கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: டாக்டர் மேரி ரட்னம்

Page 1
L IT, LT G3
இலங்கையில் பெண்கள் உழைத்த கனேடியப் ெ
gF (Upd விஞ்ஞானிகள்
 
 
 

a flapists
LIGGÖTLDGOõif)

Page 2

டாக்டர் மோரி ரட்னம்
இலங்கையில் பெண்கள் உரிமைக்காக உழைத்த கனேடியப் பெண்மணி
குமாரி ஜெயவர்த்தனா தமிழாக்கம் சித்திரலேகா மெளனகுரு
சமுக விஞ்ஞானிகள் சங்கம்
1993

Page 3
கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதி ஆதரவில் வெளியிடப்பட்டது.
C) DiffGouD 1993
Printed by Karunorotne & Sons Ltd. Colombo 0,

முன்னுரை
சமீபத்தில், இலங்கை வந்திருந்த சில கனேடியப் பெண் களுடன் உர்ையாடியபோது ரொறன்ரோவைச் சேர்ந்த வைத்தியரும் இலங்கையில் பெண்ணுரிமை இயக்கத்தின் முன்னோடியுமான டாக்டர். மேரி ரட்னம் பற்றிக் குறிப்பிட்டேன். அவரைப் பற்றிய மேலதிகமான தகவல்களை அவர்கள் கேட்டபோது, அவரது பணிகள் பற்றிய எனது மனப்பதிவையே வெளிப்படுத்த முடிந்தது. கனடாவில் அவரது இளமைக்கால வாழ்க்கை பற்றியோ, இலங்கையில் அவரது பணிகள் பற்றியோ எனக்கு அதிக விபரங்கள் தெரிந்திருக்கவில்லை. சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் பெண்கள் பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக மேரி ரட்னத்தின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதுவதற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் (CIDA) ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்டபோது, எனது ஆராய்ச்சியை, அவர் பற்றிய எனதும் மற்றையோரினதும் நினைவு கூரல்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
கிராமியப் பெண்களுக்காக மேரி ரட்னம் நடத்திய லங்கா மஹில சமிதியின் ஒரு வாரப் பயிற்சி நிகழ்ச்சியொன்றில் நான் சிறுமியாயிருந்தபோது கலந்து கொண்டேன். மேரி ரட்னத்தை நன்கு அறிந்தவரும் அவருடன் சேர்ந்து பெண்கள் அரசியற் சங்கம், அகில இலங்கை பெண்கள் சங்கத்தில் பணியாற்றியவரும் எனது தாயாருமான எலினர் டி. சொய்சா, ஆற்றல் வாய்ந்த ஆளுமை கொண்ட டாக்டர் ரட்னத்தின் பெண்கள் தொடர்பான பணிகைள நான் அறிவது எனக்கு நன்மை தரும் என எண்ணியிருக்க வேண்டும். உடல் நலம், சுகாதாரம் ஆகியவை பற்றிய ரட்னத்தின் பாடப்புத்தகத்தை நான் பயன்படுத்தியதும் மதுப் பழக்கத்தின் விளைவுகள் பற்றிய அவரது விஸ்தாரமான வர்ணனைகளால் திகிலுற்றதும் எனக்கு நினைவுள்ளது. எனது பாடசாலையில் அவர் இனப்பெருக்க அமைப்புமுறை, குழந்தை பிறப்பு முதலிய, பாடசாலைகளில் முற்றாகத் தடை விதிக்கப்பட்ட பொருள்களில் உரையாற்றியதும் எனக்கு நினைவிலுள்ளது.

Page 4
மேரி ரட்னம் இலங்கையில் பல விடயங்களில் முன்னின்ற தாலும், ஆர்வமாகச் செயற்பட்டதாலும் அவரை ஒரு கனேடியர் என அன்றி இலங்கையர் என்றே ஏற்றுக் கொண்டோம். அவரது வாழ்க்கை விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியபோது கனடாவிலும் இலங்கையிலும் அவரது அனுபவங்கள், அவரது ஈடுபாடு, செயல் திறன் ஆகியவற்றை அறிந்து ஆச்சரியமுற்றேன். 1970களிலும் 80களிலும் இலங்கையில் தோன்றிய "இரண்டாவது கட்ட பெண்நிலை இயக்கத்தின் அங்கத்தவராயிருந்த நாம் பெண்களது ஜனநாயக உரிமைகளுக்காகவும், வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த முன்னோடிப் பெண்கள் பற்றி மிகச் சிறிதளவே அறிந்திருந்தோம்.
கடந்த சில வருடங்களாக ஆசியாவில், குறிப்பாகத் தென் னாசியாவில் நிகழ்ந்த பெண்நிலைப் போராட்டங்கள் பற்றிய விபரங்களை வெளிக் கொணர்வதில் ஈடுபட்டுள்ளேன். இம் முயற்சி இதுவரை காலம் மறைந்திருந்த பல விடயங்களை வரலாற்றின் மேற்பரப்புக்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாகத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் உரிமை பற்றி ஒரு வலிமை வாய்ந்த கருத்தோட்டப் போக்கு இருந்தமையும், அரசியல் சீர்திருத்தம், சமூகமாற்றம் என்பவற்றில் பிறநாட்டுப் பெண்களின் பங்களிப்பும் தெரிய வந்துள்ளன. சுருக்கமான இவ் வாழ்க்கை வரலாற்று நுால் ஆரம்பகால சீர்திருத்தவாதிகள் பற்றிய எமது அறிவில் காணப்பட்ட ஒரு இடைவெளியை நிரப்புவதுடன் இலங்கையில் பெண்கள் வரலாறு தொடர்பாக ஏனையவர்களுக்கு ஆர்வத்தைத் துாண்டும் எனவும் நம்புகிறேன். மேரி ரட்னத்தைப் பற்றி எழுதுவது இலகுவான காரியமாக இருக்கவில்லை; அவருடைய ஒரே ஒரு நாட்குறிப்புப் புத்தகமே கிடைத்தது; அவரது பல உறவினர்கள் இறந்து விட்டனர். அல்லது வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டனர். எனினும் கிடைத்த ஆதாரங்களையும் நேர்முகப் பேட்டிகளையும் கொண்டு அவரது வாழ்க்கையினதும் பணிகளினதும் பிரதான நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்துள்ளேன்.
மேரி ரட்னத்தின் பேரப் புதல்வரான திரு. பிரெய்ன் ரட்னத்தின் பெறுமதி மிக்க உதவியின்றேல் இந்நுாலை எழுதல் சாத்தியமாகியிராது. அவர் எனக்கு மேரி ரட்னத்தின் நாட்குறிப்புப்

iii
பகுதிகள், வேறு ஆவணங்கள் ஆகியவற்றைத் தந்ததுடன், டாக்டர் ரட்னம் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் என்னுடன் பல கலந்துரையாடல்களை நடத்தினார். மேலும் டாக்டர் ரட்னத்தின் பேரப் புதல்வியான அனிற்றா கப்டனுக்கும் எனது நன்றி உரித்தாகும். அவர் பத்திரிகைத் துணுக்குகள், கடிதங்கள் ஆகியவற்றைத் தந்ததுடன் அக்கால கட்டத்தின் வரலாற்றுச் சாட்சியங்களான பல புகைப்படங்க ளையும் பிரதியெடுக்க அனுமதித்தார். மேலும் எனக்கு ஆலோசனைகளும் குறிப்புகளும் கூறிய மாலா டி அல்விஸ், சர்வம் கைலாசபதி, அக்னஸ் மென்டிஸ், ஜே. உயங்கொட, சூரியா விக்கிரமசிங்க ஆகியோருக்கும் எனது நன்றி உரியது. தகவல் சேகரிப்பில் உதவிய பிரார்த்தனா கமாராச்சி, கொல்வின் கருணரட்னா, லேக்ஹவுஸ் நுாலகர், ஆகியோருக்கும், மேரி ரட்னம் பற்றி தகவல் தந்த ரொறன்றோ டிரினிற்றி கல்லுாரி ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்த ஹென்றி பியோனுக்கும் நிதி உதவி அளித்த கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்துக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
குமாரி ஜெயவர்த்தனா சமூக விஞ்ஞானிகள் சங்கம் கொழும்பு.

Page 5

மேரி ஏர்வின் ரட்னத்தின் வாழ்வும் பணியும் (1873 - 1962)
“யுவதிகள் நிகழ்த்திய 'பெண்கள் உரிமைகள் பற்றிய உரையாடல்" மிகச் சிறந்தது."
இலங்கைப் பெண்கள் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் நடை பெற்ற நாடகத் துணுக்கு பற்றி மேரி ரட்னம் 17 ஜூலை 1909 இல் எழுதிய குறிப்பு மேரி ரட்னம் நாட்குறிப்பு 1906-1909)
காலனித்துவ காலகட்டத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்த மேற்கு நாட்டுப் பெண்கள் சிலர், இந்நாடுகளில் அரசியல், சமூக சீர்திருத்தங்களின் முதன்முயற்சியாளர்களாயிருந்தனர். இக்காலப்பகுதியில் உள்நாட்டுப் பெண்கள் சிலரும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியால் நன்மை பெறவும், பொது விடயங்களில் கருத்துச் செலுத்தவும் தொடங்கியிருந்தனர். பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்திய வைதீகக் கருத்துகளுக்கு எதிராகவும், பெண்கள் உரிமைகளுக்காகவும் போராடிய மேனாட்டு, உள்நாட்டுப் பெண்களிடையே பரஸ்பர தொடர்பு காணப்பட்டது. உள்நாட்டில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய, உள்ளூர்ப் பெண்களுக்கு ஊக்கமூட்டிய வெளிநாட்டுப் பெண்களில், மிஷனரி வேலைத்திட்டங்கள், காலனித்துவ மருத்துவ சேவை ஆகியவற்றில் பங்கேற்ற அல்லது தனிப்பட்ட முறையில் தென்னாசியாவில் தொழில் புரிந்த பெண் வைத்தியர்கள் ஒரு பிரிவினராவர்.
இலங்கையில் வாழ்ந்த மிகப் பிரபலமான வெளிநாட்டுப் பெண் வைத்தியர் மேரி ஹெலன் ரட்னம் (கன்னிப் பெயர் ஏர்வின்) ஆவர். 1993 ஆம் ஆண்டு கனடா நாட்டினரான இவர் பிறந்து 120 வருடங்கள் நிறைவுறுகின்றன. ஒரு மிஷனரி வைத்தியராக 1896 இல் இலங்கை வந்த இவர், இலங்கையர் ஒருவரைத் திருமணம் செய்ததால் மிஷனரி சேவையிலிருந்து விலக்கப்பட்டார்.

Page 6
மேரி ரட்னம் அரச சேவையிலும் தற்காலிகமாகவே கடமையாற்றினார். கனேடிய நாட்டு மருத்துவப்பட்டத்தை அங்கீகரிக்காத பிரித்தானிய அரசாங்கம், அவருக்கு நிரந்தர நியமனம் அளிக்கவில்லை. இந்நிலமையால் சமூக அரசியல் சீர்திருத்தங்களில் ஈடுபடுவதில் அவருக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. எனினும் சுமார் 50 வருடங்களுள் சமூக சீர்திருத்தம், உடல் நலக் கல்வி, குடும்பத் திட்டமிடல், பெண்களின் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை முன்னெடுத்த ஒரு தேசியப் பிரமுகரானார். அவரது தாராண்மைக் கருத்துகளையும், பெண்கள் தொடர்பாக வாதத்துக்கிடமான விடயங்களில் துணிவுடன் போராடியமையும் புரிந்து கொள்வதற்கு அவரது கனேடியப் பின்னணி பற்றிய அறிவு அவசியம். அத்துடன் அவரது உணர்வையும் நிலைப்பாட்டையும் உருவாக்கும் கருவிகளாகச் செயற்பட்ட, 19ஆம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் கனடாவில் காணப்பட்ட கருத்து நிலை அறிவுச் சக்திகளையும் ஆணாதிக்க அமைப்பு, பெண்ணின் தாழ்த்தப்பட்ட நிலை என்பவற்றுக்கு எதிராகச் V செயற்பட்ட இயக்கங்களையும் பற்றிய அறிவும் தேவையாகும்.
19 ஆம் நுாற்றாண்டின் இறுதியில் கனடாவில் பெண்கள் செயல்வாதம்
மேரி ஏர்வினுடைய இளமைக் காலத்தில், 19ஆம் நுாற் றாண்டுப் பிற்பகுதியில், கனடாவில் குறிப்பிடத் தக்க பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1870 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிற்குக் குடிபெயரும் பிறநாட்டினர் எண்ணிக்கை மிக அதிகரித்தது. இதனால் மக்களது வதிவிட மாற்றங்களுடன் தொடர்பான குறைந்த சம்பளம், கல்வி, சுகாதாரக் குறைபாடு முதலிய பிரச்சினைகள் தோன்றின. இதுகாலவரை தொண்டுப் பணிகளுடனும் ஆலயக் குழுக்களுடனும் தம்மை இணைத்திருந்த மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் மதுவிலக்கு, பொதுச் சுகாதாரம், சிறுவர் பராமரிப்பு, பெண்களது தொழில்நிலைமை, நகர ஆட்சி போன்றவை குறித்து அக்கறை கொண்டனர்.
முதலாளித்துவத்தின் விருத்தி, நகரில் மக்கள் தொகை அதிகரிப்பு (1881 இல் 96,000 ஆக இருந்த எண்ணிக்கை 1911 இல் 424,000 ஆகியது) முதலியவை காரணமாக ஏனைய நகரங்களை விட

ரொறன்ரோவில் சமூகப் பீர்ச்சண்கள் அதிகளவில் காணப்பட்டன. இதனால் ரொறன்ரோ மேற்கூறிய விடயங்களில் அக்கறை செலுத்துவதிலும் முன்னின்றது. மேலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரொறன்ரோவில் குறைந்த சம்பள நிலைமைகள், பெண்களும் சிறுவர்களும் உழைப்பாளர் படையின் மூன்றில் ஒரு பங்காக இருந்தமை, அவர்களே மிகக் குறைந்த சம்பளம் பெற்றமை காணப்பட்டன. இதன் விளைவாக பெண்களது கடின உழைப்பு, சிறுவர் உழைப்பு, சிசு மரணம் முதலியவை பற்றி பெண் சமூக சீர்திருத்தவாதிகளுடைய அக்கறை அதிகரித்தது. (Kealey 1979: 4) கனடாவில் நிலவிய பொருளாதார சமூக அசமத்துவங்களுக்கு எதிரான போராட்டங்கள் கிராம, நகரப்புறங்களில் அதிகரித்தன. தொழிற் சங்கங்களும், அரசியற் குழுக்களும் கைத்தொழிற் கிளர்ச்சிகளை முன்னெடுத்தன. இதே சமயம் விவசாய சமூகங்கள் மத்தியிலும் தீவிரத் தன்மைகள் வளர்ந்தன. இதே கால கட்டத்தில், கனேடியப் பெண்நிலைவாதத்தின் முதலாவது எழுச்சிக்கு வழிவகுப்பதாக பெண்கள் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வும் தோன்றியது.
ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் போலவே 1880 களுக்குப் பின்னர் "புதுமைப் பெண்" என்ற படிமம் கனடாவில் பிரபலமடைந்ததுடன் பெண்கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமை, சமூக சீர்திருத்தம், உடைச்சீர்திருத்தம் ஆகியவற்றுடனும் விபசாரம், மதுப்பழக்கம் முதலியவற்றுக்கு எதிரான இயக்கங்களுடனும் இது தொடர்புபட்டதாய் இருந்தது. வெளிநாடுகளில் பெண்களது நிலைமையை முன்னேற்றும் நோக்கமுடைய மிஷனரிப் பணிகள் சிலவற்றிலும் பெண்கள் ஈடுபட்டனர். பெண்களது தாழ்த்தப்பட்ட நிலையைப் பொருளாகக் கையாண்ட நாவலாசிரியர்கள், ஆணாதிக்கக் கருத்துகளை மாற்றுவதில் முன்னின்றனர். பெண்கல்வி, சமசம்பளம், பெண்கள் வாக்குரிமை, மனைவியரை அடித்தலுக்குத் தண்டனை, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக உழைத்த, உத்வேகமுள்ள, அசாதாரணமான பெண்களைத் தமது நாவல்களிற் சித்தரித்தனர். 1890 ஆம் ஆண்டு வெளிவந்த Clipped Wings - வெட்டப்பட்ட இறகுகள் என்ற நாவல் மதுவியாபாரம், மதுப்பழக்கம் என்பவை பற்றிய குற்றப் பத்திரிகை போலிருந்தது. இது பெண்களது புதிய சீர்திருத்தப் பாத்திரம் பற்றியும் பேசியது: "புதிய பெண் உலகிற்காகத் தொட்டிலை

Page 7
ஆட்டுவது மாத்திரம் அல்ல, தொட்டிலுக்காக உலகை ஆட்டவும் முனைந்துள்ளாள்" எனக் கூறியது. (Roberts. 1979:18) இத்தகைய நாவல்கள் கிராம, நகரப்புற தாய்மாரின் நிலைமை பற்றி மாத்திரமன்றி சமூகப் பிரச்சனைகள் பற்றியும் கவனத்தை ஈர்த்தன; மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு வாக்குரிமை, சட்டசபையில்
பிரதிநிதித்துவம்முதலியவற்றை அளித்தல்வேண்டும்எனவாதிட்டன.
கனேடிய சமூகமானது சகல தளங்களிலும் ஆணாதிக்கம் வாய்ந்ததாய் இருந்தது; எனினும் 19 ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதி யிலிருந்து ஒன்ராரியோவைச் சேர்ந்த பெண்கள் பெண்விடுதலை , சம உரிமை ஆகியவற்றுக்காகத் தீவிரமாகப் போராடத் தொடங்கினர். ஒன்ராரியோவிலுள்ள நோர்மல் ஸ்கூலில் பெண்களை ஆசிரியப் பயிற்சிக்கு அனுமதிக்கக் கோரி 1847 ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துடன் இதன் முதலாவது கட்டம் ஆரம்பமானது. ஆனால் பல்கலைக்கழகங்களில் பெண்களை அனுமதிப்பதற்குப் பலவருடங்கள் சென்றன. ஒன்ராரியோவின் பிரபல குடும்பமொன்றைச் சேர்ந்த ஹெலன் மக்ஹில் ரொறன்றோ பல்கலைக்கழகத்தில் கற்று 1889 இல் முதலாவது பெண்பட்டதாரியானார். ஆனால் தொழில்சார் பீடங்களான வைத்திய பீடம், சட்டபீடம் ஆகியவற்றுக்குப் பெண்களை அனுமதிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவியது. மேரி ஏர்வினுடைய இளம்பருவத்தில் 1870களிலும் 1880களிலும் வைத்திய பீடத்துக்கு அனுமதி கோரி பெண்களின் தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் பல கனேடியப் பெண்கள் வைத்தியக் கல்வி கற்றனர். 1849 இல் எலிஸெபத் பிளெக்வெல் நியுயோர்க்கில் கற்றுப் பட்டம் பெற்றார். ரொறன்ரோ மருத்துவக் கல்லுாரியில் அனுமதி மறுக்கப்பட்ட, குவெக்கர் குடும்பத்தைச் சேர்ந்த எமிலி ஹோவாட் ஸ்ரோவ் (18311903) நியுயோர்க் மருத்துவக் கல்லூரியில் கற்று 1868 இல் பட்டம் பெற்றார். ஜெனி கிட் ரவுற் பிலெடெல்பியாவில் 1875 இல் வைத்தியப் பட்டம் பெற்றார். ஆனால் டாக்டர். எமிலி ஸ்ரோவ் ரொறன்ரோவில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனினும் அவர் அதனை அலட்சியப்படுத்தி வைத்தியத் தொழிலை மேற்கொண்டார்; அதிக வருமானம் கிடைத்தது. ஆனால் உத்தியோக பூர்வமான அங்கீகாரம் 1880 இலேயே அவருக்குக் கிடைத்தது. (Bassett, 1975; 148-152)

பெண்கள் வைத்தியத் தொழில் புரிவது தொடர்பாக கனடாவில் தொடர்ந்து எதிரான கருத்துகள் நிலவிய போதிலும் 1880 களில் சில மருத்துவக் கல்லுாரிகள் பெண்களை அனுமதிக்க ஆரம்பித்தன. வைத்தியரான எமிலி ஸ்ரோவின் புதல்வியான ஓகஸ்ட்ஸ் ஸ்ரோவ் என்பவரே கனேடிய மருத்துவ நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்ற (1890) முதற் பெண்ணாவர். இவரைத் தொடர்நது பலர் பட்டம் பெற்றனர். ஒகஸ்டஸ் ஸ்ரோவ் மரபுகளை எதிர்த்து “பெண்கள் தன்னிறைவும் சுதந்திரமும் உள்ளவர்களாக" இயங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார் (Roberts 1979:29) இவர் கால்சட்டை அணிந்து, ரொறன்ரோ வீதிகளில் சைக்கிளில் வலம் வந்ததன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏனைய நாடுகளில் நடந்தது போலவே ஆரம்பகால மருத்துவ மாணவிகள் சக ஆண் மாணவர்களது ஆபாச மான கிண்டல்களுக்கும், வார்த்தையாடல்களுக்கும், விரிவுரையாளர்களின் பகையுணர்வுக்கும் முகங் கொடுக்க வேண்டியிருந்தது. நீண்டகால கோரிக்கைகளுக்குப் பின்னர் 1883 இல் கிங்ஸ்டன் பெண்கள் மருத்து வக் கல்லுாரி குவீன்ஸ் பல்கலைக்கழகத்துடனும் ரொறன்ரோ பெண்கள் மருத்துவக் கல்லுாரி ரொறன்ரோ பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டன. 1890 களின் பிற்பகுதியில் மேலும் பல மருத்துவக் கல்லுாரிகள் பெண்களுக்கு அனுமதி வழங்கின. ஆரம்பகால மருத்துவ மாணவிகள் பெண்நிலைவாதிகளாயும், கனேடிய சமூகத்தின் பழமை வாதத்துக்கு எதிராகப் போராடியவர்களாயும் உள்ளனர். அலிஸ் மக்கில்வ்றே போலப் (இவர் 1884 இல் குவின்ஸ் கல்லுாரிப் பட்டம் பெற்றவர்) பலர் வெளிப்டையாகப் பேசும் பண்பு கொண்டிருந்தனர்.
ஒன்ரோரியோவை அவளது இளம் புதல்விகளின் தேவை குறித்து விழிப்படையச் செய்தல் வேண்டும். நாம் "குருதிச் சிலுவையைச் சுழற்றி வீசி வாழ்க்கையில் ஒரு அதிர்வை உண்டாக்க வேண்டும். இதன் மூலம்தான் எமது சக பிராணிகளின் அற்பத்தனத்தை Galeft Giggs gust guy partib. (Strong-Boag 1979:116)
மேரி ஏர்வின் போன்றே ஏனைய ஆரம்பகால மாணவிகள் ஒன்ரோறியோவின் சிறிய நகர்களைச் சார்ந்த வைத்தியர்கள், சிறு வியாபாரிகள், ஆசிரியர்கள், விவசாயிகளின் புதல்வியராவர். குடும்பத்தினரது தாராள மனப்பான்மையாலும், இளம்பெண்கள் கிறிஸ்தவ சங்கம், கிறிஸ்தவப் பெண்கள் மதுவிலக்குச் சங்கம்

Page 8
போன்ற அமைப்புகளாலும் இவர்கள் விழிப்புணர்வு பெற்றிருந்தனர். சிலர் தமது கல்விக்குத் தேவையான பணமுடையவர்களாக இருந்த போதிலும் வேறு சிலர் ஆசிரியத் தொழில் புரிந்தே தமக்கு வேண்டிய பணம் பெற்றனர். ஆரம்பகால மருத்துவக் கல்லுாரிகள் இரண்டும் “மிஷனரிப் பணிகளுடன் தொடர்புடைய கடினமாக பணிகளை மேற்கொள்ளத் தயாராகும் சீமாட்டிகளுக்கு" (மேலது 120) கல்விக் கட்டணத்தைக் குறைக்க முன்வந்தன. இதனால் இருபத்தைந்து ஆரம்பகால மருத்துவப்பட்டதாரிப் பெண்கள் மிஷனரிகளுடன் சேர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பணியாற்றச் சென்றமை வியப்புத் தராது. பிரஸ்பைரியன் திருச்சைைபயின் வெளிநாட்டு மிஷன்சங்கத்தின் ஆதரவிலேயே அவர்கள் சென்றனர். இது பற்றி வெரோனிகா ஸ்ரோங் பொக் பின்வருமாறு குறிப்பிட்டார்.
பெண்நிலைவாத சார்பு மிஷனரிப் பணிகளில் ஈடுபடப் பெண்களைத் துாண்டியது. பாதம் கட்டுதல், பெண் சிசுக் கொலை, வைப்பாட்டி முறை, பர்தாமுறை என்பன மேனாட்டுப் பெண்நிலைவாதிகளின் அக்கறைக்கு உள்ளாகின. கிழக்குலகைச் சேர்ந்த, தாழ்நிலையிலுள்ள, உதவிக்காக ஏங்குகிற ஏழைச் சகோதரிகள் பற்றிய விபரங்களைத் தாங்கிய மிஷனரிமாரின் கடிதங்களை இவர்கள் ஆர்வத்துடன் படித்தனர். மேலது:121)
கனேடிய பெண் வைத்தியர்களின் சேவைக்குரிய முதலாவது இடமாக இந்தியா அமைந்தது. இங்கு பணியாற்றியோர் ஒரே பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களாயும் இருந்தனர். 1884-1892 காலப்பகுதியில் குவீன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நான்கு வைத்தியர்கள் தென்னிந்தியாவிலுள்ள இந்துாரில் பணியாற்றினர். இவர்களில், 1892 ஆம் ஆண்டு முதல் 35 வருடங்கள் இந்தியாவில் பணியாற்றிய மார்கரட் ஒஹாரா என்பவரும் ஒருவராவர். (மேலது.122)
பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டம்
கனடாவில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள். மதுவிலக்கு இயக்கங் கள் ஆகியவை பொதுசனப் பணிகளில் பெண்களுக்கு முதல் அனுபவத்தை அளித்தன. இத்தகைய செயற்பாடுகள் பல, வாக்குரிமைக்கான போராட்டத்துக்கும் இட்டுச் சென்றன. எனினும்

இந்த இயக்கங்கள் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளையும் கொண்டிருந்ததை நோக்குதல் வேண்டும். வேறு சில, பழமை பேணுவனவாகவும் மத்தியதரவர்க்க நலன்கள் பற்றிய அக்கறையுடனும் இயங்கின.
பொதுவாகவே பல நாடுகளிலும் பெண் வைத்தியர்கள், சமூக உணர்வுள்ளவர்களாகவும் தமது தொழிலில் ஆணாதிக்கப் பாதிப்புக்கு உட்பட்டோராகவும் காணப்படுகின்றனர். வாக்குரிமைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்குக் கனடா விதி விலக்கு அல்ல. எமிலி ஸ்ரோவ், ஒகஸ்டஸ் ஸ்ரோவ், ஜெனிகிட்ரவ்ற் போன்றோரும் வேறு சில வைத்தியர்களும் வாக்குரிமைப் போராட்டத்தில் "முன்னின்றனர். பொதவான எதிர்ப்பு, பத்திரிகைகளின் விமர்சனம், மருத்துவபீட ஆண் மாணவர்களினதும், விரிவுரையாளர்களினதும் கிண்டல் ஆகியவற்றுக்கு முகங்கொடுத்து இவர்கள் மன உறுதி பெற்றிருந்தனர். பின்னாளில் இவர்கள் கனடாவில் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாமையின் விளைவுகள் பற்றி பிரபலப்படுத்திய பெண்கள் இயக்கங்களின்தலைவர்கள்ஆயினர்.
பெண்களது வாக்குரிமைப் போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்றது. 1872 இல் பிரித்தானிய கொலம்பியாவில் பெண்குடி யிருப்பாளர்கள் நகரசபை தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் பெரிய நகர்களில் சொத்துள்ள, மணமாகாத பெண்கள், விதவைகள் ஆகியோரே வாக்களிக்கத் தகுதி பெற்றனர். "இந்நிலைமை தமது கணவரைக் கொலை செய்யத் துாண்டும் ஆரோக்கியமற்ற மனோநிலைக்கு மனைவியரை இட்டுச் சென்றது" என ஒரு பெண் வாக்குரிமைப் போராளி நகைச் சுவையாகக் கூறினார். (Roberts 1979; 23) 1877 இல் எமிலி ஸ்ரோவ் ரொறன்ரோவில் முதலாவது வாக்குரிமைக் குழுவை ஸ்தாபித்தார். ஆனால் இது பெண்கள் இலக்கியக் குழு என்ற பெயரில் மறைவாகவே இயங்கியது. இல் இக்குழு பல்வேறு கலாசார நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1883 இக்குழு உத்தியோக பூர்வமாக ரொறன்ரோ பெண்கள் வாக்குரிமைச் சங்கம் எனப் பெயரிட்டு பெண்கள் வாக்குரிமைக்காக ஒன்ரோரியோ அரசாங்கத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. வைத்தியர்களுடன், ஆசிரியர்கள், மருத்துவ மாதர்கள், பட்டதாரிகள் போன்றோரும் இப்போராட்டத்தில் இணைந்தனர். லோரா மக்கூலியே வாக்குரிமை குறித்து பொது

Page 9
இடங்களில் பிரசங்கம் பண்ணும் முறையை ஆரம்பித்த, ரொறன்றோவின் முதற் பெண் ஆவார். வாக்குரிமைக்கும் பெண்கள் நாட்டு நலனில் பங்கு பற்றுவதற்கும் உள்ள தொடர்பு பற்றி வாக்குரிமைச் சங்கத்தின் அறிக்கைகள் அழுத்திக் கூறின. ஒரு பெண் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
எங்களுக்காக நீங்கள் சட்டங்களை ஆக்கும் வரை, வரி அறவிடும் வரை, எமது குழந்தைகட்கு தொற்றுள்ள பாலையும், அசுத்த நீரையும் கொடுக்கும் வரை, இவ் விடயங்கள் பற்றி நாம் நேரடியாகக் கவனம் செலுத்தவும் பொறுப்பு வகிக்கவும் உறுதி பூண்டுள்ளோம். (Roberts 1979:18-19)
இன்னோர் ஆரம்பகாலப் பெண்நிலைவாதியும் வாக்குரிமைவாதியுமான நெல்லி மக்கிளங் (1874-1951) ஆண்களால் ஆக்கப்பட்ட உலகில் பெண்களின் பரிதாபகரமான நிலைமையை விபரித்து கிராமப்புறப் பெண்களது துயர் தோய்ந்த நிலை குறித்துப் பிரசாரம் செய்தார். பெண்களது உரிமையற்ற, தாழ்த்தப்பட்ட நிலைமையால் அதிர்ச்சியும் கவலையும் கொண்ட இவரும் இன்னும் பதினைந்து பேரும் 1912 ஆம் ஆண்டு அரசியல் சமத்துவச் சங்கம் (Political Equality League) 6T6örpsjeoldi'iaou fispajati. 6 Intégrhood பெறுவதன் மூலம் பெண்களது நிலையை முன்னேற்றுதல் இவர்களது நோக்கமாயிருந்தது. (Bassett 1975; 127-30) அமெரிக்க, ஐரோப்பிய வாக்குரிமைவாதிகளின் பணிகளாலும் கனடாவுக்கு அவர்கள் வருகையாலும் 1912 இல் இப் பிரசாரம் சூடுபிடித்தது. ஆனால் முதலாம் உலகமப்போரின் பின்னரே வெற்றி கிடைத்தது. 1926 இல் மனிடோபோ, மாகாண ரீதியில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதலாவது மாகாணமாகியது. மிக விரைவிலேயே ஒன்ரோறியோவும் ஏனைய மாகாணங்களும் வாக்குரிமை அளித்தன. எனினும் கியுபெக் மாகாணம் 1940 களிலேயே இது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியது.
மேரி ஏர்வின்
ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த எலோராவில் 1873 ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி மேரி இர்வின் பிறந்தார். தாயார் எலிஸபெத் பார்; தந்தையார் ஜோன் வில்லியம் ஏர்வின். இருவரும்

ஐரிஷ்- ஸ்கொட்டிஷ் பரம்பரையைச் சேர்ந்த பிரஸ்பிரியன் திருச்சபைக் கிறிஸ்தவர்கள். மேரி ஏர்வினுக்கு வலஸ், வால்டர் என இரு சகோதரர்களும் அக்னஸ் என ஒரு சகோதரியும் இருந்தனர். கனடா வில் மிகச் செழுமை வாய்ந்ததும் அதிக மக்கட் தொகை கொண்டதும் ஒன்ராறியோ மாகாணம் ஆகும். இது பெரும் விவசாயத் துறையையும் பலமான கைத்தொழில் அடிப்படையையும் கொண்டிருந்தது. ரொறன்ரோ உட்பட விரைவாக வளரும் பல நகர்கள் இருந்தன. எலோரா நகர் இந்திய எல்லோராவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த அழகிய நகர் 1832 இல் இளைப்பாறிய பிரித்தானிய அதிகாரி ஒருவரால் கட்டப்பட்டது. இது கிறேன்ட் றிவர் ஆற்றருகில் அமைந்து ஆலைக் கிராமமாய் வளர்ந்தது. மேரி ஏர்வினின் தந்தையார் எலோராவில் சொந்தமாக ஒரு கடை வைத்திருந்தார். மேரிக்கு மூன்று வயதானபோது அதனை ஹஜூரன் ஏரி அருகிலுள்ள கின்கார்டினுக்கு மாற்றினார். மேரியின் சிறுமிப் பருவம் அங்கு கழிந்தது. அடுத்ததாக அவர்களது குடும்பம் எரி ஏரியிலிருந்து சில மைல்கள் அப்பாலுள்ள கிளின்ரனுக்குக் குடி பெயர்ந்தது.
கனடாவில் கைத்தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட பிரச்சினை கள், சமூக சீர்திருத்தத்தில் கிறிஸ்தவர் பங்குபற்ற வழியமைத்தன. வறுமை,சமூகத்தீமை ஆகியவை பற்றிய அக்கறையுடன் கிறிஸ்தவ செய்தியை இணைத்து 'சமூக நற்செய்தியை கிறிஸ்தவர்கள் அங்கம் வகித்த சமூக சேவை நிறுவனங்கள் நிலைநிறுத்தின. 19 ஆம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் கனடாவில் வளர்ந்த தாய்மைப் பெண்நிலைவாதம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேவை செய்தல் என்ற கிறிஸ்தவ சமயத்தின் கருத்துடனும் இணைந்திருந்தது.பலமான கிறிஸ்தவப் பின்னணியுடைய மேரி இர்வின் போன்ற இளம்பெண்கள் வறுமை, மதுப்பழக்கம், பெண்கள் உடல் நலம், சமூகப்பிரச்சனை, பெண்கள் வாக்குரிமை ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை உணர்ந்தனர்.
மேரி ஏர்வின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிடினிட்டிக் கல்லூரியுடன் இணைந்திருந்த பெண்கள் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்று 1896 இல் பட்டம் பெற்றார். ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த துணிவு மிக்க இளம் பெண்களைப் போல

Page 10
10
இவரும் ஆசியப் பெண்கள் மத்தியில் வைத்திய சமூகப் பணிகள் செய்யும் "உலக சகோதரித்துவம்' என்ற கிறிஸ்தவ இலட்சியத்தால் ஈர்க்கப்பட்டார். கிறிஸ்தவ மிஷனரிகளும் பெண்கள் மத்தியில் வைத்தியப் பணி செய்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெண்களுக்கான வைத்தியசாலைகளை ஆரம்பித்து வைத்தியர்களையும் நியமித்தனர். வெளிநாட்டு மிஷன்களுக்கான அமெரிக்க விளம்பரத்தைப் பார்த்த மேரி இர்வின் தனது விண்ணப்பத்தை அனுப்பினார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்காக 1896 இல் நியுயோர்க் நகருக்கு அனுப்பப்பட்டார்.
திருமணம்
நியுயோர்க்கில் தமது பயிற்சிக்காலத்தில், மேரி ஏர்வின், யாழ்ப்பாணத்து வேலணைத் தீவைச் சேர்ந்தவரும் கிறிஸ்தவருமான சாமுவல் கிறிஸ்மஸ் கனக ரட்னத்தைச் (1869-1929) சந்தித்தார். கனக ரட்னத்தின் தகப்பனார் யாழ்ப்பாண அமெரிக்க மிஷனைச் சேர்ந்த டாதிரியாரான வண. ஜே. எஸ். கிறிஸ்மஸ் என்பவராவர். தாயார் கிறிஸ்தவப் பாடசாலை ஒன்றின் ஆசிரியை அவர் உலக வரலாற்றுப் பாடநூால் ஒன்றையும் எழுதியிருந்தார். கனக ரட்னம் 16 வயது வரை அமெரிக்க மிஷன் பாடசாலைகளிற் படித்தபின் தென்னிந்தியாவில் சேலத்திலும் கல்வி கற்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லுாரியிற் சேர்ந்து மெய்யியலில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் பம்பாயிலுள்ள பெல்காம் நகரத்து லண்டன் மிஷனரி சங்கத்தின் உயர்நிலைப் பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். அங்கிருக்கும் போது அரச அபின் ஆணைக்குழுவுக்கு (Royal Opium Commission)அபினால் விளையும் நாசங்கள் பற்றிச் சாட்சியமளித்தார். அவரது கருத்துகளையும் பேச்சாற்றலையும் அறிந்த அபின் எதிர்ப்புச் சங்கங்கள் 1895-96 காலப்பகுதியில் பிரித்தானியாவில் அவரது விரிவுரைச் சுற்றுப்பயணத்திற்கு ஒழுங்கு செய்தன. பிரித்தானியாவில் இருந்தபோது அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்புக் கிடைத்தது. பிரித்தானிய சமூக சீர்திருத்தவாதியான ஹென்றி சோமர்செற் சீமாட்டியும் பிரபலமான அமெரிக்க வாக்குரிமைவாதியும், மதுவிலக்கு இயக்கவாதியுமான பிரான்சிஸ் விலாட்டுமே ரட்னத்தின் அமெரிக்க வருகையை ஏற்பாடு செய்தனர்.

11
ரட்னம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மெய்யியலிலும் தர்க்கவியலிலும் எம். ஏ. பட்டம் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் நடைபெற்ற உலக சமயப் பாராளுமன்றத்தைக் கண்டித்து விரிவுரைத் தொடர்களை நிகழ்த்தினார். குறிப்பாக, அமெரிக்கரை சமயம் பற்றிய சர்வதேச நோக்கினால் கவர்ந்து கொண்ட சுவாமி விவேகானந்தரது கருத்துகளைக் கண்டிப்பதாக இவரது சொற்பொழிவுகள் அமைந்தன. ரட்னம் தமது சொற்பொழிவில் பின்வருமாறு கூறியதாக கிறிஸ்ரியன் ஹெரால்ட் என்ற பத்திரிகை (19 ஜூன் 1895) குறிப்பிட்டது.
உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் எடுத்து விளிக்கியதும், அமெரிக்க மக்களை மிகவும் கவர்ந்ததுமான இந்துசமயம், பழைய வேதாந்தத்தின் அடிப்படையில் கிறிஸ்தவ சமயத்தின் சில உயர் கொள்கைகளை நயமற்ற முறையில் இணைத்துக் காட்டியமையே தவிர வேறொன்றும் இல்லை. இந்த வேதாந்தமும் யாவும் கடவுள் என்று கூறுவதேயாகும். இந்தியாவில் எமக்குப் பரிச்சயமான இந்துசமயத்தின் குரூரமான அம்சங்கள் சிக்காகோ மகாநாட்டில் எடுத்துக் கூறப்படவில்லை.
பண்டித ராமாபாய் போன்று ரட்னமும் தென்னாசியாவில் காணப்படும் சமூகத் தீமைகளை மேற்கு நாட்டவரிடையே எடுத்துக் கூறப் பின்வாங்காத ஒரு கிறிஸ்தவராயிருந்தார். இந்துக்களால் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துரைத்ததுடன் பெண்கள் பிரச்சனைகள் பற்றியும் அக்கறை காட்டினார். “மிஷனரிகள் வேறு எதுவும் செய்யாவிடினும் இந்துப் பெண்களை விடுதலை அடையச் செய்தமையே போதுமானதாகும்” (மேலது) என்று கூறினார். 1896 இல் புருக்லின் ராமாபாய் வட்டத்தில், இந்தியாவில் சிறுபிள்ளை மனைவியர், விதவைகள் குறித்துப் பேசியது மாத்திரமன்றி பண்டிதராமாபாயின் பணிகளையும் பாராட்டினார். 1887 இல் வெளியான உயர்சாதி இந்துப் பெண் (The High Caste HinduWoman) 6T6örp ridi gibetTGai gyGLDffidaigail பரபரப்பை ஏற்படுத்தியதுடன் ராமாபாயையும் பிரபலம் அடையச் செய்தது. அவர் கிறிஸ்தவராக மாறியமை வைதீக இந்துக்களை அவமதிக்கும் செயலானது.

Page 11
12
மேரி ஏர்வின் யாழ்ப்பாண அமெரிக்க மிஷன் வைத்திய சாலைக்கு நியமனம் பெற்றதை அறிந்த ரட்னம் அவரைச் சந்தித்தார். அத்துடன் அவருக்குத் தமிழ் கற்பிக்கவும் முன்வந்தார். சிலமாதங்களின் பின்னர் இருவரும் நியுயோர்க் நகரில் புரட்டஸ்தாந்து எபிஸ்கோபாலியன் தேவாலயத்தில் 16 ஜூலை 1986 இல் திருமணம் செய்தனர். 1896 டிசம்பர் மாதத்தில் மேரி இர்வின் ரட்னமும் இளம் ஸ்கொட்டிஷ் வைத்தியரான இஸபெல்லா கேர் என்பவரும் இலங்கைக்கு வந்தனர். யாழ்ப்பாணத்தில் இணுவிலில் பெண்களுக்கான மக்லியோட் வைத்திசாலையை நிறுவும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. கேர் அம்மா எனப் பொதுமக்களால் அழைக்கப்பட்ட இஸபெல்லா கேர் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலமான வைத்தியராக விளங்கினார். மேரி ரட்னத்தின் திருமணம் பற்றி அவரை இலங்கைக்கு அனுப்பிய மிஷனுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் திருமணம் பற்றிய செய்தி வெளியானதும் பெரும் பரபரப்பு உண்டானது. அமெரிக்க மிஷன் சபையால் மேரி ரட்னம் கனடாவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். அவரது கணவர் மிஷனரிகளின் "மோசமான முயற்சிகளைக்" கண்டித்தார். இதே சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மோர்னிங் ஸ்டார் பத்திரிகை இத்திருமணத்தைக் கண்டித்து எழுதியது. அமெரிக்க மிஷனிலிருந்து விலகிய கனகரட்னம் கொழும்பு வந்தார். 1897 இல் மேரி ரட்னமும் கனடாவிலிருந்து கொழும்பு திரும்பினார்.
மேரி ஏர்வின், எஸ், சி, கே, ரட்னம் ஆகியோரின் திருமணம் முதலாவது "கிழக்கு மேற்கு திருமணம் அல்ல. ஏற்கனவே பறங்கியர் 19ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பியப் பெண்களை மணமுடித்தனர். காலனி நாடுகளில் தொழில் புரிந்த ஐரோப்பியர் உள்ளூர்ப் பெண்களை மணந்தனர். ஆனால் ஐரோப்பியப் பெண்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்தல் அரிதான வழக்கமாகும். இனத்தடைகளையும், காலனித்துவ சமூக மரபுகளையும் இத்திருமணங்கள் மீறின. இதனால் பிரித்தானியர் இத்தகைய திருமணங்களை விரும்பவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆண்களிடையே இத்தகைய துணிகரமான திருமணங்கள் மிக அரிதாகவே நடைபெற்றன. இவற்றுள் பிரபலமானது ஆனந்தகுமாரசுவாமியின் பெற்றோர்களான சேர். முத்துக்குமாரசுவாமி, எலிஸெபத் பீபி

13
திருமணமாகும். இவர்கள் 1874 ஆம் ஆண்டு லண்டனில் திருமணம் செய்தனர். குறிப்பாக மிஷனரிகள் மத்தியில் இத்தகைய திருமணங்கள் சிறிதும் விரும்பப்படவில்லை. மிஷனரியைச் சேர்ந்த பெண்கள், தனித்திருந்தோ வேறு மிஷனரிகளைத் திருமணம் செய்தோ கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்பி தமது சொந்த நாட்டினர்க்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என எதிர்பார்த்தனர். உள்ளூர் ஆண்களுடன் நட்புக் கொள்வதோ, அவர்களைத் திருமணம் செய்வதோ மிகவும் வெறுக்கப்பட்டது. மேரி இர்வினுடைய திருமணமானது, மிஷனரி நிறுவனம், காலனித்துவ சமூகம் ஆகியவற்றின் கொள்கைகளை மறுதலிப்பதாகவும், அவரது துணிச்சலுக்கும் நிறவாதமின்மைக்கும் அடையாளமாகவும் அமைந்தது. மிஷனரியினரின் கொள்கைகளால் அவர் மனம் நொந்தாராயினும், தம்மை அவர்கள் விலக்கியமை பற்றி பேசவோ எழுதவோ இல்லை. மாறாக அவரது கணவர் மிஷனரியினரின் நிறவாதத்தைப் பகிரங்கமாகக் கண்டித்தார்.
20 ஆம் நுாற்ாண்டின் ஆரம்பத்தில் இலங்கை:
இலங்கைக்கு மேரி ரட்னம் வந்தபோது பிரித்தானிய ஆட்சி நிலவியது. இராணுவத்தில் பதவி வகித்தவரும், ஏகாதிபத்தியவாதியுமான சேர். ஜோசப் வெஸ்ட் றிட்ஜ்வே தேசாதிபதியாகப் பதவி வகித்தார். 20 ஆம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் தேயிலைத் தோட்டப் பொருளா தாரம் நன்கு செழித்தது. வீதிகளும், புகையிரதப் பாதைகளும் விஸ்தரிக்கப் பட்டன. கல்வி வசதிகள் அதிகரித்தன. ஆனால் அரசியல் ரீதியாகச் சிறிதளவு மாற்றமே நாட்டில் ஏற்பட்டிருந்தது. மக்களுக்குச் சட்டசபைப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் சமூகத்தைதச் சேர்ந்த, நியமன அங்கத்தவர் சிலரும் அரசாங்க உத்தியோகத்தருமே சட்டசபையில் அங்கம் வகித்தனர். 1912 ஆம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அடிப்படையில் உள்நாட்டுப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் முறை அறிமுகமானது. உள்ளூர் அறிவு ஜீவிகளால் அரசியல், சமூக, சமய கலாசார சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டு அரசியல் யாப்புத் திருத்தங்களுக்கான கோரிக்கை எழுப்பப்பட்டது. தொழிலாளர் வர்க்க உரிமைகள் தொடர்பான விழிப்பும் ஏற்பட்டது. 1912 இலும் 1920

Page 12
14
இலும் புகையிரதத் தொழிலாளர், துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1923 இல் பொது வேலைநிறுத்தம் ஒன்று நிகழ்ந்தது. 1904, 1912 ஆம் ஆண்டுகளில் பெளத்த மதுவிலக்கு இயக்கங்கள் காணப்பட்டன. மேரி ரட்னம் தமது பணிகளை இத்தகைய சமூக சீர்திருத்தப் பின்னணியிலேயே ஆரம்பித்தார்.
இக்காலகட்டத்தில் இலங்கைப் பெண்களின் நிலைமை எவ்வாறிருந்தது? 20 ஆம் நுாற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் பெண்கள் கல்வியில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் அடிப்படையில் அவர்கள் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பகுதியினராயும் ஆண்களுக்குக் கீழ்ப்பட்டோராயும் இருந்தனர். உயர்நிலைப் பாடசாலைகள் உட்பட பெண்கள் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பெண்கள் எழுத்தறிவு வீதம் 1881 இல் 3% ஆக இருந்தது. இது 1911 இல் 12% ஆகவும் 1912 இல் 21% ஆகவும் உயர்ந்தது. ஆசிரியை களாக, மருத்துவ மாதர்களாக, செயலாளர்களாகப் பெண்கள் பதவி வகிக்கத் தொடங்கினர். பெண்களுக்கான, குழந்தைகளுக்கான வைத்திய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் சிசு இறப்பு வீதம் உயர்வாகவே இருந்தது. 1898-1904 காலப்பகுதியில் சிசு மரணவீதம் ஆயிரத்திற்கு 175 ஆகும் (Wright-1907:870) , பெருந்தோட்டங்கள், வறிய கிராமப் பகுதிகள், நகரச் சேரிப்புறங்கள் ஆகியவற்றில் இது மேலும் அதிகமாகும். மேலும், 1931 வரை சகல வர்க்கத்துப் பெண்களும் வாக்களிக்கும் உரிமை அற்றும், பிரதிநிதித்துவம் அற்றும் பாதிக்கப்பட்டனர். பெருந்தோட்டங்கள், தொழிற்சாலைகள், விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலிய துறைகளில் பெண்கள் சமனற்ற, குறைந்த சம்பளத்தையே பெற்றனர். இவர்கள் நீண்ட நேரம் வேலை செய்தனர். இவர்களுக்கு எத்தகைய சட்டரீதியான உத்தர வாதமும் நலன்களும் இருக்கவில்லை; போஷாக்கின்மையாலும் நோயினாலும் பாதிப்புற்றனர். இலங்கை சமூக சேவா சங்கம் (1915) போன்ற சில அமைப்புகளே சுகாதாரம், உடல் நலம், சத்துணவு போன்ற விடயங்களையிட்டு அக்கறை காட்டின. பெண்களது கல்வியறிவு அதிகரித்ததுடன் முன்னேற்றத்துக்கான சாத்தியப்பாடு களும் அதிகரித்தன. வர்க்கம், சாதி ஆகிய பிரிவுகளுக்கு அப்பால் பெண்களது சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான மேரி ரட்னத்தினுடைய பணி மக்களைக் கவர்ந்தது. அத்துடன் அவற்றின்
பயனும் வெளித்தெரிந்தது.

15
இலங்கையில் ரட்னம் குடும்பம்
மேரி ரட்னத்தின் திருமணத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவரை மிஷனரிச் சேவையிலிருந்த விலக்கிய பின்னர், அவர் கொழும்பில் பெண்களுக்கான லேடி ஹவெலாக் அரச வைத்தியசாலையில் தற்காலிகமாகக் கடமையாற்றினார். அங்கு அவர் இலங்கையின் முதல் பெண் வைத்தியர்களான அலிஸ் டி போயர், வினிபிரட் நெல் போன்றோருக்குக் கற்பித்தார். ஆனால் அரசாங்கம் கனேடியப் பட்டத்தை அங்கீகரிக்காமல் நிரந்தர நியமனத்தை மறுத்தபோது அவரது சேவைக்குத் தடை ஏற்பட்டது. அவரது கணவர் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் தலையிட்டு மாற்ற முனைந்த போதும் வெற்றி கிடைக்கவில்லை. அவர், அரசாங்கம் "நீதியற்ற விதத்தில் நடந்துள்ளது" (சிலோன் இன்டிபென்டன்ற் 30 நவம்பர் 1906) எனக் குற்றம் சாட்டினார். மேரி ரட்னமும் இம் முடிவை எதிர்த்துப் போராடினார். ஒன்ராறியோ கல்வித் திண்ைக்களத்தைச் சேர்ந்த டொக்டர். ஜோர்ஜ் றொஸ் என்பவருக்கு முறையிட்டார். அதற்கு அவர், கனேடியப் பயிற்சி பெற்ற வைத்தியர்களைப் பிரித்தானியக் காலனிகளில் தொழில் புரிய அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசிப்பதாகவும், ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம் எனவும் கூறினார்."நானும், வைத்தியத் துறையைச் சார்ந்த ஏனையவர்களும் உங்களுக்கு ஏற்பட்ட இச்சிரமங்களையிட்டு வருந்துவதுடன், இதற்கு ஒரு நல்ல தீர்வு அளிக்கவும் முயல்கிறோம்" என்றும் (சிலோன் இன்டிபென்டன்ற் 30 ஒக்டோபர் 1899) பதில் எழுதினார்.
எனினும் எந்த நல்ல முடிவும் ஏற்படாது போகவே மேரி ரட்னம் மகப்பேற்று மருத்துவராக தனியார் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். பெண் வைத்தியரிடமே சிகிச்சை பெற விரும்பும் முஸ்லிம் பெண்களிடையேயும் ஏனையோரிடமும் அவருக்கு நல்ல வரவேற்பிருந்தது. 1906 ஆம் ஆண்டு அவரது வைத்தியத் தராதரம் பற்றி ஒரு உள்ளூர்ப் பத்திரிகையில் கெடுநோக்குடன் ஒரு அநாமேதயக் கடிதத்தில் வினாவப்பட்டது. "அமெரிக்காவில் வாங்கிய பட்டத்தை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை" (சிலோன் இன்டிபென்டன்ந் 30 நவம்பர் 1906) என்று அக்கடிதம் குறிப்பிட்டது. மேரி ரட்னம் இதற்கு

Page 13
16
எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முனைந்தாராயினும் பின்னர் அதனைக் கைவிட்டார்."
மிஷனரிகளுடன் தனது தொடர்புகளைக் கைவிட்ட எஸ். சி.கே. ரட்னம் 1899 இல் புறக்கோட்டையில் ஒரு சந்திப்பு மண்டபத்தையும் ஆண்பிள்ளைகளுக்கான பாடசாலை ஒன்றையும் ஆரம்பித்தார். இப்பாடசாலை 1900 ஆம் ஆண்டு மத்திய கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று கொட்டாஞ்சேனைக்கு இடம் பெயர்ந்தது. அவர் அதன் அதிபரானார். அவரது சகோதரர் ஜே. சி.வி. ரட்னமும் ஏனைய பத்து ஆசிரியர்களும் அங்கு கடமையாற்றினர். இப்பாடசாலை கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்தியது. கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்கு மாணவர்கள் பயிற்றப்பட்டனர். 1906 இல் இலங்கை மருத்துவக் கல்லுரிக்கு அனுமதிக்கப்பட்ட 25 மாணவர்களில் எழுவர் இப்பாடசாலையினர் ஆவர். இதில் 1906 அளவில் 180 மாணவர்களும் 35 விடுதி மாணவர்களும் இருந்தனர். இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, உள்நாட்டவர்களின் அமைப்பாகிய இலங்கைப் ப்ல்கலைக்கழகச் சங்கத்திற்கு ரட்னம் செயலாளர் ஆனார்.
இலங்கைப் பெண்கள் சங்கம்.
இன்னோர் கனேடியப் பெண் வைத்தியரும் இந்தியாவில் தொழில் புரிந்து கொண்டிருந்தவருமான சி.ஒலிவர், மேரி ரட்னத்தின் ஆரம்பகால சமூகப்பணிகளுக்கு மிக ஊக்கமளித்தார். 1904 இல் இவர் கொழும்புக்கு வந்தார். ரட்னம் அவரை உள்ளூர் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் சென்று காட்டினார். தன்னை டொக்டர் ஒலிவர் பாதித்தமை பற்றி மேரி ரட்னம் பிற்காலத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பிற்பகலிலும் எனது கட்டிலில் ஏறியிருந்து கொண்டு, இலங்கைப் பெண்களிடையே சமூக மருத்துவ நலன்களை அதிகரிப்பதற்கு நான் செய்ய வேண்டியவை பற்றி இடித்து ரைப்பார். பல நூல்களைப் படிப்பதற்குத் தந்ததுடன் பிரித்தானிய, அமெரிக்க, கனேடிய சஞ்சிகைகளுக்கு சந்தாதார் ஆக்கினார். அவரிடமிருந்தே சமூக சேவைக்கான உந்துதலைப் பெற்றேன். இல்லாவிடின் எனக்கு இத்தகைய ஊக்கம் வந்திராது, எனது குடும்பம், தொழில் என்று நான் அவற்றிலேயே மூழ்கியிருந்திருப்பேன்.

17
இளம் பெண்கள் கூடிக் கலந்துரையாடுவதற்கு ஒரு தளமாக மேரி ர்ட்னம் 1904-இல் யுவதிகள் நட்புறவுச்"சங்கத்தை (Girls Friendly Society) நிறுவினார். இதே வருடம் இலங்கைப் பெண்கள் gilago05uyb (Ceylon Women's Union) guibl 5 gigsts. 9dafiildsib, குழந்தை பராமரிப்பு, கல்வி என்பவற்றில் சமகால விருத்திகளை உள்ளூர்ப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், பெண்களின் உரிமைகள், அவர்களது தாழ்த்தப்பட்ட நிலைமை போன்றவை பற்றியும் விவாதிக்க முனைந்தது. இச் சங்கத்தில் சகல இனத்துப் பெண்களும் அங்கம் வகித்தனர்; திருமதி. ரொட்றிகோ, சிவில் லபரோய், திருமதி. கிரய்னர் (பறங்கியர்) திருமதி டோரா போல் (கொழும்பு செட்டி) முதலியோர் உதாரணமாவார். திருமதி. போல் (பிரபலமான அறுவைச் சிகிச்சை வைத்தியரின் மனைவி) இச் சங்கத்தின் பொருளாளர் ஆனார். இவர் ஒரு பெட்டி நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவதாகவும் தாம் ஒருவருக்கொருவர் நுால்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிற்காலத்தில் மேரி ரட்னம் குறிப்பிட்டார். “எமக்குப் போதுமான அறிவு இல்லாவிடின்" மற்றவர்களை முன்னேற்ற முடியாது என்ற ஒரு உணர்வு இவர்களிடம் காணப்பட்டது. அங்கத்தவர்கள் பல்வேறு விடயங்களைப் பற்றி அறிவதற்கும் சொற்பொழிவாற்றவும் உதவியாக இவர்களிடையே ஒரு நுால்நிலையம் விரிவடைந்தது. பெண்கள் குழுக்கள் பல இடங்களில் நிறுவப்பட்டன. இதில் மொறட்டுவவில் நிறுவப்பட்ட கிளையும் ஒன்றாகும். 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இக்கிளை ஒழுங்கு செய்த கூட்டத்தில் 'குழந்தையின் முதலாவது வருடம்" என்ற தலைப்பில் மேரி ரட்னம் உரையாற்றினார். (அனிற்றா கப்டன் சேகரிப்பு)
1906 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கைப் பெண்கள் சங்கம் "சமூகப் பணியும் எமது பொறுப்புகளும்” என்ற பொருள் பற்றிய சொற்பொழிவொன்றை ஒழுங்கு செய்தது. இந்த உரைக்குப் பின்னர் "அறியாமை, தவறான நம்பிக்கை, எஜமானரின் கொடுமை" ஆகியவை காரணமாகப் பெண்கள் பால்ரீதியாகச் சுரண்டப்படுதல் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. "பாவம் செய்வதற்கு மிகப் பழகிப் போவதால் பாவத்தின் கேடுகளை உணராமற் போகும் நிலையிலிருந்து தம்மைப் (பெண்கள்) பாதுகாக்க வேண்டியதன் அவசியம்” பற்றித்

Page 14
18
தமது நாட்குறிப்பில் மேரிரட்னம் எழுதினார். "ஆண்களும் பெண்களும் புனிதமாயிருக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திலிருந்து சற்றும் விலகக் கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து அவர் மிகவும் வருந்தினார். 1906 ஆம் ஆண்டு ஜூலை மாத நாட்குறிப்பில் தனது தமிழ்ப் பெண் உறவினர் ஒருவரின் துன்பம் நிறைந்த வாழ்க்கை குறித்து எழுதிளார். "அவள் ஆண்களின் கொடுமைகளுக்கு இன்னுமொரு இரையாக இருப்பின் ஆண்களில் எனது நம்பிக்கையை இழந்து விடுவேன். அநீதி இழைக்கப்பட்ட பெண்மை நீதி கேட்டு அழுகிறது." (மேரி ரட்னம் நாட்குறிப்பு 1906 - 1909)
1909 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைப் பெண்கள் சங்கத்தின் 5வது நிறைவுப் பொதுக் கூட்டத்திற்குப் பெருந்தொகை யானோர் சமூகமளித்தனர். மேரி ரட்னம் தமது தலைமை உரையில் 'வீட்டு வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்குப் புதிய ஆலோசனைகள் வேண்டும்" எனக் குறிப்பிட்டார். எமது சட்ட சபை அங்கத்தவர்கள், குற்றச் செயல்களைக் குறைக்கும் முறைகள் பற்றிப் பேசுகின்றனர். "வழக்குகள், சிறைச்சாலைகள், புகலிடங்களுக்கு பெருந்தொகையான பணத்தைச் செலவு செய்கின்றனர்” எனக் கூறிய அவர், "இந்நாட்டிலுள்ள இல்லங்களை முன்னேற்ற எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது? என வினவினார். "ஆண்களை விடவும் பெண்களே, சமயம், கெளரவம், மனிதத்துவம் போன்றவை பற்றி எப்போதும் துணிவாகப் பேசுகின்றனர். எமது இல்லங்களைப் பாதுகாக்கும் முயற்சியை பெண்களே மேற்கொள்ள வேண்டும்" என்றார். (சிலோன் இன்டிபென்டன்ற் 6 ஜூலை 1909) இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த அலெக்ஸாண்டர் பெய்லி (முனிசிபல் கவுன்சில் அங்கத்தவர்) ஆணைத் தலைமை வகிக்கத் தேர்ந்தது பிழை எனவும் ஒரு பெண் அதனைச் செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். "இங்கிலாத்தில் பெண்கள், வாக்குரிமை அளிக்கும்படி கேட்பது பற்றி இங்கு பலரும் அறிந்துள்ளனர். ஆனால் இப்பெண்கள் சட்ட சபையில் இடம் கோரமாட்டார்கள் என நினைக்கிறேன்” எனவும் கூறினார். அவரது இந்தக் குறிப்புரை, இக் கூட்த்தில் நடைபெற்ற “பெண்கள் உரிமைகள் பற்றிய உரையாடல்" என்ற நிகழ்ச்சி தொடர்பாயிருக்கலாம். இது ஐந்து இளம் பறங்கிய சமூகப் பெண்களால் - திருமதி. எச். பெலிங், திருமதி.

19
டபிள்யு. கிறேவ், செல்வி. டி. கிறஸ்ரர், செல்விகள். சி. சில்வா, ஈ. டி. சில்வா - நிகழ்த்தப் பெற்றது. ஒரு பத்திரிகை இதனை மிகவும் பாராட்டியது. (மேலது) மேரி ரட்னமும் தமது நாட் குறிப்பில் புகழ்ந்து எழுதினார். இலங்கையில் பெண்கள் உரிமை தொடர்பான முதலாவது பொது நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடந்த பெண்கள் வாக்குரிமைப் போராட்டங்கள் பற்றி உள்ளூர்ப் பத்திரிகைகளில் இடம் பெற்ற குறிப்புகளால் செல்வாக்குற்று இந்நிகழ்ச்சியை இப்பெண்கள் தயாரித்திருக்கலாம்.
1907 - 8 காலப் பகுதியில் மேரி ரட்னம் கணவருடனும் தனது நாலு புதல்வர்களுடனும் விடுமுறைக்காக கனடா சென்று தனது பெற்றோருடன் தங்கினார். அப்போது இலங்கை நிலைமை பற்றிப் பல கூட்டங்களில் பேசினார். அங்கு பெண்கள் அமைப்புகளின் நிலைமை பற்றித் தெரிந்து கொண்டார். கனேடிய அரசாங்கம் “எமது சங்கத்தை ஒத்த" பெண்கள் நிறுவன இயக்கத்திற்கு அளித்த ஆதரவால் "நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தேன்” (சிலோன் இன்டிபென்டன்ற் 6 ஜூலை 1909) இதே காலத்தில் எஸ். சி. கே. ரட்னம் கனடாவிலும், அமெரிக்காவிலும் இந்திய д95өрпағптub, இந்தியத்தேசியம், பஞ்சம், கைத்தொழில் வளர்ச்சி, கிறிஸ்தவ மிஷன்கள் உட்படப் பல விடயங்களையிட்டு விரிவுரையாற்றினார். கிறிஸ்தவ மிஷனரிகள் "கீழைத்தேச உணர்வுகளை பாராட்டத் தவறியமை பற்றி விமர்சித்ததுடன் “உள்நாட்டவரை நிறவாத நோக்குடன் நடத்துவது" பற்றியும் கண்டித்தார். சிறுமியர் திருமணத்தையும் கண்டித்து இந்து சமயம் பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்தார். ரட்னம் புத்திசாதுர்யம் மிக்கவர், பல விடயங்களில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் 1909 ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்து 1929 இல்
SITGAV DT6ØTTf.
கொழும்புத் தமிழ்ச் சமூகத்திடையே நன்கு அறியப்பட்ட மேரிரட்னம் செல்வாக்கு மிகுந்த சில தமிழ்ப் பெண்களை ஊக்குவித்து 1909 இல் தமிழ்ப் பெண்கள் சங்கத்தை ஆரம்பித்தார். இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் முக்கிய குறிக்கோள் தமிழ்க் கலாசாரத்தைப் பேணுவதும், கல்வி, சமூகப்பணி ஆகியவற்றை ஊக்குவிப்பதுமாகும். இதன் முதலாவது தலைவர் டொக்டர். சரவணமுத்து ஆவர். திருமதி. நைல்ஸ், திருமதி. டபிள்யு. எம். வேட்ஸ்வத், திருமதி. ஜே. சி. கே. ரட்னம் முதலியோர் ஏனைய

Page 15
2())
அங்கத்தவர்கள். சங்கத்தின் கூட்டம் மாதமொருமுறை தமிழில் நடந்தது. (சிலோன் இன்டிபென்டன்ஹ் ஜூேலை 1909). அவர்களது முதலாவது வேலைத் திட்டம் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வறிய தமிழ்ப் பிள்ளை ஆட்கு ஒரு பாடசாலை அமைத்தலாகும். இதனைத் தொடர்ந்து பெண்களது வாக்குரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற விடயங்களில் பல தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டமைக்கு மேசிரட்னத்தின் முன்மாதிரியும் செல்வாக்கும் முக்கிய காரணங்களாகின என்பதில் ஐயமில்லை.
உள்ளூர்ப் பெண்களுடன் சேர்ந்து பணி புரியவே மேரி ரட்னம் விரும்பினார் என்பது தெளிவு. இலங்கையிலிருந்த ஆங்கிலேய மேரி ரட்னத்தைத் தமது காலணியைச் சார்ந்தவர் எனக் குறைவாக நோக்கியது மாத்திரமன்றி அவரது கனேடிய மருத்துவக் கல்வியையும் நிராகரித்தனர். இலங்கைப் பெண்கள் சங்கத்தின் ஆங்கில உறுப்பினர்கள் இனம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்துடன் அல்லது தாய்மார் சங்கத்துடன் இலங்கைப் பெண்கள் சங்கம் இணைய வேண்டும் எனக் கூறியது குறித்து தமது அதிருப்தியை மேரி ரட்னம் 1909 இல் தெரிவித்தார். "இலங்கை பெண்கள் சங்கத்தில் ஆங்கிலேயரை முற்றாகத் தவிர்த்து உள்ளூர் மக்களை மட்டுமே கொண்டதாக அதனை வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்" என எழுதினார். மேலும்
"அவர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் என்னைக் குறைவாகவே நோக்குகின்றனர். அவர்கள் மத்தியில் நான் வேற்றாளாக உணர்கிறேன். உயர் சமூகத்தினருக்கு அன்றி தாழ்த்தப்பட்டோர் மத்தியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கருதுகிறேன். அவர்கள் என்னைத் தவறாக விளங்கி மாட்டார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரியும் மேரி ரட்னம் நாட்குறிப்பு 1908-09)
பெண்கள் சங்கத்தில் கிறிஸ்தவர் மாத்திரமே அங்கம் வகிக்க வேண்டும் என்ற குறுகிய பார்வை இருக்கவில்லை. சாதி, சமய, இன எல்லைகளைக் கடந்து சுதேசிய மக்கள் பங்கு பற்றும் சங்கமே அவரது நோக்கிாயிற்று. இவ்வகையில் இலங்கைப் பெண்கள் சங்கம், கிராமியப் பெண்களை முன்னேற்றும் நோக்கத்துடன் மேரி ரட்னத்தால் பின்னணியில் நிறுவப்பட்ட வங்கா ஹறில சமிதிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.

Igoga, so gornjiosoɛyɛ so sisäsi和建역원은』原 흑r m3:3력는?
siirtųsi içeğiool, resso glos III sists,'Juuraug L學院中山AWrgf學구 운u日道나.1m Ur-TEP

Page 16
5R5월Eo역원 I 了I£ግ黑)*Tú=1 ---- iữi sijā, Ļsso
吧
-
f1 』
射 |
配
IỆT 町
Ļs
¡¡¡T
**
% % 7/
%
 

%%%溶 //s/
ছ
s
%% %%7/ ~
% // %%
剧%*%
%
******
% %
Ä
!፳ዟW!
ål
rேi ரட்ாம் துர்
TET
சி. கே
= -1:

Page 17
CPL ாேட்
புதல்வர்களான ஹேலன்
ாருடன் 1992
ஆகியே
ன் தமிது
ټنه كږل
ப
يarii gة :g
 

|-^%
%
55학력 확그的的wurT없r없
sae 33333333333현% 혁
s'iss&isio
sii
*력
sorosos
sosiossae isosoɛɛos Isoj
oposus)ĻI IETĪ JĀŋŋ
//
%
%%%%%%%%%%%%%
% //
%
----
¬ ¬-܌ܨ ܼ ܐ
----

Page 18
또w역할너TALTT記)
|დ digiê
soosĩšo, rossosiło ofiaA高等學r
•••••••••• ----------
|義력,济-- - - - - -
sae
Tr %%
——————
TT
 
 
 
 
 

溶
-s.
啊
%
¡ ¿
%
sae
%
****
%%|-
s.
தரவன்
Fir-rworld, I r I I r I irrri Fikir
ಫೀFಿ
Eேl ரட் வம்
է:
ஆஃபே கீஆடன்

Page 19
-
2학g ga-wa·F&I w院w용해 율법권5 &um化仁成學ww월 A**'표g & 역**니?" w?'환
%----%------------%
},
*隱
%
S
S.
'.
S
-
వై
S &২
ଝିଙ୍କି
E
ܵ
S.
SS
溶 sae
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5p6r En-16티Rwwwe해관w명A#1 &&T% 5%정學T scgrameg (民官m城地ary 역(母니는 Uni)
sae|-!!!!!!!!.........,|-*****-:-(;%% **·%%%%%*T%%%|-- ----· |-':''/''/'';----%%%
鸡
·%%%
!----ŴŴŶŶ)·sae%
sos Prጎ ;* ---- No.
sae ...
s',%학『*** ** 『&%%%%%%%
%%%%%%%%%%%%%%%% sae%%o. ----...,saesaesae ,,,,。 |--------------saeWozo*******************--------「1「──

Page 20
SSSR
SSSSSSSS:
*
S
----
f.
. . . . .% sae ( )| / A , ,
%
s, (;),
利)
IՋեք) անif all
ட்னம்
 
 
 
 
 

(...
--------- ·soos·---- *) |×(±
溶 。。没 桑)
------- ...............
ப் பெறுதெற்காங்
LU్య: Fil
al
%
த்துடன்
f3: a illigħ glazii I 953
:it:
4ו ז#Ha ותו;r*3ו
ற்காக விமான்
|-
|୍l'#',
ug: Er Gi
:äfli III
ra

Page 21
鞑
s
臺
獸
s
 

பெண்களும் உடல்நலமும்
மகப்பேற்று வைத்தியரான மேரி ரட்னம் பெண்களது உடல்நலம், குழந்தை பராமரிப்பு பற்றி மிகவும் அக்கறை கட்டினார். இலங்கையில் வசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த அக்கறை அவரிடம் காணப்பட்டது. மிஷனரிகள் அவரை விலக்கிய பின்பும் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த கனேடிய பெண் வைத்தியர்கள் அவரைச் சந்திப்பதற்கு இலங்கை வந்தனர். அவர்கள் அவரது வைத்திய சமூக சேவைப் பணிகளுக்கு உற்சாகமுட்டினர். ஆரம்பகால வைத்தியப் பட்டதாரிகளில் ஒருவரும் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தவருமான மார்க்கிரட் ஓ ஹாரா 1907 இல் இலங்கை வந்தா, மேரி ரட்னம் தனது தனிப்பட்ட நோயாளிகளுக்கு இவரது உதவியைப் பெற்றுக் கொடுத்ததுடன் லேடி ஹவெலாக் வைத்திய Մr*մյգլ.), I l:T FՃr இல்லம் போன்றவற்றுக்கு அவரை அழைத்துச் சென்றார் (மேலது. இவங்கைப் பெண்கள் சங்கத்தின் மூலம் உடலியல், மருத்துவப் பராமரிப்பு பற்றிய ஆறு நாள் விரிவரை தெறி ஒன்றை ஒழுங்கு செய்த பல தசாப்தங்களாக பெண்களது உடல் நவம் தொடப்பான விடயங்களையிட்டு கண்காட்சி, விரிவுரைகள். செய்தி' பத்திரிகைக் கட்டுரைகள் என்பன மூலமும் பாடநூல்கள் மூலமும் பிரபல்யப்படுத்திEர். சிறந்த உதாரம்ே அவரது சுகாதாரப் பாடநூலான பாடசாலைகளுக்கன உடல்நலக் கைநூல் (A Health Manual for Schools)-gygin, 33, 1928 Sai Glauerfloriggs. பின்னர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நீண்ட காலமாய் பாடசாலைகளில் பயன்பட்டது. இந்நூலின் மூலம் உடல் நவம், சுகாதாரம் போன்ற விடயங்களை அறிந்த முதல் தலைமுறையினரால் மேரி ரட்னம் இன்றும் நினைவு சுரப்படுகிறார். இவர் எழுதிய இன்னோர் நூலான இலங்கைப் பாடசாலைகளுக்கான airgi's Issif., coal, Gi (Home Craft Manual for Ceylon Schools) 1933 இல் வெளிவந்தது. இந்நூலின் முன்னுரையில் "எளிமை, ஒழுங்கு, சிக்கனம், சுத்தம் ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும். வறியவர்களதும், செல்வந்தர்களதும் வீடுகளில் சிறந்த வீட்டு நிர்வாகத்திற்கு இவை அத்தியாவசியமாகும். உடல் நலம், சுத்தம், திறமை ஆகியவற்றுடன் பொருந்தாதவை தவிர சுதேசிய வாழ்வின் ஏனைய அம்சங்களைப் பேணுங்கள்" எனக் குறிப்பிட்டார். வீட்டுப் பணியாட்களைத் துன்புறுத்தல், சிறுபிள்ளைகளை விட்டு வேலைக்கு அமர்த்தல் போன்றவையுட்பட சமூக விமர்சனத்தை

Page 22
22
இந்நுால் முன் வைத்தது. பிள்ளைகளின் உரிமை பற்றிய ஜெனிவா பிரகடனத்தையும் (1923) இந்நுால் உள்ளடக்கியிருந்தது. மேரி ரட்னம் மனிதருடனும், பிராணிகளுடனும் சரியான முறையில் நடந்து கொள்ளுதல் பற்றி அழுத்திக் கூறினார். பெண்பிள்ளைகளை வீட்டில் அடங்கியிராமல் லங்கா மஹில சமிதி போன்ற அமைப்புகளிற் சேர்ந்து சமூகப்பணி புரியும்படி கூறினார். பெண் சாரணர்கள் தற்சார்பு, தொழிற் தேர்ச்சி, உடல்நலம் என்பவற்றை ஊக்குவிப்பது மாத்திரமன்றி, இன, சமய, சாதிகளுக்கிடையே நிலவும் பொய்த் தடைகளை நீக்கி, பொறாமை போட்டி ஆகியவற்றைத் தவிர்த்து பரஸ்பர புரிதலையும், உதவியையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் பாலியல் கல்வியின் முன்னோடியாகவும் மேரி ரட்னம் திகழ்கிறார். இப் பொருள் பற்றிப் பெண்கள் பாடசாலைகளில் விரிவுரை நிகழ்த்தினார். கொழும்பு ஹவ்லொக் வீதியில் அமைந்த அவரது சொந்த மருத்துவ மனையில் மத்தியதர வர்க்கப் பெண்களுக்கு அளித்த சிகிச்சை மூலம் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பற்றிய உணர்வைப் புகுத்தினார். அவரது வாழ்நாள் முற்றிலும் கிராம நகர ஏழைப் பெண்களது உடல் நல முன்னேற்றத்திற்கு உழைத்தார். விஜிதா G) jsorcia TokyopJeffluir
"ஒரு வைத்தியர் என்ற முறையில் அவரது அக்கறை நகரத்தின் வறிய மக்கள் பற்றியதாகும். நகரின் வறிய பகுதிகளிலும் நகர எல்லைக்கு வெளியிலும் காணப்பட்ட அபாயகரமான சுகாதாரக் குறைவு கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது அவரை சமூக சேவையாளராக மாற்றிற்று. தனது இறப்பு வரையும் அவர் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக பெண்களுக்குக்
கல்வி புகட்டினார். (சிலோன் டெயிலி நியுஸ் 2 ஜூன் 1973)
உடல் நல விடயங்களுக்காகப் பிரசாரம் செய்தமை மேரி ரட்னத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். 1927 இல் பெண்களது வாக்குரிமை பற்றி உரையாற்றிய கூட்டத்தில் கொழும்பு அரச பிரசவ வைத்தியசாலையில் காணப்படும் மோசமான நிலைமையை விமர்சித்தார். இவ் வைத்தியசாலைக்குத் தினமும் 138 நோளிகள் வருகின்றனர். ஆனால் 82 கட்டில்களே இருக்கின்றன. இதனால் பிரசவத்தின் பின் உடனடியாகப் பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றார். (மோர்னிங் லிடர் 12 ஒகஸ்ட் 1927).

19
டபிள்யு. கிறேவ், செல்வி. டி. கிறஸ்ரர், செல்விகள். சி. சில்வா, ஈ. டி. சில்வா - நிகழ்த்தப் பெற்றது. ஒரு பத்திரிகை இதனை மிகவும் பாராட்டியது. (மேலது) மேரி ரட்னமும் தமது நாட் குறிப்பில் புகழ்ந்து எழுதினார். இலங்கையில் பெண்கள் உரிமை தொடர்பான முதலாவது பொது நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடந்த பெண்கள் வாக்குரிமைப் போராட்டங்கள் பற்றி உள்ளூர்ப் பத்திரிகைகளில் இடம் பெற்ற குறிப்புகளால் செல்வாக்குற்று இந்நிகழ்ச்சியை இப்பெண்கள் தயாரித்திருக்கலாம்.
1907 - 8 காலப் பகுதியில் மேரி ரட்னம் கணவருடனும் தனது நாலு புதல்வர்களுடனும் விடுமுறைக்காக கனடா சென்று தனது பெற்றோருடன் தங்கினார். அப்போது இலங்கை நிலைமை பற்றிப் பல கூட்டங்களில் பேசினார். அங்கு பெண்கள் அமைப்புகளின் நிலைமை பற்றித் தெரிந்து கொண்டார். கனேடிய அரசாங்கம் "எமது சங்கத்தை ஒத்த" பெண்கள் நிறுவன இயக்கத்திற்கு அளித்த ஆதரவால் "நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தேன்" (சிலோன் இன்டிபென்டன்ற் 6 ஜூலை 1909) இதே காலத்தில் எஸ். சி. கே. ரட்னம் கனடாவிலும், அமெரிக்காவிலும் இந்திய கலாசாரம், இந்தியத்தேசியம், பஞ்சம். கைத்தொழில் வளர்ச்சி, கிறிஸ்தவ மிஷன்கள் உட்படப் பல விடயங்களையிட்டு விரிவுரையாற்றினார். கிறிஸ்தவ மிஷனரிகள் "கீழைத்தேச உணர்வுகளை பாராட்டத் தவறியமை பற்றி விமர்சித்ததுடன் "உள்நாட்டவரை நிறவாத நோக்குடன் நடத்துவது" பற்றியும் கண்டித்தார். சிறுமியர் திருமணத்தையும் கண்டித்து இந்து சமயம் பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்தார். ரட்னம் புத்திசாதுர்யம் மிக்கவர், பல விடயங்களில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் 1909 ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்து 1929 இல் Stravidstedtrts.
கொழும்புத் தமிழ்ச் சமூகத்திடையே நன்கு அறியப்பட்ட மேரிரட்னம் செல்வாக்கு மிகுந்த சில தமிழ்ப் பெண்களை ஊக்குவித்து 1909 இல் தமிழ்ப் பெண்கள் சங்கத்தை ஆரம்பித்தார். இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் முக்கிய குறிக்கோள் தமிழ்க் கலாசாரத்தைப் பேணுவதும், கல்வி, சமூகப்பணி ஆகியவற்றை ஊக்குவிப்பதுமாகும். இதன் முதலாவது தலைவர் டொக்டர். சரவணமுத்து ஆவர். திருமதி. நைல்ஸ், திருமதி. டபிள்யு. எம். வேட்ஸ்வத், திருமதி. ஜே. சி. கே. ரட்னம் முதலியோர் ஏனைய

Page 23
20
அங்கத்தவர்கள். சங்கத்தின் கூட்டம் மாதமொருமுறை தமிழில் நடந்தது. (சிலோன் இன்டிபென்டன்ற் 6 ஜூலை 1909). அவர்களது முதலாவது வேலைத் திட்டம் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வறிய தமிழ்ப் பிள்ளைகட்கு ஒரு பாடசாலை அமைத்தலாகும். இதனைத் தொடர்ந்து பெண்களது வாக்குரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற விடயங்களில் பல தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டமைக்கு மேரிரட்னத்தின் முன்மாதிரியும் செல்வாக்கும் முக்கிய காரணங்களாகின என்பதில் ஐயமில்லை.
உள்ளூர்ப் பெண்களுடன் சேர்ந்து பணி புரியவே மேரி ரட்னம் விரும்பினார் என்பது தெளிவு. இலங்கையிலிருந்த ஆங்கிலேயர் மேரி ரட்னத்தைத் தமது காலனியைச் சார்ந்தவர் எனக் குறைவாக நோக்கியது மாத்திரமன்றி அவரது கனேடிய மருத்துவக் கல்வியையும் நிராகரித்தனர். இலங்கைப் பெண்கள் சங்கத்தின் ஆங்கில உறுப்பினர்கள் இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்துடன் அல்லது தாய்மார் சங்கத்துடன் இலங்கைப் பெண்கள் சங்கம் இணைய வேண்டும் எனக் கூறியது குறித்து தமது அதிருப்தியை மேரி ரட்னம் 1909 இல் தெரிவித்தார். "இலங்கை பெண்கள் சங்கத்தில் ஆங்கிலேயரை முற்றாகத் தவிர்த்து உள்ளூர் மக்களை மட்டுமே கொண்டதாக அதனை வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்" என எழுதினார். மேலும்
"அவர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் என்னைக் குறைவாகவே நோக்குகின்றனர். அவர்கள் மத்தியில் நான் வேற்றாளாக உணர்கிறேன். உயர் சமூகத்தினருக்கு அன்றி தாழ்த்தப்பட்டோர் மத்தியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கருதுகிறேன். அவர்கள் என்னைத் தவறாக விளங்க மாட்டார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரியும் (மேரி ரட்னம் நாட்குறிப்பு 1906 - 09)
பெண்கள் சங்கத்தில் கிறிஸ்தவர் மாத்திரமே அங்கம் வகிக்க வேண்டும் என்ற குறுகிய பார்வை இருக்கவில்லை. சாதி, சமய, இன எல்லைகளைக் கடந்து சுதேசிய மக்கள் பங்கு பற்றும் சங்கமே அவரது நோக்காயிற்று. இவ்வகையில் இலங்கைப் பெண்கள் சங்கம், கிராமியப் பெண்களை முன்னேற்றும் நோக்கத்துடன் மேரி ரட்னத்தால் பின்னணியில் நிறுவப்பட்ட லங்கா மஹில சமிதிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.

21
பெண்களும் உடல்நலமும்
மகப்பேற்று வைத்தியரான மேரி ரட்னம் பெண்களது உடல்நலம், குழந்தை பராமரிப்பு பற்றி மிகவும் அக்கறை காட்டினார். இலங்கையில் வசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த அக்கறை அவரிடம் காணப்பட்டது. மிஷனரிகள் அவரை விலக்கிய பின்பும் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த கனேடிய பெண் வைத்தியர்கள் அவரைச் சந்திப்பதற்கு இலங்கை வந்தனர். அவர்கள் அவரது வைத்திய சமூக சேவைப் பணிகளுக்கு உற்சாகமூட்டினர். ஆரம்பகால வைத்தியப் பட்டதாரிகளில் ஒருவரும் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தவருமான மார்க்கிரட் ஓ ஹாரா 1907 இல் இலங்கை வந்தார். மேரி ரட்னம் தனது தனிப்பட்ட நோயாளிகளுக்கு இவரது உதவியைப் பெற்றுக் கொடுத்ததுடன் லேடி ஹவெலாக் வைத்திய சாலை, பிரசவ இல்லம் போன்றவற்றுக்கு அவரை அழைத்துச் சென்றார் (மேலது). இலங்கைப் பெண்கள் சங்கத்தின் மூலம் உடலியல், மருத்துவப் பராமரிப்பு பற்றிய ஆறு நாள் விரிவுரை நெறி ஒன்றை ஒழுங்கு செய்தார். பல தசாப்தங்களாக பெண்களது உடல் நலம் தொடர்பான விடயங்களையிட்டு கண்காட்சி, விரிவுரைகள், செய்திப் பத்திரிகைக் கட்டுரைகள் என்பன மூலமும் பாடநுால்கள் மூலமும் பிரபல்யப்படுத்தினார். சிறந்த உதாரணம் அவரது சுகாதாரப் பாடநூாலான பாடசாலைகளுக்கான உடல்நலக் கைதுால் (A Health Manualfor Schools)-ASüd. Qg 1923 S6o G)6).6flaßgsg). பின்னர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நீண்ட காலமாய் பாடசாலைகளில் பயன்பட்டது. இந்நுாலின் மூலம் உடல் நலம், சுகாதாரம் போன்ற விடயங்களை அறிந்த முதல் தலைமுறையினரால் மேரி ரட்னம் இன்றும் நினைவு கூரப்படுகிறார். இவர் எழுதிய இன்னோர் நுாலான இலங்கைப் பாடசாலைகளுக்கான as "G," Lugooflá; 6Dangi (Home Craft Manual for Ceylon Schools) 1933 இல் வெளிவந்தது. இந்நூலின் முன்னுரையில் "எளிமை, ஒழுங்கு, சிக்கனம், சுத்தம் ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும். வறியவர்களதும், செல்வந்தர்களதும் வீடுகளில் சிறந்த வீட்டு நிர்வாகத்திற்கு இவை அத்தியாவசியமாகும். உடல் நலம், சுத்தம், திறமை ஆகியவற்றுடன் பொருந்தாதவை தவிர சுதேசிய வாழ்வின் ஏனைய அம்சங்களைப் பேணுங்கள்” எனக் குறிப்பிட்டார். வீட்டுப் பணியாட்களைத் துன்புறுத்தல், சிறுபிள்ளைகளை வீட்டு வேலைக்கு அமர்த்தல் போன்றவையுட்பட சமூக விமர்சனத்தை

Page 24
22
இந்நுால் முன் வைத்தது. பிள்ளைகளின் உரிமை பற்றிய ஜெனிவா பிரகடனத்தையும் (1923) இந்நுால் உள்ளடக்கியிருந்தது. மேரி ரட்னம் மனிதருடனும், பிராணிகளுடனும் சரியான முறையில் நடந்து கொள்ளுதல் பற்றி அழுத்திக் கூறினார். பெண்பிள்ளைகளை வீட்டில் அடங்கியிராமல் லங்கா மஹில சமிதி போன்ற அமைப்புகளிற் சேர்ந்து சமூகப்பணி புரியும்படி கூறினார். பெண் சாரணர்கள் தற்சார்பு, தொழிற் தேர்ச்சி, உடல்நலம் என்பவற்றை ஊக்குவிப்பது மாத்திரமன்றி, இன, சமய, சாதிகளுக்கிடையே நிலவும் பொய்த் தடைகளை நீக்கி, பொறாமை போட்டி ஆகியவற்றைத் தவிர்த்து பரஸ்பர புரிதலையும், உதவியையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் பாலியல் கல்வியின் முன்னோடியாகவும் மேரி ரட்னம் திகழ்கிறார். இப் பொருள் பற்றிப் பெண்கள் பாடசாலைகளில் விரிவுரை நிகழ்த்தினார். கொழும்பு ஹவ்லொக் வீதியில் அமைந்த அவரது சொந்த மருத்துவ மனையில் மத்தியதர வர்க்கப் பெண்களுக்கு அளித்த சிகிச்சை மூலம் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பற்றிய உணர்வைப் புகுத்தினார். அவரது வாழ்நாள் முற்றிலும் கிராம நகர ஏழைப் பெண்களது உடல் நல முன்னேற்றத்திற்கு உழைத்தார். விஜிதா GN. hason Girsa_untu groupGEfðfuhr
"ஒரு வைத்தியர் என்ற முறையில் அவரது அக்கறை நகரத்தின் வறிய மக்கள் பற்றியதாகும். நகரின் வறிய பகுதிகளிலும் நகர எல்லைக்கு வெளியிலும் காணப்பட்ட அபாயகரமான சுகாதாரக் குறைவு கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது அவரை சமூக சேவையாளராக மாற்றிற்று. தனது இறப்பு வரையும் அவர் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக பெண்களுக்குக்
கல்வி புகட்டினார். (சிலோன் டெயிலி நியுஸ் 2 ஜூன் 1973)
உடல் நல விடயங்களுக்காகப் பிரசாரம் செய்தமை மேரி ரட்னத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். 1927 இல் பெண்களது வாக்குரிமை பற்றி உரையாற்றிய கூட்டத்தில் கொழும்பு அரச பிரசவ வைத்தியசாலையில் காணப்படும் மோசமான நிலைமையை விமர்சித்தார். இவ் வைத்தியசாலைக்குத் தினமும் 138 நோளிகள் வருகின்றனர். ஆனால் 82 கட்டில்களே இருக்கின்றன. இதனால் பிரசவத்தின் பின் உடனடியாகப் பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றார். (மோர்னிங் லிடர் 12 ஒகஸ்ட் 1927).

23
மேரி ரட்னத்தின் இன்னோர் அக்கறை இலங்கையர் மத்தி யில் பால் அருந்தும் பழக்கத்தைத் துாண்டுவதாகும். தென், தென்கிழக்காசியப் பகுதியிலேயே இலங்கையில்தான் பால் அருந்தும் பழக்கம் குறைவாக உள்ளதை அறிந்த அவர் இதனை அதிகரிப்பதன் அவசியம் பற்றிக் கூறத் தொடங்கினார். 1928 இல் கொழும்பில் முதலாவது பால்சாலையை நிறுவினார். இது சிறிது காலமே இயங்கியதாயினும் "ப்ால் நாளாந்த தேவை” என்ற கருத்தை ஏற்படுத்தியது. எளிமையான சத்துணவுச் சமையல் பற்றியும் பல செய்முறை விளக்கங்களை ஒழுங்கு செய்தார். (சிலோன் டெய்லி நியுஸ் 2 ஜூன் 1973)
மதுப்பழக்கத்தை இவர் மிகவும் கண்டித்தார். இலங்கையின் மதுவிலக்கு இயக்கத்தில் முக்கிய பிரமுகராகவும் விளங்கினார். பல வருடங்களாக கிறிஸ்தவப் பெண்கள் மது ஒழிப்புச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். இளமையில் கனடாவிலும் மதுவிலக்கு இயக்கத்தில் உற்சாகமாக ஈடுபட்டார். எப்போதும் இவர் மதுவிலக்குப் பிரசாரக் கூட்டங்களில் ஒரு முக்கிய பேச்சாளராகவிருந்தார். சுகாதாரம் தொடர்பான தமது பாடநூாலில் மதுப்பழக்கம் தொடர்பான ஒரு அத்தியாயத்தைச் சேர்த்திருந்தார். இதில் மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு விளைவிக்கக் கூடிய தீமைகள் பற்றி விரிவாக எழுதினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்களிடையே நிலவும் மதுப்பழக்கத்தின் விளைவுகள் பற்றியும் பெண்களையும் பிள்ளைகளையும் அது பாதிப்பது பற்றியும் கூறத் தவறவில்லை. ஓட்டர் அக்குவாட்டிக் கிளப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், தனது புதல்வருமான வோல்டர் ரட்னத்தை தனது கருத்துக்களால் துண்ட முயன்றார்.
“உங்களது பானசாலையில் சுகம் தரும் பானங்களை அறிமுகப்படுத்துவது நல்லது. நீங்கள் முயன்றால் இளநீர், பால், சர்பத் போன்றவை பிரபலமாகிவிடும். மற்ற இளைஞர் களுக்கு முன்மாதிரியுமாகும். வால்டர், இது பற்றிச் சிறிது சிந்தியுங்கள்" (கடிதம் பெப்ருவரி 2 1955; அனிற்றா கப்டன் சேகரிப்பு)

Page 25
24
குடும்பத் திட்டமிடல்
மேரி ரட்னம் 1920 களில் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான பொதுப்பணிகளுக்குத் தனது நேரத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டார். 1920 இல் பிரசவம், சிறுவர் நலம், பராமரிப்பு ஆகியவை பற்றிய கண்காட்சியை நடத்தினார். 1924 இல் பெண்கள் உடல் நலம், வீட்டுப் பிரச்சனைகள், வேலை நிலைமைகள், கல்வி, தொழில் முதலியவற்றை ஆராய்வதற்காக பெண் சமூக சேவையாளரின் மகாநாட்டைக் கூட்டினார். வருடத்துக்கு இரு முறையாக இம் மாநாடு 1950 வரை தொடர்ந்து நடந்தது. பெண்களது உடல் நலம், பிறப்புக்கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது என்பதும் மேரி ரட்னத்தின் உறுதியான நம்பிக்கையாகும்.
1932 ஆம் ஆண்டிலேயே, சர்ச்சைக்குரியதாக இருந்த குடும்பத் திட்டமிடல் பற்றி வெளிப்படையாகப் பேசினார். இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளுக்கும் வருகை தந்த, மிகுந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிறப்புக்கட்டுப்பாடு பற்றி பிரசாரம் செய்த அமெரிக்கரான மார்க்கிரட் சாங்கள் போன்றோராலும் இவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் 1930 இல் கனடாவில் குடும்பத்திட்டமிடல் முறைகள் முன்னேறியிருந்தன. ஒன்ராறியோ மாகாணத்தில் திட்டமிடும் பெற்றோர் g-fägo (Planned ParenthoodASSociation) QG560)aggluftg,6nnso நிறுவப்பட்டது. இவர்கள் மேரி ரட்னத்தின் பாடசாலையான ரிடினிட்டி கல்லுாரியைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் குடும்பத் திட்டமிடலின் தாய் எனக் குறிப்படத்தக்க மேரி ரட்னம் உள்ளூர் அதிகாரிகளை இவ்விடயம் தொடர்பாக அக்கறை காட்டுமாறு துாண்டினார். ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. வைத்திய மாணவர்களின் பாடத்திட்டத்தில் இதனைச் சேர்க்கக்கூட அரசாங்கம் மறுத்துவிட்டது. எனினும் குழந்தை பெறுவதைத் திட்டமிடுவதின் அவசியம் பற்றிப் பல மகாநாடுகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தார். "எனினும் இது தொடர்பாக பலத்த எதிர்ப்புக்கு உள்ளானார். பூமாலைகளுக்குப் பதில் கல்லெறிகளே கிடைத்தன. (டெய்லி மிரர் 24 டிசம்பர் 1981)
எனினும் அவரது வழிகாட்டலுடன் ஒரு குடும்பத்திட்டமிடல் கிளினிக் மருதானை டீன்ஸ் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 2 ஆம் உலகப் போர் தொடங்கியேபாது, 1939 இல் அக்கட்டிடம் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டது. பின்னர் 1953 இலேயே இன்னோர்

25
கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் குடும்பத்திட்டச் சங்கத்தைச் சேர்ந்த சில்வியா பெர்னாண்டோ "கிழக்குலகிலேயே முதலாவது குடும்பத்திட்ட கிளினிக்குகளில் ஒன்றை ஆரம்பித்தவர்” என மேரி ரட்னத்தை பாராட்டினார். (மஹில ஜூலை 1962). அவரது கருத்துகளுக்காக அடிக்கடி விமர்சிக்கப்பட்ட போதிலும் குடும்பத் திட்டமிடலை ஊக்குவிக்க திருமதி ரட்னம் ஒரு போதும் தயங்கிய தில்லை. 1941 இல் இளைப்பாறிய போது தனது நண்பர்களுக்கும், நோயாளிகளுக்கும் "எவராவது பிறப்புக் கட்டுப்பாடு, ஏனைய பெண்கள் பிரச்சனைகள் தொடர்பாக எனது சேவையைப் பெற விரும்பின்” ஆலோசனை வழங்கத் தயாராய் இருப்பதாகக் கடிதம் எழுதினார்.
பெண்கள் வாக்குரிமைச் சங்கம்
1927 வரை மேரி ரட்னத்தின் நடவடிக்கைகள், பிரதானமாக அவரது சமூக நலச் சேவையானது, பெண்கள் உடல் நலம், பெண் சாரணர் இயக்கம், அவரது நண்பர் பிரான்சிஸ் ஜயசேகரா ஆரம்பித்த அநாதைப் பெண்களுக்கான ஜயசேகர இல்லம் போன்றவற்றுக்கு ஆதரவளித்தலாக இருந்தது. ஆனால் 1927 இல் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஆரம்பமானபோது (மேரி ரட்னமும் இதன் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவர்) அவரது பணிகளில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக டொனமூர்க் கொமிஷன் இலங்கை வந்தேபாது பெண்கள் வாக்குரிமை தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 1912 ஆம் ஆண்டு யாப்புச் சீர்திருத்தங்களின் பின்னர் கல்வி, சொத்துத் தகுதியின் அடிப்படையில் ஆண்களுக்கு வரையறுக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன் பின்னர் உள்ளூர் அரசியல்வாதிகள் யாப்புத்திருத்தம் தொடர்பான பிரேரணைகளைச் சமர்ப்பித்த போதெல்லாம் வாக்குரிமையை மேலும் விஸ்தரிக்குமாறு கோரினார். இலங்கைத் தேசிய காங்கிரஸும் 1919 ஆம் ஆண்டிலிருந்து தனது வருடாந்தக் கூட்டங்களில் பெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்துடன் சில பெண்கள் குழுக்களும் பெண்கள் வாக்குரிமைக்காகக் குரல் எழுப்பின. 1927 டிசம்பர் 7 ஆம் திகதி வரலாற்றில் பொறிக்கப்படக்கூடிய ஒரு கூட்டத்தை பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நடத்தியது. மோர்னிங் லீடர் என்ற பத்திரிகை

Page 26
26
இதனை வாக்குரிமை இயக்கம் என வர்ணித்தது. கேர்ல்ஸ் பிரண்ட்லி சொசைட்டியில் இக்கூட்டம் நடந்தது. பல்வேறு சமூகங்களையும் சார்ந்த பெருந்தொகையான பெண்கள் இதில் பங்கு பற்றினர். முன்னாள் பிரதமர். எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயகாவின் தாயாரான லேடி டயஸ் பண்டாரநாயகா தலைமை வகித்தார். தொழிற்கட்சியைச் சேர்ந்த அக்னஸ். டி. சில்வா உட்படப் பல தாராண்மைவாதக் கருத்துள்ள பெண்கள் உரையாற்றினர். தேசிய சட்டசபை, மாநகர சபை, உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான தேர்தலில் வாக்களிக்க, வரையறுக்கப்பட்ட உரிமையாவது பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மேரி ரட்னம் முன்மொழிந்தார். பொதுவாழ்விலும், அரசியலிலும் பெண்கள் பங்கு கொள்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார். குற்றவாளிகள் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டும் என்றார். இக்கூட்டத்திற்கு மறுதினம், பெண்கள் வாக்குரிமைச் சங்கம் என்ற தலைப்பில் மோர்னிங் லீடர் பத்திரிகை ஒரு தலையங்கம் எழுதியது. பெண்களுக்கு வாக்குரிமை அளித்தலானது சமூக சேவை, சிறுவர் நலன் ஆகியவற்றின் பரப்பை விசாலிக்க உதவும் எனக் குறிப்பிட்டது.
டொனமூர்க் கொமிஷன் இத்தகைய வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் மேலாக சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையிலான சீர்திருத்தங்களைச் சிபார்சு செய்தது. 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கு பற்ற முடிந்தது. அடிலின் முல்லாமுரே. நேசம் சரவணமுத்து ஆகிய இரு பெண்கள் சட்ட சபைக்குத் தெரிவாகினர். பெண்கள் வாக்குரிமைச் சங்கமானது, பெண்கள் 9 Jafuci Friidsb (Women's Politicol Union) 6T607 LDnibpub Guibpg). பெண்களது ஜனநாய உரிமைகளை வென்றெடுப்பது இதன் நோக்கமாயிருந்தது. இதுவே 1944 இல் உருவாகிய அகில இலங்கைப் GIL16óa seit slét sgg)6ör (All Ceylon Women's Conference) முன்னோடியானது. மேரி ரட்னம் இதன் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராகவும் முதல் தலைவராகவும் பணியாற்றினார். அகில இலங்கைப் பெண்கள் சங்கம் பல தசாப்தங்களாக அரசியல், தொழில், சட்டங்கள் போன்றவற்றில் பெண்களது உரிமைக்காக

27
உழைத்ததுடன் தொழில் புரியும் மத்திய தர வர்க்கத்துப் பெண்களை ஒன்று திரட்டியது. இது சர்வதேச பெண்கள் கூட்டுடன் நிறுவன ரீதியாக இணைந்து இலங்கையிலும் பெண்கள் அமைப்புகளின் பிராந்திய சர்வதேச கூட்டங்களையும் ஒழுங்கு செய்தது.
பெண்கள் உரிமைகள் தொடர்பாகப் பரந்த விடயங்களை யிட்டுத் தனது அக்கறையை மேரி ரட்னம் அகில இலங்கை பெண்கள் சங்கத்தின் நடவடிக்கைகளுடாக வெளிப்படுத்தினார். "இலங்கைப் பெண்கள் தமது குடும்பம் பற்றி மாத்திரமே அக்கறை கொள்வதை மாற்றி, சமூகம் தொடர்பாக அவர்களது பார்வையை விசாலிக்கச் செய்தார்” என கிளேடிஸ் லுாயஸ் குறிப்பிட்டார். (மஹில: ஜூலை 1962) உதாரணமாக அகில இலங்கைப் பெண்கள் சங்கத்தின் முதலாவது கூட்டத்தில் சீதனம் பற்றிய வினாவை எழுப்பி அதனால் விளையும் தீமைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு வழிவகுத்தது மாத்திரமன்றி அதனைச் சட்டபூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்றார். (டைம்ஸ் ஒப் சிலோன் 12 ஒகஸ்ட் 1958. இவ் அமைப்பின் ஆரம்பக் கூட்டத் தொடர்களில் பெண் சிறைக் கைதிகள் வறியவருக்குச் சட்ட உதவி, தொழில் புரியும் பெண்களுக்குக் குழந்தை பராமரிப்பு நிலையங்கள், வளர்ந்தோர் கல்வி போன்றவை தொடர்பான தீர்மானங்களையும் முன்மொழிந்தார். மருத்துவதாதிப் பயிற்சி, பாலர் பாடசாலை, நகரசபை சுகாதார சேவைகள், குடும்பத் திட்டமிடல், பால்சாலைகள், சிறுவர் சுவீகாரம், சிறுவர் உழைப்பு, பெண் ஆலைத் தொழிலாளர் பிரச்சினைகள் முதலியவை தொடர்பான சட்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் துாதுக் குழுக்களைக் கூட்டிச் சென்றார். (மஹில ஜூலை 1962) மேரி ரட்னம் நகரத்து மத்திய தர வர்க்கப் பெண்கள் அமைப்புகளுடன் தீவிரமாகப் பணியாற்றிய போதும், கிராமத்து வறிய பெண்கள் மத்தியில் நிறுவன ரீதியாக ஆற்றிய பணிகள் மூலமே நிலையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.
லங்கா மஹில சமிதி
1920 களின் பிற்பகுதியில் டாக்டர். ரட்னம் கனடா சென்று. அங்கு கிராமியப் பெண்கள் மத்தியில் உள்ள பெண்கள் நிறுவனங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக கல்விச் சுற்றுப் பயனெமான்றை மேற்கொண்டார். இலங்கையில் அத்தகைய நிறுவன முறைகளை மேற்கொள்ள முடியுமா என அறிவதே அவரது நோக்கமாகும்.

Page 27
28
அடிலெய்ட் ஹிட்லஸ் (1858 - 1910) என்பவர் 75 அங்கத்தவர்களுடன் ஒன்ராரியோவில் உள்ள ஸ்ரோனி கிறக் எனுமிடத்தில் ஒரு பெண்கள் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். குழந்தை பராமரிப்பில் போதிய அறிவின்மை காரணாக அவரது ஒரு மகன் குழந்தைப் பருவத்தில் இறந்தபின் கிராமியப் பெண்கள் மத்தியில் சிசு மரணத்தை இல்லாதொழிப்பதற்கு அவர் சங்கற்பம் கொண்டார். ஒன்ராரியோவில் இந்நிறுவனங்கள் பெண்கள் மத்தியில் சத்துணவு, உடல்நலம், சுத்தம், சிறுவர் பராமரிப்பு தொடர்பான அறிவைப் பரப்பின. ஒன்ராரியோவின் மாகாண அரசாங்கத்தின் நிதி ஆதரவு பெற்றன. கனடாவின் ஏனைய மாகாணங்களுக்கும் இந் நிறுவனங்கள் பரவியதுடன் மாத்திரமன்றி பிற்காலத்தில் பிரித்தானியாவிலும் ஆரம்பிக்கப்பட்டன. வங்காளத்தில் 1925 ஆம் ஆண்டு சறோஜினி நாயுடு மஹில சமிதியை ஆரம்பித்தார். 1930 ஆம் ஆண்டு 28 நாடுகளைச் சேர்ந்த கிராமியப் பெண்கள் அமைப்புகளின் சர்வதேச மகாநாடு நடைபெற்றது. 1933 இல் உலக sair geogais digit Di Giugiassii (The Associated Country WomenoftheWorld) என இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது.
1928 இல் ஒரு உள்ளூர்ப் பத்திரிகை மேரி ரட்னத்தின் கருத்துகளால் துாண்டப்பட்டு இலங்கையில் பெண்கள் நிறுனங்களின் (Women's Institutes) அவசியம் பற்றி ஆசிரியர் தலையங்கம் எழுதியது. அடுத்த வருடம் சமூக சேவையாளர்களின் அகில இலங்கை மகாநாட்டில் இதே பொருளில் மேரி ரட்னம் உரையாற்றினார். 1931 இல் பனிப்பிட்டியாவில் இத்தகைய ஒரு பெண்கள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தத்தமது கிராமங்களில் ஆசிரியர்களாகவும், தலைவர்களாகவும் பணியாற்றுவதற்கு பெண்களுக்கு கடுவெல என்னுமிடத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. சாதி வேறுபாடுகளைக் கடந்து இவ்வியக்கம் ஏழைப் பெண்களைச் சென்றடைந்தது. கிராம மட்டத்தில் பணியாற்ற நகரப் பெண்களையும் ஒழுங்கு செய்ததுடன் தமது அமைப்புகளை திறம்பட நடத்தவும் பயிற்சியளித்தது. சுகாதாரம், சிறுவர் பராமரிப்பு, முதலுதவி, சமையல், உணவு பேணுதல், சிறுவர்கல்வி, விவசாயம், கால் நடைவளர்ப்பு, கைப்பணி, தையல், றேந்தை பின்னுதல், நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆரம்பப் பயிற்சியளிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் ஆரம்ப காலப் பணிகளில் முக்கியமானவை 1945 இல் கலுபோவிலையிலும் 1947 இல்

29
மொறக்கலவிலும் பாலர் பாடசாலைகளை நிறுவியமையாகும். பல உள்ளூர் நிறுவனங்கள் இதனைப் பரின் பற்றியதுடன் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியும் பெற்றன. "லங்கா மஹில சமிதி கிராமங்களது சமூக வாழ்வின் மையமாக அமைந்தது. சகல சாதிகளையும் சேர்ந்த பெண்களை நாட்டுக்கான பொதுத் தொண்டில் ஒன்றிணைத்தது" என மேரி ரட்னம் குறிப்பிட்டார். லங்கா மஹில சமிதி சிறுவரின் 'உணவு, பராமரிப்பு, பயிற்சி, வீட்டு நிர்வாகம், சுகாதாரம், நோய் தடுப்பு என்பவற்றில் அக்கறை காட்டியது. வீட்டுத் தோட்டப் பயிர்களின் தரத்தை முன்னேற்றவும் அதிகரிக்கவும், தமது வீட்டுப்பாவனைக்கோ, விற்பனைக்கோ தேவையான அழகிய கைப்பணிப் பொருட்களை செய்யவும் பழகியதுடன் கூட்டுறவின் நன்மையையும் அறிந்தனர் (ஹோம் கிறாவ்ற் மனுவல், 1954 141)
லங்கா மஹறில சமிதி கிராமியப் பெண்களைத் தமது சுகாதாரம் பற்றி அக்கறை கொள்ளத் துாண்டியதுடன் சமூகப் பணிகளில் பங்கெடுக்க ஊக்குவித்த முதல் ஸ்தாபனமும் ஆகும். இலங்கையில் பாரிய பொருளாதார மந்தநிலை நிலவிய கால கட்டத்தில் நிறுவப்பட்ட மஹறில சமிதி பெண்களுக்கு சிறிது ஆறுதலளிக்கும் அமைப்பாக விளங்கியது. இவ்வமைப்பின் முக்கிய துாணாகிய மேரி ரட்னம் முதலாவது தலைவராகப் பதவியேற்றதுடன் தொடர்ந்தும் 13 ஆண்டுகள் அதே பதவி வகித்தார். 1944 இல் மஹில சமிதியின் இன்னோர் ஆரம்ப கர்த்தாவான சிசி குரே தலைவரானார். இவரே இலங்கையில் செனட்டராகப் பதவியேற்ற (1948) முதற் பெண்மணியாவர். மேரி ரட்னம் பற்றி விஜிதா பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்.
தமது உரிமைகள் பற்றியும், வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதன் அத்தியாவசியம் பற்றியும் கிராமப்புறச் சாதாரண பெண்களின் மனதில் ஒரு விழிப்புணர்ச்சியை மேரி ரட்னம் ஏற்படுத்தினார். இப் பெண்கள் முன்னொரு போதும் இத்தகைய சிறந்த வழிகாட்டல்களைப் பெற்றவர்களல்லர். எத்தகைய மோசமான நிலைமையில் தாம் வாழ்கிறோம் என்று உணர்ந்தவர்களுமல்லர். இவர்களிடையே மேரி ரட்னம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். (சிலோன் டெய்லி நியுஸ் 2 ஜூன் 1973)
1948 இல் லங்கா மஹில சமிதி இலங்கையின் பல பகுதிகளிலும் 125 கிளைகளையுடயதாகவும் 6000 அங்கத்தவர்களையுடையதாகவும் பரந்தது. 1959 இல் 1400 கிளைகள், 150,000 அங்கத்தவர்கள் என

Page 28
30
அதிகரித்து 1982 இல் 2664 கிளைகளையுடையதாய் ஆயிற்று. இலங்கையில் இதுவே மிகப் பெரிய பெண்கள் நிறுவனமாகும். (லங்கா மஹில சமிதி கைநூல் 1983) இதன் தலைமைக் கிளை உலகின் ஒன்றிணைந்த கிராமியப் பெண்கள் அமைப்பில் (ACWW) அங்கம் வகித்தது. இதன் சர்வதேச மகாநாடுகளில் இலங்கைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 1953 இல் கனடாவில் நடைபெற்ற மகாநாட்டுக்கும் சென்றனர். மர்ஜோரி டி மெல் அங்கு மேரி ரட்னத்தின் குடும்பத்தவர்களைச் சந்தித்தார்; அத்தகைய ஒரு சந்திப்பு பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்.
அவரது 96 வயதுடைய தாய்வழி மாமியாரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன். இலங்கையில் நாம் திருமதி. ரட்னத்துடன் மிக மரியாதையாகப் பழகுவோம். ஆனால் அப்போது 81 வயதாகியிருந்த மேரி ரட்னத்தை அவரது மாமியார் ஒரு இளைய மருமகளாக நடத்தியது வேடிக்கையாக இருந்தது.
இம் மகாநாட்டில் ஏற்பட்ட சர்வதேசத் தொடர்புகளால் 1958 ஆம் ஆண்டு 40 நாடுகளிலிருந்து 500 பிரதிநிதிகள் வருகை தந்த, உலகின் ஒன்றிணைந்த கிராமியப் பெண்கள் மகாநாடு, ஆசியாவிலேயே முதன் முறையாக இலங்கையில் நிகழ்தல் சாத்தியமாயிற்று.
மலேரியா நோய் பரவுதல்
மேரி ரட்னத்தினது வைத்தியத்துறைத் தேர்ச்சி, சமூக உணர்வு, கிராமிய நிலை பற்றிய அறிவு ஆகியவை 1934-35 காலப்பகுதியில் இலங்கையில் 100,000 பேரைப் பலி கொண்ட மலேரியா நோய் தொற்றுக் காலத்தின் போது மிகவும் பயன்பட்டன. வேலையின்மை அதிகரிப்பு, பொருளாதாரநிலை வீழ்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிராமிய மக்கள் பலவீனப்பட்டும் நைந்தும் போயிருந்த காலத்திலேயே மலேரியா பரவியது. கேகாலைக்கு அருகில் மலேரியாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பணி செய்யப் பல இளைஞர்கள் சென்றபோது அவர்களில் மேரி ரட்னமும் அவரது புதல்வர் ரொபினும் இடம் பெற்றனர்.
ரொபின் ரட்னம் யூத் லீக் எனப்படும் இளைஞர் இயக்கம், சூரிய மல் இயக்கம் ஆகியவற்றின் அங்கத்தவராவார். இவ்விரு அமைப்புகளும் இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியின் முன்னோடிகளாகும். யூத் லிக்கில் பிரித்தானிய

31
அரசிடமிருந்து இலங்கை பூரண சுதந்திரம் பெறவேண்டும் என வற்புறுத்திய தேசியவாதிகள் அங்கம் வகித்தனர். பிரித்தானிய யுத்த வீரர்களுக்காகப் பணம் சேர்க்க ஒழுங்கு செய்யப்பட்ட பொப்பி தினத்துக்கு (நவம்பர் 11) எதிராக சூரியமல் இயக்கம் செயற்பட்டது. என். எம். பெரெரா, பிலிப் குணவர்த்தனா, றொபட் குணவர்த்தனா, எஸ். ஏ. விக்கிரமசிங்க, லெஸ்லி குணவர்த்தனா உட்பட ஏனைய இடதுசாரி அங்கத்தவர்களுடன் மேரி ரட்னமும் ரொபின் ரட்னமும் கேகாலைப் பிரதேசத்தில் உணவு, மருந்துப் பொருட்களை விநியோகித்தனர். மக்களுக்கு வலிமை வாய்ந்த மருந்துகளைக் கொடுக்கும் போது அவர்களது உடற்பலத்தை அதிகரிக்கும் பருப்பு, மாமைற் என்பவற்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என மேரி ரட்னம் கூறினார். தொண்டர் குழு ஒன்று இவ்வறிவுரையைப் பின்பற்றியது. இச்செயல் மிகுந்த பாராட்டைப் பெற்றது. என். எம். பெரெரா "பருப்பு மாத்தயா’ என அழைக்கப்பட்டார். இது தந்த பிரபலம் 1936 இல் கண்டியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரைத் தோற்கடித்து சட்ட சபைக்கு இப்பிரதேசப் பிரதிநிதியாகும் வாய்ப்பைப் பெரெராவுக்கு அளித்தது.
முனிசிபல் கவுன்சிலர்
காலனித்துவ ஆட்சியின் போது தேசிய மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் மேற்கு நாட்டுப் பெண்கள் அரசியலில் பங்கு பற்றியமையும், தேர்தலில் போட்டியிட்டமையும் மிகக் குறைவாகும். மேரி ரட்னம் தாம் இருபது வருடமாக வசித்த பம்பலபிட்டி தொகுதிக்கு மே 1937 இல் முனிசிபல் கவுன்சிலரானார். இலங்கையின் முதலாவது பெண் முனிசிபல் கவுன்சிலரும் அவரே.அவரது வேட்பு குறித்து வெளியான துண்டுப் பிரசுரம் பின்வருமாறு கூறியது.
மேரி ரட்னம் தமது தொழில், குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் உண்மையான ஆர்வத்துடன், மனதார மக்களுக்காக உழைத்தார். பெண்களது சமூக அரசியல் விடயங்களில் அவரது வழிநடத்தல் பற்றி யாவரும் அறிந்துள்ளோம். பெண்கள், சிறுவர் ஆகியோரது நலன்களைக் கவனிக்கும் வகையில் முனிசிபல் நடவடிக்கைகளை விரிவு படுத்தல், பெண்களுக்கு முனிசிபல் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை முதலியவை குறித்து ஆர்வம் காணப்படும் இக்காலத்தில்

Page 29
32
கவுன்சிலிலும் பெண்கள் இடம் பெற வேண்டும். இதற்கு மேரி ரட்னத்தைத் தவிரப் பொருத்தமானவர் எவருமில்லை. பம்பலப்பிட்டியின் நலனைக் கவனிக்கவும் இவரே பொருத்த மானவர். (பம்பலப்பிட்டி வாக்காளர்களுக்கு எனத் தலைப்
பிடப்பட்ட துண்டுப் பிரசுரம்: அணிற்றா கப்டன் சேகரிப்பு)
இப்பிரதேசத்தில் ஜி. சி. எஸ். கொரியா (தொழில் அமைச்சர்) பேர்னாட் அலுவிஹார, ஜி. ஏ. வெல்லே, லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்களில் ஒருவரான என். எம். பெரெரா ஆகிய நான்கு ஸ்டேட் கவுன்சில் அங்கத்தவர்களுட்பட பம்பலப்பிட்டியின் பிரபலஸ்தர்களான ஈ. ஜி. அடமலி, வண. லுாசியன் ஜான்ஸ், எம். மருதப்பா, ஜேம்ஸ் பிரிவின், எஸ். எல். மரிக்கார் முகமது ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர். எனினும் அவரது வேட்புக்கு எதிர்ப்பும் காணப்பட்டது. கொம்யூனிசத்தைப் பிரசாரம் செய்பவர்; சமயப்பற்றற்ற வெளிநாட்டவர், குடும்பத் திட்ட பிரசாரகள் எனக் குற்றம் சாட்டப்பட்டார். லங்கா சம சமாஜக் கட்சியின் முக்கிய செயல்வாதியாக ரொபின் ரட்னம் விளங்கியமையும் அக்காலத்தில் மேரி ரட்னத்துக்கு என். எம்.பெரெரா அளித்த ஆதரவும் இத்தகைய எதிர்ப்பைத் துாண்டின. தான் ஒரு கொம்யூனிஸ்டோ, அரசியல் கட்சியின் வேட்பாளரோ இல்லையென்றும் ஆனால் தமது அக்கறை எப்போதும் வறிய மக்கள்பால் உள்ளதென்றும் அவர்களது பொருளாதார நிலைமையை உயர்த்தவே உழைத்தார் எனவும் டாக்டர் ரட்னம் இதற்குப் பதிலளித்தார். மேலும் அவர் ஒரு வெளிநாட்டவர் என்ற குற்றச் சாட்டிற்குப் பின்வருமாறு பதிலளித்தார்.
நான் கனடாவில் பிறந்தேன் என்பது உண்மைதான். ஆனால் நாற்பது வருடங்களாக இந்நாட்டு மக்களில் ஒருவராக வாழ்ந்துள்ளேன். எனது நலன்களும் அவர்களது நலன்களும் ஒன்று எனவே கருதினேன். எனது நீண்ட காலச் சேவையானது எனது எதிர்ப்பாளரின் குரலை விடப் பலம் மிக்கது."
தாம் சமயப்பற்றற்றவர் என்ற குற்றச் சாட்டை மேரி ரட்னம். பின்வருமாறு மறுத்துரைத்தார். "ஆழ்ந்த சமயப் பற்றுள்ள பிறஸ்பிடீரியன் குடும்பத்தில் பிறந்து பின்னர் பப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தேன்." அவரை மோசமாக விமர்சித்தோர் கத்தோலிக்கராவர். பிறப்புக் கட்டுப்பாட்டை டாக்டர் ரட்னம் ஆதரிப்பது நல்லொழுக்க

33
முள்ளவரின் இலட்சியத்துக்கு ஊறு விளைப்பது என்பது போன்ற தவறான அறிக்கைகளால் தமக்குக் கத்தோலிக்கர் மத்தியிலுள்ள ஆதரவைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பின்வருமாறு வன்மையாகப் பதிலளித்தார்.
பிறப்புக் கட்டுப்பாடு சர்வதேச அக்கறைக் குரிய விடயமாகும். சகல மதங்களையும் சேர்ந்த உயர்ந்த இலட்சியமுள்ள ஆண்களும் பெண்களும், தேசிய, மனிதாபிமான நலன் கருதி பிறப்புக் கட்டுப்பாட்டின் சகல அம்சங்கள் பற்றியும் அக்கறை செலுத்து கின்றனர். (துண்டுப் பிரசுரம்; அனிற்றா கப்டன் சேகரிப்பு)
இத்தகைய நிந்தனை இருந்தும் 9ň - LTéhLň. Tí65Tb 540 வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்டவர்களான பிபின் சில்வாவும், ரொபின் சொய்சாவும் முறையே 261, 233 வாக்குகளையே பெற்றனர். நகர சபை மண்டபத்திற்கு வெளியே தேர்தல் முடிவுக்காகக் காத்து நின்ற பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது "முதலாவது பெண் கவுன்சிலரை முனிசிப்பல் கவுன்சிலுக்கு அனுப்பியமைக்காகப் பம்பலப்பிட்டி பெருமைப்பட வேண்டும்" எனக் கூறினார்.
முனிசிப்பல் கவுன்சிலர் என்ற வகையில் சுகாதாரம், சந்தைகள், வீட்டுவசதிகள், நகர முன்னேற்றம், பொது நுாலகம், கஷ்ட நிவாரணம் தொடர்பான குழுக்களிற் கடமையாற்றினார். பல சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசியதோடல்லாமல் குடும்பத்திட்டக் கிளினிக்குகளை ஆரம்பிக்குமாறு நகரசபையை வற்புறுத்தினார். எனினும் இவ்விடயத்தில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. அவருடைய எதிரிகள் அவரைப் பதவியிலிருந்து விலக்குவது என்று மிக வன்மையாக முயன்றனர். 1938 இல் அவரது முகவரி மாற்றம் தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற தவறு காரணமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதனால் மூன்று வருடங்களும் முழுதாகச் சேவையாற்ற முடியவில்லை. அத்துடன் மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிட வில்லை.
எனினும் முனிசிப்பல் அரசியலிலும், முனிசிப்பல் கவுன்சிலுக்கு பெண் அங்கத்தவர்களை தேர்வதிலும் அவருக்கு ஆர்வம் குறையவில்லை. 1949 இல் ஹவெலாக் தொகுதி வாக்காளர்களுக்கு விடுத்த செய்தியில் 1938 இல் தான் திருமதி. எச். எம். குணசேகரவை ஆதரித்தமை பற்றிக்

Page 30
34
கூறினார். "நான் தொடங்கிய பணியைத் தொடர்வதற்குக் கவுன்சிலில் ஒரு பெண் வேண்டும்" என்று கூறினார். எல். எஸ்.எஸ். பி. அங்கத்தவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவருமான லெஸ்லி குணவர்த்தனாவின் மனைவியுமாகிய வரிவியன் குணவர்த்தனாவை ஆதரிக்கு முகமாக இச் செய்தியை விடுத்தார். "அனுபவம், அறிவு, ஆற்றல் கொண்ட இவ்வேட்பாளரை நான் முழு மனதுடன் சிபார்சு செய்வேன்” என்றார் புறக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட அய்ஷா ராவ் எனும் முஸ்லிம் பெண்ணையும் ஆதரித்தார். முனிசிப்பல் கவுன்சிலுக்கு "அனுபவம் வாய்ந்த இவ்விரு பெண்களும் பேருதவியாக இருப்பர்” எனக் கூறினார். “ஐக்கிய தேசியக் கட்சியினரோ, இடதுசாரிகளோ யாராயினும் பொருத்தமானவரே தேவை” என்றும் கூறினார். (வாக்காளர்க்கு எனும் தலைப்பிட்ட பிரசுரம் : அணிற்றா கப்டன் சேகரிப்பு)
குடும்பம்
1909 இல் கணவர் நோய்வாய்ப்பட்டபின் மேரி ரட்னம், தனியாளாக ஐந்து பேர் கொண்ட குடும்பத்தைப் பராமரிப்பதில் இலங்கையில் தனது ஆரம்ப வருடங்களைக் கழித்தார். ரட்னம் குடும்பத்தினருக்கு 1899-1905 காலப்பகுதியில் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் 1914 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மூத்த புதல்வர் அலன் ரட்னம் (1899-1982) றோயல் கல்லுாரியில் கற்று லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியராகப் பயிற்சி பெற்றார். பயிற்றப்பட்ட மருத்துவ மாதும் ஐரிஷ் நாட்டவருமான தனது மனைவி கேற்ரூயுட் ஸ்கொலனுடன் இலங்கை திரும்பி ஒரு தனியார் மருத்துவ மனையை வெற்றிகரமாக நடத்தினார். இரண்டாவது புதல்வரான டொனால்ட் ரட்னம் (1901-1968) றோயல் கல்லுாரியில் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். விஞ்ஞானப் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார். இந்திய சிவில் சேவைப் பரீட்சையில் தேறி இந்தியாவில் பல பதவிகள் வகித்தார். இவர் இரு தடவை ஆங்கிலப் பெண்களைத் திருமணம் செய்தார்.
மூன்றாவது மகன் ரொபின் ரட்னம் (1904-1968) கனடாவில்

35
இடைநிலைக் கல்வி பயின்று மக்ஹில் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுமாணிப்பட்டம் பெற்றார். பின்னாளில் கனேடியப் பிரதமரான லெஸ்டர் பிபர்சன் அவரது நண்பராகவும் ஆசிரியராகவும் இருந்தார். 1920 களின் பிற்பகுதியில் லண்டனில் வசித்த ரொபின் தேசியவாதிகளும், சோசலிஸ்டுகளுமான இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இலங்கை திரும்பிய பின் யூத் லீக் இயக்கத்தில் சேர்ந்தார். எல். எஸ். எஸ். பி யின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரான இவர், அதன் செயலாளராகவும் கடமையாற்றினார். றிக்கா வான் கைலன் பேர்க் என்பவரைத் திருமணம் செய்தார். இளைய மகனான வால்டர் ரட்னம் (1905-1963. றோயல் கல்லுாரியில் பட்டம் பெற்றார். முதுமானிக் கல்வியை சென்.லூயிஸில் பெற்றார். உள்ளூர் தொழில்நுட்பவியல் நிறுவனமான றிட்சர்ட் பீரிஸ் கம்பனியின் ஆரம்பப் பங்காளருள் ஒருவர். அவரது மனைவியான டொரின் பெர்டினண்ஸ் கொழும்பு லிண்ஸ்சே பெண்கள் பாடசாலையின் அதிபர் ஆவர்.
திருமதி. ரட்னத்தின் ஒரே புதல்வி ஹெலன் 1914 இல் பிறந்தவர். கொழும்பு லேடிஸ் கல்லுாரியில் பயின்றார். பின்னர் ரொறன்றோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டம் பெற்றார். இலங்கைக்குத் திரும்பிய வந்த பின் மருதானை கிளிவ்டன் பிரிஸ்பைதிரியன் பெண்கள் பாடசாலையின் அதிபரானார். டல்லஸ் குணகேகராவை மணந்தார். தனது சகோதரர் ரொபின் போல தீவிரவாத அரசியலில் ஈடுபட்டார். 1947 இல் ல. ச. ச. கட்சியினதும் கொம்யூனிஸ்ட் கட்சியினதும் பெண் அங்கத்தவருடனும் (விவியன் குணவர்தனா, டொரின் விக்கிரமசிங்க, எடித் லுடோவிக்) சேர்ந்து இலங்கையின் முதலாவது சுயாதீன சோசலிஸ் பெண்கள் குழுவான பெண்கள் ஐக்கிய முன்னணியை-எக்ஸத் காந்தா பெரமுன-நிறுவினார். அதன் செயலாளர்களில் ஒருவரானார். இவ்வமைப்பு, வறிய பெண்களின் வேலை நிலைமைகள், சுகாதாரம், பிரசவத் தாய்மார், சிசு மரணம், வைத்தியசாலைகளில் பெண்கள் பகுதி, சேரிப்புற வீடுகள் முதலிய பிரச்சனைகள் பற்றித் தீவிரமாகச் செயலாற்றியபோது ஹெலன் அதில் முன்னணியில் நின்றார். இத்தகைய விடயங்கள் தொடர்பாகவே மேரி ரட்னமும் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 31
36
மேரி ரட்னத்தின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்
1949 ஆம் ஆண்டு மேரி ரட்னத்தில் 76 வது பிறந்தநாள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் இலங்கையில் ஆற்றிய சேவைகட்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பம் ஆனது. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் அவரத வைத்திய, கல்விப் பணிகள் பற்றி பத்திரிகைத் தலையங்கங்களும், கட்டுரைகளும் வெளி வந்தன. சிலோன் ஒப்சேவர் 3 ஜூன் 1949 இல் ஒரு மேன்மையான உதாரணம்" என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது.
நேற்று டாக்டர் மேரி ரட்னத்தின் 76 வது பிறந்த தினமாகும். இந்நாட்டில் சமூக சேவைத் துறையில் அவருடன் போட்டியிடத் தக்கவர் எவருமில்லை. தான் புகுந்த நாட்டில் எத்தகைய சன்மானத்தையும் எதிர்பார்க்காத தீவிரமான சேவையை அவர் ஆற்றினார். கனேடியராக இருந்த போதும் நகரப்புற வறியவர், கிராம மக்கள் ஆகியோரது பிரச்சனைகள், தேவைகள் பற்றி ஏனைய இலங்கையரை விட ஆழ்ந்த விளக்கம் கொண்டிருந்தார். இவரது பெரும் பணி பெண்கள் நிறுவனங்களை இலங்கையில் அறிமுகப் படுத்தியமையாகும். லங்கா மஹில சமிதி கிராமங்கள் எல்லாம் பரந்து வளர்வதற்கு அவரது அயராத முயற்சிகளே காரணமாகின. பல வருடங்களாக, வறியவரது வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்காகத் தொடர்ந்து உழைத்தார். ஏனைய பெண்கள் பின்பற்றுவதற்குரிய GB D6ăT6C) Duuntesor உதாரணமாக மேரி ரட்னத்தின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவர் தொடங்கிய பணிகள் இளம் தலைமுறையால் அதே தீவிரத்துடன் தொடரப்பட வேண்டும். சமூக சேவையில் ஈடுபடுமாறு நேற்று அவர் இளம் பெண்களுக்கு விடுத்த வேண்டுகோள் வீண்போகாது என நினைக்கிறோம். சேவையாற்று வதற்குரிய களமோ பெரிது; ஆனால் செயல்வாதிகளோ சிலர்.
இச்சந்தர்ப்பத்தில் தனக்குக் கிடைத்த செய்திகள் யாவற்றையும் அங்கீகரித்து டெய்லி நியுஸ் பத்திரிகையில் 6 ஜூன் 1949) ஒரு கடிதம் எழுதினார்.
என்னுடன் நீண்ட காலமாக ஒத்துழைத்தவர்களும் இணைந்திருந்த வர்களும் எனக்குக் கிடைத்த வெற்றியில் பங்கு பற்ற வேண்டியோராவர். சகல சமூகங்களையும் சார்ந்த இலங்கைப்

37
பெண்களுக்கு எனது நன்றியைப் பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். சிலர் இறந்து விட்டனர். சிலர் இன்னும் பணியாற்றுவதில் முன்னிற்கின்றனர் நாமும் மறைந்து விடுவோம். எதிர்காலம் எப்படியிருக்கும்? இன்று சுதந்திர இலங்கையை எதிர்நோக்கும் பிரச்சனைகள் அளப்பரியன. அவற்றை புத்தி சாதுரியத்துடனும் ஆக்கபூர்வமாகவும் அணுக வேண்டிய தேவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது. இன்று எமது பாடசா லைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள இலங்கையின் புதல்விகள் இந்நிலைமையை மனங் கொண்டு தமது வாழ்வையும், திறமைகளையும் தமது தாய்நாட்டுக்குப் பயனுள்ள சேவைகளை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்பர் எனவும் இதனால் அரசியல் பொருளாதார சுதந்திரம் மாத்திரமன்றி ஆன்மீக சுதந்திரமும் பெற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதில் நிச்சயமாய்ப்
பங்கெடுப்பர் எனவும் எண்ணுகிறேன்.
ஐரிஷ்-ஷ்கொட்டிஷ் பாரம்பரியத்தைக் கொண்ட கனேடியரான மேரி ரட்னம் இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேயரால் சிறிதும் கவரப்படவில்லை. காலனித்துவ அரசு அவரது மருத்துவப் பட்டத்தை அங்கீகரிக்காததாலும் அவர் ஆத்திரமடைந்திருந்தார். பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட அரச விருதினைப் பெற்றுக் கொள்ள மறுத்தார். தேசியப் பத்திரிகைகளில் அவரது இச் செயல் பாராட்டப்பட்டது. "அரச விருதினை ஏற்க மறுத்து ஒரு முன்மாதிரியை உருவாக்கி விட்டார்” எனச் சிங்கள நாளிதழான தவஸ் கூறியது. (17 மே 1952) எனினும் 1958 இல் 10,000 அமெரிக்க டாலர் பெறுமதி மிக்க ராமென் மக்ஸய்ஸே விருதினைப் பெற்றுக் கொண்டார். இலங்கையில் அவரது பணியைக் கெளரவிப்பதற்காக அது வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது எண்பத்திஐந்து. எனினும் பிலிப்பைன்ஸ் சென்று அதனைப் பெற்றார். தன்னிடம் ஒரு போதும் இத்தகைய பெருந்தொகையான பணம் இருந்ததில்லை எனக் குறிப்பிட்டார். இலங்கைப் பத்திரிகைகள் இப்பரிசளிப்புக்கு முக்கியத்துவம் அளித்தன. பல கட்டுரைகள் எழுதப்பட்டன. "பல வகையிலும் நான் முன்னோடி என நம்புகிறேன். அதனாற்தான் இத்தகைய விருதை எனக்குத் தந்திருக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

Page 32
38
பிற்காலங்களில் அவரைக் கெளரவிக்க நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது திருமதி. பண்டாரநாயகா 1960 இல் பிரதமராகிய பின்னர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் அளித்த விருந்துபசாரமாகும். பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என வற்புறுத்திய மேரி ரட்னத்துக்கு இது மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. திருமதி. பண்டாராநாயகா ஆரம்பகாலங்களில் லங்கா மஹில சமிதியில் உற்சாகமாகப் பணியாற்றியவர். பெண்களை ஒழுங்கமைத்தல், பொது மேடைகளில் உரையாற்றுதல் ஆகியவற்றில் இதன் மூலமே பயிற்சி பெற்றிருந்தார். இந்த அனுபவம் அவர் பிரதம மந்திரியாகிய போது மிகவும் உதவியது.
மேரி ரட்னம் நினைவுச் சின்னம்
மேரி ரட்னம் 1962 ஆம் ஆண்டு, மே மாதம் 15 ஆம் திகதி காலமானார். இலங்கையர், வெளிநாட்டவர், வெவ்வேறு அரசியற் சார்புடையோர் எனப் பலரும் அஞ்சலி தெரிவித்தனர். தேசாதிபதி அவரது புதல்வரின் வீட்டிற்கு வருகை தந்தார். பிரதம மந்திரி, அரசியற் தலைவர்கள், வைத்தியர், சமூக சேவையாளர், அவருடன் சேர்ந்து பணியாற்றிய ஏனையோர் யாவரும் மரணச் சடங்கின்போது சமூகமளித்தனர். ஆங்கில், தமிழ், சிங்களப் பத்திரிகைகள் அவரது வாழ்க்கை, பணி பற்றி ஆசிரியத் தலையங்கங்கள் எழுதின. தவஸ் பத்திரிகை அவரை மேரி பொஸ்டர், அனிபெசன்ட், மியுசியஸ் ஹாக்கின்ஸ் இவர்கள் யாவரும் பெளத்தமத கல்வியுடனும் தியோசபியுடனும் தொடர்பானவர்கள்) ஆகியோருடன் ஒப்பிட்டது. "ஆயிரம் மைல்களுக்ககப்பால் பிறந்திருப்பினும் திருமதி ரட்னத்தின் பெயர் இலங்கைப் பெண்கள் இயக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்ப்படும்" எனவும‘எழுதியது. (12 மே 1962)
மேரி ரட்னத்தின் பணிகளைக் கெளரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் நிறுவ நிதி திரட்டல் ஆரம்பமானது. இது தொடர்பாக ரொபின் ரட்னத்துடன் ஒரு பெண்கள் குழு பேசியபோது அவர் பின்வருமாறு கூறினார். "எனது தாயார், ஒரு நபரின் நினைவுக்காகச் செப்புச் சிலைகளையோ கட்டிடங்களையோ

39
நிறுவுவதில் நம்பிக்கை கொள்ளவில்லை." எனினும் பலர் நினைவுச் சின்னம் அமைப்பதில் தமக்குள்ள ஆர்வத்தைத் தெரிவித்தனர். உதாரணமாக சிறிமா பண்டாரநாயகா பின்வருமாறு இது பற்றிக் குறிப்பிட்டார். சுமார்
அரை நுாற்றாண்டு காலமாகக் கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த டாக்டர் மேரி ரட்னத்தின் சேவை
லகுவில் மறக்கப்படக் கூடியதல்ல. இலட்சியத்துக்காகத் தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்டு அவர் செய்த சேவை நீண்ட காலத்திற்கு சமூக சேவையாளருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். மேரி ரட்னத்தின் சேவையை நிலைநிறுத்தத்தக்க பொருத்தமான ஒரு வேலைத் திட்டத்தில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். (டைம்ஸ் ஒவ் சிலோன்: 2 ஜூன் 1967)
நினைவுச் சின்னத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி, கொழும்பு லேடி றிட்ஜ்வே ஆஸ்பத்திரியில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் தங்கும் அறை ஒன்று கட்டுவதற்குப் பயன்பட்டது.
மேரி ரட்னம் அவரது மரணத்தின் பின் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூரப்பட்டார். அவரது பிறந்த தினமான ஜூன் 2 ஆம் திகதி லங்கா மஹில சதிமியினால் கொண்டாடப்பட்டது. 1956-57 காலப்பகுதியில் இவ்வமைப்பின் தலைவராயிருந்த மர்ஜோரி டி. மெல் பின்வருமாறு óngбlштfї.
"கனடா தனது புதல்வியர் பலரை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் வைத்தியர்களாக, மருத்துவ மாதர்களாக, கிறிஸ்தவ இளம் பெண்கள் சங்கச் செயலாளர்களாக இங்கு வந்து அருஞ்சேவையாற்றியுள்ளனர். அவர்களில் மிகச் சிறந்தவர் இலங்கைப் பெண்களிடையே விழிப்புணர்வைத் தோற்றுவித்த டாக்டர் ரட்னமாவர். (டைம்ஸ் ஒப் சிலோன், 20 செப்டம்பர் 1962)
தமக்கும் மேரி ரட்னத்திற்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அவர் கணவர் இறந்தபின் அவர் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லையா எனக் கேட்டேன். அவரது குடும்பத்தினர் அவரைத் திரும்பிவருமாறு கேட்டனர் எனவும் ஆனால் தனது பிள்ளைகள் இலங்கைக்குச் சொந்தமானவர்கள் எனத் தான் கூறியதாகவும் சொன்னார். அவர் கனடாவில் மிக வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் உலோகாயுத சுகங்களைப்
பெரிதாக எண்ணவில்லை. மேலது)

Page 33
40
மஹில சமிதியன் இன்னோர் தலைவரான வயலட் ராஜபக்ஷ பின்வருமாறு மேரி ரட்னத்தைப் பாராட்டினார்.
மேரி ரட்னம் போன்ற பெரும் ஆளுமை கொண்டவரின் பண்புகளை வகைப்படுத்த முனைவது சிரமமான காரியமாகும். கிராமங்களின் எளிமையான வீடுகளில் சேவை செய்யும் எம்மைப் போன்றோர் அவரது தாழ்வுணர்ச்சியால் எப்போதும் கவரப்பட்டிருக்கிறோம். தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் மத்தியில் பொழுது போக்கிற்காகத் தொண்டு செய்கிற செல்வந்தர் போலன்றி அம்மக்களுள் ஒருவராகவே நின்று பணி செய்தார். (மேரி ரட்னம் கோர்வை- லேக் ஹவுஸ் நூலகம்)
லங்கா மஹில சமிதியில் மேரி ரட்னத்துடன் இருபத்தி ஐந்து வருட காலமாகப் பணியாற்றியவரும், இடதுசாரி செயல்வாதியுமான தேஜா குணவர்த்தனா பின்வருமாறு கூறினார்.
"இலங்கையரின் தேவை யாது என்பதை இனங்கண்டறிவதில் எம்மைவிட அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். பொதுமக்களுடன் அவருக்கிருந்த இடையறாத தொடர்பால் இத்திறனை அவர் பெற்றார். எப்போதுமே மக்களில் ஒருவராக அவர் வாழ்ந்தார்” (சிலோன் ஒப்சேவர் 14 மே 1962) லங்கா மஹில சமிதியின் கிராம மட்டச் செயல்வாதியான டி. அலிஸ் செனரட்ன, திருமதி ரட்னம் பற்றிய தனது மனப்பதிவைப் பின்வருமாறு தெரிவித்தார். அவர் மிகுந்த துணிவுடையவர். பல சந்தர்ப்பங்களில் துாரக் கிராமங்களுக்கு நீண்ட துாரம் நடந்து சென்றார். தனது ஆயாசத்தை ஒருபோதும் வெளிக்காட்டமாட்டார். தனது கைப்பையையும் குடையையும் தானே துாக்கிச் செல்வார். முதலுதவி, சுகாதாரம், உடல்நல வசதிகள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றில் வருடத்திற்கு இருமுறை மீள் பயிற்சி அளிப்பார். இவருடன் நாம் எவ்வளவு துாரம் பழகினோமோ அவ்வளவு துாரம் அவரைப் பின்பற்ற உறுதி கொண்டோம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். (மஹில; ஜூலை 1962)
சமூக சேவையாளரான லோனா தேவராஜா நகரத்து வறியவர் மத்தியில் மேரி ரட்னம் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார்.
வீடற்ற ஒருவர், கஷ்டமுறும் ஒரு தாய், ஒரு சேரிவாசி, ஒரு பெண்கைதி போன்றோருடன் அவர் தமது நேரத்தைச் செலவிட்டார். இத்தகைய பணியில் அவரது வாழ்நாட்காலச் சினேகிதியாக இருந்தவர் திருமதி பிரான்சிஸ் ஜெயசூரிய. அவருடன் சேரிகளில் நிகழும் பிரசவங்களுக்கு வைத்தியம் ι μπίτόός இரவிலும் பகலிலும் எந்நேரத்திலும் விரைந்து செல்வார். (சிலோன் டெய்லி நியுஸ் 23மே 1962)

41
முடிவுரை
மேரி ரட்னத்தின் வாழ்க்கையையும், முன்னோடிப் பணிகளையும் நோக்கும் போது இலங்கையின் காலனித்துவ மத்தியதரவர்க்கச் சூழலில் அவரது கருத்துகள் எவ்வளவு தீவிரம் வாய்ந்தவையாக இருந்தன என்பது புலனாகிறது. ஆற்றல் வாய்ந்த ஆளுமை கொண்டவர் அவர். உருவத்தில் சிறியவராய் இருப்பினும் செயல்திடம் உடையவர். கிராம மக்கள், பெண்கள் ஆகியோரிடம் உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு கொண்டிருந்தார். உதாரணமாக 1922 இல் பெண்கள் சாரணர் இயக்கம் ஆரம்பமானபோது கிராமப் பாடசாலைகளில் அதனை நிறுவுமாறு துாண்டினார். 1929 இல் வைத்திய மாணவர்கள் றேகிங் செய்வதையிட்டு பத்திரிகைகளுக்குக் காரசாரமான கடிதம் எழுதினார். "இதனைக் கிராமத்து இளைஞர்கள் செய்திருந்தால் அது பாரதுாரமான குற்றச் செயலாகக் கருதப்பட்டிருக்கும்" (சிலோன் ஒப்சேவர் 20 மே 1929) சமூகத்தில் மிக வறிய பிரிவினரிடம் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். ரொறன்ரோவிலிருந்து 1953 செப்டெம்பரில் தனது புதல்வருக்கு எழுதிய கடித்தில் மானியங்கள் குறைக்கப்டுவதையிட்டு கவலை தெரிவித்தார். இதனை "பணக்காரரிடமிருந்தன்றி வறியவர்களிடமிருந்து அறவிடும் வரி" எனக் குறிப்பிட்டார்.
"அரிசிவிலையை அதிகரிப்பது, வறிய பிள்ளைகளின் இலவச உணவை நிறுத்துவது, தபால், புகையிரத,பஸ் கட்டண அதிகரிப்பு போன்ற ஏழைத் தொழிலாளரைப் பாதிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு பாராளுமன்ற அங்கத்தவரின் சம்பளத்தைக் குறைக்குமாறு” பிரதம மந்திரிக்குக் கூறும்படி தமது புதல்வருக்கு எழுதினார் (வோல்டர் ரட்னத்துக்கு எழுதிய கடிதம். 3 செப்டெம்பர் 1953, அனிற்றா கப்டன் சேகரிப்பு)
வைத்தியரான மேரி ரட்னம், பாலியற் சுரண்டல், அடிக்கடி நிகழும் பிரசவங்கள், வீட்டில் நிகழும் வன்முறை போன்றவற்றிற்குப் பெண்கள் பலியாவது மாத்திரமன்றி இரத்தசோகை, போஷாக்கின்மை, கல்வியறிவின்மை, அறியாமை போன்றவற்றாலும் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்தும் ஆழ்ந்த அறிவுடையவராயிருந்தார். இவற்றை

Page 34
42
பற்றி உணர்ச்சி பூர்வமாகப் பேசியது மாத்திரமன்றி அரசாங்கத்தையும் சமூகத்தின் ஏனைய பிரிவினரையும் இந்நிலைமை குறித்து வெட்கமுறச்செய்தார். அத்துடன் கிராமங்களிலும் நகரப்புறங்களிலும் இவ்வாறு பாதிப்புறும் பெண்கள், சிறுவர்களின் நிலையை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தினார். மகப்பேற்று மருத்துவராக இருந்ததனால் குடும்டத்திட்டமிடல், பாலியல் கல்வி போன்றவை பற்றி சமூகத்தில் நிலவிய தடை மனப்பான்மையை மீறி பகிரங்கமாகப் பேசினார். உறவினர், நண்பர்கள், உள்ளூர் சமூகம் ஆகியவற்றின் விமரிசனம் பற்றிக் கவலைப்படாமல் சமூகத்தால் விரும்பப்படாத விடயங்கள் பற்றி எடுத்துரைக்க அவருக்கு முடிந்தது. இவ்வகையில் 'வேற்றார் என்ற நிலை உண்மையான ஒரு அனுகூலத்தை அளித்தது. அதே சமயம் இலங்கையில் நிலவிய சமூகத் தீமைகளான சீதனம், சாதி, சிறுவர் உழைப்பு, பெண்ணொடுக்குமுறை ஆகியவை பற்றி விமர்சித்த போது இவை பற்றி அவருக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கிருந்த உரிமை பற்றி சிலர் வினாவெழுப்பினார். ஏனெனில் தனது வாழ்க்கையை இலங்கையில் சேவை செய்வதற்காக அர்ப்பணித்த 'உள்ளூரவராகவும் அவ்ர் கருதப்பட்டார்.
மேரி ரட்னம் கனடாவில் கழித்த இளமைக்காலம் அவரது பிற்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றியது. கனடியப் பெண் வைத்தியர்களினதும் சமூக சீர்திருத்தவாதிகளதும் ஆரம்பகால பெண்நிலைப் போராட்டங்களைக் காணும் வாய்ப்பு அவருக்கிருந்தது. கனடிய நிறுவனங்களில் ஆணாதிக்கத்தை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்; அவற்றுக்கெதிராக எவ்வாறு போராடினர் என்பதைக் கண்டார். இது, அவரது திருமணம் தொடர்பாக வெளியிடப்பட்ட மிஷனரிகளின் நிறவாதத்தையும், அவரது வைத்தியக் கல்வித்தராதரம் குறித்து பிரித்தானிய அரசு காட்டிய பாரபட்சத்தையும் எதிர்கொள்வதற்கு அவருக்கு உதவியது. தனது சகபாடிகளைப் போலவே மேரிரட்னமும் ஒரு பிரபல வைத்தியராவதில் மாத்திரம் திருப்தியடையாமல் சமூக, அரசியல் பிரச்சனைகள் குறித்து எப்போதும் விழிப்புடையவராய் இருந்தார். பெண்கள் வாக்குரிமை பெறுவதற்காக அவர் செய்த முயற்சிகள் இலங்கை அரசியலில் அவரை முன்னோடியாக்கியுள்ளன. அவரது பிள்ளைகளில் இருவரும் அவரைப் பின்பற்றி சமூககமாற்றத்துக்கான தீவிரவாத இயக்கங்களிற் சேர்ந்து

43
உழைத்தனர்.
இலங்கையில் மேரிரட்னமே முதன் முதலாக சிறு வாசிப்புக் குழுக்களாகவும் பின்னர் தாய்மார், நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் “பெண்களுக்காகப் பெண்களை அணி திரட்டியவராவர். மேலும், இவரே தமது அரசியல் சமூக உரிமைகளுக்காக மாத்திரமன்றி சிறந்த உடல்நலத்திற்காகவும் பிறப்புக் கட்டுப்பாடு செய்யும் தேர்வு, உரிமை ஆகியவற்றுக்காகவும் பெண்களை ஒன்று திரட்டியவராவர். வறிய மக்களிடையே உடல்நல நடைமுறைகளை நவீனமாக்கவும், சுகாதாரம், சிறுவர் பராமரிப்பு, சத்துணவு பற்றிய அறிவு, குடும்பத்திட்டமிடல் ஆகியவற்றை முன்னேற்றவும் அவர் உழைத்தமையானது பொது ஜனமட்டத்தில் பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தியது மாத்திமன்றி இலங்கையின் பெண்கள், சிறுவர்களது வாழ்ககைத்தரம் முன்னேறுவதற்கும் காரணமாகியது.
ஜனநாயக உரிமைகள், பெண்விடுதலை, வாழ்க்கைத் தராதர முன்னேற்றம், சமூக மரபுகளின் தடையை மீறுதல் ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்த, இலங்கையின் முதலாவது கட்ட பெண்நிலைவாதத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக மேரி ரட்னம் விளங்குகிறார். இத்தகைய பின்னணியில் அவர் இலங்கையில் பெண்கள் போராட்டத்தின் முன்னோடியாகவும், தொண்ணுாறு வருடங்களுக்கு முன்னரே பெண்கள் உரிமைகள் தொடர்பான விவாதங்களுக்குத் துாண்டுகோலாகவும் விளங்குகிறார். சமூக மாற்றத்துக்கான இயக்கங்களில் அக்கறை கொண்டுள்ள, கனடாவையும் இலங்கையையும் சேர்ந்த புதிய தலைமுறையினருக்கு அவரது முன்னோடிப் பணிகள் பற்றி சுருக்கமான இவ்வாழ்க்கை வரலாறு அறியத்தரும் என நம்புகிறோம்.
குமாரி ஜயவர்த்தனா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் முன்னாள் இணைப் பேராசிரியராவர். TheRise ofLabor Movement in Ceylon, Feminism & Nationalism in the Third World, Ethnic & Class Conflict in Sri Lanka gfu நுால்களின் ஆசிரியர். காலனித்துவ காலகட்டத்தில் தென்னாசியாவில் பணியாற்றிய மேற்கு நாட்டுப் பெண்கள் பற்றிய இவரது நுால் விரைவில் வெளிவரவுள்ளது. இவர் பெண்நிலை, குடியுரிமை இயக்கங்களின் செயல்வாதியுமாவார்.

Page 35
உசாத்துணை நூால்கள்
Bassett, I (1975)
The Parlour Rebellion, McClelland and Steward,
Toronto. Cleverdon, Catherine L. (1974)
The Woman Suffrage Mouement in Canada, University of Toronto. Jayawardene, Kumari, - (1991)
Doreen Wickremasingha. A Western Radical in Sri Lanks. Women's Education and Reseach Centre, Clombo. Kealey, Linda(1979)ed
A Not Unreasonable Claim-Women and Reform, Toronto, Women's Press. Rutnam, Mary,
Diary for 1906-9, in the Brian Rutnam collection Letters and press cuttings concerning Mary Rutnam in the Anita Captain collection. Roberts, Wayne, (1979)
"Rocking the Cradle for the World: The New Woman and Maternal Feminism: in Linda Kealey op.cit. Strong- Boag, Veronica (1979),
"Canada's Women Doctors: Feminism Constrained" in Linda Kealey op.cit. Wright, A. (1907)
Tuventieth Century Impressions of Ceylon, London. File on Mary Rutnam at the Lake House Library. Handbook qof the Lanka Mahila Samiti, 1983. Mahila; The Journal of the Lanka Mahila Samiti, 1962.


Page 36
aaaaase-esses
(C) Cartoon by Collette of Mary Rutin
 
 

Printed by Karunaratne & Sons Ltd, Colombo 0.