கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.07

Page 1


Page 2
24, 16 sir (peth GITT gih púid, எங்கள் முன்னேற்றம் நாட்டின் முேைனற்றம்
மேர்ச்சன்ட் பின்ைஸ் G if G
4, மேல்மாடி, மொடல் மார்க்கட்,
யாழ்ப்பாணம்
த. பெ. 83.
ʻ || 66 V? 24 1 83
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினேய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறய சனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine
N
S. gerð — 1984
மனந் திறந்து பேசுகின்றேம்
இம் மாத ஜூல் இதழ் சற்று நாட்கள் பிந்தித்தான் வெளி வருகின்றது. இது வேண்டுமென்றே ஏற்ப ட் ட சுணக்கமல்ல. அடுத்தடுத்து இரண்டு தடவைகள் தமிழகம் போய்வர வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டதன் காரணத்தால் இந்த இதழ் வெளி வரச் சிறிது கால தாமதம் ஏற்பட்டு விட்டது.
இப் பிரயாணங்கள் ஏதோ பொழுது போக்குக்காகச் செய்யப் பட்டவையல்ல. மல்லிகையின் எதிர்கால வளர்ச்சிக்கும். இருபதா வது ஆண்டு மலரை வெகு சிறப்பாக வெளிக் கொண்டுவர வேண் டும் என்ற ஆர்வத்தினலேயும்தான் இந்தப் பயணங்கள் மேற் கொள்ளப் பட்டன என்பதை நண்பர்கள் அறிந்திருக்க வேண்டும். சும்மா மல்லிகை அலுவலகத்திற்குள்ளே இருந்து கொண்டு, தபா லில் வருகின்ற கதை, கவிதை, கட்டுரைகளைப் படித்துத் தேர்ந் தெடுத்துக் கொண்டு, வந்து போகின்ற இலக்கிய நண்பர்களுடன் இலக்கியச் சம்பாஷனைகளைச் செய்து கொண்டு இருந்தால் மாத் திரம் ஓர் இலக்கியச் சஞ்சிகையை வளர்த்தெடுத்துவிட முடியாது.
சொல்லப் போனுல் நாம் இப்படி அடிக்கடி பிர ய | ண ம் செய்து வருவதே வாசகர்களுக்காகத்தான். இது சிலருக்கு ஆச்சரி யமாக இருக்கலாம். ஆழ்ந்து யோசித்தால் இதன் அர்த் தம் புரியும்.
மல்லிழை ரவிகர்கள் தரமான சுவைஞர்கள். அவர்களுக்குப் பல புதிய புதிய தகவல்க்ள் தேவைப்படுகின்றன. அதற்காகவே தாம் அந்தப் புதிய தகவல்களைத் தேடி அடிக்கடி போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது.

Page 3
கடல் கடந்து போய்ப் பார்க்கும் பொழுதுதான் மல்லிகைச் சஞ்சிகைக்கு இருக்கும் பெருமதிப்பும் அதன் தாக்கமும் தெரிகின் றன. முக்கியமான இலக்கிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கருத் தரங்குகளில் மல்லிகையின் பெயர் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.
இது மல்லிகையைத் தமது ஆத்மக் கருத்து வெளியீட்டுத் களமாக நினைத்து எழுதி வரும் சகல படைப்பாளிகளுக்கும் கிடைக் கும் கெளரவமாகவே நாம் கருதி வருகின்ருேம்.
இருபதாவது ஆண்டு மலர் தயாராகி வருகின்றது. தமிழகந் திலிருந்து பல இலக்கிய நண்பர்கள் கட்டுரை, கவிதை தத்து உதவியுள்ளனர். வந்துள்ள தமிழக எழுத்தாளர்களின் விஷய தானங்களைப் பார்க்கும் போது எமக்கு ஒரு பிரச்சினை தோன்றி யுள்ளது. எல்லாவற்றையும் பிரசுரித்தால் மலர் தமிழக மலராக விந்து 7 விடுமோ என்ற ஐயப்பாடு எம்மை அலைக்கழிக்கின்றது. எனவே தேர்ந்தெடுத்தவைகளைத்தான் பிரசுரிக்க எண்ணியுள்ளோம்.
மலரின் விலை ரூபா 5. ஒவ்வொரு மலரும் விற்று முடிந்த பின்னர் எமக்குக் கடிதங்கள் வரைவார்கள் ரஸிகர்கள், மல தேவையென்று அதனுல் அவர்களின் தேவையை எம்மால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. இந்தத் தடவை தேவையானவர்கள் முன் கூட்டியே மலர் கிடைப்பதற்கு ஆவ செய்யும்படி கேட்டுக் கொள்ளுகின்ருேம்:
- ஆசிரியர்
YSMMMMMMMMMMSMMSMMMMMMMMMS நன்றி கூறுகின்றேம் qSLLSCSMSCCMSMMSLSLSLMLMLCSLLLLLL
எங்கள் செல்வன்
செல்வன் மகேந்திரன் அவர்களுக்கும் செல்வி தேவிகா அவர்களுக்கும்
9-7-84 சென்னையில் நடைபெற்ற தி ரு மனை விழாவின் போது நேரில் வருகை தநத அன்பர்களுக்கும், எழுத்தாளர்களுக் கும். வாழ்த்து மடல் அனுப்பிய சகல இலங்கை நண்பர்களுக்கும்
குறிப்பாக ஈழத்து எழுத்தாளர்களுக்கும் எமது அன்பு கலந் நன்றியை மல்லிகை மூலம் தெரிவித்துக் சொகிேம்ே. நத
எம். ரங்கநாதன் குடும்பத்தினர் 569, 3 வது மெயின் ரோடு
இந்திரா நகர், சென்னை - 30,
t nn titsui tule ዛካuuህይ፱፱ዛዛ¢ዘtሠB'ዛዛuuዞህowllካuuuህዞዜዛ፤ካዛuuሠሠዛዛዛtህዞ'ዞዛዛዛuuዞህዞዛዛuuuuቦ!” ዘዞዟ።$ካhotuuuህዞ!”
2

தேசிய சிறுபான்மை இனப் gigst தீர்வுக்கு ஒரு மார்க்கமுண்டு
தமிழ் மக்களினது நியாயபூர்வமான அபிலாசைகள் இன்று முழு நாட்டிலும் பல பிரதேசங்களில் கட்டம் கட்டமாகவென்ரு லும் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடிய சில அறிகுறிகள் தென் ட்டு வருவதையிட்டு நாம் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிருேம்.
சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கலவான பாரா ளுமன்றப் பிரதிநிதியும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவ ருமான தோழர் சரத் முத்தேட்டுவகம தமிழ் மக்களினுட்ைய நியாயமான கோரிக்கைகளை முற்று முழுதாக் ஏற்றுக்கொண்டு தனிக் குரல் கொடுத்து வைத்தார். ‘பிரதேச சுயாட்சியின் மூலம் தமிழ் மக்களினுடைய பல நியாயபூர்வமான கோரிக்கைசளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணலாம்!" என அவர் சொல்லி வைத் தார். "தேசிய சிறுபான்மை இனங்களினுடைய சகல பிரச்சினைகளுக் கும் பூரண தீர்வு ஒரு சோஷலிஸ சமூக அமைப்பில்தான் சாத்தியப் படும் என விளக்கம் தந்த அவர், "இருந்தும் தமிழ் மக்களுடைய அரசியல் அநாதை நிலை பாதுகாப்பு, பயம், பீதி, விரக்தி போன்ற நிலைகளில் நின்று முழுத் தமிழினமும் விடுபட பிரதேச சுயாட்னி தற்போதைக்குச் சிறந்த அரசியல் பரிகாரமாகும்" என வும் சூளுரைத்தார்.
நியாய மனம் கொண்ட, ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க, நல்லெண்ண அபிமான hபடைத்த முற்போக்குச் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பக்களினது நியாய பூர்வமான பல பிரச்சினை களுக்குச் சரியான அரசியல் தீர்ாெவன்று கிடைக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவ தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்தப் புரிந்து கொள்ளத் தக்க மன மாறுதல் நல்ல அம்சம் மாத்திரமல்ல, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான கருத்து வடிவமுமாகும்.
சமீபத்தில் சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா கண்டியில் நான்கு இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு முன்னணிப்பிரசாரக் கூட்டத்திலும் பல நல்ல கருத்துக்களைச் சிங்கள க்கள் மத்தியில் தெளிவாக வைத்திருக்கின்ருர், அந்நிய வெள் இக்காரன் காலத்திலேயே தேசிய சுதந்திரத்திற்காகவும், முழு "

Page 4
நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போரfடி, அதல்ை அந்நிய ஏகா திபத்தியத்தின் எதிர்ப்புக்கு உள்ளாகிச் சிறை சென்று, தியாசங் கள் பல புரிந்த ஒர் இயக்கத்தின் தலைவர் அவர். இ ன்  ைற ய இளந் தலைமுறையினருக்கு இந்தத் தியாகப் பரம்பரையின் தகவல் களே தெரியாமல் இருக்கலாம். அப்படியான பாரம்பரியம் மிக்க வர் கொல்வின் அவர்கள்.
அவர் கண்டிக் கூட்டத்தில் பகிரங்கம்ாகவே கூறியது தமிழ்ப் பத்திரிகைகளிலே வந்துள்ளது. இராணுவ பலத்தால் எந்த ஒரு இனத்தினதும் சுதந்திரப் போராட்டங்களையும் அடக்கிவிட முடி யாது. அதன் மூலம் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்த இயலாது. ஒவ்வொரு பிரதேச மக்களினதும் பாரம்பரிய கலாச்ாரங்களையும், பண்பாட்டினையும். மொழியையும் பாதுகாப்பதன் மூலமும் பெரும் பான்மையோருக்குள்ள அனைத்து உரிமைகளையும் சிறுபான்மை மக் கிளும் சமத்துவமாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் பிா தேச சுயாட்சி வழங்குவதன் மூலம் மட்டுமே நாட்டில் ஒருமைப்பாட் டையும் ஒற்றுமைன்யயும் நிலைநாட்ட முடியும். இதை நாம் அன் றும் இன்றும் என்றும் வற்புறுத்துகின்ருேம்.
கண்டியம் சிங்களவர்களினதும் கரையோரச் சிங்களவர்களின தும் பண்பாடு, பாரம்பரியம், பழக்க வழக்கம், கலாசாரம் எல் லமே வித்தியாசமானவை. இது போலவே வடக்கு, கிழக்கு மக்க ளினதும் சமூக அமைப்பாகும். எனவே பிரதேச ரீதியி லா ன சுயாட்சி உரிமைகள் வழங்கிஞல் நாட்டின் ஒருமைப்பாடு உயருமே யன்றிக் குன்ருது!"
இதே கூட்டத்தில் இப்படியான கருத்துக்களை ஆதரித்துத் தோழர் பீட்டர் கெனமன், விஜயகுமார ரணதுங்க போன்ருேரும் பேசியுள்ளனர்.
நியாயத்தை நியாய உணர்வுடன் சிந்திக்கப் பழக்கப்பட்ட சிங்களத் தலைவர்கள் பலர், தமிழ் மக்களினுடைய நியாயமான கோரிக்கைகளில் உள்ள ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண் டதுடன் மாத்திரம் நில்லாது, அதைச் சிங்கள மக்கள் மத்தியிலேயே தைரியமாக மேடையேறிச் சொல்லவும் முன் வந்திருப்பது ஒரு அரசியல் வளர்ச்சித் தீர்வுக்கு நல்ல அறிகுறியாகும்.
நாட்டில் வாழும் சகல இனப் பகுதி மக்களும் மன நிம்மதி யுடன் வாழ, பிரயாணம் செய்ய, தமது கருமங்களை ஆற்ற ஒரு சமாதானமான சூழ்நிலை கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும், இதற்கு ஒரு வழியாகத் தான் ஜனநாயக உள்ளம் படைத் த நியாய நெஞ்சு கொண்ட, தேசியப் போராட்டப் பாரம்பரியத்தில் புடம் போட்டு எடுக்கப்பட்ட இடதுசாரித் தலைவர்களின் கருத் துக்கள் உள்ளன. இதை மனதில் கொண்டு அரசாங்கம் நியாயத் தீர் வொன்றைக் காண முயல வேண்டும்.
பரஸ்பரம் இளங்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்ப்பதற் கும் நாட்டைச் சுபீட்சப் பாதையில் கொண்டு செல்வதற்கும் மேற்படி தலைவர்களின் ஆலோசனைகளைக் கவனத்தில் எடுத்துக்
ஒகாள்ள வேண்டும் v
காலம் கடத்துவது சரியான இராஜதந்திர மார்க்கிறல்லது ை

யாழ். இலக்கிய வட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினர். இலக்கிய இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்தி உழைப்பவர். பழகுவதற்குத் தனித் தன்  ைம் வாய்ந்த பண்பாளர். சிறந்த நடிப்புக் கலை கைவரப் பெற்றவர்.
கவிஞர் மட்டுமல்ல.
தான் யாத்த கவிதைகளை இவரே
மேடைகளில் பாடக் கேட்பது ஒரு சுகமான அநுபவம்:
தகைம்ை வாய்ந்த இக்
பதில் பெருமைப்படுகின்றது,
தனித்துவம் மிக்கவர்
இனிய கவிதைகள் இசையோடு பாடுபவர்.
இனிய கவிதைகளை இசை யோடு பாடி, மக்களின் மன தைக் கவருகின்ருனென்ருல் அவ னது உள்ளம் தூய்மையானது பண்பானது என்பதை மறுக்கி முடியாது என்பதற்கு இலக்கண மாகத் திகழ் ப வர் கவிஞர் வே, ஐயாத்துரை.
அரியாலையைப் பிறப்பிடமா கக் கொண்ட கவிஞர், மரபு வழிக் கவிஞர்களுள் தலைசிறந்த வராகத் திகழ்கின்ருர்.
ஈழத்து இலக்கிய  ைநாடக உலகில் கவிஞர் வே. ஐயாத் துரை தனித்துவம் பெற்றவர்.
சலசலப்பெதுவுமின்றி / அமைதி
யாக இலக்கியப் பணி புரிந்து வரும் சிலருள் இவரும் ஒருவர். கவிதைத் துறையில் பலராலும் வியக்கப் பெறும் அரிய புல மை யைப் பெற்றுள்ளவர், இவர். கூடவே நடிப்பு, நாடக நெறி யாள்கை, ஒப்பனை போன்ற
5
கவிஞரை மல்லிகை கெளரவிப்
- ஆசிரியர்
- யாழ்வாணன்
நாடகத் துறை நுணுக்கங்களி லும் சிறந்த பயிற்சியும் திறனும் மிக்கிவர்.
பல நாடகங்களில் நடிக ராக - தனது தனித்துவ முத்தி ரையைப் பதித்த இவர், ம்க்கள் பலராலும் விரும்பி இரசிக்கப் பட்ட நாடகங்கள் பலவிற்கும் பாடல் களை எழுதியுள்ளார். "அடங்காப்பிடாரி", "அரிச்சந் திரா", "கி. பி. 2000" போன்ற நாடகங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் இவரின் கவித்து வத்திற்கு மெருகூட்டுவன.
ܝܚ
விளையும் ப யி  ைர முளையி லேயே இனங் காண முடியும் என்பது கவிஞர் ஐயாத்துரைக் கும் பொருந்தும். தனது ஆரு வது வயதிலேயே சிந்து நாடக மான "காத்தவாரயனில்" சின் னக் காத்தானுக நடித்து அனே

Page 5
suffisir turrtrfrt'.GIg&Push பெற்ற வர்.
அன்று தொடங்கிய அவரது நாடகப் பிரவேசம் இன்றுவரை நாட்டுக் கூத்து, இதிகாச -
சமூக- நகைச்சுவை நாடகங்கள்
என்று பலதரப்பட்ட பா  ைத
வழியாக தொடர்ந்து தொடர் &
கிறது.
அண்மையில் மணிவிழாக் கண்ட நடிகமணி வி. வி. வைர முத்துவின் வசந்தகான நாடக ச  ைப யி ஞ ல் நடாத்தப்பட்ட அரிச்சந்திரா, மயான காண்டம் போன்ற நாடகங்களிலும் கவி ஞர் தனது கலைத்திறனைக் காட் ul6irgitrtřřo.
1964 ஆம் ஆண்டு சுண்டிக்
குளி யாழ் நாடக கலாமன்றத்
தலைவராக இருந்ததுடன் அம் மன்றத்தின் வளர்ச்சிக்காகவும், சக நாடகக் கலைஞர்களின் கலை யுலக் முன்னேற்றத்திற்காகவும் பின்னணியாக இருந்தது மட்டு மல்ல, தூண்டுதலாகவும் நின்று
தனது பங்களிப்பை வழங்கியுள்
6TrTri.
ஈழத்து நா ட கவுல கில்
தன்னை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டிருந்த நாடகக் கலைஞர் ஐயாத்துரைக்குள் கவிஞர் ஐயாத் துரை என்ற பிறவிக் கவிஞரும் ஒளிந்திருந்தார் என்பதை இனங் காட்டிய பெருமை யாழ். இலக் கிய வட்டத்தையே சாரும். '
1966 இல் புதிய தலைமுறை யினரைக் கொண்ட "கவிதை அரங்கம்" ஒன்றினை ஒழுங்கு செய்யும் பொறுப்பினை அப்போது யாழ். இலக்கிய வட்டத் தலைவ ராகவிருந்த இரசிகமணி கனக செந்திநாதன் ஏற்றிருந்தார்.
காரை Fெ , சுந்தரம்பிள்ளை, வி. கந்தவனம, க ல் வ ய ல் வே. குமாரசாமி, வே. ஐபாத்
கவி வரிகளிஞல்
ரைக் கொண்ட கவிதையரங்கத் தில் பங்கு பற்றிறர்கள் அன் றைய கவிதை அரங்கில் துடிப் புடன் தனது சக்தியின் கனதியை நிரூபித்தவர் கவிஞர் ஐயாத்துரை.
இரசிகமணி கனக செந்தி நாதன் இவரது "வெள்ளைக் கமலம்’ கவிதைத் தொகுதிக்கு
அளித்த முன்னுரையில் பின்வரு
மாறு குறிப்பிடுகிருரி
வெறும் பயிற்சியாலும், உழைப்பாலும், திறமையாலும் மட்டும் படைப்பிலக்கிய ஆசிரி யர்கள் உருவாகி விடுவதில்லை; இறைவனின் தனிப்பங்ட கருணை
யினுல் சிலகுக்குப் படைப்ப0 ற்
றல் கிடைக்கிறதென நம்புகின் றேன். படித்தவர்களும், பட்டம் பெற்றவர்களும் ஒரு சிலர் எழுது கிருர். இவை எதுவுமே இல்லா தவர்கள் சிலர் முன்யும் எழுதி யிருக்கிருர்கள். இப் போது ம் எழுதி வருகிருர்கள். சிறந்த படைப்பிலக்கியங்களைத் தோற்று விப்பவர்களை இறைவனின் செல்லப்பிள்ளைகள் என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. அவர்
களைச் சமுதாயம் ፵"፵ பயன்படுத்திக் கொள்ள வேண் Gub” L- nr å L - rif Cyp. Gau. Geir
இந்த வசனங்களை வாசிக்கும் போது நான் கவிஞர் வே: ஐயாத்துரையை நினைக்கிறேன். இவை அவர் வாழ்க்கைக்குச் சரியாகப் பொருந்துகிறது. ஆம். இந்தக் கவிஞர் கடவுளின் செல் லப் பிள்ளை. கலைமகளின் கடைக் கண் பெற்ற பிள்ளை. யாழ்ப்பா ணத்து அரியாலையில் கலைமகளுக் கெனக் கோயில் ஒன்  ைற அமைத்து அவளேயே சதா தியா னித்து, வெள்ளியால் அங்கி அணிவித்து அ.1ளின்றி நபனில்லை என வாழ்பவர் கவிஞர் ஐயாத்
துரை, விஜயேந்திரன் ஆகியோ துறை.

கவியாக்கத்தின் போது தனது கவிதைகளை இசையோடு நகைச்சுவை இழையோடப் பாடி மக்களை ஈர்க்கும் சக்தி ஐயாத் துரைக்குண்டு. -
இவரது கவித்திறன், பல கவிதைப் போட்டிகளில் இவருக் குப் பல பரிசு களை ஈட்டிக் கொடுத்தது.
இலங்கை அரசினரால், மகாத்மா காந்தி நூற்ருண்டு விழா வை யொ ட்டி அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதோடு, அதற்கான பரிசை, பூரீமதி விஜயலட்சுமி பண் டி ட் அவர்களிடமிருந்து பெற்ற பெருமையும் பெற்றவர்.
சர்வதேச கூட்டுறவு தினங் களையொட்டி வடமாகாண ஐக் கிய மேற்பார்வைச் சபை நடாத் திய கவிதைப் போட்டிகளில் தொடர்ச்சியாக 1969, 70, 71 ஆகிய மூன்ருண்டுகள் முதற் பரிசு பெற்றுச் சாதனை புரிந்தவர் கவிஞர் வே. ஐயாத்துரை.
ui r tip. தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் கடமை யாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர், இருநூற்றுக்கும் மேற்பட்ட கவி யரங்குகளில் பங்கு பற்றி மக்க ளின் இதயத்தில் இட்ம் பெற் றவர்.
ஜூன் மாதம் 23 ந் திகதி சனிக்கிழமை அரியாலை பூரீ கல மகள் சனசமூக நிலையத்தினர் இவரது கலை இலக்கியச் சேவை யைப் பாராட்டி விழாவெடுத் கெளரவித்தனர்.
அ வ் வைபவ த்தையேட்டி வெளியிட்ட விழா மலரில் பிரபல எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா கவிஞரைப் பற்றி "பலர் கவிதை எழுதுவார்கள். வாசித்து ரவிக்
கலாம். இன்னும் சிலர் புதுக் கவிதை புனைவார்கள்
4. ஆ தன் ஆழத்திலும் கருத்துச் செறிவி லும் மனதைப் பறிகொடுக்க
லாம். ஆணு ல் ஐயாத்துரைக் கவிஞரின் ஆக்கங்களை அவரைக் கொண்டே மேடைகளில் பாடக் கேட்க வேண்டும். அதை ரசிப் பதே தனிப் பெரும் சுகமாகும்" எனவும், பிரபல நாவலாசிரிய ரான கே. டானியல் கவிஞர் ஐயாத்துரை அவர்கள் கவிதை உலகில் நிரந்தரமாகத் தனது காலடியைப் பதிப்பித்துக் கொண் டார். "மரபுக் கவிதை" என்ற உருவ அமைப்பின் வழிநின்று பழைய மரபு முறைக்குள்ளாகவே அன்ரு ட சராசரி மனிதனின் அபிலாசைகளின் தேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதைச் சாதித்துக் காட்டிய வர்" எனப் புகழாரம் சூட்டு &apf.
கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபரும், பிரபல எழுத்தாளரு
மான செங்கை ஆழியான் கவி
ஞரைப் பற்றி எழுதுகையில் *க்விஞர் ஐயாத்துரை பழமை யைப் பேணி, புதுமையை வர வேற்பவர். அவருடைய கவிதை கள் மரபு முறைக் கவிதைகள். ஆளுல் புது  ைம ய ர ன கருப் பொருட்களையும் கொண்டவை இலக்கணம் மீறிய கவிதைகளை அவர் யாக்கவில்லை. இலக்கியமா கும் கவிதைகளையே அவர் ஆற்றி வருகிருர்" எனக் குறிப்பிடுகிருர்,
இரசிகமணி கனக செந்தி நாதன் கூறியது போல கவிஞர் வே. ஐயாத்துரை யாழ். இலக்
கிய வட்டம் கண்டெடுத்த முத்து.
அரியாலையூர்க் கவிஞர்
வே. ஐயாத்துரை இன்னும் பல்
லாண்டு எம்முடன் வாழ்ந்து கலைப் பணி புரிய வேண்டும். ஷ்
7

Page 6
மலையைக் குடைந்தெடுத்து
தந்தம் கடைந்தெடுத்து
யமுனைக் கரைசமைந்த
பேரழகே.
நிலலில் பிறைமுடித்து
முமதாஜ குழலமுடிதது
நிலத்தில் உறைந்துவிட்ட
ஒரழகே.
பெண்ணும் அதிசயத்தில்
தன்னைய் பறிகொடுத்து பின்னிய மொகலாயத் தேனடையோ?
மண்ணில் வழிந்றுவிட்ட
வண்ண வானவில்லை மறுபடி எழுதுதல் தான் எளிதோ?
காதல் உலகில்ஒரு
போதை எனநின்று கண்டேன் தாஜ்மகால் அற்புதத்தை! சீதை இதழமுதை ”
ராமன பருகுதறகுச சிலையை வளைத்தகதை கற்பனையை!
கனிந்த பணியிரவும்
கனலும் பகற்பொழுதும் துணிந்து சல்லாத்துணி மறந்த பெண்ணே காற்று மழையினிலும்
மாற்றுக் குறையாது நேற்றுப் போலின்றும் பிறந்தகண்ணே!
தங்கள் உழைப்பை
உலகெங்கும் மொழிபுகல தந்தேமும் தாஜெனும் பேரினிலே எங்கள் நிலம் விளைந்த
யமுனைப் புதையலிது erன்றும் நிலத்திருக்கும் பாரினிலே,
8
 

சுகங்கள்
சந்திரா தியாகராஜா
lerriri a & 8 * அந்த அறை அவள் கன்னத்தில் விழுந்த பின் னர் வீட்டில் நீண்ட நேரம் நிசப்தம்! v
"நீங்கள். என்னைப் புரிஞ்சு கொள்ளாமல், ஏன் என்னைக் கல்யாணம் பண்ண ஆசைப்பட் டனிங்கள்? அவள் ஒரு வித ஆற்ருமையால் குமுறிஞள்.
*அது தாண்டி நான் செய்த தப்பு. உன்ரை அமைதியான அழகைப் பார்த்து, உன்ரை உள்ளமும் அழகாயிருக்குமெண்டு நினைச்சேன். ஆனல். அதிலை இருந்த அசிங்கங்களை இப்ப தாண்டி என்னுல புரிய முடியுது. நான் ஏமாந்திட்டேன்"
*போதும், நிப்பாட்டுங்கோ" ஜானி தன் காதுகளைப் பொத் தியவாறே கண்ணிரில் வெடித் தாள். ஜனகன் அவளை யே முறைத்துப் பார்த்தபடி நின் றிருந்தான்.
"நான் . . எனக்குத் தாலி முடிச்சவனிட்டை மறைக்கக் கூடாகுதண்டு எல் லாத்தைபும் சொல்லி வைச் சேனே.. ! எனக்கு வேணும்: என்ரை மனசைப் போலவே உங்களுக்கும் வெள்ளை மனசு எண்டு நிாைச்சஞன். நான் ஏமாந்திட்டேன். படாத பாடு
எதையுமே
பட்டு உங்களை என்ரை புருஷ ஞய் ஏற்றுக் கொண்ட எனக்கு, இதுவும் வேணும், இன்னமும் வேணும்!? அவள் மேசையில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்.
"அழடி, நல்லா அழு ஏதோ எல்லாத்தையும் மனம் விட்டுச் சொன்ன மாதிரி நடிக்கிறியே! நீ. வசந்தோட ஒண் டாப் படிச்சதையும், ஒரு நாள் அவன் உன்னட்டை வந்து உன்னை விரும் பிறதாகக் கூறிய போது "நான் உங்களை ஒரு சகோதரன் மாதி ரித்தான் நினைச்சுப் பழகினேன்? எண்டு நீ சொன்னதையும் அதற் குப் பிறகு நீங்கள் ஒரு அண் ணன் தங்கை மாதிரித்தான் பழ கினிங்கள். எண்டதையும் சொன் ஞய். அத்தோடை அந் த க் க  ைத யே முடிஞ்ச மாதிரிப் பேசா. மல் இருந்திட்டாய். ஆஞல், நீ அவனேட சேர்ந்து ஊர் ஊராய் சுத்தினதையும், கூல் பார்" க்குப் போய் ஐஸ் கிறீம் சாப்பிட்டதையும், சினி மாப் பார்த்ததையும் சொல்லவே இல்லையே! ஆணுல் நீ சொல் லாமல் ருக்கவாம் என்ரை சினேகிதர்கள் எனக்குச் சொல் லாமல் இருக்கமாட்டினம், அவங் கள்தான் எல்லாத்தையும் சொல் விப் போட்டாங்களே!” - கண் களில் கனல் தெறிக்க ஆவேச
纷

Page 7
மும் நக்கலும் வார்த்தைகளில் தொனிக்க, பற்களால் உதடு
களை அழுத்தியவாறே ஜனகன் அவளைப் பார்த்தான்.
"நோ. நோ. நான் அவ
ரேயட ஊர் ஊராய் சுத்தயில்லை. எங்கட வகுப்பிலை உள்ன அத் தனை பேரும் சுற்றுலா போன போது எல்லோருமாய் சேர்ந்து தான் சுத்தினுேம்; எல்லோரு மாய் சேர்ந்துதான் "ஐஸ்கிறீம்" சாப்பிட்டோம். சினிமாக் கூட எல்லே குமாய் சேர்ந்துதான் பார்த் தாம். உங்களுக்கு உங் கட மனைவி சொல்லுறதைவிட, உங்கட சினேகிதர்கள் சொல்லு றதுதான் பெரிசாப் போச்சு தெண்டால், நீங்கள் அவங்க ளையே கல்யாணம் கொண்டு அவங்கள் சொல்லுற தையே கேட்டுக் கொண்டு சந் தோசமாய் இருங்கோ’ அவள் உள்ளம் வெதும்ப, வார்த்தை களில் பொருமினுள்
*ஜானி, என்ரை சினேகிதர் கள் இல்லாததைச் சோ ல் ல மாட்டாங்க்ள். நீ தப்புச் செய் திருந்தால் அதை என்னட்டைச் சொல்லியிருக்கலாம். Lס6 מT Lמ திருந்தின எவரையும் நான் மன் னிப்பேன் என்கிறது உனக்குத் தெரியுந்தானே. ஆனல் . . pË செய்த தவறை ஒத்துக் கொள்ள மாட்டியாமே?" ^-
"கடவுளே! நான் தவறு செய்தேனு?! இந்த ஒரு வருஷ மும் நான் உங்களோட வாழ்க் கை நடத் தி ன  ைத நினைச்சு நினைச்சு நான் எவ்வளவு சந்தோ சப்பட்டிருக்கிறன். ஆனல். இப்பதான் அதை நினைச்சு வெட் கப்படுறன். என்ரை உள்ளத் தைப் புரிஞ்சு கொள்ளாத உங் களோடை வாழ்ந்த இந்த ஒரு ^ருட வாழ்க்கையும் வெறும் .ே பா லி வாழ்க்கை என்கிறது இப்பதான் எனக்குப் புரியுது. என்ரை தூய்மையான மனசை
10
பண்ணிக்க
நீங்கள் புரிஞ்சு கொள்ளுற வரைக்கும் நான் உங்களுக்குப் பக்கத்திலை பாய் விரிக்கப் போற தில்லை"
- அவள் கலங்கிய கண்களு டன் ஆவேசமாகப் பொரித்து தள்ளிவிட்டு அறைக்குள் மறைந் தாள்.
நாட்கள் நகர்ந்தன. ஆனல் அவர்களின் உள்ளங்கள் மட்டும் ஒன்றுபடவில்லை. அவள் அன்று கண்ணிருடல கூறிய அந்த வார்த்தைகளில தெரிந்த உறுதி தான் அவனை என்னவோ செய் தன. "நான் 'அவசரப்பட்டு விட் டேனுே?" என்ற பயம் அவனுள் எழுந்தாலும், "என் மனைவி ஒரு உத்தமி" என்று நினைக் கும் பொழுது அவன் எவ்வளவு திருப் திப்படுகிருன். ஆணுல் "அவள் உத்தமி’ என்று மனம் கூறின லும் அவள் முன்பு கூறிய அவ
ளது பாடசாலை வாழ்க்கையை
நினைத்து ப் பார்த்தால் ஏதோ ஒன்று அவனின் அடிமனசில் உர சாமலும்-இல்லை.
"இவள் சொல்வதை நம்ப லாமா?" என்பது அவனுக்குக் கேள்விக்குறியாகவே இருந்தது.
2.
*ஜானி. ஜானி 8 & 4 A & 像 வாச லில் அழைப்புக் குரல் கேட்டு வாசலுக்கு வந்த ஜானி ஆச்சரியத்தில் கண்கள் இமைக்க மறந்தாள்.
*வித்யா! நீயா? உள்ளே வாடி உன்?னப் பார்த்தே எவ் வளவு கால '1' ஜானி மகிழ்ச்சி பொங்க அவளை வரவேற்ருள். *ஜானி, நான் தனியா வர யில்லையடி அவரும் வந்திருக் கிருர்"
"அவர் எண்டால்.
அவர்தாண்டி. எனக்கு. அவரெண்டால் விளங்கேலையே?

عبر
"ஒ. . கல்யாணமே முடிஞ் சுதாடி, நீ எனக்குச் சொல்லவே
இல்லையே! அது ச ரி எங்க் அவர்?"
"அ. உள்ளை வாங்க
ளேன்" வித்தியா தன் கணவனை அழைத்ததும், உள்ளே வந்தவ னைப் பார்த்த ஜானி அதிர்ந்து போனுல்: .
"வசந்த்! நீங்களா? ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம் ஆச்சுது?" ஜானி மெல்லத் தடு
DIT póG96ir.
*ஜானி, எங்க ட கல்யா
ணத்தை அவசரமாய் முடிக்க
வேண்டியதாலை யாரு க்கு மே அறிவிக்க ஏலாமல் போச்சுதடி. போனகிழமைதான் கல்யாணம் ஆச்சுது. உன்ரை கல்யாணத் துக்குக் கூட என்னுல வர ஏலா மல் போயிட்டுது. அதுதான் எப்பிடியாவது உன்னட்டை வர வேணுமெண்ட ஆசையிலை எந்த ஞங்கள்" வித்யா கூறிய தும் வசந்த் மன்னிப்புக் கேட்கும் தோறணையில் மெல்லப் புன்ன கைத்தான்.
"என்ரை பழைய சினேகிதி வித்யாவும், வசந்தும் தம்பதி களாய் வந்திருக்கினம்" , ஜானி அறை வாசலில் நின்றவாறே கூறிவிட்டு ஜனகன நிமிர்ந்து நோக்கிய பொழுது, அவனது வெறித்த பார்வை அவளை என் னவோ செய்தது.
அறைக்கு வெளியில் வந்த ஜனகனைப் பார்த்ததும் வித்யா விக்கித்துப் போனள்,
is...... நீங்கள் . . ஜான்ரி இவரா உன் "ஹஸ்பண்ட்?" எதையோ கேட்க வந்த வித்யா,
எதையோ கேட்டு முடித்தாள்.
ஜனகனுக்கு அவளை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. ஜன கன் தன் ஞாபகத்தை உறுதிப் படுத்த முனைந்த பொழுது
எதையோ நோட்டமி விட்டுக் கொண்டிருந்த வசந்த் இடை யில் புகுந்து,
"அ. ஹலோ, நீங்கள் தான் ஜானியின்ரை ஹேஸ் பண்டா? புன்னகிையுடன் விணுவ ஜன கன் தன் சிந்தனைகளுக்கு அணை போட்டுவிட்டு புன்னகை சிந்தியதும் இருவரும் கைகுலுக் கிக் கொண்டார்கள்.
வெளி விருந்தாவிற்கு வந்த ஜனகனும் வசந்தும் தனியாக அமர்ந்து பலவற்றைப் பேசிக்
கொண்டார்கள்.
வசந்த், நீர் அதிர்ஷ்டக் காரன்தான்' ஜன கன் கூறிய பொழுது, வ ச ந் த் புரியாமல் தலைநிமிர்ந்தான்.
'உமக்கு நல்ல அழகான மனைவி கிடைச்சிகுக்கிரு’ ஜன கன் உதட்டுக்குள் சிரித்தவாறே உள்ளத்திற்குள் அவனிடமிருந்து எதையோ எதிர்பார்த்தான்.
*அட! உம்மட மனைவியை விடவா?" வசந்த் புன்னகை சிந் தியவாறே கூறிய பொழுது, ஜனகனின் உள்ளத்தில் சட்டென ஒரு சந்தேகப் பொறி கிளர்ந்து எழுந்தது.
"ஏன்,? ஜனகன் விழிக்க,
'உம்ம்ட மனைவி பார்வைக்கு ம்ட்டுமில்லை, உள்ளத்திலையும் அழகானவதான். நா ன் அவ ளே (ா ட படிச்சவன்தானே ரொம்ப நல்லவ"
"அ தெ ப் படி உமக்குத் தெரியும்? m *ஜனகன், முந்தி நாங்கள் ஒண்டாப் படிச்ச காலச்திலை, ஜானி எல்லாரோடைய அன் பாப் பழகுவா, அதே மாதிரி என்னுேடையும் அன்பாப் பழ
கிஞ. அதை வைச்சுக் கொண்டு
என்ரை மனசுக்குள்ளே அவவைப் பற்றி நான் வித்தியாசமாய்

Page 8
புரிஞ்சு கொண்டு, ஒரு நாள் அவவிடம் என்னைக் கல்யாணம் பண்ணுவீங்களா? எண்டு கேட் டன். அது க்கு அவ என்ன சொன்ன தெரியுமா? நான் எல்லாரோட்ையும் பழகிறமாதிரி உங்களோடையும் அன்பாத்தான் பழகினேன். ஆனல் u unrG5rrT டையும் ஆசை வைச்சுப் பழகி னதில்லை. அதுக்கு நீங்களும் விதி விலக்கில்ல்" "எண்டு சொன்ன. நான் அப்படியே ஆடிப் போயிட் டன் அந்தச் சம்பவத்துக்கு பிறகு அவ ஏதோ பெரிய மேதை மாதிரியான ஒரு இமேஜ்’ என் னுள்ளே உருவாகிப் போச்சுது. அதற்குப்பிறகு நான் அவவோடி ஒரு சகோதரன் மாதிரித்தான் பழகுவேன்; மீது ஒரு தனி மரியாதை எனக் குண்டு” ல்சந்த் மனம்_விட்டுப் பழையவற்றைக் கூறிய பொழுது ஜனகன் மன்திற்குள் பூரித்துப் போனன்.
சிறிது நேரத்தில் ஜானி தேநீர் தயாரிக்கிருளா என்ப தைப் பார்ப்பதற்காக உள்ளே நுழைந்த ஜனகன், ஹோலுக் குள்'தனியாக இருந்த வித்யா வைக் கண்டதும்,
நீங்கள். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு!" என்றவாறே நெற்றி யைச் சுளித்தான்.
ஜனகன், நீங்கள் என்னை
கொழும்பிலை பார்த்திருப்பீர்கள். சின்ன வயசிலை நான் கொழும்
பிலை படிச்சுக் கொண்டிருக்கேக்க
நீங்கள் எங்கட வீட்டுக்குப் பக் கத்திலை இருந்த பிரேம்ா அக்கா வீட்டுக்கு அடிக்கடி வாறனிங் assir gai2hurt? سمتیہ
*ஒஹோ, சரி. சரி. இப்ப தான் ஞாபகம் வந்துது" ஜன கின் அவளை அடையாளம் கண் டதும் புன்னகை சிந்திஞன்.
22
இருந்தாலும் அவ
ஜனகன், நீங்கள் அந்தப் அக்காவை ஏமாத்திட்டீங்களா?" வித்யா அவசரமாக அதே நேரம் மிகவும் மெதுவாக வினு விய பொழுது ஜனகன் திடுக்குற்றன்.
"என்னது?! தா. நான். பிரேமாவை ஏமாற்றினேன?
fË "என்ன ஜனகன்? அவவை
ங்கள் காதலித்தனிங்கள் A历凸 இல் * ?"חuע%
நோ. நான் அவளேக் காதலித்தேளு? வித்யா, நீர் புரியாமல் கதைக்கிறீர். அந்தப் பிறேமா வீட்டிற்கு அவளின்ரை அண்ணுவைச் சந்திக்கப் போற ணுனதான; அவளோடையும் கதைக்கிறனுன்தான். ஆனல், நான அப்பிடிப்பட்ட ஒரு எண் னத்தோட பழகவேயில்லை: சத் தியமாய் பழகவில்லை. பிறேமா அப்பிடி நினைத்துப் பழகிஞளோ என்கிறது எனக்குத் தெரியாது. ஆனல் நான் அப்பிடி நினைத்துப் #డి அப்பிடி நான் பழகியிருந்தால், ஒருநாளும் ஒரு பெண்ணை ஏமாற்ற மாட்டன்" ஜனக ன் ஆவேசமாகக் கூறிய பொழுது,
"ஸ். ஜனகன், சத்தம் போடாதையுங்கோ. ஜானிக்குத் தெரிஞ்சால் பிரச்சனையாகப் போயிடும். நான் கொழும்பிலே இருந்து இங் கை படிக்கவர ஆயத்தமான பொழுது ஒருநாள் பிறே மா என்னட்டை வந்து நீங்கள் தன்னே ஏமாத்திட்டதாய் சொல்லி ரொம்பவும் வேதனைப் பட்டா. அதுதான் உங்க%ளக் கண்ட உடனே கேக்க வேணும் போலை இருந்தது" வித்யா கூறி முடித்து நிமிர்ந்த பொழுது வாசலில் ஜானி நின்றிருந்தாள். திடுக்குற்ற வித்யா ஜானியின் புன்னகை சிந்தும் முகத்தைக் கண்டு மெல்ல அமைதியானள். வித்யாவும் வசந்தும் அவர் களிடமிருந்து விடை பெற்றுக்

கொண்ட பின்னர் வீ ட் டி ல் நிசப்தம் ஜனகனின் உள்ளத் தில் ஒருவித குற் ற உணர்வு தோன்றி அவனை அ த ட் டி க் கொண்டிருந்தது.
இரவுப் படுக்கைக்குச் சென் றவன் மேசையிலிருந்த தனது "டயறி"யில் எதையோ எழுத ஆயத்தமாகிய பொழுது அந்தக் கடித உறை அவன் கண்களில் தட்டுப்பட்டது சற்று யோசித் தவன், அதை எடுத்துப் பார்த்த பொழுது அதில் வித்தியாவின் முகவரி எழுதப்பட்டு, உறை ஒட்டப்பட்டிருந்தது. சுற்று முற் றும் திருப் பி ப் பார்த்தவன் ஏதோ ஒரு வித உந்துதலால் சட்டென்று அதை உடைத்துப் படித்தான்
அன்புள்ள வித்யாவுக்கு!
உனது சில சந்தேகங்களைத்
தீர்த்து வைப்பதற்காக நான் இதனை மிகவும் அவசரமாக எழு
துகிறேன். இன்று நீ என் வீட் டிற்கு வந்திருந்த சமயம் கொழும்
பிலிருந்த பிறேம்ா அக்காவைப் பற்றி என் கண வருடன் நீ கதைத்தவற்றை நானும் கேட் டுக் கொண்டுதரனிருந்தேன்.
வித்யா, என் கணவர் எதை யுமே என்னிடம் மறைத்ததில்லை, அவர் பிறே மா அக்காவுடன் தான் பழகியதைப் பற்றியும் அவ தன்னுடன் , அளவு க் கு மீறிப் பழக முயற்சித்ததைப் பற்றியும் என்னிடம் கூறியிருந் தார். நீ எனக்குத் தெரிந்துவிட் டால் பிரச்சனை என்று நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் அவரைப் பரிபூரணம்ாக நிம்புகிறேன். அப்படியான ஒரு எண்ணத்துடன் அவர் பழகியி
ருந்தால் நிச்சயம்ாக ஏமாற்றி
இருக்கமாட்டார். அவரது மனசு வெள்ளை மனசு, அதனல்தான்
ருந்தாள்.
எந்தப் பொய்களையுமே தாங்க முடிவதில்லை. வித்யா, நீ அவரை கீழ்த்தரமானவர் என்று எண்ணி விடாதே அவர் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்.
மிகுதி பின்னர் இ ம9 த வாகித்தவுடன் கிழித்துவிடு.
அன்பு நண்பி ஜானி
" حسینیها
ஜனகன் வாசித்து முடிந்து நிமிர்ந்த பொழுது, ஜானி பால் கிண்ணத்துடன் எதிரில் நின்றி திடுக்குற்ற ஜனகன் ரிச்சிலை மென்று விழுங்கி, தத்த ளித்த பொழுது அவனது கண் களில் கண்ணிர் க்ரைகட்டியது.
*ஜானி, நீ என்னேப் புரிந்து வைத்திருக்கிற விதமும், என் மீதுள்ள அபாரமான நம்பிக்கை யும்; நான்தான் உன்னைப் புரிஞ்சு கொள்ளாமல் என்னென்னவோ எண்ணி, யாரோ சொன்னதை நம்பி. * அவன் மனம் ஊம்ை யாக ஒலமிட, எதையுமே வாய் விட் டு க் கூறமுடியாமல் சட்
டென்று அவளது கைகளைப்
பற்றினன்.
ஜோனி, உன்ரை மனசை நான் புரிந் தி ட் டன். நான் கொடுத்து வைத்தவன் ஜானி என்று குரல் தழுதழுக்கக் கூறி யவனின் தலையை ஆதரவாகக் கோதிவிட்ட ஜ்ானி, /
கணவனும் மனைவியும் ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால்தான் எப்ப வும் சந்தோசமாய் வாழலாம். அப்படிப்பட்ட உறவிலைதான் உண்மையான சுகத்தை அனுப விக்க முடி யும் என்றவாறே மனம் நிறைந்த புன்னகையை தன் இதழ்களில் தவழவிட்டாள். ஜானி 噪、
13

Page 9
குழுநிலை மேலாண்மை வாதமும் ஒடுக்கப்பட்ட மக்களும்
சர்வதேசியம், தேசியம், இனம், சாதி, கிராமம் என சமூக நோக்கு குறுக்கமடைந்து, ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள்
வாழ்கின்ற கிராமத் தினுள்ளும் மேலாதிக்க உணர்வு மீது ரப் பெற்றதனல் மக்கள் குழுக்கலா
கப் பிளவுபட்டு நிற்கின்றனர். அவ்வாறு குழுக்களாகப் பிளவு படும் உணர்வு நிலையே குறுநிலை மேலாண்ம்ை வாதம் என இங்கு குறிப்பிடப்படுகின்றது. ச மூ க இயக்க நெறியில்ே ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்”ே
4-l s91g-ulu6ol உரிமைகளைத்
தானும் அனுபவிக்கவொட்டாது தொன்று தொட்டு ஒதுக்கப் பட்டு வந்த தாழ்த்தப்பட்ட éFADGB DGB6r இங்கு ஒடுக்கப் பட்ட மக்களெனக் குறிப்பிடப் பட்டுள்ளனர்"
அ ண் மை க் .% ע6 "ח Lח מr 4.
(1977ன் பின்னர்) ஒடுக்கப் பட்ட மக்கள் ம்த்தியிலே, (5(ւք நிலைம்ெலாண்மை உணர்வுகள் முனைப்படைந்து நிற்பதையும், அதன் காரணமாக ஒரே சாதி யையும் ஒரே கிராமத்தையும் சேர்ந்த மக்கள் திமிக்குள் குழுக் களாகப் பிளவுண்டு சர்ச்சை களில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.' சமூக மக்கள் மத்தியிலே இத்த oot G5 Cyp pi? &av Gudaonra வாதம் துல்தூக்குவதில்லையென் பது இதன் அர்த்தமன்று. அவர்
அர் விந்தன்...
கள் மத்தியிலும் இதன் தாக்கம் உண்டேயாயினும், ஒடுக்கிப்பட்ட மக்கள் மத்தி,பிலேே அ த ன் முனைப்பு இன்று தீவிரமட்ைந்து வருவதை அவதானிக்க முடிகி றது: யாழ்ப்பாணத்திலே ஒடுக் கப்பட்ட மக்கள் வதிகின்ற ஒவ் வொரு கிராமத்திலும் குழுநிலை மேலாண்மை வாதத்தின் தாக் கத்தினை உணரக் கூடியதாக
உள்ளது. இவ்வாருன ஒரு தாக்
கம் ஒடுக்கப்பட்ட மக்கள் மத் தியில் உருவானதன் காரணங் களை இனங்காண்பதும், எதிர் காலத்திலே இவ்வாறன தாக் கங்களினின்றும் இவர் கள் தம்மை விடுவித்துக் கொள்வதற் வழிவகைகளைக் கோடிட் டுக் காட்டுவதுமே இச் சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
குழுநிலை மேலாண்மை வாதம் தலையெடுப்பதற்கான காரணங்கள்
1. இலங்கை சுதந்திரமடைந்த தன் பின்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை சற்று மேம்பாடடைந்து வருகின்றது. அவர்களின் வாழ்க்கை மேம்பாட் டுக்கு, அவர்கள் வதியும் கிரா மங்களிலே நிர்வகிக்கப்பட்டு ருைம் சமூக அபிவிருத்தி நிறு வனங்கள் காரணமாகின்றன. சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளை
4

யாட்டுக் கழகங்கள், ஆலயங் கள் என்பன இவர்களின் வாழ்க் கையை நெறிப்படுத்துவனவாக வும் வாழ்வின் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவனவாகவும் அமை கின்றன. இவ்வாருன சமூக நிறுவனங்களின் நிரு வாக ப் பொறுப்பு. அதிகாரம் ஆகிய வற்றினைத் தம்தாக்கிக் கொள் ளும் அவா நிலையே இம் மக்கள் மத்தியிலே பிரச்சினையைத் தோற் விக்கின்றன.
கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கல்வி, பொருளா தார நிலைகளிலே தம்மை வளர்த் துக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள், மேலாதிக்க முனைப்பு டன் இச் சமூக நிறுவனங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முனைகின்றனர். இவர் கள் ஒரு சிறு குழுவினராகவோ அல்லது ஒரு குடும்பத்தினரா கவோ தமது தொடர்பெல்லையை
வரையறுத்துக் கொள்கின்றனர். '
வ்வாருன ஒரு குறுகிய வரை @:ಶ್ಚಙ್ಗಲ್ಲ: ஏனை யோரை இன்னுெரு குழுவின ராசு இணைத்துக் கொள்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே கல்வி பொருளாதார நிலைகளிலே மேம்பாடுற்றவர்கள் மிகச் சிறு பான்மையினரே. எனவே, இச்
சிறுபான்மையினர் இவற்றிலே பின்தங்கியவர்களின் எதிர்ப்பி னைச் சம்பாதித்துக் கொள்கின் றனர். இதுவே குழு நிலை
மேலாண்மைவாதத்தின் அடித் தளமாகவும் அமைந்துவிடுகிறது,
2. குழுநிலை மேலாண்மைவாதத்
தின் விசைக்கு இழுபட்டுச் செல்லும் இவ் வசதிபடைத்த வர்கள், சமூகத்திலே தமது நிலை யின் தார்ப்பரியத்தினை அல்லது தமது கடந்தகால வாழ்க்கை வரலாற்றினை விளங்கிக் கொள் ளர்மையும் பிரச்சினைக்குக் கார ண்மாக அமைந்துவிடுகின்றது
வசதி படைத் த வர்கள் தொன்றுதொட்டே தாங்க ள் மேம்பாடடைந்தவர்கள் என விசு வாசிக்கின்றனர். அவர் கள் நெருக்கடிகளினல் ந சிவு று ம் தமது ஏனைய சகா சுகளை ஏளனத் துடன் நோக்குகின் லனர். உண் மையில் வசதி படைத்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டோரும் 1844ம் ஆண்டு அடிமை ஒழிப் புச் சட்டம் அமுலாக்கப்படும் காலம் வரை சட்ட பூர்வமாக வும், சமூக ரீதியாகவும் அடிமை
கனாக வாழ்ந்தோரே. சமூகத்
தில் தாமும் ஏனையோரைப்
போல சமூக அடக்குமுறைகளி ணுல் நசுங்குண்டு வாழ்ந்தவர்கள்
என்பதனை இவர்கள் மறந்து போய்விடுகின்றனர். எனவே,
தமது சாதிக்குள்ளும் "சாதிமா
ணுக" இவர்கள் மாறி அதிகாரஞ்
செலுத்த முற்படும்போது பிரச்
gðar உருவாகிறது
3. இவ்வாருன நிலை  ைமகள்
1977 ம் ஆண்டின் பின்னர் தீவிரமடைந்ததனையும் இங்கு மனங் கொள்ளலவசியம். இக் காலப் பகுதிவரை, சமூக- விடு தலை இயக்கங்கள் பல இம் மக் கள் மத்தியிலே தமது நடவடிக் கைகளைத் தீவிரமாக மேற்
கொண்டு வந்தன. இவ்வியக்கங்
களினல் நடத்தப்பட்ட போராட் டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் யாவரையும் ஒரு பொது நோக் கில் ஒன்றிணைத்து நின்றன.
1977 ல் தாழ்த்தப்பட்ட மக் களுக்கிெனப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட் டமை, இப் போராட்ட உணர் வுகளை முனை மழுங்கச் செய்தன. இவ்வாருண இயக்கங்களும் செய லிழந்து நின்றன. எனவே ஒரு பொதுவான போராட்டத்திலே ஒடுக்கப்பட்ட மக்கள் ய்ாரையும் ஒன்றினேக்கும் சந்தர்ப்பமும்
;lkq': {

Page 10
محبر
அற்றுப்போய் விட்டது இயக் கங்கள் பெயரிழந் த து டன் போராட்ட உண்ர்வுகளும் இம்
மக்கள் மத்தியிலே மழுங்கடிக் கப்பட்டன. தனிப்பட்ட நலன் களைப் பேணுவதே இம் மக்களின்
இலட்சியமாகவும் அ  ைமந்து விட்டது. m
4. ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்
கள் அரசியற் பகடைக்காய் களாகப் பயன்படுத்தப்படுவதை உணர்ந்து கொள்ளாமையும் இவர்கள் மத்தியில் இவ்வாருன குழு நிலை மேலாண்ம வாதம் மேலோங்குவதற்கும் காரணமா கும். ஒடுக்கப்பட்ட மக்களில் மிகப் பெரும்பாண்மையினர் இடதுசாரிக் கொள்கையினல் கவரப்பட்டோராவர். ஐக்கிய மாக, நிறுவன ரீதியாக மேம் பாடுற்று விளங்கும் ஒடுக்கப்பட்ட வக்கள் வதியும் கிராமங்கள், பாராளுமன்ற அரசியல்வாதி களுக்கும் சவாலாகவே விளங்கு கின்றன. இவ்வாறன கிராமங் கள் தமக்குச் சாதகமாக இல்லா தபோது அதனலேற்படும் பார தூரமான விளைவுகளை அரசியல் வாதிகள் மனதிற் கொள்ளுகின் றனர். அவ்வாறன கிராமங்க ளின் விளிப்புணர்வும் ஐக்கியமும் தமக்குப் படுகுழியைப் பதித்து விடுமோ எனவும் அஞ்சுகின்ற னர். எனவே, அவ்வாருண கிரா ம் ங் களை ஊடுருவி அவற்றின் ஒருமைப்பாட்டினைச் சிதைப்ப திலே அவர்கள் கண்ணும் கருத் துமாக உள்ளனர்; கிராம மக்க ளைப் பல்வேறு குழுக்களாகப் பிளவுபடுத்தி, அக் குழுக்களி டையே மோதல்களை உருவாக்கு வதன் மூலம் மக்களின் கவனத் தைத் திசைதிருப்பி விடுகின்ற னர். பாராளுமன்ற அரசியல் வாதிகள் மூலம் பதவிகள் பெற் முேர் இவர்களின் ஊடுருவும் பானங்களாகப்
N.
பயன்படுத்தப் அவசியம்ாகும்.
பட்டு வருகின்றனர். அரசியல் வாதிகளின் இக் குறுகிய நோக் கினை அறிந்து கொள்ளாத அப் பாவிக் கிராம மக்கள் குழுக்க
குள்வே மோதிக் கொள்வதன்
மூலம் தமது சக்தியையும். ஆற்
றல்களையும் விர ய மாக் கி க் கொள்கின்றனர்.
எளவே, ஒடுக்கப்பட்ட மிக் கள் மீண்டும் இன ஒதுக்கல், சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதி ரான போராட்டம் போன்ற
'பொது நோக்கங்களுக்காக ஒன்
றிணைந்து செயற்பட வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. அவ்வாருன ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்றிணைவதன் மூலம் குழுநிலை மேலாண்மை வாதத்தின் தாக் கத்தினின்றும் அவர்கள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பாராளுமன்றப் பிரதிநிதித்துவத் தின் மூலம் பெறப்படும் நலன் களைவிட சமூக விடு த லை ப் போராட்டத்தின் மூலிம் கணிச மான உரிமைகளைக் கடந்த காலங்களிலே வென்றெடுக்க முடிந்தமையையும் இவர்கள் கவ னத்திற் கொள்ள வேண்டும். எனவே, ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிற் செயலிழந்து நிற்கும் சமூக விடுதலை இயக்கங்களுக்கு மீண் டு ம் புத்துயிரளிக்கப்பட வேண்டும், அவற்றின் செயற் திட்டங்கள் ஒழுங்காக வகுக்கப் பட்டு பரந்த அடிப்படையிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப் படுதல் வேண்டும். இதுவே
குழுநிலை மேலாண்மைவாதத்தின் கொடுமையினின்றும் தம்மைப் பாதுகாப்பதற்கும், முற்போக்
கான சில இலட்சியங்களை அடை வதற்குமான தீர்க்கமான ஒரு வழி என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் விளங்கிக் கொள்ளல் O
6

பழைய புத்தகக்காரரின்
சரிதை
- மேமன்கவி
சிக்னலுக்காய் தரிக்கும் பஸ்ஸில் பக்கென்றே தாவி ஏற மனிதர் நிற்பார் பக்கத்தில்தாச்சியில் கடல் மணலோடு அவியும் நிலக் கடலை மணம் தூசியோடு இன்றைய நேயரின் விருப்பத்தில் கலந்து மணக்கும்.
s
ஆமர் வீதியின்அரசாங்க மாடி வீட்டு ஜன்னல்களில் நான்கு மணி பவுடரோடு முகங்கள் தெருவை வேடிக்கை பார்க்க d பார்வைகள் வீசிடம
பழக்கமான தொழிலின் சுருதியோடு தலையில் பலநாள் சொந்தமான கைக் குட்டையோடு செய்யது பீடி கலந்த லயத்தில் அவன்!
பேசும் படங்களின் வர்ணங்களில் வீசும் நிர்வாணங்கள் எட்டு ரூபாவுக்கு, விற்றுத்தீர"மெளனி கதைகள்", "சாலையின் திருப்பங்கள்" இரண்டு ரூபாவுக்கு அபூர்வ வியாபாரங்களாகி இவனை வியக்கவைக்கும்,
17

Page 11
மீண்டும்பொம்மை, மூக்குத்திகள் தரும் லாபக்கிறுக்கில் இவன் சாரம் முடிச்சு முறுக்கேற, ஒருவன் 'கணையாழி இல்லையா?" எனக் கேட்க நேற்று- O − இருபத்திஐந்து இதழ் கணையாழிகளை ஆவல் பருகிய விழிகளோடு பத்துரூபாவுக்கு கொண்டுபோன ஒருநேசனை இவன் நினைப்பான்,
காற்சட்டை அணிந்தாலும் தினம் கால்முடக்கி வெட்கம் பார்க்காமல் குணிந்தே அமர்ந்து மல்லிகை, தாமரை அஞ்சலி, பூரணி என்றே நெடு நாளாத்ய் தேக்கிய உணர்வின் குடைவால் தேடும் விரல்களை - இவன் மானசீகமர்ய் மனதில் குடி அமர்த்துவான்!
இருளின் பக்கங்கள் கணக்கக் கணக்கி கருகும் உணர்ச்சிகளை மேலும் கல்லறையாக்கும் பு த, ப 1 பி, இத்தியாதி எழுத்தை சதை வியாபாரமாக்கும் பேணு தாசிகளின் கதைச் சரக்கு மேனிகள் அட்டை ஆடைகள் மாறினுலும் மொட்டையாய் காட்சி தந்தாலும் கவனிக்கப்படாமல்சட்டென்றே அவைகளே பையெனும் தட்டை நிறைப்பதைக் கண்டு சந்தோஷம் செய்வான் இவன் உதவியாவி!
{
ஆளுல் - இவன் செவிகளிளோ
நம டெஸ்ட் வரலையா?" என்றே தினம் வந்து கேட்டுப் போகும் கறுப்புத் தாடிக் கவி ஒருவனின் குரலும், இலக்கியக் குறிப்புகள் எழுது தெளிவாய்பெயர் நினைவில்லாமல் போன மலையகப் படைப்பாளி ஒருவரின் மெல்லிய குரலும் இடைக் கொருதரம் ஏறிநிற்கும்!
சிக்னலுக்காய் தரிக்கும் பஸ்ஸில் , பக்கென்றே தாவி ஏற மனிதர் நிற்பார் பக்கத்திலேயே ம்ெளனம் கக்கியே பழைய புத்தகம் விற்கும் இவன் இருக்கும் திசை அறியாமலேயே!
18

சோவியத் யூனியனில் இளம் எழுத்தாளர் மாநாடு
சோவியத் யூனியனில் 50 மொழிகளில் எழுதும் சுமார் 300 இளம் எழுத்தாளர்களின் 8வது மாநாடு அண்மையில் நடைபெற் றது. இந்த மாநாட்டில் வசன நடை, கவிதை, விமர்சனம், கதைகள், பத்திரிகைத் தொழில், மொழிபெயர்பு, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கியம் முதலிய பிரிவுகள் பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் சராசரி வயது 30. ஆல்ை, அவர்கள் பல்வேறு தொழிற்களில் ஈடுபட்டி ருப்பவர்கள். எஞ்ஜீனியர்கள், கட்டிடக் கலைஞர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள். ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் முதலி யோர் இவர்களில் அடங்குவர்.
இந்த மாநாடுகள் மிகுந்த மதிப்பும் ஆதரவும் பெற்றிருப்ப தாக சோவியத் எழுத்தாளர் சங்க நிர்வாகக் குழுச் செயலாளர் யூரி வெர்ச்செங்கோ கூறினர்.
இத்தகைய தேசிய மாநாடுகள் கூடுவது ஒரு மரபாக ஆகி விட்டது. இவை ஐந்து ஆண்டுசஞக்கு ஒரு றை நடைபெறுகின் றன. இளம் எழுத்தாளர்கள் பற்றி அரசுக்கு உள்ள அக்கறையை இவை எடுத்துக் காட்டுகின்றன. 9 0 உறுப்பினர்களைக் கொண்ட சோவியத் எழுத்தாளர் சங்கம் ஒரு பிரத்தியேகக் கவுன்சிலை ஏற் படுத்தி, "லித்ரதுர்னயா உக்யோபா" என்ற சஞ்சிகையையும் நடத் துகிறது. இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கா4 ச் சுமார் அரை நூற்ருண்டுக்கு முன், “கார்க்கி இலக்கியக் கழகம்" என்ற உயர் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது.
இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களைப் பிரசுரிப்பதற்கு சோவியத் யூனியனில் நிரம்ப வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமான சோவியத் இலக்கிய சஞ்சிகைகள் வருடத்தில் ஒருமுறை, ஓர் இதழ் முழுவதிலும் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிடு வது வழக்கம். உதாரணமாக, "மோலோத்யா குவார்தியா" என்ற சஞ்சிகையின் அனுபந்தம் ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் களின் சுமார் 50 புத்தகங்களை ளெளியிடுகிறது. இளப் எழுத்தா ளர்களின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலியவை தேசிய, குடியரசு, மற்றும் ஸ்தல பத்திரிகைகளில் அ டி க்க டி வெளியாகின்றன: *
9

Page 12
சுக்கிர கிரகத்தில் மறைந்து கிடிக்கும் மர்மங்கள்
பி. கேனுேவலோவ்
வெனெரா - 15", மற்றும் வெனெரா - 16" ஆகிய இரு சோவியத் செயற்கைக் கோள்களும், சென்ற கமார் 6 மாத கால மாக சுக்கிரக் கிரகத்தைச் சுற்றி வட்டமிட்டு, ராடார் மூலம் அதன் நிலப்பரப்டை ஆராய்ந்து வருகின்றன. இந்த ஆறு மாதத் தில் அந்த்ச் செயற்கைக் கோள்கள், சுக்கிரக் கிரகத்தின் நிலப் rரப்பைப் பல படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளன. அந் தக் கிரகத்தில் படம் எடுக்கப்பட்ட பிரதேசங்களின் அளவு, சோவி யத் யூனியனின் பரப்பளவைவிடச் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாகும். சுக்கிரக் கிரகத்தின் துருவப் பிரதேசங்களைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு இதுவரை ஒன்றுமே தெரியாமல் இருந்தது. அந்தப் பகுதிகளையும் செயற்கைக் கோள்கள் படம் எடுத்திருக்கின் றன. அவை அனுப்பும் தகவல்களை இப்பொழுது கம்ப்யூட்டர்கள் ஆராய்கின்றன. சுக்கிர்க் கிரகத்தின் முதலாவது வரைபடத்தை வரைய இந்தத் தகவல்கள் பயன்படுகின்றன.
விஞ்ஞானிகளுக்கு வியப்பூட்டும் பல தகவல்கள் சுக்கிரக் கிர கத்தில் உள்ளன. சுக்கிரக் கிரகத்தின் தரைமட்டத்தின் வெப்ப நிலை பற்றிய தகவல்களை அறிய அவர்கள் ஆவலாக இருந்தனர். ச்மவெளிகளின் வெப்ப நிலையை விட எரிமலைப் பிரதேசங்களின் வெப்ப நிலை அதிகமாக இருக்குமென்று பொதுவாகக் கருதப்பட் டது. எரிவது போன்ற வெப்ப நிலை உள்ள இந்தக் கிரகத்தில், "குளிர்ச்சி" மிக்க இரு மலைப் பிரதேசங்களை சோவியத் செயற் கைக் கோள்கள் கண்டுபிடித்தது, விஞ்ஞானிகளுக்கு வியப்பு ஊட்டி யுள்ளது. இந்த மலைப் பிரதேசங்களின் வெப்ப நிலை, சமவெளி களின் வெப்ப நிலையை விட 200 டிகிரி குறைவாகும்.
வியப்புக்கு உரிய விஷயம் இது ஒன்றுமட்டுமல்ல. ராடார் உதவியுடன் எடுக்கப்பட்ட போட்டோப் படங்களில் இது போல், வியப்புக்கு உரிய மற்றும் பல விஷயங்கள் உள்ளன.
"பீட்டா" எனப்படும் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட போட் டோப் படங்கள், பூமியில் இருப்பவை போன்ற பிரம்மாண்ட பிளவுப் பள்ளத்தாக்குகள் அங்கு இருப்பதை வெளிப்படுத்தின. புலியியல் ரீதியாக இவை எரிமலைகளின் இயக்கம் காரணமாக அண்மைக் காலத்தில் தோன்றியவை என்று தோன்றுகிறது,
தண்ணீரிஞலோ வண்டல் படிவத்தினலோ பாதிக்கப்படாத சுக்கிரக் கிரகத்தில் புவி இயல் அமைப்புக்கள், பூமியின்_புவி இயல் வரலாறு பற்றியும் பல மதிப்பு வாய்ந்த தகவல்களை அளிக்கின்றன:
சுக்கிரக் கிரக வட கோளார்த்தத்தின் "குளோபை" இந்தத் தகவல்களின் அடிப்படையில் சோவியத் விஞ்ஞானிகள் தயாரிதி திருக்கின்றனர், 喙·
80

ஜனரஞ்சக எழுத்தாக்கங்கள்
யாருககாக நாங்கள்
gum. GlguIUngsr
குத்துவிளக்கைக் கொளுத்துகின்றேம்?
அவர்கள் இன்னும்
-முன்னிருட்டில் இருக்கிறர்கள்
பொது சன தொடர்புச் சாதனங்களின் சூட்சுமங்களையும், ஒரு சில வாய்பாடுகளையும் வைத் துக் கொண்டு போட்டிச் சமூக மொன்றிலே ஜனரஞ்சக எழுத் தாக்கங்கள் உருவாக்கப்படுகின் றன. எழுத்தாக்கங்களை நுட்ப மான விளம்பரச் சோடிப்புக்கு உள்ளாக்கல் ஒருபுறமிருக்க, இப் படித்தான் வாசகர்கள் இருப்பர் என்ற வார்ப்பெண்ணமும் கலை யாக்கங்களுக்குக் காற் கட்டுப் போட்டு விடுகின்றது. இந்த அநர்த்தங்கள் சிருஷ்டியாளரை வருத்திய நிலையில், உடனடிச் சூட்டோடு இலக்கியங்களை மதிப் பி டு த ல் இடர்ப்பாடுகளையும் கொடுத்தன. சற்றே பொறுத் திருந்து, அலை அடங்கிய பின் னர் எந்தச் சி ரு ஷ் டி தலை நிமிர்த்தி நிற்கின்றதோ, அதுவே மதிப்பிடப் படல் வேண்டுமென்ற சிக்கனக் கருத்தும் உண்டு.
ஜனரஞ்சக எழுத்தாக்கங் களைப் பற்றிய கண்ணுேட்டங் களைத் தெளிவுபடுத்த, அவற்றின் வரலாற்றுப் படிமலர்ச்சியை அணுகுதல் அவசியம்ாகின்றது.
ஒருபுறம் வாசிப்பை முன் னெடுத்துச் சென்ற வெகுஜனத் தொடர்புச் சாதனத்தின் வளர்ச் சியும் மறுபுறம் எழுத்தறிவுப் சூரிமாணம் பெற்ற தொழிலா
ளர்களும் என்ற இருமுனைகளை யும் தழுவி ஜனரஞ்சக எழுத் தாக்கங்கள் எழுந்தன. வெகுஜன தொடர்புச்சாதனங்கள் "கொடுத் தல்" என்ற செயல் முறையை யும் தொழிலாளர் பெறுதல்" என்ற செ ய ல் முறையையும் கொண்டிருந்தமை, ஜனரஞ்சகம் பற்றிய முரண்பாட்டின் ஆரம் பப் புள்ளிகளாக அமைந்தன.
ஜனரஞ்சக் ஏழுத்தாக்கம் பேச்சு மொழியின் ஒலிக்கோலத் தைத் துண்டித்து, எழுத்துக் கோலம் என்ற புது வாழ்க்கைக்கு வி ைச கொடுத்தது, ஒலிக் கோலத்திலிருந்து எழுந்து க் கோலமாகிய புது வாழ்வு ஆரம்ப மாகிய பொழுது, ஏற்கனவே ஒலிக் கோலம் பூண்டிருந்த நாட் டார் மரபுகள், பாடல்கள், கதைகள், காவியத் துணுக்கு கள், சமயக் கருத்துக்கள் என் பவை ஜனரஞ்சகப் பண்புடைய னவாகக் கா ன ப் பட் டன. எழுத்து வடிவில் அவை கட்டுப் பொதிகள்" ஆக்கப் பெற்று விற் பனைக்கு விடப்பட்டன.
தொழிலாளர்க்குக் கிடைக் கப் பெற்ற எழுத்தறிவும், கூலி வருமானத்தாற் கிடைக்கப்பெற்ற கொள்வனவுத் திறனும் அவ்வா முன கட்டுப் பொதிகளை வாங் கும் இயல்பினை வளர்த்தெடுக் தது.

Page 13
ஜனரஞ்சக எழுத்தாக்கங் கள் மத்தியதர வகுப்பினரது எழுச்சியுடன் ஒன்றித்து வந்த போற்றப்பாடு என்று சுட்டிக் காட்டப்படுகையில் அவர்களின் வாழ் நிலைத் தொடர்புகளுக்கு இயைந்த முரண்பாடுகள் எழுத் தாக்கங்களிலே எடுத்தா ள ப் பெற்றன்மையும் தொடர்பு படுத் தப்படுதல் வேண்டும். உடைந்த துண்டுகளாக அந்நியமயப்பட்ட அவர்களின் தனிமைக்கு ரீங்கா ரமாகி அமைந்த மஞேரதியப் புண்வுகள் ஜனரஞ்சகமாக வழங் தப் பெற்றன. அவற்றுக்குச் சற்று வித்தியாசமான முறையில் நகரங்களில் நோய்ப்படுக்கை களில் எழுந்த கொலை கள், வழக்கு விசாரணைக்ள், ம்ர்மங் ரள் விற்பனைப் பொதிகளாக்கப் பெற்றன. இவை வசதிக்காக வும், தேவைக்காகவும் பின்னர் ஜனரஞ்சகப் புனைவிற் பூதாசுர மாக வளர்த்தெடுக்கப்பட்டன.
இவ்வாருன எழுத்தாங்கங் களின் சந்தையை நோ க் கி ய செயற்பர்டுக்ளில் முடம் (ான கலைத்தன்மை SnTosoT LI LILL-IT ம், வேகமான விற்பனைப் பருக்க விளம்பர உபாயங்கள் கையாளப் பெற்றன. எழுத்தா எார்கள் தாரகைகள் ஆக்கப் பெற் றனர். அவர்களைச் சுற்றிச் சுழ லும் விசிறிகள் உருவாக்கப் பெற்றனர். இவ்வாறன இயல்பு களுக்கு வேறுபட்ட முறையில் ஜனரஞ்சக எழுத்தாக்கங்கள் ஆழப் பதிந்து சென்றமை விக் ரர் ஈ நியூபர்க் (1977) போன்ற ஆய்வாளர்களினுற் சுட்டிக் காட் டப்பட்டுள்ளன. தொழிலாளரின் வாழ்க்கைச் சுமைகளும், நெருக் குவாரங்களும், எழுத்தாக்கங் களிலே புனையப் பெற்றன. கடந்த நூற்ருண்டின் பிற் கூற் ல் இவ்வாருண் எழுத்தாக்கங் கள் மேற்கு நாடுகளிலே களைகட்
டத் தொடங்கின. வாராந்தம் பதினேற்து சிலிங் கூலி உழைக் கும் தொழிலாளி உணவும், எரி விற்குப் புகையிலையும், தேயில் யும், பாவித்த உடுப்பும் வாங்க முடியாத நிலையில் வீட்டு வாட கையும் கொடுக்க முடியாத அவ லங்கள் ஜனரஞ்சகமான பாடற் பொருள்களாக்கப்பட்டன. یہ“
அக்காலகட்டத்திற் சமாத்த ரமான பிறிதொரு சமூக நிகழ்ச் சியும், கதிர் விரிக்கத் தொடங் கியது. பெண்களிடையே வேக மாகப் பரவத் தொடங்திய எழுத் தறிவு, உடனடியாக வே லே வாய்ப்புக்களை ஏற்படுத்தவில்லை. அந்நிலையிற் சமையற்கட்டு வாச கரை முதல் நிலைப்படுத்தும் ஜன ரஞ்சக எழுத்தாக்கங்கள் கொடி கட்டத் தொடங்கின. பெண்மை குடும்ப உறவுகள், குடும்பபாசம், குடும்ப அந்தரங்கம், பாகப் பிரி னை என்பவற்றைக் கருக்களா கக் கொண்டு மத்தியதர வகுப்பு அடுக் களை வாசகர்களுக்குரிய நாவல்கள் உற்பத்தி செய்யப் பட்டன. இவ்வகைக் கோலங் கள் தமிழ் நா வல்க ளிலும் திரைப்படங்களிலும் பெருமளவு வேரூன்றி நின்றமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலவீன மான புள்ளிகளைச் சுற்றியெழும் உணர்ச்சிகளைக் கதாசிரியர்கள் பொழுது போக்குச் சுருதியுடன் மீட்டிவந்தனர்.
எழுத்தறிவுப் பரவல் இளை ஞர்களிடத்து வளர்ச்சி பெற, அவர்களின் ஆராய்வூக்க எழுச் சியைச் சுரண் டும் வெகுஜன எழுத்தாக்கங்கள், திகிலையும், துப்பறிதலையும் வாய்பாடுகளா கப் பயன்படுத்தத் தொடங்கின
தமிழில் ஜனரஞ்சக எழுத் தாக்க உபாயங்களைப் பொறுத் தவரை, கல்கி அவர்கள் மேற் கூறிய இரண்டு பண்புகளையும்
露绍

இணைக்கும் ஓர் ஒட்டு வேலையை மேற்கொண்டார். அவர் எழு திய சரித்திர நாவல்களில் மத் தியதர வகுப்பு அடுக்களை வாச கர்களைத் திருப்திப்படுத்துவதற் குரிய குடும்ப உணர்ச்சிகளும், இளைஞர்களைத் திருத்திப் படுத்து வதற்குரிய மர்மங்களும் உட் பொதியப் பெற்ற "கலப்பின" எழுத்தாக்கம் முளைத்தது,
இவ்வாறன கலப்பின வெகு ஜன எழுத்தாக்கம் மு. வரத ராசனல் சற்று வித்தியாசமான முறையிலே கையாளப்பட்டது. அடுக்களை வாசகரையும். நல்ல தமிழ் பயில விருப்புடையோரை யும் இணைக்கும் வகையில் அவ ருடைய எழுத்தாக்கங்கள் மலர்ச் சியுற்றன. அதாவது - தமிழ் எழுச்சியைப் பயன்படுத்திய மத் தியதர வகுப்பினருடன் சங்கம மாகும் வெகுஜன எழுத்தாக்கப் பண்பு என்று அதனைக் குறிப்பிட (yptq. uth
தி. மு. க. வினர் மேற் கொண்ட ஜனரஞ்சக எழுத்தாக் கம் மேற்கூறிய உபாயங்களுக்கு மேலும் வேறுபட்ட வழிகளிலே அமைந்தன. நாளாந்தக் கூலி உழைப்பவர்களும் புரிந்து கொள் ளக் கூடிய எளிமை, ஒத்திசைவு என்பவற்றுடன் வாழ்க்கையில் நொந்து நலிந்து நிற்போருக் குரிய கற்ப னை நயப்பையுங் கொண் ட எழுத்தாக்கங்கள் அவர்களால் விதைக்கப்பட்டன. ஜனரஞ்சக எழுத்தாக்கங் களிலே தெளிந்தெழுந்த சமூகக் கண்ளுேட்டங்களைப் பொதியும் நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மேற்கொள்ளப் பட்டாலும், சில க ச ப் பா ன உண்மைகளையும் கருத்தி ற் கொள்ள வேண்டியுள்ளன. நாளாந்தக் கூலி உழைப்பவர் கள். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆகியோர் மத்ரி யிலே இன்றும் எழுத்தறிவின்மை
காணப்படுகின்றது: அண்ம்ை யில் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றிலே மேற்கொள்ளப்பட்ட
கள ஆய்வு இந்த உண்மையைத்
தெளிவுபடுத்துகின்றது:
இந்நிலையில் ஜனரஞ் சக எழுத்தாக்கங்கள் என்று கூறுவ தெல்லாம் மத்தியதர வகுப்பின ரைக் குறிப் பொருளாக க் (ର கா ண் ட செயற்பாடுதான என்ற பலம் வாய்ந்த, ஆளுல்
வேதனைக்குரிய கேள்வி எழுகின் றது. வறும்ைக் கோட்டின் கீழ்
வாழ்பவர் மத்தியில் ன்றும் கண்வழி சினிமாவும், Q சினிமாப் பாடல்களும்தான் கலை யூடகங்களாக ஆட்சி செலுத்து கின்றன. யார்மீது எழுத்தைக் கோலமிட வேண்டுமென்று நாம் விசைப்படுகின்றேமோ அவர் களிற் பெரும்பகுதியினர் அர்த்த சாமத்திலேதான் இருக்கின்ருர்
O
கள்.
MMMM* حیح حصامی حصامی حصمیم حصاسم حمام حاتمی
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவ்ரம் பின்
தனிப்பிரதி 2 - 0 ஆண்டுச் சந்தா 36 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படம்ாட்டா மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
A3

Page 14
இந்தச் சரஸ்வதிகளும் வாழும்
சுதந்திரமே வேண்டும்
சரஸ்வதி. . லட்சுமி. ஆண்டவனே என்று பெயர்களுக்குக் குறைவு இல்லை;
பின்னை,
வீணைகள் மீட்டிட இல்லையே என்கின்ற வேதனைக் குறைகளா? அன்றேல் வாணிதன் கல்வியைச் گصيகண்டிக்குளியிலே வளர்த்திடா மனக் குறையா?
அடிமை லாழ்வின் முடிவைக் கனவிலும் அவர்கள் கண்டது இல்லை- பின்
ந்தப் பெரிய
పి. அவர்களை எப்படிச் சூழ்ந்திடக் கூடும்? இவர்களின்அடிமை முகாம்களைத் தேடி எங்கும் அலைந்திட வேண்டியதில்லை உங்களது எங்களது உள்வீட்டு அடுப்படியில்
என். சண்முகலிங்கன்
அநேகமாய் இவர்களை அழுகையுடன் காணலாம்.
கரிப்பானைச் சுவடுகள்
மட்டுமன்றி கருக்கிய தழும்புகளும் 956ăõrg- avfruib.
எஜமானக் கொடுங்கோலர் unrGprit?
அந்நிய பாவிஸ்ற் அல்லர்; எங்களது உங்களது அம்மாமார், அக்காமாரி தாத்தாமார் தொடக்கம் பேரர்வரை தொடர்வதிது. நிஜமான சுதந்திரத்தின் நிழல்காணு அடிமைகளே! எஜமானக் கொடுங்கோன்மை ஒருகேடா உங்களுக்கு?
சுதந்திரமா..?
இந்தச்
சரஸ்வதிகளும் வாளும் சுதந்திரமே வேண்டும் 呼·
காலைப் பணியில்...!
வேகமாய் ஒடும் எங்களூர் நாய்கள் மலைப் பாதைகளிலே,
தேயிலை மரத்தடியில் உறங்கிக் கொண்டே
"லயத்து
வாசல்களின்
ரொட்டித் துண்டுகளை மோப்பம் பிடிக்கும்,
ஒன்ருய் சேர்ந்து ஓர் - நடுராத்திரியில் ஒருமைப்பாட்டை விளக்க கூடி விளையாடும்
கறுப்பு - வெள்ளை இனங்கள்
காலைப் பணியில் ogslišiasmrasí?” Lorrńf'356sr பின்குல் ஒடும்
எம். டி. ஈழகணேஷ்
鸟4

அகமது அப்பாவலின் 70 ஆவது பிறந்த தினம்
பிஷாம் சாஹ்னி
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டிகளுக்கு முன்னர் நான் அப்பாஸ் சாகிபை முதன் முதலில் சந்தித்தேன். பம்பாயில் ஐபிடிஏ என்று பிரபலம் பெற்றிருந்த இந்திய மக்கள் நாடகக் கழகத்தின் கூட்ட மொன்றின் போதுதான் அவரைச் சந்தித்தேன். இந்திய நாடக அரங்க மறுமலர்ச்சியில் ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க பாத்திரத்தை வகிக்கவிருந்த இந்த ஸ்தாபனத்தின் நிறுவக உறுப்பினராக அவர் விளங்கினர். அவர் ஒரு பத்தரின் வேட்கையோடு நாடகங்களை எழுதியும், அவற்றை ஒத்திகை பார்த்தும், பம்பாய் நகர வீதி களில் அவற்றை நடத்திக் காட்டியும் உழைத்து வந்ததை நான் கண்டேன். பகல் நேரத்தில் அவர் பத்திரிகைகளுக்கு எழுதுவார்; அல்லது தமது படைப்பாக்க எழுத்துக்களில் ஈடுபட்டிருப்பார். மாலை வேளைகளையே அவர் ஐபிடிஏக்கே செலவிட்டு வந்தார். ஏற் கெனவே அவர் ஐபிடிஏக்காக தர்த்தி கே லால் என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கியிருந்தார்; இந்தப் படம் வங்காளப் பஞ் சத்தின் கோரத்தை உள்ளத்தைத் தொடும் வகையில் சித் திரித் திருந்தது. இந்தப் படத்தை நாம் இன்று பார்த்து வரும் புதிய அலைப் படங்களுக்கு முன்னுேடி என்று தராளமாகக் கூறலாம்.
அப்பாஸ் நிறைவேற்றி முடிக்க வேண்டிய ஒரு புனிதப் பணி பற்றிய உணர்வோடுதான் எப்போதும் தமது வேலையில் ஈடுபட்டு வந்தார். பத்திரிகைகளுக்கு எழுதுவதாயினும் சரி, திரைப்படங் களைத் தயாரிப்பதாயினும் சரி, நாடக மேடைக்காக எழுதுவதாயி னும் சரி அவர் எப்போதும் ஒரு வெறி பிடித்தவர் போலவே வேலை செய்தார்.
காலம் கழிந்து வந்த போதிலும், அவரது சமூகப் பொறுப்பு மற்றும் ஈடுபாட்டு உணர்வு இம்மியும் பலவீனமடையவில்லை. அவர் தமது நிலைகொள்ளாத இளமைக் காலத்தின் அந்த நாட்களில் நடந்து கொண்டதைப் போலவே இப்போதும் சம்பவங்களையும் நிகழ்வுப் போக்குகளையும் அத்தனை தூரம் இன்றும் தொடர்ந்து உணர்ந்து வருகிருர், செயல்படுகிருர் சில ஆண்டுகளுக்கு முன்னல் பிலாண்டியில் கலகங்கள் நிகழ்ந்த போது, அவர் உண்மைகளை நேரில் கண்டறிவதற்காக அங்கேயே நேரில் சென்ருர். பின்னர் அவர் இந்தச் சோதரப் படுகொஃ வெறிக்கு முடிவு கட்டும் அவ சியம் குறித்து உள்ளத்தை உலுக்கும் பல கட்டுரைகளை எழுதினர்.
25

Page 15
அவரது உடல் நலம் குன்றிய போதிலும் தாம் ஆற்ற வேண்டிய பணி பற்றிய அவரது அக்கறையுணர்வும் அவரது மனப்பூர்வமான முயற்சியும் முன்னைப் போலவே இப்போதும் வலுவாகவே இருந்து வருகின்றன.
இந்தப் பலத்தின் சூட்சுமம் அவரது திடமான கருத்துக்களில் தான் அடங்கியுள்ளது. மதச் சார்பின்மை, ஜனநாயகம், சோவு லிசம் ஆகியவற்றில் அவருக்குள்ள நம்பிக்கையே அவரது வாழ்க் கையின் மூல பலமாகும். அவரது வாழ்க்கை முழுவதும் இந்த லட்சியத்துக்கே அர்ப்பணிக்கப் பட்டதாகும் என்று எவரும் தாரா ளமாகச் சொல்லலாம். அவரது செயலூக் மிக்க வாழ்வின் இந்த ஆண்டுகள் அனைத்திலும், அவர் இந்தக் ருத்துக்களை விடாப்பிடி யாக உறிதியோடு பற்றி நின்ருர். அவர் என்றேனும் தம்து மனச் சாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்ருே, லெளகிகச் சபலங்களுக்கு இரையானர் என்ருே எவரும் அவரைக் குற்றம் சாட்ட முடியாது. இப்போதும் கூட, அவர் வாழ்க்கையில் போரா டிக் கொண்டிருந்த காலத்தில் வசித்த அதே இரண்டு அறைகளில் தான் வசித்து வருகிருர், உண்மையான சர்வதேசிய வாதியான அவர் சமாதானத்துக்காக நின்ருர். சமாதானத்துக்கும் நாடுகளி டையே நல்லிணக்கத்துக்கும் ஆதரவாக, அவர் தேசிய மற்றும் சர்வதேசிய மேடைகளில் தமது வலிமை மிக்க குரலை எப்போதுமே உயர்த்தி வந்திருக்கிருர். மேலும் இந்திய - சோவியத் நட்புறவின் சிற்பிகள் எனக் கூறத் தக்கவர்களில் 'ரும் ஒருவராவர்,
அப்பாஸ"க்கு இப்போது எழுபது வயதாகிறது. ஆயினும் வாழ்க்கையில் ஒரு புனிதப் பணியை மேற்கொண்டுள்ள அவரைப் போன்ற மனிதர்களுக்கு வயது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை. அவரது 70 ஆவது பிறந்ததின விழாவின்போது அவ ரைப் பாராட்டுவதில், அவரது ஆயிரக் கணக்கான ரசிகர்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்.
மக்கள் எழுத்தாளர்
ஜோகிந்தர் பால்
தமது நாட்டில் ஒரு சமூக மாற்றத்தைக் ( சீாண்டு வரும் உறுதி பூண்ட அத்தாட்சி பூர்வமான எழுத்தாலி ரான கே. ஏ. அப்பாஸ் அன்ருட வாழ்க்கையின் எதார்த்தத்தைத தமது வாச கர்கள் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்றே எப்போதுப் பாடு பட்டு வந்துள்ளார். அவர் மிகவும் தெள்ளத் தெளிவான முறை யில் நமது இன்றைய வாழ்வின் எத்தன்யோ பன்முகப்பட்ட அம் சங்களை அறிமுகப்படுத்தியது போன்று வேறு எந்தவோர் உருதுச்
26

சிறுகதை எழுத்தாளரும் நமக்கு அறிமுகப்படுத்தியதில்லை, அவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் அபரிமிதமாக எழுதி வந்தபோதிலும் ஏழை மக்களின் பரிதா பகாமான வாழ்வை மேம்படுத்துவதற்கு அவர் மேற்கொண்டுள்ள மாய்மால மற்ற, வேட்கை மிக்க கிடமை யுணர்ச்சி அவரது ஒவ்வொரு புதிய கதையிலும் சாதாரண வாச க்ரின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறது. "யே. பி. தாஜ்மகால் ஹை" என்ற தலைப்பில் அவர் ராஜ்ஜியைப் பற்றி எழுதியுள்ள உள்ளத்தை நெகிழ வைக்கும் கதை, "சப்ஜ் மோட்டார் கார்" . என்ற கதையில் ஷிலா, கோபால் ஆகியோர் உள்ளத்தில் உரு வேற்றியுள்ள இடையருத நம்பிக்கை, நய் ஜங் என்ற கதையில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவரான சுபேதார் ராஜிந் தர்சிங் வறுமையையும் நோயையும் எதிர்த்து புதியதொரு போரை நடத்த எடுத் துக் கொள்ளும் சபதம், தோ ஹாத்' கதையில் ஆணவம் பிடித்த திருடன் ஒருவனும் அணுதைக் குழந்தையொன் றும் பாசத்தோடு கை பிணைப்பது ஆகிய எல்லாம் கதைகள் பரி வுணர்ச்சி மிக்க நல்லிணக்கத்தோடு சாதாரண இந்தியர்களின் அபிலாஷ்ைகளையே வெளியிடுகின்றன. அவர்களது துன்ப துயரங் களில் அவர்களைப் பாசத்தோடு அரவணைத்து அவர்க்ளது புண்களை ஆற்றும் அவர், அவர்களது உள்ளத்தில் ஒரு மலர்ச்சியைப் புகுத் துகிருர், அவர்களது பலத்தையும் தன்னம்பிக்கையையும் நம்பிக்
கையையும் புதுப்பிக்கிருர், W .
உண்மையில், அப்பாஸின் படைப்புக்களிலுள்ள சாதாரணத் தன்மையே, லட்சோப லட்சக் கணக்கான சாதாரண மக்களோடு ஓர் அசாதாரணமான இதய உறவை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. தனது சொந்த, சிறிய மனச்சாட்சிக்கு வசதியா கத் தன்னை ஒப்புக் கொடுப்பதைக் காட்டிலும், மனித குலத்தின் மிகப் பெரும் மனச்சாட்சிக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் ஓர் எழுத்தாளர், முதன்மையாக, தமது சக மனிதர்களோடு சக உறவை ஏற்படுத்திக் கொள்ளவே முற்படுகிருர். படைப்பாக்க எழுத்துக்களில் செயலூக்கத்தோடு ஈடுபடுவதைத் தவிர, திரைப் படங்கள், பத்திரிகைத் துறை ஆகியவற்றிலும் அப்பாஸ் ஈடுபட் டிருப்பதும் இந்த உண்மையைப் புலப்படுத்தும். லட்சோப லட்சக் கணக்கானவர்களைத் தாம் நேரடியாக எட்டுவதற்குத் தமது படைப் பாக்க எழுத்துக்கள் மட்டும் போதாது என்று உணர்ந்து, அவர், திரைப்படங்களையும் செய்திப்படங்களையும் தயாரிக்கிறர். பத்திரி கைகளுக்கும் எழுதி வருகிறர். அவரைப் பொறுத்த வரையில் எழுதுவது என்பது அதனேடு முடிந்து விடும் முடித்த முடிவல்ல. அது அவருக்கு பழைய முறைமை. தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும்போது, புதிய முறைமையைக் குடியமர்த்துவதற் கான ஒரு வாகனமேயாகும்.
குவாஜா அகமது அப்பாஸ் உண்மையில் தாம் எதை எழுதி னலும் அதுவாகவே வாழ்ந்து காட்டுகிருர். எனவே அவரை நாம் ஒரு மனிதராக அறிந்து ஒரு "சிருஷ்டி கர்த்தா" என்ற முறையில் அவரது பாத்திரத்தை அங்கீகரிப்போமானல் அவரை நாம் மிக நியாயமாகவே மதிப்பிட முடியும்.
A7

Page 16
போவது எங்கே?
1ழக்க தோஷம். விடியற் காலை ஐந்து மணிக்கே எழுந்து நான் போடுகிற சத் த த் தி ல் 'அயலட்டம்” எல்லாம் ரசனைப் பிசகு, நடுச் சாம்த்தில் எழுந்து ாகளை பண்ணுகிறேனும். வேடிக் கைதான். இரவு பத்துப் பதி னெரு மணிவரை பகல் கொண் t-ft. ... ... மறுநாளும் பத் து
மணிக்குத்தான் அலுவலகம்
என்று இயங்குகிற மெஷின்க ளுக்கு விடிகாலை நடுச்சாமம்தான். அக்கம் பக்கத்து வீடுகள் எல் லாம் அதே இயந்திரங்கள். இருக்கட்டுமே.
கர் புர் என்று கோண்டா வில் டிப்போ பஸ்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஒ - த் தொடங்குகிற நேரம் இது. இழுத்துப் போர்த்திக் கொண்டு கிடக்க நானென்ன விடியா மூஞ் சியா? யன்னலோரம் வந்து நின்று சில்லிடுகிற நெஞ்சைக் கைகளால் இறுக் கி. .
ogfrt. ... என்ன குதூகலம்g திருநெல்வேலிச் சந்தை க் குப் போகிற ஆண்களும் பெண்களும் என்ன சுறுக்கு..
இப்போதும் ஒரு யன்ன லோரம்.
வெறிச்சிட்டுக் கிடக்கின்ற
சென்னை வீதி. தூரத்தில் வீதி யோரமே காலைக் கடனுக்காய் ஒதுங்கும் சில உருவங்கள்,
ச்சீ...
ஏழு ம னிக் கொல் லாம் மனே வி தயாரித்து விடுவாள்
- காவலூர் எஸ். ஜெகநாதன்
என்னை கூடவே ஒரு புறுறுப்பு: "ஊர் முழுக்கத் தூங்குது. உங்களுக்கு மட்டும்."
நியாயம் தான்
இர வு தூங்கப்போகின்ற நேரத்தை மட்டும் யாழ்ப்பான நரமாக நீடிப்பவள், எழும்பு கிற நேரத்தை சென்ஆன நேர. மாக்குகிற ஆசை  ைய D560) 1. முறைப்படுத்துகிற முனைவு.
பிய்த்துக் கொண்டு கிளம்பு கிற நான். ஒரு மைல் தூரமென் புது எனது வேகத்தில் பத்து நிமிடங்களுக்கும் குறைச்சல்,
ரெட்டிக்ாருவின் பேப்பர்க்
கடை. தினத்தந்தி பிரித்தால் பேதுரு மூனையில் (பருத்தித் துயையேதான்) துப் பாக் கிச்
குடு, கண் கூர்ந்து ம்ொய்த்து. நினைவு ஒரே ஓட்டமாய் பருத் தித்துறை மறந்து, பூபாலசிங்கம் கடையில் மூச்சு வாங்குகிறது.
பிரிக்க முடியாமல் "கிளிப்’ பண்ணி வைத்திருக்கும் புத்தகங் களைக் கற்பழித்து விட்டு
மறுபக் கம் திரும்பி குமுதம், குங்குமம் என்று மேய்ந்து- பத்திரிகை களில் பெருகிவரும் ஆபாசம் பற்றி லெச்சர்" அடித்து நிமிர ஜீவா வரலாம், வேறு யாரும் எழுத்தாளர்களும் வரலாம். தப்ாது.
"ஒசி" யில் எல்லாப் பேப்ப ரும் உசாவிவிட்டு நாலு கதைஇலக்கியச் சமாச்சாரம் வம்பு g/ԼՔԼվ...
£8

ரெட்டிகாருவோ பஞ்சம்
தான் கொட்டுவார். யாரும் இலங்கைக்காரர்கள் வந்துவிட் டால் 'சிலோன் சார். எழுத்
தாளர்" என்று அறிமுகப்படுத்தி கன்ன பின்ஞ என்று புகழ்வார். புளுகுவார். எந்தத் திக்குக்குப் ப்ோனலும் என்னைப் புகழவோ அல்லது இகழவோ நாலைந்துபேர் சம்பளத்துக்கு வேலை செய்பவர்
களைப் போல் அமைந்துவிடுவது
எனது ராசி. f
இலங்கைக்காரர்களைக் கண்டு பேசுவது கற்கண்டாக இனிக் (கம்.
தனது செயற்பாட்டை விஸ் தரிக்கிற நோக்கில் இந்தியாக் காரர்களுக்கும் என்னை அறிமுகம் செய்ய ரெட்டிகாரு முனைந்தது தான் சங்கடம்.
"கொழும்போவிலதான சார் சிலோன் இருக்கு" என்கிற கேள் விகளில் மண்டை வெடித்து. ரெட்டிகாருவிடம் கரு ராகச் சொல்லிவிட்டேன். -
* உன்ர கடையில நான் ஒசிப் பேப்பர் 1ழுக்கிறது விருப்பமில் லாட்டிச் சொல்லிப்போடு. ஆன ஊர் முழுக்க அறிமுகப்படுத்தி உபத்திரவப்படுத்தாதை"
தமிழ் விளங்காமல் முழிசி ஞர் ரெட்டி.
“grri ...... வராங்காட்டியும் என்ன, வீட்ல கொணுந்து போட் டுர்ர்ர்றன் பேப்பர்" என்ருர்.
தலையெழுத்து. தினமணி தொடக் கம், சிவப்பு நாடாவரை அலசிவிட்டு புறப்படும்போது ஒரு நெடுமூச்சு
இதுவே யாழ்ப்பாணம் என்ருல் . .
மூத்திர ஒழுங்கையில் ஒரு நாலு பாய்ச்சல் பாய மினிபஸ் ஆமை, நுழைந்து தொங்கி முக் கால் மணிநேரம் பிடரி அடிபட் டால் எங்கள் கிராமம் வந்து
விடும்.
தான்,
நெஞ்சம் நெறிகட்டுகிறது
சிறகுகள் ருந்துவிட்டால் பறந்ே விழுந்து புரளளாம். வயிரவர் கோவில் நெல்லி மரத்  ைத ப் பதம்பார்த்து தண்ணீர் குடிக்க. அணில் வேட்டைக்கு அழைப் பான் துரை. நானறிய அவன் ஒரு பல்லிகூட விழுத்தியதில்லை; இருந்தும் என்ன்? கல்யாணம் முடித்து நாலு பிள்ளைக் குத் த கப்பனும் ஆகிவிட்டான். வேட்டை, வேட்டை வெறும் மனக்குவி3
நல்லதோ பொல்லாததோ ஊர் ஊர்தான்.
நெடுமூச்செறிந்து. விரைகிறபோது சோதி காட் சியளிக்கும் (ப்பான்). ஊரவண்க் காண்கிற குதூகலத்தை- அவன் விழுங்கப்போகிற நாலுமணிப் ப்ொமுது சாகப்பண்ணி விடும் கி. மு. காலம் தொடக்கம் இன்றுவரை ஊரின் கதைகளை அவிழ்த்துவிடுவான். கூறியது கூறல் எல்லாம் நமக்குத்தான் சங்கடம். அவனுக்கு அது பயிற்சி.
விடுபட்டுப் புறப்பட்டால் மதியம்.
யாழ்ப்பாணச் FT 17G)
என்ருலும் காரல் மீன் பற்றி மனைவி சப்புக் கொட்டுகி றபோது, உதறி எறிந்துவிட்டு மெலிஞ்சி முனைக்கு ஓடி யக்க முத்துவைக் கட்டி அணைக்கிறது மனம். பறி நிறையக் கொண்டு வந்து கொட்டுவாள் சீதேவி.
கூழ்ச் சிரட்டையுடன் முற் றத்துப் பனையில் ஒரு Fituido சாய, சோளகக்காற்றில் உய்யா.
ஏதும் எழுதலாம் உட்கார்ந்தால். .
நல்லா பண்றிங்க.ஆனல் இந்த உங்க பேச்சுத் தமிழ்தான் புரியல், அதை மாத்தினீங்கன்ன"
என்று

Page 17
ஆலோச இர உயிரை விடுத்து தா என்கிறது. பிண வெ டி ல் அடிக்கிறது. அருவெருப்போடு எழுந்தால் சந்திரன் வருவான் சந்திரன் வராலிட்டால் வேருெரு இந்திரன். 始
இலங்கைப் புதினங்களைச் சுமந்து, குமுறி, மாலையாகும். ம். இந்த நேரம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பலாலி ருேட் டில் ஓடிவந்து ரவுணில் ஒரு சுழற் துச் சுழன்று, கே. கே. , வீதி மல்லிகை அலுவலகம். அப்படியே சுழன்று வீட்டுக்குத் திரும்புவ்தற் குள் எத்தனை முகங்களுடன், எத்தனை முகமூடிகளுடன் உற வாடி, உரையாடி. . . w
'மனேகராச் சந்தியில அடிக் கிருங்களாம்
"ஆரு"
நாராசம் பிணத்தைத்
*வேற േന്ദ്ര" メ
குடல்அறுந்துபோகநாயோட் டம் ஓடி வீட்டினுள் பதுங்கி.
மாலைமுரசு பார்க்கிறேன்.
பேதுற முனபோல் எதுவோ ஒரு ஊரில் கொள்ளை என்று கொட்டை எழுத்து தைக்கும்:
பழகிப்போன வழக்கத்தில் ஒன்பது மணிக்கே படுக்கையில் ச ரி ந் தால், அப்போதுதான் உயிர்த்ததுபோல் சென்ஜர் உற் கத்தில் கூத்தாடும். அதுவேறு உலகமாகும். எங்கள் வீடு தனி யாகப் பிரிந்து இன்றும் նյուֆւն பாணத்திலே வேரூன்றியிருப்ப்து போலவும். w
எவ் வளவு சுகமான தூக்கம். தூக்கத்திலும் சொ ந்த மண் ணையே சுற்றிச் சுழலும் மனசு. O
iniൈinunnunninipulign,
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
தாய் (மக்ஸிம் கார்க்கி) 22.50 புத்துயிர்ப்பு(தோல்ஸ்தோய்) 32/ வீரம்விளைந்த இருபாகம் 37 - 50
உண்மை மனிதனின் கதை 24.30
ஸெர்யோஷா l8 - ዕ0
ஒட்டம் சைபீரியா 4 - 50 அரசியல் பொருளாதாரம் 6 - 75
அரசியல் பூகோளம் I 7-50 மூலதனத்தின் பிறப்பு 2 - 0 லெனின் நூல் திரட்டு 10.00
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40, சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124 குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு-2,
്ഥൂ'iufilurl:urlustuffitut *iluuisse hustri
翻伊

1984 ஆகஸ்டில், சோவியத் எழுத்தாளர்களின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்று ஐம்ப தாண்டுகள் நிறைவு பெறும், மெய்ப்பாட்டை 95g)16) - it புரட்சிகர வளர்ச்சியில் உண்மை யாகவும், வரலாற்று ரீதியில் ஸ்தூலமாகவும், சித்திரிக்கின்ற சோஷலிச எதார்த்த வாதம் தான் சோவியத் நாவல்கள் மற் றும் இலக்கியத் திறனுய்வின் பிர தான வழிமுறையாகும் என்று காங்கிரஸ் பிரகடனம் செய்தது.
சோவியத் இலக்கியத்தின் சித்தாந்த எதிரிகள் வியக்கத் தக்க வேகத்துடன் இதற்குப் பிர
திபலிப்புக் காட்டினர்கள் துல் லியமாக 1934ம் ஆண்டிலிருந்து தான் அவர்கள் சா ஷ லி ச
எதார்த்த வாதத்திற்கு எதிரான தமது பிரசாரத்தைத் தொடங் கினர். ம ற் று ம் அதனுடைய தடைகளைப் பற்றி சகல வகைப் பட்ட கட்டுக் கதைகளையுப் புனை சுருட்டுகளையும் பரப்பினர்.
சோவியத் எதார்த்த வாத மானது "புனையப்பட்டு சோலி யத் எழுத்தாளர்களுக்கு "மேலி ருந்து", "கைமாற்றிக் கொடுக் கப்பட்டுள்ளது" என்பதுதான் சோவியத்யியலாளர்களின் முத லாவதும், அடிப்படையானது மான ஆய்வுரையாகும்.
இலக்கியத்தில் சோவியத் எதார்த்தவாதம்
காவ்ரில் பெத்ரோசியான்
இரண்டாவது சோஷலிச எதார்த்தவாதமானது படைப் புச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத் துகிறது என்பதும், எழுத்தாளர் களை, அவர் கள் விரும்புவது போல் அவ்வளவு சுதந்திரமாக எழுத அனுமதிப்பதில்லை என்ப துமாகும்
மூன்ருவது, சோ ஷ லிச எதார்த்தவாதமானது கலைஞனை உத்தரவிட்டதை நிறைவேற்றும் ஒரு சாதாரண நபரின் மட்டத் திற்குக் கீழே கொண்டு வந்து ட்டது என்றும் திட்டவட்ட
கள் படைப்புக்களை வகுத்துத் தருகிறதென்றும், வஞ்சப் புகழ்ச் சியையும், மற்றும் உருவகமாக்க குறிப்பிடும் எதையும் த  ைட செய்கிறதென்றும் கூறப்படுவதா கும். இதற்கும் மேலாக சோஷ லிச எதார்த்தவாதமானது எதிர் மறையான மற்றும் சோக நிகழ்ச்
சிகளை சித்திரிப்பதை எதிர்க்கிற
தென்றும், நாவல் படைப்புக்கள் யாவும் ஒரு மகிழ்ச்சிகரமான முடிவைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்று ஆணையிடுகிற தென்றும் கூறுகின்றனர்,
வேறு குற்றச் சாட்டுகளும் உள்ளன. ஆணுல் மேலே கூறப் பட்டவைதான் மிகவும் மூர்க்க மாகக் கூறப்படுவதும் பரவலா, கக் கூறப்படுவதுமாகும்.
8.

Page 18
அனைத்து விமர்சனங்களையும் பாராபட்சமின்றி ஆய்வு செய்து பார்த்தால், அது புதை மணலை ஆதாரமாகக் கொண்டவை என் பதும், உண்மைகளை மறுக்கிறது என்பதும் தெரிகிறது.
சோஷலிச எதார்த்தவாத மானது 1934 ல், "மேலிருந்து புனையப்பட்டு" இருக்க முடியாது. ஏனெனில், அ த லு  ைட ய பெயரை அது பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே உலக இலக்கிய நிகழ்வுப் போக் கில் அது பிறந்து, உருப்பெற் றது என்ற எளிய காரணத் தையே இதற்கு மறுப்புரையா கக் கூறலாம். 1848 ம் ஆண்டின் பிரெஞ் சுப் புரட்சி மற்றும் பாரிஸ் கம்யூன் காலத்திலேயே சோ ஷ லிச எதார்த்தவாதம் பிறந்து விட்டது. ஜெர்மன் சுவி ஞர் ஜார்ஜ்வீர்த் (1922 - 1953) மற்றும் "சர்வதேசிய கீத" த்தின் கர்த்தாவான பிரெஞ்சுக் கவிஞர்
யூகே பொட்டியர் (1818-1887) ஆகியோரின் படைப்புக்களில் இதனுடைய தொடக்கங்களை
நாம் காண்கிருேம். சோவியத் இலக்கியத் தில் சோஷலிச எதார்த்தவாதமானது, இருப தாம் ஆண்டுகளில் எழுத்தாளர் களின் மூதலாவது காங்கிரஸ் நடைபெறுவதற்குப் பல ஆண்டு கள் முன்னதாகவே பிரதான வழிமுறை ஆகியது. அக்காங்கி ரஸ், அதை அங்கீகரித்து தனது சாஸனத்தில் அதைப் ப்ொறித் துக் கொள்வது மட்டுமே செப்
சோவியத் எழுத்தாளர்க வின் சுதந்திரத்துக்கு (இடையூறு விளைவிப்பது சோஷலிச எதார்த் தவாதத்தினுல் சாத்தியமல்ல. அதை அவ்வாறு அறுதியிட்டுக் கூறுவது புத்தார்வக் கற்பனையி யலானது. பைரன் மற்றும் ஹியூகோவின் படைப்புச் சுதந் திரத்தை பாதித்தது என்ருே
கூறுவதைப் போல்
எதிார்த்தவாதமானது ஸ்டென் தால், தோஸ்தயேவ்ஸ்கி மற்றும் பால்ஸாக்கின் படைப்புச் சுதந் திரத்தை பாதித்தது என்றே, இயற்கை வாதமானது ஜோலா மற்றும் கோன்கோர்ட் சகோத ரர்களேப் பாதித்தது என்ருே அவ்வளவு அபத்தமானதாகும். சால்வதோர்
தல்வி, வரம்பில்லாத அகவ்ாய் மைக் கோட்பாட்டின் தளைக GFfr)“ பாதிக்கப்பட்டிருக்கும்
Et755u LrrG - இல்லை. அப்ப டியெனில் ம் ராக்சிம் கார்க்கி, விளதமிர் மயாகோவ்ஸ்கி, மிகை யில் ஷோலகோவ், லியோனித் லியனேவ், யூரி பொந்தரேவ் ஆகிய சோவியத் எழுத்தாளர் களும் மற்றும் சோஷலிச எதார்த்தவாத வழிமுறையின் வேறுபல ஆதரவாளர்களும் அத ல்ை "ஒடுக்கப்பட்டதாக ஏன் உரை வேண்டும்? லூயி அர கான், மற்றும் பாப்லோ நெரூடா போன்ற மாபெரும் கவிஞர்கள் அதனுடைய 'எல்லை வரம்புகளை" உணர்ந்த போதிலும் அ  ைத ப் பொருட்படுத்தாது தொடர்ந்து எழுதி வந்ததேன்?
புத்தார்வக் கற்பனையியலா ளர்கள் புத்தார்வக் கற்பனை இலக்கியத்தையும், எதார்த்த வாதிகள் எதார்த்தவாதத்தை யும், இயற்கையியலாளர் இயற் கையியலையும் படைப்பாக்க சுதந் திரத்தின் பேரால் ச ரி யான தென்று வாதாடினர். அதற்கு மாருக சோவியத் எழுத்தாளர் கள், சோ ஷலிச எதார்த்த வாதத்தை உறுதியாக ஆதரித்து வந்தனர். அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறையில் தங்குதடையின்றிப் படைக்கின்ற னர். அதனுடைய 'தடைக் கட்டுகளை’ அவர்கள் உணர்வ தில்லை. Ο
சோவியத் எதார்ததவாதம்
இலக் கி யப் படைப்புக்களின்

கருப் பொருள்களையும், பொருள் களையும், படைப்புக்களையும் வரையறுத்துக் கூறுவதில்லை. அது போன்றே அது, உருவகத் தையோ அல்லது விகாரத் தையோ மிகைப்புரையையோ, ஒரு பொருளைப் பற்றி மரபு மீறியவகையில் சித்தரிப்பதையோ மற்றும் கலைப் படைப்யுக்களின் பிற பயனுறுதியான வடிவங்க ளையோ நிராகரிப்பதில்லை. ஆனல் எழுத் தாள ர்கள் மக்களின் வாழ்க்கை, சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை மெய்ப்பாடான முறையில் சித்திரிக்க வேண்டும். விளத்திமீர் மாயகோவ்ஸ்கி, பெர் தோல்டு பிரெக்ட், நஜீம் ஹிக் மெத் மற்றும் பாப்லோ நெருடா அடிக்கடி வாழ்க்கையை ‘மெய்ப் பாடான உருவ்க" வடிவத்தில் சித்திரித்தனர். வாழ்க்கையின் மெய்ப்பாட்டை உருச்சிதைக் கின்ற உருவகத்திலல்ல. சோவி யத் யூனியனின் எழுத்தாளர் சங்கத்தின் சாஸனம், சோஷலிச எதார்த்தவாதம் "சோ வியத் இலக்கியத்திற்கு, தனி நபர்க ளின் பிரத்திவேகத் திறமைப் பண்புகளையும் எந்த இலக்கியப் பாணியிலும் புதுமைப் புனைவு களையும் வெளிப்படுத்துவதற்கு எல்லா வாய்ப்புக்களையும் உத்த ரவாதம் செய்கிறது" என்று குறிப்பிடுகிறது.
"மகிழ்ச்சிகரமான முடிவு" என்பதைப் பொறுத்த மட்டிலும் அது சோஷலிச எதார்த்தவாதம் புனை ந் த ஒன்றல்ல என்பதை அந்தச் சொற்களே காட்டுகின் றன. ஒரு நாவல் படைப்பின் முடிவானது நாவலாசிரியர் தெரி ப்ப்படுத்த விரும்புகிற கருத்திலி ருந்தும், அதன் உள்ளடக்கத்தி லிருந்தும் அமைய வேண்டும். எனவே ஒரு மகிழ்ச்சிகரமான முடிவானது சோவியத் இலக்கி பத்திற்குக் கட்டாயமானதல்ல,
33
அதைப் பார்ப்பதற்கு "டான் நதி அமைதியாக ஓடுகிறது" என்ற மிகையில் ஷோலகோவின் நவீனத்தின் இறுதிப் பக்கங்களை நாம் நினைவு கூர்ந்தாலே போது LDrtoorg).
சோஷலிச எதார்த்தவாத் மானது தனது சித்தாந்த மற் றும் கலையார்ந்த கோட்பாடுக ளைக் கொண்டுன்ளது என்று கூறு வது சரியானதாகும். வாழ்க்கை யிலும், கலையிலும் அது உண் மைக்காக நிற்கிறது எனவே, அதன் விளைவாக அது பொய் மையை எந்த வடிவத்திலும் நிராகரிக்கிறது.
அது வருங்காலத்தை நோக்கி நிற்கிறது. எனவே, அது எழுத் தாளனுக்கும் வா சக ரு க் கும் மனித நேய மரபுகளுக்கு ஏற்ப வும், உயர் சமுதாய உணர்வுட னும் போதனை அளிக்கின்றது. காலத்தின் உண்மையான வீரர் களைக் காட்டுகிறது. மேலும், காலத்தையும் வாழ்க்கையையும் உன்னதமான கருத்துக்களின் அனுகூலமான நிலை யிலிருந்து மதிப்பிடவும் மனித குலத்தின் லட்சியங்கள் சித்தி பெறுவதன் பாதையில் தடையாக நிற்கும் சகல தீம்புக்ளையும் எதிர்த்துப் போராடுவதற்கும் மக்களுக்கு உதவுகிறது.
கடைசியாக - ஆஞல் முக் கியத்துவத்தில் குறையாத விஷ யம் - சோவியத்யியலாளர்கள் ஒய்வொழிச்சலின்றிப் பேசி வரு கிற "கடுமையான கட்டுப்பாடு கள்' மெய்யாகவே இருக்குமr ஞல் இன்று உலகெங்கும் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கப்படுகின்ற சோவியத் இலக்கியத்தின் படைப் புகள் தோன்றியே இருக்க முடி யாது என்பது மிகவும் தெளி வான விஷயமாகும்,

Page 19
மேன் மக்கள்
சிதம்பர திருச்செந்திநாதன்
பொன்னம்மா அந்த அலு வலகத்திற்கு வந்தபோது காலை எட்டு மணி. வெறிச்சோடி இருந்த அதன் உள்ளே காக்கிச் சேட் அணிந்த ஒருவன் துடைப் பத்தால் அலட்சியமாகக் கூட்டிக் கொண்டிருந்தான்.
கும்பலாகப் பல மேசைகள். அதனை மறைத்து பைல்கள். பிர மாண்டமான அலுமாரிகள், தூசு படிந்த ருக்கைகள் M
வாசலில் நின்றவாறு பொன் னம்மா இவற்றினை நோக்கினுள். அவளின் கைகளுக்குள் சிறைப் பட்டு இருந்த இரண்டு வயதுச் சிறுபிள்ளையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு,
gilburnt ..... " என்று மழல்ை பேசி கைகளினுல் தாயின் கன் னத்தில் அடித்தது.
சும்மா இரடா" என்று பிள் ளையின் கைகளை வி லத் தி க் கொண்டு வாசலிலேயே நின்ருள்,
சுட்டிக் கொண்டிருந்த காக் கிச் சேட்டுக்காரன், த லை  ைய நிமிர்த்தி பொன்னம்மாவைப் பார்த்தான். >9/6(168T Lחזחנ* வையிலும் அவன் கூட்டுவதைப் போன்ற அலட்சியம் தெரிந்தது
"என்ன வேணும்?' என்று உரத்த குரலில் கேட்டவாறு அவளை நெருங்கினுன்
“எத்தினை மணிக்கு ஆட்கள் வருவினம்?" என அவள் கேட்கும் போதே குரலில் பதட்டம் இருந் ,V ܀ jilܦܳܦܽ
இப்படியான இடத்திற்கு வந்த அனுபவம் இல்லாத நிலை, எ ப் படி க் கதைப்பது என்று தெரியவில்லை.
"எந்த ஆட்கள்?’ என அவன் கேட்டான்.
"இஞ்சை வேலை செய்யிற
ஆட்கிள்"
"எட்டரை மணிக்குத்தானே
கந்தோர், இப்ப எட்டு மணிக்கே
வந்து வேலை செய்யிற ஆட்கள்
எங்கை என்ருல், உதென்ன கேள்வி? நீ வருவாய் என்று என்ன இஞ்சை ஆட்கள் பார்த் துக் கொண்டிருப்பினமே?" என காரணமில்லாமல் பாய்ந்தான். அந்தப் பாய்ச்சலைத் தடுக்க பொன்னம்மாவுக்கு வழி தெரிய வில்லை. அவளைப் போன்ற ஆட் களுக்கு சொல்லிப் பழக்கப்பட்ட மாதிரி.
"இல்லை ஐயா, எனக்குத் தெரியாது ஐயா" என்று சொன் ஞள்.
அவள் ஐயா என்று சொன் னதால் காக்கிச் சேட்டுக்காரனின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அவன் குளிர்ந்துவிட்டாபோலும்.
34
 

"என்ன விசியம்? கேட்டான். குரலில் இல்லை.
எ ன் று உஷ்ணம்
"நாங்க ள் குளத்தடியில இருக்கிறம் அண்டைக்கு அடிச்ச காத்தில எங்கடை வீட்டுக்கூாை காத்தோடை போட்டுது. அது தான் ஐயா இஞ்சை வந்து எழு திக் கொடுத்தால் உதவி செய் வினம் என்று சொல்லிச்சினம்" என்று பொன்னம்மா சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங் கத் தொடங்கி விட்டது.
ஏற்கனவே நடந்த களைப்பு பிள்ளையின் சுமை எ ல் லா ம் அவளை நிலை குலைத்திருந்தன.
"அதெல்லாம் இப்ப நிற் பாட்டியாச்சே! இவ் வள வு நாளும் என்ன செய்தனிங்கள்?" என்று காக்கிச் சேட்காரன்-கேட் டான்.
"எங்களுக்குத் தெரியர்து ஐயா. இப்பதான் கேள்விப்பட் l
ம்ே. பிரச்சனைதான். எதுக் கும் அதில இருக்கிற ஐயா வரு வார். அவர் வந்தவுடன் கதைச் சுப்பார்" என்று சொல்லிவிட்டு அவ ன் மேசைகளைத் தட்டத் தொடங்கினன் o
இதில இருக்கலாமே ஐயா?" என்று வாசல் கரையோரமாக இருந்த கதிரைகளைக் காட்டி அவள் கேட்டாள்.
"ஒம்ோம்" என்று அவன் உத்தரவுதர அவள் பயபக்தியு
டன் அதில் வெகுவாகக் கஷ்டப்
பட்டு இருந்து கொண்டு மடியில் இருந்த பிள்ளையை இறக்கி விட்
T6 -
அம்மா அம்மா" என்று மெல்லியதாக சத்தம் இட்டுக் கொண்டு அந்தப் பிள்னை ஒவ்
வொரு கதிரையாக பிடித்துப் பிடித்து தளிர் நடை பயின்று தாயைப் பார்த்துச் சிரித்து விளை யாடத் தொடங்கியது;
பொன்னம்மா சீலைத் தலைப் பால் கழுத்தையும் முகத்தையும் அழுத்தித் துடைத்தாள். ஆன லும் வியர்வை நின்றபாடில்லை.
நேரம் ஒன்பது மணியான பின்னர் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலரைக் காணக்கூடிய தாக இருந்தது. ஆனல் காக்கிச் சேட்டுக்காரன் காட்டிய இடத்து ஆளைக் காணவில்லை,
மெல்ல மெல்ல ஆட்களின் வருகையும், அதனூடாக பர பரப்பும் ஏற்ப ட லா யிற் று. பொன்னம்மாவால் தொடர்ந்து
இருக்க முடியவில்லை.
விளையாடிக் களைத்த பிள்ளை,
மடியில் அமர்ந்திருந்து சீ லே த்
த லை ப் பைப் பிடித்து அதில் இருந்த சிறிய கிழியல் ஊடாக கையைச் செலுத்துவதும் பிறகு வெளியே எடுப்பதுமாக இருந் தது.
அவளைப் போலவே பல ர் வந்து பக்கத்துக் க தி  ைரயில் அமர்ந்திருந்தார்கள். வ ய து பானவர்கள், பெண்கள், ஆண் கள் என்று பலர்.
ஒன்பதரைக்கு மேல்தான் நாகரிகமாக உடையணிந்த நடுத் தர வயதுக்காரர் ஒருவர் காக் கிச் சேட்காரன் காட்டிய இடத் திற்கு வந்தார்.
இவ்வளவு நேரமும் காத்தி ருந்த களைப்பு நீங்கியது போல இருந்தது. அவள் எழுந்து பிள் ளையைத் தூக்கிக் கொண்டு அவர்
இருந்த இடத்துக்குச் சென்ருள்.
பயந்து கொண்டு மேசைக் குப் பக்கத்தில் போய் நின்ருள்.
கதிரையில் அமர்ந்திருந்த அவர்

Page 20
சிகரெட் ஒன்றைப் பற்றவைத் துக் கொண்டு நிமிர்ந்து பொன் னம்மாவைப் பார்த்தார். சட் டென்று முகம் சுருங்கியது. 'ஏய், கொஞ்சம் தள்ளி நில்லு" என்ற அவரின் சத்தம், கட்டைக் குரலில் வெளிப்பட்டது.
முக த் ைத ச் சுளித்துக் கொண்டு, "இப்பதான் ஒவ்பீஸ் சுக்கு வந்தனன். வந்தவுடனே ஒரு ஐந்து நிமிஷம் நிம்மதியாய் இருக்க விடாதேங்கோ. ஏதோ கொடுத்ததை வேண்டவாற ஆட் கள் மாதிரி ஒடியாங்கோ" என்று அவர் சத்தம் போட்டார்.
"என்ன மச்சான் கந்தசாமி என்று கேட்டபடி கண் ஞ டி போட்ட ஒருவர் அங்கு வர,
பொன்னம்மா மீது பாய்ந்த கந்தசாமி ஏன்ற நபர், கண்ணுடி ப்ேரட்டவரைப் பார்த் து, "பாரன் மச்சான், இப்பதான் வந்தனன். உடனே எ ன் னை க் கலைச்சுக் கொண்டு வந்திட்டுது' என்ருர்.
கண்ணுடிக்காரர் சிரித்துக் கொண்டே போய்விட்டார்.
பொன்னம்ம்ாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
உடலில் மெதுவான ந டு க்க ம் ,
ஏற்பட்டது. நெஞ்சத்தில் விப ரிக்க முடியாத பய உணர்ச்சி.
இந்தப் பிரச்சனையால்தான் நான் போகமாட்டன் என்று சொன்னனன். அவர் கேட்டால் தானே. ஒருநாள் உழைப்புக் கெட்டுப்போம் நீ போயிட்டுவா என்று சொன்னர். இப்ப நான்
தான் க யிஸ் டப்பட வேண்டி
இருக்கு என நினைத்துக் கொண் டரள்.
கந்தசாமி என்ற அந்த நபர், ஆத்திரத்துடன்
வைப் பார்த்தார். பரட்டைத்
பொன்னம்மா
தலை, எண்ணெய் வடிந்து காய்ந்து போன முகம், மூழியான காது, மூக்கு, வியர்வையால் நனைந்த உடம்பு, உப்பிய வயிறு.
அழுக்கும், கந்தலும் சேர்ந்த சேலை அவளைப் போலவே அத் தனை லட்சணங்களும் கொண்ட
giraft.
"என்ன விசிய கேட்டார்.
ம். ?" என்று
அவள் சொன்னுள், "எங்க்ை அவர்??
'ஆர் ஐயா?
* உன்ரை புருஷன்"
அவர் வேலைக்குப் போட் zoofilo *
*கூலி வேலை ஐயா?
வேலைக்குப் போறேல்
ሯጪ)G8ህ ሀ?”
"முந்திப் போனணுன் ஐயா. இப்ப கொஞ்சநாளாய் போற தில்லை. உடம்பு ஏலாது. இனி பிள்ளை பிறந்த பிறகுதான்'
"உன்ரை புருஷன் எங்கை என்று சொன்னணி
"அவர் வேலைக்கு என்று?
"உனக்கும் புருஷன் இருக்கே" என்று கேட்கும் போதே, கந்த சாமியின் முகத்தில் கேலியான சிரிப்பு வெளிப்பட்டது;
பொன்னம்மாவின் உடல் பதறியது. பிள்ளையை இறு க அணைத்தாள். உதவி கேட்க வந்த இ டத் தி ல இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று தெரியாதே!
அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாயைத் திறக்க முடிய

வில்லை. அவ்வளவு Lul-Lillill அவள் இவ்வாறு கஷ்டப்பட்ட தால் தான் கேட்
ரியான கேள்வி நினைத்தோ என்னவோ,
எ ன் று
உள்ளதைச் சொல் ஆறு என்று கந்தசாமி உற்சாகத்து
டன் கேட்டார்.
?எனக்கு புருஷன் இருக்கி grif guunr”
கம்மா பொய் சொல்லாதே" ன்ஜனப் போல ஆட்கள் * பேர் இஞ்சை வறவை. ஒழுங் காய் குடும்பம் இருக்காது. 6t ளையளை மாத்திரம் வருஷம் தவ Cyup6v பெத்துப் போடுவினம்" வியித்தில ஒன்று இடுப்பில ஒன்று ண்டு எந்தநாளும் இப்படிக் தான்" என கந்தசாமி சொல்
விக் கொண்டு போக
பொன்னம்மாவுக்கு அழுகை
பிறிட்டுக் கொண்டு வந்தது. கூடவே ஆத்திரமும் உண்டா னது. தான் வந்த காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கு மறும்ொழி சொல்லா Logio தேவையில்லாம்ல்தன்மானத் தைப் பரிசோதிக்கும் இந்த மனி சனை இப்படியே பூமி பிளந்து
விழுங்க மாட்டாதா? எ ன் று நினைத்தாள்.
ஐயா, குடும்பம் gerflu Interor
கயிஸ்ட்ம் ஐயா. எல்லாரையும் போல எங்களை நினையாதேங்கோ. நான் கடிதம் எழுதிக் கொண்டு வந்தனன்" என்று சொல்லிக் கொண்டு கசங்கிப் போயிருந்த ஒரு கடிதத்தை நீட்டினுள்.
அழுக்கான அதனேக் கந்த
சாமிTவாங்கவில்லை. அவளின் கோலம் அவரை என்ன நினைக்க வைத்ததோ, -
இஞ்சை ஒரு உதவி யும் இப்பTசெய்யிறதில்லை. உனக்கு
கேள்வி
புருஷன் இருந்தால் அவசி" அனுப்பு" என்ருf>
ஓம் ஐயா, அவரை அனுப் புறன். இப்பஇந்தக் காயிதத் தைப் படியுங்கோ gguLUT”
உதெல்லாம் இப்ப தேவை மில்ஜல. போய் புருஷன் இருந் தால் அனுப்பு"
ஐயா" இதென்ன துரைச்சல்; நான் தமிழில தானே சொல்லுறன். ப்ே புருஷனை அனுப்பு" என்று அவர் சத்தம் Grrrl- , ,
பொன்னம்மாவின் கையில் இருந்த'அந்தப் பிள் அழித் தொடங்கியது. அதன் அழு Gð568) til அவரால் p g is as முடியவில்லை.
அது சுாரணம்ா Gairlin யுடன் அவள் வெளியேறிஞள். ன வேதனை, உடல் களைப்பு எல்லாம் அவளை ஒன்னு பின்னப் படுத்த அவள் தளர்ந்த நடை யுடன் புறப்பட்டாள்
கண்டவன் பின்னலேயும் திரியிறது. ள்ெ2ளயளைப் பெறுகி றது. பிறகு உதவிக்கு வந்திட்டி னம்" எனக் கந்தசாமி சொன்ன தும் அவள் காதில் விழுந்தது
இலற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஆற்றமையு டன் அவளால் கண்ணீரைத் தான் விட முடிந்தது*
மத்தியானம் சாப் பி ட t போகும் போது கந்தசாமியும் கண்ணுடி போட்ட அவரின் நீண் பர் கந்தவனமும் கொ ஞ் சம் குடித்துவிட்டுத்தான் வந்திருற் தார்கள.
ஆனல் அது அவ்வளவு உற் சாகத்தைக் கொடுக்கவில்லை. அதனுல் பின்னேரம் போகும் போது செக்கண்ட் ரவு ண் ட்

Page 21
அடிக்க முடிவு செய்து நாலு மணிக்கே புறப்பட்டு விட்டார்
67.
கந்தசாமி கலியாணம் முடித் தும் தனிக்கட்டை. பெண்சாதி பிரிந்து போய் நாலைந்து வருடங் கள். கந்தவனத்திற்கு இன்னும் கலியாணம் பாக்கியம் கிடைக்க வில்லை.
அவர்கள் வழக்கமாக சில்ல றைக்குச் சாராயம் குடிக்கும் அந்த தேநீர்க் கடையின் பின் பக்கம் போய் கொஞ்சம் குடித்து விட்டு சிகரெட் பு  ைக யு டன் வெளியே கடை வாசலில் நின் ரூர்கள். ....
"வாவன்டாப்பா இப்பிடியே கொஞ்சத் தூரம் ரவுண் பக்கம் நடந்துபோய் வருவம். பிறகு வந்து மற்றத்தரம் அடிப்பம்" என்ருர் கந்தசாமி.
அ த ன் படி நடத்தார்கள். கூல்பார் வாசலில் நின்று மற்ற சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டபோது, ۔۔
கொஞ்சம் அதிகப்படியான ருேஸ் பவுடர் பூசிய முகமும்
வித்தியாசமான பார்  ைவ யும் "
கொண்ட நாகரிகமான தோற் றம் உடைய மஞ்சள் சாறி அணிந்த அந்தப் பெண்ணைக் கந்தசாமி கண்டார்.
பார்வைகள் பரிம் 1ா றிக் கொள்ளப்பட்டன.
*கந்தவனம் அந்த ஆளைப் பார் எப்பிடியிருக்கு?
நல்லாத்தான் இருக்கு" *நல்ல வடிவுதான்" "எங்களைத்தான் பாக்கிருள் "பொறு பாப்பம்' " அவள் வடிவாக கந்தசாமி யைப் பார்த்தாள். பிறகு அவ
,酯8
ரைப் பார்த்துக் கொண்டே நடக்க, ஆரம்பித்தாள். *அவள்- போருள்? கந்தசாமி சொல்ல,
*அவசரப்படாதே. -9յ6ն ளின்ரை பார்6ை1 வித்தியாசமா கத்தான் இருக்கு, போகட்டும்
எ ன் று
பின் ஞ ல போய் பார்ப்பம்" GT6ör grif.
அவள் அடிக்கடி பின்னுலே
திரும்பி கந்தசாமியைப் பார்த் துக் கொண்டு முன்னே நடக்க, கந்தசாமியும், கந்தவனமும் பின் தொடர்ந்தனர்.
அவள் எதிரே இரு ந் த தியேட்டரினுள் புகுந்து, ரிக்கெட் டுகள் வழங்கும் கவுண்டரின் ஒரமாக ஒரமாகினுள்.
கந்தசாமி அவளைப் பார்க்க, அவள் சட்டென்று மெதுவாகப் புன்னகைத்தாள். தியேட்டரில் படம் தொடங்கியபோது, அவ வளின் பக்கத்தில் உற்சாகத்துடன் கந்தசாமி அமர்ந்திருந்தார். O
yrittorii ።ዞማካካmuዞወካካntuዞ"lካkutዞ"ካካu"ዞጦካ፡
சென்னை நர்மதா வெளியீட்டாளர்
சமீபத்தில் வெளியிட்ட டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல் இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்;
ባuካuuuዞ፬ካፍካuuuዞ""ዛዛuዘዞሠ"ካካuluህ""ካuuዞ፡ሠ"ካuuuዞ"

西吸研
ಇಲಿár மாத மல்லிகையைப் பார்க்கும் பொழுது மிக விருப்ப ம்ாக இருந்தது என் மனசுக்கு.
காரணம் தி. க. சி. என அழைக்கப்படும் சிவசங்கரனை எனக்கு இலக்கிய பூர்வமாக நீண்ட நாட்களாகத் தெரியும் . அன்னுரைஅவரது கருத்துக்களை- முன்னர் தாமரையில் பொறுப்பு வகித்து வந்த காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளேன். அவரது உரு வத்தை அட்டையில் பிரசுரித்ததற்காக எனது பாராட்டுக்கள்.
நீங்கள் சமீப காலமாசுத் தமிழகத்திற்கு அடிக்கடி போய் வருவதாகத் தகவல்கள் மூலம் அறிந்திருக்கின்றேன். அங்கு சகல எழுத்தாளர்களையும் சந்திப்பதுண்டா? என்ன விதமாகக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வீர்கள் என்பதை எழுத்தில் நாம றிந்து கொள்ளக் கட்டுரை வடிவத்தில் தந்தால் என்ன?
இம் முறை வெளிவர இருக்கும் 20 வது ஆண்டு மலரைப் பற்றி மல்லிகையில் படித்துள்ளேன். ஒரு தரமான மலராக வெளி வரும் என்பது எனது நம்பிக்கை. என்னைப் போலப் பலருக்கும் கொழும்பில் ஒரு சங்கடம் உண்டு. முன்னர் கொழும்பில் பல புத்தகக் கடைகளில் மல்லிகை வாங்கக் கூடியதாகச் சுலபமாகக் கிடைத்தது. ஆணுல் கடந்த ஜூலை எரிப்புக்குப் பின்னர் தமிழ்ச் சஞ்சிகைகள் விற்பனை செய்யக் கூடிய கடைகள் இல்லை. எனவே தேடித் தேடித்தான் - பல சிரமப்பட்டு - மல்லிகை போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளை வாங்க வேண்டியிருக்கின்றது. நானறிந்த வரையில் யாழ்ப்பாணக் குடா நாட்டைத் தவிர, மற்றப் பிரதே சங்களில் வசிக்கும் தரமான சுவைஞர்கள் இப்படித்தான் கஷ்டப் பட்டுத் தேடிப் படிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன் இதற்கு ஏதாவது சுலபமான வழி முறைகளைச் செய்ய முடியுடி r?
ஒரு சஞ்சிகை தனது இருபதாவது ஆண்டு விழாவை ஈழத் தில் கொண்டாடுகிறது என்ற யதார்த்தமான செய்தியே ஒரு சரித் திர மாகும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு நீங்கள் அதற் கு ப் பாத்தி கட்டிப் பசளையிட்டு உழைத்த உழைப்பை இலக்கிய உல கம் லேசில் மறந்து விட முடியாது. அத்தனை உழைப்பு உழைத் துள்ளீர்கள். நானறிந்தவரை இத்தனை சிரமமான உழைப்பை உங்களைத் தவிர வேறு எவருமே தங்களது சஞ்சிகைக்குச் செய்தி திருக்க முடியாது._ஒரு இலட்சிய வெறியும் தாகமும் இடைவிடாத நல் நோக்கமும் இருந்திருந்தால்தான் இது சாத்தியப்படும் என நான் நம்புகின்றேன்.
கொழும்பு - 11 எஸ். ரவீந்திரன்
99

Page 22
சூடு பிடித்து ஒருவரையொருவர் சாடிய விவாத மேடை கப் சிப் என்ருக்கி விட்டீர்கள். இனி எப்போ இன்னெரு இலக்கிய விடையதான சர்ச்சை கிளம்பி அரங்கேறுமோ?
சிறுகதை ஆக்கங்களையிட்டு இளையோருக்கும் சில சமயங்களில் மல்லிகையில் களம் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி. எழுத்துலகில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்ட எழுத்தாளர் சிறுபிள்ளைத் தனமாக (கெளரவமான இலக்கியம் படைப்பதில்) விளையாட லாமா? ஆனி மல்லிக்ை இதழில் வெளியான சிறு கதை களி ல் "எழுச்சி" (இரத்தினவேலோன்) எனக்கு வியப்பைக் கொடுத்தது. இன்னுெருவரின் தரமான படைப்பு இடம் பெற வேண்டிய இடத் தில் 1980 ஆணி "சுடர்' இதழில் வெளியான "வரட்டுக் கெளர வங்கள்", "எழுச்சி" யாக மீண்டும் வெளிவந்திருப்பது கண்டு வேறு சஞ்சிகையில் மலர்ந்த ஆக்கங்கள் மல்லிகையில் மீண்டும் மலருமோ என எண்ணத் தோன்று. . ஆக்கியவர் ஆசிரியருக்கு காது குத்துகிருரே மல்லிகையின் மணமும் கெடக்கூடாது.
மல்லிகையின் வளர்ச்சியையிட்டு வாழ்த்தி. ராஜபாளையம் சிறப்பிதழை எதிர்பார்த்திருக்கிறேன்.
i prirmički). w கிருஷ்ணு மங்கை
ஜூன் இதழ் கண்டேன். மகிழ்ச்சிகள். முருகானந்தன் எழுதிய *அறுப்துகளின் புதிய கலையும், கதிர்காமநாதனின் பங்களிப்பும்? கட்டுரையும், முருகபூபதி அவர்களின் ‘தமிழகத்தில் மூன்று வாரங் கள்" கட்டுரையும் நன்றக இருந்தன. மணிவிழாக் கண்ட "வித்தி? பயின் விபரங்கள் அறிந்தேன் நன்றி.
"சோலைக்கிளி" யின் தரமான பல கவிதைகள் பல இதழ்களி
லிருந்தும் என் நெஞ்சைத் தொட்டன. "குடுக்கை வச்சான் 1ாக்கை" மிக நன்று.
மேலும் அதே இதழில் எனது கேள்வி ஒன்றுக்கு விடையளித் திரு நந்தீர்கள். நீங்கள் சொன்னபடி ராஜபாளையம் சி ற ப் பி தழ் முடி ந்ததும் கல்முனைச் சிறப்பிதழை வெளியிட நான் ஒத்துழைக் 63 ரன். அதற்கான விளக்கங்களுடன் பின்னர் சுடிதம் எழுது கின் றேன்.
(தொடர்ந்து வரும் மல்லிகைகளில் அதிகமான அச்சுப் பிழை கள் காணப்படுகின்றன. இதை நிச்சயமாகத் தவிர்த்துக் கொள் ளவும்.'
aidya? - 43 - அன்பிதயன்
40

உள்ளம் கவர் கலா பரமேஸ்வரன்
ப. சந்திரசேகரம்
கலைவிழை மாந்தர் கலைமகள் கண்டனர் அறநெறிச் செல்வோர் அறத்து முதல் கண்டனர் தவ நெறிச் செல்வோர் தவத்து முதல் கண்டனர்.
கலா எனும் அன்புப் பெயரால் அழைக்கப்பட்ட, அழைத்துக் கொண்டே வாழப் போகும் பரமேஸ்வரன் வயதில் இளையவர்; அறிவில் முதிர்ந்தவர்: பணபில் ஆளுமை பெற்றவர்.
அவருக்கும் எனக்கும் வயது வெளியிடை அதிகமாயிருந்தும், நாங்கள் இருவரும் பாசப்பிணைப்பால் இணைக்கப்பட்டவர்கள்,
கல்வி எனும் கலை கடலும். அறம் எனும் வாழ்க்கை இலட்சி யமும் மக்களுக்காகச் சேவை செய்யும் தவ நெறியும் அவரில் சங்கமித்தன.
மக்களை அவரது உள்ளச் செறிவினல் ஆட்கொள்ளும் பெருமை அவரது பிறப்பியல்பாகும்.
குரு - மாணவ இணக்கமும், நண்பர்களோடு கேண்மையும், துன்புறுவோருக்கு இரங்கும் இயற்கைக் குணமும் கலாவின் அணி கலன்கள். W
அன்புத் தம்பி பரமேஸ்வரன் 'நவசிமுர்கினியம்’ எனும் ஆய் வுக் கட்டுரையால் அவரது தர்க்க வன்மையால், அதி இறந்த உரையாசிரியரானர்; திறனய்வுக் கலையை தனது வாழ்க்கைக் கலையாகக் கொண்டதினுல் ஈழவழ நாட்டிலும், முத்தமிழ் வளர்ந்த மதுரையம்பதியிலும் சுடர்விட்டு ஒலி பரப்புமளவிற்கு அவரது புகழ் பரவி விட்டது.
தமிழே மூச்சாக வாழ்வாக, தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்த இளம் அறிஞர் தமிழ் உரிமை எனும் பலி பீடத்திலேயே உயிர் துறந்தார் என்று கொள்ளும் பொழுது, அவரது Fig&or யற்ற வாழ்க்கைத் துணைவியாரும், செல்வக் குழந்தைகளும் தங் கள் அருமை முதல்வர், தந்தை, தமிழ் வழி நின்று தமிழ்ச் சமு தாயத்துக்கு வழி கோலிச் சென்ருர் என ஆத்ம சாந்தி பெறப் பராசக்தி அருள் புரிய வேண்டும்.
எனது உறவு அவரை சைவ வேதாந்த நெறி நின்று சமதர்ம இளைஞச் சீராளர் என்றே கொள்ளுகின்றது.
4.

Page 23
அகிலத்தினை உருவாக்கி, இயங்கவைத்து செய்ற்பட வைக்கும் அன்னை பராசக்தி இவரது வைணவியாக ‘செல்வத் த T. யாக விளங்கினுள். எனவே தனது முதலாம் மழலைச் செல்வத்தினை அங்கயர்க் கண்ணியாக்கினர். மக்கள் சேவையே, அவர்கள் உள வியல் விடுதலைக்கு உழைத்தலே மக்கள், மக்களுக்காகச் செய்யக் கூடிய நிவேதனம். சகோதரி நிவேதிதை சமய ஒழுக்கமும் கல்வி யும் பின்னிப் பிணைந்த அயர்லாந்து நன் நாட்டில் பிறந்து பாரத நாட்டில் தன் வாழ் நாளை அர்ப்பணித்த அம்மையார், பரமேஸ் வரன் உலகில் வாழ் மக்களின் மகோன்னத சக்தியைப் போற்றி வளர்த்தவர். அர்ப்பணம் என்பது அவரது கட்டளை கல்.
தனது தத்துவத்தைப் புலப்படுத்துவதற்காகத் தனது குழந் లిల్లా இந் நாமங்களைச் சூட்டினர் என்பது எனது உள்ளக் L-d, öð) Éh •
தமிழ் இனமே அகதிகளாகக் கயட்சியளிக்கும் இக் கொடூரக் காலகட்டத்தில் எனது ஆருயிர்த் தம்பியான, கலாவினைப் பிரிந்த எனது உள்ளத்துக்கு சாந்தி அளிக்க முடியாத நான் எவ்வாறு அவரது அருமைத் துணைவிக்கும், குழந்தை மணிகளுக்கும், இலங் கைத் தமிழ்க் குடும்பத்திற்கும், உலகத் தமிழ் மக்களுக்கும் ஆறு தல் கூற முடியும்?
ஆனல், நம்மைவிட்டுப் பிரிந்த கலாவின் சுருவில் பல கலாக் கள் உதிப்பார்கள் என்பது திண்ணம். べ
மாய்தல் எனும் பேருண்மை பிறத்தலெனுமுண்மை, வந்து தித்தோர் தொல்லுலகில் வளர்தலெனுமுண்மை. தேய்தலெனு முண்மையிவை யாருமுளங் கொள்ளச் சென்று தேய்த் திறந்து தித்து நின்று வளர்கின்றேன் எனும் விபுலாந்த மொழி எல் லோர்க்கும் ஆறுதலும், சாந்தியும் தரவேண்டும்.
கடிதம்
ஜூன் மாதம மலர்ந்த மல்லிகை படித்தேன். 'சடப்பொருள் என்று நினைத்தாயோ' என்ற கதை மூலம் ஒரு மினிபஸ் பயணத் "தின் நுண்ணிய நிசுழ்வுகளை, உணர்வுகளை கேவலங்களை மிகவும் துல்லியமாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் காட்டியதோட்ல் லாமல் கோகிலா தன் துணிச்சலையும் காட்டிவிட்டார்.
எழுச்சி கிறுகதை முன்பு சுடரில் பிரசுரமாகியிருந்தது. இது இரண்டாவது பிரசுரம். 'மறுபிரசுரம்’ என்று போட்டிருக்கலாம்.
முருகபூபதி தான் தமிழகத்தில் கழித்த மூன்று வாரங்களில் சந்தித்த பல இலக்கியகாரர்களை எம்மோடும் சந்திக்க வைத்து விட்டார், அமரத்துவமடைந்த கலைஞர்களை, அவர் ப்ற்றிய தகவல் களை மாதாமாதம் தருவது மல்லிக்ைக்குரிய சிறப்பம்சம்.
வேலணை கிழக்கு. சு. கருளுநிதி
42

சோவியத் தரிசனம்
- சாந்தன்
எந்த ஒரு முற்போக்காள னதுமோ அன்றி இலக்கிய ஆர் வலனதுமோ, கனவுகனில் ஒன்ருக அமைவது சோவியத் நரட்டை ஒரு தரமாவது பார்த்துவி வேண்டும் என்பதாகும். -
எனது இந்தக் கனவு ஜூன் மாதத்தில் ந ன வ |ா கி யது. இலங்கை - சோவியத் நட்புற வுக் கழகம் o ஏற்படுத்தித் தந்தது: நன்றி.
ஏ ற த் தாழ ஒரு மாதம் மாஸ்கோ, லெனின்கிராத் ஆகிய இரு நகர்களிலும் செ ல விட முடிந்தது. இலக்கியங்கள் மூல மும், இலட்சியங்கள் மூலமுமே பரிச்சயப்பட்டுவிட்டிருந்த ருஷ்ய மண்ணை நேரில் நெரு க் க ங் கொண்டமை மறக்கொணு அநு பவம்.
என்னுடைய கலை இலக்கி யம் சம்பந்தமான சுற்றுலாவாக அமைந்தது. அகலக் கால் வைத்து சோவியத் குடும்பத்தின் பல குடி யரசுகளுக்கும் விஜயம் செய்து, ஒன்றையுமே (!p(p GOLDuLuntahji கண்டு கொள்ளாமல் விடுவதி லும், முதலில் ருஷ்ய நாட்டை யாவது முழுதாகக் காண விரும் பினேன்.
அதற்கேற்றவாறு மே ற் சொன்ன இரு நகர்களிலுமே
A.
இவ் வாய்ப்பினை
AYNNNNNNNNN
N
ܓܰܓܓܓܓܓܓܓܓ̈
S.
என் பிரயாண ஒழுங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நகர் களிலுள்ள ஏராளமான கலைக் கூடங்கள், ஓவிய சிற்ப 'சாலை கள் மற்றும் இலக்கிய சரித்திரப் பிரசித்தி வாய்ந்த இடங்கள் இவற்றைச் சரிவரப் பார்க்கவே இந்த ஒரு மாதம் போதாதிருந் தது. மாஸ்கோவில் திரிச்சியா கோவ் ஓவியக் காட்சிச் சாலை, அர்காங்கில்ஸ்கோயே, கொல மன்ஸ் கொயே, தல்ஸ்தோய் நினைவகம், செஞ் சதுக் கம், லெனின் சமாதி போன்றவை இன்னமும் கண்முன்னல் நிற்கின் றன.
இலக்கிய மாமுனி தல்ஸ் தோயின் யாஸ்னயா போல் யான மாஸ்கோவிலிருந்து சற் றுத் தொலைவில் அமைந்துள்ளது, இலக்கிய ஆசிரமம்
Lorrah) (55IT, அமைதியான நகரம். அது அல்வளவு அமைதி யானதாக, இயற்கையுடன் இவ் வளவு நெருக்கம் கொண்டதாழ இருக்குமென நான் எதிர்பார்த் திருக்கவில்லை. எல்லா விஷயங் களையும் போலவே நகர நீர்மா ணமும் பரிபூரணமாகத் திட்ட மிடப்பட்டுள்ளது என்பது கண் கூடு. மற்றவிஷயம்: கண்முன்னே வளர்ந்து கொண்டு போகின்ற மாடிக் கட்டிடங்கள். அவ்வள
வும் மக்கள் குடியிருப்புகள்.

Page 24
லெனின் கிராத் மாஸ்கோ விலிருந்து மாறுபட்டுத் தெரிந் தது. கூடியபட்சம் பழைய சிற்ப
,வேலைப்பாடுகளும் س...s t + lك நீரூற்றுகளும், பாலங்களுமாக நல்லதிர்ஷ்டம், நான் போன
வேளை வெண் ணி ர வுகளின் காலம். நேவாநதியின் திறந்து மூடும் பாலமும் நெஞ்சை உலுக் கிய குளிரும் ஒன்ருக நினைவில்
பதிந்துள்ளன, ஸ்மொல்னி, புஷ்கின்பார்க், பெத்ரோத்வா றியட்ஸ், எர்மித்தாஷ் எல்லா
வற்றையும் முழுதாகச் சுவைத் திட காலம் பிரச்னையாயிருந் தது. ஒட ஒடப் பார்த்ததிலேயே இவ்வளவு நிறைவு. லெனின் கிராத் கலை ஞர் க ள் நகரம். அங்கே ஒவியர் ஒருவரைத் தேட முனைந்தபோது, "திருப்பதியில் மொட்டைத் தாதனைத் தேடிய என்கிற சொற்ருெடரின் அர்த் தம் முழுதாகப் புரிந்தது.
லெனின் கிராத் ஒரு வீரர் கள் நகரமுமாகும், 900 நாட்கள் ஃபாஸிஸத்தின் முற்றுகையை எதிர்த்து நின்று வெற்றிகண்ட பூமி. அந்த வீரர்கள் நினைவால யத்திலும் அந்த முற்றுகையில் உயிர் நீத்த மக்களின் இடுகாட் டிலும் மிதித்தபோது மெய் சிலிர்த்தது. லெனின் கிராத்தின் இந்த வரலாறு கவனிக்கப்பட வேண்டியது - அதன் முழு அர்த்தங்களிலும்:
எழுத்தாளர்கள் என்று பல ரைச் சந்திக்க முடியாது போய் விட்டது. இலங்கையிலிருந்து ஆறுதலாகப் புறப்பட முடியாத தால் ஏற்பட்ட சங்கடம். எனி னும் தமிழறிஞர்களான டாக் டர் வித்தாலி ஃபூர்ணிக்கா, டாக் டர் லூ போ வ் பிச்சிக்கின, ரேடியோ மாஸ்கோவின் திருமதி ஒல்கா மிரோனவா ஆகியோ
4.
ரைச் சந்தித் து அளவளாவ முடிந்தமை பெரிய மகிழ்வு தந் தது. முக்கியமாக ஃபூர்ணிக்கா அவர்களுடைய் உபசரிப்பில் ஒரு நண்பரின், இலக்கியகாரரின், நல்ல சோவியத் பிரஜையின். ருஷ்ய பாரம்பரியத்தின் அன்பு நெருக்கத்தைக் காணமுடிந்தது.
பாரதியாரையும், ஜெய காந்தனையும் ஓவிய மாக் கி ய ஃபியோதரவ் அ வர் களும் நானும் பரஸ்பரம் சந்திக்க விழைந்தும் முடியாமல் போனது துரதிர்ஷ்டமே, முகவரி முழுமை யின்மையும் ஒரளவு என் கவலை யீனமும்,
சுற்றுலாக்களின் போது சந் திக்க நேர்ந்த டுனீஷிய கவிஞர் யூசுஃப் (அரபு மொழியில் எழு. துபவர்), பங்களாதேஷின் இளம் ஆராய்ச்சியாளரும், இசைக் கலை ஞருமான ஜலால்ட் மறக்க முடி யாதவாகள.
இனி வகைக் கொன்ருக ஒரு சினிமா, ஒரு பாலே, ஒரு சர்க்கஸ் இப்படி. சினி மா. வஸிலி ஷ"க்ஷினின் பேச்கி லாவச்கி* பாலே, லெ னின் கிராத்தில் பார்க்கக் கிடைத் தது. "பல்ஷோய் தியேட்டரில் ரிக்கற் கிடைக்கவில்லை. மாஸ்கோ சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் சமா தானம் பற்றியே பேசுகின்றன.
மேலே சொன்னதெல்லாம் மல்லிகைக்காக உடனே சொல்ல நேர்ந்தவை. இரை மீட்டு அநு பவித்து, நினைத்து நினைத்து, குறிப்பேட்டைப் புரட்டியெல் லாம் வரையும் போது தொட ராக நீழும். ஏதோ ஒரு எழுத் துருவில், எந்த ஒரு பத்திரிகை யிலோ அது விரைவில் சாத்திய மாகும்.
*

இலக்கியப் பாலத்தை
அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்!
ஒன்றரை மாதங்களுக்கிடை யில் இரண்டு தடவைகள் தமிழ கம் போய் வரவேண்டிய சந்தர்ப் பம் இந்த ஆண்டுதான் எனக்கு ஏற்பட்டு விட்டது.
வழக்கமாக ஆண் டு க் கு இரண்டு தடவைகள் என்கின்ற முறையில் தமிழகம் போய் வரு வது என்பதுதான் எனது திட்ட மாக இதுவரை இருந்து வந்தது. கடந்த இருபத்தி மூன்று ஆண்டு களாகத் தமிழகம் போய் வரும் எனக்கு இந்த ஜூன் ஜூலை மாதங்களிலே இரண்டு தடவை கள் போய்வர வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
முதல் தடவை நான் போக வேண்டுமென நினைத்தது மிக முக்கியமரனது. தமிழ கத் தி லுள்ள பல இலக்கிய நண்பர் கள் என்னைப் பற்றி அடிக்கடி விசாரித்தனர். பலர் சடிதங்கள் மூலம் எனது சுக சேமங்களைக் கேட்டு எழுதியிருந்தனர். நாட் டில் நடந்த கசப்பான சம்பவங் களினல் நான் பாதிக்கப்பட்டு
விட்டேனே எனப் பலர் பயந்து
விசாரித்துக் கொண்டிருந்தனர்.
குறிப்பாக ராஜபாளையம் நண்பர்கள், குருசுவாமி, திருச்சி ம. ந. ராமசாமி, ஜெயகாந்தன். ராஜம் கிருஷ்ணன், மேத்தா , வைரமுத்து, ராமகிருஷ்ணன், தி. க. சி., ராமலிங்கம், வல்லிக் கண்ணன். அசோகமித்திரன்
A
-டொமினிக் ஜீவா
இன்னும் பல்வேறு நண்பர்கள் எனது தற்போதைய நிலை பற்றி அங்கு ஸ் ள நண்பர்களிடமெல் லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்பட்டிருந்தனர். கடந்த ஜனவரி மாதமே நான் தமிழ கத்திற்குப் போவதற்காகத் திட் டமிட்டிருந்தேன்.
சூழ்நிலை காரணமாக அந்த ஜனவரியில் என்னுல் போக முடி
யவில்லை. ஏப்ரலில் போகலாம்
என ஒத்திப் போட்டிருந்தேன். ஏப்ரலிலும் போய்ச் சேர வாய்ப் பிருக்கவில்லை.
ஆகவே இந்த ஜூன் மாதம் போவது எனத் திட்டமிட்டபடி போய்ச் சேர்ந்தேன்.
கப்பல் மூலமாகத்தான் என் னுடைய பிரயாணத்தை மேற் கொண்டேன். ராமேஸ்வரம் போ ய் ச் சேர்ந்தவுடன் சகல நண்பர்களுக்கும் நான் தமிழகம் வந்துள்ளதைத் தபால் மூலம் தெரியப்படுத்தி விட்டே மதுரை போய்ச் சேர்ந்தேன்.
தலைமன்னரிலிருந்து ராமா னுஜம் கப்பல் மூலம் grTGLD6h) வரம் போய்ச் சேருவது என்பது அப்படிப் பிரயாணம் பண்ணிய வர்களுக்குத்தான் அதன் சிரமங் கள் தெளிவாகத் தெரி யும். அத்தனை கஷ்டப்பட வேண்டிய சங்கதி அது. ஆனல் அதிர்ஷ்ட வசமாகக் கப்பலில் வேலை செய்

Page 25
யும் பல நண்பர்கள் நல்ல தர lOfTT ல க் கி ய ரஸிகர்கள். மனிதர்க மதிக்கத் தெரிந்த நல்ல இதயங்கள். முக்கியமாக சசிகாந்த், ராமதுரை மற்றும் நண்பர்களைக் குறிப்பிடலாம். அவர்களின் இதயபூர்வமான அனுசரணையுடன் தமிழக ம் போவது என்பது எனக்குச் சிர மமாக இருக்கவில்லை.
மதுரையில் இம்முறை பல புதிய நண்பர்களைச் சந்திக்கக் கூடிய அரிய வாய்ப்பு ஏற்பட்
-து.
ராஜபாளையம் நண்பர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நான் போயிருந்த அன்றிரவு எனது மதிப்புக்குரிய பல் எழுத்தாள நண்பர்கள் என்னைச் சந்திக்க நான் தங்கியிருந்த ஹோட்ட லுக்கு வந்திருந்தனர், இர வு நடுச் சாமம் வரைக்கும் என்னு டன் உரையாடுவதிலேயே தனி
யின்பம் கண்டு நீண்ட நேரமாக”
என்னுடன் கதைத்துக் கொண் டிருந்தனர்.
என்னுடைய அன்பிற்கும் மதிப்புக்குமுரிய கோ. ச, பலரா மன் வரவில்லை. விசாரித்தபோது உடல் நலக் குறைவினுல் வீட் டில் ஒய்வெடுத்துக் கொண்டிருப் பதாகச் சொன்னர்கள். காலையில் முதல் வேலையாக அவரது இல் லம் தேடிச் சென்று அவரைப் பார்த்து உடல் நலம் விசாரித்து விட்டு வந்தேன். நண்பர் ஜெக நாதராஜா என்ன அழைத்துச் சென்ருர்,
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு கோதண்டம், ஜெகநாத ராஜா, செல்லம், துரைராஜ் போன்ருேர் மிக முக்கியமான ஒரு யோசனையைத் தெரிவித்த னர். "ராஜபாளையம் சிறப்பு இதழ்’ ம ல் லி  ைக வெளிக் கொணர வேண்டும் என்ற தமது ஆசையையும் வெளியிட்டனர்.
நான் இதுவரையும் இப் படி யோசித்தவனல்ல. இலங்கைப் பிரதேசச் சிறப்பிதழ்கள்தான் எனது சிந்தனையில் இதுவரை
வட்டமிட்டு வந்த தே தவிர, நாடு கடந்து சிறப்பிதழ் போட வேண்டும் என எனது மூளையில் தட்டுப்பட்டதில்லை.
"இலங்கை இலக்கிய நண்பர் களுக்கு ராஜபாளையம் அந்நியப் பிரதேசம் அல்ல. பார்க் கப் போனல் ஈழத்துக்கு நாங்கள் தான் மிக மிக நெருக்கமான வர்கள். எனவே யோசிக்காமல்
சிறப்பிதழ் தயாரிக்க முன்வாருங்
கள்" என வற்புறுத்தினர்கள் நண்பர்கள்.
கடைசியில் கலந்து பேசி
வருகின்ற 85 வது ஆண்டு ஜன வரி பெப்ரவரியில் சிறப்பிதழ் வெளியிடலாம் என முடிவுக்கு வந்தோம். சகல பொறுப்புக்களை யும் ராஜபாளையம் நண்பர்களே பங்கேற்பது எனவும் பொறுப் புத் த லை  ைம யாக நண்பர் கோதண்டம் இயங்குவதெனவும் முடிவு செய்தோம்.
ராஜபாளையம் சிறப்பிதழ் மல்லிகை மலராக மலரும் என அறிந்ததும் அந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட மனக் கு துர கல ம் சொல்லி முடியாது. அத்தனை மகிழ்ச்சி அனைவர் நெஞ்சிலும்;
சென்னைக்கு வந்தேன். шоGi) லிகையின் அபிமானியும் தனிப் பட்ட முறையில் என் மீது பேர
பிமானமும் கொண்ட நண்பர்
ரங்கநாதன் இந்திரா ந க ரி ல்
இப்பொழுது தங்கியிருக்கிருர்.
அவர் நான் தமிழகம் வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே நான் எங்கும் தங்காமல் தனது இல்லத்திலேயே தங்க வே ண்டு மென அன்புக் கட்டளையிட்டிருந் தார். கடிதங்கள் மூலம்,



Page 26
மனசுக்குப் படுகின்றது. 65)56). Ef y
பதி, சிவத்தம்பி போன்ற பாரிய விமரிசகர்களின் பார்வையாலும் தாக்கத்தாலும் நாம் ஆரோக்கி யமான இலக்கியத் திசைவழி யில் சென்று கொண்டிருக்கின் ருேம்.
பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வளர்ந்து வரும் நமது
எழுத்தாளர்கள் நாவல் துறை நிலை
யில் புதிய சாதனைகளை உருவாக்கி வருகின்றனர். பல லக்கியக் கருத்தோட்டங்களைப் பிரதிபலிக் கும் நம்மிடையே தலை சிறந்த எழுத்தாளர்கள் உருவாகி வரு கின்றனர். இவர்களின் பெய ரைத் தெளிவாகவே குறிப்பிட லாம். அப்படித் திறமை படைத்த பல சிருஷ்டியாளர்கள் மத்தி யிலே ஒடுக்கப்பட்ட - நசுக்கப் பட்டமச்கள் பகுதியில் இருந்து முளைவிட்டு வளர்ந்த எழுத்தா ளர்கள் பலரும் இன்று பிரபல மானவர்களாக மக் கள T ல் கணிக்கப்படுகின்றனர்' எ ன் று அப்பேட்டியில் " குறிப்பிட்டிருந் தேன்.
இப் பேட்டி வரும்போது நான் நாடு திரும்பிவிட்டேன்.
எனது இக் கருத்துக்கள் பிரசுர
மாகியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது, தமிழகத் தில். இங்கு ம் பலர் மனக் குமைச்சல் பட்டதாகவும் பின் னர் அறிந்து கொண்டேன். அந்த தாய் ஏட்டில் என்னையும் நமது எழுத்தாளர்களையும் கன்ன பின்ன எனத் திட்டி, யாரோ எழுதியிருந்தார்களாம். நான் அதைப் பற்றி சிறிது கூடக் கவ லைப்படவில்லை. சஞ்சிகை ஒன்று என் னை வருந்தியழைத்து ஒரு பேட்டியைப் பிரசுரிக்கிறது என் முல் தனக்கு விருப்பமில்லாமல்
ந்தாலும் எனது கருத்துக் ಕ್ಲಿಲ್ಲಿ'? கெளரவிக்கின் றது என்றுதானே அர்த் தம், எனது கருத்துக்களை ஏற்றுக்
கொள்ளப்படாமல் இருக்கலாம், ஆனல் கெளரவிக்கப்பட வேண் டும் என விரும்புபவன் நான். ஏனெனில் நான் வலியப் போய்ப் பேட்டி தரவில்லை. அச் சஞ்சி கைகளைக் கெளரவித்தே பேட்டி தருகின்றேன். மற்றென்று நான் வேருெரு நாட்டில் வசிப்பவன். மறுப்புக்களை உடனு க் குட ன் தெரிந்து கொள்ள Փւգ.Ա In 5 யும் உள்ளவன். எனது கருத் துக்கள் மறுக்கப்படக் கூடாத வையல்ல. ஆனல் அதில் ஒரு நாகரிகம் வேண்டும். சும் மா திட்டுவது கருத்தை மறுப்பதற் கான சரியான வழியல்ல.
இதை ஏன் இங்கு குறிப்பி டுகிறேன் என்ருல், என்னைச் சரி யாகப் புரிந்து கொண்டவர்கள் இங்கு என் கருத்துக்கள் பூரண மாகத் தெரியாததால் ம ன க் குழப்பம் அடையக் கூடாது என் பதற்காகவே.
நான் நமக்குள் ஆயிர ம் இலக்கியச் சண்டைகள் போடு வேன்; போட்டிருக்கின்றேன், ஆனல் மதிக்கப்படத் தக்கவர்
கள் மாற்றும் கருத்துக கொண்
டவர்களாக இருந்தாலும் நான் அவர்களது திறமையைக் கணம் பண்ண என்று மே தயங்கிய
தில்லை. கொள்கை, கருத்துப் போராட்டம் நடத்துவேனே தவிர, கொள்கை அ ல் ல து
கருத்து வெறிக்கு என்று மே நான் ஆட்பட்டது கிடையாது.
நான் தமிழகம் செல்லும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நமது முழு நாட்டின் பிரதிநிதியாகக் கருத்துக்களையும் அபிப்பிராயங் களை யும் சொல்லியிருக்கின் றேனே தவிர, ஒரு குறிப்பிட்ட குழுவின் பிரசாரகனகச் செயல் பட்டதே இல்லை. இதை என் னையும் எனது கருத்துக்களையும் எதிர்ப்பவர்கள் கூட ஒ ப் புக் கொள்வார்கள்.
48

நர்மதா ராமலிங்கம், என். .பி. ஏச், உசேன், கலைஞன் மாசில்லாமணி போ ன் ருே ர் என்னை அடிக்கடி கேட்பார்கள்: 'என்ன ஸார் நம்மைத் தேடி இங்கு வாறவங்களெல்லாம் தங்க தங்க புத்தகங்களைப் போடும் படிதானே ஸார் நச்சரிப்பாங்க. ஆன நீங்க ஒண்ணுதான் உங்க தேசத்தைச் சேர்ந்த மற்றவங்க புஸ்தகங்களைப் போடும்படி எங் களைப் பாடாய்ப் படுத்திறீங்க! இது எங்களுக்கு விசித்திரமாக இருக்கே ஸார்!"
*அவங்களெல்லாம் தங்களுக் குத் தாங்களே எழுத்தாளர். நான் எழுத்தாளர்களுக்கே எழுத் தாளன் ஸார் எனத் தமாஸா கச் சொல்லி வைப்பேன்.
என் மன அடிப்படை அபி லாசைகளைப் புரிந்து கொண்ட அவர்கள் என்னில் ஒரு தனி அடபிமானமே வைத்துப் பழகு வாாட்கள்.
வானதி உரி ைம ய |ா ளர் திருநாவுக்கரசு மகளுக்குத் திரு மனம், வரவேற்பு விழா ராஜே ஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடை பெற்றது. கவிஞர் மேத்தா மூலம் அல்லழக்கப்பட்டிருந்தேன். பிரமாண்ட மான வர வேற்பு: அங்கே பல எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப் புக் கிடைத்த து:
தீபம்’ காரியாலயத்தில் வல்லிக்கண்ணன் ? தலைமையில்
கலந்துரைய பாடலுக்கு ஏற் Po தனர், சென்னை கலை இலக்கிய ந1ண்பர் கழகத் தினர். அதிலும் நமது ஆரோக் கியமான இலக்கிய வளர்ச்சிப் பாதை பற்றிக் குறிப்பிட்டேன். விளக்கம் கேட்டனர் சிலர். நமது மதிப்புக்குரிய வித்தியானந் தன் உபவேந்தராகவூம், கைலா சபதி, சிவத்தம்பி பேராசிரியரா
பல கருத்துக்களை
கவுமுள்ள யாழ்ப்பாணப் பல்க லைக் கழகம் பேராசிரியர் வான மாமலைக்கு டாக்டர் பட்டம் கொடுத்துக் கெளரவித்ததையும் சமீபத்தில் ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் திற்கு வ ரு கை தந்த போது அவர்களைச் சிறப்பித்ததடன்
நமது உபவேந்தர் மாடியிலிருந்து
கீழே இறங்கிவந்து தமது காரைக் கொடுத்துதவியதுடன் கார் க் கதவைத் திறந்து ஏற வைத்து வழியனுப்பிய பண் பா ட் டு ப் பெருமையையும், சூனியத்தில் இலக்கிய விமரிசன ஆளு  ைம நெறி கட்டாது. அதற்குச் சரி யான உரம் இருக்க வேண்டும், அப்படிப்பட்ட பசளை இருந்தத ஞல்தான் கைலாசபதி, சிவத் தம்பி போன்ற ஆளுமை மிக்க விமரிசன ஜாம்பவான்கள் ஈழத் தில் தோன்ற முடிந்தது’ என்றும் முன் வைத்து விளங்கப் படுத்தினேன்
கணிசமான எழுத்தாளர்கள் பலர் இக் கூட்டத்தில் கலந்து சுொண்டு சிறப்பித்தனர். நமது பிரச்சினைகள் சம்பந்தமாகப் பல கேள்விகள் கேட்டனர்,
L னு ள் ள கருத்தரங்காக இது அமைந்தது எனப் பின்னர் சந்
தித்த போது பலர் பாராட்டி
GST rr ,
வீர. வேலுச்சாமியும் மேத் தாவும் வற்புறுத்தியதற்கமைய ஒரு இரவு மேத்தாவின் வீட்டி லேயே தங்கி இரவிரவாக இலக் கியப் பிரச்சினைகள் பற்றியே பேசித் தெளிந்தோம்.
இரண்டாவது தடவை தமி ழகம் போனது நண்பர் ரங்க நாதனுடைய இர ண் டா வது மகனுடைய திருமணத்தை முன் னிட்டே. மல்லிகை வேலைகள் தலைமேல் அழுத்திக் கொண்டி ருந்தன, போவதற்கு உத்தேசமே
49

Page 27
இல்லை. நண்பர் ரங்கநாதனைத்
தெரிந்தவர்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். அப்படிப்பட்ட நல்ல தயம் படைத்தவரது
குடும்ப முக்கியத்துவ நிகழ்ச்சி களில் எழுத்தாளர் யாராவது பங்கு பற்றுவார்களா என விசா ரித்த பொழுது யாருமே போகத் தயாரான நிலையில் இல்லை என்று தெரியவந்தது.
எனவே நானே போ க த் தீர்மானித்தேன். அவரும் சென் னையில் இருந்து தந்தி கொடுத் திருந்தார்.
திருமணத்தைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வதில்லை என்ற மன முடி வுடன்தான் தமிழகம் சென்றேன்.
ஆனல் அ ப் படி ஒதுங்கி யிருக்க விடவில்லை இ லக் கி ய நண்பர்கள். வலம்புரி ஜான் அவர்களினது சொந்த வெளி யீட்டகம் வெளியிட்ட கவிதைத்  ெத ர குதி வெளியீட்டு விழா விலும், கவிஞர் காமராசனுக்கு பாரதிதாசன் பரிசு கிடைத்த பாராட்டு விழாவிலும் , கலந்து கொண்டேன்
மேத்தா த லே  ைம யில் பாராட்டுக் கூ ட் ட ம் நடை பெற்றது.
கவிஞர்கள் அப்துல் ரகுமான், மீரா, பொன்னடியான், சுராத ஆகிய கவிஞர்கள் கலந்து கொண் டனர். கங்கை அமரன் கவிஞர் காமராஜனுக்குப் பொன்னுடை போர்த்திக் கெளரவித்தார்.
இரவு அப்துல் ரகுமானும், மீரா வும், அறிவுமதியும், நானும் ஒன்ருகத் தங்கியிருந் தோம். பல இலக்கியப் பிரச்சி னைகள் பற்றி ப் பேசினுேம். அன்னம் விடு தூது" என்ற
தமது சஞ்சிகையை ஒழுங்கான
மாத இதழாக வெளியிடுவதற்கு
50
மல்லிகை அனுபவங்களைக் கேட் டுத் தெரிந்து கொண்டார் மீரா. ஒரு முக்கியமான சந்திப் பாக இது அமைந்தது.
திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதிக்கப்படத்தக்க பல இலக் கிய நண்பர்கள் மண விழாவில் கலந்து சிறப்பித்தனர். அவர் களையெல்லாம் மணவீட்டார் சார்பில் வரவேற்று உபசரிக்கும் தொண்டு எனக்குத் தரப்பட்டது. வெற்றி க ர மாகத் திருமண நிகழ்ச்சிகள் ந  ைட பெற்று முடிந்தன.
நண்பர் ஜெயகாந்தனை அவ ரது ஆள்வார் பேட்டைக் காரி யாலயத்தில் போய்ச் சந்தித் தேன். அவரிடம் இருக்கக் கூடிய சிறப்புக் குணம் என்னவென்ருல் நட்பை நட்பாக மதித்து அன்பு செலுத்துவது. சமீப காலங் களில் நமது பிரச்சினை சம்பந்த மாக எனக்கும் அவருக்கும் பத் திரிகை வாயிலாக ஏற்பட்ட கருத்துப் போர் பற்றி இலக்கிய நண்பர்கள் பலரும் அறிந்திருப் பார்கள். நான் கூட அவரை விமரிசிக்கும் பொழுது கொஞ் சம் கடுமையான பதங்களையே
உபயோகித்திருந்தேன். இது அவருக்கு நன்கு தெரி யும், இருந்த போதிலும் கூட எங்க ளது பழைய நட்பைக் கணம்
பண்ணி பழைய மாதிரியே என் னிடம் அன்பு காட்டி உபசரித்
தார். என் மனதில் சொல்லிக் சுொண்டேன்: "என்ன இருந்தா லும் ஜெயகாந்தன் ஜெயகாந்
தன்தான்!”
சர்ச்சைக்குரிய எந்தப் பிரச் சினை பற்றியுமே நாம் பேசிக் கொள்ளவில்லை. நண்பர்களா கவே பேசிக் கொண்டோம்.
நான் இலங்கைக்குப் புறப் படுவதற்கு முதல் நாள் தேவ

நேயப் பாவாணர் அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. ஈழத்துத் - தமிழ கத்து இலக்கியத் தொடர்புகள்" என்ற தலைப் பில் கருத்துக்கள் சொல்லப்பட் ன. பன்மொழிப் புலவர் ஜெக ரதராஜா தலைமை வகித்தார். திரு. சிவபாதசுந்த ரம் கருத்தர கை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினர். அசோக மித்திரன். சி க ர ம் செந்தில்நாதன் போன்ருேருடன் நானும் கருத்துக்சுள் சொன் னேன்.
"இலக்கிய உலகிலே இரண்டு சாதிகள் உண்டு. ஒரு சாதி வாழைச் கன்று நட்டு வளக்கும் சாதி, இன்னெரு சாதி மாங் கன்று வளர்க்கு சாதி! நீண்ட
காலம் பொறுமையாக இருந்து.
பயனைப் பெறத் தயாராக இல் லாமல் ஏதோ மாதா மாதம் எழுதிப் பணம் பண்ணுவதுடன் பால் உணர்வுகளை அடி நாதமா கக் கொண்டு தமது படைப்புக் களை உருவாக்கிப் பரபரப்புப் புகழ் தேடும் சாதிதான் வாழை மரச் சாதி. வைப்பவனுக்குக் கூடிய சீக்கிரம் பழம் தருவது வாழை மரத்தின் தன்மை. சுஜாதா, புஷ்பா தங் கத்துரை, இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி போன்ருேர் இப்படி யானவர்களே. மற்ருெரு சாரார் மாங்கன்று வைத்துப் பச
யிட்டுக் காலம் காலமாகக் காவ லிருப்பவர்கள். அடுத்த வீட்டுக் காரனுடைய ஆட்டுக் குட் டி வந்து குருத்தை ஒருகடி கடிக் கும். மீண்டும் துளிர் விடப் பல மாதங்கள் செல்லும். இப்படியே கட்டிக் காத்து மாங்கன்றை வளர்ப்பவனுக்கு அம் மாமரம் வளர்ந்து பல ன் கொடுக்கும் என்பதுமில்லை. நீண்ட ஆண்டு களுக்குப் பின்னர்தான் வளர்த் தவன் பரம்பரைக்குப் பழ ம் தரும். வாழை சீக்கிரம் பழம்
வாழைக் கன்று
தருவதுடன் வெகு சீக்கிரமே அடியழிந்து போய்விடும். ஆனல் சிரமப்பட்டு வளர்க்கும் மாமரம் வாழைமரம் போலச் சீக்கிரம் அழிந்து ஒழிந்து போகாது. காலம் காலமாக வளர்த்தவன் பரம்பரைக்கு நற் கனி களை த் தந்து கொண்டேயிருக்கும்!
படைப்பாளிகள் உ ட ன் பயன்தரும் வாழைமரச் சாதியா. அல்லது நிரந்தரமாகக் கனி தர முயலும் மாமரச் சாதியா என் பதை அவர்களினது படைப்புக் களை வைத்தே மக்கள் எடை போட்டு விடுவார்கள். இலங்
,கையில் பெரும்பாலான சிருஷ்டி
யாளர்கள் மாமரச் சாதியைச் சேர்ந்தவர்கள். எமக்கு வாழை மரச் சாதியினரிடம் எந்தவித வெறுப்புமில்லை. அவர்கள் மாம ரச் சாதியினரானல் பரம்பரை பரம்பரையாகப் பயனை இவர் கள் சந்ததியினரே துய்க்கலாம் என்பதுதான் நமது பெரு விருப் பமாகும்.
இன்னென்றையும் கூறி வைக்க விரும்புகின்றேன். சென்ற தடவை சென்னைக்கு வந்தபோது ஒரு புதுக் கவிதை நூல் வெளி யீட்டு விழாவுக்குச் சென்றிருந் தேன். அப் புதுக் கவிஞர் புதிய வர். பாராட்ட வந்த பேச்சா ளர் எல்லாம் அவரை இமயத் தின் கொடு முடி என ஏற்றிப் போற்றினர்கள். இவரை விடக் கவிஞனே இல்லை எனப் புகழ்ந் தார்கள். இம் முறை ஒரு கவி தைப் புத்தக வெளியீட்டு விழா விற்குச் சென் றிருந்தே ன்.
அடுத்து நோபல் பரிசு பெறக்
கூடிய மகத்தான கவிஞர் இவரே தான். இவர்தான் மிகச் சிறந்த கவிஞர் என வானளாவப் புகழ்ந் தார்கள். இளம் படைப்பாளர் களைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டியது முக்கியம்தான். அதற்காக இப்படியான அதீத
54

Page 28
கழாரப் பாராட்டுக்கள் அந்த கவிஞர்களேயே குருக்குத்தி படிக்க வைத்து விடும் இதைப் பொறுப்பான கவிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொறுப்புள்ள நாம் மதிக்கின்ற மூத்த கவிஞர்களே நான் மேடை
பொன்றில் கண்டேன். அவர் இவரைப் புகழ்கின் ருர் இவர் அவரைப் புழுகுகின்ரர். பரஸ்
பரம் முதுகு சொறிதல் நடக் கின்றது, தரமான வாசகர்க ஞக்கு இவர்களேப் பற்றி நன்கு தெரியும். ஒருவரை ஒரு வர் மேடையில் புகழ்வதால் எரிச்சல் தான் ஏற்படுகின்றது.
நான் தமிழகத்துத் தலேநக ரில் நின்று இந்தக் கருத்துக்க ளேச் சொல்லுகின்றேன். இது கசப்பாக இருக்கலாம் என்ன்ேப் போல உங்களில் சிலர் நமது நாட்டுக்கு வந்து நமது குறை பாடுகளேயும் புட்டுப் புட்டு வையுங்கள். நாம் குறைபாடுக ளேயற்ற நிறைந்தவர்கள் என் பது நமது கருத்துமல்ல.
ஒரு கூட்டத்தில் சினிமாப் பிரமுகர் ஒருவர் கருத் துச் சொன்னூர். புத்திசாலிகளே சினிமாத் துறைப் பக்கம் தலே வைத்துப் படுக்காதீர்கள், மடை பர்கள்தான் அதற்கு த் தீனி போடத் தேவை. சிந்தனேயா ளர்கள், சாதனேயாளர்கள் அத் தப் பக்கமே தலே வைத் துப் படுக்காதீர்கள். நாமெல்லாம் முட்டாளுகளுக்குத் தீனி போடும் மடையர்கள்' என்ற கருத்துப் படி பேசிஞர். இந்தப் பேச்சைச் சென்ஃன்க் கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உற்சாக மாகக் கைதட்டி வரவேற்ருர் 压配TT。
இது
(E. rail
எத்தனே வெட்கக் கருத்து வெகுஜன
சாதனங்களேக் கண்டு பிடித்த வர்கள் குறிப்பாக நவீன சினி மாக் கருவிகளேக் கண்டு பிடித்த வர்கள் இந்த மர மண்டையர் களின் அப்பனுமல்ல பாட்டனு மல்ல விஞ்ஞானிகள், மேதை கள் தங்கள் வாழ்வையே பன யம் வைத்து விஞ்ஞான உண் மைகளேக் கண்டு பிடித்த அந்து அறிஞர்களின் சாத ன் ங் சுள்ே இன்று தமது வருமான உயர் இக்காகப் பயன் படுத்தி வாழும் இவர்கள், இன்று திறமைசாலி களும் கெட்டிக்காரர்களும் சிந்த ன்ேபாளர்களும் அந்தத் துறைக் குள் வந்து நுழைந்துவிடாமல்இப்படியானவர்கள் வந்து புகுந்து விட்டால் தம்மைப் போன்ற சரக்கற்றவர்கள் ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்ற சொந்தப் பயத்தினுலும்இயல்பான கிலியினு லும்ே-இப்படியான தடுப்பு வை யங்களேப் பொது மேடைகளில் ப கி ரங்க மாக க் சொல்லத் துணிந்து விடுகின்றனர்.
சத்யஜித் ரேயை, சியாம் பெண்கவே, மிருனுள் சென்னே, கருத்து வித்தியாசம் இருந்தா லும் நமது பாலச்சந்திரையும் கமரா மூலம் காவியம் படைக் கும் பாலு மகேந்திராவைத் தத் துள்ள சினிமா உலகைப் பார்த் துத்தான் இந்த கா மேதைகள் தமக்குத் துனேயாக அறிவிவி களே அங்கு நிலே கொள்ள முடி யும் என்ற நச்சுக் கருத்துக்களேப் பரப்பி வருகின்றனர்.
நவ தமிழகம் இப்படியான வர்களின் அடிமட்டக் கருத்துக் களேக் குப்பைக் கூளங்களுக்குள் ஒதுக்கிவிடும் என்றே நான் கருதுகின்றேன்" மேற் கண்ட வாறு எனது கருத்துக்களே அக் கூட்டத்தில் சொல் லி வைத் தேன்.
■盟

 ைவளர்ந்த எழுத்தாளர் சிலர் தாம் படித்த இலக்கியங்கள் பற்றிப் பல இலக்கிய மேடைகளில் தற்பெருமையடித்துக் கொள்ளு கின்றனரே, இவர்கள் குற்றும் தங்களேப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதில்வேயே, ஏன்?
கல்முனே அன்பிதயன்
மெத்தப் படித்தவன் வேண் டு மென் ர ல் படிப்பாளியாக இருக்கலாமே தவிர, படைப்பா எளியாக மாட்டான் படிப்பை மேடையில் முழங்குபவன் உண்  ைம யான படிப்பாளியுமல்ல. இவர்களின் தற்பெருமை பற்றி ஏன் கவலேப் படுகின்றீர்கள்? அமைதியாக இருந்து கொண்டு இந்த நாட்டுக்குக் கன மா ன இலக்கிய சேவை செய்து கொண் டிருப்பவர்களேப் பார்த்து ப் பெருமை கொள்ளலாம் நீங்கள்.
O எல்லா வெளியீடுகளிலும்
தமது பெயர் வந்தால்தான், தான் மக்கள் மத்தியில் நிலே யான ஒர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் எனச்
வெ ஈழத்து இலக்கியவாதிகள் வாதிடுகின்றனரே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
தையிட்டி, ம, வசந்தன் ஜன ரஞ்சக எழுத்தாளர் களாக இவர்கள் மிளிரலாம்.
ஆஞல் மக்கள் மத்தியில் செல் வாக்குப் பெற்றுவிட முடியாது. அதிகம் அதிகமாக எழுதுவதி ல்ை மாத்திரம் மக்கள் மத்தியில் வேரோடி விடலாம் என்பது தப்புக் கணக்கு, தரமானதைக் காலதாமதமாக எழுதினுலும் மக்கள் புரிந்து கொள்வார்கள். எல்லாப் பேப்பரிலும் எனது பெயர் வாரா வாரம் வரவேண் டும் என்பது ஒரு பேராசையா கும். இது அரசியல் வாதிகளுக்கு இருப்பது ஒரளவு நியாயமாக லாம். ஆனுல் தரமான எழுத் தாளனுக்கு இந்த ஆவல் இருந் தால் அவன் நாளடைவில் மவி னப்பட்டுப் போய்விடுவான்.
இ 20 வது ஆண்டு மலர் எப் பொழுது வெளிவரும்? நான் மலரைப் பார்க்க ரொம்பவும்

Page 29
ஆவலாக இருக்கின்றேன்
1ாசறை. க. ஜெகதீசன்
மலர் வேலையை ரொம்பத் துரிதமாகவும் பொறுப்பாகவும் செய்து வருகின்றேன். தேசிப் பிரச்சினைகள் இடையிடையே குந்தகம் விளைவிக்கின்றன. é5ñ.Lq. uLI சீக்கிரம் மலர் வெளிவரும். உங் கதுை ஆவலை நான் LD 607g5fTIT மதிக்கின்றேன்.
9 தமிழகம் சென்று வந்தீர் களே, எல்லா எழுத்தாளர் களையும் சந்தித்தீர்களா?
மல்லாகம். Gou. அருணுசலம்
எனக்குத் தெரிந்த சக ல எழுத்தாளர்களையும் பெரி சு, சின்னன் என நோக்காது சந் தி த் து உரையாடினேன். ஒவ் வொரு தடவை த மி ழ க ம்
போகும் ாேபதும் பல புதுப் புது முகங்களை நான் சந்தித்துப் பழ கும் வாய்ப்பு எனக்கு ஏற்படு கின்றது.
0 சென்ற இதழில் வெளிவந்த
"எழுச்சி சிறுகதை முன்னர் சு டர் சஞ்சிகையில் வெளிவந் தது. ஆசிரியர் இரத்தினவே
லோன் எமக்குக் காது குத்த முனைகின்ருரா?
மாதகல்: as. 5Lossmub
உங்களுக்கு மாத்திரமல்ல, மல்லிகைக்கும் சேர்த்துக் காது குத்த முனையும் இப்படியானவர் கள் பற்றி எதிர் காலத்தில் எச்சரிக்கையாக இருப்போம்.
 ைஇந்தத் தடவை தமிழகப் பயணத்தில் ரசமான சம்ப
வங்கள் ஏதாவது உங்கள் அனு
பவத்தில் ஏற்பட்டதுண்டா?
கோப்பாய். s. Joser
வானதி பதிப்பக உரிமையா யாளரின் ம க ள் வானதியின்
திருமண வர ே வற்பு விழா
ராஜேஸ்வரி கல்யாண மண்ட பத்தில் கோலாகலமாக நடை பெற்றது. கவிஞர் மேத் தா
மூலம் எனக்கு வானதி அதிபர் அழைப்பனுப்பியிருந்தார். 综f காழியின் இசை முழக்கத்துடன் விழா நட்ைபெற்றது. இரவு விரு ந் தி ல் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என வானதி திருநாவுக்கரசு கேட்டுக் கொன்
1..nrii. டப்பக்கம் இரா. வேலுச்சாமி வலப் பக் கம் மேத்தா உட்பட சுவையான
விருத்தை அருந்திக் கொண்டிருந் தேன். ர ஸம், மே 1ார் என இரண்டு கிண்ணங்களில் முன்னே வைக்கப்பட்டிருந்தன. ரஸத்தை ஊ ற் றிச் சாப்பிட்டு விட்டு, மோரை எடுத்துச் சோற்றில் கவிழ்த்து ஊற்றிப் பிசைந்தேன். அதே வேளை முன்னல் சாப்பிட் டுக் கொண்டிருந்த இரு குமரி கள் ‘களுக்’ எனச் சிரித்த சப் தம் கேட்டது. நான் அதைச் சட்டை செய்யாமல் பிசைந்த சாதத்தை வாய்க்குள் திணித் தேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்கள் சிரித்ததின் சூட்சுமம் எனக்கு விளங்கியது. ரஸத்து டன் சம மாக வெள்ளையாக இருந்ததால் நானதை மோர் என நம்பிச் சாப்பாட்டில் ஊற்றி விட்டேன். பால் பாயாசம் அது. மெதுவாகச் சமாளித்துக் கொன் டேன்.
பின்னர் இந்தத் தமாஸை மேத்தாவிடம் சொன்ன போது, அவரும் மதுரையில் தனக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட் டதாகக் கூறினர். மின் சா ர வெளி ச்ச மயக்கத்தில் நெய் யையே ரஸம் என நினைத்துச் சாதத்தில் ஊற்றிக் கொண்ட சம்பவத்தை நகைச் சுவையுடன் என க்கு விளங்கப்படுத்தினர்;
54

வானதி திருமண விருந்து எனக்கு என்றென்றைக்கும் ஞாபகத்தில்
இருக்கும்.
இ நீங்கள் ஜூனியர் விகடனுக்
குக் கொடு பூத பேட்டியைப் படித்தேன். ரொம்ப நல்லாக இருந்தது. அந்தப் பேட்டிக்காக
நீங்கள் ஜூனியர் விகடன் காரி யாலயத்திற்குப் போயிருந்தீர்
களm ?
மானிப்பாய். Tah. 5us T
என்னுடைய "அனுபவ முத்
திரைகள்" நூலின் பகுதியை மறுபிரசுரஞ் செய்ததற்காகக் *குமுதம்" பணம் தருவதாக
ஒப்புக் கொண்டிருந்தது. அது சம்பந்தமாக நான் ஒரு தடவை கு மு தம் காரியாலயத்திற்கும் போயிருந்தேன். எ ன் னு டன் நீல பத்மநாமனும் வந்திருந் தார். அது தவிா, நான் என் றுமே பத்திரிகை, காரியாலயங் களுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருப்பவனல்ல. பே ட் டி நர்மதா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உங்க செய்திகள்
O சமீப காலங்களாக
ளைப் பற்றிய பத்திரிகைகளில் னவே, பொதுவாகப் பாராட் டு க் க ள் தெரிவிக்கப்படுகின்ற னவே காரணம் என்ன?
த. செந்தில்
உண்மையான உழைப்பு, நேர்மையான செயல் என்ருே ஒரு நாள் மதிக்கப்படத்தானே வேண்டும்! என்னைப் போற்று வதைத்தானே நீங்கள் படிக்கின் றிர்கள். மறைமுகமாகப் பலர் என்னைத் திட்டுவது உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா?
அடிபடுகின்ற
 ைஉங்களுடைய புதிய புத்த கங்கள் ஏதாவது தயாரா கின்றனவா? அவை எப்பொழுது எமக்குக் கிடைக்கும்? பதுளை. ஆர். முருகையா புதிய நூல்கள் சம்பந்தம்ாக வேலை செய்து கொண்டிருக்கின் றேன். கூடிய சீக்கிரம் நூலுருப் பெறும். ம ல் லி கை  ைய த் தொடர்ந்து படித்து வந்தால் அந் நூ ல் க ள் வெளிவந்தது தெரியும்.
O உங்களுடைய பிறந்த நாள்
விழாப் பற்றிப் பேப்பரில் இலக்கியப் பகுதியில் படித்து அறிந்து கொண்டேன். அது பற்றி எமக்குத் தகவல் தந்தால்
என்ன?
சண்டிலிப்பாய். அ. நவசோதி நான் த மிழ் நாட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சம யம். 27 - 6 84 அன்று மாலை கொழும்பு சென்று அப்படியே தமிழகம் போகத் திட்டமிட்டி ருந்தேன். அன்றுதான் எனது பிறந்த தினம். அன்று மாலை சில நண்பர்கள் மல்லிகைக் காரி யாலயம் வந்தார்கள். பூபால சிங்கத்தின் மகன் பூரீதர சிங் மாலை ஒன்றைக் கொண்டு வந்து போட்டார். டானியல், திருச் செல்வம், தெணியான், மெளன குரு, சபா. ஜெயராசா, கிருஷ் ணராசா, போன்றேர் வந்தி ருந்து வாழ்த்துத் தெரிவித்தனர். மற்றும் சிலர் வாழ்த்து மடல் அனுப்பி வைத்தனர். இது திட் டமிட்டுச் செய்யப்பட்ட கொண் டாட்டமல்வ. ந எண்பர் கள் : நேரில் வந்து என்னை வாழ்த்திய சம்பவமேயாகும்.
O இந்த முறை சென்னையில் யார் யாரைப் பார்த்தீர்கள்
கீரிமல. 5 ܖ a. பெனடிக்

Page 30
மறக்க முடியாத அனுபவம் அது. நானும் மேத்தாவும் ஆட 7ல் போய்க கொண்டிருக தோம். r& Gggrtb8 ಆ6 நெருக்கம் நிரம்பிய மெளலாப்பூ ஜங்சனில் 蠶 தரித்துநின் து அங்கு போக்குவரத்தி டுேdடுத்திக் கொண்டு நின் ლფff ஒருப்ோலீஸ்காரர். மேத்தா என்னிடம் அவரைக் கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்படி கூறி ஞர். மனுஷன் நட-- நடுச்
நிதியில் ஒரு பரத நாட்டி தையே ஆடிவிட்டார் என்ன லாவகம், என்ன துரிதம், என்ன முத்திரை, என்ன முகபாவம் கொஞ்ச நேரம் என்னை மறந்து அவரது அங்க சேஷ்டைகளை ரளித்தபடியே இருந்தேன்.
இதைத் தவிர, அங்கு பல sarfão Lu LU 600 P செய்துள் ளேன். பேருந்து நடத்துநர்கள பலரைக் கூர்ந்து அவதானித் தேன். அப்பப்பா எத்தனை எத தனை விதமான காரக்டர்கள்! ஒட்டுனரே புறப்படவும்; மக ளிரை மரியாதையாக நடத்துங் போன்ற தமிழை ஒரு நடத்துநரிடம் கேட்டு க ம ம தமாசுக்காகத்தான் இப்படிப் பேசுகிருர் என நினைத்தேன். டுத்தடுத்து அந்தப் பல்ஜில் சென்ற பொழுதுதான் இயல்பா அேப்படிTஅவர் பேசுவதா கத் தெரிந்தது* O உங்களது வளர்ச்சியை எப்
படிக் கணிக்கிறீர்கள்? கைதடி க. தவஞானம் மல்லிகை a 6r rir 5l 60) tu வைத்து O வெளிதாட்டுக்குப் போளுல் அங்கு நீங்கள் முதன் முத
பளை,
லில் யாரைப் பார்க்க விரும்பு விர்கள்?
கரவெட்டி
மனிதர்களை
வரு கை தருவதாக முன் பொரு தடவை வாக்குக் கொடுத் தீர்களே ஞாபகம் இருக்கிறதா? எப்பொழுது நம்மையெல்லாம் சந்திக்க வருவீர்கள்? பதுளை. ம* தேவநாதன்
சூழ்நிலைக்ளை நீங்கள் புரிந்து கொண்டவர்தானே? நிலை  ைம சீரடையட்டும். கூடிய சீக்கிரம் உங்களையெல்லாம் சந்திக்க அ சியம் வருவேன்.
ardo ymgons för
O மல்லிகை வெளிவருவதில் காலதாமதம் ஏற்படுகின் றதே, இதை ஒழுங்கு படுத்த முடியாதா?
கொழும்பு- 6. எஸ். மூர்த்தி
நீங்கள் அங்கலாய்ப்பது புரி கிறது. நானே எ ல் லா மாக இருந்து இயங்கும் மல்லிகை அமைப்பு எனது பிரயாணங்க ளால் முடங்கிப் போய் விடுவது முண்டு. கூடியவரை ஒழுங்கு படுத்த முனைகின்றேன். மல்லி கையை மாதம், திகதி பார்த் துப் படிக்காதீர்கள். மல்லிகை யைப் ப்டிப்பதே ஓர் ஆத்ம் சுகம் என்பதைக் கருதிப் படித்து வாருங்கள் O отић
ங்கள் ஆலோசனை
எழுத்தாளர்களுக்கு சொல்லக் க டி. ப என்ன?
s. Thousif
ஏதோ எல்லாம் தெரிந்து விட்டவர்கள் போலப் பந்தா பண்ணுமல், நிறைய நிறையப் படிக்க வேண்டும். நிறையச் சிந் திக்கப் பழக வேண்டும். சோர்வு அடையாமல் வி டா முயற்சி யுடன் எழுதப் பழக வேண்டும்,
t
56

ESTATE SUPPLIERS . Com:Ission AGENTS
VARIETIES OF coNSUMER GooDs OILMAN GOODS
TIN FooDs
GRAiNS
sv PPւIERs հo کك O ?
Dial & *
26587 ീ ബി-യേrത്തം
to O
% SY
E. SITTAPALMASONS

Page 31
MAALLIKA
REGISTERED ASA NEWS
With Best Compliments of:
PL. S. V. SEWUG.
Phone: 24629
இப்பத்திரிகை 2:18, காங்கேசன்து'ை வீதி, Tழ் வெளியிடுபவருமான டோமினிக் ஜீவா ஆர்காாம் பூரீலங்கா அச்சகத்திலும், சிட்டை அபிராய
 

JULY 984
FoA, PER I FI EGR || || 4 || K. A
l'écr l'ery Fly :
WALL PAN ELLING CH|PB OARD E. TIMBER
AN CHEYTTIAR
40, Armour Street, COLOMBO-2,
" ஓம் முகவரியில் வசிப்பவரும் சிேரியரும் மல்லின சாதனங்களுடன் யாழ்ப்பாணம் அச்சகத்திலும் அச்சிடப்பெற்றது.