கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1994.07

Page 1
"MALLIKA PROGRESSIVE
 


Page 2
RANI GRINDING MILLS
219, MAN SI REET,
MATALE
SRI LANKA
PHONE: O 6 6 - 24 25
X
平
举
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE )
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha.
(Wolfendhal Street, ) COLOMBO-13.
PHONE: 27 0 1 1

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினையகலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நட்ப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
“Mallikai” “Progresie Monthly Magazine 246 ஜூலை - 1994
29-வது ஆண்டு
68.
27-5-94 剑血压dr அன்று எனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு என்னைக் கெளரவிப்பதற்காகவும், மல்லிகையை மேன் மைப்படுத்துவதற்காகவும் காரியாலயத்திற்கு அன்றும் அடுத்தநாளும் வந்து வாழ்த்தியும் ஆசிர்வதித்தும் சென்ற அனைவருக்கும் மன ார்த்த நன்றியைத் தெரிவித் கொள்ளுகின்றேன். வாழ்த்து மடல் கடிதங்கள் எழுதிய நண்பர்களுக்கும் எனது நன்றி.
*ன்று மாலை என்னுடன் தேநீர் அருந்தி என்னை - எனது உழைப்பை - சிறப்பித்த ஆத்மார்த்திக நண்பர்களுக்கு எனது மகிழ்ச் சிய்ையும் வணக்கத்தையும் தெரியப்படுத்துகின்றேன்.
பல பரிசுகளை, அன்பளிப்புகளை, பொருளாதார ரீதியான உதவிகளை "முந்து அளித்த நெஞ்சுக்கு நெருக்கமான் நேச உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தை போதாது. அதற்கும் மேலே. மேலேT
தனிநபர் புகழ் பாடும் வெறும் சம்பவமல்ல, இது. மல்லிகை என்றொரு இனிய மலர்ச் செடியை வாடாமல் கொள்ளாமல் கடந்த 30 ஆண்டுகளாக உழைப்பென்னும் நீரூற்றி வளர்த்துவரும் தோட் டக்காரனை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சி தான் இது.
"ஒவ்வொரு மாசமும் உங்களை நான் தேடி வருகின்றேன்" ஆண்டுக்கொரு தடவை நீங்கள் என்னையேன் தேடிவரக் கூடாது?; என்ற எனது நியாயமான மனக்குரலுக்குச் செவி மடுத்து என்னைத் தேடி வந்து கெளரவித்த சகலருக்கும் எனது உளமார்ந்த நன்றி களைத் தெரிவிக்கின்றேன்.
"மல்லிகையின் வாரிசு யார்?" என நீண்ட காலமாகவே என்னி டம் கேட்கப்பட்டு வந்தது. வாரிசை அன்று அறிமுகம் செய்து வைத் G856йт. •gгш சரிதையை எந்தவிதமான கலப்படமூமின்றி எழுத ஆரம்பித்து விட்டேன் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்த சிேனைந்துள்ளேன்.
- டொமினிக் ஜீவா

Page 3
ஆறுமுகம் சிற்பாலயம் ஈழத்தின் சிற்பக்கலை முன்னோடிகள்
சித்திரத் தேர் அழகு மஞ்சங்கள் எழிலான வாகனங்கள் அற்புத சிற்ப வேலைகள் தெய்வீக விக்கிரகங்கள்
மற்றும் அனைத்துச் சிற்ப வேலைகளுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்
சிற்பக்கலாமணி ஆ. ஜீவரட்ணம் ஆச்சாரி
S),Myðis föllIalls
്မှို့ ਭ 参
 
 

Göሠ6`ጠrፊ8ሐFazሠፅ துரைராஜா அவர்களினது மறைவைக் கேட்ட போது மனசுக்குள் ஆழம்” காண முடியாத சோம்ரான் தலை காட்டியது.
எப்படிப்பட்ட மனிதன் அவர்; எப்படிப்பட்ட ஆளுமை!
மிகச் சிக்களும் சங்கடங்களும் நிரம்பிய நாட்களில் 2து ஃபுமையை எவ்வித பதட்டமும் இல்லாமல் செய்து lor: என எண்ணிப் பார்க்கும் இவ் வேளையில், அவரது இழப்ை றினைத்து மெய்யாகவே வருந்தாமல் இருக்க முடியாது, யாராலும்"
உலக சரித்திரத்தில் ஒரு பல்கலைக் கழக உப வேந்தர் சைக்கிளில் சவாரி செய்து தனது கடமைக்கு வந்து காரியமாற்றியது ஒரு குறிப்பிடத்தக்க வரலாறாகும். -
நமது மண்ணில் எங்கு திரும்பினாலும் 'படி. படி.." என்ற 22ல்தான் தாய் தந்தைய சிடமிருந்து கேட்கும் குரல73 ஒலிக்கும். 2த்ெதர வர்க்கத்துக் குடும்பங்களில் இருந்து தொழிலாளர்கள்: அன்றாடம் காய்ச்சிகள் வரை, தமது குழந்தைகள், சந்ததிகள் படித்து முன்னேற வேண்டும் என்ற பேராசையையே ம ன சில் கொண்டு காரிய மாற்றி வந்துள்ளதைப் பலர் தெளிவாக அவதானித் திருக்கக் கூடும்.
இந்தப் போர்க்காலச் சூழலில் இந்த மண்ணில் எமது மாணவ மாணவிகள் வெறும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து பரீட்சைகளில் விசேஷ சித் தியெய்துகின்றனர் என்பதை மனசார யோசிக்கும்போது, நமது எதிர்காலச் சந்ததி பற்றி நாம் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படலாம். இந்தக் கஷ்டங்களை, நெருக்கடிகளையெல்லர்ம் உள்வாங்கி மனம் தளராமல் அவர்கள் சாதனை படைப்பதைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் மனசு சிலிர்க்கின்றது. அதே போல ஆசிரியப் பணியின் திறமையையிட் டும் பெருமிதம் கொள்ளுகின்றோம்.
இந்தக் கல்விச் செழுமையின் ஒரு குறியீடுதான் பேராசிரியர் தி7ை7ாஜா அவர்கள் !
மிகச் சிறந்த கல்விமான்; தனித்துவமான சிந்தனையாளன்: கண்டு பிடிப்பாளன்; மென்மையான, இனிய இதயம் படைத்தவர். பல்கலைக் கழகத் துறையினருடன் மட்டுமல்ல, பாமரர்களுடனும் நெருங்கிப் பழகியவர் பேராசிரியர்.
கல்வியுலகம் மாத்திரமல்ல, சாதாரண மக்கள் உலகமும் அன் னாரது பிரிவின் பின்னர் அவரது ஞாபகத்துக்குச் செலுத்திக்கொண்ட அஞ்சலிகள் பிரமிப்பூட்டுபவையாக இருந்தன.
மக்களை நேசிப்பவர்களை, மக்களும் நேசிக்கப் பின்நிற்க மாட்டார்கள் என்பதை மக்களே நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

Page 4
ஈழத்தின் சமகால நாடகப் புரட்சியின் தாய்
குழந்தை ம. சண்முகலிங்கம் பற்றிய ஒர் அறிமுகக் குறிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி
தொண்ணுரறுகளின் நடுக் கூற்றுக்கு வரும் இன்றைய கால நிலையில், நம்மிடையே நாடகம் பெறும் இடம் பற்றி நோக்கும் பொழுது, அக்கலையின் பயில்வில் கடந்த இருபது வருடங்கள் ஈழத்தின் புதிய நாடக ஆக்க உருவாக்கத்தில் மிக முக்கியமானவை. அதில் பத்து வருடங்கள் - எண்பதுகள் சந்தேகமற்ற முறையில், சண்முகலிங்கத்தினுடையவை. எண்பதுகளின் மாற்றத்துக்குக் காரணராக விருந்த அவர் தொண்ணுரறுகளையும் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்.
எண்பது, தொண்ணுரறுகளின் இலங்கைத் தமிழ் நாடகம் அறு பது, எழுபதுகளின் தமிழ் நாடகத்திலிருந்தும் வேறுபட்டது.
இன்று நாடகம் என்பது முழு அரங்கமாகச் சிந்திக்கப்படுகின் றது. அது வெறுமனே விருப்பு முயற்சியான சொல்லாடல் அரங்கு அல்ல. கலைப் பயிற்சிகள் மூலமாக வளர்த்தெடுக்கப்படும் ஆற்றல் களின் அறிவியல் பூர்வமான பிரயோகமாகக் கிளம்பியுள்ளது. | அரங்கில் நடக்கும் நடிப்பு முறைமை இப்பொழுது உரமம், அசைவு, ஆட்டம் ஆகியவற்றின் இணைப்பாக வந்து விட்டது. அரங்கிற் சித் திரிக்கப்படும் வாழ்க்கை, நிஜ உலகின் கண்ணாடிப் சிம்பமாக இல்லாமல், நிஜ உலகின் மனித அசைவியக்கங்களை உணர்வு முனைப்புடன் "எடுத்துச் சித்திரிக்கும்" ஓர் அரங்க முறைமையாகவாழ்க்கைப் பலகணியாக அமைந்துள்ளது.
அரங்கின் அசைவுகள் ஆகுபெயராகவும் அன்மொழித் தொகை யாகவும் காட்சி நிஜத்தையும் அதற்கும் மேலேயுள்ள ஒரு சமூக உண்மையையும் காட்டும் ஒரு குறியிட்டுக்கலை வடிவமாகியுள்ளன. இந்தக் குறியீட்டு உற்பத்தியில் பேச்சு, இசை, உடை, ஒளி, அாங்க அசைவுகள் என்பன தனித்தனியே நிற்காது ஒட்டு மொத்தமான ஒரு அழகியற் சேர்க்கையாக மாறிவிட்டுள்ளன.
4
 

"நாடகம்", "அரங்காகி" விட்டது. அது பல்கலைக்கழக புகுமுகப் பாடமாகவும், பல்கலைக்கழகப் பயிற்சி நெறியாகவும் வளர்ந்துவிட்டது.
குழந்தை ம. சண்முகலிங்கத்துக்கு இந்த மாற்றங்கள் எல்லா வற்றோடும் சம்பந்தம் உண்டு. சிலவற்றுடன் தொடர்புண்டு. சில வற்றுக்கு அவரே பொறுப்பாளி.
(1) அரங்கம் இன்று விளக்கப்படும் முறையில் ஏற்பட்டுள்ள
மாற்றங்கள். (2) நாடகத்துக்கான எழுத்துருக்களை ஆக்கலில் ஏற்பட்டுள்ள
P
வளர்ச்சிகள். ஆகிய இரண்டும் சண்முகலிங்கத்தினால் ஏற்பட்டவை.
நாடகப் போதனையில் சண்முகலிங்கத்தின் இடம் மிக முக்கிய மானது. 1984 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நாடகம் ஒரு பயில் துறையாகத் தொடக்கப்பெற்ற காலம் முதல் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவர், நாடகம் பற்றிய வரலாறு, கொள்கை, பயிற்சி ஆகிய மூன்று துறைகளிலும் தமக்குள்ள பாண்டியத்தைப் பட்டதாரி மாணவர்களுக்குக் கையளித்து அவர்களை வழிநடத்தி, நாடகத்துறையின் முக்கியஸ்தர்களாக ஆளாக்கியுள்ளார்.
நாடக அரங்கியல் ஆய்வில் சண்முகலிங்கத்தின் பெயர் அவர் எழுதியுள்ள நாடகங்களாலேதான் நின்று நிலைக்கப் போகிறது.
இவருடைய நாடகங்களை, நடிக்கப்படுவதற்காக எழுதப்படும் இலக்கிய வடிவமாகக் கொள்ளாமல் அரங்கின் ஆற்றல் முழுவதை யும் உணர்ந்த ஒருவர். அரங்க அளிக்கைக்கு என வழங்கும் எழுத துருவாகவே கொள்ளல் வேண்டும். இந்த எழுத்துருவின் பரிமான மாற்றம் அதன் அரங்கின் மற்றைய அமிசங்களோடு இதை முற்று முழுதான அரங்க அளிக்கையாக்கி விடுகின்றது.
வித்தியானந்தன் காலத்து முயற்சிகளால் மீட்டெடுக்கப்பட்ட சுதேச வடிவத்தைத் தளமாகக் கொண்டும், எழுபதுகளின் முற்கூற் றில் தமிழ் அ ரங் கு க் கு க் கொண்டுவரப்பட்ட அகற்சிகளையும் நெகிழ்ச்சிகளையும் துணையாகக் கொண்டும் அரங்கு பற்றிய மக்களின் பாரம்பரிய எண்ணக் கரு க் களை வழிகாட்டியாகக் கொண்டும் இவர் தந்த " ஆக்கம்" திடீரென நம்மிடையே நமக்கு வேண்டிய, நமக்குப் புரிந்த ஓர் அரங்கைக் கண்முன்னே நிறுத்தி யது. அந்த ரஸவாதச் சாதனை 'மண் சுமந்த மேனியரில்" நடந் தேறியது. மண் சுமந்த மேனியர் நமது தமிழ் நாடக வரலாற்றின் நிச்சயமான திருப்புமுனை. அன்று ஏற்பட்ட திருப்பம்தான் இன்று செழித்துப் படர்ந்து நீளுகிறது.
சண்முகலிங்கத்தின் ஆக்க ஆளுமை மிக உன்னிப்பாக ஆராயப் பட வேண்டியது. சமூகப் பிரச்சினைகளை அவர் காட்சிக்குரிய சித்திரிப்புகளாக மாற்றும் தன்மை, தமிழ்க் கவிதைப் பரப்பிலிருந்து குறிப்பாக தேவார திருவாசகங்களிலிருந்தும், பாரதியிலிருந்தும் தொடர்களை எடுத்து இணைத்து அவற்றுக்கு ஒரு சமகால இயை பினை ஏற்படுத்தும் முறைமை ஆதியன மிக ஆழமாக ஆராயப்ட வேண்டியவை. அவருடைய நாடகங்களின் தலைப்புகளே இதற்குச்

Page 5
சான்று - மண் சுமந்த மேனியர் (திருவாசகம்) எந்தையும் தாயும் (பாரதி) அன்னை இட்ட தீ (பட்டினத்தார்). நமது பாரம்பரிய குறி யீடுகளினூடாக நமது சமகால வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பார்க்கும் செழுமை வியக்கத்தக்கது.
சண்முகலிங்கத்தின் இந்த அரங்க வருகைக்குப் பின்புலமாகப் பல காரணிகள் உள்ளன. கலையரசு சொர்ணலிங்கத்தோடிருந்த உறவு நாடகத்துக்கென நடந்த பட்டதாரி பின் டிப்புளோமாப் பயில் நெறியில் தாசீசியஸ். சுந்தரலிங்கம், சிவானந்தன். குறமகள், கந்தவனம். காரை சுந்தரம்பிள்ளை போன்றோரும் சக மாணவ ணாய், சிங்கள நாடக உலகின் தலைசிறந்த நெறியாளருடன் ஏற் பட்ட தொடர்பு ஆதியன இவருக்கு வள்மூட்டியவை. அந்த வளங் களைத் தனதாக்கிக் கொள்ளும் ஆக்கத் திறனும் கற்பனைவளமும் இவரிடத்து நிறைந்து கிடக்கிறது.
சண்முகலிங்கம் இந்தச் சாதனைகளை நாடக அரங்கக் கல்லூரி என்னும் நிறுவனம் மூலம் சாதித்தார். நாடகக் கல்லூரியின் முக்கிய சாதனைகள் இரண்டு - (அ) அது யாழ்ப்பாணத்தின் முக்கிய நாட கத் தொழிற்பாட்டாளர்களை இடம்பெறச் செய்வதன் மூலம் புதிய நாடக முறை உத்தி வளர்ச்சியில் சகல மட்டத்தினரையும் பங்கு தாரராக்கியமை. (ஆ) நாடகம் என்பது ஆழமான முயற்சிகள், தயாரிப்பு முன் ஏற்பாடுகள் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கூட்டுக் கலை என்பதை நிறுவியமை.
தன்னை முதன்மைப்படுத்தாத ஆளுமை விசேடர்தால் தன் வய துக்காரருக்குள் முதல்வனாகவும், வந்தடைந்த இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மேற்கிளம்பினார்.
சண்முகலிங்கத்தின் மிகப்பெரிய சாதனை நாடகத்தைப் பாட சாலைகளின் முக்கிய கலை நடவடிக்கையாக்கியமையாகும். சண் முகலிங்கத்தின் நாடகங்களை உற்று நோக்கும் பொழுதுதான் தெரிய வரும். அவரது அரங்கு உண்மையில் கல்வி சார் அரங்கு என்பது. சண்முகலிங்கம் இன்று ஒரு நாடகத் தலைமுறையொன்றின் தாயாக மிளிர்கிறார். அவரது மாணவர்கள் இன்று தேடியழைக்கப் படும் தயாரிப்பாளர்களாகவும் நெறியாளர்களாகவும் உள்ளனர்.
சண்முகலிங்கத்தின் அரங்கு தமிழகத்தை நிச்சயம் வியக்க வைக்கும். ஆனால் தாசீசியஸ் போன்றோரின் தயாரிப்புகளிலும் கொழும்பில் இவரது மாணவர்களது முயற்சியாலும் சண்முகலிங் கத்தின் "அரங்கு" படிப்படியாகப் பரவத் தொடங்கியுள்ளது.
சண்முகலிங்கத்தின் சிறப்பு, தான் செய்யும் பணியின் முதன் மையைத் தான் விவரிக்காத அடக்கமாகும். தனது மாணவர்களை அவையத்து முந்தி நிற்கச் செய்வது அவரது இயல்பான நடை முறை. சண்முகலிங்கத்தின் ஹாஸ்ய உணர்வு நண்பர்களிடையே பிரசித்தமானது. "சொடுக்' என்று விழும் அமைதியான கிண்டல், கனக்குப் பிடிக்காதவற்றை ஒளிவு மறைவின்றிச் சொல்லும் நேர்மை ஆகிய இரண்டும் சண்முகலிங்கத்தின் பெரிய ஆஸ்திகள்.
யாழ்ப்பரணத்தின் மண்வளத்தையும், மனப்போக்குகளையும் சித்திரிக்கும் அற்புதக் கலைஞன் சண்முசுலிங்கம்.
அவர் சேவை காலத்தாலும் அளவாலும் மேலும் மேலும் நீளுவதாக. O

ஒரு பாமரனின் பரிணாம வளர்ச்சி
எழுதப்படாத கவிதைக்கு 00)JIllÍIILTh djjJÍ
- டொமினிக் ஜீவா
1939 ஆம் ஆண்டு ஜனவரி மாசம் தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாணம் பெரிய கடைப் பகுதியிலுள்ள செம்மா தெரு என அன்று அழைக்கப் பெற்ற இன்றைய கஸ்தூரியார் வீதியில் அறுப தாம் எண்ணில் இயங்கிக் கொண்டிருந்த ஏ. யோசப் சலூனில்யாழ்ப்பாணத்தான் பாஷையில் சொன்னால் சவரக்கடையில்பரம்பரைத் தொழிலை முறையாகக் கற்றுக் கொள்ளக் காலடி வைத் தேன். அன்று திங்கட்கிழமை. காலை நேரம். வயசு பன்னிரண்டு. படிப்போ ஐந்தாம் வகுப்பு.
பயம் என்னவென்று அறியாமல் வளர்ந்த பொடியன் நான். துடுக்கு மிக்கவன், படிப்பில் சுழியன். சென் மேரீஸ் பாடசாலை யில் நான் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒரு சம்பவம் நடந்தது. அது எனது இளம் மனசைக் காயப்படுத்தி விட்டது. அதன் தழும்புகள் இன்றும் கூட எனது நெஞ்சில் அடி மட்டத்தில் உண்டு. என்னுடைய கெட்டிக்காரத் தனத்தை நிரூபிக்கப்போய் ஆசிரியரின் கடுப்பை நேர் கொண்டவன். அவர் கூட ஒரு கிறிஸ்த வர்தான் - யார் சொன்னது கிறிஸ்தவர்களிடம் சாதித் திமிர் இல்லையென்று? - குப்பென்று முகம் வியர்க்க என்னை ஒரு சத்து ராதியைப் போலப் பார்த்து உரக்கக் கத்தினார் அவர் "ஏன்ரா எங்களின்ரை உயிரை வாங்குறீங்க? போய்ச் சிரையுங்கோவன்ரா"
எனக்கு சோறு தருகின்ற தொழிலை அவமதித்ததுதான் எனக்கு எரிச்சல், சாதியைப் பற்றி அன்றும் இன்றும் கூடநான் என்றுமே அலட்டிக் கொண்டவனல்ல. ஆனால் எனது குடும் பத்துக்குச் சோறுபோடும் தொழிலை அவமதித்ததை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அன்றே மனசில் சபதமெடுத்தேன்: எதைக் கேவலப்படுதின்ாரோ அதன் மூலம் சாதனை படைப்பேன்
அது வெறும் சவரக் கடையல்ல; அதுதான் என்னை உருவாக் திச் செழுமைப்படுத்திய சர்வகலாசாலை! பெருமை எனக்கு.
யோசப் சலூன் என்ப் பெரிய விளம்பரப் பலகை மாட்டப் பட்டிருந்த போதிலும் கூட "வண்ணாங் குளத்தடிச் சலூன்" என் பதுதான் அன்றைய பிரசித்தம். யாழ்ப்பாண நகர் அன்று அரை நகர். பட்டினமும் அல்லாத கிராமியமும் அல்லாத திரிசங்கு நகர்

Page 6
இந்தச் சலூனுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. இந் தச் சவரக்கடைதான் யாழ்ப்பாண வரலாற்றில் முதன் முதலில் சலூனாக கட்டுக் கோப்புடன் அமைக்கப்பட்ட சவரக் கடை. நாகரிகம் முகிழ்ந்து வரும் ஆரம்ப கால கட்டத்தில் சுற்றுப் பிர தேச கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாரும் சனி, ஞாயிறு நாட்களில் இங்கு குழுமுவது வழக்கம் முன் அறையில் நான்கு நாற்காலிகளும் நவீனப்படுத்தப்பட்ட பின்னறையில் நான்கு நாற் காலிகளும் போடப்பட்டு, எட்டுப் பேர் சிகை அலங்கரிப்புச் செய் யக் கூடிய வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்த நவீன சலூனாக விளங்கியது ஜோசப் சலூன்.
அதன் உரிமையாளர் எனது தந்தையார். தன்னுடைய பெயரையே பெரிசாக விளம்பரப் பலகையில் எழுதி நாமம் சூட்டி தெருவால் போவோர் வருவோரை மனசுக்குள் உச்சரிக்க வைத்த பெருமை அவருக்குரியது. அது மாத்திரமல்ல, தனி நபர் பெய ரையே விளம்பரத்தில் - அதிலும் ஒரு சலூனுக்குச் சூட்டிய பெருமை அவருடையதாகும்.
எங்னை விடப் பத்து வயசு மூத்தது இந்தச் சலூன். நான் பிறந்த பின்னர்தான் தனக்கு அதிர்ஷ்டம் பிறந்தது என்பது எனது அப்பாவின் அபார நம்பிக்கை. நான் பிறந்த சிறிது காலத்திலேயே பஸ் சொந்தக்காரராகவும் எனது அப்பா நிகழ்ந்தார். Z 2002 சவுர்லெட் பஸ் ஒன்றைச் சொந்தமாக்கிக் கொண்ட இவர், கீரி மலை - யாழ்ப்பாணம் ரூட்டில் பஸ் விட அனுமதியும் பெற்றுக் கொண்டார். டிரைவரின் பெயர் நாகலிங்கம் என்பது எனது நினைவு கண் டக் ட ரா க பூனை என்பவரின் பட்டப் பெயர் பிரசித்தம். - சாடையாக எனக்கிது ஞாபகம்.
இது தவிர, எனது தகப்பனாரின் துணிச்சலுக்கு இன்னொரு சம்பவத்(9தயும் சுட்டிக் காட்ட வேண்டும். அந்தக் காலத்தில் ஊர் குடி பார்ப்பது என்பது எங்களது பரம்பரைத் தொழிலுக்கான பெயராக இருந்தது. அதற்கு அர்த்தம் சலவை, சவரத் தொழி லாளிகள் தங்கள் தங்கள் ஊர்களைப் பங்கு பிரித்து "அந்த உடை யார் பக்கப் பகுதி உனக்கு இந்த விதானையார் பகுதி எனக்கு என்றபடி எழுதாச் சட்டமூலம் ஊரைப் பங்கு பிரித்துத் தொழில் செய்து வந்தனர். ஒருவர் பகுதிக்குள் நன்மை தீமைப் பிரச்சி னைகளில் கூட மற்றவர்கள் புகுந்து கொள்வதில்லை. தினசரி தொழில் ஆட்சி இயல்பாகவே நடந்து வந்தது
என்னுடைய தகப்பனாரின் தகப்பன் பெயர் அவுறாம்பிள்ளை" தாயார் பெயர் அன்னப்பிள்ளை. யாழ்ப்பாணம் ரெயில்வே ஸ்டே சனுக்கு முன்னால் இருந்த வளவில் குடியிருந்தனர். சொந்தர் காணி, சொந்த வீடு வளவு. ஏதோ வாழ்ந்து வந்தனர்.
எமது மூதாதையர் பரம்பரைப் பட்டினத்தவர்கள் அல்ல" எனது தகப்பனின் தகப்பனது ஊர் பெரியவிளான். தாயாரின் கிராமம் சரவணை. எனது தாயாரின் ககப்பனார் ஊர் சரவணை; தாயாரின் ஊர் நயினாதீவு. அந்த நாகம்மாளின் மீது கொண்ட விசேஷ அபிமானத்தின் காரணமாகவே சிறுவயதில் நேர்த்திக் கடன் கடக்குக்கழிவு காலத்தில் எமக்கெ லாம் முடி இறக்கி மொட்டை போட்டது அந்த நாகபூஷணி அம்பன் சந்நிதியில்தான்.
(தொடரும் வாழ்க்கை)

ஈழத்தின் நவீன தமிழ்ப் படிைப்பிலக்கிய வரலாற்றில்
கே. டானியல் ஒரு திறனாய்வு நோக்கு
நா. சுப்பிரமணியன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்மன்றம் 23-3-94 அன்று நிகழ்த்திய எழுத்தாளர் கே. டானியல் நினைவு அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை.
கணேசலிங்கனின் நாவல்கள் 50 - 70 காலகட்ட சமுதாய வரலாற்றுப் போக்கைச் சித்திரிப்பன. பஞ்சமர் வரிசை நாவல்கள் மேற்படி காலப்பகுதியை உள்ளடக்கி, அதற்கும் முன்னாக ஏறத் தாழ இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்டகாலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய லரலாற்றுப் போக்கையும் எடுத்துக் காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக அடிமைகள் நாவல் 1890 - 1956 காலகட்ட வரலா றாக அமைந்தது. ‘காணல்". "தண்ணிர்" ஆகிய நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் இந்த நூற்றாண்டு தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று. நான்கு தலைமுறைகளின் வரலாறுகள் இவற்றில் விரிகின்றன.
கணேசலிங்கனின் படைப்புக்களிலிருந்து டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்' களை வேறுபடுத்தி நிற்கும் மற்றொரு முக்கியக் கூறு இவரது சமூக அனுபவ நிலைகள் ஆகும். கணேசலிங்கனுக்கு அடக்குமுறைக் கொடுமை என்பது வாழ்வியல் அனுபவம் அல்ல. அது அவரது பொதுவுடைமைப் பார்வையினுரடாகப் புலப்படும் ஒரு காட்சி மட்டுமே. கண்டும் கேட்டும் உணர்ந்ததைக் கருத்து ஃெேத்தி கதை அமைத்து அவர் நா வ ல் புனைந்தார். ஆனால் டானியலுக்குப் பஞ்சமர் பிரச்சினை என்பது வாழ்க்கை யின் அநுபவ தரிசனம் ஆகும். தான் பிறந்த சமூக நிலையாலும் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களின் அடிநிலை மாந்தரின் வாழ்க்கை நிலைகளோடும் கொண்ட நேரடித் தொடர்
9

Page 7
புகளாலும் தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டத் தின் பங்கு கொண்டமையாலும் அவர் பெற்றிருந்த அனுபவத் தெளிவு அது.
இந்தப் பஞ்சமரில் நானும் ஒருவனாக நிற்கின்றேன். அறி வறிந்த பருவம் முதல் இன்றுவரை இந்த மக்கட் கூட்டத் தினரின் பிரச்சினைகளிற் பங்கு கொண்டு, இவர்கள் துன் பப்பட்டுக் கண்ணிர் விட்டபோதெல்லாம் சேர்ந்து கண்ணீர் விட்டு, சிறு சிறு வெற்றிசுள் கண்டு மகிழ்ந்தபோதெல்லாம் சேர்ந்து மகிழ்ந்து. பெற்றுக் கொண்ட அனுபவங்களோ எண்ணிக்கையற்றவை, W
என அவர் கூறியுள்ளவை ("பஞ்சமர் உள்ளே நுழைவதற்கு முன்..") இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியன. டானியல் அவர்களுக்கு இருந்த இந்த அநுபவத் தெளிவு பஞ்சமர் வரிசை நாவல்களுக்குத் தனியான கன பரிமாணத்தைத் தந்துள்ளமையை உய்த்துணர முடிகின்றது. இந்நாவல்களின் சம்பவங்களில் இருந்து கதையம் சத்தை உருவாக்குவதில் திட்டப்பாங்கான அமைப்புக்கு அதிக இடம் இல்லை. ஆசிரியரின் கற்பனைத் தொழிற்பாட்டிற்கு அதிக அவசியம் இருக்கவில்லை. சமூக வரலாற்றுப் போக்கில் பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்த கம்பவங்களைப் பொருத்தமுற இணைப்ப தன் மூலம் - அவற்றினூடாகப் புலப்படும் சமூக அசைவு இயக் கத்தை உணர்த்துவதன் மூலம் இந்நாவல்களுக்கான கதையம்சத்தை டானியல் அவர்களால் புலப்படுத்திவிட முடிகின்றது. யாழ்ப்பா ணப் பிரதேசத்தில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிஜமான சமூக மாந்தரைப் பெயர் மாற்றங்களுடன் நடமாட வைப்பதன் மூலமும் பல்வேறு கிராமப்புறங்களின் நடைமுறை வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், உணவுமுறை, பொழுது போக்குகள், சடங்குசம்பிரதாயங்கள் முதலியவற்றை இயற்பண்புடன் சித்திரிப்பதன் மூலமும் ஒரு உயிரோட்டமான - நிஜமான - சமூக வரலாற்றை டானியல் அவர்களால் காட்சிப்படுத்திவிட முடிகின்றது. வாழ்க்கை யிலிருந்து கலை உருவாகின்றது என்ற நிலைக்குப் புறம்பாக வாழ்க்கையே கலையாகிவிடும் நிலையை பஞ்சமர் வரிசை நாவல் களில் தரிசிக்க முடிகின்றது.
"வாழ்க்கை - கலை இவற்றின் எல்லைக் கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்  ைம யாக நூலை நிறைத்துள்ளன' எனப் ப்ேராசிரியர் க. கைலாசபதி "பஞ்சமர்" முதற்பாகம் தொடர் பாக முன்வைத்துள்ள கணிப்பு (தினகரன் வாரமஞ்சரி 1972, 10, 22, பக். 10) பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்திற்குமே பொருந்தக்கூடிய கணிப்பாகும். −
பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்தினதும் பொதுவான கதையம்சத்தைப் பின்வரும் இரு கூறுகளுக்குன் அடக்கிவிடலாம்.
(அ) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக் கொடுமைகளின் விவரணம்"
10

(ஆ) அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனிதநேயம் கொண்ட உயர்சாதியினர் எனப்படுவோரும் இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார் ந் த நடவடிக்கைகளின்
விவரணம். முதல் நாவலான பஞ்சமரில் இந்த இரு கூறுகளும் நேரடியா கவே கதையம்சமாக விரிகின்றன. உயர் சாதியினர் எனப்படு
வோரில் சாதித்திமிர், அதனால் அவர்கள் புரியும் அட்டூழியங்கள் என்பன தொடர்பான பல கதைகள், செய்திகள் என்பவற்றையும் தாழ்த் தப்பட்டோரின் வர்க்க ரீதியான எழுச்சியையும் இந்நாவல் கட்டம் கட்டமாக விவரித்துச் செல்கிறது.
*கோவிந்தன்' நாவலிலே சாதித்திமிர் பிடித்த ஒரு குடும் பத்தின் வீழ்ச்சி சித்திரிக்கப்படுகின்றது. பஞ்சமரின் எழுச்சிக்கு முன் சாதித்திமிர் நிலை தளர்ந்து போவதாகக் காட்டுவது இந் நாவலின் அகநிலையான கதையம்சம். ஆனால் புறநிலையிலே "சாதி மீறிய காதல் - பாலியல் உறவு' எ ன் ற அம்சத்தை முதன்மைப்படுத்தியதாக இந்நாவல் அமைந்துள்ளது.
"அடிமைகள்" நாவலும் கோவிந்தனைப் போலவே வேளா ளகுலக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியைப் பேசுவது. நிலம், புலம் சொத்து, அதிகாரம், அடிமை - குடிமை என்பவற்றுடன் ராச
வாழ்வு நடத்திய அக்குடும்பம் கேளிக்கைகள், ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலியவற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக இந்நாவல் காட்டியமைகின்றது.
'கானல்" நாவலின் கதையம்சம் மேற்கூறியவற்றினின்று சற்று வேறுபட்டது. தமிழர் மத்தியிற் பரவிய கிறிஸ்தவ மதம் சாதிப்பிரச்சினைக்குத் தீர்வு காட்டும் ஒன்றாக அமைந்ததா? என்ற வினா எழுப்பி விடைகாணும் நோக்கில் - விமர்சிக்கும் நோக்கில்இது அமைகின்றது.
சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையில், குடிதண்ணிர் பெறுவ தில் தாழ்த்தப்பட்டோர் எய்தும் அவலங்களை மையப்படுத்திக் கதைப்பொருள் கொண்டமைந்தது தண்ணீர் நாவல்.
தாழ்த்தப்பட்டோரின் சமத்துவம் நோக்கிய எழுச்சி வரலாற் றுடன் தமிழரின் இனவிடுதலைக்கான இயக்கங்களின் உருவாக்க சூழளை இணைத்துப் புனையப்பட்ட நாவல் பஞ்சகோணங்கள். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மேற்படி குழலில் எத்தகு பாதிப் புக்களை எய்திற்று என்பதை இந்தாவல் மூலம் டானியல் உணர்த்த விழைகின்றமை புரிகின்றது.
மேற்குறித்தவாறான பஞ்சமர் வரிசை நாவல்களின் கதைகள் நிகழ்களங்கள் என்ற வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல் வேறு கிராமப்புறங்களும் டானியலின் பார்வைப் பரப்புக்குள் வந்துள்ளன. குறிப்பாக டீஞ்சமர் நாவலின் கதை நந்தாவில், வட்டுக்கோட்டை முதலிய கிராமங்களில் நிகழ்ந்தது. "கோவிந்தன்" தாவலின் முக்கிய களம் சுதுமலை. "அடிமைகள்" நாவல் மந்து வில், புத்தூர், சுட்டிபுரம் ஆகிய கிராமங்களில் நிகழ்கின்றது. "கா ைல்' தாவடி, சின்னக்கலட்டி, திருநெல்வேலி ஆகிய கிராமங்களைக் களமாகக் கொண்டது "தண்ணீர்" வடமராட்சிப் பகுதியை
Η Ι

Page 8
குறிப்பாகக் கரவெட்டியை மையப்படுத்தியது. "பஞ்சகோணங் களின்" கதை நிகழ் களங்களாக புன்னாலைக்கட்டுவன், கட்டுவன், உரும்பிராய், சுன்னாகம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்நாவல்களின் கதை நிகழ் களங்களைப் போலவே கதை நிகழ்கால எல்லைகளும் விரிவானவையாகும் பஞ்சமர் நாவல் நிகழ் வுகள் 1956 - 69 காலப்பகுதிக்குரியன. இக்காலப் பகுதியை அடுத்து தமிழின விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவான காலம் வரையான ஆண்டுகளில் - ஏறத்தாழ 970 - 80 களில்பஞ்சகோணங்கள் கதை நிககின்றது என்பது அந்நாவலின் முன் னுரையால் உய்த்துணரப்படுவது. ஏனைய நான்கும் இந்த நூற் றாண்டின் முற்பகுதி சார்ந்தனவாகும். குறிப்பாக கோவிந்தன் 1910 - 65 காலப்பகுதியையும், அடிமைகள் 1 90 - 1956 காலப் பகுதி ையும் கதை நிகழ்காலமாகக் கொண்டவையாகும். t இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது சாதிப் பிரச்சினையை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்களின் வர லாற்றில் கதையம்சப் பரப்பு. பிரதேசப் பரப்பு, காலப் பரப்பு ஆகியவற்றில் பஞ்சமர் வரிசை நாவல்கள் முன்னைய ஆக்கங்களை விட மிக விரிவானவையாக- தனிக் கவனத்திற்குரிய கனபரிமாணங் கள் கொண்டவையாகத் திகழ்கின்றமை தெளிவாகும். திறனாய்வு நோக்கில் பஞ்சமர்வரிசை நாவல்கள்
திறனாய் நோக்கு என்ற வகையில் இந்நாவல்களின் தொணி? பொருள், கட்டமைப்பு, கதைமாந்தர் சித்திரிப்பு என்பன தொடர் பான சில சிந்தனைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
இந்நாவல்கள் அனைத்தும் அடிநிலை மக்களான பஞ்சமரின் விடுதலை வேட்கையை அடிநாதமாகக் கொண்டவை என்பது தெளிவு. யாழ்ப்பாணச் சமூகத்தில் பல்வேறுபட்ட அடக்குமுறை கட்கும் உட்பட்டிருந்த மக்கள் சமூகத்தினர் அறிவும் உணர்வும் பெற்றுக் கட்டம் கட்டமாகத் தங்களைப் பிணித்திருந்த தளை களை அறுத்தெறிந்து வந்த வரலாற்றின் பக்கங்களாகவே - வர லாற்றுக் காட்சிப் படிமங்களாகவே - இந்நாவல்களின் கதையம் சங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காட்சிப்படுத்தும் நிலையில் தொடக்கத்தில் தமது சமகால நிகழ்வு களை மையப்படுத்தி பஞ்சமர் 1 ம், 2ம் பாகங்களை எழுதிய டானியல் அவர்கள் பின்னர் வரலாற்றில் பின்னோக்கிச் செல் வதை அவதானிக்க முடிகிறது. பஞ்சமர் நாவல் 1956 - 69 காலப் பகுதி நிகழ்வுகளைக் கூற, கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர் என்பன இந்த நூற்றாண்டின் முற்பகுதிக்கும் அதற்கும் அப்பால் கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதிக்கும் எம்மை அழைத் துச் செல்கின்றமை மேலே நோக்கப்பட்டது. பஞ்சகோணங்கள் மட்டுமே பஞ்சமருக்குப் பிற்பட்ட நிகழ்வு சுளுக்கு எம்மை இட்டுச் செல்கிறது. எனவே அடிநிலை மாந்தரின் விடுதலை என்ற மையச் சரட்டில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கால சமூக வரலாற்றுப் போக்கை இலக்கியமாகப் பதிவு செய்வது டானியல் அவர்களது நோக்கம் என்பது புலனாகின்றது. அதேபோல அடிநிலை மாந்தரின் விடுதலையுணர்வை முன்னெடுக்கும் நோக்கிற்கு வலுவூட்டத்தக்க வகையில் எதிர்மறையாக உயர்சாதியினர் எனப்படுவோரின் அக நிலைக் குறைபாடுகள் எனத் தான் அறிந்தவற்றை விவரிக்கும்
12

ஆர்வமும் அவருக்கு இருந்ததை இந்நாவல்கள் உணர்த்துகின்றன. குறிப்பாகக் கோவிந்தன், அடிமைகள் என்பவற்றின் முக்கிய கதை யம்சங்களில் இதனைத் தெளிவாக அவதானிக்கலாம். எனவே அடி நிலை மாந்தரின் விடுதலை வேட்கை, உயர்சாதியினர் எனப்படு வோரின் உள்ளார்ந்த குறைபாடுகள் என அறியப்பட்டவற்றை விவரிக்கும் ஆர்வம் ஆகிய இரண்டும் பின்னிப் பிணைந்த ஒரு உணர் வுந்துதலின் இலக்கிய வெளிப்பாடுகளாகவே ‘பஞ்விமர் வரிசை நாவல்கள் அமைகின்றன என்பது நமது சிந்தனைக்குரியதாகும். மேற்சுட்டிய பொதுவான உணர்வுந்துதளின் ஊடாக டாணி யல் அவர்களால் விமர்சிக்கப்படும் விடயங்கள் இங்கு நமது கவனத் துக்குரியன. எல்லா நாவல்களிலும் பொதுவான விமர்சனத்துக் குள்ளானது சாதியமைப்பும் அதனோடு தொடர்புடையதாகக் கொள்ளப்படும் வர்க்க அமைப்பும் என்பது தெளிவு. ஆனால் கானல், பஞ்சகோணங்கள் ஆகிய நாவல்களில் சிறப்பாக முறையே கிறிஸ்துமத மாற்ற முயற்சிகள், தமிழின உணர்வினடிப்படையி லான இயக்க - எழுச்சிகள் ஆகியனவும் விமர்சனத்துக்குள்ளா கின்றன.
சாதியமைப்பைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பிரதேச சமூகக் கட்டமைப்புக்கு அடிப்படையான சமய நம்பிக்கையாகச் சைவசமயம் நிகழ்த்துவந்திருப்பது வெளிப்படை. எனவே சாதி யமைப்பின் பாதிப்பிலிருந்து விடுபட விளைபவர்களுக்கு ஐரோப்பி யர் ஆட்சியில் இங்கு அறிமுகமான கிறிஸ்தவ சமயம் ஒரு விடி வெள்ளியாக - நம்பிக்ஷக நட்சத்திரமாகத் தோன்றியது" என்பது வரலாற்றில் உய்த்துணரப்படுவது. ஆனால் அந்த நம்பிக் - க ஒரு 'கானல் நீர் தான் என்பது கானல் மூலம் டானியல் முன்வைக்கும் விமர்சனம். இதிலே கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகள் சரி என்றோ அல்லது தவறு என்றோ டானியல் அவர்கள் வாதிக்க முற்பட வில்லை. அவர் உணர்த்த விழைந்த செய்தி ஒன்றுதான். அதா வது மனிதனில் அடிப்படையான மனமாற்றம் நிகழாமல் மத மாற்றத்தால் மட்டும் எதையும் செய்துவிட முடியாது என்பதே அந்தச் செய்தி. கிறிஸ்தவ தேவாலயத்திலும் சாதி வேறுபாடு காட்டப்படும் சமூக யதார்த்தமும் ‘படகி'ை எனச் சிங்களத்தில் கட்டப்படும் "வயிற்று நெருப்பு" க்கு - வறுமைக்கு - மதமாற்றம் தீர்வாகவில்லை என்பதும் நாவலின் மேற்படி செய்திக்கு ஆதார மாக அமைகின்றன. ஐரோப்பியர் இலங்கை க்கு அடி யெடுத்து வைத்து 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட போதும் அவர் களால் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்மின் அடிப்படை எவ்வகை மாற்றத்தையும் எய்தவில்லை என சமூகவியலறிஞர்கள் பொது வாகத் தெரிவிக்கும் ஒரு கருத்தாகும். (பார்க்க: பேராசிரியர் கா. சிவத்தம்பி. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம், ஈவ்லின் இரத்தினம் பல் வினப் பண்பாட்டு நிறுவனக் கருத்தரங்கு உரை 17 - 3 - 1994 பக். 3-4) சமூகவியலறிஞர்களின் ஆய்வு பூர்வமான இக் கருத் துக்கு எவை அடிப்படையோ அவையே டானியல் அவர்களது மேற்படி நாவலின் தொனிப்பொருளுக்கும் அடிப்படைகளாகின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
பெளத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக ஈழத்தமிழர் தம் உரிமைகளை மீட்கும் நோக்கில் ஆயுதம் தாங்க முற்பட்டு
H 3

Page 9
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகின்றன. இவ்வகையில் உருவான இயக்க நிலைப்பட்ட ள்முச்சியானது தமிழர் தமக்குள் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நிலையைப் பேணிக் கொண்டு ஒற்றுமைப் பட்டுச் செயற்படும் நிலையிலேயே நிறைவான பயனைத்தரும்: விடுதலை என்ற சொல்லும் அர்த்தமுடையதாகும். டானியல் அவர்கள் பஞ்சகோணங்கள் நாவல் மூலம் உணர்த்த விழைந்த கருத்து இது என்பது எனது ஊகம். ஆனால் இன உணர்வடிப் படையிலான இயக்கங்களின் எழுச்சி அடிநிலை மக்களின் விடுதலை வேட்கையை - உரிமைக் கோரிக்கைகளை - மழுங்கடிக்கும் முயற் சியாக, தாமதப்படுத்தும் முயற்சியாக, திசைதிருப்பும் செயற் பாடாகத் தோற்றம் தருகின்றது என்பது இந்நாவலின் கதைப் போக்கில் புலப்பட்டு நிற்கும் செய்தி. ஏறத்தாழ பதினைந்தாண் டுகட்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு இயக்கங்கள் உருவா கிக் கொண்டிருந்த சூழலில், அடிநிலை மக்களின் சமத்துவம் சார்ந்த உரிமைக் கோரிக்கைகளும் இயக்கங்களின் இனவிடுதலை உணர்வுகளும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பங்களைப் பொருத்திக்காட்டி அவற்றில் இன உணர்வெழுச்சி முனைவதைத் தாமதப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முனைவதாக உணர்த்திக் கதை வளர்த்துச் செல்லப்படுகின்றது. இதன் சமூக யதார்த்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு 1980 க்கு முன் பின்னான ஆண்டு களின் - இயக்கங்கள் பலவும் உருவான சூழலின் - சமூகச் செய்தி களை நுணித்து நோக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இவ்வுரையில் வாய்ப்பில்லை (தனியானதொரு ஆய்வில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயம் அது) ஆனால் இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் 1984 இல் இந்தாவல் எழுதப்பட்டபோது இதனை எழுதுவதற்கு அடிப்படை பாக டானியல் அவர்கள் கொண்டிருந்த உணர்வுநிலையாகும். இதனை அவரது முன்னுரை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. சாதிப்பிரச்சினை தொ டர் பாகத் தொடர்ந்து எழுதி வரும் தன்னை நோக்கி, இனப்பிரச்சினை பற்றி ஏன் எழுதவில்லை? என்ற வினா எழுந்துள்ளதாகக் குறிப்பிடும் அவர், இவ்வினாவை எழுப்புபவர்கள் தன்னை, W
"தாழ்ந்தவர்களின் - வஞ்சிக்கப்பட்டவர்களின் அன்றாடங் காய்ச்சிகளின் அடிமைப்பட்டவர்களின் - வயிற்றுச் சோற் றுக்காக ஆலாய்ப்பறப்பவர்களின் பக்கம் நின்று எழுதுவதி லிருந்து' தடுத்துவிடும் நோக்கமுடையவர்கள் என்றும்,
* 'இன்றைய தமிழர் இயக்கங்களுக்குக் கணிசமான அளவு ஒரு பிரிவு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரண காரியங்களை உண்மை நிகழ்வுடன் சித்திரிப்பது எனது கடமையாகப்பட்டது" என்றும் தனது உணர்வுநிலையை முன்னுரையில் உணர்த்துகின் pTiř (uá. 5 - 6)
இவற்றிலே இரண்டாவது கூற்று தொடர்பான சமூக யதார்த் தம் மேற்சுட்டியதைப் ாேல 1980 களுக்கு முன்பின்னான கால கட்டத்தின் சமூகச் செய்திகள் பனடாக நோக்கித் தெளியப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் முதலாவது கூற்றுத்தரும் கருத்து விவாதத்துக்குரியதாகும். (தொடரும்)
l4

நினைவில் பதிந்த நூல்கள்
அல்துஸர் ஒர் அறிமுகம்
கிலத்துக்குக் காலம் தத் துவக் கலை இலக்கியப் பரப்பில் சில பெயர்கள் உச்சரிக்கப்பட்டு தர்க்கிக்கப்படுவது வழக்கம். இயங்கும் உலகில் இது தவிர்க்க முடியாதது. 1980 ல் தமிழ் பரப் பிலும் மியூ போல் சார்த்தர், அல்பர்ட் காம்மது லெவில் ராஸ், சசூர், தெரிதா, லக்கான், ஃபூக்கோ. லூயி அல்துரஸ்ர் என்ற மனிதப் பெயர்களையும் எக்சில் டென்சியலிசம், சர்ரிய வி ச ம் , ஸ்ரக் சு ர விஸ் ம் என்ற இசங்களின் பெயர்களை யும் உச்சரிப்பது ஒரு "இன்ட லக்கல்ை பாசனாப** அலை மோதியது.
அரசியல், கலை இலக்கியத்
துறை இரண்டிலும் காத்திர மான பங்களிப்பை செய்தவர் தான் லூயி அல்தூஸர் எனும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவப் பேராசிரியர். இவரை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் இருப தாம் நூற்றாண்டின் தொடக்க கால ஐரோப்பாவை குறிப்பாக பிரான் ஸ் தேசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1917ல் மார்க்சிய சிந்தனை யின் அனுசரனையுடன் ரஷ்யா வில் எழுந்த மக்கள் புரட்சி ஐரோப்பிய நாடுகளை அதிர்வுக் குள்ளாக்கியது. பிரிட் டன்,
து. குலசிங்கம்
பிரான்ஸ் போன்றவை வெண் படையின் எதிர்ப் புரட்சிக்கு ஆதரவு கொடுத்தும் மக்கள் புரட்சியைத் தோ ற் கடிக் க முடியவில்லை. போல்ஸ்விக்குகள் அதிகாரத்தை ரஷ்யாவில் நிலைப் நிறுத்திய பின்பே ,ோசலிசத்தை நடைமுறைப்படுத்த விளைந்த னர். இக் காலகட்டத்தில் தான் மார்க்சியத்துக்கு புதிய அர்த் தத்தை க ற் பித் த லெனின், ரொஸ்கி, புக்காரின் போன்றவர் களின் சிந்தனைகள் ஒழுங்கமைக் கப்பட்டு வெளி உலகைச் சென் றடையத் தொடங்கியது.
1920 ல் முதலாவது உலக யுத் தம் முடிவடைந்த பின் பிரான்சில் புதிய சிந்தனை எழுச் சிகள் சகல துறைகளிலும் எழத் தொடங்கியது. கலை இலக்கிய சூழல் இக்காலத்தில்தான் வழ மாக்கப்பட்டது. இக்காலப்பகுதி யில் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியிலும் புதிய சிந்தனையா ளர்கள் புதிய சிந்தனைகளைப் புகுத்தி வளப்படுத்தினார்கள். இவர்களில் ஜோர்ஜ் பொலியஸ் டர், போல் நிஷன் , கென்றி லெஃபேப்பர் போன்றவர்கள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஸ்டாலினிசம் மேற்கு ஐரோப் பிய நாடுகளில் முரணான தாக் கங்களை ஏற்படுத்தியது. கங்கே ரியில் சொக்காசும், இத்தாலியில் அந்தோளி க்ரான்சியும் புரட்
15

Page 10
கர இயக்கங்களுடன் தங்கள் சிந்தனைகளை இ ைண த் து ச் செயல்படத் தொடங்கினர். இக் காலகட்டத்தில் தான் ஸ்ராங் போர்ட் மாக்சிய பள்ளியும் தொடக்கப்பட்டது.
அல்தூஸரின் அமைப்பியல் வாத மார்க்சிஸம் அறுபதுகளில் பிரான்ஸ், இத்தாலி, பிரிட்ட னின் இடதுசாரிச் சிந்தனையா ளர்கள், லத்தீன் அமெரிக் க இடதுசாரிகள் மத்தியில் இச்சிந் தனை ஒர் அறிவார்ந்த இயலாக பரவி வரும் வேளையில் இதற்கு எதிர்ப்புகளும் கிளம் பி வர த் தொடங்கின. கதந்திர மார்க்சி யச் சிந்தனையாளரும், மார்க்சிய அறிவியல் நூங்களை எழுதியவரும், ஸ்டா லி னி ச
எதிர்ப்பாளருமான ஈ. பி. தோம்
ஸன் அல்துரஸாரின் அமையியல் வாதத்தை மிகுந்த கேலியுடன் விமர்சனம் செய்தார். எண்பது
களில் தொடக்கத்தில் தமிழ் இலக்கியத் துறையில் புகுந்த அமைப்பியல் வாதம் இ ன் று
பெருவளர்ச்சி அடைந்திருப்பதை காண்கின்றோம். அமைப்பியல் வாதம் பற்றி எழுதாது சிறு பத்திரிகைகள் தமிழில் இல்லை யென்று சொல்லலாம்.
அவ்து ஸ்ரீ பல வருடங்கள் கத்தோலிக்க இளைஞர் அமைப் பில் இருந்து தன் முப்பதாவது வயதில் பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சி யில் சேர் ந் தா ர். கட்சியின் பிற நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி மார்க்சியம் பற் றிய தத்துவ ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண் டா ர். 1968 ல் பிரான்சில் நடந்த மான வர் போராட்டங்களில் கூடக் கலந்து கொள்ளாது ஒதுங்கியி குத்து தன் ஆய்வில் மூழ்கிவிட் LT li l
அல்தூஸரின் முதல் நூல் "மார்க்சின் பொருட்டு'. இது
6
வெளிவந்தது 1965 ல், இதற்கு எழுதிய முன்னுரையில் 'தனது கட்டுரைக்ள் யாவும் குறிக்கப் பட்ட காலகட்டத்தில் குறிக்கப்
பட்ட சூழலில் என்றும் அவை
சமகால வரலாற்றில் அனுபவங் களையும் அவ்வனுபவ வரலாற் றின் தாக்கங்களையும் தாங்கி நிற்பன என்று கூறுகின்றார். தனது தலைமுறைக்கு ஸ்பெயி னில் நடந்த பாசிச எதிர்ப்புப் போர் மறக்கமுடியாத வரலாறுப் பாடங்களைக் கற்பித்துச் சென் றது. இப்படிப்பினையே தன் னைப் போன்றவர்கள் கம்யூனி ஸ்ட் கட்சியில் சேர வழி வகுத் தது என்கின்றார். இவரின் புகழ் பெற்ற மற்ற நூல் "மார்க்சைப்
படித்தல்". இவற்றில் கூறப்பட்ட
கருத்துகளுக்கு எழுதப்பட்ட கேள்விகளுக்கு எழு த ப் பட்ட பதில்கள் "சுய விமர்சனம் தொடர்பான கட்டுரைகள்" என்ற நூலாய் வெளிவந்தது. *"லெனினும் தத்துவமும் பிற கட்டுரைகளும்' எ ன் ற ஒரு தொகுப்பு நூலும் வெளிவந்தது.
அஸ்தூஸர் எழுப்பும் கேள்வி கள் மார்ச்சிய தத்துவம் என் றால் என்ன? அது நிலவுவதற்கு கோட்பாட்டு ரீதியான நியாயங் கள் உண்டா? அப்படி ஒரு தத்
துவம் இருக்கின்றது என்றால்
அதன் தனித்தன்மையை வரை யறுப்பது எவ்வாறு? மார்க்சிய தத்துவத்துக்கான மேலும் கறா ரான, மேலும் செழுமையான வரையறையை உ ரு வாக்கு ம் தேவையை உணர்ந்து கொள் வதுதான் என்கின்றார்.
1960 ல் ஸ்டாலின் பற்றி வைக்கப்பட்ட விமர்சனம் உலக மார்க்சியர்களிடையே மனிதாபி மான தத்துவத்திடையே அக் கறை கொள்ளச் செய்தது. இதன் எதிரொலியாக விஞ்ஞான ք է n a! சோசலிசத்திலிருந்து

மார்க்சிஸத்தை பிரித்துக்காட்ட *சோசலிச மானுடத்துவம்" என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் சார்த்தர் போன்றோரும், கிழக்கு ஐரோப் பிய நாடுகளில் ஆதாம் ஷாய் போன்றோரும் சோசலிச மானு டத்துவத்தைத் தமக்கேயுரிய வகைகளில் விளக்கினார். சோவி யத் யூனியனில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூ டி வு ற் ற து என்று அறிவிக்கப்பட்டு "அனைத் தும் மனிதனுக்கே" என்ற குறிக் கோள் நிறுவப்பட்டது. இவை யாவும் மார்க்சிஸத்தை நீர்த்துப் போகச் செய்பவை என்று கண் டனம் செய்கின்றார்.
மார்க்சியம் ஓர் மானுடத்து வம் இல்லை என்று கூறும் அல் துரஸர் கீழ்வரும் காரணங்களை முன்வைக்கிறார்.
1. மார்க்சிஸத்தை ஒரு மானு டத்துவமாகக் கொள்வோர் மார்ச்சின் இளமைக் காலப் படைப்புக்களின் பெயரா லே யே இம்மாதிரியான மதிப்பீடுகளை வழங்குகின் றனர். ஆனால் இப்படைப் புகளிலோ மார் க் ஸி ன் சாரத்தை நாட்கான முடி யாது கெ9 லிபத்திலிருந்து முற் றி லும் மீண்டுவராத இளம் மார்க்சின் சிந்தனை கள் தமக்கேயுரிய மொழி நடையும் கருத்தாக்கங்களை யும் பெற்றிராத நிலையி லேயே இவ் இளமைக்காலப் படைப்புகளில் வெளிப்பாடு கண் டுள்ளன.
2. மார்க்ஸ் கெகலிய சிந்தனை வழி வந்தவர்தான் என்றா லும் அவர் கெகலியவாதங் களை விமர்சித்து அவற்றின் தத்துவ எ ல்  ைல க  ைள க் கடந்து வந்தவர். இவ்வர லாற்று உண்மையைச் சரி வர உண்ராதவரே, மார்க்
கிஸத்தை மானுடத் தத்து வமாகக் கரு தி கெகலிய சிந்தனையின் தொடர்ச்சி யாக மார்க்சிஸத்தை விளக் கியுள்ளனர். ஆனால் மார்க் சிஸர்கள் செய்ய வேண்டி யதோ மார்க்சிய சிந்தனை யின் தனித்தன்மையை நிலை நாட்டுவதுதான்.
அல்தூஸர் தான் ஏன் எழுத வந்தேன் என்று கூறும்பொழுது "நான் உண்மையில் எழுதியே இருக்க மாட்டேன். இருபதா வது காங்கிரசில் குரு ச் சே வ் ஸ்டாலினுக்கு எதிராய் வைத்த விமர்சனமும் அதன்பின் ரஷ்யா வில் நடந்த சுதந்திரமான கம் யூனிச சிந்தனையும் நான் எழுத
வேண்டும் எனத் தூண்டின என்
கின்றார். பிரான்சின் கம்யூனி ஸ்ட் கட்சியைப் பற்றி கூறும் பொழுது "அறிவார்ந்த வறுமை" அதன் தனிச் சொத்து என் கின்றார்.
மார்க்ஸ் கெகலை கடந்து செல்லவில்லை. வேறு ஒரு பா  ைத யி ல் சென்றார். ஒரு மானுடத்துவ எதிர்ப்புக் கோட் பாட்டை மேற்கொண்ட மார்க்ஸ் "மானுட சாரம்" முழுமையான மனிதன் போன்ற கருத்தாக்கங் களைக் கைவிட்டன. அவருடைய ஆய்வுக்கான பொருள் இனி "மனிதன்" இல்லை. சமூக அமைப்புகள், அவற்றின் இயக்கம் அவற்றுக்கிடையே நிலவும் உறவு ஆகியனவே அவரது ஆய்வுகளின் கருப்பொருள். இங்கு மனிதனின் அ ந் த ஸ்து என்ன? அவன் வெறும் கருவி அல்லது சடப் பொருள் என்பதைத்தான் அல் தூஸர் சுட்டிக் காட்டுகிறாரா? மனிதனுக்காகத்தான் மார்க்சி யமா? அல்லது மார்க்சிஸத்துக் காக மனிதனா? என்ற கேள்வி
எழுகின்றது.
17

Page 11
30 வது ஆண்டு மலர் 1995 ஜனவரியில் வெளிவருகின்றது
ஆக்கங்களை அனுப்பி உதவ Gaucky Lu LD66Ý60ớh நண்பர் ளுக்கு இந்த அறிவித்தஐ முன்னதாகவே தெரிவிக்கின்
றோம்.
உங்கள் ஒத்துழைப்பு முக்கிய
தேவை.
- ஆசிரியர்
மார்க்சின் எழுத்துக்களை இரண்டு பிரிவுகளாகப் t Fífis SSir றார். முதிய மார்க்சின் படைப் புக்கள், இளைய antri di Geir டைப்புக்கள் என்று ஜேப்பி றாம் அல்தூஸர் சார் த் த ர் போன்றோர் மார்க்சின் இள மைக் காலப் படைப்புக்களில் விரவிக் கிடக்கும் கெகலிய சிந்த னையின் எச்சங்களைக் குறிப் பாக "அந்நியமாதல்" பற்றிய விளக்கங்களை மார்க்சிஸத்துக்கு உரிய அறிவுடன் குழப்பிவிட்ட
னர் என்று குற்றம் சாட்டுகின்
றார்.
சித்தாந்தங்களை உருவாக்கி சமூக வாழ்வு முறைகளோடு இணைக்கும் அமைப்புக்களாக பின்வருவனவற்றைக் குறிக்கின் றார். மதம் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் கல்வி அமைப் புக்கன், குடும்ப அமைப்புக்கள், சட்ட அமைப்புக்கள், அரசியல்
அமைப்புக்கள் தொழிற்சங்க அமைப்புகள் t_6 נthח L5) - "ש זח ו( அமைப்புக்கள்.
இத்தாலிய மார்க்சிய சிந்த னையாளர் அந்தோணி கிரான் சியை பல இடங்களில் பாராட் டிப் புகழ்ந்தவர். அவர் மீது sQuburrow விமர்சனத்தையும்
வைக்கின்றார். கிரான்சியை ஒரு கெகலியல்வாதி என்று குற்றம் சாட்டுகின்றார். மா ர் க் ஸ் வாழ்ந்த காலம் அவருக்கு ஏற் பட்ட அனுபவங்கள். கெகலிய வாதங்கள் சித்தாந்த ரீதியான வையே எ ன் ப ைத அவர் உணர்ந்து கொள்ள உதவின. அவர் அதை விமர்சித்தபோதும் தமது ஆய்வுக்குரிய பொருளாக வேறு ஒன்றைக் கண்டார். இது அரசியல் பொருளாதாரம் அவ ருக்கு வழங்கிய ஒன்று என்று கூறுகின்றார்.
'அல்தூஸர் ஓர், அறிமுகம் என்னும் இச் சிறு நூலில் இதன் ஆசிரியர் க ளா ன வ. கீதா, எஸ். வி. ராசதுரை இருவரும் முன் பகுதியில் அல்தூஸரின் கோட்பாடுகளைக் கூறி பிற்பகு யில் அக்கோட்பாடுகளை விமர் சிக்கின்றார்கள். அல்துரஸரின் நடையைப் புரிந்து கொள்வது என்பது மிகுந்த கஷ்டம். அப் படிப்பட்டவரின் எழுத்துக்களை சிரமமின்றி வாசிப்பவன் புரிந்து கொள்ளக்கூடிய மிக எளிதான தமிழில் தந்துள்ளார்கள். அவ ருடைய கோட்பாடுகளில் உள்ள வரட்டுத்தனங்களைத் தர் க் க ரீதியாக எடுத்துக் காட்டி மறுத் துள்ளார்கள். அல்தூஸரின் ஆர கியல் கோட்பாடுகளை விமர்சித் தவர்கள் அவரின் கலை இலக் கிய, மொழியியல் கோட்பாடு களையும் எடுத்து விளக்கியிருந் திருக்கலாம். அவரின் அரசியல்
கோட்பாடுகளை விமர்சிப்பது தான் முக்கிய நோக்கமாய் இருந்திருக்கிறது.
இப்படி இதே போன்ற பல நூல்கள் தமிழில் வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ் பரப்பு செழுமையுறும், நாம் எல்ல வற்றையும் கற்போம், பின் அவற் றிலிருந்து தெளிவடைவோம்.
8

மாற்றம் வரும்போது
பண்டைக் காலத்து யாழ்ப் பாண அரசர்களின் பிரதானி களில் ஒருவர் எமது ஊ ரி ல் இருந்தாராம், எமது பகுதியின் இராச காரியங்களைக் கவனிக் கும் அதிகாரி அவர். அந்தக் கால மன்னர்களின் போர்களுக் குத் துணையாக, எம்மூரிலிருந்து படையொன்றைத் தி ரட் டி க் கொண்டு தலைமை வகித்துச் செல்பவர் அவராம் . அவரின் பரம்பரையைச் சேர்ந்தவர் ஒரு வர் எம் ஊரில் இருந்தார். வீர கத்தி என்பது அவர் பெயர்.
எனது எட்டு ஒன்பது வய தப் பராயத்தில் எமது வீட்டுப் பக்கமாக அவரை அ டி க் க டி காணுவேன். எனது பாட்டனா ரின் ஆட்டுப்பட்டியில் இருந்து பல செம்மறிக் கடாக்களை அவர் கொள்வனவு செய்திருக்கிறார். அவரின் பெயரே எனக்குப் பிடிக்க வில்லை. வீரமும் கத் தி யும் சே ர் ந் த பெயர். கத்திகள் போன்ற பெரிய மீசையும் சிலுப் பாத் தலையும், அகன்ற வாயும், தடித்த உதடும். பருத்த தொந்தி
9
அந்தக் காலக் கதைகள்
தில்லைச்சிவன்
WM
விழுந்த உடலும், கண்டால் யார் தான் பயப்பட மாட்டார்கள்?
கரகரத்த குரலில் கதைப்ப தைக் கேட்கவே நடுக்கமாக இருக்கும். அத்துடன் அவர் பல களங்கண்ட சண்டியனுங்கூட. இருந்தும் அவர் எனது பாட்ட
னாருடன் மிகுந்த பெளசியமா கவே கதைப்பார். "குஞ்சியப்பு" எ ன் நூறு அடிக்கடி சொல்லிக் கொள்வதுடன், தனது வீரப் பிரதாபங்களை எல்லாம் அவிழ்த் துக் கொட்டுவார். "அந்தச்
சாதிக்காரனை அது செய்தேன், இந்த ச் சாதிக்காரனை இது செய்தேன், அவனை அடித்தேன் இவனை மிதித்தேன், அந்தப் பெட்டையைப் பிடித்துக் கலியா ணஞ் செய்து கொடுத்தேன்.
இந்தப் பெடியனுக்கு இராத்திரி
சாறு கொடுப்பித்தேன், அந்தக் கலியாணத்தைக் குழப்பினேன்"
என்று தனது வீரப்பிரதாடங்
களை விளம்பியதுடன் "குஞ்சப்பு எங்கட சத்திரியப்புலம், மஞ்சட் கேணிக் காணிகளை விலைக்குக் கேட் கி ன ம். அவையெங்கள் Lugib ueOptaj asn 60oi), u rr (ij të வேற சாதிக்காரருக்குக் கொடுக்

Page 12
கக் கூடாது. எங்கட ராசாக்கள் வாழ்ந்த கானியல்லவா சத்தி, யப்புலம், மரகதவல்லி நாச்சி யார் நீராடிய கேணியல்லவா மஞ்சட்கேணி, எல்லாருந்தான் இப்ப முதலியார் பரம்பரை பாச்சே, இந்தக் காலத்தில் இந்
தக் காணிகளாவது எங்களோடு
இருக்க வேண்டும்" என்பது அவரது வாதம்.
என்பாட்டனார் ஆ மா ப்
போடுவது போலத் தலையை ஆட்டவும் அவரின் கதை தொட ரும். அந்தக் காலத்தில் இதுக ளெல்லாம் எங் கி ரு ந் த  ைவ "பண்டார மேளமும் உண்டான வரிசையும் சோழ, குண்டானுக் கிங்கால யல்லவா." g{ نا tل பாரேன் எல்லாப் பெண்டுகளும் ர விக்  ைக ச் சட்டையல்லவா போடுகினம். மார்பை மறைத் துக் கட்டிய சீலைபோய் மூடு
தாவணிக் கொய்யகமெல்லே வைக்கினம். காலிற் செருப்பு மாச்சு, அத்தோடு செத்தவீட்
டுக்கு மேளமும், கல்யாணத் துக்கு நாயனமுமல்லே பிடிக்கத் திரியினம். இது இந்த வீரகத்தி இருக்கும்வரை நடக் கா து. ஆனால் இன்னொன்று கேட்டி யளே குஞ்சப்பு மற்றவங்க சவங்காவ மாட்டினமாம். இப் படியே போனால், இவையெல் லாம் எங்கேபோய் முடியுமோ? என்று அவர் அங்கலாய்த்த வேளையில் எனது பாட்டனார் கதையைத் தொடங்கினார்.
"சரியட்ா மகனே, இந்தச் சவங்காவுற விடயமிருக்கே இது
நமக்குத்தான் நல்லாயிருக்கா, எவ்வளவு செலவு? காவுபவர் கட்கு வேட்டி, சால்வை அத்
தோடு முடிந்ததா ? எட்டுச் செலவு வரையாவது அவர்களின் குடும்பச் செலவுக்கும் இட்டு தரப்ப வேண்டியுள்ளதே. இத்த
so
னைக்கும் ஓர் ஏழைக் கமக்கார னால் எப்படிச் சமாளிக்க முடி யும். அவன் ஒரு பிரபு, இந்த எடுப்புகளையெல்லாஞ் செ ய் தா ன் என்பதற்காக நாமுஞ் செய்து குடிமுழுக வேண்டுமா? இதை நிறுத்திவிட வேண்டும். நமக்கும் நல்லது, அவர்கட்கும் நல்லது நான்தான் மெல்லமாக அவர்களிடம் சொல்லி இதை விட்டுவிடுங்கோ என்றேன். மேற் குப் பக்கத்தாரும் எ ப் ப வோ விட்டிட்டினம். இதற்குமேல் இதை வற்புறுத்தக் கூடாது" எ ன் ன வும், * ‘குஞ்சப்புவின் வேலையா! அப்பவே நினைச்சன் எங்கட ஆட்களின்ர உதவியில் லாமல் நடக்காதென்று" சொல் விக் கொண்டெழுந்த வீரகத்தி வெளியேறிவிட்டார். போகும் போக்கில் அவர் முகத்தில் எள் ளும் கொள்ளும் வெடித்துக்
கொண்டிருந்தது. எனது பாட் உனார் முகத்தில் இளநகையோ டப் 'பெடியன் G3ays Lom sü
போறான்' என்று தம்பாட்டில் கூறிக் கொண்டார்.
மூன்றாம் நாட் காலையில் வீரகத்தி வேறொருவருடன் எங் கள் வீட்டுக்கு வந்தார். எங்கள் பட்டியில் ஒரு காளை எருது நின்றது. உழவு பழகியது. வண் டியிலும் இரண் டொரு நாள் பூட்டியிருப்போம். மா வெள்ளை நிறம். எலிக்கண் போன் று மேலெழுந்து சிவந்த கண். குறு கிய வால் நுனி யில் சிறிய வெள்ளை, பா ர் ப் ப வர் கள் ஆசைப்பட வேண்டிய அழகும் மிடுக்கும் உடைய நாம்பன். எனது சின்னமாமா அன்போடு வளர்த்த இந்த நாம்பனைத் தரும்படி அடம்பிடித்தார் வீர கத்தி. எனது பாட்டனாருக்கு அதைக் கைநழுவிவிட விருப்ப மில்லை. இருந்தும் நாட்டாண் மைக்காரனான வீரகத்தி கேட்

கிறான். கொடுக்காவிட்டால் வெளியே மாடுகளை மேயவிடும் போது, பிடித்துக் கட்டிப் பயிர் களை அழித்துவிட்டதென மணி யகாரன் வீட்டுக்கு முறைப்பாடு கொடுத்து அடாவடி பண்ணு வான். "அவனுக்கு மாறாகச் சாட்சி சொல்லக் கூட எவரும் வரமாட்டார்கள். இந்த நிலை பரத்தில் சோலியைத் தவிர்த்துக் கொள்வதற்காக மா ட்  ைட க் கொடுத்துவிடுவது நல்லதென்று பட்டதால், ஐம்பது ரூ!" தந்து மாட்டை அவிழ்த்துக் கொண்டு போ" என்று கூறிவிட்டார்.
"அதுதானே கேட்டன் குஞ்சப்பு எனக்கு இல்லை என்று சொல்வாரோ என்று, குஞ்சப்பு நாற்பது ரூபா தாரன், வேற கதை "வேண்டாம்." என்று சொல்லிக் கொண்டே கூட வந் தவனைக் கொண்டு மாட்டை அவிழ்ப்பித்துக் கொண்டு சென் றான். * எப்ப காசு" என்று இழுத்தார் எனது பாட்டனார்: *இப்ப என்ன அவசரம் குஞ்சப் புக்கு. மூன்று நான்கு வரும்படி களிருக்கு, ஊரில எல்லாம் அவ ரது தடப்புத்தானே. எனக்கேன் வம்பை, இரண்டு மூன்று நாட் களில் காசு உங்கள் கைக்குவரும் என்று சொல்லிக் கொண்டே மாட்டுடன் சென்றுவிட்டார்கள் அவர்கள்.
எனது டாட்டனாருக்கு ஒரே யோசனை. 'நல்ல மாடு நின் றால் நூறு ரூபாவிற்காகுதல் விற்கலாம். அறுந்திடுவான் கண் பட்டபின். சீ. வைத்திருக்கக் கூடாதுதான்: எ ப் படி யோ போய்த் தொலையட்டும்" என்று சொல்லிக் கொண்டே போய் ஈச்சயரில் கிடந்தார்.
மூன்று நாட்கள் கழிந்தன, காசு வரவில்லை. மேலும் மூன்று நாட்கள் சென்றள காசு வர
2.
வில்லை. எனது பாட்டனார் சாசு கேட்டு வீரகத்தி வீட்டுக் குப்போனார் வீரகத்தி கல்யா ணஞ் செய்யாத சம்சாரி. வீட் டில் வயதுபோன தாய் மட்டுத் தான் இருந்தாள்.
"ஆர்மகனே சின்னத்தம் பியே! அவன் எங்கேயோ போய் விட்டான். ஏன்மகனே வந்தனி? மாட்டுக் காசோ! அவன் ஏதே தோ சொல்லிக் கொண்டிருந் தான், உனக்கும் அவனுக்கும் கொளுவல்தான் வரும்போல இருக்கு. தகப்பனுக்கும் மகனுக் கும் கொளுவல் நல்ல வேடிக் கையாக இருக்கப் போகுது. மகனே நான் சொல்லி அவன் எதையோ கேட்கப் போறானே. தகப்பனாச்சு மகனாச்சு பட்ட பாடு" என்று சொன்னாள் வீட்டுச் சாரைக் கூட்டிக் கொண் டிருந்த கிழவி, கேட்டுக்கொண்டு
வீட்டுக்கு வந்த பாட்டா சாப்
மனையில் சாய்ந்து விட்டார். என்ன யோசனையோ..?
அந்த வேளையில் பட்டணத் தில் தனது தமையனார் வீட் டில் நின்று படித்துக் கொண்டி ருந்த எனது சின்னமாமா வீட் டுக்கு வந்தார். அவரிடம் நாம் பன் விற்ற கதையை நான் கூறி யதும் அவருக்குக் கோவம் வந்து விட்டது. "நான் ஆசையாக வளர்த்த நாம் ப  ைன ஏன் கொடுப்பான்" என்று கொதித் தவர் உடனே புறப்பட்டார்" போன போக்கில் வீரசுத்தியின் வளவில் கட்டியிருந்த நாம்பனை அவிழ்த்துக் கலைத்துக் கொண்டு வந்து எமது வீட்டு வளவிற் கட்டிலிட்டார்.
தூரத்திலே பேரிரைச்சல் கேட்டது. "டே நீ மாடுகட்டி வளர்க்கப் போறியே, பாப்பம். இன்றிரவுக்குள்ளே நீயுமில்லே

Page 13
மாடுமில்லை" என்ற அறைகூவற் சத்தம் அது.
சிறிது பின்னாக, வெளியே எனது பாட்டனார் சிலமணி நேரங்களித்து வீட்டுக்கு வந் தார். விட்டில் எனது தாயாரும் சிறிய தாய்மாரும் மாமாவும் குசுகுசுவென்று கதைத்தார்கள். இரவு எமது வீட்டில் பொருங் க ளே ப ர ம் நடைபெறலாம், மாட்டை அவிழ்த்துக் கொண்டு போக வீரகத்தியும் ஆட்களும் வருவார்களாம். நாங்கள் தடுத் தால் குழப்பம், அடிபிடி, வெட் டுக் கொத்து யார் யாருக்கோ ாதுவும் நட க் க லா ம் என்ற நிலையில் எங்கள் எல்லோரது மனங்களிலும் திகிலும் பரபரப் பும் கூடியுள்ளது. இதே வேளை யில் ஒருவர் பின் ஒருவராக எங் கள் அயலவர்கள் நாலுபேர் எமது தலைவாசலுள் நுழைந்த னர். அங்கிருந்த எனது பாட்ட னாருடன் ஏதோ இரகசியமாகக் கதைத்துவிட்டுச் சென்றுவிட்ட னர்.
பொழுதுஞ் சாய்ந்து கொண் டிருந்தது. நான் ஏதோ ஒரு பெரும் திகிற்காட்சியை அநுப விக்க என்னை ஆயத்தப்படுத் கொண்டு ஆவலாயிருந்தேன். விளக்கும் ஏற்றியாகி விட்டது. விளக்கொளி படலைவரை தெரி யத்தக்கதாக ஒரு முக்காலியில் வைக்கப்பட்டது. நான் படலை யைப் பார்த்துக் கொண்டு நடை சாரில் இருக்கிறேன். நாம்பன் எங்கள் வீட்டின் தெற் கு க் கோடிப்புறப் பூவரசமரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. எ ன து inmuon sLL 6uGIgough G765rg LrrL-Sarn (0)-sär மெதுவாக
ஏதோ பேசுவதும் வெளியே போவதுமாக இருந்தார். இப் படியாக இருக்கும் வேளையில் எனது அம்மா என்னைச் சாப் பாட்டுக்குக் குசுனிக்கு அழைத்
5rł.
போய் இருந்து சாப்பிடும் போது எனது அம்மா கேட்டாள், "நீ பயப்படுகிறாயா? பயப்ப டாதே. அவன் வீரகத்தி இனி இந்தப் படலைக்கே வரமாட் டான். வந்தால் அடித்துமுறித்துப் போடுவார்கள்" என் ற ர ஸ். எனக்கு வியப்பாக இருந்தது. யார் அடித்து முறிப்பது. இந் தக் கிழட்டுத் தாத்தா சாய் மனையிற் படுத்தபடி கிடக்கின் றார். பதினைத்து வயதுள்ள சின்னமாமா அங்குமிங்குமாக ஒடித்திரிகிறார். வீரகத்தியை அடித்து முறிக்க ஆர் இருக்கி றார்கள். அந்தச் சண்டியனை வெல்லமுடியுமா என்ற ஆதங் கத் தோ டு என் அம்மாவின் முகத்தைப் பார்த்தோன். 'தம்பி அப்போது வந்தார்களே நாலு பேர். எமது அயலவர்கள் அவர் களும் இன்னும் சிலருமாக எங் கள் வீட்டைச் கற்றிச் க வல் நின்று பாதுகாக்கினம். சிலர் வீர கத்தியின் வீடுதேடிப் போயிருக் கிறார்களாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் செய்தி தெரியும், நீபோய்ப் படு' என்று அம்மா
சொல்லவும் நான் 'அம்மா அந்த அயலவர்கள் எமக்காக ஏன் வந்தார்கள்? வீர கத் தி
எ மது சொந்தக்காரனாச்சே, சொந்தமில்லாத இவர்கள் எங்க
ளு க் கா க வீரகத்தியை ஏன் அடிக்க வேண்டும்?' என்றேன். தம்பி நீ கேட்பது சரிதான்.
வீரகத்தி எமது சொந்தக்காரன்
22

ஆனால் கூடாதவன் கெட்ட வன். எமது அயலவர்களோ மிக நவ்லவர்கள்; இவர்கள் ஏழைக ளாயிருப்பதால் இவர்களைக் கொண்டு அடிமை குடிமைத் தொண்டு செய்விக்க வேண்டும் என்ற விருப்பம் எம்மவர்கட்கு. இந்த வீடு ஒன்றுதான் இந்தக் கொள்கைக்கு மாறாக நிற்கின் ADI •
மாடு வாங்கியதும், காசுதராமல்
விட்டதும், எம்மோடு கொளுவிச் சண்டைபிடித்து எம்மை அடக்கி  ைவத் தால் அயலவர்களும் அடங்கி விடுவார்கள் எ ன் று
நினைத்துச் செய்தான். இனித் தான் தெரியும் அடங்குவது aurrrf? Er nug i LunTri GT 67 p
கூறி முடிக்கவும் நிம்மதிப் பெரு
நாம் இவர்கள் எமக்கு மூச்சுடன் நித் தி  ைர வரப் அடிமை குடிமைத் தொண்டு போய்த் தூங்கிவிட்டேன். செய்ய வேண்டாம் என்கிறோம். இதனாற் கோபமுற்ற வீரகத்தி (தொடரும்)
镑 臀 懿 S56G63) fÈSéj
25-வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு. - எம்முடன் தொடர்பு கொள்ளவும். - விலை 75 ரூபா
அட்டைப் பட ஓவியங்கள் 00 ست 20 م
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்) என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் 20 - 00
(இறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்) ண்டில் கேள்வி-பதில் s 220 تا 0 سے துர - டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்) 30.00 நான் 220 00 -ه
(தில்லைச்சிவன் கவிதைச் சுயசரிதை) மீன்குஞ்சுகள் 60 - 00
(சிறுகதைத் தொகுதி க. ச. முருகானந்தன்
மேலதிக விபரங்களுக்கு
மேல்லிகைப் பந்தல்" 234 ,ே காங்கேசன்துறைவிதி, யாழ்ப்பாணம்.
23

Page 14
டாக்டர் எம். கே. முருகானந்தனின் *வைத்திய கலசம்"
வெளியீட்டு விழா
நிறைவான நாள். 2 - 0 - 94 சித்திரா பெளர்ணமி அன்று மாலை பருத்தித்துறை வடஇந்து மகளிர் கல்லூரி மண்டபம், வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தா ளர்கள் போன்ற மக்களால் நிறைந்திருந்தது. பல்துறை சார்ந்த பெரியவர்களின் ஒன்று கூடலினால் களைகட்டியிருந்த அந்த மண் டபத்தில் கூடி இருந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒன்றை ஆவ லோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்க புe. "தாயாகப் போகு ) உங்களுக்கு" என்ற நூலை எழுதிய 1989 ம் ஆண்டு இலங்கைச் சா கி த் தி ய மண்ட்லம் பரிசைப் பெற்ற வைத்திய கலாநிதி எம். கே. முருகானந்தனின் " " வைத்திய கலசம்" என்ற நூல் தமது கையில் எப்போது கிடைக்கும் என்றே பொறுமையுடன் காத்திருந்தார்கள்.
பூரண நாளன்று பூரண கும்பம் பொலிவுறச் சரியாக மாலை
மூன்று இருபதுக்கு எழுத்தாளர் தெணியான் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. சம்பிரதாய மரபுக்கேற்ப இடம் பெற்ற மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, தமிழ்த் தாய் வாழ்த் து, அக வணக்கம் என்பன இடம் பெற்றன. தொடர்ந்து விழாவுக்கு வருகைதந்திருந்த அனைவரையும் ஹாட் லிக் கல்லூரி விஞ்ஞான ஆசிரியரும், வளர்ந்து வரும் நாடகாசிரிய ருமான திரு. பா. ரகுவரன் அவர்கள் வரவேற்று உரையாற்றி
ܗܝ
அடுத்துக் கலை பண்பாட்டுக் கழக வடமராட்சிப் பொறுப் பாளர் திரு. விபுலன் அவர்கள் தமது வாழ்த்துரையில் "டாக்டர் முருகானந்தன் போன்றவர்களது சேவை எமது மண்ணுக்குத் தேவை. இவ்வாறான காலத் தேவையை மனதிலே கொண்டு இது போன்ற இன்னும் பல நூல்களை டாக்டர் அவர் க ள் தொடர்ந்தும் எழுத வேண்டும். அவை பல பதிப்புகலாக வர வேண்டும்" எனவும் வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
தலைமை வகித்த தெணியான் அவர்கள் உரையாற்றும்போது *"டாக்டர் முருகானந்தன் அவர்கள் தனித்து ஒரு வைத்தியராக இருக்கவில்லை ஒரு கலைத்துவம் மிக்க படைப்பாளியாகவும் மிளிர்கின்றார். இத்தகைய இரண்டு துறை சார்ந்த புலமையும் உள்ளட்ைமயினால் தான் இந்த வைத்திய கலசம் என்னும் கருத் துச் செறிவும், பயன்பாடும் கொண்ட கனதியான நூலைத் தர முடிந்தது. இந்த நூலின் ஊடாக பல நோய்கள் பற்றியும் அவற் றுக்கு நாம் செய்து வந்த கைமருந்து பற்றியும் இதுவரை இருந்து
24

வந்த பிழையான நோய் சார்ந்த சமூக மூட நம்பிக்கைகளை உடைத்துச் செல்கின்றார். இவ்வாறான (நூல்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டியது அவசியம். இது குடும்பத் துக்கு மங்களத்தையும் தரும்" எனக் குறிப்பிட்டார்.
வெளியீட்டுரையை உதயன் புத்தக நிலைய உரிமையாளரும் தலைசிறந்த கலை இலக்கிய விமர்சகரும் ஆகிய திரு.து. குலசிங் கம் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தமது உரையிலே “உலகம் சுருங்கி வர நாம் மட்டும் ஒதுங்கிச் செல்வதையும், யாழ்ப்பாணத் தில் அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டியதன் அவசியத்தையும் இதில் அந்த அந்தத் துறை சார்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவையையும், குறிப்பிட்டுப் பேசினார்.
வெளியீட்டுரையைத் தொடர்ந்து நூலாசிரியரிடம் இருந்து முதற் பிரதியை அவரது பெற்றோர்களான திரு. திருமதி மு. கதிரவேற்பிள்ளை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பெற் றோரிடம் தமது நூலைச் சமர்ப்பனம் செய்த டாக்டர் முருகானதி தன் அவர்கள் கண்களில் கண்ணிர்வார, தாய் தந்தையர் பாதங் களில் வீழ்ந்து வணங்கிய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. உணர்ச்சி மேலீட்டினால் சபை சில கணங்கள் மெளனித் துக் கிடந்தது.
நூல் பற்றிய கருத்துரையாற்ற வர இருந்த Guig nrgnifia uff தந்தி அவர்கள் வரமுடியாது போன்மையினால் அவர் அனுப்பிய கடிதத்தினை திரு. பா. ரகுபரன் அவர்கள் வாசித்தார். அதிலே நந்தி அவர்கன் "தேனுக்கு விளம்பரம் தேவையில்லை. தம்பி முருகானந்தனின் கலசத் தேனை அனைவரும் பருகட்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த பாண் டித்தியம் பெற்றவரும், ஞானாசாரியர் கல்லூரி ஆசிரியருமான திரு. ஆ. கந்தையா ஆசிரியர் அவர்கள் நூல்பற்றிய கருத்துரை ஆற்றினார். டாக்டர் உமா சிவபாதசுந்தரம் அவர்களும் ஒரு மதிப்பீட்டுரையை வழங்கினார்கள்.
நூலாசிரியர் பேசும் போது தமக்கு இன்று மகிழ்ச்சியை அளிக் கும் இந்த கலசமாகிய, குழந்தையைத் தான் பிரசவிப்பதற்காக அடைந்த வேதனையையும் இன்று அது கையில் தவழ்கின்ற போது தான் உண்மையிலேயே பூரண திருப்தி அடைவதாகவும் இந்த நூலை எழுதியதன் நோக்கத்தையும் குறிப்பிட்டார்கள் "பொது மக்களுக்குச் சொல்ல வேண்டியதை நூலாக்கியுள்ளேன். இது வந்த நோயினைத் தீர்க்கவும், நோயினை வரவிடாது முன் கூட்டியே தடுக்கவும் பயன்படும் என நம்புகிறேன். கலசம் என்பது பாத்திரம், இதில் கைபோட்டுப் பாருங்கள் ஏதாவது இருந்தால் கிடைக்கும்' எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக அறிவோர் கூடல் நண்பர்கள் சார்பில் ஆசிரியர் திரு, சி. சிவநேசன் அவர்களின் நன்றியுரையுடன் விழா சிறப்புடன் நிறைவு பெற்றது.
பொ. கமலரூபன்
25

Page 15
உபகுப்தனுக்காகக் காத்திருக்கையில்.
r சோ. பத்மநாதன்
திரும்பிப் பார்க்கிறேன் வாழ்க்கை படமாக விரிகிறது பிஞ்சு வயதில்
தாயைப் பிரிந்து வேண்டாப் பிறவியாய் விட்டுக் வீடு அலைந்து
கடைசியில் பொன்னாச்சியின் வாசலில் ஒதுங்கி ஆச்சியின் பேரன் ஒளித்துக் கொணர்ந்து தரும் ஒரு கவளத்தில் உயிரைப் பிடித்து.
வேறு பெண்கள் இல்லாத சூழல்
பருவம் தரும் மினுமினுப்பு
எனக்கோ வான உச்சியில் உலாவும் உணர்வு
ar 6ŵr i unrif 60paud(e))
சகவாசத்துக்கு
ஏங்கும் ஆண்களை
உதாசீனம் செய்வதில் உள்ள சுகம் எனக்காகச் சண்டையிடும் ஆண்களை
லட்சியம் செய்யாது.
அட, அது ஒரு காலம்
தொல்லைகள், உறவுகள், சுமைகள் மாதங்கள் உருண்டோட பிள்ளை குட்டிக் காரியாக நான் எனக்கு இரண்டு பெண்கள் சரித்திரம் திரும்புகிறது: பெண்கள் கண்ணுக் கெட்டாத் தூரத்தில் காலம் உருள்கிறது உறவுகள், சுமைகள், பிரிவுகள் பெற்ற ஆண்கள் பெரிய இடங்களில் "வாழ்க்கைப் பட்டுள்ளதாக" தகவல்!
26

நானோ பொன்னாச்சிக் கிழவியின் கோடியில் அடுத்தடுத்து வந்த பிரசவங்களால் உடல் நலிவுற்று
யாரும் என்னைப் பொருட்படுத்தக் காணோம் பொன்னாச்சி பேரனுக்குச் சொல்கிறாள் "அப்பவே சொன்னன் கேட்டியா, பெட்டையை ஆதரித்தால் தொல்லை எண்டு? எத்தினை தரம் பெட்டையளைச் சுமந்து திரியிறாய்?"
அதோ,
ஒரு பெட்டையைச் சுற்றி எத்தனை இளசுகள் மணிச வர்க்கத்தில் என்றால் தலைகீழ் ஆனால் எங்களிடையோ என்னை யாரும் தேடுவதாய் இல்லை. பொன்னாச்சி வீட்டுக் கோடியில் ஒரு பழம் சாக்கில் நான் ஓர் உபகுப்தனுச்காகக் காத்துக் கொண்டு
அறிமுக விழா வைத்திய கலசம்
214 5 = 94 அன்று மாலை டாக்டர் எம். கே. முருகானந்தன் எழுதிய “வைத்திய கலசம்" நூலின் அறிமுக விழா மல்லிகைப் பந்தல் சார்பில், எழுத்தாளர் ஒன்றியத்தில் காலாநிதி நா. சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது.
திரு. டொமினிக் ஜீவா அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். திருவாளர்கள் வ இராசையா. செங்கை ஆழியான், டாக் டர் எஸ். பி. ஆர். சீர்மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
டாக்டர் முருகானந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். முடிவாக திரு. த. கலாமணி நன்றியுரை வளங்கினார். ஏராளமான பிரமுகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பித்தனர்.
பட்ைப்பு இலக்கியம் அல்லாத அறிவியல் சார்ந்த இந்த நூல் அறிமுக விழாவுக்கு வந்திருந்த பல பிரமுகர்கள் முதலில் தமது திருப்தியைபும் சந்தோஷத்தையும் டாக்டர் அவர்களுக்குத் தெரி வித்து மகிழ்ந்தனர். இது இப்புத்தக அறிமுக விழாவில் குறிப்பி டத்தக்க அம்சமாகும்.
27

Page 16
வைத்திய கலசம்" பற்றிய
சில கருத்துக்கள்
டொக்டர் முருகானந்தன் ஒரு மனிதாபிமானமுள்ள ஆங் கில மருத்துவ முறைகளை விஞ் ஞான பூர்வமாகவும் гера கலை உணர்வுடனும் அனுஷ் டித்துத் தொழிலை ஒரு சேவை யாகக் கருதும் ஒரு சிறந்த வைத்தியர் - இதை நான் இப் பிரதேசத் மக்களுக்குக் கூற "ேலே. இந் தக் கருத்து வைத்திய நண்பர் த்ெதியிலும், நிபுணர் மத்தி லும் உண்டு என்பதை அறிவிக் வே இங்கே கூறுகின்றேன். மருத்துவம் ஒரு விஞ்ஞானம். அது ஒரு &606){LD én-L- « DUES வம்”ஒரு தொழில். அதே வேளையில் அது ஒரு சேவை: மருத்துவம் உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு நல்ல"வைத்தியர், ஒரு வ ரின் உடல், மனம், ஆத்மா, குடும் பம், சமூகம் அனைத்தையும் மனத்தில் கொள்கின்றார் ஒரு நோயாளியைப் பரீட் சிக் கும் போது. ஒரு நல்ல வைத்தியர் நோயாளிகளுக்கு சிகிச்சை செய் வதோடு நிற்காமல், ககமுள்ள வர்களுக்கும் உபதேசம் செய்கி றார். ஆகவே ஒரு வைத்கியர் நல்ல ஆசிரியராகவும் பேரதக ராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அப்படியான ஒரு
28
- நந்தி
வர் எழுதிய நூல்தான் இன்று இங்கு அரங்கேற்றப்படுகிறது.
"வைத்திய கலசம்" என்ற இந்த நூல் தமிழ்ப் படிக்கும் மக்களுக்கு ஒரு சஞ்சீவி. அந்த நூலின் குணங்களை எடுத்துக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகின் றேன்.
இந்தக் கையடக்கமான நூலில் மிகவும் பொதுவான அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 40 மருத்துவ விஷயங் கள் பற்றித் தரப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் மக்களால் தவிர்க்கப்பட வேண்டிய நோய் கள். முருகானந்தன் தினமும் பல வித மா ன மக்களையும். நோய்களையும், கவலைகளை யும், ஏக்கங்களையும். வேலை களையும் சந்திப்பவர். அவரால் தான் முக்கியமான நோய்களை
யும் பிரச்சினைகளையும் தேர்ந்
தெடுக்க முடியும்"
இரண்டாவது- அவசியம்
தெரிந்து இருக்க வேண்டிய
குறிப்புகளை மட்டும் நட்சத்தி ரம் போட்டு படிப்படியாகத் தந்திருக்கிறார். ஆகவே நாங் கள் நூலைப் படித்துக் குறிப்பு எடுக்கவேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் 35 பக்கங்களில்

அல்லது 500 பக்கங்களில் எழு தும் விஷயங்களை 115 பக்கங் களில் இரத்தினச் களை சுளையாகத் தந்திருக் றார். இதுபோல் சத்துள்ள ஆனால் இனிக்கும் மருத்துவ நூல் தமிழில் மிக மிகக் குறைவு மூன்றாவது அத்தியாவசிய கருத்துக்கு முதலிடம் தருக றார். சிலர் நோய்களைப்பற் எழுதும்போது த ம் மருத்துவப் பாட நூலகள கண்டவாறு நோயின் மூலம், நோயியல், நோயின் அதாவது சிக்கல்கள், இருப்பு இப்படியாக எழுதுவார்கள். ஆனால் முருகா னந்தன் முதலில் மனத்தில் தெம்பு ஏற்படுத்துகிறார்.நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் தரு கிறார். நோயை ஆரம்ப நிலை யிலேயே கண்டு கொள் ஞ ம் குணங்களைக் கூறுகிறார். அவர் எழுதியிருக்கும் முதல் வசனங் களைப் பாருங்கள்:
பலரும் அவரை குறையாக
ந்திருப்பதும், வீண் பயங் gళ్లి அநாவசியமான சந் தேகங்களுக்கும் ஆளாவதும்
மக்கள் முறையான வைத்திய முறைகளைக் கைக்கொள்ளாதது மான நோய்தான் "பிரஷர் வருத்தம் இது உயர் இரத்த அமுக்கம் பற்றிய அத்தியாயத் நின் ஆரம்பம்,
நெஞ்சில் ஏற்படும் வலிகள் ால்லாமே இருதய நோய்களால் உண்டாவதில்லை.இது இன்னும் ஒரு அத்தியாயத்தின்முதல்வச ணம். வாசித்ததும் தொடர்ந்து படிக்கிறோம்.
நீரிழிவு நோய் பற்றிய அணா வசியமான பயம் பொதுவாக திலவுவதைக் காண்கின்றோம். ப் ப யம் தவறானது. இது ன்னொகு ஆரம்ப வசனம்.
"நாம் இருக்கப் பயம் ஏன் ??
29
ன்ன்ற தெய்வ வாக்கு இங்கே ஒலிக்கிறது. ஆம், மருத்துவர் தெய்வத்தின் பிரதிநிதி அதில் முன்வரிசையில் நண்பர். έ, ιδι ή முருகானந்தன்.
அண்மைக் காலத்தில், யாழ் குடா நாட்டில் நெருப்புக்காய்ச் சல் பெரும் pré660)swunras மாறி வருகிறது. போர், அகதி வாழ்க்கை, அடிப்படை சுகா தார வசதிகள் பாதிக்கப்பட் ம்ை மருத்துவத் தட்டுப்பாடு போன்றவை காரணமாகிறது. ஒரு சமூகப் பிரக்ஞை உள்ள மனிதனால்தான் இப்ப்டிக் கட்டு ரையை ஆரம்பிக்க (tpւգ-Ապւb. அதன் பின்புதான் முருகானந் தன் Typhoid பற்றிய விபர களைத் தருகிறார். நம்மை அறி யாமலே தொடர்ந்து படிக்கின் Ο Φπιb.
இப்படியாக முதல் வசனங் களே எம்மை ஈர்க்கின்றன. சிறு கதை எழுதுபவர்கள் கையாளும் உத்தி இது. டொக்டர் முருகா னந்தன் சிறந்த மருத்துவர் மட் டுமல்ல, அவர் நல்ல பேச்சாளர், மருங்துவ போதகர். எழுத்த வார். அவர் கையிலே, வாயிலே தமிழ்_செந்தமிழாக, மணியா ஒலிக்கின்றது. தமிழ் த பட் டு மருத்துவ நூல்களில் கானப் படுவதுபோல் தேவையில்லாத இங்கிலீஸ் சொற்கள் அவர் és Gyái துக்களை குளப்பிஅடிப்பதில்லை. அழகான சிறிய தமிழ்ச் சொற் களை உபயோகிக்கிறார். locos துவம் எழுதவந்த முருகானத் தன் தமிழையும் அலங்கரிக்கின் றார். அதனால்தான் ஆரம்பத் தில் முருகானந்தன் தமிழ்த் தாய்க்குத் த க் த வைத்திய கலசம்" என்று கூறினேன்.
இந்த நூல் தமிழ் மக்களின் வீடுகள் ஒவ்வொன்றிலும் இருக்க வேண்டும்.

Page 17
உங்கள் கடிதங்கள்
நான் கொழும்புப் பயணத்தை முடித்துக் கொண்டு நலமே சென்னை வந்து சேர்ந்தேன்.
நான் யாழ்ப்பாணம் வந்து தங்களை எல்லாம் சந்தி க்க நேர்ந்தது எனது பேறு என்றே நினைக்கிறேன். அங்கு வந்து தங் களோடு உறவாடியதும், உரையாடியதும் மறக்க முடியாத வாய்ப் புக்கள் ஆகும்.
எனது வருகையின் போது தாங்கள் என்னை வரவேற்றதும் எழுத்தாளர் ஒன்றியம் சார்பாக நடத்திய கூட்டமும் என்னை மிகப் பெருமைப்படுத்தின. நண்பர்கள் முருகையன், நந்தி, கவிஞர் இரத்தினதுரை மற்றுமுள்ளவர்களுக்கு எனது நன்றியைத் தெரி வியுங்கள். \
என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் செல்ல முனைப்பாக இருந்தவர் தணிகாசலம். அவரது முகவரி தெரியவில்லை என்பது என் குற்றமே. அவருக்கும் நன்றியைத் தெரிவிக்கவும்.
சென்னை, கோமல் சுவாமிநாதன்
உங்களை அன்று தொட்டு விளங்கிக் கொண்டவர்களில் நானு மொருவன். தூண்டிலில் ஒரு கேள்வி பதிலுக்கு நீங்கள் சொன்ன பதில் எனது மனதைத் தொட்டது. யார் அந்தப் பிரமுகர்? இப் படியானவர்களைத் தேடி இனிமேல் நீங்கள் போக வேண்டாம்! நிச்சயம் நாளை அவர்கள் உங்களைத் தேடி வரத்தாள் போகி றார்கள்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுக் காலமாக ஒரு சஞ்சிகையை நடத்தும் ஓர் ஆசிரியர் எங்களைத் தேடி மாதா மாதம் மல்லிகை யைக் கொண்டுவந்து தருவது எத்தனை கெளரவம் மிக்க செயல். உலகத்தில் எந்த நாட்டிலுமே நடக்கமுடியாத அதிசயச் செயல் இது. இது இந்த யாழ்ப்பாணத்து மண்ணில்தான் முளைவிட்டுள் ளது. இதற்காக உண்மையில் நான் பெருமைப்படுவதுண்டு. இதை யொட்டி நீங்கள் மனச் சோர்வடையக் கூடாது
நீங்கள் எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து நடந்து வந்தவர்கள். எத்தனையோ மனிதர்களைக் கண்டு, கதைத்து, புழங்கி அனுபவப்பட்டவர்கள். இப்படியானவர்களும் இங்ரு உள் ளார்களே என்ற நினைப்பில் அந்தச் சம்பவங்களை மறந்து விடு வதுதான் நல்லது.
வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் இப்பொழுது எழுதுவது குறைந்துபோய் விட்டது. என்ன காரணம்? அவர் களு டன் தொடர்பு கொண்டு மீண்டும் மல்லிகைக்கு அவர்களைக் கொண்டு வந்து சேர்ப்பியுங்கள்.
30

வரதருடைய தீவாத்தியார்’ திடீரெனச் சொல்லாமல் கொள் ளாமல் நின்றுவிட்டது. தில்லைச்சிவனின் ‘அந்தக் காலத்துக் கதை கள்" படிக்கச் சுவையாக உள்ளது. தொடர்ந்து இப்படியே பல ரையும் எழுதத் தூண்டுங்கள்.
25 வது ஆண்டு மலருக்குப் பின்னர் ஆண்டு மலர்கள் இதுவரை வெளிவரவில்லை. மல்லிகை ஆண்டு மலர்கள் சேகரித்து வைக்கப் படத்தக்கவை என்பது எனது எண்ணம். அந்த மலருக்குப் பின் னர் கால நிலை சீர்கெட்டுப் போயிருப்பது என்னவோ உண்மை தான். அதே சமயம் சூழ்நிலையையும் மீறி, தனி இதழ்கள் இந் தக் காலத்தில் வெளிவந்து கொண்டு தானே இருக்கின்றன? ஆகவே மலர் வெளியிடுவதையும் உங்களது வேலைத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்துப் பிறக்கப் போவது மல்லிகைக்கு முப்பதாவது ஆண்டு இந்த ஆண்டு ஆரம்பத்துடன் மல்லிகையின் லே - அவுட்டை மாற்ற முயற்சியுங்கள். ஏனெனில் மாதா மாதம் பார்க்க ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது மல்லிகை.
மல்லிகை ரசிகர்கள் கனபேரை எனக்குத் தெரியும். என்னி டம் நேரில் கதைக்கும்போது மல்லிகை பற்றிப் பலதும் பத்தும் பேசிக் கொள்வாரிகள். ஆனால், அந்தக் கருத்துக்களை மல்வி கைக்கு எழுதித் தெரிவிக்கப் பின் நிற்பவர்கள். மல்லிகையின் இலக்கியப் பக்கங்களில் தவிர்க்க முடியாதது, கடிதப் பகுதி என் பது எனது கருத்து. முடியுமானால் கடிதங்களைப் பெற்றுப் பிர கரியுங்கள்.
Lomt6 filmů. ம. தவயோகன்
-5
"சுப. மங்களா" இலங்கை மலரில் உங்களது உருவத்தை அட் டையில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருத்தி. உள்ளேயும் படமும் தகவல்களும் இருந்தன. படித்துப் பார்த்ததில் சந்தோசம் எனக்கு. கோமல் சுவாமிநாதனின் குறிப்பில் ஒன்று தெரிந்தது. பலர் முதல் நாளே அவரைத் தேடிச் சென்று கண்ட தாகவும், உங்களை அவர் ஆள் விட்டுத் தகவல் தந்த பின்னரே அடுத்த நாள் காலை அவரைப் போய்ச் சந்தித்ததாகவும் அவரது குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனது சிநேகிதி ஒருத்தி அதைப் படித்துப் பார்த்துவிட்டுக் கூறினாள்: "எங்கட ஜீவா மல்லிகை ஆசிரியரல்லவா அவர் அப் பிடித்தான் இருப்பார்" இதைக் கேட்டு எனது மனதுக்குள் ஒரு வகைச் சந்தோசம் பிறந்தது.
ஆசிரியர் என்ற காரணத்தை விட, நீங்கள் முன்னமேயே ஒரு படைப்பாளி. தாராளமாக மல்லிகையில் உங்களது எழுத்தை ாழுதுங்கள் உங்களது எழுத்தை ரசிப்பதற்கு என்னைப் போன்ற வர்கள் தயாராகவே இருக்கிறார்கள். சமீபத்தில் மறைந்த டானியல் அன்ரனியின் உருவத்தை அட்டையில் பொறித்துச்
31

Page 18
சென்ற இதழை வெளியிட்டிருந்தீர்கள். இது கூட ஒரு நபி முயற்சிதான். எழுத்தாளன் மறைந்து போனாலும் கூட அவனை நினைவுகூர இந்த மண் என்றுமே"தயாராகவுள்ளதை உங்களது செயல் நிரூபிக்கின்றது.
முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதுபெரும் எழுத்தாளர் திரு. அ. செ. மு. பற்றிய கட்டுரைத் தகவல் தேவையானதுதான். சகல மட்டங்களிலும் இந்த மண்ணுக்காகவும் மொழிக்காகவும் *இபட்டுழைத்த படைப்பாளிகளின் கடைசிப் புகலிடம் வயோதிபர் 4-ம் தானா என்பதை நினைக்கும்போது மனதை என்ேைமா இங்கின்றது. இதற்கு விடிவே இல்லையா என மனம் அங்கலாய்க்.
கிறது.
சுன்னாகம், ஆர். சுபாஷினி
பல தடவைகள் நீ கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள், 83)6 யகத்திற்குக் கட்டாயம் ஒரு தடவை வருவதாக. ஆனால் இது வரையும் வந்தபாடாய்த்தான் காணவில்லை "சுபமங்களா' ஆசிரியர்
கூட இங்கு மலையகத்தில் பல பிரதேசங்களுக்கு வந்து போய் விட்டார். உங்களுக்குத்தான் நேரம் கிடைக்கவில்லைப் போலும்
மலையகம் முன்னரைப் போல இல்லை. படித்த இளத் தலை முறையினர் கலை இலக்கியத் துறைகளில் புகுந்து தமது ஆற்றலை இன்று வெளிப்படுத்தி வருகின்றன்ர். கற்பனை உலகத்தில் சஞ்ச ரித்து வந்த கலைஞர்கள் இன்று தாம் வாழும் மண்ணைப் பற்றி யும் மக்களைப் பற்றியும் சிரத்தை எடுத்துப் படைப்பிலக்கியம் செய்து வருகின்றனர்.
எங்களுக்கும் ஒரு குறை மல்லிகையைப் போல சிற்றிலக்கிய ஏடுகள் எம்மிடையே இல்லை. அத்துடன் பெரிய பிரதேசமான படியால் போக்கு வரத்துக் கஷ்டம் எம்மை அலைக்கழிக்கின்றது, கூடிப் பேச, கலந்துரையாட, கருத்துப் பரிவர்த்தனை செய்து கொள்ள வாய்ப்புக்கள் நழுவிப்போய் விடுகின்றன. அதனால் நமது வளர்ச்சி குன்றிப்போய் விடுகின்றது. உங்களது பிரதேசத்து இலக் கியச் செய்திகளை மல்லிகையில் தொடர்ந்து படிக்கும் போது இச் செய்திகளை உண்மையானவை தானா? என்றொரு சந்தேக மும் மனதில் உண்டகாமலில்லை. ஆனால் மல்லிகை பொய் சொல்லாது என்பதில் எமக்கொரு திடமான நம்பிக்கை ஆகவே இந்தச் சூழ்நிலையில் உங்களாலும் உங்களைப் போன்றவர்களா லும் எப்ப்டி இயங்கிவர முடிகிறது? கப மங்களாவில் கோமலின் நேரடி வர்ணனைகளைப் படிச்துப் பார்த்த பொழுது எங்கோ கற்காலத்தில் வாழும் நமது சகோதரர்கள் என்ற உணர்வே எம் மனதில் மேலோங்கி உள்ளது. அதே சமயம் உங்களதும் உங்க ளைப் போன்றவர்களினதும் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது எதை நம்புவது என்பது சந்தேகமாகவுள்ளது.
பதுழை பூ மதுசூதனன்
32

i
வீடு நோக்கி விரைந்து நடந்து, படலைவரை வந்த டைந்த பிறகே, அங்கு வந்து சேர்ந்துவிட்டதான பிரக்ஞை நெஞ்சுக்கு வருகிறது. அதன்பின் பும் உள்ளே நுழைவதற்கு இய லாத ஒரு தயக்கம். கால்கள் அசைய மறுக்கின்றன. வெளியே ஒழுங்கையில் திகைத்து நிற்கின்
Dati.
தலை முற்றாகக் குழம்பி. உடல் அசதியில் தளர்ந்து. முகம் பிணமாக. பார்ட்பதற்கு பரிதாபமாக அவர் தோன்றுகின் றார்.
இப்பொழுது எந்த முகத்து டன் உள்ளே போவது! V மாமாவுக்குத் தாள முடிய லில்லை. மனசு சஞ்சலப்படுகின் றது.
பாதங்களுக்குக் கீழ் மிதி ட் டுக் கிடக்கும் இந்த மண்மீது விழிபதித்து ஏங்கி நிற்கின்றார்.
பூமியில் பாதங்கள் நிலைத்து அசைவுகள் அடங்கி, உள்ளோட் டங்கள் உறைந்து சில நிமிடங் கள் கல்லாகச் சமைந்துபோக.
பூரீராமனின் திருவடித் தூளி பட்டு நாடி நாளங்களில் குருதி சுரந்து உணர்வெழுந்து கிளர்ந்து
33
;ہ ہمہ حصہ سیہہ حیہ حیہ حیہ سیہہ حمہ سیہہ حمحہ} துச்சாதனன்கள்
-தெணியான்
~~~~ ~~~~~~ -^w ~~~~~~~~
உளளுயிர்த்தாளே, கல்லாகிக் கிடந்த புதுமைப் பித் தனி ன் "அந்த அகலிகை!" அவள்போல் கவனங்கள் மெல்ல அரும்பி, தலை தூக்கி மேற்கு வானை எதேச்சையாக நோக்குகின்றார்.
துப்பாக்கிச் சூ டு பட்டு ச் சாய்ந்துபோன அந்தச் சூரியன் குருதி வெள்ளத்தில் மூழ்கி குற் றுயிராகக் கிடக்கின்றான் வான விளிம்பில்,
இனி அவனும் சுடுகாட்டில் விழுந்து நீறிப்போக, காரிருள் விரைந்து வந்து சூழ்ந்துவிடும்.
இனிமேலும் எப்படித் தாம தித்து நிற்பது!
தயக்கம் நீங்கி, படலை திறந்து உள்ளே போகும் திராணி மாமா ம ன சுக் கு இன்னமும் வரவே இல்லை.
மாமா மாத்திரம் தனித்து வந்து நிற்கின்றார். அவர் கால் எடுத்து முற்றத்தில் வைக்கும் போது, உள்ளே இருந்து அத் தனை விழிகளும் துப்பாக்கிச் சன்னங்களாகத் தாட்சணியமில் லாது நெஞ்சில் வந்து குத்தப் போகின்றன.
எங்கே என்ரை பிள்ளை?"
"மாமா தம்பி எங்கே?"

Page 19
* எடே, என்ரை பே ர க் தஞ்சு எங்கேயெடா?"
• அண்ணா tonToT?” ”
au63grãiv GM Gvi unr
விழிகள் பொங்கி எழும்பும் இந்த ஏக்க வினாக்களுக்கெல் ம்ை என்ன பதில்?
அவனுக்குப் பின் னா ல் தொடர்ந்து மாமாவும் சென்ற போது, மனசில் எவ்வளவு நம் பிக்கையுடன் அவர் போனார். அவனை மீட்டு வருவேன் என்ற தீரத்துடன்தான் சென்றா fί , அப்பொழுது யாரோ சொன் னார்கள், பெண்கள் போனால் நல்லது" என்று.
அவர்களுக்குத் தெரிந்திருக் Spg). LDrt Left போவதானால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அப் பொழுதே சூசகமாக உணர்த்தி இருக்கிறார்கள்.
பெண்டுகள் போ னா ல் முகாம் வாசலில் விட்டு வைத் துப் பிரியமாக ஜவான்கள் பாத் திருப்பார்களாம். முறைப்பாடு செய்து, அழுத கண்ணீர் தெரிந் தால் பிடித்துக் கொண்டு Guitar பொடியனைச் சிலசமயம் விட்டு விடுவார்களாம்.
அம்மா, அம்மம்மா, அக் காச்சியவை கண் களி ல் ஆறு பெருக ஜவான்களுக்குப் பின் னால் அவனோடு ஒட் டி. க்
கொண்டு செல்வதற்கு அடியிடு கிறார்கள்.
ஜவான்கள் மனசுக்கு அக் காச்சியவை மூவரும் இதமான சுெ சுெப்பாக இருந்திருக்க ($ରu ବର୍ତot டும். அந்த வாலைக் குளிர்ச் சியை விழிகளால் பருகிய ஜவான் கள் அவர்களைத் தடுத் து நிறுத்தவில்லை.
மாமா மனசு ஜவான்களை விளங்கிக் கொண்டு விடுகிறது. அவர் தடுக்கின்றார்: வேண்
34
டாம் நான் போறன்’ என்பூ சொல்லி, பெண்டுகள் போயிருந் தால் இப்பொழுது ஒருவேளை அவன் வீடு வந்து சேர்ந்திருப் பானோ! மாமா ஆதங்கப் படு கின்றார்.
அவர்களைத் தடுத்து வைத் தது வீண் அபவாதமாகவா வந்து முடியப் போகிறது! இந்த உணர்வினால் மாமா குறுகிப் போகின்றார்.
இதுவரை உள்ளம் பேசாத ஒரு பேச்சு - தான் அந்நியப் பட்டுப் போனதான ஒர் உள்ளு ணர்வு - மாமா மனசைக் கலக்
கிப் பிசைகிறது.
படனல நோக்கி, அதைத் திறப்பதற்கு மாமாவின் ஒரு கரம் மெல்ல நீளுகிறது. எறிபட்டுத் துடிக்கும் மின் கம்பிபோல அந் தக் கர்த்தில் தணியாத நடுக்கம். நெஞ்சில் துருத்தியின் பொருமல், நடுங்கும் கரத்தினால் அந்தக் கிடுகுப் படலையை மெல்லத் திறக்கின்றார். தாழ்ந்த தலை நிமிரவில்லை. விரைவாக நடந்து கொண்டிருப்பதான தன்னுணர் வில் தளம்பித் தளம்பி நடை தடுமாறுகின்றார். வெடித்துச் சிதறிப்போகும் குண்டொன்று உள்ளுக்குள் பற்றிப் பரபரென்று எ ரிவது போல நெஞ்சுக்குள் மூண்டு கொண்டு வருகின்றது. அதனை இறுக மூடிக்கொண்டு சட்டென்று வீட்டுத் திண்ணை யில் ஏறி, ஒரு துண்டுதானும் எடுத்து விரித்துக் கொள்ளாமல் சாணத் தரையில் குப்புற விழுந்து படுத்து வெடித்துக் குமுறுகின் றாா.
எல்லோரும் அதிர்ந்துதுடித்தெழுந்து பதகளிக்கின்றார்
6.
அவன் இல்லை. அவன் வரவில்லை.

அவனோடுதான் மா மா திரும்பி வருவார் என்றல்லவா அவர்கள் எ தி ர் பார் த் து க் கொண்டிருக்கிறார்கள் !
வினா எழுப்பாத விடை 35. . . . . . மாமா அவர்களுக்கு இப்போது,
"ஐயோ. ஐயோ. என்ரை ராசா. என்ரைராசா. 'நெஞ் சைப் பிளந்தெழும் அவல க் குரல்கள்.
அப்பா, அம்மம்மா தலை யில் நெஞ்சில் அடித்து, மண் ணில் விழுந்து புரளுகின்றார்கள். அ க் கா ச் சி ய  ைவ நிலை குலைந்து அலமலந்து கதறுகின் றார்கள்.
*" என்ன. என்ன . என்ன நடந்ததாம்’ ஒடோடி வந்து கூடுகின்றனர் அயலவர்கள், " அச்சம் அவர்கள் உள்ளங்க ளைப் போட்டு உசுப்புகின்றது, ஜவான்கள் அடிக்கடி அங்கு வந்து போய்க் கொண்டிருக்கின் றார்கள். அவனால் தங்களுக்கும் என்னென்ன சோதனைகள் வந்து சேரப் போகின்றனவோ என்ற ஊமைக் கலக்கம் அவர்களுக்கு. எல்லோரும் மாமாவைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள்.
மாமாவுக்கு இயலவில்லை. (குரல் கம்மி நா தழுதழுக்கிறது" "ஆசைமாமா கொஞ்சம் தண்ணி தந்திட்டுப் போங்கோ.
என்ரை மாமா. உங்கடை கை
யாலை தாருங்கோ ஆசை of உங்கடை கையாலை தண்ணி. ஆசைமாமா..
Tsivoog on onr...""
மீண்டும் மாமாவுக்கு இயல வில்லை, மாமா பொருமுகின் றார். ஜவான்கள் "போ. போ " " என்று மாமாவை விரட் (டுகிறார்கள். மாமாவுக்கு எப்
35
படி முடியும்? அப்போது அவ னுக்கே தண்ணீர் கொடுத்து விட்டு வருவதற்கு!
அவன் கே ட் டானே. "'உங்கடை கையாலை. உங் கடை கையாலை . " திரும்பத் திரும்பக் கேட்டானே- அந்தக் குரல். LD nr Lorr gir turë gji/TDT விலகி வந்து கொண்டிருக்கின்ற போதும். தேய்ந்து தேய்ந்து கூர்ந்து கொண்டிருந்த அந்தக் குரல். இப்பொழுதும் மாமா வின் இதய ஆழத்தின் எங்கோ ஒரு சூனியத்திலிருந்து பெருகிக் கொண்டிருக்கிறது.
அப்படி ஏன்தான் அவன்
கேட்டானோ! மனசு தாளா மல் தவிக்கிறது.
**பொடியனை எங்கையா
வது மறைச்சிருக்க வேணும்'
"இப்ப என்ன ந ட க் கப் போகுதோ. ஆருக்குத் தெரி யும்? அவனைச் சும்மா விடான் கள். சித்திரைவதைதான் செய் வாங்கள்”*
"ஒமோம். வயதுக்கு மிஞ் சின. கண்ணுக்கை குத்திற வளர்த்தி பாருங்கோ. உடம்பும் அப்பிடித்தான். பதினெட்டு வய’ தெண்டால் ஆர் தப்புவான்கள்"
"பொடியன் த ங் க ம 1ா ன பிள்ளை. நல்ல சிரிச்ச முகம்"
""மனமும் அப்பிடித்தான். நல்ல இளகிய மனம். எல்லோ ருக்கும் உதவி செய்யிற குணம்'
"இக்கணம் பாருங்கோ. சுட்டுப்போட்டு பயங்கரவாதி தப்பி ஓடினான் எண்டு சொல் லுவான்கள்'
"நாளைக்கு எங்களுக்கும் இது நடக்களாம்"
'பின்னை. ...,
தெண்டே இருக்கிறது"
நடக்கா

Page 20
இவன் மாமன். தான் தப் பிறதுக்காகல்லோ."
** பெண்டுகள் போயிருந் தால் விட்டிருப்பாங்கள் எண்டு தான் அப்பவே சொன்னனான்"
வந்தவர்கள் அநுதாபங்கள். அபிப்பிராயங்களைக் கொட்டித் தீர்க்கின்றா ர்கள், பின்னர் தங் கள் எதிர்காலம் பற்றிய பயங் கர எண்ணங்கள் நெஞ்சி ல் முகிழ்ந்து வர அதன் @FTó நினைவுக்ளில் மூழ்கிப் போகின் றார்கள். உள்ளங்களில் புதைந்து கிடக்கும் பீதி, தி டீரெ ன க் கூவிக் கொண்டு வரும் ஷெல் போல நெஞ்சில் வந்து விழுகின்
- Oile
கும்மிருட்டு அவசரமாக எங் கும் கரிபூசிக் கொண்டு வருகின் றது. இனி, தங்கள் வீடுகளுக் குள் அவர்கள் போயாக வேண் டும். இரவு ச் சாப்பாட்டைக் கையோடு முடித்துவிட வேண் டும். விளக்குகளை அணைத்துக் கொண்டு கண்ணாம்பூச்சி ஆட் டம் போடும் தூக்கத்தைக்கட்டி யணைப்பதற்கு ஏங்கித் தவித்துக் கொண்டு கிடக்க வேண்டும்.
ஒருவர் ஒருவராக அவர்கள் மெல்ல நழுவுகிறார்கள்.
豹 "இந்தியனாமி. விசாரிச்சுப் போட்டு விட்டிடும் பாருங்கோ'
பொடியன் காலமைக்கு வந் திடும் கண்டியளோ. நா ன் எங்கை சொன்ன னெண் டு பாருங்கோ.1
சுருட்டுச் சுப்பர் சற்றுத் தரித்து நின்று சொல்லிக் கொண்டு, அவரும் கடைசியா கப் புறப்படுகின்றார்.
அவர் சொல்வதைக் கேட்க மனசுக்கொரு சுகம்; சுமை இறங் குவது போல தனிச்சுகம், இனி ஒரு ஆறுதல்.
36
கைகொடுத்து
மாமாவைத் தேடிக்
மனசு எதனை நச்சி ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றதோ அது சித்திக்கப் போகின்றதென இன்னொருவர் சோஷியம்போல வாய்திறந்து சொல்வாரானால் அதனைக் கேட்டு இந்த மனசு சொக்கிப் போகின்றது.
சுப்பீர் சொல்வதெல்லாம்
சற்றுக் கூடப் பிசகாமல் சாஸ்
வதமாக வேண்டும்
சுப் பருக்கு மாமாவோடு நல்ல ஒட்டு மாமாவுக்கு வரும் இட்டலிடைஞ்சல்களுக்கெல்லாம் உதவுகின்றவர். அவர் பெயர்தான் ஏதோ இப் பவும் பழைய சுருட்டுச் சுப்பர், இப்போது பழைய சுப்பரல்லர்.
அவர் இ  ைடயி டை யே கொண்டு இங்கு வந்து சேருவார். திண் ணையில் குந்தி, சப்பாணியிட் டுச் சாவகாசமாக அமர்ந்து
பேசுவதற்கு ஆரம்பித்தால், பத்
திரிகையில் பார்த்த தகவல்கள் எல்லாம் தனது சொந்த ஞானத் தில் விளைந்த முத்துக்களாக உதிரத் தொடங்கிவிடும்.
"நான் உங்கினை உள்ள வன்களைப் போலை கிணத்துத் தவளையே..! ஊரடிபட்டவன் கண்டியோ. கண்டியிலை சுருட் டுக் கடையிலை நிண்ட அந்த நா  ைள யி  ைல எத்தினை பேரைக் கண்டவன். பழமுந் திண்டு கொட்டையும் போட்ட வன் கண்டியோ..!"
"ஐயோ. அந்த ஊர் இந்தியச் சனங்கள். பெரிய பாவம் நல்ல சனங்கள்"
இந்தியா எண்டால். அது தமிழ் நாடுதானே..! எங்கடை தாய்நாடு’
'காந்தி,நேரு வேறை ஆர்: சுத்தத் தமிழர்: இரண்டுபேற்றை படங்களும் என்ரை வீட்டுச்

சுவரிலை கட்டித் தொங்க விட் டிருக்கிறன்'
எத்தனை தடவைகள் சொல்லி இருப்பார் அவருக்கு
இவைகள் Tச லித் துப் போவ ல்லை, நித்தமும் புதிது புதி சாக அவர் ஞானத்தில் பூத்த பாவனையுடன் அவர் பேசுவா: ff.
மாமா தலை எதனையும் ாண்டு கொண்டதாகக் காட்டிக் Garrersirnrigs வெறுமனே அசைந்து கொண்டிருக்கும்.
" சில சமயங்களில் அவ ன் வீட்டில் இருப்பான், அவனுக் குள் சுப்ப்ரைக் கேட்கக் கேட்க உள்ளூர தகைப்பு. மாமா இருப் பாரே மெளனியாக இருந்து விடுவான்.
ஒரு நாள் மாமா இல்லாத சமயம் பார்த்து சுப் ப ரிடம் குறுக்கே அவன் கேட்டான்.
"அப்பு உங்கடை வீட்டிலை வேறை படம் ஒண்டுமில்லையே' 'புத்தர் படமும் ஒண்டு கிடக்குது. அது. நான் கண் டியிலையிருந்தனான் கண்டியோ" சுப்பர் மெல்ல நசுக்கி விடு கின்றார். தொடர்ந்து அவனுக்கு தான் வெகு நெருக்கமாகக் காட் டிக் கொள்ள வேண்டும் என் னும் தந்திரத்துடன், "என்ன சொன்னாலும் எங்கடை பொடி யள் விடமாட்டான்கள் கண் டியோ..!" என்று சட்டென்று நெஞ்சு நிமிர்த்துகின்றார்.
சுப்பருக்கு வந்த திடீர்
வாரப்பாட்டில் அவன் வாய் நகைக்கிறான்.
சுப்பரின் உச்சாகம் பட்
டென்று காற்றுப்போல வெளியே பறந்துபோய் விடுகிறது. எழுந்து செல்வதற்கும் யொரு தயக்கம். தன்னை இனங் காட்டிக் கொள்ளாத நிதானம்
அவருக்குள்ளே
தலைக்குமேல் சுழன்று கொண்டிருக்கும் பெர்ம் பர் குண்டுகளை வீசாமல் திரும்பிப் போகும்போது பீ தி யி னா ல் பதுங்கு குழியில் பிதுங்கிக் கொண் டிருந்த உள்ளத்தில் வந்து பிறக் குமே ஒரு தெம்பு, அத்தகைய உற்சாகத்தைச் சுப்பர் வலிந்து வருவித்துக் கெர்ண்டு கலகலக் கின்றார்.
"தம்பி, மாமா இல்லை யெல்லே! அதுகும் நல்லது. நீ படித்த பிள்ளை. இண்டைக்கு உன்னோடைதான் பேசவேணும். நான் சொன்னன் பாத்தியோ. ராஜீவ் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாரெண்டு. பங்க ளாதேசு பிரிச்சுக் கொடுத்தது போலை தமிழீழம் பிரிச்சுத் தரு வாரெண்டு. ம்ாமாவைக் கேட் டுப்பார், நான் சொன்னனோ இல்லையோ எண்டு. எம்சியார் விடுவரே. இப்ப கண்டியோ இந்தியா வந்திட்டுது. பிளே னிலை இருந்து எங்களுக்குச் சாப் பாடு போடுது. என்ன, நான் சொன்னது சரியாப்போச் சுக் கண்டியோ. நான் பழமும்
திண்டு."
"அது சரி அப்பு. இப்ப ஆற்றை படம் புதிசாகக் கட்டித் தொங்க விட்டிருக்கிறியள் வீட் டிலை?"
இந்திரா காந்தி. 6th SR யார். *" வார்த்தைகளுக்குள் பிடிபடாத பெருமை.
""முந்திய படத்திலை ஒண் டைக் கழட்டி மறைச்சு வைச்சி ருப்பியள்"
சுப்பர் தனக்கும் செவிகள் இருப்பதாக இப்பொழுது காட் டிக் கொள்ளவேயில்லை.
'உரிமைகளை இழந்து அடி மைப்பட்டுக் கிடக்கின்ற வன் அந்த உரிமைகளுக்காகத் தான் போராடினால் மாத்திரம் அவை
37

Page 21
களை வென்றெடுக்க முடியும்’ உரிமை பற்றிய உணர்வில் அவன் ஊறி மெளனித்திருக்கின்றான்.
'தம்பி, என்ன யோசனை’’ திடீரென அங்கு உறைந்துபோன மெளனத்தை சுப் பர் மெல்ல உடைக்கின்றார்.
* 'இல்லை அப்பு நீங்க உதைச் சொல்லுறியள் ஆனால் மா  ைல நேர ரியூட்டறிக்குப் போற எங்கடை அக்கா, தங்கச் சிமார் சயிக்கிளை விட்டு இறங்கி நிண்டு, இந்திய ஜவான்களோடு நெரு க் க ம 1ா க க் குழைஞ்சு குழைஞ்சு பேசுகினம். ஜவான் களும் சளைத்தவர்களல்ல. தமி ழர் நாகரிகத்தை உபதேசிக்கும் கலா சாரத் தூதுவர்களாக வல்லோ தங்களை நினைத்துக் கொள்ளுகினம்"
"அப்பிடியே தம்பி, பேப்ப ரிலை ஒண்டும் வரவில்லை கண் டியோ, எண்டாலும் அவை பிழை விடாயினம்’’
"ஒமப்பு, முழங்கால் தெரி யச் சட்டை போடக் கூடாது நீட்டுப் பாவாடை, தாவணி போடவேண்டும், கூந்தலிலை பூச்சூட வேணும், நெத்தியிலை பொட்டு. இப்படித்தான்.""
**அது சரிதானே தம்பி!'
"எங்கடை ஆக்கள் சிலரும் குறைஞ்சாக்களில்லை அப்பு ! ரொபி வாங்கிக் குடுத்து சிரிச் சுப் பேசுகினம். கைலேஞ்சியைக் குடுத்து மாறுகினம், கையசைச்சு டாட்டா காட்டிப் போட்டுப் பிரிஞ்சு வருகினம், ஜவான்க ளுக்கு மாலை சூட்டுறதுக்கும் இவையள் சிலபேர் தயாரெண்டு கேள்வி**
சுப்பருக்கு எ ன் ன பதில் சொல்லலாமென விளங்காத முக் களிப்பு. அவர் விசுவசிக்கும் ஆதர்ச புருஷர்களின் விம்பங்க
ளைபல்லவா அவன் சிதைத்துக் கொண்டிருக்கின்றான்!
'தம்பி எனக்கு கொஞ்ச வேலை இருக்கு. அப்ப நான் வாறன். மாமாட்டைச்சொல்லு" சுப்பர் அங்கிருந்து மெ ல் ல ப்
புறப்படுகின்றார்.
38
இரண்டு வாரத்துக்கு முன் னம் ஒரு தினம், அவன் சயிக் கிள் வேகமாகப் போய்க்கொண் டிருக்கின்றது.
சுப்பர் எதிரே வருகின்றார். தம்பி, நில்.
அவன் கீழே இறங்கி மரி யாதை பண்ணிக் கொண்டு நிற் கின்றான்.
** என்ன. . உன்னையும் தேடுறான்களாம்?"
"ஒமப்பு'
"சும்மா அங்கினை இங்
கினை ஒடித்திரியிற உன்னை ஏன் தேடுறாங்கள்! இப்ப கண் டியே. நான் அந்த நாளையிலை துடங்கி தமிழ் உணர்ச்சி உள்ள வன். நான் ஒரு புலி. கிழட்டுப் புலி. 9
"அப்பு." அவன் உணர்ச்சி வசப்பட்டுக் குறுக்கிடுகின்றான். "சரிதானப்பு. உங்கடை மேன்மார் இரண்டுபேர் சுவி சிலை. அடுத்த மேனையும் இப் பதான் கனடாவுக்கு அனுப்பிப் போட்டிருக்கிறியள். அதுக் குள்ளை"
* தம்பி, அவன்கள் மனத் தைரியம் இல்லாதவன்கள்"
"சரி. சரி. நான்வாறன்" அவன் சட்டென்று சயிக்கி ளில் பாய்ந்தேறிக் கொண்டு பறக்கின்றான்.
சுப்பருக்கு அவன்மேல் சிறி சாக ஒரு மனக் கசப்பு இல்லா

மலில்லை. ஆனால் குரூரமாக அவரால் நினைப்பதற்கும் முடிய வில்லை. அவன் மீது அப்படி யொரு பிரியம். அந்த மனசு தான் நாளை அவன் வருவன் எ ன் று சொல்லிக் கொண்டு போகிறது.
வீட்டு விளக்கு ஏற்றப்பட வில்லை. வீடு இருளில் மூழ்கிக்
கிடக்கின்றது. தொ ட் டா ல்
கையில் ஒட்டிக்கொள்ளும் பசை
இருள்.
எல்லாரும் சரிந்து படுத்து
விடுகிறார்கள்.
சின் ன வ னு க் கு, பேய் வருமோ..! அப்படி ஒரு எண் ணம். அது பயமல்ல. ஆனால் ஆமிக்காரன் வந்தால். தாடி
மீசை, உச்சிக்குடுமி, தலைக்கு. கறுப்புச் சீலை. இரும் புத் தொப்பி, பனைபோல வளர்த்தி, சின்னவனுக்குப் பயம் பயமாக வருகிறது.
ஊர்ந்து சென்று, அம்மா வின் சீலைத் தலைப்பில் தொங் கிக் கொள்ளுகின்றான். அம்மா கரமொன்றை மடித்து தலைக் குக் கீழ் வைத்துக் கொண்டு கிடக்கிறாள். மறு கரம் எதேச் சையாகச் சின்னவனை அணைத் துக் கொள்ளுகின்றது.
சின்னவன் தலை நனைகின் றது. ஓ ! அம்மா கண்ணிர் வடிக்கின்றாள். ஒசை படாமல் இருளில் கிடந்து அம்மா போலத் தான் அக்காக்கள். அம்மம்மா, சின்னவனுக்கும் வெ ம் பி க் கொண்டு வருகிறது. ஆனால் அவன் அழப்போவதில்லை.
அப்பாவை இலங்கை ஆமி சுட்டுப்போட்ட போது எல்லோ ரும் அழுதார்கள் சின்னவன் அப்போது நல்ல கிறிது. "தேப் பனைத் திண்டிட்டான்" என்று சொன்னார்கள். சின்னவனுக் கும் பெருகிக் கொண்டு வருகி
39
றது. மாமாவை நோக்குகின் றான். மாமா.க்கும். அசை யவே இல்லை. முகம் மாத்திரம் இரும்பு போல நல்லாக் கறுத்து, இறுகிப்போய்க் கிடக்கின்றது. யாரோடும் அதிகம் பேச்சில்லை. சின்னவனைத் தூக்கித் தோள் மீது போட்டுக் கொண்டு உன் மத்தராகத் திரிகின்றார். சின் னவனும் மாமாவைப் போல அடக்கிக் கெ F ன் டு * Duf * மென்று இருந்து விடுகின்றான்.
இந்த மாமாதான் இப் பொழுது கண் ணி ர் விட்டுக் கொண்டு கிடக்கின்றார்.
இராம ஜன்ம பூமியில் வந் துதித்து ஜன்ம சாபல்யம் பெற் றவர்களான ஜவான்களல்லவா, வீட்டைச் கற்றி வளைத்து அவ னவை பி டி த் து க் கொண்டு போயிருக்கிறார்கள்
சின்னவனுக்கு அம்மாவைக் கேட்க வேண்டும் போல நெஞ் சில் வந்து முட்டுகிறது. m
"அம்மா, ஏனெனை «ԶI(Ա) கிறாய்?"
"அண்ணா வருவன்தானே? "மாமா ஏன் அழுகிறார்' **காலமைக்கு வ ரு வ ன் தானே!"
மெளனமாகக் கிடந்து விழிகளை அகலத் திறந்து இருளைத் துழா வுகின்றான்.
வயிறு கொதிக்கிறது. ஆக் கின உணவு அடுக்களைக்குள் ஆறிக் கிடக்கிறது. யார் இப் பொழுது சின்னவனுக்கு உணவு தரப் போகிறார்கள்!
மாமாவை அம்மம்மா அருட் டிப் பார்த்தாள்.
"தேம்பி, afnrtt SL6ir
"Gargoorinth''

Page 22
"இண்டு முழுதும் ஒண்டு மில்லாமல் கிடக்கிறாய்?"
S. US e o to w O es e e D as e 5 e o
"அப்ப. தேத்தண்ணி எரிச்சுத் தாறன்" .
*வேணாம்"
**வேணாமம்மா' கு ர ல் உ ய ரு கிற து. மாமாவுக்குச்
சினம் மூளுகிறது.
இதயத்துள் இருந்து மெலி
தாக ஒரு குரல் எழுகிறது.
“ “GOF DIT onr 56ốorGOof...
தண்ணி. உங்கடை கையாளை தண்ணி"
திக் மாமா மனசில் ஒரு பிர
6)
*"அவனுக்கு எ ன்  ைர கையாலை தண்ணி குடுக்காமல் நான் பச்  ைசத் தண்ணியும் வாயிலை ஊத்தப் போறதில்லை"
LðfTHOfT" புரண்டு புரண்டு படுக்கின்றார். கிணுகினுத்துப் பறந்து உடல்மீது வந்து அமர்ந்து கடிக்கும் நுளம்பு, சில்வண்டுக ளின் எரிச்சலூட்டும் சில்லிடுதல், ஈரமண் ணின் மணம், சாணத் தால் மெழுகிய தரையின் நாற் றம், மனசில் உளையும் அவலம். அதன் நினைவுகளினால் எழும் வெந்துயரம் .
மாமா கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு கிடக்கின் றார்.
வெகு தூ ர த் தி ல் நாய் ஒன்று பயங்கரமாகக் குரைக்கி றது. அதைத் தொடர்ந்து இன் னொன்று. அதன் பிறகு வேறொன்று. அதன் பிறகு. நடுநிசியின் நிசப்தத்தைக் குலைத் துக் கொண்டு ஒரு கிராமமே எழுந்து குரைப்பது போல.
நாய்களின் அந்தக் குரைப் போலம் ஒரு வழி அமைத்துக் கொண்டு வருவதா? நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக் கின்றது.
அயல் வீட்டு நாய்கள் இப் போது கு  ைரக் க ஆரம்பித்து விட்டன,
வீட்டுநாய் “வள்வள்" என்று முற்றத்திற்கும் கோடிப்புறத்திற் கும் ஒடியோடிப் பாய்ந்து விழு கிறது.
அயல் நாய்களும் வந்து இந்த வீட்டையே சுற்றிக் கொள் ளுகின்றன.
ஒருவகை நாற்றம். ஜவான் கள் வருவர் பின்னே நாற்றம் வரும் முன்னே. என்று சொல் லிக் கொள்ளலாம் போல. நெய் உறண்டை, கொழுப்பு முறுகிய ஆட் டு க் கடாவின் மொச்சை மெல்லப் பரவுகிறது.
அம் மா, அக்காச்சியவை மூச்சடங்கிப் போனார்கள்.
பெண்களின் நெஞ்சுச் சட் டைக்குள் குண்டு தேடிப் பார்க் கிறவர்களின் கைக்குள் அது கிடைத்தால்..?
பால் ஊட்டிக் கொண்டி ருந்த இளந் தாய்மார், தனித் திருந்த வாலைக் குமரிகள், ஐந் காறு பிள்ளைகளைப் பெற்று
நொந்த பெண்கள், பாட்டிக ளென்றால்தான் அவர் களு க் கென்ன, பெண்ணுக்குரியவை
கள் இல்லாமலா போகும்.
குண்டுப் பாட்டி ஒருத்தி மரணித்துப் போன சங்கதி அம் மம்மாவுக்குத் தெரியும்.
அம்மம்மாவுக்கும் கலக்குகி றது அடிவயிற்றில்,
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்ணில் பள்ளிக்குப் போகப்போகும் சிறார்கள், தங்
40

கள் பிள்ளைகளாகவே இருப்பார் கள் என்று பெ ரு  ைம பேசிக் கொள்ளும் இந்த ஜவான்கள் .
இருட்டில் வந்து வீட்டில் புகுந்துவிட்டால்.. ?
தம்பி சின்னவனின் பள்ளிக் கொப்பியில், ஜவான்கள் தேடிக் கொண்டிருந்த சமயம் அவன் எழுதி வைத்த உள்ளக் குமுறல் கள் இந்த நேரத்தில் தவிர்க்க இ ய ல |ா து. சின்னக்காச்சியின் நெஞ்சில் வந்து மோதுகிறது.
**சத்திய காந்தி சப்பாணித்து வெள்ளரசு நிழலில் இராட்டையில் நூற்கிறார். அமைதிக்கு வந்த துச்சாதனன்கள் பாஞ்சாலி நினைவில் ஆடை அவிழ்க்கிறார் தீர்க்கமான அவன் கணிப்பு' அவன் வீட்டில் இப்போது என்னதான் நடக்குமோ! யார் யார் பாஞ்சாலி ஆகப் போகின் றார்களோ !
இயந்திரத் துப்பாக்கியிலி ருந்து ஓய்வின்றித் தீர்ந்துகொண் டிருக்கும் தொடர்ச்சியான வேட் டுக்களின் ஒலிபோல், இதயத் துடிப்பு செவிக்குள் முழங்குகி றது. சில்லிட்டு மயிர்த்துவாரங் களுக்குள் குத்தும் கொடுங்குளி ரிலும் வியர்த்துக் கொட்டுகின் நிறது.
மாமா செவியைப் பூமியில் அழுந்தப் பதியவைத்து, வெளியே நடமாடும் பாதங்கள் மண்ணில் பதியும் அசுமாத்தம் துல்லிய மாகக் கேட்கின்றார்.
மாமாவுக்கும் பதறுகிறது"
அவனைத் தேடினார்கள்; கொண்டுபோய் விட்டார்கள். மீண்டும் மாமாவை இழுத்துக்
கொண்டு போவதற்காக வந்தி ருக்கின்றார்களோ
அவன் வந்து சரணடை வான் என்ற எதிர்ப்பார்ப்பில் மாமாவைப் பிடித்து ஒரு வார க T ல ம் வைத்திருந்தார்கள். மூன்று தினங்களுக்குள் அவனைக் கொண்டுவந்து ஒப்ப  ைட க் க வேண்டும். இந்த நிபந்தனை யோடு பின்னர் மா மா  ைவ வெளியே அனுப்பினார்கள். தவ றினால் மாமா மீண்டும் பிடி பட்டு, இதுவரை அவர் அனுப விக்காத சித்திரவதைகளைப் பட வேண்டும்.
இப்பொழுது வீட்டைச்சுற்றி நிற்கும் நாய்கள் மெல்ல அடங்கு கின்றன. குரைப்பொலி தூரத் தூர விலகிப் போகின்றது.
திரும்பவும் நிசியின் நிசப்தம். போய்விட்டார்கள்; பெண் மைபேண வந்த பொற்கைப் பாண்டியர்கள் எந்த வீட்டுப் படலையிலும் இன்று அவர்கள் தட்டிப் பார்க்கவில்லை.
எல்லோரும் நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள்.
மீண்டும் அவன் நினைவு
நெஞ்சில் எழுகிறது.
அவன் இப்போது எப்படி இருப்பான்
அம்மா, அம்மம்மா, அக் காச்சியவைக்கு ஊகிக்க முடிய வில்லை. மாமாவுக்கு ஒருவார அநுபவத்தில் அது நிதர்சனமா கிறது.
மாலைச் சூரியன் கரு கி நூர்ந்த பிறகு
விசாலமான ஒரு அறை. சுவரோரத்தில் ஒரு க தி  ைர
கொமாண்டர் வந்து கதிரையில் அமருகின்றான். அவன் முகத் தில் குரூரமும் கொடுமையும் உறைந்து கிடக்கிறது. ஜவ்ான்
41

Page 23
களை நோக்கி அவன் தலை மெல்ல அசைகிறது.
அந்த அசைவுக்காகவே காத்து நிற்கிறார்கள் அந்த ஜவான்கள்.
ஜவான்கள் இடுப்பில் சிறிய ஜட்டி. கால்கள் முதல் கழுத்து வரை புசுபுசென்று அடர்த்து வளர்ந்த ரோமக்காடு. தாடை யில் ஒரு குடுமி. தலையில் ஒரு உச்சிக்குடுமி. கண்கள் அறுத்த இறைச்சிபோல.
கால்களில் பிடித்து நிர்வா ணமாக அவனை இழுத்து வரு கிறார்கள்.
அறையின் மத்தியில் ஒரு அகலமான நீண்ட ஒரு வாங்கின் மீது மல்லாக்காக அவனை வளர்த்துகிறார்கள். அவன் தலை வாங் கி ன் விளிம்புக்குக் கீழ் மடிந்து தொங்குகிறது.
ஜவான்கள் இருவரும் ஏதோ பயிற்சி செய்யப் போகின்றவர் போல அவனுக்கு இரு பக்கங்க ளிலும் வந்து, கால்களை வலு வுடன் பிடித்து உடலை இரு கூறாகக் கிழிப்பது போல விரித் துப் பலமாக இழுத்துப் பட் டென்று மடக்குகிறார்கள்.
"ஐயோ. ஐயோ. அம்மா, ушћи, т... "."
மீண்டும் மீண்டும் நிமிர்த்தி மடக்கி, நிமிர்த்தி மடக்கி.
கொமாண்டர் இர சித் து மெல்லச் சிரிக்கின்றான்.
ஜவான்கள் கை களி ல் இரும்பு போல பாரிய கொட் டன்கள். கால்களைப் பற்றிப் பிடித்து மேலே உயர்த்தி, குதிக் கர்வில் சினம் முற்றிய தாக்கு தல். தொடர்ந்து தோள்மூட்டு, முழங்கை.
"ஐயோ.ஐயோ. அம்மா, அம்மா. தண்ணி. தண்ணி."
அவன் ஆத்மாவே கலங்கிக் கதறுகிறது.
கொமாண்டர் எழுந்து அவன் அருகே வருகிறான்.
**புலி. புலி. . எங்கே?
ஆயிதம் எங்கே? டேய் சொல்லு" அரைகுறைத் தமிழ் இடறி விழு கிறது.
இந்த ச் சித்திரவதையிலி ருந்து தப்பித்துக் கொள் ள வேண்டுமானால் யாரோ ஒரு வனின் பெயரைச் சொல்லியாக வேண்டும். உடனே இரவோடு இரவாக பாய்ந்து சென்று குறிப் பிட்டவனை உறக்கத்தில் வைத் துப் பிடித்திழுத்து வந்து. . அப்படி அவன் பெயரையும் ஒரு வன் சொன்னதனால்தான் அவன் இப்போது . .
அவன் மெ ள ன மா கத் துவண்டு கிடக்கிறான்.
அந்த மெ ள ன த் தி ல் கொமாண்டர் மூர்க்கமாகக் கெர்திப்படைகிறான். கு த ஹி எறிந்துவிடும் ஆக்ரோஷத்துடன் அவனை நெருங்குகிறான்.
ஜவான்கள் அவன் கால்க ளையும் கைகளையும் பிடித்துக் கொள்கிறார்கள்.
எரிந்து கனிந்து கொண்டி ருக்கிறது கையில் சிகரெற். அந் தக் கொள்ளியினால் அவ ன் தொடைப் பொருத்துக்குமேல் ஒவ்வொரு பொட்டாக வைத்து எடுத்து. வைத்து எடுத்து .
பொசு பொசு என எரிந்து மணந்து வெந்து போகிறது.
* "அம்மா . அம்மா. ஆசை மாமா. தண்ணி. தண்ணி."
கறள் படிந்தபேணியொன்றை ஜவான் ஒருவன் அலட்சியமாகத் தூக்கி வருகிறான். அ வ ன் வாயைத் திறந்து உள்ளே அவக் கென்று ஊத்துகிறான்.
42

அவனுக்குக் கு மட் டி க் கொண்டு வருகிறது. தரை எங் கும் வாந்தி, மூத்திர வெடில். நினைவு தப்பி சரிந்து தரையில் விழுகிறான். தேங்கி நிற்கும் வாந்திக்குள் தோய்ந்து இடக்தி றான்.
ஜவான்கள் மீண்டும் அவ னைத் தூக்கி வாங்கின் மீது மல்லாத்துகிறார்கள்.
அவன் ஆண்குறியைப் பிடித் துக் கசக்கி, மட்க்கி அவனுக் குப் பிரக்ஞை திரும்பவில்லை.
மின் கம்பி ஒன்றை இழுத்து ஆண்குறிக்குள்ளே செலுத்தி மின்சாரத்தைப் பாய்ச்சுகிறார் *ள் ஷெல் விழுந்து ஆவி பிரி யப்போகும் உட்ல் போல அவன் உடல் பதறித் துடிக்கிறது.
கொமாண்டர் முறைக்கின் றான். சமிக்கையாக ஒரு தலை யசைப்பு. எழுந்து அறையை விட்டு வெளியேறுகிறான்.
ஜவான்கள் அவன் கால்க ளைப் பிணைக்கிறார்கள்.
அறையின் கூரை மரமொன் றில் தலைகீழாக அவன் இப் பொழுது தொங்குகிறான், தலைக்குக் கீழ் குவித்த மிள காய்ச் செத்தல். அது எரியூட் டிப் புகைத்துக் கொண்டிருக்கி ADH
சற்று நேரத்தின் பின் அவ னுக்கு நினைவு திரும்புகிறது. புகை மூட்டத்தில் மூச்சுத் திணறு கிறது.
உடலின் ஒவ்வொரு அணு வும் நைத்து சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறது.
மாமா இவைகளை எல்லாம் கண்டிருக்கிறார். நெடு மூ ச் செறிந்தவண்ணம் அவர் புரண்டு படுக்கிறார்.
43
மாமா காணாததும் அவ லுக்கு நடக்கிறது.
அது அவருக்கு எ ப் படி த் தெரிய வரும்
ஒரு மணி நேரத்தின் பின் ஜவான்கள் மீண்டும் அந்த அறைக்குள் நுழைகின்றார்கள்.
அவன் காலில் கட்டிய கயிற் றில் ஒரு வெட்டு. அவன் தசைப் பிண்டமாகத் தரையில் தொப் பென்று விழுகிறான்.
அவன் கால்களில் பிடித்து வெளியே இழுத்துப் போகிறார் கள். அங்கு தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருக்கிறது ஆழமான ஒரு குழி. அதற்குள் இறக்கி அவனை நிறுத்துகிறார்கள்.
மண்ணை வாரிப் போட்டு குழியை மூடுகிறார்கள்.
அவன் சிரம் மண்ணில் நட்டு வைத்தது போல மண்ணுக்கு மேல் முளைத்து நிற்கிறது.
மழை தூறலாக ஆரம்பிக் கிறது.
இந்த மண்ணில் நட்டவை முளைத்து வளர வே ைடுமென் பதற்காக வானத்து வெள்ளி விளக்குகள் பக்கென்று அணைந்து போகின்றன. முழக்கம் வானத்து மார்பில் இடித்து வருத்துகிறது. மின்னல் நெளிந்து துடிக்கிறது. வானமே தகர்ந்து வெள்ளமாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.
மழை. பேய்மனழ! இப்படி
யொரு மழை மாமாவுக்கு இது
வரை அநுபவமானதல்ல. வீட்டு முற்றத்திலும், ஒழுங்கையிலும் முழந்தாளுக்கு மேல் அலையடிக் துச் சுழித்துப் பெருகியோடும் வெள்ளத்தின் சலசலப்பு.
இன்னும் அரைமணி நேரம் இப்படியே மழை கொட்டிக்

Page 24
கொண்டிருந்தால் நிஜ மா க வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து விடும்.
மாமா மனதில் ஒரு அற்ப சந்தேகம்,
மழை இப்படிப் பொழிந்து கொண்டிருக்கும் வேளையில் அவனைச் சித்திரவதை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
தண்ணிர். கூ  ைரயில் வடிந்து போகும் மழை நீராவது அவன் குடிப்பதற்குக் கிடைக்கா மலா போகும்! என்றாலும் தன் கையினால் அவனுக்குத் தண் ணிர் கொடுத்த பிறகுதான். வானம் முக்கி முக்கிப் பெய் ததில் நீர் வற்றி, பின் ன ர் சொட்டுச் சொட்டாக விழுந்து, இறுதியில் அதுவும் நின்று போகி Al)ği •
கொடுக வைக்கும் குளிரில் குறாவிக் கிடக்கும் சேவல் ஒன்று எங்கோ அழுகிறது. அதைத் தொடர்ந்து ஆங்காங்கே கப்பி யெழும் அழுகுரல்கள்.
வெள்ளத்தில் நீந்தும் தவ ளைகளின் ஒப்பாரி ஒலம்.
அம்மா, அம்மம்மா, அக் காச்கியவை இதுவரை காத்துக் கொண்டு கிடக்கின்றார்கள்.
அவர்கள் எழுந்து ஒருவருக் கொருவர் சொல்லிக் கொள்ளா மல் புறப்படுகிறார்கள், ஜவான் களின் முகாம் நோக்கி.
**பெண்டுகள் போனால் நல்லது' மாமாவின் இயலாமை மனசில் ஒரு நம்பிக்கை.
அம்மா, அம்மம்மா, அக் காச்சியவை அவனை மீட்டுக் கொண்டு வருவதற்குப் போகின்
றார்கள்.
மாமாவுக்கு நா போகிறது.
வறண்டு
தன் கையினால் அவனுக்குத் தண்ணிர் கொடுக்கும் வரை மாமா தான் வாயில் ‘பச்சைத் தண்ணியும் குத்தாமல்' எவ்வ ளவு காலம் அவர் காத்திருக் கப் போகின்றார். ()
வருந்துகின்றோம்
பிரபல நாடக நடிகர் லடீஸ் வீரமணி சென்ற மாதம்
மறைந்து விட்டார்.
தரமான நடிகர், திறமையாக மகா
கவியின் "கண்மணியாள் காதை"யை வில்லுப்பாட்டாக இசை ய ைமத்துப் பாடி பாமர மக்களிடம் கவிஞனைக் கொண்டு
சென்றவர்.
அன்னாரது இழப்புக்கு மல்லிகை தனது ஆழ்ந்த துயரத் தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
- ஆசிரியர்
44

அமெரிக்கத் திரையுலகின் அரசியல்மயப்பாடு
- சுரேஷ்
சித்திரை மாத முதற் கிழமையில் கலிபோர்னியாவிலுள்ள ஹொலிவூட்டில் இடம்பெற்ற ஒஸ்கார் பரிசுகள் வழங்கும் வைப வத்தின்போது நான் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யக் கிடைத்த சந்தர்ப்பம் எனக்கு ஒரு பாக்கியமே. ஒஸ்கார் பரிசுகள் வருடா வருடம் ஆங்கிலத் திரையுலகின் சிறந்த படைபுக்களுக்கும் படைப் பாளிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இவ்வருடம் இடம் பெற்ற விழாவில் கடந்த வருடத்தின் படைப்புக்களுக்கே பரிசுகள் வழங் கப்படுகின்றன. பரிசு வழங்கல் நிகழ்வுகளை விட விழா பரம்ப ரையாக திரையுலகோடு சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் 'குடும்ப ஒன்றுகூடல்" ஆகவும் அமைவது சுவாரசிய மானது.
நான் விழாவிற்கு முன்னர் அமெரிக்காவில் இருந்த ஒருமாத மும் பல திரைப்படங்களையும் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம் பரிசுகளுக்கு இடம் பெற்ற போட்டியை விளங்கக் கூடியதாகவிருந் தது. நூறு அல்லது நூற்று ஐம்பது டாலர் டிக்கற்றைப் பெற்று நாடகங்களுக்கும், நாட்டியங்களுக்கும் போக முடியாது "வங்கு ரோட்"டாக இருந்தமையால் ஒரு டாலர் பஸ் கட்டணமும். ஐந்து டாலர் டிக்கற்றும் பெற்று படங்களைப் பார்ப்பது நான் அடிக்கடி செய்யக்கூடியதாக இருந்தது. அதுவும் புலமைசார் மகாநாடுகள் நடந்து கொண்டிருக்கும் சமயம் கடைசி ஷோவிற்குக் கள்ள மாகச் சென்று அமெரிக்காவின் இரவு வாழ்க்கையையும் கழிப்பது யாழ்ப்பாணத்தில் என் பாடசாலை நாட்களை நினைவூட்டியது. மாத முடிவில் என்னையறியாமலே நான் ஒரு "திரைப்பட நிபு ணன்' ஆகிவிட்டேன். அதுவும் படங்களை நான் கவனமாகத் தெரிவு செய்தே பார்த்தமையால் நான் பார்த்த படங்களெல்லாம் பரிசில்களுக்கான போட்டியில் இடம் பெற்றமை என் ரசனைக்கு பெருமையூட்டியது.
45

Page 25
இவ்வருடம் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட படங்கள் எல்லாம் ஏதோ ஒரு சமூகப் பிரச்சினையை அல்லது அரசியற் கோரிக்கையை முன்வைத்துத் தயாரிக்கப்பட்டிருந்தமை எல்லோரு டைய கவனத்தையும் ஈர்த்தது. அதுவும் பரிசுகளை ஏற்க மேடைக்கு ஏறியபோது கண்ணீர் மல்க தம் கம் கோரிக்கைளுக்கான கோஷங் களைத் தயாரிப்பாளரும். நடிகர்களும் எழுப்பியமை அவர்கள் gld சித்தாந்தங்களில் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டியது. அவர்கள் பணத்திற்காக ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை" உணர்வு பூர்வமாக அப்படம் சித்தரித்த பிரச்சினைகளில் நன்கு ஊறியிருந்தனர் என்பதைக் காட்டியது. விழாவை "Compere' பண் ana sipil gar 51605 Whoppie Goldberg (syn (5 lb repg சித் திரங்களிலேயே நடிப்பார்) கூட இந்த சடுதியான அமெரிக்கத் திரையுலகின் அரசியல் மயப்பாட்டைப் பற்றி ஒரு வசனம் ஆவது கூறாமல் இருக்க முடியவில்லை.
சிறந்த படத்திற்கான பரிசையும் வேறு துறைகளில் பரிசுகளை யும் தட்டிச் சென்ற “Schindler's Listo GrciТр LILLh gц tri di Goат 2 h உலக யுத்தத்தின் போது நாசிகள் அழித்தொழித்த சரித்திரப் பின்னணியைக் கொண்டது. இதனோடு போட்டியாக இருந்த‘Plano" In the Name of the Fathcr' Philadephia ஆகிய ஏனைய மூன்று படங்களையும் பற்றிப் பார்க்கமுன் “Schindler’s List” Gör 35 GM5tou விளங்குவது தேவையானது. ஷிண்டிலர் ஆஸ்திரிய நாட்டு தொழி லதிபரின் ஊதாரி மகன். போலந்தை நாசிகள் கைப்பற்றியதோடு அவனும் இந்த நாட்டிற்குள் நுழைகிறான். படமும் இக் கட்டத் திலேயே ஆரம்பிக்கிறது. பணத்தையும், பெண்களையும் காட்டி நாசி இராணுவ அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்கி றான். அவனது திட்டபென்னவென்றால், இரண்டாந்தரப் பிரசை களாகக் கருதப்பட்ட யூதரை குறைந்த கூலிக்கு அமர்த்துவதன் மூலம் ஒரு தொழிற்பேட்டையை நடத்துவதே. எனவே யூதர்கள் தம் வீடு, உடமைகள் என்பவற்றிலிருந்து அப்புறப்படுத்தும்போது இலரைத் தன் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு அதிகாரிகளின் உத்தரவோடு தன் லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறான். தாம் கொல் இப்படுவதற்காகக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது யூதருக் குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியதும் ஷிண்ட் யரின் லிஸ்டில் தாமும், தம்முடைய குடும்பமும் இடம் பெறுவதற் குப் படாதபாடு படுகின்றனர். "ஷிண்ட்லரின் பட்டியலில் இடம் பெற்றால் வாழ்வு: இடம் பெறாவிட்டால் அழிவு" என்று ஒரு பாத்திரம் கூறுமளவிற்கு அந்தப் பட்டியலில் முக்கியம் பெறுகிறது. கூலிவேலை செய்யும் இந்த யூதரின் ஊடாக தொழிற்பேட்டைக்கு வெளியில் யூதருக்கு நடைபெறும் அனர்த்தங்கள் சித்தரிக்கப்படு கின்றன.
ஷிண்ட்லரும் இந்த அனர்த்தங்களை விளங்கிக் கொண்டு மேலும் பலரைக் காப்பாற்ற முயலுகின்றார், உண்மையில் அவர் களை அவன் தன் பேட்டையில் சேர்த்துக் கொள்வது தன் நயத்
46

திற்காகவா அல்லது அவர்களது உயிரைக் காப்பாற்றவா என்பது ஒரு மெல்லிய முரணணியோடு இறுதிவரை விடப்படுகின்றது. எனினும் முடிவில் அவன் நட்டமடைந்தும் கூட மேலும் யூத தொழிலாளரை சேர்த்துக் கொள்வது எம் அனுதாபத்தை அவன் பக்கம் ஈர்க்கின்றது. "நேச நாட்டுத் துருப்புகள்". போலந்தைக் கைப்பற்றும் போது இவன் காசு இல்லாதவனாகத் தப்பியோட முனைவது பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவன் ஏனைய நாசி களோடு கைப்பற்றப்பட்டு, பின் யூதரின் சாட்சியத்தின் பேரில் விடுவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டான் என்பது திரையில் எழுத் தாக ஒடுகி து இவ்வளவிற்கும் Black and White ஆக யூதரின் கடந்தகால அனர்த்தங்களை சித்திரித்த திரை கடைசிக் கட்டத் தில் முழுவர்ணத்தோடு நிகழ்காலத்திற்குத் திரும்புகிறது. ஷிண்ட் லரின் புதைகுழிக்கு மலர் வைக்க அவனின் தொழிற்பேட்டையில் வேலை செய்தவர்களும், அவர்களது குடும்பங்களும் வந்து செல் கின்றனர். இப்படம் ஷிண்ட்லரின் கீழ் வேலைசெய்த யூதர்களா லேயே விபரிக்கப்பட்டுப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு தலைவனாக இருந்த நபர் அதே பாத்திரத்தில் படத்தில் நடிப்பதோடு, படத்தின் ஒரு நெறியாளராகவும் இருந் தார், படத்தில் எனக்குக் கசப்பாக இருந்த ஒரு அம்சம் என்ன வென்றால் அடிக்கடி இடம் பெறும் யூதச் சின்னங்களும், மதச் சடங்குகளும். அதாவது எமது மனிதாபிமானத்தை கட்டியெழுப்பு வதோடு மட்டும் நிற்காமல் ஒரு சையனிசவாதத்தையும் பார்வை யாளர் மீது படம் திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டது.
பியானோ பெண் விடுதலையோடு சம்பந்தப்பட்ட படமாகப் பேசப்படுகிறது. காலனித்துவ கால நியூசிலாந்தில் கதை இடம் பெறுகிறது. ஊமையான ஒரு பெண்ணும், மகளும் அவளது தகப் பனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு (மறு) திருமணத்தை ஏற்ப தற்கு நியூசிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடியேற்ற வாசியிடம் செல்கின்றனர். இவள் ஊமையானது ஒரு புதிர். இர கசிய ஒரு உறவினுாடாக மகள் பிறந்தமையால் தகப்பனால் வீட் டில் அடைத்து வைக்கப்படுகின்றாள். இதனால்தான் அவள் பேச்சையிழக்கிறாள். தன் தொடர்பாடல் தேவையை நிறைவு செய்வதற்காக அவள் பியூனோவை வாசிக்கத் தொடங்குகிறாள். எனவே நியூசிலாந்திற்குப் பயணம் செய்யும்போது பியானோவைக் கொண்டு செல்கிறாள். அவளுடைய கணவன் பியானோவை அவள் இறக்கிய கடற்கரையிலேயே விட்டுவிட்டுச் செல்கிறான். அதைத் தாங்கள் இருக்கும் வதிவிடத்திற்கு வேலையாட்கள் மூலம் காவிச் செல்வது கடினமானது என்று மறுப்புத் தெரிவிக்கிறான். எனினும் ஊமைப் பெண் அங்கு அடிக்கடி சென்றாவது பியா னோவை வாசிக்க விரும்பி தன் கணவனின் ‘மயோரி"வேலையாளரின் உதவியைக் கேட்கிறாள். அவன் அவளைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வான். அவனுக்கு அந்த பியானோ ஆழமான ஆத்மீக - உடலியல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. எனவே தன் காணியில் பாதியை விற்று அந்த பியானோவை பெண்ணின் கணவனிடமி ருந்து வாங்கி தன் வீட்டிற்குக் கொண்டுவருகிறான். ஊமைப் பெண் அங்கு அதை வாசிக்கும்போது அவன் அவளுடன் பாலியல்
47

Page 26
தொடர்பை ஏற்படுத்த முயலுகின்றான், அவனது ஆழமான அன்பையும் மதிப்பையும் கண்ட பெண், பின்னர் அவனைக் காத லிக்கிறாள். கணவன் விஷயத்தை விளங்கி அவளைத் தடுக்க முய லும்போது அவள் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறாள். எனவே இருவரையும் பிரித்தானியாவுக்கு திரும்ப அனுப்புகிறான். வழியில் கடலில் அவள் தன் காலில் பியானோவைக் கட்டிக் கடலில் மூழ்க எத்தனிக்கிறாள். வேலையாள் கயிற்றை வெட்டி அவளை மாத்திரம் பாதுகாக்கிறான். அவள் மறுபிறப்படைந்தவளாகக் கடலில் இருந்து வருகிறாள் என்று காட்டப்படுகிறது. (Sea Change மேற்கத்தைய இலக்கியத்தில் அடிக்கடி வரும் ஒரு குறி யீடு) அவளுக்கு இனி பியானோ தேவையில்லை. பேசத் தொடங் குகிறாள். காரணம் தன் உணர்ச்சிகளை - ஆளுமையை வெளிப் படுத்த ஒரு உறவை ஏற்படுத்தியமையே. இப்படம் ஆழமான குறியீடுகளைக் கொண்ட high anrt என்று பலர் கருதுகிற போதும், இக்குறியீடுகள் சில சமயங்களில் வலிந்து புகுத்தப்பட்ட தாக எனக்குப்பட்டது. மற்றும் இதில் இடம்பெற்ற பாலியற் காட்சிகள் இந்த high ant ஒரு சில சமயங்களில் முரண்பட வும் செய்தது. "Philadelphia" என்ற படம் ஒரு எயிட்ஸ் நோயாளி பாரபட்சமாக வேலை நீக்கஞ் செய்யப்பட்டுப் பின் ஆழமான தனிமைக்கூடாகவும், மரணப்படுக்கையிலும் தன் நிறுவன அதிபர் களுக்கெதிராக வழக்காடி வெல்லுவதைக் காட்டுகிறது.
அவன் ஒரு பிரபல Law Filmல் கடமை புரிந்த கெட்டித்தன மான வழக்கறிஞர் என்பதும், பின்னர் தன் சொந்த நன்மதிப்பிற் குரிய இயக்குனருக்கெதிராக வழக்காட வேண்டியிருப்பதும் சுவா ரசியமானது. அந்நிறுவன இயக்குனர் உண்மையிலேயே தன்னி னச் சேர்க்கையாளர்க்கு எதிரான காழ்ப்புடையவர் என்பது இறு தியில் நிரூபிக்கப்படுகிறது. பிலடெல்பியா என்ற நகரத்தில் கதை இடம்பெறுவது மாத்திரமல்ல, ஆனால் "சகோதரத்துவ அன்பின் ந்கரம்' என்ற கிரேக்க பதத்தைக் கொண்டிருப்பதுவும் தலைப் பிற்குச் சுவையூட்டுகிறது. ஒரு எயிட்ஸ் நோயாளி அனுபவிக்கும் சமூக எதிர்ப்பையும், வெறுப்பையும் அனுதாபத்தோடு நாம் பார்க் கத் தூண்டினாலும், படம் பல காலங்களூடாக துண்டு துண் டாக இடம்பெற்று ‘ஐந்து நாளைக்குப்பின்", "அடுத்த மாதம் போன்ற எழுத்தோட்டங்களால் மாத்திரம் கதையைக் காவிச் செல்ல வேண்டியிருப்பது எம் இரசனையைக் குறைக்கிறது.
In the Name of the Father" 2 th Sigirafurtassig, எதிரான ஐரிங் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒரு உண் மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஐரிஸ் போராளி களிடமிருந்தும், பிரித்தானியப் படைகளிடமிருந்தும் தப்புவிக்கு முகமாக ஒரு தகப்பன் தன் ஒழுக்கக் குறைவான மகனை அபர் லாந்திலிருந்து லண்டனுக்கு அனுப்பிவைக்கிறார். அவன் லண்டனை அடைந்த இரவே இன்னும் சில வாலிபர்களோடு சேர்ந்து அவர் கள் வீட்டில் வாழ முயலுகிறான். ஆனால் அன்று இரவே லண்ட னிலுள்ள பெரிய Pub ஒன்றில் ஐரிஸ் போராளிகளால் வைக்கப்
48

பட்ட குண்டு பலரது உயிரை அழிக்கின்றது. பொது மக்க ள் பொலிசாரின் கவனக்குறைவையும், திறமையின்மையினையும் கண் டிக்கிறார்கள். தம் திறமையை நிரூபிக்க வேண்டிய பொலிசார் அந்த மகனையும், அவனது நண்பர்களையும் பிடித்து சித்திரவதை செய்து, அவர்களே குண்டை வைத்ததாக ஒப்புக் கொள்ள வைக் கின்றனர். மகனை விசாரிக்க வந்த தகப்பனையும், லண்டனில் வசித்த அவரது சகோதரியின் குடும்பத்தையும் கூட கைதுசெய்து இவர்களே வெடிமருந்தைக் கொடுத்துதவியதாகச் சாட்டுகின்றனர். சிறையில் மகன் விரக்தியடைந்து ஏனைய கைதிகளோடு சேர்ந்து போதைவஸ்து உட்கொள்ளத் தொடங்கினாலும், த க ப் பன் "உண்மை வெல்லும்" என்ற விசுவாசத்தோடு அவனை உற்சாகப் படுத்துகிறார். தகப்பன் சிறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற போக்குகளால் மரணமடைய, மகன் ஆத்திரமடைந்து தன் தகப் பனின் பெயரில் வழக்கை மீளத் தொடங்குகிறான். அனுதாப முள்ள ஒரு பிரிட்டிஷ் பெண் வழக்கறிஞரின் உதவியோடு அவன் வழக்கை வெல்லுகிறான். பிரித்தானிய அதிகாரிகளின் அநீதியும், ஊழல்களும் அம்பலப்படுத்தப் படுகின்றன. (இந்த மகனின் நண் பன் சிறையிவிருந்து மீண்டபின் அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடியின் மகளைத் திருமணம் செய்து, அண்மையில் ஐரிஸ் போராட்டத்திற்கும், கென்னடிக்கும் அரசியல் இலாபம் தேடிக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது).
பரிசுகளில் அதிகமானவற்றை "Sehindler's List தான் தட்டிச் சென்றது. சிறந்த படத்தைவிட, சிறந்த தயாரிப்பாளர், தரமான எடிடிங், தரமான பிரதியாக்கம் போன்ற பரிசுகளும் இப்படத் தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே சென்றது. இவர்கள் எல்லோ ரும் யூதர்கள் என்பதனையும் காண முடிந்தது. சிறந்த தயாரிப் Lunt 6MTQUEisnt 607 6ýUGOGE Ü Goujibp Stephen Spielberg g) 3 fib(5 (p6ör னர் திகிலூட்டும் படங்களையே எடுத்துள்ளார் "Indiana Jones' படங்கள் இவருடையதே எனினும் இதுதான் முதல் முறையாக இவர் சமூக அரசியற் கருத்தோட்டமுள்ள ஒரு படத்தைத் தயா ரித்திருக்கிறார். ஒஸ்கார் பரிசையும் இதுதான் முதன் முதலாக வென்று இருக்கிறார். பரிசை வாங்க மேடையில் ஏறியபோது கண்ணீர் மல்க " "யூதரின் இனக் கொலை மனித வரலாற்றில் ஒரு போதும் மறக்கப்படக் கூட்ாது; இதை உங்கள் பாடசாலைகளில் மாணவர்களுக்கு நீங்கள் நிச்சயமாகக் கற்பிக்க வேண்டும்' என்றுரைத்தார்.
சிறந்த நடிகருக்கான விருதை "எ யிட் ஸ்" நோயாளியாக g51955 Tom Hanks Glu-föpé Gémsönl–mf†. Schindler -2 + நடித்த Niessen ஒரு கடும்போட்டி ஏற்பட்டது. Tom Hanks பரிசைப்பெற மேடையில் ஏறியபோது வெளிப்படையாகவே க கறி னார். அங்கே வெளியில் ஆயிரக்கணக்கனோர் எயிட்ஸ் நோயி னால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு உங்களு டைய கரிசனை தேவை என்று விம்மி விம்மிக் கூறிளார்.
சிறந்த நடிகைக்கான பரிசிற்கு பிரித்தானிய நடிகைகளான Emma Thompson, Holly Hunter 60GBunršáRao Guiu assGduh GurTug:
49”

Page 27
இடம்பெற்றது. Emma Thompson சென்ற வருடம் இப்பரிசைத் தட்டியிருந்தார். எனினும் இவ்வருடம் பியானோவின் ஊமைப் பெண்ணாக நடித்த Holly Hunterக்கே பரிசு சென்றது. ஒரு வசனம் கூட படத்தில் பேசாது நடிப்பால் மட்டும் இப்பரிசை வென்றது ஒரு சாதனையே. சிறந்த உதவி நடிகை பரிசினைப் பெறவும் இந்த இருவரும் போட்டா போட்டி போட்டுக் கொண் டார்கள். ஆனால் பரிசை வென்றது ஊமைப் பெண்ணின் மத ளாக நடித்த பன்னிரண்டு வயது நிரம்பிய நியூசிலாந்துச் சிறுமி Anna Paquin இவர் ஒருவர் மாத்திரம்தான் ஒரு அரசியற் கோரிக்கைக்கா கக் கண்ணீர் விடவில்லை. எதிர்பார்க்காமல் பரிசைப் பெற்ற சந் தோசம் மேடையில் பயம் என்பவற்றிற்காக நாத்தடுமாறி, நன்றி அனைவருக்கும் நன்றி" என்று மட்டும் கூறிவிட்டு இறங்கினார். படமாக்கப்பட்ட சிறந்த நாவல் என்ற பரிசினை பியானோ என்ற படம் தயாரிக்கப்பட்ட நாவலை எழுதிய நியூசிலாந்து பெண் எழுத்தாசிரியர் Jan Campion என்பவர் பெற்றுக் கொண் டார். சிறந்த பின்னணிப் பாடலுக்கான பரிசினை "Philadelphia படத்திற்காகப் பாடிய Bruce Springsteen பெற்றார். இவர் புகழ் பெற்ற "பொப் இசைப்பாடகர் என்பதும், அதிகமாக அரச எதிர்ப்புப் பாடல்களைப் பாடுவதும் யாவரும் அறிந்ததே.
வழமையாகத் திகிலூட்டும் படங்களையும். தொழில்நுட்ப வியற் சாதனைகள் நிரம்பிய திரையையும் கொண்ட "ஹொலிவூட்" சடுதியாக அடைந்த அரசியல் மயப்பாட்டின் இரகசியம் என்ன? மேற்குலகில் பொதுவாக இன்று பாரிய சமூக மாற்றங்களுக்கான போராட்டங்களில் சற்று விரக்தி ஏற்பட்டு, மிகச் சுட்டிப்பான, குறிப்பிட்ட வரையறையுள்ள பிரச்சினைகளிற்கான போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெண் விடுதலை, Honwsexuals/ Lesbians களுடைய அங்கீகாரப் போராட்டம், சிறுபான்மை கலாசார குழுமங்களுடைய போராட்டம் என்பன பலரது கவனத் "தையும் ஈத்துள்ளன. (நான் அமெரிக்காவில் இருந்தபோது சில நிறுவனங்கள் மீசை காணப்பட்ட பெண்களை வேலை நிறுத்தம் செய்திருந்தமையால், "மீசை வளர்த்த பெண்களின் உரிமைப் போராட்டம் பெரியளவில் தலைதூக்கும் போல் காணப்பட்டது) பின் - அமைப்பியல்வாத சிந்தனையாளரான Foucault போன் Goiti Global Politics (d. 605 gypt Sugi Lugarta Local Politics (உள்ளூர் அரசியல்) யே முக்கியப்படுத்தியுள்ளனர் இத்தகைய நுணுக்கமான தளங்களூடாகவே அரசுகள் மக்களை உள ரீதியாக வும், உடல் ரீதியாகவும் அடிமைப்படுத்துகிறது என்பது அவர் வாதமாகும். எனினும் இத்தகைய நுணுக்கமான கோரிக்கைகளுக் காக போராடிவிட்டு அமெரிக்காவின் மத்திய வகுப்பினர் தம் மனச்சாட்சியைச் சாந்திப்படுத்தி, பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தாமல் செல்ல இது சாட்டாக அமைந்து விடுமோவென மாக்சியவாதிகள் கேட்கும் கேள்விகள் நியாயமானதே. இக்குறு கிய போராட்டங்கள் பாரிய கோரிக்கைகளிலிருந்து திசை திரும்பி யும் விடும். அமெரிக்க திரையுலகின் சடுதியான இவ் அரசியல் மயப்பாட்டின் தாற்பரியம் எவ்வளவு ஆழமானது என்ற வினா விற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்,
50

திருமறைக் கலா மன்றம் நடத்திய மூன்று நாள் விழா
தமிழ் விழா
؟6it ہو 0-سے
யாழ் திருமறைக் கலாமன்றம் நடத்திய தமிழ்விழா 23 - 5 -94 அன்று ஆரம்பமாகியது. துவங்கின நாளன்றே விழா களைகட்டி விட்டது. முதல் நாள் விழாவிற்குப் பேராசிரியரும் புனித சவேரி யர் குருமடத்தின் தலைவருமான அருட் திரு எஸ். ஜே. இமானுவல் அடிகள் தலைமை தாங்கினார்கள். யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் வருகை விழாவிற்கு மெருகூட்டியது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ். சிவலிங்கராசா தலை மையில் இடம்பெற்ற கருத்தரங்கு, வீரமாமுனிவரின் பலபரிமாண ஆளுமையை பலவகைகளில் மிகக் காத்திரமான முறையில் வெளிப் படுத்தியது.
இரண்டாம் நாள் இசைத் தமிழ் அரங்கு கதாசிரியர் செங்கை ஆழியான் தலைமையில் நடைபெற்றது. 'தமிழ் அறிவியல் சார்ந்த ஒரு மொழியாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். "தமிழுக்குப் புதுமை சேர்க்கும் ஒரு கவிஞன் எங்கள் புதுவை இரத்தினதுரை' என அவரை அழைத்து ஆசி கூறவைத்த பொழுது, புதுவையின் எதிர்பார்ப்பு இந்த மன்றம் இன்றைய நிகழ்வுகளையும் நாடகமாக்கி அதை நாளைய சமுதா யத்திற்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது. நிறைவாகப் பொன். சுந்தரலிங்கத்தின் இசை நிகழ்ச்சி அனைவருக்கும் மகிழ்வூட்டியது.
"கவிதை பற்றிக் கதைப்போம்” என்ற தலைப்பில் நடை பெற்ற கலை நிகழ்ச்சி தாவலர் கலாசார மண்டபத்தில் நிகழ்ந் தது. கவிதையின் உண்மைப் பொருள் கலைக் களத்தில் மறு படைப்பாக அது வெளிப்படுகின்ற தன்மை, சமூக மாற்றத்தில் அதன் பங்களிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்றுகின்ற போக்கு என்பன போன்ற கவிதையின் பல்வேறு தன்மைகளைப் பற்றி யெல்லாம் காரை. செ. சுந்தரம்பிள்ளை, இ. முருகையன், என். சண்முகலிங்கன் போன்ற கவிஞர்கள் விரிவாக ஆராய்ந்தனர். தமிழறிஞர் சொக்கன் தலைமையில் இடம் பெற்ற இக்கருத்தரங்கு தமிழ்க் கவிதை உலகின் கருத்துப் பரிமாற்றத்திற்கு ஒரு களம் அமைத்துக் கொடுத்த சிறப்பினைப் பெற்றது.
இதே மண்டபத்தில் மூன்றாம் நாட் காலை இடம் பெற்ற "புனைகதையாளருடன் ஒரு பொழுது" என்னும் கருத்தரங்கு பயனுள்ள பொழுதாக அமைந்தது. யாழ் பல்கலைக்கழக விரிவு ரையாளர் கலாநிதி நா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற
51

Page 28
இக்கருத்தரங்கில் செங்கை ஆழியான், கோகிலா மகேந்திரன். அநு. வை. நாகராஜன், இளையவன் ஆகியோர் புனைகதை பற்றி மிகவும் காத்திரமான கருத்துக்களை வழங்கினார்கள். இலக்கியத் திற் கோட்பாடு பற்றிப் பேசிய செங்கை ஆழியான் "இலக்கியத் தில் கோட்பாடு" என்ற கொள்கையினர் அன்றைய முற்போக்கு அணியில் இருந்து பிரிந்து சென்ற வரலாற்றினையும் பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றவர்கள் "அன்றைய முற்போக்கு வாதிகள் சரியான பொதுவுடைமைத் தத்துவத்தைப் பிரதிபலித்தார்கள் என்று கூறமாட்டேன்' என்று இன்று கூறுவதையும் எடுத்துக் காட்டி மார்க்சிசக் கோட்பாட்டின் தோல்வியை சோவியத் ஒன்றி யத்தின் வீழ்ச்சியோடு ஒப்பு நோக்கி ஆராய்ந்தார். இவருடைய கருத்தினை திரு. க. தணிகாசலம் வன்மையாக எதிர்த்து, கோட் ப டு மனித வரலாற்றோடு இணைந்தது என்றும், இலக்கியம் எவரால் படைக்கப்பட்டாலும் நிச்சயம் கோட்பாடு இல்லாது இருக்க முடியாது எனவும் எடுத்துரைத்தார். கோகிலா மகேந்தி ரன் பேசும் பொழுது உள்ளடக்கத்தில் எமது எழுத்தாளர்களின் திறமையை மெச்சினார். ஆனால் எமது எழுத்தாளர்கள் உருவத் திலும் உத்தியிலும் தென் இந்திய எழுத்தாளர்களைப் போல வளர்ந்து விடவில்லை என்றார். கலாநிதி சுப்பிரமணியன் தனது தொகுப்புரையில் "மனித நேயமுடைய கோட்பாடின்றி சமூகம் இல்லையென்றும் ஏதோ ஒரு வசையில் கோட்பாடு ஒரு எழுத்தா ளனுக்கு இருந்தேயாகும் என்றும் கூறினார். ஆனால் கோட்பாட் டுக்கு இலக்கியம் படைக்க முடியாதென்றும் அது இலக்கிய மாகா தென்றும் கோட்பாடே இலக்கியமாகும் என்றும் எடுத்துரைத் தாா.
விழாவின் இறுதி நாளாகிய 25 ம் திகதி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சு.டி வகலாலா தலைமையில் நாடகத் தமிழ் அரங்கின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திரு. டிவகலாலா இருபத் தியேழு வருடமாகக் கலைப் பணியாற்றும் மன்றத்தின் சேவை யைப் பாராட்டியதுடன் சிங்கள நாடகங்களாகிய மனமே, சிங்க பாகு போன்ற நாடகங்களை நடத்த திருமறைக் கலாமன்றம் ஒன்றினால் மட்டுமே முடியும் என்றும் கூறினார் பேராசிரியர் அ. சண்முகதாஸ் "நான் காணும் நாடக உலகம்" பற்றியும், பேசு கையில், இலங்கையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையே முதலில் சமூக நாடகங்களில் புதுமையைப் புகுத்தியவர் என்றும் பின்னர் கந்தன் கருணை, மண்சுமந்த மேனியர், களத்தில் காத்தான், சந்தனக் காடு போன்ற சிறந்த நாடகங்கள் இந்த மண்ணில் உருவாகின என்றும் கூறினார்.
நாவலர் மண்டபத்திலும் திருமறைக் கலா மண்டபத்திலும் இங்கும் அங்குமாக மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தேறிய இந்த வெற்றிகரமான தமிழ் விழாவுக்குப் பின்னணியாக நின்று உழைத்தவர் அநேகர். அவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர் வுடன் சேவை செய்தனர், அவர்களது உழைப்பின் பெருமை இவ் விழாவுக்குச் சோபை சேர்க்கக் காரணமாக அமைந்தது.
இறுதியாக திருமறைக் கலாமன்றம் இம்முறை தமிழையும் தமிழ்க் கலைகளையும் வளர்ப்பதில் தனது காலைச் சற்று ஆழ மாக வைத்திருக்கின்றது என்பது பொருத்தமானதாகும். O
52

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி யைச் சென்னையிலுள்ள எழுத்து,ாளர் கூட,
தித்த , ல்லையாமே, அவரைச் சந்தித்ததுண்டா?
க. நரேந்திரன்
நேரில் சந் நீங்கள்
கொழும்பு - 13,
ஜனவரி
இந்தப் பகுதி இலக்கியச் சுவை ஞர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. உங்களது மனசுக்குப் பட்ட கேள்விகளை கேளுங்கள். கேள்விகள் சும்மா சினி மாத்தனமாக இருக்கக் கூடாது. கேள் விகள் கேட்பது இரு பகுதியினரது வளர்ச்சிக்கும் உகந்தது. இதில் இளைய தலைமுறையினரது பங்களிப்பு முக்கி யம். இலக்கியத் தரமான கேள்விகள் மாத்திரமல்ல, எத்தகைய கேள்விகளை யும் கேட்கலாம். கேள்வி கேட்பதே ஒரு கலை. தேடல் முயற்சி முக்கியம். இதில் வரும் பல கேள்வி - பதில்கள் வருங்காலத்தில் நூல் வடிவில் இடம் பெறும். இதில் உபதேசம் இடம்பெறாது. அறிதலே, அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வதே நோக்கமாகும். எனவே உங்களது கேள்விகள் ஆழ, அகலமா னவையாக இருக்கட்டும்.
- டொமினிக் ஜீவா து வன் டில்
எனக்குத் த க வ ல் தந்தார். குமுதம் ஆசிரியர் என்னைத் தமது காரியாலயத்திற்கு வந்து போக முடியுமா? எனக் கேட்ப தாகச் சொன்னார். காரணம் 1980 ஆண்டு தீபாவளி சிறப்பு மலரில் நான் எழுதிய 'அநுபவ முத்திரைகள்" என்ற நூலில் இருந்து ஒரு பகுதியை குமுதம்
17 - 18 ந் திகதிகளில் சி. எல். எஸ். என்ற கிறிஸ்தவ லிட்டரி சொசைட்டி சென்னையில் ஒரு இரண்டு நாள் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது. "சிறு கதைகளில் சாதியமும் வறுமை யும்" என்பதுதான் தலைப்பு. அதில் கலந்து கொண்டு கட் டுரை வாசிக்கச் சென்றிருந் தேன். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முதல் நாள் சி. எல். எஸ். அமைப்பாளர் பாக்கியமுத்து
53
இதழ் மறுபிரசுரஞ் செய்திருந்த தற்குப் பண ம் தருவதற்குத் தான் என்னை அழைத்திருந் தார்கள் என்பது பின் ன ர் தெரிந்தது. நான் அன்று சாயங் காலமே வருவதற்கு ஒப் புக் கொண்டேன். என்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்த திரு. நீல பத்மநாபன் அவர்களும் என்னுடன் கூட வர ஒப்புக் கொண்டார்.
:

Page 29
எங்களை மிக மரியாதை யுடன் இருக்கையில் அ ம ர ச் செய்தவர்கள் தொலைபேசியில் ஆசிரியருக்குத் தகவல் தந்தனர். நாங்கள் இருவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டோம். திரு. எஸ். ஏ. பி. எங்களை மிகப் பவ்வியமுடன் வரவேற்றுப் பேசினார். பணம் அனுப்புவதில் உள்ள சிக்கல்களைக் கூறி, ஒரு தொகைக்கான காசோலையைத் தந்தார். நான் மூன்று மெய் க ண் டா ன் கலண்ட ர்களைக் கொண் டு சென்றிருந்தேன். ஒன்றைத் தோழர் கலியாண சுந்தரத்திடமும் இன்னொன்றை நண்பர் ஜெயகாந்தனிடமும் சேர்ப்பித்திருந்தேன். கைவசம் மீதமிருந்த கலண்டரை அவருக் குக் கொடுத்தேன். எங்களுக்கு விடை தந்தவர் உதவி ஆசிரியர் களான ஜ. ரா. சுந்தரேசன், ராகி. ரங்கராஜன் ஆகியோர் களையும் பார்த்துப் போகும் படி கேட்டுக் கொண்டார். மிக மிக எளிமையாகக் காட்சி தந்த அந்தப் புதுமை நிறைந்த ஆசிரி யரின் நிஜ உருவம் இன்னமும் கண்களில் நிற்கிறது.
 ைசென்ற இதழில் குறிப்பிட்
டிருந்தீர்களே, மல் லி  ைக நேரில் தந்தபோது எடுத்தெ றிந்து அலட்சியமாகப் பேசிய
அந்த மனித சிகாமணி யார்?
கோப்பாய், எம். மனோகரி
அந்தக் குறிப்பு எனது அநு பவத்தில் ஒர் இளையே தவிர, யாரையும் நோகப் பண்ணுவது எனது நோக்கமல்ல. இப்படி எத்தனையோ பேர் எனது இலக் சிய வாழ்க்கையில் வந்து போய் விட்டனர். அவர்களது பெயரை ஆவணப்படுத்திவிடக் கூடாது. பொது வாழ்க்கையில் ஈடுபட்ட வர்கள் துவேஷத்தை விதைக்கக் கூ டா து. "ஆ அப்படியா?"
என்று சொல்லித் துடைத்து விட்டு மு ன் னே சென்றுவிட வேண்டும். அந்த நண்பர் ஒன்றை மறந்து விட்டார். ஒரு ஆசிரியர் முப்பது வருடங்களுக்குப் பின்ன ரும் தனது சஞ்சிகையைத் தேடி வந்து தந்தாரே என்பதை தனது பின் சந்ததியினருக்குப் பெருமை யுடன் சொல்லும் சந்தர்பத்தை இழந்து விட்டார். இந்த வர லாறு அவர் நெஞ்சை எப்போ தும் உறுத்திக் கொண்டே இருக் கும். இது சர்வ நிச்சயம்.
ஐ மல்லிகையை அறிந்தவர்கள்
மத்தியில் பரவலாகப் பேசப் படும் செய்தி, மல்லிகையின் எதிர்கால வாரிசு யார் என்பது. இது சம்பந்தமாக நீங்கள் ஏற் பாடு செய்து வைத்துள்ளீர்களா? கொழும்பு - 6, க. மோகன்
காண்டேகரின் இலக்கிய அலை வீசியது ஒரு காலம். அப் பொழுது இளந்தாரிகளான சில இளம் எழுத்தாளர்கள் காண் டேகரின் அபிமான விசிறிகள். அவரது 'கிரெளஞ்சக வதம்" என்ற நாவலை ஆர்வத்துடன் ப டி த் து வந்கோம், அதில் திலீபன் என்றொரு பாத்திரம் மனசைக் கவர்ந்த பாத்திரம். காண்டேகரின் அபிமானிகளான நம்மில் சிலர் நாம் திருமணம் செய்து ஆண் குழந்தை பெற் றால் அக் குழந்தைக்கு திலீபன் எனப் பெயர் சூட்ட வேண்டும் எனப் பேசிக் கொண்டோம். இந்த வகை யி ல் சில்லையூர் செல்வராஜன், என். கே. ரகு நாதன், நான் ஆகியோர் நமது ஆண் குழந்தைகளுக்குத் திலீபன் என நாம ம் சூட்டினோம். நண்பர் டானியல் தமது மூத்த மகனுக்குப் புரட்சிதாசன் எனப் பெயர் சூட்டினார், இது ஒரு சம்பவம்.
f4

அடுத்து அந்தத் திலீபன் து கு ப் பட்டதைச் சொல்லுங் என்ற எனது ஒரே རྒྱའི་ ரு கள. மகனை யாழ்ப்பாணம் நதுக 鲁 4. கல்லூரியில் சேர்த்தேன். எனது மானிப்பாய், எஸ். தவயோகம் பதிப்புக்கும் தோழமைக்குமுரிய இலக்கியக் கூட்டங்களுக்கு
.' என்னைப் போன்ற அடிமட் துது மக்களின் புத்திரர்களை உருவாக்கிய தோழர் கார்த்தி கேசனது பாதங்கள் படிந்த அத தக் கல்லூரியில் எனது மகன கல்வி கற்க வேண்டுமென விரும் பினேன். அங்கு தமிழ் கற்பத் தவர் சிவராமலிங்கம் மாஸ்டர். ஒரு நாள் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயம் "வில்லுக்கு விஜயன், சொல் லுக்கு அரிச்சந்திரன்; மல்லுக்கு மேல்!" எனச் சொல்வி நிறுத் திய வேளை ஒரு மாணவன் திடீரென எழும்பி "பொல்லுக் குச் சிவராமலிங்கம்' என்றான. (ஆசிரியர் தடியூன்றிக் கொண்டு நடப்பதை சகலரும் அறிவர்) வகுப்பு ஸ்தம்பித்து விட்டது. ஆசிரியர் மாணவனை அழைத தார். *ஆருடைய பிள்ளை யப்பா நீ?" என வினவினார். வகுப்பிலிருந்த மாணவன் ஒரு வன் எழுந்து "சேர்! மல்லிகை ஆசிரியர் மகன்தான் திலீபன் எனச் சொன்னான். வாய்விட் டுப் பெரிதாகச் சிரித்த ஆசிரியர் சிவராமவிங்கம்: *அதுதானே பார்த்தன்' அப்பனுக்கேற்ற பிள் ளைதானப்பா, நீ!" என மகிழ்ச்சி தெரிவித்து முதுகைத் தடவிக் கொடுத்தார்.
அந்தத் தி லீபன் எனது தோழன், ஆத்மார்த்திக நண் பன், சிநேகிதன். நீங்களே சொல்லுங்கள், வாரிசு இயல் பாகவே உருவாகி வருகிறாரா, இல்லையா என்பதை?
த இலக்கிய உலகில் அடிக்கடி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றனவே, உங்களது மன
அடிக்கடி நேரில் அழைப்புக் கொடுப்பது எனது வழக்கம். இது எனது வீட்டு நிகழ்ச்சியல்ல. பொதுப் பிரச்சினை. கூட்டத் திற்கு வரமாட்டார்கள். சிலர் தலைமை வகிக்க, அல்லது பேச அழைத்தால் தான் வருவார்கள். பார்வையாளர்களாக வர வே மாட்டார்கள். இது ஒரு பெரிய பத்தா. இப்படியானவர்களை நான் நேரில் சென்று அழைப் பதை விட்டுவிட்டேன். இதற்கு மாறாக என் மனசை தொட்ட வர்கள் மூன்று பேர். எந்தவித மான வறட்டுப் பந்தாக்களுமில் லாமல் வந்து கலந்து கொள் வார்கள். ஒருவர் பேராசிரியர் சண்முகதாஸ், இன்னொருவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, அடுத்தவர் செங்கை ஆழியான், ஒரு இலக்கியக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதென்றால் எத் கனை சிரமம்! அதைப் புரிந்து கொள்ளாமல் பந்தா காட்டுப வர்கள் கூட்டங்களுக்கு வராமல் விடு வ தே இலக்கியத்திற்குச் செய்யும் பெரிய தொண்டாகும்.
0 மாணவர்கள் மு ன் னே ற என்ன செய்யவேண்டும்.
கோண்டாவில், த, அரியராசா
படிக்க வேண்டும். அர்ப்ப ணிப்பு உணர்வு ட ன் பயில வேண்டும்.
ஈ சீதனக் கொடுமை பற்றி உங்களது கருத்து என்ன?
அரியாலை, எஸ். பரஞ்சோதி
தமிழர் வாழ்வையே நச்சுப் படுத்தும் சனியன்கள் இரண்டு. ன்ேறு சாதிச் சாத்தான்; மற்
55

Page 30
றது சீதனப் பிசாசு. கல்வியில் தன்னிறைவு காண்பது பெண் க ளு க்கு இன்றியமையாதது. இரண்டாவது பெண்களுக்குப் பொருளாதார விடுதலை வேண் டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும். பிரசாரத்தினால் மாத்திரம் இந்தச் சனியனை நம்மைவிட்டுத் தொலைத்துவிட முடியாது. தொடர்ந்து போராட வேண்டும். என் மனசுக்குள் ஒரு கற்பனை. சீதனங் கேட்டு மணம் பேசி வரும் மாப்பிள்ளையைப் பெண்ண்ே ச ர் வ அலங்கார பூஜிதையாக வரவேற்க வேண் டும். அவருடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் எனக் கண்டிப் பாகக் கேட்க வேண்டும். இன்
றைய இளைஞர்கள் இதற்குச் சம்மதிப்பார்கள். அப்ப டி ப் பேசக் கூடிய சந்தர்ப்பத்தில்
*உங்களை எனக்குப் பிடிச்சிருக் கும். ஆனா, என்னையும் தந்து அதற்காக உங்களுக்கு முற்பண மும் தருவதுதான் எ ன க் கு ப் பிடிக்கவில்லை. அதற்காகவே உங்களைக் கட்டிக் கொள்ள எனக்குக் கொஞ்சம் கூட இஷ்ட மில்லை! எனத் துணிந்து கூற வேண்டும். இதுதான் அதிரடி நடவடிக்கை. இதைச் சாத்திய மாக்கும் பெண்கள் நம்மிடையே இல்லாமலும் இல்லை இந்தச் சிந்தனைக்குப் பின்னால் ஜெய காந்தனின் கதைக் கருவொன்று தலை நீட்டுகின்றது.
 ைஒரு காலத்தில் மல்லிகை
ஒழுங்கை மூத்திர ஒழுங்கை என அழைத்தார்கள். ஆனால்
இன்று அது தந்தவனம் போலக் காட்சி தருகின்றதே, மல்லிகைப் பந்தலிளின் மணந்தான் அதற் Så snirso0ILDrr?
நல்லூர், ச, மோகனன்
பக்கத்தேயுள்ள பூரீலங்கா அச்சக அதிபர் சிவராமனின் விடா முயற்சிதான் அதற்குக் காரணம். காரியாலயத்திற்கு முன்னால் உள் ள வீட்டார் முருகேசு ஐயாவின் சுத்தம் இன் னொரு காரணம். அயலவர்க ளின் கண்காணிப்பு பிறிதொரு காரணம், இந்த ஒழுங்கை இன்று சுத்தத்திற்காகப் பரிசு பெறத் தக்கதற்கு உங்களது கருத்துப் படி நந்தவனமாகக் காட்சி தரு வதற்கு - இவர்களுடைய தின சரி கவனிப்புத்தான் அடிப்ப டைக் காரணம். எனக்குள் ஒரு குற்ற உணர்வு உண்டு. ஒருநாள் கூட தடி விளக்குமாறுபிடித்து ஒழுங்கையின் ஒரு பகுதியைக் கூடக் கூட்டிப் பெருக்கவில்லை என்ற மன ஆதங்கம் எனக்கு உண்டு. இந்தக் கவர்ச்சிக்கும் சுத்தத்திற்கும் அவர்களே முழு முதற் காரணம். இன்று இதன் பெயர் மூத்திர ஒழுங்கையல்ல; பதிப்பக சாலை!
எனவே சுத்தம் சூழல் பாது காப்பு என்பது மேடை உபதே சமல்ல. நமது சூழல் சீர்கேட்டிற் குள்ளிருந்து மீள்வதற்கு நாமே காரணமானவர்கள். இதற்காக வும் கூட நான் எனது அயல வர்களை நேசிக்கின்றேன். இை
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் பெற்றது. அட்டை
156
"மல்லிகைப் பந்தல்" பாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
அச்சகத்தில் அச்சிடப்

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OMAN GOODS TIN FOODS
FOR ALL YOUR
NEE DOS
Wholesale & Retail
Dia: 26587
E. SITTAMPALAM & SONS,
223, FIFTH CROSS STREET,
COLONMEBO- 7 7 .
a-sha/ranamura/rem NMs
GRANS
THE EARLEST SUPPLERS

Page 31
Mallikai Regis
With Best Compliments of:
STAT
36, K. CYRIL PER COLOM T'Phone
 

- - - - H
Lerel I, il New Paper il GPC), Sri |n
| || ||
Timber Ply Wood & Kempas
LANKA
RERA MAWATTE IBO — 13.
432979