கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோவியத் யூனியனின் உடைவு

Page 1


Page 2

சோவியத் யூனியனின் உடைவு
றெஜி சிறிவர்த்தன

Page 3
சோவியத் யூனியனின் உடைவு றெஜி சிறிவர்த்தன.
பதிப்பாசிரியர்கள் எம். ஏ. நுஃமான், உ. சேரன்.
இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையம் 8, கின்சி ரெறெஸ், கொழும்பு 8, இலங்கை.
அச்சு : கிறஸன்ட் அச்சகம் 90, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை கொழும்பு - 2.
முதல் பதிப்பு : ஜூன் 1992
Soviet Unianin Udaivu (The Break up of Soviet Union) by Reggie Siriwardena
Edited by: M.A. Nuhman and R. Cheran
Published by : International Centre for Ethnic Studies 8, Kynsey Terrace, Colombo 8, Sri Lanka. First Published: June 1992.
Printed at: Crescent Publications (Pvt) Ltd. 90, Justice Akbar Mawatha, Colombo - 2
மொழிபெயர்ப்பு : எம். ஏ. நுஃமான், ஆ. தேவராஜன், எஸ். கே. விக்னேஸ்வரன், கே. சண்முகலிங்கம்

உள்ளிடு
அறிமுகம் ν முன்னுரை iX
கொர்பச்சேவ் யுகமும் சோவியத் வரலாறும் தொடரும் ஒரு விவாதம் : மார்க்சியமும் தேசியவாதமும் 22 அதிகாரத்தின் வாயில்கள் 27 வரலாறு திறந்திருக்கிறது. சோவியத் சமுதாயம் : கிழக்கு ஐரோப்பியப் பின் விளைவு 48 தேசியவாதமும் சோவியத் யூனியனின் உடைவும் 60 ஐசக் டொயிற்ஷர் : ஒரு மீள் சந்திப்பு. 90 நிக்கொலாய் புக்காரின் ஒரு நூற்றாண்டு மறுமதிப்பீடு 110 கொர்பச்சேவ் : வெற்றியும் அவலமும் 28 ட்றொட்ஸ்கியின் ஒழுக்கம் : வன்முறையின் அரசியல் 134 நெடுநாட் பணி 154 இரு கடிதங்கள் 204 பின்னுரை 2O7
iii ,

Page 4

இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், நாடகம் ஆகியவற்றின் ஆங்கிலத் தலைப்புகளும், பிரகாரிக்கப்பட்ட ஆண்டுகளும்.
o The Gorbachev Era and Soviet History 1987 م oA Continuing Debate - The Difficult Dialogue: Marxism
and Nationalisin - 1987
o Corridoors of Power - 1988 o History is open - 1990 o Soviet Union Fallout of Eastern Europe - 1990 O Nationalism and the Break-up of Soviet Union - 1991
e Issac Deutscher Rivisited - 199O
• Bucharin : A Centenary Reassesment - 1988 o Gorbachev: Triumph and Tragedy - 1992 o Trotsky's Morals: The Politics of Violence - 1989 o The Long Iay's Task - 1988 o Postscript: The World after the Fall - 1992.
பிழை திருத்தம்
Lätas üb பந்தி an பிழை திருத்தம்
s afarrivés விளக்கி
35 7 இதன் இந்த
s இருந்த பாகங்களை இருந்தவற்றை
7 A. பிறாறக் பிறாக்
A it 6 நானனத்தை ஞானத்தை
. A s அறிவிக்கின்றது நிரூபிக்கின்றது
57 多 புதிய இந்திய

Page 5

அறிமுகம்
றெஜி சிறிவர்தன (1922) இலங்கையின் மிக முக்கியமான ஆய்வறிவாளர்களுள் ஒருவர்: மார்க்சியக் கோட்பாட்டிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர்: தீவிர மனித உரிமையாளர்; பல்மொழி அறிஞர்; சிறந்த கவிஞர்; நாடக ஆசிரியர். கலை இலக்கிய விமர்சகர்.
பெரிதும் ஆங்கிலத்திலேயே எழுதிவரும் றெஜி சிறிவர்தனாவின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்கனவே சில சிறு சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. எனினும் தமிழ் வாசகர் மத்தியில் அவரைப்பற்றி அறிந்தவர்கள் மிகச்சிலரே. அரசியல்,வரலாறு, சமூகநீதி பற்றிய றெஜி சிறிவர்தனவின் இன்றைய சிந்தனையைப் பிரதிபலிக்கும் இந்நூல் தமிழ் வாசகர்களின் éFL Dé95IT6)ʻu பிரக்ஞையைக் கூர்மைப்படுத்தும் என்று நம்புகிறோம்.
முன்னாள் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுவந்த மாற்றங்களைப்பற்றி றெஜி சிறிவர்தன அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல். சமகால உலக வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முக்கியமான இந்த வரலாற்று நிகழ்வின் பல்வேறு அம்சங்களை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விரிவாக ஆராய்கின்றன.
சோவியத் யூனியனின் உடைவையும் கிழக்கு ஐரோப்பியப் புரட்சியையும் பற்றி . பிரதானமாக இரண்டு முரண்பட்ட கண்ணோட்டங்கள் நம்மத்தியில் நிலவுகின்றன. மார்க்சியம் அதன் கல்லறைக்குள் அனுப்பப்பட்டுவிட்டது என்பது முதலாவது கண்ஜேடிட்டம். வலதுசாரிகளும் மதச்சார்பாவூர்களும் இக்கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். இந் நடுகளில் மார்க்சியமோ சோசலிசமோ இருக்கவில்லை, உண்மையில் சோசலிச விரோத நடைமுறைகளைக் கொண்டிருந்த இத் 'திரிபுவாத" நாடுகளில் ஏற்பட்ட அதிகாரப் பிறழ்வு தவிர்க்க முடியாதது என்பது இரண்டாவது கண்ணோட்டம். ட்றொட்ஸ்கிய, மாஓவிச

Page 6
வட்டரத்தினரும் இதர துய மார்க்சிய அறிவாளிகளும் இக் கண்ணோட்டத்தையே கொண்டுள்ளனர். றெஜி சிறிவர்தனவுடைய இந்தநூலைப் படிப்பவர்கள் இவ்விரு கண்ணோட்டங்களையும் அவர் ஒரு அறிவார்ந்த தளத்தில் நின்று நிராகரித்துவிடுவதைக் காண்பார்கள்.
கோட்பாட்டில் இருந்ததன்றி யதார்த்தத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற மார்க்கியக் கொள்கையின் அடிப்படையில் ஆராய்வதாயின் முதலாம் உலக யுத்தத்தை அடுத்துவந்த கடந்த முக்கால் நூற்றாண்டுக் காலப்பகுதியில் உலகின் ஒரு பொரும் பரப்பில் கோடிக் கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்தின் மீது சோசலிச சமூகம் என்ற ஒரு சமூக அமைப்பு உருவாகி இருந்ததைஇதன் சோசலிசத் தன்மைபற்றி நம் மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பினும் - நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இந்தச் சமூகத்தின் ஒரு முக்கியமான பகுதி - சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வளர்ச்சி பெற்றிருந்த பகுதி - இன்று அந்த அமைப்பைக் குலைத்துவிட்டது. இக்குலைப்புக்கு எதிரான பல்வேறு சக்திகள் இச்சமூகத்துள் இன்னும் இருக்கின்றன எனினும் பெரும்பான்மையான சக்திகளால் அரசியல் பொருளியல் ரீதியில் இன்று இந்த அமைப்பு உடைக்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் அது வேறு ஒரு வடிவில் மீள் உருவாக்கம் பெறுமா என்பதை நாம் இப்போது கூறமுடியாது.
இச்சமூக அமைப்பின் பிறிதொரு பகுதி - இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து சீனாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் உருவாகி வளர்ச்சியடைந்த பகுதி - இன்னும் நிலைபெற்றுள்ளது. இதே வடிவத்தில் இந்த அமைப்பு தொடர்ந்தும் இருக்குமா அல்லது குலைவுறுமா என்பதையும் நாம் இப்போது கூறமுடியாது. மா ஒவுக்குப் பிந்திய சீன, தென்கிழக்காசிய சோசலிசத்தையும் தூய மார்க்சிய வாதிகள் அங்கீகரிப்பதில்லை என்பதையும் நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும்.
பெரஸ்ரொய்க்கா,கிளாஸ்நொஸ்த் ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர் சோசலிசப் புரட்சியின் தாயகமான, நேற்றுவரை உலகின் இரண்டாவது பெரிய வல்லரசாகத் திகழ்ந்த, சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் நிழ்ந்த தலைகீழான சமூக அரசியல் மாற்றங்கள், குறிப்பாக அடிப்படையான சமூக, அரசியல் மாற்றங்களுக்காகப் போராடும் மூன்றாம் உலக மக்களைப்
Vi

பொறுத்தவரை மிகவும் முக்கிய தீதுவம் உடையன. இம்மாற்றங்களுக்கான காரணிகள் எவை? சமீபத்தில் பத்திரிகைகளில் பெரிதாகப் பேசப்பட்டதுபோல எண்பதுகளின் தொடக்கத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி றிகனும் பாப்பாண்டவரும் மேற்கொண்ட கூட்டுச்சதியின் விளைவுதான் இது என்றோ அல்லது ஸ்டாலினிச சர்வாதிகாரத்தின் அல்லது குருஷேவின் திரிபுவாதாத்தின் விளைவு என்றோ கூறப்படும் எளிதான தீர்வுகளில் நாம் திருப்திகாண முடியாது. வரலாற்றின் இயக்கவியலிலேயே நாம் இதற்கான காரணிகளைத் தேடவேண்டும்.
சோசலிசப் புரட்சியின் ஆரம்ப நாட்களில் இருந்து சமீபகாலம் வரை நிலவிய சோசலிச நடைமுறைகளையும் இந்த நடைமுறை களை வழிநடத்திய கருத்தியலையும (ideology) அந்தக் கருத்தியலை உருவாக்கிய வரலாற்று நிபந்தனைகளையும் றெஜி சிறிவர்தன இந்த நூலிலே ஆராய முயன்றுள்ளார். இம்முயற்சியில் ஸ்டாலினை மட்டுமன்றி சோவியத் யூனியனின் பிரதான சிற்பிகளான லெனின், ட்றொட்ஸ்கி, புக்காரின் ஆகியோரின் கருத்தியல்களையும் அவர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். சோவியத் வரலாறு பற்றி நேரடியாக ரஷ்ய மூலத்தில் இருந்தே தகவல்களைப் பெறக்கூடிய ரஷ்ய மொழி அறிவுடைய மிகச் சில தென்னாசிய அறிஞர்களுள் றெஜியும் ஒருவர். தன் ஆய்வுப் பொருள் தொடர்பான விரிவான படிப்பறிவு உடையவர் அவர். அவ்வகையில் அவர் தரும் விபரங்கள் நம்பகமானவை. அவரது முடிவுகள் சில தூய மார்க்சியவாதிகளை அசெளகரியப்படுத்தக் கூடியவை எனினும் அம்முடிவுகளே முடிந்த முடிவுகள் என நாம் கொள்ளவேண்டிய தில்லை. ஆயினும் தமிழில் முதல் முறையாக மார்க்சியம், சோசலிச வரலாறு, ஆயுதப் புரட்சி, அரசியல் அறம் என்பன பற்றி கட்சி ரசியலுக்கு அப்பாலான, ஆதார பூர்வமான தரவுகளின் அடிப்படையில் ஒரு திறந்த விவாதத்தை இந்நூல் தொடக்கி வைக்கிறது என்பதை மறுக்கமுடியாது.
வன்முறை அரசியல் சுழலில் சிக்குண்டு, திக்குத்திசை தெரியாது தத்தளிக்கும் நம்நாட்டுச் சூழலில் வன்முறையின் கருத்தியலை விசாரணைக் குட்படுத்தும் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் உடையது. மனித வரலாற்றில் வன்முறை ஒரு பிரிக்க முடியாத அம்சமாக இருந்துவந்திருக்கிறது எனக்கூறி வன்முறைக்கு அமைதி காண்போர் அநேகர் நம் மத்தியில் உள்ளனர். ஆனால் வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தே மனிதப் பிரக்ஞையில்
Vii

Page 7
வன்முறைக்கு எதிரான ஒரு அம்சமும் இருந்துவந்திருப்பதை நாம் மறக்கக்கூடாது. மனித சமூகத்தை வன்முறையில் இருந்து இறுதியாக விடுவிப்பதற்கான தவிர்க்க முடியாத சாதனம் என்ற வகையி லேயே கார்ல் மார்க்ஸ் தன் புரட்சிகர வன்முறையை வலியுறுத்தினார் என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். ஆனால் வன்முறையை, புரட்சிகர வன்முறை எதிர்ப்புரட்சிகர வன்முறை எனத் தெளிவாக வேறுபடுத்த முடியுமா? என்ற கேள்வியையும் சோசலிசப் புரட்சிகளினதும் தேசிய விடுதலைப் போராட்டங்களினதும் வரலறு எழுப்புகின்றது. இந்தக் கேள்விக்கு விடைகாணும் வேட்கையையும் இந்நூல் நம்முன் தூண்டிவிடுகின்றது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள அதிகாரத்தின் வாயில்கள், ஐசெக் டொயிற்ஷெர் ஒரு மீள்சந்திப்பு, சிக்கலான உரையாடல்: மார்க்சியமும் தேசியவாதமும், சேவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பியப் பின்விளைவு ஆகிய கட்டுரைகளை ஆ. தேவராஜனும், கொர்பசேவ் யுகமும் சோவியத் வரலாறும் என்னும் கட்டுரையை க.சண்முகலிங்கமும் தேசியவாதமும் சோவியத் யூனியனின் உடைவும் என்னும் கட்டுரையை எஸ்.கே விக்னேஸ்வரனும் மொழிபெயர்த்து உதவினர். ஏனைய கட்டுரைகளையும் நெடுநாள் பணி நாடகத்தையும் மொழிபெயர்த்தவர் எம். ஏ. நுஃமான், இந்நூலாக்கத்தில் உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
எம். ஏ. நுஃமான்
உ. சேரன் பதிப்பாசிரியர்கள்

முன்னுரை
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1987க்கும் 1992 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை. முன்னாள் சோவியத் யூனியனில் ஆரம்பித்து பின்னர் மத்திய ஐரோப்பாவுக்கும் கிழக்கு ஐரோப்பாவுக்கும் பரவிய அரசியல் மாற்றங்கள் அந்த அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி முழு உட்லகுக்குமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்த மாற்றங்களை மிகுந்த கரிசனையோடும் விசாரணை உணர்வுடனும் நோக்கி அவற்றின் அடிப்படைகளை அவ்வப்போது விளக்க முயன்றேன். அதன் பெறுபேறுகளை இந்த நூலில் காணலாம்.
இப்போது இக்கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இலங்கை வாழ் சிங்கள, தமிழ் வாசகர்கள் பெரஸ்ரோய்க்காவைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றப் போக்குகளைப் பற்றிய அறிவையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும். சிங்கள, தமிழ்ப் பத்திரிகைகளில் இந்த அபிவிருத்திகள் தொடர்பாக வெளியிடப்படும் செய்திகள் இவை பற்றி வாசகர்களுக்கு ஒரு விசயஞானமுள்ள விளக்கத்தை தரக்கூடிய அளவு விரிவானவையல்ல. தவிரவும் சிங்களத்திலும் தமிழிலும் இதுபற்றி எழுதிய அல்லது விவாதித்த அரசியல் விமர்சகர்கள், முன்னாள் சோவியத் முகாமில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் இப்போது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டியுள்ள பழைய கோட்பாடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றின் மீது கொண்ட விசுவாசத்துடனேயே அவற்றைப் பெரிதும் அணுகியுள்ளனர்.
இந்தக் கட்டுரைகளில் அத்தகைய ஒரு மறு சிந்தனையின் அவசியத்தை நான் வலியுறுத்தியுள்ளேன். அதேவேளை நானே எனது சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியும் உள்ளேன். இந்த நூலைப்படிக்கும் போது வாசகர்கள் ஆரம்பத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளுக்கும் அண்மைக்காலத்தில் எழுதப்பட்டவற்றுக்கும் இடையே நோக்குநிலையில் சில மாற்றங்களைக் காணமுடியும். இந்த மாற்றங்கள், முடிவுறா நிகழ்வுகளை அவதானித்து

Page 8
ஆராய்ந்ததன்மூலம் எனது சொந்தக் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தைப் பெற்றதன் விளைவாகும். இந்தக் கட்டுரைகளை நூலுருவாக்குகையில் எனது தற்போதைய நிலைகளுக்கேற்ப ஆரம்பத்தில் எழுதப்பட்டவற்றில் மாற்றங்கள் எதையும் செய்ய நான் முயலவில்லை. நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கை புறநிலையாக, விருப்பு வெறுப்பின்றி விளங்கிக் கொள்ள ஒர் அரசியல் அவதானி மேற்கொண்ட முயற்சியைக் காண்பதில் வாசகர்கள் ஆர்வம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையுடனேயே இந்தக் கட்டுரைகளை அவற்றின் மூலவடிவத்தில் அப்படியே தருகிறேன்.
சோவியத் யூனியனில் 1938ல் தேசத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தேகாந்த நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிக்கோலாய் புக்காரினது அவலம் பற்றி 1988ல் நான் எழுதிய சிறு நாடகம் ஒன்றும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு கடிதங்களும் இடம் பெறுகின்றன. ஒரு கடிதம் புக்காரினின் மனைவிக்கு (இந்த நாடகத்தில் அவரும் ஒரு பாத்திரம்) இந்த நாடகப் பிரதி ஒன்றை அனுப்பியபோது நான் எழுதியது; மற்றது அவரது பதில். இந்த நாடகத்தின் ஆங்கில மூலவடிவம் 1988 செப்டெம்பரில் கொழும்பில் ஒரு நாடகப்படுத்தப்பட்ட வாசிப்பாக மேடையேற்றப்பட்டது. காலம் சென்ற திரு. றிச்சாட் டி சொய்சா அதனைத் தயாரித்தளித்தார். அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவரும் அவரே.
றெஜிசிறிவர்த்தன.

கொர்பச்சேவ் պՖ(ւՔւf) சோவியத் வரலாறும்
மேற்குறித்த தலைப்பின் பொருளை முதலில் நான் விளக்க முனைகின்றேன். புரட்சிக்குப் பிந்திய சோவியத் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியில் இன்றைய கால கட்டத்தில் எழுந்துள்ள தீவிர மாற்றங்களை ஆராய்வதே எனது நோக்கம். 1917ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட சோவியத் வரலாற்றில் இரண்டு திருப்புமுனைகள் உள்ளன என நான் கருதுகின்றேன். லெனின் இறப்புக்குப் பின்னர் (1925-29) சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவிர கருத்து நிலை முரண்பாடும், அரசியல் போராட்டமும் நிகழ்ந்த கால கட்டம் முதலாவது திருப்பு முனையாகும். இப்போராட்டத்தின் விளைவுகள் சோவியத் வரலாற்றை இதற்குப் பிந்திய காலப் பகுதியில் பெரிதும் பாதிப்பதாயும், தீர்மானிப்பதாயும் இருந்தன. 27வது கட்சி மாநாடு 1986ல் நிகழ்ந்தது. இம்மாநாடும் இதற்குப் பிந்திய காலகட்டமும் சோவியத் வரலாற்றின் இரண்டாவது பெரிய திருப்புமுனையாகும் . சோவியத் யூனியன் இக்காலகட்டத்தினூடாகவே இப்போது சென்று கொண்டுள்ளது.
சோவியத் வரலாற்றில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட முதலாவது திருப்புமுனை பற்றி இக்கட்டுரையின் முதற்பகுதியில் நான் குறிப்பிடுவேன். இன்று சோவியத் யூனியன் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் என்பவற்றின் நோக்கிலே புரட்சிக்குப் பிந்திய சோவியத் வரலாற்றையும் அக்கால கட்டத்தின் பிரச்சினைகளையும் நாம் ஆராயலாம். ஆனால் இந்தப் பிரச்சினைகளை நான் பழைய முறையிலான ஸ்டாலினிச ட்றொட்ஸ்கிய விவாதத்தின் அடிப்படையில் அணுகப்போவதில்லை. இவ்விவாதங்கள் இலங்கை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. எனது நோக்கு விருப்பு, வெறுப்பற்ற சரித்திர ஆய்வாக அமையும். டி.எஸ். எலியட்டின் பின்வரும் கவிதை வரிகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்:

Page 9
"பழைய உட்பிரிவுகளை உயிர்ப்பிப்பதும் பண்டைச் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டுவதும் பழைய பல்லவியே பாடுவதும் எம் வேலையல்ல"
பழைய குழுச் சண்டைகளைத் தொடர்வதும் பழைய பல்லவிகளை மீண்டும் பாடுவதும் இங்கு என் நோக்கமல்ல. 1920களில் சர்ச்சைக்குரியவர்களாக மூன்று தனிநபர்களான ஸ்டாலின், ட்றொட்ஸ்கி, புக்காரின் என்போர் விளங்கினர். அக்காலத்து கருத்து மோதல்கள் இம்மூவரையும். சுற்றியே நிகழ்ந்தன. அந்தக் கால கட்டத்தில் இம்மூவரினாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மூன்று மாற்று வழிகள் சோவிய்த் யூனியனுக்கு இருந்தன. இம்மூவரைப் பற்றியுமே நான் இங்கு ஆராய விரும்புகின்றேன். வரலாற்றில் படச்சுருளைப் பின்னோக்கி ஒட்டுவதோ கதைக் கருவை மாற்றியமைத்து கதை எந்தெந்த விதமாக மாறியிருக்கும் என்று எழுதிக் காட்டுவதோ சாத்தியமற்றது. ஸ்டாலினால் உண்மையில் தெரிவுசெய்யப்பட்ட வரலாற்றுப் பாதைக்கு பதிலாகவிருந்த ஏனைய இரு மாற்று வழிகளையும் கோட்பாட்டு ரீதியிலும், ஊக அடிப்படையிலும் ஆய்வதே சாத்தியமானது.
மேற்குறித்த மூன்று மாற்றுவழிகளிலும் ட்றொட்ஸ்கியின் வழி குறைந்தபட்ச வெற்றி வாய்ப்பைக் கொண்டிருந்தது. ஏனெனில் அதன் அரசியல் திட்டத்திற்கும், பொருளியல் செயற்திட்டத்திற்கும் இடையே அடிப்படையான முரண்பாடு ஒன்று இருந்தது. ட்றொட்ஸ் கிதான் முதன் முதலாக துரிதமான கைத்தொழில் விருத்தியையும், விவசாயத்துறையில் கூட்டுப் பண்ணை முறையை விரைவாக அமைப்பது பற்றியும் பேசினார். ளப் டாலின் இக்கொள்கைகளை 1920 களின் முடிவில் கையேற்று ட்றொட்ஸ்கி எதிர்பார்த்திருக்க முடியாத வகையில் ஈவிரக்கமற்றுத் துரிதமாகச் செயல்படுத்தினார். இதே காலப்பகுதியில் கட்சியில் தனியாதிக்கம் உடைய கட்டமைப்பையும் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகத்திற்கான தடைகளையும் கடுமையாக விமர்சித்தவரும் அவரே. (லெனின் காலத்தில் ஏனைய கட்சிகள் தடை செய்யப்பட்டபோது ட்றொட்ஸ்கியும் அதற்கு ஆதரவாக இருந்தார். அவற்றின் மீதான தடைநீக்கத்துக்கு அவர் முயலவில்லை)
அக்காலகட்டத்தில் ட்றொட்ஸ்கியின் அரசியல் திட்டமானது புக்காரினால் முன்வைக்கப்பட்ட பொருளியல் கொள்கையோடு இணைக்கப்பட்டிருந்தால் நடைமுறையில் சாத்தியமானதாக
2

அமைந்திருக்கும். புதிய பொருளாதார கொள்கையை (N.E.P.) லெனின் ஒரு தற்காலிக சமரசமான தீர்வாகக் கொண்டிருந்தார். ஆனால் புக்காரின் அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதையும் விஸ்தரிப்பதையும் விரும்பினார். அரசியல் ஏகபோகத்தைக் கெர்ண்டிருந்த போல்ஷெவிக் கட்சியினுள் பல உட்பிரிவுகள் இருந்தன. இவ் உட்பிரிவுகள் பலதரப்பட்ட வர்க்க நலன்களோடு இணைவுபட்டிருந்தன. உழவர் வகுப்பின் நடுத்தர மற்றும் உயர் பிரிவுகள், சிறு வர்த்தகர்கள், சிறு கைத்தொழில் முதலாளிகள் ஆகியோரின் நலன்களோடு உடன்பாடு உடையனவாக புக்காரின் கொள்கைகள் அமைந்தன. புக்காரின் ஒரு கலப்புப் பொருளியல் முறையை விரும்பினார். சிற்றளவு தனியார் முயற்சிக்கு சலுகைகள் அளிப்பதால் சமூகத்தின் பதட்டநிலையைத் தணிக்கலாம் எனவும் அரசியல் சூழ்நிலையில் கூடியளவு தாராண்மை வாதத்தைப் புகுத்தலாம் எனவும் அவர் கருதினார். எப்போதும் எல்லா இடத்திலும் ஓரளவு தனியார் முயற்சியை பேணுவதன் மூலம்தான் அரசியல் ஜனநாயகத்தை நிறுவமுடியும் என்பது இதன் பொருளல்ல. இருப்பினும் அரசின் கையில் பொருளியல் அதிகாரம் முழுவதையும் குவித்துவைத்துக் கொண்டு அதேவேளை அரசியல் சுதந்திரத்தையும் பேணுவதில் எந்தவொரு சோசலிச நாடும் இதுவரை வெற்றி காணவில்லை. நான் இங்கு குறிப்பிடவிரும்புவது யாதெனில் சோவியத் யூனியன் 1920களில் ஒரு குறிப்பிட்ட தனித்துவமான வரலாற்றுப் பிரச்சினையை எதிர் நோக்கியது. அது துரிதமான, பேரளவு கைத் தொழில் மயப் படுத்தல் , நிலத்தைக் கூட்டுடைமையாக்கல் என்னும் திட்டங்களை அமுல்படுத்தியது. இச்சூழ்நிலையில் பலாத்தகாரத்தையும், வல்லாட்சி முறைகளையும் கூடியளவில் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத நியதியொன்று இருந்தது. சோசலிச மூலதனத் திரட்சி (Socialist Accumulation) இதற்கான தேவையை உருவாக்கியது. சோவியத் கைத்தொழில் அக்காலத்தில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இதனால் கூட்டுப்பண்ணைகளுக்கு வேண்டிய இயந்திரங்கள், ஏனைய வசதிகளை போதிய அளவில் வழங்கக் கூடிய நிலையில் கைத்தொழில் துறை இருக்கவில்லை. இக்காரணத்தினால் கூட்டுப்பண்ணை முறையில் தம்நிலங்களை சுயமாக இணைத்துக் கொள்வது சோவியத் ரஷ்யாவில் அக்காலத்திய உழவர்களுக்குக் கவர்ச்சியுடைய ஒரு திட்டமாக இருக்கவில்லை. ஐந்து ஆண்டுத் திட்டங்கள் கைத்தொழில் மயமாக்கலை அசுரவேகத்தில் முடுக்கிவிட்டன. இதன் விளைவாக பெருமளவில் உழைப்பாளர் தொகையினரை நிலத்திலிருந்து பிரித்து தொழிற்சாலைகளுக்கு
3

Page 10
23அனுப்ப வேண்டி ஏற்பட்டது. கிராமத்திலிருந்து வந்த இந்த உழைப்பாளர்கள் தொழிற்சாலை ஒன்றின் நியமங்கள், வேலை ஒழுங்குகளுக்குப் பழக்கப்படாதவர்களாய் இருந்தனர். இதைவிட சோவியத் யூனியன் அக்காலத்தில் குறைவிருத்தி நிலையில் இருந்தது. முதலீட்டிற்கான வளங்களோ, சேமிப்புக்களோ இருக்கவில்லை. இதனால் முதலீட்டைத் தடுப்பதற்கு நுகர்வினை குறைக்க வேண்டியிருந்தது. இக்காரணங்களினால் பொருளியல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய பிரச்சினைகளை பலாத்காரம், வல்லாட்சி முறைகள் ஆகியவற்றின் மூலமே தணிக்கக் கூடியதாய் இருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்பட்ட விறைப்பு நிலையை (Tension) ஸ்டாலின் களை எடுப்புக்கள் மூலமும், பயங்கரமான ஆட்சியின் மூலமும் தணிக்க முனைந்தார். ஸ்டாலினுடைய தனிப்பட்ட மனோ இயல்புகளையும், இரக்கமற்ற சுபாவத்தையும் தவிர்த்துவிட்டாலும் சோவியத் வரலாற்றின் போக்கு அடிப்படையில் வேறு விதமாக அமைந்திருக்க முடியுமா என்ற சந்தேகம் எழவே செய்யும். சோவியத் சமூகம் துரித கைத்தொழில் விருத்தி, கூட்டுச்சொத்துடைமை முறைகளை அமைத்தல் ஆகிய இரு இலக்குகளை வரித்துக் கொண்டது. இவ்வாறான குறிக்கோள்களை உடைய அதன் ஆட்சி முறையில் ஸ்ட்ாலினைத் தவிர்ந்த வேறு எந்தநபர் இருந்தாலும் கூட வித்தியாசமான அரசியல் போக்கு ஒன்றிற்கு இடமிருந்திருக்காது.
தனது அரசியல், பொருளியல் திட்டங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ட்றொட்ஸ்கி கவனிக்காது போனது ஏன்? ஐரோப்பாவில் நிகழவிருக்கும் புரட்சி சோவியத் யூனியனை அதன் தனிமையிலிருந்து மீட்கும் என அவர் நம்பியதே இதற்குக் காரணம்.
1920களில் மட்டுமல்ல 1940ம் ஆண்டில் இவர் இறக்கும் வரைக்கும் இந்த நம்பிக்கை ட்றொட்ஸ்கிக்கு இருந்தது. மேற்கு ஐரோப்பாவின் பாட்டாளி வர்க்கம் ரஷ்யாவுக்கு கரம் கொடுத்து உதவும் என அவர் நம்பினார். இல்லாதவிடத்தில் பிரச்சினைகளால் சூழப்பட்டிருக்கும் அந்நாட்டில் சோசலிச சொத்துடைமை முறை அழிந்து போகும் என அவர் கருதினார். ஒன்றில் வெளிநாட்டுத் தலையீடு காரணமாக அல்லது அலுவலர் ஆட்சியின் சீரழிவு (Bureaucratic Degeneration) assigawat DITs 95.1 s fibuGD 6760T -9|alir எதிர்பார்த்தார். இவ்வகையில் டறொட்ஸ்கி ரஷ்ய அமைப்பின் தாக்குப்பிடிக்கும் சக்தியை குறைத்து மதிப்பிட்டார் எனவும், மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளார்ந்த புரட்சிகர சக்தியை மிகையாக மதிப்பிட்டார் என்றும் ஒருவர் முடிவுக்கு
வரலாம்.
4

புக்காரினுடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டிருந்தால் வல்லாட்சி முறை தவிர்க்கப்பட்டிருக்கும். சோவியத் சமூகம் மானிட சுதந்திரத்தோடு கூடிய விருத்தியை நோக்கி முன்னேறியிருக்கும். அதேவேளை பொருளியல் வளர்ச்சியில் துரித கதியில் முன்னேறி இருக்க முடியாது. (1924ல் புக்காரின் பின்வருமாறு கூறினார். "நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும்) புக்காரினுடைய திட்டத்தின்படி. சோவியத் யூனியன் சென்றிருக்குமாயின் 1941ஆம் ஆண்டில் நாஜிகளின் படை எடுப்பினை எதிர்கொள்வதற்கான கைத்தொழில் பலம் இருந்திருக்காது. அச்சூழலில் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக வியட்நாம் நடத்தியதுபோன்ற கொரில்லா யுத்தமுறையை கையாண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும். ஒருவேளை என்றோ ஒரு நாள் இப்படியான ஒரு யுத்தத்தை சோவியத் யூனியன் எதிர் நோக்கவேண்டியிருக்கும் என்ற உணர்வும் எதிரிகள் நிறைந்த சர்வதேசச் சூழலில் தம் நாட்டைப் பாதுகாக்க வேண்டு மென்ற சவாலும் ஸ்டாலினுடைய கொள்கைகள் வெற்றி பெறுவதற்கு காரணமாயிருக்கலாம். இதனால்தான் கட்டாயக் கைத்தொழில் மயமாக்கலும் கூட்டுப்பண்ணை முறையமைப்பும் அவசியத் தேவைகளாயின. புக்காரின் கொள்கைகளைப் புறமொதுக்கி ஸ்டாலினிசம் வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாததாயிற்று.
புக்காரினிசமும், ட்றொட்ஸ்கியிசமும் கைவிடப்பட்டன. சோவியத் ஆட்சி பாரியவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது. உற்பத்தி சக்திகள் பாரிய அளவில் விருத்தியுற்றன. வேறு எந்த நாட்டிலும் முன்னர் ஏற்படாத வகையில் கைத்தொழிற் புரட்சி ஒரு குறுகிய கால எல்லைக்குள் நிகழ்ந்தது. எண்ணற்ற மனிதவிலை கொடுக்க வேண்டியிருந்ததற்கு மேலாக இக்கைத்தொழில் வளர்ச்சி சமனற்றதாயும், முரண்பாடு உடையதாயும் இருந்தது. குறிப்பாக ஒருபுறத்தில் கைத்தொழிலுக்கும், விவசாயத்துக்கும் இடையே சமத்துவமின்மை நிலவியது. மறுபுறத்தில் மூலதனப் பொருள் உற்பத்திக்கும், நுகர்வுப்பொருள் உற்பத்திக்கும் இடையே சமத்துவமின்மை ஏற்பட்டது. 1987 ஏப்ரல் மாதத்தில் 'பிராக்” நகரில் பேசும் போது கொர்பச்சேவ் இந்த முரண்பாடுகள் பற்றி பின்வருமாறு கூறினார்: "எமது நாட்டில் சமத்துவமின்மையும், முரண்பாடுகளும் வெளிப்படையாகத் தோன்றி உள்ளன. உதாரணமாக உருக்கு உற்பத்தி, மூலப்பொருட்கள், எரிபொருட்கள், சக்தி ஆகியவற்றின் உற்பத்தியில் நாம் நீண்ட காலமாக துரித
5

Page 11
முன்னேற்றம் அடைந்தோம். அதேவேளை இவ்வளங்களை திறமையற்ற முறையிலும், விரயம் செய்யும் வகையிலும் பிரயோகித்து வருகின்றோம். இது ஒரு முரண்பாடு. தானிய உற்பத்தியில் உலகில் முதன்மையில் நிற்கும் நாடுகளில் எமது நாடும் ஒன்று. அதேவேளை மில்லியன் தொன் கணக்கான தானியத்தை ஆண்டுதோறும் மிருகங்களுக்கு உணவுக்காக இறக்குமதி செய்கின்றோம். இதேபோன்று விஞ்ஞானத் துறையிலும் அடிப்படை ஆராய்ச்சியிலும் நாம் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். எமது நாட்டிலுள்ள மருத்துவர் எண்ணிக்கையும் வைத்தியசாலை வாட்டுக் களின் எண் ணிக்கையும் பரிற நாடுகளோடு ஒப்பிடக்கூடியளவில் இருந்தாலும் எமது நாட்டு மக்களுக்கு வழங்கும் மருத்துவச் சேவைகளில் மிகப்பெரும் குறைபாடுகள் உள்ளன. எமது ரொக்கெட்டுக்கள் ஹெய்லியின் வால்வெள்ளியை மிகவும் ஆச்சரியப்படத்தக்க நுட்பத்தோடு கணிப்பிட்டுக்கூறின. செவ்வாய்க்கிரகத்தை சென்றடையக் கூடிய அதிசக்தி உடையன எமது ரொக்கெட்டுக்கள். பொறியியல் துறையிலும், ஆராய்ச்சியிலும் எமது இந்தச் சாதனைகளை நாளாந்த வாழ்வில் விஞ்ஞான சாதனங்களை பயன்படுத்துவதில் உள்ள குறைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வீட்டுப் பாவனைக்குரிய சாதாரணப் பொருட்கள். சாதாரண மக்களின் பொருளியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இவ்விதமாக பாரிய முரண்பாடுகள் எமது பொருளியலில் வெளிப்படுகின்றன"
பொருளியல் துறையில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் ஸ்டாலினிச கால கட்டத்தின் முதுசமாகப் பிற்சந்ததிகளுக்குத் தரப்பட்டவை. அதேவேளை ஸ்டாலினின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுதல் கூடாது. நீண்ட காலமாக பின்னடைவுற்று வாழ்ந்திருந்த ஒரு சமூகத்தை அப்படிப்பட்ட பின்னடைவிலிருந்து மீட்டெடுத்த பெரும் சாதனை அவருடையதே. 1953 மார்ச் மாதத்தில் ஸ்டாலின் இறக்கும் போது 'மன்சஸ்ட்டர் கார்டியன் பத்திரிகையில் "ஐசக் டொய்ற்ஷர் எழுதிய ஒரு வசனம் என்னுடைய ஞாபகத்திற்கு வருகின்றது. டொய்ற்ஷரின் கட்டுரை ஒரு தீர்க்க தரிசனம் போன்றது. ஸ்டாலினிச யுகத்தின் முடிவை அவர் தீர்க்க தரிசனமாகக் கூறினார்.
"ஸ்டாலின் பதவிக்கு வரும்போது மரக்கலப்பைகளைக் கொண்டு உழவுத் தொழில் நடத்திய நாடாக அது இருந்தது. ஸ்டாலின் அணுஉலைகளைக் கொண்ட நாடாக அதனை விட்டுச் சென்றார். இது தான் ஸ்டாலினுடைய வரலாற்றுச் சாதனையின் சாராம்சம்"
6

இந்த சாதனையானது வெறுமனே பொருளியல் தொழில்நுட்பச் சாதனை மட்டுமல்ல. இந்த உண்மையை டொய்ற்ஷர்காட்டியுள்ளார். சோவியத் யூனியனுடைய கைத்தொழிற் புரட்சியானது வெறும் உற்பத்தித் துறை மாற்றம் அல்ல. நவீன கல்வியறிவை படிப்பறிவு இல்லாத ஜனத்திரளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இக் கைத்தொழிற் புரட்சிக்கு உண்டு. அக்காலத்தில் ரஷ்ய மக்கள் சாதாரண எழுத்தறிவுகூட அற்றவர்களாக விளங்கினர். ஆனால் இக்கலாசாரப் புரட்சி அரசியல் கட்டுப்பாடுகளாலும் ஸ்டாலினிச கருத்துநிலை இறுக்கத்தினாலும் தனிநபர் வழிபாட்டினாலும் அநாகரிகமான ஸ்டாலினிசமாகத்திரிபடைந்தது என்பது உண்மையே. இருந்தபோதும் அதனுள்ளே விடுதலைக்கான உள்ளார்ந்த ஆற்றல் இருந்தது. இவ்வாற்றல் என்றோ ஒரு நாள் ஸ்டாலினிச அரசியல் மற்றும் கருத்துநிலை அமைப்புகளுக்கு எதிராகவே தொழிற்படும் சாத்தியமும் இருந்தது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ட்றொட்ஸ்கியும், புக்காரினும் கனவுகண்ட அரசியல் மற்றும் பொருளியல் தாராளமயமாக்கல் ப்னிகளுக்காக இன்று சோவியத் யூனியன் போராடுகின்றதென்றால் ஸ்டாலின் யுகத்தில் ஆரம்பு மூலதனத் திரட்சியும் ஆரம்ப கலாசார திரட்சியும் பூர்த்திசெய்யப்பட்டமைய்ே அதற்குக் காரணமாகும். இருப்பினும் தாராளமயப்படுத்தலுக்கான இந்த இயக்கம் ஸ்டாலினிச பாரம்பரியத்துடன் மோதவேண்டி இருக்கிறது, இது வரலாற்று இயங்கியலின் ஒரு அம்சமே.
35 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் இறந்த சமயத்திலேயே ஸ்டாலினிசமும் காலாவதியாகிவிட்டது. ஸ்டாலினிசம் 1920களில் ஒரு பின்தங்கிய தேசத்தின் அரசியல் மற்றும் அறிவுச் சூழ்நிலைகளுக்கு ஏற்றதாய் உருவாகியது. இவ்வாறான ஒரு கோட்பாடு 1950களின் நவீனமயப்பட்ட ஒரு சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமற்றதாய் மாறியது. எனினும் அரசியல் மற்றும் கருத்துநிலை அமைப்புக்கள் (Political, and ldeological Structures). Sy 60au 6T (paugssjbg, JyugÜLuGODLuum uiu அமைந்த பொருளியல் குழல்கள் மறைந்து விட்டாலும் சுயமாகவே தம்போக்கில் அழிந்து போவதில்லை. அரசியல் வடிவங்களும் கருத்துநிலைகளும் மாறாது நிலைத்து நிற்கும் இயல்பினைக் கொண்டிருப்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல. ஆளும் குழுக்களும் அவற்றின் நிலைபேறில் அக்கறை கொண்டனவாக இருப்பதும் இதற்கு ஒரு கார்ணமாகும். இதனால்தான் ஸ்டாலினுடைய வாரிசுகளான மலன்கோவ், குருஷ்சேவ், பிறஷ்னேவ்,
7

Page 12
அந்திரோபோவ் ஆகியோர் சீர்திருத்தம், பின்னடைவு என்ற இரண்டிற்கும் இடையிலான அவர்களது ஈடாட்டத்தில் மிகுந்த சுயமுரண்பாடு உடையவர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் இக்கட்டான நிலையொன்றை எதிர்நோக்கினார்கள். சோவியத் சமூகம் முன்னேற வேண்டுமாயின் ஸ்டாலினிச அமைப்புக்களை நீக்கவேண்டுமென்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆயினும் தங்கள் சொந்த நலன்கள் காரணமாக இத்திசையில் விரைவாகவோ, நீண்ட தூரமோ செல்வதற்கு அவர்களால் இயலவில்லை.
இந்த இரண்டக நிலையை ஐசக் டொயிற்ஷர் ட்றொட்ஸ்கியின் வாழ்க்கை சரித நூலின் இரண்டாம் தொகுதியின் முன்னுரையில் கூறியுள்ள ஒரு சம்பவத்தின் மூலம் விளக்க விரும்புகின்றேன். சோவியத் யூனியனில் நிகழ்ந்த விடயங்கள் பற்றிய உண்மையான தகவல்களைப் பெறக்கூடியவராயும், பொறுப்புணர்வு மிக்க ஒரு வரலாற்று ஆசிரியருமாக இருந்த டொயிற்ஷர் தெரிவிக்கும் சம்பவம் ஆதாரபூர்வமானது என நாம் கொள்ளலாம். 1957 யூன் மாதம் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
"மொலடோவ், ககனோவிச் ஆகியோரைச் சுட்டிக்காட்டி “எங்கள் கட்சித் தலைவர்களினதும், எண்ணற்ற அப்பாவி போல்ஷ விக்குகளினதும் இரத்தக்கறை உங்கள் கைகளில் படிந்து உள்ளது" என்று அவர் (குருஷ்சேவ்) கூச்சல் இட்டார். இதற்கு மொலடோவும், ககனோவிச்சும் "உமது கையிலும் தான்" என்று திருப்பிக் கூச்சல் இட்டார்கள். "ஆம் எனது கையிலும் தான் நான் இதை ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் இந்த களையெடுப்புக்கள் நிகழ்ந்த போது நான் உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிய ஒருவன்தான். நான் அச்சமயத்தில் “பொலிட் பியூரோவில் ஒரு உறுப்பினராக இருக்கவில்லை. அதன் முடிவுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல. நீங்கள் தான்" இவ்வாறு கூறினார் குருஷ்சேவ்.
ஸ் டாலினிசத்தைப் புறத்தொதுக்கும் செயல்முறை (De-Stalinisation) தங்கள் கரங்களில் இரத்தக்கறை படியாத இன்னோர் தலைமுறை ஆட்சியாளர்கள் பதவிக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்ததன் காரணம் இதுதான். கொர்பச்சேவ். குருஷ்சேவ் போல் இந்தப் பழைய சுமையைச் சுமந்து கொண்டு வரவில்லை. (கடைசி மொஸ்கோ வழக்கு நடைபெற்ற சமயத்தில் கொர்பச்சேவ் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தார்) குருஷ்சேவ்
8

பதவியிலிருந்து அகற்றப்பட்ட இருபது வருட காலத்துக்குள் சோவியத் யூனியனில் ஒரு முற்றிலும் புதிய தலைமுறை உருவாகி விட்டது. இத்தலைமுறை ஸ்டாலினிசத்தின் இருண்ட காலத்தின் அனுபவங்களை நேரடியாகப் பெறாத தலைமுறை. இத்தலைமுறையினர் கூடியளவில் அரசியல் மற்றும் பொருளியல் சுதந்திரங்களை அவாவி நின்றனர்.
2
கொர்பச்சேவ் காலத்தின் பொருளியல், அரசியல், கலாசார மாற்றங்களின் பிரதான போக்குகளை இப்பொழுது நான் ஆராய விரும்புகின்றேன்.
கொர்பச்சேவ் முன்வைத்துள்ள பொருளியல் சீர்திருத்தங்களில் புக்காரினிச கருத்துக்கள் தொனிக்கின்றன. நிக்கொலாய் ஸ்மெல்யோவ் என்னும் பிரபல சோவியத் பொருளியலாளர் "நொவியிமிர் என்னும் பத்திரிகையில் அண்மையில் எழுதும்போது "லெனினுடைய புதிய பொருளியல் கொள்கையை (N.E.P.) கைவிட்டதன் மூலம் சோவியத் ரஷ்யாவின் சோசலிச நிர்மாணம் பாதிக்கப்பட்டது என்பதை நாம் உணராதவரை 1953லும், 1965லும் செய்தது போன்று அரைகுறை நடவடிக்கைகளையே இப்பொழுதும் செய்ய வேண்டி ஏற்படும்" என குறிப்பிட்டார். ஆனால் கொர்பச்சேவினுடைய புதிய பொருளாதாரக் கொள்கை (N.E.P.) சிறு உடைமையாளர்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு விவசாய பொருளியல் அமைப்பில் செயற்படுத்திய ஒன்று அல்ல. பதிலாக முற்றிலும் கைத்தொழில் மயமாக்கப்பட்ட அரச கட்டுப்பாட்டுப் பொருளியல் அமைப்பிலேயே செயற்படுத்தப்பட்டது. 1920 களின் சோவியத் சமூகத்துக்கும் 1980 களின் சோவியத் சமூகத்துக்கு இடையே ஸ்டாலின் யுகம் அகற்ற முடியாத ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்திருக்கிறது.
கொர்பச்சேவினுடைய பொருளியல் சீர்திருத்தங்கள் இன்றைய சீனக் கொள்கைகளைப் போல பெருமளவில் சலுகைகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு இருக்கவில்லை. Surne gou gGbu (publaou (Family Enterprise)
9

Page 13
சட்டரீதியாக்கியிருப்பது சில காலமாக நடைமுறையில் இருந்துவந்த ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதைக்குறித்து நிற்கின்றது. அதீதமாக மத்திய மயமாக்கப்பட்டதும் அதிகாரி மயமாக்கப்பட்டதுமான (bureaucratised) அரசுடைமைப் பொருளியல் அமைப்பைத் திருத்துவதே கொர்பச்சேவின் பொருளியல் கொள்கையின் பிரதான இலக்காகும். இந்த அமைப்பு விரயம் மிக்கதும் மந்த கதியுள்ளதும் ஆற்றல் அற்றதும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொர்பச்சேவின் முக்கிய பொருளியல் ஆலோசகரும், மத்திய கமிட்டி உறுப்பினருமான பேராசிரியர் அபெல் அகன்பெக்யன் இவ்வாண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்:
"எமது நாட்டில் 48 ஆயிரம் தொழில் முயற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கானவற்றை உடனடியாக மூடிவிடுவதே உத்தமம். இவற்றைத் தொடர்ந்து இயக்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை. இவற்றை ஒழித்து விட்டு புதியனவற்றை நாம் கட்டியெழுப்புவது எளிது. இதனால் எம் வாழ்க்கை மேலோங்கும். இதற்குப் பதிலாக மேலதிக நிதிகளை இந்தப் பிரயோசனமற்ற தொழில் முயற்சிகளை இயக்குவதற்காக செலவிட்டு வருகின்றோம்"
கொர்பச்சேவின் பொருளியல் சீர்திருத்தங்களின் பிரதான இலக்கு தனியார் தொழில் முயற்சிகளுக்குத் தன்னாதிக்கத்தை (Autonomy) வழங்குவதே. அதனால் சந்தைக் கேள்விக்கேற்ப தங்கள் உற்பத்தி இலக்குகளையும், உற்பத்திப் பொருளின் தரத்தையும் தாமே தீர்மானித்துக் கொள்ளும் சக்தியை இத்தனியார் நிறுவனங்கள் பெறும். பேராசிரியர் அபெல் அகன்பெக்யனின் மதிப்பீட்டின்படி 1990ஆம் ஆண்டு நாட்டின் பொருளியளின் 30% பகுதியே அரச கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருக்கும். நாட்டுக்குள் பொருள்சார் முயற்சியின் பிரதான வடிவம் தனித்தனி தொழிற்சாலைகள் பண்ணைகளுக்கும் நுகர்வாளர்களுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மூலம் செயற்படும். இது அரச தலையீடு இன்றி இருக்கும் சோவியத் அரசின் விலைக் கொள்கையில் அடிப்படை மாற்றம் ஒன்றுடன் இது தொடர்பு கொண்டுள்ளது. ஏனென்றால் இதுவரை காலமும் பெருந்தொகையான பொருட்களும் சேவைகளும் மானியத் திட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருந்தன. மானியங்களை நீக்கி தனித்தனிப் பொதுத் தொழில் முயற்சிகளை செலவுக்கேற்றபடி விலையிடச் செய்யும்போது பொருட்களின்
O

விலைகள் உயரும். இதனால் நுகர்வாளர் மீது சுமைகள் கூடும். இவ்விதம் ஏற்படும்பாதிப்புக்களை தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலமும், தனியார் வருமானத்தின் மீதான உச்சவரம்பை நீக்குவதாலும் சமன் செய்யலாம் என கொர்பச்சேவ் கருதுகின்றார். ஆனால் எல்லாத்துறை தொழிலாளர்கள் விடயத்திலும் இவ்விதமான சமன்செய்தலைச் செய்தல் சாத்தியமா என்பது கேள்விக்குரியது. புதிய பொருளியல் கொள்கையின் இந்தப் பிரச்சினையை பொறுத்திருந்து அவதானித்தல் வேண்டும்.
அரசியல் மாற்றங்களை இப்பொழுது கவனிப்போம். முதலில் "கிளாஸ்நொஸ்த்" (Glasmost) ஸ்டாலினிச யுகத்தைத் திரைநீக்கிக் காட்டுவதில் எவ்விதம் செயற்பட்டது என்பதைக் கவனிப்போம். ஒக்டோபர் புரட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவின் போது கொர்பச்சேவ் பேசிய பேச்சு மேற்கு நாடுகளின் தாராண்மை வாதிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப்பேச்சில் ஸ்டாலின் பற்றிய கண்டனத்தில் குருசேவ் 30 ஆண்டுகளுக்கு முன் பேசிய அளவுக்கு மேலாக கொர்பச்சேவ் எதையும் பேசவில்லை. 20ஆவது கொங்கிரசில் குருசேவின் பேச்சையும். 70ஆவது ஆண்டு நிறைவில் கொர்பச்சேவின் பேச்சையும் ஒப்பிடுவதில் ஒரு தவறு இருக்கின்றது. முதலாவது பேச்சு கட்சிப் பேராளர்களுக்கு இரகசியக் கூட்டம் ஒன்றில் நிகழ்த்தியது. சோவியத் மக்கள் இதை பிறர் சொல்லியவாறன்றி நேரடியாகக் கேட்கவோ அறிந்து கொள்ளவோ வாய்ப்பு இருக்கவில்லை. மேலும் குருசேவின் விமர்சனம் ஸ்டாலினுடைய அரசியல் பயங்கரவாதத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மாத்திரம் கண்டித்தது. ட்றொட்ஸ்கிய, லினோவிய, புக்காரினிச எதிாப்பாளர்களை ஸ்டாலின் ஒழித்துக்கட்டிய பின்னர் தமது பலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கமாகத் தனது சொந்தப் பிரிவினருக்குள்ளேயே களையெடுப்பைத் தொடங்கினார். இந்த அம்சத்தினையே குருஷ்சேவ் 20ஆவது கொங்கிரசில் கண்டனம் செய்தார். "சிறந்த அப்பாவிக் கம்யூனிஸ்ட்கள்" என குருசேவ் விபரித்தவர்கள் குறித்த ஒரு பிரிவினர் மட்டுமே, கட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்களைக் களையெடுத்தது தவறில்லை, ஸ்டாலினின் பிற்கால நடவடிக்கைகளே தவறானவை என்பதே குருசேவின் கருத்தாக இருந்தது.
70வது ஆண்டு நிறைவு சமயத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களிலிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி 1920களின் பிற்பகுதியில் நடந்த வெளியேற்றுதல்களின் போதும், 1930களின்
ll

Page 14
களை எடுப்புகளின் போதும் ஸ்டாலினுடைய ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்கள் ஒரளவுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதை அறிகிறோம். உதாரணமாக "ஒக்டோபர் புரட்சிக் கலைக் களஞ்சியம்" என்ற நூலில் ட்றொட்ஸ்கி, லினேவியேவ், காமனெவ், புக்காரின் ஆகியோரையும் இன்னும் பலரையும் பற்றிக் கட்டுரைகள் உள்ளன. அவர்கள் புரட்சியாளர்கள் எனத் தற்போது ஏற்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பங்களிப்பு மறுக்கப்பட்ட காரணத்தினால் சோவியத் மக்கள் றொபெஸ்பியர், டான்ரன், செய்ன்ட் ஜஸ்ட் ஆகியோரை அறிந்திருந்தளவு தம் சொந்த நாட்டின் புரட்சியாளர்களைத் தெரிந்திருக்கவில்லை என வருத்தம் கூடத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் புரட்சிக்குப் பிந்திய காலப் பகுதியின் அரசியல் போராட்டங்களின் போது ட்றொட்ஸ்கியும் பிற எதிர்ப்பாளர்களும் தவறுகளை இழைத்தனர் என்றே இன்னமும் கூறப்படுகின்றது. ஆனால் இப்பொழுது புதிய சிந்தனைப் போக்கு ஒன்று தோன்றியுள்ளது. ட்றொட்ஸ்கி போன்றோரின் தவறுகள் அரசியல் வாழ்க்கையில் இயல்பாகவே எழுவன. அரசியல் முரண்பாடுகள் விவாதங்களின் பயனாக எழுகின்ற இத்தவறுகள் துரோக எண்ணத்துடன் இழைக்கப்பட்டவை அல்ல என்ற கருத்து மேலோங்கி வருகிறது.
ஸ்டாலின் பற்றிய விமர்சனம் தொடர்பாக சோவியத் பத்திரிகைகள் பல தரப்பட்ட அபிப்பிராயங்களைத் தெரிவிக்கின்றன. ஒருமித்த கருத்தை எல்லாப் பத்திரிகைகளும் தெரிவிக்கும் போக்கு இப்பொழுது இல்லை. இது "கிளாஸ்நொஸ்த் யுகத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. புரட்சியின் நினைவு தினக்கூட்டத்தில் கொர்பச்சேவ் ஆற்றிய உரையைவிட தீவிரமான கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. உதானமாக “ஓகொன்யொக்” என்னும் பத்திரிகை அண்மையில் ரஸ்கோல்னிக்கோவ் ஸ்டாலினுக்கு எழுதியபகிரங்கக் கடிதத்தைப் பிரசுரித்திருந்தது. ரஸ்கோல்னிக்கோவ் பல்கேரிய நாட்டில் சோவியத் தூதுவராக பணியாற்றியவர். 1938ஆம் ஆண்டில் அவரை நாட்டிற்குத் திரும்பும்படி ஸ்டாலின் கட்டளை இட்டார். இக்கட்டளையை ரஸ்கோல்னிக்கோவ் நிராகரித்து விட்டு வெளிநாட்டில் தொடர்ந்தும் இருந்தார். தான் நாட்டிற்குத் திரும்பினால் கைது செய்யப்படுவார் என்பது அவருக்குத் தெரியும். அப்பொழுது அவர் ஸ்டாலினுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் ஸ்டாலினை பலவிதமாகக் கண்டித்தார். அதில் ஒருபகுதி வருமாறு:
12

"வெறுப்பும், கழிவிரக்கமும் கொண்டு வேதனையுறும் நிலைக்கு உங்கள் ஆதரவாளர்களை நீங்கள் தள்ளி உள்ளிர்கள். உங்கள் ஆதரவாளர்கள் தங்கள் சொந்த நண்பர்களையும், தோழர்களையும் பழிவாங்கியதற்காக இவ்விதம் வேதனையுற வேண்டியுள்ளது. சோவியத் அறிஞர்களுக்கு குறிப்பாக மனிதப் பண்பியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு சிறிதளவு சுதந்திரம் கூட இல்லை. இதனால் அவர்களால் ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதையும் எழுதவோ, பேசவோ முடியாது. போரின் விளிம்பில் நாம் இருக்கும் இவ்வேளையில் செஞ்சேனையை, தேசத்தின் மதிப்பை, மகிழ்ச்சியை, அதன் பலத்தின் அடிப்படையை நீங்கள் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்".
இந்தக் குற்றச் சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்டாலினால் ஒழித்துக்கட்டப்பட்ட செஞ்சேனையின் உயர் பதவியிலிருந்த உத்தியோகத்தர்கள் பற்றிய தகவலையும் "ஒகொன்யோக்" என்ற பத்திரிகை பகிரங்கமாக வெளியிட்டது. "ஃபீல்ட்மார்ஷல் பதவியிலிருந்த ஐந்து பேரில் மூன்று பேரும், ஐந்து இராணுவத் தளபதிகளில் 3 பேரும், இரண்டாம் தர நிலை ராணுவத் தளபதிகளாக இருந்த 10 பேரும், படையணித் தளபதிகள் 57 பேரில் 50 பேரும், பதிவுப் படையணித் தளபதிகள் 186 பேரில் 154 பேரும் இவ்வாறு ஸ்டாலினால் ஒழித்துக்கட்டப்பட்டதாகப் புள்ளிவிபரங்கள் தரப்பட்டிருந்தன.
இருப்பினும் ஸ்டாலின் காலத்துக் கொடுமைகள் பற்றிய தகவல்களை வெளியிடுவதை விட அண்மைக் காலத்திலும், தற்போதும் சோவியத் நிறுவனங்களில் நிலவும் நடைமுறைகள் பற்றிய சோவியத் பத்திரிகை விமர்சனங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை. "கிளாஸ்நொஸ்த்' யுகம் கொடுத்துள்ள உத்வேகமும், எழுச்சியும் எதிர்பாராத புதிய விடயங்கள் ஆகும், கடந்த சில மாதங்களில் வெளிவந்த "மொஸ்கோநியூஸ்" இதழ்களில் மட்டுமே ஒருவர் பல எடுத்துக் காட்டுக்களைப் பெறமுடியும். முன்னொரு காலத்தில் “மொஸ்கோநியூஸ்" சுவாரசியம் அற்ற பிரசார ஏடாக விளங்கியது. இன்று உயிர்த்துடிப்புள்ள தகவல்களைக் கொண்ட பிரச்சினைக்குரிய செய்தி இதழாக அது மாறிவிட்டது. அப்பத்திரிகையில் ஒரு அரசியல் விமர்சகள் பின்வருமாறு எழுதினார்.
"ஒரு சட்டப் பேராசிரியர் ஒரு பத்திரிகை நிருபரோடு பேசும் போது, தான் ஒரு இராணுவ வீரனைக் கண்டால் வீதியைக் கடந்து
13

Page 15
மறுபக்கத்திற்கு சென்று விடுவதுண்டு என்று கூறினார். இராணுவ வீரன் எதிர்பாராத வகையில் சட்டத்தை மீறிய அத்துமீறல் ஒன்றைச் செய்துவிடுவான் என்ற பயமே அதற்குக் காரணம் என்று அவர் கூறினார். அண்மைக்காலம் வரை இப்படியான அத்துமீறல்கள் சர்வ சாதாரணமானவை. அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தேர்தல்கள் தெரிவுக்கு வாய்ப்பின்மையால் அர்த்தமற்றவையாகி விட்டன. சட்டத்துக்குப் பணிந்து நடக்கும் சமூகம் என்ற கருத்தும் அர்த்தமற்றதாகி விட்டது. தாம் இந்த நாட்டின் பிரஜைகள் என்று மக்கள் கருதுவதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது? பணித்துறை ஆட்சியின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், "கியூ" வரிசையில் காத்திருப்பதுந்தான் "பிரஜைகள்? என்பதன் பொருளாக
புதிய கொள்கைகள் பற்றியும் சோவியத் பத்திரிகைகளில் விமர்சனங்கள் வெளிவருவதுதான் இன்று குறிப்பாக உற்சாகம் தரும் விடயமாகும். உதாரணமாக அனதோலி பிறிஸ்ரங்கின் என்னும் நாவலாசிரியர் ஒரு பத்திரிகையாளருக்குக் கொடுத்த பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார்; "சொன்னதை எழுதுவதும், கட்டளைக்குப் பணிந்து போவதும் வழமையாகி விட்டது. அனுமதிக்கப்பட்டதை எழுதுவதற்குத் துணிச்சல் வேண்டுமா? இதைவிட்டு பேசாமல் மெளனம் சாதிப்பது மேலானது".
நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை இன்றைய சோவியத் பத்திரிகைகளைப் படிப்பவர்கள் உணர்ந்துகொள்வர். இந்தக் கொந்தளிப்பு நிலை மேல் மட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டது தான். அதேவேளை கீழேயிருந்து எழுந்த குமுறல்கள் இந்தக் கொந்தளிப்பினைத் திசைதிருப்பி விடுமோ என்றும் எண்ணவேண்டியிருக்கின்றது. அவை தலைவர்களின் சிந்தனைக்கு முரணான பாதையில் செல்லவும் கூடும். பண்பாடு, சூழல், சமூக சேவை ஆகிய துறைகளைச் சார்ந்த குழுவின் பிரதிநிதிகள் 600 பேர் கூடிய மாநாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அவர்கள் 'கிளாஸ்நொத்ஐ தாம்பூரணமாக ஏற்றுக்கொள்வதாகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்பதாகவும் குறிப்பிட்டார்கள். இருந்தபோதிலும் கீழ் மட்டங்களில் உள்ள ஜனநாயக குழுக்களினால் தான் பழைமையை பேணுகின்ற அலுவலர் ஆட்சியின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென்றும், புதிய கொள்கைகளின் வெற்றிக்கு வழிவகுக்க முடியுமென்றும் கருத்துத் தெரிவித்தனர்.
14

கட்சியைப் பற்றி கூறும் பொழுது அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தனர். "கடந்தகாலத்துத் தவறுகளுக்குப் பொறுப்பானவர்கள். அதிகாரிகளின் அணிகளை உருவாக்கியவர்கள் இன்னும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். மக்களின் தேவைகளிலும், நம்பிக்கைகளிலும் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்ட அடக்குமுறை அதிகாரிகள் கும்பலும் கட்சிக்குள் இருக்கின்றது. ...நாம் கட்சிக்குள் முற்போக்கானதும் ஆரோக்கியமானதுமான தலைமைத்துவ சக்திகளையும் அடிமட்ட ஊழியர்களையுமே ஆதரிக்க விரும்புகின்றோம். இம்மாநாட்டின் போது இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் ஸ்டாலினால் பழிவாங்கப்பட்டவர்களின் ஞாபகர்த்தமாக ஒரு நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்று கூறியது. இரண்டாவது தீர்மானம் தனிப்பட்ட பிரஜைகள் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராகக்கூட தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியது. சுவாரசியமான இன்னுமொரு செய்தி யாதெனில் இந்த மாநாடு உத்தியோக ரீதியாகக் கூட்டப்பட்டதல்ல. ஆனால் கட்சியின் மொஸ்கோ நகரக் கொம்யூனிஸ்ட் கட்சி உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்து கொடுத்த மண்டபத்தில் தான் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டினைப் பற்றி சிாதகமான செய்தியொன்றும் சோவியத் பத்திரிகைகளில் வெளியானது. அதேவேளை மேலே குறிப்பிட்ட இரு தீர்மானங்கள் பற்றி பத்திரிகைகளில் செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த உண்மைகள் கட்சி உத்தியோகத்தர்களுக்கும். வெளியே உள்ள அதிருப்தியாளர்கள். தீவிர மாற்றங்களை வேண்டிநிற்போர் ஆகியோருக்குமிடையே உள்ள உறவுகள் தெளிவற்றதாக இருப்பதையே காட்டுகின்றன.
அரசியலில் கொர்பச்சேவின் அடிப்படையான பிரச்சினை ஒரு கட்சி ஆட்சி வரையறைகளுக்குள் விமர்சனம், கருத்து வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றை அவர் விஸ்தரிக்க முயற்சிப்பதை மையமாகக் கொண்டே அமையப் போகின்றது. தமது புதிய கொள்கைகளை அமுல்படுத்தத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவர் ஒருமுறை இப்படிச் சொன்னார்: "எங்கள் நாட்டில் எதிாக்கட்சி என்பது இல்லை. ஆதலால் கிளாஸ்நொஸ்த் இல்லாமல் நாம் எப்படி முன்னேற முடியும்” இக்கூற்று சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஒருவரால் கூறப்பட்டது என்பது ஆச்சரியத்தைத் தரக்கூடும். ஏனென்றால் எதிர்க்கட்சி இல்லாத நிலை ஒரு குறைபாடு என்ற கருத்து இக்கூற்றில் பொதிந்துள்ளது. நான் முன்பு குறிப்பிட்ட மொஸ்கோநியூஸ் பத்திரிகையின் அரசியல்
15

Page 16
விமர்சகள் தெரிவுக்கு இடமில்லாத தேர்தல்களின் அர்த்தமின்மையைக் கடுமையாக விமர்சித்தார். கட்சியின் ஒரு பதவிக்கு பல வேட்பாளர்களை நிறுவுவதன் மூலம் இக்குறையை நிவர்த்திக்க கொர்பச்சேவ் முயற்சிக்கிறார். ஆனால் இந்த tonby auf silத்ாராண்மை வாதிகள் பலருக்கு ஏற்புடையதாகவில்லை. அவர்கள் தனிப்பட்ட பிரஜைகள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் உரிமையைக் கோரி வருகின்றனர். ஆதலால் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேறு ஸ்தாபனங்களின் வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டியிடும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுவதற்கு நீண்ட நாட்கள் பிடிக்காது.
பண்பாடு, கலைகள் ஆகிய துறைகளில் தான் கிளாஸ்நொஸ்தின் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. கொர்பச்சேவ் புத்திஜீவி வகுப்பினரைத் திருப்திப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அதனால் தான் இத்துறைகளில் கூடியளவு சீர்திருத்தங்கள் ஏற்பட்டன என்று மேற்கு நாட்டு விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். புத்திஜீவிகள் சோவியத் முகாம் நாடுகளில் ஏற்பட்டு வந்த எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வந்தார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவது அவசியம் தான். ஆதலால் இக் கருத்தில் உண்மை இருக்கவே செய்கின்றது. எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு சென்ற முறை நடந்தபோது பத்திரிகைத் தணிக்கை பற்றியும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதுவரை காலமும் தடை செய்யப்பட்டிருந்த இலக்கியப் படைப்புக்களை வெளியிடுமாறும் கோரப்பட்டது. இருப்பினும், சோவியத் யூனியனில் பண்பர்ட்டுத் துறையில் தாராண்மைக் கொள்கையைப் புகுத்துவது ஆய்வாளர்களுக்கு மாத்திரம் தான் முக்கியத்துவமுடையது என்று ஒருவர் தவறாகக் கருதக்கூடாது. சோவியத் சமூகம் கல்வி அறிவில் மிகவும் உயர்ந்து நிற்கின்றது. மக்கள் அறிவு சார்ந்த விடயங்களில் ஆர்வமும், நாட்டமும் உடையவர்களாக இருக்கின்றார்கள். கலைகளின் அரசியல் பாத்திரம் அங்கு எப்போதுமே வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இவ்வாறான ஒரு சமூகத்தில் அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து கலைகளை விடுவிப்பதால் பொது ஜனங்கள் மத்தியில் பெரும் தாக்கம் ஒன்று ஏற்படவே செய்யும். பண்பாட்டு நிறுவனங்கள் மீது அண்மைக் காலத்தில் சோவியத் பத்திரிகைகள் கடுமையான விமர்சனத்தைத் தொடுத்துள்ளன. உதாரணமாக புகழ்பெற்ற சோவியத் பாடகரும், கவிஞருமான புலத் ஒருட்ஸ்வா பின்வருமாறு கூறினார்.
l6

"அயல் நாடுகளையோ உள்நாட்டு எதிரிகளையோ கண்டு புரட்சி அஞ்ச வேண்டியதில்லை. பிலிஸ்ரைன்கள் தான் (Philistines) புரட்சியின் உண்மையான பகைவர்கள் (பிலிஸ்ரைன்கள் என்றால் பண்பாடு. ரசனை. இங்கிதம் இல்லாதவர்கள் என்பது பொருள்) என்று 1919ல் மக்சிம்கோர்க்கி கூறினார். ஸ்டாலினின் காலத்திலும் அதற்குப் பின்னரும் இத்தகையவர்களின் கூட்டம் பெருகுவதற்கான விரிந்த தளம் அமைக்கப்பட்டு விட்டது. பிலிஸ்ரைன் ஒருவன் அமைதியாக இருப்பான் பணிந்து நிற்பான். உக்கிரம் அடைந்துள்ள சமூகப் பிரச்சினைகளில் அவன் தலையிடுவதில்லை. ஆனால், அவன் அதிகாரத்தைத் தேடிப்பிடித்ததும் ஆபத்திற்குரிய ஒருவனாக மாறி விடுகின்றான். எங்கள் சமூகத்தில் பிலிஸ்ரைன்கள் அளவுக்கதிகமாகப் பெருகி விட்டார்கள் என்பதற்கு எமது எழுத்தாளர் சங்கத்தை விட வேறு என்ன எடுத்துக் காட்டு வேண்டும் கூட்டங்களில் எழுந்து இந்த எழுத்தாளர்கள் என்ன பேசுகின்றார்கள் உயர்ந்த தார்மீகக் கருத்துக்கள், இலக்கியப் போக்குகள், கலை நுட்பம், அறக் கருத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி பேசுவதை விடுத்து அவர்கள் எதெதையோ பேசுகின்றார்கள். ஒரு எழுத்தாளர் தமக்கு அளிக்கப்பட்ட கெளரவங்களையும், வழங்கப்பட்ட பட்டங்கள்ையும் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பொருட்படுத்துவதில்லை என்று பிரலாபித்திருக்கின்றார்" (மொஸ்கோ g5gsu Sl.5.87)
நீண்ட காலமாக இரகசியமாக உலவி வந்த தடைசெய்யப்பட்ட ஆக்க இலக்கியங்கள் பல சோவியத் வாசகர்களுக்கு இன்று தடையின்றிக் கிடைக்கின்றனர். இதனால் அவர்களுடைய கடந்த காலம் பற்றிய அரசியல் உணர்வு விரிவடைகின்றது. ஸ்டாலின் காலத்தில் வாழ்க்கை எத்தகையதாக இருந்தது என்பதைப் பற்றிய அவர்களுடைய அனுபவம், ஆழம் பெறுகின்றது. "அன்னா அஹ்மதோவாவின் அரிய படைப்புக்கள் இவற்றுள் குறிப்பிட்டுச் சொல் லக் கூடியவை. இப் படைப் புக் கள் இன்று வெளிக்கொணரப்பட்டுள்ளன. அன்னாவின் மகன் ஸ்டாலின் களையெடுப்புக் காலத்தில் சிறையிடப்பட்டார். அப்போது அன்னா எழுதிய கையறுநிலைப் பாடல்கள் (Requim) 50 ஆண்டுகளுக்குப் பின்னர்/ முதன்முறையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் பிரசுரிக்கப்பட்டுள்ள இரண்டு புனைகதைகள் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவை இரண்டும் எழுதப்பட்ட காலத்தில் பிரசுரிக்கமுடியாது தடை செய்யப்பட்ட நூல்கள். ஒன்று அனதோலி றைபக்கோவ் எழுதிய "அர்ஃபத்தின குழந்தைகள்'
7

Page 17
என்னும் நவீனமாகும். இக்கதை ஸ்டாலின் காலத்தில் கட்டாய உழைப்பு முகாம்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பது. இதைத் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு றைபக்கோவ் எழுதினார். 1966ம் ஆண்டில் இக்கதை நொவிடமிர் இல் பிரசுரிக்கப்பட இருப்பதாக ஒரு அறிவித்தல் வெளிவந்தது. ஆனால், குருஷ்சேவ் கவிழ்க்கப்பட்டதும் அரசியல் சூழ்நிலை மாறியதனால் இது அப்பொழுது பிரசுரிக்கப்படவில்லை. இவ்வாண்டுதான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அனதோலி பிறிஸ்தாவ்கின் எழுதிய "பொன்முகில் அங்கே துயில்கிறது" என்னும் கதை யுத்த கால நிலையை பின்னணியாகக் கொண்டது. செசென் (Chechen) இனத்தவர்கள், அவர்களில் சிலர் யுத்த காலத்தில் நாஜிகளோடு ஒத்துழைத்தார்கள் என்ற காரணத்திற்காக ஸ்டாலினால் சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள். அதைப் பின்னணியாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டது. 1981ல் எழுதப்பட்ட இந்நாவலைப் பிரசுரிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இப்போதுதான் பிரசுரமாகி உள்ளது. குரூஷ்சேவ் காலத்திலும" பிறஷ்நேவ் காலத்திலும் கூட தடைசெய்யப்பட்டிருந்த மறைக்கப்பட்டிருந்த எத்தனையோ திரைப்படங்களும் இப்போதுதான் வெளியிடப்படுகின்றன. சிறந்த திரைப்பட நெறியாளரான அந்த்ரே தார்கோவ்ஸ்கி மேற்கு நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்றார். பழைமைவாத கலாசார அதிகாரிகளின் தொல்லைகளிலிருந்து தப்புவதற்காகவே நாட்டை விட்டு அவர் வெளியேறினார். இவரைத் திரும்பி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் திடீரெனக் காலமாகி விட்டார். அவருடைய திரைப்படங்கள் மொஸ்கோ திரைப்பட விழாவில் இவ்வாண்டு திரையிடப்பட்டன. சோவியத் நாட்டின் மிகச் சிறந்த திரைப்பட நெறியாளர் என அவர் புகழப்பட்டார்.
சென்ற ஆண்டு நிகோலாய் குமில்யோவினுடைய கவிதைகள் ஒரு பெரிய தொகுதியாக வெளியிடப்பட்டன. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. ஏனெனில் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கொலை செய்யப்பட்ட எழுத்தாளர்தான் நிக்கோலாய் குமில்யோவ். இவர் ஸ்டாலின் காலத்தில் அன்றி லெனின் காலத்தில் கொல்லப்பட்டவர். அவரின் கவிதை நூல் இன்று பிரசுரமாகியுள்ளது. விளாடிமிர் நபகோவின் நாவல்களும், சிறுகதைகளும் அண்மையில் பிரசுரிக்கப்பட்டன. இவர் சோவியத் நாட்டைவிட்டு வெளியேறியவர். புரட்சிக்குப் பிந்திய கால எதிர்ப்பாளர்களில் முதல் தலைமுறையைச் சார்ந்தவர். இவர்
18

தீவிர சோவியத் எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஜோசஃப் புறொட்ஸ்கி என்னும் எழுத்தாளர் யாதொரு வேலையும் இல்லாமல் சமூகத்தில் ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்தினார் (Social Parasitism) என்று குற்றஞ் சாட்டப்பட்டு கட்டாய சேவை முகாமுக்கு அனுப்பப்பட்டார் (கிரமமான தொழில் பார்க்காத யாரும் இவ்வாறு தண்டிக்கப்பட வாய்ப்பிருந்தது). பின்னர் இவர் நாடு கடத்தப்பட்டார். அமெரிக்காவில் வாழ்ந்த இவர் சோவியத் யூனியனை மிகவும் கடுமையாக தாக்கி எழுதி வந்தார். அணுஆயுத பரிகரணம் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கும் பொழுது மேற்கு நாடுகளை அது வலுவிழக்கச்செய்யும் என அவர் கூறினார். புறொட்ஸ்கிக்கு பின்னர் நோபல் பரிசு கிடைத்தது. அவர் ஒரு சிறந்த கவிஞர் அப்பரிசுக்குத் தகுதியானவர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் நோபல் பரிசின் வரலாற்றை TTLLTTTLLLLLT S LLLTLaLaG aLLL LLa L S LTaTTTL TTLCTTTT எதிர்ப்பாளர்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியாது. பஸ்ரநாக் நோபல் பரிசு பெற்ற போது பெரும் சச்சரவு கிளம்பியது. இதே போன்ற சச்சரவு ஒன்று புறொட்ஸ்கிக்கு பரிசு கொடுத்தபோது சோவியத் யூனியனில் தோன்றும் என பலர் எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் அப்படி நிகழவில்லை. நொவியமிர்" பதிப்பகம் இவரின் கவிதைத்தொகுதி ஒன்றை வெளியிடுவதற்கு முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. புறெர்ட்ஸ்கி சோவியத்நாட்டின் பிரஜையாக இருந்தபொழுது அவர் கவிதைகளைப் பிரசுரிப்பதற்கு சோவியத் பிரசுராலயம் எதுவும் முன்வரவில்லை. இப்பொழுது அவர் சோவியத் நாட்டில் இல்லாமல் வெளிநாட்டுப் பிரஜையாக இருக்கும்போது அவருடைய கவிதை நூல் சோவியத் நாட்டில் பிரசுரமாகப் போகின்றது. இது ஒரு வேடிக்கையான சூழ்நிலை, வெளிநாட்டில் வாழும் சோவியத் எதிர்ப்பாளர்களின் ஆக்கங்கள் பிரசரிக்கப்படுவது சோவியத் அரசு சார்பான புத்திஜீவிகள் மத்தியில் குமைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கோர்க்கி, மயோகோவ்ஸ்கி, சோலகோவ் போன்ற இலக்கிய முடிசூடா மன்னர்களின் அந்தஸ்து நபகோவ், குமில்யோவ் கொடசேவிச் (இவர் பிறிதொரு முன்னணிக் கவிஞர் ஆவார். இவருடைய நூல்கள் இப்போது மறுபிரசுரம் செய்யப்படுகின்றன) போன்றோரால் மறைந்து விடப்போகின்றது என்று அவர்கள் பயப்படுகின்றார்கள். இத்தகைய விமர்சனங்களுக்குப் பதில் அளித்து ஒரு எழுத்தாளர் பின்வருமாறு எழுதினார். "நபகோவ், கொடசேவிச் ஆகியோர் சோசலிச அமைப்பை ஏற்காதவர்கள் என்று ஆதங்கத்துடன் எழுதப்படுகின்றது. உண்மையில், யதார்த்தம் கற்பனையான திட்டங்களை விடசி
19

Page 18
சிக்கல் வாய்ந்தது. ஒரு முற்போக்கான சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளாத - 95aupnrab JoyGA50 au Goeyvaesia) ApsbAs கலைஞராகவும் இருக்க முடியும்". (மொஸ்கோ நியூஸ் 7.6.87) இக்கூற்று சோவியத் இலக்கியத் துறையில் ஒரு புதிய திருப்பத்தின் அடையாளமாகும். எல்லாவற்றையும் விட கொம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டுச் சஞ்சிகையான கொம்யூனிஸ்டின் சமீபத்திய இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை பண்பாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மிகுந்த நாடகப் பாங்கான மாற்றத்தை மிக வெளிப்படையாக காட்டியுள்ளது. இவ்வறிக்கை கடந்த 50 ஆண்டு களாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த அதிகாரபூர்வமான கலாசாரக் கொள்கைகளுக்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள்.ஆய்வறிவாளர்கள் ஆகியோரிடம் கட்சி பகிரங்க மன்னிப்புக்கோரும் பாங்கில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. "சோவியத் யூனியனின் பலம் அதிகரிக்க அதிகரிக்க பண்பாட்டுத் துறையைச் சார்ந்த திணைக் களங்களும் , அரச நிறுவனங்களும் மிகவும் கோழைத்தனமாகச் செயற்படத் தொடங்கின. புத்திஜீவிகளையும் அவர்களது படைப்புக்களையும் சந்தேகக் கண்கொண்டு இவை நோக்கத் தொடங்கின" என இவ்வறிக்கை கூறுகிறது. "புத்திஜீவிகளே! லெனின் காலத்தைப் போன்று கட்சி மீண்டும் உங்களை அழைக்கின்றது. நீங்கள் எம்மோடு சேருங்கள்; நம்பிக்கையோடும். புரிந்துணர்வோடும், நாம் ஒன்று சேர்ந்து உழைப்போம். கட்டளை இடுவதும், தாழ்ந்து பணிவதும், பொய்மைகள் கூறுவதும் எமக்கு வேண்டாம். பழைய நிர்வாகக் கெடுபிடி முறைகளையும், வழக்கங்களையும் ஒழிப்போம்” என இவ்வறிக்கை புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. ஆக்கக் கலைகள் விடயத்தில் லெனின் வழியை கட்சி கடைப்பிடிக்கும் என்றும் இவ்வழியில் பிரசுரங்களை தணிக்கை செய்வதற்கும் , எழுத்தாளர்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குவதற்கும் இடமில்லை என்றும் இந்தப் பிரகடனம் தெரிவித்தது.
3
"கொர்பச்சேவின் சீர்திருத்தங்கள் நிலைக்குமா? அல்லது குருஷ்சேவை போன்று அவர் தூக்கி எறியப்படுவுாரா? அல்லது பின்வாங்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவாரா? இக்கேள்விகளுக்கு விடையளிப்பதோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன்
2O

இக்கேள்விகளைப் பொறுத்தவரை மார்ட்டின் வோக்கள் என்னும் எழுத்தாளர் கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ள கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். மேற்கு உலகின் துண்மதி படைத்த பத்திரிகையாளர்களில் மார்ட்டின் வோக்கரும் ஒருவர். கொர்பச்சேவ் ஆட்சியில் தொடர்ந்து இருப்பார் என்ற நம்பிக்கையை மொஸ்கோவில் இருந்து அண்மையில் அவர் தெரிவித்துள்ளார். குருஷ்சேவை விட தான் திறமைமிக்க அரசியல்வாதி என்பதை கொர்பச்சேவ் இதுவரை நிரூபித்தள்ளார். குருஷ்சேவ் தனது சீர்திருத்தங்களை மேலிலிருந்து கீழ் நோக்கிச் செயற்படுத்தினார். ஆனால் கொர்பச்சேவ் தனது சீர்திருத்தங்களுக்கு பொது மக்களின் ஆதரவை. கீழ் மட்டப் பலத்தைக் கட்டி எழுப்பி வருகின்றார். கொர்பச்சேவ் உட்கட்சிச் சதி ஒன்றின் மூலம் தூக்கி எறியப்பட்டாலும் கூட அவரின் கொள்கைகளுக்கு ஏற்படும் பின்னடைவு தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்கும். அவரது மாற்றங்களின் பொதுப் போக்கினைத் தடுத்து நிறுத்த முடியாது. அவை மீண்டும் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும். ஏனெனில் "கிளாஸ்நொஸ்த்தும்" பெரல் ரொய்க்காவும் முற்றிலும் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை சோவியத் சமூகத்தின் வளர்ச்சியின் தவிர்க்க முடியாத்தேவைகளால் உருவாக்கப் பட்டவை. ஜனநாயகமயப்படுத்தல் இல்லாது சோவியத் சமூகம் இன்று முன்னோக்கிச் செல்லுதல் சாத்தியம் இல்லை.
-J987
2.

Page 19
தொடரும் ஒரு விவாதம்
கடினமான உரையாடல் மார்க்சியமும் தேசியவாதமும்
ஒரு பிரபலமான பெல்ஃபாஸ்ட் குடியரசுவ்ாதியின் பின்வரும் மேற்கோள் இந்நூலின் முற்கூற்றாகத் தரப்பட்டுன்னது.
"அயர்லாந்தின் வலிமைமிக்க அம்சம் தேசியவாதமாகும். அதுதான் உலகத்திலேயே வலிமை மிக்கதென நான் கருதுகிறேன். பல்வேறு நாடுகளில் தேசியவாதத்துக்காக இறந்தோர் பலகோடி. இங்கிலாந்தில், ரஷ்ஷியாவில், ஜெர்மனியில், அமெரிக்காவில் எண்ணிறந்த கோடி மக்கள் இறந்துள்ளர். ஆனால் சோசலிஷத்துக்காக இறந்தோர் மிகச் சிலரே. என்னுடைய அனுபவத்தின் படி உலகம் முழுதும் மக்கள் தமது நாட்டுக்காக இறப்பார்கள். ஆனால் அவர்கள் ஒரு "இலத்”துக்காக இறக்கத் தயாராக இல்லை".
இந்த மேற்கோள் கலாநிதி றொனால்டோ மங்க் அவர்களது நூலின் பிரதான விவாதத்துக்கு இட்டுச்செல்கிறது. அது வருமாறு: மார்க்சியவாதிகள் தேசியவாதத்தின் வலிமையையும் ப்ற்றுறுதியையும் பாரம்பரியமாகக் குறைத்து மதிப்பிட்டு வந்துள்ளார்கள். இப்படிக் குறைத்து மதிப்பிடும் தன்மை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படைச் சிந்தனையில் இருந்த த்வற்றின் விளைவாகும். முதலாளித்துவம் உலகச் /சந்தைக்குள் எல்லா மக்களையும் உள்ளிழுப்பதன் மூலம் உலகத்தை ஒன்றிணைப்பதோடு தேசிய வரம்புகளை உடைத்தும் விடுகின்றது என்பதே அவர்களின் தவறான கருதுகோளாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கு சமச்சீர் அற்றது என்பதையும் பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும் இடையே வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் அது தேசியவாதத்துக்குப் புத்துயிர் அளிக்கும் என்பதையும் மார்க்சும் . ஏங்கல்சும் தங்கள் சொந்தச் சிந்தனை வரைவுக்குள்ளே ةL- முன்னுணரத் தவறிவிட்டார்கள். மங்க் தனது தொடக்கஅந்தியாயத்தில் ஆசிரியர் - றொனால்டோ மங்க், வெளியீடு : செட் நூல்கள் (வரை) 1996 பக்கங்கள் : 184
22

மார்க்சும் ஏங்கல்சும் "வரலாற்று அடிவழிவந்த" "வரலாற்று அடிவழிவராத" தேசங்கள் என வேறுபடுத்தியதன் மூலம் எந்த அளவுக்குத் தேசியவாதத்தைத் தாழ்த்தினார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னையவை வரலாற்று வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் முன்னணியில் இருந்தவை. பின்னையவை பின்தங்கி, சாத்தியமான "தேசிய அரசு"களைக் கட்டி எழுப்ப முடியாமல் இருந்தவை. முன்னையவையின் நாடு பிடிக்கும் படலத்துக்குப் பின்னையவையை இரையாக்கும் நடவடிக்கையை ஆதரிப்பதற்கு இந்த வேற்றுமை பயன்படுத்தப்பட முடியும். இவ்வகையில் "நாகரிகத்தின் அக்கறை காரணமாகவே "சோம்பேறி மெக்சிகோகாரர்களிடமிருந்து கலிபோர் னியாவை "பலமுள்ள யாங்கிகள் கைப்பற்றினர். என்று ஏங்கல்சும் வாதிடக்கூடும். எவ்வாறாயினும் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஐரிஷ் மக்களின் போராட்டமும் ரஷ்யப் பேரரசின் அடிமைப்பட்ட மக்களின் போராட்டமும் மார்க்சியத்தின் மூலவர்களான இவ்விரு வரையும் தேசியவாதம் பற்றிய தமது கருத்துக்களை மாற்றிக்கொள்ள வைத்தன. ஆயினும், மங்க் எடுத்துக்காட்டுவது போல (தளிவற்ற சுய முரண்பாடு கொண்ட முதுசத்தையே அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றுள்ளனர்.
தேசியவ்ாதம் பற்றிய "சரியான" மார்க்சிய நிலைப்பாட்டை உருவாக்கினார் என்று வைதிக மார்க்சிய வாதிகள் பொதுவாக லெனினுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். மார்க்சிய சிந்தனையில் முதல் முறையர்க லெனினே "தேசிய இனப்பிரச்சினையின் சார்புநிலைத் தன்னாதிக்கத்தை" அங்கீகரித்தார் என்பதை மங்க் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் தேசியவாதம் பற்றிய லெனினின் சிந்தனையின் எல்லைப் பாடுகளை அவர் தெளிவாக வெளிக்காட்டியுள்ளார். லெனின் தேசியவாதம்பற்றிய கோட்பாட்டுக்கு ஒரு முழுமையான தெளிவான கோட்பாட்டு ரீதியான வடிவத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை அது அரசியல் செயற்பாடு சார்ந்த ஒரு நடைமுறைப் பிரச்சினையே. அடிப்படையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வர்க்கப் போராட்டத்தின் பங்காளிகள் என்ற வகையில் மட்டுமே முக்கியத்துவம் உடையன. தேசங்கள் ஒரு மாறும் காலத் தோற்றப்பாடாகும். சோஷலிசத்தின் கீழ் அவை மறைந்துவிடும் என்று அவர் நம்பினார். மேலும், மத்தியப்படுத்தப்பட்ட ஒரு பெரிய நாடே வரலாற்று முன்னேற்றத்துக்குரிய வாகனம் என்பது லெனினின் சிந்தனையில் ஊன்றிப் போயிருந்த உள்ளார்ந்த ஒரு அம்சமாய் இருந்தது.
23

Page 20
தேசியவாதம் பற்றி லெனின் கொண்டிருந்த நிலைப்பாட்டில் உள்ளடங்கி இருந்த முரண்பாடுகள் புரட்சிக்குப் பின், வெளிப்படத் தொடங்கின. உக்ரேனிய, ஜோர்ஜிய தேசிய இனங்கள் ஒக்டோபர் புரட்சி அவர்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்த சுயநிர்ணய உரிமையையும், பிரிந்து செல்வதையும் வலியுறுத்த முற்பட்டபோது இவை வெளி அரங்குக்கு வந்தன. இதனால் சோவியத் குடியரசு எதிர்நோக்கிய பிளவைத் தவிர்க்க போல்ஷெவிக்குகள் இராணுவ ரீதியாகத் தலையிட்டனர். ஆனால் இத்தலையீட்டினால் லெனின் அடைந்திருந்த மனக்கலக்கத்தை மங்க் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திர (மென்ஷெவிக்) ஜோர்ஜியக் குடியரசை அடக்கி ஒடுக்கியதன் விளைவாக லெனின் இறப்பதற்கு முன் ஜோர்ஜியா பற்றிய கொள்கை தொடர்பாக லெனினுக்கும் ஸ்டாலினுக்குமிடையில் ஒரு மோதல் ஏற்பட்டது. நோய்வாய்ப்பட்டதால், 1923ஆம் ஆண்டின் பன்னிரெண்டாவது கட்சி மாநாட்டில் "பாரிய ரஷ்ய வகுப்புவாதத்தை" எதிர்க்கும் பொறுப்பை ட்றொட்ஸ்கியிடம் விட்டுவிட்டார். ஆனால் இந்தப் பணியைச் செய்ய ட்றொட்ஸ்கி தவறிவிட்டார். அதற்கு ஒரு காரணம் மங்க் சுட்டிக்காட்டுவது போல அவருக்கே தேசியவாதத்தில் அநுதாபம் இருக்கவில்லை என்பதாகும்.
ஒட்டுமொத்தமாக ஒரு சோஷலிச அரசைக் கட்டி எழுப்பும் முயற்சிக்கும், தேசிய சுய நிர்ணய உரிமைக்கும் இடையில் இணக்கம் காண லெனின் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றே சொல்ல வேண்டும். தேசியப் பிரச்சினை தொடர்பான அவரது கொள்கைகளைத் தொகுத்த வரும் பெரும் ரஷ்ய மேலாதிக்கத்தின் கீழ் சோவியத் அரசை மிக மோசமான முறையில் மத்திய மயப்படுத்துபவராகவே மாறினார். இந்தத் தோல்விக்கான காரணங்களை மங்க் திருப்திகரமாக ஆராயவில்லை என்பது என்னுடைய அபிப்பிராயும். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தேசியவாதம் பற்றிய லெனினது சிந்தனையின் மட்டுப்பாடுகளுக்கு மேலாக ஒருமுகப்பட்ட ஒரு கட்சி ஆட்சிக் கட்டுக்கோப்பிற்குள் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பான ஒரு ஜனநாயகக் கொள்கை இறுதியில் சாத்தியமாகாது என்ற உண்மையை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதுவும் தன் உள்ளமைப்பில் கூட இறுக்கமாக மத்தியப்படுத்தப்பட்ட ஒரு கட்சியால் இது சாத்தியமில்லை.
1917 க்குப் பின் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட வெற்றிகரமான எல்லா சோஷலிசப் புரட்சிகளும் அடிப்படையில்
24

தேசிய விடுதலைக்கான போராகவே இருநதன. (ரஷ்யப் புரட்சியைப் பொறுத்தவரையில் புரட்சிக்குப் பிந்திய காலத்திலேயே தேசியவாத அம்சம் முதன்மை பெற்றது- மேலும் அது விடுவிப்பதற்குப் பதில் ஒடுக்குவதாகவே இருந்தது) மங் தன் நூலின் பிற்பகுதியில் மூன்றாம் உலக நாடுகளில் மார்க்சியத்துக்கும் தேசியவாதத்துக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியே ஆராய்கின்றார். “வரலாற்று அடிவழி வராத நாடுகள் என்று மார்க்சும், ஏங்கல்சும் கருதிய நாடுகளே சோஷலிசத்துக்காக முன்னணியில் நிற்கும் முரண்நிலைத் தோற்றப்பாட்டை அவர் தன் ஆய்வில் எடுத்துக் காட்டுகிறார்.
இருப்பினும் ஐரோப்பாவை மையமாகக் கொண்ட மார்க்சியத்தின் முன்னைய நிலைப்பாட்டின் தலைகீழ் மாற்றம் சோஷலிச உலகுக்குள்ளேயே பகைமை கொண்ட தேசியவாதங்களை எதிர்கொள்ள வைத்து மார்க்சியவாதிகளைக் குழப்பத்துக்குள் ஆழ்த்திற்று. சீனா, கம்பூச்சியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட போர்கள் இந்தக் குழப்ப நிலையைத் தந்தன. இந்த நிலையைப் பற்றி மங்க் பின்வருமாறு சொல்கிறார்: "இறுதியாக இந்தோசீனப் போர்களுக்கு தேசியவாதத்தில் போதுமான விளக்கம் காண முடியாது. முதலாவது உலகப் போருக்கும் அது காரணமாக இருந்ததில்லை. வெவ்வேறு தேசிய இன மக்கள் மட்டத்தில் அவர்களுக்கிடையில் எதிர்ப்புகள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. இத்தேசிய இனங்கள் எல்லாமே குடியேற்றவாதத்துக்கு எதிராக கூட்டாகப் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. (பக்-140) இறுதியாக இந்தப் போர்கள் அந்தந்த நாடுகளின் அதிகாரத்துவ அடுக்கின நலன்களுக்காகவே நடைபெற்றதாக அவர் கூறுகிறார். இந்த இலகுவான முடிவு நூலின் வேறு ஒரு இடத்தில் கூறப்பட்டுள்ள கருத்துடன் முரண்படுகிறது. அங்கே அவர் கூறுவது எத்தகைய அரசியல் தந்திரோபாயத்தைக் கையாண்டாலும் குறிப்பிட்ட தேசிய அரசுகள் என்ற சட்டகத்துக்குள்ளேயே மார்க்சியவாதிகள் செயற்படுகிறார்கள்: தொழிலாளர்கள் தமது குறிப்பிட்ட தேசிய இனம் ஒரு யதார்த்தமானது என்பதை உணர்கிறார்கள்; வரலாற்று சக்தி என்றவகையில் தேசியவாதம் நிறைந்த ஆற்றல் கொண்டுள்ளது" (பக்கம் 139)
எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய முற்றிலும் சொந்தமான ஆய்வை இந்த நூல் கொண்டிருக்காவிட்டாலும், நிறைந்த தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது. முக்கியமாக, புறநிலைப்
25

Page 21
பார்வை கொண்டுள்ளது. மங்க் ஒரு மார்க்சியவாதிதான்ஆனால் கண்மூடிப் பின் செல்பவரல்லர். மார்க்சியத்தின் எந்தப் பிரிவுக்கும் அவர் கட்டுப்பட்டவராகத் தெரியவில்லை. கருத்தியல், கலாசாரக் காரணிகளின் "சார்பு நிலைத் தன்னாதிக்கத்தை மங்க் கொள்கை அளவில் அங்கீகரித்தாலும், குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்கள் பற்றிய தன் ஆய்வுகளில் அவற்றுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே இந்த நூல் பற்றிய எனது முக்கியமான விமர்சனமாகும்.
26

அதிகாரத்தின் வாயில்கள்
அலெக்சாண்டர் பெக் என்பவர் எழுதிய நோவோ நாஸ்னாச்சேனி (புதிய நியமனம்) என்ற நாவல் (சோவெற்ஸ்கி, பிசற்றெல், மொஸ்கோ. 1988) தொடக்க ஆண்டுகளில் தடைசெய்யப்பட்டு கிளாஸ் நொஸ்த் யுகத்தில் சோவியத் வாசகர்களுக்குப் படிக்கக் கிடைத்துள்ள அநேக இலக்கியப் படைப்புக்களில் ஒன்றாகும். நூலின் ஈற்றில் ஒரு குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதில் நூல் வெளியீட்டு வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நூலாசிரியரின் குறிப்பேட்டிலிருக்கும் சில பகுதிகள் தரப்பட்டுள்ளன. "நாவலைப் பற்றிய ஒரு நாவல்” என்ற தொனியில், பெக் அவர்களே. இந்த நாவலை வெளியிடத் தான்பட்ட நீண்ட சிரமங்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த நாவலை அவர் 1960-1964 காலப்பகுதியிலேயே எழுதினார். இது குருஷேவ் காலமாகும். அவரது குறிப்பேட்டில் அசாதாரணமான ஒரு தற்செயல் நிகழ்வைக் குறிப்பிடுகிறார். நாவலை எழுதி முடித்துவிட்டு, அந்தப் பிரதியை எடுத்துக்கொண்டு. அதனை வெளியிடும்படி "நோவமிர்" என்ற சஞ்சிகை அலுவலகத்துக்கு ஒருநாள் பிற்பகலில் சென்றார். அப்போதுதான் குருஷேவும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தார். இந்நிகழ்வின் தாக்கத்தால் தனது நாவலுக்கு ஏற்படக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை அவர் அப்பொழுது உணரவில்லை. சுமார் ஒரு மாதத்தின் பின்னர். இந்த நாவலின் முக்கிய பாத்திரம் முன்னாள் சேலரியத் அலுவலர் ஒருவரை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது என்று அவரின் விதவை எதிர்ப்புத் தெரிவிப்பதாக பெக்கிடம் கூறப்பட்டது. பெக் இதை மறுத்தார். ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நாவல் வெளியிடப்படவில்லை. ஒருவேளை இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். 1969இல் மொஸ்க்வா என்ற ஏட்டின் பிரதம ஆசிரியர் எம். அலெக்சீவ் அவர்களிடமிருந்து பெக்கிற்கு ஒரு கடிதம் வந்தது. அவர் இலக்கிய நிறுவனத்தில் சக்திமிக்க ஒருவர். அக்கடிதம் பின்வருமாறு கூறியது.
27

Page 22
"அதன் அடிப்படைக் கருத்து எம்மால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள Cupg-ustapg). A.
நாவலின் சாராம்சம் இதுதான்: ஸ்டாலினுடன் வேலை செய்தவர்கள் அவரை நம்பியவர்கள் எல்லாரும் வரலாற்று ரீதியாக பழிகுழப்பட்டவர்கள். அவர்கள் எல்லோருமே மாற்ற முடியாத ஒரு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள். ஒனிசிமோவ் என்ற பாத்திரம் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் தலைவரிடமிருந்து எட்ட நின்றவர்கள் அவரை உள்ளூர சந்தேகப்பட்டவர்கள் நாட்டின் வருங்காலத்தை தம்முள் கொண்டிருந்தவர்கள். (இளைய கொலோவ்னியாவான செலிஷேவ்)"
இந்தக் கடிதம் உள்ளந்தரங்கத்தை வெளியே கக்கிவிட்டது. பெக்கின் நாவல் ஸ்டாலினிச நீக்கத்தின் எதிர்த்திசை நோக்கிய திருப்பத்திற்குப் பலியானது. 1971இல் இந்த நாவலின் நகல் எப்படியோ வெளிநாட்டுக்குச் சென்று மேற்குலகில் வெளியிடப்பட்டது. பெக் 1972இல் இறந்தார். 1986இல் புதிய நடைமுறை வந்தபின் "ஸ்நாமியா" என்ற சஞ்சிகையில் இந்த நாவல் தொடராக வெளியிடப்பட்டது. இப்பொழுது அது நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாமல், நூலின் வரலாறு அதனை அனுதாபத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஒருவரை அணுகத் தூண்டுகிறது. எனினும் நோவோ நாஸ்னாச்சேனி ஒரு பிரமாதமான நாவல் என்று என்னால் சொல்ல முடியாது. நடையிலோ அல்லது மனித உறவுகளை கையாள்வதில் அது காட்டும் ஆழத்திலோ அது சிறப்புப் பெற்றதாக இல்லை. அறியப்படாதவற்றை வெளிப்படுத்து தன்மை கொண்ட தகவல்சார் புனைகதை என்பதே அதன் பலமாகும். வடிவத்திலும் இலக்கியத்தரத்திலும் அதனை சி.பி. ஸ்நோவின் புனைகதைகளுடன் ஒப்பிடலாம். அதிகாரத்துவ எந்திரத்தின் செயற்பாடு, அதிகாரத்தின் வாயில்களில் நடக்கும் சுற்றுமாற்றுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஸ்நோவைப் போலவே, பெக்குக்கும் ஒரே மாதிரியான அக்கறை இருந்தது. அதுபோல கற்பனை, இலக்கிய ஆற்றல்களில் ஸ்நோவுடன் அவரை பெரிதும் ஒப்பிடலாம். பாதுகாக்கப்பட்டுள்ள கேம்பிரிட்ஜ் உலகத்தைப் போலல்லாது அறுபதுகளில் இருந்த சோவியத்
28

ஒன்றியத்தில் இத்தகைய நாவலை எழுத அதிகம் துணிவு வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய பாத்திரமான ஒனிசிமோவ் ஒரு பொறியியலாளர்மனம் வைத்து வேலை செய்பவர்; அதிகாரிகளுக்கு விசுவாசமாண்வர் மக்கள் கொமிசாராக உயர்கிறார். இந்த நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஒனிசிமோவுடன் தொடர்புடைய ஒரு பாத்திரமாக ஸ்டாலின் இடம் பெறுவதாகும். அதிகார பீடத்தில் இருந்த இன்னொரு ஜோர்ஜியரான ஒட்சோநிக்கிட்சேயின் சீடனாக ஒனிசிமோவ் இருந்தவன். ஸ்டாலினுடைய படத்தையும் ஒட்சோநிக்கிட்சேயின் படத்தையும் ஒன்றாகத் தனது இல்லத்தில் தன் இறுதிநாள்வரை தொங்க விட்டிருந்தான். இந்த நாவலில் ஸ்டாலினின் பாத்திரப்படைப்பு சற்று பூடகமாகக் கையாளப் பட்டுள்ளது. தனது சகோதரனும் அவன் மனைவியும் களையெடுப்புக் காலத்தில் சிறையில் இறந்த போதிலும் ஒனிசிமோவ் ஸ்டாலினுக்கு விசுவாசமாகவே இருந்தான். இரகசியப் பொலிஸ் படையின் சக்திவாய்ந்த தலைவன் பெரியா தன்மீது கொண்டிருந்த வஞ்சத்தில் இருந்து தலைவர் தன்னைக் காப்பாற்றியதால் தான் ஸ்ட்ாலினுக்குக் கடமைப்பட்டிருப்பதாக அவன் உணர்ந்தான். நெடுங்காலத்துக்கு முன்பு ஒரு மாகாணத்தில் ஒரு பணியை மேற் கொண்டிருந்த பொழுது, அப்பொழுது அநாமதேயப் பேர்வழியாக இருந்த பெரியாவுக்கு கட்சி அடையாள அட்டை கொடுக்க ஒனிசிமோவ் மறுத்துவிட்டான். எனினும் ஒனிசிமோவ் ஸ்டாலினுடன் கொண்டிருந்த உண்மையான நடைமுறை உறவுகளைப் பார் தீது, அச்சர்வாதிகாரியைப் பற்றி ஒனிசிமோவ் கொண்டிருந்த படிமத்தில் இருந்து வேறுபட்ட ஒரு படிமத்தை உருவாக்கிக் கொள்ளவே வாசகள் தூண்டப்படுகிறார். 1938 இல் ஒருநாள் தன் மேற்பார்வையில் இருந்த தொழிற்சாலைகளைப் பார்வையிட்டபின் மொஸ்கோவுக்குத் திரும்பிய ஒனிசிமோவ் ஒட்சோநிக்கிட்சேயைச் சந்திக்க அவரது வீட்டுக்குப் போனான். அவர்களுக்கிடையிலான உரையாடல் குழம்பியது. அவர்கள் பேசிக்கொண்டிருந்த படிப்பறைக்கு வெளியே ஒட்சோநிக்கிட்சேயின் மனைவி வேறொரு விருந்தினரை வரவேற்பது கேட்கிறது. ஒட்சோநிக்கிட்சேயும் அவனிடம் மன்னிப்புப்பெற்று வெளியே சென்றார். கதவுக்கு அப்பால் பேசிக் கொண்டிருந்தவரின் குரலில் இருந்து வந்தவர் யாரென்பதை ஒனிசிமோவ் உடனே புரிந்து கொண்டான்-ஸ்டாலின் தான். ஒட்சோநிக்கிட்சே உரமாகவும் குடாகவும் பேசுவதிலிருந்து ஒரு விவாதம் நடப்பதை அவன் உணாந்துகொண்டான். ஸ்டாலினின் குரல் வேண்டுமென்றே
29

Page 23
திட்டமிட்டது போல் அமைதியாக இருந்தது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது ஒனிசிமோவுக்குப் புரியவில்லை. ஏனென்றால் அவர்கள் ஜோர்ஜியனில் பேசிக் கொண்டார்கள். அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்ததால் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனானி . அவர்கள் இருவரும் வாயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
ஒனிசிமோவ் அமைதியாக நழுவிவிடப் பார்த்தான். ஆனால் ஸ்டாலின் அவனை நிறுத்தினார்.
“வணக்கம், தோழர் ஒனிசிமோவ். நாங்கள் பேசியது கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்"
"மன்னிக்க வேண்டும். நான் அதைக் கவனிக்கவில்லை."
"பரவாயில்லை. இது நடப்பது தான். ஆனால் நீங்கள் யாருடன் உடன்படுவீர்கள் தோழர் சேர்கோவுடனா? என்னுடனா?
"தோழர் ஸ்டாலின் எனக்கு ஜோர்ஜியன் ஒரு சொல்லும் விளங்காது"
அந்த வார்த்தை சொல்லப்பட்டதாகவே ஸ்டாலின் எடுத்துக்கொள்ளவில்லை. ஒனிசிமோவைக் கடுமையாகத் தனது சிறிய புருவத்தினூடே பார்த்துவிட்டு குரலை உயர்த்தாமல் இன்னும் ஆறுதலாகத் திரும்பவும் கேட்டார்.
"யார் சரியென்று நினைக்கிறீர்? அவரா? ஸ்டாலின் சற்று இடைவெளிவிட்டு, "அல்லது நான் சொன்னது சரியா?" என்றார்.
ஒனிசிமோவ் பதிலளித்தான். "நீங்கள் சொல்வதே சரி. ஐயோசிஃப் விஸ்ஸாறியோநோவிச்" இரு வாரங்களும் ஆகவில்லை, கட்சி மாநாட்டிற்கு சென்றபோது ஒட்சோநிக்கிட்சே தற்கொலை செய்துகொண்டதாக அறிந்தான்.
ஒனிசிமோவ் நோய் வாய்ப்பட்டிருப்பதுடன் நாவல் முடிவடைவதை பெக் உள்நோக்குடன் குறியீட்டுப் பாங்கில் ஸ்டாலினிச வியாதிகளாகச் சித்திரிப்பதாகக் கருதி அலெக்சீவ் கையெழுத்துப் பிரதி பற்றிய அறிக்கையில் கடுமையாக விமர்சித்தார். ஆனால் இந்த நாவல் அப்படி அமையவில்லை. ஒனிசிமோவ்
3O

அமைப்பின் மீது கொண்டுள்ள விசுவாசத்துக்கும் அதன் அடக்குமுறைக்கு எதிரான வெளிப்படுத்தப்பட முடியாத எதிர்வினைக்கும் இடையே உள்ள உளவியல் மோதல்களினால் உருவான மனப் பாதிப்புக்களின் ஒரு அறிகுறியாகக் காட்டுவதற்காகவே ஒனிசிமோவின் புற்றுநோயை அவனது புகைப்பழக்கத்தையும் கை நடுக்கத்தையும் போல பெக் பயன்படுத்துகிறார்.
நோவோநாஸ்னாச்சேனி ஸ்டாலினிச அதிகாரத்துவ வர்க்கத்தினரின் வாழ்க்கை முறைக்கும் சாதாரண சோவியத் பிரசையின் வாழ்க்கை முறைக்கும் இடையிலான பாரிய இடைவெளியைப் புட்டுக்காட்டும் ஒரு ஆவணப் பெறுமானமும் கொண்டது. நாவலின் இந்தப் பரிமாணத்தை விளக்கும் நிகழ்வு ஒன்று இந்த நாவலின் முற்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. ஸ்டாலினின் கடைசிக் காலத்தில் அவர் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் நள்ளிரவில் மாநாடுகளை நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒனிசிமோவுக்கும் அவனது பிரதிப் பதவியாளருக்கும்.இந்த வழக்கம் பரிச்சயமானது. அவர்கள் தத்தமது உத்தியோகபூர்வமான சாரதிகளிடம் இதற்கான ஏற்பாட்டை ஒழுங்காகச் செய்திருந்தனர். இருவரும் தத்தமது கார்களில் மாநாட்டுக்குச் செல்வார்கள். பின்னர் சாரதிகளுள் ஒருவர் நித்திரை கொள்வதற்கு வீடு திரும்பிவிடுவார். மற்றவர் இருவரையும் காலையில் அழைத்து வருவதற்காக அங்கேயே நிற்பார். (இருவரும் உயர் பதவியாளருக்காக ஒதுக்கப்பட்ட ஒரே மாடித் தொடரில் வசித்து வந்தனர்) ஒருநாள் அதிகாலை அத்தகைய ஒரு மாநாட்டில் இருந்து திரும்புகையில் காரோட்டிகள் இருவரும் தவறு செய்துவிட்டதை ஒனிசிமோவும் அவரது பிரதி உத்தியோகத்தரும் உணர்ந்தனர். சாரதிகள் இருவருமே வீடு திரும்பிவிட்டனர். ஒருகணம் இவர்கள் இருவரும் நடைபாதையில் நின்று என்ன செய்யலாமென யோசித்தனர். பிரதிப் பதவியாளர் வீதிக்கு எதிரே இருந்த "எம்" எழுத்துக் குறியீட்டைச் சுட்டிக் காட்டி "நாம் சுரங்கப் புகையிரதத்தில் போவோம்” என்று சொன்னார், இருவரும் படியால் இறங்கி முண்டியடித்து காலை வேலைக்குச் செல்லும். கூட்டத்துடன் கலந்து ஸ்டேசனை நோக்கிச் சென்றனர் டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது, திடீரென ஒரு சந்தேகம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அவர்கள் வேலைக்குச் செல்லும் போது பணம் தேவைப்படுவது இல்லை. ஆதலால் பணம் கொண்டு செல்வது இல்லை, வரிசையில் இருந்து விலகிப்
31

Page 24
பைகளில் தேடினர். ஒருளிடம் முன்று றுாபில் தாள் இருந்தது. ஒனிசிமோவ் சீட்டு வழங்குமிடத்துக்கு வந்ததும் பயணத்திற்கு எவ்வளவு காசு என்று கேட்கிறார்.
சீராக உடுத்தியிருந்த இந்தப் பயணியை ஏறிட்டுப் பார்த்தார் காசாளர்,
"பிரசையே, எல்லாச் சீட்டுகளுக்கும் ஒரே காசு தான்"
பின்னாலே இருந்தவர்கள் முடுக்கினார்கள் முணுமுணுத்தார்கள்.
"அது எவ்வளவு?" இது அர்த்தமுள்ள கேள்வி என காசாளர் நம்பவில்லை,
" என்ன விளையாடுகிறீரா?"
நிரம்பி வழியும் புகைவண்டியில் பரிச்சயம் இல்லாத பயணத்தை இரு அலுவலர்களும் ஆரம்பித்தனர். குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்தனர். தமது குடியிருப்பு மாடித் தொடரை நோக்கி நடந்தனர், திடீரென விசில் சத்தம் கேட்டது. இராணுவ வீரர்கள் அலுவலர்ளைச் சூழ்ந்து கொண்டனர், "நில்லுங்கள் எங்கு செல்கிறீர்கள்?" இந்த மாடித் தொடரை நோக்கி இருவர் நடந்து செல்வது என்பது முற்றிலும் புதுமையானது சாதாரணமாக நடக்காத ஒரு காரியம்,
"நீங்கள் யார் மொஸ்கோ வாசிகளா?”
A.
"எங்கே வீதியைக் கடப்பது என்று தெரியாதா? இந்த விதிக்கு
வெளியே வருவது இது தான் முதல் தடவையா?"
சங்கடமான மெளனமே அவர்கள் பதிலாயிற்று,
"எங்கே அடையாள ஆவணங்களைப் பார்ப்டோம்”
இருவரிடமும் சாதாரணமாக சோவியத்தும்குடிமக்கள் கொண்டு செல்லும் கடவுச் சீட்டு இருக்கவில்லை. இந்த ஆவணத்திற்குப் பதிலாக ஒனிசிமோவ் தான் அரசாங் அதிகாரி என்பதற்கான அடையாள அட்டையக் காட்டினார்.இராணுவத்தினர் அதைப் பார்த்தனர். உடனே மரியாதை வணக்கம் செலுத்தினர். வாகனங்களை நிறுத்தினர். அவர்கள் வீதிகளைக் கடக்க உதவினர்.
32

‘வரலாறு திறந்திருக்கிறது’
இந்தப் பேச்சின் உள்ளடக்கம் எதுவாக இருக்கும் என்றும் எதுவாக இருக்க மாட்டாது என்று சொல்வதன் மூலம் எனது பேச்சைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். அடுத்தவாரம் அல்லது அடுத்த மாதம் அல்லது அடுத்து வருடம் கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடக்கும் என்று நான் விளங்கி உரைக்கப் போகின்றேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவீர்கள். அத்தகைய முயற்சிகள் எதிலும் நான் ஈடுபடப்போவதில்லை: மேலும் பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு முற்றிலும் தெளிவற்ற, ஸ்திரமற்ற ஒரு சூழ்நிலை பற்றி அத்தகைய ஒரு முடிவு டி கூறுவது சாத்தியமும் அல்ல. கடந்த மாதங்களில் கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ள அசாதாரணமான நிகழ்வுகள் பற்றி இலங்கையில் இருந்து கொண்டு நமது சொந்த அரசியல் சிந்தனையின் அடிப்படையில் முன்மொழிதல்களைக் கூறுவதைவிட அதன் படிப்பினைகள் பற்றியே நான் அக்கறை கொண்டுள்ளேன்.
பிறிதொரு அடிப்படை அம்சத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இது கலைச்சொல் பற்றியது. கிழக்கு ஐரோப்பிய அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் பற்றிக் குறிப்பிடும்போது "சோசலிஸம்" என்ற சொல்லை இந்த உரையில் நான் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருக்கும். இது சிலர் மத்தியில் பிரச்சினையை எழுப்பக்கூடும். பிளாட்டோவின் கருத்துப்படி இந்த மேசையும் பிற ஒவ்வொரு மேசையும் வானுலகில் எங்கோ ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் இலட்சிய மேசையின் தரம் குறைந்த பிரதியேயாகும் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் போன்றே சில மார்க்சிய வாதிகளைப் பொறுத்தவரை கிழக்கு ஐரோப்பிய சமூகங்கள். சில மார்க்சிய மூல நூல்களில் மட்டும் இருக்கும் “இலட்சிய சோசலிஸத்தின்” தாழ்ந்த அல்லது திரிந்த சோசலிஸ வடிவங்களேயாகும். இத்தகைய ஒரு அணுகுமுறை பயனற்றது
33

Page 25
என்று நான் ஏன் கருதுகிறேன் என்பதை எனது முழு உரையும் புலப்படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால் யாராவது ஒருவர் எழுந்துநின்று அது சோசலிஸமல்ல என்று கூறுவதை நான் விரும்பவில்லையாகையால் இங்கு ஒரு வ" ) தேவை என்று நினைக்கிறேன். “சோசலிலம் என்ற சொல் ன் பயன்படுத்தும் போது றுடோல்ஃப் பஹ்றோ ծռն)յմ) *"Desošavao Dufflev நடைமுறையில் இருக்கும் சோசலிஸத்தையே" நான் கருதுகிறேன். அதாவது ரஷ்யப் புரட்சியின் பிறகு சோவியத் யூனியனில் நடைமுறையில் இருந்த சமூக அரசியல் வடிவங்களையும்- இவை நிலையானதாக இருந்ததில்லை; மாறிக்கொண்டிருந்தன- இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு கிழக்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களையுமே இது குறிக்கும்.
எனது முக்கியமான குவிமுனை வரலாற்று ரீதியானது அல்ல. எனினும் ஒரு சுருக்கமான வரலாற்றுப் பினன்னி பயனுடையது என்று கருதுகிறேன். முன்- நவீன யுகத்தில் கிழக்கு ஐரோப்பா ஒரு வலிமையான பூர்ஷ்வா வர்க்கத்தைத் தோற்றுவிக்கவில்லை என்று நாம் பொதுப்படையாகக் கூறமுடியும். இது மேற்கு ஐரோப்பிய அபிவிருத்தியில் இருந்து வேறுபட்ட ஒரு அபிவிருத்திக் கோலத்தை ஏற்படுத்தியது. முழுப்பிரதேசத்தையும் பொறுத்தவரை தற்போதைய இயக்கங்கள் “ஜனநாயக மீட்பு" நோக்கியவை என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானதல்ல. இந்த நாடுகளில் பெரும்பாலானவை அவற்றின் எந்தவொரு வரலாற்றுக் கட்டத்திலும் ஒரு செயற்பாட்டு ஜனநாயக மரபைக் கொண்டிருக்கவில்லை என்பது இதற்கு ஒரு எளிய காரணமாகும். இதற்குப் புறநடையாக இருந்தவை வேர்சைல்ஸ் ஒப்பந்தத்துக்கும் நாசிகளால் கைப்பற்றப்படுவதற்கும் இடைப்பட்ட கால செக்கோஸ்லவக்கியாவும் ஹிட்லரால் வெற்றிகொள்ளப்படும்வரை வெய்மார் குடியரசின் ஒரு பகுதியாக இருந்த ஜேர்மனியும்தான். அரை நிலப் பிரபுத்துவ அல்லது ராணுவ சர்வாதிகார அமைப்புக்களே இரண்டாவது உலகயுத்தம் வெடித்த வேளையில் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளில் நிலைபெற்றிருந்தன. சில வேளை இவை மேலோட்டமான ஜனநாயக வடிவத்துள் மறைந்திருந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் "கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சமூக அமைப்பு பிரான்ஸ், பிரிட்டன் அல்லது ஜேர்மனியை விட ரஷ்யாவில் அல்லது ஆசிய நாடுகளில் இருந்த சமூக அமைப்புக்களையே பெரிதும் ஒத்திருந்தன" என ஹக் செரோன்வற்சன் கூறுகிறார்.
34

இரண்டாம் உலக யுத்தத்தின் பிந்திய கட்டங்களில் கிழக்கு ஐரோப்பாவில் செம்படையின் பிரவேசம் இந்த நாடுகளை ஸ்டாலினிச சாம்ராச்சியத்தின் உப கிரகங்களாக ஒன்றிணைத்தது. இது முற்றிலும் சிக்கலான இருமுனைப்பட்ட ஒரு நிலைமையாகும். இது முற்றிலும் ஒரு புரட்சியோ அல்லது முற்றிலும் ஒரு ஆக்கிரமிப்பின் வெற்றியோ அல்ல. ஆக்கிரமிப்பு ராணுவம் என்ற வகையில் செம்படை நிலைகொண்டிருந்தமையே இதன் மாற்றத்தைக் கொண்டுவருவதில் தீர்மான சக்தியாக இருந்தது. ஆரம்ப கட்டங்களில் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் வலதுசாரி முதல் இடதுசாரிவரை எல்லாக் கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெறத்தக்க வகையில் கூட்டு முன்னணிகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்தக் கூட்டு முன்னணிகளில் ராணுவத்தையும் பொலிசையும் கம்யூனிஸ்ட் கட்சிகளே தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயுத UGAš6 - 05 அதிகாரவர்க்கத்தைக் களையெடுக்கவும் இறுதியாகக் கம்யூனிஸ்ட் கட்சியல்லாத பிற கட்சிகளையெல்லாம் (அடிமைத் தனத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த பாகங்களைத்தவிர) அரசியல் வாழ்வில் இருந்து அகற்றவும் அவர்களால் முடிந்தது.
இந்த நடைமுறை கிளர்ச்சிகளினால் அன்றி அமைதியான முறையில் வற்புறுத்தல்கள் ராணுவ நடவடிக்கைகள் மூலமும் களையெடுப்புக்கள் மூலமுமே மேற்கொள்ளப்பட்டது. எனினும் மேல்மட்டத்தில் இருந்து இய்க்கப்பட்ட தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு ஒரு வெகுஜன பரின் பல தீ தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் காலத்துக்குக் காலம் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த தொழிலாளி வர்க்கம் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டது. எவ்வாறெனினும், ஏதாவது எதிர்ப்பு கிளம்பியிருந்தால், சோவியத் ராணுவத் தலையீடு என்ற மறைமுகமான அச்சுறுத்தல் இல்லாமல் இவற்றுள் எதுவும் பலன் அளித்திருக்காது, சில சந்தர்ப்பங்களில் இந்த அச்சுறுத்தல் வெளிப்படையாகவே இருந்தது. உதாரணமாக 1945ல் றுமேனியாவில் மன்னர் மைக்கல் தனது முதலமைச்சரை (றடெஸ்கியு) மாற்ற மறுத்த சந்தர்பத்தைக் கூறலாம். விஷின்ஸ்கி புக்காறெஸ்ற்றுக்குப் பறந்துசென்று இரண்டு மணிநேர அவகாசத்தில் மன்னர் அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது மறுப்பு தற்காலிக யுத்த நிறுத்தத்தை மீறியதாக சோவியத் யூனியனால் கருதப்பட்டது. மைக்கல் சரணடைந்தார்.
35

Page 26
உண்மையில் "மக்கள் ஜனநாயகங்கள்" என அழைக்கப்பட்ட வடிவங்களின் உருவாக்க முறைமை அனைத்தும் கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தெரிவினால் அன்றி ஸ்டாலினாலேயே சாதிக்கப்பட்டன. கைப்பற்றிப் புரட்சியைப் புகுத்தும் இந்த முறைமையின் விளைவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோவியத் சோசலிசத்தின் வடிவங்களும் அமைப்புக்களும் திணிக்கப்பட்டன. அதன் அரசியல் பண்பு ஒரு கட்சி ஆட்சியாகும். கம்யூனிஸ்ட் கட்சியே அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாகக் கொண்டிருந்தது (எனினும் கொம்யூனிச மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகள் இருப்பதற்கு சலுகை வழங்கப்பட்டதன் மூலம் ஒரு போலி ஜனநாயகத் தோற்றம் இன்னும்கூட இருந்தது). கட்சியின் உள் அமைப்பும்கூட அதிகாரித்துவ மயமாக்கப்பட்டது. கொள்கைகளும் தீர்மானங்களும் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அதிகார அமைப்பைப் பேணுவதற்கு பலவந்தமும் திகிலூட்டலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அரசினால் நிர்ணயிக்கப்பட்ட நியமங்களுளக்கு சிவில் சமூகமும் அதன் பொருளாதார, கலாசார, சமய வாழ்வும் முற்றிலும் கீழ்ப்படுத்தப்பட்டன. அதேவேளை கிழக்கு ஐரோப்பிய சோசலிசம் பிரதான சொத்துடைமை வடிவங்களைத் திருப்தியாக மாற்றியமைத்தது. நிலப் பிரபுத்துவ, அரைநிலப் பிரபுத்துவ உறவுகள் நிலைபெற்றிருந்த ஒரு பிரதேசத்தில் நிலச் சீர்திருத்தத்தின் மூலம் இது சாதிக்கப்பட்டது. மேலும் பரந்துபட்ட கல்வி போன்ற சமூகநலக் கொள்கைகள் பரந்த அளவில் கடைப்பிடிக்கப்பட்டன. எனினும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நலன்கள் எல்லாம் சோவியத் யூனியனின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளின் கீழேயே இவையெல்லாம் சாதிக்கப்பட்டன. கிழக்கு ஐரோப்பிய சமூகத்தில் ஒரு தீவிரமாற்றத்தைக் கொண்டுவருவது ஆரம்பத்தில் ஸ்டாலினது நோக்கமாக இருக்கவில்லை என்பதற்குச் சான்று உண்டு. ஆனால் அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பாவுடனும் வளர்ந்து வந்த முரண்பாடுகளின் விளைவாகவே அந்தப் பிராந்தியத்தை சோவியத் யூனியனின் ஒரு பாதுகாப்பு எல்லைப்பிராந்தியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஸ்டாலின் வந்தார். கிழக்கு ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தின்மீதான கட்டுப்பாடு சோவியத் யூனியனின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரமாக மாறியது. குறிப்பாக ஊறிப் போன தேசியவாதத்துக்குப் பிரசித்திபெற்ற ஒரு பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் டிட்டோ வாதப் போக்குகள் தலைதூக்குவது ஆபத்தானது. இத்தகைய
36

போக்குகள் "40களின் பிற்பகுதியிலும் " 50களின் முற்பகுதியிலும் வழக்கு விசாரணைகள் மூலமும் களையெடுப்புக்கள் மூலமும் அகற்றப்பட்டன. 1956ல் நடந்த ஹங்கேரியப் புரட்சி- 1968ல் நடந்த 'பிறாறக் ஊற்று" போன்ற மிகத் தீவிரமான நெருக்கடிகள்" முழு அளவிலான இராணுவத் தலையீட்டின் மூலம் நசுக்கப்பட்டன.
எளிமையான வரலாற்றுத் திட்டங்களையும் நேர்கோட்டு வரலாற்று அபிவிருத்திக் கோலங்களையும் நம்புபவர்கள் இரண்டு முரண்புதிர்கள் (Paradox) பற்றி நன்கு கருத்துரை வழங்கக்கூடும். கிழக்கு ஐரோப்பாவில் 1830இலும் 1848இலும் அரைகுறையாக நடந்து முடிந்த பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிகளால் நிறைவேற்றப்படாத சமூக பொருளாதாரப் பணிகள் அந்நிய ஆதிக்கத்தினால் மேல் இருந்து திணிக்கப்பட்ட சமூகப் புரட்சி மூலம் நிறைவேற்றப்பட்டன என்பது முதலாவது புதிர். நிறைவேற்றப்படாத பிற பணிகள், அதாவது பாராளுமன்ற ஜனநாயகத்தை நிறுவும் அரசியல் பணி கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் புரட்சியினால் இன்று நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பது இரண்டாவது புதிர்.
சமகால கிழக்கு ஐரோப்பிய மாற்றங்கள் பற்றி இன்று இலங்கையில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் கூறும் விளக்கவுரைகளில் உள்ள வரையறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு நாம் இங்கிருந்தே தொடங்குவது பொருத்தமானது. இந்த அபிவிருத்திகள் பற்றி எழுதப்பட்டவற்றை வாசிக்கும்போது இந்த விளக்கவுரைக்காரர் தாங்கள் எந்த அரசியல் கோட்பாட்டு முகாம்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் ஏற்கனவே உள்ள கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் நின்றுகொண்டே இந்த நிகழ்வுகளை விளக்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் புரட்சியானது நமது மொத்தமான முற்கற்பிதங்களையும் வாய்ப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்ற, ஒரு தீவிரமான ஆய்வறிவுப் புனர் ஒழுங்கமைப்பைக் கோருகின்ற ஒரு தோற்றப்பாடாகும்.
கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களை அணுகுவதற்குரிய ஒரு சரியான நோக்கு நிலை கடந்த ஆண்டு மிகாயில் கொர்பச்சேவுக்கும் மேற்கு ஜேர்மன் ஜனாதிபதி றிச்சாட் வொன் வெய்சாக்கருக்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலில் புலப்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. அந்த உரையாடலின் போது "வரலாறு
37

Page 27
திறந்திருக்கிறது" என்று கொர்பச்சேவ் கூறினார். "இன்னும் 200 ஆண்டுகளில் அது எதை நோக்கிச் செல்லும் என்பதை யாரும் எதிர்காண முடியாது என்றும் அவர் தொடர்ந்து சொன்னார். ஆம், வரலாறு எப்போதும் புதியவற்றுக்கு-எதிர்கான முடியாவற்றுக்கு, முன் உணர்ந்து ஆருடம் கூறமுடியாதவற்றுக்கு திறந்தே உள்ளது. அது முன்னரே திட்டமிட்டபடி தண்டவாளத்தில் செல்கின்றது என நாம் கருதக்கூடாது.
கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் புரட்சி ஆரம்பித்ததில் இருந்து அதுபற்றி ஒரு எளிமையான வலதுசாரி விளக்கம் கூறப்பட்டு வந்துள்ளது. அதாவது கொம்யூனிஸம் இயல்பிலேயே ஒரு சர்வாதிகார அமைப்பு. அது இப்போது சரிந்துவிட்டது. ஏனெனில் ஜனநாயக சுதந்திரத்துக்கான மக்களின் இயல்பான வேட்கைன்ய காலவரையறையின்றி அடக்கி ஒடுக்க முடியாது. இத்தகைய ஒரு விளக்கம் போதுமானதல்ல என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, சோவியத் பெரஸ்ரொய்க்காவின் தூண்டுதல் இல்லாமல் கிழக்கு ஐரோப்பியப் புரட்சி ஏற்பட்டிருக்க முடியாது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மேலும் சோவியத் மேல்மட்டத்தில் கொர்பச்சேவ் தலைமையிலான சீர்திருத்தக் குழுவினால் தொடக்கிவிடப்பட்டிராவிட்டால் பெரஸ்ரொய்க்காவே சாத்தியப்பட்டிருக்காது. சோவியத் கம்யூனிசம் தன் உள்ளமைப் பிலேயே எதேச்சாத்காரமானது; ஒற்றைப் பரிமாணமுடையது என்ற வலதுசாரிப் படிமம் சரி என்றால் கட்சியின் உயர்மட்டத்தில் கொர்பச்சேவ் போன்ற ஒரு சீர்திருத்த வாதியை அது எவ்வாறு தோற்றுவித்தது?
இரண்டாவதாக சோவியத் பெரஸ் ரோய்க்காவினால் தூண்டப்பட்டு 1989 முன்பாதியிலேயே போலந்திலும், ஹங்கேரியிலும் ஏற்கெனவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லவாக்கியா, பல்கேரியா, றுமேனியா ஆகிய நாடுகளைப் பொறுத்தவரை 1989 ஜூலையில் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் உடைய பிரகடனமே தீர்மான சக்தியாக இருந்தது. வார்சோ ஒப்பந்தக் கூட்டத்தின் கொர்பச்சேவ் பின்வரும் பிரகடனத்தைச் செய்தார். "ஒவ்வொரு மக்கள் தொகுதியும் தங்கள் சொந்த நாட்டின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கவும் தங்கள் சொந்த சமூக அமைப்பு வடிவத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்கவும் உரிமை கொண்டுள்ளது. வெளியில் இருந்து
38

எந்தப் போர்வையிலும் எந்தத் தலையீடும் இருக்கக்கூடாது." "பிரஷ்நேவ் கொள்கையின்" இந்த நிராகரிப்பும் பின்னர் 1968ன் செக்கோஸ்லவக்கியா ஆக்கிரமிப்பை வெளிப்படையாக நிராகரித்ததும் சேர்ந்து- தங்கள் சொந்த அரசியல், பொருளியல் அமைப்பைத் தேர்ந்துகொள்வதில் தாங்கள் எந்தப்பாதையில் சென்றாலும் சோவியத் யூனியன் அதில் தலையிடாது என்று கிழக்கு ஐரோப்பிய மக்களுக்கு பச்சைக்கொடி காட்டின.
வலதுசாரி விளக்கத்தின் போதாமையை வெளிப்ப்டுத்தும் மூன்றாவது அம்சம் கிழக்கு ஐரோப்பியப் புரட்சி பல்வேறு அரசியல் சக்திகளின் கூட்டிணைவின் மூலம் கொண்டு நடாத்தப்பட்டமையாகும். இந்த இயக்கங்களில் பங்குபற்றிய பல்வேறு வகையான குழுக்களின் மத்தியில்- தாராளவாதிகள், மதக்குழுக்கள், சூழலியல் வாதிகள் ஆகியோருடன்- கருத்து வேற்றுமைகொண்டு விலகிச் சென்ற கம்யூனிஸ்ட்டுகளும் இருந்தனர். இயக்கத்தில் அவர்களின் எண்ணிக்கையும் பலமும் நாட்டுக்கு நாடு வேறுபட்டது. 1968க்குப் பின், செக்கோஸ்லவக்கியாவில் தாராளவாதிகளும் மனித உரிமையாளர்களுமே எதிர்ப்பியக்கத்தில் ஈடுபட்டனர். அதுவே இன்று மேலாதிக்கம் பெற்றுள்ள குடியியல் பொது மேடையாகத் (Civic Forum) தோன்றுகின்றது. ஆனால் றுமேனியாவில் சீசஸ்கியூவின் ஆட்சி குடும்ப வாரிசுரிமைக் குணாம்சத்தைக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள்கூட அதற்கு ஒரு குறுகிய அடித்தளம் இருந்தது. அதனால் கட்சியின் எல்லா மட்டங்களிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மத்தியில் இருந்த பெருமளவிலான பிளவினால் அந்த ஆட்சியின் வீழ்ச்சி பூரணப்படுத்தப்பட்டது. ஆகவேதான் மார்க்சியத்தினதும் மார்க்சிய இயக்கங்களினதும் இருமுகத் தன்மையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் கிழக்கு ஐரோப்பியப் புரட்சியை விளங்கிக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு நான் வருகிறேன். அவற்றின் வரலாறு முழுவதிலும் எதேச்சாதிகாரக் கூறுகளி. தாராளவாதக் கூறுகள் இரண்டும் அவற்றுக்குள் இருந்தே வந்திருக்கின்றன. இப்போது சோவியத் பெரஸ்ரொய்க்காவையும் கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் புரட்சியையும் உருவாக்குவதில் இந்தத் தாராளவாதக் கூறுகளே உந்து சக்தியாய் உள்ளன.
"கம்யூனிசத்தின் சரிவு" பற்றிக் கூறுவோருக்கு இன்னும் ஒரு வார்த்தை எதிர்வரும் மாதங்களிலும் ஆண்டுகளிலும் கிழக்கு ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள்
39

Page 28
பெருமளவிலான மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால், உலக யுத்தத்துக்குப் பிற்பட்ட சோஷலிசத்தின் முதுசம் என்ற வகையில் சமத்துவம் பற்றிய கருத்தியலும் உணர்வும எதிர்காலத்திலும் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. பிறன்டென்பேர்க் வாயிலுக்கு மறுபுறத்தில் காட்சி தரும் பண்ட பட்சணங்களின் குவியலே கிழக்கு ஐரோப்பிய மக்களை வாக்களிக்கப்பட்ட பூமிக்கு வரும்படி கைகாட்டி அழைக்கின்றது என்று கருதுவது முற்றிலும் தவறாகும். சீசஸ்கியூவின் சுகபோக வாழ்க்கைமுறை அல்லது கிழக்கு ஜேர்மன் கட்சித் தலைவர்களின் வளவாழ்வு பற்றிய தெளிவினால் கிளறிவிடப்பட்ட வெகுஜன ஆத்திரமும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் சமத்துவத்துக்கான வேட்கை இன்னும் உயிருடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. சோவியத் யூனியனிலும் கூட இதுவே நிகழ்ந்தது.
இனி, பெரும்பாலான இடதுச்ாரிகள் தற்போதைய கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகளை நோக்குவதற்குப் பயன்படுத்தும் முற்கற்பிதங்கள், வாய்ப்பாடுகள் ஆகியவற்றைப் பரிசீலிக்க விரும்புகின்றேன். இவையே சர்ச்சிப்பதற்கு மிகவும் சிக்கலானவை. இதற்கு ஒரு காரணம் உண்டு. இலங்கையின் வலதுசாரிகள்லிபறல் கட்சியைத் தவிர- ஒரு அரசியல் கோட்பாடு இல்லாமலே பெரும்பாலும் சமாளித்துக்கொள்கின்றனர். சிலவேளை இதுவே அவர்களின் பலமாக அல்லது பலவீனமாக இருக்கலாம். ஆனால் இடதுசாரிகள் அவர்களது ஆய்வறிவு மரபுக்கு விசுவாசமான முறையில் ஒவ்வொரு பிரச்சினையையும் தங்கள் வைதீகக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அணுகுகின்றனர். ஒரு கோட்பாடு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் வரையில் மிகவும் பயனுள்ள ஒரு சாதனமேயாகும். அதாவது அது இனிப் பயனற்றது என்று ஒருவர் கண்டுபிடிக்கும்போது அதைக் கைவிட அல்லது அதை மாற்றிக்கொள்ளத் தயாராய் இருக்கும் பட்சத்தில் அது ஒரு கருவியே. ஆனால் நைந்துபோன ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் யதார்த்தத்தைத் திணிக்க ஒருவர் முனையும்போது அதுவே ஒரு சுமையாகவும் தடையாகவும் மாறிவிடுகின்றது. ரஷ்யப் புரட்சியின் ஒருமுக்கியமான கட்டத்தில் லெனின் பின்வருமாறு கூறினார்: "எனது நண்பனே, கோட்பாடு நரைத்துவிட்டது. வாழ்க்கை மரமோ எப்போதும் பசுமையாகவே இருக்கிறது". லெனின் தனது சொந்த ஆலோசனையை எப்போதும் பின்பற்றியவரல்ல. ஆனால் அதில் இருந்து நாம் ஏன் நன்மை பெறக்கூடாது என்பதற்கு எவ்வித காரணமும் இல்லை.
40

"எதிர்ப்புரட்சி”, “முதலாளித்துவம் மீட்கப்படுகின்றது" அல்லது "லெனினுக்குத் திரும்புவோம்” அல்லது "ட்றொட்ஸ்கியே சரி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது" போன்ற கோசங்களுடன் இலங்கை இடதுசாரிகள் கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகளை அணுகுவது வருத்தத்துக்குரியது. "எல்லாம் வழமைப்படியே" என்பதே இன்வகாட்டும் கருத்துநிலை அறிகுறியாகும்.
மார்க்சியம் என்பது விஞ்ஞான சோஷலிசம்" அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் தொழிற்படும் உண்மையான சக்திகள் பற்றிய அவதானம், ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சமூகப் பரிணாமத்தின் திசைகள் பற்றிய ஒரு பகுப்பாய்வு- என்று கருதப்பட்டது. ஆனால் கட்சிகளிலும் அரசியல் இயக்கங்களிலும் இது மனத்தின் இறைக்கோட்பாட்டுக் குணாம்சத்தினால் அமுக்கி மறைக்கப்பட்டுவிட்டது. இந்தக் குணாம்சம் எல்லாப் பிரச்சினைகளையும் வைதிகக் கோட்பாடுகளைத் திணிப்பதன் ஊடாகவும் புனித நூல்களில் இருந்து மேற்கோள்களைச் சடங்கு ரீதியில் ஒப்புவிப்பதன் மூலமும் மதிப்பிடுகின்றது. அண்மைக்கால உதாரணம் ஒன்றை மட்டும் இங்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். சோவியத் யூனியனிலும் இப்போது கிழக்கு ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்த முயன்ற சந்தைப் பொறிமுறை பற்றி இங்கு நடைபெற்ற பத்திரிகை விவாதம் ஒன்றை நான் அவதானித்தேன். சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பொருளியல் உற்பத்தியைப் பெருக்குவதில் மத்திய திட்டமிடுதலைவிட சந்தைப் பொறிமுறை ஒப்பீட்டளவில் கூடிய தகைமைபெற்றிருக்கின்றது என்ற அடிப்படையிலும் 'சமூக நீதி" என்ற குறிக்கோளுடன் சந்தை எந்த அளவுக்கு இணங்கிப்போகின்றது அல்லது போகவில்லை என்ற அடிப்படையிலும் ஒரு விவாதம் நடைபெறுவதை என்னால் பூரணமாக விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலான விவாதம் “இன்று அறிமுகப்படுத்தப்படும் சந்தைப் பொறிமுறை லெனின் தனது புதிய பொருளாதாரக் கொள்கையில் முன்வைத்த அதே அம்சமா இல்லையா?" என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இரு பகுதியினரும் மூல நூல்களில் இருந்து மேற்கோள்களை வாரி இறைத்தே விவாதத்தில் ஈடுபட்டனர் என்னைப் பொறுத்தவரை இது முற்றிலும் பயனற்றது. புதிய பொருளாதாரக் கொள்கை கிட்டத்தட்ட எழுபது வருடம் பழமையானது எந்தச் சமூகத்துக்குப் பணியாற்ற அது உருவாக்கப்பட்டதோ அந்தச் சமூகம் அடையாளம் காணமுடியாத அளவில் மாறிவிட்டது. இன்றையப் பிரச்சினைகளும் தேவைகளும்
4l

Page 29
புதியவையும் வேறுபட்டவையுமாகும். 1921cio Gaysofsfer குறிக்கோள்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
ஆகவே இத்தகைய ஒரு புதிய விசாரணை உணர்வுடன் கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு இடதுசாரிகள் உந்துதல் பெறவேண்டும். கிழக்கு ஐரோப்பாவில் நிராகளிக்கப்பட்டது ஸ்டாலினிசம் தான் என்று நம்புவது ஒரு மோசமான மாயையாகும். லெனினிசம் கூடத்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய அரசியல் யாப்புக்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ள முதன்மையான பாத்திரத்தின் மீதான தாக்குதல்தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பு மீதான முதலாவது தாக்குதலாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ஏகபோகத்தை உறுதிப்படுத்திய அடக்குமுறைக் கருவிகளால் தாங்கிப் பிடிக்கப்பட்ட அரசியல் யாப்புப் பொறிமுறைதான் இது. இதன் ஏகபோகம் இப்போது கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றது. சோவியத் யூனியனில் அது இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது யூகத்தின் பாற்பட்ட ஒரு விசயம்தான். மக்கள் பிரதிநிதிகளின் இரண்டாவது காங்கிரஸ் சோவியத் யாப்பின் 6ம் பிரிவைப் பற்றிய விவாதத்தை பெரும்பான்மை - வாக்குகளால் அண்மையில் நிராகரித்துவிட்டது. ஆனால் இந்தப் பெரும்பான்மை அதன் காலவரையறையற்ற நீடிப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அளவுக்கு பெரிதல்ல. பெரஸ்ரோய்க்கா கைவிடப்பட்டால் அல்லது பின்வாங்கப்பட்டால் ஒழிய இந்தப் பிரச்சினை மீண்டும் கிளம்பும் என்பதே எனது யூகமாகும். சோவியத் யூனியன் பல கட்சிமுறை நோக்கிய இயக்கத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியாது.
ஆகவே இப்போது கிழக்கு ஐரோப்பாவில் காக்கி வீசப்பட்டிருப்பது முன்னணிக் கட்சி பற்றிய - வரலாற்று இயக்கம் பற்றிய தனது மிக உயர்வான புரிந்துணர்வின் மூலம் சோசலிசக் குறிக்கோளை நோக்கி சமூகத்தை நெறிப்படுத்தி வழிநடத்தும் கட்சி பற்றிய,- லெனினிசக் கோட்பாடே என்பது தெளிவு. அவருடைய இந்தக் கோட்பாடு ஏன் வெறுப்புக்குள்ளாகியது? கிழக்கு ஐரோப்பியக் கொம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சிப் பெயர்களைக் கூட மறைத்துக்கொள்ளும் அளவுக்கு அவசரப்படுவதற்கான snipTeflo 6T6öT60TP w
42

ஸ்டாலினிச முறையிலான சர்வாதிகார நடைமுறையே முன்னணிக்கட்சியை நிராகரிப்பதற்கு இட்டுச் சென்றது என்று கருதுவது ஒரு பாரிய தவறாகும் என்றே நான் நினைக்கிறேன். அதிகாரச் சமமின்மையே இந்தக் கோட்பாட்டின் உட்கிடையாகும். SG Lutefisg 2 auúGpntb இயல்பிலேயே முதல்தரமான நானனத்தைக் கொண்டிருக்கின்றது என்றும் அதனால் அது தேர்ந்துகொன்ட வரலாற்றுக் குறிக்கோளை நோக்கி ஏனையோரை தலைமைதாங்கி நெறிப்படுத்தி அழைத்துச் செல்ல உரித்துடையது என்றும் கருதுவது கருத்து வேறுபாடு, திறந்த விவாதம், சுதந்திரத் தெரிவு என்பவற்றுக்கு முற்றிலும் முரணானது. ஆகவே நடைமுறையில் லெனின் காலத்திலோ அல்லது ஸ்டாலின் காலத்திலோ முன்னணிக் கட்சியின் பாத்திரம் என்பது முரண்பட்ட அபிப்பிராயங்களை அடக்கி ஒடுக்காமலும் வெவ்வேறு அளவிலான பலாத்காரம் இன்றியும் ஒரு போதும் சாத்தியப்படவில்லை.
இதை ஏற்றுக்கொள்ளும், யதார்த்தத்தில் கால் ஊன்றிய மார்க்சியவாதிகள் சிலர் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள்கூட இரண்டு காரணங்களின் அப்படையில் ஒரு முன்னணிக் கட்சியின் கரங்களில் அதிகாரம் குவிவதை நியாயப்படுத்தக்கூடும். முதலாவது காரணம் சமூக அமைப்பின் முழுமையான, துரிதமான மாற்றத்தையும் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியையும் அது உத்தரவாதப்படுத்துகின்றது என்பது. அதேவேளை பொருளாதார சமத்துவத்துக்காக அரசியல் சுதந்திரம் தற்காலிகமாக பண்டமாற்றுச் செய்துகொள்ளப்பட வேண்டியிருப்பது இரண்டாவது காரணம்.
முதலாவது நியாயப்படுத்தலுக்கு எனது விடை இதுதானி: நம்பப்பட்ட சமூக அபிவிருத்தியைச் சாதிப்பதற்கான வழிமுறைகள் ஊடாக இழக்கப்பட்ட மனிதவிலையை- உயிர் இழப்பு, தனிமனித சுதந்திர இழப்பு. திணிக்கப்பட்ட சிந்தனை ஒருமை ஆகியவற்றின் விலையை-அளவிடுவதற்கு நம்மிடம் தகுந்த கணிப்பொறி எதுவும் இல்லை. ஒரு கணக்கெடுப்பின்படி ஸ்டாலினது ஆட்சியின் விலை 20 மில்லியன் மனித உயிர்கள் என்றால், சீசஸ்கியூவின் ஆட்சியின் விலைகூட 25 ஆண்டுகளில் 60,000 உயிர்கள் என்றால்- மற்ற எல்லாத் துயரங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் ஒதுக்கிவிட்டாலும்இந்த விலையைக் கொடுத்து நாம் வென்றெடுத்த பொருளாதார அல்லது பிற முன்னேற்றங்கள் இந்த விலைக்கு ஈடாகுமா என்பதை நிறுத்துப்பார்ப்பதற்குரிய தராசுக்கு நாம் எங்கே
43

Page 30
போவது? குறிப்பாக இன்று இந்தப் போக்கின் இறுதிக்கட்டத்தில் நின்று பார்க்கும்போது - சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான பொருளாதார நிலைமை, அதிகாரத்துவ மயமாக்கப்பட்ட அதிகாரக் குவிப்பு- இறுதியில் இது பொருளாதார அபரிவிருதீதியைக் கூடப் பாதிக்கும் sт са и соas0 и தெளிவுபடுத்துகின்றது.
இரண்டாவது நியாயப்படுத்தலுக்குரிய எனது விடை இதுதான் பொருளாதார சமத்துவத்துக்காக அரசியல் சுதந்திரத்தைப் பண்டமாற்று செய்வதற்கு எந்த வழியும் இல்லை. “உண்மையில் நடைமுறையில் இருக்கும் சோஷலிசத்தின் முழு அனுபவம் இதையே அறிவிக்கின்றது. பொருளாதார சமத்துவத்தைப் பொறுத்தவரை சோஷலிச சமூகங்கள் மூன்று கட்டங்களைக் கடந்து சென்றுள்ளன. முதல் இரண்டு கட்டங்களும்.சோவியத் யூனியனில் நிகழ்ந்துள்ளன. மூன்றாவது கட்டம் சேர்வியத் யூனியனுக்கும் கிழக்கு ஐரோப்பாவுக்கும் பொதுவானது. முதல்கட்டத்தில், சோவியதி அரசு ஒரு வெகுஜனப் புரட்சியின் மூலம் பிறந்தது என்ற வகையில் அரசியல் மற்றும் அதிகாரத்துவ உயர்குழாத்தின் மத்தியில் கூட ஒரு மிகை எளிமையைப் பேணும் புரட்சிகர உணர்வும் இலட்சிய வாதமும் போதிய அளவு காணப்பட்டது. இரண்டாவது கட்டம் ஸ்டாலின் காலத்தில் அடையப்பெற்றது. பழையதன் இடத்தில் ஒரு புதியவர்க்க வேறுபாடு நிலைகொண்டது. முயற்சிக்கும், வினைத்திறனுக்கும் பொருளாதார வெகுமதி கொடுப்பதற்காகவும் அதிகார அமைப்புக்கு உயர்மட்ட ஊழியரின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவதற்காகவும் பொருளாதார அசமத்துவமும் சலுகைகளும் தீவிரமாக ஊக்கப்படுத்தப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவுக்குள் செம்படை புகுந்த சமயத்தில் விசேட பங்கீடுகள், விசேட கடைகள், விசேட வீட்டுவசதிகள், விசேட போக்குவரத்து வசதிகள் (சமீபத்தில் ஒரு சோவியத் பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியதுபோல) விசேட மயானம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான அமைப்பு சோசலிச ஆட்சியாளரின் அதிகாரத்துக்குரிய முன்தேவைகளின் ஒருபகுதியாக மாறி இருந்தது. சலுகைகளின் இந்த அமைப்பு கிழக்கு ஐரோப்பாவிலும் அப்படியே புகுத்தப்பட்டது.
எனினும் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியனிலோ அல்லது கிழக்கு ஐரோப்பாவிலோ அதிகாரத்துவ வர்க்க உறுப்பினர்கள் எப்போதும் பாதுகாப்பற்றவர்களாகவே
44

காணப்பட்டனர். அவர்கள் எப்போதும் கிட்டத்தட்ட சாதாரண பொதுமக்களைப் போலவே அச்சுறுத்தல் பொறிமுறையினால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர். இது அவர்களின் பொருள் ஈட்டல் பசியை மட்டுப்படுத்தியது. எனினும் சாதாரண பொது மக்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் செளகரியமாகவே வாழ்ந்தனர்.
மூன்றாவது கட்டம் ஸ்டாலினுக்குப் பிந்திய காலப்பகுதியில் «Փleաւ-աւնւսււ-Ց1. கிழக்கு ஐரோப்பா முழுவதும் சாதாரண மக்களின் வாழ்வின் மீது பயங்கர ஆட்சி தொடர்ந்த போதிலும் அதிகாரவர்க்கத்தைப் பொறுத்தவரை ஒரு கணிசமான நெகிழ்ச்சி காணப்பட்டது. மேலும் இலட்சியவாதயுகம் 67 Gunrosit முடிவடைந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் இப்போது இறுகிப்போய் எரிந்துவிழுப் அதிகாரவர்க்கமாகமாறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பதவிகளை கிடைத்தவரை சுருட்டிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதினர். இந்தச் சூழ்நிலையில்தான் அபரிமிதமான ஊழலும் சுயவளம் பெருக்கலும் நிகழ்ந்தன. பெரஸ்ரொய்க்கா ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கட்சியின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களின் பாரிய கையாடல்கள், லஞ்ச ஊழல்கள் பற்றிய பரபரப்பான செய்திகள் அப்போதைக்கப்போது வெளிவந்தன. பிரஷ்னோவின் மருமகன் சுர்பானோவர். அல்லது தவறான முறையில் தேடிய பணத்தில் தனது சகாக்களுடன் அராபிய இரவுக் கதைகளில் வருவதுபோன்ற சுகபோக வாழ்வு நடத்திய உஸ்பெக் கட்சித் தலைவர் றஷிதோவ் போன்றோர் சில உதாரணங்கள். இப்போது கிழக்கு ஐரோப்பியப் புரட்சியின் பிறகு அங்கு அதிகார அமைப்பில் மேல்மட்டத்தில் இருந்த தனிநபர்களின் தனிப்பட்ட செல்வ வளம் அவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு போன்றவை பற்றிய, சோவியத் செய்திகளுக்கு நிகரான செய்திகள் வெளிவந்துள்ளன. சீசஸ்கியூவின் அரசியல் ஒழுக்க மட்டம் மார்க்கோஸ் அல்லது டுவாலியர் போன்றோரினதை விட எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்பது தெளிவு. அந்த அமைப்பு அதன் அடிப்படையிலேயே உழுத்துச்சிதிலம் அடைந்துவிட்டது. திறந்த ஒரு அரசியல் வாழ்வு, சுயாதீன தொடர்பு சாதனங்கள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை இல்லாதிருந்த ஒரு நிலையிலேயே அது இந்த நிலைமையை எய்தியது. இதில் இருந்து நாம் பெறவேண்டிய முடிவு என்னவென்றால் அரசியல் சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து பொருளாதார சமத்துவத்தைப்
45

Page 31
பெறமுடியும் என்பது ஒரு வெறும் மாயை தவிர வேறில்லை என்பதாகும்.
இது தொடர்பாக மொஸ்கோ நியூஸ் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரைப் பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இக்கட்டுரை 1990 ஜனவரி 21ல் சமூக பொருளாதார உரிமைகள், கிழக்கும் மேற்கும்" என்ற தலைப்பில் வலெறி சாலிட்சே என்பவரால் எழுதப்பட்டது. அக்கட்டுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
* பல தசாப்தங்களாக குடியியல் மற்றும் அரசிய்ல் உரிமைகளுக்கு மேலாக சமூக, பொருளாதார உரிமைகளின் முதன்மையை சோவியத் பிரச்சாரம் போதித்துவந்தது. இதன்கருத்து சர்வதேசச் சட்டத்திலும் ஓரளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளது. வளர்முக நாடுகளின் அரசாங்கங்களும். இதனை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டன. இந்த அரசுகள் சோவியத் யூனியனைப்போலவே தமது குடிமக்களை அடக்கி வைப்பதையும் உண்மையான மனித உரிமைகளுக்காகப் போராடுவோரைத் தண்டிப்பதையும் நியாயப்படுத்துவதற்குரிய பொருத்தமான சுலோகங்களைத் தேடிக்கொண்டிருந்தன. உணவோ உறைவிடமோ இல்லாத ஒருவன் பேச்சுச் சுதந்திரத்தைப் பற்றி அக்கறைப்படமாட்டான். உணவையும் உறைவிடத்தையும் பற்றியே அக்கறைப்படுவான் என்பதே இதன் அடிப்படைக் கருத்தாகும். இது அநேகமான மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளைக் கவர்ந்தது. இந்த அரசுகள் தமது தேவை மிகுந்த குடிமக்களின் அதிருப்தியை அவர்களின் மனித உரிமைக் கோரிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அடக்கிவைத்துள்ளன."
இறுதியாக நான் தவறவிட்டுவிட்டதாக நீங்கள் உணரக்கூடிய ஒரு பிரச்சினை பற்றி சுருக்கமாகத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன். கிழக்கு ஐரோப்பியப் போக்கு கலப்புப் பொருளாதாரத்தையும் பலகட்சி முறையையும் நோக்கிச் செல்கிறது என்பதை குறிப்பாக உணர்த்தியிருந்தேன். ஆனால் எதிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்கள் எடுக்கக்கூடிய திட்டவட்டமான வடிவங்கள் பற்றி யூகிப்பது இப்போதைய நிலையில் ஆபத்தானது என்றே நான் நினைக்கிறேன். இவை ஒருமுகப்பட்ட வடிவில் இருக்கும் என்று கருதுவதற்கு எந்தக் காரணமுமில்லை. ஒரு தனிக் "கிழக்கு ஐரோப்பா" என்ற கருத்தாக்கமும், அந்தப் பிராந்தியத்தில் ஒத்தவகையான
46

சொத்துடைமை வடிவங்களும் அரசியல் முறைமைகளும் திணிக்கப்பட்டதும் சோவியத் மேலாதிக்கத்தின் விளைவாகும். கருத்து வேறுபட்டுப் பிரிந்துசென்ற அல்லது நாட்டைவிட்டு வெளியேறிய சில செக் நாட்டு ஆய்வறிவாளர்கள் தங்கள் நாடு கிழக்கு ஐரோப்பாவின் ஒரு பகுதியே அல்ல என்று அழுத்திக் கூறுகின்றனர். அதன் தனித்துவமும் மரபுகளும் மத்திய ஐரோப்பாவுக்கு உரியவை என்றும் அவர்கள் கூறுகின்றனர். அநேக கிழக்கு ஜேர்மனியர்களும் அவ்வாறே கருதுவார்கள் என்பதும் நிச்சயம். உண்மையில் இந்தப் பிராந்தியம் இனத்துவ, சமய, கலாசார தனித்துவங்களில் பாரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி இனி அவை இன்னும் முக்கியத்துவம் பெறும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம். ஆகவே இந்தச் சமூகங்களின் எதிர்காலப் போக்குகள் ஒன்றில் இருந்து மற்றது பெரிதும் வேறுபடக்கூடும். கிழக்கு ஐரோப்பாவைப் பொறுத்தவரை முன் எப்போதையும்விட வரலாறு திறந்தே இருக்கிறது.
47

Page 32
சோவியத் சமுதாயம்: கிழக்கு ஐரோப்பியப் பின்விளைவு
சோவியத்தின் பெரெஸ்ரோய்க்கா உதாரணமும் உந்துதலும் இல்லையென்றால் 1989 இல் கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டிருக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கின்றார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வார்சோ ஒப்பந்தக் கூட்டத்தில் "பிரெஷ்னேவ் கொள்கையை" கொர்பச்சேவ் மறுத்துரைத்தமைதான் கிழக்கு ஜெர்மலரி, செக்கோஸ்லவேக்கியா, பல்கேரியா, றுமேனியா போன்ற நாடுகளில் மக்கள் செய்த புரட்சிகர மாற்றங்களுக்கு விசை அழுத்தமாக அமைந்தது என்றும் ஒருவர் சொல்லலாம். (உண்மையில் அதற்கு முன்னரே போலந்தும், ஹங்கேரியும் சீர்திருத்தப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டன). கொர்பச்சேவ் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தைச் செய்ததன் மூலம் வேண்டுமன்றே கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராகத் தூண்டினார் என்றே நான் யூகிக்கின்றேன். சோவியத் இராணுவத் தலையீடு என்ற பயம் நீக்கப்படுவது கிழக்கு ஐரோப்பிய மக்களிடம் எத்தகைய மின்வேக உணர்வை ஏற்படுத்தும் என்பதை அவர் போன்ற மதிநுட்பமுள்ள சிறந்த அரசியல்வாதி முன்கூட்டி உணராமல் இருந்திருக்க முடியாது என்ற காரணத்தின் அடிப்படையிலேயே நான் இப்படி எண்ணுகிறேன். என்னுடைய கருத்துப்படி 1989 இன் நடுப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தில் சீர்திருத்த அலை சற்று ஒயத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மிகவும் அவசியம் தேவைப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் வைதீகக்கட்சி அதிகாரித்துவத்தால் தடுக்கப்பட்டன. அதனால், மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக கொர்பச்சேவ் புதிய சக்திகளை நாட வேண்டி இருந்தது. இந்தக் களத்திற்குள் கிழக்கு ஐரோப்பிய் மக்களை இழுத்துவிட்டதன் மூலம் அதை அவர் செய்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இருப்பினும் என்மீதி ஆய்வுகள்,
48

நீங்கள் எனது இந்த யூகத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா இலையா என்பதில் தங்கி இருக்கவில்லை. ஏனெனில், கொர்பச்சேவ் அதைக் கருதினாரோ இல்லையோ, அதன் விளைவு பற்றி எந்த ஐயமும் இருக்க முடியாது. 1989 நடுப்பகுதி வரையும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி இன்னமு ஸ்டாலினிச கட்டமைப்புக்களாலும் சித்தாந்தத்தாலுமே ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஆண்டின் பின் அரைவாசியில் ஏற்பட்ட ஜனநாயகப் புரட்சியில் கிழக்கு ஐரோப்பா ஸ்டாலினிசத்தை அழிப்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைத் தகர்ப்பதிலும் சோவியத் ஒன்றியத்தை எட்டிப் பிடித்தது மட்டுமன்றி அதைத் தாண்டி முன்னேறியும் விட்டது. இந்த நடைமுறை மீண்டும் சோவியத் சமூகத்திலும், அதன் அரசியல் முறைமையிலும் செயற்படுவதையே நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த விடயம் முன்பு அதிகம் ஆராயப்படவில்லை. அதனால்தான் இந்தக் கருத்தரங்கில் எனது ஆய்வுப் பொருளாக அதனை நான் தேர்ந்துகொண்டேன்.
அந்த விசயத்துக்கு வருமுன், "கிழக்கு ஐரோப்பாவும் இலங்கையும்" பற்றிய “ஒரு கலந்துரையாடலில் அது ஏன் பொருத்தமுடையது என்பதை முதலில் நான் சொல்ல வேண்டும். பெரெஸ்ரோய்க்காவும் கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் ւյUւժlպմ) பிறநாட்டு இடதுசாரிகளைப் போலவே இலங்கை இடதுசாரிகள் மத்தியிலும் ஒரு பெரிய அறிவுசார் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் இன்னும் கூட எதுவுமே நடக்காததுபோல், தாம் உள்ளூரக் கொண்ட நம்பிக்கைகளைக் குழப்பிக்கொள்ளத் தேவை இல்லாத மாதிரி பலர் தீக்கோழி விளையாட்டு விளையாடுகிறார்கள். ஏனையோர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காலம் பிந்தியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் யதார்த்தபூர்வமாக தீர்மானித்துவிட்டார்கள். காலாகாலமாக ஸ்டாலினையும், பிரஷ்னேவையும் உச்சி மேல் வைத்துப் பூசித்த பக்தர்கள் கூட அவர்களைக் கண்டித்து, அவர்களின் வீழ்ச்சி சோஷலிசத்துக்கான பெருவெற்றி என்று பாராட்டத் தொடங்கிவிட்டனர். ஆனால் ஆய்வறிவுத்துறை மற்றும் சித்தாந்த ஊற்றுச் சுத்திகரிப்பு இத்துடன் நின்றுவிடமுடியாது என்பதைத்தான் நான் இந்த உரையில் சொல்ல விரும்புகிறேன். அதனால்தான் சோவியத் ஒன்றியத்தினுள் நடைபெற்றுவரும் வாதங்கள், கருத்து மோதல்களை அவதானிப்பது அறிவு புகட்டுவதாக இருக்குமென்று நான் கருதுகிறேன்.
49

Page 33
பெரெஸ்ட்ரொய்க்காவின் முதல் மூன்று ஆண்டுகால சித்தாந்தப் போராட்டம் ஸ்டாலினிசத்துக்கு எதிரானதாக இருந்தது. அந்த விவாதம் இன்று முடிந்துவிட்டது. ஸ்டாலினிசத்தின் முதுசமாகக் கிடைத்த அரசியல் அமைப்புகள், நடைமுறைகள், ஏன் மனப்பழக்கங்கள் கூட முற்றாகச் செத்துவிட்டது என்பது இதன் பொருளல்ல, ஆனால் அண்மையில் ஸ்டாலினின் பிறந்த ஊரில் கூடி "உலக கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை அமைத்த, ஒருசில காலத்துக்கு ஒவ்வாதவர்களைத் தவிர, இனி ஸ்டாலினிசத்தைப் பகிரங்கமாக எவரும் ஆதரிக்கத் துணிய மாட்டார்கள். பெரஸ்ட்ரோய்க்காவின் தொடக்க கட்டத்தில் “லெனினிசத்துக்குத் திரும்புவோம்" என்ற குரலே ஒலித்தது. ஜனநாயகப்படுத்தல் நோக்கிய உந்தல் லெனினிச அரசியல் நியமங்களை நோக்கிய திருப்பமாகக் கொள்ளப்பட்டது. சந்தைப் பொருளாதாரம் நோக்கிய போக்குகள் லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கையின் மீட்பாகவும், உறுப்பினர்கனான குடியரசுகளுக்குக் கூடிய தன்னாட்சி அதிகாரம் வழங்கல் லெனினின் தேசிய இனங்கள் பற்றிய கொள்கையை மீள நிலைநாட்டுவதாகவும் கொள்ளப்பட்டது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொர்பச்சேவ் ஆதரவாளர்களின் நிலை இன்னமும் அதுதான். ஆனால் வைதிக லெனினிசப் போக்கு இன்று .ே 'க்கு இலக்காகி வருகிறது. புதிய இயக்கங்களும், கட்சிக்கு உள்ளும் புறமும் உள்ள தீவிரப் போக்குள்ள அறிவுஜீவுகளும் இந்தச் சவால்களை எழுப்புகின்றனர்.
தான் பிறந்து வளர்ந்த தன் கிராமத்து வீட்டுக்குப் போன ரஷ்யக் கவிஞர் சேர்கே யெசனின் 1924 இல் அதுபற்றி எழுதிய கவிதை ஒன்று எனக்கு நினைவு வருகிறது. கொம்சோமோல் இயக்கத்தில் (கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கம்) சேர்ந்த அவரது சகோதரி அவரது வீட்டுச் சுவரில் தொங்கவிட்டிருந்த தெய்வ உருவங்களை நீக்கிவிட்டு ஒரு நாட்காட்டியில் இருந்து எடுக்கப்பட்டிருந்த லெனினின் படத்தை தொங்கவிட்டிருந்ததை அவர் கண்டார். "என்னைப் பொறுத்தவரை லெனின் கூட ஒரு தெய்வம் அல்ல." என்று கவிஞர் கூறினார். ஆனால் லெனின் இறந்த பின் வந்த அறுபத்தைந்து ஆண்டுகளிலும் அவர் தெய்வ உருவமாகவே மாற்றப்பட்டிருந்தார். செஞ்சதுக்கத்தில் இந்தப் புனிதரின் உடல் பாதுகாக்கப்பட்டு, அதற்கு விசுவாசிகள் நாளாந்தம் வணக்கம் செலுத்தி வந்தமை இந்த வழிப்ாட்டின் மிக வெளிப்படையான அடையாளமாகத் திகழ்கிறது. ஒரு முன்னாள் போதகரே இதனைத் தொடக்கி வைத்திருந்தமை, என்னைப்
5O

பொறுத்தவரை மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. ஆயினும் கேள்விக்கு உட்படுத்த முடியாத ஒரு சித்தாந்தமாக லெனினிசம் போற்றப்பட்டமையும் அரசியல் ஞானத்தின் ஊற்றுமூலம் என்ற வகையில் லெனினின் கூற்றுக்கள் சடங்கு ரீதியில் மேற்கோளாகக் காட்டப்பட்டு வந்தமையும் அவருடைய கொள்கைகளையும் செயல்களையும் விமர்சன பூர்வமாக விவாதிப்பது பாபம்போல் கருதப்பட்டமையும் பாரிய முடக்குவாதமாக இருந்துவந்திருக்கிறது.
அந்தத் தடை இன்று உடைத்தெறியப்பட்டுவிட்டது. சோவியத் பத்திரிகை உலகை அவதானிக்கும்போது இந்த அபிவிருத்தி 1989 இன் முற்பகுதியிலேயே தொடங்கிவிட்டதாக என்னால் கூற முடியும். ஆனால் அந்த ஆண்டின் முன்னைய மாதங்களில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சியால் அது வலுப்பெற்றுக் கூர்மை அடைந்தது. கிழக்கு ஐரோப்பாவில் லெனினிசத்தை முற்றாக நிராகரித்தமை, லெனினின் உருவச்சிலைகள், நினைவுச் சின்னங்களை கிழக்கு ஐரோப்பிய நகரங்களிருந்து நீக்கியமை, முன்னைய ஆளும் கட்சிகள் கூட “கம்யூனிஸ்ட்" என்ற பெயரைக் கைவிட்டமை- இவை அனைத்துமே சோவியத் ஒன்றியத்தில் "லெனினிச சித்தாந்த மூட்டையைக்" கைவிட்டு சீர்திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கு கூடுதலான துணிச்ச்லைக் கொடுத்துள்ளன.
அரசுக் கொள்கை அம்சத்தில் இந்த அபிலாசை ஏற்கனவே பயன் அளித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசியல் மேலாதிக்கம் வழங்குகின்ற சோவியத் யாப்பின் 6வது பிரிவின் மீது விவாதம் நடத்த கடந்த ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் கொங்கிரஸ் பெரும்பான்மை வாக்குகளால் மறுத்துவிட்டது. இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் முன்னைய தீர்மானத்தை மாற்றி 6வது பிரிவை நீக்கவதற்கு உடன்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அபிவிருத்திகள் சோவியத் அரசு நிறுவனத்தில் ஏற்படுத்திய செல்வாக்குக்கு இது தெளிவான சான்றாகின்றது. அந்த நாடுகள் எங்கணும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த அதிகாரத் தனி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பலகட்சி அரசியல் முறைக்குமான கோரிக்கைகளே போராட்டத்தில் முனைப்பாக இருந்தன. இதே கோரிக்கைகளை சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம் என்று முன்பு தோன்றியது. (நானும் அப்படித்தான் நினைத்தேன்) ஆனால் கிழக்கு ஐரோப்பிய உதாரணம் இதனைக் கட்டுப்படுத்த முடியாததாக ஆக்கிவிட்டது.
51

Page 34
அரசியல் யாப்பின் ஆறாவது பிரிவின் நீக்கம் பல கட்சி அமைப்பைப் புகுத்துவதற்கு யாப்பு ரீதியாக இருந்த தடையை அகற்றிவிடும். அந்த அமைப்பு எத்தகைய வடிவமைப்பைக் கொண்டிருக்கும், அது எவ்வளவு தூரம் பன்முகப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பதெல்லாம் அது எத்தகைய அரசியல் செயல்முறையூடாகப் பரிணாமம் அடையப் போகிறது என்பதைப் பொறுத்தது. ஜூலை மாதம் நடைபெறவுள்ள சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 28-ஆவது தேசிய மாநாட்டை ஒட்டி கட்சிக்குள் ஏற்படப் போகும் பிளவுடன் அது தொடங்கலாம் என்பது இன்று முற்றிலும் சாத்தியமாகத் தோன்றுகிறது. இது ஒரு முக்கோணப் பிளவாக அம்ையக் கூடும். ஒரு முனையில் கொர்பச்சேவ் ஆதரவாளர்கள்: மறுமுனையில் கட்சியின் மத்திய குழுவில் லிகச்சேவ் அவர்களைப் பேச்சாளராகக் கொண்ட ஸ்டாலினிச பழைமைவாதிகள் இன்னொரு முனையில் சமூக- ஜனநாயகத்தைத் தெளிவான கொள்கையாகக் கொண்ட ஜனநாயக அரங்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் தீவிர சீர்திருத்தவாதிகள். இருப்பினும் இந்தப் பிளவுகள் ஒன்று சேர்ந்து சிறுபான்மைத் தேசிய வாதங்களின் விளைவான பிழைகளை மேலும் அதி வேகப்படுத்தக் கூடும். ஆகையால், எதிரே உள்ளது ஒரு புயல் சூழ்ந்த எதிர்வு கூற முடியாத எதிர்காலம் தான். இந்த உரை, அடிப்படையில் அரசியல் ஆருடம் சொல்லும் நோக்கில் அமையாததால், சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி அமைப்பைக் கைவிடும் போக்குடன் தொடர்பான பிரச்சினைகளை மட்டும் நான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.
லெனினிசத்தோடும் முன்னணிக் கட்சியின் பாத்திரத்தோடும் பல கட்சி முறை ஒத்துப்போக முடியாததல்ல என்று வைதீகர்கள் வாதிக்கலாம். கொள்கை அளவில் நடைமுறையில் கூட அது சரிதான். போல்ஷெவிக் கட்சி ஒக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஒரு குறுகிய காலக் கூட்டணியை இடதுசாரி சமூகப் புரட்சியாளர்களுடன் வைத்திருந்ததை நாம் நினைவு கூரலாம். ஆனால் ஒரு தனிக் கட்சியை வரலாற்றினதும் அரசியல் நடைமுறையினதும் கருவியாகக்கொள்ளும் லெனினிசக் கருதுகோள் தவிர்க்கமுடியாமல் ஒரு கட்சி அரசுக்கு வழிவகுத்தது என உறுதியாகக் கூற முடியும். இது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளும் புறமும் தீவிரவாதிகளால் இன்று லெனினிசம் பற்றிச் சொல்லப்படும் முழுமையான விமர்சனத்தின் மீது என் கவனத்தை ஈர்க்கின்றது.
52

பெரஸ்ட்ரோய்க்கா தொடங்கிய பின் சோவியத் சமுதாயத்தில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு அம்சம், வரலாற்றை மீளக் கண்டுபிடிப்பதில் காண்பிக்கும் ஆழமான அக்கறையாகும். அதாவது புரட்சிக்கு முந்திய பழைமையைப் பற்றிய உண்மையை அறிவதில் &57LüLUGSQüb ə9|&s&actiopun 695üb. எனினும் இந்த அக்கறை வெறுமனே பழைமையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதன்று. சோவியத் சமுதாயம் எப்படி இன்றுள்ள நிலைக்கு வந்தது என்பதை அறிவதில் ஆர்வம் பிறந்துள்ளது. அதற்கான காரணிகளை விளங்கிக்கொள்வதன் மூலம் இன்று தேவைப்படும்" மாற்றத்துக்கு அவை எந்தவகையில் வழிகாட்டியாக அமைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம்.
பெரஸ்ட்ரொய்க்காவின் தொடக்க கட்டத்தில் சோவியத் பத்திரிகையாளர்கள். அறிவாளிகள், ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் முதலானோர் ஸ்டாலின் காலத்திய கொடுமைகள், குற்றங்களைப் பற்றி எழுதியவை வெள்ளம் போல் பெருகின. இந்த வெளிப்பாடுகிளே மீள் தேடுதலின் முதல் பிரதிபலிப்புகளாக அமைந்தன. எனினும் இவை எல்லாம் நடந்திருந்தன என்பதை அறிந்துகொண்டால் பேர்தாது. இவை ஏன் நடந்தன என்பதை அறிந்துகொள்வது அதை விட முக்கியமானது. ஸ்டாலின் ஒரு கெட்ட மனிதன் என்று குருஷேவ் அப்பாவித்தனமாக் கூறியது இன்று ஏற்றுக்கொள்ளப் போதுமானது அல்ல. அதனால்தான் ஸ்டாலினை ஸ்டாலினாக நிலைக்க வைத்த, சர்வாதிகாரம் மற்றும் கொடுங்கோல் அமைப்பைச் சாதகமாக்கிய சமூக, அரசியல் அடிப்படைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் வரலாற்று ரீதியிலும் கோட்பாட்டு ரீதியிலும் கடந்த சில ஆண்டுகளில் நிறையவே எழுதப்பட்டுள்ளன. சோவியத் விஞ்ஞானக் கழகத்தின் வரலாற்று நிறுவனத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் குழுவால் எழுதப்பட்டுவரும் "புதிய சோவியத் சமுதாய வரலாறு என்ற நூற்தொகுதியின் முதல் அத்தியாயத்தின் இறுதியில் இரண்டு வசனங்களில் இந்த அடிப்படைப் பிரச்சினை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (இந்த அத்தியாயம் "இஸ்தோற்றியா எஸ். எஸ்.எஸ்.ஆர் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது).அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:
"ஜனநாயகத்தை அடைவதன் மூலமே சோஷலிசப் புரட்சி உண்மையில் முழுமை பெற்றதாகக் கொள்ள முடியும். சோவியத் சமுதாய வளர்ச்சியில் மாற்றீடாக அதிகாரத்துவ ஆட்சி எப்படி, எப்போது எழுந்தது? அது ஏன் வெற்றிபெற்றது?"
53

Page 35
சோவியத் அனுபவம் எழுப்பும் வினாக்களை இது தெளிவாகவும், சுருக்கமாகவும் கூறுகிறது. ஆயினும், மிக அண்மைக்காலம் வரை, எல்லா மீள் தேடல்களும் லெனின் இறந்த ஆண்டான 1924 உடன் அல்லது துறோயிக்கா மூலம் ஆட்சியைப் பொறுப்பேற்க ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருந்த 1923 க்கு அப்பால் செல்லாது நின்றுவிட்டன. "சோவியத் சமுதாய வரலாறு" என்ற நூலில் இருந்து நான் மேற்கோள் காட்டிய இரண்டு வசனங்களிலும் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு விடைகாண சோவியத் ஆய்வாளர்கள் லெனின் காலம் வரை. ஏன் அதற்கு அப்பால் ஒக்டோபர் புரட்சி வரை கூடச் சென்று ஆராய்கிறார்கள் என்பது மிகுந்த முக்கியத்துவமுடைய ஒன்றாகும்.
1990 ஏப்ரல் மாதம் நிகழ்த்திய லெனின் நினைவுச் சொற்பொழிவின் ஒரு பகுதியை கொர்பச்சேவ் “லெனின் பற்றிய அழிவு நோக்குகளைத் தாக்கிப் பேசுவதற்கு ஒதுக்கினார். "அவை லெனினை ஸ்டாலினோடு இனம் காணும் நோக்குடையவை; முழு சோவியத் வரலாற்றுக்கும் கரிபூசக்கூடியவை: ஒக்டோபர் புரட்சியையும் அதையொட்டித் தொடர்ந்த நிகழ்வுகளையும் தவறுகளாகக் காட்டக்கூடியவை. இன்னும் மோசமாக நாட்டுக்கும். மனித குலத்துக்கும் எதிராகச் செய்யப்பட்ட குற்றமாகக் காட்டக்கூடியவை" என்று அவர் கூறினார்.
இருப்பினும் கொர்பச்சேவ் தவறு விட்டுவிட்டார். “லெனினை ஸ்டாலினுடன் இனம் காண்பது” அல்ல பிரச்சினை. சோவியத் ஒன்றியத்தில் இன்றுள்ள, லெனினிசம் பற்றிய அடக்கமான, பொறுப்புள்ள விமர்சகர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்று நான் கருதவுமில்லை. இவர்கள் இருவருக்குமிடையிலும், இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ஆளும் கட்சிக்குள் உள்ளகக் கலந்துரையாடல், கருத்து வேற்றுமைச் சுதந்திரத்தைப் பேணினார் லெனின்; ஆனால் கட்சிக்கு வெளியே அதை அரித்து இறுதியில் அரசியல் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அழித்தொழித்தார். ஸ்டாலின் ஆளும் கட்சிக்குள்ளேயே கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி அதை ஒரே தளம் கொண்டதாக மாற்றினார். இந்த வித்தியாசத்தை அடையாளம் கண்டதும், இரண்டு கட்டங்களுக்கும் இடையில், ஒரு வரலாற்று நடைமுறைத் தொடர்ச்சி இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். வெளியே அரசியல் சுதந்திரத்தை ஒழித்தபின், கொம்யூனிஸ்ட் கட்சியால், தன் உறுப்பினர்கள் இடையே காலவரையறை இன்றி அரசியல்
54

சுதந்திரத்தைப் பேண முடியவில்லை. ஒரு கட்சி ஆட்சி முறையில் இருந்து தடம் மாறி ஒரேதளக் கட்சி ஆட்சி. முறைக்கு வந்தபின் தனியொரு மனிதனின் சர்வாதிகாரம் ஒரு அவசியமான வளர்ச்சிக் கட்டமாக அமைந்தது. லெனினுக்கு எதிராக புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் ட்றொட்ஸ்கி எழுதிய கண்டனக் கட்டுரைகளில் அவர் இதுபற்றி தீர்க்கதரிசனம் கூறினார். போல்ஷெவிசம் தொழிலாளர் வர்க்கத்துக்கு மாற்றிடாக கட்சியைப் புகுத்த எத்தனிக்கிறது" என்றும் அது வெற்றி பெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்றும் அவர் முன்கூட்டியே கூறினார். "கட்சிக்கு மாற்றிடாக கட்சியமைப்பு புகுத்தப்படும்: கட்சி அமைப்புக்கு மாற்றிடாக கட்சியின் மத்தியகுழு புகுத்தப்படும்; இறுதியில் தனி ஒரு சர்வாதிகாரி மத்திய குழுவுக்கு மாற்றிடாக தன்னைப் புகுத்திக்கொள்வார். எனினும் அவர் தன் உள்ளொளிக்கு மாறாக 1917 இல் லெனினின் கட்சியில் சேர்ந்தார். பிற்காலத்தில் ஏனைய ப்ல தலைவர்களை விட கட்சிக்குள் மத்தியமயப்படுத்தும் போக்கை பலப்படுத்த அதிகம் பங்களித்தார். இன்று தீர்க்கதரிசி என்று போற்றப்பட வேண்டிய ஒருவர் லெனினோ அல்லது ட்றொட்ஸ்கியோ அல்ல, ஆனால் ஜெர்மன் கம்யூனிஸ்ட் பெண் தலைவர் றோசா லக்சம்பேர்க் அவர்கள் தான். அவர் வலதுசாரி எதிரிகளுக்கு எதிராக ரஷ்யப் புரட்சியை ஆதரித்தார்; ஆனால் ஆரம்ப கால்த்தில் இருந்தே ஓய்வொழிச்சல் இன்றி அதன் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படையாகக் கண்டித்தார். சோவியத் ஒன்றியத்தில் மட்டுமன்றி புரட்சிக்குப் பிந்திய வேறு பல சமுதாயங்களிலும் சிறைமுகாம் : சோஷலிசம் தந்த பரிதாப அனுபவங்களுக்குப் பின், ரஷ்யப் புரட்சி பற்றி அவர் எழுதிய துண்டுப் பிரசுரத்தில் உள்ள சொற்கள் அவை எழுதப்பட்ட காலத்தைவிட இன்று மிக ஆழமான அழுத்தம் ப்ெறுகின்றன:-
"கட்டுப்பாடற்ற, சுதந்திரமான பத்திரிகை இல்லாமல், சங்கம் அமைக்கவும் கூட்டங்கள் நடத்தவும் வரையறை அற்ற உரிமை இல்லாமல், பெரும்பகுதி மக்களாலான ஆட்சி என்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. அரசு ஆதரவாளர்களுக்கு மாத்திரம் உள்ள சுதந்திரம், ஒரு கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் உள்ள சுதந்திரம், எவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும்சரிசுதந்திரமே அல்ல. சுதந்திரம் என்பது எப்பொழுதும், வேறுவிதமாகச் சிந்திப்பவர் ஒருவருக்கு மட்டுமுள்ள சுதந்திரமாகும்"
55

Page 36
ஏழு தசாப்தங்களில் வரவிருந்த சோவியத் ஒன்றியத்தின் அரசியல் வாழ்வை முன்கூட்டியே விபரிப்பதுபோல் அமைந்த இன்னொரு பந்தியில் அவர் கூறினார்:-
"நாடு முழுவதிலும் அரசியல் வாழ்க்கை ஒடுக்கப்படும்பொழுது. சோவியத்துகளில் வாழ்க்ல்க மேலும் மேலும் முடக்கம் அடையும். பொதுத் தேர்தல் இல்லாமல், கட்டுப்பாடற்ற பத்திரிகை, கூட்டம் கூடும் சுதந்திரம் இல்லாமல், கருத்துப் போராட்ட சுதந்திரம் இல்லாமல், ஒவ்வொரு பொது நிறுவனத்திலும் உயிர்ப்பு செத்துவிடும். உயிரோட்டம் உள்ளதுபோல் மட்டும் காணப்படும். அதிகாரித்துவம் மட்டும் செயற்பாடுள்ள கூறாக இருக்கும். அவர்களுள், உண்மையில் ஒரு பத்துப் பன்னிரெண்டு பேர் வரையில்தான் தலைமை தாங்குபவர்கள் இருப்பர். pries தொழிலாளர் வர்க்கத்திலிருந்து சில உயர்குழுவினர் அவ்வப்போது கூட்டங்களுக்கு அழைக்கப்படுவர். அவர்கள் தலைவர்களின் பேச்சுகளுக்குக் கைதட்டி முன்மொழியப்படும் தீர்மானங்களை ஒருமுகமாக ஆதரிப்பர். அடித்தளத்தில் இது ஒரு குழுக் கும்மாளம்: ஒரு சர்வாதிகாரம். நிச்சயமாக தொழிலாளர் வாக்கத்தின் சர்வாதிகாரம் அல்ல. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளின் சர்வாதிகாரம். ஆம்! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்: அத்தகைய சூழல்கள் பொது வாழ்க்கையை மிருகத்தனமாகப் பாதித்துவிடும்."
ஸ்டாலினைப் பயங்கர பூதமாகக் காட்டியபின் லெனினைப் பயங்கர பூதமாகக் காட்டுவது என் நோக்கமல்ல. லெனினும் லெனினிசமும் ரஷ்ய வரலாற்றுச் சூழலின் விளைபொருட்கள். ரஷ்யாவின் பிற்பட்ட வரலாற்று வளர்ச்சி. அதனுடன் இணைந்த, தாராள அறிவொளி, நடுத்தர வர்க்க முன்னேற்றம், ஜனநாயக அசியல் கலாசாரம் என்பவை இல்லாமை அல்லது வளர்ச்சி குன்றியமை அதற்குக் காரணமாகும். இதனால் எந்த அதிகாரக் கட்டமைப்புக்கள் தூக்கி எறியப்பட்டனவோ அவற்றின் சாயலையே லெனினிச சர்வாதிகாரத்துவம் பெற்றது. பிற்பட்ட வரலாற்று வளர்ச்சி கொண்ட ஒரு சமுதாயம் தன்னைத் தானே மாற்றி அமைக்க எத்தனிக்கும்பொழுது முற்பட்ட பழைமையின் சுமைகளைச் சுமக்கத்தான் வேண்டியிருக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சாரிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கையாண்ட தலைமறைவு அரசியல் இயக்கங்களின் உத்திகளை இலட்சியபூர்வமாக்கி, மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சியின் நிழலில்
, 56

முழுச் சமுதாயத்தையும் மீளக் கட்டியெழுப்ப எடுத்த முயற்சி லெனினிசத்தின் அழிவுப் பாதையாக இருந்தது. இது விதி வசமானது. ஒரு புரட்சிகர உயர் குழாத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஒரு சமூக மாதிரியை முழுச் சமுதாயத்தின் மீதும் திணிக்க லெனினிசம் எடுத்த அகநிலைப்பட்ட முயற்சிகள், மக்கள் திரளுக்கும் தலைவர்களுக்கும் இடையில் இருந்த கலாசார இடைவெளி போன்ற புறநிலையான சூழல்களுடன் இணைந்து செயற்பட்டபோது சர்வாதிகாரம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அப்போதிருந்து ஸ்டாலினிசத்தால் மேலும் தரங்கெடுக்கப்பட்டு குரூரமாக்கப்பட்ட லெனினிச மாதிரி தனக்கென ஒரு இடம் பிடித்துக்கொண்டது. முதலாவது சோஷலிசப் புரட்சி என்ற மவுசோடு மூன்றாம் உலக சோசலிசங்கள் அனைத்தும் பரின் பற்றப் படவேண் டிய 2 - 5 ft U socz LD T és தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. எங்கெல்லாம் லெனினிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தனவோ அங்கெல்லாம் அவர்கள் சித்தாந்தத்தில் உள்ளார்ந்திருந்த சர்வாதிகாரப் போக்கு மீதான அகநிலைப்பட்ட ஆர்வமும், அத்தகைய வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்திருந்த புறநிலையான சமூகச் சூழல்களும், ஆபத்தான முறையில் இணைந்து. நடைமுறையில் வெளிப்பட்டன. ஆதலால் பெரெஸ்ரொய்க்கா தொடர்பாக அநேக ஆசிய கொம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கறையற்றவையாக அல்லது ஆத்திரமுற்று இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது அவர்களுடைய முழுமையான அரசியல் கலாசாரத்துக்கும் எதிரானது. உதாரணமாக இது தொடர்பாக புதிய கொம்யூனிஸ்ட் கட்சி (மொஸ்கோ)க்கும், ஜனநாயக சமூக இயக்கமாகத் தன் அமைப்பையே மாற்றிவரும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையிலான தூரத்தைக் காட்டுகின்றது.
பின்தங்கலின் சாதகங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம் உளவியல் ரீதியில் அதனைச் சரிக்கட்டும் போக்கானது நான் இதுவரை குறிப்பிட்ட வகையான காலதாமதமான வரலாற்று வளர்ச்சியின் விளைவுகளுள் ஒன்றாகும். ரஷ்ய வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. மேற்குலகுக்கு நேர்ந்த கதியை முதலாளித்துவத்தைத் தவிர்ப்பதன் மூலம் дтGршт தவிர்த்துக்கொள்ளலாம் என்று ஸ்லவோபில்ஸ்களும் நரோத்ணிக்குகளும் நம்பினார்கள். லெனினும், ட்றொட்ஸ்கியும் ஐரோப்பியப் புரட்சியை ரஷ்யா வழிநடாத்த முடியும் என்று 1917ல்
57

Page 37
கற்பனை செய்தார்கள். ஒரு நாட்டில் சோஷலிசத்தைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஸ்டாலின் அப்படி நம்பினார். எனினும் வளர்ச்சியில் இன்னும் கால்தாமதமான நிலையில் இருந்த ஆசிய சூழ்நிலையில் இந்த அசாதாரணப் போக்கு இன்னும் கூர்மைப்பட்டுக் காணப்பட்டது. உதாரணமாக மாவோயிசத்தில் விவசாயிகள் இலட்சியமயப்படுத்தப்பட்டனர். பெரெஸ்ட்ரொய்க்கா வும் கிழக்கு ஐரோப்பியப் புரட்சியும் வந்தபின்னர் முதலாளித்துவத்தின் சதைப்பிடிப்பால் ஏமாற்றிக் கவரப்பட்டுவிட்ட சிதைவுறும் மேற்குலகுக்கு எதிராக வைதிக சோஷலிசத்தின் காவலர்கள் தாமேயென சில ஆசிய அரசியல் குழுக்கள் தம்மைத்தாமே கருதிக்கொள்ளக்கூடிய ஒரு ஆபத்தும் உண்டு. இந்தப் பேரக்கு இலங்கைச் சோஷலிசக் குழுக்கள் சிலவற்றிடமும் காணப்படுகிறது. சோஷலிசக் குழுக்களிடையே காணப்படும் இந்தப் போக்கு மேற்குலகச் சிந்தனையை நிராகரிப்பதாகக் கூறிக்கொள்ளும் “ஜாதிக சிந்தனை" வாதிகளின் நிலைக்கு ஒத்ததாக இருக்கின்றது. ஆகையால் அரசியல் ஜனநாயகம், சட்டித்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஆகியவை இன்று அடிப் படையான அனைத் துலக முன்னேற்றங்களை பிரதிபலிக்கின்றன என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். அவற்றைப் புறக்கணிக்கும் எந்த சோஷலிசப் போக்கும் முதலாளிமத்துவத்துக்கு முற்பட்ட கால சித்தாந்தத்தின் தொடர்ச்சியாகவே அமையும்,
கிழக்கு ஐரோப்பிய அல்லது சோவியத் நிகழ்வுகளையிட்டு நான் எந்தவித ஆனந்த ஆரவாரமும் செய்ய விரும்பவில்லை என்பதை முடிவுரையாகக் கூற விரும்புகிறேன். சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலினிசம் கைகழுவி விடப்பட்டுவிட்டது என்பதும், கிழக்கு ஐரோப்பாவில் லெனினிசம் மூட்டை முடிச்சோடு தூக்கி வீசப்பட்டுவிட்டது என்பதும், அந்த மட்டில் நல்லவைதான். ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் பல்வகைப்பட்ட சிக்கலான, சிரமமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இவற்றின் வருங்காலம் எளிதானதாக அல்லது அமைதியாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. வரலாற்று ரீதியான காலதாமதத்தின் சுமைகளை ஒரு நாளிலோ ஒரு தசாப்தத்திலோ களைந்துவிட முடியாது. சோவியத் ஒன்றியத்தில் உள்ள "ஒகோனியொக்" என்ற பெயருள்ள சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரையின் இறுதிப் பந்திகளை மேற்கோள் காட்டி இதனை முடிக்க விரும்புகிறேன். இதை எழுதியவர் வியச்செஸ்லாவ் கோஸ்திக்கோவ். அவரை நான் சோவியத் ஒன்றியத்தின்"இன்றைய
58

புத்திசாலித்தனமான அரசியல் விமர்சகராகக் க்ருதுகிறேன். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொங்கிரசின் முதற் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகை’ எதிர்பார்ப்புகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கை செய்வதே அதன் உடனடி நோக்கமாக இருந்தது. அவரது குறிப்புகளில் வெளிப்படும் அரசியல் ஞானம் இன்று கிழக்கு ஐரோப்பாவிற்கும் பொருந்துமென நான் நினைக்கிறேன். பெரிதும் வேறுபட்ட எங்கள் அரசியல் சூழலுக்கும் பொருந்துகின்ற, கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். அதில் உண்டு. மூலத்தில் இருந்து நான் அதை மொழிபெயர்த்துத் தருகிறேன்:
"நாங்கள் மயக்கங்களுக்கு சரணடைந்து, ஒரு நாளில் ஜனநாயகம் எம்மிடையே மலர்ந்துவிடும் என்று நினைக்க முடியாது. கற்பனைச் சொர்க்கங்கள் போதும் ஒரு முதிர்ச்சி அடைந்த ஜனநாயகம் வளர நூற்றாண்டுகள் பிடிக்கும். கிளாஸ்நொஸ்த், பேச்சுச் சுதந்திரம், பாராளுமன்ற முறை என்பன ஜனநாயகத்தின் சில பண்புகளும் கருவிகளும் மாத்திரமே. "மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதற் கூட்டத்தோடு மேற்கு எல்லையில் இருந்து பசுபிக் கரைவரை ஒரு பிரகடனத்தின் மூலம் விரைவாக ஜனநாயகத்தைப் புகுத்தலாம் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள்.
முகிழ்த்துவரும் சிவில் சமூகத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் சபையின் கூட்டம் சுதந்திரத்தின் சுவையைத் தந்திருக்கிறது. அதுவின்றி எந்த ஜனநாயகமும் வளர முடியாது. நேற்றுவரை "விலக்கப்பட்ட கணி"யாக இருந்ததைச் சுவைத்த சோவியத் மக்கள். விவிலிய கால ஆதாமையும், ஏவாளையும் போல, மலட்டுத்தனமான புராணிக சுவர்க்கத்தில் இனி இருக்கவும் முடியாது. இருக்க விரும்பவும் மாட்டார்கள். "பாவம் நிறைந்த உலகமான” ஜனநாயகத்தையே விரும்புவார்கள்.
59

Page 38
தேசியவாதமும் சோவியத் ஒன்றியத்தின் உடைவும்.
* வரலாறு தனது முன்னோக்கிய பயணத்தில் தடுமாறிக்கொண்டு செல்வது குறித்து கண்ணிர் விட விரும்புபவர் விட்டுக்கொள்ளட்டும். ஆனால் அந்தக் கண்ணிர் எந்தப் பயனுமற்றது. ஸ்பினோசா அறிவுறுத்துவது போல, அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல, அதைப் புரிந்து கொள்வதே அவசியமாகும்’- - ܨ
. -aSGunreir Oprmiśwa.
மொஸ்கோவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற தினத்தன்று என்னைச் சந்தித்த நண்பரொருவர் அடுத்ததாக அங்கு நடக்கப் போவது என்ன என்பது குறித்த எனது அபிப்பிராயத்தை அறிய விரும்பினார். கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக சுதந்திரம் அல்லது சுயாட்சிக்காகப் போராடி வருகின்ற சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகள் இத்தகைய பழமைவாதிகளது ஆட்சிக்கவிழ்ப்பை அனுமதிக்கப்போவதில்லை என்பதால் இது அதிகநாள் நீடிக்கப்போவதில்லை என்று அவருக்குத் தெரிவித்தேன். இத்தகைய, காலத்தைப் பின்னோக்கி ஒடவைக்கும் முயற்சிகள் சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகள் தத்தமது பிராந்தியங்களுடன் பிரிந்து செல்வதையே துரிதப்படுத்தும் என்றும் அவருக்கு நான் கூறினேன்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த முதல்நாளே கொழும்பிலும் கல்கத்தாவிலும் இன் னும் கூட தம்மை மாற்றிக்கொள்ளத் தயாரற்ற ஸ்டாலினிசவாதிகள் தாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இரட்சகரின் மீள்வருகையாக எண்ணி இதைக் கொண்டாடத் தொடங்கியிருந்த வேளையில்தான் இந்த நண்பருக்கு நான் இப்படிக் கூறிக்கொண்டிருந்தேன். இவர்களின் இத்தகைய நம்பிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. பெரஸ்ரோய்க்கா மக்களின் வாய்ப்பூட்டைத் திறந்துவிட்டிருந்தது என்னவோ
6O

உண்மைதான். என்றபோதிலும் அது அவர்களின் வயிற்றை நிரப்பிவிடவில்லை. இதனால் கொர்பச்சேவ் சோவியத் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்த ஒருவ ராகவே இருந்தார். மொஸ்க்ோ ஆட்சிக் கவிழ்ப்பாளர்கள் இதையும் அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான நேர்ம் மறுநாள் கைச்சாத்தாக இருந்த புதிய கூட்டமைப்பு ஒப்பந்தத்தினாலேயே (UnionTreaty) தீர்மானிக்கப்பட்டது.
சோவியத் மரபுவாத அதிகார வர்க்கத்தின்ர் இந்த ஒப்பந்தத்தை சுவரில் எழுதிய எழுத்தாகக் கருதினார்களென்பது வெளிப்படை. இந்தப் புதிய ஒப்பந்தம் அதிகார மையப்படுத்தலில் கொண்டுவர் இருந்த அறைகுறையான மாற்றம்கூட தமது அதிகாரத்துக்கும் வாய்ப்பு வசதிகட்கும் ஆபத்தானதாகவே அவர்கள் கருதினர். இதுவே இந்த " ரஷ்ய மூடத்தனத்தின் மிகப் பயங்கரமான நடவடிக்கை”க்கு (பின்னாளில் போரிஸ் யெல் ற் சினின் உதவியாளர்களுள் ஒருவர் இவ்வாறு இதைக் குறிப்பிட்டார்) காரணமாகப் பின்னணியில் நிலவிய சிந்தனைப் போக்காகும். இது கட்சி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் நிகழ்ச்சிப் போக்கை எதிர்த்திசையில் திருப்ப மேற்கொள்ளப்பட்ட கடைசிப் பிரயத்தனமாகும். ஆனால் இந்த முயற்சி சாதித்ததெல்லாம் ஆட்சிக் கவிழ்ப்பின் போதும் அதன் பிறகும் முன்ன்ைய சோவியத் ஒன்றிய்ம் பன்னிரெண்டு குடியரசுகளாக உடைந்ததையும் சோவியத் கொம்யூனிசத்தின் சரிவையும்தான்.
பெரஸ்ரோய்க்கா அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுக் காலத்துள் அரசியல் மாற்றப் போக்கை உந்தித்தள்ளிய இரண்டு புதிய சமூக சக்திகள் உருவாகி இருந்தன. ஒன்று அரசியல், பொருளாதார, அறிவுத்துறை ஆதிக்கவாதத்தின் நேரடித் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கான சோவியத் மக்களின் விருப்பு. மற்றையது பல்வேறு இன.மொழி கலாசார தனித்துவங்களைக் கொண்ட ஒரு நாட்டில் மையப்படுத்தப்பட்ட சோவியத் அரசமைப்பு மேலிருந்து திணித்திருந்த செயற்கையான ஐக்கியத்தை நிராகரித்து. இனத்துவ, தேசிய தனித்துவங்கள் மீள் வலியுறுத்தப்பட்டமை
முதலாவது வளர்ச்சி ட் ரொஸ் கியவாதிகளாலும் ஸ்டாலினிஸ்டுகளல்லாத பிற புரட்சியாளர்களாலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது. சோசலிச ஒழுங்கு வடிவத்துள் ஜனநாயகமயமாக்கல் சாத்தியம் என்ற தவறான நம்பிக்கை
61

Page 39
அவர்களுக்கு இருந்த போதும் அவர்கள் இப்படி எதிர்பார்த்தார்கள். இரண்டாவது வளர்ச்சியோ அவர்களால் கொஞ்சமும் எதிர்பார்க்கப்படாதது. ஏனென்றால் பொதுவாகவே எல்லா மார்க்ஸிஸ்டுகளும் வர்க்கத்தை முதன்மைப்படுத்தும் அதேவேளை தேசியவாதத்தின் உள்ளார்ந்த ஆற்றலை (சக்தியை) "மிகவும் குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளார்கள்.
தனது காலத்தின் மிகப் பிரபல சோவியத் வரலாற்றாசிரியரான ஐசாக் டொயிற்ஷெரின் படைப்புக்களை மீள்மதிப்பீடு செய்து 1990 இல் நான் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகளை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். -
" சோவியத் யூனியனின் எதிர்காலம் ஜனநாயக மயமாக்கலையும் அதிகாரத்துவம், சிறப்புரிமை, பொலிஸ் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தையுமே கொண்டமையும் என டொயிற்ஷெர் தன் வாழ்வின் இறுதிக்காலம்வரை கருதினார். அவரது இந்த முன்னுணர்வு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தான் மறைந்து கால் நூற்றண்டுகளுக்குள்ளாகவே விடுதலை பெற்றுத் தரவும் பின்னோக்கித் தள்ளவும் கூடிய முரண்வலுக் கொண்ட தீவிரமான தேசியவாதத்தை சோவியத் யூனியன் எதிர்கொண்டாக வேண்டியிருக்கும் என அவர் எண்ணிப்பார்த்திருக்க முடியாது. ட்றொட்ஸ்கி ஒருமுறை உறுதியாகச் சொன்னதுபோல "மனிதனது தெளிந்த பகுத்தறிவின் மீது தெளிந்த பிரகாசமான நம்பிக்கை" கொண்ட டொயிற்ஷெர் ஓர் அதீத செவ்வியல் மார்க்சியவாதியாக (Classical marxist) கருதத்தக்கவர். அவ்வகையில் ஒக்டோபர் புரட்சிநடந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாகுவிலும் பிறசோவியத் நகரத் தெருக்களிலும் 1983 ஜூலையில் கொழும்பில் நடந்தது போன்ற காட்சிகள் நடைபெறக்கூடும் என அவர் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் மிகுந்த கூர் உணர்வுள்ள கோட்பாட்டாளர்கள் முன்னோக்கிப் பார்க்கக்கூடியவற்றைவிட வரலாற்றின் கருப்பை இவ்விடயத்தில் அதிகளவு வளமிக்கதாகவே உள்ளது".
தேசியவாதத்தின் "விடுதலை வழங்கல்- பின்தள்ளல் என்ற முரண்பட்ட தன்மை பற்றி நான்மேலே குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். கடந்த ஐந்தாண்டுகால சோவியத் வரலாற்றில் தேசிய வாதத்தின் இத்தகைய இரட்டைத் தன்மைக்கு நிறையச் சான்றுகளைக் காணலாம். பல்வேறு சோவியத் குடியரசுகளில்
62

நடந்த இனக்கலவரங்களும் படுகொலைகளும் மட்டுமல்ல பெரும் ரஷ்யப் பேரினவாதமும் செமிற்றிய எதிர்ப்புவாதமும் கொண்ட பாமியத் (Panyat) இயக்கம் போன்ற பாசிசப் போக்குகளின் வளர்ச்சியும் தேசியவாதத்தின் அபாயகரமான அழிவுத் தன்மைக்கு உதாரணமாகும்.
ஆனால் சோவியத் யூனியனின் மீது பழைய ஆட்சிமுறையை மீண்டும் திணிக்க ஆட்சிக்கவிழ்ப்பாளருக்கு மற்றெந்தச் சக்தியையும் விட அதிகளவில் தடையாக இருந்தவை ரஷ்ய தேசியவாதமும் சிறுபான்மை இனங்களின் தேசியவாதமுமே என்பதை நாம் மறக்கக்கூடாது. ரஷ்ய தேசியவாதத்தின் சின்னமான போரிஸ் யெல்ற்சினால் மொஸ்கோவிலும் லெனின் கிராட்டிலும் நடாத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணிகளும் மற்றைய குடியரசுகளின் பிரிந்துபோகும் முயற்சிகளுமே ஆட்சிக்கவிழ்ப்பாளர்களின் தலைமைக்குழு ஹம்ரிடம்ரி போல் தலைகீழாக விழ வைத்தவை என்று துணிந்து கூறலாம்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 1989 இல் இருந்தது போலவே சோவியத்திலும் கடந்த சில வாரங்களாக அதிகாரத்துவ கம்யூனிஸ்ட் அரசுக்கெதிரான மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டாகத் தேசியவாதம் உருவாகியுள்ளது. 1984 இல் பிரசுரிக்கப்பட்ட, 'றுாடோல்ஃ பாஹ்ரோ" என்ற கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த அதிருப்தியாளரின் கிழக்கைரோப்பாவில் மாற்றுவழி என்ற நூலிலிருந்து ஒரு வரியை இங்கு, குறிப்பிட்டாக வேண்டும்.
தேசியப் பிரச்சினைகள் எவ்வளவுக்கெவ்வளவு ஆக்கபூர்வமான முறையில் தீர்த்துவைக்கப்படாமல் இருக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு கட்சி அமைப்புக்களின் புனிதக் கூட்டமைப்பை உடைப்பதில் தேசியவாதம் ஒரு அத்தியாவசியமான பாத்திரம் வகிக்கின்றது."
இது பற்றிய விடயத்துக்கு நான் பிறகு வருகிறேன். ஆனால் சோவியத் சமூகத்தில் தேசிய வாதம் பற்றிய பிரச்சினைகள் தொடர்பாகப் பேச முன்பு சோவியத் அரசு பற்றிய ஒரு சித்திரத்தினை நான் தருவது அவசியமாகும். அவ்வாறு செய்கையில், சோவியத்தின் சமீபகால வளர்ச்சி பற்றிய தெளிவான புரிதலுக்குத் தடையாகப் பலரது மனதிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற சோவியத் சோசலிசம் பற்றிய ஐதீகங்களுடன் நான் மோதவேண்டி இருக்கும்.
63

Page 40
இற்றை வரையான சோசலிஸ்டுகள், முதலாளித்துவத்தைப் பற்றிய தமது ஆய்வுகளுக்குப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் மாறான ஒரு முறையையே சோவியத்தைப் பற்றிய ஆய்வுகட்குப் பயன்படுத்தியுள்ளார்கள். முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் விரும்பினால் அவர் என்ன செய்கின்றார்? லொக்கே, பென்தம் அல்லது மில் போன்ற சிந்தனையாளர்களின் சித்தாந்தங்களைத் தேடி அவர் போவதில்லை. tortfontas. முதலாளித்துவ சமுதாயத்தின் திட்டவட்டமான சமூக உறவுகளை உற்றுநோக்கி அதிலிருந்து முதலாளித்துவம் என்றால் என்ன். அது எப்படி இயங்குகின்றது என்பதைப்பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்க அவர் முயல்கிறார். ஆனால் சோவியத் ஒன்றியத்தையும் பிற சோவியத் சமூகங்களையும் பொறுத்தவரை அனேகமாக எல்லா 'சோசலிஸ்டுகளும், மார்க்சினதும். லெனினதும் தத்துவங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் கிடைக்கக்கூடிய அனைத்துச் சான்றுகளையும் ஒதுக்கிவிட்டு ஒன்றில் சோவியத் சமூகமே இந்தத் தத்துவங்களின் முழுமையான உருவாக்கம் என்று அழுத்திக் கூறுகிறார்கள் அல்லது சோவியத் ஆட்சியாளர்கள் இந்தத் தத்துவங்களைக் கைவிட்டுவிட்டார்களென்று அவர்களைக் கண்டிக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை இவையிரண்டுமே பயனற்ற, காலத்தை வீணாக்கும் முயற்சிகள் என்று துணிந்து சொல்வேன். இவை எப்படி இருக்கிறதென்றால் அமெரிக்க சுதந்திரப் பிரகடன உரையை வைத்துக்கொண்டு அமெரிக்க சமூகத்தை அளவிடுவது போலவோ அல்லது றுசோவையும் மனித உரிமைப் பிரகடனத்தையும் வைத்துக்கொண்டு பிரஞ்சு சமூகத்தை மதிப்பிடுவது போலவோ இருக்கின்றது.
ஒக்டோபர் புரட்சியானது மார்க்சும் 1917க்கு முன்னர் லெனினும் எதிர்பார்த்தவற்றுக்கு முற்றிலும் முரணானது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் சோசலிசப் புரட்சியானது வளர்ச்சியடைந்த மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ சமூகங்களிலேயே நடைபெறும் என நம்பினர். ஏனென்றால் அவர்களது கோட்பாட்டின்படி, பிற இடங்களைவிட அங்குதான் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் விரைவில் முதிர்ச்சியடையும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட் ஒரு நாட்டில் சோசலிசப் புரட்சி நடைபெற்றதானது ஒருவகை வரலாற்று அபத்தமென்றே சொல்ல வேண்டும். இதை 1917க்கு முன்னர்
64

லெனின் ஒருபோதும் வரவேற்றிருக்க மாட்டார். ஆனால் 1917 இல் அவர் தனது அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டார். முதலாம் உலக மகாயுத்தத்தின் பின் புண்பட்டிருந்த மேற்கைரோப்பிய சமூகம் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தயாராக இருந்ததாக லெனின் நம்பியதே இதற்குக் காரணமாகும். ரஷ்யாவில் ஒரு புரட்சிகர அரசை நிறுவுவதன் மூலம் அதை துரிதப்படுத்த முயும் என அவர் நம்பினார். ரஷ்யப்புரட்சி ஐரோப்பியப் புரட்சியை முடுக்கிவிடும் என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
1917 பெப்ரவரியில் சார் ஆட்சி சரிந்து விழுந்ததானது தனது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை லெனினுக்கு அளித்தது. சாராட்சியைத் தூக்கியெறிந்த பெப்ரவரிப்புரட்சி எந்தக் கட்சியினாலும் தலைமை தாங்கப்படாத மக்களின் தன்னியல்பான எழுச்சியாகும். மாறாக, அக்டோபர் புரட்சியோ பிரதானமாக இரண்டு. முக்கிய நகரங்களில் நகர்புற முன்னணிப்படையினரால் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சிச் செயற்பாடாகும். இதைச் செயற்படுத்துகையில் சோவியத் சமூகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச மாற்றத்தில் அன்றி ஐரோப்பியப் புரட்சியிலேயே லெனின் கண்ணும் கருத்துமாய் இருந்தார். லெனினின் இந்தக் கற்பனா மாயைக்கு சோவியத் மக்கள் அடுத்த எழுபத்திநாலு ஆண்டுகள் விலை கொடுக்கவேண்டி இருந்தது.
தனக்குப் பின்னால் வந்த பல வெற்றிகரமான, கம்யூனிஸ்ட் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட புரட்சிகளைப் போலவே ரஷ்யப் புரட்சியும் பலமிக்க பூர்ஷ்வாக்களைக் கொண்டிராத ஒரு சமூகத்தில் நிகழ்ந்ததனால் அங்கு பூர்ஷ்வா ஜனநாயக மாற்றங்கள் நடைபெறாது போயிற்று. இதனால் கைத்தொழிற் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் புராதன மூலதனத் திரட்சியைப் பெறுவதே இதன் பிரதான இலட்சியமாக இருந்தது.
இது 18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய, பிரெஞ்சு, ஜேர்மானியப் பூர்ஷ்வாக்களால் நிறைவேற்றப்பட்ட பணிக்குச் சமாந்தரமானது. ஆனால் ரஷ்யாவில் இந்த மூலதனத்திரட்சி அரசினால் செயற்படுத்தப்படவேண்டி இருந்தது. அரசுதான் சோவியத் சமூகத்தின் பிரதான இயக்கு சக்தியாக அமைந்தது. இதை நடைமுறைப்படுத்துபவர்களாக அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை அதிகார வர்க்கத்தினர் இருந்தனர்.
65

Page 41
இன்றுவரை சோவியத் யூனியனில் ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் உற்பத்தி சக்திகள் மீதான தனி உடமையின் மீதன்றி அரச சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதன் மீதே தங்கியுள்ளது. முதலாளித்துவ நாடுகளின் உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படும் உபரிலாபத்தின் ஒரு பகுதி முதலீட்டிலும் மறு பகுதி இலாபமாக அல்லது பங்காக உரிமையாளர்களுக்கும் பகிரப்படுவது போலவே சோவியத் சமூகத்திலும் உபரியின் ஒரு பகுதி அரசினால் மூலதனமிடவும் பிறிதொருபகுதி அதிகாரவர்க்கத்தின் சொந்தவருவாய். இதர வாய்ப்புக்கள், பொருளாதார சலுகைகள் ஆகியவற்றுக்கும் செலவிடப்படுகிறது.
மேலைத் தேய அதிகார வர்க்கத்தின் வளத்துடன் ஒப்பிடுகையில் சோவியத் அதிகார வாக்கத்தின் வாழ்க்கை முறை டாம்பீகமற்றதாகத் தோன்றலாம். ஆனால் தமது சொந்த சமூகத்தில் பரந்துபட்ட மக்களின் சாதாரண வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் சோவியத் அதிகார வர்க்கம் மிகவும் வாய்ப்பும் வசதியும் பெற்றதாகவே உள்ளது. அவர்களது தேவைகளைக் கவனிக்க என்றே விசேட சேவை அமைப்பொழுங்கொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதான் றுடோல்ஃப் பாஃறோவின் வார்த்தைகளில் சொல்வதானால்) " உண்மையில் நடைமுறையிலுள்ள சோசலிசம்" கற்பனாலோக விருப்புக் களிலிருந்தும் பொற் காலக் க்னவுகளிலிருந்தும் வேறுபட்ட நிஜம். என்னைப் பொறுத்தவரை 'உண்மையில் இருந்த சோசலிசம்" என்றே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நாம் அந்த யுகத்தின் முடிவைக் கண்ணாரக் கண்டுகொண்டிருக்கிறோம்.
சோவியத் சமூகம் பற்றியும் கம்யூயனிச அரசுகள் பற்றியும் பெருமளவு ஆய்வுகள் வெளி வந்துள்ளன. இந்த ஆய்வுகள் இச் சமூகம் பொதுவாக சொத்துடைமை வர்க்கத்துக்குப் பதிலாக ஒரு அதிகார வர்க்கத்தை ஆளும் வர்க்கமாகக் கொண்ட ஒரு புதிய வர்க்க சமூகம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஆனால் தமது கடந்த காலத்தில் பூர்ஷ்வா சனநாயகப் புரட்சியை நடத்தத்தவறிய சமூகங்களின் வரலாற்றில் இந்தக் கொம்யூனிச அரசுகள் ஒரு மாறுதல் கட்டமாக மட்டுமே காணப்படுகின்றன என்ற உண்மையை உள்ளடக்கக்கூடிய வகையில் இந்தப் பகுப்பாய்வினை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
66

ஒகஸ்ட் 20 ஆம் திகதி கைச்சாத்தாகியிருக்க வேண்டிய கூட்டமைப்பு ஒப்பந்தம் ஏற்கெனவே எல்லாக் குடியரசுகளுக்கும் அவை "சொத்துடைமை மற்றும் பொருளாதார முகாமைத்துவம்" பற்றிய தமது சொந்த முடிவுகளை மேற்கொள்ள அனுமதி . அளித்திருந்தது. கொம்யூயனிஸ்ட் கட்சியும், பொருளாதார மாற்றத்திற்கான கடும் போக்காளர்களது எதிர்ப்பும் ஒழிக்கப்பட்ட பின் சந்தைப் பொருளாதாரம் மற்றும் தனியார் சொத்துடைமை நோக்கிய மாற்றங்கள் விரைவு படுத்தப்படும் என்பது யாரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே.
அடுத்த சில ஆண்டுகளில் ஆகக் குறைந்தது சோவியத் ஒன்றியத்தின் பெரும்பகுதியில் (அல்லது அதன் உடைவில் இருந்து எழுந்துவரப் போகும் பல குடியரசுகளில்). நிலத்திலும் பெரும்பாலான தொழில்துறைகளிலும் (சந்தேகமில்லாமல் இவற்றுள் சிலவாவது வெளிநாட்டு மூலதன உதவியுடன் ஸ்தாபிக்கப்படும்) தனியார் உடைமை உருவாகும் என எதிர்பார்க்கலாம். இவற்றில் பாதுகாப்பு மற்றும் மூலதனப் பொருட்களின் உற்பத்தியும் சமூகநலத் துறையும் அரசின் கையில் இருக்கக்கூடும்.
அரசு அதிகார வர்க்கம் ஒரு புதிய பூர்ஷ்வா வர்க்கத்துடன் இணைந்துகொள்ளும் அல்லது புதிய பூர்ஷ்வா வர்க்கம் பழைய ஆளும் அதிகார வர்க்க மட்டங்களிலிருந்து பெருமளவில் உருவாகக்கூடும். இது ஏற்கனவே மத்திய, கிழக்கு ஐரோப்பாவின் முன்னாள் கொம்யூனிச அரசுகளில் நடைபெறத் தொடங்கிவிட்டது. இங்கே அரச சோசலிசம் நிலவியபோது நிறுவனங்களை நிர்வகித்தவரே இப்போது பெரும்பாலும் அவற்றின் உடைமையாளராகவும் காணப்படுகிறார். இது ஒரு இயற்கைய்ான் வளாச்சியேயாகும். ஏனென்றால் அதிகார வர்க்கத்தினர்களே முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்பத் தேர்ச்சிகளைக் கொண்டவர்களாக உள்ளனர். புதிய பூர்ஷ்வா சொத்துடைமை வடிவங்களின் வளர்ச்சிக்கு இவர்களே வித்திடக்கூடியவர்கள்.
இதிலுள்ள முரண் நகையான விடயம் என்னவென்றால் சோவியத் யூனியனில் கடந்த 74 ஆண்டுகால கொம்யூனிஸ் ஆட்சிபற்றிய கல்லறை வாசகம் எழுதும்போது அதன் வரலாற்றுப் பணி எதிர்கால பூர்ஷ்வா வளர்ச்சிக்குத் தேவையான சாதனங்களை உருவாக்குவதாக இருந்தது என எழுதவேண்டி இருப்பதே. இதை கேலிக்குரியதாக கருதக்கூடியவர்களுக்கு நான் சமர்ப்பிக்க விரும்பும்
67

Page 42
உண்மை இதுதான்: வரலாற்றின் போக்கை மாற்றிய நிகழ்ச்சிகளுக்கு காரணமானவர்களது நோக்கங்களுக்கு மாறாக அதுபோய் முடிந்தது வரலாற்றில் இதுவே முதற்தடவை அல்ல.
17-go நூற்றாண்டில் புனித ராச்சியத்தை ஸ்தாபிப்பதாகக் கருதிய ஆங்கிலேயத் தூய்மைவாதிகள் முதலாளித்துவத்திற்கான பாதையில் இருந்த தடைகளை அகற்றியவர்களே என்பது இன்று தெளிவாகிவிட்டது. றொபேஸ்பியர் சமூகத்தில் நியாய சிந்தையை அரியாசனத்திலமர்த்தவே விரும்பினார். ஆனால் அது நெப்போலிய சாம்ராச்சியத்துக்கே வழிவகுத்தது. வரலாறு அநேக தந்திர வழிகள், ஏமாற்று வாயில்கள், இரகசிய நோக்கங்களுக்கான வஞ்சகங்கள் என்பவற்றை நிறையவே கொண்டதாகும்!
1920 களில் கைத்தொழில் மயமாக்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து
சோவியத் அதிகார வர்க்கத்தின் சாதனைகளைக் கொஞ்சம் &seau esofu CB untb. அரசினால் முடுக்கிவிடப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சாரம் ஒருபுறமும் மையத்தை நோக்கிய ஒரு முகமாக்கல், பலாத்காரம் போன்ற அடக்குமுறைகள் மறுபுறமுமாகச் சேர்ந்து முதலிரண்டு தசாப்த நிர்மானம், அதில் செலவான மனித இழப்பை ஒருவர் மறந்துவிட்டுப் பார்க்கமுடியுமானால், ஒருவகை, விறுவிறுப்புமிக்க அற்புத சாதனையாகத்தான் தோன்றியது.
எனினும் சோவியத் தொழில்துறைப் புரட்சியின் பிதாமகரான) ஸ்டாலின் மறைவின்போதுதே இந்த அமைப்பு முறை தன் சொந்த முரண்பாடுகளை வெளிக்காடட்த் தொடங்கிவிட்டிருந்தது. அண்மையிலேயே இடைக்கால யுகத்தில் இருந்து எழுந்த ஒரு சமூகத்துக்கு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பானது மாற்றுக் கருத்துக்களை ஈவிரக்கமின்றி நசுக்குவதாகவும், புராதன காலத்தைப் போன்ற தலைமைத்துவ வழிபாட்டைக் கொண்டதாகவும் இருந்ததால், நகர்மயமாக்கப்பட்டதும், கல்வியூட்டப்பட்டதுமான ஒரு நவீன சமூகத்தின் நிலைமைகளைக் கையாள்வதற்கு அது முற்றிலும் தகுதியற்றதாய் இருந்தது. இதுவே குருச்சேவின் அரைமனத் தன்மை வாய்ந்ததும் மிகக் குறுகிய வாழ்வு கொண்டதுமான ஸ்டாலினிச எதிர்ப்பு முயற்சியின் போது அவர் உறுதியாகக் கையிலெடுக்க முயன்ற பிரச்சினையாகும். ஆயினும் இந்த முயற்சியின் பின்னடைவோடு பிரஷ்னேவின் காலம் முழுவதும் அரசின் உத்தியோகபூர்வ மேற்பரப்பில் வெளித்தெரிந்த அமைப்பியல் மற்றும் கருத்து நிலையைப் பொறுத்தவரை சோவியத் சமூகம்
68

அரசியல் ரீதியில் ஆழ்ந்த உறை நிலையில் இருந்ததென்றே சொல்ல வேண்டும்.
ஆனால், அந்த உறைந்த பனிப்படலத்துக்குக் கீழே புதிய படித்த இளம் சோவியத் சந்ததியொன்று தெளிவான சிந்தனையுடன் மாற்றத்துக்காக உழைத்துக் கொண்டுதான் இருந்தது. அதேவேளை ஏற்கெனவே நிலைபெற்றிருந்த ஒழுக்க முறைகளை P stol-t} usgð asn sor இன்னொரு (pp. sir un Gub
வளர்ந்துகொண்டிருந்தது.
ஆரம்ப கைத்தொழில் மயமாக்கத்தின் ஊடாக ஆரம்பித்து ஒரு இராணுவப் பெரு வல்லரசாக சோவியத் யூனியனை மாற்றிய (அவ்வளவும் தான் அதற்கு மேல் ஒன்றுமில்லை) மையப்படுத்தப்பட்ட பொருளாதார முறைமையானது சோவியத் யூனியன் தனது பொருளாதார எல்லையைக் கடந்து, ‘ வளர்ச்சிபெற்ற முதலாளித்துவங்களுடன் உலக சந்தையில் மேர்த வேண்டி வந்தபோதுதான் தன்னுள்ளே உள்ளார்ந்திருக்கும் அதிகாரத்துவ நெகிழ்ச்சியின்மையையும் இயங்குதிறன் குறைவையும் வெளிக்காட்டியது.
1960 இல் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவை எட்டிப்பிடித்து. அதைத் தாண்டி முன்னேறுவதற்கள்ன திட்டத்தை சோவியத் சமூகத்தின் முன் வைத்ததை இப்போது நினைத்தால் நம்ப முடியாமல் இருக்கிறது. உண்மையில் எண்பதுகளின் தொடக்கத்தில் சோவியத் பொருளாதாரம் தேக்கநிலை அடைந்து கொண்டிருந்தது. மற்றைய வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத்துக்கும் இடையிலான இடைவெளியானது, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தவரை அந்த இரு தசாப்தங்களில் மிகவும் அகன்றிருந்தது. இந்த பழமைவாய்ந்த கிறீச்சிடுகின்ற அரசியல், பொருளாதார அமைப்புகளைத்தான் கொர்பச்சேவ் முதுசமாகப் பெற்றார். கடந்த ஐந்தாண்டு காலமாக அவற்றையே அவர் மறுசீரமைக்க முயன்றார்.
கொர்பச்சேவின் காலகட்டத்தைப் பற்றிய மதிப்பீட்டுக்குப் பிறகு வருகிறேன். அதற்கு முன்னர் சோவியத் புரட்சிக்குப் பிந்திய சோவியத் தேசிய இனங்களின் பிரச்சினையைக் கவனிப்பதன் மூலம் எனது வரலாற்று மதிப்பீட்டை நான் நிறைவுசெய்ய வேண்டும். இதுவே எனது விடயத்தின் மையப்பகுதியாகும்.
69

Page 43
இப்பகுதியில் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் மைய அரசுக்கும் இடையிலான மோதல்கள் ஸ்டாலினது தவறுகளதும் குற்றங்களதும் விளைவே என்கிற லெனினிசத்தின் ஆதரவாளர் மத்தியில் பொதுவாக நிலவும் கருத்துக்களை நான் கேள்விக்குள்ளாக்கவேண்டி இருக்கும்.
லெனினுடைய சிலைகளும் நினைவுச் சின்னங்களும் சோவியத் குடிமக்களால் உடைத்தெறியப்படும் இச்சமயத்தில் அவருடைய பெயர் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றிய நகரத்திலிருந்தும், அவரது முகம் "பிரவ்தா" பத்திரிகையின் முகப்பிலிருந்தும் அகற்றப்படுகிற இச்சமயத்தில், அவருடைய பாதுகாக்கப்பட்ட பூதவுடல் விரைவில் அங்கிருந்து அகற்றப்படக்கூடிய இச்சமயத்தில. அவரைப் பற்றி நாம் செய்யக்கூடியதெல்லாம் அவர் விட்டுச் சென்ற தத்துவார்த்த மற்றும் ஆய்வறிவுத்துறை முதுசத்தை ஆய்வு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நோக்குவது மட்டுமே. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்று தேசிய இனப்பிரச்சினை குறித்த லெனினிசக் கொள்கையாகும். பிறிதொரு மக்கள் சிறைக்கூடமான" ஒஸ்திரிய -ஹங்கேரியப் பேரரசு போலவே, அதிகாரப் பிரபுத்துவத்தின் பண்டைய மாதிரி ஏகாதிபத்தியமான சாரிச ரஷ்யப் பேரரசும் முதலாம் உலகப் போரின் முடிவில் துண்டு துண்டாகியிருக்க வேண்டியதுதான். ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால் லெனினும் போல்ஷெவிக்குகளும் அதை வேறொரு வடிவில் புனரமைத்துக் கொண்டார்கள்.
"தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்ற சுலோகத்தை மார்க்சீய அரசியல் திட்டத்தில் சேர்ந்தவர் என்ற கீர்த்தி லெனினுக்குண்டு. அவரது தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலிருந்த முரண்பாடு பற்றி நான் இங்கு கவனிக்க உள்ளேன். ஆயினும் தேசிய இனம் பற்றிய அவர்து புரிதல் மிகவும் மேலோட்டமானதும் எல்லைப்படுத்தப்பட்டதுமாகும் என்பதை முதலிலேயே சொல்லிவிட விரும்புகிறேன். -
முதலாம் உலகப் போரின் இறுதியில் றோசா லக்சம் பேர்க்குடன் லெனின் நடாத்திய விவாதங்களில் தேசியவாதம் பற்றி அவர் தெரிவிக்கும் விளக்கம் அப்பட்டமாக சுருங்கியதும் பொருளியல் வாதம் சார்ந்ததுமாகும். அவரது கருத்துப்படி தேசியவாதமானது. எழுச்சியடைந்துவரும் பூர்ஷ்வாக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட தேசிய சந்தைக்கான தேவையின்
7Ο

விளைபொருளாகும். தேசியவாதத்தில் மொழியின் பாத்திரம்கூட அவரால் குறைத்து மதிப்பிடப்பட்டது. தேசியவாதத்தில் மொழி சம்பந்தப்படுவது வர்த்தகத் தேவைக்குப் பொதுமொழி ஒன்று அவசியம் என்ற அடிப்படையிலேயே என்று அவர் கருதினார்.
லெனினுக்கு தேசிய வாதத்தின கலாசாரப் பரிமாணம் குறித்து அக்கறையோ, அனுதாபமோ ஒருபோதும் இருக்கவில்லை. ஒஸ்திரிய மார்க்ஸிஸ்ட்டான ஒட்டோபவர் என்பவர் ஒஸ்திரிய ஹங்கேரியப் பேரரசின் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஒரு கலாசாரச் சுயாட்சியை முன்வைத்தபோது அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கு முரணானது எனக் கூறி லெனின் அதை நிராகரித்தார்.
உண்மையில் லெனினது தேசியவாதம் தொடர்பான அணுகுமுறை முற்றிலும் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நோக்குடையதாகவே இருந்தது. ரஷ்யப் பேரரசின் அடிமைப்பட்ட மக்களது சுதந்திர இருப்புக்கான முயற்சியை உண்மையில் அவர் பொருட்படுத்த வில்லை. ஆனால் "சுயநிர்ணய உரிமை” என்ற கோஷத்தை முன் வைப்பதன் மூலமாக சோசலிசப் புரட்சிக்கான ஒரு துணைச் சக்தி யாகவும் ஒரு கருவியாகவும் அவர்களை இணைக்கவே அவர் விரும்பினார்.
அவரது சோசலிசத் திட்டங்களுக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மீதான அவரது ஆதரவுக்கும் இடையில் எப்போதும் ஒரு ஆழமான முரண்பாடு இருந்தே வந்திருக்கின்றது. அவர் தேசிய இனங்களை சோசலிசப் புரட்சிக்கான துணைச் சக்திகளாக கருதியது மட்டுமல்ல, கட்சி, அரசு ஆகிய விடயங்களில் அவர் சாராம்சத்தில் ஒரு தீவிர மையப்படுத்தல்வாதியாகவும் இருந்ததே இதற்குக் காரணமாகும். எல்லாவற்றிலும் சமமாக இருக்கின்ற சிறிய அரசுகளை விட பெரிய அரசுகள் அதிக அளவு முற்போக்குத் தன்மை வாய்ந்தவையாக இருக்கும் என மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் நம்பியதுபோலவே அவரும் நம்பினார்.
லெனினின் தேசிய இனக்கொள்கைக்கும் லெனினிச சோசலிசத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் புரட்சிக்குப் பின்பே முன்னணிக்கு வந்தன. ஆயினும் சிறுபான்மைத் தேசிய இனங்களை விடுவிப்பதற்கான எந்த ஒரு நேர்மையான கொள்கையும் உருவாகுவதில் தடையாக இருந்தது. கட்சியின் பணி பற்றிய லெனினுடைய இறுக்கமான கோட்பாடே. முன்னணிப்படையான கட்சியே வரலாற்று முன்னேற்றத்துக்கான ஒரே கருவி என்று அவர் நம்பினார்.
7

Page 44
இந்தத் தத்துவார்த்த நிலைப்பாடானது 1921 இலும் அதன் பிறரம் மற்றெல்லாக் கட்சிகளையும் தடைசெய்து போல்ஷெவிக் கட்சியினது அரசியல் ஏகபோகத்தை நிறுவியதுடன் நடைமுறையில் நிற்ைவுபெற்றது. பல்தேசிய, பல்லின மக்களைக்கொண்ட ஓர் அரசில் சிறுபான்மை மக்கள் தமது சொந்த இனத்துவ அல்லது பிராந்தியக் கட்சிகளினூடாக தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வது நாம் அனுபவத்தில் காணும் ஒரு அம்சமாகும். ஆனால் லெனினுடைய ஒரு கட்சி ஆட்சியில் இதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருக்கவில்லை.
உண்மையில் சர்வதேசியத் தன்மைகொண்ட லெனிசத்தின் கண்ணோட்டத்தில் இத்தகைய வளர்ச்சிகள் வெறுக்கத் தக்கவையே. ஏனென்றால் சுட்டிப்பான தேசியவாதம் என்பது ஒரு அழிந்துபடும் கருத்துருவென்றும், சோசலிசமானது இவற்றையெல்லாம் வரலாற்றின் குப்பைகூடைக்குள் வீசிவிடப் போகிறது என்றும் அது நம்பியது. ஆனால் நடைமுறையிலோ லெனினது அகவயமான நோக்குகளுக்கு மாறாக லெனினிச அரசோ எதிர்மாறான முடிவுகளையே தந்திருக்கிறது.
புரட்சியும், புரட்சியை நடாத்திய கட்சியும் ரஷ்யப் பெருநிலத்தில்ேயே மையங் கொண்டிருந்ததும், அதுவே தொடர்ந்தும் அதிகாரத்துக்கான பிரதான தளமாக இயங்கிவந்ததும், ரஷ்யாவிற்கு வெளியிலுள்ள மற்டைய குடியரசுகட்கும் இடையில் பொருளாதார வளர்ச்சி கல்வி என்பவற்றில் பாரிய ஏற்றத்தாழ்வு இருந்து வந்ததும், பெரிய ரஷ்ய மேலாதிக்கப் பாரம்பரியம் ஆழமாக வேரூன்றி இருந்ததும் காரணமாக லெனினது ஒரு கட்சி அரசு ரஷ்ய மையத்துக்கும் சூழவுள்ள \ அரசுகளுக்குமிடையே ஏற்றத் தாழ்வான உறவை உருவாக்கும் ஒரு கருவியாக மாற்றம் அடை வது தவிர்க்க முடியாததாக இருந்தது.
தனது நேரடி வாரிசினைப் போலல்லாமல் லெனின் பரந்த நோக்குடைய ஒரு சர்வதேசியவாதியாகவும் இருந்தார் என்பதும் அவரிடம் பெரிய ரஷ்யப் பேரினவாதமோ, மற்றைய தேசிய இனங்கள் மீதான ரஷ்ய மேலாதிக்கத்தைப் பேணும் எண்ணமோ இருந்தது கிடையாதென்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை, சிறுபான்மை தேசிய இனங்களிடையே சமத்துவம் அல்லது உண்மையான பன்மைத் தன்மையை பேணும் ஒரு உறவு உருவாக முடியாமல் செய்த கட்சியின் அரசியல் ஏகமபாக் கொள்கையை உருவாக்கக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவர் தப்பிவிடமுடியாது.
72

லெனினது காலத்தில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் நிலைமை எப்படியிருந்தது என்பதை ஆதாரங்களுடன் விரிவாக விவாதிக்க இந்த விரிவுரையில் இடமில்லை. ஆகவே நான் ஜோர்ஜியா உதாரணத்தை மட்டும் இங்கு எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் போல்ஷெவிக்குகள் கருத்தில்கொண்ட புரட்சியின் நலன்களுக்கும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கும் இடையிலான முரண்பாட்டை விளக்க இது மிகச் சிறந்த உதாரணமாகும்.
ஒக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஜோர்ஜியா தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்துகொண்டது. ஜேர்மனியர்களதும், சிவில் யுத்தக் காலத்தில் பிரிடிஷ் காரர்களினதும் கட்டுப்பாட்டுக்குக் கீழிருந்த சொற்ப காலத்தைத் தவிர அது ஜோர்ஜிய மென்ஷெவிக்குகளின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசால் ஆளப்பட்டது. இந்த மென்ஷெவிக்குகளின் அரசாங்கம் மொஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் எஞ்சிய ட்றான்ஸ் கொக்கெசியப் பிரதேசத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குக்கீழ் கொண்டுவரும் போல்ஷெவிக்குகளுடைய நடவடிக்கைகளால் ஜோர்ஜியாவின் சுதந்திரம் மிகவும் நெருக்கடி மிக்கதாகவே இருந்துவந்தது. ஸ்டாலினும் ஓர்ட்ஜோனிகிட்சும் ஜோர்ஜியர்களென்ற முறையில் அப்பிரதேச நடவடிக்கைகளுக்கான தலைமை ஆணைக்குழுவில் இருந்தார்கள். அவர்களது உத்தரவின் பேரில் 1921 இல் செம்படை ஜோர்ஜியாவை ஆக்கிரமித்துக்கொண்டது. இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த போல்ஷெவிக்குகளின் தலைமையிலான ஒரு பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியொன்று அங்கு நடந்ததாகக் கதை கட்டப்பட்டது. .
ஜோர்ஜிய ஆக்கிரமிப்புக்கும் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கும் இடையில் காணப்பட்ட வெளிப்படையான முரண்பாடு, தேசிய சுயநிர்ணய உரிமையானது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பூர்ஷ்வாக்களாலல்ல; அத்தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தாலேயே பயன்படுத்தப்பட முடியும் என்ற புதிய விளக்கத்தினைக் காட்டிப் பூசி மெழுகப்பட்டது. நடைமுறையில் இதன் அர்த்தம் பாட்டாளிவர்க்கத்தின் குரலாக தன்னைத்தானே நியமித்துகொண்ட கட்சியாலேயே இது செய்யப்பட முடியும் என்பதாகவே அமைந்திருந்தது.
73

Page 45
வரலாற்று ஆவணங்கள் லெனின் இந்த ஆக்கிரமிப்பினால் அதிருப்தி அடைந்திருந்தார் என்று கூறுகின்றன. ஆனால் அவர் அந்த ஆக்கிரமிப்பை கண்டிக்கவோ வாபஸ் பெற முயலவோ இல்லை. பதிலாக ஜோர்ஜிய மக்களது உணர்வுகளை மதித்து நடக்கும்படி ஒர்ட் ஜோனிக்கிட்சேக்கு அறிவுறுத்துவதுடன் நிறுத்திக்கொண்டார்.
1922 இல் ஜோர்ஜியா மீதான ஆக்கிரமிப்புத் தொடர்பாக கட்சித் தலைமைப் பீடத்தில் பல கருத்து வேற்றுமைகள் உருவாகியிருந்தன. இந்த இடைக்காலத்தில் ஓர்ட்ஜோனிக்கிட் ஒரு மாகாண ஆட்சித் தலைவரைப் போல, உள்ளூர்ப் போல ஷெவிக்குகளைத் தன்னிச்சைப்படி ஆட்டிப்படைக்கும் கொடிய அதிகாரியைப் போல மாறியிருந்தார். ரஷ்யக் கூட்டமைப்புக்கும், ரஷ்யர்களுக்கு மிடையிலான அரசியற் சட்ட உறவுகளை வகுப்பதற்கென ஸ்டாலினைத் தலைவராகக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்ட வேளையில் இப்பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக வளர்ந்திருந்தது.
ஸ்டாலின் எல்லாக் குடியரசுகளினதும் அரசாங்கமாக ரஷ்யக் கூட்டமைப்பின் அரசாங்கமே அமைய வேண்டும் என்றும், இக்கூட்டமைப்பு மற்றைய குடியரசுகளை "சுயாட்சிக் குடியரசுகளாக இணைத்துக்கொள்ளும் என்றும் இவ்வாணைக்குழுவில் முன்மொழிந்தார். இதுவும், ஜோர்ஜியாவில் ஸ்டாலினதும் ஒர்ட்ஜோனிக்கிட்ஸினதும் ஏதேசாதிகார நடத்தையும் லெனினைதனது இறுதி நோய்வாய்ப்பட்ட நிலையில்- ஸ்டாலினது சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராட வைத்தது.
12வது கட்சிக் கொங்கிரசுக்குத் தனது மரணப்படுக்கையில் இருந்தபடி லெனின் சொல்லி எழுதுவித்த கடிதம், ஸ்டாலினையும் ஒர்ஜோனிகிட்ச்சையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு, ரஷ்யப் பேரினவாதத்திற்கெதிராக நடாத்தப்பட்ட பலமான தாக்குதலாக அமைந்திருந்தது. அத்துடன் எதிர்கால ஒன்றியம் குடியரசுகளுக்கிடையில் பூரண சமத்துவத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சோவியத் யூனியன் பெரஸ்ரோய்க்கா காலத்தில், இந்தக் கடிதம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமை பற்றிய லெனினுடைய அக்கறையை வெளிக் காட்டுவதாகவும்.
74

அவற்றுக்கெதிரான ஸ்டாலினுடைய சட்டவிரோதமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கான அவரது முயற்சியா கவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் லெனின் இது தொடர்பான அரசியல் யாப்பு பிரச்சினையை முன்னெடுத்தார் எனினும் சட்டம் மற்றும் வடிவமைப்பு என்பதற்கு அப்பால் குடியரசுகளுக்கிடையே எத்தகைய சமத்துவத்தை அது ஏற்படுதியது?
லெனரின் உருவாக்கிய ஒரு கட் சரி முறையரில் மத்தியத்துவப்படுத்துவதற்கான போக்கு தொடக்கத்திலிருந்தே உள்ளார்ந்த அம்சமாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் அவருக்கு அடுத்து வந்தவரோ அதை ஈவிரக்கம் அற்றதாகவும் ஒற்றைப் போக்குடையதாகவும் ஆக்கியதோடு மட்டுமன்றி காலப்போக்கில் மிகவும் வெளிப்படையாக வளரத்தக்கதாக பெரிய ரஷ்ய தேசியவாதத்துடன் இணைந்ததாகவும் அதை மாற்றினார். ஸ்டாலின் தனது இறுதிக்காலம் வரை தடித்த ஜோஜியச் சாயலுடன் ருஷ்ய மொழியைப் பேசினாரென்று சொல்லப்பட்ட போதும், ஹிட்லர், நெப்போலியன் ஆகியோரைப்போலவே தானும் பெரும்பான்மையினர் வாழும் பிரதேசத்துக்கு வெளியே பிறந்த தனது துர்அதிர்ஷ்டத்துக்குப் பிரயச்சித்தம் செய்யும் விதத்தில் பெரும்பான்மைத் தேசிய இனத்துடன் தன்னை முற்றிலும் ஐக்கியப்படுத்திக்கொண்டார் என்று தோன்றுகின்றது.
ஆனால் ஸ்டாலின் யுகத்தில் பெரிய ரஷ்ய மேலாதிக்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததற்கு ஸ்டாலினின் தனிப்பட்ட இனத்துவ அடையாளம் குறித்த அச்சம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இது மத்தியப்படுத்தப்பட்ட அர்சின் இயல்பான பின்விளைவே என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். பாரிய பொருளாதாரக் கட்டுமானக் காலத்தில் கட்சியின் மீது திணிக்கப்பட்ட ஒற்றைத் தன்மைவாய்ந்த ஐக்கியத்தின் மூலமும், கட்சி மட்டத்தில் சுதந்திரமான விவாதம் ஒடுக்கப்பட்டதன் மூலமும் இந்த மத்தியத்துவம் பூரணப்படுத்தப்பட்டது. இப்போக்கினால் குடியரசுகளின் தலைமைத்துவம், மத்தி இடும் உத்தரவுகளை வாய் பேசாது நிறைவேற்ற நியமிக்கப்பட்ட வெறும் கருவியாக மாறிற்று.
புரட்சியின் ஆரம்பத்திலிருந்து மாகாணக் குடியரசுகளின் தலைவர்களாக நம்பிக்கைக்குரி யகட்சி ஊழியர்களை
75

Page 46
மொஸ்கோவிலிருந்து நியமிக்கும் ஒரு நடைமுறை வழக்கில் இருந்து வந்தது. உதாரணமாக உக்ரைன் செம்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உருவான போல்ஷெவிக் அரசின் முதலாவது தலைவராக அனுப்பப்பட்ட "றக்கோவ்ஸ்கி" என்பவர் பிறப்பால் ஒரு றுாமேனியர். கட்சியின் பாட்டாளிவர்க்கச் சர்வதேசியவாதம் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அந்நாட்களில் இது புறநடையற்ற ஒன்றாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இது காலப்போக்கில் உள்ளூர் தலைமைகளை மத்திய அரசுக்குக் கீழப் படுத்தவே உதவிற்று. சில வேளைகளில் பிராந்திய அரசியல் மேலோர் குழுக்களின் மத்தியிலிருந்தும் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டபோது கூட உட் கட்சி ஜனநாயகம் இன்மையால் அவர்களும் தமது மக்களின் பிரதிநிதிகளாக அல்லாமல் மத்திய அரசின் ஏஜன்டுகளாகவே செயற்பட்டார்கள்.
குடியரசின் அரசாங்கங்கள் , மொஸ்கோவிலிருந்த கட்சி மையத்துக்குக் கீழப்பட்டதோடு பெரும் ருஷ்யத் தேசியவாதச் சார்புகொண்ட அரசுபற்றிய கருத்தியலையும் ஸ்டாலின் இணைத்தார். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இந்தப் போக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. ஜேர்மனிய ஆக்கிரமிப்புக் காலத்தில் அதற்கெதிராக மக்களைத் திரட்டுவதற்கான முழக்கங்கள் ருஷ்யத் தேசியவாதத் தன்மை வாய்ந்தவையாக, சில வேளைகளில் அகன்ற சிலாவியச் சார்பு கொண்டவையாக அமைந்திருந்தன.
1941இல் ஜேர்மனியப் படைகள் மொஸ்கோவை அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் ஸ்டாலின் தனது ஒக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாப் பேச்சின் இறுதியில் திடுக்கிடத்தக்க விதத்தில ஏகாதிபத்திய ரஷ்ய யுத்த வீரர்களையும், நாயகர்களையும் பற்றி பிரஸ்தாபித்துக் கூறினார். "அலெகஸாண்டர் நெப்ஸ்கி, டிமித்ரி டொன்ஸ்கோய், குஷ்மா மினின், டி மிக்ரி பொஷாஷ்கி, அலெக்ஸாண்டர் சுவரோவ், மிகையில் குதுசோவ் போன்ற ஆண்மைமிக்க எமது மாபெரும் முன்னோர்களது வீர நினைவுகள் இப்போரில் உங்களுக்கு ஆதர்சமாக அமையட்டும்!” என்று அவர் வாழ்த்தினார். அதனோடு சேர்த்து "மாபெரும் லெனினுடைய வெற்றிப்பதாகை உங்களை வழிநடாத்தட்டும்” என்று அவர் குறிப்பிட்டபோது லெனினும் பெரிய ரஷ்ய தேவ கணங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டாரோ என்று தோன்றிற்று.
76

மேலும் யுத்தத்தின் நடுப்பகுதியில் சர்வதேசிய கீதமானது சோவியத் தேசிய கீதத்தால் மாற்றீடு செய்யப்பட்டது. அந்தத் தேசிய கீதம் இவ்வாறு தொடங்குகிறது. "பிரிக்கமுடியாத சுதந்திரக் குடியரசுகளின் ஒன்றியமாக பெரிய ருஷ்யா என்றென்றைக்குமாக அணிதிரள்கிறது” சோவியத் மக்களை இப்போது இந்த வார்த்தைகள் சங்கடப்படுத்துகின்ற போதிலும் இன்றுவரை இதுவே தேசிய கீதமாக உள்ளது. ஆனால் அவர்கள் சொற்களை விடுத்து வெறும் இசையை மட்டுமே இன்று இசைக்கின்றனர். 1991 ஒகஸ்டின் பின் 'பிரிக்க முடியாத குடியரசுகளின் ஒன்றியம்’ முரண்சுவையுள்ள ஒரு புது அர்த்தத்தைப் பெற்றுக்கொண்டது.
யுத்தத்துக்கு முன்பாகவே, ஸ்டாலினின் புகழ்பெற்ற சுத்திகரிப்பின்போது குடியர்சுகளில் மைய ஆட்சிக்கு எதிராக ஒரு சிறிதளவு எதிர்ப்பையேனும் காட்டக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், பெருமளவில் அழித்தொழிக்கப்பட்டார்கள். "பூர்ஷ்வாத் தேசியவாதத் திரிபுகள்” என இச் சுத்திகரிப்பின்போது இவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டது.
போர்க்காலத்தில் ஸ்டாலின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த பெருமளவு மக்களை நாடுகடத்தினார். கிரிமிய தாத்தாரியர்கள், வொல்கா ஜேர்மனியர்கள், செக் இனத்தவர்கள், மஸ்கிட்டிய துருக்கியர்கள் போன்றோரும் வேறு பலரும் பலாத்காரமாக அவர்களது வீடுகளை விட்டு அகற்றப்பட்டு மத்திய ஆசியாவில் குடியேற்றப்பட்டார்கள். ஜேர்மன் ஆக்கிரமிப்பாளர்களுடன் இவர்களில் சிலர் தொடர்பு வைத்திருந்தார்கள், என்பதே இதற்கான காரணமாகும். பின்வந்த சோவியத் அரசுகள் இந்த நடவடிக்கையின் மனிதாபிமானமற்ற தன்மையை ஒப்புக்கொண்டன. ஆயினும் நாடுகடத்தப்பட்ட இம்மக்கள் இன்றுவரை தமது பழைய இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படவில்லை.
ஒருமைவாத மையக் கட்சியின் உருக்குச்சட்டக அமைப்பும், குடியரசுகள் மீதான அதன் ஆதிக்கமும் ஸ்டாலின் முதல் சேர்னென்கோ வரை அரை நூற்றாண்டு காலம் பேணப்பட்டபோதும் இக் கட்சியமைப்புக்குள்ளேயே தேசிய இனங்கள் தொடர்பான கொள்கையின் சில அம்சங்களில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் பிரதான இயல்புகளைப் பாதிக்காத வகையில் நெகிழ்ச்சிக்கான வாய்ப்புக்கள் இருந்தன. உதாரணமாக குடியரசுகளின் நிர்வாகத்தில் பிராந்திய மொழிகளைப் பாவிப்பதற்குப்
77

Page 47
பதிலாக ரஷ்ய மொழியைப் பாவிக்கச் செய்யும் நடடிக்கையைப் பொறுத்தவரை காலத்துக்குக் காலம், இடத்துக்கிடம் வித்தியாசங்கள் இருந்தன. கல்வி மற்றும் கலைத்துறைகளில் சிறுபான்மைக் கலாச்சாரங்களை ஊக்குவிப்பது தொடர்பாகவும் இத்தன்மை காணப்பட்டது.
உண்மையில், எல்லாக் காலங்களிலும்- ஸ்டாலின் காலத்தில் கூட- சிறுபான்மைத் தேசிய இனங்களின் கலாசாரமும் நாட்டாரியல் கலைவடிவங்களும் கண்காட்சிக்குரியவையாகவே இருந்தன. வெளிநாடுகளிலிருந்து வருகின்ற எளிதில் மயங்கக்கூடிய பயணிகள் கொசாக் நாட்டியம் மற்றும் உஸ்பெக் கிராமியப் பாடல்கள் போன்றவற்றைக் கண்டுகளித்து சோவியத் ஒன்றியம் ஒரு பல்லினக் கலாச்சாரத்தின் சொர்க்கபுரியெனக் கருதினர்.
இந்த மாயைகளும், சோவியத் யூனியனில் தேசிய இனப் பிரச்சினை திட்டவட்டமாகத் தீர்த்து வைக்கப்பட்டுவிட்டது என்ற அரசியல் கூற்றும் அடக்குமுறையின் மூடியை கொர்பச்சேவ் அகற்றியதும் வெடித்தெழுந்த தேசிய, இனத் துவக் கொந்தளிப்புகளால் உடைத்தெறியப்பட்டன.
பெரஸ்ரோய்க்கா காலகட்டத்தில் மைய அரசுக்கெதிராக சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயாட்சிக்கான ஏற்கத் தக்க, ஜனநாயக ரீதியான கோரிக்கைகள் மட்டுமன்றி சிறுபான்மை இனங்களுக்கிடையே, சில வேளை காட்டுமிராண்டித்தனமான முறையில் இனக்குழு வன்மங்களும் வெளிக்காட்டப்பட்டமை முக்கிய கவனத்துக்குரிய விசயமாகும். அசேரிஸ் இனத்தவர்கள் ஆர்மீனியர்களைக் கொன்றார்கள்; உஸ்பெக்கியர் கிர்கிஷியர்களையும், மஸ்கெற்றிய துருக்கியரையும் கொன்றார்கள்; ஜோர்ஜியர்கள் அப்காசியரையும்; உக்ரோனியர்கள் யூதர்களையும் கொன்றார்கள். இவையும் இவைபோன்ற பிற இனப் பகைமைகளும் எழுபதாண்டு கால சோசலிசம் மக்களுடைய பிரக்ஞையை எவ்வகையிலும் மாற்றியமைக்கவில்லை என்பதையே நிரூபித்தன.
ஒரு அரச சித்தாந்தத்தை மேலிருந்து திணிப்பதன் மூலமும் அரசியல் ஒருமைப்பாட்டின் மூலமும் தேசிய இனங்கள் மத்தியில் நிலவும் முரண்பாடுகளை இலகுவில் முற்றாக நீக்கிவிட முடியாது என்பதையே சோவியத் யூனியனில் இத்தனை தசாப்தங்களாக நடந்த ஆய்வுகூட பரிசோதனைகள் நிறுவுகின்றன.
78

எவ்வாறாயினும் சோவியத் யூனியனில் எழுச்சியடைந்த தேசியவாதம், நீண்டகாலமாக அங்கு மறுக்கப்பட்ட புராதன விசுவாசங்களின் எழுச்சியே என்று எளிதில் கூறிவிட முடியாது. குறிப்பாக ஆசிய சுற்றயலில் உள்ள குடியரசுகளில் எழுச்சியடைந்த தேசியவாதம் சோவியத்தின் அபிவிருத்தியின் ஒரு விளைவாகவே அமைந்தது.
தேசியவாதம் தொடர்பாக எழுதியுள்ள ஏர்னஸ்ட் ஜெல்னர். பெனடிக்ட் அன்டர்சன் போன்ற அண்மைக்கால ஆய்வாளர்கள் நவீன தேசியவாதத்தை பழைய கூட்டு அடையாளங்களிலிருந்து வேறுபடுத்தி முற்றிலும் புதிய ஒரு தோற்றப்பாடாக (distinctively new phenomenon) இனங்காட்டுவதில் தமது கவனத்தைக் குவித்துள்ளனர். தேசிய இனங்களாக உள்ள 'கற்பித சமூகங்களில்" (imagined communities') Gungjaunī6ØT g56sfšgy6 u pd GIFOTñIGOau உருவாக்குவதிலும் மொழிகளைத் தரப்படுத்துவதிலும் அச்சுச்சாதனம் உட்பட பிற செய்தித் தொடர்புச் சாதனங்களினதும் பரந்துபட்ட கல்வியினதும் பாத்திரத்துக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
1917 வாக்கில் பல சோவியத் குடியரசுகளில் மக்கள் பழங்குடியினரைப் போன்றோ அல்லது நாடோடிகளைப் போன்றோதான், வாழ்க்கை நடாத்தினர். புரட்சிக்குப் பின்பே பரவலாகப் புகழ்ந்துரைக்கப்பட்ட நவீனமயமாக்கல் நடைமுறைப் படுத்தப்பட்டது. உண்மையில் சோவியத் ஒன்றியத்திலுள்ள சில ஆசிய மொழிகள் எழுத்துவடிவம் பெற்றமை பரந்துபட்டி எழுத்தறிவு போலவே புரட்சிக்குப் பிந்திய வளர்ச்சிதான்:- w
சூழவுள்ள சோவியத் குடியரசுகளில் எழுச்சியடைந்த புதிய ‘புத்திசிவிப் பிரிவும் நிர்வாக அடுக்குக்களுமே தேசியவாதத்தை உருவாக்கவும் பரப்பவும் கூடிய வர்க்கத்தைத் தோற்றுவித்தது. இவ்வகையில் பெனடிக்ற் அன்டேர்சனின் ‘அச்சுச்சாதன முதலாளித்துவம்" அல்ல, மாறாக ஒரு "அச்சுச்சாதன சோஷலிசமே” சில குடியரசுகளின் தேசிய இன அடையாளங்களின் வளர்ச்சிக்கான ஒரு ஆக்கக் கூறாக இருந்தது.
இந்த விரிவுரையின் இறுதிப்பகுதியில் தேசிய இனக் கொள்கையைப் பொறுத்தவரை கொர்பச்சேவ் யுகத்தின் சாதனைகளைத் தொகுத்துரைக்கவும் எதிர்காலச் சாத்தியப்பாடுகளை மதிப்பிடவும் முயல்கிறேன். கொர்பச்சேவின் மூன்று தாரக
79

Page 48
மந்திரங்களான கிளாஸ் நொஸ்த் டெமோகிரெட்டிசாற்சியா, பெரஸ்ரோயக்கா என்பவற்றை எடுத்துக்கொண்டால் இவற்றில் முதலிரண்டும் அவருடைய ஆட்சிக்காலப் பகுதியில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். -
கிளாஸ் நொஸ்த் காரணமாக, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சோவியத் தொடர்புச் சாதனங்கள் அசாதாரணமான வெளிப்படைத் தன்மையையும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளன.
ஒகஸ்ட் 19இல் உருவாக்கப்பட்ட அவசர காலக் கமிட்டியின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று பத்திரிகைத் தணிக்கைச் சட்டத்தை அமுல் செய்வதும், சில பத்திரிகைகளின் வெளியீட்டைத் தடைசெய்ததுமாகும். பொதுப்படையாகப் பத்திரிகையாளர்கள் இந்தச் சதிப்புரட்சிக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.இன்று உண்மையில் (சுதந்திரமான பத்திரிகையாக மீண்டும் தோன்றியுள்ள) "பிரவ்தா கூட தனது சொந்தப் பெயருடன் தொடர்ந்து வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
டெமோக்கிறட்டி சாற்சியா அல்லது ஜனநாயகமாக்கலும் கொர்பசேவின் கீழ் முன்னேற்றமடைந்தது. பகிரங்கக் கூட்டங்கள், சுதந்திரமான எதிர்ப்பு ஊர்வலங்கள், கிளர்ச்சிகள் என்பன சோவியத் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அண்மைக்கால நிகழ்ச்சிகளாகும். ரஷ்யக் கூட்டமைப்பு உட்பட பல குடியரசுகளில் சுதந்திரமான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மத்தியில் மக்களின் பிரதிநிதிகள் கங்கிரசுக்கான தேர்தலும் நடைபெற்றது. அரசியல் யாப்பின்படி இத்தேர்தலில் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் சார்பு நிறுவனங்களுக்கும் மூன்றிலொரு பங்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனினும் குடியரசுகளுக்கான தேர்தல் சுயாதீனமாகவே நடைபெற்றுள்ளது.
1918 இல் பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலுக்குப் பின் (தங்களால் பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் போல்ஷெவிக்குகளால் இது கலைக்கப்பட்டது). சோவியத் யூனியனில், எந்தவகையான ஜனநாயகத் தேர்தல்களும் நடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கையில் ஜனநாயகமயமாக்கல் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
8O

இருப்பினும் கொர்பசேவின் மூன்றாவது தாரக மந்திரமான பெரஸ்ரோய்க்கா- அதன் மிகச் சரியான அர்த்தத்தில் "புனர் அமைப்பு" மட்டுமே குறைந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என நான் நினைக்கிறேன்.
பொருளாதார, தேசிய இனக் கொள்கைகள் இரண்டையும் பொறுத்தவரை நடைமுறையில் இருந்த அமைப்பை உசுப்ப முடிந்ததே தவிர அவற்றின் இடத்தில் புதிதாக ஸ்தூலமாக எதையும் முன்வைக்க முடியவில்லை. நான் பொருளாதார தோல்வி பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. ஆயினும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவானது தேசிய இனப் பிரச்சினையில் நிலவிய நெருக்கடிகள் மேலும் வளர்சியடைவதற்குக் காரணமாக இருந்ததை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும். மத்தியிலிருந்து மிகச் சிற்றளவான பொருள்சார் நலன்களே வழங்கப்படக்கூடியதாக இருந்ததால் மையத்தை விட்டு நீங்கும் போக்கு வலுப்பெறுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. பொருளாதாரம் மற்றும் தேசிய இனக் கொள்கைகளில் ஏற்பட்ட தோல்விக்குத் தனியே கொர்பசேவை மட்டும் குற்றம் சாட்டிவிட முடியாதென்பது உண்மையே. கட்சி இயந்திரத்தின் முக்கிய பகுதி இவ்விரு துறைகளிலும் மாற்றத்துக்குத் தடையாக இருந்தது. தனது சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அதிகாரத்தில் தொடர்ந்திருக்க கொர்பசேவ் ஆர்வம்கொண்டிருந்தமைக்காகவே அவர் விமர்சிக்கப்பட வேண்டியவராகிறார். இதன் பொருட்டு பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே அவர் சமநிலையைப் பேணவேண்டியிருந்தது. இது அவரது சுயாதீனமான இயக்கத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தியது.
குறைந்தது. நான்காண்டு காலமாக தாராளவாதிகளான புத்திசீவிகள் சோவியத் யூனியனை அதன் பழைய வடிவத்திலோ அல்லது ஒரு சீர்திருத்ப்பட்ட சமஷ்டி அமைப்பிலோ காப்பாற்ற முடியாது என்றும் மாறாக ஒரு இறுக்கமற்ற கூட்டமைப்பு மூலமே அது சாத்தியம் என்றும் கொர்பசேவுக்கு ஆலோசனை வழங்கிவந்தனர். ஆயினும் பழமைவாதிகளிடம் கொண்ட அச்சம் காரணமாக கொர்பசேவால் அத்தகைய ஒரு அமைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பால்டிக் அரசுகளைப் பொறுத்தவரையிலும்கூட முரட்டுத்தன மான முறையிலும், பலவந்தமாகவும் அவற்றை இணைத்துக்கொண்ட
81

Page 49
ஸ்டாலின்- ஹிட்லர்- இரகசிய உடனப்ாடுகளை அவர் திரும்பவுய 1989இல் பிரசுரிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானார். மேலும் சோவியத் யூனியனுடன் அவை இணைக் கப்பட்டது செல்லுபடியானதே என வலியுறுத்தியதோடு ஆயுத பலத்தைக் காட்டி அதைப் பேணவும் விரும்பினார். இன்று சதிப்புரட்சி நடைபெற்றதற்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்குரிய கடைசி நம்பிக்கை என்ற வகையில் ஒரு இறுக்கமற்ற கூட்டமைப்பை ஆதரித்து நிற்கவேண்டிய நிலையில் மட்டுமன்றி பால்டிக் அரசுகளின் பிரிந்துபோகும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்யவராகவும் உள்ளார்.
சதிப்புரட்சிக்கு முன்னர் மத்திய அரசுக்கும் குடியரசு களுக்குமிடையில் ஒரு புதிய உறவு முறைகளைக் கொண்டுவருவதற்காக கொர்பசேவ் மேற்கொண்ட இறுதி முயற்சி புதிய ஒன்றிய ஒப்பந்தமாகும். (union treaty) இது எல்லாக் குடியரசுகளையும் சுயாதிபத்தியமுள்ள அரசுகளாக அங்கீகரிப்பதுடன் சோவியத் ஒன்றியத்துக்கு "சுதந்திர சோவியத் குயரசுகளின் ஒன்றியம்” என ஒரு புதிய பெயரைச் சூட்டுவதாகவும் அமைந்தது.
ஒன்றியத்தின் பெயரிலிருந்து "சோசலிச என்ற அடை அகற்றப்பட்டது முக்கியத்துவம் உடையது. இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் குடியரசுகளுக்கு தமது எல்லைக்கு உட்பட்ட நிலம் மற்றும் இயற்கை வளங்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும், சொத்துடைமை வடிவங்கள், பொருளாதார முகாமைத்துவம் போன்றவைக்கான சுதந்திர தெரிவுக்குரிய அதிகாரத்தையும் வழங்கின. இவை தனியார் சொத்துடைமைக்குப் பாதையைத் திறந்துவிடுவதால் சோசலிசம் என்பதை பெயரிலிருந்து அகற்றியது உண்மையில் பொருத்தப்பாடானதேயாகும்.
குடியரசுகளுக்கான மற்றைய அதிகாரங்களுள் தமது தேசிய அரசு மற்றும் நிர்வாக வடிவமைப்புகள், அவற்றின் அதிகார நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு என்பவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரமும் உள்ளடங்கியிருந்தது. ஒவ்வொரு குடியரசும் பிற நாடுகளுடன் நேரடி இராஜதந்திரப் பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பெறவிருந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒவ்வொருவரும் மக்கள் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக்கொண்ட ஜனநாயகம், பொது வாக்களிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஒரு சிவில் சமூகத்தை உருவாக்குதல் போன்ற அனைத்துக்கும் கடப்பாடுடையவராக இருப்பர்.
82

மறுபுறத்தில் ஒன்றியத்தின் பாதுகாப்பு, குடியரசுகளின் வெளிநாட்டுப் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை ஒருங்கிணைத்தல், நாணய வெளியீடு, ஒன்றியத்தின் வரவு செலவுத்திட்டம், ஒன்றியத்தின் சட்டக் கோவையை உருவாக்குதல், சட்ட அமுலாக்கல் அமைப்புக்களைப் பராமரித்தல் என்பன மத்தியினுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
மூன்றாவது அம்சம் ஒன்றும் இருந்தது. இதில் குடியரசுகட்கும் மத்திக்கும் இடையே கூட்டுப் பொறுப்பு இருக்கும். இராணுவக் கொள்கை, அரச பாதுகாப்புக்கொள்கை, ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கை, எரிபொருள், சக்தி மூலவளம் பற்றிய கொள்கைகள், போக்குவரத்து, தொடர்பு சாதனம், சுற்றாடல் பாதுகாப்பு, அரசியல் சட்டம், ஒழுங்கு என்பவற்றை அமுல்படுத்துதல் போன்ற வற்றைத் தீர்மானித்தல் என்பன இதில் அடங்கும். குடியரசுகளுக்கும் மத்திக்குமிடையிலான முரண்பாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கப்படவேண்டும். அவ்வாறு தீர்க்கமுடியாத பட்சத்தில் ஒரு அரசியல் யாப்பு நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இருந்தது.
இந்தப் புதிய கூட்டமைப்பு ஒப்பந்தம் பிற சமஷ்டி அரசியலமைப்புச் சட்டங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவு சிறப்புமிக்க ஒரு சமஷ்டி முறைமையைப் பற்றிப் பேசியபோதும், ஆறு குடியரசுகள் இதில் கையெழுத்திட ஏன் மறுத்தன என்பதை ஒருவர் புரிந்துகொள்வது அத்தனை கடினமானதல்ல. இக்குடியரசுகளில் சில குறிப்பாக மூன்று பால்டிக் குடியரசுகள்முழுமையான சுதந்திரத்தைப் பெறுவதில் உறுதியாக இருந்தன என்பதோடு மத்திய அரசின் நீண்டகால சர்வாதிகார மரபின் காரணமாக இப்புதிய சலுகை குறித்து அவற்றிடையே பலத்த சந்தேகமும் நிலவியது.
சமஷ்டி அமைப்பானது அதன் அதிகாரப் பரவலாக்கம் நேர்மையான முறையில் அமுல்படுத்தப் பட்டால் மட்டுமே சிறப்பான ஒன்றாக இருக்க முடியும் என்பது வெளிப்படை. ஒருங்கிணைப்பு (Co-ordination ) போன்ற அரசியல் யாப்புக் கலைச் சொற்கள் அவை எப்படி விளக்கப்படுகின்றனவோ அப்படிப் பொருள்தரக்கூடியன. அது ஒரு இறுக்கமான அர்த்தத்தில் பாவிக்கப்படின், மத்தியின் அதிகாரம் தொடர்ந்து பேணப்படுவதற்கு வாய்ப்பாகிவிடும்.
83

Page 50
இன்னமும் மத்திய அரசாங்கம் லெனினிச மரபுகளைப் பேணும் கொம்யூனிஸ்ட் கட்சியிடமே இருப்பதால், அது பிற குடியரசுகளுடனான உறவுகளில் தாராளத் தன்மையைக் கைக்கொள்ளும் என்று நம்ப முடியாமையே, இந்த ஆறு குடியரசுகளும் வெளியே இருக்க விரும்பியதற்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடும். மேலும் நீதித்துறை முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு சுயாதீனம் அற்றிருந்த ஒரு நாட்டில் மைய அரசுக்கும் குடியரசுகளுக்கும் இடையே ஏற்படும் பிணக்குகளை அரசியல் யாப்பு நீதிமன்றத்தினால் தீர்த்துவைக்கும் ஏற்பாட்டிலும் இவை நம்பிக்கை அற்றிருக்கக்கூடும்.
ஓகஸ்ட் 20 இல் கைச்சாத்தாக இருந்த புதிய கூட்டமைப்பு ஒப்பந்தம் குறைப் பிரசவமாக முடிந்த சதிப்புரட்சியினால் சவக்குழிக்குள் போட்டு மூடப்பட்டுவிட்டது. கடந்த வாரம் மக்கள் பிரதிநிதிகள் காங்கிரளயில் நடந்த விவாதம் பெருமளவுக்கு இக்கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட சமஷ்டி யோசனையை விட மிகவும் இறுக்கம் குறைந்த ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் சாத்தியப்ப்ாடுகளைச் சுற்றியே மையங் கொண்டிருந்தது. செப்டம்பர் 5 ஆம் திகதி காங்கிரஸ் தனது இறுதி அமர்வின்போது, ஒவ்வொரு குடியரசும் தனது இணைவின் அளவு பற்றித் தானே தீர்மாணிக்கக்கூடியதான ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்குவது குறித்த யோசனையை ஏற்றுக்கொண்டது.
பழைய சோவியத் ஒன்றியம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பதே இதன் பொருளாகும். ஆனால் அதன் உடைவில் இருந்து ஒன்றியத்தின் ஏதாவது ஒரு அம்சத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த முயற்சி மிகவும் காலத்தால் பிந்திய ஒன்றா?
பதினைந்து குடியரசுகளில் பன்னிரண்டு குடியரசுகள் சுதந்திரப்பிரகடனம் செய்துள்ளன, அதேவேளை, மிகப் பெரியதும் அதிக சக்தி வாய்ந்ததுமான ரஷ்யக் கூட்டரசானது செயலிழந்துபோன மத்திய அரசினது அனைத்து அதிகாரங்களையும் கையேற்கும் நிலையை நோக்கி வெகு தூரம் வந்துவிட்டது. இதுவே இன்றைய நிலையாகும்.
சுதந்திரப் பிரகடனம் செய்துள்ள இந்தப் பன்னிரண்டு குடியரசுகளில் மூன்று பால்டிக் அரசுகள் ஏற்கனவே நடைமுறைக்கு
84

வந்துவிட்டன. இரண்டாவது உலக மகாயுத்தத்தின்போது சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட மோல்டேவியன் குடியரசும் தனது சுதந்திரப் பிரகடனத்தை அமுல் செய்யும் போல் தோன்றுகிறது. மோல்டாவியக் குடியரசின் மொத்தச் சனத்தொகையில் அறுபத்து நான்கு வீதத்தினர் றுமேனிய இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களாவர். அவ்வகையில் றுாமேனியாவுடன் மீண்டும் இணைவதற்குரிய ஒரு இடைக்கால நடவடிக்கை என்ற வகையில் மட்டுமே இவர்கள் சுதந்திரத்தைக் கோரும் சாத்தியம் உண்டு.
ஏனைய எட்டுக் குடியரசுகளின் நிலை என்ன? இவற்றில் எந்த ஒரு குடியரசாவது பிரிந்துபோக விரும்பினால் சோவியத் ஒன்றியத்தின் எந்த சக்தியாலும் அதைத் தடுத்தி நிறுத்தவிட முடியாது என்பதே யதார்த்த நிலையாகும். கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கிழந்த செயலற்ற ஒன்றாகிவிட்டது. இராணுவமும், பாதுகாப்பு அமைப்புகளும் சமரசத் தன்மை கொண்டவையாகவும், தம்முள் ஆழமாகப் பிளவுண்டவையாகவும் உள்ளன. ஜனாதிபதி கொர்பசேவின் அந்தஸ்த்தும் அதிகாரமும் மோசமாக ஆட்டம் கண்டுள்ளன.
ஆகவே இந்தக் குடியரசுகளுக்குத் தமது சொந்த முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றை ஏதாவது ஒரு கூட்டமைப்பு வடிவத்துக்குள் வைத்திருப்பதற்கு தூண்டக்கூடிய ஏதுக்கள் ஏதாவது உண்டா?
இதற்கான பதில்: இப்போதைக்கேனும் இதற்கு ஓர் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு அம்சம் இருக்கிறது என்பதே; அதுதான் பொருளாதாரம். முற்றிலும் மத்திய நிர்வாகத்தினூடாகச் செய்யப்பட்டதன் காரணமாக பொருளாதார உறவுகள் திரிபுபட்டும் அதிகார வர்க்கமயப்படுத்தப்பட்டும் உள்ளபோதிலும் மூலப்பொருள் விநியோகம் மற்றும் வணிகம் என்பவற்றினைப் பொறுத்தவரை இக்குடியசுகளின் பொருளாதாரம் ஒன்றிலொன்று மிகநெருக்கமாகத் தங்கியிருக்கும் விதத்திலேயே வளர்ந்துள்ளது.
இந்த அமைப்பு உண்மையில் இனியும் நீடிக்க முடியாது. ஆயினும் தமது சொந்த பொருளாதார நலன்களுக்காக இக்குடியரசுகள் ஒவ்வொன்றும் தமக்கிடையே பரஸ்பர பொருளாதார உறவுகளை பேணவேண்டிய தேவை உள்ளது.இது பால்டிக் குடியரசுகளுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால்
85

Page 51
அவை சோவியத் ஒன்றியத்திலிருந்து அரசியல் ரீதியாகப் பிரிந்து செல்லும் போதிலும் மூலப்பொருள் விநியோகம், சக்தி மற்றும் தமது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை என்பவற்றைப் பொறுத்தவரை இவை சோவியத் பொருளாதாரத்தில் பெருமளவுக்குத் தங்கியிருப்பதனால் பொருளாதார ரீதியாக உடனடியாகத் தம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாது.
பின் ஒரு காலத்தில் பால்டிக் அரசுகள் ஜேர்மனிய அல்லது ஸ்வீடன் பொருளாதாரச் சுற்டுவட்டத்தில் சேர்ந்து கொள்ளக்கூடும். பைலோ J ağ ulu T, உக்ரேன் குடியரசுகளும் -அவை சுதந்திரமடையுமானால் இந்த மாதிரியைப் பின்பற்றக்கூடும். ஆனால் அழிவின் விளிம்பில் நிற்கும் பொருளாதார நிலையில் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக இக்குடியரசுகள் ஏதாவதொரு பொருளாதாரக் கூட்டு அமைப்புக்குள் இணைய வேண்டியே இருக்கும். இக்கூட்டு தமக்கு மேலே இருந்து ஆதிக்கம் செய்யும் அரசியல் மையமாக அன்றி இக்குடியரசுகள் தாமே உருவாக்கிக் கொண்ட ஒன்றாக இருக்கக்கூடும். மொஸ்கோவின் புதிய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு (EEC) போன்ற ஒரு அமைப்பை குடியரசுகட்கிடையிலான எதிர்கால உறவுக்கு ஒரு மாதிரியாகக் கொள்வது பற்றிச் சிந்திக்கின்றனர்.
எனினும் சோவியத் ஒன்றியத்தினதோ அல்லது அதை அடுத்து வரவிருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைக்கப்பட்ட அரசுகளின் கூட்டமைப்பினதோ பிரச்சினைகள் சுயவிருப்புடைய ஒரு பொருளாதார உறவை குடியரசுகளுக்கிடையில் ஏற்படுத்து வதனால் மட்டும் தீர்த்துவைக்கப்படக்கூடியவை அல்ல. இக்குடி யரசுகளுக்கு மத்தியில் ஏனையவற்றைவிட பரப்பளவில் மிகப் பெரியதும், இயற்கையான மூல வளங்களை மிக அதிகளவில் கொண்டதும் பொருளாதார வளர்ச்சியில் மிக முன்னேறியதும் பெருமளவு வினைத்திறன்களைக் கொண்டதுமான ஒரு குடியரசுரஷ்யக் குடியரசு- இருக்கப்போகிறது என்பது முக்கியமானது.
சதிப்புரட்சிக்குப் பிந்திய காலச் சூழலின் நிலைமைகள் - நான் ஏற்கனவே குறிப்பிட்டது போலவே - ரஷ்யக் கூட்டமைப்பின் அரசாங்கத்துக்கு மத்தியினுடைய அநேக செயற்பாடுகளை தனது கையில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கின. சதிப்புரட்சியாளருக்கு எதிராக சந்தேகத்திற்கிடமற்ற வகையில் துணிச்சல் மிக்கதொரு நிலைப்பாட்டை எடுத்த போரிஸ் யெல்ட்சின்
86

மிகவும் பலமுடையவராக எழுச்சியடைந்தார். அத்துடன் சதிப்புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்து ஜனாதிபதி கொர்பச்சேவ் ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதமரான இவான் சிலாயேவ்வை சோவியத் ஒன்றியத்தின் புதிய பிரதம மந்திரியாக நியமித்தார்.
ரஷ்ய மூவர்ணக்கொடி இப்போது ரஷ்யப் பாராளுமன்றத்தின் மீது பறந்துகொண்டிருக்கிறது. வரவிருக்கும் மாதங்களிலும் ஆண்டுகளிலும் அரசியல், கலாசார மற்றும் ஆன்மீக ரீதியாக ஒரு பலமான சோவியத் தேசிய வாதம் மலர்ச்சி பெறப்போவதை நாம் எதிர்பார்க்கலாம். லெனினின் பெயரை அகற்றிவிட்டு புரட்சிக்கு முந்திய சென் பீட்டர்ஸ்பேக் என்ற பெயரை (பெரும்பான்மை மக்களின் வேண்டுகோளின்படி) பழைய தலைநகருக்கு மாற்றிக்கொண்டது இந்த மறுமலர்ச்சிக்கு ஒரு நல்ல குறியீடாகும். கொம்யூனிஸ்ட் யுகம், வளமான ரஷ்ய கலாசார பாரம்பரியத்திலும் ரஷ்ய மொழி மீதும் ஓர் அழிவுத்தன்மை வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என நான் கருதுவதால் இத்தகையதொரு அபிவிருத்தியை முழுக்க முழுக்க எதிர்மறை" அர்த்தத்தில் புரிந்துகொள்ள நான் விரும்பமாட்டேன். பழமைவாத, அல்லது திருச்சபையோடு முரணிய ரஷ்யக் கிறிஸ்தவப் பாரம்பரியத்துக்கு இன்று கம்யூனிஸத்தை விட பெருமளவு மலர்ச்சிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அனால் அதேநேரம் ரஷ்யாவுக்கும் பிற சிறிய குடியரசுகளுக்குமிடையே அதிகாரத்தில் உள்ள சமனற்ற தன்மை பிற குடியரசுகள் மீதான ரஷ்ய மேலாதிக்கம் தொடர்வதற்குரிய ஆபத்தையும் கொண்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் அரசின் கலைப்புக்குப் பிறகு உருவாகும் புதிய வடிவங்களிலேயே இது வெளிப்படக்கூடும்.
எதிர் காலத்தில் நிகழக்கூடிய இரண்டாவது ஆபத்து, மைய அதிகாரம் நீக்கப் படுவதனால் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையில் நடந்ததுபோல் அயலிலுள்ள குடியரசுகளுக்கிடையில் அல்லது குடியரசுகளுக்குள்ளேயே பெரும்பான்மை சிறுபான்மை இனங்களுக்கிடையிலான முரண்பாடு வலுவடையும் நிலைமையாகும்.
நான் மார்க்சியமும் தேசிய வாதமும் பற்றிய சுருக்கமான சில அவதானிப்புகளோடு முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
87

Page 52
1848, ஐரோப்பிய தேசிய வாதத்தின் எழுச்சி ஆண்டுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டுமாகும். அந்த அறிக்கையில் ம்ார்க்சும் எங்கல்சும், முதவாளித்துவத்தின் கீழ் உலகச் சந்தையின் உருவாக்கம் காரணமாக தேசிய அரசுகள் ஏற்கனவே காலவதியாகிவிட்டன என்றும், தொழிலாளர்கட்கு, ஒரு நாடு இல்லை என்றும் பிரகடனம் செய்ததோடு "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்துடன் தங்கள் அறிக்கையை முடித்திருந்தார்கள். எழுபது ஆண்டுகட்குப் பிறகு மார்க்சிய சர்வதேசியத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியும் அதன் தலைவரும் பழைய சார் மன்னனின் சாம்ராச்சியத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது மார்க்சின் தீர்க்கதரிசனம் நிறைவேறத் தொடங்கிவிட்டதாகத் தோன்றியது.
ஆனால் விரைவிலேயே பெரிய ரஷ்யத் தேசியவாதம் சோவியத் அரசினுடாகவே வெளிப்படலாயிற்று. சர்வதேசப் புரட்சிக்கான கருவியாக இருந்திருக்க வேண்டிய கொம்யூனிஸ்ட் அகிலம் விரைவிலேயே ரஷ்யத் தேசிய நலன்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு முகவர் நிலையமாக மாறிவிட்டது.
ரஷ்யாவில் தேசியவாதத்தின் மேலாதிக்கமானது புரட்சியின்பின் தொடர்ச்சியாகும். அதனை அடுத்து வந்த சீன, கியூப, வியட்நாமிய புரட்சிகளிலும் பிறவற்றிலும் அவற்றின் தொடக்கத்திலிருந்தே தேசியவாதம் ஒரு பலமான சக்தியாகவும் அவற்றின் வெற்றிக்கான ஒரு நிபந்தனையாகவும் இருந்துள்ளது.
கொம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்த ஒன்றரை நூற்றாண்டுகளில் மார்க்சும், எங்கல்சும் கற்பனை செய்ததைவிட அதிக அளவில் தேசியவாதத்தின் இருத்தலுக்கான முக்கியத்துவம் வளர்ந்துள்ளது. கிழக்கைரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் இப்போது சோவியத் ஒன்றியத்திலும் ஏற்பட்ட கொம்யூனிஸத்தின் வீழ்ச்சியானது மார்க்சும் எங்கல்சும் பெற்றெடுத்த அரசியல் இயக்கத்தைவிட தேசியவாதம் நீடித்த வாழ்வைக் கொண்டிருக்கும் என்பதுதை தெளிவாகக் காட்டுகின்றது.
முன்னைநாள் சோவியத் ஒன்றியத்தின் பிரதேசங்களில் நடக்கும் இந்தத் தேசியவாதத்தின் மீள் எழுச்சியை நம்பிகைதரும் ஒன்றாகக் கருதுவதற்கு எந்தக்காரணமுமில்லை. தேசிய விடுதலையை முதற்தடவை அனுபவிக்கும் இந்த மக்கள் இதை விரும்பக்கூடும்.
88

ஆனால் அவர்கள் பலத்த கஷ்டங்களையும் மோதல் முரண்பாடுகளையும் ஏன் வன்முறைகளையும்கூட எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்நோக்க வேண்டியிருக்கும். விடுதலை பெற்ற அரசுகளிலுள்ள துணைச் சிறுபான்மை இனங்கள் அங்குள்ள பெரும்பான்மையினரின் மேலாதிக்கத்தையும் விரைவில் உணர வேண்டி வரலாம்.
சோவியத் ஒன்றியம் ஒரு பூலோக சுவர்க்கத்தை நோக்கிச் சென்று கொண் டி ருப்பதாக நெடுங் காலமாக நம் பரிக் கொண்டிருந்தவர்கட்கு இது வருத்தமூட்டும் ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் மதச்சார்பற்ற ஒரு மீட்பாளர் பற்றிய நம்பிக்கை ஒருபோதும் ய்தார்த்த அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என்பதை இன்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். மனிதர்களைப்போலவே மனித சமுதாயமும் ஒருபோதும் பூரணத்துவம் உடையதாக இருந்ததில்லை என்பதையும் கற்பனாலோகம் (utopia ) ஒரு போதும் நடைமுறைக்கு வருவதில்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்வதென்பது மார்க்சியத்தை விட மிகவும் பழமையான அநீதிக்கும் அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாக ஆகாது.
மனித குலத்தை இறுதியாக அதன் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுவிக்கும் ஒரு பூரணத்துவமான சமூகத்தை உருவாக்க முடியும் என்று நம்புவது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இது ஸ்டாலின், பொல்பொட், விஜேவீர போன்றோரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை உற்சாகப்படுத்துகிறது. எதிர்காலத்தில் மனித சமுதாயம் என்றென்றைக்குமாக சந்தோஷமாக இருக்க முடியுமானால் இப்போது அதற்காக எவ்வளவு மக்கள் தம்மைத் தியாகம் செய்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். மனிதக் குறைபாடுகளைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடும்போது, இந்தப் போராட்டம் முடிவற்றதும் ஒவ்வொரு யுகத்திலும் புதுப்பிக்கப்பட வேண்டியதும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுமாகும் என்பதை நாம் மனம் கொள்ள வேண்டும்.
இப்போது போதை தெளிந்துவிட்டது. இது அதன் பின் வருகின்ற காலைப்பொழுது
89

Page 53
ஐசாக் டொயிற்வெடிர் ஒரு மறுசந்திப்பு.
ஒன்றுடன் ஒன்று பகைமை கொண்ட, கெடுபிடி யுத்தகால சித்தாந்தங்களான ஸ்டாலினிசத்தையோ அல்லது கொம்யூனிச எதிர்வாதத்தையோ ஏற்றுக்கொள்ளாத எனது தலைமுறையைச் சேர்ந்த சிந்திக்கும் ஆற்றல் உள்ள அநேகள் மீது ஐசாக் டொயிற்ஷெரின் சிந்தனையும் எழுத்துகளும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. எனது கருத்துப்படி சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றை விளக்கியவர்களில் அவர் தன்னேரில்லாதவராக இருக்கிறார். அவரது வாழ்க்கையின் இறுதி இரண்டு தசாப்தங்களில் சோவியத் விவகாரங்கள் தொடர்பான ஆழம் மிக்க கருத்துரைகளை அவர் வழங்கியுள்ளார். எனது அறிவுசார் வளர்ச்சிக்கு நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். 1949இல் அவர் வெளியிட்ட ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை வரலாறு முதல் 1957இல் அவர் இறக்கும்வரை வெளிவந்த அவரது நூல்கள் அனைத்தையும் நான் படித்திருக்கிறேன். சிலவற்றிற்கு மதிப்புரையும் எழுதியுள்ளேன். ஐம்பதுகளில் அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை "இலங்கை டெயிலி நியூஸ்" பத்திரிகையின் நடுப்பக்கத்தில் வெளிவர ஏற்பாடு செய்திருந்தேன். 1952இல் ஒரு மாலைப் பொழுதில் அவரை அவரது கூல்ஸ்டன் இல்லத்தில் சந்தித்து நெடுநேரம் உரையாடும் பேற்றையும் பெற்றேன். அவர் இறந்து கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு கழிந்துவிட்டது. கடந்த இரண்டரை தசாப்த நிகழ்வுகளின் பின்னணியில் அவரது ஆய்வுகளும் வரலாற்றுத் தீர்க்கதரிசனங்களும்- குறிப்பாக சோவியத் ஒன்றியத்தையும் கிழக்கு ஐரோப்பாவையும் இந்தக் காலகட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் எப்படி எல்லாமோ உலுப்பிவிட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் - எவ்வளவு தூரம் ஏற்புடையவை ஆகின்றன? இந்த வினாவுக்கு விடைகாண முற்படுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய தொழில் சார் சோவியத்தியலாளர்களையும் டொயிற்ஷெரையும்வேறுபடுத்திய
90

அகன்ற இடைவெளியை ஒரு உதாரணத்தின் மூலம் நான் முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஸ்டாலின் இறந்து கொண்டிருந்த வேளையில், செய்திச் சேவைகள் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்ட செய்தியை விளாசின. அதேவேளை டொயிற்ஷெர் "மன்செஸ்ரர் காடியனுக்கு” ஒரு கட்டுரை எழுதியிருந்தர். அது ஸ்டாலின் இறந்த அன்று வெளியிடப்பட்டது. ஒரு சில மணி நேரங்களில் எழுதப்பட்டிருக்கக் கூடியதே எனினும் அந்தக் கட்டுரையின் வரலாற்று வீச்சு எப்படியும் தாக்கம் கொண்டதாகவே இருந்திருக்கும். ஆனால் அதை இன்னும் குறிப்பிடக் கூடியதாக ஆக்கியது டொயிற்ஷெரின் தீர்க்க தரிசனம் ஆகும். ஏனெனில் டொயிற்ஷெர் தனது கட்டுரைக்கு "ஸ்டாலினிசத்தின் முடிவு: சோவியத் ஒன்றியத்துக்கு ஏற்படவுள்ள நெருக்கடி" என்று தலைப்பிட்டிருந்தார். ஒரு பந்தியை மேற்கோள் காட்டி அந்தப் பகுப்பாய்வின் போக்கைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கின்றேன்.
"எதிரே தொங்கிக் கொண்டிருக்கின்ற நெருக்கடியின் கூறுகளைச் சுருக்கிக் கூறுகிறேன். லெனின் மரணப் படுக்கையில் இருந்த பொழுது புரட்சி ஒரு தனிஆள் ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டும் தன் தேசிய ஒட்டுக்குள் பின்வாங்கிக் கொண்டும் இருந்தது. ஸ்டாலின் மரணத்துடன் போராடும் இவ்வேளையில், சோவியத் மக்கள் தனியாள் ஆட்சியில் வெறுப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். புரட்சியும் தேசிய ஒட்டுக்குள்ளிருந்து வெடித்து வெளிக் கிளம்பியுள்ளது. இந்த நெருக்கடிக்கு எப்படித் தீர்வு காணப்படப் போகிறது என்பதைப் பற்றி ஆருடம் சொல்ல முடியாது. அண்மி வரும் எதிர்காலத்தில் வேகமான அல்லது அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்பார்க்கக் கூடாது. "ஸ்டாலின் இறந்துவிட்டார்- ஸ்டாலினிசம் நீடுழி வாழ்க" என்ற கோஷம் அடுத்த சில மாதங்களில் மொஸ்கோவிலிருந்து எதிரொலிக்கத் தான் போகிறது. ஸ்டாலின் இறக்க முன்னதாகவே ஸ்டாலினிசம் அரைவாசி இறந்துவிட்டது என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாது இந்த எதிரொலி கேட்கத்தான் @ժմյպմs".
அந்தக் காலகட்டத்தில் இத்தகையதொரு நிலைப்பாடு எவ்வளவு அசாதாரணமானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலினின் மரணம் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்று மேற்கத்திய சோவியத் விவகார அறிஞர்களும் கெடுபிடியுத்த சித்தாந்திகளும் கருதியதை நினைவுகூர வேண்டும்.
91

Page 54
சோவியத் அமைப்புத் தொடர்ந்தும் இருக்கும். அன்று நிலவிய சோவியத் சமூகம் பற்றிய வைதிக சித்தாந்த மாதிரி ஒரு "சர்வாதிகார அரசு” என்பதாகவே இருந்தது. வரைவிலக்கணப்படி இது ஒரே தளநிலை கொண்டது, அசைவற்று நிலையானது, மாற்றத்துக்கு உட்படாதது - குறைந்தபட்சம் உள்ளக சக்திகளால்என்று கருதப்பட்டது. (இறுதி அம்சம் முக்கியமானது; ஏனென்றால் சோவியத் கர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவதானால் அது வெளி1ே. இருந்துதான் செய்யப்பட வேண்டும் என்று கருதப்பட்டது)இதுதான் சோவியத் அரசு பற்றிய சோவியத்தியலாளரின் பொதுவான வாய்ப்பாடாக இருந்தது. ஒரு பக்கத்தில் கென்னன், ஃபெயின்சொட், பிர்சேசின்ஸ்கி போன்றோரும், மறுபக்கத்தில் இன்று மறக்கப் பட்டுள்ள கீழ்த்தரமான பிரசாரகர்களான விற்றேக்கர் சேம்பர்ஸ், ஜேம்ஸ் பேன்ஹாம் போன்றோரும் இவ்வாறே கருதினர். அன்றும் அதன் பின்னரும் டொயிற்ஷெர் இந்தக் கருத்துக்கு எதிராக இருந்தார். ஸ்டாலினால் திணிக்கப்பட்ட இறுக்கமான வார்ப்புக்குப் பின்னரும் மாற்றத்துக்கான வலுவையும், வளத்தையும் தன்னகத்தே கொண்ட உயிருள்ள கூர்ப்புள்ள சமூகம் சோவியத் சமூகம் என்று அவர் வாதிட்டார். அவர் 1956இல் ஒரு கட்டுரையில் தெரிவித்தது போல்: "ஆம் சோவியத் பிரபஞ்சம் சுற்றுகிறது”.
ஸ்டாலினிஸ்டுகள் அல்லாத பிற இடதுசாரிகளுடனும் டொயிற்ஷெர் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். அவர்கள் ஸ்டாலினிச நிலை குறுங் “ காலத்தியதுதான் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் பெரும்பான்மையினர். ட்றொட்ஸ்கியின் ஆய்வினைப் பின்பற்றி சோவியத் மக்கள் ஒரு அரசியல் புரட்சி மூலம் இதனைத் தூக்கி எறிவார்கள் என்று எதிர்பார்த்தனர். நீண்ட காலமாக அரசியல் ரீதியாகத் தாமாக இயங்கப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகத்தில் அதற்கான முன்முயற்சி மேலிடத்திலிருந்து-அதாவது ஆளும் குழுவின் ஒரு பகுதியிலிருந்தே வரவேண்டும் என்று அந்தக் கருத்துக்கு எதிராக டொயிற்ஷெர்வாதிட்டார். சோவியத் சமூகத்தின் ஜனநாயக மீளெழுச்சி மக்களின் புரட்சிகரத் தலையீடின்றி முழுமையாக எட்டப்பட முடியும் என்பதை அவர் வலியுறுத்தவில்லை. ஆனால் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம் அது முழுமையாக எட்டப்பட முடியும் என்பதை அவர் நிராகரிக்கவும் தயாராக இருக்கவில்லை. சோவியத் ஆளும் குழுவினர்களின் நிலைப்பாட்டில் இருந்து சீர்திருத்தம் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது என்ற டொயிற்வுெளின் கருத்தை குருஷ்சேவின் காலம் நிரூபித்துக்காட்டியது.
92

குருஷ்சேவின் வீழ்ச்சி திசையை மாற்றிவிட்டாலும் கூட சீர்திருத்த அலை மீண்டும் வரும் என்பதில் டொயிற்ஷெர் நம்பிக்கையாக இருந்தார். தான் இறப்பதற்குச் சில பாதங்களுக்கு முன்னர் "முற்றுப் பெறாத புரட்சி” என்ற தலைப்பில் டொயிற்வுெள் ஜோஜ் மக்கோலே றெவெலியன் நினைவுச் சொற்பொழிவு ஆற்றிய போது பின்வருமாறு கூறினார்.
"தனியாட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளிலோ அன்றி ஆளும் சிறு குழுவினரின் தன்னிச்சையான முடிவுகளிலோ தங்கியிருப்பதையும் வெறுமனே ஒரு வரலாற்றுப் பொருளாக இருப்பதையும் சோவியத் சமூகம் இன்னும் நீண்டகாலத்துக்கு ஏற்றுக்கொள்ளாது. தனக்குத்தானே தலைவனாய் இருக்கும் உணர்வை அது மீண்டும் பெற வேண்டியுள்ளது. தனது அரசாங்கங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. நெடுங் காலமாக சமூகத்துக்கு மேலாக இருக்கும் அரசை தேசத்தின் அபிலாசைகளை ஜனநாயக பூர்வமாக வெளிப்படுத்தும் கருவியாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் முதலில் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் கூட்டம் கூடும் சுதந்திரத்தையும் அது மீண்டும் நிலைநாட்ட வேண்டியுள்ளது. டொயிற்ெ கிளாஸ்நொஸ்ற், பெரஸ்ரோய்க்கா காலத்தில் வாழ்ந்திருந்தால் அவரது எதிர்பார்ப்பு இந்த அபிவிருத்திகளால் நிறைவேறுவதைக் கண்டிருப்பார்.
ஸ்டாலின் யுகம் பற்றிய மேற்கத்திய கொம்யூனிச எதிர்ப்பா ளர்களதும் இடதுசாரி ஸ்டாலினிச எதிர்ப்பாளர்களதும் ஆய்வுகளில் இருந்து முக்கியத்துவ மிக்க வகையில் அவரது ஆய்வு வேறுபட் டிருக்காவிட்டால், சோவியத்தின் வருங்காலம் பற்றிய அடிப்படையில் நம்பிக்கை ஊட்டும் டொயிற்ஷெரின் நோக்கு சாத்தியமற்ற ஒன்றாக இருந்திருக்கும். யுத்தத்துக்கு முன்பு போலந்து ட்றொட்ஸ்கியக் குழு உறுப்பினராக இருந்ததால் ஸ்டாலினிச எதிர்வாதத்தில் டொயிற்ஷெர் தேர்ச்சி பெற்றிருந்தார். ஸ்டாலினிச ஐதீகங்கள், கொள்கைகள் எவையும் அவரிடம் இருக்கவில்லை. ஸ்டாலினின் வரலாற்றை அவர் எழுதிய பொழுது அக்காலத்தில் ஹிட்லரையும் ஸ்டாலினையும் குரூரமான சர்வாதிகாரிகள் என்று ஒப்பிட்டு வர்ணிப்பதே மவுசாககொள்ளப்பட்ட போதிலும் அவர்களது வரலாறு "முற்றிலும் பெறுமதியற்றவை, வீணானவை” என்று கொள்ளப்பட்டபோதிலும், அவர் அவற்றை நிராகரித்தார். ஸ்டாலின் காலத்தில் ஏற்பட்ட பாரிய மனித உயிரிழப்புகள் பற்றி அவர் உணர்ந்திருந்தும்
93

Page 55
அதனால் சாத்தியமாக்கப்பட்ட பெறுபேறுகளையும் அவர் அங்கீகரித்துள்ளார். நான் முன்னர் குறிப்பிட்ட, ஸ்டாலின் இறந்தபொழுது எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் பின்வரும் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது:
"ஸ்டாலினின் வரலாற்றுச் சாதனையின் சாரத்தைப் பின்வருமாறு கூறலாம். மர ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த ரஷ்யாவைப் பொறுப்பேற்ற அவர் அதை அணு உலைகள் கொண்ட நாடாக விட்டுச் சென்றுள்ளாா”.
டொயிற்ஷெர் அழுத்திக் கூறுவதற்கு முயல்வதுபோல இது வெறுமனே பொருளாதார அல்லது தொழில்நுட்ப மாற்றம் மட்டுமன்று. முழுத்தேசத்தையும் பாடசாலைக்கு அனுப்பாமல் ரஷ்யாவின் பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகி இருக்க முடியாது. ஸ்டாலின் வரலாறு பற்றிய நூலில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை அவர் எப்படி அடக்கி ஆண்டார் என்பதை டொயிற்ஷெர் விளக்கும் பந்திக்குப் பின், ஒரு குறிப்பிடக்கூடிய பந்தி வருகிறது.
"எவ்வாறாயினும் ஸ்டாலினிசத்தின் கலாசார முக்கியத்துவத்தை அது கல்வியையும் கலைகளையும் எப்படி அழித்தது என்பதை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது. ஸ்டாலினின் ஆக்கபூர்வமான செல்வாக்குக்கும் அழிவுரீதியான செல்வாக்குக்கும் இடையே உள்ள முரண்பாடுகளையே மனதில் கொள்ள வேண்டும். அறிவாளர்களின் ஆன்மீக வாழ்வை ஈவிரக்கமின்றித் தரைமட்டமாக்கியபொழுதும், நாகரிகத்தின் அடிப்படைக் கூறுகளை நாகரிகமடையாத பெருந்தொகை மக்களிடையே அவர் கொண்டு செல்லவும் செய்தார். அவர் ஆட்சியில் ரஷ்ய கலாசாரம் ஆழத்தை இழந்தது. ஆனால் அகலப் பரவியது. ரஷ்யாவில் ஏற்பட்ட கலாசாரத்தின் இந்தப் பரந்த பரம்பல் ஒரு தீவிர அபிவிருத்திக் காலம் தொடர வழிவகுக்கும் என்று ஒரு தீர்க்கதரிசனம் கூறலாம். அதாவது ஸ்டாலினிச கேலிக்கூத்தை ஒரு தலைமுறை திரும்பிப் பார்த்து மன ஆறுதலடையும். நன்கு கல்வியறிவற்ற ஒரு ஆட்சியாளன் என்ற முறையில் ஸ்டாலினின் நடைமுறை, தான் எதிர்கொண்ட வேலைகளைச் செயற்படுத்த, மேற்கொண்ட ஒருவித கையாள்கை என்று வாதிடக் கூடியதாக இருக்கும். அவர் விவசாயிகளையும், விவசாயிகளில் இருந்து வந்த அதிகார பீடத்தையும் அச்சுறுத்தி, சீர்குலைத்த வறுமையிலும் இருளிலும் இருந்து அவர்களை மீட்க வேண்டி இருந்தது".
94

"அநாகரிகமான கேலிக் கூத்துக்களை ஒரு தலைமுறை திரும்பிப் பார்த்து மன ஆறுதல் அடையும்” என்ற அவரது நம்பிக்கையை பெரும் அறிவுத் துரண்டுதல் கொண்ட கொர்பச்சேவ் காலம் இன்று நிரூபித்து விட்டதைப் பார்க்கும்போது டொயிற்ஷெரின் கூர்மதியை நாம் வியந்து பாராட்டலாம்.
சோவியத் சமூகமோ அல்லது அதை ஆளும் குழுவோ ஜனநாயக மாற்றத்துக்கான உள்ளக சக்திகளை உந்தக்கூடும் என்று டொயிற்ஷெர் செய்த கணிப்புத் தான் அவரது பலமாக இருந்தது. ஆனால் இந்த மாற்றப் போக்கு ஒக்டோபர் புரட்சியின் அசல் சமூக அரசியல் திட்டத்தை மீளக் கொண்டுவரும் திசையிலே திரும்பும் என்றே டொயிற்ஷெர் எதிர்பார்த்தார். இறந்து கொண்டிருக்கையில் “மன்செஸ்டர் கார்டியனில்” எழுதிய கட்டுரையின் இறுதிப் பந்தியின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்.
“போன மச்சான் திரும்பி வந்த கதையாக போர் பன்களையும் ஸ்டுஆட்களையும் வரவேற்று, தனது புரட்சிகரப் பாரம்பரியத்தை இகழ்ந்து எந்த ஒரு புரட்சிகர தேசமும் எக்காலத்திலும் உண்மையான அமைதி கண்டதில்லை. சோவியத் ஒன்றியத்தின் மக்கள் ஸ்டாலினிசத்தை அல்லது ஸ்டாலினிசத்தின் ஒடுக்கு முறைக் கூறுகளை காலப்போக்கில் உலுப்பி எறிந்துவிடக்கூடும். ஆனால் அவர்கள் என்றாவது உண்மையாகவும், உறுதியாகவும் போல்ஷெவிக் புரட்சியை இகழந்தெறிவார்கள் என்று கருத எந்தக் காரணமும் இல்லை”.
இந்தப் பந்தியில் சோவியத் மக்கள் ஸ்டாலினிசத்தை உலுப்பி எறிவார்கள் என்று எதிர்பார்க்கும் அதேவேளை "அல்லது ஸ்டாலினிசத்தின் ஒடுக்குமுற்ைக் கூறுகளை” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இது ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை ஸ்டாலினிசத்தின் எச்சம் ஒரு கட்சி ஆட்சி, சர்வாதிகாரம், தலைவர் வழிபாடு, பொலிஸ் பயங்கரம் என்பவற்றை மட்டும் கொண்டனவாக இருக்கவில்லை. அது திட்டமிட்ட பொருளாதாரம், பொதுமக்கள் உரிமம் கொண்ட தொழிற்துறை, நிலப்பயன்பாட்டில் கூட்டு உடைமை என்பவற்றையும் கொண்டிருந்தது. ஸ்டாலினிச அரசியல் கூட்டமைப்பில் அவை எந்தத் திரிபுகளை அடைந்திருந்தாலும் சோவியத் மக்கள் இகழ்ந்தெறிய விரும்பாத போல்ஷெவிக் புரட்சியின் தொடர்ச்சியாக அவர் அவற்றைக் கருதினார்.
95

Page 56
வேறுவிதமாகச் சொல்வதானால் டொயிற்ஷெர் ஒரு தூய மார்க்சியவாதி. சோவியத் ஒன்றியத்தின் வருங்கால மீளெழுச்சி தூய மார்க்சிசப் பாதைக்குத் திரும்புவதாக அமையும் என்று அவர் நம்பினார். ட்றொட்ஸ்கியின் வரலாறு பற்றி அவர் எழுதிய பெரிய மிகச்சிறந்த நூலின் இறுதிப் பக்கத்தில் இதுபற்றி தெளிவான கூற்றைக் காணலாம். அதில் அவர் ட்றொட்ஸ்கிக்கு சோவியத் ஒன்றியத்தில் புனர்வாழ்வு கிடைக்குமென எதிர்பார்க்கிறார்.
"அது அப்படி நிகழ்ந்தால், ஒரு பெரிய மனிதனின் நினைால*ருச் செய்யப்பட வேண்டிய, நீண்டகாலமாகச் செய்யப்படாமல் டே எ. ஒரு நீதியான நடவடிக்கையாக இருக்கும். இந்தச் செயலால், தான் முதிர்ச்சி அடைந்து விட்டதாக தொழிலாளர் அரசு அறிவிக்கும் அது அதிகாரக் கெடுபிடிகளை உடைத்தெறிந்து, ட்றொட்ஸ்கியின் அழிவோடு அழிவுற்ற தூய மார்க்சியத்தை மீளத் தழுவுவதாக -9յeoւDպմo՞.
ட்றொட்ஸ்கியின் சம்பிரதாய புனர்வாழ்வு இன்னமும் ஏற்பட வில்லை. அடுத்த மாதமோ அடுத்த ஆண்டோ அது நிகழுமானால் கூட அது தூய மார்க்சியத்தைத் தழுவுவதாக அமையுமா என்பது ஐயத்துக்குரியது. கொர்பச்சேவ் ஆளும் குழுவினர் படிப்படியாக ஸ்டாலினிசத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். இதே வேகம் தூய மார்க்சிசத்திலிருந்தும் பல வகைகளில் விலகிச் செல்ல வைத்துவிட்டது, அதில் விசுவாசம் தெரிவித்த போதிலும் கூட, தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாடு அமைதியாகப் புதைக்கப்பட்டுவிட்டது. மத்தியில் திட்டமிடலின் திறன் கேள்விக்குரியதாகிவிட்டது. சந்தைத் தொழிற்பாட்டின் மேம்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போட்டியிட்ட இரண்டு உலகக் கட்டமைப்புகளுக்கு இடையிலான மேலாட்சிப் போர் ஓய்ந்து, அவற்றுக்கிடையே சர்வதேச ஒத்துழைப்பு புகுத்தப்பட்டுள்ளது. "சர்வ வியாபக மனித விழுமியங்கள்” என்ற அடிப்படையில் வர்க்க நலன்கள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஆளும் குழுவுக்குள்ளேயே ஏற்பட்டுள்ளன. வெளியே சீர்திருத்த அறிவாளர்களிடையே தூய மார்க்சிசம் பற்றிய விமர்சனம்உண்மையில் மார்க்சிசத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் நிராகரிக்கும் விமர்சனம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சோவியத் மக்களிடையே நிலவும் பரந்துபட்ட சிந்தனைப் போக்குகளைப் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களைப் பார்த்தால் - உதாரணமாக கருத்துக் கணிப்பென்ற புதிய கட்டமைப்புகள் மூலம் பார்த்தால் இன்று ஒரு சுதந்திரமான
96

திறந்த தேர்தல் சோவியத் ஒன்றியத்தில் நடக்குமானால் கடந்த ஆண்டு கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த அனுபவங்கள் இங்கும் நிகழ்ந்து கொம்யூனிஸ்ட் கட்சி தோற்கடிக்கப்படும் என்று தெரிகிறது. ஸ்டாலின் இறந்தபொழுது டொயிற்வுெள் பொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன். "அவர்கள் (சோவியத் மக்கள்) என்றாவது உண்மையாகவும் உறுதியாகவும் போல்ஷெவிக் புரட்சியை இகழ்ந்தெறிவார்கள் என்று கருத எந்தக் காரணமும் இல்லை” சந்தர்ப்பத்தைக் கொடுத்தால் இன்று அவர்கள் அதனையே செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் சாத்தியமானது.
டொயிற்ஷெரின் வரலாற்று ஆய்வுகளைப் பின் நிகழ்வுகளுடன் ஒப்புநோக்க, 1989ஆம் ஆண்டில் நிகழ்ந்த கிழக்கு ஐரோப்பிய புரட்சி, அரிய சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஐரோப்பாவில் தாங்கள் கைப்பற்றிய நாடுகள் தொடர்பாக நெப்போலியனும் ஸ்டாலினும் கொண்டிருந்த வரலாற்றுப் பாத்திரங்களிடையே ஒரு ஒற்றுமையை ஸ்டாலினின் வரலாறு பற்றிய தன் நூலில் டொயிற்ஷெர் காட்டுகிறார்.
ஜேகபினிசத்தை உள்நாட்டில் கட்டி ஆண்ட நெப்போலியன் தன் புரட்சியை அந்நிய நாடுகளுக்கு -இத்தாலிக்கும் றைன்லாந்துக்கும் போலந்துக்கும் கொண்டு சென்றார்; முற்றாகவோ பகுதியாகவோ அடிமைத்தனத்தை நீக்கினார். நிலப்பிரபுத்துவ சிறப்புரிமைகள் பலவற்றை அவரது சட்டதிட்டங்கள் அழித்து இருந்தபோதிலும், ஜேகபினிசத்தின் அரசியல் கட்டளைகளில் சிலவற்றையாவது அவர் நிறைவேற்றினார். ஃபிரான்ஸை அண்மிய நாடுகளில் நெப்போலியன் ஏற்படுத்திய தாக்கத்தில்தான் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினிசம் ஏற்படுத்திய தாக்கத்துக்கான ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு வரலாற்று நிலைமைகளின் முதன்மைக் கூறுகள் ஒரு மாதிரியே உள்ளன. கிழக்கு ஐரோப்பாவின் சமூகக் கட்டுக்கோப்பு நெப்போலியன் காலத்தில் றைன்லாந்தில் இருந்த நிலப்பிரபுத்துவ கட்டமைப்புப் , போலவே பலவீனமாக இருந்தது; காலத்துக்கொவ்வாத நிலைக்கு எதிராகத் திரண்ட சக்திகள் அதை நீக்கிவிடக் கூடியளவு வலிமை பெற்றிருக்கவில்லை. நாட்டைக் கைப்பற்றலும் புரட்சியும் ஒன்றிணைந்த ஒரே நேரத்தில் முர் போக்காகவும் பிற்போக்காகவும் இருந்த ஒரு இயக்கம் சமூகத்தின் கட்டமைப்பை மாற்றி அமைத்தது".
1950இல் இதே விடயம் பற்றி “இரண்டு புரட்சிகள்” என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் டொயிற்ஷெர் பின்வருமாறு கூறினார்.
97

Page 57
போனபாட்டிச அமைப்பு பற்றிய வரலாற்றுத் தீர்ப்பு கடுமையாக இருந்தது போல் சார்பு நாடுகளைக் கொண்ட ஸ்டாலினிச அமைப்புப் பற்றிய வரலாற்றுத் தீர்ப்பு அதைவிடத் தீவிரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை”.
சோவியத் சார்பு ஆட்சிகள் சரிந்துவிட்ட இன்றைய பின்னணியில் டொயிற்ஷெரின் முடிவு ஐயப்பாட்டுக்குரியதாகிவிட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் படையெடுத்துக் கைப்பற்றிப் புரட்சி மயப்படுத்த ஸ்டாலின் எடுத்த முயற்சி நெப்போலியனின் அதை ஒத்த முயற்சியை விட குறுவாழ்வு கொண்டதாக முடிந்து விட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் சமூக முன்னேற்றங்களைக் கைப்பற்றப்பட்ட நாடுகளுக்கு நெப்போலியனின் இராணுவம் கொண்டு சென்றது உண்மையாயினும், 1815க்குப் பரிந்திய வெற்றிகரமான எதிர்விளைவுகளால் அவை சுருட்டி வெளியே தள்ளப்பட்டன. பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய அலை இதற்குத் துணை செய்தது. கைப்பற்றப்பட்ட நாடுகளில் நெப்போலியன் கொண்டு வந்த முற்போக்கு மாற்றங்கள் பின்னடைவு எய்தின. முடியாட்சி, தனியாதிக்கம் என்பன மீள வலுப்பெற்றன. இவை பிரான்சின் இராணுவத் தோல்வியையும் பெரும் கூட்டணியின (Grand Aliance) வெற்றியையும் வேண்டி நின்றன. ஆயினும், வரலாற்றுப் பரிமாணத்தில் எதிர்ப்புரட்சி குறுவாழ்வு காலத்தையே பெற முடிந்தது.
1830இலும் 1848இலும் ஏற்பட்ட மக்கள் எழுச்சி பிரெஞ்சுப் புரட்சியின் உதாரணத்தாலும் முன்மாதிரியாலும் தொடர்ந்தும் உந்தலுக்கு உட்பட்டது. மேலாக, நெப்போலியனின் முன்னைய பேரரசில் அவரைப்பற்றி இரண்டு முரண்பட்ட படிமங்கள் நிலைபெற்றிருந்தன. ஒன்று அவரை ஒடுக்குமுறையாளராகக் காட்டியது. மற்றது விடுதலை வீரனாகக் காட்டியது. "இரண்டு புரட்சிகள்" என்ற தனது கட்டுரையில் டொயிற்வுெள் அடிக்குறிப்பில் இதனை நினைவுகூருகிறார்.
"நான் நெப்போலியனின் சார்பு நாடுகளில் ஒன்றான போலந்தில் பிறந்து வளர்ந்தேன். எனது காலத்திலும் நெப்போலியனின் வீரத் தோற்றம் மக்களை வலுவாக ஆட்கொண்டிருந்தது. பிற போலந்துப் பிள்ளைகளைப் போலவே நானும் பள்ளிக்கூட மாணவனாய்
இருந்தபோது நெப்போலியன் வீழ்ச்சி கேட்டுத் தேம்பி அழுதேன்"
98

முன்னைய பிரெஞ்சுப் பேரரசின் உள்ளே முளைத்த தேசியவாத சக்திகளின் துணையுடன் வோட்டர்லூ போரில் பெரும் கூட்டணி பெற்ற இராணுவ வெற்றி பழைய கூட்டமைப்பை மீள நிலைநாட்ட உறுதிப்பாடு அளித்தது. ஆனால் கிழக்கு ஐரோப்பாவின் 1989ஆம் ஆண்டுப் புரட்சியோ - நீங்கள் விரும்பினால் அதை எதிர்ப்புரட்சி என்று கூறலாம் - அமெரிக்கத் தலையீட்டினாலோ அல்லது சோவியத் ஒன்றியத்தின் இராணுவ ரீதியான தோல்வியாலோ ஏற்படவில்லை. கிழக்கு ஐரோப்பிய மக்கள் தாமாகவே ஸ்டாலினிச அரசுகளைக் கவிழ்க்கக் கிளர்ந்து எழுந்தனர். அங்கே டொயிற்ஷெரின் ஒப்புமை பிழைப்பதாக எனக்குப்படுகிறது. ரஷ்ய ஆதிக்கத்தை நிராகரிப்பதன் மூலம் ரஷ்யப் புரட்சியையும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் தெளிவாக ஏற்க மறுத்துவிட்டார்கள்; ஸ்டாலினைப் போன்றே மார்க்சும் லெனினும் கூட வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டுவிட்டார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த வலதுசாரித் திருப்பம் வரலாற்று ரீதியாக வோட்டர்லூவுக்குப் பின் எழுந்த எதிர்ப்புரட்சி போல குறுவாழ்வு கொண்டதாகவே இருக்கும் என்று நம்பிக்கை இழக்காத மார்க்சியவாதிகள் வாதிடக்கூடும். அத்துடன் காலப்போக்கில் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசம் திரும்பிவரும் என்றும் அவர்கள் நம்பலாம். விலை ஏற்றம், வேலையின்மை என்பவற்றின் முன்னால் கட்டுப்பாடற்ற சந்தைக்கான உற்சாகம் தாக்குப் பிடிக்காது என்பதையும் மக்கள் அவற்றைத் தாமாகவே கைவிடமாட்டார்கள் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், இன்றைய நிலைமாறு காலத்திலிருந்து மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் என்னவிதமான அரசியல், பொருளாதார கட்டமைப்புகள் உருவெடுத்தாலும், போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லவாக்கியா ஆகிய நாடுகளிலாவது 1989ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த ஒரு கட்சி ஆட்சி, மத்திய கட்டுப்பாடுள்ள பொருளாதாரம் என்பவற்றின் சாயல்கூட இருக்காது என்று உறுதியுடன் சொல்ல முடியும் (விரைவில் கிழக்கு ஜேர்மனிக்கு சொந்தமான ஒரு சுதந்திர இலக்கு எதுவும் இருக்காது போய்விடும்) பழைய சோவியத் பேரரசின் மிகப் பின்தங்கிய பகுதிகளில்தான்றுமேனியாவிலும், பல்கேரியாவிலும் - சீர்திருத்தம் என்ற மேற்பூச்சுடன் பழைய கட்டமைப்பின் சில கூறுகள் தொங்கி நிற்கின்றன. ஆகவே, வரலாற்று முதுசம் என்று பார்க்கையில் நெப்போலியனின் புரட்சியைவிட ஸ்டாலினுடைய “கைப்பற்றிப் புரட்சி புகுத்தல்" திட்டம் மிகக் குறைந்த அளவே தாக்குப்பிடித்தது என நான் கூறுவேன்.
99

Page 58
கடந்த ஆண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளைக் காண டொயிற்ஷெர் வாழ்ந்திருந்தால், அவர் என்ன சொல்லியிருப்பார்? புதிய யதார்த்தங்களின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களை மாற்றியிருக்கலாம். அவர் தனது பழைய கருத்தையே விசுவாசமாகத் தொடர்ந்தும் கொண்டிருப்பாரேயானால், 1953இல் நிகழ்ந்த கிழக்குப் பேர்லின் எழுச்சியை விபரித்ததுபோல, இந்த விளைவுகளை “வெளிப்படையான எதிர்ப்புரட்சி" என்று நியாயப்படுத்தியிருக்கக் கூடும். 1956இல் நிகழ்ந்த ஹங்கேரியப் புரட்சியைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்பதும் எமக்குத் தெரியும்.
“மொஸ்கோ ஹங்கேரியில் துப்பாக்கி முனையில் கம்யூனிசப் புரட்சியை மீண்டும் முடுக்க முனைந்த வேளையில், ஆத்திரமும் வீராவேசமும் கொண்ட ஹங்கேரிய மக்கள் கடிகார முட்களை மறுதிசையில் திருப்ப முனைந்தார்கள் என்று சொல்லலாம்”.
சோவியத் பொருளாதார அமைப்புக்களின் முக்கிய கூறுகளான பொது உடைமையும், திட்டமிட்ட பொருளாதாரமும்தான் வருங்காலத்துக்கு சரியான வழி என்பதால் அவற்றை சோவியத் சோஷலிசத்தின் அரசியல் குறைபாடுகளுக்காகக் கைவிடக்கூடாது என்று டொயிற்ஷெர் நம்பினார் என்பது இதன்மூலம் உணர்த்தப்படுவதாக கொள்ளலாம். இந்த நிலைப்பாட்டைக் கேள்விக்கிடமாக்குவது டொயிற்ஷெரின் ஆவியுடன் வாதிடுவதில் மட்டுமன்றி ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்துவதிலும் நம்மை கொண்டுவிடும். இந்தப் பெரும்பணியை ஒரு கட்டுரையின் பின் அரைப்பகுதியில் விரிவாக ஆராய முடியாது. ஆனால் அதில் ஒரு அம்சத்தை மட்டும் விளக்கலாம் என்று நினைக்கிறேன். டொயிற்ஷெரின் "மேல்மட்டப் புரட்சி” (Revolutiontromabove) என்ற கருத்தை மட்டும் எடுப்போம்.
இந்தச் சொற்றொடர் டொயிற்ஷெருக்கு சொந்தமான ஒன்றன்று. ஸ்டாலினால் எழுதப்பட்டது என்று கருதப்படும் "சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுச் சுருக்கம்” என்ற நூலில் இந்தச் சொற்றொடர் காணப்படுகிறது. இது அங்கே ஸ்டாலின் மேற்கொண்ட நிலத்தைக் கூட்டுடைமையாக்கலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் "அரசின் முன் முயற்சியுடன் உயர்மட்டத்தால் அது ஏற்படுத்தப்பட்டதாக வரலாறு விபரித்தபோதும், கீழ் மட்டத்தின நேரடி ஆதரவுடன் செயற்
1OO

படுத்தப்பட்டது என்றும் கவனமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் டொயிற்ஷெர் "மேல்மட்டப் புரட்சி” என்ற சொற்றொடரை ஸ்டாலினின் கூட்டுடைமையாக்கல் திட்டத்துக்கும், ஐந்தாண்டுத் திட்டங்களுக்கும் மட்டுமன்றி, நாங்கள் பார்த்தது போல், அவர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றியதற்கும் சேர்த்துப் பயன்படுத்தி இருக்கிறார்.
"மேல்மட்டப் புரட்சி" பற்றிய டொயிற்ஷெரின் கருத்து நிலையில் உள்ள விசேட கூறுகள் எவை? சோவியத் சூழலில், வரலாற்று ரீதியாகத் தேவையானதும் முற்போக்கானதுமாக அமைந்த, ஆனால், கட்சியினதும் அரசினதும் முயற்சியினால் நிறைவேற்றப்பட்ட அடிப்படை சமூக மாற்றத்தை உள்ளடக்கிய ஒரு புரட்சியாக அதனை அவர் கருதியிருக்கலாம் என்று அவரது ஆய்வுகளிலிருந்து நாம் ஊகிக்கலாம். அப்படியான ஒரு நடைமுறையில் பொது மக்கள் பங்கு, துணைநிலையானது என்பது முதல் முற்று முழு தான எதிர்ப்புவரை வேறுபடலாம். கூட்டுடை மையாகத்தின் போது இத்தகைய எதிர்ப்பை மக்கள் காட்டினர்.
இதுதான் “மேலிருந்திறங்கும் புரட்சி” என்பதன் கருத்து என்று கொண்டால், "மேல்மட்டப் புரட்சி" என்பதற்கும் "கீழ்மட்டப் Lulláh” (Revolutionfrom below) 676öTugsbejúb ga)Luilei 9ygDigu76or வேறுபாடு எதுவும் இருக்க முடியாது ன்ன்பது தெளிவாகிறது. ஆனால் புரட்சி நிகழ்வுப் பரப்பில் உள்ள வெவ்வேறு தளங்களுக்கு ஊடே ஒரு படித்தரம் இருக்த்தான் செய்யும். பொதுமக்கள் செயற்பாட்டைப் பொறுத்தவரை "சுத்தமாகத் தானாக” இயங்கும் நிலை கிடையாது. அப்படியான சந்தர்ப்பங்களில் மக்கள், அவை எவ்வளவு முழுமை பெறாதவையாக இருந்தாலும், கருத்துக்களாலும் சுலோகங்களாலும் கவரப்படுகிறார்கள்; கிளர்ச்சியாளர்களாலும், தலைவர்களாலும் செயலில் இறங்கத் தூண்டப் படுகிறார்கள். இப்படித் தூண்டுபவர்கள் ஒழுங்கமைப்புக் கொண்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கத் தேவையில்லை. உதாரணமாக கடந்த ஆண்டு நாம் சந்தித்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஜனநாயகப் புரட்சி "கீழ்மட்ட்" என்ற துருவத்தைச் சார்ந்ததாக இருந்தது. அப்படித்தான் ரஷ்யாவின் பெப்ரவரிப் புரட்சியும் இருந்தது. மக்கள் செயல் வேகம் பெற்று இதில் இறங்கினார்கள். எந்த அரசியல் கட்சியும் இந்த இயக்கத் துக்குத் தலைமை தாங்கவில்லை. சாரிச ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வீதியில் இறங்கிப் போராடிய தொழிலாளர்கள், போர்வீரர்கள் ஆகியோரின் பிரக்ஞையை
Ol

Page 59
உருவாக்கியதில் நீண்ட க்ாலத்திய கிளர்ச்சியும் பிரசாரமும் பங்களித்திருக்கலாம்.
அப்படியானால் நாம் ஒக்டோபர் புரட்சியைப் பற்றி என்ன சொல்லப் போகிறோம்? கிளர்ச்சி மூலம் அரசைக் கைப்பற்றும் தீர்மானம் போல்ஷெவிக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் வழிநட்த்தலிலும், கட்டுப்பாட்டிலும் இயங்கிய குழுக்களால் புரட்சியின் ஒழுங்கமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உண்மையில் அந்தத் தீர்மானத்தை எடுத்தபோது லெனினும், போல்ஷெவிக்குகளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தங்கள் முயற்சிக்கு புரட்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய பெட்றோ கிராட், மொஸ்கோ ஆகிய இரண்டு முக்கிய நகர்களிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினரினதும் போர் வீரர்களிதும் கணிசமான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே செயற்பட்டார்கள். அந்த மதிப்பீட்டில் அவர்கள் சரியான தீர்மானத்தை எடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. பெப்ரவரிக்கும், ஒக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் "எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!” அதாவது தொழிலாளர், விவசாயிகள், போர்வீரர்களின் பிரதிநிதிகள் அமைப்புகளுக்கே. என்ற சுலோகத்தையே (போல்ஷெவிக்குகள் உட்பட) இடதுசாரிகளான அனைத்துக் கட்சிகளும் முன்வைத்தன. கிளர்ச்சி நடைபெற்ற சமயத்தில் கூடுவதற்கு இருந்த சோவியத்துக்களின் கொாங்கிரசை கிளர்ச்சி தடை செய்ய வேண்டுமா என்பதில் போல்ஷெவிக் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேற்றுமை இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். கொங்கிரசுக்காக காத்திருப்பதும், கொங்கிரசின் பெயரில் அதிகாரத்தை எடுப்பதும், சோவியத்துகளில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் மற்றையக் கட்சிகளுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நெருக்குதலை ஏற்படுத்தி இருக்கும். போல்ஷெவிக்குகளுக்கு அதிகார மேலாதிக்கம் கிடைக்க வேண்டும் என்ற முன் தீர்மானத்துடன் லெனின் கொங்கிரசை எதிர்கொள்ள விரும்பினார்(இடதுசாரி சோவியத்துக் குடியரசுகளின் சிறு குழுக்களுடன் குறுகிய சூாலக்கூட்டணி ஒன்று இருக்கத்தான் செய்தது).
102

லெனின் ஏன் இந்த வழியைப் பின்பற்றினார்? எல்லாவற்றிற்கும் மேலாக, அவரை இதற்கு தூண்டியது நழுவிக் கொண்டிருந்த தவிர்க்க முடியாத ஐரோப்பியப் புரட்சிதான் என்பது வரலாற்றுப் பதிவுகளில் இருந்து தெளிவாகிறது. ஒக்டோபர் தறுவாயில் நடந்த மிக முக்கியமான போல்ஷெவிக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத் துக்கு அவர் சமாப்பித்த தீர்மானத்தில் கிளர்ச்சியை மேற்கொள்வதற்கு அவர்காட்டிய முதலாவது காரணம், ரஷ்யப் புரட்சியின் சர்வதேச நிலை ஆகும். (ஜெர்மனியின் கடற்படையில் ஏற்பட்ட எழுச்சியானது உலக சோஷலிசப் புரட்சி, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு தீவிர வெளிப்பாடு).
சர்வதேசப் புரட்சியைப் பற்றிய ஒரு நிதானமான பார்வையுடன் அடுத்துவரும் தசாப்தங்களில் தமது உதாரணம் வேறெந்த நாடுகளிலும் பின்பற்றப்படமாட்டாது என்று முன்கூட்டியே கண்டிருந்தால் லெனினும் ட்றொட்ஸ்கியும் தாங்கள் நடந்து கொண்டது போல் அதே உறுதிப்பாட்டோடு நடந்துகொண்டிருப் பார்களா என்ற வினாவை டொயிற்ஷெர் தானே எழுப்பியுள்ளார். (ஆனால் பதில்கூற முடியாதது என்று அவரே அதை ஒரு பக்கத்தில் வைத்துவிடுகிறார்). எப்படியாக இருந்தாலும், லெனின் ஐரோப்பியப் புரட்சிக்கு ஒரு நுழைவாயிலாக ரஷ்யப் புரட்சியைப் பயன்படுத்த விரும்பினார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பார்வை சோவியத்துகளில் இருந்த மற்ற மிதவாதக் கட்சிகளுடன் ஒரு சமரசத்தையோ கூட்டணியையோ ஏற்படுத்துவதை நிராகரித்துவிட்டது.
ஆகையால், ஒக்டோபர் புரட்சியில் கணிசமான அளவில் "மேல்மட்டப் புரட்சி” என்ற ஒரு அம்சம் இடம் பெறுகிறது. இது கிளர்ச்சியைத் தீர்மானித்து, ஆற்றுப்படுத்தி, நடைமுறைப்படுத்தல் வரை கட்சியின் ஒரு முதன்மைக் குழுவினரால் செய்யப்பட்டது என்பதோடு நிற்கவில்லை. இந்த முதன்மைக் குழுவின் அடிப்படை நோக்கமே சர்வதேசப் புரட்சிதான். அதிலேயே அவர்கள் விழிவைத்து வழிபார்த்து நின்றார்கள். ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்து எழுகின்ற வரையில் ரஷ்யாவை ஒரு சோஷலிசக் கொத்தளமாகப் பேணவேண்டும் என்ற உறுதிப்பாடு அதன் வழியாக ஒரு விடாக்கண்டன் நிலையை, அதற்கு எதிர்மாறாக மக்களிற் பெரும் பகுதியினர் கொண்டி ருந்த முனைப்பின் மத்தியில், உருவாக்கியது. அடிப்படையில் இரண்டு நகரங்களிலேயே புரட்சி வெற்றி கண்டிருந்தது. ஆனால் நாட்டின் பெரும்பகுதி மக்கள்
lO3

Page 60
விவசாயிகளாக இருந்தனர். நிலம் வழங்கப்பட்டால் போல்ஷெ விக்குகளை அவர்கள் ஏற்கத் தயாராக இருந்தனர். ஆனால் போல்ஷெவிக்குகளின் சோஷலிச இலக்கு - சர்வதேச இலக்கை விட்டுவிடுங்கள்- அவர்களுக்கு அந்நியமாகவே இருந்தது. 1918இல் புரட்சிக்குப் பின் சில மாதங்களில், முதலும் கடைசியுமாக ரஷ்யாவில் நடைபெற்ற சுதந்திரத் தேர்தலில் - அதுவும் போல்ஷெவிக் அரசினால் நடத்தப்பட்ட தேர்தலில் அரசியல் யாப்பை உருவாக்கும் சபைக்கான தேர்தலில் நாடு தன் தீர்ப்பை வழங்கியது. போல்ஷெவிக்குகளுக்கு 24% ஆசனங்களே கிடைத்தன. ஆனால் சோவியத் குடியரசுகளுக்கு 40% ஆசனங்கள் கிடைத்தன.
“உழைப்பாளிகளின் உண்மையான ஜனநாயக முயற்சிகளைப் பிரதிபலித்திருக்கக் கூடிய ஒரு இடதுசாரி ஜனநாயக அரசை அமைப்பதற்கு" இந்த ஆசனப் பகிர்வு சாதகமாக அமைந்திருக்க வேண்டும் என்று அண்மையில் வியச்செஸ்லாவ் கோஸ்டிகொவ் என்ற சோவியத்தியல் ஆய்வாளர் குறிப்பிட்டார். ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் சோவியத் ஒன்றியம் உள்நாட்டுப் போர்களின் பயங்கர விளைவுகளைத் தவிர்த்திருக்க முடியும். வரவிருந்த சர்வாதிகாரப் பயங்கரங்களைப் பற்றிப் பேசத் தேவையில்லை. அத்தகைய ஒரு சமரசம், எவ்வாறெனினும் ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் வந்து காப்பாற்றும் என்று நம்பி, பலவீனமடைந்து வந்த கொத்தளத்துக்குள் காத்திருந்த போல்ஷெவிக்குகளின் திட்டத்திற்கு அந்நியமாகவே இருந்திருக்கும்.
ஒக்டோபர் புரட்சி அதிகளவில் விவசாயிகளைக் கொண்ட ஒரு நாட்டின் மீது ஒரு நகர்ப்புற முன்னணிக் குழுவால் திணிக்கப்பட்ட ஒரு சோசலிசப் புரட்சி மட்டுமன்று அது பரந்த பல் இனக் குழுமங்களைக் கொண்ட ஒரு நாட்டின் மீது ரஷ்யப் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் உள்ள நகரங்களில் தளங்கொண்ட ஒரு இயக்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒரு புரட்சியுமாகும். ரஷ்யப் புரட்சியின் இனத்துவப் பரிமாணம் இன்னமும் போதுமான அளவில் ஆராயப்படவில்லை. சோவியத் வரலாறு பற்றிய பெரும்பாலான ஆய்வுகளில் இனத்துவ அம்சங்களுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படவில்லை. இது டொயிற்ஷெர் போன்ற இடதுசாரி அறிஞர்களையும், ஈ.எச்.கார் போன்ற இடதுசாரி தாராளவாதி ளையும் பொறுத்தவரை சிறப்பாக உண்மையாகும். இனத்துவம், தேசியம் என்பவை வர்க்கப் பிரிவுக்குக் கீழ்ப்பட்டவை அல்லது
O4

அவற்றின் கிளை விளைவுக்கு உட்பட்டவை என்ற பாரம்பரிய மார்க்சியப் பார்வைக்கு அவர்கள் ஆட்பட்டிருந்தனர். ஆயினும் போல்ஷெவிக்குகளின், கொள்கை அளவில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டுக்கும், புரட்சிப் பேரரசுக்கு பெருமளவு நிலப்பரப்பைப் பேணிக்கொள்வதில் காட்டிய ஆசைக்கும் இடையே உள்ள முரண்பாடு புரட்சியின் முற்பகுதியிலிருந்தே தெரியக்கூடியதாக இருந்தது. முழு சோவியத் மக்களுக்கும் உண்மையில் முழுமனித குலத்துக்கும் சார்பாகக் குரல்கொடுக்கும் உரிமை பெற்றதாகத் தன்னைக் கருதிக்கொண்ட ஒரு ஆட்சி - ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்ததுபோல்மாபெரும் ரஷ்ய மேலாதிக்கத்தின் கருவியாக மாறிய ஒரு நீண்டமாற்றப் போக்கின் தொடக்கமாக இது அமைந்தது.
உள்நாட்டுப் போர்க் காலத்தில் உக்ரேனிய அராஜகவாதிகள் நிறுவ முற்பட்ட தன்னாட்சியும் மென்ஷெவிக் தலைமையில் ஜோர்ஜியாவில் நிறுவப்பட்ட குடியரசும் செம்படையால் நசுக்கி எறியப்பட்டபோது, போல்ஷெவிக்குகளின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் இந்த முரண்பாடு வெளிப்பட்டது. இங்கு, “மேலிருந்திறங்கும் புரட்சி" என்பது சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுதந்திர முயற்சிகளை அடக்கும் தன்மையையும் பெற்றுக்கொண்டது. உள்நாட்டுப்போரின் திரிசங்கு நிலை உண்மையில் சிக்கலானதாகவும் கஷ்டமானதாகவும் இருந்தது. ஒரு பக்கத்தில் வெள்ளைப் படையினரைத் தோற்கடிக்கவேண்டிய இராணுவ நிர்ப்பந்தம் இருந்தது. மறுபக்கத்தில் குடியரசுக்குள்ளே வெவ்வேறு போக்குள்ள தேசிய இன உணர்வுகளும், போட்டிக் குழுக்களிடையே ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டன. யுத்த காலக் கொம்யூனிசத்தால் அந்நியப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நிலை இவற்றை மேலும் சிக்கலாக்கியது. இவற்றுக்கு இலகுவான பதில் இருந்ததாக எவரும் கூற முடியாது. வெள்ளை அல்லது கறுப்பு என்றவகையிலோ சிவப்பு அல்லது வெள்ளை என்றவகையிலோ எதிர்கால வரலாற்று ஆசிரியர் இப்பிரச்சினைகளை அணுகக் கூடாது என்பதற்கு இதுவே போதிய காரணமாகும்.
போல்ஷெவிக்குகள் சென்ற வழிகளுக்கு வழுவற்ற மாற்றுவழிகள் இருந்தனவென்று கூறுவதை விடுத்து, அவர்களது தெரிவுகள் புறநிலைக்காரணங்கனால் மட்டுமன்றி, சிங்ர்களது சொந்தக் TTTCCCTTTT LLLTTTTLTLLTTTTaLTLLLLLLL LLLLLL TT TTTLLTLSS S முதலாவதாக அவர்கள் சிந்தனை, மந்தியில் அதிகாரத்தை
lO5

Page 61
வைத்திருக்கும் போக்கில் வலுவாக இருந்தது. ஆதலினால் தேசிய இயக்கங்களின் தன்னாதிக்க அபிலாசைகளுடன் அவர்களால் இலகுவாக இசைவு காண முடியாதிருந்தது; இரண்டாவதாக அவர்கள் தேசிய சுயநிர்ணய உரிமையை அதன் பெறுமானத்துக்காக மதிக்கவில்லை-பதிலாக அதை சோசலிசப் புரட்சிக்கான ஒரு கருவியாக மட்டுமே கணித்தனர். மூன்றாவதாகத் தங்கள் கட்சி வரலாற்றுத் தலைவிதியைத் தீர்மானிக்கும் பேறு கொண்ட சிறப்புப் பணிக்கு உரியதென நம்பினார்கள். நான்காவதாக அவர்கள் சர்வதேசப் புரட்சியென்னும் உச்ச இலக்கால் வழிநடத்தப்பட்டார்கள்,
வரலாற்றுப பிரச்சினைகளை எளிமைப்படுத்தியதற்காக பொதுவாக டொயிற்வுெரைக் குறைகாண முடியாது. ஆனால், ரஷ்யப் புரட்சிக்குள் எழுந்த இனத்துவ தேசியப் பதட்டநிலையை அவரது காலத்திய பிற மார்க்சிய எழுத்தாளர்களைப் போல் அவரும் குறைத்து மதிப்பிட்டார். இன்று ஏற்பட்டுள்ள இனமோதல்கள், பிரிவினை வாதங்களைப் பார்க்கும்போது அவற்றின் முக்கியத்துவம் புலனாகிறது. இது முன்நாள் நிகழ்வுகள் நமக்கு விட்டுச் சென்றுள்ள முதுசத்தை மீளாய்வு செய்ய நம்மைத் தூண்ட வேண்டும். ட்றொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு பற்றிய தன் நூலில் உள்நாட்டுப் போர் பற்றிய அத்தியாயத்தில் உக்ரெயினில் ஏற்பட்ட மோதல்களின் தேசியவாதக் கூறுபற்றி டொயிற்ஷெர் குறிப்பிடவே இல்லை. அவர் உண்மையில் ஜோர்ஜியாவைக் கைப்பற்றியமை பற்றி கவனம் செலுத்துகிறார். ஆனால் ஜோர்ஜியப் பிரிவினைவாதத்தை மென்ஷெவிக்குகளின் ஒரு நொண்டிச் சாட்டாக நிராகரித்து விட்டு இராணுவத் தலையீடு என்ற அடிப்படையிலேயே அவர் அதை அணுகியுள்ளார். மென்ஷெவிக்குகள் இதை ஒரு அரசியல் ஆயுதமாகப் பாவித்திருக்கலாம். ஆனால் சோவியத் ஒன்றியத்தில் ஜோர்ஜியாவை இணைத்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும் ஜோஜியாவின் சுப்றீம் சோவியத் இக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது என்பது ஜோர்ஜிய தேசியவாதம் உண்மையானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. புதிய அரசியல் சூழலில் அனுமதிக்கக் கூடிய அளவுக்கு உள்நாட்டுப் போர்க் கால வரலாற்றில் விடுபட்ட "இடைவெளிகளை ஆராய சோவியத் அறிவுத்துறையினர் இன்று முற்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
விஞ்ஞானக் கழகத்தின் வரலாற்றுப் பிரிவினரால் வெளியிடப்படும் "இஸ்தோரியா எஸ்.எஸ்.எஸ்.ஆர்." (சோவியத் ஒன்றியத்தின்
O6

வரலாறு) என்ற ஏட்டின் 1990 மார்ச் -ஏப்ரல் இதழில் "ரஷ்யாவின் உள்நாட்டுப் போர்கள்” என்ற தலைப்பில் ஐந்து தொகுதிகளாக வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ள நூலின் உள்ளடக்க வடிவமைப்புத் தரப்பட்டுள்ளது. அதில் பின்வரும் பந்தி உள்ளது:
“தேசியவாத இயக்கங்களும் தேசியப் பிரச்சினைகளும்; மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைகள், ஜோர்ஜியாவில் மென்ஷெவிக் ஆட்சிக்காலத்தில் திறான்ஸ்காக்கசில் அமைந்த தேசிய அரசு, ஆர்மேனியாவில் டாஷ்நாக் ஆட்சி, அஜர்பெய்ஜானில் முச்சாதிச ஆட்சி, உக்ரெயினில் ஏற்பட்ட தேசிய அரசுகள்: மத்தியில் அதிகாரக் குவிப்பு, அதற்கு எதிரான போக்கு - இரண்டுக்கும் இடையிலான போராட்டம் தேசிய இனப் பிரச்சினையில் வெள்ளைப்படை வட்டங்களின் நிலை”
சோவியத் ஒன்றியத்துக்குள் இருந்த வெவ்வேறு தேசிய வாதங்களின் வலிமையைக் காணவிடாது டொயிற்ஷெரை மார்க்சியம் குருடாக்கியது. புரட்சிக்குப் பிந்திய ஆரம்ப ஆண்டுகளையும் சிவில் :புத்தகாலத்தையும் பொறுத்தவரை மட்டுமல்ல, மத்தியில் அதிகா ரத்தை மேலும் மேலும் குவிப்பதிலும் பின்னர் அது மிகச்சிலரின் கையில் குவிக்கப்பட்டதிலும் ஈற்றில் ஸ்டாலினின் சர்வாதிகாரமாக மாறியதிலும் செயற்பட்ட காரணிகள் பற்றிய அவரது கருத்திலும் அது தெரிகிறது. டொயிற்ஷெரின் ஆய்வில் இந்த நிலைமைக்கு அவர் காண்பிக்கும் காரணங்கள் வேறு. தாழ்நிலையில் இருந்த உற்பத்தியையும் வெகுசன கலாசாரத்தையும் கொண்ட ஒரு சமூகத்தை அதன் சொந்த முயற்சியால் முன்னேற்றும் எத்தனத்தில் தோன்றும் ஒரு நிர்ப்பந்த நிலையின் விளைவு என்பது ஒரு காரணம். ரஷ்ய அரசின் பைசாந்திய மரபுகளின் தெறிப்புகள் கம்யூனிஸ சர்வாதிகாரத்தின் ஊடாக வெளிப்படுவது பிறிதொரு காரணம். இவற்றை நாம் அங்கீகரிக்கும் அதேவேளை முக்கியத்துவம் குறைந்தாகக் கொள்ள முடியாத இன்னொன்றையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏராளமான தேசிய இனங்கள் மொழிகள், கலாசாரங்கள் பல்வகைப்பட்ட சமூக வளர்ச்சி மட்டங்களில் பரந்துள்ள ஒரு நாட்டில், அந்த இனக்குழுப் பன்மையின் விளைவாக மத்தியிலிருந்து பிரிந்து செல்லும் போக்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, உருக்கிரும்புக் கட்டமைப்புக் கொண்ட ஒரே தன்மையான ஆளும் கட்சியில் தங்கி இருக்கும் தன்மை இருந்திருக்கும். முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் கொர்பச்சேவ் ஏற்படுத்திய தளர்வின் விளைவாகத் தெளிவான வெவ்வேறு
O7

Page 62
தேசியவாதங்கள் இன்று தம்மை வெளிக்காட்டத் தொடங்கி உள்ளன. அவை அநேகமாக வெவ்வேறு குடியரசுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளில் இருந்தே வெளிக்கிளம்பியுள்ளன. முழு சோவியத் வரலாற்றிலும் தாக்கம் தரவல்ல இன்றைய நிகழ்வுகளைக் க்ாணும் வரை நீண்டகாலம் வாழத் தவறிவிட்டார் என்பதற்காக நாம் டொயிற்ஷெரில் குறைகாண முடியாது. ஆனால், அவரது வரலாற்றுப் பார்வையின் தகைமையை மதிப்பீடு செய்யும்போது அவருடைய தீர்க்கதரிசனத்தை இன்றைய யதார்த்த நிலையுடன் இந்த விடயத்திலும் சேர்த்துப் பார்க்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தின் வருங்காலம் பற்றி அவர் தன் வாழ்வு முழுவதும் எதிர்பார்த்தது ஜனநாயகப் படுத்தலையும் அதிகாரத்துவம், சலுகைகள், பொலிஸ் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தையுமே ஆகும். அவரது இந்த நீண்ட பார்வை இன்றைய நடைமுறைகளைப் பார்க்கும்போது உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டுக்குள்ளாக, விடுதலை வழங்கவும் பின்னோக்கி இழுக்கவும் கூடிய முரண்பட்ட வலுக்கொண்ட தேசியவாதங்களை சோவியத் ஒன்றியம் சந்திக்க நேரும் என்பதை அவர் எண்ணிப்பார்த்திருக்கவே முடியாது. டொயிற்ஷெர் ட்றொட்ஸ்கி; ஒருமுறை உறுதியாகச் சொன்னதுபோல் மனிதனின் நியாயப்போக்கில் தெளிவான, ஒளியான நம்பிக்கை வைத்திருந்த ஒரு தூய மார்க்சிய வாதி. பாக்கூ வீதிகளிலும், மற்றும் சோவியத் நகரங்களிலும் ஒக்டோபர் புரட்சி நடந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின், 1983 ஜூலையில் கொழும்பில் நடந்தவை போன்ற காட்சிகள் இடம் பெறலாம் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கவும் முடியாது. அநேகமான கூர்மையுள்ள சித்தாந்த வாதிகள் முன்கூட்டி காண முடியாத அளவுக்கு, வரலாற்றுக் கருப்பை வளமுடையதாக இருப்பதாகத் தெரிகிறது.
ட்றொட்ஸ்கியின் பலமும் பலவீனமும் சமமாக தூய மார்க்சியத்தில் வேரூன்றி உள்ளன என்று ட்றொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலின் இறுதி அத்தியாயத்தில் டொயிற்ஷெர் குறிப்பிட்டுள்ளார். அதே தீர்ப்பை டொயிற்ஷெர் பற்றியும் வழங்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவரது பலம் அவரது பரந்துபட்ட அனைத்தையும் உள்ளடக்கிய நீண்ட பார்வையில் தங்கி இருந்தது பரந்த காலப் பின்னணியில் மனிதரையும் நிகழ்வுகளையும் வைத்து எடை போடுகின்ற தன்மையில் தங்கி இருந்தது: வரலாற்று சக்திகளின் இயக்கத்தை சரிவரப் புரிந்து கொண்டு, தன் சொந்த விருப்பு
108

வெறுப்புகளுக்கு இடம்கொடாது, உள்ளதை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நிலையிலே திங்கி இருந்தது. ட்றொட்ஸ்கி அடிக்கடி மேற்கோள்காட்டும் ஸ்பினோசாவின் பின்வரும் வரிகள் வரலாற்று ஆசிரியரான டொயிற்ஷெருக்கு இலட்சியமாக இருந்திருக்கும். “சிரிப்பதோ அழுவதோ அல்ல; வரலாற்றைப்புரிந்துகொள்வதே தேவையானது." டொயிற்ஷெரின் வரலாற்று எழுத்துக்கள் குருதியோட்டம் அற்றதாகவோ தற்சார்பு அற்றதாகவோ இருக்கவில்லை. ஒரு மாமனிதன் தன் காலத்தோடும், இடத்தோடும ‘எப்படி அல்லற் பட்டார் என்ற உருக்கமான உணர்வு ட்றொட்ஸ்கி பற்றிய வரலாற்று நூலில் ஆழமாய் இழையோடி இருப்பதைக் காணலாம். தனக்குச் சொந்தமில்லாத ஒரு மொழியில் ஆழ்ந்த ஆற்றலுடன் டொயிற்ஷெர் அதை வெளிப்படுத்தியுள்ளார்
ஆயினும் டொயிற்ஷெரின் எல்லை வரம்புகளும்கூட தூயமார்க்சியவாதிக்கு உரியவைதாம். புரட்சியை நிறைவு செய்ய மேற்கத்திய தொழிலாளர் வர்க்கத்தை எதிர்பார்த்திருந்ததும், அவர்கள் அதைச் செய்வார்களென நம்பியிருந்ததும் ட்றொட்ஸ்கியின் நிதானக் குறைவு என்று அவர் கூறி வந்தாலும், டொயிற்ஷெரும் இறுதியில் மேற்கு நாடுகளில் மார்க்சியப் பார்வை தன் உண்மையான புகலிடத்தைப் பெறுமென நம்பினார். ட்றொட்ஸ்கியின் வரலாறு பற்றிய நூலின் இறுதியில் அவர் இப்படி எழுதியிருந்தார்.
"அன்னை ரஷ்யாவால் அசிங்கப்படுத்தப்பட்டு ஸ்டாலினிசமாக மாற்றப்பட்டுவிட்ட மார்க்சியம் வெறுப்பையும் அச்சத்தையும் மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சியத்துடன் சேர்ந்து வளர்ந்துவிட்ட காட்டுமிராண்டித் தனமான அம்சங்கள் நீக்கப்பட்ட புனித மார்க்சியம் நிச்சயம் மேற்குலக நாடுகளில் ஒரு வித்தியாசமான வரவேற்பைப் பெறும். மனிதரின் தலைவிதி பற்றிய தன் சொந்தப் படைப்பையும் பார்வையையும் அந்த மார்க்சியத்தில் அது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அத்தோடு வரலாறு ஒரு முழுச்சுற்றுவட்டத்தில் வந்துவிடும். w
தன் எதிர்பார்ப்புகளை உருவாக்கும் வரை, ஷெல்லியின் கனவுலகின் இந்த இறுதிப்பகுதி பிறிதொரு யுகத்தின் குரலாக எனக்குத் தோன்றுகிறது. நாம் பொறாமைப் படக்கூடிய அந்த யுகம் வரும்போது நாம் வாழ்ந்திருக்க மாட்டோம்.
09

Page 63
நிக்கோலாய் புக்காரின்:
ஒரு நூற்றாண்டு மறுமதிப்பீடு
நிக்கோலாய் புக்காரின் ருஷ்ய மார்க்சிசத்தின் வீரயுகத்தைச் சேர்ந்த மகா புருஷர்களுள் ஒருவர். பிரகாசமான அந்த நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்ந்த - 1917இன் புதல்வர்கள் - வேறு பலரைப் போலவே அவரும் பன்முகப்பட்ட ஆளுமை உடையவர். ஓர் அரசியல்வாதி, ஆய்வறிவாளன், தத்துவம், விஞ்ஞானம், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் ஆர்வமுடைய எழுத்தாளன். புரட்சிக்குப் பிந்திய ஆண்டுகளில் அவர் ஒரே சமயத்தில் மத்திய குழுவிலும் சோவியத் விஞ்ஞானக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார். இலக்கியத்தின் சமூகப் பரிமாணம் பற்றிய அக்காலகட்டக் கோட்பாட்டாளர்களுள் அவரே மிகக்குறைந்த யாந்திரிகத் தன்மை உடையவர். துர்ப்பாக்கியவசமாக(ஆச்சரியம் இல்லை எனினும்) ஸ்டாலினது சர்வாதிகாரத்தின் பிரதான பலியாட்களுள் அவரும் ஒருவரானார். 1938ல் நிகழ்ந்த பிரசித்தி பெற்ற மொஸ்கோ வழக்கில் அவரே பிரதான குற்றவாளி. அவ்வழக்கில் அவர்மீதும் வேறு இருபது பேர் மீதும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு உளவு கூறியமை, தேசத்துரோகம், சதிநாசவேலை புரிந்தமை, அரசியல் படுகொலைகள் செய்தமை, அரசைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்தமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டன. குற்றம் சுமத்தப்பட்ட பெரும்பாலானோருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
1988 பெப்ரவரியில் அவர் மரணித்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புக்காரினும் அவரோடு குற்றம் சுமத்தப்பட்டவர்களும் சோவியத் உயர் நீதிமன்றத்தால் இக்குற்றச் சாட்டுக்களில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர். இத்தீர்மானத்தை அறிவிக்கும் அரசாணை பின்வருமாறு கூறியது: "இவ்வழக்குக்கு முந்திய விசாரணை சோசலிச சட்ட வரம்புகளை முற்றிலும் மீறிய முறையில் உண்மைகளைத் திரித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்தி சட்டபூர்வமற்ற முறையில்
O

குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்தும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது என்பது நிறுவப்பட்டுள்ளது”.
இவ்வகையில் புக் காரினது சொந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அவர் கைது செய்யப்பட இருந்த சமயத்தில், கட்சித் தலைவர்களின் எதிர்காலத் தலைமுறையினருக்கு விலாசமிட்டு அவரால் இயற்றப்பட்டு 1987 நவம்பரில் மொஸ்கோவில் பகிரங்கப்படுத்தப்பட்ட ஒரு கடிதத்தில் அவர் பின்வருமாறு சொல்லி இருந்தார். “விரைவாகவோ அல்லது தாமதித்தோ என் தலைமீது சுமத்தப்பட்ட அழுக்குகளை வரலாற்று வடி கழுவித் துடைத்துவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை!"
ஸ்டாலினிச இலக்கியங்களில் நெடுங்காலமாக புக்காரின் ஒரு சதி நாசகாரியாகவும் தேசத்துரோகியாகவுமே சித்திரிக்கப்பட்டு வந்தார். அதே சமயம் ட்றொட்ஸ்கியவாதிகள் அவரை குலாக்குகளின் நண்பராகவே கருதினர் . இருபதுகளில் குலாக்குகள் வெற்றியடைந்திருந்தால் அது முதலாளித்துவத்தின் மீட்பாகவே முடிந்திருக்கும். ட்றொட்ஸ்கிவாத இலக்கியத்தில் புக்காரினைப் பற்றி தொடர்ச்சியாக திரும்பத் திரும்பக் கூறப்படுகின்ற ஒரு விசயம் இதுதான்: "அவர் விவசாயிகளை நோக்கி “நீங்கள் உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறியவர். புக்காரின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 1924-25ல் அவ்வாறு சொன்னார் என்பது உண்மைதான். ஆனால் அவரது நிலைப்பாடு அதுமட்டுமே என்று கூற முனைவது 1921ல் ட்றொட்ஸ்கி தொழிற்சங்கங்களை அரச நிறுவனங்களோடு இணைக்கவேண்டும் என்று கூறியதை வைத்துக்கொண்டு ட்றொட்ஸ்கிய வாதமே அதுதான் என்று கூறுவதை ஒத்த திரிபாகும்.
சோவியத் வரலாறு பற்றிய எனது சொந்த மறு சிந்தனையில் புக்காரின் பற்றிய முற்கற்பிதங்களையும் மனத்தடைகளையும் மீறி வருவதற்கு எனக்கு நீண்ட காலம் எடுத்தது. புக்காரின் பற்றிய இந்த மனத்தடைகளை ஒரு காலத்தில் நான் பயின்ற ட்றொட்ஸ்கிய மரபுகளில் இருந்தே பெற்றுக்கொண்டேன் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இதில் இருந்து எனது முதல் விலகல் அமெரிக்க ஆய்வாளர் ஸ்டீபன் கோஹனின் புக்காரினும் போல்ஷெவிக் புரட்சியும் (1974) என்ற நூல் மூலம் நிகழ்ந்தது. இருபதுகளில் புக்காரின் கொண்டுவருவதற்குப் பெரிதும் முயன்ற பொருளாதாரப் பரவலாக்கம் ஒருமுகப்பட்ட சர்வாதிகார அரசின்
ll

Page 64
வளர்ச்சிக்கு எதிராக இருந்திருக்க முடியும் என்றும் ஆகவே ஸ்டாலினிசத்துக்கு உண்மையான, தகுந்த ஒரு மாற்றாக புக்காரினிசம் இருந்ததே தவிர ட்றொட்ஸ்கியிசம் அல்ல என்றும் கோஹன் தனது நூலில் வாதிக்கிறார்.
கோஹனுடைய புத்தகம் வெளிவந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் யூனியனில் ஒரு புதிய சிந்தனை வட்டத்தினரால் இதையொத்த கருத்துக்கள் இப்போது கூறப்படுகின்றன.இந்தப் பிரச்சினை பற்றி நான் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஆராய்வேன். அதற்கிடையில் கடந்த சில மாதங்களாக அவரது புனர்வாழ்வுக்கு முன்பும் பின்பும்- புக்காரின் பற்றி சோவியத் பத்திரிகைகளில் வழமைக்கு மாறாகக் காட்டப்பட்டு வரும் ஆர்வம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். சோவியத் பத்திரிகைகளை நானே வாசித்து அறிந்த வகையில் (நிச்சயமாக அது பூரணமானதல்ல) பின்வரும் ஆக்கங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. மொஸ்கோ நியூஸ் (இல.49,1987) புக்காரின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டது. அதில் எதிர்கால கட்சித் தலைமைக்கு அவர் எழுதிய கடிதமும் இடம் பெற்றது. ஒகொன்யோக் (நவம்பர் 28 டிசம்பர் 5,1987) ஒரு நீண்ட கட்டுரை வெளியிட்டது. 76 வயதில் இன்னமும் மொஸ்கோ வில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது விதவையின் நினைவுகள் அதில் இடம் பெற்றிருந்தன. ஸ்டாலினின் வழக்குரைஞன் விஷின்ஸ்கி பற்றிய ஒரு பயங்கரமான சித்திரம், லிற்றதுனாயா கசெற்றா (27 ஜனவரி 1987) வில் வெளிவந்தது. புக்காரினில் வழக்கு பற்றிய குறிப்புகளும் அதில் இடம் பெற்றிருந்தன. மொஸ்கோ நியூசில் (இல.7.1988) மொஸ்கோ வழக்குப் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்த நீதிப் பிறழ்வு எவ்வாறு சாத்தியமாயிற்று என்ற வினாவை அது எழுப்பியது. மீண்டும் மொஸ்கோ நியூஸில் (இல.8.1988) ஸ்டீபன் கோஹனின் பேட்டி ஒன்று வெளிவந்தது. நிக்கோலாய் புக்காரினின் மீள்வருகை என்ற தலைப்பில் மிகச் சமீப காலம் வரை சாத்திய மற்றிருந்த ஒரு உரையாடல் இதில் இடம் பெற்றது.
இந்த நூற்றாண்டு வருடத்தில் (அவர் பிறந்த நாள் செப்டம்பரில் வருகிறது) சோவியத் வரலாறு பற்றி அல்லது சமகால சோவியத் விவகாரம் பற்றி ஆர்வம் உடையவர்களின் நலனுக்காக புக்காரின் பற்றி கவனம் செலுத்துவது பயன்தரும் என்று கருதுகிறேன். ஒரு துன்பியல் நாயகன் என்றவகையில் புக்காரினின் வாழ்க்கை இலக்கியக் கற்பனையைத் தூண்டக்கூடியது. சமீபத்தில் நெடுநாள் பணி என்ற தலைப்பில் இப்பொருள் பற்றி நான் ஒரு நாடகம்
12

எழுதினேன். புக்காரினதும் அவரது மனைவியினதும் உணர்ச்சிச் செறிவான தனிப்பட்ட வாழ்வுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையே இருந்த உள்ளார்ந்த உறவினையே இந்த நாடகத்தின்மூலம் நான் வெளிக்கொண்டுவர விரும்பினேன். இந்தக் கட்டுரை அந்த நாடகத்துக்குத் துணையாகவே எழுதப்படுகின்றது. புக்காரினின் அரசியல் பாத்திரம் பற்றி முழுமையாக ஆராய இக்ட்டுரை முயல்கின்றது. நாடக வடிவத்தின் வரம்புக்குள் இது சாத்தியமாக இருக்கவில்லை. எவ்வாறாயினும் ஸ்டாலினது வாழ்க்கைக் காலத்தில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்டது போல அல்லது ட்றொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் விமர்சன பூர்வமற்று ட்றொட்ஸ்கியைச் சுற்றி எழுப்பியது போல புக்காரினைப் பற்றிய ஒரு தனிமன்ரித வழிபாட்டை ஊட்டி வளர்ப்பது எனது நோக்கம் அல்ல. புக்காரின் பூரணத்துவம் அற்றவராக அடிக்கடி பிழை விடுபவராக, தனது பலத்துக்கும் பலவீனத்துக்கும் இடையே உள்ள உறவைப் பொறுத்தவரை மிகவும் பலவீனராக இருந்தார். அவர் ஆழ்ந்த உணர்ச்சிச் செறிவுள்ள ஒரு தனிமனிதன். அரசியல் நெருக்கடிகளின் போது மனம் உடைந்து அழக்கூடியவர்.
1929ம் ஆண்டு ட்றொட்ஸ்கியை சோவியத் யூனியனை விட்டு நாடு கடத்துவதற்கு கட்சியின் மத்திய குழுவின் ஆதரவை ஸ்டாலின் பெற்றுக்கொண்டபோது புக்காரின் அதை எதிர்த்து அழுது புலம்பி பெருமூச்சு விட்டதாகக் கூறப்படுகின்றது. மறுபுறத்தில் அவரது ஆளுமையின் இந்த அம்சத்தைப் பற்றி அவரது விதவை நினைவு கூர்ந்த ஒரு சம்பவம் மிகச் சாதகமான ஒரு விளக்கத்தைத் தருகின்றது. ஸ்டாலின் பலாத்காரமாக நிலத்தைக் கூட்டுடமையாக்கிய காலத்தில் அதன் விளைவாக ஏற்பட்ட பஞ்சத்தின்போது உக்ரைனில் ஒரு சிறிய புகைவண்டி நிலையத்தில் பசியினால் வயிறு வீங்கிப் போயிருந்த சிறுவர்களின் கூட்டம் ஒன்றை புக்காரின் கண்டார். அதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு தன்னிடம் இருந்த அனைத்தையும் இச்சிறுவர்களுக்குக் கொடுத்தார். மொஸ்கோ திரும்பிய பின் தன் மனைவியிடம் இந்த அனுபவத்தைச் சொல்லி தாங்க முடியாமல் அவர் புலம்பி அழுதார். ஆம்: உறுதி வாய்ந்த அரசியல் தலைவர்களை உருவாக்கும் அம்சங்களால் ஆனவர் அல்ல புக்காரின் என்பது தெளிவு. கட்டுறுதியற்ற ஒரு புக்காரினா, இரும்பு போன்ற ஒரு ஸ்டாலினா அல்லது ஆய்வறிவுப் பலம் வாய்ந்த ஒரு ட்றொட்ஸ்கியா? இவர்களுள் யாரைத் தெரிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட ஒழுக்கவியல் சார்ந்தது.
13

Page 65
புரட்சிக்குப் பிந்திய ஆரம்ப ஆண்டுகளில் புக்காரின் போல்ஷெவிக் கட்சியின் அதிதீவிர இடதுசாரி அணியைச் சார்ந்து நின்றார். 1918ல் எதிரிக்குச் சாதகமான சமாதானத்துக்குப் பதிலாக ஜேர்மனியுடன் புரட்சிகர யுத்தத்தை வேண்டி நின்ற ஒரு குழுவின் தலைவராக அவர் இருந்தார். அடுத்த கட்டத்தில் அதாவது உள்நாட்டு யுத்த காலத்தில் பொருளாதாரத்தை ராணுவ ரீதியில் ஒருமுகப்படுத்துவது சோஷலிசத்தை நோக்கிய முன்னேற்றத்துக்கு அத்தியாவசியம் என்ற மாயையில் ட்றொட்ஸ்கியுடன் இணைந்து நின்றார். புரட்சிகர யுத்தம், யுத்தகாலக் கொம்யூனிசம் ஆகிய இரு காலகட்டங்களையும் பொறுத்தவரை புக்காரின் முற்றிலும் தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதைத் தவிர இக்காலகட்டம் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
1918க்கும் 1920க்கும் இடைப்பட்ட காலத்தில் புக்காரின் அதிதீவிர இடது சாரிகளின் பக்கமும் 1921க்கும் 1924க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வலதுசாரிகளின் பக்கமும் சார்ந்து நின்றார் என்ற உண்மை அவரது ஆளுமையின் உணர்ச்சி ரீதியான ஊசலாட்டம் அரசியலுக்குள்ளும் நுழைந்ததைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது. பதிலாக புரட்சிக்குப் பிந்திய ஆரம்ப ஆண்டுகளில் ஆய்வறிவு ரீதியாகவும் அரசியல் ரீதியாவும் அவர் முதிர்ச்சியற்றவராக இருந்தார் என்றும் பிந்திய காலகட்டம் அவரது இளமைக்காலத்து வளமான மாயைகளை மீறிய அவரது வளர்ச்சியைக் குறித்து நிற்பதாகவும் நான் விளக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும் 'புக்காரினிசம்" என்று இப்போது அறியப்படுவது இருபதுகளின் பின் அரைவாசியில் உட்கட்சிப் போராட்டத்தில் அவரது நிலைப்பாட்டுடன் இணைந்தே இனங்காணப்படுகின்றது. இந்தக் காலகட்டம் பற்றியே நான் இங்கு கவனம் செலுத்த விரும்புகின்றேன். விடயத்துக்கு வரமுன் இரண்டு முக்கிய அம்சங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்களை இச்சூழலில் முற்றிலும் விளக்க அடையாளங்களாக மட்டுமே நான் எடுத்தாள்கின்றேன் என்பது முதலாவது அம்சம். இடதுசாரி எனப்படுவதுதான் முற்றிலும் சரியானது என்றோ வலதுசாரி எனப்படுவது முற்றிலும் பிழையானது என்றோ அல்லது மறுவளமாகவோ நான் இதனை அர்த்தப்படுத்தவில்லை.
இரண்டாவது அம்சம் கடந்தகால வரலாறு பற்றிய இந்தப் பரிசீலனையின் நோக்கம் பற்றியதாகும். சோவியத் யூனியனின்
4

விதியை நிர்ணயித்த இந்த முக்கியமான ஆண்டுகள் பற்றிய ஒரு மறுபரிசீலனை நெடுங்காலமாக இரண்டு மரபுக் கோட்பாடுகளால் தளையுண்டு கிடந்தது. ஒன்று, சோவியத் மரபுக் கோட்பாடு; இது சமீப காலம்வரை நீடித்தது. இக் கோட்பாட்டின் படி சோவியத் வரலாறு தவறற்ற கட்சித் தலைமையின் சரியான தீர்மானங்களால் திறந்துவிடப்பட்ட தொடர்ச்சியான முன்னேற்றப் பாதையாகும். மற்றது, கெடுபிடியுத்தகால மேற்கத்தைய மரபுக் கோட்பாடு. இக்கோட்பாட்டின் படி சர்வாதிகாரம் என்பது மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறையின் அத்தியாவசியமான தவிர்க்க முடியாத விளைவாகும். ஆகவே இவ்விரு மரபுக் கோட்பாடுகளையும் பொறுத்தவரை இருபதுகளின் நடுப்பகுதியிலும் அதன் பிறகும் ஸ்டாலினிசத்துக்கு ஒரு மாற்றீடு இருந்திருக்க முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்விரு மரபுக் கோட்பாடுகளையும், என்னைப்போல் ஒருவர் நிராகரிக்கும் போது இந்தக் கேள்வி ஒரு உண்மையான கேள்வியாக உருவெடுக்கின்றது. எந்த ஒரு வரலாற்று யூகம் பற்றிய ஆய்விலும் உள்ளார்ந்த அம்சமாகக் காணப்படும் கணிக்கமுடியாமை, யூகித்தல் ஆகியவற்றை இது கொண்டிருப்பினும் கூட இந்தக் கேள்வி எழுவது யதார்த்த மானது. ஆயினும் புக்காரினிசம் ஸ்டாலினிசத்தக்கு நடைமுறைச் சாத்தியமான ஒரு மாற்றீடாக இருந்ததா என்று கேட்பது முற்றிலும் வினோதார்த்தமான ஒரு வரலாற்றுக் கற்பனையாகாது. வரலாற்றுப் பாடத்தை வெற்றியாளர்களிடமிருந்து மட்டுமன்றி தோற்கடிக்கப் பட்டவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்.
நிகழ்காலத்துடனும் எதிர்காலத்துடனும் நம்மை நன்கு இணக்கப்படுத்திக்கொள்ளும் வகையில் இறந்தகாலத்தைப் புரிந்து கொள்வதுதான் வரலாற்று ஆய்வின் நோக்கம் எனில் வரலாற்றுத் தேரைச் செலுத்தியவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டவற்றைப் போலவே இழக்கப்பட்ட வாய்ப்புகளும் செல்லத்தவறிய பாதைகளும் கூட நாம் கவனிக்க வேண்டியவையாகும். இதனால்தான் சோவியத் யூனியனில் இன்று கடந்த காலத்தைப் பற்றிய விருப்பார்வத்துக்குரிய, சிலவேளை வேதனையும் தரத்தக்க ஆராய்ச்சியில் பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள், அரசியல் விஞ்ஞானிகள் , படைப்பாளிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்தப் பரிசீலனை சோவியத் மக்களுக்கு மட்டும்தான் பயனுடையது என்று கூற முடியாது. இருபதுகளிலும் அதன் பிறகும் உள்ள சோவியத் அனுபவம் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல் தீவிர சமூகமாற்றப் பாதையைத் தேடும் எந்த ஒரு சமகாலச் சமூகத்துக்கும் அவசியமான
தேயாகும்.
1 15

Page 66
நாம் கவனம் செலுத்துகின்ற காலகட்டத்தில் புக்காரினிசம் எல்லாவற்றுக்கும் மேலாக விவசாய வர்க்கத்துடன் சம்பந்தப் பட்டிருந்தது. லெனின் 1921ல் யுத்தகாலக் கொம்யூனிஸத்தின் கடுமையைக் கைவிட்டு புதியபொருளாதாரக் கொள்கையை ஆரம்பித்திருந்தார். இது விவசாயிகளிடமிருந்து கண்டிப்பாகத் தானியத்தைப் பெறுவதை நிறுத்தியது. விவசாயிகளுக்குக் குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனைச் சுதந்திரத்தை மீட்டளித்தது. சில்லறை வர்த்தகத்துக்கும் சிறு அளவிலான கைத்தொழில் முயற்சிகளுக்கும் கூட ஆதரவு வழங்கியது. புக்காரின் உடனடியாகவே புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆர்வமிக்க ஆதரவாளரானார். 1929 வரையும் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்குமான கடின முயற்சியே அவரது நிலைப்பாடாக இருந்தது.
புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பக் குதூகலத்தில், கிராமியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்குரிய சிறந்தவழி மேல்மட்ட விவசாயிகளின் விருத்திக்கு உதவுவதே என்றும் இவ்வாறு உதவினால் அவர்கள் ஏனைய விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புக் களையும் வேறுவகையான பொருளாதார உதவிகளையும் வழங்க முடியும் என்றும் புக்காரின் நினைத்தார். ஒரு நீண்ட, படிப்படியான சோசலிச பொருளாதார வளர்ச்சிக் கிரமத்தையும் அவர் தன் மனதில் கொண்டிருந்தார். "நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக்கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம்" என அவர் 1925ல் கூறினார். இந்த நிலைப்பாடு நாட்டுப்புறத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகளையும் பகைமையான சர்வதேசச் சூழ்நிலையில் சோவியத் யூனியனின் இருத்தலுக்கான நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொள்ளவில்லை.
இருப்பினும், புக்காரின் பின்னர் இப்பிழைகஸ்ளத் திருத்திக கொண்டார். 1926க்கும் 1928க்கும் இடையே விவசாய வர்க்கம் பற்றிய கொள்கைகளைப் பொறுத்தவரை அவருக்கும் கட்சியில் ஸ்டாலினுடைய பிரிவுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் எவையும் இருக்கவில்லை. அரசுக்கும் விவசாய வர்க்கத்துக்கும்குறிப்பாக பெரும்பான்மையைக் கொண்ட (1926-27ல் 67%) நடுத்தர விவசாய வர்க்கத்துக்கும் - இடையே பகைமையற்ற உறவைக் கடைப்பிடிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் இருசாராரும் உடன்பட்டிருந்தனர். நகரங்களைப் போஷிப்பதற்கு தானிய விநியோகம் அவசியமானதுதான்; ஆனால்
6

இது பலாத்காரமற்ற வழிமுறைகளில் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிலத்தைக் கூட்டுடைமையாக் குதல் இறுதிக் குறிக் கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இது மிகக் கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியது என்பது உணரப்பட்டது.
இக்கொள்கைகளுக்கான எதிர்ப்பு அக்காலகட்டத்தில் ட்றொட்ஸ்கியினால் தலைமை தாங்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பாளரிடமிருந்தே வந்தது. இதில் பின்னர் சினோவியேவ், காமனேவ் ஆகியோரும் இணைந்துகொண்டனர். விவசாயி வர்க்கம் பற்றிய இடதுசாரி எதிர்ப்பாளரின் நிலைப்பாடு ட்றொட்ஸ்கியின் சீடர்களுள் ஒருவரான பிறியோபிறசென்ஸ்கியினால் அதன் கூர்மையான வடிவத்தில் முன்வைக்கப்பட்டது. சோவியத் அரசின் மிக அவசரமான பணி ஆரம்ப மூலதனத் திரட்டலாகும் (Primitive accumulation) என்பதே பிறியோபிறசென்ஸ்கியின் வாதமாகும். வேறுவகையில் சொன்னால் சாத்தியமான விரைவான வேகத்துடன் சோஷலிசக்கைத் தொழிற் புரட்சி கிளம்புவதற்கு ஏற்ற வகையில் முதலிடு செய்வதற்குரிய மூலவளங்களைக் கண்டறிதலாகும். இது ஒரேஒரு வழியில் மட்டுமே, அதாவது மேற்குலகில் முதலாளித்துவம் அதன் ஆரம்பக் கட்டத்தில் செய்ததுபோல விவசாயிகளைச் சுரண்டுவதன் மூலம் மட்டுமே செய்யப்பட (Մ գ-պմ, என்பது அவரது வாதமாகும்.
ட்றொட்ஸ்கி இந்த அளவுதூரம் போகவில்லை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்க அரசுக்கும் விவசாயி வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாடு ஒரு சர்வதேச திட்டத்தின் அடிப்படையிலேயே தீர்த்து வைக்கப்பட முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஐரோப்பியப் புரட்சி சோவியத் தொழிலாளி வர்க்கத்துக்குத் துணையாக வந்து, தனிமைப்பாட்டில் இருந்தும் பொருளாதாரப் பின்னடைவில் இருந்தும் அதனை விடுவிக்கும். ஆனால் ஐரோப்பியப் புரட்சி நிகழாவிட்டால் என்ன நடக்கும்? ட்றொட்ஸ்கியைப் பொறுத்தவரை இது ஒரு கேள்வியே அல்ல. ஏனெனில் ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையில் அவருக்குப் பரிபூரணமான நம்பிக்கை இருந்தது.
இடதுச்ாரி எதிர்ப்பாளர் விரைவான கைத்தொழில் மயமாக்கத்தையும் கூட்டுடைமையாக்கத்தையும் கோரினர். ஆனால்
ill 7

Page 67
பலாத்கார முறையைத் தவிர்க்கவே விரும்பினர். உண்மையில் ட்றொட்ஸ்கி அதேசமயம் முழுமையான உட்கட்சி ஜனநாயகத்தையும் கோரி நின்றார். இடதுசாரி எதிர்ப்பாளர்கள் அதிகாரத்துக்கு வந்திருந்தால், ஐரோப்பியப் புரட்சியும் இல்லாமல் எவ்வாறு அவர்களால் இவ்விரு நோக்கங்களையும் இணைத்துச் செயற்பட்டி ருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமானது. இச் சூழ்நிலையில் ட்றொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டிருந்திருப்பார்கள். உண்மையில் 1928-29ல் ஸ்டாலின் இடதுபுறம் திரும்பி கூட்டுடைமையாக்கத்தை ஆரம்பித்தபோது இடதுசாரி எதிர்ப்பாளர்களின் திட்டத்தின் ஒரு பகுதியை, அக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தியிருக்கக் கூடிய ஒரே ஒரு வழியில்- அதாவது பலாத்கார முறையில் - அமுல்படுத்தினார் என்றும் நாம் வாதிக்க முடியும்.
1926க்கும் 1929க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடதுசாரி எதிர்ப்பை முறியடிப்பதில் புக்காரின் ஸ்டாலினுக்கு உதவினார். அவர்களை மெளனிகளாக்குவதற்கும், எதிர்ப்புக் காட்டிய எல்லாரையுமே கட்சியைவிட்டு நீக்குவதற்கும் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளை அவர் மெளனமாக அங்கீகரித்தார். தானும் ஸ்டாலினுமே பொருளாதாரப் பிரச்சினைகளை நேருக்குநேர் பார்த்தவர்கள் என்பதும், இடது சாரிகளின் அரசியல் வெற்றி விவசாயி வர்க்கத்துடன் அழிவுக்கு இட்டுச்செல்லும் ஒரு போராட்டத்தைத் தூண்டியிருக்கும் என்பதும் இதற்குரிய புக்காரினது சொந்த நியாயப்படுத்தல்களாக இருந்திருக்கும். இருப்பினும், தனது இந்த நடவடிக்கையால் தான் அறியாமலேயே ஸ்டாலினது கைகளில் அதிகாரத்தைக் குவிக்க உதவியதோடு இறுதியில் தனது சொந்த அழிவையே அவர் தேடிக்கொண்டார்.
மையப் படுத்தப் பட்ட பொருளாதாரக் கட்டுப்பாடு, பெருமளவிலான கைத்தொழில் மயமாக்கம், நிலத்தைக் கூட்டுமையாக்குதல் ஆகியவற்றை நோக்கி 1928-29ல் ஸ்டாலின் திட்டவட்டமாகத் திரும்பினார். விவசாய வர்க்கம் பற்றிய கொள்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்குரிய உடனடித் தூண்டுதல் நகரங்களுக்கான உணவு விநியோகத்தை அச்சுறுத்திய ஒரு நெருக்கடியாகும். இருப்பினும் இந்த மாற்றம் ஒரு பாரிய பாதை மாற்றத்தின் ஒரு பகுதியாகவே நோக்கப்பட வேண்டும். இந்தப் Untoys மாற்றம் மனித விலைபற்றிப் பொருட்படுத்தாது. மேலிருந்து திணிக்கப்பட்ட புரட்சியின் மூலம் பொருளாதாரத்தை
18

முழுமையாக அரசுடைமையாக்குவதற்குச் சார்பாகக் கட்சிக்குள் செயற்பட்ட குழுக்களின் வெற்றியைப் பிரதிபலித்தது. இதன் விளைவாக இடதுசாரி எதிர்ப்பாளரின் முன்னைய திட்டத்தைக் கையேற்று, ஈவிரக்கமற்ற முறையில் ஸ்டாலின் அதனை நிறைவேற்றி முடித்தார்.
நிகழ இருக்கும் மாற்றத்தின் முதல் குறிகளைக் கண்டே புக்காரின் பேதலித்துப் போனார். அதுவரை அதன் பழைய அர்த்தத்தில் அவரும் ஆளும் குழுவில் ஒரு உறுப்பினராகவே இருந்தார். மத்திய குழுவிலும் உறுப்பினராக இருந்தார். ஆனால் 1928 கோடையில் இடதுசாரி எதிர்ப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முன் உதாரணமற்ற நடைமுறைகளை மேற்கொண்டார். காமனேவை அவர் இரகசியமாகச் சந்தித்தார். இந்த உரையாடல் பற்றி காமனேவின் குறிப்பு புக்காரின் ஓர் பயங்கர நிலைமையில் இருந்ததைக் காட்டுகின்றது. அவர் ஸ்டாலினைப் பெயர் சுட்டிக்கூடக் குறிப்பிடவில்லை. "அவன் ஒன்றையும் விட்டுவைக்கமாட்டான் ... அவன் நம்மை அழித்துவிடுவான். அவன்தான் புதிய ஜெங்கிஸ்கான” என்றே திரும்பத் திரும்பச் சொன்னார். தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் ஸ்டாலினுக்கு எதிரான தங்கள் பொது எதிர்ப்பை விட முக்கியத்துவம் குறைந்தவை என்று அவர் காமனேவிடம் கூறினார். கட்சியினதும் அரசினதும் பாதுகாப்பும் ஸ்டாலினின் எதிர்ப்பாளர் அனைவரின் இருத்தலும் கூட அபாய நிலையில் இருந்தன. "அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்; பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும” என்று புக்காரின் கூறினார்.
இருப்பினும், புக்காரின் இடதுசாரிகளை அணுகியதன் மூலம் பயன் எதுவும் விளையவில்லை. ஏனெனில் இரு குழுக்களும் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க முடியாத அளவுக்கு தம்மிடையே உள்ள கருத்து நிலைப்பட்ட வேறுபாடுகள் பற்றி ஆழமான பிரக்ஞை கொண்டிருந்தனர். புக்காரின் தனது கடைசி முயற்சியை 1928 செப்டம்பரில் பிராவ்தாவில் எழுதிய ஒரு கட்டுரையிலும் 1929 தொடக்கத்தில் மத்திய குழுவுக்குச் சமர்ப்பித்த ஆவணங்களிலும் மேற்கொண்டார். இந்த ஆவணங்களில் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தைத் தியாகம் செய்வதை அல்லது aflau ornufl வர்க்கத்திடமிருந்து பலாத்காரமாகப் பெறப்பட்ட மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்
119

Page 68
மயமாக்கத்திட்டத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். இது விவசாயி வர்க்கத்தின் மீதான ராணுவ பிரபுத்துவ சுரண்டலுக்கே இட்டுச்செல்லும் என்று அவர் கூறினார். விவசாயத்துக்கும் கைத்தொழிலுக்கும் இடையிலும் அதேபோல் கனரக, மென்ரக கைத்தொழில்களுக்கிடையிலும் ஒரு சமமான வளர்ச்சிப் போக்கைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். இப் பொருளாதாரப் பிரச்சினைகளை கட்சியை ஜனநாயகப் படுத்துவதுடன் இணைத்து நோக்கினார். நம்பிக்கையின் பேரில் ஒரு சொல்லைக்கூட ஏற்றுக்கொள்ள வேண்டாமி" என்றும் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒரு சொல்லைக்கூடச் சொல்லவேண்டாம் என்றும் அவர் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவைதான் புக்காரின் வெளியிட்ட சுயாதீனமான கடைசி அரசியல் பிரகடனங்கள். 1929 முடிய முன்பு அவர் மத்திய குழுவை விட்டு நீக்கப்பட்டார். கடைசிச் சில ஆண்டுகளையும் ஆளும் குழுவின் கொள்கைகளைக் கொண்டு நடத்துபவராக அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்த முடியாத பதவிகளில் - ஸ்வெஸ்தியாவின் ஆசிரியராக அல்லது ஸ்டாலினின் அரசியல் யாப்பை வரையும் பிரதான வரைஞராக கழித்தார். எனினும் 1934 அளவில் ஸ்டாலினின் தோற்கடிக்கப்பட்ட எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை இருத்தலுக்கான அத்தகைய வாய்ப்புகள் கூடச் சுருங்கத் தொடங்கின. சுத்திகரிப்பு, தேசத்துரோக வழக்குகள் என்பவற்றின் மூலம் ஆட்களை அழிக்கும் யுகம் தொடங்கிற்று. 1937 பிப்ரவரியில் புக்காரின் கைதுசெய்யப்பட்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற கண்துடைப்பு வழக்கில் அவரே பிரதான எதிரியானார்.
எனது கட்டுரையின் கடைசிப் பகுதிக்கு வரமுன் - புக்காரினைப் பற்றிய ஒரு பொதுவான மதிப்பீட்டைச் செய்ய முனையமுன்மொஸ்கோ வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட ஏனைய எல்லாரையும் போல் பகிரங்க நீதிமன்றத்தில் அவர் செய்த ஒப்புதல் வாக்கு மூலம் பற்றிய பிரச்சினை பற்றி நான் இங்கு சிறிது குறிப்பிட வேண்டும்.
1940ல் முன்னாள் மார்க்சியவாதியான நாவலாசிரியர் ஆர்த்தர் கேஸ்லர் மொஸ்கோ வழக்கை அடிப்படையாகக் கொண்டு தண்பகலில் இருள் என்ற நாவலை எழுதினார். அவரது நாவலின் பிரதான பாத்திரமான நுபாஷோவ் பல மூலங்களைக் கொண்ட ஒரு படைப்பு எனினும் பல அம்சங்களில் புக்காரினைப்
12O

பிரதிபலிக்கும் ஒரு பாத்திரமாகும். நீதிமன்றத்தில் புக்காரின் ஆற்றிய கடைசி உரையில் இடம்பெற்ற ஒரு வாக்கியத்தில் இருந்தே கேஸ்லர் தன் நாவலுக்குரிய தலைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற உண்மை இதனை மேலும் வலியுறுத்துகின்றது. நாவலில் றுபாஷோவ் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அதற்குக் காரணம் கட்சிக்காக அவர் செய்யக்கூடிய கடைசிப் பணி அதுவே என வழக்குரைஞர் அவரை நம்பச் செய்வதாகும். குறிப்பாக நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் அந்த நாவலுக்கிருந்த பெருஞ் செல்வாக்குக் காரணமாக புக்காரின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தமைக்கு கட்சிமீது அவருக்கிருந்த விசுவாசமே காரணம் என்ற கொள்கை மேற்குலகில் நிலை கொள்ள முடிந்தது.
தனக்குச் சாதகமான உண்மைச் சான்றுகள் எதையும் கொண்டிராத இந்தக் கருத்து இப்போது திட்டவட்டமாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகி விட்டது. புக்காரின் பொய் யான ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தமைக்கான பிரதான நோக்கம் அவரது இளம் மனைவியின் உயிரைப் பாதுகாப்பதே என்பது இப்போது நாம் அறியும் உண்மைகளில் இருந்து தெளிவாகின்றது. அவரது மனைவியை அவள் ஒரு சிறுமியாக இருந்த காலத்தில் இருந்தே அவர் அறிந்திருந்தார். அவரை மிகவும் ஆழமாக நேசித்தார். குற்றஞ் சாட்டப்பட்டு ஒத்துழைக்க மறுத்தோரின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இழைத்தது போன்ற தீங்குகள் தன் மனைவிக்கும் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்க அவர் விரும்பினார் என்பதில் ஐயம் இல்லை. இருப்பினும் தனது பழி நீக்கத்துக்காகப் போராடுவதற்கு தன் மனைவி தொடர்ந்தும் உயிர்வாழ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அவர் விரும்பினார். தன் குற்றமின்மையை நிலைநாட்ட கட்சியின் எதிர்காலத் தலைவர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை இயற்றி அதை அவரது மனைவியை மனனம் செய்யச் செய்தார். (1937ல் அத்தகைய ஒரு ஆவணத்தை எழுத்து வடிவத்தில் வைத்திருப்பது அவரது மனைவிக்கு மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கும்) இந்தக் கடிதத்தைத்தான் புக்காரினின் விதவை அன்னா மீக்காய்லோவ்னா லாறினா ஐம்பது ஆண்டுகளாக தன் நின்ைவில் வைத்திருந்து 1987 நவம்பரில் கொர்பச்சேவுக்கு வெளிப்படுத்தினார். 1937ல் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குச் செல்ல முன்பு (அதன்பின் அவர் திரும்பி வரவே இல்லை.) புக்காரின் தனது மனைவியைக் கடைசி முறையாகப் பிரியும் சந்தர்ப்பத்தில் மனைவியின் எதிரே முழங்காலில் விழுந்து தனது கடிதத்தில் ஒரு வார்த்தையைக் கூட மறக்க

Page 69
மாட்டேன் என்று அவளிடமிருந்து வாக்குறுதி பெற்றுக்கொண்டrர். அவரது மனைவி லாறினாவின் நினைவுக் குறிப்புகளிலிருந்து எதிர்காலத்தின் மீது அவருக்குப் பரிபூரண தம்பிக்கை இருந்தது என்பது தெளிவாகின்றது. அவர் தன் மனைவியிடம் சொன்னார்: "நிலைமை மாறும். அது மாறித்தான்.ஆக வேண்டியிருக்கும். நீ இளமையானவள். நீ வாழ்ந்திருப்பாய்" தங்கள் - மகனை ஒரு போல்ஷெவிக்காக வளர்த்தெடுக்குமாறும் அவர் தன் மனைவியை வேண்டிக்கொண்டார் -
'வழக்கின் போது புக்காரின் நடந்துகொண்ட விதமும் கூட வழக்குரைஞருக்கு அவர் சுயவிருப்போடு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் என்ற கொள்கைக்கு எதிராகவே உள்ளது. அவர்களுடன் தனது பேரத்துக்கு அவசியமான அளவுக்கே அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த போதிலும் கூட குற்றச்சாட்டுக்களுள் மிகவும் மோசமானவற்றை, உளவாளியாக இருந்தமை, கொலைச்சதி புரிந்தமை போன்றவற்றை அவர் நிராகரித்தார். இவைபற்றி நீதிமன்றத்தில் விஷின்ஸ்கியுடன் அவர் வாதிட்டார். "குற்றஞ்சாட்டப் பட்டவனின் ஒப்புதல் வாக்குமூலம் இடைக்கால யுகத்தின் ஒரு நீதித்துறைக் கோட்பாடே என்றுக்கூட அவர் கூறினார். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் மறைமுகமாக இந்த வழக்கு ஒரு சோடனையே என்பதை வெளிஉலகுக்கு உணர்த்தமுடியுமென அவர் நம்பியிருக்க வேண்டும்.
புக்காரினை அவர் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எப்படி மதிப்பிடுவது? அவர் தனது நிலைப்பாடுகள் சிலவற்றில் தவறிழைத்தமை பற்றியும் சிலவற்றில் மிகமோசமாகத் தவறிழைத்தமை பற்றியும் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும் அவரது சிந்தனையிலும் செயலிலும் ஏதாவது ஒரு பகுதி முக்கியத்துவமுடையதாக , இன்றைக்கும் COFTAFea59a = சிந்தன்னையை வளப்படுத்தக் கூடியதாக உள்ளதா என்ற சேள்வியே முக்கியம்ானதாகும். இந்த வினாவுக்கான விடை முதலில்ஸ்டாலினில் பலாத்காரமான கூட்டுடைமையாக்கத்துக் கெதிரான அவரது நிலைப்பாட் ைநாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதில் தங்கியுள்ளது.
ஸ்டாலினே பின்நோக்கிப் பார்த்தபோது இந்த நடவடிக்கை பற்றி என்ன நினைத்தார் என்பது நமக்குத் தெரியும். இரண்டாம் உலக யுத்த காலத்தின் போது நாசிகளின் ஆக்கிரமிப்பினால்
22

நிகழ்ந்த வேதனை மிக்க அனுபவம் கூட கூட்டுடைமையாக்கத்துக்கான தனது பயங்கரப் போராட்டம் போல் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்று அவர் சேர்ச்சிலிடம் ஒரு சமயம் கூறினார். ஒரு கோடி விவசாயிகள் தன் கைகளைப் பற்றி நின்றதாக அவர் சொன்னார். அது அச்சுறுத்துவதாக இருந்தது. நான்கு ஆண்டுகள் நீடித்தது. ஆனால் அவர் தொடர்ந்து சொன்னார் "அது ரஷ்யாவிற்கு முற்றிலும் அத்தியாவசியமாக இருந்தது".
ஸ்டாலினின் கூட்டுடைமையாக்கத்துக்குக் கொருக்க் வேண்டி யிருந்த அளப்பரிய மனித விலையை ஒப்புக்கொள்ளும் போதிலும் அவருடைய கடைசித் தீர்ப்புடன் உடன்படும் அநேகர் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அது அத்தியாவசியமாகவே இருந்தது: நவீனமயமாக்கலுக்காக சோவியத் யூனியன் செலுத்த வேண்டிய விலையில் அது ஒரு பகுதியே இறுதியில் அதுவே முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியது என்று அவர்கள் கூறுவர்.
இருப்பினும் வேறுபட்ட ஒரு தீர்ப்பும் சாத்தியம் என்று நான் நி” Tக்கின்றேன். கூட்டுடைமையாக்கத்தின் போது இழக்கப்பட்ட மனித உயிர்களை - கூட்டுடைமையாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பஞ்சத்திலும், வடக்கே தண்டனை முகாம்களுக்கு அனுப்பப் ட ட்டதனாலும் இறந்தவர்களை - நாம் புறக்கணித்தாலும் கூட ஏற்க விரும்பாத விவசாயி வர்க்கத்தின்மீது மேலிருந்து திணிக்கப்பட்ட இச்செயற்பாடு அவர்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்ப்பின் விளைவாக சோவியத் விவசாயத்துக்குப் பாரிய பின்னடைவு எbடட்டது என்பதில் ஐயமில்லை. விவசாயிகள் கசப்பினாலும் விரக்தியினாலும் தங்கள் தானியங்களைத் தாங்களே எரித்தனர். திங்கள் கால்நடைகளை அழித்தனர். இந்த அழிபாடுகளின்போது சோவியத் யூனியனின் அரைவாசிக் கால்நடைகள் கொல்லப் பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்ப்பு முறியடிக்கப்பட்ட பின்னரும் கூட புதிய கூட்டுப்பண்ணை முறைக்கு விவசாயிகளின் மெளனமான எதிர்ப்புக் காரணமாக நெடுங்காலத்துக்கு சோவியத் விவசாயம் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. உண்மையில் முழுப் பொருளாதாரத்திலும் பலவீனமான பகுதியாக அது இருந்தது. மேலும் தனியார் பண்ணைகளை வன்முறையில் அழித்ததன் விளைவாக ஏற்பட்ட சமூகப் பதட்டநிலை சர்வா திகாரத்தை நோக்கிய போக்குக்கு அழுத்தம் கொடுத்தது. கூட்டுடைமையாக்கத்துக்கு முன்னரே போல்ஷெவிக் கட்சிக்குள் ஒரு தனிக் குழுவினரின் ஆட்சி நிலை நாட்டப்பட்டுவிட்டது.
123

Page 70
இப்போது உறுதிப்படுத்தப் பட்டதெல்லாம் ஒரு தனிமனிதனின் ஆட்சியேயாகும்.
1929இலும் முப்பதுகளின் ஆரம்பத்திலும் நிகழ்ந்த கூட்டுடைமையாக்கம் காலம் கனியமுன் மேற்கொள்ளப்பட்ட அவசர முயற்சியே என்று கூறுவது தவிர்க்கப்பட முடியாதது என்றே நான் நினைக்கிறேன். -ஏனெனில் கூட்டுப்பண்ணைகளை நோக்கிச் செல்வதைச்/ சாத்தியN மாக்குவதற்கு வேண்டிய விவசாய இயந்திரங்களையும் வேறு வசதிகளையும் வழங்கக் கூடிய நிலையில் சோவியத்/பொருளாதாரம் அப்போது இருக்கவில்லை. பூரணமான கூட்டுடைமையாக்கத்துக்கு 1,500,000 உழவு இயந்திரங்கள் தேவை என 1930ல் அதிகார பூர்வமாகக் கணக்கிடப்பட்டிருந்தது. உண்மையில் 1929ல் 3000 இயந்திரங்களே உற்பத்தி செய்யப்பட்டன. 1932ல் அது 50,000 ஆகவே உயர்ந்தது.
ஆகவே சோவியத் பொருளாதாரம் மிகக் குறைந்த வேதனையுடன் முன்னேறக்கூடிய அடிப்படைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை சோசலிச கைத்தொழிலுடன் சிறு அளவிலான விவசாயப் பண்ணைகளும் சிறிதுகாலம் இணைந்திருக்க அனுமதித்திருந்தால் அது புத்திசாலித்தனமானதாக இருந்திருக்காதா என்ற கேள்வி எழுகின்றது. இடைக்கால கட்டத்தில் தனியார் பண்ணை முறையை தேக்கமடையச் செய்யவேண்டியது அவசியம் என்பது இதன் பொருளல்ல. விவசாய உற்பத்தியில் நிலவிய தாழ்நிலைத் தொழில் நுட்பம் காரணமாக எளிய உபகரணங்களை வழங்குவதன் மூலம் உற்பத்தித் திறனைக் கணிசமான அளவு அதிகரிப்பது சாத்தியமாக இருந்திருக்கும். கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற இடைக்கால அமைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் கூட்டுடைமையாக்கத்தின் வளர்ச்சிக்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதற்குரிய அரசியல் ரீதியான உந்துதலை ஏற்படுத்தியருப்பது கூட சாத்தியமாகி இருந்திருக்கும்.
கடந்தகால வரலாறு பற்றிய அநேக முடிவுரைகளைப் போலவே இந்த மதிப்பீடும் நிச்சயமற்றதாகவே இருக்கும். அதேவேளை இப் பிரச்சினை பற்றிய மீக்காயில் கொர்பச்சேவின் கணிப்பும் கவனிக்கத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் 70ஆவது வருடாந்த உரையில், வைபவ நிகழ்வுக்குப் பொருத்தமான கட்டுப்பாடான மொழியில் அவர் இதுபற்றிக் கூறினார். கூட்டுடைமையாக்கத்தை அடிப்படையான முக்கியத்துவம்
24

உடைய ஒரு மாற்றம் என்றவகையில் அவர் ஆதரித்தார். ஆயினும் அதுபற்றி அவர் பின்வருமாறு கூறினார்.
“கிராமிய வாழ்வைப் புத்துக்கப்படுத்தும் பிரச்சினைகளைக் கையாள்வதில் ஒரு இறுக்கமான மத்தியப் படுத்தப்பட்ட ஆணை முறை சாத்தியமற்றதாகவே இருந்தது”.
"புரட்சியைத் தொடர்ந்த ஆண்டுகளில் விவசாயி வர்க்கம், ஒரு வர்க்கம் என்ற வகையில் தீவிரமாற்றத்துக்குள்ளாகி இருந்தது என்ற உண்மை சரியாக மதிப்பிடப்படவில்லை. அப்போது இடைநிலை விவசாயியே பிரதானமானவனாக இருந்தான். பொதுப் படையாக பெரும்பான்மையான விவசாய வெகுஜனங்களைப் பற்றிய மனப்பாங்கு அரசியல் ரீதியில் மிகவும் நியாயப்படுத்தப்படக் கூடியதாக இருந்திருந்தால், குலாக்குகளுக்கு எதிராக நடுத்தர விவசாயிகளுடன் ஒரு கூட்டினை ஏற்படுத்த ஒரு நிலையான கொள்கை இருந்திருந்தால் , கூட்டைடுமையாக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் நிகழ்ந்த அத்துமீறல்கள் எவையும் நிகழ்ந்திருக்க மாட்டா. பெரிதும் உள்ளூர் நிலைமைகளில் தங்கி யிருந்த மிக முக்கியமானதும் மிகச் சிக்கல் வாய்ந்ததுமான இந்தச் சமூக நடைமுறை அடிப்படையில் நிர்வாகச் செயல் முறைகளாலேயே நெறிப் படுத்தப்பட்டது. எல்லாப் பிரச்சினைகளையும் இரவோடி ரவாக ஒரே அடியில் தீர்த்துவைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. கூட்டுடைமையாக்கத்தின் மூலதத்துவங்களின் அப்பட்டமான மீறல்கள் எங்கும் நிகழ்ந்தன".
இக்கருத்து 1929ல் புக்காரின் கொண்டிருந்த கருத்தை முற்றிலும் ஒத்ததல்ல. ஆனால் மேலிருந்து திணிக்கப்படும் புரட்சி பற்றிய அவரது எதிர்ப்புக்களின் சாராம்சத்தோடு இது ஏற்புடைமை கொண்டுள்ளது.
எனினும் தற்காலத்துடன் பேசும் ஒரு குரலாக புக்காரின் நிலைத்திருப்பது இந்த அம்சத்தில் மட்டுமல்ல; பொருளாதாரத்தை அதீத மத்தியத்துவப்படுத்துவதற்கு எதிராக அவர் போராடினார். தனித்தனி அரசு நிறுவனங்களின் சுயாதீனத்தை ஆதரித்தார். தரத்தைப் பேணும் ஒரு வழிமுறை என்றவகையில் வெவ்வேறு நிறுவன முயற்சிகளுக்கிடையே போட்டியை அவர் விரும்பினார் "பொருளாதாரத்துக்காக நுகர்வோன் அல்ல நுகர்வோனுக்காகப் பொருளாதாரம்" என்பதை அவர் வலியுறுத்தினார். சந்தைப்
125

Page 71
பொறிமுறையை, முதலாளித்துவத்தின் கீழ் அதன் குறிப்பிட்ட வடிவத்தில் இருந்து வேறுபடுத்த முயன்றார். சோசலிச பொருளாதாரத்தில் சந்தை ஒரு பயனுள்ள சாதனமாக இருக்க முடியும் என்று அவர் கருதினார். இந்த அம்சங்கள் அனைத்தையும் பொறுத்தவரை அவரது கருத்துக்கள் இன்றைய சோவியத் யூனியனில் நடைபெறும் சீர்திருத்தங்களில் வன்மையாக எதிரொலிக்கப்படுகின்றன. பல வகைகளில் புக்காரினது முதுசத்தையே கொர்பச்சேவ் பெற்றிருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது.
கடைசியாக ஒரு விசயத்தை நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். ஜோர்ஜ் ஒர்வலின் 1984 என்ற நாவலில் அவரது கதாநாயகன் வின்ஸ்ரன் சிமித் அரசியல் ரீதியில் அசெளகரியம் தரத்தக்க உண்மைகளை பழைய பத்திரிகைகளில் இருந்து அகற்றும் ஒரு பதவியில் இருக்கிறான். தொடர்ச்சியான இத்திருத்த வேலைக்குச் செய்திப் பத்திரிகைகள் மட்டுமன்றி, புத்தகங்கள், பருவ இதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள், கேலிச்சித்திரங்கள், புகைப்படங்கள் போன்ற அரசியல் அல்லது கருத்தியல் நிலைப்பட்ட எல்லா வகையான இலக்கியங்களும் ஆவணங்களும் உட்படுத்தப்பட்டன என்று ஒர்வல் எழுதுகிறார். 1984 நாவலில் ஒர்வல் சித்தரிக்கும் "நினைவுத் துவாரம்" ஸ்டாலின் கால ரஷ்யாவில் இருந்த உண்மையான நடைமுறையின் ஒரு விரிவாக்கமே என்பது எல்லாருக்கும் தெரியும். பாரிய சோவியத் கலைக்களஞ்சியத்தின் பதிப்புக்களை நீங்கள் நினைவு கூருவீர்கள். இப்பதிவுகளில் பழைய தலைவர்கள் பற்றி இடம் பெற்றிருந்த கட்டுரைகள் அவர்கள் "ஆள் அற்றவர்களாக மாறியபோது கலைக்களஞ்சியத்தில் இருந்து அகற்றப்பட்டன. ட்றொட்ஸ்கியை அகற்றுவதற்காக புரட்சிக்காலப் புகைப்படங்கள் அழித்துத் திருத்தப்பட்டதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆம் ஓர்வலின் எதிர்க்-கற்பனை நகரில் (anti utopia) நிகழ்வது போலவே ஸ்டாலினின் சோவியத் யூனியனிலும் மக்கள் நினைவுத் துவாரம் வழியே காணாமல் போயினர். ஆயினும் ஒர்வலின் சோர்வுவாதப் புனைவு தொலை நோக்கற்றது. பெரிதும் ஒற்றைவழிக் கருத்துநிலைப் பார்வை கொண்டது. இப்போது 1984ஐ விட நான்கு ஆண்டுகள் கழித்து நினைவை அழிக்கும் கிரமம்" மறுவளமாகத் தரும்பியிருக்கின்றது. மெளனத்தில் நிலை கொண்ட அரை நூற்றாண்டுகால அவதூறுக்குப் பிறகு புக்காரினும் அவரை ஒத்த பிறரும் தலை நிமிர்ந்து நடக்கின்றனர். அதனால்தான்
126

இருபது ஆண்டுகள் சிறைமுகாமிலும், மேலும் முப்பது ஆண்டுகள் தனிமையிலும் ஒரு கடிதத்தின் சொற்களைத் தன் நினைவில் உயிரோடு வைத்துக்கொண்டிருந்த 76 வயதான ஒரு மூதாட்டியை எனது நாடகத்தின் மையப் பாத்திரமாகக் கொண்டேன்.
127

Page 72
கொர்பசேவ். வெற்றியும் அவலமும்
ஸ்டாலினது கடைசி நாட்களில் வாழ்ந்த இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனைப்பற்றி ஒரு நாடகம் எழுத வேண்டுமென்று கடந்த சில ஆண்டுகளில் நான் பல முறை விநோதார்த்தமாக எண்ணியதுண்டு. அந்த இளைஞன் சோவியத் அமைப்பு சரிப்பட்டு வராது என்ற கருத்துடையவன். அந்த அமைப்பைத் தன்னால் குலைத்துவிடக் கூடிய அளவுக்கு அரசியல் அதிகார ஏணியின் உச்சியை அடைவதையே அவன் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்கின்றான்.
நான் கற்பனை செய்த அந்த நாடகத்தில் வரும் இளைஞன் மீக்காயில் கொர்பசேவ்தான். அது ஒரு சுவையான நாடகமாக இருந்திருக்கும் என்றே நான் இன்னமும் நம்புகிறேன். முற்றுப்பெற்ற ஒரு தாக்கமான சதிப்புரட்சி நாடகத்தை இன்று என்னால் சிந்திக்க முடியும். 1991 டிசம்பரில் கொர்பசேவ் கிரம்லினை விட்டுச் செல்கையில், அரிவாளும் சுத்தியலும் கீழே இறக்கப்படுகையில் ரஷ்யாவின் காதுக்குள் சொல்வதற்காக வாயிற்படியில் அவர் சற்றுத் தரித்து நின்றார். "ஆம் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் கனவுகண்டது இதுதான்"
வரலாறு பற்றிய இந்தப் பார்வையை ஒரு எழுத்தாளனின் அற்புதக் கற்பனையாக அன்றி உள்மறைந்திருந்த யதார்த்தமாகப் பார்ப்போரும் இருப்பார்கள். சீனர்கள் கொர்பசேவை அவரது வீழ்ச்சியின் பின்னர், சோசலிச வரலாற்றில் மாபெரும் துரோகி எனத் தூசித்தனர். இலங்கையில் கூட சோவியத் யூனியனின் சரிவினால் அதிர்ச்சியுற்று, கொர்பச்சேவ் ஏகாதிபத்தியத்தின் கையாளாக இருந்ததனாலேயே இச்சரிவு நிகழ்ந்தது என விளக்கம் கூறும் வைதீக மார்க்சியவாதிகள் பலர் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
128

ஆயினும் கொர்பசேவின் பாத்திரம் மிகவும் சிக்கலானது. சதிக்கோட்பாடுகளினாலோ அல்லது புனையப்பட்ட எனது அற்புதக் கற்பளையினாலோ அதனை எளிதில் விளக்கிவிட முடியாது. சோவியத் யூனியனின் வரலாற்றில் மட்டுமன்றி உலக வரலாற்றில் கூட அதற்கு முன் உதாரணம் இல்லை. இதற்கு இணையான ஒன்றை ஒருவர் கற்பனையில்தான் காணவேண்டும். பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் பாப்பாண்டவராகப் பதவியேற்று, இறுதியில் கத்தோலிக்கத் திருச்சபையின் வீழ்ச்சிக்கு வழிகோலிய ஒரு சீர்திருத்தத்தை வத்திகானிலிருந்து ஆரம்பித்தார் என்ற கற்பனை இதற்கு நிகரானது.
கொர்பசேவ் கிரம்லினைவிட்டு வெளியேறிய முறை அவரது சாதனை, அவரது தோல்வி இரண்டையுமே வெளிக்காட்டுகின்றது. அவர் நிறைவேற்றிய சாதனைகளுக்காக அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு அவரைப் பதவியிலிருந்து வெளியேற்றிய அதே மனிதர்களுடன் அவர் கிரம்ளினைவிட்டு வெளியேறினார். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்த பிற உயர்மட்ட சோவியத் தலைவர்களின் விதியிலிருந்து இது பெரிதும் வேறுபட்டது. ட்றொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். ஸினோவியேவ், காமனேவ்,புக்காரின் ஆகியோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மலென்கோவும், குருஷேவும் அவமரியாதைக்குரிய முறையில் அனாமதேயங்களாக்கப்பட்டனர். கொர்பசேவுக்கு இந்த விதியின் அவலங்கள் எதுவும் நிகழவில்லை. சோவியத் யூனியனில் மிகவும் நாகரிகமான அரசியல் ஒழுக்க நியமங்களை நிறுவுவதில் வேறுயாரையும் விட அவர் அதிகம் சாதித்தமையே இதற்குக் காரணமாகும். அவர் கடைசியாக விடுத்த பகிரங்கச் செய்தியில் தனது நம்பிக்கைகளையும் தனக்குப்பின் பதவிக்கு வந்தோருடன் தனகுள்ள உடன்பாடின்மைகளையும் மீள வலியுறுத்தி கெளரவமான முறையில் அதிகாரத்தில் இருந்து விலகிக்கொண்டார். இவ்வாறு விலகிக்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பிருந்தமை பெரஸ்ரொய்க்கா மூலம் அவர் சாதித்தவற்றை மதிப்பிடுவதற்குரிய ஒரு அளவுகோலாகும்.
மறுபுறத்தில், தான் பாதுகாப்பதற்கு பாடுபட்ட சோவியத் யூனியனை சிதைவுகளாகவும் தான் சீர்திருத்தி அமைக்கப் போராடிய கொம்யூனிஸ்ட் கட்சியை அவமானத்திலும் அழிவிலும் விட்டுச் சென்றது அவரது தரிசனத்தின் ஒருபகுதியின் தோல்வியைதப்பித்துக்கொள்ள முடியாத தோல்வியைக் - காட்டுகின்றது.
29

Page 73
சீனர்களும் பிறரும் அவரைத் தூற்றியதற்கு மாறாக- தனது ஏழாண்டுகால ஆட்சியில் மாற்றியமைக்கப்பட்டதும் ஜனநாயகப் படுத்தப்பட்டதுமான சோவியத் கொம்யூனிசத்தையும் அந்த முயற்சியில் பிரதான பாத்திரம் வகிக்கக்கூடிய புத்தெழுச்சிபெற்ற ஒரு சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்குவதற்கே கொர்பச்சேவ் முயன்றார். தோல்வியில் முடிந்த சதிப்புரட்சியின் இறுதியில் மொஸ்கோ திரும்பிய ஆரம்ப நாட்களில் கூட நம்ப முடியாத வகையில் அந்த நோக்கத்தையே அவர் இறுகப் பற்றியிருந்தார். சமூக சக்திகளின் உந்துதலே அந்தத்திட்டத்தைக் காலாவதியாக்கி அதனைக் கைவிட அவரை நிர்ப்பந்தித்தன.
வயதுவந்த காலம்முதல் தன் வாழ்வை கட்சி அமைப்புக்களிலேயே செலவிட்டு அதன் மூலமே அதன் உச்சிவரை உயர்ந்த ஒரு மனிதர் என்ற வகையில் கொர்பசேவ் தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியையும் காரியவாதத்தையும் (Pragmatism) காட்டினார். எனினும் அவரது சிந்தனையின் மையம் லெனினிச மரபு சார்ந்ததாகவே இருந்தது. அவரது குருவின் உருவச்சிலைகள் அவரைச் சுற்றிலும் வீழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்அவரது வீழ்ச்சி அந்த மரபு அது பிறந்த நாட்டில் முடிவுக்கு வந்துவிட்டதைக் குறித்து நிற்கின்றது.
அனேக அரசியல் விமர்சகர்கள் கொர்பசேவ் வெளியேறியதில் இருந்து, பின்னோக்கிப் பார்த்து அவர் எங்கே பிழைவிட்டார் என்பதையும் அவர் செல்லத் தவறிய மாற்றுவழிகள் ஏதாவது இருந்த்னவா என்பதையும் கண்டறிய முயன்றிருக்கின்றனர். கொர்பசேவ் சீன உதாரணத்தைப் பின்பற்றி அரசியல் ரீதியில் தாராளப்படுத்துவதற்கு முன்பு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. எனது கருத்தில் இது மிகவும் தவறான ஒரு வாதமாகும்.
இந்த யூகம் ஆதாரமற்றது. வரலாறு சீனப் பரிசோதனை பற்றி இனிமேல்தான் தீர்ப்பு வழங்க இருக்கின்றது என்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல. பொருளாதார சீர்திருத்தங்கள் கட்டவிழ்த்துவிட இருக்கும் அரசியல் தாக்கங்களின் திட்டவட்டமர்ன சோதனைக்கு இந்த ஆட்சியாளர் முகம் கொடுப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கின்றது என்பதை எம்மால்
130

சொல்லமுடியாது. ஆனால் கொர்பசேவ் சீன உதாரணத்தில் இருந்து பாடம் படித்திருக்க வேண்டும் என்று கூறுவது பெரஸ்ரொய்க்கா ஆரம்பிக்கப்பட்ட முற்றிலும் வேறுபட்ட சூழலைப் புறக்கணிப்பதாகவே அமையும். ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் அவற்றின் சமூகக் குணாம்சத்தில் ஆரம்பத்தில் இருந்தே வேறுபட்டவை.
சாராம்சத்தில் சீனப்புரட்சி, கிராமங்களால் நகரங்கள் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு விவசாயப் போர் மூலமே வெற்றிபெற்றது. ரஷ்யப் புரட்சியோ உண்மையில் இரு பிரதான நகரங்களில் நடைபெற்றது. தேசத்தின் முழுச் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் நகாப்புறச் சிறுபான்மையினரே இப்புரட்சியை நடத்தி முடித்தனர். சீனக் கொம்யூனிஸ்ட்டுகளைப் போலன்றி போல்ஷெவிக் கட்சியும் அதன் வழித்தோன்றலான சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பலம்வாய்ந்த விவசாய வர்க்க அடித்தளத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. ஸ்டாலினது விவசாய வர்க்க அழிப்ப பினால் இது மேலும் மோசமடைந்தது.
மறுபுறத்தில், சீனாவில் புரட்சியின் மூல உந்து சக்தியாக அமைந்த விவசாய வர்க்க அடித்தளம், கலாசாரப் புரட்சியின் பின்டைவுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தனியார்பண்ணை முறைக்குச் சாதகமான உந்துதல்களைக் கொடுக்கக்கூடிய *அளவுக்கு பலம் வாய்ந்ததாகவே இருந்தது. இதற்கு மாற்றமாக சோவியத் யூனியனில் அதிகாரத்துவ மயமாக்கப்பட்ட விவசாயக் கூட்டுடமை அமைப்பைச் சீர்திருத்துவதற்கு கட்சியும் முகாமைத்துவ அமைப்புகளும் அதிக எதிர்ப்பைக் காட்டின.1991ல் இந்த எதிர்ப்பு மிகவும் பலம்வாய்ந்ததாக இருந்ததால் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று இல்லாம்ல் நிலம் தனியார் மயமாக்கப்படமாட்டாது என கொர்பசேவ் உறுதியளிக்க வேண்டியிருந்தது.
பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவரமுன்பு அரசியல் மாற்றங்களுக்குத் தவறான முறையில் முதன்மை கொடுதத்தே கொர்பச்சேவின் தோல்விக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. பழைமைவாத அரசியல் அமைப்புக்களின் பலத்தை உடைக்காமல் பாரதூரமான பொருளாதார மாற்றங்கள் எதனையும் கொண்டுவந்திருக்க முடியாது என்ற கொர்பசேவின் நோக்கு சரியானதே. இரண்டாவது அம்சத்தில் அதாவது பொருளாதார மாற்றங்களைப் பொறுத்தவரை அவர் அதிக தூரம் முன்செல்ல வில்லை என்பதே அவர்விட்ட தவறு என நான் கருதுகிறேன்.
13

Page 74
கொர்பச்சேவின் திட்டத்தின் அழிவுக்கு வித்திட்ட முக்கிய திருப்புமுனை 1988ல் கொண்டுவரப்பட்ட, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு வழிவகுத்த அரசியல் யாப்பு மாற்றங்களாகும். இத்தகைய ஒரு அரசு நிறுவனம் பற்றிய எண்ணம் சரியானதே. 1964ல் குருஷேவ் ஒழித்துக்கட்டப்பட்டதைப்போல் ஒரு உட்கட்சிச் சதிப் புரட்சியினால் தான் அகற்றப்படக்கூடிய சாத்தியப்பாட்டிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கான கொர்பசேவின் முயற்சியே அது. அரசியல் யாப்பு ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் கொங்கிரசினால் அன்றி அவரைப் பதவியிலிருந்து அகற்ற முடியாது என்பதே ஜனாதிபதியாக அவரை நியமிப்பதன் பொருளாகும்.
ஆனால் கொர்பசேவுக்கு இதிலும் கூட இரண்டு மாற்று வழிகள் இருந்தன. ஒன்று அவர் ஜனாதிபதியாக மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுது. மற்றது கொம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தையும் அதற்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களையும் இன்னமும் கொண்டிருந்த ஒரு ஆட்சி மன்றத்தினால் மறைமுகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படுது. கொர்பசேவ் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தார். இது அவரது சுயாதீனத்தையும் தற்துணிபையும் மட்டுப்படுத்திவிட்டது.
அந்தக் கட்டத்தில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருந்தால் கொம்யூனிஸ்ட் கட்சிக்குக் கட்டுப்படாத ஒரு சட்டபூர்வமான அந்தஸ்த்தையும் கெளரவத்தையும் அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு நடந்திருந்தால் கட்சியின் பழமைவாத மையத்தைத் தனிமைப்படுத்தி விட்டு கொம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் வெளியிலும் மாற்றத்துக்கு ஆதரவாக இருந்த எல்லோரையும் ஒன்றிணைத்து ஜனநாயகப்படுத்தலுக்கும் சீர்திருத்தத்துக்குமான ஒரு பரந்துபட்ட முன்னணியை உருவாக்குவதே அவரது தர்க்கரீதியான அடுத்த நடவடிக்கையாக இருந்திருக்கும்.
ஆனால் கொர்பசேவ் அத்தகைய ஒரு நடவடிக்கையில் இருந்து பின்வாங்கினார். அடிப்படையில் அவர் ஒரு கட்சிக்காரன் என்பதே இதற்குக் காரணமாகும். கட்சி முன்னணியின் வழிகாட்டல் பற்றிய லெனினிச சித்தாந்தத்தில் வளர்த்தெடுக்கப்பட்டவர் அவர். போரிஸ் யெல்ற்சினின் நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் மாற்றமானவை. அவர் கட்சியை விட்டு விலகி, கொம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கெதிராகப் போட்டியிட்டு பொதுத்
32

தேர்தலில் ரஷ்யக் கூட்டரசின் ஜனாதிபதியாக வெற்றிபெற்றவர். இவ்வகையில் பொதுமக்களின் பார்வையில் உயர்ந்து 1991 ஆகஸ்ட் சதிப்புரட்சியை எதிர்த்து நின்ற தலைவராக அவரால் LDrt D(Upg|Bg5g).
கொர்பச்சேவின் வீழ்ச்சியினை இறுதியாகத் தீர்மானித்த காரணி அவர் காப்பாற்ற விரும்பிய சோவியத் யூனியனின் அமைப்புக்குள் இருக்க குடியரசுகள் மறுத்தமையேயாகும். அவ்வகையில் அவரது புதுமை நாடும் சுயாதீன மனப்போக்குக்குப் புறம்பாக, மார்க்சிய மரபின் ஒரு வாரிசு என்ற வகையில் தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரை அவரது உணர்திறன் மிகக் குறைவாகவே இருந்தது என்பதையும் நான் கூறவிரும்புகிறேன். 1985ல் அவர் அதிகாரத்துக்கு வந்தபோது மைய அரசுக்கும் குடியரசுகளுக்கும் இடையில் இருந்த உறவை மாற்றியமைப்பதற்கு அவர் முன்னுரிமை கொடுக்கவில்லை. ஜனநாயகப்படுத்தலுக்கான பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்த வேளையில் சோவியத் யூனியனின் பல்தேசிய அரசில் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சிறுபான்மைத் தேசிய இனங்கள் விடுதலை பெறாமல் உண்மையான ஜனநாயகப்படுத்தல் இருக்க முடியாது என்பதை அவர் காணத் தவறிவிட்டார். ஒப்பீட்டளவில் சற்றுத் தாமதித்தே - முதலாவது இனமோதல் வெடித்து சோவியத் யூனியனை உலுப்பியதன் பிறகே- கொர்பசேவ் தேசிய இனப்பிரச்சினை பற்றிப் பேசத் தொடங்கினார்.
புதிய ஒன்றிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட சமயத்தில் மையத்தை விட்டு நீங்க விரும்பிய பிராந்திய தேசியவாத சக்திகள் வலிமைபெற்றிருந்தமையும் பொருளாதார வீழ்ச்சி உருவாக்கிய அதிருப்தியும் ஒன்றோடு ஒன்று இணைந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க முடியாதவையாக்கின.
கொர்பசேவின் சாதனை அரைகுறையானதாக இருந்தபோதிலும், உலக வரலாற்றுப்போக்கை மிகவும் திட்டவட்டமான முறையில் மாற்றியமைத்தவர்களுள் அவரும் ஒருவராகிறார். ரஷ்ய மக்களும் பழைய சோவியத் சாம்ராச்சியத்தைச் சேர்ந்த ஏனைய மக்களும் எதிர்காலத்தில் கொர்பசேவ் யுகத்தைத் திருப்பிப் பார்க்கும்போது புதியதை உருவாக்குவதைவிட பழையதை உடைக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையே அவர் வகித்தார் என்று சொல்லக்கூடும். ஆயினும் ஒரு இடம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது எதிர்காலம் திறந்துள்ளது
133

Page 75
ட்றொட்ஸ்கியின் ஒழுக்கம்
வன்முறையின் அரசியல்
1918 ஜூலை 17ஆம் திகதி இரவு சோவியத் யூனியனில் எக்காரெறின்பெரி நகரில் ஒரு வீட்டின் பின் அறையில் பதினொருபேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பதவி நீக்கப்பட்ட சார் மன்னன் இரண்டாம் நிகொலாஸ், அவரது மனைவி அலெக்சாந்திரா, ஃபியோதொறோவ்னா, அவர்களது பிள்ளைகளான அலெக்சேய், தாத்யானா, ஒல்கா, அனஸ்தாசியா, மரியா; அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு மருத்துவர், ஒரு சமையற்காரர்,ஒரு வேலைக்காரன், ஒரு தாதி ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டனர். இவர்களுடன் இளவரசிகளின் வளர்ப்பு நாயும் சுட்டுக் கொல்லப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு சோவியத் செய்தித்தாள்களிலும் சஞ்சிகைகளிலும் இக்கொலை பற்றி வெளிவந்த குறைந்த பட்சம் ஆறு கட்டுரைகளையாவது நான் பார்த்துள்ளேன். என் பார்வையில் படாத வேறு கட்டுரைகளும் வெளிவந்திருக்கக் கூடும். இக்கட்டுரை ஆசிரியர்கள் எல்லாருமே இந்த நிகழ்ச்சியை ஒரு "அவலம்” என்றோ அல்லது அதற்கு நிகரான சொற்களாலோ விபரித்திருப்பதே இதில் முக்கிய கவனத்துக்குரிய அம்சமாகும். பெரஸ்ரோயக்காவுக்கு முந்திய காலப்பகுதியில் இத்தகைய ஒரு விபரிப்பு சாத்தியமற்ற ஒன்றாகும்.
இக் கொலைச் சம்பவம் நிகழ்ந்த இடம் சோவியத் யூனியனில் ஒரு யாத்திரைத் தலம் போல் மாறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மில்லியன் கணக்கான மக்கள் காரண காரியமற்று இறந்துள்ள ஒரு நாட்டில் எழுபது வருடங்களுக்கு முன்பு கொலையுண்ட பதினொரு பேர் பற்றிய இந்த வெகுஜன அக்கறை இப்பொழுது ஏற்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? ஒரு பரபரப்பான சம்பவம் பற்றி அறியும் விருப்பார்வமோ அல்லது ரஷ்ய மக்களில் ஒரு சாரார் மத்தியில்
34

இன்னும் நிலை கொண்டிருக்கும் பேரரசுப் பக்தியோதான் இதற்குக் காரணம் என்று கூறுவதன் மூலம் மட்டும் இந்த நிலைமையை நாம் விளக்கிவிட முடியாது. சோவியத் யூனியனின் பொதுசன அபிப்பிராய ஆய்வு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பு இந்த உண்மையையே உறுதிப்படுத்து கின்றது. சார் அரச குடும்பம் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களில் 77 வீதமானோர் இல்லை என்றே விடையளித்துள்ளனர்.
சோவியத் யூனியனின் ஜனநாயக பூர்வமான அபிப்பிராயம் இந்தச் சம்பவத்தை முக்கியமானதாகக் கருதுவதற்கு ஒரு தகுந்த காரணம் இருப்பது வெளிப்படை. புரட்சிக்குப் பிந்திய வரலாற்றில் அரசியல் காரணத்துக்காக அப்பாவிகள் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும். "மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, சார் மன்னனே பொறுப்பாளி என்று ஒருவர் நம்பினாலும், ரஷ்புடீன் போன்றோருடன் சிநேகமாக இருந்தவள் என்பதற்காக சாரின் மனைவியும் இதில் சேர்த்துக் கொள்ளப் பட்டாலும் சாரின் பிள்ளைகளும், வீட்டுப் பணியாளர்களும் குற்றவாளிகள் என்று ஒருவர் கருதமுடியாது. நாயைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
இந்தப் பதினொரு பேரும் ஏன் கொல்லப்பட்டார்கள்? இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் யார்? முதல் வினாவுக்குக் கூறப்படும் விடையொன்று உண்டு. இதுவே பரவலாக நம்பப்படுகின்றது. உள்நாட்டு யுத்தத்தில் ஒரு விதிவசமான சந்தர்ப்பத்திலேயே அவர்கள் சுடப்பட்டனர். அக் கட்டத்தில் முன்னேறி வந்து கொண்டிருந்த வெண்படை எக்காரெறின்பெரியைக் கைப்பற்றிக்கொண்டால் அவர்கள் விடுவிக்கப் பட்டு எதிர்ப்புரட்சிகர சக்திகளை ஒன்றுதிரட்டுவதற்குரிய தளமாகப் பயன்படுத்தப்படுவர் என்ற அச்சம் நிலவியது. சாரையும் சாரினாவையும் மட்டுமன்றி அவர்களது குழந்தைகளையும் கொலை செய்வதற்குத் தீர்மானித்ததற்குரிய காரணமாக இதுவே கூறப்படுகின்றது. அவர்களது பிள்ளைகளில் ஒருவர் வெண்படையினால் மீட்கப்பட்டாலும் கூட அது எதிர்ப்புரட்சிக்கு ஒரு சின்னமாகிவிடும் என்று அவர்கள் பயந்தார்கள் என்று கருதப்படுகின்றது. அப்படியானால் மருத்துவரையும் பணியாட்களையும் ஏன் கொல்ல வேண்டும் ? சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் உயிர் வாழக்கூடாது என்பது இதற்குக்
135

Page 76
காரணமாக இருக்கலாம். அப்படியானால் நாயை ஏன் கொல்ல வேண்டும்? சிலவேளை அது அரசகுமாரிகளின் செல்லப்பிராணியாக இருந்திருக்கக்கூடும். அதனால் அது "புரட்சிகர வெறுப்பை" ஏற்படுத்தியிருக்கலாம்.
“கொலையைத் தீர்மானித்தவர்கள்” என்று ஆட்கள் யார் என இனங்காட்டாமலேயே நான் குறிப்பிட்டேன். இது தொடர்பாக ஆய்வாளர்களும் புலனாய்வுப் பத்திரிகையாளர்களும் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர்.
சில ஆய்வுகளின்படி பிரதேச சோவியத் தலைமையே தனது சொந்தப் பொறுப்பில் சுட்டுக்கொல்வதற்குக் கட்டளை இட்டது. இந்தக் கருத்தைக் கூறும் ஆய்வாளர்கள் முதலில் சார் மட்டுமே கொல்லப்பட்டதாக மொஸ்கோவுக்குப் பிராந்திய சோவியத் அறிவித்ததாகவும் பின்னரே முழுக் குடும்பமும் கொல்லப்பட்டதை வெளிப்படுத்தியதாகவும் கூறுகின்றனர். எனினும் வேறு ஆய்வாளர்கள் முற்றிலும் வேறுபட்ட கதை ஒன்றைக் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி இந்தத் தீர்மானம் மத்திய அரசினால் குறிப்பாக லெனினால் மேற்கொள்ளப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தும் காரியத்தை மட்டுமே பிராந்திய அதிகாரிகள் செய்தனர்.
இரண்டு காரணங்களுக்காக இரண்டாவது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மேல்மட்டக் கட்டளை இன்றி பிராந்தியக் கட்சியினால் இத்தகைய ஒரு பாரிய தீர்மான்ம் மேற்கொள்ளப்பட்டிருப்பது சாத்தியமில்லை என்பது ஒரு காரணம். 1935ல் ட்றொட்ஸ்கி எழுதிய தினக்குறிப்பில் (DiaryinExile) இதற்குச் சான்று இருப்பது இரண்டாவது காரணம். இந்தத் தீர்மானம் அடிப்படையில் லெனினுடையது என்பதை ட்றொட்ஸ்கி தெளிவாகக் கூறுகின்றார். லெனினுக்கு மாசு கற்பிக்கும் வகையில் அவர் இதனைப் பதிவு செய்யவில்லை. பதிலாக லெனின் இதில் சரியாகவே நடந்து கொண்டார் என்பதோடு கொலையையும் அவர் நியாயப் படுத்துகின்றார்.
எனினும் இங்கு அடிப்படையில் முக்கியமானது லெனினும் அவரது அரசாங்கமும் இந்தக் கொலைக்கு அங்கீகாரம் வழங்கினரா என்பதல்ல. ஏனெனில் அவர்கள் இதை எவ்வகையிலும் நியாயப்படுத்தியேயுள்ளனர். உண்மையில் கடந்தசில ஆண்டுகள்
136

வரை இந்தக் கொலை பற்றி சோவியத் யூனியனில் அதிகார பூர்வமாகப் பிரசுரிக்கப்பட்ட எல்லா ஆவணங்களும் புரட்சிகர அரசைப் பாதுகாப்பதற்கு இது அவசியமாக இருந்தது என்ற அடிப்படையில் அதை நியாயப் படுத்தியே வந்தன. இப்போது: சோவியத் யூனியனில் இது சர்ச்சைக்குரியதாகி இருப்பது புரட்சியின் ஒழுக்கவியல் ஆய்வறிவுக்குரிய ஒரு பொருளாக மட்டுமன்றி சுயவிசாரணைக்குரிய ஒன்றாகவும் மாறியிருப்பதையே காட்டுகின்றது.
ட்றொட்ஸ்கியின் விடயத்துக்கு வருவோம். குறிப்பாக இந்தப் பிரச்சினை பற்றிய அவரது நோக்கு நமது கவனத்துக்குரியது. ஏனெனில் சாரின் அரச குடும்பத்தைக் கொலை செய்த அரசாங்கத்தில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்தவர். அதுமட்டுமன்றி பின்னர் அவரே சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஸ்டாலினது உளவாளியினால் கொல்லப்பட்டவர்.
ட்றொட்ஸ்கி தனது கடைசி ஆண்டுகளில் ஸ்டாலினது அடக்கு முறையையும் களையெடுப்பையும் கண்டித்தவர் ஆயினும் அவர் கூட இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு அப்பாலானவர் அல்ல என விக்டர் செர்ஜி, போரிஸ் செளவாறைன் ஆகியோரும் பிறரும் ட்றொட்ஸ்கியைக் குற்றம்சாட்டியுள்ளனர். லெனின் காலத்து அடக்கு முறைகளில் அவரும் இணைந்து நின்றதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக 1921ல் நடைபெற்ற குறொன்ஸ்ராட் கிளர்ச்சியை மோசமாக அடக்கியதில் அவரே தலைமை வகித்ததை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்குப் பதில் இறுக்கும் முகமாக, பிழைகளுக்காக மனம் கலங்காத ட்றொட்ஸ்கி 'அவர்களது ஒழுக்கமும் நமது ஒழுக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இக்கட்டுரையில் ஸ்டாலினது செயல்களுக்கும் லெனின் காலத்தில் தனதும் பிற போல்ஷெவிக்குகளின் செயல்களுக்கும் இடையே ஒரு வேறுபாட்டைக் கோடு கீறிக் காட்டினார். ட்றொட்ஸ்கியைப் பொறுத்தவரை பிரச்சினை புரட்சிகர நடைமுறை சில இறுதியான ஒழுக்கக் கோட்பாடுகளை உறுதிப்படுத்துகின்றதா இல்லையா என்பதல்ல. இத்தகைய தூய ஒழுக்கக் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். கேஸ்லரின் நண்பகலில் இருள் என்ற நாவலில் வரும் பழைய புரட்சிவாதியான றுபாஷோவ் தனது இறுதிக்கட்டத்தில் பின்வருமாறு கூறுகிறான். “வரலாறு இளைப்பாறும் வேளையில் அரசியல் ஒப்பீட்டளவில் நிதானமாக இருக்கும். ஆனால் அதனுடைய
137

Page 77
சிக்கலான திருப்புமுனைகளில் பழைய விதியைத் தவிர வேறு விதி எதுவும் சாத்தியமல்ல. அதுதான் விளைவே வழிமுறையை நியாயப்படுத்தும் (endJustfiesthe means) என்பது. ட்றொட்ஸ்கி இதே கருத்தையே தனதுகட்டுரையில் வலியுறுத்துகிறார். ஆனால் அதற்கு அவர் ஒரு நிபந்தனையைச் சேர்க்கின்றார். அதாவது வழிமுறைகள் உண்மையில் விளைவுக்கு இட்டுச் செல்ல வேண்டும். ட்றொட்ஸ்கியின் பார்வையில் விளைவு- அதாவது சோசலிசமும் மனித விடுதலையும்- வரலாற்றுப் போக்கினால் வழங்கப்படுவது, அதுபோன்றதே வழிமுறைகளும், அதாவது வர்க்கப்போராட்டமும் அதை முன்னெடுக்கும் புரட்சிகர வன்முறையும்.
"புரட்சிகரத் தொழிலாளர் மத்தியில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் வழிமுறைகள் மட்டுமே அனுமதிக்கத் தக்கதும் கட்டாயமானதுமாகும். இந்த ஐக்கியமும் ஒருமைப்பாடுமே அடக்குமுறைக்கு எதிரான விட்டுக்கொடுக்க முடியாத குரோதத்தினால் அவர்களை நிரப்பும். இதுவே அவர்களது வரலாற்றுப்பணி பற்றிய பிரக்ஞையில் அவர்களை அமிழ்த்தி எடுக்கும். அவர்களது திடசித்தத்தையும் தியாக உணர்வையும் அவர்களிடம் ஏற்படுத்தும்” என ட்றொட்ஸ்கி எழுதினார்.
"இவ்வகையில் எல்லா வழிமுறைகளும் அனுமதிக்கத்தக்கதல்ல" என்று அவர் தொடர்ந்து எழுதினார். ஸ்டாலினது வழிமுறைகளான பொய்க் குற்றச்சாட்டு, அச்சுறுத்தல், தனது எதிரிகளை அழித்தொழித்தல் ள்ன்பன நிராகரிக்கப்பட வேண்டியவை. ஏனெனில் அவை ஒரு அதிகார வர்க்கக் குழுவின் பலத்தை நிலை நாட்டும் வழிமுறைகளாகும். இச்சமூகக் குழுவின் குணாம்சத்தை இந்த வழிமுறைகளின் தரக்குறைவே புலப்படுத்துகின்றது.
ட்றொட்ஸ்கி நிலைநாட்ட முயல்வது போல இப்பிரச்சினைகள் இலகுவானவைட் பா சுயசாட்சியமுள்ளவையோ அல்ல என்பதை இக்கட்டுரையில் பின்னர் நான் ஆராய்வேன். ஆனால் அதற்கு முன், சார் அரச குடும்பத்தின் கொலை தொடர்பான ட்றொட்ஸ்கியின் அவதானிப்புக்களை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.
ட்றொட்ஸ்கி இந்த அவதானிப்புக்களை 1935ல் நாட்குறிப்பில் எழுதி வைத்தபோது அவர் சோவியத் யூனியனைவிட்டு நாடுகடத்தப் பட்டிருந்தார். அதோடு அவரின் குடும்ப உறுப்பினர்களும்
38

ஸ்டாலினது அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர். அவரது மகள் ஸினைதா 1933ல் பெர்லினில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்குச் சோவியத் குடியுரிமை மறுக்கப்பட்டதும் வீட்டையும் கணவனையும் விட்டு அவர் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டதும் ஓரளவுக்கேனும் இதற்குக் காரணமாகும். சோவியத் யூனியனில் தங்கியிருந்த ஒரு அரசியல் விஞ்ஞானியான அவரது மகன் சேர்ஜி (அல்லது நாட்குறிப்பில் செல்லமாகக் குறிப்பிடுவது போல செர்யோஷா) கைது செய்யப்பட்டதாக இக்காலத்தில் ட்றொட்ஸ்கிக்குத் தகவல் கிடைத்தது. செர்யோஷா பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் டைரிக் குறிப்புகளுக்கு இடையி லேயே சார் அரச குடும்பத்தின் கொலை பற்றிய ட்றொட்ஸ்கியின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஐசக் டொயிற்ஷொ, ட்றொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு பற்றிய தனது மூன்றாவது தொகுதியில் குறிப்பிடுவதுபோல, இந்த இரு சூழல்களுக்கும் இடையே வெளிப்படுத்தப்படாத ஒரு உளவியல் தொடர்பு இருப்பது சாத்தியமே. தனது மகனுக் கெதிரான ஸ்டாலினது பழிவாங்கல் பிரக்ஞை பூர்வமாகவோ பிரக்ஞை பூர்வமற்றோ தானும் பங்காளியாக இருந்த அரசினால் கொல்லப்பட்ட அந்தப் பிள்ளை ளரின் நினைவை அவரது மனதில் கிளறி விட்டிருக்கக் கூடும்.
எனினும் சாரின் பிள்ளைகளின் கொலையை ஒரு குற்ற உணர்வுடன் ட்றொட்ஸ்கி நினைவுகூரவில்லை. அதில் நேரடியான தொடர்பு இவருக்கு இருக்கவுமில்லை. உள்நாட்டு யுத்தத்தின்போது தான் மொஸ்கோவைவிட்டு தொலைவில் யுத்தமுனையில் இருந்த்தாகவும் அந்தத் தீர்மானத்தில் தான் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். தன்னைக் குற்றத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் உள்நோக்குடன் ட்றொட்ஸ்கி இதனைக் கூறவில்லை. பதிலாக அந்தச் செயலுக்குத் தன் அங்கீகாரத்தை டையரியில் அவர் மீள வலியுறுத்தியுள்ளார்.
சார் மன்னனை விசாரணைக்கு உட்படுத்தும் கருத்து முன்வைக்கப்பட்டதாகவும் ட்றொட்ஸ்கி குறிப்பிடுகிறார். (கொல்லப் படுவதற்கு முன் விசாரணை, ச் சடங்குக்கு உட்படுத்தப்பட் முதலாம் சார்ள்ஸ் - மன்னனும் பதினாலாம் லுயிசும் இதற்கு, வரலாற்று முன் உதாரணங்களாக இருந்திருப்பர்). ட்றொட்ஸ்கியே ஒரு பகிரங்க விசாரணை பற்றிய ஆலோசனையை முன்மொழிந், எர். அது தங்கள் ஆட்சியின் தாராளத் தன்மையை பிரச்சாரப்படுத்தும் நோக்கத்தைப் பாதி நிறைவேற்றக்கூடியது. ட்றொட்ஸ்கி
139

Page 78
தன்னையே வழக்கறிஞர் பாத்திரமாகக் கருதினாரோ என்று நாம் வியப்படையலாம். அதில் அவர் மிகவும் வெற்றிகரமாகவும் செயற்பட்டிருப்பார். "அது சாத்தியமாயின் நல்லதே” என்று லெனின் கூறியதாக ட்றொட்ஸ்கி நாட்குறிப்பில் எழுதுகின்றார். "ஆனால். அதற்கு அவகாசம் போதாது. அது சம்பந்தமாக விவாதம் எதுவும் இருக்கவில்லை; வேறு அலுவல்களில் மூழ்கி இருந்ததால் நான் எனது பிரேரணையை வலியுறுத்தவுமில்லை” (புள்ளிகள் மூலத்தில் உள்ளவை) என ட்றொட்ஸ்கி எழுதியுள்ளார்.
சிறிது காலத்துக்குப் பின்னர் தான் மொஸ்கோ திரும்பியதுபற்றி அடுத்து ட்றொட்ஸ்கி குறிப்பிடுகிறார்: “ளப்வெர்ட்லோவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் இப்போது சார் எங்கே என்று கேட்டேன். 'கதை முடிந்தது" என்று அவர் பதில் கூறினார். "அவர் சுடப்பட்டுவிட்டார்” அவரது குடும்பம் எங்கே P குடும்பமும் அவருடன் சுடப்பட்டது". "எல்லோருமா? நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் "எல்லோரும்தான்" என்று ஸ்வெர்ட்லோவ் சொன்னார். 'அதனால் என்ன? அவர் எனது எதிர்வினைக்காகக் காத்திருந்தார். நான் எதுவும் கூறவில்லை. "யார் இதைத் தீர்மானித்தது? என்று கேட்டேன். நாங்கள்தான் தீர்மானித்தோம். வெண்படையினருக்கு சுற்றி அணிசேர ஒரு உயிருள்ள பதாகையை நாம் விட்டுவைக்கக்கூடாது என்று இலியிச் கருதினார். அதுவும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில்." நான் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை. விவகாரம் அத்துடன் முடிந்துவிட்டது என்றே நான் நினைத்தேன்!
இந்தவிடயம் பற்றித் தெளிவு படுத்தப் படவேண்டிய இன்னும் ஒரு அம்சம் உண்டு. கொலைச் செய்திக்கு ட்றொட்ஸ்கியின் எதிர்வினை எதுவாக இருக்கும் என்பதில் ஸ்வெர்ட்லோவுக்கு ஐயம் இருந்தது.மனிதாபிமான அடிப்படையில் அன்றி வேறு க்ாரணத்துக்காக ட்றொட்ஸ்கி இந்தக் கொலையை எதிர்க்கக்கூடும் என்ற பயம் இருந்ததே இந்த ஐயத்துக்குக் காரணம் என்று நான் கருதுகிறேன். ஒரு மார்க்சியக் கட்சியைப் பொறுத்தவரை அக்காலத்தில் இக்கொலை ஒரு முன் உதாரணம் அற்றது என்பதை நாம் மனம் கொள்ள வேண்டும். நரோத்னாயா வெல்யா இயக்கப் பயங்கரவாதிகளால் இரண்டாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டது போன்ற தனியாட்களுக்கு எதிரான வன்செயல்களை மார்க்சியவாதிகள் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளனர். இத்தகைய செயல்கள் தார்மீக ரீதியில் முரணானவை என்பதற்காக அன்றி
40

பயன் அற்றவை என்ற அடிப்படையிலேயே அவர்கள் எதிர்த்தனர். வெகுஜனப் புரட்சிச் செயல் முறையால் அந்த அமைப்பையே மாற்றி அமைக்காமல் தனிநபர்களை அழிப்பதன் மூலம் எதையும் மாற்றி விட முடியாது என்பது மார்க்சியக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகும். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஒரு புரட்சிகரக் கட்சியைப் பொறுத்தவரை பின்பற்றப்படவேண்டிய கோட்பாடுகள் யாவை? உடைமை பறிக்கப்பட்ட வர்க்கத்தின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளை புரட்சிகர அரசு அடக்க வேண்டியது அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால் அரச குடும்பத்தினதும் அவர்களைச் சார்ந்திருந்த வர்களினதும் அழிவுக்கு இதனை எவ்வாறு விஸ்தரிக்க முடிந்தது? 1918ல் சாரையும் சாரினாவையும் கொன்றதை ஒரு தண்டனை என்ற வகையில் மார்க்சியவாதிகள் ஆதரித்திருக்கமுடியும். ஆனால் ஏனைய ஒன்பது பேரின் கொலையையும் பொறுத்தவரை அவ்வாறு சொல்ல முடியாது என்பது தெளிவு. அதனாலேயே சாருடன் அவரது குடும்பமும் கொல்லப்பட்டது என்பதை அறிந்தவுடன் ட்றொட்ஸ் கி ஆச்சரியம் அடைந்திருக்கவேண்டும். அவர் ஆச்சரியப்பட்டார்; ஆனால் அதிர்ச்சி அடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பதினேழு வருடங்களுக்குப் பிறகு லெனினே இக்கொலைக்குக் கட்டளையிட்டார் என்ற உண்மையை ட்றொட்ஸ்கியால் தனது தினக் குறிப்பில் பதிவுசெய்ய முடிந்தது. ஆனால் அரச குடும்பத்தை அழிப்பதன் பயன்பாடுபற்றி லெனின் என்ன நினைத்திருந்த போதிலுமி - தனிமனிதர்களுக்கெதிரான காரணமற்ற வன்முறையை நிராகரிக்கும் மார்க்சிய மரபின் முன்- தானே அதற்குப் பொறுப்பு என்பதை அவரால் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்க முடியாது. அதனாலேதான் இந்தக்கொலை ஒரு பிராந்திய சோவியத்தின் அவசரமுடிவு என்ற கட்டுக்கதை பரப்பப் பட்டிருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ட்றொட்ஸ்கி ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டபோதிலும் பின்னர் அவர் அதனைத் தாண்டி தன் நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதுகின்றார். r
"உண்மையில் இந்தத் தீர்மானம் பயனுடையது மட்டுமன்றி அவசியமானதும் கூட. இந்தத் தீர்ப்பு நாங்கள் ஈவிரக்கம் இன்றித் தொடர்ந்தும் போராடுவோம் எதற்கும் தயங்கமாட்டோம் என்பதை
4.

Page 79
உலகுக்குக் காட்டியது. சார் குடும்பத்தின் கொலை எதிரியை அச்சுறுத்தவும்,கிலிகொள்ள வைக்கவும் நம்பிக்கை இழக்கச் செய்யவும் மட்டுமன்றி நமது சொந்த அணிகளை உலுப்பவும், முழுமையான வெற்றி அல்லது பூரண அழிவு- இரண்டில் ஒன்றைத் தவிர பின்வாங்குதல் என்பதே இல்லை என்பதை அவர்களுக்குக் காட்டவும் எமக்கு அவசியமாக இருந்தது. கட்சியின் ஆய்வறிவு வட்டாரத்தில் இதுபற்றி ஐயப்பாடுகளும் தலை அசைப்புகளும் இருந்தனதான்; ஆனால் தொழிலார்களும் படையினரும் அதில் சிறிதும் ஐயுறவு கொள்ளவில்லை. வேறு எந்தத் தீர்மானத்தையும் அவர்களால் விளங்கிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிந்திருக்காது. இதனை லெனின் நன்கு உணர்ந்திருந்தார். குறிப்பாக பாரிய அரசியல் நெருக்கடிகரின்போது வெகுஜனங்களைப் பற்றியும் அவர்களுடன் சேர்ந்தும் கந்திக்கவும் உணரவும் லெனினுக் கிருந்த அளப்பரிய ஆற்றல் அவருக்கே உரிய சிறப்பம்சமாகும்."
ட்றொட்ஸ்கியின் நாட்குறிப்பில் உள்ள இந்தப்பகுதி அவரைப் பற்றி ஒரு மாபெரும் மனிதாபிமானி என்ற படிமத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவரது அபிமானிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தும் வர்க்க எதிரி என்று அவர் கருதுபவர்களைப் பொறுத்தவரை வேறு யாரையும் போலவே அவரும் ஈவிரக்கம் அற்றவராகவே இருப்பார் என்பதை இது காட்டுகின்றது. உள்நாட்டு யுத்தகாலத்தில் உக்ரைனில் அல்லது குரோன்ஸ்ராட்டில் அவரது நடவடிக்கைகளில் இது முற்றிலும் வெளிப்பட்டது. உண்மையில் கட்சியில் உள்ள ஆய்வறிவாளர்களில் சிலர் இந்தக் கொலை பற்றி ஐயபபாடுகள் கொண்டிருந்திருக்கக்கூடும் என்று அவர் குத்தலாகக் குறிபடபிட்டது சேர்ஜி, செளவாறைன் ஆகியோரை மனங்கொண்டே என்பது தெளிவு. 1937-38 காலப்பகுதியில் இவர்கள் புரட்சிகர ஒழுக்கம் பற்றி ட்றொட்ஸ்கியுடன் வாதம் நடத்தினர்.
/
நாட்குறிப்பில் காணப்படும் பிறிதொரு பகுதி இன்னும் முக்கியமானது, "சார் மன்னனை வழக்கு விசாரணைக்கு உட்படுத்துவது பற்றி லெனினுடன் நான் பேசியது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கால அவகாசம் என்பதோடு c a சார் குடும்பத்தைப் பொறுத்தவரை லெனினுக்கு வேறு ஒரு கருத்தும் இருந்திருப்பது சாத்தியம். சட்டரீதியான விசாரணைகளின் கீழ் சாரின் குடும்பத்தை அழிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும். அரசவாரிசுரிமை (dynastic succession ) என்ற அரச குலக் கோட்பாட்டுக்கு சார் குடும்பம் பலியானது.”
42

எக்காரெறின்பேர்க்கில் அரச குடும்பத்தை கொன்றதற்குக் கூறப்படும் காரணம்- - வெண்படை முன்னேறிக்கொண்டிருந்தது என்பதும் - அது அவர்களை விடுவிக்கும் அபாயம் இருந்தது என்பதும்- இரண்டாம் பட்சமானதே என்றும் கொலையின் நேரத்தைத் தீர்மானிப்பதில் மட்டுமே அது முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்றும் நாம் முடிவு செய்வதற்கு மேற்காட்டிய பகுதி நம்மை இட்டுச் செல்கிறது. சார் மன்னனை விசாரணைக்கு உட்படுத்தாமல் கொல்வதே விரும்பத்தக்கது. ஏனெனில் சட்டரீதியில் பிள்ளைகளைக் கொல்ல முடியாது என லெனின் நினைத்தார் எனக் கருதுவதற்கு ட்றொட்ஸ்கியின் நாட்குறிப்பு நம்மைத் தூண்டுகிறது. அரச வாரிசுரிமைக் கோட்பாட்டுக்கு சார் குடும்பம் பலியானது என்று குறிப்பிடுவதன் மூலம் ட்றொட்ஸ்கி இந்தத் தர்க்கத்தை உறுதிப்படுத்துகிறார். இந்த முடிவு கொலைக்கான பொறுப்பை ஒரு சமூக நிறுவனத்தில் தள்ளிவிட்டுவிடுவதோடு அதனை ஒரு மனிதத் தொடர்பற்ற செயலாகவும் (impersonslact) காட்டுகின்றது. நாட்குறிப்பின் அதே பகுதி பின்வருமாறு தொடர்கின்றது. "செர்யோஷாவைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. சிலவேளை நீண்டகாலத்துக்கு எதுவும் இருக்காது."
இந்த நாட்குறிப்பின் இருபகுதிகளும் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி யினால் இணைக்கப்பட்டிருப்பதாக டொயிற்ஷெர் நம்பக்கூடிய முறையில் சுட்டிக்காட்டுகின்றார். இதன் உட்கிடை இதுதான். சாரின் பிள்ளைகளை போல்ஷெவிக்குள் கொன்றது நியாயப்படுத் தப்பட்டது. ஏனெனில் அவர்கள் சிம்மாசனத்துக்கு வாரிசுரிமை உடையவர்கள். ஆனால் செர்யோஷாவுக்கும் அவரது தகப்பனுக்கு மிடையே எந்த ஒரு அரசியல் வாரிசுரிமைத் தொடர்பும் இல்லை. ஆகவே அவரைத் துன்புறுத்துவதற்கு ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்க வாதத்தில் டொயிற்ஷெருக்கும் உடன்பாடு இருப்பது தெளி.
இந்தத் தர்க்கத்தின் பெறுமதி பற்றி நான் இன்னும் சிறிது நேரத்தில் பரிசீலிப்பேன். ஆனால் இச்சூழ்நிலையில் ட்றொட்ஸ்கியின் சுயதிருப்தி- அவரின் ஒழுக்கவியல் குறும்பார் “வ (Moral myopia) என்னை விறைப்படைச் செய்கின்றது என்பதை நான் முதலில் தெரிவிக்க வேண்டும். சார் குடும்பத்தினரின் படுகொலையை 1935ல் நியாயப்படுத்தும் ட்றொட்ஸ்கி 1918ல் இருந்த அதே ட்றொட்ஸ்கி அல்ல. அப்போதைய ட்றொட்ஸ்கி அவரது ஒழுக்கவியல் குருட்டுத் தன்மைக்காக ஒரளவு மன்னிக்கப்படத்தக்கவர்.
143

Page 80
அந்த ஆரம்ப ஆண்டுகளில் நிலவிய புரட்சிகர ஆரவாரத்தின் பின்னணியில் இவ்வாறு மன்னிக்க முடியும். ஆனால் இப்போது புரட்சிகர நாட்டுக்குள் முடிவற்று வியாபித்துக்கொண்டிருக்கும் அழிவுகரமான வின்முறையின் இடைக்கால அனுபவத்துடன், தானே ஸ்டாலினால் உலகெங்கும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் தனது மகளின் மரணத்தினால் வருந்திக்கொண்டிருந்த வேளையிலும் தனது மகனின் விதி குறித்து ஆதங்கமும் துயரும் கொண்டிருந்த வேளையிலுல் தேசத்தின் நலனுக்காக சாரின் குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப் படுத்தக்கூடிய ஒரு மந்தித்த நிலையில் அவரால் இருக்க முடிந்தது. ஸ்டாலினால் சட்டத்துறை பயங்கரமாக அத்து மீறப்படுவதை அறிந்திருந்த அவரால் சட்டரீதியில் அந்தக் குழந்தைகளைக் கொல்ல முடியாது என்பதற்காக தன்னிச்சையாக கொலையை மேற்கொள்ள லெனின் எடுத்த தீர்மானத்தை அங்கீகரிக்க முடிந்தது. ட்றொட்ஸ்கி இதனைப் பகிரங்கமாகக் கூறவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. பகிரங்கமாகக் கூறுவதாயின் அரசியல் கோட்பாட்டோடு அதனை இணைத்துப்பார்த்து உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்கும். அவர் தனது தனிப்பட்ட நாட்குறிப்பிலேயே எழுதுகிறார். அவரது மரணத்தின் பின்னரே அது பிரசுரிக்கப்பட்டது. ஆகவே அது அவரது சுபாவமான சொநத்ச் சிந்தனை வெளிப்பாடு என்றே கொள்ளவேண்டும். தான் அனுபவித்தறிந்த விசயங்களின் பின்னணியில் குறிப்பாகத் தனது பிள்ளைகளுக்கு நேர்ந்த விதிவசமான சம்பவங்களின் பின்னணியில் எந்தப் பயங்கரப் பூதங்களை உருவாக்குவதில் தனது சொந்த நடவடிக்கைகளும் பங்காற்றியிருக்கின்றனவோ அந்தப் பூதங்கள் தர்ன் அவர்களையும் பிடித்து விழுங்கிக்கொண்டிருக்கின்றனவோ என்ற ஐயத்தினால் ட்றொட்ஸ்கி சங்கடப்பட்டி ருக்கக்கூடும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை.
ட்றொட்ஸ்கியின் அபிமானிகள் நிர்ப்பந்த நிலைமைகளிலும் கூட தன் அடிப்படைக் கொள்கைகளைப் பேணுவதில் அவரது வளைந்து கொடுக்காத இயல்பினைப் புகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பண்பில் பாராட்டுக்குத் தகுதியற்ற ஒரு பகுதியும் உண்டு. அனுபவங்கள் மூலம் அன இறுக்கம் தளர்வதற்குப் பதிலாக அவரது முற்கற்பிதங்கள் பலப்படுவதில் இது புலப்படுகின்றது. தார்மீக நோக்கில் அல்லது சுய அறிவில் தன்னை வளர்த்துக்கொள்ள முடியாத மாபெரும் ஆய்வு அறிவாற்றல் உள்ள ஒரு மனிதனுக்கு
144

ட்றொட்ஸ்கி உண்மையில் ஒரு அச்சமூட்டும் உதாரணமாக இருக்கிறார். ட்றொட்ஸ்கியின் ஆய்வறிவு மூர்க்கத்தனத்துக்கு, ஒரு சுயவிமர்சன நோக்கு அந்நியமான ஒன்றாகவே இருந்தது. லெனின் கட்சிக்கு எழுதிய தனது கடைசிக் கடிதத்தில் ட்றொட்ஸ்கியைப் பற்றி "மிகையான தன்னம்பிக்கை உடையவர்" என்று காரணத்தோடுதான் குறிப்பிட்டார்.
சாரின் பிள்ளைகளைக் கொல்வதற்கும் செர்யோஷாவைச் சிறையில் இடுவதற்கும் இடையே ஒரு வேறுபாட்டைக் கற்பிக்க ட்றெnட்ஸ்கிக்கு உரிமையுண்டா? இந்த அம்சத்தை நாம் பரிசீலிப்போம்.
தந்தையர்கள் அல்லது கணவர்கள் செய்த பாபங்களை அல்லது அவர்கள் செய்ததாககக் கருதப்பட்ட பாபங்களை எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத அப்பாவி மனைவிமாரிலும் குழந்தைகளிலும் கூடக் காண்பது ஸ்டாலினது வழமையான நடைமுறையில் ஒரு பகுதி என்பது எல்லோரும் அறிந்ததே. களையெடுப்புக் காலத்திலும் அதன் பிறகும் சிறைமுகாம்களில் "த"'நாட்டுக்குத் துரோகம் இழைத்தோரின் குடும்ப உறுப்பினர்கள்? எ;. அழைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இருந்தனர். இவ்வ%)கப்பட்ட சிறைக்கைதிகள் அழைக்கப்படும்போது இந்த அடையாளத்தினாலேயே தங்காை இனங்காட்ட வேண்டும் என்று கேட்கப்பட்டனர். இத்தகைய மனைவிமார்களிலும் அவர்களது ஆண்பெண் மக்களிலும் பலர் பிற்காலத்தில் கொல்லவும் பட்டனர். ஏனையோர் உள்ளக நாடுகடத்தல் (internal exile ), நடமாட்ட நடவடிக்கை வரையறைகள் போன்ற நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்படும்வரை சிறையில் வாழ்வைக் கழித்தனர்.
களையெடுக்கப்பட்ட தனி மனிதர்களின் மனைவிமார்களையும் பிள்ளைகளையும் ஏன் ஸ்டாலின் பலியாட்களாக்கினார்P ட்றொட்ஸ்கி நினைப்பதுபோல் அது முற்றிலும் ஒரு பழிவாங்கலோ அல்லது ஒரு துன்புறுத்தி மகிழும் மனப்பாங்கோ (Sadism) அல்ல பதிலாக ஸ்டால*து நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது முற்றிலும் பகுத்தறி. l, ரீதியான உந்துதல்களுடனேயே அவர் செயற்பட்டார் என்று கருத்வேண்டியுள்ளது. ஏற்கனவே கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களைக் கொல்லுவதன் அல்லது சிறையிடுவதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் மத்தியில் இருந்து உருவாகக்கூடிய எதிர்ப்பில் இருந்து அவர் தன்னையும் அரசையும் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டார். அண்மைக் காலத்திலே
145

Page 81
ஆஜன்ரைனாவில் அல்லது யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் தங்கள் பிள்ளைகளையும் கணவன்மாரையும் இழந்த அரசியல் சார்பற்ற சாதாரண பெண்கள்கூட எப்படி உணர்ச்சியூட்டப் பெற்றார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தந்திரமும் தொலைநோக்கும் உள்ள அரசியல்வாதியான ஸ்டாலின் அத்தகைய ஒரு சாத்தியப்பாட்டுக்கு இடம் வைக்கவில்லை. தனது அரசுக்கான அச்சுறுத்தல் என்றவகையில் பாதிக்கப்பட்டோரின் மனைவிமாரையும் தாய்மாரையும் மட்டுமன்றி ஆண்பெண் மக்களையும் அழிப்பதில் அவர் அக்கறை காட்டினார் என்பது தெளிவு.
அப்படியாயின் சார் குடும்ப்த்தை அழிக்கும்போது லெனின் எந்த நோக்கத்தைக் கொண்ருந்தாரோ அந்த நோக்கத்தையேநாட்டின் பாதுகாப்பைக் கருதியே - பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களை ஸ்டாலின் குற்றக் கூண்டில் நிறுத்தினார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத் தார்மீக ரீதியில் பதில் அளிக்க வேண்டியிருந்தால், தற்காப்பு நிலையில் 'விளைவே வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றது" என்று அவர்கூடக் கூறியிருக்க முடியும். ஆனால் ஸ்டாலினது விளைவு ன்து? தன் சொந்த அதிகாரத்தைப் பலப்படுத்துவதே அவரது இறுதிக் குறிக்கோளாய் இருந்தது என்று நிச்சயமாகக் கருத முயாது. ஒரு பின்தங்கிய நாட்டில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியின் குறைபாடுகளை விடுவிக்க ஐரோப்பியப் புரட்சி துணைக்குவரும் என்ற நம்பிக்கை யுடனேயே போல்ஷெவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் ஐரோப்பியப் புரட்சி உதவிக்கு வரவில்லை. விவசாய வர்க்கத்தைப் பிரதான அலகாகக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு மார்க்சியக் கட்சியின் சர்வாதிகாரம் அதீத நடவடிக்கைகளினாலேயே நிலைநிறுத்தப்பட வேண்டியிருந்தது. அதன் பெறுபேறுதான் ஸ்டாலினிச எதேச்சாதிகாரம். கறுப்பு வெள்ளை என்ற இரு கூறுபட்ட வசைபாடல் சூத்திரங்களுடன் நாமும் சம்பந்தப்படாதவரை நாம் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். DGO) கொண்டுள்ள சர்வதேசச் சூழ்நிலையிலும் சாதகமற்ற உள்நாட்டுச் சூழ்நிலையிலும் இருந்து சோவியத் அரசைப் பாதுகப்பதற்கு அத்தியாவசியம் என்ற நம்பிக்கையுடனேயே ஸ்டாலின் தனது அடக்கு முறைகளைப் பயன்படுத்தியிருப்பார் என்பதே அந்த உண்மையாகும்.
லெனின் காலத்து வன்முறைகளைவிட ஸ்டாலின் காலத்து வன்முறைகள் பாரியவை என்பதில் ஐயமில்லை. மேலும் லெனின்
l46

காலத்தில் கட்சிக்கு வெளியில் இருந்த எதிர்ப்பாளர் மீது மட்டுமே வன்முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்டாலின் காலத்தில் கட்சிக்கு உள்ளே கூட கருத்து வேறுபாடு கொண்டவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் சமூக முன்னேற்றத்தின் ஒரு கருவி என்ற வகையில் அந்த வன்முறைகளும் நியாயப்படுத்தப்படக்கூடியவையே என்ற கருத்து இருகால கட்டங்களுக்கும் பொதுவான ஒன்றாகும். கூட்டுடமையாக்கத்துக்காக ஒரு கோடி விவசாயிகளை அழித்தொழித்தது மிகப் பயங்கர அனுபவமாக இருந்ததாகவும் ஆனால் அது முற்றிலும் அவசியமாக இருந்ததாகவும் இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஸ்டாலின் வின்ஸ்ரன் சேர்ச்சிலிடம் கூறினார். இந்த அளவு பாரிய வன்முறைகள் எதுவும் ஸ்டாலினுக்கு முந்திய காலத்தில் நடைபெறவில்லை. ஆனால் லெனினிச அரசு சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அடிபணியாத விவசாயிகளை அடக்குவதில் தயக்கம் காட்டவில்லை. மேலும் வரலாற்றுத் தேவை என்ற வாதத்தை முன்வைக்கவும் அவர்கள் தயாராய் இருந்தனர். இந்தக் கோட்பாட்டின் வெளிப்படையான ஒரு வடிவத்தை வரலாற்றுப் பதிவில் இருந்து எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
1919ல் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது செம்படையின் ஒரு பிரிவுக்குத் தலைமைதாங்கிய பிலிப் குஸ்மிச் மிரோனோவ் சோவியத் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்குட் படுத்தப்பட்டார். மிரோனோவ் ஒரு வறிய கொசாக் குடும்பத்தில் பிறந்தவர். சார் காலத்தில் ஒரு படைவீரனாக இருந்தார். 1917 புரட்சி இயக்கத்தில் பங்குபற்றி விரைவிலேயே செம்படையில் ஓர் உயர்பதவி பெற்றார். எனினும் தென்முனை யுத்தத்தில் நம்பிக்கையுடன் தலைமைதாங்கிக்கொண்டிருந்தபோது தனது சக தளபதிகளினால் தனது இனத்தைச் சேர்ந்த கொசாக் விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறை நடவடிக்கைகளால் மனம் பாதிக்கப்பட்டார். இத்தகைய நடவடிக்கைகள் கொசாக்குகளை வெண்படையினரின் முகாமுக்குள் தள்ளுவதற்கே உதவும் என்று கூறி அவர் மீண்டும் மீண்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கடைசியில் இராணுவத்தின் அரசியல் பொறுப்பாளியாக இருந்த ட்றொட்ஸ்கியாலேயே கட்டுப்பாடின்மை, விசுவாசமின்மை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
47

Page 82
இந்த விசாரணையின்போது விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களின் விளைவாக ஏற்பட்ட நேர்மையான தார்மீகக் கோபம் காரணமாகவே மிரோனோவ் அவ்வாறு நடந்து கொண்டார் என்று அவர் தரப்பில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசு தரப்பில் கூறப்பட்ட மறுப்பு விளைவே வழிமுறையை நியாயப்படுத்துகின்றது என்ற கோட்பாட்டைத் தெளிவாகவே உறுதிப் படுத்துகின்றது. அதிகாரபூர்வமான விசாரணை ஆவணத்தில் இருந்து ஒருபகுதி சோவியத் சஞ்சிகையான ஒகோன்யோக்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து நான் இங்கு மேற்கோள் தருகின்றேன்: "விசாரணைகளில் இருந்து அத்துமீறல்கள் நடைபெற்றதற்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரஞ்சுப்புரட்சியின் வரலாற்றுக்குத் திரும்பிச்சென்று அங்கு நடைபெற்ற எதிர்ப்புரட்சிகர விவசாயக் கிளர்க்சியை நினைவுகூர்ந்தார். இக்கிளர்ச்சி ஜேகோபியன் அரசால் மிகவும் மோசமாக அடக்கப்பட்டது. வழக்குரைஞர் தொடர்ந்து சொன்னார்":
“ஜெகோபிய இராணுவம் பயங்கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை நீங்கள் காண்பீர்கள். தனி நபர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது அது பயங்கரமானது தான். ஆனால் அந்த ராணுவ நடவடிக்கைகளை வர்க்கப்பகுப் பாய்வின் வெளிச்சத்தில் மட்டும்தான் விளங்கிக்கொள்ள முடியும். அவை வரலாற்றினால் நியாயப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் அவற்றைக் கொண்டு நடத்தியது ஒரு புதிய முற்போக்கான வர்க்கமாகும். இப்போதும் அதுதான் நடைபெற்றுள்ளது".
இவ்வகையில் பயங்கரமும் அதீத கொடுமைகளும்கூட ஒரு முற்போக்கு வர்க்கத்தின் நலன்களுக்கு உத்வுவதாக நம்பப்பட்டால் குற்றமற்றவை என்று கருதப்பட முடியும். இந்தக் கதையின் முரண்சுவை இந்த வாதத்தை முன்வைத்த வழக்குரைஞருக்கு நடந்த சம்பவத்தைக் கூறாமல் பூரணமாகாது. இந்த வழக்குரைஞர் ஸ்மில்கா ஒரு முன்னாள் போல்ஷெவிக். ஸ்டாலினிச காலத்தில் ஸ்மில்கா, ட்றொட்ஸ்கியவாத எதிரணியில் இணைந்தார். இவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அடிபணிந்தார். கடைசியில் முப்பதுகளில் நிகழ்ந்த களையெடுப்பின் போது எவ்வித சுவடு மற்று காணாமல் போய்விட்டார். அவருக்கும் அவரது சக எதிர்ப் பாளர்களுக்கும் எதிரான வன்செயல் மிரோனோவுக்கு எதிராக ஸ்மில் கா முன்வைத்த அதே வரலாற்றின் முற்போக்கு
148

அணிநடையினால் நியாயப்படுத்தப்படும் என்று ஸ்டாலின் சந்தேகமின்றிக் கூறியிருப்பார். чы
இந்தக் கட்டுரையின் தொடக்கத்துக்கு மீண்டும் வருவோம். சோவியத் யூனியனில் உள்ள அனேகரைப் பொறுத்தவரை ஏகாரெறினபேர்க்கில் இறந்த பதினொருபேரின் விதியும் தனிநபர்கள் என்றவகையில் அவர்களது உள்ளார்ந்த இயல்புகளுக்கு அப்பாலான ஒரு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தன்னிச்சையான கொலை இதற்குப் பின் வரவிருந்த எண்ணிக்கையற்ற படுகொலைககளுகு முன்னோடியாகும். இந்தப் பிரச்சினை தொடர்பாக எனது எதிரொலிகளை எழுப்ப உந்தப்பட்டதற்குக் காரணம் உண்டு என்பதை நான் இங்கு வெளிப்படையாகக் கூறவேண்டும். வன்முறையின் ஒழுக்கவியல் பற்றி கடந்தகாலத்தைவிட இப்போது நான் மிகவும் தீவிரமாச் சிந்திப்பதற்கு நமது அண்மைக்கால இரத்தக்கறை படிந்த வரலாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கையிலுள்ள அநேக தீவிரவாதிகள் (radicals) இந்தப் பிரச்சினையை எழுப்புவது ஒருமிகை உணர்ச்சிப் பலவீனம் என சிலகாலத்துக்கு முன் கருதியிருக்கக்கூடும். இன்று அத்தகைய விமர்சனத்துக்கு ஒருவர் தன்னை உட்படுத்தாமல் இந்த விடயங்கள் பற்றி விவாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நமது அனுபவத்தின் ஊடாக அதிகாரத்தின் ஈவிரக்கமற்ற தன்மையினால்- அது சட்டரீதியான ஆட்சியாளர்களினதோ அல்லது சட்டரீதியற்ற ஆயுதக் குழுக்களினதோ எதுவாயினும்- ஏற்படும் மனித இழப்பின் விலையை நாம் அறிந்திருக்கிறோம்.
எனினும் அரசியல் வன்முறைகளுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை நான் குறிப்பிடவேண்டும். சோமோசா, மார்க்கோஸ் அல்லது டுவாலியர் போன்றோரின் வன்முறை தங்களதும் தங்களைச் சார்ந்த வர்க்கத்தினதும் அதிகாரத்தின் மூலமும் செல்வத்தையும் சலுகைகளையும் பேணுவதன் மூலமும் தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நான் இங்கு முக்கியத்துவம் கொடுத்துப்பேசும் வன்முறை இதில் இருந்து வேறுப்ட்டது. இது ஒரு கருத்தியலினால் (ideology ) தூண்டப்படுவது. அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொள்வோரினால் விசுவாசமாக நம்பப்படும் வெளிப்படையான ஒரு ஒழுக்கவியல் புனிதத்தன்மையை அதற்குக் கொடுப்பது. இடதுசாரிகளிடம் மட்டும்தான் இந்தத் தன்மை காணப்படுகின்றது என்று நான் கூறவரவில்லை. பதிலாக
49

Page 83
ஃபாசிசவாத, தீவிர தேசியவாத, மத அடிப்படைவாத இயக்கங்களுக்கெல்லாம் இந்தப்போக்குப் பொதுவானது. இந்த இயக்கங்கள் வெவ்வேறு சமூக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போதிலும் இவற்றின் தத்துவார்த்த அடிப்படைகள் முற்றிலும் வேறுபட்டவை எனினும் கருத்தியல் வேட்கையினால் ஏற்படும் போதை இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு குனாம்சமாகும்.
"அவர்களுடைய ஒழுக்கமும் நமது ஒழுக்கமும் என்ற கட்டுரையில் ஒரு முக்கியமான பகுதியுள்ளது. போல்ஷெவிக்குகளின் 'திருச்சபை சார்ந்த ஒழுக்கம் (Jesuitical Morality ) எனக் குறிப்பிட்டு ஒரு விமர்சகர் சாடியதனால் தூண்டப்பட்டு ட்றொட்ஸ்கி ஒரு வகையில் 'திருச்சபைவாதிகளை ஆதரிக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார். "இதுவரை அவர்களது நடைமுறை ஒழுக்கவியலைப் பொறுத்தவரை திருச்சபைவாதிகள் கத்தோலிக்கப் பாதிரிமார்களை அல்லது பிற மதக் குருக்களைவிட முற்றிலும் மோசமானவர்கள் அல்ல. பதிலாக அவர்களை விட மேலானவர்கள். அவர்களை விட உறுதியான, திடமான, சாதுரியமானவர்கள். திருச்சபைவாதிகள் மிகவும் மத்தியத்துவப் படுத்தப்பட்ட, ஆக்கிரமிப்புக் குணமுடைய, எதிரிகளுக்கு மட்டுமன்றி ஆதரவாளர்களுக்கும்கூட அபாயகரமான ஒரு தீவிரவாத அமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தினர். தனது உளவியலையும் செயல் முறையையும் பொறுத்தவரை "வீரயுகத்தைச்சேர்ந்த" ஒரு திருச்சபைவாதி தன்னை ஒரு சராசரி மதக்குழுவில் இருந்து, ஒரு தேவாலயக் கடைக்காரனின் நிலையில் இருந்து ஒரு தேவாலயப் போர்வீரனாக வேறுபடுத்திக் காட்டுகின்றான், இதில் ஒன்றை அல்லது மற்றதை இலட்சிய மயப்படுத்தவேண்டிய காரணம் எதுவும் நமக்கில்லை. ஆனால் ஒரு வெறிகொண்ட போர்வீரனை ஒரு மந்தமான, சோம்பேறித்தனமான கடைக்காரனின் கண்கொண்டு நோக்குவது முற்றிலும் பயனற்றது".
ட்றொட்ஸ்கி முற்றிலும் வடிவ, உளவியல் உவமானங்களின் அடிப்படையில் போல்ஷெவிக்குகளுக்கும் திருச்சபை வாதிகளுக்கும் இடையே ஒரு ஒப்புமை காண முயல்கிறார். ஒருபுறத்தில் போல்ஷெவிக்குகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே உள்ள் முரண்நிலையுடன் மறுபுத்தில் திருச்சபைவாதிகளுக்கும் தேவாலயப் படிநிலை அமைப்புகளுக்கும் இடையே உள்ள முரண்நிலையினை ஒப்பிடுகிறார். ஒரு மார்க்சியப் புரட்சிவாதியிடம் இருந்து திருச்சபைவாதிக்குக் கிடைக்கும் எதிர்பார்க்கமுடியாத
150

இந்தக் கெளரவம் முதல் பார்வைக்குத தோன்றுவதுபோல அந்த அளவு ஆச்சரியப் படத்தக்க ஒன்றல்ல. ஒரு விசுவாசமுள்ள மார்க்சியவாதி வரலாற்றுக் குறிக்கோளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதில் உள்ள நெஞ்சுரம் ட்றொட்ஸ்கி ஒப்புக் கொள்வதைப்போல பெரும்பாலான தீவிரவாத மதக்குழுக்களிடம் காணப்படும் உன்மத்தநிலைக்கு கிட்டத்தட்டச் சமமானது. "அவர்களது ஒழுக்கமும் நமது ஒழுக்கமும்" என்ற கட்டுரையின் இறுதியில் மிகுந்த சொற்சாதுரியத்துடன் முடிவுரையாகக் கூறுகையில் வரலாற்றை ஒரு அதீத சக்தி என்ற வகையில் மதத்துடன் அரைகுறையாகவேனும் இணைத்து நோக்குவது தெளிவு.
"இந்த ஆழ்ந்த நெருக்கடியான நிகழ்வுகளில் (இந்த நூற்றாண்டின் பாரிய அரசியல் நெருக்கடிகளை இங்கு ட்றொட்ஸ்கி குறிப்பிடுகிறார்) "ட்றொட்ஸ்கியவாதிகள்” வரலாற்றின் ஒத்திசைவை அதாவது வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியலைக் கற்றுக்கொண்டார்கள். இந்தப் புறநிலையான ஒத்திசைவுக்கு ஏற்றவகையில் தங்கள் அகநிலையான திட்டங்களையும் செயற்பாடுகளையும் எவ்வாறு அதற்குக் கீழ்ப்படுத்துவது என்பதையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெற்றிகரமாகவே அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று தோன்றுகின்றது. வரலாற்று நியதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களில் தங்கியிருக்கவில்லை. தங்கள் ஒழுக்க அளவு கோல்களுக்கு உட்படவில்லை என்ற உண்மைகளால் அவர்கள் கைசேதப்படாதிருக்கவும் கற்றுக்கொண்டார்கள். மிகவும் சக்திவாய்ந்த தங்கள் எதிரிகளின் பலம் வரலாற்று அபிவிருத்தியின் தேவைகளுக்கு நேர் முரணாக இருப்பதையிட்டு அச்சப்படாதிருக்க அவர்கள் கற்றுக்கொண்டார்கள். புதிய் வரலாற்று வெள்ளம் தங்களை அடுத்த கரைக்குக் கொண்டு செல்லும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் எவ்வாறு எதிர்நீச்சல் அடிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். எல்லோரும் எதிர்க் கரையை அடைய மாட்டார்கள். அநேகள் மூழ்கி விடுவார்கள். ஆனால் திறந்த கண்களுடனும் பற்றுறுதியுடனும் இந்த இயக்கத்தில் பங்கு பற்றுவதனால் மட்டும்தான் ஒரு சிந்திக்கும் உயிரி உயர்ந்த தார்மீகத் திருப்தியைப் பெறமுடியும்”
மதத் தொடர்பு இங்கு தெளிவாகத் தெரிகிறது. வரலாறு மனிதனுக்கு ஒரு வாழ்வு நீடித்த பலத்தைத் தரும் கடவுள் போன்ற ஒரு சக்தி என்பது மட்டுமல்ல; வர்க்கமற்ற சமூகம் எதிர்க்கரை என்பதும் இங்கு முக்கியமானது. அதை அடைவதற்கு ஒருவர் ஆற்றைக் கடக்க வேண்டும். அங்குதான் விமோசனம் இருக்கின்றது.
151

Page 84
பன்யானும் வேறு அனேக தெய்வீகப் பாடல் ஆசிரியர்களும் இந்த மொழியை நன்கு அறிந்திருப்பார்கள்.
ட்றொட்ஸ்கி இந்தக் கட்டுரையை செர்ஜியைப்போல் அன்றி, ஒரு அரசியல் செயற்பாட்டாளனான தனது இரண்டாவது மகன் லியோன் செதோவ், ஸ்டாலினது கையாட்களால் Lunarffaio வைத்துக் கொல்லப்பட்ட பின்னர் பிரசுரித்தார். அவருடைய நினைவுக்கே இந்தக் கட்டுரையைச் சமர்ப்பணம் செய்துமிருந்தார். செதோவைக் கொன்றவர்கள் ட்றொட்ஸ்கியை ஆகர்ஷித்த அதே வரலாற்றுக் குறிக்கோளை அடையப் பணியாற்றுவது என்ற கேள்விக்கே இடமில்லாத ஒரு நம்பிக்கையினாலேயே தூண்டப்பட்டிருப்பார்கள். கொலைகாரருள் ஒருவர் என பின்னர் இனங்காணப்பட்ட செர்ஜி எஃரோன் என்பவரின்- இவர் மாபெரும் ரஷ்யப் பெண் கவிஞரான மரினா ஸ்வெதீவாவின் கணவர்- திருப்திநிலை இதனைக் காட்டுகின்றது. எஃரோனின் பெற்றோர் பழைய நரோத்னயா வொல்யா குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தக்குழு சார் ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஒக்டோபர் புரட்சிக்குப் பிறகு போல்ஷெ விக்குகள் தவறான பாதையில் செல்கிறார்கள் என்று கருதி வெண்படையில் இணைந்து பின்னர் நாட்டைவிட்டு வெளியேறினார். பாரிசில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வெண்படைக்கு ஆதரவாக இருந்தது தவறு என்றும் தன் குடும்பச் சூழல் மூலம் தான் பெற்றுக்கொண்ட நம்பிக்கைகள் தவறானவை என்றும் உணர்ந்தார். 1930களில் அவர் சோவியத் ஆட்சியாளர்களின் ஆதரவாளனாக மாறியது மட்டுமன்றி மேற்கு ஐரோப்பாவில் அதன் இரகசிய உளவாளியாகவும் செயற்பட்டார். லியோன் செதோவின் கொலையில் ப்ங்குபற்றியதோடு ட்றொட்ஸ்கியோடு இணைந்த முன்னாள் GPU உளவாளியான இக்னாஸ் றிஸன் கொலையிலும் பங்குபற்றினார். சிறந்த ஆய்வறிவாளர் பலர் இக்காலப்பகுதியில் ஸ்டாலினிசம்தான் சோசலிசத்துக்கான அதிகார பூர்வமான சரியான பாதை என்ற நம்பிக்கையுடன் கொலை செய்வதற்கும் ஆயத்தமாக இருந்ததற்கு வேறு உதாரணங்களும் உண்டு. மிகச்சிறந்த மெக்சிக்சன் ஓவியரான டேவிட் சீகுயிரோஸ்தான் மெக்சிகோ நகரில் ட்றொட்ஸ்கியின் புகலிடத்தின் மீது முதலாவது தாக்குதலைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கி நடத்தியவர். இறுதியாக ட்றொட்ஸ்கியின் மண்டையோட்டுக்குள் ஐஸ்கட்டியை உடைக்கும் கூர் ஆயுதத்தைக் செருகிய றமன் மெர்காடர் தன்சார்பில் கிரம்லினில் வைத்து ஸ்டாலினின் கையில் இருந்து தனது தாய் லெனின் பரிசைப் பெற்றதைப் பிழையாகக் கருதவில்லை.
52

ஒரு ஸ்டாலினிசவாதி ட்றொட்ஸ் கியைக் கொல் லத் துணிந்தமைக்கும் ஒரு அடிப்படைவாதி சல்மான் றுஷ்டியைக் கொல்லத் துணிந்தமைக்கும் ஒரு ஜே.வி.பி உறுப்பினர் விஜய குமாரணதுங்கவைக் கொல்லத் துணிந்தமைக்கும் பொதுவாக உள்ள அம்சம், அதன் உச்ச விளைவு- அது சோசலிசமாக, கடவுளாக அல்லது தேசமாக -எதுவாக இருப்பினும் அந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் மனிதனை சாதாரண ஒழுக்கவியல் தளைகளில் இருந்து விடுவித்து விலக்கு அளிக்கின்றது என்ற ஆழ்ந்த நம்பிக்கையே ஆகும். மூடுண்ட மனமும் கட்டித்த கோட்பாடு சார்ந்த நம்பிக்கையின் உறுதிப்பாடும் ஹிட்லர் ஸ்டாலின் அல்லது பொல்பொட் போன்றோரிடம் அரச ப்லத்துடன் ஒன்றிணையும்போது நச்சுவாயுக் கூடங்களும் வெகுஜனக் கொலை முகாம்களும் பின் தொடரும். அதனால்தான் தூய்மைவாத (Puritana ) முதியோருக்கு குறொம்வெல் கூறிய அறிவுறுத்தல் மதிப்புயர்ந்ததாக உள்ளது. "கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் தவறிழைப்பது சாத்தியம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்”
153

Page 85
நிக்கோலாய் இவானோவிச் புக்காரின் பிறந்த நூற்றாண்டையும்
அவர் கொல்லப்பட்ட ஐம்பதாவது ஆண்டையும் நினைவுகூர்ந்தும்
அன்னா மீக்காய்லோவ்னா லாறினாவின் காதல், விசுவாசம் சகிப்புத் தன்மை ஆகியவற்றைக் கெளரவித்தும்
நெடுநாள் பணி
ஒரு நாடகம்
54

முன்னுரை
"விரைவாகவோ அல்லது தாமதித்தோ எனது தலையில் சுமத்தப்பட்டுள்ள அழுக்குகளை வரலாற்று வடிகழுவித் துடைத்து விடும் என்பதை எனது வாழ்வின் இந்தக் கடைசி நாட்களில் நான் உறுதியாக நம்புகின்றேன்".
நிக்கோலாய் புக்காரின் கட்சியின் எதிர்காலத் தலைவர்களுக்கு எழுதியகடிதம். a
1917ஆம் ஆண்டுப் புரட்சியின் பின்னர் சோவியத் நாட்டின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த நிக்கோலாய் புக்காரின் 1938ல் நடைபெற்ற பிரசித்திபெற்ற மொஸ்கோ வழக்கில் பிரதான எதிரியாவார். அவருக்கும் இன்னும் இருபதுபேருக்கும் எதிராக, வெளிநாட்டுச் சக்திகளுக்கு உளவு கூறியமை, தேசத்துரோகம், நாசவேலைகளில் ஈடுபட்டமை, அரசியல் கொலைகள் புரிந்தமை, அரசைக் கவிழ்ப்பதற்குச் சதிசெய்தமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவரும் அவருடன் குற்றம். சுமத்தப்பட்ட பெரும்பாலானோரும் மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1988 பெப்ரவரி மாதத்தில் சோவியத் உயர்நீதிமன்றம் அவரையும் ஏனையோரையும் இக்குற்றச் சாட்டுக்களில் இருந்து முற்றிலும் விடுவித்து அவர்களுக்குப் புனர்வாழ்வளித்தது. நெடுநாள் பணி என்ற எனது நாடகம் இந்த நிகழ்ச்சியை அடுத்து எழுதப்பட்டது. அவலம் நிறைந்த, அதேவேளை ஆர்வத்தைத் தூண்டுகின்ற புக்காரினது வாழ்வும் மரணமும் ஒரு விவரண நாடகத்துக்கு
55

Page 86
(a documentary play) ஏற்ற விஷயப் பொருளாகும். ஸ்டாலின் நிலத்தை வலுக்கட்டாயமாகக் கூட்டுடைமையாக்கியதை புக்காரின் எதிர்த்தார். பெருமளவிலான அரசியல் சுதந்திரத்தைச் சாத்தியப் படுத்தியிருக்கக் கூடிய, குறைந்த அளவு மத்தியத்துவப் படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும், குறைந்த அபிவிருத்தி வேகத்தையும் அவர் ஆதரித்தார். நான் இந்த நாடகத்தை எழுதிக்கொண்டிருந்த போது சோவியத் யூனியனில் பெரஸ்ரோய்காவின் கீழ், புக்காரின் ஆதரித்த கொள்கைகள் சரியென நிரூபிக்கப்படுவன போல் தோன்றின. ஆயினும் இந்த அரசியல் மோதலும் புக்காரினதும் அவரது மனைவியினதும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து நின்றமையே ஒரு நாடகத்துக்குரிய பொருள் என்றவகையில் புக்காரினது கதை என்னைக் கவர்ந்தமைக்குரிய காரணமாகும். தான் கைது செய்யப்பட இருந்த சமயத்தில் தன் குற்ற மின்மையை வலியுறுத்தும் கடிதம் ஒன்றை அவர் தன் மனைவியிடம் வாய் மொழியாக ஒப்புவித்தார். அதனை அவரது மனைவி மிக்காயில் செர்ஜிவிச் கொர்பச்சேவிடம் 1987 இலையுதிர் காலத்தில் கையளிக்கும்வரை தனது சிறைவாழ்வுக்காலம் முழுவதிலும் தனது ஞாபகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.
புக்காரினை ஒரு இலட்சிய நாயகனாகக் காட்ட நான் முயலவில்லை. அவர் எதற்காகப் போராடினாரோ அதன் முக்கியத்துவத்தில் இருந்து தனிப்படுத்திப் பார்க்க முடியாத அவருடைய தவறுகள், பலவீனங்கள், ஊசலாட்டங்கள் ஆகியவற்றுடனேயே நான் அவரைக் காட்டியுள்ளேன். இருப்பினும் நான் எழுதமுயன்றது ஒரு விபரண நாடகம் என்பதை நான் அழுத்திக்கூற வேண்டும். இந்த நாடகத்தை நடிக்கக்கூடிய அளவுக்கு மட்டுமே பாத்திரங்களும், அவற்றின் உறவுகளும் வளர்க்கப் பட்டுள்ளன. 1988ல் அனுகூலமாய் அமைந்த ஒரு புள்ளியில் இருந்து சோவியத் வரலாறு பின்னோக்கிப் பார்க்கப்பட்ட பின்னணியையும் சோவியத் யூனியனில் அதன்பிறகு ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களையும் காட்டுவதற்கு நாடகத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்துவதே எனது அடிப்படை நோக்கமாகும். இந்த நாடகத்தின் கட்டமைப்பு ஒரு பேட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண பார்வையாளர்கள் சோவியத் வரலாற்றுப் போக்கையும் அதன் முக்கிய தலைவர்களையும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள் என நான் கருதியதே இந்த அமைப்பைத் தீர்மானித்தது. பேட்டி முறையின் ஊடாக அவர்களுக்கு வேண்டிய தகவல்களைக் கொடுத்து உதவ முடிந்தது.
PS

இந்த நாடகத்தின் முதல் வடிவத்தை நான் எழுதும் போது புக்காரினின் விதவையான அன்னா மிக்காய்லோவ்னா லாறினாவின் நினைவுக் குறிப்புக்களையே நான் பெரிதும் அடிப்படையாகக் கொண்டேன். இக்குறிப்புக்கள் சோவியத் சஞ்சிகையான ஓகொன்யோக் இதழில் (1987 நவம்பர் 28, டிசம்பர் 5) பிரசுரிக்கப்பட்டன. இந்த நாடகம் ஒரு நாடகப்படுத்தப்பட்ட வாசிப்பாக றிச்சார்ட் டி.சொய்சா அவர்களால் (அவரே புக்காரினாக நடித்தார்) 1988 செப்டெம்பரில் மேடையேற்றப்பட்டது. அவரது திறமையான நடிப்புக்கு மேலாக எனது நாடகப் பிரதியை நிறைவு செய்யும் பல கற்பனைப் பூச்சுக்களைத் தன் மேடையேற்றத்தின்போது அவர் செய்திருந்தார். நான் முன்னோக்கிப் பார்த்திராத சில சாத்தியப் பாடுகளைக்கூட அவை திறந்து காட்டின. அதுவே அவரது கடைசி மேடைப் பிரவேசம் என்பதும் அவர் ஏற்று நடித்த துன்பியல் பாத்திரம் அவரது சொந்த முடிவையும் குறித்து நின்றது என்பதும் வருத்தம் தரும் உண்மைகளாகும்.
இதே வேளை மொஸ்கோவில் வாழ்ந்து கொண்டிருந்த புக்காரினின் விதவை மனைவிக்கு நான் எனது நாடகப் பிரதி ஒன்றை அனுப்பியிருந்தேன். அவர் ஆங்கிலம் வாசிப்பாரோ என்ற ஐயத்தில் ரஷ்ய மொழியில் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பினேன். நான் நினைத்தது போலவே தன்னால் நாடகத்தை வாசிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டு, எனினும் எனது முயற்சிக்கு நன்றி தெரிவித்து அவர் பதில் எழுதினார். (இரண்டு கடிதங்களின் மொழிபெயர்ப்பும் பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது) அத்துடன் சோவியத் சஞ்சிகையான ஸ்னம்யா(1988 தொகுதி 10,11,12)வில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த தனது நினைவுக் குறிப்புகளில் ஒரு பிரதியையும் அவர் அனுப்பியிருந்தார். அவை பின்னர் NezabyVaemoe (மறக்க முடியாதவை) என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன. அவரது முன்னைய நினைவுக் குறிப்புகள் அவரது கணவர் கைது செய்யப்படும்வரை உள்ள காலப்பகுதி பற்றியவை. புதிய நினைவுக் குறிப்புகள் அதற்குப் பிறகு அவர் சிறைமுகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த நீண்ட வருடங்களைப் பற்றியவை. தன்னுடைய கடிதத்தில் திருமதி புக்காரின் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "உங்கள் நாடகத்தை நிறைவுபடுத்துவதற்குரிய துணைத் தகவல்கள் இத்துடன் உள்ளன"
எனது நாடகத்தின் முதல் வடிவத்தை நான் எழுதிய போது நான் அறிந்திராத (வேறு பலரும்தான்) திருமதி புக்காரின்
157

Page 87
அவர்களின் வாழ்க்கைப் பகுதியை அவரது புதிய நூல் உள்ளடக்கியிருந்த போதிலும், அதனை வாசிப்பது ஓர் உருக்கமான அனுபவமாக இருந்த போதிலும் அந்த நாடகம் மேடையேற்றப் பட்டபோது அவர் கடிதத்தில் குறிப்பிட்டதுபோல் அதில் மாற்றங்கள் செய்யும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. எனினும் அண்மையில் திரு. ரவீந்திர ரணசிங்க இந்த நாடகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து மேடையேற்றும் நோக்குடன் என்னை அணுகினார். இந்த நாடகத்தின் தொனிப்பொருள் நமது சமகால அரசியலுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதனால் இதனைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து மேடையேற்ற வேண்டும் என்று றிச்சார்ட் டி சொய்சாவும் கருதினார். ரவீந்திர ரணசிங்கவின் திட்டத்தை நான் வரவேற்றேன். அதேவேளை திருமதி புக்காரினின் நினைவுக் குறிப்புக்களின் அடிப்படையில் இந்த நாடகத்தைத் திருத்தியும் விரித்தும் எழுதுவதற்குரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்றும் நான் நினைத்தேன். அதனாலேயே இந்தப் புதிய திருந்தியவடிவம்.
இந்த நாடகத்தில் இடம்பெறும் எல்லாச் சம்பவங்களும் (காட்சி 4ல் இடம்பெறும் குறிசொல்லியின் சம்பவம் உட்பட) வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும் பாத்திரங்களின் சில உணர்வுகள், அபிப்பிராயங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை ஒரு நாடக ஆசிரியனுக்குரிய கற்பனைச் சுதந்திரத்தைக் கடைப்பிடித்துள்ளேன்.
கவிஞர் ஒசிப் மன்டெல்ஸ்தாம் வழக்கில் புக்காரின் தலையிட முயன்ற சம்பவம் நதேஸ்தா மன்டெல்ஸ் தாம் எழுதிய வொஸ்போமினானியா என்ற நினைவுக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஆங்கிலத்தில் Hope Against Hope (நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நான் இந்த நாடகத்தில் எடுத்தாண்டுள்ள ஸ்டாலின் பற்றிய மன்டல்ஸ்தாமின் கவிதை கிளாறன்ஸ் பிறவுனின் மொழிபெயர்ப்பு. இதைவிடச் சிறப்பாக என்னால் மொழிபெயர்த்திருக்க முடியாது.
றெஜி சிறிவர்த்தன.
158

மேடைக் குறிப்பு
இந்த நாடகம் புக்காரினின் விதவையான அன்னா மீக்காய் லோவ்னா லாறினாவுக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கும் இடையே நடைபெறும் ஒரு பேட்டியின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேட்டி புக்காரினுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் 1987 நவம்பரில் நடைபெறுவதாகக் கொள்ளப்படுகின்றது.
மேடை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேடையின் இடது பக்கம் (பார்வையாளர்களுக்கு இடப்பக்கம்) 1987 நவம்பரில் அன்னா மீக்காய்லோவ்னா லாறினாவின் சிறிய மாஸ்க்கோ விடுதியின் ஒரு மூலையை குறிக்கின்றது. இரண்டு நாற்காலிகள் அவற்றுக்கு இடையே பதிவான ஒரு மேசை. பின்னால் புத்தகங்களும் தாள்களும் வைக்கப்பட்டுள்ள ஒரு எழுதும் மேசை. அதன்மேல் புக்காரினின் ஒரு பெரியபடம் வைக்கப்பட்டுள்ளது.
மேடையின் வலது பக்கத்தில் அன்னா மீக்காய்லோவ்னாவின் நினைவாகக் கூறப்படும் பழைய நிகழ்ச்சிகள் நடித்துக் காட்டப்படும். இமே என்பது மேடையின் இடது பக்கத்தையும் வமே என்பது வலது பக்கத்தையும் குறிக்க இனி பயன்படுத்தப்படும்.
வமேயில் சில பொருட்களே இருக்கவேண்டும். நாற்காலிகள் ஒரு மேசை, வமேயில் இடம்பெறும் காட்சிகளில் யதார்த்தம் இருக்கக்கூடாது. இது நினைவுலம் மட்டுமே. இந்நாடகத்தில் ஒளியமைப்பு ஒரு முக்கிய பகுதியாகும். இமேக்கும், வமேக்கும் இடையில் ஏற்படும் நகர்வு ஒளி மாற்றங்களினால் உணர்த்தப்படும். இமேயில் அன்னா மீக்காய் லோவ்னாவுக்கும் பத்திரிகையாளனுக்கும் இடையே உரையாடல் நடைபெறும் நிகழ்வுகளின்போது வமே எப்போதும் இருளாகவே இருக்கும். இருப்பினும் வமேயில் கடந்தகால நிகழ்வுகள் நடித்துக்காட்டப்படும்போது இமே முற்றிலும் இருளில் அல்லது மங்கிய ஒளியில் இருக்கலாம். இது நிகழ்வின் தனிமையைப் பொறுத்தது. வமேயில் ஒளி அமைப்பு பெரும்பாலும் குவி ஒளியாக இருக்கும். ஒளிப்பொட்டைத் தவிர்ந்த இடங்கள் இருளாக இருக்கும்.
இந்நாடகத்தில் அன்னா மீக்காய் லோவ்னாக்கள் இருவர் வருகின்றனர். ஒருவர் எழுபதுவயதைத்தாண்டிய மூதாட்டி .
l59

Page 88
இவர் இமேயில் மட்டுமே தோன்றுவார். மற்றவர் இளமைக்கால அன்னா. இவர் வமேயில் மட்டுமே தோன்றுவார். நாடகத்தில் ஒருவர் அன்னா மீக்காய் லோவ்னா என்றும் மற்றவர் லாறினா என்றும் வேறுபடுத்தப்படுவர்.
காட்சி 1 இமே
(அன்னா மீக்காய் லோவ்னா ஒரு இளம் பத்திரிகையாளனுடல. மேடைக்கு வருகிறார். அவன் கையில் ஒரு ஒலிப்பதிவுக் கருவியை வைத்திருக்கிறான்)
அன்னா மீக்காய் லோவ்னா தயவுசெய்து உட்கார்.
பத்திரிகையாளன் நன்றி. (இருவரும் அமர்கின்றனர். அவன் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள மேசையில் ஒலிப்பதிவுக் கருவியை வைக்கிறான். ஆயினும் அதை இன்னும் இயக்கவில்லை.)
அன்னா மீக்காய் லோவ்னா சரி, இப்போது உனக்கு நான் என்ன சொல்ல வேண்டும்.
பத்திரிகையாளன்
எல்லாவற்றையும். உங்கள் இளமை நாட்களைப்பற்றி. தோழர் புக்காரினுடன் உங்களுக்கு இருந்த உறவு பற்றி. உங்கள் திருமணம் பற்றி.
அன்னா மீக்காய் லோவ்னா
(இடைமறித்து) தோழர் புக்காரின் உனக்குத்தெரியுமா? கடந்த 50 வருடத்தில் அவரை ஒருவர் தோழர் என்று விளித்துப் பேசுவதை நான் முதல்முறையாக இப்போதுதான் கேட்கிறேன்.
பத்திரிகையாளன் (சற்று பலத்தகுரலில்) அன்னா மீக்காய் லோவ்னா, வெட்கம் கெட்ட அந்த கடந்தகால வரலாறு அனைத்தும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. தோழர் புக்காரின் அவருக்குரிய இடத்தில் அமர்த்தப்படுவார். நமது புரட்சியின் மகத்தான புதல்வர்களுள் ஒருவராக மதிக்கப்படுவார் என்பது நிச்சயம்.
6O

அன்னா மிக்காய் லோவ்னா
எல்லாமே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சோவியத் பத்திரிகையாளனான நீ.என்னைப் பேட்டி காண்பது கூட ஆச்சரியம் தான் (அவன் அவசரப்பட்டு ஏதோ எதிர்ப்பாகச் சொல்ல முனைவதைத் தடுத்தவாறே) ஆம், எனக்குத் தெரியும். கிரெம்லினில் கொர்பச்சேவ் இருக்கிறார். ரஷ்யாவில் எல்லாம் சரியாகப் போகிறது. பல ஆண்டுகளாக நான் கனவு கண்டது இதுதான். ஆனால் இன்னும் நான் என் கண்களை அடிக்கடி துடைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் கனவுகாணவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது.
பத்திரிகையாளன் ஆனால் கெட்ட காலம் கழிந்துவிடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்போதும் இருந்திருக்கவேண்டும்.
அன்னா மீக்காய் லோவ்னா
நிக்கோலாஸா, அவர்தான் புக்காரின், அந்த நம்பிக்கை மூச்சை எனக்குள் செலுத்தியிருக்காவிட்டால் என்னால் முடிந்திருக்காது. உனக்குத் தெரியுமா? அந்தப் பயங்கரமான நாளில் அவர் வீட்டைவிட்டுப் போனபோது கிட்டத்தட்ட அவைதான் அவர் எனக்குக்க றிய கடைசி வார்த்தைகள். அப்போதே அவருக்குத் தெரிந்துவிட்டது:தான் மரணத்தை நோக்கிப் போய்கொண்டிருப்பது, "நிலைமைகள் மாறும்;. அவை மாறித்தான் ஆகவேண்டும்." இதுதான் அவர் சொன்னது. அதனால்தான் நான் தொடர்ந்தும் வாழ்வேன் என்பதை அவர் நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பினார். நான் வாழ்ந்தால்தான் அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முடியும். சிறைமுகாமில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும், என் மகனை என்னிடம் இருந்து பிரித்து அனாதை இல்லத்தில் போட்ட அந்த நாட்களிலும் எனக்கு உறுதியைத் தந்தது அந்த வார்த்தைகள்தான்.
காட்சி 2 வமே
(அன்னா மீக்காய் லோவ்னா கடைசியாகப் பேசும்போது இமேயில் விளக்குகள் மெல்லத் தணிகின்றன. அவை இருளும்போது
வமேயில் பிரகாசமான குவிஒளி ஒரு கட்டாய வேலை முகாமில் கைதியாக இருக்கும் இளம் லாறினா மீது விழுகின்றது.)
16

Page 89
குரல (ஒளிவட்டத்துக்கு வெளியில் இருந்து, கோபமாக) எழும்பு! (லாறினா எழும்புகையில் வமேயில் ஒளிபரவுகிறது. லாறினாவும் பிறிதொரு பென் கைதியும் அவர்களோடு ஆத்திரம்கொண்ட, சீர்உடை அணிந்த சிறைக்காவலனும் தெரிகிறார்கள்)
- லாறினா என்ன விசயம்? -
சிறைக்காவலன் " نه சோதிக்கவேணும், போ சுவருக்கு நேரே நில்!
இரண்டு பெண்களும் அவன் சொல்வதுபோல் செயகின்றனர். அவன் கைதிகளின் பொருட்களைக் கொட்டிக் கிளறித் தேடுகிறான். கடைசியில் ஒரு சிறிய புகைப்படத்துடன் வருகிறான்)
சிறைக் காவலன் (லாறினாவிடம்) இது உன்னுடையதா?
லாறினா geto
சின்றக்காவலன் இது ஆருடைய படம்?
லாறினா
எனது மகனுடையது.
சிறைக்காவலன்
பெட்டை நாயே! நீ இன்னமும் புக்காரினுடைய குட்டிநாயை காவித்திரிகிறாய் என்ன? (அவன் படத்தைக் கிழித்து வீசுகிறான். துண்டுகளைக் கால்ால் கசக்குகிறான்)
மற்றப் பெண் (அதிர்ச்சியடைந்து) என்ன வேலை இது!
சிறைக்காவலன் பொத்து வாய். அவளைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இல்லாவிட்டால். s
(அவன் கை முஷ்டியைக் காட்டி அவளை அச்சுறுத்துகிறான் இருள்.)
162

காட்சி 3 இமே
அன்னா மீக்காய் லோவ்னா
அந்த நாட்களில் சிறையிலேயே செத்துப்போய்விடுவேன் என்றுதான் நான் பயந்தேன். சாவுக்காக நான் பயப்படவில்லை. ஏனென்றால் அந்த நாட்களில் அந்த வேதனையோடும் நெருக்குவாரங்களோடும் வாழ்வதைவிட சாவது Os இருந்திருக்கும். ஆனால் நான் நிறைவேற்றவேண்டிய கடமை ஒன்று இருந்தது. அதற்காக நான் வாழ முயற்சிக்கவேண்டும் என்று நினைத்தேன்.
பத்திரிகையாளன்
தோழர் கொர்பசேவுக்கு எழுதக்கூடிய காலம் ஒன்று வரும்வரை நீங்கள் வாழ்ந்திருந்தது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது! அன்னா மீக்காய் லோவ்னா, நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? நீங்கள் தோழர் கொர்பசேவுக்கு எழுதிய கடிதத்தின் பிரதியைத் தருவீர்களா?
(அன்னா மீக்காய் லோவ்னா எழும்புகிறார். மேசைக்குப்போய் ஒரு தாளுடன் திரும்பி வருகிறார்.)
பத்திரிகையாளன் தயவுசெய்து படியுங்கள். (அவன் ஒலிப்பதிவுக் கருவியை இயக்குகிறான். அவர் படிக்கத் தொடங்குகிறார்)
9.
சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் பொதுச் செயலாளர் மிகாயில் செர்ஜியேவிச் கொர்பசேவ் அவர்களுக்கு,
பதட்டமான சர்வதேசச் சூழ்நிலையின் மத்தியில் மரணத்துக்குப்பின் எனது கணவர் நிக்கொலாய் இவானோவிச் புக்காரினுக்கு புனர்வாழ்வு அளிப்பதுபற்றிய பிரச்சினையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இப்போது இந்தக் கடிதத்தை எழுதுவதன் மூலம் எனது சார்பில் மட்டுமன்றி புக்காரின் என்மீது பாரப்படுத்திய பணியின் சார்பிலும் நான் உங்களுடன் பேக்கிறேன். 1937ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் கட்சி மாநாட்டுக்கு கடைசித்தடவையாக நிகோலாய் இவானோவிச் சென்றபோது தான் இனி ஒருபோதும் திரும்பிவரப்போவதில்லை என்பதை உணர்ந்திருந்தார். அப்போதைய எனது இளமையை மனம்கொண்டு தனது மரணத்தின் பின் தனது பழிநீக்கத்துக்காகப்
63

Page 90
போராடும்படி என்னைக் கெஞ்சிக்கேட்டுக்கோண்டார். சகிக்கமுடியாத மனநெரிசல்மிக்க அந்தக்கணம் என் நினைவில் என்றும் அழியாது.
விசாரணைகளினாலும், சாட்சிகளுடன் நிகழ்ந்த, அவருக்கே" விளங்கிக் கொள்ளமுடியாத பயங்கரமான மோதல்களினாலும் ஏற்பட்ட தாங்கமுடியாத வேதனையும், படுமோசமான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்பட்ட பலவீனமும் காரணமாக புக்காரின் கண்ணிர் சிந்தியவாறு என் எதிரே முழங்காலில் விழுந்து கட்சியின் எதிர்காலத் தலைவர்களுக்கு விலாசமிட்டு தான் எழுதிய கடிதத்தின் ஒரு சொல்லைக்கூட மறந்துவிடவேண்டாம் என்று என்னிடம் இரந்தார். தன்மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளை களையப் போராடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதைச் ச்ெய்வாய் என்று சத்தியம்செய், சத்தியம் செய், என்று மன்றாடினார். நான் சத்தியம் செய்து கொடுத்தேன். அந்தச் சத்தியப்பிரமானத்தை மீறுவது எனது மனசாட்சிக்கு விரோதமானது. '
பத்திரிகையாளன் கட்சியின் எதிர்காலத் தலைவர்களுக்கு அலர் எழுதிய கடிதமா? அவர் அதை உங்களை மனனம் செய்துகொள்ளச் செய்தாராP
அன்னா மீக்காய் லோவ்னா ஆம் இது நிகழ்ந்தது 1937ல் என்பதை நீ மறந்துவிடக்கூடாது. அப்போது அத்தகைய ஒரு கடிதத்தை எங்காவது மறைத்து வைத்திருப்பது மிகவும் அபாயகரமானது. எங்களது விடுதி சோதனையிடப்பட்டது- அத்தகைய ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டி ருந்தால் நான் கூடச் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பேன்.
பத்திரிகையாளன் அப்படியென்றால் இந்த ஐம்பது ஆண்டுகளும் அதை உங்கள் நினைவில் வைத்திருந்திருக்கிறீர்கள்?
அன்னா மீக்காய் லோவ்னா சிறை முகாம்களில் இருபது வருசங்களாக ஒவ்வொரு இரவும் அதை நான் எனக்குள் சொல்லிவந்தேன். சில பெண்கள் படுக்கைக்குப் போகுமுன் ஜெபம் செய்வதுபோல. சிறிது காலத் துக்குப் பிறகு உண்மையில் அவ்வாறு மனனம் செய்ய அவசியம்
164

இருக்கவில்லை. இந்தச் சொற்கள் என் மூளையில் எரிந்து கலந்துவிட்டன. ஆனால் நான் அதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தேன். நான் தொடர்ந்து வாழ்வதற்குரிய தைரியத்தையும் நம்பிக்கையையும் அவையே எனக்குத் தந்தன.
பத்திரிகையாளன் இந்தச் செய்தியைக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்ப இதற்குமுன் நீங்கள் ஒருபோதும் முயன்றதில்லையா? அந்த வாய்ப்பு உங்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லையா?
அன்னா மீக்காய் லோவ்னா
நான் முயற்சித்தேன், 1961ல், அச்சமயம் நான் சிறைமுகாமில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தேன்.ஸ்டாலினுக்கு எதிரான தன் இரகசியப் பேச்சை குருசேவ் நிகழ்த்தியிருந்த சமயம் அது. புக்காரினின் கடிதத்தை நான் கட்சிக்கு அனுப்பினேன். அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால் பிறகு குருசேவ் அரசியல் ரீதியாகப் பலவீனம் அடைந்தார். அவர் வீழ்ச்சியடைந்தபோது ஸ்டாலினிசத்துக்கு எதிரான அந்த அரைகுறை விலகல்சுட பிரஸ்நேவின் கீழ் மீண்டும் சரிக்கட்டப்பட்டது.
பத்திரிகையாளன் தேக்ககாலம் என்று அதை இப்போது அழைக்கின்றார்களே?
அன்னா மீக்காய் லோவ்னா தேக்ககாலம். அது ஒரு சூத்திரம். எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் அதன் உண்மையான பொருள் எப்படி இருந்தது தெரியுமா? ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த அவநம்பிக்கைக்குள் ஆழ்த்துவதாகவே இருந்தது. மாறும் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு அவநம்பிக்கையில் மூழ்கிக்கொண்டிருந்தோம்.
பத்திரிகையாளன் ஆனால் அது கடைசியில் உண்மையாகிவிட்டது. நீங்களும் வாய்திறந்து பேசிவிட்டீர்கள். (சற்று அமைதி)
பத்திரிகையாளன்ஸ்டாலினுடைய காலம் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும் அது தவிர்க்கமுடியாதது; அந்த வரலாற்றுச் சூழ்நிலையில் நாம்
65

Page 91
அந்தக் கட்டத்தை கடந்தே வந்திருக்க வேண்டும் என்று வாதிப்போரும் இருக்கிறார்கள்.
அன்னா மீக்காய் லோவ்னா தவிர்க்கமுடியாதது" நீ என்ன சொல்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஒரு நல்ல மார்க்சியவாதி என்ற வகையில் ஒரு நல்ல வரலாற்றுப் பொருள் முதல்லாதி என்ற வகையில் அதைப்பற்றி நான் பேசவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய். நானும் தான். ஆனால் நீ ஆச்சரியப்படுவாய். நீ தவிர்க்கமுடியாதது என்று சொல்லும்போது எனக்கு ஒரு விசயம் ஞாபகம் வருகிறது.
(இமேயில் ஒளி மெல்லத் தணிகிறது. அன்னா மீக்காய் லோவ்னா தனது கடைசி வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும் போது முற்றிலும் இருள்கிறது.)
அன்ன மீக்காய் லோவ்னா அது நடந்தது 1918ல், புரட்சிக்குப்பின் முதலாவது ஆண்டில். நிகோலாய் இவானோவிச் ஜேர்மனிக்கு அரசியல் அலுவலாகப்றஸ்ட்லிற்ரோவ்ஸ் ஒப்பந்தம் தொடர்பாக அனுப்பப்பட்டிருந்தார். அப்போது பேர்லினில் அசாதாரணமான குறிசொல்லும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டார். அத்தகைய விசயங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆயினும் ஒரு விடுப்பார்வம்
காரணமாக அவளைப் பார்க்கச் சென்றார்.
காட்சி 4 வமே
(இரண்டு ஒளிப் பொட்டுகள் வமேயில் விழுகின்றன. நிகொலாய் புக்காரினும் குறி சொல்பவளும் மேசை அருகில் இருக்கிறார்கள். புக்காரின் தனது வலது கையை மேசையின் குறுக்கே நீட்டியவாறு இருக்கிறார்; அவள் அதைப் பார்க்கிறாள்)
புக்காரின் பிறகு?,
குறிசொல்லி (சற்று மெளனத்துக்குப் பிறகு) எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
166

புக்காரின் இது பொய்.
குறிசொல்லி இல்லை. இதற்குமேல் எனக்கு எதுவும் தெரியவில்லை.
disasnr nifheir அது உண்மை இல்லை. நான் உன்னைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். உனது முகபாவம் மாறிவிட்டது. எனக்குச் சொல்ல விரும்பாத எதையோ நீ பார்த்துவிட்டாய் என்பது எனக்குத் தெரியும். சொல்லு. அதை வெளிப்படையாகச் உனக்கு அது தெரியாமல் இருக்கலாம். நான் ஒரு மார்க்சியவாதி.
குறிசொல்லி பிறகு ஏன் என்னிடம் வந்தாய்?
às rrrlsir சும்மா, ஒரு பொழுதுபோக்குக்கு பின்னேரம் ஒருவேலையும் இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கவேண்டும். அதுதான் விஞ்ஞான மனப்பாங்கு. சரி இப்ப சொல்லு.
குறிசொல்லி (தன் தொழில்மீது அவர் கொண்ட அவநம்பிக்கையால்
சினமுற்று குரலில் சற்று வஞ்சகத்தோடு)
உன் சொந்த நாட்டிலேயே நீ கொல்லப்படுவாய்.
y disas nu nifesör என்ன சொன்னாய்?
குறிசொல்லி உன் சொந்த நாட்டிலேயே நீ கொல்லப்படுவாய்?
புக்காரின் ஓ, சோவியத் அரசு சரியப்போகிறது என்று நீ நினைக்கிறாயோ?
குறிசொல்லி
எந்த ஆட்சியினால் நீ கொல்லப்படுகிவாய் என்று என்னா )
167

Page 92
சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக அது ரஷ்யாவில். (வமே உடன் இருள்கிறது)
காட்சி 5 இமே
அன்னா மீக்காய் லோவ்னா இந்த முன்மொழிவை என்னால் விளக்க முடியாது. ஆனால் ஒரு எதிர்ப்புரட்சிகர அரசினால்தான் தான் கொல்லப்பட
முடியும் என்றே அப்போது அவர் நம்பினார்.
பத்திரிகையாளன் இது ஒரு ஆச்சரியமான சம்பவம். ஆனால் 1918ல் நீங்கள் ஒரு குழந்தையாகத்தான் இருந்திருப்பீர்கள். பல ஆண்டுகள் கழித்துத்தான் அவர் இதை உங்களுக்குச் சொல்லி இருக்க/வேண்டும்.
அன்னா மீக்காய் லோவ்னா
என் குழந்தைப் பருவத்தில் இருந்தே எனக்கு அவரைத் தெரியும். எனது தாயும் தந்தையும் புரட்சியையே தொழிலாகக் கொண்டவர்கள். புரட்சி முடியும்வரை நான் அவர்களைப் பார்த்தது குறைவு. அவர்கள் பெரும்பாலும் சிறையிலேயே இருந்தார்கள். எனது நாலு வயதில் ஒருமுறை அவர்களைப் பற்றி எனது பாட்டனாரிடம் கேட்டேன். அவர் சொன்னார்; உனது பெற்றோர் சமூக-ஜனநாயகவாதிகள், உனக்குப் பக்கத்தில் இருந்து 'உனக்குச் சமைத்துத் தருவதைவிட அவர்கள் சிறையில் இருப்பதையே விரும்புவார்கள். அல்லது கைதுசெய்யப்படுவதற்குத் தப்பி வெளிநாட்டுக்கு ஒடுவார்கள் எள்து. சமூக- ஜனநாயகவாதிகள் யார் என்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறைச்சாலை இருந்தது.
என்பாட்டனார் ஒருமுறை சொன்னார். குற்றவாளிகளும் கொள்ளைக்காரர்களும்தான் அங்கிருப்பதாக. நான் நொறுங்குண்டு போனேன். என்பெற்றோரைப் பற்றி இனி ஒரு போதும் விசாரிப்பதில்லை என்று தீர்மானித்துக்கொண்டேன். ஆனால் பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள் அம்மாவைக் கண்ட உடனேயே அவள் மீது பாசம் கொண்டேன். அள் மிகவும் அழகாக இருந்தாள். நீண்ட மென்மையான கண் மயிர்களுக்குள் அகன்ற சாம்பல்நிறக்கண்கள் அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுத்தன. சமூக- ஜனநாயகவாதிகள் அப்படி ஒன்றும்
168

மோசமானவர்கள் இல்லை என்று நான் தீர்மானித்தேன். பிறகு புக்காரின் எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தார். அவர் என் தந்தையின் மிக நெருங்கிய நண்பர். நான் சிறுமியாக இருந்த காலத்திலேயே அவரை நிகோலாஸா என்றே அழைக்கத் தொடங்கினேன். நான் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகினேன். எனது பதிநாலு வயதில் நான் அவர்மீது காதல் கொண்டேன்.
காட்சி 6 வமே
(இளம் லாறினா மேசை அருகில் அமர்ந்திருக்கிறாள். கையில்
ஒரு புத்தகம். அவள் அதை வாசிக்கவில்லை. சோகத்தோடு தொலைவில் நோக்கியவாறு இருக்கிறாள்.)
லாறின் அன்னுஸ்கா.
லாறினா 67 Gülesef seyt'i ufı
avint pasiv
உனது பிறந்தநாளைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். மகளே,
லாறினா அப்பா எனக்குப் பிறந்தநாள் பார்டி எதுவும் வேண்டாம். கொண்டாட்டம் எதிலும் எனக்கு விருப்பமில்லை.
லாறின் நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை அன்னுஸ்கா, நீ பிறந்த திகதியைப் பற்றித்தான் யோசிக்கிறேன்.
அதில் என்ன பிரச்சினை?
லாறின் உனக்குத் தெரியாதா? ஜனவரி 27 உனக்கு ஞாபகம் இல்லையா? போன வருடம் ஜனவரி 27ஆம் திகதி உனது பிறந்த நாளில் என்ன நடந்தது?
69

Page 93
லாறினா ஓம், அன்றைக்குத்தான் லெனினின் மரணச் சடங்கு. அதனால்தான் போன வருசம் நான் பிறந்தநாள் கொண்டாடவில்லை.
லாறின்
ஒவ்வொரு வருசமும் சோவியத் அரசு இருக்கும்வரை ஜனவரி 27ஆம் திகதி துக்கதினமாகவே இருக்கும். அதனால்தான் ஜனவரி 27ஆம் திகதி பிறந்தவளாக எங்களால் உன்னை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது.
லாறினா (அவளது இறுகிய மனநிலையையும் மீறிச் சிரித்தபடி) ஆனால் அப்பா நான்தான் ஏற்கனவே பிறந்துவிட்டேனே.
லாறின் என்றாலும் எங்களால் உன்னை மீண்டும் பிறக்கவைக்க முடியும். உனது பிறப்பைப் பதிவு செய்து ஒரு புதிய பிறப்புச் சான்றிதழ் பெற நான் தீர்மானித்துவிட்டேன். உனது பிறந்த நாள் இனி ஜனவரியில் அல்ல. மே 27ல் வரும். இயற்கை புத்துயிர் பெறுகிற காலம். எல்லாமே பூத்துச் சொரிகிற காலம். அதுதான் உனக்குப் பொருத்தம்.
லாறினா ஓ அப்பா, இப்போது மே மாதத்தை நான் கொஞ்சமும் உணரவில்லை. இது ஜனவரிதான். வெளியில் மட்டுமல்ல, எனக்கு உள்ளும்தான்.
லாறின்
(அவளைக் கூர்ந்து பார்த்தவாறு) ஏனென்று நான் யூகித்துச் சொல்லட்டுமா?
லாறினா ஏன்? சொல்லுங்கள்?
லாறின்நிக்கொலாய் இவானோவிச் கொஞ்சக்காலம் இங்கு வரவில்லை அதுதானே காரணம்.
(ல 1றிe311 வெட்கப்பட்டுத் தன் கைகளுக்குள் முகத்தைப் புதைக்கிற 1ள். லாறின் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கையில் அவள் அதே நிலையிலேயே இருக்கிறாள்.)
17O

லாறின் அன்னுஸ்கா, அவர் கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கியமான பொறுப்புக்கள் உள்ளவர் என்பதை நீ மறக்கக் கூடாது. இப்போது விளாடிமிர் இலியிச்சின் மரணத்துக்குப் பிறகு அவரது கடமைகள் முன் எப்போதையும் விட அதிகம். தனது நேரத்தை எல்லாம் அவர் எப்போதும் உன்னோடு பேசிக் களிப்பதில் செலவிட வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
(லாறினா முகம் திறக்கிறாள். தன்னை முற்றிலும் சுதாரித்துக் கொண்டவளாகத் தோன்றுகிறாள். பின் அவள் ஒரு பையில் இருந்து ஒரு தாளை எடுத்துப் படிக்கிறாள்)
லாறினா நகர்ச் சதுக்கத்தில் குளிர்காற்று ஊளையிடும் என் இதயத்தில் அதுமேலும் வெறுமையூட்டும். ஏனெனில் நீ இங்கில்லை; உனக்காக என் தவிப்பு.
நீ என்று வருவாய்? தினமும் என் காத்திருப்பு.
லாறின் உன்னுடையதா?
லாறினா ஆம், என்னுடையது.
லாறின்
அற்புதம், நீயே அதை எழுதியிருக்கிறாய். நீயே அதை நிக்கோலாஸாவிடம் கொண்டுபோய்க் கொடு.
லாறினா அப்பா, என்னால் அது முடியாது.
லாறின் ஏன் முடியாது?
(அவர் எழுந்து அவளிடம் செல்கிறார். அவளிடம் இருந்து தாளை வாங்குகிறார். லாச்சியில் தேடி ஒரு கடித உறையை
எடுத்து கவிதையை அதற்குள் போடுகிறார். கடித P றையின் மேல் ஏதோ எழுதி அவளிடம கொடுக்கிறார்.)
7

Page 94
லாறின் யூரி லாறினிடம் இருந்து" என்று எழுதியிருக்கிறேன். இனி வெட்கப்படத் தேவையில்லை. நான் அவரைக் காணத் தவிப்பதாக நிக்கோலாய் இவானோவிச் நினைப்பார். போ அவரிடம் கொண்டுபோய்க் கொடு,
(லாறினா எழுந்து தூக்கத்தில் நடப்பவள்போல் கதவை நோக்கிச் செல்கிறாள்)
R அன்னா மீக்காய் லோவ்னா - (இமேயில் இருந்து) அவருடைய விடுதிக்குப் போய் மணியை அடித்து கடித உறையைக் கொடுத்துவிட்டு உடனே திரும்பி ஓடி வந்துவிட வேண்டும் என்று நான் நினைத்தேன்.
லாறின் அன்னுஸ்கா, (லாறினா கதவடி யில் திரும்புகிறாள்)
லாறின்
நான் உனக்கு ஒன்று சொல்லவேண்டும். நீ அதை விளங்கிக்கொள்ள முடியாத சின்னப்பிள்ளை என்று நான் நினைக்கவில்லை. நிக்கோலென்கா உன்னில் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலவேளை உனது கவிதை அந்த உணர்வை மேலும் ஆழப்படுத்தக்கூடும். அவர் மிகவும் மென்மையான உள்ளமும் உணர்வுகளும் கொண்டவர். இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ நீ எது செய்தாலும் அவர் மனம் நோகக்கூடியதாக மட்டும் நடந்து கொள்ளாதே.
(இருள்)
காட்சி 7 இமே
பத்திரிகையாளன் பிறகு அந்தக் கவிதையை அவரிடம் கொடுத்தீர்களா?
அன்னா மீக்காய் லோவ்னா அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிப் படிக் கட்டுகளில் நான் அப்போது தான் ஏறியிருப்பேன். எதிர்பாராத விதமாக
172

திடீரென ஸ்டாலின் எதிர்ப்பட்டார். அவர் நிக்கோலாஸாவைத்தான் சந்திக்கப் போகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். உடனே அந்தக் கடிதத்தை எடுத்து அதை அவரிடம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஸ்டாலின் சம்மதத்தோடு அதை வாங்கிக் கொண்டார். நிக்கோலாஸாவின் மீது நான் கொண்ட காதலின் முதல் பிரகடனம் இவ்வாறு ஸ்டாலின் மூலம கத்த்ான் செய்யப்பட்டது. இதுவும் விதியும் திருவிளையாடல் தன்
(இருள்)
காட்சி 8 வமே
(புக்காரின் லாறினுடன் இருக்கிறாள். அவரது 5)சயில் ஒரு புத்தகம் இடது சரி எதிர்ப்பாளfoள் «Մ / (foծ»ւCԱյ 16ծr 6 | } | Ա561 13, 1 1 Ժ, கொள்கைபற்றி நான் ஒரு விமர்சனம் எழுதிக்கொண்டி ருக்கிறேன்.
நீங்கள் படித்திருக்கிறீர்களா? ட்றெ பட்ஸ்கியின் சீடன் , யே பிற ஷென்ஸ்கி எழுதிய "புதிய பொருளாதாரம்"
லாறின் இல்லை. அதைப்பற்றிக் கேள்விப்பட்டி ருச்d 3றoர்:
புக்காரின்
இது உண்மையில் மிகமோசமான நிலைப்பாடாக எனக்குத் தோன்றுகின்றது. விவசாயிகளைச் சுரண்டுவதன்மூலம் ஒரே பாய்ச்சலில் சோவியத் யூனியனைக் கைத்தொழில் மயமாக்க அவர் விரும்புகிறார். அவரைப் பொறுத்தவரை கைத்தொழிலில் முதலிடுவதற்கு வேண்டிய மூலதனத்தைப் பெறுவதற்காக விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது தவிர்க்க முடியாதது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளில் முதலாளித்துவ வாதிகள் இதைத்தான் செய்தார்கள். புராதன மூலதனக் குவிப்புப்பற்றிய மாறாவிதிக்கு விலக்கில்லை என்று அவர் கருதுகிறார்.
லாறின் இது சுத்த அபத்தமாகத் தோன்றுகிறது இல்லையா?
73

Page 95
புக்காரின்
மாறா விதிகள் , வரலாற்றுத் தேவை என்றெல்லாம் கூறப்படுபவைபற்றி நாம் மிகுந்த விளிப்புடன் இருக்கவேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் இவை அதிகாரத்துக்கு இட்டுச் செல்வதற்கு வாய்ப்பான நியாயப் படுத்தல் களாகவே அமைந்துவிடுகின்றன. இதில் நல்ல விசயம் என்னவென்றால் பிறியோபிறஷென்ஸ்கி தான் நினைப்பவற்றை வெட்கமற்று வெளிப்படையாகவே சொல்வதுதான். ட்றொட்ஸ்கியும் இதே கருத்துக்களை தன்மனதில் கொண்டிருந்தார். ஆனால் அவர் பிரச்சினையில் இருந்து மெல்ல நழுவி விடுகிறார். ஐரோப்பிய புரட்சி நமக்கு உதவிக்கு வந்துவிடும் என்றுதான் அவரால் சொல்லமுடிகிறது. ஆனால் கடைசியர்க இந்தக் கைத்தொழில்மயமாக்க வாதிகள் எல்லாரும் ஒரே விசயத்துக்கே வந்து சேர்கிறார்கள். விவசாயிகளைப் பலிகொடுக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
லாறின்
அதுசரி நிக்கோலென்கா, நீ கூட இடதுசாரிக் கம்யூனிசத்துக்கு ஆதரவாக இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. உள்நாட்டு யுத்தத்தின்போது பொருளாதாரத்தை ராணுவமயமாக்கியதைப் போலவே எதிர்கால சோசலிச சமூகத்திலும் செய்ய வேண்டும் என்று ட்றொட்ஸ்கியைப் போலவே நீயும் நினைத்தாய். தொழிலாளி வர்க்க அரசு எல்லா மூலவளங்களையும் கட்டுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் வேண்டும் என்று நினைத்தாய். '
புக்காரின்
யூரி மீக்காய்லோவிச், அப்போது நான் தொட்டிலில் கிடந்தேன். அந்த இளம்பருவ மாயைகளைத் தேவைக்கதிகமாகவே வளர்த்திருந்தேன். இந்த விசயத்தில் லெனின் மிகுந்த அறிவுட்ன் விளங்கினார். யுத்தகால கம்யூனிசத்தை எப்போது கைவிடவேண்டும், சதந்திரச் சந்தை மீண்டும் வளர்வதற்கு எப்போது ஊக்கம் அளிக்க வேண்டும், விவசாயிகளுக்கு எப்போது ஊக்குவிப்புக்களை வழங்கவேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. நாம் விவசாயிகளுடன் சேர்ந்துதான் சோசலிசத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அவர்களை எதிர்த்து அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். அதைத்தான் நாம் இப்போதும் செய்யவேண்டும். லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும். அதிர்ஸ்டவசமாக ஸ்டாலின் இவ்விசயத்தில் எனது கருத்துக்களை ஒத்துக்கொள்கிறான்.
74

லாறின் அப்படியென்றால் நீ ஸ்டாலினுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய். அப்படித்தானே?
disas nrnflair ஓம், அவன் ஒரு அருமையான ஆள். பெரிய கெட்டிக்காரன் இல்லை. ஆனால் நடைமுறைவாதி. நிதானமானவன். ஒரு நல்ல
9|acolourfon 6ör.
லாறின் யூரி நிக்கோலென்கா, அவனிடம் கொஞ்சம் சுழித்தனம் இருப்பதாக நீநினைக்கவில்லையா? எனக்கொரு சந்தேகம். அவன் ஒரு பயங்கர சூழ்ச்சிக்காரனாக இருப்பானோ என்று.
புக்காரின் இல்லை. இல்லை. யூரி மீக்காய்லோவிச். உங்கள் கற்பனை தறிகெட்டுப் போகிறது. ஸ்டாலின் மிகவும் எளிமையானவன். மிகவும் திறந்த மனப்பாங்கு உடையவன். சதித்திட்டம் தீட்டுபவனுக்குரிய தகைமையற்றவன்.
லாறின் விளாடிமிர் இலியிச்சின் அந்திம கால எச்சரிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்? ஸ்டாலின் மிகவும் கரடுமுரடானவன் என்று அவர் ஏன் சொன்னார்? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவனை அகற்ற வேண்டும் என்று அவர் ஏன் விரும்பினார்?
åks ni nfessiv
ஸ்டாலின் ஒரு பட்டை தீட்டாத வைரம் என்பது உண்மைதான். ஆனால் அவனால் உண்மையில் பாதகம் எதுவும் இல்லை. அந்தக் குறிப்பை எழுதும்போது விளாடிமிர் இலியிச் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தனது மரண சாசனத்தில் நம் எல்லாரைப் பற்றியும்தான் அவர் விமர்சித்திருக்கிறார். என்னைப் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நினைத்துப்பாருங்கள்.
லாறின் நினைவிருக்கிறது. நீங்கள்தான் கட்சியின் விருப்பத்துக்குரியவர், செல்லப்பிள்ளை என்று சொல்லி இருக்கிறார்.
I75

Page 96
புக்காரின் ஓம். அதுமட்டுமல்ல கட்சியின் பெறுமதி மிக்க மாபெரும் கோட்பாட்டாளன் என்றும் சொல்லியிருக்கிறார்.
லாறின் அது சரிதான்.
புக்காரின்
ஆம் ஆனால் இன்னும் விசயம் இருக்கிறது. அவர் தொடர்ந்து சொல்கிறார் "மிகவும் வரையறைக்குட்பட்டுத்தான் அவரது கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் முற்றிலும் மார்க்சியச் சார்பானவை என்று கூறமுடியும். ஏனெனில் அவர் ஒருபோதும் இயக்கவியலைப் புரிந்து கொண்டதில்லை”. யூரி மீக்காய்லோவிச் பாருங்கள். நான் ஒரு பெரிய கோட்பாட்டாளன். ஆனால் ஒரு மார்க்சியலாதி அல்ல. லெனின் போன்ற ஒருவரால் மட்டும்தான் அப்படிச் சிந்திக்க (Մ)ւգ-պմ).
(இருவரும் சிரிக்கிறார்கள். இருள்)
காட்சி 9 இமே
பத்திரிகையாளன் - அந்தக் காலத்தில் ஸ்டாலினுடன் சேர்ந்திருந்தது புக்காரின் விட்ட பெரிய பிழை இல்லையா ?
அன்னா மீக்காய் லோவ்னா
அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு அவர் ஸ்டாலினுடன் சேரவில்லை. அவர் கொள்கை அடிப்படையில்தான் இணைந்து நின்றார். புதிய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் சேர்ந்திருந்தார். 1928க்குப் பிறகு இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறியது அவரில்லை. ஸ்டாலின் தான். அதனால் தான் ஸ்டாலினுடன் அவருக்குப் பிணக்கு ஏற்பட்டது.

நாம் அந்த விசயத்துக்குப் போகமுன்பு புக்காரினுக்கும் உங்களுக்கும் இடையே நெருக்கமான உறவு வளர்ந்ததைப்பற்றி கொஞ்சம் அறிய விரும்புகிறோம். உங்கள் திருமணம் எப்படி நடந்தது என்று சொல்வீர்களா ?
(இருள்)
காட்சி 10 வமே (புக்காரினும் லாறினாவும் கைகோர்த்தபடியே வலது மேடைப் படிகளில் ஏறி வலது மேடைக்குச் செல்கிறார்கள்.)
லாறினா நெடுக நடந்து நான் கொஞ்சம் களைத்துவிட்டேன். இங்கு உட்காருவோமா P
புக்காரின் சரி இருப்போம் (அவர்கள் இருக்கிறார்கள்)
புக்காரின் உன்னோடு ஒரு முக்கியமான விசயம் பற்றிப் பேசவேண்டும் என்று இருந்தேன். நடந்து கொண்டிருக்கும்போது அப்படிப்பட்ட விசயங்களைப் பேசுவது கஷ்டம்.
லாறினா (சற்றுப் பதற்றத்துடன் அவரைப் பார்த்தவாறு) என்ன விசயம் P
புக்காரின் முன்பொருநாள் ஸ்டாலின் மூலம் நீ எனக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தாயே, ஞாபகம் இருக்கா ?
லாறினா (நானமுற்றவளாக ஒம், அதை ஒரு கவிதை என்றா நீங்கள் கருதுகிறீர்கள் ? அது சுத்த மோசமானது முதிர்ச்சியற்றது. முதிரா இளம் பருவப் பிதற்றல்
1ファ

Page 97
புக்காரின்
ஆனால் அது நான்கு வருடங்களுக்கு முன்பு, அப்போது நீ ஒரு குழந்தையாகத்தான் இருந்தாய். அன்னுஸ்கா, அதை ஒரு குழந்தையின் பேச்சாக் எண்ணித்தான் நான் படித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. அப்படிச் சொன்னால் போதாது. அது என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் இப்போது நீ பதினெட்டு வயது இளம்பெண். உன் வயதைவிட மிகவும் முதிர்ச்சியடைந்தவள். நான் உன்னை ஒரு பெரிய வளர்ந்த பெண்ணாகத்தான் நடத்த வேண்டும். முதலில் உனது செல்லப்பெய்ரை மாற்றப் போகிறேன்.
லாறினா ஏன் நிக்கோலாஸா ?
புக்காரின் "அன்னுஷ்கா” இது உனது அப்பா உனக்கு வைத்த பெயர். இது ஒரு குழந்தைக்கு வைக்கக்கூடிய ஒரு நல்ல செல்லப்பெயர்தான். இப்போது நீ ஒரு வளர்ந்த பெண். நான் உன்னை அன்யுத்கா என்றே அழைக்கப் போகிறேன்.
லாறினா அன்யுத்கா, எல்லளவு நல்ல பெயர். என்னை ஒரு மலராக உணரச் செய்கிறது. ஒரு அன்யுதினா மலர்.
புக்காரின் உனக்கு அது பிடித்துக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. (சற்று அமைதி)
லாறினா இதுதான் நீங்கள் பேசவந்த முக்கியமான விசயமோ ?
புக்காரின் (சற்றுப்பதற்றத்துடன்) இல்லை அன்யுத்கா. இது அதற்கு ஒரு முன்னுரைதான். சரி விசயத்திற்கு வருவோம். நீ எனக்கு கவிதை அனுப்பிய பிறகு, இந்த நாலு ஆண்டுகளில் நாம் அடிக்கடி எத்தனையோ தடவை சந்தித்திருக்கிறோம். உன்னோடு எனக்குள்ள நெருக்கம் மேலும் மேலும் இறுகி வந்திருக்கிறது.
லாறினா அதற்கென்ன இப்போ?
178

புக்காரின் நாம் இன்றொரு தீர்மானத்துக்கு வரவேண்டும்.
லாறினா என்ன தீர்மானம்.
புக்காரின் (சிறிது நேர அமைதிக்குப் பிறகு) எனக்கு அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அன்னுஷ்கா-இல்லை அன்யுத்கா. விசயம் இதுதான். நான் உள்மீது அன்பை வளர்த்திருக்கிறேன். காதல் கொண்டிருக்கிறேன்.
லாறினா என்னைப் பொறுத்தவரை உங்களை எப்போதுமே காதலித்து வந்திருக்கிறேன்.
புக்காரின் ஆம், ஆனால் உணக்குப் பதினெட்டு வயதுதான். எனக்கு நாற்பத்திநாலு எனக்காக உன்வாழ்க்கையை தியாகம் செய்யக் கேட்பதை என்னால் நியாயப்படுத்த முடியுமா?
லாறினா தியாகமா? நிங்கள் இல்லாமல் எனக்கு வாழக்கையே இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?
புக்காரின் ஆம், இப்போதுஅப்படித்தான். இருபத்தியாறு வருட வித்தியாசம். இப்போது அது அவ்வளவு பெரிதாகத் தெரியாது. ஆனால் இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு வருவதை யோசித்துப்பார். நான் அறுபது கழிந்த கிழவனாக இருப்பேன். நீ இன்னும் வாழ்வின் உச்சத்தில் இருப்பாய்.
லாறினாநிக்கோலாலா உங்களால் எப்படி இந்தமாதிரிப் பேசமுடிகிறது? நான் என்ன ஒரு சாதாரண, சுயநலம் பிடித்த பெண் என்று நினைத்தீர்களா? நீங்கள் ஒருமுறை ஒரு கதை சொன்னிர்களே, அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு பண்டைக்கால முனிவர் எழுதி வைத்திருப்பதாகச் சொன்ன கதை. நோயினால் தனது
179

Page 98
கணவனின் தலைமுடி உதிர்ந்ததைக்கண்ட ஒரு பெண அவனுக்கு ஏற்றவளாக தானும் இருக்க வேண்டும் என்பதற்காக தனது கூந்தலையும் வெட்டி எறிந்த கதை. என்னால் அப்படிச் செய்ய முடியாது என்றா நினைக்கிறீர்கள்?
புக்காரின்
இல்லை அன்யுத்கா. எனக்கு உன்னில் சந்ததேகம் இல்லை. ஆனால் இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறதா என்றுதான் யோசிக்கிறேன். ஆயினும் நான் இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டும். ஒன்று நாம் இருவரும் என்றென்றைக்குமாக இணைந்து வாழவேண்டும்.அல்லது நான் வெளியேறிவிடவேண்டும். நீண்ட காலத்துக்கு உன்னைப் பார்க்கக் கூடாது. சுதந்திரமாக உனது வர் ழக்கையை அமைத்துக்கொள்ள உனக்கு வாய்ப்பளிக்கவேண்டும். மூன்றாவது வழி ஒன்றும் இருக்கிறது. அதுதான் பைத்தியம் பிடித்து அலைவது. ஆனால்.
(லாறினா விம்மி அழுகிறாள்)
புக்காரின் அன்னுஷ்கா, −
(அவர் அவளது கைகளை இறுகப் பற்றுகிறார்.) (இருள்)
asna 11 gold
பத்திரிகையாளன் . புக்காரினின் இந்த உணர்ச்சிவசப்படும் இயல்புதான் அவரது அரசியல் வாழ்வின் பலவீனம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
அன்னா மீக்காய் லோவ்னா உணர்ச்சிவசப்படுதல் அவரது ஆளுமையில் ஒரு பகுதி மட்டும்தான். அவரிடம் ஆழமான, கூரிய மதிநுட்பமும் இருந்தது.
அவர் வெறும் சிந்தனைவாதி அல்ல. உணர்ச்சிமயமான மனிதாபிமானி என்பதுதான் அவரது குணாம்சத்தின் வளமான பகுதி அவரைப்பற்றி எஹ்ரன் பேக் என்ன சொன்னார்
என்பதை எண்ணிப்பார். "அவர் வாழ்வைப் புனரமைக்க விரும்பினார். ஏனெனில் அவர் வாழ்வை நேசித்தார்.
18O

பத்திரிகையாளன் அப்படியென்றால், அவரைப் பொறுத்தவரை மனிதனின் மதிப்பைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில்தான் அவர் பலாத்காரக் கூட்டுப்பண்ணை முறையை எதிர்த்தார் என்று சொல்வீர்களா?
அன்னா மீக்காய் லோவ்னா
ஆம், அதனால்தான் 1928 கோடையில் அவர் ஒரு தீவிரமான முடிவை எடுத்தார். ஸ்டாலின் விவசாயி வர்க்கத்தை நசுக்கப்போகிறார்; கட்சிக்குள் எல்லா வகையான எதிர்ப்பையும் நசுக்கப் போகிறார் என்பது அப்போது அவருக்கு விளங்கிவிட்டது. நிக்கோலாஸா அதுவரை மத்தியகுழு உறுப்பினராகவே இருந்தார். ஆளும் குழுவில் ஒரு அங்கத்தவராகவே இருந்தார். ஆயினும் தோற்கடிக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்புக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான கமனேவுடன் ஒரு ரகசியச் சந்திப்பை ஒழுங்குசெய்யத் தீர்மானித்தார்.
காட்சி 12 வமே
(கமனேவ் மேசையில் எழுதிக்கொண்டிருக்கிறார். மணி
ஒலிக்கிறது.)
கமனேவ்
உள்ளே வாருங்கள்.
(புக்காரின் வமேக்கு வருகிறார். கமனேவ் தனது இருக்கை யில் இருந்து எழுகிறார். அவர்கள் கைகுலுக்கிக்கொள்கின்றனர். புக்காரின் நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டுகொண்டு உட்கார்கிறார். இந்த உரையாடல் முழுவதிலும் ஆழ்ந்த உணர்ச்சியுடன், ஆனால் யாராவது ஒற்றுக்கேட்டுவிடக் கூடும் என்று பயப்படுவதுபோல தாழ்ந்த குரலில் பேசுகிறார்.)
புக்காரின் லெவ் பரிசோவிச், பழைய எதிரிகளான நாம் ஒன்று சோர்ந்திருக்கிறோம். அவனை நாம் இருவருமே எதிர்ப்பது நம்மை ஒரிடத்தில் கொண்டுவந்திருக்கிறது. ஆனால், முதலில் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.
கமனேவ்
என்ன?
18

Page 99
புக்காரின் நமது சந்திப்பைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. எழுத்திலோ தொலைபேசியிலோ இதுபற்றிக் குறிப்பிடக் கூடாது. ஏனென்றால் ரகசியப் பொலிஸ் நம் இருவாரையும் வேவு பார்க்கின்றது.
கமனேவ் உங்கள் வேண்டுதல்படியே நடக்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒன்று. இன்றைய நெருக்கடி நிலை தோன்றுவதற்கு நீங்களும் துணைநின்றிருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நிக்கோலாய் இலானோவிச் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் கூட்டு எதிர்ப்பினை முறியடிக்க ஸ்டாலினுடன் நீங்கள் கைகோர்த்து நின்றீர்கள். உங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லாத வகையில்கூட எங்களை தூசித்தீர்கள். ஸ்டாலினைப் போன்ற ஒரு பாமரனுக்கு அது இயல்பானதாக இருக்கலாம். ஆனால் நிக்கோலாய் இவானோவிச் ஒரு ஆய்வறிவாளனான, தத்துவஞானியான உங்களுக்கு. P
புக்காரின் ஒப்புக்கொள்கிறேன், லெவ் பரிசோவிச், அதை நினைக்கும்போது நான் வெட்கப்படுகிறேன். ஆனால் நான் அவனோடு சேர்ந்து நின்றதற்குக் காரணம் இருக்கிறது. நீங்கள், ட்றெட்ஸ்கி, சினோவியேவ் எல்லோரும் விவசாயி வர்க்கத்துடன் முன்யோசனையற்ற கூட்டில் விழுந்துவிடுவீர்கள் என்று நான் பயந்தேன். ஆனால் இப்போதோ நாம் எல்லோரையுமே மிகமோசமான அபாயம் ஒன்று எதிர்நோக்கியுள்ளது.
கமனேவ் ஆம். ஆனால் நம்மை எது பிரித்ததோ அது இன்னும் அப்படியே இருக்கிறது.
புக்காரின்
உங்களுடைய குறிக்கோளும் எங்களுடைய குறிக்கோளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்ே. நாங்கள் விவாசாயிகளுடன் சேர்ந்து சோசலிஸத்தை நோக்கிப்போக விரும்புகிறோம். அவர்களுக்கு எதிராக அல்ல. சிறிய சில்லறை வியாபாரத்துக்கும் இடம் அளிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு திறந்த சந்தையின் மூலமாக நுகர்வோரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். மார்க்ஸ் முதலாளித்துவம் இந்த உலகுக்கு வந்தது பற்றிச்
82

சொன்னதுபோல் தலையிலிருந்து பாதம் வரை ஒவ்வொரு துவாரத்திலிந்தும் இரத்தம் சொட்டச்சொட்ட சோசலிஸக் கைத்தொழில் புரட்சியை ஒரே பாய்ச்சலில் முடுக்கிவிட நாங்கள் விரும்பவில்லை. லெவ் பரிசோவிச் எல்லாரும் என்ன சொல்லப்போகிறார்ள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் இடதுசாரி, நாங்கள் வலதுசாரி என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவன் அக்கிரமத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இடம், வலம் என்ற வித்தியாசம் அவ்வளவு முக்கியமானதா? ിണ്ഡഖ பரிசோவிச் நீங்களும் நாங்களும் இணைவதற்கு அடிப்படை எதுவோ, அது நீங்களும் நாங்களும் பிரிந்துநிற்பதற்கான அடிப்படையைவிட மிகவும் முக்கியமானது.
سمیہ
கமனேவ் W
அதனால்தான் நான் உங்களைச் சந்திக்கச் சம்மதித்தேன்.
புக்காரின்
லெவ் பரிசோவிச், கட்சியில் அவன்திணித்துள்ள சர்வாதிகார ஆட்சி முறைக்கு ஒரு முடிவு வேண்டும் என்று நாம் இருவருமே விரும்புகிறோம். கட்சிக்குள் ஜனநாயகம் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதுதான் நம்மிருவருக்கும் பொதுவான அம்சம். 951 இல்லாமல் சுதந்திரமான விவாதத்தின் மூலம் நமது வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை நாம் பெறத் தவறுவோமானால் இடதுசாரி வலதுசாரி இருவருமே இரத்தத்தில் மூழ்கடிக்கப்படுவோம். அவன் எதற்கும் தயங்கமாட்டான். அவன் நம்மை அழித்துவிடத்தான் போகிறான். அவன்தான் புதிய ஜெங்கிஸ்தான்.
(இருள்)
காட்சி 13 வமே
(லாறினா அறையில் தூசி தட்டிக்கொண்டிருக்கிறாள் புக்காரின் வருகிறார். மனம் சோர்ந்து களைத்த தோற்றம்) ,
லாறினா re
நிக்கோலாஸா, வந்துவிட்டீர்கள், ஆனால் என்ன இது? என்ன நடந்தது உங்களுக்குP மிகவும் சோர்ந்துபோய் இருக்கிறீர்கள்.
183

Page 100
புக்காரின் அன்யுத்கா. நான் அத்தகைய பயங்கரமான காட்சிகளைப் பார்த்தேன் இந்த நாட்டில் - முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்தி முடித்த ஒரு நாட்டில் - இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
லாறினா என்ன விசயம் நிக்கோலாஸ்ாP
புக்காரின் -மேலும் கீழும் அமைதியற்று நடந்தவாறு) ஸ்டாலின் மூர்க்கத்தனமாக விவசாயிகளை அடக்கி ஒடுக்குகிறான். அவன் தன்னுடைய பாதையை மாற்றிக்கொண்டபோது, இடது பக்கம் சாய்ந்து அதீத கைத்தொழில் மயமாக்கத்தையும் கட்டாயக் கூட்டு டைமை ஆக்கத்தையும் அவன் தேர்ந்தெடுத்துக்கொண்டபோது இப்படி நடக்கும் என்று நான் பயந்தேன்.ஆனால் அது நடைமுறைக்கு வரும்போது இவ்வளவு பயங்ரமாக இருக்கும் என்று நான்கூட நினைக்கவில்லை.
லாறினா என்ன நடக்குது?
புக்காரின் விவசாயிகள் பலாத்காரமாக கூட்டுப் பண்ணை முறைக்குள் தள்ளப்படுகிறார்கள். அதை அவர்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். அழிக்கப்படுகிறோம் என்பதை அறிந்துகொண்ட மக்களின் வெறித்தனமான விரக்தியுடன் திருப்பித் தாக்குகிறார்கள். தங்கள் கால்நடைகளை வெட்டிக் கொல்கிறார்கள். தங்கள் தானியங்களைத் தீயிட்டு அழிக்கிறார்கள்.அது ஒரு விவசாயிகளின் யுத்தம். ஸ்டாலின் பழைய சார் மன்னர்களைப்போல் அவர்களுடன் சண்டையிடுகிறான் எதிர்ப்பவர்கள் எல்லோரையுமே நாசகாரிகள் என்று முத்தி , ; , குத்தி, வடக்கில் போய் சாவதற்கு வண்டியேற்றி அனுப்புகிற16: குலாக்குகளை அழிப்பதாகத்தான் அவன் கூறுகிறான். அன "e உண்மை வேறு. அவனது கொள்கை முழு விவசாயி வர்க்கத்தையு. குலாக்குகளுக்கு ஆதரவாகத் தள்ளிவிடுகிறது.
லாறினா
என்ன செய்யமுடியும்? ஸ்டாலின் கட்சிக்குள் எல்.ை எதிர்ப்புக்களையும் ஊமையாக்கிவிட்டாரே
184

புக்காரின்
உக்ரெயினில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு சின்னப் புகையிரத நிலையத்தில் பசியினால் வயிறு வீங்கி போயிருந்த குழந்தைகளை நான் பார்த்தேன். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. என்னிடம் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தேன். அன்யுத்கா, இந்தப் புரட்சின் நாட்டில் இத்தகைய விசயங்களா நடக்க வேண்டும்? இவற்றையா நான் பார்க்கவேண்டும்?
(தலையை மேசையில் கவிழ்த்துக்கொண்டு விம்முகிறார்.
அவள் தலையை மெல்லத் தடவுகிறாள்.இருள்)
காட்சி 14 இமே
அன்னா மீக்காய் லோவ்னா புக்காரின் கமனேவுக்கு விடுத்த அழைப்பினால் எதுவும் ஆகவில்லை. வலதுசாரிகளும் இடதுசாரிகளும் கொள்கை அடிப்படையில் மிகவும் பிளவுபட்டுக் கிடந்தார்கள். தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகக் கூட அவர்களால் இணைய முடியவில்லை. 1930களின் தொடக்கத்தில் அவர்கள் எல்லோருமே அரசியல் ரீதியில் நபுஞ்சகர்களாகிவிட்டனர்.
புக்காரின் மத்தியகுழுவில் இருந்து ஸ்வெஸ்தியா பத்திரிகையின் ஆசிரியராகத் தரம் இறக்கப்பட்டார். இக்காலப் பகுதியில் ஸ்டாலினின் பயங்கர ஆட்சி பலம் பெற்றுக்கொண்டிருந்தது.
காட்சி 15 வமே
(புக்காரின் ஸ்வெஸ்தியா பத்திரிகை ஆசிரியருக்குரிய மேசையில்
இருக்கிறார். அவரது பெண்செயஷாளர் கொறொற்கோவா வருகிறார்)
VQ கொறொற்கோவா
நதெஸ்தா யகோவ்லெவ்னா வந்திருக்கிறார். அவரது கணவர் கைதுசெய்யப்பட்டு விட்டார்.
Lásás m.nflasi என்ன, மன்டேல்ஸ்தமாP அவரை உள்ளே வரச்சொல்.
85

Page 101
(கொறொற்கோவா வெளியே போய் கவிஞர் ஒசிப் மன்டெல்ஸ்தத்தின் மனைவி நதேஸ்தா மன்டல்ஸ் தத்துடன் உள்ளே வருகிறார். புக்காாரின் எழுந்து அவருடன் கைகுலுக்குகிறார். பின் ஒரு நாற்காலியில் அமரச் செய்கிறார். தான் அமரவில்லை.)
புக்காரின் நான் அதிர்ந்துவிட்டேன் நதேஸ்தா யகோவ் லெவ்னா, அது எப்படி நடந்தது?
நதேஸ்தா மன்டெல்ஸ்தம் ரகசியப் பொலிஸ் வந்து அவரை அழைத்துச் சென்றுவிட்டது. (புக்காரின் விரைவாக மேலும் கீழும் நடக்கத் தொடங்குகிறார். அப்போதைக் கப்போது கேள்விகள் கேட்பதற்காக மட்டும் நிற்கிறார்.)
புக்காரின் அவர்கள் என்ன செய்தார்கள்? விடுதியை சோதனை போட்டார்களா? எதையாவது கொண்டு சென்றார்களாP
நதேஸ்தா மண்டெல்ஸ்தம் ஒரு கட்டுத்தாளை அப்படியே கொண்டுபோய் விட்டார்கள். கவிதைகள், மொழிபெயர்ப்புக்கள், கட்டுரைகள் என்று நிறைய.
புக்காரின் முட்டாள்தனமாக அவர் எதையும் எழுதி வைத்திருக்கவில்லையே?
நதேஸ்தா மன்டெல்ஸ்தம் இல்லை. வழக்கம்போல சில கவிதைகள் மட்டும்தான். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை விட மோசமாக எதுவும் இல்லை.
(புக்காரின் மீண்டும் நடக்கத் தொடங்கிவிட்டா வே ஆ
食 محم *گھر
கேள்வி பேட்பதற்காக அவர் மீண்டும் நிற்கிறார், !
புக்காரின் அவரைப் பார்க்கப் போயிருந்தீர்கள1 1?
நதேஸ்தா மன்டெலஸ் தம் (நதேஸ்தா மன்டெல்ஸ்தம் விரக்தியு e மனe - ச்ச்கிறார்)
186

நிக்கோலாய் இவானோவிச் உங்களுக்கு விசயம் தெரியாது போலிருக்கிறது. குடும்பத்தினர் சிறையில் போய் சந்திப்பதற்கு இப்போது அனுமதிப்பதில்லை.
புக்காரின் (சிறிது சங்கடத்துடன்) ஓ, எனக்கு அது தெரியாது.
நதேஸ்தா மன்டெல்ஸ்தம் எனக்குத் தெரியும் உங்களால் இப்போதும் அதிகமாக எதுவும் செய்ய முடியாது. என்றாலும்.
புக்காரின் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். யாகதாவையே நான் போய்ப் பார்க்கிறேன்.
(இருள்)
காட்சி 16 இமே
அன்னா மீக்காய் லோவ்னா
-யாகதா அப்போது ரகசியப் பொலிஸ் தலைமை அதிகாரியாக இருந்தான். உனக்குத் தெரியும், அவன் ஒரு இரங்கத்தக்க பேர்வளி. தனது இளமைக் காலத்தில் அவன் நேர்மையான ஒரு புரட்சிக்காரனாக இருந்தான். ஆனால் இந்தச் சமயத்தில் அவன் ஸ்டாலினின் குற்றச் செயல்களுக்கு ஒரு கருவியாக மாறிவிட்டான். முடிவில் 1938ல் எனது கணவருடன் அதே குற்றக்கூண்டில் அவனும் நின்றான். யாகதாவைப் பயன்படுத்தி மற்றவர்களை அழித்தபிறகு அவனுக்கு அதிக விசயம் தொரிந்திருப்பதால் அவனையும் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று ஸ்டாலின் நினைத்திருக்க வேண்டும்.
காட்சி 17 வமே (யாகதா மேசையில் இருக்கிறார். புக்காரின் அவருக்கு எதிரில் இருக்கிறார்)
யாகாதா மன்டெல்ஸ்தம் ஏன் கைதுசெய்யப்பட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா?
87

Page 102
Lásакптгтпfls$т இல்லை.
யாகாதா அவர் ஒரு கவிதை இயற்றி இருக்கிறார். அதை எழுதி வைக்க அவருக்குப் பயம். ஆனால் தனது நண்பர்கள் சிலருக்காவது அதனைச் சொல்லிக்காட்டாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவர்களுள் ஒருவர் அதனை மனனம் செய்துவந்து எங்களுக்குத் தகவல் சொன்னார்.
புக்காரின் எதைப்பற்றிய கவிதை?
யாகாதா நானும் அதனை மனனம் செய்திருக்கிறேன். உங்களுக்குப் சொல்லிக்காட்டுகிறேன்.
எம்காலடி மண்ணுக்குச் செவிடராய் வாழ்கிறோம் நம் பேச்சினைக் கேட்பவர் பத்தடிக் கப்பால் யாருமே இல்லை.
நாம் கேட்பவை அனைத்தும் கிரம்லின் கொலைஞனின் வார்த்தைகள் மட்டுமே.
மரவட்டை போன்றன அவனது விரல்கள் அவனது சொற்களே இறுதியானவை.
அவனது கரப்பான் மீசை எள்ளி நகைக்கும் அவனது சப்பாத்து முனைகள் மெல்ல ஒளிரும்.
ஒல்லிக் கழுத்துத் தவைர்கள் கும்பல் எப்போதும் அவனைச் சூழ இருக்கும் காலை நக்கும் அரை மனிதர்கள் அவனுடன் ஆடக் காத்துக் கிடப்பர் அவன் விரலை நீட்டிப் பிதற்றிடும் போதில் கனைப்பர். குரைப்பர். ஊளையும் இடுவர்.
188

ஒவ்வொன்றாய் வரும் அவனது சட்டங்கள் தலையில் கண்ணில் அல்லது அரையில் குதிரை லாடமாய் வீசப்படுமே. அகன்ற நெஞ்சின் அகங்காரிக்கு ஒவ்வொரு கொலையும் ஒருபெரும் விருந்தே.
புக்காரின் சங்கடத்தோடு கவிதையை கேட்டுக்கொண்டிருக்கிறார். முழுவதும் சொல்லி முடித்தபின் யாகாதா அசைவற்று அவரைப் பார்க்கிறார்.)
யாகாதா நான் நீங்களாக இருந்திருந்தால் இந்த விசயத்தில் என்னைச் சம்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன்.
(இருள்)
காட்சி 18 இமே
பத்திரிகையாளன் 1934 . அந்த வருடம்தான் கிறோவ் கொல்லப்பட்டார். ஸ்டாலின்தான் அதற்கு ஏற்பாடுசெய்திருக்க வேண்டும் என்று இப்போது பலரும் நினைக்கிறார்கள். ஏனென்றால் கிறோவ் மிகவும் பிரபலம் பெற்றுக்கொண்டு வந்தார்.
அன்னா மீக்காய் லோவ்னா
எந்த விசயத்திலும் எதிர்ப்பை அகற்றுவதற்கே அவர் கொலையைப் பயன்படுத்தினார்.கிறோவின் கொலைக்கு சதி செய்ததாகவும் வெளிநாட்டு சக்திகளுக்கு உதவியதாகவும் சினோவியோவ், கமனேவ் போன்ற வேறு பல இடதுசாரிகள் மீது அவர் குற்றம் சுமத்தினார். அவர்களும் கொல்லப்பட்டனர். பிறகு வலதுசாரிகளின் முறை வந்தது. நிக்கோலாஸ்ாவைக் கைதுசெய்யமுன் ஒரு ஆறுமாதம் அவருடன் ஸ்டாலின் பூனை- எலி விளையாட்டு விளையாடினார்.
sn's 19 arGrid
(லாறினா மிகுந்த கவலையுடனும் ஆதங்கத்துடனும் அமர்ந்திருக்கிறாள். புக்காரின் வருகிறார்.)
89

Page 103
லாறினா (அவரைத் தழுவிக்கொண்டு) ஒ, நிக்கோலாஷா, நான் எவ்வளவு பயந்து கொண்டிருந்தேன் என்று உங்களுக்குத் தெரியாது. இன்றைய நாள் முன் எப்போதையும்விட மிகவும் நீண்டது. பத்து மணித்தியாலம். நீங்கள் ஒன்றும் சாப்பிடவும் இல்லை. என்ன நடந்தது இன்றைக்கு?
புக்காரின் கறோலின் மூலம் அவர்கள் என்னோடு மோதினார்கள். அவன் ஒரு பழைய சமூகப் புரட்சியாளன். பல வருடங்கள் அவன் சிறையில் இருந்திருக்கிறான். வற்புறுத்தி அல்லது சித்திரவதை செய்து என்னைப்பற்றி பிழையான வாக்குமூலம் கொடுப்பதற்கு அவனைத் தயாரித்திருக்கிறார்கள்.
லாறினா அவனோ ஒரு பழைய சமூகப் புரட்சிக்காரன். அவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும்?
புக்காரின் அன்யுக்தா, அது அத்தகைய ஒரு பயங்கரமாக இல்லாவிட்டால் உண்மையில் ஒரு கோமாளித்தனமாகவே இருந்திருக்கும். நான் அவனோடு சேர்ந்து 1918ல் சதி செய்ததாக கறோலின் சொல் கிறான். யோசித்துப்பார். 1918ல் லெனினைக் கொல்வதற்கு நான் சதிசெய்தேனாம். ,
லாறினா என்னP லெனினைக் கொல்லவா?
புக்காரின்
ஆம். N.K.V.D யின் திறமையை நீ ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களிடம்தான் தோஸ்தேவ்ஸ்கியின் கற்பனை நிறைய இருக்கிறது விசாரணை செய்பவனுக்கு முன் அவன் நிற்கிறான். முகத்தை நேராக வைத்துக்கொண்டு சொல்கிறான். உண்மையில் அவனுடைய முகம் ஒரு சவத்தினுடையதைப் போல சாம்பல் பூத்து இருக்கிறது. அவன் சொல்கிறான். லெனினைக் கொல்வதற்கு நான் அவனோடு சேர்ந்து சதி செய்தேன் என்று. ஆனால் அன்யுத்கா அது அல்ல விசயம். அவர்கள் இந்த அளவுக்கு கீழ் இறங்கி வருகிறார்கள் என்றால் அவர்களுடைய திட்டம் என்ன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஸ்டாலின்
190

மீண்டும் ஒரு பெரிய சோடனை வழக்கைத் தயாரிக்கிறான். அதில் நான்தான் அதிக விலைமதிப்புள்ள காட்சிப்பொருளாக இருப்பேன்.
லாறினா ஆ நிக்கோலாஷா, உங்களை என்னால் காப்பாற்ற முடியுமானால் அதற்காக நான் சாகவும் தயார். ஆனால் உங்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு நான் எப்படி உதவலாம்?
புக்காரின் ஒன்று செய்யலாம் அன்யுத்கா. வீட்டுக்கு வரும் வழிநெடுகிலும் நான் அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டு வந்தேன்.
லாறினா சொல்லுங்கள். சொல்லுங்கள். நான் எதையும் செய்வேன்.
புக்காரின் அன்யுக்தா, இனி எந்த நேரமும் நான் கைது செய்யப்படலாம். அவர்கள் என்னை விசாரணைக்கு கொண்டுவரும்போது பகிரங்க நீதிமன்றத்தில் நான் ஒப்புதல் வலாக்குமூலம் கொடுக்க வேண்டியிருக்கும். அதில் சந்தேகம் இல்லை.
லாறினா (அதிர்ச்சியடைந்து) என்ன, ஒப்புதல் வாக்குமூலமா? ஸினோவியேவையும் கமனேவையிம் போலவா? அற்தச் சகதிக்குள் உங்களையுமா தள்ளப்போகிறீர்கள்? நீங்களா? நீங்களா நிக்கோலாஷா கஸ்டாபோவிடம் கூலி பெற்றுக் கொண்டதாகச் சொல்லப் போகிறர்கள்? தேசத்துரோகி, கொலைக்காரன் என்று ஒப்புக்கொள்ளப் போகிறீர்கள்? வேண்டாம், வேண்டாம் , நிக்கோலாஷா, எது வந்தாலும் வரட்டும், மெளனமாகச் சாவதே நல்லது.
புக்காரின் அது எனக்கு மிகவும் எளிதானது அன்யுத்கா. அவர்கள் என்னைச் சித்திரவதை செய்தாலும் கூட. ஆனால் நான் என்னைப் பற்றி சிந்திக்கவில்லை. தங்களோடு ஒத்துழைக்காதவர்களின் மனைவிமாருக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது உனக்குத் தெரியும்.
191

Page 104
லாறினா எனக்கர்கவா? எனது நலனுக்காகவா? என்னைக் காப்பாற்றவா நீங்கள் முயற்சிக்கிறீர்கள்? உங்கள் அகெளரவத்தின் மீது நான் உயிர் வாழ்வேன் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?
புக்காரின் அப்படியில்லை அன்யுத்கா. நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுக்கிறேன் என்று வைத்துக்கொள். லுபியன்காவின் பாதாளச் சிறையில் சுட்டுக்கொல்லப்படுவேன். நீயும் கொல்லப்படுவாய் நமது உடல்கள் பின்னர் ஒரு பொதுச் சவக்கிடங்கில் வீசி எறியப்படும். ஒருவருக்கும் தெரியாது. நாம் மறக்கப்பட்டுவிடுவோம். இத்தகைய வீரத்தால் யாருக்கு நன்மை?
லாறினா ஆனால் ஒப்புதல் வாக்குமூலத்தால், அந்தச் சகதிக்குள் உங்களை மூழ்கடிப்பதால் என்ன ந்ன்மை கின்டக்கப்போகிறது?
புக்காரின் உன் உயிருக்கு ஏதும் நடக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பேன். ஸ்டாலினின் வார்த்தையை நம்பமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுகைது எதிர்காலத்தில் பலருக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒரு தூண்டுதலாக அமையும் என்று அவன் நினைக்கக்கூடும்.
லாறினா ஆனால், உங்களை ஒரு தேசத்துரோகி என்று ஆக்கிவிட்டு வாழ்வதை நான் விரும்பவில்லை நிக்கோலாஷா.
புக்காரின் இல்லை. நீ வாழத்தான் வேண்டும் அன்யுத்கா. ஏனென்றால் என் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்காலத்தில் உன்னால் துடைக்க முடியும்.
லாறினா எதிர்காலம் ஏது நிக்கோலாஸா, இந்தப் பயங்கரத்தில் இருந்து நாம் எப்போது விடுபடுவோம்?
92

புக்காரின் இல்லை அன்யுத்கா.புரட்சி இப்போது ஒரு இருண்ட குகைக்குள் ஒடிவிட்டது. ஆனால் ஒருநாள் அது அதைவிட்டு வெளிவரத்தான் போகிறது. நீ இன்னும் இளம் பெண் தான். அந்தப் புதிய நாளைப்பார்க்க நீ வாழத்தான் போகிறாய். அப்போது எனது பெயருக்கு ஏற்பட்ட மாசைத் துடைக்க எனது கெளரவத்தைக் காப்பாற்ற உன்னால் முடியும்.
லாறினா
உங்களுக்காக நான் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதானா?
புக்காரின் ஆம் அன்யுத்கா. எதிர்காலத்துக்கு, எதிர்காலச் சந்ததிக்கு நான் நிரபராதி என்பதைப் பற்றி ஒரு கடிதம் வரையத் தீர்மானித்துவிட்டேன். அதை எழுத்தில் வைப்பது மிகவும் ஆபத்தானது. உனக்கு மிகவும் ஆபத்தானது. ஆகலே அதை ஒவ்வொரு வசனமாக உனக்குச் சொல்லப் போகிறேன். நீ அதை மனனம் செய்துகொள்ளவேண்டும். ஒருபோதும் மறக்கக் கூடாது.
லாறினா (அவரைத் தழுவிக்கொண்டு) நிக்கோலாஷா நிக்கோலாஷா!
(அவள் அழுகிறாள் இருள்)
காட்சி 20 வமே
(லாறினா மேடையில் இருக்கிறாள். மேடைக்கு அப்பால் தொலைபேசி ஒலிக்கிறது. அது எடுக்கப்பட்டதால் பின் அமைதி. மெளனம். புக்காரின் மேடைக்கு வருகிறார். லாறினா கவலையுடன் அவரைப் பார்க்கிறாள்.)
புக்காரின்
பேசியது ஸ்டாலினின் காரியதரிசி. நான் பிளினத்துக்கு
அழைக்கப்பட்டுள்ளேன்.
(லாறினா மெளனமாக எழுகிறாள்)
புக்காரின் அந்த நேரம் வந்துவிட்டது. கவலைப்படாதே அன்யுத்கா. வரலாற்றில் இருண்ட காலங்களும் உண்டு. நிலைமைகள் மாறும்.
193

Page 105
அவை மாறித்தான் ஆகவேண்டியிருக்கும். உண்மையே வெல்லும். நமது மகனை ஒரு போல் ஷெவிக்காக வளர்த்தெடு.
( அவள் எதிரே முழங்காலில் விழுகிறார்)
எனது கடிதத்தில் ஒரு வார்த்தையைக்கூட மறக்க மாட்டேன் என்று சத்தியம் செய், சத்தியம் செய், சத்தியம் செய்.
லாறினா நான் சத்தியம் செய்கிறேன். நிக்கோலாஷர்
(இருள்)
மேடை இன்னும் முற்றிலும் இருளில் இருக்கிறது. ஆர்ப்பாட்டக் கூச்சல் கேட்கிறது. வெட்கம்கெட்ட எதிர்ப்பாளர் ஒழிக, ட்றொட்ஸ்கியன், புக்கரிரனிய சண்டியர்கள் ஒழிக, தேசத் துரோகிகளுக்கும் உளவாளிகளுக்கும் மரணமே பரிசு. பாசிசக் கொலைகாரர்களைச் சுட்டுத்தள்ளு
வெறிநாய்களைச் சுட்டுத்தள்ளு என்ற குரல்கள் மீண்டும் மீண்டும் கோரசாக ஒலிக்கப்படுகின்றது. அதன் ஒலி படிப்படியா" மேல் ஸ்தாயிக்கு எழுகிறது.
காட்சி 21 இமே
அன்னா மீக்காய் லோவ்னா
நிக்கோலாசா கைதுசெய்ப்பட்ட உடனே என்னையும் சிறை முகாமுக்குக் கொண்டுசென்றார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஸ்டாலினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்பாட்ட ஊர்வலங்களைப்பற்றி அங்குதான் நான் அறிந்துகொண்டேன். சிறையில் எங்களுக்கு பத்திரிகைகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் பெண் கைதிகளுக்காக அந்தச் செய்திகளை வாசித்துக்காட்டுவதில் சிறைத்தாதி மகிழ்ச்சியடைந்தாள். நான் அதை எப்படி எடுத்துக்கொள்கிறேன் என்பதை அறிவதற்காக அவள் என்னைஅடிக்கடி பார்ப்பாள்.
(இருள்)
194

காட்சி 22 வமே
லாறினா சிறைத் தரையில் அமர்ந்திருக்கிறாள். ஒளிப்பொட்டு அவளைக் காட்டுகின்றதுச அவளைச் சுற்றி இருக்கும் பிற பெண்களின் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. இருளில் இருந்து சிறைத்தாதி வாசிக்கும் குரல் கேட்கிறது.
சிறைத்தாதி
ட்றொட்ஸ்கிய, புக்காரினிய கும்பலின் நேற்றைய வழக்கு விசாரணையில் அரச வழக்குரைஞர், அவர்களின் குற்றங்களின் பட்டியலைப் படித்தார். ஜேர்மன் பாசிச வாதிகளுடன் தொடர்பு, ஜப்பானிய உளவாளிகளுடன் தொடர்பு, ஸ்டாலினைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிபெறாத பயங்கரவாதச் சதி, 1918இல் லெனினைக் கொல்லதற்கு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதச் சதி, குயிடபிஷேவ், கார்க்கி ஆகியோரின் கொலை, யசோவை நஞ்சூட்டிக்கொல்ல முயற்சி இவைதவிர அந்நிய சக்திகளுக்கு உதவும் முகமாக மேற்கொள்ளப்பட்ட ஏராளமான நாசகார நடவடிக்கைகள்.
(பிறிதொரு பெண்கைதி லாறினாவுக்குப் பக்கத்தில் ஒளிவட்டத்துள் போகிறாள். ஒரு துவாயால் அவள் முகத்தைத் துடைக்கத் தொடங்குகிறாள்.)
மற்றப் பெண் (மெதுவாக) பேசாமல் இருக்க முயற்சிசெய். வேதனைப்படாதிரு. நான் எப்படி இருக்கிறேன் பார்த்தாயா? நான் ஒரு கல். கல்லைப் போல் இரு
சிறைத்தாதி (இருளில் இருந்து) அரசாங்க வழக்குரைஞர் நீதிபதிகளுக்கு முன் இறுதியாக உரையாற்றுகையில், நாடுமுழுவதிலும் வெகுஜன அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட மரண தண்டனைக் கோச்சையை மீண்டும் வலியுறுத்தினார்.
1. அரச வழிச் குரைஞர் விஸின்ஸ்கி உற்சாகமாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் :
விவழின்ஸ்கி வெறிபிடித்த நாய்களை எல்லாம் சுட்டுக்கொல்லவேண்டும். என்று நான் கோரிக்கை விடுகிறேன்.
(பலமான கரகோசம்)
195

Page 106
நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும் கழியக்கழிய குற்றவாளி புரிந்துள்ள வெட்கங்கெட்ட, முன்மாதிரியற்ற , அதிர்ச்சியூட்டும் பயங்கரமான குற்றத்தொடர்புகள் மேலும் மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டவரப்பட்டன. படு கேவலமான, இறுகித் தடித்த, மானங்கெட்ட, கட்டுப்பாடற்ற,ஒழுக்கமற்ற, குற்றவாளிகளின் மொத்தமான, வெறுக்கத்தக்க, வெட்கம் அற்ற குற்றச்செயல்கள் இவற்றின் முன் மங்கி மறைந்து போகின்றன.
(மீண்டும் கரகோசம்)
நமது மக்களின் கோரிக்கை ஒன்றுதான். சபிக்கப்பட்ட ஜந்துக்களை நசுக்குங்கள் காலம் கழியும். வெறுக்கத்தக்க தேசத்துரோகிகளின் சவக்குளிகள் மீது களைப் பூண்டுகள் வளரும். கடந்த காலத்தின் கடைசிக் குப்பை கூழங்களும் அகற்றப்பட்ட பாதையின் மீது நாங்கள், நமது மக்கள், நமது அன்புக்குரிய தலைவரும் ஆசானுமான மாபெரும் ஸ்டாலின் தலைமையில் முன்புபோலவே கம்யூனிசத்தை நோக்கி முன்னேறுவோம். முன்னேறுவோம்.
(முடிவற்ற கரகோசம். விஸின்ஸ்கியின் மீது விழுந்த ஒளிப் பொட்டு அணைகிறது. லாறினாவும் மற்றப் பெண்கைதியும் தெரிகிறார்கள்)
சிறைத்தாதி (இருளில் இருந்து) புக்காரினா! போய் வாயிலைக் கழுவு. இன்றைக்கு உனது முறை
மற்றப் பெண் தயவுசெய்து அவளை வருத்தாதே. அவளுக்குப் பதிலாக நான் செய்வேன்.
(இருள்)
காட்சி 23 இமே
அன்னா மீக்காய் லோவ்னா நிக்கோலாஷா கொல்லப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு என்னை ஒரு புகைவண்டியில் ஏற்றி மொஸ்கோவுக்குக் கொண்டு வந்தார்கள். NKVD தலைமை அலுவலகத்துக்கு என்னைக் கொண்டு போனார்கள். உள்நாட்டுப் பாதுகாப்புக்கான மக்கள் கொமிசாரே என்னைப் பார்க்க விரும்புவதாக அறிந்து நான்
196

ஆச்சரியப்பட்டேன். யாகதா கொல்லப்பட்டப் பிறகு அந்தப் பதவிக்கு வந்தவர் யெஷோவ். அவர்தான் புக்காரின் வழக்கை நடத்தினவர். அவர்தான் அழைப்பதாக நினைத்தேன். யாரும் நுழைய முடியாத NKVD யின் உள்ளறை ஒன்றுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். கதவு திறந்தது. என்னை உள்ளே போகச் சொன்னார்கள்.
(கடைசிச் சொற்கள் பேசப்படும்போதுவமேயில் ஒளி பரவகிறது. பெரியா மேசையருகில் இருக்கிறார். லாறினா உள்ளே வந்து அவரைப் பார்த்தவாறு நிற்கிறாள்.)
அன்னா மிக்காய் லோவ்னா வெளி உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு சிறையில் வாழ்ந்தவள் நான். யெஷோவும் அகற்றப்பட்டு விட்டார் என்பதும் இப்போது ரகசியப் பொலிஸ் தலைவராக பெரியா இருப்பதும் அதுவரை எனக்குத் தெரியாது.
காட்சி 24 வமே
(லாறினா அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கைகளைக் கட்டிக்கொண்டு இன்னும் பெரியாவைப் பார்த்தவாறு நிற்கிறாள்.)
V லாறினா லவ்றெந்தி பவ்லோவிச்! நீங்களா? மதிப்புக்குரிய மக்கள் கொமிசாருக்கு என்ன நடந்ததுP மக்கள் விரோதிகளின் குடும்பங்களையே அழித்துவிடுவதாகப் பயமுறுத்தினாரே? அவரும் அழிந்து போனாரா?
Gunfunr அன்னா மீக்காய் லோவ்னா தயவுசெய்து உட்காருங்கள். (அவர் தனக்கு முன் உள்ள ஒரு கதிரையைக் காட்டுகிறார் அவள் அமர்கிறாள்)
லாறினா யெஷோவுக்கு என்ன நடந்தது?
Gunfurt
அதில் என்ன உங்களுக்கு அவ்வளவு அக்கறை P (அவர் அவளைக் கூர்ந்து பார்க்கிறார்.)
97

Page 107
அன்னா மீக்காய் லோவ்னா, நான் உங்களைக் கடைசியாகப் பார்த்தபோதிருந்ததைவிட இப்போது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.
லாறினா ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா லவ்றெந்தி பல்லோவிச்? இன்னும் ஒரு பத்து வருசம் நான் சிறையில் இருந்தால் நீங்கள் என்னை பாரிஸில் நடக்கும் அழகு ராணிப் போட்டிக்கு அனுப்பலாம்.
(GourfuumT புன்னகைக்கிறார்) Gunfluunt முகாமில் என்ன வேலை செய்கிறீர்கள்.
லாறினா நான் ஒரு கழிவு அகற்றும் தெழிலாளி.
GQ nfuuny (அதிர்ச்சியடைந்ததுபோல்) கழிவு அகற்றுவதா!
லாறினா Quib
Gunfluunt உங்களுக்கு வேறு ஒரு வேலையும் தர முடியவில்லையா அவர்களால்?
லாறினா ஏன்? பிரதான உளவாளியின் மனைவிக்கு, தேசத் துரோகியின் மனைவிக்கு பொருத்தமான வேலையாத்தான் அவர்கள்
கண்டுபிடித்திருக்கிறார்கள். லவ்றெந்தி பாவ்லோவிச் அது ஏன் உங்களை இவ்வளவுக்குக் குழப்பவேண்டும்? முழு வாழ்க்கையுமே ஒரு மலக்குவியலாய் மாறியபிறகு அதில் ஒரு கொஞ்சத்தை அள்ளுவதற்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?
Gunfluunt எவ்வளவு மோசமாகப் பேசுகிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு பெண் இப்படிப் பேசலாமா? நீங்கள் வெட்கப்படவில்லையா?
லாறினா நான் இனி எதற்கும் வெட்கப்படமாட்டேன்.
(அமைதி)
198

Q Infunr அன்னா மீக்காய் லோவ்னா, சொல்லுங்கள், நிக்கோலாய் இவானோசவிச் மீது நீங்கள் ஏன் அவ்வளவு காதல்கொண்டீர்கள்?
லாறினா அது எனது சொந்த விசயம். நான் அதை யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
Gunfluunr , எங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் நீங்கள் அவரை அவ்வளவுக்கு விரும்பினிர்கள்.
லாறினா அப்போ நீங்கள்? நீங்கள் ஏன் நிகோலாய் இவோனாவிச்சை விரும்பினிர்கள்?
Gunfluunt நான் விரும்பினேனா? அப்படியில்லை.
GaonTgisarm ஆனால் லெனின் தனது கடைசி உயிலில் எழுதியிருக்கிறாரே. புக்காரின்தான் கட்சியின் செல்லப்பிள்ளை என்று. நீங்கள்
அவரை விரும்பியிருக்காவிட்டால் நீங்கள் மட்டும்தான் ஒரு பொருத்தமற்ற விதிவிலக்கு.
. GQ nfuuny லெனினின் கடிதத்தைப் பற்றி உங்களுக்குச் சொன்னது புக்காரின்தானே?
லாறினா இல்லை நானே படித்தேன்.
Gunfluunr லெனின் அதைக் கனகாலத்துக்கு முன்பு எழுதினார். இப்போது அதைச் சொல்வது பொருத்தமில்லை.
(அவர் ஒரு மனியை அடிக்கிறார். அங்குவந்த பணியாளிடம் சொல்கிறார்)
Gunfluunr கொஞ்சம் சேன்ட்விச்சும், பழமும், டீயும் கொண்டுவா.
(மேசையில் இருந்த ஒரு பைலைப் புரட்டுகிறார். பின் லாறினாவைப் பார்க்கிறார்.)
199

Page 108
Gunfluuny அன்னா மீக்காய் லோவ்னாP உண்மையிலேயே உங்களுக்கு தொடர்ந்து வாழ விருப்பமில்லையா? அதை நம்பமுடியாது. நீங்கள் மிகவும் இளமையோடு இருக்கிறீர்கள். வாழ்வு உங்களுக்கு முன்னே இருக்கிறது.
லாறின
ஆனால் நீங்கள் என்னைச் சுடுவீர்கள்?
Gunfluuny எல்லாமே உங்கள் எதிர்கால நடத்தையைப் பொறுத்தது.
(பணியாள் ஒரு உணவுத் தட்டுடனும் இரண்டு பீங்கான்களுடனும் வருகிறான். பீங்கான்களை பெரியாவுக்கும் லாறினாவுக்கும் முன்வைத்துப் பரிமாறுகிறான். லாறினா உணவைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்.)
| Gunt7unt சாப்பிட மாட்டீர்களா? ஏன்? நான் உங்களுடன் சோர்ந்து தேனீர் குடிக்க மிகவும் விரும்புகிறேன். இவை நல்ல திராட்சைகள். நீங்கள் கனகாலமாகத் திராட்சை சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் சாப்பிடாவிட்டால் நான் உங்களுடன் இனி எதுவும் பேசமாட்டேன்.
லாறினா என்னோடு பேசுவதற்கு முக்கியமான விசயம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. .
Y Gunfluunt நான் சொல்வதைக் கேளுங்கள் அன்னா மீக்காய் லோவ்னா. உங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியாக்கித்தர என்னால் முடியும். நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்? நிகோலாய் இவானோவிச்சை மறந்துவிடுங்கள். அவர் போய் விட்டார். உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!
லாறினா
எனது மனச்சாட்சியை நான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்.
(இருள்)
200

காட்சி 25 இமே
அன்னா மீக்காய் லோவ்னா பெரியா எதையும் சாதித்துக்கொள்ளாமலே நான் மீண்டும் புகைவண்டியில் ஏற்றி. அனுப்பப்பட்டேன். நான் வெளியே அனுப்பப்படும்போது என்னோடு கூட வந்த அதிகாரியிடம் எனக்குக் கொடுக்கும்படி ஒரு பையில் திராட்சைப் பழங்களை பெரியா வலியுறுத்திக் கொடுத்தனுப்பினார். புகைவண்டியில் நான் அவற்றையும் சாப்பிட்டேன். அதைத் தவிர பெரியா எதையும் சாதிக்கவில்லை.
சிறையில் இன்னும் நீண்ட ஆண்டுகளைக் கழிக்க வேண்டி யிருந்தது.'மக்கள் விரோதியின் விதவையாக இருந்ததைத்தவிர அவரது நினைவுக்குத் தொடர்ந்தும் விசுவாசமாக இருந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் புரியாத போதிலும். ஆனால் இப்போது அதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?
(அமைதி)
பத்திரிகையாளன் அன்னா மீக்காய் லோவ்னா, உங்களிடம் இன்னும் ஒரு Gessesmas GBéssaurTDnTP
அன்னா மீக்காய் லோவ்னா சரி, என்ன கேள்வி?
பத்திரிகையாளன்
மாஸ்கோ விசாரணைகள் பற்றி மேற்கத்தைய எழுத்தாளர் ஒருவர் ஒரு நாவல் எழுதியிருப்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது பெயர் ஆத்தர் கோய்ஸ்லர். அவர் தனது பிரதான பாத்திரத்தை ஒரளவு உங்கள் கணவரை அடிப்படையாகக் கொண்டே படைத்ததாக நம்பப்படுகிறது.
அன்னா மீக்காய் லோவ்னா ஆம், அது எனக்குத் தெரியும்.
பத்திரிகையாளன் தனது புத்தகத்தின் தலைப்பான நண்பகலில் இருள்" என்பதைக்கூட புக்காரின் நீதிமன்றத்தில் நிகழ்த்திய கடைசிப்
2Ol

Page 109
பேச்சில்வரும் ஒரு வசனத்தில் இருந்தே அவர் எடுத்ததாகவும் கருதப்படுகிறது. அப்பேச்சில் அவர் சொன்னார் நீ சாகத்தான் வேண்டியிருந்தால் எதற்காகச் சாகப்போகின்றாய் என்ற கேள்வியை உன்னையே நீ கேட்கும்போது ஒரு முற்றிலும் இருண்ட வெறுமை திடுக்கிடச் செய்யும் பிரகாசத்துடன் திடீரென உன் எதிரே தோன்றும்."
அன்னா மீக்காய் லோவ்னா
ஆம் .
பத்திரிகையாளன்
அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது ஆச்சரியம் தருகிறது. தனது கடைசி நேரத்தில் முழுமையான அவநம்பிக்கை நிலையை அவர் அடைந்திருந்தாரா? அதனால்தான் அவ்வாறு (o) frtgifornipTrip
அன்னா மீக்காய் லோவ்னா
இல்லை, இல்லை, நாங்கள் கடைசியாகப் பிரிந்தபோது அவர் என்ன சொன்னார் என்பதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றி அவருக்குப் பூரணமான நம்பிக்கை இருந்தது. புரட்சியில் அவரது நம்பிக்கை மாசுமறுவற்றது. விசாரணையில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது உனக்குத் தெரியும். விசாரணையாளருடன் தனது பேரத்துக்கு அவசியமான அணவுக்கு மேலாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை. மோசமான விசாரணையாளன் விஷின்ஸ்கியுடன் கூட அவர் வாதிட்டார். மிகவும் நாசுக்காக குற்றச்சாட்டுக்களின் பொய்மையைத் தொட்டுக்காட்ட தன்னால் முடிந்த அளவு அவர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தினார். "குற்றம் சாட்டப்பட்டவனின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது ஒரு பண்டைய நீதித்துறைக் கோட்பாடே" என்று கூட அவர் பிரகடனப்படுத்தினார்.
பத்திரிகையாளன் அன்னா மீக்காய் லோவ்னா, பின் ஏன் அவர் அந்த வாக்கியத் தைச் சொன்னார்?
அன்னா மீக்காய் லோவ்னா அவர் எதற்காக இறந்தார்? ஸ்டாலினின் ஆட்சி வாழ்வதற்காகவே
அவர் சாகவேண்டியிருந்து. அதுதான் அவர் சொன்ன "இருண்ட வெறுமை’
2O2

பத்திரிகையாளன் நீங்கள் அதற்கு அவ்வாறு அர்த்தம் கொடுக்கிறீர்கள். ஏனென்றால் அவர் உங்களுடன் இருந்த கடைசி நாட்களில் அவர் சிந்தித்தவை உணர்ந்தவை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் லூ பியன்காவில் அவர் கழித்த பல மாதங்களில் அவரது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியாது. அதுபற்றி உங்களுக்கு நிச்சயம் இல்லை.
அன்னா மீக்காய் லோவ்னாஇல்லை, எனக்கு நிச்சயம்தான்.
(GD676Oro)
பத்திரிகையாளன்அன்னா மீக்காய் லோவ்னா நீங்கள் இன்னும் ஏதாவது
சொல்ல விரும்புகிறீர்களா?
அன்ன மீக்காய் லோவ்னா உனக்கு சேக்ஸ்பியரின் இந்த வரிகள் தெரிந்திருக்கும்.
"நெடுநாள் பணி நிறைவேறியது
நாம் துயில் கொள வேண்டும்."
விரைவில் எனது நீண்ட நாள் பணி நிறைவேற்றப்படும் என்றே நம்புகிறேன். அதன் பிறகு சிலவேளை தூக்கத்தில்
நிறைவு காண்பேன்.
(இருள்)
2O3

Page 110
இரண்டு கடிதங்கள்
அன்னா மீக்காய்லோவ்னா லாறினா அவர்களுக்கு, மதிப்புக்குரிய அன்னா மீக்காய்லோவ்னா!"
ரஷ்ய மொழியில் நான் மோசமாக எழுதுவதையிட்டு என்னை மன்னியுங்கள். இருப்பினும் அம்மொழியில் நான் நிறைய வாசிக்கின்றேன். சோவியத் யூனியனில் நான் ஒரு போதும் வாழ்ந்ததில்லை. ரஷ்ய மொழி பற்றிய எனது அறிவு அனைத்தும் நான் தானாகவே கற்றுக்கொண்டவை.
புக்காரினது அவலமும் மரணத்தின் பின்னான் அவரது மீட்சியும் நீண்ட, வீரம் செறிந்த உங்கள் சகிப்புத் தன்மையும் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய நாடகப்பிரதி ஒன்றை இத்துடன் உங்களுக்கு அனுப்புகிறேன். இந்த நாடகத்தை எழுதுவதற்குரிய பிரதான தூண்டுதலை ஒகொன் யோக் சஞ்சிகையில் வெளிவந்த உருக்கமான உங்கள் நினைவுக் குறிப்புகளில் இருந்தே பெற்றேன். சில சந்தர்ப்பங்களில் உங்கள் சொந்த வார்த்தைகளை நான் அப்படியே பயன்படுத்தியுள்ளேன். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் மற்றப்பாத்திரங்களுக்குச் செய்தது போலவே. உங்கள் உணர்ச்சிகளையும் அபிப்பிராயங்களையும் தீர்ப்புகளையும் சித்திரிப்பதில் நாடக ஆசிரியனுக்குரிய சுதந்திரத்தைக் கடைப் பிடித்துள்ளேன். இதையும் நீங்கள் மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன். வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே நான் நாடகத்தை எழுதியுள்ள போதிலும் நாடக அமைப்பைக் கருத்தில்கொண்டு சில காட்சிகளில் சில சம்ப்வங்களை வேறு முறையில் இணைத்துள்ளேன் அல்லது ஒழுங்கமைத்துள்ளேன்.
இந்த நாடகத்தின் தலைப்பான நெடுநாள் பணி (The Long Day's Task) ஷேக்ஸ்பியரின் அந்தனியும் கிளியோபத்ராவும் நாடகத்தில் வரும் பின்வரும் வரிகளில் இருந்து. எடுக்கப்பட்டது.
204

நெடுநாள் பணி நிறைவேறியது நாம் துயில் கொள வேண்டும் (The long day's task is done And we must sleep)
பர்ஸ்டர்நாக் இவ்வரிகளை ரஷ்ய மொழியில் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.
КОnchen trud
Bolshogo dnya. Para na otcyh
ஒரு நாடக ஆசிரியரின் தனது நாடகத்தை தனது பாத்திரம் ஒன்றின் தீர்ப்புக்காகச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு மிக அரிதாகவே கிடைக்கும். இந்தப் படைப்பை நம்பிக்கையுடனும் அதேவேளை ஆதங்கத்துடனும் தங்களுக்கு அனுப்புகின்றேன். இந்த நாடகத்தின் சமர்ப்பண உரையில் வெளிப்படுத்துயுள்ள அதே கெளரவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்.
இனிய வாழ்த்து க்களுடன் றெஜி சிறிவர்த்தன.
2
மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களுக்கு,
ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சியுடன் உங்கள் கடிதத்தைப் படித்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் உங்கள் நாடகத்தை என்னால் படிக்க முடியவில்லை. ஆயினும் உங்கள் கடிதத்தில் இருந்து ஒகொன்யோக் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட எனது நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அது எழுதப்பட்டிருப்பதை நான் புரிந்து கெர்ண்டேன்.
எனது நினைவுக் குறிப்புகள் உங்கள் உள்ளத்தில் எழுப்பிய உணர்வுகளுக்காவும் நிக்கோலாய் இவானோவிச்சினதும் எனதும் துர்ப்பாக்கியம் குறித்து நீங்கள் காட்டும் அனுதாபத்துக்காகவும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
தற்போது 1988ஆம் ஆண்டுக்கான ஸ்னம்யா சஞ்சிகை எனது நினைவுகளை வெளியிட்டு வருகின்றது. ஸ்னம்யாவின் பத்தாவது
2ი5

Page 111
இதழில் எனது நினைவுக்குறிப்புக்களின் முதல் பகுதி வெளிவந்துள்ளது. பதினோராம் பனிரெண்டாம் இதழ்களில் அது தொடரும். ரஷ்ய மொழியில் நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள். அதைவிட நன்றாக வாசிக்கிறீர்கள் என்பது தெரிகின்றது. உங்கள் நாடகத்தை நிறைவு படுத்துவதற்குரிய துணைத் தகவல்கள் இத்துடன் உள்ளன. V
மதிப்புடன் லாறினா அன்னா மீக்காய்லோவ்னா.
206

பின்னுரை வீழ்ச்சியின் பிந்திய உலகம்.
1991 ஆகஸ்டில் தோல்வியில் முடிந்த சதிப்புரட்சிக்கு இருவாரங்களின் பின்னர் நான் ஆற்றிய உரையொன்றில் முன்மொழியப்பட்ட சோவியத் யூனியனின் உடைவு இப்போது நிகழ்ந்து முடிந்துள்ளது. பழைய சோவியத் யூனியன் பதினைந்து தனித்தனி நாடுகளாகப் பிரிந்துள்ளது. இவற்றுள் பன்னிரண்டு நாடுகள் பிரதானமாக பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் தம்முள் ஒரு நொய்மையான கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள இணங்கியுள்ளன. இந்தக் கூட்டமைப்புக்குச் சுயாதீன அரசுகளின் Gungsbaugustub (Commonwealth of Independent States) 6T60T' பெயரிடத் தீர்மனிக்கப்பட்டுள்ளது. தமது பூரண அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் உறுதிப் படுத்தவும் சோவியத் யூனியனின் பழைய குடியரசுகளுக்குள்ள ஆர்வத்தை இந்தப் பெயரே கோடிட்டுக் காட்டுகின்றது. 1991 ஒகஸ்டுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு வகையான அரசியல் ஒன்றியத்தைப் பாதுகாக்க கொர்பசேவ் பெரிதும் முயன்றார். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குடியரசுகள் அரசியல் ரீதியில் தமக்கு மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மைய அதிகார அமைப்பை விரும்பாமையே இதற்குப் பிரதான காரணமாகும்.
முன்னர் மத்திய கட்டுப்பாட்டுக்குள் இருந்ததன் விளைவாக பொருளாதார ரீதியில் குடியரசுகள் இன்னமும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. இந்த அடிப்படையிலேயே பொருளாதார ஒத்துழைப்புக்கான தேவை எழுகிறது. எனினும் தற்போதைய இருத்ததலுக்காக இந்த ஒத்துழைப்பைப் பேணும் அதேவேளை இக் குடியரசுகளுள் பெரும்பாலானவை வர்த்தகம், முதலிடு, தொழில் நுட்பம், நிதி போன்ற துறைகளில் உதவிதேடி வெளி உலகை- குறிப்பாக ஜப்பான், ஐரோப்பிய சமூகம், அமெரிக்கா ஆகியவற்றை நாடிச்செல்லும்; ரஷ்யா, உக்ரைன் கிர்கிசியா ஆகியவை ஏற்கனவே இதனை ஆரம்பித்துவிட்டன.
2O7

Page 112
பொருளாதாரக் காரணியைத் தவிர, சோவியத் யூனியனின் முன்னைய குடியரசுகளை எதாவது ஒரு விதத்தில் ஒன்றிணைய நிர்ப்பந்திக்கும் பிறிதொருகாரணி அவை வைத்திருக்கும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அவசியமாகும். ரஷ்யா, உக்ரைன், பைலோ ரஷ்யா, கசாகிஸ்தான் ஆகிய நான்கு குடியரசுப் பிரதேசங்களில் நெடுந்துரர ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை தந்திரோபாய அணுவாயுதங்கள் இன்னும் அதிக பிரதேசங்களில் வினியோகிக்கப்பட்டிருக்கமுடியும். சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் வெவ்வேறு குடியரசுகள் அணுவாயுதங்களைச் சேர்த்துவைத்திருக்கக்கூடிய சாத்தியப்பாடு பற்றி மேற்கத்தைய அரசுகள் மிகுந்த பதற்றம் கொண்டுள்ளன. இத்தகைய அச்சங்களைத் தணிப்பதற்குப் புதிய பொதுநலவாயம் அக்கறைகொண்டுள்ளது. அணுவாயுதங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒரு மையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுள் ஒன்றாகும். இருப்பினும் சில குடியரசுகள் தமது சொந்த ராணுவத்தைக் கட்டிஎழுப்ப உறுதிகெர்ண்டுள்ளன. பழைய சோவியத் யூனியனின் கருங்கடல் கடற்படையைப் பங்குபோடுவது சம்பந்தமாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஜனவரியில் கருத்துவேறுபாடுகளும் தோன் றின. உண்மையில் ரஷ்யாவுக்கும் ஏனைய குடியரசுகளுக்குமிடையே பரப்பளவிலும், சனத்தொகையிலும், மூலவளங்களிலும் காணப்படும் பாரிய சமத்துவமின்மை இப் பொதுநலவாயத்தினுள் பிளவை ஏற்படுத்தக்கூடும்.
சோவியத் யூனியனின் உடைவு இயல்பாகவே சர்வதேச சக்திகளின் சமநிலையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள், குறிப்பாக மூன்றாம் உலகைச் சேர்ந்தவர்கள் இப்போது ஒரே ஒரு வல்லரசே நிலைபெற்றிருப்பதையிட்டு பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். அமெரிக்காவின் தனி ஆதிக்கத்துக்குட்பட்ட ஒருமுகப்பட்ட உலகைப் பற்றி அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுபற்றி இச்சிறிய பின்னுரையில் போதிய அளவு ஆராய்வதற்கு இடமில்லை. எனினும் எனது கருத்தை இங்கு கூறிவைக்க வேண்டும். இப்போதைக்கு அமெரிக்க ஆதிக்கம் அதை எதிர்த்து நிற்கக்கூடிய எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத ஒன்றாகவே தோன்றுகின்றது. ஆயினும் இந்த நிலைமை நெடுங்காலத்துக்கு நீடிக்காது. 1992ல் நிகழ இருக்கின்ற ஐரோப்பிய சமூகத்தின் நெருக்கமான ஒன்றிணைப்பு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் அதி சக்திவாய்ந்த பொருளாதார
208

அமைப்பை உருவாக்கப்போகின்றது. மேலும் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் அதனை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. காலப்போக்கில் ரஷ்யா, உக்ரைன், பைலோரஷ்யா ஆகியனவும் இதே திசையில் செல்லக்கூடிய சாத்தியம் உண்டு.
சோவியத் அணுவாயுத அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு பொருளாதார ரீதியில் பலம்பெற்ற ஐரோப்பா அமெரிக்க மேலாதிக்கத்துக்குப் பணிந்திருக்கக் கடமைப்பட்டுள்ளதாக இனி ஒருபோதும் கருதாது. சர்வதேச விவகாரங்களில் சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டையே அது பெரிதும் மேற்கொள்ளும். மறுபுறத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஜப்பான் பொருளாதாரத் துறையில் அமெரிக்காவின் சம போட்டியாளனாக மாறியுள்ளது. உற்பத்தி வளர்ச்சியைப் பொறுத்தவரை அமெரிக்கப் பொருளாதாரம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும்விட பின்தங்கியுள்ளது. இவ்விரு நாடுகளும் அமெரிக்காவைப் போல் பெருமளவு ராணுவச் செலவினச் சுமைகளால் பாதிக்கப்படாதது இதற்கு ஒரு காரணமாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான காரணிகளுள் ஒன்று இரண்டாவது உலகயுத்த காலத்தில் இருந்து அதன் பொருளாதார வளங் களில் ח עsg6ופu L Gl) g; 60 g5 til tíð அணுவாயுதங்களையும் கட்டி எழுப்புவதில் செலவிடப்பட்ட மையாகும். அமெரிக்கப் பொருளாதாரம் அதே அளவு நெருக்கடிக்கு உள்ளாகாதமைக்கு அது அதிக செல்வம் உடையதாக இருப்பதே காரணமாகும். ஆயினும் அமெரிக்கா சர்வதேச பொலிஸ்காரனாகச் செயற்படுவதனால் அதன் அதிகாரமும் அத்துமீறி விஸ்தரிக்கப் பட்டுள்ளது. அதிகரித்துவரும் பாதுகாப்புச் செலவினங்களால் அதன் சமூகநல ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. இதன் விளைவாக நகரங்களில் வீழ்ச்சிநிலை காணப்படுகின்றது. குறிப்பாக நகர்ப்புற வறியவர்களில் பெரும்பான்மையினரான கறுப்பின மக்கள் மத்தியிலும் ஸ்பானிய மொழிச் சமூகத்தினர் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வ்கையில் அமெரிக்காவில்கூட ஆழ வேரூன்றியுள்ள சமூக நெருக்கடி முதிர்ச்சியடைந்து வருகின்றது.
இவ்வகையில் சர்வதேச அதிகார உறவுகளைப் பொறுத்தவரை 21ஆம் நூற்றாண்டில் 1945க்கும் 1991க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இருந்ததுபோல் இருமுகப்பட்ட ஒரு உலகமோ அல்லது சிலர் பயப்படுவதுபோல் ஒருமுகப்பட்ட உலகமோ இருக்கமாட்டாது. பதிலாக பன்முகப்பட்ட ஒரு உலகமே சாத்தியமானது. குறைந்த
2O9

Page 113
பட்சம் மூன்று அதிகார மையங்களாவது இருக்கும். ஐரோப்பா, ஜப்பான். அமெரிக்கா என்பன அவை. இவ்விசயத்தில் ரஷ்யாவை நாம் கவனத்தில் இருந்து ஒதுக்கிவிடவும் முடியாது. தற்போதைய பிரச்சினைகளில் இருந்து அது விடுபட்டு எழுமாயின் அடுத்த நூற்றாண்டில் அதுவும் ஒரு பெரும் சக்தியாகவே அமையும். அதன் பாரிய நிலப்பரப்பும், பெருமளவான இயற்கை மற்றும் பொருளாதார மூலவளங்களும் தம்மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்கை உடைத்தெறியப் போகின்ற \ வளமான கலாச்சார மரபுகளைக் கொண்ட பரந்த மக்கள் தொகையும் இதனைச் சாத்தியமாக்கும்.
210


Page 114

ரெஜி சிறிவர்தன () இயங்கமி மிக முக்கியமா ஆய்வறிபாருரு மாயத்கோட்பாட்டிலும் வரலாற்றி ஆத (Lut. Fir I'], ' | ' யாளர் பல்மொழி அதிருகிறந்தியிருநாட ஆசிரியர் கா இயக்கிய விமா பெரிதும் ஆங்கியத்திலேயே எழுதிவரும் ெ சிநிவர்தாவின் பின்வரும் நூல்கள் இதுவா" வெளிவந்துள்ளன
Cring curtius Many Wolicis (1974), Two plays from Aleksander Pushkin 14 Anna Akhmallowa (1979), Mar IIITs well W. 1985). In a The Long Day's Task (19. Prometheus, 1989), Sara, To Il Muste o Iristir Tiria i 1990
தமிழில் வெளிவரும் நெரிசிறியதாக முதலாவது நூல் சோவியத் யூனியரி
தாடி உலக வரலாற்றில் பாரிய தாசிரிா ஏறபடுத்தியுள்ள முக்கியா திரு வரா நிகழ்வின் பல்வேறு அம்சங்கா இந் விரிவாக ஆராய்கின்றது
தமிழில் முதல்முறையாக மார்சிய LLSLLL T TLLLLLLL LSSSSS eAKAMAS T T T aL
Lihat 1 أنا أما آ ألياف التي gyfrif, troi tarznu l-irku gġu f'IM விவாதத்தை இந்நூல் தொடக்கிேேபச்சி
வன்முறை அரசியல் சுழலிங் சிரு திக்குத்திசதெரியாதுதந்தளிக்கும் நம்நாட்டு சூழலில் வர்முறையின் கருத்தியா விசாராக்கு உட்படுத்தும்