு ஊர்வலமும் சந்திவரையும் எதிரெதிர் றோட்டாலை தான் வரும். ஆனால் சந்தியாலை திரும்பி ஊருக்குள்ளை போகேக்கை தான் பிரச்சினை. இரெண்டும் ஒரே றோட்டாலை போறது பெரிய இடைஞ்சலாயிருக்கப்போகுது. இது சிலவேளை பிரச்சனையளை உண்டுபண்ணுமோ எண்டுதான் பயப்படவேண்டியிருக்கு.
: பாதர், அது வந்தால் நான் பார்த்துக் கொள்ளுறன்.
அப்பிடிவராமல் இருக்க நான் தேவையானதைச் செய்வன். அவங்கள் பிரச்சினைக்கு வந்தாங்களெண்டால் நல்ல பாடம்தான் படிப்பிச்சு அனுப்புவன். நீங்க ஒண்டுக்கும் பயப்படாதீங்கோ?
தம்பி நான் என்ர உயிருக்கு ஏதும் நடந்துவிடுமோ
எண்டு பயப்படேல்லை. ஆனால் இந்த ஊரிலை இருக்கிற அமைதி கெட்டிடுமோ எண்டுதான் பயப்படுறன்.
: அப்பிடி எதுவும் வராம நாங்கள் பாத்துக் கொள்ளுறம்
பாதர்.
சரி தம்பி, எதுக்கும் நான் ஒருக்கா கோயில் குருக்களைக் கண்டு கதைச்சுப் பார்க்கிறன்.
என்ன பாதர் நீங்கள். அவங்களிட்டைப்போய்க் கதைக்கி
D3 .
இல்லை, அவரோட கதைச்சு அவங்களைப் பழைய படியே
79

Page 50
હીufો
பாத்
(355(5 :
பாதர் :
(Ֆ(Մ5 :
பாதர் :
Gቓ(Up :
செய்யுங்க எண்டு கேட்டுப் பாப்பம்.
எனக்கெண்டா நம்பிக்கையில்லை. என்னெண்டான்ன
கதையுங்க. ஆனா நாங்கள் கூடு சுத்திறது பின்னேர மெண்டுறதை மறந்திடாதேயுங்கோ.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 3
கோவில் குருக்கள் வீடு
: குருகள், பாதர்
வாங்க பாதர், நீங்கள் சொல்லி அனுப்பியிருந்தால் நானே அங்கு வந்திருப்பேனே
அதுக்கு அவசியம் வரேல்லை. அவசரமா உங்களைக் காணவேண்டியிருந்ததாலை தான் உடனடியாக வந்தேன்.
இருங்க பாதர்.
உங்கட கோயில் உரிமையாளர் கைலாசபதி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
தெரியும் பாதர், அதில் என்ன எழுதியிருந்தார் எண்டும் எனக்குத் தெரியும். நான் இது தேவையில்லாத வேலை
எண்டு எடுத்துச் செல்லியும் அவர் கேட்கேல்லை.
8O

பாதர் :
(Šb ()
பாதர் :
(35(U5)
பாதர் :
பாதர் :
இல்லை குருக்கள் இந்தக் கிராமத்திலை மக்கள் சமய வேறுபாடின்றி சொந்தச் சகோதரர்கள் போல வாழ்ந்து வாறாங்கள். இதைப் போய் குழப்ப நினைக்கிறாரே கைலாசபதி, --
: நான் எத்தனை தரம் அதைப்பற்றி எடுத்துச் சொல்லியும்
அவர்கேட்கேல்லை. நான் சம்பளத்துக்கு வேலை செய்யிற ஊழியன் தானே பாதர். நான் என்ன செய்யமுடியும்.
எங்கட பக்கத்திலையும் சிமியோன் விட்டுக்கொடுக்கி றேல்லை எண்டு நிக்கிறான்.
: ஆர் அந்த சாராயக்கடை சிமியோன் தானே பாதர்
ஓம், அவன் தான் .
அவனும் ஒரு மாதிரி பாதர், அதோடை அவனிட்டை
காசு பணம் இருக்கெண்ட செருக்கும் இருக்கு. இது எங்க போய் முடியப் போகுதோ தெரியேல்லை.
இந்த கிராமத்திலை நெடுநாளாயிருந்து வாற இந்த வழக்கத்தை மாத்தமாட்டம் எண்டு எங்கட பக்கத்து ஆக்கள் சொல்லிறாங்க. அதோட பாருங்க குருக்கள், எங்கட கூடு சுத்திற பெருநாளிலை சைவ மக்களும் அதிகம் கலந்து கொள்ளிறவங்க தானே. இப்படி தேரை மாலை நேரத்திலை வைச்சீங்கெண்டா அந்தோனியாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திற சைவமக்கள் கூட கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படப்போகுது.
81

Page 51
(35.() :
பாதர் :
Gö(Ù :
பாதர் :
பாதர், இந்த கிராமத்திலை பயங்கர நோயென்றோ, இயற்கையின் சீற்றமென்றோ, மக்களுக்கிடையிலை சண்டையெண்டோ இதுவரை நடந்ததாக இல்லை. இதுக்குக் காரணம் பாதர் இந்த ஊள் மக்கள் கடவுள் பக்தி நிறைந்தவர்கள். இந்த ஊரையே அந்தோனியாரும் பிள்ளையாரும் தான் காப்பாத்திற கடவுளாக நான் நினைக்கிறன்.
முந்தின காலத்திலை, ஏன் இப்பவும் தான் சில இடங் களிலை சுயநலக்காரர்களாலை சமயச் சண்டைகள் நடை பெற்று வாறதை நாங்கள் அறியிறம். ஆனால் இந்தக் கிராமம் தான் இவங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக இருக்குதெண்டு நினைத்து நான் சில வேளைகளில் மனதுக்குள்ளை சந்தோசமடைந்ததுண்டு. அதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தியதுமுண்டு. ஆனால் இப்ப இங்க எழுந்திருக்கிற இந்தப் பிரச்சினையை நினைக்கும் போதுதான் இது எங்கைபோய் முடியப் போகுதோ எண்டு கேள்விக்குறியா இருக்கு.
பாதர், நான் என்ன சொல்லியும் கேட்காத கைலாசபதி இனி மனம்மாறுவார் எண்டு நினைக்கேலாது.
நானும் சிமியோனை விட்டுக்கொடுத்து சுமுகமாக இதைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டேன், அதுக்கு அவன் மறுத்திட்டான். நானும் உங்களைப்போல் இறைவனுக்கு தொண்டு செய்யும் ஊழியன், பணச் செருக்கிலும் ஆணவத்திலும் இருக்கும் சிமியோன் என்னுடைய
82

(S( :
હીufી
கொண்டிருக்கிறது. சந்தியில் இரண்டும் சந்திக்கப் போகிறது. என்ன நடக்குமோ தெரியாது.
அந்தோனியாரே பாவிகளாகிய எங்களை காத்தருளும் ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் காத்தருளும்.
தேர் வரும் ஒலியைத் தொடர்ந்
ரும ஒ 5 55ل
அதோ, கூடும் வந்துகொண்டிருக்கிறது. பாதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 1 மணித்தியாலத்துக்கு முன்னாக நான் ஊர்வலத்தை ஆரம்பித்தும் அது சந்தியைச் சென்றடையவில்லையே பிள்ளையாரே, இரண்டும் சந்தியில் சந்தித்தே தீரப் போகிறது. என்ன நடக்குமோ தெரியவில்லை, விநாயகா விக்கினங்கள் தீர்க்கும் இறைவா, ஏதும் பிரச்சினைகள் ஏற்படாமல் எங்களை பாதுகாத்தருளும். கணேசா . . . . .
(திடீரென்று ஐயோ, ஐயோ என்று அலறல் ஒலி கேட்டல்)
; அதோ சந்தியில் என்ன அலறல் ஒலி.
தேரை ஆறுதலாக நகள்த்துங்கள் நான் போய்ப் பார்க்கிறேன்.
; என்ன, சந்தியில் யாரோ அழும் ஒலி,
வாருங்கள் போய்ப் பார்ப்போம்.
: ஆ என் மகன் ரகுவரன். ஐயோ என்ன நடந்தது .
(அழுகிறார்)
! ஐயோ, மகனே பீற்றர் என்னடா உனக்கு நடந்தது.
87

Page 52
: IDl]گ>
ઈીLfો
கைலாசபதி அண்ணை உங்கட மகன் ரகுவரன் குளத்திலை தாமரைப் பூப்பிடுங்க இறங்கியிருக்கிறான். அதிலை தண்ணி அதிகமா இருந்தது அவனுக்குத் தெரியேல்லை. அதுக்குள் ளை அவன் தானி டு போகேக்கை கத்தினான்.
இந்த வேளையிலை சிமியோன்ர மகன் அதாலை வந்தவன். இதைக் கண்டிட்டு ஓடி வந்து இவனைக் காப்பாற்ற அவன் முயன்றிருக்கிறான் இரண்டு பேரும் தண்ணிக் குள்ளை மூழ்கிப் போனாங்க. இந்த நேரம் நல்ல வேளை நான் அதாலை வந்தனான். சிமியோன்ரை மகன் குளத்துக்குளை இறங்குறதை கண்டிட்டு ஓடிப்போய்ப் பார்த்தன் இரண்டு பேரும் தண்ணிக்குள்ளை மூழ்கிக் கொண்டு போனாங்க. நான் சத்தம் போட்டு அக்கம் பக்கத்திலை இருந்த ஆக்களைக் கூப்பிட்டு காப் பாற்றிட்டன்
பீற்றர், பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறானே, ஐயோ என்ர
மகனே.
- ஆறுமுகம் என்ர மகனும் பிணம் மாதிரி கிடக்கிறானே.
பயப்படாதேயுங்கா. இரண்டு பேரும் தண்ணியை கணக்கக்
குடிச்சிட்டாங்க. நான் அமுக்கியமுக்கி எடுத்திட்டன். அவங்களுக்கு மூச்சு வந்துகொண்டிருக்கு மயக்கத்திலை இருக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நேரத்திலை இரண்டு பேரும் எழும்பிடுவாங்க.
88

சிமி
பாதர் :
6b) ቇb
éufS
சிமி
அந்தோனியாரே. உன்ர புதுமையாலை என்ர மகனைக் காப்பாற்றித்தந்தாயே கடவுளே.
பாகர், க்கள் எல்லோாம் வங்கவிட்டார்கள்
தா. குரு () 西马山
சிமியோன், கைலாசபதி, உங்கட பிள்ளையளை கடவுள்தான் காப்பாற்றியிருக்கிறார் கடவுள் எல்லா வற்றுக்கும் பெரியவன். கருணை மிக்கவன்.
என்னை மன்னிச்சிடுங்க பாதர், குருக்கள் ஐயா சொன்ன சொல்லை கேட்காமல், இந்த கிராமத்திலை நம்மட மக்களுக்கை இருக்கிற ஒற்றுமையை குலைக்க நினைச்சன் அதுக்கு கடவுளே எனக்கு நல்ல படிப்பினை யைத் தந்திட்டார். என்ர அறியாமையாலும் ஆணவத் தாலும் விபரீதம் நடக்க இருந்ததை கடவுள் என்ர மகனைக் காப்பாற்றியதன் மூலம் எனக்கு புரியவைச்
சிட்டார்.
என்னையும் மன்னிச்சிடுங்க பாதர், பொறுமை, விட்டுக்கொடுக்கிற மனப்பாண்மை எப்பொதும் ஒரு கிறிஸ்தவனுக்கு இருக்க வேணுமெண்டு அடிக்கடி போதனை செய்வீங்க. அதை நான் ஒரு காதாலை கேட்டு மறுகாதாலை விட்டிடுவன். எனக்கு ஒரு சோதனையைத் தந்து ஆண்டவன் உண்மையை உணர வைச்சிட்டான். என்ர அறியாமையை எண்ணி நான் வெட்கப்படுறன் பாதர்.
என்னை மன்னிச்சிடு சிமியோன்
: என்னை மன்னிச்சிடு கைலாசபதி
89

Page 53
(55(5) :
fillf,
@@ >
பாதர் :
@@ >
ஆ, பிள்ளையஞம் மயக்கம் தெளிந்திட்டாங்க
சிமியோன், பாதர், நீங்க உங்கட கூட்டை முன்னுக்கு
கிராமத்துக்குள்ளை எடுத்துச் செல்லுங்க நாங்கள் சற்று நேரம் கழித்து பின்னால் தேரை இழுத்து வாறம்.
: இல்லை கைலாசபதி, நீங்க உங்கட தேரை முன்னுக்கு
கிராமத்துக்குள்ளை கொண்டுபோங்க, நாங்கள் கூட்டைப் பின்னாலை கொண்டுவாறம்.
இல்லை, கூடு சுத்துற நேரம் தான் இது. முதல் கூடே போகட்டும்.
ஏதோ இந்தமுறை என்ர அவசரப்புத்தியாலை தவறு நடந்துபோச்சு. இனி இந்த கிராமத்திலை வழமையாக இருந்துவந்த மாதிரியே காலையிலை தேரும் மாலையிலை கூடும் வலம் வரட்டும்.
ஆண்டவரே, எங்கள் வேண்டுகோளுக்கு நல்ல விடை தந்துவிட்டீர். இந்தப் பாவிகளாகிய எங்களை மன்னித்தருள்வீர்.
கணேசா, இந்தக் கிராமத்தின் ஒற்றுமையை குழப்பாது பாதுகாத்த தெய்வமே இவ்வொற்றுமை இப்பூமியில் மனித இனம் இருக்கும் வரை நிலைத்திருக்க அருள் பாலிப்பாய்
விநாயகா.
(தேர் செல்லும் ஒலி, கூடு செல்லும் ஒலி கேட்டல்)
(20 - 10 - 1994 அன்று ஒலிபரப்பப்பட்டது)
90

பாத்திரம்
5. கருணை உள்ளம்
: ஆசீர்வாதத்தின் வீடு
: ஆசீர்வாதம், அவரின் மனைவி பிலோமினா, மகள் சிசிலியா, வேலைக்காரப் பெண் தங்கம்மா, தங்கம்மாவின் மகள் மல்லிகா சிசிலியா - 12 வயது மகள் மல்லிகா - 11 வயது மகள்
பின்னணி வீட்டு முன் மண்டபத்தில் சிசிலியா புத்தகம்
தங்
பிலோ :
தங்
பிலோ :
படித்துக்கொண்டிருத்தல். பிலோமினா பத்திரிகை படித்துக் கொண்டிருத்தல்.
: அம்மா . . . . . அம்மா . . . .
ஆரது தங்கம்மாவா, வா ஏன் அங்க நிக்கிறா உள்ளுக்கு வா. என்ன தங்கம்மா இன்னும் எவ்வளவு தென்னோலைகள் இருக்கு. அவ்வளவையும் எப்ப நீ கிடுகாக்கப்போற. கிடுகு கேட்டு ஆக்களும் வந்து
போறாங்கள் . . .
: இன்னும் ஒரு கிழமைக்குள்ள பின்னி முடிச்சிடுவன்.
ஒழுங்கா வந்து அதச் செய்திருந்தியெண்டா இவ்வளவும்
முடிஞ்சிருக்கும். நாங்களும் கேட்டு வந்தவங்களுக்குக்
குடுத்திருப்பம். இப்ப நீ முடிக்காததால பிறகு வா . . .
பின்ன வா . . . எண் டு சொல்லிக் கொள்ள
91

Page 54
தங்
til(Зарп :
தங்
பிலோ
தங்
filGөфп :
தங்
வேண்டியிருக்கு. அது சரி, ஏன் நேற்று வரயில்லை தங்கம்மா.
: நேற்று மகளை பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிற்றுப்
போயிருந்தனான் அம்மா. வந்து சேரவே அந்தியாப் போச்சு. அதால வந்து கொள்ள முடியல்ல.
ஏன் மகளுக்கு என்ன தங்கம்மா
; அதை ஏன் அம்மா கேட்கிறீங்கள். கொஞ்ச நாளா இவள்
நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுது செய்யுது எண்டு சொல்லிக்கொண்டு இருந்தவள். திடீர் எண்டு நேற்று வலிக்குதெண்டு அழத்தொடங்கிற்றாள். உடனே நான் பெரியாஸ் பத்திரிக்குக் கூட்டிற்றுப் போய் பெரிய டாக்குத்தரிட்ட காட்டினனான்.
டாக்குத்தர் என்ன சொன்னவர் தங்கம்மா.
: ஏதோ மூச்சு வாற பையில சளி இருக்குதாம். அதுதான்
அப்பிடி வலிக்கிதாம். இந்தச் சளியை வெளியாலை எடுக்காட்டி பிள்ளைக்கு மூச்செடுக்கிறது கஸ்டமா வருமாம். பிறகு பிள்ளையின்ர உயிருக்கே ஆபத்தாப் போகும் எண்டு பெரிய டாக்குத்தர் சொன்னார் அம்மா.
அப்ப மருந்து கிருந்து ஒண்டும் குடுக்கல்லையே தங்கம்மா.
: மருந்தும் குடுத்தவர். பட்டணத்து ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு போய்ப் பிள்ளையை 2 கிழமைக்கு அங்க
92

பிலோ :
தங்
பிலோ :
தங்
வைச்சு பார்க்கோணும். அப்பதான் சுகம் வரும் எண்டு சொல்லியிருக்கிறார். நானும் எவ்வளவு செலவு வரும் எண்டு அவரிட்ட கேட்டணம்மா. எப்படியும் ஒரு 2 ஆயிரம் ரூபாக்குக் கிட்ட வரும் எண்டு சொன்னாள்.
அப்ப நீ என்ன தங்கம்மா செய்யப் போறா, காசும் ஏதும் வைச்சிருக்கிறியே
எங்கிட்ட ஏதம்மா காசு. நாங்க அன்றாடம் காய்ச்சியள் உங்கட தோட்டத்திலை வேலை செய்யிறதாலை நீங்க தாற காசை வைச்சுத்தான் நானும் என்ர மகளும் ஒரு மாதிரிக் காலம் தள்ளிக்கொண்டு வாறம். உங்களிட்டத் தான் ஏதும் கடனாக் கிடனாக் கேட்கலாம் எண்டு
இருக்கிறன்.
ஜயோ தங்கம்மா, எங்களிட்ட அப்பிடி பெரிய தொகைக் காசு ஏது தங்கம்மா. நத்தாருக்கும் இன்னும் 2நாள் தான் இருக்கு கொண்டாட்டத்துக்குக் கூட ஒரு சதமும் இல்லாமல் இருக்கிறம். இந்த ஒலையளைக் கூட நீஇன்னும் பின்னி முடிக்கேல்லை. ஆயிரம் கிடுகு வேணும் எண்டு வந்திட்டுப் போயிருக்கிறாங்கள். இதைக் குடுத்துக் காசு எடுத்தாத்தான் எங்களுக்கும் இந்த முறை நத்தார் கொண்டாடலாம். . . . . .ம் (பெருமூச்சு) நானும் என்ன செய்யிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.
எனக்கிருக்கிற ஒரே துணை என்ரமகள் மல்லிகா தான் அம்மா. அவளுக்கு ஏதாவதெண் டா என்னால இருக்கேலாதம்மா. பெரிய மனசு பண்ணி உதவினிங்கள்
93

Page 55
பிலோ
தங்
பிலோ :
ஆசீர் :
தங்
எண்டால் உங்கட கடனை நான் இராப் பகலா வேலை செய்தாவது தீர்த்திடுவனம்மா.
எங்கட நிலையும் இப்ப பெரிய கஸ்டமாத்தான் இருக்குத் தங்கம்மா. இந்த நிலையில எங்களால எப்பிடி உதவி செய்யிறது.
அப்பிடிச் சொல்லாதங்கம்மா, உங்கட தோட்டத்தில காலம் காலமா வேலை செய்து வாற ஏழையம்மா நான். எங்களுக்கு நீங்க உதவி செய்யாட்டி வேற யாரம்மா உதவி செய்யப் போறாங்க.
(ஆசீர்வாதம் வருதல்)
ர் : ஆள் தங்கம்மாவே, என்ன நேற்றெல்லாம் இந்தப் பக்ம்
வரேல்லை.
தங்கம்மாவின்ர கதையைக் கேளுங்கோவன் 2000ரூபா கடன் கேட்டு வந்திருக்கு.
2000 ரூபாவா, இதென்ன இவ்வளவு காசு தங்கம்மாவுக்குத் தேவையாயிருக்கு.
என்ர மகள் மல்லிகாவுக்கு சரியான வருத்தம் ஐயா, பட்டணத்து ஆஸ்பத்திரியில காட்டினாத்தான் அது மாறும் எண்டு டாக்குத்தர் சொன்னார். அதுக்குச் செலவாக 2000 ரூபாவுக்கு கிட்ட மட்ட வரும் எண்டும் டாக்குத்தர் சொன்னவர் ஐயா. அதுதான் உங்களிட்டக் கடனாக் கேட்கிறன். தந்தீங்கள் எண்டால் வேலை செய்து
94

தங்
பிலோ :
தங்
பிலோ :
கொஞ்சம் கொஞ்சமாக அடைச்சிடுவன் ஐயா.
; தங்கம்மா, இந்தளவு பெரிய தொகை எங்களிட்டை
எங்காலை. மற்றது இவ்வளவு காசு நீ ஏன் செலவளிக்க வேணும். உங்கட பூசாரியிட்டக் காட்டி ஒரு நூலைக் கீலைப் போட்டால் சுகம் வராதே. அதிகமா உங்கட ஆக்கள் உங்கட கோயில் பூசாரியிட்டத்தானே நூல் போட்டு சுகப்படுத்திறவங்கள் எண்டு நீ அடிக்கடி சொல்லுறணி.
; அப்பிடி எல்லாம் செய்து பார்த்துக் களைச்சுப் போய்த்தான்
ஐயா ஆஸ்பத்திரிக்கு பிள்ளையைக் கூட்டிற்றுப் போனனான்.
நாங்களே, இந்தமுறை நத்தாரை எப்பிடிக் கொண்டாடப் போறம் எண்டு யோசித்துக் கொண்டிருக்கிறம். இந்த நிலையில எங்களிட்ட காசு இல்லை எண்டு சொல்லியும் இந்தத் தங்கம்மா கேக்குதில்லை.
: ஐயா, அம்மா, இந்த ஏழைக்கு மேலை கொஞ்சம் இரக்கம்
காட்டுங்க அம்மா உங்களிட்ட இல்லாட்டிக்கூட நீங்க யாரிட்டையாவது கடனா வாங்கித் தாங்கம்மா. நான் எப்பிடியும் அந்தக் கடனை தந்திடுவன் அம்மா.
தங்கம்மா, எங்களைப் போய் ஆரிட்டையும் கடன் கேட்கச் சொல்லிறியே. இப்ப நத்தார் கொண்டாட்டமும் வருகுது. அவங்களுக்கெல்லாம் காசு தேவையாயிருக்கும். இந்த நிலையில ஆர் கடன் தரப்போறாங்க.
ர் : தங்கம்மா, நீ இந்த ஒலையளை கெதியாக் கிடுகாக்கிப் போடு
95

Page 56
பாப்பம். இதை வித்தாலாவது ஏதாவது கிடைக்கும்.
அதில ஏதாவது கொஞ்சநஞ்சம் உதவி செய்யலாம் தங்கம்மா.
பிலோ :
தங்
பாத்திரம்
என்னப்பா உங்கட கதை வாற கிழமை நத்தார். வீட்டுக்கு வெள்ளையடிக்கவேணும் டெக்கிரேற் பண்ண வேணும். சிசிலியாவுக்கு புது உடுப்பெடுக்கவேணும் அதோட உங்களுக்கு உடுப்பு எனக்கு உடுப்பு இனிக் கொண்டாட் டத்துக்குச் சாப்பாடுகளுக்குச் செலவு இப்பிடித் தலைக்கு மேலால செலவு இருக்கு இப்பிடி இருக்கேக்கை கிடுகு விக்கிற காசில தங்கம்மாக்கு எப்பிடி நீங்க கொஞ்ச நஞ்சம் கொடுக்கப் போறிங்க.
ர் : பாப்பமே. முதல்ல கிடுகத் தங்கம்மா பின்னி முடிக்கட்டும்.
கிடுகு வித்துமுடிஞ்சதுக்குப் பிறகு யோசிப்பமே. சரி, தங்கம்மா நீ போய் வேலையைக்கவனி. அதைப் பற்றிப் பிறகு யோசிப்பம்.
- சரி, ஐயா, நான் போறன். (தங்கம்மா போதல்)
ர் : பிலோமினா, நான் குளிக்கப்போறன் கொஞ்சம் வென்னீர்
வைச்சுத்தா பாப்பம்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 2
: ஆசீர்வாதம் வீடு.
சிசிலியா, பிலோமினா, ஆசீர்வாதம்
96

பின்னணி : வீட்டு முன் மண்டபத்தில் பிலோமினா இருத்தல்.
flá)
îGaoT :
பிலோ
f
ஆசீர்
d
சிசிலியா அவளுடன் அளவளாவுதல்.
- அம்மா, தங்கம்மாவின்ர மகள் மல்லிகா இப்ப என்னோட
விளையாட வாறதில்லை. ஒரு கிழமையாப் போச்கது. மல்லிகா ஏன் வாறதில்லையாம் அம்மா.
(கோபத்துடன்) சிசிலியா நீ இப்ப உன்ர படிக்கிற வேலையைப் பார் போ, அவளுக்கேதோ வருத்தமாம்.
: அம்மா, நாங்க போய் மல்லிகாவைப் பார்ப்பமா அம்மா.
சிசிலியா அங்கே எல்லாம் நாங்கள் போகேலாது. நீ இப்ப படி போ. உன்னோட இப்ப கதைச்சுக் கொண்டிருக்கேலாது எனக்குக் குசினியில வேலை இருக்கு நான் வாறன்.
(சிறிய ஒலி எழுதல்)
என்ன சிசிலியா படிக்கிறியா, கவனமாப் படியம்மா.
சோதனையும் வரப்போகுது.
; அப்பா, யேசு குழந்தைகளைத் தன்னருகே வரவிடுங்கள்
அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று தானே
கூறியிருக்கிறார்.
அதிலென்ன சந்தேகம், அப்படியேதான் கூறியிருக்கிறார்.
; அப்பிடியெண்டா குழந்தைகளுக்கு வருத்தம் வந்து
அவங்களை வாட்டுதே அப்பா .
97

Page 57
f
ஆசீர் :
f
ஆசீர் :
: வருத்தம் வந்தால்கூட யேசு அதை சுகப்படுத்திவிடுவார்
அம்மா.
: அப்பிடியெண்டால் டாக்டர் இல்லாமலே டாக்டரிட்டப்
போகாமலே சுகம் வந்து விடுமா அப்பா.
ஆம், முழு நம்பிக்கையுடன் விசுவாசிப்பவனுக்கு ஆண்டவனின் கருணை கிடைக்கும் மகளே.
தங்கம்மா உங்களோட கதைச்சத நானும் கேட்டுக் கொண்டிருந்தனான் அப்பா. அப்பிடி எண்டால் தங்கம்மான்ர மகள் மல்லிகா மட்டும் ஏன் டாக்டரிட்டப் போகவேணும்.
ர் : அது . . . அது . . . (தடுமாறியபடி) போம்மா
உன்ர கேள்விகளுக்கு பதில் சொல்லேலாது.
; அப்பா மல்லிகாவுக்கு வருத்தம் எண்டு தங்கம்மா
சொல்லிற்றுப் போயிருக்குத்தானே. எங்களிட்ட காசு இருக்குத்தானே அப்பா. டொக்டரிட்ட காட்டுறதுக்கு காசு குடுங்க அப்பா.
மகள் . . . எங்களுக்கு இப்ப நத்தாரும் வரப்போகுது. உனக்கெல்லாம் உடுப்பு எடுக்க வேணும். எவ்வளவு செலவிருக்குத் தெரியுமே. இந்த நிலையில தங்கம்மாக்கு எப்பிடிக் காசு குடுக்கிறது சிசிலியா.
அப்பா, சண்டே ஸ்கூலில எங்கட பாதள் சொன்னவர் நத்தார் எண்டால் யேசு பிறந்த நாளை நினைத்து அவர் வழி
98

ஆசீர் :
dolf
பிலோ :
பாத்திரம்
பின்பற்றி நடக்கிறதுதானாம். அதைப்பெரியவிழாவாகக் கொண்டாட வேண்டும் எண்டுறதில்லையாம். எனக்கு உடுப்பு எடுக்காட்டிலும் பறவாயில்லை. தங்கம்மாவுக்குக் காசு கொடுங்கப்பா.
அதுக்கு இப்ப எங்களிட்டக் காசு இல்லையே.
: அப்பா, தன்னப்போல பிறரையும் நேசிக்கிறதுதான்
உண்மையான கிறிஸ்தவனுக்கு அழகு எண்டு பாதர் சொல்லித் தந்தவர் அப்பா. இருக்கிறவங்க இல்லாத வங்களுக்குக் கொடுத்துதவ வேணுமாம். அதுதான் உண்மையான கருணையாம்.
எழும்புங்க, சாப்பாடு ரெடி இவளுக்கு அறிவு காணாமல் கதைச்சுக் கொண்டிருப்பாள். நீங்களும் போய் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறியள். சிசிலியா உனக்கு படிக்கிறதுதான் வேலை. அதை விட்டுட்டு பெரியாக்கள் மாதிரிக் கதைத்துக் கொண்டிராத, நீங்க வாங்க.
(காட்சி மாறும் ஒலி)
STTL ”f - 3
ஆசீர்வாதம், பிலோமினா, சிசிலியா
பின்னணி சிசிலியா முன் மண்டபத்தில் உட்கார்ந்திருத்தல்,
ஆசீர்வாதம் வருதல்.
. 99

Page 58
ஆசீர்
பிலோ :
பிலோ :
பிலோ :
ஆசீர் :
பிலோ :
பிலோமினா பிலோமினா . . (பிலோமினா உள்ளேயிருந்து வருதல்)
வந்திட்டீங்களா? வாங்க . . என்ன மாதிரிப் போன காரியம்.
: கிடுகுகள் எல்லம் விலைபேசி முடிச்சிட்டு காசையும்
வாங்கிட்டன். மூவாயிரம் ரூபாக் கிடச்சுது. அப்பிடியே நத்தார் சொப்பிங்கும் செய்திட்டு வந்திட்டன்.
அப்பிடியா, பாப்பம் என்னவெல்லாம் வாங்கியிருக்கிறீங்க ளெண்டு. (ஆசீர்வாதம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டும் ஒலி)
ர் : இந்த சாறி உனக்கெண்டு வாங்கினனான் எப்படியிருக்கு.
நல்லாயிருக்கப்பா . . உங்கட செலக்சன். எவ்வளவு காசு.
தொளாயிரம் ரூபா. இந்தா இதைப்பார் என்னுடைய
உடுப்பை. இது 600 ரூபா
பறவாயில்லை. விலையும் மலிவுதான்.
அது சரி, எங்க சிசிலியா இது சிசிலியாவுக்கெண்டு
வாங்கினனான்.
நல்லாயிருக்குது. இது என்ன விலைக்கு எடுத்தீங்க.
- 1200 ரூபா, சிசிலியாவைக் கூப்பிட்டுக் காட்டன். சிசிலியா
இஞ்சை வா மகள்.
1OO

d
பிலோ :
பிலோ :
dflá)
பிலோ :
பிலோ :
ஆசீர் :
பிலோ :
என்னப்பா?
இங்கை அப்பா உனக்கு நத்தார் உடுப்பு வாங்கி வந்திருக்கிறார்.
; எனக்கு வேண்டாம்.
ஏன் உனக்குப் பிடிக்கேல்லையா?
இதைப் போடாட்டி யேசு கோவிச்சிடப்போறாரே!
இவளுக்கு என்ன பிடிச் சிருக்கோ தெரியேல்லை. உன்னோட பேசிக்கொண்டிருக்கேலாது. இஞ்சை வாருங்கோ நாங்கள் ஒருக்கா சேச் பாதரிட்டை போய் வருவம். அவர் வரச் சொன்னதாக ஒருவர் வந்து சொல்லிற்றுப் போயிருந்தார்.
அப்ப, உதுகளை உள்ளுக்குக் கொண்டுபோய் வைச்சிட்டு
வா, இப்பவே போய் என்னெண்டு கேட்டிட்டு வந்திடுவம்.
நான் அங்கை என்னத்துக்கப்பா. நீங்களே போய் என்னெண்டு கேட்டிட்டு வாங்கோவன் . . . .
இல்லை பிலோமினா நீயும் கூட வந்தால் தான் நல்லது. அதோட ஞாயிற்றுப் பாடசாலைக் கொண்டாட்டத்துக்கும்
ஏதும் காசு குடுத்திட்டு வந்திடலாம்.
சரி, நான் வாறன்
; சிசிலியா, நீ வீட்டிலை இருமகள் நாங்க போயிற்று வாறம்.
(காட்சி மாறும் ஒலி)
101

Page 59
இடம்
பாத்திரம்
காட்சி - 4
: ஆசீர்வாதத்தின் வீடு
; சிசிலியா, மல்லிகா, தங்கம்மா, பிலோமினா
பின்னணி : சிசிலியா புத்தகம் படித்துக்கொண்டிருத்தல்
தங்
தங்
f
தங்
ရ္ဟိရ္ဟိ
தங்
f
தங்கம்மா வருதல்.
; அம்மா அம்மா
: ஆர், தங்கம்மாவா? வாங்க. ஆ மல்லிகா வா மல்லிகா. - அம்மா இல்லையா பிள்ளை?
அம்மாவும் அப்பாவும் இப்பதான் சேச் பாதரைச் சந்திக்கப்
போயிருக்கிறாங்க. இருங்க வந்திடுவாங்க.
: பிள்ளை இவள் மல்லிகா இப்பிடி இருக்கட்டும். நான்
பின் வளவுக்குளை போய் இருக்கிற ஒலையளை கிடுகாக்கிப் போட்டு வாறன்.
- சரி, தங்கம்மா.
: மல்லிகா, இப்பிடி இருந்து கொள். ஒரு இடமும்
போயிடாதை. நான் வந்திடுறன். (தங்கம்மா போதல்)
: மல்லிகா, உனக்கு ஏதோ வருத்தமெண்டு அறிஞ்சனான்.
என்னாலை வந்து பார்க்க முடியேலை மல்லிகா மன்னிச்சிடு.
102

மல்
மல்
மல்
f
: பரவாயில்லை சிசிலியா, உன்னோட விளையாட
வரேல்லையெண்டு எனக்கு சரியான கவலை. என்னாலை
முந்தினமாதிரி ஓடி ஆடித் திரியேலாம இருக்கு. மூச்சும்வாங்குது. அது தான் நான் வரேல்லை.
பெரியாஸ்பத்திரிக்கு எப்ப போகப் போறாய் மல்லிகா?
எங்க போறது சிசிலியா. அதுக்கு 2000 ரூபா காசு வேணுமாம். எங்கட்ட காசு ஏது சிசிலியா உங்கட அப்பா
தான் தாறனெண்டு சொல்லி இருக்கிறாராம். அந்தக் காசு கிடைச்சாத்தான் அம்மா கூட்டிற்றுப்போவா.
: மல்லிகா, அப்பா தருவாரெண்டு நான் நினைக்கேல்லை.
வேற ஆரிட்டையாவது நீங்கள் கேட்டுப் பார்க்கேலாதே?
: நாங்கள் ஏழையள். எங்களுக்கு யார் நம்பிக் கடன்
தருவாங்க. உங்களுக்கும் நத்தர் வருகுது. அதாலைதான் உங்கட அப்பாவுக்கும் காசு தாறது கஸ்டமாயிருக்கு, அப்படித்தானே சிசிலியா.
: மல்லிகா, நான் யேசுவிட்ட உனக்காக மண்டாடிக்
கொண்டிருக்கிறன். யேசு பிள்ளைகளுக்கு மேல பிரியமானவர். அவரிட்டை நான் மண்டாடி உனக்கு வருத்தத்தைச் சுகமாக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறன். கட்டாயம் அவர் விசுவாசிப்பார், மல்லிகா, நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை. நீயும் கடவுளிட்டை மனம் வைச்சுக் கும்பிடு மல்லிகா,
1O3

Page 60
மல்
éflés
fif
தங்
; ஏழைகளாப் பிறந்த எங்களுக்குத் தெய்வத்தைத் தவிர
வேறு யார் துணையிருக்கிறாங்க.
: மல்லிகா, நான் இப்ப உனக்கு முன்னாலேயே யேசுவை
மண்டாடப் போறன், கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்று யேசு பிரான் சொல்லியிருக்கிறார். (ஜெபம் செய்தல்)
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராச்சியம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செயல்ப்படுவது போல்பூமியிலும் செயற்படுவதாக என்னைப் போன்ற சிறுபிள்ளையாகிய மல்லிகாவை இரட்சியும் தேவனே. அவள் நோயால் படும் அவஸ்தையை நீக்கியருளும் தேவனே பாவிகளாகிய நாம் செய்த பாவங்களை மன்னித்தருளும் தேவனே. (மல்லிகா மயங்கிச் சாய்தல்)
ஆ . . . (அதிர்ச்சியுடன்) மல்லிகா என்ன மயங்கி
விழுகிறாய். (தூக்கி இருத்தும் ஒலி) (பிளாஸ்கிலுள்ள தேனீரை வாத்துக் குடிக்கக் கொடுக்கும் ஒலி)
: குடி மல்லிகா குடி, களைப்பா இருக்கா. (தங்கம்மா
வருதல்)
ஆ மல்லிகா என்ன நடந்தது மல்லிகாவுக்கு ஐயே
மகளே.
104

flo
தங்
f
ĞsaoT :
fs
பிலோ :
f
தங்
பிலோ :
அழாதீங்க, மல்லிகாவுக்கு ஒண்டும் இல்ல களைப்பு
மயக்கம் போல இருக்கு இந்தத் தேனீரைக் குடித்ததும் இப்ப அது போயிற்றுது. காலையில மல்லிகா ஏதும் சாப்பிட்டதா.
: இல்லப் பிள்ள, ஒண்டும் சாப்பிடேல்ல.
அதுதான் மயக்கம் போல இருக்கு. நான் தேனீர்
குடுத்தனான். இப்ப ஒண்டும் இல்ல . . . . (பிலோமினா வருதல்)
: ஆ அதோ அம்மா வாறாl.
ஆ தங்கம்மாவா, வா எப்ப வந்தனி.
: நீங்க போனவுடனேயே தங்கம்மா வந்திட்டுதம்மா.
மல்லிகாவும் கூட வந்திருக்கு.
என்ன மல்லிகா, ஒரு மாதிரியா இருக்கிறா.
: காலமே ஒண்டும் சாப்பிடல்லையாம் அம்மா மயக்கம்
போட்டு விழுந்திட்டா நான் பிளாஸ்கில இருந்த ரீயைக்
குடுத்தனான். இப்ப மயக்கம் ஒண்டும் இல்ல.
; அம்மா, கிடுகுகள் எல்லாம் வித்திட்டீங்க போல இருக்கு
வளவுக்குள்ள பின்னிவைச்ச கிடுகு ஒண்டையும் காணேல்ல.
ஓ ஒ. (தடுமாறியபடி) தங்கம்மா, அத அவங்கள் கடனுக்கு எடுத்துப் போயிருக்கிறாங்கள் பத்து
105

Page 61
தங்
f
பிலோ :
f
பிலோ :
f
பிலோ :
நாளைக்குப் பிறகுதான் காசு தருவாங்களாம். நாங்களும் நத்தாரை எப்பிடிக் கொண்டாடப்போகிறம் எண்டு யோசித்துக் கொண்டிருக்கிறம்.
; அம்மா, ஏதோ மனம் இரங்கி இந்த ஏழைக்கும் உதவி
செய்யுங்கம்மா, இந்தப் பிள்ளையின்ர வாழ்க்கையே நீங்க தார பணத்திலதான் தங்கியிருக்கு போயிற்று வாறன் வா
மல்லிகா .
(சிறிது நேர ஒலியின் பின்)
: அம்மா, கிடுகு வித்த காசிலைதானே எங்களுக்கெல்லாம்
உடுப்புகள் எடுத்தனிங்க.
ஒ அதுக்கென்ன இப்ப?
காசு வாங்கலேயெண்டு பொய்தானே தங்கம்மாக்குச்
சொன்னனீங்க.
சிசிலியா, வாயைப் பொத்து. உனக்குத் தேவையில்லாத விசயம் இது.
; அம்மா, பொய் சொல்லிறது பாவமெண்டு நீங்கதானே
அடிக்கடி சொல்லுவீங்க. இப்ப நீங்களே பொய் சொல்லிறீங்க.
6151 UITGI is, எதுபாவமில்லை எண்டு எனக்குத் தெரியும். உனக்கு விளங்காது. நீ இப்ப சின்னப்பிள்ளை. இப்ப கிடுகு வித்தகாசு நத்தார் கொண்டாடவே போதாது.
106

பிலோ :
f
(?i)(3өoп :
அதிலை தங்கம்மா கேட்டா எப்பிடிக் குடுக்கிறது. அதுதான் நான் அப்பிடிச் சொன்னனான்.
தரேலாது எண் டு சொலிலியிருந்தால் தங்கம்மா வேறையெங்காவது முயற்சி செய்வாங்க. நீங்க இப்ப சொன்ன பொய்யை அவங்க உண்மையெண்டு நம்பிக் கொண்டு போறாங்க. நீங்க காசு தருவீங்க எண்டு இருப்பாங்க. கடைசியிலை நீங்க குடுக்காட்டி ஏமாத்தின பாவம் கூட வந்து சேரும்.
சிசிலியா, எனக்குத் புத்தி சொல்ல வந்திட்டாய் நீ என்ன.
: நான் உங்களுக்கு என்னம்மா புத்தி சொல்லுறது. என்ர
மனத்துக்குப் பட்டதச் சொல்லிறன். இந்த மல்லிகா பாவம்தானே அம்மா. இந்தமுறை புதுஉடுப்பு எடுக்காட்டி என்னம்மா. அடுத்து வருஷம் எடுக்கலாந்தானே. ஏழையளுக்கு இரக்கம் காட்டினா தேவன் எங்களுக்கு இரங்குவார் எண்டு படிச்சிருக்கிறம். அந்த மல்லிகாவுக்கு வருத்தம் மாறாம ஏதும் நடந்திட்டா அதற்குக் காசு கொடுக்காத நாங்கள்தான் காரணமாப் போயிடுவம் அம்மா.
உனக்கு வர வர வாய் நீழுது. பொத்தடிவாயை, உன்ர அலுவலப் பார்த்துக் கொண்டு நீ இரு. அதுசரி இந்தப் பிளாஸ்கில ரீ அப்பாவுக்குப் போட்டுவைச்சது. அதை எடுத்துக் குடுத்திருக்கிறாய் என்ன. பச்சத்தண்ணி எடுத்துக் குடுக்கிறதானே. உனக்கு ஒண்டுமே விளங்கிற தில்லை. போடி போ உன்ரபடிக்கிற வேலையைப் பார்.
(காட்சி மாறும் ஒலி)
107

Page 62
காட்சி - 5
இடம் : ஆசீர்வாதத்தின் வீடு
பாத்திரம் : பாதர், ஆசீர்வாதம், பிலோமினா, சிசிலியா,
ஆசீர் : வாங்க பாதர், வாங்க, சொல்லி அனுப்பியிருந்தால் நானே
வந்திருப்பேனே.
பாதர் ; போன ஞாயிற்றுக்கிழமை நடந்த சமயப்பாடசாலை
பரிசளிப்பு விழாவுக்கு நீங்களோ அல்லது உங்கட மகள்
சிசிலியாவோ வரேல்லை.
ஆசீர் : ஒம், பாதர் நாங்கள் எல்லாரும், சொந்தக் காரர் ஒருவரின்ர
வீட்டுக்கு கொண்டாட்டம் ஒண்டுக்கு போயிருந்தனாங்
கள், அதாலை வரேலாமப் போயிற்றுது. மன்னிச்சிடுங்கோ.
பாதர் : ஒன்றுக்குமில்லை ஆசீர்வாதம், அந்த பரிசளிப்புவிழாவிலை
உங்கட மகள் சிசிலியாவுக்கு ஒரு பரிசு கிடைச்சிருக்கு.
நீங்கள் வராததாலை அதை என்னிடம் குடுத்தாங்க.
அதைத்தான் உங்களிட்டைத் தந்திட்டுப் போகலாம் எண்டு
வந்தனான். அதுசரி, எங்க சிசிலியா,
ஆசீர் : உள்ளே இருக்கிறாள். கூப்பிடுறன் பாதர், சிசிலியா
if four . . .
சிசி : என்னப்பா? (உள்ளேயிருந்து வருதல்)
சிசி - குட்மோனிங் பாதர்.
108

பாதர் :
பாதர் :
பாதர் :
fif
பாதர் :
gif
குட்மோனிங் சிசிலியா, ஞாயிற்று பாடசாலையில் நடைபெற்ற சித்திரம் வரையிற போட்டியிலை நீ வரைந்த சித்திரத்துக்குத்தான் முதற்பரிசு கிடைச்சிருக்கு.
; அப்படியா பாதர்? (ஆச்சரியத்துடன்)
அந்த சித்திரத்தை எல்லாரும் புகழ்ந்தாங்க, ஆசீர்வாதம். அப்பிடியே அதைப் பார்த்தா உயிர்ததுடிப்புள்ளது போல இருக்குது.
அப்பிடியா சிசிலியா, என்ன சித்திரம் கீறினனி?
ஒரு ஏழை வயது போன தாய் கிடுகு பின்னிக் கொண்டிருக்கிற மாதிரியும், அந்தத் தாய்க்கு பக்கத்திலை அவளின்ர மகள் தாயை ஏக்கத்தோட பாத்துக் கொண்டிருக்கிற மாதிரியும் அந்த சித்திரம் கீறப்பட்டி ருக்கு நல்ல ஒரு கற்பனை.
; அது கற்பனை இல்லை பாதர். நான் எந்த நாளும் பாக்கிற
ஒரு காட்சி பாதர் அது.
என்ன சிசிலியா சொல்கிறாய்?
எங்கட தோட்டத்திலை வேலை செய்யிற தங்கம்மா என்கிற
ஒரு ஏழைப்பெண்ணும் அவவின்ர மகள் மல்லிகாவும் தான் அது பாதர் எந்த நாளும் அவங்கள் அப்பிடி இருக் கேக்கை பாத்துப்பாத்து அந்த உருவமும் காட்சியும் அப்பிடியே என்ர மனதிலை பதிஞ்சு போயிற்று பாதர். அதைத்தான் கீறினனான்.
709

Page 63
பாதர் :
f
பாதர் :
f
பாதர் :
f
உண்மையிலை மனதிலை பதியிற சம்பவங்கள் தான் சில வேளையிலை ஒவியத்துக்கு உயிர்த்துடிப்பை வளங்குகிறது என்பது உண்மையாத்தான் இருக்கு. சிசிலியா, உனக்கு பரிசாக 2000 ரூபா கிடைச்சிருக்கு. அதுக்குரிய காசோலையை கொண்டு வந்திருக்கிறன். இந்தா வாங்கிக்கொள் சிசிலியா.
: (வாங்கிக் கொண்டு) நன்றி, பாதர்.
சிசிலியாவைப் பற்றி ஞாயிற்றுப் பாடசாலை ஆசிரியர்களெல்லாம் புகழ்ந்தார்கள் அமைதி, அடக்கம், சமயப்பற்று கொண்ட ஒரு சிறந்த பிள்ளை எண்டு போற்றினாங்க ஆசீர்வாதம். அவற்றையெல்லாம் கேட்கப் பார்க்க நீங்கள் வரேல்லை, எண்டுறதுதான், எனக்கு
566).
: பாதர், எனக்கு ஒரு உதவி செய்வீங்களா பாதர்
சொல்லு, சிசிலியா சொல்லு.
எங்கட தோட்டத்திலை வேலை செய்யிற தங்கம்மான்ர மகள் மல்லிகாவுக்கு சுவாசப்பையிலை பெரிய வருத்தம் பாதர். அதைப் பெரிய டாக்டரிட்டை காட்டாட்டி அந்தப் பிள்ளை இறந்து போக வேண்டிவருமாம். அதைக் காட்டிறதுக்கு அவங்களிட்ட காசு இல்லாமத் திண்டாடிக் கொண்டிருக்கிறாங்க. நீங்க இந்தப் பணத்தை அவங்களுக்கே கொடுத்து அந்த மல்லிகாவின் ர வருத்தத்தை மாத்திறதுக்கு உதவி செய்வீங்களா பாதர்.
110

பாதர் :
ஆசீர்
பிலோ :
பாதர் :
f
ஆசீர்வாதம், என்ன உங்கட மகள் சொல்லுறது. யார் அந்த மல்லிகா.
அது எங்கட தோட்டத்திலை வேலை செய்யிற தங்கம் மான்ர மகள். அவங்க கிறிஸ்தவங்க இல்லை பாதர். அந்தப்பிள்ளைக்கு நுரையீரலிலை ஏதோ சளி எண்டு, அதை பெரிய டொக்டரிட்டை காட்டுறதுக்கு எங் களிட்டை தங்கம்மா காசு கேட்டது பாதர்.
நத்தார் கொண்டாட்டம் அது இதுஎண்டெல்லாமி ருக்கேக்கை, எங்களாலை காசு கொடுக்கேலாது எண்டு சொல்லிற்றம். ஆனால் சிசிலியா எங்களைக் குடுக்கச் சொல்லி அடம்பிடிக்கிறாள் பாதர்
பாதர், அவங்களுக்கு கடன் கொடுத்தா திருப்பிப் பெறமுடியாது. அவ்வளவு ஏழையள்.
சிசிலியா, அப்பா அம்மா சொல்லிறதைக் கேட்டியா?
: பாதர், நீங்க அடிக்கடி சொல்லுவீங்க. உண்மையாகக்
கிறிஸ்துவை விசுவாசிக்கிறவங்க மற்றவங்களுக்குக் கருணை காட்ட வேண்டுமெண்டு சொல்லுவீங்க. யேசு குட்டரோகியையும், சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட பெண்ணையும் அன் போடு நேசித்ததைப் பற்றி கதையளெல்லம் சொல்லியிருக்கிறீங்க, பாதர். அந்த தங்கம்மாவும், அவங்கட பிள்ளையும் மனிதர்கள் தானே. யாரையும் தள்ளிவைத்துவிடாதீர்கள் எண்டுதானே யேசு சொல்லியிருக்கிறார். இப்படி இருக்கேக்கை என்னைப்
111

Page 64
பாதர் :
போல சிறுபிள்ளையாயிருக்கிற அந்த மல்லிகாவைக் காப்பாத்த யாரும் இந்த உலகத்திலை உதவவேயில்லையே எண்டு யேசுவிட்ட எத்தனை நாள் மன்றாடியிருக்கிறன் தெரியுமா பாதர். எனது பிரார்த்தனை வீண்போகவில்லை பாதர். யேசு குழந்தைகளை நேசிக்கிறவர் என்டுறது இப்ப எனக்கு தெரியுது பாதர். இல்லாட்டி 2000 ரூபா எனக்கு பரிசா கிடைக்கச் செய்திருக்கிறாரே? அதனாலை இந்தக் காசை அவங்களுக்கே குடுக்கச் சொல்லி கேட்கிறன் பாதர்.
சிசிலியா, பிள்ளைகளின்ர மனம் களங்கமில்லாதது. பளிங்கு போன்றது. கடவுளை போன்ற மனம் அவங்களுக்கு இருக்கு என்பது உன்னைப் பார்த்தாலே தெரியுது. உண்மையிலை யேசுவின் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை நீ தான். கருணையுள்ள பாலனை உன்மூலம் காண்கிறேன்
சிசிலியா,
ஆசீர்வாதம், பிலோமினா உண்மையான கிறிஸ்தவனாக இருங்க இருங்க என்று நானும் ஒரே போதனையைத்தான் செய்து கொணி டிருக்கிறேன். ஆனால் இப்ப உண்மையான கிறிஸ்தவனாக உன்னுடை மகள் இருக்கிறாள் என்கிறதைக் காணும் போது நான் மிகவும் சந்தோசப்படுகிறேன். கர்த்தருக்கு நான் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த மல்லிகா, கிறிஸ்தவளா, அல்லது வேறு மதத்தவளா என்கிறதைக் கூட சிசிலியாவின்ர மனம் எடைபோ டேல்லை. குழந்தையளின்ர மனநிலை மனிதநேயம்,
112

ஆசீர் :
பாதர் :
கருணை, அன்பு என்பவைதான் நிறைஞ்சிருக்கு ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு, கிறிஸ்துவின் போதனை களைப் பின்பற்றி நடப்பவனுக்கு, கருணை அன்பு தான் தெரியும்.
ஆசீர்வாதம், பிலோமினா நீங்க இப்பிடி ஒரு பிள்ளையை பெத்ததே பெரும் பாக்கியம்.
பாதர், எங்களை மன்னிச்சிடுங்க பாதர், வெளி உருவத்தி லையும், புறப்பழக்கங்களிலையும் தான் நாங்கள் கிறிஸ்த வர்களாக இருக்கிறம் என்பதை என்னுடைய மகள் எங்களுக்கு புரிய வைச்சிட்டாள். மற்றவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நமக்கு ஏற்பட்டதாக நினைக்கிற மனப்பக்குவம் எங்களுக்கு ஏற்பட்டாத்தான் அதை உணர்ந்து கொள்ள முடியும். சிசிலியாவின்ர விருப் பப்படியே செய்யுங்க பாதர்.
சிசிலியா, யேசு பாலன் பிறக்கப்போற இந்த நல்ல நாளிலை, எங்கட பாவங்களைத் தீர்ப்பதற்காக யேசுபிரான் வருகை தரப் போற இந்தப் புனித நாளிலை, உன்னாலை உன்னுடைய கருணை உள்ளத்தாலை கிறிஸ்தவமதம் பெருமை அடையுது. உன்கருணை உள்ளத்துக்கு யேசுவின் ஆசீர்வாதம் கிட்டுவதாக.
(22 - 12 - 1994 அன்று ஒலிபரப்பப்பட்டது)
113

Page 65
பாத்திரம்
ரவி
தங்
ரவி
தங்
6. களங்கம்
காட்சி - 1
: தங்கம்மாவின் வீடு
: தங்கம்மா, ரவி
; அம்மா, இவ்வளவு நாளும் ஒரு-முக்கியமான விசயத்தை
உனக்குச் சொல்லாமல் இருந்திட்டன். இப்ப அதை உனக்குச் சொல்லப் போறன்.
என்ன மகன் என்ன விசயம்.
: அம்மா, என்னோட வேலை பார்க்கும் நிர்மலா என்ட
பெண்ணை நான் விரும்புறன். அவளும் என்னை விரும்புறாள். அவளும் என்னோடை வேலை பார்க்கிற ஒரு டொக்டர் அம்மா. அவளை நான் திருமணம் செய்யப்போறன் அதற்கு நீங்கள் சம்மதிக்கவேணும்.
ரவி, இந்தக் குடும்பத்தைப் பற்றி யோசிச்சியா? உன்ட
தங்கச்சி சுமதியைப் பற்றி யோசிச்சியா? உன்னை இந்தளவுக்கு படிப்பிச்சு ஒரு டொக்டர் ஆக்கிய உன்ட அக்கா கண்மணி இன்னும் சவுதியிலையிலிருந்து வந்து சேரேல்லை. எங்கட குடும்பத்துக்காக இந்த பத்து வருசங்களாகச் சவுதியிலை உழைச் சுக் கொண்டிருக்கிற கணி மணியின் ர வாழ்க்கையைப் பற்றி நினைச்சுப் பார்த்திருக்கிறியா.
114

ரவி
ரவி
தங்
ரவி
- அம்மா, நாங்கள் மெடிக்கல் கொலிஜிலை இருக்கிற போதே
ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கிற்றம் அவளுக்கு வேற இடத்திலை அவங்கட வீட்டிலை கலியாணம் பேசுறாங்க. அதுதான் அவள் எங்கட திருமணத்துக்கு அவசரப்படுத்திறாள்.
ரவி உனக்கு ஞாபகமிருக்கா, ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன், நீ அட்வான்ஸ்லெவல் படித்துக் கொண்டிருந்த நேரம். (காட்சி பழைய நிகழ்வுக்கு மீளும் ஒலி) (சோகப்பின்னணி இசையில்)
: அம்மா, இப்பிடி எதையோ இழந்திட்டமாதிரி எந்தநேரமும்
கண்ணிரோட இருக்கிறது என்னாலை தாங்கேலாது இருக்கம்மா.
: (அழுதபடி) மகன், இப்பிடி அப்பா இடையிலை எங்களை
விட்டிட்டுபோயிட்டார் கடவுளுக்குக் கூட இரக்க மில்லாமல் உங்கட அப்பாவை தன்னோட சேர்த்திட்டார். இப்ப இந்தக் குடும்பத்தை எப்பிடிக் கொண்டிழுக்கப் போறனோ தெரியேலையடா. அக்காவும் வயது வந்த நிலையிலிருக்கிறாள். நீயும் தங்கச்சியும் படிச்சுக் கொண்டிருக்கிறியள். அப்பான்ற பென்சன் காசு 2000 ரூபாயிலை எப்பிடி உங்களையெல்லாம் காப்பாற்றப் போறேனோ எண்டு பயமாயிருக்கு.
: பயப்படாதயுங்க அம்மா. நான் காப்பாத்துறன். உங்கட
மகன் நான் காப்பாத்துறன்.
115

Page 66
தங்
ரவி
தங்
ரவி
தங்
ரவி
கண் :
: என்ன சொல்லுறாய் ரவி நீ?
: அம்மா, நான் இனி படிக்கப்போறதில்லை. கடையிலை
வேலையொண்டிருக்கெண்டு என்ர நண்பன் ஒருவன் சொல்லியிருக்கிறான். 'கசியர் வேலையாம், மாதம் 1800 ரூபா சம்பளமாம். நான் அதுக்குப் போகப் போறன்.
: வேண்டாம் மகன், நீ படிச்ச படிப்பை விட்டிடாதை.
இன்னும் ஒரு வருசத்திலை சோதினை எடுக்க இருக்கிறாய். அப்பா உன்னை ஒரு டொக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டுமெண்டு ஆசைப்பட்டவர்.
: அம்மா, ஆசைகள் நிறைவேறிறதுக்கு விதியும்
இருக்கோணும். விரலுக்குத்தக்க வீக்கமுமிருக்கோணும். அப்பிடி மெடிக்கல் கொலிஜ் கிடைச்சாலும் படிக்க காசு இருக்கோணுமே அம்மா.
இல்லை மகன். நான் ஏதாவது வேலை செய்து உன்னைப்
படிப்பிக்கிறன். நீ படிப்பை நிறுத்திடாதை மகன்.
: நீங்க வேலை செய்யப் போறிங்களா அம்மா. உங்களுக்
கெண்டு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருக்கேக்கை நீங்க வேலை செய்யப் போறியளா? வேண்டாம் அம்மா. கடவுளின்ர கருணை என்னை கடையிலை கசியராக இருக்கவேணுமெண்டிருக்கேக்கை அதை நீயோ நானோ மாத்தேலாம்மா.
அம்மா, ரவி. நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். நீ படிப்பை
116

ரவி
&ჩ69ბI :
தங்
கண் :
தங்
கண் :
தொடரவும், எங்கட குடும்பம் கஷ்டப்படாம இருக்கவும்
நான் வேலை செய்யிறது எண்டு தீர்மானிச்சிட்டன்.
என்னக்கா சொல்லுறாய். உனக்கு வேலை கிடைக்
கோணுமே.
நான் சவுதிக்குப் போகத் தீர்மானிச்சிட்டன்.
: கண்மணி நீ குமர்ப்பிள்ளையெண்டிறதை மறந்திட்டியா?
இந்த சின்ன வயதிலை போகப் போறியா? சவுதியிலை போற பெண்கள் சரியான கஷ்டப்படுறாங்கள் எண்டு கேள்விப்படேல்லையா?
அம்மா, வயது குறைஞ்ச பெண்கள் எண்டால் வேலை கிடைக்கிறது ஈஸியம்மா. நீங்க என்ன சொன்னாலும் நான் போறதெண் டு முடிவெடுத்திட்டன். என்ர நண்பி ஒருத்தியின் அப்பா தான் சவுதிக்கு பணிப்பெண்களை அனுப்பிறவர். அவளை பிடித்து என்னாலை இலகுவாக வேலை பெறமுடியும்.
; மகள், நீ தான் இந்த குடும்பத்திலை மூத்த பிள்ளை.
உன்ர வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்தாத்தான் மற்ற பிள்ளையளின்ர வாழ்க்கையும் சீரும் சிறப்புமாக அமையுமெண்டு சொல்லுவாங்க. ஆனால் நீ.
அம்மா, சீரும் சிறப்பும் பணத்திலைதான் தங்கியிருக்கு. இந்த சமுதாயம் பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குது. வெறும் கை முழமிடாது. நான் உழைக்கப்
117

Page 67
தங்
கண்
தங்
கண் :
போறதாலைதான் தம்பி மெடிக்கல் கொலிஜ்ஜிக்கு போக முடியும். ஒரு டொக்டராக வரமுடியும். அப்பாவின்ர ஆசையை நிறைவேற்றலாம். தங்கச்சி சுமதி படிக்கலாம். அவளுக்கு நல்ல இடத்திலை கலியாணம் செய்து வைக்கலாம். தம்பி டொக்டராகிட்டானண்டால் எங்கட குடும்பத்துக்கு விடுதலை தானே அம்மா.
தங்கச்சியின்ர கலியாணத்தை பாக்கிறியே அம்மா, நீ
கலியாணம் செய்து குடும்பமாயிருக்கிறதை யோசிக் கேல்லையே.
: அம்மா, எனக்கு இப்ப கலியாணம் பேசிப் போனீங்க
ளெண்டால் சீதனமாக வீடு கேட்பாங்க. காசாக 1 இலட்சமோ இரண்டு லட்சமோ கேட்பாங்கள். நீங்க வைச்சிருக்கிறீங்களா குடுக்கிறதுக்கு சவுதிக்குப் போய் நான் உழைக்கிறதாலை எனக்குக் கூட சீதனப் பணத்தை என்னாலை சேர்க்க முடியும்.
* உன்னுடைய அப்பா அம்மாவின்ர இயலாமையை
குத்திக்காட்டிறியா அம்மா.
அப்பா அம்மாவின்ர இயலாமையை அல்ல அம்மா, இந்த சமுதாயத்தில் உள்ள சீதனப் பேயுக்காக இனிமேல் ஒவ் வொரு பெண்ணும் கலியாணத்துக்கு முதல் உழைச் சுத்தான் ஆகவேண்டியிருக்கு. கலியாணம் சொர்க்கத் திலை நிச்சயிக்கப்படுகுதெண்டு சொல்லுவாங்க. ஆனா இனிமேல் வெளிநாட்டு உழைப்பிலையும் பணத்திலையும் தான் எங்கட பெண்களின்ர திருமணம் நிச்சயிக்கப்படும்.
118

ரவி
கண்
தங்
ரவி
தங்
என்ர கலியாணம் இருக்கட்டும் அம்மா. முதலிலை தம்பி யின்ர படிப்பும் எங்கட குடும்ப வாழ்க்கையும் தான் முக்கியம்
: வேண்டாம் அக்கா, நான் ஆம்பிளை ஒருத்தன்
இருக்கிறன் நான் உங்களை உழைச்சுக் காப்பாத்திறன்.
ரவி, இப்ப நீ உழைக்கிற வயதாடா, படிக்கிற வயது. எந்தக் கவலையும் இல்லாமப்படி, அம்மா நான் எனது நண்பியை கண்டிட்டு வாறன்.
(காட்சி மீண்டும் பழைய நிலைக்கு மீளும் ஒலி)
: அண்டைக்கு வெளிகிட்டுப் போனவள்தான் உன்ட அக்கா
கண்மணி இந்த பத்து வருசத்திலை ஊருக்கு வரவேணு மென்ட நினைப்பில்லாம உழைச்சு குடும்பத்துக்குக் கொட்டிக்கொண்டிருக்கிறாள். அவளை வரச்சொல்லி, அவளும் வாற கிழமை வர இருக்கிறாள். பத்து வருசத் துக்குப் பிறகு எங்கட குடும்பத்துக்காக உழைச்சுக் களைச்சுப் போன அந்த அக்காவின்ர கலியாணத்தை பார்க்காம உண்ர கலியாணத்துக்குப் போயிற்றியே.
- அம்மா, இப்ப எங்களுக்கு என்ன குறையிருக்கு
பணந்தான் எவ்வளவோ அக்கா சுேமித்துவிட்டா. இனி கலியாணம் பேசிறது சுலபம் தானே.
: ரவி, நீ டொக்டராவாய், உழைத்து இந்தக் குடும்பத்தைப்
பார்ப்பாய், உன்க்கு கீழையிருக்கிற தங்கச்சி சுமதியின்ர பொறுப்பை நீ எடுப்பாய், என்ட எண்ணத்தோடைதான் அக்கா தன்ர வாழ்க்கையைப் பாராம உழைச்சுழைச்சு
119

Page 68
ரவி
தங்
ரவி
தங்
உன்னைப் படிப்பிச்சாள். நீ என்னடா எண்டா வேலையாகி ஒரு வருசமில்லை, உன்ரை அம்மாவை, அக்காவை தங்கச்சியைப் பார்க்காமல் யாரோ ஒருத்தியிட்டை
போறனெண்டு இருக்கிறாய்.
அம்மர் அக்காதான் வயது போய் கலியாணம் செய்யப்
போறாள் எண்டால் என்னையும் அப்பிடி வயது போகு மட்டும் இருக்கச் சொல்லிறியே.
- அட என்னடா சொல்லிறாய்? உன்ர வாயாலை இப்பிடிச்
சொல்லலாமே. உனக்காகத்தாண்டா அவள் கலியாணம் காட்சி எண்டில்லாமல் இவ்வளவு காலமும் அந்நிய நாட்டிலை போய் தன்ர இரத்தத்தைச் சிந்தி, தனக்கெண்ட உணர்வுகளைப்பற்றி சிந்திக்காது உழைச்சுக் கொண்டி ருக்கிறாள். அவளைப் போய், வயது போக மட்டும் கலி
யாணம் செய்யாமல் இருந்திட்டாள் எண்டு சொல்லுறியே.
உனக்கு மனச்சாட்சி எண்டொண்டிருக்காடா?
இப்ப எங்களுக்கு என்ன குறையிருக்கு நான் கலியாணம் செய்தாப்போலை உங்களை விட்டிடப் போறேனே. நான் பார்ப்பன் தானே.
: போடா, போடா.நீ தான் பார்க்கப் போறாய். வாறகிழமை
அவள் வரப்போறாள் அவள் வரட்டும் அவளோடை நீ எதையும் கதைக்காதை நான் அவளோடை கதைச்சுப் பார்க்கிறன்.
(காட்சி மாறும் ஒலி)
120

காட்சி - 2
(கார் வந்து நிற்கும் ஒலி) (திறந்து மூடும் ஒலி)
பாத்திரங்கள் : கண்மணி, தங்கம்மா
தங்
655 :
தங்
கண் :
தங்
கண் :
தங்
கண் :
கண்மணி
அம்மா!
: , என்னம்மா உன்ர கோலம், (அழுகிறாள்) இப்பிடி
இளைச்சுப் போயிற்றியே?
அழாதேயம்மா (விக்கியபடி) நான் தான் வந்திட்டேனே. எங்கம்மா தம்பி, தங்கச்சி.
; தம்பி ஆஸ்பத்திரிக்குப் போயிற்றான். தங்கச்சி பள்ளிக்கூடம்
போயிற்றாள்.
சுமதி, இப்ப பெரிசா வளர்ந்திருப்பாள் என்னம்மா?
; அவள் தான் இப்ப வந்திடுவாளே, பார்க்கலாம் கண்மணி.
வா.வா. உனக்காக உனக்கு விருப்பமான நண்டுக் குழம்பு சமைச்சு வைச்சிருக்கிறன். வா. அம்மா.
இந்தப் படத்திலை இருக்கிறதுதானா தம்பி அம்மா?
டெதஸ்கோப்போடை என்ன அழகாக இருக்கிறான்.
121

Page 69
தங்
இடம்
ஓம் கண்மணி, அவன் இப்ப ரவுண் ஆஸ்பத்திரியிலை தான் வேலை பார்க்கிறான். சரி சரி நீ வா. முதல் சாப்பிடு பிறகு எல்லாம் கதைக்கலாம்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 3
தங்கம்மா வீடு
பாத்திரங்கள் : கண்மணி, தங்கம்மா.
கண் :
தங்
கண் :
தங்
என்னம்மா இரவு ஒன்பது மணியாகப் போகுது இன்னும் தம்பி வரேல்லையம்மா. நான் இண்டைக்கு வாறனெண்டு அவனுக்கு தெரியாதோ? லீவைப் போட்டிட்டு நிண்டிருக்க லாம் தானே?
; அவனுக்கு சிலவேளை வேலை அதிகமாயிருக்கும்.
சிலவேளை நைற் டியூட்டியோ தெரியாது. நீ போய்ப்படு. காலமைக்கு எப்பிடியும் வந்திடுவான்.
என்னம்மா? தம்பியைப் பார்க்க எவ்வளவு ஆசையாயி
ருக்குது தெரியுமா? காலமை மட்டும் பொறுத்திருக் கோணுமே.
! நீ போய் படம்மா, அவன் காலமைக்குத்தான் வருவான்
போல இருக்கு.
122

ዱ,6öö :
தங்
இடம்
சுமதி எங்கை?
அவள் படுத்திட்டாள். நீயும் போய்ப்படு. ம்.
(பெருமூச்சுடன்)
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 4
தங்கம்மா வீடு
பாத்திரங்கள் : தங்கம்மா, புறோக்கர் பரமசிவம், கண்மணி
தங்
புறோ !
தங்
புறோ !
வாங்க பரமசிவம் அணிணை வாங்க. எப்பிடி அண்ணை, இவளும் வந்திட்டாள். இனி இவளுக்கொரு முடிச்சுப் போடுறதுதான் நல்லது. 34 வயதாப் போச்சுது. நான் சொன்ன விசயம் சரிவந்திட்டுதே.
தங்கம்மா, எவ்வளவோ இடத்திலை கதைச் சுப் பார்த்திட்டன் நீ சொன்ன மாதிரி வீடு வளவு இரண்டு லட்சம் ரூபா காசு சீதனம், நகை நட்டுகள் ஒரு 25 பவுண் எண்டெல்லாம் சொல்லிப் பாத்திட்டன். ஆனால் எதுவும் சரிவரேல்லை.
என்ணண்ணை அப்பிடி ஒருதருமே சந்திக்கேல்லையா?
தங்கம்மா வயது கூடிற்றுது ஒண்டு. இருந்தும் நாலு
123

Page 70
தங்
தங்
புறோ !
தங்
புறோ !
தங்
புறோ !
மாப்பிள்ளையஸ் கிடைச்சாங்கள் அவங்கட குறிப்புக்களும் பிள்ளையின்ர குறிப்பும் கூட நல்ல பொருத்தம். ஆனா.
என்ன அண்ணை. சீதனம் கானா எண்டுறாங்களோ?
அதில்லை தங்கம்மா..?
வேறையென்ன அண்ணை? சொல்லுங்க.
எனக்கொரு மாதிரியிருக்கு தங்கம்மா சொல்ல. பரவாயில்லை. எதெண்டாலும் நீங்க சொல்லுங்க
சவுதிக்குப் போனா பொம்பிளையளைப் பற்றி அவளவு நல்லாக் கதைக்கிறேல்லை தங்கம்மா. அங்கை அவங்கள் விரும்பியோ விரும்பாமலோ நடத்தை தவறியிருப் பாங்களாம். இதாலை எங்கட சமூகத்திலை இப்ப சவுதிக்குப் போட்டு வாற பொம்பிளையளை குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளுறேல்லை.
அண்ணை இந்தச் சமுதாயம் எப்பிடி யெல்லாம் பொம்பிளையளைப்பற்றி நினைச்சு வைச் சிருக்கு. ஏழ்மையிலையிருந்து விடுபடுறதுக்காக, அந்நிய நாட்டுக்குப் பெண்கள் உழைக்கப் போனால் அவங்கள் வழிதவறினவங்களா அண்ணை?
தங்கம்மா, இதை நான் சொல்லேல்லை. உங்கட மகளுக்கு கலியாணம் பேசிப் போன இடத்திலை கதைச்சதைத்தான்
நான் சொன்னன்.
124

தங்
புறோ !
கண் :
தங்
கணி :
தங்
ቇ6õõ[. :
தங்
அப்ப என்ர மகளுக்கு இந்த சமுதாயத்திலை இனி இடமேயில்லயா அண்ணை?
அப்பிடித்தான் நினைக்கிறன். விதியொண்டிருக்கே. அதுக்கு ஆரும் தப்பேலாது தங்கம்மா? நான் வாறன். (சிறிய ஒலி எழுதல்)
அம்மா,
கண்மணியா? நீ எப்ப வந்தாய்?
நீங்கள் புறோக்கரோடை கதைக்க ஆரம்பித்த நேரத்தி லிருந்தே நான் இந்த அறையிலை தான் இருக்கிறன். பார்த்தியா அம்மா, உன்ர விதி உன்னை எங்கை கொண்டு போய் விட்டிருக்கு. இப்ப உனக்கு கலியாணம் செய் யேலாத நிலையாய்ப் போச்சம்மா.
அம்மா, இப்ப நான் எனக்கு கலியாணம் செய்து வைக்கச் சொல்லி கேட்டனா? நீங்க போய் தேவையில்லாமல்
இதிலை தலையிடுறிங்க.
இந்த பத்துவருசமும் உனக்கெண்டு ஒரு சுகமும் இல்லாம இந்தக் குடும்பத்துக்கு உழைச்சது போதும். இனி நீ ஒரு கலியாணத்தை செய்து பிள்ளை குட்டியோட குடும்பமாக இருக்கவேணுமெண்டு ஒரு தாய் விரும்பாம வேறு ஆரம்மா விரும்புவாங்க. பெண் பாவம் பொல்லாததம்மா. உன் அப்பா இறந்தவுடனேயே இந்தக் குடும்பப் பாரத்தைச் சுமந்து உன் தம்பியை
125

Page 71
கண் :
தங்
கண் :
தங்
கண் :
தங்
டொக்டராக்கினாய். எங்கள் குடும்பத்தின் ஏழ்மையைப் போக்கினாய். ஆனால் உனக்கு செய்ய வேண்டிய கடமையை ஒரு தாயெண்ட முறையிலை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறேனம்மா?
இதுக்குப் போய் அழுகிறியேம்மா. அந்தப் புறோக்கர்
சொல்லிப் போட்டுப் போறது உனக்கு ஞாபகமில்லையா.
எல்லாம் அவரவர் தலைவிதிப்படிதான் நடக்குமென்று. சும்மா உதெல்லாத்தையும் விட்டிட்டு வேறை அலு வலைப்பாருங்க. அது சரி இவன் தம்பி என்ன வீட்டுக்கு ஒழுங்கா வாறானில்லை.
கண்மணி, அவனைப் படிப்பிச்சு டொக்டராக ஆக்கினது தான் மிச்சம். அவன் குடும்ப பாசம், நன்றி உள்ளவனாகத் தெரியேல்லை அம்மா.
என்னம்மா சொல்லிறாய்? எனக்கு ஒண்டும் விளங்
கேல்லை.
உன்ர தம்பி ஆரோ அவனோட வேலை செய்யிற 69(Jს டொக்டர் பெட்டையை காதலிக்கிறானாம். அவளைக் கலியாணம் செய்து தரச்சொல்லிக் கேட்கிறானாம்மா.
அதிலை என்னம்மா தப்பிருக்கு வயது வந்த ஒரு ஆண் தனக்கு விருப்பமான இடத்திலை கலியாணம் செய்யிற திலை என்ன பிழை இருக்கு?
கண்மணி, நீயா அதைச் சொல்லிறாய்? இவ்வளவு தூரம் அவனைப் படிப்பிச்சு ஆளாக்கின அக்காவை, அதாவது
126

கண் :
தங்
ᎯᏂ6ᏈᎼr :
தங்
கண் :
உன்னைப் பற்றி அவன் நினைக்கவேயில்லையம்மா. அக்கா இப்பிடி தனிமரமாக இருக்கிறாளே அவளுக்கு முதலிலை கலியாணம் செய்து வைக்கவேணுமண்டு நினைக்கேல்லை அவன். இவள் சுமதியைப் பற்றியாவது அவன் நினைச்சானா?
என்ர கதையை விடுங்கம்மா, அது முடிஞ்சுபோன கதை. எனக்கெண்டு ஒரு வாழ்விருந்தா அது நீ தம்பி, தங்கச்சி இவங்கட சிறப்பான வாழ்க்கையாகத்தானிருக்கும். இவங்க ளெல்லாம் சந்தோஷமாக இருந்தா அதுவே போதும்.
கண்மணி, நானும் நிரந்தரமா இருக்கப் போறதில்லை. தம்பியும் போயிடுவான். சுமதியும் நாளைக்கு வேறொரு வனுக்குச் சொந்தமாகிவிடுவாள். உன்ர வாழ்வு தனி மரமாயிடுமே அம்மா. அதை யோசிச்சுப் பார்த்தியா?
இந்த உலகத்திலை நம்ம மனித சமூகத்திலை எத்தனை பெண்கள் இண்டைக்கு சீதனக் கொடுமையாலை தனிமரமாக இருக்கிறாங்கள். அவங்களிலை ஒருத்தியாக நானும் இருந்திட்டுப் போயிடறன் அம்மா, அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீங்க. அது சரிதம்பியின்ர கலியாண விசயத்தை கவனிக்க வேண்டியது தானே.
அவன்ர விசயமாய் அந்தப் பிள்ளையின்ர அப்பா இங்க வர இருக்கிறார்.
சரி, வரட்டும். கதைச்சு ஒரு முடிவெடுப்பம்.
(காட்சி மாறும் ஒலி)
127

Page 72
இடம்
காட்சி - 5
; தங்கம்மா வீடு
பாத்திரங்கள் : தங்கம்மா, கண்மணி, ரவி
கண் :
ரவி
கண் :
ரவி
கண் :
ரவி
தங்
கண் :
ரவி
ரவி, எல்லாம் சரிதானே. கலியாணத்தை எங்க நடத்திறதாக அவை தீர்மானிச்சிருக்கினம்.
ராமநாதன் மண்டபத்திலேயே நடத்தவாம். வருகிற புதன்கிழமை செய்யவாம்.
அப்ப சரி, அதுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வமே.
; மிக முக்கியமான விசயம் ஒண்டையும் அவங்கள்
சொன்னாங்கள் அக்கா.
என்ன? என்ன?
கலியாணத்துக்கு உங்களை வர வேண்டாமாம்.
டே ரவி, என்னடா சொல்லிறாய்.
பொறுங்கம்மா, அவசரப்படாதீங்க. ஏன் தம்பி நான் வரக்கூடாதாம்.
நீங்கள் சவுதிக்குப் போனதாலை உங்களை ஒரு மாதிரி
நினைக்கிறாங்கள். அங்கை நீங்க வந்தால் அவங்கட ஆக்களுக்கு தெரிய வந்தால் கெளரவக்குறைவாம்.
128

தங்
ரவி
தங்
கண் :
தங்
கண் :
டே ரவி, இந்தக் கலியாணம் தேவையில்லை யெண்டு போய்ச் சொல்லு.
அப்ப என்னையும் அக்காவைப் போல இருக்கச்
சொல்லிறியா?
என்னடா சொன்னாய்? (அடித்தல்)
விடம்மா, அவனுக்கு ஏன் அடிக்கிறாய்?
கண்மணி, பொறுமைக்கும் ஒரு அளவிருக்கம்மா. உன் பொறுமையும், நீ இந்த குடும்பத்திலை வைச்ச அன்பும் இண்டைக்கு உன் வாழ்க்கைக்கே உலை வைச்சிட்டுது அம்மா. இவன் இண்டைக்கு இந்த சமூகத்திலை தலை நிமிர்ந்து நிற்கிறதுக்கு காரணம் நீ தான் எண்டுறது இவனுக்கு புரியாமல் கதைக்கிறான் கண்மணி. நீ இவனுக்கு மேலை வைச்சிருக்கிற பாசத்திலை ஒரு சிறி தளவாவது இவன் உன் மேலை வைச்சிருக்கிறானாம்மா. ஆரோ ஒரு கண்டவளுக்குப் பின்னாலை, போறதுக்காக உன்னை தன்ர வாய்க்கு வந்த மாதிரிச் சொல்லுறானே.
அவங்களுக்கு வாயடைக்கிற மாதிரி கதைக்க வேண்டிய
இவன் அவங்களோட சேர்ந்து நிண்டு கதைக்கிறானே.
அவசரப்படாதே அம்மா, இந்த சமூகத்திலை, அவனும் ஒருவன் தானே. சமூகம் இப்படிக் கதைக்கேக்கை அவன் மட்டும் வாயை திறக்கேலாது அம்மா. அது கிடக்கட்டும்
இப்ப.
129

Page 73
தங்க
கண் :
தங்
கண் :
இப்பிடிச் சொல்லிச் சொல்லியே உன்ர வாழ்க்கையை அழிச்சுக் கொள்ளுறாய். அம்மா.
யாரும் யாருடைய வாழ்க்கையையும் அழிச்சுக் கொள்ள முடியாதம்மா. இந்தச் சமூகத்திலை மனிதனாக, அதுவும் பெண்ணாகப் பிறந்ததே குற்றம். இந்தச் சமூகம் பெண்களை பகடைக் காய்களாக நினைக்குது. இந்த நிலையிலை சமூகத்தின் பார்வை மாறினால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும். இப்ப இந்தக் கதைய ளெல்லாத்தையும் விட்டிடுவம். தம்பியின்ர கலியாணத்தை
நல்லா நடத்தி முடிச்சிடுவம்.
நீ இல்லாம கலியாணமா? நாங்கள் போகப் போறதில்லை.
அம்மா, நானும் வரேலாது. அப்ப அவன்ர கலியாணத்தை ஆர் முன்னிண்டு நடத்திறது. தம்பி நீ கவலைப்படாதை. நான் அங்கை வந்து உன் கெளரவத்துக்கு களங்கத்தை உண்டு பண்ண்மாட்டன். நீ அக்கா இல்லை எண்டு வெளியிலை சொல்லலாம். ஆனால் நீ என்னோட கூடப் பிறந்தனி உன்ர இரத்தத்தையும் என்ர இரத்தத்தையும் எடுத்துப் பார்த்தால் அதிலை இந்த அம்மான்ர இரத்தமும் அப்பான்ர இரத்தமும் தான் இருக்கும். அதனாலை நான் உன்னை தம்பி இல்லையெண்டு சொல்லேலாது. என்ர மன தாலை அப் பிடி நினைக் கவுமே லாது. நீ கவலைப்படாம போ. அம்மாவும் தங்கச்சியும் உன்ர கலியாணத்துக்கு வருவாங்கள். நான் இங்கையிருந்து கொண்டே உன்னை வாழ்த்துவன். முடிந்தால், சமூகம்
130

தங்
r
கண் :
இடம்
பாத்திரம்
கண் :
சுமதி !
கண் :
இடங்கொடுத்தால் கலியாணத்துக்குப் பிறகாவது இந்த அக்காவிட்டை வந்திட்டுப்போ,
கண்மணி (விக்கி விக்கிஅழுதல்) நீ உண்மையிலை. எப்பிடியம்மா சொல்லுறது உண்ட அப்பாஇருந்திருந்தா இப்பிடி உனக்கு ஆயிருக்குமா அம்மா? அவர் என்ன பாவம் செய்து போட்டுப் போனாரோ?
அம்மா, நீங்க அப்பாவைப் போய் மனம் நோகிறீங்களா? அவரை அங் கைகூட நிம்மதியாய் இருக்க விடமாட்டீங்கள் போல இருக்கு அழாதீங்க வாங்க.
(காட்சி மாறும் ஒலி)
$ITL” গ্রী - 6
தங்கம்மா வீடு
: தங்கம்மா, கண்மணி, சுமதி
சுமதி, என்ன நெக்லஸ் போடாம புறப்பட்டிட்டா, அம்மா நெக்லசை போட்டு விடுங்க சுமதிக்கு.
இது களைப் போட்டுத் தான் எனினம் மா? (பெருமூச்சுவிடுதல்)
என்னம்மா நீ அண்ணாவின்ர கலியாணத்துக்கு போற நீ பெருமூச்சு விடுறாய்.
131

Page 74
தங்
கண் :
தங்
கண் :
தங்
கண் :
இடம்
! நீ இல்லாம எனக்கு அங்க போக விருப்பமேயில்லையம்மா.
நான் வராட்டித்தான் என்ன. நீ இருக்கிறாய் தானே. உன்ர வாழ்த்து ஒண்டே போதும் அம்மா! அவங்கள் நல்லா வாழுறதுக்கு.
வாம்மா, கண்மணி நீயும் வெளிக்கிடு. அவங்க என்ன
சொல்லுறது.
தம்பியின்ர கெளரவத்தை காப்பாற்ற வேண்டியது ஒரு அக்காவின்ர பொறுப்பில்லையாம்மா, நேரமாகுது நீங்க புறப்படுங்க.
கவனமா இரும்மா, நாங்கள் போயிற்றுவாறம்.
சரி, போயிற்று வாங்க.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 7
தங்கம்மாவின் வீடு
பாத்திரங்கள் : தங்கம்மா, கண்மணி, கணேசன்
கண் : அம்மா அம்மா.
தங்
எங்க கண்மணி போயிற்று வாறாய், நாங்கள் கலியாண வீட் பாலை தாலிகட்டின கையோடையே புறப்பட்டுவந்திட்டம்.
132

கண் :
ங் وf
கண் :
தங்
கண் :
தங்
கண் :
தங்
ᏧᏂ6ᏛᎣi :
தங்
ஏன் அம்மா, நிண்டு ஆறுதலா வந்திருக்கலாம் தானே.
நீ இல்லாதது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்துதம்மா. எனக்கு மனம் கேட்கேல்லை. நானும் சுமதியும் உடனே
புறப்பட்டு வந்திட்டம்.
எப்பிடியம்மா கலியாணம் எல்லாம் நடந்தது.
பெரிய குடும்பம் பெரிய அந்தஸ்து. அதாலை பெரிசாத்தான் கலியாணம் நடந்தது.
உனக்கு அங்கை மரியாதை தந்தாங்களாம்மா?
மாப்பிள்ளையின்ரை யெண்டதாலை அதெல்லாம் சீராக இருந்தது. அது சரி நீ எங்கை போயிற்று வாறாய்?
நான் என்ர ரிக்கற்றை கொண்போம்' பண்ணிற்று. பிளைற்றையும் விசாரிச்சிட்டுவாறன்.
என்ன கண்மணி நீ சொல்லிறாய்.
ஓம் அம்மா, எனக்கும் இனித் திரும்பி சவுதிக்கு போற நாள் நெருங்கிற்றுதல்லே. V,
என்ன பிள்ளை நீ சொல்லிறாய். சவுதிக்கு திரும்ப போகப் போறியே. நான் உன்னை இங்கை வரச்சொன்னதே உனக்கெண்டு ஒரு குடும்பத்தை அமைச்சுத்தந்து இங்கை நிம்மதியா இருக்கத்தான். இனி ஏன் நீ சவுதிக்குப் போகவேணும்.
133

Page 75
கண் :
தங்
கண் :
தங்
கண் :
அம்மா, எனக்கு இன்னும் ஒரு பெரிய கடமை இருக்கு, சுமதியை நல்ல இடத்திலை வாழ வைக்க வேணுமெண்டா, இந்த சமுதாயத்திலை சீதனம் கனக்க கொடுக்க வேண்டியிருக்கு. அதாலை நான் உழைக்கத்தானே வேணும்.
அதுக்குத்தான் ரவி இருக்கிறானே. அவனை நீ ஆளாக்கி விட்டிருக்கிறாய். தன்ர தங்கச்சியை கவனிக்க வேண்டியது அவன்ர பொறுப்புத்தானே கண்மணி.
அம்மா தம்பிக்கு ஒரு மனைவி இருக்கிறாள். இனி அவன் தான் தன்ர குடும்பமெண்டு பாக்கவேணுமே தவிர தங்கச்சியைப் பார்க்கேலாது. அப்பிடியில்லையெண்டு பாக்கப்போனால் அவன்ர குடும்பத்துக்குள்ளே பிரச்சினை வரும். அவன் நிம்மதியாயிருக்கேலாது சந்தோசமாயிருக் கேலாது.
வேண்டாம் கண்மணி. இப்ப நீ உழைச்சுவைச்சிருக்கிற
காசு, நகைநட்டு இதெல்லாம்போதும் மகள். நீ போக
வேண்டாம். உனக்கு என்ர கண் மூடக்கிடேல்லை ஒரு கலியாணம் செய்து வைச் சிடோணுமெண்டுதான் இருக்கிறன்.
அம்மா, நீ தான் பார்த்தியே, எனக்கு இனி கலியாணம்
செய்து வைக்கிறதெண்டா அது நடைபெறாத காரியம்
அம்மா. குடும்பம் வாழமுடியாம கஷ்டப்படுறதைப்
பார்க்கச்சகிக்கமுடியாம உழைக்கவேணுமெண்டு சவுதிக்
குப் போற பொம்பிளையஞக்கு இந்த சமுதாயம்
134

Վ}, 8, 1
Oمبر h) 8.53 :
தங்
!,ാര്
கனே
கொடுத்திருக்கிற பேர் நடத்தை கெட்டவள். இந்தப் பேரோடை கலியாணம் செய்தாலும் வாழேலாது. இந்த ஆண்வர்க்கம் இருக்குதே இதிலை ஒருத்தன் என்ர பணத்துக்காக சிலலேளை என்னைக் கலியாணம் செய்யலாம். ஆனா அதுக்குப் பிறகு அவன் என்னை நடத்தை கெட்டவள் எண்டு சொல்லமாட்டான் எண்டுற துக்கு என்ன உத்தேசம் கலியாணத்துக்குப்பிறகு அப்பிடி யொண்டு நடந்து என்ர வாழ்க்கை பாழாகிறதை விட நான் இப்பிடியே இருந்துட்டுப் போயிடறன் அம்மா என்ர சகோதரங்களின்ர நல்வாழ்க்கையைப் பார்த்து நான் வாழ்ந்திட்டுப் போயிடறன். ... .
இல்லம்மா, இந்த உலகத்திலை நல்லவன் ஒருவன் 366 least போகப்போறான்? கடவுள் உன்ர மனத்துக்கு நல்ல வாழ்க்கையைத் தராமல் விடமாட்டார் அம்மா. நீ திரும்பவும் சவுதிக்குப் போற எண்ணத்தை விட்டிடு
c9ịLftDII. ... ', -
கண்மணி, கண்மணி
: ஆரது வாங்க
ஆ. நீங்களா? வாங்க வாங்க இன்னும் திரும்ப சவுதிக்கு போகேலையா. அம்மா நான் சொல்ல மறந்து போனன். இவர் சவுதியிலை நான் பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டிலை தான் றைவராக இருந்தவர்.
ஆம் அம்மா,கண்மணி அண்டைக்கு எனக்கு உதவி
135

Page 76
கண் :
கனே:
கண் :
கனே:
தங்
கனே:
செய்திராவிட்டால் என்ர தங்கச்சியின்ர வாழ்க்கையே சின்னா பின்னாமாய் போயிருக்கும் அம்மா.
இதென்ன பழைய கதையெல்லாம் சொல்லிக்கொண்டு.
பழைய கதையில்லை கண்மணி. உன்ர இரக்கமான மனத்தாலை இண்டைக்கு என்ர தங்கச்சிக்கு நல்ல வாழ்வு கிடைச்சிட்டுது. இந்தாங்க நீங்க அண்டைக்குத் தந்து உதவிய பணம் முப்பதாயிரம் ரூபாய்.
இப்ப இதுக்கு அவசரமில்லை கணேசன். நீங்கள் ஆறுதலாகக் கொடுத்தாப் போதும்.
எனக்குக் கிடைக்க வேண்டிய பணம் கிடைச்சிட்டுது. உங்களையும்பாத்திட்டுப் பணத்தையும் கொடுத்திட்டுப் போகலாமெண்டு வந்தன்.
நீங்க என்ன சொல்லிறீங்க. கண்மணி எனக்கு ஒண்டும் விளங்கேல்லை.
ஒருவருசத்துக்கு முதல் நான் சவுதியிலை உங்கட மகள் . வேலை பார்த்த வீட்டிலை றைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தன். திடீரென்று என்ர தங்கச்சியின்ர கலியாணத்துக்கு 30000ரூபா காசு அனுப்பும்படி அம்மா கடிதம் எழுதியிருந்தா அந்த நேரத்திலை என்னட்ட ஒரு காசும் இருக்கேல்லை. அந்தக் காசு இல்லாட்டி தங்கச்சி யின்ர கலியாணம் நிண்டுபோயிடுமெண்டும் அம்மா எழுதியிருந்தா. அந்த நேரத்திலை கண்மணிதானம்மா
136

льъ5ї :
கனே :
፴,6öö :
னே :
ול ו,
எனக்கு உதவி செய்தது. இந்த உதவி மட்டும் அண்டைக்கு எனக்கு கிடைச்சிருந்திராவிட்டால் என்ர தங்கச்சி வாழா வெட்டியாகத்தான் இணி டைக்கு மிருந்திருப்பாள். நீங்க கண்மணியை மகளாப் பெத்தது உண்மையிலை பெருமையம்மா.
உந்தப் பழைய கதையளை விடுங்க. இப்ப நீங்க திரும்ப எப்ப போகப் போறிங்க.
அடுத்த மாதமளவிலைதான்.
எனக்கு அடுத்த கிழமை பிளைற்.
என்ன கண்மணி? திரும்பப் போகப் போறியா? வரேக்கை என்ன சொல்லிற்று வந்தனி எனக்கு கலியாணம் நடக்கப்போகுது இனி நான் திரும்பி வரமாட்டன் என் டெல்லா சொல்லிற்று வந்தனி.
நான் போக வேண்டாம் எண்டு சொல்லிறன் இவள் கேட்கிறாளில்லை தம்பி.
அம்மா, தேவையில்லாத கதையளைக் கதையாதை.
கணி மணி! அம்மா தேவையில்லாத கதையளை
கதைக்கேல்லை. நான் இங்கை அரை மணித்தியாலத்
துக்கு முதலே வந்திட்டன். உனக்கும் அம்மாவுக்கும்
நடந்த சம்பாசனையைக் கேட்டுக் கொண்டுதான்
இருந்தன். நீங்க எனக்கு சொல்ல வேண்டிய அவசியமே
இல்லை. இந்த சமுதாயம் உனக்கு தந்திருக்கிற
137

Page 77
பெயரையும், உனக்கு கலியாணம் செய்து வைக்கேலாது. உங்கட அம்மா படுகிற அவலத்தையும் உன்னுடைய சகோதரன் உங்களை கவனியாமல் இருப்பதையும், உனக்குப் பின்னாலை ஒரு தங்கச்சி கலியாணம் செய்ய காத்திருக்கிறதையும், இங்கை நடந்த உங்கட கதைகளி லிருந்து அறிஞ்சு கொண்டன்.
அம்மா உங்களுக்கு ஆட்சேபனையில்லையெண்டால், கண்மணிக்கும் ஆட்சேபனையில்லை எண்டால் கண் மணியை நான் கலியாணம் செய்யிறன். நான் கண்மணி யைக் கலியாணம் செய்ய விரும்புவது கண்மணி எனக்குச் செய்த உதவிக்குப் பிரதியுபகாரமாகயில்லை. சவுதியிலை நான் கண்மணியைச் சந்திச்ச நாளிலேயே இப்பிடி ஒரு பெண் குடும்பத்துக்காக உழைக்க வந்திருக்கிறாள் என நினைத்து வியந்தது உண்டு. வியந்தது மாத்திரமில்லாமல் இப்படியான ஒரு பெண் எனக்கு வாழ்க்கைத் துணையாகக் கிடைக்க மாட்டாளா? என ஏங்கியதுண்டு.
நான் என் மனப்பூர்வமாக கண்மணியை ஏற்றுக் கொள்ளுறன் அம்மா. இந்தச் சமுதாயம் எத்தனையோ சொல்லும். இந்தச் சமுதாயம் பெண்ணை அடிமையாக்கி வைச்சிருக்கிறது, மாத்திரமில்லாமல், அவள் இந்தச் சமுதாயத்திலை முன்னேறத்துடிக்கிறபோது, அவளுக்குக் களங்கத்தைக் கற்பித்து அவளை தலையெடுக்காமல் செய்துவிட இந்த சமுதாயம் கங்கணம் கட்டிக் கொண்டி ருக்கிறது, எங்கட சமுதாயப் பண்புகளாகப் போச்சு.
138

፵ሓl
கனே :
தங்
፵,6õõ :
தங்
அம்மா, நான் கண்மணியைத் திருமணம் செய்யிறது மாத்திரமில்லை. உங்கட குடும்பத்தையும் என்ர குடும்பமாகவே ஏற்றுக் கொள்ளுறன்.
தம்பி தெய்வம்போல இந்த நேரத்திலை வந்து எங்கட குடும்பத்துக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் தந்திட்டீங்க.
சாதாரண மனிசன் அம்மா நான். ஆனால் சமுதாயத்துக்கு பயப்படாத நேர்மையான மனிதன். என்னை நீங்க தெய்வமாக்காதீங்க. தலையெழுத்தெண்ட பேரிலை எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையில்லாமல் கண்ணிரும் கம்பலையுமா இருக்கிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிற தெய்வத்தை விட கண்ணிர் விடாம சந்தோசமா ஒரு பெண்ணை வைச்சிருக்கக் கூடிய சாதாரண மனிசனாக இருந்திடறன் நான்.
கண்மணி. கண்மணி.
ஆ.ஆ.(திடுக்கிட்டவளாக)
என்னம்மா பேயறைந்த மாதிரி இருக்கிறாய். தம்பிக்கு ஏதாவது ரீ கொண்டு வா அம்மா.
(காட்சி முடிவு)
(11 - 12 - 1994 இல் ஒலிபரப்பப்பட்டது)
139

Page 78
இடம்
7. கெளரவ அகதிகள்
காட்சி - 1
மணியம் ஒவசியர் வீடு
பாத்திரங்கள் : மணியம் ஒவசியர், மனைவி அழகம்மா, புறோக்கள்
பொன் :
மணி :
الوك
பொன் :
Ln656f :
பொன் :
பொன்னம்பலம்.
ஒவசியர் ஜயா, மணியம் ஒவசியர் ஜயா,
ஆ, ஆரது புறோக்கள் பொன்னம்பலமே, வாங்க வாங்க, அழகம்மமா, இங்கை புறோக்கள் வந்திருக்கிறார்.
ஆ, வாங்கண்ணை இருங்க.
ஒவசியர் ஜயா, இப்ப மகளின்ர விசயமா என்ன
முடிவெடுத்திருக்கிறியள்.
புறோக்கள், கலியாணமெண்டுறது திடீரெண்டு எடுக்கிற முடிவில்லை. கனவிசயங்களை யோசிக்க வேண்டியிருக்கு.
ஜயா நீங்கதானே சொன்னிங்க, எங்கட மகளுக்கும் முப்பத்துநாலு வயதாப் போகுது எப்பிடியாவது ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சிடச்சொல்லி. பிறகு இன்னும் யோசிச்சுக்கொண்டடிருந்தா வயது தானே போகப்போகுது.
140

மணி :
பொன்
மணி :
பொன்:
மணி :
இங்க பார் பொன்னம்பலம், நானும் கொழும்புக்கு வந்து இங்கத்தையோடையே "செற்றிள்' பண்ணி பதினைஞ்சு வருசமாயிற்றுது. இப்ப நான் இங்கை ஒரு கெளரவமான நிலையிலை இருக்கிறன். அப்ப மகளுக்கு மாப்பிள்ளை எடுக்கேக்கையும் சில விசயங்களைப் பார்க்கவேண்டி
யிருக்கு. . . .
ஜயா, இங்கை கொழும்பிலை இப்ப ’கை சொசைற் றியிலை' இருக்கிறவங்களெல்லாம் எங்கட ஊர்ப்பக்கங் களிலை இருந்து வந்தவைதானே. அதுக்காக எங்கட ஊரிலை இருக்கிற ஆக்களை சொசைற்றியிலை குறைஞ்சவங்களெண்டு சொல்லிறியள் போல இருக்கு
அப்பிடிச் சொல்ல வரேல்லை நான். ஒரு மேல் நிலைக்கு வந்ததுக்குப் பிறகு கீழை இறங்க ஆருக்கும் மனம் வராது தானே. இப்ப பாருங்க என்ர மகள் S(O) ரீச்சராக இருக்கிறாள். நாலு இடத்திலை நல்ல மரியாதையாயி ருக்கு மற்றது அவள் படிப்பிக்கிற பள்ளிக் கூடமும் ஒரு உயர்தரப்பாடசாலை. அவளோடை படிப்பிக்கிற ரீச்சர் மாரும் 'கை சொசைற்றியலை இருக்கிற ஆக்கள். அதிகமாக ரீச்சர்மார் எல்லாம் எஞ்சினியர், டொக்டர் மாற்ற பெண்சாதிகள்.
ஏன் ஜயா, அந்தப்பெடியன் என்ன குறைஞ்ச உத்தி யோகமே, ரெக்னிக்கல் அசிஸ்டன்ற். சம்பளமும் 'ஒவரை மோடை 8000 அளவிலை வரும். பிறகு என்ன?
இல்லை புறோக்கள், அந்தப் பெடியன் இவ்வளவு காலமும்
141

Page 79
பொன்:
மணி :
பொன் :
மணி
பொன் :
ஊர்ப்பக்கம் தானே வேலை செய்தவர். இப்ப கொழும்புக்கு வந்து என்ன இரண்டு வருசம் தானே. இந்த சொசைற்றி யிலை வாழக்கூடிய நிலைக்கு இருக்கிறாரோ தெரியாதே.
நானும் என்ர மகளுக்கு எவ்வளவு சீதனம் குடுக்க
இருக்கிறன் . . . மற்றது . . .
ஜயா உங்கட மகளுக்கும் வயது கூடிற்றுது. இந்த நிலை யிலை கலியாணத்துக்கு மாப்பிள்ளை கிடைக்கிறதும் கஷ்டம். மற்றது இந்த மாப்பிள்ளையும் நல்லபொருத்தம். இதை விட்டிட்டீங்கெண்டாபிறகு தேடுறதும் கஷ்டம்.
பொன்னம்பலம், பெடியன்ர அம்மாவும் அப்பாவும் இப்ப எங்க இருக்கினம்.
ஐயா, அவங்கள் அந்த நாளிலை ஊரிலை பேரும் புக ழோடையும் இருந்த ஆக்கள். இப்ப வீடுமில்லாம வளவு மில்லாம ஊரிலை ஒரு அகதி முகாமிலைதான் இருக்கிறங்கள்.
; மகன், அவையளை இங்கை கொழும்பிலை கூப்பிட்டு
வைச்சிருக்கேலாதே .
ஜயா கொழும்பிலை உங்களைப் போல சொந்த வீட்டிலை இருக்கிற ஆக்களுக்கு பிரச்சனை இல்லை. பெடியன் இப்பவே ஒரு றுாமுக்கு 2000 ரூபாவும் சாப்பாட்டுக்கு 2500 ரூபாவும் குடுத்துக்கொண்டிருக்காம். இந்த நிலையில் அப்பா அம்மாவை கொழும்புக்குக் கூப்பிட்டு வீடெடுத்
திருக்கிறதென்டால் உழைப்பிலை மிஞ்சவும் மாட்டுது.
அப்பிடியிருந்தாலும் அவையள் ஊரை விட்டு வரமாட்ட
142

மணி :
பொன் :
மணி :
பொன் :
அழ
பொன் :
மெண்டு இருக்கினமாம்.
அகதியாயிருக்கிற நிலையிலை இப்ப நான் மாப்பிள்ளை எடுத்தா என்ர வீட்டிலை தான் வந்து அவங்கள் குடி யேறியிருக்க வேண்டிவரும்.
ஜயா, உங்கட மகளுக்கெண்டு குடுக்கிற வீட்டிலை அவ வின்ரை புருஷன்ர அப்பா அம்மாதங்கியிருக்கிறதாலை என்ன குறைஞ்சிடப்போகுது.
அப்பிடியில்லை பொன்னம்பலம். அது பின்னாலை பெரிய பிரச்சனையைக் கொண்டு வரும். அடுத்து பொடியன்ர அப்பா அம்மா அகதியாயிருக்கினமெண்டு சொல்ல ஒரு மாதிரியாயிருக்கு. மகள் இதை எப்பிடி மற்றவங்களுக்குச்
சொல்ல முடியும். எங்கட சொசைற்றிக்கு இந்த மாப்பிள்ளை சரிப்பட்டு வராது பொன்னம்பலம்.
ஜயா, சொசைற்றி, சொசைற்றி எண்டு கையில வாற மாப்பிள்ளையைத் தள்ளி விடுறியள். பிறகு நீங்கள் மனம் வருந்துவீங்க. இப்பிடி ஒரு தங்கமான பெடியனை நீங்கள் நினைச்சே பார்க்கேலாது.
: பொன்னம்பலமணி ணை, இந்தக் கலியானத்தை
விட்டிடுங்கோ. எதுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை ஏதும் இருந்தாக் கொண்டு வாங்கோ பார்ப்பம்.
சரி தங்கச்சி ஏதோ பார்ப்பம். நான் போயிற்றுவாறன்.
(காட்சி மாறும் ஒலி)
143

Page 80
காட்சி - 2
பாத்திரங்கள் : தவம், சந்திரன்.
இடம்
: பஸ்தரிப்பிடம்.
பின்னணி (பஸ் ‘ஒன்று வந்து நின்று ஆளை இறக்கிப்
சந்தி
தவம் :
3:tä :
தவம் :
சந்தி :
போகும் ஒலி)
ஹலோ சந்திரன்.
: 5 . . . . .5 . . . .
என்னடாப்பா மறந்திட்டியா? நல்லா யோசிச்சுப் பார் . . . . தவம் ” இல்லையா' . . . . . . . ,اوۍ :
ஓ, தவம் தான் என்னை அடையாளம்
காணமுடியேல்லையோ . . . .
பின்னை என்னடாப்பா, அப்ப எவ்வளவு மெல்லிசா இருந்தனி. இப்ப தடிச்சிட்டா. அதுசரி எங்கை நான் உன்னைச் சந்திச்சு மூண்டு வருஷம் ஊரிலை சந்திச்சதுக்குப் பிறகு நான் உன்னை சந்திக்கேல்லை. அது சரி என்ன இப்ப வெளி நாட்டிலையோ .
ஒம்மச்சான், நான் இப்ப ஜேர்மனியிலை இருக்கிறன். ஒரு மாதிரி ஏஜன்சியைப் பிடிச்சுப் போய் சேர்ந்திட்டன்.
அது தானே, அங்கத்தையில் சாப்பாடு தான் ஆளை
144

தவம்
சந்தி :
தவம் :
சந்தி :
தவம்
இவ்வளவு தடிப்பாக்கியிருக்கு.
ஆள் தடிச்சென்ன மச்சாள், மனசு அமைதியில்லையே
என்னடாப்பா & சொல்லுறாய். இப்ப தானே வெளிநாட்டிலை இருக்கிறவங்கள் வாழுற வாழ்க்கைக்கு நாங்கள் உள்நாட்டுக் காரங்கள் ஏணி வைச்சாலும் எட்டாத மாதிரி
இருக்கு . . .
மச்சான். அங்க நாங்கள் அகதி எண்ட பேரிலை அவர்கள் போடுற பிச்சைக் காசிலை வாழ்ந்து கொண்டிருக்கிறம். அங்கை கிடைக்கிற காசிலை அந்த நாட்டு வாழ்க்கை யைத்தான் நாங்கள் வாழ்ந்து கொள்ள வேணும். எங்கட நாட்டு வாழ்க்கையை அந்த நாட்டு அகதிக் காசிலை நடைமுறைப்படுத்தினமெண்டா எவ்வளவோ மிச்சமிருக் கும். ஆனா அந்த நாட்டிலை இருந்து கொண்டு அப்பிடிச்செய்யேலாது. அவங்கட சொசைற்றியோட ஒத்துப்போக நாங்களும் அவங்களைப் போல வாழ வேண்டியிருக்கு. இது தான் நிதர்சனமான உண்மை. அது கிடக்கட்டும் நீ எப்ப கொழும்புக்கு வந்தனி இட்ப வும் அந்த வேலை தானோ அல்லாட்டி வேறை ஏதும் வேலை பார்க்கிறியோ? . . .
இல்லை தவம் அந்த வேலைதான். இப்ப மாற்றங் கிடைத்துக் கொழும்பிலை 2 வருஷமா வேலை செஞ்சு கொண்டிருக்கிறன்.
அப்ப, அம்மா அப்பாவும் இங்கையோ .
145

Page 81
சந்தி :
தவம் :
தவம்
சந்தி
தவம் :
அதை ஏன் கேக்கிறாய். அவங்க இப்ப ஊரிலை அகதிமுகாமிலை இருக்கிறாங்க வீடெல்லாம் விட்டிட்டு இடம் பெயர்ந்து போயிருக்காங்க.
அவங்களை இங்கை கூப்பிட்டு உன்னோடை வச்சிருக்கிறது தானே.
பாவை உனக்குத்தெரியுந்தானே. பிடிச்சாவிடமாட்டார். ஆதோட அவருக்கு, காலிலை வாதமும் வந்திட்டுது. கொழும்புக்கு வரமாட்டன் எண்டிருக்கிறார். நானும் ஒரு முறை போன நேரம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தன். வரமாட்டன் எண்டே சொல்லிற்றார்.
எங்கட ஆக்கள் உள்நாட்டிலை அகதியளாயிருக்கிறம்.
36 வெளிநாட்டிலை அகதிகளாயிருக்கிறம். எங்க ளுக்கு நாங்கள்அங்க ஒரு கெளரவப்பெயரும் வைச்சுக் கொண்டிருக்கிறம்.
என்ன தவம் வேண்டா வெறுப்பாய்க் கதைக்கிறாய்.
பின்னை என்னடாப்பா? புலம் பெயர்ந்த அகதிகளாம் நாங்கள், எண்டு சொல்லிக்கொண்டு அங்கை இருக்கிற
எங்கட ஆக்கள் செய்யிற வேலைகளை நீ நேர வந்து பார்த்தாத்தான் தெரியும்.
தவம், நான் ஒணடு கேக்கிறன் பொய் பேசாதை உன்மையைச் சொல்லுவியா.
சந்திரன் ஏன் நான் பொய் சொல்ல வேணும் உண்மையைத்
146

சந்தி :
தவம்
சந்தி
சந்தி
தவம் :
தானே சொல்லுவன். நீகேளடிாப்பா
வெளிநாட்டிலை எங்கட ஆக்கள் சரியாக் கஷ்டப் படுறாங்கள் எண்டெல்லாம் சொல்லிறாங்கள். அங்கை யெல்லாம் ஒரு மூண்டாந்தரப் பிரஜையாக நாங்கள் இருக்கிறமெண்டெல்லாம் கதைக்கிறாங்கள். ஆனா அங்கை இருக்கிறவங்க ஆராவது ஊருக்குத்திரும்பி வந்து தங்கட இடங்களிலை திரும்பவும் இருக்கிறாங்களா இல்லையே. ஏன் அப்பிடி?
; சந்திரன், எங்கட ஆக்களின்ர ஒரு தன்மையை
மறந்திட்டியே பகிடிக்குச் சொல்லுவாங்க ஒசியெண்ட்ால் பேதியும் குடிப்பான் எண்டு அது மாதிரித்தான் வெளி
நாடுகளிலை அகதிக்காக எண்டு ஓசியாய் குடுக்கிற காசை
ஆர் வெண்டாமெண்டு சொல்லுவாங்க. வேலை செய்து சம்பாதிக்கிறதை விட, சும்மா இருந்து காசு எடுக்கிறது என்ன கஷ்டமே, இதை ஆர் தான் வேண்டாமெண்டு வாங்க. இதாலை தான் அங் கை வந்த வங்க
விட்டிட்டுவாறேல்லை. . .
* உனக்கென்ன இப்ப அங்க 'பெமணன் றெசிடன்சி'
கிடைச்சிட்டுதே
கிடைக்கிற மாதிரித்தான். அப்ப என்ன திடீரெண்டு திரும்ப வந்திருக்கிறாய்.
அதிருக்கட்டும் என்ன சந்திரன், வயதேறிப்போகுது, கலியாணம் ஒண்டும் சரிப்பட்டு வரேல்லையே
147

Page 82
சந்தி :
தவம் :
சந்தி
தவம்
சந்தி :
தவம் :
சந்தி
தவம் :
சந்தி
தவம் :
கலியாணக் காட்சிக்கும் காலம் வரவேணுமே
என்னடாப்பா, இப்ப எங்கட பெட்டையளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையெண்டா வடிவும் தேவையில்லையாம், குவாலிபிக்கேசனும் தேவையில்லை எண்டிருக்கிறாங் களாமே. . -
அப்பிடியும் இருக்கு சிலது, இப்பிடியும் இருக்கு சிலது. என்னடா இப்பிடியுமிருக்கெண்டு என்ன இப்பிடி
அதை விடு, அந்தக் கதையளைச்சொல்லி உனக்கும் தலையிடியை ஏன் கொடுப்பான்.
சந்திரன் ஏதோ இன்ரெஸ்ரிங் சமாச்சாரம் போல இருக்கு.
ஏன் உனக்கேதும் நடந்ததே. சொல்லடாப்பா . . .
என்னுடைய அம்மாவும் அப்பாவும் அகதிகளாக இருக்கிறாங்கள் என்பதற்காக எனக்கு பெண் கொடுக்க மறுக்கிற மனிசரும் இங்கை இருக்கிறாங்க தவம்.
என்ன, எனக்கொண்டும் விளங்கேல்லை . .
: யாரோ ஒரு ஒவசியராம். மணியம் என்பவராம், அவற்ற
மகளுக்கு என்னை மாப்பிள்ளை கேட்டாங்கள். நானும் அப்பா அம்மாட்ட எழுதிச் சம்மதம் கேட்டு சரி எண்டும் சொன்னன்.
என்ன பெயர் சொன்னனி, மணியம் ஒவசியரே மகளுக்கு என்ன வேலை.
148

சந்தி :
தவாம்:
சந்தி :
தவம் :
சந்தி :
தவம் :
சந்தி :
தவம் :
மகள் ரீச்சராம், ஏன் உனக்கு அவங்களைத் தெரியுமே
இல்லை தெரிஞ்ச பேரா இருக்குது. அதுதான் கேட்டனான். ஆர் உனக்கு இந்த கலியாணத்தைப் பேசினது.
பொன்னம்பலம் எண்டுற ஒரு புறொக்கள் தான், ஆரோ ஊரிலையிருந்து என்னைப்பற்றி அவருக்குச் சொல்லி வந்து கேட்டார் நானும் போய்ப் பொம்பிளையப் பாத்தன். பிடிச்சுது ஒமெண்டு சொன்னன்.
பிறகென்ன பிரச்சினை . . .
தவம், அவங்க கொழும்பிலை பத்துவருசமா இருக்கிறாங் களாம். சமூக அந்தஸ்திலை உயர்நிலையிலை இருக்கின மாம். என்ர அப்பா அம்மா அங்கை வீடு வளவு இல்லாம அகதிமுகாமிலை இருக்கிறாங்க தானே. தங்களுக்குவாற சம்பந்தி அப்பிடி அகதி முகாமிலை இருக்கிற தெண்டறிஞ்சா, அவங்கட கெளரவத்துக்கு இழுக்கெண்டு வேண்டாமெண்டிட்டாங்க.
என்னடா பொம்பிளையும் பாத்து ஒமெண்டு சொன்னாப் போலை இப்பிடிச் செய்திருக்கிறாங்கள்.
பொம்பிளை பாக்கிறது சம்பிரதாயமாக நிகழேல்லை. புறோக்கள் தான் ஒரு நாள் என்னை அந்தப் பெட்டை படிப்பிக்கிற ஸ்கூலில் கூட்டிக்கொண்டே காட்டினவர்.
அந்த ஒவிசியர் உங்கட அம்மா அப்பாவை அவ்வளவு
149

Page 83
சந்தி :
தவம்
சந்தி
தவம் :
சந்தி :
கேவலமாக்கிப் போட்டான். இப்ப எங்கட ஆக்கள் கேவலம் வெளிநாட்டிலை அகதியாயிருக்கிற மாப்பிளைகளுக்கு பெண் குடுக்கிறது அவனுக்கு தெரியேலைப்போல இருக்கு.
அதுதாண்டாப்பா உங்களுக்கு குருசந்திரயோகமெண்டு சொல்லிறன்.
எதடா குரு சந்திரயோகம். நிரந்தரமான ஒரு தொழிலிலை,
தன்ர காலிலை, நிக்கிற ஒருஉள்ளூர் மாப்பிளை கிடைக் கிறதை விட, அன்னியன்ர காலைப்பிடிச்சு, பொய்பேசி புரட்டுச்சொல்லி அகதி எண்டுற பேரிலை அவன் போடுற பிச்சைக்காசை கையேந்தி நிக்கிற என்னைப் போல வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற மாப்பிளை கிடைக்கிறது குருசந்திரயோகமோ?
உதை நீ தான் சொல்லுறாய், இப்ப இருக்கிற எங்கட பெட்டையஞம், வெளிநாட்டு புருஷன் எண்டாத்தான் கலியாணம் கட்டுவன் எண்டு கொண்டிருக்கிறாங்க.
சந்திரன், அங்கை கலியாணம் செய்ய எண்டு உந்த ஏஜன்சியளுக்குள்ளாலை வந்து சேர்ந்த பெட்டையள் பட்டுவருகிற அவலம் உனக்குத் தெரியாது. அங்கு வந்து சேராமலேயேவழியிலை தங்கி நிண்டு வாழ்க்கையே
கேள்விக்குறியா போயிருக்கிற பெட்டையளும் எத்தனை பேர் இருக்கிறாங்கள் எண்டு உனக்குத் தெரியாது.
தவம், நீ உணர்ச்சி வசப்படுகிறாய். சமுதாயம் அப்பிடி
150

வம் :
1ந்தி :
கவம் :
சந்தி :
மாறி இருக்கேக்கை, நீயோ நானோ இதுகளைப் பேசினால் விசரன், பைத்தியக்காரன் எண்டுதான் பட்டஞ்சூட்டு வாங்கள்.
ஏன், இப்ப எங்கட சமுதாயத்துக்கு வெளிநாட்டிலை நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கெண்டு நினைக்கிறியே.
இப்பிடிக் கதைக்கிறியே தவம், நீ உந்த வெளிநாட்டு வாழ்க்கையை விட்டிட்டு திரும்பவும் ஊருக்கு வந்திட லாம் தானே.
சந்திரன், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த வெளிநாட்டு வாழ்க்கையும் மோகமும் இப்ப போதை வஸ்துமாதிரி வந்திட்டுது. போதை வஸ்துக்கு அடிமையாயிற்றா அதிலையிருந்து மீளேலாது. அதைப் போலத்தான் வெளிநாட்டு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு அடிமையாப்போயிற்றா, திரும்ப நம்மட பழைய வாழ்க்கைக்கு மீளுறது கடினம். அங்க கிடைக்கிற அந்த காசை சுகமாகச் சிலவழிச்சுப் பழகின எங்களுக்கு இங்கை கிடைக்கிறது பிச்சைக்காசு மாதிரித்தான் இருக்கும். இங்கை வந்து தங்கிறதெண்டால் கொல்லக் கொண்டு போற மாதிரித்தான் இருக்கும்.
தவம், என்ன உனக்கும் ஏதாவது கலியாணப் பேச்சு நடக்குதோ
வந்ததே கலியாணம் செய்யவெண்டுதான்ரா, ஆனா உன்னோட கதைச்சதுக்குப் பிறகுதான் எனக்கு இப்ப
151

Page 84
சந்தி :
தவம் :
சந்தி :
தவம் :
சந்தி :
இடம்
பாத்திரம்
அழ
புத்தியும் வந்திருக்கு
என்னடாப்பா, நான் உன்னைக் குழப்பிற்றன் போல
இருக்கு ,
சரி, சந்திரன் இவ்வளவு நேரமும் என்னோட நிண்டு கதைச்சதுக்கு நன்றியடா. இப்பிடி வெளிநாட்டிலை ஒருதனும் நிண்டு கதைக்க மாட்டாங்க
இண்டைக்கு நான் லீவு, அதுதான் நானும் உன்னோட மினக்கிடக் கூடியதாயிருந்தது. சரி கலியாணம் ஏதுமெண்டா எனக்கும் சொல்லு. அது சரி எங்கை தங்கியிருக்கிறாய்.
'சில்வர் லொட்ஜில் றும் நம்பர் 21 நேரமிருந்தா வா.
சரி, அப்ப போயிற்றுவா . . . .
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 3
: மணியம் ஒவசியர் வீடு
: மணியம், அழகம்மா, புறோக்கள் பொன்னம்பலம்.
: வாருங்கோ, பொன்னம்பலமண்ணை, இருங்கோ. இவர்
குளிச்சுக் கொண்டிருக்கிறார். இப்ப வந்திடுவார்.
152

பொன்
·이)
பொன் :
·9l)
பொன் :
பொனி:
எங்க மகள் இருக்கிறாவோ? அல்லது
; மாதர் சங்கக் கூட்டமெண்டு போயிருக்கிறாள்
அப்ப நல்லது விசயத்தை நாங்கள் மனம் விட்டுக் கதைக்கலாம் தானே
எண்ணண்ணை ஏதாவது மாப்பிளை அம்பிட்டிருக்கோ.
தங்கச்சி, உங்களுக்குத்தான் நல்ல தங்கமான பெடியனைப்
பேசிவந்தன். ஐயா குழப்பிப் போட்டார்.
: அதில்லைப் பாருங்கோ . . . இப்ப போய் நீங்க அந்த
மாதர் சங்க கூட்டத்திலை பாத்தியளெண்டால் என்ர மகளோடை இருக்கிற ஆக்களைப்பற்றி அறிவியள். எத்தினை பெரிய பெரிய ஆக்களின்ர பெண்சாதிமார், பிள்ளையஸ் எல்லாம் இருப்பாங்கள். இப்பிடியிருக்கிற கெளரவமான நிலையை அந்தக் கலியாணம் குழப்பிடுமெண்டுதான் இவரும் வேண்டாமெண்டிட்டார்.
இஞ்ச பாருங்கோ, இங்கை மாதர் சங்கத்திலை
இவங்களெல்லாம் கூடி என்னதான் செய்யிறாங்க. அதிலைபோய்ப் பாத்தியளெண்டாத்தான் தெரியும். வாழ்க்கையிலை காலத்துக்குக் கலியாணம் செய்யேலாத பொம்பிளையஞம், அந்தஸ்து அந்தஸ்து எண்டு அலைஞ்சு கொண்டிருக்கிற பொம்பிளையஞம், கை சொசைற்றி எண்டு சொல்லிக்கொண்டு கண்ட கண்ட கலாச்சாரத்தையெல்லாம் தங்களுக்கு மேலை சுமந்து
153

Page 85
மணி :
பொன்:
மணி :
பொன் :
மணி :
பொன்
கொண்டு திரியிற பெண்களெல்லாம் தான் இண்டைக்கு மாதர் சங்கமெண்டும், மகளிர் முன்னேற்றச் சங்கம் எண்டும் கூடித்திரியினம்.
புறோக்கருக்கு இதெல்லாம் விளங்காதப்பா, நீ போய் அவரோட வாய் குடுத்திட்டு இருக்கிறியே. பொன்னம்பலம் கொழும்பு சிற்றியுக்குளை வாழுறது ஒரு 6)!6∂) ቇ வாழ்க்கை. இதுக்கு வாழப் பழகிக் கொண்டாத்தான் நாங்களும் இங்கை நிலைச்சிருக்க முடியும் அதுசரி, என்ன வேறே ஏதாவது சரிவந்திருக்குப் போல இருக்கு. அதுதான் இந்தப்பக்கம் வந்திருக்கிறீங்க போல இருக்கு
ஐயா, வெளிநாட்டு மாப்பிளையைத்தானே பாக்கச் சொன்னிங்க அதுதான் வந்திருக்கிறன் . . . .
ஆர் பெடியன், ஆற்ற ஆக்கள். பெடியன் இப்ப எந்த நாட்டிலை என்ன வேலையிலையிருக்கிறான்.
?urt, எல்லாம் நான் நல்லா விசாரிச்சு உங்களுக்குச் சரிப்பட்டுவருமெண்டுதான் வந்திருக்கிறன். அந்த நாளையில விதானையாராயிருந்த குமாரவேலை தெரியுந்தானே. அவற்றை பேரப் பொடியன் தான்.
ஒ. அவங்க பெரியகுடும்பம் அந்த நாளையிலை எத்தினை காணிச் சொந்தக் காரா ஊரிலையிருந்தவங்கள். அதுசரி, பெடியன்ர அப்பா அம்மா எங்கை இப்ப
அம்மாவும் அப்பாவும் மூத்தமகளோட கண்டியிலை
154

அழ
பொன் :
அழ
மணி :
பொன் :
இருக்கினம். இப்ப இரண்டாவது மகன் ஜேர்மனியிலை இருந்து வந்திருக்கிறான். அண்டைக்குப் பெடியன்ர தகப்பன் என்னைக் கண்டாப்போலை இந்த விசயத்தை கதைச்சார். என்னட்டத்தான் உன்ர மகளின்ர குறிப்பு இருக்கே அப்ப நான் பெடியன்ர குறிப்பையும் வாங்கிப் பாத்தன். நல்ல பொருத்தம் ஐயா, அதுதான் அது பற்றிக் கதைக்கலாமெண்டு வந்தன்.
பொன்னம்பல அண்ணை பெடியன் ஜேர்மனியிலை என்ன வேலையாம்.
வெளிநாட்டிலை எண்டா என்ன வேலை ஆருக்குத் தெரியும். அதைப்பற்றி கேட்டாப்போலை உண்மையையே சொல்லுவாங்கள். நான் அதைப்பற்றி அவ்வளவாக் கேட்கேல்லை . . . .
: நீங்க என்னணிணை, தொழிலைப்பற்றிக் கேட்காம
வந்திருக்கிறியள்
அழகம்மா, நீ கொஞ்சம் பேசாம இரு. இப்ப என்னத்துக்கு தொழிலைப்பற்றி வெளிநாட்டு மாப்பிளை எண்டாலே அது ஒரு கை சொசைற்றிக்குரிய சிறப்பியல்பு தானே. கலியாணக் காட் அடிக்கேக்கை, மாப்பிளை ஜேர்மனி எண்டடிச்சாலே அந்தக்காட்டுக்கு ஒரு மதிப்புத் தெரியுமே
ஐயா, நீங்க உண்மையிலை இந்த சமுதாயத்தை நல்லாப்
புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.
155

Page 86
மணி :
பொன் :
மணி :
பொன் :
மணி :
பொன்:
மணி :
பொன்னம்பலம். புரிஞ்சாமட்டும் போதாது. அதைப்போல நாங்களும் நடந்து கொள்ள வேணும்.
ஐயா, கலியாணம் முடிஞ்சபிறகு மாப்பிளை மனிசியை ஜேர்மனிக்கு கூட்டிப்போக வேணுமெண்டுறார். அதுக்கு நீங்க சம்மதமோ. . . . முதலிலையே இதைக் கதைச்சு ஒரு முடிவுக்கு வந்திட வேணும். பிறகு எல்லாம் முடிஞ்ச பிறகு பிரச்சினை வரக்கூடாது.
பொன்னம்பலம், கலியாணமெண்டு முடிச்சாப்பிறகு அவர் தன்ர பெண்சாதியைக்கூட்டிக் கொண்டு போறதை நாங்கள் தடுக்கேலாது தானே.
அதுக்கு இல்லை ஐயா, உங்கட மகள் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருக்கிறா, பென்சன் வாற உத்தி யோகமும். இதை விட்டிட்டுப் போக அவ சம்மதிப்பாவோ எண்டுதான் கேட்டனான்.
பொன்னம்பலம், மாப்பிள்ளை ஜேர்மனியிலை உழைக்கிற காசு, இஞ்சை உழைக்கேலுமே, எவ்வளவு காசு உழைப் பாராம் மாதம்.
ஏதோ எங்கட காசின்படி மாதம் எண்பத்தையாயிரம் வருமாம்.
மாப்பிள்ளைக்கு அங்கை கிடைக்கிற காசுக்கு மகள் இங்கை எடுக்கிற காசு துரசுக்குச்சமனி. வேலையை விடுற தாலை பாதிப்பொண்டும் ஏற்படாதுதானே.
156

பொன் :
மணி :
பொன் :
ᎥᏝ6ᏈᏡ :
அழ
பொன் C
மணி
பொன் :
மணி :
ஜயா என்னவோ பெடியன் உங்கட மகளைப்பார்க்க வேணுமெண்டு சொன்னான் நானும் நாளைக்கு ஸ்கூலிலை கூட்டிக்கொண்டு போய்க் காட்டுவம் எண்டிருக்கிறன்.
ஏன் பொம்பிளை பார்க்கிறதை சம்பிரதாய பூர்வமாக வைச்சா என்ன?
அதுக்கு பெடியன் ஒத்துக்கொள்ளேல்லை. எல்லாத்துக்கு முதல் தான் பொம்பிளையைப் பார்க்கோணுமாம்.
சரி பொன்னம்பலம், எதையும் கச்சிதமாமுடிச்சிடுங்கோ
அண்ணை இனியும் மகளை வைச்சிருக்கேலாது தானே. எப்பிடியும் கெதியா கலியாணத்தை முடிச்சிட்டாத்தான் எங்களுக்கும் நிம்மதி.
அது சரி ஒவசியர் ஜயா, சீதன பாதனமெண்டு கேட்டா என்னத்தை நான் சொல்லுறது
புறோக்கள் உனக்குத் தெரியும் தானே. நான் இப்ப இருக்கிற நிலை. கொழும்பிலை இப்படியொரு வீட்டை முப்பது இலட்சம் கொடுத்தாலும் வாங்கேலுமே. இதைத்தவிர காசு ச்சீதனமாக ஒரு இரண்டு லட்சம். நகை நட்டாக 50 பவுணுக்கு இருக்கு . . .
ஜயா, பெடியனும் யோககாரன் தான்.
இதுகளையெல்லாம் அந்தப்பெடியன் அனுபவிப்பானோ தெரியாது பொன்னம்பலம் ஏனெண்டா வெளிநாடு தானே இனி அவங்கட வாழ்க்கை
157

Page 87
பொன்:
!9lیہ
இடம்
சரி ஜயா, நான் பெடியனோடை கதைச்சு முடிச்சு, பிள்ளையையும் காட்டி சம்மதத்தை எடுத்துக்கொண்டு வாறன்.
அண்ணை கெதியா விசயத்தை முடிச்சிடுங்கோ .
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 4
மணியம் ஒவசியர் வீடு . . . .
பாத்திரங்கள் : மணியம், புறோக்கர் பொன்னம்பலம், தவம்,
அழ
மணி :
pإ9گى
மணி :
அழ
அழகம்மா . . .
: இஞ்சாருங்கோபுறோக்கள் எத்தினை மணிக்குப் பெடி
யனைக்கூட்டிற்று வாறனென்டவர்.
5 மணியளவிலைதான் வருவன் எண்டவன். அது சரி பிள்ளை எங்கை போயிற்றாள் . . .
": இண்டைக்கு ஏதோ மாதர் சங்கத்திலைகூட்டமாம்.
அதுக்குப் போயிற்றாள்.
என்னப்பா நீ பெடியன் வாற விசயத்தைச் சொல்லி அவளை மறிச்சிருக்கலாந்தானே
: நான் சொன்னனான் விசயத்தை. அவள் கெதியிலை
வந்திடுவன் எண்டு சொல்லிற்றுத்தான் போனவள்.
158

மணி :
அழ
மணி :
அழ
மணி :
நீ சமையலெல்லாத்தையும் வடிவாக் கவனி, பெடியனுக்குச் சாப்பாடும் தானே கொடுத்தனுப்பவேணும் . . .
: நான் உங்களிட்டை ஒண்டு கேக்கோணுமெண்டிருந்தனான்
. . இவ்வளவு சீதனத்தையும் குடுத்து உள் நாட்டிலையே மாப்பிளையைப் பாக்கேலாதே அப்பா . . .
உள் நாட்டிலை எடுக்கிற மாப்பிளைக்கு உழைக்கிற ஊதியம் காணாம இருக்கும். இங்கை கொழும்பிலை வாழுறதுக்கு . . . . பிறகு என்ன செய்வான் தெரியுமோ, பிள்ளையின்ர நகையிலை கொஞ்சங் கொஞ்சமா எடுப்பான். கடைசியாக வீட்டையும் விக்கவேண்டிவரும். இந்த மாப்பிளை அப்பிடியில்லை. ஒருகல்லிலை இரண்டு
மாங்காயை அடிக்கப்போறன் நான் . . .
: என்ன சொல்லிறீங்க . . . எனக்கு ஒண்டும் விளங்கேல்லை.
அழகம்மா, நாங்கள் இந்த வீட்டை எழுதிக்குடுத்தாப் போலை அவங்கள் இங்கை இருக்கப் போறதில்லை. அவன் பிள்ளையையும் கூட்டிற்று ஜேர்மனிக்குப்போயிடுவான் இந்த வீட்டிலை நாங்கள் தான் தொடர்ந்தும் இருக்கப்போறம். அடுத்தது வெளிநாட்டு மாப்பிளை மருமகன் எண்டு சொன்னாலே அது ஒரு கெளரவம். இதைவிட அவனுக்கு நாங்கள் குடுக்கிற காசு அங்கை உழைக்கிற காசோடை ஒப்பிடேக்கை சர்வசாதாரணமாகத்தான் இருக்கும். இப்பிடிப் பலதையும் பத்தையும் யோசிக்கேக்கை இஞ்சை இருக்கிற எஞ்சினியரையோ, டொக்ட்ரையோ விட வெளிநாட்டு மாப்பிளை எவ்வளவு நல்லது தெரியுமே
159

Page 88
அழ
மணி :
tᏝ6ᏡᎼfl :
மணி :
பொன் :
: நீங்க சொல்லுறதும் சரிதான். கடைசிக்காலத்திலை
நாங்களும் அங்கை ஜேர்மனிப்பக்கமே போய் மகளோடை
இருந்திடலாம்.
பார்த்தியே, காசு கொடுத்து ரிக்கற்றெடுத்து வெளிநாடு போய் பார்க்கேலுமோ எங்களாலை, பெடியன் பிறகு எங்களை ஸ்பொன்சர் பண்ணிக்கிண்ணி எடுப்பான். இப்பிடி அதிஸ்டம் எத்தினை பக்கத்தாலை வருகுது, பாத்தியே . . சரி, சரி கதைச்சுசக்கொண்டிருக்கிறதை
விட்டிட்டு சமையல் வேலையளைக்கவனி.
(அமைதியான ஒலி எழுந்து மறைதல்)
டக் . . . டக் டக். டக். . .
(கதவு தட்டப்படும் ஒலி)
அழகம்மா, புறோக்கள் வந்திட்டார் போல இருக்கு . போய்க் கதைவைத்திற
(கதவு திறக்கும் ஒலி)
ஆ வாங்கோ, வாங்கோ, பொன்னம்பலம் வாங்கோ ஆ. தம்பி வாங்கோ
(வந்து அமரும் ஒலி எழுந்து மறைதல்)
ஒவசியர் ஐயா, விசயத்தைச் சுத்திவளைக்காம நேரடியாகவே பேசுவம் உங்கட மகளை இவர் பார்த்தாச்சு . . . பிள்ளையையும் பிடிச்சிட்டுது . . . நீங்ககுடுக்கிற சீதனம் பற்றியெல்லாம் சொல்லிற்றன். இவர் உங்களோடை சில
16O

மணி :
தவம்
மணி :
பொன் :
tᏝ6Ꮘ0fl :
தவம்
விசயங்கள் நேர பேச வேணுமெண்டார் அதுதான் கூட்டி வந்தனான்.
ஏன் பெரியாக்கள், தம்பியின்ர அப்பா, அம்மா ஒருதரும் வரேல்லையோ
: இங்கை பாருங்க. கலியாணம் செய்யப் போறது நான்
தானே. அப்ப நானே நேரடியாச்சில விசயங்களை கதைக்கி றது நல்லதெண்டுதான் வந்தனான். மற்றது. அப்பா அம்மா வயது போனவங்க அவங்க என்னையே நேரபோய் கதைக்கச் சொல்லிற்றாங்க.
நல்லது தம்பி, நீங்க ஒரு முன்மாதிரியான ஆளாயி
ருக்கிறீங்க . . . எதையும் வெளிப்படையாக் கதைக்கிற
மனசு உங்களுக்கு . . .
ஐயா, முதலிலை நீங்கள் இவரிட்டை ஏதாவது கேட்டு சந்தேகம் தெளிஞ்சு கொள்ள வேணுமெண்டா கேட்டிடுங்க
அப்பிடியெண்டுமில்லை பொன்னம்பலம். தம்பி, நீங்க ஜேர்மனியிலை என்ன வேலை பாக்கிறீங்க . . .
! ஐயா, நான் இப்ப என்ன வேலை எண்டு சொன்னாப்போலை
நீங்க அங்கை வந்து பார்க்கப் போறதில்லை. அதுக்காக நான் பொய் சொல்லப்போறதுமில்லை . . . உண்மையிலை நான் அங்கை எந்தவித உழைப்புமில்லாமத்தானிருக்கிறன். வேலை எடுக்கிறது பெரிய கஷ்டம். உண்மையைச் சொன்னா நான் ஒரு ஜேர்மன் அகதி அவங்கள் போடுற
161

Page 89
மணி :
தவம்
பொன் :
மணி :
பொன் :
மணி :
தவம் :
அகதிக்காசிலை வாழ்ந்து கொண்டிருக்கிற புலம் பெயர்ந்த அகதிகள் இதைத் தவிரவேறை எதையும் சொல்லேலாது
அகதி எண்டாலும் காசு கிடைக்குது தானே?
அதுக்கு மட்டும் குறைவில்லை. அவங்கள் ஏதோ மனிதாபிமானமுள்ளவங்க மனமிரங்கி எங்களுக்கு பணம் தந்துகொண்டிருக்கிறாங்கள். ஆனா நாங்கள் அகதியாயி ருக்காத நிலையிலும் அந்த ஒசிப்பணத்தை சம்பாதிக்க வேணுமெண்டுறதுக்காக வீட்டை வித்து காணியை வித்து அங்கை களவா ஓடிக்கொண்டிருக்கிறம்.
ஐயா, தம்பி அகதி எண்டு சொல்லுது. உங்களுக்கு உங்கட கை சொசைற்றிக்கு இது அவ்வளவு நல்லா இல்லைத் தானே.
பொன்னம்பலம், வெளிநாட்டிலை அகதியா இருந்தா பரவாயில்லை. உள்நாட்டிலை இப்படியொரு நிலை இருந்தாத்தான் மரியாதை இல்லை
என்னையா, சொல்லிறீங்க. வெளிநாடெண்டாலும் உள்நாடெண்டாலும் அகதி அகதிதானே.
இந்த நேரத்திலை உதுகளை கதைச்சு என்ன பிரயோசனம் பொன்னம்பலம். சரி, சரி தம்பி என்னவோ கேக்க வேணுமெண்டு சொன்னது . . . என்னது . . .
ஐயா, இப்ப நான் எதுவும் கேக்கவேணு மெண்டு எனக்குப்படேல்லை. உங்கட மகளை நான் கலியாணம்
162

மணி :
தவம்
செய்யச் சம்மதிக்கிறன் . . . . ஆனா ஒரு விசயம்
என்னதம்பி சொல்லுங்க . . . .
எங்கள் திருமணத்துக்கு நீங்க வரவேற்பு மடல்
அடிப்பீங்கதானே, அதிலை மணமகன் எண்டு என்ர பெயரைப் போடுவீங்க. மணமகள் எண்டு உங்கட மகளின்ர பெயரைப் போட்டு ஆசிரியை எண்டெல்லாம் போடுவீங்க. அதே வேளை எண்ட பெயருக்குக் கீழை 'ஜேர்மன் நாட்டில் அகதி’ எண் டு நீங்கள் போடவேணும். அப்படிப்போட உங்களுக்குச் சம்மதம் எண்டால் நான் உங்கட மகளை கலியாணம் செய்யச் சம்மதிக்கிறன். இதுக்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் கலியாணத்துக்கு வேண்டிய சகல ஆயத்தங்களையும் செய்யுங்க. நான் போயிற்று வாறன் . . . .
(காட்சி முடிவுறும் ஒலி)
(16 - 12 - 1994 அன்று ஒலிபரப்பப்பட்டது)
163

Page 90
8. பேசும் ஊமைகள்
காட்சி - 1
பாத்திரங்கள் : ராமசாமி, தங்கம்
இடம்
ராமசாமி வீடு
பின்னணி : ராமசாமி படுக்கையிலிருக்கிறார்
Jl)
Usils)
Jst D
(சைக்கிள் மணி ஒலிக்கிறது)
: தங்கம்!தங்கம்! இங்கை வா! கடிதம் வந்திருக்குப்போல
இருக்கு.போய் வாங்கிற்று வா. (சிறிது நேர அமைதி)
: தங்கம்! யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கு? எங்கை
இருந்து வந்திருக்கு.
! வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கு. அட்றஸ்
போடேல்லை.
சரி சரி பிரிச்சுப்படி
(தங்கம் வாசிக்கிறாள்)
அன்புள்ள அம்மா, அப்பா, அக்கா, பிள்ளைகள் எல்லோருக்கும் கடவுள் அருளால் நலம் கூறி உங்கள் நலத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
164

மேலும் அம்மா அறிவது: முன்பு ஒரு கடிதம் போட்டிருந்தேன். அதற்கு நீங்கள் எதுவித பதிலும் எழுதவில்லை. அப்பா சுகவீனமாக இருப்பதை அறிந்து பணம் 20,000 ரூபா அனுப்பியிருந்தேன். அதைக்கூட நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டீர்கள்.
உங்களைப் பிரிந்து ஏறத்தாழ 13 வருடங்கள் போய்விட்டன. நானும் எனது மனைவியும்இங்கு நல்லாக இருக்கின்றோம்.ஆனால் குழந்தைப்பாக்கியம் தான் கிடைக்கவில்லை.சவுதியில் சகல வசதிகள் இருந்தும் நீங்கள் இல்லாதது வேதனையாக இருக்கு. இன்னும் அப்பா பெருமைகள் பேசுவதும், கெளரவங்கள் பார்ப்பதுமாகத்தான் இருக்கிறார். கால மாற்றத்தில் அவர் மாறுவாள் என எதிர்பார்த்தேன். எதுவும் நடைபெறவில்லை.
அம்மா நாங்கள் எதிர்வரும் 10ந் தேதி இலங்கைக்கு திரும்புகிறோம். 13 வருட சவுதி வாழ்க்கையின் பின் எமது சொந்த மண்ணுக்கு வருவதை நினைக்கும் போது மிகவும் சந்தோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் உங்களைப் பார்க்க வேண்டும். உங்கள் கால்களைக் கட்டிப்பிடித்து கதற வேண்டும் போல உணர்வு என்னை அரித்துக்கொண்டிருக்கிறது.வீட்டுக்கு வர இருக்கிறேன். நீங்கள் அடித்தாலும் சரி உதைத்தாலும் சரி நான் உங்களைப் பார்க்க வருவேன்.
இங்ங்ணம் உங்கள் நினைவில் வாடும் மகன் ஆர். குமார்.
165

Page 91
JTA
தங்
JITL()
தங்
தங்கம் இந்தப்பக்கம் வரக்கூடாதெண்டு உடனடியாக கடிதம் எழுதிப்போடு. இங்க வந்தாணெண்டால் கொலைதான் விழும்.
நீங்க என்னப்பா சொல்லுநீங்கள். 13 வருஷத்துக்குப்பிறகு வரப்போறன் எண்டு எழுதியிருக்கிறான். இப்பவும் உங்கட பெருமையையும் வறட்டு கெளரவத் தையும் காட்டிக்கொண்டுதான் இருக்கிறியள்.
- (கோபத்துடன்) என்னடி சொல் ாய் வரட்டு
5 l Syl D
கெளரவமோ, இந்த ஊரிலேயே சாதி மான்கள் எங்கட குடும்பம். ராமசாமி குடும்பம் எண்டால் வீட்டு வாசல் படியிலேயேஏற சனங்கள் பயப்படும். இந்த ஊரில எல்லாம் கலப்புகள். இவனாலைதான் என்ர கெளரவமும் குறைஞ்சிட்டுது. எங்கட தோட்டத்திலை வேலை செய்யிற கந்தசாமியின்ர பெட்டையை இவனால நாங்கள் சபையில எடுக்க வேண்டி வந்திட்டுது. அவள எப்ப இவன் கல்யாணம் செய்தானோ அண்டையோடை அவனைக் கைகழுவிப்போட்டன் இண்டைக்கும் இஞ்ச பார்க்கிறாய் தானே. என்னோட இந்த ஊரில இருக்கிறவங்கள் கதைக்கேக்க எவ்வளவு மரியாதையாக் கதைக்கிறாங்கள் எண்டு.
ஓம், அதுதான் உங்கட சொந்தக் காரர் இந்த வளவையும் வீட்டையும் ஈட்டில இருந்து மீட்கிறதுக்கு உதவி செய்ய இருக்கிறாங்கள். இன்னும் ஒரு மாதத்துக்குள்ள வட்டியும் முதலும் கட்டாட்டி நாங்கள் ரோட்டிலதான் இருக்க வேணும்.
166

JETLA
தங்
JfLs
தங்
JITÒ
; அதுக்காக மகனிட்ட ன்கயேந்தச் சொல்லுறியே. என்ர
விருப்பம் இல்லாமல் எங்கட குடும்ப கெளரவத்துக்குக் குறைவான ஒருத்திய கல்யாணம் செய்த அவனை திரும்பவும் எங்க குடும்பத்தோட சேர்க்கச் சொல்லிறியே.
; கெளரவம், கெளரவம் அந்தஸ்து எண்டெல்லாம்
சொல்லிக்கொண்டிருக்கிறியள்நாங்கள் படுகிற கஸ்டத்தில யாராவது உங்கட கெளரவத்துக்குரிய ஆட்கள் உதவி செய்திருக்கினமா. கடைசியில வீடு கூட இல்லாத நிலைக்கு இண்டைக்கு தள்ளப்பட்டிருக்கிறத மறந்து போனியளோ,
: நீ என்னதான் சொன்னாலும் அவனை இனி எங்கட
குடும்பத்தோட சேர்க்க ஏலாது.
; அந்தஸ்து, கெளரவம் சாதி சம்பிரதாயம் எண்டெல்லாம்
சொல்லிக்கொண்டிருக்கிறியள் உங்கட சொந்தக்காரன் முத்துலிங்கத்தின்ர மகள் யாரைக் கலியாணம் செய்திருக்கிறாள். இவையள் எல்லாம் அந்தஸ்திலை குறைஞ்சு போயிற்றினமா.இவயள எல்லாம் உங்கட கெளரவ மனிதர்கள் ஒதுக்கிவைச்சிட்டினமா. அவங்கட குடும்பங்கள் தான் இண்டைக்கு இந்த ஊரிலை பேரும்
புகழோடையும் இருக்கு.
: ஒருத்தன் அல்லது இரண்டு பேர் கிணத்துக்குள்ள
விழுந்திட்டாங்கள் எண்டால் என்னையும் விழச்
கொல்லுறியா. எங்கட பரம்பரைக் கெளரவத்தை இழக்கச்
சொல்லுறியா. உனக்குத் தெரியாதடி இவன் கந்தசாமியின்ர
167

Page 92
தங்
JTLI)
தங் :
சித்தப்பா எங்கட வீட்டுக்குள்ள ஏறிற்றான் எண்டு என்ர அப்பா முத்தத்தில கட்டிவச்சு அடிச்சவர். அப்பிடி அவங்களை நாங்கள் வைச்சிருந்த நாங்கள். இவங் களிட்டப்போய் என்ர மகன் பெண் எடுத்திருக்கிறான்.
உந்த விசர்க் கதைய விடுங்கோ இப்ப உங்கட அப்பா
செய்த மாதிரி செய்யப் போனா மறியலுக்குத்தான் போக வேணும்.காலம் மாறிட்டுது நாங்களும் மாறித்தான் ஆக வேண்டும்.அவன் தன்னோட படிச்ச பிள்ளையைத்தானே விரும்பினவன். ஏன் கந்தசாமியின்ர மகள் படிப்பிலை குறைவே.
இவங்களுக்கெல்லாம் படிக்க வசதி வந்ததாலைதான் இந்த நிலை வந்தது. அவன் அவனை அந்தந்த இட்த்தில வைச்சிருக்கோணும். இவங்கள படிக்க பள்ளிக்கூடங் களுக்கு விட்டாப் படிச்சிட்டுப் போறதவிட்டுட்டு காதலும் கத்தரிக்காயும். காதலுக்கு ஒரு நியதி இருக்கு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசப்படக் கூடாதடி தங்கம். தங்கட சாதிக்கு மேல்ப்பட்ட சாதியில காதலிக்கக்கூடாதடி இத சமுதாயம் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளாது.
நீங்கள் படிக்காதவன் மாதிரிக் கதைக்கிறியள். என்னப்பா என்ர பெத்த வயிறு மனம் இவ்வளவு காலமும் துடித்துக்
கொண்டிருக்கிறது. உங்களுக்கு என்ன புரியப் போகுது.
ஒரே ஒரு மகன் அவனைப்பார்க்காம இந்தப் 13 வருசமும்
ஒரு தாய் எப்பிடி இருந்திருப்பாள் எண்டு யோசிச்சுப்
பாருங்கோ. உங்கட சாதி அந்தஸ்து கெளரவம் எண்ட
168

J[ILD
தங்
தங்
FIL
தங்
அகம்பாவங்களுக்கு நான் எவ்வளவு நாள் பொறுத்திருந் திட்டன். இன்னும் எங்கட சீவியம் எத்தனை நாளைக்கு அவனே வாறன் எண்டு கடிதம் எழுதியிருக்கிறான். நீங்கள் அவனிட்ட போகேல்ல தானே. அவன் வந்திட்டுப் போகட்டும். நீங்கள் பேசாம இருந்திடுங்கோ.
: தங்கம்சரி உனக்காக ஒத்துக் கொள்ளுறன் அவன் மட்டும்
வந்திட்டுப் போகட்டும். அவள் வரக்கூடாது.
என்னப்பா, இன்னும் தான் உங்கட ஆணவமும், செருக்கும் குறையேல்ல. வயது போயிற்று. படுக்கையில விழுந்திட்டம். இன்றைக்கோ நாளைக்கோ வாழ்க்கை முடியப்போகுது எண்டிருக்கு அவன் தன்ர பெண்சாதி யோட வரேக்கை அவளை எப்பிடி வரவேண்டாம் எண்டு சொல்லுறது. அவன் மட்டும் வரலாம் எண்டு எப்பிடிச் சொல்லிறது. நடந்தது நடந்து போய்ச்சுது.
- சரி, தங்கம் நீ சொல்லிறதுக்கு நான் ஒத்துக்கொள்ளுறன்
ஆனால் அவளோட நான் கதைக்க மாட்டன்.
; சரி அப்பா இவ்வளவே போதும். நான் எல்லாத்தையும்
சமாளிக்கிறன். நீங்கள் மூச்சு விழடாமல் இருந்தால் போதும்.
அங்க பார் தங்கம், ஆர் அது வாறது.
: ஓம் அப்பா இவள் மூத்தமகள் லஷ்மி வாறாள்.
பிள்ளையஞம் வருகுதுகள் கொழும்பில இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வாறாள். புருஷன் வரேல்லை.
169

Page 93
JIT ()
(a)6
தங்
லஷ்
தங்
லஷ்
தங்
மகள், வா வா, இதென்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திட்டா
இல்லை அப்பா திடீரெண்டு இவர் செளதிக்குப் போயிற்றார். நாங்களும் கொழும்பிலை இருக்கிறது பிரயோசனமில்லை தானே. அது தான் வந்திற்றம். இஞ்ச பிள்ளையஸ் பள்ளிக்கூடத்தில சேத்திற்று இங்கே இருப்பம் எண்டு தான் வந்தனான்.
லஷ்மி இவன் குமாரும் வரப்போறன் எண்டு கடிதம் போட்டிருக்கிறான். வாற கிழமை வாறானாம்.
என்ன எங்களை விட்டிட்டு ஒடிப்போனவன் திரும்பவும் வரப்போறானே. அவன எங்கட குடும்பத்தில சேர்க்கப் போறியளே.
அவன் எங்களை விட்டிட்டு ஓடிப் போகேல்ல லஷ்மி. நாங்கள் தான் அவன அப்பிடி ஓடிப்போறதுக் காரணமாக இருந்த நாங்கள். அவன் அந்தப் பெட்டைய காதலிக்கிறன் கலியாணம் செய்யப் போறன் எண்டு கேட்கேக்க நாங்கள் அதை ஏற்றிருந்தால் அவன் ஓடிப்போயிருக்கமாட்டான்.
அப்பா நீங்கள் என்ன மெளனமா இருக்கிறியள். அவளையும் அவன் இங்க கூட்டிக் கொண்டு வரப் போறான். எங்கட சாதி சனங்கள் என்ன சொல்லுவினம்.
; எங்கட வாதி சனங்கள் நல்லா இருந்தா வந்து சேருவினம்,
வாழ்த்துவினம்கெட்டுப் போன தூரப் போயிடுவினம். இது தான் லஷ்மி எங்கட சமுதாய அமைப்பு. இண்டைக்கு
17O

66
தங்
JTL
லஷ்
JITLE)
இந்த வீடும் வளவும் ஈட்டில மாண்டுபோகப் போகுது. உனக்கு எத்தின தரம் கடிதம் எழுதியிருக்கிறன். உங்கட சொந்தக் காரருக்கும் இது தெரியும். நீயாவது அல்லது யாராவது ஒருத்தர் ஜயோ எங்கட ராமசாமி வீடில்லாம இருக்கப் போறானே எண்டு மனம் இரங்கியிருக்கிறியளா. நீயும் இப்ப இங்க இருக்கவெண்டு வந்திருக்கிறா. வாற மாதத்தின் பின்னர் வட்டியும் முதலும் கட்டாட்டி நாங்கள்
எல்லாரும் வெளியில நிக்க வேண்டியதுதான்.
; எங்கட பேரில இந்த வீட்டையும் வளவையும் எழுதி
யிருந்தா அவரே மீண்டிருப்பார். நீங்கள் சீவிய உருத்துக் காட்டி எழுதினது தான் அவருக்குப் பிடிக்கேல்ல.
: என்னடி கதைக்கிறா, சீவிய உருத்து எண்டாலும் அது
உங்களுக்குத்தான் எழுதியிருக்கிறம் எண்டத மறந்து போனியோ.
: தங்கம், இப்ப தான் அவள் கொழும்பில இருந்து
வந்திருக்கிறாள். அவளோட போய் இதெல்லாம் கதைத்துக் கொண்டிருக்கிறாய்.
என்னவோ எனக்குத்தெரியாது. எங்கட சாதி அந்தஸ்து கெளரவம் இதுகள விட்டுக் கொடுக்கேலாது.
; அதுகளை எல்லாம் பிறது கதைக்கலாம். இப்ப
பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு உள்ளுக்குப் போ. தங்கம் அதுகளைக் கவனி.
(காட்சி மாறும் ஒலி)
171

Page 94
இடம்
காட்சி - 2
: சவுதியரேபியாவில் ஒரு வீடு
பாத்திரம் : குமார், கமலா
பின்னணி : இலங்கைக்குப் புறப்படுவதற்கு ஆயத்தம் செய்து
குமார் :
sys):
குமார் :
3 sys) :
குமார் :
Ly6)
கொண்டிருக்கிறார்கள்.
கமலா, எப்பிடியோ, 13 வருடங்கள் இந்த சவுதியில காலம் தள்ளி விட்டம் எங்கட நாட்டு மண்ணைப் பார்க்கப் போகிறம் என நினைக்கும் போது புதிய உற்சாகமும் தெம்பும் எழுகிறது, உனக்கு எப்படி?
இந்த 13 வருடங்களும் இங்கு சொர்க்க புரியாகத்தான் எனக்கிருந்தது. சொந்த நாட்டு மண்ணும் காற்றும், நீரும் யாருக்குத்தான் சுவைக்காது. ஆனால்,
என்ன ஆனால்,
உங்கட அப்பாவையும் அக்காவையும் நினைக்கும் போதுதான் அங்க போய் நீங்கள் கெளரவக்குறைவு பட வேண்டுமா என்ற எண்ணம் எழுகிறது.
கமலா, இந்தப் 13 வருடங்களிலையும் அப்பான்ர மனம் மாறாமல் இருக்குமா. அவரும் சுகமில்லாமல் படுக்கையில இருக்கிறார் எண்டு கேள்வி.
நீங்கள் வருவதாக உங்கட வீட்டுக்குக் கடிதம் போட்டு
172

குமார் :
y6):
JITLA
கந்
i JT)
கந்
JITLI)
ஒரு மாதம் ஆகிறது. எந்தவிதமான பதிலும் வரவில்லை.
பதில் வந்ததோ வரேல்லையோ நான் அப்பாவையும் அம்மாவையும் போய்ப் பார்க்கிறதெண்டு முடிவெடுத் திருக்கிறன்.
எனக்கு பயமாயிருக்கு உங்கட அப்பாவை நினைச்சா, இப்பவும் காட்சி என்னால மறக்கேலாம இருக்கு ம்
பெருமூச்சுவிடுதல்
(பின்னணியில் பழைய காட்சி மீழ்கிறது)
: டே, கந்தசாமி, வெளியில வாடா,
என்னையா, என்ன நடந்தது.
என்ன நடக்கிறதோ உன்ர மகளுக்கு எந்தளவு துணி விருந்தா என்ர குடும்பத்தில பெடியனைப் பிடிப்பாள்.
எனக்கொண்டும் தெரியாதையா. பொறுங்கோ y6 விசாரிச்சுப் பார்க்கிறன்.
என்னடா விசாரிக்கிறது . . . என்ர மகனோட இருக்கிற தொடர்பை இண்டையோடை நிறுத்திடவேணும். இல்லாட்டி உங்கட குடும்பத்தையே இல்லாமல் ஆக்கிப்போடுவன். உங்களுக்கெல்லாம் பாவம் பழி பார்க்கக்கூடாது. என்ர அந்தஸ்து, சாதி, மதிப்பு என்னண்டு உனக்குத் தெரியும்தானே. என்ர தகுதிக்கு நான் நினைச்சதை செய்து போடுவன். ሩ
173

Page 95
கந்
JITLA
s
கந்
ity
கந்
: இல்லை . . ஐயோ . . ஏதோ தெரியாமல் நடந்திட்டுது
போல இருக்கு மகள் பள்ளிக்கூடத்தாலை வரட்டும் நான் கேட்கிறன்
கேட்கிறதென்ன . . . அப்பிடி ஏதாவதொண்டு இருந்தாலும்
அதை உடனை நிறுத்திப்போடச் சொல்லு நான் வாறன்.
(காட்சி மாறும் ஒலி)
: என்னப்பா ஒரு மாதிரி இருக்கிறீங்கள்?
; மகள் எனக்கு ஒரு விசயம் தெரியவேணும். ராமசாமி
ஐயாவின்ர மகன் குமாரோடை உனக்கு ஏதோ தொடர்பு இருக்கெண்டு ராமசாமி இங்க வந்து கத்திப்போட்டுப் போயிருக்கிறார். உண்மையைச் சொல்லம்மா உனக்கும் அவனுக்கும் ஏதாவது
அப்பா அந்தக் குமார்தான் என்னை விரும்புவதாகவும். என்னையே கல்யாணம் செய்வதாகவும் கூறி தன்னை
விரும்பும் படி கேட்டவர். நான் பயத்திலை
ஒமெண்டிட்டன்.
: என்ன காரியம் செய்தாய் மகளே
எங்கட நிலையை யோசித்துப் பார்த்தியா. நாங்கள்
ஏழைகள். அத்தோட சமூக அந்தஸ்திலும் குறைந்த
வர்களாக இந்த சமுதாயம் எங்களைப் பிரிச்சுவைச்சிருக்கு.
இது இந்த மண்ணுக்குரிய நீண்ட காலச் சாபக்கேடாக
இருந்துவருகுது. மேலும் ராமசாமி ஐயாட
தோட்டத்திலை வேலை செய்யிறவன் நான். அவர் தாற
174

éhlJ)
கந்
முகா
Š51(ሏ
சம்பளத்திலைதான் நாங்கள் வாழுறதும், நீ படிக்கிறதும். இந்த வேளையிலே இப்பிடிஒரு காரியத்தைச் செய்திட்டு
வந்து நிக்கிறியே.
: நான் இதை விரும்பேல்லை அப்பா. ஆனால் . . அவர்தான்
எனக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து என் மனதை மாற்றினவர்.
; மகள் என்னதான் இருந்தாலும், இதுக்கு நீ
முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆகவேண்டும். இந்த சமுதாயத்திலை நாங்கள் கோழிகளாகவே இருந்திடுவோம். பருந்துகளாக மாற நினைக்க வேண்டாம்.
(காட்சி மீழ்கிறது)
என்ன பழைய காட்சிகளை மீட்கிறாய்போல இருக்கு. இந்த 13 வருடகால ஓட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திட்டுது கமலா. இனிமேல் இந்த போலி கெளரவங்களும், அந்தஸ்துகளும், சாதிகளும் நிலைத்திருக்கமுடியாது. இதுக்கு அப்பா மட்டும் விதிவிலக்கா என்ன.
! உங்கட அப்பா மாறியிருப்பார் எண்டு நினைக்கேலாது.
அவர் பழமையிலையும் குலப்பெருமையை காப்பதிலும் முன்நிற்பவர். உங்களை அன்று அவர் நடத்தின மாதிரியை நினைச்சுப் பாத்தீங்களெண்டால் அவர் மாறக்கூடியவரா என்பது புலப்படும்.
175

Page 96
குமா :
JITLI)
குமா
JITLAD
தங்
ஓம் . கமலா அன்று ஒருநாள் உங்கட வீட்டுக்கு வந்திட்டு எங்கட வீட்டுக்கு வந்து செய்த அமர்க்களத்தை நினைச்சால் ம். . . (பெருமூச்செறிதல்)
(காட்சி மீழ்கிறது)
டே குமார், உன்னைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கத்தான் அனுப்பி வைச்சனானேயொழிய கண்ட சாதிகளை சினேகிதம் பிடிக் கயில்லை. உவன் கந்தசாமியின்ரை மேளுக்கும் உனக்கும் என்னடா காதல் கீதல் எண்டு ஊரெல்லாம் கதையாய் இருக்குது. எங்கட சாதியென்ன அந்தஸ்து என்ன? உனக்கு எங்கட சாதிசனத்திலை ஒரு பெட்டை கிடைக்காமல் உந்த மாதிரிப் பெண் எடுக்கப்போறியே என்னடா நான் கேட்கிறன் நீ பேசாமல் இருக்கிறாய்?
அப்பா . . . நான் தான் அந்தப் பெண்ணை விரும்பினனான். அந்தப் பெண் என்னை விரும்பவில்லை. காதல் என்பது சாதி, அந்தஸ்து, கெளரவம் எண்டெல்லாம் பாத்து வாறதில்லை. நான் அவளைத்தான் கலியாணம் செய்யிறதெண்டு முடிவு எடுத்திட்டன்.
(கோபத்துடன்) என்னடா சொன்னாய்? (அடிக்கிறாா) உனக்கு அவ்வளவு திமிரோ. நாயே நீ நல்லாய் இருக்க மாட்டாய்.
விடுங்க அவனை. வயது வந்த பெடியனை ஏன் அடிக்கிறீங்க. -
176

Jitħ
தங்
குமா
ஒமடி, உவன் கண்ட இடத்தில் பெண் எடுப்பான். நீ
போய் மருமேஸ் முறை கொண்டாடு.
கடைசியா ஒண்டு மட்டும் உனக்குச் சொல்லிறன். இந்த ராமசாமி இந்த ஊரிலை எவ்வளவு மதிப்பு, மரியாதை, பெருமையோடை வாழ்ந்துகொண்டிருக்கிறன் என்பது உங்களுக்குத் தெரியும். இவனுக்குப் பெண் வேணு மெண்டா எங்கட சாதியிலேயே எத்தனைபேர் பெண் தரக் காத்திருக்கிறாங்கள். உந்தப் பெட்டையை இவன் மறந்திடோணும். இல்லாட்டி இங்கை பெரிய கொலைதான் விழும். இவன் உவளைக் கலியாணம் செய்தா இந்த ஊரிலை நான் தலை நிமிர்ந்து வாழேலாது. உந்த சாதியளெல்லாம் என்ர படியேறி வீட்டுக்குள்ள வருங்கள். அப்படியேதும் கலியாணம் கிலியாணம் எண்டு எங்கட சம்மதம் இல்லாமல் இவன் நடத்தினானெண்டால் இவன மட்டுமில்ல கந்தசாமி குடும்பத்தையே இந்த ஊரில இல்லாமல் ஆக்கிப்போடுவன்.
தங்கம் இவனுக்கு புத்திமதி சொல்லித் திருப்பு இல்லாட்டி என்ன நடக்குமெண்டு பார்.
(கோபத்துடன் ராமசாமி வெளியேறுதல்)
குமார், இதென்னடா செய்திட்டு வந்து நிற்கிறாய். அப்பான்ர குணம் தெரியும் தானே. உது எல்லாத்தையும் விட்டுடடா.
அம்மா! அந்தப் பெண்ணின்ர மனதில காதல், கல்யாணம்
177

Page 97
தங்
லஷ்
(ğ5 ifbft :
(S55 DIT :
எண்ட நினைப்ப ஏற்படுத்தியதே நான்தான் அம்மா. சத்தியமும் கொடுத்திட்டன். இனி ஒண்டுமே செய்யேலாது.
எங்கட குடும்பநிலை சமுகத்தில எங்களுக்கு இருக்கிற மதிப்பு இதெல்லாத்தையும் நினைச்சுப் பார்த்தா பேசுகிறாய்.
அம்மா? இதெல்லாம் போலி. காலம் மாறிக் கொண்டிருக்கிற வேளையிலை இந்த சாதி, அந்தஸ்து இதெல்லாம் இனி நிண்டுபிடிக்கேலாது. காதல் என்பது இவைகள் எல்லாவற்றையும் பார்த்து உண்டாவதில்லை. மனங்களுக்கு இந்த பிரிவுகள் வேறுபாடுகள் எல்லாம் தெரியாது.
: நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறன். டே குமார்
உனக்கு குறைந்த காதியில பெண் எடுக்க எப்படித்தான் மனம் வந்திது. எங்கட விருப்பத்துக்கு மாறாகப் போனியெண்டால், நீ எனக்கு தம்பியும் இல்லை நான் உனக்கு அக்காவும் இல்லை.
(காட்சி மாறும் ஒலி)
கமலா, அந்தக் காட்சியை நினைத்தால் இப்பவும் மனதுக்குள்ளை என்னவோ போலத்தான் இருக்கு.
ஏதோ கடவுள் கிருபையாலை நீங்களும் என்னை மறக்கேல்லை. விதியும் வலிமையாய் இருந்ததாலை தான் நான் உங்களை கணவனாக அடைய முடிந்தது.
நான் உன்னைப் பதிவுத் திருமணம் செய்திட்டு
178

hy
(Jht DMT :
y
(5tofi :
கொழும்புக்கு இரண்டு பேரும் வராமல் ஊரிலையே இருந்திருந்தால் அப்பாவிட சாதிவெறியும், அந்தஸ்து வெறியும் எங்கள் வாழ்க்கையையே சின்னாபின்ன மாக்கியிருக்கும்.
ஆனால் எண்ட அப்பாவையும் உங்கட அப்பா
படுத்தினபாடு உங்களுக்குத் தெரியுந்தானே. எங்கட வீட்டைக்கூட உங்கட அப்பா ஆட்களை வைத்து நெருப்பு வைத்ததை மறந்திட்டீங்களே? நாங்கள் அப்பாவையும் அம்மாவையும் கொழும்புக்குக் கூப்பிடாதிருந்தால் அவங்கட உயிரும் இந் நேரம் எங்களைக்காண அங்க இருந்திராது. கொழும்பிலை கூட கொஞ்சநாள் நாங்கள் பட்ட கஷ்டத்தை மறக்கேலாது, கமலா. இந்த சவுதி உத்தி யோகம் கடவுள் கிருபையால அந்த நேரம் கிடைத்தது உண்மையில ஒரு வரப்பிரசாதம்தான். எவருடைய உதவியுமில்லாமல் வாழமுனைந்த எங் களுக்கு கடவுள் துணையைத்தவிர வேறு எதுவும் அந்த நேரம் கிடைக்கேல்ல இல்லாவிட்டால் எங்கட நிலை எப்பிடியிருந்திருக்கும். எண்டு யோசிக்க இப்பவும் பயமாத் தான் இருக்கு.
என்ன வந்தாலும் சரி, கமலா அப்பாவையும் அம்மாவையும் நாங்கள் இரண்டு பேரும் போய்ப் பார்த்துத்தான் ஆகவேண்டும்.
(காட்சி மாறும் ஒலி)
179

Page 98
by
(Sg5 LfDIT :
sy
குமா :
6 (U)
காட்சி - 3
ம் : சவுதி விமான நிலையம் (விமான நிலைய ஒலி)
: இமிகிரேசன் எல்லாம் தாண்டியதாயிற்று, வெயிற்றிங்
லோன்ஜுக்கு போகுமுன் உங்கட அப்பாவுக்கு ஏதோ வாங்க வேணும் எண்டு சொன்னீங்கள். இங்க டியூட்டிபிறி சொப்பில வாங்கலாந்தானே.
ஓம் சொன்னாப்போல, சரிவா டியூட்டிபிறி சொப்புக்குப் போவம்.
(சிறிது நேர பின்னணி இசை)
: இதெல்லாம் அப்பாக்கு, அம்மாக்கு எண்டெல்லாம்
வாங்கிறியள். இதையெல்லாம் அவயள் வாங்குவினமோ தெரியாது.
கமலா வாங்கினா என்ன, வாங்காட்டி என்ன, என்ர கடமையை நான் செய்யிறன்.
- சரி வாங்கோ இப்ப வெயிற்றிங் லோஞ்ஜுக்குப் போவோம்.
(விமான நிலைய அறிவிப்புப் பின்னணி ஒலி) (விமானம் புறப்படும் ஒலி)
(விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கும்
ஒலி)
18O

('NIT
குமா :
இடம்
பாத்திரம்
y
(விமான நிலைய ஒலி)
ஆகா, எங்கள் நாட்டு விமான நிலையத்தில் அழகைப் பாத்தியா கமலா, வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு
சளைத்ததல்ல என்பது போல இருக்குக் கமலா, நாங்கள்
இலங்கையைவிட்டு வெளியேறிய நேரத்தில் இருந்த விமான நிலையத்திற்கும் இப்ப இருக்கிற விமான நிலையத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்.
இன்னும் எவ்வளவு மாற்றம். சிற்றிக்குள்ள போனால்தானே தெரியும்.
கமலா, நீ இப்பிடி இரு நான் வான் ஒண்டு ஒழுங்கு பண்ணிட்டு வாறன்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 4
ஹோட்டல் அறை,
குமார், கமலா
: இப்ப என்ன செய்யப் போறிங்கள். ரெயினில ஊருக்குப்
போறதா அல்லது பஸ்சில ஊருக்குப் போறதா. பஸ்லையும் போகேலாது. ரெயினிலையும் போகேலாது. கமலா இவ்வளவு சாமான்களையும் இதுகளிலை கொண்டு போகேலாது வான் ஒண்டு பிடிக்கிறதுதான் நல்லதெண்டு நினைக்கிறன்.
181

Page 99
குமா :
இடம்
பாத்திரம்
தங்
JTL)
தங்
அப்ப நீங்கள் அப்படிச் செய்யுங்கோ.
அது சரி கமலா, இந்த கொழும்பு சிற்றியைப் பார்க்க ஒரு காலத்தில சிங்கப்பூர் மாதிரி வரும் போல இருக்கு. இவ்வளவு குறுகிய காலத்தில இந்தளவுக்கு எங்கட நாடு விருத்தியடஞ்சிருக்குக் கமலா.
- சரி, சரி நீங்கள் போய் வான் ஒழுங்கு பன்னிற அலுவலக்
கவனியுங்கோ. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிறன்.
(காட்சி மாறும் ஒலி)
காட்சி - 5
: இராமசாமி வீடு
ராமசாமி. லஷ்மி, தங்கம்
இவன் குமார் நேற்று இலங்கைக்கு வாறனெண்டு கடிதம் போட்டிருந்தவன். வந்தானோ தெரியேல்லை.
வந்தானோ, வரேல்லையோ உனக்கேன் அவனைப் பற்றிய நினைப்புவருகுது. தறுதலை நாய் கண்டவளோட பெற்ற தகப்பனும் தாயும் சகோதரமும் வேண்டாம் எண்டு ஒடினவன்ர நினைப்பு உனக்கு வரலாமோ தங்கம்.
திரும்பவும் தொடங்கிற்றீங்கள். பழைபடி வேதாளம் முருங்க மரத்தில ஏறினமாதிரி உங்கட பழைய குணங்கள் திரும்பவும் வந்திட்டுது.
182

JITL)
தங்
JITLN
தங்
ഖഖ
என்ன, என்ன பழைய குணம் எண்டு சொல்லிறாய். இது எங்கட பரம்பரை குணம் எண்டு சொல்லுறது. கெளரவம் எண்டு சொல்லு.
அண்டைக்கு என்ன சொன்னனீங்க. நான் இனி வாயே திறக்கமாட்டன் எண்டெல்லா சொன்னனீங்க. அவன் வரப்போறான். இந்த 13 வருஷமும் என்ர பெத்த வயது பத்தி எரிஞ்சது உங்களுக்கு எங்க தெரியப் போகுது.
நான் தான் அவன இந்தத் தோளிலும் மார்பிலும்
சுமந்தனான். நீங்கள் உழச்சு மட்டும் தந்தியள். அவனின்ர சரி பிழை எல்லாம் நான்தான் பார்த்தனான். இவ்வளவு காலமும் உங்கட அந்தஸ்து கெளரவம், பெருமை இதுகளையெல்லாம் அனுசரித்துத்தான் நடந்து வந்தன். இப்ப இதுகள் எல்லாம் போலியானது. வாழ்க்கைக்கு ஒத்துவராதெண்டு அறியமுடியுது. உங்களுக்கு உங்கட மகன் தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு என்ர மகன் தேவை. இனி நான் உங்கட சொல்லைக் கேட்கேலாது.
(அழுகிறாள்).
அழாதை தங்கம் அழாதை. நான் மறந்து போயிற்றன். சத்தியமா இனி நான் ஒண்டும் கதைக்க மாட்டன்.
உங்களால அவனுக்கு நான் ஒரு பதில் கடிதம் கூட போடேல்ல. அதால அவன் இங்க வருவானோ தெரியாது.
அவன் வராட்டி போகட்டன். அதுக்காக நீ ஏதோ பெரிய சொத்தை இழந்த மாதிரி கதைக்கிறாய் அம்மா.
183

Page 100
தங்
தங்
குமா :
தங்
குமா :
தங்
குமா :
தங்
* லஷ்மி உன்ர வாயைப் பொத்திக் கொண்டிரு. வீடு
கொழுத்திற ராசாவிற்கு நெருப்பெடுக்கிற மந்திரி மாதிரி, உன்ர போக்கிருக்கு. நீங்கள் அவன வரவேற்காட்டிலும் பரவாயில்லை. வாயை பொத்திக்கொண்டிருந்தால் மட்டும் போதும். (வாகனம் ஒண்டு வந்து நிற்கும் ஓசை) (கதவு திறந்து மூடப்படுகிறது)
: ஆ இந்தா குமார் வந்திட்டான்.
9ithLAT,
மகனே குமார் . . இந்த 13 வருஷமும் நான் எவ்வளவு
தவித்துப் போனேன் தெரியுமா.
அழாதே அம்மா, அழாதை, நான்தான் வந்திட்டனே.
: வா பிள்ளை அங்கேன் நிற்கிறா உள்ளுக்கு வா.
எங்கம்மா அப்பா,
: வாஉள்ளுக்குத்தான் படுத்திருக்கிறார்.
(உள்ளே செல்லுதல்)
குமா :
அப்பா, என்னை மன்னிச்சிடுங்கப்பா. (அழுகிறான்) இதென்னம்மா அப்பாவின்ர கோலம்.
: ஓம் மகனே சலரோகம்தானே அவருக்கு. அதாலதான்
இப்படி ஆகிட்டுது.
184

ஒருகுர :
தங்
முத்
(35LAT :
முத்
முத்
தங்
முத்
ராமசாமி. ராமசாமி -
யாரது வாங்கோ வாங்கோ
முத்து அண்ணனா.
: நான் இங்க இருக்க வரேல்ல ராமசாமி. ஞாபகப்படுத்திற்றுப்
போகத்தான் வந்தனான் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு இதுக்கிடையில நீங்கள் வட்டியையும் முதலை யும் கட்டாட்டி காணியும் வீடும் திருப்பித் தரேலாது. நீங்களும் வீட்ட விட்டு உடனடியா எழும்ப வேணும்.
நீங்க என்ன சொல்லுறீங்கள் பெரியவர். என்னம்மா நடந்தது.
: யாரிது, கொழும்பிலை இருந்து வந்திருக்கிற உங்கட
சொந்தக்காரரோ.
இல்லை முத்துஅண்ணை, எண்ட மகன் குமார்.
வெளிநாட்டிலயிருந்து வந்திருக்கிறான்.
; ஓ, தம்பி நீங்களே!சின்னப்பிள்ளையாய் இருக்கேக்க
பார்த்துத்தான் ஞாபகம். என்ர மருமகனும் சவுதியிலதான். ராமு சொன்னவன் நீங்கள் அங்க பெரிய உத்தியோகத்தில இருக்கிறியள் எண்டு. இது ஆர் பிள்ளை. கொழும்புப்
பிள்ளையையே கலியாணம் செய்தனி.
: இது எங்கட கந்தசாமியின்ர மகள்.
: எந்த கந்தசாமி, ஆ, இப்ப விளங்குது.இந்தப்பிள்ளை
185

Page 101
SuDM
முத்
குமா :
முத்
(35 fift :
தங்
வந்துதான் உங்கட மகனுக்கு அதிஸ்டம் எண்டு எல்லாரும் கதைத்தவங்கள். இவன் ராமசாமிக்கு நான் அப்பவே சொன்னனான் உந்தக்கோபம் எல்லாத்தையும் விட்டிட்டு மகனையும் மருமகளையும் கூப்பிடடா என்று அவன் தான்
அது இருக்கட்டும் பெரியவர். நீங்கள் வீட்டாலையும் காணி பேராலையும் எவ்வளவு வரவேண்டுமெண்டு சொல்லுங்க. நான் அந்தக் காசெல்லாம் தாறன். காணி
உறுதியைத் திருப்பித்தந்திடுங்க.
அது தம்பி வட்டியும் முதலுமாய் முப்பத்தையாயிரம் ரூபா வாச்சு. இங்கை நோட்டையும் உறுதியையும் கொண்டுவந்திருக்கிறன்ஃ
சரி இருங்க. இப்பவே நான் காசைத் தந்து எல்லாப் பிரச்சினையளையும் முடிச்சுவிடுறன்.
: நல்லது தம்பி, நான் இப்பிடி அப்பாவோடை இருந்து
கதைச்சுக் கொண்டிருக்கிறன். நீங்கள் ஆகிறதைக் கவனியுங்கோ.
எங்கம்மா? அக்கா பிள்ளையஸ் எல்லாம்.
பிள்ளையள் பள்ளிக்கூடத்துக்குப போயிற்றுதள். அக்கா வளவுக்குள்ளை பின்னுக்குத்தான் நிண்டவள். லஷ்மி, லஷ்மி,
ஆ இந்தா வாறாள்.
186

குமா :
(by
குமா :
லஷ்
குமா :
குமா :
லஷ்
குமா :
y
தங்
அக்கா என்னை மன்னிச்சிடுங்கோ அக்கா. கமலா! எங்கை நீ அக்காவுக்கும் பிள்ளையஞக்கும் எண்டு கொண்டு வந்த சாமான்கள். எடுத்துக்குடு.
இந்தாங்க உங்கட அக்காவுக்கு வாங்கிய 5 பவுன் செயின்.இது பிள்ளையஞக்கு 2, 2 பவுனிலை செயின் கைச்சங்கிலி.
இந்தாக்கா, இதுகளை பிடியுங்கள்.
: நன்றி . . . நன்றி (தழுதழுத்த குரலில்) தம்பி.
கமலா, நீ அக்காவுக்கெண்டு நாலுசாறி வங்கினியே எங்க
அது.
இங்கை இருக்கு இந்தாங்க. அதோட இந்தாங்க பிள்ளையஞக்கு உடுப்புகள், விளையாட்டுச் சாமான்கள்.
வாங்குங்க அக்கா அக்காட்டைக்குடு கமலா.
ரொம்ப தாங்ஸ் கமலா
அம்மாவுக்கு வாங்கின காப்பு, சங்கிலி, சீலையள் எல்லாத்தையும் அம்மாட்டக்குடு கமலா.
: ஆ சரி, இந்தாங்க!
ரொம்ப நன்றி மருமகள். (தழுதழுத்த குரலில்) இவர் உன்னைக் கண்டபடி பேசியிருப்பார். அதை மனசிலை வைச்சிருக்காதையம்மா.
187

Page 102
(Shi DIT :
by
(SLDM :
முத்
தங்
JTLO
தங்
y
குமா :
அப்பாவுக்கு வாங்கின மடக்கு தள்ளுவண்டியையும், அவருக்கு வாங்கின உடுப்புக்கள், பைப் - அதுதான் அந்த சுங்கான் எல்லாத்தையும் எடு கமலா.
: இந்தாங்க.
இந்தாங்க இந்த தள்ளுவண்டியிலை ஏறி இருங்க. நடக் கேலாட்டிலும் இதிலை இருந்து நீங்கள் வீட்டுக்குள்ளை விரும்பின இடத்துக்குப் போகலாம். வாங்கப்பா.
: என்ன ராமசாமி பார்த்துக் கொண்டிருக்கிறாய். வாங்க
நாங்க ஆளைப் பிடித்துத் தூக்கி இதிலை இருத்துவம். (தூக்கி இருத்தும் ஒலி)
; எப்பிடி இருக்கப்பா இந்த வண்டியிலை உடம்புக்கு
சுகமா இருக்கா?
: நல்லாயிருக்கு தங்கம். எங்கை என்ட மருமகளைக்
காணேல்லை.
! அங்கை லஷ்மியோட கதைச் சுக் கொண்டிருக்கு.
கூப்பிடுறன். பிள்ளை பிள்ளை இங்கை மாமா வரட்டாம்.
(கமலா வருதல்)
- என்னை மன்னிச்சிடுங்க மாமா!
இந்தாங்க பெரியவர். உங்கட காசு முப்பத்தையாயிரம். அந்த நோட்டையும் உறுதியையும் தாறதோடை காசு
188

முத்
குமா :
JAL D
தங்
முத்
குமா :
முத்
ததங் :
முத்
JTL)
முத்
பெற்றுக் கொண்டதாக இந்தக் கடிதத்திலை ஒரு கையெழுத்தும் வைச்சுத்தாங்க.
- சரி தம்பி, இஞ்சை கொண்டாங்க.
இந்தாங்க.
தங்கம் குமாரையும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு
போய் ஏதாவது சாப்பிடக்குடு.
வா குமார். பிள்ளை வாங்க.
சரிதானே தம்பி எல்லாம், சரியாய்ப் பாருங்க உறுதி, நோட்டு
எல்லாம் சரிதானே.
சரி பெரியவர். அப்பாவோட இருந்து கதையுங்க.
இல்லைத்தம்பி! எனக்கும் அலுவல் இருக்கு. நான் இன்னொரு நாளைக்கு வாறன்.
இல்லை முத்து அண்ணை இருங்க ரீ சாப்பிட்டிட்டுப் போங்க.
சரி, சரி உங்கட ஆசையையும் ஏன் குழப்புவான்.
(சிறிய ஒலி எழுதல் குமார், கமலா, தங்கம்)
: ம் . . . (பெருமூச்சு விடுதல்)
: ராமசாமி என்ன பெரு மூச்சு விடுகிறாய். அப்பவே நான்
189

Page 103
உனக்கு சொன்னனான். காலமாற்றத்திலை உதெல்லாம் நடக்கிறது சகஜம் தானே! மகனையும் மருமகளையும் கூப்பிடு எண்டு சொல்ல நீ என்ன சொன்னனி அந்தஸ்து, பெருமை, சாதி எண்டெல்லாம் எவ்வளவு கரைச்சலை அந்த கந்தசாமிக்கெல்லாம் செய்தனி. எங்கட தமிழ்ச் சமுதாயம் இண்டைக்கு இப்படி இரண்டும் கெட்டான் நிலையிலை இருக்கிறதுக்குக்காரணம் எங்கட சமுகத்திலை இருக்கிற இந்த போலி கெளரவம், அந்தஸ்து, சாதிகள், சம்பிரதாயங்கள் தான் ராமசாமி. இண்டைக்கு இளைஞர்கள் எல்லாம் படிச்சு பலதும் அறிஞ்சு முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறாங்க. அவங்கட எழுச்சிகளுக்கு நாங்கள் விட்டுக் கொடுக்காட்டி நாங்கள் இந்தச் சமுதாயத்திலை நிலைச்சிருக்கேலாது. கடைசி நேரத்திலை உன்னைக் கெளரவமாக வாழ வைச் சது உன்னோட ஒட்டியிருந்த அந்தஸ்து, கெளரவம், சாதி சம்பிரதாயங்கள் அல்ல என்பதை இப்ப புரிஞ்சு கொண்டிருப்பீங்க. இப்ப உங்களாலை பேசமுடியும், கத்த முடியும் ஆனா உங்களோட பின்னிப் பிணைஞ்சு இருந்த அந்தஸ்துகளும். பெருமைகளும், சம்பிரதாயங்களும் ஊமையாய் போயிட்டுது இல்லையா ராமசாமி. சரி நான் போயிட்டு வாறன்.
முற்றும்
(31 - 08 - 1994 அன்று ஒலிபரப்பப்பட்டது)
19O


Page 104
வெளிக் கொணர்ந்து அவ முறைகளை அப்படியே பட அமைந்துள்ளன. இது தற்க தொன்றாகும்.
விஞ்ஞான ஆசிரியராக இ விளங்கும் எம்.பி.செல்லவேல் வகுப்புக்காக விலங்கியல், த ஆசிரியருமாவார்
இலக்கிய ரீதியா இவரி முதன்முறையாக வெளி உ சமய-விஞ்ஞான நாடகங்க
விளங்கும் இந்நாடகங்கள், ஈழ ஆசைகளையும் பிரதிபலிக்கின்
LAMPIRA book-ma
375-8, Arcot Road, Chenna Boo. 2
 

இடம் பெற்ற நாடகங்களுள்
நாடகங்கள் நூலுருப் பெறுவது சமூகக் கண்ணாடி நிகழ்ச்சிக்கு
டுத்திய நாடகங்கள் இவை எனக்
ப் பிரச்சினைகளையும், சமூகப் ம் சில பழக்க வழக்கங்களையும் றுக்குரிய பதார்த்த அணுகு ம் பிடித்துக் காட்டுவனவாக ல நிலையில் வேண்டப்படுவ
அரசஐயாத்துரை முன்னாள் பணிப்பாளர் கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
ங்கையில் மிகவும் பிரபலமாக அவர்கள், க.பொத உயர்தர வரவியல் முதலிய நூல்களின்
ன் ஆற்றல் இந்நூல் மூலம் லகுக்குத் தெரியவந்துள்ளது. ரும் எழுதியுள்ளார். சமகாலப் ந்த எட்டு நாடகங்கள் மட்டும் ான காலத்தின் கண்ணாடியாக தின் தற்கால அவலங்களையும்
இளம்பிறை எம்.ரஹ்மான் ಇಂಗಾ
484 665