கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1975.04

Page 1
ܘܝ
 

L、
975

Page 2
நந்தி பற்பொடி
பல் அரணை, முரசிலிருந்து இரத்தம் வடிதல் வாய் நாற்றம் முதலிய சகல வியாதிகளையும்
துப்புரவாக நீக்கி, பற்களுக்கு உறுதியைக் கொடுக்க வல்லது நந்தி மருத்துப் பற்பொடி ஒன்றே.
கைதேர்ந்த வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் சிறந்த மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பெற்றது
நந்தி பற்பொடி
அண்ணு தொழிற்சாலை இணுவில்.
Gstracus: 7412
அழகான அச்சக வேலைகளுக்கும்
தரமானதும் கவர்ச்சிகரமானதுமான
கலர் அச்சடிப்புகளுக்கும்
கொழும்பில் சிறந்த இடம்
ஒரு தடவை நம்முடன் தொடர்பு கொண்டு பாருங்கள்
நியூ கணேசன் பிரிண்டர்ஸ்
22. Jeggio eg LunTfiħ om Slu Aè woA5. கொழும்பு - 11
தொலைபேசி : 35422

_ ஆடுதல் பாடுதல் சித்திரம்கவி
யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட்டென்றும்நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்".
பரஸ்பரம் பரிவர்த்தனை
தமிழகத்தின் பல பிரதேசங்களிலிருந்து தரமான இலக்கிய ரசிகர்கள் இலங்கை எழுத்தாளர்களினது தகுதி வாய்த்த படைப் புக்களையும் பல கருத்தோட்டங்களை உள்ளடக்கிய சஞ்சிகைக ளைப் பெறவும் முயன்று முயற்சித்து வருகின்றனர்.
இதைப் போல ஈழத்திலிருந்தும் பல இலக்கியச் சுவைஞர்கள் தமிழகத்துப் படைப்பாற்றல் நூல்களையும் தரமான இலக்கிய சஞ்சிகைகளையும் பெற்றுப் படித்துப் பயன் பெறவிரும்புகின்றனர். இந்த வகையான இரண்டு சாரார்களும் எம்முடன் அடிக்கடி தொடர்பு கொள்ளுகின்றனர். எம்மால் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அதே சமயம் எமக்குப் போதிய அவகாசமுமில்லை. அதற்காக அலட்சியம் செய்கின்ருேம் என்பதும் இதற்கு அர்த்தமல்ல. . ஆக்கபூர்வமான வழிகளை நாம் யோசிக்க வேண்டும். இரு பக்கமுள்ள தரமான புத்தக - சஞ்சிகைகளை நாம் பொருட்களுக் குப் பொருட்களாகப் பண்டமாற்றுச் செய்து கொள்ளலாமா? எனப் பொறுப்பானவர்களுடன் நாம் யோசிக்கின்ருேம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கின்ருேம்.
- ஆசிரியர்
இ9ை), கட்டு)ை سمي ومقامه شاسعه ஜீ ஆக்தியே06 234-A கே.கே.எஸ் வீதி
ჩ8)|62)
のジ。 ugrþút Marúð
శ్రీశ్రీశ్రీఎgo. (seks

Page 3
§
2S25
g9es. So: «â: submuuT
எனது அந்தரங்கமான நண்பர்களில் இவரும் ஒருவர். மற்ற வர்களிடம் மனந் திறந்து பேச முடியாத எத்தனையோ விஷயங் களைப் பல இரவுகள் இவருடன் கண்விழித்து விவாதித்திருக்கின் றேன். பொறுமையாகக் கேட்டு வைப்பதுடன் பொறுப்பான ஆலோசனைகளையும் சொல்லி, எனக்குத் தகுந்த நேரங்களில் கை தந்து உதவியுள்ளார்.
அச்செழுவைச் சேர்ந்த தம்பையா என்னும் பெயரையுடைய இவர் ஒரு வழியில் எனக்குக் கிட்டிய உறவினரும் கூட. ஆனல் நமது நட்பில் சொந்தம் - பந்தம் என்ற உணர்வையும் T மீறி இலக்கிய உறவே காலக் கிரமத்தில் மேலோங்கியிருக்கின்றது.
மல்லிகைக்கு நெருக்கடியான நேரங்களில் அதை எப்படியோ தெரிந்து கொண்டு பல தடவைகளில் மெளனமாக உதவியுள்ளார். அந்த மெள்னம்தான் தம்பையா அவர்களின் செயலாக்கம்.
இவரது நீண்ட கால வாழ்வு மலாயாவைச் சேர்ந்த சிரம் பானில் கழிந்தது. அங்கு இருந்த காலத்திலேயே என்னுடன் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். காரணம் வளர்ந்து வரும் எழுத்தாளராக அங்கு அவர் பிரகாசித்துக் கொண்டிருந்தார்.
ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் என்னை க் கே வந்து தனது நட்புறவைப் புதுப்பித்துக் கொண்ட ர் அன்றிலிருந்து எந்த இலக்கியப் பிரச்சினையானலும் ந" ஒ அவ த . விவ நிப்போம்
கொழும்பில் நான் தங்கியிருக்கும் போது பெரும்பாலும் இவருடன்தான் என்னைக் காணலாம். மல்லிகையின் அபிவிருத்தி யில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் என்ன விட, மல்லி கையின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.
மல்லிகையின் ஆசிரியத் தலையங்கத்தைச் சுவைத்துப் படிக்கும் இவர், "நான் எடுத்தவுடன் படிப்பது தலையங்கத்தைத்தான். மல்லிகையின் ஆசிரியத் தலையங்கம் ஆணித்தரமான தனித்தன்மை வாய்ந்தது" எனப் பாராட்ட இவர் பின் நிற்பதில்லை.
படாடோபமோ வாய்ச் சம்பிரதாயமோ இல்லாமல் இயங்கி வரும் இவரது நட்பு மல்லிகைக்குத் தரமான பசளையாகும்.
 
 
 
 
 

உழைப்பேதன் 'மல்லிகையின் மூலதனம்
அனைத்துலக மாதர் ஆண்டும் நவ இலங்கையின் உதயமும்
இந்த ஆண்டை அனைத்துலக மாதர் ஆண்டாக ஐ. நா. சபை பிரகடனம் செய்துள்ளது.
இந்தச் சர்வதேச ஆண்டை இன்று உலகு தழுவிய வண்ணம் பல நாடுகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
பெண் அடிமைத்தனம் நீங்கவும், மாதர்களை இழிவுபடுத்தும் கேவலம் ஒழியவும் உலக ஜனநாயக மாதர் இயக்கங்கள் கடந்த பல காலமாகக் கோரிக்கை வைத்து இயக்கம் நடாத்தி வந்ததின் பெறு பேருக உலக நாடுகள் சபை இந்த ஆண்டைப் பெண்களுக் குரிய ஞாபகார்த்த ஆண்டாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. முழுப் பெண் குலத்துக்குமே மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. 1910-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோஷலிஸ் மாதர் மாநாடு மார்ச் 8-ந் திகதியை சர்வதேச மாதர் தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சோஷலிஸ் இயக்க முன்னுேடியும் மாதர் இயக்கத் தலைவியுமான "கிளார்ா ஜெட்கின் இதில் முக்கிய பங்கு கொண்டு செயல்பட்டார். உலக மாதர் இயக்கத்தின் கோரிக்கை இன்று சர்வதேச சம்மதம் பெற்றுச் செயற்பட ஆரம்பித்து விட்டது.
இந்தப் பின்னணியில் நமது நாட்டை நாம் சீர்தூக்கிப் பார்த் தோமானுல் அவ்வளவு திருப்திப் பட்டுவிட முடியாது நாம்.
உலகத்திலேயே அரசின் தலைமையை முதன் முதலில் ஒரு பெண்ணை நம்பி அவரது கைகளில் ஒப்படைத்தவர் நாம் என்ற சர்வதேசப் பெருமை நமக்கு இருக்கின்ற போதிலும் கூட, நமது நாட்டில் இன்னமும் நிலப் பிரபுத்துவ பெண் அடிமைத்தனம் முற்ருக அற்றுப் போகவில்லை என்பதை நாம் கவனத்தில் வைத் திருக்க வேண்டும். ܐ
சமீப காலமாகத்தான் பெண்களின் இயக்கங்கள் சமுதாயத் தின் அரசியல், பொதுவாழ்வில் வேர் பரப்பி வருவதைக் காணம் கூடியதாகவுள்ளது. ருந்தும் எதிர்பாராத அளவுக்கு மாதர் இயக்கங்கள் வளரவில்லை என்றே குறிப்பிட வேண்டும். , .
-

Page 4
ஒரு பெண்ணைப் பிரதமராக உருவாக்கிய இந்த நாட்டில் தமிழ் மாதர்களின் சமூக அரசியல் நிலைமை மிகப் பரிதாபகர மாகக் காட்சி தருகின்றது. பாராளுமன்றத்தில் கூட ஒரு தமிழ்ப் பெண் மகள் பிரதிநிதியாக இல்லை என்ற கசப்பான உண்மையை யும் நாம் சொல்லித்தான் ஆகவேண்ம். பிரதிநிதிகளாகக் கூட வேண்டாம்; இந்தப் பிரதேசத்தில் இயங்கும் எந்தக் கட்சியும்கூட தங்களது வேட்பாளர்களாகப் பெண்களில் ஒருவன்ரயும் நிறுத்த வில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் அலட்சியம் செய்வதற் @@&ນ.
தேசத்தில் ச ரி பா தி பலத்தைக் கொண்ட பெண் சக்தியை ஒதுக்கி மூலையில் உட்கா ர வைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் அவர்களினது பேராதரவை வேண்டிப் பெற்றுக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆண்கள் கூட்டம், மீண்டும் நிலமா னிய சமூக அமைப்புக் கருத்துக்களையே பிரசாரமாக முடுக்கி, பெண்களைக் கையாலாகாதவர்களாக நினைக்க வைத்து மீண்டும் மூலையில் ஒதுக்கி வைத்துவிடும் இந்த "பம்மாத்து" நீண்ட நாட்க ளுக்கு இந்த நாட்டில் விலை போகாது என்பதையும் நாம் முற்று முழுதாக நம்புகின்ருேம்.
ஏனெனில் சிந்திக்கத் தெரிந்த- இயங்கங்களில் பங்கு கொண்டு தேசத்தைத் தகுந்த திசைவழியில் நடாத்திச் செல்ல முனைந்து செயல்படும் - பெண்கள் கூட்டம் இன்று நாடு பூராவும் புதுப் பலம் பெற்று முகிழ்ந்து வருவதை அவதானிக்கின்ருேம்.
கலையில், அரசியலில், விஞ்ஞானத்துறையில் மற்றும் சமுதாய இயக்கங்களில் பெண்களுக்குரிய பாரிய பங்கை இன்று அவர்களே
தெரிந்து வைத்துள்ளனர்.
இன்று புதிய வடிவமும் மாற்றமும் திருப்பமும் பெற்று வரும் நவ இலங்கையில் பெண்களின் பங்கு கணிசமானது. இது போதாது. முழு வடிவிலான் சக்தியாக மாதர் சக்தி திாட்டப்பட வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயங்கள் சற்றும் குறையா மல் கிடைக்கப்பட வேண்டும். இதில் பின் தங்கியுள்ள தமிழ்ப் பெண்களின் ஆற்றலும் இயக்க சக்தியாகத் திாட்டப்பட்டு பொதுச் சக்தியுடன் இணைந்து செயல்பட ஊக்குவிக்கப் படவேண்டும்.
தமிழ்ப் பெண்களைப் பொது வாழ்க்கைக்", இ(pத்துவர முட் டுக் கட்டையாகப் பெரிதும் விளங்குவன தமிழ் மக் கரினது நீண்ட கால உணர்வுகளான நிலப் பிரபுத்துவக் கருத்துக்களே. “பெட் டைக் கோழி கூவிப் பொழுது விடியாது!" என்ற பழமொழியைக் கூறிச் சஞதனிகள் பெண் உரிமை கோரித் தலை தூக்கி வரும் பெண் களின் இளம் தலைமுறையினரை மட்டம் தட்டப் பார்க்கின்றனர். ஒரு சோஷலிஸ் நவ இலங்கையை நாம் உருவாக்கும் பணிக்கு மிக மிக உந்து சக்தி பெண்கள் இயக்கம் தான் என்ற உண்மையை இந்த மாதர் ஆண்டில் தேசத்தின் சகல பகுதியினருக்கும் நாம் சொல்லிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எழுத்துத் துறையில் ஆர்வம் மேலிட உழைக்க விருப்பும் படித்த பெண்களைக்கூட, கொச்சைத்தனமான வம்பு வதந்திகளைப் பரப்பி அவர்களினது ஆர்வத்தையே மண்ணடிக்கின்) து சென்ற தலைமுறை அடிமைக் கூட்டம். கட்டுப்பாடான மகளிர் இயக்கங்களினல்தான் பெண் உரிமை யை வென்றெடுக்க முடியும் என சரித்திரமே மெய்ப்பித்துள்ளது. 4.

ரசூல் கம்ஸதோவின்
புதிய நூல்
லெனின் பரிசாளரான பிர பல கவிஞர் ரகு ல் கம்ஸ்தோ வின் புதியதொரு க வி ைத த் தொகுதியொன்று காதல் சரம்” என்ற பெயரில் வெளியாகியுள் ளது. பெண்கள் மீதான நன்றிப் பாடல் என விமர்சகர்களால் வர்ணிக்கப்படும் இக் கவிதைத் தொகுதி வெளிவந்த உடனேயே மாஸ்கோ புத்தகக் கடைகளில் விற்றுத் தீர்ந்து விட்டது.
"1975-ம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அற்புத மான செயல்தான். ஆனல் க தையைப் பொறுத்த வரையில் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் இனிவரப்போகும் ஒவ் வொரு ஆண்டுமே மகளிர் ஆண் டுதான். ஏனெனில் கவிதையின தும் மனிதனினதும் சிறப்பு ப் பண்பாக பெண் எக்காலத்தி லுமே தி க ழ் ந் து வருகிருள்" கம்ஸ்தோவ் இவ்வாறு எழுது &მფ. †.
இந்நூலிலுள்ள பெருவாரி யான கவிதைகள் தாயைப் பற் றியவை. தொட்டிலின் மீது குனிந்திருக்கும் ஒரு பெண், கம்ஸ் தோவுக்கு இது சமாதானத்தி னதும் நல்லெண்ணத்தினதும்
சின்னமாகும். யுத்தத்துக்கு எதி
ரான சின்னமாகும். அன்பையும் தாய்மையின் பெருமிதத்தையும்
தின் "அவார்?
ஏ. ஏ. லத்தீப்
பாடும் அதே நேரத்தில் ஹிரோ ஷிமாவின் கொடிய அணுகுண்டு வெடிப்பின் ரத்தச் சாக்காட்டுக் குள் கிடக்கும் ஒரு நங்கையின் வேதனையையும் இவரது கவிதை கள் கூறுகின்றன.
காக்கேஸிய இலக்கியத்தின் தலைமகஞன கம்ஸத் ஸ்தாஸின் புதல்வர் ரசூல் கம்ஸ்தோவ். பல பத்தாயிரம். ஜனத்தொ கையை மட்டுமே கொண்ட ஒரு சிறிய கக்காவிய தேசிய இனத் மொழியிலேயே கம்ஸ்தோவ் எழுதுகிருர். ஆனல் அவரது நூல்கள் சோவியத் யூனி
யனிலுள்ள சகல மொழிகளிலும்
பல அந்நிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல லட் சக் கணக்கான பிரதிகள் வெளி யாகின்றன.
கம்ஸ்தோவின் முதலாவது சிறிய தொகுதி இருபதுக்களில் வெளியாகியது. அதன் பின்னர் இதுவரை அவர் 40 நூல்களை வெளியிட்டுள்ளார். கவிஞர் சோஷலிஸ் உழைப்பு வீரர் விரு தைப் பெற்றவர். அவர் தமது வாழ்வின் இரண்டாவது அரை நூற்ருண்டின் முன்னைவிட மகத் தான ஊக்கத்துடன் அடியெ டுத்து வைத்துள்ளார்.
*நொவி மிர்" என்ற சஞ்சி கையின் சமீபத்திய இதழ் கம்ஸ்

Page 5
மிகக் கவனம்
Linth gal பனங் கள் விறக்கி: பழக்கப் பட்ட பல தோழர்நாளை வாழ்வின் விடிவை நோக்கி வச்சிர உணர்வில் வெகுண் டெழுந்தால்.. அவர்தம்மின்பாளை சீவும் பாரிய கத்தி பெருந் தன வர்க்கப் பூதங் களின், elp2it Sis, மூர்க்கம் கொல்ல மார்க்கம் தேடும்; மமதை வேண்டா! மிகக் கவனம்...!
அனலக்தர்
தோவின் இறுதி விலை" என்ற கவிதையை தாங்கி வந்துள்ளது. பூமியில் சமாதானத்தின்பாலான மனிதனது பொறுப்பை சமாதா னத்திற்கு அளிக் க க் கூடிய
பெரும் விலையை இக்கவிதை பிர
திபலிக்கிறது. கம்ஸ்தோவின் ஈரானிய பயணத்தின் ம ன ப் பதிவுகளின் பயணுக எழுதப்பட்ட இக்க்விதையில் அந்த நாட்டின் புராதன கலாசாரம் பொதிந் துள்ளது.
இலக்கியப் படைப்புகளும் புராணக் கதைகளும்” எ ன் ற தொகுப்பு நூலொன்றை எழுதி யுள்ள கம்ஸ்தோவ், இதைப் பெரும் முக்கியத்துவமிக்கதாகக் கருதுகிருர் . 'நாடோடி வாழ்க் கையின் தார்மீகக் கோட்பாட் டிற்குள்ள வலிமையை வாசக ருக்குக் காட்ட விரும்பினேன்" என்று அவர் எழுதுகிறர். வாழ்க்
6
வறுமையின் கோரத்தால் மனைவியின் தாலியை விற்கச் சென்றேன் "தாலி வாங்குவ சமய விரோதமென்முர் செட்டி அவரென்ன..! (untrf கோவலன் காற்சிலம்போடு வருவா னென்று எதிர்பார்க்கிருரோ?
தில்லையடிச் செல்வன்
கையின் நகைச்சுவையையும் அன் பையும் கொண்டுள்ள இவரது கவிதைகள் அவற்றின் நல்ல தொரு வெளிப்பாட்டினை பெரி தும் கொண்டு திகழ்கின்றது.
தாஜிஸ்தானின் தலைநகரான மக்ஹாசெகாலாவிலிருந்து கம்ஸ் தோ வின் தொகுதிகள் ஆறு தொகுப்புகள் வெளியாகியுள் ளன. இங்குதான் கவிஞர் வாழ் கிருர், "மலையக நங்கை" என்ற கம்ஸ்தோவின் கவிதையை அடிப் படையாகக் கொண்ட திரை யோவியமொன்று படமாக்கப் பட்டு வருகிறது.
வாசகரிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திய எனது தாஜிஸ்தான்" என்ற தமது நாவ லின் இறுதிப் பகுதியை கம்ஸ் தோவ் தற்போது முடித்துள் ளார். மோர்தானுக்கு மேற் கொண்ட பயணத்தில் மனப்பதி வுகளைக் கவிதைகளாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
கவிஞர் எதை எழுதிஞலும் அவரது படைப்பின் பிரதான கருப்பொருள் மனிதனது மகத் துவத்தையே கொண்டிருக்கும். அவரைப் பொறுத்தவரையில் மனிதன் உயர்ந்தவன். அவரது கவிதைகளும் இக்கருத்தை முழு மையாகப் பிரதிபலிக்கின்றன.

தங்கமான ஒரு விழா
os supňr”
நாதஸ்வரம், தவில் ஆகிய தமிழரின் பாரம்பரியம் வாய்ந்த கலைகளைப் பயிலவேண்டுமானுல் தமிழகம் செல்லவேண்டிய அவசி யம் இங்குள்ளவர்களுக்கு ஒரு காலத்தில் இருந்தது. இன்று மேல் நாட்டவர்கள் கூட இங்கு வந்து இக்கலைகளைப் பயின்று செல்லும் செழுமையான நிலை மலர்ந்துள்ளது. இச் செழுமைக்கு வித்தட் டவரும் இப்போது எண்பத்தைந்து வயது நிரம்பியுள்ளவருமான முதுபெரும் நாதஸ்வர வித்துவான் நவாலியூர் கோவிந்தசாமி அவர்களுக்கு இசையாளர்களும் மறுமலர்ச்சி மன்றத்தினரும் சேர்ந்து 29-3-75 சனிக்கிழமை மாலை வீரசிங்கம் மண்டபத்தில் விழாவெடுத்து பொன்னடை போர்த்தி பொற்கிழி வழங்கியுள்ளனர்.
பொன்னுடையும் பொற்கிழியும் பெற்ற இக்கலைஞர் ஒரு காலத்தில் தங்க நாதஸ்வரத்தில் தங்கமான இசை பொழிந்தவர். அறுபத்தைந்து பவுண் எடை கொண்ட அந்த நாதஸ்வரத்தை நவாலி மக்கள் 1918-ம் ஆண்டில் அவருக்கு வழங்கிப் பாராட் டினர். நாதஸ்வரம் தவில் வித்துவான்களது கலையினை ஒரு காலத் தில் ரசித்த மக்கள், அக்கலைஞர்களது பிற்கால வாழ்க்கை எத்த கையதாக இருந்தாலும் இதுபோல அக்கறை காட்டியதில்லை. எனவே இவ்விழா நாதஸ்வர, தவில் வித்துவான்களது வாழ்க்கை யில் ஒரு மறுமலர்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்டும் விழா என மேற்படி விழாவில் பேசிய பல இசை ரசிகப் பெரியார்கள் குறிப்பிட்டனர்.
மறுமலர்ச்சி மன்றத் தலைவர் திரு. பொ. செல்வரத்தினம் வர வேற்புரை நிகழ்த்துகையில் ஈழத்தில் நாதஸ்வர வித்துவான்கள் இப்பொழுது கையாளும் பாரி நாதஸ்வரத்தை திரு. கோவிந்த சாமியே இலங்கையில் முதன் முதல் அறிமுகம் செய்து வைத்தார். நாதஸ்வரச் சக்கரவர்த்தி ரி. என், இராஜரத்தினம்பிள்ளையின் நெருங்கிய உறவினரான இக்கலைஞர் வித்துவத்தன்மையில் அக் கலைஞருக்குக் குறைந்தவரல்லர் என்பது இசையாளர்களது கருத்து என்ருர்,
தலைமை வகித்த முதலியார் வை. மகேசன் பேசுகையில் , பத்து வயதிலேயே திருவாவடுதுறை ஆதீன வித்துவானுக இருந்த கோவிந்தசாமி 1913-ம் ஆண்டு இலங்கைக்கு வந்து நவாலியில் குடியேறி, திரு. சூரியர் என்னும் கலா ரசிகர் அளித்த உற்சாகத் துடன் இலங்கையில் நாதஸ்வரக் கலையின் முன்னேடியாக அக் கலையை வளர்த்தார் என்ருர், v
பூgரீலபூரீ சுவாமிநாதத் தம்பிரான் ஆசியுரை வழங்கினர்,
பொன்னடை போத்திய "மில்க்வைற் தாபன அதிபர் திரு. சு கனகராசா தவில் நாதஸ்வரக் கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு
7

Page 6
ஒரு பாடசாலை நிறுவப்பட வேண்டும் என்றும் அதற்குத் தான் உதவியளிப்பதாகவும் கூறினர்.
பொற்கிழி அளித்த கலையரசு சொர்ணலிங்கம் பேசுகையில் ஆயிரம் பிறைகண்ட கோவிந்தசாமி இங்கு வருகை தந்த பெரிய நாதஸ்வர வித்துவான்களையெல்லாம் தனது வித்துவத் திறனல் வென்று இலங்கையின் இசைப் பெருமையை உயர்த்தினர் என்ருர்,
இசையாளர் சங்கச் செயலர்ளர் தி . எஸ். ஆர். ஞானசுந் தரம், திரு. எஸ். செல்வநாயகம், திரு. நா. சச்சிதானந்தம், திரு. க. நடராசா , திரு. க. கதிரவேலு ஆகியோரும், கோவிந்த சாமியின் இ  ைச த் திறனை சம்பவ ஆதாரங்களுடன் எடுத்து விளக்கினர்.
நாதஸ்வரம், தவில், வயலின் இe) T விருந்துகள் இவ்விழா வில் இன்பத் தேளுகச் சேவிகளில் பாய், நன. தங்கமான இசை மாரியை தங்க நாதஸ்வரத்தில் பொழிந்த கோவிந்தசாமி வாழ்க் கையிலே தளர்ந்த நிலையிலே அவருக்குப் பொன்னுடை போர்த்தி பொற்கிழி வழங்கப்பட்ட இவ்விழாவை ஒரு தங்கமான விழா என்பதில் நிறைந்த அர்த்தம் இருக்கிறது.
ஆராய்ச்சி காலாண்டு ஆய்விதழ்
ஐந்து ஆண்டுகளில் 16 இதழ்களை வெளியிட்டு 17-வது * இதழை வெளியிட இருக்கும் ஒரே ஆய்வுப் பத்திரிகை.
சர்வதேசத் தரம் உள்ள பத்திரிகைகளின் பட்டியல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ்ச் சஞ்சிகை இது ஒன்றே.
முழுவதும் ஆய்வு க் கட்.ெ ' 11ம் ஆராய்ச்சிச் செய்திகளையும் மட்டுமே வெளியிடு). o, இதழ்.
சகல துறைகளையும் சேர்ந்த தேர்ந்த விற்பன்னர்கள் 130-க்கு மேற்பட்ட கட்டுரைகளை இதுவரை எழுதியுள் ளனர். M
258, திருச்செந்தூர் ரோடு, ஆசிரியர்
பாளையங்கோட்டை. நா. வானமாமலை

9;reallyria 6) is st யுத்தத்தின் போது, சோவியத் நாட்டின் மீது நாஜி ஜெர்மனி படை எடுத்தது. அந்தப்போரில் ஜெர்மனியை எதிர்த்து சோவி யத் நாட்டில் சிறுவர்கள் முதல் எல்லோரும் போரிட்டார்கள். தாய் நாட்டிற்காகச் சிறுவர் கள் தங்கள் உயிரையும் விடத் தயாராகவிருந்தனர். இதைப் பற்றி நாஜி போர் வீரரே தமது நாட்குறிப்பில் எழுதியிருக்கிமுர்: "நாம் ஒரு சாலும் ரஷ்யர்களை வெல்ல முடியாது - அவர்களு டைய சிறுபிள்ளைகள் கூட வீரர் களைப்போல் போரிட்டு மாள்கி முர்கள்' அவர் அப்படி எழுதி யதில் வியப்பில்லை.
மா க் சி மும் அவருடைய மனைவி தார் யாவும் 6 குழந்தை களுடன் ஒரு கி ரா ம த் தி ல் வசித்து வந்தார்கள். யுத்தம் ஆரம்பித்து விட்டது. மாக்சி மின் மூத்த மகன் எ ல் லைப் படையில் சேர்ந்தான்.
மாக்ஸிம் வசித்த கிராமத் தைப் பாசி ஸ்டுகள் கைப்பற்றி விட்டனர். ஒருநாள் மாக்வி
ASqASSASSASSASSASSAMASMSSSLAMAASSSSAMAAA AAASASSAMSSSASTAAAMSASLSSASSAMMAS SAMSALLLSSSSSSASLSLSSSLLLLSMqMSMMeMS SSSSSSASASASMSMSMSMMSAS
முடைய சகோதரர் அங்கு வந் தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட் "பாசிஸ்டுகளுக்கு எதிரான குழு என்ளே இங்கு அனுப்பியுள்ளது; மறைமுகமாக அச்சகம் ஒன்றை நடத்துவதற்காக என்னை இங்கு அனுப்பியிருக்கிருர்கள். அதற்கு உன் வீடுதான் சிறந்த இடம் என்று நான் கருதுகின்றேன்" C7ei(yf.
அச்சகத்திற்கான ஏற்பாடு తత్వ ஆரம்பமாயின. வீட்டின் பின்புற்ம் இருந்த ஆப்பிள் மரத் தின் அடியில்ே குழி வெட்டப் -- J. Sy ở Sir GT iš Surub அங்கு வைக்கப்பட்டது. சில நாட்க ளில் துண்டுப் பிரசுரங்கள் வெளி யாயின; பாசிஸ்டுகளின் தலைமை முகாம்களின் சுவர்களிலும், விளக்குக் கம்பங்களின் மீதும் துண்டும் ''ಅಞ್ಞ! காணப் - 607. எல்லைப் $ $ର୍ଜ! சோவியத் மக்களின் 'ನ್ತಿ? பற்றியும் மக்கள் நம்பிக்கை யுடன் மேலும் தொடர்ந்து போராடும்படி ஊக்குவிக்கப் பட்டும். துண்டும் பிரசுரங்களில் எழுதப்பட்டிருந்தது. அதனைக் கண்ட பாகிஸ்டுகள் அவற்றை

Page 7
அப்புறப் படுத்தத் தொடங்கி
இர்கள். ஆனல் அடுத்தடுத்து அவை வெளிவரத் தொடங்கின.
பாசிஸ்டுகள் அச்சகத்தைக் asalur G) ugi s duyub ulu söT Ap 6or irir. எனவே, அச்சகத்தை அருகில் இருக்கும் காட்டிற்கு மாற்றி விடும்படி உத்தரவு வந்தது. அதன்படி அச்சகமும் மாக்சிம் குடும்பமும் காட்டிற்குச் சென் றனர். மாக்சிமின் இரண்டாவது மகன், திக்கோன்தான் தூதுவ ஞகப் பணி புரிந்தான். திக்கோ னுக்கு வயது 12. திக்கோன் ரு பழைய கோட்டை அணிந்து 器芯 பூட்ஸுகளையும் போட் டுக்கொண்டு, வேவு பார்க்கக் கிளம்பினன். தெருப் பையன் போல் அக்கிராம்ம் முழுவதும் சுற்றி பாசிஸ்டுகள் தங்கியிருக் கும் முக்கிய முகாம்களை அறிந்து கொண்டு, கோட்டின் பின்புறம் மறைத் து வைக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை கிராமத் தில் வினியோகித்துவிட்டுதிரும்பி காட்டிற்கு வந்து சேகரித்து வந்த செய்திகளைத் தெரிவிப் பான். ஒருநாள் திக்கோன் தன் அம்மா, சகோதரிகளுடன் கிரா மத்திற்கு வந்தான். உணவு சேகரிப்பதற்காக அவர்கள் வந் தார்கள். அன்று பாசிஸ்டுகள் அந்தக் கிராமத்தினைச் சோதனை இடுவது என்று முடிவு எடுத் திருந்தார்கள்.
'கொரிலாக்களில் ஒரு குடும் பத்தினர்’ என்று இவர்களைப் பிடித்து 6 வாரம் சிறையில் வைத்திருந்தனர். பாசிஸ்டுகள், பிறகு குழந்தைகளை வெளியே
ட் டு விட்டார்கள்: ஆனல் தாயை ஜெர்மனிக்கு அனுப்பி விட்டார்கள். குழந்தைகள் திரும்பதங்கள் பழைய வீட்டிற்கு வந்தனர். அடுத்த வீட்டுக்கா ரர்கள் சிறுமிகளை அழைத்து
0
 ைவத் துக் கொண்டார்கள் ஆஞல திக்கோள் பழையபடி கொரி ல் லா வீரர்களுடன்
போய்ச் சேர்ந்தான்
1944-ஆம் ஆண்டு, ஜனவரி 21-ஆம்நாள் திக்கோன் பழைய
4 தன் பணியை ஆற்றக் கிராமத்தை நோக்கிக் கிளம்பி ஞன். அப்பொழுது கா லை நேரம்: பாசிஸ்டுகள் அந்தக்
கிராமத்தைச் சூழ்ந்து இருந்தார் கள், கொரி, லாக்களுக்கு உதவி அளிக்கும் இக்கிராமத்தையே அழித்து விடுவது என பாசிஸ் டுகள் முடிவு செய்து விட்டார்
56
பல வீடுகளிலிருந்து மக்களை பாதி உடைகளை களைந்து விட் டுக் கடும் பணியில் ஒட விட்டார் கள். பனிக்கால உடை இன் றியே பெரிய அகழிகள் ட்ெ டும்படி மக்களைக் கட்டாயப் படுத்தினர்கள் பணியால் நடுங் கிக் கொண்டு இருந்த தனது சகோதரிகளை இறுக்கப் பிடித்
தவாறு நின்று கொண்டிருந்
தான் திக்கோன், பாசிஸ்டு வீரர்கள் வீடு வீடாகச் சென்று தீ வைத்தனர். எந்திரத் துப் பாக்கியை முடுக்கி விட்டனர். ஊரெங்கும் தீ!
பாசிஸ்டு தளபதி ஒருவன் + கோதரிகளுடன் நின்று கொண் டிருக்கு திக்கோனைப் பார்த்து விட்டான் திக்கோன் சிறையில் இருந்தது அதிகாரியின் நினை விற்கு வந்தது. எனவே திக் கோன் கொரில்லாக்களின் தூது வளுகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தான். எனவே திக்கோனைத் தனியாக அழைத்து வரும்படி ஆ.ை பேட்டான்.
ஒரு மணி நேரத்துக்குள் திக் கோன் சகோதரிகள் உட்பட அக்கிராமத்றைச் சேர்ந்த 957

பேர்களும் தீயில் வெந்து சாம் பலாயினர். கிராமம் அழிக்கப் பட்டு விட்டது
'நீ எங்களைக் கொரில்லாக் கள் இருக்கும் இடத்திற்கு இட் டுச் செல்ல வேண்டும். இல்லை யேல் உங்கள் கிராமத்தினருக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்” எ ன் று திக்கோனை நோக்கிக் கூறினன், பாசிஸ்டு அதிகாரி.
கண்களில் நீர் ததும்பியது: ஆனல் அழுகையை விழுங்கிய திக்கோன், “சரி” என்று புறப் பட்டான். படை வீரர்களின் துப்பாக்கிகள் சிறுவனின் முது கை நோக்கிய வண்ணம் பின் தொடர்ந்தன. தி க் கே (ா ன் முன்னே சென்று கொண்டிருந் தான்.
பாசிஸ்டுகளை நடுக்காட் டிற்கு அழைத்துச் சென்ற திக் கோன் எதைப் பற்றிச் சிந்தித் திருப்பான்? பல நாட்களுக்கு முன்பு, ஒருநாள் செப்டம்பர் முதலாம் நாள் தான் முத ன் முதலாக பள்ளி செல்லும்போது சகோதரிகளும் , பெற்றேரும் தன்னை வழியனுப்பிய காட்சி யைப் பற்றி இருக்குமோ! அல் லது தன் பள்ளி நண்பர்களுடன் டையோடு நின்று அளவளர் வி யதைப் பற்றி இருக்குமோ ! அல்லது தன்னை இக் கிராமத் திற்கு அனுப்பியபோது கொரில் லாத் தலைவர் தாழ்ந்த குரலில் கூறிய 'திக்கோன், உன்மீது எங்களுக்கு அளவு கடந்த நம்
பிக்கை இருக்கிறது. நீ எங்களை
ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்று கூறிய வார்த் தைகளே நினைத்துக் கொண்டு போயிருப்பானுே?
Jyɔnug)! GRM -- tinu கா ல் கள்
எங்கோ சென்று கொண்டிருந் sar. 85 gr(9 eyPart-frsaf allâ).
அழித்து விட்டனர்.
பெரும் L16öflu! thu á sauti sðar á குழ் ந் து கொண்டது. இதில் 9705't Loftuplb இருக்கிறது என்று நினைத்தான், ப்ாசிஸ்டு அதிகார்.
* ஏ ய், கொரில்லாக்கள் எங்கே?' என்று திக்கோனை அதட்டினன்.
விரைவில் அங்கு சென்று விடுவோம்’ என்ருன் திக்கோன்;
தான் போகும் இடத்தில் வெறும் சேறும் சக தி யும் நிறைந்த ஆழமான குட்டைக்ன் இருப்பதைத் திக்கோன் அறி
வான். அக்குட்டைகள் பணியி
லும் உறைவது இல்லை என்பது திக்கோனுக்குத் தெரியும், அதில் அகப்பட்டுக் கொண்டால் நீந்த முடியாது. போய்க் கொண்டே இருந்தனர். திடீர் என்று ஒரு பாசிஸ்டு சகதியில் மாட்டிக் கொண்டான். அடுத்தவன் உத வப் போனன்; அவனும் CUAb கிப் போனன். ஆ த் தி ரம் அடைந்த அதிகாரி தனது துப் பாக்கியை எடுத்து, "நீ எங்கஇ
எங்கு இட்டு வந்தாய்?? என்று
மிரட்டிக் கேட்டான்.
"இங்கேதான். இங்கிருந்து நீங்கள் தப்ப முடியாது.Tஇங் கேதான் செத்து மடிய வேண் டும். என் தாய், சகோதரிகள், எங்கள் கிராமத்தவர்கள், என் தாய் நாடு அனைத்திற்காக இப் படிச் செய்தேன்" என்று கூறி ஞன் திக்கோன்.
ஒருமுறை சுடும் ச்ப்தப் கேட்டது. பிறகு பாசிஸ்டுகள் அந்த இடத்திலிருந்து திரும்பி வர வழி தெரியாமல் இங்கும் அங்கும் அலைந்தனர். ஒவ்வொ ருவராகக் குட்டைகளில் மூழ்கி மடிந்தனர். அவர்களில் மிஞ்சிய வர்களையும் Qsm flóvsvarásar

Page 8
புத்தக விமர்சனம்
விமல் திஸநாயகாவின்
*ரவ் பிலிரல்
ஆங்கிலத்தில்: சுனில் சரத் பெரேரா
தமிழில்: எம். ஏ. இணுத்துள்ளாஹ்
விமல் திஸநாயகாவின் ஐந்தாவது புத்தகம் 'ரவ் பிலிரவ்" ஆகும். ஆஞல் அவரின் கவிதைத் தொகுப்புக்களில் இது நான் காம் இடம் பெறுகிறது. ஏற்கெனவே மூன்று கவிதை நூல்களை ாழுதியுள்ள திஸ்நாயக்காவின் புகழை உச்சப்படுத்தி, அவரை சிங்களக் கவிஞர்கள் மத்தியில் முன்னணி வகிக்க வழிவகுத்தது, அவரின் "இந்திர சபய" என்ற நூல். இதைவிட ஒருபடி மேல் உயர்ந்து நிற்கிறது 'ரவ் பிலிரவ்"
*ரவ் பிலிரவ்" முப்பத்தேழு கவிதைகளை உள்ளடக்கியது. அவை தனிமனித அனுபவங்களையும், பெரும் சமூக அனுபவங் களையும் பற்றி பாடுகின்றன. அவை கவிதையின், தனிப்பட்ட உணர்ச்சிகளைச் சொல்லும் திறமையைக் குறித்துக் காட்டுகின் றன. பொதுவாக தனிமனித உணர்ச்சிகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் படம் பிடித்துக் காட்டுகின்றன "ரவ் பிலிரவ்" கவிதைகள். இவற்றை, மரண பிய" (ம, ணப் பீதி), "புரண சீன கவியகுட" (புராதன சீனக் கவிஞர் ஒருவருக்கு), "ஹந்த கன கவியக்", "குரு பதிபுத" போன்ற கவிதைகள் வலியுறுத்துகின்றன. சமூக அனுபவங்களைக் கூறும் இக்கவிதைகள் உ. ஸ் ள த்  ைத க் கவர்ந்து உணர்ச்சி நரம்புகளைத் தொட்டுச் செல்வதை ஒருவ ரால் அவதானிக்க முடியும்.
"ரவ் பிலிரள்" இல் திஸநாயக்கா உலகின் கொடுமைகளை எழுதுகிருர். கவிதையின் கருத்துக்களை 'ஆரவாரம்" இன்றி எளிய முறையில் தெரிவிக்கிருர். கவிதைகளின் உரு அமைப்புக்களும் அதற்கு இசைத்து செல்கின்றன.
'சன் வதயக்" (ஒர் உரையாடல்) என்ற கவிதை மூலம் சமூக உருமாற்றத்தைக் காட்டுகிருர் ஆசிரியர். அக் கவிதையில் சமூகத் தில் மிகவும் சுெளரவமான "ஒரு புள்ளி", பு தி தா க பணம் படைத்த ஒருவனேச் சந்திக்கிருர் . அவர், "உன்னைப் போன்ற ஒரு பலசாலியை ஆரம்பத்தில் சந்திக்கவில்லையே” என புதியவ னிடம் வருந்துகிாரர். "நிச்சயமாகக் கூறுகிறேன். : உங்கள் வாழ் வில் பல்முறை என்னைச் சந்தித்துள்ளீர்கள்; "கிளப்பு" களில் இருந்து திரும்பும் ப்ோது பாதையோர பேமண்ட்" களில் நான் சுருண்டு
Ꮧ;
 

tufi ந்ததைக் காணவில்லையா? நீங்கள் ஆடம்பரமான பாரிய ಖ್ವಕಿಸ್ದಿ செய்யும் போது என்ன பஸ் "கியூ" க்களில் காணவில்லையா?" என புதியவன் அவரிடம் திருப்பிக் குத்திக் கேட்கிருன்.
இதே போன்று தருவகு கே பிய" (ஒரு குழந்தையின் பயம்) என்ற கவிதையும் எழுதப்பட்டுள்ளது. இதில், சுவர்க்கத்தின் அழகுகளைத் தன் தாய் மூலம் அறிந்து கொண்ட குழந்தை அங்கு செல்ல விரும்புகிறது. ஆனல் அதனிடம் ஒரு பயம்! குழந்தை அதன் வாழ்நாளில் சந்திக்கும் "ஹாமு’ என்ற (உயர்) கூட்டம் சுவர்க்கத்திலும் இருக்குமோ? என்ற ஐயத்தோடு அஞ்சுகின்றது அக் குழந்தை.
இவ்விரு கவிதைகளிலும் சமூக அமைப்பில் நிலவும் சுவர்க்க பேதங்களுக்கெதிரான தன் கருத்துக்களை, பாத்திரங்களைப் பேச விடுவதன் மூலம் நையாண்டியாகவும் துல்லியமாகவும் எடுத்தியம் புகிருர் ஆசிரியர். VA
விமல் திஸ்நாயக்காவின் கவிதைகள் பாராட்டுக்குரியவை; உன் னதமானவை. தன் கருத்தை வலியுறுத்த எளிய சொற்முெடர்க ளையும், பேச்சு நடைச் சொற்களையும் தேர்ந்து கவிதைகளில் புகுத்தியுள்ளார். பல கவிதைகள் எதுகை, மோனை என்ற இலக் கண வரம்புக்குட்பட்டுள்ளன. ஆஞல் சில கவிதைகள் (இன்று தமிழில் அதிகம் பேசப்படும்) புதுக் கவிதைகள் போல் எதுகை, மோனைக் கட்டுப்பாடுகளில் நின்றும் விலகி எழுதப்பட்டுள்ளன. என்ருலும் அவரின் கவிதை ஆற்றல் கவிதை அமைப்புக்களில் பிரகாசிக்கின்றது.
எல்லாக் கவிதைகளும் ஆசிரியருக்கு வெற்றி அளித்துள்ள தாகச் சொல்ல முடியாது. "கலுபியும" (கருப்பு மலர்), "ஹிங் கன தருவா" (பிச்சைக்காரப் பிள்ளை) என்ற கவிதைகளில் குறை பாடுகள் உள்ளன . என்ருலும் கற்பணுசக்தி அவரிடம் குறைய வில்லை விமல் திஸநாயகாவின் ரவ் பிவிரவ்" உன்னதமான ஒரு படைப்பு. அது அவருக்கு கவிதை உலகில் "முத்திரை" ஒன்றைத் தேடிக் கொடுக்கும் என்பது தவிர்க்க முடியாதது எனலாம்.
0 e o ALS0LLL00L0L000LLLLLLL000L0LLL0LLS00000S OK) «» () ::::::::::::::::::
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்த 10-00 தனிப்பிரதி -75 இந்தியா, மலேசியா 12.00
(தபாற் செலவு உட்பட)
X- vyr. 岔、$》岔2※

Page 9
ஒரு கண்ணுேட்டம் மீராவின் w
ஊசிகள்’
ஜவாத் மரைக்கார்
புதுக்கவிதை தோன்றிய காலத்திலிருந்தே, மரபு வெறிபிடித் தவர்களிடமிருந்தும், அவர்களது கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பி மரபுக் கூட்டை உடைத்துக் கொண்டு மாரிகாலத்துப் புற்றிசல்களாகப் பெருகிவரும் புதுக்கவிதைகளுக்குத் தமிழ் இலக் கியத்திலே நிலையான ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்துவிட புதுக் கவிதைப் படைப்பாளிகள் முயன்று வருகின்றனர். புதுக் கவிதைகளுக்கென்றே வெளிவரும் "வானம்பாடி' முதலான சஞ்சி கைகளும், புதுக்கவிதைகளுக்கு ஆதரவு கொடுத்துப் பிரசுரிக்கும் பிற ஏடுகளும் தமிழ் மக்கள் மத்தியில் புதுக்கவிதைகளை ஜனரஞ் சகப்படுத்தி விட்டன இன்று புதுக் கவிதைகள், நுர்ல்களாகவும் உருப்பெற்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஈழத்திலிருந்து ‘எலிக்கூடு", "பொறிகள்", "போலிகள்" போன்று மினித் தொகுப்புக்கள் சிலவே வெளிவந்துள்ளன. எனி னும் தமிழகம் இத்துறையில் பெருஞ் சாதனைகளை ஈட்டி வருகின் றது. 'மெளனத்தின் நாவுகள்", "கண்ணிர்ப் பூக்கள்", "விதி", "கூட்டுப் புழுக்கள்" போன்ற புதுக்கவிதைத் தொகுப்புக்கள் பெரிய அளவில், உயர்ந்த பதிப்பில் வெளிவந்து கொண்டிருக் கின்றன. இவ்வரிசையில் அண்மையில் வெளிவந்ததுதான் மீரா வின் 'ஊசிகள்" 82 பக்கங்களுடன் வெளிவந்துள்ள இத் தொகுப் பில், வானம்பாடி, விவேகச்சித்தன், மனிதன் போன்ற ஏடுகளில் வெளிவந்த அறுபது கவிதைகள் கோக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் யாப்பின் மணம் வீசுகின்றது. ஆயினும் அவை கவிஞரால் இழுத்துவந்து நிறுத்தப்பட்ட சின்ற யாகத் தெரியவில்லை. -
தொகுப்பின் ஆரம்பத்தில் முகவுரைக்குப் பதிலாக, கவிஞர் அப்துல் ரகுமான், பாலு ஆகிய இருவரும் கவிஞர் மீராவுடன் கலந்துரையாடுவதன் மூலம் நூல் மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புதியதொரு முயற்சி. "சமுதாயத்தின் நோய்க் கிருமிகளைப் பார்க்கிறபோது, சங்கடப்படுகின்றேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமான ஆசைதான் இந்த ஊசிகளை உருவாக்கியது" என்ற மீராவின் கருத்துக்களைப் படித்தபின் கவிதைகளைப் புரட்டு கின்றபோது, அவருடைய கோபம் நோய்க்கிருமிகளையும், நோய் களையும் திட்டித் தீர்க்கும் அளவிலேயே இருப்பதை உணர முடி கின்றது. மக்கள் விரோதிகளைப் பல இடங்களில் இனங்காட்டி யுள்ளார் கவிஞர். ஆணுல் விரோதிகளை ஒழித்துக் கட்டி விமோ சனம் பெறக்கூடிய வழிகளைக் கூருமல் ஒதுங்கிவிடுவதோடு, மக் கள் சக்தியைத் தட்டியெழுப்பவும் தவறிவிட்டார்
சிறந்த கவிதைகளில், "வறுமையே வெளியேறு", "தலைகுணிவு" "அவசரக்காரன்". இரண்டு பிணங்கள்", "மேயர் மகன் தோட்டி மகனுக்குக் கூறியது.” போன்றவை உள்ளத்தைத் தொடுகின்
d

றன. "வறுமை வேகவேகமாய் வெளியேறிற்று பரட்டைத்தல் யும் எலும்பும் தோலும் கிழிந்த கந்தையுமாக..." என்று (வறு மையே வெளியேறு) சொல்லும்போதும், "முக வாசலிலே முது மைச்சிறுக்கி புள்ளி வைக்கிருள் கோலம்போட" போன்ற (நான் அவன் நண்பண்) படிமங்களைக் கையாளும் போதும் "அமெரிக்கப் படை வீசிய நாப்பாம் குண்டிலிருந்த பித் தளையைப் பெயர்த் தெடுத்தே ஆயுதம் செய்து அமெரிக்கண் விரட்டியடித்து வியட் நாம் போரை நிறுத்திய விடுதலை வீரர்களுடன், "அமெரிக்கன் ரிப்போட்டரை' இலவசமாக வாங்கி நிறுத்துப்போட்டுக் கிடைத்த பணத்தில் "சோவியத் நாடு" சந்தா செலுத்தியதன் மூலம் "அமெ ரிக்கன் ரிப்போர்டர் சஞ்சிகையை நிறுத்திய பாரதத்து விவேகி களையும் ஒப்பிட்டு நோக்கும் போதும் (வீரமும் விவேகமும்), தான் ஒரு சிறந்த கவிஞன் என்பதை நிரூபிக்கும் இவர் சில கவிதைகளால் வீழ்ச்சி அடைந்து விடுகிரு ர்.
சில கவிதைகளில் இழையோடும் நகைச்சுவைகள் கருத்துக்கு வலிமையை ஏற்படுத்துகின்றன. தங்க முதலாளி, பழக்கம் பொல் லாதது. உறுமின் வருமளவும, கடமையைச் செய். கத்தி வந்தது. டும். டும். போன்றவற்றைச் சொல்லலாம். வேறு சில கவிதை களை, மிதமிஞ்சிய நகைச்சுவை, வெறும் விகடத் துணுக்குகளாக்கி விட்டன. "பழம் நீ அப்பா" என்ற கவிதையை அவதானிக்கலாம்:
சிறு மலைப்பழம் ஒருசீப்பும்
பலாப் பழச் சுளைகள்
பத்துப் பன்னிரண்டும்
சிவந்த ஆப்பிள் ஐந்தாறும் தின்றபின்
மாம்பழம் இங்கே வரத்தில்லையோ
என்று கேட்டவாறு
இருமிக் கன்னத்து
பாகவதர் கனிந்து
பாடத் தொடங்கினர்:
"பழம் நீ அப்பா பழம் நீ."
அப்பன் முருகன் அலறி ஒடிஞன். .
'இழந் தமிழன் கண்டுபிடிப்பு’, ‘மாயம்", "பறக்கவிடலாம்" முதலிய கவிதைகள் கூட “சிரிந்திரனில் வெளிவந்த பகுடிகளை நினைவூட்டுகின்றன.
மீராவின் மற்றெரு கவிதை நூலாகிய, "கனவுகள் - கற்பனை
கள் - காகிதங்கள்" என்பதில் காணப்படும் படிம உத்தி கற்ப னைச் செறிவு, கவித்துவத்திறன் ஆகியவற்றை மனதிற் கொண்டு அதே எதிர்பார்ப்பில் ஊசிகளைப் புரட்டும் போது ஏமாற்றமே மிஞ்சுகின்றது. கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் போல ஒரு கற்பனைக் காவியமாக இல்லாமல், யதார்த்தமான விடயங்கள் * ஊசிகளில் காணப்படுவதும் இதற்கொரு காரணமாக இருக் 856) fT lo) .
ஆயினும் சுருக்கமாகக் கூறும்போது, "ஊசிகள்" சமூக விரோ திகளை "நறுக் கென்று குத்தக் கூடியது. ஆனல் மக்களின் இத யத்தை ஊடுருவிச் சென்று அவர்களே எழுச்சிபெறச் செய்யும் சக்தி அதற்கு இல்லை.

Page 10
கைப்பணியில் இது ፵(5 கலைப்பணி
திருமணத்தின் போது ம பகள் அல்லது மணமகள் வீட் rif ou F TITUDT & விருந்தினர் களுக்குச் சில மங்கலப் பொருட் களை அளிப்பது வழக்கம்.
நாகரிகத் திருமணங்களில் வெடிங் கேக்"ஒரு உபசாரப் பொருளாகக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். வெடிங் கேக்" வைக்கப்படும் சிறிய காகிதப்
பெட்டி அழகு வாய்ந்தது:
சி நிரம்பியதாக இருக் கும்.
அண்மையில் கொழும்பில் நடந்த திருமணத்திற்குப் QổLI T6ũT போது வெண் ஜனயோலையால் செய்த குட்டாணினுள் வைத்து வெடிங் கேக்" வழங்கப்பட்டது.
வழமை யைப் புதுமையான முறையில் பனம் குட்டானில் வைத்து வழங்கி, இதனை ச்
சாதித்தவர் திருமதி ஹைமவதி சோமசுந்தரம் காகித அட்டை பஞ்ச காலமானபடியால் பலர் காகிதங்களில் சுற்றி வளங்கி ஞர்கள். இதில் புதுமை இல்லை.
கால சூழலுக்கு ஏற்ற வாறு உள்ளூர் கைத்தொழிலை யும் சிக்கனத்தையும் ஒன்ருக இணைத்து, வண்ண ஒ%லகளினல் அழகுசெய்து விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட போது அளித்த வர் முகங்களும் சுவைத்தவர் முகங்களும் களித்தன. பனந் தொழிலே விருத்தி செய்யும் திரு. பரநிருபசிங்கம் என்பவரின்
6
பரா. சுற்தரலிங்கம்
யமுடிந்தது என்று நன்றியுடன் அங்கு கூறினர் பூரீமதி சோம சுந்தரம் .
திருமண அலங்காரங்கள் யாவும் தென்னங் குருத்தோலே யா ல் செய்யப்பட்டிருந்தன. இவை சிங்களக் கலைஞர்களின் உதவியுடன் செய்யப்பட்டதாம்.
எ ல் லா வேலைகளுமே பனங் குருத்தினல் செய்ய முடியும், எ னினும் யாழ்ப்பாணத்தில்
தேவையான பனங் குருத்துக் களைத் தருவிப்பது oż: இருந்ததாம். தெ ன்னை ஒலை சோடனைகள் விரைவில் வாடி விடும்; கருகிவிடும். பனை அப் படி அல்ல. வாட்ாது வா லும் డివి Tళ్లి நிர்ந்தரமாக அழகாக கவர்ச்சி
யாக இருக்கும்.
இவற்றைப் பார்த்தபோது ஒரு சிந்தனை ஓடியது. இன்று பாடசாலைகளில் அழகி ய ந் கல்வி, தொழில் முன்னிக் கல்வி என்பன கட்டாய பாடம் , வானிஸ் பேப்பர், காட்போட் என்பனவற்றை விடுத்து, பனை, இதன்னையின் குரு த் துக் க ளே இவற்றிற்குப் பயன்படுத்தலாம். இவற்றல் நம் மத்தில் குருத் தோலை அலங்காரக் கலைஞர்கள்
தோன்றலாம். இன்று பனம் பண்டம் பனையின் ஒவ்வொரு
பகுதியும் மக்களிடம் பரவுகிறது. முன்பு அசிங்கம் என்று ஒதுக்கிய வஸ்துக்கள் இன்று அலங்காரம் பாஷன்" என்ற பெயரில் நாக சிக வட்டாரங்களில் புகுந் து பிரபலமாகி வருகின்றது.

திருமதி ஜெயலட்சுமி சத்தியேந்திராவின் ஒவியங்கள்’
சண்முகன்
அ விர  ைம யி ல் 'gyu 67 . வென்ற் நினைவு மண்டபத்தில் நிகழ்ந்த "இலங்கை வனப்புகள்" ஓவியக் கண்காட்சியைப் பார்க் கக் கிடைத்தது. கண்காட்சியில் இடம்பெற்ற 52 ஓவியங்களும், எண்ணெய் வண்ணத்தில் திரு மதி ஜெயலட்சுமி சத்தியேந்தி ராவினலேயே படைக்கப்பட்டி ருந்தன. அந்த வகையில் இந் தக் கண்காட்சி அவரின் கலை முனைப்புகளின் தனித்தன்மை களைப் பிரதிபலிக்கும் தனி நபர் கனகாட்சியாகவும் அமைந்தது.
இந் த "வ ன ப் புக ள்" "இலங்கை வனப்புகள்" என்ற குறுகிய பெயர் எல்லைக்குள் அடங்கியிருக்கத் தேவையில்லை யென்றே நினைக்கின்றேன். உலக வனப்புகளாக விரிந்திருக்கலாம். அல்லது பேதமுருத - எல்லைக ளுக்குள் சிக்காத கலைஞனின் பார்வையில் மாருத பரவசத் தைத் தருகின்ற "வனப்புகளா கவே" மிளிர்ந்திருக்கலாம் திரு மதி ஜெயலட்சுமி சத்தியேந் திரா சித்திரித்திருக்கின்ற வனப் புகள்' அப்படிப்பட்டன. இடம், காலம் என்பனவற்றைக் கடந்த பரவசத்தையும், விடு த லே உணர்ச்சியையும் தந்துநிற்பவை:
காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்த இவரின் ஓவியங்களில்
பெரும்பாலானவை இயற்கைக் காட்சிகளைத் தத்ரூபமாகச் சித்
திரிக்கின்றன. வண்ணங்களின் சேர்க் ைக அவற்றுக்கு உயிரும் மெ ரு கும் கொடுக்கின்றன.
இவரின் கை அசைவில் ஒளிரும் வண்ணங்கள் ஒரு நிதர்சனமான அமைதியான. ஆழமான உல கத்தைக் கண்முன் கொண்டு வருகின்றன. மார்கழி மாதத்து நிலா, தொலை தாரத்துக்கு அப் பால். மழை பெய்த பிறகு, இளஞ் கி வ ப்பு மேகங்கள், குளிர் நிழல், நீர் நட னம், தூரத்து வைகறை, சிவப்பு வயல்கள் மு த லிய ன இந்த வகையில் குறிப்பிடக்கூடியன.
இவர், காட்சிகளை காட்சி களாகவே காண்கின் ருர் . அதை அதனதன் தோற்றப் பாணியிலே ಟ್ವಿಟ್ಜೆ (pðbor 6G6ãr
ர். அதில் வெற்றியும் பெ
អ៊ីg: யாழ்ப்பாணக் கடலேரி, முற் ருத வயல்கள், நெல் வயல் என் பன இந்த வகைப்படுத்தலில் அடங்குவன:
இவரின் ஒவியங்கள் எல் 6omrub uzoprı qeQı8ü LuireGoofius?GBay GBu அமைந்துள்ளன? ஆஞல், கலை ஞளின் மன உ ணர் வு களை க் காணும் காட்சிகளில் சித்திரிக்

Page 11
சீதனம்
திருமணங்கள் சுவர்க்கத்தில்தான் நிச்சயிக்கப் படுகின்றனவாம்! அப்படியானல் காலமெல்லாம்
கன்னியராய் அழுதழுது காத்திருக்கும் ஏழைகுலக் கன்னியரின் திருமணங்கள்
சுவர்க்கத்தில் - நிச்சயிக்கப் படாததேனே, ஒருவேளை அவர்களது திருமணங்கள் நரகத்தில்தான் நிச்சயிக்சப் படுகின்றனவோ?
ஏ. எம். ஏ. நவீர்
MA-1M murmur Mr
கின்ற நவீன ஓவியத்தின் சில அம்சங்களையும் இவரின் ஒவியங் களில் காணமுடிகின்றது. ஒரு வழியில் இப்படிக் கூறுவது தவ ருகக் கூட இருக்கலாம். இவர் தான் காணும் காட்சிகளால் தனது ம ன த் தி ல் ஏற்படும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின் ருர் என்று கூறுவது பொருத்த மாக இருக்குமென நினைக்கின் றேன். ஏ. காந்தம், அகந்தை, லயம் முதலிய ஓவியங்களில் இத்தன்மையைக் காணமுடியும் , குறிப்பாக "ஏகாந்தம்" என்ற ஒவியத்தில் சில மரங்களாலும் நீர் நிலையாலும் அந்த உணர்வை எழுப்புகின்ருர், கடும் நீலத்தி லிருந்து தொலை தூரத்திற்ாரு வெளிர் நீலமாக மாறிச் செல் லும் அந்த நீர்நிலை ஏகாந்த
8
மான தனிமை உணர்வை ஏற் படுத்துகின்றதுதான்.
இத்தனை ஓவியங்களிலும் அடிநாதமாகக் கவிந்து நிற்கும் சாந்தமும் - அமைதியும்தான் இவரின் தனித்தன்மை. இவரின் இந்தத் தனித்துவம்தான் இலு ரின் படைப்பாற்றலுக்கு ஆழ மான அர்த்தத்தையும், பெறும தியையும் கொடுக்கின்றன என்று நினைக்கின்றேன். "புயற்கூட்டம்" என்ற இவரி ஒவியத்தில் கூட இந் த ‘அழகான அமைதி" ஏதோ விதமாகக் கவிகின்றது. காட்சியில் "சாந்தமான ." என்ற தலைப்பில் ஓர் ஓவியம் கூட உண்டு.
இக்காட்சியில் மார் கழி மா த த் து நிலா, ஏகாந்தம், மறையும் நாள், நிழல்கள், நீல நீர், மலையேற்றம் ஆகிய ஒவி பங்கள் என்னை மிகவும் கவர்ந் தன. இவை என்னில் ஏற்படுத் திய உ னை ர் வுத் தாக்கங்கள் அளப்பரியன.
இலண்டனில் பரிசுத்த மாட் டின் கலைக் கல்லூரியில் ஐவர் பைப்ரிஸ்டிடம் ஒவியம் பயின்ற திருமதி ஜெயலட்சுமிசத்தியேந் திரா இலங்கையின் நம்பிக்கை வாய்ந்த ஒவியர்களில் ஒருவர் என்ற கணிப்பை இக் கண்காட்சி ஏற்படுத்துமென நினைக்கிறேன்.
.
நோய்கள்
உதிரம் சிந்தி உழைத்தவனுக்கு லோ பிறசர் இரத்தம் உறிஞ்சி உயர்ந்தவனுக்கு ஹை பிறசர்
கா. புஸ்பராணி

இம் மாத இதழில் கேள்வி பதிலுக்கான "தூண்டில் ஆரம் பித்துள்ளீர்கள். நல்ல தலைப்பு. ஆழமானதும் அறிவு சார்ந்தது மான கேள்விக்கான பதிலேயே தேர்ந்தெடுங்கள். சும்மா செக்கு மாட்டுத் தடத்தில் கேள்வியோபதிலோ அமையாது, தரமானவாசகர்களைச் சிந்திக்கத் தூண் டும் விதத்தில் - அ  ைம வ து நல்லது.
ம ல் லி கை யி ன் 11-வது ஆண்டு மலர் பற்றியும் இம் மாத இதழில் தகவல் தந்துள் ளிர்கள். இத்தப் பதினேராவது ஆண்டு மலர் ஒரு காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்ட
தாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன். பத்தாவது
ஆண்டு ம ல ரை ப் பார்த்துப் படித்தவன் நான். எனவே வரப்போகும் மலர் மிகச் சிறப் பாக அமையும் என்பதில் எனக் குச் சந்தேகமேயில்லை.
மல்லிகை மாத இதழ்களில் இன்னும் சிறந்த அம்சங்களைச் சேருங்கள். வாசகர்கள் தத்த மது அபிப்பிராயங்களைப் பூரண மாக எழுத மேடையமைத்துத் தாருங்கள். வெறும் சிறுகதைை
* கடிதங்கள்
நாவல், கவிதை மாத்திரம் இலக்கியமல்ல. பிரயாண இலக் கியங்கள், விஞ்ஞானக் கற்பனை கள். சுய சரித ஆக்கங்களையும் மல்லிகையில் வெளியிட ஆக
வேண்டிய ஆயத்தங்களைச் செய்
தால் நம்மைப் போன்ற வளரும் இளம் சந்ததிக்கு நல்லது.
அருமையான பிரபல எழுத் தாளர்கள் இன்று எழுதாமல் முடங்கிப்போய் இருக்கின்றனர் அவர்களை எப்படியாவது மல்லி கையில் எழுதவைக்க முயலுங் கள். இது மல்லிகைக்கு மாத் திரமல்ல, இன்று சோர்வு தட் டிக் கிடக்கும் ஈழத்து இலக்கி யத்துக்கும் ஆக்கபூர்வமான உதவியாக இருக்கும்.
நமது நாட்டில் இலக்கியக் கருத்து மேடை இன்று சுருங்கி வருகின்றது. கடதாசி நெருக் கடியும் இதற்கொரு காரணம் தொடர்ந்து நமது எழுத்தாளர் களின் புத் த க ங் கள் வெளி வருமோ எனச் சந்தேகப்படும் படியான சூழ்நிலை இன்று உரு வாகியுள்ளது. இந்தத் தேக்க நிலையில் இருந்து வெளிப்பட எழுத்தாளர் உ ற் சா க ம பா சு u rivâ as Log Lu GDL - Lydias?

Page 12
வெளிக்கொணர வேண் டி ய த க் க ஆலோசனைகளைக் கூற வேண்டிய பொறுப்பு பொறுப் பானவர்களுக்கு உண்டு. அப்ப டியான கருத்துக்களைப் பரிவர்த் தன செய்வதற்கு களம் அமைத் துக் கொடுப்பதும் மல்லிகைக்கு உரியது என்றே நான் கருதுகின் றேன்.
அச்செழு sa. sia. sibsnuut
மல்லிகை சிறந்த இலக்கி யக் கட்டுரைகளை வெளியிடுவ தில் தனக்கென ஒரு மதிப்பான தனியிடத்தைப் பெற்றுள்ளது. நுஃமானின் தொடர் கட்டுரை சாமிநாதனின் சவாடல் பேச் சுக்கு, அவரின் பிழை யா ன கொள்கை அவரின் சிறுபிள்ளைத்தனமான வாதங்களுக்கு, சரியான விஞ் ஞான பூர்வமான பதில்களையும், அவரின் குழப்பங்களுக்கு நல்ல விளக்கங்களைக் கொடுப்பது மாத் திரம் இன்றி மாக்ஸியம் பற்றிய பொதுவான கருத்துக்கள் பற் றியும், அதன் தத்துவ ரீதியான பகுதி, செயல்முறைப் பகுதி பற்றியும் சிறப்பான விளக்கங் கண்யும் கொடுத்து வாசகர்க ளுக்கு மாக்ஸியம் பற்றிய நுண்  ைம ய ர ன அறிமுகத்தையும் கொடுக்கின்றது,
ஏ. ஜே. கவின் தமிழில் தரும் கட்டுரையும் மிக்க அறி வூட்டும் கட்டுரையாக வருகிறது. சிங் கள எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள், தமிழ் வாசகர்களுக்கு சிங்கள எழுத்தாளர்கள் பற்றிச் சிறப் பான (ஆனல் மேலோட்டமான) ஒரு அறிமுகத்தைக் கொடுப்
ao
விளக்கங்களுக்கு,
ஆழமாகப்
பதை ஏற்றுக்கொள்ளும் அதே
நேரத்தில், ஒரு கட்டுரையில் வெளியான செய்திகள் இன்னு மொரு கட்டுரையில் சிறிதள வேனும் திரும்பவும் குறிப்பிடப் படுவதையும். அது அறிவு பூர்வ மாகக் கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு சலிப்பூட்டுவதை யும் குறிப்பிட விரும்புகிறேன்: எனவே வாசகன் தானே நேரடியாக சிங்கள எழுத்தா ளர்கள் பற்றி அனுபவ பூர்வ மாக அறியும் பொருட்டு இன் னும் அதிக அளவில் மொழி பெயர்ப்புக் கதைகளை வெளி யிடலாம்.
அத்துடன் ஒரு சிங் கள எழுத்தாளர், த ன து மொழி பெயர்ப்புக் க  ைத மூலமாக மல்லிகை ஊ டா க தி தமிழ் வாசகர்களுக்கு முதன் முதலில் அறிமுகமாகும் பொழுது, அந்த எழுத்தாளன் பற்றியும், அவ னது மற்றைய ஆக்கங்கள் பற் றியும், விமர்சன பூர்வமான ஒரு சிறிய அறிமுகக் கட்டுரை யையும் வெளியிடுவது பொருத் தமானதாகவும், அறிமுகக் கட் டுரையை மரத்திரமன்றி, அந்த எழுத்தாளனது ፴ (ው L160L-l பைக் கூடவே, அனுபவ பூர்வ மாக உணர்வதால் அந்த எழுத் தாளன் பற்றியும் அவன் படைப் புப் பற்றியும் வாசகன் மனதில் பதிய வைக்கவும் உதவும் எனவும் நம்புகிறேன்.
எம். கே. முருகானந்தன் sosans.
“---“--o--“---“--“ o-o---
மல்லிகையைத் தொடர்ந்து படித்து வருபவன் தான். என் னைப் பொறுத்தவரையில் அதன் வளர்ச்சியை நான் கட்டம் கட்

டமாகக் கவனித்து வந்துள் ளேன். தொடர்ந்து ஓர் இலக் ய சஞ்சிகையை நடத்துவது என்பது எத்தனை சிரமம் என்பது எனக்குத் தெரியாததல்ல. எத் தனையோ நெருக்கடிகளுக்கு மத் தியிலும் இந்தச் சாதனையை நீங்கள் செய்து வருவதையிட்டு எனது தனிப்பட்ட பாராட்டுக் களை உங்களுக்குத் தெரியப்படுத் துகின்றேன்.
ஈழத்து இலக்கியவாதிகளின், பல தகவல்கள் நமக் த் தெரி யாமல் இருக்கின்றன. அவர்க ளினது வாழ்க்கையில் நடந்த ரு சிகரமான சம்பவங்களைக் கலைச் சுவையோடு ந ப க் குத் தெரியப்படுத்தினுல் என்ன?
மற்றும் நமது எழுத்தாளர் களது க ரு த் து க் கள் பற்றி பேட்டி மூலமோ அல்லது வேறு வழிகளிலோ வாசகர்களாகிய எமக்குக் கிடைக்கத் தக்கதாக ஏற்பாடு செய்தால் புதுச் சுவை யாக இருக்கும் என நம்புகின் றேன்.
கண்டி. எம். பர்லசுப்பிரமணியம்
4 1^\r\/Nawru/~~~~~Mu/raM/~ Mu~~~~~
தமிழ் நாட்டில் இன்று புதிது புதிதாகப் பல இலக்கிய சஞ்சி கைகள் வெளிவந்தவாறு இருக் கின்றன. அவைகளின் பெய ரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக் கின்ருேமே தவிர. அவைகளைப் படித்துப் பார்க்கக் கூடிய வசதி நம்மைப் போன்றவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை.
தமிழகத்து இலக்கிய நண் பர்களின் பல ரது இலக்கிய தாகம் கொண்ட கடிதங்களை
நா ன் மல்லிகையில் படித்த போது எங்களைப் போலவே அங்
கும் ரசிகர்கள் - ஈழத்து ஆக்க இலக்கியத்தைப் படிக்க வேண் டுமென்ற ஆர்வம் கொண்டவர் கள் இருக்கின்றனர் என்ற முடி வுக்கு நான் வந்தேன்.
தமிழகத்திற்கும் நமது நாட் டுக்கும் பாலமாக ஏன் மல்லிகை செ1 ல்படக் கூடாது எ ன் ற எண்ணத்தின் உந்துதலிஞலே எனக்கொரு யோசனை தோன் றியுள்ளது. நாங்கள் அவர்க ளுக்கு இங்குள்ள சஞ்சிகைநூல்கண்த் தொடர்ந்து அனுப்
புகின்ருேம். அதே போல அவர்
களும் நாம் விரும்பும் - நமக்கு
இங்கு கிடைக்க முடியாத -
மாசிகை, புத்தகங்களை நமக்குக் கிடைக்க- பரிவர்த்தனை பண்ண sgiblu TGS) GQafuibaumrttaseTr? 6rdir பதை மல்லிகை மூலம் அறிய விரும்புகின்ருேம். இதில் ஏதா
வது சிரமங்கள், சிக் கல் கள்
இருந்தாலும் இ லக் கி ய நல் வளர்ச்சிக்காக இந்தச் சிரமத் தைப் பொருட்படுத்தாமல் நீதி
கள் ஆவன செய்தால் பரஸ்வ
ரம் இரண்டு நாட்டுக்கும் நன்மை செய்தவர்களாவீர்கள்.
சங்கானை. எஸ். புவனேற்திரன்
(நமது நாட்டைப் பொறுத் தவரையில் தமிழகத்துத் தர மான ரசிகர்களுடன் மல்லிகை நீண்ட நாட்களாகத் தொடர்பு கொண்டுள்ளது. фуртт өтиопторт இலக்கிய நண்பர்கள் அங்கிரும் தும் இப்படியான கருத்துப்பட
எ ம க்கு ம் அடிக்கடி கடிதம்
எழுதி வருகின்றனர்.
சட்டப்படி இது சரிதான? என நாம் யோசிக்க வேண்டும்; சம்பந்தப்பட்டவர்களுடன் நாம் தொடர்பு கொண்டுள்ளோம்;
.

Page 13
இப்படியான புத்தக-சஞ்சிகை பரிவர்த்தனை சாத்தியமானது தான் என நமக்கு அரசாங்க மட்டத்தில் உத்தரவு கிடைத் தால் நம்பிக்கையாக உங்களுக்கு இப்படியான உதவியை நம்பிக் கையாகச் செய்வோம்.
தமக்கு மல்லிகையை சந்தா வாக அனுப்பக் கேட்டெழுதும் தமிழகத்து நண்பர்களுக்கும் இப் படியான உள் நாட்டுச் சிக்கல் இருக்கின்றது என்பதும் எமக் குத் தெரியும். எனவே ஆரோக்
கியமான இலக்கிய வளர்ச்சிக்
காகவாவது நாம் இந்தப் பிரச் சினையில் முக்கிய க வன ம் செலுத்த வேண்டும்.
மல்லிகைக்குத் தமிழகத்தி இலக்கிய சஞ்சிகைகள் வருவது வழக்கம். முடியுமானல் காரியா லயத்தில் அவைகளைப் படிக்க
லாம். கொண்டு GLlufr 35 Gaunt அனுப்பிப் .ெ றவோ முடியாது. காரியாலயத்தில் பெற்று க்
கொண்டு போன இப்படியான சஞ்சிகைகள் திரும்பிவந்ததில்லை என்ற அநுபவ நடை முறை நமக்கு நல்ல பாடத்தைப் புகட் டியுள்ளது. எல்லா இலக்கிய ரசிகர்களும் நன் மை பெறக் கூடிய திட்டத்தைக் கூடிய சீக் கிரம் ஏற்பாடு செய்வோம்.
- ஆசிரியர்)
/^rau/N1^n\ /~~~m/~~~~~~. Manawr 1~N =~~~~Minu/~ 55
நா ன் மினுவாங்கொடை பகுதியில் பீலவத்த்ை சுரம்மா
ராம பெளத்த விஹாரையில்
உ த வி ப் பீடாதிபதியாகக் கடமை புரிகிறேன் தமிழின் மீதும் த மிழ் இலக்கியத்தின்
மீதும் மாருத பற்றுக் கொண்
டுள்ளேன். தங்களது மல்லிகை
、盛2
இதழை பலமுறை படித்திருக் கிறேன். தொடர்ந்து படிக்க ஆசை கொண்டுள்ளேன். ஈழத் தின் தரமான படைப்பிலக்கிய ஏடு மல்லிகைதான் எ ன் பது எனது நம்பிக்கையாகும். இத் தோடு மல்லிகைக்கான சந்தா 10- ரூபாயை அனுப்புகிறேன். இம்மாதத்திலிருந்து என்ன ஒரு சந்தாதாரராகச் சேர் த் து க் கொள்ளவும். இத்தாலி மொழி யில் பீ, ஏ. பரீட்சையில் அடி யேன் சித்தியெய்தி உள்ளேன். தமிழில் பண்டிட் பரீட்சையிலும் ஜெர்மன், ஆங்கிலம், சமஸ்கிரு தம், பாளி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேச, எழுதமுடியும். நீர்கொழும்பு இ லக் கி ய வட்ட நண்பர்கள், முருகபூபதி, மூ. பசீர் போன்றவர்களோடு நிறையத் தொடர்புண்டு. ஒரு முறை தேசாபிமானி இதழில் நண்பர்கள் என்னைப்பற்றி வெளி யிட்டிருந்தார்கள்.
சந்தாதாராக இதுவரை இல்லாவிட்டாலும் நான் மல் லிகை வாசகன்.
என்னைப் பற்றிய விபரங் கள் ஒரு அறிமுகத்திற்கே தவிர தற்பெருமைக்காக அல்ல என் பதை இத்தால் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
நமது இலக்கியத் தொடர்பு கள் நீடிக்க பிரார்த்திக்கிறேன். தொடர்ந்து மல்லிகை கிடைக்க ஆவன செய்யுங்கள். நீர்கொ ழும்பு வந்தால் நிச்சயம் என்னை சந்தியுங்கள். சனி, திங்களில் விகாரையிலும் மற்ற நாட்கள் நீர்கொழும்பு அரசாங்க ஆஸ் பத்திரி பெளத்த பொதுப்பணி பிரிவிலும் இருப்பேன். நிச்சயம்
சந்திக்கவும்.
சுவாமி தம்மதஸ்ஸி தேரோ மினுவாங்கொடை

தமிழ் நாடகங்களும்
சிங்கள நாடகங்களும்
f
இன்று
ரஞ் சித் தர்மகீர்த்தியின் உறிரு நெத்தி வொ வக்" (ஒளி ல்லாவுலகு) என்ற AB5fn L—l. 86íb
1974 சிங்கள நாட்க விழாவில்
சிறந்த தழுவல் 5 FT - 95 tonTessi தெரிவு செய்யப்பட்டமை தமிழ் ரசிகாகளுக்கு முக்கியத்துவமற்ற ஒரு செய்தியாகத் தோன்றலாம். ஆனல் இதனுடன் பின்வரும் சய்திகளையும் தொ குத் து நாக்கும் போது அவர்கள் வியப்புக்கும், பெருமிதத்துக்கு மூரிய பல்வேறு உண்மைகஜ் உய்த்தறிவர், இந் நா ட கம் மாக்சிம் கோர்க்கியின் லோவர் ட்ெப்ஸ் என்பதன் தழுவலா கும். இதே நாடகத்தைத் தழுவி 606) noff onlf 1973 முற்பகு யில் "நகரத்துக் கோமாளி' தயாரித்தளித்தார். தன் நாடகப் பிரதியைத் தயா த்தவர் பெளகல் அமீர். இவரே 974-ஆம் வருடத் தமிழ் நாடக விழாவிற் சிறந்த நாடகமாகத்  ெத ரி வா ன "பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்" Bn L-5 (TSifu printaint. “L96疗兹7 பெற்ற ராஜா" வில் ராஜாவாக ፮፥% சிறந்த நடிகருக்குரிய ரிசு பெற்ற கே. ஏ.' ஜவாஹர் நகரத்துக் கோமாளிகள்" A519. $ர் குழுவில் ஒருவராவர்.
67607 QBau நாடகத்துறையில் கீழ்க் கலைஞர்களது திறமைக் கும், தகுதிக்கும் எவ்வித ஐயத் துக்கும் இடமில்லை. சிங்க ள
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
நாடகக் கலைஞர்களுக்குச் சளைத் தவர்களாயும் அவர்கள் இல்லை
எனினும் இன்று சிங்கள நாடகவுலகு புகழ்பரப்பி நிற்கு மளவுக்குத் தமிழ் நாடகவுலகு முன்னணி பெருததேன் என்பது நன்கு கவனித்து est for u juu. வேண்டும்.
இதற்குச் சிங்கள நாடகங் . களைப் பற்றி விமரிசகர்களும், பத்திரிகைகளும் கொடுக்கும் விளம்பரத்தை மட்டும் காரணங் காட்டுவதற்கில்லை. சிறந்த நாடகங்களின் அமைவுக்கு நாட கப் பிரதியின் பங்கும் இன்றி யமையாதது. சிங்கள நாடகங் களின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது அவற்றின் ஒரு முக்கிய குறையாகவும் இவ் வம் ச த் தையே சுட்டிக் "காட்டலாம். சிங்களத்தில் ந ல் ல நாடகப் பிரதிகள் குறைவு என்பதற்கு அங்கு தயாரிக்கப்படுவன பெரு மளவுக்குத் தழுவல்களாக உள் ள மை எடுத்துக்காட்டாகும். சுய ஆக்கங்களைத் தயாரிப்பதில் அவர்களுக்குத் திறமைக்குறைவு இதற்குக் காரண்மாக இருக்க வியலாது. நாடகத் 555 u umr ithulʻi 4?asör நோக்கமும் ஒரு காரணமாகும். நிTடகத்துறை வருவாய்க்குரிய ஒரு வழியாகவுள்ளது. எனவே சுயமாக நல்ல நாடகங்களைத் தயாரிப்பதிற் பிரயாசைப்படு வதை விட ஏற்கெனவே பிற
岑、

Page 14
G La mas a Aò prèguerror நாடகப் பிரதிகளைப் பின்பற்று வது பல வழிகளிலும் வசதியா கப் போய்விடுகிறது. இது எப் படி இருந்தபோதிலும், "நகரத்
g & Gassmru off aufs där ” யில் பெளசுல் அமீர், "அகில உலக தரத்திற்கு உயர்ந்துவிட்ட நமது சிங்களச் சகோதரர்களின் நாளாந்த முன்னேற்றம்" என மலப்புறச் செய்யும் வகையில் சில உயர்வுகளே எய்த, பேட் ரோல் பிரெச்ட், பேனுட்ஷோ இப்ஸன், டெனசி விலியம் லூகி பிராண்டெலோ போன்ற சர்வ தேச நாடகாசிரியர்கள் உதவி புள்ளனர் என்ற உண்மையை நாம் படிப்பின்ப் பெற்று க் கொள்ளத்தான் வேண்டும். எமக்குரிய உந்துதல் மேற்கு pås Gurtas ar GBLJnraširno p5mt L-3: nr சிரியர்களிடமிருந்து ம ட் டு ம் தான் வரவேண்டுமென்பதில்லை. ஜெயகாந்தனின் "யாருக்காக அழுதான்" சிறுகதையிலிருந்தும் நாடகப்பிரதி அமையலாம், தமிழ் நாட்டிலிருந்து 'தங்கப் பதக்கம்" போன்றவை கூட எம க்கு ப் பிரதி உதவலhம். மனேகர், சோ, டி, கே. எஸ். (சேவா ஸ்டேஜ்) சகஸ்ரநாமம் போன்றவர்களிடமும் நாம் கற் கத்தக்கவை உள. இவற்றுடன் எமது "சிங்களச் சகோதரர்க ளது" நாடகங்களேயும் உள்ள டக்கலாம்.
இதனை நான் எ டு த் து க் காட்டும்போது தமிழ் நாடகக் கலைஞர்கள் இதுவரை தமிழ் மேடை கண்டுள்ள, யாருக்காக அழுதான், கிளரிக்கல் கிளாஸ் ரூ. நகரத்துக் கோமாளிகள் முதலியவற்றையும், வேதாளம் சொன்ன கதை, மதமாற்றம், கடூழியம், வீடு யாருக்கு முதவி யவற்றையும் எமது கவனத்து குக் கொண்டுவர இடமுண்டு.
易4
முன்னுரை
இவ்வாறு நல்ல நாடகங்கள் அவ்வப்போது மேடையேறியும் தமிழ் நாட கவுலகு விரிவுருத தேள் என்பதும் ஒரு நல்ல கேள்வியேயாகும். இவ்விடத்தி லேயே தமிழ் நாடகங்களுக் கான ரசிக ஆதரவு பற்றிய விடயம் முன்வருகிறது. ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்ற வகையில் தமிழ் நாடகங்களுக்கு சினிமாவின் போட்டி கடுமை யானதே சினிமாவைப் போல நாடகத்தைநாடுவோர் குறைவு. சினிமாவின் கட்டண மலிவுத் தன்மை இதற்கு ஒரு காரண மாகும். எனினும் மட்டுப்பட்ட அளவுக்காதல் நாடக ரசிகர்  ெத ஈ  ைக பெருகுவதற்கோ கொழும்பையோ சில சமயங்க ளில் யாழ்ப்பாணத்தையோ தவிர ஏனைய இடங்களில் தமிழ் நாட்கங்கள் எட்டுந்தன்மை முற் ருக இல்லை எனலாம். அதே
சமயம், சிங்கள நாடகங்கள், பாத்தறை, காலி, அம்பலாங் கொட, களுத்துறை, நீர்கொ
ழும்பு, குருநாகல், கண்டி அநு ராதபுரம் எனப் பரந்து ட எட் டுகின்றன. இதன் மூலம் இவை சாதாரண மக்களுக்கு எட்டு கின்றன என்று பொருள்படாது. இவை ஒரு குறித்தவகை நகர் சார் ரசிகர்களையே அணைத்துக் செல்வன . எனவே சாதாரண மக் களு க் கு ஏற்புடைத்தாக நாடகங்களை இட்டுச் செல்லும் விடயம் தனியே விரிவுற ஆரா யக்கூடியதாகும். எனினும் தமிழ் நாடக ரசிகர்களைப் பொறுத்த வரையில் தற்போதுள்ள நிலை யில் ஏற்பட வேண்டிய மாற்றத் தையே நான் இங்கு கருதினேன்.
இதுவரை எடுத்துக் காட் டியவற். வி ந்து இன்று உயர் வுற்று வி : 5வதாகக் கருதப் 11 ம் சிங்கள நாடகத்துறை யிற காணும் அடிப்படையான

குறைகள் தெரிய வருகின்றன: அவை பெரிதும் தழுவல்களாக வுள்ளமை, அவை p5s firm if 'குறித்த ஒரு தரத்தினரையே மகிழ்வூட்டுகின்றன . இவை மட்டும் அல்ல. சிங்கள நாடகங் களில் புதிய ஆக்கங்களுக்குபுதியவர்களது முயற்சிகளுக்குப் போதிய வரவேற்பையும், 2ଛାt & கததையும் பிரபல விமரிசகர் கள் வழங்குவதில்லை என்ற அதி ரு தி நிலவுகிறது. இதுபோலவே நாடக விழாக்களில் நல்ல IBT . கங்களும், கலைஞர்களும் தமக் குரிய மதிப்பினைப் பெறவில்லை என்ற குறையும் நிலவுகின்றது. எடுத்துக் காட்டாக 1974 சித் கள நா ட க விழாவின்போது இயங்கிய நாடக ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டு நடித்த ஹிரு தெத்தி வொவக்" பரிசு பெற்றமையைச் சுட்டிக்காட்டுவோர் இது சிறந்த நாடகத் தெரிவுகளில் அசாதா ரன நிலை களே ற் படுவதைக்
குறித்து நிற்பதாயும் சொல்வர்.
சிங்கள நாடகத்துறையில் நிலவும் இப்படியான அதிருப்தி கரமான நிலைகளைக் கொண்டு அங்கு தமிழ் நாடகம் கைக் கொள்ளத்தகு முன்மாதிரிகள் எவையுமில்லை என்று மனநிறைவு
கொள்ள முயலுதல் தவருகும்.
எனினும் தமிழ் நாடகங்களின் உயர்ச்சி கருதி எனது மனத்திற் படும் சில கருத்துக்களை நாடகக் கலைஞர்களது கவனத்துக்குக் கொண்டுவருதல் பொருத்தமெ னத் தோன்றுகிறது,
* தமிழ்நாடகங்களை கொழும்
புக்கு வெளி ரசிகர்களுக்கும் பார்க்கும் சந்தர்ப்ப வசதிகருதி உள்ளூராட்சி மன்றங்களினதும் அரசினதும் அனுசரணையுடன், பொழுதுபோக்குக் கட்டணச்
சலுகை, நாடக நிதியுதவிகள் என்பன கலே ஞர் களு க் குக் கிடைப்பதவசியம். மேடைவச தியுள்ள பாடசாலை, அரங்க மண்டபம் என்பவையும் எளிதா கக் கிடைக்க வேண்டும். தீவெங் இம் மத்தியான நிகலயங்களில் திறந்த வெளியரங்குகளின் 96.1 சியத்தைக் கூறத் தேவையில்லை;
* நாடகங்களை ரசிகர்கள் முன் எடுத்துச் செல்வதில் சமயத் திருவிழாக்களின் Liš6
குறிப்பிடத்தக்கது. நல்லூர், கேதீஸ்வரம், மடு, தலைவில்லு, கதிர்காமம் போன்றவற்றின்
இவ்வழியில் உதவக் கூடியன. பழைய காலங்களில் நா ட க வளர்ச்சிக்குச் சமய விழாக்கள் பெருந் தொண்டாற்றியுள்ளன. எனவே இத்தகைய கோயில் திருவாகிகளும், கலைஞர்களும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான முறையிற் செயற்படலாம்:
* காலத்துக்கேற்ற மாறுதல்
களுடன் பழைய நாடகங் களது மீள் மேடையேற்றம் சாதாரண மக்களிடையே நாடக ஆர்வத்தைத் தூண்ட வழிவ
குக்கும்.
* இந்தியா, மலேயா, சிங்கப்
பூர் போன்ற தமிழ்கூறு தல்லுலகங்களுடன் இல்ங்கை கொள்ளக்கூடிய பரஸ்பர நாடக நல்லுறவுகளும் வரவேற்ப் 6R) 6Rr, இந் நாடுகட்கிடையே நாடகக் குழுக்களது பரிமாற் றம் வகுல் பணம் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பும். எந்த ஒரு குழுவினராலும் அவ்வந்நாட்டின் ஏற்படும் வசூல் தொகை அவ் வந்நாட்டிலேயே நாடகத்துறை
சம்பந்தமான பொது திதியாக
இடப்பெற்று விடலாம். Yk
&5

Page 15
நிர்வாணங்களை
மறந்த
assetosses)--sionists
"D- b ud r பிச் சக் கா ரி யொன்டு வந்தீக்கி மகள் ஒடி வந்து சொன்னதும் "காம்பரா" வுக்குள்ளிருந்து முன் வாசற்ப டிக்கு வந்தாள் ரஹீமா.
"ஏன்ட சுபஹானல்லா" அங்கு நின்றிருந்த நடுத்தர வயதுப் பெண்ணைக் கண்டதும், அவளது நெஞ்சு "திக் கென்றது. ஒரு சில கணங்கள் மறந்த நிலையில் அப்படியே நின் றிருக்க வேண்டும்.
உள்ளாடைகள் இருந்ததோ இல்லையோ, அழுக்கப்பியிருந்த "கிளாஸ் நைலோன்" பிடவை யொன்றைச் சுற்றியிருந்த போதி
அலும் அப்படியே. அதுவும் முழங்காலுக்குக் கொஞ்சம் உய ரக் கிழிசலோடு. அந்த நிலைக்
குள்ளும் க ஷ் ட ப் பட் டு ஒரு தொங்கலை இழுத்துத் தலையை மறைத்து த ன து இனங்காட்டிக்
"சோனேப் பொ ம் புள எலியா? இப்பிடி ரோட்டு நெடு கப் போன எல்லாருக்குந்தானே வெக்கம் இவ்வாறு நினைத்துப் பார்க்கும்போதே அவளின் உடம் பெல்லாம் பூரித்தது.
"இங்கல உள்ளுக்கு வந்து நில்லுங்கொ"
கொண்டு.
86
உச்சந்தலை
அலங்காரங்கள்
எல்லாம்.
வெச்சிருந்தாரு,
இனத்தை
மீண்டும் காம்பராவுக்குள் போ ன வ ள் அலுமாரியைத் திறந்து அரைப் பழையதான "வொயில் ஸாரி யொன்றையும் சட்டையொன்றையும் கொண்டு வந்து கொடுத்தபோது, அந்தப்
டெண் அதை எதிர்பார்க்கவே இல்லைப்போலிருந்தது.
பத் தே நிமிடத்துக்குள்
அடக்கமான தோற்றத்தில் வச தியாக முக்காடு போட்டப்டி ஒரு புதுத் தரிசனம் அவள் கண் ணெதிரே தெரிந்தது,
அப்போது உச்சிப்பகல் பன்
னிரண்டு மணி
நான் மட்டக்களப்பு மகள். எனக்கு வாப்பா. உம்மா இல்ல மகள் ஒருதரும் இல்லாதபோது தான் என்ன க்ல்லாணம் முடிச் சார் . இருந்த காலத்தில நல்லா இப்ப அவர் *மெளத் தாகி ரண்டு வருடம். எனக்கு இப்ப நாலு பிள்ளகள்'
தனக்காக இரக்கப்படுபவர் கள் முன்னிலையில் உள்ளத்துய ரத்தையெல்லாம் கொட்டித் தீர்ப்பதே பெரிய நிம்மதிதானே! நீண்ட நாட்களுக்குப்பின் வயிறு நிறையச் சாப்பிடக் கிடைத்த
சந்தோசம் வேறு.
*அ ல் ல ஓங்களுக்கின்னம் "பரக்கத்’துச் செய் யட் டு ம்
缓

இரண்டு ரூபா நோட்டையும் கக்குள் சுருட்டியபடி வெளியி றங்கினுள் அப்பெண்,
pigsil Dr சாய்வு நாற்காவி பில் அப்படியே அமர்ந்தாள்.
இல்லாவிட்டால் அவளும் கூட இந்நேரத்தி ) அப்பெண் ஃனப்போல எங்கெங்கோவெல் லாம் கைநீட்டி அலைந்துகொண் டிருக்க வேண்டியிருந்திருக்கும். அல்லது கண்ணிர் வெள்ளத்து டன் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும்!
நல்ல வேளை ஆண் டவன்...
கைகொடுத்ததால், இப் படி யொரு நிலையில் அவளால் பிரச் சினையில்லாமல் வாழ முடிகிறது. கொஞ்சம் வயது கூடியவளாக இருந்தாலும் முன்பொரு மனை வியுடன் வாழ்ந்தவராக இருந் தாலும் அவளைப் பொறுத்தமட் டில் அதிஷ்டசாலிதான்.
வாய்ப்புக்கேற்ற உ  ைழ ப் போடு மாரடிக்கும் இருவரின் குலக் கொழுந்துதான் அவள். காலத்தால் கவர்ந்து செல்லப்
படக்கூடிய குச்சில் ஜீவியம்தான்,
அவளுக்குக் கால்நூற்ருண்டு அனுபவம். இப்படிப்பட்ட விடி வற்ற மக்களின் சகவாசம்தான் அவளுக்குப் பரிச்சயம்! அதனல் தான் நிகழ்கால மதாளிப்பில் கூட அவளால் கடந்தகால வறட் சியை மறக்கமுடியவில்லை; மாற் றிய மை க் க வேண்டுமென்ற ஆவேசம். -
"அஸ்ஸலா மா லைக் கூம், பரக்கத்து செய்ங்கே மகள்?
வாசலில் பழைய கோட்டும் ஸாரமும் தொப்பியுமாக ஒரு வர். முந்தானையில் முடிந்திருந்த இருபத்தியைந்துசத நாணயத் தை அவிழ்த்துக் கொடுத்துவிட் டுத் திரும்பினள்.
வெள்ளிக்கிழமைகளில் இப் படிப்பட்ட காட்சிகளுக்குத்தான்
குறைவில்லையே! வறுமைப் புண் ச் சமுதாயக் கண்களில் குத் திக் காட்டும் நாள் அல்லவா?
★
'ஜூம்மாக்" தொழுகைக் குப்பின் அந்த வீட்டு முன் வாச லில் ஒரு கூட்டம் கூடியிருந்தது. ஏதோ ஒவ்வொருவகையிலும் பெரிய மனிதர்களாகவும் மதிப் பு வாய்ந்தவர்களாகவும் முத்திரை குத்தப்பட்டுள்ள ஒரு பத்துப்பேர் கொண்ட கோஷ்டி தான்.
அன்று தொழுகைக் குப்பின்
"ஜமாஅத்'தார்கூடி மையத்துப்"
பிட்டணி பள்ளிவாசலிலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருப்பு தால் ஜனஸா’ த் தொழுகைக் கும் இ ன் னு ம் வசதிகளையும் பொறுத்து அங்குமொரு சிறிய பள்ளிவாசல் கட்டியே ஆகவேண் டுமென்று முடிவ்ெடுத்திருந்தார் கள.
அதற்கான வேலைகளைக் கவ னிக்கவும் பணச் சேகரிப்புக்களை மேற்கொள்ளவுந்தான், இப்படி யொரு கமிட்டியையும் தெரிவு செய்துவிட்டிருந்தார்கள். அதற்
கான செயற் திட்டங்களை வகுப்
பதற்கான கூட்டந்தான் அங்கு அங்கு தடைபெற்றுக் கொண்டி ருந்தது;
"இது அல்லாடவேல ஒவ் வொத்தரும் ஏன்டென்ட மாதிரி ஒதவி செய்வாங்க. நாங்க மனம் வெச்சி ஒரே கருமமாக நின்டா ஒரு மாஸ்த்திலயென்டாலும் கெட்டிப்போடேலும்"
"கெட் டி க்கியத்தில பிரச்சினில்ல. ఆ :: மேட்" போட்டு, சல்லியச் சேத் திக்கொளோணுமோ சால்லாத் துக்குமுந்தி"
‘சரி இந்தக் கிழ ம யே பொறப்படுவோம். கஹவத்த.
7

Page 16
ரெத்னபுர கொழும்பு. சீனங் கோட்டக்கி ஒரு ரெளன் செய்த் திட்டு வந்தா எல்லஞ்சரி?
உள்ளேயிருந்தபடி உ  ைர யாடல்களைக் கேட்டுக் கொண் டிருந்த ரஹீமாவின் நெஞ்சம் கொதித்துக் கொண்டிருந்தது.! காரணம் ஐந்தாயிரம் மக்கள் வாழும் கிராமத்தில் ஐந்தாவது பள்ளிவாசல் கட்டப்போகின்ற தென்பதல்ல; அது ஒன்றுதான் இவ்வூர்ப் பெரியவர்களது பிரச் சினையும் சிந்தனையுமாக இருப்ப தால்தான்!
கூட்டம் முடிந்து கால்மணி நேரம் நகர்ந்திருக்கும்.
தேனீர்க் , கோப்பையைக் கொடுத்துவிட்டு அங்கே நின்று கொண்டிருந்த மனைவியிடம் அந் தச் சந்தோசமான செய்தியை அவரால் எப்படிச் சொல்லாம லிருக்க முடியும்!
தெரீமா செய்தி? மையத் துப் பிட்டனில புதிய பள்ளி யொன்டு கெட்டப்போற. அந்த வேலயாத்தான் இப்ப கூட்டம் கூட்டின" அதில் தனக்கொரு மிக முக்கியமான பங்கிருப்பதைச் சூசகமாகச் சொல்வதில் அவருக் கெவ்வளவு பெருமிதம் தெரி uqu Drr?
அஸ்ஸலா மாலைக்கும்
மு ன் வாசற்படியில் ஒரு வாப்பாவும் மகனும் கைநீட்டி աւյւԳ......
கறுத்த இடுப்புப் பட்டியின் "பொட் டென்று திறந்து பத் துச்சத நாணயமொன்றை டேக்" கென்று எடுத்து "இதக் கு டு ங் கொ ரஹீமா" என்று நீட்டினர் அவர்.
"அல்ஹம்துலில்லா" இருவ ரும் திரும்பி நடந்து கொண்டி ருந்தார்கள்
28
"ஊருலதானே எதினயோ பள்ளிக்கி அதப்பரக்க எல்லா
ருஞ் சே ந் து பிச்சயெடுத்துக்
கெ ண்டு திரீத எங்கட மனிச
ருக்கொரு வழிசெய்யேலவா..?"
தனது உள்ளக் கு மு ற லின் வெளிப்பாட்டை அவள் இப்ப டிச் சொன்னதும், அவரது கண் களுக்கு முன் ஒரு புதுமின்னல் பளிச்சிட்டது போலிருந்தது.
*எனத்த. . . எ ன த் த சென்ன..?? கொஞ்சம் விளக் கமாக எ தி ர் பார் த் தா ர் போலும்!
திேன்னத் தீனி ல் லா ம, தொழி ல் தொறவில்லாம, பொம்புளயள், கொமரு குட்டி
யெல்லம் ஊரூரா அலஞ்சி பிச்ச வாங்கித் திரீதாங்க.. இதிய ளுக்கொரு வழி செஞ்சா அதும் அல்லாட வேலதானே..?"
பணத்தில் புரள்வதும் அதை ஸ்திரப்படுத்தும் சமுக அந்தஸ் துக்காக அலைவதுமான அவரது சிந்தனையில் ஒரு புது ந ர ம் பு முறுக்கேறிக் கொண்டிருந்தது. அதற்குத் தாக்குப் பிடிக்காமல்
உடம்பெல்லாம் வேர் த் து க் கொட்டியதைச் ரோக்காவா என்னவோ. எழுந்து அடைத்தி
ருந்த கண்ணுடி ஜன்னல்களைத் திறந்தார்.
வெளியே.
முற்றத்துப் புழுதியில் புரண் டபடி, உடுப்பென்று ஒன்றுமீல் லாத "பள்ளத்து ரோட்டு" சின் னஞ் சிறிசுகள் தங்கள் விளை யாட்டைத் " திடுதிப் பென்று நிறுத்தி. ஒரேயடியாக ஜன் னலுக்கூடாகப் பார்க்க, அங்கே மக்கத்துத் தொப்பி பளபளக்க நின்றவரைக் கண்டதும், ஏச்சு விழுமே என்ற பயத் தி ல் திரும்பி ஓடத்தொடங்கினர்கள்.
女

மனிதாபிமானம்
மஸ்தான்களுக்குரியதல்ல!
செ ன் னை "அலையோசை" என்ற இதழில் வெளிவந்த பின் னர் "மித்திர னில் மறுபிரசுரஞ் செய்யப்பட்டிருந்த ஜெயகாந் தன் எழுதிய "கடத்தல்காரர்க ளின் மத்தியில் கட்டுரைபற்றிச் சிலர் எனக்குக் கடிதம் எழுதி எனது அபிப்பிராயத்தைக் கேட் டிருந்தனர்.
தனி நபர்களைப் பற்றி - குறிப்பாக அவர்களினது தனிப் பட்ட தத்துவார்த்த வியாக்கி யானங்களைப் பற்றி - நான் எழு துவதையோ, கருத்துச் சொல் வதையோ சமீபகாலமாக நிறுத் திக் கொண்டு விட்டேன். கார ணம், தனிநபர் விவகாரம் பற்றி விவாதித்து எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. அது தேவையற்றதும் கூட.
ஆனல் சில இலக்கிய நண் பர்கள், தனிநபர் ஊ டா க வெளியிடப்படும் கருத்துக்கள் பொது வாழ்வையும், இலக்கிய உலகையும் பாதிப்பதாகக் கரு திக் கேள்வி கேட்கும்பொழுதுஇவ் விவகாரங்களில் எனக்குச் சில தகவல்கள் அதிகமாகத்  ெத ரி யும் என்ற நோக்கில்என்னை அணுகி எனது அபிப் பிராயங்களை வெளியிடத் தூண்
டும் பொழுது என்னுல் கருத்துச்
சொல்லாமலும்
இருக்க முடிவ f i2hu.
அந்த ஒரே யொ ரு கார ணத்தை முன் வைத்தே சில
அபிப்பிராயங்களைச் சிலருக்குச் சொல்லி வந்தேன். காற்றுடன் போய்விடும் இவ் வித மா ன
வாய்ப் பேச்கக்களைவிட, அவை களை எழுத்தில் வடிக்க வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படுவ துண்டு. தமிழகத்தைச் சேர்ந்த இலக்கிய நண்பர்கள் பலர் எனது கருத்துக்களை - என் மூலம் நமது நாட்டின் சிந்தனைப் போக்கைஅறிய விரும்பிக் கடிதம் எழுதி விடுகின்றனர். நான் சகல வசதி வாய்ப்புக்களையும் கொண்டு சஞ் சிகை நடத்துபவனல்ல. நானே கட்டியகாரன், நானே ராஜா என்ற நிலை எனது நிலை. இருந் தும் எனது கருத்தை அறிய வேண்டி உண்மையான இலக் கிய ஆர்வத்துடன் கடிதம் எழு தும் நண்பர்களின் உணர்வை என்னல் அலட்சியம் செய்யவும் முடியவில்லை.
எனவேதான் சில சமயங்க ளில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைத்து விட் டு ச் சில கருத்துக்களைச் சொல்ல வேண்டிய தேவை அல் லது நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடு கின்றது.
இதற்கெல்லாம் என் து கருத்தை அறிய வேண்டியதற்

Page 17
குக் காரணம் ஒன்று உண்டு. நான் மு ன் ன ர் மல்லிகையில் எழுதிய ‘ஒரு சிருஷ்டியாளனைப் பற்றி இன்னெரு படைப்பாள ன் பார்வை" என்ற தலைப்பில் தொடராக எழுதிய கட்டுரை யைத் தொடர்ந்து படித்த தமி க நண்பர்கள் அலையோசை ஜயகாந்தனின் கருத்துக்களைப் பற்றி எனது அபிப்பிராயங்களை அறிய முனைகின்றனர்.
*க டத் த ல் உனக்குக் க  ைத மன்னணுகிய நான் கடிதம் எழுதுகின்றேன்" என்று ஆரம்பிக்கின்ருர் நண்பர் ஜெயகாந்தன். மஸ்தானுக்காகப் பரிந்து பேசுகின்றது அக் கட் டுரை.
மஸ்தானும்
கடலூரைச் சேர்ந்தவர்.
ஜெயகாந்தனும்
அதே ஊரைப் பிறப்பிடமாகக்
கொண்டவர். ஒருவேளை ஊர்ப் பாசம் இப்படியாக அனுதாபப் பட வைக்கின்றதோ என் எண்ண வேண்டியிருக்கலாம்.தொடர்ந்து மஸ்தான் ஊடாக முழு இந்திய நாட்டின் பொது வாழ்வையும்பொருளாதார வாழ்வையும் சீர ழித்த சுடத்தல் திமிங்கிலங்க ளுக்காகவும் வாதாடும் பொழுது தான் ஜெயகாந்தனின் உள்ளக் கிடக்கை தெரிகின்றது.
பெரும் தலைவர், நடமாடும் காந்தி, எனது தலைவர் என இவரால் சமீப காலமாக வர் ணிக்கப்படும் திரு. காமராஜர் பொது மேடைகளில் அடிக்க்டி குறிப்பிட்டார்: "இப்படியான தேச விரோதிகளுக்கு-கட்த்தல்
காரர்களுக்கு - ம ன் ன ர் க ள்
என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்
கின்ருர்களே இது எவ்வளவு கேவலம்!" எனத் தான் செல்லும்
மேடையெல்லாம் கேட்டார்.
Siž
காமராஜரது கொள்கையே நவ இந்தியாவை உருவாக்க வல் லது என நம்புவதாகச் சொல்
30
"குறுகிய"
மன்னணுகிய
பாலதண்டாயுதம் இந்த
லும் ஜெயகாந்தன் கட்டுரை ஆரம்பத்திலேயே எழுதுகின்றர்: "கடத்தல் மன்னணுகிய."
இவர் சமீப கால மா க் மேடைகளில் பேசி வருவதும் எழுதிவருவதும் இவரது உண்மை நிலையை நமக்குத் தெளிவாக்கி விடுகின்றது. மார்க்ஸியம்” என்ற கொள்கையிலிருந்து வி டு பட் டு, மனிதாபிமானம் என்ற விரிந்து பரந்த" கொள்கைக்காகச் சத் தி ய ப் போர் செய்யப் புறப்பட்டுவிட்ட இவர்களைப் போன்றவர்கள்தான் மஸ்தான் போன்றவர்களுக்கா கப் பரிந்து பேசப் புறப்பட்டுள் ளார்கள் . இதற்குக் காரணமே பரந்து விரிந்த" மனிதாபிமா னம்தான் காரணமார்ம்.
எனக்கொரு ஞாபகம் வரு கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த கீழவெண்மணி என்ற கிராமத்தில் நாயுடு நிலப் பிரபு விவசாயப் பெருங்குடி மக்கள் 44 போர்களை - ஆண்கள், பெண் கள் - குழந்தைகளை - குடிசைக் குள் பூட்டி வைத்துப் பெற்ருேல் ஊற்றி நெருப்பிட்டுக் கொன்று குவித்தான் .
தமிழ் நாடே துடித்துப் பதை ததது.
இதன் கொடுமையை இலக் கியக் கோணத்தில் விளங்கப் படுத்திய காலஞ்சென்ற தோழர் மனுக் குலக் கொடுமையை மையமாக வைத்து நாவல் படைத்தால் என்ன என்ற கேள்வியை ஜெய காந்தன் போன்றவர்களைக் கேட் டபொழுது, இன்று மஸ்தான் களுக்காகப் பரந்து விரிந்த மனி தாபிமானம் பேசும் ஜெயகாந் தன் துள்ளிக் குதித்தார்.
"நான் அரசியல் வாதியல்ல. நானெரு சிருஷ்டிகர்த்தா. என் னைப் போன்ற படைப்பாளிகளி டம் இப்படித்தான் எழுத வேண்

டும் எனவோ அல்லது இதைப் பற்றித்தான் (pத வேண்டும் எனக் கட்ட பட்டவோ யாருக் குமே உரிமையிலே என ஆக் СBртптағиоптау;  ை திட்டவர்தான் இந்த ஜெயகாந்தன்.
இத்தனைக்கும் பாலதண்டா யு த பம் போன்றவர்கள்தான் என்னை உருவாக்கினர்கள்; அந்த அர சி ய ல் பட்டறையில்தான் நான் உருவ கினேன்!" எனப் பெருமிதமா. சொல்லும் ஜெய காந்தன், இதுவரை கூட அந்தக் கீழவெண்மணிக் கொடுமையை எதிர்த் ஒருவரி கூட எழுத வில்லை.
ஆளுல் மஸ்தான்களுக்காக வரிந்து வரிந்து அலையோசையில் தொடர் கட்டுரை எழுதியுள் ளார். மன்னர்களுக்கு மானி யம் நிறுத்தப்பட வேண்டும் என டி ல் லிப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் வேளையி லும் இதே ஜெயகாந்தன் மன் னர்களுக்குப் பரிந்து பேசிக் கூட் டத்தில் பேசியதையும் எழுதிய தையும் இத்துடன் நாம் இணைத் துப் பார்க்க வேண்டும். அப் பொழுதுதான் ஒரு படைப்பா ளியின் சமீபத்திய சீரழிவின் அவல நிலை நமக்கு நன் ரு க விளங்கும்.
மஸ்தான்கள் மீது இந்தச் சமுதாயம் அநுதாபம் காட்ட வேண்டும் என வாதிடுவதற்கு ஜெயகாந்தன் போன்ருேர் ஆயி ரம் காரணங்களைக் காட்டலாம்; வக்கீல்தனம் பண்ணலாம். இப் படியான சமூகத் துரோகிகளுக்கு அநுதாபம் காட்டுவது தேசிய நாசம் எ ன க் காட்டுவதற்கு பல்லாயிரக் கணக்கான காரணங் களை நாம் காட்ட முடியும்.
*தினமணிக் கதிர்" வார இதழில் இவரது தொடர் நாவல்
'ரிஷி மூலம்’வெளிவந்தபொழுது "சாவி அதை வெட்டி ஒட்டி வேலை செய்தார் எனக் குமுறிய இவர், இந்திரா பார்த்தசாரதிக் கும் தினமணிக் கதிருக்கும் அபிப் பிராய மோதல் ஏற்பட்டு அதை டில்லி சாமிநாதன் பிரச்சினை யாக்கிய பொழுது துள்ளி க் குதித்தவர். "எ ன க் கு அநீதி நடந்தபோது வன் எங்கே போய் விட்டான்?" எனச் சீறிச் சினந்தார்.
இன்ருே தினமணிக் கதிரில் இவரது "சக்கரங்கள் நிற்பதில்லை" நெடுங்கதை வெளிவந்தது. ஒரு தொடர் நாவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இன்று சகல முரண்பாடுக ளின் மொத்த வடிவமாகவே ஜெயகாந்தன் காட்சி தருகின் ருர் என்ருல் அது ஒர் அதிசய
மல்ல.
இப்பொழுது இலக்கியத்தின் பெயரால் நல்லதொரு வியாபா ரியாகிக் கொண்டிருக்கும் ஜெய் காந்தன் போன்ற சென்ற கால நல்ல படைப்பாளியை நினைத்து நல்லெண்ணம் படைத்த நெஞ் சங்கள் வருந்தாமலில்லை.
இந்த வருத்தத்தில் கலந்து கொள்ளும் அதே வேளையில் இந்தத் தார்மீகச் சீரழிவிலிருந்து
ஒரு கலைஞன் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகின் றேன்.
அல்லாது எனது புதிய தத் துவத்தின் தார்மீகத் தாக்கத் தைப் புரிந்து கொள்ளாதவர்க ளின் விஷமக் கூப்பாடு இது என அவரைப் போன்றவர்கள் கரு தினுல் அவர் அப்படிக் கருதிச் செயல்படுவதற்கு அ வ ர து பாஷையில் அவருக்குப் பரிபூரண சுதந்திரமுண்டு.
3.

Page 18
கைலாசபதி
8
t
t & Lf5)
சாமநாத
●●●る・る・る・る・ふふふふふふふふふふふふふふふ
கலாநிதி கைலாசபதியின்
"தமிழ் நாவல் இலக்கியம்" என் னும் நூல் மா க் ஸி ய ஆய்வு முறையாகிய, இயக்கவியல் வர லாற்றுப் பொருள் முதல் வாதக் கண்ணுேட்டத்தில், தமிழ்நாவல் இலக்கியத்தின் தே T ற் ற ம், அதன் வளர்ச்சிப்போக்கு ஆகிய வற்றைப் பற்றி ஆராய்கின்றது. இது தொடர்பான ஆறு கட்டு ரைகள் இந்நூலில் இடம் பெற் றுள்ளன. காவியமும் நாவலும், உரைநடையும் நாவலும், நாவல் இலக்கியமும் தனிமனிதக் கொள் கையும், ஆங்கில மூலமும் தமிழ்த் தழுவலும், சிறுகதையின் தேய் வும் நா வலி ன் வளர்ச்சியும், இயற் பண்பும் யதார்த்தவாத மும் என்னும் தலைப்புக்களின் கீழ் தமிழ் நாவல் இலக்கியத்
தைப் பற்றிய கருத்துக்கள் இந்
நூலில் அலசப்படுகின்றன.
ஆன ல் இந்நூலைப் பற்றி விமர்சிக்கவந்த வெங்கட் சாமி நாதன், "இது புத்தகமும் அல்ல தமிழ் பற்றியும் அல்ல, நாவல் பற்றியும் அல்ல, தோற்றம் வளர்ச்சி பற்றி ஏதும் கேள்வி கள் இவற்றின் பின்னர் எழுவ தும் இல்லை" என்கிருரர். சாமி நாதனின் இக்கூற்று அவரது மனப்போக்கையும், நி த ர ன
32
༠༠ 88.8888.8888.888-888-8-8-8
9488 V. (oves •
வளவு தவருனதும்,
88.8888.8888.8888.8888.8888.888s w யின் () * தமிழ் நாவல் இலக்கியமும்’
னின் கட்டுரையும்
· w, - 9 - 9 - 9 -o-lo---- w80 x oxes x0x9x-w
எம். ஏ. நுஃமான்
மிழந்த தன்மையையும் தெளி வாகக் காட்டுகின்றது. ஓர் அறி வாளியின் நிதானத்தோடு அவர் இந்நூலை சுவைக்கவில்லை. மாக் ஸியத்தின் மீதும், மா க் ஸி ய ஆய்வு முறையின் மீதும் அவ டிக்கு உள்ள தீராத ஆத்திரத்தி ணுல் நிதானமிழந்து, பாமரத் த ன மா ன, சேரிப்புறத்துத் தெரு சண்டைக் காரன் போல அவர் இந் நூலை அணுகி இருக் கின்ருர் என்பதற்கு மேற்காட் டிய அவரது கூற்று போதிய சான்று ஆகும். "ஆத்திரக் க ர னுக்குப் புத்தி மட்டு" என்பது பழமொழி. சாமிநாதனின் விமர் சனம் அதற்கு நல்ல உதாரண மாகும்.
தனது அறியாமையின் பலத் தில் அதிக நம்பிக்கை கொண்ட சா மி நா த ன் மாக்ஸியத்தின் ஜீவிய நியாயத்தை மிகவும் சுல பமாக நிராகரித்தார். அது எவ் நேர்மை யீனமானதும் என்பதை நான் ாேனது முன்னைய கட்டுரைகளில் நிரூபித்தேன். இனி கைலாச பதியின் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய சாமிநாதனின் கருத்துக் களை நோக்கலாம்.
கைலாசபதியின் நூலில் இரு வகையான கருத்தோட்டங்கள்

2-6 6 6ð
ஒன்று அடிப்படைக் கருத்தோட்டம். தமிழ் நாவல் இலக்கியத்தின் தோ ற் ற ம் ,
வளர்ச்சிப் போக்கு, பண்பு ஆகி யவற்றை நிர்ணயிக்கும் சமூகக் காரணிகள் பற்றியது இதில் அடங்கும். ம ற் ற து துணைக் கருத்தோட்டம். சில குறிப்பிட்ட நாவல்கள் நாவலாசிரியர்கள் பற்றியும் வேறு விசயங்கள் பற் றியும் போகிற போக்கில் சொல் லப்படும் கருத்துக்களும் மதிப் பீடுகளும் இ தி ல் அடங்கும். கைலாசபதியின் அடிப்படைக் கருத் தோட்டத்தில் நான் முழுக்க உடன்பாடு உடையவன். அவரது துணைக் கருத்துக்கள் சிலவற்றுடன் எனக்கு முரண் பாடு உண்டு. அவசியமான இடத் தில் நான் அ  ைத ச் சுட்டிக் காட்டுவேன்.
ஆனல் சாமிநாதன் கைலாச ப தி யின் அடிப்படைக் கருத் தோட்டத்தை முற்ருக நிராக ரிப்பதோடு - அவற்றை நிரா கரிப்பதற்குத் தவறன வாதங் களைத் தருவதோடு, நேர்மையி னமான முறையில் கைலாசபதி யின் சில கருத்துக்களைக் திரிபு படுத்தியும், சிலதை மூடிமறைத் தும், வெவ்வேறு சந்தர்ப்பங்க ளில் கூறிய கூற்றுக்களை ஒன்றி ணைத்து முரண்பாடு காட்டியும் தனது அறியாமையை மேலும்
பலப்படுத்த முனை கி ன் ருர் . கைலாசபதியின் நூலைப் பற்றிக் கூறுகையில் "பதிலளிப்பதென்
ருல் இப் புத்தகத்தின் ஒவ்வொ ருவரிக்கும் பதில் அளிக்க வேண்டி இருக்கிறது. அணுவசிய வேலை. சில முக்கியமானவற்றை மாத் திரம் நான் அங்கங்கே தேர்ந் தெடுத்துக் கொள்வேன். ஒரு சராசரிப் படிப்போ, சிந்தனைத் திறனே, விபர ஞானமோ கூடக் காட்டாத ஒரு புத்தகத்தில் நான் செய்யக்கூடியது இவ்வளவுதான்"
என்று சாமிநாதன் ரொம்பவும் ஆணவத்துடன் கூறு கி ரு ர். (பூரணி 8. பக், 8) , உண்மை யில் இக்கூற்று கட்டுரையில் சில முக்கியமானவை பற்றி மட்டுமே இங்கு நோக்கப் படும். முதலில் "காவியமும் நாவலும்" என்ற கட்டுரை பற்றிய கருத்துக்களைப் Luntri 'Gjumrb.
இவ்வத்தியாயத்தில் மூன்று அ டி ப் ப ைட க் கருத்துக்களை கைலாசபதி விரித்துரைக்கின்ருர். (1) காவியமும் நாவ்லும் வேறு பட்ட இலக்கிய வடிவங்கள் (2) இரண்டும் இருவேறு சமு தாய அமைப்புக்களின் பிரதி பலிப்பாய் அமைந்தவை. (3) ஐரோப்பாவில் நடந்தது போல இந்தியாவில் திட்டவட்டமான முறையில் முதலாளித்துவ சமூக
மாற்றம் ஏற்படாததஞல் தமிழ்
நாவல் ஆரம்பத்தில் அதற்குரிய தத்துவ சிந்தாந்தப் பலத்தை பெற்றிருக்கவில்லை. கலை இலக் கிய சமுதாய வரலாறு பற்றிய தெளிவான பார்வையும், தமிழ் நாவல் இலக்கியத்தில் ந ல் ல பரிச்சயமும் உடையவர்கள் இக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர் என்பது நிச்சயம். a
காவியமும் நாவலும் இரு வேறு இலக்கிய வடிவங்கள் என் பதை அதிக சான்றுகள் காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவை வேறு பட்டவை. காவியம் நிலமானிய ச மு தா ய உள்ளடக்கத்தைக் கொண்டது, நாவல் முதலாளித் துவ சமூக அமைப்பின் உள்ள டக்கத்தைக் கொண்டு தோன்றி யது. இவ்வுள்ளடக்க வேறுபாடு இவ்விரண்டு இலக்கிய வடிவங் களின் ஊடகம், உத்திமுறை, விபரணத்தன்மை பாத் தி ர வார்ப்பு, போன்ற பல்வேறு அம்சங்களில் அடிப்படையான
33

Page 19
வேறுபாடுகளைக் கொண்டு வந் துள்ளது. கைலாசபதி, இலக் கிய மாணவர்களுக்கு ஏ ந் நற வகையில் இதை விஸ்தாரமாக விபரித்துள்ளார்.
சாமிநாதன் இந்த வேறு பாடுகளை ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை. கைலாசபதி காட் டும் வேறுபாடுகளை இவர் மறுக்க முனைகின்றர். அதற்காகப் பிழை யான வாதங்களையும் தவருன தகவல்களையும் தருகிருர், ஆங் கிலத்திலும் தமிழிலும் eg|Tift கால நாவலாசிரியர்கள் நாவலை வசனகாவியம் என்றே அழைத் தனர். காவியத்தையும் நாவலை யும் வேறுபடுத்துவது வசனம் என்ற ஊடகமாற்றமே என்று இவர்கள் கருதினர்கள். சாமி நாதனும் இதே கருத்தை உடை யவர் என்று தெரிகின்றது. நாவலை வசனகாவியம் என்னும் போது, காவியத்தின் இடத்தில் இன்று நாவல் அமர்ந்திருப்பதா லும், இரண்டுக்கும் பொதுவாக உள்ள கதை சொல்லும் பண் பாலுமே உரை நட்ை அந்த வேற்றுமைக்காகவே "வ சன" என்ற அடைமொழியும் சேர்க் கப்பட்டது" என்கிருர் சாமிநா தன். (பூரணி 8 பக். 8) கைலா சபதி வசனகாவியம் என்ற இக் கருத்தை ஏற்றுக் கொள்பவர் அல்ல. "வசன காவியம் என்ற சொற்ருெடர், வசனத்தினுலாய காவியம் என்ற பொருள்பட நிற்றல் நோக்க்த்தக்கது. இது புதிய படைப்பான நாவலைக் கா வியத் தி ன் GurrífleF nr 35 iš கொண்ட மனப்பான்மையைக் காட்டுகின்றது" என்பது கைலா சதியின் கருத்து. (த. நா. இல், பக். 11) ஆஞல் சாமிநாதன் போகிற போக்கில் ஒரு ப்ொய் யான தகவலைத் தருகின்ருர், "மு ன்ன ர் காவியம் வகித்த இடத்தை இன்று நாவல் வகிக்
34
“எவ்வாற்ருனும்
f கின்றது என்பதையும் இவ்விரண் டையும் வேறுபடுத்துவது உரை தடை மட்டுமே என்பதையும் கைலாசபதி ஒப்புக் கொள்கின் முர்" என்று சாமிநாதன் சொல் கின்றர். (பூரணி 8. பக், 8). கைலாசபதி உண்மையில் இவ் வாறு ஒப்புக்கொள்ளவே இல்லை. ப தி லா க மறுத்துரைக்கிருர், "முற்காலத்திலே சமுதாயத்தில் காவியம் வகித்த தானத்தை தற்காலத்தில் நாவல் அடைந் துள்ளது என்று ஒருவாறு கூற லாயினும், காவியத்தையும் நாவு லேயும் வேறுபடுத்துவது உரை நடை ஒன்று மட்டுமே என்பது ஏ நீர் புடைத் தன்று' என்பது கைலாசபதியின் கூற்று. (த. நா. 8. பக்' 11) கைலாசபதி திட்ட வட்டமாக மறுத்த ஒன்றை அவர் ஒப்புக் காளவதாகக் கூறுவது சாமிநா தனின் நேர்மையீனத்தையே காட்டுகின்றது.
கோவியம் நாவலின் [$ଉଁr றும் வேறுபடுவது பொருளடக் தத்தாலும் ஆகும். பொருள் வேறுபாடே முக்கியமானது என்று கூடக் கூறுதல் ஏற்புடைத் தாகும்" என்ற கைலாசபதியின் கருத்தையும் (பக். 17) சாமி நாதன் மறுத் துரைக்கின்ருர், "பொருள் வேறுபாடு ஒரே வகை
பைச் சேர்ந்த இரு வேறு நூல்
காணபபடுவது மிகச் சாதாரணம். ஆகவே இது ஒரு வாதமாகாது" என்கிருர் சாமி நாதன், : ԼեU 60ծf 8. լյժ, 8) சாமிநாதான், பொருள் வேறு பாடு பற்றிய இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவு. இரண்டு நாவல்கள், அல்லது இரண்டு நாடகங்கள் அல்லது இரண்டு சிறுகதைகளில்
காணப்படும் பொருள் வேறு பாட்டுக்கும், இரு வேறு யுகங்க ளுக்கு உரிய நாவலையும் காவி

யத்தையும் வேறு படுத் தும் பொருள் வேறுபாட்டுக்கும் இடையே சாமிநாதன் வித்தியா சம் கண்டுகொள்ள முடியவில்லை.
ஆகவேதான் இது ஒரு வாதமா.
காது என்று சுலபமாக ஒதுக்கி விட முடிகின்றது. ஆனல் காவி யத்துக்கும் நாவலுக்கும் இடை யேயுள்ள இந்தப் பொருள் வேறுபாடு மாறுபட்ட சமுதாய அமைப்பின் பிரதிபலிப்பாகும். கவியம் தோன்றும் சமுதாயச் சூழமைவு வேறு நாவல் தோன் றும் சமுதாய அமைப்பு வேறு. இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டாலன்றி இரு இலக்கிய வடிவங்களின் தனித் தன்மைக ளையும் சரிவர விளங்கிக் கொள் ளுதல் இயலாது" என்று கைலா சபதி கூறுகின்ருர் (பக். 17).
காவியம் நிலமானிய சமூ கத் தி ன் விளைபொருளாகும். நிலப் பிரபுத்துவ சமூக நோக் குகள் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசர்கள் பிர புக்கள் போன்ற உயர் குடியின ரின் ஆ  ைச அபிலாசைகளைப் பேணுவதாயும், பிரதிபலிப்பதா யும் அமைந்தது அது. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்ற பிரபுத்துவக் கோட்பாட்
டுக்கு ஏற்ப உயர்குடியினரே காவியங்களின் தலைமக்களாய் அமைந்தனர். நிலப்பிரபுத்துவ
சமூகத்தில் பல நூற்ருண்டுக ளாக மாற்றமுடியாத பல ஸ்தி ரமான நியமங்களுக்குள் ஸ்திர மான தத்துவக் கோட்பாடுக ளுக்கும் அமையவே வாழ்க்கை முறை நிலவியது. வாழ்க்கை பற்றியும், வீடுபேறு பற்றியும், ஒழுக்கம் பற்றியும் ஒவ்வொருவ ரது சமூக நடத்தை பற்றியும் வரையறுக்கப்பட்ட ஸ்திரமான கருத்துக்கள் இருந்தன. இன்னது இவ்வாறிருக்கும் என்ற இந்த நியமங்களே அன்றைய இலக்கி
டிய அவசியம்
யங்களிலும் மரபுகளாக நின்று ஆட்சி செலுத்தின. எதை எவ் வாறு கூறவேண்டும் எ ன் ற பழைய கட்டுப்பாடான இலக் கிய ம ர புக ளின் அடிப்படை
இதுவே. காவியங்களிலும் இம் மரபே கோலோச்சியது. நடை முறை வாழ்வுக்குப் பதிலாக
கற்பனை வாழ்வு ஒன்று காவியங் களில் புனையப்பட்டது. ‘வாழ்க் கைக்கு அப்பாற்பட்டதாய் தலை மக்களின் சிறப்புக் கூறுவதாய் அறநெறிகளைக் கருத்து வடிவில் காட்டுவதாய்" அவுை அமைந் தன. ஆனல் நாவல் இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அழுத்திக் கூறவேண்
இல்லை. இயந் திர சாதனங்களின் பெருக்கத்தினுலும், கைத்தொ ழில் நாகரீகத்தின் வளர்ச்சியின லும் பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தளங்க உடைத்துக் கொண்டு வளர்ச்சி யடைந்த முதலாளித்துவம் அன் றைய நியதி வழுவா வாழ்க்கை முறையைத் தகர்த்தது. அத ஞல் ஸ்திரமான நியமங்களும் ஸ் திர மா ன சமய தத்துவக் கோட்பாடுகளும் தகர்ந்தன. இ ன் னது இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுவிழந்தன. ஆகவே எதை எவ்வாறு கூறவேண்டும் என்ற பழைய இலக்கிய மரபில் இருந்து எதையும் எவ்வாறும் கூறலாம் என்ற புதிய கட்டுப்பாடற்ற இலக்கிய மரபு உதயமாகியது. இவ்வாறு புதிய வாழ்க்கை முறையில் புதிய சமுதாய உள் ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் பெரிய இலக்கிய வடிவமான நாவல் தோன்றியது. தெய்வாம் சம் பெற்ற காவிய நாயகர்க ளும், கற்பனை வாழ்வு மறைந்து அன்ருட நடைமுறை வாழ்வும் அதில் நின்று உழலும் சாதாரண
Js

Page 20
மாந்தரும் இலக்கிய அரங்கில் ஏற்றம் பெற்றனர். காவியத் தையும் நாவலையும் வேறுபடுத் தும் பொருள் வேறுபாடு என் பது இதையே. இது இரண்டு பெரும் வாழ்க்கை முறையின் வேறுபாட்டைக் குறிக்கின்றது ஒரே இலக்கிய வாழ்க்கையைச் சார்ந்த இருவேறு நூல்களில் காணப்படும் பொருள் வேறுபா டும் காவியத்திலும் நாவலிலும் காணும் இரு வேறு சமுதாய உள்ளடக்கமும் ஒன்று த ர ன் என்று சாமிநாதன் நினைத்தால் அவரது அறியாமைக்காக நாங் கள் வருத்தப்படலாம்.
காவியமும் நாவலும் வேறு சமூக அமைப்புக்களின் விளைபொருள் என்பதையும் சாமி நாதன் ஏற்றுற்கொள்ளவில்லை. * காவியத்தின் பல வி ப ர ன குணங்களும் நாவலின் விபரண குணங்களும் மாறுபட்டிருப்பது காலமாற்றத்தில் ஏற்பட்ட மதிப் புகளின் மாற்றத்தால். இரண் டும் வெவ்வேறு சமூக ச் சூழ் நிலைகளில் பிறந்தன என்பது ஒரு வாதமாகாது. ஏனெனில் வெவ் வேறு சமுதாயச் சூழ்நிலையில் பிறந்த கவிதைகள் (உதாரணம் புறநானுாற்றுப் பாடல் ஒன்று=
பாரதி பாடல் ஒன்று) அதன் காரணமாக கவிதையல்லாது வேறு வேறு இலக்கிய வகை
யைச் சா ர் ந் த ன ஆகிவிட மாட்டா" என்று சிறுபிள்ளைத் தனமான ஒரு வாதத்தைத் தரு கிருர் சாமிநாதன். (பூரணி 8. பக், 9) இங்கு சமூகச் சூழ்நிலை வேறுபாட்டை மறுக்கும் அதே
சாமிநாதன் அடுத்த ஒரு பந்தி
யில் அதை ஒப்புக் கொள்கிறர். "இவ்விரண்டிலும் காணப்படும் பாத்திாசிருஷ்டி வேறுபாடுகளோ அ  ைவ கையாண்ட பொருள் வேறுபாடுகளோ இலக்கிய வகை வேறுபாட்டை விளைவிக்காது.
36
இரு
வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளில் காலகட்டங்களில் எழுதுபவனின் நோக்கு வேறுபாட்டில் பிறப் பவை - ஒரே இலக்கியவகையில் கூட" என் கி ரு ர் சாமிநாதன் (பூரணி 8. பக். 9).
சாமிநாதன் தான் என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டுதான் சொல்கிருரா என்பது தெரியவில்லை. சரி, சாமிநாதனின் முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு அவர் சொல்வது போல காவியமும் நாவலும் பிறந்ததற்கு வெவ்வேறு சமுதா
யச் சூழ்நிலை காரணம் இல்லை
என்றும் கால மாற்றத்தில் ஏற் பட்ட மதிப்புக்களின் மாற்றத் தாலேயே இது நிகழ்கின்றது என்றும் கொள்வோம். எழுதுப வனின் மதிப்பு அல்லது நோக்கு வேறுபாட்டுக்கு வெறும் கால இடைவெளி மட்டுந்தான கார ணம் என்ற ஒரு அடிப்படை யான கேள்வி அடுத்து எழுகின் றது. முதலாம் நூற்ருண்டில் ' இருந்து 18-ம் நூற்ருண்டு வரை யுள்ள 1800 வருடங்களில் ஏன் இந்த மதிப்பு மாற்றம் ஏற்பட வில்லை? ஏன் இந்த நீண்ட கால கட்டத்தில் ஒரு நாவல் தோன்ற வில்லை. குறிப்பாக 18-ம் நூற் முண்டில் மட்டும் ஏன் ஒரு கலை ஞனின் மதிப்பு ம் நோக்கும் வேறுபடவேண்டும்? முன் இந்த கால கட்டத்திலேதான் நாவல் தோன்றவேண்டும்? இதற்குச் சாமிநாதன் என்ன பதில் கூற முடியும் என்று தெரியவில்லை, ஆனல் சாமிநாதன் தன்னை அறி யாது விபரம் புரியாது ஒப்புக் கொண்டதுபோல எழுதுபவனின் நோக்கு வேறுபாட்டுக்கு வெவ் வேறு சமூக ச் சூழ்நிலைகளே காரணமாகும்.
(வளரும்

போடாத விண்ணப்பம்
பாண்டியூரன்"
நாட்டோர் வியக்கும் நடையுடைய ஐயாவே!
ஒட்டுப்போட் டூரார் உமைத்தேர்ந்த “போதையிலே " பாட்டிணக்கி வாழ்த்துமடற் பத்திரமும் தந்தவர் நாம்! பச்சோந்தி யென்றும்மைப் பைத்தியங்கள் சொன்னுலும் மெச்சத் தகுந்த விதத்தில். பணந்திரட்டி மாலைகளும் போட்டு ஊர் வலமும் நடத்தியவன்; காலைமுதல் மாலைவரை கால்தேயப் பாடுபட்ட கிட்டப்பன் நானென்று கேள்விப் படாதார் யார்?
ஒற்றன் உளவாளி ஊர்ப்பகையன் எட்ட்ப்பன், பற்றுன்மே லுள்ள ஒரு பக்தனெனப் பேர்பெற்றேன். பட்டாலும் குட்டுப் பவுண்போட்ட கையாலே பட்டேனென் றும்மைப் பவிசுகெட விட்டேன... ?
வாத்திமார்;
பீயோன்; மலம்சுத்தி செய்வோர்க்கும்
பாத்திகையாய் நின்ற பணித்தரகன் நானன்றே! நேர்த்திக் கடனென்று நிச்சயமாய் செய்வேன் நான். சீர்த்தியுடன், ஐயா! செவிசாய்த்து என்னுடைய விண்ணப்பம் இஃதை வினைப்படுத்தித் தந்திடுக! மண்மறையும் மட்டுமுமை மாண்புடனே போற்றிடுவேன்! 9lLfrs எனது அருமைப் புதல்வர்கள்
z.

Page 21
"கைவாறு க் காரர் உம் கைபோன்ற கையாட்கள் கோழி, கிழங்கு, இளநீர், குடம், சட்டி வாளி, உலக்கை. தளவாடம், மண்வெட்டி சீனி, மா, சட்டை, செருப்புத் திருடர்களாம்! மானியென்றன் மக்கள் வழிப்பறியும் செய்தாராம். என்று நமது எதிர்ப்பாட்டிக் காரர்கள் ஒன்றின்மே லொன்ருய். ஒருகொள்ளைக் குற்றத்தைத் தாக்கல்செய் துள்ளார்! தலைதுாக்க ஏலுதில்லை! போக்கிரிகட் கெல்லாம் புதுப்பாடம் கற்பிக்க. ... நல்ல தருணமிது! நழுவ விடாதீர்கள்!
சொல்லவுந்தான் வேண்டும் சுருக்கமாய்; ESTGOT D 956mr ,
காற்சட்டை போட்டும், - கதிரையிலே வீற்றிருந்தும். . . ஏற்ற தொழில்கள் இயற்றிடுதல் வேண்டுமென்று பட்டணத்தில் விட்டுப் படிப்பித்தேன்: படம்பார்த்து, கெட்ட பயல்களுடன் கூடி இடம்பார்க்க ஊர்சுற்றி "இப்பி முடிவளர்த்து, பொன்பொருளைத் தீர்த்துவிட்டார்! போக்கிரிகள்; போகட்டும்! வட்டிப்பணந்தான்! மனவருத்த மில்லை யஃதால்! مم குட்டிக்கு, நாய்கள் குரைக்கப் பழக்குவதா? வாகான தோற்றம், மவுசுடையார் என்மக்கள்!
ஆகாத செய்கையிலே. . . ஆணையிவர் கைவையார்! உம்மருளால் எப்படியோ ஒர்தொழிலைப் பெற்றிடுவார்! சன்மானம் செய்யச் சலியாது என்கைகள் சும்மா உம் வாசலினைச் சுற்றித் திரிவேணு..?
நிற்க; ஒருபெரிய சிக்கல், இதனேடு பற்பலநாள் போலீஸார் பற்றியுள்ளார்
ஒர்மகனை!
உங்கள் திருநாமம் உச்சரித்தேன் மீட்பதற்கு! கேட்டந்தத் தெய்வங்கள் கிஞ்சித்தும் ஆடவில்லை! -

போட்டேன் நான்பிட்டிசங்கள்
பொந்திகண்ணன்' போஸ்ற்ருச்சு! ஆகையினல். . .
ஐயா!
அவசரமாய் வந்தருளி வாகைபுனை யென்மகனை மட்டும் விடுவிப்பீர்! சாகையிலும் என்னேட்டைச் சத்தியமாய்ப் போட்டிடுவேன்!
போகட்டும் என்று பொறுத்திருப்பேன்;
ஆனலோ. . . ஊரிற் கலகலப்பு ஓய்ந்துவிடும்! ᎧᎱᎧᎼᎢ LᏝᏪ#5éᎦ5ᎶrᎢ காரியங்கள் முற்றும் கதைக்கின்றேன் நேர்கண்டு; காரமாய் உங்கள் கவுரவத்தைக்
காப்பாற்ற, விண்ணப்பம் இஃதை வினைப்படுத்தித் தந்திடுக, பண்ணுவேன் கையுட் பல!
ஆரம்பித்து 10 ஆண் 2. டுகளில் மிகப் பெரிய
தை ஏற்படுத்தியுள்ள மாத சஞ்சிகை. தொடர்ந்து வெளிவருவது. இந்த நாட்டின் இலக்கியச் சரித்திரத்தையே மாற்றி அமைத் துக் காட்டும் வல்லமை இச் சஞ்சிகைக்கு உண்டு. எதிர்காலத்தை மகோன்னதமான நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் உற் சாகத்துடனும் இடையருத உழைப்புடனும் நோக்கும் மாசிகை. புதிய யுகம் படைக்கும் இந்தச் சத்திய வேள்வியில் நம்முடன் இணைய விரும்புவோர் மாத்திரம் தொடர்ந்து படிக்கலாம்.
9

Page 22
இலக்கியத்தில் ஒரு காட்சி
நாடெனப் படுவது
சிவா சுப்பிரமணியம்
அரண்மனை கூடுகின்றது"
கட்டியக்காரன் கட்டியங்
கூறப் படாடோபமாக வந்து சிம்மாசனத்தில் அமர்கின்ருன் மன்னன் .
அவனுடைய பார்வையில் ஒரு மமதை பேச் சி ல் ஒரு
som L0 ,
உலகம் முழுவதற்கும் தான் மன்னணுக - மாபெரும் சக்கர வர்த்தியாக வரவேண்டும் என்ற ஆசை அவனுக்கு. அந்த ஆசை காரணமாக எல்லா நாடுகளிலும் தன் ஒற்றர்களை அனுப்பி வைத் திருக்கிருன். அந்த ஒற்றர்களோ  ைக தேர்ந்த சதிகாரர்கள். கொலை அவர்களுக்கு ஒரு விளை யாட்டு. ஒவ்வொரு நாட்டிலும் பணம் படைத்த "முதலை களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் திருவிளையாடலை நடத் துவார்கள்.
இந்த ஒற்றர்கள் தங்களுக் குள் "மத்திய உளவு நிலையம்" ஒன்றை அமைத்து இயங்கி வரு கின்ருர்கள். மன்னரின் வெள்ளை" வெளேரென்ற "மாளிகை" க்குள் இந்த ஒற்றர்கள் சுதந்திரமாக உலாவுவார்கள். மந்திரி பிரதா ணிகளுக்கே இவர்களுடைய நட
40
வடிக்கைகளைப் பற்றித் தெரி யாது. தட்டிக் கேட்கும் அதிகா ரமும் இல்லை. w
எல்லா நாடுகளிலும் கைப் பொம்மை ஆட்சிகளை உருவாக் கிவிட்டால் தங்கள் மன்னன் தன்னிச்சைப்படி அந்த நாடுக ளின் செல்வத்தைச் கரண்ட முடியும் என்பதாலும், எல்லா நாடுகளையும் அடிமை நாடுகளாக் கிவிட்டால் தங்கள் மன்னன் உலகத்தின் சக்கரவர்த்தியாக முடியும் என்பதாலும் இந்த ஒற் றர்கள் தாங்கள் "இயங்கும்" நாடுகளில் பார்த்துப் பாராமல் பணத்தை அள்ளிக் கொட்டு வார்கள்.
தன்னுடைய சொந்த நாட் டில் பட்டினிப் பட் டா ள ம் பெருகி வருவதைப் பற்றி மன் னனுக்க அக்கறை இல்லை. எச் சில் ( பிக்காக ஏங்கி அலையும் பச் சைக் குழந்தைகளைப் பற் றியோ, தீராத பிணியால் துய ருறும் ம க் களை ப் பற்றியோ அவன் நினைத்தும் பார்ப்பதில்லை. "உலகத் தலைமை தான் அவனு டைய ஒரே நோக்கம்.
இன்று பல இடங்களிலிருந் தும் ஒற்றர்கள் வந்து கூடியிருக் கின்றர்கள்.

அவர்களைப் பார்த்து மன் னன் கேட்கிருன்.
இப்பொழுது எங்கள் கை வரிசை நடக்கும் தேசம் எது? "மன்னர் பிரானே, இந்து சமுத்திரத்தில் பழம் பெருமை வாய்ந்த பெரிய தேசம் ஒன்றில் இப்போது எங்கள் "திருவிளையா டல்" நடக்கிறது’
நிலைமை எப்படி?"
‘வெகு சாதகம் , எங்களுக்கு நம்பிக்கையானவர்கள் ஒரு ங் கிணைந்து போராட்டம் நடத்து கின் ரு ர் க ள். தாராளமாகச் செலவு செய்தால் ஒரு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி விடலாம்"
"அப்படியானல் பார்த்துப் பாராமல் பணத்தை அள்ளிக் கொட்டுங்கள். கா ரி யம் கை கூட வேண்டும்
அந்த நேரம் பார் த் து வெளியில் ஒரே சத்தம்,
விரைந்து வந்த காவலாளி பேசி பொறுக்க முடியவில்லை என்று ஒரு கூட்டமும் கொடிய நோய்கள் பரவுவதைத் தடை செய் என்று இன்னுெரு கூட்ட மும் அந்நிய நாடுகளை ஆக்கிர மிக்காதே என்று வேருெரு கூட் டமும் கோஷம் போடுகின்றன" என்ற உண்மையைக் கூறுகின் ருன்.
அவர்களைக் கொன்று குவி யுங்கள்" இது ம ன் ன  ைன் கர்ச்சனை.
மனிதாபிமானம் மாவது உள் ள ஒரு தனக்குள் நினைக்கிருன்.
இதுவும் ஒரு நாடா! மிக்க பசியும் தீராத நோயும் அழிவு செய்யும் பகையும் இல்லாததல் லவா நாடு.
கொஞ்ச மந்திரி
உறுபசியும் ஓவாப் பிணியும்
w செறுபகையும் சேரா தியல்வது நாடு"
ண் குறள் 734
LLML MLqLAL LAqLA AALLAAAAALLAAAALALAL LqLALTLLLLSLLLLLAALLLLLAALLLLLAL
11-வது ஆண்டு மலர்
தயாராகின்றது
* கட்டுரை
úr &sog5 * கவிதைகள்
அனுப்ப வேண்டியவர்கள் இப் போதே எம்முடன் தொடர்பு கொள்ளவும்:
ஆர்வமுள்ள நண்பர்கள் மலருக்கு வேண்டிய விளம்பரங்களைச் சேக ரித்து உதவினல் ஆக்கபூர்வமான
உதவியாக அது அமையும்
armYrmrmr MMArrmaarM
பிஸ்னஸ்
ஒரு முதலாளி சொன்னர்; *சே.
சுத்த மோசம்..! வரவர, பிஸ்னஸ் டள்ளாப் போச்சு...! ஆனதால் எதிர்வரும் தேர்தலில் நிற்கப் போகிறேன். எப்படி எனது ஐடியா?"
மருதூர்க்கனி

Page 23
நைலான் கயிறுகளின் ஒயிலான ஆட்டங்கள்’
இந்த முள்ளில்லாத ரோஜாவுக்கு எத்தனை நாள் காத்திருந்தோம்? இந்த முதிராத இளமை , ' அழகான வித்துக்கு எங்கெல்லாம் அலைந்து விட்டோம்? அலையில்லாக் கடலோரம் வெயில் நுழையாப் பந்தலுக்குள் எத்தனை. . எத்தனை. . இலக்கியப் பஞ்சணைகள்? பூப்பந்தாட்ட அரங்குகள்! நைலான் கயிறுகளின் ஊஞ்சல் ஆட்டங்கள் ஆடுவோமே நாம்.
ஐயோ.. ரசனைப் பசி எடுக்கிறதே... வெண்ணெய் இல்லாவிட்டால் இலக்கிய ரொட்டியில் எண்ணெய் தடவுங்கள்!
அந்த
இலக்கியப் பஞ்சணையைத் தாங்கி நிற்கும் வர்க்க போதிக் கால்களில் "வார்னிஷ் . பெயின்ட் அடித்து விடுங்கள்! முள்ளில்லாத ரோஜாவினல் வருடிவிட்டு வசந்தத்தின் புத்திரிகளுக்கு தாலாட்டுப் பாடுங்கள். . . ஸ். ஸ். . மூச்சு முட்டுகிறது சாளரத்தைத் திறந்து விடுங்கள்! தென்றல் வரட்டும். . . துரங்கட்டும் அவர்கள் எழுப்ப வேண்டாம்!
பொன்மணி
42,

அப்துல் ரகுமான்
டொமினிக் ஜீவா
கொழும்பில் நான் தற்செயலாக ஒரு தமிழகக் கவிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரிப் பேராசிரியர் அப்துல் ரகுமான்தான் அவர். ச
முன்னர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவரது புதுக் கவிதை நூலான "பால் வீதி' யையும் படித்திருந்தேன். கவிஞர்கள் மீரா, சிற்பி ஆகியோரின் நண்பர் அவர் எனவும் கேள்விப்பட்டிருந்தேன்.
வை. எம். எம். ஏ. கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மீலாத் விழாவில் பங்கு கொள்ளக் கவிஞர் வந்திருந்தார். தமிழகத்துப் பல் இலக்கியப் பிரச்சினைகள் பற்றியும், குறிப்பாக வளர்ந்து வரும் தமிழக எழுத்தாளர்கள் பற்றியும் இருவரும் மனம் திறந்து கலந்துரையாடினேம்.
இலங்கையைப் பற்றியும் நமது நாட்டில் ஏற்பட்டுவரும் இலக் கிய வளர்ச்சி பற்றியும் தமிழகத்தில் அறிந்து கொள்ள ஏற்பட்டு வரும் ஆர்வம் முன் எப்பொழுதையும் விட இன்று கணிசமான அளவில் இளம் தலைமுறையினர் மத்தியில் இருப்பதாக ஒப்புக் கொண்டார். அதே சமயம் ஈழத்திலிருந்து கிடைக்கக் Ցռւգա அத்தனை இலக்கியப் படைப்புக்களையும் தகவல்களையும் தாங்கள் பெற முடியாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி இந்த அவல நிலை தீர இரு பக்கத்திலுமுள்ள ஆரோக்கியமான இலக்கியச் சக் திக்ள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினர்.
ஒரு கட்டத்தில் நான் மல்லிகையில் குறிப்பிட்ட "ஈழத்து முஸ்லிம் படைப்பாளர்கள் தான் தமிழகத்து முஸ்லிம் பட்ைப்பா ளிகளை விட, தகுதி மிக்கவர்களாக விளங்குகின்றனர்" என்ற கருத்தை அவர் முன் வைத்தேன்.
*சந்தேகமில்லாமல்; அது முற்று முழுக்க உண்மை’ என்ருர்)
பல இலக்கியக் கருத்துக்களைப் பல கோணங்களில் விவாதித் த எனக்கு அவரைக் கொழும்பு வாழ் மல்லிகை ரசிகர்களுக்கு அறி முகப்படுத்த ஆர்வம் இருந்தும் போதிய வசதி கிடைக்காததால் அவரிடம் அக் குறையை எடுத்துச் சொல்லி விடைபெற்றேன்.
விடை பெறும்போது நம்மவரைப் புரிந்து கொண்ட நம்மவ ரிடம் இருந்து விடை பெறும் உணர்வே என்னிடம் மேலோங்கி இருந்தது.
d

Page 24
நாடோடி இனத்தில் பிறந்த பெண் ஒவியர்
ஆர். கவ்ரிலோல்
புருயாத் தேசிய இனத்தைத் சேர்ந்த அலெக்சாந்தரா ஷக ரோவ்ஸ்காயா, அக்குடும்பத்தின் 14-வது குழந்தை. நாடோடி இனத்தைச் சேர்ந்த அலெக்சாந்தராவின் முன்னேர்களுக்கு அக் டோபர் புரட்சிக்கு முன் எழுதவோ படிக்கவோ தெரியாது. 1917 அக்டோபர் புரட்சி முடிந்ததும் அலெக்சாந்தராவின் பெற்றேர்கள் சுரங்கம் அமைத்தல், ரயில் பாதைகள் போ டு த ல் போன்ற தொழிலாளர்களுடன் ஈடுபட்டனர். அவர்களின் கூட்டு முயற்சி வீண்போகவில்லை. இன்று புருயாத் சுயாட்சிக் குடியரசில் ஆகாய விமானங்களும், படகுகளும், கண்ணுடி, சிமெண்டு, துணிகள், காலணிகள் போன்றவைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
புருயாத் இனத்திலேயே அலெக்சாந்தராதான் ஒவியம் வரை தலை முதன் முதலில் ஒரு தொழிலாக மேற்கொண்டார். அவரு டைய 13 சகோதர, சகோதரிகளைப் போலவே அலெக்சாந்தரா வும், தன் தொழிலைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். சோவியத் அரசாங்கம் புது வாழ்விற்கான வாய்ப்புக்களை அவர்க ளுக்கு வழங்கியுள்ளது. حمصير
அலெக்சாந்தரா இர்குட்ஸ்கில் உள்ள ஒரு ஓவியப் பள்ளியில் முதன் முதலில் பயின்ருர் . பின்னர் ரேபின் பெயரால் நிறுவப் பட்டுள்ள புகழ்பெற்ற லெனின்கிராடு ஒவியப் பேரவையில் தமது ஓவியக் கல்வியைத் தொடர்ந்தார். 1957-ல் பட்டம் பெற்ருர், அலெக்சாந்தரா தன் கல்விக்காக பணம் ஏதும் செலவிடவில்லை. மாருக, ஒவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மாதந் தோறும் கணிசமான உதவித் தொகையைப் பெற்று வந்தார்.
புருயாத் இளம் பெண் ஒவியரான அலெக்சாந்தரா லெனின் கிராடில் இருந்தபோது, உலக இலக்கியம், ஒவியம் ஆகியவற்றை றையும் பயின்ருர்; அவரது ஆசிரியர்களின் கலைக்கூடங்கள் மற்றும் ஓவியக் கூடங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்தார். மாபெரும் ரஷ்ய ந க ரா ன லெனின்கிராடு சூழ்நிலையை ஆர்வமுடன் உட் கொண்டார். vm
இன்று அலெக்சாந்தராவின் படைப்புக்கள், கலா ரசிகர்களி டையே மிகவும் புகழ் பெற்றுள்ளன. பல சோவியத் நகரங்களில் நடைபெறும் ஒவியக் கண்காட்சிகளில் அலெக்சாந்தராவின் படைப் r புக்கள் தவருமல் இடம் பெறுகின்றன. மாஸ்கோவிலும் அவரது ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. அவருடைய கண்கவர் சித்தி ரங்களும் ஒவியங்களும், மங்கோலியா, ஹங்கேரி, ஜெர்மன் ஜன நாயகக் குடியரசு சுவீடன், ஜப்பான், இத்தாலி, மேற்கு ஜெர் மணி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டனர் அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதும் பாராட்டினர், ★
44

இழப்பிற்குப் பின்னரும் இலக்கியகாரன்
நமது கனக செந்திநாதன் மானிப்பாய் ஆஸ்பத்திரியில் இருக் கிருர், ஆளுக்குக் கடுமையாக இருந்து இப்பொழுது கொஞ்சம் சுகம். ஆனல் .." என இழுத்தார் திரு. ஆ. தம்பித்துரை ஒருநாள் என்னை விதியில் சந்தித்தபொழுது,
*அவரது இடது. காலை முழங்காலுக்குக் கீழாக அகற்றி விட் டார்கள். அதுதான் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கின் றது" எனக் கூறிக்கொண்டார் அவர்.
அன்று முழுவதும் மனசில் ஒரு பாரம் எந்த வேலை செய் தாலும் சுற்றிச் சுற்றி அந்த ஞாபகமே வந்து நின்றது. "மனிசன் எப்படித்தான் இந்த இழப்பைத் தாங்கிக் கொண்டாரோ?*
நானும் அய்யரும் மானிப்பாய் ஆஸ்பத்திரிக்கு அடுத்த நாட் காலை திரு. கனக செந்திநாதனைப் பார்க்கச் சென்ருேம். காலை நேரம். படுக்கையில் சாடையாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந் தவர் எனது ஸ்பரிசம் பட்டதும் விழித்துப் பார்த்தார்.
"ஜீவாவா... வா வா இரு. . . * எனச் சாதாரணமாகச் சொன்னவர், எனக்குப் பக்கத்தில் வந்துள்ளவரை அவதானித்து விட்டு "யாரது, அய்யாவா?" எனக் கேட்டார். படுக்கையில் ஒரு ஒரமாகக் குந்தி இருந்து கொண்டேன் நான்.
"ஈழநாடு பத்திரிகையில் செய்தி போட்டிருந்ததாம். எல்லா எழுத்தாளர்களும் வந்திருந்தனர்" என நன்றிப் பெருக்கோடு சொன்னர் செந்தி. ܝܝ
பேச்சு. பேச்சு. ஒரே இலக்கியப் பேச்சுத்தான். தனக்கு ஏற் பட்ட இழப்பைப் பற்றியோ அதன் வேதனை பற்றியோ எதிர் காலத்தில் அந்த இழப்பினுல் ஏற்படப் போகும் பாதிப்புகளைப் பற்றியோ எந்தவிதமான அக்கறையுமற்று, இலக்கியம் பற்றியே பேசித் தீர்த்தார்! அப்பொழுதுதான் கடந்த நாற்பது வருடங்க ளாக இந்த மண்ணை நேசித்த ஓர் இலக்கிய நெஞ்சத்தின் ஆத்மக் குரலை நான் அங்கு கேட்டேன். W
"என்னுல் இயன்ற சகல இலக்கியக் கடமைகளையும் நான் ஒர ளவுக்குச் செய்து விட்டேன். என் மனத்திற்குப் பூரண திருப்தி. எனக்காக யாருமே கவலைப்படக் கூடாது. என்னில் அன்பிருந்தால் அந்த அன்பை எங்களது நாட்டு இலக்கியங்களின் மீது திருப்பு வதையே நான் மனசார விரும்புகின்றேன்"
கடுந்துன்பங்கள் மத்தியிலும் இப்படிச் சிந்தித்துச் சொன்ன செந்தியை நா ன் வேறெந்தக் காலத்தையும் விட அன்றுதான் பூரணமாகப் புரிந்து கொண்டேன்.
விடை பெறும்போது எனக்குள் நானே பெருமிதப்பட்டுக் கொண்டேன். "இப்படியானவர்களைப் பெற்றெடுத்த ஈழத்து இலக் கியம் நிச்சயம் பெருமைப்பட நியாயமுண்டு!"
ፊ።

Page 25
தமிழகக் கடிதம் ஒன்று
இதுகாறும் - ஒரு நல்ல ஆளுமை பெற்ற முற்போக்கு எழுத் தாளரின் இதழான மல்லிகையை எப்போதோ அறிந்திருந்தும் தொடர்பு கொள்ளாதிருந்துவிட்ட அசட்டுத்தனத்திற்கு மன்னிப் புக் கொருகிறேன். "சரஸ்வதி (நா. விஜயபாஸ்கரனுடையது) காலம் முதல் என் இதயத்துடன், முன்பின் கருத்து வேற்றுமை இல்லாத முறையில், உணர்வு கொண்டு மதித்திருந்த டொமினிக் ஜீவாவுக்கு இன்றுதான் நான் எழுதுகிறேன். அதாவது இப்பொழு துதான் “ஏதோ வளர்ச்சியைப் பெற்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
தோழர் பரிணுமன் பெயரிட்டு நீங்கள் அனுப்பிய 5 செட்” மல்லிகை இதழில் ஒரு செட்டை நான் எடுத்துக் கொண்டேன். எங்களை இனம் கண்டு இதழ் அனுப்பிய பின்தான் எனக்கு ஓர்மை" தட்டுப்பட்டிருக்கிறது, பாருங்களேன். எப்பொழுதாவது "பாரதி' புத்தக நிலையத்தில் மல்லிகையை வாங்கிப் படிப்பது - விமர்சிப்பது இத்துடன் நிறுத்திக் கொண்ட நாங்கள், மல்லிகைக்கு எப்படி சந்தா அனுப்புவது, "போரின் எக்க்ேஞ்ச்" தகருறுகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றியெல்லாம் அதிகமாக விசாரிக்காமலே இருந்துவிட்டோம். தவறு எங்களுடையதுதான்.
எங்களுடைய சிறுகதைத் தொகுப்பில் இலங்கை செ. யோக நாதனின் கதையொன்றும் சேர்ந்து வெளியீடு 14-4-74-ல் மது ரையிலே நடைபெற்றது. என் கதை உள்பட 10 கதைகள் உண்டு.
கவே புதுத் தொடர்பாக மல்லிகைக்கென்று என்னுடைய 4 கவிதைகளை அத்துடன் அனுப்பியிருக்கிறேன். கைலாசபதியின் "தமிழ் நாவல் இலக்கியம்" "நான் படித்திருக்கிறேன். அதைக் கிண்டல் செய்த கோணங்கி" வெ. சாவின் கட்டுரையை நடை யின்" சில இதழ்களிலும் கண்டேன். அந்த இரண்டையும் ஒப்பிடும் கட்டுரைகளை மல்லிகை ஜன - பிப்ரவரி இதழ்களில் கண்டேன். இக்கட்டுரை மல்லிகையில் எப்போது ஆரம்பமானது? ஜனவரிக்கு முந்தியே ஆரம்பிக்சுப்பட்டிருந்தால் முந்திய மல்லிகைகளில் ஒரு காப்பி அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
நாம் நேருக்கு நேர் பேசவேண்டியுள்ள விஷயங்கள் அநேகம்.
அடுத்து தமிழ் நாட்டுக்கு நீங்கள் வரும் சமயம் தெரிவியுங்கள். எங்கள் கலை - இலக்கிய மன்றத்தில் கூட்டம் போடுகிருேம். எங் கள் கலை - இலக்கியக் கூட்டங்களில் கதை, கவிதை, குறுங் காவியம், குறுநாவல்கள் அரங்கேறுவதுண்டு.
சில பேர்கள் இலங்கையிலிருந்து இடதுசாரிக் கோஷங்களோடு இங்கு வருகிறர்கள். ஏதோ பண்டமாற்று வியாபாரம் போல்
ரகசியச் சந்திப்புகள் நடக்கின்றன. போய்விடுகிருர்கள். . . கலாநிதி கைலாசபதி ஜூலை மாதம் மதுரை வருவதாகக் கேள்வி.
பொன்மணி
46

சாலை விபத்துக்களைத் g56535....
கார்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது: சா லை கள் அதிகரிக்கின்றன. எனவே போக்குவரத்துப் பாது காப்புப் பிரச்னைகளுக்கு விரை வில் தீர்வு காணவேண்டியுள்ளது.
சாலை விபத்துக்கள் கண்டிப் பாகத் தவிர்க்கப்பட வேண்டும்இதுதான் பொதுவான கொள் கை. இருப்பினும் விபத்துக்கள் நி க ழ Tம ல் இல்லை. எனவே விபத்துக்களின் விளைவுகளைக் கூடு மான அளவுக்கு குறைக்க முயற் சிகள் எடுத்தல் அவசியம் . கார் களின் தோற்றம் மற்றும் வடி வத்தைப் புனைவரைவு செய்தல், சாலைகளின் மேற்பரப்பு மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளை அபிவி ருத்தி செய்தல் ஆகிய சிக்கலான பிரச்னைகள் இதில் அடங்கியுள் ளன. பாதசாரிகளும், வண்டி களை ஒட்டுபவர்களும் கவனத்து டன் இருத்தல் அவசியமாகும். ஹெலிகாப்டர்கள், விபத்து நடைபெற்ற இடத்தைத் துல்லி யமாகக் காட்டும் எந்திரங்கள் ஆகியவை போக்குவரத்துக் கட் டுப்பாட்டைத் துறையில் இன்று உள்ளன. இருப்பினும் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்த சிறந்த முறைகளும், யுக்திகளும் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
தற்பொழுது சாலை விபத் துக்களை ஆராய்வதற்கென கம்ப் யூட்டர்கள் பரவலாகப் பயன் படுத்தப்படுகின்றன.
கர்னல் எழிலேவ் ,
சாலைப் போக்குவரத்து பாது காப்பு ஆராய்ச்சி நிலையத்தில் சட்டவியல், பெளதிக - கணித வியல், தொழில் நுட்ப, பொரு ளாதார விஞ்ஞானம் ஆகிய துறைகளைச் சார்ந்த நிபுணர்க
ளும் உள்ளனர். தவிர, மனே தத்துவ இயலாளர்கள், சமூக வியலாளர்கள், மருத்துவர்கள்
ஆகியோரும் உளர். சாலை விபத் துகளினல் ஏற்படும் விளைவுகளை மட்டுப்படுத்தும் பிரச்னைகளுக் குத் தீர்வு காண மருத்துவத் துறையும் பேருதவி செய்கிறது. இப்பொழுது வருங் கால டிரைவர்களை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட் டும் அன்றி, எலெக்ரானிக் எந் திரங்களும் பரிசோதிக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆலோசனைப் படி, சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கும் முறைகளும் இப்பொ ழுது டிரைவர்கள் பயிற்சிப் பள் ளியில் கற்பிக்கப்படுகின்றன,
சமீபத்தில் நடத்திய ஆராய்ச் சியின் விளைவாக, சாலை விதிக ளில் சில திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. டிரைவர்களோ, பிரயாணிகளோ கா ய முற் ற 1200 சாலைவிபத்துக்களை, சாலைப் போக்குவரத்து நிலைய ஊழியர் கள் ஆராய்ந்தனர். விபத்து சம் பந்தமான கார்டுகளில், விபத்து
47

Page 26
·墨8
நடந்த பொழுது வாகனத்தின் வேகம், டிரைவரின் யோக்கிய தாம்சங்கள், தொழில் அனுப வம், விபத்தின் விளைவு, விபத்து ஏற்பட்ட காலம், நேரம் அனைத் தும் குறிக்கப்பட்டன. ஒட்டிச் செல்லும் வாகனத்தின் வகை அதை ஒட்டுபவரின் தொழில் அனுபவம் இவற்றைப்பொறுத்து வேகத்தின் அளவு நிர்ணயிக்கப் பட வேன்டும் என்பதை இந்த ஆராய்ச்சியின் விளைவுகள் உறு திப்படுத்துகின்றன. வாகனங்க ளின் வேகத்தைக் குறைப்பதால், வாகனம் போய்ச் சேர வேண்
டிய இடத்திற்குத் தாமதமாகா மலும் இருக்க வேண்டும். ஒரு மணிக்கு 80 - 90 கிலோ மீட் டர் வீதம் வேகம் கட்டுப்படுத் தப்பட்டாலும் விபத்தின் விளே வுகள் இல்லாமல் இல்லை. எனவே ஒவ்வொரு வாகனத்திலும் முத லுதவிப் பெட்டி வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டு உள்ளது.
சாலை விபத்துக்களைத் தடுக் கும் பணியில் விஞ்ஞானம் பெரி தும் உதவும் என்று நான் நம் கிறேன்.
eeALALAALAAAAALLAAAAALLALLAALLAAAAALLAAAAALLAALLAAAAALLAALLAAAAALAAAAALLAAAAALLAALLAAAAALLAALAMAAA
நயினுதீவு
நடத்தும்
பரவசத்தை வந்துதான் பாருங்களேன்!
s
مح.
நவீனத்வ நாடகத்தை நாடறியக் கூடாதா?
R
பரவச நாட்டியத்தைப் R
‘மணிபல்லவ கலா மன்றம்
13-வது ஆண்டு கலை விழா
16ー4ー1975
பார்த்திருக்க வேண்டாமோ?
கருத்துமிகு சொற்பொழிவுகளைக் காதேற்கலாகாதோ?
கலைமிகு நிகழ்ச்சிகளும் கண்களுக்குத் தவமன்ருே
இலக்கிய உணர்வுமிகு இளைஞர்களின் படையல்கள்!

உலகத்திலேயே அதிக உயர ^- ۔
மான இனத்தினர் யார்? பூநகரி.
வெள்ளை நைல்நதி உற்பத்தி ஸ்தானத்திலுள்ள "நீலோடிக்" என்ற ஜாதியினர் சாதாரணமா
ம, அன்றணி
கவே ஏழு அடி உயரமும் அதற்கு
மேற்பட்ட உயரமாகவும் இருப் பார்களாம்.
* ஈழத்தில் தமிழில் வெளி வந்த முதல் இரண்டு மூன்று
நாவல்களின் வரிசைக் கிரமப்படி
சொல்ல முடியுமா?
கிண்ணியா. மு. ஜெயசீலன்
1895-ல் மோகனுங்கி என்
கின்ற நாவலை திருகோணமலை
யைச் சேர்ந்த சரவணமுத்துப்
பிள்ளை என்பவர் எழுதினர். இதுவே இலங்கையில் முதன் முதலில் எழுதப்பட்ட தமிழ் நாவல் என்பது ஒரு கருத்து.
1902-ல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பிமுத்துப்பிள்ளை என்பவரால் "அழகவல்லி" என்ற நாவல் எழுதப்பட்டது. இது இரண்டாவது நாவலாகக் கணிக் கப்படுகின்றது.
1916-ல் சி. வை. சின்னப் பிள்ளை என்பவரால் யாழ்ப்பா ணத்தில் எழுதப்பட்ட நாவலின்
g|T66s q6t)....
பெயர் "சுந்தரம் செய்த தந்தி ரம் அல்லது விஜயசீலன்" இது ஈழத்தின் மூன்ருவது நாவலாக எண்ணப்படுகின்றது. * பரதேசித் தபால்" என ஊர்களில் சில பகுதிகளில் வழங்கும் சொல்லுக்கு உண்மை யான அர்த்தம் என்ன? கிளிநொச்சி. Louńsaar
பரதேசித் தபால் எனப்படு வது ஊரில் ஏதாவது நடை பெற்ற சம்பவத்தைப்பற்றி குசு குசுத்துப் பலர் காதுகளுக்குக்
கொண் டு போய்ச் சேர்க்கும்
பொய் வதந்தி.
* வண்ணத்துப் பூச்சிகள் எத் தனை மைல் தூரம் பறந்து செல்லும் வலிமை பெற்றவை? கோப்பாய். நளினி தேவதுரை மஞ்சள் நிறமும் கறுப்பு நிற மும் கலந்துள்ள ஒருவகை வண் ணத்துப் பூச்சிகள் அட்லாண்டிக் மகாசமுத்திரத்தைப் பறந்தே கடந்துள்ளன என ஆய்வு நிபு ணர்கள் நம்புகின்றனர் * காதலின் தோல்விக்குப் பிற கும் மனிதன் வாழ்வது அறி வீனம் என நான் கருதுகின்றேன். உங்கள் ஆலோசனை என்ன?
கல்முனை, 另· முருகமூர்த்தி
d9

Page 27
காதலின் தோல்விக்குப் பிற கும் ஓர் இளைஞனுக்கு அல்லது ஒரு யுவதிக்கு வாழ்க்கை இருக் கின்றது. காதலை மட்டுமே முழு வாழ்க்கை என நினைத்து அதன் தோல்வியால் விரக்தியுற்று உள் ளங்குமுறுவதும் வாழ்வை அழிப் பதும் இள  ைம யி ன் அறியா மையே.
* ஒரு சிறுகதையை எந்தெந்த முறையில் அமைக்கலாம்?
அல்லது உருவாக்கலாம்?
கொழும்பு. க. தேவதாசன்
ஒரு கதைக் கருவைத் தேர்ந் தெடுத்து அதற்கேற்ற பாத்தி ரங்களை அமைப்பது ஒருவகை. ஒரு பாத்திரத்தைத் தேர்ந் தெடுத்து அதற்கேற்ற சூழலை, கதைக் கருவைப் பின்னி இணைப் பது இன்னெரு வகை
ஒரு சூழ்நிலையைத் தேர்ந் தெடுத்து அதற்கேற்ற பாத்தி ரங்களை யும் நிகழ்ச்சிகளையும் பொருத்தமாக்கிக் கதை கட்டு வது வேருெரு வகை.
* சமூகத்தோடு ஒட்டாதுமக்களின் எந்தப் பிரச்சினை களிலும் முகம் கொடுக்காது
ஒதுங்கி இருந்து கொண்டு வாய் கிழிய முற்போக்குப் பேசும்எழுதும் சிலரைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
திக்குவல்லை, எம். நிலாமுதீன்
அவர்கள் என்ன பேசுகின் முர்கள், என்ன எழுதுகின்ருர் கள் என்பதை வைத்து அவர்க ளைக் கணித்து விடாதீர்கள். அவர்கள் என்னத்தைச் செய்கின் ருர்கள் என்பதை வைத்தே அவர்களினது முற்போக்கைக் கணக்கிலெடுத்துப் பாருங்கள்.
* தமிழகத்தைப் போல நமது
நாட்டிலும் பெண் எழுத் தாளர்கள் இல்லையே. இது நமது இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிய நட்டமல்லவா?
நீர்வேலி. எஸ். சற்குணம்
உண்மை. ஒன்றிரண்டு பெண் எழுத்தாளர் நம் மத் தி யில் இருந்து வந்தனர். இன்று அவர் கள் எழுதுவதை மறந்து விட் டனர். சிந்திக்கத் தெரிந்த ஒரு பெண் வீட்டில் பேனவை எடுத்து எழுதிவிட்டால், அவள் யாருக் கோ காதல் கடிதம்தான் எழுது
深赛 澄
சலூன்களுக்குத் தேவையான
இ பேஸிங் ஸ்நோ
முகப் பவுடர் நறுமணங் கமழும் வெளிவீன் வகை நம்மிடம் கிடைக்கும். தரமான ஊதுபத்தி வகையருக்கள் எம்மிடம் உண்டு கேரளா தயாரிப்பாளர்
மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை.

கின்ருள் என நம்பர் நமது சமூக அமைப்பில் பெ0 எழுத்தாள ராக உருவாகுவதற்கு ரொம்பத் துணிச்சல் வேண்டும். நிச்சய
மாகத் தரமான பெண் எழுத்
தாளர்கள் தோன்றுவார்கள் என்பதே எனது நம்பிக்கை.
* மல்லிகை தரமற்ற சஞ்சிகை
என்பது எ ன து அசைக்க
மூடியாத நம்பிக்கை. உங்களது கருத்து என்ன? "கொக்குவில். ம, சரத் சந்திரன்
உங்களது கருத்து உண்மை
யாக இருக்கலாம். காரணம் நீங்கள் அனுப்பிய கதை, கவிதை மல்லிகையில் இடம் பெறவில்லை. தரமானது என நீங்கள் கருதும் உங்களது படைப்புக்கள் இடம் பெருதபோது மல்லிகை தரமற் றது என நீங்கள் நம்புவதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன்.
* பெப்ரவரி மாத மல்லிகை இதழில் நீலாவணனின் நினை வுக் கட்டுரையில் நீங்கள் எழு திய கருத்தான ஒரு நல்ல கட்டு ரையைப் படிக்க வேண்டுமானல் ஓர் எழுத்தாளன் இறந்துதான் போகட்டுமே என்பதற்கு இணங்க ஈழத்தின் பிரபல இலக்கியப் பத்திரிகையான மல்லிகையின் ஆசிரியரான நீங்கள் எங்களுக் காக இறந்து அப்படியொரு நல்ல கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பைத் தருவீர்களா?
வை. திருநாவுக்கரசு புங்குடுதீவு - 11.
இது நல்ல யோசனை. (Մ)ւգսկ மா ) ல் அப்படி ஒரு கட்டுரையை
நீங்களே எ(n ெ அனுப்புங்கள். அதைப் படி விட்டு நா ன் செத்துப்போ ') ன். எனக்கும்
சாவதற்கு முன் ) . அப்படியொரு தரமான கட்டுரையைப் படிக்கும்
தொடர்பு கொள்ள
மல் லி  ைக ஆசிரியரைக் கொழும்பில் சந்திக்க விரும்புப வர்கள் ஒவ்வொரு மாதத்தின் பின்வரும் கடைசி வாரத்தில் 137, மலிபன் வீதி, 182, முத லாம் குறுக்குத் தெரு, 24 பூரீ கதிரேசன் வீதி ஆகிய முகவரி களில் சந்திக்கலாம். .א
தொலைபேசி: 20712
வாய்ப்புக் கிட்டும். உங்களுக்கும் ஒரு தரமான கட்டுரை எழுதிய நிம்மதி கிடைக்கும்.
* புத்திசாலியாகவும், திறமை சாலியாகவும் எந்நேரமும் கவன மாகவும் இருந்தால் பாதுகாப் பாக இருக்க முடியுமா? -
த. விநாயகமூர்த்தி s கெட்டிக்காரணுகவும் வாய்ச் சாதுரியகாரணுகவும் இருப்பதை விட, கள்ளங் கபடின்றி இருப்ப வனே சிறந்த பாதுகாப்புக்குரி யவனுகின்றன். ஏனெனில் அவ னைச் சகலரும் நேசிக்கின்றனர்: அவனும் சகலரினதும் கு  ைற நிறைகளை நேருக்கு நேரே சொல்லி விடுகின்ருன்!
* சிரஞ்சீவியான ஆயுள் பெற் றவர்கள் எழுவர் என ப் புராணங்கள் கூறுகின்றனவே, அந்த எழுவர் பெயர் என்ன? J. J5hyFsir
Lott Løve
வவுனியா.
வத்தளே.
அஸ்வத்தாமன் வியாசன், அனுமன், விபீஷ ணன். பரசுராமன். கிருபாச்சா ரியன்இதைப்படித்துவிட்டு அவர் கள் இப்பொழுது எங்கிருக்கின்ற னர் எனமாத்திரம் கேட்டுவிடா தீர்கள்.

Page 28
வாழ்த்துக்கள்
நாடகத் தயாரிப்பாளரும் நடிகரும் எழுத்தாளருமான திரு. நா. சுந்தரலிங்கம் அவர்களுக்கும் பவானிக்கும் கடந்த 31-3-75-ல் கொழும்பில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மணமக்கள் சிறப்பு நிற் று வாழத் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை மல்லிகை கூறு
கின்றது,
றது - ஆசிரியர்
*பட்டப்படிப்பைப் பற்றி -- குறிப்பாக விஞ்ஞானப் படிப்
பைப் பற்றி என்ன கருதுகின் நீர்கள்? நெல்லியடி. சா. கணேசன்
பட்டப் படிப்பு அறிவை விருத்தி செய்யவும் பல பிரச்சி னைகளுக் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ காணும் மனப் பக்கு பதிதையும் கொடுக்கும் என்பது உண்மை தான். ஆனல் இந்த நாட்டில் பட்டம் சீதனத்தைப் பெருப்பிக்
, பெண்களுக்கு ஒர் ஆப ர 30ம் போ' ஆண்களுக்கு ஒர் அணிகலணு ம்தான் விளங்கு கின்றது.
விஞ் 7ணப் படிப்பைப்பற் றிக் கேட்டுள்ளிர்கள். ந 1 ன் நேரில் பார், ஒரு சம்பவத் த அப்படியே சொல்லுகின்றே எனக்குத் தெரிந்த விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் ஒரு நாள் பாடசாலைக் த் த்னது காரில் வந்து கொஸ்டிருந்தார். வழி யில் வாகனம் "மக்கர்" செய்து நின்றுவிட்டது. "போனற்றைத்
திறந்தார். அங்கொன்றும் இங்
கொன்றுமாக இழுத்துப் பn , தார் ஊகூம் கார் என்ஜின்
58
ஆற அம, 5 தி: , ஷ
இயங்கவில்லை; பக்கத்தே உள் கராஜி ' உள்ளவரைக் கூட் வக் , 11 . காவியும் எண்ணெயு அ. க்கும்சேர்ந்த உடை. சாத் ர0ை பாமரத்தனத் 'ல் காட் தந்தார் அந் த் தொழிலாளி. அதையும் இ தயும் இணைத் இதையும் அதையும் பொருத் விட்டு என்ஜினை 'ஸ்ராட் செ தார். கார் வேலை செய்தது அந்த விஞ்ஞா ன ஆசிரிய காரில் ஏறிப் போய்க் கொண்ட ருந்தார்.
விஞ்ஞானப் ւյւգւնւ 6սուք, கைக்கு 'ழி காட்டாது போன6 அதை. அந்த த் தொழில ளிய நடைமு . ரப் цитцрдт: தனமே சிறந்ததாகும். * ஐ ஞ் கிறு காப்பியங்கள்
என்ன?
பொன்னலை. கோ. ராமலிங்கம்
குழாமணி,
கதை, நீலகேசி,
காவியம்,
'உதயணன் நாககுமார யசோதர காவியம்.
* யாளி என்ருல் என்ன?
நல்லூர். ச. தமயந்தி
யாளி என்பது யானையின் துதிக்கையும் சிங்க வடிவமுமுள் ளதாகக் கருதப்படும் ஒரு மிருகம்.
இலக்' த்தின்மேல் பேர்ார் ' கொண்ட பலர் தமிழகத் , பூந்து தங்களுடன் தொடர்பு கொண்டுள்ள 5 அறியக் கிடக்
ளினது முகவரி
கின்றது. 13: களை நமக்கு அறUதவுவதுடன்
அவர்களுடன் நாமும் தொடர்பு
கொள்ளத் தக்க 5ாக ஏற்பாடு செய்து தருவி . ?
த. கோபாலன் மட்டக்களப்பு.
தாராளமாக!
g
 
 

வகைவகையான பிடவைத் திணிசுகள் |
அழகிய சேட்டிங்-சூட்டிங் வகைகள்
வனிதையர் விரும்பும்
கூறைச்சேலை வகைகள் ஆடவர் விரும்பும்
ܒܒܫܒܝ̈ܫ ܚܿܫܒܝ̈ܒܘcܫܒܣܚܡܫܒܫ
குழந்தைகளுக்குத் தேவையான, றெடிமேட் உடைகள்
மற்றும் அழகு சாதனப் பொருட்கள் யாவும் நிதான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
MAN AMS E.
16, People's Model Market, JAFFNA.

Page 29
-
、
翡 -
Like
*
ఫేమ్ల్లో
妻
བེ་
 
 
 
 

et er in S. In
மில்க் வைற்
விலகுறைந்து விட்டது
a *** *,
7 GNU Geni నె
1-7。 is a dial all :55
,
GANIALWYNGYLL RIAAA) fl_{ {{#if:{# *、。*
பார்ந்து வாங்குங்கள்
、
க்வைற் சோப்தொழிற்சால்
ாேம் ܡܘܩܬܐ ܕ ܗ ܬܐܬܐ - ܐܢܬܬܐ ܓܒܪlܡ1_11 e. ப்பெற்ற
---